கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரவன் 2008

Page 1

鶴

Page 2
'്യ്രബ്' (്വങ്ങ്.
ஒவ்வொரு மனிதனிடத்திலும் பல திறமைகள் மறைந்து இருக்கின்றன. அத்திறமையானது வெளிப்படுத்துவதற்கான களம் அமைவதுதான் கஸ்ற்றம். ஆதலால் கல்வி இலக்கிய கலை சஞ்சிகையான நான் திறமைகளை திறந்து எனது இதழில் தருகின்றேன்.
எழுதும் படைப்புக்கள் எல்லாம் மூட்டைகட்டப்பட்டு முடங்கி கிடப்பதும் உண்டு “வெளியிட முடியவில்லை” எனும் ஆதக்கம் ஒவ்வொரு படைப்ப்ாளிகளுக்கும் வருவதுண்டு. இதில் இளம் எழுத்தாளர்களை அதிகம் குறிப்பிடலாம். இதனை கதிரவன் கலை இலக்கிய சஞ்சிகையான நான் நிறைவேற்றுவேன்.
எழுதுங்கள் நல் ஆக்கங்களை படையுங்கள். “நான் வலம்
வருகின்றேன்” உங்கள் உள்ளக் கதவை திறந்து உள் இருக்கும் விடயத்தை எடுப்பதற்கு.
அனைவருக்கும் ஆண்டவன் ஆற்றலையையும் திறமையையும் படைத்துள்ளான். இதனை வெளிப்படுத்தாமல் துங்கி கிடத்தல் நியாயமா? “கதிரவன்” உங்கள் தூக்கத்தை திறக்கும் அதில் பல ஆக்கத்தை படைக்கும்.
*கதிரவன் ஆசிரியர்”
சமர்ப்பணம் ஆழிப்பேரலையால் அகால மரணமடைந்த.
ஆருயிர்களுக்கு.
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008 இதழினுள்ளே.
பக்கங்கள்
ல் வாழ்த்துச் செய்திகள் 2,3
கவிதைகள் 4ーア
கருத்தரங்கு தேருகிறேன் புரிந்துகொள் மனிதம் இல்லை மானிடம் மாறுமா? பங்குனி-2008 கட்டுப்பாடு புகைத்தல் சங்கம் ஒரு சில நாள் ஃ சிறுகதைகள் 8 - 7
மரங்கொத்தி பாடசாலைப்பை
மெழுகுவர்த்தி d6651)giggy மூத்தப்பா அழகிய வீடு கட்டுரைகள் 18 - 27
மட்/புதுக்குழயிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் வரையறுக்கப்பட்ட சரீரம் முநீலங்கா தேசிய மன்றம் பற்றிய குறுகிய விபரக்கூற்று. gogo NyITLabib 28 - 47 “அருகே ஒரு பாலைவனம்”
தெரிந்து கொள்வோம் 48
Örgoylf

Page 3
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
QsQábiá 6lasnfo
புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் “கதிரவன்’ என்னும் கலை இலக்கிய கல்விச் சஞ்சிகையை வெளியிட முன்வந்துள்ளமை பாராட்டிற்குரிய விடயமாகும்.
கலாசாரம், சார்ந்து பல்வேறுபட்ட பரிணாமங்களில் பிரதேச மட்டத்தில் மாத்திரமன்றி தேசிய மட்டத்திலும் முதன்மை பெற்ற கலைசார் தாபனமாக விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும். “கதிரவன்’ காலத்தின் தேவைக்கேற்ப பாரம்பரிய கூத்து, கரகாட்டம், இதிகாச புராண நாடகங்கள், சமூக சீர்திருத்த நாடகங்கள் முதலியவற்றில் முக்கிய பங்கேற்றிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.
சமகாலங்களில் நவீன நாடகம், கவிதை, சிறுகதை, வீதி நாடகம் முதலியவற்றில் கதிரவன் கலைக்கழகம் முக்கிய பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். கிழக்கு மாகாணத்திலே 2006 தொடக்கம் 850ற்கு மேலான வீதி நாடகங்களை நிகழ்த்தியுள்ளமை பாராட்டிற்கு மட்டுமன்றி சாதனைக்குமுரிய விடயமுமாகும்.
தேசிய இளைஞர் நாடக விழா 2008ல் “அருகே ஒரு பாலைவனம்” என்னும் குறுநாடகத்திற்கு தேசிய மட்ட விருதை வெற்றி கொண்டு பிரதேசத்தின் பெயரைத் தக்க வைத்த பெருமை இக்கலைக்கழகத்தையே சாரும்.
சமூக, சமய பணிகளில் ஈடுபடும் கதிரவன் கலைக்கழகம் வெளியிடுகின்ற கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை “கதிரவன்’ போல் பிரகாசிக்க எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
27.11.2008 கலாநிதி. எஸ். அமலநாதன் பிரதேச செயலாளர் மண்முனைப்பற்று.
 
 

QMQò6Hòấi OÀafiùG
வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டத்தின் (நெக்டப்) தாரக மந்திரமும், நோக்கமும், மக்களிடையே இயல்பாகவே புதைந்து கிடக்கின்ற அனுபவத்தையும், ஆளுமையையும், வளங்களையும், எதையும் இனங்காணக்கூடிய ஆற்றலையும், முடிவெடுக்கக்கூடிய திறமையையும், திட்டங்களை வகுக்கக் கூடிய ஆற்றலையும் சவால்களை முறியடிக்கக்கூடிய இயல்பையும் வெளிக்கொணர்ந்து, மக்களுடைய வாழ்க்கையை மக்களே சிறப்பாக மாற்றியமைப்பதற்காக அவர்களைப் பிறரை நம்பி வாழாது அவர்கள் காலிலேயே அவர்களை நிற்க வைக்கப் பழக்குவதாகும்.
இந்த நெக்டப் திட்டத்தின் நோக்கத்தை மக்களிடையே அவர்களுக்கு விளங்கக்கூடிய முறையில், அவர்களது வாழ்க்கையோடு தொடர்புபட்ட விதத்தில் விழிப்புணர்வு ஊட்டுவதற்கு நெக்டப் திட்டம் நடைமுறைப்படுத்தும் கருவி வீதியோர நாடகங்களாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்காக பொருத்தமான ஒரு ஆர்வலர் குழுவைத் தேடிய போது எங்களுக்கு சகல விதத்திலும் ஒத்தாசையும், ஒத்துழைப்பும் வழங்க முன்வந்தவர்கள் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழகத்தினராகும்.
இக்கலைக் கழகத்தினரைக் கொண்டு நெக்டப் திட்டம் தனது நோக்கத்தை படித்தவர்கள் தொடக்கம் பாமர மக்கள்வரை கிராமங்கள் தோறும் பரப்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் தங்கள் திறமையினால் மக்களை நெக்டப் திட்டத்தின் குறிக்கோளைப் பரப்ப உதவி வருகின்றனர்.
பால்நிலைச் சமத்துவம், சுற்றாடலைப் பேணல், சுகாதாரப் பழக்க வழக்கங்கள், சிக்கன வாழ்க்கை சமூக அபிவிருத்தி இன்னோரன்ன விடயங்களில் இவர்கள் தங்கள் திறமையினால் பல வீதியோர நாடகங்களை தயாரித்து இயக்கி மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். எனவே இந்த விடயங்களில் அவர்களது ஆற்றலும், அனுபவமும், திறமையும் பாராட்டப்பட வேண்டியதாகும். அவர்களது திறமையினால் மாவட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நாடகம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுவது இதை உறுதிப்படுத்துவதாகும். எனவே தற்போதைய கால கட்டத்தில் கலைப் பணியை வழங்கி வரும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக் கழகத்தின் கலைப் பணி மேலும் தொடர்ந்து இனிவரும் காலங்களிலும் எமது சமூகத்திடையே விழிப்புணர்வையும், கலை ஆர்வத்தையும் வளர்க்க அவர்களது ஆற்றல் பயன்பட வேண்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
எஸ். சாமித்தம்பி, மாவட்டப் பிரதித் திட்டப் பணிப்பாளர், வடக்கு கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டம் (நெக்டப்)
O5. 2.2008
LDLLd556TL.

Page 4
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
δ(ΦΦΦ9(6)ώ அறிமுகம் இல்லா முகங்களாக. அறிவகம் வருவோம். அறிவு பல கற்றிடவே.
ஓர் இரு நாட்களில். உறவாகுவோம். ஐந்தாறு நாட்களில் - பிரியாத உயிர் ராகுவோம்.
அன்பெனும் கயிற்றால் பினைவரும் கட்டுண்ரு. அழகாக வாழும் சிலநாட்கள்.
அறிவக கதவுகள் (96.DLlbf (3D.gib அறியாத வரைக்கும்.
வார்த்தைகளால், செயலால் வரம்பு மீறி நட்பாகுவோம். சேர்ந்த கரம் விரும்போது செத்து மழயும் உடலாவோம். தனியாக, குழுவாக.
56 fig6) disp65)f06Dul..... நிலை நாட்டுவோம் - நாம் தனியாக பிரிகின்ற தருணழ் வரும் போது தரணியையும் வெறுத்திருவோம். வேறொன்றும் இல்லை வேதனை தரும் செயல். வேர் ஊன்றி நிற்கும் ஆலை - அன்பு விழுதுகளாய் தொங்கிருவோம்.
மறதி இல்லா விட்டால் - எம் மரணங்கள்தான் மலியும். அன்பினால் சாதிப்போம் - உறவு பிரிந்தாலும், மழந்தாலும் . சரித்திரம் படைப்போம் உறவுகளின் உணர்வுகள் -எம் உயிரில் உள்ளவரை.
தேடுகிறேன்.
வேலியோரம் நின்றிருந்த. வேம்புதனில் கம்பு வெட்ழ நாளுக்கு கால் நாட்டி. வைக்கோலிலே கூடாரமிட்டு கூழ வாழ்ந்த குழசையெங்கே?
வாசலிலே மரவெள்ளி. கிணற்றழயில் சிவப்புக்கீரை. குழலருகே கொச்சிக்காயும் குலைகுலையாய் இளநீரும் பருகிக் கொள்ள-பால் கொருத்த tuđFLOTI’b tu'oup6oñ6ab5?
பக்கத்து வாழமிலே. பலபிள்ளைகள் பெற்று பட்ழனி தெரியாமல் பாசத்தோரு வாழ்ந்த. பத்தினியின் குரும்பமெங்கே? வாய்க்கால் ஒரமாய். வரம்பினிலே கல்லை வைத்து ്യത്ത് കെfig. வழிபட்டு வந்த கிராமியத் தெய்வமெங்கே..? உழுதுகளைத்த பின்னும் உண்டு மகிழ்ந்த பின்னும் வெயிலுக்கு ஒதுங்கி உறங்க நிழல் கொருத்த நிழல் வாகை மரமெங்கே..?
குளத்திலே கூடு வைத்து கொழுத்த விரால் பிழத்து. குளம்பு வைத்து பொரித்தும். குருனல் அரிசி சோறுடனே. நாக்கு சுவைக்க திண்ட - காலம் நாளைவருமா? தேருகிறேன்.
=リー

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
புரிந்து கொள்
66------------ ஏக்கங்களை தேக்கி வைத்து என்ன செய்யப் போகிறாய் பிள்ளையார் பிழத்தாலும் சரி குரங்கானாலும் சரி
எதை பண்ணித் தொலைத்தாலும் பறவாயில்லை போல்தான்
இருக்கிறது எனக்கு.
நான் சாதாரன மாகத்தான் இருக்கிறேன்
எனது மனசுதான். - உன் அங்கீகாரம் தேடும் பிழவாதத்தில் ஒரு தீவிரவாதியாய்
உனக்கு கூட வாழ்க்கை பிறப்பில் இருந்துதான் தொடங்கியிருக்கும் எனது வாழ்க்கை. தீர்த்தத்தை விடவும் தித்திப்பான உனது வார்த்தையிலிருந்துதான்.
தெரிந்த விடயம்தானே. (9,605----- தெரிந்து கொள்ளவும் தெரிவித்து கொள்ளவும் ஒத்திகை பார்த்து பார்த்து - ஏனழ ஒத்தி வைத்துத் திரிகிறாய்.
பூமி எந்த அச்சில் சுழல்கிறதோ. எனக்குத் தெரியாது
ஆனால். எனது வாழ்க்கை சுழலப் போவதுமட்டும் உனது வார்த்தை அச்சில் என்பதை புரிந்து கொள்.
- த. தயாபரம் -
முனிதம் இல்லை
காய்த்த மரம் நிற்கின்றது - அது காயும் கனியும் தருகின்றது பூத்த பூமரம் ஜொலிக்கிறது - அதன் பூவும் அழகாய் சிரிக்கிறது.
கூவிக் குயிலும் பறக்கின்றது - அதன் குரலும் காதில் கேட்கின்றது கூவிச் சேவல் விழிக்கின்றது - தினம் காலைப்பொழுதும் விழகின்றது.
பச்சை கிளியும் திரிகின்றது - இங்கு பறவைகள் எல்லாம் வாழ்கின்றது பூச்சி புழுவும் மிருகங்களும் - மண்ணில் புகழும் சிறப்பும் பெறுகின்றது.
ങ്ങി, മഞ്ഞിൺ ിറ്റ്രഗ്രി - 9ഖ് மாண்புறுவாழ்க்கை அடைந்தானா? மனிதப் பிறவி மகா பெரியது - பலர் மனிதன் இல்லை, மனிதம் இல்லை.
- த கோபாலகிருஷ்ணன் -
ՖՍ(6ծԾզ6
கதைக்கும் போதும் கட்டுப்பாடு விதிக்கிறாய் கனவிலும். கட்டுப்பாகு விதிக்கிறாய் ബ്ഞങ്ങ് 'ക്രി ஏன்? கட்ட மறுக்கிறாய்.
妾=

Page 5
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
06്Lb OgO?
எப்போ. மாறும் - இந்த losTGof soL60)to.... கருவறை முதல். கல்லறை வரை. - துயரால் கட்டுண்ட கொருமை.
பெண் சிசுவா? - அன்று பிறந்ததும் கொலை வளர்ந்த மங்கையர் - இன்று ഖj'rതെങ്ങ് 6ിഞ്ഞുണ്. எப்போ. மாறும் - இந்த LOMJ60s tot 6DLo.
சிதறுண்ட மனித இனம் சீரழிந்த பூவுலகம். போதையும் போரும் பேரழிவு தரும் பேராயுதமும் - எம் மனித இனத்தில். எப்போ மாறும் - இந்த loséof OL60)0.
பஞ்சமா பாதகமும் - மனித நெஞ்சிலே நேயமில்லை. மாறுமா..? இப்புவி. நித்தியம் நிம்மதியாய். சரணடைந்தோம் பொற்பாதம் தூய அன்போரு - இறைவா! எப்போ மாறும் - இந்த fosT6f to 6Dio.
- ம. றோகனகாந்தன் -
கல்முனை.
Uங்குனி - 2008
மண்ணில் மழை பொழிய மனதில் மகிழ் வொழிய வெள்ளம் வருமோ! சுனாமி வருமோ! மனது தருமாறுதம்மா.
பங்குனி மாத வெயில் வழமைக்கு மாறாக. மழையாக மாறிய தேன்?
காலத்திலும் காணாத. காலநிலை மாற்றங்கள் விஞ்ஞானத்தின் நிந்தையா? மெஞ்ஞானத்தின் விந்தையா?
வெயில் நேரம் மழை பொழிய மழை நேரம் வெயில் எரிய. சந்தேகமும் சஞ்சலமும் மனிதனின் இயல்புதான். இதையெல்லாம் பார்த்தவர்கள் இன்னுமும் திருந்தவில்லை காலம் கெட்ட தென்பார் கண் கெட்ட கடவுள் என்பார் கண்மூழத்தனமாக. கலியுகம் அழியுதென்பார் உண்மை நிலை அறியாதோர்.
இயற்கையின் இயல்பான. மாற்றங்கள் இதுவென்பேன் இறைவனின் சக்தியால் இவை யெல்லாம் நடக்குதென்பேன்.
- என். சறோஜினி

