கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாற்று 2004.10

Page 1


Page 2


Page 3

* நாற்று வெள்ளி இதழ் 오
ffffff ബbീഴ്ക് ട്രൂ, ജീബ് 2004
நி17ற்று இதழின் இருபத்தைந்தாவது இதழ் வெள்ளி இதழாக உங்கள் முன் வருகிறது. தமிழினத்தின் வாழ்வுக்கான போராட்டமான எமது விடுதலை வரலாற்றில் சமூகப் பெண்களின் பல்வேறுபட்ட பக்கங்களையும் சமூகத்தில் அவர்களின் வாழ்வியலையும் நாற்று இதழ் தன்னகத்தே தாங்கி எமது தாயகத்தின் மூலைமுடுக்கெல்லாம் உலாவருகிறது.
பெண்ணினம் எதிர்நோக்கிய பல்வேறுபட்ட பிரச்சனைகளையெல்லாம் எளிய ஆக்க வடிவங்களில் வெளிக்கொணர்கிறது. இத்தனைக்கும் எங்கேயும் மலிந்துபோய் இருக்கின்ற தென்னிந்திய சிலரிமாப்பத்திரிகைகள் மற்றும் வியாபார
*நாற்று இதழ் - 25

Page 4
오 gran |
நோக்கங்கருதிய சஞ்சிகைகள் என்பவற்றோடு போட்டிபோட வேண்டிய தேவை என்பது,நாற்றுக்கும் சவாலாகவே அமைந்தது. இதனடிப்படையில் நாற்றின் களம் வேறுபட்டது.பெண்களின் பல்வேறுபட்ட சமூகப்பிரச்சனைகளையும் களமாகக் கொண்ட நாற்றுக்கு தமது ஆக்கங்களை தருபவள்களும் ஒப்பீட்டுரீதியில் குறைவு. அரசியலுக்கும் சினிமா உலகுக்கும் மக்கள் கொடுக்கும் ஆர்வம் என்பது இத்தகைய சமூக முன்னேற்றக் கருத்துக்களில் மிகக் குறைவு என்றே கூறலாம்.
இத்தகைய ரசனைகளுக்கு மத்தியிலும் நாற்று தனது தொடக்கப்பணியிலிருந்து இன்றுவரை நிலைத்திருப்பது அதன் வாசகள்களின் ஊக்குவிப்பால் என்றே கூறலாம்.
அன்றைய அச்சு இயந்திரங்கள் மை, காகிதாதிகளின் பற்றாக்குறை, இடப்பெயர்வு, இராணுவநடவடிக்கை என்ப்னநாற்றின் வளர்ச்சியிலும் தடைக் கற்களைப் போட்டது. வெளிவரும் காலக்கிரமங்களில் இடர்பாடுகளை ஏற்படுத்தியது எனினும் நாற்று தன்பணி தொடரும். நாற்றினை அலங்கரித்து உட்கருத்துக்களை விதைத்து நாற்றினை வெளிக்கொணர உதவியாக இருக்கும் எழுத்தாள்கள், ஒவியர்கள், புகைப் டக்கலைஞர்கள் அச்சகத்தினர் அனைவருக்கும் இவ் வெள்ளி இதழில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
தொடர்ந்தும் படைப்பாளிகள் தங்கள் சமூகப்பார்வைகளை நாற்றில் விரிப்பீராக, எமது பணிக்கு கை கொடுப்பீராக.
GO
*நாம்று வெள்ளி இதழ்
கு?

*ாற்று வெள்ளி இதழ்
நாற்று வெள்ளி இதழ் அக்ரோபர் 2004
உருவாக்கம் ஆசிரியர்குழு ஓவியம்
Liu Jón)
மதுமிதா
புகைப்படம்
கார்விழி அட்டைப்படம், பக்கவடிவமைப்பு வ.வாகினி
அச்சுப்பதிப்பு அந்திவானம் பதிப்பகம், வேணாவில்,
புதுக்குடியிருப்பு
வெளியீடு தமிழீழப் பெண்கள் ஆய்வு நிறுவனம், 2ம் வட்டாரம்,
கோம்பாவில்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.
osas) e5uT 15I/H
*Dubma 6dar இதழ்

Page 5
tätử][]] |
ROMA
*நாற்று இதழ் - 25
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
வாழ்த்துரை
ിU. ஆய்வு நிறுவனத்தின் இருமாத வெளியீடான் "நாற்று” தனது இருபத்தைந்தாவது இதழைப் பிரசவிக்கின்றது. மனதிற்கு மகிழ்ச்சியைத்தருகிற விடயம். பெண்ணிலைக் கருத்துக்களை ஒரு சரியான தீர்க்கமான அடித்தளத்திலிருந்து மிக எளிமையாக அனைவருக்கும் ஏற்ற விதத்தில் நாற்று வெளிக்கொண்டு வருகின்றது. பெண்கள் சஞ்சிகை என்றாலே அழகுக்குறிப்புகளும், சமையல் குறிப்புகளும், கோலக்குறிப்புகளும் இன்னும் எப்படியெல்லாம் மாமியாரை, கணவனைசமாளித்துப்போவது என்று பெண்களுக்கு மிகத்தாராளமான ஆலோசனைகளை அள்ளி வழங்கி அவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே சிந்திக்க வைக்கின்ற பெண்கள் சஞ்சிகை கலாச்சாரத்தை முறியடித்து பெண்களின் ஆளுமையைக் கட்டியெழுப்புகின்ற கருத்துக்களை காத்திரமாக வழங்கி இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது "நாற்று’ முற்றுகையிடப்பட்டிருந்த நாட்களில் தாளுக்கும், மையிற்கும் தட்டுப்பாடான காலத்திலும் கூட ‘நாற்று’ பட்டுப் போகவில்லை. வீரம செறிந்த ஈர நிலத்தில் பற்றிப்படர்ந்தது அதன் வேர் . இன்று அழகான அட்டைப்பக்கங்களுடன் வெளிவரும் நாற்றைப் பார்க்கும் போது மாட்டுத் தாள்ப் பேப்பர் கலரில் அச்சடித்து வெளியான “நாற்று” நெஞ்சில் வந்து போகிறது. எப்பவும் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை “நாற்று” கொண்டுள்ளது. இன்று இருபத்தைந்தாவது இதழை வெளியிடும் போது இனிமேலும் இதற்கு மெருகு சேர்க்க வேண்டிய அம்சங்களை இதன் வேகமான
*நாற்று இதழ் - 25

Page 6
요 " - | grabon 1
வளர்ச்சியை நாம் அனைவருமே எம் தோள்களில் சுமக்க வேண்டிய தார்மீக பொறுப்புள்ளவர்களாக உள்ளோம். உண்மையில் பெண்கள் ஆய்வு நிறுவனப் பொறுப்பாளர், போராளிகள் ஆகியோரது அயராத உழைப்புத்தான் இதன் வெளிப்பாடு. பூரண வசதி வாய்ப்புகள் அற்ற நிலையிலும் ஒடியோடி உழைக்கும் அவர்களின் உழைப்பை நாற்றின் வளர்ச்சியோடு நிச்சயம் வரலாறு பதிவு செய்யும். அரும்பாய் துளிர்த்த "நாற்று’ இன்று குடலைப்பருவத்தை அடைந்து விட்டது. இதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும். பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நன்றி”
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’
சு.தமிழினி
பொறுப்பாளர். அாசியல்துறை மகளிர் .
*நாம்று வெள்ளி இதழ்
ਨ

*நாற்று வெள்ளி இதழ் 요
நாற்று வெள்ளி இதழாகி வருவது பெருமையைத் தருகிறது. 1995ல் நிறைந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ்ச் சமுகத்தினூடு தன் பயணத்தை தொடங்கிய நாற்று இடர்கள், இழப்புக்கள், இடப்பெயர்வுகள், தமிழர் படையின் பெருவெற்றிகள் அதனைத் தொடர்ந்தன. தற்போதைய சமாதான முயற்சிகள் என அனைத்தினூடும் தன் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கும் நாற்று தனது இலட்சியப் பயணத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறதென்றே கூற வேண்டும். புற்றீசல் போல முலைமுடுக்களிலிருந்தெல்லாம் சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலத்தில் தனது தனித்துவம் மிக்க கொள்கைப்பிடிப்பினால் நின்று, நிலைத்து தனக்கானதோர் இடத்தைப் பெற்றுக் கொண்டு விட்ட நாற்று தன் நீள்வழிபயணத்தில் தொடர்ந்தும் சோர்வின்றிப் பயணிக்கும் என்பது தெளிவான புரிதல்.
நாற்றின் ஒரு தசாப்த கால புலர்வில் நின்று அதன் ஆரம்ப நாட்களை ஒருமுறை நோக்குவது புதிய,இளைய வாசகர்களுக்கு
*நாற்று இதழ் - 25

Page 7
요 grsom ||
Ib6f 60LD பயக்கும் என்பதன் அடிப்ப்டையில், 1995 நோக்கி ஓர் ஞாபகப்படுத்தல் கட்டாய தேவையாகின்றது.
தேசிய விடுதலையையும் சமுக விடுதலையையும் குறிப்பாக பெண் விடுதலையையும் நோக்காக கொண்டு வெளிவரும் விடுதலைப்புலிகள் மகளிர் அணியின் உத்தியோகபூர்வ ஏடான ‘சுதந்திரப் பறவை பெரும்பாலும் பெண் போராளிகளின் படைப்புக்களையே தாங்கி வந்து கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆயினும் அவ்வேளை போராளிகள் அல்லாத சமுகப்பெண்கள், பெண்களின் சுதந்திரமான வாழ்வில் அதிக பற்றுக் கொண்ட ஒரு சில ஆண்கள் என பலர் “பெண்கள்’ பற்றிய தமது படைப்புக்களை வெளிப்படுத்த களம் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தை பெண்போராளிகளிடம் தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து தேசியத்தலைவர் அவர்களின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்ட போது பெண்கள் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பெண்கள் பற்றிய ஆய்வுகள், தரவு சேகரிப்புகள், ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகள் என்பவற்றையும், அதன் ஏனைய பணிகளையும் வெளிக்கொணர சஞ்சிகை ஒன்றை உருவாக்கும் எண்ணம் ஏற்கனவே உங்களிடம் உள்ளது தானே. அதனோடு இவர்களது ஆக்கங்களையும் இணைந்து சஞ்சிகையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை கவனியுங்கள். பெண்கள் பற்றிய ஆய்வுகள், தரவுகள்,ஏனைய விபரங்களோடு இந்தப் படைப்பாளிகளின் ஆக்கங்களும் இடம்பெறுகையில் அது ஒரு முழுமை பெற்ற சஞ்சிகையாக உருவாகும். என தேசியத்தலைவர் அவர்களால் பணிக்கப்பட்டதை தொடர்ந்து தோற்றம் பெற்றதே நாற்று ஆகும். ஆனால் தொடர்ந்து வந்த மக்கள் இடப்பெயர்வுகளால் ஒரு முழுமையான புள்ளி விபரங்களை நாம் பெற முடியாதிருந்து உண்மை. இனிவரும் காலங்களில் அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
*நூற்று வெள்ளி இதழ்
ढ*

*கங்று வெள்ளி இதழ்
jGILDGl சமுகத்தின் அதன் அச்சானியாக இயங்கும் பெண்களின் விழிப்புணர்வு நோக்கிய கருத்துக்களை பதியமிடும் சஞ்சிகையான இதற்கு நாற்று' என்று பெயரிடப்பட்டதும் அது வளர்ந்து கதிர்பரப்பி தனது உச்சப்பயணத்தை எவ்வாறு பெறுகிறதோ அதே போன்று இச்சஞ்சிகையும் பயன் கொடுக்கவேண்டும். என்பதற்காகவே நாற்று’ எனப்பெயரிடப்பட்டது.
பெண்களின் விழிப்புணர்வை வேண்டி ஆண்களின் மனவுலக மாற்றத்திற்கு உற்றதுணையாகி பென்விடுதலை என்ற பதத்தின் தவறான புரிந்து கொள்ளல்களை களைந்து பிற்போக்குத்தனமான சமுக ஒடுக்குமுறைகளுக்கெதிரான சாட்டையாக சுழன்று கொண்டிருக்கும் நாற்று நாளைய சந்ததிக்கு ஒளியூட்டும் என்பது திண்ணம்.
*நாற்று இதழ் - 25

Page 8
요 shm
இந்தியாடல்களையும் ஒருமுறை கேளுங்"
ஒலி பரவாத பிரபஞ்சத்துள்ளும்
பரவிச் செல்கிறது எனது இனிய பாடல்,
விழிகளுள் புகுந்து ஊடுருவி உயிர் வரை சென்று நிலைக்கிறது உலகின் அழகு.
உள்ளம் தொடுகின்ற ஸ்பரிசங்களி இறக்கை விரிக்கிறது கனவுப் பறை
பூவுக்குள் தேனாகவும் காற்றுக்குள் விசையாகவும் துயர்கவியும் விழிகளிலிருந்து நீராகவும் பீறிடும் நினைவுக்குள் ஊற்றெனவும் இழைந்து படர்கிறது மனது,
சீவராசிகளின் காதலுள் கரையவும் அன்பு ததும்பும் கடல்களுள் மூழ்கவும் நுரைத்துப் பெருகும் இளமை நினைவுகளில் நீந்தவும் தகித்துச் சுடுகின்ற
*நூற்று வெள்ளி இதழ்
S?
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ்
கோபங்க்ளைத் தாண்டவும் தவிக்கிறது மனக் குதிரை.
புகைவிலக்கிப் பார்க்கையில் வரைகோடுகளை மீறிய வடிவங்களில் இயந்திரத் தனம் அகற்றிய நாட்களில் இவையெல்லாம் நடக்கிறது எனக்குள்ளும்.
சேலையின் உள்யேயும் ஒரு உயிர் சீவிக்கிறது. சுவாசிக்கவும், சமைக்கவும் இட்ட பணி முடிக்கவும் மட்டுமன்றி சிறகாகவும் விரும்புகின்ற கரங்களுண்டு வீட்டினுள்ளே,
கடிவாளங்களிட்ட வாழ்விடையே சிறிது ஆனந்தித்துக் கொள்ளவும் அவாவுகிறது மனது, முட்கள் உறுத்தினும் ரோஜாக்களின் இதழ்தொட முனைகின்றன விரல்கள்.
எங்கள் பாடல்களைச் சற்றுக்கேளுங்கள் அதன் வரிகளுள் உறைந்த வலிகளைப் பாருங்கள்.
உளிகளும் கடப்பாரைகளும் தேவைப்படாத தோழமையின் பரிவோடு இந்தப் பாடல்களையும் ஒரு முறை கேளுங்கள். பெற்றவளின். தங்கையின். மூத்தவளின். தோழியின்.
காதலியின். மனைவியின்.
Cഥബ്രഖി.
*நாற்று இதழ் - 25

Page 9
요 giga
து முறிப்பு கிராமத்தில் இராணுவ கெடுபிடிகளில் துணைவன்மாரைப் பறிகொடுத்த பெண்கள் சிலர் மிகுந்த துன்பங்கள் மத்தியில் வாழ்வதாக அறிந்து, அங்கு போனோம். புதுமுறிப்புக் குளம் கொடும் வரட்சியினால் வற்றி பாளம்பாளமாக வெடித்திருந்தது. நடுவில் கறுப்பாய் கொஞ்சம் தண்ணிர் நின்றது. பட்ட மரங்கள் நடுநடுவே தலை நிமிர்த்தி நின்றன. முறிப்புக் குளத்துக்கு மிக அண்மையில் அந்தக் குடிசை. அங்கே ஜெயந்தினி என்ற பெண். அவரைச் சந்திப்பதற்காக சென்றோம். உயரமான நாய் ஒன்று தொங்கித் தொங்கிக் குரைத்தபடியே வரவேற்றது. “நாய் கடிக்காது. கட் டியரி ரு க குது வாங்கோ.’ தயங்கித் தயங்கிப் போனோம். “ 2 Th' 35 L (3 LU rť ஜெந்தினியா?.”
G6 99
ஓம so a - நாங்கள் எதற்காக வந்தோழ் என்று கூறினோம். ஜெயந்தினிக்கு 17 வயதில் 19 வயது கரனுடன் திருமணம் நடந்தது.
&#yrfbais வெள்ளி இதழ் 요
 
 
 

*நாற்று வெள்ளி இதழ் 요
இந்தத்திருமணம் சட்ட ரீதியான பதிவுத்திருமணமல்ல. இரண்டு வருட வ்ாழ்வில் ஒரு பெண் குழந்தை. சத்ஜெய இராணுவநடவடிக்கையால் இடம்பெயர்ந்து ஓடினார்கள். போன இடத்தில் நின்மதியாய் வாழ முடியாமல் கஸ்டம், வறுமை, 19வயதான துணைவன் கரன் 55ஆம் கட்டை தென்னந் தோட்டத்தில் தேங்காய் பிடிங்கி வருவதாக கூறி வேறும் சிலருடன் புறப்பட்டார். தாங்க முடியாதபடி, எவருடைய உதவியுமற்ற தனிமை, கைக்குழந்தை. y - ஜெயந்தினி சம்மதித்து வழியனுப்பினார். அன்று போன கரன் இன்றுவரை வரவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிலரை இராணுவம் பிடித்ததாக சொன்னார்கள். தென்னிலங்கைச் சிறைகளில் போய்த் தேடிப்பார்க்க பணவசதி இல்லை. “பொது அமைப்புகள்” மனிதஉரிமை நிறுவனங்களிட்டை நீங்கள் அறிவிக்கவில்லையா?.” என்று கேட்டோம்.
“I.C.R.C இலை முறையிட்டனாங்கள். தாங்கள் எல்லாச்சிறைச்சாலையிலையும் தேடினதாகவும்.எங்கேயும் இல்லை என்றும் கூறிச்சினம். எங்கட கிராம அலுவலர் மரண அத்தாட்சிப்பத்திரம் தருகிறாரில்லை.” என்றார்.
“ஏன்?.”
“திருமணப்பதிவு இல்லை. திருமணப்பதிவு இல்லாம மரண அத்தாட்சிப்பத்திரம் தாறது சட்டமில்லையாம்.எண்டவ,” “ஏன் திருமணப்பதிவு செய்யாம விட்டனிங்கள்” தலையைக் குனிந்து கொண்டு நின்றாா ஜெயந்தினி, அவரது மகளுக்கு வயது ஏழு.
“மகள் பாடசாலைக்குப் போறவவா?.” “ஓ.போறவ.ஆண்டு ரெண்டில படிக்கிறா.ஆனா பிறப்பு
*நாற்று இதழ் - 25 டு)

Page 10
요 grom
அத்தாட்சிப்பத்திரம் இல்லை.அதால பள்ளிக் குடத்திலை பெயர் பதிவில்லை. சும்மா பிள்ளை போய் வருகுது.” ஜெயந்தினி நான்காம் ஆண்டுவரை படித்திருக்கின்றார். “வாழ்க்கையை எப்பிடி ஒட்டுறீங்கள்?.” “பதிவுகள் ஒன்டும் இல்லாததால. உதவிக்கொடுப்பனவுகள் எதுவும் இல்லை.கூலிவேலைக்கு போறனான்.” “கூலிவேலையெண்டா என்ன வேலை?.”
“அருவிவெட்டுறது. கிணத்துமண் இழுக்கிறது. புல்லுவெட்டுறது. என்ன வேலை எண்டாலும் போறது தான்.”
விடிவற்ற முகத்தில் விரக்தியுடன் ஒரு சிரிப்புச் சிரித்தார் ஜெயந்தினி.
கரன் காணாமற் போன பிறகு ஜெயந்தினி பொது அமைப்புகளிடம் தேடித்தேடி அலுத்துப் போனார். திருமணம் சட்டப்படியான முறையில் பதிவு செய்யப்படாததால் மரணப்பதிவு பத்திரம் பிள்ளைக்கான பிறப்புப் பத்திரம் எதுவுமே எடுக்க முடியாதநிலை . ஏழு வயதுப் பெண்பிள்ளை பிறப்புப் பதிவுப்பத்திரம் இல்லாமலே பாடசாலைக்கு போய்வருகிறாள். கூலிவேலைகளுக்கு போகும் ஜெயந்தினி வறுமையாலும், தனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு தேவை என்பதாலும் , சமூகத்தின் விமர்சனங்களில் இருந்து விடுபட விரும்புவதாலும் 49 வயதுள்ள ஒருவரை மறுமணம் செய்துள்ளார். இந்த திருமணத்துக்கும் சட்டரீதியான பதிவில்லை ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது . இந்த துனைவரும் கூலிவேலைக்கு போகிறார் . குழந்தையை வயதான தாயிடம் விட்டுச் செல்கிறார் .
() ()
புது முறிப்பு கிராமத்தில் இனனெரு பெண் யோகநாயகி இவருக்கு வயது 34 இவரது துணைவன் வேலு விஜயகுமார் 1997 ஆவணி மாதம் 20ஆம் திகதி சத்ஜெய ஆக்கிரமிப்பின் பின்
*sbu வெள்ளி இதழ் S?

*நூற்று வெள்ளி இதழ்- 요
காணமற் போயியுள்ளார். 11 வயதில் ஒரு மகன். வீட்டின் கூரையில் அரைவாசிப் பகுதிக்கு மட்டும் கிடுகு ஓட ஓடக் கட்டப்பட்டுள்ளது. சமையல், படுக்கை எல்லாமே அதற்குள்தான்.
நாங்கள் அவரைத் தேடிப் போன போது அப்போதுதான் குளிக்கப் போய்விட்டுவந்து கொண்டிருந்தார். உள்ளே சென்று அமர்ந்தோம்.
“உங்கள் துணைவருக்கு என்ன நடந்தது?. 99 “ஆமிபிடிச்சுக் கொண் போய் . காணாம போயிட்டார்.” “எப்பீடிநடந்த தென் சொல்லுவீர்களா?’ “கிளிநொச்சிக்கு s வந்தவுடனை நாங்க்
ளெல்லாம் இடம் பெயர்ந்து போயிட்டம். போன இடம் புதுசு .சரியான கஷ்டம். இவர் பார்த்திட்டு திருவையாறில தேங்காய் பிடிங்கிக் கொண்டு வாறன் எண்டு சொல்லி வேறயும் மூண்டு பேரோடை சேர்ந்து போனார்.திரும்பி வரேல்ல. 99 “என்ன நடந்ததெண்டு தெரியாதா?. “கூடப் போன ரெண்டு பேரை ஆமி பிடிச்சதெண்டு தெரியும். 8. “மனிதஉரிமை அமைப்புகளுக்கு அறிவிச்சு உதவிகேட்டீர்களா?.”
"@..... இவர் பிடிபட்டது 1997 ஆவணி 20ஆம் திகதி செஞ்சிலுவை சங்கத்திலை அறிவிச்சனான்.இவற்ற பேர்வழியிலை ஆரும் சிறையிலை இருக்கிறதா தாங்கள் அறியேல்லை எண்டு சொல்லிச்சினம். வவுனியாவிலை எல்லாம் போய்த் தேடினனான். ஆளைப்பற்றி ஒரு விபரமும் இல்லை. 99 “மகனுக்கு எத்தினை வயது?. 99
99
*நாற்று இதழ் - 25 டு)

Page 11
요 – wohm –
“பதினொண்டு.” "படிக்கிறாரோ. “ஒ.விக்கினேஸ்வராக்கு போறது. எங்களுக்கு எந்த மனிதஉரிமை அமைப்பும் இதுவரை எந்த உதவியும் செய்யேல்லை. கடன் பட்டும், கூலிவேலை செய்தும் தான் குடும்பத்தை ஒட்டுறன்.”
துணைவன் விஜயகுமார் காணமற் போன பின்னர் யோகநாயகி மிகவும் சிரமங்களுடன் வாழ்க்கையை நகர்த்த வேண்டி இருந்தது. எந்த விதமான உதவிகளும் கிடைக்காதநிலை. பொது நிறுவனங்கள் இவரது துணைவனுக்கு என்ன நடந்ததென தெரியாதென கைவிரித்துவிட்ட நிலை. தனக்கு பாதுகாப்பு தேவையெனக் கருதி யோகநாயகி மறுமணம் செய்திருக்கிறார். புதிய வாழ்வின் அறுவடையால் பெண்குழந்தை ஒன்றைப் பெற்றிருக்கிறார். குழந்தை 27 நாட்கள் வயதுடையது . குழந்தை பெற்றிருப்பதால் இப்போது கூலிவேலைகள் எதற்கும்போவதில்லை. திருமணம் இன்னமும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. திருமணப் பதிவின் அவசியத்தை விளக்கி விட்டு விடை பெற்றோம்.
99
() ()
LIலகடைச் சந்தியடி. புதுமுறிப்பில். வைரமுத்து பாலேஸ்வரனின் துணைவி வசந்தகுமாரி வயது 35. மூன்று பெண் பிள்ளைகள் உட்பட 5பிள்ளைகளின் தாய். சத்ஜெய நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த மக்களோடு இவர்களின் குடும்பமும் இடம் பெயர்ந்து யூனியன்குளம் ஸ்கந்தபுரத்தில் தெரிந்தவர் வீட்டில் இருந்தார்கள். அவசரத்தில் வீட்டுப்பொருட்கள் எல்லாம் அந்தந்த இடத்தில் போட்டு விட்டு ஓடினார்கள். *நூற்று வெள்ளி இதழ்
중위

*நாற்று வெள்ளி இதழ் 요
“வீட்டை ஒருக்கால் பார்த்துக் கொண்டுவாறன். ’ என்று கூறி இவரது துணைவர் பாலேஸ்வரன் போனார். வீடு பார்க்க வந்த இவரையும் இன்னும் சிலரையும் கைகளைப் பிணைத்துக்கட்டி சயிக்கிளுகளைத் தூக்கி வைச்சு கூட்டிக் கொண்டு போனதை ஆக்கள் கண்டிட்டு வந்து சொன்னவை. வீடு பாக்கப் போனவை தானே விசாரிச்சுப் போட்டு விடுவான்கள் எண்டுதான் நம்பினம். ஆனா இண்டுவரைக்கும் விடேல்லை. ’ என்றார் மிகுந்த கவலையோடு. ஓரளவுக்கு படித்தவர். தையலும் கற்றிருக்கிறார். “முந்தி காணாமப் போனவையின்ர குடும்பத்தாக்களுக்கு வேலை எண்டு சொல்லி தைக்கிற வேலைக்குப் போனனான். பிறகு. அந்த நிலையத்தைப் பூட்டிப் போட்டினம். இப்பகூலி வேலைக்குப் போறனான். ஆராவது தையல்மிஷின் எடுத்து தந்தால் தைச்சு உழைப்பன். நிறைப் பேர் வந்து வந்து விபரங்களைப் பதியினம். ஆனா ஒரு உதவியுைம் செய்யிறேல்லை.” என்று கூறினார்.
() {}
புது முறிப்பில் துணைவனை தேடித்தேடி ஓய்ந்திருக்கும பெண்களில் ஒருவர் கனகலிங்கம் கணேஸ்வரி 1959 ஆம் ஆண்டு பிறந்தவர். பிள்ளைகள் 3ஆண் 3பெண்கள். புதுமுறிப்பில இந்திரன் பேக்கறியின் உரிமையாளராக இருந்தவர் கனகலிங்கம். சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து போனார்கள். கனகலிங்கத்தின் தாயாரிடம் 8 ஆம் வாய்க்கால், உருத்திரபுரத்தில் பேக்கறி ஒன்றிருந்தது. லக்சுமி பேக்கறி அதன் பெயர்.
*நாற்று இதழ் - 25 G2)

Page 12
오 gefesa ||
தாயாரின் பேக்கறியிலுள்ள தளபாடப்பொருட்களை ஏற்றுவதற்காக தன்னுடன் இன்னும் 8 பேரை கூட்டிப் போனார். இன்றுவரை திரும்ப வில்லை. இவர்களை இராணுவத்தினர் பிடித்து கைகளைப் பிணைத்து தோளில் சயிக்கிள்களை சுமக்க வைத்து கூட்டிச் சென்றதாக கதைக்கிறார்கள். செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகுழு எல்லாத்துக்கும் அறிவிச்சு தேடினாங்கள். களுத்துறை பூசா எல்லாம் போய்த் தேடினனான். அங்கை இல்லை. வெலிக்கடையிலைபோய்ப்டார்க்க அனுமதி இல்லை. இங்கே இருக்கிற ஆட்களைப் போய் பார்க்கேலாதாம் தேடித்தேடியே உள்ள நகை நட்டு’ பொருள்பண்டமெல்லாம் வித்தாச்சு.” “நீங்கள் தேர்தலிலை ஆருக்கு புள்ளடி போட்டனிங்கள்.” என்று கேட்டோம். -
“வீட்டுக்கு.”என்றார். “நீங்கள் புள்ளடி போட்ட உறுப்பினர்களிட்டை ஏதும் முறையீடு செய்யே S.S.S.R.
குளள பெயர் விபரம காட் வங்களாம் - அ எங்கட இவற்றை ெ இல்லையாம்.”
“இப்ப எப்பிடிசீவியம் போகிந்து --S “மூத்தமகன் கலியாணம் கட்டி விட்டார். நாங்களாதீேர்டேம் செய்யிறம். இப்பகிணத்தில தன்னியில்லை. குளிக்க முழுகக் கூட தூர இடம் போய்வாறம்..” என்றார்.
*நூற்று வெள்ளி இதழ்
கு?
 
