கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொந்தளிப்பு 1985.07-12

Page 1
கைாங்
இதழ்: ஜுலை - டிசம்பர்
மானிடர் நெஞ்சிலே மாறுமிவ் வுலகிலும்
சிறியநல் லறிவிலும்
சீற்றந்தான்! இதுவுமோ
பெண்
 
 

தளிப்பு
1985 LD6h)Î: 32, 33
கொந்தளிப்பு
கொந்தளிப்பு
கொந்தளிப்பு
ார் கொந்தளிப்பு
ாகளறிவை வளர்த்தால் - வையம்
தைமை யற்றிடுங் காணிர் 'பாரதி'

Page 2

ܨܠܘܬܐ ܡܪܬܐ ܝܬܐ கொந்த gro -
娜
ܝܓ
గk
இதழ்: ஜூலை - டிசம்பர் 1985 LD6)ft: 32-33
qAAA AAAAAAAAqAAAAAAAA AAAA AAAAS
'இதயமாற்றுச் ஒஇச்சை
சோதனைக்குழாயில் குழந்தைப் பிரசவ ib':
WAUN இவையெல்லாம் இருபதாம் நூற்ருண்டின் இணையற்ற மருத் துவ சாதனைகள். மருத்துவ உலகின் அற்புதங்கள்தான் எத்தனே! எத்தனை!!
தலேநகரில் நவீன மயமான ஆஸ்பத்திரிகள், ஸ்பெஷலிஸ்டுகள் இத்யாதி. இத்யாதி. இதயத்துக்கொன்று, மூளைக்கொன்று, சிருநீரகத்துக்கொன்று என்று உடம்பின் ஒவ்வொரு அங்கத்தற்கும் ஷ்பெஷலிஸ்டுகள் நாகரிகமான நகர்ப்புறத்தில்
| კრუგს კი იყვნუ
இலகத்தி "தொழிலாளர்களுக்கு
è 巒
ஆனல் ம் கொண்ட ஈ எம். ஏக்கள்தான் முன்னுள் மருத்து கலக்கும் காம்ப வுண்டர்கள்தான், மருந்து லேபல்களையும் மிக்ஷர்களையும் மட்டுமே ua பாமஸிஸ்டுகள்தான் சகல நோய்களுக்கும் ஸ்பெஷலிஸ்டுகள் அந்த ஸ்பெஷலிஸ்டுகளுக்கோ அஸ்பிரின், டிஸ்பிரின் விட்டமின், கலர் கலர் மிக்ஸர்கள், இவைதான் சர்வரோக நிவாரணிகள், சாதா ரண பிரசவங்களுக்கு தோட்டத்து ஆயம்மா கொஞ்சம் சீரியஸ் என்ருல் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரி. அந்த ஆம்புலன்ஸைப் பெறுவதற்கும் ஆயிரம் கேள்விகள்.
03-0

Page 3
அதிலும் நம் தொழிலாளர்களுக்கு கைக்காசுக்கு மருந்து எடுத்தால்தான் சர்வரோக திவாரணி வேலை செய்யும் என்று தோட்ட வைத்தியர்கள் ஏற்படுத்தியிருக்கும் மனப்பிராந்தி வேறு.
இவற்றின் தவிர்க்கமுடியாத விளைவுகள்தான் தேர்ட்டப்புறத் தில் நிலவும் சிசு மரணவீதம், பிரசவமரணங்கள், தொழிலாளர் இறப்புவீதம் என்பவற்றில் அதிகரிப்பு.
மலேயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் சாபக்கேடுகளில் மருத்துவம் மட்டும் விதி விலக்காகிவிடமுடியுமா? என்ன?
ტბა. sis
அதிலும் இந்த ஈ. எம். ஏக்கள் தொழிலாளர்களை நடத்தும் விதம்மோ வைத்தியாதான நெறிகளையே அவமதிக்கும் செயலாகும்
இவற்றுக் கெல்லாம் மேலாக தொழிலாளர்களிடையே செல் வாக்குப் பெற்றிருக்கும் தொழிற்சங்கங்களும் சரி, ஏனைய நிறுவனங் களும் சரி இவற்றை கண்டு கொள்ளாது நழுவி விடுகின்றமை மன் னிக்கமுடியாத ஒன்ருகும். | || || A. PAS
நாம் இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் அலட்சிப்பிபோக்கு மலையக சமுதாயத்திற்கு மாத்திரமல்ல மானிட இனத்திற்கே செய் யப்படும் மாபெரும் அநீதி என்பதனை ஐஐந்துவிடலாகாது,
இந்த இழிநிலைக்கு எதிரான நமது உடனடியான செயல்ப்ாடு கள் நமது இன்றியமையாத கடைமையாகும்.
WIWITINSKIM
—.
下=一トン一ー一つ
லேன்
( '
●一4-{》
 

LD?að நாட்டில்
குழந்தைகள்
്യജ്ഞi:'-iങ്ക *-ー・一ー
புசல்லாவை இஸ்மாலிகா
புத்தராம் புனித பெருமான் போதனை பிறந்த நாட்டில் சித்திரம் போன்ற செல்வச் சிருர்களின் நிலைமை பாரீர்
இத்தரை வாழ என்று இரத்தத்தை உரமாயீந்தோர் புத்திரர் பாவப் பிறப்பாய் புழுதியில் உழல் வதேனுே!
நித்திரை நீங்கு முன்பு நிரைதனை அனுகும் பெண்கள் புத்திரப் பாசம் கொண்டு பரிவுடன் அனேத்தல் ஏது?
சத்தியம் பிறந்த நாட்டில் சமதர்மம் பேசும் நாட்டில் பத்தரை மாற்றுத் தங்கப் பாலகர் மாய்வ தேனே!
சுற்றி நல் வளம் சேர்க்கும் சுகமற்ற தாயின் மார்பில் வற்றிய முலையைச் சப்பும் வருங்கால செல்வச் சிற்பி
Oسي-5--Q

Page 4
வட்டியும் கள்ளுக் குடியும் வறுமையும் தொற்று நோயும் வெட்டிடும் வெட்டுக்கிளியாய் விடிவற்ற மலேயகந்தன்னில்
முழு திருவாணக் கோலம் மூக்கிலே வழியும் நீரும் அழுகின்ற ஏழைச் சிறுவர் அடைந்திடும் துயர்கள் கூறும்
துரும்பதாய் உருவம் மெலிந்து தோல் நிறம் கருத்து வாடி பெருஞ்சுமை தாங்கும் இந்தப் பிஞ்சதன் வாழ்வோ துன்பம்
அறிவுடன் வாழ்க்கைத் தரமும் அடுத்தவர் போல உயர நெறி பெற கல்வித் தாகம் நிறைந்திட வேண்டும் எங்கும்
கற்றிடும் வயதில் இவர்கள் காசுக்காய் வேலை செய்யும் முற்றிய கொடுமை தீர்ந்து மதி ஒளி காண வேண்டும்
கல்வியால் சிறுவர் வாழ்வை கதி பெறச் செய்தாலன்றி நல்வழி காணல் கனவே நாமிதை உணர்தல் வேண்டும்
இனிவருங் காலம் தன்னில் எம்மவர் கல்வி பெற்று தனியுகங் காணலுண்மை தாரணி பொறுத்தல் வேண்டும்
Oس 6-Q
 
 
 

போராட்டம்
இலங்கையில் தென் கிழக்குப் பகுதியிலுள்ள வெல்லஸ்ஸ ஆதி காலத்தில் நெல் உற்பத்திக்குப் பேர் போன இடமாஅத் இகழ்ந்தது. வெல்லஸ்  ைஇெல் டி லஸ்ள) வெல் - வயல்கள், வஸ்ஸ் - இலட்சம் வெல்லஸ்எ என்ருல் இலட்சம் (நூருயிரம்) வயல்கள் என்று அர்த்தம். இப்பிரதேசம் ஆதிகால ருஹனை இராஜ்யத்தின் செழிப்பு மிக்க நெல் உற்பத்தி ஸ்தானமாக இருந்ததோடல்லாமல், அதன் தேவைக்கு மிஞ்சிய நெல்லை ஊவா, கண்டி இராஜ்யங்களுக்கனுப்பி அவற்றையும் போஷித்து பத்தொன்பதாம் நூற்ருண்டின் இரண்டாம் பத்தாண்டுப் பகுதியில் சர்வ நாசமும் பேரழிவும் பெரும் அளவில் நிகழ்ந்தன. பிரிட்டிஸ் ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக 1817ஆம் ஆண்டு மூண்ட பெருங்கலகம் வெல்லஸ்ஸ பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். பிரிட்டிஸ் ஆட்சி யாளர் ஈவிரக்கமின்றி இக் கலகத்தை அடக்கினர். கிராமங்களனைத்திம் முற்ருக நாசமாக்கப்பட்டன. அவற்றின் ஜனங்கள் அழிக்கம் பட்டனர். இந்தப் பேரழிவினின்று அங்கு மிங்குமாகச் சிதறிக்கிடந்த சில கிராமங்கள் மாத்திரமே தப்பின. இப்பொழுது சரியாக நூற்றைம்பது வருடங்களுக்குப் பிறகு அதே வெல்லஸ்ஸ் பிரதேசத்தை அரசாங்கம் வெளிநாட்டுக் கொம் பணிகளுக்கு அபிவிருத்தியின் பொருட்டு கையளிக்கிறது.
பல நாட்டுக் கொம்பனிகளின் படையெடுப்பு
புதிய தொழில் ஆரம்பிக்கும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் மூன்று பெரிய கொல்பணிகள் வெல்லஸ்ஸ பிரதேசத்தில் வேலே ஆரம் பிக்குமாறு அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் மொன ராகல மாவட்டத்தில் கரும்புத் தொழிற்சாலைகளே நிறுவி பெரும் அளவில் கரும்புச் செய்கையைத் தொடங்கியுள்ளன. பெரிய வெளிநாட்டுக் கொம் பணிகள் பூரீலங்கா அரசாங்கம் உள்நாட்டுத் தனியார் துரை ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் அவ்வவ்விடங்களின் பெயர்களைக் கொண்ட கொம் பணிகளை அமைத்துள்ளன. அவையாவன:
வரையறுக்கப்பட்ட பெல்வத்த சீனிக் கொம்பணி
வரையறுக்கப்பட்ட மொனராகல சீனிக் கொம்பனி
வரையறுக்கப்பட்ட நன்கல சீனிக் கொம்பனி மூன்று முக்கிய விவசாய
+1-(

