கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான் 1998.10-12

Page 1


Page 2
சஞ்சிகை
S, எட்வின் வசந்தராஜா
- - - O MAI , , , , Th
இணை ஆசிரியர் : ஜீவனதாஸ் பெர்ணான்டோ
O.M.I. , 3. A
நிர்வாகக்குழு : அ.ம.தி. இறையியல் மாணவர்கள் (ềg Toứu từ ov), .
இதழ்: 4
1998
rst
மனித மேம்பாடு ஒரு சமூகவியல்நோக்கு
ஜி. எம். செபஸ்தியாம்பிள்ளை கருத்துக்குவியல் -78 சிறுவர்களும் அவர்களின் மேம்பாடும்
ஜெனோவா அல்பிரட் LL. B. மனிதன் -பகுத்தறிவு = மிருகம் மனிதன்+பகுத்தறிவு=தெய்வம்
ngượ6} & đề6ưuữ36ở7 நெஞ்சே நீ கலங்காதே
இடைக்காடன் கற்றலுக்கு ஊக்கமளித்தல்
சறோஜா 5i GTINGWA U
வாழப்பிறந்தவன் அட்டைப்பக் ஓவியம்; லிைறா நிர்மலா நவரெட்ணம் சொல்லோவியம் 7
சமூக மேம்பாட்டு
குறிகாட்டிகள்
ஆ. செளந்தரலிங்கம் புன் கண்ணீர் GAfgš O. M., M. A. 曼鹦。 ரவீந்திரன் Gas sing asperie O. M. , Ph. D. கலைகளின் பங்களிப்பு üsô gang Sur si O., M. E., M. Phil டும்பத்தின் பங்கு அல்
v, g5 ( i A5
O. M. M. A. (355 Gềơaắềunử Gu೨೫೫
G735 17. řqy:
நான்' ஆசியர்,
கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்,
ஆண்டுச் சந்தா g’so-90
(தபால் செலவிடின்)
தனிப்பிரதி ரூ 12-00

1 sܬܐ را ه به حمله ا ၄၅င်္ဂါဇုံuu့်"၊ ". fESRFIF
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலேயே
கணணி யுகத்திற்குள் காலடி எடுத்து வைத்துவிட்ட உலகம், இருபத்தியொராவது நூற்றாண்டில் நுழையும் Gυ η 3), σβού βαρώ υσα காணுவோம்?’ எனச் சிந்திக்
கின்ற காலமிது.
ஆனால் யத்த பூமிக்குள் இருந்து கொண்டு தனி மனித
மேம்பாடு' பற்றி சிந்திப்பது வியப்பிற்குரிய 62065°-فان !
அழிவுகளும், அனர்த்தங்களும், அவலங்களும் நீண்ட தொடர்கதையாகி அதற்குள்ளே வாழப் பழகிவிட்ட ஒரு சமூகம் நாம், இயல்பற்றநிலை இயல்பானதா கிக்கொண்டு
வருகின்ற நிலை எமக்கு.
போதை போன்ற - உயிர்க் கொல்லிகளும், சமூகச்சீர் கேடுகளும், எயிட்ஸ் போன்ற நோய்களும் அதி கரித்து சமூகத்தை உருக்குலைக்கும் 67ώρ6οσταουθού, அனைத்து கடைகளையும் தாண்டி βαρώυ σ (2 Φν60), αν "நான" ஆலோசனை கூறுகின்றான். தனி மனிதன் மேம்பாடடைய குடும்பம், சமூகம் உதவ வேண்டும் பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், கல்வி கலை, கலாச்சாரம் போன்றன துணை நிற்கவேண்டும். இத் துணைக் கரங்களை பற்றிப் பிடித்து உந்து சக்தி யாக்கி தனிமனிதன் மேம்பாடு அடைய முடியும். * இருளைப் பழிப்பதை விட ஒளியை ஏற்றுவது (psi.” என்பதற்கொப்ப இருள் சூழ்ந்த எம்மண்ணில் ஒரு சிறு ஒளியையாவது ஏற்றி வைத்து மேம்பாடு அடைய
puള്ബ് ()
'நான் வளர்ந்தால் நாம் வளர்வோம்.”
ஆசிரியர்

Page 3
மனித மேம்பாடு ஒரு சமூகவியல் நோக்கு
qALALLAT LALAA AA AMSAALAA AAAAAA LALAMALALASA ALeA ALALALALALT TLLALASSSA ALAeeMeqMAAA AALLSLLLAAAAA S AAAALLL0 S SqLeSSeqeALLLSS S SSTALLLLLAAS LALASSS
ஜி.எம் செபஸ்தியாம்பிள்ளை சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ் . பல்கலைக் கழகம்.
மனித மேம்பாடு என்பது மனிதன் தோன்றிய காலந் தொட்டு கோட்பாட்டு ரீதியாகச் செயற்படா விட்டாலும், மேம்பாட்டிற்கான செயற்பாடுகளும், சிந்தனைகளும் காலத் திற்குக் காலம் முன் வைக்கப்பட்டு வந்துள்ளன.
மனுதர்ம சாஸ்திரம், விவிலியம் போன்ற நூல்களிலும் இன்னும் பல சீன, மத்திய கிழக்குப் பகுதிகளில் உருவாகின. நூல்களிலும் இ  ைவ பற்றி த் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
சோக்கிரட்டிஸ், தன்னைத்தான் அறிவதிலேயே சமூக மேம் பாடு உருவாகும் என்றார்.
பிளேட்டோ, சமூகத்தை மூன்று பிரிவுகளாக, அவரவர் ஆற்றல்களுக்கு ஏற்றவாறு பிரித்து, தத்தமது கடமைகளைச் செய்யும் போது சமூக மேம்பாடு ஏற்படும் எனக் கூறினார்.
விவிலியம் ஆன்மீக மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாடு ஏற்படும் எனக் கூறி நிற்கின்றது. புனித தோமஸ் மூர் வீணாகக் ாலத்தைப் போக்காமல், ஆடம்பர வாழ்வை அகற்றி, ஒருவர் ஒருவருக்கு உதவுவதிலே ஆர்வம் காட்ட சமூக மேம்பாடு ஏற் படும் என்று தனது "உட்டோபியா' விலே கூறுகின்றார்.
சமூகவியல் நோக்கில் வளமார்ந்த மேம்பாடுகளை ஆய்வு செய்தோர் பல்வேறுபட்ட கோட்ப ாடு க ைள உருவாக்கி உள்ளனர். அவை பின்வருமாறு:
(அ) பரிணாமக் கோட்பாடு. (ஆ) அமைப்பியல் - தொழிற்பாட்டுக் கோட்பாடு. (இ) நவீனவியற் கோட்பாடு.
நான் 02

(ஈ) பொருளியல் விளைவுக் கோட்பாடு. (உ) மார்க்சியக் கோட்பாடு
(pot) சார்புநிலைக் கோட்பாடு. (எ) விடுதலைக் கோட்பாடு.
சார்ல்ஸ் டார்வின், ஒக்ஸ்தே கொம்தே, எமில்டூர்க்கைம் கார்ள் மாக்ஸ், மக்ஸ் வெபர் போன்றோர் சிந்தனைகள் 96LJADs மேம்பாடு படி மலர்ச்சியின் வழியாக முன்னெடுக்கப்படுகிறது எனச் சுட்டிக்காட்டினர்: சமூக அமைப்பின் தன்மையைப் பொறுத்தே சமூக மேம்பாடும் அமையும் என்பது இவர்களது ஆய்வின் சாராம்சம்.
சமூகம் என்பது ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு சமுக நிறுவனங்களைக் கொண்டது. சமயம், கல்வி, அரசு , அரசாங்கம், குடும்பம் போன்ற நிறுவனங்கள் தமக்குள் ஒருவித சம நிலையைப் பேணுகின்றன. இந்தச் சமநிலைத் தொழிற் பாடுகளே சமூக மேம்பாடுகளை ஏற்படுத்துகின்றன என்பதை அமைப்பியல் - தொழிற்பாட்டுக் கோ ட் ப ா டு வலியுறுத்து கின்றது.
புதிய சிந்தனைகள் தோன்றும்போது, சமூக நிறுவனங்கள் அதனை உள்வாங்கி அவற்றுக்க அனுசரணையாக அமைந்து சமூக மேமபாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று நவீனவியற் கோட்பாடு வலியுறுத்தி நிற்கின்றது.
தேசிய முன்னேற்றம், சமூக மேம்பாடு முதலியவை மனித மூல கண் உயற்சியோடு தொடர்புடையது என்பதை பொருளியல் விளைவுக் கோட்பாடு குறிப்பிடுகின்றது. ஆகவே மக்களின் உடல் உள ஆற்றல்களை கவ்வியில் வளம்படுத்தி மேம்பாட்டை ஏற்படுத்துதலை ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறுகின்றது, இக் கோட்பாடு இக் கருத்தை முன்வைக்க, இதற்கு எதிர் மறையான வினாக்களும் எழத்தான் செய்கின்றன; கல்வி என் றால் என்ன? எவ்வகையான கல்வி? பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? யாரு க் கா ன் பொருளாதார வளர்ச்சி? உயர் குழாமின் விழுமியங்களைப் பேணுவதுதான் கல்வியா? அல்லது வளர்ச்சியா? இப்படிப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒரு பிரதேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் மேம்பாடானது இன்னொரு சமூகத்தின் மேம்பாட்டுடன் தொடர்புபட்டிருத் தலைச் சார்பு நிலைக் கோட்பாடு விளக்குகின்றது. உதாரண
03 நான்

Page 4
மாக இன்றைய முதலாளித்துவ நாடுகளின் முன்னேற்றம் வறிய நாடுகளைத் தொடர்ந்து சுரண்டும் நிலையை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
சமூக அமைப்பிலும், உற்பத்தி முறையிலும் காணப்படும் முரண்பாடுகள் தோற்றுவிக்கும் பல்வேறுபட்ட செயற்பாடுகள் மேம்பாட்டை வருவிக்கின்றன. அடிக்கட்டுமானம் எப்படி உள்ளதோ அதன் வெளிப்பாடு மேற்கட்டுமானத்தில் புலப்படும் என்று மார்க்சீயக் கோட்பாடு விளக்குகின்றது.
சார்புநிலைக் கோட்பாடு, மார்க்சீயக் கோட்பாடு முதலிய வற்றுடன் தொடர்புகொண்டதாக மேம்பாடு பற்றிய விடு தலைக் கோட்பாடு விளக்குகின்றது.
அரசியல் , சமூக, பொருளாதார புரட்சிகர மான மாற்றங்களைக் கொண்டுவருவதன் வாயிலாகவே மேம் பாடு சாத்தியமாகும் என்பதை விடுதலைக் கோட்பாடு விளக்கு கின்றது. இக் கருத்தை வலியுறுத்தியவர்களில் பவுலோ பிறேறி (Paulo Frere) சிறப்பார்ந்த இடத்தை வகிக்கின்றார்.
எந்த வகையான கோட்பாடாகிலும் அரசியல் , பொருளr தார அடிப்படையில் மட்டும் நோக்குவோமேயானால் அது சிறப் பார்ந்த கோட்பாடாக இருப்பது கடினம்?
மனிதனின் வாழ்வு இவ்வுலகை சார்ந்தது மட்டுமல்ல, அவன் மறுமையில் இரண்டறக் கலக்கவேண்டும். ஆகவே, ஒரு வன் இம்மையிலும் மறுமையிலும் மேம்பட உருவாக்கப்படும் கோட்பாடுதான் சமூக மேம்பாட்டை ஏற்படுத்தும்.
மனிதன் புறத்தே செய்வதெல்லாம், அவன் அகத்தே எண்ணும் எண்ணங்களின் வெளிப்பாடும், நிறைவும் தான். திறமையாகச் செயல்பட, அவன் தெளிவாகச் சிந்திக்க வேண்டும், உத்தமமாகச் செயல்பட, அவன் உத்தமமாகச் சிந்திக்க வேண்டும்.
வில்லியம் சே எனிங்
நான் 04

கருத்துக் குவியல் 78
சமூகமேம்பாடு
வளர்க்கப்படுகின்றது
சிதைக்கப்படுகின்றது
சிதைக்கப்படுகின்றது:
சமூக மேம்பாட்டிற்கு மிக முக்கிய காரணியான சமூக
அங்கத்தவர்களது ஒருமித்த செயற்பாடு என்பது தனித்து, தனி
நபரது இணைவு என்பதல்ல. தனி நபர்களினது மன (mind)
இணைவு என்பதாகும். தற்கால நடைமுறையின்படி சமூக மேம்
பாட்டில் - சமூக இணைவாயினும் சரி - மன (mind) இணைவு ஆயினும் சரி - ஏதோ ஒரு மன நோக்கத்தினை தமது மறை நோக்காக அல்லது பின்னணியாகக் கொண்டவையாக அடிப் படையில் அமைந்து விடுகின்றன. கிராம மட்ட சனசமூக நிலை யங்களினை எடுத்துக்கொண்டால் அங்கு எல்லை, அங்கத்தவர் என சமூக மேம்பாட்டு அடிப்படைக் காரணிகள், சமூகநலன் என்கின்ற வெளிப்பூச்சுடன் வகுக்கப்படுகின்றன. அத்துடன் நிர் 6007 auth செய்யவும்படுகின்றன. இங்குதான் உயர்வு, தாழ்வு, சாதி - மது, வர்க்க - நிற என பாகுபாட்டு அம்சங்கிள் சுய நிர்ணயப் போக்கில் செயற்பாடடைவதனால் முரண்பாட்டுச் ஒக்கல்களும் கூடவே தோற்றம் பெற்று சமுதாய சீர்கேட்டுக் காரணிகளினைத் தோற்றுவித்து விடுகின்றன. சரி இவை யாவை யும் மறந்து சமூகமட்ட குழுக்களினை எடுத்து நோக்குவோம்.
மனிதன் அறிவு ( 1 ? ) பெற்ற நாள் முதல் சமூகநல குழுக் கள் யாவுமே மிகவும் சாதுரியமானதாக, புத்திஜீவிகளினது கூர்மையான, அனுபவரீதியான சுரண்டல்களாகவே இருந்து வருகின்றது. மறைமுகமான தேர்தல் முறையாகவோ அல் லது பிற சமூக ஆதரவுடனான தேர்வு முறையாகவோ அல்லா மல் 'ஊழல் பெருஞ்சாளிசள்" தமது நலன்களை சமூக நலன் என்கின்ற போர்வையினுள் அடக்கிவிடுவது மட்டுமல்லாது; பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றுவதுமல்லாது; நூற்றாண்டு கால குழுவாக செயற்படும் அல்லது செயற்பட இக்குழுவாகும்
05 15rr6tiar

