கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2009.01-02

Page 1
தடைகளைத்
த
இருமாத க
NEEN KALIUM (Poetry
விலை
நீங்களும் எழுதலா!
 

தகர்த்து தவுகனைத்தேஐ
விதை இதழ்
EZHUTHALAM Magazine)
a 25-)
ற் -10-2009 (ஜன -பெப்)
g

Page 2
நீங்களும் விழுதலாம்-10 இருமாத கவிதை இதழ் ஜனவரி-பெப்ரவரி-2009
ஆசிரியர்
எஸ்.ஆர்.தனபாலசிங்கம் படைப்பாளிகள் துவாரகன் எம்.ரீ.எம்.யூனுஸ் தமிழ் நேசன் ரா.பிரேம் சுரேஷ் ஷெல்லிதாசன் கலைமகள் ஏ.நஸ்புள்ளாஹற் சி.ரவீந்திரன் சண்முகம் சிவகுமார் ஏழாலைவாணி செ.ஜே.பபியான் சரவணன் க.சுதர்சன் கவின்மகள் 6)6Orgg T BLUIT3FIT தாமரைத்தீவான் ஆனந்தன் வே.சசிகலா ச.சுஜி நடயாழினி சி.சிவசேகரம் என். சந்திரசேகரன் ஜெனிதா மோகன் உநிசார் எச்.எப். ரிஸ்னா சூசை எட்வேட் ஏ.ஆர்.நவாஸ் 3.0ggu LT6066 அ.விஜயராஜ் எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
பதிவுகள், அறிமுகக் குறிப்பு கருத்தாடற்களம்
*நுனிப்புல்லரிப்பு-தீரன் ஆர்.எம்.நெளஸாத் *பாரதி ஒரு சர்ச்சை ஒரு குறு விமர்சனம் - ஒற்றைச்சிலம்பு
பெரிய ஐங்கரன் நீங்களும் எழுதலாம் - ஓர் அறிமுகம்
பேனாமனோகரன் வாசகள் கடிதம், மூலமும் பெயர்ப்பும்
வடிவமைப்பு
எஸ். யசோதரன் கே. மாக்ஸ்சிறிராம்
அட்டைப்படம்
ஓவியர்.கே.சிறீதரன்
தொடர்புகளுக்கு, நீங்களும் எழுதலாம்’ 103/1,திருமால்வீதி, திருகோணமலை, 6a5nT. CELI : 026 2220898. E-mail:-neenkal(a)yahoo.com
2 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

<-ތބ ބަޗެބަ/ வுற அறநதபு ܐܶ# ܲܢ ܥ
/தெளிவுறுமொத்தி ,
* ప్లే క్షీ په كې \(நெருக்கடி மிகுந்த() நாட்கள் இவை. கொக்கிரிப்புக்களுக்கும் வீம்புத்தனங்களுக்கும் உரிய தருண்ம் இதுவல்ல. பொய்யான படிமங்களும் Lq60) 601 u I LI LI LI L- வரலாறுகளும் சின்னஞ்சிறு இலங்கைத் தேசத்தவராகிய நம்மை ஆட்கொண்டதன் விளைவுகள் இவை எனலாம்.
நல் ல எண் ணங் களையும் செயற்பாடுகளையும் ஊன்றக் கூடிய பருவம் இளமைப்பருவமாகும். சிறந்த செய்யுட்கள், கவிதைகள் பாடல்கள் எண் பன இலட்சிய வாழ் வுக் கு வழிகாட்டக்கூடியவை. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனின் புறநானூற்றுப் பாடலின் வரிகள் `தொழிலாளி வர்க்கத்துக்கு தேசிய எல்லைகள் கிடையாது" என்ற லெனினின் கூற்றோடு ஒப்பிடக்கூடியவை. குழப்பகரமான சூழலில் எதையும் தெளிவுற அறிந்திடுதலும் தெளிவுற மொழிந்திடலும் அவசியமானது. கவிதை என்னும் வடிவில் உங்கள் எண்ணங்களை தெளிவுற வெளிப்படுத்த நீங்களும் எழுதலாம். இளைய முதிய தலைமுறை இடைவெளியின்றி பிரதேச தேச எல்லைகளைக் கடந்து “நீங்களும் எழுதலாம்" களம் கொடுக்கும்.
அன்புடன் ஆசிரியர் நீங்களும் எழுதலாம்.
3 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 3
நினைவுகளில் கவிஞர்.சு.வில்வரத்தினம் நிகழ்வு சு.வி.மறைந்த இரண்டாவது தினமான 09.12.2008 ல் நடைபெற்ற போது எழுத்தாளர் நந்தினி சேவியர் தலைமையுரை ஆற்றுவதையும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.செ.யோகராசா சு.வியின் பாடுபொருள்" என்னும் தலைப்பில் உரையாற்றுவதையும் “நீங்களும் எழுதலாம்" ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் வரவேற்புரையினை நிகழ்த்துவதையும் எஸ்.சத்யதேவன் நன்றியுரை கூறுவதையும் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் கீழே உள்ள படங்களில் முறையே காணலாம்.
நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)
 
 

மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்.
துவாரகன் மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது
உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால் பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம் இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ
நாக தாளிப் பற்றைகளோ பெரிதில்லைத்தான்
மருதமரங்களையும் மலைவேம்புகளையும் கைவிட்டு பற்றைகளிலும் பாம்பு புதர்களிலும் படுத்துறங்குகிறோம்.
வானம் கூரையாக முட்கள் படுக்கையாக வெறும் மனிதர்கள் மட்டும் இருக்கிறோம் இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்கள் உடல்களும் செத்துப் போகும்.
பனிமலையேறிகள் மரத்துப்போன உடல்களைக் கண்டு கொள்வது போல். நாளை வரும் ஒருவன் இந்த பாம்புப் புதரிலோ சூரைப்பற்றைகளுக்குள் இருந்தோ சிதைந்து போன எங்கள் உடல்களைக் கண்டு கொள்வான் அப்போது அவனும் கூட கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பான்.
களங்களை விரித்துள்ளோம் ஆக்கங்களை அனுப்புங்கள்
5 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 4
விதிவரைந்த கோலங்கள்
எம்.ரீ.எம்.யூனுஸ், காத்தான்குடி
முகவரிகள் முடக்கப்பட்டதனால் முகாரிகளும் முறுவலிழந்து முட்டிமோதி முணங்குகின்றன!
அகிம்சை வழி அடக்கப்பட்டதனால் ஊதாரியின் உரசல்கள் ஊமையாகவே உலாவுகின்றன!
தேடல்களின் தேட்டம் தொலைந்து போனதால் தொந்தரவே தொலைதூரம் பயணிக்கிறது!
எண்ணப் பகிர்வோ ஏற்றமிழந்து வசைபாடும் வாஞ்சையுடன் நிர்க்கதியில் செல்கிறது
பகிடிவதை பலமானதால் பீதிக்குள் என் வாழ்வு L60)L (5p66)....... பாத்திரத்தின் பேருவகை பெயரதனின் சுட்டலுடன் சுமையாகவே சிணுங்குகிறது!
திண்டல்கள் தெம்பிழந்து சுருதியை சுட்டிநிற்க ஆவேசத்தின் ஆரம்பத்தில் முழுமுகவரியும் முடக்கப்படுகிறது பல்கலையில் பயிலும் காலம் முடிந்து போக
முண்டங்களின் மூர்க்கத்தனத்தால் முழுவாழ்வும் மடிந்து போகிறது எதிர்பார்ப்புக்கள் நிறைந்த எதிர்நீச்சலுடன்
ைெனபெயரில் எழுதுவோர் தமதி சொந்தப்பெயர் முகவரியினையும் குறிப்பிடுதல் வேண்டும்.
6 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)
 
 
 
 
 
 

