கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏகலைவன் 2002.10-11

Page 1
*ஜ்ல்
ஊக்குள்
 
 
 
 
 
 
 

ப - கல்வி - அறிவியல் பிப்பு: 20/=

Page 2
. 185 يمر فكأنها أقع في
எங்கள் உயிரினும் மேலான கலைத்தாய்
யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி ទៅបាវិញថា មិចោTចារិ បng៣៣uffយ
வாழ்த்துகின்றோம்.
- உயர்தர மாணவர் மன்றம் -
لار
 
 

போற்றினம் தேன்தமிழாகிய பொருளே
புலர்ந்தது போர்க்களத்து இசையொடு பொழுதே
தோற்றசொல் இலையெனும் நிகண்டினை உடையோம்
துயரினை நீக்கிய திருவடி தொழுவோம்
tL T MMGMTCaTtT TmmmmMmTTTLLL LLmmmLLLLLL TTTM
குனிந்தவர் நிமிர்ந்தனர் குருதியிற் கரைந்து,
ஏற்றிய கொடியசை தேசமும் உடையாப்
ஏகலை வாபள்ளி எழுந்தருளாயே!
கூவின பல்குழல் கூவின விமானம்
குருவிகள் கலைந்தன; அலைந்தன எங்கும் ஓவி ைவாழ்வியல், புதுவிதை இதயத்து
ஒருப்படுகின்றது செருக்களம் நமக்கு IJIബ് (ബ്', 'ൈi ബൈ'
LOBLg 65ឬថ្លឹម សាលាបច្ច ឬក្បិន្តាំ யாவரும் அதையறிவார் அவரழியார்
ஏகலை வாபள்ளி எழுந்தருளாயே!
ളൈ ബൈ ക്ണ് (
இதுஎதற் கென்றுமே இயம்பினர் ஒருபால் வண்ணிமண் துனையது கொண்டனர் ஒருபால்
வளமுடன் இலங்கையும் கடந்தனர் ஒருபால் சென்னியில் கையது வைத்தனர் ஒருபால்
சினமதை எழுத்தினில் சுமந்துமே வாராப் உன்னைநீ யாரென உலகினுக் குரைப்பாப்
ஏகலை வாபள்ளி எழுந் தருளாயே!
N

Page 3
உங்கள் உறவுகளுடன்
உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு சேவையினை இரவுபகலாய் வழங்கும் இணையற்ற நிறுவனம்
வல்வெட்டித்துறை, தொலைபேசி இல: 070.212432 வெளிநாடு: 0094-70212432 சந்தமொழி சிந்தி நிதம் தந்த சுகம் கூடும் அந்த இத விந்தையோடு சொந்தம் உனை நாடும்
கம்பர்மலை,
Kamparimalai, Wavettiturai. .
World Wide Connunication Services
T.P. No: O7O-22482
| Day& Night Services - Siray assò Geos
 
 
 

"தூங்கிவிட்ட சந்ததிமுன் பூபாளமாய் எழும்பேனா துரோணர் தந்ததிந்த
ஆறாம் விரலாய் எழும் பேனா'
கெளரவ ஆசிரியர் திரு. ப. ஜோதீஸ்வரன்
பிரதம ஆசிரியர் திரு. சு. முரளிதரன்
மதியுரைஞர் திரு. கி. நடராசா திரு. க. தர்மலிங்கம் திரு. மா. லோகசிங்கம்
இணையாசிரியர் செல்வன் வி. மணிமாறன் செல்வி மோ, கிரிஷாந்தினி
பிரதம வடிவமைப்பாளர் செல்வன். த ரதீஸ்வரன்
ஒவியர் செல்வன். த. தவஜிவன்
விளம்பர முகாமையாளர் செல்வன். தி டொன்றோலோஜான் செல்வன். தி நிமலேஸ்வரன் செல்வி சி. கஸ்தூரி
விற்பனை முகாமையாளர் செல்வன். இ. சஞ்சீவ்
செல்வி து கம்ஷானந்தி செல்வி கு. குலசக்தி
«N.
உடனுதவும் பகுதி
எம் இனிய மாணவர்களே.!
ஏகலைவன் சஞ்சிகை மூலம் நீங்கள் நிகழ்த்தியிருப்பது இமாலயசாதனை எறும்புகள் “எவரெஸ்ற்றை அடைவது சாத்தியமில்லை. என்று ரைத்தவர்கள் ஏமாந்து விட்டார்கள். எமக்கான தேசத்தைச் செதுக்கும் பணியிலே மாணவர்களும் பேனா முனையுடன் களமிறங்க 'ஏகலைவன்' கால்கோள் செய்ததையிட்டு மணன் மகிழ்கிறது. எம் மொழி மீது எச்சில் துப்புவோரை, எம் கல்வி மீது கல்லெறிவோரை, எம் தெய்வங்கள் மீது சிறுநீர் பெய்வோரை, எம் பண்பாட்டை பாழ்படுத்துவோரை 'ஏகலைவன்’ எதிரியாகக் கருதுகின்றான். மண்ணிலே கலந்து விட்ட குருதித்துளிகளுக்கு மாணவர்கள், வெறுமனே அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பதை ஆதரிக்க முடியாது. அதற்கு அப்பாலும் அவர்களின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெறவேண்டும். ஆயுத முனைகளே அனைத்தையும் சாதிக்கட்டும் என்று பேனா முனைகள் உறங்கிக்கிடந்தால் கல்வி கற்பிழந்துவிடும். பயிற்சி பெறவில்லை, ஆயுதம் ஏந்தவில்லை, சீருடை அணியவில்லை, பாசறை களில், காடுகளில் தங்கவில்லை. ஆனாலும் அனை வரும் போராளிகள்தான். இது வாழ்வியல் எம்மீது திணித்த நியதி புலம் பெயர்ந்து போனவர்கள் கூட இந்த நியதிக்குட்பட்ட நிகழ்காலத்திலேதான் வாழ்கிறார்கள். தாய் மண்ணின் விடியலுக்காய் தமிழின் பாதம் பணிவோம். வாழ்வியற் பயணத்தை தொடருவோம்.
எல்லோரது எதிர்பார்ப்பினையும் 'ஏகலைவன்
பூர்த்தி செய்து வைப்பதென்பது இயலாத காரியம்.
குறை காணும் மனோபாவங்களை தவிர்த்து ஆரோக்
கியமான விமர்சனங்களை வெளியிடுங்கள். ஏகலைவன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வான்.
அன்புடன்
ஆசிரியர்.
gൈ

Page 4
- ಫ್ಲಿ? துப்பாக்கி இனிமேல் ஜூேது,
பூக்களையே தூவீட்டும் சிப்பாய்கள் இனிமேல் சிரிப்பினையே காவட்டும் பீரங்கிக் குழல்களுக்குள்
அமைதிப் புறாக்கள்.குடி பூரட்டும் குண்டுப் புகையகற்றி வானெல்லாம் சாம்பிராணி பன்னீரும் சந்தனமும் மணக்கட்டும் கட்டிபட்ட ரத்தம்நம் ஆனந்தக் கண்ணிரால் முற்றாய்க் கரையட்டும். மோனம் சுமந்து நோப்பட்டிருந்த பூங்குயில்கள் பரவசமாய்ப் பாடட்டும்.
எதிரெதிர்த் துருவங்கள் இணைந்தனஓர் நேர்கோட்டில்! சதிசெய்து. எவர்தடுத்துஞ் சாகாப்போர்ப் பேயினது விதியையிரு கரங்களது
கையெழுத்து மாற்றிற்று! கள்ளி முளைத்திருந்த கபாடந் திறந்துகொள்ள முள்ளகற்றி அமைதி முகங்காட்ட
நித்தநித்தம் எங்கள் தெருக்களிலே கம்பாயத் தேவதைகள்' பாம்புக்குக் கீரி பகையென்ற காலம்போய்
O2
 
 
 

பாம்புகளின் புற்றுக்குள்
கீரிக்கு இரணசிகிச்சை ஆண்டுகளால் எங்கள் அன்பழிக்க ஏலாதென்று கூண்டு திறந்து
குலவவரும் சொந்தங்கள் சாவினையே நித்தம் தரிசித்த பேப்பர்களில் வாழ்வினையும் தரிசிக்க வாய்ப்புகள்
ஆனந்தக்
கூத்தாடுதுள்ளம்
குரவையிடும் கவிஞனுள்ளம் கவிஞன்தான் துன்பத்தைக் கண்டு கரைந்தழுவான் கவிஞன்தான் இன்பமெனில் எல்லோரையும் விட மகிழ்வான் எந்தன் மகிழ்ச்சி என்றும் இருக்கவேண்டும்.
"வானத்தமரர்களே! வாழ்த்திசைக்கும் ஆண்டவரே! எங்களது வாழ்வுக்கு இசையமைக்கும் தேவதைகாள்! பக்கத் துறைந்திருந்து பாலிக்கும் ஞானிகளே நானறியாது என்னோடு நடந்துவரும் சித்தர்களே! எந்தன்மகிழ்ச்சி நிரந்தரமாய் நிலைக்கவேண்டும் எந்தன் கவிஇனிமேல் இனிமையைத்தான் பாடவேண்டும் குண்டு சுமந்தவரை, குதறுண்ட குஞ்சுகளை கண்ணிழந்தும், கையழிந்தும் மனமிடியாப் பிஞ்சுகளை
ழப்புகளை, தோல்விகளை, அழிவுகளை, குனிவுகள், இழவுகளை, பாடி இரணமான என்மனது இவற்றுக்கு ஏற்றதீர்வின் இனிமைகளை மருந்தாகப் பூசவேண்டும் புனர்ஜென்மம் பெற்றுச் சிலிர்க்கவேண்டும்."
இந்த வரங்களினை.
எத்தனைநாள் போர்களுக்குள் குண்டு வெடிப்புக்குள், கொல்களத்துள். தவஞ்செய்து உங்களிடம் கேட்டிருந்தேன்?
இன்றிவற்றைத் தரநல்ல
சந்தர்ப்பம் காத்துள்ளேன்!
தந்து அருள்வீரா?

Page 5
2002ம் ஆண்டு வைகாசி மாதம் இங்கு வர்த்தக நோக் கிலே 20ஆம் திகதி பிறந்த புதிய குழந்தை குடியேற்றங்களை நிறுவினர். 434 தான் கிழக்குத் தீமோர் ஆறு ஆண்டு ஆண்டுகள் போர்த்துக்கேயரின் களுக்கு மேலாக சிறையிலும், வீட்டுக் காலனித்துவ நாடாகவே தீமோர் காவ லபிலு மஐ தகழி நதது.
வைக் கப்பட்டி
(Jose Alexandre - Gusmao) @g தேசங் களாகப தருநாட்டினி 纖 பிரிக்கப்பட்டது.
வருமானத்தை விட நிர்வாகச் செலவு அதிக புதிய தேசியக் கொடி பறந்து கொண் ಊ75 காணப் பட்டதால் 1974 இல் டிருக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி போ ாததுககல கிழக்குத் திமோரை யிருக்கிறது. சந்தோசத் விட்டு விலகி து கிழக் ಅಳ್ಗಿ திருவிழாவில் சங்கமித் பற்றாம் .g) ------- ன சுதந திருப்போர் பூந் தோட்டங் | རིགས་ l;&&& శస్త్రి ಟಿಳ திரத்திற்
་་་་་་་་་་་་་་ '? :த்தி Ls களைக கடநது வநதவா |* t
s
களல்லர் பல போராட்டங் 3. గx . போராடிய
*్య
களைக் கடர் - భక్స్ "தீமோர்
நது வநத வர்கள். 3 گل ببینیمه عیسی به ஜனநாயக గోపన్స్"%e ang யூனியனுக் o otšoššoti, భ? 1520 இல் தீமோர் இது "சி" 7. கும்UDT) பிரெறிலின்
தீவிலே காணப்பட்ட சந்தன tDTÉgóslóð - - - - - - அக்கறை கொண்ட போர்த்துக்கேயர் இக்கும் (Fretin) ஏற்பட்ட மோதல் களைத் தொடர்ந்து இந்தோனேசியா
கிழக்குத் தீமோர் அதிபர் குஸ்மாவோவுடன் இந்தோனிசியா அதிபர் மெகாவதி சுகர்ணோ புத்திரி
தலைவராகியு ளார். தலைநக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலையிட்டு தீமோரை தன்னாட்டின் 27வது மாகாணமாக பிரகடனப்படுத் தியது. இக்காலத்தில் 2 இலட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் இந்தோ னேசியப் படைகளால் கொல்லப்
L Lafi.
1998இல் B. ஹபீப் இந்தோ னேசியாவின் ஜனாதிபதியானார். 1999 இல் அவுஸ்ரேலியா கிழக்குத் தீமோரின் சுய நிர்ணயக் கொள் கையை ஆதரிப்பதாக அறிவித்தது. 1999 ஆவணி 30ஆம் திகதி நிகழ்ந்த பொதுசனக் கருத்தெடுப்பில் 78.5 வீத மான மக்கள் சுதந்திரத் தனியரசிற்கான ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தோ னேசிய அரசு கோபங்கொண்டு மக்க
ளைக் கொன்று குவித்தது 5 இலட்சத்
திற்கதிகமான மக்கள் இடம் பெயர்ந் தனர். இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினர் தலை நகர் "டிலி” யில் வந்திறங்கினர். 2002ஆம் ஆண்டு சித்திரை 14ஆம் திகதி கிழக்குத்திமோரின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் குஸ்மாவோ மிகப் பெரும்பான்மை வாக்குகளுடன்
ஜனாதிபதியானார்.
இந்தோனேசியா தீவுக்கூட்டத் தின் 13677 தீவுகளில் ஒன்றாகத் தீமோர் தீவும் விளங்குகின்றது. இதில் 24000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்
"கிழக்குத் தீமோர்’ என அழைக்கப்
படுகிறது. மொழிகள் இங்கு வழக்கில் உள்ளன. *ரெம்" (Tetum) மொழியே தேசிய மொழியாகும். போர்த்துக்கல் உத்தி
30 இற்கும் மேற்பட்ட
யோக பூர்வ மொழியாக உள்ளது.
இயற்கை வளங்கள் குறைந்த வறிய நாடாகத்தான் கிழக்குத் தீமோர் காட்சியளிக்கிறது. எனினும் நம்பிக்கை யோடு இம் மக்கள் செயற்படத் தொடங்கிவிட்டனர். நம்பிக்கைதான் வெற்றி சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க இரத்தம் சிந்தியவர்களுக்கு இலக்கை எய்துவது எளிதானது தானே கிழக்குத் தீமோரின் நாளைய எதிர்காலம் ஒளிமயமாக அமையட்டும். புதிய பொன்னாடு சர்வதேச அளவில் சிறப்புற்று விளங்கட்டும்.
வி. மணிமாறன்
2003 556の6m)
யா/உடுப்பிட்டி அ.மி கல்லூரி
ഋൈബ്