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
ஒரு சில நாள்.
(9dysfjbdafush (360 காதலிக்க அறியாத காலத்தில். காதலை கற்று தந்தாய் - ஏன் சில நாட்கள். என்னை விட்டுச் சென்றாய் மனசெல்லாம் நீ உள்ளாய் ஆயிரம் தடவைகள் - உன் நினைவாலே. நான் என்னையே மறந்ததுண்டு எமது பிரிவு. நிரந்தரமில்லை. SS இருந்தாலும் - என் இதயம் ஏற்குதில்லை எத்தனை ஆண்டுகள். எடுத்தாலும் - என் ஆருயிரே - மறந்துவிடாதே என்னை விட்டுப் பிரிந்துவிடாதே.
புகைத்தல் சங்கம்
புகைத்தல் எச்சரிக்கை பெட்டியில் போட்டாலும் புகைத்தல் தடை - அரசு dro_ћањ6i 6ил"Lпgih – ćoep6o அச்சழக்கப்பட்ட வசனங்கள்.
கிறவல் வீதிகள் - தார் வீதிகளாய் மாறும் வரை உடல் கலங்கள் பழுத்து அழுகும்வரை. கின்னஸ் சாதனைக்காய் விடாமுயற்சி செய்வார்கள் புகைத்தல் சங்கத்தினர்.
- த இன்பராசா -
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகைக்காக சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் கதிரவன் கலைக் கழகத்தின் நன்றிகள் உரித்தாகுக.
考立た=

Page 6
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
மாங்கல்ய தாரணம் மதிய போசனம், பரிசுப் பொருட்கள் வழங்கி வாழ்த்துதல் என்னும் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான கட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. காலையில் இங்கு வந்ததிலிருந்து வீடியோக் காரனான என்னை மாலா எனப்படும் இந்த மணப்பெண் மிகவும் கடுப்பாக்கி விட்டிருக்கிறாள். ஆனாலும் ஒரு பெண்ணுக்கு, மணப் பெண் அலங்காரத்துடன் நிற்கும் ஒரு பெண்ணுக்கு இவளவு அடாவடித் தனமும் கொலை வெறியும் கூடாது. என்னை முதலில் திருமண மண்டபத்தை படம் பிடிக்கச் சொன்னாள், பின்னர் தாலி கட்டும் போது படம் பிடிக்கச் சொன்னாள், பந்தியை படம் பிடிக்க ஆயத்தமானபோது துர்க்கையம்மனாகி ருத்திர தாண்டவம் ஆடினாள் இப்போது வீடுவளவு சீதனம் எழுதுவதனையும், திருமணப் பதிவினையும் மட்டும் படம் எடுக்கச் சொல்லிக் கட்டளையிட்டு விட்டு பதிவாளருக்கு கதிரை மேசை ஒழுங்கு செய்கின்றாள்.
மாலாவின் மூன்று அக்காமாரும் அத்தான்மாரும் பிள்ளைகளும் இவளுடன் முகம் கொடுத்துப் பேசக் கூட இல்லை. ஏனோ தானோவென்று 'எப்போது இங்கிருந்து புறப்படலாம் என்று தவிப்போடு இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது.
மணப் பெண்ணின் மூத்த மச்சான் முகுந்தன்தான் என்னை இங்கு அழைத்து வந்தவர் எனக்குத் தூரத்து உறவினரும் கூட.
எனக்கு மனம் பொறுக்கவில்லை “ஏன் முகுந்தன் அண்ணா மாலா தாய், தகப்பன், ஆண் சகோதரம் இல்லாத பின்ன உங்கட பிள்ளையாகவே வளர்த்தனிங்கள். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையையும் அமைச்சுக் கொடுக்கிறீங்கள் பின் ஏன் வெளி விறாந்தையில் நிற்கிறீங்க? உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டாயிற்று.Y “மாலா மாறி விட்டாள் தம்பி இவள்ட பன்ரெண்டு வயசுல தாயும், பதினைஞ்சு வயசுல தகப்பனும் செத்துப் போக நாங்க மூன்று மச்சான் மாரும் எங்கட பெண்சாதி மாருமா அவள பெத்த பிள்ளையள விடவும் மேலாகத்தான் போற்றி வளர்த்தனாங்க, இப்பகூட தாயதி வீடு, காணி பூமி என்று எதுவுமே நாங்க தொடாம பாதுகாத்து அவளிட்டயே ஒப்படைச்சிட்டம், சீதனம் பத்து லட்சம் தாலி மற்ற கல்யாணச் செலவுகள் எல்லாம் நாங்க மூன்று குடும்பமும் சேர்ந்துதான் செய்யிறம்”.
“தெரிந்த விசயம்தானே முகுந்தண்ணன். இப்ப குழப்பத்துக்கு என்ன காரணம்?” “தம்பிராஜன் அவள் கல்யாணம் என்ற பெயரில கல்லக்கட்டிக் கொண்டு கடலுக்குள்ள இறங்கியிருக்கிறாள்டா. தாலிக் கயிரு என்று நினைச்சு கழுத்தில சுருக்குக் கயிரு மாட்டியிருக்கிறாள்” “என்னண்ணன் சொல்றீங்க முறையாய் பேசின கல்யாணம் என்று கேள்விப்பட்டன், ஓம் தம்பி இவளுக்கும் நாற்பது வயதாகுது. எத்தனையோ இடம் பார்த்து செவ்வா தோஷம் அது இது பரிகாரம் என்று காலம் கடந்ததுதான் மிச்சம். இந்த சம்மந்தம் சரி வந்தது. எல்லாம் பேசி பொருத்தமும் பார்த்தாச்சி, அப்பதான் என்ட சகலன் அதுதான் மாலாட மூன்றாவது அக்காட புருஷன் பாஸ்கர் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிச்சுக் கொண்டு வந்து அதிர்ச்சியான தகவலைச் சொன்னான்’ ‘அப்படியா? என்ன சொன்னவர்?’
இவன் இந்த மாப்பிள்ளை ஏற்கனவே மூன்று இடத்தில திருமணம் செய்தவனாம். கல்முனையில் முதல் கல்யாணம். ஒரு வருஷத்திலேயே பிரச்சினைப்பட்டுப் பிரிஞ்சு போய் மட்டக்களப்பில அவன்ட சொந்த மாமன்ட மகளை

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
கல்யாணம் பண்ணி அவளோட ரெண்டு வருஷம் பிறகு அவளோடையும் பிரச்சினைப்பட்டு குழந்தை இல்லை என்று சாட்டுச் சொல்லித்துப் போய், தான் புது மாப்பிள்ளை என்று பொய் சொல்லி அக்கரைப்பற்றில ஒரு ரீச்சர் பிள்ளைய கல்யாணம் பண்ணியிருக்கிறான். ஒரு வருஷம் முடிஞ்சி உண்மை தெரிஞ்சி அங்க இருந்து இவன துரத்தி விட்டுத்தாங்கள் இவன் இப்ப இங்க வந்து புது மாப்பிள இவன இதற்கு முதல் பொய் சொல்லி, புது மாப்பிள்ள என்று சொல்லி விற்றது போல் இவன்ட சகோதரிகள் தம்பி இவளவு காலமும் வெளிநாட்டில் இருந்தவன் என்று பொய் சொல்லி ஏமாற்றி எங்கட தலையில கட்டிவிட்டு ஐந்து லட்சம் கொள்ளையடிக்க தயாரான போதுதான், பாஸ்கர் உண்மையை அறிஞ்சு கொண்டு வந்து சொன்னவர். உடனே மாப்பிள்ளையிட வீட்டரக் கூப்பிட்டு எச்சரிச்சுப்போட்டு இத நிற்பாட்டுவம் என்று எல்லோரும் முடிவெடுத்த நேரம்தான் மாலா எங்கட தலையில கல்லத் தூக்கிப் போட்டவள்’.
“மாலாவை எனக்கு பள்ளிக் கூட காலம் தொடக்கம் தெரியும் முகுந்தண்ணன், சீர் திருத்த எண்ணமும் முற்போக்குமான ஒரு ஆள் அப்படியிருக்க என்ன குழப்பம்?”
தம்பி, அவள் எதையுமே காதில வாங்கிக் கொள்ளல்ல. இதுக்கு மேல மாப்பிள்ள நீங்க செய்துதான் கொண்டு வர வேண்டும், நீங்க என்னைப் பார்த்தது போல் உங்கட பிள்ளையஸ் பார்ப்பாங்களா? கடைசி காலத்தில எனக்கு ஒரு கெதியும் இல்ல. ஆம்பிள்ளையஸ்ள யாரும் ராமனும், இல்ல. எல்லா ஆம்பிளையும் இராவணனும் இல்ல என்றெல்லாம் தத்துவம் பேசி ஒற்றைக்காலில் நின்று இன்று நான்காம் தாரமாய் தாலிவாங்கி நாசமாகி நிற்கிறாள்.
அவர் சொல்லி முடிக்கவில்லை மாலாவின் சொல்லம்புகள் துரத்தி வந்து என்னைச் சூழ்ந்து கொண்டன. “இங்க ரெஜிஸ்ட்ரேசன் நடக்குது இதக்கவரேஜ் பண்ணாம கமராவக் கொண்டு வச்சி அங்க என்ன கதாப் பிரசங்கம் நடக்குது? ஒழுங்கா வேலையைப் பாருங்க”. மாப்பிள்ளையை நோக்கி என் கமெராவை நிமிர்த்தும் போது என்மனம் நினைத்துக் கொண்டது. “கமராவுக்குப் பதில் என் கையில் ஒரு துப்பாக்கி இருந்தால் மாதரையெல்லாம் மண்ணாங் கட்டிகள் என்று நினைத்து மனம் போன படி ஆட்டம் போடும் இந்தக்காட்டு மிராண்டியை” சாட்சி கையெழுத்துப் போட வாங்க! விமலா அக்கா போடுங்க! “கையெழுத்துப் போடுவதிலேயே பால் நிலை சமத்துவம் பேணும் மாலாவின் கட்டளையில் என் கற்பனைக் குதிரை கவிழ்ந்து போனது’.
முகுந்தன் அண்ணாவின் மனைவியும் மாப்பிள்ளையின் மூத்த சகோதரியும் திருமணப்பதிவில் சாட்சிக் கையெழுத்துப் போட்டு முடிக்க எனது உதவியாளனும் தன் லைட்டை அணைக்க நான் புறப்படும் அவசரத்துடன் முகுந்தன் அண்ணனைத் தேடுகின்றேன். அவர் வரவேற்பு பலகையையும் வாழை தோரணங்களையும் பார்த்துக் கொண்டு, மனைவி, பிள்ளைகளை எதிர்பார்த்துக் கொண்டு வீதியில் நிற்கின்றார். “எடிட்டிங் சம்மந்தமாகவும், அல்பம் செய்வது சம்மந்தமாகவும் கதைக்க வேண்டும்’ நான் மாலாவிடம் சொல்ல “சரி தம்பி அத்தான் ஆக்களோட கதைப்பம் என்று விட்டு” வெளியில் நிற்பவர்களை அழைக்கின்றால். அக்காக்கள், அத்தான்கள் எல்லாரும் ஒரு நிமிஷம் தயவு செய்து வந்து நான் செல்வதைக் கேட்டுத்துப் போங்க. சொல்லிக் கொண்டே அவர்களிடம் ஒடிச் செல்கின்றாள். அவர்களின் கால்களில் விழுகின்றாள். “எல்லோரும் என்னை மன்னித்துக் கொள்ளுங்க, தம்பி ராஜன்! இங்க வா! வீடியோக்கசட்டக் கழட்டி பெரிய அத்தான்ட கையில கொடு!” என்ன! என்ன சொல்றீங்க? எடிட்டிங் செய்து சீடிக்கு மாற்றித் தாறன்!” “தம்பி

Page 7
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
நான் சொல்றத மட்டும் நீ செய். அந்த வேலையெல்லாம் அத்தான் இரவைக்கு அவங்கட பொலிஸ் ஸ்டேசன்ல வச்சுச் செய்து கொள்ளுவார் நீ வீடியோ கசட்டைக் கழட்டிக் கொடு!” அழுகின்றாள். இன்று முழுவதும் புலி போல் தனி ஆளாக தனது திருமண நிருவாகத்தினைத் தானே நடத்தி முடிந்த அப்பெண்ணா இவள்? இவள் பூவா? புயலா? எனக்கு ஒரே குழப்பம். என்ன நடக்கிறது இங்கே? எல்லோரும் கூடி விட்டார்கள். மாப்பிள்ளையும் சகோதரிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பேயரைந்தவர்களாக வீட்டு வாசலில் நிற்கின்றனர். மாலா தொடர்கிறாள் “பெரியத்தான் அத்தான் என்று கூப்பிட்டாலும் நீங்க என்றைக்குமே எனக்கு அப்பாவாகத்தான் இருந்திருக்கிறீர்கள். அடுத்த மாசம் இளைப்பாறப் போற உங்கட இத்தனை வருட பொலிஸ் வாழ்க்கையில சட்டம், ஒழுங்கும் கடமை கண்ணியம் கட்டுப்பாடும் உங்கள் மூச்சாகவே இருந்தது.
ஆனா கடந்த ஒரு வாரமா நீங்க கொஞ்சம் தடுமாறிப் போயிட்டிங்க. பல பெண்களின் வாழ்வையும், பொருள் பணத்தையும் கொள்ளையடிச்சு, பல தடவையில் திருமணப் பதிவும் வச்சி சட்டத்தை முட்டாளாக்கும் ஒரு நவீன திருடன் கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும், கைது செய்ய முடியவில்லையே என்று கவலை. எது முக்கியம்: கடமையா? மைத்துணியின் வாழ்க்கையா? என்று போராட்டம். சப் இன்ஸ் பெக்டர் முகுந்தன் தான் இளைப்பாறும் போது, நெருப்புக் கொள்ளி எடுத்துத் தலை சொறியும் இவனைப்போல் ஆண்களுக்கு ஒரு தகவல் சொல்லிவிட்டு இளைப்பாற வேண்டும் என்பதுதான் இந்த மக்களின் ஆசை. பெண் என்பவள் தனித்து வாழ்ந்தாலும் சரி, தாலியோடு வாழ்ந்தாலும் சரி, அந்த வாழ்வில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை நமக்கு வலி ஊட்டுவதாக இருந்தாலும் பின்னால் வருபவர்களுக்கு வழி காட்டுவதாக அமைய வேண்டும். அத்தான்! சொறி! அப்பா தாலியும் , மாலையும், தலையணைக் கனவுகளும் பகுத்தறிவுள்ளவர்களைப் பாதிக்காது. மாலா மாறமாட்டாள் சொல்லிக் கொண்டு வீடியோ கசட்டை முகுந்தண்ணனின் கையிலும் தாலியைக் கழட்டி தன் கைப் பையிலும் திணித்துக் கொண்டு கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறி வீட்டை நோக்கி விரைகிறது அந்தப் புயல்.
முகுந்தண்ணன் முணு முணுக்கின்றார் “இந்த மண் மகத்துவமானது. எங்கள் பெண்கள் தனித்துவமானவர்கள்’.
த. தயாபரம(GN)
U(UijF(6)6W 60)
சுந்தரும், குமாரும் ஏழாம் தரம் படித்து வந்தார்கள். குமார் படிப்பில் கெட்டிக்காரன். ஓர் நாள் சுந்தர் குமார் மீதுள்ள பொறாமையினால் ரூபனின் பாடசாலை பையினுள் இருந்த பேனாவை எடுத்து குமாரின் பையினுள் வைத்துவிட்டான்.
ரூபன் “பேனாவை காணவில்லை சேர். பாடசாலை பைகளும் சோதனை செய்யப்பட்டது.
சுந்தரின் பையில் இருந்தே பேனா எடுக்கப்பட்டது. “குமாரின் பையில் வைத்த பேனா எனது பைக்குள் எவ்வாறு வந்தது” சிந்தித்தான் சுந்தர். இடம் பெயர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு நிறுவனத்தில் வழங்கப்பட்ட ஒரேமாதிரியான பாடசாலை பை என்பது சுந்தர்க்கு தெரியவில்லை போலும் அவமானத்துடன் தலைகுனிந்தான்.
த. பூபாலசிங்கம்
ஆசிரியரிடம் முறையிட்டான். அவ்வேளை எல்லோருடைய

