கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2010.07-09

Page 1

ஜூலை-செப்ரெம்பர் 2010
(ஏப்ரல் - ஜூன் 2010 உட்பட)

Page 2
ಫಿ'ಸ್ಲಿಸಿ:
கொஸ்தா அ (அங்கோலா,
புவிமீது யாருமே துன்பங்கொண்டாடாத மான
புதைக்கப்படாது
மாண்டோர் 50,000 பேர்
புவிமீது உளர் - எவருமே துன்பங் கொண்டாடாது.
ஆயிரம் குவேர்னிக்காக்களும்*ஒரொஸ்கோ தூரிகையின் செய்தியும் கடல் போல அகலமானதாக இம் மெளனமு மண்ணெங்கும் பரவுகின்றன.
மழை குருதியாகப் பெய்தது போல முரட்டு மயிர் பல யார் தொலைபடர் 50,000 சாவுகளின் அக் கணத்தில் வாழும் உயிர்கள் அனைத்தையும் வாய்கள் பழியுரைத்தாற் போல
யாருமே துன்பங் கொண்டாடாத மாண்டோர் 50,000 பேர் புவிமீது உளர்.
எவருமிலர்.
அங்கோலாவின் தாய்மார்
தம் மைந்தருடன் வீழ்ந்து பட்டனர்
(* குவேர்னிகா - பிக்காசோவின் புகழ்பெற்ற ஸிக்குவெய்ரோஸ் - மெக்சிகோ நாட்டின் பு

á fé, ܙܘܼܬܵܐ
ண்டோர் 50,000 பேர்
வினதும்* ஸிக்குவெய்ரோஸினதும்*
b
ந்த புல்போல
0 போர் அவல ஓவியம். ஒரொஸ்கோ, கழ்பெற்ற ஒவியர்கள்)

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ் ஏப்ரல் - ஜூன் 2010
இதழ் இல. 78
பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா
அழ. பகரத்ன் ஜெ. சற்குருநாதன் சி. இதயராஜா த. கோபாலகிருஷ்ணன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
கு. மதுராளினி
ஓவியங்கள்
எஸ். டி. சாமி
முன், பின் அட்டைப் புகைப்படங்கள் மலையகம், பங்களாதேஷ்
தொடர்பு : ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில் 021-2223629
L566OTsigob: thayakam 10 yahoo.com
அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011 2432477
விநியோகம் 152 -1/6, ஹல்ற்ஸ்டோப் வீதி, கொழும்பு - 12 Tel O11 23816O3
ଶ୍ରେରjରୀfuj(6 தேசிய கலை இலக்கியப் பேரவை
 
 
 
 
 
 

髻
வரலாற்றுத் தவறுகள் Šju blo 2
இந்த நாட்டின் அரசியல் என்பது இந்தத் தேசத்தினதும், அனைத்தின மக்களதும் சுதந்திரமும், சுபீட்சமும் நிறைந்த வாழ்வுக்கான அரசியலாக இன்றுவரை வளர்த்தெடுக்கப்படவில்லை. சமூக பொருளாதார வாழ்வில் இன்றும் பின்தங்கிய நிலையிலுள்ள சகல இனங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்களே இலங்கையின் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருந்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனால் இன்றுவரை மிகவும் அடிப்படையான உயிர்வாழும் உரிமைக்கான இவர்களது சோகம் நிறைந்த ஒருமித்த குரல்களை அதிகார வர்க்க இனவெறிக் குரல்களுக்குள் பிரித்து அமிழ்த்தி இவர் களை குரலற்றவர்களாகச் செய்யும் இனமேனி மைவாத அரசியலே இலங் கை அரசியலில் இன்று வரை வலுவடைந்துள்ளது.
இதனால் இனங்களின் பெயரைச் சொல்லி, மிக இலகுவாகத் தொடர்ந்து பதவிக்கு வந்த அனைத் தின இனவாத அரசியல் வாதிகள் அனைவரும் தத்தமது பதவி நிலைகளுக்கேற்ப இன்றுவரை அதிகார வர்க்க நலன்களைப் பெற்று அனுபவித்து வருகின்றனர். ஆனால் இவர்களால் தவறாக வழி நடத்தப்பட்டு கூர்மைப்படுத்தப்பட்ட இனவாத அரசியலுக்கு இந்தத் தேசத்து மக்களில் பெரும் எண்ணிக்கையானோர் தமது இரத்தத்தையும், உடல், பொருள், உயிர் அனைத்தையும் இவர்களது நலன்களுக்காக தாரை வார்த்து வந்துள்ளனர். அன்பையும், அகிம்சையையும் போதிக்கும் மதத்தலைவர்கள் கூட இவர்களது பழமைவாத ஆதிக்கக் கருத்தியலுக்கு துணைபோகும் நிலையிலேயே இருந்து வந்துள்ளனர். இதனால் அனைத்து மக்களின் சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த வாழ்வுக்கான மாற்று அரசியலுக்கான சிந்தனை இன்றுவரை மழுங்கடிக்கப்பட்டே வருகிறது.

Page 4
་་་་་་་་་་་་་་་་་་་་་་་།། கல்வயல் குமாரசாமி 05
ਸੰ6l13
நாடகச் சுவடி
ஜெ. சிவ இந்திரன் 12
பக்கங்கள் 13, 1
பின்வரலாற்றியல் தொடர்கதை ஜெகதலப்பிரதாபன் 37
ஆராய்ச்சிமணி
தை
ஷெல்லிதாசன் 11
劃 எல்லண்ணா 18
சடகோபன் 19 ன ஈசுவரன் 33
பெயர்ப்புக் கவிதைகள்
முன் உள் அட்டை ဗျွိမ္ပိ
23, 25, 28, 29
43.
விந்தை மனிதர்
ார் நினைவுகள் | Lă,5b 04
5uast 78
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேரினவாத அரசியலின் தவிர்க்க முடியாத பின்விளைவாக எழுந்த நீண்ட யுத்தத்தின் வெற்றியையே சாதனையாக காட்டி நடந்து முடிந்த இரு தேர்தல்களிலும் அரசு மீண்டும் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் நிறைவேற் று அதிகாரம் கொர்ை ட ஜனாதிபதியாக இவ்வரசுத் தலைவர் மீளவும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். அத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கைப் பெற்று அரசியல் அமைப்பை மாற்றி அமைக்கக் கூடிய அதிகார பலமும் இணைந்து பலம் மிக்க அரசாகவும் இது விளங்குகிறது. இதனால் தேசத் தினதும் , மக் களினதும் சிறந்த எதிர்காலத்துக்கான நன்நோக்கின் அடிப் படையிலும், கொலனித்துவ ஆட்சிக்குப் பிற்பட்ட வரலாற்றுப் பட்டறிவோடும் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நீதியான அரசியற் தீர்வை முன்வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தெடர்ந்த இனவாத அரசியலால் எழுந் த இனக் கலவரங்களாலும் யுத் தங் களாலும் பாதிப்படைந்த இனங்களுக்கிடையேயான நல்லுறவையும், தேசத்தின் ஒருமைப்பாட்டையும் மீளக் கட்டி எழுப்புதல் என்பது அரசின் அதிகார பலத்தாலும், படைபலத்தாலும் உருவாகக் கூடிய ஒன் றல் ல. இந்த நாட் டினி அரசியல்வாதிகளால் தவறாக முன்வைக்கப்பட்ட நீடித்த இன வர்த அரசியல் போக் கால் பலியாக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் உள்ளிட்ட அனைத்தினங்களையும் சேர்ந்த மக்களின் இழப்புக்களும் அவலங்களும் கணிப்பில் எடுக்கப்பட வேண்டும். இம் மக்களின் மனங்களில் பட்ட காயங்கள் தாமாகவோ அல்லது காலத்தாலே ஆறக்கூடியவை அல்ல.
இனி னும் தடுப் பு முகாம் களிலும் சிறைகளிலும் வாடும் பெருந்தொகையான இளைஞர்கள் யுவதிகள் ஒரு தேசத்தின் தவறான அரசியலின் தலைவிதியால் அலைக் கழிக்கப்பட்டவர்கள் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், சட்டவரையறைகளுக்கு அப்பால் மனிதாபிமான நோக்கில் அணுகப்படவேண்டிய விடயங்களாக இவைகள் உள்ளன. இன்றைய நிலைக்கு இலங்கையை இட்டு வந்த அதன் கடந்தகால அரசியல் வரலாற்றின் தவறான பக்கங்கள்
ஏப்ரல் ஜூன் 200

Page 5
நடுநிலையோடு திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். கொலனித்துவத்திற்குப் பின்னர் ஏற்பட்ட ஜனநாயக மக்களாட்சி - முறையை மன்னராட்சிக்கால அதிகாரங்களுடன் முடிச்சுப் போட்டு முன்னெடுக்க முனைந்தமையே இப்பேரழிவுக்குக் காரணம் என்பது அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட வேண்டும். பண்ணை அடிமைக்கால பழமைவாத அறியாமை இருளுக்குள் மக்களின் சிந்தனையை அமிழ்த்தி வைத்தபடி ஜனநாயக அரசியலின் ஆரம்பப் படியில் கூட இலங்கை மக்களை கால்பதிக்க வைக்க இந்த அரசால் முடியாது.
தமது தேர்தல் கால அரசியல் முழக் கங்களில் ஜனாதிபதி ராஜபக்ச ' ஒரேநாடு ஒரே இனம்’ என்பதை அடிக்கடி கூறி வந்தார். வடபகுதி உட்பட நாட்டின் பலபாகங்களிலும் விளம்பர எழுத்துக்களிலும் பெரிதாக இந்த வாசகம்
சூளும் இருளும் 6
ਉof நடக் க இருப் பன மேலும் ஆபத்தானவை. ஒரு குடும்பம் இந்த நாட்டின் ஆட்சித் தலைமையில் தன்னை நிரந்தரமாக நிலை நிறுத்தக் கடுமையாக முயலுகிறது. அதற்கு வாய்ப்பான முறையில் இப்போதைய சூழல் உள்ளதால் அதிகாரத்தில் உள்ள சனாதிபதி மேலும் இரண்டு தவணைகட்கு அல்லது மேலாக கட்சியில் தொடரவும் அவருக்குப் பின் அவரது குடும்ப வாரிசு தொடரவும் அரசியலமைப்புச் சட்டம் வழி செய்வதாக அவசரப்படுகிறார். அதை விட நீதி நிருவாகம், சட்ட நடைமுறையாக்கம், பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட குழுவே ஆதிக்கம் செலுத்துகிற சூழ்நிலையும் உருவாகி வருகிறது.
இதன் விளைவாக இந்த நாடு ஒரு கட்டத்தில் பர்மா இன்று உள்ளது போன்ற நிலைக்கோ ஒரு காலம் தென்கொரியா இருந்து வந்த நிலைக்கோ கீழிறங்கலாம். அதைத் தடுக்கும் முயற்சிகள் மிக அவசியமானவை. அவை இல் லாமல் இந்த நாட்டை ஒரு ஃபாசிச சர்வதிகாரக் காரிருளிலிருந்து காப்பாற்ற இயலாது.
C

பொறிக்கப்பட்டும் உள்ளது. இதற்கு இருவகையான அர்த்தங்கள் உண்டு. சில அரசுத் தலைவர்கள் முன்பு குறிப்பிட்டதைப் போன்று பெரும்பான்மை இனத்தை மரமாகவும் ஏனைய சிறுபான்மை இனங்களை அதன்மீது படரும் கொடிகளாகவும் கருதுகின்ற பார்வை ஒன்று. அதே வேளை நாட்டு மக்கள் அனைவரையும் சாதி, இன, மொழி, மத பேதங்கள் யாவுமற்று மனித இனத்தவராகவே கருதி அவர்களது உரிமைகளை சமத்துவமாக மதிக்கின்ற உயர்ந்த மனிதநேயப் பார்வை இன்னொன்று. தேர்தல்களுக்கூடாகப் பெற்றிருக்கும் அதிகார பலத்தை இவற்றில் எந்த அர்த்தத்தின் இலக்கை நிறைவேற்ற இந்த அரசு செயற்படப் போகின்றது என்பதில்தான் நாட்டின் எதிர்காலமும் மக்களின் சுதந்திரமும் சுபீட் சமும் நிறைந்த நல்வாழ்வும் தங்கியுள்ளது.
- ஆசிரியர் குழு -
ரியும் ஒளிக் கீற்றும்
இந்த நிலையில், நாம் தமிழ் மக்கள்,
குறிப்பாக வடக்கின் தமிழ் மக்கள், பாராளுமன்றக்
கட்சிகள் மீதான மனவெறுப்பை அடுத்தடுத்து
வெளிகாட் டியுள் ளதை ஒரு நம் பிக் கை ஒளிக்கிற்றாக நோக்க இயலும்.
தமிழ் மக்கள் பாராளுமன்ற மூலமே தமிழ் அரசியற் கட்சிகள் யாரிடமும் கெஞ்சி இரந்துமோ தமது அவலத்தினின்று மீள இயலாது என்பதையும் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு நிச்சயமாகப் பாராளுமன்றம் மூலம் தீராது என்பதையும் உணரத் தொடங்கி விட்டனர். இது ஒரு பலவீனமான ஆனால் நிச்சயமான ஒரு நல்ல தொடக்கம். தாம் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதைத் தமிழ் மக்கள் நன்குணர்ந்து ஒடுக்கப்பட்ட பிற மக்களுடன் இணைந்து தமது மீட்சிக்கும் முழு நாட்டினது மீட்சிக்குமான வியூகங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அந்தப் பணியில் கலை இலக்கியங்கட்கும் அரங்கக்கலைகட்கும் பண்பாட்டுப் பரிமாறல்கட்கும் ஒரு பெரிய பங்குண்டு. அவை பற்றி நாம் ஆழச் சிந்திப்போமாக.
- ஆசிரியர் குழு -

Page 6
நீத்தார் நினைவுகள்
நாடகத் துறைக்குப் பெரும் பங்காற்றி மக்கள் களரி என்ற அமைப்பினுTடு தமிழ்-சிங்களக் கலைஞர்கட்கு நாடகப் பயிற்சி வழங்கி சகல தேசிய இனங்கட்குமிடையில் நட்புறவுப் பாலமாக விளங்கிய எச்.ஏ. பெரேரா அவர்கள் தேசிய கலை இலக்கியப் பேரவையில் நாடகப் பயிற்சிகட்கும் மிகவும் உதவியவர் ஆவார். அவரது மறைவையொட்டித் தாயகம் தனது ஆழ்ந்த மன வருத்தத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிறுவயதிலிருந்தே தமிழ் நாடக, சினிமா துறைகளில் தொடர்ச்சியாக நீண்டகாலப் பணியாற்றிப் பெரும் பங்களித்த கலைச்செல்வி ஆர். மணிமேகலை அவர்கள் தேசிய கலை இலக்கிய பேரவையின் நாடகம் முயற்சிகட்கும் பெரும் உதவி வழங்கியவர் ஆவார். அவரது மறைவையொட்டித் தாயகம் தனது ஆழ்ந்த மனவருத்தத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
G4
 
 

பன்முக ஆற்றல் கொண்டவரும் நாடகம், ஒவியம், தமிழ்ச் சினிமா உட்பட்ட பலதுறைகளிலும் தனது ஆளுமையைப் புலப்படுத்திய சிறந்த இசைக்கலைஞரான ஹீதர் பிச்சையப்பா தேசிய கலை இலக்கியப் பேரவையின் நாடக, புத்தகப் பண்பாட்டு முயற்சிகளை ஆதரித்து ஊக்குவித்தவர் ஆவார். அவரது மறைவையொட்டித் தாயகம் தனது ஆழ்ந்த மனவருத்தத்தையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
(אר 9b(r\VAV3>V22
O 6) IT8F851J 6) LL files GT தாயகம் வாசகர் களை ஒன்றினைப் பதற்காகவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளிப் படுத் தி பரந்தளவில் தாயகம் சஞ சரிகையைப் பரிர பலி யப் படுத் தவும் எழுத்தாளர் களையும் வாசகர் களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட் டங் களை அமைக் கவும் அவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்தவும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
ஆசிரியர் குழு . പ്ര - ܓܠ
ஏப்ரல் ஜூன் 2010

Page 7
கவிதை
சிறு பிள்ளை போல மறுபடியும் மறுபடியும் மறுபடியும் வெறு வயிறு அழுகிறது கறி சோறு காணக் கவலையோ காட்டுப் பசியோ? கம்பி முள் வேலிக் கரை ஓரம் கால் கடுக்க நின்று விறைப்பேறி நினையா நினைப்போ ஒன்றும் புரியா நிலையில் கண்ணில் கவலைகளை மண்ணில் சிதறுண்டு புண்ணாகிப் பூரான் கடியாய் அடி வயிறு
நிவாரணத்துக்காக நீள் வரிசை நிற்கையிலே வாயற்ற அந்த வயிறும் அழுகிறது எண்ணெய்க் கொதியில் எரிக் குஞ்சு வீழ்ந்தாற் போல் உண்ணத் துடி துடித்து வார்த்தை உருவமற்று சின்ன வயிறு சிரமப் படுத்துகுது ust 6 Lib
அறியாப் பருவத்துக்கு இரைக் குஞ்சாய்க் காவு கொள்ளப் பட்டோர் கணக்கை நினைப்போமா
bll DGITHDT bll DIII
C
 

ங்
*琶
愛る 绛、 ፴/; D ཉི་ Y As
A N/》
罗
$)
உள்ளடங்கித் தீரும் நொடிகள்
திகைப்பும் திசை தெரியா மெளன மொழி - மெளனம் ஒழி மரணத் தறுவாயின் கவனம் கவனமென
காற்றும் எதிரொலிக்கும்
மெளனம் ஒளி மெளன மொழி மனித அவலத்தின் மெளன உறுதி மொழி மெளன இறுதி மொழி குட்டைக் குளத்து u65 560 ITU குஞ்சு குருமன் குமர் இளசு கிழங்கள் புவனி புதிர்பார்க்கப் போயிற்றே நஞ்சிரண்டும்
ஏப்ரல் ஜூன் 200

Page 8
சிறுகதை
6596) S 11(1936 ĝ
முள்ளுக் கம்பி வேலிக்குள்ளே சிறை 6ை இந்த அகதி முகாம் வாழ்க்கை வேலுப்பிள்ளைக்கு போச்சு. இந்த வயசு போன காலத்தில தன்ர ே பாத்துப் பராமரிச்சுக் கொண்டிருந்த வளர்ந்த ஒரு ஒருத்தியும் வன்னிப் பக்கம் விழுந்த செல்லடியில கழு: அந்த அதிர்ச்சியில உறைஞ்ச ரெத்தம் இப்பவும் கு நெஞ்சில ஒட்டின மாதிரிக் கிடக்கு.
இன்னும் தனக்கு என்னென்ன சூறாவளி இப் எண்டதுதான் இதுக்குள்ள நாளும் பகலுமா அவரு Ց56)16Ն):
இந்தப் பத்தடித் தறப்பாழ்க் கூட்டுக்கிள்ள விெ தங்கட சீவியத்த நினைச்சு நினைச்சு அழுகாத ச6 அழுகிற சத்தமும் கேக்குது அவருக்கும் சிலதுக ஒப்பாரிகளும் விழுகுது அவருக்குக் காதில
உயிருக்குப் பயந்து ஓடி ஒடித் திரிஞ்சு மெ போன சனங்கள் தான் இதுக்கிளயா இப்ப இருக் வருத்தம் வந்து கோழி பொம்மிக் கொண்டு திரிஞ்சு இந்த அகதி முகாமுக்கயும் வன்னிச் சனங்கள் வருத் போன அந்த மனுசரப் பாத்துக் கொண்டு இதுக்கு பேச்சு, மூச்சேயில்லாமல் கவலையோட கிடக்குதுகள் ஆள் செத்த அடையாளமே இல்லை. காம்புக்கு கொண்டு போயிற்றாங்கள் செத்துப் போன பிணத்த
"தானாடாவிட்டாலும் தன்ரை தசை ஆடுமென
தன் ஊர்ச் சனம் இப்பிடி ஆடு மாடு வேலுப்பிள்ளைக்கும் மனசப் போட்டுப் பிழிஞ்செடுக்கி எண்டாலும் இந்த அணியாயமெல்லாம் அந்தக் கடவுளு இதுக்கொரு நீதியக் கேக்க வேண்டுமெண்டு போட் பேசாமல் இருந்து கொள்ளுறார்.
இண்டைக்கு மங்கலாயிருந்த மத்தியான மாதிரியாக் கறுத்து இறங்கிக் கீழ வந்த மாதிரிக் கோலம்? நாங்க இருக்கிற கேட்டுக்கு மழையும் வந் எண்டு சனங்களெல்லாம் வெட்டுக்கிளிக் கூட்டம் ம வானத்தையே பரிதாபமாப் பாத்துக் கொண்டிருக்குது வெள்ளம் நிண்டமாதிரி சேறாப் போனா தட்டத் தை மனுசர் இருக்கேலாது படுக்கேலாது மாதிரியா உ வேற எங்கயும் இதுக்க ஒதுங்கி நிக்க ஒழுங்கா ஒ காய்ச்சல் எண்டு கிடக்கிறதுகள் இதுகளுக்க பிறகு படு நனைஞ்சாப் பிறகு சன்னியாக்கியும் போடுமே?
தாயகம் 78
 

() O A 6ůLVý
பக்கப்பட்டது போலக் கிடக்கிற இப்பவாச் சரியான சோகமாகிப் தப்பனுக்குத் தேப்பனா அவரப் குமர்ப் பிள்ளையான அந்த ந்தறுந்து செத்துப் போயிட்டாளே. ங்குமக்கட்டி மாதிரி இவரிண்ட
படியா வந்து சுத்தப் போகுதோ? க்கு இருக்கிற பெரிய்ய மனக்
க்கைக்குள்ள கிடந்து கொண்டு னம் பாக்கியில்ல. எல்லாரிண்ட ள் அழுதழுது சொல்லியழுகிற
லிஞ்சு உசிர் வத்தின மாதிரிப் கிற சனங்கள். தொற்றுநோய் செத்துப் போற கணக்காத்தான் தம் வந்து சாகுதுகள். பிணமாப் ள்ள உசிரோட இருக்கிறதுகள் ர். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தள்ள பிணத்த விடுவாங்களே?
ତ୍ରି
Ε
Ds
ண்டு சொல்லுவாங்களேயப்பா.”
கள் செத்த மாதிரிச் சாக, ற மாதிரிப் பெரிய கவலைதான்! க்குத் தான் தெரியும் அவர்தான் டு அவர் மனம் கொறிச்சாலும்
த்துக்குப் பிறகு மேகம் ஒரு
கிடக்கு. ‘இதென்னப்பா இது து பிளந்து கட்டப் போகுதோ?” திரி குமிஞ்சு நிண்டு கொண்டு 5ள். மழை பெஞ்சு பள்ளத்துக்க ரயிலையும் இதுக்கிளயெல்லாம் ர்ளதும் போயிடுமே. மழைக்கு இடமுமில்லையே? தலைவலி த்துக் கிடக்கேலுமே? மழையிக்க
ஏப்ரல் ஜூன் 200

Page 9
சிறுகதை
* ஆண் டவனே ஆணி ட எண்டு மேகத்த விரட்டி அடிக்கிற மாதிரியா அதுகளெல்லாம் சொல்லித் தவிச்சுக் கொண்டு நிண்டாலும் மேகங்களொண்டும் கலைஞ சு போகேல் ல. அதக் கலைச்சு விடுறதுக்குக் காத்தும் ஒழுங்கா வீசேல் ல. எங் கயும் ஒழிஞ்சு ஒட்டமா ஓடாத கணக்கில அடிச் சுக் கொண் டு இறங் கி வந்திட்டுது. பேந்து கடகடவெண்டு கொட்டுற பெரிய மழை. இந்த G 6 | Li L- வெளியான 6 (b. இடத்திலயா மழையும் காத்தும் ஆதிக்கம் செலுத்தினா எப்படி யிருக்கும்? அதையெல்லாம் வாயால எப்பிடிச் சொல்லேலும்? தாய்மா ரெல் லாம் அழுகிற கண் ணக் கசக்கிக் கொண்டு பிள்ளையளத் தூக்கி வைச்சுக் கொண்டு தார்ச் சீலைக் கொட்டிலுக்க நடுங்கிக் கொண்டு நிக்குதுகள், வகுத்துப் பிள்ளைக்காறியள் ஈரக்குலையை அறுக்கிய நனைஞ் ச அந்தக் குளிரோட கிடந்து நடுங் கிக் கொண்டிருக் குதுகள் அரைப் பிள்ளையை வகுத்துக்க வைச்சுக் கொண்டு இப்பிடியா அதுகளுக்கு ஒரு கஷ்டம், நனைஞ்ச வயிறு தெரியுதேண்டு சீலைய இழுத்து மறைச்சுக் கொண்டு அந்தப் பிள்ளை நிக்குது பாவம், முதல் அடிக்காத காத்து இப்ப சுளிர் சுளிரெண்டு சுழட்டிச் சுழட்டி அங்காலையும் இங்காலையுமா பேய் மாதிரி அடிக்குது. உடம்பு தெம்பு பலம் இல்லாம குளிரில நடுங்கினபடி ஆளையாள் பாத்துக் கொண்டு அழுகை அழுகையா வர இப்பிடி ஒரு விதிய எங்கட தலையிலயும் எழுதீட்டியா கடவுளே எண்டு சொல்லி அதுகள் கடவுளையும் திட்டுதுகள். இருக்க ஒரு கூடும் இல்லாத மாதிரியாப் போய் இப்பிடி கஷ்டப்படுகிறமே எண்ட கவலை அதுகளுக்கு! ஆனாலும் இதுக்குள்ள சிலதுகள் கண்ணிரும் வருத்தமுமாய்ப் பட்டு இவ்வளவு நாளும் உறைஞ்ச மாதிரி போனதிலை மனதில வைராக்கியம் முத்தினதாகவும் நிண்டு கொண்டிருக்குதுகள். பழைய கஞ்சியெண்டு எதக்கிடைச்சாலும் பசியப் பிடிச்சு வைச்சுக் கொள்ளுறதுக்கு மளமளவெண்டு குடிச்சுப் போட்டு அதுகள் பேசாம இருக்குதுகள் இப்ப,
(
99
 
 

அடிச்ச காத்து சுத்தி விட்டுப் போன மாதிரிப் போனாப் பிறகு உறைச்சுப் பெஞ்சு கொண்டிருந்த மழையும் நிண்டு போச்சு. வேரோட பிடுங்க இதுக்க ஒழுங்கான மரமில்லாத இந்த இடத்தில விசிறி அடிச்சமாதிரி வீசின கடுங்காத்து தறப்பாள் சீலையளக் கிழிச்சுச் சுருட்டித் தூரவா எறிஞ்சு போட்டுப் பிறகு போட்டுது.
வறுத்தெடுக்கிற வெயிலுக்க வேர்த்து விறுவிறுக்கக் கிடந்து இந்தக் கூடாரங்களில நாங்க சுக்காக் காஞ்சு போனாலும் பறவாயில்லக் கடவுளே! ஆனா இந்த மழை தப்பியும் இனி வர வேண்டாம். தள்ளியும் இனி வர வேண்டாம். எப்பவுமே வேண்டாம் எண்டு எல்லாச் சனங்களும் வாயால சொல்லிக் கொள்ளுதுகள். மழையில நனை ஞ் சு குளிர் காய் ச் சலி , மார்ச் சளி பிடிச்சதுகளெல்லாம் முகாமுக்குள்ள நடத்திற வைத்திய சிகிச்சைப் பிரிவுக்குப் போகுதுகள் மருந்து வாங்க ஊரில அங்க வன்னிப் பக்கம் இருக்கேக்க சுண்டு வலி, முதுகுவலி கூட வந்ததில்லச் சிலதுகளுக்கு. இப்ப இதுக்க கிடந்து
ஏப்ரல் ஜூன் 2010

Page 10
சிறுகதை
படுறபாட்டில மாரில நெஞ்சுவலி எண்டு கொண்டு மருந்தெடுக்கப் போகுதுகள் கியூவில.
வேலுப்பிள்ளைக்கும் நெஞ்சில கொஞ்சம் சளி வருத்தம் தான். அகதி முகாமில இருக்கிற சனங்களெல் லாத்தையும் ஒண்டா உரிமை கொண்டாடுற வருத்தம் இந்தச் சளிவருத்தம் தான். அது வேலுப்பிள்ளைக் கிழவரையும் பிடிக்காம சும்மா விட்டுடுமா? அவரும் நெஞ்சுச் சளியைக் காறிக் காறி ஒரு எத்து எத்தி வேலிப் பக்கமாய்ப் போய்த் துப்பி விட்டுப் பேந்து மூலையெல்லாம் இடமில்லாம ஊத்தை பிடிச்ச வேட்டிய மடிச்சுக் கட்டிக் கொண்டு, உள்ளே சேற்றுப் பகுதி இடமெல்லாம் அங்காலயும் இங்காலயுமாக நடந்து கொண்டிருக்கிறார்.
பூமி குளிரப் பெய்த அந்த மழையோட அவருக்கு இப்பவாத் தன்ரை வயல் ஞாபகம் ஊர் ஞாபகம் வந்திட்டுது. கண்ணுக்கெட்டின தூரம் மட்டும் பறந்து கொண்டிருக்கும் காக்கா குருவியள அதுக்குள்ளயா நடந்தபடி வெறிச்சு வெறிச்சு உத்துப் பார்த்துக் கொண்டு அதையே அவர் யோசிக்கிறார்.
தான் விதைச்ச நெல்லு வெள்ளாமைக் காடுகள் பிணம் எரிக்கிற சுடுகாடு மாதிரி இண்டைக்கு ஆகிப் போச்சே எண்டுற கவலையள் இருதயக் கூட்டில அவருக்கு. நாத்து நட்டாப் பிறகு நிறுத்தி வைச்ச மாதிரி தளதளவெண்டு மலர்ந்து மலர்ந்து பச்சப் பசுமையாயெல்லே அந்த அவற்ற வயல் முழுக்கவாப் பாக்க இருக்கும். அந்தப் பயிர் முளைச்ச வயல்களப் பாக்கப் பாக்க அவருக்கு எவெளவு ஆச. ஆச! அந்த விதைச்ச வயலுகள் ஒழுங்கா விளைஞ்சு பிறகு வீடு வந்து சேந்திட்டா ஆறாள் பத்தாள் கூட அவரிண்ட வீட்டில வருசம் முழுக்க இருந்து சாப்பிட்டுத் திண் ணயில படுக்கேலுமே.
வீட்டில நிக்கிற அவரிண்ட பசுக்களும் நாம்பன்களும் தலையைத் தூக்கிப் பாக்காமத் திண்டு கொண்டிருக்கிற அளவுக்கு வைக்கோலும் பிறகு கிடக்குமே வளவுக்க. கோவணத்தை இறுக்கிப் பின் அருணாக் கொடியில செருகிக் கொண்டு இவ்வளவு நாள் வயலுக்க நிண்டு தனியவாக் கஷ்டப்பட்டதெல்லாம் அவருக்குப் பிறகு கொஞ்ச நாளுக்கு அப்பவா இல்லாமப் போயிடுமே.
Gfu6ö 78
 