பூவா தியா
தமிழ்நேசன் - மன்னார் உன் சொற்கள் அடுத்தவர் நெஞ்சில் பூ வைக்கிறதா? இல்லைத் தீ வைக்கிறதா?
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்றா?
உள்ளத்தில் நலிந்தோரும் உடலில் மெலிந்தோரும் உன்னால் வாழ்வு பெறட்டும்
புதையுண்ட விதை மண்ணில் மீண்டும் சிதைவுண்டு சிலிர்க்கிறது!
மூங்கில்கள் எல்லாமே புல்லாங்குழல் ஆவதில்லை பூக்கள் எல்லாமே சந்நிதிகள் சேர்வதில்லை!
கேள்விக்குறிகளாய்?
-JH.L18ji 3,6969, 56bälf DT6. Lüb தமிழ்நாடு இராவணனின் நாட்டினிலே ஈவிரக்கமற்றவர்களின் களியாட்டம் இடியென வெடியோசை தினமும் இடரினிலே உழல்கிறதே நம் உறவு
இலங்கையின் இதயமாயிருந்து நலம் சேர்த்த இனமன்றோ அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றது அராஜகவாதிகளால் அந்தோ!
இருண்டு கிடந்த தீவுக்கு இன்னொளி தந்தவர்கள் உழைப்பால் இனவாத அனல் மூச்சில் அன்றோ அகப்பட்டு கருகுகின்றார் ஆதரவேதுமின்றி
தாய் மண்னாம் தமிழகமாம் இங்கே தம் தொப்புள் கொடியை உதறிவிட்டு மூவர்ணக் கொடியின் நிழலில் அயர்ந்து கேள்விக் குறிகளாய்!
7 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 5
”மனிதனை" தேடுகிறேன்
-ஷெல்லிதாசன்
நீதி ஏங்குகிறது
நிலையாய் தனக்கென்றொரு
நிலம் - இந்த
தரணியிலே இல்லாமல்
எல்லாம் .
தறி கெட்டுப் போனதென்று!
சாதிக்கொன்றாய் சமயத்திற்கு வேறொன்றாய் இனத்திற்கு இன்னொன்றாய் நிறத்திற்கு வெவ்வேறாய் நீதியை பங்கீடு செய்ய நினைக்கும் . "தாராள மனசு" பஞ்சாயத்துப் பண்ணையார்களால் - நீதி ஏங்குகிறது நிலையாய் தனக்கொரு நிலம் இல்லாமற் போனதென்று!
செங்கோல் இன்று "செங்குரங்குகள்" கைகளிலும் செங்கம்பள வரவேற்புக்கள் இன்று - மனித அங்கங்களை அசலாக சப்பித் துப்பும் "உத்தமர்” களுக்குமாக உருமாறிப் போனதால் நீதி ஏங்குகிறது நிலையாய் தனக்கென்றொரு நிலம் இல்லாமற் போனதென்று
நீதியே.நீ.கேளாய்! என்றோ ஒருநாள். கோடியில் ஒரு ”மனிதன்” ཀྱི2(ག་ கோடியிலிருந்து உன் குறை தீர்க்க
வீறுடன் எழுவான் என்றும் - வீழாத செங்கதிராய்” அன்று நீதியே உனக்கு அரியணை கிடைக்கும் அமைதியாய் உனது ஆட்சியும் மேலோங்க விடியும் உலகம் முடியும் அவலங்கள்!
நீங்களும் எழுதலாம் ဒီ0-2009 (ஐன -பெப்)

நினைவுகளின் மீதி.
கலைமகள் -நாவற்குடா.
நேசத்தின் அருகாமையுடன் உன்வாசல் வரை வந்து திரும்பியவள்
உன் மெளனத்தின் முன் என் வார்த்தைகள் - வெறும் அர்த்தமற்ற ஒலிகள் தான்:
பூக்களின் மேல் ஏறி நிற்கும் வண்ணாத்தியின் கனவுகளுடன்
உன்னை இழுத்து நிறுத்த முடியாமல் தோற்றுக் கொண்டிருக்கிறேன்
போய் வா - நாம் சுதந்திரமாய் சுற்றிய பொழுதுகள் குறைவுதான்
என்னை எடுத்த இடத்திலே விட்டுச்செல் உன் இயலாமையுடன் என் நட்பையும் துார எறிந்து விடு
நமக்கான பொழுதுகள் வாய்க்கும் போது - மட்டும் அமர்ந்து பேசிக்கொள்வோம்:
கவிதைக்கான.
பயில்களம்
பரிசோதனைக்களம் S. காத்திரத்தின்களம் கருத்தாடற்களம் •S விளக்கக்களம் ཎྜི་ விமர்சனக்களம் 翠
9 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 6
  

Page 7
மாயக்காரனின் புதைகுழி
-சண்முகம் சிவகுமார், கொட்டகல
மாயக்காரனின் புதைகுழி நிரம்பப் போவதில்லை ஒவ்வொரு இரவும் மனித வேட்டையாடுபவன் அதிக மதுவருந்திவிட்டு கூர்வாளினைக் சுழற்றி பயிர்களை வேரறுக்கிறான் தீய்ந்த வருகை தரும் சித்தார்த்தன். என் சடலக் காற்றில் அலைகின்றான் யாருடைய பொம்மைகளை
இன்று. புணர்வானோ?
35/16) 35T6)LDITU தலைக்குள் எழும் விருட்சங்களின் கீழ்
அவன் புத்தனான செய்தியை காலத்தின் பிணநாற்றம் உறுதிப்படுத்திற்று. வெறுப்பின் நிரந்தர நாற்காலியில் அமர்கிறேன்.
பிணம் நாறும் மண்ணின் தோளுக்கடியில் நமது வாழ்வு எப்படி தொடர முடியும்?
கடிதவழி தனி இதழை பெற விரும்புவோர் 5/= பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும் வருட சந்தா 200/- (தபாற்செலவு உட்பட) அனுப்பவேண்டிய தபாலகம் திருகோணமலை முகவரி எஸ்.ஆர்.தனபாலசிங்கம் 103/1 திருமால் வீதி,திருகோணமலை,
ဗူဖိုဖွဲဏ္ဍိစ္ပါး உங்கள் கவிதைத் தொகுப்பு இடம் பெற வேண்டுமாயரின் ஒரு பிரதரியை அனுப்பிவையுங்கள் 2007ற்கு முன் வெளியானவை அறிமுகக்குறிப்பில் இடம்பெறமாட்டாது لم
மாணவர்களே பயில்களத்திற்கு உங்களது ஆக்கங்களை அனுப்புங்கள்.
أص ܥ 12
நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

கற்பனைக் காகிதம்
ஏழாலை வாணி உனக்குள்ளும் சின்னத்தன்மானம் தரைமுட்டிப் பார்க்கட்டும் ஆனால். எச்சரிக்கை விடுத்தபடியே இருந்து கொள்! மனதுக்குள்ளே மனிதப்பேய்கள் நல்லவராய் வேடமிடுவதற்குள் மனதிற்குள் - ஒரு தைரிய தீக்குச்சியை கிழித்துப்போடு ஆம் வேஷம் கட்டியவள் நெஞ்சில் தந்த காயத்தை நாளை தேற்றிக்கொள்ள உன்னைத் தவிர யாருமில்லை ஆகையால் எச்சரிக்கை விடுத்தபடியே உன் சின்னச் சின்ன கிளைகளை மெல்லப் பரப்பிக்கொள் அதில் கற்பனைக் காகிதத்தை கண்டபடி தொங்கவிடாதே
Lu 6007 if
செ.ஜெ.பபியான் - சாமிமலை குருட்டு பூமியின் கூக்குரல்! தீக்குளித்தே விழுங்கிக்கொண்டு, முக்குளித்த பகற் பொழுதின் வெளிக்கடந்து, மயான வழிப்பயணம்! நீரூற்றி வரண்டு போன என் கண்களில் பாவக்கணக்கு! தொலைந்த சுவடைத் தேட விழைந்த குரல் விரக்தியுடன்.
3 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 8
  

