கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைமுகம் 2006.01-06

Page 1
, 2 ވޮހިކަg/ޱހ (/މާ76//ނަ ހި ,ހaމާ6ފޮހިކަ/ހިކަކަgތިހ 0/ފޯaގޑިކި]މަ 2/ 0/010/07//ށ ތިޔަކަ_201/ބއިނަމަހ
تصميم
ޗަހالހ2ޗަކަg/މހ /ޤތިހާ/ށހބިޓިރޮށި
" 。ぶ بھمبر کو کچھ حصہ سمتیہ T / ()މި2-އި 0
/2/6ކe}}//މހ، ތ)ށހ މި
 


Page 2
128,டேவிற்விதி, Tel. 021-2229419
 
 


Page 3
/ e O
காலாண்டுச் சஞ்சிகை
UNDOUGOU
கலை, இலக்கிய, சமூக இதழ்
56O)6) 17 முகம் 01 ஜனவரி-ஜூன் 2006
பிரதம ஆசிரியர் நீ, மரியசேவியர் அடிகள்
பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்
உதவி ஆசிரியர் வி. பி. தனேந்திரா
அட்டை ஓவியம் ஒவியர் ஆ. இராசையா
அட்டைப்பட வடிவமைப்பு அ. ஜூட்சன்
உட்பக்க ஒளிப்பட உதவி ஹரிகரன்
ஒப்புநோக்கு உதவி சா. கெலன் மேரி
இதழ் வடிவமைப்பு கி. செல்மர் எமில்
கணினிசார்ந்த சேவைகள் ஜெயந்த் சென்ரர் 28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம்.
அச்சுப்பதிப்பு ஏ. சி. எம். அச்சகம் 464, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு திருமறைக் கலாமன்றம் 238 பிரதான வீதி, யாழ்ப்பாணம், இலங்கை, Te1 O21-222 2393
E-Mail: cpateam(a).sltnet.lk
Centre for Performing Arts 19-5/6, Milagiriya Avenue, Colombo-4, Sri Lanka. Tel. 01 12-597245 Fax: 01 12-556712
E-Mail: saveri(a)dynanet.lk ܢܠ
5 a USDy
மனோ றஞ்சிதன் மனோன்மணி சண்மு மாரி மகேந்திரன்
பேராயர் எஸ். ஜெபநே
சிறகதை
சாரங்கா தயானந்தன் க. சட்டநாதன் முகமாலை சேகர் சு. ஞாலவன் அபியோசே நிக்கோல் (தமிழில்: சோ. பத்மந
 
 

ട്ടു.ET. பத்மநாதன் செளஜன்ய ஷாகர் Jाe `व्ञ्
ராஜேஸ்வரன் ஜோ. ஜெஸ்ரின் யோ, யோண்சன் ராஜ்குமார் செல்வா
சித்தாந்தன் த. அஜந்த குமார் ந. சத்தியபாலன் சு. வில்வரெத்தினம் ஹரிகரன்
p
i 遠 • அறிமுகம்
ళ్ల བློ་ கந்தையா ருநீகணேசன் ாதன்) தெ. திருநாவுக்கரசு
ராதி @ ഈ சூரியநிலா DOOM1 Desa மதுரா தலையங்கம் ஜோ. ஜெஸ்ரின் அஞ்சலிகள்
நிகழ்வுகள், பதிவுகள் பார்வைகள்

Page 4
ம்ோரும்
660OELB
மனித வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து நிற்பது போர் என்னும் வன்முறை ஒரு மனித குழுமம் இன்னும் ஒரு குழுமத்திற்கு எதிராக தனியாக அல்லது கூட்டிணைந்து பல வேறு காரணிகளின் உந்துதல்களால் திட்டமிட்டு கிளர்ந்து எழுந்து தமது சமூக பொருண்மிய வளங்களை ஒன்று திரட்டி எதிரியின் உடல், பொருள் ஆவி அ னை தி  ைதயும் அழிக் க (Up 60) 60Tulf வினைப்பாடு தான் போர், ஆறறிவு படைக்காத உயிரினங்கள் நடுவில் காணப்படாது பகுத்தறிவு படைத்த மக்கள் வாழ்வில் தென்படும் ஒரு கொடிய எதார்த்த நிலை.
போர்களின் விளைவுகளை வைத்துக் கொண்டே பெரும்பாலும் ஒரு நாட்டின் அல்லது ஒர் இனத்தின் வரலாறு வரையப்படுவது மனித வாழ்க்கையையும் அதன் நாகரிக வளர்ச்சியையும் வரையறை செய்யும் ஆற்றல் போருக்கு உண்டு என்பதை உணர்த்துகின்றது.
பண்டைய தமிழ் மக்கள் வாழ்வில் போருக்கு அளிக்கப்பட்ட பெரும் பங்கை 'புறம” சார்ந்த இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. போரின் இலக்கணத்தைக் கூறும் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற இவ்விலக்கியங்கள் போரிற் கடைப் பிடிக் க வேணி டிய ஒழுக் கதீ  ைதயும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எடுத்துக்காட்டாக, நெஞ்சை அச்சுறுத்தும் கொடும் போர் நடக்கின்ற போதும் அந் தணர் , பெண் கள் , முதிய வர் , குழந்தைகள் ப்ோன்றவர்கள் பாதுகாக் கப்பட வேண்டியவர்கள் என்பதை அவை இடித்துக் கூறுகின்றன.
திருக்குறளில் “படைமாட்சி’ பற்றிக் கூறும் வள்ளுவர்:
“உறுப்பு அமைந்து ஊறு அஞ்சாவெல்
படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை,”
அதாவது ஒர் அரசனுக் கு இருக் கக் கூடிய செல் வங் களுள் வெற்றிப்படையே தலையானதாகும் எனக் கூறுகிறார். மேலும், “படைச்செருக்கு” என்னும் அத்தியாயத்தில், பகைவரை அழித்து வெற்றி ஈட்டுவது வீரமே;
2 ஜனவரி
 

ைெமதிே
ஆயின் அவருக்கு துயரம் நேரும் பொழுது உத விக் கரம் நீட்டு வது தான் அவி வீரத் திணி உச்சமாகும் என மறத்திலும் பார்க்க எத்துணையோ மேல் ஒங்கி நிற்கும் அறத்தின் சிறப்பை அழகாக எடுத்துக் கூறுகிறார்.
"பேராணர்மை என்ப தறுகண் ஒன்று
உற்றக்கால் ஊர் ஆணர்மை மற்று அதன் எஃகு ’
போரா? அமைதியா' என்ற கேள்விக்கு விடையாக பல்வகை வேறுபட்ட கருத்து நிலைகள் முன் வைக்கப்படுகின்றன. போர்கள் தவிர்க்க முடியாதன என்பது ஒரு சிலருடைய கருத்து. எப்படியும் அதை இல்லாது செய்ய வேண்டும் என்பது பல அற நெறியாளர்களின் அறை கூவல். சரது ஸ் ரா என்ற பேர் சிய ஞானி, “மனிதன் மனிதனுக்கு எதிராக விளைவிக்கும் மிகவும் தீய கொடுமையே போர்” எனக் கூறுகிறார். “போரின் ஆயுதங்கள் தீமையின் கருவிகள். அவைகளை வியந்து போற்றுபவர்கள். தங்கள் உள்ளத்தில் கொலைகாரர்” என்பது கீழ்ப் புலத்து தாவோ சமயத்தின் கொள்கை நிலை, பொதுவாக, போரின் மூலமாக நாம் எதை அடைய விளைகின்றோமோ, அதை அமைதி வழியில் இன்னும் சிறப்பான முறையில் அடைந்து விட முடியும் எண் பது அறிஞர்கள் பலரின் கருத்து.
எது எதுவாக இருப்பினும், போர் என்னும் அரக் கண் கோரத் தாண்டவம் ஆடினும், அவ் வெறியாட்டத்தின் நடுவிலும் மனித உயிர்களும், மனித உரிமைகளும் பேணப்பட வேண்டிய இயற்கை அறம் இன்று உலக நெறியாகி விட்டது. எந்நாட்டில் நிகழும் போர் என்றாலும், அதில் அடிப்படை மனித உரிமைகளை மீறி, இன ஒழிப் புப் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சிலர் கைது செய்து தண்டிக்கப்படுவதை இன்று கண்கூடாகக் 35|T6OOT 6UITLb.
அமைதி விரும் பிகளின் ஆழ் நெஞ்சங்களில், தெய்வ நம்பிக்கையில் ஊறியவர்களின் உள்ளங்களில், போர் அரக்கனின் இன்னல்கள், இடுக்கண்கள் நடு விலும் நடம் பிக் கை ஒளியாக சுடர் விட்டு எரியும் வாக்கு: தர்மம் தலை காக்கும்!
நீ, மரியசேவியர் அடிகள்
ஜூன் 2006 酶

Page 5
உலக வரலாற்றில் ஐரோப்பிய வரலாறானது பிரதான இடத்தை வகிக்கின்றது. ஐரோப்பிய வரலாற்றை அறியாதவன் அரை மனிதன் என்று கருதப்பட்ட காலமும் உண்டு. Faithin Europe, Europe in Faith விசுவாசம் என்றால் ஐரோப்பா, ஐரோப்பா என்றால் விசுவாசம் என்ற காலம் போய், ஐரோப்பிய மக்கள் பல புதுக்கொள்கைகள், கோலங்கள் என 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் மாறத்தொடங்கினார்கள். பிரான்சிய புரட்சி, அமெரிக்க சுதந்திரப் போர், தொழிற் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்பவை மாற்றத்தின் அடையாளங்களாக வெளிப்பட்டன. அரசியல் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களுடன் சமயக் கொள்கைகளிலும் மாற்றங்கள் தென்படத்தொடங்கின. கிறிஸ்தவ நாகரிகத்தினால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள், 20ஆம் நூற்றாண்டில் புதுக்கிறிஸ்தவ கொள்கைகளில் ஆர்வம் காண்பிக்க முற்பட்டன.
இத்தகைய சூழ்நிலையில் தான் கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளில் திருச்சபைகளினால் அங்கிகரிக்கப்படாத, இயேசுவின் வாழ்க்கையுடன் தொடர்புபட்ட நடைமுறையிலில்லாத, அறியப்படாத நூல்கள் மீண்டும் உயிர்ப்புப் பெறத் தொடங்கின. இவை மத்தேயு, லூக்கா, யோவான் போன்ற நற்செய்திகளின் இடத்தை அடையாவிடினும் , இன்றைய நாட்களில் நடைமுறையிலுள்ள கிறிஸ்தவ தத்துவத்திற்கு மாற்றீடான ஒன்றை கிறிஸ்தவத்திற்குள் தேடலில் ஈடுபடுவோரின் தேவையை ஒரளவு நிறைவு செய்வதாக சிலர் கருதினார்கள். இத்தகைய நவீன கிறிஸ்தவ கலாசார தோற் றங்களை பரின் வரும் கொள்கையாளரிடத்தில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இவ்வித நோக்கர்களில் பெண் எழுத்தாளரான கரன்கிங் (Karen King) மேரி மக்டலினை பீற்றரிற்கு போட்டியாளராக ஒரு திருச்சபைத் தலைவியென எடுத்துக்காட்ட முற்பட்டார். பிறிஸ்ரன் சர்வகலாசாலை பேராசிரியை இலெயின் பேஜல் ஸ் நோஸ் ரிக் bisi3G)3Fuugala+56ir” (Gnostic Gospels) 6T6örg கட்டுரையை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவில் 1970 களில் தோன்றிய தியானம் செய்வதால் கடவுளை காணலாம் (Mystical Spirituality) என்ற கீழைத்தேய ஆன்மீகத் தத் துவங்கள் கிறிஸ்தவர்களை, தமது கிறிஸ்தவத்
酶 ஜனவரி -
 
 

கிறிஸ்தவம்:
வேதாடரும்
BFG. DIIIIIIIIIIIIIIIII Got TUB Eistes III
oைேn றஞ்சிதன்
திலேயே அதைக் காண்பதற்கு ஆவலை உண்டு பண்ணிற்று. இத்தகைய சந்தர்ப்பத்தில் இன்னோரன்ன சிந்தனைகளிற்கு தூண்டுதலை ஏற்படுத்துவது போல் 1945 இல் எகிப்தில் நடந்த அகழ்வு ஆராய்ச்சியில் கிறிஸ்தவம் பற்றிய 46 கையெழுத்துப் பிரதிகள் கிட்டின. அவற்றைக் கொள்கை ரீதியாக வகைப்படுத்திய பெயர்கள் பின்வருமாறு - நோஸ்ரிசிசம் (Gnosticism), எபியோனிசம் (Ebionism), மார்சியோனிசம் (Marcionism) என்பனவாகும். இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது என்னவென்றால் இவை காலத்தால் பரிந்திய தோடு, இவை யாவும் ஒரே கொள் கையை வெளிக்கொணராமல் கொள்கை மாறுபட்டு, ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுக் காணப்பட்டமையேயாகும் வட கரோலினாவில் மதங்கள் பற்றிய கல்விப்பீடத்திற்குத் தலைவரான ஏர்மன் (Ehrman) இவை பற்றி கருத்து வெளியிடும்போது, ஆதிக்கிறிஸ்தவர்கள் சிலர் ஒரே கடவுளையும், சிலர் பல கடவுள்களையும் வணங்கினார்கள் என்றும், சிலர் இயேசுவின் மரணம் மீட்பைக் கொண்டு வந்தது என நம்பினார்கள் எனவும், தமது மறைந்த கிறிஸ்தவம்' (LOSt Christianities) என்ற நூலில் எழுதியுள்ளார். கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர் றேமண்ட் பிறவுண் (Raymond Brown) பேஜல்ஸினால் (Pagels) எழுதப்பட்ட 2ஆம் நூற்றாண்டின் குப்பை என்ற நூலைச் சாடும் பொழுது இந்நூல் அதைவிட குப்பை என வர்ணித்திருந்தார். பழைமையைப் பேணும் கிறிஸ்வர்கள் மறக்கப்பட்டதாக, மறைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆதிக்கிறிஸ்தவ நூல்கள் நடைமுறைக்கு வராமைக்கு காரணம் கடவுளின் செயலே என்று கூறுகிறார்கள். அங்கிகரிக்கப்படாத (Non Canonical) ஆதிக்கிறிஸ்தவ கொள்கைகளை ஆசிக்கின்ற நவீன கிறிஸ்தவர்களிற்கு சும்மா மெல்லுகின்ற வாய்க்கு அவல் கிடைத்தது போல மைக்கல் பேய்ஜன்ட் (Michael Baigent) றிச்சாட் லெய் (Richard Leigh) என்பவர்களால் 6TQg5. Guibng "The Holy Blood and the Holy Grai’ என்ற நூல் வெளிவந்தது. இது 1982 ஆம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்டது. இயேசுவுடைய இரத்த தொடர்புடைய பரம்பரையைப் பற்றியும், இராப்போசன பாத்திரத் தைப் பற்றியும் வேறு தகவல்களையும் அடங்கியதாக இது @(55g5g5). SQ6ODg5g5g56îJ “Remes Le Chateau எனப்பட்ட பிரான்சின் தெற்கில்
ஜூன் 2006 - 3.

Page 6
அமைந்துள்ள கிராமத்தின் தகவலையும் கொண்டதாக உள்ளது.
இத்தகையதான பல பாரம்பரிய கதைகளை அடியொற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் கிறிஸ்தவர் களிடையே மனக் குழப்பத்தையும் , சிலரிடையே மாற்றத்தையும் ஏற்படுத்த முனைந்தன. இந்நிலையில் தான் 2003ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் டாண் பிறவுண் (Dan Brown) 6T(ggu 5 LT6ilsida (85T என்ற நாவல் இக் கொள்கைகளை உள்ளடக்கியதாக ஜனரஞ்சகமானதாய், பரபரப்புடன் வெளியிடப்பட்டது. ஆசிரியர் ஒர் ஆங்கில ஆசிரியர். இந்நாவல் 40 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் பிரதிகள் 50 மில்லியன்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. சல்மான் ருஷ்டியினால் எழுதப்பட்ட Satanic Verses எனப்பட்ட நூலின் பின் உலகில் மிகவும் சர்ச்சைக்குரியதான நூல் இது எனலாம். இந்த நாவல் பிரசுரமான வேளையிலும் பார்க்க கொலம்பியா பிக்சர்ஸ் பதிப்புரிமையை பெற்று திரைப்படமாக, 19.05.2006 இல் காண்பிக்கப்பட்டபோதுதான் மிகப்பிரபல்யமடைந்தது. பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சாதக, பாதகமான கட்டுரைகள் தினப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இன்றும் வந்தவண்ணமிருக்கின்றது. டாண் பிறவுணின் நாவல் இத்தாலியில் தீயிடப்பட்டது. இத்தாலி, பிலிப்பைன்ஸ் போன்ற கத்தோலிக்க நாடுகள் முதலாக இத்திரைப்படம் தடை செய்யப்படவில்லை. இலங்கையிலும், இந்தியாவில் தமிழ் நாடு உட்பட சில மாநிலங்களிலும் தடை செய்யப்பட்டமை அரசியலோ என்றுகூட ஐயுறவேண்டியுள்ளது.
இந்நாவலில் காணப்படும் முக்கிய அம்சங்கள் எவை என அவதானித்தால், டாண் பிறவுண், இயேசுவை ஒரு சாதாரண மனிதனாகவும், மேரிமக்டலின் அவருடைய மனைவியாக இருந்தாள். அவளுக்கு குழந்தைகள் இருந்தன, இயேசுவின் சீடர்களில் மக்டலினும் ஒருத்தி, மக்டலின் பயத்தின் காரணமாக நாட்டைவிட்டு பிரான்ஸ் நாட்டிற்கு ஓடினாள் என்றும், அவளின் வாரிசுகள் இன்னும் வாழ்கின்றன என்றும் ஒபுஸ் டேயி (Opus Dei) என்ற கத்தோலிக்க இரகசிய சபை (Le Tresor Maudit நூலில் இரகசிய சபையின் பெயர் Prieure de Sion என்ற பெயரால் அழைக்கப்பட்டது) இந்த உண்மையை மறைக்க பல வழிகளைக் கையாண்டது என்றும் (பக்கம் 257) தகவல்கள் பல, ஒவியர் டாவின்சியின் கடைசி இராப்போசன ஒவியத்தில் சங்கேத குறியீடுகளில் மறைக்கப் பட்டிருந்தன என்றும் டாண்பிறவுணின் கற்பனைக் கதை பேசிக்கொண்டே போகின்றது. இதைத் தவிர நோஸ்ரிக் கொள்கையை (Gnostic) அடிப்படையாக வைத்து ஆணும் பெண்ணும் சேர்ந்த மனிதன்தான், முழு மனிதன் எனவும் இதற்கு உதாரணம் டாவின்சியினால் வரையப்பட்ட سه மோனலிசா ஒவியம்; இச்சித்திரத்தில் ஆண் பெண் தன்மைகள் ஒருமித்து இருப்பதாக கருதுகிறார். இயேசுவுக்கும் பூரணத்துவ மடைய ஒரு பெண் தேவைப்பட்டதாக காண்பிக்கிறார் டாண் பிறவுண். (பக்கம் 120) டாவின்சியின் கடைசி இராப்போசன ஒவியத்தில் இயேசுவின் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது மேரிமக்டலின் என்றும்
4 ஜனவரி -
 
 

சொல்லுகிறார். ஆண் ஆதிக்கத்தை விரும்பிய கொன்ஸ்ரன்ரைன் சக்கரவர்த்தி கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிற்பாடு நற்செய்திகளை மாற்றி எழுதிவைத்தார் என்கிறார்.
டாண் பிறவுணது கற்பனை நூலில், நாவலில் சொல்லப்படும் கருத்துக்கள் யாவும் வரலாற்று ரீதியாகவும், ஆதாரமுள்ள உண்மையான நூல்கள் மூலமும் தவறு என்று கிறிஸ்தவ திருச்சபைகளை சார்ந்தவர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இயேசுக் கிறிஸ்து மனிதனாக வந்த இறைமகன்தான். கொன்ஸ்ரன்ரைனின் காலத்திற்கு முன்பே (கி.பி 313) அதாவது நைசி (Nicea) மாநாட்டிற்கு முன்பே இயேசு கடவுளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது வேதத் தத்துவம். இதற்கு முற்பட்ட காலத்திலேயே ஆதிக்கிறிஸ்தவர்கள் அவரை வணங்கினார்கள். இன்று அங்கீகரிக்கப்பட்ட (Canonical) நற்செய்திகளின் கையெழுத்துப் பிரதிகள் 2ஆம், 3ஆம் நூற்றாண்டுகளிலேயே கிடைக்கப்பெற்றன என்றும் அவற்றிடையே ஒற்றுமை இருந்தது எனவும் டாண் பிறவுணின் வாதம் கற்பனை, வரலாற்றுச் சான்றுகளிற்கு புறம்பானது எனவும் விளக்குகிறார்கள். மேலும் நற்செய்தி நூல்களிற்கும், பழைய ஏற்பாட்டிற்குமிடையேயுள்ள தொடர்புகள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டவை நற்செய்திகளில் நிறைவேறியமை என்பன இதன் உண்மைக்கு ஆதாரமாகக் காட்டப்படுகின்றன.
டாண் பிறவுண் பாரம்பரிய கதைகளை பெரும்பாலும் ஆதாரங்களாகக்கொண்டு இந்த நாவலை எழுதியுள்ளார். மக்டலினைப் பொறுத்தவரையில் அவளிடத்திலிருந்த பேய்களை ஒட்டி சமாதானத்தை இயேசு அவளிற்குக் கொடுத்தமைக்காக அவள் நன்றியும், பணிவும் உள்ளவளாக இயேசுவுக்கு அன்பு காட்டினாள். இயேசுவின் வாழ்க்கையில் மாத்தாள், மரியாள் ஜெருசலேம் வாழ் பெண்கள், வெரோனிக்கா போன்ற பெண்கள் அவரை நேசித்ததை நற்செய்தியை சான்றாக வைத்து வாதிக்கப்படுகிறது. கடைசி இராப்போசனத் தில் யேசுவின் வலது பக்கத்தில் அமர்ந்திருப்பது ஒரு பெண் அல்ல, இளவயதானவரும் இயேசுவின் அன்பிற்கு நெருங்கியவருமான யோண்தான் எனவும், கி. பி. 33 ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தை 15ஆம் நூற்றாண்டில் (1495 - 97) வாழ்ந்த டாவின்சி வரைவதற்கு ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. டாவின்சி ஒரு பொறியியலாளரே அன்றி வரலாற்றாசிரியர் அல்லர் என்று காண்பிக்கப்படுகிறது.
இவ்விதமாக டாவின்சி கோட்டிற்கு எதிரான வாதங்கள் செல்லுகின்றன. சில கிறிஸ்தவ அறிஞர்கள் டாண் பிறவுணது கற்பனையில் பிறந்த நாவலிற்கு இத்தனை முக்கியத்துவம் அவசியமற்றது. உண்மை வேறு கற்பனை வேறு என்கிறார்கள். ஆனால், பலர் டாண் பிறவுண் ஒரு நன்மையைப் புரிந்துள்ளார், திருச்சபை புதிய உத்வேகத்தோடு தமது விசுவாசப் பரப்புதலை செய்ய அவர் காரணமாகிவிட்டார் என்கிறார்கள். கட்டுரைகள் உண்மையை ஆதாரத்துடன் காண்பிக்க வெளிவந்துள்ளன. உதாரணமாக, டெனிஸ் பிசர் (Dennis Fisher) எழுதிய நூலைக் குறிப்பிடலாம். இக்கட்டுரையில் முன்பு குறிப்பிட்ட
jaggaf

Page 7
"The Holy Blood and the Holy Grail 6T66m BIT6ù *Le Tresor Maudit’616öIms L'îJT6öTofflui மொழியில் எழுதப்பட்ட நூலில் இருந்து Heury Lincoln என்ற பி.பி.சி செய்தியாளரின் ஆய்வின் பின் தோன்றிய ஆய்வு நூல். இதில் டாண் பிறவுணின் நாவலின் மூலக்கரு (9.53553g). "The Holy Blood and the Holy Grai’ என்ற நூலைப் பற்றி விவரண திரைப்படமாகத் தயாரித்து Simon Cox இந்நூல் டாண் பிறவுணின் நாவலின் மூலங்கள் என்று விளக்கியிருக்கிறார். தூய ரத்தம் பிரான்சில் இயேசுவின் பரம்பரையையும் Grail எனப்படும் சொல் பாத்திரத்தை (Chalice) குறித்து கடைசி இராப்போசனத்துடன் பாத்திரத்தை தொடர்புபடுத்துகிறது. இத்தகைய பாரம்பரிய கதைகளின் அடிப்படையில் பாத்திரத்தைப் பற்றிய மள்ம வரலாறுகள் Arthurian Legend ஆர்தூரியன் பாரம்பரிய கதைகளில் 12ஆம் நூற்றாண்டில் இருந்தது. ஆர்கள் என்ற ஆங்கில அரசனுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இதில் வரும் சான்றுகள் எவ்வளவு தூரம் உண்மையானவை, அல்லது உண்மைக்குப் புறம்பானவை என்பதை வாசிப்பவர்கள் உய்த்து உணராலாம்.
டாவின்சி கோட் என்ற, நூலை விடுத்து திரைப்படத்தை ஆராயப்புகுந்தால் இப்படத்தின் நெறியாளர் Ron Ioward ஒஸ்கார் பரிசு பெற்றவர். "The Beautiful Mind’ போன்ற சிறந்த படங்களைத் தயாரித்து புகழ் படைத்தவர். இதில் இரசிகள்களை அந்நியப்படுத்த விரும்பாது சில தவிர்க்கப்பட்டுள்ளன. திரைப்படத்திற்கு வசன கள்த்தாவான அகிவா கோல்ட்ஸ்மன் (Akiva Goldsman) 'வரலாறு இயேசுவை ஒரு விசேஷ மனிதனாக சொல்கிறது. அவர் ஒர் குழந்தைக்கு தகப்பனாகியும் தெய்வீகத் தன்மையுடன் இருக்கமுடியாதா?’ என்ற வசனமும் திரைப்படத்தின் இறுதியில் “எது எப்படியாக இருந்தபோதும் நீ விசுவசிப்பது எது என்பதுதான் முக்கியமானது” என்பதும் சில ரசிகர்களுக்கு சமாதானம் சொல்லுவதாகத் தெரிகிறது. ஏனென்றால் இது டாண் பிறவுணின் கருத்தல்ல என்பதால்தான். கிறிஸ்தவம் தனது 2000 ஆண்டுக்கால வரலாற்றில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் நிமிர்ந்து நிற்பதுபோல்த் தெரிகிறது. திரையுலகில் பல படங்கள் கிறிஸ்துவைப் பற்றி வெளிவந்துள்ளன. அண்மைக் காலத்தில் (G6).j6flobg. The Last Temptation of Christ 6T6öm 9,51356), ULib கிறிஸ்து ஒரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதாகத்தான் சித்திரிக்க (puu6öaŝm3g5]. “The Passion of the Christo” GIL D6ö gĝouJf6ĵ6ör தயாரிப்பில் வெளிவந்தது. இதில் வரும் காட்சிகள் இஸ்ராயேலரிற்கு எதிரானது என்ற சர்ச்சையை உண்டுபண்ணியது நாம் தெரிந்து கொண்டதே.
(3 LDII Lò, “The Holy Blood and the I Ioly Grail' நூலாசிரியர்களால் டாண் பிறவுண் மீது லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. தம்மால் எழுதப்பட்ட நூலின் மையக்கருத்தும், டாவின்சி கோட்டின் மையக்கருத்தும் ஒன்றெனவும், தமது நூலைத் தழுவியே டாண் பிறவுண் இந்நாவலை எழுதியுள்ளார் எனவும், இந்த தழுவலுக்காக நஷ்டஈடு தரவேண்டுமெனக் கோரியே வழக்குத் தொடரப்பட்டது. அவ் வழக்கில் டாண் பிறவுண் வெற்றி கண்டார். அவ் வழக்கையொட்டி அவர் ஓர் சிறந்த விற்பனைக்கு ஏதுவான நூலை எழுத ஐந்து உத்திகளைக் கூறினார். அதில் ஒன்றை
酶 ஜனவரி =
 
 

அவதானித்தால் அவர் டாவின்சி கோட் என்ற நாவலை இந் நோக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் எழுதினாரா என்று கருதத்தோன்றுகின்றது. அது உங்கள் கவனத்திற்கு; (1). 'Pick a Big IDEA with a Gray area. (2). The first step to select a theme that E (You) find particularly intriguing... (3) The ideal has no clear right and wrong (4). No defenite good and will, and makes for great debate.”
இத்தகைய நூல்கள், திரைப்படங்கள் அரசாங்கங்களினால் தடைசெய்யப்பட வேண்டுமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஒரு சாரார் ஐ. நா. சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட மனித அடிப்படை உரிமை சாசனத்தின்படி அரசியல் யாப்புக்களிற்கு அமைவாக எழுத்துச் சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம் ஆகியவை ஒருவனுக்கு இருக்கிறது. எனவே வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட நூல்களையோ, திரைப்படங்களையோ வெளியிட உரிமை உண்டு என்கிறார்கள். புகழ்பெற்ற ஒஸ்கார் வயில்ட் (Oscar wilde) 6T6örm gyruso) 6T(p55T6trir "There is no such thing as a moral or an immoral book, Books are well writer or badly written. That is all" 616örnssir. Voltair (86). TGüLuis "I dinaprou of what you say, but I will defend to Death your right to say it.” 61601.j, கூறியுள்ளார். அடுர் கோபாலகிருஷ்ணன் என்ற பிரபல கேரள திரைப்படத்தயாரிப்பாளர் டாவின்சி கோட் திரைப்படத்தைப்பற்றி United News India விற்கு பேட்டி அளிக்கும் பொழுது திரைப்படங்களை தடை செய்யும் கட்டுப்பாட்டுச் சபையில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், தான் சமூகத்திற்கும் பார்வையாளரிற்கும் ஒரு பொறுப்புள்ள தயாரிப்பாளர் எனவும் இத்திரைப்படம் ஒரு கற்பனைப்படைப்பே, இயேசுவைப் பற்றி முன்பே பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். நாகரிகமுள்ள எந்த நாட்டிலும் கட்டுப்பாடற்ற பேச்சு, எழுத்துச் சுதந்திரம் கிடையாது. gilas goi Ji Libg565, “Every publication in said to be blasphemous which contains any contemptuous, reviling, scurrilous or ludicrous matter relaing to god, Jesus Christor Bible or the formularies of the Church of England as by law established. it in not blasphanous to speak or publish opinions hostile to the Christian Religion or deny the existence of God, if the publication is couched in decent and temperate language" எனச் சொல்லப்பட்டுள்ளது. 1919களில் அமெரிக்க உயர்நீதிமன்ற Ég)Lig)u IT6öl O. W. Holmes SIGIsrg,6ir Schenck vs the U. S. என்ற வழக்கில் பேச்சுச் சுதந்திரம் பற்றி அவர் குறிப்பிட்டது மிகவும் வரவேற்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் டாவின்சியின் கடைசி இராப்போசன சித்திரத்தைப்போல ஆனால் அரை நிர்வாணமாக இளம் பெண்கள் 12 சீடர்களைப்போல ஒரு உடை தயாரிக்கும் ஸ்தாபனத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தோன்றினார்கள். பிரான்சிய கத்தோலிக்க திருச்சபை இந்த ஸ்தாபனத்திற்கெதிராக நடத்திய வழக்கில் வெற்றி கண்டது.
இக்காலத்தில் வெளிவருகின்ற
கட்டுரைகள், நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவை சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமூகத்தினரையோ, மதத்தினரையோ
ஜூன் 2006 5

Page 8
கொச்சைப்படுத்துவதாகவும், வேதனைப்படுத்துவதாகவும் பல சந்தர்ப்பங்களில் அமைந்து விடுகின்றன. இவை பெரும்பாலும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே வெளிவருகின்றன. முரண்பாடான கருத்துக்களுடன் வெளிவரும் நாவல்கள், திரைப்படங்கள் அதிக வருமானத்தை வெளியிடுவோரிற்கு ஈட்டிக்கொடுப்பதும், அவர்கள் பிரபலங்கள் ஆகிவிடுவதும் இப்படியான வெளியீடுகள் வருவதற்கு காரணமாகவும் ஒரு வகையில் அமைந்து விடுகிறது.
GG UGelugpò 3-6U Ua
சோளகம் வீசத் தொடங்கினால் ஊரிலை பட்டம் ஏத்தும் சீஸன் சீனத்தானி
சானணி குஞ்சம் கட்டிய கொக்கு எட்டு மூலைக் கொடி
6ጕ 6∂T
அவரவர் இயல்புக்கேற்ப ஏத்துவர்!
விணிபூட்டிய ஆளுயர எட்டு மூலைக்கொடியை ஏத்தி பனைமரத்திலை கட்டிவிட்டா இரவிரவா வணிகவும்!
சின்னப்பெடிகள் ஏத்த சீனத்தானி வசதி எட்டுவயதில்
நாணி பட்டம் கட்ட எடுத்த முயற்சி அவலமாய்ப் போன சோகத்தை இன்றும் சுமக்குது என் நெஞ்சு
ஐயாத்துரை கடையில்ை பத்துச் சதத்துக்கு இரண்டு நூற்பந்து வாங்கினன் தென்னம் ஈர்க்கு அளவாய் வெட் நடு ஈர்க்கிலை விகிதாசாரப்படி NA குறுக்கு ஈர்க்குகளை வைத்து இறுகக் கட்டியாச்சு அடுத்து இரண்டு சிறகையும் முறியாமல் வளைக்கவேணும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகவே சட்டங்களை ஆக்குவதால் மட்டும் இவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது. இந்த யுகத்தில் அவை திருட்டு வீ.சீடீ யாகவோ, இன்ரநெற் மூலமாகவோ இளைஞர்களையும், பெரியோர்களையும் அடைந்துவிடக்கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. எனவே ஒவ்வொருவரும் தமது புத்தியை தீட்டிக் கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும். திருவள்ளுவர் கூறியது போல், “எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”
ഞ്ഞn>\n|a@b
ஆச்சு, வெற்றி! தாளையும் ஒட்டீற்றணி முச்சை அளவெடுத்து முடிச்சுப் போடேக்கை மாமா தரிசனம் தாறார்! “ஏதடா நூல்?” "கடையிலை வாங்கின நாணி’ “என்ன வரிலை?” "பத்துச் சதம்” *ஏது காசு’ “றோட்டிலை கிடந்தது' என் கஷ்ட காலம் அன்று அத்தை வளவிலை தேங்காய் பரிடுங்கிய நாள் நிலத்தில் கிடந்த பாளைக் காம்புகள் அளிப்திரங்களாக ஒன்றன்பினி ஒன்றாக
என்மீது பிரயோகிக்கப்பட கொஞ்சநேரம் தாக்குப் படிச்சனி ஏலேல்லை தொழிலாளருக்கு கணக்குத் தீர்க்க வைச்ச காசிலை பத்துச்சதம் எடுத்ததை ஒப்புக் கொண்டதும் அருச்சனை ஓய்ந்தது! தழும்புகள் மேல்
நாணி
3.
8
তটো 2006 酶

Page 9
பண்டைத்தமிழ் இலக்கியங்களில், எடுத்துக் கூறப்பட்டுள்ள தமிழர் வாழ்வியல் பற்றிய குறிப்புகள், இன்று எமது வாழ் வியலில் ஏற்பட்டுள்ள அவலநிலையைப் போக்குவதற்குத் துணை செயப் வனவாக உள் ளன. அக் காலத் துப் புலமைச்சான்றோரின் சமூகப்பார்வை பரந்துபட்டி ருந்தது. மக்கள் வாழ்வியலைப் புலவர்கள் ஊன்றி நோக்கினார்கள். தாம் கண்டகாட்சிகளைச் செய்யுள் வடிவிலே சிறந்த சொல்லோவியங்களாகத் தீட்டி வைத்தனர். இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் பாடிய பாடுபொருள் இன்றும் எடுத்துப் பேசவேண்டிய பொருளாகவே உள்ளது. பழையபாடல்களின் தொகுப்பு நூல்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பதினெட்டு நூல்களாக இன்று படிக்கக் கிடைக்கின்றன. எளிய மொழிநடையிலே அமையும் இன்றைய கவிதைகள் போலல்லாது அவை செந்தமிழ் நடையிலே பாடப்பெற்றவை. இறுக்கமான மொழி நடையரில் பொருளை @_6া நிறுத்தியமைக்கப்பட்ட செய்யுள்கள். மக்களுடைய அகவாழ்வியலையும், புறவாழ்வியலையும் எமக்குக் காட்டும் சிறந்த மானிட வரலாற்றுக் குறிப்புகளின் தெளிவான குறிப்புகள். அவற்றுள் 'புறநானூறு என்னும் தொகுப்பு நூலினைத் துருவிக் கற்கமுயன்றபோது இந்தக்கட்டுரை உருவாகியது. பாடல்களிடையே கிடைத்த செய்தியொன்று இன்று உலகெங்கும் பேசப்படும் செய்தியொன்றை இணைத்து நோக்கவைத்தது. மக்கள் வாழ்வியலில் குழந்தைகள் பற்றிய எண்ணம் எப்படியிருந்தது என்பதைப் பல புறநானூற்றுப் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவற்றை மீண்டும் ஊன்றிப்படிக்கும் போது நாம் இன்று ஆராயும் சிறுவர்பற்றிய சிக்கல்களைத் தெளிவாக இனம் காணமுடிகின்றது.
பண்டைத்தமிழர்களுடைய புறவாழ்வியல் பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். தொகுப்பின் பெயர் நானூறு பாடல்களை உள்ளடக்கியது என்பதை உணர்த்தியபோதும் முதற்செய்யுள் கடவுள் வாழ்த்துப் பாடலாகவே அமைந்துள்ளது. இது பாடல்கள் தோன்றிய காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வேறு என்பதை விளக்கி நிற்கின்றது. ஏட்டுப்பிரதிகளில் இருந்த பாடல்களைப் பரிசோதித்து நூலாகத் தொகுத்த உ. வே. சாமிநாதையருடைய பதிப்பு இன்றைய புறநானூற்றுப் பதிப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏட்டுப்பிரதித் தொகுப்பிலிருந்த பாடல்களை யார் தொகுத்தாரென்பதும் துலக்கம் பெறவில்லை. பாடல்களை யார் தொகுப்பித்தாள் என்பதும் புலப்படவில்லை. சில பாடல்கள் சிதைவுற்றும் காணப்படுகின்றன. அதனால் இப்புறநானூற்றுப் பாடல்களின் அடிகளின் சிறுமை பெருமையும் தெரியவில்லை என உ.வே.சாமிநாதையர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் எல்லாப் பாடல்களையும் தெளிவாகப் படித்து பல குறிப்புகளையும் எழுதி இணைத்து நூலைப் பதிப்பித்துள்ளார். பாடல்களில் குறிப்பிடப்படும் நாடுகள், கூற்றங்கள், ஊர்கள், மலைகள், ஆறுகள் என்பவற்றைத் தொகுத்தும் தந்துள்ளார். இத்துடன் தெளிவில்லாதவற்றையும் குறிப்பிட்டுள்ளார். செய்யுட்களைப் பாடினோரது வரலாற்றையும், பாடப்பட்டோர் வரலாற்றையும் குறிப்புகளாகத் தந்துள்ளார். தொகுப்பில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்களாக பதினைந்து பாடல்களைக் (244, 256, 257, 263, 267, 268, 297, 307, 323,
ஜனவரி -
 