Page 6
சந்நிதியில்
முகவரி இறுப்பதா அமிழ்டஐ
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பரம்பரை, பழம்பெருமையை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது. இத் தனை சிறப்புகள் இருந்தன என்று போடுவதில் பயனே இல்லை. மூத்தமொழி மூச்சிழந்து போய் முது மக்கள் தாழியில் முடங்
பட்டியல்
கும் நிலையை அடைந்து விடக் கூடாது. தமிழை வளர்ப்பதாக யாரும் தம்பட்டம் அடிக்க வேண்டாம் தமிழ் தன்னைத் தானே வளர்க்கும் தவ வலிமை கொண்டது. தமிழைத் தவ றாகப் பயன்படுத்துவதைத்தான் சகித் துக் கொள்ள முடியவில்லை. வேற்று மொழி பேசுவோருக்கு தமிழின் பரிமாணம் முற்று முழுதாக வசப்படக் கூடியது அல்ல. அவர்களிடம் அகப் பட்ட தமிழ் அரை நிர்வாணமாக அலையலாம் அதனை அலங்கரித்து அழகுபடுத்துவது தமிழர்களின் தலையாய கடமையல்லவா..?
இராணுவச் சோதனைச் சாவடி களில் "உங்கள் ஒத்துழைப்புக்குநன்றி” என்ற வாசகத்தில் ஒத்துளைப்பு 'ஒங்கள்', 'ஒங்கட' 'நண்றி”
என்றவாறான தமிழ்க் கொலைகள்
- அமைந்துள்ளது.
ൈ
காணப்படுகின்றன. கொழும்பில் "காலி முகத்திடல்” என்பதை 'காலிழுக” என
எழுதி வைத் திருக் கிறார்கள். இவற்றையெல்லாம் திருத்து வது
இயலாத காரியமல்ல.
தமிழ் பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் கூடதமிழை ஒழுங்காக எழுதுவதில்லை. நயினாதீவு இறங்கு துறைக்கருகில் அமைச்சர் ஒருவரின் புகழ்பாடும் பேருந்துத் தரிப்பிடம் "கட்டடம்’ என்ற சொல்லை அதிலே எழுதி வைத்திருக் கிறார்கள் கட்டு + இடம் = கட்டிடம் என்பது மூன்றாந்தரத்தில் கல்வி கற்கும் குழந்தைக்குக் கூடத் தெரிந்த விடயம். இத் தவறுகள் களையப்படா விடில் எதிர் காலத்தில் அங்குள்ள மக்கள் கட்டடம் என்ற சொல்லையே பயன்படுத்தும் கால விபத்து நிகழ்ந்து விடலாம். யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் "காட்சி” என்ற சொல்லை “காட்ச்சி" என எழுதியிருக்கிறார்கள்
தமிழர்கள் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த போது அதன் தலை வனாக முருகப் பெருமானே இருந்த
 
 

Y UNA TOT DIT از او را از زن: L0
தாக வரலாறு உணர்த்துகிறது. தமிழை வளர்த்த முருகன் தலங்களில் தமிழ் சாகும் நிலையிலே காணப்படுவது சரிதானா..? திருச்செந்தூரிலே சூரன் போர் நிகழ்ந்த போது, முருகன் பாடி வீடமைத்த ஏமகூட மாக கதிர்காமம் சிறப்பிக்கப்படுகிறது. ஆனால் பெரும் பான்மை மொழி தான் ஆலயத்தின் ஆட்சிமொழி ஆங் காங்கே தூவப்பட் டுள்ள தமிழோ கொடுந் தமிழாகக் காட்சி அளிக்கிறது. அடியார்கள் என்ற சொல் வடியார்கள் என எழுதப்பட் டுள்ளது. கதிரமலைக்கு செல்லும் பாதையிலுள்ள திருடர்கள் கவனம் பற்றிய அறிவிப்புப் பலகையைப் பார்க்கும் போது கண்ணிர் மல்கிறது. (அந்த அறிவிப்புப் பலகையை 'ஏகலைவன் புகைப்படப் பிரிவினர் படம் பிடிக்க முயன்ற போது பாதுகாப் புப் படையினர் ஏனோ.(?) தடுத்து விட்டனர்.)
கதிரமலையில் உள்ள மற்றோர் அறிவிப்புப் பலகை தான் இங்கு தரப்பட்டுள்ளது. கல்வி, மொழி, இந்துப் பண்பாடு போன்றவற்றை வளர்க்கப் புறப்பட்டவர்கள் கும்பகர்ண
உறக்கம் கலைந்தெழுவது எப்போது?
ஏகலைவன்
யாழ்ப் பல
செல்வச் சந்நிதி மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. தவறு சிறிதாக இருப்பினும் தவறு தவறுதான். ஆலயத்தில் எழுதப்பட்டுள்ள இறவா மல் பிறவாமல்’ எனும் தேவாரத்தில் எனையாள் சற் குருவாகி' என்ப தற்குப் பதிலாக எனையாழ் சற் குருவாகி' என எழுதியிருக்கிறார் கள் ளகரத்திற்குப் பதிலாக ழகரம் பாவிக்கப்பட்டதால் தேவாரத தனி பொருளே மாறி விட்டது. இதே தவறை பாடசாலை மாணவன் செய்தால் ஆசிரியர் மன்னிப்பாரா? உடனடியாகப் புள்ளியைக் குறைத்து விடுவார் எழுத்துப் பிழைகள் ஏற்படுவது இயல்புதான். திருத்தக் கூடிய சந்தர்ப்பங்களிலே திருத்தி விடவேண்டும் பாடபேதங்களே பாடங்களாக படித்தவர்கள் அனுமதிக் கக் கூடாது. 'ஏகலைவன்’ இதழிலும் எழுத்துப் பிழைகள் ஏற்படுகின்றன. எனினும் இயன்றவரை திருத்த
முயல்கிறோம்.
இந்து விவகார அமைச்சர் கதிர் காமத்தில் செந்தமிழை வாழ வைப் பதே ஈழமணித் திருநாட்டிற்கு ஆற்றும் அளப்பரிய தொண்டாகும். அதுதான் ஆறுமுகக் கடவுளை அகமகிழ வைக்கும் அர்த்தமுள்ள அர்ச்சனை யாகும். தமிழை வாழ வைக்காத எவருமே தமிழருக்குத் தலைமை தாங்கத் தகுதியில்லாதவர்கள் என்பது 'ஏகலைவனின' முடிந்த முடிவு

Page 7
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட அந்த பஸ்ஸில் யன்னலோர மாக இடம் பிடித்த சனத் வரும் வழி முழுவதும் காணப்பட்ட இயற்கை அழகுகளை ரசனையுடன் பார்த்தவனுக்கு இடிபாடுகளை உடைய வீடுகள், பாடசாலைகள், கோயில்கள் அனைத்தையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. "இவை தமிழர் நிலமா? என நினைத்தான். அருகில் இருந்த தங்கை றம்மியாவுக்கு அவற்றைக் காட்டி அவளையும் அதில் இணைத்துக் கொண்டான். மறு *、
பக்கத்தில் தாய் றிரீஜாவும் தந்தை தலக் சேனவும் தமக்குள் ஏே தோ (3 gful வண்ணம் இருந் தார்கள் வீதியின் மறு புறம் எவ்வாறுள்ளது என்பதை பார்க்க ஆவலுடன் றம்மியா எழுந்து பின்புறம் அமர்ந்தாள் றம்மியாவை காணாத பூரிஜா, சனத்தைப் பார்த்துக் கேட்டாள். 'றம்ய.கொகே?' என்ற போது சனத் றம்மியா இருக்கும் திசையை காட்டினான்.
திலக்சேன குடும்பம் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய சொந்த இடம் கொழும்பு என்பதால் தமிழ் பேசவும் தெரிந்திருந்தார்கள் இலங்கையில் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையினால் இவர்கள் யாழ் மண்ணை சுற்றிப் பார்க்க என வந்தார்கள். திலக்சேனாவின் ஒரே மகன் சனத்' இருபத்தி யொரு வயது கொண்ட துடிப்பான இளைஞன். அதேபோல் பதினெட்டு வயது நிரம்பிய மகள் றம்மியா' இவர்கள் இருவருடைய விருப்பமும் ஆவலும்தான் இவர்கள் குடும்பமாக யாழ் வருவதற்கு காரணமானது.
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தவர்கள், வீடொன்றில் வாடகைக்கு சில தினங் களுக்காக குடியிருந்தார்கள். வந்த அன்றைய தினமே பக்கத்து வீட்டில் குடியிருந்த அமிர்தலிங்கம் குடும்பத்தின ருடன் சினேகம் கொள்ள ஆரம்பித்தார் கள். அமிர்தலிங்கமும் திலக்சேனவும் நாட்டு நிலமைகள் பற்றி தம் கருத்துகளை முன் வைத்து பலவிதமாக பேசிக் கொள்வார்கள். திலக்சேனா "எங்கடநாட்டில. சமாதானம் நிலைக்கணும். அது தான் நல்லம்.' என்றார். அதற்கு ற்றாற் போல் அமிர்தலிங்கமும்'
08 D g(്
 
 
 
 
 
 
 
 
 

வேறென்ன எமக்கு வேண்டியிருக்கு திலக்சேன "தபரய திபென. தென 5 உள்ள இடத்தில் தான் சமாதானமும்
இவர்கள் இருவரும் இவ்வாறு த
"இல்லை~~றம்மியா~~~எங்கட எதிரி அரசு... அதன் அமைப்புஅதன் கொள்கைகள் மட்டுமே. இராணுவமோ, அல்லது நீங்களோ~~ இல்லை~~நீங்கள் எங்கள் சகோதரர்கள்
ό
6)
ଔur, LD56h றம் மி
○ கொண்டி றம்மியாவு
பல இடங்களையும் தலங்களையும் சுற்றிப் பார்க்கும் .ே கம் குடும்பமும் கூடவே செல்வதுண்டு அழகாக காட்சி தரு சனத், றம்மியா உள்ளங்களில் யாழ் மண்ணில் விருப்பை 6 ஆனால் துன்பத்தைத் தரும், துயரத்தைத் தரும் காட்சிகள் சனத்து ஆழமான ஓர் சிந்தனையை உருவாக்கக் காரணமானது. இந்த சிறிய இரண்டு இனங்களின் எதிர்ப்பால் எத்தனை இழப்புகளை எல்லாம் எத வேண்டி இருக்கிறதே. இத்தனை காலமும் தமிழ் இனம் என்றால் 6 என்று தானே நினைத்திருந்தோம் பண்பு, கலாசாரம் மிக்க பெண்கள், அ6 தாய்மார், உணர்வுள்ள இளைஞர்கள், கட்டிக்காக்கும் தந்தைமார் என்ன6ெ. கண்ணியமான குடும்பங்கள் வாழும் இனத்திற்கு இப்படி ஒரு சீரழிவா? இ எல்லாம் யாரால் வந்தது-? எம் இனத்தவர்களாலா-? இவ்வாறு பலவற்றையு நினைத்து மனம் புழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு "சனத்! அங்க பாருங்க. என்ற நிலாவின் குரல் திசை திருப்பியது. நிலா காட்டிய திசையை சனத் நோக்கினான். அவள் சுட்டிக்காட்டிய இடத்தை அர்த்தம் புரியாமல் பார்த்தவனுக்கு அது ஒரு மயானம் என்பது ஊகிக்கக் கூடியதாக இருந்தது. நிலா விளக்கினாள்
O
"சனத் இது தான் செம்மணி மயானம்- இதற்குள்ளே- புதைக்கப் பட்டவர்கள் தான் அதிகம்- தாமாக புதைய நினைத்தவர்களல்ல. அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உயிருடன் சிதைக்கப்பட்டவர்கள்- எச்சங்கள் கூட இல்லாமல் யுத்தத்தின் மத்தியில் புதைக்கப்பட்டவர்களின் இடம்-' என்றவள் மேலே சொல்ல முடியாமல் நிறுத்திக் கொண்டாள். 'சனத்' அவளின் வேதனையைப் புரியாமலில்லை. ஆனாலும் அவனால் எதைச் சொல்லிட முடியும் புதைத்த வர்கள் தம் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா? அதனால் மெளனமானான்.
g(ാബ് 09)

Page 8
%'ഉം
୪%; " @"
*/g్యశ லாவின் முகம் பார்த்த றம்மியா?--
ஆ)?ழிலா- எத்தனை, கொடுமைகள் நடந்திருக்கு உங்களுக்கு, எங்க
ே ேேஇறுப்பு வரலியா-” என்று கேட்டாள்.
)ை
*్క இல்லை- றம்மியா. எங்கட எதிரி அரசு- அதன் அமைப்பு, அதன் *,ை இருத்கேகள் மட்டுமே- இராணுவமோ அல்லது நீங்களோ இல்லை-நீங்கள் %, %குளிசகோதரர்கள் உங்கள் மீது விருப்பு ஏற்படுமே தவிர வெறுப்பு ஏற்படாது )ே என்றாள். ം.ീര് ● ్కుతి క్తి இருவர் பேச்சுக்களையும் கேட்டுக் கொண்டேவந்த சனத் வேறு )ே %ப்ேக்ேகளில் கவனத்தைத் திருப்பினான் சனத் றம்மியா இருவரும் எப்போதுமே 5% அஆற்றிவர்களுடைய மனதைப் புண்படுத்த நினைக்காதவர்கள். அதனால் தான் 2.7% இத் பேச்சை மாற்றினான். 霹%^* *్క இவ்வாறாக பல இடங்களை சுற்றிப் பார்த்ததில் சில நாட்களை கழித்தார் ேே, 'கள் யாழ மண்ணை சுற்றிப்பார்த்ததுமே தம் ஊர் செல்ல இருந்த திலக்சேன குடும்பம், யாழ் மண்ணில் வாழும் மனிதர்கள் நட்பாலும், சனத் றம்மியா இ S. இருவருடைய விருப்பத்திற்காகவும் சில நாட்கள் தாமதமாகவே செல்ல முடிவு
అక్కి* செய்தார்கள் %;"
శక్తిత్ర அமிர்தலிங்கம் குடும்பத்தினருக்கும் திலக்சேன குடும்பத்தின் மீதும், ஜ2 அவர்களின் நடத்தை மீதும், அவர்கள் தங்களுடன் பழகும் முறைகள் பலவும் @  ேபிடித்திருந்தன. சிங்களவர் என்றால் கொடூரமானவர்கள் என்ற சிந்தனை பெரி 貂 யோர் முதல் சிறியோர் வரை வளர்த்த அவர்களுக்கு இப்படியும் நல்லவர் * கள் இருக்கிறார்களா? என்று எண்ண வைத்தது. திலக்சேனா குடும்பம் மீது ஏற்பட்ட விருப்பத்தால் தங்கள் வீட்டில் அவர்களுக்கு விருந்தும் அளித்தார் @ கள் அன்றுதான் சனத் நிலாவின் வீட்டை ஆவலாக கண்களால் துழாவினான். அவ்வாறு அவன் சுற்றி சுழன்று பார்த்தபோது சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த பிறேம் போடப்பட்ட அழகிய புன்னகையுடன் மாலை போடப்பட்டு காணப்பட்ட இளைஞனின் படம் அவன் பார்வையில் வீழ்ந்தது. உற்றுப்பார்த் தவனுக்கு நிலாவின் சாயல் தென்பட்டது. யாரென அறியும் ஆவலில் நிலாவை அழைக்க முற்பட்டவன் திரும்பியபோது நிலா தன்னையே பார்த்துக் கொண்டு நின்றதையும் கண்களில் நீர் பெருகுவதையும் கண்டான். சனத் என்ன கேட்க நினைத்தான் என்பதை தெரிந்த நிலா "அது- என்னுடைய அண்ணா-' என்று வேதனை கலந்த குரலில் சொன்னாள் சனத்திற்குப் புரிந்தது. அதற்கு மேல் தான் ஏதாவது கேட்கப் போய்- அவள் பெரிதாக அழுது விட்டால்- என்று நினைத்தவன் அத்தோடு தன் பார்வையை வேறு திசை திருப்பினான். தாம் வந்த நாட்களிலிருந்து பல துயரச் செய்திகளை நிலா மூலம் கேட்டறிந்தவனுக்கு நிலாவுக்குள்ளும், அவர்கள் வீட்டிலும் ஒரு வேதனைக்குரிய நிலமை இருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு சனத் தாய் தகப்பனுக்கும்
COD gG

