கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புவியியல் 1965.10.15

Page 1

5 (6.
இரும்புருக்குத் தொழிற்கு
உள்நாட்டு மூலப் பொருட்கள்
-GւյrրՁիար: குலரெத்தினம்
இலங்கையின் உப்புக்கைத்தொழில்
ஒரு புவியியல் நோக்கு --கலாநிதி ஜோர்ஜ் தம்பையாபிள்ளை
கிழக்கு மேற்குப் பாகிஸ்தான்
ஒப்பீட்டுப் புவியியல்
-5 - (3568ծID IT92IT நமது புவியியலாளர்
ܕ ܐܬ
- -பொ. புவனராஜன்
படவெறியங்களிற்
சமபரப்புத் தன்மை
-சி. திலகநாதன் .

Page 2
0 பேராசிரியர் கா. குலசெத்தினம் M. A, Ph. D.D.se F. R. G. S., Dip, in Gemmolgy, Dip, in Geography.
(புவியியற் பேராசிரியர், இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை)
10 கலாநிதி டபிள்யு.எல். ஜெயசிங்கம் B.Sc., Ph.D.
(புவியியற் பகுதித் தலைவர்
யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோ
O திரு. சோ. செல்வநாயகம் M.A.
(புவியியல் விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை)
& ஆலோசக ஆசிரியர் : |//I (, )
0 கலாநிதி, ஜோர்ஜ் தம்பையாபிள்ளை M.A., Ph.D.
(Cantab), F.R.Met, S. (புவியியல் விரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக் கழகம், பேராதனை)
鱷燃
| r ஆகிரியர்: 臀 O 3, ... (56.875 fgr. B. A. Hons. (cay)
(புவியியல் விரிவுரையாளர்,
இலங்கைப் பல்கலைக் கழகம் கொழும்பு)
A.
s
துணை ஆசிரியர்
O 9. இராஜகோப гбо В. A. (Goog.) (Cey)
இலங்கைப் பல்கலைக் கழகம்
கொழும்பு
= அன்பு வெளியீடு =
.. 55017. காங்கேசன்துறை வீதி, 燃鯊
யாழ்ப்பாணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*புவியியல் ஒரு கலை ; விஞ்ஞானம் , தத்துவம்
~ஆசிரியர்: க. குணராஜா B, A, H08
* 15-ஒக்டோபர்-1965 k
e இரு திங்கள் ஒளிதழ் ஏடு 9 * இவ்விதழிலுள்ள கட்டுரைகளின் கருத்துக்கள்
யாவற்றிற்கும் அவற்றை எழுதிய கட்டுை ஆசிரியர்களே முழுப்பொறுப்பாளர். *
புவியியற் கல்வியுலகு
"புவியியற் கல்வி உலகில் புதியதோர் சகாப்தத்தை “புவியியல் இலங்கையில் உருவாக்கியுள்ளது. ’ என வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் எழுதியுள்ளார். *இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒராண்டு தொடர்ந்து புவியியலை நடாத்தியமை பெரும் சாதனையே’ என ஹெலிஎல அன்பர் ஒருவர் எழுதியுள்ளார். இவற்றையெல்லாம் நோக்கும்போது நல்லதொரு செயலை, இன்று, கல்வியுலகிற்குத் தேவையானதொரு செயலைச் செய்கின்ருேம் என்ற பூரண திருப்தி நமக்கேற்படுகின்றது.
*புவியியல்' பற்றி இன்னுெருவகையான கருத்தும் நிலவுகின்றது. *புவியியலின் தரம் போதாது என ஒரு சாராரும், புவியியலின் தரம் கூடிவிட்டது' என்று மறுசாராரும் குறிப்பிடுகின்றனர். பேரா சிரியர் கா. குலரெத்தினம் அவர்களின் ‘இலங்கையின் புவிச்சரித வியல் என்ற மூன்ருவது இதழ் மட்டும் போதுமே புவியியலின் தரத் தைக் கூற படித்தவர்கள் ஒன்றைத் தரமில்லை என்று கூறுவதன் மூலம்தான் தமது பெருமையைக் காத்துக் கொள்கின்றர்கள். அது நியதி.

Page 3
எந்த அளவுகோலின் துணைகொண்டு புவியியலின் தரம் போதாது என்று கூறுகின்ருர்கள் என்று புரியவில்லை. எதனேடு ஒப்பிட்டுத் தரம் பேசுகிருர்கள் ? புவியியற்கல்வி தமிழில் இப்போதுதான் வளரத் தொடங்கியிருக்கின்றது. புவியியற் கல்வியின் உள்ளடக்கத்தைத் தமிழில் முதலில் கொண்டுவந்த பிறகுதான், ஆராய்விற்கு இட மிருக்கின்றது. அத்திவாரமின்றி வானையளாவி மாளிகை சமைக்கும் எண்ணம் நமக்கில்லை.
-பட்டம் பல பெற்றவர்களுக்காக நடாத்தப்படும் ஏடன்று புவி யியல்; பட்டம் பெறப் போகிறவர்களுக்காக நடாத்தப்படும் இதழ் தான் புவியியல்.
இப் புவியியல் இதழிலிருந்து பல புதிய அம்சங்களைத் தொடங்கி யுள்ளோம்; இலங்கையிற் பரவலாகப் பல புவியியலறிஞர்கள் குடத் துள் விளக்காகவுளர். அவர்களைத் தக்க முறையிற் கெளரவிக்கப் புவியியல் விழைகின்றது. ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர் வி. சுப்பிரமணியம் அவர்கள் இவ்விதழில் புவியியல் வளர்ச்சிக்குத் தக்க கருத்துக்களைக் கூறியுள்ளார்; சென்னை, கலைக்கல்லூரி, புவியியற் பகுதித் தலைவர் என். அனந்தபத்மநாதன் தமது கடிதத்தில் பல அரிய கருத்துக்களை வழங்கியுள்ளார்.
-புவியியற் கட்டுரைப் போட்டி முடிவுகளையும், இவ்வாண்டின் சிறந்த புவியியல் மாணவன் யார் என்பதையும் இவ்விதழில் அறிவிக்க முடியாது போனமைக்காக வருந்துகின்ருேம். கட்டுரைகள் பரிசீலனை செய்யப்பட்டுவருகின்றன. முடிவுகளை அடுத்த இதழில் தவருது தருவோம்.
வணக்கம்.
-ஆசிரியர்
முக்கிய அறிவித்தல் *புவியியல் தொடர்பான எந்த விடயங்கட்கும் கீழ்க்கண்ட முகவரியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின் ருேம். * η ஆசிரியர் "புவியியல்? (புவியியற் பகுதி) இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு
 
 
 
 

3
- பேராசிரியர் கா. குலரெத்தினம்
இரும்புருக்குத் தொழிற்கு உள்நாட்டு
மூலப்பொருட்கள்
"காலடியின் கீழுள்ள செல்வங்கள்’ என்னும் முன்னைய கட்டு ரையில் (புவியியல்; இதழ் 2), இலங்கையின் கனிமூலவளங்களின் இருப்புப் பற்றிய ஒர் ஆய்வை மிகவிரைவில் மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனுல் திட்டமிடுதலும், கைத் தொழிலும் விருத்தியடையும். இதனைச் செவ்வனே நடாத்துவதற்கு இந்நாட்டின் புவிச்சரிதவியல் பற்றிய அளவீடுகளும், படங்களுமவசி யம், 1902 ஆம் ஆண்டு தொட்டு எமது புவிச்சரிதவியற்பகுதி இயங்கி வருகின்றதெனினும், அது செலவழித்த நேரத்திற்கும், பணத்திற்குமேற்ப பணிபுரியாமை வருத்தத்திற்குரியது. இலங்கை முழுவதற்குமுரிய இடவிளக்கப் படங்கள் வரையப்பட்டுள்ள போதி லும், புவிச்சரிதவியற் படங்கள் இதுவரை இரண்டே வரையப்பட் டுள்ளன. (ஆனந்தக்குமாரசாமி 1906 இல் கண்டியில் புவிச்சரிதவியற் படத்தைக் கீறினர்) அவை பொலநறுவை, றங்காலை பற்றியன. இதற்குக் காரணம் போதிய பயிற்சி பெற்ற புவிச் சரிதவியலாள ரின்மையே. எமது பல்கலைக்கழகங்களிற் புவிச்சரிதவியற் பட்டம்பெற முடியாமை காரணமாகக் கூறப்பட்டது: எனினும் அதனைப் பற்றிய சிபாரிசு காலத்திற்குக் காலமெடுக்கப்பட்டு, இன்று இக்குறையைப் பல்கலைக்கழகம் நிவர்த்தி செய்துள்ளது.
பாறைகளிற் கணிப்பொருட்கள் ஒழுங்கற்றிருப்பதில்லை; ஒவ்வொரு கணிப்பொருள் அல்லது கூட்டிற்கும் அதற்கெனப் புவிச்சரிதவிய
லமைப்பும், சூழலுமுண்டு. விசேஷமான பாறைகளிலே தம் தனிப் பட்ட கூட்டுக்களுடன் அவை விளங்கும். மேலும், தேசிய கனிவளப்
பட்டியலைத் தயாரிக்கப் புவிச்சரிதவியற் படங்கள் மிகஅவசியம்.
இரும்புத்தாது பற்றியும், அதன் நிலைச் சக்திபற்றியும் இக்கட்டு ரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் எமது இரும்புத் தாது வளம்பற்றியும் கிடைக்கக்கூடிய தரவுகள் கொடுக்கப்பட்டுள் ளன. இதே விடயம் பற்றி இவ்வாசிரியர் இலங்கையின் விஞ்ஞான

Page 4
விேருத்திக் கழகத்தில் 1945 ஆம் ஆண்டில் உரைநிகழ்த்தியுள்ளார். இவ்வுரையின் சாராம்சம் இலங்கையின் புவியியற் சங்கத்தின் சஞ்சி கையில் (தொகுதி : 5. மலர் : 2, 1950) வெளியிடப்பட்டது.
வரலாறு சம்பந்தமானவை
அநேக நூற்றண்டுகளாக இலங்கையில் இரும்புத்தாது பற்றித் தெரிந்ததுடன் அத்துறையில் முயற்சிகளும் நடந்தன. இவை பற்றிப் புராதன நூல்கள் கூறியுள்ளன. மேலும், நூதனசாலையின் பழைய பல்வேறுபட்ட பொருட்களிலிருந்தும் இவ்வுண்மை தெரிவதுடன், நேரடியான புதைபொருள் ஆராய்ச்சிகள் மூலமும், புவிச் சரிதவியற் சான்றுகள் மூலமுந் தெளிவாகின்றன. நாட்டின் பலபாகங்களிலும் பரந்துபட்டு பழைய உருக்கு அசுத்தங்களின் படிவுகளுள. தீவின் சிலபகுதிகளிலுள்ள மண்மேடுகள், குவியல்கள் என்பன இங்கு மிகப் பழைய காலத்திலிருந்தே தாதுக்கள் இரும்பிற்காக உருக்கப்பட்டுள் ளன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இரும்பு உருக்குடன் தொடர்புடைய கைத்தொழில்களும் நடைபெற்று வந்துள்ளன. அக் காலச் சமுதாயப், பொருளாதார அமைப்புக்கள் என்பன நோக் கற்பாலன. அடுக்களை உபகரணங்கள், பயிர்ச் செய்கை, வேட்டை ஆயுதங்கள், யுத்தத்திற்கான ஆயுதங்கள் என்பனவற்றிற்கு உள் நாட்டுத் தேவையிருந்தன. இவையாவும் ஒவ்வொரு கிராமங்களிலும், குடியிருப்புக்களிலும், சொந்தக் கிராமக் கொல்லரால் பூர்த்தி செய்யப் பட்டன. அச் சூளைகளிற்கு அநுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டுக் கட்டைக்கரி வலுவாக உப்யோகிக் கப்பட்டது. உள்நாட்டில் வெளியிருப்பாக இருந்த சுண்ணக்கல், தொலமைற்று என்பன உருக்கும்போது அபரிமிதமான வெப்பத்தைக் குறைப்பதற்கு உதவின. இவை இரும்புத் தாதுக்கள் போன்று பெருமள வில் கிடைத்தன, புவிச்சரிதவியலாளரும், பிரயாணிகளும் மற்றும் தொழில் வெளியாய்வாளர்களும் உருக்கு அசுத்தங்களின் குவியல்களை அவதானித்துள்ளனர். கரிகளின் எச்சங்களும் அவதானிக்கப்ட்டுள் ளன. இப்பகுதிகள் (இன்று குடியிருப்பின்றி) பல நூற்றண்டுகளாக காடு களாக உள்ளன. எனினும் இரும்புத் தொழில் ஒரு முக்கிய இடத் தினை வகித்ததை எடுத்துக்காட்டுகின்றன. காடுகளின் வளர்ச்சிக் காலத்திற்கு முன்னரே, சமுதாய பொருளாதார அமைப்பில் இத் தொழில் முக்கியத்துவம் வகித்தமை தெளிவாகின்றது. அரசியல் சமுதாய, குடித்தொகை மாறுதல் காரணங்களால் வறண்ட பிரதேசம் கைவிடப்பட்டது. இதஞல் அநேக பொருளாதார மாறுதல்கள் ஏற்பட்டதுடன், உள்நாட்டுக் கைத்தொழில் அமைவிலும் பல விளைவுகள் ஏற்பட்டன. இடப் பெயர்வு காரணமாகவும், தேவை

5
នាវាទាំ முக்கியத்துவத்தாலும் இரும்புக் கைத்தொழில் குறைவான குடிநெருக்கமுள்ள இடங்களில் அமையலாயிற்று. இதன் பூரண அழிவு மிக அண்மையில் ஏற்பட்டது. காரணம், உலகிலுள்ள பிற கைத்தொழில் நாடுகளிலிருந்து மலிவாகவும், பேரளவாகவும் இரும் புப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டமையாலாகும். எமது இரும்பு, உருக்குக் கைத்தொழில் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சிறு குடிசைத் தொழிலிலிருந்து நவீன ஆலைகள் வரை இதன் வளர்ச்சியுண்டு. இதனுல் வெளிநாட்டுச் செலவாணி பாதுகாக்கப்படும். இதனல் நுகர்ச்சியாளர்கட்கு பாதிப்பு ஏற்படாத வாறு இறக்குமதிப் பொருள்கட்கு மாற்றுப் பொருட்கள் கிடைக்கின் றன. இலங்கையின் கனிவள ஆய்வினை நிர்வாக அறிக்கையில் கூறி புள்ளனர். இது 1904 ஆம் ஆண்டில் ஆனந்த கே. குமாரசுவாமியால் பின்வருமாறு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. "பலாங்கொடையில் இன்றும் சிறு அளவில் இரும்பு உற்பத்தியும், உருக்குத்தொழிலும் நடைபெறுகின்றன.' s
தாது காணப்படுமிடங்களில் உருக்குத் தொழில் நடைபெற வில்லை. அவை எரிபொருளும் (கட்டைக்கரி) ஏனைய மூலப்பொருட் களும் (சுண்ணக்கல், தொலமைற்று) உள்ள இடங்களில் அமைந்தன. அத்துடன் துணை த்தொழில்களான வீடுகட்டல் முதலானவையும் முக்கியமடைந்தன. கிராமக் குடியிருப்பில் கொல்லருக்கு விசேட இடம் சாதிஅடிப்படையில் ஒதுக்கப்பட்டது. (உ+ம் யம்மனு Yammanu) இத் தொழில் நாளடைவில் வீழ்ச்சியடையலாயிற்று. எனவே அவர்கள் இத் தொழிலுடன் தொடர்புபட்ட சுண்ணும்பு செய்தல், செங்கட்டி செய்தல், போன்ற தொழில்களில் கவனம் செலுத்தலானுர்கள்.
இலங்கை மக்கள் புவியியல் உறவிலும், கலாச்சாரத் தொடர்பு களிலும் தீபகற்ப இந்தியருடன் விசேட இணைப்புக் கொண்டவர்கள். இலங்கையில் நடைமுறையில் இருந்த இரும்பு உற்பத்தி, முறை தென் இந்திய செயல் முறைகளுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டது. இந்திய உருக்கு புராதன, மத்தியகால வர்த்தகத்தில் இடம் பெற்ற தாக எடுத்துக் காட்டப்பட்டுள. சில போது இலங்கை உருக்கும் அவ்வாறு இடம் பெற்றிருக்கலாம். இவை புகழ் பெற்ற ஆயுதங்கள் செய்வதெற்கென டமாஸ்கசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
அக் காலத்தில் தரம் குறைந்த செம்பூரான் வகையான தாதுக் கள் உபயோகிக்கப்பட்டன. இவற்றை அக்காலத்தில் எங்கும் பரந்த கம்மாலரின் உருக்கு அசுத்தங்கள் (கசடு) மூலம் அறியக் கிடக்கின்

Page 5
6
றன. இவ்வசுத்தங்கள் அதிக அளவு சிலிக்கா கொண்டுள. அத் தோடு தேவையான களித்தன்மையான லிமோனைற் சிறு உருண் டைகள் இலங்கையின் பலபாக மண்ணிலும் உள. இவை அதிகமாக அன்றி குறைவான அபரித பெருக்கு கொண்டவையாதலால் உருக் கின் போது குறைந்த வெப்பத்தை வேண்டுவன. எரிபொருளின் விலை அதிகமாக இருந்தது. எனினும் அதிக அளவு வெப்பவிதம் விரயமாக்கப்பட்டது. ஆனலும்-இதற்குத் தேவைப்பட்ட விறகு
உயர்ந்த, ஏமத்தைற்று, மகனத்தைற்று தாதுக்களை உருக்குவற்கு
முடியவில்லை. எனவே அத் தாதுக்கள் உபயோகிக்கப்படாது விடப்பட்டன. இணக்கமற்ற உலைகள் இன்னமும் வளர்ச்சியடைய வில்லை. எனவே தாதுத் தேர்வில் வெப்பமே நிர்ணயிக்கும் ஏதுவாக வுளது. காபூக் சாதி (20 வீத இரும்பு கொண்டது) உபயோகிக்கப் பட்டது. இதனல் லைமோனைற், எமத்தைற்று, மகனதைற்று படிவு கள் பின்தலை முறையினருக்கென பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட் | - (oðI'. இலகுவாகத் தாது எடுக்கப்பட்டதும் சிறு உருண்டைகள் இலகுவில் உடைக்கக் கூடியதாக இருந்தமையும் சந்தேகமற மற்று மோர் காரணமாக விளங்கிற்று.
இலங்கையில் இரும்புத் தாதின் பரம்பல்
இரும்புத் தாதின் வரைவிலக்கணத்தை சேவியர் (Sauveur) பின் வருமாறு கூறுகிருர், 'இரும்பு கொண்ட கணிப்பொருள்களிலிருந்து இரும்பு எடுக்கத்தக்கதாது, அது வர்த்தக அளவிலும், லாபம் தரக் கூடியதாகவும் விளங்க வேண்டும்' வேறுபட்ட உற்பத்தி முறைகளைக் கொண்டு இரும்பு கொண்ட கணிப்பொருட்கள்-பல்வேறுபட்ட தரத்தினவாக இலங்கையில் கிடைக்கின்றன. தற்கால போட்டி நிபந்தனையில் ஒர்சிலவே திருப்திகரமாக உள்ளன. தரத்தில் குறைந்த செம்பூரான், இரும்பு கலந்த களி முதலானவற்றை தற்பொழுது ஆய்விலிருந்து நீக்கி விடலாம். இவை பரந்த அளவில் பெருமளவில் கிடைக்கத்தக்கனவாக உள்ளன. மூலப் பொருட்களாக இவையே முன்னர் உபயோகிக்கப்பட்டன. இன்று உலோகத்தை உருக்க ஏற் படுத்தும் முறையில்-சிலிக்காவை நீக்கியபின்னரே கணிப்பொருளை உபயோகிக்கக் கூடியதாகவுள்ளது. சேவியர் கூற்றுப்படியுள்ள படிவு கள் பிரதேச அமைவில் பரந்துள்ளன. எனினும் அவை புவிச் சரித இயல் நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்டுள :
 
 

7
(9) இரத்தினபுரி-பலாங்கொடை. (டெலா , ஒபாரா, பலாங் கொடை, கலவானை, றக்குவானை என்பவற்றை உள்ள டக்கியுள.) (ஆ) களுத்துறை-படிகம. (கொஸ்கொட, மதுகம என்பன
வற்றை உள்ளடக்கியுள) (இ) மாத்தறை-அக்குறச.
(ஈ) விலாகெடர, கொறிகண்ட, பணிரண்டாவை முதலான
இடங்கள்.
-றுாவான்வெல, கண்டி, மாத்தளையிலும், மற்றும் இடங்களிலும் சிறு அளவில் தாதுக்கள் உள.
நல்ல தரத் தாதுக்கள் ஐந்து மில்லியன் தொன்னளவில் முன் கூறப்பட்ட மூன்று இடங்களிலும் உளதாகக் கணிக்கப்பட்டுள்ளது: இவை ஆழமற்றுள. இவற்றின் மீது சிதைவாலும், உக்கினமையா லும் ஏற்பட்ட பாறைகள் காணக்கிடக்கின்றன. இதனுல் அதிக வேலை கிடையாது. ஆழம் கூடிச் செல்ல இரும்பும் கிடைக்காமல் விடுகின்றது. இதனல் திறந்த வெளி முறையிலும், கையாலும் தாதினை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தாது உயர்ந்த தரமா னது. எனவே அதிக வெப்பத்தினைக் கிடைக்கக்கூடியதாக வழிவகுத் தால் இலகுவான முறைகளில் அவற்றை உபயோகிக்கலாம்.
'இத் தாதுக்கள் மென்மையாக, கடற்பஞ்சு போன்று, அன்றி சிற்றறைகளுள்ளனவாக விளங்குகின்றன. அத்துடன் நீரக இரும்பு ஒக்சைட்டு, லைமோனைற்று, கோதைற்று' சிறு அளவில் கேமத்தைற்று என்பனவற்றைக் கூட்டாகக் கொண்டுள. (வாடியா). இவை நாட்டி லுள்ள வானிலையாக்கத்திற்குட்பட்ட பாறைகளின் மேற் பரப்பில் காணப்படுகின்றன. பெரும் திணிவுகளாக, மிதக்கும் சிறு உருண்டை
கள் முதலானவற்றை இவை அடக்கியுள. இவை போதிய சான்று களுடன் தனியாக்கப்பட்ட மாற்றங்கட்கும் உட்பட்டு விளங்குகின்
ற்ன. நல்ல தரத் தாது 54-57 வீத இரும்பு கொண்டது. சராசரி இரும்புத் தன்மை 50 வீதமேயாகும். இவற்றில் சில பொசுபேற்று கொண்டனவாக சுமார் 0.5 தொட்டு 15 வீத பொஸ்பரஸ் பென்ட் ஒக்சைட் கொண்டுள. அடிப்படை செயல்முறைகள் மூலம் இவற்றை உருக்குத் தொழிலிற்கு உபயோகிக்கலாம். சிலவற்றில் மங்கனீஸ் ஒக்சைட் உண்டு. சல்பர் கிடையாது. கல்சியம் பொக்சு பேற்ருசு பொசுபரசு வெளியேற்றப்படும். இதிலிருந்து பெறுமதிவாய்ந்த உப உற்பத்தித் தொழிலான வளமாக்கிகளை உற்பத்தி செய்யலாம்.