Page 9
  

Page 10
கல்லாய்க் கிடக்கின்றாள் அகலிகை
ஆனந்தன்-தும்பளை,பருத்தித் துறை
கல்லாய்க் கிடக்கின்றாள் அகலிகை தன் கணவனின் பொல்லா சாபத்தை ஏற்றிங்கு
சூதறியாள் வாதறியாள் கணவனின் சுகமேதுமறியாள் தொட்டுத் தாலி கட்டியவன் தொட்டுக் கூடப் பார்க்காதவன் விசா முடிந்ததென்று வெளிநாடு சென்ற பின்பு ஒருவருடம் இருவருடம் என QQuigl U6) 6}(blub கடிதமும் கையடக்கத் தொலைபேசியுமாய்!
காலம் கனிந்தது கையடக்க தொலைபேசி கனிவாகக்கூறியது அவன் வரவை துள்ளிக்குதித்தாள் தன் கணவனை எண்ணிக் களித்தாள்.
வாசலிலே தேவதை வழிபார்த்து விழி மலர இத்தனை அழகா என பிரமித்துப் போனவனின் சந்தேகமொழி எப்படி இருந்தாய்
இது நாள்வரை? இடி இறங்கியது அவள் தலையில்! பிறந்திங்கு இராமன் பின் ஒருக்கால் வந்துமென்ன கற்பின் கனலை அந் நெருப்பில் அமுக்கியே அனைத்தான் என்றால் பிறந்திங்கு இராமன் பின் ஒருக்கால் வந்துமென்ன?
கவிதை சம்பந்தமான குறிப்புக்கள் கட்டுரைகள் மர்சனங்கள் போன்ற பல்வேறு
விடயங்களோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
8 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

நீ
வே.சசிகலா - தி/செல்வநாயகபுரம் S.D.6)f நினைவுகளை நீக்க வைத்தாய் நிஜங்கள் அனைத்தையும் நிழல்களாக்கி விட்டாய்! சிந்தனைகளையெல்லாம் சிதைத்துவிட்டாய் இன்பங்களையும் துன்பங்களாக்கி விட்டாய்! நினைவுகளை சிந்தித்தவளாய் நான் ஆனால் நியோ. சமாதானமே வா
ந.டயாழினி,யா/கொடிகாமம்
திருநாவுக்கரசு.ம.வி
அமைதி வாழ்வை புயலாக்கி அழிக்கின்ற யுத்தம் ஓய்ந்து நான்கு பேரும் நட்புடன் நலமாய் உண்டு மகிழ்ந்திட சத்தியம் வாழ சகோதரத்துவம் மலர சரித்திரம் படைக்க சமாதானமே வா
இலங்கைத் தீவின் இனிய பிள்ளைகள் இனிதாய் வாழ பள்ளியில் இருந்து விடுக்கும் பணிவான கட்டளை
சந்ததிவாழ
சமாதானமே வா
தாய் முகம்
ச.சுஜி-தி/செல்வநாயகபுரம்,இ.ம.வி
பிறந்தவுடன் பார்த்தேன்
பல முகம்!
வளர்ந்தவுடன் பார்த்தேன்
சில முகம்!
இன்று வரை பார்க்கின்றேன்
ஒரு முகம்!
என்றும் எனக்குப் பிடித்த முகம்
தாய் முகம்!
19 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 11
மொழி பெயர்ப்புக் கவிதை
தபாற்காரர்
புலன்ட் அல்-ஹைடாரி (Buland Al-Haidari)
தமிழில் - சி.சிவசேகரம்
தபாற்காரரே உமக்கென்ன வேண்டும்? நான இந்த உலக?ல7ருந்து ஒதுங்கியிருக்கிறேன். நிர்ஏதோ பிழை விட்டிருக்கிறீர்.
நிச்சயமாக என்போல ஒரு கதியற்றவனுக்கு இப்பூமியில் புதிதாக எதுவும்
இராது கடந்த காலம் தொடர்ந்து வாழுகின்றது; கனாக் கண்டபடி, 62ITIElaնա Լոջ, பழையதை நினைவுகூர்ந்தபடி சாவிட்டு இடைவேளைகளுடன் மனிதர் விருந்துண்டபடி உள்ளனர் புதியதொரு பசிக்கு உணவூட்ட ஒரு
எலும்புக்காக அவர்களது கணிகள் அவர்களது
மனங்களை அகழ்கின்றன. சீனப்பெருமதில் இன்னமும் தன்
கதையை உரைக்கிறது, பூமிக்கு இன்னமும் அதன்
ஸிஸிபஸ் * உள்ளான். எனினும் தனக்கென்ன வேண்டுமெனப் பாறை அறியாது
20 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

தபாற்காரரே நீர் ஏதோ பிழைவிட்டிருக்கிறீர்
நிச்சயமாக ஒன்றுமே மாறவில்லை திரும்பிப்போம் உமக்கென்ன வேண்டும்.
1951ம் ஆண்டு எழுதப்பட்டது. முதலாவது ஆங்கில வடிவம் அப்துல்லா அல்- உதாரி 1986 அல் ஹைடாரி ஓர் ஈராக்கியர்.
எபிஸியஸ் *(sisy Phus) கிரேக்க இதிகாச மரபிலி தனது வஞசகமான குநர்நரத களுக்காகத் தனடிக்கபபட்டு முடிவின்றி ஒரு பாறையை உச்சிக்கு உருட்டிச் செல்லவும் பாறை கீழே உருண்டு வர மறுபடி மேலே உருட்டிச் செல்லுமாறும் பணிக்கப்பட்ட ஓர் அரசன்.
ஹைக்கூ
என்.சந்திரசேகரன்,இரத்தோட்டை
ஆற்றைக் கடக்கவே அல்லல் படுகின்றோம் நகரில் மேம்பாலம்
பூர்வீகத்தை புரிந்திருக்கிறார்கள் வால் பிடிக்கிறார்கள் மனிதர்கள்
யார் சொன்னது? விலைவாசி" என்று விற்போனுக்கா..?
செவ்வாய் எப்பிடி இனி சிவந்திருக்கும் மனிதனின் காலடி
புள்ளடியிட்டு புரியாதோரின் புன்னகைகள் தேர்தல் காலம்
21 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 12
கருத்தாடற்களம்
நுனிப்புல்லரிப்பு
தீரன். ஆர்.எம். நெளஸாத். நீங்களும் எழுதலாம் 9ம் இதழில் வானம்பாடி" எழுதிய பந்தியில், "...இப்படியே, பஸில் காரியட்டர். ஜின்னா ஷெரிப்புத்தீன், காத்தான்குடி அஸ்ரப்கான் போன் றோ ரும் D J 3 L T (B só நிற்கும் கவிஞர்களாவர்.” என்று குறிப்பிட்டுள்ளதைக் கண்டு புல்லரித்துப் போனேன். * தமிழ் கூறும் நல்லுலகிலேயே ஆறு தமிழ்க் காட்பியங்களை எழுதி சாதனை புரிந்தமைக்காக உலகத்தமிழிலக்கிய மாநாட்டில் தமிழ்நாட்டுப் புலவர் களாலேயே கெளரவம் பெற்ற தமிழ்ப்பெருந்தகையாளரான ஜின்னாஷெரீப்புத்தீன் ஐயா அவர்களை ஒரு சாதாராண மரபுக் கவிஞர் வரிசையில் வைத்ததும்,
* புலவர் மணி பெரியதம்பி பிள்ளை ஐயா அவர்களால், "பாவலர்” என்று பட்டமளிக்கப்பட்ட பாவலர் பஸில் காரியப்பர் அவர்களை மரபுக் கவிஞர் என்ற தர வரிசையில் குறிப்பிட்டிருந்ததும்,
*தமிழ்க் கவிதையுலகில் பேர் குறிப்பிடமுடியாத அஸ்ரப்கான் என்னும் மின்மினியை மேற்படி சூரியசந்திரர்கள் வரிசையில் சேர்ந்திருந்தும் கண்டு இந்த ஆய்வுக் கட்டுரையை (?) எழுதிய வானம்பாடியின் அறிவுத்திறனை எண்ணித்தான் இப்படிப் புல்லரித்துப் போனேன். காத்தான்குடியில் ஆயிரம் புலவர்களும், மரபுக் கவிஞர்களுமிருக்க, அஸ்ரப்கான் என்பவரை மட்டும் இவ்வரிசையில் பட்டியலிடக் காரணம் என்னவோ. இவர் யார்.? இவர் தமிழ்யாப்பிலக்கணம் பயின்ற ஒரு மரபுக் கவிஞரா..?
* `மேற் படி மூன்று வித தியாசமான வார்ப்புகளையும், ஒரே பாத்திரத்திலிட்டு இவர்கள் மூவரும் மரபோடு நின்றவர்கள் என்றால். இதன் அர்த்தம்தான் என்ன...? எவ்வளவு பெரிய அறியாமை இது.! ஆக் கங்களை செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுண்டு என இதழில் குறிப்பிட்டிருக்கும், ஆசிரியர், எஸ் . ஆர் . தனபால சிங் கம் இதனைச் செவிவைப்படுத்தவில்லையே ஏன்.?
22 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