கலாநிதி Oைேரின்oபிை 8ண்முகதாஸ்
327, 328, 333, 339, 340, 341) குறிப்பிட்டுள்ளார். செய்யுள்களைப் பாடியவர்கள் பாடியவர்களின் பெயர்களை வேறுபடுத்தியிருப்பதையும் அவர் குறிப் பிடத் தவறவில் லை. பாடல் களிலே o பயன்படுத்தப்பட்டுள்ள பழந்தமிழ்ச் சொற்களையும் விளக்கி ஒரு அரும்பத அகராதியையும் தனது புறநானூற்றுத் தொகுப்பிலே பின்னிணைப்பாகச் சேர்த்துள்ளார்.
இத்தகைய புறநானூற்றுத் தொகுப்பிலே அமைந்த புறப்பாடல்களில் சிறுவர் பற்றிய
G
= செய்திகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றை மட்டுமே
==
இக்கட்டுரை முன்வைக்கின்றது. புறப்பாடல்களில் குழவி, சிறார், மக்கள் என்னும் சொற்களால் குறிப்பிடும்போது வயதுவேறுபாடு உணரப்படுகிறது. குழவி என்னும் சொல் தானாக இயங்க முடியாத தாயின் அரவணைப்பில் இருக்கும் வயதை உணர்த்துகிறது. 'சிறார்' என்ற சொல் குடும்பநிலையில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் ܢܒ குறிப்பிடுகிறது. 'மக்கள் என்ற சொல் ஊரிலுள்ள எல்லாக் குழந்தைகளையும் குறிப்பிடுகிறது. இதனைப்பின்வரும் செய்யுளடிகள் மூலமாகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
"பாலில் குழவி அலறவும்.’ (புறம்:44) “தாயின் தூவாக் குழவி போல.’ (புறம்:4) "குழவி கொள்பவரின் ஒம்புமதி.’ (புறம்:5) "குழவி இறப்பினும்.’ (புறம்:74) "புனிறுதீன் குழவிக்கு இலுற்று முலைபோல.’ (புறம்:68) 'ஈன்றோள் நீத்த குழவி போல.’ (புறம்:230) பண்டைய தமிழர் வாழ்வியலில் குழவிப்பருவம் பாதுகாவலுக்குரிய பருவமாகக் கருதப்பட்டுள்ளது. பாலில்லாத குழவியின் அலறல் பாடலில் பதிவு செய்யப்பட்டபோது மக்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தை மன்னன் நீக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கும் புலவர், போரினால் அல்லற்படும் குழந்தையின் நிலையைச்சிறப்புற முன்னிறுத்தியுள்ளாள். போரினால் நாட்டு வளம் குன்றும்போது பிறந்த குழந்தைகள் பாலின்றி வருந்தும் ஒரு கொடுமையை அவர் கண்டார். எனவே அக்கொடுமையை நீக்கவல்ல அரசனை ஏற்றது செய்யும்படி கேட்கிறார். இன்று இத்தகைய ஒரு அவலநிலை உலகின் பலபாகங்களில் நிதர்சனமாக உள்ளது. பச்சைக் குழந்தைகளின் பசியை ஆற்றும் பொறுப்பு தாயுடையது என அரசு ஒதுங்கிவிடுவது தகுந்ததல்ல. அது நாணுதற்குரிய செயலெனப் புலவர் கூறுகிறார். இன்று போரின் கொடுமையால் மிகவும் பாதிப்புக்குள்ளாகுபவர் இளம் குழந்தைகளே என்பதை எவரும் கருத்திற்கொள்வதில்லை. எமது தலைமுறை முளையிலே கருகும் பயிராகிவிடக்கூடாது என்பதை நாம் உணரப் புறநானூற்றுப் பாடல் எமது கடமையைச் சுட்டிக்காட்டிநிற்கிறது. போரினால் பாதிப்புக்குள்ளான நாடுகள் அநுபவிக்கும் துன்பத்தை விளக்கப் புறநானூற்றுப் புலவர் ஒரு சொல்லோவியத்தைத் தீட்டியுள்ளார்.
'தாயின் தூவாக் குழவி போல ஒவாது கூஉநின் உடற்றியோர் நாடே” சிறுகுழந்தைப் பருவத்திற்குப் பெற்றதாயின் அரவணைப்பு மிகவும் இன்றியமையாதது. அப்பருவத்தில் தாயின் பாலூட்டலால் குழந்தை தன் உணவைப் பெறுகின்றது. அந்தத் தாயின் பால் ஜூன் 2006 7

Page 10
குழந்தைக்குக் கிடையாதபோது அது ஓயாமல் அழும். இளங் குழந்தையின் பசித்துன்பம் தாயினால் மட்டுமே தீரும். தாயைக் காணாத குழந்தை தன்பசியைப் பொறுக்கமுடியாமல் ஓயாமல் அழுது தாயைக்கூப்பிடும். “இந்நிலையில் உனது பகைவர் உள்ளனர். அது பற்றி நீ எண்ணிச் செயற்படவேண்டும்.” எனப் புலவர் போர் செய்யும் அரசனை அறிவுறுத்துகிறார். பகைநாட்டவர் படும்துன்பத்தையும் நீ நினைக்கவேண்டும் எனப்புலவர் கூறும்போது குழந்தைகளின் அவலமே அவள் எண்ணத்தில் தோன்றுகிறது. ஒரு நாட்டின் வளமான எதிர்காலத் தலைமுறையைப் பேணிப்பாதுகாக்க வேண்டிய அரசனின் கடமையை எடுத்துரைக்கின்றார்.
அரசனின் ஆட்சி நிலையைப் பற்றிக் கூறும்போது ஒரு சிறு குழவியை எவ்வாறு தாய் பேணி வளர்க்கிறாளோ அது போல அரசன் தன்குடிகளைப் பேணவேண்டுமெனப் புலவர் கூறும் அறிவுரை அக்கால மக்கள் வாழ்வியலில் குழந்தை வளர்ப்பு நிலை எவ்வாறு சிறப்புற்றிருந்தது என்பதை எமக்கு உணர்த்துகின்றது. நீண்ட காலமாகவே உலகில் குழந்தை வளர்ப்புப்பற்றி மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுவந்துள்ளது. ஆனால் புறநானூற்றுப் புலவர் கூறும் அக்காலக் குழந்தை வளர்ப்புத் தனித்துவமானது. தமிழர் வாழ்வியலில் ஒரு குழந்தையை வளர்க்கும் பணியில் தாய்க்கே பெருமிடம் இருந்தது. தான் பெற்ற குழந்தை வல்லவனாக நல்லவனாக உருவாகவேண்டும் என்பதைத் திட்டமிட்டுத் தாய் செயற்பட்டாள். குடும்பநிலையிலும் நாட்டு நிலையிலும் எதிர் காலத்தில் குழந்தை வளர்ந்து ஆற்ற இருக்கும் பணிநிலைக்கேற்ப வளர்க்கவேண்டிய பொறுப்புத் தாயினுடையதே. சிறந்த மனித விழுமியப் பண்புகளைக் குழந்தைக்குப் பாலூட்டும்போதே தன் சிந்தனை மூலம் ஊட்டுகிறாள் எனக்கருத்தப்படுகிறது. அன்பு, அருள், இரக்கம், வீரம், பொறுமை போன்ற குணங்களைக் குழந்தை தாயின் பாலூட்டும் பரிவினால் உணர்கிறது. அது உணவுடன் கலந்து அதன் உணர்விலே செறிகின்றது.
தாயின் பாலூட்டல் குழந்தைக்கு இன்றியமையாதது என விஞ்ஞான வைத்திய அறிவுரைகள் எடுத்துரைக்கப்படும் இக்காலகட்டத்தில் புறநானூற்றுப் புலவர் ஒருவருடைய பாடலடி பண்டைய வாழ்வியலின் செந்நெறியை நன்கு விளக்கி நிற்கிறது. சோழ நாட்டிலே நீர்வளம் மிக்கிருப்பதைப் பாடவந்த புலவர் காவிரியாற்றின் பெருக்கிற்கு ஈன்று சிலநாட்களே கழிந்த குழந்தைக்காகப் பரிவுடன் பாலைச்சுரக்கும் தாயின் முலையை உவமையாகக் காட்டுகிறார். இயற்கையான நீர்வளத்தைத் தாயின் முலைவளத்தோடு ஒப்பிட்டு நோக்கவைக்கிறார். ஆனால், அதேசமயம் ஈன்ற தாயை இழந்த குழந்தையின் அவலத்தையும் சங்கப்புலவர் பதிவு செய்யத்தவறவில்லை.
“பொய்யா எழினி பொருது களம் சேர ஈன்றோள் நீத்த குழவி போலத் தன்னமர் சுற்றம் தலைத்தலை இணையுக் கடும்பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு நோயுழந்து வைகிய உலகினில்.” போரிலே நாட்டு மன்னன் உயிர் துறந்தான். மக்கள் தாயிழந்த குழவி போலக் கலங்கினர். சுற்றத்தவரோடும் வாழமுடியாமல் பல்வேறிடங்களை நாடிச்சென்று கொடிய பசியினால் வருந்தும் துன்பம்மிக்க அந்த மக்கள் நிலையைப் புலவர் எடுத்துரைப்பது சிறப்பானது. 'தாய் நீத்த குழவி' என்ற தொடர் தற்காலத்தில் சமூகத்திலே தாயாற் கைவிடப்பட்ட இன்றைய குழந்தையை நினைவூட்டுகிறது. தன்னை யாராவது அணைத்து
8 ஜனவரி -

ஆதரவு தரமாட்டார்களா எனக்குழந்தை அலைந்து திரிகிறது. வயிற்றுப்பசியைத் தீர்க்க முடியாமல் துன்பப்படுகிறது. போக்கிடம் இன்றி வீதியிலே அலையும் குழந்தையைத் தாய் ஏன் கைவிடவேண்டும் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. அண்மைக்காலங்களில் மருத்துவமனைகளிலே குழந்தையை நீத்துவிட்டுச் சென்ற தாயார் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. பண்டைத்தமிழர் சமூகத்திலும் இத்தகைய நிலைமை இருந்ததை இப்பாடல் நன்கு உணர்த்துகின்றது.
குழந்தை கருவிலே இறப்பினும், முழுமையாகப் பிறந்து இறப்பினும் அதனை ஒரு மகப்பேறாகக் கருதிச் சிறப்புச்செய்யும் பண்பாடு இருந்ததையும் புறநானூற்றுப் பாடல் பதிவு செய்துள்ளது.
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன்று என்று வாளில் தப்பார்.” என்னும் அடிகள் இதனை உறுதி செய்கின்றன. மகப்பேறு என்பது மக்களால் ஒரு பெரும்பேறாகக் கருதப்பட்ட காலம் ஒன்றிருந்தது. தற்காலத்தில் குழந்தை ஒரு வேண்டாத பொருளாகவும் கருதப்படுகிறது. பண்டைத்தமிழர் வாழ்வியலில் மக்கட்செல்வம் பெரிதும் மதிக்கப்பட்டது. பெருஞ்செல்வராக இருந்தாலும் மக்கட்செல்வம் இல்லாதவர்கள் மரணபயத்துடன் வாழ்ந்தனர். தமக்குப் பின்னர் தம்முடைய பெயர் சொல்ல ஒரு தலைமுறை வேண்டும் என விரும்பினர். இக்கருத்து எல்லோராலும் உணரப்படவேண்டிய ஒன்றாகும். ஆனால் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் வைத்திய அறிவு வளர்ந்தபோது இயற்கை நிலையில் இன்றிச் செயற்கை நிலையில் குழந்தை கருவிலேயே அழிக்கப்படலாயிற்று. 'குடும்பக்கட்டுப்பாடு' என்ற மேலைத்தேய வாழ்வியல் நடைமுறை பரவலாக்கம் பெறலாயிற்று. அதன் பின் விளைவுகளே இன்று எமது சமூகத்தில் சிறார் அனுபவிக்கும் துன்பங்களுக்கு அடிப்படையாயிற்று. மண்ணில் பிறக்கும் குழந்தைகள் எல்லோரும் நமது செல்வங்களே என்ற நினைப்போடு வாழ்பவர் சிலரே.
குழந்தை நிலையிலிருந்து வளர்ந்து 'சிறார் என்னும் பருவத்தடையும் போது அவர்களின் வளர்ச்சியிலும் உணர்ச்சி நிலைகளிலும் ஏற்படும் மாற்றங்களைப் புறநானூற்றப் புலவர் தனித்துவமாகப் பாடியுள்ளனர். எடுத்துக் காட்டாகச் சிலவற்றை இங்கு குறிப்பிடலாம்.
1. “புன்தலைச் சிறார் மன்று மருண்டு நோக்கி
விருந்திற் புன்கண் நோவுடையார்’
(புறம்:46)
2. “பழனவாளைப் பநுஉக்கட்டுணியல்
புதுவெண் சோற்றுக் கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்பமாந்தி நீடு கதிர்க் கழனி சூடுதடுமாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையில் தந்தையர் குறைக்கண் நெடும்போர் ஏறி விசைத்தெழுந்து செழும்கோட் பெண்ணைப் பழம் தொட முயலும்.”
(புறம்:61)
3. “பொய்யா வெழிலி பெய்விட நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ்சேரும் சிறு நுண் எறும்பின் சில்லொழுக்கேய்ப்பச்
ஜூன் 2006 酶

Page 11
சோறுடைக் கையர் வீற்று வீற்றியங்கும் இருங்கிளைச் சிறாஅர் காண்டும்.”
(புறம்:173)
4. “மரம் கொல் தச்சன் கைவல் சிறாஅர்.”
(புறம்:206)
5. “கொடுங்கோட்டாமா நடுங்குதலைக் குழவி
புன்தலைச் சிறாஅர் கண்றெனப் பூட்டுஞ்.’
(புறம்:319)
6. “புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்.”
(புறம்:321)
7. “இலந்தலை இரத்தி அலங்கு படுநீழல்
கயந்தலைச் சிறாஅர் கணை விளையாடும்.’
(புறம்:325)
8. "வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது.”
(புறம்:320)
9. "தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
புன்றலைச் சிறாஅர் மன்றத்தார்ப்பின் படப்பொடுங் கும்மே.”
(புறம்:334)
10. "நுண்பூண் மார்பின் புன்றலைச் சிறாஅர்.”
(புறம்:373)
11. “புலப்பல் தாலிப் புன்றலைப் சிறார்.”
(புறம்:374)
12. "நல்குரவின் பசிதுன்பவென்ப நின்
முன்னாள் விட்ட மூதறி சிறாரும்.”
(புறம்:382)
மேற்கானும் எடுத்துக் காட்டுகளில் சிறப்பாகச் சிறாருடைய தலை “புன்தலைச்சிறாஅர்’ என வர்ணிக்கப்பட்டுள்ளமை நோக்குதற்குரியது. சிறுவர் உணர்வுகளில் பயஉணர்வு பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, அவர்களுடைய வயதுக்கேற்ற செயற்பாடுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பல்வேறுவகையான உணவுகளை உண்டாலும் மேலும் மேலும் உண்ணவேண்டும் என்னும் விருப்பால் செயற்படும் சிறுவரைப்புலவர் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார். தெங்கம் பழத்தைத்தின்று வெறுப்படைந்த சிறார் தந்தைமார் செய்த குறையான நெல்லின் போரிலே ஏறித்தொங்கி எழுந்து பனம்பழம் பிடுங்க முயலும் காட்சி சிறுவருடைய போக்கைத் தெளிவாக விளக்குகிறது.
உணவு கிடைக்குமிடத்துச் சென்று உணவு பெற்று வரும் சிறார் சிறிய எறும்பின் செல்வுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளனர். இது சிறாருடைய செயற்பாட்டிலே ஒரு ஒழுங்கமைதி இருப்பதைப் புலப்படுத்துகிறது. தந்தையருடைய கைவினைத் தொழில்களைச் சிறாரும் பயிலும் பண்புடையராக இருந்தனர். சிறுவயதிலே அவர்கள் பெறும் தொழிற்கல்வி பற்றிய அறிவைப் பாடல்கள் பதிவு
ஜனவரி -

செய்துள்ளன. மரவேலை வேட் டையாடுதல் போன்ற தொழிற்பயிற்சியை சிறார் பெற்றனர். ஏட்டுக்கல்வி நிலையிலன்றி செயற்பாட்டுக் கல் விநிலையில் சிறாருக் குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வாழ்வியலுக்குத் தேவையான தொழிற்பயிற்சி மரபான நிலையில் சிறாருக்கு அளிக்கப்பட்டது. விற்பயிற்சி, வேட்டைப்பயிற்சி, கவின்கலைப்பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிபெற்ற சிறார் இயற்கையுடன் இயைபுபட வாழும் பயிற்சியும் பெற்றனர். சிறாரைப் பொறுத்தவரையில் பசியைப் போக்க, உணவைத் தேட ஒரு தொழில் தேவையென் பது உணரவைக்கப்பட்டது. இளமையில் வறுமையைத் தீர்க்க வழி சொல்லிக்கொடுக்கப்பட்டது. இப்பயிற்சிநிலை இன்று எம்மிடையே இல்லை. அதனால் ஏட்டுக்கல்வியால் மட்டுமே வறுமையைப் போக்கும் தொழில் தேட வேண்டும் என்ற எண்ணமே வலுப்பெற்றுள்ளது. கைத்தொழிற் பயிற்சி சிறாருக்கு வழங்கப்படாமையால் தொழில் நிலையில் ஏற்றத்தாழ்வு உண்டு என்ற எண்ணமும் வலுப்பெற்றுள்ளது. வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புபட்ட வேளாண்மை, மீன்பிடி, வேட்டை போன்ற தொழில்களின் இன்றியமையாமையைப் பழந்தமிழர் சிறாருக்கு சிறப்பாகப் புகட்டினர். குடும்ப நிலையில் தன்னுடைய பணியைச் சிறார் செய்யவொரு நல்ல பயிற்சியளிக்கப்பட்டது. சமூகநிலையில் இது அனைவரதும் பொறுப்பாகவிருந்தது.
மக்கள்' என்ற சொல் சமூகத்தில் நல் ல குழந்தைப்பேற்றைக் குறித்தது. புறநானூற்றில் இரு பாடல்கள் இதனைச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. "மயக்குது மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழநாளே” “மாண்ட என் மனைவியுடன் மக்களும் நிரம்பினர்.” என்ற பாடலடிகள் இதனைத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. பிசிராந்தையார் என்னும் புலவர் மக்கட் செல்வத்தைப் பெற்றதால் தான் இளமைக் கோலத்துடன் மகிழ்வாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார். பாண்டியன் அறிவுடைநம்பி மக்கட்பேறு மரணபயத்தை நீக்குமெனப் பாடியுள்ளான். பண்டைத்தமிழர் வாழ்வியலில் பிள்ளைப்பேறு மகிழ்வான வாழ்க்கைக்குப் பக்கபலமாக இருந்தது. ஆனால் இன்று வீடு, குடும்பம், சமூகம், நாடு என்ற அமைப்புகளில் பிள்ளைப்பேறு பற்றிய கருத்து மாறுபட்டுள்ளது. குடும்பத்தின் இறுக்கமான இணைப்புக்குச் சான்றாகப் பிள்ளைப்பேறு இன்று கருதப்படவில்லை. மேலைத்தேச வாழ்வியல் என்னும் மயக்க நிலையில் தமிழர் வாழ்வியல் திசைமாறிச் செல்கிறது.
இந்நிலையில் குழந்தைகளும், சிறுவர்களும் ஆற்றுப்படுத்துவாரின்றி அலையும் நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். சர்வதேச மட்டத்தில் இவர்களுடைய நிலையை மாற்றவேண்டும் என்ற கூக்குரல் கேட்டாலும் செயற்பாட்டில் மாற்றமில்லை. இவ்வேளையில் புறநானூறு காட்டும் சிறுவரை இக்காலச் சிறுவரோடு ஒப்புநோக்கியபோது ஒருண்மை தெளிவாயிற்று. தொழிற்கல்வி என்ற பயிற்சியொன்று சிறுவருக்கு இன்றியமையாதது. பசிக்குச்சோறும், உடுக்க உடையும், தங்க இருப்பிடமும் கொடுப்பதால் மட்டும் சிறுவர் வாழ்வை வளம்படுத்தமுடியாது. அவர்களை ஒரு தொழிலில் ஈடுபடுத்தி, சமூகப்பணியில் இணைக்கவேண்டும் ஏட்டுக்கல்வியுடன் இணைந்த தொழிற்கல்வியும் பயிற்றப்படவேண்டும். அதுவும் இயற்கையுடன் இயைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் இன்று கவனிப்பாரற்றுப் பசியைப் போக்கவேண்டி அலையும் சிறார் வாழ்வை வளம்படுத்தமுடியும் இதனையே பழந்தமிழ்ப் பாடல்கள் கூறுகின்றன. அதனை விரைந்து செயற்படுத்த முனைவோமாக. 量
ஜூன் 2006 9

Page 12
= ஓர் அரசியல் குறிப்பு
Onf oகேந்திரன்
தமிழ் சினமாவில் தணிக்கை என்பது ஒரு கேலிக்குரியதாகத்தான் இருக்கின்றது. தணிக்கை என்பது கலாசார, ஒழுக்க விழுமியங்களை காப்பாற்றும் வகையில் மேற்கொள்ளப்படாமல் அதிகார வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்றும் வகையில் தணிக்கையின் அரசியல் மிக மோசமான ஆளும் நிலைப்பாட்டின் வெளிப்பாடாக செயல்படுகின்றது என்பதுதான் உண்மை. கலாசார ஒழுக்கம் என்பது கூட சாதி இந்துக்களின் பார்ப்பண கலாசாரத்தை முன்வைத்தே தணிக்கையின் செயற்பாடுகள் கையாளப்படுகின்றது. சினமாவில் தணிக்கை என்பது ஒரு மானுட கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்கான சூழலில்தான் நல்ல சினமாவின் உருவாக்கத்திற்கான சூழல் ஒளிந்திருக்கின்றது. ஒரு வகையில் தென்னிந்திய கழிசடை சினமாவின் மோசமான முகம் இவ்வளவு குரூரமானதாக இருப்பதற்கான மூலகாரணம் தணிக்கைக்கான கத்தரிக்கோல் ஒரு பக்கச் சார்பானதாக செயல்படுவதனால்தான் என்ற உறுதியான முடிவுக்கு வர முடிகின்றது. போலாந்து சினமாவின் மிகவும் போற்றப்படும் திரைப்படக் கலைஞன் கீஸ்லோஸ்கி சொல்கிறார்: தணிக்கை இருக்கும் ஒரு நாட்டில் சினமாவின் ஆன்மா செத்து விடுகின்றது என்று. பெண்களை, பெண் சமூகத்தை இவ்வளவு கொடுரமான முறையில் இழிவுபடுத்துகின்ற ஊடகங்களில் தமிழ் சினமாதான் முதன்மையான பண்பாட்டு ஊடகமாக இருக்கின்றது. பெண்களை இத்தனை இழிவாக சித்தரிக்கும் தமிழ் சினமாவின் குரூரம் அவர்களின் தாய்மையின் சின்னங்களாக பார்க்கப்பட வேண்டிய மார்பையும், வயிற்றுப் பகுதிகளையும் - கேமரா என்ற ஆணாதிக்க இருள் விழிகளின் வழியாக, பிம்பங்களின் நிமிட கால காட்சிகளின் மூலம் ஆபாசமாக தமிழ் பொது உளவியலில் திணிக்கப்பட்டிருப்பதன் காரணம் என்ன? பெண்களை இவ்வளவு இழிவுப்படுத்தும் தமிழ் சினமாவின் மேல் - பெண்கள் / பெண்ணிய அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுக்காமல் வீட்டில், திரையரங்குகளில் மெளனமாக இரசிக்க செய்கின்றதன் காரணம்தான் என்ன? ஏன் நாம் இப்படியான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். எதிர்ப்புணர்வு மழுங்கியவர்களாக பெண்களை பெண்கள் மூலமாக பெண்களாலேயே ருசிக்கப்படுவதற்கான தந்திரத்துடன் நமது வீட்டின் காட்சிகளில், வேலைத்தளங்களில், பஸ் பயணத்தில் மற்றும் பெண்கள் நடமாடும்போது வெளியில் தமிழ் சினமா கட்டமைக்கும் ஆணாதிக்க பிம்பங்களின் மன உளவியல் செயல்படுவதை நாம் எப்படி அத்தனை விரைவில் மறுத்துவிட முடியும். நல்ல கட்டை, சூப்பர் பிகள், சரியான துண்டு, சாமான் சங்கு இது போன்ற சமூக வார்த்தைகளின் பின்புலத்திற்கு மூலகாரணம் தமிழ் சினமா என்பதை நாம்
1 O ஜனவரி - ஐ

எப்படி மறுத்துவிட முடியும்? தமிழ் சினமா பெண் உலகத்தை இவ்வளவு இழிவு செய்த பின்பும் அவர்களுக்கு எவ்விதமான கோபமும் ஏற்படவில்லையே. அது ஏன்? ஒரு வகையில் பெண்கள் கூட இதை ஏற்றுக்கொள்கிறார்களா அல்லது அவர்களின் உளவியல் என்பது ஆணாதிக்க சிந்தனைகளினால் திசை திருப்பப்பட்டிருக்கின்றதா..? அல்லது அது வெறும் “சினமாதானே’ என்ற நினைவுகளுடன் கவனமற்று நகர்ந்து விடுகிறார்களா? சினமா என்பது கேளிக்கை கூட்டத்தின் பொழுதுபோக்கு வடிவம் அல்ல. அது ஒரு அரசியல் நடவடிக்கை. அதனால்தான் அது தமிழகத்தின் அரசியல் வாழ்வில் தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களை முதலமைச்சர்களாக மாற்றுகின்றது. தியேட்டர்களும், திரைப்படங்களும் பார்ப்பண அரசியலை பிரசாரப்படுத்தும் மிக நுட்பமான ஆயுதம், அதன் செயற்பாட்டு தளம் என்பது பொழுது போக்கு, களியாட்டம் வெகுசன ஜனரஞ்சக புனைவின் வண்ணம் பூசிய கலவைகளின் மேல் தந்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் நமது வீடுகளில் U6160TTG 960)606) isgO)3356T601 H.Bo/Star Movie/Cinemax போன்ற ஆங்கில பட அலைவரிசைகளை பார்ப்பதற்கு உள்வீட்டு தடை இருக்கின்றது. ஆனால், ஆபாசமான தமிழ் சினமாவை வீட்டில் குறுந்தகட்டில் மற்றும் சண், சக்தி, விஜய், ராஜ் போன்ற ஆபாச சினமாவை ஒளிபரப்பும் அலைவரிசைகளுக்கு தடை ஏதும் எழுவதில்லை. உண்மையில் ஒப்பீட்டளவில் பார்க்கப்போனால், ஆங்கில படங்களில் பெண்களின் கதாபாத்திரமும், வாழ்வும் ஓரளவு யதார்த்தத்துடனும் சுய மரியாதையுடனும் சித்திரிக்கப்படுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழ், ஹிந்தி படங்களில் பெண்களின் கதாபாத்திர சித்திரிப்பு என்பது மிக மோசமான ஆபாச சதை பிம்பங்களாகவும், தன்னிலை அற்ற வெற்று உருவங்களாகவும், மார்பு, வயிற்றை முதன்மைப்படுத்தும் காட்சிப்படுதலையும் (ஜெமினி) கவர்ச்சி, ஆபாசம் என்ற பன்னாட்டு அலை வரிசைகளை விடவும் மிக அதிகமான B/F களை காட்சிப்படுத்தும் தமிழ் சினமாவை நாம் வீட்டில் அங்கீகரிப்பதன் காரணம் என்ன? நாம் இதில் எவ்வளவு தூரம் முட்டாள்களாக்கப்பட்டிருக்கின்றோம்? வெகுசன ஜனரஞ்சக பிம்பத்தின் அரசியல் இதுதான். நடிகர்கள், நடிகைகள் ஒரு வழிபாட்டு பொருளாக ஒளிவட்டமாக முன் நிறுத்தப்படும் ஊடக, சினமா பற்றிய நடுப்பக்கம் மற்றும் சினமா பற்றிய செய்தி எழுதும் பத்திரிகையின் அரசியலையும் நாம் உள்வாங்கிக்கொள்வோம். வெகுசன பொதுப் புத்தியை மிக நுட்பமாக வடிவமைக்கும் இந்த போக்குகளின் பின்னணியை நாம் மிகக் கவனத்துடன் அணுகவேண்டும். சினமா பற்றிய செய்திகளும், கிசு கிசுகளும், அந்தரங்க ஆபாச சினமா குறிப்புகளும், வெறும் பொழுதுபோக்குக்காக புனையப்படுவதில்லை. அது ஜனரஞ்சகம் என்ற பொது புத்தியை கீழ்நிலைபடுத்தவும், ஆரோக்கியமான சிந்தனை வளர்ச்சியை மட்டுப்படுத்தி திசை திருப்பவும் / சமகால வாழ்நிலை பிரச்சினைகளை தீவிர தன்மையிலிருந்து திசை திருப்புவதே இச்செய்தி புனைவின் நோக்கங்கள். அதனால்தான் ரஜனிகாந்தும், த்திரிஷாவும் நம் குளியல் அறை, பஸ் பயணங்களில், மற்றும் பொது இடங்களில் திரைப்படம் பற்றிய செய்திகளாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. ெ
ဗူဗ6éT 2006 酶

Page 13
© @achgduມ ລona)
கவிதை பற்றிய ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டவரும் கவிதைக்கான தனது மொழியில் ஆளுமை பெற்று வருபவருமாகிய சித்தாந்தன் கவனிப்புக்குரிய சிறந்த கவிஞர்களில் ஒருவர். நம் மண்ணில் இன்று கவிதைத்
ခ်ိဳၾ/႔ဈင်္ဂါဇံ)
O
துறையில் மிகுந்த அக்கறையுடன் உழைத்து வரும் கவிஞர்களில் ஒருவரான இவரது காலத்தின் புன்னகை தொகுப்பு பல சிறந்த கவிதைகளை கொண்டமைந்திருக்கிறது. இதிலுள்ள 'ஆதியிலிருந்து என்வருகை பல தனிப்பண்புகளால் பிரதானத்துவம் பெறுகிறது.
ஆதியிலிருந்து என் வருகை
ஆதியிலிருந்து நான் வருகிறேன் என் வருகை முதலில் நந்தவனங்களுக் கூடாய் நிகழ்ந்தது. பின், எரிந்த வனங்களுடாய் நிகழ்கிறது. சாம்பல் மண்டிய மேடுகளில் என் சுவடுகள் முளைத்திருக்கின்றன. யெளவனம் சுருங்கி துயர் கிறிய என் முகம் விழிகளை நந்தவனக் கனவுகளுக்குள் தொலைத்திருக்கிறது. வெப்பம் வழியும் பொழுதுகளுக்குள்ளும் என் வருகை நிகழ்கிறது. வீச்சு நிரம்பிய என் பாதங்கள் அனலில் நனைந்து நனைந்து விறடைந்து சுவடுகளைப் பெருக்குகின்றன ஆதியிலிருந்து நான் வருகிறேன் என்வருகை நந்தவனங்ளுடாய் நிகழும் கனவுகளில் திளைத்திட நான் வருகிறேன்.
இந்தக் கவிதையில் கவிஞர் என்ன சொல்ல முனைகிறார்?
ஆதியிலிருந்து நந்தவனங்களினூடாக வந்து, இன்று எரிந்த வனங்களுடாய்த் தொடர்ந்து கொண்டிருக்கிற அந்த நான் யார்?
விழிகளை நந்தவனக்கனவுகளில் தொலைத்து விட்டு யெளவனம் சுருங்கிவிட அனலில் நனையும் பாதங்களால் வீறடைந்து சுவடுகளைப் பெருக்குவது யார்?
-எமது வாழ்க்கை ஆரம்ப காலங்களில் நந்தவனப் பயணமாகத் தான் இருந்தது.
நாம் இந்த உலகுக்கு வருமுன்னரும் அது அப்படித்தான் இருந்திருக்கிறது.
மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் தொடர்ந்து கொண்டிருந்த வாழ்க்கையெனும் பயணம் இன்று எரிந்த
酶 ஜனவரி =
 
 

şişi" リ* ମୁର୍ଛା ଅଛି।
(சுவைத்தேன்-2)
வனங்களுடாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வாழ்க்கையின் பழைய அழகு சுருங்கிவிட்டது. துயரம் அதனைக் கீறிக் காயப் படுத்தியிருக்கிறது. இன்றின் கோலத்தை ஏறெடுக்க முடியாமல் பழைய நந்த்வனக் கனவுகளுக்குள் வாழ்வின் முகம் விழிகளைத் தொலைத்துவிட்டது. பொழுதுகள் வெப்பம் வழியும் பொழுதுகளாய் ஆகிப் (8_Tu0. பொழுதுகள் பெருக்கும் அனலில் நனைந்து வாழ்வின் பாதங்கள் வீறடைகின்றன. சுவடுகள் பெருகுகின்றன.
-வாழ்க்கை தொடர்கிறது. நந்தவனங்களினூடாகவே வருகை தொடர வேண்டுமென்பது வாழ்வின் கனவானபோதும், அனல் பெருகும் பொழுதுகளிலும் தனது வருகையை அது நிறுத்துவதில்லை.
அனலிடையில் அதன் பாதங்கள் வீறடைகின்றன. சுவடுகள் பெருகுகின்றன. - கவிஞரின் வரிகளில் இந்த அர்த்தங்கள் பொதிந்திருப்பதை இப்போது உணர்கிறீர்களா?
இந்த மண்ணில் மனிதனுடைய வாழ்க்கை எத்தனையோ மகிழ்வோடும் நிறைவோடும் செல்லவேண்டிய ஒன்று. ஆனாலும், காலத்தின் சோதனையில் வாழ்வின்
வேதனையுமாய் முழுவாழ்வும் ஆகிவிடுகின்ற துரதிஷ்டம் நிகழ்ந்து விடுவது எத்தனை கொடுமை - என்பதை உணர்ந்த கவிஞனாய் சித்தாந்தன் தனது உணர்வுக்கு கவிவடிவம் தருகிறபோது எத்தனை நுண்ணுணர்வுடன் தொழிற்படுகிறார் பாருங்கள். தனது உணர்வுகளைக் கவிதையிற் பொதிந்து ஒரு கலைவடிவாய் அதைப் படைக்கையில் சர்வ ஜாக்கிரதையோடு தொழிற்படுபவராக அவர் இருப்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.
தேவைக்கு மேலாக எந்தச் சொல்லையும் பயன்படுத்தாமல் அநாவசிய நீட்டல், குறுக்குதல் செய்யாமல் தேவையான சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு செய்யப் பட்டுள்ள 'கவிநேர்த்தி கண்டு கொள்ளப்படவேண்டியதாகும்.
கவிதையில் சில சமயங்களில் சொற்கள் தங்களின் நேர்ப்பொருளைத் தாங்காமல் வேறு அர்த்தம் பூண்டு ஒலிப்பதை - நிகழ்வதைக் காணமுடிவதுண்டு அல்லவா இங்கு ஒரு இடத்தில் ஒரு பதம் தனது எதிரான அர்த்தத்தோடு கையாளப்படுவதைப் பார்க்கலாம்.
"..என் பாதங்கள் அனலில் நனைந்து நனைந்து தன் சுவடுகளைப் பெருக்குகின்றன.” என்ற வரியில் நனைந்து என்னும் சொல் அனலில் நனைந்து என வரும்போது கவிஞனின் கையில் அது வேறு அர்த்தம் சூடிக்கொள்கிறது. - நீரில் பின் நனைதல் நிகழும் - இங்கோ அனலில் நனைதல் நிகழ்கிறது. நீரில் நனைய நாம் சுகமாய் அனுபவிப்போம். அனலில் நனையும் துயரை - சோதனையை ஒரு அனுபவமாய் ஏற்று அதனூடாக வீறுபெருகும் பாதங்களாக இங்கே வாழ்க்கையின் பாதங்கள் சித்திரிக்கப்படுவது ஒரு தனிச்சிறப்பு.
இத்தகைய சிறப்பையெல்லாம் கண்டு அனுபவிக்க முடிவது கவிதை தரும் தனி இன்பம். 量
ஜூன் 2006 1督

Page 14
്ത്രം) ?6ܢܹܗܘܟ ge (
1. அலைகள் எல்லாம் என்னிடம் ஏகுக
எல்லையற்ற வானமே - நீ என்னுடையதாகுக.
நட்சத்திரங்கள் என்னிடமே சினுங்கட்டும்.
நிலவு கசிந்த இரவுகளில்
676୪୮
? காலங்களின் நினைவாய்
நானிருப்பேன்.
2. நடுச்சாமம்
நிலவு நோண்டிக் கொண்டிருக்கும் தறைகள்.
கோபத்தின் கவிதைகளோடு வெடிக்கக் காத்திருக்கும் துப்பாக்கிக் குழாய்கள்.
U(16) Job
பால்ய காலம். ஒரு பாயில்
ஒய்ந்து கிடந்தது.
உப்பள வயல்கள் நெல் கழனிகள் கவிதையாய் ஆகாத கோடைகள் எல்லாமே தேவையற்றிருந்தது இப்போது.
UéfPUU வயலளர்ளிப் போன மழையும்.
3. இன்னும்
கொஞ்ச நேரமிருக்கிறது நிலவு மறைய
ஜனவரி -
 

காற்றில் தொலையப் போகிறது வெள்ளிகளின் தெரு
அன்பே சற்றைக்கெல்லாம் இந்த இரவு வடிந்துவிடும்
தேவதைகள்
பூக்கொட்டும் நிலவின் கரைகளில் மேய்ந்து கொள்வோம் - வராய்
4. முண்டப் பனை
மொட்டை வீடு 6760}' பாதம் படிக்காத வீதி
நானொரு அகதியாய் ஸ்வார்த்தமான மெளனங்களின் வாசியாய்.
நிலவு விழுந்த இரவைப்போல மிகக் கொடியது யுத்தம்.
பதில் கூற முடியாத நாவுகளின் தாகம்போல மிகத்துயரமானது
இந்த
இடப்பெயர்வு.
5. நள்ளிரவு
நான் மளமளவென்று ஒழுகிக் கொண்டிருந்தது நிலவு.
நீரொழுக்கி உலர்வு விட்ட உடல் தறைகளே!
ஜூன் 2006 酶

Page 15
மணல் வறுக்கப்பட்ட தெருவின் கரைகளே!
பாழ்நிலத்தின்
எல்லாக் கூரையின்
கீழிருந்தும் இந்த நிலவை ஏந்திக் கொள்வோம்.
6. கறுப்புத் தேநீருடன் வழிகின்ற காலை
கல்லறை காலக் கனவுகளுடன் எழுகின்ற சூரியன்
துயரங்களின் பாடலாய் ஊளையிட்டுக் கொண்டு திரியும் தென்றல் 7.
நிலவு
காலிக்காத மனம்
மெளனத்தால் தறையப்பட்ட உதடுகள்.
இதயம் வலியெடுத்து மழையாய் கொட்டிக் கொள்ளும் விழிகள்.
நான் இரட்சிக்கின்ற என் ஆதர்ஸ்யமான அம்சங்கள் இங்கெதுவுமில்லை.
مaه ډول இனியென்ன தேவகுமாரர்களின் பிடில் எங்கும் ஒலிக்கும்.
ஆறு ஜனவரி .
 

