கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏகலைவன் 2003.01-02

Page 1
gygygygg gegyg ysg ysgggy
ტ560))6]]
இருதிங்கள் இதழ்
翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼翼
இலக்கிய
சமூக - கலை
Na گر
ஊக்குவி
l
y
冢冢冢冢冢冢厥厥冢冢爱冢雳
 
 

SyysySy:SSSSYSSySS&SS&
- கல்வி - அறிவியல் ஏடு
iப்பு 20/= ܓN2

Page 2
s SSS ST LLTA TAeSSTA ST SASS0A ALSST LSSLA SSLLSASTAA SSLLALS A SSSAAA SLASSSAA SAASSSA SASLSSASSASSAAAAAASAAMSASTTSATSASSASSASS
泰
ఫ
夔
※
SKO
s
裘
r
நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள்
இவை தான் மனித குலக் கனவு
தாயண்பின் தனித்தவமாய்
உருவெடுக்கும்
இந்திரா கபே உணவு
நெல்லியடி.
சுவர் இருந்தாலே
சித்திரம் வரையலாம்
சுகாதாரமற்ற உணவுகளால்
W ஆயுளே குறையலாம்
உயிர் மருந்தான ஊட்டமுள்ள்
Main Street, Nelliady.
引
&
@。 දී
※※※※※
※
※
※
ఫ
※
"هو "هكمهمة
مي ܢܬ
 
 
 
 
 
 
 

rats
"தூங்கி விட்ட சந்ததிமுன் பூபாளமாய் எழும் பேனா துரோணர் தந்ததிந்த ஆறாம் விரலாய் எழும்- பேனா கெளரவ ஆசிரியர் திரு.ப.ஜோதீஸ்வரன் பிரதம ஆசிரியர் திரு.இ.சு.முரளிதரன் மதியுரைஞர் திரு.கி.நடராசா திரு.க.தர்மலிங்கம் திரு.மா.லோகசிங்கம்
இணையாசிரியர் செல்வன் விமணிமாறன் செல்வி மோ.கிருஷாந்தினி
பிரதம வடிவமைப்பாளர் செல்வன் தரதீஸ்வரன் ஓவியர் செல்வன் மா.செல்வதாஸ்
99.
விளம்பர முகாமையாளர் செல்வன் கு.பாலகிருஷ்ணகுமரன் செல்வன் நிநிமலேஸ்வரன் செல்வி சி.கஸ்தூரி விற்பனை முகாமையாளர் செல்வன் இ.சஞ்சீவ் செல்வி து.கம்ஷானந்தி செல்வி கு.குலசக்தி வெளியீடு:
யாlஉடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி. வல்வெட்டித்துறை.
影
6τώ βδΑσίμ υΡτΔοτσυταδώ ότι :
முழுமையினை நோக்கிய எம் பயணத் தின் மூன்றாவது இதழிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகின்றோம். 'ஏகலைவன்’ எப்போது வரு வான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நீங்கள் தான் எங்கள் வெற்றியின் விலாசம்.
“தைபிறந்தால் வழி பிறக்கும்” என்று ஏதோ ஒப்புக்குச் சொன்ன போதெல்லாம் எந்தத் தை என்று புரியாமல் விழித்தோம். 'புரிந்துணர்வு" புரிய வைத்திருக்கின்றது. இதுவரை காலமும் விருந் தின வேடமிட்ட யுத்தம் ‘போய் வருகிறேன்' என்று தடுமாறி மீண்டும் சிந்தித்து 'போகிறேன்' என்று ரைத்த பொற்காலமிது. களமொன்று புதிதாகப் பூத்து கலைஞர்களைப் பார்த்துக் கண்ணடிக்கிறது.
பானை வெண்ணுரை ததும்பப் பொங்கு கிறது. விறகாகிப் போயின ஆயுதங்கள். ஈழத்தாய் விருந்துண்டு மகிழ இன பேதமற்ற குழந்தைகளை இன்முகத்துடன் அழைக்கிறார். தேசாபிமானத்துக் குள்ளே குடியிருந்த மனிதாபிமானத்தை சர்வதேசம் சரியாக இனங்கண்டிருக்கின்றது.
ஈழத்தின் உரிமையை முதன்மைப்படுத் தப் போராடிய கரங்கள், ஈழத்தை உலகிலே முதன் மைப்படுத்தப் போராடட்டும். உலகிலே இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மிகமிகச் சொற்பமா னவை என்பதை மிச்சமானவை உங்களால் நிகழ்த் தப்படும்போது உலகம் உணர்ந்து கொள்ளட்டும்.
மாணவ சமுதாயமே.! உன் விரல் இடுக்கில் வீற்றிருப்பது வெறும் பேனாஅல்ல. அஸ் தமன மேற்கிலும் ஆதவனைப் பிளந்தெடுக்கும் ஆயுதம் என்பதை அகிலத்திற்கு அறிவி. சோம்பல் ஆடை களைந்து துள்ளி எழு! சர்வதேச அரங்கிலே தமிழின் முகவரி பதிக்கப் பள்ளிஎழு!
- ஆசிரியர் -
QSAZ Ž ZOO3

Page 3
a) ஏகலைவன்" Ka
(வதனகுவிதைத்ளுற்குபற்றும்
கலாநிதியோகராசா, கிழக்குப் பல்கலைக்கழகம்.
க.பொ.த.உயர்தர வகுப்பிற்குரிய தமிழ்ப் பாடத்திட்டத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் கவிதைகள் சில இடம்பெற்றுள்ளன. காற்று என்பது அவற்றுள் ஒன்று. (காற்று 8:9) அது பாரதியார் கவிதைகளில் வசனகவிதை என்ற பகுதியில் அடங்குவது. காற்று பகுதியைப் புரிந்து கொள்வதற்கு பாரதியாரின் வசன கவிதை முயற்சி பற்றியும் அப்பிரிவில் அடங்கும் ஏனைய கவிதைகள் (காட்சி, சக்தி, கடல், ஜகத்சித்திரம், விடுதலை) பற்றியும் கவனிப்பது அவசியமானது.
பாரதியாரின் வசனகவிதை வடிவமுயற்சி தமிழிற்கு புதியது என்று கருதப்படுகின்றது. பாரதியார் வசனகவிதை என்று வெளிப் படையாக இப்பகுதி பற்றி எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. இதனால் பாரதியார் வசனகவிதை முயற்சியில் ஈடுபட்டமைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அவையாவன
01) வால்ட்விட்மனின் செல்வாக்கு .
பாரதி மேலைத்தேயக் கவிஞர். பலரது படைப்புக்களை ரசித் தவர். மேலைத்தேய வசனக் கவிதை முன்னோடியான வால்ட்விட்மனும் பாரதியைக் கவர்ந்தவர்களுள் ஒருவன். வால்ட்விட்மனின் செல்வாக்குக் காரணமாக பாரதி இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.
02) பாரதியாரின் பரிசோதனை நாட்டம் .
தமிழிற்குப் புதியபுதிய வடிவங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது பாரதியின் வேணவா. சொனற்பாவடிவம், தன்னுணர்ச்சிப்பாடல், கதைப்பாடல், நவீன காவியம் என்றவாறு இத்தகைய பட்டியல் நீண்டு செல்கின்றது. இவ்விதத்தில் வசன கவிதை முயற்சியிலும் ஈடுபட்டிருக் 656Os TLD.
அது மட்டுமன்று; பொருளுக்கும் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் பொருள் மாற வடிவமும் மாறுமென்றும்
@须 2)

ρα» ஏகலைவன் KAMA
கருதியவன் பாரதி. "சக்தி' (5) என்ற வசன கவிதைப் பகுதியில் வரும் பின்வரும் பகுதியை இவ்விதத்தில் பலரும் சுட்டிக் காட்டுவது வழக்கம்.
“ என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம் ஓரளவு ஒருநியமம் ஏற்படுகின்றது. அதனை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால் அந்த வடிவத்திலே சக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்காவிட்டால் அவ்வடிவம் மாறும். மேலுறையைக் கந்தை என்று வெளியில் எறி. அந்த வடிவம் அழிந்துவிட்டது. வடிவத்தைக் காத்தால் சக்தியைக் காக்கலாம். வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை. வடிவத்தைக் காப்பது நன்று. சக்தியின் பொருட்டாக ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்து விடுவர் ' (பழங்கந்தை - பழைய வடிவம், சக்தி - நிரந்தர உண்மை, உறை - ஊடகம்)
அத்துடன் பாஞ்சாலி சபதச் சூரியோதய வர்ணனைப் பகுதி யையும் இவ்விதத்தில் கவனத்திற் கொள்வர். சூரியோதய வர்ணனையை முதலில் கவிதையூடாக நிகழ்த்திய பாரதி பின்பு ஒருகட்டத்தில் (அநு பந்தத்தில்) வசனத்தினூடாக அதனை மேற்கொள்கின்றான். அவனது உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு யாப்பு தடையாக இருந்திருக்க வேண்டும். இதனாலேயே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும் என்று ஊகிக்கின்றனர்.
03) தாகஉரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்பு .
வசன கவிதைப் பாணியில் அமைந்த கீதாஞ்சலியை தமிழில் பாரதி மொழிபெயர்த்துவிட அதன் புதிய வெளிப்பாட்டு வடிவம் பாரதி யைக் கவர்ந்திருக்க வேண்டும்.
04) வேதப்பாடல்களில் ஈடுபாடு .
பாரதியின் வசனகவிதை முயற்சி தொடர்பாக அண்மைக்கால ஆய்வாளரால் முன்வைக்கப்படும் புதியதொரு கருத்து இதுவாகும்.
பாரதி புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் அவனும் அவனது சகாக்கள் சிலரும் வேதப் பாடல் ஆராய்ச்சியில் ஈடுபாடு காட்டினர். வேதப் பாடல்களின் உள்ளடக்கம் மட்டுமன்றி வேதப் பாடல்களின் செறிவு, எளிமை, இனிமை, அழகு, நேரடியாக விடயத்தை அணுகுதல் முதலிய பண்புகளும் பாரதியைக் கவர்ந்தன.
@% 须孩

Page 4
a) ஏகலைவன் KAMA
இத்தகைய பண்புகள் கொண்ட வேத ரிஷிகளின் கவிதைகள் அவனால் எழுதப்பட்டன. இவற்றின் இன்னொரு வெளிப்பாடே வடிவப் புதுமை கொண்ட வசன கவிதைகள் என்று கூற முற்பட்டுள்ளனர் அண்மைக்கால ஆய்வாளர்.
எவ்வாறாயினும் பாரதி அறிமுகப்படுத்திய வடிவம் - வசன கவிதை வடிவம் - தமிழிற்குப் புதியது என்பதில் ஐயமில்லை.
இவ்வசன கவிதைப் பகுதியில் உள்ளடக்கம் பற்றிச் சிந்திக்கும் போது கூட மேலே (இறுதியாகக்) குறிப்பிட்டுள்ள வேதப் பாடல்களின் நாட்டம் பற்றித் தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
வேதப் பாடல்களில் கொண்ட நாட்டம் பாரதியை வேதகால வாழ்வு நோக்கித் திசை திருப்புகின்றது.
வேதகாலவாழ்வு எத்தகையது, வேதகால மக்கள் வாழ்க்கை இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்து இயற்கைக் கூறுகளை அவர்கள் தெய்வம் என்ற நிலையில் வழிபட்டனர். மந்திரங்களால் அவற்றை அர்ச்சித்தனர். போற்றிப் புகழ்ந்து வணங்கினர். இவ்வுலக வாழ்க்கையிலே இன்பமும் அமைதியும் கண்டு கொண்டனர். இத்தகைய வேதகால வாழ்க்கையினை மீண்டும் காணவிழைந்தார் பாரதியார். இத்தகைய பின்னணியில் நின்றே இவ்வசன கவிதை உள்ளடக்கம் பற்றி அணுக வேண்டும்.
இவ்வசன கவிதைப்பகுதியில் ஆறு விடயங்கள் பற்றி - காட்சி, சக்தி, காற்று, ஜகத்சித்திரம், விடுதலை என்பன - பேசப்படுகின்றது.
காட்சியில் இன்பம், ஞாயிறு என இரு கிளைகள் உள்ளன. காட்சி பிரபஞ்சக் காட்சியைக் கருதுகின்றது. பிரபஞ்சக் காட்சியின் இன்பம் பற்றி விபரிக்கப்படுகின்றது. இரண்டாம் கிளையில் ஞாயிறு போற்றப்படுகின்றது. ஞாயிறுடன் காற்று, கடல் என்ற பகுதிகளையும் இணைத்துப் பார்க்கும்போது ஐம்பூதங்களும் நிலம், ஆகாயம், தவிர்ந்த ஏனையவையும் போற்றப்படுகின்றமை புலப்படுகின்றது. தனித்துப் பேசப் படாவிட்டாலும் நிலம், ஆகாயம் என்பன ஆங்காங்கே போற்றப்படுகின்றன. சுருங்கக்கூறின் ஜகத்சித்திரம், விடுதலை தவிர்ந்த ஐந்து பகுதிகளிலும் அவ்வப்பாடு பொருள்களின் அறிமுகம் வடிவுநிலைகள், தெய்வீகப் பண்புகள், மனித வாழ்வில் அது வகுக்கும் பங்கும் பணிகளும் புகழ், வாழ்த்தலும் வணங்குதலும் என்ற ஆறு நிலைகளில் பஞ்சபூதங்கள்
642 இ)

