கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாத்ரா 2001.01-06

Page 1

Poetry Journal
560T இதழ்

Page 2
நன்றி
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை
'யாத்ராவுக்கு நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்!
நாள்தொறும் நாடிமுறை செய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்
- நலன்விரும்பி
யாத்ரா கிடைக்குமிடங்கள்
இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77, தெமட்டகொட றோட், கொழும்பு - 9 பூபாலசிங்கம் புக் டிப்போ, 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11 மில்லேனியம் புக் லேண்ட் 37/14, வொக்ஷோல் லேன், கொழும்பு - 2 ஹாதி புக் டிப்போ, 79, தெமட்டகொட றோட், கொழும்பு - 9 எஸ்.எம்.பி.கொம்யுனிகேஷன், பிரதான வீதி, ஓட்டமாவடி அறிவு நூல் நிலையம், ஏறாவூர் சக்தி நூல் நிலையம், மட்டக்களப்பு நூரி புத்தகசாலை, காத்தான்குடி கோல் மாஸ்டர் கொம்யுனிகேஷன், எம்.பி.சி.எஸ். வீதி, ஓட்டமாவடி
O O O O O கோல் மாஸ்டர் அச்சகம்
திருமண அழைப்பிதழ், ரசீட் புத்தகம், லேபல்கள், மற்றும் பொலித்தீன், மரம்பேனை, துணி போன்றவற்றிலும் அச்சு வேலைகள்
எம்.பி.சி.எஸ்.வீதி, செம்மண்ணோடை, Ph: 065-57125 ஒட்டமாவடி EaΧ.065-57378

ரEதுஉசாத்தனே நூலகம் மாநகர நாஒ: நீசSை
(&፡ ' IÑ1 ; ( ; " ፌፕኘኝ፣:,ff\
.. :့်
ஆர்யாத்ரா 5
கவிதைகளுக்கான காலாண்டிதழ்
ஜனவரி - ஜூன் 2001 56tfáciológ, Longsgluth - Private Circulation Only
கவிதைகள் மொழிபெயர்ப்புக்
எம்.ஏ.நு.'மான் கவிதைகள்
சி.சிவசேகரம் ".பைஸ் அஹமத் ..பைளல் ஜின்னாஹ் ஷரிபுதீன் (பண்ணாமத்துக் கவிராயர்) அல் அஸ்"மத தம்பேகொட ஜினதாச கலைவாதி கலீல் மஞ்சுள வெடிவர்தன
?ே"-" (இப்னு அஸமத்) (8LDLD667 கவி ஸிரா அன்ட்ரெஸ் மாவை வரோதயன் (சி.சிவசேகரம்) k ഡ്രജ്ഞ ഗ്രഞ്ജിf ( மகுடேசுவரன் (ஏ.இக்பால்) பஹிமா ஜஹான் ஏ.எம்.எம்.அலி த.ஜெயசீலன் இப்னு அஸஉமத் எஸ்.நளிம் கிண்ணியா அமீர் அலி ஜெளஸி இளநெஞ்சன் முர்ஷிடீன் முல்லா அரபி ஏ.எச்.எம்.ஜிப்ரி - , அன்சார் எம் வழியாம் (ஐ 2
மீராவோடை சியாத்
ஷகீலா ராஜா திக்குவல்லை கமால் \)(ހލޮ
R JAFFNA ARy
Այ gLLLDIT6)JEQ. அறபாத
படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்பாளிகள்

Page 3
போர் அழவைத்த தாய்க்கு
உன் மகன் போரிற் படுகாயமுற்றான் நீ அழுதாய் உன் மகன் போரிற் காணாமற் போனான் ! நீ அழுதாய் உன் மகன் எதிரிகளால் கைப்பற்றப்பட்டான் நீ அழுதாய்
உன் மகன் போரில் மரித்தான்
நீ அழுதாய்
 
 
 
 

Aasr - 7 दृइ O3) (se,
* 57 ծաaծ (? T
உணர் மகனின் அசாவை அரசு ஏற்கவில்லை நீ அழுதாய் உர்ை மகனின் அசடலம் கிடைக்கவில்லை நீ அழுதாய்
(SUTsfoor ஒவ்வொரு நிச்சயமும் நிச்சயமின்மையும் உன்னை அழவைத்தன உன்னையொத்த ஒவ்வொரு தாயையும் அழ வைத்தன
என்றாலும் இன்னமும் இன்னுமொரு தாயினர் மகன் போருக்குள் போகிறான்
உன் கண்ணிர் இம்மண்ணில் மழையாய் விழுந்தது என்றாலும் வெள்ளம் பெருகவில்லை இம்மண்ணின் கொடுமைகள் அதில் அள்ளுண்ணவில்லை போரின் எசமானர்கள் அதில் மூழ்கவில்லை போர் தொடர்கிறது, போர் வளர்கிறது
தாயே, உன் கண்ணிர் போர்த் தீயை அணைக்காது
உன் கண்ணிருக்கு அணைகட்டு உன் நெஞ்சிற்கு உரமேற்று அங்கே உன் உணர்வுகளை விறகாக்கி அற உணர்வுத் தீமூட்டு இறந்த மகனை மீட்க அல்ல இருக்கின்ற மைந்தர்கள் மாளாமல் மீள உன் நெஞ்சின் நெருப்பெடுத்துப் போரைப் பொசுக்கப் பொங்கியெழு, போராடு
штфЈт - 5

Page 4
இறகு முளைத்த பறவை ----
இறக்கை இழந்த பச்சைக்கிளி நீ இளம் யுவதியாய் எம் வீட்டுக்கு வந்தாய் வாஞ்சையோடு வாரி எடுத்து V பால் பழம் ஊட்டிப் பாதுகாத்தோம் பல நாளாய்
காலையில் வீட்டினுள் இருந்து வெளிக்கிட்டு வெளியில் உலாவி விறாந்தைக் கதிரையில் இருப்பாய் மாலையில் அறைக்குள் புகுந்து என் மக்களோடு துயில்கொள்வாய் உன்னை நிலத்தில் விடாது வளர்த்தோம் வாசல் பூமரத்தில் ஏறிப் புறுபுறுத்தாய் கண்களில் உனது கவலை கொடிகட்டியது மண்டபத்துள் பறந்தாய் மரத்தில் ஏறி நின்றாய் விதியைப் பார்த்து விழிகளை நனைத்தாய் உன் விழிகளால் விண்ணை அளந்தாய் தனித்திருந்து தலைவாசலில் கீச்சிட்டாய் சிலநாள் தூரத்தில் அது எதிரொலித்து வந்தது சோர்வுப் போர்வையைச் சுழற்றி எறிந்து வீரச் சட்டையை விரித்துப் பார்த்தாய் தொடர்ந்தது உன் விளையாட்டு.
இன்று யாருக்கும் சொல்லாமல் பறந்தே போய்விட்டாய் நீ இல்லாத சோகம் நினைவை வருத்துகிறதே இறகு முளைப்பது பறப்பதற்காகத்தான் நீ அவனோடு பறந்து போனாலும் நிலைத்து வாழ்ந்து நினைவைப் பகிர்ந்திடு மகளே!
Cup.JFLT'JFU 6 or
யாத்ரா - 5
 

ஒரு முன்னணிப் படையின் இறுதிப் போராளி
- எம்.கே.எம்.ஷகப்ே -
665 aftig. If ggs. If C 1915-2000)
இரவு பகல்களென மாறிவரும் இந்த மாய இல்லத்தில் மிதந்து கொண்டிருக்கிற கனப் பொழுது நான் இறந்த காலத்தின் சுடுநீர் ஜாடியுள்ளிருந்து எதிர்காலமென்ற வெற்றுக் கோப்பைக்குள் விழுந்து கொண்டிருக்கும் ஒய்வற்ற துளி நான் தூங்குகிறேன் எழும்புகிறேன் மீண்டும் அதுரங்கிக் கொள்ள விழித்துக் கொள்கிறேன் காலமெனும் மேடையில் நானொரு பண்டைக் கால நாடகம்.
இறப்பற்று நிலைபெற்றிருப்பதற்காகவே நான் இறந்து போகிறேன்
- அலி சர்தார் ஜப்ரி (எனது பயணம்
அலி சர் தார் ஜப்ரி சுதந்திரத்துக்கு முற்பட்டதும் பிரிவினைக்குட்படாத இந்தியாவினதும் எழுத்தாளப் பரம்பரையைச் சேர்ந்தவர். 1930 களின் பலம் வாய்ந்த எழுத்தியக்கத்தின் இறுதி வளையங்களிலுள்ளவர். இந்தியாவின் முற்போக்கு எழுத்தாள முன்னணியுடன் பிரித்துப் பார்க்க முடியாதளவுக்கு இணைப்புக் கொண்டவர் இவர். பல்வேறு காரணங்களுக்காக இவருடன் இருந்த பலர் பிரிந்து சென்றுவிட்ட் போதும் கூட விடாப்பிடியாகத் தன் கொள்கையில் இருந்தவர்.
U --
ாதரா - 5 o:¬AR*
A.

Page 5
தாராளத்தனம் , மதச் சார் பிண் மை, மற்றவர்களின் சிந்தனை உணர்வின் மீதான சகிப்புத் தன்மை, இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பனவெல் லாம் எம் காலத்தேய அரசியல்வாதிகள், புத்தி ஜீவிகள் போன்று இவரிடம் வெறும் பேச்சாக மட்டுமிருக்கவில்லை.
இவரோடு இலக்கிய புத்திஜீவித்துவப் பயணம் மேற்கொண்டோர் பலர்.அவர்களில் பிரேம்சந்த், ஜோஸ், ..பைஸ் அகமத் .. பைஸ், ஸஜ்ஜாத் ஸஹிர், கிருஷன் சந்தர், இஸ்மத் ஜக்தய், முல்க் ராஜ் ஆனந்த், மஜாஸ், ஸஹரீர் லுதியான்வி, நிஸார் அக்தார், பராக் ஜோக்பூரி, கை.பி அஸ்மி, மக்தூம் முஹிதீன் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களுக்கெல்லாம் கலை வெறும் கலைக்காக மட்டுமிருக்கவில்லை. (இவர்களில் பிரேம் சந்த், முல்க் ராஜ் ஆனந்த், ஃபைஸ் அகமத் ஃபைஸ், கிருஷன் சந்தர் - தமிழில் ஓரளவு பரவலாக அறியப்பட்டவர்கள்) மிகத்திறன் வாய்ந்த கவியாளுமை கொண்டவரான ஜப்ரியின் Guflagu என்ற இலக்கிய இதழ் இலக்கிய விமர்சனத் துறையில் முதி திரை பதித்ததாகும்."காலிப், இக்பால் போன்ற கவிஞர்களில் பிடிப்பும் அவர்களின் ஆளுமைத் தாக்கங்களும் இவரிடமிருந்தன எனலாம்.
ஜப்ரி தன் கவிதையெனும் சக்திவாய்ந்த ஆயுதத்தை இரண்டு பெரும் யுத்தங்களில் ஈடுபடுத் தினார். ஒன்று, பிரிட்டிஷாருக்கெதிராக. மற்றையது. இவரும் இவரது அணியினரும் எவற்றை இந்திய இலக் கியத் திற்கு எதிரானதாகக் கண்டார்களோ முன்னைய சோவியத் யூனியன்தான் எல்லா முற்போக்காளரதும் ஆதர் சங்களுக்கு உட்பட்டிருந்தது. அதுவே அவர்களின் கனவும். ஜப்ரியும் அவரது சகாக்களும் கூட ஒரு 'செவ்விடியலையே எதிர்பார்த்து மிக அர்ப்பணிப்போடு போராடி வந்தார்கள்.
ஜப்ரி தன் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பிரகடனப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்டாகவே கழித்தவர். அதே நேரம் தன் மதத்துடனும் உறவுகளைப் (3 LJ 600fuJ6uff : இஸ் லாத்துடனானதும் மார்க் ஸியத் துடனானதுமான இவரின் இந்த இரட்டை Զ - 1) 6ւ நிலை விமர்சனங் களுக்குட்பட்டிருந்தது. ஒரு தொலைக் காட்சி நேர்காணலில் இந்த இரட்டை நிலையை குஷ்வந்த் சிங் மிகக் காரமாகச் சாடினார்.
خلار
அவற்றுக் கெதிராக.
அவரது வாழ்வின் இறுதி வருடங்களில் உருது மொழிக்கு அதைக் காப்பாற்ற வேண்டியவர்களாலும் காப்பாற்றுவோம் என்று உறுதியளித்தவர்களாலும் நேர்ந்த
கதியை எண்ணி வருத்தமுற்றிருந்தார். அம்
மொழிக்குத் தன்னாலான பங்களிப்புகளைச் செய்தும் வந்தார்.
இந்தியா - பாக்கிஸ்தானுக்கிடையிலான அமைதி உறவை அவர் பெரிதும் விரும்பியிருந்தார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சுமுக உறவை அவர் தன்னளவில் பேணிவந்தார். பிரிவினையின் ஆரம்ப காலங்களிலும் கூட இரு பக்க அமைதியை நாடியோர் ஒரு சிலர்தான். ஏன் இன்றும் கூட ஒரு சிலர்தான் அவ்வாறு விரும்புகிறார்கள். புவியியல் ரீதியில் பிளவுண்ட இரு தேசங்களுக்கிடையிலான அமைதி உறவை ஏற்படுத்த முயன்றதன் விளைவை அவர் இரு பக்கங்களிலிருந்தும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1965ம் ஆண்டு இடம்பெற்ற இந்திய பாக்கிஸ்தான் யுத்தம் மிக மோசமான உறவு நிலைகளை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவர் இந்தக் கவிதையை எழுதினார்.
லாகூரின் தோட்டங்களிலிருந்து நிறைய மலர்களைப் பறித்துக்கொண்டு நீங்கள் வாருங்கள். நாங்கள். பெனாரஸின் காலையுடனும் ஹிமாலயத்தின் சுகந்தத் தென்றலுடனும் வருகிறோம். அதன் பின்னர். விவாதிப்போம் எங்களில் யார் எதிரியென்று!
அமைதிக்கான போராளிக் கவிஞனாக வாழ்ந்து மறைந்தவர் ஜப்ரி. மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டுமென்று சகல மட்டத்திலும் விரும்பிய ஒரு மனித நேயர். மனித நேயம்தான் எந்தப் பொருள்களோ உதவிச் சாதனங்களோ இன்றி அவர் அடைந்த இலக்கு. ఇక్లి
Aijaz Syed 6öi இரங்கல் கட்டுரையைத் தழுவி b6örps): Mean Time India
யாத்ரா - 5

வெண்புறாவின் வருகைக்காகக் காத்திருந்த போது
வெண்புறாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என் வாசல் முற்றத்தில்
பருந்துதான் வந்தது முதலில் என் கோழிக் குஞ்சுகளைத் துரக்கிச் சென்றது
Uன்னர் வல்லூறு வந்து குந்தியது என் முற்றத்துத் தென்னையில் அது எறிகணை பீய்ச்சியதில் என் வீடும் வாயிலும் பிய்ந்து சிதறின என் உயிர் அழிந்தது நான் மீண்டும் அகதியானேன்
எம்.ஏ.நுஃமான்

Page 6
a m m m m s. .N. N صے
ܓܠ e O - صحي
விண்ணப்பம் ~പ്ര っマ^ーーーーーー
Na sa N - == -- Tushnson ஜஹான)
ཡོད། ། 一ーつ
முன்பு போல
எதுவித அறிமுகமுமற்றவளாக நான் போய் விடுகிறேன் உன் மனதிலெனக்கு நன்மைகள் கொண்டோ தீமைகள் கொண்டோ தீர்ப்பெழுதி விடாதே
உய்த்துணர்வதால் மட்டுமே தெரிந்து கொள்ளத் தக்க துயரங்களின் வலியை நானுனக்கு உணர்த்திக் காட்ட முடியாது நிகழ்வுகளை விUரித்துச் சொல்வதனால் சாக்காடாகிப்போன வாழ்வின் வேதனையை வெளிப்படுத்தவுமேலாது
உன் மனத்திரையினூடு சட்டமிட்டுப் பார்க்கும் எல்லைகள் உள்ள் வரை, ":
எனது குரலின் நியாயத்தை நிபுணர முழயாது. அனைத்துப் பூதங்களுக்கும் பயந்தவளாய் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மெளனமாய்த் தலையசைப்பவளாய் எதிர்த்துச் சொல்ல எந்த வார்த்தைக்கும் உரிமையற்றவளாய் தனதினத்தை மாத்திரமே நேசிப்Uவளாய் இருக்க வேண்டுமென எனக்குச் சாசனமேதுமில்லையே
உன் கொள்கைகளின் வழியே யாவரும் நடக்கவோ நீ வெறுப்பவைகளை மற்றவரும் வெறுக்கவோ அல்லது .
வேண்டாம் , உனக்கிவைகளைக் ớt, [DC90(2U[T95) அறிவிலும் ஆற்றல்களிலும் முதன்மையானவன் நீ அன்றியும் எனது மதிப்பு மிக்கவன்
யாத்ரா - 5
 
 

உனது உரையாடலின் தொனி நான் தவறிழைத்து விட்டதென உணர்த்திப் போவது அறிவாயா செய்யாததொன்றுக்காக உன்னெதிரில் தண்டனை பெற்ற உள்ளமெனது நீ அறிந்தவைகளுக்கு அப்பாலுள்ள கறைபடியாத ஆத்மாவின் கதையெனது உன் மனதின் பதிவுகளை மாற்றிக் கொள்வாயாக
நாளை எந்தவித அறிமுகமுமற்றவளாக நான் போய்விடுகிறேன் உனதுள்ளத்தில் நன்மைகள் கொண்டோ தீமைகள் கொண்டோ எனக்குத் தீர்ப்பெழுதி விடாதிருப்பாயாக
யாத்ரா - 5
ൈ

Page 7
'யாத்ரா-2' அறிமுக விழாக்கள் 16, 1706-2000 ந் திகதிகளில் கல் முனை, அக் கரைப் பற்று, மருதமுனை ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருதமுனையில் தங்கியிருந்த நாம் 16ந் திகதி காலை புலவர் மணியைச் சந் தரித துவிட் டு அன்றைய தினம் கல்முனையில் முழு நாள் நிகழ்சிகளில் கலந்து கொண்டோம். மீண்டும் மருதமுனை திரும்பினோம்.
அன்று பிற்பகல் புலவர்மணி அவர்கள் தன் மனைவியிடம் ‘என் மக்கள் எங்கே? என்று கேட்டிருக்கிறார். "சூழவும் இருக்கின்ற உங்கள் மக்கள் மத்தியில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அவர் பதில் சொல்ல, "நான் சொந்த மக்களைக் கேட்கவில் லை, வந்த மக் களைக் கேட்கிறேன்' என்றிருக்கிறார் புலவர்மணி. நலிந்திருந்த நிலையிலும் நம்மை சொந்த மக் களாக நினைத து விசாரித்த புலவர்மனியின் அன்பை எண்ணி மனசு சிலிர்த்தது.
17ந் திகதி காலை புலவர்மணியின் முன்னால் அமர்ந்து நாம் காலை உணவு சாப்பிட்டோம். அவ்வேளை ஒரு பழைய செய்யுளின் இறுதி வரியை ஞாபகப்படுத்த அல் அஸ"மத்தும் ஜின்னாவும் பிரயத் தனப்பட்ட போது அதை நிறைவு செய்து கொடுத்து புலவர்மணி நம்மை ஆச்சரியத் துக்குள்ளாக்கினார்.
ஐந்து மாதங்கள் கழித்து அவரை நாம் சந்தித்த அதே திகதியில் அவர் மறைந்த செய்தி வந்தது. பாசம் மிக்க ஒரு தந்தையை இழந்த தவிப்பு மனசை ஆட்கொண்டது. அவரது வாழ்வின் இறுதிக் காலத்தில் சில மணித்தியாலங்களை அவருடன் கழித்ததைப் பேறாகக் கருதுகிறோம்.
படங்களில்:- புலவர்மணி, அவள் துணைவி, அல் அஸ"மத், கலைவாதி கலீல், 'யாத்ரா ஆசிரியர். முதல்படம் தவிர்ந்த ஏனைய மூன்று படங்களையும் எடுத் தவர் புலவர் மணியின் புதல் வர் ஜின் னாஹற் வடிரிபுத்தீன்.
 