எனது கவிதைகள் இங்குதானுள்ளன. ,
நான் அறிவேன்
நான் விளையாடாத மலட்டுத் தெருக்களில், என்னால் பார்க்கப்படாத வஸந்த காலப் பறவைகளில்,
எனது கவிதைகள்
எல்லையற்ற என்தீவு ஜூ வர்ைகளே உங்களின் அழுகையாய் நான் வெளிப்படுவேன். பின்னரும் உங்களின் மொழியால் நான் எழுதப்படுவேன்.
0ՈՑ
அவன் செதுக்கிய சிற்பம் உளியைக் கையில் ஏந்துகின்றது பிணங்களைச் சிலையாக்கி
Σιωή பெற்ற உருவம்
முட்கம்பிகளை ஆடையாய் போத்திய பேய்களின் விழிகளில் பேசும் சிலை தென்படவேயில்லை
நாளைய சிற்பிகளைத்தான் --- சிலையாக்க முடிகின்2து.
ශිෂුn. ධූහුගීofilâo)
ஜூன் 2006 13

Page 16
வெண்மை என்றால் அப்படி ஒரு வெண்மை. மென்மினுக்கத் தூய்மை, உயிர்த்துடிப்பான கண்கள். பார்ப்பவர் கண்களை வலிந்து சிறைப் பிடிக்கத்தக்க அழகு. மெல்ல மெல்லத் தத்தி நடக்கும்போது அப்படியே கைகளில் அணைத்தெடுத்து தூக்கி மடிமீது வைத்துக் கொள்ளத் தோன்றும் எவருக்கும். அவனுக்குப் பார்க்கப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு எவர் வந்தாலும் அவர் கவனம் திருப்பி ஒருமுறை தன்னைப் பற்றிக் கதைக்க வைக்காமல் விடாது அந்த வெள்ளைப் புறா.
கூடென்று ஏதுமில்லை. வீட்டினுள் பலகாலம் வசித்து வருவதில் தனது வாழ்விடம் அதுவென்று அதற்குப் படினப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அவ்வகையில் அது முட்டாள்த்தனமுடையதாக இருப்பினும் கூட சிலபொழுதுகளில் இந்தப் புறாவே உலகிலுள்ள சகல புறாக்களிலும் அதி புத்திசாலியெனத் தோன்றும் அவனுக்கு. அதன் சில செயல்களைப் பார்க்கும்போது எப்படி இத்தானுண்டு சின்னப் பறவைக்குள் இத்தனை அறிவு வந்ததோ என்று வியப்பான். ஒருவேளை அவ்வெண்ணம் “காக்கைப் பொன்குஞ்சோ' என்னமோ?
இந்தப் புறா அவனுக்குக் கிடைத்த விதம் இப்போதும் அவனது நெஞ்சில் - நிற்கிறது. வாடைக்கிருந்த பக்கத்து ' வீட்டுக்காரர் வேறு வீடு மாறிப்போகும்போது விற்கமுடியாது தேங்கிப்போன பொருட்களாக நல்ல தமிழ் இலக்கண நூல்களும், ஒரு புறாக்கூண்டும் அவரிடம் மிஞ்சியிருந்தன. அவற்றை அவனிடம் அவர் கொடுத்தார் என்பதற்காக அவன் புறாவை வாங்கவில்லை. புறாவானது அவனது குடும்பத்தில் நிம்மதியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாய்ப் போய்விட்டதனால் அவன் அதை வாங்கினான்.
பக்கத்து வீட்டுக்காரர் தன் தனிமை போக்க ஒரு புறாவை வளர்த்து வந்தார். கறுப்பும் வெள்ளையுமான அந்தப் புறாவில் சொல்லமுடியாத பிரியம் அவருக்கு. புறாவும் கூட்டினுள் அப்பாவித்தனமாய்த் தன் முகத்தை வைத்துக் கொண்டு அவர் கொடுக்கும் உணவுகளை உண்டு விட்டு அல்லது உண்பதாகப் பாவனை பண்ணிவிட்டு
வாழ்ந்து வந்தது. பெ மென்மாலைப் பொழு அதனைத் திறந்து வி விடும் பொழுதுகளில் கதிரையிலிருந்து புத் புறாவிலும் ஒருகண் இருப்பார். புறா அவர இருந்து ஏதாவது தா6 பொறுக்கி உண்டபடி அந்தப் புத்தகத்தை
தானாகவே போய்க் அதைக் காணும் போ தானாகவே சிறைப்பட பறைவைகளும் உல எண்ணி அவனுக்கு 6 பறக்கும் நோக்கமற்ற கொண்ட அந்தப் புற பொழுதுகளில் குழந்ை குறும்புகளைக் குறை உதவியாக இருந்தது
சிலநாட்களின் அந்தப் புறாவின் நளி கொத்தியுண்ணும் நா அரங்கேறவில்லை. அ மதிலெட்டி விசாரித்த அவரிடம் மிகுந்த வச கட்டவேண்டியிருந்தது மனம் சகலமும் அல வசவுகளின் முடிவில் தரக்குறைவான புறா6 போய் விட்டதாக அ6 அத்துடன் பெண்களை புறாக்களையும் நம்பக அவனுக்கு இலவச அ
வழங்கினார். அது அ தான். பெண்களின் ச "பிரமச்சாரியாக” வா
雪4
ஜனவரி - 8
 

ரும்பாலான துகளில் அவர் டுவார். திறந்து தோட்டத்துக் தகம் படித்தபடி வைத்தபடி து காலடியில் வியத்தைப்
இருக்கும். அவர் மூடி எழும்பப் புறா கூட்டருகே நிற்கும். தெல்லாம்
விரும்பும் கில் வசிப்பதை வியப்பாக இருக்கும்.
சிறகுகளைக் பின்னேரப் தை ரம்யாவின் க்கப் பெரிதும்
பிறகு ஒருநாள் னமாகக் டகம் தோட்டத்தில் அவன் வியப்போடு போது அந்தப் புறா வுகளை வாங்கிக் 1. அதன் உடல், சிய அந்த
ஒரு புடன் அது பறந்து if (olgFIT6টা60াfা, Tu quib 5கூடாது என்று ஆலோசனையும்
வரது வழக்கம்
கவாசமே அற்று 2ந்து வருகின்ற
அவள் இல்லறவாதிகளையும்விட அதிகமாகப் பெண்களையும் அவர்களின் உணர்வுகளையும் நடையுடை பாவனைகளையும் விமர்சித்து வருவது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். இல்லறவாதிகளின் நடப்பியல் வாழ்வின் மீது இரகசியமாய் அவர் கொண்டுள்ள ஈர்ப்புத்தான் அவரது உணர்வுகள் முழுவதையும் பெண்களின் உலகம் மீது குவியப்படுத்தி எந்நேரமும் அவர்களை “அலச’ வைக்கிறதோ என நினைத்தாலும் அதனை நேரடியாகக் கேட்டுவிடாத சமூகத்தில் ஒருவனாகவே அவனும் இருந்தான். பலவருடங்களாக மனங்கலந்திருந்து இதய அன்பின் சுவைபிழிந்து மணம்முடித்த அவனே மனைவி என்ற பெண்மூலமாய் அறிந்து கொள்ள முடியாதிருக்கும் அவர்களின் உடலியல் ஆசை பற்றிய உள்மனக்கொதிப்புக்களை அவர் தன் மனக்கண்ணில் கண்டு அதைப்பிறருடன் பகிர்ந்து கொள்வதென்பது சாதாரண விடயமல்லத்தான். எப்படித்தான் இது அவருக்கு முடிகிறதோ? எது எப்படியிருந்தாலென்ன, அது அவனுக்குத் தேவையும் இல்லை. குழந்தைக்குப் “புறாக்காட்டப் போகும்” பொழுதுகளில் அவரது “பெண்களின் உலகு பற்றிய ஆராய்ச்சிகளைக்” கேட்கும் சகிப்புத்தன்மை மட்டும் இருந்தால் போதும்.
சுதந்திரவாழ்வின் பால் ஈர்க்கப்பட்டுத் துணையோடு பறந்தோடிவிட்ட அந்தப் புறாவின் நியாயங்களை அயல் வீட்டுக்காரர் புரிந்து கொள்ளாது இருந்தது போலவே ரம்யாக்குட்டியும் புரிந்து கொள்ளவில்லை. “புறா பார்க்கப் போவோம்” என்று அவள் பிடிக்கும் பிடிவாதம் வேறு எந்தப் போக்குக் காட்டலிலும் மறைந்து போகாதபடியிருந்தது. அந்தப் புறா பறந்து போய் விட்டதாகச் சொல்லி குழந்தையின் மேலதிக விளக்கத்துக்காகத் தூரப் பறந்து பார்வையிலிருந்து விலகும் ஒருகாகத்தைக் காட்டினான் அவன். அந்தப் பொழுதுக்கு குழந்தை அமைதியானாலும் மறுநாள் வீட்டுமுற்றத்தில் அமர்ந்திருந்த காகத்தைக் காட்டி அதுபோலப் புறா எப்போது திரும்பி வரும் என்று பிடிவாதம் பிடிக்கத்தொடங்கிவிட்டாள். வேறொரு
ច6 2006
酶

Page 17
புறா வாங்கித் தருவதாகப் பேரம்பேசிக் குழந்தையுடன் சமாதானம் ஆகியாற்று. ஆனால் பிறகு தினமும் இவன் அலுவலகம் போகும்போது எதிர்பார்ப்பைத் தேக்கி ஏமாந்து போகத் தொடங்கினாள் குழந்தை. அது அவனது நிம்மதியை குலைத்தது. அது போதாதென்று அவன் அதைப் புரிந்துகொள்ளவே இல்லையென்று மனைவியும் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டாள். அலுவலகத்தால் களைத்து வருபவனை வார்த்தைகளால் உலுக்கினாள். 'ரம்யாக்குட்டி எங்கை? கேட்டபடி வருவது அவன் இயல்பு.
“ரம்யாவும். குட்டியும்.பெரிய பாசந்தான்.”
“என்னப்பா. என்ன சொல்லுறீர் நீள்.?
“என்ன சொல்லுறது.? என்ரை பிள்ளை எந்தநாளும் புறா வருமெண்டு நினைச்சு ஏமாந்து போகுது.”
பெண்கள் தான் எவ்வளவு வேகமாகப் பிள்ளைகளை முற்றும் தமது உரிமையாக்கி விடுகிறார்கள். அவனும் முயற்சிக்காமல் இல்லை. ஆனால் குழந்தையின் ஏமாற்றத்தின் முன்பாக அவனது எந்த நடைமுறைப் பிரச்சினைகளையும் பொருட்படுத்த மனைவி தயாராக இல்லை.
“கொஞ்ச நேரம் சிலவழிச்சுப் பிள்ளையின்ரை சிரிச்ச முகத்தைப் பார்க்க விருப்பம் இல்லை.”
அவனது "தந்தைமை” யைத் தாக்கும் அவளது வார்த்தைகளில் நிறையவே காயப்பட்டுப் போனான். தொடர்ந்து வந்த சனிக்கிழமையில் புறா வாங்கியே விடுவதென்ற தீர்மானத்தோடு ஊரின் ஒதுக்குப் பக்கமாயிருந்த “கொலனிப்பக்கம்” போனான். சேரிக்குடிகளின் பிள்ளைகள் கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவனது சிவப்பு நிற மோட்டார் சைக்கிளின் உறுமல் ஒலியில் இலகுவாய்க் கவனம் திரும்பி இவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் ஓடிவந்து குழுமினார்கள். இடுப்பில் நிற்காத காற்சட்டையைக் கைகளால் பிடித்தபடி ஓடிவந்த அவர்களைப் பார்த்த அவன் மனம் பரிதாபப்பட்டது.
'தம்பியவை. இஞ்சை புறா ஒண்டு வாங்கலாமோ..?
“என்னவாமெடா..? சற்றே பெரிய பையன் ஒருவன்
சேரிக்குடிக கொண்டி( சைக்கிளின் இ
இவன் பே குழுமினா
60556
L
is sis கூட்டத்திலிருந்து 6ெ வந்தான்.
“ஒரு புறா தே “என்னமாதிரிப் பையன் இயல் கொண்டாடினான்.
“வெள்ளைப் பு நல்லது. என்ன விை Lമ്പ്രഖTuീൺങ്ങബ.'
“கொஞ்சம் நி: பையன் காற்ற திரும்பி வந்தபோது தேமேயென்று உட்க வெள்ளைப்புறா. ஆ6 பார்த்தால் புறாவின் பையன் தன் விரலிடு கொடுத்திருந்தது தெ புறாக்களின் நிலை , வெளியே தெரியாம6 சிறைப்பிடிக்கப்பட்டி நிலத்தில் விட்டான்.
‘அண்ணைக்கு சொல்லு.”
பையனின் வா தன் மூக்கு நிலத்தி முதுகுப்புற வெண்சி பரத்தியது. பையன் விலையைச் சந்தோ கொடுத்தான்.
“ஒற்றைப்புறா அண்ணை.”
பேரம் பேசாத வாக்குவாதப்படாத கண்டுகொண்ட சந்ே மெய்க்கரிசனத்தோடு “மகள் விளை போதும்.”
“சோடிப்புறா ( “புறா எறியிற வேை வைச்சிடாதேங்கோள் 96.1661 (3LDTL உதைக்கவும் பைய
酶
ஜனவரி =

களின் பிள்ளைகள் கூட்டமாய் விளையாடிக்
நந்தார்கள். இவனது சிவப்பு நிற மோட்டார்
உறுமல் ஒலியில் இலகுவாய்க் கவனம் திரும்பி ாட்டார் சைக்கிளை நிறுத்தியதும் ஓடிவந்து ர்கள். இடுப்பில் நிற்காத காற்சட்டையைக் ால் பிடித்த்படி ஓடிவந்த அவர்களைப் ர்த்த அவன் மனம் பரிதாபப்பட்டது.
வளிப்பட்டு முன்னால்
வைப்படுது தம்பி.” புறா அண்ணே.” பாய் உறவு
புறா எண்டால் லயெண்டாலும்
ல்லுங்கோண்ணை.” ாய்ப் பறந்தான். அவனது கையில் ாந்திருந்தது
னால கூாநது கால்களில் ஒன்றைப் }க்கில்
5ரியும். சில அப்படித்தான். ல் நுட்பமாய்ச் ருக்கும். புறாவை
5 வணக்கம்
ர்த்தைக்குப் புறா ல் படப் பணிந்து றகை இருபக்கமும் சொன்ன
ஷமாகக்
போதுமே
விலையில் நல்ல மனிதனைக் தாஷத்தில் பையன்
கேட்டான். யாடத்தானே.
தேடி வரச்சொல்லி
ன்னை.”
ார் சைக்கிள் ன் சொன்னான். புறா
வளர்க்கும் பையன்களிடம் இருக்கும் “புறா எறியும் பழக்கம்” அவனுக்கும் தெரியும். ஒருபுறாவை நன்றாகப் பழக்கப் படுத்திய பிறகு தனிப் புறாவாய் உயர எறிந்து விடுவார்கள். அது பறந்து போய். “இணை’யோடு மீண்டு வரும். ஏதோ ஒரு இடத்திலான இழப்பு எறிந்தவர்களின் வரவாய்ப் போய்விடும். இவன் திரும்பிக் கேட்டான்.
“ஏன் தம்பி.” பையன் தன் கூட்டத்தவரைப் பார்த்து ஒருமாதிரிச் சிரித்தான்.
"அதுக்கு உள்ச்சிறகு ஒண்டுமில்லை அண்ணை. எல்லாம் வெட்டி விட்டிட்டன்.”
முன்புறக் கூடைக்குள்ளிருந்த புறாவின் முதுகுப்புறச் சிறகிரண்டும் விரித்தான் உள்ளே சிறகு கத்தரிக்கப்பட்டிருந்த புறாவின் உடம்பு வெறும் தோலாய்த் தெரிந்தது.
“எறிஞ்சால் பிடரியடிபட விழுந்துடும் அண்ணை.”
வரதட்சணையின் பின்னும் மகனில் உரிமை கொள்ளும் பெற்றவராய்ப் பையன் புறாவை விற்றபிறகும் கவனம் சொன்னான்.
“நான் அப்பிடிச் செய்யமாட்டன் தம்பி.”
“இடைக்கிடை பார்த்துக் கத்தரிச்சு விடுங்கோ அண்ணை. சிலவேளை பறந்து போகவும் பார்க்கும்.”
பையனின் குரல் அவனது மோட்டார் சைக்கிளைத் துரத்தியது. ரம்யாக்குட்டிக்கு கரை காண முடியாத சந்தோஷம். மனைவிக்கும் தான். அவள் தான் சொன்ன வார்த்தைகளையெல்லாம் மறந்து போனது போல நடந்து கொண்டாள். வழமையான “புருஷ இலக்கணத்துக்கமைய’ அவனும் அதைக் கிளற விரும்பவில்லை. புறா வந்தபொழுதிலேயே வணக்கம் சொல்லும் வித்தையால் சகலரையும்
ஜூன் 2006
雷5

Page 18
கவர்ந்து விட்டது.
உடனடியாகப் புறாக்கூண்டினுள் தான் அதனை விட்டான். திறந்து விடும் பொழுதில் புறா விடெங்கும் தத்தித் திரிந்தது. விரும்பினாலும் அதனால் பறக்க முடியாதென்ற உண்மையை மனைவியிடம் சொல்லி பெரும்பாலான வேளைகளில் அதைத் திறந்தே விட்டான். பையன் சொன்னபடி, புறா புத்திசாலிதான். கழித்தலுக்கும் உண்பதற்கும் மட்டும் கூண்டை வைத்திருந்தது அது. ஈரத்துணி நனைத்து அதன் மேல்சிறகு ஒற்றியதில் பளிர் வெண்மையாய் ஒளிர்ந்தது. இப்போது புறா வந்து மூன்று மாதங்களாகி விட்டது. அதுவும் வீட்டின் தவிர்க்கமுடியாத அங்கத்தவராய் ஆகிவிட்டது.
பலமுறை பறக்க முயன்று தோற்றதிலோ என்னமோ புறா பறப்பதற்கான எத்தனிப்பையே கைவிட்டிருந்தது. அவன் மெல்லப் புறாவைப் பிடித்து உள்ச்சிறகு விரித்துப் பார்த்தபோது அவை சற்றே வளர்ந்திருக்கக் கண்டான். ஆனால் அது பற்றிய பிரக்ஞையே புறாவுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. எனினும் மனைவிக்கு விஷயம் தெரியவந்ததிலிருந்து அவளுக்கு அதே நினைப்புத்தான். அதன் உள்சிறகைக் கத்தரித்து விடும்படி அல்லும் பகலும், சொல்லிக் கொண்டிருக்கிறாள். À
ரம்யாகுட்டி கட்டமிட்ட ஊஞ்சலில் இருக்க, புறா அவளின் முன்பாக நின்று தன் வெளிர்ச்சிறகு பரத்தி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது. குழந்தையின் குலுங்கல் சிரிப்பில் வீடு மகிழ்ந்திருந்தது.
“என்னப்பா. உள்ச்சிறகை இண்டைக்கு வெட்டி விடுறது எண்டு நேற்றுச் சொன்னீங்கள். வெட்டிவிடுறியளே.”
புறாவுக்குத் தானியந் தூவியபடியே கேட்டாள் மனைவி. மொழிபுரியாத அப்பாவித்தனத்தோடு புறா தானுண்ணும் தானியத்தில் கவனமாயிருந்தது. அந்தப் பொழுதில் தான் வெளியே அழைப்புக் கேட்டது.
'அக்கா நிக்கிறாவோ.” மென்மையான பயந்தது மாதிரியான குரல் மாதங்கிதான். நாலாம் வீட்டுப் பிராமணப் பெண். பதினேழு வயதில் மணம் முடித்துக் கொடுத்துவிட்டார்கள்.
புருஷன் பெரிய சிவ குருக்களைய்யா. அ என்று சொன்னாலும் அந்தப் பொன்னிறத் விழிகளிலும் தாயை கொண்டிருப்பதாகச் வேண்டும். லட்சுமிநா ஒன்பது பிள்ளைகளி ஆறு பெண்களில் ஒ விட்டதில், அழகு ஒ: வீட்டுக்கு “வரும் தட் கொண்டு இத்தனை தாலிக் கொடிக்குள் புதைத்துக் கொண்டு அந்தப் பெண்.
துணிமணிக்குக் வேளாவேளைக்குச் பெண்கள் பலரும் பட பெற்று பெரிய பதவி காலத்திலும் அதிகா குளித்து ஈரக்கூந்தல் 6) Tagf666ù (3a5'TGOLD (31 ஆசாரம். அவ்வாறான இவனது பார்வையில் அந்தக் காட்சி விழுந் கோலமாவைக் கைய கொண்டு பள்ளிக்குப் வகுப்பு மாணவியை பார்த்துக் கொண்டிரு இவன் புன்னகைத்த பதிலுக்குச் சிரிக்கவி அடிக்கடி வீட்டுக்கு வி இவன் வாங்குகின்ற இரவலாக வாங்கிப் ( பொழுதுகள் பெரும்ப குருக்களைய்யாவுக்கு செய்யத் தேவையற் இல்லாத பொழுதுகள் இதழ்களின் “விட்டுவி பெண்களைப் பார்த்து பெருமூச்செறியுமோ பெண்களின் வாழ்க்ை YSLSLS S SYS S SLSLSLS S YSY LS
...G3&T6) LDT6.
(8Lur
ஏக்கத்துடன் இவன் புன்ன ஆனால்
@।
16
ஜனவரி -

ன் கோவில் வரது கடைசி மகள் நம்பலாம். ஆனால் நிலும் பெரிய 生 சேர்த்துச் சொல்ல தர் ஐயாவின் ல் நடுப்பெண்ணாக, ருத்தியாகப் பிறந்து ன்றே குருக்களப்யா சனை’ யாகக் சிறிய வயதில் கழுத்தைப்
விட்டிருந்தது
b குறைச்சலில்லை. சாப்பாடு. பிராமணப் டித்துப் பட்டம்
வகிக்கின்ற இந்தக் லையில் தலைக்குக்
முடிந்தபடி முன் பாடுகின்ற "தீவிர” ா ஒரு காலையில்
தற்செயலாக திருந்தது. பில் வைத்துக்
போகின்ற உயர்தர ஏக்கத்துடன் ந்தது இந்தப் பெண். போதிலும் ல்லை. ஆனால் பந்து கீதாவுக்காக மாத இதழ்களை போகும். வரும் ாலும்
ச் “சேவகம்’ ற இவன் வீட்டில் ாய் இருக்கும். மாத டுதலையான”
Ľi என்னமோ? ஏன் சில க மட்டும்
நம்பமுடியாதபடி நிகழ்வுப்பொழுதின் சற்று முன்பதான காலப்பகுதியிலேயே உறைந்து நின்று விடுகிறதோ தெரியவில்லை.
“கீதா.” உள்ளே திரும்பிக் கூப்பிட்டான். பதிலாய் வெளிப்பட்ட கீதா மாதங்கி கொண்டு வந்திருந்த மாதஇதழ்களை வாங்கி முக்காலியில் போட்டு விட்டு அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போனாள். பெண்கள் இருவர் கூட்டு சேர்ந்து விட்டால் பொழுதுகள் பொருள் இழப்பது உண்மை எனினும் மாதங்கி விடயத்தில் அது மெய்ப்படவில்லை. கீதாவின் மற்றைய சிநேகிதிகள் “போகமாட்டார்களோ? என்று நினைக்கும் வரை இருந்து கதைப்பார்கள். இடையிடையே படீர்ச் சிரிப்பு வேறு. அப்படி எதைத்தான் கதைத்துத் தீர்க்கிறார்களோ? கீதாவிடம் கேட்டால் “அதெல்லாம் எங்கடை விஷயம். உங்களுக்கெதற்கு?’ என்று வெட்டுத்தெறித்தாற்போலச் செல்லுவாள். ஆக அவன் ஏதும் கேட்பதில்லை. "அந்தப் புறாச் செட்டையை (G6). L (36.606LTLDUIT...”
மாதங்கி போனதும் அவனருகில் வந்து மெல்லிய குரலில் சொன்னாள் மனைவி.
"ஏன்.? ஏன் திடீரெண்டு இப்படிச் சொல்லுறீர்.?
“அந்த மாதங்கி தான் கேட்டுது. தனக்காய் ஒரு உதவி செய்வியளோ எண்டு சொல்லிப் பெரிய பீடிகையெல்லாம் போட்டுப் பிறகு தான் கேட்டுது.”
“ஏனாம்.? “நான் கேக்கேல்லை. பிராமணக்குடும்பம் தானே. அதுதானாக்கும்.”
“சிறகு வெட்டிறது பறவைக்கு வலியில்லைத்தானே.”
வக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்குப்
கின்ற உயர்தர வகுப்பு மாணவியை ா பார்த்துகே கெரிண்டிருந்தது இந்தப் பெண். கைத்த போதிலும் பதிலுக்குச் சிரிக்கவில்லை.
அடிக்கடி வீட்டுக்கு வந்து கீதாவுக்காக வன் வாங்குகின்ற மாத இதழ்களை
இரவலாக வாங்கிப் போகும்.
ဗူဗ6ōT 2006

Page 19
“சொன்னன். சிறகு வெட்டின நிண்டிட்டுப் போகட்டு பறவை செத்ததுக்குச் சரிதானே எண்டு புரியேல்லை ஏன் மா
சொல்லிச்சுது.” கேட்டுதெண்டு.”
அவன் எதுவும் சொல்லாமல் சொன்னபடியே
இருந்தான். சமையலறைக்குப் ே "திருப்பித் திருப்பிக் கேட்டுதப்பா. புறாவின் சிறகு பற்றி
விடுங்கோ. புறா நிக்குமட்டும் பெண்களிடமும் வே
எனது எதிர்பார்ப்பில்
எதனை எதனையெல்லாம் எதிர்பார்க்காமல் நடந்து விடுகிற நிகழ்வுகளுக்குள். பெருத்து வீங்கி விடுகிற காற்றுப்பையாக
ஊதும் மட்டும் சம்பவங்கள் பல இருக்கிறது!
காற்றுவெளியில் பறந்து செல்லும்
இலகுவான பலூன் போலத்தான்
இடைக்கிடை நிலை எடுக்க முடியாமல் இன்னொரு உந்துதலுக்குள்
அகப்பட்டு எதுவும் முடியாமல் போய்விடுகிறது!
நெருக்கங்களின் உணர்வுகளில் பகிரப்படுகின்ற உறவுகள் வெவ்வேறு ஊடகம் கொண்டு, எத்தகைய வலிமையானதாக இருப்பினும் அவரவர் தமக்குள் உட்படுத்தும் செயற்பாடுகளின்
வித்தியாசத்தில் கட்டியெழுப்பப்படுகின்றது
வாழ்வு!
酶 ஜனவரி - :
 
 
 
 
 
 
 
 

ம். எனக்குப் அவனுக்குச் சிந்திக்காதிருக்க
தங்கி இதைக் முடியவில்லை. மனைவி சொல்
போல மாதங்கிக்கு எழுத வாசிக்க .
கீதா மட்டுமன்றிச் சிலவற்றைச் சிந்தி
பானாள். ஒரு முடியும் என்று தோன்றியது அ6
|ய புரிதல்கள் இரு கூடவே கீதாவுக்குப் புரியாத அந்த றுபடும் விதம் பற்றி காரணமும் புரிந்து போய் விட்டி
1°. 4 قصبے. ஏ قتالوصلاض۲Tحکوے صلاحیت کو 16
வெவ்வேறுபட்ட இடங்களின் மாறுபட்ட சந்திகளுடேயும்
தெருக்கள்
ஊர்ப் போய்ச்சேருகிறது
போல
ஒவ்வொருவருக்குள்ளும். ஒன்றான சிந்தனைகளில்
அறியப்படாது ץ நடைமுறைகள் மாறுப்ட்டதாக
நினைக்கிறது
மனசு!
வேகம், தடை இரண்டும் சேர்ந்ததால் தான் ஒரு நிகழ்வாக அமைகிறது நிகழ்வுகளில் இரு விளைவுகள் இருப்பது போல இலகுபடுத்தும் செயற்பாடுகளில் கூடுதலாக முழுமை அடையாமல்
எம்மை விடுவித்துக் கொள்வதும் தெரியாமல் அகப்பட்டுக்கொண்டு சிறைப்பிடிக்கப்பட்ட நினைவுகளில் கைதுகளைப் பற்றிப் பேசுகின்றோம்!
இங்கே யார் வேண்டுமானாலும்

Page 20
ஒரு கருத்து எங்கிருந்து பெறப்பட்டாலும், யாரிடமிருந்து பெறப்பட்டாலும், அது மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு மேல்வரிச்சட்டமாக அமையுமானால் அதை நாம் நடைமுறைச் சாத்தியமாக்க முயற்சிக்கவேண்டும். அதை இலகுவாகத் தட்டிக்கழிக்க முயற்சித்தால், சமுதாயத்தின் சிந்தையில் மக் கிப் போன வண் டல் களாகப் படிந்து கிடக் கும் குருட்டுத்தனங்களையும், முரட்டுத்தனங்களையும் சுத்தம் செய்து அகற்றிவிட முடியாது. எவை தெளிவாக்கப்பட வேண்டுமோ எவை தெளிவாகப் புரிந்து கொள்ளப்படவேண்டுமோ அவற்றின் மேலுள்ள மூடுதிரைகளைக் கிழித்து அகற்றிவிடவேண்டும்.
ஓர் எழுத்தாளன், கலைஞன் தன்காலத்தின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக மட்டும் இருந்து விடமுடியாது தன்காலத்தின் சூழலுக்குள் புதையுண்டு, அஞ்சிக்கிடப்பவனாக, ՑI (Աք Ֆl வடிப் பவனாக, அடங் கரிப் போ பவனாக வு ம குறியீடீடு இருக்கமுடியாது. மானுடநேயத்தைச் சுமந்துகொண்டு, அவன் அச்சூழலைக் கடந்துபோகவேண்டும். துன்பச் சிலுவைகளைச் சுமந்துகொண்டிருக்கும் மக்கள் அவற்றை வென்றுயிர்க்க, அவர்களுக்கு அவன் ஒரு தூண்டுதலை அளிக்கவேண்டும்.
அதனால் பிரச்சினைகளைத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமல்ல, பிரச்சினைக்குரிய காரணங்களையும் அவன் கண்டுபிடித்து தெளிவாக்க வேண்டும்.
எனவே தான் சூழலுக்கேற்ப நாடகத்தில் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கும், புதிய குறியீடுகளைப் படைப்பதற்கும் ஒரு படைப்பாளிக்கு சமுதாயம் பற்றிய தெளிவான புரிதல் வேண்டும். சமுதாயத்தில் நிலவும் பொருள் சார்ந்த, சிந்தனை சார்ந்த, ஆன்மீகம் சார்ந்த தளங்கள் பற்றிய அறிவியல்பூர்வமான சிந்தனைத் தெளிவை
அவன் பெற்றிருக்கவேண்டும்.
& প্ত
“பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும்! மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்! கோணலானவை நேராக்கப்படும்! கரடு முரடானவை சமதளமாக்கப்படும்! மனிதர்கள் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்
- லூக் 3:5-6
יין
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டின் எசாயா என்ற நூலிலிருந்து புதிய ஏற்பாட்டில், யோவான் என்ற தீர்க்க முனிவரால் இந்த மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த உருவகக் குறியீடுகள் என்ன உள்ளடக்கத்தை அறிவுக்குப்புலப்படுத்துகின்றன என்பதை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம்.
மலைகள், குன்றுகள் என்பன சமுதாயத்தில் நிலவும் பொருளாதார நிலையை நமக்குப்புலப்படுத்துகின்றன. அதாவது
雷8 ஜனவரி -
 

OnGSR do Goodö
சமுதாய செல்வம் ஓர் இடத்தில், ஒரு சிலரிடத்தில் குவிந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. வறுமை, பசி, பிணி, ஒடுக்குமுறை, அடிமைத்தனம், அச்சம், துன்பங்கள் மற்றும் கண்ணிர் நிறைந்த இடங்களாகப் பள்ளத்தாக்குகள் காட்டப்பட்டுள்ளன. அத்துடன் கோணலானவை, கரடுமுரடானவை என்பன மனத்தளம் சார்ந்த சிந்தனைகள், நடத்தைகள், மரபுகள் மற்றும் மானுடப்பண்புகள் கலந்து, நெறிகெட்டுக்கிடக்கும் மனிதப்போக்குகளைச் சுட்டி நிற்கின்றன. இங்கு, "சமதளம் என்பது சமத்துவம், சகோதரத்துவம், சுகவாழ்வு நிறைந்த சமுதாயத்தைப் புலப்படுத்தி நிற்கிறது.
இந்தக் குறியீடுகள் வெறுமனே அவைகளின் உள்ளார்ந்த பொருளை அறிவுக்குப் புலப்படுத்துவதுடன் நின்று விடவில்லை.
A Ο மேற் குறித் த 3F (Up 5 Tu அறங்கு: நிலை மைகளை மாற்றி அமைபபதறகான அழுததததையும,
அத்தகைய மாற் றத் தை உருவாக் கவல் ல ஒரு தலைமைத்துவத்தையும், அதற்கான ஓர் அமைப்பையும், அதிகாரத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. “இதுவரை காலத் தத்துவ வாதிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நிலமை என்னவென்றால்
அதை மாற்றுவதுதான்’
மாமேதை கார்ல்ஸ் மார்க்ஸின் அறிவியல் பூர்வமான இந்தக் கருத்துரை, மேற்குறித்த குறியீடுகளின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது, இதுவரைகால தத்துவவாதிகள் உலகில் நிலவும் முரண்பாடுகள், மோதல்கள், துன்பங்கள், ಉಶಿಗ್ಹಹi அடிமைத்தனம் வறுை
இம்மை, மறுமை, நம்பிக்கை, வாழ்வு, மரணம் இவைகளைப்பற்றித் தங்கள் உலகநோக்குகளிலிருந்து விளக்கமளித்தார்களே தவிர, இவற்றை வெற்றிகொள்வதற்கான சமுதாய மாற்றத்தைப் பற்றிக் கூறவில்லை. ஆனால் சமுதாயத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே நம்முள் வைக்கப்பட்டிருக்கும் பாரிய பிரச்சினையாகும்.
சமுதாயம் எத்தகையதாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதை மேற்குறித்த குறியீடுகள் சுட்டி நிற்பதோடு, கடவுள் அருளும் மீட்பு (விடுதலை) என்ற சொற்றொடர், சகவாழ்வுப் பண்பு சார்ந்த ஒரு சமுதாய சூழலுக்கு ஒரு மணிமுடியாய்த் திகழ்வதையும் நாம் கண்டு கொள்ளலாம். இந்தக் குறியீடுகள் எல்லோரும் இன்புற்று இருப்பதற்கான ஓர் உன்னத இலட்சிய உலகை நம் மனக்கண்முன் நிழலாட வைக்கின்றன.
நிலப்பிரபுத்துவ பொருளாதார அமைப்பு முறை நிலவிய காலகட்டத்தில், யூத இனத்தின் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு பிரகடனம் மட்டுமல்ல, சமுதாய மாற்றத்திற்கான
ஜூன் 2006 酶

