கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலப்பை 1995.04

Page 1

|( 氰

Page 2
Travelling overseas?
For all your travel needs:
Airline tickets Packaged tours * Travel Insurance
* Visa * Hotel reservations 南 * Ground transport arrangements
Contact your partner in travel . . .
AIR TRAVEL EXPRESS
(ACN 064 084.297. Licence No. 02TA: 004883)
level 2, 4 The Boulevarde, STRATHFIELD 2135
(near Strathfield railway station-adjoining ANZ Bank)
Phone: 02-7445899
Fax: 02-7448744
HERO MOVIE LAND & SPICE LAND For all supplies of Fijian, Indian & Sri Lankan : Foods and Spices and
Tamil, Hindi & Malayalam Movies 9:00am-8.00pm, 7 Days 281A Beames Ave., Mt. Druit 2770 Tel:(02).6254638 (New Owners)
Sponsorsed by
The Student Representative
Council
University of Sydne
TAML and HND Movies are Available Wholesalers and, Retaiers
* Indian Spices * Island Foods * Philipine Foods * Groceries
Opening Hours: Mon - Wed 8am - 7pm
Thursday 8am - 9pm Friday 8am - 8pm Saturday 8am - 6pm
Sunda 9am - 6pm
h ()|BA|L SHOPBIEST Shop 2, 32-50 Rooty Hill Road
North, Rooty Hill 2766 Tel: 6753954
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

( மனித மனதை உழுகின்ற ெ
"abasilau' உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும் ஆசிரியர் குழு
திருகேதீஸ்வரன் பொண்மயிலைநாதன்
திரு செ. பாஸ்கரன் திரு கோ. செல்வநாதன் செல்வி இந்துமதி வெங்கடாசலம் செல்வி கோதை சங்கரலிங்கம் திரு பகீரதண் மகாதேவன் திரு A.C. நேசகுமார் திரு விசாகன் பொன்னம்பலம் செல்வி பபிதா சற்குணராஜா திரு ஞானசேகரம் சிற்றங்கண் செல்வி சாந்தினி கிருஷ்ணசர்மா மிதரைவ ஆசிரியர் திருமதி பாலம் லக்ஷமணன் வடிவமைப்பு : கேதீஸ் sarius :-Aus s2.50 ஆண்ருச்சந்தா 9 LGGTTG) :- Aus S 10.00 QaafpsTIG :- Aus S 15.00 பிரசுரிக்கப்படாத படைப்புகள் திரும்பம் பெற இயலாது. படைப்புகள், சந்தா அனுப்பவேண்டிய முகவரி "Kalappai" Sydney University Tamil Society P.O.Box 40, Wentworth Bldg.,
University of Sydney, NSW 2006 AUSTRALIA ܢܠ
ஏர் 4
மனிதக் கோலங்கள் 2 مممممممه வாசகர் கடிதங்கள் المممممممه கர்வபங்கம் معمم مممه கிறீஸ்துவினர் பாருகள். .9 தமிழ் சிமாழியின் சிறப்பு الممممممه
தண்ணீர்த் தாவியம். .2 مممممم புதிய கோசங்கள் لممممممهl3 மனைவி அமைவசிதல்லாம்.டி RACISM كلممممممه வள்ளுவர் சொன்ன கடவுட்.உ0 கோபமோ தாபமோ? 23 ممممممه ஈழத்துப் பெரியார் -er 2
தும் தண்ணா தனனானா .உ6 தமிழ் ஊக்குவிப்புப் போட்டி .உ7
Øምጠu፤ፊé seesao சிதறல் நிரப்பல் போட்டிஇசியு-21 Australian Famils and
- ...Their Ethnicity ఈత2
கண்சிட்ருத்த கடிதங்கள் .38 முதலியாரும் மாடனும் تھ#لسیمیس உணர்வுகள் உள்ளத்தினர்
தனி உரிமை welf-7
FA ప్రాం (του og . է28ոs6 கலைநிகழ்ச்சீஆர்கண். கே.57 சொல் நிரப்பல் போட்டி-இலSபு. விடைகளும், அதிட்டசாலிகளும்.60
ஓவியம்-தகலைமணி, மனோஜெகேந்திரன்
& ஞானசேகரம் சிற்றங்கன் அட்டைப்படம்-தீமதி இராஜதுரை
கலப்பை", சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் காலாண்டுச் சஞ்சிகையாகும்.

Page 3
கலப்பை
சித்திரை 1995
வாசகர்களே,
சமாதானம், ஒற்றுமை, நல்வாழ்க்கை
இவற்றுக்காக பல தனிமனித சக்தரிகளும், அமைப்புகளும் பாடுபடுகின்றன.
இவற்றை நல்வழிப்படுத்தரி
சமுதாயத்தை நேரிய முறையில் வைப்பதற்காக இறைவழிபாடு, மத அமைப்புகள் என்பன செயல்படுவதாக சொல்லப்படுகின்றது. அதை மக்களில் அநேகமானோர் நம்புகின்றார்கள். இறைவழிபாட்டில் நாட்டம் இல்லாதவர்கள் கூட, அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பம், பிணி போன்றவை ஓர் அளவிற்கு மீறும்போது தன்னம்பிக்கையை இழக்கின்றார்கள். அந்த நேரத்தல் ஆண்ட 6/6O60T வேண்டுகின்றார்கள்.
அப்படியானவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய வகையில் பல மத குருக்கள், சாமியார்கள் தொடர்பு ஏற்படுகின்றது. இதனால், ஆங்காங்கே பல சாமியார் வழிபாடுகள் தொடங்கி வரிடுகளின்றன. இது மேற்கத்தரிய நாடுகளைவிட இந்தியா இலங்கையில் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.
மனிதக் 65 tails
அரசியலில் தொண்டர்கள் தலைவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அவருக்காகவே உயரிரை துறக்கசின்றபோது அதன் முலம் அந்தத்தலைவர்கள் ஊழலரிலும், கேடுகெட்ட வியாபாரத்திலும் பணம் தேட முற்பட்டு, நாட்டையே குட்டிச் சுவராக்குவதுபோல், அதீத நம்பிக்கை கொண்டு வழிபடும் பக்த கோடிகளால் சாமியார்கள் என்று போற்றப்படும் சிலர் கிரிமரினல்களாக, காமுகர்களாக, அரசியல் செல்வாக்குப் பெற்ற தரகர்களாக Ꮝ . 6m 6Ꭷ//7 6m7456r/ /7 45 செயல்படுகின்றார்கள். கொலை, கற்பழிப்பு, குழிச்சி என்பன இவர்களுக்குக் கைவந்த கலையாகிப் போய் விடுகின்றன. இவற்றை மறைத்து நல்ல வேடம் போட இப்படியான பக்த கோடிகளை துணைக்கு வைத்து சித்து விளையாட்டுகள், குறளிவித்தைகள் முலம் தங்களை 62([[ნ வரித்தரியாசமானவர்களாகவும், ஆண்டவனின் அவதாரமாகவும் காட்டிக்கொள்கிறார்கள்.
ஆத்மா, மெய்யுணர்வுசக்தரி, இறையொற்றியம், மனத் தூய்மை போன்ற தெய்வக் கோட்பாடுகளில் ஒன்றைக்கொண்டு மக்களை கவர்வது
2
 

கலிப்பை
சித்திரை 1995
இல்லாமற்போய், தங்கம், விங்கம், புஷபம் போன்றவற்றின் மூலம் மக்களைக் கவரும் தன்மை பெருகிவிட்டது.
இன்ற் இந்தபியாவில் பாலரியல் வன்முறை, கிரிமினல் குற்றங்களில் ல் த ர ட ர புள' எ வர க ளாக இனங் காணப்பட்டும், அரசியல்
வாசகர்கட்த
செல்வாக்கால் மறைக்கப்பட்டவர்கள் பலர்.
dՔ էջ
தன் நம்பிக்கையும், சுய சிந்தனையும் உள்ளவர்களாவது இந்த உண்மையை விளங்கிக்கொண்டு இப்பழயான ஏமாற்று வாதரிகளை இல்லாது செய்ய முயல்வார்களா?
- ஆர்.குழு
ΦβαίΑσί υιό ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு உழவைக் காட்டினும் உரம் போடுவது நல்லது, களை எடுத்து நீர் பாய்ச்சி வளர்த்த பயிரை வேலியிட்டுக் காப்பது அதைவிட இன்றியமையாதது ஆகும். அதி 104 குறள். 8
- 4. அருத்த இதழுக்கு. கலப்பையின் அதிக பக்கங்களில் வெளிவர விருக்கும் ஆண்டுமலருக்கு ஆக்கங்களை அனுப்பி வைக்க விரும்புவோர் அவற்றை 14/6/95 க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்க வேண்டும். இந்த இதழில் பிரசுரிக்கப்படாத தரமான ஆக்கங்கள் ஆண்டுமலரில் பிரசுரிக்கபடும்.
கலப்பை இதழில் உங்கள் விளம்பரங்களை பிரசுரிக்க விரும்பின், பகீரதன் மகாதேவன் உடன் CO2) 746 74O4 6TGip தொலைபேசி இலக்கத்திலோ அல்லது முழு விபரத்துடன் கலப்பை முகவரியுடனோ தொடர்பு கொள்ளவும்.
கலப்பை சஞ்சிகையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வெளிவரும் எமது அடுத்த இதழ், சிறப்பு மலராக அமையவுள்ளது. இதனையொட்டிய விழா, எதிர்வரும் ஜூலை மாதம், 23ம் திகதி, மாலை 4.30 மணிக்கு ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை மண்டபத்தில் நடைபெறும். அண்றைய தினம், கலப்பை பற்றிய சிறப்புரைகள், ஓராண்டு மலர் வெளியீடு மற்றும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி என்பன இடம்பெறும். இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Page 4
கலப்பை சித்திரை 1995
வாசகர்களே கலப்பையில் பிரசுரிக்கவென எமக்கு அனுப்பிவைக்கப்படும் எந்த ஆக்கமோ அல்லது கடிதமோ, எழுத்தாளரின் பெயர், முகவரி என்பவற்றுடன் அனுப்பிவைக்கப்படல் வேண்டும். உங்களது பெயர், முகவரி குறிப்பிடப்படாது, புனைபெயரில் மட்டும் அனுப்பப்படும் ஆக்கங்களும், கடிதங்களும் கலப்பையில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம். இதழுக்கு இதழ், கலப்பை பற்றிய குறை-நிறைகளை, எமக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி வருவோருக்கு எமது நன்றி. ஆர்குழு
மதிப்பிற்குரிய ஆசிரிய குழுவிற்கு,
எனது தமிழ் ஆர்வத்தினால் 1955ம் ஆண்டு கலை ஈழம்" என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தேன். அதன் பின் இலங்கையில் முதல் தமிழ்படமான தோட்டக்காரி என்னும் படத்தைத் தயாரித்தோம். தற்பொழுது என் இருப்பிடம் குவீன்சுலாந்து இங்கு வரமுதல் அவுஸ்திரேலியாவின் தேச குணத்தை ஆராய்ந்து குவீன்சுலாந்தில் நிரந்தரமாக வாழ நிச்சயித்தேன். இவ்விடத்தில் தமிழர் சமுதாயம் பல வசதிகளோடு சீவிக்கிறார்கள். மகிழ்ச்சி கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது சமுதாயத்தின் நோக்கம். இவ்விடத்தில் வாழும் தமிழர்களின் முயற்சியால் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இம்முயற்சியை எடுத்த எல்லோருக்கும் எனது நன்றி உலகெங்கும் வாழும் எல்லா இந்து மதத்தாருக்கும் இது மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
சிட்னியில் இருக்கும்போது, 'உலகத் தமிழர்தம் உணர்வை உயர்த்தி நிற்கும், கலப்பை ஆசிரிய குழுவில் ஒருவரைச் சந்தித்ததில் ஆனந்தம் அடைந்தேன். பிறந்த நாட்டை விட்டு வாழும் நாட்டில் தம் பாஷைக்கும், சமயத்திற்கும் பாடுபடுபவர்கள் சிலரே. எங்கள் சமூகக் கொள்கைகள் எங்கள் சமுதாயத்திற்குச் சிறந்தவை. ஆனால் பிற நாடுகளில் வேர் ஊன்றிய எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் அந்தக் கொள்கைகளையும் பழக்க வழக்கங்களையும் கடைப்பிழப்பது மிகவும் கஷ்டம் சிலவற்றை நாங்கள் கட்டாயம் மாற்றிக் கொள்ளவேண்டும் அதிலும் முதியவர்களாகிய நாங்கள், இளம் சமுதாயத்திற்கு தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றி ஊரோடு ஒத்துவாழ உதவும் வழியும் கொடுக்க வேண்டும். இன்றேல் இளம் பிள்ளைகளின் வாழ்வு சஞ்சலம் அடையும் குடும்பங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருக்கும் ஐக்கியம் அழிந்து போகும்.
கடந்த இதழில், கல்யாணம்" என்னும் கதையில் வந்த மேனகா' என்னும் கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது? காலத்தோடு உடன்பட்டு நடக்காததால்தான்அந்த நிலை. ஈழத்துப் பெரியார்' போன்ற தொடர் வெளியீடுகள் மூலம் மறைந்து போன பல பெரியார்களை மீண்டும் எங்கள் இளம் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்துவது ஊக்கத்தைக் கொடுக்கும். வி சி முத்துவேலு
4
 
 

கலப்பை சித்திரை 1995
பேரன்புமிக்க பெருந்தகையீர்,
கலப்பை சஞ்சிகையைப் பழத்து மகிழ்ந்தோம் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், உழவனுக்குக் கலப்பை மிகமிக முக்கியம். அந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் தலையங்கம் அளித்திருப்பது நனி பொருத்தம் ஈழத்துப் பெரியார் என்று எமது குருநாதர் நல்லைக்குருமணி அவர்களின் அருமை, பெருமை, அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை உள் உணர்வோடு குறித்திருப்பது பாராட்டுக்குரியது. ரசிகன், ஸ்வாமிகளோடு நெருங்கிப் பழகியிருக்கிற7ர். கட்டுரை சிறிதாயினும் கருத்தாழம் மிக்கது. கடல் கடந்து சென்ற யாழ்ப்பாண மகனொருவர் ஸ்வாமிகளை மறவாது நினைவு கூர்வது மிக மேன்மை உடையது. மற்றும் நல்ல கட்டுரைகளும் இச்சஞ்சிகையிலுள்ளது, தமிழ் ஆர்வமுள்ளளோர் அதனை வளர்ப்பதற்கு இவை துணைபுரிவன கலப்பை இன்னும் வளமுற்று வளர வேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவருளை உளமார வேண்டி, இச்சஞ்சிகைக் குழுவினரை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கின்றோம்.
என்றும் வேண்டும் இன்ப அன்பு, பூரிலழறி குருமஹா சந்நிதானம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், யாழ்ப்பாணம், இலங்கை
வணக்கம், கலப்பையின் ஒவ்வொரு இதழும் தரத்தில் உயர்ந்து வருவதைக் காண்கிறேன். இது மேலும் மேலும் உயர்ந்து சிந்தனைக்குத் தீனிபோடும் ஒரு சிறந்த இலக்கிய இதழாக வளர வாழ்த்துகிறேன்.
இன்றைய இளைஞர் என்ற தலைப்பில் வெளியான ஆசிரியர் தலையங்கம், சிந்திக்க வைத்தது. வாய்ப்புக்கள் கொடுக்கப்படுபவை அல்ல. எடுத்துக்கொள்ளப்படுபவை. ஆம், ஆசிரியர் குறிப்பிட்டபடி, ஓரிரு ஆண்டுகள் கூட்டித்துடைத்தல் வேலைகளைத் தானே முன்னின்று செய்பவர் யாரானாலும் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் அவர் தலைவராவதைக் கண்கூடாகக் காண்கிறோம். நன்றாக வளர்ந்துவிட்ட, வலுவான அமைப்புகளில் முக்கிய பதவியை அடைவது என்பது முதியவர், இளைஞர் உட்பட அனைவருக்குமே ஒரு கடினமான செயலாகும். இதற்குத் தொடர்ந்து பல ஆண்டுகள் உழைக்க நேரிடும். ஆகவே, திறமையும் சேவைமனப்பான்மையும் உடையவர் யாரானாலும் அவர்களுக்கு அனைத்து அமைப்புக்களின் கதவுகளுமே திறந்துதான் இருக்கும் என்பது எனது கருத்தாகும். தைப்பொங்கல் இந்து மதத்தவரால் கொண்டாடப்படுவது என்பதைவிட, தமிழர்களால் கொண்டாடப்படுவது என்று கட்டுரை ஆசிரியர் எழுதியிருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்- ஏன் அதுதான் உண்மையும் கூட. மேலும், ஆரிய வழிபாடு பண்பட்ட பழைய நாகரிகங்கள் அனைத்திலும் ஒரு அங்கமாகும். அது அப்பழயிருக்க, பொங்கலின் ஒரு அம்சமான ஆரிய வழிபாட்டை வைத்துக் கொண்டு, வேத, இதிகாசங்களுக்கும் பொங்கலுக்கும் கட்டுரை ஆசிரியர் முழச்சுப் போட முயல்வதை விட்டு, பொங்கலின் மற்ற அம்சங்களான மாட்டுப் பொங்கல், கன்னிப்பொங்கல் பற்றி எழுதியிருக்கலாம். (7ம் பக்கம் பார்க்க)
5

Page 5
கலப்பை
சித்திரை 1995
மழை 'சோ' வென்று பெய்து கொண்டிருந்தது. ஆனந்த வாரிதியில் குளித்தெழுவது போன்று நீராடிக் கொண்டிருந்தது கல்வெட்டு. அருகாமையில் ஒரு பேரறிஞரால் எழுதப்பட்ட நூல் மழையால் கசங்கி முற்றாக நனைந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்டதும் கல்வெட்டுக்குச் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. 'தம்பி’ என்று குரல் கொடுத்தது கல்வெட்டு “என்ன அண்ணா?’- நூல். "ஏன் நடுங்குகின்றாய் ?” "குளிர் தாங்கமுழயவில்லை” "என்னைப் பார்த்தாயா? எவ்வளவு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றேன்: "ஹ"ம்! இந்த மழையென்ன, ஊழிக்காற்றே வீசினாலும் நான் நிலைபெயரமாட்டேன், "நீ நூல் வழவில் இருப்பதால்தானே தம்பி இப்பழச் சீர்குலைந்து விட்டாய்? &?GuIT LET6)Jubl" "ஆமாம், அதற்கென்ன செய்வது? நீங்கள் இந்த இடத்திலேயே இருக்கிறீர்கள். நானோ பலருக்கு அறிவு புகட்டும் அரிய
சேவையில் ஈடுபட்டிருக்கிறேன்.” "அறிவாம் அறிவு! நன்றி கெட்ட மனிதர்கள். நீ புதிதாக, மெருகுடன் இருந்த பொழுது உன்னைத் தங்கள் கரங்களில் அனைத்துச் செல்வதில் பெருமை கண்டார்கள். நீபழசாகியவுடன் பாவம், எறிந்து விட்டார்கள்!” “என் கடன் பணிசெய்து கிடப்பதே, அண்ணா.!” “பணி செய்து என்ன பலன் கண்டாய்? என்போல் கல் மேல் எழுத்தாய் இருந்தருந்தால் பல்லுாழி காலம் பெருமையுடன் வாழலாமே, தம்பி ?” “எனக்கு அந்த ஆசை வேண்டாம், egygólgait” ‘பைத்தியக்காரன், ஹ.ஹஹற்ஹா! உனக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும்.” மழையும் ஓய்ந்தது. மனித அரவம் கேட்கவே இருவரும் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தனர். ஓர் அரசியல் தலைவர் பல இளைஞர்கள் புடைசூழ அங்கு வந்து சேர்ந்தார். ‘நண்பர்களே!’
'676ié077' "அதோ பார்த்தீர்களா ஒரு கல்வெட்டு”
6
 
 

கலப்பை
சித்திரை 1995
“அதில் நமது நாட்டை அழமை கொணர்ட நரிகழ்ச்சியைப் பொறித்திருக்கிறார்கள்.” வார்த்தையை முழக்குமுன் கல்வெட்டு சுக்குநூறாகியது. "இதோ ஒரு நூல் அதன் பக்கத்தில் கிடந்தது.”
அல்லவா? அவர் கையெழுத்துக் கூட இதில் இருக்கிறதே! பொன்னேபோல் பாதுகாக்கப்பட வேண்டிய நூல், நடைபாதையில் கிடக்கின்றது, எடுத்து வாருங்கள். கர்வபங்கம் அடைந்த கல்வெட்டு உருக்குலைந்து, உளம் சோர்ந்து, சிரம் தாழ்த்திக் கிடந்தது .
"நேர் கொண்ட பார்வையினதாய்” ஏறு நடை போட்டது, நூல்
நம்நாட்டு மேதை எழுதய நுால்
"ஆ கள் f ஆறுமுகநாவலர்
வாசகர் கடிதத் தொடர்ச்சி. "சத்தியம் சாய்வதில்லை”, பழைய கருத்தானாலும் இதனை ஆசிரியர், திருமதி மனோ ஜெகேந்திரன், உருக்கமான கதையாகப் படைத்திருக்கிறார். "உணர்வுகள் உள்ளத்தின் தனி உரிமை” - கலைமணியின் இந்தப் படைப்பு, முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் நடையும், சம்பவங்களின் அமைப்பும் பாராட்டுக்குரியன. வல்வை தேவராசா, தலைக்கணம் பிடித்து அலையும் சில கலைஞர்களுக்கு வைத்த குட்டு நறுக். . அதைப்போல "செமிக்கவில்லை” யில் திருமதி கெளரி சிறீஞானகுரு கலாசாரம் விபச்சாரமாவதை பிட்டுப் பிட்டு வைத்துள்ளார். பிட்டு என்றவுடன் "புட்டு” வின் இளைய தலைமுறையின் சிந்தனைகள் முன்னுக்கு வருகிறது. வரதட்சணை என்ற கருத்தில் பல கதைகள் வெளியிடப்படும் இந்த நாட்களில் அன்புக்கு ஏங்கும் உள்ளத்தைக் கண்டேன். மேலும் பொறியியல், நுண்கலை மற்றும் மருத்துவக் கட்டுரைகள் அதிக அளவில் வெளியிடப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். கடைசியாக, ஆங்கில அல்லது மற்றமொழி வார்த்தைகளுக்கு நேரடியாக பொருள் தரும் தமிழ் வார்த்தைகள் கிடைக்காதபொழுது அவ்வார்த்தைகளின் ஒலி அமைப்பு மாறாமல் அவற்றைத் தமிழரில் கையாளுவது வழக்கம். இதனைக் கலப்பை கடைப்பிழக்குமாயின் அதன் தரம் மேலும் உயரும் என்று நம்பலாம். உதாரணமாக, "Australia” என்பதை 'ஆஸ்திரேலியா” என்று எழுதலாம் t, d என்ற ஆங்கில ஒலிக்கு நேராக ட' என்ற தமிழ் ஒலி எழுத்து இருக்கும் பொழுது ற என்ற எழுத்தினைப் பயன்படுத்துவது எவ்வளவு சரி?
வாழ்க கலப்பையின் தமிழ்ச் சேவை 22772 447 42222222 -----------------------------------
இதழ்-2 புதிரின் விடைக்கான விளக்கம் சில கலப்பை வாசகர்கள் , இதழ்-3 இல் பிரசுரிக்கப்பட்ட முளைக்கு வேலைக்கான விடைக்கு விளக்கத்தை கேட்டு கழதங்கள் எழுதியிருக்கிறார்கள். இதோ விளக்கம் கேள்வி: முன்று பூனைகள், மூன்று எலிகளை முன்று நிமிடத்தில் பிடிக்கவல்லன. நூறு எலிகளைப் நூறு நிமிடத்தில் பிடிக்க எத்தனை பூனைகள் தேவை? விடை: 3 பூனைகள் விளக்கம்: இப்புதிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியாக அமையக்கூடியதாக இருப்பினும், எம்மால்த் தரப்பட்ட விடைக்கான விளக்கத்தை இங்கு தருகின்றோம். இங்கு முன்று பூனைகளும் சேர்ந்து தான் எலிகளை ஒவ்வொன்றாகப் பிடிக்கின்றன என எடுத்துக் கொண்டால், முன்று பூனைகளும் சேர்ந்து ஒரு எலியைப் பிடிக்க ஒரு நிமிடம் எடுக்கிறது. எனவே நூறு எலிகலைப் நூறு நிமிடங்களில் பிடிக்க முன்று பூனைகள் தேவை=
7

Page 6
With Compliments
From
THURAI RAJAH SOLICITOR
SSLLLLYY LLLL S0LSSLSS YSSS SSLLiiiLYSLSLLLLzYYLLLLzzzYS
CONVEYANCING
When it comes to buying or selling a property do not make a move without a solicitor conveyancing is much more than paper workl
LITIGATION
We advise, we negotiate, We prepare and arrange court proceedings for all areas of litigation.
IMMIGRATION
MMIGRATION AGENT NO. 53030 We accept instructions and offer complete Migration service
For appointments call : (02) 6341170
953 County Drive Cherrybrook NSW 2126
THAMIEPILA THAMIBITHURA THURA I RAJA:
8 GRA DIP EG MRA IS SE DY
SOLICTOR OF THE HIGH COURT OF AUSTRALIA
SOLICTOR OF THE SPREME COLRT OF NEWSOLT WALES
ATORNEY AT LAW OF THE SUPREME CORT OF SRI LANKA
 
 
 
 