Page 6
இலங்கையின் இரும்புத் தாதுக்கள் பற்றிய ܐܝ தொகுப்புக்கள்
1847 ஆம் ஆண்டில் இலங்கையரசாங்கத்தினுல் டாக்டர் கைகாஸ் என்னும் சுவிஸ் தேச கணிப்பொருளியல் வல்லுநர் நியமிக்கப்பட் டார். அவர் இலங்கையில் காணப்பட்ட இரும்புத் தாது பற்றிப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:
'இலங்கையில் காணப்படும் இரும்புத் தாது தரத்தில் சிறந்தது. அது இலேசாக உருக்கக் கூடியது. உருக்கியதும் வெள்ளி போன்று காட்சிதரும் தாது முப்பது தொட்டு எழுபத்தைந்து வீதம் இரும்பு உற்பத்தி செய்யக்கூடியது. சராசரி ஐம்பது வீதமாகும். அதிலி ருந்து செய்யப்பட்ட இரும்பு களித்தன்மையற்றே உருக்காகின்றது. அது உருக்காக்கப்பட்டதும் வைரம் போன்று வெட்டும் தன்மை கொண்டது. (ரெனன்ரினுடைய இலங்கை: 1859-நூல் பார்க்க)
‘நல்ல தர இரும்பு மலைப்பகுதிகளில் பல்வேறுபட்ட உருவங்களில் உள. அவை சிறு இரும்புக் கற்களிலிருந்து பெரும் திரள்கள் வரை அநேக தொன் நிறை கொண்டனவாக இருக்கின்றன. ஒரு நாள் பூராக ஊதி, காற்றடித்தால்-இருபது இருத்தல் இரும்பு உருவாக்கம் படும். அதுவும்- நன்முறையில் உருக்கப்படாதிருக்கும். இவை திரும்பவும் உருக்கப்பட்டு கைக்கோடரி, மண்வெட்டி, பாக்குவெட்டி என்பன செய்யப்படும். அது சுவீடன் தேச சிறந்த தர இரும்பை ஒத்தது.' இவ்வாறு எஸ். டிபிள்யூ. பேக்கர் என்பார் பகர்ந்துள் ளார். ('எட்டு ஆண்டுகளாக இலங்கையில் பிரயாணம்: ' 1855)
நான்காவது புவிச்சரித இயல் நிலப்பரப்பில் (விலாகெடர வயல்) உள்ள இரும்புத் தாது தென் இந்தியாவிலுள்ள தாதின் தரத்தை ஒத்தது. இது அண்மையில் சண்டலங்காவையின் அருகிலுள்ள விலாகெடரவில் கண்டுபிடிக்கப்பட்டன. இவை மிகப் பழைய புவிச் சரிதவியல் காலத்திலேயே படிவுகளாக்கப்பட்டன. இவை பின்னர் உருமாற்றங்கட்கு உட்பட்டன. கொறிகண்ட பனிரண்டாவ பகுதி களுள் இதன் தொடர்ச்சி உண்டு. இங்கு நான்கு மில்லியன் தொன் வரை சிறந்த ரக மகனத்தைற்று குறிப்பிட்ட எல்லைக்குள் உளது. மற்றும் பிரதான மூன்று இடங்களிலும் உளது போன்றன்றி இங்கு ஆழத்தில் இவையுண்டு. மேலும் தற்போதுள்ள நவீன ஆய்வு முறை க்ளால் உள்ளகம் கண்டுபிடிக்கப்படும். இது 60 வீத இரும்புச் சேர்க்கை கொண்டது.
 
 
 
 
 
 

புவிச்சரித இயல் தொடர்புகள் : சாதாரணமாக நம்பப்படுவது போன்று-இரும்புத் தாதுக்களின் படிவுகள் இங்குமங்குமாக இலங்கையில் இருப்பதில்லை. தீர்க்கமான் பகுதிகளில், தெளிவான அமைப்பில், புவிப் பெளதிக உறுப்பியல் தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டுள. முதல் மூன்று பகுதிகளும் தீவின் தென்மேற் பகுதியில் உள்ளன (மழை வீழ்ச்சி-75/ அதிகம்) ஆங்கு பாறை உக்கும் ஏதுக்கள் மிக அதிகம். இயற்கை இணைப் பான கதிர் வீச்சு அதிகமாக இருத்தலும், வளிமண்டல ஈரலிப்பு, நிலநீரின் கசிவு என்பன பாறைகள் துகள்களாகக் காலாகின்றன. இவற்றுடன் இரசாயன மாற்றங்களான ஒட்சியேற்றம், ஊறுவதால் சில சேர்க்கைகள் கரைதல் என்பனவும் நடைபெறுகின்றன. இரும்பு ஒக்சைட்டுக்கள் வளமாக குவிந்து கரையாமல் உள. இவை காலநிலை முறைகளுடன் தெளிவான தொடர்பு கொண்டவை. அவை முதலான அன்றி பாறைக்குழம்பினல் உருவாக்கப்பட்டவையன்று. இத் தாதுக்களின் புவியியல் அமைவிற்கு காலநிலையின் முக்கிய பங்கினை அதிக உதாரணங் காட்டி விளக்கப்பட்டுள்ளது.
புவிச்சரித இயலின் படி அவை தீர்க்கமாக வரையறுக்கப்பட்ட பாறை அமைப்புகளுடன் தொடர்புபட்டுள. அதிகமான உருமாற்றத் திற்குட்பட்ட படிவுக் கூட்டங்களில் இவை அமைந்துள்ளன. முத லாவது வலயம் இரத்தினபுரி-பலாங்கொடையிலிருந்து அவிசாவலை, ககாவத்தை வரை பரந்துளது. இதன் அகலம் சுமார் எட்டு மைல். களுத்துறை-படிகம வலயமும் மாத்தை-அக்குரெசவரை பரந்துளது. இதுவும் ஒர்ேவித புவிச்சரித இயல் தொடர்பு கொண்டுளது. நாட்டின் புவிச்சரித இயல் தாக்கங்கட்குட்பட்ட பாறைகளுடன் தொடர்புபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அ ைெ கொண்டலைற் பாறை அமைவுடன் நெருங்கிய தொடர்பு கொண் டவை. கொண்டலைற் அமைவு இரும்பு உருக்கின் அபரிமிதமான பெருக்கிற்கு உதவும் சுண்ணக்கல், தொலமைற்று என்பவற்றை அதிர்ஷ்டவசமாகக் கொண்டுள.
இத் தாதுக்களின் தோற்றம்
முதல் மூன்று பகுதிகளிலும் உள்ள தாதுக்கள் செம்மணி இரும்பு
(அ) கொண்டலைற்றில் செம்மணிகள் மிக அதிகமாக உள. அவற்றுடன் மணியுருவானவையும். லெப்ரினேட்சும் காணப்படு கின்றன. செம்மணிகள் சிதைதலினையும், அவை சுடோமோபசு

Page 7
0
லெமோனைற்று உருண்டைகளாவதனையும் காணலாம். இவை தகுந்த போது இறுக்கப்பட்டும், இறுகியும் ஸ்தூலமான தட்டுக்களாகின்றன. ஆனல் அதிகமாக அவை சிறுதூளாகி-தாதுக் கணுக்களாகவும், திரல்களாகவும் ஆகின்றன. இவற்றிற்கு பல பொறிமுறைக்குரிய செய்முறைகள் உள்ளன. செம்மணி-இரண்டாந்தரமாக உருமாறிய கணிப்பொருளாகும். அது தன் வாழ்வு வட்டத்தில் முதலில் படிவாகவும் பின் பளிங்காகவும், பின் படிவாகவும் மாறுகின்றன.
(ஆ) மற்றைய செயல்முறையினுல் இரும்புத் தாதுப்படிவுகள் உண்டாவதன் காரணம் கராமொபிசம் (Katamorphism) நடைபெறுவ தால் சானுேகயிற் போன்ற உப்பு மூலப் பாறைகள் உருவாகுவதாகும். வளி மண்டலத்திலுள்ள நீர் இச் சிதைவுக்குட்பட்ட பாறைக்கூடாகக் கசிவது குறிப்பிடத்தக்க சம்பவமாகும். கரைதலிற்குட்படக்கூடிய பொருட்கள் அகற்றப்பட்டுவிடும். அத்துடன் பாறைகளில் உள்ள பிளவுகளில் நீரக இரும்பு ஒக்சைடு நிரப்பப்படும். இத்தகைய நிரப்பல் செய்கையினுல் இடைவிடாது நிலநீர் ஊறுவது தடைப் படும். இத்தகைய தாதுக்களின் உற்பத்தி இவ்வாறு எஞ்சியவை யாகவும், காற்றின் பிரிக்கைக் குட்பட்டு அவ்விடத்திலேயே உருவா னவையாயும் இருக்கும். ஒட்சியேற்றத்தால் இவை அதிக கணிப் பொருட்களைக் கொண்டிருக்கும். இவை இயற்கையால் சாதகமாக் கப்பட்டு, அன்றி வளமாக்கப்பட்டு இருக்கும். இவை இரு முக்கிய செய்முறைகள் கொண்டவை. அவை :
(அ) இரும்பிற்குப் பதிலாகச் சிலிக்கா இடமாற்றஞ் செய்யப் பட்டும், திரும்பவும் சீமெந்தாக்கமும் நடைபெறும்.
(ஆ) வன்மையான ஒடும், கபில-க் கணுக்களான லெமோ
னேற்று தடையாகவும் விடப்படும்.
மிதக்கும் கணுக்களும், சிறு உருண்டைத் தாதுக்களும் மூடு பரப் பில் பரந்துள்ளன. இவற்றின் தோற்றம் பின்வரும் காரணிகளுடன் தொடர்புபட்டவை.
1. அவ்விடத்திலேயே உள்ள தடைகளிலிருந்து தனியாக்கப் பட்ட துண்டுகளும், உடையல்களும் சூழவுள்ள மண்ணில் சிதறியிருக்கும்.
2. காணெற் உள்ள பாறைகள் பிரிந்தழிந்ததால் ஏற்பட்ட தனி யாக்கப்பட்ட காணெற்றுகளின் சிறு உருண்டைகள் இருத்தல்.
3. கொலோடல் பெருஜினஸ் பொருட்களும் தரைநீரில் கரைச லாகவுள்ள ஒக்சைட்டும் தடை செய்யப்படுவதால் பிசோ லிறிக் (Pisolitic) ஆக்கங்கள் ஒரே மைய வித்தினைச் சுற்றி உரு
6) Ir-5 Gii).
 

மிதக்கும் கணுக்களும், சிறு உருண்டைகளும் சாதாரணமாகவும், இவ் வழிகளாலும் அமையக்கூடியவை. இவை இலகுவாக எடுக்கக் கூடியவை. இவை அபரிதமாகப் பெருகுவதாலும், குறைந்த வெப்பத்தில் உருகுவதாலும் முன்பு இவை மூலப் பொருட்களாக விளங்கின. இவை சில செம்பூரான் மண்ணுடன் விளங்கின. தற் பொழுது இரும்பு உருக்குத் தொழில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள ஈரலிப்பான தென் மேற்குப் பகுதியில் இவை மையமாக்கப்பட்டுள் ளன. கெமறைற்றும் மக்னரைற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டமையால் இப் பகுதிகள் முக்கியம் வாய்ந்துள்ளன. முன்னுள்ள எடுத்துக்காட்டுக்களிலிருந்து புவிச்சரித இயல் படங்களிற்கும் தாதுக் கள் உள்ள படிவுகட்கும் இடையேயுள்ள தொடர்பின் முக்கியத்து வம் எடுத்துக்காட்டப்பட்டது. அத்துடன் புவிச்சரித இயல் நிலவள வீடும், படங்களும் வரையவேண்டிய முக்கியத்துவமும் அவசியம். இவை முழுத்தீவுக்கும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். இவற்
3; 4; M393
ரித கைத்தொழில் மயமாக்கவும் உதவும்.
பிடிப்பதோடு
தேசிய கைத்தொழில் வளர்ச்சிக்கு உள்நாட்டு இரும்பு உருக்குத் தொழில் அவசியம் என்பது யாவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. எமது பெரிய கைத்தொழில் திட்டங்களில் இலங்கை உருக்கு ஆலைத் தொழில் முக்கியமானது. இது ஒருவெலவில் (அருறுகிரிய) அமைக்கப்படுகின்றது. 160 மில்லியன் ரூபா இதை அமைக்கச் செல வாகும். ஆண்டுதோறும் 60,000 தொன் உருக்கு உற்பத்தி செய்யப் படுமெனக் கணிக்கப்பட்டுள்ளது. சிறப்பான சிறந்த தர உருக்கினை உற்பத்தி செய்வதற்கெனவும், இதே போது முயற்சிகள் எடுப்பது வரவேற்கத்தக்க ஒன்று. தாதுக்களைச் சிறு மின்கருவி உலைகளில் உருக் கலாம். அத்துடன் சுவீடனில் உள்ள முறைபோன்று கிராமப் புறங் களில் தனிப்பட்ட நபர்களோ அன்றி கிராமக் கூட்டுறவு முறைக ளிலோ கிராமச் சூளைகளை உருவாக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
உயர்ந்த தர நிலக்கரியின்றி உருக்குவதற்கு காந்தத்தன்மையற்ற தாதுக்கள் துணை செய்யும் என்பதை இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும். இவை நேரடியாக உயர்ந்ததர உருக்காகக் சிறு உலைகளில் மின்சக்தி கொண்டு உருக்கலாம். ஸ்கந்திநேவிய நாடுகளில் இம் முறையுண்டு. நீர் வலுவினை உபயோகித்து சிறு உலைகள் ஒருவெல வின் பெருஉருக்குச் சாலையினை யடுத்து நிறுவுவதற்குச் சாதகமுண்டு. விலாகெடரவில் உள்ள வேறு வ கைத்தாதுக்களை இவை உருக்கலாம்.
றின் அடிப்படையில் எமது கணிப்பொருள் மூல வளத்தினைக் கண்டு

Page 8
2
ஒருவெல ஆலேயின் முதலாம் நிலையில் இறக்குமதி செய்யப் பட்ட தாதுக்களினை உருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது உள் நாட்டுத் தாதுக்களை உருக்காது. கம்பிகள் செய்யும் துறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உருக்கு, ஆணிகளாகவும், கம்பி வலைகளாகவும், மற்றும் பொருட்களாகவும் செய்யப்படும். நாளடைவில் இறக்குமதி செய்யப்பட்டதும், உள்நாட்டில் உப யோகித்த இரும்பும் உபயோகிக்கப்படும். இறுதியிலேயே இறக் குமதி செய்யப்பட்ட பழைய இரும்பிற்குப் பதிலாக உள்நாட் டில் உருக்கப்பட்ட இரும்பும், உருக்கும் உபயோகிக்கப்படும். இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட உருண்டைகட்குப் பதிலாக உள் நாட்டு மூலப் பொருட்கள் உபயோகத்திற்கு வரும்போது சிறு மின் உலைகள் முக்கியத்துவம் அடையும். இவை அவ்வேளையில் ஒரு வெலவில் உள்ள பெரிய ஆலைக்கும், ஆங்குள்ள விசேட இலாகாக் கட்கும் உப பொருட்களை வழங்கி உதவும். இவ்வாறு பெரிய ஆலைக்கும், சிறு உலைகட்கும் உள்ள தொடர்பினையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் கைத்தொழில் திட்டமிட்டோர் கவனத்திற்கு எடுக்கவில்லை. யாவும் ஒரே மையத்தில் ஒரு தனி அலகுடன் இருப் பதிலும் பார்க்க, மேற்கூறப்பட்ட ஒருமுறை பொருளாதார வளர்ச் சிக்குச் சிறப்பாகப் பயன்படும். 鬣,
ஆரம்ப நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட தாதில் தங்கியிருத் தல் அவசியம். ஆணுல் இத்தகைய முதலாவது நிலையின் கால எல்லையைக் குறைத்தல் வேண்டும். அவ்வாறில்லாவிடில், இரும்பு உருக்குக் கைத்தொழிலின் தூண்டும் விசை வலுவிழக்கும். அத்தோடு உள் நாட்டுத் தாதினை உபயோகிக்க வேண்டிய கால எல்லே வரும் போது அது கேள்வியுடன் முரண்பட்டிருக்கும். இக்காரணத்திற்காக வும், சிறு உலைகளையும் நேரத்துடன் நிறுவவேண்டிய அவசியம் உள்ளது. அவசிய தேவைகளை விருத்தி செய்வதுடன், தனிநபர் களும், கிராமக் கூட்டுறவாளரும் இப் புதுத் துறையில் ஈடுபட வாய்ப்பு அளிக்கப்படவேண்டும். அத்தோடு கிராம அளவில் சுரங் கம், உற்பத்தி, இன்னுேரன்ன தொழில்களில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்குதல் வேண்டும்.
(தமிழாக்கம் * b. வேல்முருகு)
 