/ 2^Veva ཡོད།༽
சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு - e5UT 300.00 இரண்டு ஆண்டு - ரூபா 500.00 மூன்று ஆண்டு - ரூபா 900.00
85 60 LT
ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்பவுன் 20.00
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு - ஈரோ 10.00
இரண்டு ஆண்டு - ஈரோ 20.00
மூன்று ஆண்டு - ஈரோ 30.00
அவுஸ்திரேலியா
ஒரு ஆண்டு - டொலர் 20.00
இரண்டு ஆண்டு - டொலர் 40.00
மூன்று ஆண்டு - டொலர் 60.00 ノ
அதுக் குப் பிறகெல லாம் அவர் எப்பிடியாயெல்லாம் நல்ல சந்தோஷமா வீட்டில நிம்மதியா சீவியத்தப் போக்காட்டுவார். நல்லா சாப்பிட்டுக் குடிச்சு ஒரு அலுப்பு வந்தா பகலிலயும் அவர் படுத்துக் கொள்ளுவார். பொழுதுபட்டா மேல் நனைஞ்சு குளிர தண்ணியூத்திக் குளிச்சு அது முடிய வீட்டுத் திண்ணையில அவர் கால் நீட்டி உக்காந்து கொண்டு புத்தகமும் படிப்பார்.
இப்படியா அங்கினேக்க வாழ்ந்து எல்லாச் சுகத்தையும் அனுபவிச்சவர் தானே அவர்.
ஆனா அவர் உழுத அந்த வயல்கள் உள்ள பூமிக்கிளயெல்லாம் பிறகு மனித இரத்தம் கடுஞ் சிவப்பாக் கசியுமெண்டு அவர் கனவில கூடக் கண் டாரா? யுத்தம் எண் டு ஒண் டு வருகிறதா லதான் விபரமொண்டும் அறியாத அப்பாவியான சனங்களிண்ட சீவியங்களெல்லாம் பாழாய்ப் போறது எண்டு அப்பிடியெல்லாம் அங்க நடந்த பிறகால தானே அவர் தன்ர அனுபவத்தில
) ஏப்ரல் ஜூனர் 200

Page 11
சிறுகதை
கண்டு கொண்டார். இந்த வேதனையான காட்சிகளையெல்லாம் பிறகு அவர் கண்டு கொண்டபடியாலதானே அவர் நெஞ்சப் பிடிச்சுக் கொண்டு அப் படியெல் லாம் யோசிக் கத் தொடங்கினார்.
காடுகரையெல்லாம் அங்கங்க ஊடுருவி ஆமி வருகுது எண்டு சொல்லிக் கொண்டு கையில எடுக்கக் கூடியதுகள சனம் எடுத்துக் கொண்டு தங்களக் குப்பை கூட்டித் தள்ளின மாதிரியா ஒட, அவரும்தான் அதுகளுக்குப் பின்னாலேயே அந்த நேரம் ஒட்டமும் நடையுமாய் ஓடினார். களைக் கொத்தெடுத்து சுரண்டியெறிற மாதிரியா அப்பதான் அவர் தன்ர வீடு வாசலாலே வெளிக்கிடுத்தி விடப்பட்டார். முழங்கால் தண்ணிருக்கையும் இடுப்பளவு கழுத்தளவு தண்ணிக்கு மேலயும் இறங்கி நடந்து கரையேற அவர் என்ன மாதிரியான பாடெல்லாம் அப்ப பட்டார். பூமியும் பிழைப்பும் அப்பத்தைய அந்த நாளோடு தானே அவருக்குப் பாழாய்ப் போன மாதிரி அழிஞ்சு போச்சுது.
மூண்டு அறையாத் தடுத்திருக்கக் கட்டி வைச்ச பெரிய கல்வீடெல்லே அவருண்ட வீடு. அவர் சிறுகச் சிறுகக் கட்டிக் கட்டிப் பெரிசாக்கின வீடு அந்தக் கல் வீடு. உள் வீட்டு அறைக் கதவிலயிருந்து எல்லா அறைக்கதவுகளுக்கும் அவர் போட்டிருந்த பலக திறம் வேப்பம் பலக.
பிணி கதவத் திறந்தா செடி செத்தையெல்லாம் செருக்கி அவர் வைச்சிருந்த திறந்த வெளியால இருந்து குப்பெண்டு அடிச்ச மாதிரி அறைக்கிளயா நல்ல காத்து வரும். வளவைச் சுற்றி முள்ளுக்கம்பி அடிச்சு கிளுவையும் கறி முருங்கையும் அது வழிய போட்டதான அந்த உயிர் வேலியோட வீட்டுக்கும் அது நல்ல ஒரு மறைப்புத் தானே!
அதெல்லாம் இப்ப அங்கினேக் கயா இருக்குமோ இல்லையோ? எல்லாம் துலைஞ்சது மாதிரி இப்ப அந்த வீடும் செல்லடியில தாறுமாறாச் சிதறிப் போயிருக்குமோ? நினைக்க நெஞ்சுக் கதவை அடைக்கிற மாதிரி வருகுது அவருக்குச் சோகம். அந்தச் சோகத்த மனத்தில இருந்து விலக்கிக் கொள்ளாத அளவுக்கு அவருக்குக் கண்ணிரும் இப்ப வருகுதே.
கண்ணால இருந்து நீர் சொட்டச் சொட்ட அவர் அந்த முள்ளுக்கம்பி வேலிக்கு வெளியாலே
(

நூல் : பூங்காவனம் (சஞ்சிகை) GalafiG : Best Queen Foundation விலை: ரூபா 80/-
པ་2"-༡H : 0775,009222, 07.19200580
s
நூல் : முக்கூடல் (சிறுகதைகள்) ஆசிரியர் : க. சட்டநாதன் பதிப்பு : மீரா பதிப்பகம்
விலை: ரூபா 300/- 一ノ ܢܠ
நூல் : மறுபாதி
(கவிதைக்கான காலாண்டிதழ்)
ஆசிரியர் : சித்தாந்தன்
தொடர்பு : அரசடி வீதி, கோண்டாவில்
வடக்கு, யாழ்ப்பாணம்
ད། དེ་ཙམ་མ་ ரூபா 30/-
ஏப்ரல் ஜூன் 200

Page 12
சிறுகதை
துரவாய்ப் புல் மேய்ஞ்சு கொண்டிருக்கிற மாடுகளப் பாக்கிறார். தன்ர வீட்டு மாடு கண்டுகளிண்ட நினைவுகள் இப்ப சூடுபிடிக்கவாப் புத்தியில அவருக்கு ஓங்கி உறைக்குது. அவர் வீட்டை விட்டு வெளிக்கிட்டு புத்தி தடுமாற்றத்தில ஓடின அண்டைக்குப் பட்டியில அடைச்சுக் கிடந்த பசு மாடு கண்டுகளையும் வெளியால போக விடவா அவர் திறந்து விடேல்லையே?
ஷெல் அடி விழ விழ அந்தப் பசு மாடு கண்டுகள் அதுக்க கிடந்து என்னா கத்துத் கத்திச்சுதோ பாவங்கள். அதுகளப் பட்டியில இருந்து அவிட்டுக் கலைச்சு விடாத பழிபாவம் தான் இப்ப எனக்கு வந்து இப்பிடி முள்வேலிக் கூட்டுக் கிள் ள கிடந்து கஷ் டப் படுறதா ஆயிட்டுதோ?
இந்த எல்லாக் கவலையளும் அவருக்குத் தொண்டைக் குழியில நிக்கிறமாதிரித் தட்டிக் கொண்டு நிக்குது. ஆனாலும் தன்ர கவலயள உசத்திப் பிடிச்சுக் கொண்டு, ஆருக்கு அவர் இதுகளைச் சொல்லி இங்க அழலாம்? இளந்தாரி வயசுக்கு ஏற்ற வளத்தியில்லாமல் குரும்பையா இருக்கிற பெடியள் பெட்டையள இதுக்கிள்ள வாறவங்கள் சிலபேர் உருட்டி உருட்டிப் பாத்துப் போட்டுக் கூட்டிக் கொண்டு போயிடுறாங்கள். அப்பிடியா ஒரு இழவு வீடாவே சீச்சி எண்டு சொல்லுற அளவுக்கு அந்த அகதி முகாம் இருக்கு. இதையெல்லாம் பாத்து நெஞ்சில காரமுள்ளும் சூரமுள்ளும் கள்ளிமுள்ளும் சேர்ந்து ஒண்டாக் குத்தினது மாதிரி சனங்கள் வேதனையில கிடந்து வதைபட்டுக் கொண்டிருக்குதுகள். தங்கட பிள்ளயஸ் பலிக்கடாவாப் போயிருங்களோ எண்டு நினைச்சு சில தாய் தேப்பன் கிடந்து அழுது புலம் பினபடி இருக் குதுகள் . இப் பிடியான அதுகளிண்ட பெரிய பெரிய துன்பக் கதையஞக்க இவர் தன்ர கதையை ஆருக்கும் சொல்ல வெளிக்கிட்டால் அதையெல்லாம் ஆர்தான் தங்கட காதுகளில பெரிசா இதுக்குள்ள எடுக்குங்கள்.
இந்தக் கடசி யுத்தம் குடுத்து விட்டுப் போன கொடுமையளப் பாத்தா அதில தங்கட அப்பன் செத்துப் போட்டானெண்டு சிலதுகள் சொல் லி அழுகிறதா யிருக் குதுகள் . சில பொம்பிளயஸ் கட்டினவன் செத்துக் போயிட்டான் எண்டு செத்த சவம் மாதிரித் திரியுதுகள். தாய் தகப்பன் செத்துப் போச்சு, பிள்ளைகள் செத்துப்
தாயகம் 78
 

மூஞ்சிகள தங்களிண்ட முகத்தில வைச்சுக் கொண்டு சீவிக்கிறதாய் எத்தின சனங்கள் இப்ப இதுக்க இருந்து கொண்டிருக்கிதுகள். இதுகளுக்கெல்லாம் ஆரும் தெம்பு திறம் சொல்லி மனச ஆத்தேலுமே? இதுகளெல்லாம் இழப்புக் குடுத்த அந்த நேரத்தில துடங்கி உசிர் கிழிய ஓங்கிக் கத்திக் கத்தி இப்பவா உடம்பு வழிய உசிர் ஏதும் இல்லாதது மாதிரித் தான் இருந்து கொண்டிருக்குதுகள்.
இதெல்லாம் சில மாதங்களுக்கு முதல் நடந்து முடிஞ்சு துலைஞ்சு கெட்டுப் போச்சுத் தான். ஆனாலும் எப்பத்தைய வருஷத்துக்கும் எங்கட சாதிசனத்தாலும் மறக்கவே முடியாத கதயள் தானே இதுகள் எல்லாம். இனிமேல இந்தச் சனத்துக்குப் பிறக்கப் போற பிள்ளைகளாலும் இது மறக்க முடியாத கதயாத்தான் இதெல்லாம் நெடுகவா இருக்கும் போலப் பாக்கக் கிடக்கு. இதெல்லாம் எங்களுக்கு நடந்தது என்ன விதியோ? என்ன தலையெழுத்தோ? இல்லாட்டி ஆர் செய்து விட்டுப் போன பாவமோ தெரியாது உமியப் புடைச்சுச் சுளகால தள்ளின மாதிரி எல்லாமே தூசியாப் பறந்து போன மாதிரித் தானே உள்ள உசிருகள் உடமைகளெல்லாம் இப்ப இந்தச் சனங்களுக்கு துலைஞ்சு போன கணக்கா ஆச்சு.
இனிமேல இதுக்குள்ளால இருந்து நான் வெளிய வெளிக் கிட்டு என்ர இடத்துக்குப் போனாலும் அங்கின ஆள் இல்லாத ஆனாதிக் காட்டில ஒத்தப் பாதையில நான் தனியப் போற மாதிரித்தானே முடிஞ்சு போகும் போல . இப்பிடியாத் தானே இவங்களெல்லாம் சேந்து எங்களக் குத்திக் குத்தி ரெத்தம் ஒழுக விட்ட மாதிரிச் செய்திருக்கிறாங்கள்.
இந்தக் கெடுவெல்லாம் வந்து கேடு கெட்டதால உண்மையாவே செத்துப் போனா என் ன எண் டது மாதிரித் தானே மனம் எங்களுக்கெல்லாம் இப்ப வெறுப்பா இருக்கு?
ஆனாலும் என்ன எங்களுக்கு ஆர் இப்பிடி கொடுமையள் செய்தாலும் எங்களிட்ட இருக்கிற இந்த மனத்தைரியம் மட்டும் எப்பவுமே எங்களுக்கு இனிக் குறைஞ்சு கெட்டுப் போகாது. நாங்கள் சாப்பிடாமக் கிடந்தாலென்ன, அங்க போயும் எங்களின்ட வயல நாங்கள் உடன உழ ஏலாமக் கிடந்தாலென்ன? பெத்தபிள்ள இல்லாட்டியென்ன?
) ஏப்ரல் ஜூன் 200

Page 13
சிறுகதை
ஒரு பிழைப்பில்லாமப் போனாத் தான் இனியென் துலைஞ்சதாயிருக்கட்டும்.
ஆனாலும் ஒண்டு எங்களிண்ட மனசில நினைப்புகள் எப்பவுமே எங்கட சனத்துக்கு இை இருக்கத்தான் போகுது. நாங்க எந்த இடத்தில சாகவே ஒரு நாளும் சாகாது. என்று அதையெ6 வந்த அழுகை நிற்கவில்லை வேலுப்பிள்ளைக்கு துளிகளின் வழிவை இரண்டு கைகளாலும் அவர் வேளை நெஞ்சுக்குள்ளே அவருக்குச் சுத்தமான கொண்டிருந்தது.
(95.
அடிப்படை ஏதுமற்றதாய் அடிப்படை ஆத்திவாரங்கள் ஆனதால் கோபுரக் கட்டுமானங்கள் குடைசாய்ந்தது. வீடு கட்டப்போய் வெறுந்தரையும் பறிபோய் முழத்துக்கொரு சலவைக் கோபுரம் "புனிதம்’ காப்பதற்காய்.
S = ३.= حوه G• 35 G
வில்லைத் தனதாக்கிக் கொண்டவனுக்கு கிடைத்தாலும் கிடைத்துவிட்டன அசலான அம்புகள் ஏவிய இடத்துக்குச் சென்று எதுவித பேச்சுமின்றி காரியத்தைக் கச்சிதமாய் முடிக்க
வேட்டைக்காரனின் இலக்கைத் தவிர வேறெந்த இலக்கோ இலட்சியமோ தனித்துவமாய் ஏதுமற்ற 9|LDLJ356T 960)6)
தாயகம் 78
 

ன? போய்த்துலைஞ்சதுகள் இனி மேலயா போய்த்
பச்சை குத்திவிட்டுப் போன மாதிரியா உள்ள இந்த அழியவே அழியாமல் ஆயுசு பரியந்தம் மட்டும் இருந்தாலும் அந்த ஞாபகம் எப்பவும் எங்களுக்குச் லாம் நினைக்க நினைக்கத் தன்னிடமிருந்து எழுந்து தன் கண்ணை விட்டுத் தவ்வி வந்த கண்ணிர்த் நடை நடந்து தானே துடைத்தும் கொண்டார். அவ் அக்கினி சுவாலித்து எரிவது போலவும் இருந்து
விழுந்தமானத்துக்கு குறிவைக்க விசுவாசத்தனமான அம்புகள் துணையிருக்க வேட்டைக்கு ஏது பஞ்சம்?
வேட்டைக் காரனுக்குத் தேவை அவ்வப்போது குருதியும் நரமாமிசமும் புனிதம் நிறைந்த சமாதான வேட்டையை உலகில் பறைசாற்ற
பாவம் அம்புகள் அவைகளும் கூட காலாகாலத்தில் (36)IL6OLULITLÜLL6u)TLD)
அதனால்.
எய்தவனிருக்க நாமும் அம்புகளைப் போய். அம்புகளாய் மாறினால் எய்யப்படத்தானே வேண்டும் விடுவானா வேட்டைக்காரன்
ஏப்ரல் ஜூன் 200

Page 14
நாடகச் சுவடி
(வெற்று மேடையின் நடுவிலே ஒரு நாற்காலி. பின்னாலிருந்து ஒரு குரல்)
எல்லோருக்கும் வணக்கம்.
இது என்னுடைய கதை. இவ்வளவு காலமும் 6া 60 தர வழிகள் உங்கள் தரவழிகளினுடைய கதைகளைச் சொல்லிக்
கேட்டிருப்பீர்கள். இது வேறு யாருடைய கதையு
மில்லை. என்னுடைய கதை.
உங்களுக்கு விளங்க வேண் டும் எங்களுக்கும் மானம் மரியாதை விருப்பு வெறுப்பு சுகம் துக்கம் நோக்கள் உளைவுகள் என்று பலவிதமான உணர்வுகள் இருக்கும் என்று.
நான் யார் என்று கேட்கிறீர்கள். இன்னுங் கொஞ்ச நேரம் பொறுங்கள். நான் யார் என்று உங்கள் எல்லாருக்கும் விளங்கும். யாரோ முரட்டுத் தனமாகத் தள்ளிய போது மேடையிலிருந்து சரிந்து விழுந்து விட்டேன். அடி பலமில்லை. என்றாலும் எழும்பி நிற்கக்
வந்து விடுவேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். -
கிறேன். என்னைப் பெற்றவர் அப்போது நாடறிந்த எழுத்தாளர் சுயம்புப் பாவேந்தர். அப்போது அவரை எல்லாரும் அப்பேரால் மட்டுமே அறியுமளவுக்கு அவர் பிரபலமாக இருந்தார். சுயம்பர் என்று எல்லாரும் அவரை நட்புடன் அழைப் பார்கள் . கதைகளும் எழுதுவார். மேடையில் அழகாகக் கதைப் பார். இடையில் நகைச் சுவையாகவும் பேசி எல்லாரையும் சிரிக்கவும் வைப்பார். இதெல்லாம் நான் கேள்விப்பட்ட விடயங்கள்.
இப்போது சுயம்புப் பாவேந்தர் என்றாற் கூட ஒருவருக்கும் தெரியாது. ஏனென்றால் ஒருவரும் இப்போது கவிதை வாசிக்கிறதில்லை - எழுதுகிறவர்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.
தாயகம் 78
கொஞ்சம் நேரமாகிவிட்டது. விரைவாக
என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லு
 
 

லின் தனிமை
அவையிலிருந்து உரத்த ஒரு குரல்: ‘'இப்போது ாந்தப் புத்தகத்தையும் யாரும் வாசிக்கிற தில்லையே! . ஒய்! எப்போது வரப்போகிறீர்?)
வந்து விட்டேன்! வந்து விட்டேன்!
ஒரு பெரிய புத்தகம் இருண்ட நிற ஆடை அணிந்த ஒருவரால் கொண்டு வரப்பட்டு மேடையிலுள்ள நாற்காலியில் அமர்த்தப்படுகிறது. கொண்டு வந்தவர் நாற்காலிக்குப் பின்னால் புத்தகத்தின் மறைவில் அமர்ந்திருக்கிறார். புத்தகத்தின் முகப்பில் பெரிய எழுத்தில் 'சுயம்புப் பாவேந்தரின் போர் ஒடுங்கற் பாடல்கள்’ என்று எழுதப்பட்டுள்ளது).
பின்னணியில் இருந்து ஒரு குரல் மீண்டும் ஒலிக்கிறது)
என்னுடைய பேர் ‘போர் ஒடுங்கற் பாடல்கள்’. இதென்ன பேர் என்று யோசிக் கிறீர்களா? அது தான் சுயம்புப் பாவாணர் எனக்கு வைத்த பேர்.
அவையிலிருந்து ஒரு குரல்) : “எங்கேயிருந்து
கதைக்கிறீர்?’
மறுபடியும் பின்னணியிலிருந்து குரல் ஒலிக்கிறது)
நான் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன் தெரியவில்லையா? நான் ஒரு நூல். இன்னுஞ் ரியாகச் சொல்லுவதென்றால் ஒரு நூலின் பிரதி. ான்னைப் போல இரண்டாயிரம் பேர் ஒரே நாளில் பிறந்தோம். மருத்துவமனையில் இல்லை, ஒரு அச்சகத்தில். எங்கள் எல்லாரையும் ஒவ்வொருவராக ாடுத்துப் பிசிறாகத் தெரிந்த எல்லாவற்றையும் சீவித் துடைத்துத் துப்புரவாக்கி ஐம்பது ஐம்பது பேராகச் சேர்த்துத் தடித்த தாளில் ஒற்றிப் பொதியாக்கி பாகனங்களில் ஏற்றினார்கள். நான் மற்றவர்கள் லரிலும் கொஞ்சம் விசேடமான ஆள்.
அவையிலிருந்து ஒரு குரல்) : “ என்ன மாதிரி விசேடம்? தடித்த மட்டையில் உறை போட்டு ஸலோfேன் தாளால் போர்த்து விட்டார்களா?”
இன்னொரு குரல்) : “ உம்மை மட்டும் ளபளப்பான தாளில் அச்சடித்தார்களா?”
பின்னணியிலிருந்து உரத்த குரல் எழுகிறது)
ஏப்ரல் ஜூன் 200

Page 15
நாடகச் சுவடி
இனியும் சத்தம் போட்டுக் குழப்பினால் நான் எழுந்து போய் விடுவேன்.
(மீண்டும் தணிவான குரல்)
எல்லாரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரித் தான் பிறந்தோம். என்றாலும் எல்லாரும் வேறு வேறு மனைகளுக்கு அனுப்பப்பட்டோம். புறப்பட்ட பிறகு, சிலர் அருகருகாகப் புத்தகக் கடைகளில் கொஞ்சக் காலம் அமர்ந்திருந்தார்கள். சிலர் பெட்டிகளுள் ஒட்டினாற் போல படுத்திருந்தார்கள் என்பதை விட்டால் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே கிடையாது. என்னுடைய விசேடம் என்னவென்றால் சுயம்புப் பாவாணர் வீட்டுக்குப் போன ஐம்பது பேரில் நான் ஒருவன். ஒரு நாட் காலை அவர் எண் னுடய உள்ளுறையில் தன்னுடைய கைப்பட எழுதிய எழுத்துக்கள் என்னைப் புல்லரிக்க வைத்தன.
(புத்தகம் நடுங்குகிறது. புத்தகத்திற்குப் பின்னால் மறைந்திருப்பவர் முன் அட்டையை விரித்து முகப்புப் பக்கத்தை விரிக்கிறார்.)
மெல் ல, மெல் ல . கவனமாக ...! என்னுடைய மூட்டு நோக்கள் என்னைத் திறந்து வாசிக்கிறவர்கட்கு எங்கே விளங்கும்? கீழே விழுகிற நேரம் எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளு வார்கள். அடிபட்ட இடத்தை யார் கவனிக் கிறார்கள்? சிலர் பின்னட்டையும் முன்னட்டையும் முட்டுகிற மாதிரி மடிப்பார்கள். சிலர் பின்னால் வளைத்துச் சுருட்டிப் பிடிப்பார்கள்.
(நாற்காலிக்குப் பின்னால் இருப்பவர் நூலை உயர்த்திப் பிடித்து அவ்வாறு தொடர்ந்து செய்து காட்டுவார்)
ஐயோ! வலிக்கிறது!
உங்களுடைய கை கால்களை யாராவது இப்படிப் பின்னால் மடித்து வளைத்தால் எப்படி இருக்கும்?
சுயம்புப் பாவாணர் அன்று மாலை என்னை ஒரு பிறவுண் பேப்பர் பையில் வைத்து ஜே. ஆர். ஆர். என்று சொல்லப்படுகிறவரின் வீட்டுக்குக் கொண்டு போனார். ஜே. ஆர். ஆர். வீட்டுக்குள் போய் விறாந்தையில் இருந்த நீளக் கதிரையில் அமர முதல் அவர் என்னை ஜே. ஆர். ஆரிடம் ஒப்படைத்தார். ஜே. ஆர். ஆர். பேப்பர் பைக்குள்ளிருந்து என்னை எடுத்து முகப்பைச் சற்றே உற்றுப் பார்த்து விட்டு, 'தாங்ஸ்’ என்றார். பிறகு உள்ளுறையில் எழுதப்பட்டதை மனதுக்குள்
C

போர் நடந்த மண்ணில் மக்கள் மீளக் குடியேற இயலாமைக்குத் தக்க காரணம் உண்டு மீளக் குடியேறுவோரின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டி அவர்கள் மண்ணுட் புதையுண்டுள்ள E. உயிராபத்தான பொருட்களை கவனமாக மிகக் கவனமாகத் தோண்டியெடுத்து அழிக்கிறார்கள் கண்ணி வெடிகள் கைக்குண்டுகள் அமுக்க
வெடிகள் இன்னமும் வெடியாத வெடியோடுகள் மறைத்து வைத்த ஆயுதங்கள்.
மேலும் கவனமாக மேலும் மிகக் கவனமாக மனித எலும்புகள் மண்டையோடுகள் இன்னமும் உக்காத உடற் கூறுகள், உடைகள்.
தோண்டியெடுத்து அழிக்கப்படாவிடின்
9/60Ꭰ62/
எந்த வெடி பொருளினும் மிக ஆபத்தானவை
☞ມສ ஒல்லி நாய் உணவு தேடி அலைந்த ஆழமற்ற காண் ஒன்றினுள் மண்டையோடுகளை அறுவடை 68ប់និព្វាgy.
கென் சரொ-விவா (சில ஆண்டுகள் முன் நைஜீரியாவில் தூக்கு மேடையேற்றப்பட்ட கவிஞர்) ノ
3) ஏப்ரல் ஜூன் 200

Page 16
நாடகச் சுவடி
வாசித்தார். ஒரு பெரிய முறுவல் அவருடைய முகத்தை நிறைத்தது.
(திரையின் வலப் புறமிருந்து மெலிதாக ஒரு குரல்)
‘நூலுலகின் நேயமிகு நண்பரும் எங்கள் தமிழ் எழுத்தை எல்லாரும் அறியவென நயந்து விதந்துரைக்கும் நல்லாருமான ஜே. ஆர். ஆர். அவர்கட்கு இனிய நினைவுகளுடனும் நிரந்தரத் தோழமையுடனும் - சுயம்பர்”
(அதே குரல் திரும்பவும் சற்ற உரக்க)
'நூலுலகின் நேயமிகு நண்பரும் எங்கள் தமிழ் எழுத்தை எல்லாரும் அறியவென நயந்து விதந்துரைக்கும் நல்லாருமான ஜே. ஆர். ஆர் அவர் கட்கு இனிய நினைவுகளுடனும் தோழமையுடனும் சுயம்பர்.”
(தொடர்ந்து வழமையான குரலில் ‘கவிதை மாதிரி எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய 'ஏரும் எறிகணையும்” என்ற கவிதையைப் பற்றித் தான் எல்லாரும் சிறப்பாகக் கதைப்பார்கள். அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறதா?”)
(மேடையின் இடது அருகிலிருந்து ஒரு குரல் ) :
* ஏரும் எறிகணையுமல்ல. ' ஏவுகணையும்’
ஏடும்
(வலப்புறமிருந்து குரல் ) :
'ஒமோம். எனக்கு மறதி. கொஞ்சம்
மெத்திக் கொண்டு போகிறது. எத்தனையாம்
L55üb?”
(இடப்புறமிருந்து குரல் ) :
* பதினேழோ பத்தொன்பதோ என்று நினைக்கிறேன்’
(புத்தகம் பினி னா லிருப் பவரால தாள் புரட்டப்படுகிறது.)
(வலப்புறமிருந்து தொனி மாறாத குரலில்) : ' வையத்து மானிடர்கள் வாசித்தறிந்துலகம் உயப் வதற் காய் நாடு தொறும் அறிவுடை நம்மான்றோர்கள் ஆக்கி வைத்த.”
(இடப்புறமிருந்து குரல் ) :
"நான் வாசிக்கவா?”
(வலப்புறமிருந்து குரல் ) :
- G14

ஓமோ மி , வரிகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?”
(இடப்புறமிருந்து பாட்டாக ) :
* வையத்து மானிடர்கள் வாசித்து அறிந்துலகம் உய்வதற்காய் நாடுதொறும் அறிவுடைநம்
ஆன்றோர்கள் ஆக்கிவைத்த நன்னூல் ஏதொன்றும் அறியார்
(3LT6) தீக்கணைகள் நூறெறிந்து மேதினியைத்
தீய்ந்தழிக்கப் பார்க்கின்ற பாவிகளைப் போரிடுவோர்
பாசறைக்கே சேர்த்திடுவோம் பாக்கணைகள் அறவலியும்
சேர்த்திடற்கே’
(வலப்புறமிருந்து குரல் ) :
இதெல் லவோ கவிதை. மிக அருமையான கவிதை, கட்டாயம் இந்தக் கவிதை நூல் பற்றித் தமிழர் சிங்களவர் மட்டுமிலி லை, முழு உலகமும் அறிய வேண்டும்’
(இடப்புறமிருந்து குரல் ) :
'நன்றி. நான் வருகிறேன்’
(பின்னாலிருந்து குரல் மீண்டும் ஒலிக்கிறது)
அந்தச் சந்திப்புக்குப் பின்னர் நான் ஜே. ஆர். ஆர். வீட்டு வரவேற்பறை மேசையில் எல்லார் கண்களிலும் படும்படி இருந்தேன். வருகிற எல்லாரும்.
(நாற்காலிக்குப் பின்னாலிருப்பவர் முகப்புப் பக்கத்துக்குத் திரும்புகிறார்)
மெல்ல. மெல்ல.
தவறாமல் இந் தப் பக்கத் தைப் பார்ப்பார்கள். ஜே. ஆர். ஆரின் முகத்தில் பெருமையுடன் கூடிய முறுவல் படரும்.
பிறகு வேறு புத்தகங்களும் கொஞ்சங் கொஞ்சமாக வரத் தொடங்கி விட்டன. என்னை எடுத்துக் கவனமாகத் தன்னுடைய அலுமாரியில் வைத்து விட்டார்.
என்னைப் பற்றி ஒரு குறிப்பெழுத என்று சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்திருப்பாரே ஒழிய.
D