கவிஞன் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறான் என்பதை மெய்ப்பிப்பதைப் போல் நளிமின் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. போர், சிங்கள ராணுவ, தமிழ் விடுதலை இயக்க முற்றுகை போன்ற அடக்கு முறைகளை எதிர் கொண்டு வாழ்ந்து வரும் ஒரு இளைஞனின் முதிர்ந்த வெளிப்பாடுதான் இத்தொகுப்பு. ஓர் அழகிய கிராமத்தின் சிதிலங்களுக்கிடையேயும் இடிபாடுகளுக் கிடையேயும் ஆக் ரோஷமான கவிதைகளும் புதையுண்டு போயுள்ளன. அந்தக் கவிதைகளின் காயங்களைத் துடைத்து, அதன் மொழியிலேயே அதன் துயரங் களைப் பேசவைப்பவன் தான் கவிஞன். அப்பேர்ப்பட்ட பிரயத்தனமொன்றை நளிம் செய்திருக்கிறார்.
அழகிய ஓவியங்கள் சிதைக்கப்படும் ப்ோது, கருத்தாழமிக்க ஒரு ரசிகனின் கண்ணிர், அந்த ஒவியங்களுக்கு உயிர் தருகின்றது. சிதிலமடைந்து விட்ட ஒரு வாழ்வின் உயிர்ப்பை அர்த்தப்படுத்துகின்றன இந்தக் கவிதைகள்.
நளிம், தேடல் மிகுந்த பரந்த வாசகன். கவிதை, நவீன ஓவியம்- இரண்டு தளங்களையும் உணர்வு ரீதியாக வளர்த்தெடுத்து வருபவர். வளர்ந்து வரும் இக்கவிஞனின் பலமும் நிவர்த்திக்கப்படக் கூடிய பலஹினங்களும் இத்தொகுதி மூலம் இனங் காணப்படுகின்றன.
ஒட்டமாவடி அறபாத்
யாத்ரா - 5
本

Page 8
O2)
ஜனநாயகம் என்றால் அடக்குமுறை என வரைவிலக்கணம் தந்துள்ள ஒரு தேசத்தில் வாழ்ந்து கொண்டு, காவியுடையின் இனவாதக் கூச்சலையும் உரிமைகள் கோரும் போராட் டதி தையும் அதற்கெதிரானோரின் காட்டுக் கூத்தையும் தன் கவிதையில் கேலிக்குள்ளாக்குவதற்கு மிகுந்த ஒர்மம் தேவை.
யாருக்கும் முதுகு சொறியாத அபார நெஞ்சுறுதி கொண்ட சில கவிதைகளை இத்தொகுப்பில் தரிசிக்க முடிகிறது. "04-02
1999', 'வக்கிரத்தின் உக்கிரத்தில், ‘சுதந்திரம்', ‘இன்னும் எழுதாத அந்தக் கவிதை’, ‘மூன்றாமவனின் புலம்பல்,
ஆதிக்கம்', 'குரைக்க ஒரு நாய் வேண்டும், போன்ற கவிதைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
விரிசலின் விசாலம்’ என்ற கவிதை 90களில் ஏககாலத்தில், வாழைச்சேனை மீயாணி குளச் சந்தியில் ஆயுதப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம் புத்தி ஜீவிகள் (அரசாங்க அதிபர் (எழுத்தாளர்), உதவி அரசாங்க அதிபர், சட்டத்தரணி, பாடசாலை அதிபர்) பற்றிய கவிதையில் மட்டும் வாசகனுக்குப் பலத்த மயக்கம் ஏற்படுகிறது. இந்தக் கவிதை சொல்லும் ஓராயிரம் துன்பவியல், இழப்பு, பரிதவிப்பு- அத்தனை உணர்வுகளையும் அப்பிரதேசத்து மக்களும் அந்நிகழ்வு நடந்தேறிய போது வாழ்ந்த மக்களுமே அறிவீர். இக்கவிதைக்கு அடிக்குறிப்பிட்டு, புரியும்படி சொல்லியிருக்கலாம் அல்லது முன்னுரையிலாவது சொல்லியிருக்கலாம் என் பது எனது கருதி து. எனினும் கவிதைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சோக நிழல், மண்ணில் ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சதி துளிர் ள விதையைப் போல இக்குறைகளையும் மீறி நாற்றுக் கட்டுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
சில கவிதைகள் நளிமின் பயில் நிலை உணர் வினைப் பிரதிபலிக் கின்றன. சோலைக்கிளியின் கவிதையில் பரிச்சயம் கொண்டோருக்கு அவரின் கவிதைகளை சட்டென நினைவூட்டவல்ல கவிதைகளையும் தந்துதான் இருக்கிறார். இது 90களுக்குப்
لجير
பின் கிழக்கில் எழுதத் தொடங்கிய அநேக இளங் கவிஞர்களிடம் காணப்படும் பலவீனமே. இதைத் தவிர்க்க முடியாது.
எனினும் பிற் காலத்தில் நளிமின் கவிதைகள், கவிதை வெளிப்பாட்டுத் தளம், பொருளடக்கம், சொல் நேர்த்தி போன்ற இசைவுகளில் தனித தனி மையுடன் ஜொலிப்பதையும் ஈண்டு குறிப்பிடாமல் இருக்க முடியாது.
சில கவிதைகள் பலஸ்தீன எல்லைப் புறத்துக் கவிஞர்களை நினைவுபூட்டி நிற்கின்றன.
கவிதைகள் சிறிய வடிவத்தில் பெரிய செயப் தி யைச் சொல் வன. கவிதை செய்யப்படுவதில்லை. அது ஒரு பிரவாக நதி, ஓர் உந்துதல். மனசின் உள்ளறையில் இருந்து ஒரு உதை. அது ஒரு அற்புதமான கவிதையாகப் பிறக்கிறது. இந்த உணர்வில் நின்று ரசிக்கத்தக்க கவிதைகளையும் நளிமின் தொகுப்பில் பார்க்கக் கிடைக்கிறது. நளிம் கவிதையின் மொழியில் இன்னும் அதிக கரிசனை எடுக்க வேண்டும். உடைத்துப் போட்டால் குறிப்புகள் என எண்ணுமளவிற்கு- கவிதையை மலினப் படுத்துவதும் வாசிக்க வாசிக்க ஒன்றுமே விளங்காமல் சிணி டைப் பியப் த துக் கொள்ளும்படியும் கவிதைகள் இருக்கக்
கூடாது.
எனினும் பத்து வரிக்குள் வழவழாவென்று கிறுக்குவதை மூன்று வரிக்குள் மொழியின் வசியத்தால் மனதில் நிற்கும் அழகிய கவிதையாகச் செப்பனிடலாம். அப்படிச் செதுக்க வேண்டிய ஆரம்ப நிலைக் கவிதைகள் உள்ளிட்ட அண்மைக் காலக் கவிதைகளும் இந்தப் பூரணத்துவத்தை அவாவி நிற்கின்றன.
புதுக்கவிதைக்கு அர்த்தமுள்ள கருத்துக் கணிப்பீட்டைத் தந்திருக்கிறார் மூத்த கவிஞர் அல்-அஸஉமத். அவர் முன்னுரையில் குறிப்பிடுவது போல அனுபவத்தை மட்டும் இந்தக் கவிதைகள் வெளிப்படுத்துவதால் ஒரு முதிய கவிஞனின் பரிணாமப் படியை இந்த இளையவர் பெற்றிருக்கிறார். இது இன்னும் செழுமையடைந்து ஓங்கி வளர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. * யாத்ரா - 5

G3)
தமிழ்ச் சங்க பாரதிக்கு என்ன பயம்
- மாவை வரோதயன்
அச்சம் தவிர் ஆண்மை தவறேல் என்று சொன்ன பாரதியை பிச்சைக் கிழவன் என்றா நினைத்து பொல்லைக் கையிற் கொடுத்திர் பச்சைத் தமிழில் பாக்கள் வடித்து பாமரர்கள் மனதில் இச்சை நிகர்த்து வாழ்வோன் கரத்தில் ஏனோ பொல்லைக் கொடுத்தீர்
முப்பத்தொன்பது வயதில் மரணம் முந்திக் கொண்ட கவியை செப்பம் செய்து வடித்த சிலையில் - ஏன் சேர்த்து வைத்திர் தடியை தப்புத் தண்டா செய்தார் தமையும் தட்டிக் கேட்டுக் கவியால் நற்பண்பூட்டியே நிமிர்ந்தும் நடப்பான் நாட்டில் யார்க்கும் பயமோ
வெற்றுக் கையை வீசி நடந்து வலிமை கொன் மேனி கற்றுத் தந்த ஞானத்துடனே கவிதை ஊறுங் கேணி முற்றிப் போன நோயில் தளர்ந்து முதுமை கண்டதில்லை சுற்றி வந்து தாக்கும் விலங்கில் சுழற்றத் தேவை யில்லை
வெள்ள வத்தை தமிழ்ச்சங் கத்திர் வேண்டு கின்றேன் உம்மை - நம் உள்ளம் வென்ற மகா கவிக்கும் ஊறாய்த் தோன்றும் பொல்லை மெள்ள நீக்கி மிடுக்கோன் தேடும் மின்னல் தீச்செண் டொன்றை உள்ளங் கையில் கொடுத்தால் பாரதி
உன்மச் ாங்கள் சீய்ப்பான் ---
-னமத த ள் தீய் *ԾՋիto
யாத்ரா - 5

Page 9
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அல்லாமா இக்பால் இவ்வுலகை விட்டுப் பிரியுந் தறுவாயில் உருது இலக்கிய வானில் | தோன்றிய ஃபைஸ் அஹமத் ஃபைஸ் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பாதியில் சிரேஷ்ட உருதுக்
கவிஞராகத் திகழ்ந்தவர்
ஃபைஸின் பெயர் 1984ல் - அவரது மறைவுக்கு முன் - நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, பலஸ்தீனப் போராட்டத்துடன் அவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக சக்திவாய்ந்த சர்வதேசக் | கும்பலினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டமை அதிகம் அறியப்படாத செய்தி
முதலில் அறபு இலக்கியத்திலும் பின்னர் ஆங்கில இலக்கியத்திலும் எம்.ஏ. பட்டம் பெற்ற ஃபைஸ், 50களில் பாக்கிஸ்தான் டைம்ஸ்' ஆசிரியராகவும் 1984 நவம்பரில் அவரது திடீர் மறைவு நிகழும் போது, ஆப்ரோ-ஆசிய எழுத்துக்களின் வெளியீடான "லோட்டஸ்' சஞ்சிகையின் | பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -ل
ஃபைஸ் அஹமத் ஃபைஸ்
தமிழில் - பண்ணாமத்துக் கவிராயர்
சினாயின் பள்ளத் தாக்கில் மீண்டும்
சிதறித் தெறிக்குது மின்னல் -
சுவாலை வீசும் எதார்த்தத்தின் அனற்பொறி மரணத்தூது. எதார்த்தக் காட்சி. கானுதற்கு அழைப்பு விடுக்குது
翰 வேத வெளிப்பாடு இறங்கும் தருணம்
விழியே - உன்னால் எதிர் கொள்ள முடியுமா
வேதனை களையும் கொலைகாரா வாழ்வுக்குப் பின்னால் வரவிருப்பதன் பாழ்வெளியின் பிரதிபிம்பமாய் பார்". இறாம் தோட்டம்
காதல் ஞானமே
நித்தியத்துவம் நோக்கி நடப்பதற்குத் துணிவுண்டா உனக்கு
யாத்ரா - 5
 
 
 

சினாயின் பள்ளத் தாக்கில மீண்டும் சிதறித் தெறிக்குது மின்னல் -
இதயத்தை மீண்டும் துய்யதாக்கு
உனக்கு மெனக்கு மிப் பீடப்பலகையில் புதிய கட்டளை - வெளிப்பாடு வரலாம்
கொடுமை யிழைப்பதே பூமிப் பந்தின்
மேட்டுக் குடியினர் கொள்கை
பணிதல் என்னும் வழக்கத்தை மாற்றப் பணியாமைக் கட்டளை வருகை அவசியம்
மண்ணுைலகுக்காய். பஞ்சைப் பனாதி இதயங்களுக்காய் இறங்கப் போகும் வார்த்தையின் முன்னுரைதான் இச் சுடரொளி
பூர்வ காலச் செய்தியைச் செவி கொடு
உதவியற்ற இளமைகள்தான் எச்சரிப்போர் - எதிர்வு கூறுவோர்
அதிகாரம் படைத்த கொடுங் கோலர்கள் அமல்களின் பட்டோலை சரிபார்த்துக் கொள்ளட்டும்
துன்பத்தில் உழலும் மக்கள் கூட்டம் வெகுண்டெழுகையில்
விலங்கு மாட்டலும் தூக்கிலிடலுமே நியதிகளாகும்
முடியா தினி எவராலு மிங்கே
கொடும் பாவிகளைக் காப்பாற்றுதற்கு
இறுதி நாளின் பயங்கர இரைச்சல் எதிர் பார்த்திருக்கும் இறுதித் தீர்ப்பு வெகுமதி , தண்டனை
எல்லாமே இங்குதான் (gങ്ങ് ܗܝ
۔۔۔ اس حصلى الله عليه وسلم
'பைஸ், பலஸ்தீனில் யஸர் அறபாத்துடன் தங்கியிருந்த நாட்களில் எழுதிய கவிதைகளின் ஸாரே வாடியே ஸினா - சினாயின் பள்ளத் தாக்கில் - தொகுதியில் இடம்பெற்றுள்ள நுஸ்க் ஹை வ.'பா' என்ற கவிதையின் ஆங்கில வழித் தமிழாக்கம்.
இாழ்ப்பா
யாத்ரா - 5 本

Page 10
Ge)
பார்க்கப் போகிறோம்
ஃபைஸ் அஹமத் ஃபைஸ்
நித்தியத்துவப் பலகையில் உள்ள நிகழ்வுகள் நிச்சயம்
பார்க்கப் போகிறோம்
ஒடுக்கு முறையின் கொடுங்கோன்மையின் சிகரங்கள் பொடிந்து பஞ்சாய்ப் பறப்பதை ஒடுக்கப் பட்டோர் பாதங்களின் கீழ் பூமியதிர்ந்து நடுநடுங்குவதை கொடுங் கோலர் தலையில் இடிவிழுவதை பூமி யென்னும் கஃபாவிலிருந்து விக்கிரகங்கள் வெளியேற்றப் படுவதை மகுடாசனங்கள் குப்புற வீழ்வதை
மாளிகைகள் தரைமட்டமாவதை
நித்தியத்துவப் பலகையில் உள்ள நிகழ்வுகள் நிச்சயம் ܀
பார்க்கப் போகிறோம்
கஃபாவிலிருந்து விரட்டப் பட்டோர் அதிகார பீடம் ஏறியமர்வர் கண்ணனுக்குத் தெரியாதெங்கு மிருப்போன் திரு நாமமொன்றே எஞ்சி யிருக்கும் காட்சியும் பார்வை யாளனுமானோன் திருச் சன்னிதானம் பரவி நிலைக்கும் அனல் ஹக் கென்ற எதிரொலி கேட்கும் அவனாட்சியமைய நானும் நீயும் அந்நாள் பூமியை ஆளத் தொடங்குவோம்
நித்தியத்துவப் பலகையில் உள்ள நிகழ்வுகள் நிச்சயம் பார்க்கப் போகிறோம்
"ஸாரெ வாடியே ஸ்னா’ தொகுதியில் இடம்பெற்றுள்ள இக்கவிதை ‘குல்லுமன் அலைஹா ஃபான். வயப்கா வஜ்ஹ" ரப்பிக துல் ஜலாலி வல் இக்ராம் என்ற குர்ஆன் வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. 'ஹம் தெக்ஹாயென் கே' - பார்க்கப் போகிறோம் - என்ற தலைப்பில் பிரசித்தம் பெற்ற கவிதை.
யாத்ரா - 5

éGlas உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாடு 1999ல் சென்னையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஏழாம் மாநாடு மலேசியாவில் 2002ல் நடைபெறலாம் என்ற கொள்கையளவிலான அறிவிப்பு சென்னை மாநாட்டில் விடுக்கப்பட்டது.
முழு உலகுக்குமான இஸ்லாமியத் தமிழ் எழுச்சி, 1966ல் இலங்கையின் மருதமுனைக் கிராமத்தில் ஏற்பட்டது. இதற்கு முன்னரும் ஆங்காங்கு இலங்கையில் இதையொட்டிய விழாக்கள் நடைபெற்றிருந்த போதும் மருதமுனை மாநாட்டின் தொடர்ச்சியாகவே உலக அளவிலான நோக்கு தோற்றமானது.
1979ல் நான்காம் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. மூன்று நாட்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நினைவுகள் இன்னும் பசுமையாக
நெஞ்சில் இருக்கின்றன.
சென்னையில் நடைபெற்ற ஆறாம் மாநாட்டின் பின்னர் அகில இலங்கை ரீதியாக ஒரு மாநாட்டை நடத்தவதற்கான முன்முயற்சிகள் ஒரு சாரால் மேற்கொள்ளப்பட்டன. மூத்த இலக்கியவாதிகள் பலரும் இன்னும் மிகுந்த ஆள்வத்தடன் இருக்கின்றனர். நவமணி பத்திரிகையில் அவ்வப்போது இவ்வாறான ஓர் இலக்கிய மாநாடு நடைபெறுவது குறித்த ஆதங்கக் குறிப்புகள் வெளிவருகின்றன. முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஒரு சர்வதேச ரீதியான மாநாட்டை நடத்துவது பற்றியும் சிலரால் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சர் அவர்களும் இப்படியொரு மாநாட்டை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.
இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் பல்வேற காரணங்களால் இடைநடுவே நிற்பதை அறியமுடிகிறது. ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவது என்பது இலகுவான காரியமல்ல. அதே வேளை முயற்சித்தால் முடியாத ஒரு காரியமுமல்ல 2002ல் மலேசியாவில் ஏழாம் மாநாடு நடைபெறமாக இருந்தால் 2003ல் இலங்கையில் இம்மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். நடைபெறாதவிடத்து அடுத்த வருடமே அதனை நடத்தத் துணியலாம்.
சொந்த இலாபங்களுக்காகவோ சுய வெளிச்சங்களுக்காகவோ மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளாத இலக்கியத்தோடு சம்பந்தமுள்ள, இயங்க முடிந்த ஒரு குழுவை அமைப்பதன் மூலம் மட்டுமே வெற்றிகரமான இலக்கிய மாநாட்டை நடத்த сурц2uццb.
அமைச்சர் அவர்களின் நேரடிப் பார்வையில் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிலேயே இதன் செயற்பாடுகளுக்கான காரியாலயம் அமைந்தால் விடயங்களை முன்னெடுத்தச் செல்வதில் உள்ள பல தடைகளை நீக்கி விடலாம். வெற்றிகரமான மாநாட்டையும் நடத்தி விடலாம்.
இந்த வருடத்தக்குள் அந்த நல்ல செய்தி வருமா?
مجيمس.
யாத்ரா - 5 本

Page 11
鶯
த.ஜெயசசீலன்
நீ வருவாய் என்று நினைத்தென் மனப்பூவில்
வாசம் பரவ நின்றேன் வாடவைத்தாய் ஏன்
ജ്രസ്ത്ര 淄 ஏதோ ஒரு வெறுமை எணைத் தகர்க்க
റ്റ്രമേ മസ്ക, മ്ഗ്ഗ ബff, 6Uസ്ത്ര உனக்காகக் காத்திருந்து கால்கள் களைப்பதிலும் சுகத்துயரைப் பார்த்தேன் நீ வராத பாதையெலாந் தீப்பிடிக்க வேர்த்தேன் எந்தன் பூ மனசு தீய்ந்தெரிந்த வாசம் உன் வீட்டு வாசலுக்கு வந்ததுவா என் தவிப்பு அனல் மூச்சுன் இருதயத்தை முட்டலையா என் துடிப்பும் புரியலையா ஏய். உந்தன் குளிர் மூச்சில் கொஞ்சம் அனுப்பது என் தவிப்பணலை <9ഞaസ്ക1'00
உன் வீட்டின் மேற்செல்லும் ஒரு மேகத் துண்டை நான் நின்றிருக்கும் இடம் நோக்கி நீ திருப்பு அது பொழிந்து
நீ வராத பாதையதன் நெருப்பை அணைக்கட்டும்
உன் சூழல் முகில் பட்டென் உயிர் வலிகள் ஆறட்டும்
யாத்ரா - 5

