கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2009.07-08

Page 1


Page 2
கொழுந்து வளர வாழ்த்துக்கள்
சமூகஜோதி Lion J.P.Jeyaram J.P.
118/7, S.R. Saravanamuttu Mw, (Wolfendhal Street) Colombo 13, Sri Lanka.
Jeyaram Brothers
Dealers in Jute Gunny Bags, Tea Chest, Twine 6 Polythene
Importers of all type of Jute Items, Peper, Indianos, Chainese, Japane's Cellophane
Tel: 2445615, 2348430, 2345099, 2345142
Fax. 2330164, e-mail jayarambOSltnet.lk
 

ஆசிரியர் - அந்தனி ஜீவா 57, மகிந்த பிளேஸ், கொழும்பு 06. 36 orialsoa5. O776612315
கொழுந்து - சஞ்சிகை மலரின் வேண்டுகோளுக்கினங்க மீண்டும்
வெளிவருகிறது. எமது பரந்த, விரிந்த தொடர்புகளுக்கு கொழுந்து இதழில்
வருகை மிக முக்கியமானது.
கடந்தகால கொழுந்து இதழ்களை
வாசித்தவர்களுக்குத் தெரியும். எமக்கு
என்று தனிப்பட்ட ஆளுமையும்
தெளிவான இலக்கும் நோக்கமும்
உண்டு. மலையக இலக்கியத்தை
முதன்மைப்படுத்தும் இளம்
படைப்பாளிகளுக்கு களம் அமைத்தல்
எமது நோக்கமாகும்.
உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் மத்தியில் மலையக
இலக்கியத்திற்கு ஓர் அங்கீகாரத்தைத் تلقیلیہقومیت தேடிக் கொடுப்பதே எமது தலையூ
వ్య?*^#*}}్య ஜி కోప్కి
பணி, மலையக மக்களிடைப்ே புதிய
விடிவெள்ளி உதயமாக வேண்டும்
என்று லட்சிய நோக்குடன் எமது A
பயனம் தொடருகிறது. எதிர்காலம் ஒளிமயமாக விளக்கும் என்பதில் ஐயமில்லை. ཉ། }
ஒவியம் கலாபூசனம் எஸ்.டி.சாமி
கொ (upf9 ജങ്ക

Page 3
கனவுவெளி மனிதர்கள்
கவிதை
என் இதயத்துக்குள்ளிருந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன என் தந்தையின் இறுதிநாட்கள்.
என் ஜென்ம பூமியை அறிய மாட்டாய் நீ. உலகின் தர்மங்களுக்கு உருக்கொடுத்த பூமி அது. வறுமையிலும், வேற்றுமையிலும் வாழ்க்கையை நேர்கொள்ளும்
மானுடம் வாழ் பூமி அது.
மாரிக்காலத்தில் மட்டுமே நீர்க்கசியும் காட்டாறும் அய்யனார் கோயிலின் பனை உயரக் குதிரைச் சிலையும் என் மனவெளியில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அவ்வெளியில் நான் மரணிக்க
ஆவன செய்ய மாட்டாயா மகனே?
மலையகப் பூமியில் முப்பதாண்டுகள் உழைத்த பின்னும் இழப்பதற்கு ஏதுமற்றுப் போன ஒரு தலைமுறையின் குரல்
இருதேச ஒப்பந்தமும், கடவுச்சீட்டும் அவர் கண்களில் நிகழ்த்திய பரவசம் அபூர்வமானது.
சி.பன்னீர்செல்வம் - மதுரை
ஆயினும் கப்பல் பயணத்திற்கு முந்தைய மாதம் வாழ்க்கைப் பயணம் முடிந்து போயிற்று
இதோ, மலையகப் பூமியில் ஜென்மம் எடுத்தவன் இந்திய பூமியின் குடிமகனாகி கால் நூற்றாண்டுக்கும் கழிந்தோடி விட்டது. ஆயினும்
என் தந்தையின் ஜென்மபூமி என்னை அடையாளப்படுத்துகிறது
கண்டிக்காரன் என்று
நான் ஒவ்வொருநாளும் அலைந்து திரிகிறேன் என் ஜென்மபூமியை இரைமீட்டபடி. மலைத் தொடர்களுக்குள் கனவு விதைக்கும் பசுந்தேயிலைகள்: குளிர்மேகம் தரை இழைய
குதித்துவரும் எழில் அருவி ஏலக்காடுகளிலும் மூங்கில் பற்றைகளிலும் இசை சேகரிக்கும் காற்று. உழைப்பின் வாசனை சூழ்ந்த என் மனிதர்களின் உயிர்மூச்சு.
இன்று என் தந்தையின் ஜென்மபூமியான காட்டாற்றுவெளியிலும் குளம்பொலி கேட்காத குதிரைச் சிலையின் காலடிகளிலும் என் ஜென்மபூமிக் கனவுகள்
சிதறிக் கிடக்கின்றன.
 
 
 
 

புலம்பெயர் இலக்கியம்
விவாதத்திற்கான புள்ளிகள்
ஆதவன் தீடீசண்யா
லெம்பெயர் இலக்கியம் பற்றிப் பேசுவதற்கு முன் நிபந்தனையாக புலம்பெயர்ந்தவர்கள் குறித்துப் பேசவேண்டியும்ளது. பொதுவாக ஒருவரது முன்னோர்/ சந்ததியினர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே அவருக்கு சொந்தமான புலம் எனப்படுகிறது.
காலகாலமாய் ஒருவர் வாழ்ந்த மண்ணிலிருந்து சுயவிருப்பத்துடன் இன்னொரு இடத்திற்கு பெயர்ந்து போகிறவரை நாம் புலம் பெயர்ந்தராகக் கொள்ள முடியாது. இந்திய மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பெற்ற பட்டங்களைக் காட்டி டாலரிலும் பவுண்ட்ஸிலும் பிச்சை எடுத்து கொழுப்பதற்காக செட்டில் ஆவதற்காக
அயல்நாடுகளுக்கு ஏகியவர்களைப் பற்றி பேச இங்கொன்றுமில்லை. எனவே தமது வாழிடத்தில் தொடர்ந்து வாழ முடியாத அக, புறவய நெருக்கடிகளாகி வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேறுகிறவரை/ வெளியேற்றப் படுகிறவரை/ வெளியேற்றப்படுகிறவரை புலம்பெயர்ந்தவராகக் கொள்ளலாம். இவர்களில், தத்தமது நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் (Internaly Displaced Persons) 6T6öIgDjid, I GD நாடுகளுக்கு தப்பிப் போய் தஞ்சம் கோருகிறவர்களை அகதி ஏதிலி என்றும் வகைப்படுத்தலாம். இப்படியாக புலம்பெயர்ந்து செல்வதை மொழிபெயர்தேசம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டுவதாக ஒரு குறிப்புண்டு.
நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, கடும் வரட்சி, போதிய வளமின்மை போன்ற இயற்கைப் பேரழிவுகள், திரிபுகள் காரணமாக மக்கள் தமது வாழிடங்களை விட்டுப் பெயர்ந்த புதிய இடங்களை நோக்கி நகர்வது இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கனிமச் சுரங்கங்கள், அணைக்கட்டுகள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பேட்டைகள், தங்க நாற்கரச்சாலை போன்ற வளர்ச்சித் திட்டங்களின் (?) பெயரால் மக்களை

Page 4
அவர்களது பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் குடியமர்த்துவதும் நின்றபாடில்லை. இதுவன்றி குறிப்பிட்ட மதம், தேசிய இனம், மொழி, பிரதேசம் இயக்கம்/ அரசியல் சாரந்த்வர் என்ற காரணத்திற்காக நிகழ்த்தப்படும் மனிதவுரிமை மீறல்கள், உயிர்வாழ்தல் மீதான அச்சுறுத்தல்கள் கலவரங்கள் காரணமாக மக்கள் கட்டாயமாக தமது வாழிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்து தமது நாட்டுக்குள்ளேயே வேறு மாற்றிடங்களில் குடியமர்கிறவர்களை அல்லது அமர்த்தப்படுகிறவர்களை உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் என வரையறுக்கிறது ஐ.நா. அவை, உலகின் பல்வேறு நாடுகளில் 20 - 25 மில்லியன் மக்கள் இவ்வாறு உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. போதிய இடவசதியுற்ற - சுகாதாரக்கேடு மிகுந்த தற்காலிகமான தகரக்கொட்டகைகளில் நிரந்தரமாக தங்கவைக்கப்படும் இம்மக்கள் அன்றாட உணவுக்காகவும், குடிநீருக்காகவும், மருத்துவத் தேவைகளுக்காகவும் அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். உள்நாட்டு அரசாங்க நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்ற இவர்கள் கல்வி பயில்வதிலிருந்தும் உற்பத்திசார் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் இவர்களது பாடுகள் குறித்துப் பேசும்
இலக்கியப் படைப்புகள் எதுவுமிருக்கிறதா என்று தெரிவில்லை.
இவர்களன்றி, பஞ்சம் பிழைக்கவும் உயிர் வாழ்வதற்கான குறைந்தபட்ச வருவாயைத் தேடியும் பெருநகரங்களை நோக்கி அன்றாடம் இடம் பெயர்கிற கோடிக்கணக்கானவர்கள் எந்த வகைப்பாடுக்குள்ளும் வருவதில்லை. மும்பை, பெங்களூர், திருப்பூர் போன்ற நகரங்களை நோக்கிய இடம்பெயர்வை இவ்வகையில் சேர்க்கலாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அரசியல் பொருளாதாரத் தளங்களில் வலுவற்றவர்கள். இவ்வாறான இடப்பெயர்ச்சிகள் ஒட்டுமொத்தமாக கூட்டு முடிவின் அடிப்படையில் அமையாமல் தனிப்பட்ட குடும்பங்களின் தன்னிச்சையான முடிவாக தலைவிதியாக கருதப்படுவதால் அவர்கள் தம் மண்ணைவிட்டு வெளியேறுவதற்கான நெருக்கடியை ஒரு அரசியல் நிகழ்வாக எப்போதும் மதிப்பிடுவதில்லை. நகர்ப்புறங்களின் உதிரிப் பாட்டாளிகளாக குறைந்தகூலி உழைப்பாளிகளாக வந்து குவியும் இவர்களைப் பொருட்படுத்திய சமூக பண்பாட்டு, அரசியல் இயக்கங்கள் எதுவொன்றையும் சுட்டவியலாத நிலையே உள்ளது.
காலனியாட்சியாளர்கள் இந்திய மக்களைத் தமது உள்நாட்டுத் தேவைகளுக்காக இடம்பெயர்த்து இழுத்துச் சென்றதோடு நில்லாது தமது கட்டுபாட்டின் கபழ் இருந்த மலேசியா சிங்கப்பூர், பர்மா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தீவுகளுக்கும் இழுத்துப் போயினர். இந்திய/தமிழ்ச் சமூகத்தின்
 
 
 
 