Page 5
அங்கத்தவர்கள் தவறுவதில்லை. தீய நலனுக்காகவும் இவர் களது குணவியல்பு இணையும் தன்மையைப் பாராட்டினாலும் இவர்களது தொடர் செயற்பாடுகள் தான் சமூக சீரழிவுக்கும் காரணமாகின்றன. தனிநபர்- குடும்பமாகி, சமூகமாகி, கிராமம் பிரதேசம், மாவட்டம் மாகாணம், நாடு, முழு உலகம் என சுற்றுவட்டப் ப்ரப்பின் அடித்தளத்திலேயே பிறழ்வுகள் தோற்றம் பெறுமேயானால் அது பாரிய பூகம்ப பிரச்சனை யாகப் பரிணாம வளர்ச்சியுறும் காலமும் வெகுதூரத்திலில்லை. சமூக மேம்பாடு என்கின்ற போர்வையினுள் கலை, கலாச்சார நிகழ்வு, ஆண்டு விழா, போட்டி என் வெளியே அமர்க்களம் வின் உள்ளே படு அமர்க்களமாயிருக்கும். அவ்வளவிற்கு தனிநபர் நலன் பேணப்பட்டுக்கொண்டே இருக்கும் சில இளை ஞர்கள், சிறுவர்களும் வீழ்வது தெரியாமல் அல்லது கைதேர்ந்த அனுபவசாலிகளான முதியவர்கள் தமது வலைக்குள் வெகு சாதுரியமாக சேர்த்து விடுவதனால் 'சமூக வீக் பொயின்ற் இனை சுட்டிக்காட்டி: பிரச்சனைக்குரியவர்களினை வளைத்து
விடும் தந்திரோபாய வழிமுறைகளினைக் கற்பித்துவிடுவதனால் நேற்று இன்றாகி நாளையும் இதே நிலையே தொடர்ைைகத் தனீர்க்க இயலாது தான், இவ்வாறு கான் இன்று சமூக நலன் மேம்பாடடைகிறது:
சமூக மேம்பாட்டுப் போர்வையில் செயற்படும் கழுக்களாக G7 irun சேவையாளர் அல்லது பயனுள்ள அதிகாரியின் அரி ஆப்பில் இருக்கும் குழுத்தலைவர்களாகும். 'நலன் விரும்பி கள் குழுவாகி பயங்கரவாத தடுப்புக் காவல் தண்டனை பெற்று குறற மன உணர்வு, இரா ம சமூக வெறுப்பு 颂葱 னும் கொடும் தண் பனை பெறும் இளைஞர்களது "சமூக சீாகேட்டு செயல்" &#ffff; உணவு போன்ற அத்தியாவசி: பொருட்கள் தடையின்றி தம் கரம் சேர எத்தனிக்கும் ' கிளைக்குழுவாக' செய்வது அறியாது அல்லது பிற வேலையற்றவர்களது ஒன்றிணைந்த கூட்டுபுயற்சி . ஆக அறிவுசாலிகளது தொழில் முயற்சியா (சாமி/பக்த ம்ே மூக அந்தஸ்து ஐயே அந்தான் செய்தால் சரியா தானே இருக்கும் அவர் கூறினதே சரி) பெற்றுவிட்டவர்களது கூட்டு முயற்சியாக இவ்வாறாக ஏதோ ஒரு சமூகத்திற்கு ஒவ் வாத காரணியை, தம்மகத்தே கொண்டு செயற்படும்போது
சமூக மேம்பாடு எப்படி உருவாகும்.
இவை யாவும் ஏற்றுக்கொள்ள உற்று நோக்க பயந்து (மறந்து) அல்லது தட்டிக் கேட்க திராணியற்று நோக்குமிடத்து,
海訂曾 06
 

இவற்றை சமூகமும் பிறவழிகள் ஏதுமின்றி அங்கீகரிக்குமிடத்து வெளியே நின்று நோக்கினால் சமூக மேம்பாடு "பலே" 'சபாஷ், ஆஹா ஒஹோ' செர்ல்ல வைக்கும். சமூக மேம்பாடு மேம்பா டடைவதாகவே தோன்றும். அல்லாது போயின் இவ்வாறான வர்களினது செயற்பாடுகளினால் ( ?) சமூக சீரழிவுக் காரணி களில் முக்கியமான தடைசெய்யப்பட்ட மதுபாவனை, சட்ட விரோத குற்ற செயல்களைக் கூட கட்டுப்படுத்த முடியாதா என்ன ? வினோதம் என்னவென்றால் இவர்களும் அவர்களுடன் இணைந்து விடுவதுதான்.
இக் கருத்துக்கள் அனைத்து இடங்கட்கும் பொருந்தி விடு 1வை அல்ல, இவை இன்றியமையாத காரணிகளால் ஆட் கொள்ளப்பட்டு சிறப்பாக சமூக மேம்பாடு அடைந்தாலும் அது ஏனைய சமூகங்களுடன் சுமூகமான உறவை வளர்ப்பதையேனும் எங்காவது காணமுடிகின்றதா? இயலவில்லையே!
எனவே மேற் கூறிய விடயம் எதுவானாலும் அங்கு இல்லா தது "தூய நல்மனது,' " அது சமூக நலன் கருதியதாக அம்ை ሀ/"መዓ» LÜ . அவ் மனதை திடப்படுத்தி எம்மையும் எம்மை சூழ வுள்ளவர்களினையும் ஒன்றாக எண்ணும் அதி உன்னத நிலை யடையும் எண்ணம் உருவாக வேண்டும் . உருவாகுமா? உரு வாகினாலும் சமூகமாகும்வரை நிலைக்குமா? நிலைத்தாலும் மாறாது தொடருமா? அதுவரை சமூக மேம்பாடு சீரழிகின்றது எல்கின்ற கருத்தை நாம் ஏற்றவர்களாகவே காணப்படுவோம்
உண்மையும் அதுவே.
சமூக மேம்பாடு வளர்க்கப்படுகின்றது:
தனிப்பட்ட ஒவ்வொருவரும் சமூக நலன் கருதி ஒன் றிணைந்து / ஒருமித்து செயற்படும்போதுதான் சமூகநலன் என் பது செயல்வடிவமாகின்றது . இங்கு வசனத்தின் ஒவ்வொரு சொற்களும் உற்றுநோக்கப்படும்போதுதான் அவை தம்மகத்தே பாரிய தத்துவக்கருத்துக்களினைக் கொண்டிருப்பது தெரியவரும். தனிப்பட்ட ஒவ்வொருவரும். என்கின்ற கருத்தினுள் உள்ள கருத்தைநோக்குமிடத்து உயர்வு தாழ்வு, மத-இன, மொழி-ஜாதி நிற வர்க்க பேதங்களற்ற இவற்றை மறந்த அல்லது சற்றேனும் நகர்த்திவிட்டு; எம்மையும் எம்மைச்சூழவுள்ளனவற்றை கருத்திற்
07 söfrgir
ess

Page 6
မှူး++
கொண்டு அவற்றுக்காக ஒன்றிணைந்து / ஒருமித்து மனப்பூர்வ மாகச் செயற்படுவோமானால் அவவழி சமூகமேம்பாட்டு மார்க்க வழியாக அமைந்து விடுகின்றது. -
இன்றைய காலங்களில் உள்ளூர் வெளியூர் அரசசார்பு, சாரி பற்ற நிறுவன ஆதரவுடனும், கிராம அறிஞர்களினதும் வழி காட்டுதலுக்கு அமைந்து செயற்படுவதனாலும் சமூகமேம்பாடு யதார்த்தப்படுவதனை உணர முடிகின்றது. போர்மேகம் சூழ்ந்து இருந்தாலும் அதீத வளர்ச்சியை உடனே எட்ட முடியாது டோனாலும் வளர்ச்சி / முன்னேற்றம் அடைந்துள்ளமையை மறுக்க இயலாது. சமூக மேம்பாட்டு விழுமியங்களினை கோவிற் திருவிழா காலங்களிலும், கிராம, பிரதேச, வலய, மாவட்ட மட்டங்களில் நடைபெறும் கலை, கலாச்சார, விளையாட்டு நிகழ்வுகளிலும், தவிர சனசமூகநிலையச் செயற்பாடுகளிலுமாக பல வழிகளில் அறிய முடிகின்றது.
கிராமிய மட்டங்களில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் சிறுவர் உரிமைகள் நலன்பேணும் குழு, விவசாய சம்மேளனம் , கிராமநலன் பேண்குழு என பல பரிமாணங்களாக மிளிர்கின்றன. கிராம சேவையாளரது தனிச் செல்வாக்குடையவர்கள் இக் குழு வின் அங்கத்தவர்களாகிவிடுவதனால்; சில முரண்பாட்டுச் சிக்கல் களினை சில இடங்களில் தோற்றுவித்தாலும் கூட பல இடங்களி லும் சமூக மேம்பாடு எனும் தனித்துவம் பேணப்பட்டே வரு கின்றது. ஒரு பக்கத்தே நோக்குமிடத்து இவை யாவும் நோக்கம் கருதியதாக அமைந்தாலும் கூட மன ஒற்றுமையுடன் கூடிய சமூக மேம்பாட்டை குறித்த இலக்காக கொண்டுள்ளமை நோக்கத் தக்கது.
இவ்வாறாகப் பல வழிகளிலும் இன்று சமூக மேம்பாடானது வளர்க்கப்படுகின்றதாகவே அமைகின்றது என்பதில் ஐயமில்லை.
ജെ. தரன்
శ్రీ ஞ்சலி அ. செ. மு. என அழைக்கப்படும் ஈழத்து முதுபெரும் எழுத்தாளர் அ. செ. முருகானந்தன்
அவர்களின் பிரிவுகண்டு "நான்’ வாசக இதயங்களு
டன் இணைந்து அஞ்சலிக்கிறது.
இவரது இறுதிக்கதை "நான்' சஞ்சிகையில் வெளி
வந்துள்ளமை வாசகர்கட்கு நினைவிருக்கலாம்.

சிறுவர்களும்
அவர்களின் மேம்பாடும்
: ஜெனோவா அல்பிரட் LT. B.
թյS
'பிள்ளைப் பருவம் மிகவும் அபூர்வமானது. அது ஒரு வருடைய வாழ்வில் ஒருமுறை தான் வரும். (*Childhood is a wonderful stage, that comes only once in one's life.' I சிறுவர் தொடர்பாகப் பெற்றாரோ, அரசாங்கமோ, தனியார் ஸ்தாபனங்களோ,பொதுநல அமைப்புக்க்ளோ நீதிமன்றங்களோ, சட்டவாக்கக் குழுக்களோ எடுக்கும் சகல நடவடிக்கைகளிலும் “ “ Gago auri ag iflaðir ad u ufulu 56 v Gör 4, Git ’ ” ( The Best interest of the Child) முழுமுதற் கவனத்திற்கு எடுக்கப்படவேண்டும் என்பதே இன்றைய உலகின் கோஷமாக இருக்கின்றது. காரணம் சிறு வர்களே எதிர்கால சமுதாயத்தின் கர்த்தாக்கள். அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இன்னோ ரன்ன இலட்சிய உணர்வுடன் ஒரு சிறந்த சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்குத் தயார்ப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
மனித வாழ்க்கையின் தொடக்கமாக அமையும் இந்தப் பராயத்தில்தான் வாழ்வின் முதல் கற்றல் ஆரம்பாகின்றது அந்த ஆரம்பம மிகக் கவனமாகவும், உறுதியாகவும், செம்மை யாகவும் அமைதல் வேண்டும் . இங்குதான் இவர்களது மேம் பாட்டிற்கு அத்திவாரம் இடப்படுகிறது. இங்கு, இவர்கள் காணும முதல் ஆசிரியர்கள் பெற்றோரே பொதுவாக ஒரு குழந்தை ஐந்து வயதுவரை குடும்பச் சூழலிலேயே தனது கற் றலை ஆரம்பிக்கின்றது. சிறுவர்களைப் பேணுவதற்கும். f. FTğil
காப்பதற்கும் குடும்பம் அத்தியாவசியம் ஆகும். அது சிறுவர்
களின் அபிவிருத்தியில் ஒரு சமூக, பொருளாதார, பண்பாட் டுக் காரணியாக விளங்குகின்றது. என 3. தான், ஒரு சிறு வனின் மேம்பாட்டில் அ ன் தனது ஆளுமையை முழுமையாக வும், இசைவாகவும் விருததி செய்வதில்; ஆனந்தமும் அன்பும், பற்றுணர்வும் நிறைந்த குடும்பமும், அதன் சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம்.
09 தான்

Page 7
சிறுவர்களின் மேம்பாடு தனித்துக் கல்வியில் தங்கியிருப்ப தில்லை. அவர்களின் உடல், உள, ஆத்மீக, ஒழுக்க, சமூக
ரீதியிலான மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக உள்ளது. இச் சிறுவர்களின் மேம்பாட்டைப் பொறுத்தவரையில் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல அவர்களுடைய ஆளுமை, ஆற்றல், திறமை போன்றவற்றிற்கு உரமூட்டுவது ஒவ்வோர் குடும்பத்தினதும், சமுதாயத்தினதும் முக்கிய கடப்பாடாக அமைகிறது.
மேம்பாடு என்பது வளருகின்ற ஒரு குழந்தையின் 9 ಇà#@| உணர்வு, சிந்தனை, கற்றல், விளைவு காட்டல், இரசனை நிகழ்வு, அனுபவங்கள் போன்றவற்றின் வளர்ச்சியில் மாற்றத் தில் எழுகின்ற பலாபலன்களின் தொடர் நடவடிக்கையே ஆகும். இத்தகைய ஆரோக்கியமான மேம்பாட்டிற் கும் நடத்தைக்கும் மிக அவசியம் எனக் கருதப்படுபவைகளில் ஒன்றுதான்;
போஷாக்கும் சுகவாழ்வும்
போஷாக்கு நிறைந்த உணவும், ஆரோக்கியமான சூழலும், நோய்த் தடுப்பு வசதிகளும், போதுமான gy 676 மருத்துவக் கவனிப்பும் நிறைந்த அதி உயர்ந்த சுகவாழ்வு குழந்தைக்கு உடல் ரீதியான பலத்தைக் கொடுத்து கொடிய நோய்களில் இருந் தும் அதன் தாக்கங்களில் இருந்தும் பாதுகாப்பைக் கொடுப்பு துடன் அவர்களின் மூளை விருக்திக்கும் உடல் விருத்திக்கும் அதனுடனான மேம்பாட்டிற்கும் உதவுகிறது எனலாம். இவற் றைப் பெற்றுக்கொள்வதில் பெற்றார் அதிக அக்கறை எடுத்தல் அவசியம். இவை இச் சிறாருக்கு மறுக்கப்படாதிருப்பதற்கு வழிசெய்வதில் ஒவ்வோர் அரசும் உறுதிப்பாடுடையதாக இருத் தல் வேண்டும். இதில் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும்
அவசியம் எனலாம்,
தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு
அன்பு ஆதரவுடனான ஒரு தொடர்பு முறை. அதாவது பிள்:ை தான் நெருக்கமான உறவை வைத் திருக்கும், தன்னைப் பாதுகாக்கும் ஒருவருக்கு தான் முக்கிய மாணவர் பெறுமதி உள்ளவராகக் கருதப்படுவதான , உணரப்படுவதான g2(5 தொடர்பு முறை இத்தகைய இந்த நெரு க் கம் அல்லது தொடர்பு முறை சிறுவர்களுக்குப் பாதுகாப்புணர்வைக் கொடுப்
நான் 10
 