கே.எஸ்.சிவகுமாரன்
缀
விமர்சனம் என்ற பதத்தை நான் பயன்படுத்த விரும்புவதில்லை. இதற்குக் N காரணம்' கிரிட்டிசிஸம்" என்ற ஆங்கிலப் பதத்திற்குச் சமமானதாகத் தமிழில் இந்த ஆங்கிலப் பதம் உபயோகிக்கப்படுவதுவே. ஆங்கில அகராதியில் N ’கிரிட்டிசிஸம் என்றால் ‘கண்டனம் என்று பொருள்படும். ஆயினும் இலக்கியத்திலே N' கிரிட்டிசிஸம் என்றால், அது சீர்தூக்கி, நயம் - போதாமை போன்றவற்றை N அளவிட்டு மதிப்பீடு செய்வதைக் குறித்து நிற்கும். திறன் சக ஆய்வு சமன் திறனாய்வு திறனாய்வு என்றால் வெறுமனே ஒரு படைப்பின் நயத்தை மாத்திரம் |n $২২
&
புகழ்ந்து பேசுவது என்றாகாது. நயங்காணலை ஆங்கிலத்தில் 'அப்ரிஷியேஷன் என்பார்கள். மாணவர்கள் இரண்டாம் நிலைப் படிப்பை மேற்கொள்ளும் போது, பாடல்களுக்கு நயங்காணக் கேட்கப்படுவதுண்டு. ஏனெனில், ஆய்வு செய்யுமுன்னர் N குறிப்பிட்ட படைப்பை இரசிக்க முதலில் பழகிக் கொள்ள வேண்டும். N இரசனையின்றித் திறனாய்வு இல்லை. இரசிப்பு இலயிப்பின்றி எழுந்தமானமாக, N சண்டமாருதத்துடன் தமது 'வாசிப்பைத் திணிக்க முற்படுவோர் திறனாய்வாளர் N அல்லர். அவர்கள் வெறுமனே கண்டனக்காரர். விமர்சகர்கள் எனலாம் என்பது N N எனது துணிபு.
"விமர்சனம்' என்ற பெயரிலே தற்சமயம் கலகக்காரர் சிலர் "ஆழம்கான முற்பட்டு, குட்டை குழப்பி அராஜகப் போக்கைக் கடைப்பிடித்துத் தமிமைப் பெரிய விமர்சகர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். N இவற்றிற்கு மாறாக, யான் எனது பத்தி எழுத்துக்கள் மூலம் மரபுவழித் திறனாய்வு N முறைகளைக் கையாண்டு வருகிறேன். எனது திறனாய்வுப் பார்வைகள் மேலை Nநாட்டுத் திறனாய்வு அணுகு முறைகளைச் சார்ந்தவை. N இந்த அடிப்படையிலே, கவிதையை நான் எவ்வாறு நுகர்கிறேன், இரசிக்கிறேன்,
திறனாய்வு செய்கிறேன் என்பதை விளக்கிக் காட்ட இங்கு முயல்கிறேன்.
முதலில் சில அடிப்படைகள்
கவிதை மொழி இறுக்கமானது. கூர்மை முனைப்பைக் கொண்டது. ஒரு ২ கவிதையை முதன்முதலிற் படித்த போதே அது என்ன கூறுகின்றது என்பதை Nநாம் பூரணமாய் அறிந்து கொண்டோம் என்று சொல்வதற்கில்லை. எமக்குக் N கவிதை புரியவில்லை என்றால் நாம் வெளி ஒதுக்கி விடுகிறோம். இது தப்பு. 'கவிதை' என்ற பெயரில் எழுதப்படும் மட்டரகமான சொற் கூட்டங்களை,
Nநியாயமுண்டு. யாத்ரா 5 本

Page 12
அதே வேளையில், நல்ல கவிதைகள் என்று எமது பயிற்சியும் தேர்ச்சியும் காரணமாக நாம் தேர் நீ தெடுக் கும் கவிதைகளை முதலில் படித்து, மறுபடியும் படித்துத் திரும்பத் திரும்பப் படித்துப் பார் கி கும் போதுதான் அவற் றரினி வெளிப் படையான அர்தி தங்களும் உள்ளர்த்தங்களும் படிப்படியாக, மெல்ல, மெல்ல எமது உணர்வில் தெறித்து எமது வெளிப்பாடாக, திறனாய்வாக வந்து விழும். கவிதையின் மொழிப் பயன்பாட்டை நாம் நுகர்ந்து வெளிக் கொணரும் போது ஆக் கபூர்வமான திறனாய்வை நாம் செய்கிறோம் எனலாம்.
கவிதை மொழியின் வார்த்தைகள் அனைத்தையும் தனித் தனியாகவும் - கூட்டாகவும் நாம் புரிந்து கொண்டாலுங்கூட, கவிதை என்ன கூறுகின்றது என்று உடனடியாகவே புரிந்து கொள்ள முடியாது போகிறது.
கவிஞன் தான் தீர்மானித்தபடி, காரண காரியங்களுடன் அந்தந்த இடங்களில் அந்தந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறான். இவ்வாறு அவன் ஏன் செய்கிறான் என்பது எமக்கு உடனடியாகவே முதல் வாசிப்பின் போது தெரியாமற் போகலாம்.
ஒரு கவிதையை நாம் படித்துச் சுவைக்கும்
போது அதன் வெளிப்படை அர்த்தத்தையும் ஆழமான அர்த்தத்தையும் விளங்கிக் கொள்ளல் அவசியம். கவிதையைத் திறனாய்வு செய்யும் பொழுது நம்முடைய சொநி த மனப் பதிவுகள் அலி லது எதிர்வினைகள் என்ன என்பதை முதலில் விளக்கிக் கூற வேண்டும். கவிதையை நாம் மனதால் மாத்திரமன்றி வாய் விட்டும் உச்சரித்துப் படிக்க வேண்டும். அவ்விதம் வாசிக்கும் போது கவிதையின் ஒலிநயத்தை, ஒத்திசையை நமது மனதும் கேட்டுக் கிரகிக்க வேண்டும்.
சாதாரணமாக, நாம் உரைநடையை வாசிப்பதற்கும் கவிதையை வாய்விட்டு வாசிப்பதற்குமிடையே வித்தியாசங்கள் உள்ளன. எனவே, கவிதையை எவ்வாறு வாய்விட்டுப் படித்துப் பார்ப்பது என்று முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு நாம் உரத்து வாசிக்கும் போது கவிஞன் பாவிக்கும் உன்னதச் சொற்கள் எம் மனதில் ஒரு மனப்பதிவை ஆக்கித் தருகின்றன.
خر
இந்தப் பின்னணியிலே கவிதையைப் புரிந்து கொள்வதற்கு நாம் சில பகுப்பாய்வு முறைகளை மேற்கொள்ளலாம். அவற்றைச் சில கவிதை உறுதிப் பொருள்களின் அடிப்படையில் வகுத்துக் கொள்வோம். இங்கு ஆங்கிலக் கவிதைகள் எவ்வாறு பகுப்பாய்வுக்கு உட்படுகின்றன என்பதைப் பார்ப்போமாயின், அந்த முறைகள் தமிழ்க் கவிதைத் திறனாய்வுக்கும் உதவுவதை நாம் 35(T600T6)Tib.
இந்தத் தலைப்புக்களாவன: சொல் நடை சொற்றேர்வு - Diction தொனி- த்வனி, ஒலிப்பண்பு, குரலின் பண்பு - Tone 6T605600T 360)u IL - Association பொருள் தெளிவின்மை - Ambiguity உவமை உருவக அணிவகை, நினைவுக் காட்சி, மனத்தகத் தோற்றம் - Imagery எதிர் வினை - எதிர்ச்சொல் - Response
இப்பதங்கள் எவற்றைக் குறிக்கின்றன?
கவிஞன் பயன்படுத்தும் தேர்ந்த சொற்களை நாம் சொற்றேர்வு என்போம். கவிஞனின் சொற்றொகுதி வளத்துக்கேற்ப ( Vocabulary) 9 6J 6õi luuli 60ĩ Lu (Bg5 g5! LĎ சொற்களும் அமையும். அவ்வாறு கவிஞன் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் சொற்களின் தன்மைக்கேற்பக் கவிதையின் தனித்துவம், உன்னதம் அமையும். இக்கவிதை உன்னத
நிலைகளை நம் முனர் கொணி டு வருவதாகவும் அமையலாம். அன்றில், சாதாரண கொச்சை வழக் கிலும்
அச்சொற்றேர்வு அமையலாம். அன்றில், யதார்த்த - நடைமுறைத் தன்மையைக் குறிப்பவையாகவும் அவை அமையலாம். அல்லது காத்திரமானதொரு நிகழ்ச்சியைச் சித்தரிப்பதாக அமையலாம். அல்லாவிட்டால் இலகு நகை கொணி டதாக அமையவுங்கூடும்.
கவிதையில் கவிஞன் உபயோகிக்கும் சொற்றேர்விலேயே, அக்கவிதை எம்மிடையே எழுப்பும் சலனம் உருவாகிறது. இதனால்தான் கவிஞனின் சொற்றேர்வு எம்மிடையே ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து கொண்டே நாம் அக்கவிதையை அணுகவேண்டும். அசாதாரணமாகத் தென்படும் சொற்களை இனங்கண்டு, அவற்றின் மூலம் உணர்த்துவிக்கப்படும் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
யாத்ரா - 5

வாழ்க்கைப் புகையிரதம்
ஊதியம் பெற்ற தினம் biljNTİQâb UDHöÜ L|60|DöhbuUğLİ) g|P(HLİ) தலையில் தீப்பிடித்த சக்தியுடனர். பெருமூச்சுக்களுட6ர். bDLâ. Läi. bULå. Låblthblls
நிறுத்தப்படும் பின்வரும் foLD6DLLIAChblfst) -
bTČiblJGOOTL (56UDL பால்காரணின் வீடு GLUT 56UDL
b) TbOtis Lif
55 JDbDbDOT
சலு5ர் bis (HfGODILDLIJTGITrfbŪT 6Th புக்கி.
புகையிரதம் களைப்புடன் நிறுத்தப்படும் வாடகை வீட்டின் முன் fill blush
சிங்கள மூலம் : தம்பேகொட ஜினதாஸ் தமிழில் : இப்னு அளல 9மத்
யாத்ரா - 5
G)
அடுத்ததாக த்வனி- தொனி பற்றிப் பார்ப்போம். உண்மையிலேயே இது ஒலிப் பண்பை ஒட்டியது. கவிஞனின் சொற்றேர்வின் விளைவே தொனி- த்வனி. கவிஞனின் குரலை நாம் இங்கு காணலாம். தனது கவிதைப் பொருள் தொடர்பாக, கவிஞன் எத்தகைய சார் பை எண்ணத் தைக் கொணி டுள்ளானி என்பது இங்கு முக்கியமாகிறது. அதே சமயம் நாம் இன்னொன்றையும் மனதிற் கொள்ள வேண்டும்.
அதாவது, கவிதையின் ஆரம்பத்தில் கவிஞன், குறிப்பிட்ட ஒரு கருத்தை வெளிப்படுத்துபவனாகவும் பின்பு படிப்படியாக தனது மூல எண்ணத் தை மாற்றிக் கொள்பவனாகவும் இருக்கலாம். இன்னும் விளக்கமாகக் கூறினால், முழுக் கவிதையிலுமே ஒரே சீரான எண்ணத் தொடர் இருக்கும் என்று சொல்ல முடியாது. சில வேளைகளில் வரிக்கு வரி மாறிக் கொண்டே போவதாகவும் அமையும். எனவேதான், கவிஞனின் தொனி தொடர்பான சொற்களை நாம் மிகவும் நுட்பமாக அவற்றின் விகற் பங்களுடன் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
இனி, எஸோஸியேஷன் எனப்படும் எண்ண இயைபுக்கு வருவோம். அதாவது, அளந்தெடுத்துக் கவிஞன் சொற்களைத் தேர்ந்து பயன்படுத்துகிறான் என்பதை நாம் அறிவோம். எனவே சொற்களை நாம் மிகவும் நுண்ணியதாக அவதானித்தல் வேண்டும். சில சொற்கள் இயல்பாகவே நம் கவனத்தை ஈர்க்கின்றன. இது ஏனெனில் எமது எண்ணம் கவிஞனின் எண்ணத்துடன் இயைபுடையதாக இணைகிறது. அதே போன்று சில சொற்கள் கவர்ச்சியிழந்தும் காணப் படும். நுகர்வாளராகிய நமக்குக் கவிஞனின் எண்ணத்துடன் இயைபு படுத்த முடியாமலும் போகக் கூடும்.
சிற்சில எண்ண இயைபுகளை நம்மிடையே ஏற்படுத்தக் கவிஞன் குறிப்பிட்ட சொற்களின் வளத்தைப் பயன்படுத்தக் கூடும். குறிப்பிட்ட சொற்கள் நம் மனத்திடையே ஏற்படுத்தக் கூடிய நினைவுப் பிம் பங்களையும் தொடர்புடைய பிம்பங்களையும் காட்சிப் பொருளாகத் தரும் பொருட்டுக் கவிஞன் வேண்டுமென்றே சில சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவான்.
உதாரணமாக, சூரியனைச் செங்கோளம் என்று கவிஞன் கூறுவானாகில், உடனடியாக நம் மனதில் ஒரு பிம்பம் உருவாகும். அது
版

Page 13
இரத்தம், அதனுடன் தொடர்புடைய விளைவுகள் என நாம் கருத வாய்ப்பு இருக்கிறது.
'அம்பிகியூவிட்டி எனப்படும் பொருள் தெளிவின்மை பற்றியும் நாம் கருத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இரட்டை அர்த்தங்கள், தெளிவின்மை, கவிதைகளில் காணப்படுவது சாதாரணமானதுதான். இது ஏனெனில், குறைந்த எண்ணிக்கையுடைய சொற்களில் பலவற்றைக் குறிப்பிட்டுக் கூறக் கவிஞன் விழைகிறான். ஆனால் அவ்வாறு சுருங்கிய சொற் களில் அவனி விளங்கப்படுத்தும் பொழுதே கவிதை கருத்தாழம் கொண்டதாகவும் பல பொருள் கொண்டதாகவும் அமைவதை நாம் மறுக்க முடியாது.
அடுத்து இமேஜரி எனப்படும் படிமம் பற்றி நோக்குவோம். உவமை உருவக அணி
வகை, மனத்தகத் தோற்றம், நினைவுக் காட்சி என்றெல்லாம் படிமத்தை விபரிப்பர். ஐம்புல நுகர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான மொழிப் பிரயோகம் என இதனை நாம் கொள்ளலாம். எமது கற்பனைத் திரையில் புலன் சார்ந்த ஓர் அனுபவத்தைக் கவிஞன்
காட்ட முற்படுவதை நாம் அவதானிக்கலாம்.
ஐம்புல நுகர்ச்சியை நாம் அனுபவிக்கக் கவிஞன் துணை போகிறான்.
பாரதி பாடும் போது, தேன் சுவை நாக்குக்கு எப்படி இருக்குமோ அதேபோல "செந்தமிழ் நாடென்னும்.” தொடர் காதுக்கு இனிக்கிறது என்று நாம் பொருள் கொண்டு விளக்கலாம்.
ஒரு கவிதையில், வெவ்வேறு படிமங்கள்
காணப்படலாம். அவற்றைத் தொகுத்தும் நாம் பார்க்க முயல வேண்டும். பல |
படிமங்களின் தொகுதியாகக் கவிதை
அமைந்திருக்கக் கூடும். அதே வேளையில் | முரண்பாடான படிமங்களும் குறிப்பிட்ட ஒரு
கவிதையில் இடம்பெற்றிருக்கக் கூடும்.
இறுதியாக, கவிதை தொடர்பாக நம்மிடையே ஏற்பட்ட பாதிப்பை தாக்கத்தை, எதிர்கூறல்களை, காரண காரியத்துடன் நாம் விளக்கிக் கூற வேண்டும். Yn y திறனாய்வுக்கு முதற்படி ரசனை அல்ல சுவைத்தல், ரசனையின்றி, நயங்காணலின்றி, வெறுங் கண்டனமாக ஆய்வு செய்யும் பொழுது, திறனாய்வு பின் தள்ளப்பட்டு நமது வாசிப் பின் ' எல் லைக் கட்டுகளே’ துலாம்பரமாய்த் தெரிய வரும். வெளி ஒதுக்கிய மட்டமான போலிக் கவிதைகள் மாத்திரம் கண்டனத்துக்கு உரியவை. ே
خر
‘தேன் வந்து பாயுது காதினிலே' என்று |
தொடர் கதை
நாக்குத்தான் காரணம் அதை நலியச் செய்து விட்டால் போர்க்கோலம் புதையும்
இல்லையில்லை மூளைதான் காரணம் அதை முழுதாய் அகற்றி விட்டால் மூர்க்கம் முடிந்துவிடும்
ஆ. அதுவுமில்லை கண்கள்தான் காரணம் அவற்றைக் குத்திக் கெடுத்துவிட்டால் குறைதான் பார்வையில்லை
ஏய் ஏனிந்தக் கஷ்டம் ஆளை அகற்றிவிட்டால் அத்தனையும் தூள்! அதைச் செய்யும்!
ம். முடியாது அதைச் செய்தால் நமது ஆட்களுக்கு வேலையில்லை
நெடுகில் தொடர ஒரு நேர்வழியைச் சொல்லுமப்பா
ஸ்பானிய மொழியில் றிஸன்றோல
தமிழில் கவிஞர் ஏ.இக்பால்
யாத்ரா - 5
 
 

பெற்றாரும் உற்றாரும் யார் யாரையோ விரட்டிக் கொண்டிருக்க மின் ஒளி வெப்பத்தில் வெந்து கொணடிருந்தது புது மணத் தம்பதி
பார்வையால் எரிக்கும் இசைக் குழுத் தலைவரைச் சட்டை பணணாமல் தாளந் தப்பிப் பாடிக் கொணடிருந்தார் 44g/Ú LUATL - 5/7
அழும் குழந்தையை ஏந்திய ஒருத்தியிடம்
ஏதோ ஒரு பாடசாலை ஆசிரியை பற்றிச்
சொல்லிக் கொண்டிருந்தாள்
கனத்த சரீரமும் சாரீரமுமான பெணமணி )
அடுத்து அமையவிருக்கும் அரசு பற்றி
ஆரூடம் சொல்வதற்குச் | சாப்பிட்டுக் கொணடிருந்த ஒருவருக்காகக் காத்திருந்தார்
கோர்ட் அணிந்த வயதானவா
அடுத்த பந்திக்குக் காத்திருக்கும் இருவரிடம் மற்றொரு அமைச்சருக்கு ஏகவசனத்தில் ஏசிக் கொண்டிருந்தார். அமைச்சர் ஒருவரின் நான்காவது இணைப்பதிகாரியின்
மூன்றாவது செயலாளர்
அடுத்த வாரப் பத்திரிகையில் வரவுள்ள குப்பை கிளறும் தனது தேடல் கட்டுரையில்
தான் அறுத்துக் கிழித்த நபர் பற்றி
சிறுவர்கள் நால்வரிடம் விளக்கிக் கொண்டிருந்தார்
எழுத்தாளர் ஒருவர்
பல்லுக் குத்தியபடி தலையாட்டிக் கொணடிருந்தவரிடம் உலக விவகாரம் பற்றி
உரையாற்றிக் கொணடிருந்தார் காற்சட்டையணிந்த ஒல்லியான தேகமுள்ளவர் இவர்களிடமிருந்து தப்பிய என்னிடமும் ஒருவர் அகப்பட மாட்டாரா எனத் தேடத் தொடங்கினேனர்யார் மீதாவது தீர்ப்புச் சொல்ல!
штфЈт — 5

Page 14
BDBDSSzSBSzzBzeSeBBeBSzzBSzBS
புலவர்மனி அல்ஹாஜ் ஆ.மு.வடிரிபுத்தரீன்
கவிதை இலக்கியத்தைப் பொறுத்த வரை தெளிவாகவும் அமைதியாகவும் நடந்த ஒரு நதியாகவும் சமுதாய முன்னேற்றப் பணிகளில் ஒரு மலரின் வாசமாகவும் கண்ணியமும் மரியாதையும் நிறைந்த அவரது வாழ்வின் நினைவுகளை ஒரு இனிய தென்றலாகவும் விட்டுச் சென்றவர் புலவர்மணி அல் ஹாஜ் ஆமு.ஷரிபுத்தீன் அவர்கள்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் மருதமுனைக் கிராமத்தில் ஆதம்பாவா மரைக்கார்
பாத்திமா தம்பதியின் புதல்வனாக 04.05.1909ம் அன்று பிறந்தவர் புலவர்மணி அவர்கள்.
தமிழும் ஆங்கிலமும் கற்பது சர்ச்சைக்குரிய விடயமாகக் கருதப்பட்ட அக்காலப்பிரிவில் தமிழ் கற்று ஆசிரியரானார். ஜே.எஸ்.வேலுப்பிள்ளை, கே.எஸ்.வைரமுத்து சுவாமி விபுலானந்தர் போன்ற பெருந் தமிழறிஞர்களிடம் கற்றுத் தேர்ந்து ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக உயர்ந்தவர் புலவர்மணி. கிழக்கிலங்கையின் முதலாவது முஸ்லிம் தமிழாசிரியர் என்ற பெருமை புலவர்மணிக்கு உண்டு.
அவர் பணிசெய்த காலத்தில் பல நல்லாசிரியர்களையும் கவிஞர்களையும் உருவாக்கினார். ழாணவரின் வாசிப்புத்திறனை வளர்த்தல், ஆங்கிலக் கல்வியில் அக்கறை காட்டல் போன்ற விடயங்களில் மிகக் கரிசனை காட்டினார். பல பாடசாலைகள் உருவாவதற்கும் ஏதுவாக அமைந்தார். 42 வருடகால அரசாங்க சேவையில் அவர் செய்த பணிகள் அனந்தம்.
1935ல் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவும் மருதமுனைப் பிரதேச ஆசிரியர் சங்கக் கிளையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். 1953ல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் என்ற குர்ஆன் பாடசாலையையும் அதே பெயரில் ஒரு பள்ளிவாசலையும் நிர்மாணிப்பதில் காலாக நின்று உழைத்தார். இந்த இரு முகாமைத்துவமும் அவரை அவற்றுக்கு ஆயுட் காப்பாளராகத் தெரிவு செய்தன. 1972ல் கரைவாகு வடக்குப் பகுதிக்கான இணக்க சபையின் தலைவரானார். 1985ல் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார்.
"புலவர்மணி அவர்கள் பரம்பரைக் கவிஞராகத்தான் அநேகரால் அறியப்பட்டிருந்தார். ஆனால் பல தளங்களில் கால் பதித்து அருமை செய்த அற்புதக் கலைஞர் அவர். அறுபதுகளின் நடுக்கூற்றில், கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் அவரது செய்யுள்கள் வெளியுலகுக்கு அறிமுகமாயின. ஆசிரியப் பணியின் போது பாடசாலையின் தேவைக்காக மேடை நாடகங்கள் எழுதி நெறிப்படுத்தியுள்ளார். பல இசைப் பாடல்களை சாஸ்திரீயம் தவறாமல் எழுதி மாணவர்களைக் கொண்டு பாடவைத்தார்.
 