13
-கலாநிதி ஜோர்ஜ் தம்பையாபிள்ளை
இலங்கையில் உப்புக்கைத்தொழில் ஒரு புவியியல் நோக்கு
“இத்தீவின் மேற்குப் பக்கத்தில் போட்டலூன் என்ற பிரதேசத்தில் ஒரு துறைமுகம் இருக்கிறது. அது அரசனது நாட்டின் ஒரு பகுதிக்கு உப்பையும் மீனையும் விநியோகம் செய்கிறது. அங்குள்ளவர்கள் டச்சுக்காரருடன் சிறிதளவு வணிகத் தொடர்பும் கொண்டிருப்பதால் ஒரு கோட்டையும் வைத்திருக் கின்றனர். அவர்களுக்கு அண்மையாக, சற்றுக் கிழக்கே இயற்கையின் நியதியால் உப்பளங்கள் அமைந்திருக்கின்றன. அது அவர்கள் மொழியில் “லெவாவா’ என்றழைக்கப்படும். மேற்குக் காற்ருல் (அங்கு சாதகமான வானிலை இருப்பதால்) அங்கு உப்பு விளைகிறது. அது பெருந்தொகையாக அங்கு கிடைப்பதால் தங்களால் எவ்வளவு உப்பை எடுக்க முடியுமோ அவ்வளவு உப்பை அங்கு எடுப்பர். இது அவர்களுக்கு மிக அத்தியாவசியமான பொருளாக இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் யுத்த காலங்கள் அல்லது கலவரகாலங்களில் ஏற்படும் நெருக் கடிக்காக உப்பைச் சேமித்து வைப்பர். '
--ருெபேட் நொக்ஸ்
(30Gao தரப்பட்ட கூற்றிலிருந்து, உப்பானது ஒர் உயிர்நாடி யான பொருளாக இருந்ததோடு யுத்தங்கள் ஏற்பட்டவும் காரணமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. உப்புற்பத்தியின் ஏகபோக உரிமை டச்சுக்காரரது கையில் இருந்தது. இது அவர்களுக்கு உண் மையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகவும் இருந்தது. உப்புற் பத்திக்கு குறிப்பாக கரையோரப்பகுதிகளிலேயே கவனம் செலுத்தி னர். இதனல் இவர்களை கண்டி அரசன் கட்டுப்படுத்த வேண்டிய தாக இருந்தது. புத்தளம் (போட்டலூன்) உப்புற்பத்தியில் பிர தான இடமாக இருந்தபோதும், சிறந்த ரக உப்பு நீர் கொழும்பி

Page 9
l 4
லிருந்தே பாதா வள்ளங்கள் மூலம் டச்சுக்காரரது கால்வாய்கள் வழி யாக களனி ஆற்றுக்கு பெருந்தொகையாக கொண்டுவரப்பட்டது. ருெபேட் நொக்சின் கூற்றுப்படி கண்டியர்களும் கிழக்குக் கரையோரப் பகுதியில் உப்புவிளையும் ஒரு பிரதேசத்தை வைத்திருந்ததாக தெரி கிறது. அது பெரும்பாலும் மட்டக்களப்பாக இருக்கலாம். அங்கு இன்று ஒழுங்கான முறையில் உப்புற்பத்தி மேற்கொள்ளப்படாத போதிலும் சில காலங்களிலாவது உப்பு சேகரிக்கப்படுகிறது. இவர் கள் உப்பு எடுத்த ஏனைய இடங்கள் தென்கரையோரமாக இப் போது காணப்படும் லெவாயாசாக (உப்பளங்கள்) இருக்கலாம். அவை அம்பாந்தோட்டையையும் மகாலெவாயாசையும் (Maha Levayas) சூழ அமைந்துள்ளன. இதில் கவனிக்க வேண்டியதென்னவெனில் போத் துக்கேயர் காலத்திலும் டச்சுக்காரர் காலத்திலும் செழிப்பாக இருந்த உப்பு வணிகம் ஆங்கிலேயர் காலத்தில் எதுவிதமோ மங்கிவிட்ட தென்பதேயாகும். இத்தீவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு முழு வதும் ஞாயிற்று ஆவியாதலினலானது; பாறை உப்பு ஒரு போதும் எடுக்கப்பட்டதில்லை.
உப்புற்பத்திக்குத் தேவையான மூலகங்கள் :
ஞாயிற்று ஆவியாதலினல் உப்புற்பத்தியை வெற்றிகரமாக செய்
வதற்கு தேவையான மூலகாரணங்களாவன : 1. வெப்பமான வரண்ட காலநிலை i. கடலுக்கு அண்மையான பிரதேசம்
i. உப்புப்பாத்திகள் அமைக்கக்கூடிய களிமண் : காற்றை எதிர் நோக்கி அமைந்துள்ள பாறைகளுடனுனுல் மிக வாய்ப் LITT GÖTEBI.
இதில் வானிலை நிலைமையே மிகவும் பிரதான இடத்தை வகிக் கிறது. மற்றைய இரு காரணிகளும் ஏற்றதாக இருந்தாலும் வானிலை சாதகமற்றதாகவோ அல்லது நம்பிக்கையற்றதாகவோ இருந்தால் உப்புப்பாத்திகள் அமைப்பதில் செலவழிக்கப்பட்ட பண மும் முயற்சியும் வீண் விரயமானதாகும். இதற்குச் சான்முக எதிர் பாராத விதமாக ஏற்பட்ட வானிலை மாற்றங்கள் எவ்வாறு குறைந்த உப்புவிளைச்சலைக் கொடுத்தது என்பதை பின்னர் குறிப் பிடப்படும்.
i, காலநிலை
திருப்திகரமான வானிலையைக் கொண்ட வெப்பமான வரண்ட காலநிலை ஒரு நீண்ட காலத்துக்கு நிலவவேண்டும். இந்நீண்ட வரண்ட

15
பருவத்தில் ஆவியாதலுக்கு உதவியாக மழையில்லாதிருப்பதோடு ஒரு குறிப்பிட்டளவு காற்றும் இருக்கவேண்டும். இலங்கையில் உப்புச் செய்கை ஞாயிற்று ஆவியாதல் மூலம் பெறப்படும் ஓர் இலகுவான முறையைக் கொண்டிருக்கிறது. உப்பு இறுதி நிலையாக படிக நிலையை யடையும் வரை கடல் நீர் அடர்த்தியில் மாறிக்கொண்டு வரும். கடல் நீரானது ஞாயிற்றினதும் காற்றினதும் காய்தலுக்கு விடப் பட்டிருக்கும் காலத்தில் மழை பெய்தால் கரைந்து அதன் அடர்த்தி பாதிக்கப்படும். அதனுல் உப்பு விளைவு குறைவதோடு மழை அதிக மானல் அதிக சேதமும் ஏற்படலாம். உதாரணமாக உப்புப் பாத்தி களின் கட்டு உடைக்கப்பட்டு உப்பு விளைச்சல் முற்ருகவே இல்லாமல் இருக்கலாம். அதிட்ட வசமாக இலங்கையில் தென்மேல் பருவக் காற்றுக் காலங்களாகிய யூன், யூலை, ஒகஸ்ட், செப்டம்பர் மாதங் களில் நீண்ட வறட்சிக்காலம் நிலவுகிறது. (1-ம் படத்தைப்பார்க்க)
1. w). ぞ° 。 ჯ. ბენა“: w
ff ീLILIffff , (இயற்கையான உப்புச் ဖွ%AÁlo!#ဇံ ● பத்திகளுபேட)
Ustase
புதித்தலாம்
டி 2 12 ஆ4
భభ్రత
இாரத்ை Ag 8, y A
శ్రీ 6A All
}ళ్లీ
வரையுள்ள
காலத்தின் &
கந்து 204ங்க்ள் கழமaழ விழிசி, Aநாதி /
1. :g/& سلايين

Page 10
6
கரையோரத்தின் சில பகுதியில் அதாவது முந்தலிலிருந்து ஏறக்குறைய தங்காலைவரை (கொழும்பிலிருந்து 126 மைல் தெற்கில்) ஒரு திருப்தி கரமான மழையற்ற காலம் பெப்ரவரி தொடக்கம் செப்டம்பர்வரை காணப்படுகிறது. எப்படி இருந்தபோதிலும் இவ்வகன்ற வலயத்தில் சில வருடங்களில் குருவளியினலும் அமுக்க இறக்கத்தாலும் மழை பெய்து உப்புற்பத்தியை கடுமையாக தாக்கக்கூடிய நிலைமைகளும் காணப்படுகின்றன. வடகிழக்கு பருவக் காற்றுக்காலங்களில் இப்படி யாக எதிர்பாராமல் ஏற்பட்ட மழையால் உப்பளங்களின் பாத்திக ளின்வரம்புகள் உடைக்கப்பட்டோ அல்லது பெருவெள்ளம்காரணமாக பாத்திகளில் வெள்ளம் தங்கி நின்ருே சேதங்கள் ஏற்படுத்திய காலங் களைவிட, 1950-ம் ஆண்டு தொடக்கம் உப்புற்பத்தி திருப்திகரமாக நடைபெற்று வந்திருக்கிறது. இவ்விதம் 1957-ம் ஆண்டில் உற்பத்தி ஆகக் கூடிய அளவுக்கு 80,000 தொன்னக இருந்தாலும் 1957-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக 1958-ம் ஆண்டு உற்பத்தி 18,000 தொன்னக குறைந்தது. அதேபோல 1950-60-ம் ஆண்டுகளுக்கிடைப்பட்டகால சராசரிப் பெறுமானத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 1961-ம் ஆண்டில் பெப்ரவரி மாதத்துக்கும் செப் டெம்பர் மாதத்துக்கும் இடையில் வழக்கத்துக்கு மாருக அதிகமழை நீண்டகாலத்துக்குப் பெய்ததினுல் 34,000 தொன் உப்பே விளைந்தது இதனை முதலாம் அட்டவணையில் விளக்கமாக காட்டப்பட்டுள்ளது.
அட்டவணை 1
புத்தளம், அம்பாந்தோட்டை, ஆனையிறவு உப்பளங் களின் 1961-ம் ஆண்டிற்குரிய, சராசரிப் பெறுமான மும் மழைவீழ்ச்சியினதும், மழை நாட்களினதும் ஒப் பீட்டு அட்டவணை . *。
சராசரி மழைவீழ்ச்சி
(அங்குலத்தில்) புத்தளம் அம்பாந்தோட்டை ஆனையிறவு
1950.60 20 - 9 19 | 11 : 5
1961 31 - 5 87.8 127 சராசரி மழை நாட்கள்
1950-60 52 64 3 Ι
1961 86 106 29.
வரண்ட பிரதேசத்தில் உப்புநீர் ஆவியாதலுக்கு உதவியாக வருடம் முழுவதும் வெப்பம் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. வரண்ட பிரதேசத்தில் தென்மேல் பருவக்காற்றுக் காலத்தில் கூடிய வெப்ப
*
 

| 7
மும் வேகமான காற்றும் காணப்படுகிறது. இக்காற்று வரட்சியை அதிகரிக்கிறது. வரண்ட பருவப் பெயர்ச்சிச்சுற்றேட்டத்தோடு தொடர்புடைய சோழக கச்சான் வரண்ட பிரதேசத்தில் வீசி அப் பிரதேசத்தை வரட்சியடையச் செய்கிறது. அது பயிர் வளர்ச்சிக்கு
யாதலுக்கு அது ஏற்ற வரட்சித் தன்மையைக் கொடுக்கிறது.
i.கடலின் அண்மை:
இலங்கையில் உப்புநீர் ஞாயிற்று ஆவியாதலுக்கு விடப்பட்டு இலகுவான முறையில் உப்புற்பத்தி நடைபெறுகிறது. அதனல் அதற்கான மூலப்பொருள் மிகவும் அண்மையாக இருப்பதோடு, குறைந்த முயற்சியுடனும் அதிக செலவில்லாமலும் பெறக்கூடிய தாக இருக்கவேண்டுமென்பது தெளிவு. இலங்கையின் இயற்கை அமைவுக்கேற்ப அதன் கரையோரப்பகுதிகளில் ஏற்றகாலநிலை திருப்தி கரமானதாகவுள்ளது. அத்துடன் இலங்கைத் தீவானது கடலுடன் நேரடித்தொடர்புள்ள கடலேரிகள், கலப்புவாஸ் (Kalapuwas) ல்ெவாயாசால் (Levayas) சூழப்பட்டு இருப்பதும் அதிட்டவசமான தென்றே கூறவேண்டும். இப்படியாக கடலுக்கு மிகவும் அண்மை யாக, ஏற்ற காலநிலையுடன் அமைந்துள்ள ஏரிப் பிரதேசங்ளை தெரிந் தெடுத்தால் அங்கு உப்புற்பத்தியை மேற்கொள்ளக் கூடியதாக இருக் கும். கடலுக்கு அண்மையாக இருக்கும் இடம், தேவைக்கேற்ப கடல்நீரை ஒழுங்காக கட்டுப்படுத்தக் கூடிய முறையில் இயற்கை யாகவே அமைந்திருக்கவேண்டும். கால நிலையையும், நிலையங்களையும் நோக்கும்போது எங்கள் உப்பளங்களில் பெரிதான ஆனையிறவு, பாலாவி, அம்பாந்தோட்டை, புத்தளப்பகுதி ஆகியவை அதற்கேற் றனவாக அமைந்து காணப்படுகின்றன. (1-ம் படத்தைப் பார்க்க) ஏனைய உப்பளங்கள் (நிலாவெளி, யாழ்ப்பாணப்பகுதி, மன்னுர், பலமத்தளம்) சிறிய ஏரிகளாகவும் திருப்திகரமான காலநிலையைக் கொண்டனவாகவும் இருக்கின்றன.
iii பாத்திகளமைப்பதற்கான களிமண் :
கரையோரப் பகுதிகளிலுள்ள மணல்மண் பாத்திகள் அமைக்க ஏற்றனவாக இல்லாது இருத்தலால் பாத்திகள் சிறிது உள்நாட்டில் அல்லது மணல் மண்பிரதேசத்தையடுத்து இருத்தல் ஏற்றது. இதுவும் இத்தீவில் இயற்கையாகவே அமைந்துள்ளது. ஏனெனில் ஏரிகள் எல்லாம் நிலப்பகுதியை நோக்கி அமைந்து சிறிது தூரம் பரந்திருக்கிறது. இயற்கையாக அமைந்துள்ள களிமண்தரை திருப்திகரமாக இல்லாத இடங்களில் சிறிது மாற்றங்கள் செய்து
C
உகந்ததல்ல. எப்படி இருந்த போதிலும் உப்புநீர் ஞாயிற்று ஆவி

Page 11
8
ஏற்றமுறையில் அமைத்துக் கொள்ளலாம். காற்றுப்பக்கமாக ஏற்ற முறையில் பாறை அமைந்துள்ள இடங்களை எல்லா இடங்களிலும் பெறுவது இயலுமானதல்ல. ஆனல் அப்படியான தடைகளை செயற்கை வழியால் உண்டுபண்ணலாம்.
இப்படியாக இயற்கையாக அமைந்துள்ள தன்மைகள் மட்டும் உப்பளங்களை அமைப்பதற்கு போதாது. உற்பத்தியான உப்பை குறைந்த செலவில் எடுத்துச் செல்லுவதற்கான வசதியையும் கவனத்
தில் கொள்ளவேண்டும். அரசாங்க உப்பளங்களைப் பொறுத்தவரை
இவ்வசதிகளை இலங்கை அரசாங்க புகையிரதப் பகுதி அளிக்கிறது. உப்பு விற்பனவு, விநியோகம் ஆகிய உரிமைகளை அரசாங்கம் மட்டும் மேற்கொள்ளுகிறது. தனியாருக்கு உப்பு இறக்குமதி செய்யும் உரிமையை அளியாமல், இந்நாட்டில் உற்பத்தியாகும் உப்பை இந் நாட்டு சுயதேவைக்கே உபயோகிக்கக்கூடியதாக இருப்பதால், உப்பை கொண்டு செல்வதனல் ஏற்படும் செலவை அதனை விற்பனை செய் வதன் மூலம் பெறக்கூடியதாக இருக்கிறது.
உப்புச் செய்கை :
ஞாயிற்று ஆவியாதல் முறையினல் உப்புற்பத்தி செய்வதற்கு குறைந்தளவு மூன்று பாத்திகள் இருக்கவேண்டும். வரம்பிடப்பட்ட முதல் பாத்தியில் கடல் நீர் விடப்பட்டிருக்கும். இக்கடல் நீர் அதன் அடர்த்தி கூடும்வரை ஆவியாதலுக்கு விடப்பட்டிருக்கும். அம்பாந் தோட்டையில் திறந்த வாய்க்கால் மூலம் உட்செல்லும் உப்புநீரைக் கட்டுப்படுத்தக் கூடியமுறையில் அலைப்பொறி (Wave Trap) வைத்து உப்புநீர் மகாலெவாயாவிற்குள் விடப்படுகிறது. புத்தளத்திலும், ஆனையிறவிலும் இவ்வுப்புநீர் காற்ருடி இயந்திரமூலமோ, மின் இயந் திரமூலமோ (Electric Pump), நீரை இறைத்து சுற்றிவரக் கட்டப் பட்டுள்ள ஏரிக்குள் விடப்படும். உப்புநீரை பாத்திக்குள் விடும் மூன்ருவது முறையாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெறு வதுபோல (சிவியாதெரு, கரணவாய்) நீண்டவாய்க்கால் மூலம் i (Long Aguaducts) 6íLüLJG6)/5T (5Lb.
உப்புநீர் வேண்டியளவுக்கு அடர்த்தியடைந்தபின்னர் இரண்டாம் பாத்திக்குள் மீண்டும் ஆவியாதலுக்கு விடப்படும். இதற்குள்ளும் தேவையான அளவு அடர்த்தி கூடியபின்னர் மூன்ரும் பாத்திக்குள் விடப்படும். இங்கு இறுதியாக உப்புநீர் உப்புப்படிகமாக மாற உப்பு சேகரிக்கப்படும். இது உப்புச் செய்கையின் இறுதிப்படியாகும். உப்புநீர் ஆவியாதலுக்கு விடப்பட்டிருக்கும் காலத்தில் மழை

9
இல்லாதிருந்தால் மட்டும் இவ்விலகுவான உப்புச் செய்கைமுறையை திருப்திகரமாக முடிக்கக் கூடியதாக இருக்கும். இம்மூன்று படிமுறை நிலைகளில் ஆவியாதலுக்கு விடப்பட்டிருக்கும் காலத்தில் கிப்சம், பாடசாலைகளுக்குத் தேவையான வெண்கட்டி போன்ற பல உப பொருட்களும் எடுக்கக் கூடியதாக இருக்கும். இவை இயற்கை யாகவே உண்டாகும் உப பொருட்களாகும்.
சேகரிக்கப்பட்ட உப்பு விற்பனைக்குப் போகுமுன்னர் ஒரு வருட காலத்துக்கு முற்றியநிலைமை (Mature) அடையவிடவேண்டும். உப்பு மலைகள் கிடுகுக் கூரைகளால் மூடப்பட்டு விடப்பட்டிருப்பதைச் சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கும். அதனைப் புகையிரதப் பெட்டிகளில் ஏற்றுவதற்குச் சாதகமான உலர்வானிலை காணப்படும் வரை அப்படியே விடப்பட்டிருக்கும். பிரதான உப்பளங்களில், உப்பு எடுக்கப்படும் பாத்திகள்வரை புகையிரதப்பாதைகள் அமைக் கப்பட்டிருக்கின்றன. அதனுல் தீவின் பல பாகங்களுக்கும் பிரதானமாக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உப்புக்களஞ்சியங்கள் இருக்கும் நகர்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கிறது.
உப்பு செய்கையின்போது பெறப்படும் உப பொருட்கள்
1. மேசை உப்பு (Table Salt) ஆனையிறவில் நடைபெறுவது போல காய விடுவதினுல் மேசை உப்பு உண்டாகிறது. இங்கு உப்பானது சிறந்த முறையில் ஞாயிற்றினுல் காய்ச் சப்பட்டு மருதானை பொதி நிலையத்தில் பொதியாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
2. கிப்சம் (Gypsum) : கிப்சம் அல்லது கல்சியம் சல்பேற்ரு னது, இயற்கையாகவே உப்புநீரை உப்பெடுக்கப்படும் மூன் ரும் பாத்திக்குள் விடுவதற்கு முன்னராக பெறப்படும். இது போற்லாந்து சீமேந்து (Portland Cement) செய்கையில் உபயோகிக்கப்படுகிறது, இங்கு உற்பத்தியாகும் கிப்சம் முழுவதும் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையினல் வாங்கப்படுகிறது.
3, பரிசுச்சாந்தும் வெண்கட்டியும் (Plaster of Paris Chalk) :
இது கிப்சத்தை தூய்மையாக்கி பெறப்படும். இந் நாட்டுக்குத் தேவையான வெண்கட்டி முழுவதும் பாலாவி உப்பளத்திலேயே செய்யப்படுகிறது. (படத்தைப்பார்க்கவும்)

Page 12
4. மற்றும் பொருட்கள் : உப்புச் செய்கையினல் பெறப்படும் மற்றும் உப பொருட்களாவன மக்னீசியா (Magnesia) எப்சம் உப்பு (Epsom Salt) ஒக்சிகுளோறைட்டு சீமேந்து, (Oxychloride Cement) Firth Lii)3, Tulb (Potash) g(Bust 196ór (Iodine) (06) 1GöTé5FTITLb (Borax) என்பனவாகும்.
உற்புற்பத்தி
சமீபகாலங்களில் அதாவது 1957-ம் ஆண்டுவரை இலங்கைத் தீவில் செலவான உப்பின் தொகை ஆண்டுக்கு சுமார் 50,000 தொன்ஞ்கும். இந்நாட்டுக்கு தேவையான உப்பு இத்தீவிலேயே உற் பத்தி செய்யப்பட்டு வந்தது. சில வருடங்களில் கூடுதலாக விளைந்த உப்பு, இயற்கையின் காரணமாகவோ அல்லது செயற்கையின் கார்
னமாகவோ குறைந்த விளைச்சலைக் கொண்டகாலங்களில் உபயோ
கிக்க உதவியாக இருந்தது. அட்டவணை இரண்டில் நாட்டின் உப் புற்பத்தியையும், செலவையும் காட்டும் புள்ளிவிபரம் காட்டப்பட் டிருக்கிறது.
அட்டவணை 2.
இலங்கை உப்புற்பத்தியின் ஆண்டுக்கணக்கு. 蟾 (பெறுமதி தொன் னில்)
鬣
வருடம் உற்பத்தி செலவு வருடம் உற்பத்தி செலவு 1939 33,559 I951 25 ,834 Ꮞ8 , 288 1940 33,264 I952 45, 305. 49,21 1 , 94. 28,061 1953 57,026 51,981 1942 18 , 883 -- " I 954 50, 434 52,001 1943 13,563 1955 38,905 47,305
1945 41,695. 1957 80,192 1946 42, 920 1958 I 7,877 1947 , 22, 79 Ι 46,544 1959 28,575
1956 106,565 49,923
948 77,429 44, 867 1960 52,659 1949 28, 220 48,025 1961 34,000
950 11,559 46,718
.
o
* பல அடிப்படைகளைக் கொண்டு புள்ளி விபரம் தயாரிக்கப்பட்டது.
 