தங்கை றம்மியாவுக்கும் நிலா வீட்டில் நடந்தவற்றை சொல்லிய போது அவர்கள் கண்களில் ஈரம் பனிக்கக் கண்டான். தன் குடும்பம் தமிழ் இனத்திற்காக வருந்துவதைப் பார்த்தான். இப்படி ஒவ்வொரு சிங்களக் குடிகளும் தமிழர் களின் வேதனைகளையும், உணர்வுகளையும் புரிந்து நடந்து கொண்டால்இன்று தமிழ் இனத்திற்கு இத்தகைய அவலங்கள் ஏற்படுமா?- என்று நினைத்தவன் கூடவே நிலாவின் அண்ணா ஏன் இறந்தார் என்றும் அறிய மனம் துடித்தவன்- மறுநாட்காலை விடிவை எண்ணிக் கண்ணயர்ந்தான்.
மறுநாட்காலை சனத்' நிலாவைத் தேடி சென்றபோது நிலாவின் தாயும் தந்தையும் கோயிலுக்குப் போயிருப்பதை உணர்ந்தான்.
தான் அறிய ஆவலாய் இருப்பதை இலகுவில் அறிந்து விடலாம் என நினைத்தவன் வேறு சில விடயங்களைப் பற்றி அவளுடன் பேசிக் கொண்டிருந்த வன் சிறு அமைதிக்குப் பின்,
'நிலா- ஒண்ணு- கேப்பேன்- நீங்க பதில் சொல்லணும்' என்றவன் நிலாவின் பதிலுக்குக் காத்திராமல்
"உங்கட- அண்ணாவிற்கு- இந்த நிலை-” என்று இழுத்த போது நிலாவின் வெண்மையான முகம் கன்றிக் கறுத்தது. அதுவரை புன்னகை இழையோடிய அந்த முகத்தில் சோக இழை படர்ந்தது
சனத் கேட்ட கேள்விக்குப் பதில் கூற நினைத்தவளாக- தன் குனிந்த தலையை நிமிர்த்தி சனத்தைப் பார்த்தவள்.
"போராட்டத்தில்- வீரமரணம் அடைஞ்சிட்டார். என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்- “போராடப் போகும் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சோகம் ஆழப்பதிஞ்சிருக்கும் என் அண்ணா மனதிலும் ஒரு சோக வரலாறு- ஆழப் பதிஞ்சிருந்தது - உங்களுடைய பார்வையில் இப்ப இருக்கிறவங்கதான் என் அம்மா, அப்பா என்று- ஆனால் உண்மை அதில்லை- என்னுடைய அம்மா அப்பா இறந்து பதினைந்து ஆண்டுகளாகிவிட்டன-” என்றவளை இடைமறித்து கேட்டான் சனத்
"உங்க- அண்ணா-' என்றாள். "அண்ணாவும் நானும் சகோதரர்கள்தான்- எங்களுடைய அம்மாவும் அப்பாவும் விமானக் குண்டு வீச்சின் போது எங்கள் வீட்டிலேயே எங்கள் கண்முன் இறந்தார்கள். அன்று நானும், அண்ணாவும் குண்டு போட்ட விமானத்தை திட்டித் தீர்த்தோம்- அது அறியாத வயது- நாம் கதறிய குரல் அதன் காதில் கேட்கும் என்று நினைத்தோம்- அனாதரவற்று நின்ற நிலையில் எம்மை எம் அம்மாவின் உறவினரான இவர்கள் தான் வளர்த்தார்கள்இவர்களுக்குப் பிள்ளைகள் யாரும் இல்லாததால் எமக்கு தாய் தந்தையானார்
gGബര്

Page 9
கள் ஆனால் யுத்தம்' என்றால் என்ன என்று அறியும் வயது வந்த பின்ன -, எம் தாய் தந்தைக்கு நடந்த கெதி எவருக்கும் இனி வரக்கூடாது என் நினைத்த அண்ணா. வளர்த்தவர்களையும் உடன்பிறப்பையும் பிரிந்து மண்ணுக்காக போராடச் சென்று, உயிர் விட நேர்ந்தது.”
என்று கூறி முடித்த நிலா தன் கரங்களால் முகத்தை மூடிய வண்ணம் அழுதாள்
சனத்திற்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. 'நிலா.' என அழைத்தான். அழுகையே பதிலாக வந்தது.
அவளது அழுகை ஓயும் வரை சனத் அவளையே பார்த்துக் கொண்டி ருந்தான்.
ஒவ்வொரு தமிழ் பெண்ணுடைய வாழ்விலும் வேதனைகள் ஒவ்வொரு தமிழ் இளைஞனுடைய மனதிலும் கீறல்களுடன் கூடிய உணர்வுகள், ஒவ்வொரு தமிழ்த்தாய் தந்தையின் கண்களிலும் நீர்த்துளி என்ன காரணத்திற்காக இவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். இவர்களுக்கு சுதந்திரமாக வாழ ஆசை இருக்காதா -? என்று நினைத்துக் கொண்டிருந்தவன் நிலாவின் அழுகை நின்றுவிட்டதை உணர்ந்தான். அப்போதுதான் கோயிலுக்குச் சென்ற நிலாவின் தாயும் தந்தையும் வந்து கொண்டிருந்தார்கள். 'சனத் கஷ்டப்பட்டு முகத்தில் புன்னகையை வரச் செய்தான். சிறிது நேரம் அவர்களுடன் பேசி விட்டு விடை பெற்றான்.
சில நாட்கள் சனத்' நிலாவைக் காணும் போது சிரிக்கும் சிரிப்பை
நிறுத்திவிட்ான் அதற்குக் காரணம், அவள் அன்று சொன்னவைதான். தமிழ்
மக்களின் துயரங்களை அறிந்து வேதனைப்பட்டதைவிட, அவன் வந்த நாளிலிருந்து நட்பாகப் பழகிய நிலாவின் வாழ்வில் ஏற்பட்ட வேதனைகள் தான் அவன் மனதை இன்னும் பாதித்திருந்தது.
அடுத்து வந்த நவம்பர் இருபத்தேழாம் நாள்- அன்று மாவீரருக்கு ஈகைச்சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்வுக்காக திலக்சேனகுடும்பத்தையும் நிலா அழைத்திருந்தாள். அங்கே நிலாவின் கைகள் ஈகைச் சுடரை ஏற்ற முற்பட்ட வேளை இன்னொரு கையும் சேர்ந்து கொண்டது. நிமிர்ந்து பார்த்த நிலாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கே சனத் அவள் பிடித்திருந்த ஈகைச் சுடரில் தன் கையையும் இணைத்திருந்தான். இருவரும் சேர்ந்தே ஈகைச்சுடரேற்றி முடித்த போது- ஒருவரை ஒருவர் பார்த்தபோது- சனத்தின் விழிகளில் திரண்ட கண்ணிர்த்துளிகள் கன்னம் வரை உருண்டோடியது
அவனுடைய சகோதரன் இராணுவத்தில் இருந்து இறந்து போனதற்கும் சேர்த்தே விழிகள் சுடுநீர் சிந்துவதை அவனைத்தவிர வேறுயாரால் அறிந்து கொள்ள (UDIQU-LD. J.D. (35 d5606). It gif
2004 E606) யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
 

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை எங்கு நடைபெற்றது?
சட்டாஹிப் படைத்தளத்தில் (தாய்லாந்து)
இவ்வாண்டு உலக உணவு உச்சிமாநாடு எங்கே நடைபெற்றது?
தென்னாபிரிக்கா ஜேஷன்ஸ்பேர்க்கில்
உலகில் அதிகமாக விற்பனையாகும் தமிழ் நாளிதழ் எது?
தினத்தந்தி
கல்விமேம்பாட்டு பேரவையின் புதியதலைவர் யார்?
சண்முகதாஸ்
2003இல் ஆசிய மெய்வல்லுநர் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
பிலிப்பைன்ஸ் மணிலாவில்
சுற்றுலாப் பயணிகளில் சிறந்தவர்கள் என அழைக்கப்படுவோர் யார்?
ஜேர்மனியர்
இலங்கையின் சட்டமா அதிபர் யார்?
கமலசபேஷன்
உலக மன்னிப்புச் சபையின் தலமையகம் எங்குள்ளது?
இலண்டனில்
2006இல் G8 மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
ரஷ்யாவில்
ஓசோன் படலத்தை பாதுகாக்கும் முயற்சியை முதன் முதலில் ஆரம் பித்த நாடு எது? இலங்கை
விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஒப்பென் பட்டத்தை வென்ற வீராங்கனை
LITT?
செரீனா வில்லியம்

Page 10
12)
13)
14)
15)
16)
17)
18)
19)
20)
உலகத் தமிழர் மாநாடு அண்மையில் எங்கு நடைபெற்றது?
சென்னையில்
"நானும் தமிழும்" என்ற தலைப்பில் 7மணி 40 நிமிடம் பேசி உலக சாதனை படைத்தவர் யார்?
சோக்கல்லோ சண்முகம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவர் யார்? எங்கு மரணமடைந்தார்?
பெர்டினன்ட் மார்க்கோஸ் ஹவாய்த் தீவில் (1989)
பலூன் மூலம் உலகம் சுற்றும் சாதனையை பலமுறை மேற்கொண்டு வெற்றி இலக்கை நெருங்கியவர் யார்? ஸ்பீவ் பொசெட் (அமெரிக்கா)
2002ம் ஆண்டு உலக அழகிப்பட்டம் பறிக்கப்பட்டு யாருற்கு வழங்கப் பட்டது?
ஜஸ்டின் பசெக் (பனாமா)
தற்போதைய யாழ்மாவட்ட அரச அதிபர் யார்?
பத்மநாதன்
ஆசிய விளையாட்டுப் போட்டி ஒன்றில் உயரம் பாய்தலில் தங்கப்
பதக்கம் வென்ற தமிழர் யார்?
எதிர்வீரசிங்கம்
அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்ட நாடு எது?
ஹொங்ஹொங்
ஞாபக சக்தி கூடிய விலங்கு எது?
IT 60D 605
க. கலைவாணி
தரம் 10 யா/கம்பர்மலை அ.த.க பாடசாலை
 

ETT SÚAS "リ エ」。
"மொகமத் அப்துல் ரவூஃப் அரபாத்
அஸ்குட்வா அல்ஹிசைனி” இதுதான் யசீர் அரபாத்தின் முழுப்பெயர் எகிப்தின் தலை நகரான கெய்ரோவில் 1929 ஆவணிமாதம் பலஸ்தீனத் தாய்க்கும் எகிப்தியத் தந்தைக்கும் பிறந்தவர். 1956ல் ஃபாட் பல் கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரி யானார். 1858ல் அல்.பட்டா என்ற விெடுதலை இயக்கத்தை தோற்றுவித்தார். 1964ல் அரபு நாடுகள் கழகம் (Arab league) பலஸ்தீன விடுதலை இயக்கத்தை (Palastine Liberation Organisation-PLO) (85Tibojo,5555). 19676), (3arb(BJaylair நிகழ்ந்த 6 நாள் யுத்தத்தில் PL.O பலவீனப்பட்டது. இதனால் தலைமறைவாகச் செய்யப்பட்ட அல்.பட்டா PL.O வைக் கைப்பற்றியது. அரபாத் அதன் தலைவரானார்.
பலஸ்தீனம் அரபு முஸ்லீம்களின் நாடு 1917ல், பலஸ்தீனத்தின் மொத்த
சனத்தொகை 7 இலட்சம் தான் அதில் ஏறத்தாழ 574000 பேர் அரபு முஸ்லீம்கள் 70000பேர் கிறிஸ்தவர்கள் 56000 யூதர்கள் பலஸ்தீனத்தில் 2 சதவீதம் மட்டுமே யூதர்களுக்கு உரியதாக இருந்தது. ஐரோப்பிய யூதர்களின் திட்டமிட்ட குடியேற்றத்தால் பாலஸ்தீனம் அங்குல அங்குலமாக ஆக்கிரமிக்கப்பட்டது. சியோனிசத்தினதும் பிரித்தானிய, அமெரிக்க ஏகாபத்தியங்களின் கூட்டுச் சதியாலும் பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது 4 இலட்சத்திற்கும் மேலான பலஸ்தீனியர்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். முதலாவது அரபு இஸ்ரேல் யுத்தம் மூலம் 77 சதவீதமான பலஸ்தீன நிலப்பரப்பை இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 1948 மார்கழிக்கும் 1949 மாசிக்கும் இடைப்பட்ட 3 மாதகாலத்தில் மட்டும் 250 அரபுக் கிராமங்கள் அழிக்கப்பட்டு பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் கொல்லப் பட்டனர். மேலும் 1967க்கும் 1970க்கும் இடையில் 700 நகரங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டன.
gG C15 D