 
 
 
 
 

மரபு சார்ந்த ஓவியக் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்தார். அவரது ஓவிய வெளிப்பாட்டின் கண்காட்சி அரங்கமாகப் பாடசாலைச் சுவர்கள் அமைந்தன. அவரது கலைப் பணியின் முக்கிய கூறாகக் கொள்ளத் தக்கது நாட்டார் இயலாகும். வாய்வழிச் செவிநுகர் அம்சமாக இருந்த மட்டக்களப்பு நாட்டுக் கவிகளைத் திரட்டி வாதுக் கவிச் சித்திரமாகவும் அமைத்து பாடசாலை மேடைகளில் அரங்கேற்றிக் கட்புலக் கலையாகவும் மாற்றினார்.
அவரால் உரைச் சித்திரமாக வடிவமைக்கப்பட்ட மட்டக்களப்பு நாட்டுக் கவி 1951 மார்கழியில் இலங்கை வானொலிக் கலையகத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அரை மணித்தியால ஒலித் தட்டு அது. நாட்டார் இலக்கியத்தை ஒலிப்பதிவு செய்த முதலாவது கலைஞன் புலவர்மணி ஆவார்" என்கிறார் மூத்த எழுத்தாளரான மருதூர்க் கொத்தன்.
1952ல் சீறாப்புராணம் -பதுறுப்படலத்துக்கு விளக்கவுரை எழுதினார் புலவர்மணி அவரது நபிமொழி நாற்பது என்ற நூலுக்கு 1967ல் சாஹித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. 1968ல் "வீரமங்கை ஷஹீதா என்ற நூல் வெளியாயிற்று. 1972ல் புதுகுஷ்ஷாம் காப்பித்துக்கு அவர் எழுதிய விளக்கவுரை வெளியாகி பாடநூலாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதுகுஷ்ஷாம் காப்பியத்துக்கு எழுதப்பட்ட விளக்கவுரை நான்கு பாகங்களும் இசைவருள் மாலை' என்ற நூலும் 4வது அனைத்துலக இஸ்லாமிய தமிழாய்ச்சி மாநாட்டின் போது வெளியிட்டு வைக்கப்பட்டன. கிழக்கின் நாட்டார் பாடல்களைத் தொகுத்து கனிந்த காதலி என்ற தலைப்பில் 1984ல் நூலாக்கினார்.
இவை தவிர நபி மொழி நானாற்பது, இலங்கைக்கு வெளியே நூறு நாட்கள் பயணக் கட்டுரை, மற்றும் பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் போன்றன இன்னும் வெளிவராமல் இருக்கின்றன என அறியக் கிடைக்கிறது. புலவர் மணியின் கைப்பிரதிகளில் அநேகமானவை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பாகப் பேணப்படுவதாய் அறிகிறோம். வெளிவராதவற்றை கூடியவிரைவில் நூலுருப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
மருதமுனைக் கிராம மக்கள் ஆசிரியமணி என்று 1953ல் பட்டமளித்துச் சந்தோஷப்பட்டார்கள். 1969ல் புலவர் என்று பட்டமளித்தார் தமிழறிஞர் எஸ்.நடரா அவர்கள். 1969ல் மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் ஷரிபுத்தீன் ஹாஜியாரை கெளரவம் செய்தது. 1976ல் வெண்பாப் புலி என்ற பட்டத்தை தமிழக அறிஞர் ஆகா.அ.அப்துஸ் ஸமது அவர்கள் வழங்கினார். 1987ல் அமைச்சர் செல்லையா ராசதுரை அவர்களால் இலக்கிய மாமணி பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். 1987ல் கொழும்பு முஸ்லிம் லீக் பாராட்டுச் செய்தது. 1991ல் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் நூறுல் பன்னான் (கலை ஒளி) என்ற பட்டத்தை வழங்கி மரியாதை செய்தார். 1999ல் அமைச்சர் பிபி.தேவராஜ் அவர்கள் தமிழ் ஒளி பட்டம் வழங்கிக் கெளரவித்தார்.
1979ல் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் என் நாமம் உனக்களித்தேன் நண்பா என்று ஒரு சாற்றுக் கவியின் மூலம் புலவர் மணி என்ற பட்டத்தை ஷரிபுத்தீன் ஹாஜியாருக்கு வழங்கினார். அனைத்துப் பட்டங்களையும் விடுத்து புலவர்மணி என்ற இந்த நாமத்தின் மூலம் தமிழ்கூறும் நல்லலுலகு இன்று வரை அவரை அழைத்து மகிமை செய்கிறது.
தனக்குத்தானே பட்டங்களைச் சூடிக் கொள்வதிலும் பட்டங்களைத் தேடிச் சென்று தனக்கொன்று, தன் நண்பனுக்கு ஒன்று தன் குழுவிலிருப்பவனுக்கு ஒன்று தனக்கு முதுகுசொறிந்தவனுக்கு ஒன்று, என்றெல்லாம் பங்கு போட்டுக் கொள்ளும் இலக்கிய அசிங்கங்கங்களைப் பார்க்கும் போது ஷரிபுத்தீன் ஹாஜியார் இமயமாய், எட்டாத தூரத்தில் உயர்ந்து நிற்பதை நம்மால் காணமுடிகிறது.
இலக்கிய உலகிலும் தான் நேசித்த மக்களிடமும் கண்ணியமும் மரியாதையும் பெற்றிருந்த ஷரிபுத்தீன் ஹாஜியார் 16-11-2000 அன்று இலக்கியத்தையும் தனது அன்புக்குரிய கிராமத்தையும் இந்த உலகத்தையும் விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்.
அவருக்குத் தமிழ் மீதிருந்த வல்லமை அளவிடற்கரியது. அந்த வல்லமை பற்றித் தெரிந்து கொள்ள வேறு எங்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. அழகிய உதாரணமாக அவரது புதல்வன் ஜின்னாஹ் ஷரிபுத்தீனைக் காட்டினாலே போதுமானதாயிருக்கும்.

Page 15
(ඉම
நிமலராலுணின் அம்மா
LD (s59#Grr Gsh II q_5.Jfro5 sỡr
ஆத்மா மயங்கிக் கிடந்தது நான் நிமலராஜனின் அம்மாவுக்கொரு கடிதம் எழுதினேன்
ஒரு போதும் கண்டிராத அன்பான அம்மா, உன்னைக் காணவும் ஆசை உனைக் கண்டு வருவதற்கும் இவர்கள் எமக்கு இடம் தர மாட்டார்கள் தாய்மார்களைக் கூட இங்குள்ளோர் தெரியாதவர்கள் பிள்ளைப் பாசம் என்பதையும் இங்கெவரும் அறியாதவர்கள
அவள் அனுப்பிய கடிதத்தில் எனை விளித்திருந்தாள் "மகனே, உன் கையெழுத்து நிமலின் கையெழுத்துப் போன்றதே உனைக் காண ஆசை
அவளது கடிதத்தில் எனது ஆத்மா மீண்டுமொரு முறை உற்சாகம் கொண்டது
அனைத்து "பெரியர்களையும் தாண்டி நான் காணச் சென்றேன் அவளை
அவளது அன்பின் முன் விழுந்து மண்டியிட்டு முத்தமிட்டேன் அவளது வெடித்த பாதங்களை
'அம்மா உன் பாதங்கள் என் தாயின் போன்றவையே
குனிந்து ஸ்நேகமாய் விரல் கொண்டென் தலை கோதினாள்
யாத்ரா - 5

'மகனே உன் சிரசு
நிமலின் போன்றதே
நிமிர்ந்து நானவள் முன் நின்றேன் அம்மா உன் பாசக் கைகள் என் தாயின் போன்றவையே
அசையாமல் கண்ணிமைக்காமல்
எனையவள் பார்த்துக் கொண்டிருந்தாள்
சிரிக்க நான் முயன்றேன் "மகனே உன் சிரிப்பு
நிமலின் போன்றதே
உடன் அவள் விழிகளில் W. மெல்லிய நீர்க் கோடுகள் வழிந்து வந்தன
'அம்மா இந்தக் கண்ணிர்
என் அம்மாவின் போன்றதே
தமிழில- இப்னு அஸ உமத் நன்றி - ராவய
(நிமலராஜன் - படுகொலை செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய - பத்திரிகையாளர்)
யாத்ரா - 5
本

Page 16
'யாத்ரா முதலாம் ஆண்டுமலர் கிடைத்தது. மிகவும் நேர்த்தியாயும் அழகாயும் உள்ளன.
மிகவும் நன்றி. உருவமும் உள்ளடக்கமும்
4.
--- எஸ்.எச்.எம்.ஜெமீல்
நான் மதிக்கின்ற ஓர் எழுத்தாளர். யாத்ரா-3ல் இடம்பெற்ற எனது கட்டுரை பற்றிய அவரது குறிப்பை ஆவலோடு படித்தேன். அல் குர்ஆனும் ஸுன்னாவும் கூறும் வரலாற்றுச் சம்பவங்களை நான் வெறும் புராணங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேனா என்ற நோக்கில் மீண்டும் எனது கட்டுரையைப் படித்துப் பார்த்தேன்.
தமிழ்ப் புதுக் கவிதையில் பயிலப்படும் படிமங்களை இனங்கண்ட விமர்சகர்களே அவற்றுக்குப் பல்வேறு விதமான பெயர்களைச் சூட்டியுள்ளனர். அல்குர்ஆன், ஸ"ன்னா என்பவை சார்ந்த சம்பவங்களை மாத்திரம் சுட்டக் கூடியதான படிமப் பெயர் எதுவும் நானறியேன்.
கவிஞர் அபூபக்கர் குறிப்பிடுவது போல, Myth என்பதற்கு ஆங்கில அகராதி கொடுக்கும் விளக்கம் அதுதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரின் மத்தியிலுள்ள புராணங்களை மட்டுமன்றி சமயம், வரலாறு. இதிகாசம் காப்பியம் சார்ந்த நம்பிக் கையோடொட் டிய சம்பவங்களைப் புராணவியற் படிமம் என்றே தமிழ் விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
தமிழக முஸ்லிம் கவிஞர்களுள் பலர் இந்துப் புராணவியற் படிமங்களையே தமது கவிதைகளில் பெரிதும் பயன்படுத்தி வந்துள்ளனர். அகல்யை, கண்ணகி. குருஷேத்திரம், அரிச்சந்திரன் எனப் பல உதாரணங்களைக் காட்டலாம்.
இலங்கையிலோ இஸ்லாமியப் புராணவியற் படிமங்களை பலரும் பிரயோகித்த போதும் அவை விமர்சகர்களால் இனங் காணப்படவில்லை. இக்குறைபாட்டைப் போக்கும் நோக்குடனே எனது சிற்றறிவுக்கேற்ற வகையில் என் கைக்கு எட்டிய கவிதைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அக்கட்டுரையை வரைந்தேன்.
கட்டுரையில் ஓரிடத்தில் புராணம் பலபோது வரலாற்றோடு தொடர்புறுவதால் இதனை வரலாற்றுப் படிமம் எனவும் வழங்குவர் என்று
கவிஞர் அபூபக்கர்,
நான் குறிப்பிட்டதனால் வாசகர்கள் இஸ்லாமிய
வரலாற்றுச் சம்பவங்களை புராணம் என்ற கட்டுக் கதைகளாக கருதமாட்டார்கள் என்பதே சிறியேனின் அபிப்பிராயம்,
இவ்விடத்தில் கஸ்ஸால் அன்பியா எனப்படும் குர்ஆன் விரிவுரை தருகின்ற பல சம்பவங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். இஸ்லாத்தின் பெயரிலும் புராணங்கள் (கட்டுக் கதைகள்) உண்டு என்பதற்கு இந்நூல் ஒர் எடுத்துக் காட்டு.
لمدر
சமயவாதிகள் இவற்றைக் கட்டுக் கதையென்று. புறக்கணித்தாலும் கவிஞர்கள் படிமங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இஸ்லாமிய என்ற அடை மொழியில் யான் பயன்படுத்தியுள்ள அனைத்துமே அல் குர்ஆன், !
என்பவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட
சுன்னா சம்பவங்களல்ல. எனது கட்டுரையின் தலைப்பு அதுவாக இருப்பினும் நிறைய மரபியற் படிமங்களையே உதாரணங் களாகக் கையாண்டுள்ளேன். இவை கலாசாரம் சார்ந்தவை. கலாசாரக் கோலங்கள் அனைத்துமே அல்குர்ஆன்,
ஸ்"ன்னா என்பவற்றின் வழி வருபவையல்ல. குதுப்
நாயகம், கர்பலா என்பன வரலாறு சார்ந்தவை. ஆது மகன் ஸத்தாதின் சம்பவம் தப்ஸ்ரில் வருவது. அபாபீல் சம்பவம், ஸம்ஸம் உருவானவை போன்ற அல்குர்ஆன் சார்ந்த நிகழ்வுகள் கொண்ட கவிதைகளை எடுத்தாளும் போது நான் புராணம் என்று குறிப்பிடவில்லை. வரலாற்றுப் படிமம் என்றே குறிப்பிட்டுள்ளேன்.
முஸ்லிம் கவிஞர்களது படிமக் கவிதைகள் தொட்ர்பாக மேலும் சிந்திப்பதற்குத் தூண்டுகோல் அமைத்துத் தந்த பன்னூலாசிரியர் கவிஞர் ஏ.எம்.அபூபக்கர் அவர்களுக்கு எனது நன்றிகள்.
எம்.எச்.எம்.ஷம்ஸ் - கொழும்பு
'யாத்ரா-4'ல் வாகரைவாணன் அவர்கள், எனது (புதிய அழைப்பு) கவிதையில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் எப்படிப் புகுந்தன என்று ஆதங்கப்பட்டிருந்தார். 'அறிஞர் அண்ணாவையோ கலைஞர் கருணாநிதியையோ நாம் அறிஞர்களாகவோ கலைஞர்களாகவோ ஏற்றுக் கொள்வதும் இல்லை. அவர்களின் நூல்களைப் படிப்பதும் இல்லை. சர்வ மதங்களின் ஒருமைப்பாடு பற்றிய அறிவு, வாகரைவாணன் போன்ற
鶯幣
அறிஞர்களுக்கு இவர்களின் நூல்களால்தான் . . . . .
தெரிய வந்திருந்தால் எம்மேல் அந்த அபத்தத்தைச்
சுமத்த வேண்டாம் என அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த லட்சணத்தில் அவர் சோலைக்கிளியின்
கவிதைகளை விமர்சிக்க முற்பட்டதுதான்
வேடிக்கை. அவர் நாயக்கர் காலத்துப் SLLSSLLSSLSSLGSLSSLSLSSLSLSSLSSLLSLSLLSLSSLLSSLLSSLSLSLS
O
O D o
O o O O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O. O., a
யாத்ரா .5
 

监 SS o e o o os oo e o os oo e o oooo o புலவருமல்ல, அவரின் கவிதைகள் சொற்களின் சோடிப்பும் அல்ல. இந்த அடை மொழிகள் சாட்சாத் வாகரைவாணனுக்கும் அவரது செய்யுட்களுக்குமே சாலப் பொருந்தும்.
65
மு.பொன்னம்பலம் - தெஹிவளை
தமிழ் இலக்கியம் பற்றிய செ.யோகநாதனின் குறிப்புக்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன. எந்த ஆதாரங்களை முன்னிறுத்தி அவர் சங்க இலக்கிய காலத்தை வரையறுக்கிறார்? சிலம்பும் மேகலையும் 5ம் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்தனவா? இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது அவரிடம்?
பொருளாலாயினும் சொல் லா லாயினும் தொடர்வதுதான் தொடர்நிலைச் செய்யுள். இந்தக் கணிப் பை வைத்துக் கொண் டு தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவற்றைத் தொடர் நிலைச் செய்யுள் என்று சுட்டுவது சுருக்கமானசுலபமான வழி. ஆனால் தமிழ்ச் செய்யுளியலை அறிய இது தக்கதல்ல. அவ்விதமெனின் பா. பாஇனம் என்பவை தேவையற்றதாகி விடும். கம்பராமாயணத்தைத் தொடர்நிலைச் செய்யுளின் உச்சம் என்று சொல்வதைவிடப் பலவித ஒசை விருத்தங்களின் சங்கமம் என்பதுதான் பொருத்தம் 1 5 LÓ நுTற் றாணி டி ல LDL (6 LD6ö 60, சிலப்பதிகாரத்திலேயே பல்வேறு பா மரபுகளைப் பார்க்கலாம். சங்கப் பாடல்களும் தனிப் பாடல்கள்தாம். அவற்றிலும் விரக்தியும் உண்டு, வெறுப்பும் உண்டு.
இனி இன்றைய காலகட்டத்துக்கு வருவோம். அதிகார வர்க்கத்தின் ஆசீர்வாதம், வெறும் சொல் விளையாட்டுக் கவிஞர்களுக்கு மட்டுமல்ல, சில எழுத்தாளர்களுக்கும் அமோகமாக இருக்கிறது. உதாரணமாக 11ம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சிறுகதையைக் குறிப்பிடலாம். புதுக் கவிதை தந்த பிச்ச மூர்த்தியையும் அவர் போன்றவர் களையும் யாப் பரிலக் கணம் தெரியாதவர்கள் என்று கிண்ணடலடித்த பேராசிரியர் கைலாசபதி, பின்னர் காலமாற்றத்துக்குக் கட்டுப் பட்டு அதே விதக் கவிதையை எழுதியவர்களை ஆரத் தழுவியமை எல்லோரும் அறிந்ததுதான். குறிப்பிட்ட சில கவிஞர்களை
வைத்துக் கொண்டுதான் பேராசிரியர் சிவத்தம்பியும் விமர்சனக் குடுகுடுப்பை ஆட்டுகிறார். ஒரு குழுவைச் சேர்ந்த இந்தப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இலக்கியவாதிகள் பலர் என்றாலும் அவர்களில் சிலராவது தம் சுய வெளிச்சத்தில் பிரகாசிக்க்வே செய்கிறார்கள்.
கவிஞர்கள் என்றதும் இந்த விமர்சகர்களுக்கு முருகையனும் மகாகவியும் சில்லையூர் செல்வராஜனுமே முதலில் தென்படுகிறார்கள். இதுவும் குழு மனப்பான்மைதானே. அறிஞர் அண்ணாவால் தமிழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ்த் தேசிய உணர்வை (இதனைப் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒரு பேட்டியில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்) முன்னெடுத்துச் சென்ற முக்கிய கவிஞர் பாரதிதாசனுக்கு இணையான (இலங்கையில்) கவிஞர் காசி ஆனந்தன் இந்த விமர்சகர்களின் கண்களில் தெரிவதே இல்லையா? சுதந்திரன்' காலத்துக் கவிஞர்கள் எல்லாம் சொத்தைகளா? இன்றைய வக்கிரப் போக்குத் திறனாய்வு பற்றி ஆதங்கப்படும் செ.யோகநாதன் அவர்கள் இவற்றையும் தன் ஆழ்ந்த பார்வைக்கு எடுத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.
வாகரைவாணன்- மட்டக்களப்பு
ஆண்டு மலர் கிடைத்தது. அற்புதம்! உங்களின் ஆளுமையும் சுற்றி நின்று தோள் தந்து வருவோரின் சுந்தரத் தோழமையும் யாத்ரா'வை முன்னெடுக்க உதவும். இலங்கையில் சிற்றிலக்கிய வெளியீட்டு முயற்சிகள் பாதங்களைக் காயப்படுத்தும் பாலைவனப் பயணங்களே.
இந்து மகா சமுத்திரத்தின் அலைக் கரைகளுக்கு அப்பாலும் உயிர் வாழும் இலக்கிய உதடுகளும் 'யாத்ரா'வைப் பேசி வருவது நம் மண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. உங்கள் முயற்சிகளை நானெவ்வாறு பாராட்டாதிருக்க முடியும்?
கவிதைகள் அர்த்தக் கனதி மிக்கவை. நிகழ்கால சூழலே உள்ளடக்கம் ஆயினும் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வெளிப்பாட்டு முகம். மனசைக் கீறிக் குருதி கொப்பளிக்கச் செய்யும் மாய விரல் நகங்கள் அவற்றுக் குண்டு, ëf (hij 35U U6060) 35. தங் கப் LJ 6060) 85 . மறக்கப்பட்டவர்களை மனசின் மேற்பரப்பில்
(8 LI JT sŤ jf
'யாத்ராக்கள் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி. யுத்த பூமியிலிருந்து வரும் இதழ் என்பது மேலும் என்னை ஈர்ப்புக்குள்ளாக்கியது. கவிதைகள் வாசிப்பில் ஒரு ஈடுபாட்டை உண்டாக்குகின்றன. கவிதை விமர்சனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
சுகன்- தஞ்சை
பாத்ரா 65"س
人