 
 
 

*காற்று வெள்ளி இதழ் 오
இது வரை மனிதஉரிமை அமைப்புகள் எதுவும் உதவி வழங்கீவில்லை என்பது இவரது மனச் சுமை
(3 33
பெருகின்ற வழியில் முருகேசு யோகம்மாவின் வீடு. இவரது துயரம் மிகப் பெரியது. சத்ஜெய இராணுவ நடவடிக்கையின் போது கனகபுரத்திலிருந்து இவர்கள் ஸ்கந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்து வாழ்ந்தார்கள் நிரந்தர வாழ்விடமான கனகபுரத்தில் கமம் தான் இவர்களின் தொழில் . தென்னைகளும் நின்றன.
துணைவர் முருகேசு ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்கந்தபுரத்திலிருந்து வந்து கனகபுரத்தில் தேங்காய் பிடிங்கிக் கொண்டு செல்வார் . இவரோடு இவரது மூத்தமகனும் வருவார். அன்றும் ஞாயிற்றுக்கிழமை.வழமைபோல தேங்காய் பிடுங்க என்று புறப்பட்டவர்கள் திரும்பி வரவில்லை . 53 வயதுத் தந்தையும் 22 வயது மகனும் இன்று வரை இல்லை. சம்பவம் நடந்து முடிந்த சிலநாட்களில் வந்து பார்த்தபோது ஓரிடத்தில் இரத்தம் உறைந்து கிடந்தது . முள்ளுக்கம்பி வேலியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சாரம் தொங்கிக் கிடந்தது.
32 வயது மகளும் 24 வயது மகனும் உள்ளனர் . மகன் கடையில் வேலை செய்கிறார். கமம் செய்கிறார்கள். கோழிவளர்க்கிறார்கள் . “அம்மா ஒரு படம் எடுப்பமா ?.” கேட்டதும் படமெடுக்கும் பாம்பாய் சீற்றம் கொண்டார்கள். “எங்களைப் படமெடுக்க வேண்டாம். எங்களைப் பற்றியும் எழுதவேண்டாம்.எத்தினைபேர் உப்பிடி வந்து வந்து எழுதிக் கொண்டு போயிட்டினம். ஒருதரும் ஒரு முடிவும் சொல்லேல்லை. ஒரு உதவியும் செய்யேல்லை.எங்கட துன்பமும் துயரமும் கஷ்டமும். எங்களோடை. போங்கோ. எங்களைப் பற்றி ஒண்டும் எழுத வேண்டாம்.”
*நாற்று இதழ் - 25

Page 13
오 Egbamu
உள்ளே எழுந்து போய்விட்டார்கள் .
இக்கிராமத்தில் கிணற்று வசதியில்லை. புதுமுறிப்புக்குளமே இவர்களின் தேவைகளை நிறைவு செய்கிறது. பிறப்பையோ, இறப்பையோ, திருமணத்தையோ முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இவர்களிடம் இல்லை. இதன் காரணமாக இவர்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்கள் ஏராளம். மலசலசுடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட அற்ற சூழலில் துயரம் சுமந்து வாழும் இவர்களின் வாழ்வு மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது.
இவர்களுடைய இழப்பும் துயரமும் ஈடு செய்ய முடியாதது . ஆற்றமுடியாதது . இந்த இழப்பினதும் துயரத்தினதும் விளைவே இந்தச் சீற்றத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொண்ட நாம் எமது மக்களின் சோகங்களைச் சுமந்து, இதயச் சுண்மயோடு திரும்பினோம் .
ஆதிலட்சுமி சிவகுமார்
ஏரி
சைக்கிள் விற்பனை 5) S3561,
உரிமையாளர் ம.இக்னேசியஸ்
*8്യ வெள்ளி இதழ்
@?
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
ear டகங்களைக் கூடுதலாக நுகர்கிறது பெண்கள்தான் எண்கின்றன புள்ளி விபரங்கள். பொதுவாக அவதானித்தபோதும் பெண்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு ஆண்களை விடக் கூடுதலாக இருப்பது தெரிந்தது. பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிற ஒய்வில் இந்த ஊடகங்கள் வந்து குந்ததியிருக்கிறன. தொலைக்காட்சி, வானெலி, பத்திரிகை, சஞ்சிகைகள், புத்தகங்கள் என எல்லாவகையான ஊடகங்களிலும் கூடுதலான பரிச்சயம் பெண்களுக்குத்தான் உண்டு. இதனால் இந்த ஊடகங்களில் பலவும் அல்லது எல்லாமே பெண்களைக் கவருகிற மாதிரி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. இதுதான் இங்கே முக்கியமானதும் கவனிக்கவேண்டியதும்.
பெண்கள் ஊடகங்களை கூடுதலாக நுகர்கிறார்கள் என்பது உண்மையென்றால், தொடர்பாடலின் அறிவையும் வெளியுலகின் வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் அவர்கள் அதிகமாகப் பெறுவார்களே என்ற கேள்வியெழலாம்.
உண்மைதான். ஊடகங்களை நுகர்வதில் கூடுதலாக இருப்பது
*நாற்று இதழ் - 25 ᏣᎠ

Page 14
위 apben |
பெண்களாக இருந்தாலும் அவர்கள் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளையும் விடயங்களையும் விரும்புகிறார்கள்; துகர்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களில் வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் அவதானிக்கமுடியும்,
வானொலிகளில் பெரும்பாலான பெணி களர் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்கிறார்கள். ஏன் ஆண்கள் பாடல்களை விரும்புவதில்லையா, கேட்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். அவர்களும் விரும்புகிறார் களர் கேட்கிறார்கள்தான். சில வேளைகளில் ரசனைமட்டம் கூட இருதரப்புக்கும் ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால், பெண்கள்தான் வானொலியைக் கேட்பதும் அதிகம்; அதில் ஒலிபரப்பாகிற நிகழ்ச்சிகளையும் பாடல்களையும் தெரிந்து வைத்திருப்பதும் அதிகம். வானொலிக்கு அவர்கள் எழுதுகிற கடிதங்களில் கூட இதனை அவதானிக்கலாம், இதுதவிர அந்த நிகழ்ச்சிகளை கூர்ந்து அவதானித்தாலே சில விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். காதல், தாய்மை, சோகம் என கலவைகளில் இவைவரும்,
விட்டுப்பணிகளை ஒரளவுக்கு முடித்துக் க்ொண்டு பெண்கள் சற்று ஒய்வெடுக்கிற நேரங்களில் ஒலிபரப்பாகிற நிகழ்சிகளில் பலவும் பெண் ஈர்ப்புக்குரியதாகவே இருக்கின்றன. தவிர, பெண்களுக்கென்றே தனியான நிகழ்ச்சிகள் வேறு ஒலிக்கின்றன. வெளியே வேலைக்குப் போய் வீடு திரும்பும் பெண்களுக்கேற்ற மாதிரியும் கூட நிகழ்ச்சிகள் உண்டு. இதே மாததிரித்தான் தொலைக்காட்சிகளிலும் நிகழச்சிகள் ஒளிக்கின்றன. மதியத்திலும் முன்னிரவிலும் பெண்கள் தொலைக்காட்சியின் முன் குந்தியிருக்கிறார்கள். வேறு என்ன வேலையிருந்தாலும் அதையெல்லாம் விட்டு விட்டு இந்த
*கங்ா வெள்ளி இதழ் G2) 요

&-መቓሳክm! வெள்ளி இதழ் 요
நிகழ்ச்சிகளைப் பார்ப்பது முக்கியமாகிவிட்டது. இப்போது. அவர்கள் இதைவிட்டு விலகிவிட முடியாதபடியான ஒரு வித ஈர்ப்புவலை இந்த நிகழ்ச்சிகளுக்குண்டு. அப்படியான கவரும் நோக்கோடு தான் நிகழ்ச்சிகளும் தாயாரிக்கப்படுகின்றன. பத்திரிகைகள், சஞ்சிகைகளின்
தன்மையும் இதுதான். அவற்றின் 6 உத்திகளும் இப்படித்தான். பெண்களின் >.
புத்தகங்களில் கூட இதனை
அவதானிக்கலாம்.
பொழுதைக் கொள்ளையடித்து இவைபொதுவானவை. இதில் அவர்கள் நடைமுறை இனிக்கூர்ந்து அவதானிக்க வாழ்வைக்காணாமல் வேண்டியவையுண்டு. அது கனவுலகில் சஞ்சரிக்க தான் முக்கியமானதும் கூட. விடுகின்ற ஒன்று, பெண்களை இலகு ஊடகங்கள் தான் வாகக் கவரக்கூடியவாறான இன்று பெருகி உத்திகளைப் பயன்படுத்தும்
போக்கு இந்த ஊடகங்களில் பலவற்றுக்கும் உண்டு. ஏற்கனவே உருவாகி கப் பட்டிருக் கற,
யிருக்கின்றன.
வளர்ந்திருக்கிற “பொழுதுபோக்கு’ என்ற கருத்தோட்ட ரசனைக்கு இன்னும் இனிப்பாகத் தினிபோடுகிற சங்கதிதான் H5 , இது இனினுமினி னும் பெணிகளைلک வளர்ச் சரிவிததியிலிருந்து கட்டுப்படுத்தும் தயவலைப் படப்பின்னல். பெண்கள் அறிவுமயப்படுகிற விடயங்களை பெண்களுக்குத் தருவதைவிட, பெண்களின் பொழுதைக் கொள்ளையடித்து அவர்கள் நடைமுறை வாழ்வைக்காணாமல் கனவுலகில் சஞ்சரிக்க விடுகிற ஊடகங்கள் தான் இன்று பெருகியிருக்கின்றன. இவை பெண்களுக்கென்று
*நாற்று இதழ் - 25 ᏣlᎧ

Page 15
와 grhm
அழகுக்குறிப்புகள், அலங்காரவிடயங்கள், பெண்களின் காதல் கணிணிர் பெணிகளினர் விட்டுக் கொடுப்புகள், ஏற்றுக் கொள்ளல்கள் என சம்பிரதாயமான விடயங்களை அந்தச் சூழலுக்குள் நின்றே காட்டுகின்றன. மாறுதலாக, பெண்களின் பிரச்சனைகள உணர்வுகள், அவர்களுடைய விடுதலை “அவர்களுக்கான சுதந்திரம், அவர்களின் வேட்கை, பெண் சமத்துவம் பெண உயிரி என்ற வளர்ச்சி நோக்கிய கண்ணோட்டத்துடன் வெளிப்பாடடைகிற நிகழ்ச்சிகள் அல்லது விடயங்கள் குறைவு.
பெண்கள் கூடுதலாகப் பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருத்தோட்டத்தையும் அவதானித்தால் அவை பெண்களை இன்னும் பலவீனப் படுத்துவதைக் காணமுடியும் , பிற் போக்குத்தனமும் பெண்ணடிமைக்கூறுகளும் கொண்ட வாழ்வை அவை காட்டும்; வலியுறுத்தும், பெண்ணின் அழகு, பெண்ணின் அழுகை, பெண்ணின் அங்கம் (அழகு, அழுகை, ஆபாசம்) என்பதில் தான் இவற்றின் மையம் உண்டு.
பத்திரிகைகளின் போக்கும் கிட்டத்தட்ட இப்படித்தான். இதைவிட புத்தகங்கள்தான் மிகவும் மோசமானவை. தமிழில் குறிப்பாக ரமணிச்சந்திரள், அனுராதா ரமணன், லக்சுமி, ராஜேஸ்குமார், புஸ்பா தங்கித் கோட்டை பிரபாகர் போன்றவகை எழுத்த ண் கனவுகளை தவறான தரிசையில் குவிக்கிறார் களர் . பெ இந்தப்புத்தகங்கள் தான் இவ்ற்றை அதிகமாக வாசிப்பிே ஒரளவுக்கும் படித்த பெண்களிலிரு
*ாற்று வெள்ளி இதழ்
 
 
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
பெண்கள் வரையில் இந்தவகை எழுத்துகளையே அதிகமும் வாசிக்கிறார்கள்.
முழுப் புனைவாகவும் பெருங் கற்பனையாகவும் காட்டப்படுகிற வாழ்வில் தங்களின் கனவையும் பொழுதையும் வளர்க்கும்படியாகிறது. பல பெணிகளுக்கு சடங்கு, சம் பிரதாயம் எல்லாவற்றையும் ஒழுங்கெனவும் விதிமுறையெனவும் வலியுறுத்திக் காட்டுவதன் மூலமாக பெண்களின் மனதில் அவற்றை நிறுத்திவிடுகின்றன இவை. பல சடங்குகளின் உயிர்ப்பு இல்லாமற்போய்விட்ட இன்றைய நாட்களிலும் அவற்றை மீண்டும் மீட்டுக் கொண்டு வர முயல்கின்றன இவை புனிதத்தன்மையுடயவை இந்தச் சடங்குகளும் வழமைகளும் என று நியாயப்படுத்த முனைவதரினுடாக பெணிகளை அவற்றினர் பினர் னால் நிற்கவைக்கின்றன மேலும், அறிவியலில், சமநிலையில்,
ஆற்றல் வெளிப்பாட்டில், சிந்தனையில், உழைப்பில், / 6 \
செயற்றிறனில் பெணிக சடங்கு, சம்பிரதாயம்
e. எலலாவறறையும ளிடையே ஏற்பட்டிருக்கும் : வளர்ச்சிகளைத் தாகக விதிமுறையெனவும் பூாவமாக நிரூபிக்க எநத வலியுறுத்திக் ஊடகமும் யோசிப்பதில்லை. காட்டுவதன் மூலமாக அப்படி பெணி சற்றுச் பெண்களின் மனதில் சிந்திக்கிற ஊடகங்களையும் அவறறை o பெரும்பாலான பெண்கள் நிறுத்திவிடுகின்றன
நாடுவதும் இல்லை? அறிய \ இவை, 9 / விரும் புவதும் இல்லை. மிகச்சுருங்கிய வட்டங்களில் மட்டும் இந்த உயர்வான சிந்தனையும் தெளிதலும் இருக்கிறது. இதனை பரந்த
*நாற்று இதழ் - 25 25)

Page 16
ugramu |
தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியதே எப்போதுமுள்ள சவால். ஆனால், பரந்த அளவில் அறிமுகமாகியிருக்கிற, இயங்கி வருகிற ஊடகத்தளம் இந்த விழிப்புக்கு எதிர்நிலையிலேயே பலமாக உள்ளது.
ஏற்கனவே இருந்துவரும் ஆண்நிலைப்பட்ட சிந்தனை ஊடகங்களில் பெண்களுக்கான மதிப்பை ஒடுக்குமுறை சார்ந்ததாகவே காட்டுகின்றன. அங்கே பெண் அடையாளம் உண்மையான தல்ல. ஆண் அதிகாரமயப்பட்டது. ஆண் நலனர் சார்ந்தே அதனர் இயக்கமும் நெறிமுறைகளும் இருக்கின்றன. அவற்றில் காட்டப்படுகிற பெண்களும் மெய்யான பெண்களல்ல. அதாவது பெண்ணின் உண்மை வெளிப்பாட்டோடோ, இயல்போடு காண்பிக்கப்படுவதில்லை, வெளிப்படுவதுமில்லை. பெண னினர் உணர்வுகளும் பிரச்சனைகளும் சரியான முறையில் இனங்காணப்படுவதும் இல்லை, தீர்வுகாண முயற்சிப்பதும் இல்லை.
இவ்வாறுள்ள ஆணி மனோபாவ ஊடகங்களினர் செல்வாக்கினால் ஆளப்படுகின்ற பெண்கள் ஒரு பக்கம், இதுபெண்களில் ஊடகம்செலுத்துகிற தாக்கம் பற்றிய்து,
மறுபக்கத்தில் ஊடகங்களில் பெண்கள் சித்திரிக்கப்படுகின்ற விதமும் நோக்கமும், பெண்ணுடலை கவர்ச்சியாக்குவதே இதில் பிரதானமானது.
இரணர் டாவது பெணிணைப்பற்றிய வர்ணனைகளும் கருத்துகளும். புராண, இதிகாச அடையாளங்களிலிருந்து சரித்திர-சமகால விடயங்கள் வரையில் பெண் கவர்ச்சியே மூலதனமாக்கப்படுகிறது.
பெண்ணை ஒரு உயிரி என்ற நிலையிலிருந்து பெயர்த்து
*நூற்று வெள்ளி இதழ்

*நூற்று வெள்ளி இதழ்
அவளை ஒரு பொருள் என்ற நிலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தல் இங்கே நிகழ்கிறது. பயன்படுத்தல் எனும்போது அது ஒரு பண்டம், பொருள் என்பதாகிறது. பண்டம் அல்லது பொருள் என்று வரும் போது அது உயிரி என்ற உணர்வுப் பெறுமானத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது.
விளம்பரங்கள், சசினிமா, அலங்காரம் , அழகு என எல்லாவற்றின் போதும் காண்பிக்கப்படுகிற பெண் என்ன அடிப்படையில் சித்திரிக்கப்படுகிறாள் என்பதைக் கூர்ந்து பாருங்கள். அப்போது இவை நன்றாகப்புலனாகும்.
e 485 இரணர் டு தளங்களிலும் பெணிھ> மதரிப்பிழக்கப் கட்டவளாகவே இருக்கிறாளர் , பெணி பற்றிச்சிந்திக்கும் சரியானதொரு சிந்தனையைக் கோரி நிற்கின்றன எல்லாமும்,
Ο GO Ο
கருணாகரன்'
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்த
நெதர்லாந்து நாட்டின் வீராங்கனை 1948 ல் நடந்த ஒலிம்பிக் போட்யில் 100, 200 மீற்றர் ஒட்டப்
போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றார்.
1960 ல் குறைமாத வளர்ச்சியுடன் பிறந்த வில்லா ரூடால்வ் என்னும் அமெரிக்க வீராங்கனை 100 M200M ஆகிய ஓட்டங்களில் தங்கப் பதக்கம் வென்றார்.
*நாற்று இதழ் - 25 Ꮳ2)

Page 17
്னாட்சி கலைந்த துாக்கத்துடன் கண்களை கசக்கி வெளியே பார்த்த போது உலகம் இயங்க ஆரம்பித்திருந்தது. “கொக்.கொக்” சத்தத்துடன் குஞ்சுகள் புடைசூழ கோழிகள் அந்த அதிகாலைப் பொழுதிலேயே இரைதேட ஆரம்பித்திருந்தது. “கா.கா.” தனது இரையின் இலக்கை நோக்கி காக்கை கூட்டம், இன்னும் கிளிகளும், குயில்களும் மற்றைய பிராணிகளும் தம் தம் பாஷையில் அளவளாவியபடி இரைக்காக அவை பேசும் பாஷை புரியாவிட்டால் கூட அதில் தொனிக்கும் நம்பிக்கை எங்காவது ஒரு மூலையில் தமக்குரிய உணவு கிடைக்கும் என்ற உறுதி மீனாட்சியை ஏக்கம் கொள்ள வைத்தது. மீனாட்சி பெரு மூச்சொன்றை வெளிவிட்டபடி "சீ இந்த பறவைகளில் ஏதேனும் ஒன்றாக நான் பிறந்திருக்க கூடாதா? அவைகளால் கூட நேரம் தப்பாது தனது குஞ்சுக்கு உணவு குடுக்க முடிகிதே பாவி நான் இந்த பாலகன் பட்டினியால் வாடுவதை கூட தடுக்க
*நூற்று வெள்ளி இதழ் 요
 
 

வெள்ளி இதழ் - 요
முடியாதவளாய், அதை பார்த்தும் கையாலாகதவளாய் இருக்கிறேன்ே’ அவள் தாய் மனம் குமுறியது. அவளது இடுப்பின் மீது காலைப் போட்ட படி அயர்ந்து உறங்கும் மகனைப் பார்க்கிறாள். விலா என்புகள் வெளித்தெரிய சுவாசித்துக் கொண்டு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான். அவன் ஒட்டிய வயிறும் குச்சி குச்சியாய் கை கால்களும் அவளை என்னவவோ செய்தது. இருந்தும் அந்த முகத்தில் எந்தப் பாதிப்புமே தெரியாத அமைதி, மகனின் தலையை கோதிவிட்டவள். குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். மெதுவாக அவன் காலைத் தூக்கி தன்னை விடுவித்துக் கொண்டவள். அவனின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்திருந்தாள். வாசலில் அவளது மாமியார் ஏதோ முனகியவாறு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள்.
முகவரி இன்றி இராணுவத்தின் கெடுபிடிக்குள் தொலைந்து போன அவள் கணவன். அவளது பாதுகாப்பிற்காக தனது தாயையும் பாசத்திற்காக மகனையும் அவளிற்குத் தந்துவிட்டுச் சென்றிருந்தான். கண்களில் துளிர்த்த நீரை சேலைத் தலைப்பால் துடைத்தபடி அடுப்படிக்குள் சென்றாள். பாத்திரங்கள் ஒன்றும் பெரிதாக அலம்புவதற்கு இருக்கவில்லை. சமைத்திருந்தால் தானே கழுவுவதற்கு நேற்றைய தினம் கஞ்சி காய்ச்சிய பானை மட்டும் ஒரு மூலையில் இருந்தது. அதை எடுத்து அலம்பி வைத்தவள, இன்றைய பொழுதிற்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையுடனையே சுள்ளிகளைப் பொறுக்கி அடுப்பை மூட்டினாள். தேனிப்பானையை அடுப்பின் மீது வைத்துவிட்டு அடுப்பையே வெறிக்கப் பார்த்திருந்தாள். கைகளும் கால்களும் பரபரக்க கணவன் வேலைக்குச் செல்லும் முன்பு சமையலை முடிக்க வேணும் என்று இதே அடுப்படியில் அவள் பம்பரமாக சுழன்ற நினைவுகள் அவளைத் தட்டிய போது அடுப்பு போல அவள் வயிறும் எரிந்தது. இருமல் ஒலி அவள் கவனத்தைத் திருப்பவே பனை மட்டை வரிச்சினூடாக வெளியே பார்க்கிறாள். நெஞ்சை நீவியபடியே அவள் மாமியார் திண்ணையில் வந்து அமர்வது தெரிகிறது “என்ன மாமி செய்யுது” ... "
202 GG
“ஒண்டுமில்ல பிள்ள” “அம்மா.” கண்களைக் கசக்கியபடி மகனும் எழுந்து வெளியே வரவே“முகத்தைக் கழுவி கொண்டு வா அப்பு அம்மா தேத்தண்ணி
*நாற்று இதழ் - 25 ᏣᏪᎧ

Page 18
오드 Egbom
தாறன்’ என்றாள். முற்றத்தில் ஒட்டைப்பானையில் இருந்த x్య, கரித்துண்டை எடுத்து வாயில் போட்டு தனக்கு தெரிந்தவாறு பல்லைத் (ப்) துலக்கி வாளித் தண்ணீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு தாயை நோக்கி ஓடினான் சிறுவன். பானையில் கொதித்த தேனிரைக் جمہ குவளைக்குள் ஊற்றிவிட்டு சீனிப் போத்தலை எடுத்தாள் மீனாட்சி அதன் கனமே அதன் உள் இருப்பை அவளிற்கு உணர்த்தியது. அகப்பைக் காம்பை எடுத்து போத்தலின் சுவரில் ஒட்டியுள்ள சீனியை சுரண்ட ஆரம்பித்தாள். தாய் செய்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த முத்து அவள் சுரண்டி முடித்ததும் தனது வலது கையை தாயை நோக்கி நீட்டிய படி இடது கையால் ஒரு தேனிர்க் கோப்பையை எடுத்தான். தன் முன் நீண்ட கையில் சிறிதளவு சீனியைக் கொட்டிவிட்டு மகனின் முகத்தை உற்று நோக்கினாள். அந்த முகத்தில் எதுவித ஏமாற்றமும் இன்றி நிர்சலனமாய் இருந்தது. அந்தச் சீனியை நக்கிக் கொண்டே தேனிரை குடிக்க ஆரம்பித்திருந்தான். அந்த ஏழ்மைநிலையை ஏற்றுக் கொண்டு குறிப்பறிந்து நடக்கும் முத்துவின் குணம் அவளை மேலும் வேதனைப் படுத்தியது. ஒரு சராசரி தாயாக அவனது அடிப்படை தேவைகளை கூட அவள் பூரணமாக பூர்த்தி செய்யாத போதும் கூட அவன் அடம் பிடித்து அழுவதில்லை. அந்த வயதிற்கே உரிய பிடிவாதம் அது வேணும் இது வேணும் என்ற வேண்டுதல்கள் எதுவுமே அவனிடம் இருந்து அவளிற்கு கிடைத்ததில்லை. அவள் எதைக் கொடுத்தாலும் அதை மறுபேச்சின்றி ஏற்றுக் கொள்ளும் குணம் அவனுக்கு வாய்த்திருந்தது. தனது வறுமைக்கு கடவுள் கொடுத்த பரிசுதான் இத்தகைய பிள்ளையோ என்னவோ என்று அவ்ள் மனம் நினைப்பதுண்டு. முத்து முன்பு தான் ஒரு குற்றவாளியாக நிற்பது போன்ற உணர்வு அவளிற்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.
மற்ற குவளை தேனிரை எடுத்துக் கொண்டு மாமியாரை நோக்கி நடந்தாள் மீனாட்சி, “மீனாட்சி. மீனாட்சி. அயலில் வசிக்கும் பார்வதியக்காவின் குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள் மீனாட்சி, “பிள்ள கோயிலடியில ஒரு வீட்ட வேலை இருக்காம் ராசண்ண சொன்னவர் வாறியோ” சொல்லி முடித்தாள் பார்வதி. மீனாட்சியின் முகம் மலர்ந்தது. அன்றைய பொழுதிற்கு வழி கிடைத்ததற்கு கடவுளிற்கு மனதிற்குள் நன்றி சொல்லிக் கொண்டாள். “ஓமக்கா வாறன்’ சரி வெளிக்கிட்டு விட்ட வா நான்
*நூற்று வெள்ளி இதழ் 动到
 

*நூற்று வெள்ளி இதழ் 요
போய் வெளிக்கிடுறன். பார்வதி போய்விட்டாள். மீனாட்சிபரபரப்புடன் ஆயத்தமானாள். சேலையை மாற்றி தலையை சீவிக் கொண்டாள். ‘மாமி தம்பியை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ நான் போட்டு வாறன்’ வாசல் தூணை அணைத்துக் கொண்டு தாயை ஏக்கத்துடன்
பார்த்தபடி நின்றிருந்தான் முத்து “அம்மா நானும் வரப்போறன்” “வேணம் அப்பு அம்மா போய் கெதியா வந்திடுவன் சரி வரேக்க உனக்கு என்ன வாங்கிவாறது” அவனை சமாதானப்படுத்துவதற்கு பேச்சை திசை திருப்பினாள். தலையை குனிந்தவாறே சிறிது நேரம் மெளனமாக நின்றிருந்தான் முத்து பின்பு தலையை நிமிர்த்தி “பிஸ்கோத்தும் வாழைப்பழமும்’ என்றான். மகனின் கன்னத்தை தடவியவாறே புறப்பட்டவள் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். கடவுளே என்ர பிள்ளய ஏமாத்திற மாதிரி ஒண்டும் நடந்திடக் கூடாது நிச்சயமாக வேலை கிடைக்க வேணும் நல்ல கூலி கிடைக்க வேணும் என்று வேண்டிக் கொண்டாள்.
பார்வதியின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். மீனாட்சி இவளிற்காக படலையிலேயே காத்திருப்பது தெரிந்தது. “அக்கா போனா வேலை இருக்கும்தானே என்று மெதுவாக கேட்டாள்’ இப்படித்தான் வேலை இருக்கும் என்று கேள்விப்பட்டு பல மைல் தூரம் நடந்து போய் “இண்டைக்கு இல்லை நாளைக்கு வாங்கோ’ என்று திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் எத்தனையோ “ம்கூம் இருந்தா செய்யிறது இல்லாட்டி திரும்பி வாறது இதொண்டும் புதுசு இல்லையே” பெரு மூச்சுடன் சொன்னாள் பார்வதி சிறிது நேரம் மெளனத்தில் கரைந்தது. ‘என்ன பிள்ள யோசனை பலமா கிடக்கு ஒண்டும் பேசாமல் வாறாய்”“ஒண்டுமில்லையக்கா இவர் இருந்திருந்தா நானும் என்ர பிள்ளயும் இப்பிடி கஸ்டப்பட வேண்டி வந்திருக்குமோ என்று
ਘਲ'
“உனக்கு இல்லாததால கஷ்டம் எனக்கு இருந்தும் கஷ்டம்தான்’பார்வதி தனது பொறுப்பற்ற குடிகார கணவனை இடித்துரைத்தாள். "எனக்கு இந்த மனுஷன் உழைச்சு உருப்பிடியா ஒண்டும் தாறதுமில்ல நான் கேக்கிறதையும் விட்டிட்டன் நான் கேக்கர்மலேயே தாறது வருஷத்துக்கு ஒரு பிள்ளையத்தான்” சொல்லி விட்டுவிரகதியாக சிரித்தாள் பார்வதி மீனாட்சிக்கு பார்வதியை பார்க்க பாவமாக
*நாற்று இதழ் - 25 டு)