"வானம்பாடி" ஏதாகிலும், கட்டுரைகள் எழுதும் முன்னர் தனது பார்வையை மேலும், கூர்மையாக்கி கொள்ளுதல் வேண்டும்.
”தமிழறிஞர் திரு அருளையா அவர்களால், "எழுக புலவனே...!" என விளிக்கப்பட்டவரும், கலாநிதி எம்.ஏ.நு.மான் அவர்களால், "அரும்பு மீசைத் தத்துவஞானி.! என சிலாகிக்கப்ட்டவரும், கல்முனை அபாபீல்களினால், "தென்கிழக்கின் உமர்கையாம்!" என வர்ணிக்ககப்பட்டவருமான பாவலர் பஸரீல் காரியப்பர் அவர்களின், இனநல்லுறவுக் கவிதை ஒன்றினை “நீங்களும் எழுதலாம்" வாசகர்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.
துளசி
துறைநீலாவணையிலிருந்து ஒரு துளசிச் செடி கொண்டு வந்தேன். வேள் நொந்து போகாமல் நீர் வார்த்து ஒரமாய்க் கெல்லி ஈர மண்ணோடு உசுப்பாமல் கொண்டு வந்து எங்கள் இல்லம் இருக்கும் கல்முனைக்குடி மண்ணைக் கெல்லி அதன் உள் வைத்தேன். அம்மண்கள் கலந்தன மனிதரைப் பழித்தன. துளசியின் இலைகள் என்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கின்றன.
பாவலர் பஸில் காரியப்பர். (நன்றி- ஆத்மாவின் அலைகள்.(1994)
* கருத்தாடற்களம் கருத்தாடல் மூலம் தெளிவுறுவதற்கே. ஆகையால் "செவ்வை செய்தல்" இயன்றவரை தவிர்க்கப்படுகின்றது கருத்தாடல் வரவேற்கப்படுகின்றது.
ஆர்
வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர் வருட சந்தா 200/- R.Thana balasingam A/C No: 106653.402077 Sampath Bank, Trincomalee என வைப்பிட்டு பற்றுச்சீட்டை அனுப்பிவைக்கவும் G66flybiTG US $ 10
23 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 13
பாரதி - ஒரு சர்ச்சை
பாரதியின் குழப்பங்கள்,
முரண்பாடுகள்
க.சி.அகமுடைநம்பிஉள் ளத் தாலி பொய் யாது
ஒழுகியவன் மகாகவி பாரதி. சொல் ஒன்று செயல வேறு என்று வாழ்ந்தவன் அல்லன். ஆனால் அவனிடம் சில குழப் பங்கள் முரண்பாடுகள், தடுமாற்றங்களை காண்கின்றோம். இந்துமதத்தின் மீது அவனுக்கிருந்த அளவற்ற பற்றுதல், நான்கு வருணங்களில் நிலவுகின்ற உயர் வு தாழ் வு நடைமுறைகளுக்கிடையிலும் அவற்றைக் கட்டுக் குலையாமல் பாதுகாத் து நிலைப்படுத்த வேண்டும் என்பதில் அவனுக்கிருந்த வேட்கை, சமுதாயத்தில் சமத்துவத்தை எப்படிக் கொண்டுவரலாம் எண் பதில் அவனிடம் இருந்த தெளிவின் மை போன்ற பல கூறுபாடுகளில் பாரதி குழம்புகிறான். தடுமாறுகிறான். தனக்குத் தானே முரண்படுகிறான்.
இந்து மதப்பற்று இந்தியாவின் சீர்குலைவுக்கும் பேரழிவுக்கும் காரணம் இந்துமத தர்மம் சரியான முறையில் போற்றப்படாததுதான் என்று பாரதி கருதினான். காரைக்குடி இந்து அபிமான சங்கத்தை வாழ்த்தி அவன் பாடிய பாடலின் ஒரு பகுதி இதனை உறுதிப்படுத்துகிறது:
"அருமையுறு பொருளில் எலாம் மிக அரிதாய்த் தனைச் சாரும் அன்பர்க்கு இங்கு பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம் ஹிந்துமதப் பெற்றி தன்னைக் கருதி அதன் சொற்படி இங்கு ஒழுகாத மக்களெலாம் கவலை எனும் ஒருநரகக் குழியதனில் வீழ்ந்து தவித்து அழிகின்றார் ஓய்விலாமே”
24 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

"இந்தக் கருத்தையே "இந்துக்களின் கூட்டம்" என்ற கட்டுரையில் (பாரதியார் கட்டுரைகள்) அவன் வலியுறுத்தி எழுதுகிறான்.
இந்துக்களுக்குள்ளே இன்னும் சாதி வகுப்புகள் மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் நாம் தொல்லைப்படுவோமேயன்றி அழிந்து போய்விட மாட்டோம். ஹிந்துக்களுக்குள்ளே இன்னும் வறுமை மிகுதிப்பட்டாலும் பெரிதில்லை. அதனால் தர்மதேவதையின் கண்கள் புண்படும். இருந்தாலும் நமக்கு சர்வ நாசம் ஏற்படாது. ஹிந்து தர்மத்தை கவனியாமல் அசிரத்தையாக இருப்போமேயானால் நமது கூட்டம் நிச்சயமாக அழிந்து போகும்."
“இத்தகைய துயர் நீக்கிக் கிருதயுகம் தனை உலகில் இசைக்கவல்ல புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமை தனை" என்றும் அவன் பாடுகின்றான்.
கிருதயுகம் என்ற பாரதியின் கனவுலகத்தை ஹிந்து மதத்தால் மட்டும்தான் கொண்டுவர முடியுமா? மானுடத்தை உயர்த்தும் நோக்கம் தானே உலகிலுள்ள ஒவ்வொரு மதத்திற்கும் உள்ளது. அத்வைதம் பேசுகின்ற பாரதி ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை?
கட்டமைப்பு என்று எதுவும் இல்லாமல் சிதறலாகவுள்ள இந்து மதத்தைச் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரே கூட்டமாகக் காண வேண்டுமென்று பாரதி ஆசைப்படுகிறான். மதிப்பு என்ற கட்டுரையில் (சமூகம்) பாரதி எழுதுகிறான்.
”இருபது கோடி இந்துக்களையும் ஒரே குடும்பம் போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக் கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை” முப்பது கோடி ஜனங்களின் சங்கம் என்று பாடிய பாரதி இங்கு இருபது கோடி இந்துக்கனை மட்டுமே ஒரே குடும்பம் என்று பிரித்துப்பார்ப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகாதா? இந்திய ஒருமைப்பாட்டை விட இந்துக்களின் கூட்டமைப்பே பாரதிக்கு முக்கியமானதாக படுகிறது இதனால்
25 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 14
முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை - வாழ்க" என்ற புகழ் பெற்ற வரிகள் பொருள் இழந்து நிற்பதை நாம் காணவேண்டியுள்ளதே!
இந்தியா எனும் போது பாரதிக்கு இந்துக்கள் மட்டுமே ஏற்புடைய மனிதக் கூட்டமாகப் படுகிறது. பூணுால் போடுவதா வேண்டாமா என்பதிலும் பாரதிக்கு உறுதியான நிலைப்பாடு இருந்ததில்லை.
நாலு வருணப் பாகுபாடுகள் இந்துமதத்தின் அடிப்படை வருணாசிரம தர்மந்தான். படித்தவன் பிராமணண் வீரன் சத்திரியன், தந்திரசாலி வைசியன் என்ற மனுதர்மம் கூறும் குணப்பாகுபாடுகளைப் பாரதி ஏற்றுக் கொள்கிறான். ஆனால் சூத்திரனைத் தொழிலாளி என்று குறிப்பிடுகிறான். ஆனால் மனு தர்மமோ சூத்திர தர்மத்தை "ஏவலரான மக்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவள் என்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்" என்று வரையறுக்கிறது.
ஏவல் தொழில் அல்லது தொண்டுத் தொழிலுக்கு மாற்றாக வெறுமனே தொழிலாளி என்று சூத்திரனை மடைமாற்றம் செய்கிறான் பாரதி. மனு தர்மப்படி சூத்திர தர்மத்தை விளக்கப் புகுந்தால், மூவர்ணத்தாருக்கும் அடிமைத்தொழில் புரிதல் என்பதை சொல்லித்தானாக வேண்டும் என்பதால் பாரதி இங்கு தடுமாறுகிறான்.
”வேத மறிந்தவன் பார்ப்பான்-பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான் நீதி நிலை தவறாமல் தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன் பண்டங்கள் செய்பவன் செட்டி தொண்ட ரென்றோர் வகுப்பு இல்லை சோம்பலைப் போல இழிவில்லை" தொழில் தொண்ட ரென்போர் இல்லை என்றால் மனுதர்மம் வகுத்துள்ள நான்கு வருணங்களில் சூத்திரன் என்ற நான்காவது வருணம் இல்லை என்று தானே பாரதி சொல்ல வேண்டும்? சொல்லவில்லை. அப்போதும் அவன் நான்கு வருணங்களை விடுவதாக இல்லை.
26 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