Page 17
அமைந்திருக்கிறது.
ஆண்டு மலர் என் கரம் கிட்டிய தினமே அதனை முழுவதும் படித்து விட்டேன். 'ஒரு யுகத்தின் தலைவனான கவிஞன் எனும் தலைப்பிலான கட்டுரையும் கவிதைகளும் என் மனதை நெகிழ வைத்துக் கண்கலங்கச் செய்தன. அமீர் அலி, நி.மத் ஆகியோர் முதல் இதழ் வெளியீடு நடந்த வை.எம்.எம்.ஏ மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மலர்
மிகச் சிறப்பாக
சித்திக் ஹனிபா. வறக்காப்பொல
கொண்டு வந்து நிறுத்தி வைக்கிறீர்கள். இப்னு அஸமத்தின் தூறலுக்கு என் வரவேற்பு மாலைகள். அவரது மொழிபெயர்ப்புக்கள் தனியாக பேசவும் தொகுக்கவும் படவேண்டியவை.
மாஹம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் பற்றிய கட்டுரை மனசை மறுபடியும் புண்ணாக்கிற்று. முடிவடைந்த நூற்றாண்டின் அந்திம இரு தசாப்தங்களில் அவரைப் போல் கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளான முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் இருக்க முடியாது. அவரது அரசியல் வீச்சுக்களுக்கு அப்பால் நல்ல மனிதராக நல்ல கவிஞராக அடையாளப் படுத்திக் கெளரவித்த யாத்ரா'வை நெஞ்சோடு சேர்த்தெடுத்து நேசிக்கத் தோன்றுகிறது. 'யாத்ரா சிறப்புப் பகுதியைத் தந்தமைக்காக மீண்டுமொரு முறை உங்களைப் பாராட்டலாம். ஃபைஸ் அகமத்தை மீண்டும் தரிசிக்க வாசல் திறந்துள்ளிகள். அல் அஸஉமத் பற்றி நிறையவே எழுதலாம். கலைத்துவமும் நவீனத்துவமும் மிக்கவை அவரது கதைகள். அவரது பாலியம்' காவியம் பற்றி நானறிந்து ஒரு தசாப்தத்துக்கும் மேல், அதை யாத்ரா வெளியிடக் கூடாதா?
வெளிமட- ரபீக்
முதலாம் ஆண்டு மலரில் தலையங்கச் செய்தியில் சொன்ன செய்தியும் சொன்ன படி இலவச இணைப்பாக 'முதுசம் தந்த செயலும் நன்று. இம்முயற்சியில் புலமைசார் நிலையங்கள். பல்கலைக் கழகங்கள் மாத்திரமல்ல, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கூடிய அக்கறையைச் செலுத்த முன்வரவேண்டும் என்ற செய்தியை வாசகர்களாகிய நாங்களும் வழி மொழிகிறோம். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முதுசம் களை 'யாத்ரா தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இரண்டாம் பக்கத்தில் மஹற்மூது தர்வீஷின் கவிதையோடு அந்த மனிதரை அமைச்சர் என்று அறிமுகப்படுத்தாமல் கவிஞராகக் காட்டியது வெகு சிறப்பு உண்மையில் ஒரு கவிதை ஏடு அவரைக் கவிஞனாகவே பார்க்கிறது என்பது புலனாகிறது. அந்தக் கவிதையும் வெகு அருமை.
அவர்களும் நீயும் என்ற நுட்மானின் கவிதை
البر
நல்ல செய்தி சொன்னது. மேமன் கவி "பேய்கள் கவிதையை அவசர கதியில் எழுதித் தந்து விட்டார் போலும்.அவரது பழைய கவிதைகளில் காணப்படும் இறுக்கச் சிறப்பு பேய்களில் இல்லை. எதிரொலியில் வாகரைவாணன் சொல்வது போல் சோலைக்கிளி ஒரு நாயக்கள் காலத்துப் புலவர் அல்லர். அவர் சிறப்பாகக் கவிதை சொல்லக் கூடியவர். ஆயினும் அவரது கொண்டை முட்டைக் கவிதை சரியில்லைத்தான்.
அபூ ஜஹில், ஜாஹிலிய்யா, ஈமான் போன்ற சொற்களை வெறுக்கும் பஹரீமா ஜஹான், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை ஆர்வமாகக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். சப்பாத்து, ப்ரியம், அலுமாரி, நேயம், மேசை, துப்பம்டி சாயம், சாவி போன்ற ஆயிரம் வேற்று மொழிச் சொற்கள் தமிழில் புகுந்து தமிழாகவே பாவிக்கப் படுவதால் தமிழ் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. தமிழ் வளம் பெறுகிறது. அதே போல அறபு மொழிச் சொற்களின் கலப்பால் தமிழில் புதுப்புது தமிழர்த்தச் சொற்கள் உருவாகியுள்ளன. இது இயற்கை. இது நம் வாழ்வு ஒரு வகையில் இதுவும் இஸ்லாமியப் படிமமே தவிர வெறுப்பதற்கு அதில் ஒன்றுமில்லை. பர்தா என்பதை தமிழில் உடல் மூடி' என்று பயன்படுத்த முடியுமா? பர்தா இப்போது தமிழ்ச் சொல். தமிழரே பாவிக்கும் சொல்.
ஒரு யுகத்தின் தலைவனான கவிஞன் என்ற ஒரு விசிறியின் வாக்கு மூலம் பற்றிச் சில வரிகள் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் எனக்கு. அஷரஃப் அஷரப் நெருக்கம் எப்படியிருந்த போதிலும் அந்த பூகம்பம் புரட்டிய கிராமத்தில் கவிதை அப்பாடா. உண்மையில் நல்ல கவிதை, இதை ஏற்கனவே எங்கோ வாசித்திருந்த போதிலும் இப்போது அதன் பின்னணி அறிந்து படிக்கையில் ஒவ்வோர் அடியும் உணர்ச்சி தந்தது.
அன்புடினின் 'குருவிக்கூடு அருமையிலும் அருமை. என்றாலும் கவிதையில் இலக்கங்களை அளவுக்கதிகமாகப் பாவிப்பதால் கவிதை தன் சுயதன்மையை இழக்கிறது. அந்த இருதலைக் கொள்ளி எறும்புகளுக்கும் வேண்டுமொரு குருவிக் LL SLLSLL SLLLLLS SLLLSSSLLLSLLLLLSLLLLLS SLLLLSLSSLLSLSSSLLSSLLSSLLSSLLS LLSLLLS LLS SLLSLL
எதிரொலி :
O O. o O o O O. O. o O O. O. O. O. O. O. O. O. O. O. யாதரா - 5
 

LL SLLLL LL SLL SLL SLL SLL SLLLL LLLL SLL SLL SLL SLL SLL SLL SLLLLLS SLLLLLS SLLLL SLLLLLS SLLL
LL SLL SLL SLL SLL S L SL S LLS LLS SLLS SLLLLL S LLLLSLLLLLSLL S LLSLL SLLLSLLLS LLS LLSLLLL கூடு என்கிற கவிஞரே. எறும்புகளுக்குக் குருவிக் கூடு அல்ல, எறும்புப் புற்றுத்தான் வேண்டும். விஷயம் நன்றாக விளங்குகிறதெனினும் எறும்பு என்ற சொல்லை உதாரணத்துக்குக் கூடப் பாவித்திருக்கக் கூடாது. ‘என்னைத் தீயில்
எறிந்தவள் சிறந்ததொரு கவிதை. கடைசி வரிகள்
நச் சென இருந்தது. இரு தடவைகள் வாசித்தேன். (பிழைகள் ஏதும் பிடிக்கலாம் என்றுதான்.)
முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளாமல் எழுதுவதும் அதனால் அங்கீகாரம் கிடைப்பதும் பரிசுகள் பெறுவதும் பற்றிய அல் அஸஉமத்தின் கருத்துக்கள் மிக யதார்த்தமானவை. அதில் நூறு வீத உடன்பாடு எனக்குண்டு. மு.சடாட்சரத்துடனான நேர் காணலில் இலக்கியச் சிண்டு முடிதலுக்காக இஸ்லாமியத் தமிழிலக்கியம் பற்றிக் கேட்டிருந்தால் உபயோகமாயிருந்திருக்கும்.
அறபியிலிருந்து தமிழுக்கு வந்த கவிதைகள் சிறந்தவை. சிங்களத்திலிருந்து வந்தவையும் அப்படியே. அதே சமயம் மூல மொழியில் அதை எழுதிய கவிஞர்கள் பற்றிய குறிப்புகளையும் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எப்படியோ ஒட்டு மொத்தக் கணிப்பீடுகளின் படியும் என்னுடன் இது பற்றிக் கலந்துரையாடிய கல்முனைக் கொம்புகளின் அபிப்பிராயங்களின் படியும் ஆண்டு மலர் தரச் சிறப்போடு வெளி
வந்துள்ளது. இதே தரம் மேலும் பேணப்படுதல்
வேண்டும்.
என்.ஏ.தீரன் - சாய்ந்தமருது
எத்தனை புதிய வடிவங்களில் இன்று கவிதைகள் வெளிவந்தாலும் நம்முன்னோரது இலக்கியங்கள் இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழ்வதை `வெள்ளப் பிரளயக் காவியம் உறுதிப்படுத்துகிறது. ஒரு பெரிய நிகழ்வின் முழுமையான நேர்முக வர்ணனை போல அந்தக் காவியம் அமைந்திருக்கிறது. இது போல இன்னும் எத்தனையோ அரிய காவியங்கள் மறைந்து கிடக்கலாம். அவற்றைப் பெற்று வெளிக் கொணர்வது அவசியம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் உணர வேண்டும். சில அரிய இலக் கியப் பொக கிஷங்களை வெளிக் கொணராமல் தாங்களே வைத்துக் கொண்டிருக்கும் பல இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் 'யாத்ரா மூலமாவது அவற்றை வெளிப்படுத்தி மற்றோரும் இன்புற வழி செய்ய வேண்டும்.
எம்.எம்.காமில் - யாதரா - 5
கண்டி
நண்பர் இலக்கியக் குழு வாழைச்சேனை
V.
ل
ஆசிரியர்
அஷ்ரஃப் சிஹாப்தீன்
துணையாசிரியர்கள்
வாழைச்சேனை அமர் ஏ.ஜி.எம்.ஸ்தக்கா
ஒவியங்கள்
மறீதர் பிச்சையப்பா எஸ்.நளிம்
தொடர்புகள
YA ATHRA 57, DHANKANATTA RoAp, (YNA BOLA, WATTALA
SRI LANKA
PoNE; O f - 93356 6 Fax; Of - 6斉斉85斉
ஆண்டுச் சந்தா 100.00. காசுக்கட்டளை அனுப்புவோர் M. P. Sadhath 6T 6ởi O GAULLU(5ës(g) Wattalaதபாற்கந்தோரில் மாற்றக் கூடியதாக அனுப்ப முடியும்.
காசோலையாயின் ஆசிரியர் பெயருக்கு
அனுப்பி வைக்கலாம்.
\S

Page 18
(32)
"R
உறவுகள்
மகுடேசுவரன்
மடியில முறுக்கு மஞ்சட் பையில வாழச் சீப்பு
எளம் பொழுதிருக்கப் பொறப்புட்டா உச்சிக்குள்ளாற
lögou JT6OD6nu O (BLITučř சேந்திரமாட்டானா. பின்ன
பொறந்தவளப் பாத்து பொத்தான் பிஞ்ச சொக்காயோட
மாமான்னு ஓடியாற புள்ளையைப் பாத்து
БТ6ппčići 60(36DT.
முறுக்குப் பொட்டனத்த அவுத்துக் குடுத்தா
கருத்தாத் திங்கும்க
வாண்ணா. வாண்ணா. ம்பா
நீரு குடுத்து சோறுங்கச் சொல்லுவா ஆத்தாளும் அண்ணியும் சவுக்கியமாம்பா (நான் பொறந்தவுட்டுக்குப் போயிப்போட்டு வாரது
என்ற வுட்டுக்காரிக்குத் தெரிஞ்சா
இனுங்கி உட்ருவா)
邓
யாத்ரா ட 5
 

கிளம்புற போது கைல பத்தஞ்சு குடுத்துப் போட்டு
யே. அம்மணி.! அந்த முண்ட கூட ஓடிப்போன மச்சான் அதுக்குப் பொறவு புள்ளயளப் பாக்கவாவது உன்ற வுட்டுப் பக்கம் எட்டிப் பாத்தாரா..?
நன்றி - அப்துல்ரகுமான் இதழ்-1
யாத்ரா - 5

Page 19
எண்பதுகளில் வெளி வந்து புதிய தலைமுறைக் கவிஞர்களை உணர்ச்சிப் பிழம்பாக்கிய எம்.ஏ.நு.மான் மொழிபெயர்த்த "பலஸ்தீனக் கவிதைகள் புதிய மெருகுடனும் இன்னும் அதிக கவிதைகளுடனும் மூன்றாவது மனிதன் வெளியீடாக வந்திருக்கிறது. மூன்றாவது மொழியூடாக வந்தும் கவிதைகள் உயிர்த்துடிப்புடன் பேசுகின்றன என்றால் அவற்றின் ஆத்மா சிதறாமல் மொழிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும் முக்கிய காரணமாகும் 15 கவிஞர்களின் 71 கவிதைகளை உள்ளடக்கிய இந்நூல் 162 பக்கங்களில் வெளிவந்துள்ளது. உங்களிடம் ஒரு சிறு நூலகம் இருக்குமாயின் அதில் கட்டாயம் இருக்க வேண்டிய தொகுதி. விலை-200.00, மூன்றாவது மனிதன் பதிப்பகம், 37-14, வொக்ஸோல் லேன், கொழும்பு-2.
காலத்தின் துயரங்களுக்கு மத்தியில் சித்தாந்தன் எனும் கவிஞனின் காலத்தின் புன்னகை என்ற கவிதை நூல் கோண்டாவில் வடக்கிலிருந்து குலன் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. முல்லைக் கோணேஸின் அட்டைப்பட ஒவியத்துடன் 48 பக்கங்களில் 48 கவிதைகளை உள்ளடக்கியிருக்கிறது தொகுதி. தொண்ணுாறுகளின்
பிற்பகுதியில் படைக் கப்பட்ட கவிதைகள் இவை. பிரதிபலிப்புக்களும் சுய ஆக்கமுமாக ஒரு தொடக்க நிலைப்படைப்பாளியின் இயல்போடு வெளிக்கிளம்பியுள்ள சித்தாந்தனின் கவிதைச் செயற்பாடு புதிதான அடையாளத்தைப் பெறத் தொடங்கியுள்ளது. என்கிறார் கருணாகரன். விலை 65.00: குலன் வெளியீட்டகம், கோண்டாவில் வடக்கு, uJITp(JLJT600TLD.
எஸ்.நளிம் தனது கவிதைகளைத் தொகுத்து கடைசிச் சொட்டு உசிரில்' எனுந் தலைப்பில் நூலுருவாக்கியுள்ளார். 'யாத்ரா வெளியீடான 72 பக்கக் கவிதை நூலில் 30 கவிதைகள் அடங்கியுள்ளன. கவிஞரே ஓவியராகவும் இருப்பதால் கருத்துப்படங்கள் கவிதைகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. ஓர் ஊர் அல்லது ஒரு சமுதாயம் உள்ளாகியிருக்கும் நிலை, விருப்பு வெறுப்புகள், நன்மை தீமைகள், எதிர்பார்ப்புகள், கையாலாகாத நிலை, கோபம், விரக்தி போன்ற பலப்பல உணர்வுகளைத் தன்னகத்தே கொண்டு குமுறும் ஒரு கவிஞனின் ஒட்டு மொத்த நிலையாக இக்கவிதைகள் அமைந்திருக்கின்றன. என்கிறார் கவிஞர் அல் அஸஉமத், விலை 9500. எஸ்.நளிம், அரிசி ஆலை வீதி, மீராவோடை-5.
யாத்ரா - 5
 
 

(35)
T. Is
மாவை வரோதயனின் கவிதைகளின் தொகுப்பு இன்னமும் வாழ்வேன். தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக 80 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 78 கவிதைகள் உள்ளடங்கியிருக்கின்றன. சொன்னதைத் திருப்பிச் சொல்லும் பொய்யை வண்ணமாய்த் திரித்துப்பின்னலும் மின்னதைக் காற்றாக்கியே கலை நயம் படைத்தலும். என்று இவர் சொல்லும் இலங்கை வானொலியில் இக்கவிதைகளில் பல ஒலிபரப்பானவை. இது என்னை அடையாளங் காட்டி எனது பாதையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான முன்முயற்சி மட்டுமே என அடக்கத்துடன் கூறுகிறார் நூலாசிரியர். விலை85.00 சவுத் ஏசியன் புக்ஸ், எஸ்-44, 3வது மாடி, மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி கொழும்பு-11
ஒரு விழாவின் மலரோ என்று எடுத்த எடுப்பில் எண்ணுவதற்குத் Bügü öğeni தோன்றுகிறது இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை கவிதைத் 滚 தொகுப்பு உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 100வது வெளியீடாக 154 பக்கங்களில் வந்துள்ள இந்நூலில் 71வது பக்கத்திலிருந்துதான் கவிதைகள் ஆரம்பமாகின்றன. கலைமகள் ஹிதாயா, மஸீதா புன்னியாமீன் ஆகியோரது கவிதைகளைப் படைப்புக்குரியவர் யார் என அடையாளங் காட்டாமல் புதுமை செய்திருக்கிறார்கள். புன்னியாமீன் தனது அனுபவத் தடங்களை முழுமையாகப் பிறிதொரு நூலில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். விலை- 100.00: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, உடத்தலவின்ன.
மடவளையைச் சேர்ந்த அன்சார் எம் வழியாம் என்ற இளங் கவிஞனின் கவிதைகளை உள்ளடக்கி 'என் தேசம்’ என்ற கவிதைத் தொகுதி கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தினால் வெயிடப்பட்டுள்ளது. 98 பக்கங்களில் 20 கவிதைகளைக் கொண்ட கையடக்கக் கவிதைத் தொகுதி இது. "எதிர்காலத்தில் வளரவிருக்கும் தரமான ஒரு கவிஞரை இனங்காட்டத் தக்க வகையில் இத்தொகுதி அமைந்துள்ளது' என்று பேராசிரியர் துரை மனோகரனும் வழியாமை, அப்துற் றஹீமிலிருந்து அப்துல் ரகுமான் வரை பாதித்திருக்கிறார்கள். மேத்தா முதல் வைரமுத்து வரை அவர் வாசித்திருக்கிறார்’ என்கிறார் உஸ்மான் மரிக்கார். விலை- 100.00, அன்சார் எம் வழியாம், 12/1, வங்குவக் கடை, மடவளை பஸார்.
யாத்ரா - 85 tiswijs #};
翻叮 墨*