கலப்பை
சித்திரை 1995
பரிசுத்த வாரம் என எமது தமிழ் LOTListib, Holy Week 61607 -25 sidih மரபிலும் அழைக்கப்படும் பாஸ்குவிழாக் காலம் ஒவ்வோர் கிறிஸ்தவன் வாழ்விலும் மிகவும் முக்கியம் வாய்ந்த, பொருள் பொதிந்த காலமாகும். இவ்வாரத்திலேயே கிறீஸ்துவின் மீட்புப் பணியின் உச்சக்கட்ட நிகழ்வுகளான அவரது பாடுகள், மரணம், உயிர்ப்பு என்பன இடம் பெற்றன. இவையே இயேசு எனும் யூதப் பிரஜை ஓர் மனிதன் மட்டுமல்ல, அவரே கிறஸ்து எனும் மீட்பர், இறைமகன் என்ற உண்மைகளை ஆணித்தரமாக வெளிப்படுத்தரிய நரிகழ்வுகளாகும். இதனாலேயே புனித சின்னப்பர் இயேசுக்கிறீஸ்து உயிர்த்திராவிட்டால் கிறீஸ்தவர்களின் விசுவாசமே வீண்' என்கிறார்.
இந்தப் பரிசுத்த வாரமானது 40 நாட்கள் தபசு காலத்தின் இறுதி வாரமாகும். இந்த 40 நாட்களும் கிறீஸ்து வனாந்திரத்திலே நோன்பு இருந்து செபித்ததைக் குறிப்பதாய் அமைகின்றது. இந்தத் தபசு காலம் சாம்பல் புதனுடன் (Ash Wednesday) -2, TibLLOTatiading/. அன்றைய நாளில் கிறீஸ்தவர்களின் நெற்றியில் மண்ணில் இருந்து வந்த மனித உடல் மண்ணுக்கே திரும்பும், ஆனால் ஆன்மாவோ இறைவனில் ஒன்றிக்கும்; எனவே மனம்தரும்பி இறைவனின் வார்த்தையை நம்புங்கள் என்றுணர்த்தும் அடையாளமாக - சாம்பலரினால் சிலுவை அடையாளம் வரையப்படுகின்றது. தொடர்ந்து வரும் நாற்பது நாட்களும் மக்கள் தமது பாவவாழ்க்கையை விட்டு மனம்திரும்பி
மென்மேலும் இறைவனுடன் ஒன்றிக்கும் காலமாகும்.
பரிசுத்த வாரத் தொடக்கம் குருத்தோலை ஞாயிறுடன் (Palm Sunday) ஆரம்பமாகின்றது. இந்தக் குருத்தோலை ஞாயிறானது யூதர்கள் இயேசுக் கிறிஸ்துவைத் தமது அரசனாக ஏற்று ஒசானா' எனும் மகிழ்ச்சிக் கீதம்பாடி ஜெருசலேம் விதிகளில் அவரை ஊர்வலமாக அழைத்து வந்ததைக் குறிக்கின்றது. இவ்வாறு ஒசானா கீதம் பாடிய அதே யூத மக்களே அவரைப் பெரியவெள்ளி அன்று சிலுவையில் அறைந்தார்கள். பரிசுத்த வாரத்தின் அடுத்த நிகழ்வு பெரிய வியாழக்கிழமை (Holy Thursday) அன்று நினைவுகூரப்படுகின்றது. இந்த நாளே கிறீஸ்து தாம் இவ்வுலகில் இருந்து சாவை வென்று உயிர்த்து வானகம் சென்றாலும் என்றும் தமது மக்களுடன் ஆன்மீகத்தில் வாழ்வேன் என்றதன் அடையாளமாக தனது உடலையும் இரத்தத்தையும் அந்த மக்களுக்கு அளிக்கும் வண்ணம் "தேவநற்கருணையை அதாவது திவ்விய அப்பத்தையும் இரசத்தையும் ஏற்படுத்திய தரினமாகும். இந்த நபிகழ்வையே கிறீஸ்தவர்கள் ஒவ்வொரு திருப்பலிப் பூசையிலும் நினைவுகூர்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து கிறீஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும் பெரிய வெள்ளிக்கிழமை அன்றும் (Good Friday) அவர் சாவை வென்று மூன்றாம் நாள் உயிர்ந்து எழுந்ததை உயிர்த்த 6p stuff06inlf (Easter Sunday) நினைவுகூர்கின்றார்கள்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்
9

Page 7
கலப்பை
சித்திரை 1995
நடைபெற்ற இயேசுக் கிறீஸ்துவரின் பாடுகளையும் மரணத்தையும் கொண்டாடும் நோக்கத்தோடு மட்டும் மக்கள் நரின்றுவிடுவார்களானால் “எனக்காக அழாதர்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று இயேசு அன்று சிலுவை சுமந்து சென்ற போது தன்னைப் பார்த்துப் புலம்பி அழுத ஜெருசலேம் பெண்களுக்கு மொழிந்த வேதனை நிறைந்த வார்த்தைகள் இன்று ஒவ்வொருவர் மேலும் விழும் சாட்டை அடிகளாகவே அமையும் அன்று சிலுவை சுமந்து தம்மரணம் நோக்கிச் சென்ற அதேவேளையிலே தம்மைப் பார்த்து அழுத அப்பெண்களிடம் இயேசு இவ்வார்த்தைகளை மொழிந்தாராகில் இன்று அவரின் பாடுகள் மரணம் மட்டுமல்ல, அவர் உயிர்த்து தன் தந்தையுடன் மாட்சியில் வாழ்கின்ற அவருக்காக துயரப்படுவதும் கண்ணிர் வழப்பதும் மிகவும் வேழக்கையானதும் அர்த்தமற்றதுமே ஆகும். ஆனால் இயேசு கூறிய அவ்வார்த்தைகளை ஆழமாக சிந்தரிப்போமாகின் மேற்பழ பாஸ்கு விழாவின் பொருளும் நோக்கமும் நமக்குத் தெளிவாகப் புரியும். அதாவது இன்று எமது நாட்டிலும் இன்னும் பல இடங்களிலும் எத்தனையோ மக்கள் - எமது சகோதரர்கள் - உண்ண உணவின்றி நோய்க்கு மருந்தின்றி ஓய இடமோ காலமோ இன்றி, அனுவேனும் நிம்மதி இன்றி ஒவ்வொரு கணமும் குண்டையும் துப்பாக்கி ரவைகளையும் எதிர்பார்த்து தெருத் - தெருவாய், ஊர் - ஊராய் ஓடுகின்ற வேளையிலே இங்கு நிம்மதியாக - பாதுகாப்பாக வாழப் பாக்கியம் பெற்ற நாம் அடுத்தவர் துன்பதுயரங்களைக் கண்டு கண்ணர் சிந்துகின்றோமா? காணாதவர்போல் வாழவில்லையா?
கர்வம் பொறாமை, சுயநலம் என்பவற்றால்
ஆட்கொள்ளப்பட்டு அடுத்தவன் உருவில் வாழும் இறைவனை அநியாயத் தீர்ப்பிட்டு, பழி துயரம் எனும் சிலுவை சுமத்த கழுமரத்தற்கு இட்டுச் செல்கின்றோம். இதனால் இயேசு பிரான் இன்றுள்ள மக்களைப் பார்த்து உயிர்த்து மாட்சியரில் வாழும் எனக்காக அழாதீர்கள், ஆனால் இன்றும் அயலவர் உருவில் வாழும் என்னைத் துன்புறுத்தும் உங்களையும் உங்கள் பிள்ளைகளாகிய உங்கள் செயற்பாடுகளையும் வினைப் பயன்கள் அனைத்தையும் நினைத்து மனமுருகி அழுங்கள், மனம் திருந்தி வாழுங்கள்' என்று கூறுகின்றார். சிலுவை சுமந்த இயேசுவின் சீடராய் வாழவிரும்பின் சிலுவை சுமத்துவோராய் அல்ல மாறாக சிலுவை சுமப்போராய் தம்பின்னே செல்ல அழைப்பு விடுக்கின்றார். இவ்வழைப்பால் அவர் முன்மொழியும் வாக்குறுத? கல்வாரியில் முழவுறும் ஓர் சிலுவை மரணம் அல்ல - கிறீஸ்தவர்களின் நம்பரிக்கையரின்படி அதற்கப்பாலர் தொடர்கின்ற மகிமை, உயிர்ப்பும் மாட்சிமை வாழ்வுமே ஆகும். இதுவே ஈஸ்டர் விழா எமக்குத் தெரிவிக்கும் உண்மையும் அதைக் கொண்டாடும் நோக்கமுமாகும்.
இன்றைய சூழலிலே ஈஸ்டர் விழாவின் செய்தபியானது - மக்கள் தமது பாவங்களை உணர்ந்து அதற்காக மனம் வருந்தி தம்மை ஒறுத்து, மனந்திரும்பி இறைவனின் சாயலில் துன்புறும் அயலவர்க்கு அன்பு செய்து உதவி புரிவதன் மூலம் இறைவனுடன் இணையும் செய்தபியானது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திலும் பற்றுக் கொண்டு இறைவனில் நம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய செய்தியாகவே அமைகின்றது.
10

கலப்பை சித்திரை 1995
தமிழ் மொழியின் சிறப்பு
ஏ. மோகன்ராஜ்
‘ஓங்கலிடை வந்துயர்ந் தோர் தொழ விளங்கும்
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னோர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னேரிலாத தமிழ்.”
என்னும் இத் தமிழ்ப் பாடல் தமிழ், ஞாயிறு ஆகிய இரண்டிற்கும், சில ஒற்றுமைப் பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
ஞாயிறு மலையிடைத் தோன்றி உயர்ந்தோரால் தொழப்பட்டு உலகில் கானும் இருளைப் போக்குகின்றது. அவ்வாறே தமிழம் பொதிய மலையிடைப் பிறந்து அறிவு சான்றுள்ள பெருமக்கள் வணங்கி வாழ்த்த விளங்கி உலகிருளைப் போக்குகின்றது என்பது இப்பாடலின் பொருள். இவ்விரண்டிற்கும் ஒற்றுமைகள் பல இருப்பினும் தமிழ் ஞாயிறை விட ஒருபடி உயர்ந்து விடுகின்றது. அது எப்படி?
ஞாயிறு உலகத்தின் இருளைத்தான் போக்குகின்றது. ஆனால் தமிழ் உள்ளத்தில் குவிந்து கிடக்கும் இருளைப் போக்குகின்றது. தமிழ் உயர்ந்த மொழி மட்டுமல்ல அது செந்தமிழ், வண்தமிழ், முத்தமிழ், இன்தமிழ் எனப் பலவாறாகப் போற்றப் படுமளவிற்குச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.
பொதிய மலையில் பிறந்து தென்னவன் மடியில் தவழ்ந்து சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பராமரிப்பிலே வளர்ந்த முத்த தமிழாம் எம் தமிழ் மொழியின் சிறப்பினை என்னென்று வர்ணிப்பது.
'ஆலமரம் அணையது தமிழ் மரங்களுள் ஆலமரத்தை இம்மொழிக்கு உவமையாகச் சொல்லலாம். நான்கு படைகளுடன் மன்னரும் தங்க நிழல் தரும் தன்மையது ஆலமரம். அதுபோல உலகமெலாம் கருத்துப் பஞ்சம், மொழிப் பஞ்சம் ஆகியன தோன்றினாலும் அப்பொழுதும் அத்துணைப்பேருக்கும் இடம் தந்து வாழ வைக்கும் வளம் பொருந்தியது தமிழ் மொழி
'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது பாரதியார் பாடல். செந்தமிழ் நாடெனும் போது காதில் தேன் பாய்வதாக இருந்தால் அதற்குக் காரணமான தமிழை என்னென்பது
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்' எனப் பாரதியாரே போற்றும் அளவுக்குச் சிறப்புப் பெற்றது எம்மொழி

Page 8
கலப்பை சித்திரை 1995
பல்லாயிரம் ஆண்டுகளாகச் செழித்துச் சிறந்து விளங்கும் தமிழ்மொழி இனியமொழி அது எங்கள் உயிர்.
வாழிய தமிழ்!
- த.கலைமணி
O கட்டுமரம் கட்டிக்கிட்டு கடலோடு போற அண்ணே
ஒட்டிப்போன வயிறும் கண்னமும் உலர்ந்த உடம்பும் நமக்கு ஏண்ணே
எட்டி ரெண்டு துடுப்பு போடு எண்ணருமைச் சின்னத்தம்பி O கெட்டியான உழைப்பினாலே ஒட்டிப்போச்சு நம்ம கும்பி
ஏலேலோ ஐலசா ஐலசா. ஏலேலோ ஐலசா ஐலசா. O
O ()
O
துக்கத்திலே குழந்தைகளைத் துக்கி முத்தம் கொடுத்த அண்ணே ஏக்கத்தோடும் கவலையோடும் பார்ப்பதேன் ஒன்மனைவி கண்ணே O
காத்தைநம்பி கடலைநம்பி கருக்காலே போறோம் தம்பி O
காத்திருந்து பூக்கும் கண்ணு கனிவதுந்தான் யாரை நம்பி
ஏலேலோ ஐலசா ஐலசா. ஏலேலோ ஐலசா ஐலசா.
O O
வானத்திலே கடலினிலே வாசிக்கிறோம் பாடம் அண்ணே பானையிலே பொங்கும் சோறு தவிர எண்ன வேணும் பின்னே
சுருக்கா வலையைப் பரப்பி சமுத்திரத்தில் விசு தம்பி இருக்கா மீனுகண்ணு இழுத்துப் பாரு வலையை நெம்பி
ஏலேலோ ஐலசா ஐலசா. ஏலேலோ ஐலசா ஐலசா. O
12
 
 
 
 
 

கலப்பை
சித்திரை 1995
புதிய கோசங்கள்:
e எங்கள் மக்களே எங்கள் மக்களே ஒன்று திரண்டு  ைஒரு குரல் வையும
அமைதியை வேண்டி
O அனைவரும் பாடுவர்
தென்திசை எங்கும் ஒலிக்கும் குரலிது தென்திசை எங்கும் ஒலிக்கும் குரலிது O
கொன்று குவிக்க கட்டளையிட்டு குதூகலமாக இருந்தவர் இன்று
எழுப்புகின்ற புதுக்கோசம்
O
தங்குதடையின்றி பறந்துசென்ற விமானத்தால்
: கொட்டுகின்ற குண்டுகளை
• பார்த்து ரசித்துவிட்டு
dipoli6O45 விட்டதற்கு 5 ஆதரவு சொன்ன
புதிய அமைச்சர்களும் போடுகிறார் புதுக்கோசம்
O
தீர்வொன்றை வைத்து மதிசைதெரியா மக்களை நான்
மீட்டெடுப்பேன் என்று வாக்குறுதி வைத்து
• பதவி கொண்ட பெண்ணும் பகருகிறார் புதுக்கோசம்
O
: நல்லசகுனமென்று
நம்பியவர் ஆயிரம்பேர் இந்தமுறையோடு
O 621slig56.jörb
சண்டையென
O
நெஞ்சு குளிர்ந்து
: மகிழ்ந்தவர்கள் ஆயிரம்பேர்
O
வன்னிக் குழ யேற்றம் e மட்டுநகர்க் குழயேற்றம்
தேயிலைச் செடிவளரும்
உயர்மலையில் குடியேற்றம் 6 கப்பல் விமானம்
படைக்கலன்கள் கொள்வனவு பட்ஜெட்டில் கோடி சு பாதுகாப்பு தேவைக்கு
இவையெல்லாம் என்ன
வெறும் வேழக்கைச் செய்கைகளா e போருக்கு முன்னே
அரங்கேற்றும் தொடர்கதையா ? O
முச்சைப் பிடித்து முன்வைப்போர் கோசமதை
: நம்பாதே முற்றும்நலமென்று சு நாளைக் கருக்கல் புலருமுன்பு
மாற்றிடுவார் மாறிடுவார் ஆட்டி அலைக்கழிக்கும் சு பேக்கூச்சல் போட்டிடுவார்
: ராங்கி உருளும் 6 விமானமது விசம்தூவும் ஆள் குழக்கும் குண்டு
அகலக் குழிபறிக்கும் o LOT6ö6 62Íg6)JÜ
மக்களும் பாலகரும்
O BħLITதே முற்றுமாய்
பொய்க்கோசம் போடுவதை செயலற்ற வெறும் கோசம் e செய்பவர்கள் மாறிடுவர்.
13

Page 9
கலப்பை
சித்திரை 1995
முனைவி அமைவதெல்லாம்
புதிய ஏழுத்தாளர் அறிமுகம் சித்ரா குமார்
ரவரிக்கு முகம் ஜிவு ஜிவு எனச் சிவப்பேறியது. கோபத்துடன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
"வரட்டும் கதா, இரண்டிலொன்று பார்த்து விடுகிறேன் "எனக் கருவினான்.
ரவிக்கும் கீதாவுக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகியிருந்தது. ரவி, ஆராய்ச்சிக்கென அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் பிஎச்.டி பழத்துக் கொண்டிருக்கிறான். சொற்ப வருமானத்தில், தலைக்கு மேல் ஆகும் செலவரில் மூச்சுத் தரிணற வேண்டியிருந்தது.
நேற்றுதான் அவனும் கீதாவும் ஒரு பட்ஜெட் போட்டுச் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் எனத் தீர்மானித்திருந்தனர். கீதாவும், ரவி ஆராய்ச்சி முடிந்து வேலைக்குச் செல்லும் வரை புதிதாக ஷாப்பிங் எதுவும் செய்யப்போவதில்லை என உறுதிமொழி கொடுத்திருந்தாள்.
ஆனால் முழுதாக ஒருநாள் ஆகவில்லை. இன்று தற்செயலாக கடைத்தெருப் பக்கம் போனவன், கீதாவை ஒரு பெரிய கைப்பையுடன் 'கோல்டன் டெக்ஸ்டைல்ஸ்' கடைக்கு அருகே பார்த்துவிட்டான்.
கல்லூரிக்குக்கூடப் போகாமல், கையும் களவுமாகக் கீதாவைப் பிடிக்க விட்டுக்கே வந்துவிட்டான் ஏன் அவளுக்கு இப்படிப் புத்தரி போகிறது? அப்பழத் தருட்டுத்தனமாக உடைகள்
கணவனுக்கே தெரியாமல் வாங்கித்தான் ஆக வேண்டுமா? ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாவிட்டால் உறுதிமொழி என்ன வேண்டிக் கிடக்கிறது?
அவளுக்குத்தான் அவனைவிட மூன்றுமடங்கு துணிமணிகள் இருக்கின்றனவே! சுரிதார், சேலைகள்,
மாடர்ன் டிரஸ், நைட்டிகள் என வகைவகையாய் வார்ட்ரோயில் அடுக்கி வைத்திருக்கிறாளே! வரட்டும்.
"சார், போஸ்ட்!" தபால்காரன் சத்தம் கேட்டது.
பெரிய பார்சல் வந்தருந்தது. கையெழுத்துப் போட்டு வாங்கினான். திறக்க மனமே இல்லை.
வேறென்ன இருக்கும். கீதாவரின் அப்பாதான் மறுபடியும் அவளுக்குத் துணிமணிகள் அனுப்பரி வைத்திருந்திருப்பார்.
வீட்டில் கீதா செல்லப் பெண் ஒரே மகள் என்பதால் கதாவரின் அப்பா மாதத்திற்கொருமுறை அவளுக்குத் தேவையான துணிமணிகளை அனுப்பி வைத்துவிடுவார். இதற்கு மேல் அமெரிக்காவரில் உள்ள அவளது அண்ணன் வேறு அருமைத் தங்கைக்கென மாடர்ன் டிரஸ்களையும், சோப்பு, பவுடர் இத்யாதரிகளையும் அனுப்பிக் குவித்து விடுவார். இருந்தும் இந்தப் பெண்களுக்கு புடவை ஆசை அடங்காதா? சே!.
14

கலப்பை
சித்திரை 1995
மாப்பிள்ளைக் கென மாமனாரோ, மைத்துனரோ ஏதும் அனுப்ப முயற்சித்தாலி ரவரி கணிழப்பாக மறுத்துவிடுவான். ஒருமுறை அவன் பேச்சையும் மீறி அவர்கள் அனுப்பிவைக்க
அவனோ பணிவுடன் தருப்பரி அனுப்பிவிட்டான். சற்று மனவருத்தம் இருந்தாலும் தர்ைமானமுள்ள
மாப்பிள்ளையரின் சுயமரியாதையில் அவர்களுக்கு ஏகப் பெருமிதம் ரவியும் தற்போதைய நரிலையில் தன் இல்லாமையை யாருக்கும் வெளிக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் இந்த கீதாவுக்கு என்ன ஆயிற்று குடும்ப நிலை அவளுக்குத் தெரிய வேண்டாமா?
ஒருமணி நேரத்திற்குப் பிறகு "அப்பாடா. என்ன வெயில். என்ன வெயில்!"
என்றபடியே உள்ளே நுழைந்தாள் கீதா.
"என்னடா கண்ணாட்டி, இன்னிக்கு சீக்கிரம் வந்திட்டியே." கீதாவின் கொஞ்சலில் குழைவு பிறந்தது.
ரவியோ இந்த கொஞ்சலுக்கெல்லாம் மசியவில்லை. மிகவும் சீரியசாக ஒரு புத்தகத்தை வைத்துப் படிப்பதாக பாவல7 செய்துகொண்டே ஓரக் கண்ணால் நோட்டம் விட்டான்.
62ც/b கையரில் டெக்ஸ் டைலர் கடைப்பையும், மற்றொரு கையில் கனத்த காய்கறிப்பையுமாகத் தூக்கமுழயாமல் தூக்கிக்கொண்டு வந்திருந்தாள்.
நேராகப் படுக்கையறைக்குச் சென்று, டெக்ஸ்டைல் பையை வைத்துவிட்டு, காய்கறிப் பையை மட்டும் இரண்டு கைகளால் துக் கரிக் கொண்டு சமையலறைக்குச் சென்ற7ள்.
"கடைத்தெருப் பக்கம் போயிருந்தேன். இன்னிக்கு உருளைக்கிழங்கு மிகவும் சீப் நாலு கிலோ வாங்கிட்டேன்."
"ஓஹே7.
"தக்காளி, வெங்காயம் கூட மலிவுதான். அதுவும் வாங்கிட்டேன். இன்னும் ரெண்டு வாரத்துக்குக் காய்கறிக் கடைப் பக்கம் போகத்தேவையில்லை."
"வேறென்ன சீப்" எனக் கிண்டலாகக் கேட்டான்.
"ஐயோ, இதுவே போதும்பா. இதைத் துரக்கிக் கொண்டே பஸ்ஸரில் வர முடியலே. இதுக்கு மேலேயா?" என்று சொன்ன கதா கைகளுக்கு தேங்காயெண்ணெய் தடவிக் கொண்டாள்.
பொய் சொல்கிறாள். அது சீப், இது சீப் எனத் துணிக்கடைக்கும் போயிருக்கிறாள். அவளுக்குத் துணியும் வாங்கியிருக்கிறாள். ஆனால் மூச்சுவரிட மாட்டேன் என்கிறாளே. சரியான அழுத்தக்காரி!
"என்னங்க, ரொம்ப கசகசன்னு இருக்கு. நான் குளிக்கப் போறேன். அடுப்பிலே குக்கர் வச்சிருக்கேன் சத்தம் வந்ததும், பரிளஸ். கொஞ்சம் இறக் கரி 6/defadfict67777"
ரவி அவள் முகத்தைப் பார்க்காமலே `உம்' கொட்டினான். அவள் குளியலறைக்குள் நுழையவும் சடாரென எழுந்து படுக்கையறைக்குள் சென்றான்.
எங்கே அந்தப் பை? அவள் அலமாரி
முழுவதும் ஐந்து நிமிடம் தேடியும் அது கிடைக்கவில்லை.
15