Anternsg, Cor. El
ஜ 品鱼芷 o case மெழுகுவர்த்தி
என்னடா மச்சான்! ஏன்? முகத்தை ஒரு மாதிரியாய் வைச்சிருக்காய் “சொல்லண்டா. நான் உன்ட உயிர் நண்பன்’ என்னட்ட சொல்லாம யாருட்ட சொல்லப்போறாய்’ சிவா விடாது கேட்டுக் கொண்டே இருந்தான் பதில் வரும் வரைக்கும் தனது கேள்விகனைகளை தொடுத்த வண்ணம். “நீ சொல்லாவிட்டால் நான் இவ்விடத்தில் இருந்து போகமாட்டேன்’ வார்த்தையினை கூறிவிட்டு அமர்ந்து விட்டான் சிவா.
பேசும் படங்களாகவே கண்களில் நீர் நிறைந்த வாடிய முகத்துடன் கல்லூரியின் மாணவர்கள் இருப்பதற்காக கட்டப்பட்ட இடத்தில் உயிர்புணமாக இருந்தான் சங்கர். அவனின் கண்கள் கொவ்வைபழம்போல் சிவத்திருந்தன.
கண்களில் தாரை தாரையாக நீர் வடிந்தோடியது. அவனால் எதுவும் பேசமுடியவில்லை நாவரண்டு விட்டது.
சங்கரின் அன்றைய சோகம் ஒரு நாளின் துயரம் போல் தெரியவில்லை சதா காலமும் அவன் மனதிற்குள் அழுது கொண்டிருப்பது தெட்டத் தெளிவாக தெரிந்தது.
சங்கர் சொல்லும் வரைக்கும் எதுவும் கேட்பதில்லை என்று சிவா தனக்குள்ளே முடிவெடுத்தான். அமைதியாக இரண்டு பேரும் எந்தவித பேச்சுக்களும் இல்லாமலே இருந்தார்கள்.
அவ்விடத்தில் மெளனமே குடி கொண்டது. ஐந்து பத்து பணத்திற்காக தன் வீட்டை அண்டிய வீடுகளுக்கெல்லாம் சென்று சொல்லும் வேலைகளை கூலியாக செய்து பிழைத்த பிள்ளை பருவமே சங்கரின் உருவம்.
தன் தந்தை சிறந்த குடிமகன் வீட்டில் உணவு இல்லாவிட்டாலும் குடித்து விட்டு பேசும் வீராப்பு பேச்சுக்கு மட்டும் குறைவில்லை.
சங்கர் இளம்வயதில் பாடசாலை பருவத்தில் படாத கஷ்டமில்லை. தன் தாய் பாக்கியம் சந்தையிலே மரக்கறி வியாபாரத்திற்காக செல்வாள். அவ்வேளை சங்கர் “சொப்பின்’ வேக் சொப்பின் வேக்.” என்று தனது வியாபாரத்தினையும் விட்டதில்லை.
வேளாண்மை வெட்டும் காலம் வந்தால் வயலிலே அறுவடை முடிந்ததும் கதிரொன்றும் மிஞ்சுவதில்லை.
பாடசாலைக்கு போட்டுச் செல்லும் நீலக் காற்சட்டையுடன் செங்கல் சுமந்து கொண்டிருந்தான் சங்கர்.
“என்ன சங்கர் காற்சட்டையிலே “பெட்ச்’ போட இன்னும் இடமிருக்கா..?” காற்சட்டைதான் நீலம் ஆனால் அழகான மாற்று நிறங்களும் பாதுகாப்பிற்காக இணைக்கப்பட்டிருந்தது. அன்றைய கூலிதான் நாளைய பரீட்சை கட்டணத்திற்கு உதவும.
நூறு ரூபாய்க்கு வேலை செய்தான் முப்பது ரூபாய்தான் கையில் கிடைத்தது அதையும் திருடர்கள் திருடிவிட்டார்கள்.
அது வேறு யாருமில்லை சங்கருக்கு உதிரம் கொடுத்தவர்தான். பாடசாலைக்கு போட்டுப்போக செருப்பில்லை வெள்ளை நிற சேட்டில்லை இத்தனைக்கு மத்தியிலும் வீட்டிலும் பலதொல்லை.
考。

Page 8
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
சங்கர் தனிப்பிறவியல்ல. பெண் சகோதரங்கள் மூன்று. இவர்கள் எவருமே படிக்கவில்லை படிக்க ஆசைப்பட்டாலும் சேகரன் விடுவதில்லை. ஆனால் வேலை வாய்ப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. சங்கரின் அக்கா திருமணமாகி கணவர் விட்டுச் சென்ற நிலையில் இரண்டு பெண் பிள்ளைகளுடன் ஒரு சிறு கடைவைத்து அன்றாட வாழ்க்கையினை பாதியளவு நடத்தி வருகிறாள். இரண்டு தங்கைகளோ வீட்டு வேலைக்கு நின்று தங்களது வயிற்று பசியை தீர்த்துக் கொள்கிறார்கள்.
“தம்பி சங்கர் அந்த மனுஷன் இப்படியே குடிச்சி குடிச்சி. திரிஞ்சா. நம்மட கெதி என்னவாகும்.”
சங்கரின் தாய் வறுமையின் வடிவம் சேகரனின் அன்பு துணைவி பிள்ளைகள் பெற்றெடுக்கும் வரைக்கும் தற்காலிக அன்பு அதன் பின் அடிதடியும் ஆக்கினையும்தான். எத்தனையோ சோகங்களுக்கு மத்தியிலும் தன்மகன் சங்கருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பாக்கியம் அவள் ஒரு பாக்கியம்தான். “தம்பி சங்கர். எத்தனை கஷ்டம் வந்தாலும் நீ நல்லா படிக்கனும் நீ வாத்தியார் வேலை எடுக்கனுன்டா. மெனே. நான் செத்தாலும். என்ட புள்ள நல்லா வாழனும்.
“நீங்க. கவலைப்படாதிங்க அம்மா.” சங்கர் கண்களை கசக்கி கொண்டே குடிலுக்குள் நுழைந்தான்.
நாய் போல் தவழ்ந்து செல்லும் சங்கர் சற்று நிமிர்ந்தால் குடில் கம்பு தலையில் அடித்துவிட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தான் கல்லூரியின் மாணவர்கள் எவரையுமே காணவில்லை அருகில் மாத்திரம் சிவா இரண்டு கைகளையும் நாடியில் வைத்து கொண்டு வலது கால் பெருவிரலால் மண்ணிலே படம் வரைந்து கொண்டிருந்தான்.
“என்ன. சிவா..!” “என்ன சங்கர் நினைவெல்லாம் முடிஞ்சா. எனக்கிட்டையும் சொல்லி இருக்கலாமே. உனக்குள்ளே. யோசித்து கொண்டிருக்காய்.”
சங்கருக்கு மீண்டும் அழுகை அழுகையாக வந்தது தன் நண்பனை கட்டித்தழுவினான் சிவா சங்கரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்.
“சங்கர் உன்ட சோகத்தை உனக்குள்ளே வைத்து கொண்டு நாளாந்தம் கவலைப்படாம என்னிடம் சொல்லப்பா. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டவங்கதான் நல்லா வாழுரவங்க. வாழ்ந்து முடிச்சவங்க. ஒவ்வொருவருடைய வரலாற்றையும் பிரட்டிப்பார். எத்தனையோ சோகங்களுக்கு மத்தியில் அவங்களின் வெற்றி அமைஞ்சிருக்கும்.”
எவ்வளவோ சிவா கதைத்துப் பார்த்தான் சங்கர் சொன்னதும்மில்லை அழுகையை நிறுத்தியதுமில்லை. விம்மி. விம்மி. அழுதான்.
மண்ணென்ணெய் விளக்கினை படுக்கையில் போட்டு அவ்விளக்கிற்கு எதிராக தானும் படுத்து உயர்தர பரீட்சைக்காக சங்கர் படித்து கொண்டிருந்தான். நிலவும் உதவவில்லை. காரணம் கருமுகில் இருண்டு கிடந்தது.
மதியம் சமைக்கவில்லை. சங்கரின் தாய் “தம்பி சங்கர் கால் ராத்தல் பாண் இருக்க சாப்பிடு.”
“சரி அம்மா.” “சீனி போத்தலுக்குள்ள சீனியும் இல்லை துறைத்துச் தின்னு மெனே. கால்ராத்தல் பாண் எங்க? எப்படி? கிடைத்ததோ தெரியாது. சங்கரின் கைகளுக்கு கிடைத்தது. சீனிப் போத்தலை துறைத்து பாணை சுவைத்து சாப்பிட்டான்.
孪=
99

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
"அம்மா சாப்பிட்டாவோ என்னவோ..!”
தனக்குள்ளே சிந்தித்தான் கட்டாயம் சாப்பிட்டிருக்க முடியாது விடை ஒன்றுதான்.
அன்றைய தினம் சங்கரின் அப்பா சேகரன் வேலைக்கு சென்றிருந்தார். மாதத்தில் ஒரு தடவையாவது வேலைக்கு செல்வார். இரவு எட்டு மணியாகிவிட்டது. அன்று மாத்திரம் எல்லோருடைய வீட்டிலும் சாப்பாட்டு பாத்திரம் கழுவி வைக்கும் நேரத்திலாவது எங்கள் வீட்டில் விறகு எரியும் என்ற நம்பிக்கை சங்கருக்கு இருந்தது.
“அவனின் நம்பிக்கை சில நாட்களில் வீண் போவதும் இல்லை” “என்ன. இன்னும். அப்பாவக் காணல்ல. காலமும் பொல்லாத காலம் கடவுளே! இந்த மனுஷன் வேலை இல்லாட்டியும் நேரத்தோட வாரதானே.”
ஆக்கினை செய்யும் கணவனுக்காய் ஆயிரம் நேர்த்திகளோடு வழிமேல் விழிவைத்து பாத்திருந்தால் பாக்கியம்.
இங்கு வயிற்றுக்கு கஞ்சி கூட இல்லை ஆனால் திருவடி சூட்டு படலத்தில் விருந்தோம்பல் படிக்கிறான் சங்கர்.
இரவு 8.30 மணியாகிவிட்டது. ‘அடியேய்.” பாக்கியம். ’ குரலில் மதித்துவிட்டாள். இருபத்தைந்து வருடம் வாழ்ந்தவருக்கு. தன் கணவனின் குரல் தெரியாமல் விடுமா..?
“சங்கர். சங்கர். புத்தகத்தை மூடிவைச்சித்து படுமெனே. அப்பா வாரார்.”
தன் தாயின் சொல்லைக் கேட்டு அவ்வாறே செய்கிறான். “விளக்குத்தான் இனியும் எரியுமா..?” சங்கரின் காதுகளுக்கு தனது தந்தையின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காரணம் இல்லாமல் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தீய வார்த்தைகளால் தன் தாய்க்கு பேசுகின்றார். ஒரு சில அடிச்சத்தங்களும் கேட்கின்றன.
“சத்தம் மெதுவாக. “சங்கர் அயர்ந்து தூங்கிவிட்டான்.” காலையில் வழமைக்கு மாறாக சங்கரின் வீட்டுச் சேவல் அவனை கூவி படிப்பதற்காக எழுப்பவில்லை. அவனின் வளர்ப்பு நாய்தான் ஊழையிட்டது. எந்த நாளும் படிப்பதற்காக எழும்புவன் அன்று எழும்பவில்லை. பசி வாட்டம் ஒருபக்கம் தன்குடும்ப நிலை மறுபக்கம்.
விடிந்து வருகின்றது. இன்னும் தூங்கத்தான் விருப்பம் ஆனால் பாடசாலைக்கு செல்ல வேண்டும் கண்களை கசக்கி கொண்டு எழுந்தான்.
குடிலுக்குள் இருந்து காலை கடன்களை நிறைவேற்றும் நோக்குடன் எழுந்து நடந்தான் தடக்கி கொண்டு கீழே வீழ்ந்து விட்டான்.
“திரும்பிப்பார்த்தான் தனது தாய். و و கல்லூரியின் கட்டுகளில் தலையை அடித்துக் கொண்டே அழுதான். சகமாணவர்கள் தாவிப்பிடித்தார்கள்.
“கல்வியல் கல்லூரி மாணவன் அவன்”. இத்தனை சோகங்களுக்கு மத்தியிலும் தனது மூன்று சகோதரிகளுக்காய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன். “இப்போதாவது என்ன பிரச்சினையென்று சொல்ல மாட்டாயா? மச்சான்!” கேட்டான் சிவா. “மன்னிக்கனும் எனக்கு எதுவும் தெரியாது’. - தங்கராசா இன்பராசா -

Page 9
(3 சoகாதரன
தரிசன் மிதுனாவை மிகவும் ஆழமான அன்போடு காதலித்தான். எவருக்கும் தெரியாமல் தனக்குள்ளே பல வகையான கற்பனைகளையும் கனவுகளையும் சேகரித்து வைத்தான்.
மிதுனா மிதுனா நான் உன்னை விரும்புகிறேன், உன்னோடு வாழ்வதற்காக ஆசைப்படுகிறேன் என் காதலை ஏற்றுக் கொள்வாயா? மிகவும் தைரியமாக ஒத்திகை பார்க்கப்பட்ட வசனங்களை மிதுனாவிடம் கூறினான் தரிசன்,
மிதுனா புன் சிரிப்புடன் கடிதம் ஒன்றினை தரிசனின் கையில் கொடுத்தாள் அவனுக்கு எல்லை கடந்த ஆனந்தம். அவசர அவசரமாக கடிதத்தை பிரிக்கின்றான். தரிசன் சொன்ன வசனங்களே அக்கடிதத்திலும் எழுதப்பட்டிருந்தன. அதில் தரிசனின் அண்ணாவின் பெயர் தடித்த எழுத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு கணம் திகைத்தான்.
ஒத்திகை பார்க்கப்பட்டபோது தரிசன் சத்தமாக மிதுனாவுடன் சொல்லும் வசனங்களை கதைத்து பார்த்தான். அவ்வேளை அவனின் அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தது. தரிசனின் ஞாபகத்திற்கு வந்தது.
மூத்தப்பா மக்கள் நிறைந்த கூட்டம் பனைமர நிழலில் குந்தியிருந்து போன பாதை திரும்பட்டும் என ஒரு பெருமூச்சு மூத்தப்பாவுக்கு காற்றடிக்கும் ஆற்றுநீர் அலையில் தள்ளிய பஞ்சு பறந்ததைப் பார்த்து எதுவும் எதிலும் நிரந்தரமாக தங்கியிருப்பதில்லை என உணர்ந்து கொண்டார் மூத்தப்பா. அரை மணி நேரம் குந்தியிருக்கிறார். ஆறுதல் பேச்சு பேச யாருமேயில்லை. அநாதையானார். பெற்றெடுத்த மக்களிலிருந்தும் பலனில்லை.
அறுபது வயது நிரம்பி அறுபத்தியொரு வயது நாளை எட்டிப்பார்க்கும் காலத்தில் அக்கரை புறப்பட வந்த மூத்தப்பாவுக்கு இறந்தகால நினைவுகள் “நீரூற்றுப் போல” மலர்ந்தன. அதற்குள் ஒரு முணுமுணுப்பு.
செல்லம்மாவை திருமணம் முடித்து ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்து கரப்பு கூடை கொண்டு களப்பில் மீன்பிடித்தும் பிரம்பு வெட்டி சுளகு, மரைக்கால் பின்னியும் சீவியம் நடத்தி பிள்ளைகளை படிக்க வைத்தார் மூத்தப்பா.
காலை உணவை கவனத்தில் கொள்வதில்லை. பகல் உணவை பார்த்திருப்பதில்லை ஏனோ தானே..? என வயித்துப் பசிக்கு ஏதாவது போட்டால் போதும் என மக்களை புகழாரம் சூட்டி மன்னர்களாக்க வேண்டும் என்ற அவா..! மூத்தப்பாவுக்கு!
வெற்றிலை பையுடன் தட்டுவா கத்தியையும் எடுத்துக் கொண்டு மரப்பலகை சப்பாத்தும் அணிந்து பிரம்பு வெட்ட சென்றார். மூத்தப்பா. ஆறுகட்டை தூரம் நடக்க வேண்டும் மரநிழலில் குந்தியிருந்து மறுதரமும் வெத்திலை போட்டு நடந்த மூத்தப்பாவுக்கு “நெஞ்சுவலி’ வலது கையில் இருந்த கத்தியை கீழே போட்டு
சி. சுதேஸ்வரன்.