Page 17
நாடகச் சுவடி
(நாற்காலிக்குப் பின்னாலிருப்பவர் புத்தகத்தை மூடி நாற்காலி மீது வைக்கிறார்.)
அப்பாடா. ஒரு நாளும் ஒவ்வொரு பக்கமாக ஆறுதலாக வாசிக்க என்று என்னை எடுத்துப் பார்த்திருக்க மாட்டார்.
வாசிக்கிறவருடைய கண் வரி வரியாக மேய்ந்து விரல்கள் ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிக் கொண்டு போகிற போது கிடைக்கிற ஆனந்தம் உங்களுக்கு விளங்காது. ஒரு நல்ல நூலைக் கேளுங்கள். சொல்லும்.
எனக் கு அருகாகப் பல நூல் கள் இருந்தாலும் என் னை யாருமே எடுத்துப் பார்க்காததால் எனக்கு ஒரு தனிமை உணர்வு. என்னோடு அலுமாரியில் இருந்த எல்லாருக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
இப்படி இருந்து வந்த காலத்தில் தான் ஒரு நாள் ஜே. ஆர். ஆர் அலுமாரியைத் திறந்து எங்கள் எல்லாரையும் ஒரு காட்போட் பெட்டிக்குள் குவிக்கத் தொடங்கினார். எனக்கு மூட்டு களெல்லாம் நோகத் தொடங்கி விட்டன. அப்போது அவருடை மனைவியார் வந்தார். அவர் என்போல நூல்களை அதிகம் வாசிப்பதில்லை. ஆனாலும் எங்களிடம் இரக்கமானவர். -
(அடுத்து வரும் உரையாடலின் போது புத்தகம் நாற்காலியில் வலமும் இடமுமாகத் திரும்பிப் பார்க்கும்)
(இடதுபுறமிருந்து பெண் குரல் ) :
'இப்போது இவற்றையெல்லாம் என்ன செய்யப் போகிறீர்கள்?’
(வலப்புறமிருந்து ஆண் குரல்) :
' விற்கப் போகிறேன்’
(இடப்புறமிருந்து குரல் ) :
யாருக் கு? Լ1605 էք եւ } காகிதம் வாங்குபவருக்கா?”
(வலப்புறமிருந்து குரல்) :
'இல்லை. பழைய புத்தகக் கடைக்கு”
(இடப்புறமிருந்து குரல் ) :
தாயகம் 78 (

9nwరిరి ཡོད།༽ ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஓவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண் டு பிரசுரிக்கப்படும் . ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Editor, க.தணிகாசலம் Thayakam Tild #152-1/6, ரத මෑ; Hulftsdorp Street, ஆடியபாதம் வதி, Colombo -12 கொக்குவில் T.P. 011,5024358, தொ. பே. 0212223629 011 2381603
പ്ര ܢ ܓܠ
அவர்கள் கிளர்ச்சியாளர்களாகவு அழிவுகாரர்களாயும் ஆடவர் குருதியாலும் பழிப்பானதாலும் நாட்டை நிரப்புவர்.
N
பின்னர் முகவர்களாகவும் சம்மனசுகளாகவும் மீளுவர் சிரித்தும் அழுதும் அறபக கருணைகடகாக
இரந்தவாறு.
季 கென் CJ-పోary ܓ
15)

Page 18
நாடகச் சுவடி
" இதிலே அணி பளிப் பாகத் தந்த புத்தகங்களும் இருக்குமே. அவற்றை எடுத்து வைத்து விட்டீர்களா?”
(வலப்புறமிருந்து குரல்) :
'இல்லை. புதிய புத்தகங்களையும் எனக்குக் கிடைத்த விருதுகளையும் வைக்கவே அலுமாரியில் இடம் இல்லை. அதைவிட இவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் இலவசமாகக் கிடைத்தவை தான்’.
(இடப்புறமிருந்து குரல் ) :
'உங்களுடைய சினேகிதர்களுடைய புத்தகங்களையாவது? தற்செயலாக அவர்கள் கண்ணில் பட்டால் அவமானமாகப் போய்விடும். பேர் களைச் சொல்லுங்கள். தேடி எடுத்து வைக்கிறேன்’.
(வலப்புறமிருந்து அதட்டும் குரல்) :
'நீர் உம்முடைய பாட்டில் போம். அவர்களில் அரைவாசிப் பேர் இப்போது உயிரோடேயே இல்லை. அப்படி அகப்பட்டாலும், இரவல் வாங்கிக் கொண்டு போனவர் திருப்பித் தராமல் இப்படிச் செய்து போட்டாரே என்று சொல்லுவேன்’.
(மீண்டும் மேடையின் பின்னாலிருந்து வரும் குரல்)
இப்படி நான் பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு பெரிய மேசையில் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக் ப் பட்ட சில நூறு நூல்களிடையே கிடந்தேன். என்றாலும் ஒரு நல்ல விடயம். எப்போதாவது யாராவது என்னைத் தூக்கிப் பக்கங்களை வேகமாகப் புரட்டி விட்டுப் போவார்கள். சிலர் கொஞ்சம் வாசித்து விட்டு வைத்து விடுவார்கள்.
(புத்தகம் நாற்காலியில் திறந்து மூடப்படுகிறது)
இப்படித்தான் ஒரு நாள் ஒரு நடுத்தர வயதினர் வந்து என்னைத் தூக்கி என் முகப்புப் பக்கத்தைத் திறந்து வாசித்தார்.
(புத்தகம் திறக்கப்படுகிறது)
(வலது புறத்திலிருந்து குரல்) :
G16

'நூலுலகின் நேயமிகு நண்பரும். (அதிர்ச்சியுடன்) சுயம்பர் இதென்ன அநியாயம்!” (புத்தகம் மூடப்படுகிறது)
(மேடையின் பின்னாலிருந்து வரும் குரல்)
அந்த மனிதரால் அந்த அதிர்ச்சியைத் தாங்க முடிந்ததோ இல் லையோ, கேட்ட விலைக்கே என்னை வாங்கிக் கொண்டு போனார். அவரிடம் என் உடன்பிறப்புக்களில் ஒருவரும் இருந்ததால் என்னை நீண்டகாலம் தன்னுடன் வைத்திருக்காமல் நகரத்தின் புகழ்பெற்ற தமிழ் வளர் க் கும் சங்கம் ஒன்றிற்கு எண் னை நன்கொடையாக வழங்கினார்.
அங்கே என்னைச் சில காலம் மிகவும் மரியாதையாகத் தான் வைத்திருந்தார்கள். எப்போதாவது வயதானவர் யாராவது வந்து என்னை ஆறுதலாக இருந்து பார்த்துப் படித்தும் போவார். ஆனால் என்னுடைய இந்தக் கொஞ்சம் மகிழ்ச்சியான காலம் நிலைக்கவில்லை.
நுT ல கதி திற்கு வருகிற வர் களில பெரும்பாலோர் இலக்கியத் தரமான நூல்களை விரும்பி வாசிப்பதில்லை என்பதால் என் போன்ற நூல்களைக் கழித்து விட்டுத் திகில் மூட்டும் கதை நூல் களையும் காதல் கிளுகிளுப்பு நூல் களையும் கொஞ சமம் ஆபாசமான நூல்களையும் கொண்டு வந்து போடலாம் என்று நூலகருக்குப் பணிக்கப்பட்டது. பாவம் மனிதர். சம்பளத்துக்கு வேலை செய்கிறவர். நூல்களைப் பற்றி மேல் நிலையில் உள்ளவர்களுடன் வாதிக்க முடியுமா? கொஞ்சம் மண் றாடிப் பார்த்தார். முடியவில்லை. நான் இன்னொருமுறை ஒரு மேசையில்,-இம்முறை மலிவு விற்பனைக் காகக் குவித்து விடப்பட்ட நூற்றுக் கணக்கான நூல்களிடையே - கிடந்தேன். யாரோ நூல்களை இழுத்து எடுத்த போது தவறி இந்த நாற்காலி மீது விழுந்து விட்டேன், உடம்பும் கொஞ்சம் நைந்து போய் விட்டது. தேடுவாரற் றுக் கிடக்கிறேன்.
உடல் வேதனையை விட, மன வேதனை தான் அதிகமாகத் தெரிகிறது.
(திரை)
ஏப்ரல் ஜூன் 200

Page 19
மொழிபெயர்ப்புக் கவிதை
கேள்வியாவிற்கு
பிரதமர் கொலையுண்டது பற்றி ஓம், பிரதமர் கொலையுண்டது என்ன நினைக்கிறாய்? அது பற்றி உனது உணர்வெ6 அதிர்ச்சியிலிருக்கிறாயா அல்லது மனஞ் சோர்ந்து இரு ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உனக்கென்ன திக்குவாயா அல்லது என்ன நடக்குமென்ற அல்லது நிகழ்காலம் காரணம நீ இத்தனை குழப்பத்துடன் ே ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஒரு வேளை நீ முட்டாள் என் அல்லது உனக்கு அபிப்பிராய பதில் கூறு. நான் பதில் சொல்கிறேன். நீர் சொன்னதெல்லாம் சரி நீர் ஒரு அருமையான ஆள். ஒரு விடயத்தைச் சேர்த்துக் ெ பிரதமர் மகிழ்வான ஒரு மனித கணவரும் தந்தையுமான அதிலும் மேலாக *சிவப்பு ரோஸாவின் மகனுமா பிரதமரின் சவத்துக்கு அமைதி
(இஸ்ரேலியப் பிரதமரும் கடு சமாதான உடன்படிக்கை செ a562flags, * Red Rosa gogg செல்லப் பேர்)
டாலியா ரவிக்ே
gruesti 78 ' 一(
 

நீருதீபற்ற மறுமொ
டாலியா ரவிக்கோவிச் (இஸ்ரேல்)
என்ன நினைக்கிறாய்?
பற்றி
ன்ன?
disasportuT?
நிச்சயமின்மையா ாயோ சமகாலம் காரணமாயோ பசுகிறாயா -
ற உணர்வா (3LD 36)6O)6)ut
கள்ள விரும்புகிறேன்: நராக இறந்தார்.
60
உண்டாகுக.
ம் போக்காளருமான யிட்ஷாக் ரபினர் ப்ததற்காகக் கொலையுணர்டது பற்றிய / தாயாரின் இடது சார்பு காரணமான
காவிச் சமாதானத்துக்கான பிரசாரகர்.
ஏப்ரல் ஜூன் 2010

Page 20
கவிதை
வந்தார்கள். 米 நின்றார்கள். (2 குனிந்தார்கள். @ கும்பிட்டார்கள். இளித்தார்கள். حميع
அன்புடன்
‘ஐயனே தங்கள் குறை என்னவோ?’ என்றார்கள்
விண்ணதிர
வீர வசனங்கள்
மண்ணதிர
மேடை முழக்கங்கள் کر کرتے لم
மக்கள் மனங்குளிர
மணி மணியாய்
வாக்குறுதிகள்.
போனோம் பட்டியல் நீண்டது
நின்றோம்
குனிந்தோம் ஐயா திருவாயருளினார்
இளித்தோம் Gauju 6 orb GFuru Got
பணிவுடன் LITU35856)TLD LIFTU35856)TLD
சேர்’ என்றோம். வீடு வந்தோம்
முறைப்பு விறைப்பு வேலைக்குப் போனோம்
கண்ணாலே விசாரிப்பு உழைத்தோம் தின்றோம்
எங்களை யாரென்று செத்தோம் பிறந்தோம்
செத்துச் செத்துப் பிழைத் அன்புச் செயலர் அவர் காதில் மந்திரம்போல குசுகுசுத்தார். ஐயா முணுமுணுத்தார் வெறுப்பாய்ப் பார்த்தார் எரிச்சலுடன் ' என்ன?” என்றார்.
ஒடைஞ்ச றோட்டு ஒட்ட லயம் ஒழுகும் கூரை இடிஞ்ச சுவர் நாறுங் கானு LITL&II606ð& &L19LLð வேலை வாய்ப்பு விலை குறைப்பு.
(18)
 

ஐயா வரவில்லை
பேப்பரைப் பார்த்தோம்
அடுத்த மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தலாம்?”
* தே.மு. - தேர்தலுக்கு முன் * தே.பி. - தேர்தலுக்குப் பின்
ஏப்ரல் ஜூன் 200

Page 21
சிறுகதை
ଚମ୍ପତ୍ତୀ ଅଣା।
66
ன்ெனங்க, இவனுக்கு பொறந்தநா கொடுக்க வேனாமா? டவுனுக்குப் போனா ஏ மனைவி என் மகனின் பிறந்தநாள் கொண்டா இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றியெல் கெழம, மாதம், வருடம் இதெல்லாம் எவனே போயிட்டான். இவனுக அத வச்சிக்கிட்டு கண
* பயலுக்கு என்ன வாங்கிக் கொடுக்க
'காரு தான் வேணுமாம் அடம்பிடிக் வாங்கிட்டு வாங்க”
என் மனைவி சாதாரணமாத்தான் சொல் இந்த காரு விசயம் எனக்கு எனது சிறு பரா காருங்கிறது எல்லாப் பிள்ளைங்களுக்கும் பி ஆனா எல்லாப் பிள்ளைங்களுக்கும் அதைவச்சு எங்க அப்பாவால எனக்கு வெளையாட்டுக் க ஆனா அதுக்காக நாங்க எங்க அப்பாமேல வ போகல. நான் என்னோட அந்த பழைய நெை
--
அப்பாவோட டவுனுக்கு போறதுல கெடையாது. சாப்பிடறதுக்கு நெறைய கெடைச்
பழம் எனக்கு ரொம்ப பிரியம். அண்ணாவும் த அப்பா எம்மேலதான் அதிகம் பிரியமா இருப்ப
தாயகம் 78
 

ள் வருதுல்ல. என்னமாவது வாங்கிக் தாவது வாங்கிக்கிட்டு வாங்க” என் ட்டம் பற்றி நினைவூட்டினாள். எனக்கு லாம் ஒரு நாட்டமும் இல்ல. நாள், ா வேல இல்லாத பய எழுதிப்புட்டு க்குப் பாத்துக்கிட்டிருக்கிறானுக.
6) Tib
கிறான். நல்ல காரா பாத்து ஒன்னு
ர்னா. வெளையாட்டு காருதான். ஆனா யத்து வடுவொன்றைக் கிளறிவிட்டது. டித்த வெளையாட்டுப் பொருள்தான். விளையாட சந்தர்ப்பம் கெடைக்குமா? ாருகூட வாங்கிக் கொடுக்க முடியல. Fசிருந்த மதிப்பு கொஞ்சமும் குறைஞ்சு ாவுல மூழ்கிப் போனேன்.
* ଫ୍ରି
타
E
--
இருக்கும் சந்தோஷம் வேறெதுலயும் கும். எல்லாத்தையும் விட குச்சி ஐஸ் ம்பியும் கூட வருவாங்க தான். ஆனா T(5.
ஏப்ரல் ஜூன் 200

Page 22
சிறுகதை
அன்னைக்கு நாயித்துக் கெழம. பொதுவா நாயித்துக் கெழமையிலதா டவுனுக்குப் போவம். அணி  ைனக் குத் தா மரக் கறி சந் த, மீன் சந்தயெல்லாம் கூடுவாங்க. டவுனுக்குப் போற விசயத் த அப்பா நேத்தே அம் மாக் கிட்ட சொல்லிட்டதால இன்னிக்கு காலங்காத்தால விடியற துக் குளிர் ளேயே நாங் களி லாம் எந்திரிச்சிட்டோம்.
தோட்டங்கல கக்குசு குழி யெல்லாம் கெ டையாது. ஒன் னுக் கு ரெண் டுக் கு போறதெல்லாம் தேயிலைச் செடி மறப்புலதா. மறவான எடத்துல ரெண்டு கல்ல வச்சி குதிகால துாக்கி வச்சி அதுல ஒக்காந்து தான் கக்கா போவனும், அப்பிடியே காணுத் தண்ணியில பொறத்திய கழுவிக்கிட்டு ஒடியாந்திடுவோம். இப் பிடித்தா விடியறதுக் குள்ளேயே எல்லா ஆளுகளும் போய்ட்டு வந்திடுவாங்க.
நானும் , அணி னா வும் , தம் பியும் ஒன்னாத்தான் மூஞ்சிக் கழுவ போவம். பல்லுத் தீட்ட பிரசெல்லாம் கெடையாது. தேயிலைச் செடியிலருந்து பச்சையான வாது ஒன் ன ஒடச்சிக்கணும். அத ஒரு முனைய கடவாப்பல்லால நல்லா சுத்திவர கடிச்சி தும்புத் தடிமாரி கொண்டு வரணும். அதுதா எங்க பிரசு, அதுல பல்லத் தீட்டறது கூட சொகமாத்தான் இருக்கும். ஆனா
குச்சிய நல்லா கடிச்சி மெல்லிசாக்கனும் இல்லாட்டி
குச்சி மொறசுல கீறி ரத்தம் வந்திடும்.
இதெல்லாம் முடிஞ்சதும் பீலித் தண்ணியில
மூஞ்சியை புடிச்சா எண்ணப் பிசுக்கெல்லா கழண்டு '
ஒடிரும். மூஞ்சிய ரொம்ப நேரம் தண்ணில புடிக்கேலாது. ஜில்லுனு குளிரும். அப்படியே மூஞ்சிய தண்ணியிலருந்து இழுத்து சாரத்தில தொடச்சி புட்டு ஓடியாந்திர வேண்டியதுதா.
சொணங்குனா அப்பா சத்தம் போடுவாரு அம்மாவைத் தான் ஏசுவாரு ' கம்மனாட்டி, கழுத’ங்கறது எப்போதும் சொல்ற வார்த்த, அதுனால வேலைய கம் முன்னு முடிச்சிட்டு டுர்ரு. டுர்ருண்ணு ஒடியாந்துட்டோ.
அப்பா டவுனுக்குப் போறதுன்னா நல்ல சுத்தமான முழுக்கை வெள்ளைச் சேட்டும், வெள்ளை வெளேருன்னு வெளுத்த வேட்டியுந்தா உடுப்பாரு வேற எங்க போறதுனா கூட வெள்ளை உடுப்புதான். அவரு அத மாத்துனத நா பாத்ததே இல் ல, நாங்க போறதுக் குள் ளயே அப்பா உடுத்தியிருப்பாரு.
தாயகம் 78
 

s
"எங்கடா பயலுக போனீங்க, நேரமாவல; ருக்கா பொறப்படுங்க. ஏழு மணி பஸ் ஸ் டிக்கனும்’
அது அப்பாவோட பழக்கம். எல்லாத் க்கும் அவசர படுத்துவாரு எதையும் குறிச்ச நரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிஷத்துக்கு முந்தியே pடிக்கனும்னு சொல்லுவாரு. அப்ப பொறப்பட்டா வட ஏழு மணி பஸ்ஸ புடிக்கிறது லேசுப்பட்ட ாரியமில்ல. ஏன்னா, எங்க லயத்து வயூட்லருந்து புடிக்கிறதுக்கு மூனரை கட்ட துாரம் டக்கனும், அதுவு லெவலு ரோட்டு கெடயாது. காஞ்ச நடக்கனும் பெறகு படி எறனும். இன்னுங் காஞ்சத் துாரம் ஒத்தயடிப் பாதையில போவனும், டசியா இருக்குறதுதா பெரிய ஏத்தம். அதுல றும் போது மூச்சு வாங்கும். போறதுதா ரொம்ப ஷ்டம். வாறப்போ பள்ளத்தில இறங்கி 'குடுகுடு” 1ணு ஒடியாந்திடலாம்.
அம்மா எடுத்து வெச்சிருந்த நல்ல உடுப்புங்கள எங்க மூத்த அக்கா தான் உடுத்தி டட்டாங்க. எங்க வீட்ல மொத்தமா பத்துப் பேரு. னக்கு முன்னால அண்ணனும் நாலு அக்காமாரும் இருந்தாங்க. நா ஆறாவது ஆளு. எனக்குப் பாறகு தம்பியும் மூனு தங்கச்சிமாரும் இருக்காங்க. பாம்பளப் புள்ளங்கெல்லாம் ஐஞ்சாங்கிளாசோட டிப்ப உட்டுட்டாங்க. அண்ணா இப்ப ஐஞ்சாங் ளாஸ் தான் படிக்கிறான். அடுத்த வருசம் அவன வுனு ஸ்கூல்ல சேத்துவுடுறேன்னு அப்பா சொல்லி }ருக் காரு. அணி னா டவுண் ஸ் கூலுக் கு பாய்ட்டான்னா நானும் போவலாம். இப்ப எங்க தாட்டத்து வாத்தியாரோட மவன் மட்டுந்தா வுனுக்கு படிக்கப் போறான்.
டவுனுக்கு போறதுன்னா மூனரை கட்ட டந்து போவனும். அப்புறம் பன்னண்டு கட்ட ஸ்சுல போவனும் ஏழு மணிக்கு ஐஞ்சு நிமிஷம் ருக்குறப்பவே நாங்க நாலுபேரும் பஸ்டாப்புக்கு ந்துட்டம். ஆனா இந்த படவா பஸ்காரன் தினைஞ்சு நிமிசம் லேட்டா தான் வந்தான். அப்பா நத்தி வேர்வையை தொடைச்செறிஞ்சி ஆசுவாசப் டுத்திக் கிட்டாரு. எங்களுக்குன்னா இந்த வர்வையெல்லாம் கணக்கே இல்ல. டவுனுக்கு பாறதுல்ல அவ்வளவு சந்தோஷம்.
பஸ்சுக்கு காத்திருந்த இந்த இருவது மிசத்துல ' களவானிப்பய, திருட்டுப் பய, நாசமா பானவன் நேரத்துக் வரமாட்டான் னு ஒரு ாலுதடவ அப்பா பஸ்காரனை திட்டியிருப்பாரு. ங்களுக்கும் கூட பொறுமையா இருக்க முடியல.
ஏப்ரல் ஜூன் 200

Page 23
சிறுகதை
என்னோட அண்ணா ஒரு சாதுவான பிராணி அதனால அப்புராணின்னு பேர் வாங்கியிருந்தான் அவன் மூணு வயசு இருக்கும் போது கணச்சூடு வந்து செத்துப் போற அளவுக்கு மோசமா கெடந்தான்னு அம்மா அடிக்கடி சொல்லுவா,
இந்தியாவுல இருக்கிற குலதெய்வத்துக்கு நேத்திக் கடன் வச்சித்தான் காப்பாத்துனாங்களாம் அவன ஒருதடவாவது இந்தியாவுக்கு கூட்டிப் போய் தங்களோட சொந்த கிராமத்துல இருக்கிற குலதெய்வத்துக்கு வைச்சிருக்குற நேத்திக்கடன முடிச்சிடனும்னு அவனுக்கு சொகமில்லாம போற நேரமெல்லாம் அம்மா பொலம்புவா. அந்த குலதெய்வத்தோட பேரு என்னான்னு நா பல தடவி கேட்டப்பவும் சொல்லல. சொன்னா அதோட சக்தி கொறஞ்சிடுமாம்.
ஒரு நா "நீ செத்திட்டின்னா ஒங் கொல தெய்வத்தோட பேரு எங்களுக்கு தெரியாமலே போயிருமே அப்புடீன்னு வாய்க்கு வந்தப்படி கேட்டேன். அம்மா கண்ணுல பொல பொலன்னு தண் ணி வந் திடுச் சி. நா அப் படி எண் ை சொல்லிட்டேன்னு எனக்கு வெலங்கல. பொறகு அம்மா என்னை இருக்கி அனைச் சிக் கிட்( காதுக்குள்ள பயபத்தியோட குசு குசுன்னு சொன்னா. எங்க குல தெய்வத்தோட பேரு கள்ளண்ணன் புள்ள பெருமாள்.
எந்தம்பி என்னளவுக்கு சுட்டிப் பயல இல்லாட்டியும் சுறுசுறுப்பா இருப்பான். நான சுட்டித்தனம் பண்ணம் போது அவனும் என்னோ இருக்குறதால எனக்கு விழுற அடி உதையில் ஒண்ணு ரெண்டு அவனுக்கும் உழும். அடிக்க என்னைய அவன் காட்டிக் கொடுக்குறதா6 எனக்கிட்டையும் அவன் ஒத வாங்குவான்.
நாங்க போற பஸ் பாதைய நீங் பாத்திருக்க மாட்டீங்க. வலைஞ்சி வலைஞ் கோணமாணலா தேயிலைத் தோட்டத்துக்குள்ளா போகும். புள்ளத்தாச்சி எல்லாம் அந்த பஸ் போனா பஸ்சுக்குள்ளேயே புள்ள பொறந்துரும்னு எங்கப்பா சொல்லுவாரு வெள்ளக்காரன் போட் ரோட்டு. அதுக்குப் பொறகு ஒரு மவபுள்ளையு வந்து பாக்கலையாம்.
டவுனுக் கு வாறதுக் கு ஒன ன வ பிடிச்சிருக்கும். பஸ்காரன் மணியடிச்சிக்குட்டு போ வண்டி மாதிரிதான் போவான். அதோட ஆளுங்க அங்க ஏத்தி. இங்க எறக்கி. வலு வட்ட பய.
தாயகம் 78

前
D]
巅
D
இதழ் : பலி ஆடு (கவிதைத் தொகுப்பு)
ஆசிரியர் : கருணாகரன்
ഒഖങ\n' : ഖ_ങ
། མfཚོ0a : ரூபா 100.00 الرب
இதழ் : சிறுவர் பா அமுதம்
(சிறுவர் பாடல்கள்)
ஆசிரியர் : செ. ஞானராசா
வெளியீடு : சர்வீனா வெளியீட்டகம்
விலை : ரூபா 140.00
\'ಹಾಗ-೨ : 026 3267891 للر
ஏப்ரல் ஜூன் 200

Page 24
சிறுகதை
டவுன் னா டவுனி தானி , தோட் டமு னி னா தோட்டம்தான். அவ்வளவு வித்தியாசம். எங்கவுட்டு தோட்ட லயம் எப்பவும் கரியும் புகையும் அப்பி கருப்பாதான் இருக்கும். மனுசங்ககூட வெயில்லயும், மழையிலயும், குளிர்லயும் வாடி கருகிப்போயி மரக் கட்டையாட்டம் இருப்பாங்க. மூஞ் சில பளப்பளப்பே இருக்காது. எண்ண வடிஞ்ச மூஞ்சும் பரட்டத்தலையும் சகிக்காது.
டவுன்ல ஆளுங்க எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. காரு பஸ்செல்லாம் புர்ரு புர்ருன்னு ஓடுது. வெள்ளையடிச்ச கட்டிடங்க, கடைங்க. எல்லாரும் கலகலப்பா, துருதுருன்னு இருக்காங்க. அப்பாவோட, அப்ப. அப்ப. அந்த டவுனுக்கு வந்ததால அந்த டவுனப் பத்தி கொஞ்சம் தெரியும். அந்த டவுன் நடுவுல ஒரு முச்சந்தி இருக்கு. அதுல இருந்து பிரிஞ்சு போற மூனு ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் கடைங்க வரிசையா இருக்கும். பெரிய பஸ்டாண்டு, கோச்சி வந்து நிக்கிற இடம், சந்தைங்க, சினிமா தேட்டர் எல்லா இருக்கு. பெரிய பள்ளிக்கூடங் கூட இங்கதானிருக்கு. அண்ணா அடுத்த வருசம் அதுல சேர்ந்திட்டான்னா அதுக் கடுத்த வருசம் நானும் சேர்ந்துரலாம்.
கடைங்கள்ளேயும், சந்தைலேயும் வீட்டுக்கு சாமான் வாங்குறதுல ரொம்ப அப்பா அக்கரையா இருந்தாரு, எங்களுக்கு வேர்க்கடலை, சீனி போலைங்கக் கொறிக்க வாங்கித் தந்தாரு நா அதெல்லாத்தையும் கால்சட்டை பைக்குள்ள போட்டு கிட்டு குச்சி ஐஸ் பழம் சாப்ட பொறகுதான் அதச் சாப்பிடுவேன்னு சொல்லிப்புட்டேன். அப்பா எங்களுக்கு குச்சி ஐஸ் பழம் வாங்க காசு கொடுத்தாரு, அப்படியே டவுன சுத்திப் பாத்துட்டு வரும்படியும், தான் சந்தையில் யாழ்ப்பாணத்து சொக்கநாதன் வெத்தல கடயில இருக்கிறதாகவும் சொன்னாரு.
எங்களுக்கும் அதுதானே வேணும். சிட்டாப் பறந்துட்டம். அப்படி சுத்திக்கிட்டு போற நேரத்தில தான் அந்த வெளயாட்டு சாமான் கட எங் கண்ணுல பட்டுடுச்சி. அங்க சோக்கேசுல செவப்புக் கலருல ஒரு வெலயாட்டு காரு வச்சிருந்தான். கொஞ்சம் பெரிசு. பெட்ரியில ஒடுறது. அண்ணாவும் தம்பியும் கூட அத கண்டுட்டாங்க. அது மட்டும் எனக் கு கெடச் சா. ஆனா அதெல லாம் பேராசைன்னு எங்களுக்குத் தெரியும். எங்க அப்பாவால அவ்வளவெல்லாம் செலவுபண்ண (UDIQUITg5l.
தாயகம் 78
 