Page 10
கலப்பை
சித்திரை 1995
"உவர்வர்ஷர்வுத்வர்." குக்கர் இரைந்தது. ஒழப்போய் அடுப்பை அணைத்தான்.
சே! பையை எங்கே வைத்தாளென்று தெரியவரில் லையே! நேர7கவே கேட்டுவிடலாமா?
பாத்ரூமிலிருந்து பளிச்சென ஃபாரின் சோப் வாசத்துடன் தேவதையென வெளியே வந்தாள் கீதா, அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். மிகவும் இயல்பாகத் தெரிந்தாள். தன்னுடைய நீண்ட அழகான கூந்தலை வாரி முடிந்து, முகத்துக்கு பவுடர் போட்டாள். திரும்பியவளின் கண்களில் பட்டது அந்த பார்சல்,
"என்னங்க பார்சல் இது?"
"இன்னிக்கு போஸ்ட்மேன் கொண்டாந்தான். உங்கப்பாதான் அனுப்பிச்சிருக்கார்"
கீதா அதைப் பிரித்துப் பார்க்கவில்லை.
படுக்கையறைக்குள் வந்த ரவரி தலையணையை அனைத்துக் கொண்டு தலையைக் கவிழ்த்துக் குப்புறப்படுத்துக் கொண்டான். அவன் மனம் நரிலையரில்லாமல் தவரித்துக் கொண்டிருந்தது.
"என்னங்க. இந்த புதுத்துணிகளைப்
பார்க்கலரியே" அவன் தோளைத் தொட்டாள் கதா. அவன் திரும்பவில்லை.
"அட திரும்பித்தான் பாருங்களேன்." 2 626O6) வலுக்கட்டாயமாய்த் திருப்பினாள். வேண்டாவெறுப்பாய் நிமிர்ந்து பார்த்தான். அவள் கைகளில் புத்தம் புது குட் ஒன்று மின்னிக்கொண்டிருந்தது அவன் பார்வை
ஆச்சரியத்தில் நிலைத்தது.
"என்னங்க அப்/ரப் பாக்குறிங்க அடுத்த மாதம் உங்களுக்கு ஒரு கான்பரன்ஸ் இருக்குன்னு சொன்னிங்களே. இதுதானே நீங்க பங்கு பெறப் போகும் முதல் கான்பர்ன்ஸ், அங்கு எல்லோரும் மக்கா டிரஸ் பண்ணிக்கிட்டு வருவாங்கல்ல? உங்களுக்குன்னு போட்டுக்க நல்ல சூட் வேணாமா? இன்னிக்கு கோல்டன் டெக்ஸ் டைலர் ஸ்ரில் தள்ளுபடி விற்பனையாச்சே. அதுதான் போய் வாங்கிட்டு வந்தேன்."
ரவி பேச்சுவராமல் கீதாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்பாவும், அண்ணனும் எனக்கு வேண்டிய துணிமணிகளை அனுப்பிடற7ங்க. உங்களுக்குன்னு போட்டுக்க நல்ல துணிமணிகள் இல்லையேன்னு எனக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்குன்னு தெரியுமா? அதைநினைச்சு மனசுக்குள்ளே எத்தனை நாள் அழுதிருக்கேன். அதுதான் நானே போய் வாங்கிட்டு வந்துட்டேன்."
ரவிக்குப்பிடித்த கருநீல நிறத்தில் பேண்ட் மற்றும் கோட் அதற்கு மேட்சாக வெளிர் நீல நிறத்தில் சட்டை, அவனுக்கு மிகவும் பிடித்த காம்பினேஷன்
"உனக் கேது இவ்வளவு பணம்?" தயங்கினாள் கீதா.
"கோவிச்சுக்காதீங்க. நீங்க காலேஜ் போனபிறகு பக்கத்து வீட்டு அக்கா եւ0/7 69/7 6:յ6Օւ եւ/ டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் போய் அவங்களுக்கு டைப் அடித்து உதவி செய்வேன். அவங்களும் நீசும்மா செய்ய வேணாம்.
6

?..?..&്
கட்சீாயம் ஏதாவது வாங்கிக்கோன்னு பணம் கொடுப்பாங்க அதில் கொஞ்சம் கழுத்தை ஈரப்படுத்தியது. கொஞ்சமாகச் சேர்த்த பணந்தாங்க இது." "என்னங்க இது" பதறி அவன்முகத்தை ரவியின் கண்கள் கலங்கின. பேச நிமிர்த்திய கீதாவின் கன்றிய கைகளைப் வார்த்தைகளே வரவில்லை. என்ன பற்றித் தன் கன்னத்தோடு சேர்த்துக் செய்வதென்று தெரியாமல் மனைவியை கொண்டான் மனைவி அமைவதெல்லாம் கட்டி அணைத்துக் கொண்டான். இறைவன் கொடுத்த வரமென்பது
உண்மைதான்! சிட்னி தமிழ் மன்றம் N
"சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞர்” போட்டி சிட்னியின் தமிழ் மன்றம் கடந்த 15 வருடங்களாகப் பொதுநலத்துடன் இயங்கிவரும் ஒரு நல்லியக்கம். தமிழ் மன்றம், சிட்னிவாழ் தமிழ் மக்களுக்குக் கலைநிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தி வருகிறது.
சிட்னிவாழ் தமிழ் இளைஞர்களை ஊக்குவித்துப் பரிசளிப்பதற்காக இவ்வருடம் மன்றம் சுழற்கோப்பை வழங்க முழவு செய்துள்ளது. "சிட்னியின் சிறந்த தமிழ் இளைஞர்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்பரிசு இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.
சிட்னியில் வாழும் 21 வயதுக்குட்பட்ட எல்லாத் தமிழ் இளைஞர்களும் இப்போட்டியில் பங்குபெறத் தகுதியானவர்களாவர். தமிழ்ச் சமுதாயத்தின் பெரியோர்கள், சான்றே7ர்கள் உள்ளடங்கிய நடுவர் குழு ஒன்று, முன்மொழியப்பட்ட இளைஞரில் மொழி, கலாசாரம், கல்வி, விளையாட்டு மற்றும் தொழில் அடிப்படையில் திறமைசாலியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கும். இப்போட்டியில் நடுவர் தீர்ப்பே இறுதியானது.
இதைத்தவிர, இரண்டு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். April 30ஆம் தேதி விண்ணப்ப முடிவு நாளாகும். மேல் விவரங்களும், விண்ணப்பப்படிவங்களும் வேண்டுவோர் பின்வரும் செயற்குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளவும்: டாக்டர் எஸ். சத்தியகுமார்- 718 7617, திரு திருவேங்கடம் சேகர்-823 2466
திருமதி பரமேஸ்வரி நல்லதம்பி - 642 4666
17

Page 11
சித்திரை 1995
Racism is an important issue facing everyone but it is an issue that is especially relevant to migrants living in Australia. Racism can take many forms and many people fail to spot some blatantly racist practices. The Sydney University Racism Sux Collective is a group of students concerned about the racist attitudes of people in society. Earlier this year the group released "The Racism sux handbook' for Sydney Uni students. The handbook is full of useful and thought-provoking articles. One of these is the Are You a Racist'? Quiz. This quiz is reprinted below.
I. When looking at your peer group would you describe it as: a. made up of a wide range of people groups b. people you've known for a long time c. people like you d white, male, middle class, heterosexual and proud of it.
2. You would define racism as: a. all forms of discrimination whether overt or covert, which judge a person on the basis of his or her race b. ethnic abuse
c. harassing wogs d a damn fine way of life
3. If a Chinese woman sat next to you, you would describe her as : a. the person sitting next to you b. the Chinese woman sitting next to you c. Anglo-Celtically challenged
d reason to move seats
4. A group of school children are pushing another child around, and hurling racist abuse at him. Do you: a wade in, liberate the kid and proceed to lecture the bullies on the evils of bigotry
b. go and call the police c. walk away, feeling a bit guilty djoin in the abuse
5. Multiculturalism's best point is: a. the idea that no one culture owns a nation, and that all can co-exist, learning from and respecting each other b. the marvellous things that other cultures bring. kohl eye pencil, fried rice, falafel rolls, Austrian blinds. c. the Italian restaurant, down the road d that it will bring about the fall of the socialist left government sooner
6. Japan is: a, a group of islands of the coast of China and Russia b. a source of great food, fashion and nifty techno toys c. the place where all those cute little tourists come from, although you get a bit sick of taking their photos all the time at Circular Quay d the enemy. And they're buying up Queensland
7. The Mabo decision means:
18
 

கலப்பை
சித்திரை 1995
a. that the myth of Terra Nullius is finally dispelled b. that it's a lot easier to make land rights claims c. that the Aborigines will want all the best bits of the country d that daddy's mining company is in real trouble
8. Refugees: a. should be welcomed regardless of whether they are fleeing political or financial hardship. They contribute a great deal to Australia and more than repay the initial cost of their immigration b. shouldn't be detained in camps because that's uncivilised c. are okay if they're fleeing political persecution, but those ones who just come here to get the dole are a bit on the nose d should be held off with gunboats
9. Australia is: a. a large island continent in the Southern Hemisphere, with a long history b.full of sun, with lots of great beaches, and the best place to live on earth c. the home of the world's greatest cricket and rugby teams d for the Australians
10. Australians are: a. people who are residents of Australia b. the Aboriginal peoples, and also those who 've been here for more than one generation c. great cricketers, and they also know how to hold their beer d being ruined by the influx of nonwhites
ANSVERS
If you scored mostly A's. You are very politically correct. That's great as long as you actually mean it, and don't just espouse these views because you think you should. At best you could be kind, caring person who genuinely appreciates differences.
If you scored mostly B's. You mean well, occasionally you accidentally offend people, and you're really embarassed, because you like your 'ethnic' friends. A hint: stop thinking of people in terms of their ethnicity unless it is an integral part of the conversation you're having.
If you scored mostly C's: You wouldn't call yourself racist, but then you wouldn't think about it. Your friends are probably all very much like you. Perhaps it is time to broaden your horizons.
If you scored mostly D's: You are such a reactionary bastard that you probably cheated. You make Bruce Ruxton look tolerant.
This questionaire was created by Donyale Harrison and published in full in the "Racism sux Handbook'. Many thanks to the Racism Sux Collective.
Racism is intolerable. If you ever experience it don't put up with it. If you go to Sydney Uni, the Racism Sux Collective meets in the International Students Room, Wentworth on Fridays at lunch.
19

Page 12
கலப்பை
சித்திரை 1995
நா. மகேசன்
வள்ளுவர் சொள்ளவுட்கொள்
திருவள்ளுவப் பெருந்தகையார் 133 துறைகளில் மனித சமுதாயத்தரிற்கு அறிவுரைகள் வழங்கபியுள்ளார். அத்துறைகளில் கடவுட் துறையும் ஒன்று. அறிவு கூர்மையடைந்து, நாகரிகம் விரிவடைந்து, உலகமே உள்ளங்கை அளவுதான் என்று சொல்லக் கூழய அளவுக்குப் போக்குவரத்தும், தொடர்புச் சாதனங்களும் பெருக்கம் அடைந்திருக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் வாழும் தமிழர்களாகிய நாம், வள்ளுவர் ᎶᏔᏧ/Ꭲ 60r 601 Ꭳ1 . 60/1 " கொள்கையைப் பழத்துப் பார்த்து, அதன்பழ வாழ எத்தனிக்கிறோமா?
உலக இனங்களில்ப் பல இன மக்கள், வள்ளுவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லிய கொள்கைகளைத் தமது கொள்கைகளாக்கிக் கொண்டு அவற்றைப் போற்றி அதன்பழ வாழ முற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் தமிழர்களாகிய நாமோ, எல்லோரும் போற்றுகளிறார்கள் என்பதனால், திருக்குறளைப் போற்றுகிறோமே தவிர, வள்ளுவர் சொன்னவற்றில் ஒருசில கொள்கைகளையாவது மின்பற்ற முயல்கிறோம் இல்லை. பின்பற்ற வேண்டாம், தெரிந்து கொள்ளவாவது முயற்சிக்கிறோமா? இது தமிழ் மக்களிடையே உள்ள பெருங்குறை. இது எப்போது திருமோ?
கடவுட் கொள்கையைப் பற்றி வள்ளுவர் என்ன சொன்னார்?
மனிதர்களே உங்கள் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தரி, இந்த உலகையும், உலகைக் கடந்து
விண்ணையும், விண்ணில் விரிந்து கிடக்கும் அறிந்த, அறியப்படாத கோளங்களையும் இயக்குகின்றது. அந்தச் சக்தியே கடவுள். அந்தக் கடவுளை நம்புங்கள். அகர ஒலியானது, ஒலிகளுக்கெல்லாம் -9 էջ մ Լյ6»ւ եւ//7 ծ இருக்கிறது. அதுபோலவே ஆண்டவனும் உலகுக்கு அழப்படையாக இருக்கிறான், என்று கடவுளை நம்பும்பழ சொன்னார்.
கல்வி அறிவு, பகுத்தறிவை விரிவடையச் செய்யும் பகுத்தறிவு விரிவடைந்தால், எதையும் ஆராய்ச்சிக் கண்ணோடு பார்க்கத் தூண்டும். அப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது, கற்றவர்கள் தாம் பெற்ற அறிவின் வழியே ஆண்டவனை ஆராய முற்படுவர். அறிவால் அடையமுடியாதவன் - ஆண்டவன். அறிவுக்கு அகப்படாத இறைவன் இல்லை என்றே சொல்லவும் துணிவர் சில கற்றறிந்தோர். அவர்களைப் பார்த்து, வள்ளுவர் சொன்னார் - கற்றறிந்த பெரியோர்களே, நீங்கள் அறிந்த அறிவிலும் பார்க்க முதன்மையான அறிவைப் பெற்றவன், கடவுள். அந்தக் கடவுளை
நீங்கள் வணங்கி, அவனிடத்துள்ள
முதன்மையான அறிவை நங்கள் பெறாவிட்டால் உங்கள் கல்வியெல்லாம் பயன்இல்லாமல் போய்விடும் கவனமாய் இருங்கள், என்றார்.
கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்கள் கூட கடவுள் எங்கே இருக்கிறார் என்று தெரியாது அலைகிறார்கள். கோயிலில் இருக்கறார் கடவுள், குளத்தரில் இருக்கிறார் கடவுள் என்று பலவிதமான நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு அந்த நம்பிக்கைகளை நிலை நாட்ட,
20

கலப்பை
சித்திரை 1995
அவைதான் சிறந்தவையென்று நிரூபிக்கச் சமுதாயத்தரிலே போட்டியையும், பொறாமையையும் வளர்க்கிறார்கள். குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பார்த்து வள்ளுவர் சொன்னார், அன்பர்களே கடவுள் எங்கேயும் இல்லை. எங்களுடைய உள்ளத்தில் தான் இருக்கிறார். நீங்கள் பிறக்கும் போதே உங்கள் மனச்சாட்சியாக, இறைவன் உங்கள் உள்ளங்களில் தோன்றிவிட்டார். அந்த இறைவனை வணங்கும் நங்கள், உங்கள் உள்ளங்களைத் துாய்மையாக வைத்திருங்கள், என்ற7ர்.
மரத்தை நட்டு, நாம் தண்ணி ஊற்றினால் அது நமக்குப் பழங்களைத் தருகிறது. பசுவை வளர்த்து, அதற்குப் புல் போட்டால் அது நமக்கு பால் தருகிறது. நாம் ஒன்றைக் கொடுத்து, இன்னொன்றைப் பெறுகிறோம். இது உலக இயல்பு. இந்த உலக இயல்பில் ஊறிய நாம், இறைவனுக்கும் ஒன்றைக் கொடுத்து, இன்னொன்றைப் பெற முயல்கிறோம். அப்பழப் பட்ட எம்மைப் பார்த்து வள்ளுவர் சொன்னார், மனிதர்களே கடவுள் விருப்பு வெறுப்பு இல்லாதவர். நல்லவன், தயவன், தருபவன், தராதவன் என்று அவர் பேதம் காட்டுவதில்லை. உங்களின் உள்ளத்தின் தூய்மைக்குத் தகுந்தவாறும், நீங்கள் செய்கின்ற செயல்களின் தன்மைக்குத் தகுந்தவாறும் அருள் வழங்குகிறான். ஆண்டவனுக்கு இலஞ்சம் கொடுத்து உங்கள் உலக வாழ்க்கையைச் சமாளிக்க முற்படாதீர்கள். அவனுக்கு எதுவும் வேண்டியதில்லை. அவனே எல்லாமாக இருக்கிறான். அவனுக்கு வேண்டியது உங்கள் தூய உள்ளமே என்றார். நமது செயல்களினால் உலகில் நன்மையும் ஏற்படுகிறது, தீமையும் ஏற்படுகிறது. ஒரு
செயல் ஒருவனுக்கு நன்மை போலத் தோன்றுகறது. அதே செயல் இன்னொருவனுக்குத் தீமை போலத் தோன்றுகிறது. இது மனிதர்களினுடைய அறியாமையினால் ஏற்படுகின்ற நிலை. முதன்மையான அறிவை மனிதன் பெற்றுவிட்டால், அறியாமை நீங்கி ஒரு செயலின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த முதன்மையான அறிவு இறைவனிடம் தான் இருக்கிறது. அதைப் பெற அவனை வணங்குங்கள் என்கிறார் வள்ளுவர்.
முதன்மையான அறிவைப் பெற வேண்டுமா? அது இலகுவான காரியம் அல்ல. முதலில் உங்கள் புலன்களைக் கட்டுப்படுத்துங்கள். மெய், வாய், கண், முக்கு, காது என்னும் உறுப்புகளின் புலன்கள், உங்களுக்கு உதவுகின்றன தான். ஆனால் கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம்போல் அவை பாய முற்படுகின்றன. அவற்றை அடக்கி நல்வழியில் செலுத்துங்கள். அப்போது தான்நீங்கள் உலகிலே துன்பம் இல்லாது வாழ்வீர்கள் என்றார். தூய அறிவைப் பெறுவீர்கள் என்ற7ர்.
உலக வாழ்க்கையிலே துன்பத்தை அனுபவிக்காதவர்களே கிடையாது. பசித்துன்பம், உடற்துன்பம், பொருட் துன்பம், வித்துவத் துன்பம் இப்பழப் பலபல துன்பம் மனிதருக்கு. இந்தத் துன்பத்தினாலே மனக்கவலை கொண்டு மாள் கன்ற மனிதர்கள் தங்கள் மனக்கவலைகளை மாற்றிக் கொள்ள யார் யாரிடமோ எல்லாம் போகிறார்கள். அரசியல்வாதிகளிடம் போகின்றவரும், உயர் அதிகாரிகளை நாடுகின்றவர்களும், வைத்தியர்களை நாடுகின்றவர்களும் வழக்குரைஞர்களை நாடுகின்றவர்களும் என்று பலவாறாக மனிதர், மனிதருடைய உதவியைத் தேழ மனக்கவலைகளை
21

Page 13
கலப்பை
சித்திரை 1995
மாற்றிக் கொள்ள முனைகின்றார்கள். எவரிடந்தான் போனாலும் அவர்கள் துன்பமும், மனக்கவலையும் முற்றாக மாறியதே கிடையாது. அவ்வகைப்பட்ட எம்மைப் பார்த்து தருவள்ளுவர் சொன்னார், ஏய் மனிதர்களே உங்கள் மனக்கவலைகளைத் தீர்க்க நீங்கள் நாடும் எல்லோரிலும் பார்க்க உயர்ந்த ஒப்பும் உவமையும் சொல்ல முடியாத ஒருவன் இருக்கறான். அவனை மறந்துவிடாதர்கள். அவன் தான் இறைவன். அவனிடம் சென்று உங்கள் குறைகளை முறையிடுங்கள். நிச்சயம் உங்கள் மனக்கவலை திரும் என்று.
கடவுளுடைய பெயரைச் சொல்லரிக் கொண்டு அதனால் வரக் கூடிய நன்மைகளைத் தம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படுத்தம் மனிதரும் இவ்வுலகில் இருக்கத் தான் செய்கிறார்கள். பெரிய அறங்களைச் செய்கிறோம், கோயில் கட்டுகிறோம், குளம் வெட்டுகிறோம், தர்மக் கடல்களாக இருக்கிறோம் என்று எண்ணுகிறவர்கள் பலர்.தமது பெயரையும், புகழையும் நரிலைநாட்டிக் கொள்வதற்காக அறங்களைச் செய்கிறவர்களைப் பார்த்து வள்ளுவர் என்ன சொன்னார்? அறக்கடல்கள் என்று அழைக்கப்படும் அன்பர்களே உங்கள் அனைவரையும் வென்ற அறக் கடல் ஒருவன் இருக்கிறான். அவன் மனிதருக்குச் செய்கின்ற கருணைக்குப் பிரதி உபகாரம் எதிர்பார்ப்பதில்லை. சகல உயிர்களையும் காத்து, வழிநடத்தரி, வேண்டுவன வேண்டுமாறு ஈகின்ற அறக்கடல், கடவுள். அந்த அறக் கடலரிடம் தஞ்சம் புகாதவர்கள், வேறு எந்தக் கடலையும் கடக்கமுடியாது. அவனுடைய நினைப்பே இல்லாமல் நீங்கள் வாழ்ந்தால் உங்களுக்குத் துன்பமே அல்லாமல் இன்பம் கிடையாது. நீங்கள் செய்கின்ற
உங்களது அறங்கள் எல்லாம் அவனுடைய கருணையால் தான் நடைபெறுகின்றன. அவன் தான் உங்களைப் படைத்த கடவுள். மறந்துவிடாதீர்கள், அவன் பெயரைச் சொல்லித் தருமம் செய்வதாக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், 676ήάόητή.
நமது கண்களுடைய வேலை என்ன? பார்ப்பது பார்வை இல்லாத கண்கள் இருந்தால் நமக்குப் பயனில்லை. அது போலவே மற்ற அவயவங்களும் தமது வேலைகளைச் செய்யாவிட்டால் அவை இருந்தும் இல்லாதவை போன்றன ஆகிவிடும். கேட்காத காதும், பேசாத வாயும், முகராத மூக்கும், உணர்ச்சியில்லாத உடலும் பயனற்றவை. நமது தலையரின் வேலை என்ன? சிந்திப்பது சிந்திக்கின்ற தலை கடவுளைப் பற்றி சிந்திக்கும். சிந்திக்காத தலை இருந்தும் இல்லாதது போன்றதுதான். மனிதர்களே நீங்கள் தலையில்லாத முண்டங்களைப் போல் வாழப்போகிறீர்கள். தலையைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள். உலகை இயற்றுவது யார்? என்று சிந்தித்துத் தெளியுங்கள். அந்தத் தெளிவு உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையை உண்டு பண்ணும், என்று அடித்துச் சொன்னார்-வள்ளுவர்.
வாழ்கை பெருந்துன்பமாக இருக்கிறது. கடலின் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதுவதுபோல, வாழ்க்கையிலும் துன்பங்கள் வந்து மோதரி எம்மை எல்லாம் அலைக்களிக்கின்றது. இந்த வாழ்க்கையென்னும் பெருங்கடலை எப்படி தாண்டிக் கடப்போம், என்று ஏங்குவது மனித இயல்பு. இந்த மனிதர்களை நோக்கினார்-வள்ளுவர். பிறவி பெருங்கடலாக இருக்கிறதா?
(29ம் பக்கம் பார்க்க)
22

கலப்பை சித்திரை 1995
சந்தமில்லாச் சங்கீதத்திற்குப் பெயரில்லையே
Snséeč. ஆந்தமில்லா அன்பிருந்தும் பயனில்லையே
R *தந்தனமில்லாத் தாளமிருந்தும் தரமில்லையே
சொந்தமில்லாச் சுகமிருந்தும் சுவையில்லையே
ഖിത്രീ1ി வேண்டாத அத்தரானேனே கனியாத கனவிற்கு அர்த்தமானேனே பணியான துளியாகப் பரிதவித்தேனே நினையாத நிழலாக விதிர்விதித்தேனே
நாடிவரும் இளவேனில் நீயுமில்லையே மோடிதரும் குழலெனக்குக் கானமில்லையோ கூடிவிட வண்டேநீ வரவுமில்லையே வாடிவிட மலராதல் பாவமில்லையோ
பாடிவரக் குயிலுக்குக் களிப்பில்லையே ஓடிவர மானெனக்கு வேகமில்லையே ஆடிவர மயிலுக்கு மேகமில்லையே கோடிபெறும் எழிலுக்கு ஒளியில்லையே
எனக்காகத் தாமரையாய்த் திருவடித்தேனே நினைக்காது நிலவாய்நீ மாறிவிட்டாயே உனக்காக அல்லியாய் உருவெடுத்தேனே அணைக்காது ஆதவனாய் ஆகிவிட்டாயே
வந்துநீயோ மிஞ்சுகிறாய் கோபமுமேனோ தந்துநானோ கெஞ்சலாமோ தாபமுமேனோ எந்தன்மனக் கூட்டினுள்ளே நீயுமேனே உந்தன்விளை யாட்டிற்கு நானுமேனோ
" "۶" با مردم " م. , ...