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
வலக்கையால் நெஞ்சை பொத்திக் கொண்டு மண் தரையில் மனிசர் சாய்ந்தார். என்னவோ பரிதாபம் என வீதியால் சென்றவர்களும் தோட்டத்தில் வேலை செய்பவர்களும் கூட்டமாய் வந்து மூத்தப்பாவை தூக்கி மடியில் சாய்த்து தண்ணிர் பெருக்கி வீடு கொண்டு சேர்த்து விட்டார்கள்.
‘அம்மா..! அம்மா. நோகுது. என் நெஞ்சே வலிக்கிறது. பாழப் போன உலகில பாவியாயிட்டனே.” என மூத்தப்பா துடி துடித்து துன்பப்படுகிறார். “தண்ணி கொஞ்சம் எடுத்துவா? செல்லம்மா..? என தன் மனைவி செல்லம்மாவை கேட்கிறார். அவர் கூறி சிறிது நேரத்தின் பின்னர் தண்ணீர் செம்பு தளம்பியவாறு வாயால் முணுமுணுத்து கொண்டு செல்லம்மா தண்ணிர் கொண்டு வருகிறாள்.
“உனக்கெல்லாம் வேலையிறத்துக்கு ஒரு ஆளு வேணும். இந்தா புடி.” என வேண்டா வெறுப்புடன் பேசுகிறாள். செல்லம்மா. “ம். ரெண்டு, மூண்டு நாளா சும்மாதானே கிடக்கா. ஒரு நாள் நெஞ்சு நோகுது என்டா சரி மத்தநாள் எல்லாம் பார்த்து வேலைக்கு போறானே. வேலைக்கும் போறால்ல.
என பொங்கி எழுகிறாள் செல்லம்மா. வெற்றிலை போட்ட வாய்க்கு போடாமல் இருக்க முடியவில்லை. வாங்க பணமில்லை. பையுள் கையை விட்டார். வெத்திலை காம்புகள் கருகிக்கிடந்தன. கூடாத வெட்டுப்பாக்கு துண்டுகள் சிலவும் கிடந்தன.
தாம் பெற்ற மக்களோ உழைக்கும் பருவத்தில் உயர்ந்து விட்டார்கள். தங்கள் படிப்பிற்கேற்ற ஊதியத்தையும் பெற்று வாழ்கிறார்கள். இதெல்லாம் யாரால் வந்தது என்பதை அறியாத பிள்ளைகள் பணத்திமிரில் வாழ்கின்றார்கள்.
அன்றைய இரவுப் பொழுது மூத்தப்பாவுக்காக வேகமாய் ஓடி மறைந்ததோ தெரியவில்லை. விடிந்து சூரிய ஒளி முகத்தில் அடிக்க கண்ணில் தள்ளிய பூளையை புறங்கையால் துடைத்து கொண்டு காலையில் தன்வீட்டிற்கு வந்திருந்த இளையமகன் குமாரை பார்த்து “மெனே. சின்னவா. தம்பி சின்னவா. இங்கவா. மெனே. இந்த கைய பிடித்து ஒருதரம் தூக்கி விடப்பா..” “அட! சீ. இதனா எனக்கு வேல. வேற வேலயில்லையா..? எனக்கு இந்த கிழட்டு கிழவனோட கிடந்து கஷ்டப்பட வேண்டி இருந்ததே. சீ. மூதேவி..” என சத்தமிடுகிறான்.
உயர்வான கோபுரங்கள் போன்று ஒய்யாரமாய் வீடுகள் கட்டி தனிக்குடித்தனம் என தாயை அழைத்துக் கொண்டு தந்தையை தலைகுனிய வைத்து விட்டு பல பொருட்களையும் பிரித்தெடுத்துக் கொண்டு பயணம் செய்து விடுகிறார்கள். மூத்தப்பா பெற்றெடுத்த அறுவரும் மனைவியும்.
ஒதுக்குப்புறமாய் செத்தையோரமாய் ஊண்டல் பிடி ஒன்றுடனும் கிழிந்து நாராய் தொங்கும் சால்வை ஒன்றுடனும் அல்லல்படுகின்றார் மூத்தப்பா.
கரப்பு கூடைகளும், பிரம்பு சுளகுகளும் கண்ணிர் வடிக்க கண்ணிர் எங்கே என கண்கள் கேட்க கவலையால் தன் முகத்தை தடவிப்பார்க்கிறார் மூத்தப்பா. ஊண்டல் பிடியுடன் மெதுவாக நடந்து சிரட்டை ஒன்றை கையில் பிடித்து அருகே இருந்த குளத்தருகே நடந்து சென்று பக்குவமாய் அமர்ந்து தண்ணிரை அள்ளி பருகும் வேளையில் கை நடுக்கத்தால் அந்த தண்ணிர் சிதற தொண்டையால் வடிகிறது. இரண மணியில்லாத உடம்புக்குள் நீர் சென்றதும் நெஞ்சு மீண்டும் வலிக்க தொடங்குகிறது.
"ஆண்டவா. என்ன காப்பாத்து என்ட உயிர ஏன்?. இவளவு காலமா உட்டு வச்சிருக்கா. அத எடுத்திடு கதிர்காம கந்தா..” என அவதியுருகிறார். மூத்தப்பாவை எவரும் கவனிக்கவில்லை.
அவரின் அன்றைய பயணம் உடன் பிறந்த சகோதரன் வீட்டிற்கு குளத்தில்

Page 10
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
மீன்பிடிக்க வந்த மீனவர்களைப் பார்த்ததும் மூத்தப்பாவுக்கு முன்னைய ஞாபகம் நினைவில் வந்தது. அழுது புலம்பினார்.
“மூத்தப்பா என்ன இது ஏன்? அழுகிறாய்” என கேட்டு கொண்டே மூத்தப்பாவின் முன்னைய நண்பரான முருகேசு முதுகைத் தடவினார்.
“முருகேசு எனக்கொரு உதவி செய்கிறாயா?. என்னன்று சொல்லு மூத்தப்பா?..”
“என்ன கூட்டிக் கொண்டு பாதையடியில உடுறியா?. என கேட்டார். முருகேசு மூத்தப்பாவை சைக்கிளில் ஏத்தி மிதித்து வரும் வழியில் தனது மூத்த மகன் மோகனை காணுகிறார்.
"நான் பெத்த மகராசா. எங்க மெனே போறா.’ என கேட்டு முருகேசுவிடம் “சைக்கில கொஞ்சம் நிறுத்துடா முருகேசு.” என்றார். பக்கத்து ஊர் கலியாணத்துக்காக தன் மனைவியுடனும் தான் பெற்ற இரு பிள்ளைகளுடனும் காரில் சென்று கொண்டிருந்த மூத்தப்பாவின் மூத்த மகன் காரை நிறுத்தி ‘நல்ல காரியத்துக்காக போக்குள எங்க போறாண்டு கேட்கிறியே மூதேவி. போன காரியம் இனி சனியன் பிடிச்சமாதித்தான்.” என சத்தமிட்டான்.
முருகேசு சால்வையை எடுத்து வாயை பொத்திக் கொண்டார். மூத்தப்பா தலை குனிந்து “நா’ தடுமாற மனங்கலங்கி அழுதார். காருக்குள் இருந்து மூத்தப்பாவின் பேரப் பிள்ளைகள் எட்டிப் பார்த்து “யாரப்பா?. அவர்’ என கேட்க “அது ஆரு பைத்தியமோ?. தெரியாது உள்ளுக்கு ஏறுங்க?’ என்று உறுக்கினான்.
முருகேசு உடனே திகைத்து போய் “முத்தப்பா உண்ட பேரப்பிள்ளைகளிட்ட கூட உன்னப்பத்தி சொல்லல்ல பாத்தியா?” என்றார். “பரவாயில்லை முருகேசு ஆண்டவன் படைப்பில அவங்க நல்லா இருந்தா போதும்’.
எந்தப் பெரிய மனசு படைத்த மூத்தப்பாவுக்கு முகம் கொடுத்து பேச மக்களோ வெக்கப்படுவார்கள். பேசினாள் அவர்களுக்கு அவமானமாம்.
இரைச்சல் சத்தம் நிமிர்ந்து பார்த்தார். “ஐயா. போறல்லையா?. எல்லாரும் ஏறித்தாங்க. கெதியா வாங்க.” பாதை ஒட்டுனரின் சத்தம். “இந்தா வாரன் மெனே.” என செருப்பை கையில் பிடித்து கொண்டு சென்றார்.
இனி மூத்தப்பாவின் தம்பி வீட்டிலும் அவருக்கு மதிப்புமரியாதை கிடைக்குமா?
s
s
பு. தியாகதாஸ்
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
“அம்மா! அம்மா! பசிக்குதம்மா. இவ்வளவு நேரத்திற்கு சமைக்காம என்ன செய்றா..?’ என்று கேட்டுக் கொண்டே சுமன் வந்தான் “கொஞ்சம் பொறுதம்பி. “நிறுவனக்காராக்கள் ஏதாச்சும் கொண்டு வந்தால்தான் சாப்பாடு கையில காசும் இல்ல. அந்தமனுஷன் வேலைக்கு போய் எத்தன நாளாச்சி.’ கதைத்துக் கொண்டே போனால் பொன்னம்மா.
“அவங்க எப்ப வாற நாம எப்ப சாப்பிடுற. சொந்த உழைப்பில் சொத்துச் சுகத்துடன் வாழ்ந்த குடும்பங்களை சோகத்துக்குள்ளாக்கி மற்றவர்களை நம்பி மற்றவர்களிடம் தங்கி கையேந்தும் நிலை எதனால்..?
“இது என்ன நம்மட வீடா? நினைச்ச நேரம் நினைச்சமாதிரி சாப்பிட. முன்னுாறு சனத்திற்கும் சமைச்சி முடியனுமே.”
“ஏனம்மா நாம இங்க இருக்கனும் நம்மட வீட்டுக்கு போகலாம்தானே இந்த நுளம்புக்கடியும் கொசுத் தொல்லையும் என்னால தாங்கேலா அம்மா.”
“படங்காலையும் வீடு கட்டுவாங்களா..?” பொன்னம்மா கண்களில் நீர் வடிந்தது தன் மகனை கட்டித்தழுவி அழுதாள். “என்னம்மா கண் கலங்கி இருக்கு என்ன..?’ தொண்டர் நிறுவனத்தின் ஊழியர்.
“ஒன்றுமில்லை மெனே. பொன்னம்மாவின் மன குமுறலை கேட்க ஆரம்பித்தான். “தம்பி நாங்கள் இங்கு வருவதற்கு ஒரு கிழமைக்கு முன்பு எங்கள் ஊரில் இருந்து பத்துகட்டை தூரத்திற்கு அப்பால் பெரிய வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர் நாங்கள் இருந்த பிரதேசத்திலும் அந்த முளக்கம் ஆரம்பித்தது எங்களால் என்ன செய்வது என்றும் தெறியவில்லை. எல்லோரும் அனைத்துப் பொருட்களையும் விட்டுத்து ஓடினார்கள். நாங்களும் இருந்துதான் என்னசெய்வது. இங்குவந்து சேர்ந்துவிட்டோம்.”
“உங்களுடைய கணவர்.?” “வயலுக்கு போன மனுஷன் இன்னும் வரயில்லை. “உங்களுக்கு பிள்ளைகள் எத்தனை.” “இரண்டு பெண்பிள்ளைகளும். இளையவன் தம்பி. *சுமனுக்கு ஒர் புன்சிரிப்பு சாப்பாடு கிடைக்கும் என்று. “இங்க இப்ப சந்தோஷமாய் இருக்கிங்களா? அம்மா. “என்ன கேள்வி மெனே எப்போ எங்கள் சொந்த ஊருக்கு போறோமோ அன்றுதான் எங்களுக்கு சந்தோஷம்.”
பொன்னம்மா இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பது ஊழியருக்கு நன்றாக புரிந்தது “மீண்டும் வருவேன்’ விடைபெற்றுச் சென்றார்.
கையில் இருந்த பத்து ரூபாய் பணத்துடன் தன் மகனுக்கு வட்டராவது வாங்கி கொடுப்போம் எனும் எண்ணத்துடன் புறப்பட்டாள் பொன்னம்மா. கடையை நோக்கி. "வருவதற்குள் இரவாகிவிடும்.” தெரிந்த விடயமே சுமன் விளையாட ஆரம்பித்தான்.
சி. சுதர்சன்
s
2.
99
33
ཉཉ

Page 11
மட்/புதுக்குழுயிருப்புகண்ணகி மகாவித்தியாலயம்
மட்டக்களப்பின் தென்பால் 11 கிலோ மீற்றர் தொலைவில் மண்முனைப்பற்றில் அமைந்திருப்பது புதுக்குடியிருப்பு இந்து குடிமக்களால் நிறையப்பெற்ற புதுக்குடியிருப்பின் மத்தியில் புகழ் பரப்பி இலங்கி கொண்டிருப்பது புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்.
மண்முனைப்பற்று கல்வி கோட்டத்தில் தனக்கென ஒரு இடம் பிடித்து தலைநிமிர்ந்து நிற்கிறது எமது வித்தியாலயம் இன்று 1074 மாணவர்களையும் 40 ஆசிரியர்களையும் 03 கல்வி சாரா உத்திய்ோகத்தர்களையும் மற்றும் கணிசமான அளவு பெளதீக வளங்களையும் உள்ளடக்கி உயர்ந்து கொண்டிருக்கிறது.
வரலாற்று ரீதியாக நாம் நோக்கும் போது எமது வித்தியாலயம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1875.05.14ம் திகதி திண்ணைப் பள்ளியாக அமைக்கப்பட்டது. இதன் முதல் அதிபராக கடமையாற்றியவர் விநாயகம்பிள்ளை அப்போது 06 மாணவர்களே கல்வி கற்க தொடங்கியிருந்தனர். ஒலைக் குடில் ஒன்றில் இயங்கிவந்த இப்பாடசாலை மிசநெறிக் காலத்தில் புதுக்குடியிருப்பு மெதடிஸ்தமிசன் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கத் தொடங்கியது.
ஆரம்பகாலத்தில் ஆரம்பப்பிரிவு வகுப்புக்களை மாத்திரமே கொண்டிருந்த எமது பாடசாலை 1975ல் திரு. செ. சிவஞானம் அதிபர் காலத்தில் தேசிய கல்விப் பொதுத்தராதர வகுப்பைக் கொண்ட பாடசாலையாக மாற்றப்பட்டது.
இதன்பின் 1978 காலப்பகுதியில் திரு. வீ.கே. கணபதிப்பிள்ளை அதிபராக இருந்த காலத்தில் பாடசாலை பல்வேறு விடயங்களில் புடம்போடப்பட்டு மிளிர்ந்தது எனலாம்.
அதாவது 1978ம் ஆண்டிலேயே பாடசாலைக் கொடி (பச்சை+மஞ்சள்) பாடசாலை கீதம், களுத்துப்பட்டி என்பன ஏற்படுத்தப்பட்டன. இக்காலத்தில் பிரதி அதிபராக இருந்த மு. கணபதிப்பிள்ளை என்பரே பாடசாலை கீதத்தை இயற்றிக் கொடுத்தார். அதிபர் அவர்களின் முயற்சியால் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையாக இருந்த எமது வித்தியாலயம் அருகில் இருக்கும் கண்ணகித் தெய்வத்தின் பெயரால் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலயம் எனவும் பெயர் பொறிக்கப்பெற்றது.
இதன் பிற்பாடு 1993ம் வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்களும் அதிபர் நியமனங்களும் பாடசாலையை புத்தெழுச்சி பெறவைத்தன.
இக்காலத்தில் திரு. செ. நடராசா அவர்கள் அதிபராகவும் மற்றும் திரு. மா. தங்கவடிவேல், திரு. ச. சின்னத்தம்பிப்போடி ஆகியோர் உதவி அதிபர்களாகவும் இருந்து பாடசாலையை வழிநடாத்தி சென்றனர். இந்த வழிப்படுத்தலில் 1994ம் வருடம் க.பொ.த. (சா/த)ப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் பல மாணவர்கள் (26 மாணவர்கள்) திறமையாக சித்தி