Page 19
오 سی
இருந்தது. சிறிது காலமெனினும் தான்அனுபவித்த மகிழ்ச்சியான வாழ்க்கைஇவளிற்கு கிடைக்க வில்லையே என்று.
k »k 米
தாய் போன திசையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து. அவள் பார்வையை விட்டு விலகியதும் முற்றத்திற்கு வந்து கோலி உருண்டைகளை உருட்டி விளையாடத் தொடங்கினான். சிறிது நேரத்திற்கெல்லாம் சிறுவர்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக எங்கோ போவது அவன் கண்களில் பட்டது. ஒடிச் சென்று படலையடியில் நின்றபடியே “ அண்ணா .எங்க போநீங்க என்றான்”
“பணிச்சமரம் பழுத்திருக்கு அதுதான் பணிச்சங் குளத்திற்கு போறம்” முத்துவின் அயலவர்கள் யாவரும் இனப்பிரச்சன்ையால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் தான், தாய் தந்தையர் வேலைக்குப் போன பிறகு காட்டிற்கு பழம் பறிக்க, கிழங்கு தோண்ட என நேரத்திற்கு ஏற்றவாறு இவர்களும் தங்கள். வயிற்றுப் பாட்டை பார்க்க புறப்பட்டு விடுவார்கள். அந்த வகையில் பணிச்சமரம் பழுக்கும் காலம். அவர்களது வாழ்க்கையில் முக்கியமான தொன்றாகும். ஒரு போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு பணிச்சங்காட்டிற்கு போய் விடுவார்கள். அங்கு விழுந்திருக்கும் பணிச்சம் பழங்களை பொறுக்கித்தின்று தமது பசியைப் போக்கி நீரையும் குடித்துவிட்டு வீடு திரும்புவார்கள். இது ஒரு வழமையான நிகழ்வுதான். இருப்பினும் முத்து ஒரு போதும் இவர்களுடன் போனதில்லை. இன்று ஏனோ அவனுக்கு தானும் அவர்களுடன் போக வேணும் போல இருந்தது. திரும்பவும் வீட்டிற்குள் ஓடினான் “அப்பாச்சி நானும் மற்றவங்களோடை சேர்ந்து பணிச்சங் காட்டிற்கு போகப் போறன்.”
“வேண்டாம் கொம்மா வந்தாப் பேசுவா.”
“இல்ல அப்பாச்சி நான் தனியப் போகல்ல அம்மா வர முந்திநான் வந்திடுவன் ”தயக்கத்துடன் சொன்னான் முத்து.
*கங்க வெள்ளி இதழ் G2) 요
 

*நூற்று வெள்ளி இதழ். 오
கிழவி சிறிது நேரம் யோசித்தாள் வீட்டிலும் சமையலுக்கும் ஒன்றுமில்லை, மருமகள் வரும் வரையிலும் சிறுவன் பசியுடன் தனித்திருப்பதைவிட இப்படி பிராக்கா போய் வருவது அவளுக்கு சரியெனப்பட்டது. “சரி போயிட்டு கவனமா திரும்பி வரவேணும்.”
శన
அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவன் அடுப்படியை நோக்கி ஓடினான். அங்கே கண்ணில் பட்ட போத்தல் ஒன்றை கழுவி நீரை நிரப்பி எடுத்துக் கொண்டு மற்ற சிறுவர்களுடன் தானும் சேர்ந்து கொண்டான். பரட்டைத் தலைகளும் காய்ந்து போன உடலுமாக அந்த சிறுவர் கூட்டம் காட்டை நோக்கி போய் கொண்டு இருந்தது.
பிரதான வீதியையும் கோயிலையும் தாண்டி ஒரு வீட்டின் முன்பு நின்றாள் பார்வதி “அம்மா. அம்மா.’ என்று வீட்டை நோக்கி குரல் கொடுத்தாள். வீட்டிற்குள் இருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். “வேலைக்கு ஆள் வேணும் எண்டு கேட்டனிங்களே ராசு அண்ண சொன்னவர்.”
“ஓம். ஓம் உள்ளுக்கு வாங்கோ’ அவள் இவர்களை எதிர்பார்த்திருந்தது போல படலையை திறக்கவும் பார்வதி மீனாட்சியை பார்த்து நிம்மதி பெரு மூச்சு விட்டுக் கொண்டாள். அந்தப் பெண் இவர்களை வீட்டின் பின்புறமாக அழைத்துச் சென்றாள். சமையலறையை ஒட்டிய விறாந்தையில் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. “இந்த அரிசியை புடைச்சு சுத்தப்படுத்த வேணும், இந்த அண்டாவில் உள்ள அரிசியை இடிச்சு வறுத்துத் தர வேணும். அவ்வளவுதான்” சிரித்தபடியே சொன்னாள். நன்கு சிரித்த முகம் குரலில் அதிகாரம் இல்லை. அன்பான பார்வை மீனாட்சிக்கும். பார்வதிக்கும் வேலை கிடைத்தது மட்டுமன்றி அந்தப் பெண்ணின் போக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.
சுறுசுறுப்புடன் வேலையைத் தொடங்கினார்கள். வேலையைத் தொடங்கி சற்றைக்கெல்லாம் அந்தப் பெண் தட்டில் சாப்பாடும் குவளையில் தேனிரும் கொண்டு
*நாற்று இதழ - 25 G3)

Page 20
와다 ആൽയ
வந்தாள். “சாப்பிட்டுட்டு வேலையை செய்யுங்கோ’ என்றாள். மீனாட்சி திரும்பி பார்வதியைப் பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்திருந்த கேள்வி பார்வதிக்கு நன்றாகவே புரிந்தது. இப்படித்தான் ஒருமுறை ஒரு விட்டிற்கு இருவரும் வேலைக்கு சென்றிருந்தனர் கூலி நூறு ரூபாய் என்று சொல்லி விட்டு கடைசியில் இருபது ரூபாயை மட்டும் நீட்டினார்கள். ஏன் என்று கேட்டதற்கு இரண்டு நேரம் சாப்பாடு கொடுத்ததாக சொல்லி அதில் கழித்திருப்பதாகவும் சொன்னார்கள். காலையில் போட்ட பழைய சோற்றுக்கும் மதியம் அரைகுறையாகப் போட்ட சாப்பாட்டிற்கும் எண்பது ரூபாய் கழிக்கப்பட்ட கொடுமையை வெளியே சொல்லாது இருவரும் மனச் சுமையுடன் வீடு திரும்பியிருந்தார்கள். அதற்குப் பிறகு போகும் இடங்களில் சாப்பாடு தந்தாலே இருவருக்கும் மனம் திக் திக் என அடித்துக் கொள்ளும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்கவும் “சாப்பிடுங்கோ’ மீண்டும் வீட்டுக்காரி சொன்னாள். இருவரும் கையலம்பி விட்டு சாப்பிடத் தொடங்கினார்கள். “யோசியாதயடிபிள்ள வீட்டுக்காரி நல்லவவா தெரியது கூலியில கை வைக்கமாட்டா” மீனாட்சி மெளனமாக தட்டில் இருந்த பாணை பிய்த்து சம்பலுடன் சேர்த்து வாயில் வைக்கப் போனவள் அப்படியே நின்றாள். கண்கள் கலங்கியது அடிவயிற்றை என்னவோ செய்தது. இதை கவனித்த பார்வதிக்கு அவள் நிலை புரிந்தது. ‘என்ன பிள்ள வீட்டு ஞாபகம் வந்திட்டுதோ” “ ஓமக்கா தம்பிக்குகூட இண்டைக்கு காலம ஒண்டும் குடுக்கேல்ல வீட்டில சமைக்கிறதுக்கும் ஒண்டும் இல்லை. மாமியும் பிள்ளையும் நான் போகும் வரைக்கும் பட்டினிதான் நான் மட்டும் இங்க என்னென்டக்கா சாப்பிடுறது”
“எனக்கு விளங்குதடி ஆனா யோசிச்சுப் பார் இவ்வளவு வேலையையும் செய்யிறதுக்கு உடம்பில தெம்பு வேண்டாமோ? வேலையை முடிச்சாத்தான் கூலி, அது கிடைச்சாத்தான் அதுகளிற்கு சாப்பாடு”
அவள் சொல்வது நியாயமானதுதானே காலை வேலைக்கு வரும் போதே மீனாட்சிக்கு உடம்பு சோர்வாகவும் தலை இலேசாக சுற்றுவதுபோலவும் இருந்தது. இந் நிலையில் சாப்பிடாமல் எப்படித்தான் வேலைகளை செய்து முடிப்பது ஏதோ
*நூற்று வெள்ளி இதழ் 孟9
 

*நூற்று வெள்ளி இதழ் 요
* கடமைக்கு சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.
sk ck ck ck
முத்துவிற்கு அது உற்சாகமான அனுபவமாக இருந்தது. பனிச்சங்குளத்தை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதை வழியே அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். ஒருவருடன் ஒருவர் அடித்துப் பிடித்து ஓடுவதும் கோலிகளை உருட்டி விட்டு அதன் பின்னே ஓடுவதுமாக அவர்கள் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. முத்துவின் வயதை ஒத்த ஆண் பிள்ளைகள் யாரும் அங்கே இருக்கவில்லை. அவன் தன் கையில் உள்ள தண்ணீர் போத்தலை இறுக பிடித்தபடியே பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தான். அவர்கள் காட்டுப் பூக்களை பறிப்பதும் அணில்களையும் முயல்களையும் வேடிக்கை பார்ப்பதுமாக வந்து கொண்டிருந்தனர். முதலில் தேவிதான் முத்துவின் கவனத்தை திருப்பினாள். “முத்து நீ இதுக்கு முந்தி ஒருக்காலும் வரேல்லையோ’ இல்லை என்பது போல பலமாக தலையை ஆட்டினான் முத்து. தேவி வாஞ்சையுடன் அவன் தலையை தடவிக் கொடுத்தாள். பாதையில் இடக்கு முடக்கான இடங்களில் அவன் நடக்க சிரமப்பட்ட போது அவனுக்கு கை கொடுத்து உதவி செய்தாள். முத்து சீக்கிரம் தேவியுடனும் தோழிகளுடனும் ஒட்டிக்கொண்டு விட்டான். அவர்கள் பணிச்சங்குளத்தை அடைந்தபோது சூரியன் தன் வெப்பக்கதிர்களை பரப்ப ஆரம்பித்திருந்தான். இருப்பினும் குளமும் அதைச் சூழ உள்ள பனிச்சமரங்களும் அந்த சூழலுக்கு குளுமையை வழங்கிக் கொண்டு இருந்தது. பனிச்சமரத்துக்கு கீழே பழங்கள் பழுத்து விழுந்திருந்தன. அவற்றைக் கண்டதும் சிறுவர்கள் துள்ளி ஓடிப்போய் அவற்றை சேகரிக்கத் தொடங்கினர். அணில்களும், பறவைகளும் கடித்தது போக எஞ்சியநல்லவற்றை தேர்ந்தெடுத்து சேகரிக்கத் தொடங்கினார்கள். முத்துவும் அவர்களுடன் சேர்ந்து ஓடி ஒடி பழங்களைச் சேகரித்தான். சேகரித்த பின்பு எல்லோரும் குழுமியிருந்து சாப்பிடத் தொடங்கினார்கள். முத்து தேவியின் அருகில் இருந்து சாப்பிடத் தொடங்கினான். அவனுக்கு இப்பிடிச் சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வள்வு நேரம் ஒளித்திருந்த பசி அவனை அகோரமாக ஆட்கொள்ள சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தான். “முத்து இஞ்ச வா”
*நாற்று இதழ் 25

Page 21
s - w بسسسة grom
பையன்கள் அவனைக் கூப்பிட்டதும் எழுந்து போனான்அவர்கள் அவனுக்கு நல்ல பழங் களைக் கொடுத்தனர். அந்தச் சிறுவர் கூட்டத்திலேயே மிக இளையவன் ஆதலால் சிறுவர்களும் அவனுக்கு மாறிமாறிபழம் தந்தனர். முத்துவிற்கு திடீரென தாயினதும் த பேத்தியினதும் ஞாபகம் வந்தது. "ஐயோ நான் சாப்பிடுறேனே அப்பாச்சியும், அம்மாவும் என்ன செய்வார்கள் என்று அவன் பிஞ்சு மனம்யோசிக்கத் தொடங்கியது” தன்னிடம் உள்ள பழங்களில் நல்ல வற்றைப் பொறுக்கி காற்சட்டைப் பைகளில் அடைத்தான். சிறிது பசியாறியதும் கள் பனிச்ச மரத்தின் கீழ் விளையாடத் தொடங்கினர். முத்துவிற்கு விளையாட்டில் மனம் செல்லவில்லை. அங்கும் இங்கும் ஒடி அந்த அழகான காட்டுச் சூழலை வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.
*్క
sk ck 米
அடுப்பின் வெக்கை மீனாட்சியின் முகத்தில் வியர்வையாக வழிந்தது. இந்த தாட்சிச் சட்டி மாவை இறக்கினால் போதும் அவர்களது வேலை முடிந்து விடும் பிறகு கூலியை வாங்கிக் கொண்டு விட்டிற்குப் போகவேண்டியது தான். இவ்வளவு நேரம் தன் பிள்ளைபசியால் எப்படித் துடித்துக் கொண்டிருப்பான் என்று நினைத்து அவள் தாயுள்ளம் வெந்து கொண்டிருந்தது. பரபரப்புடன் வறுத்து முடித்த மாவை பெட்டிக்குள் கொட்டிவிட்டு அடுப்பை அணைத்தாள். வியர்வையை சேலைத்தலைப்பால் துடைத்து விட்டு நிமிர்ந்த போது பார்வதியும் வேலையை முடித்ததற்கு அடையாளமாய் மடியிலிருந்த வெற்றிலைப்பையைத் திறந்து வெற்றிலை போடத் தொடங்கியிருந்தாள். மீனாட்சிக்கு எப்போதடா வீட்டுக்குப் போவோம் என்றிருந்தது “அம்மா. அம்மா.” என அவசரத்துடன் வீட்டுக்காரியை
*நூற்று வெள்ளி இதழ் 요
 
 
 
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
கூப்பிட்டாள். “ஓ வேலை முடிஞ்சுதோ கொஞ்சம் இருங்கோ வாறன்’ என்றவள் வீட்டுக்குள் போய் வரும்போது தேனீருடன் வந்தாள். மீனாட்சியும் பார்வதியும் அவசர அவசரமாக அதைக் குடித்து முடித்து நிமிர்ந்தபோது கூலிக்காசை இருவரிடமும் தந்துவிட்டு “இனித்தேவை எண்டால் சொல்லிவிடுறன்’ என்றாள். சிரித்த முகத்துடன் கூலிக்காசை அவசர அவசரமாக பிரித்துப் பார்த்த இருவரது முகங்களும் மலர்ந்தது. அதில் பத்து ரூபாய் அதிகமாக இருந்தது. “சரி அம்மா நாங்கள் போட்டு வாறம்” என்று விடை பெற்று அவசர அவசரமாக நடை போட்டனர். மீனாட்சிக்கு ஏதோ அன்றைய பொழுது நன்றாக விடிந்திருப்பதாகப் பட்டது. வழமையான ஏமாற்றங்கள் ஏதும் அவளை இன்று அணுகவில்லை. தரப்பட்ட காசில் மிக அத்தியாவசியமான சாமான்களை எப்படி வாங்கலாம் என்று கணக்குப் போட்டவாறே கடையை நோக்கி நடந்தாள். சாமான்களைப் பட்டியலிட்டு வாங்கி முடித்தவளின் கண்களிற்கு வாசலில் கட்டித்தூக்கிய வாழைக்குலை தென்பட்டது. காலையில் மகன் சொன்னது ஞாபகத்திற்கு வரவே சிறிது பிஸ்கற்றும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டாள். அவள் மனதில் ஏதோ பெரிதாக சாதித்து விட்டது போன்று மகிழ்ச்சி. எப்போது வீட்டுக்குப் போவோம் இவற்றை மகனிடம் கொடுத்து அவன் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியைப் பார்ப்போம் என்றிருந்தது. நடையை விரைவு படுத்தினாள்.
ck 米 ck 米
பொழுது சாயத் தொடங்கியிருந்தது. கிழவிக்கு இன்னும் பேரனை காணோமே என்ற அச்சம்.தொற்றிக் கொள்ள படலையடியில் வந்து நின்றாள். நேரம் செல்ல செல்ல அவள் மனம் திக். திக். என அடித்துக் கொண்டது. கடவுளே மருமகள் வந்து சேர்வதற்கு முன் பேரன் வந்து சேர்ந்துவிட வேண்டும் என வேண்டிக் கொண்டாள். தூரத்தே சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக வருவது தெரிந்தது. தனது இடுங்கிய கண்களை மேலும் இடுக்கி கொண்டு கையை புருவமுகட்டிற்கு நேரே பிடித்தபடி தன் பேரன் தட்டுப்படுகிறானா? எனப் பார்க்கத் தொடங்கினாள்.கூட்டமாக சிறுவர்கள் அவள் படலையை தாண்டி போன போதும் அவசர அவசரமாக முத்து முத்து என மெதுவாக கூப்பிட்டாள். பொழுது சாய்ந்துவிட்டதால் அவளிற்கு எல்லாமே
*நாற்று இதழ் - 25 G2)

Page 22
위 urbang | தெளிவற்ற விம்பங்களாகவே தெரிந்தது. கடைசியாக வந்த குழு அவளைத் தாண்டிப் போன போதும் கூட முத்து வந்து சேரவில்லை. கிழவி செய்வதறியாது திகைத்து நின்றாள். பயத்தில் அவள் நா மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது. சிலையென நின்றவளை “என்ன மாமி பொழுது சாய்ஞ்ச நேரம் படலையடியில நிக்கிறியள் உள்ளுக்க வாங்கோ பணிவேற பெய்யத் தொடங்கிற்று. வருத்தம் உழைக்காம கெதியா உள்ளுக்க வாங்கோ என அன்பாக கடிந்தபடி உள்ளே போனாள். அவள் கண்கள் ஆவலுடன் மகனைத் தேடியது. அவள் கண்களிற்கு தட்டுப்படாமல் போகவே “முத்து. முத்து.என ஆவலுடன் கூப்பிட்டாள் பதில் வரவில்லை” “எங்க மாமி முத்து உங்க எங்கெயெண்டாலும் விளையாடப் போனவனே’ சிறிது கலவரத்துடன் கேட்டாள். கிழவி கையை பிசைந்தபடி நிற்க ஒடிச்சென்று வேலிக்கருகில் நின்று அயல் வீடுகளை நோக்கி “முத்து. முத்து.” என கூப்பிட்டாள் பதில் இல்லை. “எங்க மாமி எங்க போனவன்” என்றாள் திரும்பிமாமியாரை நோக்கி கிழவி பயந்தபடி நடந்தவற்றை சொல்லி முடிக்கவும் “இதுக்குத்தானே உங்களை காவலாவைச்சிட்டுப் போனனான் சின்னப் பிள்ளை விளையாட்டுத்தனமாக கேட்டா நீங்களும் ஒமெண்டு விடுறதா’கத்தியபடி பொங்கி வந்த அழுகையை சிரமபட்டு அடக்கிக் கொண்டு அயல் வீடுகளை நோக்கி ஓடினாள் வழியில் தன் வீட்டு வாசலில் தேவி நின்றிருந்தாள். “தேவி முத்துவை கண்டனியம்மா” “
முத்து எங்களோடதான் இருந்தவன் பிறகு மூலை வீட்டு கிரியோட விளையாடிக் கொண்டிருந்தான். பிறகு நான் காணேல்ல” சிறுமியின் பதிலைக் கண்டு ஏமாற்றம் அடைந்தவள் கிரியின் வீட்டை நோக்கி ஓடினாள். தேவியின் விழிகள் கலவரத்தால் விரிந்தது. முத்து மாறி மாறி தம்முடனும் பையன்களுடனும் விளையாடிக் கொண்டு நின்றதால் அவன் அவர்களுடன் வந்து இருப்பான் என எண்ணி விட்டாள் தேவி தேவி சொன்ன பதிலையே கிரி மாற்றிச் சொன்னான். “முத்து தேவியக்காளோடதான் இருந்தவன்” என்றான். மீனாட்சிக்கு நிலவரம்புரிந்தது யாருமே தன் மகனை கூட்டிவரவில்லை மற்றவர்களுடன் சேர்ந்து வருகிறான் என்ற நினைப்பில விட்டு விட்டு வந்து விட்டார்கள் “ஐயோ என்ர பிள்ளை’கத்தியபடி இருளையும், பனியையும் பொருட்படுத்தாதுபணிச்சங்குளத்தை நோக்கிய காட்டுப் பாதையில் ஓடத் தொடங்கினாள் சில் வண்டுகளின் இரைச்சலும் காட்டு விலங்குகளின் உறுமலும் அந்த இருள் நேரத்தின் பயங்கரத்தை இன்னும்
*ாற்று வெள்ளி இதழ்
 

*நூற்று வெள்ளி இதழ் 요
கூட்டியது. காலில் முள்ளும் கல்லும் குத்துவதை பொருட்படுத்தாது அந்த காட்டுப் பாதையில் வெறிபிடித்தவள் போல ஒடத் தொடங்கினாள். பகலில் விறகு பொறுக்க மற்ற பெண்களுடன் சேர்ந்து வந்தால் சரி மற்றும்படி தனித்து இந்த நேரத்தில் அவள் இந்த காட்டிற்கு வந்ததில்லை. ஒடிய வேகத்தில் கொடிகள் காலை இடநிற்று இடறிய வேகத்தில் மரங்களுடன் மோதி கை கால்களை சிராய்த்துக் கொண்டாள். தூரத்தில் எங்கோ யானை பிளிறும் ஓசை கேட்டது. “கடவுளே பணிச்சங்குளத்திற்கு யானைகள் தண்ணி குடிக்க வரும் என்று சொல்லுறவயள் அல்லோ ஒருவேளை. ஒருவேளை தன் மகன் எந்த யானையின் காலிலாவது மாட்டுப்பட்டு. இருக்காது. த்னக்குத்தானே ஆறுதலும் கூறிக்கொண்டாள். ஏனோ யானை மிதித்து செத்துப் போன முருகனினி’ ஞாபகம் அவளிற்கு அந்த நேரம் வந்தது. பெரிதாக குரல் எடுத்து அழுதபடி ஓடினாள். தூரத்தில் நிலவொளியில் பனிச்சங்குளம் அமைதியாக தெரிந்தது. காலை வழுக்க வைத்து ஏதோ ஒன்று பாதத்திற்கு கீழாக நகர்ந்து சர்.சர்.சர். என்று சருகுகளிற்குள் ஓடி மறைந்தது.
“ஐயோ பாம்பு’ என தனக்குள் தானே கத்திக் கொண்டாள். இந்தக் காட்டில் விஷ பாம்புகள் அதிகம் ஒருவேளை முத்துவை பாம்பு கடித்திருக்குமோ? போன மாதந்தானே விறகு பொறுக்க வந்த செல்லத்தை பாம்பு தீண்டி இறந்து போனாள். “கடவுளே என்ர பிள்ளைக்கு நீதான் துணை” உடல் வியர்வையால் தெப்பலாக நனைய கை,கால்கள் கட்டுப்பாடிழந்து நடுங்கத் தொடங்கியிருந்தது. பனிச்சங்கு மணலில் இடறி விழுந்தவள் “முத்து முத்து” எனக் கூப்பிட்டாள். அவள் குரல் அவளிற்கே கேட்கவில்லை போலிருந்தது. எங்கோ ஆதாள பாதாளத்தில் இருந்து ஒலிப்பது போல அவள் குரல் கேட்டது. உதட்டை நாவால் எச்சில்படுத்தி தன்னை ஒருவாறு அசுவாசப்படுத்திக்கொண்டு “முத்து. முத்து.’ என உரக்கக் கூப்பிட்டாள் அவள் குரல் திசையெங்கும் எதிரொலித்தது அவளது அழுகை அலறல் எதிரொலியாய் எழுந்து அவளையே கிலேசம் கொள்ள வைத்தது “முத்து. முத்து. அம்மா வந்திருக்கிறன் ஐயா நீ எங்கே இருக்கிறாய்”
“முத்து. முத்து. ஒடி வா அம்மாட்ட வா” வெறிபிடித்தவளக கத்தத்
*நாற்று இதழ் - 25

Page 23
위 Myndroom |
தொடங்கினாள், ம்கூம் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அங்குமிங்கும் ஒடி ஒடி அந்த நிலவொளியில் மரத்திற்குப் பின்னும் புதர்களிற்கு இடையிலும் மகனை தேடத் தொடங்கினாள். அதோ. அந்த மரத்திற்குப் பின்னால் தெரிவது என்ன? ஒரு சோடி சிறிய பாதங்கள். மல்லாந்த நிலையில் “கடவுளே என்ர பிள்ளை’ என்றாள். நிலவொளியில் லேசாக தெரிந்த அந்த பாதங்களை நோக்கி ஓடினாள் மனதில் ஒருவித நிம்மதியும் கலவரமும் தொற்றிக் கொண்டது. மரத்தின் பின்னே மல்லாந்து முத்து படுத்திருக்க ஓடிச்சென்று அவனை வாரி அண்ைத்துக் கொண்டாள். அவனிடம் இருந்து மூச்சும் சன்னமான குறட்டை ஒலியும் வந்து கொண்டிருந்தது. மகனை இறுக அணைத்து கொண்டு முத்தமிட்டாள். “முத்து. முத்து.” அவன் கன்னத்தை தட்டி எழுப்பினாள் கண்களை கசக்கியபடி கண்களை திறந்தான். தாயைக் கண்டதும் பூவாய் சிரித்தபடி கழுத்தைக் கட்டிக் கொண்டான். “அம்மா. அம்மா. எப்ப வந்தனி. சாப்பிட்டியா அம்மா நான் பணிச்சம் பழம் சாப்பிட்டனான். இந்தா இது உனக்கும் , அப்பாச்சிக்கும் சட்டைப்பையில் உள்ள பழங்களை எடுத்து தாயிற்கு காட்டினான். மீனாட்சிக்கு என்ன பேசுவது என தெரியவில்லை. மகனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். அவனை தூக்கி இடுப்பில் வைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நிலவு வழிகாட்டத் தொடங்கியது.
ஐஸ்லாந்து நாட்டு மக்கள் தங்கள் அம்மா பெயரையே இனிஷியலாகப் போட்டுக் கொள்கின்றனர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசளிப்பு விபரத்திலும் எழுத்தாளரின் தாயார் பெயரை முதலிலும், அடுத்து தந்தையின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
கல்கண்டு 23-8-2004 *நூற்று வெள்ளி இதழ்
2
 

*கங்ா வெள்ளி இதழ் 요
భ్యు; nభణి
w:x:
2 ஆம் லெப். ம்ாலதி (பேதுறு சகாயசீலி) ஆட்காட்டிவெளி, மன்னார்.
தமிழீழப் பெண்ணென்றெழுந்தாய் தடைகளை வென்று தரணியில் உயர்ந்தாய் ஒரு படையணியின் பெயர் எழுதி உன் பின்னே வந்த மக்களுக்கோர் சேதி சொன்னாய் - விடியும் என்றதோர் பொழுதில் --இருள் விலகிடும் இங்கெம் வீடுகளில் இருண்ட கருவறைகளில்.
*நாற்று இதழ் - 25

Page 24
9 Pots
சட்டம் என்ன சொல்கின்
67ண்க்கு கடுமையான யோசனையாகக் கிடக்கு.
மண்டையைக் குடையுது. சா என்ன கெட்டித்தனமையா. சும்மா வீட்டில வந்து அடுகிடை படுகிடையாக் கிடக்கயுக்க வேலை யில்லயாமோ. இப்பதான் வேலை கூரையப் புடுங்குது.ாங்,
எட நாந்தான் கிடந்து அந்தரப்படுறன். அவகள் தங்கடபாடு என்னடி சொல்லிப் போட்டுப் போனவன். எண்டா ஒண்டுமில்லை. வேலையாக்கிடக்கு. பிறகு வாறனெண்டு சொன்னவர். பொறுக்கி நாயஸ் எனக்குப் பின்ன ஏறிச்செண்டா என்ன செய்வன் தெரியுமே.
பின்ன என்ன பாருங்கோ நீங்களே சொல்லுங்கோ அயல்ல இருந்த பழக்கம் அங்கின ஏதும் நன்மை தீமையெண்டா வாறது போறதுதான். இருந்தாப் போல எனக்கும் வேலை மாற்றம், இடம் மாறிப் போக வேணும். வாகனத்தைக் கொண்டு சாமான் ஏத்தவர அயலட்டையில் பெடியலெல்லாம் ஓடி வந்ததுகள் சாமானுகளைத் தூக்கியேத்தி அடுக்கி விட்டுதுகள்.
எட இவன் மட்டுந்தான் பறிக்கிற இடம்மட்டும் கூட வந்தவன். சாமானுகளப் பறிச்சு வைக்க வேண்டிய இடங்கள்ள வச்சுப்போட்டு பிள்ளையளோட விளையாடிப் போட்டுப் டோனான்.
*நாற்று வெள்ளி இதழ் கு?
 