ஒரு நாளு கூட கடையில் வெளயாட்டுச் சாமா வாங்கி நாங்க வெளயாடுனதில்ல. தென்ன மட்டையும், டின் னும், தகரமும், காட் போட் பெட்டிங்களுந்தான் எங்கவுட்டு வெளயாட்டு சாமங்க. ஆனா அந்த வெளயாட்டுக் காரைப் பத்தி எங்களால பேசாம இருக்க முடியல. அதோட மின்னுற செவப்பு கலரு, பளிச் பளிச்னு வெளிச்சம், அது போடுற சத்தம், அது சொய்ங்ங்ண்னு. ரிவசுல திரும்புற வெதம். இது தான் பேச்சு. அப்பாவும் இவிங்க அந்தக் காரப் பத்தி இவ்வளவு பேசுறாங் களேன்னு வாங்கடா போய் பார்க்கலாம்னு ஒரு ஆர்வத் துல வந் துட் டாரு. அப்பா அப்படி சொன்னோன்ன எங்களுக்குள்ள ஒரு பெரிய எதிர் பார்ப்பு வந்துருச்சி. அப்பாவ ரெண்டு கையாலயும் இழுத்துக்கிட்டே அந்த கடைக்கு வந்துட்டம்.
இந்தக் கடைய ரெண்டு பொம்பள புள்ளங்கதா கவனிச்சிக்குட்டு இருந்தாங்க. அப்பா அந்த கார பாத்ததுமே கொஞ்சம் தயங்கினாரு. பொறவு ஒரு பொம்பளப் புள்ளக்கிட்ட அந்தக் கார எடுக் க சொனி னா ரு, அந்த புள் ள அப்பாவையும் எங்களையும் ஒரு மாதிரி பாத்துச்சி. எங்களோட சாயம் மங்கிப் போன உடுப்பு, உழைத்து உக்கிப் போன அப்பாவின் தோற்றமும் 'இந்தப் பயலுகளா இத வாங்கப்போறானுகன்னு அந்தப் புள்ள எலக்காரமா நெனச்சிருக்கனும்.” இருந்தாலும் அந்த புள்ள அத எடுத்துக்காட்டுச்சி. அப்பா அதோட வெல எவ்வளவுனு கேட்டாரு. அந்த புள்ள அருநுாத்து நாப்பது ரூவான்னு சொன்னுச்சி.
அதக் கேட்ட ஒடனே அப்பாவோட மொகம் டக்னு மாருனத நா கவனிச்சேன். அப்பா ஒரு ஒணர்ச்சியையும் காட்டல.
* தம் பிங்களா. இது வெல கூடவா இருக்கு. இன்னொரு நாளைக்கு வரப்போ வாங்குவோம்’ அப்புடீன்னாரு.
நாங்களும் கப்புச் சிப்புனு ஆயிட்டோம். எங்கப்பாவ எனக்கு ரொம்ப நல்லா தெரியும். ரொம்ப துணிச்சல்காரரு. வேட்டைக்கெல்லாம் போயி காட்டுப் பண்டி கொண்டாந்து சமச்சுத் தருவாரு எங் க மேல ரொம ப பாசம் வச்சியிருந்தாரு அந்தக் கடையில இருந்து எந்த முஞ்சியோட எங்கள கூட்டிக்கிட்டுப் போவாருன்னு எனக்கு ரொம்ப வருத்தமா போயிடுச்சி.
அண்ணனும் தம்பியும் மெளனமாவே வந்தாங்க. எனக்கு ஏன் அந்தக் காரப் பத்தி
ஏப்ரல் ஜூன் 200

Page 25
சிறுகதை
அப்பாக்கிட்ட சொன்னோம்னு ஆயிருச்சி. का தெரிஞ்சும் அப்பா மனச நோகடிச்சிட்டோம்.
எல்லா இந்த ரெண்டு பயலுகளாளும் மனசுல ஒரு வருத்தமான வடு உருத்திக்கிட்டே
அப்பா கிட்டத்திலெதா இறந்து போன வாங்கிட்டோம். எனக்கு ஏழு வயதில் ஒரு மகன் கூட்டிக்கிட்டுப் போனோம். அங்கே கடையில ஆசைப்பட்டான். அதன அவனுக்கு வாங்கிக் ெ மட்டுந்தான் தெரியும். இந்த கதைய எம் மை சொட்டு தண்ணி வந்திருச்சி. ஒங்ககிட்டயு சொல்
உங்கள் வாசற் கதவைத் தட்டுவது ந எத்தனை வாசற் கதவுகட்குத் தான் டே யாருமே என்னைக் காண்பதில்லை.
ஏனென்றால் இறந்தோர் கண்ணுக்குத் (
நான் ஹிரோஷிமாவில் இறந்தேன் அது பத்தாண்டுகள் முன்பு. எனக்கு ஏழு வயது - இறந்த குழந்தைகள் வளர்வதில்லை.
முதலில் என் தலைமயிர் தீப்பிடித்தது பிறகு என் கண்கள் பொசுங்கிப் போயி நான் காற்று வீசி எறிந்த கைப்பிடியளவு சாம்பலானேன்.
நான் எனக்காக எதையும் கேட்கவில்ை
ஏனென்றால் கரித்துண்டுகளாக எரிந்து மிட்டாய்களைக் கூடத் தின்ன முடியாது
மாமிமாரே மாமாமாரே நான் உங்கள் இனி எப்போதுமே குழந்தைகள் எரிந்து அவர்கள் மிட்டாய்களைத் தின்னுமாறு
உங்களுடைய கையொப்பங்களைப் ெ
(நஸிம் ஹ
தாயகம் 78

ள மாரி உள்ளவங்களுக்கு அதெல்லாம் அதிகமுனு
வந்த வெனதா. இனி கொஞ்ச நாளைக்கு அப்பா இருக்கும். எனக்குங் கூடதான்.
ாரு, நாங்கெல்லாம் படித்து பெரியவர்களாகி பட்டம் ரிருக்கிறான். நானும் மனைவியும் சேர்ந்தே டவுனுக்கு
அதே மாதிரி ஒரு செகப்பு காரை பாத்து மகன் காடுத்த போது எம் மனசு அடைஞ்ச மகிழ்ச்சி எனக்கு னவிக்கிட்ட அப்ப நா சொன்னே. அவகண்ல ரெண்டு லனும்னு நெனச்சே, சொல்லிப் புட்டேன். அம்புட்டுதான்.
ான் தான். ாயிருக்கிறேன் - ஆனால்
தெரியமாட்டார்கள்.
ম্ভ 索
601 姿 Š
}6Ն)
போன குழந்தைகளுக்கு
.
கதவைத் தட்டுவது
போகாமல்
பறுவதற்காக.
விக்மெற், துருக்கியக் கவிஞர் 1904-1963)

Page 26
நால் விமர்சனம்
66 (JG) 60 yarbó அறிமுகம் "முறுக
ஈழத்துக் கவிதை மரபில் சமூகப் பயனும் சமூகப் பார்வையும் ஒரு முக்கியமான பங்கை வகித்து வந்துள்ளன. 'கலை கலைக்காகவே” என்ற மயக்கத்தை ஊட்டியவர்கள் தவிர்க்க முனைந்தவை முற்போக்குச் சிந்தனையும் இடது சாரி அரசியலுமே ஒழிய அவர்களாற் கூடத் தமது வர்க்க, சமூக நிலைப்பாடுகளில் நின்று எழுது வதைத் தவிர்க்க இயலவில்லை. தூய இலக்கிய வாதிகளது பிரச்சாரம் சூடு பிடிக்க முன்னரே தேசிய இனப் பிரச்சினை இன ஒடுக்கலாகக் கொதிப்புற்று விட்டதனால் தூய இலக்கிய காரர்களுக்குள் அடங்கிக் கிடந்த அரசியலுக்குத் தேசியவாதம் ஒரு வடிகாலானது. தேசியவாதத்தின் எழுச்சி இடதுசாரி அரசியலின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாகியது போலவே இலக்கியத்தில் தேசியவாத்தின் ஆதிக்கமும் முற்போக்கான சமூகப் பார்வையையுடைய ஆக்க இலக்கியங் களின் வளர்ச்சிக்கு இடைஞ்சலாகியது.
வீசுகிற காற்றோடு அலை கிற மனப்பாங்கு தெளிவான உலக நோக்கும் திடமான அறஞ்சார்ந்த நிலைப்பாட்டையும் உடையோருக்கு இருப்பது அரிது. அத்தகைய சீரிய படைப்பாளிகள் பலருடைய உருவாக் கத்தில் இலங்கையின் இடதுசாரி இயக் கத்திற்குக் குறிப்பாக மாக்சிய லெனினியச் சிந்தனைப் போக்கிற்கு ஒரு முக்கியமான பங்குண்டு. வெளிப்படையான அரசியல் அடையா ளத்துடனும் போர்க் குணத்துடனும் கூடிய படைப் புக்களை வழங்கிய நல்ல கவிஞர்கள் பலர் இருந்து வந்துள்ளனர். அவ்வாறு, நிதானமாகச் சொற்களை அளந்து பயன்படுத்தி புரட்சிகரச் சிந்தனைகளைப் புலப்படுத்தியவர்களும் உள்ளனர்.
மாக்சியத்தை ஈழத் தமிழ்ப் படைப்பாளிகள் சிலரே முற்றாக உள்வாங்கினர். எனினும் அதன் தாக்கம் சமூக அக்கறை உள்ள பல நல்ல படைப்பாளிகளையும் எட்டியது. தோற்றத்திலும் வாழ்க்கை முறையிலும் பழமை பேணுவோர் போலத் தெரியும் பலருக்குள் சமூகம் பற்றியும்

சமூக நீதி பற்றியும் சமூக மாற்றத்திற்கான தேவை பற்றியும் ஆழமாக வலுவான சிந்தனைகள் உள்ளன. அவை மனிதரின் தகைமையைச் சோதிக்கும் தருணங்களில் கூர்மையுடன் வெளிப்படுகின்றன. மற்ற நேரங்களில் இலை மறைகாயாக இருந்து விடுகின்றன.
முற்போக்கான, சமூக நீதி நாடுகிற சிந்தனை நவீனத்துவமானது. ஆனால் அது நவீனத்துவம் என்ற பெயரில் வருகிற எல்லாவற்றையும் விமர்சனமின்றி ஏற்பதில்லை. புதுமையையோ மாற்றத்தையோ தம்மளவில் பெறுமதியுடையனவாய் அது கொள்வதில்லை. தனையும் அதன் பயனும் பயன்பாடும் கருதியே து மதிப்பிடுகிறது. அக் காரணத்தினாலேயே ற்போக்கான சிந்தனையாளர்களான நமது விஞர்கள் பலர் புதுக் கவிதையால் ஈர்க்கப் டவில்லை. அவர்களது நோக்கில் அவர்கட்குப் ரிச்சயமான அவர்களால் ஆற்றலுடன் செயற்படக் டிய வடிவங்களிற் செயற்படுவதில் நிறைவு ண்டார்கள். அதனால் அவர்கள் புதுமையை றுத்தவர்களாகி விடவில்லை. மரபுச் செய்யுள் டிவங்கட்குள் அவர்கள் புதிய சிந்தனைகளைக் றினார்கள். சொற் பிரயோகத்தில் புதுமை சய் தார் கள் . மரபிற் குப் புதிய சந்த டிவங்களையும் புகுத்தினார்கள்.
ஏப்ரல் ஜூன் 2010

Page 27
本
وجہ
நால் விமர்சனம்
கல்வயல் குமாரசாமியின் சமூக விழுமியங் களில் ஒரு பகுதி மரபு சார்ந்ததாகவும் இன்னொரு பகுதி மனித சமத்துவம் சார்ந்ததாகவும் இருக்கக் காணலாம். மரபிலுள்ள பல சிந்தனைகளை அவர் கைவிட மனமில்லாதவராய் இருக்கும் அதே வேளை எந்த நம்பிக்கையும் நடைமுறையும் மனிதருக்குக் கேடானதாய் இருக்கிறதை அவர் ஏற்பவரல்ல.
அவருடைய முந்திய கவிதை நூல்களில் அவரது கவிதை நெஞ்சமும் உலக நோக்கும் வெளிப்பட்ட முறையிலிருந்து வேறுபட்டதாக இந் நூலில் அவரது கவிதை வெளிப்படுகிறது. பெரும் பாலும் அகவற் சந்தத்தில் அமைந்த ஈரசைச் சீர்கள் நான் கைக் கொண்ட தனிச் செய்யுள்கள் முந்நூற்றுக்கும் மேலாக இத் தொகுதியில் உள்ளன. படிக்கும் போது, சில நீதி வாக்கியங்கள் போன்றும் சில பழமொழிகளின் தன்மையுடனும் அமையக் காணுவோம்.
தமிழ் நீதி நூல் க்ளான ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவை ஒற்றை வரியில் அமையும் கூற்றுக்களின் தொகுப்புக்களே ஆகும்.
கல்வயலாரின் இச் செய்யுள்களில் தமிழ்க் கவிதையில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய சிலேடைப் பாங்கான மொழியின் செல்வாக்கும் வலுவாக உள்ளது.
எனினும் இந்நூல் விடய அடிப்படையிலே செய்யுள்களின் அமைப்பின் அடிப்படையிலோ வரிசைப்படுத்தித் தொகுக்கப்படாமை அதன் பலவீனமாகவே தெரிகிறது.
இன்று தமிழ்க் கவிதை எனப்படுவதிற் கணிசமான பகுதி - 'ஹைக்கு’ என்ற பேரில் வருவன மட்டுமன்றி - குறைவான சொற்களைக் கொண்ட ஆக்கங்களாகவே உள்ளன. பொருட் தெளிவீனமும் ஓசை நயமின்மையும் அவற்றின் பெரிய பலவீனங்களாக உள்ளன. கல்வயலாரின் "முறுகல் சொற்பதம் இருபடி’ எனும் நூலிலிருந்து அவர்கள் நிறையக் கற்க முடியும். சொற் சிக்கனமும் கருத்தாழமும் நம் பழமொழி மரபின் வலிமை. கவிதை அத் திசையில் இருந்தும் ஊட்டம் பெற இயலும் என்பதையும் சிலேடையின் அழகியலையும் நமக்கு இக் கவிதை நூல் நினைவூட்டுகிறது.

ஆச்சியொருத்தியின்
這
கதைப் பாடல்
என்றும் திருமணம் ஆகாத
ஆச்சி யொருத்தி இருந்தனள் இருபத்தொரு குழந்தைகள்
ஆச்சி பெற்று எடுத்தனள்
தேவனின் பெரும் புகழ் பாடியே வறுமையுள் இயன்றவையாவுமே
அவர்கட்கு அவளும் வழங்கினள் ஆண்டவருக்குப் பணிவுடன்
அவர்களை அவளும் வளர்த்தனள்
தேவனின் பெரும் புகழ் பாடியே அவர்களும் வயது வந்ததும்
கடல் கடந்தே தொலை சென்றனர் உன்னத அமெரிக்க நாட்டினை
ஒருவர் பின் ஒருவர் சென்றடைந்தனர் தேவனின் பெரும் புகழ் பாடியே இடையிடை அவளை நினைகுவர்
இடையிடை கடிதம் எழுதுவர் இடையிடை அவளுக்கும் ஒரு ஐந்து
டொலர்த்தாள் அனுப்புவர்
தேவனின் பெரும் புகழ் பாடியே காத்திருந்த நெடும் ஆண்டுகள்
காலம் கழித்ததன் போக்கிலே கடிதங்கள் வருவதும் ஓய்ந்ததே
அவள் தன் விழிநீர் உலர்த்துவள்
தேவனின் பெரும் புகழ் பாடியே பழைய கொட்டில் கூரையும்
உக்கி விழுந்த போதிலே தரும சத்திரம் சென்றனள்
அத்தனை தொலையும் நடந்துமே தேவனின் பெரும் புகழ் பாடியே தாயற்ற சேய்கள் பலருக்கே
தாயாய் அவளும் இருந்தனள்
அவளது தோள்களில் தூங்குவார்
பின்னலைக் கையால் இழுப்பரே
தேவனின் பெரும் புகழ் பாடியே ஒருநாள் ஆச்சி நோயுண்டாள்
மறுநாள் ஆச்சி சாவுண்டாள் பிணஊர்தியையும் கொணர்ந்தனர் அவளையும் உள்ளே ஏற்றினர்
தேவனின் பெரும் புகழ் பாடியே இரவொடும் பகலின் ஒளியொடும்
ஒன்றிப் போன அவளது களிமண்ணின்று களைகளும்
முள்ளிச் செடிகளும் எழுந்தன
தேவனின் பெரும் புகழ் பாடியே
ஏப்ரல் ஜூன் 200

Page 28


Page 29
பற்றிய புரிதலை விளங்கிக் கொள்ள படைப்புகளையும் பிரதானமாக இரண்டு It goi6OLuigi (gib. «
5.86
பாள் காதை ஒரு சாதாரண மனிதனது பனவும் நீலாவணனின் வேளாண்மை யும்
க் கொண்ட படைப்புக்கள்
நெடும்பகல், அது அவர்கள் பின் கந்தப்ப சபதமும் இப்பிரிவினுள்
வும் மஹாகவி, முருகையன் ஆகியோர் ார்த்தப் படைப்பாகவும் ភាសាអ៊gööø.
நீலாவணன் ஆகியோரின் நவீன கொண்டு அவர்களின் சமூகம் சார் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
ப் படைப்பாக்க நெறியில் நின்று கொண்டு வாழ்வியல் முரண்களான பிற்போக்கு சிற்படுகின்றார்.
ாண்மைக் காவியத்தில் தான் சார்ந்த 6is GoofiūLoLTas ஒளிவு மறைவின்றி பரது பார்வை மஹாகவியினது மத்திய தர TՄ606)յա6Ù6Ù, ষ্টু
தொட்டு இன்றைய விஞ்ஞான மனிதன் * சமூகவியல் விஞ்ஞானப் பார்வை
க்கியப் புரிதலின் அடியாய் தோன்றிய திர் முரண்களை அவற்றின் சாதக LIT g585 முனைவதும் அவற்றின் அடிப்படையில் பனுள்ளது என நம்புகின்றேன்.
மண்ணின் மனிதர்களையும், அவர்களது குகள், சம்பிரதாயங்கள் வழிபாடுகள், போன்ற இன்னோரன்ன அம்சங்களையும் டைத்து விடுகிறார். ஆனால் மஹாகவி ஆசாரங்கள் என்பவற்றை சமூகத்தின் கின்றார். சடங்கு சடங்காசாரங்களுக்கு
 


Page 30
நாடக விமர்சனம்
எனச் செல்லையன் கூறும் போது தாழ்த்தப் பட்டவர்களின் விடுதலை ஆதிக்க சாதியினரின் கைகளில் தான் இருக்கின்றது என்பதான சிந்தனையை ஏற்படுத்தி விடுகின்றது. தொடர்ந்து செல்லையன் பேசுகின்றான்.
பெருமை உண் டிதனால் என்பதற்காகப் பேசிட வில்லை நான் இதனை அருகதை உடையார் அவர்கள்! நாம் அளித்தால் அறமும் நம் பயிர் எனத் தழைக்கும்.
'அருகதை உடையவர் அவர்கள் எனும் போதும் நாம் அளித்தால் அறமும் நம் பயிர் எனத் தழைக்கும்’ எனக் கூறும் போதும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நிலைமை புலப்படுவது மட்டுமன்றி உயர் குடியினரின் மேல் நின்ற பார்வையினையே இனங்காட்டுகிறது.
"தாழ்ந்த சாதியள் ஆயினும், ஆண்டுகள் தனது நெஞ்சின் இடத்தினை ஆண்டு
தான் வாழ்ந்த செல்லியை .'
என சாதாரண மனிதனது சரித்திரத்தில் கூறும் போதும் இத் தன்மையையே வெளிப்படுகின்றது.
இயற்பண்புவாத இலக்கியப் படைப்பாக்
கத்தில் இத்தகைய தப்பிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. புலக் காட்சியில் தரிசிக்க முடிகின்ற மனித வாழ்வுக்குப் பின்னால் உள்ள உற்பத்தி சார் அதிகார அடுக்கமைவு பற்றிய அறிதல் முக்கியமானது. இவ் வகையில் முருகையனது “ஆதி பகவன் கிராம வாழ்க்கைப் பின் புலத்தில் வர்க்கப் பார்வையை முன்னிறுத்தி எழுந்திருக்கின்ற காவியப் படைப்பாகும். இது உலகப் பொதுவான மனித அனுபவத்தை நமக்கு பழக்கத்தில் உள்ள பாத்திரங்கள், களங்கள் ஊடாக மிகவும் நெருங்கி வரச் செய்கின்றது. வர்க்க பேத முரண்பாடுகள் எங்கும் வியாபித்து நிற்கின்றது என்பதைக் கவிஞர் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துக் காட்டுகின்றார். வரலாற்றின் ஆரம்பந் தொட்டு வழி நெடுக நடந்து வந்த மனித அனுபவத்தை சிறு காவியத்துள் அடக்கி துன்பத்திற்கும் முன்னேற்றமில்லா வாழ்வுக்கும் உரிய காரணங்களை உணர்த்து கின்றார். வெறுமனே நடை முறை உலகைச் சிருஷ்டிக்கும் ஆரம்பமும் தெளிவுமற்ற துன்பியல் படைப்பாக இதனைக் கருதி விட முடியாது. மிக நீண்ட வரலாற்றனுபவம் நமக்கு பரிச்சயமாகின்றது.
월).

குரங்குகள் எமது சுற்றமும் உறவும் ཛོད༽ என்பது கொஞ்சம் கவர்ச்சியான ஒரு புனைவென்றே நினைக்கிறேன் என்றாலும் அந்தக் கருத்தை ஏற்கச் சித்தமாயுள்ள குரங்கொன்றையும் நான் இன்னமும் சந்தித்திலேன்
.பிராங்க் கொலிமோர்
(BITG BGLT 6mö)
al っ
ஆண், பெண் ஆகியோருக்கிடையிலான யற்கையான இணை விழைச்சுடன் காவியத்தை ஆரம்பிக்கிறார். கிராமியக்களத்தில் மனித வரலாறு ரிகின்றது.
'ஊர் மனைப் புறத்து மருதநிழலிலே உள்ளது வெண்மணற் பரப்பு வாரி உண்டிடவும் மறைந்து கொண்டிடவும் வல்லமை உண்டெனில் வரலாம் ஆருமே பார்க்கார்
இன்று அமாவாசை அதாவது கடுமிருள் அடர்ப்பு'
ஆதி பகவனை புணர்தலுக்கு அழைப்பதும். ன் இருவரும் கூடி குடிசையமைத்து உற்பத்தியில் படுவதும் ஆதி அவனுக்கு உடன் உதவுவதும் ன வாழ்க்கை நகருகின்றது. அவர்கள் தம் உடல் ழைப்பால் உற்பத்தியில் பெருக்கம் ஈட்டுகின்றனர்.
இந்நிலையில் மற்றவர் உழைப்புக்கு ாக்கமூட்டி சோம்பியிருந்து தந்திரத்தால் பிறர் பாருளைக் கொள்ளும் மேல் வர்க்கத்தினர் கழ்ச்சி மொழி கூறி உழைப் பாளிகளை ளைத்துப் போடுவதோடு ஆசை வலைக்குள்ளும் க்க வைத்து விடுகின்றனர். இது உழைப்பாளரைச் ாண்டும் பொருட்டு ஆதிக்க வர்க்கம் கையாளும் ழ்ச்சிகளில் ஒன்றே. இத் தன்மையை ஆதியையும் கவானையும் முன் னிறுத்தி உரைக்கிறார் ருகையன்.
"இந்நாட்டினுக்கே முது கெலும்பாகும் இவர்களால் அல்லவா வயலிற்
ஏப்ரல் ஜூன் 200

Page 31
மொழிபெயர்ப்புச் சிறுகதை
செந்தளிர்ப்பு என்ற சிறப்பை நாம்
அடைந்தோம் தேசமே இவர்களால் வாழும் இந்த மாநிலத்தின் பசியினைப் போக்கும் இவர்களின் உழைப்பினை மெச்சி வந்தனை செய்தல் தகும் தகும் என்று வாழ்கினை செல்லையர் என்பார்”
தமிழர் வரலாற்றில் வணிகவுடைமைச் சமுதாயம் மேன்மை பெற்றிருந்த காலத்தில் வணிகர்கள் தாம் பொருளிட்டிக் கொள்வதற்கு பல அறக் கருத்துக்களை அள்ளிச் சொரிந்தமையை காணலாம். திருக்குறள் - “உழுவார் உலகத் தாருக்கு ஆணி’ எனப் பலவறாக உழவைப் போற்றிய தன்மையையும் கொல்லாமை முதலிய கோட்பாடுகளை உலவச் செய்தமையும் இந் நோக்கம் கருதியேயாகும்.
பண் டைய விவசாயிகள் தொடங்கி இன்றைய நவீன தொழிற்சாலை உழைப்பாளிகள் வரையான வர்க்க வரலாற்றை பலவாறாக எடுத்துக் காட்டுவதோடு ஆதிபகவனின் குடும் பத்தைக் குறியீடாக்கி உழைக்கும் வர்க்கத்தின் பட்டினி வாழ்வையும் எப்போதும் அடங்கிக் கிடந்திராத பாட்டாளி மக்களின் எழுச்சியையும் உரைக்கிறார் கவிஞர்.
'உறுக்கிய உறுக்கல் கேட்டிடு முன்னர் உழைப்பவர் மிகப்பலர் கூடி விறுக்கெனப் பொங்கி மேலிருந்தவரை மிதிக்கவும் உழக்கவும் துணிந்தார்’
வரலாற்றுக் காலங்கள் தோறும் அவர்கள் மேல் சுமத்தப்படும் உழைப்புச் சுமை, தொழிற் சுரண்டல் என்பவை நீங்கி ஓர் சமவுடைமை உலகு உருவாகுமோ? என்கின்ற ஏக்கத்தை காவிய முடிவில் எழுப்புகின்றார். மாற்றமொன்று காணாமல் தன் மக்கள் மேலும் மேலும் துன்பத்துக்கு உள்ளாவார்களோ? என்ற கழிவிரக்கத்தையும் அவரிடத்தில் காண முடிகின்றது.
" அப்பனைப் போன்றே அவர்களும் வறிதே அரை உயிர் வாழ்வரோ அன்றி மெய்ப்பொருள் உணர்ந்து தெளிந்து கொள்வரோ மிடிமையைத் தொலைத்திடு வாரோ
வஞ்சனை கபடம் மாண்டு போம்படியாய் வழிகளை வகுப்பாரோ?”
தாயகம் 78
 

(குருதி சிவப்புச் சூரிய அத்தமனம் N
பொழுதில் தொடங்கி அமைதியான தீமை விளைக்காத உடுக்களுடன் முடிந்த அந்த மாலைப் பொழுதில் அனைத்துமே ஒழுங்கற்றுக் கிடந்தன. நிலையங்களிலிருந்து பயணிகள் யாருமின்றிப் புகையிரதங்கள் கடுகி விரைந்தன. அரங்குகளும் சினிமாக் கொட்டைகளும் வெறிதாய் இருந்தன.
தெருக்களில் மனிதர் தாங்கள் அறிந்தவர்களையும் புறக்கணித்தனர். மாலை ஒளியின் நிழல்களில் மனிதர் சிலர் துள்ளும் எலிகள் போலவும் வேறு மனிதர் மீயெடுப்பான குரவையொலிக் கருவிகள் போலவும் இன்னும் வேறு மனிதர் பறவைகளதோ அரிதான மீனினங்களதோ எலும்புக் கூடுகள் போன்று விசித்திரமான வடிவங்கள் கொண்டும் தோன்றினர்.
யாருமே அறிந்திராத ஒரு மனிதன் நட்டாற்றில் நீந்தியபடி ஒளிரும் நிலவின் தடத்தைப் பின் தொடர்ந்தான். என்ன நடக்கும் என்று அனைவரும் காத்திருந்தனர்.
நள்ளிரவினளவில் சூறைக் காற்று வனங்களிலிருந்து விரைந்து வந்து கீழிறங்கி நம் கூரைகள் மீது இறாஞ்சியது.
அலெக்சாண்டர் வுசோ
الري )யூகோஸ்லாவியா( ܢܠ
என் மீது துப்புக எசமானரே.
b flipidity GOTLD பல்லில்லாத ஒருவாய்.
யூசுஃப் அல் - க்ஹல்
(லெபனான்)
ஏப்ரல் ஜூன் 2010

Page 32
மொழிபெயர்ப்புச் சிறுகதை
உள்ளடக்கம் மீதான புரிதலும் தெளிவுமே இலக்கியத்தின் இன்ன பிற அம்சங்களோடு இணைந்து வாசகனிடத்தில் சிந்தனைப் பிரவாகத்தை ஏற்படுத்துகின்றது. உலக மனித வர்க்க வரலாறு பற்றிய முன்னறிவு ஆதிபகவனை முழுதும் புரிந்து கொள்வதில் அவசியமானதாகும்.
மஹாகவி, முருகையன் ஆகியோரின் காவியங்களில் வெளிப்படும் மனிதனின் இருத்தல் பற்றிய சிந்திப்பு அவதானத்துக்குரியது. கந்தப்ப சபத்தில் விஞ்ஞானத்தின் அழிவுப் பக்கங்களை எல்லாம் பலவாறாகச் சுட்டி இறுதியில் "முற்றிற்று, மீண்டும் முயல்வோமே! என்னும்/முறுவலித்தே' என நம்பிக்கை குரல் உயர்த்துகின்றார் மஹாகவி. நெடும் பகலிலும் இத்தகையதொரு நம்பிக்கை ஒளியுடனேயே காவியத்தை முடிக்கின்றார் முருகையன்.
"ஆவலோடு காத்திருந்தார் அவர்கள் அங்கே ஒளிகாட்டத் தீவம் இல்லையானாலும் 'தென்பு மிகுந்தது நெஞ்சகத்தே மேவி விளக்காய் மின்னிய தவ் விளக்கின் ஒளியை மங்காமல் காவல் காத்தார் இருபேரும் காலம் மெல்ல நகர்கின்றது’
சாதாரண மனிதனது சரித்திரத்திலும் முடிவுறாத மனித வாழ்வு பற்றியே பேசுகின்றார் மஹாகவி.
* அன்று பிறந்து இன்று இறப்பதுள் - ஆயதன்று நம் மானிட வாழ்வுகாண் அப்பனே மகனாகி - வளர்ந்து
உயிர் ஓய்தல் அற்று உயர்வு ஒன்றினை நாடலே உண்மை’
மற்றும் பல விஷயங்களைப் போலவே மரணத்தைப் பற்றியும் மனிதன் பல மூட நம்பிக்கைகளை கொண்டிருந்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மரணத்தைப் பற்றி ஒரு விஷயத்தை மாத்திரம் அவன் சரியாக அறிந்து வைத்திருந்தான். அது தான் மரணத்தோடு அவனது வாழ்வு முடிந்து விடவில்லை என்பது. இந்தவொரு மாற்ற முடியாத உள்ளுணர் வில் அவன் எதையெதையெல்லாமோ நினைத்திருந்தான். ஆனால் அவனுடைய நினைப்புகளில் பல தவறு
தாயகம் 78
 