பதுடன், தனது சூழலை அறிவதற்கும், புதிய அனுபவங்களைப் பெறுவதற்கும், சூழலுடன் ஒத்துப்போவதற்குமான நம்பிக்கை யுடன் கூடிய ஒரு உளரீதியான வளர்ச்சியைக் கொடுக்கிறது. தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான விளைவுகாட்டலுடனான தொடர்பு முறை என்பது பிள்ளையின் உணர்வுகளையும், விருப் பங்களையும் அறிந்து செயற்படுவதான ஒரு விளைவு காட்ட arrest. T A Loving & Responsive Relationship) gas) is at 60 at யின் பலவித கற்றல் நிலையிலான மேம்பாட்டிற்கு உதவுகிறது. ஏனெனில், ஒரு தாய் தனக்குப் பாதுகாப்பானவள் பயமில்லை என்ற உணர்வு எழும்போது ஒரு பிள்ளை தானாகவே முன்வந்து எதையும் பயமின்றிக் கற்றுக்கொள்ளும்,
உளநலம் ஒருவருடைய நடத்தைக்கும் மேம்பாட்டிற்கும் நெருக்கமான உறவுடைய விடயம் எனலாம். மேம்பாடு அடை யும் ஒரு சிறுவன் சந்தோஷத்தையும்; தன்நம்பிக்கையையும் உணர்கிறான். இவ்வாறு உடல், உள ஆரோக்கியம் சிறுவரின் மேம்பாட்டில் அவசியமானவையாக இருக்கின்றவேளையில்;
ஊக்குவிப்பும் சந்தர்ப்பம் அளிக்கப்படலும்
சிறுவர்கள் சுதந்திரமாகச் செயற்பட்டு தமது திறமைகளை, ஆற்றல்களை அபிவிருக்கி செய்யப் பல வழிகளிலும் ஊக்குவிக் கப்படலும், சந்தர்ப்பம் அளிக்கப்படலும் சிறுவரின் மேம்பாட் டில் பெரும்பங்கு කණ්ණිණී ත්‍රී £} ஒன்றாகக் கருதப்படுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் உதாரணமாக
ఫ్రT ്രൈ தவழும்போது சூழலை அறிதல், நடக்கும் போது தொட்டுணர்தல், இழுத்தல், பொருட்களைத் திறந்து பார்த்தல் போன்ற செயல்களினூடாக ஆராய்ச் சித் தன்மையான ஒரு கற்றலைப் பெறுகிறது. 1) சில சமிக்ஞைகள், செயல்கள், சொற்களினூடாக தனது எண்ணங்கள் உணர்வுகளைத் தொடர் பாடல் செய்க் கற்றுக்கொள்கிறது. 0 சிறிய வேலைகளைத் தாயின் கண்காணிப்பில் செய்வ தினால் நாளந்த வேலைகளைக் கற்றுக்கொள்கிறது. உ + ம் த னா 3 வே சாப்பிடுதல், ( ; சிறிய சிறிய பிரச்சினைகளைத் தீர்க்க அனு மதிக்கப் படுவதனால் எதுவித சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கற்றுக்கொள்கிறது .
நான் 11

Page 8
1) பலவித நிறங்கள், உருவங்கள், பருமன் போன்றவற்றை வித்தியாசப்படுத்திக் காண்பதுடன் மொழி, ୫% ଗନ୍ଧ, ଶ} சிருஷ்டிப்பு, இசை, நாடகம் போன்ற பலவித கற்றல் அனுபவங்களைப் பெறுகிறது. ( ) இலக்கங்களை எண்ணுதல், வரைதல், வாசித்தல், எழுதுதல் போன்றவற்றினால் தன் திறமைகளை வளர்த் துக் கொள்கிறது. ( ) பேலும், பெரியவர்களை மதித்தல் பொதுநல செயற் பாடுகளில் பங்குபற்றதல் போன்ற செயற்பாடுகளினால் சிறந்த சமூகத் தொடர்பைக் கற்றுக்கொள்கிறது. இவற் றுள் விரக்தி, கோபம் என்பவற்றைச் சரியான முறை யில் சமாளிக்கப் பழகுதல் போன்றவையும் அடங்கும்.
இவ்வாறு சிறுவர்கள் போஷாக்குணவின் மூலம் உடல் ரீதி யானதும்; அன்பு ஆதரவினூடாக உளரீதியானதுமான மேம் பாடு அடைவதுடன் தன் திறமைகளை வளர்க்க நல்ல சூழலை யும், சந்தர்ப்பத்தையும் பெறுவதனாலும், தட்டிக்கொடுத்தலி இாடாக ஏற்றுக்கொள்ளப்படுவதனாலும் அபிவிருத்தியுடன் சு டிய பூரண வளர்ச்சியைப் பெற்று மேம்பாடுடைய சுதந்திர புருஷர்களாக சமூகத்தில் மிளிரமுடியும்.
இவை எவ்வாறு இருப்பினும் பாகுபாடு காட்டுதல்; துஷ் பிரயோகம்; பாதுகாப்பின்மை; கவனிக்கப்படாமை; இனரீதி யான ஒடுக்குமுறை சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம்; கடத்தல்; யுத்தநெருக்கீடு போன்ற இன்னோரன்ன புறநிலைக் காரணிகளின் பாதிப்பிலிருந்து சிறுவர்கள் காப்பாற்றப்படா விட்டால் அவர்களின் மேம்பாட்டுக்கான எத்தகைய முயற்சியும் பின்னடைவையே காணும். இதனையே ஐ.நா. வின் சிறுவர் 2-flgo-po grt pourruth (Convention on the Rights of the Child ) மிக வன்மையாக எடுத்துரைக்கின்றது.
இடமிருந்து வலம் சொல்லோவியம் 6. விடைகள் 1. அங்கவீனம் 5 . yசிர்யபி(சிற்பியர்) 7. கிருபி 8. பன் 10. கதம்ர (தகரம்) 11. ஆனை 12. கசிவு மேலிருந்து கீழ் 1. அக்கினி 2. கற்பித்தல் 3 . வீசி 4 ம்யப(பயம்) 6. பின்னம் 8. நேரசூசி 10 ஆணை
பரிசு பெறுபவர் R, றஜீவன் முழங்காவில்
12 frär

*மனிதம்” அது புனிதமாளது. ஏனைய உயிரினங்களில் இருந்து மனிதன் வேறுபடுவதற்குப் பற்பல காரணங்கள் கூறப் படுகின்றன. மனிதனில் மனம் ஒரு அற்புதமான சுரங்கம். அங்கே எண்ணக்கனவுகளும், இனிய கற்பனைகளும், பயங்கர விபரீத சிந்தனைகளும் அதி அற்புதமான கருவூலங்களும் பாளம் பாளமாகப் பதிந்து பரந்து கிடக்கின்றன. இத்தகைய அற்புதக் களஞ்சியமான மனதை ஒரு குரங்காக வர்ணிக்கும் கவிஞர்களும் உண்டு. மனதை ஒரு தோணியாகவும், மூல மூர்த்தியாகவும், தெய்வத்தின் குரல் ஒலிக்கும் புனித பீடமாகவும் ஆன்மீக வாதிகள் கூறுகின்றார்கள். இத்தகைய மனம் தான் மனிதத்தை மேம்படுத்துகின்ற ஒரு சக்தியாகும்:
மனிதன் வி பகுததறிவு = மிருகம் மனிதன் + பகுத்தறிவு = தெய்வம்
AqALA ALAqSLA LqASA ATe LLALS LSLLAT SLAqATT LAALALAST TAALLLLLAAS LeeeLLLLLLS S0LALASS AAAAS LLLLAT LALLLLLAASS LALAST TeLSq ATL
ஐ பாரதி கணேசன்
மனதில் தோன்றும் எண்ணங்களாலேயே மனிதன் உருப் பெறுகின்றான். அவன் ஒரு முட்டாள். ஒரு மூடன், ஒரு அறிஞன் ஒரு பண்பாளன், ஒரு தெய்வம், ஒரு கருமி, ஒரு மிருகம் , ஒரு பாவி, ஒரு மூர்க்கன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும்போது அதன் பின்னணியில் அவனது எண்ணங்களும் செய்கைகளுமே மறைந்திருக்கின்றன. மனம் மிகவும் வேகமானது, அழகானது. அதிசயமானது. காற்றைவிட வேகமாகப் பறக்கவல்லதும் சொர்க் கத்தைவிடப் பல மடங்கு அழகானதும் மனம்தான் - நாம் நினைத்தால் மனதை சொர்க்கமாக்கவும் முடியும், சேறும் சகதியும் நிறைந்த சாக்கடையாக்கவும் முடியும். இதே மனம் தான் ஆண்டவன் தொலு விருக்கும் ஆலயமாகவும் முடிகிறது. எல்லாமே எம்மால்தான். எம் எண்ணங்களால்தான். செய்கை களால்தான்.
இந்த மனதின் அழகு அவனவன் முகத்தில் தெரிவதைக் காணலாம். சில முகங்களை ஒரு தடவை பார்த்தால் மீண்டும்
பஈர்க்கத் தூண்டும் தன்மை இருக்கும். சில முகங்களை இனறு
13 நாள்

Page 9
முழுவதும் பார்த்தபடி இருக்கலாம் சலிக்காது. ஒரு முகத்தைத் தெரியாத்தனமாக ஒரு தடவை பார்த்துவிட்டால் போதும் வேறு எதுவுமே வேண்டாம். அத்தனை பயங்கரமாக மூர்க்கத் தனமாக இருக்கும். ஒரு முகம் "கடுகடு" என்று இருக்கும். சிரிப்பே பஞ்சமான முகங்களும் உண்டு, துடைத்துவிட்டாற் போன்ற முகங்களும் உண்டு. சில ஒரே தீவிர சிநதனையுள்ள முகமாக இருக்கும். சிலவற்றில் கனிவு, கருணை, தெய்வீகம் குடிகொண்டிருக்கும். சில எந்நேரமும் மலர்ந்து அன்டிலர்ந்த மலர்போலக் காட்சி தரும் . இவை யாவும் ஒட்டு மொத்தமாக நோக்கினால் மனித முகங்களே தான். (இங்கே கவர்ச்சியோ அவலட்சணமோ பற்றிப் பேசப்படவில்லை என்பதைக் கவனத் தில் கொள்ளவும். ஒவ்வொரு முகத்தினதும் தோற்றம் அவர் களது உள்ளத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பனவேயன்றி வெளித் தோலிலும் முகவெட்டிலும், சதை என்பு அமைப்பிலும் இல்லை - நிச்சயமாக ရွှံ့ ၏ ဓ၈ ဓ) - நாமே நமது முகங்களை எமது எண்ணங்களின் தூய்மையால் அழகுபடுத்த நிச்சயம் முடியும்.
ஆமாம்! மனித மேம்பாட்டிற்கும் முகத்தின் தோற்றத்திற் கும் அப்படி என்ன உறவு என்று சிந்திக்கின்றீர்களா ? உறவு நிறைய இருக்கின்றது. பொதுவாக மனிதனின் 'மணிதம் அவனது முகத்திலேயே எழுதி ஒட்டப்பட்டிருக்கும். அவனது அகத்தினைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே முகம. மனிதனுக் கென்று ஒரு பண்பாடு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சார அளவுகோலினைக்கொண்டே அவன் மனிதனாகக் கணிக்கப்படுகின்றான். அந்த எல்லையை எப்பொழுது மீறு கின்றாலோே அப்பொழுகிலிருந்து அவன் மனிதத் தன்மைக்கே லாயக்கற்றவனாகி விடுகிறான். ம னி த நே ப ம் எங்கெங்கு பேணப்படுகின்றதோ அங்கங்கே மனிதம் மேம்பாடடைகிறது.
பூனம் உடைக்கப்படும்போது சிதைக்கப்படும்போது மனிதம் சீரழிக்கப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் என்றோ எங்கோ ஒரு கணமாவது மனித உணர்வுகள் சிதைக்கப்பட்ட, உடைக் கப்பட்ட அனுபவத்தைப் பெற்றே இருப்போம் என்பதில் சந் தேகமே இல்லை. எமக்கு ஏற்பட்ட உணர்வுச் சிதைவுகளோ அல்லது எமது முன்நிலையில் பிறருக்கு ஏற்பட்ட உணர்வுச் சிதைவுகளோ எதுவரினும் எமது உணர்வுகள் பூப்போல இருக்க வேண்டிய நிலைமாறி கன்றிச் சிவந்து கசக்கப்பட்டு நசுக்கப் பட்டிருக்கும். ஏனெனில் நாம் இன்னும் மனிதசகளாகத்தானே
நான் 14
 