சாதிய ஒடுக்குமுறைக்கும் அதன் வழியான பொருளாதாரச் சுரண்டலுைக்கும் ஆளாகித் திணறிக் கொண்டிருந்த தலித்துகளே இவர்களில் பெரும்பாலானவர்கள். இக்கொடுமைகளிலிருந்து தப்பித்துவிடும் நப்பாசையில் தலித்துகளில் ஒரு பகுதியினர் கப்பலேறியதாகவும் பெரும்பாலோர் பலவந்தமாகவே இழுத்துச் செல்லப்பட்டதாகவும் எண்ணற்ற தரவுகள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்திற்கு உகந்த தென் தமிழ் நாட்டில் சாதிக்கொடுமையாலும், கடும் பஞ்சங்களாலும் அலைக்கழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்த இந்த அடித்தட்டுத் தமிழர்கள் பிடித்தச் செல்லப்பட்டு 1820 இல் மலேயாவின் பினாங்கிலும், 1824 இல் இலங்கையிலும், 1840 களில் டிரினிடாட்கயானா, மொரிஷியஸ்சிலும், 1860 களில் தென்னாபிரிக்காவின் நேடாலிலும், 1870 களில் டச்சுக்காலனியான சுரிநாமிலும், 1879 இல் பிஜியிலும் இறக்கிவிடப்பட்டனர். 1874 இல் தமது காலனியாக மாறிய பிஜித்தீவுக்கு 1879 முதல் 1916 வரை 87 கப்பல்களில் 65 ஆயிரம் பேர் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு பெண் என்ற
வீதத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இவனர்களிலிருந்த உருவாகித்தான் பிஜித்தீவு தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உள்ளது. 840 தீவுகளின் தொடுப்பான பிஜியின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம்பேர் இந்திய வம்சாவளியினர். பிஜித்தீவின் கரும்புத் தோட்டங்களில் அவதியுறும் தமிழர்களை (எந்தச் சாதித் தமிழன்?) பாரதி பாடியதற்கு மேலாக அவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவு எதுவும் இருக்கிறதா தமிழில் என்று இனிதான் ஆராய வேண்டும்.
இன்றைய மலேய மக்கள் தொகையில் 10 சதம்பேர் (சுமார் 17 லட்சம்) தமிழர்களாக இருந்தபோதிலும் அவர்கள் அம்மண்ணில் இயங்கி 188 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அந்நாட்டின் மொத்த சொத்து மதிப்பில 1.5 சதம் மட்டுமே அவர்களுக்குரியதாய் இருக்கிறது. புலம்பெயர் தமிழர் என்றதும் வழலாற்று ரீதியாய் உழைப்புச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளான இந்த மலேசியத் தமிழர்கள் நம்மில் ஒருவரது நினைவுக்கும் எட்டுவதில்லை என்பதே உண்மை. குறைந்த அல்லது நடுத்தர வருமானத்துடன் மலேயாவின் தோட்டப்புறங்களிலும்
UN Lanka’s
#32, St Anthony's Mawatha, Colombo 13 Sri Lanka. 0114 614438, 0115 5665214 e-mail. : balendra co 130yahoo.com
புறநகரப்பகுதிகளிலும் வாழ்ந்து
Computer Type Setting * Prin 8 POCUCtion
Offset Printing Screen Printing யுனிலங்காஸ் வாக்கிய பஞ்சாங்க நாட்காட்டி தயாரிப்பாளர்கள் Education Publishers

Page 5
கொண்டிருக்கிற இவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் தமிழ் மண்ணை எட்டியுள்ளனவா என்பதை இவ்விடம் நின்று கேட்டுக் கொள்வோம் ‘தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களில் தேர்ந்த புலவர்களோ செஞ்சொற் பாவலர்களோ இருந்ததில்லையென்றாலும் கல்லாமல் கவிபாடும் திறன் கொண்டிருந்த தோட்டத் தமிழர்களின் நாட்டுப் புறப் பாடல்களே மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மூத்த கலைச் செல்வங்களாக விளங்குகின்றன என்று சொல்வது மிகையாகாது' என்று முரசு நெடுமாறனால் விதந்து கூறப்படும் பாடல்கள் தொடங்கி ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி என்ற சமகாலப்படைப்புவரை நாம் அறிந்தது சொற்பமே என்று ஒப்புக் கொள்வதே நேர்மையாகும்.
உலகமே வியக்கும் இன்றைய சிங்கப்பூரை உருவாக்கியவர்கள் நாங்களே என்று தமது கவிதைகள் மற்றும் நாடகங்களின் வழியே அறிவிக்கிறார் இளங்கோவன். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்த தமிழரான இவரது படைப்புக்கள். அம்மண்ணில் தமது மூதாதையரின் உழைப்புக்கான பங்கினைக் கேட்பதாய் அமைந்துள்ளன. எனவே அவரது நாடக ஆக்கங்கள் அங்கே அரங்கேற அனுமதிக்கப்படுவதில்லை. புலம்பெயர் இலக்கியம் என்றதும் இவரும்கூட நமக்கு நினைவுக்கு வருவதில்லை. பணியின் நிமித்தம் தன்விருப்பத்தோடு அங்கு குடியேறியுள்ள ஜெயந்தி சங்கர் போன்றவர்களின் எழுத்துக்கள் இன்றைய சூழலுக்குள் பொருந்தி
நிற்கிற தன்மை கொண்டவை அவற்றை
புலம்பெயர் இலக்கியமாய் கொள்ள
(ԼՔԼԳեւ IIIՑl.
மோகன்சந்த் கரம்சந்த் காந்தியை ஒரு தேசத்தின் தந்தையாக வடிவெடுக்க வைத்தவர்கள் தென்னாபிரிக்காவிலிருந்த தமிழர்கள் என்ற பெருமையைப் பேசினாலும், அவர்கள் எதற்காக அங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், அவர்களுக்கும் தமிழ் நாடு உரியதுதானே என்று நாம் நினைத்ததுமில்லை. காந்திக்கு தமிழ் கற்றுத்தந்த போராளி ரெட்டைமலை சீனிவாசன் அங்கேதான் இருந்தார் என்பத கவனத்தில் நிறுத்துக.
III
தனது இன்னொரு காலனி நாடான இலங்கையின் மலைப்பகுதிகளில் காப்பி, தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். 1824 இல் முதலில் வந்திறங்கிய 16 குடும்பங்களோடு இந்த புலம்பெயர்வு தொடங்கியதாக கூறுகிறார் அந்தனி ஜீவா. 1930 வரையிலும் இந்தப் பெயர்வு முடிவற்றதாக இருந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர் இந்திய/தமிழ்ச் சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் என்பதை சாரல்நாடன், கலாநிதி க.அருணாசலம் ஆகியோர் தத்தமது நூல்களில் தெரிவிக்கின்றனர்.
சொந்த மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்து வரப்பட்ட இம்மக்கள் புதிய வாழிடமான - புகலிடத்திற்குள் பொருந்த முடியாத தமது துயரங்களை பாடல்களின் மூலம் வெளிப்படுத்தி யுள்ளனர். அவர்கள் கண்டிச் சீமைக்கு கனவுகளுடன் வந்தனர். புலம்பெயர்த்
 
 
 
 
 

தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்பமாயிற்று. இன்றுவரை அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவையனைத்தையும் உயிர்த்துடிப்புடன் புலப்படுத்தும் உருக்கமான சொல்லோவியங்களாக இப்பாடல்கள் அமைந்துள்ளன என்று பேராசிரியர் கைலாசபதி குறிப்பிடு கிறார். எஸ்.ஆர்.எஸ்.பெரியாம்பிள்ளை, பி.ஆர்.பெரியசாமி, மா.செ.ஜம்புலிங்கம், எஸ்.எஸ்.நாதன், ஜஃபார், கந்தசாமி கணக்கப்பிள்ளை, எம்டன் ஏ.விஜயரட்ணம் போன்ற தொடக்ககால பாடகர்களை அடியொற்றி 1960 களுக்குப் பின்னரும் வி.எஸ்.கோவிந்தசாமித் தேவர் கா.சி.ரெங்கநாதன், நாவல்நகர் பீர் முகம்மது இப்ராஹிம் போன்றவர்கள் மக்களிடையே விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடி வந்ததாக சாரல் நாடன் குறிப்பிடுகிறார். இவர்களில் சிலரது பாடல்கள் 'மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும் போன்ற நூல்களில் காணக்கிடைக்கின்றன. எஸ்.எம்.கிருஷ்ணம்மா (சீர்திருத்தக் கீதம்) எஸ்.பெரியக்கா (தொழிலாளியின் துயர்) ஆகிய பெண் பாடலாசிரியர்களும் காத்திரமாக இயங்கியுள்ளனர்.
உயிருக்கு உத்தரவாதமற்றதாய்
கடற்பயணம் இருந்ததை 'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்/ அந்நாள் பலபேர்கள் உயிரினையிடைவழி தந்தோம் என்னும்
மீனாட்சியம்மையின்
பாடல்வரிகளிலிருந்து அறியமுடிகிறது.
“ஊரான ஊரிழந்தேன்/ ஒத்தப்பனை தோப்பிழந்தேன்/ பேரானகண்டியிலே/ பெத்தத் தாயை நான் மறந்தேன்."
'கோணகோண மலையேறி/ கோப்பிப்பழம் பறிக்கையிலே/ ஒத்தப்பழம் தப்பிச்சின்னு/ ஒதைச்சானையா சின்னத்துறை.
'றப்பர் மரமானேன்/ நாலுபக்கம் வாதானேன் எரிக்க விறகுமானேன்/ இங்கிலிஷ்காரனுக்கு ஏறிப்போக காருமானேன்.”
பஞ்சம் பொழைப்பதற்கு/ பாற்கடலைத் தாண்டி வந்தோம்/ பஞ்சம் பொழைச்சு நம்ம பட்டணம் போய்ச் சேரலியே/கப்பல் கடந்து/ கடல் தாண்டி இங்க வந்தோம்/ காலம் ww செழிச்சு நம்ம/ காணி போய்ச் சேரலியே."
ஆகிய வரிகளிலிருந்து தமிழர்கள் பட்ட துயரங்களும் ஊர் திரும்பும் ஏக்கத்தையும் உணர முடிகிறது.
இப்படி இலங்கைக்குப் போய்
SASCO TEX
Authorsed Distributors for Original KIBS Products
Lucky Paradise Super Market, No. 531A, 12, Keyzer Street, Colombo 11, Sri Lanka. Tel: 0112432850, Fax 0112471719.
WholeSalle & Retai
Dealers in
exties

Page 6
இன்னலுறுகிற ஒரு குடும்பத்தின் கதையாக புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி யைத் தவிர தமிழகப் படைப்பாளிகள் ஏவரின் மனதும் இம்மக்களுக்காக கசியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையின் பெருந்தோட்டத் தொழில்களை கொழிக்க வைத்த மலையகத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் சுதந்திரத்திற்குப் பின்னும் நீடித்தது. அவர்களது குடியுரிமை மறுக்கப்பட்டது. சிறிமாசாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் இலட்சக்கணக்கானவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். வாழிடங்களிலும் பணியிடங்களிலும் சிங்களவர்களால் புறக்கணிக்கப்பட்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் இந்த இலங்கைத் தமிழர்கள், இவர்களோடு ஒட்டுறவு கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டனர். வடக்கிலும் கிழக்கிலும் இருந்த இலங்கைத் தமிழர்கள் இவர்களோடு ஒட்டுறவு கொள்ளாமல் புறக்கணித்தனர். சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கைத் தமிழரின் விடுதலை இயக்கங்களும் கூட இவர்களைப் பொருட்படுத்தவில்லை. புஸ்பராஜா போன்ற ஒரு சிலரைத் தவிர, மற்ற இயக்கவாதிகள் அங்கு களப்பணி களுக்கு செல்லவில்லை. அம்மலையக மக்களின் பாலும் அக்கறை கொண்ட காரணத்துக்காகவே EPRLF என்ற அமைப்பின் சுருக்கத்திலுள்ள People என்பதைச் சுட்டும் P. Paraiyar (பறையர்), Pala (பள்ளர்) என்று இழிவுபடுத்தப்பட்டதாகவும் செய்தியுண்டு. வாழ்வின் இத்தனை துயரங்களையும் அந்தந்தக் காலத்தின்
பதிவாக வெளிப்படுத்தும் இலக்கியப் படைப்புகளும், நிகழ்கலைகளும் மலையக இலக்கியம் என்ற தனி வகைமையாக வளர்ச்சி கண்டுள்ளது. வாய்மொழிப் பாடல்கள் தொடங்கி கதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் எனச் செழித்து நிற்கும் ‘மலையக இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாக நமக்குத் தோன்றாதிருக்கக் காரணம் என்ன? அவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு சாதியினர் என்பதால் தன்னியல்பாக உருவாகியுள்ள புறக்கணிப்பு மனப்பான்மை தான் காரணம் என்று சொன்னால் அதைக் குறுகிய சாதியப் பார்வை என்று ஒதுக்கிவிடத் துணிபவர்கள் வேறு நியாயமான காரணங்களை முன்வைக்க வேண்டும்.
Wi தமிழ் நாட்டின் ஒவ்வொரு வட்டத் தலைநகளிலும் அல்லது மாவட்டத்திற்கு ஒன்றாவது இலங்கைத் தமிழர் நிவாரண முகாம் இருப்பதை அறியாதவர்கள் ஒருவருமில்லை. அந்த முகாம்களில் பெரும்பாலானவை வசிக்கத் தகுதியற்றதாய் பாழடைந்து கிடக்கின்றன என்று மனிதவுரிமை அமைப்புகள் தெரிவிக்கும் புகார்களை செவிமடுப்பார் யாருமில்லை. அகதிகளுக்கான சர்வதேச சட்டங்களும் ஒப்பந்தங்களும் இங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. காவல்துறையின் கண்களில் இவர்கள் அனைவருமே குற்றவாளிகளாகவே தென்படுகின்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு கரையிறங்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழரையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது இங்கு பொதுப் புத்தியாக மாறியிருக்கிறது.
ՏՀՏՀՏՀՏՀՏՀՏՀ கொழுந்து
 