*நூற்று வெள்ளி இதழ் 요
புதிசாக் குடி வந்த இடத்தில பக்கத்து வீட்டில ஒரு கிழவி. நல்ல குணம் கொஞ்சம் புரிந்துணர்வுள்ள கிழவி. பின்ன. ஒரு நாள் கடைதெருவிற்குப் போயிற்றன். திரும்பி வரக்க வீட்டில இவன் நிக்கிறான். மகள்காறி குசினிக்க அலுவலா நிக்கிறாள். என்னைக் கண்டவுடன ஏதோ வாங்கவேணும் எண்டு மாமா கேட்டவராம்
அதுதான் காசுக்கு
வந்ததாம். எண்டாள். ஆள் முத்தத்தில போட்டிருந்த
கல்லுக் குவியல்லதான்
eum
இருந்தவன்.
எட மாமா கடையில யெல்லே 'அவசரமோ தம்பி போய் வாங்கி வரட்டோ’ எண்டு கேட்டன்.
தந்தா நல்லம்’ எண்டான். நான் வெளிக்கிட்டு சந்தைக்குப் போய் பெடியனட்ட காசை வாங்கிக் கொண்டு திரும்பி வாறன். இவன் உள்வீட்டு விறாந்தையில படுத்திருக்கிறான். இப்பிடி ஒருநாளும் படுக்கிறவனில்ல, ஏதும் சுகமில்லையோ. எண்டு நினைச்சிட்டும் நான் ஒண்டுங்கேக்கல்ல. எண்னத்தைக் கேக்கிறது. அவன் எழும்பி காசை வாங்கிக் கொண்டு போயிற்றான்.
*நாற்று இதழ் - 25

Page 25
பிறகும் ஒருநாள் நான் சேரனில ஒரு சாமானுக்கு காசு கட்டினனானி , கொழும் பால வாறசாமான் காசு கட்டினா எடுத்துத் தருவாங்கள்.
ஒரு பத்தாந்திகதி அச் சவாரங் கட்டின சாமான் வருதெண்டாங்கள். அப்ப மிச்சக் காசு கட்டவேணுமே. ம். எண்ட ஊரில கொஞ்சக் காசு வருமதி இருந்தது. வாங்கிக் கொண்டு வாறன்,. கந்தசாமி கோயிலடியில் சாமான் இறக்கி பங்கிடுகிறாங்கள். என்னைக் கண்டவுடன கடைப் பொடியன் “வீட்ட போய்  ெச |ா ன’ ன ந |ா ங் க ள அண்ணையிட்ட” எண் டான் “அண்ணையிட்டயோ..?” “ஓ. ஒரு ஹ"ரோக் கொண்டாவில நிக்கிறார்.” எண்டான். பொடியன் வேலைக்குப் போகேல்லயோ... எண்டு யோசிச்சுக் கொண்டே என்ரபங்குச் சாமான வாங்கிக் கொண்டு வீட்ட போனன். போனா...! எட இவன் தான் நிக்கிறான். மோள் கலாவும் வீட்டிலதான் நிக்கிறாள். ஒருவயசுப் பிள்ளை நிக்கிற வீட்டில இளந்தாரி
:
வந்து நிக்கிறான். இவன் இப்பிடி ஒரு நாளும் நிண்ட தில்லை. இப்ப ரெண்டு வரியமாகிட்டத்தானே குடியிருந்தனாங்கள். நான் வந்த பிறகும் சாவகாசமா நிண்டு சாப்பிட்டுக்கீப்பிட்டு ஆறுதலாப் போறாண் . என்னன் கரவு நினைக்கிற,
மற்ற நாள் செவ்வாக் கிழமை, அவன் வேலை க்குப் போகேல்ல. நான் சந்தைக்குப் போயிற்று வாறன், ஆள் வீட்ட நிக்குது. கலா குசினிக்க இவனி ஹோலுக்க, நான் குசினிக்க கொண்டேச் சாமான வைக் கேக்க ரகசியமா கலாட்ட ‘எப்ப வந்தவன்’ எண்டு கேட்டன். கொஞ்சங்கூட சலனமில்லாம “இப்பான்’ எண்டாள். "ஆங்’
எண்டிட்டு விட்டிட்டன்.
பிறகும் மற்றச் சனி ஞாயிறு முடிஞ்சு திங்கள் இதேபோல வந்து நிக்கிறான். வீட்டில நாங்களெல்லாரும்
*கங்று வெள்ளி இதழ்

*நாற்று வெள்ளி இதழ்
வேலுைக்குப் போயிருவம். ரெண்டுவயதில மகன்ர பிள்ளை மட்டும் கலாவோட நிப்பள். மத்தியானம் இவன் நிக்கிறான். ஒரு நாளுமில்லாத திருநாளா செய்யிற வீட்டுவேலையிலும் உதவி செய்யிறான். சொந்த வீடுமாதிரிப் பிழங்கிறான். ஆனா நாங்கள் நிக்குமட்டும் எங்ளோட தான் கதை. நாங்கள் போனபிறகு.? மெல்ல ஒரு நாள் கலாவிட்டக் கேட்டன். என்னடி இவன் நாங்கள் இல்லாத நேரமாப் பார்த்து வாறான் உன்னோட ஏதும் கதைச்சவனே. அவள் பட்டெண்டு “சீ... அப்பிடி ஒரு நாளும் வரயில்லயே. அதுகும் வர நீங்களும் வாறியள்” எண்டாள்.
விட்டிட்டன். ஆனா ஒரு நாலைஞ்சு நாளைக்குள்ள பக்கத்து வீட்டுக்கிழவி என்னட்ட வந்துது. “ யாரும்மா இங்க வந்துக்கிட்டிருக்கிற
99
LILI
எண்டு கேட்டா. எனக்கு துணுக் கெண்டுது. காட்டிக் கொள்ளாம “ஏனாச்சி?” எண் டு கேட்டன். “இல்ல நீங்க இங்கிட்டுப் போனதும் வருது. கலாவும் அதுவும்
요
உள்ளுக்கேயே இருந்து பேசிக்கிறாங்க. இந்தப் பிள்ளையைக்கூட கையில விஸ் கட்டைக் குடுதது நம்பவிட்டுக்கு விட்டுறாங்க. அப ற மீ நா தா னி நீங்களுமில் லயேன்னுட்டு வந்து வாசப்படியில குந்தி யிருக்கறது.’ எண்டது மனிசி.
எனினணி டா லுமி என்ரபிள்ளைய விட்டுக்குடுக் கக் கூடாது எண் டிட்டு “ஆ. அதுஎங்கட தெரிஞ்ச பொடியண் தான் துTரத்து உறவு’ எண்டன். பிறகும் ஒரு எச்சரிக்கை உணர்வு வர, “ எதுக்குமம்மா அவன் வந்தா நீங்கள் எப்பன் வந்திருங்கோ நாளைக்கொரு சொல்லுக்கிடம். எண்டன்.”
இவளேன் என்னட்ட ஒழிக்கிறாள். நான் ஏதும் இல்லாததக் கேக்கப்போய். சும்மாயிருக்கிற மனதைக் கிண்டி விட்டிருவானோ, எண்டும் பயமாய்க்கிடக்கு.
*நாற்று இதழ் - 25
GS)

Page 26
와
அவள்தான் இல்லையெண்ணுறாள்.
என்னவோ நானும் என்னால ஏலாம மோனுட்டச் சொன்னன். இப்பிடியிப்பீடியா வாறான் போறான் ஆக்களில்லாத நேரம் நாங்கள் வந்த பிறகும் நிண்டுதான் போறாண். ஏதும்...? பிரச்சனை வந்திருதோ தெரியேல்ல.
“ வடிவாக்கேள். இவவட்ட ஒழிச்சு நடந்துபோட்டு மாட்டப் போறாவே. ம். அவன் அப்பிடிப்பட்ட ஆளில்ல.” அவ்வளவு தான் அவன் போட்டான். அடக்கடவுளே இவளையும் கேக்கேலாம,அவனையும் கேக்கேலாம, உள்ளுக்கு ஒண்டு மில்லாட்டி வீணா நான் என்ர பேரைக் கெடுத்ததாப் போகுமே. இந்த நாளையில ஏதோ சொல்லுவினமே பிரெண்ட்சிப் வேறகாதல் வேற ரெண்டையும் போட்டுக் குழப்பக்கூடாது எண்டு எண்டாலும் எனக்கு முன்னை பார்த்த ஒரு தமிழ்ப்படத்தின்ர வசனம் அடிக்கடி பட விளம்பரத்திற்கு ரேடியோவில போன வசனந்தான். நெஞ்சில அறையுறமாதிரிக் கேக்குது. “ஆயிரமிருந்தாலும் அந்நியன் அண்ணனாக முடியாது”.
பொறுமையாத்தான்
*நங்க வெள்ளி இதழ்
இருந்தன். இவளின் ர நெருக்கமான சிநேகிதி ஒருத்தி. இருந்தாள் அவளிட்டப் போய் இதைப் பற்றி விசாரிப்பம் எண்டு போ ன ன . “அ வ ள உங்களுக்குத் தெரியாதே நீங்கள் பழையவீட்டில இருக் கேக் கயே உது இருந்தது. அவர்தான் கே ட டு க கே ட டு த திரிஞ்சவர். கலா இப்ப தான் ஒமெண்டதாம் . எனக்குச் சொன்னவள்.”
கடலில தத்தளிச் சவளுக்கு மிதப்புக் கிடைச்ச மாதிரி, எனக்கு ஒரு தெளிவு வீட்ட வரக்கயே இந்த அசட்டுப் பெட்டை ஏணிப்பிடி மறுத்தது. நாளைக்கு ஏதும் ஏமாத்து வேலை யெண்டா இதுக்கு என்ன பிடியிருக்கு... இப் பிடித்தானே அறியாமையில கணபிள்ளையஸ் ஏமாந்து போறது ம் . . . இந்த நாளையில ஆரை
2

*நன்று வெள்ளி இதழ்
நம்பிறது. வயித் துக்குள்ள இருக்கிறதயே நம்பேலாமக் கிடக்கு. எண்டு நினைச் சுக் கொண்டு வீட்ட வாறன்.
அவன் ஏதோ மேசையில வச்சு எழுதுறான். பக்கத்தில மேசையில கவிண்டு கைய ஊண்டிக்கொண்டு கலா ஏதோ சொல்லிக் கொண்டு நிக்கிறாள். என்னைக் கண்டவுடன கலா நிமிந்து நிக்கிறாள். அவன் கொஞ்சமும் அசையாம வேலை செய்யிறான்.
நானும் அதே அறைக்க போறன். ‘எப்ப வந்தனிங்கள்’ எண்டு சம்பிரதாயத்துக்கு ஒரு சொல்கேட்டேன். எண்டாலும் என்ர மனதுக்க ஒரு திடுக் காட்டம்.
கற்புக்கரசி, சிவகாமியின் சபதம் பதிபக்தி யிலிருந்து விதி படம் வரைக்கும் ஒருக்கா கண்ணில ஓடி மறையுது. நாளைக்கு ஏதும் இசகு பிசகா நடந்து ஒரு பிரச்சனை எண்டா... ஏன் நடக்காது
오
எண்ணுறியளே. வயது வந்த பிள்ளை. சந்தோசமாத்தான் கதைச்சுக் கொண்டு நிக்குதுகள். கதையோட கதையா. எட்டி நெஞ்சில... பிள்ளையின் ர நெஞ்சிலதான் கை வெச்சினா னெண்டா. பிள்ளை வழுக்கி விழ எவள நேரம். காலங்காலமா குடும்பம் நடத்துற பொண்டு களுக்குத் தெரியாதே. நான் சொல்லுறன்.
ஒரு இங்கிலீசுப் பொன் மொழி இருக்கு. ‘முத்தமிடும்போது (ஏணி) கணிகள் மூடிக் கொள்கின்றன? அங்கால என்ன நடக்குமென்டு ரெண்டு பேருக்கும் தெரியாமத்தான் நடக்கும்.” பின்னச் சொல்லுறியள் எப்பயோ பட்டனத்தார் சொன்னாரே. ஒருமடமாதும் ஒருவனுமாகி. எண்ட பாட்டில. உணர்வு கலங்கி என்மோண்டு.
எனக்குப் பயந் தான் அதுக்குப் பிறகு ‘சென்றி போடவேண்டியதாப் போச் சு. என்ன?. கதைக்கிறதுக்குத்
*நாற்று இதழ் - 25

Page 27
요
தடை போட்டா எங்கயும் ரோட்டு வழிய பத்தை வழிய போய் சந்திக்குங்கள். அதிலும் பார்க்க கதைச்சாக் கதைக்கட்டும் எண்டு விட்டிட்டன். அதால அவனும் ‘ஒப்பினா’ வந்து போறாண். அயலட்டைக்கும் அரசல் புரசலா யில்லை. தெளிவாயே கலாட்டை வந்து போறது தெரியத் துவங்கி அவையும் ‘ஒப்பினா’ ‘கலான்ர ஆள்’ எண்டு கதைக்கிற அளவில வந்திட்டுது
அவன்ர தாய் பிள்ளை சகோதரங்கள் எங்கட வீட்டையும், நாங்கள் அவயட வீட்டையுமா உறவு கொண்டாடி நடக்கிறம்.
ஆனா அவன் ர தாய் தேப்பனுக்கு. இந்தத் தொடர்பு எந்தளவில தெரியுமெண்டு விளங்கேல்ல.
இருந்தாப்போல அவன்ர வரவு குறைஞ்சு - இல்லலாமலே போத்சு.
டக் கெண்டு எனக் குச் சந்தேகம். நான் நேர அவன்ர இடத்துக்கு தற்செயலாப்
grifinan |
போறமாரிப் போய் ‘என்னதம்பி கனநாளா வீட்டுப் பக்கம் காணயில் ல’ எண்டன். நேரமில்ல. ரெண்டு நாள்ள வாறன் எண்டான்.
ஆனா வரயில்லை. தாய் சகோதரங்கள். வந்து போனவை தான். கலாவின்ர நடவடிக் கையள்ள ஒரு எரிச்சல், கோவம், யோசிச்சுக் கொண்டிருக்கிறது, ஏதுங் கேட்டா வள்ளெண்டு பாயுறது. எல்லாம் வெளிப்படுது. உங்களுக்க ஏதும் பிரச்சனையோ எண்டு சாடை யாக் கேட்டுப் பாத்தன். “ச்சீ” அவ்வளவுதான் பதில்.
இவன் ஏமாத்துவான் போலதான் கிடக்கு. ஆம்பிளை க்கென்ன சேறு கண்டத்த மிதிச்சு தண்ணிகண்டத்தை கழுவுவான். பொம் பிளப் பிள்ளை இனி அவளை ஆர் சீண்டுவான். அவளின் ர எதிர்காலம் பெரிய கேள்விக
'குறியாப் போப்போகுது. சும்மா
கதைச்சதுதானேயெண்டு
*நாற்று வெள்ளி இதழ்
ক52

*Isrấom வெள்ளி இதழ்
நீங்கள் சொல்லுவியள். ஆனர் எங்கட நாடு இன்னும் அமெரிக்கா ஆகயில்லையே இது ஒரு வடுத்தானே.
அதோட பாருங்கோ அறுவத் தெட்டுப் பொம்பிளை பாக்க வருவாங்கள் ஒவ வொரு வ ைன யு ம ஒமெண்ண மாட்டானோ? இவன் புருசனோ? அவன் புருசனோ? எண்டு எல்லா ரையும் ஒருக்காண்டாலும் தன்னோட இணைச் சுக் கற்பனை பண்ணித் தோத்துப் போறவளைக் கூட ஒருவன் கட்டுவான். அது அனுமதிக்கப் பட்ட கற்பனை வாழ்க்கை. ஆனா ஒருவனை நினைச்சு அவன்ர அன்பை நம்பிப் பழகி பிறகு விலகிற அல்லது விலக்கப்படுகிற பொம்பிளைய சந்தேகமாத்தானே பாக்கினம். இவன் எவ்வளவு கெட்டித்
ஏமாத்திப் போட்டான். இதுக்கு ஒரு தண்டனையுமில்லையே. இப்பிடி எத்தினை பேர்
요
வெளிக் கிட்டிருக் கிறாங்கள். இவங்களை ஒணிடுஞ் செய்யேலாதே...?
செய்யலாமீ தமிழீழ
ஒறுப்புச்சட்டம்
பிரிவு 414 - இலங்கை ஆட்கள் சட்டப்பிரிவு 20
தமக்குள் திருமணம் செய்து கொள்வதற்குத் தகுதியுடைய ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள இணங்கி ஒருவரை யொருவர் காதலித்துப் பின்னேர் அமையத்தில் அவ்வாறு காதலித் தவர்களில் ஒருவர் திருமணம் செய்து கொள்ள இனங்காமல் கைவிடுவது தவறாகும். இத் தவறை இழைத்தவர் ஐந்து ஆண்டுவரை நீடிக்கக்கூடிய எளிய afsopusoIITGaon, குற்றக் காசிறுப்பினாலோ, இவை இரண்டி னாலுமோ ஒறுக்கப்படுதல் வேண்டு மென்பதுடன் தீங்கிழைக்கப்பட்ட மறுபாலாருக்குரிய இழப்பீட்டினையும் தீங்கிழைத்தவரிடமிருந்து பெற்றுக்
கொடுக்கலாம். நான் சொல்லேல்ல.
சட்டம் சொல்கிறது.
Ο
*நாற்று இத% - 25

Page 28
/*
பற்றிய ஆய்வுகள் غم ہے / (
இன்று உலக அளவில் நடைபெற்று வருகின்றன. பெண்கள் அடிமை வாழ்வு நடத்துவதாகவும், அவளுடைய ஆற்றல்கள் ஆணுடன் கரைந்து மடிவதர்கவும் பலர் குரல் கருதுகின்றனர்.பெண் விடுதலை தொடர்பாக மடிவதாகவும் பலர் கருதுகின்றனர். இதற்கென பெண் விடுதலை தொடர்பாக பலர் கொடுக்கின்றனர். அதற்கென நிறுவன ரீதியபன அமைப்புக்களும் தோன்றி யுள்ளன. கீழைத்தேச நாடுகளிலும் அண்மைக் காலங்களில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் முனைப்புப் பெற்றுள்ளன. தமிழர் பண்பாடு தனித்துவ
மானது. பெண்மையைத் தெய்வமாகப் போற்றுவது. தமிழ்ப் பண்பாட்டை மறந்து மேலைத் தேச நாகரிக த்தில் மூழ்கியவர்கள் மத்தியில்
தான் பெண்ணியம் பற்றிய மாறான
சிந்தனைகளும் தோன்றி யுள்ளன. மேலைத்தேசத்தவர் மத்தியில் பெண் மை - தாய்மை ー Nஇறைமை என்ற ஒழுங்கு
நிலைகள் குடும்ப வாழ்வில்
போற்றப்படாமையால் சமூகத்தில் பெண்மை இழிவடைந்து நிற்கின்றது.
பெண்மை போற்றும் மரபான வாழ்வியல்
*நாம்று வெள்ளி இதழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ்
நடைமுறைகளும் சிதைவடைந்துள்ளன. பெரும்பாலான ஆய்வாளர்கள் மேலைத்தேசக் கொள்கைகளை பழந்தமிழர் பண்பாட்டிற்குப் பிரதியிட்டுப் பார்த்து பெண்மை இழிதகைமைக்கு உள்ளாகியுள்ளது என்ற கருத்தினை முன்வைத்துள்ளனர். பழந்தமிழர் இலக்கியங்களை ஆழமாகப் பார்க்கும் போது தமிழர் வாழ்வியலில் பெண்மை பெற்றிருந்த இடத்தினைத் தெளிவாக இனங்காண முடியும். இன்று பல பெண்கள் தாம் ஆண்களால் அடிமைப் படுத்தப்பட்டுள்ளோம் என்கின்ற மனோபாவம் உடையவர்களாக விளங்குகின்றனர். இதன் காரணமாக குடும்பத்தில் முரண்பாடுகளும், விரிசல்களும் தோன்றியுள்ளன. மேலைத்தேச நாகரிகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற எம்மவர்மத்தியில் பெண்மை பற்றிய தெளிவு அவசியமானது. அத்தகைய 6 விரிவடைந்து உலகம் ங்கு
குடியிருப்புக்களை அமைத்து గ్రీత్త (6) ைேகயில் ஈடுபட்டனர். ஆண் தன்னோடு பெண்ணையும் இணைத்து வாழத் தொடங்கினான். கூட்டு வாழ்க்கை நிலையில் குடும்ப அமைப்பு உருவாகியது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழும் குடும்ப வாழ்வு சமூகத்தின் உறுதியைக்
*நாற்று இதழ் - 25 GD

Page 29
gråttomu
காட்டியது. தனி மனித வாழ்வியல் பண்பட்டு அமைய குடும்ப உறவுகள்
உதவின. பெண் ணால் குடும் பத்தல் புதய உறவுகளும் , நடைமுறைகளும் உருவாகின.
குடும்ப அமைப்பில் இல்வாழ்க்கை வெளி வாழ்க்கை என்ற இரு வாழ்வியல் நடைமுறைகள் உருவாகின. ஆண்கள் பொருள் தேட்டம், போர் நடவடிக்கை காரணமாக வெளிவாழ்க்கையில் ஈடுபட்டனர். பெண் கள் இல் வாழ்க் கையோடு தொடர்புபடுத்தப்படுகின்றனர். ெ ற்கு மட்டும் உரியவளாகி அடக்கி ஆளப்பட்டாள் என்றி காணப்படுகின்றது. சங்க இலக்கியங்க6ை toto ாது இது பற்றிய என மக்கள்
பிணர்ச்சுற் பன்றி தோன்முலைப் பினவொடு கனைக்கா லேனல் கைம்மிகக் கவர்தலிற் கல்லத ரரும்புழை யல்கிக் கானவன்
*நூற்று வெள்ளி இதழ்
 
 
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
வில்லிற் றந்த வெண்கோட் டேற்றைப் புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் குடிமுறை பகுக்கு நெடுமலை நாட
(நற்றிணை.336)
கானவன் அம்பெய்து கொன்று கொணர்ந்த பன்றியை அவன் மனைவி அறுத்து குடிகள் இருக்கும் இடந்தோறுஞ் சென்று பகுத்துக் கொடுக்கிறாள் வேட்டை மூலம் கிடைத்த உணவை உறவினர் அனைவருக்கும் பங்கிட்டுக் தம் கடிமை பெண்ணுடையதாக அமைந்தது.
முதிய ரிளையர் முகைப்பரு வத்தர் வதிமன வம்பலர் வாயவிழ்ர் தன்னார்
*நாற்று இதழ் - 25 GB)

Page 30
오 shm
இருதிற மாந்தரு மின்னினி யோரும் விரவுநரை யோரும் வெறுநரை யோரும்
(பரி பாடல்.10.19-22)
பூப்பெய்தாத மகளிர் முகைப் பருவத்தார் என்றும் பூப்பெய்திய மகளிர் அலர்வாய் அவிழ்ந்தன்னார் எ ம்பெயர் பெற்றுள்ளனர். அடுத்த
] நிலையில் உள்ளவர்கள் கரும்பிரிேை நரைSரவு நடுப் பருவத்தினர், முதுநரை பழுத்தவ்ர் எனப் பகுக்கப் பெற்றுள்ளனர் குழந்தைப் பருவத்தில் தாயின் மூலம் வாழ் ॐ ۔۔۔۔ கொள்கின்றார்கள். குமரிப் பருவத்தி உற்பத்திச் திக்கு தயாரான நி கொள்கின்றனர். மீனைவி/த ଧୈର୍ଯ୍ୟ
劇。 θ ள்ளமும் பக்குவப்பட்டு வாழ்வியலில் பங்கு
*னும்டியிலரங்கில் ধ্ৰুঃ - শিল্প * தாய்
* 機 , பெருங்காட்டுக் யூாள்(அகம்.2OI)
வயிற்றிலி தாங்
緣
தாய்மையின் தொண்டு 88ჭ கத்தின வேண்டிய பயிற்சிகளை தாயிடமிரு ۔ மனிதனாக உலகுக்கு அளிக்கும் கடமையும் பொறுப்பும் தாய்மைக்கு உண்டு.ஆண்கள் உடல் வலிமை உள்ளவர்களாகவும் மனவலிமை குறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். பெண்கள் உளவலிமை உடையவர்களாகக் கருதப்பட்டனர். மனித உற்பத்தியில் இருவரும் சமபங்களிப்பை நல்கியபோதும் குழந்தையின் உடல்உள வளர்ச்சி நிலைகளில் தாய்மையின் பணி ஆற்றுகின்றாள். தாய்மையின் தன்னலங் கருதாப்பணி ஆற்றுகின்றாள்.
*நாற்று வெள்ளி இதழ் AD/ திழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 오
தாய் மையரின் தன்னலங் கருதாப் பணியினால் தெய்வமாக வழிபடப்படுகிறாள். தாய்மையிடத்து அன்பு நிலைபேறாக ஒளிர்கின்றது. இதனால் பெண்ணைத் தெய்வமாகப் போற்றி வாழ்ந்தனர்.
சமூகத்தில் இறைவழிபாடு செய்யும் நடைமுறை பெண்ணின் கடமையாக இருந்தது. இயற்கையில் கிடைத்த பொருட்களை இயற்கைக்கு காணிக் கையாக அவற்றை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் பண்பு பெண்டிைக்குரியது. பொருளாதார உற்பத்தியில் பங்குபற்றிய பெண்கள் தொ iபிான ーデ ರೌಲ್ಲ! சங்க இலக்கியத்தில் *क्ष् பயிர்களைப் பாதுகாத்தல்,
மாற்றுச் செய்தல்,
இன்னினு வியந்துரைத்த செய்திகளும் சங்க இலக்கிய “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே; ஈன்ற ஞான்றிலும் பெரிதுவந் தனளே; ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ போன்ற புறநானுாற்றுப் பாடல் அடிகள் இதற்குச் சான்றாகின்றன.இவை பெண்ணின்
*நாற்று இதழ் - 25 *- شمال آنتی چوبی به اتاقهای
, , ; ; ; ; ; ; హజో క్షీణి
தில் காணப்படுகின்றன.

Page 31
gramu
வீரத்தினுாடாக அவளை அடிமைப்படுத்துகின்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வெளிப்பாடுகள் என்ற கருத்துக்களும் காணப்படுகின்றன. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விடுதலைப் போராட்டத்தை நோக்குமிடத்து சங்க இலக்கியம் குறிப்பிடுகின்ற வீரப்பெண்கள் பற்றிய செய்திகளும் உண்மையானவை.இதில் எவ்வித ஆணாதிக்க போக்குகளும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.
காரணிகள் பெண்
:33:3 திக்கம் செலுத்தின தமிழர்கள் வாழ்வியல்
நிலையில் வைத்துப்
நல்வழிப்படுத்தி மனிதனாக மாற்றும் வல்லமை தாய்மை உணர்வு கொண்ட பெண்ணினாலேயே முடியும் ஒழுக்க நெறி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது ஆண்களால் பெரும்பாலும் அதனைப் பேணமுடியாது. போய் விடுகின்றது. நாளைடைவில் ஒழுக்கம் என்பது பெண்கள் மட்டும்
*நூற்று வெள்ளி இதழ் கு?
 