Page 21
"శ్వేrg
့် ဖွံ ့်
என்றைக்குமான ஒரு பிரகடனமாகவும் இக் குறியீடுகள் விளங்குகின்றன. மார்க்ஸின் அறிவியல் பூர்வமான கருத்துரையைப் பார்க்கிலும், விவிலியத்தின் கலாபூர்வமான குறியீடுகளின் பிரகடனம் தெளிவான பொருள் நயம் வாய்ந்தவை.
பொருளாதார சமத்துவம் இல்லாமல் சமுதாயத்தில் சகோதரத்துவம், சகவாழ்வு நிலவ முடியாது. செல்வச்சீமானுக்கும் ஏழை லாசருக்குமிடையில் சகோதரத்துவம் பற்றிக் கனவா காணமுடியும்?
பொருளாதார சமத்துவம் என்பது என்ன? ஒரு சமுகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வாதாரத்திற்கு அவசியமான பொருள்களை உத்தரவாதம் செய்யும் உற்பத்தி மற்றும் பங்கீட்டு முறையையும் கொண்டிருப்பதோடு, உற்பத்திக் காரணிகள் மற்றும் உற்பத்திப் பொருள்கள் தனிமனிதர்களின் கைகளில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், அச்சமுகத்தில் உள்ளவர்களின் பயன்பாட்டிற்கு உரியதாக்கிக் கொள்ளும் சட்டப்படியான அங்கீகாரமாகும்.
நிலப் பிரபுத் துவ காலத் தைத் தொடர்ந்து, பெரும் பான்மையான மக்கள், அவர்களது உழைப்புச் சாதனங்களிலிருந்து, வரலாற்று ஓட்டத்தில் பலவந்தமாகத் தூக்கி எறியப்பட்டு, அவற்றிலிருந்து அந்நியமாக்கப்பட்டு, எவ்வித சொத்துக்களுமின்றி, உழைப்பை மட்டும் விற்றுப் பிழைப்பவர்களாக ஒதுக்கப்பட்டதன் விளைவே பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையாகும்.
எனவே, சமுதாய செல்வம், அச்சமுதாயத்தில் உள் ள வர் களின் வாழ் வாதார தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்போது தான், அங்கு சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு சாத்தியமாகும். அத்தகைய உணர்விற்கு ஒரு தூண்டுதலை அளிக்கும் சகோதரத்துவ உணர்வென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்த விடயம் அல்ல. அது மனத்தளம் சார்ந்த விடயமுமாகும்.
நான், எனது என்ற சுயநல மனப்பாங்கு, தனிச்சொத்துடமை சமுதாய அமைப்பினால் உருவாகுவதில்லை. மாறாக, நான், எனது என்ற சுயநல மனப்பாங்கிற்குத் தனிச் சொத்துடைமை பெருந்துண்டுதலை அளிக்கிறது.
நான், எனது என்ற சுயநல மனப்பாங்கு இயற்கையானது. ஏனெனில் மனிதர்கள் கருவிலேயே நல்லவர், தீயவர் என்று உருவாகிறார்கள். இது அவர்களது பிறவிக்குணம், கிறிஸ்து எடுத்தாண்ட ஓர் உருவக ஒவியம் இதை விளக்குகிறது.
"கெட்ட கனிதரும் நல்ல மரமுமில்லை, நல்ல கனிதரும் கெட்ட மரமுமில்லை, ஒவ்வொரு மரமும் அதன் கனியினால் அறியப்படும். ஏனெனில், முட்செடிகளில் அத்திப் பழத்தைப் பறிப்பாருமில்லை,
முட்புதர்களில், திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.
நல்லவர்கள் தங்கள் உள் ளமாகிய நல் ல கருவூலத்திலிருந்து
நல்லவற்றை எடுத்துக்கொடுப்பர், தீயவரே, தீமையினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர்.”
லூக் 6: 43-45 நல்லமரம் அதன் கனியால் அறியப்படுவதுபோல், நல்லவர்களும் அவர்களது செயல்களால் அறியப்படுகிறார்கள். தீயவரும் அப்படியே. இத்தகைய எதிரும் புதிருமான குணவியல்புகளைக் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகத்தில்
ŪDUOS ஜனவரி - ஜ

(ygl" 龕
முரண்பாடும், மோதலும் தலை தூக்குவது தவிர்க்கமுடியாதது. பிறவிக் குணத்தை மாற்ற முடியாது. ஆனால் கட்டுப்படுத்தலாம். மனிதர்களது தான்தோன்றித்தனமான சிந்தனைகள், நடத்தைகள் சமூகத்தின் பல வேறு காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சமூக பொருளாதார அரசியல் மற்றும் சித்தாந்தங்கள், மதம், நம்பிக்கைகள், மற்றும் கலை இலக்கியம், பண்பாடு, சட்டம், சூழல் என்பன மனித சிந்தனைகளையும் நடத்தைகளையும் கட்டுப்படுத்துகின்றன. இத்தகைய கட்டுப் பாடுகளைச் சமூக பலாத் காரம் என்பதே மிகப்பொருத்தமானதாகும்.
இந்த அதிகாரம் ஓர் அரசியல் அதிகாரமாகும் தனிமனிதர் கைகளில் சமுதாய செல்வம் அபரிமிதமாய்க் குவிந்து கிடப்பதைக் கட்டுப்படுத்தி, மனிதரை மனிதர் சுரண்டிப்பிழைக்கும் சுயநலமனப்பாங்கை அடக்கி ஒவ்வொரு மனிதனும், அவனுக்கே உரித் தான உள்ளுறை ஆற்றலை இனங் காணவும் , வளர்த்தெடுக்கவும், அதற்கேற்ப தொழில்புரியவும், மனித இனத்திற்கும் இயற்கைக்கும் தீங்கிழைக்காத வகையில் நவீன தொழில் நுட்பங்களைக் கண்டறியவும், சூழல் மாசடையாதவாறு புதிய தொழில்துறைகளைப் பெருக்கவும், சமூகத்திலுள்ள அனைவருக்கும் நன் மை பயக் கும் வகை யரில் அனைத்துத்துறைகளிலும், கூட்டுறவையும், கூட்டுணர்வையும் முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் அதிகாரமாகும்.
உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்குமிடையில் இருக்கக்கூடிய வேறுபாடு, எந்த நபரையும் இழிவுபடுத்தாதவாறு ஒவ்வொரு தொழிலுக்கும், ஒரு தொழிலின் பல பிரிவுகளுக்கும், கெளரவம் அளிப்பதை உத்தரவாதம் செய்தல் மற்றும் பரம்பரையான, சாதிரீதியான தொழில் துறைகள், சேவைகள், குடியிருப்புகள், கோயில்கள், பாடசாலைகள், கலாசார மையங்கள் போன்றவற்றை அகற்றி, எல்லோரும் உண்டு, உறங்கி ஒய்வெடுத்துக்கொள்வதற்கு உகந்த இல்லிடங்களை அமைத்துக் கொடுத்தல் அறிவைப்பெருக்குதல், ஆய்வுகள் நடத்துதல், கலைகளிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுக் களிப்படைதல் போன்றவற்றிக்குச் சந்தர்ப்பமளிக்கும் அதிகாரமாகும்.
அனைத்துத் துறைகளிலும் பால் வேறுபாடுகளை அகற்றுதல் மற்றும் பாலியற் பலாத்காரம், பலாத்காரத் திருமணம், பெண் ஒடுக்குமுறை, சீதனக்கொடுமை, விபசாரம், சிறுவர் துஷ்ப்பிரயோகம், பாமரத்தனம், மூடநம்பிக்கைகள், மந்திரதந்திரம், வசியம், பில்லிசூனியம், பொறாமை, வஞ்சனை, பொருளாசை, புகழாசை, அதிகார ஆசை, மதவெறி, இனவெறி, சாதிவெறி, நிறவெறி போன்றவைகள் தலைதூக்காதவாறு தடுத்தல் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்குப் பொருந்தாத கல்விமுறை போன்றவற்றை நீக்குதல், பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், அவசியத்திற்கு ஏற்ப சங்கம் அமைக்கும் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம், இவைகளை மக்கள் முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரமாகும். சாராம்சத்தில் இது ஒரு கலாசாரப் புரட்சியுமாகும். அநியாய வட்டி, கள்ளத்தராசு, கலப்படம், அநியாய விலை, தரமற்ற மற்றும் சுகாதாரக் கேடான பொருள்களின் விற்பனை, ஊழல், மோசடி, கையூட்டுப் போன்ற கேடுகளை சகல நிர்வாக, தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறைகளிலிருந்து கண்டிப்பாக அகற்றிவிடும் அதிகாரமாகும்.
மனிதர் களை நேசிக் கும் மனிதர் களால்
கட்டியெழுப்பப்படவேண்டிய, கட்டியெழுப்பக்கூடிய இந்த உன்னத
25টা 2006 19

Page 22
சமுதாயம் ஒரு மனோராட்சியம் (Utopia) அல்ல கடவுளின் மேலும், விதியின் மேலும், கர்மாவின் மேலும் பழியைச் சுமத்திவிட்டு இலகுவாகத் தப்பித்துக் கொள்ளாமல், எல்லோரும் இன்புற்றிருக்கக் கட்டியெழுப்பப்படவேண்டிய ஓர் உன்னத இலட்சிய உலகமாகும். உலகில் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீவாக, நம்முன்வைக்கப்பட்டிருக்கும், கடினமான சவால்கள் நிறைந்த நடைமுறை வேலைத்திட்டமே இந்த உன்னத சமுதாயத்தைச் சாத்தியமாக்க வல்லது. சமுதாயம் எவ்வாறு இருந்தது, இருக் கிறது, எ வி வாறு இருக் க மாற்றியமைக்கப்படவேண்டும் என்பதை இக்குறியீடுகளின் தொகுதி நமது அறிவுக்குப் புலப்படுத்துகிறது. வாழ்க்கையைப் பற்றிய பொய்யான கற்பிதங்கள், விளக்கங்கள் அடையப்படவேண்டிய இந்த இலட்சிய உலகிற்கு ஏற்புடையவை அல்ல.
யூதர்களிடையே ஆன்மா சார்ந்தவற்றிற்கும், உலகம் சார்ந்தவற்றிற்குமிடையே, எந்தவிதமான, தெளிவான வரையறுக்கப்பட்ட வேறுபாடு கிடையாது அது இவ்வுலகினுடாக மறுவுலகை நோக்குகிறது. மறுவுலகினுடாக இவ்வுலகைச் சமநிலையில் வைக்கிறது. அதற்கு விண்வேறு, மண்வேறு அல்ல. அதனால், அது சமுதாய முன்னேற்றத்திற்கான புரட்சிகர நடவடிக் கைகளையும் ஆன்மீகச் செயற்பாடாகவும் , பிரார்த்தனையாகவும் பிரகடனம் செய்கிறது.
“ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் (கடவுள்) உண்ணா நோன்பின் நாளென்று தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த் திச் சாக்குடையையும் சாம்பலையும் அணிந்துகொள்வதா எனக்கு (கடவுளுக்கு) ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும், கடவுளுக்குரிய நாளென்றும் அழைக்கிறீர்கள்?
கொடுமைகளின் தளைகளை அவிழ்ப் பதும் , நுகத்தடிகளின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தடியையும் உடைப்பதும் அன்றோ நான் (கடவுள்) தேர்ந்து கொள்ளும் நோன்பு பசித்தோருக்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமற்றோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்துவருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் (கடவுளாகிய நான்) விரும்பும் நோன்பு!”
இப்படி எசாயா என்ற தீர்க்க முனிவர் தமது நூலில் (எசா.58:5-7) கடவுள் கூறுவதாக, கடவுளின் சார்பில் புரட்சி முழக்கமிடுகிறார். ஆனால், இங்கு தெய்வம் விடைகொடுத்தாலும் பூசாரி அனுமதிக்காத நிலைமைதான் நிலவுகிறது.
“யூதர்கள் ஒரு கடவுள் கோட்பாட்டை உலகிற்கு அளித்தார்கள். சமுதாய நீதியைப்போதிக்கும் முதல் வேதம் அவர்களுடையதாகும். கிரேக்கர்கள் மனவிடுதலையை அளித்தார்கள். ஆனால் யூதர்கள் சகோதரத்துவத்தைக் கொடுத்தார்கள். கிரேக்கம் பண்பாட்டைப் பெற்றிருந்தது. ஆனால், இதயத்தைப் பெற்றிருக்கவில்லை. அதன் தத்துவஞானிகள் கூட அடிமைத்தனத்தைப் பாதுகாத்தார்கள். கிரேக்கள்கள் கலையையும், விஞ்ஞானத்தையும் உண்டாக்கினார்கள். ஆனால், உலகில் சமுதாய நீதியையும் மனித உரிமைகளையும் உண்டாக்க, யூதர்களுக்கு அவை விட்டுச்செல்லப்பட்டன.”
“உலக மதங்கள் ஒரு தத்துவப்பார்வை” என்ற நூலில் அதன் ஆசிரியர் வில்டியூரென்ட் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
2O - ஜனவரி - 8

இந்தச் சமுதாயநிதியைக் கட்டியெழுப்பும் ஒரு நடைமுறைக் கோட்பாட்டையும், வேலைத்திட்டத்தையும் மேற்குறிப்பிட்ட குறியீடுகள் நமக்குத் தெளிவாக்குகின்றன. இதற்குத் தீர்க்கதரிசனமும், அஞ்சாமையும் வல்லமையுமுள்ள ஒரு தலைமைத்துவம், ஒர் அமைப்பு, அதற்கான அதிகாரம் அவசியம் என்பதை அவை மறைமுகமாகக் குறிப்பிடுகின்றன.
இந்த அரசியல் அதிகாரத்தின் தன்மைபற்றிக் 'கலைமுகம் புரட்டாதி - மார்கழி 2005இல் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மனித நேயமே இந்த அதிகாரத்தின், நலன்கொளி நல்லாட்சியின் மூலாதாரமாகும்.
மதம் சார்ந்த தளத்தில் ஆன்மீகக் குறியீடு
மதம் சார்ந்த குறியீடு, அதன் எல்லைக்கு அப்பாற்பட்டு, அதற்கே உரித்தான உண்மையைச் சுட்டிக்காட்டி, அதனுடைய ஆற்றலில் பங்குபெற்று, அதன் பொருளை அறிவுக்குப் புலப்படுத்துகிறது. பாற்கப்படாத ஒன்றின் பூடகமான பொருளை இலகுவாக விளக்குவதே குறியீட்டின் தனிச்சிறப்பாகும்.
மதம் சார்ந்த தளத்தில் மேய்ப்பன்' என்பது கடவுளான பரமாத்மாவையும், மந்தை' என்பது மனிதனாகிய ஜீவாத்மாவையும் சுட்டி நிற்கின்றன. தாவீது மன்னன், மேய்ப்பனாகிய பரமாத்மா தன்னை வழிநடத்துவதால் ஜீவாத்மாவாகிய தான் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்ற பொருள் படப்பாடிய பாடல் ஒன்றை நமது கவனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
"ஆண்டவர் எனது நல்ல ஆயன், எனக்கேதும் குறையில்லை பசும் புல் வெளிகளில் அவர் என்னை இளைப்பாறச் செய்வார். அமைதியான நீர்நிலைக்கு அவர் என்னை அழைத்துச் செல்வார். சாவின் இருள்சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சமாட்டேன். உமது கோலும் கவனும் என்னைத்தேற்றும்’.
திரு.பா.23:1-4. இந்தப்பாடல் மதம் சார்ந்த தளத்தில் பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவிற்குமிடையில் இருக்கக்கூடிய, ஆன்மீகம் சார்ந்த நெருக்கமான, பக்திபூர்வமான உறவு நிலையை எடுத்துக் காட்டுகிறது. பசும்புல்வெளி, அமைதியான நீர்நிலை, வீடுபேறு குறித்த உருவகங்களாகும். வீடுபேறு என்பது இங்கு ஓர் இடம் (சொர்க்கம்) அல்ல. அது பரமாத்மாவோடு ஜீவாத்மா உளஞ்சார்ந்திருக்கும் உறவு நிலையின் ஒரு சுகானுபவமாகும். பரமாத்மாவோடு இணைந்திருக்கும் ஜீவாத்மாவிற்கு அச்சம் என்பது இல்லை. சாவின் இருள் சூழ்ந்த பள்ளமாகிய உலக நெருக்கடிகளுக்குள், பந்தங்களுக்குள் வாழநேர்ந்தாலும், ஜீவாத்மாவைப் பரமாத்மா தனது கோலும் கவணும்போன்ற அருளால், அன்பால் அணைத்துக் காப்பதனால் ஜீவாத்மாவாகிய தான் (தாவீது) எதற்கும் அஞ்சவேண்டியதில்லை என்று அவன் பரமாத்மாவின் மகிமையைப்போற்றுகிறான்.
சரணடைதல் என்பதன் அர்த்தம் ஆழமானது. ஒருவன் தனது சுயத்தை உடல், பொருள், ஆவியை இன்னொருவரிடம்
ఫ్లోరె61 2006 酶
龜壟

Page 23
மனமுவந்து அர்ப் பணித்து விடுவதாகும் எதிரிக்கு முகங்கொடுக்கமுடியாத ஆற்றாமையினால், தன் உயிரைக்காக்க ஒருவன் எதிரியிடம் சரணடைவது போன்றதன்று இது தன் எதிரியுடன் போரிடும் ஒருவன் அவனை எதிர்கொள்ள வலுவற்றுப் போவதனால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, பலம் வாய்ந்த மன்னன் ஒருவனின் கோட்டைக்குள் புகுந்து அவனிடம் சரணடையும் நிலைக்கு இதனை ஒப்பிடலாம். சரணடைந்தவனைச் சரணமளிப்பவன், தன்முழு இதயத்துடனும் ஏற்றுக்கொள்ளச்சித்தமாக இருப்பது இந்த உறவுநிலையின் முக்கிய அம்சமாகும். இனிச்சரணடைந்தவனைப் பாதுகாப்பது, சரணமளிப்பவனின் முக்கிய பொறுப்பாகிவிடுகிறது. உலக வாழ்க் கைப் போராட் டத்தில் ஏற்படும் நெருக்குதல்களாலும், துன்பதுயரங்களாலும் சாவுபற்றிய அச்சுறுத்தலாலும், மலபந்தங்களுக்குள் சிக்குண்டு, ஆன்மா குன்றிப்போன ஜீவாத்மா (மனிதன்) பரமாத்மாவிடம் தன்னை முழமையாக ஒப்படைத்து விட்டதும் அது ஒரு புதுப்பிறப்படைகிறது. வாழ்க்கையின் நெருக்கடிகள், சாவின் பயம் இவைகளை எதிர்கொள்ளும் துணிவைப் பெற்று விடுகிறது. தாவீது மன்னன் இறைவனிடம் சரணடைந்ததினால் ஏற்பட்ட மனத்துணிவின் ஆன்மாவின் இராகமே இந்தப்பாடல்.
விவிலியத்தில் வரும் மேய்ப்பன் (பரமாத்மா) என்பதன் சிறப்பான அம்சம் என்னவென்றால், வழிதவறிநெறிகெட்டு உலக மலபந்தங்களுக்குள் தொலைந்துபோன ஒரு ஜீவாத்மாவை (மந்தையை) பரமாத்மா தேடி அலைந்து, கண்டுபிடித்து, அதைத்தனது தோழிலே சுமந்து வந்து தனது வீடுபேறான இன்பப்பட்டிக்குள் அடைத்து மகிழ்வதுதான்.
“பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து” என்று திருவாசகம் கூறுவதுபோல், பரமாத்மா இங்கு தாயினும் மேலான இடத்தை அடைகிறது பிள்ளைக்குப் பசித்தால் தாயின் முலை இரங்குகிறது. ஜீவாத்மாவாகிய பிள்ளை உலக பல பந்தங்களுக்குள் சிக்குண்டு ஆன்மதாகத்தால் துன்புறும்பொழுது பரமாத்மா அதற்காக இரங்குகிறது. அதைத்தூக்கி வந்து, மீட்பு (விடுதலை) என்ற அருளமுதை ஊட்டுகிறது. “பெற்றதாய் தன் பிள்ளையை மறப்பதுண்டோ? அவள் அப்படி மறந்தாலும் நான் (கடவுள்) உன்னை மறவேன்.” என்று பரமாத்மாவின் எல்லைதாண்டிய அன்பைச் சுட்டிக்காட்டுகிறார் தீர்க்க முனிவர் எசாயா, அதனால்தான், ஜீவாத்மா தன்னைப்புறக்கணித்துத் தூரவிலகிச் சென்று (மத்.28:12-13) உலக மாயைக்குள் புதையுண்டுபோனாலும், பரமாத்மா அதைத்தேடிச்சென்று பாதுகாக்கத் திருவுளங்கொண்டு செயற்படுகிறது. ஜீவாத்மா இவ்வுலகில் துன்புறுவது பரமாத்மாவிற்கு ஏற்புடையதன்று. அது இவ்வுலகில் இன்புற்றிருக்கவேண்டும் என்பதை பரமாத்மாவின் திருவுளம்,
எதிர்பார்க்கின்றோம்.
硕卿确 ஜனவரி
 
 

ஆனால், கிறிஸ்துவின் இறை அனுபவம் வேறுபட்ட ஆழ்ந்த பரிமாணத்தைக்கொண்டது. அதை அவர் ஓர் உருவக ஒவியத்தால் விளக்குகிறார்.
“நல்ல ஆயன்நானே! தந்தை (பரமாத்மா) என்னை (ஜீவாத்மாவை) அறிந்திருக்கிறார். நானும் அவரை அறிந்திருக்கிறேன். அதுபோல் நானும் (பரமாத்மாவும்)
6T60 - ஆடுகளை (ஜீவாத்மாக்களை) அறிந்திருக்கிறேன். என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக என் உயிரைக்கொடுக்கிறேன்’ யோவான். 10:14-15,
இங்கு தந்தை மகன் உறவு சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு புறத்தில் யேசு கடவுள் மகன் என்பதால் ஜீவாத்மா என்றாகிறது. மறுபுறத்தில், ஜீவாத்மாக்களுக்கு (ஆடுகளுக்கு) மேய்ப்பனாக இருப்பதால் யேசு பரமாத்மா என்றாகிறது.
ஒருவர் ஒருவரை அறிந்திருக்கும் நிலையானது வெறுமனே ஒருவரை ஒருவர் அறிந்திருக்கும் உறவுப்பந்தம் இல்லாத நிலை அல்ல. ஒருவன் தன் மனைவியை அறிந்திருக்கிறான்; மனைவியும் தன் கணவனை அறிந்திருக்கிறாள் என்ற அன்னியோன்னியமான, உடல், உளம், சிந்தனை, இரசனை, நடத்தை சார்ந்து, பரஸ்பரம் புரிந்து, பிணைந்து வாழும் உறவின் சங்கமமாகும். இதுபோன்றதுதான் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கும் ஆன்மீகம் சார்ந்த உறவு நிலையாகும் பரமாத்மாவை அறிந்திருக்கும் ஜீவாத்மா உலகவாழ்வின் நெருக்கடிகளுக்கு அஞ் சுவதில் லை, துண் பத் தில் உழல் வதில் லை, சஞ்சலப்படுவதில்லை, பரமாத்மாவிற்குள் அது அமைதியில் துயில்கிறது. தாயின் முலையில் பாலமுதுண்டு சுகங்காணும் குழந்தையைப் பார்த்துத் தாயானவள் இன்புறுவதுபோல், ஜீவாத்மாவைப் பார்த்துப் பரமாத்மா அக்களிக்கிறது. இந்த உறவுநிலைதான் முத்தி.
தன் ஆடுகளான ஜீவாத்மாக்களுக்காக, மேய்ப்பனாகிய பரமாத்மா தன் உயிரைக் கொடுப்பதானது, இவ்வுலகில் ஜீவாத்மாக்கள் புரியும் பாவங்களுக்குப் பரிகாரப் பலியாக, அவற்றிற்கு வீடுபேறு அளிப்பதற்காக தன்னை மரணத்திற்கு உட்படுத்தும் அன்பின் நிலையாகும். இங்கு, கிறிஸ்துவின் பாடுகள், மரணம் என்பன ஆன்மீகம் சார்ந்த தளத்தில் மீட்பின் செயலாகும்.
எனவே, குறியீட்டின் மதிப்பானது, தெளிவுபடுத்தலும் எளிய அர்த்தமுள்ள முழுமையைச் சுருக்குதலுமாகும் என்பதை நாம் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும். (தொடரும்) ெ
விரைவாக அனுப்பிவையுங்கள். மற்றும் கலைமுகம் பற்றிய உங்களது கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். ஆக்கங்கள் மற்றும் கருத்துக்களை
366, ខ្សថ្រាងៃ ខ្សអ៊u,
கலைமுகம் திருமறைக்கலாமன்றம் 238 பிரதான வீதி யாழ்ப்பாணம்
ஜூன் 2006 2督

Page 24
s s S
黑
ܠܢ
கனவாய் உதிர்ந்த இரவு
யாரையுமே வருடாத உன் முகத்தை அந்த இரவுகளுக்குப்பின் காணமுடிந்ததில்லை.
நான் உனக்காகக் காத்திருந்தேன். நினைவுச் சுவர்ப் பாளங்களில் கண்ணிர் முகத்தோடு துயரின் குறியீடாய் உறைந்துபோயினாய்
எந்தப்பகலும் உன்னுடையதாயில்லை மினுங்கும் கரிய பிசாசுகளைத் தோளில் சுமந்து திரியும் மனிதர்களிடம் தோற்றிருந்தாய்
எந்த இரவும் உன்னுடையதாயில்லை கனவுகள் குலைந்த நாளில் இரவுகளையும் பறிகொடு
நீ பேசாதிருந்த இரவு
கண்கள் முழுவதும் முட்கள்
உனது பார்வைகளிலிருந்து விலக்கப்படுவதை யுணர் காற்றோ சருகுகளுக்கிடையில் செத்துக்கிடந்தது
ஒரு நாயின் ஊளையை இன்னொரு நாய் தின்றுதொன்
உனது ஒரு சொல்லும் வெளிச்சம் பாய்ச்சுவதாயில்லை மெளன இடிபாடுகளுக்குள் வார்த்தைகளில் புதர்மண்பு
நான் தூங்காமலே விடிந்த இரவில் கனவு கண்டு சிரித்தபடியிருந்தாய்
நான் வெளியேறிய இரவு
இதயத்தின் நாளங்கள் அறுந்து போயின கடலில் அலைகளில் உருவம் உடைந்து எனது முகம் அலைந்தபடியிருந்தது.
நீ நினைத்தேயிருக்க முடியாத் தூரத்தில் நான் பயணித்தபடியிருந்தேன் முடிவில் நான் கண்டது காடுகளை இருளில் முகம் தெரியாதவர்களின் வார்த்தைகளைக் ே
நள்ளிரவின் திகிலூட்டும் ஒலிகளுக்கிடையில் கனவின் ஈரித்த நிறங்களில் ஒளிரும் நாய்களின் கண்க பல முறையும் திடுக்குற்றுத் துயருற்றேன்.
இரவில் கால்களுக்கிடையில் அன்று உடைந்துகிடந்த பகலின் ஒளித்துண்டுகளை அதன் பிறகு ஒரு போதுமே நான் கண்டதில்லை
22
ஜனவரி - ஐ
 

சித்தாந்தன் கவிதைகள்
த்தாய்
ந்தேன்
லைத்தது
2ற்று
கேட்டேன்
5ள் கண்டு
2012,2OO2
ဗူဗဧér 2006 酶

Page 25
*ািঞ্জন্টুি ভুঞ্জ ঞ এরা
5B இல் இருந்து இறங்கியபோது அந்தக்குரல் கேட்டது:
“ஏய். சிலோன்காரரே உங்களத்தான். திருப் பரிப் பார்த் தேன் . ஆளை மட்டுக் கட்டமுடியவில்லை. ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தையொன்றைக் கைப்பிடியாக பிடித்து இழுத்தபடி, என்னை நோக்கி அவள் ஓடிவந்தாள்.
நெருக்கத்தில் அவளது அழகு ஒரு உதைப்பைத் தந்தது. திரட்சிகொண்ட உதடுகளில் லேசான சிரிப்பு அவளது கண்களும் சிரித்தன. பிரம்மசிருஷ்டியின் பூரணப்பொலிவுடன் அவள் இருந்தாள். தாய்மை அடைந்து, பெற்றுப் பேறுகண்ட பின்னரும் அவளது அழகு சிந்தாமல் சிதறாமல் இருப்பது எனக்கு வியப்பைத்தந்தது.
“வரதலக்சுமிதானே.” பத்தாண்டுகளுக்கு முன்னைய நினைவுகள் அவளைத் தொட்டிருக்கவேண்டும். அவளது கண்கள் லேசாகத் திரையிட்டன.
“ழரீதரா. சுகமாகயிருக்கேளா..? பேசும்போது அவளது உதடுகள் துடித்தன. பெரிய கண்களும் படபடத்தன.
எனது பெயரை அவள் ஞாபகத்தில் வைத்திருந்தாள் இளமையில் எனது மனதில் பசிய தடங்களைப் பதித்தவளென்ற அளவில், அவள் கைப்பிடியில் இருப்பதான உணர்வே எனக்கு அப்பொழுது ஏற்பட்டது. "தெய்வாம்சம் ஒளிர - சிறு பிச்சியாய், பேதையாய் என்னை வளைய வந்தவள், இன்று இப்படிக் குடும்பம், குழந்தை என்ற லெளகீகப் பிடிமானங்களுடன்.
?_豹
“என்ன வரதா இந்தப்பக்கம். சின்னக்காஞ்சியில இப்ப 96)606)ust...?'
“நீங்க பி.யூ.சி பாசாகி, விவேகானந்தா வந்தப்ப, நான் கண்ணாலமாகி ஆம்படயானோட திரவல்லிக்கேணி வந்துட்டேன்’ “திருமணமாகிப் பத்தாண்டுகளா..? குழந்தை இவன் LDGLDT...?'
“இன்னும் இருக்கான். இவனுக்கு ரெண்டு வயசுக்கு மூத்தவன். பேரு முரீதரன். உங்கபேருதான்.”
éé 35
இதென்ன சினிமாத்தனம் என நினைத்த நான் பேச்சொழிந்து, அவளையே பார்த்தபடி நின்றேன். அவள் தொடர்ந்து பேசினாள்:
“கண்ணாலம் எல்லாம் ஆச்சா.?”
“இன்னும் இல்லை. சிஸ்ரேர்ஸ் இருக்கினை. மூண்டு பேர். அவையஞக்கு ஆன பிறகுதான் எனக்கு எல்லாம்.”
“ஐயே..! என்னக் கண்ணாலம் பண்ணி இருந்தாலும் குஞ்சும் குறுமானுமா ரெண்டு மூணு இப்ப இருந்திருக்கும்.’
அவள் தொடர்ந்து பேசினாள்:
“கிழக்கு மாட வீதியிலதான் இருக்கோம் சந்நிதித்தெருக்கு நேரெதிர்க்க நம்பர் பத்து. இவனுக்கு அப்பா இத்தியன் பாங்கில
酶 ஜனவரி -
 
 

வேல பார்க்கிறா. அதால ஜாகைய இங்க மைலாப்பூருக்கு மாத்திண்டோம். ஆத்துக்கு வாங்க, அவங்களையும் பார்த்துப் பேசினாப்ப இருக்கும்.”
“என்ன பேச்சேயே காணோம். பழசெல்லாம் நினைக்கிறாப்பில.”
நெருக்கமாக வந்து, எனது கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளது கரங்கள் குளிர்ச்சியாக இருந்தன.
திரையிட்ட கண் களில் இருந்து உதிர்ந்த நீரைத்துடைத்துக் கொண்டாள்.
"ஆத்துப்பக்கம் எப்ப வாறேள். சொல்லுங்கோ.” குரலில் கெஞ்சுதல். “LUFTËTILLD.” “என்ன பார்க்கிறது. கட்டாயம் வாங்கோ. நாள சாயந்தரமா. நான் பார்த்துண்டேயிருப்பன் ஆத்துக் காரருமிருப்பார்’ கூறியவள், விசுக்கெனப் பிரிந்து சென்றாள். குழந்தையும் அவளுடன். சற்றுத் தொலைவு சென்றதும் திரும்பி என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, கிடு கிடுவென அவள் மேலே நடந்தாள். எனக்கு அவளது அழைப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் போலத்தோன்றவில்லை. எதனையும் என்னால் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை. 'திகைப்பூண்டில் அழுத்தமாகவே கால்பதித்து நிற்பது போலிருந்தது.
மாடவீதிச் சனநெரிசலில் அவள் மறைந்துவிட்டபோதும் எனது நினைவு மட்டும் அவளுடனேயே இருந்தது.
“Liġi 60oġfu JLJLJ T6OJT...?” பூ உதிர்வதுபோல, மயில்தோகையின் வருடுகைபோல அந்தக் குரல் இருந்தது.
பக்கத்து வீட்டுத் திறந்த மாடியில், என்னைப் பார்த்தபடி அவள் நின்றாள். அவளைச் சூழ, கசிந்து சிதறும் பிரபை என்னை வியப்பிலாழ்தியது. அம்மன் சிலையின் சாயல் அவளில்.
எங்களது விடுதி, அவளது வீடு மாதிரித் தோற்றமும் அமைப்பும் உடையதாக இருந்தது.
வாசலுடன் கூடியமுன் திண்னை ஒன்றைக்கதவு, கதவைத் திறந்தால் நேர்கோட்டில் தெரியும் பின்வளவு நடுக்கூடம் கூடத்துக்கு முன்பின்னாக அறைகள். திறந்தமாடி பின்வளவில் கிணறு அடைப்பு மலசலகூடம். சில பன்றிகள்.
அவளது வீடும் எனது விடுதியும் தென்மாட வீதியில் இருந்தன. மாட வீதிகளில் உள்ள இத்தகைய வீடுகள் சிலதைத் தான் கல்லூரி மாணவர்கள் விடுதியாகப் பயன்படுத்தினார்கள். மாணவர்களது 'மெஸ் டோல்கேற்றில் இருந்தது.
என்னை நெருங்கிவந்த அவள், மீளவும் பேசினாள்: "பஸ்ட் இயரா.? பி.ஏ.வா, பி.எஸ்.ஸியா..? “இல்லை பி.யூ.ஸி.” எனது குரலின் நடுக்கம் அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும்.
“பெட்டைப்பிள்ள எண்ணு பயமா..? பேசப்படாதா..? ம். நான் பத்தாவது வாசிக்கிறன். பெரியகாஞ்சி டி.ஜி.எஸ்.சில்.’
ஜூன் 2006 23

Page 26
“பேசவராதா. ஊமையா.?” அவள் கெஞ்சும் குரலில், மிகுந்த பாந்தமுடன் என்னைப் பார்த்தபடி நின்றாள்.
அவள் மனிஷியாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்கு பதிநான்கு அல்லது பதினைந்து வயதுதான் இருக்கும். அவளது கண்கள் பெரிதாக இருந்தன. கண்மையிட்டதால் இன்னும் இன்னும் பெரிதாக. தந்தநிறம்; கொஞ்சம் மஞ்சள் கலந்து பூசியது போலவும் இருந்தது. குருத்துப்பச்சைப் பட்டுப்பாவாடை தாவணியில் அவள் பளிச்சென்றிருந்தாள். சிறிதாகத் திரட்சி கொள்ளும் மார் பகங்கள் . கூர் மையான நாசியையும் அடர்ந்த கண்புருவங்களையும் இன்றெல்லாம் பார்த்தபடி இருக்கலாம் போலிருந்தது. ஈரமான உதடுகள் பளபளக்க, அவள் மீண்டும் பேசினாள்:
“நெடு நெடு எண்ணு வளர்ந்து நெருப்பு மாதிரி இருக்கேள். முழந்தாளைத் தொடுராப் பல கைகள், விரிந்த தாமரைப் பூவாப் பாதங்கள். எல்லாமே தெய்வாம்சமா இருக்கோன்னோ. சித்த இந்த மீசையை மட்டும் மழிச்சிடுங்கோ. பார்க்கறத்துக்கு சாட்சாத் பகவான் மாதிரியே ஆயிடுவேள். காஞ்சி வரதராஜனே எனக்குப் பக்கத்தில வந்து நிக்கறாப்பல இருக்கு.”
நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது போல அவளது கலகலத்த பேச்சு இருந்தது.
'இதெல்லாம் எதனால்..? அவளது வயதின் தயக்கமற்ற துருதுருப்பினாலா, அல்லது. அல்லது அவளின் இயல்பான துடிப்பினாலா..?
நான் குலுங்கிச் சிரித்தேன். சிரித்தவன் - இது சரியான பைத்தியம். சாமிப் பைத்தியம்' என நினைத்துக் கொள்ளவும் செய்தேன்.
எனது சிரிப்பு அவளுக்கு எரிச்சலூட்டி இருக்க வேண்டும். சிணுங்கியபடி விலகியவள், வேகமாகிப் படிகளில் இறங்கிக் கீழே போனாள். -
இரண்டு நாள் கழித்து, அவள் மீளவும் தானாகவே, மொட்டை மாடிப்பக்கம் வந்தாள்.
எதுவுமே பேசாமல் கைகளில் இருந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்து, உரத்தகுரலில் நெட்டுருப் போட்டாள். குரலில் ஸ்தோத்திரம் சொல்லும் பாவனையே தெரிந்தது.
“விஷ்ணு ஸ்தோத்திரமா..? “மண்டு, மண்டு. இது கூடத்தெரியல. ஸ்கூல் நோட்டு.” உதடுகளில் கிறலாய் மலர்ந்த முறுவலுடன் நெருங்கிவந்தவள், கையில் இருந்த நீலமலர்களை எடுத்துத் தந்தாள். “விஷ்ணுகாந்தி. பகவானுக்கு இஷடமான புஷ்பம், சூடிக்கொள்ளுங்கோ.”
அப்பொழுது கீழே குரல் கேட்டது “அம்மா கூப்பிடறா. கொஞ்சம் பொறுங்கோ.” என்று கூறியவள், படி இறங்கிப்போனாள். அவளது நடையில் அவசரம் ஏதும் இருக்கவில்லை.
மறுநாள் மாலை, செக்கல்பொழுது. படிஇறங்க நான் நினைத்தபொழுது, “றிதரா.” என்ற அழைப்பு அவளது குரல்தான். எனது மாடிக்கு அருகா வந்து, “கைகொடுங்கோ நான் அத்தண்ட வரணும்.”
எனது கைகளைப் பிடித்து, அநாயாசமாகத் தாவி, எனக்கு அருகாக வந்து நின்று கொண்டாள். நெருக்கத்தில் அவளது கண்மலர்கள் படபடத்தன. உதடுகளிலும் பளபளப்பு, கொச்சம் ஈரமும். அவளது மூச்சுக் காற்றை எனது உடல் ஸ்பரிசித்தது.
24 ஜனவரி -