Page 14
கலப்பை
சித்திரை 1995
வரலாற்றுச் சுருக்கம்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
- திரு. க. மாசிலாமணி
நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.
இந்துசமுத்திர நித்திலம் எனத் திகழும் ஈழமணித்திருநாட்டின் స్థల్లో இருதய ஸ்தாபனம் யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தில் நீர்வளம், நிலவளம் மிக்க பகுதி தென்மராட்சி தென்மராட்சி பகுதியைச் சேர்ந்த தனம்கிளப்பு என்னும் மருத நிலப்பகுதியில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார் காரைத்தூவிநாயகர். தென்மராட்சிப் பிரிவில் கல்விநலஞ்சான்ற மக்கள் வாழும் இன்னொரு பகுதி மட்டுவரில், 2 6Of lust difluff ம.க. வேற்பிள்ளை பண்டிதர் வேமகாலிங்கம் உள்ளிட்ட பல அறிஞர் பெருமக்களைத் தந்த பதி மட்டுவிற்பதி மட்டுவிலில் தருமர் என்று அன்போடு அழைக்கப் பெற்ற சின்னத்தம்பரி அவர்களும் தனங்கிளப்பு முருகர்களான வள்ளியம்மையாரும் சென்ற நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிறப்புடன் வாழ்ந்த இலட்சிய தம்பதிகள். இவர்களைப் புத்திரபாக்கியம் இல்லை என்ற கவலை
திருவருட்பயன் - காய்புச் செய்யுள்
பெரிதும் வாட்டியது. வள்ளியம்மையார் பெருங்கருணைத் தடங்கடலாகசிய காரைத்து விநாயகரிடம் புத்திரபாக்கியம் வேணர்ழ பெரும் தவம் புரிந்தார். விநாயகரின் அருளாணையைப் பெற்று பிரயான வசதிகள் குறைந்த அந்தக் காலத்தல் தோணி மூலம் சிதம்பரயாத்திரை மேற்கொண்டார். சிதம்பர நடராசப் பெருமானை வேண்டி அங்கு தவம் இருந்தார். சிவகாமி அம்பாள் சமேதரான சிதம்பர நடராசப் பெருமானின் தரிசனத்தை பூர்த்தி செய்துகொண்டு மீண்டார். இவ்வாறு கடுந்தவம் புரிந்த காரணத்தினால் சென்ற விகாரிக்கு முந்திய விகாரி வருடம் ஆனி மாசம் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் (27-06-1899) சதயநட்சத்திரத்தில் ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். கணபதியின் திருவருளைப் முன்னிட்டு பிறந்த ஆண்குழந்தைக்குக்
24
 
 
 
 
 
 
 
 
 

கலப்பை
சித்திரை 1995
கணபதிப்பிள்ளை என்று நாமகரணமும் செய்தனர்.
அவரே இலக்கிய கலாநிதி பண்டிதமணி சிகணபதிப்பிள்ளை அவர்கள். 1902ம் ஆண்டு தாயார் தமது 30வது வயதில் காலமாகிவிட்டார். மட்டுவில் சந்திர மெளலிச வித்தியாசாலையில் ஆரம்ப கல்வியைக் கற்று வந்தார். உரையாசிரியர் ம.க. வேற்பரிள்ளை அவர்களின் பிள்ளைகளுடன் கூழக்குலாவியும் சேர்ந்து பழத்தும் வந்தார். அறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியார், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர் சாவகச்சேரி பொன்னப்பாபரிள்ளை ஆகியோரிடத்தில் பாடங்கேட்டார்.
1917 கார்த்தரிகையரில் நாவலர் காவரியபாடசாலையரில் சேர்ந்து பேரறிஞரான சுன்னாகம் பூரிமத்.அ.குமாரசுவாமரிப் புலவரிடம் பாடங்கேட்கும் பெருவாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது நாவலர் காவிய பாடசாலை மனேஜராக இருந்தவர் நாவலர் தமையனார் புத்தரர் பூரிமத்த.கைலாயப்பிள்ளை அவர்கள். குமாரசுவாமிப் புலவரின் மறைவுக்குப் பின் வரித்தகம் ச.கந்தையாப்பிள்ளை அவர்களுடன் கல்வித் தொடர்பு ஏற்பட்டது. நாவலர் காவரிய பாடசாலையரில் வரித்துவான் ந.சுப்பையாபிள்ளையிடம் பாடங்கேட்டார். கணபதிப்பிள்ளை அவர்கள் 1926ல் மதுரைச் தமிழ்ச்சங்க பண்டிதரானார். நாவலர் காவரிய பாடசாலையரில் இவரோடு சேர்ந்து கற்றவர்களில் மட்டக் களப்பு புலவர்மணி பெரியதம்பரிப்பிள்ளை அவர்களும் வட்டுக்கோட்டை சிவபூரி குருமூர்த்தி ஐயரவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கணபதிப்பிள்ளை அவர்கள் மிகவும்
சிறப்பாக பண்டித பரீட்சையரில் dž5ОШižilusoloapulj LITUTIIlp 1066097 பூரிமத் த.கைலாசப்பிள்ளை அவர்கள் மாணவரான கணபதப்பிள்ளைக்கு பொற்பதக்கம் ஒன்றைச் சூட்டி உற்சாகப்படுத்தினார்.
காரைநகர் அருணாசல உபாத்தியாயரின் ஆலோசனைப்பழ ஆசிரிய பயிற்சி பெறும்பொருட்டு 1927ம் ஆண்டு கோப்பாய் ஆசிரிய பயரிற்சிக் கலாசாலையரிற் சேர்ந்தார். எதிர்பாராதவிதமாக அதே ஆண்டில் தந்தையை இழந்து தனிமரமானார். பயிற்சி பூரணம் அடைந்தது. 1929ர் ஆண்டு திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை விரிவுரையாளர் பதவி இவரைத் தேழ வந்தது.
1951ல் யாழ்ப்பாணம் திருநெல்வேலரி பரமேஸ்வராக் கல்லுரியில் இடம் பெற்ற தமிழ் வரிழாவரில் தமிழர் பற்றிய பண்டிதமணியரின் உரை உச்சமாய் அமைந்தது. இலங்கை இந்தய பத்திரிகைகள் பண்டிதமணி அவர்களின் பொருள் பொதிந்த பேச்சினை மிகவும் பாராட்டி எழுதின. கல்விமான்கள் வியந்தார்கள் பண்டிதமணி என்ற பட்டமும் வந்து சேர்ந்தது. 1959ல் விரிவுரையாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இலக்கியம் சம்பந்தமாகவும் சமயம் சம்பந்தமாகவும் பண்டிதமணி எழுதிய கட்டுரைகள் ஆயிரத்துக்கு மேல் என்று கூறலாம்.
பண்டிதமணி எழுதிய அணிந்துரைகள் வாழ்த்துரைகள் பல நூற்றுக் கணக்கானவை. அன்னாரது ஆக்கங்கள் இருபத்து மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. தவத்திரு குன்றக்குழ அழகளார் அவர்களால் பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலைச் சமய
25

Page 15
கலிப்பை
சித்திரை 1995
வfழாவரிலும் பேராசிரியர் ஆ.வி.மயில் வாகனம் அவர்களால் பேராதனைப் பல்கலைக்கழகக் கலை மண்டபத்தில் இடம் பெற்ற கந்தபுராணம் தகூழ காண்டம் உரைநூல் வெளியீட்டு விழாவிலும் சைவாசிரிய கலாசாலை முன்னை நாள் அதரிபர் தரு.சி.சுவாமிநாதன் அவர்களால் வண்ணை வைத்தீசுவர வித்தியாலயத்தில் இடம்பெற்ற கந்தபுராணம் தகழக /ாண்டம் உரைநூல் சிறப்பு விழாவிலும் பண்டிதமணி அவர்கள் பொன்னாடை போர்த்தரிக் கெளரவிக்கப்பட்டார்கள்.
பரிற்காலத்தரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தால் பண்டிதமணி அவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டம் இலக்கிய கலாநிதி' என்பதாகும். தமக்குத் கிடைத்த பொன்னும் புகழும் குலதெய்வமான காரைத்துTர் விநாயகப்பெருமானும், மட்டுவில் மருதழ வரிநாயக முர்த்தரிகளும்,
/ ཡོད།༽
“நம் தண்ணா தனனானா”
கரையோரம் பூங்குயில்கள் சல்லாமம் சிகாட்ருத: கதிரவனினர் பார்வையில் சிகாஞ்சிக் சிகாஞ்சிக் ஆருதடி-ாங்கும்
மீனவர்கள் கூடிநிர்ைறு வலை வீசி நிர்நனரே சிபண்ணவர்கள் கூடி நிர்று வழிபார்த்துநின்றனரே. எங்கும்
சிறு குருவி இசையாட கடல் அலைகள் சுதி போட சிவள்ளை மணல் அரங்கினிலே காதல் ஆட்டம் நடக்குதடி - லிங்கும்
Sagiturub 6 lurraias.
- கார்த்திகா, ரம்யா, அபி, \། த்திகா, ர 6)/DT ノ
அநுக்கிரகித்தவை என்றும் எல்லாம் அத்தெய்வங்களுக்கே உரியவை என்றும் பண்டிதமணி அவர்கள் குறிப்பட்டார். பத் தொன்பதாம் நூற்றாண்டின் இறுதக் காலகட்டத்தரில் பிறந்து இருபதாம் நூற்றாண்டின் பிற்காலம் வரை முழுவதும் நைட்ழகப் பிரமசாரியாக வாழ்ந்தவரான பண்டிதமணி அவர்கள் போதனையோடுமட்டும் நிற்கவில்லை சாதனையரிலும் மக்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார்.
86 வருடங்கள் 8 மாதங்கள் 16 நாள்கள் இப்பூவுலகை அவரது பொன்மேனி தீண்டி இருந்தது. குரோதன வருடம் மாசிமாதம் 28 ம் நாள் புதன்கிழமை இரவு பூர்வபக்கத் திருதியையும் ரேவதி நட்சத்திரமும் பொருந்திவந்த புண்ணிய பொழுதினில் மூதறிஞர் இலக்கிய கலாநித
பண்டிதமணி சிகணபதிப்பிள்ளை அவர்கள் இயற்கை எய்தினார்
 

கலப்பை சித்திரை 1995
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 1995
மிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் சென்ற ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாண்டே எமது இளம் சந்ததியினர் பெரும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இப்போட்டிகளில் பங்குபற்றின7ர்கள்.
இரண்டாவது ஆண்டாக இவ்வாண்டு நடைபெற்ற இப்போட்டிகளுக்கு முந்திய ஆண்டைவிட அமோக வரவேற்பும் ஆதரவும் கிடைக்கப்பெற்றது என்பதைப் பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிறநாட்டுச் சூழலிலே வாழ்கின்ற எமது இளஞ் சந்ததியினர் எமது தாய்மொழியாம் தமிழ்மொழியை ஆர்வத்துடன் கற்கவேண்டும், எமது பண்டைய தமிழ் கலாசாரத்தைப் பெருமையுடன் பேணிப்பாதுகாக்கவேண்டும் என்ற சிறந்த நோக்கத்துடனேயே இப்போட்டிகள் ஆரம்பித்து நடாத்தப்பட்டுவருகின்றன. பல பெற்றே7ர்களும் தமிழ் அபிமானிகளும் இப்போட்டிகளை நடாத்துவதற்கு எமக்குப் பெரும் ஆக்கமும் ஊக்கமும் நல்கி வருகின்ற7ர்கள்.
பெரியோர் பலர் தெரிவித்த கருத்துக்களுக்கேற்ப இவ்வாண்டு நடைபெற்ற எமது போட்டிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆறுவயதிற்குட்பட்ட பச்சிளம் பாலகர்களும் பங்குபற்ற வாய்ப்பளிக்கும் வகையிலே அவர்களுக்குப் பாடல் மனனப் போட்டியொன்றினை ஆரம்பித்துவைத்துள்ளோம். இப்போட்டியில் பல மழலைச் செல்வங்கள் பங்குபற்றிப் பரிசுகள் பெற்றதைக் கண்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பல்கலைக்கழக மாணவர்களிடையே தமிழ் மொழி ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் பிரிவிற்கிடையே விவாதப் போட்டியொன்றினை நடாத்தி அதில் பெரும் வெற்றியும் கண்டுள்ளோம். எமது இளம் சந்ததியினரிடையே தமிழ் மொழியைப் பற்றிய அறிவு வளரவேண்டும் அவர்கள் தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதப்பழகவேண்டும் என்ற நோக்குடன் எழுத்தறிவுப் போட்டியொன்றினையும் இவ்வாண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இவ்வாண்டு நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய நூற்றுக்கணக்கான மாணவர்களில் பரிசுகளைத் தட்டிச்சென்ற மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. பாடல் மனனப் போட்டி - ஆரம்ப பிரிவு
முதலாம் பரிசு செல்வி யதுகிரி லோகதாசன் இரண்டாம் பரிசு செல்வி ஆரவி இளங்கோ மூன்றாம் பரிசு செல்வி நிசேவிதா பாலசுப்பிரமணியம்
செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியம்
ஆறுதல் பரிசுகள்
செல்வி வாசுகி குணசிங்கம் செல்வன் விக்னேவர் சந்திரசேகரன் செல்வி ஆரண்யா இளங்கோ செல்வி அபர்ணா சுரேவும் செல்வி சுருதி பாலாஜி
27

Page 16
கலப்பை சித்திரை 1995
2. பாடல் மனனப் போட்டி - கீழ்ப் பிரிவு
முதலாம் பரிசு செல்வி லவண்யா லிங்கம் இரண்டாம் பரிசு செல்வன் செந்தூரன் தேவராஜ7 மூன்ற7ம் பரிசு செல்வி மயூரி பஞ்சநதீஸ்வரன்
ஆறுதல் பரிசுகள் செல்வி வைஷ்ணவி பரிமளநாதன் செல்வி தர்ஷனிகா சபாநாதன் செல்வன் பிரியந்தன் பிரபாகரன் செல்விதாரணிதவபாலசந்திரன் செல்வன் சத்துருக்கன் இராஜேந்திரா
3. பேச்சுப் போட்டி - மத்திய பிரிவு
முதலாம் பரிசு செல்வன் முகுந்தன் குணசிங்கம் இரண்டாம் பரிசு செல்வன் முரளி ஜெகதீஸ்வரன் மூன்றாம் பரிசு செல்வன் தேசோகுமார் ஜிவாஜிராஜா
ஆறுதல் பரிசுகள் செல்வன் செந்தூர்ப்பிரியன் சத்தியநாதன் செல்வி சந்தியா சுரேவுத் செல்வி பிரியதர்ஷரினி பாலசந்திரன் செல்வன் சரவணன் அருணாசலம்
4. பேச்சுப் போட்டி - மேற்பிரிவு
முதலாம் பரிசு செல்வி தனுஷா சபாநாதன் இரண்டாம் பரிசு செல்வி மிரா ரமேஷ்
p6bigI07 Lb Llyfr செல்வி தக்ஷரி வீரகத்திப்பிள்ளை
செல்வி லாவண்யா தேவராஜ7 ஆறுதல் பரிசுகள் செல்வி சுஜித்தா தவபாலசந்திரன் செல்வி சிவதர்வு2ணி சண்முகநாதன் செல்வி -ழரீலகஷ்மி மனோகரன் செல்வி பூரியா முத்துசாமி செல்வி தனுயா சித்திரவேலு
5. எழுத்தறிவுப் போட்டி - மேற்பிரிவு
முதலாம் பரிசு செல்வி சாம்பவி பரிமளநாதன்
இரண்டாம் பரிசு செல்வி மயூரதி சிவபாதசிங்கம்
மூன்றாம் பரிசு செல்விதாரணி மீனாட்சிசுந்தரம்
6. எழுத்தறிவுப் போட்டி - அதிமேற்பிரிவு
முதலாம் பரிசு செல்வி வனஜா சிவபாதசிங்கம்
இரண்டாம் பரிசு செல்வி சாய்பிரியா பாலசுப்பிரமணியம்
(p6öINDTILð LJfør செல்வன் லசீதரன் சிவப்பிரகாசம்
7. விவாதப் போட்டி - அதிமேற்பிரிவு
முதலாம் பரிசைப் பெறும் குழு செல்வி அபிராமி ஜெகதீஸ்வரன்
செல்வி கிறிஸ்ரீன் அருமைநாதன் செல்வி ஜனனி சண்முகலிங்கம்
28

கலப்பை சித்திரை 1995
செல்வி மைதிலி சிவராமன் செல்வி அனுஷா அருச்சுனமணி செல்வி சந்தோவனி சங்கர்
ஆறுதல் பரிசைப் பெறும் குழு
8. விவாதப் போட்டி - இளைஞர் பிரிவு
முதலாம் பரிசைப் பெறும் குழு செல்வன் தனுஜன் சத்தியமூர்த்தி
செல்வி வினோதினி கணபதிப்பிள்ளை செல்வி சாந்தி இராமநாதன் செல்வி தர்மினி பாலசுப்பிரமணியம் செல்வி கோமதி சத்தியமூர்த்தி செல்வன் கிளன் சத்தியமூர்த்தி
ஆறுதல் பரிசைப் பெறும் குழு
இறுதியாக எமக்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கிய தமிழ்க் கல்விநிலைய ஆசிரியர்கள், நிர்வாகிகள், பெற்றோர், மாணவர்கள், நடுவர்கள், பரிசளிப்பதற்கு நன்கொடைகள் வழங்கிய தாபனங்கள், அன்புள்ளம் படைத்த தமிழ்ப் பெரியார்கள் ஆகிய அனைவருக்கும் சிட்னி பல்கலைக்கழக தமிழ் சங்கம் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கின்றது. அடுத்துவரும் ஆண்டுகளில் இன்னும் பலவகைப்பட்ட போட்டிகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். அவற்றிற்கான கருத்துக்களை வாசகர்களாகிய உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். இப்போட்டிகளிலே எமது இளஞ்சந்ததியினர் பெருமளவில் பங்குபற்றி இப்போட்டிகளை நடாத்துவதனால் ஏற்படக்கூடிய முழுப்பயனையும் அடையவேண்டும் என்பதே எமது பேரவாவாகும்ப
தமிழ் ஊக்குவிப்புப் போட்டி உபகுழு,
(22ம் பக்கத் தொடர்ச்சி)
இல்லையேல் உங்களது இம்மையிலும்,
இதை நீந்திக் கடக்க வேண்டுமா? முதலில் இறைவனை நம்புங்கள். அவனை வணங்குங்கள். எல்லாம் அவன் செயல் என்று வாழப் பழகுங்கள். இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே விதமாக மதியுங்கள். அப்போது பிறவிக் கடலை உங்களால் கடக்கமுழயும். அப்படி நடக்கமாட்டாதவர்கள், பிறவியாகிய துன்பக்கடலை நிம்மதியாகக் கடக்கமாட்டார்கள், என்று எச்சரித்தார்.
ஆக, மனிதர்களே கடவுளை நம்புங்கள், அவனை வணங்குங்கள். அவனே எல்லாம் வல்ல அறிஞன். அவனிடம் தஞ்சம் புகுந்தால் உலக வாழ்க்கையைத் துன்பம் இன்றிக் கொண்டு செல்வீர்கள்.
மறுமையிலும் நிம்மதியே கிடையாது என்ற கொள்கையை ஆணித்தரமாக எமக்கு வழங்கினார், தமது திருக்குறளிலே,
இந்தத் தருக்குறட் கடவுட் கொள்கை, எந்தச் சமயத்தவருக்கும்,
எந்த இனத்தவருக்கும் பொருந்தக்கூடியது. பொதுவானது. உலகின் பல இனத்து அறிஞர்களாலும் போற்றிப் புகழப்படுவது திருவள்ளுவரின் வாரிசுகள், நாம் நாம் இவற்றைப் பின்பற்றி நடக்காவிட்டால் வேறு யார் இவற்றைப் பின்பற்றுவார். பேச்சுப் பொருளாாய் நாம் இக் கொள்கையை நரினையாது, பொறுப்புள்ள வாழ்க்கைச் செயலாய் இதைக் கடைப்பிழப்பது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும்.
29

Page 17
சித்திரை 1995
மலர்ந்த மூதமதனில் மதியின் சாயல் கண்டேன் வளைந்த மிநந்நியிலே ởia:Buffasi artaruusůs arbadásulai மறுவந்ந பற்களிலே மூகத்தின் சாயல் கண்டேன் சிவந்த இதழ்களிலே கொவ்வையின் சாயல் கண்டேன் வளைந்த புருவமதில் வில்லின் சாயல் கண்டேர்
▪ጵ | .
3 인
C
E
நீண்ட கூந்தலிலே நாகத்தின் சாயல் கண்டேன் சிமகிந்த இடைதனிலே துடியினர் சாயல் கண்டேன் துள்ளி அவள் ஒரும் போது u(aisais up/rafai at/ruais asanikalai சாயல் கண்டேண் . நானும் காதல் கொண்டேண்.
30
 

பூபாலபிள்ளை நினைவு தினம்
முத்தமிழ் புலவர் மு. நல்லதம்பி ம கவியோகி சுத்தானந்த பாரதியார்

Page 18
செப்டம்பர்
அக்டோபர்
9.
11 14 19
6ਰੀ
திங்கள் வியாழன் செவ்வாய்,
வெள்ளி
திங்கள் :
கலாயோகி ஆனந்த குமாரசாமி நினைவு தினம்
மறைமலை அடிகள் நினைவு தினம்
மகாத்மா காந்தி பிறந்த தினம்
நினைவு தினம்
சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் சேர் பொன். அருணாசலம் பிறந்த தினம்
கப்பலோட்டிய தமிழன் வஉ. சிதம்பரப்பிள்ளை
வான் சத்தியசாயி பாபா பிறந்த தினம் சர் பொன் இராமநாதன் நினைவு தினம்
பநீத கிருஷ்ண பாரதி நினைவு தினம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

KAA தலப்பை சந்தா
zijøøữ40rửưửưỵzub
Name yyySSSSSSSSSSSSSSSSSSSSSS
Address ......................................................
Telephone...........................
Amount ...........................
Signature ............................ Date:......................
ஆண்டுச்சந்தா D_ühI6:– Aus $10.00
வெளிநாடு :-Aus $ 15.00 All Cheques in Favour of "Sydney University Tamil Society"
சந்தா அனுப்பவேண்டிய முகவரி "Kalappai"
Sydney University Tamil Society, P.O.Box 40,
Wentworth Bldg., University of Sydney NSW 2006, AUSTRALIA ܓܠ

Page 19
சொல் நிரப்பல் போட்டி இல. பு
| | | | | |
a
. . . . . . . . . . . .
LSLL LLLL SLLL LLLL LL L 0 Y LLLLL LLL SY L00 SY L SLL L SY LL SY S LLL LLSLLLL LL LLL LLL LLLL LLL L0L LL LLL LLL LLL LLLLLS SLLL LLLL LLL LLL 0L L 0L LLLLL LLL LLLL LSL LLLLL LL LLL
LY LLL LLL LLL LLLL SSLL SY SLLSL SY SLSL S LLLLL LSL LLL SY Y L SY LL S L SLL S cL LLL SL0L S L S 0 S 0L S LL SL LLLL LLL LLLL LL LL SLLLL LL LLLL LLLLLLS LLL LL LL zS LLLLL LL LLL LLLLS SY 0L
தொலைபேசி இல.
முழுமையாக நிரப்பப்பட்ட இத்தாளை 14-6-95 க்கு முன் எமக்குக் கிடைக்கக் கூடியதாக பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
"Kalappai" Sydney University Tamil Society P.O.Box 40, Wentworth Bldg., University of Sydney NSW 2006 AUSTRALIA
 

கலப்பை சித்திரை 1995
கலப்பை சொல் நிரப்பல் போட்டி இலடி
இப்போட்டியில் கலப்பை உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொள்ள முடியாது என்பதை கூறிவைக்க விரும்புகிறோம். அடைக்கப்பட்ட சதுரங்கள் - 14, 15, 24, 26, 29, 31, 34. இடமிருந்து வலம் 1) நிகழ்கால சம்பவங்கள் சில எதிர்காலத்தில் இப்படி அமையும். 7) பெண்கள் அழகாக இருப்பதற்காக இதைச் செய்வதில் அதிக
நேரத்தைச் செலவிடுவார்கள். இங்கு குழம்பியுள்ளது. 16) உண்மை நட்பிற்கு அடையாளம்-ஆபத்தில் இதைச் செய்வதாகும்,
இங்கு குழம்பியுள்ளது. 19) அன்னப்பறவையைத் துாதுவிட்ட பெண், இங்கு குழம்பியுள்ளாள். 27) நிகழ்ச்சி முடிவடைவதைக் குறிக்கும் மங்களகரமான சொல்
முதலெழுத்து விடுபட்டுள்ளது. 32) சந்திரனைக் குறிக்கும் சொல் இங்கே உள்ளது. 35) இலங்கையில் மார்கழி மாதத்தில் இது கடுமையாகப் பெய்யும், சிலரை
கேலி செய்யவும் இச்சொல்லைப் பயன்படுத்துவார்கள்.
மேலிருந்து கீழ் 1) சங்கடமான சமையலை விட்டு, இதைப் பாடப் போகலாம் என்பார்கள். 2) சோக இராகமொன்று முதலெழுத்து விடுபட்டு, தலைகீழாகவுள்ளது. 3) பல நாட்களின் பின் காணும் ஒருவரைப் பார்த்து, இது பூத்தாற் போல்
என்பார்கள். இங்கு கடையெழுத்து விடுபட்டு, தலைகீழாக உள்ளது. 4) திரைகடல் ஓடியும் இதைத் தேட வேண்டுமி என்பார்கள். 5) இரத்தத்தைக் குறிக்கும் சொல், இங்கு குழம்பியுள்ளது. 6) ஆண்டவன் குடிகொள்ளும் இடத்தை இப்படியும் அழைப்பர்,
இங்கே குழம்பியுள்ளது. 21) இதற்கு முந்து படைக்குப் பிந்து என்பார்கள். இங்கு குழம்பியுள்ளது. 30) நவக்கிரகங்களில் ஒன்று. வாசகர்களே! இப் போட்டியரில் பங்கு பற்றுவதற்கு நடுப்பக்கத்தரில் இணைக்கப்பட்டிருக்கும் சொல் நிரப்பல் போட்டிக்கான சதுரங்களை உபயோகிக்கலாம் சரியாக விடை அனுப்புவோரில் அதிட்டசாலிகளின் விபரமும், சரியான விடைகளும் அடுத்த கலப்பை இதழில் பிரசுரிக்கப்படும். அதிட்டசாலிகளான இருவருக்கு Theepam Kids International, Auburn Road, Auburn 6ids/TUGolgig5b5 A815 2 lb, A810 உம் பெறுமதியான பொருள் கொள்வனவுப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு வாசகர்களாக இருப்பின் ஒரு வருட கலப்பை இதழ்கள் இலவசமாக அனுப்பிவைக்கப்படும். விடைகளை 146.95 இற்கு முன்பாக கலப்பை முகவரிக்கு அனுப்பிவையுங்கள். ஒருவர் எத்தனை விடைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
31