Page 5
மாவட்டங்களாகிய வவுனியா, மன்னர், மொனராகல ஆகியவற்றை 'விவசாய அபிவிருத்தி வலயம்' எனப் பெயரிட்ட பின்னரே அரசாங்கம் இக்கொம்பனிகளே (வியாபார ஸ்தாபனங்களே) மொனராகலைக்கு அழைத்து பெரிய வெளிநாட்டு உள்நாட்டு முதலீடு செய்பவர்களாகிய இரு சாரா ருக்குமே ஒரே விதமான ஊக்குவிப்பு அளிக்கப்பட்டுள்ளது (வரி சலுகை முதலியன) சுதந்திர வர்த்தக வலயத்தில் போல பத்து வருடங்களுக்கு நூற்றுக்கு நூறு வரிசலுகை, இயந்திரங்களும் மூலப் பொருள்களும் இறக்கு மதி செய்ய வரி விலக்கு முதலியன் நாட்டுக்குள்ளே சம்பாதித்த இலா பத்தில் எவ்வித பங்கும் வைத்துக் கொள்ளக் கூடாது (4-5-81 சன் பத்திரிகையைப் பார்க்கவும்) மேலும் 1978 அரசியல் சட்டம் 157ஆம் பிரிவின்படி அந்நிய மூலதன வைப்பைக் கவர்வதற்காகத் தேசியமய மாக்குவதினின்றும் பாதுகாப்பளிக்கப்படுகிறது.
முதலீடு செய்பவர்களும் கரும மாற்றுவதின் நோக்கம்
சலுகைகள், உத்தரவாதங்கள், ஊக்குவிப்புகள் இவ்வளவே. இக் கம்பனிகளின் செயல்களின் நோக்கமும் சட்ட திட்டமும் வெளிப்படையாகத் தெரிகின்றன. பூரீலங்கா அரசாங்கத்தையும் இலங்கை வங்கியையும் தவிர பேல்வத்த கொம்பனி ஐந்து வெளிநாட்டுப் பங்குதாரர்களே கொண்டுள்ளது அவைகள்:
ஐக்கிய இராஜ்ய சர்வதேச புருக்கர்
盛 ஐக்கிய இராஜ்ய குடியரசு நாடு அபிவித்திச் சங்கம்
3. ஹோங்கோங் சேங்கய் வங்கிச் சபை
4 ஹோங்கோங் வரையறுக்கப்பட்ட கெரிங் எஞ்சினியரிங்
5 ஐக்கிய இராஜ்ய ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கி என்பனவாகும். கொம்பனியின் (நிறுவனத்தின்) விளம்பரங்களின்படி வெல்லவாய மாவட்ட பேல்வத்த கொம்பனியின் விவசாய திட்டம் ஆகப்பெரியது ரூபா 25000 இலட்சம் மூல தனத்தையும் 10,000 ஹெக்டர் நிலப்பரப்பையும் உள்ள டக்கியது. (8-5-84 ஐலண்ட் பத்திரிகையைப் பார்க்கவும்) இதில் அரைவாசி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தது. நேரடியாகக் கொம்பனியினுல் பயிரிடப் படும். மீதி சிறு விவசாயிகளால் பயிரிடப்படும் கரும்புச் செய்கையே பயிரிடும்படிக் கட்டாயப் படுத்தப்படுவார்கள் (60 சத விதமே இலங்கை வாசிகளுக்குச் சொத்தமானதாக இருக்குமென்று சொல்லப் படுகிறது) 21-3-84 சன் பத்திரிகையின் விளம்பரத்தின்படி ஒரு முக்கிய விஷயம் யாதெனில் உலக சந்தையில் சினியின் விலை வீழ்ச்சியடைந்ததாலோ, பணப் பெறுமதி குறைந்ததாலோ கூடியதாலோ இலாபத்தில் நஷ்டம் ஏற்படுமாயின் ஸ்தாபனத்தின் பங்குதாரர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது. அதே விளம்பரம் 1974லிருந்து
0-8-0
 
 
 
 
 
 
 
 
 
 
 

1983ஆம் ஆண்டுவரை உலக சந்தையில் சீனி விலை எப்படிப் பெரும் வீழ்ச்சியடைந்தது என்பதை வரைபடம் மூலம் காட்டுகிறது. ஸ்தாபனத் தின் (கொம்பனியின்) பங்குதாரர்களும் முதலீடு செய்தவர்களும் அவர் களுடைய இலாபத்தின் நஷ்டத்திற்கு எதிராக உத்தரவாதமளிக்கப்பட்டி ருக்கையில் இலங்கை பாவனையாளர்கள் பெரும் விலை கொடுத்துச் சீனி வாங்க லேண்டியிருக்கும். எனவே விலை அபிவிருத்தி!
மேலும் கொம்பனி 12,000 ஏக்கர் காட்டு நிலத்தை வெட்டித் துப்பரவு செய்யத் தொடங்கி விட்டது. மத்திய பிரதேசத்தில் இன்னும் 5000 ஏக்கர் சேர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஸ்தாபனம் நேரடியாகப் பயிரிடும்.
பூரீலங்கா அரசாங்கமும் இந்திய ஆப்பிரிக்க நிறுவனமும் கூட்டு முயற்சியில் "மேட்டா இன்றர் நேஷனல்" (மேட்டா சர்வதேச) என்ற பெயரில் மொனராகல கொம்பனி நிருமாணிக்கப்பட்டுள்ளது. சியாம்பலாண் டுவ உதவி அரசாங்க அதிபர் பகுதியில் இதற்காக 52,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய பிரதேசத்தில் 12,000 ஏக்கர் நிலம் கொம்பனி நேரடியாக பயிரிடும். மீதியைச் சிறு கமக்காரர்கள் பயிரிடு வார்கள். மற்ருெரு கூட்டுச் சேர்ந்த கொம்பனி நக்கல கொம்பனி பூரீ லங்கா அரசாங்கமும் H. W. H, என்று பெயரிடப்பட்ட (சர்வதேச) ஒரு 'டச்சு" கெனம்பனியின் பங்கு தாரர்கள் இக் கொம்பனிக்கு 6000 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனங்களின் அவல நிலையும் போராட்டமும்
வெல்லஸ்ஸ பிரதேசம் கவனிப்பாரின்றிக் கிடந்த படியால் அபி விருத்தியடையாமலும், பின் தங்கியுமிருந்தது. 1817ஆம் ஆண்டு சொல்ல வொண்ணு சர்வ நாசத்துக்குப்பின் பொருளாதாரத் தேவையால் பெரிதும் பாதிக்கப்பட்டோர் சிறு தொகையினராக இங்குவர ஆரம்பித்தனர். பதுளை, பசறை, மற்றும் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் தேயிலை விஸ்தரிப் பினுல் பாதிக்கப் பட்டோர் தாங்கள் தலைமுறைத் தத்துவமாக வாழ்ந்து வந்த கிராமிய வீடுகளையும் நிலங்களையும் கைவிட்டுவிட்டு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஈர வலயத்தில் உள்ளவர்கள் அப்பகுதியில் ஜனப் பெருக்கம் அதிகரித்தபடியினுல் காணியில்லாப் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டியவர்களானுர்கள். அவர்கள் சிறு கமக்காரர்களாகச் சேனை பயிர் செய்து ஜீவனம் நடத்தத் தொடங்கியவர்கள். இந்தப் பகுதியில் விவசாய அபிவிருத்திக்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள திட்டத்தின் அனுகூலங்கள் எதுவுமின்றி அவர்கள் தங்கள் சொத்த முயற்சியின் மூலம் இப்பிர தேசதிலுள்ள வாராந்த சந்தையிலிருந்து கொழும்புக்கு இரண்டாந்தர உப உணவுப் பொருள்களை அனுப்பி வைத்தனர். மேலும் இக்காடுகள் முக்கிய மருந்து மூலிகைகளையும் மக்களின் ஏனைய தேவைகளையும் கொடுத்து
O--9-سO ,"

Page 6
உதவின. இயற்கை சூழலையும் தண்ணிர் வளங்களையும் பாதுகாக்கின்றன. கிராமிய மக்களின் அதி முக்கிய தேவைகளுக்கு அவசியமென்று இவை போற்றிக் காப்பாற்றப் படுகின்றன. புதிய அபிவிருத்திகளைக் கண்டு கிராமிய மக்கள் காரணத்தோடுதான் அஞ்சுகின்றனர். இந்தப் பல நாட்டு வியாபார ஸ்தாபனங்களின் செயல்களினுல் நேரடியாகப் பாதிப்புக்குள்ளா கப் போகும் இம் மக்களை இது வரை யாரும் கலந்தாலோசிக்கவில்லை. இப் புதிய திட்டத்தின் கீழ் அவர்கள் நிலை என்ன என்பதை அரசாங்கம் அவர்களுக்குக் கூற வேண்டும்.
இயல்பாகவே நிலத்தில் அவர்களுக்கு மாற்ற முடியாத உரிமை இருப்பதாக மக்கள் நினைக்கிருர்கள். அநேகர் பல தலைமுறையாக அங்கே வசித்து வருகிருர்கள். மத்திய அரசாங்கத்தின் உதவி சிறிதுமின்றி அவர் களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பல் லாண்டு காலமாகக் காட்டு நிலத்தைப் பண்படுத்தி கிராமங்களாக மாற்றி அமைத்திருக்கிருர்கள். நிலத்துக்குச் சட்டப்படி உரிமை கொண்டாட அவர்களுக்கு உரிமையிருக்கிறது. சமீப காலம் வரை கிராமங்கள் விரிவடை ந்த போது காணி குடியேற்ற திண்ைக்களம் காலத்துக்குக் காலம் நீண்ட காலப் பயிர்களைப் பயிரிட்டவர்களுக்குக் காணிகளைச் சொந்தமாக்குவதற் காகக் காணிகளின் எல்லைகளை அடையாளமிட்டு வந்துள்ளது. வெளிப்
o-10-0
 
 
 
 