"நாலு வகுப்பும் இங்கு ஒன்றே - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி"
என்கிறான். நான்கு வர்ணங்களையும் கட்டுக் குலையாமல் நிலைப்படுத்திக் கொள்ளவே பாரதி விரும்புகிறான். இந்து மதத்தினர்க்கு மட்டும் என்பதில்லாமல் மானிட சாதிக்கே நான்கைத் திணிக்கப் பார்க்கிறான்.
தொழில்களின் அடிப்படையில் உருவான பல்வேறு சாதிப்பிரிவுகளை வருணாசிரம சட்டத்திற்குள் பிராமணர் சத்திரியர் வைசியன் சூத்திரர் என்றவாறு நான்கு வருணங்களாக வகைப்படுத்திக் கட்டமைத்து விட்டார்கள் மனுவின் வழிபட்ட வேத நெறியாளர்கள்.
நான்கு வருணங்கள் என்று வகைப்படுத்தியதும்,
பஞ்சமர் என்று பாட்டாளி மக்களைத்
தீண்டத் தகாதவர்கள் என்றாக்கியதும் ,
மானுடத்துக்கு மனுதர்மம் செய்திட்ட மாபெருந்
தவறாகும். இதனை உணர மறுக்கிறானே பாரதி
பின்னர் ஏன் அவன்
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள் எனப்
T (3660ö(Bib?
இந்து மதக் கட்டமைப்பை வலிமையுடையதாக்க வேண்டும் என்பதே பாரதியின் தலையான நோக்கம் இதற்குக் குலத்தாழ்ச்சி என்பது தடையாக இருந்து விடக் கூடாது என்பதால் அதனை நேர் செய்துவிடலாமே என்று பார்க்கிறான்.
இதன் காரணமாகத்தான் பிராமணர் என்ற சாதியைப் பிராமணத்துவம் என்ற தத்துவ நோக்கிலே பார்த்து, பிராமணத்துவம் என்பது பிராமணர் என்ற சாதிக்குள்ளே மட்டும் அடைபட்ட ஒன்றல்ல, அது எல்லா சாதிகளுக்குள்ளும் பரந்து விரிந்த ஒன்று என்று பாரதி விளக்கம் தர முற்படுகிறான். ஆக நான்கு வருணங்களும் அதனதன் குணநலன் கள் மாறாமல் , நெகிழ்ச்சியுடனாவது பாதுகாக்கப்பட வேண்டும்.
27 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 15
என்பதே பாரதியின் விருப்பமாகும். இதன் மூலம் உச்ச நிலையில் உள்ள பிராமண வருணம், தனது உயர்வு நிலைக்கு எந்தப் பங்கமும் வந்து விடாமல் ஒர் உறுதிச் சமநிலையில் என்றென்றும் நீடித்திருக்க வேண்டும் என்ற தனது உள்ளார்ந்த வேட் கையை வெளிப் படையாகவும் மறைமுகமாகவும் பாரதி எழுதிச் செல்கிறான். பாரதியின் மெய்மை நிலை இவ்வாறிருக்க,
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
என்ற பாடியதில் என்ன சிறப்பிருக்க முடியும்?
நன்றி - “உயிர் எழுத்து"
கட்டுரையின் ஒரு பகுதி சுருக்கமாக தரப்பட்டுள்ளது மிகுதி அடுத்த இதழில் வெளிவரும். கட்டுரை சம்பந்தமான உங்கள் கருத்தாடலை எதிர்பார்க்கின்றோம்.
ரோஜா
செல்வி. ஜெனிதா மோகன்
கிழக்குப் பல்கலைக்கழகம்
நீயோ! மரபுக்கவிதையின் தலைவி புதுக்கவிதைக்கு எதிரியல்ல நீயோ! பூவுலகிற்கு கவியொளி மலர்களின் அழகும் நீதான்
கவிதைக்கு முதல்வன் பாரதி மலர்களின் முதல்வன் ரோஜா பக்தனுக்கு இன்பம் பதியை சந்திப்பது கவிஞருக்கு இன்பம் அழகு மலர் உன்னைக் காண்பது
உன் அழகில் மயங்காத பெண்கள் தான் உண்டா? பாரினிலே எத்தனை மலர்கள் வந்தாலும் உன் அழகு தனி ரகம் தான்
உன் பெயரில் கவி புனைவது இன்பமோ! பேரின்பம்! தமிழ் அன்னைக்கு - ஆரம் சூடுவோர்களில் நீயும் கூட விதிவிலக்கல்ல.
28 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