Page 20
கலப்பை
சித்திரை 1995
TRA ANTA THE
|LS
RETHNO
Nadarajah Sriskandarajah
அவுஸ்திரேலியத்தமிழரும்
அவர்களது இனத்துவமும்
இனத்துவம் என்பது ஒரு இன மக்களின் அடையாளம் அவர்களது பண்பாடு, மொழி வாழ்க்கை முறை, நடை, உடை, உறவுமுறைகள், உணவு, மதம், அவர்களது பூர்வீகம் எல்லாவற்றையுமே உள்ளடக்கும் ஒரு சொல்லாக அமைகிறது. நான்தமிழன், ஈழத் தமிழன் என்று சொல்வதற்குரிய எனது அடையாளம் என்ன? அதை எவ்வாறு எனது மனதிலும், மற்றையோர் மனத்திலும் நிறுவிக் கொள்ளலாம்? அதனை எவ்வாறு சிறப்பாக வெளிப்படுத்தலாம்? இவை எல்லாம் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மனதில் ஏற்படும் கேள்விகள். இதை விட எமது பண்பாட்டின் பலவேறு கூறுகளில் எவற்றை நாம் பேணிப்பாதுகாக்க வேண்டும்? எவற்றை அடுத்த தலைமுறையினருக்கு, அதுவும் தாய் மண்ணின் வாசனையின்றி வளர்ந்து வருபவர்கட்கு நாம் கையளிக்கவேண்டும்? இவை பொறுப்புள்ள பெற்றோர் மனதில் இயல்பாக ஏற்படும் கேள்விகள்.
எமது பாரம்பரியச் ஆழலுக்கு வெளியே வளரும் எங்கள் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராயவென சென்ற ஆண்டு தை மாதத்தில் மெல்பன் கலை வட்டத்தினர் கருத்தரங்கு ஒன்றினை நடாத்தினர். அதற்கெனத் தயாரித்த இக்கட்டுரை இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது. பிள்ளைகளும், பெற்றோரும் வாசிப்பதனால் பயனுண்டு என்ற கருத்திற்கமைய இக்கட்டுரை ஆங்களில முலத்தரிலேயே வெளியிடப்படுகின்றது.
இனத்துவம் ஒரு இன மக்களின் அடையாளத்தைக் குறிக்கும் ஒரு முழுமையான கருத்து என்பதையும், அந்த அடையாளம் தேவைக்கேற்றபடி அணிந்துகொள்ளக் கூழய வெறும் போர்வையோ, முகமுழயோ அல்ல, அதற்கு மாறாக எமக்கே உரிய வகையில்திறமையுடனும், நம்பிக்கையுடனும் போலியற்ற வகையில் வெளிப்படுத்த வேண்டியது என்பதையும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது இனத்துவ அடையாளத்தின் பல்வேறு அம்சங்களில், மொழி தான் மிகவும் சக்தி வாய்ந்த காரணி என்பதையும் அதேவேளையில் ஒரு இனத்தைச் சேர்ந்த அனைவரும் தமது இனத்துவத்தை ஒரே அளவிலேயோ, ஒத்த மனத்துடனேயோ வெளிப்படுத்துவதில்லை என்பதையும் அறிகிறோம். ஒரு இனம் தனக்குரிய எல்லைப்பரப்பின் மீது தனது கட்டுப்பாடு, இறைமை அவசியம் எனக் கருதும்போது அவர்களின் இனத்துவம், தேசியத்துவமாக வளர்ச்சியடைகிறது என்பதையும் கட்டுரை குறிப்பிடுகிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய குழயேற்றமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நாடு, இங்கிருந்த பூர்வீகக் குழமக்களை ஒடுக்கிய அதேவேளையில், வெள்ளை நிறத்தினரின் குழயேற்ற நாடாக வளர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே. ஒரு இனமும், ஒரு கலாசாரமும் என்ற பழமையான கொள்கை கைவிடப்பட்டு, பல இனங்கள் இணைந்து வாழும் பலி கலாச்சாரக் கொள்கை 25 ஆண்டுகளின் முன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்கீழ்
32

கலப்பை
சித்திரை 1995
குடியேறிவாழும் ஒவ்வொரு இனமும் தமது கலாசார, மொழி சமய பாரம்பரியங்களை வெளிப்படுத்துதல் அவர்களது உரிமை மட்டுமல்ல, வளர்க்கப்பட வேண்டிய ஒன்றென்றும் கருத்து நிலவுகிறது. பல்லின கலாசாரக் கொள்கையை தனக்குரிய புதிய தேசிய அடையாளமாக அவுஸ்திரேலியா நிறுவிவரும் இன்றைய நிலையில், இங்கு குழயேறிய தமிழர் இருமொழி பேசும், இரு கலாசாரம் பேனும் மக்களாக வாழ்வது மிகவும் சாத்தியமானது இளைஞர்களும், இரண்டாம் தலைமுறையினரும் தமக்குரிய இனத்துவத்தை தாமே அறிந்து நரிலைநாட்ட வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதற்குரிய அத்திவாரம் விட்டில் இடப்பட்டு, தொடர்ந்து அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் முலம் கட்டியமைக்கப்படுகின்றது இனத்துவத்தை நிறுவும் முயற்சி முரண்பாடெதுவுமின்றி நபிகழவேண்டுமெனில், பரிள்ளைகள் மட்டுமல்லாமல் பெற்றோரும் முயற்சி எடுக்க வேண்டும். எமக்குரிய தமிழ் இனத்துவ அடையாளத்தை ஏற்று வாழும் அரிய வாய்ப்பு இங்குள்ள தமிழருக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது
wamils in Australia are but one
small fraction of a whole Tamil community on the move. We have either left or fled our homeland thereby contributing to the diaspora and adding to the mass of migrants and refugees on a global scale. We, like any other migrant ethnic group, carry with us our values, traditions, memories, language and culture. As we attempt to integrate into our new environments, all sorts of conflicts arise in our minds, our homes, work places and in the wider society we live in. We discuss these conflicts privately and in public and it seems that we are willing and prepared to deal with such difficulties. As a new community in the Australian scene, we have a
wonderful opportunity to learn from the experiences of many other communities that have been through these stages before us and also to capitalise on the collective experience of Australia as a growing nation of immigrants. Some of our experiences andlessons are no doubt relevant to fellow expatriate Tamils in other lands too.
My interest in this area stems from a need to analyse and establish aspects of my own heritage that I would like to see strengthened and retained by the next generation of Tamils who have chosen to live away from our homeland. I also believe that there are components of our culture that are worthy of sharing with the world as we evolve into a rapidly expanding global village. And more importantly, I need to establish my own identity. How best can I express it? Where does my Eelam Tamil identity overlap my new Australian identity? How can we, as parents, assist our children in their day-to-day dilemmas by ourselves being useful role models? What has been written about the experiences of other migrant communities? These are some of the questions I set out to explore here.
In thispaper Ipresent ethnicity as a new and an all-encompassing term that is preferred by social scientists today to describe ethnic identity, culture, language and any other special features of an ethnic group, whether they are natives in their homeland or immigrants in another society. I then trace development of Australia as an immigrant society from the early days of colonisation to the current policy of multiculturalism. Finally, I argue that
33

Page 21
கலப்பை
சித்திரை 1995
Tamils, particularly those of the younger generation, as recent immigrants to Australia, are in a strong position to maintain a bi-cultural, bi-lingual identity, and express an ethnicity that is both compatible with and also positively encouraged by Australia's multicultural policy.
Ethnic Identity
A person's identity has been considered to be the field of study of psychologists, while identity of an ethnic community has been studied by anthropologists and social scientists. National identity of a people and aspects of their nationalism, on the other hand, has been the purview of historians. There has been a convergence in these fields of study in the past 20 years or so, and ethnicity and multicultural studies have emerged as disciplines important in contemporary society. This coincides with the 20-30 year period when many people have come out of the grips of colonialism and imperialism of one form or another in the past, and have searched for their own identities and ways of strengthening them.
The events of the last few years in Eastern Europe, the former Soviet Union, and indeed all the events that followed the end of the cold war, indicate that groups and movements on ethnic lines are going to contest the territorial integrity of existing states, many of whom were established at the end of the second World War. Of the many cases of unrest around the world which are concerned with the assertion of ethnic
identities and national identities, the one
that is closer to our hearts is the fierce
struggle going on in our homeland for the establishment of the identity of Eelam
Tamils and their nationhood. Many of us chose to move away from the
unpleasantness of a war at home and as we make our home in this new country,
here too we witness the emergence of a new form of nationalism. Some 207 years after colonisation by the British, we are
now asking questions that relate to the
identity ofan Australian, whether it is a
single identity or a multiple one, what indeed is unique about Australia's identity as a nation, and how it could evolve as a sovereign republic by cutting its links with the British crown and so
O71.
Despite the expectation of many that Australia by now would possess a mature identity of its own, we realise that even at the end of a 200 year experiment,
Australia is still in the process of formulating its identity. We, as a new
migrant community, have a part to play in the formulation of this Australian identity, just as we are discovering how we can retain our ethnic identity as Tamils.
What do we mean by the term identity? If we wanted to know our respective identities, we would simply have to ask ourselves the questions, “Who am II” at the personal level to establish our individual identity, and "Who are we?” at the collective level to establish our cultural, ethnic or national identity. Both identities are important in our day-today lives. We have an identity of our own that we feel internally and we also express it externally to the outside world
34

கலப்பை
சித்திரை 1995
The person is a system of identities. Freud, the great psychologist and psychoanalyst, spoke of his inner identity that came from his Jewish tradition which was still at the core of his personality when he lived away from that culture. He claimed that this identity gave him the capacity to live and think in isolation from the compact majority.
Psychologists say that the beginning of our identity is at the time of our psychological birth. This identity is then developed during our childhood as we go through a period of primary socialisation, when we learn to be a member of society and assume attitudes and roles in relation to the environment we grow up in and from our parents, family and other relatives. Secondary socialisation that follows in later life does not change fundamentally the identity acquired in early life, but adds to it. Identity on the other hand is not a mask that we can put on according to our convenience. It is something that we express with some skill, conviction and authenticity. The essential elements of our identity such as ourname, our family andour history are given but we have to learn to use these with mastery along with new identities we acquire through personal achievements.
In what context do we use the term "ethnic'? In a colloquial sense, the term has been used in Australia to describe any group of people who are not AngloCeltic, in other words people who do not belong to the original group of migrants. While such usage may reflect a convenient but narrow aspect of this country's history, the word itself is
derived from "ethnos” which means a nation or a people. An ethnie or an ethnic community is one that shares myths of common ancestry, memories of a shared historical past, elements of culture, and in many cases a common territory and a name.
It is also important to note that the term "ethnic” emphasises the cultural aspects of a person's identity as opposed to "race” which emphasises the biological features of that person, such as the colour of their skin and eyes and the shape of their head and nose. Pure races do not exist in today's world although myths such as the one from Sri Lanka about two distinct races, Sinhala and Tamil, in that land still get propagated In any case, race is an old-fashioned word today. Sociologists have moved away from the concept of race in view of its past association with the negative aspects of colonialism and the domination of one race by another. Ethnicity has come to be seen as a term that presents a more positive and a liberating identity to people. It does not employ the biological determinism of the past which the term race often implied
Ethnicity has been defined as the feeling of closeness felt between people who share a common culture that is a common language, a way of life, a common past and possibly also common racial origin, religion and homeland. Aspects of culture may also include symbolic elements such as particularkin structures, diet, religious beliefs, rituals, dress, economic activities or political affiliation of the group. Although race, religion and territory may play a powerful part in keeping alive a sense
35

Page 22
கலப்பை
சித்திரை 1995
of ethnicity, the most powerful factor is language.
While the feeling of closeness, togetherness or solidarity is the one that identifies a group's ethnicity, it is also true that there needs to be a collective consciousness of how they are different from other groups and how they are related to those groups who share such differences (Spoonley 1993). Accordingly, all Tamils who are conscious of their common linguistic or cultural difference from say the Sinhalaspeaking or Hindi-speaking people will see themselves as sharing a common ethnicity. Individuals need to identify themselves and be identified as different by others.
Revival of Ethnicity
In the industrialised societies of the West, in which group I would place Australia along with US, Canada and New Zealand, it was thought that migrants and their descendants would abandon their ethnicity in favour of a new national identity. Instead, there was an ethnic revival in these countries in the 1960's which continued into the 1990's. Both the native peoples in their own land and migrant ethnic groups in their adopted homes asserted their identity very forcefully. Spoonley (1993) argues that alongside these revivals, there has also been an ethnogenesis, or establishment of new identities. He quotes the case of Afro-Americans asserting their new black consciousness and the creation of a new sense of unity
which did not exist among American Blacks. This new ethnic identity among Afro-Americans used a blend of past symbols from their religion, food and music along with newly created ones, which are both American and African.
It is evident that ethnicity is not necessarily a traditional nor an unchanging property but one that is continuously evolving. The ethnicity of a Tamil born in the colonial era would certainly be different in content and expression to that of a Tamil growing up in the same land today. Ethnicity is something that is continuously adapted and modified by the people in order to
fulfil certain purposes. But for a group
of people to express a common ethnicity there must be something that binds them
together, for example, a particular history of oppression as in the case of the Afro-American or Jew. For this bonding to be retained over time, there
must be strong reasons for the individual members to remain committed and involved. In countries like Australia, a
sense of identity amongst an ethnic group gives them advantages such as recognition of the group by the state and the offer of funding. Reasons for retaining the identity may be negative
when the group continues to face
discrimination. In the case of the latter,
ethnicity becomes a defensive means of providing support for the group in a hostile environment. The case of many indigenous people including the
Australian Aborigines and the Maori,
asserting their ethnicity would be
examples of this situation.
Ethnicity of a group may not be readily visible or easy to comprehend for an
36

கலப்பை
சித்திரை 1995
outsider. It is difficult for an outsider to understand why ethnicity is important to members of a group. A non-Tamil Australian may gain some understanding about our ethnicity by participating in some of our activities, but they will not fully understand our particular experiences and attitudes that shape our ethnicity. In other words, outsiders will see a particular ethnicity in quite different ways. I have often come across situations where Tamils from Tamil Nadu have difficulties in fully comprehending the ethnicity ofan Eelam-born Tamil. For the ethnicity of a group to be preserved in an authentic form, the important aspects of it should be maintained and fostered within the group and not be allowed to be weakened.
People within a group differ in their commitment to aparticular identity. Some people who are eligible to claim a particular ethnicity may not want to be seen as a part of that group or be involved in their activities. Also, within the group, people practise their ethnicity in different ways and with different degrees of commitment. There were many Central and Eastern European post-war migrants to Australia who anglicised their names and thereby did not claim their ethnicity. We know of Tamils in our own community who claim their Tamil ethnicity in a selected way, when and where it suits them. It is true also that the degree of commitment to a Tamil ethnicity amongst Tamils, both in our homeland and in our adopted lands, is influenced by the age, generation and social class. No ethnic group is totally unified or in complete agreement about their own ethnicity. Ethnicity is essentially a subjective
process of status identification whose salience and worth varies from individual to individual (Jayasuriya 1990).
Anthony Smith (1992) in an attempt to understand why some ethnic groups have historically survived better than others, put forward the ideas of "ethnic election” and "the chosen peoples'.
Long term ethnic survival, he argued,
depends on the active cultivation of a heightened sense of collective distinctness and mission. Such communities would posses what has been called "irreplaceable cultural values' and believed that the community had a sacred duty to preserve and extend its culture. The feeling that they were the chosen people has always existed amongst the Israelites and also through the ancient Middle East and Europe. Smith suggests that this sense of uniqueness and mission has been cultivated amongst Persians, Armenians, Poles, Russians,
Chinese, Koreans, Japanese,
Americans, Irish, English and French,
just to name a few. For example,
Islamic allegiance amongst Arabs has stimulated a pride in their language,
culture and achievements. The sense of election and collective destiny continues to influence Middle Eastern politics even today. There is ample evidence of the existence of such feelings amongst Tamils as recorded in Tamil literature and history and scholars are already beginning to examine its role in shaping the ethnicity of Tamils today and in the contemporary events in Sri Lanka.
37

Page 23
கலப்பை
சித்திரை 1995
“அன்னை இல்லம் ?
ஆசையூர்,
1. Z 94. என் இதய சங்கரனுக்கு,
திடீர் என்று வரும் எனது கடிதம் உங்களுக்குத் தரிகைப்பை உண்டாக்கலாம். திறந்த உள்ளத்தோடு, தேங்கி இருந்த என் எண்ணங்களை எழுத்து வடிவிலே ஏட்டிலே தீட்டுகிறேன். தென்பான உள்ளத்தோடு, அவசரமே7 அதிசயமோ எதுவுமில்லாத, ஆழ்ந்த அமைதியான ஒரு நிலையில் தான் நான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அவசரப்படாமல், அமைதியாக ஆழ்ந்து படியுங்கள். அடி உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிகளை ஒன்றாக்கி, அழிவில்லா எனதன்புடன் இரண்டறக் கலந்து, அசையாத நம்பிக்கையுடன் ஆக்கி உள்ளேன் இக்கழதத்தை.
துணிவு எனக்கு எப்படி ஏற்பட்டது என்று எண்ணத்தோன்றும் உங்களுக்கு. தூய அன்பு அவ்வளவு தான் என்று சொல்லிக்கொள்கிறது எனது நெஞ்சம்.
எல்லாம் 'ஒன்றாகவே' தோன்றும்
அந்த இளவயதில் வந்து சேர்ந்தேன் பள்ளியரில் படிப்பதற்கு.
*ia த்தேன்,பழத்தேன், எவ்வளவோ பழத்தேன். பாலில் நெய் உண்டு என்று பழத்தேன். பாம்பில் விஷம் உண்டு என்று அறிந்தேன். மயில் ஆடுவது கண்டேன். குயில் கூவுவது கேட்டேன். கிளியின் மழலையில் மெய்மறந்தேன். எழில் கண்டேன். ஏழ்மை கண்டேன். எழுச்சி கண்டேன். நாளும் யாவும் நடப்பவை கண்டேன். ஆனால், பாழும் உலகில் வாழும் மனிதரின் உள்ளத்தை ஏனோ என்னால் உணர முடியவில்லை.
சின்ன வயதிலே நாம் எல்லோரும் ஒன்றாக ஓடி விளையாழிய அந்த இன்ப நாட்கள் இன்றும் என் கண் முன்னே நிழலாடிக்கொண்டிருக்கின்றன. நீங்களும் அப்பொன்நாட்களை மறந்தருக்க மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன்.
இளவயதின் நினைவில் தான் எவ்வளவு இன்பம் பொறுப்பற்ற அந்த வயதில் நாம் பெற்ற சுகங்கள் தான் எத்தனை! எத்தனை இதயத்தைத் தொடும் இள வயதில் துன்பம் நேர்ந்தால் அழுவோம். இன்பம் விளைந்தால் சிரிப்போம். இவைதான் எம்மால் செய்ய முழந்தது. அப்போது வாழ்வின் இன்ப துன்பம் யாவும் நமக்குச் சூனியம். நாம் சிந்தித்துச் சீரழிந்ததே கிடையாது.
38
 
 

கலப்பை
சித்திரை 1995
நான் யாருடனும் நன்றாகவே பழகுவேன். அவ்வாறே நீங்களும் யாவருடனும் ஒன்றாகவே பழகுவிர்கள். எந்த ஒரு காரியத்தைச் செய்யும் பொழுதும் நாம் இருவரும் முன்னின்று செய்வோம். ஆசிரியரே இதுகண்டு ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்திருக்கிறார். உங்கள் பேச்சுத்திறனும், யாவருடனும் சேர்ந்து பழகும் தன்மையும் என்னை மட்டுமல்ல யாவரையுமே கவர்ந்திருந்தது.
சிறுக வெட்டிச் சீவப்படியாத மயிரும், மெலிவான உடலும், சுறுசுறுப்புடன் பேசும் வாயும், குறுகுறு என்று பார்க்கும் கண்களும், மெல்லிய கருமையான நிறமும், உயரமான உடலும் கொண்ட உங்கள் உருவம், மற்றைய மாணவர்களிடமிருந்து தனியே எடுத்துக் காட்டியது எனக்கு.
காலம் நம்மை வளர்த்தது. குழந்தைப் பருவம் மாறி, வாலிபப் பருவம் அடைந்தோம். ஏற்றமும், தாழ்வும், எண்ணமும், எழுச்சியும், என் இதயத்திடையே தோன்றின. வருங்காலம் வகையாக அமைய வேண்டும் என்று திட்டங்கள் போடத் தொடங்கினேன். வாலிபப் பருவமானதால் கற்பனைக் கோட்டை வானளாவிநின்றது. கடலின் அலைகளை அடக்கலாம், ஆனால் கன்னியரின் கற்பனைக்கோ அணைபோட
(if2Լջ եւ//73յի
முன்பிருந்த அமைத? இப்போது என்னிடமில்லை. முன்பு உங்களிடம் பழகும் போது இருந்த தெளிவு இப்போது
எனக்கில்லை. காட்சியில் புதுமை காண்கிறேன். கற்பனையில் புதியன காண்கிறேன். கானும் பொருட்களில்
புதிய கருத்துக்கள் காண்கிறேன். ஏன் இப்பழ ஏற்பட்டது என்று எனக்கே
ᎶᏜffl1/6ᎧfbᎧ60)6Ꭰ?
சிறுபிள்ளையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகின்றது. அப்போது நாம் எவ்வளவு சந்தோசமாக இருந்தோம். அன்று உள்ளங்களில் தான் பற்று இருந்தது. இன்று உடலிலும் பற்று ஏற்பட்டு விட்டது.
சில மாணவர்களுக்கு உங்களைப் பிழப்பதில்லை. ஏனோ அவர்களைக் கண்டால் எனக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் கணினுக்கும் எனது பார்வைக்கும் எவ்வளவோ வித்தியாசம், அவர்கள் குயிலரிலே கருமை காண்கின்றனர். நான்குரல் கேட்கின்றேன். மயரிலவிலே அவர்கள் இனிமை காண்கின்றார்கள். நான் சாயல் காணிகின்றேன். பசுவரிலே பால் வேண்டுகின்றேன் நான் அவர்கள் சாணி பெறுகிறார்கள். இதுதான் எங்களிடையே உள்ள வித்தியாசம்.
சிறு வயதிலே எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை ஒருமையாகி ஓங்கி நிற்க வேண்டும் என்பதே என் பேரவா. பெண்கள் மனம் திறந்து பேசக்கூடாது என்பார்கள். மறைத்து வைக்க முழயவில்லை. உங்ளை நான் மனமாரக் காதலிக்கிறேன். மனப்பூர்வமான எனது காதல் தூய்மையானது, நேர்மையானது.
விட்டில் உள்ளவர்கள் என்னை வேறொருவருக்குக் கொடுக்கலாம் என எண்ணுகின்றனர். மனம் கவர்ந்தவரை மறந்து மற்றொருவருக்கு மனைவியாகேன் மனவுறுதியோடு கூறுகிறேன், உங்களை என்றும் மறக்கமாட்டேன். என்றும் என் உள்ளத்தரில் உங்கள் உருவம் பசுமையாகவே பதிந்திருக்கும். என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று
39

Page 24
கலப்பை
சித்திரை 1995
எண்ணித்துணிந்தே இக் கழதத்தை எழுதினேன்.
ஒருத்தி வாழ்க்கையில் ஒருவனைத் தான் காதலிக்க முடியும் உள்ளம் விளைந்த உத்தமனையே அவள் என்றென்றும் தன் இதயக்கோயிலில் ஏற்றிப்பூசிக்க முழயும். என் இதயப் பெட்டகத்தில் இருப்பிடம் அமைத்துக் கொண்ட உங்களிடம் இருந்து நல்ல பதிலை நாடி நிற்கும், தங்கள,
சாந்தி
5 DLib”
ஏறாவூர், 5. Z 94.
அன்பு நண்பன் தருமன் அறிவது,
'67,
நீண்ட நாட்களுக்குப் பின் இக் கழதத்தை எழுதுகிறேன். கோபித்துக் கொள்ளாதே. தடங்கல் இல்லாமல் சென்றுகொண்டிருந்த எனது வாழ்வில் சிறு தடங்கல் ஏற்பட்டு விட்டது. அத்தடையை உன்னால் போக்கமுடியும் என்ற காரணத்தால் இக் கடிதத்தை அவசர அவசரமாக எழுதுகிறேன். இவ்வுதவியைச் செய்து முழப்பாயே யானால் உன்னை உள்ளளவும் மறக்க மாட்டேன்.
நான் வாழ்ந்த வாழ்வு தான் உனக்கு நன்றாகத் தெரியுமே? எவ்வளவு கவலை இல்லாத வாழ்வு வாழ்ந்தேன். நாம் பிறக்கிறோம், இறக்கிறோம். இந்த இடைநேரத்திலே நாம் நினைப்பது நடக்குமானால் வாழ்வு எவ்வளவு இன்பமடையும், வாழ்க்கை வளம் பெறும், ஆனால் எமது எண்ணங்கள் தான்
நிறைவேறுவதில்லையே!
நீ எனது பள்ளித் தோழன் என்ற முறையில் சொல்கிறேன். உனக்குத் தெரியும் நான் பள்ளியில் எல்லோருடனும் நன்றாகப் பழகுவேன். பெண்களோடு மிக நெருங்கிப் பழகுவேன். பெண்களோடு பேசுவதை நான் பெருமையாக எண்ணிக்கொண்டேன். அவர்களோடு பேசுவதில் தான் எனக்கு எவ்வளவு அக்கறை. இதனாலர் என் சக மாணவர்கள் என் மீது பொறாமை கொண்டதும் உண்டு ஏனோ என்னால் செய்ய முழந்ததை அவர்களால் செய்ய முழயவில்லை. நீயும் தான் முயற்சித்துப்
பார்த்தாயே? முழயவில்லையே. ஒவ்வொருவனும் நரினைப்பது நடப்பதில்லை.
நான் எல்லாப் பெண்களுடனும் பழகுவது போலவே சாந்தரியுடனும் பழகினேன். மற்ற மாணவரிகளிடம் எவ்வளவு அன்பைச் செலுத்தினேனே7 அவ்வளவு அன்பைத்தான் சாந்தியிடமும் செலுத்தரினேன். ஆனாலர் என் எண்ணத்திற்கு எதிராக அவள் எண்ணம் மாறி விட்டது. அவள் என்னைக் காதலிக்கிறாள். ஆனால் அவளை நான் காதலிக்கவில்லை. ந" அவளை விரும்புகிறாய். ஆனால் அவள் உன்னை வெறுக்கிறாள். என்ன விசித்திரமான உள்ளங்கள், விசித்திரமான எண்ணங்கள்.
நான் எல்லா மாணவிகளையும் விரும்புகிறேன். ஆனால் மணம் செய்யும்பழ கேட்டால் முடியாது என மறுப்பேன் என்ன பைத்தியக்காரன் போல் எழுதுகிறான் என்று எண்ணிவிடாதே. என் மனம் எந்த ஒரு தனிப் பொருளிலும் திருப்தி அடைவதில்லை.
பூவிலுள்ள தேனை எடுத்துச் சுவைப்பேனே ஒழியப் பூவின் மென்மையை
எடுத்துப் போற்ற மாட்டேன்.
40
 