பிரதேசங்களிலிருந்து புதிதாக வந்தவர்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப் படவில்லே. உத்தியோக பூர்வமாக அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களே இப்போது காணி வைத்திருக்கிருர்கள். மற்றவர்கள் குடியேற்றச் சட்டப் படி 99 வருடம் குத்தகைப் பெற்றவர்கள். இன்னும் மற்றவர்கள் வரு டாந்த பயிர் செய்கைக்காகக் காணி பெற்றவர்கள்.
மக்களுக்கும் அவர்களுடைய காணிகளுக்கும் அச்சுறுத்தல்
மொனராகல சீனி கொம்பனி திட்டத்தில் மத்திய பிரதேசத்தின் 10,000 ஏக்கருக்குள் வரும் 500-550 குடும்பங்களையுடைய 25 இராமங் களின் விவசாயிகள் மொனராகலையில் பெரும் பீதியடைந்துள்ளார்கள். 1982ஆம் ஆண்டில் 8 கிராம சேவகர்கள் இந்தக் கிராமங்கனில் நில அளவை நடத்திய போது அவர்களுடைய நிலைக்கு அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளதென்று உணர்ந்து மொனராகல பாராளுமன்ற அங்கத்தினரிடம் விசாரித்தார்கள். அப்படியொரு திட்டம் கிடையாதென்றும் காணி சுவீ கரிக்கப் படமாட்டாதென்றும் அவர்களுக்குக் கூறப்பட்டது. ஆனல் இப் போது கொம்பனி கிராமங்களுக்குள்ளேயே காணிகளை எல்லை அடையாள மிடவும் மண்ணைப் பரிசோதனை செய்யவும் தொடங்கியுள்ளது. பல்லாண்டு காலமாகப் பயிரிட்டு வந்த நிலங்களிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப் படுகின்றன. இதன் விளைவாகக் கொம்பனிகளின் மத்திய பிரதேசத்தி லுள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்கம் அமைத்து மொனராகல அர சாங்க அதிபரிடம் நேரில் பேட்டி கண்டு பேசுவதற்குக் கேட்டிருக்கிருர் கள். எல்லைகளை அடையாளமிடவும் மண் பரிசோதனை நடத்தவும் வந்த வர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். இந்த ஜனங்களின் எதிர்ப்பின் பயனுய்க் கொஞ்ச காலமாக வேலை இடைநிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட 25 கிராமங்களுள் பத்து பெரியவை. அவற்றில் மதுகம, பொலகஹகம எனும் இரண்டும் 1818 ஆம் ஆண்டு கலகத்தின் போது மதுகம கமரால, பொலகஹகம பிஹினவல என்னும் இரண்டு கலகத்தின் போது மதுகம கமரால, பொலகஹகம பிஹினவல எனும் இரண்டு பிரசித்தி பெற்ற தீரமிக்க தலைவர்களை அளித்தன. 200 ஆண்டுகள் பழமையானவை, சில ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரு கின்றன.
O-1 1-0

Page 7
மக்களின் நிலைமை
500-550 குடும்பங்களையுடைய மொத்த ஜனங்களின் சனத்தொகை சுமார் 3000 ஆகும். இதில் திருமணமாகாத 18 வயதுக்கு மேற்பட்ட வாலிபர்களின் தொகை 1000.
வீடுகளில் 75 சதவீதம் நிலையான கட்டிடங்கள். இவைகளில் பங்கு ஒடு வேயப்பட்டவை, அல்லது தகரம் போடப்பட்டவை. தரைகள் சீமெந்து போடப்பட்டவை. 4 பங்கு தடிகள் நாட்டி மண் பூசப்பட்ட வீடுகள், கூரைகள் தென்னுேலையால் வேயப்புட்டவை. இந்த வீடுகளுக்கு பெரிய தோட்டங்களுண்டு. இவற்றில் தென்னை, பலா, மா, எலுமிச்சை தோடம், வாழை போன்ற நிலையான பயிர்களும்; கரும்பு, அன்னசி கிழங்குகள் போன்ற குறுகிய கால பயிர்களும் பயிரிடப்படுகின்றன. சோளம், கொள்ளு, பச்சைக் கடலை, போஞ்சி, மரவள்ளி, மிளகாய் முதலியன பயிரிடப்படுகின்றன. சேனை பயிர் விளைவிக்கும் காணி 4000-5000 ஏக்கராகும்.
மொனராகல மாவட்டத்திலிருந்து வரும் பெருந்தொகை எலு மிச்சம் பழம் இந்தப் பிரதேசத்திலிருந்து வரும் விவசாயப் பொருள்களின் பெறுமதி ஒரு இலட்ச ரூபாய்கு அதிகமானதென்று மதிப்பிட்டுள்ளார்கள் ஹத்த ஒய நதிபாயும் இந்தப் பிரதேசத்தில் ஹத்தவ காட்டுக்கென 6000 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமையானதாகக் கருதப்படும் இந்தக் காடு தண்ணிரைத் தேக்கிவைத்து ஹத்த ஒய நதிக் களிக்கும் உற்பத்தி ஸ்தானமாக விளங்குகிறது.
கிராம வாசிகளின் விறகு, மருந்து மூலிகை, தேன் முதலியவற்றிற் கும் மூலஸ்தானமாக அமைந்துள்ளது. பண்டைக் காலத்தில் புத்ததாச மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட மூலிகைச் செடிகளின் கேந்திரதானம் இந்தக் காட்டின் சுற்றுப் புறத்திலேயே அமைந்திருக்கலாமென்று நம்பப் படுகிறது. சீனித் தொழிற்சாலை நிறுவுவதற்கும் அதற்கான மூலப் பொருள் கள் உற்பத்தி செய்வதற்குமாக இன்று ஹதவ காட்டை முற்ருக அழிப் பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தனியார் ஒப்பந்தக்காரர் கள் மரங்களையும் விறகுகளையும் வெட்டித் துப்பரவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்கள். சந்தேகமின்றி ஹதவ்வ காட்டை அழிப்பது முழுப் பிரதேசத்திற்கும் பாரதூரமானதும் ஈடு செய்ய முடியாததுமான உயிரினங் களை அழிக்கிற நடவடிக்கையுமாகும், வலகம மன்னனல் கட்டப்பட்ட **கொலியாகொட ராஜமகா விகாரை, கீத்திசிரிமேவன் மன்னனல் கட்டப்பட்ட ‘மண்டகஹ* ராஜ மகா விகாரை, மனபரன மன்னனல் கட்டப்பட்ட அலுகல்கே ராஜ மகா விகாரை ஆகிய மூன்று பண்டைக் கால புத்த விகாரைகளின் தலைவிதி என்னவாகுமோ? அரசாங்கம்
o-12-o
 

பன்னுட்டுக் கம்பெனிகள் சங்கத்துடன் (Multinational Corporation) இணை ந்து செய்யவிருக்கும் பூரீ லங்காவின் பேரபிவிருத்தியின் பொருட்டு அவை
கள் தரைமட்டமாக்கப்படுமா?
மேலும் கொம்பனிப் பிரதேசத்திலுள்ள 11 கிராம சேவர்களின் பிரிவுகளிலுள்ள 42,000 ஏக்கர் நிலத்தில் வாழும் கிராமிய மக்களின் அபிவிருத்திக்காக மக்களினல், மக்களுக்காக அரசாங்கம் என்ன செய்ய எண்ணியுள்ளது?
அரசாங்கத்தின் மனநிலை
மொனராகல பேல்வத்த கொம்பணிகளினுல் பாதிக்கப்பட்ட ஜனங் களின் எதிர் காலம் எப்படிப் பட்டதாயிருக்குமென்று அரசாங்கம் இது வரை கூறவில்லை. தற்போது அவர்கள் வசிக்கும் வீடுகளிலிருந்தும் நில புலன்களிருந்தும் அகற்றப்படவிருக்கும் கிராமவாசிகளுக்கானத் திட்டங் களோ, முன்னேற்பாடுகளோ, காட்டப்படவோ எடுக்கப்படவோயில்லை. சமீப காலம் வரை பிபில, மொனராகல பாராளுமன்ற அங்கத்தினர் களுக்குக் கூட இந்தச் சீனி நிறுவனங்களின் உத்தேசிக்கப்பட்ட செய்முறை பற்றிய முழுவிபரங்களும் அவைகள் ஜனங்களை எப்படிப் பாதிக்கும் என் பது பற்றியும் தெரியாதாம் பாராளுமன்றத்தில் இவ்விஷயம் முன் வைக் கப்பட்டும் அரசாங்கத் தரப்பு அங்கத்தினர்களிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. ஜே. வி. பி. யின் செயல்போல மக்களால் தெரிவு செய்யப்பட்ட எதிர் கட்சியைக் கலைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் 11ஆம் திகதி ஒரு விவசாயிக்குச் சொந்தமான நிலத்தை வரையறுக்கப்பட்ட மொனராகல சீனி கொம்பனியின் மண் அகற்றும் இயந்திரம் (Bulldozer) ஒன்று வெட்டித் துப்பரவு செய்ய முயன்ற போது அந்தப் பகுதி விவசாயிகள் கொம்பனி உத்தியோகத்தரோடு நாற்று மேடை அழிவைப்பற்றி மே மாதம் 12த் திகதி சம்பாஷணை நடத்தினர். இது சமாதான முறையில் அமைதியாக நடந்த உரையாடலாகும். ஆனல் கொம்பனி உத்தியோகத்தரின் பொய்யான முறைபாட்டின் காரணத்தால் பொலிஸ் மொனராகல விவசாய ஐக்கியக் குழு அங்கத்தினர்களில் மூவரைக் கைது செய்தது. இந்தக் தலைவர்களும் இவர்களுடன் மொனராகல மாஜிஸ் டிரேட் கோர்ட்டுக்குச் சென்ற 57 மற்றவர்களும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஜூன் மாதம் 5ஆம் திகதி (எல்லாமாக 83 சந்தே கிக்கப்பட்டவர்களின் பெயர்கள் கோர்ட்டில் வாசிக்கப்பட்டன) எல்லாரும் பிணையில் விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஆஜ ராகும் படிக் கூறப்பட்டனர். தற்போதுள்ள நிபந்தனைகளின் படி ஒரு முழு கிராமத்தையே பினக்குட்படுத்த முடியாது என்று நியாயாதிபதி (மாஜிஸ்டிரேட்) கூறிஞர். V
о-13-o