 

தலித்துகளிடமிைருந்து வெளியாகும் மாற்றுக்குரல்களையும் இதற்குள் இணைக்க வேண்டியுள்ளது.
தமிழ் நாட்டிலிருந்து பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் காலனியாட்சியாளர்களால் பலவந்தமாக
இலங்கையில் நம் தமிழ் சகோதரர்கள் இப்படி வதைக்கப்படுகிறார்களே என்று அரற்றுகிறவர்களும் கூட தமிழ் நாட்டின் முகாம்களில் வதிந்து கிடக்கும் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை. மிகவும் உணர்வுபூர்வமான இவ்விசயம்
முழுவதுமே வறண்ட தட்டையான எல்லாவற்றையும் கோப்புகளாய்க் கருதுகிற அரசு அதிகாரிகளின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.
இழுத்துச் செல்லப்பட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அயலகத் தமிழர் இந்திய வம்சாவளியினர் என்ற
புலம்பெயர் இலக்கியம் என்ற வகைமையை ஆழமும் விரிவும்
அலங்கார வார்த்தைகளைப் பூசி இவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்ட வரலாறு மறைக்கப்பட்டு வருகிறது. இவர்களது கலை இலக்கிய வெளிப்பாடுகளையும்
கொண்டதாக மாற்றியமைக்கும் பொறுப்பு தமிழக படைப்புலகத்தின் முன்னே இருக்கிறது. இலங்கையிலிருந்த புலம்
வாழ்வனுபவங்களையும் உள்ளடக்கும் பெயர்ந்தவர்களின் படைப்புகள்
- - போதுதான் இந்தப் புலம்பெயர் மட்டமேயல்லாது, மலையகத் தமிழர் இலக்கியம் என்பது முழுமை பெறும்.
தமிழ் முஸ்லிம்கள், நன்றி : உயிர்நிழல்
பூபாலசிங்கம் புத்தகசாலை
୪7 புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள்,
நூல் வெளியீட்டாளர்கள்.
ൈഥ
தொபே - 242821 தொநகல் 233.733 156öTGCTG 5563 - pbdhoGPStnet. Ik
கிளை: இல. 309 அ-2/3 காலி வீதி, கொழும்பு - 06, இலங்கை, தொ.பே. - 4515775,2504266,
இல, 4அ, ஆஸ்பத்திரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்,
இலங்கை,
கொழுந்து

Page 7
பதுளை சேனாதிராஜா
கவ்வாத்து வெட்டுர ராமசாமிய தெரியாதவங்க இங்க இருந்தாங்கனா அவங்க இந்த சுத்துவட்டத்துல வசிக்காதவங்கனுதான் நா சொல்லுவேன். எங்க தோட்டத்துல இருக்கிற மாரியம்மன் கோவில் எப்பிடி பிரசித்தமோ அப்பிடி கவ்வாத்து ராமசாமியும் பிரசித்தம். கவ்வாத்து கத்திய கையில பிடிச்சாருனா அப்புறம் கவ்வாத்து மெசினுதான். கொரஞ்சது அம்பது அறுபது தேயில செடிய வெட்டி சாய்ச்சுப்புட்டுதான்நிமிருவாரு அவரு வெட்டுன தேயில செடிய பார்த்தா சின்னபுள்ளக கட்டருல பென்சில் சீவுமே அந்தமாதிரிதேயில கம்புக கொஞ்சம்கூட ஒடயாம, தெறிக்காம கூரான கம்புமாதிஇருக்கும். வெள்ளக்கார தொர இருந்த நேரத்துல ராமசாமியுட்டுதகப்பன் பொன்னுசாமிதான் கவ்வாத்து வெட்டுறதுல பலேகில்லாடி,
 
 
 

அன்னைக்கு அப்பிடிதான் ராமசாமி சொகமில்லாததோட கவ்வாத்து வெட் டிக்கினு இருந்தாரு, அவருட்டு சம்சாரம் எத்தனமொற சொல்லி இருப்பா போகா திங்க. டாக்டர் ஐயா ஒருவார காலத்துக்கு வீட்டுல இருக்கச்சொன்னாரு நீங்க என்னமோ ஒடனே போய்யாகனு முனு சொல்லுறீங்களேனு கேட்டா அதுக்கு அவரு நா இல்லாட்டி யாரு இருக்கா இந்த வேலய கவனிக்க, தொரதப்பா ஏதும் நெனச்சிப்புட்டா எல்லாந் தவறாபோயிருறும் புள்ள நெஞ்சுவலி இப்ப சொகம்தானே. ஏ.வினா பயப்படுறணு அவகிட்ட ஆறுதல சொல்லிபுட்டு போயி வேலய கவனிக்கத்தொடங்கிட்டாரு. வேலய கவனிச்சிச்சாதான் ஒங்களுக்கு தெரியுமே. வீட்டு நெனப்பு நின்னுபோயிடும். தீடிருனு அவருக்கு ரொம்ப வேறுக்க தொடங்கிருச்சி. ரொம்ப எளப்புமாதிரி வந்திருச்சி. அப்பிடியே நெஞ்சபுடிச்சிக்கிட்டு கீழ விழுந்துட்டாரு. அப்புறம் என்னா? அந்த வழியில வந்த ராசக்கா மகென் மூலமா விஷயம் ஒடனே தோட்டத்துக்கு தெரிஞ்சிப் போயிருச்சி. அவருட்டு சம்சாரமும் மகனும் தேயில காட்டுக்கு ஓடிவந்தாங்க. அவருட்டு பய கொஞ்சம் துடிப்பா இருப்பான். கூடிக்கொரச்சிப்பார்த்தா ஒரு பதிமூனு வயசு இருக்கும். கவ்வாத்து வெட்டின மலைக்குள்ள பாஞ்சிகிட்டு ஓடிவாரப்போ அவனுட்டு எடது காலு நீட்டிக்கிட்டிருந்த தேயில கம்புலபட்டு அப்படியே அதுக்குமேல தவறி விழுந்திட்டான். அவனுட்டு தொடய கிழிச்சிக்கிட்டு தேயில கம்பு போயிருச்சி. இந்த நேரம் பார்த்துத்தான் இப்பிடி இவென் விழுகனுமா? கூறு கெட்டபய. அவனுட்டு காலுக்கு ஒப்பரேஷன் நடக்கிற நேரம் அவனுட்டு தகப்பனும் கட்ட ஏறிட்டாரு.
விதி எப்பிடி வெளயாடுதுனு பார்த்தீங்களா? அவனுட்டு ஆத்தாவுக்கு தீடீருனு வானம் ரெண்டா பொளந்தமாதி இருந்திச்சி. அவருட்டு மகெனுக்காக வாழ்ந்துதானே ஆகனும், அவனுக்கு காயம் கொஞ்ச நாளுள ஆறிபோனாலும் தழும்பு மட்டும் தகப்பனுட்டு நெனப்புமாதி மாறாம இருந்திச்சி. ஆத்தாவ பாக்க கொஞ்சம் அப்பிடி இப்பிடினு இருப்பா. ஆனா அந்த எளம கொரஞ்சிக்கிட்டே போவுது அவளுட்டு சந்தோஷத்தப்போல, அவென் அதான் ராமசாமியுட்டு சம்சாரத்துட்டு மகென் மளமளனு ரெண்டுமூனு வருஷத்தில வளந்து பெரிய ஆம்பளயாட்டம் இருந்தான். பத்தாம் வகுப்பு டெஸ்ட் எடுக்கப்போற நேரம்தான் அவனுக்கு பேர்த்செட்டிபிக்கட் இல்லனு தெரிஞ்சிச்சி. ஒருமாதி போஸ்ட் ஐடின்டி கார்ட் ஒன்னு எடுத்துக்கிட்டு சமாளிச்சி எக்ஸ்சேம் செஞ்சான் பெறகு ரெண்டு வருஷத்துக்கு ஏஎல் எக்ஸாமும் செஞ்சு பாஸ்பண்ணிப்புட்டான். கெம்பஸ்சுக்கு போக கெடைக்கல. என்னா பண்ணுறது? அவனுட்டு ஆத்தா படிப்புக்கு செலவழிச்சதவிட ரொம்ப நல்லா படிச்சிருக்கானுதான் நா சொல்லுவேன். ஏஎல் எக்ஸ்சாம் பாஸ்பண்ணிபுட்டு தோட்டத்துல வாத்தியாரா வரணுமுணு அவென் நெனைக்கல. கொழும்புக்கு போகனும், நெறய சம்பாதிக்கனும், ஆத்தாவ நல்லா பார்த்துக்கனுமுனு மனசுல ஆசய வளர்த்துகிட்டான். தோட்டத்துல மாரியம்மன் திருவிழாவில கலந்துகிரதுல இருக்கிற சந்தோஷம் கொழும்புக்கு போனதும் வருமுனு நெனைச்சான்.
எப்பிடியோ கொழும்புக்கு போயி ஏதோ பிரிண்டர்சாம் அங்க வேலைக்கு சேர்ந்துக்கிட்டான். கணக்கு எழுதுறது பேங்க்கு போறதுணு வேலய பத்துமாசமா
கெ ாழுந்து ல

Page 8
நல்லா செஞ்சிகிட்டு இருந்தான். ஆத்தாவுக்கு லெட்டரு போட்டான். சீக்கிரம் ஒன்ன வந்து கூட்டிக்கிட்டு போக வருவேனு சொல்லிக்கிட்டு இருந்தான்.
மூனுமாசத்துக்கு மொதல அவென் பகல் சாப்பாட்டுக்கு பத்துபதினஞ்சு கடய தாண்டி போனவனதான் அப்புறமா இன்ணைக்கிவச்சி திரும்பவே இல்லேங்க. எங்கபோனானு தெரியல. பிரின்டஸ்காரங்க தேடிப்பார்த்து ஒஞ்சிப்போனாங்க, தேயில காட்டுல ஊசிய தொலச்சிப்புட்டு எப்படிங்க தேடுறது? அப்பிடிதாங்க இப்ப காணாம போனவங்கவுட்டு கதையும். இப்ப நெழம தான் ஒங்களுக்கு எல்லாம் தெரியுமே. நாளைக்கி சூரியன் உதிக்குமுனு மட்டும்தான் நிச்சயமா இருக்குமுனு உறுதியா சொல்லியுடலாம். மத்த விசயமெல்லாம் ஆத்துதண்ணியில தான் எழுதிவைச்சிடனும், நடக்கிறத பாத்தா எம்.ஜி.ஆர் சிவாஜி படம் வந்த காலத்தில பொறந்து நல்லா வாழ்க்கைய அனுபவிச்சிட்டு போயிருக்கனுமுனு தோனும். இப்ப ஒவ்வொரு நாளும் மனசுக்கு கஸ்டமான வெசயம் இல்ல கேள்விபடுறோம். இவென சும்மா சொல்ல கூடாது. முயற்சி இல்லாம வெற்றிபெற முடியாதுதான். இவென் ஜோரா போய்கிட்டுதான் இருந்தான். என்னாதான் செய்யுறதுணு கேக்கிறேன்?
சரி.சரி. ஏம்புட்டு கதய சொல்லுறதுக்கா உங்களயெல்லாம் கூப்பிட்டேன் இல்லயே. அவென் ஜெயிலுல இருந்து எழுதின தபால் அட்ட ஆத்தாவுக்கு நேத்துதான் கெடைச்சிச்சி. காங்கிரஸ்காரர் ஒருத்தரோட கொழும்பு கோட்டுல புரொக்டர் ஒருதரபுடிச்சி மோசன் போடனுமாம்! -
கொழும்புல உள்ளவங்க அதுவும் சொந்தகாரனா இல்லாட்டி வெளியில எடுக்க ஏழாதுனு கேஸ் போய் பார்த்துப்புட்டு புரொக்டரு கையவிரிச்சிட்டாரு.
ஆத்தா ரொம்பதா ஆடிப்போயிட்டா, புருசன எழந்த பெறகு பெத்த புள்ளையும் எழந்தா அவ இருந்து என்னா புண்ணியமுனு நெனைச்சி ஒனு அழுதா,
புரொக்டர்கிட்ட கெஞ்சினா, காங்கிரஸ்காரரும் என்னென்னமோ அவருகிட்ட சொன்னாரு சரி. முயற்சிபன்னுவோமுனு புரொக்டர் சொல்லிபுட்டு கோட்டுல
ARUSHANA
*ewelleż2
அருஷனா ஜாவலரி
Dealers in Genuine 22 Ct. Gold jewels
157 / 2-B, Sea Street,
Colombo 1 1 , Sri Lanka Tel: O 1 12424.125 07 1 3028571
 ைகொழுந்து
 