Page 20
(3රිව
நண்பிகட்குச் சொன்னால்
எறிரா அண்ட்ரெளல்
நான் என் அன்னையின் அன்னையென என் நண்பிகட்குச் சொன்னால் என்னை நம்பவே மாட்டார்களென நிச்சயமாய் நான் அறிவேன்
எனினும் இதுவே நான் அறிந்த மிக அழகிய ஜனனம் என ஒரு கவிதையைப் போல நான் ஊட்டமளித்ததென அவளை இரவிற் தூங்கப் பண்ணுைமுன் மனித இனத்தின் பரிணாமத்தை விளக்கிய போது குரங்கின் கதை கேட்டு அவள் குழந்தை போல் சிரித்தாளென எழுதவும் வாசிக்கவுமான இயக்கத்தின் முடிவில் வாக்கியங்களை எவ்வாறு இணைப்பது எனவும் பூமி உருண்டை எனவும் அவளுக்குக் காட்டினேன் என நான் ஹவானாவுக்குச் சென்ற போது கம்யூனிசத்தை நேசிக்க அவளுக்குக் கற்பித்தேன் என நான் மீண்ட போது என் கையில் ஒரு குழந்தை இல்லாமல் என் இதயத்தில் எத்தனையோ குழந்தைகளை அவள் கண்டாளென அவர்கட்கு நான் விளக்கினால் கடைசியாக நிச்சயமாகச் சொல்வேன் என் நண்பிகட்கு நான் என் அன்னையின் அன்னையெனச்
சொன்னால்
அவர்கள் என்னை நம்புவார்கள்
தமிழில்: அசி.சிவசேகரம்
Cira Andres - கியூப தேசத்துப் பெண் கவிஞர்-1982
யாத்ரா - 5

GZ)
காணாமல் போனவள்
ஏ.எச்.எம்.ஜிப்ாரி
கருப்புடை தரித்த இரவின் கொடூர சப்தங்களுக்குள்ளும் நெருப்Uாய் எரிகின்ற உன் நினைவுகள் நிழலெனத் தொடர்ந்து என்னை எரித்துக் கொண்டேயிருக்கிறது
நீயும் நானும் போர் தரித்த பூமியில் வாழ்வதற்காய்ப்பட்ட அவஸ்தைகள் இன்று உனக்கு மட்டும் ஓய்ந்து போயிற்று சகோதரி
சருகுகளாய் உதிர்ந்து கொட்டும் வாழ்வின் கனவுகள் நிஜங்களைத் தரிசிக்கு முன்னமே நீ வாழ்வைத் தொலைத்துவிட்டுச் சமாதியாகிப்போன துயரம் என்னைத் துரத்தித் துரத்தித் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது
E
ஒரு புதிருக்கான விடையாகவோ ஒரு கனவுக்கான விளக்கமாகவோ ஒரு துயரத்திற்கான சொந்தக்காரியாகவோ இல்லாவிடின் குறைந்தது ஒரு புரியாத கவிதைக்கான புரிதலாகவோ இருந்திருப்பாய்
யுத்தத்தின் எச்சங்களுக்குள் உன் வாழ்வு தொலைந்திராவிட்டால்.
யாத்ரா - 5

Page 21
கலைத் துறையில் முகங்களைக் கொண்ட றகுமான் ஏ. ஜப்பார் வண்ண வண்ணப் பூக்கள் என்ற குழந்தை இலக் கரிய நுாலைத் தந்துள்ளார். மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி வெளியீடான 10 பக்கச் சிறு நூலில் 10 சிறுவர் பாடல்கள் அடங்கியுள்ளன.
O குழந்தை இலக்கியம
மட்டக்களப்பு தொழில்சார் உள இயல், உளநல ஆலோசனை நிறுவக வெளியீடாக வந்துள்ள 'சின்னஞ் சிறு கிளியே கவிஞர் வாகரைவாணனின் மற்றுமொரு படையல். 34 பக்கங்களில் படங்களுடன் கூடிய 28 கவிதைகள் அடங்கியுள்ன.
மின்னல்கள்
கு நான் மரணித்துவிட்டேன்
என்னைத் தவிர!
e அவர்முதலாளி
சின்ன வீட்டில் வாழ்கிறார்!
e அவளுக்குச் சரியான காய்ச்சல்
படுத்த படுக்கையில் நான்
ல புத்தம் புதிதாய்.
அழகாய். அதோ வந்து கொண்டிருக்கிறது குப்பை வண்டி!
கு அந்த மரண விசாரணை அதிகாரியின் மரணம் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது!
O தூக்கம் வரவில்லை
காலையில்கட்டில் காசு கொடுக்க வேண்டும்!
கிண்னியா அமிர் அலி
O பாலம் இல்லாத ஆற்றில்
படகு மூழ்கியதுஎம்.பி சரியில்லை
இ எங்கள் வீட்டில்
இரவு களவு போனதுநாய்!
9ே வேலை கிடைத்த பிறகும்
ஊர் சுற்றித் திரிகிறான்தபால்காரன்!
இ வீட்டுக்குப் புதிதாய்
தொலைபேசி எடுத்தோம்
அடுத்த வீட்டுக்கு அழைப்பு வந்தது!
O 6vců.C LČ 6vců.C. LČ)
C LČ). தொப். கப்சிப்!
لار
யாத்ரா - 5
 
 
 
 

காபாவைச் சுற்றிக் கலக்கம் அறுத்தொழித்தேன் மாபாவம் அற்ற தென!
3
- அல் அஸ9மத்
மனித வெண்மலர்
சுற்றும்
கருவண்டு!
- ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
நான்கு சுவர்களுக்குள் என்னதான் இருக்கிறது உன் இதயத்தைத் தவிர
- கலைவாதி கலீல்
கறுப்பு ஆடையில்
ஓர் வெளிச்ச வீடு
- மேமன் கவி
நான்கு வரிகளுக்குள்
விடுத்தார். மாத்தளை நகருக்குள் நுழையும் பே
minuuwa mumunuma wuwun
‘பாத்ரா ஆண்டு மலர் அறிமுக விழாவில் கலந்து கொள்ள மாத்தளை நகள் நோக்கிச் சென்ற குழுவில் ஒன்பது கவிஞர்கள் வாகனததில் இருந்தனர். மாத்தளை நகரை அண்மிக்க ஒரு ၈။pရ်)l தூரம் இருக்கையில் உலக முஸ்லிம்களின் இதய பூமியில் அமைந்துள்ள இறையில்லமான 5. LIT பற்றி நான்கே வரியில் உடனடியாகக் கவிதை சொல்லுமாறு கவிஞர் கலைவாதி கலீல் வேண்டுகோள் |
ாது கவிதைகளைத் தாளிலேயே எழுதித் தந்துவிட்டனர்.
ിം
*: e ,
برز أهم خيا
உதடுகள்தான்
உன்னை முத்தமிட்டன
என் உள்ளம் எப்படி
வெண்மையானது?
- இளநெஞ்சன் முர்வரிதின்
LOGOT
அழுக்கை
அழிக்கும் அழிரப்பர்!
- எஸ்.நளிம் 8ť}
ஊரெல்லாஞ் சுற்றினேன்
பாவங்கள் சேர்ந்தன உன்னை வந்து சுற்றினேன் பாவங்கள் தீர்ந்தன
- கிண்ணியா அமீர் அலி
مه ف% A *ෂ්ණි’ **గాత్మ
நான் எப்படி இது
5.L T65) 6) ତୁର୍ଥୀ அதிசயமான அடக்கி விடுவது? கறுப்புக் கற்கண்டு!
- இப்னு அஸ?மத் -அஷ்ரஃப் சிஹாப்தீன் J யாத்ரா - 5
本
A.

Page 22
ததிக்குவல்லை கமால்
கவிதையில் இலக்கியப்பயணம் ஆரம்பித்த திக்குவல்லைக் கமால் முப்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியத்தோடு வாழ்ந்து வருகிறார். ஆச்சரியப்படத்தக்க அவரது அமைதியான சுபாவம் போலவே அவரது பேச்சும் மிகவும் மென்மையானது. கமால் சத்தமாகப் பேசியதையோ வீண் இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபாடு காட்டியதையோ யாரும் கண்டிருக்கமாட்டார்கள். ஒரு நூலை வெளியிட்டு விட்டாலே ஒளி வட்டம் தோன்றி விடுவதாகக் கற்பனை செய்யும் இலக்கிய உலகில், 9 நூல்களைத் தந்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறார் கமால்.
இலங்கையின் முதல் புதுக்கவிதைத் தொகுப்பு எனக் கருதப்படும் எலிக்கூடு” இவருடையது. பாதை தெரியாப் பயணம், ஒளி பரவுகிறது, நச்சு மரமும் நறுமலர்களும்', ஆகிய நாவல்களையும் கோடையும் வரம்புகளை உடைக்கும், குருட்டு வெளிச்சம்', 'விடுதலை', 'விடை பிழைத்த கணக்கு', 'புதிய பாதை வரண்டு போன மேகங்கள் ஆகிய சிறு கதைத் தொகுதிகளையும் தந்தவர். இன்னும் எழுதிக் கொண்டுமிருக்கிறார்.
இவற்றில் ஒளி பரவுகிறது’ நாவல் சாஹித்ய மண்டலப் பரிசு பெற்றது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு இவருக்கு இலக்கிய வேந்தன்’ (தாஜுல் அதீப்) என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்திருக்கிறது
தற்போது வவுனியா (தெற்கு) வலயக் கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.
பிரசுரத்துக்கு அனுப்பவில்லையே தவிர நான் இன்னும் கவிதை எழுதிக்
கொண்டேதான் இருக்கிறேன். ஏற்கனவே பிரசுரமானவை இரு தொகுதிகளாகவும் பிரசுரமாகாதவை இரு தொகுதிகளாகவும் வெளியிடுமளவுக்கு என்னிடம் கவிதைகள் உள்ளன. அவற்றை வெளியிடவும் உத்தேசித்துள்ளேன்' என்று ‘கவிதைக்கு வரமாட்டீர்களா ? கவிதைகளை நூலுருவாக்கமாட்டீர்களா?' என்ற நமது
கேள்விகளுக்குப் பதிலாகத் தெரிவித்தார்.
DIKWELLA KAMAL 191-B, Atulugama, Bandaragama, Sri lanka
யாத்ரா ー5
 
 

கவிதைத் துறைப் பிரவேசம் பற்றி.
1965களில் தர்ஹா நகர் ஸாஹிராவில் மாணவனாக இருந்த போது, நண்பர் வை.ஐ.எம். ஹாபிஸ் அரும்பு’ என்ற கையெழுத்து சஞ்சிகையை வெளியிட்டு வந்தார். அதில் நானும் நண்பர்களும் எழுதினோம். எமது ஆற்றலையும் ஆர்வத்தையும் இனங்கண்ட ஆசிரியர் கவிஞர் ஏ.இக்பால், எங்களை ஒன்று திரட்டி ஸாஹிறா கவிதா மன்றத்தை ஆரம்பித்தார். அதன் மூலம் 'சுவை' என்ற ரோனியோ கவிதை இதழை வெளியிட்டோம். அதன் ஆசிரியராக நான் கடமையாற்றினேன்.
சுவை'யில் மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமன்றி ஆய்வுகூட உதவியாளர் அப்துல் ஹாதியும் கவிதை எழுதினார். அவர், எல்லோருக்கும் தெரிந்த ஸில் மியா ஹாதியின் தந்தையாவார். அன்றைய “அரும்புதான் இன்று மாணவர் மத் தியில் பிரபலமான அறிவியல் சஞ்சிகையாகத் திகழ்கிறது.
அதற்குப் பிறகான கவிதை ஆற்றல் வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?
தினபதி பத்திரிகை வெளிவர ஆரம்பித்த கட்டம். பத்திரிகை விற்பனையைப் பிரதான நோக்கமாகவும் இளம் இலக்கியவாதிகளை ஊக்குவிப்பதை இன்னொரு நோக்கமாகவுங் கொண்டு, தினம் ஒரு சிறுகதை. தினம் ஒரு கவிதை. திட்டங்களை மேற்படி பத்திரிகை முன்வைத்தது.
நேரடியாக யாரும் தமது படைப்புகளை அனுப்ப முடியாது. 'தினபதி அங்கீகரித்துள்ள மூத்த படைப்பாளி ஒருவரின் சிபார்சுடனேயே அனுப்ப வேண்டும். சுமார் 40 பேர் கவிஞர்களின் பெயர் முகவரிகளைத் தந்திருந்தது. அதில் கவிஞர் ஏ.இக்பாலின் பெயரைப் பார்த்த போது அவர் மீது பெருமதிப்பு ஏற்பட்டு விட்டது. அவரது சிபார்சுடன் ஏராளமான கவிதைகளை எழுதினேன்.
சம காலதி தில் வேறு [ ] 6u) பத்திரிகைகளுக்கும் கவிதைகள் எழுதினேன். ஏதாவதொரு பத்திரிகையில் வாரம் ஒரு கவிதையாவது வெளிவரவேண்டுமென்ற வேகத்துடன் எழுதினேன். வரவுந்தான் செய்தது.
штфTт - 5
அக்காலத்தில் நீங்கள் தொடர்பு வைத்திருந்த கவிஞர்களை ஞாபகம் செய்வீர்களா?
பலருடன் தொடர்பு கொண்டேன். கவிதைகளைத் திருத்தியும் ஆலோசனைகள் தெரிவித்தும் அவர்கள் எழுதிய கடிதங்களை இன்றும் பொக்கிஷமாகப் பேணிவருகிறேன். எருவில் மூர்தி தி, ஆ.சபாபதி, ச.வே.பஞ்சாட்சரம், திமிலைத்துமிலன், திமிலை கி கணி னணி , காரை. செ.சுந்தரம்பிள்ளை. போன்றவர்களை நன்றியோடு ஞாபகமூட்டுகிறேன்.
அதேவேளையில், கவிதா தாகம் கொண்ட ஓர் இளவலின் உணர்வைப் புரிந்து கொள்ளாது எனது கவிதைகளைக் குப்பைக் கூடைக்குள் எறிந்து விட்ட கவிமேதைகளின் பெயர்ப் பட்டியலை நாகரிகம் கருதித் தவிர்த்துக் கொள்கிறேன்.
அந்நாட்களில் உங்களோடு கைகோர்த்துக் கொண்ட கவிதை எழுதியவர்கள்?
ஏராளம். மிக வீச்சோடு எழுதியவர்கள் ஏன்தான் தளர்ந்து போனார்கள்? ஏராளமாக எழுதியவர்கள் ஏன் எழுதாமலேயே விட்டு விட் டார் கள் ? பழைய பத் திரிகை நறுக்குகளைப் புரட்டும் போது சிலவேளை அழவேண்டும் போலிருக்கிறது. பலர் முகம் தெரியாமலே காணாமல் போனதுதான் பெரிய வேதனை.
கருணை யோகன், இராஜம் புஷ்பவனம், ச.பாலதேவி, கட்டைபPச்சான் கனகசிங்கம், முல்லை வீரக்குட்டி, கவிவாணன், ஜெளபர் மெளலானா, கல்முனை பூபால், ஈழக்குயில் இத்ரீஸ், அன்புடீன், சாருமதி, பாலமுனை பாரூக், சோலைக்கிளி. இப்படியொரு பட்டாளம்.
கவிதையோடு இலக்கியப் பிரவேசம் செய்து சிறுகதைக்கும் நாவல்களுக்கும் சென்று, கவிதைத் துறையைக் கைவிட்டுவிட்டீர்களே, என்ன காரணம்?
கவிதைகளில் உணர்வின் மேலாண்மை யோடு சில கருத்துக்களைச் சொல்லிவிட்டுப் போகலாமே தவிர, வாழ்க் கையின் யதார்த்தங்களை வெளிக் கொணர முடியவில்லை. எனவேதான் சிறுகதை"
நாவலெனர் று புெநிலை
ga 25'T. A \ علاقهاrالف دق
封ー一

Page 23
என்க்கேற்பட்டது.
ஒவ்வொரு கிராமத் தினுடைய வழக்காறுகள், பண்பாட்டு அம்சங்களை, ஏன் இருப்பைக் கூட இலக்கியப் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவையெனச் சிந்தித்தேன். ஒரு தர்க்கத்துக்காகச் சொல்லுகிறேன். பாரம்பரியமாக வாழ்ந்த யாழ் மண்ணில் இன்று ஒரு முஸ்லிம் கூட இல்லை. நாவலிலக்கிய முன்னோடியான இளங்கீரன் அதே மண்ணைச் சேர்ந்தவர். அந்த மக்களின் வாழ் நிலையை முழுமையாக வெளிக்கொணரும் ஒரு நாவலைப் படைக்காமல்தானே போய்ச் சேர்ந்து விட்டார்.
இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நாலுவரிக் கவிஞனாவது இருக்கத்தான் செய்வான். ஆனால் சிறு கதையாளன் இருப் பானா? வாழைச் சேனையில் இஸ்மாயில்,ஜனைத், அஷ்ரப்,அமர், நளிம். இப்படியொரு கவிஞர் பட்டாளமே
is - (12) y
புதுக்கவிதை உங்களைக் கவர்ந்ததற்கான வேறும் காரணங்கள் உள்ளனவா?
ஒரு கவிஞன் புதுக் கவிதையினுாடாக சொல்ல நினைப்பதை நேரடியாகச் சொல்லி விடலாம். சுற்றி வளைக்க வேண்டிய அவசியமில்லை. விளக்கவுரை எழுத வேண்டிய தேவையுமில்லை. வாசித்து முடியும் போது வாசகனின் உள்ளத்தைப் பிடித்துக் கொள்ளும் சக்தி அதற்கு உண்டு. வார்த்தை ஜாலம், சந்தம், சோடனைகளை அது நிராகரிக்கிறது.
கவிதையின் போக்கில் உண்டான மாற்றம்
நிறைய உண்டாக்கியிருக்கும் அல்லவா?
வாதப் பிரதிவாதங்களை
நிறைய நடந்தன. ந.வானமாமலை, க.கைலாசபதி போன்றவர்கள் உருவத்தை வரவேற்று உள்ளடக்கம் சமூகப்
உண்டு. இவர்களெல்லோரும் சேர்ந்தாவது வை.அஹற்மத்தின் | "புதிய தலைமுறைகள் அல்லது "முக்காடுக்கு நிகரான எதையும்
பெறு மா ன மு ள ள தாக
| மாறவேணி டும் என்று
வலியுறுத்தினார்கள்.
மரபு உடைக்கப்படுவதன்
கவிதையில் சாதித்துள்ளார்களா?| கவிஞர்களைக் குறைத் து|| மதிப்பிடவில்லை. சிறுகதை || நாவலினி தேவையை
| மூலம் இலக் கியத் தரம் வீழ்ச்சியடைந்து விடுமென்றும் | கண்டவன் நிண்டவனெல்லாம் | எழுத வெளிக்கிட்டால்..' என்ற
வ லபி யு று த து கபி றே ன . இதனால் தான் நான் எனது கவனத்தைத் திருப்ப நேர்ந்தது.
వges(Hugభz*
ஆதங்கத்தோடும் மரபுவாதிகள் வாதித்தனர்.
:
கவிதையில் ஏற்பட்ட இந்த
* புதுக்கவிதைத் துறையில் அப்போது
உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற்பட்டது?
சி.சு.செல் லப் பாவின் ' எழுத் து’ பைண்டுகளைப் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது அதில் ஏராளமான புதுக் கவிதைகள் வெளிவந்திருப்பதை அவதானித்தேன். பிச்சமூர்த்தி, சி.மணி போன்றவர்கள் நிறைய எழுதியிருந்தார்கள். பின்னர் தீபம், கணையாழி, அ.க், நடை, க ச ட த பற, போன்ற சிற் றரிதழ் கள் புதுக்கவிதைகளைத் தாங்கி வெளிவந்தன. இவற்றைப் படித்த போது இந்த உருவத்தைப் பயன்படுத்தினாலென்ன என்ற சிந்தனை எனக்கேற்பட்டது.
உள்மன ஒலம், விரக்தி, பாலியல் போன்ற உள்ளடக்கத்தோடு உடன்பட முடியவில்லை.
ملابر
மாற்றம் திடீரென்று ஏற்பட்ட ஒன்றாக நீங்கள் கருதுகிறீர்களா?
பாஞ்சாலி சபதத்தின் இறுதிப் பகுதியை பாரதி, வசன கவிதையாக புதுக் கவிதையாக எழுதியுள்ளான் என்றெல்லாம் கூறுவர்.
மகாகவி உருத்திரமூர்த்தி பாரதிக்குப் பின் ஒரு திருப்பு முனையாக இருக்கிறார். உணர்வுகளின் தோற்ற ஒழுங்குக்கேற்ப அவர் யாப்புக்குள் நின்று பேச்சு மொழிப்
பண்போடு கவிதை படைத்துள்ளார்.
இதறி கிடையில் யாழ்ப் பாணம் தா.இராமலிங்கம் ‘புதுமெய்க் கவிதைகள் எண் று இரணர் டு தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இரண்டாம் தொகுதியான காணிக் கைக்கு மு.தளையசிங்கம யாதரா - 5
 
 