à t - فه لأنه قتل الثالث
: : a) ஏகலைவன் )ختھارٹ
வணங்கப்படுகின்றன.
ஜகத்சித்திரம், விடுதலை ஆகியன இரு சிறுநாடகங்களாம். முதல் நாடகம் அகப்பகை பற்றியது. அடுத்தது அரசியல் உள்ளடக்கம் கொண்டது. V
வணக்கப் பாடல்கள், சிறுசிறு தொடர்களும் அவ்வப்போது நீண்டதொடர்களும் கொண்டவை. முற்கூறியது போல் செறிவும், எளி மையும், புதுமையும்,வலிமையும், வனப்பும் மிக்கவை. வேதப் பாடல் களுக்குரிய மந்திரங்களுக்குரிய ஓசைப்பண்பு கொண்டவை.
"காற்று” பதினைந்து அலகுகள் கொண்டது. இவற்றில் காற்றின் ஆற்றல் அதன் பல்வேறுசெயல்கள், அதனை வாழ்த்துதல், வரவேற்றல் என்பன இடம்பெறுகின்றன. எட்டாம், ஒன்பதாம் அலகுகளில் பாரதியின் வழமையான குணம் தலைநீட்டுகின்றது. பாரதி எது பற்றிச் சிந்திப்பினும் உலகத்து மனிதர்கள்பற்றி அல்லது தமிழர்கள் பற்றி நினைவுகூரத் தவறுவது இல்லை. எட்டாம் அலகில் உடல்வலுவும் உள வலிமை யும் அற்ற மனிதர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள். ஒன்பதாம்அலகில் தமிழ்மக்களின் சோம்பல், அறியாமை, ஆரோக்கியமின்மை, விதி மீதான அதீத நம்பிக்கை என்பன கூறப்படுகின்றன. உண்மையான சாஸ்திரங்கள் இல்லாநிலை எடுத்துரைக்கப்படுகின்றது. அதுமட்டு மன்று. பார்ப்பனக் கவிஞன் என்று சிலரால் முத்திரை குத்தப்பட்ட பாரதி அத்தகையனல்லன் என்பதும் தெளிவாகின்றது. இவ்வாறு பார்ப்பனரை விமர்சிக்கின்றான் பாரதி.
GG
உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல் இருப்பவற்றையும் மறந்து விட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகின்றார்கள்.”
க.பொ.த.உயர்தர வகுப்பிற்கு "காற்று' வசன கவிதையின் எட்டாம் ஒன்பதாம் அலகுகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன. கற்பிக்கும் ஆசிரியர் இதுவரை கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து மேலும் சிந்திப்பது அவசியமானது.
(9% 须哆

Page 5
ஏகலைவன் KR
காளமேகத்தின்(து)வித்து
விமணிமாறன் 2003 கலை யா/உடுப்பிட்டி அ.மி.க
நாயக்கர்காலப் பாடல்கள் வித்துவத் தன்மையைக் கொண்டன வாக அமைந்து காணப்படுகின்றன. இக்காலப் புலவர்களை அரசர்கள் அவ்வளவாக ஆதரிக்கவில்லை. இதனால் தம்மை சிறந்த புலவர்களாக வெளிக்காட்ட வேண்டிய தேவை தவிர்க்க முடியாததாயிற்று. இக்காலப் பாடல்களிலே வசைக்கவி மரபும் மேலோங்கிக் காணப்படுகின்றது. "இம்மென்றால் எழுநூறும் எண்ணுறும் அம்மென்றால் ஆயிரமே” பாடத் தக்க புலவராக காளமேகப் புலவர் காணப்படுகின்றார். யமகம், திரிபு, மடக்கு, சிலேடை, வஞ்சப் புகழ்ச்சி, சித்திரக் கவி போன்ற அணிகளை இவர் அதிகம் கையாண்டிருக்கிறார்.
தாதி தூதே தீது தத்தை துதோ தாது தூதி தூதொத்தித்த தூதாதே - தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி.
இப்பாடல் தகரவர்க்கத்தினால் ஆக்கப்பட்டுள்ள கவி காள மேகத்தின் வித்துவச் செய்யுளாகும். தாதி துதே தீது - பணிப்பெண்ணின் தூது தீமை தரும். தத்தை தூது ஒதாது - கிளி தூதினைச் சொல்லாது என்பது முகலடியின் பொருளாகும். தூதி தூது ஒத்தித்த தூதாதே என்பதற்கு தோழியின் தூது ஒத்திப்போடும் (நாளைக் கடத்தும்) தூதாக அமைந்துவிடும் என்று பொருள் கொள்ளலாம்.
தாதொத்த - பூந்தாதுகளைப் போன்ற துத்தி தத்தாதே - தேமல் எண்மீது படராது. தே துதித்தே - தெய்வத்தை வழிபட்டு, தொத்து தீது - தொடர்ந்தாலும் தீமை. தித்தித்தது ஒதித்திதி - இனிப்பான தலைவனின் பேரை ஒதுவேனாக, என ஏனைய அடிகளுக்கு பொருள் கொள்ளலாம். பாடலின் முழுப்பொருள் பின்வருமாறு.
பணிப்பெண்ணைத் தூதாவிடுவது பயனற்றது. கிளியோ தூதைச் சொல்லமாட்டாது. தோழியோ நாளைக் கடத்திக் கொண்டிருப்பாள்.
66% 2 须丞)’

am) ஏகலைவன் (a
தெய்வத்தை வழிபடுதலும் பயனற்றது. எனவே பூந்தாதுகள் போன்ற தேமல் என்மீது படராது. எனக்கு, இனிமையான தலைவன் பெயரை ஓதிக்கொண்டிருப்பேனாக.
காளமேகத்தின் தனிப் பாடல்களை நோக்கும்போது அவரது கற்பனை ஆற்றல், சொல்லாட்சி, சிலேடைநயம், வஞ்சப் புகழ்ச்சி என்பன அதிசயிக்கக்கூடிய வகையிலே அமைந்திருப்பது புலனாகின்றது.
முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கில் ஒன்றெடுத்து முந்நான்கில் ஒன்றின்மேல் மோதினான். முந்நான்கில் ஒன்றரிந்தால் ஆகுமோ . ? ஒ . ஒ மடமயிலே அன்றணைந்தான் வராவிட்டால்,
இப்பாடலில் முந்நான்கு என்பது பன்னிரு ராசிகளையும் சுட்டி நிற்கின்றது. பன்னிரு ராசியில் ஒன்றான மீனைக் கொடியாக உடைய மன்மதன் பன்னிரு ராசியில் ஒன்றான தனுசு (வில்) எடுத்து பன்னிரு ராசியில் ஒன்றான கன்னியாகிய என்மீது மோதிவிட்டான் ஓ . ஒ அழகிய மயில் போன்ற தோழியே ! அன்று என்னைத் தழுவிய காதலன் வராவிட்டால், பன்னிரு ராசிகளில் ஒன்றான மேடத்தை (ஆடு) பலியிட்டால் மட்டும் என் நோய் நீங்குமோ. ? என்றவாறாகப் பாடலின் பொருள் அமைந்துள்ளது. காளமேகம் கவிபாடுவதில் முந்நான்கில் ஒன்று (சிங்கம்) என்பதால், தமிழுலகே முந்நான்கில் ஒன்று (கும்பம்) வைத்து போற்றிக் குதூகலிக்கின்றது.
வாலி மடிந்ததுவும் வல்லரக்கர் பட்டதுவும் கோல முடிமன்னர் குறைந்ததுவும் - சால மிகுந்த மதியுடைய நூற்றொருவர் மாண்டதவும் ஐயோ ! சத இகரத்தால் வந்த தாழ்வு. பாடலின் கருத்தினை நோக்குவோம். வாலி இறந்து போனதும், வல்லமை பொருந்திய அரக்கர்கள் இறந்ததுவும், அழகிய முடியையுடைய மன்னர்கள் பலர் அழிந்ததுவும், மிகுதியான அறிவைக் கொண்ட கெளரவரான நூற்றொருவர் (கெளரவர் + கன்னன்) இறந்ததுவும் எதனால் வந்ததென்றால் - சத இகரத்தால் - சகரம் (ச) தகர இகரம் (த்+இ) என்பது தி - சதியால் வந்தது. சதி என்பது இங்கு பெண்ணைப் பற்றிய செயல்.
சத இகரம் என்ற கற்பனை சராசரி மக்களுக்கு உரியதல்ல. இதனைப் புரிந்து கொள்வதற்கும், கையாள்வதற்கும் உயரிய புத்திக்
(sz محبرمحبرسمبرسمبر محبرمحمجسمبر Z(Τ) ,

Page 6
a) ஏகலைவன் Kn
கூர்மை அவசியம். இத்தகைய பாடல்களின் தாக்கமே பின்னாளிலே கண்ணதாசன் "என்ன பார்வை உந்தன் பார்வை இடை மெலிந்தால் (ள்) இந்தப் பாவை’ என எழுதத் தூண்டியது. (பார்வை என்ற சொல்லில் இருக்கும் இடை எழுத்து மறைந்துவிட்டால் பாவை என்றாகும்) இன்று எம் போன்ற மாணவர்கள் காலுக்கு இடையில் தகரம் செருகுவது காதல் என்று கவிதை நடையிலே உரையாடவும் வழிவகுத்தது. (கால் - தகரம் (த) கா-த-ல்)
ஒகாமா வீ தோடு தேரொக்க டுடுடுடுடு நாகார் குடந்தை நகர்க்கிறைவர் - வாகாய் எடுப்பர் நடமிடுவர் ஏறுவரன் பர்க்கு கொடுப்பர் அணிவர் குழை
இப்பாடலின் பொருளை புரிந்து கொள்வதற்கு நேர் ஒக்க - முறையே - ஓடு, காடு, மாடு, வீடு, தோடு என இணைக்க வேண்டும்.
நாகார் குடந்தை நகர்க்கு இறைவன் என்றால், இளமரச்சோலை நிறைந்த திருக்குடந்தை நகரத் தலைவனான சிவன் என்பது பொருள். அச் சிவபெருமான் வாகாய் எடுப்பர் - அழகிய திரு ஓடு எடுப்பர், காட்டில் நடமிடுவர், மாட்டில் ஏறுவர், அன்பர்க்கு வீட்டைக் கொடுப்பர், தோட்டை அணிந்திருப்பர் என்பதே பொருளாகும்.
காளமேகப் புலவர் சிலேடைப் பாடல்களையும் சிறப்புறப் பாடியுள்ளார். நாய்க்கும் தேங்காய்க்கும் சிலேடை பாடும்போது,
" ஒடு மிருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது ' என்று பாடுகின்றார். தேங்காய் - ஓடும் உடையதாக இருக்கும், உட்புறம் வெண்மையாக இருக்கும். அனைவரும் விரும்பும் குலை கோணாது தொங் கிக்கொண்டிருக்கும். நாய் - ஓடும்.இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும் விருப்ப மாகக் குலைக்க (குரைக்க) வெட்கப்படாது (நாணாது) மீனுக்கும் பேனுக்கும் சிலேடை பாடும்போது " மன்னீரில் பிறக்கும் மற்றலையில் மேயும்
பின்னிச்சிற் குத்தும் ” என்று பாடுகிறார்.
மீன் - மன்னீரில் நிலை பெற்ற நீரில் பிறக்கும், மற்றலையில் மேயும் - அந்த அலைகளிலே மேயும் பின் நீச்சின் குத்தும் - நீந்தும்
63% % ്യള)

a) ஏகலைவன் Kama
போது பின்னால் வந்து எமக்குக் குத்தும்.
பேன் - மன்னீரில் - நிலைத்த ஈரில் பிறக்கும், மற்றலையில் மேயும் - அடர்ந்த தலையிலே மேயும். பின் ஈச்சின் குத்தும் - பின்பேனைக் குத்தும்போது 'ஈச்” என்ற சத்தத்துடன் குத்தப்படும்.
காளமேகம் தனிப்பாடற் திரட்டின் அனைத்துக் கவிதைகளை வாசித்துப் பார்த்தால், ஈடு இணையற்ற வித்துவக் கவிஞனின் விலாசம் புலப்படும். இவர் காலத்து ஏனைய கவிஞர்களை விட பூரண ஆற்றலோடு புதுமையான முறைகளை இவர் கையாண்டிருக்கிறார் என்பதையும் இவரது கவிதைகள் இனங்காட்டி நிற்கின்றன.
என் வாழ்க்கையில் விழுது விட முடியவில்லை தினம் அழுது வாழ்ந்து சிரிப்பு வருகின்றது பொழுது விடிகிறது என் பொழுது தனிமையில் கழிகிறது தினம் என் பேனாவே என் சோகம் கேட்கிறது அழுது என்ன பயன் எழுது எழுது .அதன் மூலம் பொழுது விடியும் என்கிறது
இ.சுபாஜினி 2003 கலைப்பிரிவு யா/கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி
Gaz 29)