Page 11
தமிழர்களைப் போலவே பலஸ்தீனியர்களும் மிகத் தொன்மையான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். ஈழத்தமிழ் விடுதலை இயக்கம் தோன்றி 20 ஆண்டுகள் தான். ஆனால் பலஸ்தீன விடுதலை இயக்கம் 40 ஆண்டுகால வரலாற்றை உடையது. மேலும் பொருளாதாரமானதுமிக வலுவான எண்ணெய் வளத்தை உள்ளடக்கியது. அத்தோடு அதனை ஆதரிக்க சுற்றிலும் ஏராளமான அரபு நாடுகள் உலகளவில் இஸ்லாமிய நாடுகள் என்று மாபெரும் பேரணி இதன் பின்னணியில்தான் அரபாத் இயங்குகிறார். அமெரிக்காவின் சிலந்தி வியூகத்திற்குள் சிக்கியதால் சிதைந்துபோன கனவுகளுடன் வாழ்க்கையை நடத்துகிறார். ஆயுத மேந்திய போராளிகள் ஆரோக்கியமற்ற சமரச முயற்சி களுக்கு உடன்படக் கூடாது என்பதற்கு யசீர் அரபாத்தின் போராட்ட வழிநடத் தல் நல்லதோர் பாடமாகும்.
1988ல் மேற்குக்கரைப் பகுதியை பலஸ்தீனத்திற்கு வழங்குவதாக ஜோர்டான் மன்னர் உறுதியளித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் எண் 242 மற்றும் 338 ஆகியவற்றின் அடிப்படையில் பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரித்தது. பலஸ்தீன மக்களின் அதிகார பூர்வ அமைப்பாக PL.Oவை அமெரிக்காவும் அங்கீகரித்தது. 1988ல் இஸ்ரேல் பிரதமர் நேட்டன் யாகுவும், அரபாத்துவும் "வைநதி ஒப்பந்தம் கைச்சாத் திட்டனர். அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிய அரபாத் அதன் நிழலிலே அமர்ந்து கொண்டார். பின்னர் இஸ்ரேலில் புதிய பிரதமர்கள் மாறும் போதெல் லாம் புதிதாக ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அடுத்து ஆட்சியைக் கைப்பற்றும் பிரதமர் பழைய ஒப்பந்தங்களைக் கிழித்தெறிந்து புதிய ஒப்பந்தங்களைச் செய்தார். கேம்டேவிட் என்ற இடத்தில் 2000 ஆடி 25ல் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன்-இஸ்ரேல் பிரதமர் எஹத் பாரக்-அரபாத் ஆகியோர் முக்கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர். ஏரியல் ஷரான் இஸ்ரேல் பிரதமரானதும் கேம் டேவிட் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
அமெரிக்காவையும், சமரச ஒப்பந்தத்தையும் நம்பி ஆயுதங்களை கீழே போட்ட அரபாத்தினால் பலஸ்தீன மக்களின் விடுதலை கேள்விக்குறியாகியுள் ளது. 'ஹமான் இயக்கம் PL.O வின் ஆயுதங்களைத் தன் கரங்களில் ஏந்தியுள்ளது.
இன்று பலஸ்தீன மக்கள் மரணத்துள் வாழ்வு தேடுகின்றனர். தங்களின் தாய் தங்கள் கண் முன்னாலேயே ஆடை உருவப்பட்டு - பெயர் மாற்றப்பட்டு பிறிதொருவனுக்குப் பெண்டாக்கப்பட்டதும் - தாங்கள் தங்களின் பிறந்த வீட்டிலிருந்து பிடரி பிடித்து வெளியே தள்ளப்பட்டதும் தான் பலஸ்தீனர்களின் வடியாத சோக வரலாறு
உலக நாடுகள் ஒப்புக் கொண்ட பலஸ்தீனப் பகுதிக்குள் இஸ்ரேல் இராணுவம் புகுந்துவிட்டது. ரமல்லா நகரில் அரபாத்தின் தலைமையகம் முற்று
 

கைக்கு உள்ளாகிச் சேதப்படுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்கா பாசாங்குத்தனமான ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டும் இஸ்ரேல் எவற்றையும் காதிலே போடாமல் தன் வழியிற் செயற்படுகின்றது. 40 ஆண்டுகளில் அரபாத் சாதித்ததைவிட 20 ஆண்டுகளில் ஈழத்தலைமை சாதித்தது ஏராளம் தீர்க்க தரிசனமற்ற அரபாத்தின் செயற்பாடுகளால் நாளுக்கு நாள் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். அரபாத்தை நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. போர்க்குணங் கொண்ட வேங்கையாக அரபாத் மறுபடி உயிர்த் தெழுவாரா? பலஸ்தீன மக்கள் சிந்திய குருதிகளுக்கு அர்த்தம் அறிவிக்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் மலினப்படுத் தப்பட்ட்ட தலைமைத்துவங்களின் செயற்பாடுகளால் மக்களின் கனவுகள் சிதைந்து போவதை வரலாறு மன்னிக்காது.
;تر لاسته கால தோறும் சுதந்திரப் பிரதீரத்திற்கு மருத்துவச் செலவுகள் அதிகமாகி வருகிறது
கவிஞர் அக்னி புத்திரன்

Page 12
இலையுதிர்காலத்திலே இயற்கைஅன்னை
தன் மரமகளின் ஆடை களைந்து
அழகு பார்க்கிறார்கள் அப்போது பறவை திரும்பிப் பார்க்காமல்
பறக்கிறது.
சினிமாக்காலத்திலே அரக்கி தனது
விபச்சார மகளின் ஆடை களைந்து
அழகு பார்க்கிறாள் அப்போது கற்பு திரும்பிப் பார்க்காமல்
ஒடி மறைந்து விட்டது.
பறவையை அழைக்க மரம் துளிரால்
மன்னிப்புக் கேட்கிறது கற்பை அழைக்க யாரை மன்னிப்புக் கேட்பது? கமராவையா? கதாநாயகிகளே வாருங்கள் தீக்குளிப்போம் அத்தீயோடு அவமானம் சாம்பலாகட்டும்
ந. நிகிந்தா தரம் 10 யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
பெண்களின் தந்தை:
தம்பி. இது என்ர இளைய மகள் வயது இருபது இவளைக் கட்டுவீங்கள் எண்டால் இருபது லட்சம் தாறன், மற்றவளுக்கு வயது முப்பது அவளைக் கட்டுவீங்கள் எண்டால் முப்பது லட்சம் தாறன்
பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை:
பக்கத்தில நிக்கிறவவுக்கு வயது ஐம்பது வரும் போல கிடக்கு எனக்கு அவவைத் தான் பிடிச் சிருக்கு
பெண்களின் தந்தை:
ஐயோ. தம்பி அது என்ர மனிசி
 
 

* Śrafia ്വ8 am Ain II 606}ligj. gj. Ujdi dj6)ID) எல்லா உறுப்புகளையும் போல பலலும ஒரு முககியமான உறுபபாகும். இந்த பல்லை நாம் பேணி பாதுகாக்க வேண்டும் இல்லாவிட்டால் பற்களில் பல விதமான நோய்கள் தோன்றலாம். அவற்றில் ஒன்று பயோரியா நோய் ஆகும்.
: தற்காலத்தில் மக்களை அதிக |மாக பாதிக்கின்ற நோய்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு பல்லும் நம் வாயில் உறுதியாக நிற்க அதற்கு பிடிமானமாக எலும்புகளும் ஈறுகளும் இருக்கும். ஈறுகள் பல வகை நோய்களால் தாக்கப்படும் பொழுது குறிப்பாக பயோரியா நோயில் ஈறுகளின் அளவு குறைவதால் ஈறுகளில் கீழே உள்ள எலும்பும் கரைந்து பற்களின் மேல் உள்ள பிடிமான மும் குறைய பற்கள் ஆட ஆரம் பிக்கும். இதில் அதிக அசைவுகள் ஏற்படுகின்ற பொழுது வலியும் வீக்கமும் ஏற்படும் உணவு உண்ணவும் சிரமமாக இருக்கும். இதைத்தான் "பயோரியா நோய் என்று அழைக்கிறோம். இந்த பயோரியா நோய் பற்களின் வேர்களைச் சுற்றியுள்ள மெல்லிய சவ்வுகளைப் பாதித்து பற்களை தன் உறுதி நிலையிலிருந்து ஆட வைப்பதோடு சீழ் உண்டாவதும் ஈறுகள் சுருங்கவும் செய்கிறது. வயதான காலத்தில் பற்கள் விழுவதற்கு இந்த நோயே முக்கிய காரணமாகும். இந்த பயோரியா நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட எல்லா வயதினருக் கும் இந்த பயோரியா நோய் வரலாம். ஐந்து வயது குழந்தை கூட இந்த நோயின் அறிகுறியில் இருக்கலாம். வயதாக வயதாக இந்த நோயும் அதிகரிக் கிறது. இதற்கு முறைப்படி சிகிச்சை செய்யாவிட்டால் பற்களும் அதைச் சுற்றியுள்ள எலும்புகளும் பாதிக்கப்பட்டு இறுதியாக பல்லையே இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

Page 13
ஈறுகளில் ஒரு விதமான அழற்சி மற்றும் இளகும் தன்மை ஏற்பட்டு அழுத்தத்தினால் சீழ் பற்களில் ஓரங்களில் இருந்து வரும் அதனால் ஜீரணத் தன்மை பாதித்து ஈரலும் பாதிக்கப்பட்டு நமது உடல் நலமும் பாதிக்கப்படு கின்றது. *
காரணங்கள்
ஒவ்வொரு உணவுக்கு பிறகும், முறையாக பற்களை தூய்மை செய்யாது விட்டால் கிருமிகள் பற்களில் காலப்போக்கில் அதிகமாக சேர்ந்து விடும். இந்த கிருமிகள் அதிகமாக சேருகின்ற பொழுது பல வகையான தன்மைகளை உண்டாக்கி ஈறுகளுக்கு அழற்சியும், வலியும், இரத்தக் கசிவையும் ஏற்படுத்து கின்றது. இவை தவிர இந்த பயோரியா நோய் ஈறுகளிலும் அதை பாதுகாப்பாக வைத்திருக்கின்ற பகுதிகளிலும் காயங்கள் ஏற்படுவதாலும் உண்டாகிறது. உணவு துணுக்குகள் பல்லின் இடுக்குகளில் அதிக நேரம் தாங்குதல், தவறான முறையில் பல் குத்தும் குச்சிகளை பயன்படுத்துதல், ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
மருத்துவம்
எல்லா நோய்களுக்கும் உள்ளது போலவே இந்த நோய்க்கும் உணவு ஒரு முக்கியமான மருந்தாக திகழ்கிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட பல்லை எடுப்பது தீர்வாகாது இந்த நோயினால் ஏற்பட்ட நச்சுத்தன்மையை நீக்கவேண்டும் "பயோரியா நோய் வந்த பிறகு மருத்துவம் செய்வதைவிட வராமல் தடுப்பதே புத்திசாலித்தனமாகும் பற்ற உறுப்புகளுக்கு எப்படி நாம் பயிற்சி அளிக்கிறோமோ அதேபோல ஈறுகளுக்கும் அளித்தல் வேண்டும். ஈறுகளுக்கு எப்படி உடற்பயிற்சி அளிப்பது என்று ஆச்சரியப்படுகின்றீர்களா? இது மிகவும் எளிமையானது நார் சத்துள்ள உணவு பொருட்களை கடித்து மென்று உண்ணு தலே சிறந்த பயிற்சியாகும். அதுவும் குறிப்பாக சப்பாத்தி போன்ற உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் சப்பாத்தியை நாம் சோறைப் போல முழுங்க முடியாது. சப்பாத்தியை நாம் நன்றாக மென்று உண்கின்ற பொழுது அது பற்களுக்கும் ஈறுகளுக்கும் சிறந்த பயிற்சியாக இருப்பதோடு செரிமானத்திற்கும் உதவியாக உள்ளது.
கொய்யாக்காயை கடித்து தின்பது பற்களுக்கு சிறந்த பயிற்சியாகும். இது பற்களில் ஈறுகளை பலப்படுத்துவதோடு ஈறுகளில் இருந்து வருகின்ற இரத்தக் கசிவை நிறுத்தி நச்சுத் தன்மையையும் போக்குகிறது. அதே போல் கொய்யாவின் வேர்ப்பட்டையையும் கஷாயம் வைத்து அருந்தினாலும் நல்ல பலன்தரும் பசளைக்கீரையின் சாறு இதற்கு மிகப் பலனளிக்கக் கூடியதாக இருக்கிறது. பசளைக்கீரையின் சாற்றை கரட் சாற்றுடன் சேர்த்து அருந்தும்
பொழுது மிகுந்த பலன் தரும் எலுமிச்சம் பழமும் இந்நோயிற்கு மிகுந்த
 
 
 

பலனை தரக்கூடியது. ஏனென்றால் எலுமிச்சம் பழத்தில் விட்டமின் "சி" உயிர்ச் சத்து அதிகமாக இருப்பதால் அவை பற்களின் ஈறுகளை உறுதிப்படுத்தி இந்நோய் வராமல் தடுக்கிறது. காலையிலும் இரவிலும் படுக்கப் போவதற்கு முன்பாக நாம் பல்துலக்கும் "பிரஷ்ஷில்” எலும்பிச்சம் பழச் சாற்றை தடவி நன்றாக தேய்த்து வந்தாலும் பலன் தரும் இவை தவிர சில எளிய மருத்துவ முறைகளும் உண்டு.
சாதாரண புழுங்கல் அரிசியை கோவை இலைச்சாற்றில் நன்றாக ஊற வைத்து அதை உலர்த்தி நல்லெண்ணையில் லேசாக வறுத்து அதை வாயில் ஊறவைத்துக் கொண்டால் பல்லின் கீழ் மற்றும் இரத்தம் வருதல் குணமாகும். உப்பு ஒரு கைப்பிடி எடுத்து அரைலிட்டர் தண்ணீரில் போட்டு அதை பாதியாக வரும் வரை சுண்டகாய்ச்சி வாய் கொப்பளித்து வந்தாலும் பலன் தரும்
புதினா விதையை வாயில் போட்டு கொண்டு நன்றாக மென்று துப்பி விடவேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்ய வேண்டும். இதனால் பல் கூச்சம், பயோரியா நோய் ஆகியவையும் குணம் ஆகும்.
கடுக்காய் 175 கிராம், சுக்கு 35 கிராம், மிளகு 175 கிராம், படிகாரம் 8.75 கிராம் இவற்றை தனித்தனியாக நன்றாக இடித்து தூள் செய்து கொண்டு ஒன்றாக கலந்து அத்துடன் 175 கிராம் கடலைமாவையும் சேர்த்து பல் துலக்கி வந்தால் நல்ல பலன் தரும்.
மாவிலை, கொழுந்து, வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, ஆலம் விழுது இவற்றை நன்றாக உலர்த்தி, இடித்து எல்லாம் ஒரு சம அளவாக எடுத்துக் கொண்டு கால் பங்கு படிகாரமும் உப்பு கலந்து கொண்டு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து கொண்டு தினமும் இரண்டுவேளை பல் துலக்கிய பின் கடுக்காய் கஷாயத்தால் வாய் கொப்பளித்து வந்தாலும் ஆரம்ப நிலையில் உள்ள பயோரியா நோய் குணமாகும்.
பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் வரும் முன் காப்பதே நலம். ஆகவே இந்த பயோரியா நோய் வராமலிருக்க தினமும் காலையிலும் படுக்க போகும் முன்பும் முறையாக பல் துலக்கி வரவேண்டும் பல் துலக்கும் பொழுது வலது கை ஆள்காட்டி விரலால் ஈறுகளை நன்றாக மசாஜ் செய்ய
வேண்டும். ஒவ்வொரு முறையும் உணவு உண்டபிறகு வெறும் கையால் நன்றாக தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும் உணவு துணுக்குகள் பற்களின் இடுக்குகளில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக முறையான உடற்பயிற்சியும் மூச்சு பயிற்சியும் இந்நோய் வராமல் தடுப்பதற்கு மிகவும் பயன் தரும்.
திரு. ர. யசோதரன்.
ஆசிரியர் யா/உடுப்பிட்டி அ.மி.க.
ജൈ 21 D