முன்னுரை வழங்கியுள்ளார். இலக்கண மரபை மட்டுமன்றி சமூக மரபையும் அவர் கவிதைகள் உடைக்கின்றன.
இப் படிப் பார் கி கும் போது புதுக் கவிதைகள் திடீரெனத் தோன்றியவையல்ல, காலத்தின் தேவையை ஒட்டி ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி என்று Gay T606)6)Tib.
இலங்கையின் இலக்கிய இதழ்கள் புதுக்கவிதைகளை எவ்வாறு எதிர்கொண்டன?
தமிழகத்தில் வாழ்ந்த இலங்கையரான தருமு சிவராமு நிறையப் புதுக் கவிதைகளை எழுதினார் . கண்ணாடியுள்ளிருந்து தொகுப் பை அந்நாட்களில் வெளியிட்டார். அ.யேசுராசா, ஏ. இக் பாலி , கே. எஸ் . சிவகுமாரனி , ரத்னஸ்பாபதி ஐயர் போன்றவர்களும் அவ்வப்போது எழுதியுள்ளனர்.
1972ல் 'சிரித்திரன்’ ஆசிரியர் சுந்தர் எனக் கொரு கடிதம்
"துன் நூலகம் "Tanzará
மல்லிகை, கற்பகம்,"இத் களனி, பூரணி, குமரனி போன்ற சிற்றிதழ்களும் புதுக் கவிதைகளைப் பிரசுரித்தன.
ஏனைய பிரதேசங்களில் நிலைமை எவ்வாறிருந்தது?
நான் அறிந்த மட்டில் .
அனுராதபுரத்திலிருந்து பேனா மனோகரன், சுகுண சபேசன், திக்குவல்லையிலிருந்து எம்.எச்.எம்.ஷம்ஸ், செந்தீரன், நீள்கரை நம்பி, புத்தளத்திலிருந்து ஜவாத் மரைக்கார், நூன், தில்லையடிச் செல்வன் போன்றவர்கள் குழு நிலையில் எழுதிக் கொண்டிருந்தனர். மற்றும் ஆங்காங்கேயிருந்த தனிப்பட்ட ரீதியில் நிறையப்பேர் எழுத ஆரம்பித்துவிட்டனர்.
தேசியப் பத்திரிகைகளில் வரவேற்பு
எப்படியிருந்தது?
முதலில் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தது.
எழுதியிருந்தார். 'கணையாழியில் வெளிவந்த 'குழந்தை' என்ற எனது கவிதையைப் பாராட்டி அத்தகைய கவிதைகளைத் தமது
சஞ்சிகைக் கும் எழுதுமாறு கேட்டிருந்தார். 61 (ԼՔ 5 ஆரம்பித் தேனி. அழகாக
வெளியிட்டு வந்தார்.
மரபுக் கவிதைக்கு வழங்கிய அதே அந்தஸ்தைக் கொடுத்தது. ஏனைய பத்திரிகைகளுக்குப் புதுக்கவிதை பற்றிய பிரக்ஞை இருக்கவில்லை.
காலப்போக்கில் புதுக்கவிதைப் Lf J 6)) T E uó எநி த ப் பதி திரிகையையுமி விட்டு வைக்கவில்லை. மணிக்கவிதை,
அதிர் ஷ்டவசமாக அதே" காலகட்டத்தில் பலாலி ஆசிரிய கலாசாலைக்குப் பயிற்சிக்காகச் சென்றேன். அங்கு அன்பு ஜவஹர்ஷாவைச் சந்தித்தேன். இலக்கியச் சூழல் உருவானது. வார நாட்களில் யாழ். இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அறிமுகமாகும் இலக்கிய நண்பர்கள் கலாசாலைக்கு வர ஆரம்பித்தனர். அப்போது படித்துக் கொண்டிருந்த சேரன், ஆதவன் போன்றோர் தாமி நடத்தும் கையெழுத்துச் சஞ்சிகைகளோடு எங்களை வந்து சந்திப்பார்கள்.
ராதேயன், சசி கிருஷ்ணமூர்த்தி, லோகேந்திரலிங்கம், மரியதாஸ், பாலகிரி போன்றோரோடு கருத்துப் பரிமாற்றம் செய்தோம். சஞ்சிகைகளைப் பகிர்ந்து கொண்டோம். சிரித்திரனை முதன்மைப் படுத்தி எல்லோரும் கவிதை எழுதினோம். யாதரா - 5
மினிக் விதை எண்றெல்லாம் மகுடமிட்டுப் பிரசுரிக்க ஆரம்பித்தன. போகப் போக இடை வெளி நிரப்பும் அம்சமாக புதுக் கவிதை மாறிவிட்டது. கோஷங்கள், விடுகதைகள். ஏன் ஒரு வசனத்தை முறித்துப் போட்டாலே கவிதை என்ற நிலையும் வந்துவிட்டது.
உங்களில் பாதிப்பு நிகழ்த்திய கவிஞர்களாக யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?
ஆரோக்கியமான உள்ளடக்கத்தோடு புதுக் கவிதை வேணி டுமெனி ற கருத்தோட்டத்தின் அங்கீகாரமாக மானுடம் பாடும் "வானம்பாடி வெளிவர ஆரம்பித்தது. கவிஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏன், எழுச்சி, வேள்வி முதலான கவிதை இதழ்கள் வர ஆரம்பித்தன. இவை அனைத்திலுமே எனது
கவிதைகளும் வெளிவந்தன.
本

Page 24
*
டு)
DL 666 ** அன்சார் STLidspu arrI d
நிலவு விழித்திருக்க தூங்குகிறார் காவல்காரர்
х பென்சிலை உடைக்கிறேன் அப்பா கையில் அழகிய பேனாக்கள்
X
கொலைகாரன் கூட்டில் வெண்புறா
X புது வேலைக்காரி நல்ல பெயர் கேட்டாள் சிதைந்தது சிலந்தி வலை
X காத்திருக்கிறேன் நிலா வரும் பாதையில் இருட்டு
X தெளிந்த குளம்
தூரத்து வானம்
X அழகிய நடை பைத்தியம் பிடிக்கும் தொடாந்து வாசித்தால்
ஞானக்கூத்தன், மு.மேத்தா, இன்குலாப், மீரா
போன்றவர்கள் என்னை மிகவும் பாதித்த
கவிஞர்களாவர்.
இலங்கையின் முதல் புதுக்கவிதைத் தொகுதியான ‘எலிக் கூடு உங்களுடையது. அது பற்றிய ஞாபகங்கள்?
தொகுதி என்ற பெரிய அந்தஸ்தை அதற்குக் கொடுக்க முடியாது. பதினாறு பக்கங்கள் கொண்ட ஒரு பிரசுரம் என்பதே சரி. வெளிவந்த கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து வெளியிட்டாலென்ன என்ற கருத்தை முன்வைத்து செயல் வடிவம் கொடுத்தவர் ஜவஹர்ஷாதான். அவரது திட்டத்தின் படி 44 கவிஞர் களினி கவிதைகளைக் கொண்ட "பொறிகள் தொகுப்பை வெளிக்கொணர்ந்தார்.
இத்தொகுதியின் வரவினால் உண்டான பிரதிபலிப்புகள் எப்படியிருந்தன?
பல இடங்களில் எலிக்கூடு' தொடர்பான கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்றன. சுவாமி ரத்னவன்ஸ் தேரர் முழுமையாக இதனைச் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். (வெளிவரவில்லை) "டெய்லி நியூஸ்” பத்திரிகையில் கே.எஸ்.சிவகுமாரன் அறிமுகக் குறிப்பெழுதி பலமட்டங்களிலும் கவன ஈர்ப்புச் செய்தார்." கலைக்கோலம் வானொலி நிகழ்ச்சியில் விரிவான விமர்சனம் இடம்பெற்றது. க.கைலாசபதி மேலும் பிரதிகள் கேட்டு தமிழ் நாட்டு நண்பர்களுக்கு அனுப்பினார்.
அதைத் தொடர்ந்து வெளிவந்த
தொகுப்புகளை ஞாபகம் வைத்துள்ளீர்களா?
"காவிகளும் ஒட்டுண்ணிகளும்' - அன்பு ஜவஹர் ஷா, "அறுவடை - பூநகரி மரியதாஸ் , - லோகேந்திரலிங்கம், சமுதாய வீதியிலே
தில்லையடிச் செல்வன், 'விடிவு' . செந்தீரன், நூன் கவிதைகள்' - நூன்
இவ்வாறு பல்வேறு பிரசுரங்கள் வெளிவர
ஆரம்பித்தன.
கருக்கட்டி, பிரசவம் நிகழ்ந்து, குழந்தைப் பருவத்தைத் தாண்டி 1975க்குப் பின் புதுக் கவிதை எழுந் து நடக்க штфTт - 5
இக்காலகட்டக் கவிஞர்களான தமிழன்பன்,
 

ஆதனது ஊர் - ஒ சாரா என ராச ர
உசாத்துனே நூலகம் மாநகர நூலக சேடுை
dert bLuu Tasarıh
ஆரம்பித்துவிட்டது. மேமன்கவி, புதுக் கவிதைக்கான முதலாவது சாஹித்ய மண்டலப் பரிசையும் வென்று தந்துவிட்டார். இதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது?
இலங்கையின் கவிதைச் சஞ்சிகைகள் பற்றி?
அவ்வப்போது கவிதைச் சஞ்சிகைகள் தோன்றி ஓரிரண்டு இதழ்களோடு பயணத்தை முடித்துக் கொண்டுள்ளன. பேச்சு மொழிப் பண்புள்ள கவிதைகளுக்கு எம்.ஏ.நு.மானின் கவிஞன் போல் புதுக் கவிதைகளுக்கு ஈழவாணனின் ‘அக்னி களமமைத்தது.
‘யாத்ரா நிறையச் சாதிக்கும் என்ற நம் பிக் கையை இலக்கிய உலகம் கொண்டுள்ளது.
1970 - 80 - 90 களில் தோன்றிய கவிஞர்களுக்கிடையிலான, அவர்களது படைப்புக்களுக்கிடயிலான வேறுபாடுகளை எப்படி உணர்கிறீர்கள்?
70களில் வர்க்கப் போராட்டத்தை முதனி மை ப் படுத் தி சமத் துவ சமதா யமொன் றுக் காக கவிதைகள் படைக்கப்பட்டன. 80 களில் கவிதையின் பாடு பொருள் இனமேலாதிக்க, யுத்த அவலங்களை. புலம்பெயர் சோகங்களைச் சுமந்ததாக இருந்தது. 90களில் தமிழ்த் தேசியமே உள்ளிடாகி விட்டது.
எண்பதுகளின் பின் இன (8 Lu Tfi சூழலுக்கு அப் பாற் பட்ட எலி லா யதார்த்தங்களும் இலக்கியத்தில் இரண்டாம் பட்சமாகிப் போனது கவலைக்குரியதும் கவனிக்கத்தக்கதுமாகும்.
இலங்கை இலக் கியப்
பிரிகோடுகளாக நீங்கள் கருதும் கவிஞர்கள் யார்?
மரபு விழுமியங்கள் சார்ந்த கவிதைப் போக்கிலிருந்து மனித நேயத்தோடு சமூக மாற்றத்தை வேண்டிநின்ற கவிஞனாக முகிழ்த்த முருகையனை ஒரு பிரிகோடாகக் காண்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. 80 - 90 களில் எழுந்த சூழ்நிலைகளுக்குள்ளால் முகிழ்த்து நின்று இன்னொரு பிரிகோட்டுக் கவிஞனின் வரவுக்கு சில அறிகுறிகளைக் காட்டிய இரண்டொருவர் துரதிர்ஷ்டவசமாக அந்த நிலைப் பாட்டுக் கு உயராம ல போய்விட்டார்கள். யாத்ரா - 5
பரப் பில்
அங்கீகாரம் யாரால் வழங் க ப ப வேண்டும்? |
பு த' த க க கொள்வனவுத் தாபனங்களில் பதவி வகிப்போர், புரவலர்கள். இவர்கள்தான்
இன்று கவிஞர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் அங்கீகாரம் வழங்குகிறார்கள். இவர்களின் அங்கீகாரத்துக்காகத்தான் இலக்கியவாதிகள் ஏங்குகிறார்கள். உண்மையில் யாருக்காக கவிஞன் பாடுகின்றானோ அவர்கள்தான் அவனுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டியவர்கள்.
குறிப்பிட்ட கவிஞர்களைத்தான் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தூக்கிப் பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டுப் பரவலாக இருக்கிறது.
இதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
ஒவ்வொரு கவிஞனும் ஒரு குழுவின் பிரதிநிதியாக இருக்கிறான். அவனுக்குப் பின்னே ஓர் அரசியலும் இருக்கிறது. பேராசிரியர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்குத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய காலத் தேவையுண்டு. இதனால் தானி இங் கொண் றும் அங்கொன்றுமாக இன்றைக்கு ஒன்றும், நாளைக்கு இன்னொன்றுமாகப் புலம்பித் திரிகிறார்கள். எனவே, பேராசிரியர்கள் சொல் கிறார் களே எண் பதை இப்பொழுதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பேராசிரியர் சொன் னால் , குருபக்தியோடு அதையே இன்னும் நாலுபேர் சொல்லத் தொடங்குகிறார்கள். இப்படித் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லியே சிலரது தலை வீங்கி வெடித்துவிட்டது. அதற்கு மேல் எதுவும் எழுதாமலேயே இன்னும் சிலர் ஒரம் போய்விட்டார்கள். பேராசிரியர்களின் போக்கு இப்படிக் கூடாத விளைவுகளையும் ஏற்படுத்தித்தானிருக்கிறது. இக்குற்றச்சாட்டை முற்று முழுவதும் நான் ஏற்றுக் கொள்கிறேன். swig"تقع الكتلفيقول " سے ہر سست"تظالا لااللg
به سوسیالیست سرمایه هنرسی. ... سعی حس.
--T_ািস্প"
。
أن التي نهايتهمهمين " S\s jగోతో

Page 25
(மு5)
இப்போதைய நிலையில் இலங்கையில் சிறந்த கவிஞர்கள் பத்துப்பேரை வரிசைப்படுத்துமாறு உங்களிடம் கேட்டால் அப்பட்டியலில் இருப்போர் யார்?
முருகையன், மகாகவி, சில்லையூர் செல்வராஜன், புரட்சிக் கமால், எம்.ஏ.நு. மான், புதுவை இரத்தினதுரை, சுபத்திரன், ஜெயபாலன். மன்னிக்க வேண்டும். பட்டியல் அதற்கு மேல் நீளவில்லை.
இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நீங்கள் கருதும் கவிதை எது?
எந்த இடர்ப்பாடுகளுமின்றிப் புரியும் படியாக. ஒரு நல்லுணர்வை மனதில் தோற்றுவிக்கக் கூடியதாக. வாசித்து முடிக் கும் போது கணி மடலிகள்
ஒரு பேராசிரியர் சொன்னால், குருபக்தியோடு அதையே இன்னும் நாலுபேர் சொல்லத் தொடங்கு கிறார்கள். இப்படித் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லியே சிலரது தலை வரீா) கரி வெடித்துவிட்டது. பேராசிரியர் களின் போக்கு இப்படிக் கூடாத விளைவுகளையும் ஏற்படுத்தித் தானிருக்கிறது.
மூடிக்கொள்ளத் தக்கதாக. மனசுக்குள் கொஞ்ச நேரம் எதிரொலிப்பதாக இருக்க வேண்டும்.
புரிந்து கொள்ள முடியாத பல கவிதைகள் வருகின்றன. புரிய முடியவில்லையென்றால் அது வாசகனின் இயலாமை என்று ஒரு கருத்துச் சொல்லப்படுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பத்திரிகைக் காரியாலயங்களில் குந்தியிருப்பவர்களெல்லாம் கவிதையில் வல்லவர்களல்லர். கிடைப்பதைப் பிரசுரித்து இடத்தை நிரப்புகிறார்கள். சிற்றேடுகள் குறித்த நோக்கத்தை மையமாகக் கொண்டு குறிப் பிட்ட வாசகர் களுக் காக நடத்தப் படுபவை. உடனர் பாடான
المجر
மெளலானா லுங்கி கறுத்த தொப்பி
எங்கள் ஊரில் கொண்டாட்டம்
ஸக்காத் கொடுக்கிறார்கள்
விளம்பரம்
அரபி
8ᎮᎲᏏ U6Ꭰ60ᎧᏑ அச்சிட்ட தாள் அங்கேதான் வரதட்சினை ஒழிப்பியக்கம்
கையில் தாயத்து அவர் சொன்னார் 'முஸ்லிம்
மன்னிப்புக் கேட்டால் தவறுகள் மன்னிக்கப்படும் சொல்லிச் சொல்லிக் கேட்கிறார் மன்னிப்பு
வட்டி2 வாங்குதல் ஹராம் நேற்றுத்தான் வங்கியில் கட்டினார் வைப்பு முதல்
வலிய வீட்டில்
நோன்பில் Uடி வாசம் சொல்கிறார் டாக்டரின் ஆலோசனை பட்டினி கூடாதாம்
Uட்டங்கள் பெற்றதில்லை போய் வந்தார் மக்கா பெயருக்கு முன்னால் அல்ஹாஜ்'
UrТ6)Jüђ இவர்கள் வாளெடுக்கத் தயார் பள்ளிக்கு வர நேர காலம்’ வேண்டுமாம்
ஆமாம்
விளம்Uரம்
அச்சிட்ட தாள் இங்கே நடக்குது அரங்கேற்றம்
யாத்ரா - 5

இலக்கியகாரரே அதற்கு எழுதுவர். அவர்களிடமிருந்து கிடைக்கும் கவிதைகள் தனக்கு விளங்கினாலும் விளங்காவிட்டாலும் பொறுப்பாசிரியர் பிரசுரித்து விடுவார். சரிநிகர், மூன்றாவது மனிதன், நிலம் போன்ற
இதழ்களிலிருந்து புரியாப் புலம்பலுக்கு நிறை உதாரணம் காட்டலாம். எவருக்கும் விளங்காதபடி எழுதுவதே வித்துவம் என்று நின்று நினைத்தும் சிலர் எழுதக் கூடும். போதாக்குறைக்கு வாசகனின் இயலாமை என்று கூறிப் பத்திரிகாசிரியர்கள் தப்பிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பாவம் விட்டுவிடுங்கள்.
கவிதை விமர்சனத்துறை இலங்கையில் எப்படியிருக்கிறது?
இருக்கிறதென்று யார் சொன்னார்கள்? அது என்றோ செத்துப் போய்விட்டது.
யாராவது ஒருவரைப் பிடித்து, - - - - - -
தனது புத்தகத்தைக் கொடுத்து நான்கு வரி நன்றாக எழுத வைத்து அதைக் கொண்டு போய்ப் பத்திரிகை ஆசிரியரை வளைத்துப் பிரசுரிக்க வைத்து விட்டால் அதுதான் விமர்சனமா? விபவி, தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்பகள் மேற் கொள்ளும் நூலாயப் வு முறையில் பல தரப்பினரும் அபிப்பிராயம் வைக்கும் வாய்ப் புண்டு. இது ஆரோக்கியமான முறையென்றே கருதுகிறேன்.
மனதைக் கவரும் வண்ணமான அழகிய மரபுக் கவிதைகள், தாலாட்டுப் பாடல்கள், மற்றும் தாள லயத்தோடும் சந்தத்தோடுமான இலக்கியங்கள் புதிதாக இனிமேல் தோன்றப் போவதில்லைப் போல் தெரிகிறது. அடுத்த தலைமுறைக்கு இவற்றை கிடைக்காதா?
ரசிக கக
UITL6ü, g5/T6TT6)uub, சந்தம், மரபொழுங்கு எண் பனவெல் லாம் செவியோடு சம்பந்தப்பட்டவை. ஆரம்ப காலத்தில் செவியோடு சம்பந்தப்பட்டே இலக்கியங்கள் எழுந்தததால் அக்காலகட்டத்துக்கு அது பொருத்தமாக இருந்தது. யாத்ரா - 5
அச்சியந்திரப் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து கட்புலனுக்குரியதாய்க் கவிதை வந்து விட்டது. எனவே மேற்குறித்த செவிப்புல அம்சங்கள் அவசியமற்றுப் போயின. எனவே, இவை வாசிப்புக்கான இலக்கியமாகப் புதிதாகத் தோன்றக் கூடிய வாய்ப்புக்கள் குறைவு.
அடுத்த தலைமுறைக் கு இசையோ டிணைந்த உருப் படிகளாக இவற்றை முன் வைப் பதனி மூலம் ஓரளவுக்குத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
உங்களோடு இலக்கியத்துள் நுழைந்த பலர் இலக்கியத்தை விட்டும் தூரப் போய்விட்டார்கள். உங்களால் மட்டும் எப்படித் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடிகிறது?
கணவன், அரச ஊழியன் என்று பல முகங்கள் எனக்கிருந்தாலும் ஓர் இலக்கியகாரன் என்ற உணர்வுடனேயே நாணி எப்போதும் இருந்த வருகிறேன். இதுவே நான் தொடர்ந்து எழுதுவதற்குரிய அடிப்படைக் காரணமாகும்.
எழுத்தைக் கைவிட்டுவிட்ட, அல்லது இடைநிறுத்தியுள்ள பலரை நான் சந்தித்திருக்கிறேன். பிரச்சினைகள் - இதுவே அவர்கள் சொல்லும் ஒரே காரணம். பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத் தீர்வு கண்டு முன் செல்வதே வாழ்க் கையெண் று நான் நம்புகின்றேன். காலப்போக்கில் அதையே சிறந்த இலக் கியமாக்கி சமூகப் பயன்பாட்டுக்கு அழுத்தம் கொடுக்கலாம். வேறு வகையில் சொல் வதானா ல எழுத்தாற்றலை சமூகப் பொறுப்பாகக் கருதிச் செயலாற்றுவதால் தொடர்ந்து எழுதிக்
தந்தை,
கொண்டிருக்கிறேன்.
இறுதியாக.?
என்னை ஒரு பெருங் கவிஞனாக நினைத் துக் கொணி டு கருத் து வெளியிடவில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டால் சரி. நன்றி.