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
பெற்றதன் விளைவாக 1995ம் வருடத்தில் இங்கு க.பொ.த. உயர்தரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வெற்றியால் பாடசாலை 1C ஆகவும் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயமாகவும் தரமுயர்ந்தது. இந்நிகழ்வு அக்காலத்தில் மண்முனைப்பற்று கல்விக்கோட்டத்தில் ஒரு சாதனையாக அமைந்திருந்தது. இந்தச் சாதனைக்கு அக்காலத்தில் அதிபர்களுடன் சேர்ந்து உழைத்த திரு.வே. தட்சணாமூர்த்தி, திருமதி ஜ. உதயகுமாரன், செல்வி சு. அன்னபூபரணம் ,செல்வி பொ. சிவநாயகி, திரு. பொ. செல்வநாயகம் ஆகிய ஆசிரியர்களும் பாராட்டத்தக்கவர்களே இவ்வாசிரியர்கள். க.பொ.த உயர்தரத்திற்கும் எடுத்த முயற்சியின் விளைவாக முதலாவது முறையில் க.பொ.த. உயர்தரத்தில் 1997ல் பரீட்சைக்கு தோற்றிய அத்தனை மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமையை பெற்றுக் கொண்டதோடு 05 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினையும் 02 மாணவர்கள் கல்வியல் கல்லூரி அனுமதியினையும் பெற்றுக்கொண்டமை பாடசாலை வரலாற்றின் ஒரு மைல்கல் எனலாம்.
இதன்பின் அதிபராக இருந்த திரு. மா. தங்கவடிவேல் அவர்கள் காலத்தில் பெளதீகவளங்கள் உள்ளடங்கலாக பாடசாலை மீண்டும் புதுமலர்ச்சி பெற்றது எனலாம். இதுவரை காலம் எட்டப்படாது இருந்த தரம் 05 புலமைப்பரிசில் வெற்றி இம்முறை எட்டப்பட்டது. திரு. அ. குலேந்திரராசா ஆசிரியரின் முயற்சியால் 1996ம் ஆண்டு செல்வன் ச.மதன் சித்தியடைந்தார். இதனைத் தொடர்ந்து வந்த காலங்களில் கல்வி விருத்தியில் மாத்திரமின்றி விளையாட்டு, தமிழ்த்தினம், விவசாயம், விஞ்ஞானமென்று பல்வேறு போட்டிகளிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 1998ம் வருடம் தமிழ்த்தின விழாவில் தமிழ் அறிவு வினாவிடைப் போட்டியில் எமது மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் 1ம் இடம் பெற்று மாகாணமட்டம் வரை சென்று வந்தார்கள். (அங்கு இரண்டாம் இடம்) அது மாத்திரமன்றி 11ம் ஆண்டு மாணவர்களுக்காக கிழக்கு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட விவசாய அறிவுப்போட்டியில் செல்வன் தி.நாகநாதன் 1ம் இடத்தையும் செல்வன் த. மதிவதனன் 2ம் இடத்தையும் பெற்று கொண்டனர். செல்வன் க. கேதாகரன், செல்வன் வ. லோகநாதன் செல்வி க. தேவமாலா ஆகியோர் மாவட்ட, மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்று தேசியமட்டம் வரை சென்றுவந்தனர்.
2003 காலப்பகுதியில் எமது வித்தியாலயம் மேலும் விருத்தி கண்டது. 2003ம் ஆண்டு தமிழ்த்தின போட்டியில் குறுநாடக ஆக்கம், கவிதை ஆக்கம் முதலான போட்டிகளில் வலயமட்டத்தில் 1ம் இடம் பெற்றமையும் செல்வன் த. இன்பராஜா குழுவினர் விவாதம், இசைநாடகம் (அரிச்சந்திரமயான காண்டம்) மாவட்ட மட்டத்தில் 1ம் இடம் பெற்று மாகாணமட்டம் வரை சென்றமையும் பெருமைக்குரிய விடயமாகும். இக்காலப்பகுதியில் “விடியலைநோக்கி’ எனும் கவிதை நூல் ஒன்றினை உயர்தர மாணவர்களுக்கான தனி செய்திட்டத்தில் செல்வன் த. இன்பராஜா வெளியிட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். தொடர்ந்து வித்தியாலய கல்வி வளர்ச்சிக்காக கிடைத்த பரிசாக விஞ்ஞான ஆய்வுகூடம் கணனி அலகு, பல்லூடக அறை, நூலகம் என்பன

Page 12
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
உருவாக்கப்பட்டன.
2004ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் சிறிது பாதிக்கப்பட்ட எமது பாடசாலை JICS நிறுவனத்தின் உதவியால் மீண்டும் பொலிவு பெற்றது. ஆம் அவர்களின் உதவியால் அழகிய புதிய மூன்று மாடிக் கட்டடம் புதுப் பொலிவுடன் விளங்குகின்றது. அண்மைக்காலத்தில் பாடசாலை முன் பகுதிக்கும் புதிய மூன்றுமாடி கட்டிட முன்பகுதிக்கும் கிறவல் இடப்பட்டு பூக்கன்றுகள் நடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு எமது பழைய மாணவர் மன்றத்தின் உதவி கிடைத்தமை பாராட்டத்தக்கதாகும். அதுமாத்திரமின்றி 2006ம் வருடம் முதல் Unicef அனுசரணையில் பிள்ளைநேயப் பாடசாலையாகவும் எமது வித்தியாலயம் மலர்ந்தது.
அண்மை காலத்தை நோக்கும்போது 2007ம் ஆண்டு O/L பரீட்சையில் கணித பாடத்தில் திருமதி. சு. புஸ்பராசா ஆசிரியரின் முயற்சியால் எமது வித்தியாலயம் மண்முனைப்பற்றிலே 1ம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் செல்வன் சு. டினோசன் கணித வினாவிடை போட்டியில் 1ம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
கணனி அலகின் வளர்ச்சியில் இன்று எமது வித்தியாலயம் நகரப்புறப் பாடசாலைக்கு இணையாக நின்று கணனி கண்காட்சி-2008 நடாத்தி பெருமை சேர்த்ததுடன் கணனி அலகுக்கான போட்டியில் வலய மட்டத்தில் 5ம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. மற்றும் ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட கணனி மென்பொருள் ஆக்கப் போட்டியில் (கணிதபாடத்தில்) திரு. சு. புஸ்பராசா ஆசிரியை மாகாண மட்டத்தில் 1ம் இடம் பெற்றுக் கொண்டதும் எமது வளர்ச்சியின் மற்றுமொரு படிக்கல் எனலாம்.
இவ்வாறாக பாடசர்லையின் வளர்ச்சிக்கு ஆசிரியர், மாணவர்களின் அயராத பங்களிப்பு மாத்திரமின்றி பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழையமாணவர் சங்கம் என்பனவற்றின் ஒத்துழைப்பும் எனலாம். அந்தவகையில் மிக நீண்டகாலமாக (ஒருசிலவருடங்களைதவிர) பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராக இருந்து பங்காற்றி கொண்டிருக்கும் திரு. மா. சதாசிவம் ஜே.பி. அவர்களும் பாராட்டத்தக்கவரே.
இவ்வாறு பெருமைப் படும் வேளையிலும் இன்னும் சில வேதனையளிக்கும் நிகழ்வுகளும் மனதை வருடுகின்றன. அதாவது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அநேக மாணவர்கள் தோற்றுகின்ற போதும் சித்தி வீதம் குறைவாகவே உள்ளது. இவ்வருடத்தில் ஒரு மாணவரே சித்திபெற்றிருந்தார். இதேபோன்று க.பொ.த.(உத) பரீட்சையிலும் நாம் மேலும் முன்னேற வேணி டியுள்ளது. இம் முறை இரணி டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் இப்போது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர் காட்டும் அக்கரையும் விழிப்புணர்வும், எமது கண்ணகி மகா வித்தியாலய வளர்ச்சிக்கும் கல்வி விருத்திற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
திரு.வே. தட்சணாடுர்த்தி அதிபர், மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

வரையறுக்கப்பட்டசர்ரம்முநீலங்காதேசிய மன்றம் பற்றிய குறுகிய விபரக்கூற்று
ஆரம்பம்
மேற்படி மன்றமானது 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திரு. ஆறுமுகம் லோகேஸ்பரன் - ச.நீ அவர்கள் இம்மன்றத்தின் ஸ்தாபகராகவும், நிரந்தரத் தலைவராகவும் இருந்து பணியாற்றி வருகின்றார். இவருடன் சேர்ந்து உபதலைவர்களும் பொதுச் செயலாளரும், மேலதிக செயலாளர்களும், பொருளாளரும், ஏனைய உறுப்பினர்களும் அடங்கிய நிறைவேற்றுச் சபை மன்றத்தை நிர்வகித்து வருகிறது.
அலுவலகம்
மன்றத்தின் தலைமை அலுவலகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் - தாழங்குடா, ஆரையம்பதியில் அமைந்துள்ளது.
சட்டபூர்வத்தகைமை
இம் மன்றமானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
நோக்கங்கள்
தேசிய மட்டத்திலான பல்வேறுபட்ட சமூகங்களுக்கும், சமயங்களுக்குமிடையே நிரந்தர ஒற்றுமையையும், சமாதானத்தையும் உருவாக்குதல்.
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் அபிவிருத்தித் திட்டங்களையும், சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் முழுமனதுடனும், அரசாங்க அமைச் சுக் கள் , திணைக் களங்கள் என்பனவற்றின் அனுசரணையுடனும் செயற்படுத்துவதில் முன்னின்றுழைத்தல்.
சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் வருமானம் குறைந்த குடும்பங்களின் வருமானத்தை உயர்த்தி அதன் வாயிலாக நாட்டில்
妾

Page 13
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
நிலவும் வறுமையை இல்லாமற் செய்தல்.
கலை, கலாசார, கல்வி, ஆன்மீகத் துறைகளை உரிய செயற்திட்டங்களின் மூலம் முன்னெடுத்துச் செல்லுதல். மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள், இயற்கையால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்கள் என்பவற்றினால் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் வேளைகளில் அவர்களுக்கு வலிந்துதவி, அவர்களைக்கட்டி எழுப்புதல். அவ்வாறான மக்களுக்கு நிரந்தர மேம்பாட்டுக்குத் திட்டமிடப்பட்ட முறையில் பணியாற்றுதல்.
காலத்திற்குப் பொருத்தமான ஏனைய சமூக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்லுதல்.
பிரதான செயற்பாடு
இயற்கையிலும், பல்வேறு அனர்த்தங்களினாலும் துன்ப, துயரங்களுக்குள்ளாகி, வறுமைக்குள்ளான குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பொருத்தமான விழிப்புணர்வூட்டல், ஒன்றிணைத்தல், உற்சாகப்படுத்தல் முதலான செயற்திட்டங்களின் மூலமாக மனஉறுதிப்பாடுடையவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஒற்றுமை உடையவர்களாகவும் ஆக்கி, அவர்களின் விருப்பங்களையும் அறிந்து, அதற்கேற்றவாறு சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுத்துவதும், அவர்களுக்குத் தேவையான நவீன தொழிநுட்பப் பயிற்சிகளையும், தொழிற்செயற்பாட்டிற்குத் தேவையான கடன்களையும் வழங்குவது. அதனைத் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், நிச்சயமான வருமானத்தைப் பெற ஊக்குவித்தல் முதலான தொடர் சேவைகளை மேற்கொள்வது. இதன் வாயிலாக அவர்கள் உடனடி அபிவிருத்தியையும், இடைக்கால அபிவிருத்தியையும், நிலைபேண் அபிவிருத்தியையும் படிப்படியாகப் பெறுவதை உறுதிப்படுத்தல். மக்கள் தங்கள் சொந்த முயற்சியினாலே தேடிக்கொள்ளும் மேலதிக வருமானத்தின் உதவியுடன் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதையும், அதன் வாயிலாக தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வதையும் மேற்படி செயற்பாடுகள் நிச்சயப்படுத்தும்.
妾

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
ஆத்மீக சேவை சங்காபிஷேக நிகழ்வு
ஆத்மீக கலாச்சார மேம்பாட்டுப் பணி
கல்வி அறிவுபூட்டலினால் மாத்திரம் மக்களின் மனங்களை முழுமையாக மாற்றமடையச் செய்ய இயலாதென்பதை அனுபவத்தில் கண்டறிந்ததன் காரணத்தினால், அவர்களை உண்மையான மனப்பக்குவம் உடையவர்களாக ஆக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. ஆதலால், சரீரம் பூரீ லங்கா தேசிய மன்றம் நிறைவேற்றுச் சபை, மன்றமானது ஆன்மீக சேவையையும் உள்ளடக்க வேண்டுமென்று ஏகமனதாகத் தீர்மானித்தது. அதன் பெறுபேறாக, 1997ம் ஆண்டில் நிஷப்தம் பூர் மஹா விஷ்ணு தேவஸ்தானம் என்ற பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆலயத்தை முறையாக நிர்வகிப்பதற்காகவும், பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் ஆலயத்தின் பெயரில் அறங்காவலர் சபை ஒன்று அமைக்கப்பட்டது. இச் சபையானது கொம்பனிகள் சட்டத்தின்கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆத்மீக எழுச்சி உத்வேகம் பெறுவதுடன், அதன் வழி பொதுவான சமூக, கலை, கலாசார, கல்வி, பொருளாதாரச் செயற்பாடுகளும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள்
இந்த நிறுவனம் , வடக்கு கிழக்கு மாகாண சபையினால நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பன்முக சமூக அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தும் பங்காளி நிறுவனங்களின் ஒன்றாகவும் இருந்து மக்களுக்குப் பணியாற்றி வருகிறது. வடக்கு - கிழக்கு சமூக மீளமைப்பு அபிவிருத்தித்
妾

Page 14
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
திட்டம் (NECORD), வடக்கு - கிழக்கு கரையோர சமுதாய அபிவிருத்தித் திட்டம் (NECCDEP) ஆகிய திட்டங்களினைக் குறிப்பிடலாம். இத்திட்டங்களின். கீழ் முக்கியமாக உட்கட்டமைப்பு வசதிகளும், வாழ்வாதாரச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உதாரண்மாக, சமூக பலநோக்கு அபிவிருத்திச் செயலகங்கள், சந்தைக்கட்டிடங்கள், பயிற்சி நிலையங்கள், பாலர் பாடசாலைகள், மீனவர் தங்கு நிலையங்கள், நிரந்தர வீடுகள், வீதிகள், மதகுகள் என்பனவும், மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பல்வேறு பயிற்சிகளும் சுயதொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்தும் முகமாக வாழ்வாதார மேம்பாட்டு உதவிகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய செயற்பாடுகள் அனைத்தும் அவ்வக் கிராமங்களில் இயங்கும் கிராம முன்னேற்றச் சங்கம், மாதர் கிராம முன்னேற்றச் சங்கம், நலன்புரிச் சங்கம் என்பவற்றின் வாயிலாக நிறைவேற்றப்படுகின்றன. இச்செயற்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பிரதேச செயலாளர்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படுகின்றன. வீதிகள் அமைப்பு சம்பந்தமாக பிரதேச சபைகளின் ஆலோசனைகளும், ஒத்துழைப்பும் பெறப்படுகின்றது.
SAREERAM
'ॐ ॐ४१४४४४४४४४४*
ཅིང་།
சரீரம் நிரந்தர வீடுகள்
நிவரணம், புனர்வாழ்வு, புனர் நிர்மானச் செயற்பாடுகள்
எதிர்பாராதவிதமாக ஏற்படும் வெள்ளம், புயல், சுனாமி முதலான அனர்த்தங்களின்போதும், யுத்தத்தினால் ஏற்பட்ட அனர்த்தத்தின்போதும் துரித கதியில் நிவாரணப் பணிகளையும் அதனைத் தொடர்ந்து புனர்வாழ்வு, புனர்
 
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
நிர்மாணப்பணிகளையும் தற்காலிக குடிசைகளையும், நூற்றுக்கணக்கான நிரந்தர வீடுகளையும், குடிநீர்க்கிணறுகள், மலசலகூடங்கள் முதலானவற்றையும் நிறைவேற்றி வைத்துள்ளது.
விசேட கடன் திட்டம்
இம்மன்றம், இப்பொழுது, இவ்வாண்டு தொடக்கம் 2011ம் ஆண்டு முடிவு வரை செயற்படத்தக்க வகையிலான 03 ஆண்டுக் கடன் அபிவிருத்தித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டு அவற்றிலிருந்து மொத்தம் 75 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் குறித்த பிரதேச செயலாளர்களே அடையாளப்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இத்திட்டம் குறித்த பிரதேச செயலாளர்களின் அனுசரணையுடனும், ஒத்துழைப்புடனும், வழிகாட்டலிலும செயற்படுத்தப்படுகின்றது. குறித்த பிரதேச செயலாளர்களுடன் இம்மன்றம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இப்புதிய கடன் வழங்கும் சேவை அந்தந்தக் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கிராம முன்னேற்றச் சங்கம்/ பெண்கள் சங்கம் என்பவற்றினூடாகச் செயற்படுத்தப்படுகிறது. ஆதலால், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தன்னலமற்ற சேவையும், ஒத்துழைப்பும் பெறப்படுகின்றன. குறித்த சங்கங்களுக்குச் சில விசேட சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இம்மூன்றாண்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் ரூபா. 50,000.00 இற்கு மேற்படாத சிறுகடனும், ஒவ்வொன்றும் ரூபா. 300,000.00 இற்கு மேற்படாத பெரிய கடனும் வழங்கப்படுகிறது. இதுதவிர, பயனாளிகள் நிரந்தர வீடொன்றைக் கட்டுவதற்கு, முடிவடையாத வீடொன்றைக் கட்டி முடிப்பதற்கு, வீடொன்றைத் திருத்துவதற்கு, வீட்டுத் தளபாடங்கள், உபகரணங்கள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்கு, மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு முதலான அபிவிருத்திக்கான கடன்களும் இத்திட்டத்துள் அடங்குகிறது. தேவைக்கேற்ப கடன்தொகை நிர்ணயிக்கப்படும்.
妾