என்று விஞ்ஞானம் காட்டியதும் அவன் அந்தரித்துப் போனான். அந்த அந்தரித்த மனிதனுக்கு ஆறுதலையும், இடத்தையும் ஓர் அரிய கண்டு பிடிப்பையும் வழங்குவதே மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரத்தின் பயனின் மறு பகுதியாகும' என்கிறார் சண்முகம் சிவலிங்கம்.
அரிய கண்டுபிடிப்பாகவும் தத்துவக் கோட் பாடாகவும் இதனைக் காண்பது பொருத்தமான தன்று. சாதாரண மக்களின் நம்பிக்கையைத்தான் மஹாகவியும் கொண்டிருக்கிறார் என எண்ணலும் தவறு. முற்றிற்று, சாதாரண மனிதனது சரித்திரம் ஆகியவற்றில் இத்தன்மையே துலக்கம் பெறு கின்றது. மேற் குறித்த சண்முகம் சிவலிங்கத்தின் கருத்துக்கு எதிர் விமர்சனம் செய்யும் மு. பொன்னம் பலம் 'தமக்கு மகனோ மகளோ பிறக்காது வரும் தம்பதிகளின் விஷயத்தில் மஹாகவியின் தத்துவம் என்ன விதத்தில் ஆறுதல் கூறுமோ?’ என்கிறார்.
இருவரினதும் இக்கூற்றுக்கள் மனித வர்க்கத்தின் தனி உயிரியை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டது என்பது தெளிவு. ஒட்டு மொத்த மனித வாழ்வையும் கண்டு தெளிகின்ற விமர்சனக் கூர்மையை இவர்களிடத்து காண முடியாதுள்ளது.
முருகையனின் நெடும்பகலில் அவர் படைத்திருக்கும் இரண்டு ஆணும் பெண்ணும் பூமியின் மாற்றங்களுக்கெல்லாம் காலந்தோறும் உட்படுதல் என்பதை அவ்வாறே பார்க்க முடியுமா? முருகையன் கால மாற்றத்தை, குறித்த பாத்திரங் கள் எதிர் கொள்வதன் ஊடாகவே சித்திரிக்கின் றார். அவர் புலப்படுத்துவது வரலாற்று ரீதியான பொது மனித வாழ் வியலே அல்லது மனித வாழி க் கை எவ்வாறு அலைக் கழிதலுக்கு உள்ளாகின்றது என்பதே.
இத்தகைய தோர் தனி மை யையே மஹாகவியும் முன்னிறுத்துகின்றார். எனினும் அவருடைய யதார்த்தச் சார்பும் காவிய உத்தியும் முருகையனில் இருந்து பெரிதும் வேறுபட்டது. நடை முறை உலக வாழ்க்கையையே சித்திரிக்கும் தன்மையால் பிறந்தமை, நடந்தமை, முனைந்தமை என காலப் பாய்ச்சலை மேற்கொண்டாலும், முருகையனின் மிகப் பெரிய காலப்பாய்ச்சல் இங்கு கிட்டிய சந்ததி மாற்றமாகின்றது. அவ்வளவுதான. வேலுப்பிள்ளை - முத்தையன் - வேலுப்பிள்ளை என்பவர்கள் எல்லாரும் மனிதனின் பிரதிநிதிகளே. மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விட வில்லை
) ஏப்ரல் ஜூன் 2010

Page 33
மொழிபெயர்ப்புச் சிறுகதை
என்பது கவனிக்கத்தக்கது. பொது மனித தளத்தில் வைத்து இதனைப் பார்க்கும் போது மஹாகவியின் படைப்பாற்றல் உச்சம் பெறுகின்றது.
இன்னுமொன்று முன் வாழ்ந்த காலத்து மனிதனது சிந்தனைகளாலும் அவன் செதுக்கி வைத்த பண்பாடுகளினாலும் உற்பத்திச் செயன் முறையாலும் மனிதன் தலை முறை ரீதியாக தொடுக் கப்பட்ட உள்ளார்ந்த பிணைப்பைக் கொண்டுள்ளான் மனிதவர்க்கத்தின் உலைவுகள் காலந்தோறும் மாறாததொன்றாகும. வர்க்க பேதங்கள் தகர்ந்து போகும் வரையிலும் மனிதன் தான் பிறந்த வர்க்கத்தின் துயரங்களைச் சுமக்க வேண்டியதாகின்றது. வேலுப்பிள்ளை முத்தைய னாகவும் முத்தையன் வேலுப்பிள்ளையாகவும் பிறத்தல் என்பது சந்ததிகளின் அக வழித் தொடர்பன்று. சமூகஞ் சார் புறவழித் தொடர்பாகும். இதனையே முருகையனின் குரல் வாயிலாகவும் கண்டு கொள்ள முடிகிறது.
* முன்னைப் பிறப்பின் கடன்கள்
அடைப்பதற்கே இம்மைப் பிறப்பை எடுத்துள்ளோம் இம்மைப் பிறப்பின் கடன்களை அடைக்கும்
பொருட்டு பிறப்போம் நாம் இன்றும் பிறகு”
"அது-அவர்கள் சாதாரண மனிதனது சரித்திரத்தில் வேலுப்பிள்ளை-முத்தையன், முத்தையன் - வேலுப்பிள்ளை என ஆண் வழி மானிட இருத்தலை மஹாகவி குறித்துரைப்பது அவரிடத்தில் ஊன்றியுள்ள ஆண் மையச் சிந்தனையை எடுத்துக் காட்டுகிறது. இத்தன்மையை முருகையனிடத்திலும் காணலாம். ஆதி பகவனில் ஆதிக்கும் பகவானுக்குமுள்ள குடும்ப வாழ்வைச் சித்தரிக்கும் போது
'ஆதியும் போய்க் குடி அமர்ந்தாள் அவன் சில மூடை நெல் கொண்டு
வந்தான் அவள் அதை அரிசியாய்ப் புடைத்தாள் அவன் சில கிழங்கும் கத்தரிக்காயும் அவரை மீன்களும் தந்தான் அவள் அவை எல்லாம் கறி குழம்பாக்கி ஆக்கினாள் சோற்றையும் அளித்தாள்’
இப் பாடலிலும் அது அவர் கள்' காவியத்திலும் சுட்டப்படும் ஆண், பெண் ஆகியோருக்கிடையிலான தொடர்பும் ஆண்மைச்
தாயகம் 78
 

/്
நூல் : ஆர்கொலோ சதுரர்
(நடன நாடகம்)
\ണ്ട്ര செந்தமிழ் வெளியீடு - 20/
6)6)IỞ56ỞbIIII) LIIIIII
என்னை நேசித்த வைக்கோற் பாயொன்று எம்மிடம் இருந்தது நினைவிலுள்ளது. அது எனக்குச் சொல்லும்: என் பிள்ளாய், நாளைக்கு ஆலய விழா புன்னை இலை வளையங்களும் மெழுகு
திரிகளும் தேவாலயத்தை நிறைத்திருக்கும்
ஆலய விழா வந்தது பிற விழாக்களும்
தொடர்ந்தன அவற்றையெல்லாம் ஒரு ஆடைபோல
அணிந்தேன் சடங்குகளின் போது இயேசுவைத் தன் சுவர்க்கமாகக் கொண்ட ஒரு சாம்பிராணித் தட்டத்தைச் சுமந்தேன்
இருந்தாற் போற் திடீரென்று புகை தன் பாதையை மாற்றி நத்தார் மணியினின்று விலகிச் சென்றது அது தேவாலயக் கற்களின் ஒம்புனராகத் திரும்பி வரவில்லை
எனது கிராமத்தில் காலத்தினளவு தொன்மையான ஒரு வைக்கோற் பாய் இருந்தது.
ஃபு'அட் றி.ப்கா
(சிரியா)
ஏப்ரல் ஜூன் 200

Page 34
மொழிபெயர்ப்புச் சிறுகதை
சமூகச் சிந்தனையின் வழி நின்று முருகையன் நோக் உற்பத்தித் திறன் ஆணுடையதாகவும் பெண் அவ வேலைகளைச் செய்தல் என ஆதிச் சமூகத்திலும் ( நோக்குதற்குரியது.
நவீன காவியத்தை வளம்படுத்திய முக்கிய முக்கிய முனைப்பான அம்சங்களே ஒப்பிட்டு உரைக்க குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வெளிவரு வரைவு மாத்திரமே.
டொன் மற்றேரா (தென்னாபிரிக்கா 1935)
கவிஞர் சாக வேண்டும் அவருடைய முணுமுணுப்பு அவர்களுt அவருடைய மூச்சு ஒரு புரட்சியை மு( அவர் அழிக்கப்பட வேண்டும்
அவரைத் தடைசெய்க அவரைத் தீவுக்கு அனுப்புக துப்பாக்கி வேட்டுக் குழுமத்தைக் கூப் சுவரிலிருந்து அவருடைய குருதியைத் பின்பு சுவரை இடியுங்கள் வீட்டை நொருக்குங்கள் அயலவரைக் கொல்லுங்கள்
அவர்களுடைய பொய்கள் உயிர் வாழ கவிஞர் சாக வேண்டும்.
 
 

கியுள்ள தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது. னைச் சார்ந்திருப்பவளாகவும் சமைத்தல் வீட்டு பெண் அவ்வாழ்வு பெற்றாள் என்பதாக குறிப்பது
மூன்று கவிஞர்கள் குறித்த இக்கட்டுரையில் சில கப்பட்டுள்ளன. முருகையனின் நவீன காவியங்கள் தல் அவசியமானதாகும். இவ்வாய்வு ஒர் முன்
A 21 01 醇 Z9ے
ÖD ULI உயிர்வாழ்தலை மிரட்டுகிறது டுக்கிவிடக்கூடும்
பிடுங்கள்
துடைத்துவிட மறவாதீர்கள்
pவதற்குக்
) ஏப்ரல் ஜூர்ை 200

Page 35
கையிலே இரண்டு பயணப் பைகளுடன் மருதானை புகையிரத நிலையத்தில் இறங்கிய வேளை எட்டு மணி தாண்டிவிட்டது. சாடையாக மழையும் தூரத் தொடங்கி விட்டது. பம்பலப்பிட்டி, காலி வீதியில் டிக்மன் வீதி சந்தி கடந்து இறங்கிக் கொஞ்சத் தூரம் நடக்க வேண்டும். மழை உரத்தால் பிரச்சனை. கையிற் குடையும் இல்லை. புகையிரத நிலையத் தின் பக்க வாசல் அடைக் கப்பட்டு விட்டது. முன் வாசலால் வெளியேறி வலப்புறம் திரும்பிச் சந்தியருகாக மறுபடியும் வலப்புறம் திரும்பிப் படிகளின் கீழே இருந்த கடைகளை மூடிக் கொண்டிருந்தவர்கட்கும் மழைத் தூற்றலுக்கு ஒதுங்கி நின்றவர்கட்கும் நடுவாகச் சுழியோடி பஸ் தரிப்பை அடைந்தேன். அதற்குள் கல்கிஸ்ஸைக்குப் போகிற பஸ் என்னைத் தாண்டி ஓடியது. கையில் ஒரு பை மட்டுமென்றால் வசதியாகக் கையை நீட்டியிருக்கலாம். நிறுத்தி ஏற்றியிருப்பார்கள். ஏனென்றால் இப்போதெல்லாம் யாரையும் ஏற்ற பஸ்ஸை நிறுத்துவதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் இல்லையே.
எனவே மழைத் தூற்றலுக்காக ஒட்டோ பிடிக்க வேண்டிய எண் எண்ணத்தை நான்
(3
 

園 恕妃 N 牌 İ) 曬 艮
தவறவிட்ட பஸ் உறுதிப்படுத்தியது. என்றாலும் மழையும் மாலைப் பொழுதுமான போது ஒட்டோ பிடிப்பது கஷ்டம். அதை விடக் கையில் இரண்டு பைகளுடன் நிற்கிற ஒருவரின் அவசரத் தேவையை விளங்கிக் கொள்வது ஒரு ஒட்டோக்காரருக்குக் கடினமல்ல. சாதாரணமாகவே முன்பின் தெரியாத ஒட்டோக் காரருடன் பேரம் பேசாமல் வண்டி ஏறியது அரிது. எனவே வழமையாக இருநூற்றைம்பது கேட்கிற தூரத்திற்கு முன்னுறோ முன்னுாற்று ஐம்பதோ கொடுக்க வேண்டி வரலாம். கையில் போதியளவு பணம் இருந்தாலும் அநியாயத்துக்கு ஐம்பது, நூறு நட்டப்பட யார் விரும்புவார்கள்?
அன்றைக்கென்று பொடி மெனிக்கே கடுகதி வண்டி ஒரு மணி சுணங்கித்தான் கடுகண்ணாவைக்கு வந்தது. இல்லாவிட்டால் ஏழு மணிக்கு வந்து சேர்ந்திருப்பேன். மழையைக் கூடத் தவிர்த்திருக்கலாம். அதிகம் முறைப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டேண் . ஏனென்றால் மேலாகத் தூறல் தொடர்ந்ததே ஒழிய இன்னும் வானம் அவிழ்ந்து மழை கொட்டத் தொடங்கவில்லை.
ஏப்ரல் ஜூன் 2010

Page 36
சிறுகதை
ஒட்டோ கி களுக் குளிர் பயணிகள் உள்ளனரா இல்லையா என்று சொல் வது கடினமாக இருந்தது. மழைத் தூறலுக்காக இரண்டு பக்கமும் படங்குத் திரைகளை இழுத்து மூடியிருந்தார்கள். எனவே என்னை நோக்கி வந்த ஒட்டோவுக்கு கை நீட்ட வேண்டியிருந்தது. கடைசியாக ஒரு ஒட்டோ வந்து எனக்குக் கொஞ்சம் முன்னாலே நின்றது. 'காலு பாற டிக்மன் ஹந்தியட்ட கியத?’ என்று கேட்டேன் ‘தெசியக் தென்ட மாத்தயா” இருநூறு ரூபா? இடத்தைச் சரியாகக் கேட்காமல் சொல்லுகிறாரோ என்று நினைத்தேன். உறுதிப் படுத்துவதற்காக மீண்டும் 'காலு பாற, டிக்மன் ஹந்திய” என்றேன். 'மாத்தியா நகின்ட” என்றார். படங்குத் திரையை விலக்கி உள்ளே ஏறினேன்.
ஒட்டோக்காரர் எவரும் தன் வீட்டுக்குப் போகிற வழியில் என்றால் அருமையாக இப்படிக் குறைந்த கட்டணம் கேட்பார். ஆனால் என் போல மழைத் தூறலில் இரண்டு கைகளிலும் பைகளுடன் நிற்கும் ஒருவரிடம். வண்டி ஓடும் போது மாறி மாறித் தெரு விளக்குக்களதும் கடைகளதும் ஒளி வண்டிக்குள் விழுந்தது. முன் கண்ணாடிக்கு மேலாக அரபு எழுத்துக்களைக் கண்ட பிறகு தான் ஒட்டோக்காரரின் தலையில் இருந்த சிறிய விளிம்பற்ற தொப்பி கண்ணிற் பட்டது. டீன்ஸ் றோட்டுக்குள் வண்டி திரும்பிய போது பக்க வாட்டாக அவருடைய முகம் தெரிந்தது. மீசையில் லாமல் தாடையைச் சூழத் தாடி வைத்திருந்தார். தாடி பெருமளவும் நரைத்திருந்தது.
பொதுவாக ஒட்டோக் காரர்களுடன் பேச்சுக் கொடுத்தால் பேசிக் கொண்டே போ வார்கள். சிங் களத்தில் கொஞ்சம் பிழையில்லாமல் சமாளிப்பேன் என்றாலும் தமிழில் உரையாடுவதற்கு இது ஒரு வாய்ப்பு. 'மழை பல மாகி விடுமோ தெரியாது’ எண் று தொடங்கினேன். 'பேஞ்சாலும் பேயும் தொரே சொல்லிக்க முடியாது’ என்றார். 'இண்டைக்கு ற்றெயின் நல்ல லேற்றாப் போச்சு” என்றேன். "எங்கிட்டிருந்து வரீங்க?’ ‘கடுகண்ணாவ பொடி மெனிக்கே.'. 'அந்த வண்டி நேரம் சொல்லிக்க முடியாது’. இந்த மாதிரிச் சொற்சிக்கனமாக எங்கள் உரையாடல் தொடர்ந்து கொண்டு போகிற போது நகர மண்டபத்தைத் தாண்டிச் சென்று ற்றொறிங்ற்றன் பிளேஸ் சந்திக்கு கொஞ்சம் முன்னதாக வண்டி நின்று விட்டது.
வண்டி நிற்பதற்கு அதை விட வேறு இடம் இல்லையா என்று யோசித்தேன். 'தொரே
தாயகம் 78
 

கொஞசம் இரிங்க' என்று சொல்லி விட்டு வண்டியின் பின்புறமாகச் சென்று எஞ்சினை ஏதேதோ செய்து பார்த்தார். இயந்திரம் ஒத்துழைப்பதாக தெரியவில்லை. 'பிரச்சனையா?” என்று தலையை வெளியே நீட்டிக் கேட்டேன். "ஆமா..” என்று அவர் சொல்லத் தொடங்க. 'நான் இறங்கி வேற ஒட்டோ பிடிக்கட்டோ?’ என்று சொல்லியவாறு நான் இறங்க, 'இரிங்க தொரே. ஒரு நிமிசம்' என்று சொல்லி விட்டுத் தன் கைத் தொலைபேசியில் ஒரிரு பேருடன் பேசினார். 'ஆண்டவன் புண்ணியத்தில நம்ம கூட்டாளி ஒரு ஆள் இங்கிட்டால வாறது. தொரயே நான் ஏத்தி வடுறேன்’ என்றார். வருகிற ஆள் என்ன கட்டணம் கேட்பாரோ, வந்த தூரத்துக்கு எவ்வளவு கொடுக்க வேண் டுமோ எண் று மனம் பலவாறாக யோசனையில் அலைந்தது. ஒட்டோக்காரர் வண்டிக்கு வெளியே எட்டி எட்டிப் பார்த்தபடி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். மழை அப்போது போலத்தான் இப்போதும் தூறியபடி இருந்தது.
எங்களுடைய ஒட்டோவுக்கு பின்னால் ஒரு ஒட்டோ வந்து நின்றது. இரண்டு ஒட்டோக் காரர்களும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். எனக்கு ஒன்றும் சரியாகக் கேட்க வில்லை. "தொரே அவரோட ஆட்டோல ஏறுங்க அவர் கிட்ட எல்லாம் சொல்லியிருக்கி. இருநூறு ரூவா குடுங்க” என்று சொல்லியபடியே என் பயணப் பைகளை எடுத்து மற்ற ஒட்டோவில் ஏற்றினார். “இவ்வளவு தூரமும் வந்தததுக்கு உங்களுக்கு.” என்று இழுத்தேன். 'வாணாம், அவருகிட்ட இருநூறு ரூவா குடுங்க” என்றார். எனக்கு அவரைப் பார்க்க இரக்கமாக இருந்தது. 'பரவாயில்லை வைச்சுக் கொள்ளுங்க” என்று ஒரு நூறு ரூபாத் தாளை நீட்டினேன். 'வாணாம் தொரே என்று மறுத்து விட்டார்.
ஒட்டோக்காரர்கள் எல்லாரும் பயணி களிடம் இருந்து கறக்க கூடியதை கறக்கப் பார்க்கிறவர்கள் என்று நினைத்திருந்த எனக்கு இப்படி ஒரு மனிதரை அறியப் பெரும் வியப்பாக இருந்தது. அவருக்கு நான் நட்ட ஈடாகப் பணம் கொடுக்கப் பார்த்தேனே ஒழிய நன்றி என்று ஒரு சொல்லைக் கூடச் சொல்லவில்லையே என்று எனக்கு-வெட்கமாக இருந்தது.
என்னுடைய மனதுக்குள் இந்த விதமாக எண் ணங் களி ஓடிக் கொணர் டிருந்ததால் ஒட்டோக்காரரிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. இன்னொரு முறை ஒட்டோ நின்றது. "சேர் டிக்மன் சந்தி வந்தாச்சி. இனிமே எங்கிட்டுப் போவனும்?”
D

Page 37
சிறுகதை
என்று கேட்டார். "சீ சைட் திரும்பி வர நீளமா 员 என்றேன். “சேர் நீங்க இங்கிட்டு இறங்கினா சரி போவணும்’ என்று சொல்லியபடி என் மறுமொழிக்கு வரை கொண்டு போய்த் திருப்பிக்கொண்டு வந்து
இரண்டு நூறு ரூபாத் தாள்களை நீட்டினே6 முன்பு 'முதல் ஏறின ஒட்டோக்காரருக்கு இதை தாளை நீட்டினேன். 'ஜபார் நானா எடுக்க மாட்டா காத்திராமல் ஒட்டோவை கிளப்பி விட்டார்.
தங்களுடைய தொழிலில் இப்படிச் சுய நேரத்துக்குள் அறியக் கிடைத்தது. அவர்களுடைய ஒருவர் ஜபார், மற்றவர்.?
மழை இன்னமும் லேசாகத் தூறிக் கொண் கனத்தன. என் மனதைப் போல.
இளைஞர் அனைவரும் கனாக்கான :ே
ஆனாலும், முப்பத்து மூன்று வயதில், நீ கற்றிருக்க வேண்டிய காலமில்லைய
நீ இழக்கக்கூடியது இழக்கப்படும். அவர்கள் உன்னிடமிருந்து எடுக்க இய இழப்பின் வேதனை, நிலத்திருக்கும் 6ே
இத்தகைய காலந்தவறாத மனஉடைவி இறுதியாக நீ வாழக் கற்கும் வரை
அது உனது.
அப்போது அவர்கள் அதையும் எடுத்து
 
 

புண்ட் அடிக்க வேணும். இங்கேயே இறங்குகிறன்'
அங்கிட்டு இறங்கினா சரி, நா திரும்பி தானே
காத்திராமல் ஒட்டோவைப் பிள்ளையார் கோவிலடி இறங்க வேண்டிய இடத்தில் இறக்கினார்.
ன். வாங்கிக் கொண்டு அவர் ஒட்டோவைக் கிளப்பு 5 கொடுக்கிறீங்களா?’ என்று ஒரு நூறு ரூபாத் சேர்.” என்று சொல்லி விட்டு என் மறுமொழிக்கு
கவுரவம் பார்க்கிற இரண்டு பேரை அரை மணி பேரைக் கேட்கக் கூட நான் முயற்சி எடுக்கவில்லை.
டிருந்தது. பயணப் பைகள் கொஞ்சம் அதிகமாகக்
வெய்ன் பிரவுண் (ற்றினிடாட் 1944 - 2009)
வண்டும்,
厅?
லாதது வதனை முத்து -
ன்றி,
க் கொள்வார்கள்.

Page 38
உரைநடைக் கவிதை
தாய்மை எய்துவதன் மூலம் ஒரு பெண் தனது பெண்மையை நிறுவுவதுடன் மட்டுமன்றிப் பெண் ணாகத் தன் னை முழுமைப் படுத்திக் கொள்கிறாள் என்று சொல்லப்பட்டாலும் அதினும் முக்கியமாக அவள் ஒரு ஆணின் ஆண்மையை நிறுவுகிறாள் என்பதால் ஒரு ஆண் தன்னை முழுமைப் படுத் திக கொளர் வதற்காகவே திருமணங்கள் சொர்க்கத்திலும் சமையலறையிலும் சாவீட்டிலும் இணையத்தளங்களிலும் இன்னும் பல இடங்களிலும் பெற்றோர் உறவினராலும் பெரியோர் நணி பர் களாலும் எலி லார் சார் பாகவும் தரகர்களாலும் தவறுமிடத்து மணமக்களாலும் பல வேறு பேரங்களினதும் கொடுக்கல் வாங்கல் களினதும் வாதப் பிரதிவாதங்களினதும் நடுவே நிச்சயிக்கப்படுகின்றன.
திருமணம் அதன் விதிக்கப்பட்ட இலக்கான வம்சவிருத்தியை எய்தாதபோது ஆண் முழுமை எய்தாதவனாகித் தெய்வங்களாற் சபிக்கப்படக் கூடுவானாதலால் தாய்மை எய்தாத பெண் தான் தண்டனைக்குரியவளாகிறதைத் தவிர்க்கும் முகமாகத் தன்னைத் தானே பல்வேறு விதங்களில் தண்டித்துக் கொள்கிறாள்.
அவி வாறு தான் ஒருவனுடைய முதலாவது மனைவி வேண்டாத தெய்வங்களை எலி லாம் வேண்டி வழிபடாத கோயில் களிலெல்லாம் வழிபட்டுச் சுற்றாத மரங்களை எல்லாம் சுற்றி முழுகாத கேணிகள் குளங்கள் ஏரிகள் ஆறுகள் கடல்கள் எல்லாவற்றிலும் முழுகி ஏறாத மலைகளெல்லாம் ஏறிக் கைகளிற் கற்பூரச்சட்டியும் தோளிலே காவடியும் தலையிலே கும்பமும் சுமந்து மண்பாதைகள் வழியே நடவாமல் உருண்டு நகர்ந்தும் உண்ணா நோன்புகள் பல இருந்தும் தாய்மை கிட்டவில்லை.
இரண்டாவது மனைவி பல விதமான சோதிடர்களிடமும் ஆலோசனை பெற்றும் தன் பேரின் எழுத்துக்களையும் அணிகலன்களிற் பதித்த கற்களையும் ஆடைகளின் நிறங்களையும் பரிந்துரைகட்கேற்பப் பலமுறை மாற்றிப்பார்த்தும் மஞ்சள் சிவப்பு நீலம் காவி வெள்ளை உட்பட்ட பலவேறு நிறங்களுள் தங்களைப் பதுக்கிக் கொண்ட மாந்திரீகர்களது ஆலோசனைகளைக்
தாயகம் 78
 
 
 

கேட்டு அவற்றுக்கமைய கைகளிலும் கழுத்திலும் இடுப் பிலும் வேறுபட்ட நீளமும் தடிப்பும் நிறமுமுடைய கயிறுகளையும் தங்கம் வெள்ளி பித்தளை செம்பு அலுமினியம் பிளாஸ்ற்றிக் தாயத்துக்களையும் அணிந்தும் தாடி வைத்த வைக்காத தலை முடியை வளர்த்த வளர்க்காத முற்றாக அரைகுறையாக மழித்த மழிக்காத பூணுரல் அணிந்த அணியாத திருமணம் ஆன ஆகாத சாமிகள் யோகிகள் சித்தர்கள் சன்னாசிகள் அவதாரங்கள் அனைவரதும் ஆசிகளை அவர்களது வாய் கை கால் வழிப்பெற்றும் அவர்களது அற்புதங்களைக் கண்டு வியந்தும் வெகு சாதாரணமாக தெரியும் தாய்மை எனும் அற்புதம் நிகழவில்லை.
மூன்றாவது மனைவி ஆயுர்வேதம் சித்த மருத்துவம் யுனானி ஹோமியோபதி அலோபதி தொடங்கி அக்குபங்சர் அறுவை மருத்துவம் வரை அனைத்து மருத்துவ முறைகளையும் பரீட் சித்துப் பல்வேறு வடிவங்களிலான மாத்திரைகளை உடைத்தும் உடையாமலும் பல்வேறு நிறங்களிலான கலவைகளைக் குலுக் கியும் குலுக் காமலும் பல வேறு மணங்களையுடைய பொடிகளைக் குழைத்தும் கரைத்தும் விழுங்கியும் மோந்தும் குப்பிகளில் அடைத் த பேர் தெரிந்த தெரியாத திரவங்களைச் சிறிய பெரிய ஊசிகள் வழியாக உட்கொண்டும் கத்திகள் முதலாகப் பல்வேறு வெட்டுக்கருவிகளாற் தன்னைக் காயப்படுத்தியும் தன் உடலைப் பல வேறு நிபுணர் களதும் பரிசோதனைக் கூடமாக்கியும் தாய்மை எனும் விளைவு நிகழவில்லை.
நான் காவது மனைவி முன் கூறிய வாறெல்லாம் அல்லற்படாது தனது பெண்மையை நிறுவித் தன்னை முழுமைப் படுத்தி அதினும் முக்கியமாக ஒரு ஆணின் ஆண்மையையும் நிறுவினாள்.
நாம் விரும்பும் விடைகளையே நாம் பெற விழையும் வரை நிறுவ வேண்டியது எவ்வாறோ நிறுவப் படுமாயினி நிறுவப் பட்ட விடயம் உண்மையோ பொய்யோ என்பது முக்கியமான தல்லவே!
蠶
ஏப்ரல் ஜூன் 2010