ஹைக்கூ
உ.நிசார்.மாவனல்ல
வெற்றுப் பதர் சலசலக்க
தலை குனிகிறது
நெற்கதிர்
چي چو په
புல்லாங்குழலா
கைத்தடியா
முடிவு செய்வது முங்கிலல்ல
安安安
சன்னலோடு உரசும்
திரைச்சீலைக்கு
காற்றோடு தான் காதல்
مk k k
வெண்புறா கைகளில்
ஏலம் விடுகிறார்கள்
கழுகுகளை
安·安安
அடிக்கத் தூக்கிய கையிலேயே
வந்தமர்கிறது
bj6Tibl
جو چی چ
மரத்தைச் சுற்றிக்கொடிகள்
மூச்சுத் திணறுகிறது மரம்
பலதாரம்
-
தாமரை இலையில் நிற்க
தயங்குகிறது
தண்ணித் துளி
- *
பற்றிய மரம்
பட்டுப்போக
பரவசத்துடன் குருவிச்சை
- * 솟
முட்களோடுதான் வாழ்க்கை
முகங்கோணவில்லை ரோஜா
இசைவாக்கம்
- -
படைப்புகளில் வரும் கருத்துகளுக்கு படைப் பாளிகளே பொறுப் பாளிகள் . படைப் பரினை செவி வைப் படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
29 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 16
எலும்புக் கூடுகளும் இரத்தம் நிரம்பிய குவளைகளும்!
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா அடிக்கடி நான் மரணித்துப் போகிறேன் இந்த உலகம் விசாலமானதாம் ஆனால் விசேஷமாக எதையும் நான் காண்பதில்லை!
ஒரு அமானுஷ்ய சக்தி எனக்குள் ஊடுருவி விட்டதாகத்தான் உணர்கிறேன்!
ஊரடங்கு நேர வீதிபோல வெறிச்சோடிக்கிடக்கிறது இதயம்!
கடலைப் பிளந்த நெருப்புக்குண்டமாக மனசுக்குள்ளே ஒரு வித உருட்டுதல் சதாவும், என் ஆகாயத்திற்கு மட்டும் அஸ்தமனம் மீது அப்படி என்னதான் காதலோ..?
பகலில் சூரியன் தன் அகோரப்பற்களைக் காட்டி என்னைப் பயமுறுத்த நான் நேசித்தவைகளெல்லாம் வளர்த்த கையை - என் குரல் வளையை நோக்கி நீட்டியதாகவே...!
மண்ணைத் தகர்த்துக்கொண்டு வெளிவந்த எலும்புக் கூடுகள் இரத்தம் நிரம்பிய குவளைகளுடன் உல்லாசமாக...!
எல்லோருடைய குப்பைகளும் என் இதயத் தொட்டியில் இடப்பட்டதாய் மாறுகிறது. ஐயோ ...! ராட்சத கழுகொன்று இதயத்தை கொத்திக் குதறி ரணமாக்கிய வண்ணம்.
விஷ ஜந்துகளெல்லாம் என் மேனியை முத்தமிட்டு, செந்நீர் பருகி காமம் தீர்த்துச் செல்கின்றன!
ஓர் ஒளிக்கிற்றைக் கூட கண்டிராத காணகமொன்றின்
நடுவில் சிக்கிய கோழிக்குஞ்சாய் இப்போது நான்!
30 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

தெருக்குரல்
சூசை எட்வேட், அன்புவழிபுரம்
அறிவு மிகவிருந்தும் பயனற்றுப் போம்
மறதி மிகவிருந்து விடின.
ce ce.
கருநாகமாய் மனையாள் உருவானால் புருடன்
கருடனாய் மாறுவதே இயல.
@も、(X
பருவத்து உணர்வுகளை மதிக்காப் பெற்றோர்
உருவத்தில் மட்டுமே உற்றார்.
exc
பெரிதுபடுத்தார் பணக்காரர் கப்பற் கொள்ளை
பரிகசிப்பார் ஏழைத் திருட்டை
(EC.
தாய்மையில் தூய்மைதான் சந்தேகமில
காதற்கற்பில்
நேர்மை உண்டோ பெண்மையில்.
அவசரமில்லை ஆறுதலாக சொல்
ஏ.ஆர். நவாஸ் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி
உறவைக் கேள் - என் ஒளுரைக் கேள் உற்றுப் பார் - ஏன் அந்த ஆண்டவனையாவது கேட்டுப்பார்
நடந்த பாதையைக் கேள் நான் ரசித்த - அந்த வான் மேகத்தைக் கேள் தேன் சிந்தும் பூவைக் கேள் பூவில் மொய்க்கும் - கரு வண்டைக் கேள்
உன்னைப் பார்த்ததும் பிடித்தது ஆனால் - உன் பதில் மட்டும் தான் அடம் பிடித்தது
நன்றாக யோசி நாணமின்றி யோசி அவசரமில்லை ஆறுதலாய் யோசி.
3 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 17
களவு போன கனவு
ச.ஜெயபாலன், நெடுந்தீவு
வறுமையே மல்லுக்கட்டி தோற்றுப் போனது உன் அழகைக் கண்டு என் நினைவுகள் உனக்கென உயில் எழுதப்பட்டவையா கடிகார முட்களாய் உன்னைச் சுற்றியே
கனவுகளில் நீ புன்னகைக்க மறுக்கும் போதெல்லாம் என் விழிகள் அழுது வியர்த்திருக்கிறது
என் வெற்றிகளுக்கு பின்னணி வர்ணமாய் நீ தோல்விகள் மட்டும் வெள்ளைத் தாள்களில் உன்னிடம் இதயத்தை இழந்ததற்காய் வருத்தப்படவில்லை ஏனெனில் என்னிடமிருப்பது உனது இதயம்
இனி ஒரு விதிசெய.
அருளானந்தி விஜயராஜ் அன்புவழிபுரம்
தாவித்திரியும் மனமது தவியாய் ஏங்கித் திகைக்குது திரும்ப நினைக்கும்திசையெலாம் சேதம் தானே தெரியுது வாங்கி வகையாய் உண்டது வசைக்கு என்று தெரியுமோ நேசம் என்று நினைக்கையில் துவேசம் கண்ணில் தெரியுது
நடந்து வந்த பாதையில் தடயம் ஏதும் உள்ளதா? மாரடிக்கும் நெஞ்சங்களின் பாவச்சுமை குறையுதா? கூறிடும் கொள்கைகள் இதுவரை கொண்டு வந்ததென்ன கூறுமே நாறிடும் உலகத்தை மாற்றியே
நாங்களும் ஒருவிதிசெய எழுவமே
32 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

மாதுமையின; “ஒற்றைச்சிலம்பு"
(கவிதைத்தொகுப்பு)
பெரியஐங்கரன் "திறந்திருந்தது என் புத்தகம் தாண்டிச் சென்றவர்கள் நின்று வாசித்தார்கள்"
எங்கிருந்தோ தாழப்பறந்து வந்த பறவை எச்சம் போட்டுப் பறந்தது பறவையைத் துரத்தி வந்த நாயொன்று புத்தகத்தை கெளவிச்சென்றது"
தமிழ் இலக்கியபாட நூலில் இடம்பெற்றுள்ள மாதுமையின் இக் கவிதை படிமங்களும் குறியீடுகளும் கலந்து விளங்கி கற்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. புத்தகம் அசிங்கப் படுவதையும் , பரின் னர் கெளவிச் செல்லப்படுவதையும் இக் கவிதை வேதனையோடு சொல்கின்றது. இங்கு புத்தகம் என்பது படிமம் பலரது வாழ் கி கை அழிக்கப்படுவதையும் , அவஸ்த்தைப்படுத்தப்ப டுவதையும் இப் படிமம் குறிக்கிறது. இங்கு பறவை நாய் என்பன குறியீடுகள்.
இக்கவிதை இடம்பெற்ற "ஒற்றைச் சிலம்பு" இவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். இவரது சிறுகதைத் தொகுதி ஒன்றும் ஏற்கனவே வெளிவந்துள்ளது. 35 கவிதைகள் அடங்கியுள்ள இக்கவிதைத் தொகுதி "உயிர்மை" பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் பெண் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் மாதுமை. இவர் அதிகமான கவிதைகள் எழுதாவிட்டாலும் எழுதிய கவிதைகள் அனைத்தும் காத்திரமானவை கனதியானவை தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருபவை. இவரது கவிதைகள் பெண்ணின் அவலம் சுதந்திரம், காமம், தனிமை ஆணின் அடக்குமுறை, காமப்பசி ஆகியவற்றைப் பெரும்பாலும் பாடுபொருட்களாகக் கொண்டுள்ளன. தாய்நாட்டு யதார்த்தத்தை ஒரிரு கவிதைகள் பிரதிபலிக்கின்றன.
33
நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 18
”அம்மாக்கள் மட்டும் Qigo)LDLJTi 35b560ir உலகத் துயரங்களைச் சுமக்க”
என்று முடிகிறது "இட்படிக்கு அம்மா" என்ற கவிதை ஈழத்திலும் போர் நடக்கும் ஏனைய நாடுகளிலும் தாய்மார்கள் படும் சோகத்தையும் தாகத்தையும் இக்கவிதை வரிக்குவரி படம்பிடிக்கிறது.
"கற்பழிப்புகளின் எண்ணிக்கைக்குள் வராமல் கற்பழிக்க கணவன் என்ற அனுமதிட்பத்திரம் உனக்கு மட்டும் 5,5535 u Tir"
நேரடியாகவே கணவன் மாரைச் சாடுகிறது
"உன்னுள் இருந்த மது போதை ஒருபுறம் காமப்பசி மறுபுறம் இரண்டின் வெளிப்பாட்டினில் நீ புணரும் மிருகமானாய்"
என்ற கவிதை வரிகள் காமவெறியர்களுக்கு பெண் பலிக்கடா ஆக்கப்படுவதை அவமதிக்கிறது.
இவ்வாறு மாலதிமைத்ரி, குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்ற தமிழகப்பெண் கவிஞர்களோடு ஒப்பிடக்கூடிய ஆற்றலும் கவித்துவமும் மாதுமைக்கு உண்டு என்பதில் ஐயமில்லை. ஆனாலும் பெண்களது காமத்தைப் பேசுவதும், ஆண்களது அத்து மீறலை அடக்குவதும் தான் பெண் கவிஞர்களது வேலையோ என்ற மனச்சங்கடத்தையும் மறைக்க முடியவில்லை.
தமிழக கவிஞர் களை விட ஈழத்துக் கவிஞர்களுக்குப் பாடுபொருள் அதிகம். ஈழத்து வாசகர்களுக்கு தமிழகக் கவிஞர்களது
3本 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)
 