இருக்கிறோம். மிருகங்களாகவோ, அன்றித் தெய்வங்களாகவோ மாறிவிடவில்லையே!
* மனித மேம்பாடு எங்கே உயிர் பெறுகிறது ? எப்போது ஒருவனை, "இவன் ஒரு மனிதன்” என்று மதித்து ஏற்றுக்கொளள ஆரம்பிக்கிறோமோ அப்போதே மனிதம் மேம்பாடடைய ஆரம் பித்து வருகிறது. நொந்துபோயிருக்கின்ற ஒருவனை அர வனைத்து ஆறுதல் கூறும்போது, அங்கவீனன் ஒருவனுக்கு உதவி செய்யும்போது, வயோதிபர்களுக்கு மதிப்புக் கொடுக்கும்போது . நண்பர்களின் முகம் கோணாது நடக்க முற்படும்போது, அன்பை ஏற்றுப் பதிலுக்கு நாமும் அன்பு காட்டும்போது, ஒரு சின்னக் குழத்தையின் உணர்வுகளையும் மதித்து அவனது முகத்தில் பூரண நிறைவைக் கொண்டுவரும்போது, அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும்போது போன்ற இந்த மாதிரிச் சந்தர்ப் பங்களிலெல்லாம் நாம் நம்மை அறியாமலே மனித மேம்பாட் டிற்கான ஆரம்ப புள்ளியை இட்டு விடுகிறோம்.
இத்தகைய நிலையிலே பகுத்தறிவின் நிலைப்பாடுபற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாகின்றோம். மனிதனுக்கு விசேடமாக
மறுத்து மனம் போன போக்கில் நடக்கத் தலைப்பட்டு விடுகிறான். எப்படியும் வாழலாம் என்ற நிலை மறந்து இப் படித்தான் வாழவேண்டும் என்று ஒரு கட்டுப்பாட்டிற்குள் மணி தனின் வாழ்க்கை அடையும்போது அங்கே அவனது விருப்புக்கு மாறாக ஒரு மனம் நடப்பது தவிர்க்கப்படுகிறது.
உயர்ந்த மனித விழுமியங்கள் பேணப்படும் தன்மையை இளம் சிறார்களிடையே உருவாக்கும் பட்சத்தில் மனித
நல்ல கதைகள், நல்ல இசை யுடன் கூடிய பாடல்கள் என்பன மனித விழுமியங்களைப் பதிக்க வல்லன. கீழே விழுந்தவனைப் பாத்துக் கைகொட்டிச் சிரிப்ப பர்கள், தோல் விக்குள்ளான ஒருவனைப் பார்த்துக் கேலி செய் வர்கள் இருக்கும் ፳ስነ ፍቖ9፱ ̆ மனிதம் மேம்பாடடைய முடியாது. விழுந்தவனைக் கைகொடுத்து எழுப்பவும் நோயுற்றவனைத் தட் க் கொடுத்து ஆறுதல்படுத்தவும் ஒருவன் முன்வரும்போது னிதம் அங்கே மதிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
15 நான்

Page 10
ஒரு சமூகம் தனி மனித மேம்பாட்டில் அக்கறையுடன் இருக்கும் வரை அங்கே உரிமை மீறல்களோ அத்துமீறிய அழுத் தங்களோ ஏற்பட்டு சிறுமைப்படுத்திவிட முடியாது, ஒவ்வொரு மனிதனும், தான் தன்னுடனே முரண்படாது இருப்பின் பிற டேனும் முரண்பட மாட்டான். ஒருவன் இன்னொருவனோடு முரண்படும்போது அந்த முரண்பாட்டைத் தீர்க்க வருபவனும் வேறு ஒருவகை முரணோடு வர நேரும்போது அங்கே சமூக ஒருமைட்பாடு சீர்குலைந்துவிட, மனித மேம்பாடு சீரழியும் சாத்தியக் கூறுகள் தோன்ற வாய்ப்பு ஏற்படுகின்றது.
நிறைவாக இன்று உலக நாடுகளில் பரவலாகப் பேசப்படு கின்ற "மேம்பா டு என்ற சொற் பிரயோகமானது இதுவரை காலமும் எங்கே தூங்கிக் கிடந்தது, இப்போது ஏன் முன்னே வந்து நிற்கின்றது என்பது பற்றி ஒரு தடவை சிந்தித்துப் ாேர்ப்பது ஆரோக்கியமான ஒன்றாகும். எங்கே தவறு நடக் கின்றதோ அங்கே நீதிபற்றிப் பேசப்படும். எங்கே அதர்மம் தலைதூக்கி நிற்கின்றதோ அங்கே தர்மம் பற்றிப் பேசப்படும் , எங்கே நோய் ஏற்படுகிறதோ அங்கே மருந்துபற்றி பேசப்படும். சேங்கே மனிதம் சீரழிக்கப்படுகிறதோ, நசுக்கப்படுகிறதோ, அங்கே மனித மேம்பாடுபற்றிப் பேசப்படுப !
ஆம் ! நாமே நம்மை நசுக்குகிறோம். எமக்கு அருகில் இருப் பவனின் அமைதியை நாம் குலைக்க முற்படும்போது நமது அமைதியும் கூடவே சேர்ந்து பறிபோவதை ந17ம் அவதானிக்கத் தவறிவிடுவது எத்தனை விந்தையான செயல். எந்த ஒரு சமூகம் சக மனிதனைப் பேணவும் மனித நேயத்துடன் அரவணைக்கவும் முன் வருமோ அங்கே மேம்பாடு பற்றிய பேச்சுக்கே அவசியம் இல்லை. எனவே நாம் இப்போது மனித மேம்பாடு பற்றிப் சிந்திக்கின்றோமென்றால் எம்மிடையே மனிதம் ' சீரழிந்து கொண்டிருப்பது தெளிவாகினறது. நல்லவேளை இப்பொழு தாவது புலனான்ெறதே ஒல்வொரு தனி மனிதனும் தன்னை யும் பிறனையும் மதிக்க முயன்றுவிட்டால் மனிதம் செழுமை யடையும். ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாகும் ஆம் ! இது நிச்சயம் நிறைவேறு. ஏனெனில் இப்பொழுதெல்லாம் நாம் எமது ஜன்னல்கள் ளத் திறந்து அடுத்தவன் துயரை செவி மடுக்கத் தொடங்கிவிட்டே மல்லவா ? எனவே எமது எதிர் பார்ப்பு நிச்சயம் ஈடேறு: ! இதில் ஏதும் ஐ:L இல்லை.
சந்தாவை ப்பித்து விட்டீர்களா?
&
நான் 16
 

நெஞ்சே நீ கலங்காதே
மானுட நெஞ்சே! நீ ஏன் கவல்கிறாய்?
வஞ்சனைகள் மிஞ்சி " உறவுகள் உடைந்து - வெறுமை வாழ்வு வெந்து, காய்த், " விரக விறகாக கொளுந்து விட்டெரிகிறே அதற்காகவா ? ?
மனம் என்ற ஆல் தழைத்து புலன் எங்கும் ஆழமாய் தன் நம்பிக்கை விழுதுகள் ஊன்றி துன்பச் சுழற் காற்றை துணிவுடன் எதிர் கொள்ள மானுடனே உன் ஆளுமையை உறுதியாக வளர்த்தெடு அன்பை உள்ளங்களில் ஊன்றிவிடு
நடந்த முட்பாதை நீ கடந்த கானல் வெளி அங்கே நி 熬 உற்ற துணையாக உதவ நீ வந்தபாதையைத் திரும்பி
நினைவுகளை இரைமீட்கும் வேளை உணர்வுகள் உனை ஆரம சுய விமர்சன விளிப்பில். & விசாரணை வழியில் நீ புரிந்துணர்வை வந்தடைய மனித உறவுகளை வளர்த்து புனித மனிதத்துவத்தை ெேணு
பிரபஞ்ச மன வெளியில் அரவமற்ற நிசப்தத்தில் ஆத்மவிசாரணை செய்

Page 11
நட்பு வித்துக்களை
உள்ளன்புடன் கலந்து
இதயங்களில் தூவி தெய்வீக அன்பை முளைக்க விடு
தெய்வமும் நீயும் வேறல்ல-பின் தொய் வெதற்கு உன் முயற்சியில்? அன்பே தெய்வீகம் உன் வாழ்வு அன்பில் மலரட்டும் முதலில் நீ உன்னை நேசி ஆன்னை பாசி W、MW உலகம் உன்னை பேசும் உறவு உன்னைத் தேடும் பிறவிப்பயன் உறுதிப்படும் ܐ ܐ |
மற்றவர்கள்- பேச்சை கூர்ப்புடன் செவிமடு ஏச்சை என்றும் பாராட்டாதே பொறுமையை நினைவிலிருத்தி, உறவுடன் உரையாடு - விருப்புக்கு இடமளி வெறுப்புக்கு விடைகொடுபுரிந்துணர்வுப்புன்னகை வரவேற்பில் பிறந்துவிடும் புனித உறவு 。 பிறர், துன்பத்தில் பங்கெடு இன்பத்தில் கலந்து கொள் is அன்பு உறவின் நெருக்கத்திற்கு நட்பு உறவின் பிணைப்பிற்கு, ο υσούύσ υαια οθόψό υπαίθ
இதயத்தின் இசைபாக்கம் பெற உறவுகளின் பரிணாமம் உயிர்க்கும் உள்ளங்களின் சங்கமத்தில்
துயரங்கள் தூர விலக இதயங்கன் இணைசேர உதயமாகும் சமூக உறவு பரஸ்பர புரிந்துணர் வின் பரிமாணத்தில் .
18 நான்
 
 
 
 

கற்றலுக்கு ஊக்கமளி த்தல்
8 சறோஜா நல்லையா
'அனுபவத்தினால் உருவாகி நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கும் நடத்தை மாற்றங்களே கற்றல்" ஆகும். இவ் வாறான கற்றலுக்கு மாணவரது உடலும், உள்ளமும் ஆயத்த நிலையில் இகுக்க வேண்டியது அவசியமாகும். இந்த ஆயத்தத்தின் ஊடாக மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் தொடர்ச் சியாக ஈடுபடுவது அவர்கள் பெறும் ஊக்கலிலேயே தங்கியுள்ளது: ஆகவே ஒருதனிநபரிடம் ஏதோவொரு செயற்பாட்டிற்காக உள்ள ஒரு சாதாரண சக்தி அதாவது உந்தல்கள் எண்ணங் கனை மலரச் செய்து அதன் மூலம் விசேடசக்தியைப் பெறு தலே ஊக்கல் எனலாம். *W
கற்றலில் ஈடுபடும் மாணவர்கள் பல்வேறுபட்ட தனியார் வேறுபாடுகளை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இதனாலே அளிக்கப்படும் ஊக்கல்கள் சிலரை மட்டுமே ஊக் குவிப்பவையாகவும், ஏனையோரைப் பொறுத்துப் பயனற்றதாக வும் அமையலாம். ஆகவே, மாணவரின் தகுதியையும் நிலையை யும் அறிந்து அவர்களுக்கேற்ற வெவ்வேறு முறைகளில் ஊக்க
மளிக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்ஊக்கமளித்தலை அகஅளக்கிகள், புறஊக்கிகள் என இரண்டா கவகுக்கலாம். மாணவரிடம் பசி, தாகம், பால் உணர்வு புலனுணர்வுபோன்ற மரபு வழிவந்த அக ஊக்கிகள் உண்டு. இந்த அகஊக்கிகளை நல்ல அகஊக்கிகள், தீயஊக்கிகள் எனப்பாகுபடு த்தலாம். உ+ம் பிறருக்கு உதவிசெய்ய ஒருவன் முன்வருவானா யின் அதுநல்ல அகஊக்கி எனவும் பிறரது பொருளைத் திருட ஊக்குவிப்பது தீய அகஊக்கி எனவும் கருதப்படுகிறது. இதில் ஆசிரியர் நல்ல அகஊக்கிகளை விருத்தி செய்யவும் தீய அகஊக்கி களைத் தடுக்கவும் நன்னெறிப்படுத்தவும் உதவுதல் வேண்டும். அடுத்து அன்பையும், கணிப்பையும் பெறுதல் தீரச்செயல் புரிந்து திறமைகளைக் 'காண்பித்தல், பிறரோடு ஒன்றித்தல், பயம் , சமுதாயத்தேவைகள், திருப்தி போன்ற சமூக ஊக்கிகள் அல்லது புறஊக்கிகள் ஒரு மாணவனின் நடத்தைக்கு ஊக்கமளிக் கின்றன.

Page 12
பொதுவாக கற்றலுக்கு பின்வரும் ஊக்கல் முறைகள் பயன்படுத்தப்ப்படுவகிறது
01. புகழ்ச்சி,
02. குறைகூறுதல், 08. பரிசு வழங்குதல். 04. தண்டனை வழங்குதல், 05. போட்டிகள்,
06. செயற்பாடுகளில் ஈடுபடுதல் 07. சிறந்த முன்மாதிரிகளைக் காட்டுதல் 08. முன்னேற்றம்பற்றி விளக்கமளித்தல்: 09. வெற்றிகளைப் பெறுதல். 10. அவாமட்டம். 11. தெளிவான இலக்குகளை வழங்குதல்.
சிறந்த கற்றல் நிலை ஒன்றினைப் பெற்றுக்கொள்ள நல்லதொரு ஊக்கல்முறையாகப் புகழ்ச்சி காணப்படுகிறது. மாணவரது வெற்றியைப் புகழுகின்றோம், இவ்வாறு புகழ்ந்து கூறும்போது சுயகெளரவம் பற்றிய விருப்புத் தொழிற்படு வதனாலேயே மற்றவரிலும் பார்க்க நன்றாக ஒரு செயலைச்
செய்து முடிப்பர். மேலும் புகழ்பவருக்கும். புகழப்படுபவருக்கும்
இடையேயுள்ள தொடர்பே, கற்றலுக்கு ஊக்கமளித்தலில் புகழ்ச்சியானது எவ்வளவுதூரம் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதைத் தீர்மானிக்கின்றது. மாணவர்மீது அன்பும், ஆதரவும் விருப்பும் கொண்டுள்ளதோடு அவன் முன்னேற்றத்தில் விருப் பும், நம்பிக்கையும், நல்லெண்ணமும் உள்ள ஒருவராக இருக்கும் போது அதன்விளைவுகள் விசாலமானதாகும் ஐ ஜோ. ஹன்ஸன் செய்த ஆய்வின்படி 10 - 11 வயது வரையுள்ள பிள்ளைகளில் எண்கணிதம் கற்றலில் அதில் ஆர்வம் உடையவர்களுக்கும், சுயநம்பிக்கை குறைந்தவர்களுக்கும், ஆசிரியர் மீது எதிரான மனப்பாங்கு உள்ளவர்களுக்கும் ஆசிரியரின் புகழ்ச்சி சிறந்த முறையாகும். ஆனால் இந்தப் புகழ்ச்சியினை மாணவரின்
- ஆளுமைக்கேற்ற வகையில் பயன்படுத்த வேண்டியதும் அவசி
யமாகும்
திறமை நுண்ணறிவு கூடிய மீத்திறன் பிள்ளைகளுக்கு பூட்டுமே குறைகூறுதலும் எச்சரித்தலும்" என்ற ஊக்கலைப் பயன்படுத்துவது சிறந்தது என உளவியலாளரால் கருதப்படு
நான் 2ο
 