Page 15
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
மன்றத்தின் இலச்சினை, நிறங்கள், கொடி, எழுச்சிக் கீதம், தாரக மந்திரம் என்பன
இலச்சினை - வலம்புரிச் சங்கு நிறங்கள் - வெண்மை, மஞ்சள், நீலம்
சந்திர வட்டக் கல்லின் வண்ணத்தையும், ஒற்றுமை, சாந்தி, சமாதானம் முதலான நல்லியல்புகளையும் உணர்த்துவது மஞ்சள் நிறம். கடலின் ஆழத்தையும், மக்களின் ஆளுமையையும், நிலைபேண் தன்மையையும் உணர்த்துவது நீல நிறம். வலம்புரிச் சங்கின் நிறத்தையும், மனத் தூய்மையையும் வெளிப்படையான தன்மையையும் விளக்குவது வெள்ளை நிறம். கடலின் ஆழத்திலிருந்து வீறு கொண்டு மேல் நோக்கி எழுந்து வந்து வெற்றிப் பெருமிதத்தை ஒசையெழுப்பி முழங்குவது வலம்புரிச் சங்கு. தமது சொந்த முயற்சி காரணமாக மக்கள் அடையத்தக்க வாழ்வின் உயர்வை அது எடுத்துக் காட்டுகின்றது.
மன்றத்தின் கொடிப்பாடல்
உள்ளத் தெளிவை உண்மையை உயர் வெண்மை காட்டும் கொள்ளும் ஒற்றுமைக் கோலம் குலவு மஞ்சள் காட்டும் விள்ளும் உழைப்பினை திறனை விளங்கு நீலம் காட்டும் துள்ளும் வாழ்வின் செழிப்பைத் தோன்றும் வலம்புரி காட்டும்
மன்றத்தின் தாரக மந்திரம்
“நல்வாழ்விற்கு நல்வழி செய்வோம்”
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
எழுச்சிக் கீதம்
சரீரமே எங்கள் சரீரமே சமத்துவம் பேணும் சரீரமே (சரீரமே)
சாகர நடுவில் வலம்புரிச் சங்கதன் சப்திக்கும் ஒலிச் சின்னமதாய் ஏக நாட்டில் ஒளி வீசும் எங்கள் புனித சரீரமே (சரீரமே)
நல்வாழ்விற்கு நல்வழி செய்து நாட்டினில் நற்பணி புரிதலினால் எல்லா இனமும் இனிதே வாழ என்றும் துணைசெய் சரீரமே (சரீரமே)
தேசிய ஒற்றுமை நிலைபெற்றே நம் தேசம் எங்கணும் ஒற்றுமையாய் மாசில்லாக் கலை பொருளான் மீகம் மகிழ்வாய் ஊட்டும் சரீரமே (சரீரமே)
இலங்கையில் வாழும் அனைவரிலும் இனமத பேதம் தாம் களைந்து நலமாய் வாழ வகை செய்யும் நல்ல சரீரம் வாழ்கவே வாழ்கவே வாழ்கவே மலர்வுடன் சரீரம் வாழ்கவே. சரீரமே எங்கள் சரீரமே
இந்த நிறுவனம் ஆற்றி வருகின்ற மக்கள் சேவையினை ஆராய்ந்து பார்க்குமிடத்து அவர்கள் மதிப்பிடற்கரிய பல சேவைகளை ஆற்றி வருகிறார்கள் என்பதையும், கல்வி, கலாசார, விளையாட்டு, சமூக, சமய அபிவிருத்திக்காக அளப்பரிய அன்பளிப்புக்களை வழங்கி வருகிறார்கள் என்பதையும் கண்டறிய முடிகிறது.
- கதிரவன் -
三妾=

Page 16
விருகே ஒரு பாலைவனம்
தயாரிப்பு: தங்கராசா இன்பராஜா
(இளைஞர் நாடகவிழா - 2008 மாவட்ட, மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு 24.11.2008 தேசியமட்ட போட்டியில் கொழும்பு லும்பினி மேடையரங்கில் மேடையேற்றப்பட்ட குறுநாடகம்)
(நடிகர்கள் அனைவரும் சேர்ந்து குழுப்பாடல்)
மேடையிலே நடிக்க வந்தோம் நாடகம். விருப்படைந்து பாத்திடுங்கோ ஒருகணம். காதினிலே சேதி சொல்லும் நாடகம். கருத்துணர்ந்து கேட்டிடுங்கோ ஒரு கணம்.
நாடகமாம் நாடகம் விழிப்புணர்வு நாடகம். நாடகமாம் நாடகம் விழிப்புணர்வு நாடகம்.
(மேடையிலே.) தெருவெங்கும் கூடிநிற்கும். பெருமக்களே! கேளுங்கோ - நல்ல இயற்கையினை சிறப்பாக இருத்திவிட பாருங்கோ நம்ம சுற்றாடலை ஒன்று சேர்ந்து வளர்த்துவிட வேணுங்கோ. (2 தரம்) அந்த வளத்தினிலே எல்லோர் வாழ்வும் மேன்மையடையும் பாருங்கோ.
(மேடையிலே.)
காட்சி - 01 இடம்:- கடற்கரை பாத்திரங்கள்:- முத்தையா, செல்லமுத்து, பரமானந்தன், பாக்கியராசா. (முத்தையா கடற்கரை மணலில் துள்ளி ஓடி வருதல்)
முத்தையா:- கடல் மண்ணில் கால் புதையும் போது நல்லாத்தான்

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
இருக்கும் ஒருக்கா உடல் பயிற்சி செய்வோம் (முத்தையா உடல் பயிற்சி)
(முத்தையாவின் நண்பன் செல்லமுத்து கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருத்தல்.)
செல்லமுத்து:- என்னடப்பா இவன் முத்தையா. கடற்கரை மணலில நின்று
முத்தையா:-
கராட்டி அடிக்கிறான். என்ன மச்சான் சின்னப்பொடியன் மாதிரி கடற்கரையில நின்று விளையாடுகிறாய்.
ஒண்ட கண்ணுக்கு நான் விளையாடுற மாதிரியா தெரியுது? எக்சசயிஸ் செய்றண்டா. இப்பதான் பிறசர் கொஞ்சம் குறைஞ்சிருக்கு சீனி (சுகர்) வருத்தமும் குறைஞ்சிருக்கு தொடர்ச்சியாய் செய்தால்தான் உடம்பில நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
செல்லமுத்து:- உண்மைதான் முத்தையா இந்த கடற்கரையும்
முத்தையா:-
இல்லையென்றால் நல்ல காற்றக் கூட சுவாசிக்க முடியாது இயற்கைதான் மனுஷனுக்கு கிடைச்ச ஒரு வரப்பிரசாதம்.
இந்த கடற்கரையையும் மனுஷன் எத்தனை நாளைக்குத்தான் விட்டு வைக்கப்போறான் நாலா பக்கமும் இதற்குத்தானே தொல்லையை கொடுக்காணுகள்.
செல்லமுத்து:- ஓம் மச்சான் (பாடல்)
மங்களங்கள் பொங்கி வரும் இலங்கையிலே - மக்கள்
நெஞ்சில் இன்பம் பொங்கி வந்த வேளையிலே. அள்ளி மீன்கள் ஏந்தி வந்தோம் ஆதியிலே. - இன்று அல்லலுறும் சளலம் கண்டோம் ஒளழவினை.
(மங்களங்கள். ) அண்ணாந்து பாக்கிற தென்னை பனைகள் அழகிய கடலோர தென்றல் காற்றில். - இன்னும் அலைகடல் நடுவே நாங்களிருந்தோம். 6
கடல்வள உயிரினம் கண்டு மகிழ்ந்தோம்.
(மங்களங்கள். )

Page 17
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
செல்லமுத்து:- முன்னொரு காலத்தில இந்த கடற்கரை எப்படி இருந்தது தெரியுமா? சின்ன வயதில. ஐந்து வயதிருக்கும் அப்பப்பாட கைய பிடித்துக் கொண்டு வரும் போது ஆகா. ஆகா. முத்தையா:- எப்படி இருந்த கடற்கரை இன்டைக்கு எப்படி போயிற்று.
(முத்தையாவும் செல்லமுத்துவும் கதைத்து கொண்டிருந்த வேளையில் பரமானந்தனும் பாக்கிய்ராசாவும் மண்வெட்டி, பெட்டியுடன் வருதல்)
(உழவு இயந்திரம் இரையும் சத்தத்தினை முத்தையாவும் செல்லமுத்தும் காது கொடுத்து கேட்டல்)
செல்லமுத்து:- மச்சான் முத்தையா! பரமானந்தனும் பாக்கியராசாவும்
மண்வெட்டியும் பெட்டியும் கொண்டு வரானுகள் மிஷின் இரையிற சத்தமும் கேட்குது கடற்கரையில மண் ஏத்த போரானுகள் போல வா அங்கால பத்தைக்குள்ள போய் நின்று பார்ப்போம். (பாடல்)
கையாரே கையர கையர கையாரே. கையாரே கையர கையர கையாரே.
பாக்கியராசா பாடல்:-
வாடா மச்சான் பரமானந்தா! போய்வருவோம் - நல் கடல் மண்ணை அள்ளி கொண்டு விற்றிடுவோம்.
(கையரே. 6065- - - - - - )
பரமானந்தன் பாடல்:-
முகத்துவார ஓரத்திலும் கண்டல் உண்டு நாளைக்கு நாம் சேர்ந்து வந்து வெட்டிடுவோம்
(கையரே. )
முத்தையா:- இவனுகளை விடக்கூடாது கடலில மண் எடுத்தால் தீமை
நமக்குத்தான் ஒருபக்கம் கடல் அரிப்பு மறுபக்கம் உப்பு
 
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
நீரல்லாம் உள்ளுக்குள்ளே வந்து பக்கத்து கிணரெல்லாம் உப்பு நீராகும்.
செல்லமுத்து:- அதுமட்டுமா மச்சான் மண் அள்ளுற மடுவில நீர் தேங்கி
நாற்றம் எடுக்கும் நுளம்பும் உற்பத்தியாகும்.
முத்தையா:- மச்சான் செல்லமுத்து இவனுகளை ஒருகை பாக்கத்தான்
வேணும்.
செல்லமுத்து:- ஏன் மச்சான் நமக்கு வீண் வம்பு போய் கதைச்சி பார்ப்போம்.
(மண் அள்ளப்படும் இடத்திற்கு நகர்தல்)
(பாக்கியராசா மண்வெட்டியுடன் வெளியேற பரமானந்தம் மட்டும் நிற்றல்)
செல்லமுத்து பாடல்:-
கடல் மண்ணை அள்ளுவதால் - தம்பியாரே! மண் அரிப்பு உண்டாகும். அழிக்காதே! கடல் வளத்தை - தம்பியாரே! கெடுக்காதே உடல் நலத்தை
பரமானந்தன் பாடல்:-
கொப்பன் ஒளட்டு சொத்தா - செல்லமுத்து குழறுபடி நீ செய்றா. P (பின்னனி. கொப்பன். )
முத்தையா பாடல்:-
மண்வெட்டி பிடியால உன்னுடைய. மண்டையை உடைப்பேண்டா.
இதில் 65. (மண்வெட்டி. )
(இவ்வேளையில் மிஷினில் மண்வெட்ட சென்ற பாக்கியராசா
ஓடி வருதல்)
妾

Page 18
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
பாக்கியராசா:- மச்சான் (தடுமாற்றத்துடன்) கதிர்காமப் போடி மிஷின
எடுத்திட்டு ஒடுறான். அங்கால பக்கம் நாயும் குரைக்குது போலிஸ்காரனுகள் வாரானுகளோ! தெரியவில்லை எல்லாத்தையும் எடு மச்சான் ஒடுவோம்.
(பரமானந்தனும் பாக்கியராசாவும் வெளியேறல்)
(முத்தையா, செல்லமுத்து - கடல் வளத்தினையும் நிலம், நீர், வளி ஆகியவற்றை பாதுகாத்தல் தொடர்பாகவும் மக்களுக்கு எடுத்துக்கூறி வெளியேறல்.)
காட்சி-02 இடம்:- பரமானந்தன் வீடு பாத்திரங்கள்:- பரமானந்தன், மனைவி, முத்தையா, மகன்
(ஆற்றிலே மீன்பிடிக்கச் சென்ற தன் கணவர் பரமானந்தனை எதிர்பார்த்தபடி புள்ளையம்மா நிற்றல்)
புள்ளையம்மா:-ஆற்றங்கரை பக்கம் மீன் வீச என்று போன மனுஷன
இன்னும் காணவில்லை. இந்த காலம் தொழில் என்றால் கஷ்டமாகத்தான் கிடக்கும்.
(மக்களோடு கதைத்துக்கொண்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருத்தல்)
பரமானந்தன்:- உச்சி வெயில் உச்சமண்டைய பத்தவைக்குது. விடிஞ்சா பொழுது போகும் வரைக்கும் வெயிலாகத்தான் இருக்குது. அந்தகாலம் இந்த இடமெல்லாம் நிழல் சோலையாக இருந்தது. இப்ப பாலைவனமாய் போயிற்று. புள்ளையம்மா. இன்றைக்கு மீன் ஒன்றும் இல்லையம்மா.
புள்ளையம்மா:-என்னங்க கொஞ்ச நாளாய் ஆற்றில மீன் ஒன்றும் பிடிக்க
6J6.DTLDT S(bëb(J5g5.
妾

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
பரமானந்தன்- அது என்னென்டா புள்ளையம்மா மீன்களெல்லாம் விசா
எடுத்துவிட்டு வெளிநாடு போயிற்றுதுகளாம்.
புள்ளையம்மா:-எப்பவும் உங்களுக்கு குறும்பு பேச்சுதான்.
பரமானந்தன்:- பிறகென்ன. தெகிழம் கொடியை அவிச்சி அதன் சாரைக் கொண்டு ஆற்றில ஊற்றினால் தேவையான அளவு மீன் பிடிக்கலாம். எத்தன தடவ சொல்லியிருப்பேன் தெகிழம் கொடியை அவிச்சித்தாடியென்று. என்ட கதையை கேட்டால்தானே.
புள்ளையம்மா:கோவிக்காதிங்கோ. அக்கம்பக்கத்து சனம் எல்லாம் பாக்குது
நாளைக்கு தெகிழம் கொடி ஆஞ்சித்து வாங்க அவிச்சித்தாரன்.
(இவ்வாறு நஞ்சுத்தன்மை கொண்ட தெகிழம் கொடியினை பற்றி பரமானந்தனும் புள்ளையம்மாவும் கதைத்துக் கொண்டு இருக்கையில் முத்தையா வருதல்.)
முத்தையா:- நல்ல அரசனும் ஆலோசனை சொல்லும் மந்திரியும்.
பரமானந்தன்:- ஆ. வாங்க பெரியப்பா. என்ன கனகாலத்திற்குப் பிறகு
இஞ்சால பக்கம்.
புள்ளையம்மா-இருங்க மாமா தண்ணியக் கிண்ணிய குடிச்சிட்டுப் போகலாம்.
முத்தையா:- இருக்கிறத்த விடுபுள்ள நீங்க கதைச்ச கதையெல்லாம்
கேட்டுக் கொண்டுதான் வந்த நான். தெகிழம் கொடி என்பது நச்சுத்தன்மையுடைய ஒரு கொடி அந்த கொடிய அவித்த
நீரை ஆற்றில் கொண்டு ஊற்றினால் வருங்காலம் நமக்குத்தான் கஸ்ற்றம்.
பரமானந்தன்:- அதில் என்ன கஸ்ற்றம் பெரியப்பா?
妾=