Page 8
எதிர்ப்பு நடவ டிக்கைகள் - விவசாயிகளினுலும் அவர்களுடைய ஆதரவாளர்களினுலும்
இரக்கமோ அநுதாபமோ காட்டாத அரசாங்கத்தின் மனப்போக் கின் விளைவாக மக்கள் ஆத்திரமூட்டப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்க ஒழுங்கு கள் செய்தனர். மொனராகல சீனி நிறுவனத்தின் திட்டப் பிரதேசத் திலுள்ள விவசாய சங்கங்கள் அப்பகுதியிலுள்ள கிராமங்களில் எதிர்ப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளன. அகில இலங்கை விவசாய காங்கிரஸ் 1984 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி ஒரு பத்திரிகை மாநாடு நடத்தியது. அதைத் தொடர்ந்து மக்கள் இயக்கங்களின் கூட்டங்கள் பல நடைபெற்றன. அதில் விவசாயிகளின் பிரதிநிதிகளும் புத்த குரு மார்களும் பேசினர். அன்றைய தினமே விவசாயிகளின் இயக்கங்கள் உட்பட அநேக இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய மொனராகல விவசாய ஐக்கியக்குழு அமைக்கப்பட்டது. அதனுடைய முக்கிய நோக்கம் இந்த முழுப்பிரச்சினைக்கும் சம்பந்தப்பட்ட உண்மை விஷயங்களைத் தேசிய மட்டத்தில் விசாரித்து, இந்தக் குழுவினுல் ஒரு வாக்கு மூலம் தயாரிக்கப் பட்டு மதத் தலைவர்கள், அரசியல் த லேவர்கள், தொழிற் சங்கங்கள், நாட்டின் முக்கிய பிரஜைகளால் கையொப்பமிடப்பட்டுப் பிற நாட்டுக் கொம்பனிகளுக்குக் காணி வழங்குவதை எதிர்க்கும்படி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மொனராகல விவசாயிகளின் போராட்டத்திற்குப் பரந்த அளவில் ஆதரவு தேடி நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்த நிலையில் வைத்திருப் பதற்காகக் கொழும்பில் இரண்டு முறை மொனராகல விவசாய ஜக்கியக் குழு கூட்டங்கள் நடத்தியது.
கடைசியாக ஜூலை மாதம் 27 ஆம் திகதி நர ஹென்பிட்டிய அப பராமய புத்த கோவிலில் கூட்டம் நடைபெற்றது. மதத்தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும், மனித உரிமை இயக்க பிரதிநிதிகளும், தொண்டர் இயக்க பிரதிநிதிகளும் பெருமளவில் வருகை தந்திருந்தனர். ஜூன் மாதம் 28 ஆம் திகதி மொனராகலையில் ஒரு சத்தியாக்கிரகமும் நடைபெற்றது. மொனராகல கச்சேரிக்குச் செல்லும் பாதையில் புத்த சங்க உறுப்பினர்கள் பாதையின் இரு மருங்கிலும் அமர்ந்து இவ்வொப் பற்ற சத்தியாக்கிரகத்தைச் செய்தனர். கச்சேரியில் மாவட்ட அபிவிருத் திச் சபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பாராளுமன்ற அங்கத்தினர்களும், மொனராகல மாவட்ட உத்தியோகஸ்தர்களும் சமூக மளித் திருத்தனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் காணி வழங்கும் பிரச்
O-14-0

சினை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்குப் புத்த குருமார் அநுமதி கோரினர். அந்தக் கலந்துரையாடல் மாலை 2 - 00 மணிக்கே நடைபெற்றது. அதுவரை அவர்கள் பாதையின் ஒரத்திலேயே அமர்ந்திருந்தனர். பகல் போஜனத்தையும் அவ்விடத்தி லேயே அருந்தினர்.
மாவட்ட மந்திரி, அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர், அரசாங்க அதிபர் ஆகியோருடன் புத்த குருமார் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் ஜூலே மாதத்தில் விவசாய சங்கங்களுடன் கூட்டம் நடத்து வதற்கு ஒப்புக் கொண்டனர். அரசாங்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் கையளிக்கப்பட்டது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய ஆதரவளிக்கும் இயக்கங்களின் பிரதிநிதிகளும், அநேக கிறிஸ்தவதொழிலா ளர் ஒத்துழைப்பு அங்கத்தினர்களும் பிரசன்னமாயிருந்தனர். பாதிக்கப் பட்ட பிரதேசத்திலிருந்து விவசாயிகள் பெருங் கூட்டமாய்த் திரண்டு வந்திருந்தனர்.
விவசாய ஐக்கியக் குழுவின் பிரதிநிதிக் குழுவொன்று (delegation) ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சி அமைச்சரைச் சந்திக்கவிருக்கிறது. பதினைந்து தலைமை புத்த குருக்கள் இப்பகுதி விவ சாயிகளைக் காப்பாற்றும்படி கோரியுள்ளனர். இந்த வேண்டுகோள் பூரீ கல்யாண வம்ச (பிரிவு) மத குருவின் மூலம் விடப்பட்டுள்ளது.
போராட்டம் நீடிக்கிறது. சிங்கள விவசாயிகள் அடக்கு முறைக்கு ஆளாகின்றனர். இனத்தடைகளுக்குக் குறுக்கே தோட்டத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கி விவசாயி களின் சக்தியைப் பலப்படுத்துவார்களா? பெரும் அளவு நிலப்பரப்பில் கரும்பு பயிரிடும் நீதியற்ற சுரண்டல் முறையை வெளிப்படுத்துவதில் தோட்டத் தொழிலாளர் நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இது புதிய காலனி நிர்வாக அடக்கு முறையாகும்.
திரு. அபயசேகரவின் கட்டுரையை மொழி பெயர்த்தவர் இரா. மலேயப்பன்
o-5-o

Page 9
  

Page 10
ற்கு, மூடசமூக அமைப்பை உடைத்தெறிவதில் வகிக்கும் அம்சத்தை காட்டிய பாத்திரப் படைப்புகளைத்தான் நாம் பெருமைப்படுத் வேண்
டும்.
நிலசுவாந்த தர்களின் அடாவடித்தனதையும், அடக்குமுறையை யும் நாம் அறிந்துள்ளோம். ஒரு கிராமத்திலுள்ள மக்களை, சூறையா டுவதில் நிலச்சுவாந்ததரிகளின் பங்கை நாம் அறிவோம் கண் சிவந் தால் மண் சிவக்கும் என்ற படத்தில் நிலசுவாந்தரை கதா நாயகன் சகதியில் போட்டு புரட்டி புரட்டி மிதிப்பதிலிருந்தும், அதை ரசிகர் கள் ரசித்ததன்மையிலிருந்து இன்னும் கொஞ்சம் புரட்டி எடுக்கமா ட்டாணு என்று தோன்றியது என்று ஆனந்த விகடன் படவிமர் சனம் எழுதியதிலிருந்து நிலசுவாந்தர்களின் கொடுமைகளை நாம் இல குவில் புரிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட அமைப்புறைக்கெதிராக அந்த கிரர் மத்தில் எழும் முற்போக்கு அம்சங்கள் புரட்சிகர சிந்தனைகள்,
இந்த நிலையில் அந்த நிலசுவந்தரரின் வைப்பாட்டியின் நிலை யை யோசித்தால் அவள நிலசுவாந்தருக்கும் ஆதரவாகத்தான் நட ந்துகொண்டிருக்கவேண்டும். ஏனெனில் தனது வாழ்வுக்கான பொரு ளாதார உதவிகள் எல்லாமே அவரிடமிருந்துதான் வருகின்றது.
இருந்தாலும் சமுதாய அமைப்பிற்கெதிராக அக்கிராமத்தில்
நடைபெறும் எல்லா போராட்ட அம்சங்களிலும் பாப்பாத்தி எனும் அப்பெண் பாத்திரம் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது போராளிக ளோடு போராளியாக தனக்கே சோறுபோட்டு கட்டுப்படுத்திய ஜமீ ந்தாருக்கெதிரான எதிராளியாக பாப்பாத்தி செய்யும் தியாகம் விடுதலை இயக்கங்களில் ஒரு போர்வீரன் செய்யும் செயலுக்கு சம 1976ರಿ!Tತ್ತಿ!
தாலியை கழட்டுவதிலிருந்தும், கணவனைப்பிரிந்து விதவையாக வாழ்ந்து காட்டுவதிலும், கற்பிழந்தபின்னர் காதலனை பலி வாங்கு வதிலிருந்தும் - மாறுபட்ட ஒரு சமூக விடுதலைக்கான பாத்திரமாக பாப்பாத்தி மாறியிருப்பது- கடைசியில் அவளே ஜமீன்தாரை செய்வது- இந்த அம்சங்கள் பெண்களை ஆண்களின் பங்குகளை விடவும் கூடுதலான அந்தஸ்த்துக்கு உயர்த்துகிறது.
Oس-18 س-O

சமூக வளர்ச்சிக்காக அதன்தேவைக்காக தன்னை ஈடுபடுத்திய இன்னுமொரு பெண் பாத்திரத்தை தண்ணீர் தண்ணீர் என்னும் திரைப்படத்தில் பார்க்கின்ருேம்,
அரசாங்கத்தின் கையாலாகாத தனத்திற் கெதிராக சவால் பாணியில் தண்ணிர் இல்லாத கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் முயற்சியில் கிராமத்துக்கு புதியவனுன கோபால் எனும் இனஞ னின் செயலுக்கு அக்கிராமத்து முழு மக்களுமே ஆதரிக்கிருர்கள்.
கடைசிநேரத்தில் அரசாங்கம் கால்வாய் வெட்டும் முயற்சி யைத் தடைசெய்கிறது- முழு கிராமமக்களுமே அதை எதிர்த்து சத் தியாக்கிரகம் செய்கிருர்கள்- கதாநாயகி சரிதா- அவளின் கணவன் ஒரு பொலிஸ் உத்தியோகத்தன்.
ஆணுல் கணவனின் வேண்டுகோள், அவனது கடமைக்காக தனது பங்கு எல்லாவற்றையும் உதறிதள்ளி விட்டு, சமூகத்துக்கான ஒரு போராட்ட நிகழ்ச்சியில் தனது பங்குதான் முக்கியம் என்ற நிலையில் கதாநாயகி போராட்டத்தில் கலந்து கொள்கின்ருள். இப்படியான சமூகரீதியிலான- தனி நபர் சுயநலமில்லாத நிகழ்ச்சி களில் பெண்களின் பங்குகளைப் படம்பிடித்துக் காட்டுவதன்மூலம், மனித சக்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்மே மேலோங்குகின்றது
குடும்பப் பிரச்சினை- காதல் தோல்வி, போன்ற அம்சங்களில் பெண்களின் முற்போக்குத்தன்மைகளைத் திரைப்படங்களில் பார்ப் பதை விடவும்
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான சமுதாயமாற்றத் இல் பெண்களின் பங்குகளைக்காட்டிய, தண்ணீர் தண்ணீர்- கண் சிவந்தால் மண்சிவக்கும் எனும் திரைப்படங்கள் முன் நிற்கின்றன
-O-O-O-
பனேயளவு உயர்ந்த உபதேசத்தை விடத் தினையளவு சிறிய நடைமுறையே சாலச் சிறந்தது
"LD5rrå, ud fr” 0-19-0