கிறது இதன்மூலம், தவறுதலாக விடப்பட்ட மறந்துபோன ஒருசெயலை மீண்டும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் எ6ஏத் தெரியவந்துள்ளது. குறைகூறுவதால் பல மாணவருக்கு வெட் கமும் உளத்தாக்கமும் ஏற்படக்கூடும் அதேவேளை சிலர் அடிக் கடி ஆசிரியரின் குறைகூறுதலுக்கு இலக்காகும் வேளையில், திறனுள்ள மாணவனுக்கு இக் குறைகூறுதல் பொருளற்ற செய லாகிவிடும்.
ரி: எச் பஜ்றிஸ் என்பவர் 'ஜாடையாகச் சொல்லுதல் இழிவுபடுத்திச் சிரித்தல், பயமுறுத்துதல், கேலிக்குட்படுத்துதல் பிறர் முன்னிலையில் எச்சரித்தல் வேலையை அதிகப்படுத்து தல் போன்ற குறைகளினால் கற்றலுக்கு மிகக்குறைந்தளவிலேயே ஊக்குவிக்கப்படுவர் எனக் கூறுகின்றார்:
தேவையான நடத்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும். பெறுமதிகளே 'பரிசு" ஆகும் 'உங்களது நடத்தை கன்று அதனை மேலும் விருத்தி செய்துகொள்ளுங்கள்? என்பதனையே அது உணர்த்துகின்றது. தேவையான துலங்கல் ஏற்பட்டபின் அவற்றுக்கு பரிசு அல்லது வெகுமதி வழங்கும் போது ஊக்கம் அதிகரிக்கின்றது. பாட அடைவு,நல்லொழுக்கம், தூய்மை, விளையாட்டு, வரவு போன்ற சொல்களில் முதன்மை வகிப்போருக்கு உடனுக்குடன் முன்னறிவிப்பு எதுவுமின்றி வெகுமதி அளிப்பது சிறந்தது. அத்துடன் இதனூடாக ஒரு சிலருக்கு அன்றி குழுரீதியாகவோ அல்லது அநேகம் பேருக்கோ வெகுமதி அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
35ģ நடத்தையில் தொடர்ந்து ஈடுபடத் தண்டனை எனக்கூறப்படுவனவற்றை நிறுத்துங்கள், என்பதனையே பரிசுகள் உணர்த்துகின்றன. வேண்டாத ஒரு செயலை தவிர்ப்பதற்காகத் தண்டனை வழங்கப்படுகின்றது 'தண்டனையினால் நல்ல விளைவுகள் பெறுவதிலும் பார்க்க, தீயவிளைவுகளே ஏற்படு இன்றன" என ஜோன்லொக் என்பவர் கருத்து வெளியிட்டுள் ளனர். இந்த ஊக்கல் எல்லாப் பிள்ளைகளிடையேயும் ஒரே 66 ஏற்படுவதில்லை. சில சந்தர்ப்பங்களில் இத்தண்ட னைகள் கற்றலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துவதுடன், முழு மையாகக் கற்றலையும், பாடசாலையையும் வெறுப்பதற்கும் வழிவகுக்கின்றது. றொரஸ்மான் எனும் கல்வியாளர் : மூக் கியமாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களைத் தவிர, ஏனைய

Page 13
வரை ஈடுபடுத்திக்கொள்ளுதி
வேளைகளில் தண்டனை வழங்கக்கூடாது அனுதாபப்படுதல்,
நம்பிக்கையை ஏற்படுத்தல், விளங்கவைத்தல் ஆகியவற்றிறை
மீண்டும் மீண்டும் செய்யவேண்டும்" எனக்கூறுகின்றார்.
assissani"
g5, 6).35ain) முழுவதும் பரந்துள்ள ஊக்குவிப்பு முேறையாகப்
போட்டி விளங்குகின்றது. வீடு, பாடசாலை போல் சர்வதேச
மட்டம் வரை இது படர்ந்து காணப்படுகின்றது. அடிப்படை யான உகந்த மனநிலைக்கும், உந்தல்களுக்கும். மனத்தைரியத் துக்கும், தனித்துவத்துக்கும் உச்சநிலையை அடைவதற்கேற்ற ஆற்றலை இது பெற்றுக் கொடுக்கின்றது. இதனால் ஆரம் வகுப்பு மாணவர்களுக்கு போட்டியானது மிகச்சிறந்த (LP60AD.
யாகப் பயன்படுத்தப்படுகிறது.
செயற்பாடுகள் மூலம் கற்றலுக்கான ஊக்கலை அதிகரிக்
முடிகிறது. ஆசிரியர் தனது வேலைகளில் காட்டும் உற்சாகன்
களுக்கேற்பவே மாணவர்கள் தமது வேலைகளில் காட்டும் உற்சாகமும், நாட்டமும் தங்கியிருக்கும். வகுப்பில் கற்பித்தல் முறைகளிலும், பாடத்தை எடுத்துக் கூறுவதிலும் பல்வேறு முறைகளைக் கையாள்வதால், மாணவர்களைக் கற்றலுக்கு ஊக்குவிக்க முடியும். உ+ம் படங்கள் வரைபடங்கள், அட்ட வனைகள், கரும்பலகை முதலியவற்றை பொருத்தமாக உப் யோகித்துக்கொள்ளுதல், பல செயற் திட்டங்களிலும் மாண ல், குழுப்போட்டிகள், வெளிக்கள வேலைகள், என்பன ஊக்கலை அதிகரிக்கும் என எதிர்பார்க்க முடியும். மேலும் இங்கு காணப்படும் குழுச்செயற்பாடானது,
பொதுப் பிரச்சினைகளை விடுவித்து, ஜனநாயக முறையில் தீர்
மானங்களை மேற்கொண்டு, கற்றலில் ஊக்குவித்தலை ஏற். படுத்த உதவுகிறது: W ^ {ሸነ! ... O
சிறந்த முன்மாதிரிகள் மாணவர்களது கற்றலுக்கு பெரிய
தொரு ஊக்கலை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாணவர்கள் முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடிய குணப் பண்புகளையும், நல்
லொழுக்க விருத்தியுமுள்ள் நல்லாசிரியரே பொருத்தமானவ
pirau (Trf. அதேபோல் வீரத்தியாகிகளின் கருத்துக்களை வழங்கு வதாலும் அவர்களது பண்புகளான வீரம், உறுதி, கருணை, கட்டுப்பாடு, முதலிய முன்மாதிரிகளை மாணவர் உள்ளத்தைக் கவரக்கூடிய முறையில் கற்பிப்பதனாலும், கற்றலில் ஊக்கத்தை
நான் 22
 
 

ஏற்படுத்தமுடியும். இதற்காக இவர்கள் நடத்தைகளைக் கூறும் புத்தகங்களை கொண்ட நூல்நிலையம் ஒன்றை வைத்திருப்பது சாவுைம் சிறந்தது. 鷺 ፱፻፵ リ
கற்றலை விருத்தி செய்துகொள்வதற்கு மாணவருக்கு அவை களின் முன்னேற்றம் பற்றிய அறிவு அத்தியாவசியமானதாகும். கிரிக்கட் வீரன் அடிக்கடி புள்ளிகள் அறிவிக்கப்படும் பலகையைப் பார்ப்பதன்மூலம் நன்கு விளையாட, மன உந்துதலை அடைகின் றான். அதேபோல் மாணவன் தற்போதைய அடைவினை விரை வாக அறிந்துகொள்வதனால் மேலும் கற்றலுக்கு ஊக்கலை
பெறுகின்றான்.
வெற்றி பெறுவதைப் போன்றதொரு
வெற்றி வேறொன்றில்லை' என்பர்:
ஏதோவொரு உந்தலினால் ம னி தன் வாழ்க்கையில் வெற்றி பெறத் தூண்டப்படுகின்றான். இவ்வெற்றி மகிழ்ச்சி யான அனுபவங்களையே கொடு க்கும் வெகுமதிகளாகும். தோல்வி என்பது மாறாக துன்ப அனுபவங்களை தரும் தண் டனைகளாகக் கருதப்படுகிறது. ஒருவரின் வெற்றி தோல்வி என்பது அவரின் எதிர்பார்ப்பு மட்டத்திலேயே தங்கியுள்ளது. உ+ம்: பாட அடைவாக 100 ஐ எதிர்பார்த்த மாணவருக்கு 95 புள்ளிகள் கிடைத் தாலும் அவன் அதைத் தோல்வியாகவே கருதுவான். அதேவேளை 35ஐ எதிர்பார்த்த மாணவனுக்கு 50 புள்ளிகள் கிடைத்தால் அது அவனுக்கு வெற்றியாகவே அமையும். இதனாலேயே * லான்ஸ்' எனும் உளவியலாளரி ெேவற்றி கற்றலுக்கான ஊககலை அதிகரிக்கும். எனவும், தோல்வி கற்றலுக்கான ஊக்கலை குறைத்து விடும்" எனவும் கூறுகின்றார். ஆனால் ஆறு தடவைகள் படை எடுஷ்பில் தோல்வி அடைந்தும் 7 ஆவது தடவையாக யுத்தம்செய்து வெற்றி ஈட்டிய றொபேட்புருஸ் வரலாறுகள் தோல்வியும் கற்றலுக்கு ஊக்க மளிக்கமுடியும் என்பதை நிருபிக்கின்றபோதும், மிகவும் பொருத் தமானதாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
அவாமிட்டம் என்பது ஒருவன் தனது திறமைகளுக்கேற்ப ஏதோவொரு செயலை நிறைவேற்றிக்கொள்ள அவனிடம் ஏற் படும் எதிர்பார்ப்புகள் பற்றிய உணர்வாகும். "பூரண திருப் தியை பெற்றுக்கொண்டவர்கள் கறபதில் குறைபாடுள்ளவர் 1ள் ஆவர். என நில்மிலர் கருத்துத் தெரிவிக்கினறனர். ஒரு
23 நான்

Page 14
தேைையில் திருப்தியின்மை ஏற்புடும்போது அதில் வெற்றிபெற வேண்டிய அவா நிலை ஒருவரிடம் தோன்றும். மேலும் குறித்த மாணவர்களது அவாநிலைகள் பூர்த்தியாகுமிடத்து, புதிய அவா நிலைகள் தோற்றம் பெற்று கற்றலில் சாதனை படைக்க ஊக் கல் விசைகளாகவும், அமைகின்றன.
"ஆழமறியாது காலைவிடாதே' என்பது பழமொழி. இதற்கேற்ப கற்றலை ஊக்குவிக்க மாணவர் தாம் கற்கும் பாடங்களின் குறிக்கோள்கள், நோக்கங்கள் பற்றி தெளிவான விளக்கம் கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடின் மாணவர் தமது இறுதி நோக்கத்தை அடையமுடியாதவராகி விடுவர்.
எனவே மேற்கூறப்பட்ட பல்வேறு ஊக்கல் முறைகள் மூல மாகவும், மாணவரின் தனியாள் வேறுபாட்டுக்கேற்ற வகையில் ஊக்குவிப்புகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் கற்றலில் எதிர் பார்த்த நடத்தை மாற்றங்களை பெறமுடியும் என்பதை எவ ரும் மறுக்க முடியாது.
භුණූප ඥාණ්ථ ඉටුකිරිචු ලෙඩ්‍ර ශූන්‍දිදං ඛුද්‍රිස්‍රා (ලූත්‍රීඩා ගූණ් ගුඩ්‍රදිරිඳිට”
b[ 50 , naua சஞ்சிகையின் 25வது வெள்ளிவிழா ஆண்டு மலர் வெளிவரவுள்ளது
உங்கள் ஆக்கங்கள், ஆலோசனைகள்,
விளம்பரங்களை தந்து புதிய
வாசகர்களையும் ஊக்கப்படுத்துங்கள்.
'நான்' வளர்ந்தால்
'நாம்” வளர்வோம்
நான் 24
 

வாழப்பிறந்தவன்
- லைறா
நான் சாகப் பிறந்தவனல்ல - வாழப்பிறந்தவன் எனது இலட்சியங்கள் உறங்கி கிடக்கவல்ல உருக்கி வடிவமைக்கவே பிறந்தன. என் ஆளுமையின் துணைபோல் சினம் எனும் உலோகத்தை உருக்கி வாழ்வெனும் உருவத்தை உருவாக்கவே
நான் பிறந்தேன்
எனக்கு உதவியற்ற நிலை என்று கலங்க மாட்டேன்
என் செங்ற்பாடுகள் தான் உதவியை வரவழைக்கும்.
நெஞ்சம் புண்பட்டு வேகும் அர்த்தமெனும் மனப்பறவை
சிறகிழந்து தவிக்கும். வாழ்வின் அடுத்த கணங்கள் காரிருளாயும்
இக் கணங்கள் இருளாயுமிருக்கும். அப்போதெல்லாம் என் வாழ்வு முடிவடைந்து விட்டதாகவும் என் இறுதி கணங்களை அனுபவிப்பது போலவும்
எண்ணுவேன். மனதில் ஒர் எண்ணக்கதிர், உயிரில் ஒர் குலுக்கம் அர்த்தமெனும் வாள் கொண்டு வாழ்வு எனும் கனியை என்று வெட்டத் தொடங்குகிறேனோ அன்றே வாழ்வின் சுவையை என்னால் உணர முடியும்
- என்று உணர்ந்தேன். ஒவ்வொரு உறுப்பும் புத்துணர்வு பெற்றது போன்ற உணர்வு
என்னுள் ஒரு ஆன்மா பிரவேசித்தது போன்ற மனப்பிரமை வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அர்த்தத்துடன்
நகர்த்த தொடங்குகிறேன். நான் ஒரு தடவையல்ல நாளுக்கு ஆயிரம்முறை சொல்வேன்
"நான் '' வாழப்பிறந்தவன்
ਸੁ'
இது மனதால் மறக்கவேண்டிய சொல் அல்ல
மனதில் உறுத்தவேண்டிய சொல்