 
 
 
 
 
 
 

கேஸ எடுத்தாரு,
கேஸ்சு நம்பர கூப்பிட்டோன புரொக்டரு எழும்பி நீதவானுக்கு தெளிவா ஏதோ
சொன்னாரு ஆத்தாவயும் நீதவானுக்கு காண்மிச்சி கதைச்சாரு. ஆத்தா என்னடானா மாரியம்மாவ நெனைச்சிக்கிட்டே இருந்தா, புஞ்சனம்பூத்து இருந்த கண்ணுல மழமழயா கண்ணீர் கொட்டிக்கிட்டே இருந்திச்சி.
நீதவான் ஆத்தாவ நல்லாபார்த்துப்புட்டு ஆத்தாவ கையெழுத்துப்போட்டுட்டு போனாபோதுமனு உத்தரவுபோட்டுட்டாரு.
ஆத்தா அழுதுகிட்டே சிரிச்சா. ஆத்தா கையெழுத்துபோட்டா ஏன் இப்பிடி இருக்கப்போறா, கைநாட்டுதான் போட்டாள். பதிவு செஞ்சவர் மஞ்சல் கலருல ஒரு துண்ட கொடுத்து ஜெயிலுக்கு போயி கொடுத்துப்புட்டு மகன கூட்டிக்கிட்டு போக சொல்லிப்புட்டாரு. காங்கிரஸ்காரரு என்னா மந்திரம் பண்ணினாரோ தெரியாது பிரிண்டஸ்காரங்க ரெண்டுபேரு வந்து ஆத்தாவ பார்த்துபுட்டு கைஎடுத்து கும்பிட்டு போட்டாங்க. பத்தாயிரம் ரூபா காசயும் கொடுத்தாங்க. கூrஎடுத்துகிருங்க ஆத்தா. மவென் வேல செஞ்சசம்பள காசு, செலவுக்கு ஒதவும்; மூனு காங்கிரஸ்காரர் சொல்லிபுட்டதாள ஆத்தாகாச வாங்கிட்டா.
அந்திக்கு ஆத்தாவும் காங்கிரஸ்காரரும் அவனும் பதுள கோச்சில ஏறிக்கிட்டு ஊருக்கு போறாங்க. அவென் ஆத்தாவுட்டு கைய புடிச்சிகிட்டே வந்தான்.
காங்கிரஸ்காரர் போற வழியில இவென்கிட்ட நடந்த சம்பவத்த எல்லாம் ஒன்னுவிடாம கேட்டாரு. எறங்கிற எடம் வந்தோன, க்ஷக்ஷசரி ஒண்ணும் யோசிக்காத ஒம்புட்டுவேல முடிஞ்சதுனு வச்சிக்க. அடுத்த கெழம மினிஸ்டர் இங்க வாராரு இல்ல. எலக்ஷன் மீட்டிங் எல்லாம் ரொம்ப நல்லா எரேஞ்ச் பண்ணி இருக்கோமில்ல. அவரு வந்தோன ஒண்ண கூட்டிகிட்டுபோய் வெசயத்த முடிச்சிதாரேன். என்னா ஒக்கேவா.; னு சொல்லிகிட்டு எறங்கி எங்கேயோ போனாரு.
பொலபொலனு பொழுது விடிஞ்சிருச்சி. அவனுட்டு வாழ்க்க எப்பிடி இருக்கபோவதுன்னு சொல்ல தெரியல! இவென் ரொம்ப நேரம் யோசிச்சிப்புட்டு கிட்ட சொல்லிபுட்டு ஒரு முடிவோட தோட்ட தொரய பாக்க விறுவிறுணு அவருட்டு ஒப்பிஸ்சுக்கு போனான்.
பச்சகலரு பெயின்ட் அடிச்சி ரொம்ப அழகாவும் சுத்தாமாவும் பு??க்கன்னுகளுட்டு வாசமும் பக்கத்துல இருந்த தேயில பெக்டரியுட்டு தேயில வாசமும் கமகமனு இருக்க எஸ்டேட்டு ஆப்பிஸ்சு இருந்திச்சி. ஆபிஸ்சு பையன்கிட்ட இவென் ஏதோ கதைச்சான்.
ஆபிஸ்சுபையன் பெரிய கிளார்க்கர்கிட்ட என்னமோ காதில சொன்னான். அவரு இவன கூப்பிட்டு கதைச்சாரு. கொழும்புல நடந்ததகேட்டு அச்சோ கொட்டினாரு இவரு முன்னம் இவனுட்டு அப்பாவுட்டு பிரெண்டு. ரெண்டுபேருமா சேர்ந்து காங்கிரஸ்ச தோட்டத்துக்கு கொண்டு வராதுல தூனுமாதிரி நின்னாங்க, அதனால ரெண்டுபேரு மேலயும் அப்ப இருந்த தொர ரொம்ப கோவமா இருந்தாராம்.
சரி.சரி. நா. தொரகிட்ட சொல்லுறேன். நாகூப்பிடும் வச்சும் உள்ள வராதனு
கொழுந்து மா

Page 9
էֆֆ
பெரிய கிளார்க் ஐயா சொல்லிபுட்டு ஆபிஸ்சு பியோனபாத்துளூ ஏம்மப்பா பெரிய
ஐயாவுக்கு கொடுத்திட்டியானு கேட்டாரு.
இப்பதான் சார் போட்டேன். இப்ப கொண்டு போய் கொடுத்திடுரேன்னு
சொல்லி டி கப்ப சோசர்ருல வச்சி உள்ள போக போனவன பெரிய கிளார்க் ஐயா
திடிருனு தடுத்துபுட்டு இஞ்ச கொண்டா நானே கொடுத்துரேனு அத வாங்கிகிட்டு உள்ள போனாரு.
ரெண்டு நிமிஷம் போயிருக்கும். சிரிச்சிக்கிட்டே வந்து இவெனபார்த்து உள்ள வரச்சொன்னாரு கொஞ்சம் பார்த்து நடந்துக்கனு சொல்லி இவென உள்ளே அனுப்பி வச்சிருக்காரு. இவென் தைரியமா உள்ள போய் தொரைக்கு முன்னால நின்னுபட்டான். கைய கட்டிக்கிட்டான்.
பெரிய வார்னிஸ் பூசுனமேசயில ரொம்ப அழகா அடுக்கிவச்சி என்னென்னமோ பொருட்களோடயும் ரெண்டு மூனு டெலிபோன் ஓடயும் மீச இல்லாத விஜயகாந்தபோல குசன்செயருல ஒக்காந்து செக்க எழுதிக்கிட்டு இருந்தாரு,
மேசயில ஆவி பறந்துகிட்டு இருக்குது! இவெனுட்டு ஆவியும் இப்ப இவருகையில இருக்கிற மாதிதான் இருந்திச்சி. இவென அவரு தீர்க்கமா பார்த்தாரு, - நீ. கவ்வாத்து ராமசாமியுட்டு மகனானு கேட்டாரு. நம்ம பெரிய கிளார்க்கு ரொம்பநல்லதான் தொரைக்கு இவென பத்தி சொல்லி இருக்காரு இல்ல!
வட் இஸ் யுவ புரபுளம்? முனு அவரு இவெனபார்த்து கேட்டாரு. பேர்த்து செட்டிபிகேட் எடுக்கனுமுனு அவென் வெடுக்குனு சொன்னான். பேர்த்செட்பிகேட்! என்னமேன் கேக்கிறது. கச்சேரிக்கு போய் எப்ளை பண்ணுனு தொர அவென பார்த்து ஆச்சரியமாபதில சொன்னாரு.
நா பொறந்தது இந்த தோட்டத்து ஆஸ்பத்திரியிலதான் எங்க அப்பா கவ்வாத்து ராமசாமி வேலயில கவனமா இருந்தாரே ஒழிய ஏம்புட்டு பேர்த் செட்டிபிக்கட் எடுக்குறதுல இல்ல சேர்னு இவென் சொன்னான்.
ஆங். கேள்விபட்டிருக்கேன். ஒம்புட்டு பாதர் ஜொப் செய்யிற நேரம் நா இல்ல. லு சொல்லி இப்ப என்ன செய்யனும்கிற மாதி அவென பார்த்தாரு,
எனக்கு பேர்த்த பதிஞ்சி கச்சேரிக்கு அனுப்பல அதனால பேர்த் செட்டிபிக்கேட் கெடைக்கல. அதனால நெஷனல் ஐடி எடுக்க முடியலனு அவென் சொன்னான்.
சோ.ணு தொர அவன பார்த்துக்கிட்டு வார்த்தய இழுத்தாரு ஐடி இல்லாம எங்கயும் போக முடியல. பொலிசு புடிச்சிகிருவாங்க தெரியும்தானே சேருனு சொன்னான் அவென்.
சரி.இப்ப நா எங்கபோவேன். ஒனக்கு பேர்த் செட்டிபிகேட் கொடுக்கனு தொர சொன்னாரு.
அப்பிடி சொல்லாதீங்க. தொரதான் தோட்டத்துல பொறந்தவங்களுக்கு பேர்த் குறிப்பகச்சேரிக்கு கொடுக்கனும், அப்பிடி கொடுக்காமதா எங்களுக்கு பெரிய
கொழுந்து
 
 