Page 39
பின் வரலாற்றியல் தொடர் கதை
ஆங்கிலேயரீர் பரீ
நீங்கள் ஊகித்திருக்கக் கூடிய விதமாகக் கண்ணனுக்காக ஒரு ஆங்கில ஆராய்ச்சியாளரும் காத்திருக்கவில்லை. கண்ணன் சஞ்சலப்படும் விதமாக எதுவும் அமையவில்லை. தேஞ்சுப் பூம்பட்டினத்தில் அவனைச் சந்திக்க லிங்கனும் சூசையும் வந்திருந்தார்கள். அவனைக் கொண்டு செல்ல ஒரு மின் மகிழுந்து ஏற்பாடு செய்யட் பட்டிருந்தது. மகிழுந்து தேஞ்சுப் பூம்பட்டினத்தின் தென்கிழக்காகச் சென்றது.
ஆ.வி.போ.சி. அமைப்பின் மத்திய ஆங்கில நாட்டுத் தலைமைக் குழுவினரின் கூட்டம் இங்கிலாந்திற்கும் பிரான்சிற்கும் இடையே உள்ள கடற் கீழான நூற்றுச்சொச்ச கூப்பிடு தொலை நீளமான பாழடைந்த சுரங்கம் ஒன்றில் நடந்தது கண்ணனுக்கு அப்படி ஒரு சுரங்கத்தைத் தன் முன்னோரும் பிரெஞ்சுக் காரரும் சேர்ந்து அமைத்ததைப் பற்றித் தெரியும். அடுத்தடுத்து நடந்த தீ விபத்துக்களின் பயனாகச் சுரங்கத் தொடர் வண்டிச் சேவையை நடத்த முடியாமற் போய் விட்டது. சுரங்கத்தின் சில பகுதிகள் தூர்ந்து
(
 

s
- 5 - , , 0க்கஞ் சேர் (லம்
( முன்வரலாற்றுச் சுருக்கம்
கண்ணன் யார் என்று உங்களுக்குத் தெரியும் அடுத்தடுத்து ஆட்கடத்தலுக்கு உட்படுகிற கண்ணன் ஆங்கில ஆராய்ச்சி மாநாட்டில் கடத்தப்பட்டு மீண்ட பிறகு, அவனை மிட்ட ஒருவனும் முனர் பினர் தெரியாத இன்னொருவனுமாக அவனை அவனுடைய வீட்டு வாசலடியிலிருந்தே இழுத்துச் சென்றனர். அவர்கள் அவனை வானவிதிப் பின்னலுக்குக் ) கொண்டு சென்றனர் என்றும் அவனுக்குத் தேஞ்சுப் பூம்பட்டினத்தில் ஆங்கில ஆராய்ச்சி அறிஞர் ஒருவரைச் சந்திப்பதற்கான அழைப்பு வந்திருநதது என்றும் அறிவர்கள். தேஞ்சுப்பூம்பட்டினத்தில் அவனை என்ன காத்திருந்தது என அறியத் தொடர்ந்து
\வாகியுங்கள்
ஏப்ரல் ஜூன் 2010

Page 40
பின் வரலாற்றியல் தொடர் கதை
விட்டன. ஆங்கில நாட்டை அண்டிய ஒரு பகுதி மனித நடமாட்டத்துக்கு ஏற்றதாக இருந்தாலும் பல காலமாக, அதாவது அதை ஆ.வி.போ.சி. கண் டு பிடிக் கும் வரை, அது பாவனை யற்றிருந்தது.
சுரங்கத்தினுள் மெழுகுதிரி ஒளியில் தான் கூட்டம் நடந்திருக் கும் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். சுரங்க வாசலில் சூசையும் வேறிருவரும் காவலுக்கு நின்றனர். மத்திய ஆங்கில நாட்டுத் தலைமைக் குழு ஏன் தென் கிழக்கு ஆங்கில நாட்டு எலி லை மாநிலமொன்றில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று என்னைக் கேட்காதீர்கள். ஆங்கிலேயர் தமிழர் (3L T60 தர் க் க ரீதியாகச் செயற்படுகிறவர்கள் அல்ல என்று உங்களுக்குத் தெரியும் . அதைவிட ஆங்கில அரசியல் மரபுக்கமையத் தலைவர்கள் தாங்கள் எதையும் ஏன் செய் கிறோம் எண் று எவருகி கும் விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்களல்ல.
கண் ணனைப் போலப் புதிதாக உறுப்புரிமை பதியப் பெறுவதற்காகவும் பணிகள் விதிக்கப்படுவதற்காகவும் நாலைந்து பேர் வந்திருந்தனர். யாரும் யாரையும் அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கண்ணன் கொஞ்சம் ஒதுங்கி நின்றான்.
அவர்களுள் உள்ளுவராமிட்டனில்
கண்ணனுடைய பழைய பாடசாலையிற் படித்த
ஆவி, அலுப்பிரட்டு என்ற பேர்களைக் கொண்ட இருவர் இருந்தனர். அவர்கள் கீழ் வகுப்பு மாணவர் கள் எண் பதால் கண் ண னுக் கு அவர்களைத் தெரியாது ஆனால் அவர்களுக்குக் கண்ணனைத் தெரியும். தயங்கித் தயங்கிக் கண்ணனிடம் போய்த் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். கண்ணன் எருதுக்கடவைக்குப் போய் மீண்ட கதை அவர்களுக்குத் தெரியும். எனவே, உலகின் அதிகார மையமான தமிழர் தாயகம் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தார்கள். அவர்கள் விசாரித்ததை விடத் தீவிரமான ஒரு விசாரணைக்குத் தான் உட்பட இருப்பதைக் கண்ணன் எதிர்பார்த்திருக்கவில்லை.
குறிப்பிட்ட நேரத்திற்கும் பின்னரே கூட்டம் தொடங்கியது. வரவேற்புரையில் கூட்டத்திற்கு வந்தவர்கள், வர இருப்பவர்கள், வர இயலாது போனவர்கள் எல்லாருடைய
该
தாயகம் 78
 

பர் களும் சொல் லப் பட்டு வரா மைக் கு 1ளக்கங்களும் கூறப்பட்டு முடிய ஒரு நாழிகை 4 மணித் துளிகள் என்பது) அளவில் எடுத்தது. ன்பு தலைமையுரை ஆற்றிய பேதுரு பாவல் ங்கம் (இயக்கத்துக்குள் தோழர், நண்பரெல்லாம் டையாது. எல்லாரும் சிங்கம் என்றுதான் ளிக்கப்படுவர்) மேலும் ஒரு நாழிகைக்கு மேற் பசினார். அவர் சொன்னதை தொகுத்துப் பேசிய ங்கம் இரண்டு நாழிகை நேரமாவது பேசியிருப்பார். ண்ணனுக்கு ஆங்கிலேயர் மீது வெறுப்பு வந்தது. மிழரின் நேரந் தவறாமை, சொற் சிக்கனம் போன்ற புனைத்தையும் நினைத்த போது தமிழர்கள் -6060)85 ஆளுவதில் என்ன வியப்பு என்று யாசித்தான். கட்டுப்பாடான போராளிச் ங்கங்களின் நிலையே இதென்றால் மற்ற |யக்கங்கள்? நினைக்கவே பயமாயிருந்தது.
கொள்கை விளக்கம் முடிந்ததும் |யக் கப் பொறுப்புக் களை வழங்கும் வபவம் தொடங்கியது. ஒவ்வொரு இளங் }ருளைக்கும் அவரவரது பொறுப்புக்களை பழங்குவதற்கு முதல் அவர்கள் ஒரு சுய மர்சனக் கூட்டத்திற்குப் போக வேண்டி ருந்தது. கண்ணனுக்குச் சுய விமர்சனம் ன்றால் என்னவென்று விளங்கவில்லை. ண்ணனுடைய திகைப்பைக் கண்ட ஆவி வனுடைய காதில் 'அதொன்றுமில்லை. டன்னுடைய சுயசரிதையைச் சொல்ல வேண்டும் |வ்வளவு தான்’ என்று குசுகுசுத்தான். ஆவி வி வளவு உலகம் தெரியாதவன் எண் று ண்ணனுடைய சுயவிமர்சனம் தொடங்கிய போது ான் கண்ணனுக்கு விளங்கியது.
கண்ணன் தான் தமிழர் தாயகம் சென்று iண்ட கதையைச் சொல்லி முடித்த பிறகு அவன் சால்லத் தவறிய நிகழ்வுகளும் சந்தித்தவர்களின் பர்களும் பட்டியலிடப்பட்டன. அவன் ஏன் அவற்றைக் குறிப்பிடவில்லை என்று திரும்பத் ரும்பக் கேள்விகள் கேட்கப்பட்டன. பேராசிரியர் பரு முடிக்கோவைப் பற்றி அவன் விவரமாகப் பச விரும்பிய போதும், அவரைப் பற்றி அதிகம் பிசாரிக்கப்படவில்லை. ஆனால் அங்கயற்கண்ணி ன்ற பெண்ணைத் தெரியுமா என்று கேட்ட போது }வண் கொஞ்சம் தடுமாறினான். முன்னரும் }வனிடம் அங்கி என்ற அங்கயற்கண்ணி பற்றிக் கட்ட போது போலன்றிக் கேள்வியின் தொனி காஞ்சம் வித்தியாசமாக இருந்தது. மருத்துவர் காதைநாச்சி அம்மையார் அங்கியுடைய தாயார் ன்று தெரியுமா என்று கேட்கப்பட்ட போது
) ஏப்ரல் ஜூன் 2010

Page 41
பின் வரலாற்றியல் தொடர் கதை
கண்ணனுக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. ஏனென்றால் அவனுக்கு அந்தக் கதை இப்போது தான் தெரியும். கண்ணன் திட்டமிட்டு ஆற்றில் விழுந்து அங்கியின் அனுதாபத்தைப் பெற முயன்றான் என்றும் கோதை நாச்சி அம்மையார் கண் ணனிடம் சாடை மாடையாகத் தன்னுடைய மகள் தமிழர் அல்லாத எவரையும் மணமுடிக்கும் வாய்ப்பில்லை என்று தெரிவித்ததாகவும் அதனாலேயே கண்ணன் பேராசிரியர் பெருமுடிக்கோவின் உதவியுடன் இங்கிலாந்துக்கு விரைந்தான் என்றும் குழு உறுப்பினர் ஒருவர் சொன்ன போது கண்ணனுக்கு அவமானத்தால் உடல் கூனிக் குறுகி விட்டது. நிகழ் வுகளின் வரிசைக் கிரமத் தையே தலைகீழாக்கிச் சொல்லுகிற இவர்களிடம் எதை எப்படி விளக்குவது என்று தடுமாறிக் கொண்டிருந்த போது, பேதுரு பாவல் சிங்கம், கேள்வி எழுப்பிய குழு உறுப்பினரிடம் ' பன்னாடைச் சிங்கம் அவர்களே’ (அவருடைய இயற் பேர் பேணாட்டு. அவர் எலி லாரிடமும் கிணி டலாகவும் குதர் க்கமாகவும் பேசுவதால் மற்றவர்கள் அவருடைய பேரை முதலில் பனாட்டு என்றும் பின்பு பன்னாடை என்றும் மாற்றிப் பன்னாடை என்பதே அவருடைய பேராக இயக்கத்துள் நிலைபெற்று விட்டது) 'இந்தக் கேள்வி தவறானது' என்று அவரை அடக்கினார். பன்னாடையார் 'இல்லை. இந்த இளங் குருளையிடம் நமக்குத் தெரியாத இரகசியங்கள் எதுவும் இருக்கலாம்.' என்று இழுத்தார். அப்போது கோவிலூர்ச் சிங்கம் (மூலப்பேர் ற்றெம்பிள்றிறன்) என்பவர் குறுக்கிட்டு 'இயக்கத்திற்குள் இரகசியம் எதுவும் இருக்க இயலாது” என்று அழுத்திக் கூறினார். பேதுரு பாவல் சிங்கம் கண்ணனிடம் “சுயவிமர்சனத்தின் நோக்கம் உன்னுடைய வாழ்க்கை வரலாற்றை அறிவதல்ல. உன்னுடைய செயல்கள் எவையும் ஆங்கிலத் துரோகமாக அமைந்திருந்தால் அதற்கான விளக்கத்தை உன்னிமிருந்து பெறுவது தான்’ என்று விளக்கினார். அதன் பின் பு கண்ணனிடம் ஒரு குறுந்தட்டைக் கொடுத்து “இதில் உன்னுடைய இயக் கப் பணி என்னவென்று விவரிக்கப்பட்டுள்ளது. இதைக் கணினியில் இட்டு ஒரே ஒரு முறை மட்டுமே படிக்க முடியும். அதன் பின்பு குறுந்தட்டில் வைக்கப்பட்டுள்ள நச்சு நிரல் அந்தக் கோப்பை அரித்துச் சிதைத்து விடும். இரண்டாவது முறையாகவும் குறுந்தட்டை ஒரு கணினியில் இட்டால் நச்சு நிரல் (அதாவது வைரஸ்) கணினியில் தொற்றிக் கோப்புகளை அழிக்கத் தொடங்கி விடும்” என்று பேதுரு பாவல்
C

( கவைக் கொம்புகள் N
மலை யொன் றில வாழும் ஒரு சமூகத்தினர் மரங்களின் கவைக் கொம்புகளை வாங்குகளின் கால்களாகப் பயன்படுத்துவர். இரண்டாகக் கிளைத்த ஒரு சோடி ' கவைக் கொம்புகள்’ நான்கு கால்களாக நிற்கும். ஒரு வாங்கின் கால் ஒன்று முறிந்ததால் ஒரு கவைக் கொம்பை வெட்டி வருமாறு ஒருவர் தன் மகனை அனுப்பினார். மகன் வெறுங்கையுடன் மீண்டான். தகப்பன் மகனை ஏசினார். மகன் "நானென்ன செயவது? நிறைய கவைக் கொம்புகள் இருந்தன, ஆனால் எல்லாமே கீழிருந்து மேல் நோக்கிக் கிளைக்கின்றன’ என்றான்.
(ஷியாஒ ஃபூ)
விரலைத் தா
வறியவன் ஒருவண் சித் தனாகி
அற்புதங்கள் செய்யும் தன் பழைய நண்பனைச் சந்தித்தான். தன்னுடைய வறுமையைப் பற்றி முறைப்பட்டவனுக்கு இரங்கிச் சித்தன் ஒரு செங்கல்லைத் தொட்டான் அது தங்கக் கட்டியாகியது. வறியவன் திருப்தியடைய வில்லை. சித்தன் ஒரு சிங்கத்தின் சிலையைத் தொட்டான். அது பொன்னாலானதாகியது. வறியவன் திருப்தியடையவில்லை. சித்தன் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டான். வறியவன் உன்னுடைய விரலைத் தா என்றான்.
(ஷியாஒ ஃபூ)
கணவாய்
கணவாய்க்கு நான்கு சோடிக் கால்கள் உள்ளன. கணவாயால் அக் கால்களைத் தன் அலகிற்குள் இழுத்துக் கொள்ளும். மேலதிகப் பாதுகாப்புக்காக எதிரியைக் கண்டதும் அது மைத்தாரை ஒன்றை வெளியேற்றி அந்த இருளுள் தன்னை மறைத்துக் கொள்ளும். மீன்பிடிப் படகைக் கண்ட போதும் அது அப்படியே செய்தது. அந்த மைத் திட்டைக் கண்ட மீனவன் அதன் மேல் வலை வீசிக் கணவாயைப் பிடித்துக் கொண்டான்.
தான் GT ツ( ܢܠ
ஏப்ரல் ஜூன் 2010

Page 42
F్కళ్
பின் வரலாற்றியல் தொடர் கதை
சிங்கம் விளக்கினார். பின்பு, எதுவோ நினைவில் வந்தவர் போல 'இயக்கப் பணிக் கோப்பை உன்னால் தாளில் அச்சிடவும் இயலாது. கையால் பிரதி எடுக்கும் முன்பே கோப்பு அழிந்து விடும். எனவே கால் நாழிகைக்குள் படித்து மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துக் கண்ணனை சுரங்கத்திற்கு வெளியே போய் நிற்குமாறு பணித்தார்.
கண்ணனும் அலுப்பிரட்டும் ஆவியும் கண்ணனுக்கு அதுவரை அறிமுகமாகாத பற்றை (மூலப் பேர் புஷ்) நரி (மூலப் பேர் 'பொக்ஸ்) ஆகியோரும் மாலை நேர வெய் யிலை அனுபவித் துக் கொண் டு நின்றார் கள் . ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊர், பேர் விபரங்களை மற்றவர்களுக்குச் சொல் லிக் கொண்டாலும் மேற்கொண்டு அவர்களுடைய பேர்கள் இயக்கத்தைப் பொறுத்தவரை - வேறாகவே அமையும் என்பதை அவர்கள் மறுபடியும் சுரங்கத்திற்குள் அழைக்கப்பட்ட பின்னரே அறிந்தனர்.
ஆ.வி.போ.சி. இயக்கப் பாடல் ஒன்று பாடப்பட்டு புதிய ஆங்கிலத் தேசிய கீதம் இசைக்கப்பட்டுக் கூட்டம் முடிவடைவதற்கு முன்பாக ஒரு பேர் சூட்டல் வைபவம் நடந்தது. ஒவ்வொரு வருக்கும் அவர் அவருடைய இயக்கப் பேர் அவரவருடைய வலது காதில் இரகசியமாகச் சொல்லப்பட்டது. ஒவ்வொருவரும் செயற்பட இருக்கும் இயக்கக்கலன் (செல்) அல்லது சிங்கப் படையணி சார்ந்தோர் அல்லாதவர்களுடன் இயக்கந் தொடர்பான எவ்விதமான கதை பேச்சும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இயக்க உறுப்பினர்கள் தேவையான போது மட்டுமே ஒருவருடன் ஒருவர் பேச இயலும் என்றும் கூறப்பட்டு அதற்கான வழி முறைகள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆ.வி.போ.சி. இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடான இயக் கம் எண் று நம் பக் கண்ணனுக்குச் சிரமமாகவே இருந்தது. கண்ணன் தனது எதிர் காலச் செயற்பாடுகள் பற்றி யோசனைகளில் ஆழ்ந்திருந்த போது புதிய ஆங்கில தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதென்ன புதிய ஆங்கிலத் தேசிய கீதம் என்று யோசிப்பீர்கள். ஆங்கிலேயர் உலகை ஆண்ட காலத்தில் 'கடவுள் அரசரை/அரசியாரைக் காக்க வேண்டும் என்று தொடங்குகிற ஒரு பாடலே பிரித்தானியா முழுமைக்கும் மட்டும் அல்லாது
தாயகம் 78
 

அவர்களது ஆட்சிக்குட்பட்ட நாடுகளதும் தேசிய கீதமாக இருந்து வந்தது என்று அறிவீர்கள். தமிழர்கள் தங்கள் எழுச்சிக் காலத்தில் ஒரு தேசிய கீதத்தை வைத்திருந்தாலும் உலகை ஆளத் தொடங்கிய பிறகு தங்களது தேசிய கீதத்தை இசைப் ப ைதயும் தேசியக கொடியை உயர்த்துவதையும் ஏறத்தாழ நிறுத்தி விட்டார்கள். அதற்கான விளக்கத்தைப் பிறகு சொல்லுகிறேன். இப்போது புதிய ஆங்கிலத் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. கண்ணன் அதற்கு மரியாதை செலுத்த வேண்டாமா?
வணக்கம் எங்கள் வணக்கம் என்று வணங்கும் நம் நாடெனப் புவி போற்றிட பிற நாட்டவர் துதித்தேற்றிட - பெருமையொடு ஆங்கிலத் திருநாடுனை நாம் வாழ்த்துவோம் வணக்கம் எங்கள் வணக்கம் என்றும் வணக்கம் உலகோர் தொழக் கடல் யாவையும் உன தாகவே கலம் மேவிடும் - புகழின் மிகு ஆங்கிலர் திரு நாடுனை நாம் வாழ்த்துவோம் வணக்கம் எங்கள் வணக்கம் என்றும் வணக்கம்
முழுத் தேசிய கீதத்தையும் எழுதுவது என்றால் மூன்று பக்கங்கள் வரை நீளும் உலகிலே மிக நீளமான தேசிய கீதம் இதுவாகத் தான் அமையுமென்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இனி னொரு ஆணி ட பரம் பரையினரான அமெரிக்கர்களிடம் அதைவிட நீளமான ஒரு தேசிய கீதம் உள்ளது என்பது தெரியாமல் பல போராளிச் சிங்கங்கள் தங்களது தேசிய கீதமே உலகின் அதி நீளமான தேசிய கீதம் என்று சொல்லிக் கொள்ளுவார்கள். அதைவிட மேற்கூறிய தேசிய கீதத்தை இயற்றியவர் நாடு கடத்தப்பட்ட ஒரு டென்மார்க்கு நாட்டவர் என்ற உண்மையும் பெரும்பாலான சிங்கங்களுக்குத் தெரியாது.
இன்னொரு உண்மையையும் இங்கு சொல்ல வேண்டும். இந்தப் புதிய தேசிய கீதம் ஆங்கில விடுதலைப் போராளி இயக்கங்கள் உருவாகும் முன்னரே மிதவாத ஆங்கில அரசுக் கட்சியின் செல்வாக்கு ஓங்கி இருந்த காலத்தில் அதன் பேரவைக் கவிஞர் கவிக்கோ பாவேந்து ஆங்கில வல்லாண் செம்மொழிச் செம்மல் தேனிசைப் புயல் பியானோவாணர் யாழிசை வித்தகர் பசும்பொன்னாடையார் அவர்களால் இயற்றப்பட்டு அவராலேயே மெட்டமைக்கப்பட்டது. அந்த மெட்டு ஏலவே தமிழில் இருந்து வந்து பின்பு வழக்கொழிந்து போன ஒரு மெட்டு என்பதை எவரும் அறியார்.
ஏப்ரல் ஜூன் 200

Page 43
பின் வரலாற்றியல் தொடர்கதை
போராளி இயக்கங்கள் உருவான போது
அந்தத் தேசிய கீதத்தில் போர்க் குணம் போதாது என்று போர்க்குணம் மிக்க ஒரு தேசிய கீதத்தை அமைக்கும் யோசனை ஏற்கப்பட்டது. எனினும் ஒரு மாற்றுத் தேசிய கீதம் பற்றிய உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னரே இயக்கங்கள் பிளவுபட்டுப் பெருகிவிட்டதால் மேற்கூறிய தேசிய கீதமே ஏற்கப்பட்டுள்ளது என்றாலும் தேசியக் கொடி பற்றிய விவாதம் இன்னும் தீர்க்கப்படவில்லை.
எட்டுக்கால் பூச்சியைப் போல இருக்கிறது என்று பழைய பிரித்தானியக் கொடியை யாரும் நிராகரிக்கவில்லை. அக் கொடியில் இணைந்துள்ள குருசு அடையாளங்களில் ஆங்கிலேயரினது அல்லாதவை அகற்றப்பட வேண்டும் என்றதன் விளைவாகவே அது விலக்கப்பட்டது.
ஆங்கிலேயனின் குருசு அடையாளம் இடப்பட்ட கொடி ஆங்கிலேயர்கள் எல்லாரும் சைவர்களாகி விட்ட நிலையில் பொருத்தமற்றது என்று விலக்கப்பட்டு விட்டது. நந்திக் கொடியைப் பல நாட்டினரும் வெவ்வேறு நிறப் பின்னணிகளில் ஏற்று விட்டதன் காரணமாகத் திரிசூலமே ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான கொடியாக உள்ளது. ஆயினும் அதனிடத்தில் ஆங்கிலச் சிங்கம் அல்லது ஒற்றைக் கொம்புக் குதிரை அல்லது இரண்டும் பொருந்தும் என்று கருதப்பட்டுச் சிங்கம் என்பது பரவலாக ஏற்கப்பட்டாலும் எத்தனை சிங்கங்கள் என்பதிலும் சிங்கங்கள் நோக்குகிற திசை எதாக இருக்க வேண்டும் என்பதிலும் ஏற்பட்ட விவாதங்கள் இனி னமும் முடியவில் லை. ஆ.வி.போ.சி. எதிரெதிர்த் திசைகளில் நோக்குகிற இரண்டு சிங்கங்களைக் கொண்ட நீளமான கொடியை உடையது. அது ஆங்கிலேயரின் ஒற்றுமையீனத்திற்கு மிகப் பொருத்தமானது என்று போட்டி இயக்கங்கள் கேலியாகப் பேசுவதுண்டு.
இப்போது கூட்டம் முடிந்து கண்ணன் வெளியே வந்து விட்டான். இன்னமும் நீண்ட பகற் பொழுதுகளே இருந்தன என்பதால் தேஞ்சுப் பூம்பட்டினத்திற்குப் போய் அங்கு இராப் பொழுதைக் கழித்து விட்டு மறுநாட் காலை வீடு திரும்ப எண்ணினான் என்றாலும் அவனுடைய கையில் இருந்த குறுந்தட்டு "என்னைப் பார், என்னைப் பார்” என்று அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.
கைத்தொலைபேசிகளின் வீச்சம் தமிழர் ஆட்சியின் கீழ் மிகவும் மட்டுப்பட்டிருந்ததுடன், கைப்பையில் கொண்டு செல்லக் கூடிய கணினிகளும்
தாயகம் 78
 

*కెన్డో gradesh
擎 リ。
பொதுப் பாவனையில் இருந்து அகற்றப்பட்டிருந்தன. சுற்றுச் சூழலின் மாசடைதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும் தமிழரின் நோக்கங்கள் அதற்கும் அப்பாலானவை என்பது தான் மேற்குலகு எனப்படும் பின்தங்கிய நாட்டினரின் பொதுவான எண்ணம். உள்ளுவராமிட்டனில் உள்ள அளவுக்குக் கூட ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் விளங்கிய தென்கிழக்கு இங்கிலாந்தின் எந்த நகரிலும் கணினி நிலையம் இல்லை.
கண் ணர்ை இவ் வாறு தடுமாறிக் கொண்டிருந்த போது பற்றையும் நரியும் தாங்கள் வந்த வண்டியில் கண்ணனுக்கும் இடமிருக்கும் என்று சொன்னார்கள். கண்ணன் அவர்களிடம் தனது குறுந்தட்டைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போக விரும்புவதாகச் சொன்னான். அவர்கள் தாங்களும் அவ்வாறு செய்ய இருப்பதாகவும் தேஞ்சுப்பூம் பட்டினம தாண்டிய பின்பு ஒரு கணினி நிலையம் இருப்பதாகவும் அங்கேயே தம் குறுந்தட்டைப் படித்துவிட்டுப் போக எண்ணி இருந்தாகவும் சொன்னார்கள். கண்ணன் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னமே, அவனைக் கூட்டத்திற்கு இழுத்து வந்த லிங்கன் அவனிடம் ‘உன்னை எங்கே எல்லாம் தேடுவது? வா’ என்று தன்னுடன் வருமாறு பணித்தான். நரிக்கு லிங்கனை முன்பிருந்தே தெரியும் என்பதால் 'நாங்கள் வந்த மின் மகிழுந்தில் இடமிருந்ததால் நான் தான் கிறித்தியை எங்களுடன் வரச் சொன்னேன். உங்களிடம் சொல் லத் தவறியதற்குக் கோபித்துக் கொள்ளாதீர்கள்’ என்று கண்ணனின் சார்பாக மன்றாடினான்.
தான் வாயைத் திறந்தால் தவறாகிவிடும் என்பதைப் பட்டறிவின் மூலம் அறிந்திருந்த கண்ணன் மவுனமாக நின்றான்.
'நான் மேலிடத்துச் சிங்கங்களுடன் கதைத்துவிட்டுத் தான் முடிவு சொல்ல இயலும்” என்று சொன்ன லிங்கன் கண்ணனையும் நரியையும் தன்னுடன் வருமாறு சொல்லி விட்டு சுரங்க வாயிலருகே நின்ற மூத்த சிங்கமொருவரை நோக்கி நடந்தான்.
(லிங்கன் முத்த சிங்கத்திடம் கண்ணனையும் நரியையும் பற்றிக் குற்றஞ்சாட்டிப் பேசினானா, இயக்கத்தில் முழுயான உறுப்பினராகு முன்னரே இயக்க ஒழுங்குகளை மீறுகிற முறையில நடநது கொணர்டதற்காக அவர்கள் எச்சரிக்கப்பட்டார்களா, கனர்ணனதும் நரியினதும் குறுந்தட்டுக்கள் பறிக்கப்பட்டு அவர்களது உறுப்புரிமை பிற்போடப்பட்டதா என்றெல்லாம் அறிய ஆவலாயிருப்பீர்கள். என்னால் உங்களுக்குச் சொல்லக் கூடியதெல்லாம் அடுத்த படலத்தை வாசியுங்கள் என்பது தான்.)
ஏப்ரல் ஜூன் 200

Page 44
தாயகம் விமர்சனம்
சிறுகதைகள் பற்றிய
நான் ஒரு இலக்கியவாதி அல்ல. ஒரு வாசகன் என்றவகையில் எனது அபிப்பிராயங்கள் இதோ. நான்கு சிறுகதைகள் உள்ளன. ஒரு மொழிப்பெயர்ப்புச் சிறுகதையுடன் ஐந்து. றோஸி என்ற இக்கதையை ஒரேயொரு தடவை மட்டும் வாசித்த போது nostalgia எனப்படக்கூடிய தாயக நினைவு ஒருவரை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டேன்.
மனிதன் தன் சுயத்தை அடிப்படையாகக் கொண்டவன். தன்னை இப் பூமியில் மிகச் சிறந்த முறையில் இருத்தி வைக் கும் முயற்சிகளில் இடைவிடாது ஈடுபட்டபடியே இருப்பான். தனது இயற்கை மரணம் வரை சிறப்பாக வாழ்வதற்கு ஏதுவாக, உறுதுணையாக, ஆதரவாக, தன்னை அரவணைத்துக் கொண்டும், இறுதிவரை தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிளெல்லாம் தன்னுடன் கூடவே இருந்து அவற்றுடன் போராடும் உறவுகளை அவன் ஒரு கணமேனும் மறக்கவோ கைவிடவோ தயாரில்லை. எத்தகைய இடர் நிலையிலும் தனது செளகரியங்கள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து, சன்மானம் எதிர்பாராமல் தனக்காக எவற்றையும் அர்ப்பணிக்கும் தனது அன்னையை ஒருவர் தனது முதலாவது உறுதுணையாக வைத் துக் கொள்கிறார். இதன்வழியே தனது குடும்பம், உடன்பிறப்புக்கள், உற்றார், பாலிய நண்பர்கள், பிறந்து வளர்த்த ஊர், தாயகம், தாய் மொழி: முதன் முதலில் தனக்கு ஊட்டப்பட்ட அனுபவங்கள், முதன் முதலில் அறிமுகம் செய்து விட்ட மனிதர்களை ஒருவர் மறத்தல் இயலாது. பின்னர் உள்ளத்தில் வளர்ச்சிபெற்ற நினைவுகளை முதன் முதலில் தந்தவர்கள் என்ற இந்த வகையினரே ஒருவரின் இருப்பை இந்த பூமியில் உறுதி செய்தவர்களாவர். இவற்றை ஒருவர் எக்காலமும் மறப்பதில்லை. உலகின் எந்த மூலைக்கு சென்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையிலும் மறப்பதில்லை. இத்தகைய உறவுகளை விட்டுப் பிரிந்து விட்டோமே என்று ஏங்காத உள்ளம் இல்லை. நிர்ப்பந்தம் காரணமாக இவற்றைத் தற்காலிகமாக விட்டுப் பிரிந்தவர்களுங் கூட மீண்டும் அந்தச் சூழலுடன் தம்மைத் பிணைத்துக் கொள்வதற்காக ஏங்காது விடுவதுமில்லை. ஆற்றல், இயலுமை, இளமை என்பன குறைந்து போகும் நிலையிலுள்ளவர்களும், பிறந்து வளர்ந்த சூழல் பகுதிகளில் மாற்றங்கள் செய்வதற்கு
தாயகம் 78
 