Page 15
!,类杀 சொ i 亲亲
6) 踝兴奖 C360пт 5 ಟ್ಲಿ?
l____t**###_ வி 8 | ” [ဋ္ဌိဋ္ဌိ |T’ | | | |” |မွို U. క్ష్ 'క్ష్ స్టీళ్ల () శ్లోlt | | | | స్టీళ్ల
ဇွို” |’’’’’’’’ ၊ ‘_စ္ဆိဒ္ဒိ|_ 7 '? | | | |
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 01. அமெரிக்காவில் நியுயோக் 01. ஐந்து பக்கங்கள் 9.9001-Mi
நகரில் செப்ரம்பரில் 53 வது மூடிய தளவுருவம் *.' கள் சபைகூடியது 02. கழுத்து {{MISCYNNWYSI/VII, 64. உரிமையில்லா நாடும் ஒரு 03. மூக்கு
இதுதான். 06. வடமொழித் தமிழெழுத்து 05. குயில் 07. சேரர், சோழர், பாண்டியர் 07. உலகெங்கும் பரந்திருக்கும் மூவரையும் இப்படி அழைத் சிறுவர் இயக்கம் குழம்பி தாலும் அவர் தலை கீழாக விட்டது. நிற்கின்றனர் 10. ஆப்கானிஸ்தானின் கடும் 90. அணுக்குண்டால் அழிந்து போக்கான இஸ் லா மி ய மக்கள் உழைப்பால் உயர்ந்த இயக்கம் நாடு 12, 8 நான்' சஞ்சிகையின் 10. துன்பமிகு யுகம் த ଶ୍ରେଷ୍ଟ}} ଛାଞ୍ଚୀ
கருத்துக்குவியல் 78 குழம்பி கீழாகிவிட்டது
விட்டது.
உங்கள் விடைகளை தனித்தாளில் எழுதி 30. 12, 98 முன் எமக்கு அனுப்பி வையுங்கள்
முகவரி: "நான்' ஆசிரியர்
rsi 26
கொழும்புத்துறை,
 
 

மேம்பாட்டு
ஆ செளந்தரலிங்கம்
பொருளியல்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்
ஒரு நாட்டின் அபிவிருத்தியினை அல்லது மேம்பாட்டினை அளவிட்டுக் கூறுவதற்கு மரபு ரீதியாக சில குறிகாட்டிகள் பயன் படுத்தப்பட்டுவந்துள்ளன.அவற்றுள் ஒன்று நாட்டின் தேசிய வரு மான அளவு. அதாவது குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு நாட்டின் உற்பத்தியில் ஈடுபட்டமைக் $ாக அந்நாட்டுமக்கள் பெற்
றுக்கொண்ட மொத்த வருமானம். மற்றது தலா வருமானம்.
அதாவது ஒருநாட்டின் மொத்த வருமானத்தில் சராசரியாக ஒரு நபருக்குக் கிடைக்கும் வருமான அளவு. இவ்விரு குறிகாட்டிகளும் ஒருநாட்டின் அபிவிருத்தி மட்டத்தினை அளவிடுவதற்கு பயன் படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால் இத்தகைய குறிகாட்டிகள் இன்று மேம்பாட்டினை அளவிடுவதில் பொருத்தமற்றவையாக காணப்படுகின்றன. அதாவது தேசியவருமானம் , தலா வருமா னம் ஆகிய இரு குறிகாட்டிகளும் மனித நல மேம்பாட்டினை எடுத்துக்காட்டுவதற்கு இன்று பொருத்தமற்றவையாகி விடு கின்றன.
உண்மையில் மனித நலன் மேம்பட்ட ஒரு நிலையே அபி விருத்தி ஆகும். இம் மனித நல மேம்பாடு வெறுமனே பொருளா தாரத்துறை மேம்பாட்டில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை. மாறாக அரசியல், சமூக, கலாச்சாரத் துறைகளினது மேம் பாட்டிலும் தங்கியிருக்கின்றது. எனவே சுருக்கமாகக் கூறினால் இன்று அபிவிருத்தி அல்லது மேம்பாடு என்பது பொருளாதாரம் , அரசியல், சமூகம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் மனிதனது நலன் மேம்பட்டு நிற்பதையே குறித்து நிற்கின்றது. எனவே தான் அதனை அளவிட்டுக் கூறுவதற்கு பொருளாதார குறி காட்டிகளான தேசிய வருமானம், தலா வருமானம் என்பவை போதாமல் உள்ளது. ஏனைய சில குறிகாட்டிகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவற்றுள் மிகவும் முக்கியமானவை
27 நான்

Page 16
சமூக மேம்பாட்டைக் காட்டும் குறிகாட்டிகளாகும். அத்தகைய சமூக மேம்பாட்டுக் குறிகாட்டிகள் பற்றிக் கூறுவதே இக் கட்டு ரையின் நோக்கமாகும்.
கல்விசார் குறிகாட்டிகள்:
சமூக மேம்பாட்டினை காட்டுவதில் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும். கல்வித்துறை சார்ந்த பல குறி காட்டிகள் நாட்டின் அபிவிருத்தி மட்டத்தைக் காட்டி நிற்கின் றன. உதாரணமாக நாட்டில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் எத்தனை வீதத்தினர் க. பொ. த. சாதாரண தர, மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளனர் என்பது சமூக மேம்பாட்டினைக் காட்டும் ஒரு குறிகாட்டியர்க அமைந்து காணப்படுகிறது.
இதனை விட 20 வயதிற்குட்பட்டோரில் எத்தனை சத வீதத்தினர் உயர் கல்வி கற்கின்றார்கள், மற்றும் தொழில் சார் கல்வியைக் கற்றுள்ளார்கள். அந் நாட்டில் ஒரு மாணவனுக்காக செலவிடப்படும் தொகை எவ்வளவு, வருடாந்தம் தமது ப்டிப்பை முடிக்காமல் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர் களின் எண்ணிக்கை, மொத்தக் குடித்தொகையில் எத்தனை சத வீதத்தினர் தினசரி பத்திரிகைகளை வாங்குகிறார்கள், நூல் நிலையங்களில் ஒருவருக்கு எத்தனை புத்தகங்கள் உள்ளன. என்ற அளவிடும் கருவியைப் பொறுத்தவரையில் அந்த சமூகம் எந்தளவிற்கு மேம்பட்டுள்ளன என்பதனை காட்டி நிற்கின்றது. மேலும் மொத்த சனத்தொகையில் எத்தனை வீதத்தினர் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள், ஒவ்வொரு 1000 பேருக்கும் எத்தனை தொலைக்காட்சிகள் காணப்படுகின்றன . ஒரு ஆசிரியருக்கான மாணவர்களின் எண்ணிக்கை, அரசாங் கத்தினுடைய மொத்த செலவீட்டில் கல்வித்துறைமீதான செல வீட்டின் பங்கு , போன்ற குறிகாட்டிகளும் கல்வி சார்பாக ஒரு சமூகம் அடைந்துள்ள மேம்பாட்டினை எடுத்துக் காட்டுகின்றன.
சுகாதாரம் சார்பான குறிகாட்டிகள் :-
சுகாதார ரீதியில் ஒரு நாட்டின் அபிவிருத்தியை காட்டுகின்ற பல குறிகாட்டிகள் காணப்படுகின்றன. இவையும் சமூக மேம் பாட்டினை காட்டி நிற்கின்றன. ஒரு குழந்தை பிறந்து ஒரு வயது அடைவதற்கு முன்னர் இறந்து விடும் நிலயை 1000
நாள் 28

குழந்தைகள் சார்பாக மதிப்பிடும் பொழுது அது சிசு இறப்பு வீதத்தினைக் குறிக்கின்றது. சிசு இறப்பு வீதம் குறைவாக அமைவது ஒரு நாட்டின் சமூக மேம்பாட்டைக் காட்டுகிறது அதேபோல ஒரு நாட்டில் காணப்படும் 1000 பேருக்கு உள்ள
வைத்தியர்களின் தொகை, வைத்தியசாலைகளின் தொகை,
வருடாந்தம் சராசரியாக ஒருவருக்கு ஏற்படும் மருந்துச்செலவின் தொகை என்பனவும் சமூக மேம்பாட்டினை காட்டி நிற்கின்றது .
மேலும் ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்களின் சராசரி ஆயுட்காலம்
அதாவது ஒரு நபர் சராசரியாக எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறார் என்ற தரவுகளும் சமூக மேம்பாட்டினை காட்டி நிற்கின்றன. இலங்கையில் ஒருவரது சராசரி ஆயுட்காலம் 70 வயதிற்கு மேல் கண்ப்படுகிறது. வங்காள தேசத்தில் இது 51
ஆகும். பிறப்புவீதம்" இறப்புவீதம் போன்றவையும் சமூக மேம்
பாட்டைக் காட்டிநிற்கு மேலும் உட்கொள்ளும் உணவில்
காணப்படுகின்ற கலோரிகளின் அளவும் சுகாதார ரீதியாக
சமூக மேம்பாட்டைல் காட்டி நிற்கின்றது. வளர்முக நாடுகளை விட வளர்ச்சியடைந்த நாடுகளில் சுகாதாரம் சம்பந்தமான குறிகாட்டிகள் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன.
கலாச்சாரம் சார்பான குறிகாட்டிகள்:-
இடு சமூகத்தினுடைய மேம்பாட்டினை மதிப்பீடு செய்யும் பொழுது கலாச்சார ரீதியான தரவுகளும் நோக்கப்படுதல்
வேண்டும் . ஒரு நாட்டில் ஒரு மாதத்தில் இடம்பெறும் கலாச்சார
நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு கலாச்சார நிகழ்ச்சியிலும் பங்கு பற்றுவோரின் சராசரி எண்ணிக்கை, எவ்வளவு பேருக்கு
பொதுவாக ஒரு மைதானம் காணப்படுகிறது, பூங்காக்கள்
காணப்படுகின்றன. நூதன சாலைகள், நாடக அரங்குகள், சினிமா
அரங்குகள் மற்றும் கலை, கலாச்சார கல்விநிலையங்கள் காணப்படுகின்றன என்ற அளவீடுகளும் கலாச்சாரத்துறையில் அந்த சமூகம் அடைந்துள்ள மேம்பாட்டினை காட்டி நிற்கின்றன.
இவை மட்டுமன்றி மேலும் பல குறிகாட்டிகள் சமூக மேம்பாட்டினை காட்டி நிற்கின்றன. வருடாந்தம் நாட்டில் ஏற்படும் வன் செயல்களின் மூலம் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை, பொது மக்களின் உடமைகளிற்கு ஏற்படுகின்ற
சேதங்களின் அளவு என்பன ஒரு நாட்டின் சமூக அமைதியைக் காட்டி நிற்கின்றன, அதன் மூலம் இக்குறிகாட்டி எவ்வளவிற்கு
29. [bitଜର୍ଦr

Page 17
சிறியதாக உள்ளதோ அந்தளவுக்கு சமூக மேம்பாட்டினையும் அதனூடாக நா ட் டி ன் அமைதியையும் நாம் அளவிட்டுக் (ଜ&rt ଜୀt ଜୀtiର)rti}} ·
அரசியலிலே மக்களுக்கு உள்ள விழிப்புணர்ச்சியின் அளவும் சமூக மேம்பாட்டினைக் காட்டுகின்றது. மொத்த வாக்காளர் களின் எத்தனை சதவீதத்தினர் வாக்கெடுப்பில் பங்குபற்றி னார்கள், ஒரு நாட்டின் அரசியலில் பங்கெடுக்கின்ற அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை, அக் கட்சிகளின் மொத்த அங்கத்த வர்களின் எண்ணிக்கை, அரசாங்கங்களின் ஸ்திரத் தன்மை, ஒழுங்கான தேர்தல் முறைகள், நேர்மையான அரசியல்வாதி களின் நடத்தைகள், அரசியல்வாதிகளின் ஊழல்கள் போன்றன வும் சமூக மேம்பாட்டைக் காட்டுவதன் மூலம் நாட்டின் அபி விருத்தியையும் காட்டி நிற்கின்றன.
ஒரு நாட்டில் காணப்படும் ஒவ்வொரு 1000 பேரிலும் எத் த6ை5 பேர் மதுப் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்கள், புகைக் கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள், போதைவஸ்துக் கால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், வருடாந்தம் இடம் பெறும் தற்கொலைகளின் எண்ணிக்கை நாட்டில் காணப்படும் மன நோயாளர்களின் எண்ணிக்கை என்பனவும் சமூக மேம்பாட் டினைக் காட்டும் குறிகாட்டிகளாகும்.
அடிப்படை வசதிகள்:-
ஒரு நாட்டில் காணப்படுகின்ற சேரிகளின் துளவு, 1,000 பேருக்கு எத்தனை கல்வீடுகள் காணப்படுகின்றன. பல அறை களைக்கொண்ட வீடுகள் எத்தனை காணப்படுகின்றன. எத்தனை சதவீதத்தினர் சொந்த வீடுகளில் வாழ்கின்றனர். ஒரு அறை யில் சராசரியாக எத்தனை பேர் வாழ்கின்றஈர்கள், பாழடைந்த நிலையிலுள்ள வீடுகளின் எண்ணிக்கை, எத்தனை வீடுகளுக்கு மின்சாரம் உள்ளது, எத்தனை வீடுகளுக்கு தொலைபேசி உள் ளது, எத்தனை பேர் சுத்தமான குடிநீரே அருந்துகின்றார்கள். போன்ற தரவுகளும் சமூக மேம்பாட்டைக்ாட்டி நிற்கின்றன, வீடுகளில் காணப்படும் குளியலறை, மலசல கூட வசதிகளும் சமூக மேம்பாட்டினை காட்டுகின்றன்.
மேலும் நாட்டிலே காணப்படும் புகையிரதப் பாதை, தரைப் பாதை என்பவற்றின் மொத்த நீளம், பயன்படுத்தப்படும்
நான் 30
 