அவளது கரங்களைத் தொடர்ச்சியாகப் பற்றியிருப்பதை உணர்ந்து, கைகளை உதறிக்கொண்டேன்.
"கூச்சமா..?’ என்று குழைந்தவள், எனது கரங்களை எடுத்துத் தனது உள்ளங்கைகளுள் பொதித்துக் கொண்டாள். அவளது கைகளில் இருந்த இளஞ்சூடு என்னைக் கிறங்கவைத்தது.
அவளது கரங்கள் ஏனோ மேலும் பரபரப்படைந்தன. எனது சட்டைப் பொத்தான்களை கழற்றினாள். மிகுந்த பரவசமுற்றவளாய், எனது மார்பில் இளசாக அரும்பி மலர்ந்திருந்த, மயிர்க்கற்றைகளில் தனது விரல்களை நுழைத்து, ஒருவித மயக்கத்துடன் துழாவினாள். திடீரென அவளது கண்கள் ஜோதி ரூபமாய் ஒளிர்ந்தன. கலவிக் களிப்பில் படபடக்கும் பெண்புறாப்போல, அவளது குரல் மிகுந்த கிளர்ச்சியுடன் ஒலித்தது. “இதோ. இதோ மாரில ஹிவச்சம் கூடஇருக்கே.!” எனது மார்பில் இருந்த மச்சத்தில் - பிறவிமறுவில் - அவள், தனது விரல்களை அழுத்தமாகப் பதித்து, ஸ்பரிசித்தாள்.
“என்ன இது. விசராட்டம் கையை எடம்மா..!’ "பைத்தியமா..? இல்ல, பகவான்ர ஜாடை உடையவர அவரோட ரீவச்ச மச்சமுடையவர. ஆம் படையான அடயறது தெய்வனுக்கிரகமோன்னோ.”
“பகவானா. நானா..?” மீளவும் சிரித்தேன். அவள் பிச்சியாய் பிதற்றுவது மட்டுமல்ல, நடத்தையிலும் அப்படியே இருப்பதுபோல எனக்குத் தோன்றியது.
அவளது படபடப்பு இன்னும் ஒய்ந்தபாடில்லை. எனது கழுத்தைத் தனது இரு கைகளாலும் வளைத்து, தனது உயரத்துக்கு வாகாக வைத்தபடி, எனது கண்களில் முத்தமிட்டாள்.
எனது ஸ்பரிசம் தெய்வத்தைத் தீண்டியதான இன்பத்தை அவளுக்குத் தந்திருக்கவேண்டும். அவள் உதடுகளசைய ஏதோ முணுமுணுத்துக் கொண்டாள்.
“விஷ்ணுசகஸ்ரநாமமா..?” கண்கள் ஒளிர, எனது கரங்களில் இருந்து விடுபட்டவள், எனது உதவியில்லாமலே தனது மாடியில் இறங்கிக் கொண்டாள். திரும்பிப்பார்க்காமல் நடக்கவும் செய்தாள்.
ஆராவது இதைப் பார்த்திருந்தால். பயம் அழுத்தமாக என்னைக் கெளவிக்கொண்டது. அதே சமயம் ஆணுக்கே உரிய சபலபுத்தியும் துர்க்குணமும் என்னுள் தழைந்தது. இவளை. இந்தப் பெட்டையை பட்டும் படாமல் பயன்படுத்திக்கொண்டால் என்ன. என்று மனசில் லேசான கீறல் விழவும் செய்தது. அடுத்தகணம் 'அது பாவமோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது.
தொடர்ந்து ஐந்தாறு நாள் அவளை நான் பார்க்கவில்லை. 'வீட்டுத்தூரமாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டேன். அவளை மீளவும் நான் பார்த்தபோது, அவள் தனது தாயாருடன் வாசல் பக்கமாக நின்றாள். என்னைக் கண்டு கொள்ளவில்லை. அவளது அந்த அலட்சியம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
தூரத்தில், மாடவீதியில் வந்த கீரைக்காரியைக் கண்ட அவளது தயார், குரல் கொடுத்தாள். கீரைக்காரி, தலையில் சுமந்து வந்த கீரைப்பிடிகளடங்கிய வட்டச்சுளகை, சற்று முன்னாக வந்து, அவர்களது வீட்டு அரை மதிற்கூவரில் வைத்துவிட்டுத் தூர விலகி நின்று கொண்டாள். வரதாவின் அம்மா சுளகில் சில்லறைகள் சிலவற்றைப்போட்டு விட்டு, இரு கீரைப்பிடிகளை எடுத்துக் கொண்டாள்.
இக்காட்சி எனக்கு உவப்பானதாக இருக்கவில்லை. பிராமணியத்தின் விகாரமுகம் எனது சுயத்தை அசரவைத்தது.
ஜூன் 2006 酶

Page 27
‘ஐயரோ, ஐயங்காரோ. இவர்கள். இந்தப் பிராமணர்கள். அதீத ஜாதி உணர்வுடன் இருக்கிறார்களே. இது அவர்களது தன்னகங்காரமா. அல்லது அறியாமையா..? சக மனிதனைப் புழுவெனப் பார்க்கும் இவர்களுடன் இனியும் என்ன உறவு வேண்டிக் கிடக்கிறது.
எனது உடல் குறுகி, மனது உள்ளொடுங்கியது. நானாக ஒதுங்கினாலும் வரதா என்னை விடுவதாயில்லை. அன்று மாலையே அவள் மாடிக்கு வந்தாள். வாய் எதையோ முணுமுணுத்தது:
"குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி.” "என்ன பாசுரம் இது.” "அசடு மாதிரி உளறாதேயள். இதுகூடத் தெரியாம. திருப்பாவை, திருப்பாவை, நாச்சியார் திருமொழி யெல்லாம் படியுங்கோ. படிச்சா. என்னோட மனசு பளிச்செண்டு உங்களுக்குப் புரியும்.”
இளக்காரம் அவளது குரலில் இழைந்தது. அவள், வலது பக்கமாக முன் கொண்டைபோட்டு, அதைச் சுற்றி, மல்லிகை மொட்டுக்களாலான மாலை அணிந்திருந்தாள்.
தெய்வாம்சம் மிளிர, அவள் தெய்வமாகி நின்றாள். அவளைப் பார்த்துக்கேட்டேன்: "இதென்ன புதுக்கோலம்.” “றி ஆண்டாளைத் தெரியாதோன்னோ உங்களுக்கு. பகவான் மீது பிச்சியாகிப்போன சாட்சாத் அந்த ஆண்டாள்தான்
அவள் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டாள். அவளது பேச்சும் தோற்றமும் நடனமாதின் அபிநயம் போலிருந்தது.
'ம். ஆண்டாளா..? இவளுக்குச் சரியான கீலாதான். என நினைத்துக்கொண்டேன்.
‘பைத்தியம் எண்ணு நினைச்சேளா..? அப்படி ஒண்னும் கிடையாது. உங்கமேல எனக்குக் காதல் எல்லாம் இல்ல. ஒரு பிரியம் அபிமானம். இது ஒரு வகையில பகவத் பக்தி யோன்னோ.” எனக்கு அடி முடி விளங்கவில்லை. பகவத் பக்தியா..? குழம்பியவன், தமிழாசிரியர் ம.கி.த.வைக் கேட்டால் தெரிகிறது. என நினைத்துக்கொண்டேன்.
ஏதோ காட்சி கொடுக்க வந்ததுபோல வந்தவள், வந்தகையுடனேயே அன்று திரும்பிவிட்டாள்.
நாலு நாள் கழித்து என்னை நெருங்கி வந்த அவள் - ஏதோ முறைப்பாடொன்றுடன் வந்தாள்.
“ஆரவன்! நெட்டையா, கரு கரு எண்டு வளர்ந்திருக்கான். மர அட்டை மாதிரித் தடித்த உதடுகளோட. சின்னக் கண்களோட. என்ன விழுங்கிவிடுறமாதிரிப் பார்க்கான். உங்க ரூம் மேட்டா..? அவன் துர்த்தனாயிருப்பான்போல. துஷ்ட அசுரன் ஹிரண்யாட்சன் மாதிரி அபச்சாரமாய் பேசிண்டு.”
“ழரீதரனோட முடியுமெண்ணா என்னோடயும் வா. வாயேண்டீ. எண்ணு மிரட்டிறான், நம்ம விஷயம். நாம பேசிறத. பழகிறத எல்லாம் கொட்டிச் சிந்தியாச்சோன்னோ.”
6 ஒ9
“எதுக்கும் மெளனந்தானா..? அந்த அசுரப் பிறவியை ஹதம் பண்ண வேண்டாமோ..? நரசிம்மமாய் பகவான் அவதாரம் எடுத்த கதையெல்லாம் உங்களுக்குத் தெரியாதோன்னோ."
酶 ஜனவரி =

எனது மெளனம் அவளுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்திருக்கவேண்டும்.
அவள் உதடுகள் துடிக்க கண்கள் சிவப்பேறி - இமைகள் படபடக்க நின்றாள். அந்த அழகு கூட எனக்குப்பிடித்திருந்தது.
எனது இதழ்களில் அரும்பிய புன்னகையைப் பார்த்த ജൂഖണ്:
“சிரியுங்கோ.நன்னாச் சிரியுங்கோ, சிரிச்சுச்சிரிச்சு என்ன மயக்கிப் பூோடுங்கோ. எனது வேதன எங்கே உங்களுக்குப் புரியறது.”
பொரிந்து கொட்டியவள், எங்களுள் உளவாரக் குருவியின் லாகவத்துடன் ஒரு வெட்டு வெட்டித் திரும்பி நடந்தாள்.
இப்பொழுதெல்லாம் வரதா மாடிப்பக்கம் வருவதை அனேகமாக நிறுத்தியிருந்தாள். எல்லாம் எனது அறை நண்பன், அந்த கே.ஜி.எஃப் வேலப்பனின் வாய் வல்லபத்தால் என்பதை உணர்ந்து கொண்டேன்.
'உண்மையில் வரதா சொல்வது போல அவன் ஹிரணியன்தான்!
அப்பொழுதெல்லாம் அவளைச் சந்திக்க வேண்டும் - அவளுடன் (3Lj g: வேண்டும் என்ற ஆர்வம் கூடியதே ஒழியக் குறை யவில்லை. அவளை சந்திப்பதற்கான வழியும்
&
赛、*
sorröstosub 31616TT6O அடைபட்டு விட்டதா ಇನ್ಡಿಟ್ತು ಅ! கவே எனக் குத் * తిar பேசினத தோன்றியது. பத்தாதேள் இந்தப்
LD fT 605) 6\) N மெஸ் வரை சென்று திரும்பி வந்த என்னை, மாமியின் குரல் தடுத்தது. அவள் சுலபமாகக் கதைத்தாள். அவளிடம் சிநேகம் கொள்வதற்குச் சிரமம் ஏதுமிருக்க வில்லை.
"பச்சையப்பாவா, பியூசியா வாசிக்கிறேள். நீங்க சிலோன் காரராமே. அங்கிட்ட 'போறின் குட்ஸெல்லாம் சீப்பா கிடைக்குமெண்டு சொல்லறா. லீவில போனேளா. ஏதாச்சும் கொண்டு வந்தேளா..?
'மாமி எல்லாமே தெரிஞ்சு வைத்திருக்கிறாள். கொஞ்சம் கொஞ்சம் வரதாவின் ஒத்தூதலாயும் இருக்கும். என நினைத்துக் கொண்டேன்.
சந்தர்ப்பம் பார்த்திருந்த எனக்கு, மாமியின் உரையாடல் மிகுந்த நம்பிக்கை தருவதாய் இருந்தது. வரதாவைச் சந்திப்பதற்கும் அது ஒருவகையில் உதவியது.
ஊருக்கு போன பொழுது - கொண்டு வந்த, ஒவல் ரின்களில் இரண்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. அது ஞாபகம் வரவே, அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு, வரதா வீட்டு வாசலில் கால் வைத்தேன்.
கூடத்தில் வரதா, மஞ்சள் பட்டுப்புடவையில், மடிசார் உடன் நின்றாள். மிதிலையில் ராமனுக்காக காத்திருந்த சீதையை அன்று அவள் எனக்கு ஞாபகப்படுத்தினாள்.
அவள் என்னைப் பார்த்ததும் உள்ளே குரல் கொடுத்தாள்:
எல்லாம்.” என
ணுத்தவள் என்னை
ஜூன் 2006 25

Page 28
"அம்மா. யாரு வந்திருக்கா. வந்து பாருங்கோ.!” சற்றைக் கெல்லாம் மாமி வெளியே வந்தாள். வந்ததும் வராததுமாய், "இதென்ன அம்பி. ஒவல் டின்னா..?’ என்று கூவியபடி, எனது கைகளில் இருந்த ரின்களை பறித்தெடுத்துக் கொண்டாள்.
ஆலாய்ப் பறக்கும் அம்மாவை மகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
எந்த விஷயத்திலுமே உம்மணா மூஞ்சியாய் இருக்கும் அம்மா, என்னை விழுந்து விழுந்து உபசரித்தது, வரதாவுக்கு நம்பமுடியாத அதிசயமாக இருந்தது.
'அம்மா காரியக் கெட்டி, ஒவல் டின்களை கண்டதும் பல்லிளித்து விட்டாள்.' என நினைத்த வரதா உள்ளே சென்று, ட்றேயில் கோப்பியுடன் வந்தாள். என்னைப் பிரியமாக உபசரித்தாள். திடீரென மாமிக்கு முகம் கறுத்து விடுகிறது. அவள் என்னைப்பார்த்துக் கூறினாள்:
"அம்பி காப்பியைத் தூக்கிச் சாப்பிடு, எச்சில் பண்ணாத." எவ்வளவுதான் பரபரப்படைந்தாலும் ஆசாரம் அது இதென்று வந்து விட்டால், அம்மா உசாராகி விடுவது வரதாவுக்குத்
தெரியும்.
நான் மிகுந்த தயக்கத்துடன் கோப்பியை எடுத்து எனக்கு அருகாக வைத்துக் கொண்டேன்.
“சாப்பிடுங்கோ.1 அம்மா அசட்டுத்தனமா ஏதாவது பேத்துவா. உங்க செளகரியம் போல சாப்பிடுங்கோ.”
மாமியின் அசட் டுத் தனம் தொடரவே செய்தது.
'அம்பி என்ன ஐாதிடா..? ஐயரா. ஐயங்காரா.”
வேட்கையும் ஆகா :
நிரம்பி வழிய மணி
“சைவ வேளாளர் மாமி.” பலஹினமான எனது முனகல், "வேளாள முதலியா..? என்ன ஆனாலும் சூத்திராள்
மாமி உதடுகளை நெழித்து, நொடித்தாள். "அவா ஒண்டும் கீழ்ஜாதி இல்ல. எல்லாம் மேல் ஜாதி
வரதாவின் கண்களில் ஒளிர்ந்த தீட்சணியம் மாமியைச் சுட்டதாகத் தெரியவில்லை.
"எம்மட்டுச் சொல்லு. ஜாதி கெட்டவா, கெட்டவாதான்.” மாமியின் முகத்தில் குதிர்ந்த அசூசை என்னை விரட்டவே, நான் எழுந்து கொண்டேன்.
“காப்பி சாப்பிடாமலா.?” வரதாவுக்கு குரல் கமறியது. கண்களில் நீர் திரண்டது. முகமும் மூக்கும் சிவப்புக்கண்டது.
நான் மாமியைப் பார்க்காமல், வரதாவிடம் விடை பெற்றுக் கொண்டேன்.
அன்று மாலை வரதா மாடிக்கு வந்தாள். தூரத் தூர விலகி நிற்பது போல வேடிக்கை காட்டுபவள் - அன்று
26 ஜனவரி - ஜ
 

வந்தவுடனேயே, எனது கரங்களைப் பற்றி, ஆசுவாசப்படுத்தும் குரலில் சொன்னாள்:
"அம்மா பழங்காலத்து பொம்மனாட்டி. பழசெல்லாத்தயும் அவளால விட முடியல. அவா பேசினத பெரிசு படத்தாதேள். இந்தப் பூவைப் பூ வண்ணன் தான் எனக்கு எல்லாம்.” என முணுமுணுத்தவள் என்னை இறுக அணைத்துக்கொண்டாள். எனது உயரத்துக்கு கால் பெருவிரல்களில் நின்றபடி, உதடுகளில் முத்தமிட்டாள்.
அவளது வசதி கருதி, அவளைச் சிறிது கைகளில் ஏந்திக் கொண்டேன். அவள் மீண்டும் மீண்டும் என்னை முத்தமிட்டாள். அவள் தந்த அவ்வினிய அதிர்ச்சியும் சுழிப்பும் என்னைக் கிழித்துக் கொண்டு உள்ளே உள்ளே போவது போலிருந்தது. நான் தேவனாகவோ அவள் தேவதையாகவோ அப்பொழுது இருக்கவில்லை. சமநிலைப்பட்டு பூமியில் கால் பாவி நிற்கும் சாமனியர்களாகவே ஆகியிருந்தோம்.'
எனது நினைவுகளுக்கு மாறாக அவளது செயல்கள் இருந்தன. அவளது உதடுகள் சதா எதையோ முணுமுணுத்தபடி அந்த முணுமுணுப்பு எனக்கு எரிச்சலூட்டியது.
அவள் மீளவும் ஆண்டாளாகி உருகினாள் சாமி ஆடினாள். ஏதேதோ பிதற்றினாள்:
"கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ.”
மயங்கி நின்ற அவளை, இரு கரங்களாலும் அவளது தோள்களைப் பற்றி உலுக்கினேன்.
விழிப்புற்ற அவளது கண்களில், மிகுந்த பிரியமும் வியப்பும் தேங்கி, உறைந்து போயிருந்தது.
அதுதான் எங்களது இறுதிச்சந்திப்பு என்பது எனக்கு ஏனோ அப்பொழுது தெரியாமல் போய்விட்டது.
"அவள் சின்னக்காஞ்சியில் இல்ல. மாமாவையோ. மாமா பையனையோ கட்டிக்கப் போறாள். அவள் படிப்பக்கூட நிறுத்திப்பிட்டாள். திருவல்லிக் கேணியில் இப்ப இருக்காளாம்.” அவளது ஹிரணியன் வேலப்பன்தான் இதை எனக்குக் கூறினான்.
நான் அதிர்ந்து போனேன். அதேசமயம் ‘எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, அதிக ஜாதிய உணர்வுடைய ஐயங்காரர்கள் மத்தியில் பெண் கொள்ள முடியுமா. எனது மனதில் பல கேள்விகள் கிழர்ந்தெழவே செய்தன.
'ஏதோ நடப்பது போல நடக்கட்டும். என மனதைத் தேற்றிக் கொண்டேன். காலம் - துயரை ஆற்றும் நண்பன் எனும் நம்பிக்கை எனக்கு இருந்தது. 'அவளை மறப்பதற்கான ஒரே வழி படிப்பு. படிப்பு மட்டுமே. என நினைத்துக் கொண்டேன்.
அதுவே எனக்கு அப்போதைய தாரக மந்திரமாகவும் இருந்தது.
杀、冷
வரதலக்சுமியின் அழைப்பை ஏற்று, கிழக்கு மாடவீதியில் உள்ள, அவளது வீடுவரை சென்று வருவதில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், கூடவே தயக்கமும் இருந்தது.
'அவளைப் பிரிந்து, அவளது தொடர்புகளை விட்டு, எத்தனை வருடங்கள். அந்தக் கனவை. நெகிழ்ச்சியை எல்லாம் அவள் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறாளா..? அது சாத்தியமான ஒன்றுதானா..? இன்னும் ஒரு வார காலத்தில் ஊர் திரும்ப இருக்கும் எனக்குப் புதிய அனுபவங்களும் சிக்கல்களும் வேண்டுமா.
০6টা 2006 酶

Page 29
மனப்பாரத்துடன், கிழக்கு மாடவீதியில் கால் பதித்த நான் - சந்நிதித் தெருவுக்கு எதிராக இருந்த, பத்தாம் இலக்க வீட்டு வாசலை அணுகி, அழைப்பு மணியை அழுத்தாமல் நின்றேன். உள்ளே ஒரு துவந்த யுத்தமே நடந்திருக்க வேண்டும். பேசுவது காதில் விழுந்தது. ஒதுங்கி நின்றபடி, அங்கு அதிரும் சொல் வெடிகளை செவிமடுத்தேன்.
“றிதரனா..? ஆரவன். சிலோனா..? ஏன் வாறான்.? "பாலிய சிநேகம். காஞ்சி பச்சையப்பாவில படிச்சவா. அப்ப எங்க ஆத்துக்குப் பக்கத்தில இருந்தாரண்ணா.”
“ஐயங்காரா..?” "ஜயங்காரா இருக்க எல்லாத் தகுதியும் அவாளுக்கு இருக்கு."
"ஜாதி கெட்ட சூத்திரனா..?” "அப்படிப் பேசாதேங்கோ, நீங்க பழைய காலத்து ஆளா..? அவா ஒண்டும் ஜாதி கெட்டவா இல்ல. வேளாள முதலி. ஹோத்திரம் கூட சிவஹோத்திரம்."
"என்ன ஹோத்திரமா இருந்தா என்னடி. சூத்திரா எண்ணா சூத்திராதான். நமக்கு விருந்தாளியா அவன் இங்க வரவேணாம்." மெலிதாக ஒரு விம்மல் ஒலி கேட்ட மாதிரி இருந்தது. 'வரதா அழுகிறாளா..? "பேசாதேள். அவா வந்து போகட்டும்.” "அவன் வந்து, என்ன பொன்னா பொருளா கொட்டித்தரப் போறான். அசடு மாதி அழைச்சிண்டு. இப்ப விழிச்சிண்டா ஆச்சா. அவா எல்லாம் இஞ்ச வரவேனாம்.'
ஜஸ்கிறிம் வண்டி ஒன்று அப்பொழுது மாடவீதியால், மணியடித்தபடி, நகள்ந்து வந்தது.
அந்த ஓசையைக் கேட்டு வரதாவின் கடைக்குட்டி வாசல்வரை வந்தது. என்னை அடையாளங் கண்டுகொண்டு "வாங்க மாமா." என்றது.
"யாரது.” கேட்டபடி வரதாவும் வந்தாள். தொடர்ந்து அவளது மூத்த பிள்ளையும் வந்தான்.
திடீரெனத் திரும்பி நடந்த நான், சிறிது ஓடவும் செய்தேன். "றிதரா சித்தே நில்லுங்கோ.” வரதாவின் குரல் எனக்குப் பின்னால் கேட்டது.
திரும்பிப் பார்ப்பதற்குத் துணிவேதும் இல்லாதவனாக, கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாகக் கோயிலினுள் நுழைந்தேன்.
திரும்பிப் பார்த்தபொழுது, வரதா அவளது வீட்டு வாசலில் பிள்ளைகளுடன் நிற்பது தெரிந்தது.
எனது மனம் ஒரு கணம் கரைந்து கலங்கியது. 'கடவுளே..' என முனகினேன். கோயிலுக்கு வரதா வருவாளா..? வந்து.' குழப்பத்துடன் ஈஸ்வரனது சந்நிதியின் முன்பாக, சாஷடாங்கமாக விழுந்து வணங்கினேன்.
வணங்கி எழுந்தபொழுது, வரதா எனக்குப் பக்கத்தில் - தனது இரு குழந்தைகளுடன் - என்னையே பார்த்தபடி நின்றாள்.
அவளைப் பார்த்ததும் எனது கண்கள் பனித்தன. "அபிஷ்டு. அபிஷ்டு. இப்படி ஒடி ஒழிஞ்சா எல்லாமே ஆயிடுமா..!"
வரதாதான் பேசினாள். அவளது குரலில் பதட்டம் ஏதும் இல்லாத நிதானம்.
அவள் அப்பொழுது - பெரிய நாயகியாகவோ, பத்மாவதியாகவோ, றி ஆண்டாளாகவோ எனக்குத் தரிசனம்
酶 ஜனவரி =

தரவில்லை. வேட்கையும் ஆசாபாசங்களும் நிரம்பி வழிய - மனித
உறவு என்னும் வலுவான இழையைத் தளர்ச்சியில்லாது பற்றி
நிற்க விரும்பும் வரதலக்சுமியாகவே தோன்றினாள்.
அவளைப் பார்ப்பதற்கே எனக்குப் பயமாக இருந்தது.
/ ༄༽ சிற்பவடிவில் “சுனாமி அவலங்கள்
26 டிசெம்பர் 2004 இல் தென்னாசிய நாடுகளில் நிகழ்ந்த ஆழிப் பேர் அடுக்கு அலைகளின் கோரத் தாண்டவத்தால் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலும் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தின் நெஞ்சை உருக்கும் காட்சிகள் சிற்ப வடிவில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பேரலை அனர்த்தத்தின் அவல நிகழ்வுகள் ஒவியங்களாக, புகைப்படங்களாக, நூல்களாக, ஒளி, ஒலி நாடாக்களாக இதுவரை தனிப்பட்ட பலராலும், பல அமைப்புக்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னமும் இம் முயற்சிகள் தொடர்கின்றன. ஆனால், இவற்றிலிருந்து மாறுபட்டு, ஒரு சிற்பத்திற்கூடாக இவ் அவலங்களை நம் முன்பாகக்கொண்டு வந்து, ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் திருமறைக் கலாமன்ற அங்கத்தவரும், பிரபல சிற்பக் கலைஞருமான யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த திரு. ஏ. வி. ஆனந்தன் தற்போது ஈடுபட்டு வருகின்றார். 8 அடி உயரத்தையும், 10 அடி சுற்றளவையும் கொண்டதாக முற்றிலும் மரத்தினால் இச் சிற்பம் கலைஞரால் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. மக்களின் பார்வைக்காக விரைவில், யாழ்ப்பாணம், மல்லாகத்தில் அமைந்துள்ள 'சிற்பி ஏ. வி. ஆனந்தனின் சிற்பாலயம் என்ற கலைக்கூடத்தில் வைக்கப்படவுள்ளது. இச் சிற்பமே “சுனாமி அனர்த்தம் தொடர்பாக பெரிய அளவில் முதல் தடவையாக உருவாக்கப்படும் சிற்பமாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடறிந்த சிற்பக் கலைஞரான ஏ. வி. ஆனந்தனின் சிற்பக் கண்காட்சிகள் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை
குறிப்பிடத்தக்கது. ノ
வாசகர்களுக்கு. தொடர்ந்து இரண்டாவதுதடவையாக 'கலைமுகம் இந்த இதழும் இரு காலாண்டுகளை இணைத்த ஜனவரி-ஜூன் 2006 இதழாக காலம் தாழ்த்தி வெளிவருகின்றது. காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாசகர்கள் தெரிந்து கொண்ட மாறி வருகின்ற மண்ணின் சூழல்தான். இருப்பினும் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் பயணிப்போம்.
பாரம்பரியம் ஒரு மீள் பார்வை’ என்ற தொடர் கட்டுரை இந்த இதழில் இடம்பெறவில்லை. கட்டுரையாசிரி யர் எழுதித் தந்தால் அடுத்த இதழில் இடம்பெறும்.
ஜூன் 2006 27

Page 30
பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேகன்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு எட்டயபுரத்திலே பிறந்தவர். 1921ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியிலே மறைந்தார். புதுமைப்பித்தன் என அழைக்கப்படும் சொ.விருத்தாசலம் 1906ஆம் ஆண்டு கடலூருக்கு அருகாமையிலுள்ள திருப்பாதிரி புலியூரில் பிறந்தார். 1948ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் காலமானார். புதுமைப்பித்தன் மகாகவி பாரதிக்கு 24 வயது இளையவர். இருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். தமது கல்லூரிப் படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலே தொடர்ந்தவர்கள். இன்றும் திருநெல்வேலி இந்துக் கல்லூரி ஆசிரியர்கள் ஒய்வு அறையில் "எமது மிகச்சிறந்த பழைய மாணவர்களென்று மூவருடைய படங்கள் தான் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன." அவையாவன மகாகவி பாரதி, புதுமைப் பித்தன், வ.உ.சிதம்பரப்பிள்ளை.
மகாகவி பாரதியும், புதுமைப்பித்தனும் ஏறத்தாள ஒரே விதமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் தமது வாழ்வை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே கழித்தனர். புதுமைப்பித்தன் இந்தியா சுதந்திரமடைந்து ஒரு வருடமாவதற்கு முன்னரேயே இவ்வுலக வாழ்வை நீத்த்ார்.
பாரதியார் உலக மகாகவி என்ற அந்தஸ்தை அடைந்தவர். புதுமைப்பித்தன் தமிழ் நாட்டின் "சிறுகதை மன்னன்" என்று போற்றப்படுகின்றார். இருவரும் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவித்தவர்கள். ஆங்கிலேயரின் ஆட்சியை மனதார வெறுத்தவர்கள். நோயும், வறுமையும் அவர்களை இளமையிலேயே சாகடித்து விட்டன. மகாகவி பாரதி தமது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்வினை முடித்தார்.
புதுமைப்பித்தன் காச நோயினால் பீடிக்கப்பட்டு கண்ணில் மிதந்தபடியே தமது 42ஆம் வயதில் மறைந்து போனார். மகாகவி பாரதிக்கு தங்கம்மா, சகுந்தலா என்று இரண்டு பெண் குழந்தைகள். புதுமைப் பித்தனுக்கு தினசரி என்று ஒரு பெண் குழந்தை; இருவருமே தங்களுடைய பிள்ளைகளை உயிருக்கு மேலாக நேசித்தனர்.
இவ்விருவரும் ஏறத்தாள ஒரே விதமான பின்னணியையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டிருந்த பொழுதிலும் அவர்களுடைய வாழ்க்கைத் தத்துவத்தில் எவ்வளவு வேறுபாடு? ஒரு இலட்சிய வாதிக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்பவர் சுப்பிரமணிய பாரதியார். யதார்த்த வாதியின் மொத்த உருவமாகத் திகழ்பவர் புதுமைப்பித்தன்.
O புதுமைப்பித்தன் நூர்
28 ஜனவரி -
 

மகாகவி பாரதியின் தெளிந்த சிந்தையையும், நல்ல எதிர்பார்ப்பையும் அவருடைய பாடல்களிலே காணலாம்.
"பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால் புன்மையிருட்கணம் போயின யாவும்"
இதனையே தம் வாழ் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தவர் மகாகவி பாரதி. எப்பொழுதும் நல்லதையே நினையுங்கள். நல்லபடியே நடக்கும். (Positive Thinking) என்ற மந்திரத்தை ஒலித்தார் நோர்மன் வின்சன்ற் பீல் என்ற அறிஞர். மகாகவி பாரதி தான் ஆவலோடு எதிர்பார்த்த புதிய பாரதத்தை காணும்முன் மறைந்துவிட்ட பொழுதும், எப்பொழுதும் எல்லா எதிர்பார்ப்புகளும் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தன.
"குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது சாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது,
தரித்திரம் போகுது செல்வம் வருகுது, படிப்பு வளருது, பாவம் தொலையுது படிச்சவன் சூதும், பாவமும் பண்ணினால், போவான், போவான், ஐயோவென்று போவான்"
பாரதியின் பாடல்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கை தொனிக்கின்றது. வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு என்ற கவிதையிலும், பாரதத்தின் இன்னல்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு, எனினும் இங்கு இவையெல்லாம் நீங்குபவையன்றி நிலைப்பனவல்ல என்று முடிக்கின்றார்.
புதுமைப்பித்தன் கதைகள், மகாகவி பாரதியின் பாடல்களின் இனிமைக்கு எவ்வளவேனும் குறைந்ததல்ல. அந்த யதார்த்தம் சமுதாயத்தின் பச்சை உண்மைகளைப் பிளந்து காட்டும் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை புதுமைப் பித்தனைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் மனங்கொள்ள வேண்டியவை.
"அவருடைய குத்தலான நையாண்டி எதிரிகளை இடுப்பில் குத்தி வாங்கும். விபச்சாரஞ் செய்து வயிற்றைக் கழுவுவேனே தவிரப் பிச்சையெடுத்துப் பிழைக்க மாட்டேன் என்று நினைக்கும் யுவதி, அவர் கதாநாயகி, கற்பை விற்றுப் புருஷனைக் காப்பாற்ற விரும்பும் அம்மாள். அவரது இலட்சியப் பெண். ராமனுக்கு ஒரு நீதி, தனக்கொரு நீதியா? என்று குமுறிக் கேட்கும் அகல்யை. அவரது சிருஷ்டி ஆகவேதான் அவருடைய கதைகள் பலருக்கும்
OTTIGño 1906 — 2006
ஜூன் 2006 酶

Page 31
புகைச்சலைத் தந்தன.”
"சோகம் மலிந்த வாழ்வில், அனுபவ வேதனையினால் கசப்புற்று, எரிக்குஞ் சிரிப்பைச் சிந்தக் கற்றுக்கொண்ட உள்ளம் புதுமைப்பித்தனுடையது. வாழ்க்கைச் சூழலில் அகப்பட்டிருந்தாலும், அதனினின்றும் சிறிது ஒதுங்கி நின்று வாழ்க்கையைப் பார்த்து, அதில் மிதக்கும் வகை, வகையான வேடிக்கை மனிதர்களின் விந்தை செயல்களைக் கண்டு அவர்களது எண்ணங்கள், பழக்க வழக்கங்கள், மூடநம்பிக்கைகள் முதலியவற்றை உணர்ந்து சிரிக்கக் கற்றுக்கொண்ட ஒரு மனித உள்ளத்தின் உணர்ச்சி நாதங்கள் அனைத்தையும் அறிய முடிகிறது புதுமைப் பித்தனின் எழுத்துக்களிலே."
புதுமைப்பித்தனுடைய யதார்த்த வாதத்திற்கு "மனக்குகை ஓவியங்கள்" சிறந்த உதாரணம்.
"பரவெளியிலே பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்திலே, ஆனந்தக்கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான்"
ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்றாடுகிறான் பக்கத்தில் வந்து நின்றார் நாரதர்.
"அம்மையப்பா எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க! அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான அவனது உள்ளத்திலே தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது, தெரியுமா? துன்பம், நம்பிக்கை, வரட்சி, முடிவற்ற சோகம்.
தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன.
வீணையை மீட்டிக் கொண்டு வேறு திசையைப் பார்த்து நடந்தார் நாரதர்"
மகாகவி பாரதி நல்ல நம்பிக்கையுடன் வாழ்ந்ததோடு அமையாத பரந்த உள்ளமுடையவராயிருந்தார். எல்லா மதத்தவரையும் மனமார நேசித்தார். பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சமவுரிமை பெற்று சிறப்புற வாழ வேண்டுமென்று பாடுபட்டார். அவரிடம் எந்தவிதமான காழ்ப்பும் இருக்கவில்லை. அவர் இயேசுவையும் பாடினார். அல்லாவையும் வாழ்த்தினார். புதுமைப்பித்தனோ இத்தகைய பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்கவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் பற்றி அவர் கவனம் எடுக்கவில்லை. கிறிஸ்தவர்களை அவர் நஞ்சென வெறுத்தார். கலப்புத் திருமணம் "ஒரு கேலிக்கூத்து" என்பது இந்த யதார்த்தவாதியின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவ்விருவருக்கும் இடையிலுள்ள வேற்றுமையைக் காண்பதற்கு "கோபாலயங்காரின் மனைவி" என்ற கதை அரிய சாதனமாகின்றது. மகாகவி பாரதியாரால் உயர்ந்த இலட்சியத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கதை புதுமைப்பித்தனின் அப்பழுக்கற்ற யதார்த்தத்தினால் முடித்து வைக்கப்படுகின்றது. புதுமைப்பித்தன் பின்வருமாறு தமது கதையைத் தொடங்குகிறார்.
"பாரதியார் தமது 'சந்திரிகை என்ற நாவலிலே கோபாலயங்காருக்கும் வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வர்ணித்திருக்கிறார். கதையின் போக்கு, கண்டதும் காதல், என்று கோபால ஐயங்கரின் இலட்சியத்துடன் ஏன் பிரம்மை என்றும் கூறலாம் - முடிவடைகின்றது முடிவு பெறாத 2ஆம் பாகத்தில் வர்ணிப்பாரோ என்னவோ மனிதன் காதல்ப் பெண்ணின் கடைக்கண்
酶 ஜனவரி =