கலப்பை
சித்திரை 1995
பழத்திலுள்ள இரசத்தை எடுத்துப் பருகுவேனே ஒழிய அதன் விதையைப் பேணி எடுக்கமாட்டேன். பசுவிலே பாலைக் கறப்பேனே ஒழிய அதன் பசியைத் தீர்க்க எண்ணமாட்டேன். இவை யாவும் நான் வேண்டுமென்று செய்வன அல்ல. என் இரத்தத்திலே ஊறிப்போன பழக்கங்கள். எனது இந்த இழிவான குணத்தை எப்படியும் திருத்திவிடலாம் என்று பார்க்கிறேன். முடியவில்லை. என்ன செய்வது நான் பிறந்த நிலை அப்பழ என்று சொல்லி என்னைத் தேற்றிக்கொண்டு வருகிறேன்.
சாந்திதன்னை மணந்துகொள்ளும் பழ என்னை மன்றாடுகிறாள். மனம் உண்டென்றால்தான் மார்க்கம் உண்டு. என் மனம் விரும்பவில்லை. 'உன்னை நான் மணம் செய்ய விரும்பவில்லை’ என்று நேரே அவளிடம் என்னால் எப்படிச் சொல்ல முடியும்? இந்த இடத்தில் தான் உன் உதவி தேவைப்படுகிறது. எனது உள்ளத்தை நீ அவளுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
மனமற்ற வாழ்வு மணமற்ற மலராகும். வீணையின் நரம்புகள் நல்லவையாக இருந்தால்தான் நாதம் பிறக்கும் இல்வாழ்வில் இருவர் மனம் ஒன்றுபட்டால் தான் இன்பம் பிறக்கும். கட்டாயத்தால் கனிவு பிறக்காது. காதலும் தோன்றது.
நன்றாக இவற்றை எடுத்துச் சொல். எண்ணத்தினை மாற்றச் சொல். ஏக்கத்தைத் தவிர்க்கச் சொல்.
வரிரைவரிலர் உன் எதிர்பார்க்கிறேன்.
11Ꮺ57Ꮝ2) 6Ꭰ
இங்கனம் நண்பன் சங்கர்
"அருள்வெளி” நல்லுரர்
10-2-94 அன்புடை நண்ப!
உனது கழதம் பெற்றேன். சிந்தனையற்று அமைதியுடன் இருந்த நான், உனது கடிதத்தைப் பழத்தவுடன் என்னையறியாமல் ஏதேதோ எண்ணத்தொடங்கிவிட்டேன். வேதாந்த எண்ணங்கள் சில நேரத்தல் தோன்றுகின்றன. வீணான செய்கைகளைத் தூண்டக் கூடிய விபரீத எண்ணங்கள் மறுகணத்தில் தோன்றுகின்றன. கனவு போல் காட்சிகள் பல என் கண் முன் உதயமாகசின்றன. காரணந்தான் தெரியவில்லை.
எங்களிடையே இருக்கிறதே உள்ளம் என்றதொரு உருவற்ற பொருள்! அது செய்யும் மாய வித்தைகள் தான் எத்தனை உருவற்ற உள்ளத்திடையே தோன்றும் அன்பு இருக்கிறதே! அதன் செயலைத் தான் என்னவென்று சொல்? காக்கை தன் குஞ்சைத் தான் காக்கிறது.குயிலின் குஞ்சைக் கொத்திக் கொல்கிறது. ஒற்றுமையாய் இருக்கும் இரு நாய்கள் கூட உணவைக் கண்டவுடன் ஒன்றோடு ஒன்று சண்டை பிடிக்கத்தான் செய்கிறது. இவற்றின் உணர்மையை எம்மால் 2 - 607 W முழயவில்லை. இதைச் சுயநலம் என்றுதான் ஏற்க வேண்டியிருக்கிறது.
நான் சாந்தரியை மனமாரக் காதலித்தேன். அது உனக்கு நன்றாகத் தெரியும் அவள் அன்பைப் பெறுவதற்கு நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான் எத்தனை! நான் பழக்காமல் எத்தனை நாள் அவளுக்கு எனது பாடப் புத்தகங்களை இரவல் கொடுத்திருப்பேன் அவளுக்கு எத்தனை உதவரிகள் செய்திருப்பேன். இவை யாவும் காணல்
5ü GUToÜ Luolünü GUILÜ GİLÖZ
41

Page 25
கலப்பை
சித்திரை 1995
விடாமுயற்சி வெற்றியைத்தரலாம் என நினைத்தேன். அவளைச் சுற்றிச் சுற்றி வந்தேன். உடலை அழகு படுத்தினேன். உடையை அலங்காரம் செய்தேன். ஏனோ அவள் உள்ளத்தை என்னால் கவர முடியவில்லை.
இதனால், நான் மன அமைதி இழந்தேன். மனச் சாந்திபெற மார்க்கம் தேடினேன். கலர் வரியரில் கவனம் செலுத்தினேன். கன்னித் தமிழில் ஆர்வம் காட்டினேன். கவிதை எழுதத் தொடங்கினேன். என்றாலும் அவளை என்னால் மறக்க முடியவில்லை. புது வழி ஒன்றைக் கடைப்பிடித்தேன். புத்துணர்ச்சி கிடைத்தது. அவள் செய்யும் தவறுகளை மட்டும் கவனித்து வந்தேன். இதனால், அவள் மேல் ஒருவரித வெறுப்பே வளரத் தொடங்கிவிட்டது. நரிக்குத் திராட்சைப் பழம் புளித்தது போல், எனக்கு அவள் மேல் வெறுப்பு ஏற்பட்டது. ஏமாற்றத்தினால் ஏற்பட்ட நிலையிது என்பது என்னமோ உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். என்னை ஏற்க மறுத்தவளாகிய அவளும், யாராலும் ஒதுக்கி எறியப்பட வேண்டும் என ஏங்கி இருந்தேன். என் எண்ணம் ஈடேறி விட்டது. இன்று அவள் என்னிலையில் இருக்கிறாள்.
உன் காதலை வேண்டித் தவம் கிடக்கிறாள். நீயோ அவளை உதறித் தள்ளிவிட விரும்புகிறாய். ஒருகால் அவளின் நரிலையை எண்ணினால் இரக்கமாகதான் இருக்கிறது. ஆனால் முன்பு எனக் கேற்பட்ட நரிலையை நரினைத்தவுடன் இன்பம் தான் ஏற்படுகிறது. மனித குணங்களில் இதுவும் ஒன்று என்று தான் எண்ணத் தோன்றுகிறது. என்ன செய்வது, என்னாலேயே என் இதயத்தைப்
புரிந்துகொள்ள முழயவில்லை, வண்டு வண்ண வண்ண மலரைத் தேடி வருவது அதிலுள்ள தேனைப் பருகுவதற்குத் தான் தேனற்ற பூவையும் மணமற்ற மலரையும் வண்டுகள் நாடுவதில்லை.
பூனையில் எனக்குப் புனுகு தான் வேண்டும். பூவில் எனக்குத் தேன் தான் வேண்டும். யானையில் எனக்குத் தந்தம் தான் வேண்டும். யாழில் எனக்கு நாதம் தான் வேண்டும் சிப்பியில் எனக்கு முத்து தான் வேண்டும். இவை கிடைக்காவிடில், அவற்றை உருவாக்கும் பொருள்களும் எனக்கு வேண்டியதில்லை. சாந்தியின் காதலை வேண்டினேன். அது கிடைக்கவில்லை. இனி அவள் எனக்கு வேண்டியதில்லை.
நண்ப ! ந” 2Ꮃ 6Ꭷ16ᏍᏬ67 வரிரும் பவரில்லை என்பதை நான் அவளுக்குச் சொல்லத் தயார். ஆனால் அதற்கு ஒரு தடை இருக்கிறது. நான் காதலித்துத் தோற்றதனால் பொறாமை கொண்டு அவ்வாறு சொல்கிறேன் என்று அவள் எண்ணலாம். எண்ணுவதோடு நின்றுவிடாது என்மேல் வெறுப்பும் கொள்ளலாம். அதனால் சொல்கிறேன், அவள் என்னிடம் எவ்வாறு மனம் முழக்க முழயாது என்று சொன்னாளோ, அவ்வாறே நீயும் அவளிடம் மணம் செய்ய மனம் இல்லை என்று சொல்லிவிடு. நேருக்கு நேர் சொல்லுவது நெஞ்சத்தைப் புண்படுத்தினாலும், தொல்லைகள் யாவும்
தொலைந்துவிடும். குழப்பம் எளிதில் குறைந்துவிடும். துன்பம் விரைவில் மறைந்துவிடும். எந்த விசயத்தையும்
நேரே பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது உனது தொல்லைகள் விரைவில் திரட்டும்.
இப்பழக்கு, நண்பன் தருமன்.
42)

கலப்பை
சித்திரை 1995
“கலைமடம்” நவாலிபூர், 1507.94. அன்புசால் நண்பன் சுரேஷ் !
நான் நலம். உமது சுகம் அறிய வேணவா. எனது கடிதம் காலம் கடந்து வரினும் கடந்த கால நமது கல்லூரி வாழ்வரின் சிந்தனைகளை அள்ளி வருகிறது. கால மாற்றங்களைக் கழதத்தரில் தட்டும் பொழுது தான் எத்தனை இன்பம்!
கல்லூரிப் படிப்பு முழந்து தொழில் புரியத் தொடங்கிவிட்டோம் நாம் இருவரும். கடந்த நமது கல்லூரி வாழ்வில் தான் எத்தனை கொள்ளை இன்பம் வாழ்வின் பொறுப்பு, தொழில் புரியத் தொடங்கியவுடன் தான் நன்கு புலப்படுகிறது. முன்புபோல், நாம் நினைத்த இடமெல்லாம் சுதந்திரமாகச் செல்ல முழயாது. எண்ணிய எதுவும் செய்ய முடிவதில்லை. ஒரு ஒழுங்கான வாழ்வை நாம் இப்போது அமைக்க வேண்டி இருக்கிறது.
եւ)/76O6) եւՈ6ծ 2 6Ꭰ/7 6l/ij56Ꮣ) , முன்னிரவில் பழத்தல், பின்னிரவில் துயரிலுதல், காலையில் எம்மை வேலைக்குத் தயார் செய்தல், அப்புறம் அலுவலகம் செல்லல், பின் மாலையில் வீடு திரும்புதல், இப்பழயே நமது வாழ்வு செல்லப் போகிறது. நமது கடந்த கால வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள்? வயதுக்கேற்ப வாழ்வை அமைக்க வேண்டி இருக்கிறது. வயது தான் வாழ்வின் வழிகாட்டியோ என எண்ணத்தோன்றுகிறது!
வயது என்றவுடன் ஞாபகம் வருகிறது, எனக்கு இன்றோடு 26 வயது முழவடைகிறது. என் தாய் என்னை மணம் செய்துகொள்ளும் படி
துாண்டுகின்றார். நான் முற்றாக மறுத்துவிட்டேன். பாவம்! அவர் நிரம்ப வருத்தப் பட்டார். அவருக்கு எப்படிப் புரியும் எனது மனநிலை? உனக்கு ஒருவனுக்கு மட்டும் தான் எனது உள்ள நிலை கொஞ்சம் தெரியும்,
நான் சாந்தரியை மனமாரக் காதலித்தது ந ஒருவன் தான் அறிந்தரிருந்தாய். எனது காதல் உண்மையானது, நேர்மையானது, தூய்மையானது, தெய்வீகத் தன்மை வாய்ந்தது. ஆனால் நான் அவளைக் காதலித்தது அவளுக்குத் தெரியாது. நானும் அவளுக்கு அதை வெளிப்படுத்த விரும்பவில்லை. அதற்குக் காரணம், நான் அவளுக்கு அதரிக மதரிப்புக் கொடுத்தேன். அவளை ஒரு மேன்மை பொருந்திய பெண்ணாக மதித்தேன். இப்பொழுதும் மதிக்கிறேன். எனது அந்தஸ்தலும் பார்க்க அவளுக்கு உயர்ந்த அந்தஸ்துக் கொடுத்தேன். அவளுடைய காதலுக்கு நான் தகுதியுடையவன் தானா என்ற எண்ணம் என்னிடைத் தோன்றியதால் தான் என் காதலை நான் அவளிடம் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் நான் இவள் காதலையும் பெற முடியவில்லை.
அவளது காதல் எனக்குக் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் நான் அவளை வெறுக்கவில்லை. அப்பழ நான் வெறுத்தருந்தால், நான் கொண்டிருந்த காதல் வெறும் சுயநலத்தினால் எழுந்த காமமாய் இருக்கும். இங்கு தான் கல்லூரி மாணவர்களின் காதல் L6) தன்மைப்படுகிறது. தன்னை ஒருவள் காதலிக்கவில்லை என்ற காரணத்தினால் அவள் மேல் ஒருவன் வெறுப்புக் காட்டினால், அல்லது பழரிக்குப் பழி வாங்க எண்ணினால் அவன் காதல் உண்மைக் காதலாகாது. அது வெறும் சுயநலத்தரினால் உண்டான உடற்
AR

Page 26
கலப்பை
சித்திரை 1995
கவற்சியினால் ஏற்பட்ட உள்ளத்தின் மயக்கமாகும். உதாரணத்தற்கு எங்களுடன் கல்வி கற்ற தருமனை எடுத்துக் கொள். அவனும் தான் சாந்தியைக் காதலித்தான். ஆனால், அவள் அவனைக் காதலிக்கவில்லை. அதனால் அவனுக்கு அவள்மேல் ஒருவித வெறுப்பு. அவள் கவர்டப் படுவதைக் கண்டுகளிக்குமளவிற்கு அவன் மன நிலை வளர்ந்து விட்டது.
என்ன செய்வது ஒவ்வொருவனும் ஒவ்வொரு வரிதமாக நடந்து கொள்கின்றான். சங்கரன் இருக்கிறானே! அவன் செயலைத் தான் என்னவென்று சொல்வது! அவனைப் பற்றி உனக்கு நன்றாகத் தெரியும், கண்ட கல்லூரி மாணவிகளையெல்லாம் தன்வசப்படுத்தி அதிலே வாழ்வு கண்டு வருகிறான். எல்லாப் பெண்களுடனும் இனிக்க இனிக்கப் பேசுவான். ஆனால் அவன் இதயத்திலே இனிமை இருக்காது.
சாந்தரி சங்கரனை மனமாரக் காதலிக்கிறாள். காதலுக்காக எதையும் தியாகம் செய்யவும் அவள் தயாராக இருக்கிறாள். ஆனால், பாவம் அவள் காதல் கைகூடாத நரிலையில் இருக்கிறது. சங்கரன் அவளைக் காதலிக்கவில்லை. காதல் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு மனப்பான்மை வளர்ந்துள்ள அவனுக்கு, காதலிக்க எப்படித் தெரியும்?
இவற்றையெல்லாம் யோசிக்கு மிடத்து வாலிபர்களின் உள்ளங்கள் தான் எத்தனை விசித்தரமானவை என்று எண்ணத் தோன்றுகிறது, தாயரின் இதயத்திலே தோன்றும் அன்பு கூடச் சுயநலத்தரின் வேகத்தரில் தான் சுரக்கிறது. அப்பழ இருக்கையில் சுயநன்மைக்காகவே உதயமாகும் காதலைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
தன்னை மறந்த நிலையில் தான் எதுவும் சிறப்படைகிறது. தன்னை உணரும் பொழுது அந்த நல்ல நிலை உடைந்து விடுகிறது.
(B6LD. இவ்வாறு, நண்பன், லிங்கன்.
摩தமிழகம் yy
அளவையூர்,
22-7-94 பண்புடை நண்ப!
உனது மடல் கிடைத்தது. மிக்க
மகிழ்ச்சி உனதுநலம் அறிந்தேன். நான் நலம் கல்லூரி வாழ்விலே ஏற்பட்ட இன்னல்களைப் பற்றி எல்லாம் எழுதியிருந்தாய். யாவும் உண்மை. இன்பம் என்பதுதான் என்ன? இச்சைகள் பூர்த்தியாகும் போது இடையே கிடைப்பது தான் இன்பத்தின் இறுதி
நீ கூறியது போல் வாழ்வுக்கும் வயதிற்கும் அதிகம் தொடர்பு உண்டு. எங்களுக்கு ஒரு வயதில் இன்பமாய் இருப்பது.சிறந்ததாய்த் தெரிவது
இன்னொரு வயதல் அப்பழ இருப்பதில்லை. பால் மணம் மாறாப் பருவத்தரில், பரிள்ளை தாயரின்
அணைப்பையே விரும்புகிறது. தாயின் அணைப்பில் கானும் இன்பத்தைத் தரணியில் வேறு பொருட்களில் அப் பிள்ளை காண்பதில்லை. தவழ்ந்து விளையாடும் குழந்தைக்கு விளையாட்டுப் பொருட்களை விட வேறொன்றும் வேண்டியதில்லை. பழக்கும் பருவத்தில் பந்தழப்பது போன்ற வரிளையாட்டுக்களிலேதான் காலம் கழிகிறது. வாலிபப் பருவம் வந்ததும் வானினை முட்டும் அளவிற்கு வருங்கால வாழ்வை அமைக்கும் எண்ணங்களும், எழுச்சிகளும், எதையும் எதிர்க்கும் தன்மையும், ஓங்கிடும் உள்ளமும், வாழி வரில் துணையொன்றின்
44
 

கலப்பை
சித்திரை 1995
இன்றியமையாமையும் தோன்றுகின்றன. இல்லற வாழ்வின் போது எதிர்த்து வரும் இன்னல்களையும், தொடர்ந்து வரும் துன்பங்களையும், வறுமைமையையும், பிணியையும் எதிர்த்து நிற்கும் சக்தியைத் தேட நேர்கிறது. வயோதிய காலத்தில் வாழ்வின் உயர்ந்த குறிக்கோளையும், அனுபவத்தினால் ஏற்பட்ட அறிவினையும், ஆண்டவனை வேண்டுகன்ற எண்ணத்தையும் உள்ளம் கொடுக்கிறது.
ஒரே மனிதன் தனது வாழ்நாளிலே எத்தனையோ விதமான வாழ்வு வாழ நேரிடுகிறது. காலம் அவன் எண்ணங்களை மாற்றுகிறது. குறிக் கோள்களை மாற்றுகின்றது. பாம்பானது வளர, வளரத் தனது உடலரின் மேலுள்ள தோலினைக் களைந்தெறிவது போல, மனிதனும் தனது எண்ணங்ளைக் காலத்தரின் போக்கரிலே மாற்றிக் கொண்டே போகிறான். அப்போது தான் அவனால்
வாழ முழகிறது.
மனிதர்களுடைய உள்ளங்கள் யாவும் ஒரே தன்மையுடையனவல்ல. உனக்கு அழகாகத் தெரிவது இன்னொருவனுக்கு அருவருப்பைக் கொடுக்கலாம், தேன் வேண்டும் என்கிறான் ஒருவன். அது தெவிட்டும் என்கிறான் இன்னொருவன். வானின் வழவுபார் என்கிறான் ஒருவன். முடிவு அதற்கில்லை என்கிறான் இன்னொருவன் கோடி, கோடி பணம் என்கிறான் ஒருவன். அது குணத்தைக் கெடுத்துவிடும் என்கிறான் இன்னொருவன். நாட்டின் இயற்கை வளம் காண்கிறான் ஒருவன். நலிவுற்ற மக்களைப் பார் என்கிறான் இன்னொருவன். மானம் தான் பெரிது என்கிறான் ஒருவன். மனமார உண்டால் போதும் என்கிறான் இன்னொருவன். எதிரியை நேசி என்கிறான் ஒருவன். எதிர்த்தவர்களையெல்லாம் அழித்துவிடு என்கிறான் இன்னொருவன்
எத்தனை வரித்தவியாசம் மனிதரிடை. சாந்தியின் வாழ்வில் தான் எத்தனை வளைவு, நெளிவுகள். வகையோடு வாழ விரும்புகிறாள் சாந்தி 667TAO/75 அதை அமைக் கத் தெரியவில்லை. காதலிக்கத் தெரிகிறது அவளுக்கு. ஆனால் யாரைக் காதலிக்க வேண்டும் என்பதை அவள் அறியவில்லை. காதலித்தவனைத் தான் கரம் பற்ற வேண்டும் என்ற எண்ணத்தால், சங்கரனைக் கட்டாயப் படுத்தி மணம் செய்ய எண்ணுகிறாள். கட்டாயப்படுத்திப் பெறும் பொருட்களில் கனிவிருக்காது என்பதை அவள் அறியவில்லைப்
போலும்,
Լյո լճ վ படமெடுத்தாடும் அழகினை இரசிக்கிறாளே ஒழிய, அதன் பல்லரிலுள்ள வரிவு2த்தை அறிகிறாளில்லை. வானில் வல்லுறு
வட்டமிட்டுப் பறக்கும் வழவான காட்சியைக் கண்டு களிக்கிறாளே ஒழிய, அதன் நோக்கம் கோழிக்குஞ்சைக் கொத்தரிச் செல்லவே என்பதைத் தெரிகிற7ளில்லை. சங்கரனின் மயக்கு மொழிகளிலே அவள் மயங்கரிக் கவிடக் கறாளே ஒழிய, அவன் மனதுக்குள்ளே மண்டிக் கிடக்கும்
மாசுபழந்த எண்ணங்களை அறிகிறாளில்லை. அவன் சிரிப்பின் அழகரிலே தன் சிந்தையைப்
பறிகொடுக்கிறாளே ஒழரிய. அவன் சீரிய வாழ்வு வாழத் தெரியாதவன் என்பதைப் புரிகிறாளில்லை. அவன் நடாத்தும் உல்லாச வாழ்வில் தனது உள்ளத்தைப் பறிகொடுக்கிறாளே ஒழிய, அவன் உள்ளத்தைப் புரிகிற7ளில்லை.
வெளி வேசம் கண்டு ஏற்படுவது, காதலல்ல. அது காமம். உள்ளங்கள் உணர்ந்து ஒன்றுபடுவது தான் காதலாகும். தருமனைப் பற்றி எழுதியிருந்தாய். நீ எழுதியிருப்பது முற்றிலும் சரி அவன் ஒரு சுயநல வாதி (53ம் பக்கம் பார்க்க)
45

Page 27
கலப்பை சித்திரை 1995
முதலியாடும் IILனும் C.C.குமாரசாமி
முத்துத்தம்பி முதலியாரின் வேலையாள் மாடன் படிப்பறிவில்லாதவன். ஒருநாள் முதலியாரைக்கான ஒரு பிரமுகர் வந்திருந்தார். வாசலில் நின்ற மாடனுக்கு அவரை யாரெனத் தெரியாது. ஆகவே பேரென்னவெனக் கேட்டான். அவர் சண்முகம்' என்றார். மாடன் உள்ளே போக எத்தனிக்க முதலியாரும் வெளியே போவதற்காக வந்து கொண்டிருந்தார். மாடனும் எவனோ சண்முகமாம் உங்களைப் பார்க்க வந்திருக்கிறான்' என்றான். வந்தவரைப் பார்த்த முதலியார் வாருங்கள். வாருங்கள்."என்று சொல்லிவிட்டு மாடனைப் பார்த்து மடையா, இவர் பிரபல ஆங்கில வைத்தியரல்லவா, இவரைப் போய் அவன் இவன் என்று தலையில் அழத்தாற்போல் பேர் சொல்லிவிட்டாயே’ என்று கழந்துவிட்டு வைத்தியர் வந்த விடயம் முழந்து போனபின், இங்கே வாடா மாடா! இனிமேல் வருபவர்களை மரியாதையாகப் பேருடன் திரு' அல்லது அவர்கள் எனச் சேர்த்துச் சொல்ல வேண்டும் கவனித்துக்கொள், என உத்தரவிட்டார். மாடனும் 'சரி ஐயா’ என ஏற்று வழக்கப்படுத்திக்கொண்டான்.
சில நாட்களின் பின்மயானக் காவல் முனியாண்டி, முதலியாரைப் பார்க்க வந்தவனைப் பேரென்னவெனக் கேட்டறிந்து மாடன், 'ஐயா, திரு. முனியாண்டியவர்கள் வந்திருக்கிறார்கள் எனக் கத்தினான். முதலியாரும் வெளியே வந்து பார்த்து, முனியாண்டியை அனுப்பிவிட்டு மாடனை விழித்து, சே! சே! என்னடா மடையா. சுடலை முனியாண்டியை உனக்குத் தெரியாதா? உன்னால் பெரிய கரைச்சலாயிருக்குது. சரி இனிமேல் இந்தத் திருவை விட்டுப் போடு' என்றார்.
பின்பு ஒருநாள் முதலியார் வெளியே போயிருந்த சமயம் ஒரு ஆள் வந்து நான் வரும் வழியில், ஐயா தொலைக் காட்சிப் பெட்டியில் ஏதோ பிழை இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போகிறார். நான் பார்க்கவேண்டும்' எனக்கூற, மாடன் அவரை வீட்டினுள்ளே போகவிட்டுத் தொலைக் காட்சிப் பெட்டியைக் காட்டினான். அவரும் பெட்டியில் அங்கும் இங்குமாய் ஏதோ திருகிவிட்டு, கொண்டுபோய்த்தான் திருத்த வேண்டும்' என்று பெட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே போக எத்தனிக்க, மாடன் நான் பெட்டியைக் கொண்டுபோக விடமாட்டேன்' என மறுக்க, அவரும், நீசும்மா இரு ஓய். உனக்கு என்ன தெரியும்?' எனச் சொல்லிவிட்டுப் பெட்டியுடன் போய்விட்டார். அம்மா கோவிலுக்குப் போய்விட்டபடியால் வீட்டிலோ வேறுயாருமில்லை. வந்தவன் கள்வனாயிருக்கலாமோ என மனதில் பட்டது வந்தவனைப் பின்தொடரவும் முழயாத நிலை. தலையில் கையை வைத்துக் கொண்டு வாசலில் கடவுளே என்று அமர்ந்துவிட்டான் மாடன்
முதலியார் வீடு திரும்பியவர், உள்ளே போய்த் தொலைக்காட்சிப்பெட்டி இருந்தவிடம் காலியாயிருப்பதைப் பார்த்து, அடே மாடா! எங்கேடா தொலைக்காட்சிப் பெட்டி’ எனக் கேட்க, மாடன், அது டன் வந்து டிக் கொண்டு போய்விட்டான்' என்றான். முதலியார் ‘என்னடா உளறுகிறாயர்' என்று கோபமாகச் சத்தமிடவே, 'ஐயா, கோபிக்காதேயுங்கோ. நீங்கள் திருவை விட்டுப் போடச் சொன்னிங்க, மன்னியுங்கள். அதுதான் திருடன் வந்து திருடிக்கொண்டு போய்விட்டான்' என்றான். ஐயையோ போச்சே எனக் கத்திக் கொண்டு முதலியார் காவல் நிலையத்துக்கு ஓடினார்.
46