வாகனங்களின் எண்ணிக்கை, தனியார் வாகனங்களுக்கும், அர சாங்க வாகனங்களுக்குமிடையேயான விகிதம் நாட்டு மக்களில் பொதுப் போக்குவரத்துச் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் afog) grg rrib. குறிப்பிட்ட தூரத்தினை அடைவதற்கு ஒரு வாகனத்திற்கு எடுக்கின்ற நேரம், வருடாந்தம் நடைபெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை விபத்துக்களில் கொல்லப்படு வோரின் எண்ணிக்கை என்பனவும் சமூக மேம்பாட்டைக் காட்டி அதனூடாக அமைதியைக் காட்டி நிற்கின்றன,
மக்களிடையே காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வு குறைவாக இருக்கும்போது சமூக மேம்பாடு உயர்ந்த மட்டத் தில் காணப்படுகின்றது. வயது முதிர்ந்தோர்க்கான அரசாங்கத் தின் உதவிகள் அதிகமாகக் காணப்படுகின்ற தன்மை, நோயா ளர்கள். வலது குறைந்தோர் போன்றோர்க்கான உதவிகள், செல்வப் பங்கீட்டின் சமத்துவம் தொழிற் சங்கங்களின் வளர்ச்சி, அவற்றினுடைய பலம், தொழிலாளர்களுக்கு நாட்டில் தொழி உத்தரவாதம் காணப்படுகின்ற தன்மைகள். அவர்களுக்கான மருத்துவப் பராமரிப்பு, தொழிலாளருக்கான நட்டஈடு, ஒய்வு கால கொடுப்பனவுகள், இறப்பு நன்கொடைகள், வெள்ளம் போன்ற அழிவுக்கான நிவாரண உதவி, புனர்வாழ்வு, மீளக் குடியமர்தல் உதவிகள், உடல் உள ரீதியில் பாதிககப்பட்டோ ருக்கும், சமூக ரீதியில் வசதி குறைத்தோருக்கான புனர்வாழ்வு சேவைகள் என்பனவும் அரசாங்கத்தினால் சிறப்பாக வழங்கப் படுகின்ற தன்மை என்பனவும் சமூக மேம்பாட்டினைக் காட்டி நிற்கின்றன. இந்த சமூக மேம்பாட்டுக் குறிகாட்டிகள் உயர்ந்த நிலையில் காணப்படுவது அபிவிருத்தியைக் காட்டி நிற்கின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட சமூக மேம்பாட்டுக் குறிகாட்டிகள்
மிகவும் உயர்ந்த நிலையைக் காட்டுகின்றபோது அது யேர்
சமூக மேம்பாட்டினைப் பிரதிபலித்துக் காட்டும் அதனூடாக நாட்டின் அபிவிருத்தியையும் நாம் அறிந்துகொள்ளலாம் . ஆனால், இக்குறிகாட்டிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் காணப் படும் முன்னேற்றத்தை வைத்துக்கொண்டு அந்நாட்டின் அபி விருத்தியை மதிப்பிட முடியாது. ஏறக்குறைய எல்லாக் குறி காட்டிகளும் முன்னேற்ற நிலைமையைக் கொண்டிருக்கும்போதே அங்கு சமூக மேம்பாட்டைக் காண முடியும், அபிவிருத்தியும் ஏற்பட முடியும், சமூக மேம்பாட்டைக் காட்டும் இத்தகைய குறிகாட்டிகளை இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூறு வதும் முடியாத காரியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நான் 3

Page 18
அந்தப் பாடசாலை வழமை போல இயங்கிக்கொண்டிருந்தது. முதலாம் பாடம் முடிவடைந்த தற்கு அறிகுறியாய் மணி "கணிர்’ என்று ஒலித்தது. ஆண் டு பதி
னொன்று வ கு ப் பி லே தனது
பாடத் தை முடித்துக்கொண்டு மெதுவாய் வெளியேறிக்கொண் டிருந்தார் ஆசிரியர் சத்தியன். சங்கரன் தன் பாடப் புததகத்தை விரித்து வைத்தவாறே மெது வாய்த் தன் பார்வையை வெளியே ஓடவிட்டான். தன் வழக்கமான பாணியில் கம்பீரமாய் நடத்து வந்துகொண்டிருந்தார் ஆசிரியர் மரியநாயகம். ஒருவித அச்சமும்
இன்னும் அந்த வகுப்பறைக்குள் இரண்டாம் பாடத்துக்கான ஆசிரி யர் பிரவேசிக்கவில்லை. இருந் தாலும் வகுப்பு மிகவும் அமைதி யாகவே இருந்தது. அதற்குக் காரணம் இல்லாமலில்லை. பக் கத்து வகுப்பறையில் ஆசிரியர் மரியநாயகம் நின்றுகொண்டிருந் 35frff.
ஆசிரியர் மரியநாயகம் அந்த வரிசையிலுள்ள ஏதோ ஒரு வகுப் ப  ைற யி ல் நுளைந்துவிட்டால் போதும் அத்தனை வகுப்புக் களும் அமைதியாகிவிடும். அப் படியொரு வல்லமை அவரிடமிருந் 岛@ ந7ங்கள் தோற்றத்திலை மனிதர்களாயிருந் த7 ல் மட்டும் போதாது. மனிசத்
* பிள்ளை பள்,
புன் கண்ணிர்
ஆ. ரவீந்திரன்
அருவருப்பும் மனதைக் கெள்விக் கொள்ள, சட்டெனத் தன் பார் வையைத் திருப்பி மேசையிலே கிடந்த புத்தகத்தின் மீது ஒட விட்டான் சங்கரன். 'சி, யமன் மாதிரி இதுவும் ஒரு மனுசனே;
கொஞ்சம் கூட நெஞ்சிலே ஈரமில் லாத சென்மம். இந்தாளெல்லாம் ஏன்தான் வாத்தி வேலைக்கு வந் துதோ கொஞ்சம் கூட மனிதத் தன்மையில்லாத மரம்' என்றெல் லாம் தன் மனதாரத் திட்டிய வாறு நிமிர்ந்தான் சங்கரன்,
நான் 32
- /^2\عنچ தன்மை எங்களிட்டை இருக்க
வேணும். நாங்கள் மற்றவர்களை
நேசிக்க வேணும். அன்பு செலுத்த வேணும்.
*அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாள் ஆர்வலர் புன்கண்ணிச் பூசல் தரும் :
Joፕ
என்று வள்ளுவர் சொல்கிறார். அதாவது "ஆசிரியர் மரியநாய கத்தின் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகள் பக்கத்துவகுப்பறை

யிலிருந்த சங்கரனின் செவிகளில் நன்றாகவே விழுந்தன. "சீ அரக் கப்பிறவி. அன்பைப்பற்றி இந்தா ளுக்கு என்ன தெரியும்?' அவன் தனக்குத் தானே கூறிக்கொண் டான். சற்றே தன் தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்தான் சங்கரன். நாதன் தன் கைகளால் மேசையைப் பற்றியவாறு கால் களை மேசைச் சட்ட த் தி ல் ஊன்றி, தன் கதிரையைப் பின் புறமாய்ச் சா ய் த் து இலாவக மாய் க் குதிரையாடிக்கொண் டிருந்தான். சங்கரனுக்க
அவனைப் பார்க்க சிரிப்பு வந்தது . கூடவே பரிதாபமாகவும் இருந் தது. காலைக் கூட்டத்தில் தேவா ரம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நாதன் தைசாய் தன் கையி லிருந்து கைக்குட்டையை சற்று அ ப் பால் நின்றுகொண்டிருந்த மாணவி ஒருத்தி மீது விட்டெறிந் தான். அவ்வளவுதான், தேவா ரம் முடிவடைந்த மறு விநாடியே ஆசிரியரி
மரியநாயகம் அந்த இடத்துக்குப் புயலாய்ச் சீறிவந் தர். ' தேவாரத்தைக் கூட
மதிக்கத் தெரி: த தேவாங்குப்
பயலே" என்றவாறு கோழிக் குஞ்
சைப் பருந்து கெளவிக்கொண்டு
போவதைப் போ ல
நாதனை "லடக்" கென்று பற்றி இழுத்து அப்பால் கொண்டு சென்று தன்
வழக்கமான பாணியில் வாங்கு வாங்கென்று வாங்கினார். நாத னின் தந்த அன்றல் இப்பொழு
தும் சங்கரனின் காதுகளில் ஒலிப் பது போலிருந்தது.
டெறிந்தான்.
பறந்தது.
நான்கு நாட்களுக்கு முன்பு தனக்கு நடந்த அந்தப் பயங்கரம் சங்கரனின் மனதில் நிழற்படமாய் விரிந்தது. அன்று ஒரு வெள்ளிக் கிழமை. ப7 ட சா லை இடை வேளையின்போது சங்கரன் மை தானப் பக்கமாகச் சென்றான். அங்கு ஆண்டு ஆறு மாணவாகள் மிகவும் உற்சாகமாகக் கிரிக்கட் விளையா டி க் கொண்டிருந்தார் கள் சங்கரன் மனதில் சட்டென்று ஒரு எண்ணம், மின்னல் வேகத் தில் குனிந்து க ல் லெ ரா ன்  ைற எடுத்து, எதிரேயிருந்த கட்டடத் தின் கண்ணாடி யன்னல் மீது விட் "கலீர்" என்ற ஒலி யோடு கண்ணாடி தூள்தூளாய்ப் விளையாடிக்கொண் டிருந்த அவர்கள் அந்த அனர்த் தத்தைச் ச ற் று ம் எதிர்பார்த் தி ரூ க் க வி ல்  ைல. ஆ வ ர் க ள் திகைத்து நிமிர்ந்து, என்ன நிகழ்ந் தது என்பதை ஊகித்துக்கொள் ளும் முன்னமே சங்கரன் அத்தனை
பேரின் கண்களிலும் மண்ணைத்
அங்கிருந்து له تا نه لاتي طلا (ه) لوق له الله اته fIالي நழுவித் தன் வகுப்பறைக்கு வந்து நல்ல பிள்ளையாகத் தின் ஆசனத் தில் அமர்ந்துகொண்டான் .
மணியடித்து ஐந்தாம் பாடம் ஆரம்பமானது. என்றுமில்லாத வாறு அன்று சங்கரன் சமூகக் கல்வி ஆசிரியர் கொடுத்த குறிப் புக்களை அதீத அக்கறையுடன் எழுதிக்கொண்டிருந்தான். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும், "எக்ஸ் கியூஸ் La
33 நான்

Page 19
  

Page 20
§ දෙවිෙන්‍දි">1-2' కొ=====కొ============వాకాజ=== இர
மனித மேம்பாட்டுக்கு கலைகளின் பங்களிப்பு
LTTTMqLLTAMqLTTeLTTMTeLeLSLLLLT ST LLLSL0YLT MMLeYeMSMeezLTYMeBS Szarvszegzave:gra
& அல்வி %罗
இணையாசிரியர் - கலைமுகம்
மனித குலத்தின் ஆரம்பகால வாழ்வும், வளர்ச்சியும், வர லாறும், லகளினூடாகவே வெளிப்படுகின்றது. கலைப் படைப்பின் மூலமாகவே ஆதி மனிதன் கதைத்த்ான். மொழி தோன்றமுன்னரே அவன் எண்ணத்தை, சிந்தனையை வெளிப் படுத்த அவனுக்கு ஆதாரமாக விளங்கியது கஜலயே. இரண்டு இலடசதி ஆண்டுகளுக்கு முன்னர் எனக் கருதப்படும் பிரான்சு நாட்டின் டோர்டோக்னே' என்ற குகை ஒவியமாயினும் சரி: பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படும் இந்தியாவின் பிம்பெட்கா" குகைச்சித்திரங்களாயினுமி சரி; அன்றேல் அஜந்தாவில் இருந்து சிகிரியா வரையிலான சுவர் ஓவியங்களாயினும் சரி; மனித வரலாற்றின் நாகரீக நகர்வை, பண்பாட்டை அத்துடன் அதன் பின்னணியில் ஒரு இலட் ஒயத்தை எடுத்துக் காட்டுவனவாகவே இருக்கின்றன. கட்டடக் கலையின் எழிலைக் காட்டும் தாஜ் அகாலில் வெறும் அழகியல் உணர்வுமட்டும் வெளிப்படவில்லை; உண்மைக் காதலின் மாண்பு மகத்துவம் அங்கே எதிரொலிக்கிறது. இவ்வாறு மனித மேம் பாட்டின் பரிணாம வளர்ச்சியை காட்டி நிற்கின்றன கலைகள்,
வாழ்க்கையோடு மிகநெருங்கிய தொடர்பு L537:ಹ_ತಿ காலந் தொட்டு கலைக்கு இருந்தது. ஆதி மனிதன் தனக்கு மேலான எல்லாம் வல்ல ஒரு சக்தி இருப்பதாக உணர்ந்து, அதற்கு சாந்தி செய்ய எண்ணி பல சடங்காசாரங்களைச் செய்தான்; மழை வேண்டிச் செய்த மந்திரச் சடங்குகள்; கலை பட்டங்கள்; பறை முழக்கங்கள் : தெய்வ நம்பிக்கையில் தோன் றிய படிமங்கள் 3 படிமங்களின் புறவடிவம7 கத் தோன்றிய சிலை கள்; சித்திரங்கள்; இவையனைத்தும் கடவுளோடு மனிதன் தொடர்புகொண்ட பண்பாட்டுக் கோலங்கள். எனவே கால கதியில் மனித மேம்பாட்டுக்கு மதம் ஒரு முக்கிய இடத்தை வகிக்க முனைகையில், அதன் வளர்ச்சிக்கும், வழிபாட்டுக்கும் ,
நான் 36