Page 11
கீரை கஞ்சி
தேவையான பொருட்கள் -
வல்லாரைகீரை அல்லது பொன்னுங்காணி - 2 கட்டு
சிவத்த பச்சை அரிசி - 1 சுண்டு தேங்காய் கட்டிப்பால் - 3 கோப்ை உப்பு (தேவையான அளவு) (Tea Cup)
செய்முறை:- அரிசியை நன்முக கழுவி தாராளமான தண்ணீருடன் நன்ருக கஞ்சி போல் அவிய விடவும். பின் நாங்கள் பாவிக்க போகும் கீரையையும் சுத்தம் பண்ணி கழுவி உரலில் போட்டு நன் முக இடித்து, சாறு பிலிந்து, தேங்காய் பாலையும் அந்த சாற்றுடன் கலந்து பின் இக் கலவையை, வேகவைத்த அரிசிகஞ்சி கலவையுடன் சேர்த்து நன்ருக கொதிக்கவிட்டு பின் இறக்கி பரிமாறலாம். (தேங்காய் பூ கீரை, மொடகத்தான் கீரை, சிறிய கத்தரிகாயின் இலே இவைகளையும் பாவிக்கலாம்.)
伊
வலிமை என்பது உடலின் பலத்தால் உண்டாவத ன்று. அது மனவுறுதியிலிருந்து உண்டாவதாகும்.
“Lidas Tš5 KAD IT” ,
o+20-0
 
 
 

மல்லிகை சி. குமார்
நான் பாடும் பாடல் - நாயகி - அம்பிகா,
காதலன் இறந்ததால் தன்னேயே விதவை போல் ஆக்கிக்கொள் ளும் நாயகி - அவள் அவளின் நிலைகண்டு அவளுக்கு வாழ்வு கொடுக்க முன் வரும் ஒர் எழுத்தாளர் (சிவக்குமார்) ஆனல் அவனோ. இறந்து விட்டதன் காதலனையே (மோகன்) மேலாக நினைத்து உனக்கு திலகமிடவரும் எழுத்தாளனைப் புறக்கணித்து நெற்றியில் தானே சூடுபோட்டுக் கொள்கிருள் ஒருத்தி மனதார ஒருவனே நினைத்துவிட்டால் அவனே தனக்கு சொந்தம் என இக்கதை சொன்னுலும், ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி வீணுகிப் போகிறதே. என்ற வேத இன எழத்தான் .ெ ய்கிறது.
சிறை - நாயகி - லட்சுமி.
தன் மனைவி ஒருவனுல் வஞ்சிக்கப்பட்டுவிட்டால் என அறிந்த துமே. அவளே உதறித்தள்ளிவிட்டு ஒடும் கணவன்.
எவனுல் வஞ்சிக்கப்பட்டாளோ. அவனின் (ராஜேஸ்) வீட்டிலே யே வந்து குடியேறும் நாயகி, செய்த தவறுக்காக சாகும் வரை நொந்து கொண்ட அந்தோணி அவனின் இறப்புக்குப்பின்.
மீண்டும் மனைவியை அடையவரும் கணவன்.
* சீ உன்னுேடு இனியும் நான் மஞ்சள் குங்குமத்தோட வாழ் வதை விட. செய்த ஒரு தவறுக்காக - தன் நிழல் கூட என் மீது படாமல் ஒதுங்கி வாழ்ந்த அந்தோணி. உன்னுேட மனைவியாக நான் வாழ்வதைவிட இறந்தவனுக்காக விதவையா வது எவ்வளவு மேல் என தாலியை அறுத்து வீசும் . அவள். அனுராதாவின் இந்தப்படைப்பு ஒரு புதுமையை மட்டும்மல்ல மனைவியை எப்பொழுதும் பாவித்துக்கொள்ளலாம். என்ற ஆண்களுக்கு ஒரு அடி
o-21 -o

Page 12
காதல் ஒவியம் - நாயகி - ராதா,
அவன் குருடன், இருந்தும் நல்ல பாடகன். அவளோ. நி1 னத்தில் ஆர்வமுள்ளவள். அந்த கோயில் பாடகனுக்கும் (ரம ண ன்) அவளுக்கும் ஏற்படும் காதல் குருட்டு காதலனுேடு ஊரை விட்டே ஓடும் நாயகி. சந்தர்ப்பவசத்தால் பிரிவுற்று மாற்ருனுக்கு மனைவியாகி விட்டாலும் அவள் மனதில் அடித் தளத்தில் அவனின் நினைவே!
அவனும் அவளைத்தேடியே அவ்வூர் கோயிலில் பாட வருகின் முன். அவனின் பாடலுக்கு அவள் எங்கிருந்தாலும் வந்து ஆடி விடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆனல் முடிவு. தேவதாஸ்தான்- பாரதி ராஜாவின் படைப்பான இது- இதன் படப்பிடிப்பு எல்லாமே ஒரு ஒவியம்தான். இப்படம் பார்க்கும் போது ஒரு கலேயுண ர்வு. ராதாவின் நாட்டியங்களைப் படமாக்கி இருக்கும் கலைத் திரன் பாராட்டப்பட வேண்டும். ஆனல் கதையின் ஒட்டம் சில இடங்களில் கொஞ்சம் தடங்கள் ஆணுல் ஏராளமான பிரேம் கள் ஒவியமாகவே தோன்றின.
புதுமைப்பெண் - ரேவதி.
வீணுக கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு அடைக்கப்பட்ட கண இரவு பகல் உழைக்கும் ஒருத்தியின் கதை கணவனை வெளியே மீட்டவள். கணவனுலேயே சந்தேகிக்கப் படுகின்ருள். அதற்காக சீதையைப் போல இவள் தீக்குளிக் கவோ அய்யோ மானம் போகுதே என்று தற்கொலே செய்து கொண்டோ மற்ற படநாயகிகளைப் போல இராமல். தனக் கென புதிய வாழ்வை அமைத்துக் கொள்கிருள். கணவன், குடும்பம், உற்ருர், உறவினர் சொல்லுக்கெல்லாம் அடிமைப் பட்டு பணிவாக வாழ வேண்டும் என்ற அடிமைத்தனத்தை கொஞ்சம் உடைத்தெறியும் கதை. வழக்கமாக பாரதிராஜா உபபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்து இழுத்துச் செல்பவர். இக்கதையிலும் அதைக் கையாண்டு இருக்கிருர்,
o-22-0
 
 

5 கோபுரங்கள் சாய்வதில்லை - சுகாஷினி.
அழகியலை விரும்பும் ஒருவன் ஒரு நாட்டுப்புறத்திக்கு கணவனு கிருன் அவளோ. கணவனே கண்கண்ட தெய்வமாக. அவனையே பின்தொடர்கிருள். அவனே மற்ருெருத்தியை மண ந்து விடுகிருன். அந்த இரண்டாந்தாரத்தால் நாட்டுப்புற மனைவி நாகரிக நங்கையாகிருள்.
இவளேக் கணவன் மீண்டும் விரும்ப. முதல் மனைவியோடு கணவனே கிராமத்திற்கே அனுப்பிவைக்கிருள் அர்க்காணியாக சுகாஷினியின் நடிப்பு சிறப்பானது.
இவ்வுலகில் நிரந்தரமான சமாதானம் ஏற்பட வேண்டுமானுல் அதை நாம் குழந்தைகளிட மிருந்தே தொடங்கவேண்டும்
"மகாத்மா”
ol-23-0

Page 13
தோட்டத் தெழிலாளரின் இன்றைய பொருளாதார நிலை
தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தில் தொழிற் சங்கங்களின் பங்கு
D2 தோட்டத் தொழிலாளரின் சம்பள விகிதம் வேறு எந்தத் துறையினரைச் சேர்ந்தோரின் சம்பள விகிதங்களில் இருந்தும் பாரிய வித்தியாசத்தைக் கொண்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்ட அமைப் புகக்களுக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் காலத்துக்கு காலம் எடுத் துக் கூறியும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்துள்ளது.
எனினும் அண்மைக் காலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து சம்பள உயர்வுக் கோரிக்கையை முன் வைத்து போரா டியது யாவருமறிந்ததே. இப்போராட்டத்தின் போது அரசாங்க சார்புடைய இலங்கை தேசிய தோழிலாளர் சங்கம் இரட்டை வேடம் போட்ட போதிலும் தொழிலாளர் மத்தியில் ஏற்பட்ட உணர்வுகள் ஒன்றித்திருந்த காரணத்தினுல் இறுதி நேரத்தில், சம் ளே உயர்வுக்கான காரணகர்த்தாவாக இருந்த தோழிற்சங்கங்களில் தாங்களும் சங்கமும் மிக முக்கியமானதென அச் சங்கம் பேர் பண் ணிக் கொள்கின்றது. இந்தப் போராட்டத்திலிருந்து சில உண்மை கள் புலனுகின்றன, முதலாவது மலையக தொழிலாளர்கள் ஒன்றிணை த்து நாள்ொன்றுக்கு அரசாங்கத்திற்கு ஆறு கோடி ரூபாயை சம்பா தித்துக் கொடுக்கின் ரூர்கள் எனவே அவர்களை அரசாங்கம் எப்போ தும் அலட்சியப்படுத்தி ஏமாற்றிவிட முடியாது. இரண்டாவது அரசா ங்க சார்பு கொண்டு தொழிற்சங்கங்கள் மலையக மக்களிடம் பொய் முகம் காட்ட முடியாது. மூன்ருவது மலையக தொழிலாளரின் ஏக போக பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்கின்ற இலங்கைத் தொழி லாளர் காங்கிரசில் மாத்திரம் தனித்துப் போராடி வெற்றி காண் பதும் முடியாத காரியம்
o-24-0
 
 