DTTEase 2-GTETE55i
8...we tyske
تتنضصنشسطسستستضعن تنميتشص
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
இதுவரை.
நான் ஒரு எழுத்தாளன் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்ற என் தொடர்கதையின் உச்சக் கட்டத்தை மனதில் உருவாக்கிக் கொண்டிருந்த போது, என் கதையின் நாயகன் மணிவண்ணனே என் எதிரில் வந்து அமர்ந்து நான் எழுதிய தன்கதையையே என்னிடம்கூறி அதில் அவனுக்கு இழைக்கப்பட்டிருக்கும்
அநீதிக்கு நியாயம் கேட்கிறான்..! அபூர்வமான சந்திப்பு.
அக்கதையில் அவன் காட்டிலாகா அதிகாரி பக்கத்து எஸ்டேட் அதிபரின் பெண்ணான கயல் விழியைக் காதலிக்கிறான். அவர்களின் நெருக்கம் அவள் தந்தையின் காதுகளுக்கு எட்டியவுடன் காதல் 5 GOLசெய்யப்பட்டது. அச் சமயத்தில் மணிவண்ணனுக்கு இடமாற்றல் வந்ததினால் சென்று திரும்புவதற்குள்
47

Page 28
கலப்பை
சித்திரை 1995
அவளுடைய தந்தை அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயம் செய்துவிட்டார். திரும்பி வந்த மணிவண்ணன் திருமணத் தோரணங்களைப் பார்த்து கயல்விழிக்கு திருமணம் முடிந்துவிட்டதென மனம் நொந்து பழைய நினைவுகள் நெஞ்சை அரிக்க ஜீப்பில் செல்கையில் கண்ணீர் பார்வையை மறைத் து விபத்துக்குள்ளாகிறான்.
ஆனால் திருமண ஏற்பாட்டில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சி அவன் அறியாத ஒன்று.
இனிமேல்.
என்னதான் தன் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடக் கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளுக்குள்ளே போராடிக் கொண்டிருந்தாலும், திருமண நாள் நெருங்க நெருங்க கயல்விழியின் உறுதி கரைய ஆரம்பித்தது.
மனம் ஒன்றாமல் தொடங்கும் வாழ்க்கை நரக வேதனைதான் என்பதை அவள் அறிவாள். இனி மணிவண்ணனை மறப்பது என்பது ஏழு பிறவியிலும் நடக்க இயலாத காரியம். உள்ளத்தை ஒருவருக்குச் சொந்தமாக்கி விட்ட நரிலையரில் 2 - 1 - 6ᏯQᎠ6ᎸᏗ மட்டும் மாலையிடுபவனுக்குக் கொடுத்துத் துரோகம் இழைக்க அவள் மனசாட்சி ஒப்பவில்லை. இதனால் இருவருமே நிம்மதியிழப்பது உறுதி என நம்பினாள்.
எனவே நீண்ட யோசனைக்குப்பின் திருமண நாளன்று ஒரு துண்டுத்தாளில் வாழ்க்கையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த உயிர் அதன் உரிமையிடத்தை நோக்கிச் செல்கிறது. கயல்விரி என்று மடல் எழுதி வைத்து
விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டாள்.
கழதத்தைக் கண்ட அவள் தந்தை பதற்றத்துடன் உடனே வேலையாட்களை நாலாபுறமும் அனுப்பித் தேழ வரச் சொன்னார். அச்சமயத்தில் அவர் தன் அந்தஸ்துக்கு அவச் சொல் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்ற அந்த அக்கறை உணர்வைத் தன் மகளின்
வாழ்க்கையரின் மேல் முன்பே வைத்த7ருந்தால் இம்முழவு ஏற்பட்டிருக்கும77
தேழச் சென்ற ஆட்கள் யாரும் நிச்சயமான செய்தியுடன் வரவில்லை. சிலர் அவளைத் தற்கொலைப் பாறைப் பக்கம் பார்த்ததாகக் கேள்விப்பட்ட செய்தியைக் கொண்டுவந்தனர்.
'என்ன! என் கயல்விழிக்குத் திருமணம் நடக்கவில்லையா? எனக்காக வீட்டை விட்டே வெளியேறிவிட்டாளா? இது ஏன் எனக்குத் தெரியவில்லை?’ என்று ஆங்காரத்துடன் மணிவண்ணன் இரைந்தான்.
'மணிவண்ணா! அனைத்தையும் அறிந்தவன் படைப்பவன் ஒருவன்தான். படைப்புகளின் அறிவோ ஒரு வரம்புக்குட்பட்டது. பாத்திரத்துக்குத் தெரிய வேண்டியவை எவையென அதைப் படைத்தவன் தர்மானிக்கிறானோ அவைதாம் தெரியமுடியும், என்று அறிவுறுத்திவிட்டு
நீகயல்விழியை மறந்து விட்டு.’ என்று தொடருமுன்னே,
இல்லை. இல்லை. நான் கயல்விழியை இன்னும் மறக்கவில்லை. அவளை மனதார நேசிக் கரிறேன்," என்று உணர்ச்சியுடன் குரல் கொடுத்தான்.
48

கலப்பை
சித்திரை 1995
நான் கயல்விழரியை மறந்துவிட்டேன் என்று உங்களுக்கு எப்பழத் தெரியும்’ என்று எதிர்க்கேள்வி வேறு போட்டான்.
சிக்கலான அந்தக் கேள்வரிக்குப் படைத்தவனின் பொறுமையுடனும், பாடம்
சொல்லபித்தரும் பாவத்துடனும் விளக்கலானேன்.
'மணிவண்ணா! நீ என் கற்பனைப்
படைப்புக் குணாதிசயங்கள் என்னும் அங்கங்களால் என் பேனா மூலம் உருவாக்கப்பட்ட பாத்தபிரம். ந" நரினைத்ததாக எணர்னிக் கொண்டிருப்பவைகளெல்லாம் நான் நினைத்தவையே! உன் செய்கை களெல்லாம் என் விரலசைவினாலே செய்யப்பட்டவை ! ஆம், உன் உருவினிலே நான் நீயாக இருந்தேன். உன் உணர்ச்சிகளை உருவாக்கும் உள்ளமாக நான் இருந்தேனப்பா!'
என்ன! என் உணர்ச்சிகளுக்கு நீங்கள் உள்ளமா? அப்படியானால் எனக்கென்று ஓர் இதயம் இல்லையா? அந்த உள்ளத்துக்கு என் உணர்ச்சிகள் உரிமையில்லையா? என் விருப்பப்பழ நடக்க என்னால் முழயாத77 ஆட்டுவிப்பவர் நீங்கள். அனுபவிப்பது மட்டும் நாங்களா? இது எந்த வகையில் நியாயம்’
பின்னர் கோபத்திலிருந்து இறங்கி வந்து கெஞ்ச ஆரம்பித்தான். கயல்விழிக்கு என்ன சார் ஆயிற்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலைப்பாறைப் பக்கம் போனாளே. அவள் உயிரோடு இருக்கிறாளா? தெரிந்து கொள்ள என் மனம் துடிக்கிறது சார்!’
அது படைப்பின் ரகசியம்! உனக்குத்
தெரியக்கூடாது, சற்றுக் கண்டிப்புடன் கூறினேன். அவனோ என் மீது தன் ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் மேசை மீது காகரித எடைக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குண்டை எடுத்துத் தரைமேல் விட்டெறிந்தான். அது உடைந்து பல துண்டுகளாகச்
dobiluj!
பின்னர் சில நொடிகளில் ஆவேசம் குறைந்து குற்றம் செய்த குறுகுறுப்புடன், என்னை ஏறிட்டுப் பார்க்கவும் துணிவின்றித்
தலையைக் குனிந்து கொண்டான்.
நான் அவனையே பார்த்தவாறு இருந்தேன். பின் என் இருக்கையில் சிறிது பின்னோக்கிச் சரிந்து, கண்களை முடி, நெற்றியைக் கைவிரல்களால் தட்டியவாறே அவன் வாழ்க்கை முழுவதையும் ஒரு மறுகண்ணோட்டம் விட்டேன். 'மணிவண்ணா! உன் கதை இன்னும் முழயவில்லை’ என்று என் வாய்
முணுமுணுத்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது.
எவி வளவு நேரம் அப்படி யே
இருந்தேனோ தெரியாது, திடீரென்று முதுகுப்புறம் கு டேறும் உணர்ச்சி ஏற்பட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்துப் பார்த்தேன். சூரிய ஒளி சன்னல் வழியாய் அறைக்குள் நுழைந்திருந்தது. அட, விழந்து விட்டதா?
'மணிவண்ணா.!' என்று விளித்து எதிரே நோக்கினேன். நாற்காலியில் அவனைக் காணவில்லை. எங்கே அவன்?
யோசனையில் இருந்தபோது மறுபடியும் கதவு தட்டப்பட்டது. ஆவலுடன் எழுந்துபோய் முடியிருந்த கதவைத் திறந்தேன். என்தங்கை ராணிதான்நின்று
49

Page 29
கலப்பை
சித்திரை 1995
கொண்டிருந்தாள்.
'கதவைத் தாளிட்டுக் கொண்டு இவ்வளவு நேரமாக உள்ளே என்னண்ண7 செய்து கொண்டிருக்கிறாய்? பால் கொண்டு வரவா?’ என்று கேட்டாள்.
அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்,' என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, இப்போதும் கதவு உள்புறம் தாளிடப்பட்டிருந்ததை எண்ணிக் குழம்பரியவாறே உள்ளே வந்து நாற்காலியில் பொத்தென விழுந்தேன். முளையில் எண்ணங்கள் கழன்றன.
நேற்றிரவு நடந்ததெல்லாம் கனவா? இல்லையே..! என் அருகிலிருந்த நாற்காலரி எதரே இழுத்துப் போடப்பட்டிருந்த நிலை, மேசை மேல் விரிந்து கிடக்கும் வாசகி முழுமதி' யின் கடிதம், எல்லாவற்றுக்கும் மேல் தரையில் சில்லுச் சில்லாகச் சிதறிக்கிடக்கும் கண்ணாடிக்குண்டு. இவை எல்லாம் அவன் வந்து போனதற்கான தடயங்களன்றி வேறென்ன? ஆனால் பூட்டப்பட்டிருந்த கதவைத் தாண்டி அவன் வந்ததும். சென்றதும்.?
மறுபடியும் என்னைக் குழப்பம் வந்து சூழ்ந்து கொண்டது. அந்தக் குழப்பத்திற்கிடையிலும் மணிவண்ணன் எழுப்பரிய எதவிர்வாதங்கள் தெள்ளத் தெளிவாய் மனதல் ரிங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அவன் இறைஞ்சல் என் கண்முன்னே தெரிந்தது. என்னவோ என் மனமும் அவனுக்காக இளக ஆரம்பித்தது. அவன் அனுபவித்த துன்பங்கள் போதும் என்றிருந்தது.
உடனே தொடர்கதையின் இறுத அத்தியாயத்தை எழுத முழக்கும்
தீர்மானத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கற்பனை கன்றுக்குட்டியாய்த்துள்ளி ஓட, கடகட வென என் பேனா தாளில் நர்த்தனம் புரிய ஆரம்பித்தது.
“பள்ளத்தில் பாய்ந்த மணிவண்ணனின் ஜீப்
திகுதிகுவெனப் பற்றி எரியத் தொடங்கியது. அடிபட்டு வண்டிக்குள் அகப்பட்டுக் கொண்ட மணிவண்ணனின் காயம்பட்ட தலையிலிருந்து பெருகிய குருதி அவன் முகத்தை நனைத்தது. கண் முன்னே தயின் செந்நிற நாக்குகள் பெருகி எழுவதை உணர்ந்தும், கை கால்களை அசைக்க முடியாதபடி அடிபட்ட வேதனையில் அரை மயக்கத்தரில் கிடந்தான். நெருப்புச் சுவாலைகள் அவனைச் சிறிது சிறிதாகச் சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தன.
அச்சமயத்தரில் மலைத் தோட்டத்திலிருந்து தற்கொலைப் பாறை வழியாக வரும் குறுக்குப் பாதையில் காட்டிற்கு வந்து கொண்டிருந்த கயல்வழியின் கண்களில் ஜீப் எரியும் புகைமண்டலம் தெரிந்தது.
ஆம். தந்தையுடனான செல்வ வாழ்க்கையை முடித்துக் கொண்டு தன் உயிரின் உறைவிடமான மணிவண்ணனைத் தேடி வந்து கொண்டிருந்தாள். அதைத்தான் கழதத்தலும் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தாள். எரியும் நெருப்பைப் பார்த்ததும் இன்னதென்று தெரியாத உள்ளுணர்வு உந்தித்தள்ள பதைபதைப்புடன் அவள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தாள். எதற்காக வேண்டிக் கொள்கிறோம் என்று தெரியாமலேயே இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள்.
இறுதியில் அவள் காதலில் இருந்த
50

கலப்பை
சித்திரை 1995
தூய்மையும், வலிமையும், மணிவண்ணனின் உயரிரைக் காப்பாற்றி வரிட்டன. எல்லாவற்றுக்கும் மேலான சக்தி ஒன்று அவளை விபத்து நடந்த இடத்திற்குச் சரியான நேரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டது.
ஜப்பரிலவிருந்து வெளியேற்றிக் காப்பாற்றப்பட்ட பின் கயல்விழரியின் கல்யாணப் புடவையரில் பாதரி மணிவண்ணனின் காயத்தற்குப் போடப்பட்ட கட்டுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு விட்டது. மணிவண்ணனின் குருதிபழந்த கரங்களின் அணைப்பில் கயல்விழியும் நிறைவு கண்டாள். எரியும் ஜீப்பே அக்கினி சாட்சியாய் விளங்க அங்கே இரு மனங்கள் இணைந்தன.”
என்று அந்த வாரத் தொடர்கதையின் முழவுக்கு கதைக்குறிப்பு எழுத? நறுத்தரினேன். மணிவண்ணனும் கயல்விழியும் சேர்ந்தது என் மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. அவன் உள்ளத்தின் உரிமையான உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. கதையின் தலைப்பை நினைவுகூர்ந்து அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று என் நெஞ்சம் வாழ்த்தியது.
அச்சமயத்தில் என் நெருங்கிய நண்பரும் மனோதத்துவ நிபுணருமான எங்கள் குடும்ப டாக்டர் முத்துகிருஷ்ணன் வந்திருப்பதாக என் தங்கை சொன்னதும் அறைக்கு வரச் சொன்னேன். என்
அக்கறையுடைய அவர் உள்ளே வந்ததும், மேலும்,g மேசை மேல் இருந்த கையெழுத்துபூதீனித்தன்ழ்ை
பிரதிகளைப் பார்த்துவிட்டு, ‘என்ன.*4ல்லுதுத
தொடர்கதையா?’ என்று உரிமையுடன் எடுத்துப் பழக்க ஆரம்பித்தார். நான் கண் இமைக்காமல் அவர் முகத்தைப் பார்த்த வண்ணமிருந்தேன் கதை முடியும் தருவாயில் அவர் முகத்தில் படர்ந்த அதிருப்தியைக் கவனித்தேன்.
‘என்ன டாக்டர் முத்துகிருஷ்ணன். எப்படியிருக்கிறது’
"ட்ரீட்மென்ட் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் கதைக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது பாருங்கள், என்று சிரித்துக் கொண்டே கூறிய டாக்டர் எதிரில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.
‘என்ன மிஸ்டர் கலைமணி! கதையை திடீரென்று இப்பழ முடித்து விட்டீர்கள்? சோகத்தை நோக்கி உணர்ச்சிகரமாகச் சென்று கொண்டிருந்த கதையில் இப்பழ செயற்கையான தவிருப்பத்தைத் தேவையரில்லாமல் உருவாக்கரி யிருக்கிறீர்களே! சினிமாவில் வருவது போலக் கடைசி நேரத்தில் ஏதோ திடீர் அற்புதம் நடப்பதாகக் காட்டி மணிவண்ணனையும், கயல்விழரியையும் சேர்க்க வேண்டுமா? இது கடவுள் சக்தி அது இது என்று காரணம் வேறு சொல்லி இருக்கிறீர்களே!’
விபத்திலிருந்து மணிவண்ணன் நம்ப முடியாதபடி பிழைத்திருப்பது கதையில் தொய்வைக் கொடுக்கிறது. அவனைச் சாகழத்து அவர்கள் காதலர் நிறைவேறாமல் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்! அதனால் வாசகர்கள் அனுதாபங்களையும் அப்பாத்திரங்கள் பெற்றிருக்கும் அல்லவா?
ழவுதானே உங்கள் தன் இந்த மாற்றம். பிற்றும்’
51

Page 30
கலப்பை
சித்திரை 1995
நீங்கள் கூறியது அனைத்தும் நூற்றுக்கு
நூறு உண்மை டாக்டர்! ஆனால் எனக்கு நேர்ந்த அனுபவங்கள் உங்களுக்கும் நேர்ந்திருந்தால் இப்பழச் சொல்ல மாட்டீர்கள்’ என்று புன்னகைத்தபழயே முன்னிரவு நடந்த நரிகழ்ச்சிகளை விவரித்தேன். அவரோ இதையும் நான் சொல்லும் கதைகளில் ஒன்றைக் கேட்பதைப் போன்ற பாவனையுடன் கேட்டுவிட்டு முழவில் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.
‘என்ன எழுத்தாளரே ! உங்கள் கற்பனையை என்னிடமும் காட்டுகிறீர்களா? அல்லது கனவு ஏதாவது கண்டீர்களா?
இல்லை டாக்டர்! முதலில் எனக்கும் அந்த சந்தேகமிருந்தது. விளையாட்டில்லை. உண்மையாகத் தான் கூறுகிறேன்,' என்று மணிவண்ணன் வந்துவரிட்டுப் போனதற்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக அவருக்கு விளக்கினேன்.
அதுவரை நண்பர் என்றமுறையில் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று டாக்டர் என்கிற முறையில் சீரியசாகி ஒரு நோயாளியிடம் விவரங்கள் கேட்பதைப் போன்று கேட்க ஆரம்பித்தார். அது எனக்கு என்னவோ போலிருந்தது.
இது எத்தனை நாளாக இருக்கிறது’
'67ğ/ LTâLip' இப்பழ வேற்று உருவங்களைக் கற்பனை செய்து அதனுடன் உரையாடுவது.
அது கற்பனை இல்லை டாக்டர்! உண்மையாக."
கதாபாத்திரங்களைப் பற்றி அழக்கழ ஆழமாக எண்ணிப்பார்ப்பதுண்டா?
அடிக்கழயா? இருபத்து நான்கு மணி நேரமும் கதையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் என் வழக்கம்’
9 ஐ 0ெ.
'நேற்றுக் கூட மணிவண்ணனைப் பற்றிக் கடுமையாக யோசனை செய்து கொண்டிருந்தபோதுதான் அவன் வந்தான். ஏதோ ஒன்று நெருடியதைப் போன்றிருந்தது.
'அப்பழயா..?’ டாக்டர் என்னை அனுதாபத்துடன் பார்த்தார்.
"ஆமாம்! ஆனால் பூட்டிய அறைக்குள் அவன் எப்படிப் புகுந்தான் என்பதுதான் புரியாத பதிராயிருக்கிறது. அது சரி. ஏன் இதையெல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள்’
மிஸ்டர் கலைமணி! நான் சொல்வதைப் பதட்டப்படாமல் கேளுங்கள். உங்கள் டாக்டர் என்பதைவிட நெருங்கிய நண்பர் என்பதால் வெளிப்படையாகச் சொல் கரிறேன். அதர்ச்சியடைய வேண்டாம்,' என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தார்.
'மனிதனுக்கு மனம் சமநரிலையில் இருத்தல் மிக அவசியம். மனஅழுத்தம் அளவுக்கு அதிகமாகும்போது மனநிலை மாறுபடும் சாத்தியம் அதிகமாகிறது, அம்மாதிரி குழ்நிலையில் சிலருக்கு மனச்சிதைவு நோய் ஏற்படலாம். இதை நாங்கள் Schizophrenia என்போம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரு பாத்திரங்களாகத் தம்மை உருவகம்
52

கலப்பை
சித்திரை 1995
செய்துகொள்வர். பேச்சரிலும் ABL i 6ODá5ufgyló split personality எனப்படும் இரட்டைப் பாத்திரத் தன்மை வெளிப்படும். இதை மனோதத்துவ முறையில்தான் குணப்படுத்த முடியும்.
'உங்களுக்கு இருப்பது ஆரம்ப நிலைதான் பயப்படத் தேவையில்லை. ஒருமுறை கிளினிக்கிற்கு வந்து பே7ங்கள். மனதை அதரிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம் உங்களுக்கு முழு ஓய்வு தேவை, வரட்டுமா?’ என்று கூறிச் சென்றவர் வெளியே என் தங்கையிடம் 'உன் அண்ணனை நன்றாகக் கவனித்துக்கொள். கதை எழுதுகிறேன் என்று அதிகம் மனதை வருத்தி சிக்கலை
வரவழைத்துக் கொள்ள வேண்டாம், என்ன புரிகிறதா?’ என்று சொல்வது கேட்டது.
என்ன சொல்கிறார் இவர் எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது. மணிவண்ணனிடம் பேசியது மனநோய் என்கிறாரா? ஆனால் மணிவண்ணனிடம் பேசிய அந்த அரிய அனுபவத்திற்காக நான் மனநோய்க்கு ஆட்பட்டிருந்தாலும் பரவாயில்லைதான்! எது எப்படியிருந்தாலும் கயல்விழரியை மணிவண்ணனிடம் சேர்த்து வைத்ததற்காக அவன் எங்கிருந்தாலும் என்னை வாழ்த்துவான் என்பது மட்டும் உறுதி!
(முற்றும்)
(45ம் பக்கத் தொடர்ச்சி) தனது வாழ்வு மலர்ந்தால் இன்பமடைவான். தாழ்வடைந்தால் பொறாமை கொள்வான். சாந்திதன்னைக் காதலிக்கவில்லை என்பதற்காக அவளை வெறுக்கிறான். அவள் மணமுழப்பதாகச் சொல்வாளேயானால், மனமார விரும்புவதாக இப்போழுதும் சொல்லத் தயாராய் இருப்பான மனிதசமுதாயத்திற்கு உதவாத வாழ்வின் நிலையிது.
நண்ப! உன்னை நினைக்கும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது. உனது நேர்மையான உள்ளத்தையும் தபிடமான Թd57 671 6Օd56Oապած போற்றுகின்றேன். ஆனால் ஒன்று மட்டும் கூற விரும்புகளின்றேன். இரு உள்ளங்களின் ஒற்றுமையிலே தோன்றுவது தான் காதல், நீசாந்தியை 106071Ꮭ//Ꮑ விரும்பரியமிருக்கலாம். அவளுக்காக உனது உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்திருக்கலாம்.
அதனால் அது காதலாகாது. அவளிடம் உனக்கு மிகுந்த அன்பு மரியாதை பற்று முதலியன உள என்று தான் கூறலாம். சாந்தி தருமன் நீ - உங்கள் மூவரது காதலரின் தோல்வரிக்குக் காரணம் ஒருவரையொருவர் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததே. முவரும் காதலித்தீர்கள். மூவரும் அதில் வெற்றி காண முடியவில்லை. காரணம் மூவர் காதலும் ஒருதலைப்பட்சமுடையது.- அதாவது கைக்கிளை.
நிச்சயம் பெற முடியாது என்று தெரிந்த ஒரு பொருளைப் பெற முயற்சிப்பது பேதமை, முயற்சித்தாலும் முழுப்பலன் கிடையாது என்பதே என் எண்ணம். ஏதோ எனக்கு எட்டியதை எழுதியுள்ளேன். ஏற்றதை எடுத்துக்கொள். எழுதிய உனது கழதத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இக்கழதத்தை முழக்கின்றேன். இங்கனம், நண்பன்
சுரேஷர். (தொடரும்)
53