Page 7
1)
2)
குருதியின் வகைகளைக் கண்டறிந்த விஞ்ஞானி யார் ? லான் ஸ்ரெயினர்
மூளைக்கு எவ்வளவு நேரம் இரத்தம் செல்லாவிடின் இறப்பு ஏற்படும்? 1.5 நிமிடம்
3) சூரியனின் எந்தநிற ஒளியில் ஒளிச்சேர்க்கை அதிகம் நடக்கும் ?
4)
5)
6)
7)
8)
9)
சிவப்பு பவளம் எதிலிருந்து பெறப்படுகின்றது ? கோரல் என்ற முருகைக்கல் விலங்கிலிருந்து
இலங்கையின் தேசிய விளையாட்டு எது?
கரப்பந்தாட்டம்
ஒரு பற்றீரியா ஒரு நாளில் எத்தனை பற்றீரியாக்களாகப் பெருகக் கூடியது ?
ஏறக்கறைய 200 இலட்சம் வரை
புகையிலையிலுள்ள நஞ்சுப் பதார்த்தம் எது? நிக்கொட்டின்
லண்டன் விடுதியில் அண்மையில் மர்மமாக மரணமான இளவரசி uurtj ? ஈரானிய இளவரசி லைலா
அங்கவீனர்களுக்குப் பல்கலைக்கழகம் உள்ள நாடு எது? சீனா
10) ஒரு பூவுக்கு உள்ள 4 பருவங்கள் எவை ?
அரும்பு , முகை, போது, மலர்
11) தேயிலையைக் கொதிநீரில் ஊறவிடும்போது வெளிவிடப்படும்
நஞ்சுப் பொருள் எது? தனின்
12) கரப்பந்தாட்டப் பந்தின் நிறை என்ன ?
260-280 கிராம்
61% 2)
 

Eg:Yaving 2 (", ρα» are Eilar sha.
[' ) ?
13) எமது குருதியின் உறைநிலை யாது? Այո, նա
0.550C
14) பூமியின் சுழல்வேகம் யாது?
1 மணித்தியாலத்திற்கு 108,000 கிலோமீற்றர் 15) சுகதேகியான ஒருவரின் குருதிஅமுக்கம் ബഖണഖ ?
120 / 80 mm.Hg 16) நாம் பேசுகின்ற ஒலியின் அதிர்வெண் யாது ?
1000 Hz (32m 6ö) 17) உயிரின் அடிப்படைப் பொருள் யாது?
நியூக்கிளிக்கமிலம் 18) தேசியதினம் ஜனவரி 01 ஆக உள்ள நாடுகள் எவை ?
கியூபா, சூடான் 19) தமிழில் முதல் காப்பியம் எது ? அதனைத் தந்தவர் யார் ?
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள் 20) குளிர்காலத்தில் தெற்குநோக்கி பறக்கும் பறவைகள் எவை ?
வேபல்ஸ் பறவைகள்
நநிசாந்தன் தரம் 109 யா/உடுப்பிட்டி அ.மி.க.
r e ༤༽
ஆசிரியர் :- நான் தந்த விண்ணப்பப் படிவத்தை
நிரப்புவதிலே ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம் மாணவன் :- சேர் . எங்கட வீட்டில கொழும்புக்கு
போக விடமாட்டார்கள். ஆசிரியர் :- கொழும்புக்கா? ஏன் அங்கே போக
வேண்டும் LDIT600T66öT :- 956) write in Capital 6T606 (6 الصر .போட்டிருக்கு சேர் ܢܠ
(ಎ2 2 须征队

Page 8
ஏகலைவன் KR
t தென்கிழக்காசியூ நாடுகளில் இந்துப்பண்பாடு
ப.ஜோதீஸ்வரன்
தொடர் - 2 யா/உடுப்பிட்டி அ.மி.க.
இந்துநாகரிகம் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்காக
D(36)dru III
இது முன்பு "கடாகத்துபீபம்" என அழைக்கப்பட்டது. இங்கு பெருமளவு இந்துக்கள் வாழ்கின்றனர். கி.பி 1ம் நூற்றாண்டில் "இலங் காசுகம்” (இலங்காசோகம்) எனும் இந்து அரசு நிறுவப்பட்டதாக சீன வரலாற்றுநூல் குறிப்பிடுகின்றது.
போர்த்துக்கேயர் தாம் ஆட்சிசெய்த காலத்தில் இந்துக்கோயில் களை இடித்து அக்கற்களைக் கொண்டு கத்தோலிக்க தேவாலயங் களைக் கட்டினர். இவ்வாறு மலேசியாவில் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்றிலே மகர வேலைப்பாடுடைய கற்றுண்கள் காணப்பட்டிருந்தன. இவை பல்லவர் காலப்பகுதியில் கட்டப்பட்டவையாக இருக்கலாமெனக் கருதப்படுகின்றது.
மலேசியாவில் "கெட்டர்” எனும் மலையுச்சியில் சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் பின்பு அது இஸ்லாமியர்களால் அழிக்கப்பட்ட தென்றும் கூறப்படுகின்றது. இவ் அழிபாடுகளில் சிவன், துர்க்கை, நந்தி, கணபதி என்பவற்றின் சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. "வர்மன்” ஈற்றுநிலைப் பெயருடைய மன்னர் ஆட்சிபுரிந்தனர். கல்வெட்டுச் சான்று களில் சமஸ்கிருத, தமிழ்ச் சொற்கள் என்பன பொறிக்கப்பட்டிருந்தன.
மலேசியாவில் இன்றும் இந்துக்கள் அந்நாட்டுப் பிரஜைகளாக வாழ்கின்றனர். இங்குள்ள ஆலயங்களில் பத்துமலை முருகன் கோவில், முத்துமாரி அம்மன் கோவில், காளியம்மன் கோவில், பூரீ மகாமாரி அம்மன் கோவில் போன்றன குறிப்பிடத்தக்கனவாகும். மலேசியமக்கள் மார்கழி மாதத்தில் சாணம் தெளித்து வாசலில் கோலம் போடும் வழக்கம் உண்டு. "தைப்பூசவிழா' சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. கோயில்களில் நித்திய, நைமித்திய கிரியைகள் நிகழ்கின்றன. இக்
@须 2)

a) ஏகலைவன் KaQ
கிரியைகளை ஆற்ற இன்றும் இலங்கை இந்தியாவிலிருந்து பிராமண்ர்கள் மலேசியா செல்வதனையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.
இது முன்பு "சிங்கபுரம்'என அழைக்கப்பட்டது. வர்த்தகத் தொடர்பே இங்கு இந்துப்பண்பாடு நிலவுவதற்கு அடிப்படைக் காரணம். இங்குள்ள சுப்ரமணிய சுவாமிகள் கோயிலில் ஆகமமுறைப்படி பூசைகள், விழாக்கள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. மிகப் பழமை வாய்ந்த சிவாலயம், பெருமாள் ஆலயம், செண்பக விநாயகர் ஆலயம், மன்மத காரூனிஸ்வரர் ஆலயம், இராமர் ஆலயம், முனீஸ்வரன் கோவில், காளியம்மன் கோயில் போன்ற பல ஆலயங்கள் காணப்படுகின்றன. இவ்வாலயங்களில் பிதிர் வழிபாடு, தைப்பூசவிழா, காம தகனம் என அழைக்கப்படும் மன்மதனை எரித்த திருவிழா, சிவராத்திரி, நவராத்திரி போன்ற இந்துசமய விழாக்கள் நடைபெறுகின்றமை சிங்கப்பூரில் இந்துப் பண்பாடு சிறப்பிடம் பெறுவதனையே எடுத்துக் காட்டுகின்றது.
கம்போடியா
இது முன்பு "காம்புஜதேசம்" என அழைக்கப்பட்டது. இங்கு "பூனாக்” என்ற ராட்சியமே இந்து குடியேற்ற நாடாக விளங்கியது. இந்து மரபுக்கதைகளின் படியும் சீனமரபுக் கதைகளின் படியும் கி.பி. 1ம் நூற்றாண்டில் இருந்து இந்துப்பண்பாடு நிலவி இருந்ததை அறியலாம். இந்நாட்டின் முதல் அரசனாக விளங்கிய "கெளண்டின்யன்” “சோமா” என்னும் நாக இளவரசியை மணம்புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளன. இந்தி யாவில் "கெளண்டியன்” எனும் பிராமண கோத்திரம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காம்புஜதேசத்திலுள்ள செல்வாக்குப் பெற்ற குடும்பத்தினருக்கும் இந்திய பிராமணருக்கும் இடையே திருமணத் தொடர்பு காணப்பட்டிருந்தன.
இங்கு சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் ஆலயங்கள் அமைக்கப் பட்டதாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இந்துப் பண்பாட்டை விளக்கும் "சூரியவர்மன்” என்பவனால் கட்டப்பட்ட "அங்கோர்வாட்” எனும் ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இவ் வாலயத்தின் கருவறையிலேயே மகாவிஷ்ணு கருடவாகனத்தில் எழுந் தருளி நிற்கும் சிலையானது பொன்னால் செய்யப்பட்டதாகும். இவ்வால யத்தின் சுவர்களிலே இராமாயண மகாபாரத சிற்பங்களும் ஓவியங்களும்
(čaŽ 213)

Page 9
a) ஏகலைவன் KAMA
பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாலய சிற்பங்கள் திராவிட கட்டடப் பாணி யிலேயே அமைக்கப்பட்டிருந்தன.
சிவபெருமான் முதல்மூர்த்தியாகவும், மாபெரும் துறவியாகவும் போற்றப்பட்டார். "ழறி சிகர ஈஸ்வர” என அழைக்கப்பட்டார். இங்கு பெறப்பட்ட கல்வெட்டுச் சான்றிலே சிவபெருமான் பரமாத்மாவாகவும் அப்பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலே வீடுபேறு என குறிப்பிடப் பட்டுள்ளது. இக்குறிப்பானது சைவசமயத்தின் அத்துவித தத்துவத் தினையே சுட்டுவதாக அமைகின்றது. இங்கு யாகங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதற்கு உதாரணமாக "சிவயக்ஞம்" என்ற யாகம் நடைபெற்றதற்கான குறிப்பு கிடைத்ததனைக் கூறலாம். பாசுபதம் பின்பற்றப்பட்டது.
இங்கு காரைக்காலம்மையார் வழிபாடு நிகழ்ந்ததற்கான சான்று கள் உண்டு. "காரைக்கால் பேய் வழிபாடு ' என்பது கி.பி.5ம் நூற் றாண்டில் சிறப்பிடம் பெற்று விளங்கியது. வணிகர் குலத்தைச் சேர்ந்த அம்மையாரை கடல் வணிகர்கள் தமது குலதெய்வமாகக் கருதினார்கள். இந்தியாவிலிருந்து குடியேறிய வணிகர்களால் வணங்கப்பட்ட காரைக் காலம்மையாரை கம்போடிய மக்களும் வணங்கினர். இங்கு சிவபெருமான் ஊழிக்கூத்தின் திருமேனியுடன் காட்சியளிக்க அதற்கருகே காரைக்கால் பேயின் சிலை அமைந்துள்ளது. இச்சிலையானது கல்லினாலும் கெப்பி னாலும் செதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு ஆட்சிபுரிந்த “பலவர்மன்’ சிறந்த சிவபக்தனாவான். அவன் நான்கு சிவாலயங்களைக் கட்டுவித்து நாட்டிலுள்ள பல கோயில் களையும் சிவலிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து இதிகாசங்களையும் புராணங்களையும் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி இருந் தான்.
கம்போடியாவில் அமைந்துள்ள திருமால் கோயில்களில் தென் கலை வைணவர்கள் பின்பற்றும் பாஞ்சராத்திர ஆகமமுறைப்படி பூசை கள் நடைபெற்றன. மக்கள் சிவனையும் திருமாலையும் ஒன்றெனக் கருதி வழிபட்டிருந்தனர். இதற்குச் சான்றாக இங்குள்ள கல்வெட்டுக் களிலே சங்கர நாராயணர் , சம்பு விஷ்ணு, ஹரஅச்சுதன், ஹரிசங்கரன், ஹரிஹரன் என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் சக்தி வழிபாட்டில் துர்க்கை, உமை, பகவதி, இலக்குமி, சதுர்புஜதேவி என்ப
வற்றோடு நாக கன்னிகைகளை வழிபட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்
தக்கதாகும்.
6.1% %2)

a) ஏகலைவன் Ka
7ம் ஜெயவர்மன் என்பவன் "பயோன்’ (Bayon) என்னும் பிரமிட் வடிவமுடைய பெரிய ஆலயத்தை அமைத்திருந்தான். இது பல கோபுரங் களை உடையது. இங்கு நடராஜர், பார்வதி, கிருஷ்ணன் போன்றோரின் சிலைகள் காணப்படுகின்றன. கோவர்த்தன மலையைத் தாங்கிய கிருஷ்ண ரின் உருவமும் சிவனும் விஷ்ணுவும் இணைந்த ஹரிஹரவடிவமும் சுவர் களில் காணப்படுகின்றன. மேலும் இம்மன்னனது ஆட்சிக் காலத்தில் வேதங்களில் கூறப்பட்ட யாகங்கள் நடாத்தப்பட்டன என்றும் கூறப்படுகின்றது. A.
(தொடரும்)
1) குரைக்கும் தவளை
தவளை இனத்தில் குரைக்கும்தவளை, செங்குத்து தவளை என இரண்டு வகை உள்ளது. இந்த இனம் அமெரிக்காவில் உள்ளது. பொதுவாகத் தவளைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் தவளை குஞ்சுநிலையில் இருந்து படிப்படியாகத்தான் தவளை உருவத்திற்கு வரும். ஆனால் இந்த தவளைகளும் முட்டையிலி ருந்து வெளியே வரும்போதே தவளையாகவே தான் வருகின்றது.
2) பசுபிக் சமுத்திரம்
"நெருப்புவளையம்” என்று அழைக்கப்படுகின்றது. இப்படி அழைக்கப் படுவதற்கு காரணம் உலகிலுள்ள ஐந்நூறுக்கும் மேற்பட்ட எரிமலை களில் மிக அதிகமான அளவு எரிமலைகள் பசுபிக் சமுத்திரங்களின் கரையோரங்களில் தான் உள்ளன. அதனால் தான் பசுபிக்சமுத்திரம் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகின்றது.
சி.உஷாநந்தினி
தரம் 11A யா/உ.ம.கல்லாரி.
ØSSØ 215)