பாணியிலே அனலை விழுங்கலாம். புளித்த குழம்பையும், குலைந்த சோற்றையும் உண்ணச் சம்மதிப்பானோ என்னவோ? பின் கதையை என் போக்கில் எழுதுகிறேன். பாரதியின் போக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதில்லை.
புதுமைப் பித்தன் பின்னர் அவர்களுடைய இல்லறத்தில் வரும் சிக்கல்களை சிறிது சிறிதாக எடுத்து விளக்குகின்றார். இடைக்குலத்து சிறுமியாகிய மீனாவுக்கு உயர் அதிகாரியான கோபாலயங்காருக்கு கிட்டப் போகவே பயமாக இருக்கின்றது. இதனால் கோபாலயங்காரர் அவளுக்கு மதுப்பழக்கத்தை ஆரம்பித்து வைக்கின்றார். மீனா மாமிச உணவில்லாமல் வேதனைப் படுகின்றாள். பின்னர் ஒரு உதவியாளனினால் அவளுக்கு மாமிச உணவு கிடைக் கின்றது. மதுபோதையில் மயங்கும் கோபாலயங்காருக்கு மீனா மாமிச உணவைப் பழக்கிவிடுகின்றார். மீனா பிராமணப் பெண்ணாய் மாறுவதுபோல் கோபாலயங்கார் கோனாராக மாறிவிடுகின்றார்.
கோபாலயங்கார், மீனா இலட்சிய திருமணம் என்ன மாதிரி முடிகின்றது என்று காட்டுகிறார் புதுமைப் பித்தன்.
"கோபாலயங்காரர் மாமிச பட்சணியான பிறகு சுப்புவையரின் ஏதேச்ச அதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரக இலட்சுமியானாள். 2வருட காலம் அவர்களுக்குச் சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக் கருவியாக கோபாலயங்களின் மேல் நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன. தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு என்பது வயதைக் கவனியாமலே வந்தது. மீனாளின் அழகு மறைந்து அவள் ஸ்தூல சரிfயானாள் கோபாலயங்காரர் தலை நரைத்து வழுக்கை விழுந்து கிழப்பருவம் எய்தினார். இதை மறப்பதற்குக் குடி ஆபிஸிற்குப் போகுமுன் தைரியம் கொடுக்கக் குடி, வந்ததும் மீனாளின் செளந்தரியத்தை மறக்கக் குடி இப்பொழுது அவர்கள் தென்னாற்காடு ஜில்லாவில் இருக்கிறார்கள். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.
இரவு பத்து மணிக்கு அக்கம் பக்கம் யாராவது போனால் கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.
"ஏ! பாப்பான்" என்று மீனாள் கொஞ்சுவாள், "என்னடி எடச்சிறுக்கி" என்று கோபாலயங்கார் காதலுரை பகருவார். இருவரும் சேர்ந்து தெம்மாங்கு பாடுவார்கள். மீனாள் டிரியோ டிரியோ’ பாட்டில் கோபாலயங்காருக்கு - அந்த ஸ்தாயிகளில் - பிரியமதிகம்.
இவ்வாறு ஒரே காலத்தில் வாழ்ந்த இரு மேதைகள் வாழ்க்கையை எவ்வாறு பார்த்தனர் என்பதனை அவர்களுடைய படைப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதனாலேதான் புதுமைப் பித்தனின் யதார்த்த வாதம், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமே விருந்தாக இருக்கின்றது. மகாகவி பாரதியாரின் படைப்புக்களோ அல்லற்பட்டு ஆற்றாது கண்ணிர் வடிக்கும் அனைவருக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் வழங்குகின்ற கருவூலமாகத் திகழ்கின்றன.
வாழ் நாள் எல்லாம் வறுமையையும், தோல்வியையும், ஏமாற்றத்தையுமே கண்ட பாரதியார்.
“தமிழா கடவுளை நம்பு, உனக்கு நல்ல காலம் வருகிறது’ என்று எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.
ஜூன் 2006 29

Page 32
காதல், தமிழ் உணர்வு, மண்வாசனை, சாதிப்பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை, மொழிப்பிரச்சினை அதனுடன் வந்த அரசியல் எதிர்ப்பு, மொழிப்பற்று, மொழியின் பாரம்பரியம், இராணுவ அட்டுழியத்தால் விளைந்த அவலம், அதன் எதிரொலியாய்த் திரண்ட வெறுப்பும், எதிர்ப்பும் போர்க்குரலும், போர்ச்சித்திரிப்பும், இளைஞர் தியாகமும், வீரமும் என
நீண்டுகொண்டுவரும் ஈழத்தமிழ் இலக்கிய நூல் : நினை பாடுபொருட்கள் ஒரு வகையில் தமிழ் (கவிை மக்களின் இருப்பை, சுதந்திரத்தை ஆசிரியர்: சோ. ட வலியுறுத்துபவை. அவற்றை கவித்துவமாக வெளியீடு தூண் சொல்ல செய்யுள், புதுக்கவிதை, சிறுகதை, கேணி நாவல், நாடக வடிவங்கள் கை திருெ கொடுக்கக்கூடியன. மிகவும் இறுக்கமாகவும் பதிப்பு : மார்க செறிவாகவும் கவித்துவமாகவும் 6760) Gv : 180.0C
வெளிப்படுத்த கவிதை ஊடகம் காலாதிகாலமாக எழுத்தாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை கண்கூடு.
சத்தங்களால், ஓசைகளால் போற்றப்பட்டு வந்த கவிதை, அச்சுவாகனம் ஏறியவுடன் வெறும் கட்புல வடிவமாக குறுக்கப்படுவது அதன் உள்ளார்ந்த பண்பை மறுதலிப்பதற்கு ஒப்பாகும். ஒசை சத்தம் கொண்டு எழுதப்பட்டமையும் படிமங்களுக்கு காட்சியை விரிப்பவையாக அமையும்போது கவிதைக்குரிய பண்பை பெற்றுவிடும். "மரணத்துள் வாழ்வோம்' (1985) எனும் ஈழத்துக் கவிதைத் தொகுப்பு முன்னுரையில் கவிஞர் சேரன் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. "சிந்தனையின் ஆழமும், படைப்பு வீச்சும் ஒருங்கே இணைந்து வரும் கவிதைகள் உயர்ந்தவை என்றும்; ஓசை, உணர்ச்சி சார்ந்து வரும் கவிதைகள் ஒருபடி இறங்கியவை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. எங்களுடைய அனுபவம் இது சரியல்ல என்பதையே உணர்த்துகிறது. ஏனெனில் எமது சூழலில் கவிதை மெளன வாசிப்பிற்கும், புத்திஜீவிகளுக்கும் மட்டும் என்றில்லாமல், சாதாரண மனிதனின் உள்ளத்திற்குமானதாக வெளிவரவேண்டிய அவசியம் உள்ளது.” (பக்11,1996, 2 ஆவது பதிப்பு)
சிந்தனையின் ஆழம், படைப்பு வீச்சு, ஓசை, படிமம், சந்தம் என்பனவற்றுக்கு அப்பால் மனித வாழ்வின் அனுபவம் கிளர்ந்தும் கவிதைகள் மனித வாழ்வின் பதிவுகளாகவும், மனித இருப்பின் தடங்களாகவும் ஆகின்றன. சங்கக்கவிதை முதல் ஈழத்து சோ.பத்மநாதன் கவிதைகள் ஈறாக நாம் கண்டு கொள்ளக்கூடிய முக்கிய பண்பு மனித - தமிழ்மனித இருப்பைப் பறைசாற்றும் அனுபவத் தடங்களாகும். இதில் கட்புலம், செவிப்புலம் என்று பாகுபடுத்தல் வெறும் வித்தைகாட்டும் எத்தனிப்புகளே. கவிதையின், பாடுபொருளுடாக கவிஞன் கிளர்த்தும் அனுபவப்பகிர்வு கவிதையின் தளத்தை பல மட்டங்களுக்கு எடுத்துச்செல்லும், வாசகள் தம் தம் அனுபவங்களுடாக அதிலிருந்து பயணிப்பர். சோ. பத்மநாதன்
阳
C
30 ஜனவரி - ஜூ
 
 

எழுதி அண்மையில் (மார்ச் 2006) வெளியிட்டுள்ள நினைவுச்சுவடுகள் சுட்டும் GILJfuĚJLIT, GÌLuflu ubLDT, LDITLÓ), LDITLIDIT, குஞ்சியாச்சி பாத்திரங்கள் வாசகள் தம் உறவுகளுடன் பயணிக்க வழிகோலும் கவிதைகளைக் கொண்டவை.
எழுபதுகளிலிருந்தே சிந்தாமணி, ஈழநாடு போன்ற இதழ்களில் மரபுக் கவிதைகளை எழுதிவந்த சோ.ப. இயற்கை ாவுச் சுவடுகள் அழகு, இறைவன், காதல் எனப்பாடிவந்தார். தத் தொகுதி) எண்பதுகளில் தமிழ் உணர்வு, தமிழ்
பத்மநாதன் உரிமை, தமிழர் அவலம் எனப் பல
早 பாடுபொருள்களில் பாடத்தலைப்பட்டார்.
யடி கவியரங்குகளில் சந்தம் இழையோட நல்வேலி. சொற்கள் தாளமிட கேட்பவர் மனங்களில் ழி 2005 உணர்வு நர்ததனமிட தனி முத்திரையைப்
பதித்தவர். ஆங்கிலம் வழி தமிழுக்கு பல - வெளிதேசத்துக் கவிதைகளை ஆக்கி - தமிழ் மயப்படுத்தி வழங்கியவர். ‘வடக்கிருத்தல்' (1997) எனும் தொகுதியூடாக சமூக சித்திரங்களை தீட்டிய சோ.ப. ஏற்கெனவே நல்லூரான் காவடிச் சிந்து (1986) ஊடாக இலக்கிய உலகில் அறிமுகமானவர். அவரது "ஆபிரிக்கக் கவிதை (2002) ஆபிரிக்கக் கவிதைகளின் சிறந்த கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகும்.
ஈழத்தின் இன முரண்பாடுகள் போரிடும் நிலைமைக்கு தள்ளியபோதிலும் சிங்களதேசத்து உணர்வலைகளை தமிழ் உள்ளங்களுக்கு வழங்க சோ.ப. வெளியிட்ட "தென்னிலங்கைக் கவிதைகள் (2004) எனும் நூல் பெரிதும் உதவியது. இன்று இன்னும் ஒருபடி கடந்து தனது சொந்த அனுபவங்களை நினைவுச் சுவடுகள் (2006) எனத் தந்துள்ளமை தமிழரின் காலாதிகால இருப்பை, பண்பாட்டை வெளியார்க்கு உணர்த்தும் ஒரு செயற்பாடு என நாம் கொள்ளலாம். ஒரு கதைசொல்லியாக, எடுத்துரைப்பாளனாக (Narrator) கா.சிவத்தம்பி கூற்று) கவிஞர் தன் பண்பாட்டுப்புலத்தை, தடும்பவாழ்வின் உள்ளார்ந்த பண்புகளை, மனித உணர்வின் உயிர்ப்புகளை நாடகத்தன்மையுடன் (இ.முருகையன் கூற்று) படைத்திருப்பது நினைவுச் சுவடுகள் சுட்டும் ஓர் உண்மையாகும்.
நினைவுச்சுவடுகளை புதுக்கவிதை நடையில் இலகு நன்மையில் எழுதப்புறப்பட்ட கவிஞரால் அவரது மரபு ஆளுமை காரணமாக சந்தங்களிலிருந்து விடுபட முடியவில்லை. எனினும் ஒசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 5விதை படைக்க முயலாது வெறுமனே படிமக் தவியல்களுக்குள் தம்மைப் புதைத்துக்கொள்ளும் பல சமகால புதுக்கவிஞர்களுக்கு சோ.ப. இன் இந்நூல் ஒரு வழிகாட்டி ஆகலாம்.
பேச்சோசைப் பண்பு மகாகவி உருத்திரமூர்த்தியுடன் ழத்துக் கவிதையுலகில் பாவனைக்கு வந்தது. சோ.ப. போன்றவர்கள் அதனை வெகு லாவகமாக, உயிர்த்துடிப்பாக,
ສູງ 2006 酶

Page 33
*୍, ୩ ମୁଣ୍ଡ ଆକof g " ********
இயல்பாக தம் கவிதை ஆளுமைக்குள் ஏந்திக்கொண்டனர்.
சுவீகாரம்' எனும் முதல் கவிதையே இதற்கு சான்று பகரும்.
"உப்பிடித்தான் மோனை
பதினெட்டு மாதத்திலை
கொம்மான் வீடு போன நீ
பிறகு
திரும்பி வரவே இல்லை’
'பெரியம்மா’ கவிதை இப்படி விரிகிறது.
"இந்தப் பெரியம்மா மீது
எங்களுக்கு
அதாவது
தங்கை பிள்ளைகளாகிய எங்களுக்கு
தனி உரிமை;
ஒன்று கதை குடுத்து' பராக்காட்ட
ஒன்று தலைபின்னிவிட்டுப் பேச்சுவாங்கும்;
பேச்சோ, ஏச்சோ
அன்பில் குழைத்துத்தான் வரும்,'
கடந்த நூற்றாண்டின் கிராமத்துக் காட்சிகளை சோ.ப. வரையும் அனுபவக் கீற்றுகளுடாக நாம் தரிசிக்க முடியும்.
"பள்ளி விடுமுறைக் காலத்தில்
எனக்குப் பல பணிகள்
முக்கியமானது
சுருட்டுக்கொட்டிலில்
பத்திரிகை வாசித்தல்
அல்லது.
.பாரதக்கதை படிப்பது”
'ஆடைதிருடிய கதை வரையும் சித்திரம் இது.
"ஒரு நாள் -
பனை ஓலை கிழிச்சுக் கொண்டிருந்தவ
திடீரென அடுப்படிக்குள் போனால்
செல்லப்பிள்ளை
அருள் அண்ணா
இரண்டு பனை ஈர்க்கை வளைச்சு
அடுப்பிலை வற்றிக்கொண்டிருந்த பாலுக்குள்ளிருந்து
லாவகமாக ஆடையை எடுத்து
வாய்க்குள் போட்டுக் கொண்டிருக்கிறார்”
மேற்படி கவிதையை வாசிப்பவர் மனதில் காட்சி விரியாமல் இருக்குமா? அதன் தொடர்ச்சியில் அவரவர் அனுபவங்கள் தெறிக்காமல் இருக்குமா?
இவற்றை விட சோ.ப. கூறும் அனுபவத் தத்துவங்கள் கணிதம், விஞ்ஞானம், அரசியல், சாஸ்திரம், பஞ்சாங்கக் கணிப்பு எல்லாம் தொட்டுச் செல்கிறது. "நேரமும் தூரமும் கவிதை பெரியப்புவுக்கு சவால்விடும் சிறுவனின்
酶
 

常籠}器靈
輝蠱
துடிப்பை கூறும்; யான் பெற்ற இன்பம் பஞ்சாங்கம் இரண்டுபட்ட எம் சமூக அவலத்தையும், விழுமியங்களை இழந்த எம் தேசத்தின் நிலையையும் கூறும்; கிழக்கும் மேற்கும் ஏலத்தின் பாசத்தையும் வெற்றிலையின் வீச்சையும் ஒப்பிடும்; நினைவுச் சுவடுகள் தொழிலில் சந்தித்த ஆளுமைகளின் சுவைபேசும்; அது ஜாதி, இன, மத, பேதங்களைக் கடந்து இன்றும் மனதில் இசை மீட்டும் ராகங்களைப்பாடும். 'இல்லறறாணி அஞ்சு பொம்பிள்ளைப் பிள்ளைகள் பெற்றவரின் மன உறுதியைக் கூறும்; மறுத்தான் ஜாதி வேற்றுமையில் அடக்குமுறை என்ன செய்யும் என்று சொல்லும்; 'பொன்னையருக்கு வேலைபோனது சிறுவர் உளவியலை படம் பிடிக்கும் - இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம். தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றுப்போல் சீறிப்பாயும் நினைவுச் சுரங்களாக சோ.ப. கவிதைகள் மிளிர்கின்றன. அவை ஓசையுடனும், பொருத்தமான சொற்பயன்பாட்டுடனும் படைக்கப்பட்டதால் வாசகனின் மனதைத் தெற்றெனப் பற்றிக்கொள்ளும்.
கவியரங்கக் கவிதைளை தனியே ஒரு தொகுதியாகப் போட்டிருக்கலாம். பாடல்களையும் தனி ஒரு தொகுதியாகத் தந்திருக்கலாம் என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. நினைவுச்சுவடுகள் கிளர்த்தும் அனுபவப்பகிர்வு வேறு. மற்றவை வேறு. அத்தோடு ஆங்கிலப் பதங்களின் நேரடிப் பாவனை - அதாவது - ஆங்கில எழுத்துகளிலேயே போடுவது எவ்வளவு தூரம் சாதாரண வாசகனிடம் கவிதை சென்றடைய ஊக்குவிக்கும். பயன்பாட்டில் உள்ள சொற்களான "ரீயூசன், 'றிம் மாஸ்ரர் என்பதை விட See Through (ஊடுருவி உள்ளே பார்க்கக்கூடிய) Luxury (ஆடம்பரம்) Negative (எதிர்மறை) என்பனவற்றுக்கு தமிழ் சொல்லைப் பயன்படுத்தி பழக்கத்துக்கு விடும்போது அனுபவம் தொற்றிக்கொள்ளும். பழக்கத்தில் உள்ள சொற்கள் இயல்புக்கு தவிர்க்க முடியாதவை. ஆனால், கடும் சொற்கள் மத்தியதர ஆங்கிலப் பின்னணியுள்ளவர்க்கு பொருத்தம்தான். பொதுமக்களுக்கல்ல.
மேலும் நூலின் அமைப்பு கச்சிதமாகவுள்ளது. ஆசை இராசையாவின் ‘குஞ்சியாச்சியும், பேத்தியும் சித்திரம் உணர்வுக்குள் பாயவல்லது. பேராசிரியர் சிவசேகரம் எழுதிய முன்னுரையும் சோ.ப. இன் என்னுரையும் வாசகனுக்கு வழிகாட்டுவன. ஆனால், அச்சு எழுத்தின் அளவு சிறிதாக உள்ளமை கவிதை வாசிப்புக்கு குந்தகமாக உள்ளது.
இவற்றுக்கு அப்பால், கட்புல, செவிப்புல விவாதங்களுக்கு அப்பால், சோ.ப. இன் நினைவுச் சுவடுகள் உ.வே.சாமிநாதையரின் என் சரிதம்போல், வைரமுத்துவின் சுயசரிதைபோல் ஈழத்து யாழ்ப்பாண மனிதனின் இருப்பை, வாழ்வியலை காலாதி காலத்துக்கும் தக்கவைக்கும் அரும்படைப்பு என்பதில் ஐயமில்லை.
கந்தையா ரீகைே8ன்
முகம் நாடாக்கள் மற்றும் இறுவட்டுக்கள் என்பன அறிமுகம் டப்புக்களும் <>)。កែខៃ គ្រោះ នៅថ្ញៃតែ tmumTm eeOmM sTTmlmtm seOsemmk mO OmmLS eeLu tmmu mHLLSLmm ប្រត្រៃ ហ្គោះ ព្រោយត្រូវតែ ៨ឆ្នាគ្រូធំ ស្វ៊ែរ LSuSKSAAAA ஜூன் 2006 3莺

Page 34
மயிலங்கூடலூர் பி.நடராசன் இயற்றிய சிறியதும், பெரியதுமான 52 குழந்தைப் பாடல்களின் தொகுதியானது “ஆடலிறை குழந்தைப் பாடல்கள்’ என்னும் தலைப்பிலான நூலாக, யாழ் இலக்கிய வட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், பாலர்கள், சிறுவர்கள், பிள்ளைகள் என்றவாறு அழைக்கப்படுவோரின் வயதெல்லையை
வரையறை செய்வது சற்றுக்கடினமானது. நூல் : ஆயினும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்ை சிறுவர்கள் படித்துப் பாடி இன்புறத்தக்க ஆசிரியர் : ஆடலி விதத்தில், இந்நூலின் பாடல்கள் (மயிலங்கூடலு பொருத்தமுற அமைந்துள்ளன எனக் வெளியீடு : யாழ். இ கூறமுடியும். அவற்றுள்ளும் இலங்கைப் யாழ்ப்பு பாடசாலை ஆரம்ப வகையினுள் முதனிலை பதிப்பு : ஒகஸ்ட் 1,2,3 ஆகியவற்றுக்குப் படிநிலையில், விலை : 250.00
சொல்லாட்சியாலும், பொருண்மையாலும் ஏற்றமுறையில் குழந்தைப்பாடல்களின் பல்வேறு தரங்களும் காணப்படுகின்றன. மாறாக இடைநிலை, உயர்நிலை மாணவர்களும் நயத்தக்க பாடுபொருட்சுவைமிக்க பாக்களும் உள்ளடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஐந்து வரிப்பாடல் தொடங்கி ஐம்பத்து இரண்டு வரிகளாலான கதைப்பாடல்வரை இந்நூலில் காணப்படுகின்றன. நூலாசிரியர் திரு.நடராசன் (ஆடலிறை) அவர்களின் தமிழ்ப்பணி பன்முகத்தன்மை வாய்ந்ததாயினும், தமிழில் குழந்தைக் கவிதைத்துறையில் ஈழத்தில் குறிப்பிடக்கூடிய இடத்தைப் பெற்றுள்ள படைப்பாளியாகக் கருதப்படுபவர். குழந்தை இலக்கியத்துறை ஆய்வாளர். தனக்கு மிகவும் ஈடுபாடுள்ள இலக்கியத்துறையில் தனது இளமைக்காலத்தில் தொடங்கி (அறுபதுகளில்) ஈழநாடு, தினகரன், திருமகன், முரசொலி ஆகிய ஏடுகளில் எழுதி வெளியான பாடல்களையும், உலகெங்கும் குழந்தைகளால் பாடப்படும் ஆங்கிலப்பாடல்களின் கருப்பொருளைக் கொண்டமைந்த சில பாடல்களையும், சோவியத் மூலக்கவிதை, சமஸ்கிருதமொழி மூலக்கவிதை ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த ஒரு சில பாடல்களையும், பல்வேறு நீத்தார் நினைவு மலர்களுக்காகத் தான் படைத்த குழந்தைக் கவிதைகளையும், தமிழ்ப் பாரம்பரியத்தில் செல்வாக்குப் பெற்று அறாத்தொடர்ச்சியுடன் வழங்கப்பெறும் சிறுவர் கதைகளுக்காக உருவாக்கப்பட்ட கதைப்பாடல்களையும் இணைத்து உருவாக்கி முழுமையுற நூலாக்கித் தந்துள்ளார்.
பூக்கள், பச்சைக்கிளி, அறிந்திடு, பாலகனே கேள், கீரிமலைக்குச் சென்றோம், வணங்குவேன், நடனம். ஆடும் தெய்வம், காந்தி ஆகிய தலைப்பிலான பாடல்கள் எளிமையும், பொருண்மையும், சந்தத்தெளிவும் கொண்டு சிறப்புறுகின்றன. குழந்தைகளுக்கான பாடல்கள் எப்படி அமைய வேண்டுமென நவீன கல்வியியலாளர்கள் கருதும் அம்சங்கள் யாவும் இப்பாடல்களுள் பொதிந்துள்ளன.
"வண்ண வண்ணப் பூக்கள்
மனதைக் கவரும் பூக்கள் வண்டு வந்து குந்தி
32 ஜனவரி - ஐ
 

மது அருந்தும் பூக்கள் கண்ணைப் பறிக்கும் பூக்கள்
காலை மலரும் பூக்கள் மண்ணில் தோன்றும் செடிகள்
வழங்கும் நல்ல பூக்கள்' (“பூக்கள்” பாடலிலிருந்து) சிறுவர்கள் இசையோடு பாடவும், இடரின்றி உச்சரிக்கவும், தொடராக நினைவுபடுத்தவும் ஏற்றதான பாடலாக இது அமைந்துள்ளது. "பச்சைக் கிளிதான் பறந்து வந்து
றை
தப் பாடல்கள் பாட்டுப்பாடுது
றை இச்சைக் கினிய கதைகள் கூறி
இதயம் கவருது'
ார் பி. நடராசன்) GG. - 2 99 இலக்கிய வட்டம், ("பச்சைக்கிளி’ பாடலிலிருந்து) பாணம்.
2005 "காகம் இனத்தோ டுண்டிடும்
களித்து மயிலும் ஆடிடும் இராகம் குயிலே பாடிடும்
இருந்து நீயும் மகிழ்ந்து பார்’
("அறிந்திடு’ பாடலிலிருந்து)
"பிஞ்சு மனத்தினில் வஞ்சம் வளர்த்திடும்
பேதைமை விட்டிடு செந்திருவே
அஞ்சி வளர்ந்திடும் நஞ்சு மனத்தினை
நீக்கி உயர்ந்திடு கண்மணியே'
(“பாலகனே கேள்” பாடலிலிருந்து)
"அன்னை போன்ற கடவுளே தந்தை போன்ற தெய்வமே இந்த உலகம் முழுவதும் படைத்துக் காக்கும் இறைவனே என்னை என்றும் காத்திடு கல்வி செல்வம் தந்திடு உன்னை என்றும் வணங்குவேன் உனது புகழைப் பாடுவேன்' ("வணங்குவேன்” பாடல்)
மேலே எடுத்துக்காட்டிய குழந்தைப்பாடல் வரிகள் ஒரு பானை சோற்றுக்குப் பதம் காட்டும் சில பருக்கைகள். இரசிகமணி கனக. செந்திநாதன் போன்ற பலராலும் பாராட்டப்பட்ட பாடல் “நல்ல வாத்தியார்’ ஆகும். குழந்தைகளுக்கேற்ற அருமையான அன்பும், அறிவும் ஊட்டும் LITL6). "எழுதத் தெரியா எமக்கு நன்றாய்.
எழுத்துஞ் சொல்லித் தந்தார் அழுதா லெம்மை அழைத் தணைத்தே
அன்புகாட்டி நிற்பார்'
என்பது அதன் ஒரு பகுதியாகும். ஈழத்துத் தமிழ்க் குழந்தைக் கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் “காலைத்தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக்கொஞ்சும் அம்மா” பாடல் தந்த வித்துவான் க. வேந்தனார். அவரது பாடலின் ஈர்ப்பினால் ஆடலிறையிடத்தே எழுந்த பாடல்கள் இனிய அப்பா, அம்மா எங்கள் தெய்வம், நல்ல வாத்தியார்,
ஜூன் 2006 酶

Page 35
தங்கத்தாத்தா முதலானவை. சொற்செட்டும் இசைக்கோவையும் இனிமை பயப்பவை, 13 கதைப்பாடல்கள் இந்நூலிலுள. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அறிமுகஞ்செய்யும் ஆக்கிமீடிசு, காந்தம் கண்டான் ஆகியவற்றுடன் சோவியத் பின்னணியிலான ஆடுகள் இரண்டு, கோழியும் குஞ்சுகளும் இவற்றுள் காணப்படுகின்றன. பொதுவில் கற்கின்ற மாணவர்களுகன்றிக் கற்பிக்கும் ஆசிரிய உள்ளங்களையும் மகிழ்விக்கக் கூடிய நூல் இதுவெனலாம். ஒவியர் ரமணியின் “நல்ல வாத்தியார்” பாடலின் பின்னணியில் தீட்டப்பட்ட கருத்தும், கவர்ச்சியும், தமிழ்பண்பாட்டுறைவும் மிக்க அட்டைப்படத்துடன் ஒவ்வொரு பாடலுக்குமான வண்ண ஒவியங்களும் (23 முழுப்படங்களுட்பட) நூலுக்கு அணிசெய்கின்றன. பாடல்களுக்கும், படங்களுக்குமானவை, 93 பக்கங்களாகவும், ஏனையவை (அணிந்துரை, வாழ்த்துரைகள், வாழ்த்துக்கவிகள், பதிப்புரை, முன்னுரை, பின்னிணைப்பு) ஆகியன 25
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கு ஒர் தனித்துவ இடமுண்டு. அவர்களில் பலர் தமிழ் மொழி செழுமை பெற தம்மையே அர்ப்பணித்து உழைத்தவர்கள். அந்தவகையில் சிறப்பாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்னும் இயற்பெயரைக்கொண்ட வீரமாமுனிவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய
பங்களிப்பு உரைநடை, செய்யுள், நூல் : திருக் இலக்கணம், அகராதி, மருத்துவம் என கலம் நீளும். ஆசிரியர் : ஆர். ே
வீரமாமுனிவர் கோனான் குப்பத்தில் அமைந்த மாதாவின் திருவருட்கொண்டு வெளியீடு நூலா இறைமகன் கிறிஸ்துவை வளர்த்து 130 டில் ஆளாக்கிய சூசையப்பரின் வரலாற்றை கொழு 'தேம்பாவணி' என்ற காப்பியமாகப் (1726) பதிப்பு: 19.03.2 படைத்துள்ளார். இது உலகம் போற்றும் விலை 150.00
இலக்கியமாக விளங்குகின்றது. அத்துடன் இந்த இலக்கியத்தின் மூலமே அதிகம் அறிமுகமாகி இருக்கின்றார் வீரமாமுனிவர். ஆனால், அவர் படைத்த ஒவ்வொரு படைப்புகளும் அந்த அந்த கருப்பொருட்களில் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை. வீரமாமுனிவர் படைத்தளித்த நூல்களில் ஒன்றுதான் "திருக்காவலூர்க் கலம்பகம்’ ஆகும். இந்நூலின் தனித்துவங்கள் அதிகம் வெளிவரவில்லை. ஏனெனில் வீரமாமுனிவரின் "தேம்பாவணி" காப்பியத்திற்கு நடைபெற்ற ஆய்வுகள் போல் 'திருக்காவலூர்க் கலம்பகம்' நூலுக்கு நடைபெற்ற ஆய்வுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில் ஆர். ஜோசப் ஜெயகாந்தன் அவர்கள் "திருக்காவலூர்க் கலம்பகம் ஓர் ஆய்வு" என்னும் நூலை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்நூலுக்கு ஆசியுரையை வண. இம்மானுவேல் பெர்ணான்டோ அடிகளாரும்; அறிமுகவுரையை பேராசிரியர் நீ மரிய சேவியர் அடிகளாரும் எழுதியுள்ளார்கள்.
"நம்மத்தியில் கத்தோலிக்க இலக்கிய சொத்துக்கள் பற்றி நம் கத்தோலிக்க எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும்
酶 ஜனவரி =
 

பக்கங்களாகவும் அமைந்து, 25x20 செ.மீ அளவில் அழகானதொரு நூலாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அழகியல், சூழலியல், எண், எழுத்து எண்ணக்கருக்கள், விஞ்ஞானம், ஆன்மீகம், இரசனை முதலான பல்தரப் பண்புசார் உணர்வுகளைக் குழந்தைகளிடத்தே வளர்த்தெடுக்கத் துணைபுரியக்கூடியது இந்நூலாகும். ஆடலிறையினால் தனது குருநாதர் அமரர் செ.கதிரேசர் பிள்ளைக்குச் சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இந்நூலினைத் தமிழ்ச் சிறார்களும், தமிழ் பயிற்றும் ஆசிரியர்களும் வாங்கிப்படித்துப் பயனுறல் வேண்டும். காலமறிந்து கூவிய சேவலின் பணியினை திரு பி. நடராசன் அவர்கள் ஆற்றியுள்ளார். அவரது நல்லாக்க நூலின் பயனே, எதிர்காலத்து அவரை தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சிகான உழைப்பை
ஊக்கப்படுத்துமெனலாம்.
கலாநிதி 8ெ. திருநாவுக்கரசு
காவலூர்க் பகம் ஒர் ஆய்வு ஜோசப்
ஜெயகாந்தன் Թmւլյի, பாசால் வீதி, ம்பு - 15.
OO6
அதிக அக்கறை எடுக்காதது பெரிய ஒரு குறை போல் தென்படுகிறது. ஆயர் தியோகுப்பிள்ளை ஆண்டகை தமது காலத்தில் தனி ஒரு மனிதனாகவும், திருமறைக் கலாமன்றத்தின் ஊடாகவும் இத்துறையில் அளப்பரிய பணிகள் பல புரிந்தார். தமது சொந்தச் செலவிலேயே பழைய ஏடுகள் பலவற்றையும், புத்தகங்கள் பலவற்றையும் அச்சேற்றினார்.” என பேராசிரியர் நீ மரியசேவியர் அடிகளார் இந்நூலின் அறிமுகவுரையில் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்க விடயம். இந்தப் பின்னணியில் கத்தோலிக்க அருள்பணியாளராகிய ஆர். ஜோசப் ஜெயகாந்தன் அவர்கள்; தமது பல்கலைக்கழக பட்டப்படிப்புக்காக 'திருக்காவலூர்க் கலம்பகம் ஓர் ஆய்வு என்னும் தலைப்பை தெரிவுசெய்து, அதில் ஆய்வு மேற்கொண்டு நூலாக
வெளியிட்டுள்ளமை சிறப்புக்குரிய விடயம் ஆகும்.
ஆர். ஜோசப் ஜெயகாந்தன் அவர்கள் இந்நூலில் கிறிஸ்தவ மதமும் தமிழ் மொழியும்; தமிழில் பிரபந்த இலக்கியம்; திருக்காவலூர்த் திருத்தல வரலாறும், அதன் பாடுபொருளும்; வீரமாமுனிவரின் புலமை நயம்; தமிழில் வந்த கலம்பகங்களில் திருக்காவலூர்க் கலம்பகத்தின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளின் கீழ் மிகவும் நுட்பமாக ஆய்வு செய்துள்ளார்.
ஏலாக்குறிச்சி எனப்படும் திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவைப் பாட்டுடைத்
தலைவியாகக்கொண்டு பாடப்பட்ட திருக்காவலூர்க் கலம்பகம்’ அடைக்கல அன்னையின் பெருமைகளையும், அவள் ஈன்றளித்த இறைமகனாம் இயேசுக்கிறிஸ்துவின் மீட்பையும், திருமறை உண்மைகளையும் அருமையாக விளக்கக் கூடிய சிறந்த நூல் என்கிறார் நூல் ஆசிரியர் ஆர். ஜோசப் ஜெயகாந்தன்.
அவர் மேலும் திருக்காவலூர்க் கலம்பகத்தின் சிறப்புப் பற்றி கூறும்போது, இதுவரை தமிழில் தோன்றியுள்ள கலம்பகங்களில் இது ஒன்றே பெண்பாக் கலம்பகமாகத்
ஜூன் 2006 33

Page 36
திகழ்வது. அத்துடன் கிறிஸ்தவ இலக்கியங்களில் உள்ள கலம்பக இலக்கியமும் இது ஒன்றேயாகும். ஏனைய கலம்பகங்களெல்லாம் சிற்றின்பச் செய்திகள் விரவியனவாக இருக்க, திருக்காவலூர்க் கலம்பகம் ஒன்று மட்டும் பேரின்பச் செய்திபெற்று விளங்குவது இந்நூலின் தனிச் சிறப்பு என்கிறார்.
கலம்பக உலகில் திருக்காவலூர்க் கலம்பகம் ஒரு புதுமைக் காப்பியமாகும். கலம்பகத்துள் கலம்பகம் என்றாலும் மிகையாகாது என்று வியந்து கூறும் ஆசிரியர்; காவலூர்க் கலம்பகத்தில் மட்டும் காணப்படும் ஒரு புதிய உறுப்பு 'சமூக உல்லாசம்'. இது கலம்பக இலக்கிய வளர்ச்சிக்கு ஓர் சான்றாகும் எனவும் கூறுகின்றார்.
வீரமாமுனிவர் தெரிந்த சொல்லைத் தெரியாத பொருளில் வைத்து பல இடங்களில் பாடியுள்ளார். அத்துடன் சமயக் கருத்தை இலக்கிய நயத்துடன் பாடியுள்ளார். இதனால் திருக்காவலூர்க் கலம்பகம் ஓர் சமய நூல் என்பதிலும் பார்க்க, தமிழ் இலக்கியம் எனக் கூறவைத்திருக்கின்றார் வீரமாமுனிவர். இவர், கற்பனைகளையும் உருவகங்களையும் அதிகம் கையாண்டுள்ளார். அடைக்கல அன்னையின் முடியாகிய விண்மீனும், உடையாகிய ஆதவனும், பாதுகையாகிய பிறை நிலவும், இதனுள் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பினும்
'கவிதை - கலைகளில் உன்னதமானது. அதனூடாக கவிஞர்கள் தங்களதும் சமூகத்தினதும் உணர்வுகளை வெவ்வேறுபட்ட கோணங்களில் கச்சிதமாகவும் நயம்படவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
கவிதைக் கலையை சிறந்ததோர் ஊடகம் என்றுகூடக் குறிப்பிடலாம். இவ் ஊடகத்தினூடாக பல செய்திகள் சமுதாயத்துடன் பகிரப்படுகின்றது. நூல் : பகிர்வு கவிஞர்கள் காலத்தின் கண்ணாடியாக (கவிதை இருக்கின்றார்கள். அவர்களது ஆசிரியர் : ஜெ. சுட கவித்துவத்தினூடாக அவர்கள் கவிபுனைந்த ெ வளியீடு : நூலாசிர் காலத்தின் பிரதிபலிப்புக்களை காணமுடியும். 122, செம் இந்த வகையில் கவிதை எனும் கலை நல்லூர். உயிர்ச் சுவடாக இறந்த காலத்தை சான்று பதிப்பு : பெப்ரவ பகள்கின்ற பணியைக்கூட செய்கின்ற விலை : 175.00 தென்றால் மிகையில்லை.
கவிஞர்கள் பிறக்கின்றார்களா? அல்லது உருவாக்கப்படுகின்றார்களா? என்றால் பதில் பிறந்து பட்டைதீட்டப்படுகின்றார்கள் என்பதே. அதாவது ஒவ்வொரு ஜீவராசிகளது உள்ளத்திலும் கவித்துவம் உள்ளது. அதனை அவற்றின் வாழ்க்கைக் கோலத்தை அவதானிப்பதனூடாக அறிந்து கொள்ள முடியும். அதுபோலவே பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் கவித்துவம் நிறைந்தவனே. அவனது மனம் சமூகத் தரவுகளால், சம்பவங்களால் தாக்கத்துக்குட்பட்டு பட்டைதீட்டப்படும் போது அவன் கவிஞனாக அடையாளப்படுத்தப்படுகின்றான்.
இந்த வகையில் செல்வி ஜெ. சுபாஷினியின் பகிர்வு எனும் கவிதைத்தொகுதி வெளிவந்துள்ளது. சுபாஷினி தனது எண்ணத்தின் பிரவாகங்களை கவிதைகளாக பின்னி பத்திரிகைகளில் பிரசுரமானவற்றை தொகுத்து பகிர்வு எனும்
34 ஜனவரி - ஜ
 