 
 
 
 
 
 
 
 

*நாற்று வெள்ளி இதழ்
கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக அவள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இடம் பெறும் மருதத் திணைப் பாடல்கள் ஆண்களின் பரத்தமை ஒழுக்கத்திற்குப் போதிய சான்றாகும் பூப்பும் தாய்மையும் பெண்மையின் ஒரு வளர்ச்சி நிலைகளாகும் . இவை இயற்கையாகப் பெண்மையிடம் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் ஆகும் இலக் கரியங்களில் தமிழர்கள் இவ்விரு நிலைகளையும் வாழ்வியலில் சடங்குகளாக நடைமுறைப்படுத்தி உள்ளனர்.
பெண்மையும் ஆண்மையும் இணைந்தே சமூகம் இயங்குகின்றது தமிழர்கள் வாழ்வியலில் இருவருக்குமே சமபங்கினை அளித்திருந்தனர். இதனைப் பழைய இலக்கியங்கள் சான்று பகள்கின்றன. பிற பண்புட்டுத் தாக்கம் தமிழர் வாழவியலில் புகுந்த
டோது பெண் பற்றிய படைப்பில் ஆண் பெண்பேதமி
o
:
8.
க்கத்திற்கும் "Loc.
; :
*நாற்று இதழ் - 25 57

Page 32
* நம்ம வெள்ளி
 

*நாற்று வெள்ளி இதழ் 요
ട്രീjകിത്തിയ
இலைமறை காயாக கலைத்துறையில் பெண்கள் சுடர்விடுகின்றனர். இவை பெரும்பாலும் வெளிவருவதில்லை. 6fl. டிலி தார் களர் ஓயவு நேராகர் களில் தார் களி கற்பனைகளுக்கு கலை வடிவம் கொடுத்துள்ளனர். அவை ஒவியங்களாக, சிற்பங்களாக, ஏணி இன்னும் கழிவு என ஒதுக்கி விடுபவற்றில் கைவினைப் பொருட்களாக இவை அழகிய வடிவம் பெறுகின்றன.
அந்த வகையிலே இம் முறை ஒரு ஓவியரை நேர்கண்டோம். கலைத்துறையில் உங்கள் முன் ஒரு இளம் ஒவியரை அறிமுகப்படுத்துகிறோம். பிரப்பங்குளம் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர் மயில்வாகனம் மதுமதியுடனான நேர்காணல் ஒன்றை இம்முறை நாற்று வாசகர்களுக்குத் தருகிறோம்.
ஒரு மதிய நேரம் அவரை அவர் வீட்டிலேயே சந்தித்தோம்.மகிழ்ச்சியுடன் எமக்கு தனது அறிமுகத்துடன் தனது ஒவியங்களைப்பற்றி கூறினார்.
முதலில் உங்களைப்பற்றிக் கூறுங்களேன்?
*நாற்று இதழ் - 25

Page 33
위 sphony
நான் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனது தந்தையார் மரவேலை செய்பவர். எனது இரு சகோதரர்களும் நன்றாக ஒவியம் வரையும் ஆற்றல் உள்ளவர்கள். நான் எனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் பின்னர் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றேன்.
O உங்களுக்கு எப்போது ஓவியக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது?
எனது சிறுவயதிலிருந்தே எனது அக்காமாருடன் போட்டிக்கு ஒவியங்கள் வரைவேன். ஒரு உருவத்தைப்பார்த்து கீறும் பழக்கம் அப்போதிருந்தே இருந்தது. தந்தையாரும் என்னை ஊக்குவித்துக்கொண்டேயிருப்பார். விவேகானந்தர், பாரதியார் படங்களை எனக்குமுன்னே வைத்து எனது தந்தையார் பார்த்துக்கீறும்படி கூறி என்னை ஊக்குவிப்பார். இதேபோல் ஒவியர் ரமணி, ஒவியர் சிவப்பிரகாசம் என்போரும் என் ஒவியத்துறைக்கு ஊக்கமளித்தனர்.
O நீங்கள் எவ்வகையான ஒவியங்களை வரைகிறீர்கள் என்பது பற்றியும் எவ்வகையான ஊடகங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றியும் கூறுவீர்களா?
மரபுரீதியான ஒவியங்களை வரைந்தாலும் நவீன ஒவியங்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். எனது பெரும்பாலான ஒவியங்கள் நவீன ஓவியங்களே.
என்னைப் பொறுத்தவரை நான் சமூகத்தில் நடப்பவற்றை நான் கேட்டு உணர்ந்தவற்றையே ஒவியமாக வரைகிறேன். இங்கு வீட்டைவிட்டு வெளியே வந்து நான் காணும் பிரச்சனைகள் நடப்புகள் என்பன என்னை வரையவைக்கின்றன. எனது நண்பர்கள் அடிக்கடி என்னைக் கேட்பர்கள் நீங்கள் பெரும்பாலும் பெண்கள் சம்பந்தப்பட்டவற்றை அதிகம் வரைகிறீர்கள்
எனறு. *நாற்று வெள்ளி இதழ் 오
-டு)

오
எனக்கு அவர் களது பிரச்சனைகள் பொரிதாக த தெரிவதாலி வரை கலிறேன். வீட்டைவிட்டு
*:৪. প্ৰাপ্ত இராணுவத்தின் கொடுமைகள், பாலியல் வல்லுறவு என்பனவும் பெண்களின் பத்திரிகைகளில் வருகின்ற இவ்வாறான பிரச்சனைகளும என்னை ஒவியங்களுக்கு கருப்பொருளாக்கின.
இதற்கு கணவனை இழந்த பெண் ஒருவர் தனித்து வீட்டைவிட்டு வெளியே வந்திருக்கும் காட்சி மற்றும் இராணுவ வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் காட்சி என்பனவற்றை குறிப்பிடலாம். மற்றும் இயற்கைமீதான எனது நேசிப்பினால் இயற்கைக்காட்சிகளையும் அடிக்கடி கீறுவேன் மரம்,செடிகொடி பரந்தவெளி, கடல்,காலைமாலை என்பவற்றையும் நான் வரைவதுண்டு.
O நீங்கள் நவீன ஓவியங்களை அதிகம் விரும்புவதற்கு காரணம்?
நவீன ஓவியங்களில் நிறைய கருத்துக் களை முன்வைக்கலாம். ஆரம்பத்தில் நவீன ஓவியங்களை வரைவதில் சிரமப்பட்ட எனக்கு ரமணி ஆசிரியரின் ஊக்குவிப்பும் ஆர்வமும் என்னை நவீன ஓவியங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மனஉணர்வுகளை துல்லியமாக காட்டுவதற்கும் இவ்
*நாற்று இதழ் - 25 GD

Page 34
요 већи
ஒவியங்கள் உதவின. பார்க்கும் ஒவ்வொருவருக்கும் புதிதுபுதிதான அர்த்தத்தை கொடுத்தது. பின்னர் கீறுவதற்கு இலகுவாக்கியது.
நீங்கள் உங்களுக்கென்று ஒரு கலைப்பாணியை உருவாக்கியுள்ளீர்களா?
ஆரம்பத்தில் எல்லோருடைய ஓவியங்களையும் பார்த்து கீறினாலும் பின்னர் எனக்கேயான கலைப்பாணியை உருவாக்கினேன் எனக்கென்று அதனை என் ஓவியங்களில் வெளிக்கொண்டு வருகிறேன்.
உங்கள் பல்கலைக்கழக கல்வி பற்றி கூறுவீர்களா?
நான் க.பொ.த உயர்தரக்கல்வியை 1997 இல் முடித்துக்கொண்ட பின்னர் 1999இல் யா/இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் முதன்முதலாக ஒவியத்துக் கான முறை ஆரம்பித்ததை அடுத்து அந்த முதற்பிரிவிலேயே எனக்கும் அனுமதி கிடைத்தது. இதனடிப்படையில் க.பொ.த உயர்தரத்தில் சித்திரப் பாடத்தினை கற்றமையால் என்னால்அங்கு அனுமதி பெற
இங்கு 4 வருடங்கள ஒ வ ய ம’ பயின் றேன். இங்கு பயின்ற காலங்கள்
云9
*நாற்று வெள்ளி இதழ்
 
 
 
 
 
 
 
 
 

*நாம்ம வெள்ளி இதழ் 요
எனது ஆர்வத்துக்கு மேலும் பயனளித்தது. முறையாக என்னை வளர்த்துக்கொள்ளவும் ஊக்கப்படுத்தவும் உதவின. இதனூடாக திருமறைக்கலாமன்றத்திலும் என்னை ஒவியத்துறையில் வளர்த்தது. யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கலாமன்றத்தினூடாக கொழும்பில் நான் உட்பட 18 ஒவியர்களுடைய ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு, விற்பனையும் இடம்பெற்றது.
உங்களுக்கு சிற்பக்கலையிலும் ஈடுபாடு உண்டா? அவ்வாறாயின் அதுபற்றிக் கூறுவீர்களா?
எனக்கு கிடைக்கும் சப்புப்பலகைகளைக் கொண்டு, கொக்கு, மனித உருவம் போன்றவற்றை செதுக்குவதுண்டு. மற்றும் கழிவுப்பொருட்களைக்கொண்டு எனது கற்பனைக்கு எட்டியவரை சில கைவினை பொருட்களை ஆக்குவேன். இவற்றில் சிப்பியைக் கொண்டு, முட்டைக் கோது, முத்து, மரத் துண்டுகள் என்பவற்றைக்கொண்டு இவர் ஆக்கிய கொக்குவீடு பென்குயின் சுவர் அலங்காரப்பொருட்கள் என்பன இவரின் வீட்டை அலங்கரித்ததனை நாம் காணக்கூடியதாக இருந்தது.
வளர்ந்து வரும் ஓவியக் கலைஞராக இருக்கின்ற செல்வி மதுமதி அவர்களே எமது எதிர்கால சந்ததிக்கு இக்கலைபற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்?
நாங்கள் இன்னும் இத்துறையில் வளர வேண்டும். இது ஒரு வரையறைக்குள் மட்டும் ஆசிரியர்கள் படிப்பித்தார்கள். இப்பாடசாலைகளிலும் தனித்தனி சித்திரத்துக்கென்டு என்று ஆசிரியர்கள் இருப்பதில்லை. உதாரணமாக விஞ்ஞான ஆசிரியரே சித்திர பாடத்தையும் படிப்பிப்பார். இதன் லம் ஒவியம் ஒரு வரையறைக்குள் (பாடத்திட்டத்துக்குள்) நிற்குமே தவிர வளரும்
*நாற்று இதழ் - 25 -

Page 35
요 Esgrifinom ||
சாத்தியம் இல்லை. ஒவியத்தை விருப்புடன் ஆாவமுடன் பயில வேண்டும். ஒருவரின் திறமைகளை இனங்கண்டு வளர்ந்து விட வேண்டும். எம்மோடு சேர்த்து பதினெட்டுப்பேர் இம்முறை புதிதாக இதற்கென பயிற்றுவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் ஒவியத்தை வளர்ப்பதற்கும் கற்பிப்பதற்கும் பெரும் சந்தர்ப்ப0 ஏற்பட்டிருக்கிறது என்பதனை நான் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன் என்றார்.
நாமும் ஒரு இளைய ஓவியரை பெரும்பாலும் அறியப்படாத, நாளை நம்பிக்கையுடன் மிளிரப் போகின்ற ஒவியரைச் சந்தித்த மகிழ்ச்சியுடன் விடைபெற்றோம்.
சந்திப்பு சுதாமதி
నైP வெள்ளி விழாக்கானும் ‘நாற்றே
வெளியீட்டில் இடர்கடந்து ്. * صفوی” வீறுநடை போடுவாய் .ލޢީ
கொள்கையில் வெற்றி பெறுவாய் ! பாடசாலை உபகரணங்கள், இந்தியச் சஞ்சிகைகள், jilogariji, வாரர்ந்த பத்திரிகைகள், என்பவற்றைபெற்றுக்கொள்ளவும், போட்டோ பிரதிகள் செய்து கொள்ளவும் கிளிநொச்சியில் ޗޢީ
ॐ ॐ * 38 ܦܠܘ
தி" O վ III O தன்தாக்ஜமெடுள்ளனில்
,மத்தியசந்தை حل ళ கிளிநொச்சி.
*ந்ாற்று வெள்ளி இதழ்
 
 
 
 
 
 
 
 
 

*நாற்று வெள்ளி இதழ்
வேல்மரத்தைக்கங்ார்
6
| ՍՈழ்ப்பாணம்’ தமிழர் வரலாற்றில் இன்று எல்லோரும் அறிந்த பெயராக விளங்குகிறது. பெயரளவில் அது ஒரு நகரமாக விளங்கி போதும் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் பொருள்நிலையில் சுட்டி வரையறையும் செய்து நிற்கிறது. அது உள்ளடக்கிய நிலப்பரப்பும், அங்கு வாழ்ந்த மக்களும், வாழ்வியலிலும் பண்பாட்டிலும் தனித்துவம் பெற்றிருந்ததைக் கடந்த
* +நாற்று இதழ் - 25 (ଲିଙ୍ଗି)

Page 36
오! prom
கால வரலாறும் காட்டுகிறது. யாழ்ப்பாணத்தின் அமைவிடம் புவியியல் நிலையிலும் தனித்துவம் பெற்று விளங்கியது. “யாழ்ப்பாணம்’என்ற சொல்லின் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்களின் வரலாறு, பண்பாட்டுநிலை, வாழ்வியல் நடைமுறை, என்பவற்றைப் பிற நாட்டவர் அறிவதற்கு ஆவல் கொள்ளச் செய்தது.
இன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றுப் பழைமையை அறிய உதவும் சான்றுகளின்தேட்ல்முனைப்பாக மேற்கொள்ளப்படுகிறது. இத் தேடலுக்கு வழிவகுத்ததுஅங்கு வாழ்ந்த மக்களின் தனித்துவமான பண்பாடாகும். மக்களின் வாழ்வியற் கோலங்களில் பண்பாட்டுச் சீர்மையொன்று காணப்பட்டமை யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் அறியப்பட்டுப் பெரிதும் வியந்து பேசப்பட்டது. மக்கள் வாழ்வியல் இயற்கையோடு பெரிதும் இணைந்திருந்தது. கால நிலையோடும் , பருவமாற்றங்களோடும் ஒத் திசையும் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. மக்கள் வாழ்வியல் நடைமுறைகளும் சூழலும் சிறப்பாகத் தொடர்புற்றிருந்தன. அதனால் மனித உறவுநிலைகளும் இறுக்கமாகப் பேணப்பட்டன. குடும்பவாழ்வு கூட்டு வாழ்க்கை முறையாக ‘அன்பு’ என்னும் சங்கிலியால் அழகாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அதனால் மனிதநேயம்
பண்பாடு’ என்ற சீர்மிய நிலையில் மேன்மை பெற்றிருந்தது.
நீண்டகாலமாக நிறைவாக நடந்த வாழ்வியல் பிறநாட்டுச் செல்வாக்கு என்னும் புயல் வீசிய போதும் பண்பாட்டுப் பாரம்பரியம்’ சிதையாமல் “யாழ்ப்பாணத்து மண்ணிலே காலூன்றி நின்றது. ஏறக்குறைய 400 ஆண்டு அந்நிய அரசியல் செல்வாக்கு இருந்த போதும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாடு சிதையாமல் நிமிர்ந்துநின்றது. அக் காலத்திலே மேலைத்தேய மொழியும், பண்பாட்டு நடைமுறைகளும் வேகமாக ஊடுருவிய போதும்
*கங்ா வெள்ளி இதழ் 动?

*நூற்று வெள்ளி இதழ் 요
யாழ்ப்பாணத்துப் பண்பாட்டின் ஆழ வேரூன்றியிருந்த மூலத்தை அசைக்க முடியவில்லை. மண்மீது கொண்ட பற்றினால் பண்பாட்டைக் கட்டிக் காக்கும் மனவுரம் மக்களிடம் மிக்கோங்கியிருந்தது. மண்ணின் மரபு காக்கும் பணியில் தமிழ் மொழிப்புலமையாளர் முனைப்புடன் செயற்பட்டனர். எனவே பண்பாடு பழமையின் வலுவோடு நின்று பொருந்தாத புதுமையால் சோரம் போகாமல் ஒழுங்கான செம்மையான பண்பாட்டு வாழ்வியல் தொடரத் துணை நின்றது.
ஆனால் இன்று இந்தப் பண்பாட்டு வாழ்வியல் சிதைந்து விட்டது. வரம்பு கட்டி நடந்த ‘இல் வாழ்க்கை’ என்னும் நன்செய்நிலம் திட்டமிட்டுப் பாழாக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்து மண்ணிலே செழித்து பரந்து நின்ற பண்பாடு என்னும் ‘காவல் மரத்தின்’ கிளைகள் தறிக்கப்பட்டு விட்டன. முன்னைய காலங்களில் வீசிய அந்நியச் செல்வாக்கு என்னும் புயலுக்கெல்லாம் வளைந்து கொடுத்துத் தன்னை இழக்காமல் நின்ற பண்பாடு இன்று தன்னையே இழக்க தயாராகி விட்டது. அன்று எல்லை போட்டு ஒழுங்காக நடந்த மனித வாழ்வு இன்று திறந்த வெளியில் சீர்கெட்டு நடக்கிறது. இந்நிலையில் பழைய பண்பட்ட வாழ்வியற் கோலங்களை மீட்டுருவாக்கம் செய்து அழியாத கோலங்களாகப் பதிவு செய்து வைக்க வேண்டிய பாரிய கடமையொன்று எமக்குண்டு. எமது முன்னோரது சீரான வாழ்வியல் என்னும் முதுசொத்தை நாம் பின்னவரிடம் முறையாகக் கையளிப்புச் செய்ய வேண்டும். எனவே முதலில் வேகமாகச் சிதைந்து கொண்டிருக்கும் பண்பாட்டுக் கோலங்களிலேதான் எமது பார்வையைப் பதிய விட்டு அவற்றைத் தெளிவாக இனங் கண்டு ஏற்றது செய்ய வேண்டும்.
யாழ்ப்பாணத்து மண்ணின் வளத்திற்கு ஏற்ப வாழ்வியலோடு
*நாற்று இதழ் - 25

Page 37
위 aromy
இணைந்த பனைமரம் பண்பாட்டின் சின்னமாக நின்று நிலவியது. பருவமாற்றங்களான கோடைக்கும் மாரிக்கும் ஈடுகொடுத்து வெப்பத்திற்கும் தட்பத்திற்கும் ஏற்ற வகையில் செழிப்புற்று மக்கள் வாழ்வியலுக்குத் தன்னை முழுமையாகத் தந்து நின்றதால் பூலோக கற்பகதரு’ எனச் சிறப்பான பெயர் கொண்டழைக்கப் பட்டது. ஒரு யானை படியும் இடத்திலே விளையும் விளை பொருளால் ஏழு யானைகளுக்கு ୬:-6୪CT ର! கொடுக்கலாம். எனப் புறநானூற்றுப்புலவன் தமிழ்நாட்டு மண்ணின் வளத்தைப் பாடினான். முற்றத்தில் நிற்கும் ஒற்றைப் பனையின் வளத்தால் ஒரு தலைமுறை வாழ்வு நடந்ததை யாழ்ப்பாண மண்ணின் வளம் கூறுகிறது. மனித வாழ்வின் இன்றியமையாத தேவைகளான உணவு, உறையுள் என்பவற்றை நிறைவு செய்வதில் பனை முக்கிய பங்கினை வகித்தது. தொழில் நிலையாகவும் பலருக்கு வாழ்வு கொடுத்தது. உடலுக்கு உரம்தரும் சத்துணவு வகைகளை ஓராண்டு சேமித்து வைக்க உதவும் பண்பாட்டு வங்கியாகவும் பனை பணியாற்றியது. குடிசைக் கைத்தொழில் நிலையிலே பல பெண்களின் கைவினைப் பயிற்சிக்கு மூலப் பொருட்களை வழங்கியது. பனை மரத்தின் எல்லாப் பகுதிகளுமே மனித வாழ்க்கைக்குப் பயன் பட்டன. அதனுடைய நீண்ட ஆயுள் மனிதனின் தலைமுறையைப் பராமரித்துப் பாதுகாக்கப் பேருதவி செய்தது. அத்தகைய பனை வழி வந்த பண்பட்ட வாழ்வியல் இன்று பெரிதும் சிதைவுற்றுள்ளது.
கடந்த காலப் போர் நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்துப் பனை மரங்கள் தலைசாய்க் கப்பட்ட முண்டங்களாகக் காட்சியளிக்கின்றன. ஊருக்குக் காவல் மரங்களாக நின்ற பனைகள் அடியோடு வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. பனைகளின் அழிப்பு பலருக்குப் பட்டினியைத் தந்துள்ளது. பனை வளத்தால் ‘அம்பனை’ எனச் சிறப்பாக அழைக்கப்பட்ட ஊர்களை இழந்து
*நாற்று வெள்ளி இதழ் 오 @千

*நூற்று வெள்ளி இதழ்
போயிற்று.வாழ்க்கைக்கு வளம் தருவதாக உறைவிடத்திற்குப் எல்லை வேலியாக விளங்கிய பனை போரின் விளைவாகப் பொல்லாத தாக்குதலுக்கு ஆளாகி முண்டமாக ஊர் இடம் பெயர்ந்தது. அங்கு ஊறிப்போயிருந்த பண்பாடு சீர்குலைந்தது. மனிதருக்கு மட்டுமன்றி வீட்டு விலங்குகளுக்கும் உணவூட்டிய பனையின் அழிவு கால்நடைச்செல்வங்களையும் பட்டினியால் வாடவைக்க யாழ்ப்பாணத்தின் இயற்கையோடு இணைந்திருந்த இன்பமான வாழ்வும் சிதறிப்போயிற்று.
முதியவர்களைப் ந்த அநுபவத்தைப் क्षं தின் கற்பித்தற் பயிற்சி முற்றாகத் தடைப்பட்டது. முதியோர் வழங்கிய இலவசக்கல்வியை இளையோர் இழந்தனர். வாழ்க்கைப் பாதையின் முன்னே சென்று அதைச் செப்பனிட்டு இளையோரை வழிநடத்திச் சென்ற முதியோர் தாம் நெடுங்காலமாக வாழ்ந்த இவ்விடங்களை இழந்தபோது மனம்
8
f
*நாற்று இதழ் - 25 ଜ୍ଯା

Page 38
요 grba
ஒடிந்து போயினர். இயற்கைப் பறவையொலி கேட்டு எழுந்து வழிபாட்டு மரபோடு நாளாந்தக் கடமைகளைச் செய்யும் அமைதியான வாழ்வியல் அற்றுப் போனது. காதைப்பிளக்கும் போர் விமானங்களின் பேரிரச்சலைக் கேட்டுத் துடித்துப் பதறிக் கண் விழிக்கும் நாளின் தொடக்கம் சிறரின் மனத்திலே அச்சமே மனித வாழ்வின் உச்சமான பயன் என்ற முரண்பட்ட எண்ணத்தைத் தோற்றுவித்தது. மழலைச் சிறாரின் மொழி குழறலாக ஈற்றில் மெளனமே மொழியாக, வாய்ப்பேச்சற்று வளர்ந்து, சிறாரின் செந்தமிழ் மொழி முளையிலே கருகித் தொலைந்து போயிற்று. குடும்பத்தின் அச்சாகத் தொழிற்பட்ட பெண்மை இக் கோலங்களைக் கண்டு உணர்வுகள் சிதறி மனநோய் வயப்பட்டு நிற்கும் குடும்பத்தோரின் சக்கரங்கள் கழன்றுவிட அது குடைசாய்ந்தது.
வாழ்வு அகதி வாழ்வு என்ற புதிய 函L造彦诅ü aaral taga nuri ng “அகதிமுகாம்” எனிற புரிய sa f'L-riħ fil-ġugars U alogu ggri gul L. aIr afusa gan ng mrpsü UmfUnrch புரியதோர் சீதைவிற்கு இதுளாயிற்று. 9
لر
ހ...تN
தாய் மனை என ஒரு வேலி அடைப்புக்குள் திட்டமிட்டு ஒழுங்குபட நடந்த யாழ்ப்பாணத்து மக்களின் சீர்மையான பண்பட்ட வாழ்க்கை வீதியிலே நடக்கும் துன்பநிலை ஏற்பட்டது. சிதறிப்போன குடும்ப உறவுகளின் அன்புச்சங்கிலியின் இணைப்பு அறுந்து போக
*நம்று வெள்ளி இதழ் 중위
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
தனி வாழ்க்கை’ என்ற நடைமுறை உருவாயிற்று. மனித நேயம் மக்களைவிட்டு விலகச் சுய நலம் தலை தூக்கலாயிற்று. பிற நலம் பேணும் பண்பாடு மறைந்தது. தாயைப் பிரிந்து, தந்தையையும் கண் முன்னே வன்முறையால் இழந்த இளம்பிஞ்சுக்குழந்தைகள் அடைக்கலந்தேடி அலைய யாழ்ப்பாண மண் வளமற்றுப் புழுதி படிய வானமே கூரையாக வாழ்வு நடந்தது. வெயிலும் மழையும் உடலைத்தாக்க நோயின் பிடியிலே சிக்கி மக்கள் வருந்தினர். அவர்கள் வாழ்வு ‘அகதி வாழ்வு’ என்ற புதிய தடத்திலே செல்லலாயிற்று ‘அகதிமுகாம்’ என்ற புதிய தங்குமிடம் உருவாகப் பழைய ஒழுங்குபட்ட வாழ்வியல் முறை மாறிப் பண்பாடு புதியதோர் சிதைவிற்கு ஆளாகிற்று. ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கநெறி நிலைதடுமாற விலங்கு வாழ்வியலுக்கு மனிதன் மீண்டும் திரும்பிவிட குடும்பம் என்ற கட்டமைப்பிலே விசலும் வெடிப்புந்தோன்ற ஆண் பெண் இணைப்பும் அறுந்தது. தாய் தந்தை என்ற உணர்வு நிலையில் குழந்தைகளுக்கு முரண்பாடு தோன்றியது. தாயின் பரிவான அணைப்பிலும் தந்தையின் பாதுகாவலிலும் பக்குவமாய் வளர வேண்டிய சிறார் யாருமற்றவர்களாய் வீதி தோறும் அலையலாயினர். ஒரு வேளை உணவுக்காகக் கையேந்தும் சிறாரைபfவோடு பார்க்க எவருமே விரும்பாத ஒரு நிலையும் ஏற்பட்டது. உறவு இல்லாத குழந்தை முறையற்றுப் பிறந்த குழந்தையெனப் பட்டம் சூட்டப்பட்டது. பிஞ்சு முகத்தின் தேடலை உணராத வன்னெஞ்சங்களால் குழந்தையின் மனதிலே வக்கிரம் குடிகொள்ள வன்முறையிலே அது ஈடுபடலாயிற்று. குழந்தையின் பண்புள்ளமும் பாழாகிப் போயிற்று.
உறவற்ற சிறாரைப் பயன்படுத்தி ஒழுக்கச் சீர்கேட்டைப் பரப்பும் செயற்பாடும் தொடரலாயிற்று. களவாக அவர்கள் பிஞ்சுமனங்களையும் உடலையும் பாழாக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன. இளைஞர்களாக அவர்கள் வளர்ந்த போது பண்பாடு
ற்று இகம் 25 *நாற்று இதழ்

Page 39
와다
பேணும் மரபு அறியாத இரு தலைமுறைகள் உருவாகி விட்டன.
(Up gbl 60) LD 60) uu வ ழ ப டா த (up f্য 6চতো L L' Lபோக்கும் மித மிஞ்சிய வேகமான செயற்பாடும் பிறர் மனதை நோகச் செய்து களிப் படையும் வெறித் தனமான போக்கும் இளைஞர் பூணும் அணிகலன்களமின. வீதி ஒழுங்குகள் சீர் கெட டன. சமநிலையான ஈருருளி ஓட்டம் இளம் பெண் களைக் கேலி செய்யும் ஒலியரவம், அகால வேளையில் அட் டகா சம , பகிடிவதை எனப் பலவாறான புதிய குணங்களுடன் gß GIT 60) LD é5 ʼ
费 Erfomu வெள்ளி இதழ்
ugibamu |
தலைமுறை உருவா குவதற்குப் பின்னணி யாக நிற்கும் சக்தி களை நன்கு உணரா |தவர் பலருள். ஆனால் "ஊரோடு ஒத்து வாழ்’ என்ற முது மொழியின் கருத்தைதி தலை கீழாக்கிச் செயற் படுகின்றனர். கல்விப் புலமையாளரும் உயர் நிறுவன இயக்கு நள்களும் கூட்த் தமது பதவி இருப்பு நிலைக்கு
தமிழர் பண்பாட்டின் சீர் குலைவு கண்டும் வாழாவிருக்கின்றனர். இத்தகைய செல் நெறியைத் தடுத்து நிறுத்த ஏற்றது செய்ய இன்னும் வேலை உண்டு. இப்போதைய இடைக்கால அமைதிச் சூழலைப் பயன்படுத்தி
விரைவாகச் செயற்பட்டு
இந்தப் பண்பாட்டுச்
கோலங்கள் ச த்தில்
8& &
நடமாடலாயின.
இத்தகையதொரு சிதவை நேராக்க
சூ?
 