Page 10
அனைத்துலகத் தொழுநோய் ஒழிப்புத் தினம்
அனைத்துலக நோயாளர் தினம் அனைத்துலக காதலர் தினம் மார்ச் 08 அனைத்துலக மகளிர் தினம்
அனைத்துலக குடிதண்ணிர் தினம் (1993) ஏப்ரல் 01 அனைத்துலக முட்டாள்கள் தினம்
O7 அனைத்துலக சுகாதார தினம் (1992) மே 01 அனைத்துலக தொழிலாளர் தினம்
O2 அனைத்துலக அன்னையர் தினம் O3 அனைத்துலக பத்திரிகைச் சுதந்திர தினம் 31 அனைத்துலக புகைபிடித்தல் தடுப்பு தினம் ஜூன் 03 அனைத்துலக தந்தையர் தினம்
26 அனைத்துலகப் போதைப்பொருள் எதிர்ப்பு தினம் චුg“ෙනඛ28 அனைத்துலக அகதிகள் தினம் செப் 28 அனைத்துலக் செவிப்புலனற்றோர் தினம் ஒக் 01 அனைத்துலக சிறுவர் தினம்
O2 அனைத்துலக வயோதிபர் தினம் O6 அனைத்துலக ஆசிரியர் தினம் O9 அனைத்துலக தபால் தினம் 15 அனைத்துலக வெள்ளைப் பிரம்புதினம்
(கண்புலனற்றோர் தினம்) 21 அனைத்துலக விவசாய தினம் நவம் 14 அனைத்துலக நீரிழிவு நோய் தினம்
фarib 01 அனைத்துலக HIV நோய் தடுப்பு தினம்
03 அனைத்துலக வலது குறைந்தோர் தினம் O அனைத்துலக மனித உரிமைகள் தினம்
த.கெளரீஸ்வரன்
தரம் - 10 யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி
6.16% 2)
 
 
 

ஆசனத்தை அலங்கரிப்பவர் "நடிகர் திலகம்” சிவாஜி கணேசன்
“உங்களை நடிப்பாலே கவர்ந்த மிகச்சிறந்த நடிகர் யார்’ என்று தென்னிந்திய நடிகை தேவயானியிடம் நிருபர் ஒருவர் கேட்டபோது "மார்லன் பிராண்டோ” என்று பதிலளித்தார். | உலகிலே அதிகளவு ஒஸ்கார் விருது களைப் பெற்ற ஆங்கிலேய நடிகர் மார்லன் பிராண்டோ. அவர் நடித்த “கோட்பாதர் " திரையுலகிற்கே திசை காட்டியாகத் திகழ்கிறது. தன் நடிப்பால் சர்வதேசத்தையே பிரமிக்க வைத்த மார்லன் பிராண்டோ விடம் ' உங்களை நடிப்பாலே கவர்ந்த மிகச்சிறந்த நடிகர் யார்? என்று ஆங்கிலேய நிருபர் ஒருவர் கேட்டபோது "சிவாஜி கணேசன்' என்று பதிலளித்தார். தன் இதயத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் திலகத்திற்கு தன் இல்லத்திலே விருந்து கொடுத்து மகிழ்ந்தார். மார்லன் பிராண்டோவையே தன் ரசிகராக்கிய மாமேதை சிவாஜி என்ற மகா சிற்பியை எம் சிறப்புவிருந்தினராக அழைத்துக் கெளரவிக்கின்றோம். விழுப்புரம் சின்னையா கணேசன் (வி.சி.கணேசன்) கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஏ.வி.எம் தயாரித்த 'பராசக்தி ” திரைப்படத்தில் அறிமுகமானார். படப்பிடிப்புக் காட்சிகளின்போது அவரின் நடிப்பினை பலர் அவரது காதுபடக் குறைத்துப் பேசினார்கள். எனினும் படம் வெளிவந்து புதிய சரித்திரம் படைத்தபோது தூற்றிய வாய்களெல்லாம் போற்றின. பராசக்தி தொடக்கம் படையப்பா வரையும் ஏறத்தாழ முந்நூறு படங்களில் நடித்திருக்கிறார். கட்டபொம்மன், ராஜராஜசோழன், வீரசிவாஜி, வ.உ.சிதம்பரனார், கொடிகாத்த குமரன், பரதன், கர்ணன், அப்பர், விசுவாமித்திரர், அம்பிகாபதி, காத்தவராயன், சிவன், சிக்கல் சண்முக சுந்தரம். இவர்களை சிவாஜியின் பிரதி விம்பங்களாகவே காண தமிழர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
(ହୁକ୍ତି)% ZT)

Page 11
ano ஏகலைவன் KaQ
சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று ஏட்டின் தோல்வியான பக்கங் கள் அரசியல் அத்தியாயங்களாக அமைந்திருக்கின்றன. இவரது ஒவ் வொரு அசைவும் நடிப்பினைப் பிரதிபலித்ததால் அரசியல் மேடைப் பேச்சும் நடிப்போ? என தமிழக மக்களை எண்ணத் தலைப்பட்டார்கள். அதுவே அரசியற் தோல்விக்கு அத்திவாரமிட்டுவிட்டது.
இவர் நடிப்பின் அனைத்துப் பரிமாணங்களை வேறொருவரைப் பார்த்து உருவாக்கிக் கொள்ளவில்லை. தானே தனது சொந்த முயற்சி யால் உருவாக்கிக் கொண்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் இறுதிக் காட்சியில் வீராவேசமாகப் பேசி நடிக்கையில் ரத்தம் கக்கி மயங்கி விழுந்து விட்டார். இப்படி உயிரைக்கொடுத்து நடித்த படம்தான் 1960 இல் கொய்ரோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் என்ற சிறப்பினைப் பெற்றுக் கொடுத்ததுடன் 1995இல் பிரான்ஸ் நாட்டின் " செவாலியர்" விருதினையும் ஈட்டித் தந்தது. வெளிநாட்டில் விருதுபெற்ற முதல் இந்திய நடிகர் இவர்தான். அமெரிக்க நகரமொன்றில் ஒரு நாள் மேய ராக (நகரத்தந்தை) இருந்த பெருமையும் இவருக்கு உரியது. அந்நகரத் தின் தங்கத் திறப்பினைக் கொண்டுவந்து மத்தியரசின் கைகளில் கொடுத்தபோது இந்தியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. (இந்தியா விடம் இப்போது இரண்டு தங்கத் திறப்புகள் உண்டு. மற்றையது நேரு ஒருநாள் "மேயராக” இருந்தபோது அமெரிக்கா கெளரவித்து கொடுத்தது)
திருவருட் செல்வர் படத்தில் நடிக்க தன் உணவைக் குறைத்து உடலை மெலிய வைத்திருக்கிறார். அப்பரின் ஒப்பனைக்கு மூன்று மணி நேரமும் அதனைக் கலைப்பதற்கு ஒரு மணி நேரமும் செலவ்ளித் திருக்கிறார். தெய்வமகன் படத்தின் தீயில் வெந்தமுகம் போன்ற ஒப்பனையைக் கலைக்கும்போது முகத்தோல் உரிந்து வந்திருக்கிறது. தோல் வளர்ந்த பின்புதான் மீண்டும் ஒப்பனை செய்தார். திரும்பக் கலைக்கும்போது தோல் உரிந்திருக்கிறது. இத்தனை சிரமங்கள் மத்தி யில் தான் சிவாஜி சிகரம் நோக்கிப் பயணித்திருக்கிறார்.
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே . '' UTL6) காட்சியின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாடற்காட்சியை நடிகர் திலகத்திற்கு விவரித்தார். காட்சியின்போது "வோக்கிங் ஸ்ரிக்” (கைத் தடி) சுழற்றியபடி ஒருவகையான லாவகத்துடன் நடந்துசெல்ல வேண்டும். இயக்குனர் நடக்கும் காட்சியை நடித்துக் காட்டி "இப்படி நடக்க முடி யுமா..?’ என்றார். உடனே சிவாஜிகணேசன் இருபத்தியொரு வகை
6.1% 2O2S)

a) ஏகலைவன் KINA
யான நடைகளை நடந்து காட்டி "இதிலே எந்த வகை வேண்டும் ” என்றார். இயக்குனர் மிரண்டு "ஐயோ சாமி. ! உனக்கு நடிக்கச் சொல்லித் தந்தது என்ர பிழை ’ என்றாராம். சிவாஜியின் நடிப்புத் திறனுக்கு இது சிறிய உதாரணம்.
பிற்பட்ட காலங்களில் சிறந்த கதாசிரியர்களும், இயக்குனர் களும் இன்மையால் சிவாஜியின் நடிப்பு வீணடிக்கப்பட்டது. பாரதிராஜா வின் "முதல் மரியாதை"க்கு பின் பதில் மரியாதை கொடுக்க திரை யுலகம் முன் வரவில்லை. சிவாஜியின் ஆசனத்தில் இருந்து பார்க்க ஆசைப்பட்ட கமலும் ரஜனியும் தேவர்மகனிலும், படையப்பாவிலும் நடிகர்திலகத்தைப் பயன்படுத்தினார்கள்.
தன்மகன் பிரபு நடிகனாக இருந்தும் கூட, தன் கலையுலக வாரிசாக கமலஹாசனை அறிவித்தார். இது பிள்ளைப் பாசத்தினைத் தாண்டிய அவரது கலைவெறியை இனங்காட்டுகின்றது. தன்னை எதிரி யாகக் கருதிய கண்ணதாசனை அன்பாலே உயிர் நண்பனாக்கிக் காட்டியவர். இன்று அவர் எம்மோடு இல்லை என்று கூறமுடியாத அளவிற்கு தன் நிழலைப் பூமியிலே பதித்துத் சென்றிருக்கிறார்.
தமிழ் உச்சரிப்பைக் கற்பிக்கும் நல்லதொரு ஆசானாக அவரது படைப்புக்கள் திகழ்கின்றன என்றால் மிகையானது. வரலாறு பேசியது போதும் அவரது வாள் வார்த்தைகள் பேசட்டும்.
மனோகரா
புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியிலே உலகத் தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே குளிர்நிலவைக் கொள்ளிக்கட்டை எனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அறநெறியின் இருப்பிடம் கருணையின்வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம்.
அவர்களை அவதூறு கூறிய உமது அங்கங்களைப் பிளந்தெறி வேன். இந்தத் துரோகப் பேச்சுக்கு உம்மைத் தூண்டிவிட்ட துர்த்தையின் உடலைத் துண்டாடுவேன். துணிவிருந்தால் ; தோளிலே வலுவிருந்தால் எடுத்துக் கொள்ளும் உமது வாளை ; தடுத்துக் கொள்ளும் உமது சாவை ! தைரியமில்லாவிட்டால் தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே
@% 219)