Page 31
கலப்பை
சித்திரை 1995
CうI ஸ் gDIDIT வே 2ை
டாக்டர் சி. தவசீலன்
967iginsot (Asthma) 2-6 albupp6.gifth பரவலாக அதிகரித்து வரும் ஓர் நோயாகும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் முக்கியமாக இந்நோயால் பாதரிக்கப்படுபவர்கள் அதரிகரித்து வருகின்றனர். அவுஸ்தரிரேலயாவரில் 10% சனத்தொகையும் 20% பிள்ளைகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நோய் மேல்நாட்டு வாழ்க்கையினுள் LOIýbuchlib (westernised) Lodödb6afkaDL Gulu கூடுதலாக காணப்படுகின்றது. சீனா, மலேசியா போன்ற நாடுகளில் இந்நோய் மிகக்குறைந்த அளவரிலேயே காணப்படுகின்றது.
இந்நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் பலவென ஆராய்ச்சிகள் கூறுகின்ற போதலும் அவுஸ்திரேலியாவில் "துாசிப்பூச்சி” (House dust mite) psi (upd5 d5u காரணமாக கருதப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பூச்சி அவுஸ்திரேலியாவின் கழக்குக் கரையைச் சார்ந்த Lj65d liab6fb) (Sydney and suburbs) பெருமளவில் காணப்படுவதால், Sydney இல் அதிகளவு மக்கள் இந்நோயால் பாதரிக்கப்படுகின்றார்கள் 67607 நம்பப்படுகின்றது. வெற்றுக்கண்ணிற்குத் தென்படாத இச்சிறிய பூச்சியின் எச்சத்தில் உள்ள ஒரு பிறபொருள் (allergen) சுவாசக்குழாய் சுவரில் ஏற்படுத்தும் தாக்கத்தால் இந்நோய் ஏற்படுத்துவதாக
நம்பப்படுகிறது. இப்பூச்சி சிறிய தும்பு போன்ற பொருட்களில் (Carpet, பஞ்சு மெத்தை) வாழ்ந்து வருகிறது. அத்துடன் வீட்டில் காணப்படும் g/Tafabulb (House dust) Asthma 606) ஏற்படுத்தக் கூடிய காரணமாகும். இதைத்தவிர மகரந்தத்துாள் (Polens), பூஞ சக் காளான் (moulds), சரில உணவுப்பொருட்கள், வீட்டுவளர்ப்பு மிருகங்களின் மயிர்கள், என்பனவும் மற்றைய காரணிகளாக கருதப்படுகின்றன.
தொய்வு நோயானது மீளக்கூடிய சுவாசக்குழாயின் பகுதி அடைப்பேயாகும். இவ்வாறான மாற்றம் இரண்டு விதமான நோயாளிகளிடம் காண்ப்படுகின்றது. முதலாவது ரக மக்கள் பொதுவாக சில பிறபொருட்களுக்கு அதகரித்த
எதவிர்த்தாக்கம் (Atopy) காட்டக்கூடியவர்கள். இவர்கள் Asthma Φ 1 ώή வேறு தொடர்புடைய
GIB Tuјđ66o67đ5 (e.g Hayfever, skin alergy) கொண்டவர்களாகவும், பரம்பரையுடன் சம்பந்தப்பட்டதாகவும் உள்ளார்கள். இவர்கள் பொதுவாக பிறபொருளை உட்சுவாசிப்பதால் Asthma தாக்கத்தை எதிர் நோக்குகிறார்கள். அவுஸ்திரேலியாவில் 35% நோயாளிகள் இந்த ரகத்தைச்சேரந்தவர்கள். மிகுதி 65% ஆனோர் தெரிந்தும் தெரியாததுமான பல பிறபொருட்துரண்டுதலால், அதரிகரித்த சுவாசக்குழாய் 67.5ijø5/7 diagiog (Bronchial hyper
54
 

கலப்பை
சித்திரை 1995
reactivity) 6125Gd576iog/165 Asthma தாக்கத்தைப் பெறுகிறார்கள். பபிற பொருடது.ாணி டுதலர்களாக கருதப்படுபவை அதிகரித்த சர் வேலை, குளிர் உலர்ந்த காற்று மற்றும் பல்வேறுபட்ட கழ் குறிப்பிட்ட பிறபொருட்களுமாகும். இவர்களில் சிலர் (p diggigi/61/77 Gibs 60u (Allergic Rhinitis) கொண்ட வர்களாக காணப்படுகறார்கள். இவர்கள் இவ்வாறான நோய்த்தாக்கத்தை மகரந்தத்துாள் காலங்களில் (Polen Season) எதவிர் கொள்கறார்கள். எந்த வகையைச் சேர்ந்த நோயாளிகளாயினும் சில நன்கு தெரிந்த தாக்கத்தை விளைவரிக்கக்கூழய GLIT5 d56pi (trigger factors) அவர்களின் திடீர் தாக்கு நோய்களுடன் (Acute attack) dibLig5lil IL (66.767760. இவற்றுள் முன்பு குறிப்பிட்ட நோயை ஏற்படுத்தும் காரணிகளான (Causative factors) House dust mite, pollens, moulds, animal hairs, house dust ஆகியவை நோய்த்தாக்கத்தை 6Jsju66525 didnigu (trigger factors) வன்மையும் கொண்டுள்ளவை. இதனைத்தவரிர சில 6006Ꭷ1/7Ꮷr G5Illing GD/Iuildsii (Flu, common cold), குளிர் உலர்ந்த காற்று, மற்றும் 260fajafloatlil 1656)5(Emotion), dau உணவு வகைகள் என்பனவும், தொழிற்சாலை அசுத்த வாயு (Varnishing, soldering, Biological washing powder manufacturing), dfb) மருந்துவகைகள் (ASpirin, குருத அமுக்க மாத்திரைகள்) என்பனவும் நோய்த்தாக்கத்தைத் தூண்டக்கூடிய காரணிகளாகும். வளிமண்டல அசுத்தக் காற்று (Atmospheric polutions) ஒருதுாண்டுகாரணியாக கருதப்படுகின்ற போதும் இது நோயை ஏற்படுத்தக் கூடிய காரணியாக ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை.
இவற்றுள் புகைப்பிடித்தல், Ozone காற்று
வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை அலங்காரவாசனைப் பொருட்களின் வாயு (perfumes), பெருமளவு தூசி என்பவை அடங்குகின்றன.
தொய்வு நோய் வேறுபட்ட அறிகுறிகளுடன் ஏற்படுவதால் அதனை ஏக காலத்தரில் அறிந்து தக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். பொதுவாக நோயாளிகளுக்கு எதிர்பாராத இழுப்பு இரவில் தோன்றுவதால் நித்திரையிலிருந்து விழிப்பதும் (Acute посturnal dуspпоеa), 3)ф60)/ 6ї சேர்ந்தோ சேராமலோ சத்தத்துடன் மூச்சை உள்ளெடுத்தல் (wheeze), இறுக்க உணர்வுள்ள மார்பு (Chest tightness), 3dplo65 (cough) 676in 16016plb ஏற்படலாம். இவ்வாறான தாக்கம் மேற்குறிப்பிட்ட LffJp G?L//T (tö5 L '' தாக்கங்களினாலும் ஏற்படலாம்.
தொய்வுநோய் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதில் இருமுறைகள் கையாளப்படுகின்றன. அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்பாக அவை ஏற்படாது தடுத்தலும் (Prevention ) அறிகுறிகளைக் குணப்படுத்தலும் (Treatment of acute asthma) -25th. இவ்வறிகுறிகளை முன்தடுத்தலுக்குப் பொதுவாக பல்வேறு ரக சுவாச வாயு (puffers) பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் Asthma தீவிரத்தை வீட்டில் அளவீடு செய்ய ஓர் சுவாச உபகரணம் (peak flow meter ) Luluu 6øřLJÓ6gjø5Lý படுகின்றது. கைக் கடக்கமான 43.66, lab/60.5605 Asthma GibsTILIT6tfitsi வைத்திருத்தல் நல்லதாகும். இதன்மூலம் PEF(Peak Expiratory Flow rate) என்னும் ஒரு கணியம் அளக்கப்படுகின்றது. Asthma நோயுள்ளவர்கள் தமது வைத்தியரிடம் ஓர் உடன் நடவடிக்கை அறிவுறுத்தலை (Action plan) எடுத்திருப்பது அவசியமாகும். இதன்படி Ashma தாக்குதல் ஏற்படும் போது 55

Page 32
கலப்பை
சித்திரை 1995
PEFஐ அளப்பதன் மூலம் தகுந்த /5ւ 6)/էջ d5 6»d56Oա வீட்டில் எடுக்கக்கூடியதாகவிருக்கும். ஆயினும் மிகவும் தீவிர Asthma அல்லது மேற்படி நடவடிக்கைகளினால் குணமடையாத அறிகுறிகள் இருப்பின், நோயாளியை வைத்தியரிடம் அழைத்துச்செல்வது அவசியமாகும். வைத்தியசாலையில் நோயரின் கடுமையைப் பொறுத்து வேறுபட்ட மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றுள் பிரான வாயு, இயந்திர சுவாச வாயு மூலம் மருந்துகள் (Nebuliser) மற்றும்
நாளத்தனுாடாகச் செலுத்தப்படும்
ldlifigieb67 (Intravenous medications),
மாத்தரைகள் என்பன
கொடுக்கப்படுகின்றன. அரிதாக மிகவும் கடுமையான தாக்கம் செயற்கை சுவாசம் (mechanical ventilation) (p 6o Ló
(ớ56ØJÜLu@atókölymygl. Asthma 6 suum fíluslai வைத்தயம் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய பிறபொருட்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும். Asthma உள்ள பிள்ளைகளில் 75% L16,767f7 பருவத்தினுள் குணமடைகிறார்கள். ஆயினும் குணமடைந்தோரில் 50% ஆனோரில் மீண்டும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். Asthma வினால் பாதிப்படைந்த 30% ஆன வளர்ந்தோர் (upg5 6i (up 60,0U//7 d5 Asthma (OD 6)/ வளர்ந்தோர் வயதில் பெறுகின்றனர். Asthma வியாதியின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதலும் தடுப்பதிலும் மருத்துவத்துறை பல முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும் இவ்வியாதியை வராமல் தடுப்பதலும் Լե Մ6007 குணமாக்குவதிலும் சிரமங்கள் இருந்து வருகின்றன.
 

கலப்பை
சித்திரை 1995
UNIFUND கலைக்கதம்பம் ஒரு கண்ணோட்டம்
நல்ல நோக்கு, இளைஞரின் செயல்திறன் பல பிரச்சனைகள் மத்தியிலும் பழப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம். இவற்றின் பிரதிபலிப்புதான் 'Unifind’நிறுவனம் இது யாவரும் அறிந்ததே.
இதன் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாக வருடந் தோறும் இடம்பெறும் கலைக் கதம்பமாலை, 'கலைக்கதம்பம் 95 ஏப்பிரல் 1ஆந் திகதி மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது.
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு மிகவும் பராட்டத் தக்கது 6.30இற்குத் தொடங்கவேண்டிய நிகழ்ச்சிகள் 637இற்குத் தொடங்கினாலும் மரிகவும் ஒழுங்காக அதன்பின் தொடர்ந்துகொண்டு சென்றதற்கான பாராட்டு சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தாருக்கே உரியதாகும்.
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் முதலிடம்பெற்ற பிள்ளைகளின் பேச்சு, அப்பப்பா. என்ன திறமை அந்த சிறருக்கு. பெரியவர்கள் கற்றுக் கொள்ளலாம் அவர்களிடமிருந்து தமிழைப் படிப்பிக்கச் சிந்திக்காத பெற்றோருக்கு ஒரு சாட்டை அழ.
பரதநாட்டிய நிகழ்ச்சி மூன்று பகுதிகளாக, ஒன்று இரண்டு சிறுவர்கள் சேரன், கரன் வழமையான நாட்டியமாக இருந்தாலும் ஆண்களான இவர்கள் செய்த போது அவர்களின் பாவங்களும் அசைவுகளும் வித்தியாசமானவைதான் ஆசிரியை உஷா கருணாகரனுக்கு ஒரு பாராட்டு எனக்குப் பரதத்தைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாது இருந்தாலும் பல கோணங்களில்
95
சிந்திக்கப்பட்டு பரதக்கலையைப் புகுத்தி புதிய கலைவடிவத்தைப் பிரசவிப்பது ஒரு சிலருக்கு மட்டுமே இயலக்கூழயது. மற்றபடி, காலம் காலமாக அரைத்த மாவையே அரைப்பது போலி ஒரே அச்சாகவே நிகழுகின்றபோது இந்த மேடையில் 'மோகினி ஆட்டம் வெள்ளை உடையுடன் அரங்கேறிய அந்த நாட்டியம் வரித்தரியாசமான ஒன்றுதான். பாராட்டவேண்டிய அதே நேரத்தில் அது என்ன பாடல் அதையும் தமிழில் இடம்பெற வைத்திருந்தால் அதன் சிறப்பிற்கு அளவே இருந்திருக்காது. (தெரியாத பாஷை, தலையாட்டும் கூட்டம்; இந்த நிலை மாறட்டும்).
அடுத்த நரிகழ்ச்சி குட்ழ நாடகம். நாடகமென்றால் ஏத7வது சொல்லவேண்டுமே மக்களுக்கு. சொல்லாமலேயே போய் வரிட்டது. இருந்தாலும் வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்தார்கள். சிரிப்பதற்கு மட்டும் ஏற்ற வகையில் நல்ல முறையில் வழவமைத்து சிரிக்கவைத்த நெறியாளர் சுதர்சன் பாராட்டுக்குரியவர் (கவுண்டமணிப் பகிழகளைத் தவிர்த்திருக்கலாம்). நழகர்கள் ஒருவருக்கொருவர் சோடை போகாத நடிப்பு. யாரிந்தச் சாமியார் பக்தி பிரவாகம் பெருக்கெடுத்தது.
அடுத்து, பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்ட நாட்டிய நிகழ்ச்சி முதல் இது நாட்டியந்தானா? அடுத்து, இது யாருக்காக? யாரிடமிருந்து என்பதை முதலில் சிந்திக்க வேண்டும் பல நாட்கள்; நேரம் ஒதுக்கித் தயாரித்து மேடையேற்றிய ஒரு நிகழ்ச்சி வெறும் இந்திய முதலாளிகள் இலாப நோக்கோடு வக்கிரங்களையும்
57

Page 33
கலப்பை
சித்திரை 1995
டப்பாக் கூத்துக்களையும் உண்மைக்குப் புறம்பான நிகழ்ச்சிகளையும் காட்ழத் துரித கதியில் பணம் சம்பாதிக்க மேற்கொள்ளும் பாடல்களையும், ஆட்டங்களையும் அப்பழயே அழயொற்றி இந்த மேடையில் தந்தார்கள், சிட்னி பல்கலைக்கழக மாணவர்கள் என்பதை நம்பித்தான் ஆகவேண்டிய துர்ப்பாக்கிய நிலையாக உள்ளது.
அதைத்தான் நாமும் கடைப்பிழக்கப் போகின்றோமா? தமிழை, கலையை, கலாச்சாரத்தைப் பேண முற்படுபவர்களான இவர்கள் இப்பழயான ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்கலாமா? நாம் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து எதிர்பார்த்தது எதிர்பார்ப்பது இதையல்ல. பல்கலைக்கழக மாணவர்கள் 69(Ib சமுகத்தரின் முன்னோடிகள்என்றுசொல்லப்படுபவர்கள்.
பேராதனை, கொழும்பு, கட்டுபெத்த போன்றவை தயாரித்த சிந்தனைக்குரிய சமுதாய முன்னேற்றமான கருத்துக்களைக் கொண்ட, பெண் அழமைத்தனத்தை உடைத்தெறிந்த எத்தனை உதாரணகரமான கலைகள் கடந்தகாலங்களில் முன்வைக்கப்பட்டன. ஏன் நங்கள் அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் அதன் அருகில் நிற்கக்கூடியதான தொன்றை சிந்திக்கத் தவறினர்கள்? கலப்பை புதிது புதிதாகப் பிரசுரித்துக்கொண்டிருப்பவைகளுள் பல உங்கள் கைவண்ணங்கள் என்பவை மறக்கமுடியாதவை. உங்கள் திறைமைக்கு சற்று உருவம் கொடுங்கள். நீங்கள் சிந்தரிக்கவேண்டியவர்கள். கலையை, கலாச்சாரத்தை, தமிழை வளர்க்கவும், முட நம்பிக்கைகளையும், பாமரத்தனத்தையும் விரட்டும்வகையிலும் படையுங்கள்.
பலருடைய விமர்சனங்கள்-உங்களுக்கு வந்திருக்கும், மிகத்திறமையாக இருந்தது
కజe కిజ్ఞ
என்றிருப்பார்கள். பெரும்பான்மையான மக்கள் நேரே இப்பழத்தான் கூறுவார்கள். நீங்கள் பல்கலைக்கழகத்தினர் என்றும் உங்களைப் பார்ப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றும் பாருங்கள். இது கலையை, தமிழை, கலாச்சாரத்தை வளர்க்குமா? பெண்கள் இன்னும் æff Lolls பொருட்கள்தானா? போன்ற பெண்நிலை வாதரிகளால் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு விடைகூற முழந்தால், அந்தப் பெரும்பான்மை விமர்சகர்களுடைய விமர்சனம் பொருத்தமானதுதான்
ஒரு இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதை நான் தொட்டுக் கொள்ள விரும்பவில்லை.
கடைசியாக, சிட்னியிலுள்ள தனிநபர்களும் அமைப்புகளும் முன்வந்து வெற்றிக் கேடயங்களைக் கொடுத்தது வரவேற்கப்படவேண்டியது. கொடுக்க வைத்த தன்மை பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தாருடையது. வழமைபோல் நீண்ட நன்றியுரை. இதைச் சுருக்குவது எல்லோருக்கும் நல்லது. யாரையும் போரடிக் காது. "பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி” என்ற வார்த்தைகள் எல்லோரையும் அடக்கிக் கொள்ளும் செயல்படுத்துவார்களா?
மொத்தத்தில் பல சுவைகொண்ட ஒரு அருமையான மாலைப் பொழுதாக அமைந்தது. அதை ஒழுங்கு செய்து நடாத்திய விதம் உண்மையிலேயே மிகமிக அருமை. பாராட்டப்படவேண்டியவர்கள். த வ?ர்க்கப்பட வேணி ழய வைக ள தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
- சிட்டுக்குருவி (இது ஒரு கண்ணோட்டம் தான், இவ்விழா பற்றிய வேறு கண்ணோட்டங்களை எதிர்பார்க்கின்றோம். ஆர். குழு).
*丽>
58

கலப்பை
சித்திரை 1995
SBS தமிழ் வானொலி
ஒலிபரப்பு
நகரம் நேரம் 960)66) Jrf,05
ઈી'_6tiો L. 11.00 LD60. 97.7 FM மெல்பன் Li J. 11.00 LD60öß. 93.1 FM
பிரிஸ்பன் U. 2.00 tpa.00. 93.3 FM (Euijs J. 2.00 LD60s. 96.9 FM டாவின் L. 2.00 LD60s, 100.9 FM
நியூகாசில் L. 2.00 LD60cf. 1584 AM 66uorỀJQabsTrhl slu. 2.00 LOGOosî. 1485 AM அடிலேட் 5LI.. 1.30 LD60cf. 106.3 FM
இவ்வானொலி நிகழ்ச்சிகள் யாவும் ஞாயிற்றுக்கிழமை தோறும்
ஒலிபரப்பாகும்.
Brisbane இல் தமிழ் வானொலி
Brisbane 5Lóp (96.5", 5Lsp வானொலி நிகழ்ச்சியை Radio 4EB-1053 kHz 96O)6)6) Irfaoyus), பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 9.00 மணி முதல் 9.45 மணி வரை கேட்டு மகிழலாம்.
தமிழ் க்குரல் ' , தமிழ் வானொலி நிகழ்ச்சியை Radio CMR- FM103.1 MHz9606) வரிசையில், பிரதி செவ்வாய்க் கிழம்ை தோறும் LOT6O)6) 7.00 மணி முதல் 7.30 மணி வரை கேட்டு மகிழலாம்.
கலப்பை இங்கே கிடைக்கும்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Indian & Pacific Market 3OB The Crescent, Homebush - 2140 Tel:(O2) 746 7169
காமதேனு களஞ்சியம் 133, Paramatta Road, Auburn - 2144 Tel:(02)7481840
KATPAGA TRADERS 59, Rawson St., Auburn - 2144 Tel:(O2) 6463345
Global Shopbest Shop 2/32-50, Rootyhill Road, North Rootyhill- 2766.
Tel: (02) 675 3954
Hero Movieland & Spiceland 281 A Beames Ave., Mt. Druit - 2770 Tel:(O2) 625 4638
அவுஸ்திரேலியத் தலைநகரம்
Canberra (ACT)
திரு.K.குணசீலன்
(06). 291 9882
விக்டோரியா மாநிலம் (Melborne) திரு. முருகபூபதி Tel:(03)3056246
குயிண்ஸ்காந்து மாநிலம் (Queensland)
திரு. S. பூபாலன் Tel: (07) 2523574
59

Page 34
கலிப்பை சித்திரை 1995
சிசால்நிரப்பல்ப் போட்டி இல3 விடைகளும் அதிட்டசாலிகளும்
b ፅip 6) 4. 5 6
《F ம் 6)]
10 11 12
வி J 6)
16 17, 18 நெய 22 24 ய/நெ 28 30
f ஏ 31 32 34 35
அடைக்கப்பட்ட சதுரங்கள் - 8, 14, 19, 23, 29, 33 & 36
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. தைப்பொங்கல் 1. தையல் 9. திவசம் 3. பொதிகைமலை 15. கைவிரல் 4. ரவிசங்கர் 20. LDIJsb 5. கரம் 25. d56O)6)LDIT6T 6. நெல்வயல் 31. அரி 20. அம்மா 34. ஏர் 25. ரின்
இம்முறை சொல்நிரப்பல் போட்டிக்கு அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் தங்கள் பதில்களை அனுப்பியிருந்தார்கள். போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் எமது நன்றி அவர்களில் சரியான விடையை அனுப்பியவர்களில் அதிட்டசாலரிகளான இருவர் - முதற்பரிசான $15.00 பெறுமதியான பொருள் கொள்வனவுப் பத்திரத்தைப் பெறுவர் - WestRyde ஐச் சேர்ந்த திருமதிP ஆறுமுகம் இரண்டாவது பரிசான $1000 பெறுமதியான பொருள் கொள்வனவுப் பத்திரத்தைப் பெறுபவர் - Homebush ஐச் சேர்ந்த செல்வி சாம்பவி பரிமளநாதன். இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். இவர்களுக்கான பரிசுகளை அன்பளிப்புச் செய்திருப்பவர்கள் - 87A, Auburn Road, Auburn (365 egy 6 duoi g/6i 6IT THEEPAM KIDS INTERNATIONAL ஸ்தாபனத்தினர். இப்பரிசுகள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும் சொல் நிரப்பல் போட்டி இல, 2 இல் பரிசு பெற்ற செல்வி யசோ சண்முகசோதி தனது பரிசுத் தொகையான $25.00 ஐ கலப்பைக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். இவருக்கு எமது நன்றி
60
 

SURABE FOOD BAR 133, PARAMATTA ROAD
AUBURN, N.S.W. 2144 Telephone : (02) 748 1841 FAX: (02) 748 1840
சிறுபிள்ளைகளுக்கான உடைகள், விளையாட்டுப் பொடுட்கள்,
பெண்களுக்கான சுரிதார், காகராசோலை, கல்டான்ஸ் என்பனவும்
விசேட வைபவங்களுக்கான உடைகள், பரிசுப் பொடுட்களைப் பெற்றுக் கொள்ள நாடுங்கள்
THEEPAM KIDS INTERNATIONAL
87A Auburn Road, Auburn 2144 Tel: 02-6495863
pr פו
Business Cards Letterheads Leaflet Envelopes Invitations Brochures Menus Invoice Book Typesetting Rubber Stamps
"For all your printing needs" please call PARI at 793 7481 Prints R Us 446 HUME HIGHWAY, YAGOONA 2199 հԷ (Cooper Street Corner) 代

Page 35
சுவைமிக்க இ
திருமணம், உங்கள் இல்லங்களில் நடை தேவையான விருந்து உபசா * Treat yourself traditional II * Relax and experience true * We have prices to suit you * We also do outdoor cateri எமது வாடிக்கையாளர்கள், அண்பர்கள், நண்ட
நல் வாழ்த்துக்களைத்
vếà s. Si Ba N *్క - LUNCH.
11.00am-2.30pm,
DINNER
5.30pm-10.00pm Closed Monday
KX
இ)
● 参 A a s
● 魔
置
INDIAN RE
Tel : (047 469 High Street Mal
e
Printed by Prints R Us'
 
 
 
 
 

இந்திய உணவகம் பிறந்த நாள் மற்றும்
பெறும் விசேட வைபவங்களுக்குத் ரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் ndian Cuisime of Thamlmi Indian hospitality
r budget
ng and private functions ர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புதுவருட தெரிவித்துக் கொள்கிறோம்
நர்மை - உழைப்பு മൽ இ razz/-zzi ண்ைண~ளூை,
ESTAURANT
) 21 7382 l, PENRITH 2750.
PP 243459/0011 1