Page 14
புராதன காலத்திலிருந்து நவீன யுகம் வரை சமூகம் பாதிப்படையக் காரணமாக விளங்குவதில் மதுப்பழக்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த நவீன யுகத்தில் எவ்வளவு துறைகளில் முன்னேறினாலும் இம் மதுப் பழக்கம் பின்னோக்கி ஈர்க்கிறது.
மது அருந்தியவர்கள் தூய்மையான மனிதப்பண்பை இழந்து மிருகமாக மாறுகின்றனர். மதுப்பாவனையால் பல குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. இதனால் புத்தி ஜீவிகள் கூட உயிரை இழக்கின்றனர்.
மதுப்பழக்கத்தால் உடலில் உள்ள மென்மையான உறுப்புக்களும் பாதிக் கப்படுகின்றன. மனவளர்ச்சியும் குன்ற வாய்ப்பிருக்கின்றது. இவ்வேளையில் பழிவாங்கும் நோக்குடன் செயற்படுவர். மதுபோதையில் இருக்கும் போது சுய உணர்வுகளை இழந்து என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை தெரியா மல் இருக்கிறார்கள், மது போதை தெளிந்தவுடன் பெரியோர் புத்திமதி கூறினால் வருந்துவார்கள் வருந்தியும் பயனில்லை போன மானத்தை மதிப்பை மீள பெறமுடியுமா? இம் மதுப்பழக்கத்தால் எவ்வளவு தூரம் மக்கள் பாதிப்படைகி றார்கள்
மூத்த நபர்களது இந்நிலையை பார்த்து இளம் சந்ததியும் இவற்றை பாவிக்க ஆரம்பிக்கிறார்கள். இம் மூத்த நபர்கள் நற்பழக்க வழிகாட்டியாக திகழவேண்டும். ஆனால் அவர்களோ இளம் சந்ததி கெட்டுச் சீரழிய வழி வகுக்கின்றார்கள். இதைவிட செல்வந்தர் வீடுகளில் மது அருந்துவதை நாகரிகமான செயலாகக் கருதி இவ் இழிவான செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இவ் உலகிற்கே இம் மதுப்பழக்கம் சாபக்கேடாகவுள்ளது. எம் சமூகத்தை சீரழிக்கும் இம் மதுப்பழக்கத்தை தடுக்கவும், தீய பழக்கங்களை களையவும், நற்பண்புகளை வளர்க்கவும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது அனைவரது கடமையாகும். எம் சமூகம் விழிப்புணர்வோடு மதுப் பழக்கத்திலிருந்து விடுபட மாணவரும், சமுதாயமும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும்.
அரசு பல்வேறு இடங்களிலுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களுக்கு தடை விதிப்பதுடன் எதிர்காலத்தில் இவை ஆரம்பிக்க அனுமதி வழங்காதிருக்க வேண்டும் பாடசாலை, கல்வி நிறுவனங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொது இடங்களில் மது ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கதைகள், கவிதைகள், நாடகங்கள் மதுஒழிப்பை கருப்பொருளாகக் கொள்ள வேண்டும். மது என்னும் அரக்கனை மாய்க்க வேண்டுமாயின் தீயவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இனிவரும் சந்ததி மதுவைக் கண்டால் தூர விலகி நிற்க வேண்டும்.
g5. g76.9/TTEIT
B un.61. D.D.sabauriff
 
 
 
 
 

இன்றோ பெருநெருப்பில் தேசம் கருகிறது என்றந்தச் சிறுபொறி எம்மண்ணில் வீழ்ந்தது? எவர் அறிவார்.?
பொறியை, சிறு நெருப்பாக்கி ஊது குழல் கொண்டு உருப்பெருக்கம் செய்த உன்மத்தர் யார்? யார்? அன்றேன் அணைக்க அயலவர் வரவில்லை-? அடுப்பு நெருப்பென்று அகமகிழ்ந்து அரிசி உலையிட்டு ஆக்கி உளமாற உண்டோர், குசினி பற்றி எரிகையில் ஏன் கூச்சலிடவில்லை? யாகத்தி என்றுரைத்து நெய்யூற்றி வளர்த்தோர் குளிர்காயவென்று விறகடுக்கி மகிழ்ந்தோர் பெருமை முழக்கமிட்டு பெற்றோலிட்டோர் தீயில் கருகாது தப்பினரா? அருகிருக்கும் வீட்டிற்கு அக்கினியிட்டோர் தம்வீடு பற்றிஎரியுமுன்னர் பதறி அணைத்தனரா? ஒரிருவர் நீரள்ளித் தெளித்து நிகழ்வதென்ன? நெருப்பாற்றின் நீளம் நெஞ்சறியும் அனைத்துக்கரங்களிலும் நீர்க்குடங்கள் நிறைந்தால் அக்கினிப் பூ அணையும் அகம் மகிழும். அணைக்க ஆர்வமின்றி. அதை வளர்க்க முயலும் வக்கிரமே! நெருப்பணைக்க விரும்பாத நீசமே! நினைவிற் கொள் நாளை நீ கூடத் தீக்கிரை தான். உன்னை அழித்து எதை உருவாக்குவாயோஅது கூட அழியுமெனில் உன்னழிவில் ஏதும் உயர்வுளதா-?
சு. முரளிதரன் ஆசிரியர் யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
தலைவன் ' (23)

Page 15
8 კი - ატს (მზ ܬܛܞ ა. კoo, მას وليس هامينيس له مينس هي : هي الم.
6. ܵ நழுறுது அழிவுணிய படலத்திலி SUMP, š., 336R 6S 608868060R
உலகிலே நல்லவர்களும் கொடியவர்களும் பிறப்பதும் இறைவன் கொடியவர்களை அழித்து ஏனையவர்களுக்கு நல்வழி காட்டுவதும் வரலாறு கண்ட உண்மையும் சமயக்கொள்கையுடையவர்களின் நம்பிக்கையும் ஆகும். அந்த வெளிப்பாடுகள் அந்தந்தச் சமயங்களிலே நூல் வடிவிலே மரபு வழியாகப் பேணப்படுகிறது. * 。
அந்த வகையிலே இஸ்லாம் சமயத்தைப் பொறுத்தவரை உலகிலே ஓரிறைக் கொள்கையை நிலைநிறுத்தி மக்களை நல்வழிப்படுத்த இறைவன் காலத்துக்கு காலம் தனது தூதர்களை பூவுலகுக்கு அனுப்பி வைத்தார். அத் தூதர்கள் நபிகள் என அழைக்கப்படுகின்றனர். இஸ்லாம் சமயத்தைப் பொறுத்த வரை இதுவரை ஓரிலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிகள் பிறப்பெடுத்தனர். அவர்களுள் இருபத்தைந்து நபிகளின் வாழ்க்கை வரலாறு இஸ்லாமியப் புனித நூலான அல்குர்ரானிலே விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
அவர்களுள் இப்ராகிம் நபியும் ஒருவராவர். இப்ராகிம் நபி அவர்கள் நமுறுது எனும் அரசனை அழிக்கு முகமாகப் பிறப்பெடுத்தார். நமுறுது மன்னன் இஸ்லாம் சமயத்தவனாக இருந்தும் கூட இஸ்லாம் சமயத்தை எதிர்த்து, அதாவது ஒரிறைக் கொள்கையை மறுத்து தானே இறைவன் தன்னையே உலக மாந்தர் வணங்க வேண்டும் என்ற பிற்போக்கான ஆணவம் மிக்க சிந்தையால் மக்களையும் ஈர்த்து முற்றாக இஸ்லாம் சமயம் மறையும் அளவிற்கே கொடுர தாண்டவம் ஆடினான். இப்ராகிம் நபி தனக்கு எதிரியாக உள்ளார் என அறிந்ததும் இப்ராகிம் நபியைக் கொல்ல முயற்சித்தான். ஆனால் அதில் ( தோல்வியையே பரிசாகப் பெற்றான்.
இவ்வாறு வளர்ந்த பகை போர்க் களத்திலே இருவரும் நிச்சயம் சந்திக் கத்தான் வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. நமுறுாது அரசன் என்பதால் அவனின் படை மிகப் பலம் வாய்ந்ததாக, வாய்மையை இலக்காகக் கொண்ட அரிச்சந்திரன் போல யுத்தத் தையே இலக் காகக் கொண்ட அறிவுமிக்க மக்களும், வானிலை
 
 

ஆராய்ச்சியாளர்கள் போல் கணத்துக்கு கணம் செய்தி சொல்லும் சோதிடர் களும், நட்பின் இலக்கணம் இதுதானா என ஆச்சரியப்படத்தக்க நண்பர்களும், சூழ துன்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு நரகம் செல்ல இதுதான் வழி எனும் வண்ணம் நமுறுாது போருக்கு எழுந்தான்.
உலகிலுள்ள இசைக்கருவி வகை அனைத்தையும் சேர்த்து உருவாக்கிய இசையரங்கம் போல வீரமுரசொலி உலகைக் குலுக்கி யது கண்ணிமைக்க முன் ஒடி மறையும் குதிரைகள் ஏராளம், தும்பிக்கையை ஆயுதம் என ஏந்தி நிற்கும் கரிய மலை போன்ற யானைகள் ஏராளம், இது சூரி யனோ என ஆச்சரியப்படக் கூடிய பொணி ரதங்கள் ஏராளம் , காலத்தால் முந்திய விருட்சம் தன்னை எடுத்துக் காட்ட கிளைகள் விரித்தது போல காட்சியளிக்கும் வர்ணக்குடைகள் ஏராளம், பால் பொங்கி ஊற்றுவது போல மனதி லிருந்த கோபத்தை பட்டாசு போல் பறக்க விட்ட போர் வீரர்கள் ஏராளம். இவ்வாறு இயற்கை யையே நடுங்க வைத்த நமுறுதின் படைவீரர்களில் ஒவ்வொரு உறுப்பும் கோபத்தின் அடையாள மாய் விளங்கியது.
நெருப்புப் பந்தம் மின்னியது போல் அவர்களின் வாய்கள் ஏதோ சொல் எடுத்து மூடின, அவர்களின் நெஞ்சமோ கறை படிந்த வெள்ளைத் துணி போலவும், நன்கு பழுத்த கொவ்வைப்பழம் நஞ்சு கக்குவது போல கண்கள் காட்சியளித்தன. எந்த ஆபத்தையும் எதிர்க்கும் மண் மூட்டை போன்ற தோள்களும் மானைக் கண்ட சிங்கம் போல எதிரியின் உயிரைக் குடிக்க ஆவலான முகபாவனையும் கொண்டு காணப்பட்டனர்.
நமுறுது மன்னனின் போர்க்களத்திலே பெண்களும் காணப்படுகின்றனர். தன் தோல்வியைத் தவிர்க்க பெண்களைத் துணைக்கு அழைத்துச் செல்கிறான். இலக்கு வைத்த அம்பு என கண்களும், வாள் போன்ற பற்களும், காற்றால்

Page 16
அசையாத கரிய கூந்தலும், மலை போன்ற பருத்த மார்பகங்களும் கொண்ட பெண்கள் அலைபோலத் தி ண்டிருந்ததனர்.
போர்க்களத்திலே காணப்பட்ட நீண்ட வலிமைமிக்க கொடிகள் வானத்தை மறைத்திருந்தன. வானத்தை மறைத்த கொடிகளைக் குடைகள் மறைத்திருந்தன. படைவீரர்களின் பாதங்களில் இருந்து எழுந்த தூசியானது போர்க்களத்திலே செயற்கையாக இருட்டினை உருவாக்கியது. அந்த இருட்டிலே போர் வீரர்கள் தட்டுத்தடுமாறவில்லை. அவ்வீரர்கள் கையிலே ஏந்தியிருந்த பேராயுதங்கள் வெளிச்சத்தினை இறைத்த வண்ணமிருந்ததால் அவ்வெளிச்சத்தினைப் பயன் படுத்திக் கொண்டு படையணியானது விரைகின்றது என அதிசயமான கற்ப னையை "சேகுனா புலவர்” வெளியிடுகின்றார். மனத்திலே நினைத்த மாத்திரத்தில் வானத்திலே பறக்கும் வேகமுடைய குதிரைகள், முகபாடமணிந்த யானைகள் அச்சத்தினை விளைவிக்கும் படைகள் என்றவாறாக மன்னன் நமுறுது போர்க் களத்திலே காட்சியளிக்கிறான். தலைப்பாகையைக் குடையாகவும், சபமணியை வேலாக்கி உடலில் பொருந்தக்கூடிய கவசத்தோடும் புதிதாக மதம் சிந்தும் யானை முன்செல்ல, கலிமா எனும் குதிரையோடு தேவர்கள் கொடிகளை ஏந்திச்செல்ல இறைதூதரான இப்ராகிம் நபியை போர்க்களத்திலே "சேகுனாப்புலவர்' காட்டுகிறார்.
போர்க்களத்தினை பாடல்களின் மூலம் அழகாகப் படம்பிடித்துக் காட்டிய புலவர்நாயகம் எனப் போற்றப்படும் சேகுனர் புலவர் தம்மை இஸ்லாமிய தமிழிலக்கிய வரலாற்றின் தன்னிகரற்ற புலவர் என வெளிப்படுத்தியுள்ளார்.
வ. உஷாளினி
10A யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
தாங்க முடியாத மகிழ்ச்சியில்
மரம் தலையாட்டுகின்றதே. ឆ្នាឬផៃម៉ៃ ប្រើជាម្ភៃឆ្នាំ
* ចិញ្ច្រា១៦ ឆ្នា
தோ ខ្ស
 

ஆசிரியர்;~ டி. ஜோதீஸ்வரன்
யா/உடுப்பிட்டி அ.மி.க.
இந்து நாகரிகம் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்காக
இந்தியாவிற்கே உரியதாக விளங்கும் இந்துப்பண்பாடு காலப்போக்கிலே இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளிலும் பரவலடைந்ததற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பரவலடைந்த நாடுகளில் தென்கிழக்காசிய நாடு களும் குறித்தற்குரியனவாகும். இத்தகைய தென்கிழக்காசிய நாடுகளில் தாய் லாந்து, கம்போடியா, ஜாவா, சம்பா, பர்மா, மலேசியா, சுமாத்ரா, போர்ணியோ, மதுரா, பாலித்தீவுகள் போன்றன முக்கியம் பெறுகின்றன.
ஆசியப் பெரு நிலப்பரப்பின் தென்கிழக்காக உள்ள நாடுகளே "தென்கிழக்காசிய நாடுகள்” ஆகும் இப்பெயரானது மொழி ரீதியாகவோ, சமய ரீதியாகவோ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ தோற்றம் பெற்றிருக்க வில்லை. புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இதனை நிலவியல் ரீதியாகவே விளங்கி நிற்கின்றனர். அதாவது பசுபிக் கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் நீங்கலாக உள்ள தீவுகளையும் தீபகற்பங்களையும் குறிப்பதற்கான ஒரு பெயராகவே கைக்கொள்ளப்பட்டது ஆய்வாளர்கள் இதன் மேற்கு எல்லையாக இந்தியாவையும் கிழக்கு எல்லையாக ஜப்பானையும் வடக்கு எல்லையாக சீனாவையும் தெற்கு எல்லையாக அவுஸ்ரேலியாவையும் கூறுகின்றனர்.
இந்தியாவிற்கும் அதற்கு அருகே உள்ள நாடுகளிற்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஆனந்தகுமாரசுவாமி, ஆர். சி. மஜீம்தார், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி போன்றோர் குறிப்பிடத்தக்கவர் களாவர் இவர்களில் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் "தூரகிழக்கில் இந்தியச் செல்வாக்கு” என்ற நூலிலே கீழைத்தேய நாடுகளில் இந்துப் பண்பாடு பரவிய முறையை நன்கு அராய்ந்தறிந்துள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவி இருந்த தன்மை யினை புராதன இந்திய இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம், புராணங்கள், ஜாதகக் கதைகள் என்பவற்றில் குறிப்புகள் உண்டு. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலே பெறப்பட்ட கல்வெட்டுக்கள், சிதைந்த கட்டிடங்கள்,
9. 27