கவிதைகளின் போதாமை அல்லது அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணம் இதுதான். இதைப்புரிந்து கொண்டு ஈழத்துக்கவிஞர்களும் புலம்பெயர் கவிஞர்களும் செயற்பட வேண்டும். தமிழகத்துப் பெண் கவிஞர்கள் போலல்லாது ஈழத்துப்பெண் கவிஞர்கள் தம்பார்வையை அகலவிரித்து பாடுபொருள் பரப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும். மாதுமை செய்ய வேண்டியதும் அதுதான் தொடர்பு: த.சிவசுப்பிரமணியம். இல:9 2/3, நெல்சன் பிளேஸ்-கொழும்பு-06 பதிப்பகம் உயிர்மை இந்திய விலை 40;
நீங்களும் எழுதலாம்.
(இருமாத கவிதையிதழ் (இலங்கை) ஓர் அறிமுகம்) பேனா.மனேகரன்.மதுரை
இனமோதல்களால் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் என் அருமை இலங்கைத் தீவினின் கிழக்கு மாகாணத் தலைநகரமான திருகோணமலையில் இருந்து நீங்களும் எழுதலாம்'(தடைகளைத் தகர்த்து - தகவுகளைத் தேடி) - இருமாத கவிதையிதழ் வைகாசி -ஆனி 2008 வாசிக்கக் கிடைத்தது. என் வாலிப வசீகரங்களை மறுபடியும் வாலாயப்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பாக 1972இல் திருகோணமலை இந்துக் கல்லூரியில் நடைபெற்ற எழுத்தாளர் - கலைஞர் மாநாட்டில் நானும் பங்கேற்பாளனாக இருந்தேன்.
இந்த இதழின் படைப்பாளிகளான சபா.ஜெராசா, ஷெல்லிதாசன் ஆகியோருடன் கவிஞர் சில்லையூர் செல்வராசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் புதுவை இரத்தின துரையின் கவிதையை விமர்சிக்கும் நிகழ்வில் நானும் கலந்து கொண்டது இன்னமும் பசுமையாகவே இருக்கிறது. கவிஞர் சில்லையூர் செல்வராசன் அமரரான தகவலுடன் கருத்தாடற் களத்தில் அவருடைய “கற்றால் வருமோ கவித்துவம்" என்ற கட்டுரைக்கான கலாவிஸ்வநாதனின் கட்டுரையை கண்ணி மல்கும் கண்களுடன் தான் வாசித்தேன். இதழின் இன்னொரு கவிஞரான சி.குமாரலிங்கம், இலங்கை வங்கியின் அனுராதபுரக் கிளையில் பணி ஆற்றியவர். என் சமகாலப் படைப்பாளி.இந்த இதழில் சுமார் 30 படைப்பாளிகளின் கவிதைகள், மரபுக் கவிதைகள்,
நீங்களும் எழுதலாம் ??:10-2009 (ஜன -பெப்)

Page 19
புதுக்கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள் என ஒருகவிதைக் கதம்பமாக மணம் கமழ்கிறது. இதழின் வடிவமைப்பு, புதுக்கவிதையின் எழுச்சிக் காலமான எழுபதுகளின் புற்றீசல்கள் போல் புறப்பட்ட கவிதையிதழ்களின் கட்டமைப்பை ஞாபகப்படுத்தியது. கைக்கு அடக்கமாக, கச்சிதமாக இருக்கிறது. ஓராண்டு முடிந்து, இரண்டாம் ஆண்டில் காலடி வைத்திருக்கும் நீங்களும் எழுதலாம்"இருமாத கவிதை இதழ். கவிஞர்கள் விரிவுபடுத்த வேண்டிய பார்வை, பாடுபொருள் பற்றிய பிரகடனத்தை முன்வைத்து
இருப்பது பொருத்தமானதாகும். “பயில்களம்" பகுதியில் மாணவக் கண் மணி களின் கவிதைகளில் இரண்டு கவிதைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் இனப் போரின் அவலத்தையும், வலியையும் கவித்துவத்தோடு வெளிப்படுத்துகிறது
பெரிய ஜங்கரனின் கவிதையில் முரண் கோட்பாடு" கட்டுரை, தமிழக சீரியஸ் சிற்றிதழ்களின் கட்டுரைத் தரத்திற்கு வந்திருக்கிறது.கவிஞர்கள் சுந்தரராமசாமி, விக்ரமாதித்யன், சுகுமாரன் ஆகியோரின் கவிதைகளை மேற்கோள் காட்டி இருப்பது கட்டுரையரின் களத் திற்கு உரமி சேர்த்திருக்கிறது.ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல “நீங்களும் எழுதலாம்"இருமாத கவிதை இதழ் கவிதைக்கான பயில்களம்,பரிசோதனைக் களம், காத்திரத்தின் களம், விளக்கக்களம், விமர்சனக் களம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே
தமிழக இதழ்களில் இலங்கைப் படைப்பாளிகள் தம் படைப்பனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் போல, தமிழக இளம் படைப்பாளிகளும் இதுபோன்ற இலங்கை இதழ்களில் பங்கு கொள்வது பரஸ்பரம் இலக்கிய, கலாசார, சமூகப் பரிவர்த்தனையை முன்னெடுக்கும். தொடர்பு முகவரி: நீங்களும் எழுதலாம், 103/1, திருமால் வீதி, திருகோணமலை, இலங்கை, மின்னஞ்சல்: neenkal (dyahoo.com. இதழாசிரியர் : எஸ்.ஆர்.தனபாலசிங்கத்திற்கு என் வாழ்த்தும் LIFT FIL (Bib.
நன்றி. “இனிய நந்தவனம்"
36 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