அவை திரும்பத் திரும்பச் சுவைக்கத்தக்க வேறு வேறு கற்பனை நயங்கள் வாய்ந்தவை எனப் பல அரிய கருத்துக்களை இந்நூலில் முன்வைக்கின்றார் ஆசிரியர் ஆர். ஜோசப் ஜெயகாந்தன் அவர்கள்.
இந்த ஆய்வு நூல் மறைக்கப்பட்ட கத்தோலிக்க இலக்கியத்தை வெளிக்கொண்டு வந்த பாரிய முயற்சியாகும். இந்நூலின் அட்டைப்படத்தில் திருக்காவலூர் அன்னை மரியாளின் திருவுருவம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நூல் ஆசிரியர் பற்றி மறைந்த கவிஞர் நாவண்ணன் கவி பாடியுள்ளார்.
ஆசிரியர் ஆர். ஜோசப் ஜெயகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
崇 இந்நூலாசிரியரின் மற்றுமொரு வெளியீடாக ‘சிதறிய என் சிந்தனை முத்துக்கள் என்னும் நூலும் வெளிவந்துள்ளது. இந்நூலில் ஆசிரியர் பல்வேறு பத்திரிகைகளிலும் தான் எழுதிய படைப்புக்களையும், தன்னால் எழுதப்பட்ட வேறு பல ஆக்கங்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
-Oné
கவிதைத் தோட்டமொன்றை எம் இரசனைக்காக உருவாக்கியிருக்கிறார். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு மாசி மாதம் வெளியிடப்பட்ட இக் கவிதைத் தோட்டத்தில் எழுபத்தொன்பது கவிதைக் கன்றுகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. எழுபது பக்கங்களைக் கொண்ட இக் கவிதைப் புத்தகம் அழகுற ஒழுங்கமைக்கப்பட்டு நேர்த்தியான அட்டைப்பட ஓவியத்துடன் காணப்படுகின்றது.
த் தொகுதி) இக்கவிதைப் புத்தகத்திலுள்ள கவிதைகள் ாஷினி எமது நாட்டுச் சூழ்நிலை, சமாதான ஏக்கம், lui காதல் உணர்வுகள், இளைஞர்களின் மணி வீதி, இன்றைய போக்குகள், சமூக சீர்திருத்தம், fl 2006 தமிழ் உணர்வு, மூடநம்பிக்கை தவிர்ப்பு,
பெண்ணியம் எனும் கருப்பொருள்களை உள்ளடக்கி புனையப்பட்டுள்ளன. இக்கவிதைகளில் சிலவற்றை தொட்டு நோக்குவதன் மூலம் ஒரளவேனும் பகிர்வினூடாக பகிரப்பட்ட பக்கங்களை உங்கள் மனக்கண்முன் தரலாமென நம்புகின்றேன்.
༡
"சமாதானம்.” எனும் கவிதையில்; 'பிள்ளை இன்னமும் பிறக்கவில்லை. அதற்குப் பெயர் கூட வைத்துவிட்டார்களாம்.
இதிலென்ன சிரிப்பு? நமது சமாதானமும் இது போலத்தானே??”
দুটা 2006 õDUS

Page 37
எனக் குறிப்பிடப்படுவது தமிழ் மக்களின் சமாதான ஆவல், ஏக்கம் என்பவற்றையும், சூழ்நிலைகளால் அது பின்தள்ளப்படுவதால் மனதில் எழும் சந்தேகம், நம்பிக்கையீனம் என்பவற்றையும் கோடிட்டுக் காட்டுகின்றது.
"வேல்விழி.கொடுமையால்.” எனும் கவிதையில்; “பெண்ணே. உன் வேல் விழி என் இதய நாளங்களை இடம் பெயரவைத்துவிட்டன. கடந்த காலமாய் அவற்றை தேடிப்புறப்பட்ட என் நாடிகள். இப்போ ‘காணாமல் போனோர் பட்டியலில்!” காணப்படுகின்றதாம்.!!”
எனும் வரிகளினூடே காதல் உணர்வை சமகால யதார்த்த சூழ்நிலைகளுடாக பிணைத்துத் தருகின்றார் சுபாஷினி.
"தொலைந்தவை கிடைத்ததா?’ எனும் கவிதையில்; "திரும்பவும் நீட்டினேன் பத்து ரூபா நோட்டொன்று “இரண்டு ரூபா இல்லை” என்றபடி தந்தார் ரொபியிரண்டு வாங்கியதை வாயில் போட்டபடி போகின்றேன் தொலைந்து போன சில்லறைகளை தேடுவதற்காக."
என்று பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தாற்போல வர்த்தகர்கள் பணச்சுரண்டலில் ஈடுபடுவதை சிறப்பாக சுட்டிக்காட்டுகின்றார் கவிஞர்.
“பட்டாசு கொழுத்தும் பக்தர்கள்.” எனும் கவிதையில்;
"பற்றைக்குள் பரபரக்கும் துப்பாக்கிச் சத்தத்திலே எத்தனை நாள் தூக்கமிழந்து தவித்திருப்போம்? இது போதாதென்று இப்போது கூடவா பட்டாசு வெடிகளிங்கு”
எனும் கவிதையினுடாக துப்பாக்கி ரவைகளாலும் குண்டுச் சத்தங்களாலும் புண்ணாகிப் போயுள்ள எம் மனங்களுக்கு திருவிழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் பட்டாசு கொழுத்துவதும் தேவைதானா? இது பொறுப்புள்ளவர்கள் செயலா? என கேள்வி கேட்கிறார் இன்றைய சமூகத்தைப் பார்த்து.
"முடியாது' எனும் கவிதையில்;
"என்னை ஓர் ஊமை
என்று தெரிந்தும் அவன்
மூங்கிலாக நினைத்து
வாசிக்க எடுத்தான் - ஆனால்
வெறுமனே ஊதமுடிந்ததே தவிர
5ADogg, ஜனவரி -

ஒரு புல்லாங்குழலாக வாசிக்க அவனால் முடியவில்லை!
என்று கவிவடிப்பதனூடாக ஒரு பெண்ணின் உணர்வுகளின் எதிர்பார்ப்பை கணவன் புரிந்து கொண்டு உணர்வொத்து வாழவேண்டுமென பெண் எதிர்பார்ப்பதையும்,
“விழியின் மொழி” எனும் கவிதையில்;
“புெண்ணே.!
உன் கண்ணைப்
பேசும் விழி என்றார்
அவை பேசும்
மொழியை
ஏன் கேட்கவில்லையவர்'
என்பதனூடாக பெண்களை போகப் பொருளாக பார்க்கும் காலம் மாறவேண்டுமெனவும், அவளின் உணர்வுகள் நியாயமான முறையில் மதிக்கப்பட வேண்டுமெனவும் ஆசைப்படுகிறார் கவிஞர்.
"நான் மட்டுமல்ல. எனும் கவிதையில்;
"தமிழ் அன்னையே!
நீ தந்த தமிழ் பழத்தை உண்டு
அதன் எழுத்து விதைகளை
இதயங்களில் தூவினேன்.
செழித்து வளர்ந்தது
நான் மட்டுமல்ல - என்
சமுதாயமும்தான்!”
எனும் வரிகளினூடாக தமிழில் கொண்டுள்ள பற்றையும், தமிழை ஒருவன் தன்னகத்தே பற்றுகின்றபோது அது சமூதாயத்தின் நல்விருட்சத்துக்கான விதையாக அமையும் என சிறப்பாக தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றார்.
மேலே குறிப்பிட்ட சில கவிதை வரிகளினூடே சுபாஷினியின் பகிர்வு நூலின் தரிசனத்தை ஒரளவேனும் காணமுனையலாம்.
"நினைத்தால் வருவதல்ல
கவிதை
நெஞ்சம் கனத்தால் வருவது!"
என்பதற்கிணங்க கவிஞர் சுபாஷினியின் நெஞ்சம் கனத்ததால் உருவான உணர்வு ஓவியங்களின் அழகை பகிர்வை படிப்பதனூடே அனுபவிக்கலாம்.
கவிஞரின் கன்னிப் பிரசவமான இப் பகிர்வு கவிதை நூலில் உள்ள கவிதைகளில் சந்தம், எதுகை மோனை, வசன அமைப்பு என்னும் அம்சங்களை இன்னும் கவனித்து சேர்த்து கவிதையூடாக கருத்தைச் சொல்லும் புதுக்கவிதையின் சிக்கன யுக்தியையும் கையாண்டால் மேலும் இக்கவிதைகள் சிறப்புற்றிருக்கும்.
தொடர்ந்தும் கவிஞர் சுபாஷினி கவிதைகளின் நுட்பங்களை இன்னுமின்னும் அறிந்து, அவற்றினூடாக மிகச் சிறப்பான கவிதைகளை படைக்க வேண்டும்மென அவாவுவதோடு, அவரது எதிர்கால கவிதைப் பயணத்திற்கு ஆதரவும், வாழ்த்தும் வழங்குவோம்!
- கவிஞர் ஆரியநிலா ஜூன் 2006 35

Page 38
மனித வாழ்வியல் வேறு - வரலாறு வேறல்ல. இரண்டும் இரண்டறக் கலந்து ஏற்ற இறக்கம், நன்மை தீமைகள், சாதனை வேதனை எனத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த வரலாற்றுத் தொடரில் புதையுண்டு போனவைகள் - புதைக்கப்பட்டவைகள் - துர்ந்து போனவைகள் எத்தனை எத்தனை? அவற்றில் சிலவற்றையேனும் தற்போது வாழும் சிலரிடம் தோண்டி எடுக்கலாம். நூல் : கடலலைக அதிலும் எவ்வளவு தூரம் வெற்றி (சமூக வா கிடைக்கும்? அவர்களின் நினைவுகளிலிருந்து ஆசிரியர் கலைய வார்த்தைகளாக வெளிவருபவைகளைத்
தவிர ஏனையவைகள் இல்லாதவைகளாக - வெளியீடு:நெயே கிட்டாதவைகளாகவே மாறிவிடுகின்றன. 28/1, சென். ஜே இதனால் ஒரு சமூகத்தின் தனித்துவங்கள் - யாழ்ப்பாணம் அடையாளங்கள் - பிரபல்யங்கள் கணிசமான பதிப்பு: டிசெப அளவில் மூழ்கடிக்கப்படுகின்றன - என்று விலை : 200,00
தொடரும் நூலாசிரியர் கலையார்வன் கு. இராயப்புவின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக, அவரது ஆக்கத்தில் உருவான கடலலைகள் கொஞ்சும் நகள் என்னும் வரலாற்றுப் பதிவுகளை தாங்கிய நூல் வெளிவந்துள்ளது.
ஏற்கெனவே, கணினித்துறை சார்ந்த பெறுமதிமிக்க நூல்கள் சிலவற்றையும், வேறு நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ள கலையார்வன் - தான் சார்ந்த குருநகர் மண்ணினதும், மக்களினதும் மீதான பற்றுதலின் வெளிப்பாடாக வெளிக்கொணர்ந்துள்ள இரண்டாவது நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இதற்கு முதல், 'குருநகள் கலை மாட்சி' என்ற நூலினூடாக குருநகள் மண்ணின் பூர்வீகம், இழப்புகள், குருநகள் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்ட நூல்கள், குருநகள் மக்களாலும், குருநகரிலிருந்தும் வெளியிடப்பட்ட வெளியீடுகள், குருநகள் கலை, இலக்கிய, நாடக மன்றங்கள், நாடக எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், குருநகள் நாட்டுக்கூத்துச் சிறப்பு, குருநகள் கவிஞர்களால் எழுதப்பட்ட கூத்துக்கள், குருநகள் பிரசவித்த நாட்டுக்கூத்து அண்ணாவிகள் என குருநகள் மண் பற்றிய பலரும் அறிந்திராத வரலாற்றுத் தகவல்களை ஒரே பார்வையில் நம் முன்வைத்த ஆசிரியர், இந்நூலில், குருநகள் கலை மாட்சி என்ற நூலை வெளியிடப்பட்ட பின்னர் அந் நூலில் இடம்பெற்ற விடயங்கள் பற்றி அறியக் கிடைத்த மேலதிக விடயங்களையும் இணைத்துள்ளதுடன், மேலும் பல விடயங்களையும் உள்ளடக்கியிருப்பதன் மூலம் 'கடலலைகள் கொஞ்சும் நகள் குருநகள் பிரதேசம் தொடர்பான முழுமையான வரலாற்று நூலாக தடம் பதித்துள்ளது. காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக வெளிவந்துள்ள இந்நூல், உண்மையில் பெறுமதி வாய்ந்ததாகும்.
இந் நூல் போன்று, பிரதேசங்களின் வரலாறுகளை முன் வைக்கும், பல நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், எமது தமிழ்ப் பிரதேசங்களைப் பொறுத்தவரை இதன் அவசியம் - தேவை இன்றைய நாட்களில் மிகவும் உணரப்படுகின்றது. தொடர் யுத்தத்தால் மிகவும் கொடுரமாக பாதிக்கப்பட்ட தமிழ் மண்ணின் வளம்
36 ஜனவரி -
 

நிறைந்த எண்ணற்ற பெருமைகள் - சிறப்புகளுடன் நிலைத்திருந்த பல பிரதேசங்கள் அழிக்கப்பட்டு விட்டன. பல இராணுவ ஆக்கிரமிப்புக்குள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இன்னும் பல பிரதேசங்கள் தொடர் இடம்பெயர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு, அவற்றின் கருவூலங்கள் சிதைக்கப்பட்டு, சிதறடிக்கப்பட்டு விட்டன. இப் பிரதேசங்களில் வாழ்ந்த பெருமளவு மக்கள்
ள் கொஞ்சும் நகர் ழ்வியல் தரவுகள்) நாடு முழுவதும் இடம்பெயர்ந்து, உலகம் ார்வன் முழுவதும் புலம்பெயர்ந்து
சின்னாபின்னப்பட்டுப் போய் விட்டார்கள்.
(கு. இராயப்பு) ாகல்சரல் கவுன்சில் இன்னும் வருடக்கணக்காக தொடர்ந்த ஜம்ஸ் மேற்கு வீதி இடம்பெயர்வுகளால் பல பிரதேசங்களின்
வரலாறுகளுடன் இணைந்து - இயைந்து bufi 2005 நின்ற ஒரு தலைமுறையின் அஸ்தமனங்கள்
அதிகரிக்க, புதிய தலைமுறை தோன்றி வருகின்றது. இவர்களிடம் தம் பூர்வீக நிலங்கள் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை பெற முடியாத நிலை. ஒரு காலத்தில் நிலைமை சீராகும் நிலை இம் மண்ணில் ஏற்பட்டாலும் - இப் பிரதேசங்களின் முன்னைய ஆனந்த வாழ்வு மீண்டும் வரும் என எதிர்பார்க்க முடியாது. வரலாம், எல்லாம் வெவ்வேறு வடிவங்களில், இன்று தமிழ் மண்ணின் பல பிரதேசங்கள் தொடர்பான கதைகளைக் கேட்கும்போது, வேதனையோடு கேட்பதைத் தவிர, வேறு தெரிவு இருப்பதில்லை. இந்த நிலையில் இது போன்ற வரலாற்று நூல்களின் தேவை அவசியமாகின்றது.
இவற்றுக்கப்பால், நவீனத்துவத்தின் நுழைவு எமது பாரம்பரியங்களை அப்புறப்படுத்தி வருகின்றது. மறு புறத்தில், முன்னைய மக்களிடம் காணப்பட்ட பிரதேசங்களுடன் ஒன்றித்து வாழும் தன்மையுடன் ஒப்பிடும் போது, இன்றைய புதிய வளர்ந்து வரும் சந்ததியினரின் போக்குகள் வேறு விதமாகச் செல்கின்றது. இவர்கள் முன்பாக தத்தம் பிரதேசங்களின் வரலாறுகளை முன்வைக்கும் போது ஓரளவுக்கேனும் அவற்றின் மீதான பற்றுறுதியை கொண்டு வரலாம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் ஒப்பிடும் போது, கடலலைகள் கொஞ்சும் நகர் மையப்படுத்தி வெளிவந்துள்ள குருநகள் பிரதேசம், முழுமையாக ஆக்கிரமிக்கப்படாவிட்டாலும், ஏனைய பாதிப்புகள் குருநகரிற்கும் நிறையவே பொருந்தும், அவலங்களும், அனர்த்தங்களும், நவீனத்துவத்தின் பாதிப்புக்களும் மிகத் தாராளமாக இங்கும் அரங்கேறின. மக்களின் இடம்பெயர்வும், புலம்பெயர்வும் இங்கும் அதிகம். அதனால், முன்பிருந்த நிலை இன்றில்லை. வரலாறு மாறிச் செல்கின்றது.
இந்த நிலையில்தான், குருநகர் மண்ணின் வரலாற்றுச் சுவடுகளை, காலப் பெருமைகளைத் தாங்கி அப்பிரதேச மக்களுக்கும், அப்பிரதேசத்தைப் பற்றி அறிந்திராத ஏனைய மக்களுக்கும் வரப்பிரசாதமாக "கடலலைகள் கொஞ்சும் நகள் நம் முன் விரிந்துள்ளது.
கரையோரக் கிராமமான குருநகர் கடற்றொழிலுடனும், கலைகளுடனும் இரண்டறக் கலந்த மண், அதன் ஒவ்வொரு பக்கங்களும் இவற்றின் ஆளுகைக்குட்பட்டே இருக்கும். இந்
ஜூன் 2006 酶

Page 39
நூலில் 'அறிமுகம்' என்னும் பகுதியைத் தவிர்த்து, 18 தலைப்புக்களில், 180 பக்கங்களில் விலாவாரியாக குருநகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவையாவன; ஆளுமை, சமூகம், இல்லிடம், சடங்குகள், புனித யாத்திரைகள், தொழில் வளர்ச்சி, கடற்கலம், கலங்களின் பயன்பாடுகள், தொழில் உபகரணங்கள், தொழில் பண்புகள், வலைகளின் அமைப்புகளும் தொழில் முறைகளும், தொழிலாற்றுகையில் எதிர்கொள்ளும் அபாயங்கள், குருநகள் கொண்ட ஆலயங்களும் அவற்றின் வரலாறுகளும், விளையாட்டு, கலை, சிற்பம், ஒவியம், மண்ணின் நினைவுகள், வழக்கிலிருந்த சொற்கள் ஆகியன. இவை ஒவ்வொன்றையும் பல உப தலைப்புகளுடன் சிறப்பாக முன் வைத்துள்ளார் கலையார்வன். இவற்றில் 'மண்ணின் நினைவுகள் என்ற பகுதி மட்டும் கவிதைகளாக அமைந்துள்ளது. எனினும் அது கூட ஒரு
டிசெம்பர் 26, 2004 நினைவு கூரப்படவேண்டியதும் இலகுவில் எவராலும் மறந்துவிடவியலாததுமான ஓர் துக்க நாளாகும். சுனாமி அனர்த்தத்தால் இலங்கையின் சனத்தொகையில் இருபது பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டனர்.
காவு கொள்ளப்பட்ட உயிர்களில் சிறுவர் சிறுமியரின் துன்பியல் சாவு
நிகழ்வுகளால் கலங்காதவர்கள் இருக்க நூல் : சுனாமி முடியாது. சுனாமி அனர்த்தத்தால் சோகங் சூனியமாக்கப்பட்ட பிரதேசங்களும் (அனுட சூறையாடப்பட்ட சொத்துக்களும் ஆசிரியர் : செப வெளிப்படையாக புலப்படும் அழிவுகளாகும். வெளியீடு : அம6 கண்ணுக்குத் தெரியாத வகையில் சுனாமி யாழ் தந்த அவலம் உறவுகளின் உள்ளங்களை பதிப்பு: 15.12. வலுவிழக்கச் செய்தது. இத்தகைய விலை : 140.0
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஆறுதல் கூறி துயர் துடைத்த அனுபவச் சாரல்களின் வெளிப்பாடுதான் “சுனாமி சொல்லாத சோகங்கள்.”
எழுதப்படாத அறிக்கைகளாய் குவிந்து காணப்பட்ட மனித அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து பாதிப்புக்களின் பதிவுகளாக தகவல்களை தக்க வைப்பதிலும் தவிக்கும் மன வடுக்களை போக்குவதிலும் இந் நூல் முதன்மை வகிக்கின்றது. அதோடு அழிவுகளின் பல பகுதிகள் ஆவணமாக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் செபமாலை அன்புராசா அடிகளார் தனக்கேயுரித்தான பண்புடன் எடுத்தாண்டிருக்கும் ஆற்றுப்படுத்தல் முறைமையில் சுனாமி பற்றிய அறிவூட்டல்களும் விழிப்புணர்வுக் கருத்தாடல்களும் விரவிக் காணப்படுகின்றது. கனம் காத்திரமான ஏழு கட்டுரைகள் வாயிலாக அனர்த்த அவலங்களின் இரண்டு பக்கங்களையும் படம் பிடித்துக் காட்டும் படைப்பு முயற்சி வரவேற்கத்தக்கது. -கடல் அன்னை மானிடத்திற்கு வரைந்தமடல், -அனுபவத்தை ஆரம்பிக்குமுன், -"ரைடல் ஊவேஸ்' சோ, கடல் கோளோ அல்ல சுனாமி, -களத்தில் கண்டவை,
ÚíD9195) ஜனவரி
 

வரலாறுதான். குருநகள் மண் எதிர்கொண்ட அவலங்களின்போது ஆசிரியர் புலம்பெயர்ந்திருந்த காலத்தில் அவரால் எழுதப்பட்டு நூல்களிலும், வானொலிகளிலும் வெளியாகிய கவிதை வரிகளாக அவை அமைந்துள்ளன.
மொத்தத்தில், வரலாற்று நூலொன்றை ஆக்குவது இலகுவானதல்ல. அதன்போது எதிர்கொள்ளும் இடர்களும், நூல் வெளிவந்த பின் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகளும் அநேகம், இருப்பினும் துணிந்து இம் முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளார் கலையார்வன் கு. இராயப்பு. ஆக, வெளியார் குருநகரில் வாழாமலேயே குருநகரை அறியவும், அங்கு வாழ்வோர் தம் மண்ணின் பெருமைகளைக் கண்டுணரவும் 'கடலலைகள் கொஞ்சும் நகர் ஒரு வரம்தான்.
-O 3 On
- சிறுவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களும் அவற்றுக்கான சிகிச்சைகளும், -பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும், -சுனாமி புகட்டும் போதனை என, ஏழு விதமான பொருளடக்கத்துடன் 85 பக்கங்களில் காணப்படும் அழகிய நூல்தான் - சுனாமி சொல்லாத சோகங்கள்.
சுனாமி வருவதற்கு முன்பு மக்கள் சொல்லாத மத்தியில் சுனாமி பற்றிய அறிவின்மை கள் இருந்தது ஒருவகை. ஆனால் சுனாமி வத் தொகுப்பு) அனர்த்தம் நிகழ்ந்த பின்பு சுனாமியை ஒரு மாலை அன்புராசா வியாபாரமாக, விளம்பரமாக,
ஸ்மரித்தியாகிகள், நகைச்சுவையாக பார்த்த அனர்த்தத்தால் ப்பானம், பாதிக்கப்படாதவர்களின் நிலைப்பாடுகளை 2005 ஆசிரியர் விபரித்திருக்கின்றார். அத்தோடு
சுனாமி என்றால் என்ன? உலக வரலாற்றில்
ட சுனாமியின் பங்கு பற்றி புள்ளி
விபரங்களோடு எடுத்துரைத்திருக்கின்றார்.
சுனாமி ஏற்பட்ட பிரதேசங்களிற்கு நேரில் சென்று, தான் களத்தில் கண்ட அனுபவங்களை தெளிவான நடையில், புதுமையான சொற்பிரயோகங்களோடு, புனிதமான உணர்வுகலந்து யதார்த்த பூர்வமாக விழிப்புணர்வூட்டியிருக்கின்றார். சிறுவர்கள், பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றிற்கான சிகிச்சைகளையும் தனித்தனியாக கோடிட்டுக் காட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வரைந்த ஒவியங்கள், பெண்கள் மற்றும் தாய், தந்தை உறவுகளின் கருத்துக்கள் போன்றவற்றையும் தொகுத்து அளித்திருப்பதில் உயிர் துடிப்புக் காணப்படுகின்றது.
"இயற்கை வளங்களை மனிதன் எந்தக் காரணங்களுக்காகவும் அழித்துவிடாது பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து ஆணித்தரமான ஆலோசனையாகவும், விழிப்புணர்வூட்டும் எச்சரிக்கையாகவும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, "சேதுசமுத்திரக் கால்வாய்த்திட்டம். இத்திட்டத்தினை அரசுகள் மீள்பரிசீலனைக்குட்படுத்தக் கூடாதா? என்றவாறான நியாயபூர்வமான வினாக்கள் ஆதாரங்களோடு விளக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 2006 37

Page 40
தனது பன்முக ஆளுமைத் தன்மைகளை வெளிப்படுத்தும் புலனாய்வுத் தேடல் மூலம் சுனாமி தொடர்பான தாக்கங்களையும் அதிலிருந்து மீளவும் எழுதல் பற்றிய ஆய்வுகளையும் அன்புராசா மேற்கொண்டிருக்கின்றார்.
இந்நூலின் வாசகர்களால்தான் இன்னுமொரு சுனாமியின் வரவைத் தடுக்கமுடியும். காரணம், வாசக மனங்களில் விழிப்புணர்வுக் கருத்துக்களை விதைத்து நிற்கும்
பாக்யா
ஈழத்தில் சிறுவர் சஞ்சிகைகளுக்கான
தேவைகள் நிறையவே உள்ளன.
இத் தேவையை நிறைவு செய்வதாக ஈழத்தில் வெளிவந்திருந்தாலும், அவை எவையும் தொடர்ந்து வெளிவராமல் நின்று போனதால் - இன்னமும் தமிழகத்தில் இருந்து வெளிவரும் கோகுலம், சுட்டி விகடன், அம்புலிமாமா போன்ற சஞ்சிகைகளையே நம்பியிருக்க வேண்டிய நிலையில் எமது சிறுவர்கள் உள்ளார்கள். இந்நிலையில் நம்பிக்கையைத் தரத்தக்கதாக கொழும்பிலிருந்து வெளிவரும் விஜய் பத்திரிகையும், வவுனியாவில் இருந்து வெளிவந்த 'பூங்கனி’ சிறுவர் மாத இதழும் தம்மாலான பங்களிப்புக்களை எமது சிறுவர் உலகிற்கு, மாணவ சமுகத்திற்கு வழங்கி வரும் நிலையில் மற்றுமொரு சஞ்சிகையாக பாக்யா என்னும் சிறுவர் மாத இதழ் யாழ்ப்பாணம் கொக்குவிலில் இருந்து எஸ். இராஜகுலேந்திரனை ஆசிரியராகக் கொண்டு ஜனவரி 2006 முதல் வெளிவருகின்றது. சிறுவர்களுக்கு பயனுள்ள ஆக்கபூர்வமான பல்வேறு விடயங்களையும் தன்னகத்தே கொண்டு வெளிவரும் பாக்யா சிறுவர் மாத இதழும் எமது சிறுவர்களிடம் தனக்கென்றதொரு இடத்தைப் பிடிக்கும் என நம்பலாம். இருப்பினும் "பாக்யா வின் உட்பக்க வடிவமைப்பில் சிறுவர்களை கவரத்தக்க விதத்தில் இன்னும் அழகியல் தன்மையை அதிகரித்தால் அதிக கவனத்தைப் பெறும் - அட்டைப் படங்கள் சிறப்பாக உள்ளன. முகவரி: இல. 121, கே. கே. எஸ். விதி, கொக்குவில், الرب .யாழ்ப்பாணம் ܢܠ ཡོད༽ /് தோற்றுவிடுவேனோ என்று ஒருவன்
தயங்கிக்கொண்டிருக்கும்போதே நிறையத் தோல்விகளைக்கண்ட ஒருவன் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறான்.
-ஹென்றி சி. லிங்க்
ノ ܢܠ
38 ஜனவரி - ஐ
 
 
 
 

சுனாமி சொல்லாத சோகங்கள் மனிதத்துவத்திற்கே உரித்தான பார்வையோடு இயற்கை வளங்களை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. அத்தோடு சுனாமி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளவர்களுக்கும் ஏற்ற நூலாகவுள்ளது.
-(39ạn. Qìgạẩofiểồ.
* ஞானரதன்
ஈழத்துத் தமிழ் திரைப்படத்துறையில் தனித்துவம் மிக்க
இடத்தை வகித்ததுடன், சிறந்த கலை, இலக்கிய படைப்பாளியாகவும்
விளங்கி நாவல், சிறுகதை, ஓவியம், கட்டுரை எனப் பரந்த தளங்க
ளில் பல படைப்புக்களைத் தந்த ஞானரதன் (வை. சச்சிதானந்த சிவம்) 18.01.2006 இல் காலமானார். ஒளிப்படத்துறையில் காலத்தின் பிரதிபலிப்புக்களாக பல்வேறு குறும்படங்களையும், முழு நீளத் திரைப்படங்களையும் இவர் தயாரித்திருந்தார்.
* ஆட்டிஸ் மணியம்
ஆட்டில் மணியம் என அழைக்கப்படும் ஈழத்தின் புகழ்பெற்ற ஓவியரான கலாபூஷணம் பெரியதம்பி சுப்பிரமணியம் 15.03.2006 இல் காலமானார். "சினிமா கட் - அவுட்டுகள்’ வரைவதில் தனக்கென்றொரு தனித்துவத்துடன் விளங்கிய இவர், கோவில்கள், திரையரங்குகள் போன்ற பல இடங்களில் தனது ஓவியத் திறமையால் முத்திரை பதித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியவர்.
* கவிஞர் நாவண்ணன்
கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், ஓவியர் எனப் பல தளங்களிலும் தனது தடங்களைப் பதித்த கவிஞர் நாவண்ணன் முருசலீன் சூசைநாயகம்) 15.04.2006 இல் காலமானார். ஆரம்ப காலங்களில் கத்தோலிக்க இலக்கிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்ட இவர், பின்னைய காலங்களில் போர்க்கால இலக்கியங் களை படைப்பதில் முன் நின்றார். "இறுதி மூச்சு’ என்ற நாடக நூல் இவரது முதல் நூலாக 1972 இல் வெளிவந்தது. தொடர்ந்தும் பல நூல்கள் வெளிவந்தன. இறுதியாக சுனாமியின் அவலங்களை வெளிப்படுத்தும் “சுனாமிச் சுவடுகள்’ என்னும் கவிதை நூலை கடந்த ஆண்டில் வெளியிட்டிருந்தார்.
* ஈழத்துச் சோமு
ஈழத்துச் சோமு என்ற பெயரில்; ஈழத்துக் கலை இலக்கிய உலகில் அறியப்பட்ட படைப்பாளி கலாபூஷணம் நா. சோமகாந்தன் 28.04.2006 இல் காலமானார். இலக்கிய உலகில் தமிழ் மாமணி, தமிழ் ஒலி, இலக்கியக் குரிசில் ஆகிய பட்டங்களைப் பெற்றிருந்த இவர்; நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எனப் பலவற்றைப் படைத்தவர். இவற்றில் பல நூல்களாகவும் வெளிவந்துள்ளன. தம் வாழ்வாலும் பணிகளாலும் இம் மண்ணிற்கு வளம் சேர்த்த இவர்களுக்கு 'கலைமுகம் தனது அஞ்சலிகளைச் செலுத்துகின்றது.
চ5ঠা 2006 酶

Page 41
வகுப்பறையில் வண்ணாத்துப்பூச்சி அமர்ந்திருந்தபோது அதன் சிறகுகளில் இருந்து வானில் விரியத்தொடங்கினேன்
என் கனவுகளின் பச்சைப்பசேலென்ற ஞாபகக் குவியலை, குப்பையென்று
கொட்டவும் எரிக்கவும் அம்மா படும் பிரயத்தனம் கண்டு கொடுப்புக்குள் சிரிச்சுக்கொண்டு
கரைகின்றேன், வண்ணத்துப்பூச்சியின் சிறகுள்
ஒளித்துக் கொண்டு.
நேற்றுநடுச்சாமத்தில் வண்ணத்துப்பூச்சி பற்றிய மயக்கத்தின் நீண்ட தெருவில் கிடந்து உருண்டபடி
எழுதிய கவிதை காலையில் காணாமல் போயிருந்தது
எங்கே போனது அதுவென்று தேடிக்களைத்து புலம்பியபோதுதான், மயிர்கொட்டி ஒன்று அந்தக் கவிதைக் காகிதத்தில் ஊர்ந்து கிடந்ததாயும் அந்தக் கவிதைக் காகிதத்தாலேயே அதை நசித்து
வீசி எறிந்ததாயும்,
அம்மா சொல்லிப் போட்டு கன்னத்தில் குழி விழச்சிரிச்சுக் கொண்டு அங்காலே போனா.
酶 ஜனவரி =
 

பின்வளவுக்கு வெற்றிலை ஆயச்சென்றபோது, வண்ணத்துப் பூச்சியின் செட்டைகள் பிய்ந்து கிடந்தன,
q%ര് മെർ
ஒரு புள்ளியில்
வசிக்கும்
எனது நிரந்தரம் தன் கை கால்களை நீட்டி வடிவங்களுக்குத் தலை கொடுக்க, களைச்சு வேர்த்து ஓடிச் திரிகிறது
சுயத்தின் தற்கொலை சொல்ல முடியா மொழிகளின் உடலில்
வழிந்தபடி இருக்கிறது
காவித்திரியும் சுமைகளின் கனவை எச்சில் விழுங்கி விழுங்கி, மனம் ஒப்புவிக்கிறது
எனது சங்கடங்களின் தருணங்களில் தொண்டைக்கும் நெளியும் புழுக்கள்
மலத்துடன் என்றாலும்
வெளியேறாததன் காரண உண்மை புள்ளியின் தலைக்குள் புதைந்து கிடக்கிறது.
ஜூன் 2006 39

Page 42
முகமாலை சேகர்
காலை மணி ஏழு.
அந்த நேரத்திற்கே உரிய கலகலப்பு அந்த நாளின் ஆரம்ப ஓட்டம் மனித நடத்தைகளில் பிரதிபலிக்க ஆரம்பித்து இருந்தது. நகரத்து அந்த பசு மாடு வழுவழுப்பாக நன்கு கொழுத்து, மெழுகு பூசிய தோல் தோற்றம் பெற்று அந்தத் தேநீர்க் கடையை உள்நோக்கியவாறு நின்று கொண்டிருந்தது. பஸ் நிலையத்தை அண்மித்த அந்தத் தேநீர்க் கடையில் கூட்டம் சேர்ந்திருந்தது. சிற்றுண்டி, காலை உணவு வியாபாரம் களைகட்டி இருந்தது. முதலாளி காசு மேசையில் இருந்தவாறு உள்ளிருந்து வரும் கட்டணக் குரலுக்கு செவிசாய்த்து வசூலிப்பதும் உள்ளே கண்ணால் மேற்பார்வை செய்வதுமாக இருந்தார். தேநீர் அருந்தி வெளியே வந்த நான் அவர் அருகே தூங்கிக் கொண்டிருந்த இதரைக் குலையில் இருந்து ஒரு பழத்தை பிடுங்கி வாய்க்குள் தள்ளி மென்றேன். வாசலில் நின்றிருந்த அந்தப் பசு தலையை ஆட்டியது. தோலை அதனிடம் நீட்டினேன். தன் நாவால் வெகு லாவகமாக பற்றி மெல்லத் துவங்கியது. முதலாளியிடம் மீதியைப் பெற்று வாசலில் இறங்கினேன். அந்தப் பசுவை தடவிவிட்டு பஸ் நிலையம் நோக்கி நகர ஆரம்பித்தேன்.
முகமாலை - எக்ஸ்பிறஸ்' 'வாங்கோ, வாங்கோ' சிற்றுர்தி நடத்துனர் ஒருவர் கூவிக்கொண்டு இருந்தார். இ.போ.ச தரிப்பிடம் நோக்கி நகர்ந்தேன். அங்கு முகமாலை போட்டை தாங்கியவாறு ஒரு பேரூந்து நின்றிருந்தது. மெதுவாக ஏறி ஜன்னல் ஓர இருக்கை ஒன்றில் அமர்ந்து
கொண்டேன். மெல்ல காலைக்காற்று என்6 இதமாக இருந்தது. பார்வையைச் செலு: இன்னமும் அந்த சி முகமாலை எக்ஸ்பி கூவிக்கொண்டு நிற்ப விழுந்தது. அருகே ! இப்ப கொஞ்சம் மு: எக்ஸ்பிறகம் முகமா நான் விட்டுட்டன்; அ போவமண்டு இருக்கி கேட்காமலே அவர் கூறிக்கொண்டிருந்தா கெதியாய்ப் போகல பதிலளித்தபடி இருக் வசதிப்படுத்திக் கொ ஏதோ ஒரு ஏக்கம் அ உணர்வு கவ்வியிருந் உணரவும், உணராப புரியாத உணர்வு நி ரிக்கற்றை வழங்கிக் சாரதி பஸ்ஸை ஸ்ர தனக்கு மேல் உள் வளியாக நடத்துனரி காத்திருந்தார். 'றைட் குரலோடு பேரூந்து ெ புறப்பட்டுவேகம் பிடி வெளியே பார்வைை இருந்த எனது பார்ை முகமாலை எக்ஸ்பி எனது பேரூந்தை மு கொண்டிருந்தது தெரி
'எக்ஸ்பிறஸ்' நாட்களில் என்னை அந்த சொல் - கடு கல்வியில் சாவகச்ே கல்லூரியில் கால் ப பாடசாலை முடிவுற்ற ஒரு பணிஸ், முன் க சைக்கிளில் வரும் ந தொற்றி ஒரு மைல் கணிதபாட ஆசிரியரி வகுப்பு சுமார் ஒரு ம தொடரும், சாவகச்ே நிலையத்தை வந்து மணிக்கு சேர்ந்தால்த பஸ்ஸைப் பிடிக்கல வரும் வவுனியா, மு: எல்லாம் கடுகதி. 'க முகமாலையில் நிற்க L6bdib 3560)Ld u6rt வரும். அதுதான் தஞ
40
ஜனவரி =
 
 
 