 
 

2 I
1947-ம் ஆண்டுக்கும் 1956-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நாட்டில் செலவான உப்பின் தொகையை நோக்குமிடத்து, 1948-ம் ஆண்டில் செலவு 44,867 தொன்னக இருந்து 1954-ம் ஆண் டில் 52,000 தொன்னுக்கும் அதிகமாக சிறிதளவு மாற்றம் ஏற்பட் டிருப்பதைக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே 50,000 தொன் என மதிப்பிடப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. எவ்வாருயினும் புதிதாக அமைக்கப்பட்ட (1964) தேசிய உப்பு கூட்டு ஸ்தாபனத்தின் இயக்குநர் குழு, நாட்டில் செலவாகும் தொகை ஏறக் குறைய 70,000 தொன் என மதிப்பிட்டிருக்கிறது. இம்மதிப்பீடு குடித்தொகைப் பெருக்கத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது மீனைப் பாதுகாத்தல், சவர்க்காரம் செய்தல், தோல் பதனிடல், விவ சாயத்துறையினருக்கு முக்கியமாக தேவைப்படும். சாம்பற்காரவள மாக்கி (Potash fertiser) செய்தல் ஆகியவற்றுக்கு உபயோகிக்கப் படும் உப்புத்தேவையின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டிருக்கிறது. 1957-ம் ஆண்டில், வீட்டு உபயோகத்தைவிட ஏனையவற்றிற்கு உப யோகிக்கப்பட்ட உப்பின் தொகை கீழே காட்டப்பட்டிருக்கிறது.
தொன் (1) மீன் பாதுகாத்தல் 2549 (2) சவர்க்காரம் செய்தல் 406 (3) தோல் பதனிடல் 37 (4) விவசாயம் 102 34 28
3000 தொன் னிலும் சிறிதளவு மாத்திரம் கூடியதாக இருக்கும் இத்தொகை, அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்டிருக்கும் கைத் தொழில் முன்னேற்றத்தின் வேகத்தையும், அதிகரித்து செல்லும் குடித்தொகைக்கு வேண்டிய மீனின் தொகையையும் எண்ணும் பொழுது முற்ருக போதியதாக இருக்கமாட்டாது. விவசாயத் துறையினர் தமக்கு வேண்டிய பொற்ருஸ் வளமாக்கியை உற்பத்தி செய்ய கூடியளவு உப்பையே உபயோகிக்கவேண்டியவர்களாக இருக் கின்றனர். 1960-ம் ஆண்டுக்கணக்கீட்டின்படி செலவு 66,000 தொன் ணுகும். அதில் கிட்டத்தட்ட 57,000 தொன் வீட்டுத்தேவைக்கும் 9,000 தொன் மீன்பாதுகாப்பு, கைத்தொழில், விவசாயத்துறை ஆகியவற்றுக்கும் செலவானது.
வருடாந்த உப்புற்பத்தி புள்ளி விபரத்தை (அட்டவணை 2,பரிசீலனை செய்தால் அதில், வருடாவருடம் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக இருக்கும். 1956-ம் ஆண்டில் எவ்வருடத்திலும்

Page 13
22
இல்லாத அளவில் 106,000 தொன் னிலும் அதிக அளவில் உற்பத்தி நடைபெற்றிருப்பதைக் கவனிக்கலாம், அதே வேளையில் 1957-ம் ஆண்டில் 2-ம் இடமாக 80,000 தொன்னுக்கும் கூடிய தொகை உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. ஆனல் அவ்வாண்டைத் தொடர்ந்து 1958-ல் உற்பத்தி மிகவும் குறைந்து 18,000 தொன்கை மாத்திரம் இருந்தது. என்பதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் 1957-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பாதகமான காலநிலையே. அதிட்டவசமாக 1956-ம் 57-ம் ஆண்டில் நடைபெற்ற கூடியளவு உற்பத்தி 1958-ம் ஆண்டில் ஏற்பட்ட குறைந்த உற்பத்தியை சமாளிக்க உதவியாக இருந்தது. ஆனல் திரும்பவும் 1959-ம் ஆண்டு குறைந்த உற்பத்தியே நிகழ்ந்தது. 1960-ம் ஆண்டில் சராசரி உற்பத்தி 52,000 தொன்னுக்கும் கூடியதாக நன்னிலைக்கு வந்தது. (படம் 3) ஆனல் திரும்பவும் 1961-ல் வெளியீடு 34,000 தொன்னுக மாத்திரம் இருந்தது. இதற்கும் வானிலையே காரணமாக இருந்தது. இதனல் அரசாங்கம் பாகிஸ்தானிடமிருந்து கிட்டத்தட்ட 10,000 தொன் (9620 தொன்) உப்பைரூபா 60/- விலையில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இறக்குமதிசெய்ய உப்புக்கு அரசாங்கம் கொடுத்த உயர்ந்த விலையை சாதாரண F. O, B, விலையுடன் (ரூ. 13-50) ஒப் பிடலாம். 1941, 1942, 1943, 1944, ஆகிய ஆண்டுகளில் குறைந்த உற்பத்திக்கு, யுத்தகாலத்தில் ஏற்பட்டிருந்த கூலியாட்கள் தட்டுப் பாடே காரணமெனக் கொள்ளலாம்,
உப்பு வர்த்தகம் அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாக இருக் கின்றது. தனி உப்பளங்களின் சொந்தக்காரரோ, அல்லது ஏனைய வர்களோ உப்பு விளைவிற்கு சாதகமான காலங்களில், இயற்கை யாகவே உப்பளங்களில் விளைந்த உப்பை எடுப்பதற்கு அரசாங்கத் திடமிருந்து அனுமதிபெறவேண்டியிருக்கிறது. அல்லது அதன் மேற் பார்வையின்கீழ் செய்ய வேண்டியிருக்கிறது, இதனுல் வானிலைநிலைமை சாதகமாக இருக்குமானுல் இலங்கையின் ஆண்டு உப்புற்பத்தியை நிலை நிறுத்துவதற்கான முறைகளை மேற்கொள்ள அரசாங்கத்துக்கு இலகுவாக இருக்கும். 1940 வரை எடுக்கப்பட்ட உப்பு அரசாங்கத் தால் ஏலத்தில் விற்கப்பட்டது. ஆனல் 1940-ம் ஆண்டு தொடக் கம் அரசாங்கம் கூட்டுறவு மொத்த விற்பனவு ஸ்தாபனத்தின்மூலம் பிரதான விநியோகஸ்தராக இயங்குகிறது. இம்முறையைக் கையா ளக் காரணம் எல்லா உப்புக்களஞ்சியங்களிலும் போதியளவு உப்பு விநியோகிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும், நாடுமுழுவதும் சமமாக விநியோகிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்துவதற்கா கவேயாகும். அப்படியானுல் வீட்டுக்குத் தேவையான இவ்வத்தியா வசிய பொருளை பதுக்குபவர்களிடமிருந்தும் நாட்டுமக்கள் தப்பித்துக் கொள்ள முடியும். 鬣
 

1942-ம் ஆண்டு தொடக்கம் அத்தியாவசியமான இப்பொருளை இறக்குமதி செய்வதில்லையென தீர்மானித்ததோடு இறக்குமதி செய்ய வர்களது ஊக்கத்தையும் 4% சுங்கவரியினை விதித்து குறைத்தது. எப்படியிருந்தபோதிலும் 1944, 1945, 1960 ஆகிய ஆண்டுகளில் உப் பிறக்குமதி செய்யவேண்டிய அவசியமேற்பட்டது. ஏனெனில் இவ் வாண்டுகளிலும் இதற்கு முந்திய ஆண்டுகளிலும் உப்புற்பத்தியாகும் காலங்களில் ஏற்பட்ட மாறுபாடான வானிலை காரணமாக உப்புற் பத்தி குறைந்தமையேயாகும். அவ்வாண்டுகளுக்கு முந்திய சில வருடங் களில் கூடுதலாக விளைந்த உப்பை சேகரித்து வைத்திருந்ததனல் இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஏற்படவில்லை. திரும்பவும் 1964-ல் (20,000 தொன்) உப்பு இறக்குமதி செய்யவேண்டியிருந்த தாடு 1963-ம் ஆண்டிலும் உள்நாட்டுத்தேவை கிட்டத்தட்ட 0,000 தொன்னக இருந்ததால் அதைநிவர்த்தி செய்ய குறைந்தது 0,000 தொண்ணுவது இறக்குமதிசெய்யப்பட வேண்டுமென மதிப்பி ப்பட்டது. 20,000 தொன் உப்பு இறக்குமதி செய்ய ஏற்கனவே میسور இந்திய அரசாங்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
(தமிழாக்கம்: ச. சிவநாதன்)
வளியும் காற்றும்
வளி (AR) என்பதும், காற்று (WIND) என்பதும் ஒன்றையே குறிக்கின்றன என்று சிலர் தவருக எண்ணக் கூடும். ஆனல், இரண்டும் *புவியியலைப் பொறுத்த மட்டில் ஒன்றல்ல வளி என்பது அசைவற்ற வாயு, இந்த அசைவற்ற வாயு அல்லது வளி அசைவுறும் போது, அசைவுறும் அவ்வளிக்குப் பெயர்தான் காற்று என்பது. எனவே, வளியின் இயக்கமே (MOTION) காற்ருகும்.
(தொடரும்)

Page 14
彎。
24
-க. குணராஜா, B, A, Home (cry)
கிழக்கு மேற்குப் பாகிஸ்தான். ஒப்பீட்டுப் புவியியல்
- முன்னுரை இந்தியத் துணைக்கண்டம், பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலி ருந்து சுதந்திரம் பெற்றவேளை, முஸ்லீம்கள் தமது மத ஒருமையைப் பேண விரும்பி, 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் என்ற ஆள்புலத்தை அமைத்துக் கொண்டார்கள். ஆள்புல ஒருமைப்பாட்டைப் பேண் முடியாது போகவே, கிழக்குப் பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்தான் என்றிரு ஆள்புலங்களாக முன்னது கங்கைக் கழிமுகத்திலும், பின் னது காஷ்மீரின் மேற்கு எல்லைப்புறத்திலிருந்து அராபிக்கடல்வரை சிந்துநதிபாய் பிரதேசத்திலும் அமைவுற்றன. 3,09,239 சதுரமைல் பரப்பினையுடைய :மேற்குப் பாகிஸ்தான், மேற்கு, வடமேற்கு, வட கிழக்கு, கிழக்கு, தெற்கு எனும் எல்லைப்புறங்களில் முறையே ஈரான், அப்கானிஸ்தான், காஷ்மீர், இந்தியா என்னும் நாடுகளையும், அரா பிக்கடலையும் கொண்டுள்ளது. ஏறத்தாழ இரு இலங்கையின் பரப் பினைக் கொண்டுள்ள கிழக்குப் பாகிஸ்தான் (55,134 சதுரமைல்), தெற்கே வங்காள விரிகுடாவையும், தென்கிழக்கே பர்மாவையும் ஏனைய எல்லைப்புறங்களில் இந்திய ஆள்புலங்களையும் கொண்டுள்ளது. (படம் 1, 2). பாகிஸ்தானிய ஆள்புலங்கள் இரண்டிற்குமிடையே ஏறத்தாழ 1500 மைல்களுக்கு மேல் இந்திய நிலப்பரப்பு பரந் துள்ளது. அரசியலடிப்படையில் மிகவும் இளம் நாடாகவிருக்கும்
பாகிஸ்தான், வரலாற்றடிப்படையில் மனிதனலறியப்பட்ட மிகப்
பழமையான நிலப்பரப்பாகவுள்ளது. எவ்வாருயினும், மதலுருமை யைப் பாதுகாத்துக் கொள்ளமுடிந்த பாகிஸ்தானுல், புவியியல் ஒருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது போய்விட்டது. எனவேதான் கிழக்கு, மேற்குப் பாகிஸ்தான்கள் இரண்டும் புவியியல் வேற்றுமைகள் நிறைந்த நாடாக விளங்குகின்றன.
இடவிளக்கவியல் பொதுநோக்கில் மேற்குப் பாகிஸ்தானையும் கிழக்குப் பாகிஸ் தானையும் ஒப்பிட்டு ஆராயும் போது, ஒவ்வொன்றும் பெளதிக , பொருளாதார நிலைன் மகளில் ஒன்றிற்கொன்று முரண்பாடுடையன
 
 

வென்பதை உணரலாம். கிழக்குப் பாகிஸ்தான் கழிமுக இடவிளக்க வியலிற்குரிய மாறும் நதிப் போக்குகளையும், நதிமுகத்தில் பல்வேறு சிறு தீவுகளையும் கொண்டுள்ள அடையல் செறிந்த தாழ்நிலமாகும்;
ந்ேதப்பாகிஸ்தான்
இ3000 அடிக்குமேல் : 1000 - 3000 24g.
&ಷಿ
1000 அடிக்குக்கீழ்
இது அடிக்கடி வெள்ளப் பெருக்கிற்குட் படுகின்றது. கடலிலிருந்து 100 மைல்க ளுக்கு அப்பாற் கூட இத்தாழ்நிலத்தி னு ய ர ம் 35 அடிகளாகத்தானுள்ளது. கிழக்குப்பாகிஸ்தானின் இடவிளக்கவிய லில் உயர் நிலத்திற்குரிய தோற்றத்தைத் இ தருவன, கிழக்குப் புறப்பகுதிகளாம். (படம் : 2) மேற்குப்பாகிஸ்தான் கிழக்3 குப் பாகிஸ்தானினின்றும் இடவிளக்கs வியலில் வேறுபடுகின்றது; அமைப்பினைப்` பொறுத்த மட்டில் மேற்குப் பாகிஸ்தா
னின் மேற்குப்பாகம் அப்கானிஸ்தான்
மேட்டு நிலத்தோடும், கிழக்குப்பாகம்
D

Page 15
26 W
இந்து-கங்கைச்சமவெளியினுேடுந் தொடர்புடையன. கடலிலிருந்து காஷ்மீர் புறத்தையடுத்து உயரம் 1200 அடிகளுக்கு மேலுள்ளது. அத்தோடு மேற்குப் பாகிஸ்தான் கீர்த்தார், சுலைமான் தொடர்களின் பகுதிகளை மேற்கே கொண்டிருப்பதோடு, பலுசிஸ்தான் போன்ற மேட்டு நிலங்களையும், பஞ்சாப் போன்ற தொடரலை நிலத்தையும், சிந்துப்பிரதேசம் போன்ற மணற் சமவெளிகளையும் கொண்ட பல்லின இடவிளக்கவியல் பிரதேசமாகும். (படம்: 1)
காலநிலை
காலநிலைத் தன்மைகளைப் பொறுத்தமட்டில் கிழக்குப் பாகிஸ் தானும், மேற்குப் பாகிஸ்தானும் முரண் முனைகளாம். முன்னது ஈர லிப்பான பிரதேசமாக விளங்க, பின்னையது குறை வறள் பிரதேச மாக விளங்குகின்றது. கிழக்குப்பாகிஸ்தானின் ஆண்டு மழைவீழ்ச்சி மிகவதிகமாகும்; எப்பகுதியும் 80 அங்குலங்களுக்குக் குறைவாக மழை வீழ்ச்சியைப் பெறுவது கிடையாது. சில விடங்களிற் குறிப்பாகக் கிழக்கிலும், தெற்கிலும் 200 அங்குலங்களுக்கு மேலும் மழை வீழ்ச்சி
மேற்குப்பாதிசத்தாள் பயிர்ச்செய்கை *エ一て (++) பருந்தி E) கோதுமை 65) கரும்பு
TN 40-یہ کھولاd1 c్చ
ཚུལ་ CY85.
W
こ 90լյ :
 
 
 
 

27
நிகழ்கின்றது. தென்மேல் பருவக்காற்றின் செல்வாக்கிற்குள் இக்கழி முகப் பிரதேசம் அமைவதனல், ஆண்டுக்குரிய மழை வீழ்ச்சியை மிக வதிகமாகப் பெறுகின்றது; அத்தோடு வங்காளக் குடாவில் உரு வாகும் குருவளிகளும் கணிசமானவளவு மழையைக் கிழக்குப்பாகிஸ் தானிற்குக் கொடுக்கின்றன. அதிகமழை காரணமாகவும், பணி படர்ந்த மலைத்தொகுதிகளிலிருந்து இழிந்துவரும் கங்கை, பிரமபுத் திரா நதிகள் அதிகநீரை இப்பகுதியிற் சேர்ப்பதாலும் இத்தாழ்நிலம் அடிக்கடி வெள்ளப் பெருக்கிற்கு உட்படுகின்றது. ஆணுல், மேற்குப்பாகிஸ்தான் 40 அங்குலங்களுக்கும் குறைவாகவே ஆண்டு மழைவீழ்ச்சியாகப் பெறுகின்றது; சிந்துப் பிரதேசம் 5 அங்குலங் களுக்கும் குறைவாக மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. மேற்குப்
பாகிஸ்தான் தென் மேல் பருவக்காற்றின் ஆகுப்பாதிந்தர்பூதி:
தாக்கத்தால் முன்னதைப்போன்று அதிக பூங்கேற்றுவதி
மழையைப் பெறுவது கிடையாது. கிழக் ဒွိုဦဇုံ || ဒြာန္တိ
8ă
குப் பாகிஸ்தானில் அதிக நீர் ஒரு பிரச் சனையாக விருக்க, மேற்குப் பாகிஸ்தாலி னில் நீர் போதாமை ஒரு பிரச்சனையாக: வுள்ளது. (படம் 3, 4) வெப்பநிலையைப் ) பொறுத்து மழைவீழ்ச்சியின் முரண் தன்மைS எதிர்மாருக மாறி, ஒப்பளவில், மேற்குப் பாகிஸ்தான் அதிக வெப்ப நிலையையும் கிழக்குப்பாகிஸ்தான் குறைவான வெப்ப நிலையையும் பெறுகின்றன. கிழக்குப் பாகிஸ்தானில் வெப் பநிலை ஆண்டு முழுவதும் ஒரு சீராகப்பரந்துள்ளதோடு, நாளாந்த, பருவ வெப் பநிலை வீச்சுக்களும் குறைவாகும் ; மாரியிற் கூட இங்கு வெப்பநில 60°ப) ஆகவுள்ளது. மேற்குப்பாகிஸ்தானில் நாளாந்த, பருவ வெப் பநிலை வீச்சு மிகவுயர்வாக விருக்கின்றது. கோடை, மாரி சமவெப் பக் கோடுகள் சீரான பரம்பலைக் காட்டுவனவாக இங்கு அமைய வில்லை. (படம் 3). மாரியில் லாகூரில் 35°ப. தாழ்வெப்பநிலையையும், கோடையில் யக்கோபாட்டில் 125°ப. உயர் வெப்பநிலையையும் காணக்கூடியதாகவுளது.
பயிர்ச்செய்கை
பாகிஸ்தான் இரண்டினதும் பொருளாதார நடவடிக்கைகள், கீழைத்தேச நாடுகளுக்கேயுரிய பொருளாதார நடவடிக்கைகளை ஒத்தன. சுருங்கக் கூறில் பாகிஸ்தான் ஒரு பயிர்ச்செய்கை நாடாகும். கிழக்குப் பாகிஸ்தானதும் மேற்குப் பாகிஸ்தானதும் பயிர்ச் செய்