மீட்பின் பெயரால்
எஸ்.ஆர். தனபாலசிங்கம்
உறுதியான உடலிருந்தும் உயிர் ஒரு நொடியில் காவு கொள்ளப்படலாம்! அன்றேல். கால்கள் கழற்றுப்படலாம்! கைகள் அகற்றப்படலாம்! ஏன் கைகளும் கால்களும் துண்டற அற்றுப்போகலாம்! நிறைமாதக் கர்ப்பிணியின் இரு கால்களையும் வெட்டியெறியலாம்! புண்களில் தசைகள் அழுகுண்டு புழுக்கள் விளையலாம்! பச்சிளம் பிஞ்சுகளும் படுகாயத்திற்குள்ளாகி ஆதரவற்றுத் தவிக்கலாம்! உடலெங்கும் எரிந்து எவரும் esoluJITGIT figbg) (3LT356Tib உறவுகள் தொலைந்தும் வேலியிடப்பட்டும் 9 (bis(560)6]uj6)Tib
மரங்களை வெட்டிவீழ்த்தும் மனப்பூரிப்பில் கங்கணங் கட்டிக்கொண்டு வேர்களை ஆகாயத்திலும் தேடி அலையலாம்!
முகாம்களைப்பெருக்கி முகவரிகளை அழிக்கலாம்! நச்சுவாயுக்களின் நாற்றத்தில் நாடு பாலைவனமாகலாம்! எச்சங்கள் ஊனமுறுவது என்றென்றும் தொடரலாம்!
ஒவ்வொரு கிளர்விலும் இடப்படும் புள்ளிகளை முற்றுக்கள் என்று எடுப்பார் கை பிள்ளைகள் குதுகலிக்கலாம்!
மீட்பர்களே! நாம் சுமக்கும் சிலுவைகளால் உங்களுக்கு கதிமோட்சம் கிடைக்கட்டும்.
3 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 20
வாசகர் கடிதம்
எந்த நம்பிக்கையுமற்று கரைகின்ற நெருக்கடியான வாழ்வு. எனினும் இந்தக் காலத்தை பதிவு செய்ய வேண்டியதும் நம் பணியே தாங்கள் இப்பணியாற்றுவதும் நமக்கு செயலாற்றத் துணிவைத் தருகிறது. அருமையான முயற்சி. இன்னும், இனிவரும் காலமும் தொடரவேண்டும். அருளானந்தம் சத்தியானந்தம் அரங்காலயா , வவுனியா
“நீங்களும் எழுதலாம்"ஈழத்து இலக்கியப் பரப்பில்
மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருவதையிட்டு
பெருமிதமடைகிறேன்.
கொற்றை பி.கிருஷ்ணானந்தன்.
நீங்கள் அனுப்பிவரும் கவிதை இதழ்கள். கிடைக்கப்பெறுகின்றன நன்றி! “தடைகளைத் தகர்த்து தகவுகளைத் தேடி" உங்கள் இலக் கியப் பயணத் தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! இலங்கையின் இன்றைய இக் கட்டான சூழ்நிலையரில் கவிதைக் காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றிதழைத் தாங்கள் தொடர்ந்தும் வெளிக்கொணர்வது பாராட்டுக்குரியது. பழைய மற்றும் புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைக்கும் வகையில் உங்கள் சஞ்சிகை அமைந்திருக்கின்றது. நிச்சயமாக இச்சஞ்சிகை ஈழத்துக் கவிதை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்பலாம். கவிதை பற்றிய ஆழமான கட்டுரைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அருட்பணியாளர் தமிழ்நேசன் பதிப்பாசிரியர் “மன்னா" பத்திரிகை
உங்களது இருமாத கவிதைஏடு இரண்டு பெற்றேன். பல மாதங்கள் தமிழகத்தில் இருந்ததால் உடன்தொடர்பு கொள்ளமுடியாமல் போனேன். இயல்பிலேயே நான் கவிஞன் அல்லன், இருந்த போதிலும் உங்களது முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும். வாழ்த்த வேண்டும் அந்தவகையில் இனிய பாராட்டுகள்.
மானாமக்கீன் கொழும்பு
38 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

"நீங்களும் எழுதலாம்" 9ம் இதழில் எழுதியிருப்பவர்களை நோக்கினால் இதழின் விலாசம் பரந்துபட்டு வருகிறது என்பதை உணரமுடிகிறது.
9ம் இதழில், அஷ்ரபா நுார்டீன் எழுதிய “புதிய ஆத்திசூடி"கவிதைத் துறையில் புதிய நெத்தியடி தீபச் செல்வனின் “இரவு மரம்" வித்தியாசமான பார்வை. ஏ.எம்.எம். அலியின் துளைக்குள்ளே நுழைதற்குத் துடிப்பு" என்ற அங்கதக் கவிதைக்கு "அச்சாணி" என்று நச்சென்று தலைப்பு இட்டிருந்தால் நன்று. வாகரை வாணனின் “தமிழுக்காக" - கவிதை ஓட்டமும், மொழி அழகும் அருமை! அன்புவழிபுரம் சூசை எட்வேட்டின் “தெருக்குரல்" புதினமான சிரிக்குறள் கவிஞர் அலியின் "உக்கிரப்பார்வை" உண்மையில் ஒரு அக்கறைப் பார்வைதான்.
இது ஒரு கவிதைசார் ஏடு என்பதால், ஆசிரியர் கருத்து, வாசகர் கடிதம் கருத்தாடல் போன்ற தலைப்புகளை விடுத்து புதுமையான நவீன தமிழ்ச்சொற்களை இடலாம். ஆசிரியர் கருத்தை கவிதைநடையில் எழுதலாம். ஆங்கிலத்தில் கவிதை பிரசுரிப்பதை தவிர்க்கலாம் தள அழகு கருதி தலைப்பு மற்றும் விடயங்களுக்கு எழுத்துருக்களை மாற்றலாம். "இருமாத கவிதை இதழ்" என்பதற்கு வேறு ஒரு கருத்தும் உண்டு. எனவே ”துவி மாதக் கவிஇதழ்" என்று குறிப்பிடலாம்.
சில பக்கங்களின் அடியில் சிறிய இடம் மிஞ்சி விடுகிறதே என்பதால் அந்த இடங்களிலெல்லாம் ஆசிரியர் மூக்கை நுழைத்து ஏதோவெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க தேவையில்லை. எல்லா விசயத்தையும், தான் ஒரே பக்கத்தில் சொல்லி விடலாம் இடம் மிஞ்சும் பிரச்சினை கணனியில் இல்லைதானே!
10 வது இதழையும் கொணர்ந்து விட்ட ஆசிரியர் எஸ்.ஆர். தனபாலசிங்கத்திற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது தமிழ் உள்ளத்திற்காகவும், தமிழியல் முயற்சிக்காகவும். தீரன்.ஆர்.எம்.நெளஸாத்-கல்முனை
நீங்களும் எழுதலாம்" கவிதை இதழின் இரண்டு வெளியீடுகள் கிடைத்தன. கவிதை தொடர்பான ஆக்கங்களும் தகவல்களும் உள்ளன. அவை ஆய்வுக்கு உபயோகமாக இருக்கும்.
அன்பு ஜவஹர்ஷா-அனுராதபுரம்
39 நீங்களும் எழுதலாம் -10-2009 (ஜன -பெப்)

Page 21
மூலமும் பெயர்
THE SHEPHER
How Sweet is the Sh From the morn to th He shall follow his S. And his tongue shall
For he hears the lam And he hears the ew He is watchful while for they know when
ஆங்கிலத்தி
(3 Dut" Li6i
மேய்ப்பனின் புல்வெளி உதயம் முதல் அந்தி அவன் அலைகிறான் நாள் பூராக அவன் ம பின் தொடர்கிறான் அவன், நாவில் நிரம்பி மந்தைகள் பற்றிய பு ஆட்டுக்குட்டியின் வஞ் அவன்-செவிமடுக்கிற தாய் மந்தையின் மெ அவன் கேட்கிறான் தன் மேய்ப்பன் அருகில் இருப்பதை அவை அமைதியாக அவன் காவலில் அ
பெயர்ப்பு : வைரமு நன்றி பிளேக் கவிதை
“நீங்களும் எ( 35 GROOT GOf A Du. Li | ஆர்.நித்தியா ( உவர்மலை), அவ அச் சிட்டு உ பதிப்பகத்தினரு எழுதலாம்" த தெரிவித்துக்கொள்
ISSN 1
நீங்களும் எழுதலாம்
 

ப்பும்
epherd's Sweet lot! e evening he strays: heep all the day,
be filled with Praise.
b's innocent call, e's tender reply; they are in Pease, their Shepherd is nigh. ல்: வில்லியம் பிளேக்
எவ்வளவு அழகானது வரை
ந்தைகளை
உள்ளதெல்லாம் கழுரைகளே
சகமில்லா அழைப்பை ான். ன்மையான பதில் குரலை
அறிந்து உள்ளபோதும் க்கறை குறையவில்லை.
த்து சுந்தரேசன் நகள்
ழுதலாம்" இதழை படுத்த உதவிய EDGE NET Cafe ர்களுக்கும் அழகுற த வரிய அஸ் ரா க்கும், “நீங்களும் னது நன்றிகளை கின்றது.
800 - 3311
40
-10-2009 (ஜன -பெப்)