Page 17
கோவில்கள், சிற்பங்கள், நூல்கள், ஓவியங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள்,
தொல்பொருட்கள் போன்ற சான்றுகளும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப்
பண்பாடு நிலவிய தன்மையினைக் காட்டி நிற்கின்றன.
தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவியிருந்ததற்கு
அடிப்படைக் காரணிகளாக பின்வருவனவற்றை வரையறை செய்யலாம்.
வர்த்தக நடவடிக்கைகள்
குடியேற்றங்கள்
திருமண உறவு முறைகள்
சுதேசிகளின் நாகரிகத்தில் ஸ்திரமற்ற தன்மை
அரசியல் நடவடிக்கைகள் என்பனவாகும்.
இந் நாடுகள்ை இந்து நூல்கள் கூட்டாக "சுவர்ணபூமி” என்று அழைத்திருந்தன 'சுவர்ணபூமி” என்பதன் பொருள் செல்வம் கொழிக்கும் நாடுகள்' என்பதாகும். இந்நாடுகளில் முத்து, பவளம், இரத்தினம், சந்தனம், அகில், கற்பூரம் போன்ற பல்வேறுபட்ட பெறுமதி மிக்க பொருட்களும், வாசனைப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிகுந்த அளவிலே காணப்பட்டன. இதன் காரணத்தால் இந்திய மக்கள் (வர்த்தகர்கள்) தரைவழியாகவும், கடல் வழியாகவும் இந் நாடுகளிற்கு சென்று வந்தனர். இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளின் காரணத்தால் இந் நாடுகளிலே இந்துப் பண்பாடானது பரவலடைவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருந்தன. சிறப்பாக கி.மு. 2ம் நூற்றாண்டில் இருந்து கிபி 15ம் நூற்றாண்டு காலப்பகுதிவரை இந்நாடுகளில் இந்துப் பண்பாடு மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததனை ஆய்வுகள் ஆதாரப்படுத்துகின்றன.
இவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளின் நிமித்தம் இந் நாடுகளிற்குச் சென்ற இந்திய வர்த்தகர்கள் காலப்போக்கில் அந்நாடுகளில் குடியேறத் தொடங் கினர் இந்துக்களது சமய வாழ்க்கையும் பண்பாடும் கோயில்களை அடிப்படை யாகக் கொண்டே பெரும்பாலும் அமைவதனால் இவ்வாறு குடியேறிய இந்திய வர்த்தகர்கள் தாம் குடியேறிய இடங்களில் தமது சமயம், பண்பாடு, கலை என்பவற்றை வளர்ப்பதற்காக பண்பாட்டின் நிலைக்களமாக விளங்கும் கோயில்களை அமைந்திருந்ததனை அறிய முடிகின்றது. இன்றும் இந் நாடுகளில் அழிந்த நிலையில் காணப்படும் ஆலயங்களும் சிற்பங்களும் அந்நாடுகளில் இந்துப் பண்பாடு பரவியிருந்ததனை எடுத்துக் காட்டும் ஆதாரங்களாகவே அமைகின்றன.
இவ்வாறு குடியேறிய இந்துக்கள் காலப்போக்கில் அந் நாடுகளின் சுதேசிகளுடன் திருமண உறவு முறைகளை மேற்கொண்டதனாலும் சுதேசிகள் ஸ்திரமான நாகரிகம் அற்ற, தன்மை உடையவர்களாக விளங்கியிருந்தமையும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு பரவலடைவதற்கு அடிப்படையாக அமைந்திருந்
 

இவ்வாறு குடியேறிய சுதேசிகளுடன் திருமண உறவு முறை கொண்ட இந்துமக்கள் காலப்போக்கில் அந்நாட்டு அரசியல் அமைப்புக்களில் ஈடுபட்டத னாலும் இந்திய மன்னர்கள் பலர் இந் நாடுகளின் மீது படை எடுப்புகளினை மேற்கொண்டு வெற்றி பெற்று ஆட்சி புரிந்ததினாலும் இந் நாடுகளில் இந்துப் பண்பாடானது பரவலடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது என்று கருதலாம்.
மேலும் தென்கிழக்காசிய நாடுகளை ஆட்சி புரிந்தவர்கள் இந்திய மன்னர் களின் அரச முறைகளை பின்பற்றியது மட்டுமன்றி தாம் "சாத்திரியர்” என்பதனை நிரூபிப்பதற்கு பாண்டவர்களோடும் சில ரிஷிகளோடும் தங்களைத் தொடர்புபடுத்தும் கதைகளை தமது ஆவணங்களில் பயன்படுத்தியிருந்தமையும், முடிசூட்டுவிழா, பட்டாபிஷேகம் போன்ற சடங்குகளை பின்பற்றியிருந்தமையும் மன்னன் தனது முதற் பிரசங்கத்தை 'ஓம்' எனும் பிரணவ ஒலியுடன் ஆரம்பித்திருந்தமையும் ஆட்சியினர் இந்திய இலக்கியங்களையும், கோட்பாடுகளையும், வழமைகளையும் பின்பற்றி நிர்வாக முறையை அமைத் துக் கொண்டமையும் பல்லவர் கால கலைப்பாணியின் செல்வாக்கு அந்நாடுகளில் காணப்பட்டிருந்தமையும் முதலாம் இராஜேந்திர சோழனது ஆவணங்களில் அம்மன்னன் இந்து சமுத்திர தீவுகளில் இருந்து ஷஷரீவிசயம்" என்ற இராட்சியத்தினை தோற்கடித்தான் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவிய தன்மையினையே புலப்படுத்துகின்றன.
சிறப்பாக அரசியல் எனும் ரீதியில் நோக்கும் பொழுது கம்போடியா, சம்பா, ஜாவா, போர்ணியோ ஆகிய நாடுகளின் அரசியலில் இந்துமதம் செல்வாக்குப் பெற தாய்லாந்திலும், மலேசியாவிலும் பெளத்தத்தினதும் இந்து மதத்தினதும் செல்வாக்கு இடம் பெற்றது. மேலும் கம்போடியா, சம்பா ஆகிய தேசங்களில் முடியாட்சி காணப்பட்டது. தேவராஜா கோட்பாடு நிலவி இருந்தது. பர்வதராஜன், சைலேந்திர மன்னன் போன்றோர் சத்திரிய மரபுகளையே பின்பற்றினர்.
ஐரோப்பியர் கீழைத்தேய நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த போது பல இந்துமக்கள் தொழில் பெறும் நோக்குடன் பல்வேறுபட்ட காரணங்களுக்காகவும் தென்கிழக்காசிய நாடுகளில் சென்று குடியிருந்தனர். இத்தகையோரின் வம்சா வழியினர் இன்று அந்நாடுகளில் நிரந்தர வாசிகளாக வாழ்ந்து வருகின்றனர். அத்தகையோர் தாம் வாழும் இடங்களில் ஆலயங் களை அமைத்தும் இந்து சமயத்துடன் தொடர்புடைய கலைகளை பேணுவதற் கான நிறுவனங்களை அமைத்து வருகின்றமையும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவி வருவதனையே எடுத்தியம்புகின்றது.
இந்துக்களைப் போலவே தென்கிழக்காசிய நாடுகளினதும் மன்னன் இறைவனுக்கு சமமானவனாக கருதப்பட்டான். மேலும் இந்நாடுகளில்
9G് 29D

Page 18
பிராமணர்கள் செலுத்திய செல்வாக்கும் அங்கு இந்துப் பண்பாடு பரவக் காரணமாக அமைந்த தன்மையினையே காட்டுகின்றது. பட்டாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை புரோகிதர்களே குருவாக நின்று நடாத்தியமை பிராமணர்கள் சோதிடத்தில் வல்லுனராகவும் அரச அவையிலும் பிரதானிகள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றிருந்தமையும் பிராமணர்களுக்கு தானம் வழங்கியமையும் பற்றிய குறிப்புக்கள் உண்டு.
மேலும் இந்நாடுகளில் அரசர்கள் அரண்மனைச் சடங்குகளை நடாத்து வதற்கும் இந்திய இலக்கியங்களை போதிப்பதற்கும் வருடத்திற்கு வேண்டிய காலக் குறிப்புக்களை கணிப்பதற்கும், வேதம், வியாகரணம், புராணம் முதலியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பிராமணர்களை தமது ஆலோசகராகவும், புரோகிதர்களாகவும் நியமித்திருந்தமையும் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து பண்பாடு நிலவியதனையே காட்டுகின்றது.
இந்நாடுகளின் சைவ, வைணவ மரபுகள் கர்நாடகம், கலிங்கம், வங்காளம், தமிழகம் முதலிய இடங்களில் இருந்து பரவின. சமுதாயத்தின் மேல் மட்டத் தில் உள்ளவர்களிடமிருந்து இந்து மத செல்வாக்கும் பாமர மக்களிடம் இருந்து மரபுவழியான சமய செய்திகளும் பரவின. கலை, சமூகம், அரசியல் என்பன இராட்சியங்களிடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தின. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தர்மசாஸ்திரங்கள் மூலமாக இந்துநெறி பரவியிருந்தது. இவற்றினைப் போதிக்கும் ஏற்பாடுகளும் காணப்பட்டன. இதற்குச் சான்றாக "காம்பு தேச மன்னர்களால் நூல்நிலையம் உருவாக்கப்பட்டதனைக் கூறலாம்.
இந்நாடுகளில் சைவம், வைணவம், சாக்தம், கணாபத்தியம் போன்ற மதப்பிரிவுகள் செல்வாக்கு செலுத்தியிருந்தமையும் இந்து இலக்கியங்களான திருக்கோவையார், திருப்பாவை, திருவெம்பாவை, திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்றன அரசசபைகளிலே செல்வாக்கு பெற்றிருந்ததுடன் நீதி வழங்கும் பொழுது மனுதர்ம சாஸ்திரமானது செல்வாக்கு பெற்றிருந்தமையும் இந்நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவியிருந்த தன்மையினையே காட்டுகின்றன.
இந்நாடுகளிலே காணப்பட்டிருந்த விழாக்களும் நம்பிக்கைகளும் இந்துப் பண்பாட்டுடன் தொடர்புடைவையாகும். இதற்கு உதாரணமாக தற்காலத்தில் சிறப்படைந்த சித்திரை, தைப்பூசம், வருடப்பிறப்பு முதலியவற்றுடன் உழவுத் திருவிழா, கார்த்திகை, பெளர்ணமி எனப்படும் மழைத்திருவிழா, மார்கழி ஊஞ்சல் திருவிழா போன்றன குறிப்பிடத்தக்கவை ஆகும் அவ்வாறே நம்பிக்கை கள் எனும் ரீதியில் நோக்கும் பொழுது மழைக்காக உமாதேவியையும் நாற்றுக்குரிய தெய்வமாக கங்காதேவியையும், கதிர்களுக்குரிய தெய்வமாக பூரிதேவியையும் வழிபட்டு வந்தமையினைக் குறிப்பிடலாம்.
 

தென்கிழக்காசிய நாடுகளில் சைவசமயமானது சிறப்பாக குப்தர், பல்லவர், சோழர் காலத்தில் விரிவான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இவற்றில் 'தக்கணம்” கூடிய பங்கினை வழங்கியிருந்தது.
இந்நாடுகளில் திராவிட கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் முதலியன செல்வாக்குப் பெற்றிருந்தன இதற்குச் சான்றாக அங்கோர்வாட் (கம்போடியா), பெரம்பனூர் (ஜாவா) கோயில்களும் அங்குள்ள சிற்பங்களும், இதிகாச புராண ஒவியங்களும் சிவன், விஷ்ணு, அகத்தியர் போன்றோரது சிலைகளும் இந்நாடு களில் இந்துப் பண்பாடு நிலவியதனை காட்டுகின்றன.
இவ்வாறு தென்கிழக்காசிய நாடுகளில் பரவலடைந்துள்ள இந்துப் பண் பாடுகள் காலப்போக்கிலே அழிவடைந்ததற்கான காரணங்களினை பின்வருமாறு வரையறுக்கலாம்.
இந்நாடுகளில் மீது இஸ்லாமியர்களினால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பு நடவடிக்கைகள்
2. வாசனைத் திரவியங்களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்
தினால் வர்த்தக நடவடிக்கைகளில் தளம்பல் ஏற்பட்டமை.
3. இந்திய மன்னர்கள் புதியபுதிய குடியேற்ற நாடுகளை அமைப்பதில்
நம்பிக்கை அற்றிருந்த தன்மை.
இவ்வாறு தென் கிழக் காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு அழிவடைந்திருந்த பொழுதிலும் இன்றும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, பாலித் தீவுகள் போன்ற நாடுகளில் அந்தக்கால அரசியல் நிலைக்கேற்ப இந்துப் பண்பாடு நிலவி வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.
(தொடரும்-)
முதன் முதலாகக் கொடை கொடுக்க விரும்பியவன் ॐ கர்ணன் வீட்டுக் கதவைத் தட்டியது மாதிரி ខ្សឆ្នាត្រូវ ,
பூ வாங்கி வந்தேனே
Its mont