Page 16
28
கையை (அ) வாழ்க்கைப் பயிர்ச்செய்கை, (ஆ) வர்த்தகப் பயிர்ச் செய்கை என இருபெரும் பிரிவுகளாக வகுக்கலாம். வாழ்க்கைப் பயிர்ச் செய்கையும், வர்த்தகப் பயிர்ச்செய்கையும் இரு ஆள்புலங் களுக்கும் பொதுவானவை எனினும், பயிர்வகைகளில் இரண்டிற்கு மிடையில் வேறுபாடுகளுள்ளன.
மேற்குப் பாகிஸ்தானில், நிலையான உணவாக, இடைவெப்ப வலயத்திற்குரிய தானியமான கோதுமையும், கிழக்குப் பாகிஸ்தா னில் பருவக்காற்று வலயத்திற்குரிய தானியமான நெல்லும் முக்கிய விடத்தை வகிக்கின்றன. மேற்குப் பாகிஸ்தானின் உலர் ஈரப்பரப்பு களில் கோதுமைபரவலாகப்பயிரிடப்படுகின்றது; கிழக்குப்பாகிஸ்தான் எங்கினும் செறிவாகவும், நெல் விளைவிக்கப்படுகின்றது. கிழக்குப்பாகிஸ் தானில் மேற்குப் பாகிஸ்தானுக்குரிய கோதுமை விளைவிக்கப்படுவ தில்லை ; ஆனல், மேற்குப் பாகிஸ்தானில் நீர்ப்பாய்ச்சல் வசதி களுடன் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது. கோதுமைச் செய்கை, மேற்குப் பாகிஸ்தானின் மொத்த விளைநிலத்தில் ஏறத்தாழ 60%-இல் நடைபெறுகின்றது ; நெற் செய்கை, கிழக்குப் பாகிஸ் தானின் மொத்த விளைநிலத்தில் ஏறத்தாழ 40% இல் நடைபெற்று வருகின்றது. வண்டல் செறிந்த நிலமும், அதிக மழைவீழ்ச்சியும் நெற்செய்கைக்குச் சாதகமாக அமைந்ததுபோல, உலர் காலநிலை குளிர்காலக்கோதுமைச் செய்கைக்குச் சாதகமாக அமைந்துள்ளது. (படம் 3, 4). மேலும், பஜ்ரா போன்ற திணைவகைகள், சோளம், எண்ணெய் விதைகள் என்பன மேற்குப் பாகிஸ்தானின் வெவ்வேறு கால நிலைமைகளில் செய்கைப் பண்ணப்படுகின்றன. கோதுமை, நெல், தினை வகைகள் என்பனவே பாகிஸ்தானின் வாழ்க்கைப்பயிர்ச்செய்கை யில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
வர்த்தகப் பயிர்ச் செய்கையில் பருத்தி, சணல் எனும் பணப் பயிர்கள் மேற்குப் பாகிஸ்தானிலும், கிழக்குப் பாகிஸ்தானிலும் அதி முக்கியமானவையாகவுள்ளன. மேற்குப் பாகிஸ்தானில் பருத்தியும், கிழக்குப் பாகிஸ்தானில் சணலும் செய்கை பண்ணப்படுகின்றன. பாகிஸ்தானின் வேறுபட்ட இரு வர்த்தகப் பயிர்களில் ஒவ்வொன்றை இரு ஆள்புலங்களும் கொண்டுள்ள போதிலும், ஒருவிதத்தில் இப் பயிர்களிடையே ஒற்றுமையுங் காணப்படுகின்றது. எவ்வாறெனில் பருத்தியும் சணலும் நெசவிற்குரிய நாரினப் பயிர்கள் என்றவகையி லாம். வெள்ளப்பெருக்கால் அடிக்கடி புதிப்பிக்கப்படும் கங்கைக் கழிமுக மண்ணும், போதிய தொழிலாளரும் இங்கு சணலுற்பத் திற்குப் பேருதவியாகவுளர். உலகச் சணலுற்பத்தியில் 60%-மேல் கிழக்குப் பாகிஸ்தானே தனித்து உற்பத்தி செய்கின்றது. மேற்குப் பாகிஸ்தானில் 15 இலட்சம் ஏக்கருக்கு மேல் செய்கை பண்ணப்படும்
V
 
 

29
பருத்தி, தரத்திலுயர்ந்ததாகும். இவ்விரு பயிர்ச்செய்கை மூலப் பொருட்களும் மிக வண்மைக்காலம்வரை வெளிநாடுகளுக்கே முற்ருக ஏற்றுமதியாகின. இன்று உண்ணுட்டில் கைத்தொழில் விருத்தி புற்றதால், ஒரளவே ஏற்றுமதியாகின்றது. பாகிஸ்தானிய இரு ஆள்புலங்களிலும் கருப்பஞ் செய்கை நடைபெறுகின்றது. மேற்குப் பஞ்சாப் இதில் முக்கியமானவிடத்தைப் பெறுகின்றது. சணல் போன்று கிழக்குப் பாகிஸ்தானிற்குரிய இன்னெரு பயிர், தேயிலை யாகும். கிழக்குப் பாகிஸ்தானின் கிழக்குப் பாகத்தில் கணிசமான வளவு தேயிலைச் செய்கை விருத்தியுற்றுள்ளது.
இவ்விரு ஆள்புலங்களின் பயிர்ச்செய்கை முறைகளும், தொழில் நுட்பங்களும் பண்டைமுறை தழுவினவாயும் திறமையற்றனவாயு முள்ளன. மேற்குப் பாகிஸ்தானில் மண்ணைப்பேணி, யந்திர சாதனங் களைப் பயன்படுத்துவது அவசியமாகும்; ஆனல், கிழக்கே விளைநிலங் கள் சிறியனவாயிருப்பதால் யந்திரங்களை உபயோகிப்பது கடின மாகும் ; கிழக்குப் பாகிஸ்தானில் விருத்திக்குரிய விளைநிலங்கள் யாவும் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், இவ்விளை நிலங்களில் அதிக குடித்தொகை தங்கியிருப்பதால், யந்திர சாதனங்களைப் பயன் படுத்துவதன் மூலம் வேலையில்லாத்திண்டாட்டத்தை ஏற்படுத்துவது சிறப்பாகாது என்று கருதப்படுகின்றது. மேற்குப்பாகிஸ்தானில் ών ΤΙΤ 6ΤLDIT 607 நிலப்பரப்பு பயிர்ச்செய்கைக்குட்படாது வீணே பரந்து கிடக்கின்றது. சுக்கூர் அணை, பஞ்சாப் கால்வாய்கள், குழாய்க்கிணறு
பல நீர்ப்பாய்ச்சல் வசதிகளை இங்கு ஏற்றவிடத்து உருவாக்குவதன் மூலம் குடியேற்றத்திட்டங்களை வகுத்து பயிர்ச்செய்கையை விருத்தி பாக்கலாம் என்று கருதப்படுகின்றது. கிழக்கே நீர் நிறைந்த சதுப்புநிலங்கள் பிரச்சனையாக அமைய, மேற்கே நீரற்ற உலர் பாலை நிலங்கள் பிரச்சனையாக அமைந்துள்ளன.
கைத்தொழில்
மேற்குப் பாகிஸ்தானிலும், கிழக்குப் பாகிஸ்தானிலும் கணிப் பொருள் வளம் குறைவு ; கிழக்குப் பாகிஸ்தானில் மிகவும்
குறைவாகும். நிலக்கரி, குருேமைற், கிப்சம். சுண்ணக்கல், செம்பு, மைக்கா போன்ற படிவுகள் மேற்கு ஆள்புலத்தில் சிறிதளவு உள்ளன. அதனுலிங்கு சீமேந்து, இரசாயனக்கைத்தொழில் போன்றன விருத்தி புற்றுள்ளன. பாரக்கைத் தொழில்கள் நன்கு விருத்தியுறவில்லை. போதிய மூலப்பொருட்கள், வலு, முதல் என்பன இல்லாமை கை தொழிலின் விருத்திக்குத் தடைகளாகவுள்ளன. மேலும், இரு ஆ
கள், சாலிகொட் பிரதேச சாதாரண கிணறுகள் போன்று இன்னும்

Page 17
{ ;((( تنبیہ
()
புலங்களுக்கும் இடையிலுள்ள பிரதேசத் தொடர்புகள் நன்கமையா மல் இருப்பதோடு, ஒவ்வொரு ஆள் புலங்களிலுமுள்ள இருப்புப்
பாதை, வீதிகள் போக்குவரத்தும் திறமாக அமையவில்லை. இவை
பும் பாகிஸ்தானின் கைத்தொழில் விருத்திக்குச் சாதகமானவையாக வில்லை. எனினும் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் பயிர்ச்செய்கை மூலப் பொருட்களான பருத்தி, சணல் ஆதியவற்றினைக் கொண்டு கைத்தொழில்கள் இன்று விருத்தியடைந்து வருகின்றன.
குடிப்புள்ளி விபரம்
குடிப்புள்ளிவிவரவியலிற் கூட மேற்குப்பாகிஸ்தானுக்கும் கிழக்குப் பாகிஸ்தானுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகளுள்ளன. இரு ஆள்புலங்களிலும் 9 கோடி மக்களுக்குமேல்வாழ்கின்றனர். இக்குடித் தொகையில் ஏறத்தாழ 54 கோடி மக்கள் இரு இலங்கைப் பரப்பளவின் தான கிழக்குப் பாகிஸ்தானில் வாழ, மிகுதி மக்கள் பன்னிரண்டு இலங்கைப் பரப்பளவினதான மேற்குப் பாகிஸ்தானில் வாழ்கின்ற றனர். கிழக்குப்பாகிஸ்தானில் இயல்பாகவே குடியடர்த்தி அதிகம். இங்கு ஒரு சதுர மைலிற்கு ஏறத்தாழ 750 மக்களுக்குமேல் வாழ் கின்றனர். ஆனல், சிலவிடங்களில் 2000 மக்களுக்கு மேலும் ஒரு சதுரமைலில் வாழ்கின்றனர். மேற்குப் பாகிஸ்தானில் ஒரு சதுர மைலிற்கு 6 மக்கள் பலுசிஸ்தான் பகுதியிலும், சிந்துப் பகுதியில் 91 மக்களும், மேற்கு பஞ்சாப்பில் 300 மக்களும் வாழ்ந்து வருகின்றனர் நிலப்பரப்பையும் குடித்தொகையையும் நோக்கும்போது கிழக்குப் பாகிஸ்தானிலும் மேற்குப் பாகிஸ்தானில் வாழ்பவர்கள் அதிக பரப்பில் வாழ்கின்றனர். ஆனல், மூலவளத்தையும் குடித் தொகை யையும் ஆராயும்போது மேற்குப் பாகிஸ்தானிலும் சிறிய கிழக் குப் பாகிஸ்தானில் அதிக மக்கள் வாழ்கின்ற போதிலும், இவர்கள் மேற்குப் பாகிஸ்தானிலும் பார்க்க வாழ்க்கைத்தரத்திலுயர்ந்தவர்
களாக விளங்குகின்றனர்.
இரு ஆள்புலங்களின் மொத்த குடித் தொகையில் 85-9% முஸ்லீம்களாகும். மேற்குப் பாகிஸ்தானிலுள்ள மக்களில் 90% முஸ் லீம்களாகவுள்ளனர். ஆனல், கிழக்குப் பாகிஸ்தானில் 80% மட்டுமே முஸ்லீம்களாகவுளர் உருது மொழி பேசும் மேற்குப் பாகிஸ்தானிய முஸ்லீம்கள் கடும் உழைப்பாளிகள், வங்காளி மொழிபேசும் கிழக் குப் பாகிஸ்தானிய முஸ்லீம்கள் கடும் உழைப்பாளிகளல்லர், ஈரலிப்
பான பிரதேசங்கள் எங்கும் சோம்பேறிகளாகவே யுள்ளனர். இத்
தகைய இயற்கையின் நியதிக்குக் கிழக்குப்பாகிஸ்தானிய மக்கள் விதி விலக்காகவில்லை.
 

3
முடிவுரை
இடவிளக்கவியல், காலநிலை, பொருளாதார நடவடிக்கைகள், குடி, மொழி, பிரச்சனைகள் என்பனவற்றிலெல்லாம், மேற்குப் பாகிஸ்தானும் கிழக்குப் பாகிஸ்தானும் பெரும் வேறுபாடுகளையுடைய நாடுகளாகும். எனினும் இரு தன்மைகளில் இவ்விரு ஆள் புலங்களும் தமது ஒருமைப்பாட்டைப் பேணிக்கொண்டுள்ளன. ஒன்று மதவடிப் படையில் இரண்டும் இஸ்லாமிய மதத்தத்துவங்களைப் பேணும் மக்க ளைக் கொண்டுள்ளன. மற்றது அரசியலடிப்படையில் இரண்டும் சரியோ, பிழையோ ஒரே நிர்வாகத்திற்குட்பட்டுள்ளன. புவியியல் அடிப்படையில் இவ்விரண்டும் வேறுபாடுகளைக் கொண்டுள்ள போதி லும், மதம் அரசியல் எனுமிரண்டும் இவ்விரு ஆள்புலங்களையும் ஒரே
நாடாக எண்ண வைத்துள்ளன, எனலாம்.
பெப்ருவரி
இதழ்
சிறப்பிதழாகும்
காலநிலையறிஞர் கலாநிதி. ஜோர்ஜ் தம்பையாபிள்ளை
அவர்கள் இலங்கையின் காலநிலை"
பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதுகிருர், دیکھیے
* இவ்விதழ் ஒரு தனிநூல் * இக்கட்டுரை மட்டுமே இடம்பெறும்.

Page 18
"இக் காலப் புவியியற் கல்வி முறைக்கும், அக் காலக் கல்வி முறைக்குமிடையே மிகு ந் த வேற்றுமைகள் நிலவுகின்றன. அக் காலத்திலே புவியியல் கற்ப தென்ருல் மிக வும் சிரமம். மாணவன் இத்துறையில் ஆர்வ மும் ஆவலும் கொண்டிருந்தா லன்றி இதனைக் கற்கமுடியாது ஏனென்ருல் அக் காலத்தில் புவி யியல் கல்விக்கான வசதிகள் கிடையா. ஏற்ற நூல்கள் வெளி ளியாகவில்லை. ஏன் ? புவியியல் நூல் என்று சொல்லக்கூடிய ஒரு தரமான நூல் இருக்கவே இல்லை எனச் சொல்லவேண்டும். புவியி யல் ஆசிரியர்களோ, அன்றிக் திரு. வி. கப்பிரமணியம் B, A, B.Sc.(Lond) கற்றவர்களோ அதனைவிட அரி தாகவே இருப்பார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் பல் வகைத் துறைகளிலீடுபட்டிருப்பார்கள், அவர்களைத் தேடிப்பிடித்து ஒய்வு நேரங்களில் சென்றே புவியியல் அறிவைப் பெறவேண்டி யிருந்தது.'
'நானும் அப்படிக் கற்றவன்தான். எனது "இன்டர்’ பரீட்சைக் குப் பின்னர், நான் தேடிச் சென்று புவியியல் கற்ற ஆசிரியர்களாக திரு. சிதம்பரப்பிள்ளை, பாதர் பி. ஜி. எஸ். பின்ரோ, செல்வி. எல். சி. கே. குக், ஏ. கினிகே, பாதர் டிலாகே- ஆகியவர்களைக் கூற லாம். எனது புவியியல் ஆர்வத்தை வளர்த்த பெருமை யாழ் இந்துக் கல்லூரிக்கே உரியது எனலாம்.'
'இவ்வித சிரமநிலை அக்கால எல்லா மாணவருக்குமே இருந்து வந்தது. உதாரணமாக இன்று இலங்கைப் பல்கலைக் கழக புவியியற் பேராசிரியராக விளங்கும் கா. குலரத்தினம் அவர்களும் இதற்கு விலக்கல்ல. அன்று புவியியலை கஷ்டமான முறையில் பயின்ற போதிலும் அவர்களின் அறிவு வியக்கத்தக்க முறையிலே விளங்கியது
Gr6OrG)fTb.
‘இன்று புவியியற்கல்வி எவ்வளவோ வளர்ச்சியடைந்துள்ள போதிலும், முன்னேறுவதற்கு இன்னும் நிறைய இடமுண்டு. புவி 32
 
 

33
யியலுக்கும் ஏனைய விஞ்ஞான பாடங்கட்கு இருப்பது போன்ற ஆய்வு கூடம் மிக மிக இன்றியமையாதது. ஆகவே இந்த ஆய்வுகூடத்தை ஒவ் வொரு முக்கியமான பாடசாலைகளிலும் அமைத்துக் கொடுக்க அர சாங்கம் பேருதவி புரிதல் வேண்டும்.
"அத்துடன், புவியியல் கற்பிப்பதற்கு ஆற்றலும் அனுபவமும் உற்சாகமுமிக்க ஆசிரியர்கள் அவசியம். இவர்களே வெளியாராய்வு (Field work) படிப்புகளிலும், படவரைகலையின் முக்கியத்துவம் உணர்ந்த போதனைகளிலும் புவியியலை வளர்க்கமுடியும்.
*புவியியல் வளர்ச்சிக்கு சில அதிகாரப் பொறுப்பு நிலைபும் உத வக்கூடியதாக இருக்கவேண்டும். உதாரணமாக ஒவ்வொரு பாப் சாலைகளிலும் புவியியல் ஒர் கட்டாயபாடமாக இருத்தல்வேண்டும்.
இதனுல் புவியியல் கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அத்துறை
யும் வளர ஏதுவாகின்றது. நான் அதிபராக இருப்பதினல் எனது பாடசாலையில் புவியியலைக் கட்டாய பாடமாக்கியுள்ளேன். அது போன்று, புவியியற் பட்டதாரிகளுக்கும் உடனடியாக ஆதரவு அளிக்க அரசாங்கமும் முன்வரவேண்டும். புவியியற் பட்டதாரிகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை-பதவிகளை அளித்து-மாண வர்களிடையே ஊட்டில் புவியியல் வளர்ச்சி உச்சநிலையை அடையும். அரசாங்கம் இதுவரை வேலையற்றிருக்கும் புவியியற் பட்டதாரிகளுக்கு வேலை கொடுப்பதில் அக்கறை செலுத்தவேண்டும் என விரும்புகி றேன்.'
சிறந்த ஆங்கில நூல்களைத் தமிழில் பெயர்த்துவருகின்ற போதிலும் அவற்றில் கையாளப் படுகின்ற கலைச்சொற்கள் மிகவும் திணறவைப் பதால், மாணவர்கள் புவியியலைக் கண்டே அஞ்சுகின்ருர்களாதலின் இக்கலைச்சொற்களை இலகுவாக்குதல் அவசியம் என்பதுடன், தமிழி லேயே மூல நூல்கள் புவியியலுக்கென எழுதல் அவசியமாகும்.'
உஇவ்விதம் பல கருத்துக்களைக் கூறும் இவர், ஸ்கந்தவரோத யக் கல்லூரி அதிபரான விசுவலிங்கம் சுப்பிரமணியம் B. A. B. Sc (Lond) அவர்களாகும். இவர் மொங்கவுஸ் என்பாரின் பெளதிக புவியியற் றத்துவங்கள்-என்ற நூலை தமிழாக்கியவரில் ஒருவராவர். இவர் தமிழாக்கம் செய்த கோட்மன் என்பாரின் ஐரோப்பா என்னும் நூல் அச்சிலிருக்கிறது. நமது புவியியலாளர்களில் ஒருவரான ஐம்பத்தாறு வயதே நிரம்பிய இவர் இன்னும்பல தொண்டுகளே யாற்றி புவியியற் கல்வியுலகிற்கு நீண்ட சேவையாற்ற, எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானக !
-?, . 9JIgG6 lõi B. A. (Geog) (Cey.)
'இன்று அரசாங்க மொழித் திணைக்கழகம் புவியியலுக்கான

Page 19
கோயம்புத்தூர், அரசினர் கலைக்கல்லூரிப் புவியியற் பகுதித் தலைவரின்
வாழ்த்துரை
1.தாங்கள் அனுப்பிய 'புவியியல்' இதழ்கள் யாவையும் படித்து மெத்த மகிழ்ச்சியுற்றேன். தமிழில் இது ஒரு புதிய முயற்சியாகும். 'புவியியல்' இதழ்கள் நல்ல முறையில் அச் சிடப்பட்டு சிறந்த கட்டுரைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. தாங்கள் இவ்வகையில் தமிழுக்கும் புவியியலுக்கும் செய்துவரும்
தொண்டைப் பெரிதும் பாராட்டுகின்றேன். தாங்கள் அனுப்பிய 'புவி
யியல்" இதழ்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிமுகப் படுத்தி வைத்துள்ளேன். ۔۔۔۔۔۔۔
இக்கல்லூரியில் B, A, மாணவர்களுக்குச் சிறப்புப் பாடமாகப் புவி யியலைத் தமிழ்மொழி வாயிலாக ஐந்தாண்டுகளாகக் கற்றுக் கொடுக் கிருேம். தமிழ் நாட்டு அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியால் தமிழ் வெளியீட்டுக் கழகம் சிறந்த புவியியல் நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளது. இந்நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்க ளுக்கும், 'புவியியலில்' பயன்படுத்தப்பட்டுள்ள கலைச்சொற்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கின்றது. கலைச்சொற்களில் உள்ள வேறுபாடு களை நீக்கி ஒரே கலைச்சொற் பட்டியல்களைத் தமிழ் நாட்டிலும் இலங்கை யிலும் பயன்படுத்தினுல் எல்லோருக்கும் பயன்படும் வகையில் நூல்கள் வெளிவர முடியும். மொழிபெயர்க்கப்படும் கலைச் சொற்களைத்தவிர, ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்போதும் ஒரேவிதி முறை யைப் பின்பற்றினல் தெளிவாக இருக்கும்.
கோடை விடுமுறையின்போது புவியியற் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்ப முயற்சிக்கிறேன். நான் எழுதியனுப்பும் கட்டுரையிலுள்ள கலைச் சொற்களை உங்களுடைய வழக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டு பிரசுரிக்கவும்.
அன்பு, என் , அனந்த பத்மநாபன்
கலைக்கல்லூரி, கோயம்புத்துர்ம1.
 