மேற் கூறிய உண்மைகளை புலனுக்கிய இப் போராட்டம் அர சாங்கத்தை பெருமளவில் அச்சுறுத்தியது அரசாங்கம் இதனுல் அவ சரமாக ஒரு சம்பள உயர்வை அளித்து ஆண் பெண் சம சம்பளத் திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்து போராட்டத்தை தற்காலிக மாக நிறுத்தச் செய்ததோடு தொழிற்சங்கங்கள் வேண்டுகோளுக்கு அமைவான உரிய சம்பளத்தை நிர்ணயப் படுத்துவற்கென அமைச் சர்கள் திரு. தொண்டமான், திரு. காமினி திசாநாயக்க ஆகி யோரோடு, முன்னைய அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சரில் ஒரு வரான திரு கொல்வின் ஆர் டீ. சில்வா ஆகியோரையும் கொண்ட குழுவொன்றினை அழைத்து இக் குழுவானது குறிப்பிட்டதொரு கால எல்லைக்குள் தனது சிபாரிசினை தெரியப்படுத்துமாறு பணிக்கப் பட்டது. இக் காலக்கெடு முடிவுற்று பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் அரசாங்கம் தற்காலிகமாக அளித்த சம்பள உயர்வினையே தொழிலாளர் பெற்று வருவது வருத்தத்திற் குறியதே அத்துடன் வர்ழ்க்கைச் செலவுப் புள்ளி ஒன்றிற்கு 3% கொடுத்து வந்தது யாவரும் அறிந்ததே இதுவும் 1984ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1985ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஒரு வருட காலத்திற்கு கொடுக்கப் படவில்லை இத் தொகை தீபாவளி பண்டிகைக் காலத்தில் கொடுக் JSLI படவுள்ளதாக அதிகார பூர்வமற்ற அறிக்கைகள் கூறுகின்றன.
எனவே தற்போதைய சூழ்நிலையில் மலேயக தொழிற்சங்கள் யாவும் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் இடைக்கால சம்பள உயர்வில் திருப்திப் படுவதைத் தவிர்த்து ஆக்க பூர்வமான உரிய செயல் திட்டத்தில் இறங்கி மலையகத் தொழிலாளரின் முறையான ஊதியத்தை யும், காலகாலமாக மறுக்கப் பட்டு வருகின்ற ஜனநாயக உரிமை களையும் பெற்றுக் கொடுத்தல் இன்றியமையாததாகும்.
Ghos III. L525) lui. GLDIT366öT

Page 14
தோட்டங்களைப் பலி கொடுத்தால் பொருளாதாரத்திற்குண்டாகும் தீங்கு
தமிழில் இரா. மலேப்பன்
1985 ஒக்ருேபர் 2ஆம் திகதி அந்த பத்திரிகையில் லியனல் சரத் எழுதியது:
வெளிநாட்டு வியாபாரிகள் இந்நாட்டின் பெருந் தோட்டங்களைப் பொறுப்பேற்க இடமுண்டு. அவர் கள் பொறுப்பேற்பது பயிர்ச் செய்கையை அபி
விருத்திச் செய்வதற்காகவல்ல அவர்களுடைய பிற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே.
ஜே. ஆர். ஜயவர்தன அவர்களின் ஜனுபதி பதவியிலும் அவர் அப்பதவியை நிர்வகிக்கும் முறையிலும் ஏதோ பெயரளவில் செய் கின்ருரோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது. நாடு எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினையைப் பற்றி அவர் உணர்ந்து கொண்ட தாகக் தெரியவில்லே. அவரது சொல்லும் செயலும் இதனை நன்கு வெளிப்படுத்துகின்றன. தோட்டத் துறைமார் சங்கம் இண்டர் கொண்டினண்டல் ஹோட்டலில் நடாத்திய கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரை இதற்குத் தக்க சான்று பகர்கின்றது.
அரசாங்க தோட்டங்களனைத்தும் பொது கொம்பணிகளாக்கப் பட்டால் உலக வங்கிக் கடனுதவி பெற வேண்டிய அவசியமிராது என்று அவர் கூறியிருக்கிருர், அரசாங்க செய்தித் தாள்களும் அவரது உரையைப் பல விதமாகப் பிரசுரித்திருந்தன. தோட்டங்களின் பொருட்டுக் கடன் வாங்கப்படுகின்றதா? அல்லது அரசாங்க வரவு செலவு திட்டத்தை நிறைவு செய்வதற்குக் கடன் பெறப் படுகின்றதா என்று அவ்வரிக்கைகள் சரியாகத் தெளிவு படுத்தவில்லே.
ஐ-26-0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்பகுதியிலிருப்பினும் தோட்டங்கள் பொது ஜனங்களுக்குச் சொந்தமாகவிருப்பதைப் பார்க்கிலும் கொம்பணிகளுக்குக் கையளிக் கப்பட்டால் இப்போதைப் பார்க்கிலும் அதிக வருமானத்தைப் பெற முடியுமென்று ஜயவர்தன அவர்கள் கருதுகிருர்கள் அரசாங்கக் கூட்டுத் தாபனமான மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையை அகற்றி விட்டுத் தோட்டங்கள் எல்லாவற்றையும் மீண்டும் கொம்பனிகளுக்கு ஒப்படைக்கத் தயாராவதாகத் தெரிகிறது.
தோட்டங்களுள் பெரும்பாலானவை வெளிநாட்டுக் கொம் பணிகளுக்குச் சொந்தமாகவிருந்த பொழுதே சுவீகரிக்கப்பட்டு மக்க சாளுக்குச் சொந்தமாக்கப்பட்டன; அவைகளே மாத்திரம் திரும்பத் தர முயற்சி எடுக்கப்படுகின்றதா? இப்பொழுது மொனராகலை பிர தேசத்தில் விவசாயிகளுக்குப் பரம்பரை பரம்பரையாகச் சொந்தமாக விருந்த காணிகள் பலாத்காரமாகச் சுவீகரிக்கப்பட்டு வெளி நாட்டுக் கொம்பனிகளுக்குக் கொடுக்கப்படுவதஞலேயே அப்படி திே ட் க வேண்டியுள்ளது.
பொதுஜனங்களுக்குச் சொந்தமான நிலபுலன்களைச் சுவீகரித்து வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கை யென்பது தெளிவாக விளங்குகிறது. இது வரை அவ்வாறு நெசவு தொழிற்சாலைகள் உட்பட அரசாங்க நிறுவனங்கள் பல அர சாங்கத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. நாங்கள் இப்போது அதைப்பற்றிப் பேசவில்லே. மக்களுக்குச் சொந்தமான தோட்டங் களைக் கொம்பனிகளுக்கு ஒப்படைக்கப் படுவதைப் பற்றியே பேசு கிருேம்.
ஜனதிபதி ஜயவர்தன அவர்கள் தோட்டங்கள் மக்கள் நோட்ட அபிவிருத்திச் சபையால் நிர்வகிக்கின்ற படியால் நஷ்டம் ஏற்படுவதாகவும், கொம்பனிகளால் ஆதாயம் ஈட்டமுடியுமென்றும் கூறியிருக்கிருர்,
இங்கே நாங்கள் கேட்க விரும்பும் முதலாவது கேள்வி எந்த நாள் தொடக்கம் ஜனவசம நிறுவனம் நட்டமடையத் தொடங் கியது என்பதே. ஜயவர்தன அரசாங்கம் அதிகாரத்தைக் கையேற்ற சமயத்தில் இந்த நிறுவனம் கோடி கணக்கில் இலாபத்தை உற்பத்தி
o-27-0

Page 15
செய்தது. ஆனல் தோட்டங்களை நிறுவகிக்கத் தகுதியற்றவர்களை நியமித்ததே காரணம் என்பது அவரது குற்றச்சாட்டகும் அதற் கேற்ப அவரது அரசாங்கல் தகுதியுள்ளவர்களை நியமித்தது. நிய மிக்கப்பட்டவர்கள் ஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஜன வசம நிறுவனத்தை நடத்திச் செல்வதற்கு உலக வங்கிக் கடனைப் பெற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குக் கொண்டு சென்றவர் களும் அவர்களே, நாங்கள் எழுப்பிய கேள்விக்கு மற்ற எல்லா நிறு வனங்களைப் போலவே ஜனவசம நிறுவனத்தையும் சுத்தப்படுத்தப் போவதாக அவர்கள் விடையளித்தார்கள்.
மக்களுடமையான தோட்டங்களைப் பொது கொம்பனிகளுக்கு ஒப்படைப்பதன் மூலம் இலாபம் ஈட்டுவது எப்படி என்பதே எங்கள் இரண்டாவது கேள்வி இதற்கான விடையை ஜனதிபதி அவர்களின் நிதி அமைச்சரே கூறியுள்ளார். அதில் சிறிதளவேனும் ஜனுதிபதி அவர்கள் அறிந்திருப்பாராயின் கொம்பணிகள் மூலம் இலாபம் பெற முடியுமென்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்.
நிதி அமைச்சர் ரொனி டீமெல் அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்யிைல் இப்பொழுது முழு உலகமுமே அளவுக்குமிஞ்சி தேயிலை உற்பத்தி செய்வதாக கூறியுள்ளார். தேவையைப் பார்க்கிலும் உற்பத்தி அதிகம். இதற்குக் காரணம் உலகில் மேலும் பல நாடு கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டமையே. அதன் காரணமாகத் தேயிலே விலை மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்தது. சென்ற வருடம் தேயிலையின் மூலம் 500 கோடி ரூபா இலாபம் கிடைத்தது. ஆனல் இந்த வருடம் அதனிலும் குறைந்த 250 கோடி ரூபாவே இலாப மாகக் கிடைத்துள்ளது. இந்த றிலேமை மாறுமென்று எதிர் பார்க்க முடியாது, ஏனைய தோட்டப்பயிர்ச் செய்கைகளாகிய தென்னே, இறபர் ஆகியவற்றின் நிலைமையும் இவ்வாறேயுள்ளது.
ஜனுதிபதி அவர்கள் கூறுகிறபடி, கொம்பனிகாரர்களுக்கு இந்த நிலைமையை மாற்றியமைக்க முடியுமா? அவர்களுடைய தொழில் நிபுணத்துவம் இப்போதைப் பார்க்கிலும் அதிக உற்பத் தியைப் பெருக்கி மேலும் சிக்கலையுண்டு பண்ணுமேயல்லாமல்
O-28-0
 