Page 19
"ஆன்மா லயப்படும் இடம் ஆலயம்” என்று கூறி எமது முன்னோர் ஆலயம் சென்றனர். இன்று ஆண்-மா லயப்படுவதால் "தமிழரின் அந்தரங்கம் வெளிப் படும் இடம்” என்று ஏனையோர் கூறுமளவிற்கு எமது பண்பாடும் கலாசாரமும் புறக்கணிக்கப் படுகின்றன. நாகரிகம் புறம் சார்ந்தது. நாடுகள் கடக்கும் போது மாறிவிடலாம். பண்பாடு அகம் சார்ந்தது. கால மாற்றங்களால் காணாமற் போகக் கூடாது. எம்முன்னோர்கள் நீண்ட காலம் போற்றிப் பாதுகாத்தவற்றை நொடிப் பொழுதிலே சிதைத்து விடக்கூடாது.
தற்போது எமது நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகின்றது. பிற இன மதத்தவர்களும் எமது ஆலயங்களுக்கு வருகை தருகின்றனர். எமது இளைஞர்களும் யுவதிகளும் மகோற்சவ காலத்திலேதான் ஆலயம் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். தமிழர் தாயகம், தமிழ்த்தேசியம் என்பதற்காய் போராடிக் கொண்டிருக்கின்றோம். இந்த வேளையிலே நாம் இரவல் கலாசாரத்தில் வாழ முனைந்தால் இரண்டிற்கும் தொடர்பற்றுப் போய் விடும். இதனை இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நாளைய தலைவர்களென்று வர்ணிக்கப்படுவோர் ஆன்மிக உணர் வுடன் ஆலயம் செல்வது வரவ்ேற்கத்தக்கதும் பெருமைப்படக் கூடியதுமாகும். ஆலயம் செல்லும்போது கலாசாரத்தை உதறித்தள்ளி, நவநாகரிகச் செயற்பாடுகளை ஆற்றுவது கவலைக்குரிய விடயமாகும்.
எமக்கெனவொரு கலாசாரம் இருக்கும்போது மேலைத்தேச கலாசாரத்தை பின்பற்றமுற்பட்டு தோல்வி காண்பது வெட்கத்திற்குரியது. அந்நிய கலாசாரம் இயல்பாகவே எம்மோடு ஒன்றிப்போகாது எமது கலாசாரங்களையும் பண்பாடுகளையும் மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்தால் நாம் யாரென்பது நமக்கே புரியாமற் போய்விடும்.
ஆடைகுறைப் பில் ஆண்-பெண் சமத்துவத்தைக் காட்டுவது பெண்விடுதலை என்ற சிந்தனை பிற்போக்குத்தனமானது. இத்தகைய எண்ணங்கள் களையப்பட வேண்டும். இந்த மண்ணையும் வாழ்வையும் எம் முன்னோர்களிடமிருந்து நாம் முதுசமாகப் பெற்றுள்ளோம். முதுச தேசத்தை மறந்து அலங்கோலமாக்க முற்படுவது நாகரிகமல்ல. அநாகரிகமும் மாபெருந் துரோகமுமான செயலாகும்.
65, 96gs
தரம் 10 யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
C32D (്
 

Dr. J. P. f. 20 | مقالہ} } نتیجہ: '{\{al}{T} E//
×ল্প 毅
፵9 ,66
"ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற உன்னதமான கோட்பாடுகளின் அடிப்படையிலேயே கூட்டுறவு அமைப்பு உருவாகி யது. கூட்டுறவு என்றால் என்ன? ஒன்று கூடி உழைத்தல் என்று பொருள்படும் ஒருவர் பலருக்காக என்பது முதலாளித்துவம் பலர் ஒருவருக்காக என்பது சமதர்மம். இவ்விருகோட்பாடுகளின்றும் மாறுபட்ட, வேறுபட்ட எதுவித தனிமனித தலையீடுமின்றி ஒருவர் பலருக்காகவும் பலர் ஒருவருக்காகவும் என்ற சமத்துவப் பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த அமைப்பே கூட்டுறவு ஆகும்.
கூட்டுறவிலே இனபேதமில்லை, மத பேதமில்லை, சாதிபேதமில்லை, பிராந்திய பேதம் இல்லை, உயர்வு தாழ்வு இல்லை, அங்கே மனிதநேயம் பேணப்படுகிறது. கூட்டுறவினாலே குடும்பம் உயர்கிறது. சமுதாயம் உயர்கிறது. நாடு உயர்கிறது. எனவே கூட்டுறவே நாட்டுயர்வு ஆகின்றது.
"யாதும் ஊரேயாவரும் கேளிர்” என்பது பண்டைத்தமிழர் போற்றிய கூட்டுறவுக் கொள்கை மனித வரலாற்றின் ஆரம்பநாட்களில் அவன் அநாகரிகமாக வேடனாக, இடையனாக வாழ்ந்த காலத்திலேயே கூட்டுறவு நிலவியிருக்கிறது. நாகரிகம் மிக உயர்வான நிலையில் இருக்கின்ற இன்றைய காலகட்டத்திலும் மனிதன் கூட்டுறவை புரிந்துகொள்ளாதிருப்பது விந்தைக்குரிய விடயம்தான்.
ஒருபக்கம் தேவைகள் உருவாகின்றன. மறுபக்கம் அவை நிவர்த்தி செய்யப்படுகின்றன. இதற்கு அடிப்படை கூட்டு முயற்சியே என்பதை நாம் யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. இங்கிலாந்திலே றொச்டேல் முன்னோடிகளால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கத்தின் முன் யாவரும் சமன் யாவருக்கும் சம உரிமை வழங்கப்படுவதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அங்கு சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் நிலவுகின்றது.
மனிதனை பொருளாதார சமூக கலாசார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்வதுடன் மனித இனம் உயர்ந்த பெறுபேறுகளை அடைவதற்கு உதவுகிறது. அத்துடன் சுரண்டல் நடவடிக்கையை தவிர்த்து மனிதனை மனிதத்துடன் வாழ வழி சமைத்து நற்பிரஜைகளை உருவாக்கி நாட்டுயர்விற்கு உதவுகின்றது.

Page 20
கூட்டுறவினால் வலு இழந்தவர்களும் வலிமை பெறலாம். கூட்டுறவில் போட்டி மனப்பாங்கு இல்லை சேவை மனப்பாங்கே நிலவுகிறது. அண்டவெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கூட்டாக முயற்சிசெய்து வெற்றி பெறவில்லையா? சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க இன்ரபோல் எனும் சர்வதேச காவல்துறை கூட்டாக இயங்கவில்லையா? இந்து சமுத்திரத்தை அமைதிப் பிராந்தியமாக கொண்டு வருவதற்கு வல்லரசு நாடுகள் கூட்டாக முயற்சி செய்யவில்லையா? இவை அனைத்தும் கூட்டுறவின் ஊடாக நாட்டுயர்வையும் அதனூடு உலக உறவுப் பண்பையும் விளக்குகின்றன.
கூட்டுறவு என்பது ஒற்றுமையை மட்டும் அன்றி இதயத்தில் எழுகின்ற
ஊக்க உணர்வையும் குறிக்கிறது. மக்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு மதம் கூட்டுறவு அம்மதத்தை கைபிடித்து வீறுநடை போடுவோம்.
சி. ஹரிகரன்
தரம் -10 யா உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
 

அ. அஜந்தன் தரம் 10 யா/உடுப்பிட்டி அ.மி.க.
தீபாவளி, தீபாவழி, தீபாவலி என்பவற்றில் சரியான வடிவம் எது? ஆவலி என்பதற்கு வரிசை என்று பொருள். தீபங்களின் வரிசை என்பதை தீபாவலி தான் குறித்து நிற்கிறது. ஆனாலும் ஆவலி என்பதும் ஆவளி என்பதும் ஒரே கருத்துடையதாகக் கையாளப்படுவதால் தீபாவளியும் சரிதான்.
கு. பாலகிருஷ்ணகுமரன்
2004 கலை யா/உடுப்பிட்டி அ.மி.க. 'ஏகலைவன்” என்று சஞ்சிகைக்கு பெயரிட்ட காரணம் என்ன? ஏகலைவன் குருபக்தி உடைய மாணவன். சிறுபான்மை வேட்டுவச் சமுதாயத்தைச் சேர்ந்தவன். அரசியலின் அங்கமான அருச்சுனன் கல்வித்துறை சார்ந்த குருவின் உதவியுடன் ஏகலைவன் வாழ்வை கட்டைவிரல்மூலம் களவாடி விட்டான் பெரும்பான்மை அரசு சிறுபான்மை மாணவனின் திறமையைத் தந்திரமாகக் கொன்றொழித்து விட்டது. இதே நிகழ்வுதான் ஈழத்திலும் நிகழ்ந்தது. அரசு சிறுபான்மைத் தமிழர்களின் கல்வியை "தரப்படுத்தல்' மூலம் வெட்டி எடுத்துவிட்டது. எனவே 'ஏகலைவன்’ தமிழ் மாணவர்களின் குறியீடாகக் காணப்படுகின்றான்.
லோ, தீசன் 2004 கலை யா/உடுப்பிட்டி அ.மி.க. அரசியல் வாதிகள் சிறைச்சாலைகளில் காட்டுகின்ற அக்கறையில் பாதியைக்கூட கல்விச்சாலைகளின் மீது காட்டுவதில்லையே ஏன்? பதவிக்காலம் முடிந்தபின்பு அவர்களைக் கல்விச் சாலைகளா வரவேற்கப் போகின்றன.

Page 21
சி. உமாகரன் தரம் 11 யா/உடுப்பிட்டி அ.மி.க.
* தற்போதைய திரையிசைக்கவிஞர்கள் முரண்பாட்டுத் தன்மையான கருத்துக்களை விதைப்பதாகக் கூறுகிறார்களே உண்மையா துரோணரே? உண்மைதன் "காதலர்கள் சாவதுண்டு கல்லறை சொல்கிறது காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது” என்று எழுதிய கவிஞர்.
"டைட்டானிக் காதல்போல் என் காதல் மூழ்காதப்பா' என்று எழுதியிருக் கிறார் "டைட்டானிக்’கில் மூழ்கியது கப்பல்தான் காதலல்ல. அது வாழ்ந்து கொண்டிருக்கிறது.
"யுத்தம் இல்லாத உலகம் கேட்பேன்’ என்று எழுதிய விரல்கள் "ராஜராஜனின் வாளைக்கேட்பேன்' 'பார்த்தீபன் தொடுத்த வில்லைக் கேட்பேன்’ என்றும் எழுதுகின்றன. இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட போராயுதங்கள் மீது பற்றுள்ளவன் போரை வெறுக்கிறான். புரியவில்லை எதுவுமே!
"என்னைக் காணவில்லையே நேற்றோடு” என்ற காதல்
தேசம்’ திரைப்படப்பாடலில் مصر
"மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய்யென்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதல் என்றால்” என்றவரிகள் சிரிப்பை ஊட்டுகின்றன. மெய்யாக விரும்பாத காதல் பொய்மூலம் பொய்யாக முடியுமே தவிர, நிஜமாக முடியாது. வாழ்க! திரைப்பரிடபல்கள்
அ. அனந்தன் 2004 வர்த்தகம் யா/உடுப்பிட்டி அ.மி.க.
* ஈழப்போராட்டத்திற்கு அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும்
உள்ளதா? ஆம், தமிழினத்தின் துரோகிகளுக்குக் கூட சிலைசெதுக்கப்படும் முறை பிடிக்காமல் இருக்கலாம் உளி பிடிக்காமல் இருக்கலாம். சிற்பிமிது கோபம் இருக்கலாம். கல்லின் பரப்பளவில் கருத்துவேறுபாடு காணப் படலாம். ஆனால் சிலை அனைவருக்கும் தேவை என்பதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது.
C36D gà്
 
 

அ. சுகிதராஜ் 2004 கலை யா/உடுப்பிட்டி அ.மி.க.
மாணவர்களின் கல்விமீது பெற்றோரின் அக்கறை அதிகரித்து வருகிறதா, குறைந்து வருகிறதா? அதிகரித்து வருகிறது. பிள்ளைகளின் கல்விக்கு அதிகபணம் செலவு செய்கிறார்கள். நல்ல உணவும் உடையும் வழங்குகிறார்கள். புள்ளிகள் குறைந்தால் தண்டனை வழங்குகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள், அதி பரோடு அடிக்கடி கலந்துரையாடத் தவறுகிறார்கள் திகதி ரீதியாகவேனும் தம்பிள்ளைகள் எதையாவது படித்திருக்கிறார்களா? அவர்களது பாடக் குறிப்புகளில், வினாவிடைப் பயிற்சிகளில் ஆசிரியரின் சிவப்புபேனா கலந்திருக்கிறதா? எனக் கவனிக்கத் தவறுகிறார்கள்.
பத்தாந் தரத்திலே படிக்கும் தன்மகனுக்காகப் பயிற்சி புத்த வாங்கச் சென்ற தந்தையொருவர், அப்புத்தகம் இல்லாததால் இரண்டு ஐந்தாந்தரப் புத்தகங்களை வாங்கி வந்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
எப்போது திருந்தும் இத்தேசம் இனி என்ன செய்வதாய் உத்தேசம்?
சி. சுரேஷ் 2004 கணிதம் யா/உடுப்பிட்டி அ.மிக ஆசிரியர் - மாணவர் சம்பந்தமான ஒரு "கடிஜோக்” சொல்லுங்கள் தமிழாசிரியர் ஒருவர் சந்தர்ப்பம் கூறல் சம்பந்தமான வினாக்களை மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
"இன்றுபோய் போர்க்கு நாளை வா' இதற்கு சந்தர்ப்பம் கூறு என்று கேட்டு அனைவருக்கும் அடி கொடுத்தார். மாணவர்கள் எவருமே பதில்
சொல்லவில்லை.
"ஒண்டும் தெரியாதெண்டால் இங்க ஏன் வாறனிங்கள்” என்றார்.
இதுக்கு எனக்கு விடை தெரியும்' என்ற மாணவன் ஒருவன் அதிபரால், உங்களுக்கு, அதிபர் காரியாலயத்திலே கூறப்பட்டது என்றான்.