Page 12
m) ஏகலைவன் KMA
நீர் கோழையாகி விட்டிருந்தால் ஓடிவிடும். புறநானூற்றின் பெருமையை மூடவந்த புழுதிக் காற்றே புறமுதுகு காட்டி ஓடும். கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே கால் பிடரியில் இடிபட ஓடும்.
சோக்கிரட்டீஸ்
உன்னையே நீ அறிவாய்! கிரேக்கத்தின் கீர்த்தி புவனமறியாத தல்ல. அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயல்வது புண்ணுக்குப் புனுகுதடவும் வேலையைப் போன்றது. அதனால் தான் தோழர்களை சிந்திக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன். ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே! நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க இதோ சோக்கிரட்டீஸ் அழைக்கிறேன். . ஓடி வாருங்கள். வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தோழர்களே, இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் ஏற்றுக்கொள் ளுங்கள்.
வீரபாண்டிய கட்டப்பொம்மண்
கிஸ்தி, திறை, வரி, வட்டி, வேடிக்கை, வானம் பொழிகிறது. பூமி விளைகின்றது. உனக்கேன் கொடுப்பது கிஸ்தி, எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்ற்ம் இறைத்தாயா? நீரபாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? களனிவாழ் உழவருக்கு கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானம் கெட்டவனே? எதற்கு கேட்கிறார் வரி ? யாரைக் கேட்கிறாய் திறை ?
வரங்களே சாபங்களானால் இங்கே தவங்கள் எதற்காக ?
“கவிக்கோ” அப்துல் ரகுமான்

a)
Gil GöERDENLI
ஏகலைவன்
பூந்தென்றல் தேடுகின்ற
பொன்வண்டின் புத்திரர் நீர் பேந்தென்ன போராட்டப்
புயல்பற்றித் திறனாய்வு கடலுக்குள் இறங்காது கரையினிலே நின்றீர் - எம் பரதவர்க்கும் அலைமொழியை படிப்பிப்பேன் என்றீர்
ஈழத்தின் காயத்தை
எட்டிநின்று பார்த்துவிட்டு
ஆழத்தை விளங்காது
அவசரமாய் விமர்சனமா இதுவரை நாம் பட்டவலி இமயமலை உயரம் - வான் தூவுமழை துளிகளது கணக்கெடுப்பில் துயரம்
வெடிகுண்டு கவிபாடும்
வேட்டோசை கைதட்டும் அடிவானம் போல் தேசம்
அக்கினியாய் சிவந்திருக்கும் பிணம் பங்கு போட்டிடுவோம் போர்முடிய நாங்கள் - ஏன் இவை எவையும் புரியாது புலம்புகிறீர் நீங்கள்
வெள்ளிநிலா முற்றத்தில்
விண்மீன்கள் சுற்றத்தில் நள்ளிரவு நித்திரையில்
நாய் குரைத்து எழுப்புகையில் அச்சஉடை அணிந்தமனம் அடியுயிரைக் கலக்கும் - இங்கு பச்சைவெறி புகுந்தமனை பாலகரை இழக்கும்
குன்றாத மலையில்லை
குளிரோடை நதியில்லை
அன்றாட நிகழ்வேதும்
அழிவின்றி வரவில்லை
ØSASZ
须 勿扮

Page 13
ஏகலைவன் KAMA
ஆனாலும் மண்ணைவிட்டு அயல்நாடு போகோம் - எமை ஆள்வதின்றி சர்வதேச அகதியென ஆகோம்.
முத்தசத்தம் சுரம் பிரிக்கும்
மோக இசை கலைகளில்லை ரத்தமழை நனையாத
ராகங்கள் இங்கில்லை தாய்மடியில் உறங்குவதே தனயனது தாகம் - அந்த தமிழ்கனவை காப்பதற்கே தணலிலுயிர் வேகும்.
துன்பங்கள் சூழ்கையிலும்
துவக்குகளே ஆள்கையிலும் வன்முறையின் பாதையிலே
வரலாறு நீள்கையிலும் கல்லறைமுன் சபதமிட்டோர் கனவுமக்குப் புரியாது - எம் கடல்நீரின் ஆழத்தை கரைவலைகள் அறியாது
இ.சு.முரளிதரன்
(ஆசிரியர்) யா/உடுப்பிட்டி அ.மி.க.
தூரத்திலே இருந்த நிலாவைத் தொட்டான் ད། வெள்ளையன் ஆனால், அருகிலே இருந்த நீக்ரோவின் இதயத்தைத் தொடமுடியவில்லை. அவன் நிலவைத் தொட்டதும் நிலா வெள்ளை என்பதால் தான் நிலாவும் ஒருநாள் நீக்ரோ தானே ?
“ கவிக்கோ " அப்துல் ரகுமான்

வதிரி - இ.இராஜேஸ்கண்ணன்
"கிறிக்கட் விளையாடுகின்ற ஸ்ரேடியம் போன்ற ஒரு இடத் திலே மேகத்தின் "உச்சாரத்தில்” இருந்து ஒரு “பிளேன்” தலை குத்தென இறங்கி வந்தது. நடு "ஸ்ரேடியத்தில்” ஒரு பனையளவு உயரத்திலிருந்து படிகளின் வழியாக பல "கிறிக்கட்” வீரர்கள் சச்சினைப் போலவும், ஜெயசூரியா போலவும். பலர் இறங்கி வரு கிறார்கள். கடைசியாக அப்பா ஆ. அப்பா தான். பெரிய ஒரு சூட்கேசும் கிறிக்கட் பற்றும் கொண்டு இறங்கி வருகிறார். அம்மாவோடு கிறிக்கட் பார்க்க வந்த சஞ்சீவன் கையைப்பறித்துக் கொண்டு பாய்ந்தடித்து அப்பாவிடம் ஓடுகின்றான். டேய். புடியடா. புடியடா’. என்றவாறு சஞ்சீவனை துரத்திக் கொண்டு ரம்யன் ஆமிக்காரனைப் போல உடுப்புப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறான். அவனால் சஞ்சீவனைப் பிடிக்க முடியவில்லை. குனிந்து கல் லொன்றை எடுத்து எறிகின்றான். கல்லு அப்பாவின் தலையிலே பட்டு இரத்தம் 'குபீர்' என்று பாய்ந்தது. அப்பா தொப் பென்று விழுகிறார். ஐயோ அப்பாவைச் சுத்தி ரம்யனைப்போல உடுப்புப் போட்ட பல ஆமிக்காரர் வந்துநிக்கினம் சச்சின்போல ஆமி, ஜெய சூரியா போலை ஆழி . அப்பாவுக்குப் பக்கத்திலை பெரிய கிடங்கை வெட்டீனம். அப்பாவை தாழ்க்கப் போயினமாம் எண்டு
99
சொல்லினம் '.
துடிதுடித்து விழித்தான் சஞ்சீவன். அவனுக்கு உடலெல் லாம் வியர்த்துக் கொட்டியது. மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. அதிகாலைப் பாதித் தூக்கத்தில் வெடியோசை கேட்டு எழுந்தவன் போல படபடத்தான். அவனது மனம் நிலை கொள்ளாமல் உருக் குலைந்தது. "ஐயோ’ என்று அழுதுவிடலாமோ? என்று தோன்றியது. படுக்கையில் தன் முதுகின் கீழாக பல்லாயிரம் புழுக்கள் நெழிவது போன்ற உணர்வு. கண்களை இறுக மூடிக்கொள்கின்றான். முடிய
(SAMEZ 须 ア 223)

Page 14
a) ஏகலைவன் {ma
வில்லை. எழுந்து உட்கார்ந்தான். தன்னை நிதானித்துக்கொண்டு மீண்டும் மெதுவாகப் படுக்கையிலே சாய்ந்து சுவரிலே மாட்டப் பட்டிருந்த அப்பாவின் படத்தினை அண்ணாந்து பார்த்துக் கொண்டி ருந்தான். அவன் கண்கள் உடைப்பெடுத்தன. உயிர்கரைந்து கண் களின் வழியே "ஊத்துண்டது
- அருகிலே படுத்திருந்த தாய் அயர்ந்து தூங்கிக்கொண் டிருந்தாள். "அம்மாவை எழுப்பி விடுவமோ . சீ. வேண்டாம் ”
"அப்பா. எனக்குப் பயமாக்கிடக்குது. நீங்கள் வரமாட்டி யளே?. அம்மாவும் நித்திரை. அம்மாவைக்கூட எனக்குப் பிடிக்க யில்லை. அம்மா பொய்தான் சொல்லுறாபோல்ை கிடக்கு. அம்மா என்னிலை சரியான பாசம்தான். ஆனால் எனக்கு பொய்தானே சொல் லுறா. நீங்கள் எனக்கு "கிறிக்கட்பற்' 'போல் எல்லாம் வாங்கி வருவியளாம். அம்மா சொல்லுறது உண்மையே அப்பா ? ’ .
சஞ்சீவனின் மனம் அப்பாவோடு அழுதழுதே கதைத்துக் கொண்டது. கண்வழியே வழிந்த கண்ணீர் காதோரம் தலையணை வரை நனைத்துக் கொண்டிருந்தது.
G
" அப்பா நீங்கள் எப்ப வருவியள். எல்லாரும் வெளிநாட் டாலை வருகினம். நீங்களும் வரலாந்தானே. ரம்மியன்ரை அப்பாவும் வந்திட்டார். பிரவீணாவின்ரை அப்பாவும் வாற கிழமை வாறாராம். நீங்களும் வரலாந்தானே.வரேக்கை எனக்கு நிறையச் சாமான்கள் வாங்கி வருவியள்தானே. இல்லாட்டில் ரம்மியன் சொன்னமாதிரி. உங்களை? ”
சஞ்சீவனுக்கு மனம் துடியாய் துடித்தது. கண்களை இறுக மூடிக்கொண்டான். ரம்யன் சொன்ன வார்த்தைகள் அவனை வரட்டி எடுத்தன. விரிய முனைந்த எண்ணங்களை மனத்தினுள் இறுகப் பூட்டிக்கொள்ள முனைந்தான். முடியவில்லை. கண்களை விழித்து அப்பாவையே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்போல ஒரு வித உந்தல்.
படமாகி சுவரிலே தொங்கிய அப்பா நைற்பல்ப் கசிவிக்கும் மெல்லிய ஒளியிலும் அவனைப் பார்த்துச் சிரிப்பது தெரிகின்றது.
62.5% ്യഭ)

AN) ஏகலைவன்
"அப்பா நான் கனவுகண்டு பயப்பிடிறதைப் பார்த்து சிரிக் கிறார் போல ” தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.
"சஞ்சீ. என்னப்பு பயந்திட்டீங்களா?. கனவுதானே பயப் பிடக் கூடாது. இஞ்சை பாருங்கோ. அப்பா இருக்கிறன் பயப்பிடக் கூடாது . என்ன ”. என்று தன்னைப் பார்த்து அப்பா சொல்வதைப் போல ஒரு பிரமை.
"ரம்மியன்ரை அப்பாவும் இட்பிடித்தானே. வாங்கோ போங்கோ எண்டு ரம்மியனோடை கதைக்கிறவர். என்ரை அப்பாவும் அப்பிடித் தான் கதைக்கிறார் ’
"சஞ்சி உனக்கு தெரியுமா. எங்கடை அப்பா என்னை ஒருநாளும் டேய் எண்டு கூப்பிடுறதே இல்லை. அம்மா என்னை டேய் எண்டு கூப்பிட்டாலும் அப்பாவுக்குப் பிடிக்காது. உடனையே அம்மாவை ஏசுவார். தெரியுமா ? கோவம் வந்தால் கூட தம்பி ரம்யா' எண்டுதான் கூப்பிடுவார்’
ரம்யன் தன்னுடைய அப்பாவைப் பற்றிக் கூறிய வார்த்தை களிலுள்ள இனிமையை மனதினால் குடித்தது போலவும் அப்பா தன்னுடன் கதைப்பது போலவும் உணர்ந்தான் சஞ்சீவன். 蠍
மின்குமிழ் உமிழ்ந்து கொண்டிருந்த சந்தணம் குழைத்த ஒளி அப்பாவின் முகத்தில் பட்டு பிரகாசித்தது. அப்பாவின் முகத்தின் சாந்தம் உள்ளுணர்வை நிறைத்தது. இப்போது கனவின் ஏக்கம் கரைந்து வடிந்தது.
"டேய் சஞ்சி. என்ரை அப்பா நல்ல வடிவடா அப்பான்ரை சொத்தையில தடவினா. பஞ்சு மாதிரி. நான் அப்பாவின்ரை மடியிலை ஏறிநிண்டு கொண்டு அவற்ரை சொத்தையிலை 'உப்பா' கொஞ்சுவன். அப்பாவுக்கு அது பிடிக்கும் ரம்யா அப்பாவுக்க "உப்பா தாறிங்களா?. என்று சிலநேரம் அவரே கேட்பார்.” .
ரம்யன் சொன்ன வார்த்தைகள் அவனது மனத்தை உர சின. "என்ரை அப்பாவும் நல்ல வடிவுதானே. ரம்யன்ரை அப்பாவை விட என்ரை அப்பாதான் வடிவு. அப்பாவின்ரை முகம் எந்தநேரமும்
@% كم % 猩队