பெரச்சன. அவென் கொஞ்சம் கோவமா சொன்னான் தொரைக்கு.
டோன்ட் எங்கிரி மேன். நா அப்ப ஜொப்புல இல்லனு சொன்னது புரியலயா. இப்ப எப்பிடி கேக்கிறது நீ?னு தொர அவனுகிட்ட கேட்டாரு. அப்பிடி நீங்க கையவிரிச்சா நா என்னாபண்ணுறது?னு
அவென் கடுமையா சொன்னான்.
ஐ. கான்ட் ஐசே.ணு திரும்பவும் சொன்னாரு தொர,
ஒ. அப்படினா நீங்க வராததுக்கு முன்னாடி இருந்த பெரச்சனயான பையில எல்லாம் கிழிச்சிபோட்டிருவீங்களா?னு கேட்டான் அவென்.
தி.ஸ்.இஸ் டூமச்.ணு சொன்ன தொரைக்கு கோவம் மூக்குக்கு மேல வந்திருச்சி.
சேர்நா மூனுமாசம் ஜெயிலுக்கு போயிட்டு வாரேன். ஐசி கேட்டாங்க பேர்த்செட்டிபிக்கெட்ட இல்லாம எப்பிடி எடுக்குறதுனு அவென் சொல்லிகிட்டு இருந்தப்பவே தொர அவென உன்னிப்பா பார்த்துபுட்டு, ஒ. ஐசிஇல்லாம மூனு மாசம் நீ ஜெயில இருந்ததா ஒ. ஐ கான்ட் பிலிவ்னு சொல்லிப்புட்டு சிகரெட் ஒன்ன பெட்டியில இருந்து எடுத்து பத்தவச்சி வாயில வச்சி ஊதினாரு.
ஒப்பீஸ்சு கூரய மொரச்சிப்பார்த்துக்கிட்டு கொஞ்சநேரம் இருந்தாரு பெறகு சொன்னாரு. ஒ கே. போய். எனக்கு ஒரு தகவலும் இங்க வரலே. ஒம்புட்டு மதர் இருக்கிறதா.ணு கேட்டார் இவென பார்த்து.
இயஸ்னு.ணு அவென் சொன்னான்.
ஒகே. ஒம்புட்டு மதர் இங்கவந்து இன்போம் செய்யல ஏன்?னு கேட்டாரு.
நா. ஜெயிலுல இருந்தேனு ஒருத்தருக்கும் தெரியாது. நா வேல செஞ்ச Aih எடத்துக்கும் தெரியாது. அப்புறம் எப்பிடி ஆத்தாகிட்ட சொல்லுறதுணு சொன்னான் அவென்.
ம். நொட் பொசிபல். அப்ப எப்பிடி வெளியில நியூஸ் வரும். ஒ.கே. ஒனக்கு நா எல்ப் செய்யிறது. ஒம்புட்டு பாதர் பெரிய ஆள். ஏன் மேன் அப்ப பேர்த்செட்டிபிக்கெட்ட எடுக்கலனு கேட்டாரு தொர.
அவரு தொழில் சங்கத்துல முக்கியமான ஆளா இருந்தாரு, அதனால இவரோட கோவம் அப்ப இருந்த தொர ஏம்புட்டு பேர்த்தயும் கச்சேரிக்கு அனுப்பாம விட்டுட்டாருனு நெனைக்கிறேன்னு அவென் தொரகிட்ட சொன்னான்.
ஒகே. ஒகேஐ அன்டர்ஸ்டேன்ட், த்திரிமந்த்துக்கு பெறகு வா. ஒனக்கு பேர்த் செட்டிபிக் இன்போம் துண்ட தேடி தர சொல்லுறது, ஏம்புட்டு இஸ்டாப்புக்கு னு தொர சொன்னார்.
இவெனுக்கு மின்னல்மாதி சுருக்குனு கோபமுனா அப்பிடியொரு கோபம் வந்திருச்சி ஜெயில இருந்தத மறந்துபுட அவனுக்கு முடியுமா? கண்ணு செவந்துகிட்டே போயிருச்சி. ஒடம்புதுடிச்சிச்சி. படாருனு அவென் போட்டிருந்த நீட்ட கால்சட்ட பட்டுன கழட்டி சிப்ப பராஸ்னு தெறந்து கழட்டிப்புட்டான். இப்ப ஜட்டியோட அர நிர்வாணமாநிக்கிறான். நீட்ட கால் சட்ட தரையில அவனுட்டு
கொழுந்து - 15

Page 10
կե էֆեիի ֆ செறுப்புபோட்ட கால் பாதத்துல சங்கமாகி கெடக்குது.
ஒ. மை.கோட். அலறிக்கிட்டு தொர குசன் செயாருல இருந்து விருட்டுனு எழும்பி அவென அப்பிடியே அதிர்ச்சியோட பார்த்தாரு,
அவனுட்டு தொடயில தொரவுட்டு பார்வ தங்கி நின்னு போச்சி. நா முன்னமே சொன்னேனே கவ்வாத்து காட்டுல விழுந்து தொடயில பெரிய காயமுனு அந்த காயம் தான் பெரியதழும்பா இப்ப தெரியுது.
பாருங்க. நல்லா பாருங்க. இது என்னாணு நல்லா பாருங்க. இந்த தழும்புதான் ஒண்ண மூனு மாசம் ஜெயில போட்டிருச்சி. எனக்கு ஐசியும் இல்லயாம். அதோட பயிற்சி எடுத்தேனாம். அதுதான் இந்த காயமாம். அதுதான் அவங்களுக்கு சந்தேகமாம். இன்னும் மூனுமாசம் ஐசியில்லாம இருந்தா புடிச்சி கொண்டு போய் திரும்பியும் இப்பிடிதான் இந்த காயத்த பார்த்து உள்ள வச்சிடுவாங்க. ஐசிஇல்லாம கொழும்புக்கு வேலைக்கி போக ஏலாது அவென் சொல்லிபுட்டு விக்கி விக்கி அழுதான்.
சுயதெனவுக்கு வந்த தொர நின்னுகிட்டே பெரிய கிளார்க்க வரச்சொல்லி கூப்பிட்டாரு. பெரிய கிளார்க் ஏதோ நடந்திருச்சினு பயந்துகிட்டே சிங்க கொகைக்கு நொழையிர மாதிதொரவுட்டு காம்புராவுக்கு வந்தாரு,
தொரயையும் இவெனையும் மாறிமாறி பார்த்துபுட்டுதலயில அடிச்சிக்கிட்டாரு.
டேய். டேய். என்னடா செஞ்ச. மருவாத கெட்டவனே. எல்லாத்தயும்
கெடுத்துப்புட்டே பாவினு அவரு அலறினாரு.
மிஸ்டர் பெருமாள் டோன்ட் வொரி, டுமாரோ எனக்கு பென்டிங்கா இருக்கிற பேர்த் செட்டிபிக்கட் பயில் எல்லாம் வேணும். அந்த கபோட்ட தொறந்து கீய எடுத்துக்கிட்டு போங்க. கோ.குயிக். டோன்ட் போர்கட் ஐ வோன்ட்டு ரிப்போர்ட் டுமாறோனு ஒரு போடு போட்டாரு தொர.
பத்திரிகைத் துறையில் ஓவியராக தனது ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர்
Ան 5 இந்துசமய கலாசார திணைக்களம் அண்மையில் கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு ஜோ ஐசில்வா அரங்கில் நடைபெற்றது. Էֆֆի
ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏஎச்.எம்.அஸ்வர் அவர்கள் ஓவியர் எஸ்.டி.சாமிக்கு கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிப்பதைப் படத்தில் காணலாம்.
 ைகொழுந்து
 
 
 
 
 
 
 

சாரல் நாடன்
இலங்கையில் மலையகத் 1823இல் தேசாதிபதி எட்வர்ட்
பார்ன்ஸ் கன்னொருவ கோப்பித் தோட்டத்தில் மலையக மக்களுக்கு ஒரு அறியப்படுகின்ற இந்திய ஆரம்பத்தைக் கொண்டு வந்தார்
தமிழர்கள் என்று
வம்சாவளியினரின் வருகை என்பதை சந்தியாபிள்ளை கீத
பொன்கலன் தன் நூலொன்றில் பதிவு Lig5 தொன்பதாம் செய்துள்ளார். இப்படி இலங்கைக்கு நூற்றாண்டின் முதல் இறக்குமதி செய்யப்பட்ட தமிழர்கள்
to o to ஊரான ஊர் இழந்தேன், ஒத்தப்பனை தசாப்தத்தில் 6 JADLI L - IL-ġE51. தோப்பிழந்தேன், பேராள கண்டியிலே
1803இல் தேசாதிபதியாகவிருந்த பெத்த தாயை நானிழந்தேன் என்று பிரட்ரின் நோர்த்தால் பாடிய பாடல்கள், அவர்களின் மன தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி உணர்வுகளுக்கு வடிகாலாயமைந்து,
செய்யப்பட்ட தொழிலாளர்கள் பாதைகள் அமைக்கும் பணியிலீடுபடுத்தப்பட்டனர். அவர்களின் சந்ததியினர் ரயில்பாதைகளமைப்பதிலும், பாலங்கள் நிறுவனத்திலும் பங்காற்றியுள்ளனர். மலைநாட்டில் கட்டுகாஸ்தொட்டை, கம்பளை, பேராதனை பாலங்களை நிர்மாணித்து பேர்பெற்ற தோமஸ் ஸ்கின்னருடன் இணைந்து உழைத்தவர்கள் அவர்கள் தாம் கற்பாறைகளைப் பிளந்து மிக நீண்ட சிங்கமலைச் சுரங்கத்தை முக்கால் மைல் தூரத்துக்கு அமைத்தது அவர்களின் கரங்கள் தாம்.
இன்றைய புலம்பெயர் இலக்கியத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது
கொழுந்து ை

Page 11
என்பதை கலாநிதி வ.மகேஸ்வரன் தானெழுதிய கட்டுரையொன்றில் (2008) குறிப்பிட்டுள்ளார்.
இப்படி புலம்பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் எழுத்தாளர்களாகவோ கவிஞர்களாகவோ இல்லாத காரணத்தால் தம் இதயத்துணர்வுகளை வாய்மொழிப் பாடல்களாகவே வழங்கியுள்ளனர். அவைகளில் வேறு எங்கும் காணாத ஆதார உணர்வு என்று சுஜாதா வகைப்படுத்திக் கூறும் தன்மை மிகுந்திருப்பதை இன்றைய தமிழுலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
இப்படி புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையை வாழிடமாகக் கருதும் மனோபாவத்தை 1963இல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கைச்சாத்தான சாஸ்திரி - பூரீமா ஒப்பந்தம் ஏற்படுத்தியது. இலங்கையை தற்காலிக தங்குமிடமாகக் கருதியிருந்த பலருக்குத் தம் கனவுகள் பொய்யாகின. இங்கேயே வாழ்ந்தாக வேண்டிவந்தவர்கள் புதிய உறுதியுடனும் புதுத் தெம்புடனும் தங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு வாழலானார்கள். இப்படி வாழ்பவர்கள் தாம் அந்தனி ஜீவாவும், சாரல் நாடனும், அவர்களின் நண்பர்களும், அவர்கள் பேசுகிற மலையக இலக்கியமும்.
யாழ்ப்பாணத்தில் அந்தக் காலப்பகுதியில் கவர்மெண்ட் ஏஜண்டாக பணியாற்றிய வி.பி.விட்டாச்சி பூரீலங்கா என்ற தலைப்பில் எழுதிய நூலொன்றில், இலங்கையைப் போன்று பேர்பெற்ற நாடு வேறெதுவும் கிடையாது என்று கூறி மகிழ்ந்த அவரே இலங்கையைப் போல் பேரிழந்த நாடும் வேறில்லை என்று கூறிக் கவலைப்படுகிறார்.
அவரது பட்டனுபவம் அப்படி அவரைக் கூறவைத்துள்ளது.
இலங்கை வந்த இந்தியர்கள் தமது விருப்பத்தால் மாத்திரம் வரவில்லை. இந்தியாவில் நிலவிய வரட்சியும், பஞ்சமும், சாதி ஒடுக்கு முறையும் அவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் காரணிகளாயமைந்தன. குறிப்பாக சாதி ஒடுக்குமறைக்கு முகம்கொடுக்க விரும்பாத பலர் அவர்களில் அடங்குவர். அவர்கள் இங்கு கிடைத்த வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்டு இங்கேயே வாழத் தலைப்பட்டனர். புதுமைப்பித்தனின் சிறுகதையொன்றில் - நாசகாரக் கும்பல்
இளைஞனே. வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் !
- கவிஞர் தாராபாரதி
- இவர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
கிறிஸ்தவப் பாதிரிகளான வெப் என்பவரும் வாஷ்பர்ன் என்பவரும் தமிழ் மக்களிடையே வாழத் தொடங்கிய வேளை கிறிஸ்தவ சங்கீதத்தை தமிழுக்குக் கொண்டுவர நினைத்து 1853இல் ஞான கீர்த்தனைகளைத் தந்தனர். அதற்கு தமிழ் நாட்டு தஞ்சை வேதநாயக சாஸ்திரிகள் உதவி இருக்கிறார். அவை இன்றுவரை கிறிஸ்தவர்களால் பாடப்படுகிறது.
மலை மக்களின் கதைகளும் இப்படித்தான். நாம் நமது காலத்தைய கதைகளை எழுத்தில் வடித்து வைப்போம், எதிர்காலம் அதைப் படித்து தெளிவுறும்.
 ைகொழுந்து
 