நிலைமையைச் சீராக்காது. தனவந்தர்களின் பொருளாதார சித்தாந்
தத்தின்படி இருக்கின்ற ஒரேயொரு வழி உற்பத்தியைக் குறைத்தலே Lurr(5Lb.
பிரச்சினேயை ஜயவர்தன அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வில் லேயென்று இக்கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியது சும்மா பேச் சுக்குச் சொன்னதே. உண்மையில் அவர் இந்த இக்கட்டிலிருந்து நழுவிக் கொள்ளவேபார்க்கிருர், ஒரு வேளை மூல நிதிஸ்தாபனத் திலிருந்து அவருக்கு இவ்வாலோசனை கிடைத்திருக்கலாம்.
ஜனதிபதி அவர்கள் தமது பொருளாதாரக் கொள்கையை ஏற்றுமதிப் பொருட்களின் அடிப்படையிலேயே அமைத்துக் கொண் டுள்ளார். பொருட்களை இறக்குமதி செய்யப்படும் அடிபடையில் இந்நாட்டைக் கைத்தொழில் மயமாக்கி வெளிநாட்டிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் பொருட்களின் அளவைக் குறைத்துக் கொள் வதை அவர் நிராகரித்துவிட்டார். அதனுல் காலனித்துவயுகத்தில் முக்கிய இடத்தை வகித்த பாரம்பரிய தோட்டப்பயிர்ச்செய்கைகளி லேயே நாட்டின் பொருளாதாரம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனுல் உள்நாட்டுக் கைத்தொழில்கள் அழிந்து நாசமாகும் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன: முதலாளித்துவ நாடுகளின் அபிலாசையை நிறை வேற்ற முனைந்ததின் பலன் இது.
மேற்கூறிய எருமைமாட்டு நியாயத்தின் தீமைகள் இப்போது பயனளிக்க ஆரம்பித்துள்ளன. பாரம்பரிய தோட்டப்பயிர் செய்கை யின் இலாபம் வீழ்ச்சியடைந்தமையோடு பல பிரச்சினைகளைத் எதிர் நோக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியிருகிறது. ஜனதிபதி அவர் களோ அவரது நிதி அமைச்சரோ இந்தத்தீமைகளை முன் கூட்டியே அறிந்திருக்கவில்லே. தேயிலை, தென்னை, இறப்பர் போன்ற வழமை யான ஏற்றுமதிப் பொருட்களுக்கு உலக சந்தையில் எப்போதும் ஒரேமாதிரி நிலையான நிலைமை இருக்குமென்று அவர்கள் நினைத் தனர். உலக நிலைமைக்கேற்ப போன வருடம் திடீரென்று தேயிலை யின் விலை உயர்ந்த பொழுது நிதி அமைச்சர் இனிப்பு கிடைக்கப் பெற்ற சிறுவனப் போல் சத்தோஷமிகுதியால் துள்ளிக்குதித்தார்.
o-29-0

Page 16
இப்பொது நிகழ்ந்து கொண்டிருப்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஜயவர்தன அவர்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற் காகத்தோட்டப்பயிர்ச் செய்கை முழுவதையும் கொம்பனிகளுக்குக் கையளித்துவிட ஆயத்தஞ்செய்சிருர், வீழ்ச்சியடைந்து கொண்டிருக் கும் இத்தொழிற்குத் தேசிய இயக்கங்கள் கைகொடுத்துதவும் என்று நம்புவதற்கில்லை. எனினும் சில வேளை வேளிநாட்டுக் கொம்பனி காரகள் இத்தொழிலேக் கையேற்கலாம். அது மற்ற வழிகளைக் கை யாள்வதற்காகவல்ல. முடிந்த அளவு உற்பத்தியைக் குறைப்பதன் நோக்கமே. வெளி நாடுகளில் தேயிலே, தென்னை, இறப்பர் என்ப வற்றுடன் போட்டியிடுகின்ற ஒரு போட்டியாளர் சமாதானமாக வும் ஆறுதலாகவும் நடந்து கொள்ளமுடியும். விலை வீழ்ச்சியடை யும் போது உலக உற்பத்தியைக் குறைத்துவிடுவதற்கோ முற்ருக நிறுத்தி விடுவதற்கோ உலக வியாபாரிகள் தயங்கமாட்டார்கள். அது அவர்களுக்குச்சகஜம். பசிப்பட்டினியால் வருந்தும் மக்கள் கூட் டம் உலகமெங்கும் பரந்து காணப்படும். இவ்வேளையில் தாணிய உற்பத்தி அளவுக்கு மிஞ்சி கூடிவிட்டதாகக் கூறி தானிய உற்பத்தி க்கு வரம்பு விதித்தும் உற்பத்தியாளருக்கு ஆறுதல் உதவிகள் வழங் கியும் உற்பத்திக்கு எல்லை வகுத்திருப்பது இரகசியமல்லவே.
இலங்கையில் தோட்டப் பயிர்ச்சொய்கை உற்பத்திப் பொறுப் பைத்தாங்கள் கையேற்றுக் கொண்டு அடுத்தபடியாக அதைமுற்ருக மூடிவிடும் வஞ்சக நோக்கமே தவிர அதற்குக் கைகொடுத்து உதவுவத ந்கு வெளிநாட்டுக் கொம்பணிகாரர்கள் முன் வரவில்லையென்பது திண்ணம்.
சிறிது காலத்திற்கு முன் ஜெமெயிக்கா அரசாங்கத்தின் உத விக்கு வந்த அமெரிக்கக்கொம்பனிகாரர்கள் அங்கே இயங்கிவந்த பொற்சயிட் தொழிற்சாலைகளை முற்ருக மூடிவிட்டார்கள். உலக சந்தையிலும் அமெரிக்காவிலும் பொற்சயிட் விலை வீழ்ச்சியடைந்தே இதற்குக் காரணமாகும். வியாபாரச்சந்தையில் பெஈற்சயிட்டின் விலை உயர்வதற்காக ஜெமிக்காவைப் பலிகொடுத்தனர். அதன் பிர திபலனுக அங்கே வரவு செலவு திட்டம் பாதிப்புக்குள்ளானது. வியாபாரச் சந்தையிலும் பற்ருக்குறை அதிகரித்தது. ஆயிரமாயிரம் பேர் தொழிலிழந்து சொல்லொணுக் கஷ்டத்துக்குள்ளாயினர்.
0-30-0
 
 

இலங்கையிலும் தோட்டப்பயிர்ச்செய்கையைத் தாங்கள் பொறு ப்பேற்று அதை முற்முக அழித்துவிடுவதற்கு உலக வியாபரிகளுடன் இரகசியச் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ என்னவோ தெரியாது பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் உலக சந்தையில் கோப்பியின் விலை வீழ்ச்சியுற்ற காரணத்தாலேயே கோப்பி தோட்டங்கள் மூடப் பட்டன. அந்த நிலை நாட்டிலே எஞ்சியுள்ள தோட்டப் பயிர்ச் செய்கைகளுக்கு ஜயவர்தன அவர்களின் யுகத்தில் நேரலாம் அல்லவா? அம்மாதிரி நடவடிக்கை எடுக்கப் பட்டால் இலட்சக் கணக்கான மக்கள் வேலையிழந்து தெருவில் நிற்பார்கள் என்பதில் சிறிதும் ஐய மில்லை. அப்பொழுது 'உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்த தோட்டப் பயிர்செய்கைக் காரர்களிடம் அவ்வேலையை ஒப்டைத் தோம். அவர்களாலேயே முடியவில்லை யென்ருல், நான் என்ன செய்வது' என்று ஜயவர்தன அவர்கள் சொல்லித்தம்மைக் காப்பா
ற்றிக் கொள்ளப் பார்க்கிருர்,
ஆகையினுல் ஜயவர்தன அவர்களுடைய கொண்டினண்டல் நியாயத்தைத் தோட்டப் பயிர்ச் செய்கையிலீடுபட்டுள்ள இலட்சக் கணக்கான மக்கள் மிகவும் கவனமாகச் சிந்தித்துப் பார்க்கும் படி யும் அவர்களுக்கு நேரப்போகும் ஆபத்தை முன் கூட்டியே எச்சரிக் கவும் விரும்புகிருேம். ஜனவசம தோட்டங்களைத் தனியார்க் கொம் பணிகளுக்கு ஒப்படைக்க எடுக்கப்படும் நடவடிக்கையினுல் தோட்டத் தொழிலாளர் எடுத்து வைக்கும் அடுத்த அடி நடுவீதியில்தான் என் பதைக் கருத்தில் கொண்டு இப்பொழுதே உரிய நடவடிக்கையில்
ஈடுபடுவார்களாக
O-3 -o

Page 17
சமாதானத்திற்காகவே சண்டைக்காக வல்ல நீர்க்கொழும்பு தமிட்டாவில் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடை பெற்ற பொது கூட்டத்தின் சிற்றறிக்கை.
ஜிப்றி - தமிழில் - இரா. மலேயப்பன்
23 சங்கங்களிலிருந்தும் குழுக்களிவிருந்தும் சுமார் 80 அங்கத் தினர் நீர்க்கொழும்பு கிறிஸ்த்தவ சமய நிலையத்தில் 1985 செப் டம்பர் 20 - 22 திகதிகளில் நியாயமான சமாதானத்திற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட முதலாவது கூட்டத்தை நடத்தினர். அவர்கள் சர்வ இன ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சமாதானத்தின் பொருட்டு அவர்களுடைய பல திறப்பட்ட செயல் களின் அநுபவங்களைப் பகிர்ந்து அளித்து அடுத்த மூன்று மாதங் களுக்குரிய நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தனர். அவைகள் கீழ்க்கண்ட
வற்றை உள்ளடக்கியன:
மட்டக்களப்பு கூட்டம் 1985 ஒக்ருேபர் 25 தொடக்கம் 27ம் திகதி வரை உலக சமாதான வாரக் கொண்டாட்டம் ஒக்ருேபர் 25 முதல் 27 ஆம் திகதி வரை தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற விசேஷ தினங்களில் சமாதான நடவடிக்கைகளிலிடுபடல் (அடுத்த 3 மாதங்கள்)
கருத்தரங்குகள் சமாதான பயிற்சி வகுப்புகள் நாடகங்கள்
கொழும்புக்கு வெளியேயுள்ள பல இயக்கங்களைப் பார்வையிடல் (இதுவரை அம்மாதிரியான 20 அழைப்புகள் கிடைத்துள்ளன)
32)