Page 19
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
முத்தையா:- ம். சரியான கேள்விடா. அந்த நீர் ஆற்றில
ஊத்தப்பட்டதும் குறிப்பிட்ட எல்லைக்குள்ள இருக்கிற குஞ்சுமீன் தொடக்கம் பெரியமீன் வரைக்கும் மயங்கி போய்விடும் ஏன் மீன் மட்டுமில்லை சின்ன இறால், பெரிய இறால், சின்ன நண்டு, பெரிய நண்டு எல்லாமே செத்துப் போகும் முழுதும் அழிஞ்சுபோம். கடைசியில இவையெல்லாம் இல்லாமல் கஸ்ற்றப்பட வேண்டி வரும்.
பரமானந்தன்:- அப்படியென்றால் நம்மட சுப்பிரமணியன் சுக்காரன், சுந்தரன், முஸ்தபா நானா எல்லோரும் இப்படித்தானே பிடிக்கானுகள்.
முத்தையா:- பரமானந்தன் கதையைக் கேள் அந்தகாலத்தில அநேகமான
ஆக்கள் இப்படித்தான் இலகுவாக மீன் பிடித்தானுகள் அதனாலதானே இன்டைக்கு மீன், இறால், நண்டு இவற்றுக்கெல்லாம் பஞ்சம் ஏற்படுது. விலையும் கூட இருக்குது.
புள்ளையம்மா:-அது தானே மாமா சின்னமீன் குஞ்செல்லாம்
செத்துப்போனால் கடைசியில மீன் இனத்தையே காணமுடியாமல்தான் இருக்கும். இஞ்ச பாருங்கோ. நம்ம இயன்றளவு வலைவீசி மீன் பிடிப்போம். பேராசை பெருநட்டம் ஓயாத உபத்திரம்.
பரமானந்தன்:- உண்மைதான் பெரியப்பா நீங்க சொல்றதும் பிள்ளையம்மா
சொல்லுறதும் சரிதான் நான் இனி இந்தவேலையை பாக்கமாட்டேன். மற்றவெங்களுக்கும் விஷயத்தை சொல்லிக் கொடுப்பேன்.
முத்தையா:- சரிபுள்ளையம்மா நான் கடைக்கரைப்பக்கம் ஒருக்கா
போயிற்றுவாரன் (முத்தையா வெளியேறல்)
பரமானந்தன்:- புள்ளையம்மா கடலிலையும் கீரிமீன் நல்லாபடுதாம் பாக்கியராசா ஒருக்கா வந்திட்டு போகட்டாம் என்று சொன்னவன் நான் போயிற்றுவாரன்.
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
(பரமானந்தன் வெளியேறல்)
புள்ளையம்மா-இன்றைக்கு கறி ஒன்றும் இல்லை முருங்கை
இலையைத்தான் சுண்டனும். இவன் பள்ளிக்கு போன பொடியனும் வந்திடுவான். (புள்ளையம்மாவின் மகன் சந்திரன் பாடசாலை நின்று வருதல்) என்னடா மகனே சந்திரா பள்ளிநின்று இடையில ஓடிவாரப் போல வரக்குள்ளயே நெழிஞ்சி நெழிஞ்சி வாராய்.
சந்திரன்:- அம்மா! இன்றைக்கு பள்ளிக்குள்ள சத்துணவு சாப்பிட்டதில இருந்து வகுத்துக்குள்ள ஒரு மாதிரியாத்தான் இருக்குது. கக்கா வரப்பாக்குது.
புள்ளையம்மா-நீ சத்துணவை சத்துணவு மாதிரியா சாப்பிட்டிருப்பாய்.
மாடு தவிடு திங்கிற மாதிரி விழுங்கி இருப்பாய். சரி சரி அந்த கடற்கரை ஓரத்தில போயிற்று கழுவிற்றுவா.
சந்திரன்:- சரியம்மா போயிற்றுவாரன்
(சந்திரன் போகும் போது)
புள்ளையம்மா:சந்திரன் இந்த குப்பைகளையும் கொண்டு அங்க கொட்டிவிடு.
(சந்திரன் குப்பையினை வாங்கி எடுத்துக்கொண்டு செல்லுதல்)
புள்ளையம்மா:-மிளகாய் தூள் வாங்கனும் கடைப்பக்கம் போயிற்றுவாரன் புள்ள செல்லமக்கா வீட்டக் கொஞ்சம் பாத்துக்க. குஞ்சாத்தட கோழிக்கெள வரும்.
(புள்ளையம்மா வெளியேறல்)
妾

Page 20
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
காட்சி:-08
இடம்:- தெருவோரம்
பாத்திரங்கள்:-
பாக்கியராசா:-
பரமானந்தன்:-
பாக்கியராசா:-
பரமானந்தன்:-
பாக்கியராசா:-
பரமானந்தன்:-
பாக்கியராசா பரமானந்தன் செல்லமுத்து
இவன் பரமானந்தன் வாரன் என்று சொன்னான்
ஆளை இன்னும் காணவில்லை.
(பரமானந்தன் வருதல்)
என்னமச்சான் பாக்கியராசா, தனிமையில நின்று கதைக்கிற. கதைச்சது போதும் இப்ப நல்ல கீரி மீன் சீசன் தானே மீனுக்குப் (3UT356)6O)6)ust....?
நானும் அதைப்பற்றித்தான் கதைக்க உன்ன வரச் சொன்னநான்
இதில என்ன கதைக்க வேண்டிகிடக்கு. வலையை எடுத்திட்டு வந்தால் மீனைப் பிடிக்கிற.
(சிரித்துவிட்டு) அங்கதான் பிரச்சனை இருக்கு. இந்த நேரம் எல்லாம் வலையைக் கொண்டு மீன் பிடிச்சால் சம்மதிக்க முடியுமா..? மச்சான் நாளைக்கு விடியரத்திற்கு முன்னால் கடலில டைனமெட் அடிக்கிறன் விடிஞ்சதும் கூடைகூடையாக கீரிமீன் அள்ளலாம்.
எனக்குப் பயமா இருக்கு. டைனமெட் தடைசெய்யப்பட்ட வெடிகுண்டு. யாராவது கண்டால் பிரச்சினையாகிவிடும்.
三妾=
 
 
 

பாக்கியராசா:-
செல்லமுத்து:-
பாக்கியராசா:-
பரமானந்தன்:-
செல்லமுத்து:-
பாக்கியராசா:-
பரமானந்தன்:-
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
நீ ஏன் பயப்படுகிறாய் நான் விடியத்திற்கு முதல் டைனமெட் குண்டை அடிச்சிவிட்டு மாறிவிடுவேன் விடிஞ்ச பிறகுவந்து அள்ளுறதுதானே. கீரிமீன் மட்டுமா எல்லா மீன்களையும் பிடிக்கலாம்.
(இவ்வேளையில் செல்லமுத்து வருதல்)
தம்பி பாக்கியராசா! பரமானந்தா! கடலில டைனமெட் அடிச்சால் என்ன பாதகம் ஏற்படும் என்று உங்களுக்கு தெரியுமா? சின்ன குஞ்சிகுருமான் எல்லாம் செத்துப்போகும். மீன் வளமே இல்லாமல் போகும். டைனமெட் அடிக்கிற அன்றைக்கு மட்டும்தான் மீன் கிடைக்கும். பிறகு மீனுக்கு ஆசைப்படுகிற கட்டம் வரும்.
இது உங்களுக்கு தேவையில்லாத கதை கடல் என்ன உங்கவீட்டு சொத்தா? நாங்க டைனமெட்டும் அடிப்போம். ஆற்றில கொண்டு தெகிழம் கொடிச் சாறையும் ஊற்றுவோம்.
மச்சான் செல்லமுத்து சொல்லுறதும் சரிதான் நீ சொன்னபடி நாமல் இப்படியான வேலைகளை செய்தம் என்றால் கடலை நம்பி வாழுகிற நமது வாழ்க்கையில் கடைசியில பிச்சை எடுக்க வேண்டித்தான் வரும்.
உண்மை பரமானந்தன். அந்தக்காலம் இத்துடன் எவ்வளவோ மீன்களை வாரிக் கொடுத்தது. இப்போ மனிதர்கள் பாக்கின்ற சிலவேலைகளால் ஆமை இனமே
அழிந்து போகூடிய நிலை ஏற்பட்டு விட்டது.
டைனமெட் அடிக்கிறது பிழைதான் செல்லமுத்து இருந்தாலும் வருமானத்தை கூட்டத்தான் இந்த ஏற்பாடெல்லாம்.
ஒருநாளைய வருமானத்தை பார்த்தோம். என்றால் பலநாளைக்கு கஷ்டப்பட வேண்டி வரும்.
豪华

Page 21
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
செல்லமுத்து:- இப்படித்தான் ஒருநாளைய வருமானத்திற்காக கதிரேசன் முந்தநாள் ஆமை முட்டையெல்லாம் அள்ளிக் கொண்டு விற்கிறான். கிட்டத்தட்ட 400 முட்டை இருக்கும். முட்டைதானே என்றுகூட நீங்க நினைக்கலாம். அவை அத்தனையும் கொஞ்சநாள் போனால் 400 ஆமைகள் இவையெல்லாம் நாம்விடக்கூடாது. நாம் இறந்து போனாலும் எதிர்கால நம் உறவுகள் வாழ வேண்டும்.
பாக்கியராசா:- செல்லமுத்து சொன்ன பிறகுதான் எனக்கு விளங்குது.
நான் வலை கொண்டு மீன் பிடிக்கிறன் வாரன் போயிற்று.
(பாக்கியராசா செல்லுதல்)
செல்லமுத்து:- பாக்கியராசா. சின்ன கண் கொண்ட வலையை பயன்படுத்தி
மீன்பிடிக்கக்கூடாது.
பாக்கியராசா: ஓம் எனக்கு தெரியும்.
பரமானந்தன்:- ஏன் செல்லமுத்து சின்ன கண் கொண்ட வலையினை
கொண்டு மீன்பிடிக்க கூடாது.
செல்லமுத்து:- அவ்வாறு மீன்பிடித்தால் சின்னமீன் குஞ்சு அழிந்து போகும்.
அப்புறம் பெரிய மீன்கள் உருவாக முடியாது.
பரமானந்தன்:- அதிலும் பெரியவிடயம் இருக்குத்தான். நான் இன்றைக்கே ஒரு வலையை வாங்கித்தான் மீன் பிடிக்கனும் ஏன் என்றால்
எனக்கிட்ட இருக்கிறது அந்த வலைதான்.
(பரமானந்தன் செல்லமுத்து வெளியேறல்)

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
காட்சி-04
இடம்:- கடற்கரை பாத்திரம்:- சந்திரன், செல்லமுத்து, புள்ளையம்மா, சுக்காரன், முத்தையா
(செல்லமுத்து கடற்கரையினை நோக்கி வந்து கொண்டிருக்கையில், கடற்கரையில் புள்ளையம்மாவின் மகன் சந்திரன் மலம் கழித்தல், குப்பை கொட்டுதல்)
செல்லமுத்து:- தம்பி. மலம் கழிக்கவும் குப்பை போடவும் இந்த
கடற்கரைதான் உங்களுக்கு கிடைச்சதோ. நீ. படிக்கிற பொடியன் என கொஞ்சம் யோசிக்கிறது இல்லையா?
சந்திரன்:- குப்பை அம்மாதான் கொட்டச் சொன்னவ.
(இவ்வேளையில் கடற்கரைக்கு சென்ற மகனை காணவில்லை என்று எல்லோரையும் விசாரித்த வண்ணம் புள்ளையம்மா வருதல். புள்ளையம்மாவை சந்திரன் காணல்)
அதோ. SldLDIT..... அந்தா வாராங்க.
செல்லமுத்து:- இஞ்ச வாபுள்ள இந்தா நிற்கிறான் பொடியன். கடற்கரை
நமக்கு கிடைச்ச ஒரு சொத்து இதை அசிங்கப்படுத்தலாமா?
புள்ளையம்மா:-என்ன அண்ணே! என்ன நடந்தது.
முத்தையா:- மருமகள்! இஞ்ச வா. பொடியனுட்ட சொல்லிக் கொடு
கடற்கரையில கக்கா போக கூடாது என்று அப்படி போனாலும் தள்ளிப் போயிற்று வெட்டி புதைச்சிப் போடனும். இல்லையென்றால் நிலம், நீரெல்லாம் அசுத்தமடையும், நோயும் ஏற்படும்.
புள்ளையம்மா-சரி மாமா. நீங்க சொல்லுறதும் சரிதான் நாங்க இனி
இப்படியெல்லாம் பிழைவிடமாட்டோம்.

Page 22
கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
செல்லமுத்து:- கடற்கரையில குப்பைகளை கொட்டக்கூடாது. இந்த
பொலித்தீன் பைகள் எல்லாம் இஞ்ச கொட்டினால் நமக்குத்தான் சிக்கல் ஏற்படும். இப்போது பொலித்தீன் பாவனையை முற்றாக ஒழித்துப் போட்டாங்க. விளங்கிற்றா தம்பி.
(விளங்கியபடி தலையை அசைத்துக் கொண்டு கொட்டிய குப்பைகளை சந்திரன் பொறக்கி எடுத்தல்)
(அனைவரும் கடற்கரையினை விட்டு வெளியேறிக் கொண்டு வரும்போது சுண்ணாம்புக் கற்களை அள்ளிய சுக்காரன் சைக்கிளில் வைத்து கொண்டு வரும் போது கற்கள் கீழே விழுகின்றன.)
(முத்தையாவும் செல்லமுத்துவும் அவ்விடத்திலே நிற்கின்றார்கள் புள்ளையம்மாவும் சந்திரனும் தங்கள் வீட்டுக்கு செல்கின்றார்கள்)
செல்லமுத்து பாடல
சுண்ணக்கல் தோன்றுவதால் - சுக்காரனே!
கடலரிப்புண்டாகும். அழகான கடல்வளத்தை - சுக்காரனே! அழிக்காதே. அழிக்காதே.
முத்தையா பாடல்
மீன் நண்டு உயிரினத்தின் உறைவிடம் முருகைக்கல் பாறைதாண்டா.
வானாலே பயணிவரும். - உல்லாசிகள்
காட்சி பொருள் இவைதாண்டா.
சுக்காரன்:-
நான் மட்டுமா கல் உடைக்கிறன். கழுத்தளவு தண்ணியில நின்று கந்தனும் சுந்தரனும் உடைக்கவில்லையா? ஏன் வெள்ளைக்காரக்களுக்கு அழகான கற்களை கந்தப் போடி மச்சான் கூட விற்றவந்தான், நான் கொண்டு வந்தால்
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
மட்டும்தான் உங்களுக்கு கடல் அரிப்பு வருமா? இது உங்கட வகுத்தெரிச்சல்.
செல்லமுத்து:- இஞ்சபாருதம்பி. கதையக்கேளு. நீ உன்னடைய பிழைப்பை மட்டும் பாக்காத நம்மட ஊரைப்பற்றி சிந்திச்சிப்பாரு. நம்மட சூழல் சுற்றாடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய செயல்களை செய்யக்கூடாது.
சுக்காரன்:- நீங்க எல்லாரையும் சுண்ணக்கல் தோண்டுவதை
நித்தாட்டினால் நானும் நித்தாட்டுவேன்.
முத்தையா:- முதல் நீ நித்தாட்டு உன்னைப் பார்த்து மற்றவங்க
திருந்தனும் நீ மற்றவங்களுக்கு விஷயத்தை சொல்லிக் கொடுக்கனும். நீ சொல்லுற மாதிரி எல்லோரும் சொன்னால் எப்படி சுற்றாடலை பாதுகாக்கிற.
சுக்காரன்:- சரி முத்தையா. இன்றையோட நான் இந்தவேலையை
விடுறன் (வெளியேறல்)
காட்சி-05 இடம்:- பரமானந்தன் வீடு பாத்திரங்கள்:- பரமானந்தன், பாக்கியராசா, புள்ளையம்மா
பரமானந்தன் பாடல்:-
அழகே புள்ளையம்மா! மீன்கள் எதுவும் இல்லையம்மா! ஆற்றிலே காத்திருந்து வந்திருக்கேன். ஐந்தாறு நாட்களாக தொழில் எதுவும் இல்லாமலே கூலி வேலைகேட்டு கேட்டு அலைகிறேன். கூலிவேலை இஞ்ச கிடைக்குமா? என்னவேலை என்றாலும் செய்கிறேன்
LuITö&éluuJIT8FIT LuITL6Ö:-
கிடைக்கும் கிடைக்கும் முகத்துவார ஓரத்தில்