9ெது இருந்து
இலட்சியம் கொண்டு இருந்தவர்களும் இத்தகைய நினைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையிலேதான் இந்த மொழிபெயர்ப்புக் கதையில் வரும் சிறுமி றோஸியின் மனவேதனைகளைப் பார்க்க முடிகிறது.
இனி று புலம் பெயர் நீ து உலக நாடுகளில் இருக்கும் தமிழர்களாயினும், சிங்களவராயினும் அவர்களை றோஸியின் உணர்வுகளுடாகவே என்னால் பார்க்க முடிகிறது. ' பாடசாலை வாங்கு’ என்ற சிறுகதையும் சண் முகம் ' என்ற நடைச் சித் திர மும் அடிப் படையிலான பாகுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. "சண்முகம்” பிரபுத்துவ சமூக அமைப்பின் தொடர்ச்சியாக சாதிகளாக பிரிக்கப்பட்ட தொழிலாளர்கள் கூட்டங் கட்டமாக 'தொண்டுழியம்” செய்து வாழ்வதை எடுத்து கூறுகிறது. கட்டாடிமார்கள் தீண்டத்தகாத ஏனைய சாதிகளிலும் பார்க்க வேறுபட்டு நிற்பதையும் உயர் சாதியினரினி திருமணங்களை முடிவு செய்வதை எடுத்து விளக்குகிறது.
S R
காலத் திணி மாற் றம் சாதி அமைப் புகளில் மேல் போக கிலான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் சில இடங்களில், சில சமூகங்கள் மத்தியில் முனைப்புப் பெற்றும் அரசியல் ரீதியான விழிப்புணர்ச்சிகள் பரவலாக ஏற்பட்டும் இருந்த 1956ஆம் ஆண்டின் பின்னணியில், பாடசாலை களுக்கு நடைமுறையில் தடுக்கப் பட்டிருந்த காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது. முற்போக்கு தோற்றத்தை தந்த அரசியல் சூழல் ஒன்றை துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு கட்டாடியர் தனது மகளை எஸ்.எஸ்.சி. வரைக்கும் பாடசாலைக்கு அனுப்பியது மட்டுமன்றி இந்தியாவுக்கு அனுப்பி ஒரு பட்டதாரியாயும் ஆக்கிவிடுகிறார். முற்போக்கு பேசிவந்த அரசியல்வாதிகளை பிடித்து ஒரு ஆசிரியர் தொழிலும் பெறப்பட்டது வரை கதை
ஏப்ரல் ஜூன் 200

Page 45
நால் விமர்சனம்
முன்னேறியதாயினும், அதற்குப் பின் நிகழ்ந் திருக்கக் கூடியவைகளை அறியமுடியவில்லை.
முக கியமாக அந்த கட் டாடிச் சி ஆசிரியைக்கு ஒரு பள்ளிக்கூடம் ஒதுக்கி கொடுக் கப்படாதா? உயர்சாதிப் பிள்ளைகள் தாழ்ந்த சாதி ஆசிரியையை 'குரு'வாக ஏற்க முன்வந்திருப் பவர்களா? அதற்காக வெளிப் படையாகவும், திரைமறைவிலும் அதிகாரிகள் மட்டத்தில் நடைப் பெற்றிருக்கக் கூடிய தில் லுமுல்லுகள் ஒருபுறமிருக்க இறுதியில் அந்த ஆசிரியை கல்வித் திணைக்களத்தில் ஒரு எழுதுவினைஞராக அமர்த்தப் பட்டு சுமூகமாக பிரச்சினை தீர்த்து வைக்கப் பட்டதா? அந்தப் பெண்ணின் திருமண விவகாரம், அந்தச் சாதிக்குள் அந்தப் படிப்பு படித்த மாப்பிள்ளை இல்லாததால் சீரழிந்திருக்குமல்லவா? இவையெல்லாவற்றையும் எழுத முனைந்தால் நடைச்சித்திரம் சிறுகதையாகி பின்னர் நாவலாக நீண்டும் போயிருந்திருக்கும். உயர்சாதியினருடன் பழகநேர்ந்து, அதனால் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கியிருந்த ஆசிரியை தந்தையார் வீடுவீடாக சென்று துணியெடுப்பதை விரும்பவில்லை. அத்தகைய மனப்போக்குகளின் வளர்ச்சி அந்த குடும்பத்தையும் ஊரையும் எத்தகைய பேயாட்ட நிலைக் குளிர் தள்ளியிருக்கும் எண் பதும் சுவாரஸ்யமானது. ‘தொண்டுழியம் இல்லை’ என்ற முடிவான கருத்து சண்முகத்தின் முடிவாக இருந்தவரையிலும் ஒரு மகன் ஒரு லோண்டறியை தொடக்கி தொழிலை தொடர்ந்தார் என்ற செய்தியும் அரைவேக்காட்டு வெள்ளாவி அவியலுக்குள் சிக்கி சமூகம் படும் அவலத்தைக் காட்டுகிறது.
* பாடசாலை வாங்கு” சிங்களமொழி மாணவர்கள் பாடசாலையில் சுமுகமாகப் பழக முடியாமல் சாதி குறைந் த மானவன் சிறுமைப்படுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. இக்கதையும் 'சண்முகம்’ கதை நடைபெற்ற காலத்தையது தான் . இக் கதையின் படி தென்னிலங்கை வட்டாரங்களில் சாதி பற்றிய சிந்தனைகள் நிலவுவதாக ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.
மொத்தத்தில் சாதி பற்றிய சிந்தனை மட்டுமல்ல பாரபட்சமும் புறக்கணிப்பும் சமூக சுரண்டல் சமூக அமைப்பு இருக்குமட்டும் இருக்கப் போவதுதான்!
"புன்னகை மறைந்த அந்த நாளில்.’ பாடசாலை மாணவர் களினி இயல் பான செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்றுவரும்
தாயகம் 78
 

/* ཛོད༽ பேய்களை வரைதல்
சி இளவரசனுக்காகப் படங்கள் வரையும் ஒரு ஒவியன் இருந்தான். இளவரசன் ஓவியனிடம் "வரைவதற்கு மிகக் கடினமானவை எவை என்று சொல்லுவாயா?" என்று கேட்டான். "நாய்கள், குதிரைகள் போன்றவை" என்றான் ஒவியன். "வரைவதற்கு மிக எளிதானவை எவை?" என்று இளவரசன் கேட்டான். ‘பேய்களும் பூதங்களுமே" என்று சொன்ன ஒவியன் மேலும் விளக்குவான்; "நாய்களையும், குதிரைகளையும் அறிவோம் அவற்றை அன்றாடம் காணுகிறோம். ஆனாலும் அச்சொட்டாக அவை போல வரைவது கடினம். அதனால் அவை கடினமான விடயங்கள். பேய் பூதங்களுக்குக் குறிப்பான வடிவம் இல்லை. அவற்றை யாரும் கண்டதும் இல்லை. எனவே அவற்றை வரைவது எளிது"
(ஹான் ஃபெய் ஷி)
ابر ܓܠ
நாட்கள்
ஒரு சவப்பெட்டியை வரைகையில் என்
கையை நிறுத்தினேன் அவர்கள் எனக்கு ஒரு
மலர்வளையத்தை அனுப்பினர் இரண்டாம் நாள் ஒரு பூவை வரைகையில் என் கையை
நிறுத்தினேன் அவர்கள் எனக்கொரு சவப்பெட்டியை
அனுப்பினர்
மூன்றாம் நாள் நான் வாழ
விரும்புகிறேன் என்று கத்தினேன் அவர்கள் ஒரு கொலைகாரனை
அனுப்பினர்.
(இப்ரஹிம் நஸ்ரல்லா)
43) - ஏப்ரல் ஜூன் 2010

Page 46
நால் விமர்சனம்
அருவி வெளியீட்டு ஆயத்தங்கள் ‘துரையின் பங்களாவுக்குள் பிரவேசிக்கும் வரை அந்த மாணவர்களுடன் வாசகர்களும் சுமூகமாக அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.
விடயம் பிழைத்து விட்டது என்று முடிவு வெளிவந்த போதும் பெரிதாக ஏதோ நடந்துவிட்டதா என்று முடிவு வெளிவந்த போதும் பெரிதாக ஏதோ நடந்துவிட்டதா என்று வாசகர் அதிர்ச்சிக்கு உள்ளாகவில்லை - கதை நகர்கிறது.
மீண்டும் ரூபா 2500/- பற்றிய நம்பிக்கையும் தரப்படுகிறது. இப்போதும் கதை ஒரு பேரதிர்ச்சியை எதிர்வுகூறுமாப் போல அறிகுறிகளை காட்டவில்லை. ஏமாற்றத்தின் அளவு ரூபா 2500/-ற்கு மேல் போவதற்குமில்லை என்ற எண்ணம் ஊட்டப்படுபிறது.
* சிங்கார் வரவேயில்லை’ என்றதுமே, அட
கதை முடிந்து விட்டதே என்பது போன்ற ஒரு உணர்வு
யாவும் கறி பனை’ என்று ஒரு சம்பிரதாயத்திற்காகவேனும் போடாமல் கதையை முடித்து விட்டார்களோ!
ஒரு நப்பாசையில் மறு பக்கம் திருப்பிப் பார்த்ததில் - சில வரிகள் தான்.
ஒரு சம்பவக் கோவை மனப் பதிவுகளை
ஏற்படுத்திய ஒரு சிறு கதையாக முழுமை பெற்று நிற்கிறது. பதின்வயதினரை பெரியோர் எவ்வாறு
நடாத்துதல் வேண்டும்? பதினெட்டு வயதில் நாட்டின்
தலைவரைத் தீர்மானிக்க இருப்பவர்களைப், பெற்றோராயினும் , பெரியவர்கள் பிறர் முன்னிலையில் பரிகசித்தும் அவமதித்தும் நடத்தலாமா? விபரீதங்களுக்கு வழிவகுக்கும் வளரந்தோரின் நடைமுறைகள் கண்டிக்கத் தக்கவை.
‘ஜெயா' - சிங்களவர் தமிழர் இனக் கலவரம் - ஆக்கிரமிப்புப் போக்குக்களோ தற்காப்பு போக் குகளோ கருத்தில் கொள்ளப்படாது கலவரத்தில் ஈடுபடும் இரு தரப்பினரும் சம குற்றவாளிகளாகக் கருதப்படுகின்றனர்.
கிளிநொச்சியின் தமிழ் முதலாளி இரண்டு வருடங்களாக ஜெயாவின் உள் ளத் தைச் சுரண்டினார். முரண்பாடு ஏதுமின்றி விடயம் முற்றுப் பெறுகிறது. பின்னர் ஒரு 'ஐயா அவனுக்குத் தொழில் கொடுத்துப் பராமரிக்கிறார். அன்பு,
தாயகம் 78
@
N
 

ாசம் சொரிகிறது. அங்கும் பொருளாதார pரண்பாடுகள் தோன்றவில்லை. கலவரக்காரர்கள் பர முன்பே ஜெயா பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு விட்டான். நாடெங்கும் கலவரம் டந்து ஓய்ந்து விட்டது. ஜெயரட்ணா பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அன்பு, பாசம், னிதநேயம் இல்லாமல் தவிச்ச முயலடிப்பது போல் னிதனை மனிதன் அடித்துக் கொல்லும் கொடுரம் டுத்துக் காட்டப்படுகிறது. மேலதிகமாக எதுவும் இல்லாதது ஏமாற்றம்.
அன்பு, பாசம், கருணை, இரக்கம் பற்றி ல்லாம் மதங்கள் தாராமாகப் போதிக்கின்றன. அதற்கதிகமாகக் கதையில் புதியது ஒன்றுமில்லை. நீர்வு பற்றிய சிறு வழிகாட்டல் வழிகள் எவையும் இல் லை. ' கால ஓட்டத்தில் .' என்ற சொற்களுக்குப் பதிலாக 'சுரண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக் க’ என்று விளக்க முன்வந்திருக்கலாம். அடிப்படைகள் மறைமுக )ாகவேனும் சுட்டிக் காட்டப்படவில்லை. இறுதியில் வரலாற்றுக் கடமை’ என்ற வெறுஞ் சொற்கள் >ட்டும் தரப்பட்டு முடிந்தவரை தாம் இனங் 5ாட்டப்படாமலிருக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. நோயாளியுடன் சேர்ந்து தானும் அழுது கொள்ளும் ஒரு டாக்டரின் நிலை சமூகத்தை முன்கொண்டு செல்லுமா? 'அடம்பன் கொடி’ என்றும் "பூனைக்கு Dணி’ என்றும் பழமொழிகள் கூறிப் புரட்சிகர Dக்களைத் தன்னம்பிக்கை இழக்க வைத்தல், அவர்களை எலிகள் போல ஒடுவதற்கு வைத்தல் ரன்?
(தாயகம் - 77 - வாசகர் வட்டத்தில்
சிறுகதைகள் விமர்சனம் பற்றியது)
ஒற்றைக் கண் வலைகள்
"வலை எவ்வளவு பெரிதானாலும்
ஒவ்வொரு பறவையும் ஒரு கண்ணிலே தானி சிக் குகிறது" என்று ஒரு பழமொழியுண்டு. அப் பழமொழியால் மிகவும் கவரப்பட்ட ஒருவன் பல நூல் துண்டுகளை எடுத்து ஒவ்வொரு துண்டையும் தனித் தனித் கண்களாக அமைத்தான். அவனுடைய வலை களால் ଗ୍ଯା ( 5 பறவையையும் பிடிக்க முடியவில்லை.
(ஷென் ஜியான்) الر
) ஏப்ரல் ஜூன் 200

Page 47
மொழிபெயர்ப்புச் சிறுகதை
வியர்வையில் குளித்தபடி ஜயசேனவும் சிரிஸேனவும் கூட்ட மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். கூவிக்கூவி அதிர்ஷ்ட லாபச் சீட்டு விற்கும் சிறுவன் வழியைக் காட்டியிராவிட்டால், இன்னும் இரண்டொரு மணிநேரம் நிச்சயமாக அவர்கள் பாதையளந்திருப்பார்கள். வாயிலில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் முதலில் அவர்கள் மீது கடும் பார்வைதான் வீசினான். உங்களப் போன்றாக்களுக்கு இது பொருத்தமான இடமில்ல' என்று அவனது பார்வையிலேயே பதிவாகியிருந்தது. மெல்கம் ஸேர் தபால் மூலம் அனுப்பியிருந்த கடிதம் ஜயசேனவின் தேசிய உடைக்குள்ளிருந்து வெளிப்பட்ட போதுதான் அவனது முகத்தில் சற்றே ஒளிபரவியது.
மண்டப முன்பக்கமாக நின்ற சுறுசுறுப்பான இளம்பெண் அவர்களைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள். திடீரென்று அங்கு அவர்கள் பிரவேசித்தப்போது, ஒரு கணம் சபையிலிருந்த அனைவரது கவனமும் அவர்கள் மீது குவிந்தது. முள்ளம்பன்றியின் பொந்துக்குள் புகுந்த அழுக்குகள் போல் ஜயசேனவும் சிரிஸேனவும் சுற்றுமுற்றும் பார்க்கலாயினர். உடல் விறைப்படையக் கூடிய அளவுக்கு அதிகுளிரூட்டப் பட்ட கேட்போர் கூடத்தில் செளகரியமான இருக்கை களில் அவர்கள் உடனடியாகவே அமர்ந்து கொண்டனர். மிக மென்மையான சொகுசுக் கட்டில்
s
தாயகம் 78 G
 

କୁଁ
போனி ற ஆசன வரிசையில் , பூசிமினுக்கிய அகன்ற தட்டில் இரு கைகளையும் வைத்த பார்வையாளர் பகுதி அரைத்தூக்கத்தில் ஆழ்ந்தது போல் மீண்டும் அமைதியடைந்தது.
அந்த வேளையில் சபையை விளித்துப் பேசிக் கொண்டிருந்த பெண் மணியின் வாயிலிருந்து மடைதிறந்த வெள்ளம் போல ஆங்கிலம் பிரவாகித்தது. உடலோடு ஒட்டிய காற்சட்டையும் கட்டைக் கைக் கோட் அங்கியும் அணிந்திருந்த அப் பெண்மணியின் குறுகத் தரித்த கொண்டை, அகன்ற முகம் முதலிய சகல லட்சணங்களும் ஆண் பாத்திரமேற்று நடிக்கும் பெண்ணைப் போன்றே காணப்பட்டது. பத்திரமொன்றைப் பார்த்தபடி அவள் முன்வைத்த பேச்சில் farmers, water, cultivation (3LT6ip Gambassif S 3 g flags படும் போது, ஜயசேனவும் சிரிஸேனவும் ஒருவரை ஒருவர் பார்த்து. கடந்த காலங்களில் மெல்கம் ஸேர் அவ்வப் போது நடாத்திய கலந்துரையாடல் களின் போது, இவ்வாறான சொற்கள் உச்சரிக்கப் பட்டதல்லவா என்று கேட்பது போலிருந்தது.
அடுத்ததாக அமைதியான தோற்ற முடைய ஒருவர் மேடையில் தோன்றினார். கீழே பார்த்தபடி மெல்ல அடிவைத்து வந்த அவர், தேசிய உடையை ஒத்த வெண்ணிற மான கட்டைக் கை
5) ஏப்ரல் ஜூன் 200

Page 48
மொழிபெயர்ப்புச் சிறுகதை
சேட்டும் சாரமும் அணிந்திருந்தார். கழுத்துவரை வளர்ந்திருந்த அடர்த்தியான தலைமுடியும் இளமையையும் ஆரோக் கியத் தையும் வெளிப்படுத்தும் நேர்த்தியான உடல் வாகும் ஒரேயடியாக சிரிஸேனவுக்கு ஊரில் வாழ்ந்த பழைய நாட்டியக்காரரான சுவத வாத்தியாரை நினைவூட்டியது. ஜயசேனவின் கண்களும் கூட மேடையில் தோன்றிய அபூர்வ மனிதனின் தோற்றத்திலேயே லயித்திருந்தது.
நண் பர் களே!. உங் களுக் குதி தெரியும். பலநூற்றாண்டுகளாக நாங்கள் வெளி நாட் டவர் களுக்கு அடிபணிந்து வாழ்ந்து வந்தோம்.” பேச்சாளர் தனது விடயத்தை ஆரம்பித்து முன் வைத்த தொனி ஜயசேன, சிரிஸேன இருவரது உள் ளத் தையும் தொட்டுவிட்டது. ‘நண்பர்களே! அவர்கள் எங்களது நாட்டை ஆக்கிரமித்து எடுத்துச் சென்றது எங்களது தேசிய வளங்களை மட்டுமல்ல; எங்களுக்கு உரிமையாகவிருந்த சகல பெறுமானங்களையும் பறித்துக் கொண்டார்கள். எங்கள் கலாசாரம், பாரம்பரியம் அனைத்தையும் நாசமாக்கினார்கள். நண்பர்களே! வெள்ளை ஏகாதிபதியவாதிகள் பரப்பிச் சென்ற விதேசிய மனோபாவங்களைத் தவிர, இன்று எங்களிடம் என்னதான் எஞ்சிக் கிடக்கிறது?. இன்று கறுப்பு வெள்ளையர்கள் சிலர் சேர்ந்து மாறிமாறி எங்களது நாட்டை ஆட்சி செய்கிறார்கள். வெளி நாட்டவர்களின் நிர்வாக முறை, சட்டதிட்டங்கள், பழக்கவழக்கங்கள் தவிர எங் களுடைய தென் று சொல் ல ஏதாவது எஞ்சிருக்கிறதா? எமது எதிர்காலச் சந்ததியினருக்கு கையளிக்க புதிதாக எதைத்தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம்? நண்பர்களே! இனியாவது நாங்கள் விழிப்படைய வேண்டும். எங்களது வேர்களைத் தேடிச் செல்லும் பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் . அதற்காக நாம் ஒனர் று சேர் வோம் . விவாதிப் போம் . முன்னேறுவோம். அனைவரதும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்’
அவரது உரை எவ்வளவு கவர்ச்சிகரமாக அமைந்த போதிலும், சபையிலிருந்து அவ்வளவாக வரவேற்புக் கிட்டவில்லை. பார்வையாளர்களின் அலட்சியத்தைப் பொருட்படுத்தாது, சிரிஸேனவும் ஜயசேனவும் தலைமை வகித்த மெல்கம் ஸேரின் அவதானத்தை ஈர்த்தபடி கைத்தட்டத் தொடங்கினர்.
இந்த வேளையில் தான் சிற்றுண்டித் தட்டுக்களைத் தாங்கியபடி, அழகிய யுவதிகள்
தாயகம் 78
 

இருவர் இருக்கை வரிசைக்கிடையில் வெளிப் ULL6Tij.
'சிரிஸ்ேன அண்ணா. எங்கட தண்ணீர் பிரச்சின பற்றி நாலு வார்த்த சொன்னால் நல்லதில் லையா?" குளிருக்கு விறைத் துப் போயிருந்த கையை உயர்த்தி அவனது தோளில் தட்டிய ஜயசேன தனது காவிப் பற்களைக் காட்டிச் சிரித்தான்.
"அவசரப்பட வேணாம் தம்பி. மெல்கம் ஸேர் எங்களுக்கு பேசச் சந்தர்ப்பம் தருவாரென்று நெனக்கிறன்’ சிரிஸேன தனக்குக் கிடைத்த அட்டைத் தட்டிலிருந்து கட்லட் ஒன்றை எடுத்துச் சுவைக்க முனைந்தான்.
அதைத் தொடர்ந்து இன்னும் பலர் சிங் களம் , தமிழ் , ஆங்கில மொழிகளில் உரையாற்றினர். சிலருக்கு சபையிலிருந்து சுடச்சுடக் கரகோசம் கிட்டிய போதும் ஜயசேன சிரிஸேன ஜோடிக்கு அவ்வளவாக எடுபடவில்லை. அவர்களது உள்ளத்தை முதலில் தேசப்பற்றோடு பேசியவரே கொள்ளை கொண்டிருந்தனர். சில சிங்களப் பேச்சுக்கள் கூட அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் போன்று விளங்கா மொழியாகவே இருந்தது. அவர்கள் கிளிப்பிள்ளை போல் அடிக்கடி உச்சரித்த தோல்வியான அரசாங்கம்' என்பதே ஜயசேனவினதும் சிரிஸ்ேனவினதும் மனதில் எஞ்சியிருந்தது.
'உனக்கு முடியாட்டா சொல்லு. நான் எழுந்து நின்று கேக்கிறன். எங்களுக்கு இந்த தோல் வியடைந்த அரசாங் கக கதை தேவையில்ல. எங்கட தண்ணிர்ப் பிரச்சின பற்றிப் பேசத்தான் நாங்கள் வந்தோம்’ அவர்களது இரண்டாவது பிரச்சினை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பம் மெல்ல மெல் லத் தூரமாவதைக் கவனிக்க ஜயசேன, தனது பொறுமை இழந்த பார்வையை, சிரிஸேனவின் முகத்துக்கு பாய்ச்சினான்.
இறுதியில் சிரிஸேன எழுந்து நின்றான்.
'சபையின் அனுமதியோடு. நாங்கள் இருவரும் மொனராகலையிலிருந்து வந்திருக்கும் விவசாயிகள். சிலகாலமாக நாங்க கடும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு ஆளாகியுள்ளோம்’ சிரிஸேன சபையின் பக்கமிருந்தே தனது கருத்தை வெளிப்படுத்தத் தொடங்கினான். ஆனால் தலைமைப் பீடம் அதற்கு இடம் கொடுக்க வில்லை.
) Sög6ð - gSgi 2010

Page 49
மொழிபெயர்ப்புச் சிறுகதை
“மன்னிக்கவேணும் சிரிஸேன அண்ணா. இன்னக்கி உங்கள பார்வையாளரா மட்டுமே அழைத்திருக்கோம். அடுத்த சந்தர்ப்பத்தில் நிச்சயமா உங்க கருத்துக்கு இடமளிப்போம்.’ மெல் கம் ஸேர், சிரிஸேனவை அமர்ந்து கொள்ளுமாறு கையினால் சமிக்ஞை செய்தார்.
தலைமைப் பீடத்துக்கு கட்டுப் பட்ட சிரிஸேன சுற்றுவட்டாரத்தைப் பார்த்துச் சிரித்தபடி, இரு கைகளாலும் தேசிய உடையைக் கீழ்ப்பக்கமாக இழுத்துச் சரிசெய்துக் கொண்டு, மீண்டும் சொகுசுக் கதிரையில் அமர்ந்துக் கொண்டான்.
சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் வேளையில் முன்பு சொன்ன வசீகரமிக்க இருவரினதும் முகங்கள் பிரகாசிக்கத் தொடங்கின. அவர்கள் வெள்ளைக் கவரும் புத்தகப் பொதியும் வழங்கி, பத்திரமொன்றில் கையெழுத்து வேண்டத் தொடங்கினர். ஜயசேனவுக்கும் சிரிசேஸனவுக்கும் கூட குறித்த பங்கு கிட்டியது. புத்தகங்களை பிரயாணப் பொதியுள் திணித்த ஜயசேன, மிக நிதானமாக கடிதக் கவரை விரித்துப் பார்த்தார். உள்ளே ஆயிரம் ரூபாத் தாளொன்றிருப்பதை விளங் கிக் கொண் ட அதே கணத்தில் , சிரிஸேனவுக்கு விரலால் குத்தி, சற்று வெளிநீட்டிய பணத்தாளை கண்களால் காட்டினான்.
'கொழும்புக்கு வந்தும் சின்னதுகளுக்கு ஏதும் கொண்டுபோக முடியாமல் போய்விடுமோ என்று பயந்தன். தப்பிவிட்டோம். கைநிறைய கிடைத்திட்டில்லையா?" சிரிஸேனவும் தனது கையிலிருந்த உறையை மிகுந்த மரியாதையோடு பார்த்தான்.
நிகழ்வு முடிவுற்றபோதும் கலைந்து செல்லும் அவசரம் அங்கே தெரியவில்லை. ஆங்காங்கே இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து, ஆங்கிலத்தில் கதைத்துக் கதைத்து வாய்விட்டுச் சிரித்து நேரத்தைப் போக்கினர். குளிர்க் களஞ்சியம் போன்ற கூட்ட மண்டபத்திலிருந்து எப்போது வெளியே பாய்ந்துவிட கிடைக்குமென்று பார்த்துப் பார்த்திருந்த ஜயசேனவும் சிரிஸேனவும் தங்களது பிரயாணப் பைகளைத் தூக்கியபடி, சிவனொளிபாத மலைக்குச் சென்ற பக்தர்களைப்போல் வெளியே பாய் ந்தனர் . விதவிதமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த முற்றவெளியின் அந்தத்தில் சடைத்திருந்த நாகைமர நிழலுக்குச் சென்று இருவரும் வெற்றிலை போடத் தொடங்கினர், இன்னுந்தான் உடல் அங்கங்களை ஆக்கிரமித் திருந்த குளிரை வெளியேற்றவும் சேர்த்துத்தான்.