Page 15
சிரிச்சபடிதான். அப்பாவின்ரை மீசை நல்ல வடிவான மீசை. தொட்டுப் பாக்க வேணும் போலை ஆசையா இருக்கும். ரம்மி யன்ரை அப்பாவுக்கு சாடை மொட்டைத்தலை என்ரை அப்பா வின்ரை தலைமயிர் அந்த மாதிரி ’
அப்பாவின் அழகை "பிறேம் மினுள் சிறைப்பிடித்த புகைப் படத்தில் அனுபவித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவன். கறுப்பு வெள்ளைப் புகைப்படம். அப்பாவின் நெற்றியிலெ அம்மா ஒருநாள் விரதமிருந்த வேளை அப்பாவை வணங்கி இட்டுவைத்த சந்தனப் பொட்டு : நல்ல வடிவான ஒரு மாலைபோட்டு அப்பா எடுப்பான தோற்றத்தோடு இருந்தார்.
"அப்பா கறுப்போ ? வெள்ளையோ ? . வளத்தியோ ? . கட்டையோ?. தெரியாது. அம்மா ஏன் அப்பாவைக் கும்பிடுறவா? - - - - - ஏன் பொட்டு வைச்சவா?. செத்தவையின்ரை படத்துக்குத் தானே பொட்டு, மாலை, எல்லாம் போடுறதெண்டு 'நேசரியிலை ரீச்சர் ஒருநாள் சொன்னவ. அப்ப அப்பா. சீச்சி கடவுளின்ரை படத்துக்கும் பொட்டு, மாலை எல்லாம் போடுறவைதானே. அம்மா வுக்கும் எனக்கும் அப்பா கடவுள் மாதிரித்தானே. அதுதான் அம்மா அப்பாவை பொட்டு வைச்சு மாலைபோட்டு கும்பிட்டிருப்பா போலை. அல்லாட்டில் ரம்மியன் சொன்னது போலை அப்பா ? ’.
"எங்கடை பக்கத்துவீட்டு வினோதனின்ரை அப்பா வேறை இடத்துக்கு வேலைக்குப் போட்டு வாறவர் தானே. அவர் அவ்னுக்கு சின்னக்கதைப் புத்தகமெல்லாம் வாங்கியந்து குடுக்கிறவர். நல்ல நல்ல உடுப்புகளெல்லாம் எடுத்துவந்து குடுப்பார். அவனை தன்ரை சயிக்கிளிலை ஏத்திக்கொண்டு திரியிறவர். அவனுக்கு இரவிலை படிப்பிச்சுக் குடுக்கிறவர். சிலநேரங்களிலை சாப்பாடு கூட தீத்திற தைத் நான் ஆசைப்பட்டு பாக்கிறனான். ரம்மியன்ரை அப்பாவும் அப்பிடித்தான். செய்யிறவர். என்ரை அப்பாவும் வெளிநாட்டாலை வந்து என்னை மடியிலை இருத்தி கதை சொல்லித் தருவாராம், சாப்பாடு தீத்தி விடுவாராம். வினோதனின்ரை அப்பா அவனை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போறதைப்போல என்ரை அப்பாவும் என்னைக் கூட்டிக்கொண்டு போவாராம். இப்படியெல்லாம் சொல்லி
62.6% 须丞)

a) ஏகலைவன் Kuna
y'y
அம்மா ஏமாத்திப்போட்டா போலை
அவனது மனம் மீண்டும் முகாரித்தது. படிப்படியாக பொழுதும் புலரத் தொடங்கியது. நேற்று ரம்யன் சொன்ன அந்த சுமையான வார்த்தைகளின் பழு, இந்தக் கனவின் பின்னர் அப்பாவின் படத் தைப் பார்க்கப் பார்க்க சுவாசத்துளை வழியே இறங்கியது.
"அம்மாவை எழுப்பிக் கேட்டுவிடலாம்". என்று எண்ணிய வாறு தாயைத் தட்டி எழுப்பினான். அழுத விழிகளின் அர்த்தங்கள் தன் மனதில் கேள்விக் குறியாகி நிற்க தாய் துடித்துப் போனாள். "என்னப்பு சஞ்சி. ஏன்ராசா என்னத்துக்கு அழுகிறியள். சொல்லுங்கோ. என்னப்பு கனவு கினவு கண்டு பயந்திட்டியளே?. ஏன் அம்மாவை எழுப்பயில்லை. உப்பிடி அழுதுகிடக்கு. என்
99
60 L .......
நம்பிக்கைகளின் சிதைவால் அவனது நெஞ்சைப் பிளந்து பீறிடும் வார்த்தைகள் தொண்டைக் குழியோடு வலுவிழந்து விடவே பரிதாபத்துடன் தாயின் முகத்தைப் பார்த்தான். இதயத்தைப் பிழிந்த ரத்தத்துளிகள் கண்ணிராய் பனித்துக் கொட்டின. தாய் அந்தரித் தாள்.
"அம்மா என்ரை அப்பா எங்கையம்மா?. செத்துப் போனா ரோ ? .” தாய் இடிந்து போனாள். மெளனியானாள். "அம்மா. நான் அப்பா எங்கையெண்டு கேட்ட நேரமெல்லாம் அப்பா வருவார் எண்டு பொய் சொல்லிப் போட்டியள். என்னை ஏமாத்திப் போட்டியள் என்ன? . அம்மா என்ரை அப்பா வெளிநாட்டிலை இல்லை. செத்துப் போனாராம’.
உயிர் உருக அழுத அவனைக் கட்டுப்படுத்த முடியாத தாயின் கண்களும் உடைப்பெடுத்தன.
"அம்மா. அப்பா பயணத்தாலை வருவார். அவரோடை நாங்கள் கோயிலுக்குப் போவம். அப்பா வந்து சுபந்தனின்ரை தேப்பன் அவனுக்கு மடியிலை இருத்தி சாப்பாடு தீத்திற மாதிரி எனக்குத் தீத்துவாரெண்டு சொன்னியள். வினோதனின்ரை அப்பா அவனுக்கு கதைசொல்லிற மாதிரியும், புத்தகம் படிப்பிச்சுக் குடுக்
Q2 须 Z5)

Page 16
pama) ஏகலைவன் 

Page 17
a) ஏகலைவன் KANA
* சிவந்திருக்கும் கண்களில் தாய்ப்பாலை மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தும் மாமேதைகளே ! கண்ணின் சிவப்புக்கும் தாய்ப் பாலுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. குழந்தைகளின் கண் ணுக்கு அடிக்கடி மையிடுவதும் ஆபத்தானது. வளர்ச்சியின்மை, வலிப்பு, மனநிலை பாதிப்பு போன்ற சிக்கல்களை இது ஏற்படுத்தி விடும்.
ற்ேறிஹோம்
ஒழுக்கத்தைத் தரும் கல்வியே உள்ளம் நிறைந்த கல்வியே ஒழுங்காய் இருந்தே கற்று ஊக்கமாய் முன்னேறிடுவோம்
மரியாதை உண்டு பண்ணும் கல்வியே மனிதனை வாழ வைக்கும் கல்வியே மாரியாகப் பொழியும் சொற்களையே மளமளவென அடுக்கி விட்டாயே
பெருமை தரும் கல்வியே பெற்றோரை மகிழ்விப்பாயே பெருவாழ்வை அளிக்கும் செல்வமே பெண்களை வாழ வைக்கும் செல்வமே
சந்தோஷம் தரும் கல்வியே சாலைகள் எங்கும் நீடிப்பாய் - நீ சந்தேகம் தீர்க்கும் கல்வியே ஏழைகள் மனதில் நிலைத்திருப்பாயே
கல்வியே உனது கானம் எங்கே காவியமாய் தவழ்ந்திடுவாய் கல்லிலே பதிந்திருப்பாயே - நீ காலத்தில் நட்பை வளர்த்திடுவாயே கல்வியைப் போற்றுவோம் காலமெல்லாம்
தவராஜறஞ்சன் - சிவதாரணி யா/கொற்றாவத்தை அ.மி.த.க.பாடசாலை
g5Jib 9 A
63.0% 2)

தரம் 9 ஹாட்லிக் கல்லூரி * கலை இலக்கியச் சஞ்சிகைகளைத் தொடங்கியவர்கள் பின்னர்
ஏன் அம்முயற்சிகளைக் கைவிடுகிறார்கள் ? கலை இலக்கியங்கள் விலை மதிப்பற்றவை என்று பேசிப் பேசியே எமது சமூகம் விலை கொடுக்காமல் விட்டுவிடுவதால் தான்.
ம.காந்தரூபன் செம்பியன் லேன், கொக்குவில். * சிகரெட் பெட்டியில் "அரசாங்க எச்சரிக்கை " புகைபிடிப்பது
உடல்நலத்திற்கு கேடானது ' என்று எழுதியிருக்கிறதே அதன் பிறகும் எப்படி அதிக விற்பனை நிகழ்கின்றது? அரசாங்கம் சொல்லும் எதைத்தான் மக்கள் நம்புகிறார்கள். மருத் துவ எச்சரிக்கை என்று அதனை மாற்றுவார்கள் எனில் விற்பனை குறைய வாய்ப்பிருக்கின்றது.
தரம்மியா தரம் 11 யா/விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி. * கவிஞர்கள் , திரைப்படப் பாடலாசிரியர்கள் இருவருக்குமான
வேறுபாடு என்ன? கவிஞர்களிடம் கவிதை சுரக்கிறது. திரைப்பட பாடலாசிரியர்களிடம் கவிதை கற்க்கப்படுகின்றது.
" தண்ட வாளத்தில் தலை சாய்த்துப் பூத்திருக்கும் ஒற்றைப் பூ - என் காதல் நீ நடந்து வருகிறாயா ரயிலில் வருகிறாயா " இது பழநிபாரதியின் கவிதை. ஆனால் திரையிசைப் பாடலிலே இப்படி எதையும் அவரால் பதியம் போட முடியவில்லை.
த.செந்தூரன் வன்னிச்சி கோவிலடி, வல்வெட்டி. * வரலாற்றில் பெயர் பதித்த ஆயிரக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். அலி யாராவது உண்டா?
(SZ 235)

Page 18
w
தமிழ் இஸ்லாமிய வரலாற்றில் தன்னைப் பதிவுசெய்த மாலிக்கபூர் ஓர் அலிதான். இவன் இஸ்லாமிய மன்னனான அலாவுதீனின் தள பதி. கி.பி. 1310 இல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் புதல்வர் கTோன சுர் க்கும், வீரபாண்டி க்கும் ஏற்பட்ட அரசாட்சி போட்டியைப் பயன்படுத்தி தென்னிந்தியாவைக் கைப்பற்றினான். பின் அலாவுதீனை நஞ்சூட்டிக் கொன்று விட்டு அவனின் மூன்றாவது மனைவியை மணந்தான் (தான் அலி என்பதை மறைக்கத்தான்) பட்டத்து இளவரசனான முபாரக்கைக் கொல்லும் முயற்சியே தோற்று உயிரைத் துறந்தான்.
வி.கார்த்திகா தரம் 10 சாவகச்சேரி இந்துக் கல்லூரி. * யாழ்ப்பாண்த்தில் மிகவேகமாகப் பரவிவரும் நாகரிகம் எது?
நடமாடும் தொடர்பாடல் கருவிகள் தான். அதிலும் இந்தக் HERO HONDA வில் பயணம்செய்யும் இளைஞர்கள் சிலர், பெண்கள் கூடி நிற்கும் இடம்பார்த்து HERO HONDA வை நிறுத்தி அவசர அழைப்புகளுக்கு பதில் உரைப்பதுபோல் பந்தா' காட்டுவது சகிக்க முடியவில்லை.
ததுஸ்யந்தன் கரணவாய் தெற்கு, கரவெட்டி. * எதிர்கால சினிமா எப்படி இருக்கும் ?
நடிகர்களைக் கணனிகளே உருவாக்கிக் கொள்ளும் எம்.ஜி.ஆருடன் சிம்ரன் இணைந்து நடிக்க, பதினாறு வயது ஜெயலலிதாவுடன் மாதவன் இணைந்து நடிப்பார். ஆபாசம் தலைவிரித்தாட தணிக்கைக் குழு என்பது இல்லாமற் போய்விடும். தியேட்டரில் பதினெட்டு வய துக்கு மேற்பட்டோருக்கு விசேட கண்ணாடிகள் வழங்கப்படும். சிறுவர் களுக்குப் புடைவையிலே தெரியும் சிம்ரன் விசேட கண்ணாடியில் குட்டைப் பாவாடையில் தெரிவர். குடும்பத்தோடு தியேட்டருக்குச் செல்வது குற்றமாகக் கருதப்படலாம். தயாரிக்கும் படங்கள் அனைத் தும் முப்பரிமாண முறையில் அமைந்திருக்கும்.
அசுகிர்தராஜ்
2004 கலை யா/ உடுப்பிட்டி அ.மி.க.
* திருமண வீட்டிலே அதிக கவனத்திற்குரியவர் மாப்பிள்ளையா?
பெண்ணா ? வீடியோக்காரன்
@ 么 ØS)