 
 

35
பொ. புவனராஜன் B, A, Hons (cag.) புவியோட்டில் ஏரிகள்
ஏரிகள் உலகின் பெரும்பாலான பாகங்களிலேகாணப்படுகின்றன. குறிப்பாக பனிக்கட்டியாற்றின் தாக்குதலுக்குட்பட்ட பிரதேசங்க ளிலே இவையினைக் காணக்கூடியதாகவிருக்கின்றது. இவ்வேரிகள் புவி மேற்பரப்பில் தோன்றுதலுக்குக் காரணம் இல்லாமல் அல்ல-முதலா
வதாக ஏரிகள் எவ்வாறு, ஏன் தோன்றுகின்றன என நாம் ஆராய்
தல் அவசியமாகும். பூமியின் மேற்பரப்பில் மழை மூலம் விழும் நீரானது ஒரு நீரியல் வட்டத்தினுட்படுகின்றது’ (HydrologicalCycle)-மழையாகப் பெய்யப்படும் நீர் தரைவழியே ஒடி பெரும் ஆருகவோ சிறு அருவியாகவோ கடலையடைகின்றது-இந்நீர் ஆவி யாக்கத்திற்குட்பட்டதும் வளிமண்டலத்தை யடைந்து மீண்டும் மழை யாகப் பெய்து தரையை அடைகின்றது, ஆணுல் மழையினல் தரை யில் விழும் நீர் அத்தனையும் இச்செய்முறைக்குட்படுதல் கிடையாது. அதாவது தரையிலே விழும் நீர் முழுவதுமே கடலையடைவதில்லைமுனைவுப் பகுதிகளில் பனிக்கட்டியாவதன் மூலம் அவை தடுக்கப்பட லாம், மழை நீரை உட்புக விடும் இயல்பினைக் கொண்ட சுண்ணக் கற்பாறை மீது மழை ப்ெய்தவிடத்து அந்நீர் உடனடியாகத் தரை கீழ் சென்று தரை நீராகி விடுகின்றது-(இவ்வாருண செய்முறை யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிதும் ஏற்படுவதுண்டு) அடுத்தபடி யாக நீர் தடைசெய்யப்படும் முறை இவ் விடயத்துடன் தொடர்பு கொண்டதாகக் காணப்படுகின்றது- அதாவது ஏரிகளில் நீர் தடைப்
பட்டு நிற்பதாலும் அவை கடலையடையாது தடைப்படுகின்றது.
உலகின் மொத்த நிலப்பரப்பின் ஒரு விகிதம் (1%) ஏரிகளைக் கொண்ட, பிரதேசங்களாக விளங்குகின்றது-இம் மொத்த நிலப்பரப் பில் இருவகையான ஏரிகள் காணப்படுகின்றன, சிலஉவர்நீரைக் கொண் டவையாகவும் வேறு சில நன்னீரைக் கொண்டவையாகவும் விளங்கு கின்றன. நன்னீரேரிகள் உவர் ஏரிகளிலும் பார்க்க கூடுதலான நிலப் பரப்பிலமைந்துள்ளன. நன்னீர் உவர்நீர் ஆகிய நீர்வகை ஏரிகளுள் காணப்படுவதற்கும் விளக்கங் கூறலாம். தண்ணீரை வெளியேற்றும் ஏரிகள் பொதுவாக நன்னீர் ஏரிகளாகக் காணப்படும். நீர் வெளியேழுது கட்டுப்பட்டு நிற்கும் ஏரிகள் உவர்நீரேரிகளாகின்றன, அதாவது தண் ணிர் ஏரியினுட் சேரும்பொழுது பலவகையான பருப் பொருஆள

Page 20
கரைத்து வந்து சேர்க்கின்றது. இப்பொருள் வெளியேருது கட்டுப் பட்டு நிற்பின் உவர்த்தன்மை தோன்றும். ஆனல் ஏரியினுள் தண்ணீர் வருவது போன்று நீர் வெளியேறிக் கொண்டும் இருந்தால் ஏரியின் நீரிலுள்ள பலவகை சேர்வைகள் வெளியேறிக்கொண்டே இருக்கும். இதனல் நன்னீர் ஏரியினுள் அமைய ஏரி நன்னீர் ஏரியா" கின்றது. உவர் நீர் ஏரிகளில், நீர் ஆவியாக்கம் மூலமாக மட்டுமே வெளியேறுகின்றது. இதனுல் ஏரியினுள் கரைந்து வந்து சேர்ந்த பொருள் வெளியேருது அதனுள் இருக்கின்றது. இதனல் உவர்த்தன்மை ஏற்படுகின்றது. உதாரணமாக நாம் உற்ருவின் பேர் உப்பேரி, கஸ்பி பன் கடல். டெற்கடல், (Dead Sea) போன்றவற்றை எடுத்துக்கூறலாம். வறண்ட காலநிலைநிலவும் பாகங்களிலேயே உவர்நீர் ஏரிகள்தோன்றும். ஏரிகளின் தோற்றம் அடுத்தபடியாக ஏரிகள் தோன்றுவன பற்றி ஆராய்தல் அவசியம். ஏரிகள் தோன்றுவதற்கு இரு காரணிகள் இன்றியமையாதனவாக விளங்கும். 鷲 (1) பூமியின் மேற்பரப்பில் பள்ளமான பாகம் இருத்தல்வேண்டும். (2) ஆவியாக்கம், நிலநீர்ப்பொசிவு ஆகியனவற்ருல் மறையும் நீரிலும், மேலதிகமாக நீர் அப்பள்ளத்தில் அமையவேண்டும்.
உலகிலே பல்லாயிரக் கணக்கான ஏரிகள் காணப்படுகின்றன. இவை பல்வேறு காரணிகளால் ஆனவை. அவை தோன்றிய காரணி கள் ஒவ் வொன்றினையும் எடுத்து ஆராயின், அவ்வொவ்வொரு காரணி மூலமும் பல்வேறு வகையான ஏரிகள் தோன்றியுள்ளதைக் கவனிக்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாகப் பனிக்கட்டியாற்றல் ஆண், ஏரிகளின் வகை கணக்கிட இயலாததாய்க் காணப்படுகின்றது, எனவே ஏரிகள் இவ்வாறு பல்வேருன காரணிகளால் பலவகைப்பட் டனவாகத் தோற்றமளிப்பதனல் அவை பற்றிய ஆய்வினை நேரடி பாகச் செய்ய முயல்வது கடினமானதென்றே கூறவேண்டும். எனவே ஏரிகள் பற்றிய ஆய்வினைத் தொடங்குதல் முன்னே, அவையினை பிறப்பு மரவடிப்படையில் பாகுபாடு செய்தல் அவசியமாகும். பாகுபாடு செய்வதன் மூலமே நாம் அவையின் பல்வேறு வகையினை எளிதல் ஆராயக் கூடியதாய் இருக்கும்.
பாகுபாடு மேல்வரும் காரணிகளால், பூமியின் மேற்பரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதே காரணிகளால் ஏரிகளும் தோன்றுகின்றன. எனவே இக்காரணிகளே பாகுபாட்டின் அடிப்படையாக விளங்குகின் றன. 臀 -
*
 
 
 

37
(1) புவியேரிட்டத்திற்குரிய அசைவு, (2) எரிமலை நடவடிக்கைகள். (3) அடையலின் படிவு. (4) பனிக்கட்டியாற்றின் தாக்கம். (5) தரைகீழ்நீர் (6) மனித தாக்கம். (7) ஏனைய காரணிகள், T_1}
முதலாவதாக புவியோட்டத்திற்குரிய அசைவினுல் பல்வேறு வகையான ஏரிகள் தோன்றியுள்ளன. புவியசைவு பலவகைப்பட்ட தாதலால் அவைமுலம் உருவான ஏரிகளும் அவ்வாறு பலவகையின தாய் விளங்குகின்றன. -
புவியோட்டத்திற்குரிய அசைவினல் உலகில் மிகப்பெரிய ஏரிகள் தோன்றியுள்ளன. உ-ம் கஸ்பியன் கடல், இதே காரணியால் ஆழத்திற் கூடியதான பேய்க்கால் ஏரிபோன்றனவும் வேறு ஆழத்தில் மிகக் குறைந்தனவான டெற் கடல் (Dead Sea) போன்றனவும் உயரத்திற் கூடியதான ரிற்ரிக்காக்க ஏரி (Titicaca) போன்றனவும் தோன்றி யுள்ளது குறிப்பிடத்தக்கது. புவியோட்டத்திற்குரிய அசைவினுல் ஏற் படுகின்ற பிளவுகள், உதைப்புப்பிளவுகள் மடிப்புகள் போன்றனவே பெரும்பாலும் புவியோட்டில் மாறுதலை ஏற்படுத்தி அங்கு ஏரிகள் உருவாகக்கூடிய வடிநிலங்களை உருவாக்குகின்றன. இவ்வாருன, புவி யோட்டு மாற்றங்களினல் ஏற்படுகின்ற ஏரிகள் பலவகைப்படுகின்றன.
புவியோட்டத்திற்குரிய அசைவினுல் ஆகும் ஏரிகள்
(1) LSufia) attisgir - Newland Lakes
(2) மலைத்தொடரின் வடிநிலஏரிகள் - Basin Range Lakes
(3) 1926MrGay L' LIGT GITö95 IT jh (95 GTf7a7; Gir -- Rift Valley Lakes. (4) பூமிநடுக்க ஏரிகள்.
புதிய நில ஏரிகள் : அண்மைக் காலத்தே கடலினின்று மேலுயர்த்
தப்பட்ட மேற்பரப்பிலுருவானவை எனக் கூறலாம். இவ்வாறு மேலுயர்த்தப் பெற்ற மேற்பரப்பில், ஒழுங்கற்ற தன்மைகள் நிலவுவத ஞல் நீர் கட்டுப்பட வாய்ப்பளிக்கின்றது. அதாவது இம்மேற்பரப் பில் சிறிய வடிநிலங்கள் தோன்றுகின்றன. இவை நீரைக்கொள்ள ஏரி யாகின்றது. இவ்வாறன ஏரிகளை வடஅமெரிக்காவில் புளோரிடா (Florida) விற் காணக் கூடியதாய் இருக்கிறது. இவை ஆழத்தில் மிகக் குறைந்தவை. எனவே இவையுள் படிவு ஏற்பட்டதும் அவ்வேரி சதுப்பு நிலமாக மாறுவதுமுண்டு.

Page 21
குலையப்படுவது வழக்கம்-இதனுள்
38.
மலைத்தொடரின் வடிநி ஏரி இவ்வாறன ஏரிகள் திண்மப்பி ஞல் பாதிக்கப்பெற்ற பி தேசங்களிலேயே காணப்படும். அதாவது
சரிந்த
பிளவுப்பள்ளத்தாக்கு ஏரி பிளவுப்பள்ளத்தாக்கு ஒன்றில் அமுக்க விசையினல் அல்லது இழுவிசையினல் தோன்றுகின்றது. இவ்வாருன விசையின் தாக்குதலினல் ாடு தாழ்த்தப்படுகின்றது. இவ்வா முன ஏரிகள் நேரான நீண்ட ஆழமா ஒடுக்கமான இயல்புகளைக் கொண்டு காணப்படும். இப்பள்ளத்தாக்கின் இருபுறமும் செங்குத் தான பக்கங்களைக் கொண்டன ாகத் தோற்றமளிக்கும் (படம் 2) கிழக்காபிரிக்காவிற் காணப் கள் இவற்றிற்குதாரணமாக
அமையும். உ-ம் நயாசா ஏரி, ரங்கனிக்கா ஏரி.
பூமிநடுக்க ஏரி பூமி நடுக்கம் பரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்ற
தோற்றமளிக்கும்-எனவே பூமிநடுக்க ஏற்பட்டதின் பின்பு உருவான ஏரியைக் கருதுகின்றே
எரிமலை நடவடிக்கைகளாலான ஏரிகள்
இவையுள் இரு பிரதான வகையுண்டு. (1) எரிமலைவாய் ஏரிகளும்,
(2) குளிர்ந்த எரிமலைக் குழம் ஏரிகளுமாகும்.
எரிமலைவாய் ஏரிகள்: மலையுச்சியிற்காணப்படுவதுமுண்டு. அதாவது இவை பெரும்பாலும் எரிமலை நடவடிக்கைகள் முடிவடைந்த மலை யுச்சிகளில் காணப்படும். இவ்வேரிகள் வட்டவடிவமானவையாகக் காணப்படும். அதோடு அவையது பக்கங்கள் செங்குத்தானதாய் விளங்கும். இவை அதிக ஆழமுடையனவாய்க் காணப்படுவது வழக் கம் ஆழத்தில் மிகக் கூடியபாகம் மத்தியிலேயே விளங்கும். ஒறிக னில் இவ்வாறன ஏரிகள் காணப்படுகின்றன. ஆனல் சில எரிமலை வாய்கள் கூம்புருவமற்றுக் காணப்படும். அவையின சூழ்ந்துள்ள
உறுப்புகளின் மட்டத்திலேயே அமைந்து விளங்கும். இவ்வாறன. எரிமலைவாய் ஏரிகளை ஜேர்மனியில் எய்வல் (Eifel) மலைத்தொ டரிலும் பிரான்சில் Auwergre பகுதிகளிலும் காணக்கூடியத
امرن
இருக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

39
குளிர்ந்த எரிமலைக்குழம்பு ஏரி: சில எரிமலைப்பிரதேசங்களில் எரிமலைக் குழம்பு எரிமலையின் வாயின் மேலாக வடிந்து சில சந்தர்ப்பங்களில் ஆறுகளினது போக்கைத் தடைசெய்வதுமுண்டு. இவ்வாறு ஆற்றுப் போக்கு தடைசெய்யப்பட நீர் கட்டுபட்டு ஏரி உருவாகும். உதார ணமாக கலிபோனியாவில் சினக் ஏரியைக் (Snag Laleo) குறிப்பிட லாம்.
அடையலின் படிவினுல் ஆகும் ஏரிகள்
அடையல் படிவாகுவதனல் ஏரிகள் தோன்றியுள்ளன. அதாவது நிலவழுக்குகை, ஆற்றரிப்பு, காற்று, கடலலை, ஆகியன அடையலின் படிவினை ஏற்படுத்தக் காரணமாக விளங்குகின்றன. இவ்வடையல்கள் பள்ளத்தாக்குகளில் ஆற்றுப் போக்கினைத் தடைசெய்யவே ஏரிகள் தோன்றுகின்றன.
பணி எருத்தேரி ஆறுகள் அவையது போக்கில் மியாந்தர் வளைவு தனை ஏற்படுத்துவதுண்டு. காலம் செல்லச் செல்ல இவ் ஆறு முன்ன மைந்த மியாந்தர் வளைவு வழியாகச் செல்லாது போக்கில் குறுக்கிடு கின்றது. இவ்வாருகக் குறுக்கிட்டதும் அது முன் தனது போக்காகக் கொண்ட மியாந்தர் தனியே எஞ்சிய உறுப்பாக ஆறு ஊடறுக்காத பாகமாக விளங்கும். அப்பாகம் நீரைக் கொண்டிருப்பதனல் அது வளைவுருவான் ஏரியாகத் தோற்றமளிக்கும். (படம்-3)
5.G.) a fly, air (Raft Lakes) :
இவை பெரும்பாலும் ஈரப்பதனன காலநிலை நிலவும் பகுதிகளிலேயே உண்டு. இக்கால நிலை நிலவும் பகுதிகளில் ஆறு அதனது போக்கில் அடர்ந்த காடமைந்த வகுதிகளை ஊடறுத்துச் செல்கின்றது. இவ் வாறு காட்டினூடாகப் பாயும் ஆறு அதனது கரையோரங்களிலுள்ள சில மரங்களை அரிப்பினல் வீழ்த்திவிடுகின்றது. இவ்வாறு வீழ்கின்ற மரங்கள் கட்டு மரம் போன்று காணப்பெற்று அவை ஓரளவு ஆற் றுப் போக்கினிற்கு தடை ஏற்படுத்த ஏரிகள் தோன்றுவதுண்டு,
கழிமுகஒதுக்கேரி (Side Detta Lakes) கிளை ஆறு, பிரதான ஆற் றைச் சந்திக்கும் இடத்தே கிளை ஆறு ஓரளவிற்கு செங்குத்தான சாய்வைக் கொண்டிருப்பதைக் கவனிக்கலாம்-இதனல் கிளை ஆறு பிரதான ஆற்றினின்று கூடுதலான விசையைக் கொண்டதாயும் காணப்படும்-கிளையாறு அதிக விசையுடன் ஒடுவதனல் அது பெரு மளவு பாறைத்துண்டுக்குவையினையும் எடுத்து வரும்-இதனல் கிளை யாறு பிரதான ஆற்றைச் சந்திக்கும் இடத்து படிவு ஏற்பட அங்கு

Page 22
40
భశ్
rg్నుggరళి లేడి gf
கழிமுகமொன்று தோன்றுகின்றது.
மேலும் மேலுமாகப் படிவு ஏற்பட இக்கழிமுகம் பிரதான ஆற்றின்போக் கினைக் குறிக்கிடுகின்றது. இதனுல் பிர,
தான ஆற்றின் போக்கில் தடையேற்
பட (அதாவது பிரதான பள்ளத்
தாக்கில் கழிமுகம் குறுக்கிட்) அங்கு
கழிமுக ஒதுக்கேரி தோன்றுகின்றது.
ሥ ጳ. கழிமுக ஏரிகள் பேராறுகளினது கழிமுகங்கள் பறவைகளினது பாதத் தையொத்த உருவத்தினதாய்க்
காணப்படும். ஆறு கடலையடைய
முன் பல்வேறு கிளைகளாகப்பிரிந்து
கடலையடையும்போது மீண்டும் ஒன் ருகச் சேர்ந்து அடைகின்றது. ஆறு
கிளைகளாகப் பிரிந்தோடும்போது இரு கிளையாற்றிற்கு இடைப்பட்ட பாகம் ஓர் அட்ைப்புப் ப்ோலாகின்றது. (En lேosure) இவை வடிநிலங்கள் போலர் கின்றன. வெள்ளப்பெருக்கின்போது ஏரிகள் இங்கு அமையலாம். இவை ஆறு கடலையடைவதற்கு சற்று முன் புள்ள பாகத்தில் உருவாகக்கூடும். (படம்-4) a
தடை ஏரிகள் : இவை கடற்
ப டி வி ஞ ல் ஆனவை-தடையாக
கீழ்
அமைந்துள்ள கடற்கரையோ அல்லது
மணற்றடையோ இவ்வுறுப்பை உரு
வாக்கலாம்? இவை கரையோரங் களில் நீரை நாலாபுறமும் சூழ்ந்து ஏரிகளை உருவாக்குகின்றன. ஆற்று முகங்களிலும் இவ்வகைப்பட்ட ஏரி களைக் காணக்கூடியதாய் இருக்கும்.
In 631 jö(56ör (3 pfl: (Dure Lakes) கரையோரங்களில் உள்ள மணற் குன்றுகள் கடல் நீ  ைர ச் சூழ
மணற்குன்றேரி தோன்றலாம். இம் மணற்குன்றுகள் ஆற்று முகங்களிலும்
ஏரிகளை உருவாக்குகின்றன, எனவே
இவ்வேரிகள் யாவும் காற்று கருவியாக இயங்கிப் படிவு ஏற்படுத்துவதனல
உருவாகிய ஏரிகளாகும்.
 