 

நாங்கள் எப்போதும் ஒதுக்கப்படுகிறோம் ஒடுக்கப்படுகிறோம்! மலையகம், மலையக மக்கள், மலையக இலக்கியம் என்ற அடையாளத்தை நிரூபிப்பதற்காக கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக போராடி வருகிறோம் இதற்காக எமது முன்னோடிகளாக மலையக மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை கல்வியலாளர் இர.சிவலிங்கம் நாவலர் ஏ.இளஞ்செழியன் போன்றவர்கள் மலையகம்" என்ற அடையாளத்தை எடுத்துச் சென்றவர்களாவர் மலையகம், மலையக மக்கள். மலையக இலக்கியம் என்பதை அயல் நாடெங்கும் அடையாளப்படுத்தியவர்கள் மலையக எழுத்தாளர்களே என்பது யதார்த்த பூர்வமான உண்மையாகும்.
மலையக கவிதை ஓர் அவசர குறிப்பு
ஆனால் அதேவேளை பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் இதனை அங்கீகரித்து குரல் எழுப்பியுள்ளனர். இதேபோன்றே தமிழகத்தில் தமிழறிஞர் பெ.சு.மணி, சுபமங்களா, கோமல் சுவாமிநாதன் தாமரை மகேந்திரன் பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர்களான பொன்னீலன், பா.ஜெயப்பிரகாசம் போன்றவர்கள் மலையக இலக்கியத்திற்கு ஆதரவு நல்கியவர்கள் "20 ஆம் நூற்றாண்டில் 'ஈழத்து தமிழ்க் கவிதைகள் என்ற நூலில் மலையக
கவிஞர்கள் ஒதுக்கப்பட்டமை பற்றி "கொழுந்து ஞானம்' சஞ்சிகைகளில் எழுதிபொழுது நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியரின் அறியாமையை பலரும் தெரிந்து கொண்டார்கள் இது போன்ற தவறு காவ்யா" வெளியீடாக வந்திருக்கும் "ஈழத்தின் புதிய தமிழ் கவிதைகள் என்ற தொகுப்பில் நிகழ்ந்துள்ளது. ஈழத்து மலையக கவிஞர்களின் ஒரு கவிதை கூட இடம்பெறவில்லை. இதனை தமிழவன் தொகுத்துள்ளார்.
இந்தத் தொகுதியை படித்த பொழுது எனக்கு பிரக்ஷன் கவிதைதான்
ஞாபகத்திற்கு வந்தது இளம் அலக்சாந்தர் இந்தியாவைக் காப்பாற்றியது அவன்
மட்டும் தனியாவா? சீசர் கோள்ஸ்களைத் தோற்கடித்தான் அவன் சேனையில் ஒரு சமையற்காரன் கூட இருக்கவில்லையா? ஈழத்து தமிழிலக்கியத்தின் செழுமைக்கும், கவிதை வளர்ச்சிக்கும் ஒரு மலையக கவிஞன் கூட பங்களிப்புச் செய்யவில்லையா?
ஆனால் தமிழவன் இந்தக் கவிதைத் தொகுதியை தொகுத்ததற்கு காரணம் காலமெல்லாம் இலக்கிய வியாபாரம்தான். தமிழகத்தில் ஈழத்து தமிழிலக்கியத்தின் மீது உள்ள அக்கறையை விட புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து எவ்வளவு பெறமுடியுமோ அதைப் பெறுவதுதான். இதனை நம்மவர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் தமிழகத்தின் உள்ள சிலர் எரிகிற வீட்டிலே எவ்வளவு பெறலாம் எனப் பார்க்கிறார்கள் இந்த உண்மையை புலம் பெயர்ந்தவர்களும் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.
கொழுந்து ை
அந்தணி ஜீவா

Page 12
தாயகத்திலும், புகலிடத்திலும் இன்று ஈழத்தமிழர்களின் வாழ்வு, விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும், அங்கு நிகழும் எமது உடன்பிறப்புகள் எதிர்நோக்கும் போர் அவலம் தொடர்பாகவுமே சிரத்தையுடன் உற்றுநோக்கப்படுகின்றது. அனைத்துலகின் பார்வையில் போரியல் சாரந்த அக்கறையுடனேயே, கவன ஈர்ப்புகளும், வாசிப்புகளும்,
என்.செல்வராஜா
தமிழ் ஆய்வாளர்களுக்கோ, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத தமிழியல் ஆய்வாய்வாளர்களுக்கோ இலங்கை மண்ணிற்கு அப்பால் உரிய வளங்களை பெற்றுக் கொடுக்கக் கூடிய அளவில் நாம் நிறுவன ரீதியில் வளமாக இருக்கிறோமா என்ற கேள்வியை புத்திஜீவிகளாகக் கருதிக்கொள்ளும் எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். பிரித்தானியாவில்கூட, ஈழத்
புலம்பெயர்=த LටවේI@ෆ්"කළු ஈழத்தமிழர்களுக்கானதொரு ஆவணக்காப்பகம்
எழுத்துகளும், ஈழத்தமிழர் சார்பில் விரவிக்கிடக்கின்றன. இந்நிலையில் போராட்டத்திற்கு அப்பால் கவனிக்கப்படவேண் டிய பல முக்கிய விடயங்கள் அடிபட்டுப் போய்விட்டன. நீண்டகால நோக்கில் இது எமது ஈழத்தமிழ் இனத்தில் பாரிய பாதிப்பினை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
இன்று ஈழத் தமிழர்களின் வாழ்வியல், அரசியல், இலக்கியம் மற்றும் அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும்
தமிழர்களின் பங்களிப்பின்றி தமிழரல்லாதோரினால் நிர்வகிக்கப்படும் | SOAS பிரித்தானிய நூலகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவு போன்ற கல்விசார் நிறுவனங்களின் நூலகங்களிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பான சேகரிப்புகளும் பயன்பாடுகளும் வரையறைக்குட்பட்ட தாகவே உள்ளன. உலகின் தமிழியல் பல்கலைக்கழகங்களில் ஈழத்தமிழர் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள முன்வரும் இளம் ஆய்வாளர்கள் அதற்கான போதிய தகவல் சாதனங்கள்
கொழுந்து
 
 
 

இன்மையாலும், இலங்கையின் போர் நிலைமைகளால் அங்கு செல்ல முடியாததாலும் தமது ஆய்வைத் தமிழகத்தை நோக்கித் திசைதிருப்பிக்கொண்ட பல கதைகள் எம்மிடையே உள்ளன. இதனால் ஈழத்தமிழர் தம் வாழ்வியல் பற்றி பல ஆய்வுகள் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையிலேயே காணப்படுகின்றன.
புகலிடத்தில் எம்மத்தியில் கோவில்கள் வளர்ந்த அளவுக்கு, வர்த்தக நிலையங்கள் வளர்ந்த அளவுக்கு, கல்வி, கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ள அளவுக்கு நூலகங்களும் ஆவணக் காப்பகங்களும், புத்தக விற்பனை நிலையங்களும் ஏன் வளரவில்லை என்பதை நாம் எமக்குள் கேட்டுக் கொண்டால் அங்கு ஒரே ஒரு பதில் தான் கிடைக்கும். நூலகங்களும் ஆவணங்காப்பகங்களும், புத்தக விற்பனை நிலையங்களும் ஒரு போதும் கொழுத்து வருமானத்தைத் தேடித்தராதவை என்ற ஒரே ஒரு பதிலைத்தான் இதயசுத்தியுடன் உண்மையானதாக நான் கருதுவேன். இது மிகவும் கசப்பானதுதான்.
இந்நிலையில் இனிமேலாவது இந்நிலையில் மாற்றம் கொண்டுவர முடியாதா என்ற ஆத்மார்த்த உணர்வுடன் அண்மையில் ஐரோப்பிய தமிழ் ஆவணக்காப்பகமும் ஆய்வகமும் 6T6Tp Guufei) (European Tamil Documentation and Research Centre - ETDRC) ஒரு நூலக அமைப்பினை உருவாக்கியிருக்கிறோம். இது ஒரு சிறிய தடம் தான். ஆயினும் எதிர்காலத்தில் பாரிய நகர்வுகளையும் அதிர்வுகளையும், புலம்பெயர்ந்த தமிழரின் அறிவுசார்ந்த
வாழ்வியலில் இதனால் ஏற்படுத்த முடியும். இதனை பிரித்தானிய அரசினால் பதிவு செய்யப்பட்ட தமிழியல் ஆய்வு நிறுவனமாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம். இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஈழத்தமிழியல் துறையில் ஈடுபாடு காட்டும் தனிப்பட்டவர்களை இனம்கண்டு இந்த ஆய்வகத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் நூல்களையும் ஆவணங்களையும்
பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கிறோம்.
இதுவரையில் நான் ஐந்து தொகுதிகளில் 5000 நூல்களை நூல்தோட்டம் தொகுப்பின் வாயிலாகப் பதிவு செய்துள்ளேன். ஒவ்வொரு தொகுதியும் சுமார் 600 பக்கங்களைக் கொண்ட நூல் வடிவில் 2004 ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. 6
கொழுந்து Aggsgssigszin

Page 13
ஆவது நூல்தேட்டம் தொகுதியின் தொகுப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2009 ஐப்பசியில் இத்தொகுப்பு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. நூல் தேட்டம் பதிவிற்காக எனக்குக் கிடைக்கும் நூல்கள் அனைத்தையும் இவ்வாவணக் காப்பகத்தின் முன்னோடி வளமாக வழங்கியிருக்கிறேன். இந்தக் காப்பகம் வளர இந்த 3000 நூல்கள் மட்டும் போதாது. உலகெங்கினுமிருந்து எமக்கு தமிழியல் சாந்ததும், ஈழத்தமிழர்களினதும், மலேசிய
சிங்கப்பூர் தமிழர்களினதும் நூல்கள் கிடைக்கவேண்டும். தனிப்பட்ட சேகரிப்புகளைக் கொண்டிருப்பவர்கள் மனமுவந்து தங்கள் சேகரிப்பிலிருந்து சில நூல்களை பொதுப்பாவனைக்காக எமக்கு வழங்க முன்வரவேண்டும்.
இது புகலிட மண்ணில் ஈழத்தமிழர்களின் ஆவணக்காப்பகமாகவும், சிங்கப்பூர் - மலேசியத் தமிழர்களின் நூல்களின் காப்பகமாகவும் எதிர்காலத்தில் சிறப்புற விளங்க பலரும் இன்று பொது நோக்கம் கருதி உதவி வருகின்றார்கள். எமது ஆவணக் காப்பகத்திற்கு இன்னும்
ஏராளமான நூல்கள் தேவைப்படுகின்றன. அவற்றைப் பெற்றுக் கொள்ளும் பணியில் தற்போது இயங்கி வருகின்றோம்.
உங்கள் வசமுள்ள ஈழத்துத் தமிழ் நூல்களையும், ஈழத்தவர்களால் எழுதப்பட்ட தமிழ் ஆங்கில நூல்களையும், ஈழம் மற்றும் இலங்கைத் தமிழர் பற்றிய பன்னாட்டறிஞர்கள் எழுதியுள்ள நூல்களையும இந்த அமைப்பில் பாதுகாத்துவைத்துப் பயனளிக்க உதவுவீர்கள் என்று எதிர்பார்த்து இக்கடித்த்தை எழுதியிருக்கிறேன். எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழியல் ஆய்வாளர்களுக்கும் எமது அடுத்த தலைமுறையினருக்கும் அவர்களது ஆய்வுத் தேவைகளுக்கும் - குறிப்பாக ஈழத் தமிழர் பற்றியும், புலம்பெயர்ந்த தமிழ் பற்றியுமான ஆய்வுகளுக்குத் துணைபுரியும் பணியில் நீங்களும் இணையும் வாய்ப்பினை இத்திட்டம் வழங்கம் என்று நம்புகின்றேன்.
உங்கள் தொடர்பினை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
தொலைபேசி இல: 004441582 7O3786
LS6öT60Té536): Selvan(a)ntlvworld.com
official address for sending books and other Documents
N. Selvarajah,
Administrator ETDRC
48 Hallwicks Road,
Luton, Brds,
LU 2 9 BH
United Kingdom.
ண கொழுந்து
 