Page 22
-- ھ چمٹھ<6یے ہجیX)6 ଗିହାଁ 籬 滚
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு விடக் கூடாது என்று கன்னட நடிகர்கள் போராட்டம்  ைநிகழ்த்தியுள்ளார்கள் காவிரி நீரைத் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் கர்நாடக முதலமைச்சர் கிருஸ்ணா முரண்டு பிடிக்கிறார். உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கைக் கூடச் சந்திக்கத் துணிந்து விட்டார். கர்நாடக விவசாயிகளின் எதிர்கால நலனில் அவர்கள் அதீத அக்கறை செலுத்துவதால் தமிழக விவசாயிகளின் நிகழ்காலம் கண்ணிரில் நீந்துகிறது. கன்னட நடிகர்களின் போராட்டத்தால் கொதித்தெழுந்த தென்னிந்தியத் தமிழ்த்திரையுலகம், நெய்வேலியில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தக்கோரி போராட்டம் நிகழ்த்தியுள்ளது. கன்னடரான ரஜனிகாந்த் மின்சாரத்தை நிறுத்தக் கோருவதை எதிர்த்தார். அனைத்திந்திய ஒற்றுமைக்கான அறிக்கை விடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் திரையுலக இயக்குனர் பாரதிராஜா, ரஜனியை உப்புவிசுவாசமற்றவர் - வளர்ந்த மண்ணை மறந்தவர் - தண்ணீர் கொடுத்த தாய்க்கு துரோகமிழைத்தவர் என்றெல்லாம் கடுமையாகச் சாடினார். இதனால் ரஜனி ரசிகர்களும் ரசிகர் மன்றங்களைக் கலைத்து ரஜனியின் கொடும்பாவிகளை எரித்தார்கள். நிகழ்வுகளின் தீவிரங்கண்டு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிப்பு ரஜனியிடமிருந்து வெளிவந்தது. உடனே அவ் உண்ணாவிரதத்தை புறக்கணிக்குமாறு திரையுலகம் சார்பிலே பாரதிராஜா கேட்டுக் கொண்டார். நெய்வேலிப் போராட்டத்தின் வெற்றி ரஜனிகாந்தின் உண்ணாவிரதத்தை ஊனமாக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் அனைத்தும் எதிர்மறையாகியுள்ளது.
நெய்வேலிப் போராட்டம் காவிரி நதி நீர் பிரச்சனையிலிருந்து விலகி அரசியல் நாடகத்தை அரங்கேற்றியது. ரஜனிமீதும் கலைஞர் மு. கருணாநிதி
38 (്
 
 
 
 

P .1.891:5691:16 11(540
மீதும் அவதூறு கூறுவதையே குறிக்கோளாகக் கொண்டு பாரதிராஜா கருத்துக்களை வெளியிட்டார். இதனால் தி.மு.க. ஆதரவினரான தென்னிந்தியத் திரையுலகினர் நெப்போலியன், சரத்குமார், T. ராஜேந்தர், ராதிகா போன்றோர் சீற்றங் கொண்டனர். அத்தோடு நெய்வேலி நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்ய முயன்ற தி.மு.க.வின் பிரச்சார தொலைக்காட்சியான "சன்ரிவிக் கும் தடைவிதிக்கப்பட்டது. பொதுமக்களின் தலையீட்டால் "சன்ரிவி நிகழ்வினை ஒளிபரப்பியது. நெய்வேலிப் போராட்டம் திசை மாறியதால் ரஜனிகாந்தின் உண்ணாவிரதம் களைகட்டியது. ஆனால் அதுகூட அரசியல் வியூகத்தோடுதான் அமைந்திருந்தது. ரஜனிகாந்த் சேப்பாக்கத்தில் 9 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தார். தென்னிந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டத்தினைச் செயற்படுத்த தன் சொந்தப்பணத்தில் ஒரு கோடி ரூபா தருவதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகினரின் உணர்வு பாராட்டப்படவேண்டிய தொன்றுதான். ஆனால் ஏழை விவசாயிகளின் வாழ்வியற் பிரச்சனையை அரசியலாக்குவது மனிதாபிமானமற்ற செயலாகும். நெல் கோபுரமாக குவியும் தஞ்சை வறண்டு கிடக்கிறது. ஆதிச்ச புரத்திலே பட்டினிச்சாவு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த்திரையுலகமோ விவசாயிகளின் வாழ்வியலை தம் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகிறது. ரஜனிகாந்தின் அரசியற் பிரவேசத்தை வாழ்த்தி விட்டு உண்ணாவிரத மேடையை "அப்பட்டமான அரசியல்" என்று வருணித்த நடிகர் கமலஹச்னின் விமர்சனம் நூறுவீதம் சரியானது சமூக சிந்தனையுள்ள இயக்குனரான பாரதிராஜா "Who is he?” எனக் கலைஞரைக் குறிப்பிட்டதும் “வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இனி மண்ணின் மைந்தர்களைத் தான் ஏற்றுக் கொள்ளும் ' என்றதும் கீழ்த் தரமான சிந்தனைகளின் வெளிப்பாடுகளேயாகும்.
நட்சத்திர அந்தஸ்த்தோடு திரையுலகிலே நடமாடுவோரின் முகமூடிகளை இனங்காணத் தெரியாத தமிழக மக்களின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறதோ தெரியவில்லை. உண்ணாவிரதத்திலே கலந்து கொண்ட திமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் T. ராஜேந்தர், பாரதிராஜாவின் செயற்பாடுகளைக் கண்டித்து ஆவேசமாகப் பேசினார். இவற்றிற்கு எல்லாம் நடிகர் சங்கத் தலைவர் விஜய்காந் பதில் கூறவேண்டும் எனவும் முழங்கினார். மேலும் தனக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாகவும் அறிவித்தார். தந்தை பெரியாரின் சிந்தனையில் உருவாகி அறிஞர் அண்ணாவால் வழிநடத்தப்பட்ட தல்லவா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று அதன் கொள்கை பரப்புச் செயலாளர் கடவுள் நம்பிக்கைபற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. T ராஜேந்தர் தனது படங்களுக்கு 9 எழுத்திலே பெயர் வைக்கும் மூட நம்பிக்கையினையும் கடைப்பிடிப்பவர் பாவம் பாரதமக்கள் சினிமாத்துறையினரிடம் தேசத்தை அடகு வைத்திருக்கிறார்கள் உண்ணாவிரதமிருந்த இடத்தில் ரஜனிகாந்தின் காலடி மண்ணை எடுத்து இளைஞர் சமுதாயம் திருநீறாகப் பூசிக்கொண்டதும்
(ബര് 39D

Page 23
அருவருக்கத்தக்கது. ஈழத்திலே திரைப்படத்துறை வளரவில்லையே என்றெல்லாம்
கவலை அடைகின்றோம்.
தமிழகத்தினைப் பார்க்கும் போது திரைத்துறையினை வளர்க்காமல் விடுவதே மேலெனத் தோன்றுகிறது.
த வாகீசன்
2002:5റ്റൂ யா/உடுப்பிட்டி அ.மி.க.
சூரியனின் மரணத்திற்காக வருந்திக் கொண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களையும் ரசிக்க முடியாது கவிஞர் தாகர்
(வகுப்பறையினுள் ஆசிரியர் வருகின்றார்) | LDIT 600f6f66
(ஆசிரியரைப் பார்த்து)
குட்மோனிங் சேர் குடாப்றனூன் சேர்
ஆசிரியர்
ஏன்ரா உங்களுக்கு நேரம் காலம் தெரியாதே, குட்மோனிங், என்று சொல்லுறீங்கள் குடாப்றனூன் எண்டுசொல்லுறீங்கள்
மாணவன்:-
மன்னிக்க வேண்டும் சேர், நான் சொன்னது புதிய நேரம், அவன் சொன்னது பழைய நேரம்
N പ്രി
 
 
 
 
 

இரு திங்கள் வெளியீடே எந்தன் ஏகலைவா, உன் இதயக் குமு றல்கள் என் இளமைக் காலத்
திற்கு புதுவழி கலைக் களஞ்சி யமாய் எழுந்த என் காதலியே ே உன் கலா வித்தகத் திறமை கண்டு நயக்கிறேன். ஒரு கணம் வியக்கிறேன் உன் பணி என்றும் அழியாத சுவடாகவே இருக்க என் அன்பு ஆசிகள்
gரமேஸ்
யாமானிப்பாய் இந்துக் கல்லூரி
ஏகலைவன் இருதிங்கள் இதழ்கண்டு மகிழ்ந்தேன். ஆசிரியர் மாணவர் இணைந்து நிகழ்த்தியிருக்கும் அற்புதம் வியக்க வைக்கிறது. அடுத்து வரும் சஞ்சிகைகள் ஆரோக்கியமானதாகவும், அதிக பக்கங்களுடனும் வெளி வர வாழ்த்துகிறேன்.
உ நிரூஜா 2003 வர்த்தகம் "B" யா/இந்து மகளிர் கல்லூரி
ஏகலைவா- உன் இதழில் எல்லாச் சிறப்புக்களையும் கண்டு மகிழ்ச்சி யில் மூழ்கினேன். "கூண்டுக்கிளி" சிறுகதையும் பொதறிவு விடயங் களும் சிறப்பாக இருந்தன.
கு. யுகந்தன் தரம் 5
ஏகலைவா, நீ சுமந்துவரும் செய்திகளிலே தேடல் போட்டியானது மாண வர்களின் பொது அறிவுத் திறனை வளர்க்கின்றது. ஆனால் இருதிங்களில் வருகின்றாயே ஒரு திங்களில் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
த சரணியா
தரம் 10 யா/வல்வெட்டி இ.த.க. பாடசாலை

Page 24
போட்டி இல~02
01) குவைத் நாட்டிலிருந்து வந்து தன் காதலனோடு இந்தியாவுக்குள்
தஞ்சம் புகுந்த இஸ்லாமியப் பெண் யார்? 02) சர்வதேச ரீதியில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயர் விருதான
"ஒஸ்கார்’ விருதைப்பெற்ற இந்திய இயக்குனர் யார்? 03) இலங்கையின் முதலாவது பெண்கள் பாடசாலை எது? 04) அண்மையில் விமான விபத்தில் காலமான தென் ஆபிரிக்காவின்
முன்னாள் கிரிக்கெற் தலைவர் யார்? ۔۔۔۔۔ 05) "வைநதி’ ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட ஸ்ரேல் பிரதமர் யார்? 06) 'ஒலிவ்” கிளை தாங்கிய வெண்புறாவை சமாதானத்தின் சின்னமாக
வடிவமைத்த ஓவியர் யார்? 07) அமெரிக்க நகரமொன்றிலே ஒருநாள் “மேயராக (நகரத் தந்தை) இருந்த ?தமிழ்த் திரைப்பட நடிகர் யார் ܗܝ 08) தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெய்ரை நடிகர் விஜய்காந் தன் மகனுக்குச் சூட்டியுள்ளார். ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து தடாசட்டத்தின்படி கைது செய்யப்பட்ட அரசியல்வாதி யும் இதே பெயரை தன் மகனுக்குச் சூட்டியுள்ளார் அவர் யார்? 09) தமிழில் வெளிவந்த முதல் நாவல் எது? 10) அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் காணப்படும் நகரம் எது?
போட்டி நிபந்தனைகள் XX விடைகளை அனுப்பும்போது அதனுடன் அனுமதி அட்டையானது
இணைக்கப்பட வேண்டும்.
XX நடுவரின் தீர்ப்பே இறுதியானது
XX சரியான விடைகளை ஒன்றுக்கு மேற்பட்டவர் எழுதும்போது வெற்றிக்
குரியவர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவர்
XX யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்கள்
எவரும் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது.
பதில்வந்து சேரவேண்டிய இறுதித் திகதி - 01-12-2002 பரிசுத் தொகை - 200/=
G42D ൈബ്
 

உடனுதவும் பகுதி
தேடல் போட்டி இல-0 விடைகள்
சிறுவர் உரிமைச் சாசனம் 08
லகான்
அருந்ததி ரோய் மேரி கியூரி அம்மையார் முகம்மது அலி ஜின்னா கனியன் பூங்குன்றனார் ஜப்பான்
ஜிட்சாக் ராபின் நெல்சன் மண்டலோ,
0.
\
レク
71
மாணவர்களே,
சிறுகதைகள், கவிதைகள், அறிவியற் செய்திகள், நகைச்சுவை விடயங்கள், கல்விக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை எழுதி அனுப்புங்கள் 150 சொற்களுக்குள்ளே அமைந்திருப்பது வரவேற்கத் தக்கது. உங்கள் ஆக்கங்களை 'ஏகலைவன்" ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அனுப்பவேண்டிய முகவரி
பிரதம ஆசிரியர்,
'ஏகலைவன்’ யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
வல்வெட்டித்துறை.
ノ
g#53)6òộiệĩ

Page 25
தேடல் மோட்டி இல 01க்கு சரியான விடைகளை எழுதி ரூபா 200/= பரிசாகப் பெறுபவர்
 ேரங்கநாதன் மோகனப்பிரியன்
யா/ஹாட்லிக்கல்லூரி தரம் 8A
சரியான விடைகளை எழுதிப்
பாராட்டுப் பெறுவோர்
த. உதயகுமார் தரம் 8A
யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை
த. சுவர்ணராஜ் தரம் -10A யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
 

விழாக் கானும் "ബ് ക്ലബ്ബ് ബ് ബിജു, ബീറ്റു ട്യൂബ്ബ് മീമീബയ്ക്കൂബ് മ0% ബൈഖ0%
தங்கவேல் வாகீசன் 2002 கலைப்பிரிவு மாணவன்
"தாரதேச பாசங்களை இணைக்கும் ஒலிவழி இழையம் பூரண புதுயுக ஸ்ரார் லைற் தொலைத் தொடர்பு நிலையம்’
r. っ「下 so-a)riralašiosmiji GlarijLjaji (Si)
உண்மை அண்பை பகிர்ந்தளிக்கும்
உண்தை சேவையின் ஊற்று
ஊரிக்காரு, வல்வெட்டித்துறை.
தொலைபேசி இல: 070-212921
3ே வல்வையில் இருந்து கொழும்பு செல்லப்பிரயாண வசதிகள்
ல்ே கொழும்பில் தங்குமிட வசதிகள்
- செய்து கொடுக்கப்படும் レ

Page 26
பொழுது போக்குச் சித்திரங்களான தமிழ், ஹிந்தி, ஆங்கிலமொழிகளில்
செப்பனிடப்பட்ட திரைப்படப் பிரதிகளை
பெற்றுக் கொள்ள நாடுங்கள் தி
வல்வெட்டித்துறை வீதி, உருப்பிட்டி "நுரைக்கின்ற கனவுகளைக் கரைசேர்க்கும்
திரைப் பிரதி புதிதாகத் தினம் பூக்கும்’
“இன்றே பிறப்பெருக்கும் நாளைய நாகரிகம்
நிகழ்த்திக் காட்டுநீங்கு துர்க்கா தையலகம்’
நவநாகரிக முறையில் உங்கள்
ஆடைகளைத் தைத்துக் கொடுக்கும்
தன்னிகளில்லாத் தையலகம்
வதிரி வீதி, உருப்பிட்டி.
உரிமையானர்;~ செல்வநாயகம்
 
 
 

7 N நிமிடத்தில் இணைய வேண்டுமா நீண்டதார சொந்தம் நேசமுடன் நாடுங்கள்
நிரோஜனாவின் பாதார விந்தம்.
தொலைத் ളീ/മാബ
ஆதி கோவிலடி, கே.கே.எஸ். விதி, வல்வெட்டித்துறை.
உள்நாடு: 070-213157 வெளிநாடு: 0094-70213157
சொந்தங்களுடன் சுகம் பகிர்ந்து
சொப்பன வாழ்வில் கலந்த
விந்தைமிகு அன்பினால் அகம் நிறைந்து
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ
அழைக்கிறது.
NIROJANA TELE COMMUNICATION
4thi Koviéady, K.K.S. 7Road, Maévettitudetai.
“நுரைக்கின்ற கனவுகளைக் கரைசேர்க்கும் இரவினிலும் உங்களது குறை போக்கும்”
Daபூ 8 Night Service - இரவு பகல் சேவை.
ܢܠ
ノ

Page 27
வர்ண சொப்
வசந்து 6
ரதான வீதி, நெல்
நிகழ்வுகளை வை حص: வீடி ஈ வாழ்வியலின் சா:
6 firgoor காலத்தின் பதிவே
வெள்ளைப்
அனைத்தையும் அ தன்னிகரில்லாத
INDUSHA STU
Maint Street, Neia
"World is Camara
இ வ ய ல வ ன வ ய ல வ ஹ வ ஹ ஸ  ைவைக  ை=
 
 

~ | ¡ ¿ *蠻
置
「
!)
|
■ s.
E