பரம்புதலுக்கும் கைகொடுத்து உதவியது கலையே. இதுவே மைக்கல் அஞ்சலோவின் வத்திக்கான் சிஸ்ரைன் தோவாலய ஓவியம் தொடங்கி ரவிவர்மாவினதோ, நவீன பிக்காசோ வினதோ ஒவியம் வரையும் நாம் காணும் உண்மை.
கலையினூடாகக் கடவுளைக் கண்டவன் மனிதன், தில்லை யம்பலத்துத் திருநடனமும்; வீனஸ் தெய்வத்தின் வெவ்வேறு காலகட்ட விபரீதத் தோற்றங்களும்; உலகம் முழுமையும் நாட்டுக்கு நாடு உருவாகிய நாட்டார் கலைகளும்; லியனாடோ டாவின்சியின் இராப்போசன விருந்தும்; மனிதன் ஏதோ ஒரு உயர்ந்த இலட்சியத்தை நோக்காக வைத்து நடாத்திய தேடு தலின் விளைவுதான். மதத்தின் ஊடாக மனிதத்தை; மனித மேம்பாட்டை வளர்க்க முயன்ற மனிதனுக்கு கைகொடுத்து உத உதவியது கலையே.
மனித மேம்பாட்டிற்கு ஆற்றுகைக் கலை (Performing Arts) அளப்பரிய தொண்டு புரிகின்றது. சத்தியத்தின் மகிமையை எடுத்துக்காட்டுகின்றது 'அரிச்சந்திரன் நாடகம்?. பாவத் தைச் சுமந்து சாவை வென்ற பரமனின் கீதையைக் கூறி நல் வழிப்படுத்துகின்றது. 'திருப்பாடுகளின் காட்சி' (Passon Play)
தாய் சொல்லைத் தட்டாத தனயனின் பெரு ைலியப் பேசுகின் றது. 'காத்தவராயன் கூத்து' கற்பின் பெருமையைக் காட்டு கின்றது 'சத்தியவான் சாவித்திரி",
'நாடகம் நல்ல மனிதனை உருவாக்குகின்றது; அதுவே மனித வளர்ச்கியின் ஆதாரமாக இருக்கின்றது" என்று கூறு கின்றார் நாடக மேதை பேனாட்ச7. இந்திய அரங்கு காட கத்தை ஒரு ஐந்தாவது வேதமாகக் கொள்ளுகின்றது இந்த வகையில் இன்று அரங்கியல் கலை ஒரு புதிய பரிணமிப்புக் களுடன் மனிதனை அணுகுகின்றது. விடுதலைக்கான அரங்கு ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு புரட்சிகர அரங்கு நோய் தீர்க்கும் அரங்கு; சிறுவர் அரங்கு' என்று மானிட மேம்பாட் டிற்கும்; சுதந்திரத்திற்கும், விடுதலைக்கு 6ாக அரங்கக் கலையின் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. உள ஆற்றுப்படுத் தலுக்கு (Counseling) உகந்த ஒரு ஊடகமாக இன்று அரங்கக் கலை உதவுகின்றது.
இன்றைய நவீன ஓவியங்கின் மனித முரண்பாடுகளையும்; ஒடுக்கு முறையையும், நடப்பியல் பிரச்சனைகளையும், யுத்த
37 தான்
ZTTI

Page 21
நெருக்கீடுகளையும் அழகுறச் சித் தரித்து, மனிதனைச் சிந்திக்க வைக்கின்றது. பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்கி சுமூக மான ஒரு தீர்வுக்கு வழிவகுக்குகின்றது.
ஒவியத்தை வரைய வைத்து சிறுவர்களின் உளத் தாக்கத்தை உணர்ந்த அதற்கு பரிகாரம் காணுகின்றார்கள் இன்றைய நவீன இன்னும் யுத்த பூமியில் சிறுவர்கள் வரைந்த சித்திரங்களை (The Art of War) வைத்து உலக அனுதா பத்தையும், ஆதரவையும் பெற்று தீர்;கான முயலுகின்றது இன்றைய உலகம். வால்ட் டிஸ்னியின் 'மிக்கி பவுசும்." 'டிஸ்னி லாட்ன்டும்" பல்லாயிரக் கணக்கான மக்களின் உள் ளத்தை தொட்டு, உவகை கொள்ள வைத்து, கவலையைப் போக்கி உள்ளத் துரய்மையைத் தூண்டுகின்றதாக, அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இவ்வாறே கதையும், கவிதையும், காவியமும் இலக்கியக் கலையினூடாக, மனிதனையே மாற்றிவிட்ட வரலாறுகள் ஏரா' ளம், டால் ஸ்டாயின் "யுத்தமும் சமாதானமும்'; பஸ்ரி நாக்கின் 'Dr. சிவாக்கோவும்'; கொயர்ச்சோவின் "பிரத்தி ரெய்ஸ் காவும்' ரவீந்திரநாத்தாகூரின் ' கீதாஞசலியும்' சமூக, அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு வித்திட்டமையை வரலாறு எமக்கு உணர்த்துகின்றது
இன்று விஞ்ஞானத்தின் அதிவேக வளர்ச்சியால், கணணி ஆகத்தில் நின்று, புதிய ஒரு யுகத்திற்குள், அதுவும் மின் மிக ஒய்வு ற்ற ஒரு உலகத்திற்குள் (Very Busy World காலடி வைக் கும் மனித இனத்திற்கு சாந்தியும், சமாதான் மும், ஆரோக்கிய வாழ்வும், ஆனந்தமும் கிட்டவேண்டுமானால், கலையழகில் அவன் மனம் மூழ்க வேண்டும். உடலும் உள்ளமும் தெய்வீகக் கலையின் தரிசனத்தில் திளைக்க வேண்டும், அங்கே சாந்தி சமாதானம் திளைக்கும், மனிதம் மேன்மையுறும்.
வழி தவறிச் சென்றுவிட்டால், 3σφει ουσουπώς வாய் தவறிப்பேசிவிட்டால், திரும்பப் பெற முடியாது
- திபெத் நாட்டுப் பழமொழி
SSqqSqSqSqSqA StSA AASSASASqSqSqSqSqAAAAAAAA
马7命38

தனி மனித வளர்ச்சியில்
குடும்பத்தின் பங்கு
சேவியர் ஜோசவ்
குடும்பம் சமூகத்தின் ஆணிவேர். குடும்படி ஒரு பல்கலைக் கழகம். நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனியைக் கொடுக்கும்.
நல்ல ஆரோக்கியமான, புத்தியுள்ள பிள்ளைகளை நல்ல
குடும்பத்தினால்தான் கொடுக்க முடியும். மரபணு பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. ஒரு குடும்ப அங்கத்தவர்களின் உடல் அழகு, ஆரோக்கியம் மன வலிமை உயர உயர அச் சமூகம் படிப்படியாக உயர்ந்த தளங்களுக்கு உயருவதினால் அச் சமூகத்தின் விழுமியங்கள் உயரும். - ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் 5 வருடங்களில்
50% வளர்ச்சியைப் பெற்றுவிடும்.
இதனால் எதனையும் கிரகிக்கக்கூடிய நிலையில் குழந்தை யுள்ளது. Gupg|th y if f all (Sub - Conscious Mind) Lugely 56i குழந்தையின் பிற்கால வாழ்க்கையை சாதகமாகவோ பாதகமாகவோ பாதிக்க இடமுண்டு. பாலியல், விருப்பு, வெறுப்பு, உயர்வு தாழ்வு மனப்
பான்மை போன்ற உணர்ச்சிகள் சிறுவயதிலேயே அயர்
புலத்தில் பதிந்துவிடுகின்றன. 5 வது வரை பெற்றாரின் கண் முன்னே பிள்களை வளசி வதனால் இப் பாரிய பொறுப்பு பெற்றார் 1 மற்றும் குடும்ப அங்கத்தினர்களைச் சார்கின்றது. அக்குடும்ப சூழ்நிலை பிள்ளை வளர்ப்பில் முக்கிய பங்கினை வசிக்கின்றது. இதனால் தான் ஐந்திலே வளையாதது
ஐம்பதிலே வளையுமா என்று கேட்கின்றோம்.
தாய்ப்பால் இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்திகள் ஒரு சிறந்த போஷாக்குள்ள உணவு குழந்தை களுக்கு இதற்கிணையான ஒரு செயற்கை உணவு இது வரை தயாரிக்கப்படவில்லை
39 நான்

Page 22
10.
l.
13.
6.
தான் 40
பால் கொடுத்தல், அரவணைப்பு முத்தமிடல், கொஞ்சி விளையாடல் போன்ற தாயின் செயற்பாடுகள் குழந்தைக் குத் தென்பை ஊட்டி ஆளுமையை வளர்க்கின்றன. அன்புக்கு அன்னை, அறிவுக்குத் தந்தை, சிறு பிள்ளைகள் கற்பனைகள் செய்து பொய் கலந்து Gall y sir,
வது வழக்கம். அதனைச் சரியானபடி வாய்க்கால்கட்டி
நல்வழிக்குத் திருப்புவது குடும்ப அங்கத்தவர்களின் பொறுப்பாகின்றது.
நீண். பிரசங்கங்களை விட குடும்ப வாழ்க்கையில் அவ்வப் போது கொடுக்கப்படும் சிறுசிறு போதனைகள் மிக்க பலனளிக்கும். தாய், தந்தை, தாத்தா, பாட்டி , மாமா, மாமி, பெரி யப்பா பெரியம்மா, சின்னம்மா, அண்ணன், தம்பி அக்கா, தங்கை போன்ற குடும்ப உறவுகள் மனதைப் பண்படுத்துகின்றன.
வாழ்க்கையில் உள்ள உண்மைகளை அறிவைக் காட்டிலும் உணர்ச்சிகளினால் விரைவில் புரிந்துகொள்ள முடிகின்றது . முன்னுக்குப் பின் முரணான குடும்ப அங்கத்தவர்களின் (}சயல்கள் பிள் ஆள களை மருளச் செய்கின்றது. (டிரண்பாடு தோன்றும் போது போராட்டம் ஆரம்பமிா கின்றது.
உடல் ஆரோக்கியத்திற்கு குடும்பம பல வழிகளில் உதவு கின்றது . 臀 (உ + ம்) உணவு, உணவுப் பழக்கம் முதலியன. ஒருவரது அன்பு, இரக்கம், கருணை, மன்னித்தல் போன்ற மனித பண்புகள் வளர குடும்பம் உறுதுணை செய்கின்றது. ஒரு மனிதனின் சமநிலைப்படுத்தப்பட்ட அறிவுக்கு விஞ் ஞானம், இலக்கியம், மெஞ்ஞானம் அவசியமாகின்றது.
இதற்கான ஆன்மீகப் பயிற்சிக்கு குடும்பம் என்னும்
கோவில் பயிற்சி அளிக்கின்றது.
ஒருவரை தாம் எவ்வாறு அன்பு செய்யலாம் ? " அறத்திற்கே அன்புசார் பெய்ய அறியார்
மறத்திற்கும் அஃதே துணை'
(குறள்: 7.6)
அன்பானது அறத்திற்கு மட்டுமே துணையாவது கள் அறியாதவர்கள்; மறச் செயல்களுக்கும் அந்த அன்பே துணையாக இருக்கின்றது. ")w蜘
எனவே நீதி, நேர்மை, உண்டிை, ஆத்தியம் என்பவற்றை விற்று அன்பு செய்யக் கூடாது.
 
 
 

H 9 ο
罗0。
2 ,
குடும்ப, அயல், சமூக, நாட்டுப் பீச் ச் உனகள் போன்ற வற்றிக்கு இது ஒரு க ை4 ய காரணமாய் விளங்கு சின்றது பகிடிவ ைதக்கு வீட்டு நம்பிக்கை ன், வளர்ப்பு முறை 1ள் ஒரு முக்கிய காரணமாய் விளங்குகின்றது.
மனச்சாட்சி மழுங்கினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும், உ + b, ஹிட்லர் பகிடிவ ைத பெற்றோரின் நல்லுறவுகள் பின் னைகளின் சந்தே *வும?ன இல் வாழ்வுக்கு வழி வகுக்கும் ஒரு வளர்ந்த சாதாரண மனி தனின் தே ஒவகள் :
ஆரோக்கியமான சுக வாழ்வு i. உணவு, i. நித் திரை , iv. பணமும் அதனால் வாங்கப்படும் பொருட்களும்
V, உடலுறவில் திருப்தி, wi, பிள்ளைகளின் நல்லுறவு wi. சமூகத்தில் நன் மதிப்பு wi. இறப்பிற்குப் பின் வரும் வாழ்க்கை, இத் தேவைகளை ஒரு நல்ல கடு 04:3ே அளிக்கும். & Loal 15th 9) says : { சத்தியத் ை* நோக்கி
நமது கேவைகள் கோக்கி மனிதன் அகமும், புறமும் கொண்டவன் இ ன்று மனிதன் புறவாழ்க்கைக்கிே அதிக முக்கியத்துவம் சொடுக்கின்றான்; இது சமூகத்தின் ஆணிவேரான குடும். த்தைப் பாதிக்கும். குடும்பம் கெட்டால் நாடு சீரழியும். i சான்றவர் சான்ற7ண் சம குன்றின் இரு நிலத்தான்
தாங்காது மன்னோ பொறை.
(குறள் 990) சான்றாண்மை உள்ளவர்களு * , தம்முடைய அந்தச் சான் றாண்மைப் பண்பிலே குறைவுபடுவார்களாயின் இப்பெரிய நிலமும் மனித குலத்தைத் தாங்கி இர து i, ஒரு சமூகத்தில் 10 நீதிமான்கள் இல்லையாகில் அச்
சமூகம் அழியும்,
(soul Gair) தனி மனிதனின் வளர்ச்சி, நல்ல குடும்பங்களை உருவாக் கும் , நல்ல குடும் பங்கள் நல்ல சமூகத்தை உருவாக்கும். நல்ல சமூகம் நல்ல நாட்டை உருவாக்கும். இதற்கு நாட்டின் வளங்களும், இ ய நீ  ைக யு ம் நிச்சயம் கை கொடுக்கும்

Page 23
g N O. M.
99th the (8es (2en.pli.
PTARICIAN
OF HIGHEI
for all Em
Computer City and Guilds of Londo Book -Keeping and Account Civil Draughtsmanship English classes Short Hand & Typing (Engli Short Hand & Typing (Tami General Motor Mechanism Electrical Wiring General Electrician Motor Ric Winding Lahe Machine Opetation Ari Welding
"Carpentry
Í rée Fnglish Classes*
PATRICAN INDUS
. . . . . . . . . . ΕΟΚ PRODUCTION AND REPAIR
x+ Grills Sk Gate ke Iron chair
k Welding Works, Repair work,
plaining and sizing) le Water equipment and Engine (Petrol
FOR FURTHER D PATRICIAN I. 59. St. Patrick's Road,

NAAN Psychology - Magazine I. Seminary, Colombuthurai.
nents
INSTITUITE R STUIIDIES
ploy ment Oriente di Courses -
in Exam Courses
S.
ish) il)
TRIAL INSTITUTE
NG ON ORDER.........
s, Beds and Wooden Furniture planks sawing, ' pumps, Electrical
& Diesel Repairing.
TAILS CONTACT NSTITUITES
Jafna