 

4 I
பனிக்கட்டியாரு லானவை
அடுத்தபடியாக பனிக்கட்டியாற்றின் தாக்கத்தினுல் உருவான களை ஆராய்வோம். ஏரிகள் உருவாகுவதற்குக் காரணிகளை ஆர
றது. ஏனைய புவிச்சரிதச் செய்முறைகளோடு ஒப்பிடுகையில் ப 5 g. u ற்றின் தாக்கமே புவியோட்டில் பெரும்பாலான ஏரிகளை ரு வாக்கி இருப்பதைக் கவனிக்கலாம். இதனலே நாம் பனிக்கட்டியாற் றின் தாக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களை ஆராயுமிடத்து அங்கு பெருமளவினதாயும் குறிப்பிடத்தக்கதாயும் தோற்றமளிக்கின்ற
55,000 யிரத்திற்கு மேற்பட்ட ஏரிகளை படத்திலிட்டிருப்பதைக் கவ
தையே (Suomi) சுவோமி என அழைப்பர்-விளக்கம் ஏரித்தேயம்,
கட்டியாற்றின் தாக்கத்தினல் உருவான ஏரிகளுடன் ஒப்பிட்டால் பனிகட்டியாற்ருலான தொகைமிகக் கூடியதாயே காணப்படும்.
மிடத்து கண்டப்பணிக்கட்டியாற்றின் தாக்கம் மலை அல்லது பள்ளத்
பெற்ற ஏரிவகைகளைக் கவனித்தல் வேண்டும். இவ்வேரிகள் பனிக் கட்டியின் நேரடியான மறைமுகமான தாக்குதலினல் ஆனவையெனக் கொள்ளவேண்டும். மறைமுகமான தாக்குதலினல் பள்ளங்களை உரு வாக்கி ஏரி தோன்றலாம்-நேரடியான தாக்குதலில் பனிக்கட்டி ஆற் றுப் போக்கையோ அல்லது வெவ்வேறு ஏதேனும் நீர் நிலையத்தைத் தடுப்பதனல் தண்ணீர் கட்டுப்பட்டு ஏரி தோன்றலாம். வேறுபனிக் கட்டியாற்றுப்படிவினலும் ஏரி தோன்றலாம். 鷺 (1) பனிக்கட்டியாற்றுப்படிவு ஏரிகள்: பனிக்கட்டி உருகியதும் அப் பனிக்கட்டியிற் பதிந்திருந்த பாறைத்துண்டுக்குவை படிவாகின்றதுஇது பெருமளவினதாய் இருப்பதினல் அவை அருவிகளின் போக்கி னைத்தடைசெய்யலாம், இதனல் ஏரிகள் உருவாகின்றன. இவ்வேரி கள் பனிக்கட்டியாற்றுப் படிவு ஏரிகள் என அழைக்கப்படுகின்றன.
2) பாறைவடிநிலஏரிகள் : கண்டப் பணிக்கட்டியாற்றின் தாக்கத் தினல் தரையின் மேற்பரப்பில் சமமற்றதன்மை நிலவும். இவை வடிநிலம் போன்ற பள்ளநிலங்களாவதும் வழக்கம். இப்பள்ளமான பாகங்களினுள் தண்ணீர் கட்டுப்பட ஏரிகள் தோன்றுகின்றன. இவை பாறைவடிநில ஏரி எனப்படும். 鷲
தால் அவையுள் பனிக்கட்டி ஒரு தனியிடத்தையே பெற்றுவிடுகின்
உறுப்பு ஏரிகளேயாம். பின்லாந்தை எடுத்துக்கொண்டதால் அங்கு
னிக்கக் கூடியதாய் இருக்கின்றது. பின்லாந்தியர் அவரது தேசத்
ஏனைய காரணிகளால் ஆன ஏரிகளினது தொகையை தனியே பனிக்
பனிக்கட்டியாற்றின் தாக்குதலினல் ஆன ஏரி வகைகளை ஆராயு
தாக்குப் பனிக்கட்டியாற்றின் தாக்கம் ஆதியனவற்ருல் உருவாக்கப்

Page 23
4°。
- (3) குழி ஏரிகள்: இவ்வேரிகளை பனிக்கட்டியாற்றின் தாக்குதலுக் குட்பட்ட பிரதேசங்களில் வெளியடையற் பொருளினல் ஆன அகன்ற சமவெளிகளிலே காணக்கூடியதாய் இருக்கும். இச்சமவெளியினைக் குழிபடிந்த சமவெளி என வழங்குவர். இவ்வாருன, குழிகள் தோன்று தலுக்கு பனிக்கட்டியாற்றுப் படிவின் சமமற்ற படிவே காரணம் எனக் கருதப்படுகின்றது.
(4) கற்குன்று ஏரிகள்: இவ்வேரிகள் கண்டப்பணிக்கட்டியாற்றின் போக்கினை ஓர் மலைத்தொடர் தடுக்குமிடத்துத் தோன்றுகின்றது. மலை தடை விதித்ததும் கண்டப்பனிக்கட்டியாறு அம்ம்லையிலுள்ள இடை வெளிகள் வழியாக வெளியேற முயலும்-இவ்வாறு இடைவெளிகள் வாயிலாக வெளியேறுகையில் அதனது விசை அதிகரிக்க அங்கு வடி நில உருவான உறுப்புகள் தோன்றுகின்றன. இவை பின்பு ஏரிகளாக மாறுகின்றன. இவ்வாறன ஏரிகளை கற்குன்று ஏரி என்பர், ஒல்லாந்து தேயத்தில் (Golk) கோல்க் ஏரிகள் எனவும் வழங்குவர்.
(3) பனிக்கட்டியணை ஏரி : கண்டப்பனிக்கட்டியாறு முன்னேறும் பொழுதும் பின்வாங்கும்பொழுதும் அதனது போக்குச்சாதாரணமான வடிகாலினைக் குறுக்கிடும் போக்காகவே காணப்படும். இதனுல் வடி கால் தடைப்பட தண்ணிர்கட்டுண்டு பணிக்கட்டியனைஏரிகள் தோன்று கின்றன-இவ்வாருன ஏரிகளை ஸ்கந்திநேவியாவிற் காணக்கூடியதாய் இருக்கும்.
அடுத்தபடியாக மலைப்பனிக்கட்டியாற்ருல் உருவான ஏரிகள் பற்றி ஆராய்வோம்.
(6) பள்ளத்தாக்குப் பணிக்கட்டியாற்றுப்படிவேரி :
இவ்வேரிகள் பின்வாங்கும் பனிக்கட்டியாற்றுப் படிவினுல் ஆனவைஅதாவது பாறைத்துண்டுக்குவையினது படிவினுல் உருவான ஏரி என லாம். இப்பின்வாங்கும் பனிக்கட்டியாற்றுப் படிவு 'ப' உருவான பள்ளத்தாக்குகளுக்குக் குறுக்கே காணப்படும். பனிக்கட்டியாறு முழுவனவே பின்வாங்கியதன் பின்னர் சாதாரண அரிப்பு தோன்று கையில் ஆற்றின் போக்கினை இப்பின்னிடற் பனிக்கட்டியாற்றுப்படிவு (Recessional Morrine) தடைசெய்யும். இதனுல் தண்ணிர் கட்டுப்பட்டு ஏரிகள் தோன்றுகின்றன. இவையினை பள்ளத்தாக்குப் பனிக்கட்டி யாற்றுப்படிவேரி என வழங்கப்படும்.
(?) பள்ளத்தாக்குப்பாறை வடிநில ஏரி (Valley Rock BasinLake) பள்ளத்தாக்குப் பனிக்கட்டியாற்றினது அரிப்பு விகிதம் எங்கும் சமமானதாக விளங்குவது கிடையாது. இதனுல் "U" (யூ) உருவான
 

43
பள்ளத்தாக்கின் அடித்தளம் அழுத்தமானதாய் விளங்காது அரிப்பு விகிதம் கூடியவிடங்களில் பள்ளங்கள் காணப்படும்-பனிக்கட்டி உருகி
சாதாரண அரிப்புத் தொடங்கியதும் இப்பள்ளமான பாகங்கள் ஏரிகளாகின்றன. இவற்றைப் பள்ளத்தாக்குப் பாறை வடிநில ஏரி
என அழைப்பர். பெரும்பாலும் இவ்வேரிகள் "U" உருவான பள்ளத்
தாக்கில் வரிசையாகக் காணப்படுவதால் அவை மணித்தொடர்
போன்றும் காணப்படுகின்றன இதனல் இவ்வேரிகளைச் செபமாலை
உருவான ஏரிகள் எனவும் அழைப்பர். (படம்-3) (Pater Noster
Lakes)
(8) நில வழுக்குகை ஏரி : "U" (யூ) உருவான பள்ளத்தாக்குகள் செங்குத்தான பக்கங்களைக் கொண்டனவாகக் காணப்படும். இப் பள்ளத்தாக்கினுள் பனிக்கட்டியாறு அமைந்திருக்கும் பொழுது அவை விளிம்பு மட்டம் வரை பள்ளத்தாக்கினை நிரப்புகின்றன. ஆனல் பனிக் கட்டியாறு உருகியதும், பள்ளத்தாக்கின் இருபக்கங்களும் வலுக் குன்றிய பாகங்களாக விளங்கும். இதனுலேயே அந் நிலவழுக்குகை அல்லது பனிப்பேர் இறங்கி ஏற்படும். இதனல் செங்குத்தாய் விளங் கிய பள்ளத்தாக்குப் பக்கங்கள் படிகளைக் கொண்ட சாய்வாக மாறு கின்றன-இப்படிகளின் மீது ஏரிகள் தோன்றுகின்றன (படம்-6) இவற் றினை நிலவழுக்குகை ஏரி எனக்கருதப்படுகிறது. மேலும் நிலவழுக்கு கையினுல் பள்ளத்தாக்கின் அடியில் பாறைத் துண்டுக் குவை ஆற்றின் போக்கைத் தடைசெய்வதனலும் ஏரிகள் தோன்ற இடமுண்டு.
இவ்வாருக பனிக்கட்டியாற்றின் தாக்கத்தினுல் புவியோட்டில் பல ஏரிகள் தோன்றியுள்ளன. அவை அரிப்பு, படிவு ஆகிய காரணிக ளால் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாகத் தரைகீழ் நீரினுல் உருவாகியுள்ள ஏரிகளைக் கவனிப்போம்.
தரைகீழ்நீர் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏரிகளை உரு வாக்கியுள்ளன. தரைகீழ்நீரினுலான ஏரிகள் சுண்ணும்புக் கற்பிரதே சத்திலேயே பெரும்பாலும் காணப்படும்.
(1) விழுங்கு ஏரிகள் - விழுங்கு துவார வழிமூலமே தண்ணிர் சுண்ணக்கற்பிரதேசத்தில் தரை கீழ்ச் செல்கின்றது. பல விழுங்கு துவாரங்கள் ஒன்ருகச் சேருகையில் விழுங்குதுவாரம் அமைந்திருந்த இடம் தாழ்வுற்ற பாகமாகக் காணப்படும். அவையுள் தண்ணிர் கட் டுப்பட ஏரிபோன்று தோற்றமளிக்கும் வேறு சுண்ணக்கற் பிரதேசத் தில் புணற்பள்ளங்கள் ஊவாலர் (Uvala) போன்ற கரைசல் உறுப்பு
G

Page 24
44.
களும் ஏரிகள் தோன்ற வாய்ப்பளிக்கின்றன. இவை கரைசலினுல் உருவான உறுப்புகள்-பெரும்பாலும் தரைகீழ் நீர் துவாரம்வழியே கீழ்ச் சென்று தரை கீழ் குகைகள் போன்ற உறுப்புகளை உருவாக்கு கின்றது, குகைக்கு மேலுள்ளபாகம் இடிந்ததும் அவை மேற்பரப் பில் பெரும் பள்ளங்களாகத் தோன்றும். இவையினுள் தண்ணீர் கட் டுப்பட ஏரிதோன்றுகின்றது.
அடுத்தபடியாக, மனித தாக்குதலினுலும் ஏரிகள் உருவாகி யுள்ளன. ஆறுகளின் போக்கில் மனிதன் அணைகளைக் கட்டுவது பொதுவாக இன்று காணப்படுகின்றது. நீர் மின்சக்தியினுற்பத்திக் காகவோ, வேறுவிவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ இவை கட்டப்படுகின்றன. இவ்வாறு அணைகள் அமைய தண் ணிர் அவ்வணையின் பின் கட்டுப்பட்டு ஏரிகள் தோன்றியுள்ளன. இலங் கையிலேயே இதற்குதாரணங்களை நோட்டன் பாலம், கல்லோயா போன்ற பாகங்களிலே காணலாம். வேறு கொலனுடோ ஆற்றில் உள்ள மேற் ஏரி (Lake Mead) சம்பசி ஆற்றிலுள்ள கரிபா ஏரி (Lake Kariba) 35 fig5 (36 spy உதாரணங்களாக அமைகின்றன.
மேலும் சுரங்க மறுக்கப்படும் இடங்களிலும் ஏரிகள் தோன்றி. யுள்ளன. நிலக்கரிச் சுரங்கம் வைரக்கற் சுரங்கம் போன்ற சுரங்கங் கள் அறுக்ப்பட்டதன் பின்னர் அச்சுரங்கங்களுள் நீர்தேங்கி ஏரியாகின் றது. தென் ஆபிரிக்காவில் வைரச் சுரங்கங்களில் இவ்வாறு ஏரிகள் தோன்றியுள்ளன.
வேறு காரணிகள் :- புவியோட்டில் பெருவிண் கற்களின் (Giant Meteorites) தாக்குதலினல் ஏற்பட்ட காயங்கள் பள்ள. நிலங்களாகக் காணப்படுகின்றன. இவையினை நட்சத்திரக் காயங்கள் (Star WoundsAstroblemes) என அழைப்பர். இவற்றுள் நீர் தேங்க ஏரிகள் உரு வாகும். இவ்வாருன ஏரிகளை கியுபெக் (Quebec) கில் காணலாம். வேறு தென்கீழ் ஐக்கிய அமெரிக்க நாட்டிலும் (ஜோஜியா, கரோ லீன) போன்ற மாகாணங்களில் பெரும்பாலும் கரோலீனவில் பல் லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட நிலையங்களும் அவையுட் சில ஏரிகளாகவும் தோற்றமளிக்கின்றன. இவ்வேரிகள் தோன்றிய முறை இன்றும் புதிராகவே இருக்கின்றது. எனவே விளக்கம் கூற இயலாத னவான ஏரிகளும் உலகில் உள்ளன.
ஏரிகளை பொதுவாகப் பார்வையிடும்போது அவை நிரந்தரமா உறுப்புகள் போன்றே தோற்றமளிக்கும்-ஆனல் உண்மையில் ஏரிகள்
 
 

. . . .
45
சமுத்திரத்தைப்போன்று நிரந்தரமான உறுப்புகளல்ல. அவை தற்காலி கமானவை. அவை விரைவில் அழியக்கூடிய புவிச்சரித உறுப்புகளா gth. (Lakes are Ephemeral Geologic Features of The Eath Surface)
ஒரு பள்ளத்தினுள்ளே குறிப்பிடத்தக்க நீர் தேங்கியதும் ஏரி தோன்றுகின்றது. ஆனல் இவ்வாருன ஏரி தோன்றியவுடனேயே அடை யல் நடவடிக்கைகளும் தோன்றுகின்றன. இவ்வேரியினுள் நீரைக் கொணர்ந்து சேர்க்கும் சிறு அருவிகள் நீரை மட்டுமன்றி அவற்ருேடு களி, அடைய்ல், மணல், பரல் போன்ற பருப்பொருளையும் படிவு செய்கின்றது. இவ்வாருகக் காலவேளையில் மேலும் மேலும் படிவேற் படுவதினுல் பள்ளமாக இருந்தபாகம் முழுவனே நிரம்பிவிடுகின்றது. எனவே ஏரியும் அற்றுப்போகின்றது எனவே அடையலை ஏரியினுள் கொண்டு வந்து சேர்த்த அருவி காலவேளையில் ஏரி அற்றுப்போக ஒரு காலத்து ஏரி இருந்த நிலயத்திற்கு மேலே ஒடிச்செல்கின்றது. படிவு நடவடிக்கைகள் ஏரியைஅழிக்கக் காரணியாவது போன்று அரிப்பு நட வடிக்கைகளும் ஏரிகளை அழிக்கக் காரணமாகின்றன. உதாரணமாக நிலவழுக்குகை ஒன்றினல் ஒர் பள்ளத்தாக்கினூடாக ஒடிய அருவி தடைபட்டு ஏரி தோன்றியதாகக் கொள்வோம். கால வேளையில் நில வழுக்குகையினல் ஆன அணையின் பின்னர் கூடுதலாக நீர் தேங்கிநிற் கும் ஒரு நிலையில் நீர் நிரம்பியதும் அணைக்குமேலே வழிந்தோடத் தொடங்கிவிடும். அணையின்மீதுமுதல் வழிந்தோடிய அருவி மேலும் மேலும் நீர் அருவி வழியே தொடர்ந்து வர அணையை அரிக்கத் தொடங்குகின்றது. கால வேளையில் அணை முழுவதுமே அரிப்பினல் அகற்றப்பட அருவி முன் போனபோக்கில் செல்லுவதோடு அங்கு
அமைத்த ஏரியும் அற்றுப் போகின்றது.
எனவே அரிப்புப் படிவு நடவடிக்கைகள் ஏரிகளை உருவாக்கக் கார ணமாய் அமைவதோடு நின்று விடாமல் அவையினை அழிக்கவும் கார ணிையாக அமைவது குறிப்பிடத்தக்கதேயாம்.
鷲。 ae
அடுத்த இதழில்!
கடலரிப்பாலுண்டாகும் நிலவுருவங்கள் எழுதுபவர் : ஆ. இராஜகோபால் B. A. (Geo) Cey.