崇
உடனுதவும் பகுதி KAMA
ஏகலைவன்
திநிமலேஸ்வரன்
2004 கலை உடுப்பிட்டி அ.மி.க "நாயுடு ஹால் மேட்டராக நான் ரெடி எண்னை அப்படியே உடுத்திக் கொள்ளநீங்க ரெடியா' என்ற மாடல் வரியில் வரும் நாயுடுஹால் மேட்டர் என்பதன் அர்த்தம் என்ன? நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமான கேள்வி. ஏனுங்க வேற கேள்வியே கிடைக்கலையா? நாயுடு ஹால் என்பது உள்ளாடை களை உற்பத்தி செய்யும் ஒரு பிரபல நிறுவனம். இப்ப பாட்டு வரி புரிஞ்சுதா,
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
இலக்கியம் தொடர்பான பொதறிவுகள் மூன்று வகையான நூல்கள் யாவை ? முதனூல், வழிநூல், சார்பு நூல் நான்கு யுகங்கள் எவை ? சிரேத யுகம், திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம், நான்கு பதவிகள் எவை ? சாலோபம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் நான்கு வகைக் கவிகள் எவை ? ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி
ஐவகை வாசனைப் பொருட்கள் எவை ?
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம் ஏழுபரிகளும் எவை? அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை ஏழு பிறப்பு என்பது எவை ? தேவர், மக்கள், விலங்கு, புல், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் அட்டமா மலைகள் யாவை? கைலை, இமயம், இமயமீந்தரம், விந்தம்தரம், நிந்தம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் ጎ அட்ட ஐஸ்வரியங்கள் யாவை ? இராசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை பெண்களின் எழு பருவங்கள் யாவை ? பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம், பெண்
ப.ராஜி தரம் 10 யா/உ.ம.கல்லூரி

Page 19
ந. சிவகுமாரன் யா/விக்னேஸ்வராக் கல்லூரி,
2003 கலை
ஹைக்கூ என்பது யப்பானில் வாமனஅவதாரம் மூன்றடியால்
உலகளக்கும் தத்துவ விசாரம். அந்த தேசத்தின் உற்பத்திப்பொருட்கள் எல்லாம் அளவிற் சிறியவை. ஆற்றல் பெரியவை. கவிதை உட்பட நான்கு அடியில் யப்பானின் தேசியகீதம் செதுக்கப்பட்டுள்ளது. ஹைக் கூவின் பிதாமகன் பாஷோ என்பவர் "ஆண்டுதோறும் கவிதை நடை மாற வேண்டும். மாதந் தோறும் புதிது புதிதாய் மலரவேண்டும்” என்ற சிந்தனை மிளிர்ந்த சிருஷ்டி கர்த்தா, ஹைக்கூ என்பதற்கு எளியஇதயம் அல்லது சுதந்திர இதயம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஹைக்கூவின் இலக்கணம்
1)
2)
3)
4)
5)
6)
7)
ஐந்து - ஏழு - ஐந்து என்ற அசை அமைப்புடன் மூன்று அடிகளால் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். - பருவமாற்றங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் விம்பங்களின் பிரதிபடுத் தற் காட்சியாக கவிதை சித்திரிக்கப்பட வேண்டும். ஜென் (Zen) என்ற புத்தமத தத்துவப் பார்வை காணப்பட வேண்டும். இரண்டு படிமங்களும், இவ்விரு படிமங்களிடையேயான ஆழ்ந்த கருத்துநிலைத் தொடர்பும் காணப்பட வேண்டும் வாசகனுக்கு கவிதையை விளங்கப்படுத்தக் கூடாது. அவனாகவே சிந்தித்து விளங்கக் கூடியதாக அமைக்க வேண்டும். சொற்சிக்கனம் பேணி தேவையற்ற வெற்று வார்த்தைகளையும், இணைப்புச் சொற்களையும் விலக்கிவிட வேண்டும். கவிதையின் இதயத் துடிப்பை ஈற்றடி கொண்டிருக்க வேண்டும். ஏனைய இரு அடிகளிலிருந்து பாய்ச்சப்படும் குருதியோட்டமே துடிப்புக்கு வடிகாலாக அமையவேண்டும்.
63% 么 须丞》
 

am) ஏகலைவன் KamaA
8) தலைப்பு இடப்படுதல் கூடாது :-
மேற்கூறிய இலக்கணங்கள் யப்பானிய ஹைக்கூவிற்கு உரித்தா னவை. இத்தனை இலக்கணங்களையும் தமிழில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து-ஏழு-ஐந்து என்ற அசைய மைப்பு, பருவமாற்றங்களின் பிரதிபலிப்பு, புத்தமதப் பார்வை, இரட்டைப் படிமங்கள் போன்றன தமிழிற்கு அவசியமற்றவை தமிழிலே எவ்வாறு ஹைக்கூவை அமைப்பது என்பதை நோக்கு (36), Tib.
ஹைக்கூவின் முதல் இரு அடிகளையும் ஒரு பகுதியாகவும், ஈற்றடியை இன்னொரு பகுதியாகவும் அமைத்தல் வேண்டும். ஹைக் கூவின் வலிமையும், வசீகரமும் ஈற்றடியில்தான் புதைந்திருக்கின்றது. அங்குதான் எதிர்பாராத கரந்தடிப்படைத் தாக்குதல் காத்திருக்கின்றது. முதலிரு அடிக்கும், இறுதி அடிக்கும் இடையே காணப்படும் முடிச்சே கவிதைக்கு முழுமையைக் கொடுக்கின்றது. தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் ஹைக்கூவைச் சிதைத்து விடுகின்றன. எனவே இணைப் புச் சொற்களைக் களைந்து விடவேண்டும். தந்தி மொழியைப் பயன் படுத்த வேண்டும். உயிர்நாடியான ஈற்றடியின் வெளிப்பாட்டுக்காய் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
வாழ்க்கை இதுதான் செத்துக் கொண்டிருக்கும் தாயருகில் சிரித்துக் கொண்டிருக்கும் குழந்தை
இது அறிவு மதியின் ஹைக்கூ "வாழ்க்கை இது தான் என்ற உபன்யாசத்தொனி ஹைக்கூவையே கெடுத்து விட்டதாக அப்துல் ரகுமான் சுட்டிக்காட்டி,
y9
சாகும் தாய், அருகில், சிரிக்கும் குழந்தை
என இதை அமைத்திருக்க வேண்டுமென விமர்சிக்கின்றார். ஹைக்கூ பற்றி முதலில் தமிழில் எடுத்துரைத்தவர் பாரதியாரே. ஆயினும் அதன் முழுப் பரிமாணங்களையும் விளக்கியவராக அப்துல் ரகுமான் காணப்படுகின்றார். :
உதிர்ந்த பூ
@2 须盔队

Page 20
a) ஏகலைவன் Óma
கிளைக்குத் திரும்புகின்றது. வண்ணாத்துப்பூச்சி. உதிர்ந்த பூ எப்படி மீண்டும் கிளையில் சென்று அமரும் .? இங்கு "ஹைக்கூ” கவிஞன் அந்த அதிசயத்தை நிகழ்த்தி விடுகின்றான். பூ உதிர்ந்த இடத்தில் அழகிய வண்ணாத்துப்பூச்சி சென்று அமர்வது அவனுக்கு உதிர்ந்த பூ கிளைக்குத் திரும்புவதாகத் தென்படுகின்றது.
எரிந்து விட்டது கூரை தெளிவாகத் தெரியும் நிலா
தன்வீட்டின் கூரை எரிந்துவிட்டதே என்று கவலைப்பட வேண்டிய நேரத்தில் கவிஞன் ஒருவன் மகிழ்ச்சியடைகின்றான். கூரை இருந்தபோது வீட்டுக்குள் இருந்த படியே நிலவை ரசிக்கமுடியவில்லை. இப்போது நிலா தெளிவாகத் தெரிகின்றது எனத் தத்துவம் பேசுகின்றான்.
தமிழிலும் பல ஹைக்கூக் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. மாதிரிக்காக . சில 1 முடிச்சுக்களை அவிழ்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.
நடுப்பகல் சுடுமணல் பாவம் .என் சுவடுகள்
கண்ணாடியைக் கொத்தும் சந்தேகச் சிட்டு > அவளுக்குச் சில அலகுகள்
- அறிவுமதி -
இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள் - அப்துல் ரகுமான் -
போதுமான ஆட்கள் ஏறியும்
புறப்படவில்லை புகையிரதம்
லயன்கள் - சு.முரளிதரன் -
(மலையகக் கவிஞர்)
636% 么 2 须堡》
 
 

a) ஏகலைவன் KAMA
மிலிறும்பிழந்துவிறுதி
குதிருமாறன் தரம்10^ யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி.
வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. திடீரென்று குளிர் காற்றுப் பலமாக வீசியது. சற்று நேரத்தில் மின்னல் ஆகாயத்தை கிழித்துக்கொண்டு தொடர்ந்தது இடியின் முழக்கம்.
பெஞ்சமின் பிராங்லினின் கையைப் பற்றியவாறு நடந்துவந்த மகன் கேட்டான் " அப்பா மின்னல் ஏன் மின்னுகின்றது ' இடிச்சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றதே என்ன காரணம் ?
பொடியனின் வினாவிற்கு அப்போது அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை. மகனிடம் இதனை ஒப்புக்கொண்டார். விரைவில் கண்டு பிடித்து கூறுவதாகவும் உறுதிஅளித்தார்.
அரசியல்வாதி, விஞ்ஞானி, பத்திரிகையாளர், சமூகசேவகர், கல்வி யாளர் எனப் பல துறைகளிலும் புகழ்பெற்ற பெஞ்சமின் பிராங்லிங், அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் 1706 இல் பிறந்தார். உடன்பிறந்த வர்கள் 16 பேர்.
மெழுகுவர்த்தி தயாரித்து வந்த ஏழை அப்பாவினால் மகனை இரண்டு வருடம்தான் பள்ளிக்கு அனுப்பமுடிந்தது. அப்புறம் விஞ்ஞானம், கணிதம், இலக்கணம், தர்க்கவியல் போன்ற பாடங்களை சொந்தமாகவே கற்று தெரிந்து கொண்டார் பிராங்லிங்.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் முன்வரைவினை எழுத தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் பிராங்லினும் ஒருவர்.
விஞ்ஞானத்தில் பேரார்வம் கொண்டபோதிலும் தமது 38வது வயதின் பின்னரே விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அந்தக் காலத்தில் மின்னல் மின்னுவதற்கும் இடி முழங்கு வதற்கும் உண்மையான காரணம் என்னவென்பது விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக இருந்து வருகின்றது.
(s)Z 须 么孩

Page 21
a) ஏகலைவன் KANA
காற்று மண்டலத்தின் மேல்படுக்கையிலுள்ள "கந்தக ஆவி' வெடிப்பதனால் மின்னல் மின்னுகின்றது என்றும் ; இடியோசை கிளம்பு கின்றது என்றும் சில விஞ்ஞானிகள் நினைத்தார்கள்.
இருப்பினும் ‘கந்தக ஆவி எங்கிருந்து வந்தது? திடீரென்று ஏன் வெடிக்கின்றது?’ என்ற வினாக்களுக்கு அவர்களால் பதில் கூற முடியவில்லை. மின்சாரத்தின் இன்னுமொரு வடிவமே மின்னல் ' என்று சில விஞ்ஞானிகள் கருதினார்கள். பிராங்லினுக்கும் இதில் உடன்பாடு இருந்தது. நிரூபித்துக் காட்டமுடியாமல் தடுமாறினார்.
ஒருநாள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்தார். ۔۔۔۔۔۔۔
உடனே அவர் முகத்தில் ஒளி படர்ந்தது. மின்னலில் மின்சாரம் உண்டா இல்லையா என நிரூபிக்க வழி தெரிந்தது. மகனின் துணை யுடன் ஒரு காகிதப் பட்டம் தயாரித்தார். பட்டத்தின் மேற்பகுதியில் ஓர் ஓயர்” (மின்கடத்தி) நீட்டிக் கொண்டிருக்கும்படி அமைத்தார். மின்னலில் இருந்து மின்சாரத்தைப் பெறவே இந்த ஏற்பாடு. அப்புறம் பட்டத்திற்கு கட்டும் நூலுக்கு பிரதிபொருளாக மெல்லிய கம்பியைப் பயன்படுத்தினார்.
பட்டத்தைப் பறக்கவிடும்போது மெல்லியகம்பியை கையில் பிடிப்பது கடினமாக இருக்குமே ?
இந்தக் குறையை களைய கம்பியின் முனையுடன் நீண்ட சாவியை இணைத்துக் கட்டினார். சாவி கைக்கடக்கமாகக் காணப்படுவத னால் கஷ்டமில்லாமல் பறக்கும் பட்டத்தைப் பிடித்துக் கொள்ளமுடியும். கம்பிவழியாக பாயும் மின்சாரம் சாவியிலும் பாயுமே. இதனைத் தடுப்பது எப்படி?
சாவியின் ஒரு முனைமட்டும் வெளியே தெரியம்படி விட்டுவிட்டு அதை சில்க்ரிப்பனால் (சில்க் துணியிலான நாடாவால்) கட்டி சில்க் ரிப்பன் மின்சாரத்தை அரிதிற் கடத்தும் இயல்புடையது. எனவே இதனைப் பிடித்துக் கொண்டால் "ஷாக்” அடிக்காது.
எல்லாம்சரி மழை பெய்யும்போது ஈரத்தில் நனைந்தால் சில்க் ரிப்பனிலும் மின்சாரம் பாயுமே.
இதனைத் தவிர்க்க ஒரு மாட்டுத் தொழுவத்தின் கீழ் பட்டம் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இடிமின்னல் கூடியநாளில் இந்தப்
63% 2)