Page 23
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
புள்ளையம்மா-வாங்க அண்ணா. வாங்க கொஞ்சநாளாய் பெரும்
கஸ்ற்றமும் கவலையுமாய் இருக்கு நிரந்தரமாக தொழில் ஒன்றும் கிடைக்குதில்ல.
பரமானந்தன்:- ஓம் மச்சான் பாக்கியராசா. முந்தியமாதிரி ஆற்றிலையும்
மீன்பிடிக்க இயலாம இருக்குது ஏதாவது தொழில் செய்யலாம் என்று யோசித்தால் கைலையும் காசில்ல. யோசித்தால் தலையெல்லாம் விறைக்குது.
பாக்கியராசா:- பரமானந்தன் கையில முதல் எடுக்க நல்ல ஐடியா
சொல்லுறன் ஆற்றங்கரை ஓரத்திலும் முகத்துவார ஓரத்திலும் நல்ல கண்டல் தாவரங்கள் செழித்து வளந்துபோய் கிடக்குது. அதையெல்லாம் வெட்டிக் கொண்டு விற்கலாம்.
பரமானந்தன்:- ஓம் மச்சான் அங்காலபக்கம் சவுக்கு மரமும் நிற்குது.
நில்லு கத்தியை எடுத்திட்டு வாரன். இன்றைக்கு எல்லாத்தையும் கொண்டு வித்துப் போட்டுத்தான் மற்ற அலுவல் பாக்கிற.
பாக்கியராசா:- பொன்னையன்ட மாட்டு வண்டியை சொல்லி விட்டால் அந்த
உள்ரோட்டால வருவான். கொண்டு தட்டிவிட்டால் சரி. கெதியா வெளிக்கிடு
புள்ளையம்மா:அதுதானே தொழில் ஒன்றுமில்லை என்று இருந்தால் தொழில்
காலடியில தேடிவருமா கெதியா வெளிக்கிடுங்கோ.
(அனைவரும் மரம் வெட்ட செல்லுதல்)
 

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
காட்சி-06
இடம்:- கடற்கரை பாத்திரங்கள்:- பரமானந்தன், பாக்கியராசா, செல்லமுத்து, முத்தையா
பாக்கியராசா:- என்ன செல்லமுத்து இன்றைக்கு மரம் வெட்ட எங்களோட
வாரீங்க தொழில்பாடுகள் கஷ்டம் போல
செல்லமுத்து:- அப்படியொன்றுமில்லை இந்த கடற்கரை ஓரத்தில ஆற்றங்கரை ஓரத்திலையெல்லாம் இந்த மரங்கள் இருந்துதான் என்ன பிரயோசனம்?
முத்தையா:- அதுதானே இவை இருந்தால்தான் மீன்கள் உற்பத்தியாகும்.
இறால் நண்டெல்லாம் அங்கே குஞ்சுபோடும் என்ன பரமானந்தன்?
பரமானந்தன்:- நீங்க சொல்வதை பார்த்தால் கண்டல் மரத்தையெல்லாம்
வெட்டக்கூடாதுபோல இருக்கு
செல்லமுத்து:- உண்மைதான் வெட்டக்கூடாது நமது சுற்றாடலை நாமதான் பாதுகாக்கனும். இந்த மரங்களையெல்லாம் வெட்டினால்தான் இன்றைக்கு இறால், நண்டெல்லாம் குறைவாக இருக்குது.

Page 24
முத்தையா:-
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
அதுமட்டுமா? இந்த கண்டல் தாவரங்கள் எவ்வளவு பிரயோசனம் தெரியுமோ? காற்றை சுத்தப்படுத்தும் நில அரிப்பை தடுக்குது. இடத்தை குளிர்மையாக வைத்திருக்குது. உயிரினங்களுக்கு புகழிடம் அளிக்குது. நீர் பெருக்கெடுப்பை கூட தடுக்குது. இவ்வளவு பிரயோசனமான இந்த தாவரங்களை வெட்டுவதா? வளர்ப்பதா?
பாக்கியராசா:- இந்த கண்டல் தாவரத்துக்குள் இவ்வளவு பெரிய வேலை
இருக்குதென்ன
பரமானந்தன்:- நாங்கள் இநத விடயங்களையெல்லாம் அறியாமல்
தப்புப்பண்ண பார்த்தோம்.
செல்லமுத்து:- இஞ்ச பாருங்கதம்பி, கண்டல்கள் இயங்கையின் அற்புதமான
படைப்பு அது நீரிலும் விளையும், நிலத்திலும் விளையும் காய்ந்துபோய் கிடக்கின்ற நிலத்திற்கு ஈரமூட்டி பசுமையாக்கும். அதுமட்டுமில்லை இன்னொரு விடயம் இருக்குது,
முத்தையா பாடல்:-
ஆழி அன்னை கோபம் கொண்டால் அன்றொரு நாளில் - மக்கள் ஆருயிரை கொடுத்தார் : இருபத்து ஆறில். கண்டல் மரம் வெட்டுவதால் கஷ்டங்கள் நேரும் - அந்த சுனாமியின் சீற்றத்தையும் கண்டல்கள் தடுக்கும். (2)
பாக்கியராசா:- அப்போ இந்தசுனாமி நம்ம ஊரை குறைவாக பாதிச்சதும்
இந்த கண்டல் தாவரங்களாலதான் பக்கத்துகிராமமெல்லாம் பயங்கரமான அழிவு. நாம் இதை வெட்டக்கூடாது.
(இவ்வாறாக கண்டல் தாவரங்களின் அவசியம் பற்றி 4 பேரும் கதைத்துக் கொண்டு இருக்கும் வேளையில் சுக்காரன் எரிந்த ஒயில் கழிவுகளை கடலிலே ஊத்துதல்)

சுக்காரன்:-
செல்லமுத்து:-
சுக்காரன்:-
முத்தையா:-
சுக்காரன்:-
பரமானந்தன்:-
செல்லமுத்து:-
பாக்கியராசா:-
முத்தையா:-
முத்தையா:-
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
என்ன நாலு பேருமாக சேர்ந்து பெரிய திட்டம் ஒன்று போடுகிறாப் போல
ஒன்றுமில்லை கலனுக்குள்ள என்னத்த கொண்டு போறியல் அதுவும் கடற்கரைக்கு. என்ன சாமன் அத காட்டு மச்சான் பார்ப்பம்
அது போட்டில மீன்பிடிக்க போன நாங்கள் எரிஞ்சிபோன ஒயில் கழிவுகளையெல்லாம் கடலில கழுவப்போறம்.
நல்லா இருக்கு மச்சான் உன்னுடைய கதை எரிஞ்ச ஒயில் கழிவுகளையும் கறல் பிடிச்ச டின், பழைய பெயின்ற், குப்பை கூழங்களையெல்லாம் கடலில கொட்டக்கூடாது.
ஏன் கடல் உங்களுக்கு சொந்தமா போயிற்றோ. நாங்கள் என்னவும் செய்வோம். அது எங்கட விருப்பம்.
முத்தையா, நானும் இவ்வளவு காலமாய் இந்த கழிவுகளையெல்லாம் கடலிலதான் கொட்டினேன். ஏன் கொட்டக்கூடாதோ.
இந்த கழிவுகளையெல்லாம் கொட்டினால் எவ்வளவோ பாதிப்பு ஏற்படும். இது உங்களுக்கு தெரியுமா?
என்ன மச்சான் புதுக்கதையாய் கிடக்கு இவ்வளவு நாளும் இதைத்தானே செய்துவாறோம்.
கொஞ்சம் கதையக் கேளுங்க நீங்க மீன்பிடிக்கிறத்திற்கு நடுக்கடலுக்கு போவீங்க. ஆனால் மீன் குஞ்சுகள் வளர்ச்சியடையிற இடம் கரையோர கண்டல் திடல்தான் அந்த இடத்தில ஒயில், ஏனைய கழிவுகள் கொட்டுப்பட்டால் அந்த மீன் குஞ்சுகள் வளரமுடியாமல் போய்விடும்.
இது உங்களுடைய வருமானத்தையல்லவா பாதிக்கும்.

Page 25
செல்லமுத்து:-
சுக்காரன்:-
செல்லமுத்து:-
பாக்கியராசா:-
முத்தையா:-
பரமானந்தன்:-
சுக்காரன்:-
செல்லமுத்து:-
முத்தையா:-
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அந்தா பாருங்க. அந்தகரையில ஒயில் கழிவெல்லாம் ஒதுங்குது அதில பறவையெல்லாம் நனைந்து பறக்க முடியாமல் சாகப்போகுது இதை மாதிரித்தான் இந்த கரையில இருக்கிற உயிர்களுக்கு எரிஞ்ச ஒயில்கழிவால அழிவு ஏற்படும்.
அது மட்டுமல்ல கடல் பஞ்சு என்று சொல்லுற பவளப்பாறைகள். அவற்றுக்கிடையில் வாழுகின்ற நண்டு, சிப்பி போன்ற உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகுது இதற்கு மேலாக இயற்கை அழகு கெட்டுப் போகுது.
இன்றைக்குத்தான் நாங்கள் அறியாத பல விடயங்களை
அறிந்து கொள்ளுகின்றோம். செல்லமுத்து இந்த எரிஞ்ச ஒயில் கழிவுகளை என்ன செய்யலாம்.
இந்த எரிஞ்ச ஒயில் கழிவுகளை சேகரித்தால் காசு கிடைக்கும்.
கழிவுகள் காசாகுமா?
எரிஞ்ச ஒயிலை நல்ல விலைக்கு விற்கலாம். வேலி, கொட்டில் போடுகிற மரம் தடிகளுக்கு கறையான் பிடிக்காமல் அடிக்கலாம்.
ஏன் தென்னை மரத்திற்கும் வண்டு பிடிக்காமல் அடிக்கலாம்.
நான் இனி இந்த வேலையை செய்யமாட்டேன். கழிவுகளை சேகரித்துக் காசாக்குவேன்.
உண்மையில் நாம் எல்லோரும் திரிந்தினால் நமது சுற்றாடலை சிறப்பாக பாதுகாக்கலாம்.
கடலிலே மண் அள்ளுவதை தவிர்த்து கொள்ளல் தொடக்கம்ட எரிஞ்ச ஒயில் கழிவுகளை கடலில் ஊற்றாமல்

கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
விடுதல் வரைக்கும் கவனமாக இருந்தால் எமது சுற்றாடலில் நாம் வளமாக வாழலாம்.
(இவ்வேளையில் எதிர்பாராத விதமாக நெருப்புமழை பொழிகின்றது. அனைவரும் அழுகைக்குரலுடன் தவிக்கின்றனர்.)
திரை (85.60)Ld uTL6))
நாசாப்பட்ட சுற்றாடலை நல்லதாக மாற்றுவோம். மனிதர்கள் மாறிவிட்டோமே. மண்ணில் மனிதர்கள் மாறிவிட்டோமோ
(நாசப்பட்ட) ஆயிரம் வளங்கள் இங்கு வாழவைக்க இருந்தாலும் இயற்கை போல வளங்கள் கிடைக்குமா? (ஆயிரம்) உன்னையும் என்னையும் வாழவைக்கும் கடலிலே. எண்ணில்லா மீன்களை பிடித்து வாழ்வோம். நாங்களே. o
(PDOJ -
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய நாடகவிழா-2008 தேசிய மட்ட போட்டியில் “அருகே ஒரு பாலைவனம்” குறு நாடகத்தில் பங்குபற்றியோர்,
த. இன்பராஜா திற்க பூபாலசிங்கம் த. கோபாலகிருஷ்ணன் க. மோகன்ராஜ் பு. தியாகதாஸ் சி. சுதேஸ்வரன் ந. சறோஜினி சி. சுந்தர சுதர்சன் ச. ஜெகரூபன் த. புவனேசராசா
தரவு த. புவனேசராசா

Page 26
1826
1868
1883
1896
19 O8
1946
196O
1964
1976
1998
2OO4
கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகை - 2008
சுனாமி
ஜப்பான் (மரணம் 27OOO) சிலி (மரணம் 25674) கிரகடோபா எரிமலை வெடிப்பு (மரணம் 36OOO) சந்தியாகோ, ஜப்பான் (மரணம் 22O70) பூமி அதிர்ச்சி மற்றும் சுனாமி மெசினா இத்தாலி (மரணம் 7OOOO) லியூட்டியன் தீவுகளில் பூமி அதிர்ச்சி ஹபாய் மட்டும் அலெஸ்கா ஐக்கிய ராச்சியம் (மரணம் 165) சிலி யில் பாரிய பூமி அதிர்ச்சிசிலி, ஹபாய், பிலிப்பீன்ஸ் மற்றும் ஜப்பான் (மரணம் 2OOO) பெரிய வெள்ளிக்கிழமை பூமி அதிர்ச்சி அலெஸ்கா மற்றும் ஹபாய், ஐக்கிய ராச்சியம் (மரணம் 122) பிலிப்பீன்ஸ் மோறோ தீவு (மரணம் 5000) பபுவா நியூகினியில் (மரணம் 3OOO) 14 நாடுகள் பாதிப்புக்குள்ளான போதிலும் ஆசிய பிராந்தியத்தில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, சோமாலியா, மலேசியா, மியன்மார், வங்களாதேஸ் ஆகிய நாடுகளில் (மரணம் 25O676) எனும் தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
தேடல் க. மோகன்ராஜ் ச. ஐெகரூபன்
“கதிரவன் கல்வி இலக்கிய கலை சஞ்சிகைக்கு’ ஆக்கங்களை எழுதி அனுப்புபவர்கள், மற்றும் வர்த்தக விளம்பரங்களை அனுப்ப விரும்புபவர்கள் நேரடி அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
།
கதிரவன் கலைக் கழகம் புளியடி வீதி, புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு. 065-49.03006
077-465,1732

།
பாடசாலை உபகரணங்கள், சகலவிதமான வாழ்த்து அட்டைகள் மற்றும் குறைந்த செலவில் தெளிவான போட்டோ பிரதிகளை பெற்றுக் கொள்வதற்கும்
AMMAN COMMUNICATION
63/01, பிரதான வீதி, ஆரையம்பதி இ
65nT. GUaf: 065 2245191 இல்
தரமான ஆபரணத் தெரிவுக்கு.
விஷ்வபிரம்மா பொன் அ
ஒடன் தல்ைகள் குறித்த அலுனையில் محصےܡܬ
செய்து ல்ெஎடுப்பதுடன் பழைய தஞ்லல், லுெள்ளி நியண்ணலான விலையில்
தட்டார் தெரு, தாழங்குடா-03 தொ.பேசி: 077 6529929
ான அரிசீவகைகளுக்கு. அம்பாள் அரிசி ஆலை
நியாயமான முறையில் கொள்வனவு செய்ய நாடுங்கள்
na -- E. - Amha Rice Mi
பிரதாள வீதி, தாழங்குடா. SSI-Guere 005 2245842, 065 2247020

Page 27
இந்தியன் வீன சகல விதமான ஆ ') இருபாலாருக்கு
கலியாண
சிறுவர்க >ற்றும் இந்தியாவிலிருந்து அனைத்து வகைய கொள்வதற்
இல; 104, பிரதான (Dr. அலிமா ரஹற்மான் ை
தொ.பேசி: 060 26
()ேவர்ஷா &
TVS மோட்டார் சைக்கிள் இல வகையான மோட்டார் சைக்கிள்க Repairing, Body Washing, Paint செய்து கெ
චීබ WARSHAA
இங்கு அனைத்து மோட்டார் எ உதிரிப்பாகங்களும் மலிவான விை பிரதான வீதி, &
தொ.பேசி: 065 568
சுவையான சிற்றுண்டி வகைகளை சுடச்சுட பெற்றுக் கொள்ளவும். மற்றும் விஷேட நிகழ்வுகளுக்கான ஒடர் உணவு வகைகளை தயார் செய்து கொள்ளவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோணர் இ
டைத் தெரிவுகளுக்கும், ஆண், பெண் மான நவீனரக ஆடைகள். கூறைப் பட்டுச்சாறிகள், ளுக்கான ஆடைகள்
நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட பான ஆடைகளையும் பெற்றுக் கான ஒரே ஸ்தாபனம். வீதி, காத்தான்குடி. வத்தியசாலை அருகில்) 55878, 077 64.48327
0வச சேவை மற்றும் அனைத்து (6535(gLDIT60T Machanical Service & ing என்பன மிக சிறந்த முறையில் ாடுக்கப்படும்.
MOTORS
சைக்கிள்களும், அவற்றுக்கான லையில் பெற்றுக் கொள்ளமுடியும். ஆரையம்பதி-02
1454, 077 6089349
புதுக்குடியிருப்பு தொ.பேசி: 077 4689875