 
 
 

*நூற்று வெள்ளி இதழ் 오
வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்து மக்களின் காலங்காலமான இயல்பான வாழ்வியல் இதுவே. என்ற நிலை உருவாகாமல் உடனடி முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மொழியே தமிழர் பண்பாட்டின் அச்சாணி. எனவே மொழி மூலமாக மேற்கொள்ள வேண்டியவற்றைத் திட்டமிடல் அவசியம். தொடர்பு நிலைகளை மொழியாற்றலால் ஏற்படுத்த இன்று தொழில்நுட்ப முன்னேற்றத்தால் இணையத் தமிழ் வந்து விட்ட நிலையில் விரைவாகச் செயற்படும் வாயபும் எமக்குண்டு.
பண்பாட்டைக் காக்க இன்று புதியதொரு களப்பயிற்சி தேவை நோயுற்றவரை நலமாக்கும் பணிக்கான தாதியரைப் பயிற்றுவது போல வாழ்வியலில் முரணி படுவோரை உள நலமுடையோராக்க பயிற்றப்பட்ட சேவையாளர் குழு இன்றியமையாதது. வாழ்வியலில் இன்றைய வேண்டத்தகாத முரண்பாடுகளைச் சீராக்க ஒரு செம்மையான புதிய கல்வித்திட்டம் தேவை. நூலறிவு மட்டுமன்றி செயற்பாட்டறிவும் கொண்டு பண்பாடு காக்கும் இளம் போராளிகள் தேவை. நமது மூத்தோர் வகுத்த மரபுகளின் தெளிவான விளக்கங்களையும் செயற்பாடுகளையும் இளந்தலைமுறையினருக்கு ஏற்றவகையில் புகட்டவேண்டும். சமூகத்தின் ஒழுங்கான கட்டமைப்பை உருவாக்க முதியோரும் இளையோரும் சிறாரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. குடும்பம் என்ற தேரின் ஓட்டத்தைச் சமநிலைப்படுத்தும் பெண்மை நலன்கள் பேண ஏற்ற இயல்பான சூழ் நிலைகளை உருவாக்கிப் பணியாற்ற வேண்டும். புதிய முறையிலே புரிந்துணர்வுடன் அனைவரும் செயற்பட தமிழ்மொழி ஒரு ஊடகமாகப் பயன்பட வேண்டும். இன்றைய வாய்ப்பான காலத்தைப் பயன்படுத்திப் பண்பாட்டுக் கல்வியைப் புகட்டி மனித வாழ்வியலின் செல் நெறியைச் சீர்செய்ய வேண்டும். மனிதனின் இயற்கையோடு ஒட்டிய இயல்பான வாழ்வியல் நடைபெறும்போது மனிதம் தோன்றும் நமது தாயக
*நாற்று இதழ் - 25 @

Page 40
위 Ris ||
மண்ணிலே நெடுங்காலமாக நிலைபெற்று விளங்கிய பண்பாடு என்னும் பசுங்கொடி பற்றிப்படர ஒரு புதிய களச்செயற்பாடே உகந்தது. மேலைத் தேசப் பண்பாட்டின் கலப்பால் திசைமாறும் வாழ்வியலை மீண்டும் எல்லோருமாக இணைந்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். தமிழன் என்ற இனத்தின் அடையாளமாக ‘தமிழர் பண்பாடு’ மீண்டும் வெளிப்பட வேண்டும். அதற்குத் தடையாக வளரும் பார்த்தீனியங்களைக் களைந்தெறிய வேண்டும். இப் பணிக்கென ஒரு புதிய படையணி உருவாக்கி அதன் முனைப்பான செயற்பாட்டினால் எமது பண்பாடு என்னும் காவல் மரம் பேணப்பட வேண்டும். இன்று தமிழர் எங்கிருந்தாலும் யாழ்ப்பாணத்தை நினைவில் சுமந்து வாழ்வதற்கு அதன்
பண்பாட்டுக் கோலங்களே காரணம். சொந்த மண்ணின் மணத்தோடும் பண்பாட்டுத் தோற்றத்தோடும் அம்பனையூடாக நடக்கும் ஒரு தலைமுறை தேவை. அது எமது வரலாற்றையும் பண்பாட்டையும் உலகுக்கு உணர்த்தி தமிழன் வாழ்வியலை அடையாளம் காட்டிக் காவல் மரமாய் நிற்கும்.
GO
கலாநிதி மனோண்மணி சண்முகதாஸ்
*கங்க வெள்ளி இதழ்
 

*கங்ங் வெள்ளி இதழ் 요
| ஒளி வருங்கலம்
óf ருகுதிர்த்துப் போகின்றன. நினைவுகளின் நாட்கள். இன்றும் நாளையும் வெவ்வேறாய் விடிவு தராத காலங்களாய் நீட்சியுறும் காலப்பெருவெளியில் எத்தைகைய விடைகளும் கிடைக்கவில்லை.
காணாமற் ! போகையில் கருவுதிதித மகனிப்போ பள்ளிசெல்லும் பருவத்தினன் மரணச் சான்றுக்கு மனுப்பே அரச சட்ட வரையறைகளால் வலுவிளந்து போயிற்று. வாழ்கையும் தான். துணையிழந்த வாழ்வென்று தூண்டில் போடும் சில கண்கள் முன்னுக்கு வராதே என்ற முணுமுணுப்புக்கள் பின்னே ே முற்றத்தில் சிறு வீடு கட்டும்* என் சின்னமகனுக்கு என்ன சொல்ல .
கொற்றவை
*நாற்று இதழ் - 25 (3)

Page 41
와다 ኅ
67னது அலுவலக முகவரியிட்ட வெளிநாட்டுக் கடிதம் ஒன்று வந்திருந்தது. அதை நான் ஆவலோடு உடைத்துப் பார்க்க அதிசயம நண்பி சுதா எழுதியிருந்தாள்.
பரபரப்பாக வாசித்தேன். அதில் “நான் அடுத்த கிழமை லண்டனில் இருந்து கனைவர் பிள்ளையோடு வருகிறேன். நீ லீவு எடுத்துக் கொண்டு வீட்ட வரவும். எவ்வளவு காலத்துக்குப் பின் இப்படி ஒருவாய்ப்பு. நாம் இருவரும் சந்திப்பதற்கு கட்டாயம். கட்டாயம் வரவும்” என்று திரும்பத் திரும்ப எழுதப்பட்டிருந்தது.
நானும் லீவு எடுத்துக் கொண்டு சுதா வீட்ட போனால். இது என்ன மாற்றம். வீடு புதுப்பொலிவோடு மின்னியது. ஏதோ ஒரு மங்கலகரமான நிகழ்வு நடப்பது போல் களைகட்டியிருந்தது.
som வெள்ளி இதழ்
 

*கங்ா வெள்ளி இதழ்
வாசலில் போனதும் சுதா ஓடிவந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டர்ள். அந்த முத்தத்தில் நம் பிரிவு நன்றாகவே தெரிந்தது.
என்னைத் தன் கணவன் ரவீந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். "இவள் தான் என் ஆருயிர் நண்பி சிந்து” என்று. ஒரு கணம் எனக்கு பழைய நினைவுகள் திரும்பின.
ஓ.. நானும் சுதாவும் ஒரே வருடம் பிறந்தவர்கள். பாலர் வகுப்புத் தொடக்கம் இணைபியாதே இருந்தம். யாரும் பார்த்தாலே எரிச்சல்படுமளவவுக்கு எங்கள் நட்பு இருந்தது. நிகழ்ச்சிகள் நடந்தால் இருவருமே மேடையில் நிற்போம். விளையாட்டு எனில் மைதானத்தில் சேர்ந்தே இருவருடைய பாதமும் படும். எங்கள் நட்புக் கூட்டுக்கு கல்லெறியப்பட்ட அந்த நாள் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாதது.
1990ல் இடப் பெயர்வு வந்து இருவருமே திசைமாறினோம். சுதா என்னை விட்டுப் பிரிந்தாலும் அடிக்கடி கடிதம் போடுவம். தரிசனம் என்பது இல்லாமலே போய்விட்டது. ஐந்து வருடம் கழிய சுதாவுக்குத் திருமணப் பேச்சு நடந்ததாகவும், லண்டனில் தன்னைவிட ‘பத்து வயது’ கூடிய ரவீந்திரனுக்குத் தன்னை அனுப்பப்போகினம் என்பதனையும் எழுதியிருந்தாள்.
இதில் எனக்கு உடன்பாடில்லை 'பத்து வயது' என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. எங்கள் பள்ளி வாழ்க்கையில் ஒரு “விவாதஅரங்கு” நடந்தது. “குறைந்த வயதுப்பெண்கள் கூடிய வயது ஆண்களைத் திருமணஞ் செய்வது சரியா? பிழையா?’ என சுதாவும் நானும் பிழை என்ற பக்கம் வாதத்தை முன் வைத்தோம். எங்கள் பேச்சு வான்மையால் அதில் நாமே வெற்றியும் கண்டோம்.அதையும் அவளே நினைவூட்டி எழுதியிருந்தாள்.
தான் எவ்வளவோ எதிர்த்தும் கடைசியில் பெற்றோரின்
*நாற்று இதழ் - 25 @

Page 42
요 agramu |
பக்கமே வலுப்பெற்றது என்றும் தன் பேச்சை மேடையோடு விட்டுவிடுமாறும் சொல்லி விட்டார்கள் என்றும் வேதனைப்பட்டு எழுதியிருந்தாள். அதே சுதா. கணவன் ரவீந்திரன். பிள்ளை மது. என்றாலும் ரவீந்திரனோடு சுதாவை ஒப்பிட்ட போது அந்தப் பத்து வயதின் மூப்பு என் ஆழ் மனதுள் சுள்ளிட்டது.
பிள்ளை மது விளங்காத மொழியில் உரையாடினாள். எனினும் என்னுடன் ஒட்டிக்கொண்டாள். அவளுடைய கதையைப் புரிந்து கொள்ள. நான் சுதாவையே நாடவேண்டியிருந்தது.
சுதாவோடு நிறையக் கதைக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். ஆனால் சுதாவின் சொந்தக் கதைகளால் என் உள்ளம் வெடிப்படைந்து விட்டது.
நான் போகேல்லப். போகல்ல எண்டு அடம்பிடித்தும் அம்மாவோ, அப்பாவோ ஏன் எனக்கு கீழ் உள்ள இரண்டு தங்கச்சியோ, கேக்கல்ல. நான் போகவே வேணும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். ஊரில மாப்பிள்ளை இல்லாத கலியாணம் நடத்தினார்கள். விருந்து வைத்தார்கள். போட்டோவும் எடுத்தார்கள். கால்மாறி மாப்பிள்ளை வீட்ட கூட்டிப் போனார்கள். அதோடு அவர்களின் வேலை முடித்து என்னை அனுப்பியும் விட்டார்கள்.
பிரச்சனையான நேரம். களில் ரப்பட்டு பாஸ் எடுத்து கொழும்புக்குக் கூட்டிப் போய் ஏஜன்ற் மூலம் அனுப்பிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் உட்படப் பத்துப் பேர் இடையிடையே நிண்டு லண்டன் போய் இறங்க ரவீந்திரன் ‘எயாபோட்டில்’ நின்றார்.
அவரைக் கண்டதும் என்னை அடக்கமுடியாது அழுகையே வந்தது. தலையில் மயிர் என்பது எண்ணிப்
*நம்று வெள்ளி இதழ் 云罕

*நாற்று வெள்ளி இதழ் 요
பார்க்கத்தான் முடிந்தது. அவ்வளவு மொட்டை. இடையிடை இருந்த மயிரிலும் வெள்ளைமயிர். நான் கட்டியிருந்த கோட்டை சிதற ஆரம்பித்தது. எனினும் வந்துவிட்டன்தானே, விதி என் வாழ்க்கையில் விளையாடி விட்டதே என்று விதி மேல் பழியைப் போட்டு விட்டுச் சேர்ந்து போனேன்.
வீடு என்று சொல்லுமளவுக்கு ஒரு அறை மட்டும்தான் இருந்தது. பெற்றோர் இல்லாது லண்டனில் ஒரு மண்டபத்தில் இயந்திரமயமாகத் திருமணம் நடந்தது. ரவீந்திரனுக்குப் பக்கத்தில் அப்பாவோடு நிற்கும் உணர்வே எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவர் நான் கேட்டதையெல்லாம் வாங்கித்தந்தார். இடங்களையும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினார். இவ்வளவும் ஒரு சில நாட்களே இருந்தது. ஊரிலிருந்து கடிதம் வந்தது.
“பிள்ள வீடுகட்ட வேணும் காசு அனுப்பு” என்று அப்பாவும் “தங்கச்சி வாணிக்கும் வயது வந்திட்டுதெல்ல கலியாணம் ஒண்டு கேட்டு வந்திருக்கினம் பத்து லட்சம் கேக்கினம். உன்னை நம்பித்தான் இருக்கிறம்” என்று அம்மாவும்.
“அக்கா இஞ்ச எல்லாருமே மோட்டச் சயிக்கிள் ஓடுகினம். எனக்கு ஒரு மோட்டச்சயிக்கிள் வாங்க காசு அனுப்பு” என்று தம்பியும்.
“அக்கா நான் கொம்பியூட்டர் வகுப்புக்குப் போறன். வீட்டில வைச்சுப் படிக்க ஒரு கொம்பியூட்டர் வாங்கி அனுப்பிவிடு.” என்று சின்னத் தங்கை நதியாவும் வேண்டுகோளை விட்டிருந்தாள். இவ்வாறு கோரிக்கையடங்கிய மகஜர் வந்திருந்தது.
அது போலவே ரவீந்திரன் வீட்டிலிருந்து ரெலிபோன் வந்திருந்தது.
“தம்பி அக்காவின் மகளுக்கு பிறந்த நாள். நீதானே மூத்த மாமன், ஐஞ்சு பவுனில எண்டாலும் சங்கிலி செய்து
*நாற்று இதழ் - 25

Page 43
위 |
போட்டாத்தானே உனக்கும் பெருமை, உன்ர அக்காவுக்கும் பெருமை.’ இப்படி ரவீந்திரனின் அம்மாவின் கதையிருந்தது.
அப்பா எடுத்துச் சொன்னார் ‘தம்பி என்னால இனி உழைக்க ஏலாது. உன்னை நம்பித்தான் இருக்கிறன். மாதம் மாதம் காசு அனுப்பு. குடும்பச் செலவுக்கு “ என்றவாறிருந்தது. ரவீந்திரனுக்கு இது சகஜமேதான். ஏனெனில் இருபத்தி ஐந்து வயதில் போனவர் முப்பத்து ஐந்து வயது வரை உழைத்து உழைத்துத் தனக்கு எண்டு ஒண்டுமே சேர்க்காது குடும்பம். குடும்பம் என்றே தேய்ந்து போனவர்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் மட்டுமே நான் வீட்டிலிருந்தேன். எனக்கு லண்டனில் வேலை தேடிப் போக மொழிப்பிரச்சனை, ரவீந்திரனோ பெரிய அலுவலகத்தில் வேலை செய்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ஒரு கடையில் கோழி இறைச்சி பக்கற்றில் அடைத்துக் கொடுப்பதும், அத்தோட ஒரு பெற்றோல் செற்றில் பெற்றோல் அடிப்பது. அப்படியிருக்க நான் எப்படி அலுவலகத்தில் வேலை செய்ய முடியும்.
நானும் வேலை தேடிய போது ஒரு வீட்டில் வேலை கிடைத்தது. வீடு கூட்டுவது, துடைப்பது, பாத்திரம் கழுவுவது இப்பிடிப் பல வேலைகள். சம்பளம் எங்கட காசில் சொல்வதென்றால் எழுபத்தி ஐயாயிரம் ரூபா மாத முடிவில் வரும். வேலை என்றால் வாயால் விபரிக்க முடியாது.
வீடு என்றால் அது மாளிகை. அதைத் துடைக்க வேண்டும். முட்டுக்காலில் இருந்து தேய்க்க வேணும். பாத்திரங்கள் தேய்க்க வேணும் சில வேளைகளில் கையைப் பார்த்தால் சிவந்து கொப்பளம்.கொப்பளமாக வெடித்திருக்கும். ஒரு நாள் முட்டுக் காலில் இருந்து தேச்சுக் கொண்டிருக்க கீழ விழுந்திட்டன். நான்
*கங்ா வெள்ளி இதழ் 오

*நாற்று வெள்ளி இதழ் 요
வீட்டுக்கு வர இரவீந்திரன் இரவு வேலைக்குப் போய்விட்டார். நான் கையை சுத்தம் செய்து மருந்து போட்டுவிட்டு எங்கள் வீட்டு வேலையும் செய்தேன். லீவு எடுக்கல்லை. எடுக்கவும் முடியாது. புண் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் வேலைக்குப் போனால் தான் சம்பளம். ஒரு நாள் போகாது விட்டால் அடுத்த நாள் நிப்பாட்டிப்போடுவாங்கள்.
எங்கள் வீட்டுச் செலவு. இங்க எண் வீடு. ரவி வீடு. எல்லாத்துக்கும் காசு தேவைதானே.
எங்கள் “தாம்பத்திய வாழ்வு” நினைத்துப் பார்க்க முடியாத இயந்திரமயமானது நேரம் கிடைக்கும் போது மட்டுமேயான அவலமானது. ஏதோ ஒரு பிள்ளைக்கு தாயாகி விட்டன் “விசர்க்கதை கதைக்காத பிள்ள நீ லண்டனிலயிருந்தல்லே வந்திருக்கிறாய். வஸ் சில போறது மதிப் பே? என்னடா இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவுக்கு வழியில்லாததுகள் எண்டெல்லே சொல்லப் போகுது சனம்.’ என்றா அம்மா பெருமையோடு.
தன் மன ஆதங்கம். உளத்தாக்கம் என்பவற்றைப் படிப்படியாகக் கொட்டினாள். கலகலவென்று சுற்றித்திரிந்த என் நண்பி. அவள் என்னிடம் இறக்கி வைத்த சுமைகள் எல்லாம். என் தலை மீது பாறையாக அழுத்தியது. இந்தச் சமூகம் எப்போது வெளிநாட்டு வாழ்விலிருந்து விடுபடும். உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். எப்போ தம்மையே புரிந்து கொள்ளும் எண்டு சிந்திக்கவே முடியாதிருந்தது.
பொ.நந்தினி
*நாற்று இதழ் - 25

Page 44
-- Fers
"..2222ין
---
ဒွါ Säff ஆ
s
s ja airgiogoitiago
8:88:88:
இரவுணவுகள் குளிர்களிகள்
* 6šfjeloši
r
ĝriĉiĝo
 
 

*நூற்று வெள்ளி இதழ் 요
c፵„ ஒரு கிராமத்தின் வீடு. நீண்ட காலமாக மறு திருமணமாகாத ஏற்கனவே திருமணமான ஓரிரு நாட்களில் திருமணங் குழம்பித் துணைவர் பெண்ணை விட்டு விலகிய வீட்டில் தாய், தந்தை இருவரும் அற்ற நிலையில் பெண்ணொருவர் தனித்திருந்தார். வயது நாற்பதைத் தொடும் அப் பெண்ணைப் பற்றி சில நாட்களாக பலர் குசுகுசுவென்று கதைக்க அவர் பற்றிய செய்திகள் வாய்களின் மூலமாக கடத்தப்பட்டு பத்திரிகையில் வராத செய்தியானது. சங்கக்கடை, கள்லுக்கொட்டில், கலியாணவீடு,
*நாற்று இதழ் - 25

Page 45
요 granu |
செத்த வீடு நாலு பெண்கள் கூடும் இடம் என்று அச் செய்தி பரவிய மையங்கள் ஏராளம். இக்கதைகளின் நடுவே அப்பெண் வைத்தியசாலையிலிருந்து உயிர் தப்பியதே பெரும்பாடு. என்று மீண்டு வந்தார். முன்புபோல் எல்லோருடனும் இயல்பாகப் பழக முடியாத நிலை. ஊருக்குள் முகங்காட்டவே குற்றவுணர்வு முந்திக் கொள்ள மீண்டும் தனித்து விடப்பட்ட நிலை. இந்தத் தனிமைக்கு ஆபத்தாக இருந்த தனிமையைச் சாதகமாக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் பார்த்திருக்கும் சிலர் என்று கதை நீளுகின்றது அப்பெண்ணுடன் சம்பந்தப்பட்ட ஆணின் வயதோ பெண்ணைவிட சரி அரைவாசி இருக்குமிடத்தில் அப் பெண்ணைக் துணைவியாக ஏற்று வாழ்க்கை நடத்த முடியாத நடைமுறைச்சிக்கல் ஒரு புறமிருக்க தனியே சுமையையும் வசைகளையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் வெறுமையான பக்கங்களை நிரப்ப முடியாமல் அல்லலுறும் துயரம் பற்றி யாரும் சிந்தித்ததாய்த் தெரியவில்லை. ஒழுக்கப் பிறழ்வு என்று வரும் போது சமூகக் குற்றம் என்ற பார்வையில் அவரை நோக்கும் யாரும் மனித உணர்வுகள், அவற்றின் அடக்க முடியாத வெளிப்பாடுகள் என்ற ரீதியில் மனிதாபிமானமாக அணுக முயற்சிக்கவுமில்லை, முன் வரவுமில்லை இது இந்த தனியொரு பெண்ணின் கதை மட்டுமல்ல.
இது இன்று எம்மத்தியில் உயர்த்திவிடப்பட்ட சீதன விலையேற்றத்தை எட்டித் தொடமுடியாத சில பெண்களின் கதையும்கூட. சமூகத்தில் பல்வேறு விதங்களில் சம்பிரதாயங்கள் நம்பிக்கைகள் ஜாதகப்பொருத்தங்கள் வாயிலாக தடைப்பட்ட திருமணங்களினால் வாழ்க்கையை வசதியிருந்தும் வாழமுடியாமல் தவிக்கின்ற பெண்களின் கதையாகவுமிருக்கிலாம். அல்லது ஒரு பெண் பற்றிய தப்பபிப்பிராயம் அல்லது பிழையான கண்ணோட்டம் வாயிலாக ஒழுங்கு படுத்தப்படும் திருமணங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் குழம்பிவிட அதனாலும் வாழ்க்கை அமையாத
*நாம்று வெள்ளி இதழ்
வள்ளி' இதழ் @9

*நாம்று வெள்ளி இதழ் 오
பெண்களின் துயரக் கதையாகவுமிருக்கலாம். இப்படிப் பலவாக எம்மத்தியில் இருக்கின்ற முதிர் கன்னிகளுக்கு தமக்கான வாழ்க்கைத் துணை கிடைக்காத நிலையில் வாழ்க்கையை வாழ முடியாத நிலையில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
இவற்றைத் தனியொரு பெண்ணின் தலையில் குற்றமாகச் சுமத்தி விட்டு அவள் பற்றிய வியாக்கியானங்களில் ஈடுபடுவோருக்கு அப் பெண்ணின் வாழ்க்கை பற்றிய உண்மையான அக்கறை சிறிது கூட இருப்பதில்லை. உயிரினங்கள் எல்லாமே பாலியல் உணர்வின் பாற்பட்டவை. அதன் வெளிப்பாட்டிலேயே இந்த உலகின் இயங்கு சக்தி தங்கிக் கிடக்கிறது. இதே அடிப்படைத் தத்துவத்தை விளங்கிக் கொள்ளாமல் சம் பிராதயங்களைப் பற்றியோ சடங்குகளைப்பற்றியோ ஏன் ஒழுக்கம் பற்றியோ தவறுகள் தண்டனைகள் பற்றியோ பேசிக் கொள்ள முடியாது.
ஒரு ஆண் அவர் எந்த நிலையிலிருந்தாலும் திருமணம் செய்வதற்கு தயாராகவும் தகுதியாகவும் உள்ள நிலையில் இந்தச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் ஏராளம் இந்தத் தடைகள் எல்லாவற்றையும் தாண்டி ஒரு பெண் முன் வந்தாலும் அவரைத் திருமணம் செய்ய இன்னொரு ஆண் முன் வந்தாலேயே அவருக்கு வாழ்க்கை சாத்தியப்படும். தனியொரு கைதட்டிச் சத்தம் ஏற்படாத போது பெண் மட்டும் முன் வந்து வாழ்க்கை அமைக்க முடியாது. மீறி அவர் அமைப்பதாயின் முன் சொன்ன பெண்ணைப் போன்றதொரு தவிர்க்க முடியாத சங்கடத்தைத்தான் பெற்றுக் கொள்ள முடியும். அப்படியாயின் இன்று எம் மத்தியில் வாழ்கின்ற ஏராளமான பெண்களின் வாழ்க்கைக்குப் பதில்தான் என்ன?
ஒவ்வொரு வீட்டிலும் அக்காவுடனும், தங்கைகளுடனும் ஏதோ ஒரு வகையில் பெண்களுடன் சம்பந்தப்பட்ட சமூக
*நாற்று இதழ் - 25

Page 46
오 UrbomJ |
உறவுகளில் இருப்போர் அக்கறையுடன் இம்முதிர் கன்னிகளின் வாழ்க்கை பற்றிச் சிந்தித்தால் என்ன ஒருவரைப் பற்றி அவதூறாகக் கதைக்கும் நேரத்தில் அவரின் உணர்வுகளைச் சிறிது புரிந்து கொண்டால் என்ன?
எந்தத் தவறுகளையும் நியாயப்படுத்த முடியாது. சட்டத்துக்கு முரணான குற்றம் என்று இனங் காட்டப்பட்டாலும், சமூக ஒழுக்கத்தை மீறிய செயல் என்று பார்க்கப்ப்ட்டாலும். மனித உணர்வின் அடிப்படை என்றாவது சற்று நிதானித்து ஆராய்ந்து பார்த்தால் இதே சமூகத்தின் மீதே குற்றத்தைச் சுமத்த வேண்டியிருக்கும்.
போர்ப் பங்களிப்பு, அரச வன்முறை, புலப்பெயர்வு, புலப்பெயர்வால் உறவுகள் பிரிந்த தனித்த வாழ்வு, என்று பல வகையிலும் ஆண்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டு சீதன விலையேற்றம், மத நம்பிக்கைகள், சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று பல வகையிலும் திருமண வாழ்வுக்குத்தடை ஏற்பட்டுள்ள சூழலில் ஏக்கமுடன் வாழ்கின்ற முதிர் கன்னிகள் இங்கு ஏராளம் நீங்கள் அடிக்கடி இவர்களை அலுவலகங்களில், பாடசாலைகளில், தையல் நிலையங்களில், அயல் வீட்டில் , மருத்துவ மனைகளில் கடைகளில், கண்டிருக்கலாம். எவ்வளவு தான் வசதியோடு வாழ்ந்தாலும், எப்படி தற்துணிவாகச் சுய உழைப்பில் ஈடுபட்டாலும், எவ்வாறு கலகலப்பாகவும், இயல்பாகவும் இருந்தாலும் இவர்களின் மனதின் ஓரத்தில் உங்களுக்குத் தெரியாமல் உறைந்திருக்கும் தனிமையுணர்வை ஒரு முறை உணர்ந்து பாருங்கள். நீங்கள் ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ இருக்கலாம் யாராக இருந்தாலும் சரி இந்த உணர்வுகளைப் புரிந்து சொந்த மனிதாபிமானம் ஒன்றிருந்தால போதும் முடிந்தால் அவர்களுக்கு ஆதரவாயிருங்கள் முடியாவிட்டால் கூட பரவாயில்லை
*sidomi வெள்ளி இதழ்
S?

*ருங்று வெள்ளி இதழ் 요
அவர்களுக்கு மேலும் துன்பத்தைக் கொடுக்காதீர்கள்.
*k >k >k
இந்த உலகில் அழகாகப் படைக்கப்பட்டிருக்காவிட்டாலும் சரி அன்போடு வாழ்ந்தாலே போதுமானது. அழகுள்ளவர்களைவிட அன்புள்ளவர்களையே அதிகமதிகம் எல்லோரும் நேசிக்கிறார்கள். இந்த அன்பு கூட இல்லா விட்டால் பரவாயில்லை. குறைந்த பட்ச நாகரிகமாக மற்றவர்களுடன் கதைக்கவும், பேசவும் தெரிந்திருந்தாலே ஓரளவுக்குப் போதுமானது. வாழ்க்கையின் தெரிவுகள் இப்படியாகி விட்டனவே என்று யோசிக்குமளவுக்கு உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கதை ஏன் வருகின்றது. என்றால் சிலருக்கு எப்போதும் யாருடனாவது குத்தல் கதை கதைக்க வேண்டும் போலிருக்கும் இப்படியானவர்களை உங்களுக்கு தெரிந்து கூட இருக்கலாம். இல்லைத் தெரியாமலும் இருக்கலாம். ஒரு விடயத்தை நாகரிகமாக நல்ல முறையில் கூறுவதற்குப் பதிலாக நக்கலும் நையாண்டியுமாக உள்ளாந்த அர்த்ததில் கூறி அதைக் கேட்பவரின் உள்ளத்தில் வேலைச் செருகி விடுவதில் இவர்கள் கைதேர்ந்த வல்லுநர்களாக இருப்பர். இவ்விடயம் அவர்களுக்கு தேவையோ இல்லையோ தொடர்ந்தும் இப்பணியிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பர். பகிடி, அறுவை, முஸ்பாத்தி என்ற விடயங்களுக்கும் அப்பால் பலர் முன்னிலையில் அல்லது தனிமையில் மற்றவர்களின் மனதை நோகப் பண்ணும் விதமாக இடக்குமுடக்காக இவர்கள் கதைப்பதை நிச்சயமாக ஒருவரும் விரும்ப மாட்டார்கள்.
அன்பாகவும், ஆதரவாகவும், இருக்காவிட்டால் கூடப் பரவாயில்லை மனம் புண்படும்படியாக வார்த்தைகளை யாருக்கும் சொல்லாமல் இருங்கள். அதுவே போதுமானது. நேரடியாக உரிய முறையில் மற்றவர்களுடன் உரையாடுங்கள். பூராயமாக கதைப்பதை உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்றைக்
*நாற்று இதழ் - 25

Page 47
요
கதைப்பதை விடுத்து நேர்மையாகப் பேசுங்கள். மிகவும் கூரிய ஆபத்தான ஆயுதம் இவ் உலகில் வேறு எதுவுமில்லை. அது மனிதனின் நாக்குத்தான். இந்த ஆயுதத்தால் மற்றவர்களின் இதயம் காயப்படாது இருக்கட்டும்.
typfban
நாகரிகத்தையாவது பேசும் போது கடைப்பிடியுங்கள்.
O O Ο
an O
குறைந்த பட்ச
*நாம்று வெள்ளி இதழ்
34 வயதில் உலக சாதனை
பூலா செளத்ரி என்ற 34 வயது மேற்கு வங்காள வீராங்கனை ஏழு கடல்கள் நீந்திக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். ஏழாவது கடலாக பாக்ஜலசந்தியை 14 மணி நேரத்தில் தனது 34 வயதில் கடந்தார். இவரின் பத்து வயது மகனும் அம்மாவுடன் பாதுகாப்பு வீரர்கள் படகில் வந்தான். இவர் தனுஷ்கோடி கரையை அடைந்தபோது மீனவர்களும் பொது மக்களும் அளித்த உற்சாக வரவேற்பை பார்த்து மெய் சிலிர்த்தார்! “என் பயணக்களைப்பு எல்லாம் இந்த வரவேற்பில் பறந்து போய் விட்டது. "இத்தனைக்கும் ஒரு பெண் பாக்ஜலசந்தியை நீந்திக் கடக்கிறார்’ என்ற செய்தியை மட்டும் கேட்டு வரவேற்றார்கள் தான் இந்த மக்கள்! பூலா செளத்ரி தமிழர்கள் அளித்த வரவேற்பை மறக்கவே மாட்டார்!
நன்றி கல்கண்டு 13/09/2004

*நூற்று வெள்ளி இதழ் 오
பெண்ணின் வாழ்வியக்க யதார்த்தங்கள்
எடுதியவர்: C.S. லக்ஷ்மி
5 SO36, O2/o5/2OO4 தமிழில் - வி.டுேளாளன்
Uெழமையாக பெண்களின் ஆக்கங்கள் நிலையானவையும் “அடிப்படையில் பெண்மையியல்பு கொண்டவை” எனக்கருதப் படுபவையுமான இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. அடிப்படையில் பெண்களின் அனுபவமான ஏதாவதொன்றை தெரிந்து கொண்டு அதைப் பொதுமைப் படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற் கொள்ளப் படுகின்றன. பெண்கள்
*நாற்று இதழ் - 25

Page 48
பெறும அனுபவங் கள , உதாரணமாக, மாதாந்த சு கயினங்கள், மகப்பேறு போன்றவை ஒரே மாதரி யானவையாக இருந்தாலும் அவற்றை எதிர் கொள்ளும் ஆத்மா என்கிற வகையிலே அவர்கள் இணைந்திருக்கும் பிராந்தியம், குடும்பம் சமூகத்தைப் பொறுத்து அவர்கள் பெறும் அனுபவங்களும் வேறுபடுகின்
காலப் பகுதிகளிலும் இவர்கள் இருக்கப் போவதால் அவர் களுடைய அனுபவ நோக்கங் களும் பல்வேறுபட்டவையாகவே இருக்கும். பெண்களின் ஆக்கங்கள் தொகுக்கப்படும் பொழுது அவற்றின் தொகுப் பாளர் அந்த ஆக்கங்களில் “ பெண்ணை’ யே தேடுவார். தொகுப்புக்கு அடிப்படையாக அது ஆகும் பொழுது ஒரு ஆக்கத்தை எப்படி? ஏன்? ரசிக்கிறோம் எண்பது புறம் தள்ளப்பட்டுவிடும். அந்த தொகுப்பும் கிளர்ச்சியற்றதாக, சந்தம் மாறாததாக ஆகிவிடும்.
இதற்கு விதி விலக்காக
sea
“உள்ளே உள்ள நதிகள்” என்ற வங்காள தொகுப்பு நிகழ்கால வங்காள பெண் எழுத்தாளர்களின் பல வித்தியாசமான பதிவுகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. சுவாதி, காங்குலி, ஷர்மிஸ்ரா, குட்ரா, குப்தா ஆகியோரால் அது தொகுக்கப் பட்டிருக்கிறது. வெறுமனே பெண்களால் எழுதப்பட்ட சிறுகதைகளை தொகுக்காமல், இத் தொகுப்பானது, நிகழ்கால வங்காள பெண் எழுத்தாளர் களின் ஆக்கத்திறன் என்ற வரைபடத்தை ஆரயும்முயற்சியாக இருக்கிறது. ஆக்கத்திறனை Uncinou JILI(Bjöß (GENDER SPECIFIC), LITfögölĎ 9gbl (8 JT6öp முயற்சிகளில் எதிர்
மாலினி பட்டாச்சாரியா தனது முன்னுரையில் தெளிவாக விளக்குகிறார். சுற்றிவளைத்துப் பார்க்கும் பொழுது வழமை யாவே பிதாவழி மரபுடன் (P A T R I. A R C H I Y ) இணைந்திருக்குமி சந்தம் மாறாத் தன்மை கொண்ட நிலைக்கு பின்கதவு வழியாக
*நங்க வெள்ளி இதழ்
கு?