 
 
 
 
 

அடீடைப்பட விளக்கம்
நம்மிடையே வாழ்ந்து மறைந்த நாவலர்
ஏ.இளஞ்செழியன் பெரியாரின் பெருந்தொண்டர். ஈழத்தில் இளஞ்செழியன் பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களை ကြီး၌ முன்னெடுத்தவர்.
நாவலர் இளஞ்செழியன் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை இலங்கை தமிழ்மக்கள் மத்தியில் பரப்பும்
எழுத்தில் பெரியார் முதல் : நாவலர் இளஞ்செழியன் வரை.
முயற்சியில் ஈடுபட்ட போதிலும் அதனை இலங்கைக்குரியவாறு முன்னெடுத்தமையைக் காணமுடிகிறது. பெரியோரினால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம் தமிழ்மக்கள் குடியேற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளுக்குப் பரவியதுடன் குறிப்பிட்ட நாடுகளின் தமிழக தி.க, மற்றும் தி.மு.க. தலைமைகளையே தமது தலைமைகளாக கருதி செயற்பட்டனர். ஆனால்,
திரு.இளஞ்செழியன் அவ்வாறு செய்யாது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட போதிலும் தமிழக தலமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறு மார்க்சிய வாதிகள் மார்க்சிய சித்தாந்தத்தை ஏற்றுத் தமது நாடுகளில் காணப்படும் சூழலுக்கேற்ப அமுல்படுத்த முனைந்தனரோ அவ்வாறான முயற்சிகளிலேயே திரு.இளஞ்செழியன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு எழுதாத வரலாறு நூலில் பெ.முத்துலிங்கம் குறிப்பிடுகிறார்.
இலங்கை மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் போர்க்குரல் எழுப்பியவர் நாவலர் ஏ.இளஞ்செழியன் மலையகம் என்ற சொல்லை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் ஏ.இளஞ்செழியன் மலையக மக்கள் பெருந்தோட்டத்துறையில் ஒடுக்கப்பட்டவர்களாக, ஒதுக்கப்பட்டவர்களாக இருந்தவேளையில் ஐம்பதுகளில் அவர்களுக்காக உரிமைக்குரல் எழுப்பியவர் இளஞ்செழியன். இவர் 09.09.2007இல் அமரரானார்.
நாவலர் ஏ.இளஞ்செழியனின் வாழ்வும் பணியும் அறிந்துகொள்வதற்கு அவர் எழுதிய சுய வரலாறான ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை என்ற நூலையும், பெ.முத்துலிங்கம் எழுதிய எழுதாத வரலாறு என்ற நூலையும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் படிக்கவேண்டும். அப்பொழுதுதான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

Page 14
மகாகவி என்ற பெயரில் கடந்த பன்னிரண்டு வருடங்களாக தமிழ்நாடு வத்தகுண்டு என்ற ஊரிலிருந்து சிற்றிதழ் வருகிறது. மகாகவி உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் வதிலை பிரபாவை ஆசிரியராகக் கொண்டு வருகிறது.
தொடர்புகளுக்கு மகாகவி
W.mahakavimontbly.blogspot.com
s
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் செங்கதிர் தனது மே 2009 இதழை மலையகச் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. இலங்கை மலையகம் பற்றிய இலக்கிய வரலாற்றை அறிந்துகொள்ள செங்கதிர் ஒரு ஆவணமாக அமைகிறது. ஒடுக்கப்பட்ட, உரிமையற்ற மக்களின் உண்மைகளை செங்கதிர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
தொடர்புகளுக்கு த.கோபாலகிருஷ்ணன் ஆசிரியர் செங்கதிர்
19, மேல்மாடித் தெரு,
மட்டக்களப்பு - இலங்கை,
క్రై 4%ტ தமிழகத்தில் சேலம் மாவட்டத்திலிருந்து
வெளிவரும் மணல்வீடு என்ற காத்திரமான இலக்கிய சஞ்சிகை தனது 6 7இதழை கேடானியல் சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது. டானியல் எனும் கலைஞன் கேடானியலுடன் ஒரு செல்வி எனது படைப்புகள் என்ற தலைப்பில் கேடானியலின் கட்டுரை தண்ணீர்
ருந்து ஒரு பகுதி டானியனில் சிறுகதைகள்
ஆடனியல் சிறப்பிதழ்
ஒன்று தலித் இலக்கிய முன்னோடியான கேடானியலின்
ஆளுமையை நன்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்புகளுக்கு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் மின்னஞ்சல் manaiveedusagma կիի
 
 
 
 
 

சிங்கள மொழியில் சிறுகதை மன்னன்
இலங்கையில் ஆண்டுதோறும் அரசின் கீழ் இயங்கும் இலங்கை சாகித்திய அகடமி தமிழ்,
சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவரும் இலங்கை எழுத்தாளர்களின்
படைப்புகளுக்கு விருதும் பணப் பரிசும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு (2008) சாகித்திய விழாவின்போது கவிஞர் சு.முரளிதரன் மொழிபெயர்த்த தமிழ் சிறுகதையின் முன்னோடி புதுமைப்பித்தன் என்ற பெயரில் சிங்கள நூலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்கள்
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனை அறிந்துகொள்ள நல்லதோர் வாய்ப்பாகும்.
இந்த நூலில் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, சாபவிமோசனம், தெருவிளக்கு,
எந்திரயுகம் ஆகிய கதைகளும், கண்மணி கமலாவுக்கு எழுதிய கடிதங்களும் இடம்பெற்றுள்ளன. இதேபோல பாப்ளோ நெருடா பற்றிய ஒரு நூலை கவிஞர் முரளிதரன் தொகுத்துள்ளார். இந்த இரண்டு நூலும் சாகித்திய விழாவில் வெளியிடப்பட்டது. தற்போது 2009ஆம் ஆண்டு சாகித்திய விழாவுக்காக எழுத்துலக ஜாம்பவான் ஜெயகாந்தன் கதைகளை மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளது.
ஈழத்தில் நாடகமும் நானும்
ஈழத்து நாடகத் தந்தை கலையரசு க.சொர்ணலிங்கம் தினகரன் பத்திரிகையில் தொடராக எழுதியதை 1968ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டதின் மறுபதிப்புத்தான் இந்நூல், ஈழத்து நாடக வரலாற்றுடன் தமிழ்நாட்டு நாடக நடப்புகள் பற்றிய செய்திகள் இந்நூலில் ஏராளமாக உள்ளது. நான்கு வயதில் தொடங்கிய நாடகத்தின் மீது உள்ள ஈடுபாடு கடைசிவரை காலம்வரை இருந்ததை ஆசிரியர் விளக்குகிறார். நாடகங்கள் அவருக்கு முன்னால் எப்பஐ இருந்தது. அவருடைய காலத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் போன்றவற்றை அழகாக விவரிக்கிறார். ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் அவர் நாடகத்தில் நடத்தபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் சேர்த்திருப்பது இந்நூலுக்கு மெருகு ஊட்டுகிறது. நாடக வரலாற்றை அறிய, இந்நூல் சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
கலையரசு க.சொர்ணலிங்கம் வெளியீடு ஈழவர் திரைக்கலை மன்றம், லண்டன்
கொழுந்து

Page 15
ஊடகவியலாளரான நாவலப்பிட்டி கே.பொன்னுத்துரையின் செல்வப்புதல்வி செல்வபிரியா செல்வன் வசீகரனுக்கும் சமீபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் சிறப்பு நிகழ்வாக கவிஞர் குறிஞ்சி தென்னவனின் குறும்பாக்களை குறும்பூக்கள் என்ற தலைப்பில் கைக்கு அடக்கமாக சிறு நூலாக, வருகை தந்தவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய பொழுது நூலை புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொள்கிறார். நடுவில் மணமக்கள்
மற்றும் நூலை பதிப்பித்த அந்தனி ஜீவா, குறும்பாவில் தோய்ந்துவிட்ட நெஞ்சம்
பதுளை சேனாதிராஜா, குத்துகிற தெனையெழுத, “கொஞ்சம்' கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் பொறு சில நாள், காலம் வரும்
படத்தில் காணப்படுகின்றனர். பூரிக்க நீ’ என்றேன்.
குறும்பா இதோ மகிழும் நெஞ்சம்!
'ஆ நிறை A 痪
ി அ
 
 
 
 
 

இSunjஆைத் 29\నపs\నత
அறிமுகத் தந்தை.
1840ஆம் ஆண்டளவில் இலங்கை வந்த டாக்டர்த்வெய்ட்ஸ் அப்போதைய ரோயல் பொட்டானிக்கல் கார்டன் என்ற பெயரில் அமைந்த பேராதனைப் பூங்காவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்று பணி செய்யத் தொடங்கினார்.
லண்டனின் தாவிரவியற் கல்வியில் பட்டம் பெற்ற டாக்டர் இலங்கை வந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தவர்.
1928ஆம் ஆண்டில் வெளியானதொரு இலங்கை வரலாற்று நூல் அவரைப்பற்றி மிகப் பெருமையுடன் எழுதுகின்றது.
அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது. இலங்கைத் தேயிலையைப் பயிரிட எடுத்துக்கொண்ட முயற்சி பிரமாண்டமானது.
1845ஆம் ஆண்டு முதல் 1865ஆம் ஆண்டுவரை பேராதனைப் பூங்காவில் தேயிலைக் கன்றுகளுக்கு மேடையமைத்து அதனைக் கண்ணின் மணிபோலக் காப்பாற்றி வந்தார். அந்த இருபதுவருட காலத்திலும், அதற்கு மேலும் கண்டி, பதுளை மட்டுமல்லாது இந்தியா (அசாம்) சீனா தேயிலை ஆய்வுப் பணிகளுக்கும், தாவர
- டாக்டர் ஜி.எச்.கேத்வெய்டிஸ்
விஞ்ஞானக் கடமைகளுக்கும் ஒரம் சேர்த்துக்கொண்டவர்.
உலக சந்தைக்கு இலங்கைத் தேயிலை என்ற தொனிப் பொருளின் நாயகன். ஆனால் அந்த காலகட்டத்தில் உயர் கல்வி பெறாத பெரும்பாலான தோட்ட உரிமையாளர்கள் டாக்டரின் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொள்ளவில்லை. ஆனாலும் லூல்கந்துர தோட்டத்தில் ஒரு சாதாரண சம்பளத்தில் துரையாக அமர்த்தப்பட்டிருந்த இருபத்தைந்து வயதுள்ள இளைஞன் திரு.ஜேம்ஸ் டெய்லர் மட்டுமே டாக்டரின் கருத்துக்களை செவிமடுத்து தமது தோட்ட உரிமையாளரின் (லண்டனில் வாழ்ந்தவர்) அங்கீகாரத்துடன் தோட்டத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்தார்.
இரண்டு வருடங்களில் தெல்தொட்ட, லூல்கந்துர தோட்டத்தின் ஏழாம் நம்பர் மலையில், கற்பாறைகள் மிகுந்த ஒதுக்குப்புறத்தில் முதலாவது இலங்கைத் தேயிலைப் பயிர்ச் செய்கையின் உதயம்.
இதற்கான 25,000 கன்றுகளை விநியோகம் செய்தது. பேராதனைப் பூங்கா. இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்த திரு.ஜேம்ஸ் டெய்லர்
தி.இரா.கோபாலன்