முன்னேற்பாடு செய்யும் குழு
சமாதானத்திற்காகப் பாடுபடும் பலவகையான சங்கங்களும் இயக்கங்களும் ஒன்றிணைந்து ஒரு சமாதான இயக்கத்தை அமைப் பதற்கானத் திட்டங்களை வகுக்க ஒரு ஆயத்தஞ் செய்யுங்குழு அமைக்கப்பட்டது. பின்வரும் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொ ள்ளப்பட்டது.
'தம்மிட்டயில் (20 - 22 செப்டம்பர்) சமாதான மாநாட்டில் பங்கு பற்றியவர்களாகிய நாங்கள் கீழ்க்கண்டவற்றைத் தீர்மானிக்கிருேம்: இந்தக் கூட்டம் நியாயமான சமாதானத்தை மக்களுக்குப் பயிற்று விப்பதற்காக மக்களைச் செயல்திறமைமிக்க சத்தியாக உருவாக்கு வதற்கு ஒரு சமாதான இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்.
நாங்கள் ஒரு குழுவாக இணைந்து பின்வருமாறு தீர்மானித் தோம்:
s இலங்கையின் சகல மக்களினதும் மனித உரிமையை ஏற்றுக்
கொள்ளல்
<颚 மாகாண சபைகள் மூலம் அதிகாரம் பரவலாக்கல் அடிப்
படையில் அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளல்.
(ஐக்கிய சட்ட அமைப்புக்குள் பொது விஷயங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு அல்லது மூன்று எல்லாரும் ஒன்முக இணைந்து செயலாற்றக் கூடிய வகையில்)
இ யுத்தத்தின் மூலம் தீர்வு காணும் நோக்கத்தைக் கைவிடல்:
FF தற்போதைய பிரச்சனைகளுக்குப் பேச்சு வார்த்தைகள் மூலம்
நேரடியான தீர்வு காணல்,
உ நியாயமான தீர்வுக்கான மேற்கண்ட தேவைகளை ஏற்றுக்
கொள்ள மக்களைத் தூண்டுதல்.
oم-33--وo

Page 18
குறிக்கோள் நீதியின் அடிப்படையில் சமாதானத்துக்காக மக்கள்
சக்தியைக் கட்டி எழுப்புவதே இறுதி நோக்கம்.
உடனடித் தேவைகள்:
அ அமைப்பு வேலைகளைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவ
தற்கு ஒரு முன்னேற்பாடு செய்யும் குழுவை நியமித்தல்.
ஆ தேசிய சமாதான இயக்கத்தில் பங்குபற்றும் எல்லா இயக் கங்களின் பயிற்சிக்கும் பிரசாரத்திற்கும் மூலதனம் தேவை. எனவே அங்கத்தினர்களிடமிருந்து சந்தா வசூலிப்பது அத்தியா
68uj tř).
இலங்கையில் தீவிர இனவாதப் போரும் பலத்த கருத்து வேற்றுமைகளும் மலிந்துள்ள இவ் வேளையில் நீர்க்கொழும்பு சமா தானக் கூட்டம் உண்மையாகவே நம்பிக்கையளிக்கும் அறிகுறியாகவே அமைந்துள்ளது. இரு தரப்பினருமே அதாவது தீவிரவாத இராணுவ இயக்கங்களும் அரசாங்கப் பாதுகாப்புப் படையினரும் ஆயுதம் ஏந்தி சண்டையிலீடுபட்டுள்ளதை நோக்குமிடத்துப் போர் நிறுத்தம் வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாமற் போய்விடும் போல் தோன்றுகிறது. இதன் (ՄtԳ6/ அரசாங்கம் ஒரு யுத்தத்திற்கு ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறது. இலங்கையர் இலங்கையரையே கொன்று அழிப் பதால் இந்த யுத்தம் நாட்டுக்குப் பெரிய நாசத்தையே உண்டு பண்ணும். பொருளாதாரரீதியிலும் நாடு ஒரு யுத்தப் பளுவைச் சமாளிக்கக் கூடிய நிலையில் இல்லே அரசாங்கம் 'இராணுவத்திற்கு ஆள் திரட்டல் கட்டாயத்துணைப்படை சட்டம்' என்ற ஒரு புதுச் சட்டத்தை அமுலாக்கத் தீர்மானித்து அதன் படி இளைஞர்கள் ஒரு குறிப்பட்ட காலம் கட்டாயத் தேசிய சேவையாற்றக் கடமைப் பட்டுள்ளார். இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பல இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மனதுக்குச் சிறிது தைரியமளிக்கிறது. இலங்கை கிறிஸ்த கோவில் (கொழும்பு பிஷொப்பின் பொறுப்பிலு ள்ள பிரதேசம்) அதன் 100 ஆவது கூட்டத்தொடரில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியது:
cy-34-0
 
 
 
 

'இச்சபை தேசியப் பிரச்சினையைப் பேச்சு வார்த்தைகள் மூலமே அல்லாமல் ஆயுதப் போரிஞல் தீர்வுகாணக் கூடாதென்ற அதன் கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. அரசாங்கத்தின்
நிச்சயமிற்ற போர் நிறுத்தக் கடைப்பிடித்தல் தீர்மானம் எங்களுக்கு
ஒரளவு நம்பிக்கையளிக்கிறது தீவிரவாத இராணுவத் தலைவர்களை யும் அரசாங்கத்தின் இம்முன் மாதிரியைப்பின் பற்றுமாறும் பேச்சு வார்த்தைகளைத் தொடர்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி ம் வேண்டுகிருேம்.
திட்டமிட்டுள்ள இராணுவத்திற்குக் கட்டாய ஆள்திரட்டல் துணைப்
UN . «G» 4. சட்த்தை அமுலாக்கலைக் கைவிடுவதன் மூலம் அரசாங்கம்
பேச்சு வார்த்தைகளி: தென்பதை உறுதிப்படுத்தும்படி எமது அரசாங்கத்தை வேண்டுகி
மூலமே தீர்வுகாண ஆர்வங் கொண்டுள்ள
ருேம்.
மென்மேலும் Luaj இயக்கங்களும் மத ஸ்தாபனங்களும் இப்
பூரண சமாதான இயக்கத்தில் சேர்ந்து தற்போதைய யுத்த நட வடிக்கைகளை மாற்றியமைக்க ஆவன செய்தல் வேண்டும். அப்படிச்
செய்யாதுவிடின் எதிர்கால ஐக்கிய இலங்கை என்ற நம்பிக்கையை
நிச்சயம் அது அழித்து நாசமாக்கிவிடும்.
இன்றே செய்க - நாளை என்ருல் மிகவும் பிந்தி விடுவோம்.
ونسبة 35 سيبو)

Page 19
'குறும்பாக்கள்'
'குறிஞ்சி தென்னவன்'
குப்பன் வாழ் லயத்தினது
குளமாக்கும் வீட்டை மழைத்
தப்பாது இங்கு வந்த - தகரமெல்லாம் ஓரிரவில் -
அப்போதே அடையுங் கொழும்
ஆபம்மா வாகவரும் பெண்கள் அவர்களுக்கோ தாலிலே ai Giorosofi
தாயம்மா மீனுச்சி சரசுவதி. வாயினிலே திறைந்திருக்கும் Le Sow. adl
பாப்பாத்தி தூக்கி வந்தாள் ở.694_! பார்த்து நிறை சொல்பவனுே 45 63)
தீப்பாயும் கண்களினுல் - மேய அவள் மேனிதனை - தாப்பாடும் 20 திது சாLை!
மலைகளிலே ஊற்றெடுக்கும் தண்ணி
மக்கள் விழி ஊற்றெடுக்கும் as gav GOosfr) |
வளமூட்டி ஒளிகொடுக்கும் - மாவலியாய் பாயும் எனில்
இலை, இவர்க்கு குடிப்பதற்கு தண்ணிர்
Oس-36--o
 
 
 
 
 
 

தொழிற் சங்கத் த&லவர் தண்ட பTஐ தொழிலாளர் இவர்க்கு ஒரு ஏணி
விழிசிவக்க, முகஞ்சிவக்கு மேடைகளில் பேசிடு 6) In it. . . . தலைவர் இவர் இன்றுகங் காணி
முள்ளெடுத்து தோன்மீது
முத்து, வள்ளி பார்வையினல்
செல்ல சில வாரங்கள். தேயமலே யோரங்கள்.
வள்ளி வயிற் தள்ளிடவே.
தேவான நட்டதிந்த - ரோஜா
தினந் தண்ணீர் ஊற்றிவந்தான், ராஜா
ஏவாளை மிஞ்சும் வண்ணம் "... தேவானே வந்து நிற்பாள்.
நோவாமல் பூத்தாளோ ரோஜா
நெல்லறுத்துக் கட்டிவைத்தான்
நெஞ்சோடு அள்ளுகின்ருள்
கள்ளிருக்கும் முட்டியினை ... கண்டு விட்ட களிப்பினிலே.
நெல்லறுத்தும் கட்டிவைப்பான்
霹
O-37-0
வைத் தைத்
கைத்

Page 20
புலமைப் பரிசில்
நுவரெலியா/மஸ்கெலியா தேர்தற் தொகுதியைச் சேர்ந்த, அனுமதி பெற்ற இடைநிலைக் கல்வி பெறும் வசதியற்ற மாணவர்களுக்கு
உபகாரப் பணம் வழங்கப்படவுள்ளது.
விபரங்களுக்கு:-
மலையக கல்வித்தாபன புலமைப்பரிசில், ! இல. 88/2, உன்பார் வீதி,
அட்டன்,
எனும் முகவரியோடு தொடர்பு கொள்க.
冲
o-38-o
 
 
 


Page 21
Registered as a News Paper ir
வாசகர்களே
கொந்தளிப்புக்கான
சிறுகை
* கட்டு
* கலி
உங்களிடமிருந்து
மலையக இளம் எ
முதலிடம் ெ
ஆக்கங்களை அனுப்ப
୫୭ඉරல்
v
i
%05}ے
8.
இப்பத்திரிகை 88/2, டன்பார் வீ. கி. தொ. ஒ. செயலாளருக்காக அ யூ. கே. அச்சகத்தில் அச்

n Sri Lanka. 6ú Żsuo ரூபா
ఉస్తిస్తో ప్తిశిష్టి
ஆக்கங்கள்,
த
5Ꮱ Ꭻ ,
விதை
என்பனவற்றை
எதிர்பார்க்கிறேம்
rழுத்தாளர்களுக்கு காடுக்கப்படும்.
வேண்டிய முகவரி:
ஆசிரியர், கொந்தளிப்பு, 88/2, டன்பார் வீதி,
அட்டன்,
锡
3-00
● @
剑
穆f
i
S.
i
鲨
i
தி, அட்டன் என்ற முகவரியிலுள்ள
ட்டன், சேக்குலர் ரோட், இல ச்சிட்டு வெளியிடப்பட்டது,
. 9D,