Page 25
சி. திலகநாதன் B, A, (Ceg)
படவெறியங்களிற் சமபரப்புத்தன்மை
அடுண்ணிய ஒரு பொருள் பெரிய அளவில் வரையப்பட்டு விளக் கப் படுவது போன்று பெரிய பொருளும் சிறிய அளவில் வரையப்பட்டு Ꮡ விளக்கப் படுகின்றது. புவிமேற்பரப்பை அல்லது அதன் ஒரு பகு தியை உண்மையான அளவில் வரைவது சாத்தியமர்னதன்று. ஆணுல் அதனைச் சிறிய அளவில் ஒரு கோளமாக வரைந்து விளக்கமுடியும். கோள உருவில் அமைந்துள்ள படம் (Spherical Map) தட்டையான படம் (Flat Map) போன்று அவ்வளவு வசதியான படமன்று. எனவே கோள உருவில் அமைந்துள்ளவற்றை தட்டையான மேற்பரப்பிற்கு மாற்றவேண்டி ஏற்படுகின்றது. உருளை (Cylinder) அல்லது கூம்பு (Cone) உருவங்களாயின் அவற்றை மாற்றங்கள் எதுவுமின்றி தட்டை பாக லிஸ்தரிக்கமுடியும். ஆனல் கோள உருவில் அமைத்துள்ளவற்றை அப்படியே தட்டையான மேற்பரப்பில் மாற்றி வரைவதற்கு முறை கள் எதுவும் இல்லை. மாற்றியமைக்க முற்பட்டால் கோள உருவின் மேற்பரப்புத்தன்மைகளை ஏதோ வகையில் திரிபு அடைவதைத் தவிர்க்க முடியாது. கோள உருவில் அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும் அவை அமைந்துள்ள கேத்திர கணிதத்திற்குரிய (Geometrical) தொடர்புகள் யாவற்றையும் தட்டையான மேற்பரப்பில் ஒரே முறை பில் சரியாக வரையமுடியாவிட்டாலும் வெவ்வேறு முறைகளில் அதன் ஒருசில தொடர்புகளையாவது சரியாகக்காட்டலாம், இத்தகைய முறை கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் எறியங்களாகும். எனவே எறியங்கள் யாவும் அவை வரையப்பட்ட தேவைகளுக்குகேற்ப ஒரு சில தன்மை களைச் சரியாகக் காட்டுகின்றனவே தவிர முழு இயல்புகளையும் பிரத்தியட்சமாகக் காட்டும் எனக் கொள்ள முடியாது, ஒரு பண்பு சரியாக அமையும் போது அவ் வெறியத்தில் பல பண்புகள் பிழையா கக் காணப்படும் சமபரப்புத்தன்மையை ஒர் எறியத்தில் சரியாக அமைக்கும் போது சமதூரம், சம உருவம் (நேருவம்) சரியானதிசை முதலிய தன்மைகளை எதிர்பார்க்கமுடியாது. ஆகவே உண்மையில் பிழையான உருவமும் தவருண திசையும் வேறுபடும் அளவுத் திட்ட மும் உடைய ஒரு பட எறியத்தைதான் சமபரப்புத் தேவைக்குப் பயன்படுத்துகிருேம், இவ்வாறே மற்றைய தேவைகளுக்குப் பயன் படுத்தும்போது அவை தவிர்ந்த ஏனைய பண்புகள் உண்மையாக அமைவதில்லை. எனவே எறியங்கள் எல்லாம் புவிமேற்பரப்பு பற்றிய பலதவருண எண்ணங்களுக்கு காரணமாக அமைகின்றது எனலாம்.
 

47
தேசப் படப் புத்தகங்களில் (Atlas) இத்தகைய எறியங்களில் ைெர யப்படும் படங்கள் எல்லாம் எமக்கு பல தவருண தோற்றங்களைப் பழக்கப்படுத்தி விட்டன. பெல்ஜியன் கொங்கோவிலும் பார்க்க கிறீன்லாந்துபெரியதுஎன்றே பலர் கருதுகின்றனர். (மாருககிறீன்லாந்து 8,40,000 ச. மைலும் பெல்ஜியன் கொங்கோ 9, 18,000 ச. மைலும் உடையன. உண்மையில் பெல்ஜியன் கொங்கோ பரப்பில் கூடியதா யிருப்பினும் மேற்காடோவின் எறியத்தில் உலகை அதிகமாக நினைவு படுத்துபவர்கள் கிறீன்லாந்தை பெல்ஜியன் கொங்கோவிலும் பத்து அல்லது பதினைந்து மடங்கு பெரிதாகக் கருதுகின்றனர். எனவே ஒவ் வொரு தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் எறியங்களைப்பற்றி நன்கு தெரிந்தாலொழிய அவற்றின் தவருனவற்றை அறிந்து உண்மையை உணர்ந்து கொள்ளமுடியாது. 鷺
(1) கோளத்தின் நாற்கோட்டுப் பகுதி (2) பொன்னினெறியம் (3) சைன்வஜன
கோட்டெறியம்,
இயற்கையமைப்புப் படங்கள், கால நிலைப் படங்கள், மக்கட் பரம்பல் படங்கள் பொருளாதாரப் புள்ளிவிவரப் படங்கள் முதலியனவற்றிற்கு சம பரப்புத் தன்மை உடைய எறியங்கள் தேவைப்படுகின்றன, சம பரப்புத்தன்மையுடைய எறியத்தில் தான் பரம்பலை உண்மையாக விளக்கலாம். சம அடர்த்தி உடைய இரு இடங்களின் பரம்பலை சமபரப்புத்தன்மையற்ற எறியத் தில் புள்ளிமுறையில் (Dots)இரு இடங்களும் ஒரே அடர்த்தியுடையதாக அமையாது ஒன்று அடர்த்தி கூடியும் மற்றது அடர்த்தி குறைந்தும் காணப்படும். சிலவேளை வேறு பட்ட அடர்த்தி உடைய இரு இடங்கள் சம அடர்த்தி உடையனவாக அமையக் கூடும் எனவே பரம்பல் படங்களுக்கு சம பரப்புத்தன்மை அவசியும் பாதுகாக்கப் பட வேண்டும், ஆனல் சரியான பரப்பை மிகவும் பிழையான உருவத்திரிபின் (Distortion of Shape) epaigntair பெற முடிகின் றது. உருவத்தைச் சரியாக் காட்டுவதாயின் பரப்பைச் சரியாகக் காட்டமுடியாது. கோளத்தில்தான் இவை இரண்டையும் உண்மையாகக் காட்டமுடியும். தட்டையான மேற் பரப்பில் இவற்றில் ஒன்றைமட்டும் பாதுகாகக முடியும், ஒரே பரப்பை ஒரு வட்டத்திலோ செவ்வகத்திலோ நீள் சதுரத்திலோ அல்லது வேறு உருவங்களிலோ காட்ட முடிவது போன்று கோளத்

Page 26
4&
'
தின் மேற்பரப்பையும் பல்வகை உருவமாற்றங்களின் மூலம் தட்டை யான மேற்பரப்பில் சமபரப்பைப்பாதுகாத்து வரையலாம், இத்த கைய பலவகைப்பட்ட உருமாற்றங்களுடைய எறியங்களே உருளைச் சமபரப்பெறியம், உச்சிச்சமபரப்பெறியம், பொன்னினெறியம், சைன்வளைகோட்டெறியம், மொலுவீட்டெறியம், முதலியனவாகும். இவ்வெறியங்களுட் சில பொதுவாக உலகத்திற்கும், சில குறிப்பிட்ட பகுதிகளுக்கும் பயன் படுத்தப்படத்தக்கவகையில் அமைக்கப்படுகின் றன. இவை ஒவ்வொன்றும் அமைக்கப்படும் போது ஏற்படும் உருவ மாற்றங்களையும் அதே நேரத்தில் அவை எவ்வெவ் வகையில் சம பரப்பைப் பாதுகாக்கின்றதென்பதும் அடுத்து நோக்குதலவசியம்.
கோளத்தில் ஒவ்வொரு நாற் கோட்டுப் பகுதியின் (Graticule) பரப்பும் எறியத்தில் குறிப்பிட்ட நாற் கோட்டுப் பகுதியின் பரப்பிற் குச் சமனுக அமையின் அதனைச் சமபரப்பு எறியம் எனக்கொள்ள லாம், நாற்கோட்டுப் பகுதி என்பது இரு அகலக்கோடுகளுக்கும் இரு நெடுங்கோடுகளுக்கும் உட்பட்ட பகுதியாகும். கோளத்தின் இந்த நாற் கோட்டுப் பகுதியின் பரப்பு எறியத்தில் ஒன்றில் ஒர் அளவு விரிந்ததற்கேற்ப மற்ற அளவு சுருங்குவதன் மூலமோ அன்றி ஏதோ வகையில் இரு அளவுகளின் மாற்றங்களும் சமமான மொத்தப் பரப்பை தருவதன் மூலமோ பெறப்படுகின்றது. உருளை, உச்சிச் சமபரப்பெறியங்கள் முதல்வகையிலும் ஏனைய சமபரப்பெறியங்கள் இரண்டாவது வகையிலும் அடங்கும்,
முனைவுப் பாகங்களுக்கு சமபரப்புத்தன்மைத் தேவைகளுக்கு பயன் படுத்தக்கூடிய எறியம் உச்சிச்சமபரப் பெறியமாகும். இவ்வெறியத் இல் அகலக்கோடுகள் ஒரு மையத்தில் வரையப்படும் (ConcentricCircle) வட்டங்களாகவும், நெடுங்கோடுகள் மத்தியிலிருந்து பிரிந்து செல்லும் நேர்கோடுகளாகவும் அமைகின்றன. அகலக் கோடுகளின தும் நெடுங்கோடுகளினதும் அளவுத் திட்டம் வேறுபட்டு உருவம் மாறுதலடைந்தாலும் பரப்பு சமனக அமைகின்றது. இது அகலக் கோடுகளின் விரிவு நெடுங் கோடுகளின் ஒடுக்கத்திற்கு சமனனவிகி தத்தில் அமைப்பதன் மூலம் பாதுகாக்கமுடிகின்றது. ஆயினும் இதை ஒரு திருப்திகரமான சமபரப்பெறியம் எனக் கொள்ளமுடியாது. இவ்வெறியத்தில் பருமட்டாக சமபரப்புத்தன்மை காட்டும் எறியம1 கக் கொள்ளலாமே தவிர உண்மையான சமபரப்பெறியம் எனக் கொள்ளுதல் தவறு. இவ்வெறியத்தில் முனைவிற்கப்பால் அகலக் கோடுகள் விரிவடைந்தும் நெடுங்கோடுகள் சுருங்கியும் செல்வதற் கேற்ப உருவமும் கிழக்கு மேற்கு நீண்டும் வடக்குத் தெற்கு ஒடுங்கி யும் அமைவதால் முனைவிற்கு அண்மையில் உள்ள இடங்களில் தேவ்ைக்கு பயன்படுத்தவே இவ்வெறியம் பொருத்தமானதெனலாம்.
இடைவெப்பப் பகுதிகளுக்கு சமபரப்புத்தன்மை தேவைக்கு அதிகமாகத் தெரிவு செய்யப்படும்எறியம்பொன்னியின் எறியமாகும் பொன்னியின் எறியத்தில் ஒவ்வொரு நாற் கோட்டுப் பகுதியினதும்
 

49
பரப்பு கோளத்தின் அந்தந்த நாற் கோட்டுப் பகுதியின் பரப்பிற்குச் சமணுக அமைகின்றது. கோளத்தில் ஒரு நாற்கோட்டுப் பகுதியின்பரப்பு அதன் இரு அகலக்கோட்டின் நீளத்திலும் அவற்றின் செங்குத்துத்தூரத் திலும் (Perpendicular Distance) தங்கியுள்ளது. இவ்விரு நிபந்தனைக ளும் கோணத்தில் உள்ளவாறு எறியத்திலும் இருந்தால் அதனைச் சமபரப்புடைய எறியமாகக் கொள்ளலாம். பொன்னியின் எறியத் தில் அகலக் கோடுகள் ஒரு மையவட்டங்களாகவும், மத்திய நெடுங் கோடு தவிர்ந்த ஏனைய நெடுங்கோடுகள் வளைகோடுகளாகவும் அமை கின்றன. அகலக்கோடுகள் ஒவ்வொன்றும் கோணத்தின் உண்மை யான அளவிற்கு கணிக்கப்பட்டு வரையப்படுகின்றன. இதனுல் இவ் வெறியத்தில் எந்த நாற் கோட்டினதும் அகலம் கோளத்தில் உள்ள வாறே அமைகின்றன.
கோளத்தின் க, கா-வும், கி,கீ-யும் (படம் : 1), எறியத்தில் க.கா. வுக்கும், கி’, கீ’-யுக்கும் சமனக அமைகின்றன. (படம் : 2) ஒவ்வொரு அகலக்கோடும் ஒருமையத்திலிருந்து மத்திய நெடுங்கோட்டில் உண் மையாகக் கணிக்கட்பட்ட அளவுகளுக்கு வரையப்படுவதால் இவற் றினது செங்குத்து இடைத்தூரம் கோளத்தின் அளவிலிருந்து வேறு படுவதில்லை. இதனுல் நாற்கோட்டின் இரு அகலக் கோடுகளுக்கிடை யில் உள்ள செங்குத்துத் தூரமும் கோளத்தின் அளவிலிருந்து வேறு படுவதில்லை. அதாவது கோளத்தில் அ, ஆ, இவ்வெறியத்தில் அ' ஆ" க்கு சமனக அமைகின்றது. எனவே கோளத்தின் இரு நிபந்த னைகளும் இவ்வெறியத்தின் ஒவ்வொரு நாற்கோட்டுப் பகுதிகளிலும் சரிவர அமையப் பெறுவதால் இதனை ஒரு திருப்திகரமான சமபரப் பெறியம் எனலாம். ஆனல் சமபரப்பை பெறுவதற்கு அதன் உருவம் வேறுபடுவதுடன் உண்மையான திசை, சரியான அளவுத்திட்டம், முதலிய பண்புகளையும் இழப்பதால், இத்தகைய வேறுபாடுகள் கூடிய எறியத்தில் எல்லைக்கோணப்பகுதிகளை அடக்கும் இடந்தவிர்ந்த ஏனைய இடங்களைக் காட்ட இவ் வெறியத்தைப் பயன் படுத்தலாம்.
சமபரப்புத்தேவைகளுக்குஉலகப்படங்களைவரைவதற்கு,சைன் வளை கோட்டெறியம் உருளைச் சமபரப்பெறியம் மொலுவீட்டின எறியம் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவு செய்யலாம். சைன் வளைகோட் டெறியத்தை எடுத்தால் கோளத்தின் நாற்கோட்டுப்பகுதியில் சம பரப்பு தன்மைக்கு வேண்டிய இரு நிபந்தனைகளும் இதில் சரி வர அமைகின்றன. சைன் வளைகோட்டெறியத்தில் அகலக்கோடுகள் நேர்கோடுகளாகவும் மத்திய நெடுங்கோடு தவிர்ந்த ஏனைய நெடுங் கோடுகள் வளைகோடுகளாகவும் அமைகின்றன. அகலக்கோடுகள் ஒவ்வொன்றும்கணக்கிடப்பட்டுசரியான அளவுகளில்வரையப்படுவதால் ஒவ்வொரு நாற் கோட்டினதும் அகலக்கோடுகள் கோளத்தில் உள்ள வாறே அமைக்கப்படுகின்றன. கோளத்தின் க காவும் கி, கீ-யும்எறியத் தின் க,'கா' க்கும் கி' கீ’ க்கும் சமனக அமைகின்றன. அதேபோல் மத்திய நெடுங்கோட்டில் ஒவ்வோர் அகலக்கோட்டளவுகளும் உண்மை
யாகப் பிரிக்கப்பட்டு சமாந்தரமாக வரையப்படுவதால் இவற்றின்
姆

Page 27
50
செங்குத்து இடைவெளி கோளத்திலும்இடைவெளியிலிருந்து வேறுபடு வதில்லை. எனவே கோளத்தின் நாற்கோட்டுப்பகுதியின் இடைவெளித் தூரம் எறியத்திலும் சமனுக அமைகின்றது. கோளத்தில் அ, ஆ சைன்வளை கோட்டெறியத்தில் அ, ஆ' க்குச் சமனக அமைகின்றது. இவ்வாறு இரு நிபந்தனைகளும் இவ்வெறியத்தில் காணப்படுவதால்
சமபரப்புத்தன்மை பாதுகாக்கப்படுகின்றது. ஆனல் பொன்னியின்
எறியத்தைப்போலவே இவ்வெறியத்தில் எல்லைப் பகுதிகளின்மூலைகளில் பேரளவு உருமாற்றம் ஏற்படுகின்றது. இதனுல் வடதென் அமெரிக்கா ஆபிரிக்கா போன்ற பகுதிகளின் சமபரப்புத் தேவைகளுக்கு இவ் வெறியத்தைத் தெரிவு செய்யலாம்.
உலகப் படத்தை வரைவதற்கு பயன்படுத்தப்படும் இன்னுேர் சமபரப் பெறியம் உருளைச் சமபரப்பெறியமாகும். இவ்வெறியத் தில் அகலக் கோடுகள் எல்லாம் மத்திய நெடுங் கோட்டிற்குச் சம மாக நீட்டப்பட்டு நேர்கோடுகளாக வரையப்படுகின்றன. நெடுங் கோடுகள் உண்மையளவிலும் குறிக்கப்பட்டு அகலக் கோடுகளை செங் குத்தாக ஊடறுக்கும் வகையில் நேர்கோடுகளாக வர்ையப்படுகின் றன, இவ்வெறியத்தில் அகலக்கோடுகளின் கிழக்கு மேற்கு விரிவுக ளால் விரிவடையும் பரப்பு நெடுங்கோடுகளின் வடக்குத் தெற்கு ஒடுக்கத்தால் சமப்படுத்தப்படுகின்றது. இவ்வெறியத்தில் முனைவுப் பகுதிகளில் சரியான பரப்பைக் காட்டுவதற்காக அகலக் கோடுகளின் விரிவிற்கு பொருத்தமாக நெடுங்கோடுகள் ஒடுக்கப்படுவதால் இப்பகுதிகளில் உருவம் மிகவும் கூடிய அளவில் வேறுபட்டுள்ளது, தணுல் மத்திய கோட்டுப் பகுதியின் சமபரப்புத் தேவைக்கே வ்வெறியத்தைப் பயன் படுத்த முடிகின்றது, !
ஒப்பிடின் மொலுவீட்டினெறியமே முன்னைய இரு எறியங்களி லும் பார்க்க உலகப்படங்களில் சேமபரப்புத்தன்மையைக் காட்டுவ தற்கு மிகவும் பொருத்தமாகின்றது எனலாம். இவ்வெறியத்தில் சைன்வளை கோட்டெறியத்தைப்போன்று மூலைப்புற எல்லைப் பகுதி கள் அதிகளவு உருவமாற்றமடைந்தோ, அல்லது உருளைச் சமபரப் பெறியத்தைப் போன்று முனைவுப்பகுதி அதிக அளவில் கிழக்கு மேற்கு நீண்டும் வடக்குத் தெற்கு ஒடுங்கியும் உருவம் வேறுபட்டோ அமைய வில்லை எனலாம். இவ்வெறியமும் அமைக்கும் முறையால் சமபரப் புத் தன்மையைப் பெறுகின்றது.
எனவே பலவகையான உருவத்திரிபு, திசைமாற்றம், அளவுத் திட்ட வேறுபாடுகள் முதலியவற்றைப் பொருட்படுத்தாவிட்டால் தான் எறியங்களில் சமபரப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியும். கேரள உருவான பூமி முதலில் குறுகிய அளவிற்கு குறுக்கப்பட்டு, அதிலிருந்து தட்டையான தாளில் எறியங்களாக வரையப்படுவதால் சமபரப்புத்தன்மை தேவைகளுக்கு எறியங்களைப் பயன்படுத்தும்போது அவற்றைப்பற்றி தெளிவாக விளங்கியிருக்கவேண்டும். அப்போது தான் தவருண தோற்றங்களை விலக்கி உண்மையை உணரமுடியும்.

அன்பு வெளியீடு
இலங்கைப் புவியியல், உலகப் புவியியல். 1. படவரைகலையில் எறிய
படவரை கலையில்
சமவுயரக் கோடுகளும் வரைப் படங்களும்.
} - (விரைவில் வெளிவரும்)
விற்பனை உரிமை:
றரீ லங்கா புத்தகசாலை
காங்கேசன்துறை விதி, யாழ்ப்பாணம்

Page 28
பாடசாலைகள் மகிழ்வு
1. படவரைகலையில் எறியங்கள் *2. உலகப்புவியியல்-ஜி. சி. ஈ. *3. இலங்கைப் புவியியல்-ஜி. சி. டிெ நூல்கள் எழுதியவர்: க. குணர 4. பரீட்சைச் சித்திக்கேற்ற பாஷைப்
5. நான்காந்தரச் சூழல்-விணுவின 6. மூன்ருந்தரச் சூழல்- 蠶 7. இரண்டாந்தரச் சூழல்- ,
டிெ நூல்கள் எழுதியவர்: வே. 8. சைவசமய விஞவிடை 2-ம் வகு 9. சைவசமய விணுவிடை 1-ம் வகுப் 10. ஆசிரியர் லீவு விண்ணப்பம்
டிெ நூல்கள் எழுதி வித்தியாதிபதியின் அ
| விற்பனை
○ 。 U oblight
காங்கேசன்துறை வீதி,
 

Gör go Lu G3 LITT GYLL I GO) GJI:
(உயர்வகுப்புகள்) 3=60 80-6 ¬ ¬ܢ
FF。 o 3=75 ாசா (பேராதனைபல்கலைக்கழகம்) பயிற்சி-ஜி. சி. ஈ. | 1-00 செல்லையா, தலைமையாசிரியர்) 1-50 1-25
1-25 க. கந்தசாமி (புதுமைலோலன்) iնւ pe 100 , 一臀5 1-25
யவர்க வை. ஆத்மநாதசர்மா ங்கீகாரம் பெற்றவை
களிலும் கிடைக்கும்
புத்தகசாலை
uu IT għalli L. li in Gaworin.