a) ஏகலைவன் Kama
பட்டத்தை பிராங்லினும் மகனும் பறக்கவிட்டார்கள். சாவியைத் தொடு வதா வேண்டாமா என்று முதலில் சற்றுதயங்கி பின்னர் தைரியத்தை வரவழைத்துத் தொட்டுப்பார்த்தார். மின்சாரப் பொறிகைக்குள் அகப்படு வதை உணர்ந்து "விரட்" என்று விடுவித்து மகிழ்ந்தார். இதன் பின்னரும் ஆராய்ச்சிகள் பலவும் மேற்கொண்டு உலகிற்கு மின்னலில் மின்சார முண்டு அது பெரும் சக்தி கொண்டது என நிரூபித்தார்.
நன்றி.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் வன்முறைகளை அடியோடு அழிக்கவென வந்துதித்த எம்மினிய சிறார்கள் இங்கு வலிந்து தாக்கப்படுவது முறையா ?
பண்பெனும் உருவாய் பாடறிந்தொழுகி
பணிவுடன் அன்பினை நெஞ்சினில் எழுதி பாரினில் தோன்றிய மலர்கள் - இன்று
பாதை தெரியாமல் தவிப்பது ஏனோ ?
மானமும் வீரமும் உயிரென கருதி மாண்புடனே வாழ வேண்டுமென எண்ணி மாணவர் என்ற பெயருடன் இன்று மானமிழந்து தவிப்பது தகுமா?
சின்னஞ்சிறிய வயதில் இன்பமுடன் சிறகடித்து திரிய வேண்டிய நேரத்தில் சித்திரவதைப்படுத்தப்பட்டு - இங்கு சிறுமைப்படுத்தப்படுவது சரியா ?
எதிர்காலமெனும் ஏணிப்படியில் எதிர்பார்ப்புக்கள் பலவுடன் தோன்றியவர் எண்ணிறைந்த அடக்குமுறைகளை இன்று எதிர்த்துப் போராடாமல் இருப்பது ஏன் ?
அபவித்திரா (9) மு/யோகபுரம் மகா வித்தியாலயம்
யோகபுரம், மல்லாவி.
| GèYZ Z 須@

Page 22
al) ஏகலைவன்
குமாந்தரக்
நேற்று உன்னருகில் - மனம் நிறைந்த நிமிடங்களில் வேற்று நினைவுகளை - நான் விரட்டி அடித்திருந்தேன்
இன்று தனிமையிலே - என்
ஈர விழியிரண்டில் உன்னை இழந்ததினால் - துளி
உதிரம் கசியுதடா
கன்னந் தொடுகையிலே - என்
கவிதை பிறந்ததடா விண்ணே உனைப் பிரிந்து - நிலா
விதவை யானதடா
இரவில் பிரிவை எண்ணி - நான்
உறக்கம் தவிர்ப்பதுண்டு உறவே பிரிந்த் பின்பு என்
உயிரே தவிக்குதின்று.
உள்ளம் உருகி நின்றால் - என்
உணர்வைப் புரிந்துகொண்டு கல்லில் செதுக்கிவைத்த - அந்த
கடவுள் காக்கும் என்பாய்
கவிதை மொழிகளிலே - நான்
கண்ணிர் சிந்துகின்றேன் இவளின் உணர்வுகளை - அந்த இறைவன் அறிவானா
அடுத்த பிறவியிலே - நாம்
அன்பில் கூடிவாழ கொடுத்து வைத்திருந்தால் - அந்த
கோயில் தெய்வமுண்மை.
உநிரூஜா 2003 வர்த்தகம் "B" யா/இந்துமகளிர் கல்லூரி.
@ Z 须堡》
 

"ஏரகம் பொற்பதி வீதி, கொக்குவில். 05-11-2002
அன்புள்ள .
எப்பொழுதோ எழுதப்பட்டிருக்க வேண்டிய கடித மிது. 'ஏகலைவன் முதலிதழ் வந்த கையோடு கொழும் புப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. மீண்டதும் வேலைச் சுமைகள் எல்லாம் எழுத்து - பேச்சு - பொதுப் பணிகள்.
துரோணர்கள் என்றுமே ஏகலைவர்களோடு நியாயமாக நடப்ப தில்லைப் போலும்!
"அச்சு, வடிவமைப்பு பற்றியெல்லாம் நாம் நுணுக்கமாகப் பரி சீலிப்பதுண்டு. கணினி அச்சுக்கோப்பு யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகும் கூட, சிலர் மோசமான பதிப்பு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பலரிடம் அழகுணர்ச்சியே இல்லை. இந்நிலையில் எடுத்த எடுப்பிலேயே ஒரு சஞ்சிகையை அழகுற வடிவமைத்திருக்கிறீர்கள். கண்ணில் ஒற்றிக் கொள்ள வேணும்போல ! பாராட்டுகிறேன்.
கதை, கவிதைகளுடன் பல்துறைசார் கட்டுரைகளும் இடம்பெற் றுள்ளமை திருப்தி தருகின்றது.
மாணவர் பக்கங்கள் அவசியந்தான். ஆனால் திரும்பிய திசை யெல்லாம் உடுப்பிட்டி மகளிர் , அ.மி.க கண்ணை உறுத்தாது பார்த்துக் கொள்க’
“பள்ளிஎழுச்சி நல்ல கவிதைதான். ஆனால் அது கணை-2
இலும் திரும்ப வந்ததேன்? புரியவில்லை. பணி தொடரட்டும்
அன்புடன்
(3öFIT.II.
வடித்தெடுத்த வார்த்தைத் தொடுப்புக்களுடன் வியப்புறும் எண்ணத் தொகுப்புக்களையும் தாங்கிவரும் இருதிங்கள் இதழான 'ஏகலைவன்’ வாசக நெஞ்சங்களுக்கு மகத்தான வரப்பிரசாதம்.
@须 ހޗް///// 须匣该

Page 23
a) ஏகலைவன் KANA
ஆறாம் விரலிலிருந்து பதிவுகளில் படிந்துபோன போகின்ற அம்சங்களைத் தொகுத்தும், புதிதாக உருவாக்கியும் வழங்குவதில் நிகரற்று விளங்கும் இதழாக ஏகலைவன் நெஞ்சங்களில் தடம்பதிக்கிறது. 'ஏகலைவன்’ என்ற நாமமே அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் குறியீடு என்பது ஒரு வியத்தகு சிந்தனை. இந்தப் பதிவில் 'ஏது இல்லை என்றால் 'எல்லாமே உண்டு' என்பது தெளிவான உண்மை. கவிதை, கட்டுரை, சிறுகதை, பொது அறிவு விடயங்கள் தொடக்கம் சினிமா விமர்சனம் உட்பட அத்தனை அம்சங்களையும் கொண்டு வெளிவரும் ஏகலைவன் பிரசவிப்பு, யாழ் மண்ணுக்கே பெருமை.
வாசகர்களின் அறிவுத் தேடல்களுக்கு விழிசமைத்து அவர் களின் ஏக்கங்களுக்குத் தீனிபோடும் அதே நேரம், தேடலைத் தூண்டும் பரிசுப் போட்டியும். இதழின் ஆசிரியர் சு.முரளிதரனுக்கு வாசக உலகமே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
சுடர்ஒளி டிசம்பர் 03-09-2002
சினம் என்பதை அறியாது
சிரிப்புடன் வாழப் பழகுங்கள் அழுக்காறு என்பதை அறியாது
அன்புடன் வாழப் பழகுங்கள் துரோகம் என்பதை அறியாது
தூய்மையுடன் வாழப் பழகுங்கள் வேற்றுமை என்பதை அறியாது
ஒற்றுமையுடன் வாழப் பழகுங்கள்
குஜனனி
தரம் 8A உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
69.2% معکبر(
 

Aa) ஏகலைவன் Kuna
தேடல் போட்டி இல - 03
01) இலங்கையில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் (பத்திரிக்கை)
எது? 瘟 02) நோபல்பரிசை ஆண்டுதோறும் வழங்கிவரும் நிறுவனம் எது? 03) கிழக்குத் தீமோர் நாட்டின் அதிபரின் பெயர் என்ன? 04) ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய நாணய அலகு
எது? 05) உலகின் மிகப்பெரிய சிலை எங்குள்ளது ? 06) 2006 இல் G8 மாநாடு எங்கு நடைபெற உள்ளது ? 07) தமிழில் வெளிவந்த முப்பரிமாணத் திரைப்படம் (3D) எது? 08) உலகின் முதலாவது இஸ்லாமிய பெண் ஆட்சித் தலைவர் யார்? 09) குருதிச் சுற்றோட்டத்தைக் கண்டறிந்தவர் யார் ? 10) வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் காட்டிலே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சரின் பெயரென்ன?
தேடல் போட்டி இல 02 ற்கு சரியான விடைகளை எழுதி
ரூபா 200 = பரிசாகப் பெறுபவர்.
சரியான விடைகளை எழுதிப் பாராட்டுப் பெறுவோர்
செ.நிசாந் 8A உ.அ.மி.க
சி.பிரசாந் 8A உ.அ.மி.க
பா.சாருஜன் 5A உ.அ.மி.க தகோவர்த்தனன் 7A உ.அ.மி.க கு.யகந்தன் 5A உ.அ.மி.க 8A உ.அ.மி.க
த.கிரிதரன்
(ca)Z ހަށަހަށަހަށަހަށަހަށަހަކާ ZQ3)

Page 24
1) தலால் ஆஸ்மி 2) சத்யஜித் ரே 3) யா/உடுவில் மகளிர் கல்லூரி 4) ஹான்சி குரென்ஜே 5) நேட்டன் யாகு 6) பபிலோ பிக்காஸோ 7) நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 8) வைகோபால்சாமி 9) பிரதாபமுதலியார் சரித்திரம் 10) பென்டகன்
மாணவர்களே !
சிறுகதைகள், கவிதைகள், அறிவியற் செய்திகள், நகைச்சுவை விடயங்கள், கல்விக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை எழுதி அனுப்புங்கள். 150 சொற்களுக்குள்ளே அமைந் திருப்பது வரவேற்கத்தக்கது. உங்கள் ஆக்கங்களை 'ஏகலைவன்" ஆவலோடு எதிர்பார்க்கிறான். ஆக்கங்கள் சுய ஆக்கங்களாக இருத்தல் அவசியம் (பலர் வைரமுத்து, அப்துல்ரஃமானின் கவிதைகளை எழுதி அனுப்புகிறீர்கள். தவிர்த்துக் கொள்ளுங்கள்)
அனுப்ப வேண்டிய முகவரி: பிரதம ஆசிரியர், 'ஏகலைவன்’ யா/உருப்பிட்டி அ.மி.கல்லூரி - வல்வெட்டித்துறை.
KYZ 么 须堡》
 
 

SekOLOLOLOLOLOLOLOLOLOLOLOLOLYLOLOLOL OLOLO LOLOLOL YLOLOLOLOLOLe
உலகம் முழுவதும் பரந்த சேவை ! உடனுக்குடன் நிறைவுறும் உங்கள் தேவை !
s སྐྱེ་
·滕
绯
தொலைபேசி இலக்கம்: 070-212714 , 212781
(QQIG5IG) 0094-70-212714
OO94-70-21278
மாறும் உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வித்தியாலயம்
Uduppididy. Regd No.: K.V.D. 0160 EST : 07-02-1999
உரிமையாளர் : செ.சந்திரமூர்த்தி.

Page 25
)ெ Go )ெ (S CA) G Cr-a-a-a-a-a-a-a- () TARD ZNOJ TROJKZ লোেৰ)
உலகின் ஓரத்தில் நீண்டதாரத்
அருகழைத்து வரு பூனிமுருகன் !
துல்லியமான பேச்சோை
அள்ளி ஆனந்தம் த
கெருடாவில்,
உள்நாடு ( வெளிநாடு : 0
" சந்தமொழி சிந்திநிதட
இந்த இத விந்தையென
Muru (COmm
Kerudavil,
Dialog : 077
 
 

ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖୁଁ ଖଁ ଖଁ
நதில் காத்திருக்கும் உறவுகளை
வான்
தொண்டைமானாறு.
)70-212692
O94-7O 212692
ம் தந்த சுகம்கோடி
ளில் வந்திடுவீர் நாடி ”
a O Iñicatiom,
Thondaimanaru.
77 - 273732.
VKM. Road, Point Pedro.