*கங்று வெள்ளி இதழ்
திரும்பிவிடுவதற்கு அது வழி வகுத்து விடும் என்று அவர் கூறுகிறார். “பெண்களுடைய ஆக்கங்கள் ஏதோ ஒரு வகை அடையாளப்படுத்தும் இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்கி கப்படுகினிறது” என்கிறார் அவர். மாலினி பட்டாச்சார்யா விளக்குவது போல் ஒரு பெண் படைப்பாளியினுடைய புலமானது பால் அடிப்படையில் குறிப் பானதாக இருந்தால் மட்டும் போதாது. 56) இடவகைகளில் புதைந்திருப் பதாகவும் காணப்பட வேண்டு மென்பதால் மேற் கூறியவாறான அபாயகரமான முயற்சிகள் முக்கியமானவை யாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பால் அடிப்படையில் குறிப்பானதாக இருக குமி ஆக கங்கள் கொண்டிருக்கும் வரலாற்று ரீதியான பரிமாணங்கள், அதனை ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக வரலாற்று ஆவணமாக மாற்றி விடுகின்றன. இந்த தொகுப்பில் இருக்கின்ற சிறுகதைகள் ஆக்கத்திறனை, பெண் களுடைய வாழ்க்கையின் “
요
யதார்த்தங்களுக்கு’ மட்டுப் படுத்தி விடாமல் முடிந்தளவு பரவலான அடிப்படையில் நோக்க வேண்டும் என்பதை போதியளவில் மெய்ப்பித் திருக்கின்றன. இந்தக் கதைகள் வீடுகளுக்கு உள்யேயும் வெளியேயும் பெறப்படும் அனுபவங்களை உள்ளடக்கியிருக்கின்றன. எந்த ஒரு பெண் பாத்திரத்தை யும் வழமையான பாணியில் அமைந்தவையாக கான முடியாது. கதைகள் ஒரே மாதிரியான நடை மொழியில் சொல்லப்படவுமில்லை.
இந்த தொகுப்பு 1952ல் சாவித்திரி றோய் எழுதிய 6 Փ கதையோடு ஆரம்பமாகின்றது. சகுந்தலா ஒரு படைப்பாளி. அவளது ஆக்கமொன்றை பெற வரும் பத தாரிகை யாசிரியர் சமையலறையை வேறாகப் பிரிக்கும் ஒரு திரையின் பின்னால் இருந்து தொடர்ச் சியாக வரும் மாமியாரின் விசமமான பழிப்புரைகள்
*நாற்று இதழ் - 25

Page 49
오다
முடிவேயில்லாமல் தொடரும் சமையல் இரண்டு பிள்ளைகளை கவனித்தல் முதலியவற்றுக்கு நடுவிலேயே உருவாகின்றன என்பதைக் கண்டுகொள்கிறார். சகுந்தலாவின் படைப் புத் திறனுக்கு அந்த வீட்டில் எந்த பெறுமதியும் இல்லை. அவளுடை பேராசிரியர் கணவருக்கு அவளது ஆகி கங் களைப் பார்க க நேரமில்லை. காய்ச்சலில் சுருண்டிருக்கும் பிள்ளையை ஏநீதிக் கொண்டிருக்கும் சகுந்தலாவை விட்டு அவளது ஆக்கத்துடன் செல்லும் ஆசிரியர் அவளுக்கு உள்ளே உள்ள நதியை அவள் எப்படி ஒடவைக்கிறாள் என்று வியந்து கொண்டே செல்கிறார்.
அங்கிருந்து பெண்களின் ஆக்கங்களின் பல்வேறு அம்சங்களுக்கு இந்த தொகுப்பு எம்மை இட்டுச் செல்கிறது. இந்தக் கதைகள் அந்தப் பெண்களின் வாழ்க்கை முறை சரியானதென்று நிறுவ முயலவு மில்லை, அவைகளிலே செய்
in
இல்லை. “யதார்த்தங்களை’ விவரிப்பவை யாகவோ, அல்லது ஒரு பெண்ணைக் குறிப்பிட்ட ஒரு வகைப் போராளியாக, அல்லது புரட்சிக் காரியாக சித்தரிக்கவுமில்லை. அவர்களில் சிலர் அதிகம் ஆறுதல் தரமுடியாத சூழ்நிலைகளுள் மாட்டிக் கொள்கிறார்க ளெனினும் அவற்றுக்குப் பலியாகிப் போனவர்களாக அவர்கள் இல்ல்ை, தினசரி வாழி வினி கடினமான யதார்த்தங்களையும் பிதாவழி மரபு கொண்ட சமூகத்தின் ஒடுக் குமுறை இயல்பான வழிகளையும் பல்வேறு வழிகளில் இந்தப் பெண்கள் எதிர் கொள்கிறார்கள் சாபிவ்ாசுவின் கதையில் வரும் g(b வேலை செய்யும் பெண்களான ராதாவையும் சரமாவையும் போல் வேறு ஒரு வகை வாழ்வைப் பினி னிக் கொள்வதற்கு தங்களது கற்பனை வளத்தைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது புரபிவாசுவின் கதையில் வருவதுபோல் இயற்கை
* Ogrom
வெள்ளி இதழ்
@?

*mskom
வெள்ளி இதழ்
அனுபவிக்கவென தங்கள் வழமையான வேலை நிகழ் வொழுங்கை முறித்துக் கொள்ள முடிவுசெய்து சமைக்க மறுத்து விடுகிறார்கள்.
அவர்களில் சிலர் நஸ்தீன ஜஹானின் கதையில் வரும் குசும் என்கிற பெண்ணைப் போல், தங்களுக்கு எதிராக பயன் படுத்தப்படும் ஆயுதத்தை தம் வசப்படுத்தி, தாங்கள் மாட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலை களிலிருந்து தப்பி வெளியேற அதனைஏணியாகப் பயன் படுத்துவதோடு தங்கள் வாழ்க்கைகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். குசுமின் கணவன் எந்த விதத்தயக்கமுமின்றி அவளைத் ‘தலாக் (மணவிலக்கு) செய்து விடுகிறான். பினர் பு அவளை மீண்டும் சேர்த்துக் கொள்ள விரும்புகிறான். இதைச் செய்வதற்கு அவள் வேறு ஒருவரை மணந்து அவருடன் ஒரு இரவைச் செலவிட்டிருக்க வேண்டும். கணவனே அந்த மணத்தை ஒழுங்கு செய்கிறான்.
நாடோடி ஒருவன் மணமகனாக கணவனால் ஒழுங்கு செய்யப் படுகிறான். இந்த “ஒழுங்கு செய்யப்பட்ட” திருமணம் அவள் Ֆ6ծIՖ] கணவனிடம் திருமி புவதற்கான ஒரு சம்பிரதாயம்தான். ஆனால் குசும் கணவனிடம் போகாமல் அந்த அன்னியனுடனேயே வாழ முடிவு செய்கிறாள்.
இதேபோலவே ஸெலினா ஹரிசெய்னின் கதையில் வரும் மோட்ஜொன், தன்னிலை இழந்து, பெரும்பாலும் வீட்டுக்குவராத தன் கணவனின் தாயாருக்கும் அன்பேகாட்டாத கணவனுக்கும் அடிமையாவதில்லை என்று முடிவு செய்கிறாள். அவளுடைய மாமியார் அந்தக் கிராமத்திலேயே
அவளது வழியைத் தானும் கைக் கொள்ள மோட்டிஜான் முடிவு செய்கிறாள். சீதனக் கோரிக்கைகளை மோட்டிஜான் மறுத்துவிடும் போது தங்கள் பரம்பரை வாழ பேரனைப் பெற்றுத்தா என்று கூறுகிறாள். மோட்டிஜானால் அதனை
*நாற்று இதழ் - 25
Ꮆ8Ꭷ

Page 50
와다
நிறைவேற்ற முடியாது என்று மாமியார் நினைக்கிறாள். ஆனால் தன் கணவனின் நண்பன் மூலம் அவள் இரண்டு பெண் குழந்தைகளை ஏற் கனவே பெற்றிருந்தாள். இருந்தும் ஆண் குழந்தை பெறவில்லை என்பதற்காக வீட்டை விட்டு விரட்டப்படுகிறாள். வேடிக்கை பார்க்கும் கிராம வாசிகளுக்கு முன்னால் தன் மகனுக்கு மறுமணம் செய்து வைக்கப்போவதாக மாமியார் கத்துகிறாள். மோட்டிஜான் சிரித்துக் கொண்டே, உன் மகனை நம்பியிருந்தால் இந்த பெண் குழந்தைகளைக் கூட ଗujନ୍ତି ପ୍ରାର୍ଥ கொண்டிருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறுகிறாள் கதையின் கடைசிவரிகள் மிக அற்புத மானவை தங்கள் தாயின் மார்பகங்களோடு இழைந்த படியே மோட்டிஜானின் பெண் குழந்தைகள் இருவரும் சனக் கூட்டத்தை தங்கள் பிரகாசமான ஒளி விடும் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கதை
gromp |
அத்துடன் முடிகிறது. இந்த முடிவு கதையை ஒரு வித்தியா சமான வாழ்க்கைத் தளத்துக்கு கொண்டு செல்கிறது. அந்த இரண்டு குழந்தைகளும் தங்கள் வாழ்க்கை கதையை வித்தியாசமான முறையில் எழுதக்கூடும்.
வாழ்வில் மலிவான பொருட்களையே பெறமுயலும் ஆதிவாசிகளின் துன்பங்கள் பற்றிய மஹாஸ்வீற்ரா தேவியின் கதை மிக வித்தியாசமான ஒரு வகை வாழ்க்கையை வரைந்து காட்டுகிறது. உப்புக்காக அந்த ஆதிவாசிகள் காட்டில் யானைகளுடன் போட்டி போட
வேண்டியிருக்கிறது.
துஷ்யந்தனதும் பெண் களை அனுபவிப்பதற்கு அவன் கைக் கொள்ளும் வழிகள் பற்றியதுமான நாபனித்தா தேவ்சென்னின் கதை மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லப்படுகிறது. அவர் ஷாலபா என்ற பாத்திரத்தை அறிமுகப் படுத்துகிறார் அவள் சகுந்தலை யின் சகோதரி அவள் தேவலோக மங்கையான
+mgirdibmj வெள்ளி இதழ்
கு?

*நூற்று வெள்ளி இதழ்
மேனகாவுக்கும் உஜ்யினி அரசனுக்கும் பிறந்தவள். அவள் துஷ்யந்தனை பற்றி பெரிதாக எண்ணுவதில்லை துஷ்யந்தன் வேட்டை பயணம் ஒன்றின் பின் கொண்டு வந்திருந்த பெண்களால் அரண்மனை நிறைந்து வழிந்தால் வேறு ஒரு அரண்மனை கட்டும் வரை சகுந்தலையை கூட்டிச் செல்ல வில்லை ஷாலபா சகுந்தலையை முனிவர்களால் ஆழ நடுக் காட்டில் பெண்களுக்கென நடத்தப்படும் நலன் புரி நிலையத்துக்கு அழைத்துச் சென்று பராமரிக் கிறாள். என்று காளிதாசரின் எழுத்தை எந்த விதத்திலும் மதிக்காமல் போகிறது
5605.
இந்த தொகுப்பை வாசிக்க ஆர்வமூட்டுவதாக ஆக்கியிருப்பது கதைகளின்
요
‘சிறப்பான வற்றை மட்டும் தேர்வதற்கான முயற்சியாகவும் அது இல்லை. இதன் பெறுபேறாக வேறு வேறு வழிகளிலும், திசைகளிலும் செல்லும் பதின் மூன்று சிறுகதைகள் கிடைத் திருக்கின்றன. இதன்மூலம் பெண்களின் கருத்து வெளிபாட்டை கருப்பொருள், மொழிநடை முதலியவற்றி லிருந்து விடுவித்து அவை பற்றிய பரந்த நோக்கையும் இத்தொகுதி தந்திருக்கின்றது.
கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு
C.S 6a) iš 3 Lc6?
ஒரு சயாதீன ஆய்வாளரும் எழுத்தாளருமாகும். அவர்
தமிழில் அம்பை என்ற புனை பெயரில் எழுதுகிறார். அவர்
தெரிவுதான். இந்தக்கதைகள் பெண்கள் தொடர்பான எந்த ஒரு குறிப்பிட்ட வகை ஆய்வுகளுக்கான ஒலி, பெண்களையோ அல்லது திரைப்பட ஆவணக் எழுத்துப் பாணியையோ Sir Jusgsgai SOUND AND J ந்துவப் படுத்துபவையாக PICTURE ARCHIVES FOR திநிதித் O RESERCH ON WOMEN - இல் 6) 6). அலலது 5F LO 55 TT6Y) SPARROW) தாபக - கறபனைக e கதைகளினை நம்பிக்கைப் பொறுப்பாளர் வகைப்படுத்தி அவற்றுள் ஆவார். *நாற்று இதழ் - 25 டு)

Page 51
와다 piben
இன்னமும்
முடிவனப்
SHLibla)
மனச் அSை தக்டுS தற்குள் வில்லிதS$ இடுக்கிறதா கட்டுக்கள்?
*நூற்று வெள்ளி இதழ்
 

*நாம்ற வெள்ளி இதழ் -?
குட்கள், yதர்தல்
தUSடுத்கும் தற்குள்
&ýy Shadosön விந்தத் திசைவித்த்தின்றன செல்லுல்தள்?
2-0Mó aðäþá sr-gw இதmழி, இதmஜிழர்/தள் எல்திருத்தின்ரnkதள்?
இல்லதிச் சத்திற்ஸ் இந்த ஊரில் அல்லது உலகத்தில் இடுக்கிறது? அதன் மூதவி இலண்டுSெணக்டு
இதயத்தை Sட்டுS இம்சிக்டுS தாதலன் ஒடுலணை Unசித்திலிறன்
லி லிசிறில் Snkத்டுS திசையெல்டுல் Sளில் yறந்த இதழெங்டுல் அண்wள் ைSவிதர்தந்ை தேடுகின்றேன். அலுதிய உலதையே வேண்டுகின்றேன்.
நீண்டு லிக்குள்ள தாலல் yUனத்தில்
anിത്ത് wnawŷŷoreys இடுவிடில் தெரியுS லினக்டு.
*நாற்று இதழ் - 25 @

Page 52
요 ಹಾರು"
67 மது சமூகம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இக் கால கட்டத்தில் எமது சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. மாற்றங்களினூடாக ஏற்பட்ட விளைவுகள் மதிப்பிட முடியாதவை இந்நிலையில் பெண்கள் சார்ந்த மாற்றங்கள், அனாத்தங்கள், ஆபத்துக்கள், துரோகங்கள். என விரியும் விளைவுகளையெல்லாம் நாற்று' தாங்கி வந்துள்ளது. தமிழீழ மண்ணில் தூவப்பட்ட விஷவாயுக்களிலும், குண்டு மழையிலும், துப்பாக்கி வேட்டுக்களிலிருந்தும், தமிழ்மக்கள்தப்பியது போல நாற்றும் தன் ஆளுமையாலும், அதன் கட்டுக் குலையாத நிர்வாகச் செயற்பாட்டினாலும் ஆண்டுகள் பல கடந்தும் இன்று வாழ்கின்றது. பல்வேறு நாடுகளில் , ஏன் இலங்கையில் இருந்தும்
வெளிவந்த சிறுசஞ்சிகைகளுக்கு நேர்ந்த கதிகளையும் தாண்டி வாழ்கின்ற நாற்றுக்கும், நாற்றின் விளைநிலத்திற்கும் உரிய பெருமையாகும்.
நாற்று'விளைநிலத்தைப்பெருமைப்படுத்தும். அது வளர்ந்து வரும் புதிய எழுத்தாளர்களை வெளிக்கொணரும் கதிராகிய
*நாற்று வெள்ளி இதழ்
 

8.8%88
V

Page 53
오 Cartham
நெல் மணியாகிய எழுத்தாளர்கள் , கவிஞர்கள் விமர்சகர்களை வெளிக்கொணர்ந்த பெருமை நாற்றுக்கு உண்டு.
நாற்றுத் தாங்கி வந்த விடயங்களினூடாகநாற்றின் சிறப்பைப் பேச முனைகின்றேன். நாற்று முழுமையாக பெண்கள் பற்றிய விடயங்களையும், பெண்களது அரசியல் , அவர்கள் வாழும் சமூகம், அச் சமூகத்தில் பெண்களது அந்தஸ்து, பெண்கள் சார்பாக சமூகம் கொண்டுள்ள பார்வை. அதிலும் ஆண்கள் கொண்டுள்ள மனப்பாங்கு, தமிழீழச் சட்டங்கள் பெண்களுக்காக முன்வைத்துள்ள சட்டங்கள். பெண்களது ஆளுமைகள், இலக்கியப்படைப்பாற்றல்கள், பெருமைக்குரிய பெண்மணிகள் என பெண்களது உலகை பலபக்கங்களிலும் நோக்கியுள்ளது.
பெண்கள் பெருமைக்குரியவர்கள், ஆளுமை நிறைந்தவர்கள், எவ்விதத்திலும் ஆணைவிடக் குறைந்தவர்களல்ல, என்பதனை உலகறியச் செய்துள்ளார்கள். அவ்வாறு வீரமங்கையர்களாக பெயர் பெற்ற பலரையும் எமது சமூகம் சிறப்பாக பெண்கள் அறிய வேண்டுமென்பதற்காகவும், அதனூடாக பெண்கள் விழிப்புணர்வு பெறுவதுடன், உடல், உளரீதியாக மாற்றங்களைப் பெற வழிகாட்டியுள்ளனர். அந்த வகையில் அமெரிக்கப்பத்திரிகையாளரின் முதல் பெண்மணியான “ஸாராஜோசப்பாஷேல் அவர்களின் வாழ்க்கைவரலாறு கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. ஸாரா அவர்கள் தனது பணியை பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய வகையில் கண்காட்சிகள் வைத்தது பற்றியும், அவர் பத்திரிகையாளரான சிறப்புப்பற்றியும், சஞ்சிகை நடத்தியது பற்றியும், பெண்கள் திணைக்களங்களில் வேலைக்கமர்த்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதற் பெண்மணி என்பதையும் வெளியிட்டுள்ளதுடன் ඡiඛJප්‍රා பாடலே “மேரிஷாட் ஏலிட்டில்லாம்ப்” என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது நாற்று. (1995 நாற்று)
* Irithm வெள்ளி இதழ்
S?

*நூற்று வெள்ளி இதழ் - --오
இவரைப் போல மரியா மொண்டிசொரி அம்மையார் அவர்கள் இத்தாலிய நாட்டில் அன்கோனாவிலுள்ள சியாராவல்லி கிராமத்தில் 1870ல் பிறந்தவர். இவர் புதிய கல்விமுறைக் கண்டுபிடிப்பாளர் மருத்துவர் மனோவியல் நிபுணர், மானுடவியல் நிபுனர், நிறுவன இயக்குனர், பேராசிரியர் அரச பரிசோதகர், நூலாசிரியர், பெண்ணியவாதி, இவரது குறிப்பிடத்தக்க நூல்களாக மொண்டிசொரிமுறை, உயர்நிலை மொண்டிசொரி, குழந்தைத்துவ இரகசியம், புதிய உலகிற்கான கல்வி, குழந்தையின் கண்டுபிடிப்பு உள்வாங்கும் மனம், மனிதனின் உருவாக்கம் (2Oமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது)
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் வரலாற்றுச் சிறப்புகளையும் நாற்று குந்தவையின் கட்டுரையாக வெளிக்கொணர்ந்துள்ளது. பிரான்சின்டோம்ரமி ஊரில் பிறந்த ஷாக்ஸ்மனின் மகளான ஜோன் ஒப்பவ் ஆர்க் பிரஞ்சிய ஆங்கிலப் புரட்சியின் போது பிரான்ஸ் நாட்டிற்காக தனது வீரத்தைக் காட்டியவர். அப்போரில் c3660) 6T இராணுவத்தினர் துன்புறுத்தல்களைச் செய்து உயிருடன் எரித்தனர். இவரைப் போன்றே இந்தியாவில் பிறந்த ஜான்சிராணி (இலட்சுமிபாய்)அவர்கள் பிரித்தானிய அரசுக்கெதிராகப் போராடினார். இவரைப்போன்று இந்திய காவல்துறைப் பெண்மணி கிரண் பேடியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. இவர் டெனிஸ் வீராங்கனையாகவும், திகழ்ந்தவர். இவருக்கு மகாசேசே பரிசும் கிடைத்தது.
இலக்கியத்தில்வீராங்கனைகளாகத் திகழ்ந்தவர்கள்பற்றியும் நாற்று வெளிப்படுத்தியுள்ளது. பேர்ஸ். என்.பக். அமெரிக்கப் பெண்மணியான இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டதுடன், அமெரிக்கப்பரிசான புலிட்ஸ்ரர் பரிசையும் பெற்றுக் 6)SESTGOởIL6lur. SS6 ugi East wind, West wind, the good
*நாற்று இதழ் - 25

Page 54
오! вићи ||
earth, guovadis (2O 6)LnII fateffalo 2 608T(b) The Mother, other gods, The pariot, Dargonseed Ibn 6uebebel5th, e56LîL-52ă ep6)6). டாக்டர்ஜொய்செலின் எல்டேர்ஸ் - அறுவைச்சிகிச்சை நிபுணர்
இவர்களுடன் சமூக சேவைகளாகிய நிவேதிதா அம்மையார், அன்னை திரேசா போன்றோர்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. ஒவியரான ரோஸா பொன்ஹியூர்பிராஞ்சில் ஒவியங்களில் புரட்சி செய்தவர். இவரது உழவுக்காட்சி, குதிரைக் கூட்டம் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மேற்குலகப் பெண்களே ‘குந்தவையின் கட்டுரைகள் வெளிக் கொணர்ந்தன. நாற்று ஈழத்துப் பெண்களது திறமைகளையும், ஆழுமைகளையும் வெளிக் கொணர்வதில் தவறில்லை. அவர்களது திறமைகளை நேர்காணல்களாகவும், உரியவர்களது திறமைகளைக் கூறுவதனூடாகவும் வெளிப் படுத்தியுள்ளனர். அந்த வகையில் திருமதி மொய்றா ராஜலிங்கம் அவர்கள் சிறந்த் வலைப்பந்தாட்ட வீராங்கனை. மாணவர் களுக்காகவும், கழகங்களுக்காகவும் தனது சேவையைச் செய்துள்ளனர். விழிப்புலன் அற்றவர்களுக்காக ‘வாழ்வோதயம் நிகழ்த்தும் அன்னலட்சமி சின்னத்தம்பி அவர்களது சேவையும், கிளிநொச்சியில் உள்ள கருணா நிலையத்தை நடத்திய மியூறியல் வயலட் ஹட்சின்ஸ் அவர்கள் லண்டனில் பிறந்தவர். 1927 களில் மிசனறியில் ஒருவராக இலங்கை வந்தவர். சுண்டிக்குழி, உடுவில் பெண்கள் பாடசாலையின் அதிபராகவும், ஆசிரியராகவும் விளங்கியவர். அநாதைப்பிள்ளைகளுக்காக தனது சேவையை முழு மனதுடன் ஆற்றியவர். ஈழத்தில் வாழும் ஆசிரியர்கள், சமூக சேவைகள் ஆற்றுபவர்கள், மாணவர்கள் ஆகியோரையும் அறிமுகம் செய்கின்றனர். அந்த வகையில் ஹேமமாலினி உதயகுமார், அற்புதமலர் சோமசுந்தரம், பிறேமாசெல்வராஜா, பாலசுப்பிரமணியம்
*ாற்று வெள்ளி இதழ் ・
ਫ

*நூற்று வெள்ளி இதழ் 요
லக்சனா, திருமதி ஈஸ்வரி மகேஸ்வரன்,நிரமலா கறுப்புசாமி, சுமதி சிவபாதசுந்தரம், மோகனராணி செல்வச்சந்திரன், கமலராணி கிருஸ்ணபிள்ளை, அனுசா இரத்தினசிங்கம், வேலும்மயிலும் சுமதி, மகேஸ்வரி பத்மநாதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
நாற்று தனது நோக்கிலிருந்து பலதரப்பட்ட சேவையைச் செய்துள்ளது. அதில் நாற்றில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் பெண்கள் பற்றியும், சிறுவர்கள் பற்றியும் சிறப்புப் பார்வையாக விடயங்களைத் தந்துள்ளது. குந்தவையின் 'கரிபியப் பிரதேச பெண்கள் அமைப்புக்கள் கட்டுரையானது மேற்குல நாடுகளில் பெண்களின் விழிப்புணர்வும், புரட்சிகரச் செயற்பாடுகளையும் வெளிப்படுத்தியுள்ளது. 19ம் நூற்றாண்டில் கட்டாய கூலிகளாக வந்த ஆபிரிக்கப் பெண்களையும் சட்ட பூர்வ ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளராக வந்த இந்தியப் பெண்களையுமே கரிபியப் பெண்களாக குறிப்பிட்டனர். இவர்கள் அரசியல் கட்சிகளின் தோற்றத்திற்கு வழிகாட்டினர். இது ஒரு தொழிற்சங்க இயக்கமாகவே இயங்கியது. கயானாவில் பெண்கள் முன்னேற்ற அமைப்பு தோன்றியது. இது அடிமை, சுரண்டல், என்பவற்றுக்கெதிராக செயற்பட்டனர். ஜமேய்க்கா - கருச்சிதைவுச் சட்டங்களை நீக்குவது ரினிடாட் ( பெண்கள் உரிமைப் பாதுகாப்புக்குழு, வீட்டு மனைவியருக்கான அமைப்பு) கிரனடா (தேசியப் பெண்கள் அமைப்பு) என பல அமைப்புக்கள் தோன்றியமையும்.
அரூபாவின் “தெளிவாகத் தெரியும் மாற்றங்கள்’கட்டுரைச் சமூகத்தில் பெண்களின் பிரச்சினைகள், பெண்ணியம், பென்விடுதலை என்பன ஆண்மட்டுமன்றி சகலதரப்பினரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது."
*நாற்று இதழ் - 25

Page 55
오! ugdbom
இருபாலாருக்கும் கருத்தியல் ரீதியான விழிப்புணர்வு, பரஸ்பர புரிந்துணர்வு தேவை” என்பது வெளிப்பட்டது.
முதலாளித்துவ நாடுகளில் வளர்ந்து வரும் ஆயுதப்போட்டியினால் பெண்களும், சிறுவர்களும், எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. குந்தவையின் “வன்முறைப் பலிக்கடா’கட்டுரை ஆபிரிக்கநாடுகளில் பெண்களது பிறபபறுபைச் சிதைக்கும் கொடுமையும், உடன் கட்டை ஏறல், வி. வைக் கோலம் போடல், என்பன பாலியல் இம்சை, விபச்சாரம் செய்யத்தூண்டல், உட்படுத்தல் பற்றிப் பேசுகின்றது.
த.ஜான் எழுதிய “உலக அரசியல் அரங்கில் பெண்கள்” என்ற கட்டுரை வாக்குரிமையை ஒவ்வொரு நாடுகளும் பெற்ற வரலாறு கூறப்படுகின்றது. அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டாகவும், நியூஸ்லாந்து (1883) ஐரோப்பா (20ம்நூ) பின்லாந்து ( 1906) ஆசிய நாடுகளில் இலங்கையில் 1931 லும் இந்தியா 1947ல் வாக்குரிமை பெற்றமை கூறப்படுகின்றது.
தமிழ்க்கவியின் பாலியல் தவறுகள் கட்டுரை பாலியல் தவறுகளை மறைக்கக் கூடாது அவ்வாறு மறைப்பது அதற்குத் தீர்வு அன்று. அதனை சரியானமுறையில் கையாளப்பழக வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது மனோன்மணி சண்முகதாசின் “ தமிழ இலக்கியத்தில் பென்களின் இழிதகையை” கட்டுரை இலக்கிய ரீதியாக பெண்நோக்கப்பட்டது சித்கரிக்கப்பட்டுள்ளது. ஆளுமை, திறன், அரசியல்பற்றி டேசிய கட்டுரைகள் ஓவியரவின் உல்லாசப் பெண்கள் தொடரும்கதை” கட்டுரை உம் உலகப்போரின் போது பாலியல் தேவைககாக “உலலாசநிலையங்கள் வைத்து பெண்களை இம் சித்தமை பற்றிப் பேசுகின்றது.” ஆசியப்பசுபிக் பிராந்தியத்திலிருந்து இரண்டு இலட்சம் பேர் பயன்படுத்தப்
*கங்ாறு வெள்ளி இதழ் S?