Page 26
முல்லை முஸ்ாரிபா
முள் வேலியிற் பூத்திருந்து நீ மெல்லெனக் கையசைத்தல் சலனப் படமாக நெஞ்சுட் பரவ என் சிறகு விரிவதாக.
புண்ணியாரங் குளத்து வயல் வெளிகளில் சோடிக் குருவியாய்க் கூவிக் களிப்பதாக.
நீராவிக் கரையோரத்து மின்னித் தளிர்களில் பனி தீராது துளிர்வதாக.
எங்கள் தோட்டத்துப் பனம் பாத்திக் கிழங்கின் "பீலியாய்ப் பிரிக்க மெதுமெதுத்து மெல்லென மேலெழுவதாக.
பள்ளிக்கூடம் விட்டுப்பின்
ஒடை வழியேகி செட்டிநாவற் பழத்தோப்பில் நா கணிவதாக.
உன் வீட்டு ரோஜாச் செடியில் நிதமும் நான் நிறம் மாறாமல் பூப்பதாக.
স্কুণ্ঠ
 

யாத்ரா - 5
நீயென் முற்றத்தில் நிலாப் பொழிந்து பெளர்ணமிப்பதாக.
முட்சிறைக்குள் முகஞ்சிதைந்து என் சிறகொடியச் சிறகொடிய.
இப்போதுகளில். என் வயலின் வெளி வனாந்தரித்து விரிவதாயிற்றா. என் ஒற்றைக் குருவி குரல் கிழிந்து செத்திற்றா.
நீராவியூற்றடங்கி மின்னித் தளிர் பனி உலர்த்திற்றா. அன்றேல் அனலிற் கருகி வாடிற்றா. பனங்கிழங்கின் பீலியிலும் துப்பாக்கி முளைத்திற்றா.
உன் வீட்டு ரோஜாச் செடியில் நிதம் கண்ணிர் பூத்திற்றா. என் முற்றத்திலமாவாசை குடிசையிட்டுக் குழுமியழுதிற்றா. முள்வேலியிற் பூத்திருந்து நீ மெல்லெனக் கையசைத்தல் சலனப்படமாக நெஞ்சுட் பரவப்பரவ.
மீளொரு பொழுது நானுன் திருமுகந் தேடியலைவேன்
முள்குத்திய மனசோடெங்கோ
முகவரி தொலைந்ததாக காற்று எனக்குள் செய்தி தீய்க்கும்
யாமிருவர் உன் வீட்டு ரோஜாச் செடியிலமர்வதும் சோடிக் குருவியாய்க் கூவிக் களிப்பதுவும் எவ்வண்ணம் என்றுரைப்பாயாக.

Page 27
மாத்தளை இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் 14.01.2001 அன்று 'யாத்ரா' முதலாம் ஆண்டு மலர் அறிமுக விழா வெகு விமர்சையாக மாத்ளை ஆமினா மகளிர் தேசிய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
வர்த்தக வாணிப, முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட விழாவில் கெளரவ அதிதிகளாக மாத்தளை துணை மேயர் ஐ.எம்.அத்ஹம், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஏ.சி.எம்.ராஸிக், முன்னாள் கல்விப் பணிப்பாளர் ஏ.இஸட்,ஒமர்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்
ரூபவாஹினி செய்திப் பிரிவுத் தயாரிப்பாளர் யூ.எல்.பாக்கப் வர்த்தகர் புகாரி எம். இஸ்மாயில் பிரதம அதிதி, கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ், கலாநிதி துரை மனோகரன் ஆகியோர் விழா மேடையில் (இடமிருந்து வலமாக)
வரலாற்று நூலாசிரியர் ஏ.ஏ.எம்.புவாஜி அவர்கள் தலைமை வகித்த இவ்விழாவில் மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவைச் செயலாளர் எம்.எம்.பீர்முகம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். பேரதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் விமர்சன உரையையும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரை மனோகரன் அவர்கள் சிறப்புரையையும் நிகழ்த்தினர்.
அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்
邸兹
அல் ஹாஜ் ஏ.ஏ.எம்பவாஜி அவர்கள் மாணர்புமிகு
5 - யாத்ரா خر
 
 
 
 

கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் கலாநிதி துரை மனோகரன் என்.அருளானந்தம்
மாத்தளை உதவிக் கல்விப்பணிப்பாளர் என்.அருளானந்தம் அவர்கள் கருத்துரை வழங்கினார். கவிஞர்களான பண்ணாமத்துக் கவிராயர், மேமன் கவி ஆகியோர் கவிப் பொழிவு நிகழ்த்தினர். முதல் பிரதியை வர்த்தகப் பெருந்தகை புகாரி எம். இஸ்மாயில் அவர்கள் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். யாத்ரா ஆசிரியர் பதிலுரை வழங்கினார்.
மேமனர் கவி எம்எம் பீர் முகம்மத் பணிணாமத்துக் கவிராயர்
அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ்.ஹமீத் உட்பட பேரவையின் அங்கத்தவர்கள், கவிஞர்களான ஜின்னாஹற் ஷரிபுதீன், அல் அஸ"மத், கலைவாதி கலீல், இப்னு அஸ"மத், கிண்ணியா அமீர் அலி, இளநெஞ்சன் முர்ஷிதீன், எஸ்.நளிம், பஸ்மினா அன்ஸார், அன்ஸார்.எம்.ஷியாம், மடவளை கலீல் ஆகியோரும் மற்றும் பல முக்கியஸ்தர்களும் இலக்கிய ஆர்வலர்களும் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
艇

Page 28
ஊர்வலம் போப்பற. ஊர்வலம்
வாய்பா ஊர்வலம் போப்பற.
நேத்து வரேக்கும் எங்கட மேல வெச்சாத எரக்கத்தகச்சில வெச்சி கரஞ்சி போன வாய்பா ஊர்வலம் போப்பற.
மீட்டீனும் மாலயும் பாராட்டுமெண்டு பகலிலேம் ராவிலேம் பெரிய மனிசர்ட கார்ல பறந்த வாய்பாவ இண்டேக்கி சந்தேக்கில வச்சி துக்கிக் கொண்டு போக வாய்பா ஊர்வலம் போப்பற.
வாய்பாவ வெளங்காம குடும்பத்த நெனச்சி கவலப்பட்ட உம்மாக்கு கையுங் காலும் இழுத்துப் போட்டு கட்டுக்குள்ள சொகமில்லாமீச்ச வாய்பா இங்க ஊர்வலம் போப்பற.
ஒரு சொமயா ஈச்சிய கடனுல குடும்பம் தாண்டு கொண்டீச்ச. முப்பத்தஞ்சிவயசக்கடந்து தாத்தா மார்க கொமர்களாக ஊட்டுக்குள்ளிச்ச. கச்சி வளக்க நெடுக ஒழச்சி நொடிஞ்சி போன வாய்பா ஊர்வலம் போப்பற.
கஞ்சித் தண்ணியோடயும் நாங்க செலநாளிச்ச. கச்சிக்கார கூட்டாளிமார்ட கல்பு நெறய
கோழிக்கறியும் நெய்யும் மணக்க சாப்பாடு போட்டு மனிசரத் தேடிய வாய்பா நெறஞ்ச மணிசர்ட் மரியாதையோட ஊர்வலம் போப்பற.
எங்கட நெலமேக்கி ஒருநாளெண்டாலும் அழாத வாய்பா
கச்சிச் சல்லி நேத்துராவு இல்லாமப் பெய்த்தெண்டு கதறியழுது ஹார்ட்டட்டக் புடிச்சி மெளத்தாகிப் போன.
இனி மறந்து போப்பற மனிசர்களோட வாப்பா கடேசியாக ஊர்வலம் போப்பற. வாய்பா ஊர்வலம் போப்பற. ஜெளஸ்லி
யாத்ரா l6
 

தோழிக்கு
வடிகிலா ராஜா
ஆணிவேர் ஆழப்பதிந்து ஓங்கி உயர்ந்த விட்ட ஆணாதிக்கத்தால் சிதைக்கப்பட்டு விட்ட சின்னவளே
மத்திய கிழக்கு மண்ணை மிதித்தாய் என்றறிந்தபோது உள்ளம் குளிர்ந்தேன் உற்ற தோழியாய் ஒடிக்கப்பட்ட உன் சிறகுகள் விரிக்கப்பட்டதை எண்ணி மகிழ்ந்தேன்
தாய்நாட்டில் கணவனின் கொடுமையிலும் மாமியார் அடக்கு முறையிலும் முடங்கிப் போகாத உன்னை கடல்கடந்தா காலன் கவர்ந்து போக வேண்டும்?
நம்மண்ணின் அடிமையிலிருந்து மீண்டு அரபு மண்ணில் அடிபட்டு அழிந்து போனாயே
உன் இதயம் அடங்குகையில் என்னவெல்லாம் எண்ணிற்றுப் பெண்ணே என்றுமே அடிமை மாறாப் பெண்களுக்காய் வருந்தினாயா இனிமேல் பெண்பிறவியே வேண்டாமென அல்லாஹற்விடம் இறைஞ்சினாயா
ஊர்க்கதையும் உறவுக்கதையுமாய் ஓடோடி வந்து சொல்லும் நீ உன் இறுதிக் கதை சொல்லாமல் ஒய்ந்து போனாயே
கேள்விகளோடு காத்திருக்கிறேன் பெண்ணே உன்னைக் காணும் அந்த நாள்வரை
யாத்ரா - 5

Page 29
காற்று
956vĩìG|5ĩ 6.Jr.6 TLD.6 TLib.-e#65)
உச்சைப் பிளந்து உதிரம் வியர்வையாகிக்
கச்சைக் கூடாகக் கசிந்தோடச் செய்யும்வெயில் நேற்று நிலம் மீது நெருப்பன்ன விழுந்த வெயில் போட்டு என்னையும் பொசுக்கிய மதியப்பொழுது!
வெள்ளிக் கிழமை யாதலால் வெளிக்கிட்டேன் பள்ளிக்குச் சென்று படைத்தவனைத் தொழுதுவர முடியில்லாத் தலையை முடிக்கைக் குட்டையால் பொடியல்லாற் பெருநடையைப் போட்டேன் தணல்வெயிலில்!
ஆரடா? பக்கத்தால் அடித்தாற்போல் செல்கின்றான் ஏறிட்டுப் பாாத்தேன் எனக்குநன்கு தெரிந்தவன்தான் குமாஸ்தா தொழில்பார்க் கின்றவொரு கூட்டாளி தமாஷாச் சொல்லிவிட்டுத் தான், போறான் எனநினைத்தேனி
ஏற்றிக் கொள்ளுதற்குக் காற்றுக்கானா தென்றுரைத்துப் போட்டு அவன்விலகிப் போகின்றான ஐயகோ! மண்ணாபி ஷேகம் மனிதர்க்குச் செய்யுமளவு விண்ணா லெழுந்தெங்கும் வீசுகின்ற காற்றினது
காதினிலும் பட்டதுவோ? டயர்முழுக்கக் காற்றிருக்கும் போதினிலும் இவன்இங்கண் பொய்புகல லாமோவென்றே வாயுபக வான்அவனின் வண்டிச் சில்விட்டந்தத் தருணம் உஷ்சென்றே த(ட)யர் சுருங்க வெளிவந்தான்!
போனால் போகட்டும் பொடிமனது என்றெண்ணி நானோ வீதியிலே நடந்து கொண்டிருக்கையிலே வண்டியை உருட்டியவாறு வாயுபக வானைத்தேடிக் கொண்டு நடக்கின்றான் கூட்டாளியுங் கொதிவெயிலில்!
யாத்ரா - 5
 

ھے 47.
வெடிகுண்டுத் தேசம் - இ.ஆ.
மிராவோடை - சியாத்
இலங்கை கண்டு வரும் இந்தப் போருக்கு முடிவு இல்லை முடிவுகள் இல்லையென்றால் இந்த நாடு செழிப்பதில்லை
ஒரு ஷெல்லு வருகையில் நெஞ்சம் சிதறிப் போகுதே ஆனால் சன்னம் வருவது கண்ணில் தெரிவதில்லையே இந்தத் தேசமே பெரும் சோகமே அது மாற வேண்டி வேண்டி நாங்கள் இறைஞ்சிடுவோம்
தீர்வில்லை என்றாலோ வாழ்வொன்று கிடையாது
வழிகின்ற விழி நீர்க்கு வகைசொல்ல ஆளேது
சோதனை சொல்லவே ஒரு வார்த்தை இல்லையே வேதனை தீரவே வேளை வரவில்லையே ஷெல்லும் அணுவும் முடிந்து விட்டால் உலகில் சாந்தி வரும் குருதி ஓடும் பூமியெல்லாம் பாலாய்ப் பெருகி எழும் இச் சிறிய தேசம் எந்த இடமும் நெருக்கடியே.
மனமொன்று சேர்ந்தாலோ மரணங்கள் குறைவாகும் கிழக்கென்று சொன்னாலே இதயங்கள் பயந்தோடும் உறவுகள் போனது புதைகுழிகளில் வாழுது இரவுகள் வந்ததும் பெரும் பயங்கரம் வாட்டுது பூக்கள் மலரும் பூமியிலே நெருப்பு எரிகிறது வடக்குக் கிழக்கு வாழ்க்கையிலே கவலை இருக்கிறது இச் சிறிய தேசம் எந்த இடமும் நெருக்கடியே.
துப்பாக்கி இல்லாமல் வாழ்வில்லை என்றாச்சு தப்பான வழி எல்லாம் சரி என்று கண்டாச்சு
வாகனம் ஓடுது அதை 'டைம் பொம் தாக்குது கடைகள் எரியுது கண்ணீர் பெருகுது ஆயுதம் கொண்ட வாழ்க்கையிலே தொல்லை இருக்கிறது அன்பு மிகுந்த வாழ்க்கையிலே ஆறுதல் இருக்கிறது இச் சிறிய தேசம் எந்த இடமும் நெருக்கடியே.
(யுத்த பூமியில் வாழும் ஒரு இளங் கவிஞனின் படைப்பு இது இன்னிசை பாடிவரும் இளங் காற்றுக்கு என்ற பாடல் மெட்டில் எழுதப்பட்டுள்ளது)

Page 30
** d,6Ni dil Ilji Juli
அன்புடன்,
'யாத்ரா-6 வெளிவரவேண்டிய காலப்பகுதியில் யாத்ரா-5 வெளிவருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
'யாத்ரா'-5ன் 50 பக்கங்கள் வடிவமைக்கப்பட்ட நிலையில் மின் ஒழுக்கு காரணமாக 'யாத்ராவின் கணனியின் இதயத்திலேயே கோளாறு ஏற்பட்டது. அதை மீளமைக்க முடியாத நிலையில் வேறு ஒரு இதயம் பொருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மீண்டும் எழுத்துக் கோவை செய்து, வடிவமைக்கத் தாமதம் ஏற்பட்டு விட்டது. இது ஒரு காரணம்.
ஒரு இதழை வெளியிட்டபின் கவிஞர்கள் அதனைப் படித்து விட்டு பின்னரே படைப்புகளை அனுப்பி வைக்கிறார்கள். படிப்பதற்கும் படைப்புகளை அனுப்புவதற்கும்ான் கால இடைவெளி ஆறு மாதங்களாகக் கூட இருக்கின்றது. மதிப்புக்குரிய சிலர் அவ்வப்போது படைப்புகளைத் தரவே செய்கிறார்கள். அவற்றை *மாத்திரம் கொண்டு சஞ்சிகையை வெளியிட முடியாதல்லவா? கத்தை கத்தையாக படைப்புகளை அனுப்பும் சிலரும் உள்ளனர். அவற்றில் கவிதைகளைத் தேடுவதில் நாம் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கிறோம். இது தாமதத்துக்கான மற்றக் காரணம். இந்த இரண்டாவது காரணத்தினாலே சஞ்சிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்த முடியாத நிலைக்கு சஞ்சிகை ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதை
வேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. இப்படி நாம் குறிப்பிடுவது கொண்டு
'யாத்ராவை நிறுத்திவிடப் போகிறோம் என்பது கருத்தாகாது. தாமதங்களைத் தவிர்க்க முடியாது என்பதையே சொல்ல வருகிறோம்.
எழுதுகின்ற சிலரும் கடும் வேலைப்பழுக்களுக்கு மத்தியில் சிதறித் திரிபவர்கள். உதாரணமாக, நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமாரைக் குறிப்பிடலாம். இம்முறை அவரது அம்சம் இடம்பெறவில்லை. பலமுறை முயன்றும் முயற்சிக்கிறேன் என்ற வார்த்தையை மட்டுமே அவரால் தர முடிந்தது.
என்ன செய்வது? அவசரமான உலகத்தில் துரித கதியில் வாழ்வு காலத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.
இதுவரை பேட்டி காணப்பட்டவர்களில் ஒதுங்கியிருந்த பண்ணாமத்துக் கவிராயர். மு.சடாட்சரன் ஆகியோரின் கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் காணக் கிடைக்கிறது. மகிழ்ச்சியாயிருக்கிறது. இன்னும் சிலரை வெளியே கொண்டுவரவேண்டும் என்று எண்ணியிருக்கிறோம்.
அடுத்த இதழை முழுக்க முழுக்க கவிதைகள் நிறைந்த இதழாக வெளிக்
கொணர ஆசை கொண்டுள்ளோம். மிக நீண்ட படைப்புகளை அனுப்பாமல்
'கவிதையாக அனுப்பி வையுங்கள். -
'யாத்ராவின் தாமதம் குறித்து தொலைபேசியில் விசாரித்த சகல நெஞ்சங்களுக்கும் நன்றி. நீங்கள் தரும் உற்சாகத்தில்தான் 'யாத்ராவின் வாழ்வு தங்கியுள்ளது என்பதை மறவாதீர்கள். தாமதமாகிறது என்பதற்காக சந்தாதாரர் கலவரமடையத் தேவையில்லை. உங்களுக்குரிய இதழ் எப்படியும் வந்து சேரும்.
அன்புடன், ஆசிரியர்.
>
வாழைச்சேனை நண்பர் இலக்கியக் குழுவுக்காக, கிறீனியர் றோட் கொழும்பு-8, அஷ்ஷபாப் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்டு ஹாதா றோட், வாழைச்சேனையில் வசிக்கும் எ.ஜி.எம்.ஸதக்காவினால் வெளியிடப்பட்டது.
 
 
 

இது தமிழ் எr அ அr $ ஆ இ 5,7 δ , ή
δεν μή, , , , τ σαπ, β,
ご)○○ C%○ (%パcマaz
(3uporters су 6ay Gooகி)
31/2, Pepiliyana Road, Nedimala, Phone: 734750 Dehiwala Fax: 075 5521.21
Cဖွာဒls f douse /*Շ8, iii,
Dealers in Cycle & Cycle Spare Parts 4//ر FRA, ' ', 'A' p- ~,
N .
35, Mai Street,
KEGALLE,
SRI LANKA ,
Ph. 035 22956
S.A. HIBATHUL KAREEM Co.
Importers, Exporters, General Merchants & Commission Agents
l l 1,113, Old Moor Street. . Tel: 434829,336125, 332580 COLOMBO - 12, Fax: 0094 - 1 - 337577 SRI LANKA Hotline: 072 232468
| LYAS TRADERS
83/2, new Moor street, COLOMBO, 12
TEL:33"749O

Page 31
SMV'ith, õhe 73es
f
- - - - - M.A.AB Managing - - - - -
INTERWORLD MA
|N| | | | R \M/ORARL
(Supliers of Industrial Sewin
○
121.4/4.H. First CrO. COLOM
ཅུ་ Tel: 544478, Fax: 94-7,
E-mail: interwo
mabdulla C
 

εί, €ompliments
ᎠᏗᏤᏤᏖ/
BDULLA
-
; Director
ل
CLINLRY (DDTD DTRADINC Co,
ug Machins and Accessories)
拿
3rd Floor SS Street, [BO — 1 1
O75-341904
4-715824 , , rld (a eurekalk . . .
eureka.lk
ཞི་
-