Page 16
டாக்டர்த்வெய்ட்ஸ் அவர்களின் சீடர் அப்போதைய கவர்ணர் திரு.வில்லியம் கிரிகோரியின் ஆதரவுடன் 1867ஆம் ஆண்டு தேயிலைப் பயிர்ச்செய்கை குறிப்பிட்ட தோட்டத்தில் ஆரம்பமானது
எனக் கூறலாம்.
1967ஆம் ஆண்டு இலங்கைத் தேயிலையின் நூற்றாண்டு மலரில் டாக்டர் தவெய்ட்ஸ் பற்றி எதுவும் குறிப்பிடாமல் விட்டது எமக்கு வியப்பைத் தந்த விடயம்.
திரு.ஜேம்ஸ் டெய்லர் சிறுவயதில் ஏழ்மையுடன் இலங்கை வந்த இளைஞர். தமது தோட்டத் தொழிலாளர்களுடன் தொழிலாளியாக வாழ்ந்தவர் தேயிலைக் கன்றுகளை நாட்டி, அவை வளர்ந்து கொழுந்து பறித்து, அரைக்கப்பட்டு காயவைக்கச் செய்த களிமண் அடுப்பை நிர்மாணிக்கும்வரை டெய்லருக்கு உதவியவர் டாக்டர் தவெய்ட்ஸ்,
இன்று டெய்லர் போற்றப்படுவதும், அறியப்பட்டுள்ளதும் நியாயமான தொன்றாலும் பின்னணியில் கர்த்தாவாக இருந்து ஊக்குவித்த டாக்டர் விடப்பட்டதே புதிய செய்தியாகும்.
ஒரு கவிதையில் எமது கருத்தை
நிறைவு செய்கிறோம்.
புதுமை ஏதும் தெரியாமல் பூமியினைக் குடைந்தெடுத்து
பதுமை போல, ஆட்டியவர் கரங்களிலே அடக்கமுடன் வியர்வை சிந்தி
தோட்டத்து மக்களாக தொல்லைகளைத் தோள் சுமந்து
தவட்சின் உணர்வுகளை டெய்லரின்
கரங்களை
வீரமுடன் பலப்படுத்தி, வீடு வாசல்
எதுவுமின்றி
ஆரவாரம் எதுவுமின்றி அற்புதமாய்க்
காடழித்து தேயிலை என்கின்ற தெய்வீகப்
பயிரதனை
மாவிலை தோரணங்கட்டி மாரியம்மன் சாட்சியாக
மலையகம் என்கின்ற மணமுள்ள
மைதானத்தில்
விலையில்லா கற்களாக நிரந்தரமாள்
நிற்கின்ற முன்னோர் வாழ்க.
ܥܬ
உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் 5ஆம் மாநாடு நடைபெறும் இடம் : குற்றாலம் நாள் : 14.02.2010 ஏற்பாடு : நல்லூர் முரசு இதழார் சொக்கம்பட்டி ரஹீம் இலங்கையிலிருந்து கலந்துகொள்ள விரும்பும் சிற்றிதழாளர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி
அந்தணி ஜீவா 57, மகிந்த பிளேஸ், கொழும்பு 06.
இலங்கை. 0776612315 A
༄།
கொழுந்து
 
 

நாமும் மற்ற தேசங்களைப் போல் முன்னேறப் பாடுபடுகிறோம். ஒரு நாடு முன்னேறியிருக்கிறதா என்பதை அறிய அளவுகோல், அந்த நாட்டில் எல்லோரும் படித்திருக்கிறார்களா? எல்லோருக்கும் வேலை இருக்கிறதா? எல்லோருக்கும் சோறு கிடைக்கிறதா? என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இதை இலட்சியமாகக் கொண்டுதான் நாம் பாடுபடுகிறோம்.
— ១៣០ប្ល៣ឆ្នា
இந்தப் பக்கத்தை வழங்கியவ அ.முத்தப்பன் செட்டியார்
தலைவர் - இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி
கொழுந்து

Page 17
எழுத்தாளர் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமியின்பால் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர். அவ்வப்போது அ.ந.க.வை மறக்காத கட்டுரைகள் பத்திரிகைகளில் எழுதி நினைவு கூர்பவர். அவரது அ.ந.க. பற்றிய கட்டுரைத் தொடரொன்று முன்னர் இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன் பத்திரிகையில் சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் என்னும் பெயரில் வெளிவந்திருந்தது. அத்தொடர் பதிவுகள் இணைய இதழிலும் பின்னர் தொடராக வெளிவந்திருந்ததை அனைவரும்
வ.ந.கிரிதரன்
வெளிவந்த அ.ந.க.வின் வாழ்க்கையில் வெற்றி அடைவது பற்றிய நல்லதொரு உளவியலுடன் கூடிய நூலான வெற்றியின் இரகசியங்கள் என்னும் நூலினைக் குறிப்பிடலாம். மேற்படி நூல் அவரது இறுதிச் சடங்குகளின்போது அவரது தலைமாட்டில் காணப்பட்டதொரு புகைப்படத்தினை இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளிலொன்றில் அன்றைய காலகட்டத்தில் கண்டிருக்கின்றேன். அடுத்தது மதமாற்றம் அ.ந.க.வின்
புகழ்பெற்ற நாடகமிது.
பதிவுகள் - நூல் அறிமுகம் : மற்றும்
அறிவீர்கள். அ.ந.க. பற்றிய ஆய்வுகள் செய்ய விழையும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும் கட்டுரைத் தொடர்.
அண்மையில் எழுத்தாளர் அந்தனி ஜீவா மேற்படி கட்டுரைத் தொடரினை சில மாற்றங்களுடன் அ.ந.க. ஒரு சகாப்தம் என்னும் நூலாக மலையக வெளியீட்டகம் என்னும் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். மேற்படி நூலானது அ.ந.க.வின் மறைவு தினமான பெப்ரவரி 14ஆம் திகதி மேற்படி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருப்பது பொருத்தமானதே. இதற்காக அந்தனி ஜீவாவைப் பாராட்டிட வேண்டும். இதன் மூலம் மலையக பணியினை ஆற்றியுள்ளது. இதுவரையில் அ.ந.க. வின் படைப்புகளைத் தாங்கி இருநூல்களே வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் முயற்சியின் பயனாக
இன்னொரு வரின் நிதி உதவியுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்தனி ஜீவாவின் மேற்படி நூலான அ.ந.க. ஒரு சகாப்தம் என்னும் நூல் மலையக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருப்பது ஈழத்தின் இன்றைய தலைமுறையினருக்கு அ.ந.க.வை அறிமுகம் செய்து வைப்பதற்கு மிகவும் உதவியாகவிருக்கும். மேற்படி நூலானது எண்பதுகளின் இறுதிப் பகுதியில் வெளிவந்திருக்க வேண்டிய நூல். இருந்தாலும் தான் தொடங்கிய முயற்சியினைக் கைவிடாது அதனை வெற்றிகரமாக முடித்திருக்கின்றார் அந்தனி ஜீவா. இதுபோன்று ஏற்கனவே தனது மலையக வெளியீட்டகத்தினால் 17 நூல்களை வெளியிட்டுள்ள அதன் மூலம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு (ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியமுட்பட) நல்லதொரு சேவையினை ஆற்றியுள்ளார்.
 
 
 
 

இலங்கை இந்திய வம்சாவளி மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
மலையகத்தின் மூத்த கவிஞர்
சக்தி பால ஐயாவின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடாத்திய Tur(o விழாவில் தொழிலதிபர் ரொபின்சன் மாலை அணிவிக்கிறார். அருகில் புரவலர்ஹாசிம் உமர் தலைவர் அ.முத்தப்பன் செட்டியார் அமல் ராஜபக்ஷ ஆகியோர் படத்தில்
காணப்படுகின்றனர்.
நாங்கள் தோட்டிச் சிறுவர்களாகக்
ல்விபயின்ற காலத்தில் பொருளாதார வசதியின்றி வாடினோம். வறுமையின் நிழலில் வளர்த்தோம் எங்களால் பெற
முடியாமல்போன உயர்கல்வியை எமது
சமூகம் பெறவேண்டும் என்று உறுதி கொண்டோம் இது மலையக அபிவிருத்திமன்ற உறுப்பினர்களின் ஒன்றுபட்ட குரலாக இருக்கிறது.
மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு உதவித் திட்டங்களை சொற்படுத்தி வருகின்றது. பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஒராண்டு காலமாகப் புலமைப்பரில்களை வழங்கி வருகின்றது. பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 36 மாணவர்களுக்கு இம்மன்றம் புலமைப்பரிசில்களை வழங்கி வருகிறது.

Page 18
கடைசிப்பக்கம் அந்தனி ஜீவா
ஒரு கலைஞனின் மரணம்!
என் தாயாரின் மரணத்திற்கு பிறகு என்னை மிகவும் பாதித்தது செல்டன் பயாகல என்ற கலைஞரின் மரணம். என்னை மிக அதிகமாக நேசித்த ஒரு சகோதர சிங்கள கலைஞன் செல்டன். புரட்சிகரமான மார்க்ஸிச சிந்தனையாளனான கலைஞர் செல்டன் 1944ஆம் ஆண்டு அட்டனில் பிறந்தவர். ஆரம்பத்தில் அட்டன் பூரீபாத வித்தியாலயத்திலும் பின்னர் மொறட்டுவ பிறின்ஸ் ஒவ்வேல்ஸ் கல்லூரியலும் கற்றவர்.
சிங்கள இலக்கியத்தின் சிகரம் எனப் போற்றப் படும் மார்ட்டின் விக்கிரமசிங்க, எழுத்தாளர் ஜி.பி. சேனநாயக்கா போன்றவர்களின் தொடர்பு செல்லட னின் வளர்ச்சி துணை புரிந்தது. பின்னர் செங்கொடி இயக்கத்தில் என்.சண்முகதாசனுடன் இணைந்து தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபாடுகொண்டு, பெருந் தோட்டத்துறை தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு உழைத்துள்ளார். இலக்கியம், சினிமா என்ற ஈடுபாடு இரண்டு சிங்களத்திரைப்படங்களை இயக்கியுள்ளார் ஒன்று மலரை மறந்த தேனீ (1982) இரண்டாது ஊமை கடலில் சூறாவளி (1991) இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இரண்டாவது திரைப்படம் இனப்பிரச்சனையை மார்க்ஸிய அணுகுமுறையில் பார்த்தது.
நான் கண்டியில் இருந்த காலத்தில் இவருடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. உலக சினிமா பலவற்றை எனக்கு அறிமுகம் செய்தார். இலங்கையில் முதன் முதலில் தொலைக்காட்சி பாடநெறியை தமிழில் நடத்தியபொழுது, அந்த பயிற்சிக்கு நான் பொறுப்பாளராக செயற்பட்டபொழுது, ஆரம்பம் முதல் இறுதிவரை எனக்கு உறுதுணையாக இருந்தவர் கலைஞர் செல்டன் பயாகல.
அணிவை 65இல் நம்மைவிட்டு பிரிந்தது ஒரு பேரிழப்பாகும். கலைஞர் செல்டனிடம் திரைப்படத்துறை சம்பந்தமாக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஒரிருவராவது இவரது கனவை நனவாக்குவார்கள் என நம்பலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 

பெரியாரின் பெருந்தொண்டர்
நாவலர் ஏ.இளஞ்செழியன் அவர்களுக்கு
எமது இதய அஞ்சலி
JAMAYAN||
EXPORTS (PT) LTD.
Exporters of Sri Lanka Foodstuff, Spices, Kitchen Wares, A|| PrOdu CtS & PrOdu CeS
No. 211A, Awis Town Road, Hendala, Wattala, Sri Lanka. Tel 2932835, 4812603-4, Fax: 2937838 Mobile : O777 848780, e-mail: damexpo visualnet.k, Web: WWW.nce.lk/members/damayanthi

Page 19

uzoorgessusisprawww - Igg lgb zito qet usisod
プ
●○ Œ ∞ G ッ ! 厕 C
011 2361321