*நூற்று வெள்ளி இதழ் 요
பட்டனர். இவர்களிற்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையால் கருவுற்ற பெண்களின் குழந்தைகளின் நிலை 'வேண்டாத பிள்ளைகள்’ என்றாகிவிட்டது. இக் கட்டுரையானது சமாதான காலத்தின் போது மாற்றுப்படைகளால் ஏற்படும் சீர்கேட்டை எமது சமூகம் உணர ஏதுவாக அமைகின்றது.
பெண்களின் ஆளுமை, திறன், அரசியல் பற்றிப் பேசிய ட்டுரைகள் பெண்களின் உடல், உள பாதிப்புக்கள், நோய்கள், கருச்சிதைவுகள், கர்ப்பகால நோய்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. இது ஒரு நாட்டின் விடுதலை பெண்கள் விடுதலையில் தங்கியுள்ளதால் அப்பெண்கள் வலுவுள்ளவர்களாகவும், ஆளுமையுடையவர்களாகவும், பலம் பொருந்தியவர்களாகவும், இருக்க வேண்டும் என்பதற்காகவே நாற்றில்’ இவை பிரதானமாக எழுதப்பட்டுள்ளது. இதில் மறைமுக இனஅழிப்பு என்ற கட்டுரை சுகாதாரரீதியாகவும் பெண்களது உடல், உளரீதியாகவும் ஏற்பட்ட அனர்த்தங்கள் பற்றிப் பேசுகின்றது. கொற்றவையின் "தந்தையின் முகம் தேடும் குழந்தைகள்”உயிரியல் இலக்கணம் ஆணாதிக்கத்தை தீர்மானிக்கும் ஒரு காரணியா? “G.M செபஸ்தியாம்பிள்ளை DR க.சிவபாலனின் பிறப்புக்குறைபாடை உருவாக்கும் காரணிகள் இவற்றை வைத்து நோக்கும் போது சமூகத்திலுள்ள ஒவ்வொரு பெண்களும் ஏதோ ஒரு விடயத்தில் நாற்றில் விருப்புடையவர்களாவதுடன் குறித்த விடயம் தொடர்பாக விழிப்புணர்வு அடைவர் என்பது உண்மை.
பெண்களும் தழிழீழச் சட்டங்களும் பகுதியானது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றது. இச் சம்பவங்கள் ஏன் பிரசுரிக்கப்படுகின்றது.? என்ற வினா எழக் கூடும் இதில் உண்மை என்ன வென்றால் ஒருவருமே தமக்கு நடந்தது பிறருக்கு நடக்க கூடாது என்று
*ந்ாற்று இதழ் - 25

Page 56
위 asis ||
நினைத்து அதனை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் பெண்ணை அவளது கருத்தை ஏற்காத இச் சமூகத்தில் உண்மை எவ்வளவு தூரம் போற்றப்படும் என்பது கேள்விக் குறியே. அதனால் தமக்கு நடந்தவற்றை கூறாது விடுகிறார்கள் நாற்று பேசப்படாதவற்றை, உணரவேண்டியவற்றை விழிப்படைய வேண்டியவற்றை இப் பகுதியிலே வெளிப்படுத்தியு ள்ளது. “ மனக்கொடைச் சட்டம்’ தமிழீழம் எங்கும் பரவும் காலம் வரும். கன்னிகள் சிட்டாகப்பறக்கும் காலம் வரும்.
* பரமேஸ்வரியும், பவித்ராவும்” என்ற பாத்திரங்களின் கலந்துரையாடலாக பெண்களது பொருளாதாரம் சுரண்டப்படல், அந்நியப்படை பெண்களை துஸ்பிரயோகம் செய்தல், பெண்களது கல்வி , ஆளுமை போற்றப்படல், ஏமாற்றம், அடிமைத்தனம், மூட பழக்கவழக்கங்களைக் கண்டித்தல், சீதனக் கொடுமை, அதனை எதிர்த்தல், என்பன இங்கு உரையாடலினூடாக வெளிக்காட்டப் பட்டமை, சகல அடிநிலை மக்கள் கூட புரிந்து கொள்ளும் மொழிக் கையாளுகை என்பன LJITLO U மக்களிடமும் சென்றடையக்கூடிய முறையில் இருப்பது சிறப்பாகவுள்ளது.
‘நாற்று' சஞ்சிகை சிறுகதைகளினூடாக பல புதிய எழுத்தாளர்களையும் (1993ல்) ஏற்கனவே எழுத்துத்துறையில் தடம்பதித்தவர்களது சிறுகதைகளையும் தாங்கி வந்துள்ளது. பொதுவாக நோக்குமிடத்து நாற்றுச் சஞ்சிகையின் நோக்கான “பெண்களது ஆளுமை, திறன், பிரச்சினை, தீர்வு’ போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு எழுதியுள்ளனர். இச் சிறுகதைகள் பெண்களுக்கு எதிராக, அவளின் ஆளுமை திறன்களை மதிக்காத ஆண்களதும், சில சமூக நடைமுறைக்குள் வரம்பு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்களதும் மனநிலையைப்படம்பிடிப்பதுடன் அச்சப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும்
*கங் வெள்ளி இதழ்

*கங்ங் வெள்ளி இதழ் 요
பெண்களையும் இவற்றையெல்லாம் துறந்து வெளியேற நினைக்கும் பெண்களையும் சிறப்பாக சிறு கதையில் வடித்துள்ளனர். பூம்பாவையின் நாங்கள் சுமைகளள்ள சிறுகதைகளில் வரும் அப்பா பாத்திரம் கூறுவது‘எப்பிடிப்படிப்பிச்சு என்ன பிள்ளை இன்னொருத்தர் வீட்டுக்குப் போனால் அவையிட்ட நல்ல பேர் வாங்கினால் தான் பெண்களுக்குச் சிறப்பு.’ எங்களப் பாத்துதான் சனங்கள் குறை சொல்லும்.” என்ற அடிகள் தெளிவு படுத்துகின்றது. நந்தினியின் “ அக்கா காத்திருக்கிறாள்’ சிறுகதை வெளிநாட்டில் இருந்து வரும் ஆண்கள் வெளிநாட்டில் திருமணம் முடித்துவிட்டு ஊருக்கு வரும் போது பெற்றோருக்காக வேறு மனம் முடிப்பதும், அவன் நாட்டை விட்டுச் சென்ற பின் தொடர்பை முறிப்பதும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனையே கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள் நாற்றில் இடம் பெற்றுள்ளன. தாமரைச் செல்வியின் “பாதுகாப்பு” இதில் குறிப்பிடத்தக்கது.
விதவைப் பெண்களது வாழ்வு அவர்களது மன உணர்வை வைத்துச் சிறுகதைகளைப் படைத்துள்ளனர். மலரன்னையின் “கூடு திறக்கிறது” கணவன் ஷெல்பட்டு இறந்தது அவளது பலன் என்ற சமூகத்தின் கருத்தை படம் பிடிக்கின்றது. “பெட்டைச்சி ஆறு”சிறு கதையும் விதவைப் பெண்ணை மறுமணம் செய்து வைக்க தூண்ட தன் பிள்ளையுடன் அவள் ஆற்றில் விழுந்து இறந்து போதல் பெண்ணின் உளத்தைப் புரிந்து நடக்கும் சமூகம் உருவாக வேண்டுமென எதிர் பார்ப்பவர்களுக்கு இச் சிறுகதை ஆதரவைக் கொடுக்கும் மைதிலியின் “வாழ்விழந்தவர்கள்’ சிறுகதையும் குறிபபீடத்தக்கது.
திருமணப் பேச்சுக்கள், சீதனக்கொடுமை படிப்புக் குலைதல் மனமுறிவு ஏற்படல் என்பவற்றை கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகள் நாற்றில் இடம் பெற்றுள்ளன. செல்வியின் “பவித்திரா சிரிக்கிறாள்”நா. மனோன்மணியின் “உறுதி” என்பன
*நாற்று இதழ் - 25

Page 57
오! on
குறிப்பிடத்தக்கவை.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களில் பெண்களே அதிகம் பாதிக்கப்ட்டனர். அதிலும் இராணுவத்தின் சித்திரவதைக்குள், பாலியல் சேஷ்டைகளுக்குள், பாலியல் வல்லுறவுகளுக்குள் சிக்குண்டு வாழ்விழந்த பெண்கள் எத்தனை பேர், அவர்களையும் அதற்கு காரணமான இராணுவச் சிப்டாய் பற்றி எமது சமூகம் வைத்திருந்த மூடத்தனமர்ன நம்பிக்கையையும் "நல்ல பாம்பு” சிறுகதை வெளிப்படுத்துகின்றது.
சமூகத்தின் ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகள் பற்றி "சமூக நீதிகள் நா. மனோன்மணியின் சிறுகதை சிறப்பாக சம்பள முரண்பாட்டை வைத்து எழுதப்பட்டுள்ளது. ஆதிலட்சுமியின் “ 'தணலில் விழுகின்ற தளிர் சிறுகதை குடும்பத்தில் கணவனது சித்திரவதை பற்றி பேசுகின்றது. தாமரைச்செல்வியின் “தீர்மானம்” சிறுகதை கணவனது பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை பிறந்ததும் இறந்து விடுகிறாள். அவளது குழந்தையை உரியவன் வேண்டாமென மறுக்க இரண்டாவது மனைவி ஏற்றுக் கொள்ளல் பெண்ணின் நுண்ணிய மனவுணர்வு வெளிக் கொணரப்படுகின்றது. மாபசானின் “அட்டிகை” நகைக்காக ஆசைப்படும் பெண் தன்னிடம் உள்ளதைப்போதுமென எண்ணாமல் போலிநகையை அணிந்து சென்று அதனைத் தொலைத்தமைக்காக பவுண் நகையாகச் செய்து கொடுத்து தனது வாழ்வின் இளமையை துறந்த நிகழ்வு சித்தரிக்கப்டுகின்றது.
விவசாய வாழ்வு இடப்பெயர்வினாலே சீர்குலைந்ததும்
அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் பிறேமினியின் “நீளக்கொம்பன்’ சத்தியமூர்த்தியின் “திரிகாண்டி”இரண்டும் குறிப்பிடத்தக்கது.
+mydbEmI 6) olaiiaf இதழ்
S?

*நூற்று வெள்ளி இதழ் 요
இச் சிறுகதைகள் பல எழுத்தாளர்களை எம் உலகம் தெரியச் செய்துள்ளது. இவர்கள் தமது முச் சுமைகளுடன் தங்களது எழுத்துலக வாழ்வையும் திறம்படச் செய்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் யாவரும் படைப்புலகில் தடம்பதித்து பெண்களது பலதரப்பட்ட விடயங்களையும் சிறுகதைகளினூடக வெளிப்படுத்தியுள்ளனர். ஆதிலட்சுமியின் "வானக்கருமை”பெண்ணுணர்வு, இடப்பெயர்வு போராட்ட வாழ்வு ஆணாதிக்கம் என்பவற்றின் முழுவடிவையும் சித்தரித்துள்ளது.
நாற்று தனது இலக்கியத்தடத்தில் கவிதைகளுக்கென தனியான இடத்தினை பெற்றுள்ளது என்றே கூறவேண்டும். நாற்றின் ஆரம்ப கால கவிஞர்கள் பலர் இன்று கவிதை உலகில் பெயர் சொல்லுமளவிற்கு வெளியீடுகளைக் கூட செய்துள்ளார்கள். இவர்களது கவிதைகளின் சீதனம், சீதனக்கொடுமை பற்றியவையாக அமைந்துள்ளன. ழரீகலாவின் "துணிவு” ரூபியின் “அர்ப்(பணம்’ சீ (இத்) தனம் ந. சுதர்சனாவின் “சிகரங்களை நோக்கி’ துதியின் “ பொத்திக்கொள்’ நா. மனோன்மணியின் “சமத்துவம் இதுவா’
அம்புலியின் “புதியபிறவியாகு” ந.கங்காவின் மனம் சிறகொடிக்காதே’
கவிதைகளில் பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதனை தமது கவியில் வெளிப்படுத்தியுள்ளனர். அலையிசையின் “மெளனமாய் உன்மனச்சாட்சியிடம்”ந. சுதர்சனாவின் “சிகரங்களை நோக்கி’
“விழிகளை இன்னும் திறவுங்கள்”
விடுதலை என்னும் சுவர்க்கம்
இதே அருகிலேயே . என்ற அடி குறிப்பிடத்தக்கது. பூம்பாவையின் “ஒரு வாழ்வின் தேக்கம்” கவிதை, நிதர்சனாவின்
*நாற்று இதழ் - 25 இ9

Page 58
요 Bråbomu
“நிமிர்வு”.மைதிலியின் “பெண்னே கேள்”அலையிசையின், “நானும் சிறகசைக்க” சிவசக்தியின் “இருண்ட காலங்களில் ஒன்று” கொற்றவையின் “ஒரு தென்றலின் வருகை” மனுஷியின் “உள்ளக் கதவுகள் திறப்பாய்” யோ.புரட்சியின் “சிறகு விரித்து’ என்பவை குறிப்பிடத்தக்கவை.
போராட்டமும் போராட்ட வாழ்வு தந்த பாடங்களும் அதில் ஈடுபட்டவர்களுக்காய் குரல் கொடுக்கும் கவிதைகளும் நாற்றில் இடம்பெற்றுள்ளன. ரூபியின் “விடுதலை நோக்கி” ஆதிலட்சுமியின் கிருஷாந்தி நினைவாக எழுதிய கவிதை குறிப்பிடத்தக்கது.
“உயிர் மட்டும் காப்போமென்று புறப்பட்டோர் -வெறும் உடல்களானார் ஒரு நொடியில்..” என்ற அடிகளும்
“இது நாளைய புலர்வுக்காக” என்ற கவிதையும் அலையிசையின் ‘அன்பின் குலவிளக்கு” பூம்பாவையின் “ஓர் உயிர்க்குமுறல்” கொற்றவையின் “என் தேசத்தின் கதை” பாரதியின் “பூபாளமாய் எழுந்து வா’ சித்தாந்தனின் “ஒளிக்காலம் இன்பா இரத்தினத்தின் “சரித்திரமாவாய் பெண்னே’
“சாதனை படைக்கச் சாவினைத்
துாசென நினை சுடுகணை ஏற்று வெடிகனல் கக்கு” என்ற அடிகள் போராட்டத்தின் உச்சம் என்றே கூறவேண்டும்.
s
இலகுவில் புரிபடக்கூடிய காட்டுன் அமைப்பினுாடாகவும் அட்டைப்படங்களினுாடாகவும் எமது பெண்களினதும் சமூகத்தினதும் நிலைமைகளைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.
“நாற்று” நல்ல ஒர் விளைநிலத்தில் *நூற்று வெள்ளி இதழ்
ਫ

*நூற்று வெள்ளி இதழ் 요
விதைக்கப்பட்டுள்ளது. அதற்குநாங்கள்ங் ஊற்றி பாதுகாப்பது எமது கடமை. புதிய எழுத்தாளர்களை, படைப்புக்களை தந்து நிற்கும் நாற்றின் முழுமையானபார்வையை எனக்குக் கிடைத்த இதழ்களைக் கொண்டே ஆராய்ந்துள்ளேன். இதன் தொடர்ச்சியை ஆய்வாளர்கள் தொடர்வார்கள் என்ற எண்ணத்துடன் “நாற்றின்’ செயற்பாடு தமிழீழம் எங்கும் தனது பணியை செய்யட்டும்.
O GO GO
ஜெயபத்மா
1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 22 வயது நிரம்பிய மாகிரட் அல்பேட் என்ற பெண் கோல்ப் விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்ற முதலாவது பெண் வீராங்கனை என்ற பெருமையும் இவருக்குரியதே.
*நாற்று இதழ் - 25 QlᎧ

Page 59
<フ
.ണ്ട്" ബ/ணக்கம் அம்மா
அந்த இரு இளம் பெண்களும் புன்னகையோடு கை குவித்தார்கள்.
“வணக்கம். உள்ள வாங்கோ. இதில இருங்கோ.’ வாசல் கடந்து வந்தவர்களை அமர வைத்தாள். ‘நாங்கள் பெண்கள் நலஅமைப்பு நிறுவனத்தை சேர்ந்த ஆட்கள். குடும்பத்தலைவன்மாரை இழந்தாலும் சுயமாய் உச்ைசு வாழுற பெண்களின் வாழ்வு பற்றி ஒரு ஆய்வு செய்யிறம். அதுதான் உங்களோட ஒரு பேட்டி எடுக்க வந்தனங்கள்.’ மெலியதாய் சிரித்துக் கொண்டே ‘கேளுங்கோ சொல்லுறன்’ என்றாள்.
“உங்கட பேர்’
‘பானுமதி
‘வயது’
நாப்பத்திநாலு’
“எத்தினை பிள்ளையன்’
'ரெண்டு’ “அவைக்கு வயது
பதினெட்டும் பதினாறும்’ 'கலியானம் செய்து எத்தினை வருசம்’
இருபது’ ‘அவர் உங்களை விட்டுப் போனது எப்ப?’ ‘அவர் போய் நாலு வருசமாகுது.
*நூற்று வெள்ளி இதழ் கு?
 

*நாற்று வெள்ளி இதழ் 오
‘அவரோட உங்கட வாழ்வு எப்படி இருந்தது. ஒரு வினாடி தயங்கினாள். 'உண்மையைச் சொல்லுங்கோ அம்மா ?” ‘சரியாய்க் கஷ்டப்பட்டனான்தான். குடிப்பார். குடிச்சிட்டு வந்து அடியும் உதையும்தான். நாங்கள் இடம் பெயந்து மல்லாவியில சொந்த பந்தத்துக்கு பக்கத்தில இருக்காமல் தனிச்சுப் போய் இருந்தனாங்கள். எனக்காக கதைக்க எங்கட பக்கத்தில ஆட்களும் இருக்கேல. அந்த வாழ்க்கை கவலைதான். துன்பம்தான். அதை ஏன் இப்ப.
‘இல்லை அம்மா. எல்லாம் நீங்கள் சொல்லவேணும். சமூகத்தில பெண்களுக்கு எத்தினை விதத்தால துன்பம் வருகுது என்று வெளிப்படுத்த வேணும். இப்பதான் மனிசன் இல்லையே நீங்கள் மனம் விட்டுச் சொல்லுங்கோ. உங்கட பேரை வெளிப்படுத்த நீங்கள் விரும்பாட்டி நாங்கள் வெளில விட மாட்டம். உங்கட கருத்து மட்டடுமே வெளிவரும். நீங்கள் பயப்பிடாமல் சொல்லுங்கோ.’
ஒருநிமிடம் நிதானமாய் அவர்களைப் பார்த்தாள். கண்களை ஒரு தடவை அழுத்தமாய் மூடித்திறந்தாள். சிறு துளிநீள் விழியோரங்களில் திரண்டு நின்றது.
நெஞசுக்குள் ஏதோ அழுத்துவது போலிருந்தது. ‘அந்த பழசு எல்லாம் ஏன் பிள்ளையஸ். பொம்பிளையளாய்ப் பிறந்தால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. சிறுமைப் படவேண்டியிருக்கு. நான் எல்லாச் சிறுமையும் பட்டிட்டன்’ “எத்தினையோ பொம்பிளையள் இப்படிக் கஷ்டத்துக்குள்ளதான் வாழுகினம். அதை எதிர் கொள்ளுறதுதான் முக்கியம் அம்மா. 'கலியாணம் செய்த நாளிலயிருந்தே மாறிமாறி பிரச்சனையள்தான் கலியாணம் கட்டின சந்தோசமே இல்லாமல் போச்சு. உத்தியோகம் எண்டு அவருக்கு இல்லை. போற வேலையளிலயும் ஒழுங்காய் நிற்கிறேல்லை. புடவைக்கடையில ஆறுமாதம் பாட்ஸ் கடையில ஆறுமாதம் எண்டு அலைஞ்ச படி எல்லா இடத்திலயும் சண்டைதான். பொறுப்பு இல்லை. கடைசியா சாப்பாட்டுக் கடையில கூட நிண்டவர். கூலிவேலைக்கும் அப்ப அப்ப போவார். ரெண்டு நாள் வேலை செய்தால் நாலு நாள் வீட்டில இருப்பர். எவ்வளவு கஷ்டம். வீட்டில அது இல்லை இது இல்லை எண்டு சொல்லக்
*நாற்று இதழ் - 25 113

Page 60
오! pdom
கூடாது. சொன்னா கோபம் வந்திடும். கோபத்தில என்ன செய்யிறது எண்டு தெரியாமல் என்ர தலைமயிரை கையில சுத்திக் கொண்டு சுவரோட முகத்தை மோதுவார். எத்தினை இடி உதையைத் தாங்கியிருப்பன். குடிச்சா கண்மண் தெரியாது. உழைக்கிறதை கொண்டு வந்து ஒழுங்கா தாறதல்லை. இத்தினையும் என்ர தலைவிதி எண்டு பொறுத்துக் கொண்டிருந்தன். என்ர பக்கத்து உதவியும் இல்லை ரெண்டு பிள்ளையளை வளர்க்க வேணுமே. எல்லாக் கொடுமையையும் பொறுத்துக் கொண்டு அந்தாளோட இருந்ததுதான் ஆனா. குரல் தழும்பியது. தலை குனிந்து சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். நினைக்கக்கூடாது என்று தீர்மானித்தவைகள் எல்லாம் கூப்பிடாமல் ஓடி வந்து நெஞ்சுக்குள் நிரம்பிக் கொண்டன. ஆழமான வலயைத் தந்தன.
‘அந்தப்பெண்கள் இவளை அனுதாபமாய்ப் பார்த்தார்கள். “இத்தனையையும் பொறுத்திருந்தது எல்லாம் சாதாரணம் போல இன்னுமொரு பேரிடி தலையிலை விழுந்துது. வவுனியாக்கு போய் வியாபாரம் செய்யப் போறன் எண்டு என்னட்ட இருந்த ஒரே சங்கிலியையும் சண்டை பிடிச்சு பறிச்சுக் கொண்டு போனார். தொடக்கத்திலே ரெண்டு மூண்டு தரம் வந்து போனார். பிறகு கொஞ்சநாள். வரேல்லை. பிறகுதான் அறிஞ்சம் அங்கையும் ஒரு பொம்பிளை இருக்கெண்டு. வாழ்கையே வெறுத்துப்போச்சு செத்துப் போகலாம் போல இருந்தது. ரெண்டு பிள்ளையளையும் விட்டுப் போக ஏலுமே. அதையும் பொறுத்து கொண்டன். அந்தப் பொம்பிளையைப் பற்றி ஏதும் கேட்டால் எனக்கு அடியும் ஆய்க்கினையும்தான். எனக்கு படிப்பு இல்லை எனக்கெண்டு ஒரு வேலை தேடிக்கொள்ள முடியேல்லை அந்தாள் காசு தந்தால் சாப்பாடு இல்லையெண்டால் பட்டினி எண்ட நிலைதான். குடிச்சிட்டு வந்தால் பிள்ளையஞக்கும் அடிதான். அதைத்தான் என்னால தாங்கேலாமல் இருந்தது. அரை வயிறுச் சாப்பாட்டுக்காக அத்தனையையும் தாங்கினன். எனக்கெண்டு ஒரு மனம் இருந்து என்ன செய்யிறது. என்ர பிள்ளை பன்ரெண்டு வயதில தோட்டத்து வேலைக்கு கூலிக்குப் போனான். நானும் அயலட்டையில மா இடிக்கப் போனன். எங்கட உழைப்பில மனிசன் குடிச்சுக் கொண்டு சுகமாய் இருந்தார். என்ர காதுத் தோட்டைக் கூட பறிச்சு எடுத்துக் கொண்டு போய் அந்தப் பொம்பிளைக்கு குடுத்திட்டு வியாபாரத்தில நட்டம் எண்டு பொய்வேற. ஆரை நான் நோகிறது. எல்லாம் என்ர விதி
ngrih air O *II 6alitaf Søst 动?

*நூற்று வெள்ளி இதழ் 요
எண்டு இருந்தன்.’
தொடர்ச்சியாக பேசியதில் மூச்சு வாங்கியது. சேலைத்தலைப்பால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டபின் இமைகளில் ஈரம் படிந்து போய் இருந்தது.
பிறகு எப்பிடி செத்தவர்.’ மெலிந்த குரலில் சங்கடத்தோடு கேட்டார்கள். ஒரு வினாடி முற்றத்தை. அதைத் தாண்டி தென்பட்ட தெருவை வெறித்துப் பார்த்தாள். மறு விநாடி இயல்பாக திரும்பி அவர்களைப் பாரத்துத் தொடர்ந்தாள். 'மத்தியான நேரம் நல்ல வெறியில வந்தார் சாப்பாடு எடுத்து வை. குளிச்சிட்டு வாறன் எண்டு கிணத்தடிக்குப் போனார். கிணத்துல தண்ணி அள்ளுறபோது கால்தவறி கிணத்துக்க விழுந்திட்டார். நான் தற்செயலாய் யன்னலால பார்த்திட்டு குளறி அழ பக்கத்து வீட்டுச்சனம் ஓடி வந்து தூக்கினது. அதுக்குள்ள சீவன் போயிட்டுது' ‘சரி. அதுக்குப் பிறகு.? ’ "கண்ணைக் கட்டி காட்டில விட்டது போல இருந்துது. என் ஈ செய்யிறது எண்டு தெரியாமல் நாள் கணக்கில அழுது கொண்டிருந்தன் எதாவது உழைச்சே ஆகவேணும் எண்ட நிலை. படிப்பில்லாத எனக்கு சமையல் வேலைதான் கை குடுத்துது. ஒரு நிறுவனத்தில சமையலுக்கு சேர்ந்தன். ஒரு வருசத்தில சமையல் நிர்வாகத்தை பொறுபபெடுத்து நடத்தினன். என்னால உழைக்க முடிஞ்சுது. கூலி வேலைக்கு விடாமல் பிள்ளையளை ஸ்கூலுக்கு விட்டு படிக்க வைக்கிறன். சமையல் வேலை தவிர மிச் "சுரங்களில வீட்டில பலகாரம் செய்து கடையளுக்கு குடுக்கிறன் இப்ப ஆட்களை வைச்சு பெரிய அளவில பலகாரம் செய்யிற தொழிலை தொடங்க யோசிக்கிறன். கஸ்டப்பட்டு உழைச்சா பலன் கிடைக்கும். நம்பிக்கை இருக்கு, மனிசனை சார்ந்துதான் இருக்கவேணும் எண்டு எவ்வளவு விசர்த்தனமாய் இருந்திட்டன். இப்ப நினைக்க வெக்கமாய்க் கிடக்கு. எவ்வளவு காலத்தை வீணாக்கியிட்டன்’ ‘இப்ட உங்கட உழைப்பின்ர வருமானம் போதுமானதாய் இருக்கா அம்மா’ ‘போதும் என்டதை மனம்தான் தீர்மானிக்கிறது. ஆசை இல்லை ஆடம்பரம் இல்லை. தேவைக்கு மட்டும் வந்தால் போதும் . சாப்பிடவும் உடுக்கவும் 'பிள்ளையன் படிக்கவும் என்ர உழைப்பு கை குடுக்குது.
*நாற்று இதழ் - 25 II5

Page 61
오 вића ||
கெளரவமாய் வாழலாம். எண்ட நம்பிக்கை இருக்கு. இதை விட வேறென்ன வேணும்’ ‘சரி அம்மா. எல்லாம் சொல்லியிட்டீங்கள் தானே. வேற ஏதாவது சொல்ல இருக்கா. இல்லை என்று தலையசைத்தாள். ‘அப்ப நாங்கள் போயிட்டு வாறம்,’
அவர்கள் எழுந்து படியிறங்கி வாசல் நோக்கிப் போனார்கள் . அவள் தூணில் சாய்ந்து நின்று அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லாம் சொல்லியிட்டீங்கள்தானே. வேற ஏதாவது சொல்ல இருக்கா என்று அவர்கள் கேட்டது நெஞ்சில் நின்றது. சொல்லவில்லை. எல்லாம் சொல்லவில்லை. உதட்டு வளைவில் ஒரு சுழிப்பு வினாடியில் தோன்றி மறைந்தது .
குடிவெறியில் கிணற்றடியில் நின்று அவவோடு சண்டை போட்டு அவளை காலால் உதைய எத்தனித்த போதே அவன் தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தான் . அவன் தடுமாறி விழ நேர்ந்த இந்த கணம் காப்பாற்றியிருக்கலாம் . எட்டிக் கையைப் பிடித்துக் காப்பாற்றியிருக்கலாம். அல்லது கிணற்றுக்குள் அவன் விழுந்த உடனாவது சத்தம் போட்டு ஊரைக் கூட்டி அவனை தூக்கியிருக்கலாம். மனம் இறுகிப்போக தான் நின்று கொண்டிருந்த அந்த சில நிமிட நேர அமைதி பற்றி அவளால் எப்போதுமே யாரோடும் பேச முடியாது. நிமிர்ந்து தெருவைப் பார்த்தாள். புழுதி சூழ பெரும் இரைச்சலுடன் வாகனம் ஒன்று போய்க் கொண்டிருந்தது.
GD O Ο
தாமரைச்செல்வி2
*நங்று வெள்ளி இதழ் 와


Page 62


Page 63