குழந்தையின் இதயத்தை வெடியோடு நொருக்கிய அக் கணத்தே மூன்று சிறிய கனவுகள்
இரவினூடாக ஒரு வீட்டுக்காக அலைகின்றன.
(இப்ரஹிம் நஸ்ரல்லா)
'நீங்கள் இருவரும் அல லவா மொனராகலையில் இருந்து வந்தவர்கள்? அங்க மெல்கம் ஸேர் வரச் சொன்னவர்’ காலையில் வாசலில் நின்ற் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பின்னால், அரைகுறையாகத் தயாரித்த வெற்றிலை - வாயைத் திணித்துக்கொண்டு இருவரும் சென்றனர்.
"கொழும்புக்கு வந்துeங்கள். அப்படியே வீட்டுப் பக்கம் போய்க் கொஞ்சம் கதைப்பம். சரி ஏறுங்கோ ஏறுங்கோ." காரை ஸ்டாட் செய்திருந்த மெல்கம் ஸேர், கண்ணாடியைப் பணித்து முகத்தை வெளிநீட்டினார்.
"ஐயோ ஸேர் எங்களுக்கு கடைசி பஸ் மூனுமணிக்கு. கதைக்க வேண்டியத இங்கேயே கதைத் துக் கொள்வது நல் லதல் லவா?" வெற்றிலைக் குதப் பலைக் கடைவாயில் சிறைப்படுத்திக் கொண்டு காரின் யன்னலுக்கூடாக ஒரு விதமாகத் தலையைப் புகுத்திக் கொண்டான் சிரிஸேன.
“மை கோட் மூனு மணிக்கு இன்னும் எவ்வளவோ நேரமிருக்கு. சரி சரி. சுணங்கினா நான் பஸ்ஸுக்கு கொண்டு வந்து விடுறன். அதிக தூரமில்ல. பக்கத்திலதான் வீடு.சரி ஏறுங்க" ஆசனத்திலிருந்தபடியே பின்பக்கமாகத் திரும்பி கையை விட்டுக் கதவைத் திறந்தார்.
“மண்டபத்துக்குள்ள நீங்க ரெண்டுபேரும் வந்து புகுந்ததைக் கண்டதும் எனக்கு பெரிய சந்தோஷம்" காரைப் பிரதான பாதைக்கு விட்டு அதன் வேகத்தை அதிகரிப்பதோடேயே அவரது குரலும் மேலோங்கியது. ‘இன்றைய கூட்டம் நினைத்ததைவிட எவ்வளவோ வெற்றியப்பா. அதுதான் எனக் குச் சந்தோஷம். உங் கட தண்ணீர்ப் பிரச்சினய எங்கட புரோக்ராமில
ஏப்ரல் ஜூன் 200

Page 50
மொழிபெயர்ப்புச் சிறுகதை
சேர்த்திருக்கோம். அதப்பற்றி நீங்க ஒன்னும் பயப் பட வேணி டியதில் ல. ம் . இருந்து பாருங்கோ."
‘ஓம். எங்க கிராமத்தவங்க உங்க மேல பூரண நம்பிக்க வெச்சிருக்காங்க. எங்களுக் கெனி னா அங்க கூட்டத்தில பேசின விஷயங்களொன்னும் அவ்வளவா விளங்கேல்ல பாருங்கோ. ஆனா வெள்ள முடிக்காரனின் பேச்சென்னா அந்த மாதிரி. அவர் எங்கயும் கெம்பனில பெரிய பதவியில இருக்கிறவராக்கும்" வெற்றிலைக் குதப்பலை மறுபக்கக் கடவாய்க்கு மாற்றிய சிரிஸேன மடியிலிருந்த பயணப் பொதியை மீண்டும் சரி செய்து கொண்டான்.
'ஹற் ஹா. எங்கட சிந்தனையாளர் மனோரத்னவைப் பற்றித்தான் சொல்றீங்களென்ன? அவர் கொஞ்சம் அப்செட் பேர்வழி. தலை கொஞ்சம் சரியில்ல. அனுதாபத்தின் பேரில நாங்க இப் படி சந்தர்ப்பம் கொடுக் கிறம். இப் பிடி ஆக்களத்தான் படித்த பைத்தியம்’ எங்கிறது ஹற்ஹா." மெல்கம் ஸேரின் கதைப் போக்கை சகித்துக் கொள்ள முடியாத காரும் கூட இரண்டு மூன்று முறை குலுங்கியது.
‘நானும் இதுபற்றிக் கேக்கத்தானிருந்தன். தோல்வியடைந்த அரசாங்க மென்று எல்லோரும்
சொன்னாங்களே. எனக்கு அது என்னென்று
விளங்கேல்ல. ஆனா எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தாங்க. சந்தோஷப்பட்டாங்க. கை
தட்டினவங்கள்" இனிமேலும் பொறுமை காப்பது.
பொருத்தமற்தென்று நினைத்த ஜயசேன, இவ்வளவு நேரமும் தனது நுனிநாக் கை அரித்துக் கொண்டிருந்த வினாவை வெளியே தள்ளினான்.
'இப்போதுதான் சரியான பிரச்சினக்கி வந்திருக்கிறம்" ஆசனத்தில் நெகிழ்ந்தபடி கியரை மாற்றினார் மெல்கம் ஸேர், 'அதுதாண்டாப்பா எங்கட இயக்கத்தின்ற அடிப்படை. அதை நாங்கள் வீட்டுக் குப் போய் கொஞ்சம் ஆறுதலா கதைப்போமென்ன".
மெல்கம் ஸேர் பதில் முற்றுப்பெறும் போதே, மரம் செடி கொடிகளால் நன்றாகவே
நிழல் பரவியிருந்த முற்றத்தினுள் கார்
பிரவேசித்தது. புதியவர்கள் நிலத்தில் கால் பதிக்கும்போது, பூமியிலிருந்து வெளிப்பட்ட பரிசுபோல் அந்த மெல்கம் மாளிகையே அவர்களின் கண்களில் பட்டது. அடுத்து, பசுமையான வீட்டு முன்றில் பூப்பந்தலுக்கு அப்பால் நின்ற கற்சிலை
தாயகம் 78
 
 

போன்ற பெண்ணின் உருவமே அவர்களுக்குத் தெரிந்தது. அவள் அணிந்திருந்த முக்கால் காற்சட்டையும் பொக்ஸிங் பெனியனும் உடலின் செழிப்பை பன்மடங்காக்கிக் காட்டியது. அவளது காலடியில் சாய்ந்து கிடந்த உயர்தர நாய்க்குட்டி மெல்கம் ஸேரைக் கண்டதும் புதுமையாக முனகியபடி ஒரு பாய்ச்சல் பாய்ந்தது. அதைக் கட்டியிருந்த மெல்லிய சங்கிலி அம்மணியின் கையிலிருந்ததால் அதன் இலக்கு தவறிவிட்டது. சிரிஸேனவும் ஜயசேனவும் உடனே மெல்கம் ஸேருக்குப் பின் மறைந்து கொண்டமை நாய்க்குப் பயந்து மாத்திரமல்ல; அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத்தான்.
'ஏன் பயப்படுறிங்கள்?. ரெக்ஸ் சின்னப் பிள்ளை மாதிரி" என்றவாறு ஸேர் விறாந்தைப் பக்கமாகப் போக முற்பட்டார்.
"மெல்கி. கருணா விட்ட ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறான். தயவு செய்து பின்பக்கமாகக் கூட்டிட்டுப் போங்க". பூப்பாத்திகளைப் பலப்படுத்திக் கொண்டிருந்த தோட்ட உதவியாளன் பக்கம் நிலைத்திருந்த கண்கள், புதியவர்கள் பக்கம் சற்றே திரும்புவது போலிருந்தது.
'சரி மெடம்.மன்னியுங்க” மனைவியோடு சிரித்தபடி மெல்கம் ஸேர், சிரிஸேனவின் தோளில் கை போட்டு. மூக்குக் கண்ணாடிக்குக் கீழால் பார்த்துச் சிரித்தார். "நாங்கள் அந்தப் பக்கமாகப் போவம். இதவிட சுதந்திரமான இடமது.”
GLID6ðEELĎ LIDT6f6ÖDJEu6ð î6ði LugšgELDFTGE அமைந்திருந்த சிறிய கட்டிடத்தின் ஒரு பக்கமாக களஞ்சிய அறை காணப்பட்டது. காற்றுப்போன டயர்களுடன் கூடிய பழைய பாணி ஜீப் ஒன்றோடு, சிலந்தி வலையாலும் புழுதியாலும் போர்த்தப்பட்ட பாவித்து உடைந்த வீட்டுத்தளபாடங்களும் அங்கு குவிக் கப்பட்டிருந்தன. அதற்கு அடுத்துக் காணப் பட்ட சிறிய அறையைத் திறந்து விருந்தாளிகளை உள்ளே போவிட்டு பின் தள்ளி நின்றார் மெல்கம் ஸேர்.
‘வொஷ் எடுத்திட்டு கொஞ்சம் ஒய்வாக இருங்கோ. நான் சீக்கிரம் வாரன்’ விரல்களால் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி மீண்டும் வீட்டுப் பக்கமாக நடக்கலானார்.
மெத்தை விரித்து ஒழுங்குபடுத்தப் பட்டிருந்த இரும்புக் கட்டிலின் மீது தமது பயணப் பொதிகளை வைத்த சிரிஸேனவும் ஜயசேனவும், மெல்கம் ஸேரின் அடுத்த பிடி என்னவென்று
) ஏப்ரல் ஜூன் 200

Page 51
மொழிபெயர்ப்புச் சிறுகதை
புரிந்துக் கொள்ள முடியாமல் ஒருவருக் கொருவர் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
*ம். இந்த ஆள் எங்கள நிற்பாட்டிக் கொள்ளப் பார்க்கிறார் போலிருக்கு. விலகிறது கஷ் டம் . அது சரி அந்த பாத் ரூமோ என்னவோவென்று சொல்லுவாங்களே. அது எங்கோ தெரியல’ சிரிஸேன தனது பெனியனைத் தலைக் கூடாகக் கழற்ற முனைந்தான்.
* மூன்று மணி பஸ் ஸ தவறவிட முடியாது. சொல்லிப் போட்டன். பாழடைந்த வேளாண்ம சம்பந்தமான கூட்டம் நாளைக் கல் லவா?" ஜயசேன தனது சக பாடியின் நடவடிக்கையைப் பின்பற்றி, தானும் பெனியனைக் கழற்றக் கைகளை உயர்த்தினான். ' என்ற மூத்திரப் பை வெடிக்கப்போவது போலிருக்கு. சீக்கிரமா போயிட்டுவா. அங்க தெரியிது கதவு. அதுதான் பாத்ரூமாக இருக்கணும்."
விவசாயிகள் இருவரும் வொஷ் எடுத்துக் கொண்டு வந்து, கட்டிலில் அமர்ந்து வெற்றிலை வாய் தயாரிக்கும் போது, கூடவே உதவியாளர் ஒருவரோடு மெல்கம் ஸேர் அறைக்கு வந்தார்.
'ஆ.ஆ.வெற்றிலய ஒரு பக்கமா வைங்க, நேரத்துக்கேத்த மாதிரி சின்னதொரு ஒழுங்கு செய்தன்" உதவியாளன் மேசையில் வைத்த தட் டிலிருந்து இரண்டு அழகிய கிளாஸ்களை எடுத்து மெல்கம் ஸேர் அவர்களது பக்கமாக வைத்தார்.
'ஐயையோ வெளிநாட்டுச் சரக் கு. எங்களுக்கு பழக்கமில்ல ஸேர். அடுத்தது ஸேர் இந்தக் கூத்து போடப்போய் பஸ் தவரினா நாங்க நடு வழியிலதான்’ மதுக் கிண்ணத்தைக் கையிலெடுக்காமல் நண்பனின் கருத்தறியுமுகமாக ஒரு பார்வை பார்த்தான் சிரிஸேன.
"சரிசரி நான் ரெண்டு வார்த்த பேச மாட்டன். உரிய நேரத்தில் ரெண்டு பேரயும் பஸ்ஸேத்திற பொறுப்ப நான் எடுக்கிறன்.சரி நான் பொறுப்பெடுத்திட்டனல்லவா? அப்படீன்ன மொனராகல விவசாயிகள் வாழ்க’ என்று ஒரு அடி அடிப்போமென்ன” மெல்கம் ஸேர் புது விஸ்கி போத்தலைத் திறந்து கிளாஸில் ஊற்றினார்.
'இதுக்குப் பிறகு முழு மொனராகல விவசாயிகளின்ற தலைமைத்துவம் உங்கட கையிலதான். என்ன சரிதானே..? நாங்க சொல்றது போல் நீங்க வேல செய்தா, புதிய
C

நம் காலைப் பொழுதுகளின் நுகத்தடியின் கீழ் சூரியன் நொருங்குகிறது. நமது காலடிகளின் இருளில் நம் மூச்சிரைப்பத் தீப்பற்றுகிறது போர்க்கைதிகளன்றி வேறெதுவுமாக இல்லாமல்
நாம் காணப்படும் இந்த முழுமையற்ற தாயகங்கள்.
(இப்ரஹிம் நஸ்ரல்லா)
விவசாய முறைகள் பற்றி அறிய வெளிநாட்டுப் பயணங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.ஹிஹி.” இரண்டாம் சுற்றுக்காக மதுக் கிண்ணங்களை ஒழுங்குப் படுத்திய மெல்கம் ஸேர் பொரித்த கோழித் தட்டை சிரிஸேனவின் பக்கம் நகர்த்தினார்.
'இதுதான் ஸேர் உண்மையான கத. ஊர்ப்பக்கத்தில ஒருவன் கூட எங்கட சொல்லுக்கு அப் பால போக மாட் டானி . ஆனா எந்த முறையிலாவது இந்தப் போகம் செய்யத் தண்ணி வேணும். இத எப்படியாவது செய்து தாங்க ஸேர். அப் புறம் எங்களால வளச் சிக் கொள்ள முடியும் . ஸ்ேராக் கள் சொல் ற எலி லாம் செய்யலாம். அவ்வளவு செலவு போகாது ஸேர். இரண்டு மோட்டர் போட்டு பொரலு ஒயாவிலிருந்து எங்கட வயல் பரப்புக்கு தண்ணியடிக்கலாம்’ பதமாய்ப் பொரித்திருந்த இறைச்சித் துண்டை பற்களுக்கிடையே நெரித்துக் கொண் டான் சிரிஸேன.
‘'சிரிஸேன அண்ணன் சொனி னது உண்மைதான் ஸேர். எங்கட விவசாயிகள் ரொம்பவும் களச்சிப் போயிருக்காங்க. ரெண்டு பக்கத்தாரும் பொய் வாக்குறுதி தந்து தந்து எங்கள ஏமாற்றிக்கிட்டே வந்தாங்க, ஸேராக்கள் தேர்தலில் நிற்காதபடியால தான் நாங்க தொடர்பு
ஏப்ரல் ஜூன் 2010

Page 52
மொழிபெயர்ப்புச் சிறுகதை
கொண்டோம். எங்க கிராமத்து சனங்களுக்கு போய்ச் சொல்ல எங்களுக்கொரு வாக்குத் தாருங்க ஸேர். அது எங்களுக்கு தாராளமாப் போதும். இந்தப் போகத்தில வயல்வேல செய்ய முடியாமல் போனா நம்ம விவசாயிகள கடவுள்தான் காப்பாத்தனும்” இரண் டாம் சுற்றின் இறுதித் துளியை தொண்டைக்குள் இறக்கிய ஜயசேன ஏதோ சொல்வதற்குப் போல் வாயைத் துடைத்துக் கொண்டான்.
é.
பாத்தீங்களா.. என்னிட்ட மொதல்ல கேட்ட கேள்விக்கு உங்களிமிருந்தே விடை கிடைச்சிட்டுது. ஹிஹற்ஹீ.” ஜம்புப் பழம் போன்ற கன்னங்கள் அசைய மெல்கம் ஸேர் தனியே சிரித்தார்.
‘தோல்வியடைந்த அரசென்று சொல்றது அதுதானப்பா. ஏழை விவசாயிக்கு தண்ணிர் கொஞ்சம் கொடுக்க முடியாத அரசாங்கத்தால ஒரு நாட்ட ஆள முடியுமா?. ம். விவசாயிக்கு பொலிடோல் . அமைச்சர்களுக்கு சொகுசு வாகனம். இப்போ உங்களுக்கு அசாத்தியமான அரசென்றா என்ன வென்று வெளங்குதல்லோ?. சரிசரி அடிப்போம் அடிப்போம். அசாத்திய அரசு அழிக. என்றபடி இன்னொரு அடி அடிப்போம். ஹற்ஹா.’ மெல்கம் ஸேரின் சர்வாங்கமும் புது ஆவேசம் பெற்றது போலிருந்தது. இயந்திரம் போல் போத்தலை நோக்கி அவரது கை நீண்டது.
ஸேருக்கு பணிவோடு சொல் றம்
எங்களுக்கு பெரிய லாபம் , பிரயோசனம் இல் லாட்டியும் பரவாயில் ல லேர். எங் கட
பிள்ளைங்கள பாதுகாத்துக் கொண்டு. விவசாயம்
செய்து கொண்டு நிம்மதியா வாழக் கிடைத்தா அது தாராளமாப் போதும், ஸேராக்கள் செய்ற செலவுகளப் பாக்கிறப்போ எங்களுக்கு ரெண்டு தண்ணீர் மோட்டர் வாங்கித் தருவது பெரிய விஷயமில்ல ஸேர்’ சிரிஸேன சிரமத்தோடு வார்த்தைகளைப் பொறுக்கி வரிசைப்படுத்தினான்.
"ஐயோ. இதென்ன இப்படி அழுதுவிழும் தலைவர்களுக்கு நான் விருப்பமில்லை. ஊவாவில் போராடிய வீரப்பரம்பரையில் வந்தவங்கள். நீங்கள் ஏதோ ஒரு பாட்டிலே. கொண்டை வளர்த்த வாலிபன். என்று பாடுவாங்களே. நல்ல வேளை ஞாபகம் வந்தது. அந்தப் பாட்டையும் தேடிக் கொள்ளணும். முன்னுள்ள வேலைகளுக்கு அது உதவும். எங்க எங்க. இன்னுமே கிளாஸ கையில வைத்தபடி.ம். முதலில இத முடித்திட்டு நிற்பம்’ போத்தலில் எஞ்சியிருந்த விஸ்கியை மூன்று கிளாஸிலும் பகிர்ந்து ஊற்றினார் மெல்கம் ஸேர்.
(50

* நல்லது ஸேர். இப்பொ எங்களுக்கு என்னதான் செய்யச் சொல்றீங்கள்?" சிரிஸேன இறுதிச் சொட் டையும் தொணி டையில் ஊற்றிக்கொண்டான்.
'நீங்க செய்ய வேண்டியது ரொம்பவும் சினி ன விஷயம் . நாங் க சீக் கிரமா மொனராகலைக்கு வருவோம். எங்களோட டீவி, ரேடியோ, பேப்பர்காரங்களெல்லாம் வருவாங்க. வெள்ளக்காரரும் அன்னக்கி வருவாங்க. ம். மொனராகலயில மாபெரும் விவசாயப் போராட்டம். ஆமா. அன்னக் கித்தான் ஆரம்பமாகும் . அம்மாவல்ல. அதன்ற தலமப் பொறுப்ப நீங்க ரெண்டுபேருந்தான் ஏற்கனும். எங்களிட்ட ஆக்கள் இல்லாமலில்ல. ஆனா இந்த தலமப் பொறுப்ப உங்களுக்கு தரவேணுமென்று குழுக்கூட்டத்தில நான் அழுத்தமாச் சொன்னன். இது யாருக்கும் அப்பிடி இலகுவாகக் கிடைக்கிற சான்ஸ் அல்ல. ம். உங்களுக்கு சுவீப் விழுந்ததா நெனச்சிக் கொள்ளுங்க. அப்டீன்னா. மெனராகல விவசாயத் தலைவர்கள் வாழ்க. அசாத்திய அரசு வீழ்க.’ விழுந்து விடப் போவதுப் போல் கையிலிருந்த கிளாஸை காலியாக்கிய மெல் கம் ஸேர், சிரிஸேனவினதும் ஜயசேனவினதும் பக்கமாக முத்தமிடப் போவதுபோல முகத் தை நெருக்கமாக்கினார்.
“ஸேர். அப்.போ. எங்கட. தண். தண். ண்ர்ப்.பிர.ச்.ன.?’ சிரிஸேனவின் தலை கீழே கவிழ்ந்து குரல் நடுநடுங்கியது.
g
‘என்ன.டாப்.பா. சிரி.ஸேன. நான்.நான் வாக்.களிச்.சிட்டன். நாங்க. அத.செய்.வம்’ மெல்கம் ஸேர் இருபக்கமாகவும் அல்லாடினார்.
'அ.அப். டீன்னா.நா.நாங்க.ஊ. ஊருக்கு. பொ.போய். எண் . எண் .னத் த. சொல்.றது?’
ஜயசேன தனது தலையைச் சுழலவிடாமல் நேராக வைத்துக் கொள்ள கடும் பிரயத்தனப்பட்டான்.
* அ. சாத். திய. அரசு. அ.அ. அசா.த்திய. அ.ரசு. ஹஹா.” ஜயசேனவினதும் சிரிஸேனவினதும் தோள்களை இரு கைகளாலும் நெருக்கிக் கொண்ட மெல்கம் ஸேர், முன்பைவிட வெறியுடன் இரு பக்கமாகவும் அல் லாடத் தொடங்கினார்.
ஏப்ரல் ஜூன் 200

Page 53
விந்தை மனிதர்
உங்களுக் குத் தெரியும் , நான் பொது விலை மொக குக் கதை தானே கதைக்கிறனான். சின்னனிலை சில நேரம் ஏதேன் மொக்கு கேள்வி கேட்டுப் போட்டன் எண்டா ‘ என்னடா பேய்க் கேள்வி கேக்கிறாய்?’ எண்டு அப்பர் ஏசுவார். அம்மாவும் சிலநேரம் என்டை அலுப்பத் தாங்கேல்லை எண்டாச் 'சும்மா பேய்க் கதை கதையாமைப் போ!' எண்டு துரத்திட் போடுவா. ஒருக் கா ரண் டு தரம் பள்ளிக் கூடத்திலையும் வகுப்புப் பெடியன்கள் ‘பேயா எண்டு சொல்லியிருக்கிறாங்கள். என்னிலை பேய் பிடிக்கேல்லை எண்டு எனக்கு நல்லாத் தெரியும் பிடிச்சிருந்தால் கோழி, ஆடு எல்லாம் வெட்டிட் படையல் வைச்சு ஆசை காட்டிப் பேயை வெளியாலை கொண்டு வந்து வேப்பிலையாலை அடிச் சிக் கலைச் சிருக்க மாட் டினமோ பாருங்கோ, வழக்கம் போலை சொல்ல வந்ததை மறந்து போயிட்டன். பேய்க் கதை பேய்க் கேள்வி எண்டு இருந்தாப் பேய்ப் பாசை எண்டும் ஒண்டு இருக்கத்தானே வேணும். அதுதான் எண்டை ஆராய்ச்சி.
(
 

103. Angkol
வேதாள சிங்கனுக் குப் பல சாதிப் பேயளையும் தெரியும். எதெதை எப் பிடிச் சமாளிக்கிறது எண்டெல்லாம் நல்லாத் தெரியும். அதைவிட மனிசருக்குள்ளை இனம், பாசை, சாதி, சமயம் எண் டெல் லாம் இருக்கிற மாதிரிப் பேயஞக குளிர்  ைளயும் இருக் குது எண் டு சொல்லுவான். முனி, பிசாசு எண்டெல் லாம் பேர்கள் கேள்விப்பட்டிருக்கியள் தானே. அதை விட, பேயஸ் சமய விசயத்திலையும் வலுங் கட்டுப்பாடு. வேறை சமயத்தில் உள்ள ஆக்களை அதுகள் அண்டாது. ஒவ்வொரு பேய்க்கும் ஒரு பாசை இருக் குது. அதுக் குத் தெரிஞ ச பாசையிலை கதைச்சாத்தான் காது குடுத்துக் கேக்கும். இந்தப் பேயோட்டுகிறவைக்கு அந்த பாசையளர் கொஞ சமி தெரியும் . அவை இடையிடையிலை தமிழிலை, சிங்களத்திலை சொல்லுகிறதுகளை வைச்சு நீங்கள் பேயஞக்குத் தமிழ், சிங்களம் விளங்கும் எண்டு நினைச்சுக் கொளர் ள ಆಹಾ L-IT 51 எ நர் க ைLயா கி களர் கொழும்பிலை பஸ் ஏறி இறங்கச் சந்தையிலை மரக்கறி மீன் வாங்க எவ்வளவு சிங்களம் தெரிய
ஏப்ரல் ஜூன் 2010

Page 54
விந்தை மனிதர்
வேணும்? அதிலுங் குறையச் சிங்களமும் தமிழும் தான் பேயஞக்குத் தெரியும். பேயோட்டிறவை தமிழிலை, சிங் களத்திலை கதைக் கிறதை வைச்சுப் பேயஞக்கு சிங்களம், தமிழ் எல்லாம் தெரியும் எண்டு நினையாதையுங்கோ. எங்களைப் போலை அதுகள் பஸ் ஏறிச் சந்தைக் குப் போகிறதா? நான் சொல்லுறதை நம்பாட்டில் எங் கையேன் வேதாள சிங்கனைக் கண்டால் விசாரிச்சுப் பாருங்கோ.
வேதாளசிங்கன் தான் வடிவா விளங்கப் படுத்தினாண் , கடவுளர் மாருக்கு பா சை இருக்குது. அவைக்கு எங்கடை பாசையள் சில வேளை விளங்கினாலும், தகவல் அனுப் புறதெண்டால் ஐயர், பாதிரி எண்டு தானே நாங்கள் போகிறம். தேவ பாசை எண்டு தானே சமக்கிறுதத்தைச் சொல்லுகிறவை. அதாலை தான் மணிசர் அந்தப் பாசையிலை கதைக் கிறதை நிப்பாட்டிப் போட்டினம் எண்டு நினைக் கிறன். மணிசர் மக்கரெண்டில்லை. தாங்கள் தங்களுக்குள்ளை கதைக்கிறதை வெளியாக் களுக்கு விளங்கக் கூடாதெண்டு ஆக்கள் பாசை மாத்திக் கதைக்கிறேல்லையா? முந்தி முந்திச் சில தாய் தகப்பன்மார் பிள்ளை களுக்கு விளங் கா மை இங்கிலீசிலை கதைச்சுக் கொள்ளுவினம். இப்ப, பிள்ளை களுக்குத் தங்களைக் காட்டில் தெரியும் எண்டதாலை பிள்ளைகளுக்கு முன்னாலை தாய் தகப்பன் தங்களுக்குள்ளை தமிழிலை தான் கதைப்பினம். அந்த மாதிரித் தங்கட கதைய ளர் சா மிக கு விளங் குமெண் டு சமக் கிறுதம் கதையாமல் நிப் பாட் டிப் போட்டினம்.
எங் கடை மந் திரவாதிமா ருக்கு எவ்வளவு பேய்ப் பாசை தெரியும் எண்டதிலையும் எனக்குக் கொஞ்சம் ஐமிச்சம். ஏனெண்டால் இப்ப பேய்களின்டை தொகை குறைஞ்சு போயிட்டுது. மின்சார வெளிச்சம் வந்ததாலை எண்டு சிலபேர் சொல்லுகினை. பேயளே கண்டு பயப்படுகிற மாதிரிப் பொல் லாத வேலையளை மணிசர் செய்கினை எண்டதாலை தான். இப்ப நான் நம்புகிறன். ' பேயஸ் ஒரு நேரத்திலை ஒரு ஆளிலை தான் தொத்தும். ஒரு ஆளைத் தான் துரத்தும். எப்பவேன் அடிச்சுப்போடும். அது பாம்பு மணிசரைக் கடிக்கிற மாதிரி. பாம்பு மனிசரை வேணுமெண்டு தேடி வந்து கடியாது. பயத்திலை பாம்பு கடிக்கிற மாதிரித் தான் பேயஞம்’ எண்டு வேதாளசிங்கன் வடிவா விளங்கப்படுத்தினவன்.
தாயகம் 78
Ε 는 墨 Es
g
 
 

高亡 மந்திரவாதிகள் பேயளோடை சரியாக் தைச்சு வருவினை எண்டால் ஏன் பேயஸ் ஊரை பிட்டு ஓட வேணும்? பேயஸ் குறைஞ்சால் பாருக்கு நட்டம்? பேயோட்டிறவைக்குத் தானே. இந்தக் கொம்பியூட்டர் வருத்தம் இருக்கெல்லோ அது மாதிரி மனிசருக்கு வாற புதுப் புது பருத்தங்கள் எல்லாம் அதுகளுக்கு மருந்து பிக் கிறவைதான் உண்டாக்குகிறது எண் டு கேள்விப்பட்டிருக்கிறன். கொஞ்சம் உண்மையாத் நாண் இருக்க வேணும் ஆனால் எங் கடை )ந்திரவாதியள் ஏன் பேயளோடை கதைச்சுக் காலத்துக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்ளப் பழக்க மாட்டினை? யோசிச்சுப் பாத்தன், பிறகு தான் உண்மை விளங்கிச் சுது. எங்கடை ஐயர்மாருக்கும் கடவுளின்டை பாசை சரியாத் தெரியாது. சனத்துக்கும் தெரியாது. அதாலை அவை வாயிலை வந்ததையெல லாம் அரிச்சனை, மந்திரம் எண்டு சொல்லுவினை. நாங்களும் கும்பிட்டுப் போட்டுக் காசையுங் குடுத்துப் போட்டுப் போவம். தமிழிலை மந்திரஞ் சொன்னாத் தானே கரைச்சல், பிழையாச் சொன்னாப் பிடிச்சுப் போடுவினை.
எங் கடை எம்.பி. மாரும் தாங்கள் ஊரூராப் போய் இங்கிலிசிலை மந்திரஞ் சொல்லி இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா எண்டு பல பல ஊரிலையும் உள்ள பெரிய பெரிய பேயளை எல்லாம் வாலாயம் பண்ணி எல்லாஞ் சரிக் கட்டித் தருவினை எண்டு பேய்க் கதை சொல்லித் தான் இலெக்சன் கேட்டவை. சனம் போடாவிட்டாலும் அவை எப்பிடியோ வெண்டிட்டினை. இனி அயலூர்ப் பேயஸ் வந்து எங்களைத் தின்னுமோ உள்ளுர்ப் பேயஸ் வந்து தின்னுமோ தெரியாது. பொறுத்திருந்து தான் பாக்க வேணும்.
ழப்பம் தொடக்கத்தில்
குதிரைகள் தமக்குச் சமவெளிகள் தேவை என்றன கழுகுகள் மலைமுடிகள் தேவை என்றன பாம்புகள் பொந்துகள் தேவை என்றன மனிதர்களோ குழம்பிப் போயிருந்தனர்
(இப்ரஹிம் நஸ்ரல்லா)
ஏப்ரல் ஜூன் 200

Page 55
வேறுeட இ
ஒனேஸிமொ ஸில்வெய்ர
தீவுகளின் மக்கள் தீவுகளின் ம வேறுபட்ட ஒரு கவிதையை வே புலம்பெயர்ந்தோர் தமது இருப்பி முறையிடாத ஒரு கவிதை கருச்சிதைந்த காலத்தின் கருை குழந்தைகள் ஊட்டம்பெறாத ஒ( தாயற்ற தமது மைந்தர்களின் க தாய்மார் கூர்ந்து நோக்காத ஒ( தீவுகளின் மக்கள் தீவுகளின் ம வேறுபட்ட ஒரு கவிதையை வே வேலை தேவைப்படும் கைகளே ரொட்டி தேவைப்படும் வாய்களே தெற்கே செல்லும் தெருவழியே வீம்புகள் இல்லாத ஒரு கவிதை மெளனத்தின் ஆழக்கீறலினால் அடைபட்ட சொற்கள் இல்லாத தீவுகளின் மக்கள் தீவுகளின் ம வேறுபட்ட ஒரு கவிதையை வே தொடக்கத்தில் இதயத்தின் சாறு புனித கத்தரீனின் பட்டுக்கும் ச்ச
தீவுகளின் மக்கள் தீவுகளின் ம வேறுபட்ட ஒரு கவிதையை வே கடலின் அருளையும் திசைகாட் கற்பனைக் கோலங்களையும் இ

s கவிதை
IT (Gas (36.1j(8L 1935)
க்களுக்காக ண்டுகின்றனர் lன் அமைதியிலிருந்து
LDuu(T601 unto Sol)
ரு கவிதை
ாட்சித் தோற்றத்தைத்
ரு கவிதை
க்களுக்காக
ண்டுகின்றனர்
T
ாா இல்லாத ஒரு கவிதை
மக்களை அடிச்சுமையேற்றிய
ஒரு கவிதை
க்களுக்காக
ண்டுகின்றனர்
எழும் கவிதை
ாபெற்றாவும் படியாக்களும்
கொண்ட கவிதை
க்களுக்காக
Iண்டுகின்றனர்
டியின் பிரதான முனைகளின்
இழக்கும் மனிதர் இல்லாத கவிதை.

Page 56