மிய இளந்தென்றல்
Ծ601 6)/(blԳեւ 1951, ஜன்னலால் ந்தியபோது ற்றுார்தி நடத்துனர் றளில் என்று து காதில் இருந்த ஒருவர், irgOTLD g5T6ór C.T.B லைக்கு போனது. தாலை இதிலை றன்! ஏதும் எனக்கு ர். 'ஓம், கொஞ்சம் Tம் ஒப்புக்கு 5கையில் என்னை ாண்டேன். மனதில் அல்லது புரியாத ததை என்னால் 0லும் இருக்கும் ஒரு லை. நடததுனா கொண்டு வந்தார். ாட் செய்தவாறு ாள கண்ணாடி ன் உத்தரவுக்கு
நடத்துனரின் மெதுவாக க்க ஆரம்பித்தது. ய தவளவிட்டவாறு வயில் அந்த றஸ் சிற்றுார்தி ந்தியவாறு சென்று ரிந்தது.
- எனது பாடசாலை மிகவே பாதித்த கதி - இடைநிலை சரி பிரபல தித்திருந்தேன். g5lb 6.jp60)LDUIT85 கடைத் தேநீருடன் ண்பர் யாருடனாவது அப்பால் உள்ள டம் ரியூசன். அவரது பணித்தியாலம் சரி பஸ்
மாலை ஐந்து நான் 'கண்டாவளை’ ாம். முன் பின்னாக ல்லைத்தீவு பஸ்கள் டுகதி" 5ாது. கண்டாவளை ) மாதிரி நிறைந்தே ந்சம். இல்லையேல்
இரவு ஏழு மணிக்கு பளை பஸ். அதுவும் தவறினால் பட பஸ் பளை வரை போகும், அதுதான் கதி ரியூசன் முடிந்ததும் எப்படியும் கண்டாவளையிலை ஏறி விடவேணும். பரபரப்பு தொற்ற நண்பர் சைக்கிளில் தொற்றி பஸ்பிடித்து முகமாலை சேர்ந்த காலம் அநேகம், தவறிய அனுபவம் சிலநாள் - கண்டாவளை போட்டுதாம் பஸ்நிலையத்தில் நின்றவர்கள் கூறினார்கள். வவுனியா வந்தது ‘கடுகதி" என்னை மிரட்டியது. பளையில்தான் நிற்கும். றைவர் பக்கம் வெளியே சென்று 'அண்ணை முகமாலை சேச்சடி ஒருக்கால் மறிப்பியளோ அவரது எரிந்த பார்வை என்னைச் சுட்டது. இது எக்ஸ்பிறஸ் - நிற்காது, ஏற வேண்டாம். முகத்தைத் தொங்கவிட்டவாறு அடுத்த முல்லைத்தீவுக்கு தவமிருக்க ஆரம்பித்தேன். வந்தது முல்லைத்தீவு "கடுகதி' நேரக்கணிப்பாளர் சாரதியிடம் துண்டைவேண்டி பதிந்து சாரதிபக்க ஜன்னலால் கொடுத்தார். ‘அண்ணை ஒருக்கா றைவரிட்டை சொல்லுறியளே! என்னை முகமாலை சேச்சடியிலை இறக்கச் சொல்லி, பரிதாபமாக பார்த்த அவர் 'எக்ஸ்பிறஸ் தம்பி நிற்பாட்ட மாட்டாங்கள். என்ன நினைத்தாரோ றைவரிடம் "இந்த தம்பியை ஒருக்கா முகமாலை சேச்சடியிலை இறக்கி விடுறியளோ "இல்லை, இது எக்ஸ்பிறஸ். உங்களுக்குச் செய்தால் மற்றவையும் கேப்பினம். நான் நேரத்துக்கு கொண்டு போய் சேர்க்கேலாது முகத்தைத் திருப்பி பஸ்ஸை உறுமவிட்டு கியரை மாற்றி பஸ்ஸை அசைத்தார் றைவர். நான் சொன்னன் தம்பி’ என்னைப் பார்க்காமலே அசைந்தார் நேரக்கணிப்பாளர். எனி, ஏழுமணி பளை பஸ்தான். தவமிருப்பு ஆரம்பித்தது. இருட்டு பயமுறுத்தியது, வீட்டுப்பாடவேலைகள் கனத்தன. வழமையான வீட்டு வேலைகளும் நிழலாடின. இப்படியான சந்தர்ப்பங்கள் சில அப்போது.
'முகமாலை' - பிறந்து வளர்ந்து என்னை ஆளாக்கிய மண், "கடுகதி" போக்கு வரத்து எப்போதும் மிரட்டியகாலம் அது. பலருக்கு எழுதிப்போட்டும் "கடுகதிகள் நிற்கவில்லை. ஆனால் -கடுகதிக்காரர் - சாடையாக அச்சிலேற்றரால் காலை எடுத்து முகமாலை சேர்ச்சைப் பார்த்து
ஜூன் 2006

Page 43
நெஞ்சைத் தொட்டபின் மிதிப்பார்கள். நானும் இடம்பெயர்ந்து யாழ்ப்பான வாசியாகிவிட்டேன். இது வவுனியா செல்லும் முகமாலை ஊடான பயணம். யாவருக்கும் முகமாலை ஊடான பயணம். இப்போது உலகம் முழுவதும் தெரிந்த முகமாலை. 'முகமாலை பொயின்ற் யாவரும் அடிக்கடி பேசிக்கொள்ளும் சுலோகம். தினசரிகளில் தினசரி காணாமல்போகாத பெயர் முகமாலை. இடப்பெயர்வால் புகலிடம்தேடி உலகில் பரந்து பல நாடுகளில் வாழும் மக்கள் உலகமே தெரிந்த பெயர் முகமாலை. நடுநிலையாளர், அனுசரணையாளர், அரசியல் தலைவர்கள், அனைவரும் அறிந்த பெயர் முகமாலை. இலங்கை வரைபடத்தில் குறிக்கப்படும் முக்கிய இடமாக முகமாலை இடம்பெற்றுவிட்டது. "கடுகதிகள் இனி இங்கு நிற்கும். இல்லை அவைகளின் முடிவிடமே முகமாலைதான். அவை நிறுத்தத்தான் வேண்டும். இதுவே நியதி. காலமாற்றம். எனது பஸ் முகமாலை பொயின்ற்ரில் நிற்கிறது. நான் இறங்க ஆயத்தமாகிறேன். அருகே "கடுகதி முகமாலை சிற்றுார்தியும், "கடுகதி" இ.போ.சவும் நிற்கின்றன. கடுகதி நிற்காத முகமாலைக்கு கடுகதியாகவே வந்து சேர்ந்து முடிந்த பஸ்கள். கடுகதிகள் இனி முகமாலையைப் பயமுறுத்தப் போவதில்லை. நான் இன்று முகமாலையில் இல்லை. ஆனால் கடுகதிகள் முகமாலையில் நிற்கின்றன. பாடசாலை நாட்கள் கடுகதி ஏக்க உணர்வு மாறி தற்போது முகமாலையே கதி என தரித்து நிற்கும் கடுகதிகளைப் பார்த்தவாறு பஸ்ஸைவிட்டு அகல்கிறேன். ஒரு மனநிறைவு. நான் இல்லாவிடினும் இனிமேல் கடுகதிகள் முகமாலையில் நிற்கும்.
ஆதரவாய்த் தழுவி ஆதுரமாய் வார்த் கூட வந்தீர். நன்றி பல! வேதனையின் கூ இதயம் துடித்து ஏது செயல் என்ற அயர்ந்து அழுதிருந்த வேன கண்ணிர்துடைத்து விரலை விழி ஒற் நெகிழ்ந்தேன். வெயில் தணிய விழுந்த குளிர்நிழ நெஞ்சாறி வாழ்க்கையிலே 1 விழுத்தி நிமிர்கையிலே திடுக்குற்றதேன்) எனது நிமிர்வு
ടഗേ
గLaaTLTడdha
e;
UTH o el சஞ்சிகையின்
நாடக ஆர்வலர்க நாடகத்துறையில் நாடக அரங்கியன கற்கும் மாணவர் அனைவருக்கும்
硕卿邸
ஜனவரி -
 
 

Պ
தை சொல்லி
ர் தைத்து
றியாத் தவிப்பில்
1ளகளில்
துவிட்ட றி
JTរិយា៣
ங்கள்?
உம் முன் என்ன நிகழ்த்தியது? உங்கள் நண்பன் நான்
நானாய்’ நடந்து செல்ல முடிவதனை உங்களால் ஏன் இன்று உள்ளெடுக்க இயலுதில்லை? நொந்திருந்த போதெல்லாம் கூடவந்த பேர்கள் இன்றென்ன புதிதாய் இறுகிய முகம் அணிந்தீர்? அச்சம் தொட்ட மனசோடு தனியிருந்தேன் 'ஒட்டுதலும் விலகுதலும் புதிய அர்த்தம் பூண்பதனை உணர்கையிலே கசப்பூறும் மனசு கனக்கிறது
எனக்குள்ளே.
நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம் 238 பிரதான விதி, யாழ்ப்பாணம்.
6ó 2006
4督

Page 44
திருமறைக் கலாமன்றத்தின்
äW 田 등 8
궁 으 g 岔 8 95
2ஜ(சனியில் எதிர்தெளிவுப்பட்ட 324ல்
ஜேர்மனியில் நிகழ்வுகள் நிறைவுடன் நடந்தேறினாலும் மனதை நெருடும் துரதிஸ்டவசமான நிகழ்வு ஒன்றும் நடந்தேறியது. பயணக்குழுவில் வந்திருந்த கலைஞர் ஒருவர் அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று வர அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சென்ற அவர் அவரது உறவினர்களால் "மனம் குழப்பப்பட்டு ஜேர்மனியிலேயே தங்கிவிடும் முடிவிற்கு வந்திருந்தார். இதனை அறிந்துகொண்ட ஏனையவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ஏற்கெனவே இப்பயணத்திற்கான விசா மறுக்கப்பட்டு மரியசேவியர் அடிகளாரின் பெயரில் இருந்த நம்பிக்கையிலும், ஒருவகையில் அவரின் பிணையிலுமே விசா வழங்கப்பட்டது. ஈழத்தமிழர் என்றால் இப்படித்தான் என்ற எண்ணம் தூதராலயங்களில் ஆழப்பதிந்திருந்தது. இந்த எண்ணத்தை மாற்றவேண்டும், நாம் உண்மையுடனும் பிரமாணிக்கத்துடனும் நடந்து மீளச்சென்று எம்மை நிரூபிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடுதான் அனைவரும் பயணத்தில் வந்திருந்தாலும் அந்தக் கலைஞன் மூளைச் சலவை செய்யப்பட்டு சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தார்.
இதனை அறிந்த இயக்குநரும் ஏனைய கலைஞர்களும் வேதனைப்பட்டதுடன் இதனை வெல்லும் மார்க்கம் தேடினார்கள், ! அந்தக் கலைஞருடன் உரையாடி அவரை தெளிவுபடுத்தினார்கள். ஆனால் அவரது உறவினர் விடுவதாயில்லை. அவரை வலுக்கட்டாயமாக அங்கு நிறுத்துவதற்கான முயற்சிகளையும், அவரை கடத்திச் செல்வதற்கான முனைப்புகளையும் எடுத்தனர். எனவே இதனைத் தடுக்க நிகழ்ச்சிகளில் அந்தக் கலைஞனுக்கு விசேட பாதுகாப்புச் செய்து அவரை ஜேர்மனியில் இருந்து பிரான்சிற்குக் கொண்டு வரும் வரை போதும் போதும் என்று ஆனது. பிரான்சில் முதலாக அதன் அச்சம் நீங்கவில்லை என்று
42 ஜனவரி - ஜ0
 

Gun. Gungdonedba Onéhcetonň
தான் கூறவேண்டும். எனினும் கலைஞர்களின் உறுதிப்பாட்டினால் அந்தச் சவால் வெல்லப்பட்டது.
பிரான்ஸ் (சண்ணில் தலைத்தப்ேபுகிதவி
ஜேர்மனியில் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த பின் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி மீளவும் பயணக்குழுவினர் பிரான்சிற்குத் திரும்பினர். பாரீஸின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்த ‘ஒபவில்லியஸ் நகரில் 20ஆம் திகதி காலையில் அனைவரும் மீண்டும் கால் பதித்தனர். கலைஞர் றெமீசியஸ், அனைவரும் தங்குவதற்குரிய வகையில் தனது வீட்டினை ஒழுங்குபடுத்தியிருந்தார். எனினும் ஒரு சிலர் அருகில் இருந்த தமது உறவினர்களின் இல்லங்களில் தங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டனர். ஒய்வெடுத்துக்கொண்ட கலைஞர்கள் பாரீஸைச் சுற்றிப்பார்ப்பதற்கான ஒழுங்குகள் இயக்குநராலும், பிரான்ஸ் திருமறைக் கலாமன்ற உறுப்பினராலும் மேற்கொள்ளப் பட்டிருந்தன. மூத்த உறுப்பினர் பெஞ்சமீன் இம்மனுவேல் வேலைக்கு லீவு போட்டுவிட்டு ஆவலாக வந்திருந்தார். அவருடன் திருமதி றெமீசியஸ், கலைஞள் கொலின்ஸ் அவர்களின் இரு சகோதரர்களான ரஞ்சன், கருணா ஆகியோர் இச்சுற்றுப்பயணத்திற்காக தமது நேரத்தை ஒதுக்கி வந்திருந்தனர். இரண்டு குழுக்களாகப் பிரிந்து நகள் வலம் வந்தனர்.
உலக நாகரீக வளர்ச்சியின் ஒரு அடையாளமாக அந்தப் பாரீஸ் நகரம் திகழ்ந்தது. "மெற்றோ புகையிரதப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது மட்டுமன்றி நெரிசலைத் தவிர்க்கும் நகர அமைப்பின் அற்புதமான ஒரு செயற்திட்டம் என்பதனைக் கண்டுகொள்ள முடிந்தது. பாரீஸ் நகரைச் சூழ நிலத்திற்குக் கீழே ஒடுகின்ற அந்த மின் புகையிரதத் தொகுதி நிமிடத்திற்கொரு புகையிரதமாக நகர்ந்துகொண்டிருந்த விந்தையும், நிலத்தின் கீழே இருந்த இன்னுமொரு உலகத்தினையும் கண்டபோது அனைவரும்
6া 2006

Page 45
号 垩。独 璽 运。 @ 貓
མི་
வாயடைத்து நின்றனர். எம்மவர்கள் பெருமளவில் பயணம்செய்யும் மிகவும் குறைந்த கட்டணத்தைக் கொண்ட பயணமும் அதுதான் என்பதனையும் அறியக்கூடியதாக இருந்தது. எங்கு செல்வதாக இருந்தாலும் ஒரே நுழைவுச்சீட்டில் பயணம் செய்யலாம் என்பதும், அந்தப் புகையிரத இலக்குகள், பாதை ஒழுங்குகள் மிகவும் எளிமையாக வரைபடத் துண்டுகளில் அச்சிடப்பட்டும் வழங்கப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி அந்த நிலவறை உலகத்தில் பிரான்சின் வரலாற்று ஒவியங்கள் ஆங்காங்கே வரையப்பட்டிருந்தன. அந்தப் புகையிரதத் தளங்களில் தெருப்பாடகர்களும், இசைக்குழுக்களும் நின்று இசை வழங்கி நிதி சேகரித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு மெற்றோ புகையிரதங்களிலும், கலைஞர் கொலின்ஸ் அவர்களின் சகோதரர்களது வாகனங்களிலும் பயணம் தொடர்ந்தது.
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஈபிள் கோபுரத்தை பார்ப்பதற்கு கலைஞர்கள் பயணமாயினர். பிரான்ஸ் தேசத்தின் அடையாளங்களில் ஒன்றான மனித வலுவால் உருவாக்கப்பட்ட அந்த உயர்ந்த இரும்புக் கோபுரத்தை நெருங்க நெருங்க ஆச்சரியம் தாழவில்லை. மனித ஆற்றலின் வலுவை எடுத்தியம்பி நின்ற அந்தக் கோபுரத்தின் அழகைக் கூறுவதற்கு வார்த்தையில்லை. அந்தக் கோபுரச் சதுக்கமே கலைத்திடலாகக் காட்சி தந்தது. ஒவ்வொரு திசையில் நின்று நோக்கினாலும் அது ஒவ்வொரு அழகுக் கோலத்தைத் தந்து நின்றது. அந்தக் கோபுரத்தின் உச்சிக்கு ஏறிச் செல்வோரும் அங்கிருந்து பரசூட்டுகளில் கீழே வருவதுமாக இளைய வயதினர் குதுகலித்தனர். அதன் சூழலில் அமைக்கப்பட்ட ஈபிள் ரவர் அடையாளப் பொருட்களை விற்கும் கடைகளும், அந்தச்சூழலில் பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்ட நிர்வாணச் சிலைகளும், அழகிய நீர் தூறல்க் கோலங்களும், அவைகளைச் சூழ நின்ற பல்லின உல்லாசப் பயணிகளும் என மறக்கமுடியாத கலையனுபவத்தைத் தந்து நின்றது. அந்தக் கோபுரத்தை அமைத்த ஈபிளின் உருவச்சிலையும், அவள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் அந்தக் கோபுரத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தமை அந்த நாட்டின் பொறுப்புணர்வுக்கு ஒரு அடையாளமாகத் திகழ்ந்தது.
தொடர்ந்து பாரீஸின் பட்டணச் சதுக்கத்தின் பல்வேறு மையப்புள்ளிகளை தரிசித்தனர். நவீன கண்ணாடி மாளிகைகள், தெருக்களிலே அமைந்துள்ள கலைத்தூண்கள், அந்த இயந்திரகதி உலகத்திலும், ஆறவும் ஒய்வெடுக்கவும் அமைக்கப்பட்ட சதுக்கங்கள், அதில் கூடுகின்ற மாடப்புறாக்கள், அவற்றுக்கு உணவு 酶 ஜனவரி =
 

வழங்கி மகிழும் உல்லாசப் பயணிகள் என வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாதளவு ஒவ்வொரு விடயங்களும் மனங்களைக் கவர்ந்தன.
அதேவேளை பாரீஸின் மையப்பகுதியில் அமைந்திருந்த கத்தோலிக்க திருச்சபையின் புனிதர்களில் ஒருவரான 'புனித வின்சன் டி போலின் ஆலயத்தரிசிப்பும் நிகழ்ந்தது. ஆலயத்தின் அமைப்பு ஏற்படுத்திய அதிசயத்தைவிட அழிவுறாது இருக்கும் புனித வின்சன் டி போலின் உடலம்' ஆச்சரியத்தைத் தந்தது. தூங்கிக் கொண்டிருப்பவரைப் போல அவரின் உருவம் நிர்மலமாகக் காட்சி தந்தது. காணக்கிடைக்காத ஒரு அதிசயத்தை கண்ணாரக்கண்டு பக்தியுடன் மீண்டனர் வடலிக்கூத்தர்.
இப்படி ஒரு குழுவினர் நகரின் பல்வேறு இடங்களையும் கண்டு அனுபவம் பெற்றுக்கொண்டிருந்த அதேவேளை, சிற்பஜோதி ஏ.வி. ஆனந்தனும் அவருடன் சென்ற குழுவினரும் கலைப் பெறுமதி மிக்க இடங்களைக் கண்டுகளிக்கச் சென்று கொண்டிருந்தனர். முதலில் லூவர் மியூசியத்தை தரிசிக்கச் சென்றனர். அதற்கான அனுமதிக்கட்டணம் சற்று அதிகமாக இருப்பினும் அதன் பெறுமதி அபரிதமானது. அங்கு உலகப் புகழ் பெற்ற படைப்பாளிகளின் சிற்பங்கள் ஒவியங்கள் வைக்கப் பட்டிருந்தன. லியனாடோ டாவின்சியின் மோனலிசா, இராப்போசனம், ஒவியங்கள் முதல் பல நவீன படைப்பாளிகளின் கலைப்பொருட்கள் ஈறாக வைக் கப்பட்டிருந்தன. அதனை முழுமையாகப் பார்ப்பதென்றால் ஒரு வாரம் போதாது. அந்தளவுக்கு அதன் பெறுமதி உயர்வாக இருந்தது. மாவீரன் நெப்போலியன் அரசோச்சிய மண்டபம், அவன் பாவித்த பொருட்கள் ஈறாக பிறிதொரு தளத்திலே வைக்கப்பட்டிருந்தன. புகைப்படம் எடுப்பதற்கு தடை இருந்த காரணத்தினால் அங்கு எவரும் புகைப்படம் எடுக்கவில்லை. பெறுமதி வாய்ந்த உலக பொக்கிசங்களை, வளர்ச்சியடைந்த அந்த நாடுகள் பேணி வருவதை நோக்கும்போது எமது பாரம்பரியங்கள் அழிந்தொழிந்து போகும் அபாயத்தின் விளிம்பில் இருப்பது வேதனையைத் தந்தது. அந்தக் கலையகத்தைப் பார்த்ததைவிட ஆச்சரியமான விடயங்கள் வெளியே காத்திருந்தன.
உலகப்புகழ் பெற்ற ஒவியங்களையெல்லாம், சர்வ சாதாரணமாக பிரதி செய்யக்கூடிய ஆற்றலுடைய தெருச் சித்திரக்காரர்கள் வீதிகளில் இருந்து வரைந்து கொண்டிருந்தார்கள். வறுமை அவர்களையும் இந்நிலைக்கு கொண்டுவந்ததோ என்று எண்ணத்தோன்றியது. ஒரு சில கணங்களுக்குள் கோடுகளோடும், வர்ணங்களோடும் விளையாடும் அவர்களின் விரல்களை என்னவென்பது. அதுமட்டுமன்றி பார்வையாளர்களையே
怒
ஜூன் 2006 43

Page 46
கொண்டிருக்கும் (Portrait) அந்த தெருவோர ஓவியர்களிடமே நாம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கின்றது என்பதனை உணர்ந்து கொள்ளமுடிந்தது.
ஓவியர்கள் மட்டுமன்றி தம்மை வினோதமான கோலங்களில் ஒப்பனை செய்துகொண்டு (டயனோசர், இயந்திர மனிதன், முதலை.) ஆடாமல் அசையாமல் சிலையாகவே நின்று அவர்களுக்கு முன்பாகவுள்ள தட்டுக்களில் விழும் பிராங் நாணயங்களை எதிர்பார்த்திருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போதும் ஆச்சரியமே மேலிட்டது. இந்தத் தெருவரங்கக் கலைக் கோலங்களைக் கண்டு அதிசயித்த வடலிக்கூத்தருக்கு மற்றுமொரு அதிசயமாக 'ஒப்பேரா அரங்கு தோன்றியது.
பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற "ஒப்பேரா அரங்கு மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் கலைத்துவ வெளிப்பாட்டு அடையாளமாகத் திகழ்ந்தது. அதன் வெளிவாயில் வராண்டாவிலும் அரங்கின் உட்புறத்திலும் அமைக்கப்பட்டிருந்த சலவைக்கற் சிலைகள், 'உடற்கூற்றியல் வெளிப்பாட்டின் கலைத்துவ உன்னதங்களை வெளிக்காட்டி நின்றன. அதன் அரங்க வெளி, நீண்ட அழகிய வேலைப்பாடுகளுடைய திரைகள், ஆடுகளம், புறோசினிய ஆர்க் வளைவுகளும், வேலைப்பாடுகளும், பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைத்தன. ஆயிரக்கணக்கானோர் அமரக்கூடிய பார்ப்போர் கூடம், ஆசனங்கள் அனைத்தும் ஐரோப்பிய அரங்க வளர்ச்சிக்கு சான்று கூறி நின்றன.
அடுத்து அனைவரையும் கவர்ந்த மற்றுமொரு முக்கியவிடயம், அணையாவிளக்கு என்று அழைக்கப்படுகின்ற பதினாறு தெருக்கள் சந்திக்கின்ற மாவீரர் நினைவுத்தூபி ஆகும். அத்தூபியின் மத்தியில் 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் தீபச்சுடரும் உலகயுத்தத்தில் இறந்த இளம் வீரர்களுக்கான அஞ்சலியும் பொறிக்கப்பட்டிருந்தது. அவ்விளக்கைச் சூழ உயிர்ப்பூக்களால் ஆன மலர்வளையங்களை தினமும் கொண்டு வந்து வைக்கின்ற அந்த மக்களின் அர்ப்பணிப்பையும் பிரமாணிக்கத்தையும் என்னவென்பது. அதேவேளை வடலிக்கூத்தரின் பயணம் புறப்பட்ட காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் இளவரசி டயானா பிரான்சில் ஒரு விபத்தில் இறந்தார். அவர் இறந்த இடம் பிரதான சுருங்கை வீதியொன்றின் 13 ஆவது தூணின் அருகே ஆகும். ஆனால் அவர் இறந்த இடத்தில் தினமும் குவியும் மலர்வளையங்களும், அஞ்சலி செலுத்துவோர் தொகையும் உலகத்தலைவருக்கு இல்லாத கெளரவத்தை ஏற்படுத்தி நின்றன. அந்தக் காட்சியையும் வடலிக்கூத்தர் அதிசயத்துடன் நோக்கினர்.
44 ஜனவரி - ஜ0
 

இவ்வாறு மூன்று நாட்களும் கிடைத்த நேரங்களில் பாரீஸின் முக்கிய இடங்களைக்கண்டு அவற்றின் அழகில் மூழ்கித் திளைத்தனர் கலைஞர்கள். திரும்புகின்ற ஒவ்வொரு இடங்களும் அமைக்கப்பட்ட முறைகள் எவ்வளவு கலைத்துவத்துடன் அமைந்திருந்தன என்பதனை ஒவ்வொருவரும் உணரக்கூடியதாக இருந்தது. மக்கள் கூடுகின்ற இடங்கள், ஆலயங்கள், நாடாளுமன்றம், அரச அலுவலகங்கள், வங்கிகள் அனைத்துமே திட்டமிடப்பட்டு கலை அழகுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஏன் ஆற்றுவாய்கள், நீரோடை விளிம்புகள், பாலங்கள் கூட கலைத்துவமாக ஆக்கப்பட்டி ருந்தன. கட்டடம் கலையாக எழுந்து நிற்பதனை பாரீஸில் தரிசிக்க முடிந்தது. வானுயர எழுந்த பல மாடிக் கட்டடங்கள் முதலாக, வெளிகளை நிறைத்து நின்ற முறையும், தொடர் அடுக்கு வீடுகள் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இசைந்து நிற்கின்ற தன்மைகளை யும் அவதானிக்க முடிந்தது. சுத்தமான வீதிகளும் அதில் நோகாமல் ஓடுகின்ற வாகனங்கள், இலத்திரனியல் விளம்பரப் பலகைகள் என ஒரு கனவுலகத்தில் நின்ற உணர்வையே பலரும் பெற்றனர்.
பாரீஸ் நகரைச் சுற்றிப்பார்த்தபோது இயக்குநர் மரியசேவியர் அடிகள் பலவற்றுக்கு விளக்கம் கொடுத்தும், ஒவ்வொருவரும், வளர்ந்த உலகத்தின் மாதிரியை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதில் பேராவலுடன் வழிநடத்தினார். அதே நேரம் நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும், கலைஞர்களுடனான சந்திப்புக்களும் நடந்து கொண்டிருந்தன. பழக்கமற்ற குளிரும் இரவு ஒன்பது மணிக்கும் இருளாத பொழுதும், என இயல்பற்ற சூழலுக்குள் நின்று செயற்படுவது சிரமமாக இருப்பினும் கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் பயன்படுத்த வேண்டும் என்ற பேரவா ஒவ்வொருவரிடமும் நிறைந்திருந்ததனால் அவை எவையும் சிரமமானதாக எவருக்கும் தோன்றவில்லை.
பாரீஸில் கண்ட குறிப்பிட வேண்டிய மற்றுமொரு விடயம் லாசப்பல்' என அழைக்கப்பட்ட தமிழ்த் தெரு, யாழ்ப்பாணத்தில் நிற்பது போன்ற உணர்வினை அந்தத் தெருவில் உணரக்கூடியதாக இருந்தது. காரணம், அதில் இருந்த பெரும்பாலான கடைகள் தமிழ்க்கடைகள், பலசரக்கு கடைமுதல், புத்தகக்கடை, சலூன், புடவைக்கடை, வீடியோ சென்ரர் என பல கடைகள் எம்மவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்ப்பாண உணவு வகைகள் பனாட்டு, பனங்காய் பணியாரம் ஈறாக, யானை மார்க் சோடா வரை அந்தத் தெருவில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. மனதளவில் பெருமையாக இருந்தபோதும் அந்தத் தெருவில் உடைந்து கிடந்த கண்ணாடி ஒடுகளைப் பார்த்தவுடன் அது என்னவென்று விசாரித்தபோது, முதல்நாள் இரு தமிழ் இளைஞர்
টো, 2006 酶

Page 47
கூட்டங்களுக்கிடையில் நடைபெற்ற கைத்தகராறின் எச்சங்கள் என்றும், வாள் வெட்டுமுதல், இவ்வாறான அசம்பாவிதங்கள் அடிக்கடி அங்கு நடக்கின்றன என்றும் கேட்ட போது மனதில் இனம்புரியாத வெறுமை. வளர்ந்த உலகத்தில் வாழும் பேறு கிடைத்த எம்மவரில் பலர் இன்னும் வளரவில்லை என்ற வேதனைதான் மனதிலே படர்ந்தது.
அதே நேரம், "அம்மா சஞ்சிகை ஆசிரியர் மனோகரன், "எக்ஸில்' சஞ்சிகை ஆசிரியர்களான கலைச்செல்வன், லக்ஷ்மி, எழுத்தாளர் ஷோபாசக்தி போன்ற பலரும் வடலிக்கூத்தருடன் கலந்துரையாடல் செய்தனர். குறிப்பாக யாழ்ப்பாண வாழ்வியல் பற்றியும் அங்கு எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள் பற்றியுமே அதிகம் உரையாடப்பட்டன. திருமறைக் கலாமன்றம் வெளியிடுகின்ற "கலைமுகம்", "ஆற்றுகை சஞ்சிகைகளையும் அவர்களுடன் பரிமாறிக் கொண்டதுடன் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் புலம்பெயர்ந்தோர், இலக்கிய முயற்சிகள் பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டன.
ஐரோப்பிய அரங்கப் பெறுகைகள்
வடலிக்கூத்தரின் ஐரோப்பிய கலைப் பயணத்தில், நிகழ்வுகளை நிகழ்த்தியது மட்டுமன்றி ஐரோப்பிய அரங்கப் போக்குகள் பற்றிய பெறுகை தொடர்பாகவும் இப்பயணத்தில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கொப்ப பின்வரும் இரு நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும். 1) அரியானி நூக்சினின் அரங்கத் தரிசிப்பு 2) பீற்றர் புறுக்கின் Lhomme qui என்ற நாடகம் பார்வையிடப்பட்டது.
1. அரியானி நூக்சினின் அறங்கத் தவிகிப்பு
ஐரோப்பாவில் நவ வேட்கைவாத அரங்கு தொடர்பாக பேசப்பட்டவர்களுள் அரியானி நூக்சின் முக்கியமானவர். இவர் அறுபதுகளில் இருந்து இன்று வரை அரங்க செயற்பாடுகளிலும், சமூக நலச் செயற்பாடுகளிலும் முன்னிற்பவர். இவரது தந்தையாரும் ஒரு பிரபல்யமான திரைப்படத் தயாரிப்பாளர். பாரீஸ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற இவர் அங்கு தயாரித்த நாடகங்களினூடாக அரங்கிற்கு வந்தவர். "தெயார்தர் டு சோல்” (சூரியப் பிரகாச அரங்கு) என்ற அமைப்பினை உருவாக்கி அதற்கூடாக நாடகங்களை மேற்கொண்டு வருபவர். பீற்றர் புறுக் ஆர்த்தோ, ஜோண் லூயிபரோ, ஹைன்னர் முல்லர் போன்ற நாடக ஆசிரியர்களை பின்பற்றி ஆரம்பகால நாடகங்களை ஆக்கினார்.
as Diggs ஜனவரி -
 
 

பின்னர் காலனித்துவத்திற்கெதிரான கொள்கை வாதியாக மாறி சீன, யப்பானிய, இந்திய, பேர்சிய கலை வடிவங்களினை பயன்படுத்தி தனக்கான புதிய நாடகப் போக்கினை உருவாக்கி செயற்பட்டு வருபவர். இவரது "த கிச்சின், பேர் வெக்ஷன் ஒவ் ஹப்பினஸ், 'மிற்சமர் நைற்றிம்', 'கெங்கிஸ்கான்', "த ஏஜ் ஒவ் கோல்ட்', "இன்டியாட் (இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புபட்டது) போன்ற நாடகங்கள் இவரது நெறிப்படுத்தலில் பெருமை பெற்ற நாடகங்களஈகும். நாடகச் செயற்பாட்டுடன் மட்டுமன்றி சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபடும் இவர் திபெத், கம்போடியா, அல்ஜீரியா, சீனா போன்ற நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு ஐரோப்பியராகவும் திகழுகின்றார். தாலாய் லாமாவுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்.
இவருடைய அரங்கினைத் தரிசிப்பதற்கு இயக்குநர் மரியசேவியர் அடிகள், ஏற்கெனவே பிரான்சின் கலாசார அமைச்சுடன் தொடர்புகொண்டு அதற்கான அனுமதியைக் கோரியிருந்தார். பொதுவாக தமது நாடகத் தயாரிப்புக் காலத்தில் இவ்வாறான சந்திப்புக்களை விரும்பாத அரியானி நூக்சின், இலங்கையில் இருந்து வந்த பயணக்குழுவினர் என்று அறிந்ததும் அனுமதி வழங்கினார். அனுமதியுடன் வந்த இயக்குநர் “உலகின் தலை சிறந்த நெறியாளர்களில் ஒருவரைக் காணப்போகிறோம்; புறப்படுங்கள்” என்றதும் அனைவரும் ஆனந்தத்துடன் புறப்பட்டனர். ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி பிரான்சிலுள்ள Chateaude uincenes என்ற இடத்திலுள்ள அரியானி நூக்சினின் 'தெயாத்த டு சோல் அரங்கினை நோக்கிப் பயணமாகினர். பாரீஸில் இருந்து நகர இரைச்சல் குறைந்த அமைதியான இயற்கை வனப்பு நிறைந்த ஒரு பிரதேசத்தில் அந்த அரங்கு இருந்தது. ஏறத்தாழ 20 ஏக்கள் விஸ்தீரணமுள்ள அந்த அரங்கத் தொழிற்சாலையைக் கண்டதும் கலைஞர்களின் கண்கள் அகல விரிந்தன. நாடகத்தில் ஈடுபடுவதற்கு இவ்வளவு பெரிய தொழிற்களமா என்ற ஆச்சரியமே மேற்கிளம்பியது.
பயணக்குழுவினரை, இயக்குநர் அரியானியே எதிர்கொண்டு வரவேற்றார். அவரது கம்பீரமான தோற்றமும் சுறுசுறுப்பும், கண்ணில் நிறைந்து நின்ற பிரகாசமும், அவர் ஆளுமை மிக்க பெண்மணி என்பதனை பறைசாற்றி நின்றன. இயக்குநர் மரிய சேவியர் அடிகள் சரளமாக பிரஞ்ச் மொழியில் அவருடன் உரையாடிக்கொண்டே கலைஞர்களை அறிமுகம் செய்தார். இன் முகத்துடன் அனைவரையும் வரவேற்றவர் தமது வரவேற்புக் கூடத்திற்கு அழைத்துச் சென்று சாதாரணமாக உரையாடினார். அவரது
xஇ
ஜூன் 2006 45

Page 48
உதவியாளர் லில்லியானாவும் கூட இருந்து அவர்களது அரங்கச் செயற்பாடுகள் பற்றி விபரித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல மொழி பேசுகின்ற, 64 கலைஞர்கள் அங்கு நிரந்தரமாகவே தங்கி தமது அரங்கச் செயற்பாடுகளை மேற்கொள்ளுகிறார்கள் என்றும் நான்கைந்து மாதங்கள் முயற்சி எடுத்து ஒரு நாடகத்தை உருவாக்குவார்கள் என்றும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நாடகம் மேடையேற்றப்படும் என்றும், ஒவ்வொரு நாடகத்தினதும் தேவைக்கேற்ப அரங்கும் அந்தச் சூழலும் மாற்றி அமைக்கப்படும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாகவே தமது அரங்க இலக்கு இருக்குமென்றும், அரங்கின் ஒவ்வொரு செயற்பாடுகளும் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன என்றும், பிரான்ஸ் அரசின் கலாசார அமைச்சின் நிதியுதவியுடன், தமது அரங்க முயற்சிகளினால் கிடைக்கும் பணத்தைக் கொண்டும் அந்த நிறுவனத்தை நடத்துவதாகவும் தமது நிறுவனத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். அப்போது அவர்கள் மேடையேற்றப்போகின்ற Et Soudain des nuits d’eveil' 6T6Öï m BTL 55 g5)ff35|T601 முன்னாயத்தங்கள் நடைபெறுவதாகவும், விளக்கினார்கள். அந்த நாடகத்தின் பெயரை மொழி பெயர்த்த மரிய சேவியர் அடிகள் "சடுதியாக சில விழிப்பு இரவுகள்’ என்றார்.
அந்நாடகம் பற்றி விசாரித்தபோது, அது திபெத் மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு நாடகமென்றும், மாலியில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் அந்த அரங்கில் தங்கினார்கள் என்றும் அவர்களின் அவலங்களை கேட்டறிந்த அரியானி, திபெத்திய ம்க்களின் போராட்ட வரலாறை திபெத்துக்கு சென்று ஆராய்ந்தும், தலைலாமாவுடன் உரையாடியும், அந்த நாடகமாக உருவாக்கி, பிரான்ஸ் அரசு அம்மக்களுக்கு எதிராக ஆயுதம் வழங்குவதை எதிர்த்தும் அந்த மக்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற கருத்தினை மையப் பொருளாகக் கொண்டும் அந்த நாடகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து அரங்கச் செயற்பாடுகள் ந்டைபெறும் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிடுவதற்கு உதவியாளர் கலைஞர்களை அழைத்துச் சென்றார். 20 ஏக்கர் விஸ்தீரணம் மிக்க அந்தத் தொழிற்களத்தில் வெவ்வேறு வேலைத்திட்டங்கள் வெவ்வேறு இடங்களில் துரிதகதியில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஒரு தொழிற்சாலைக்குள் நிற்கின்ற மன உணர்வே ஏற்பட்டது. ஒரு கட்டடத்தில் நாடகத்திற்கான காட்சி விதானிப்புகள் மரப் பலகைகளைக் கொண்டு செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு மரத் தொழிற்சாலைக்குள்ளே நின்ற மன உணர்வே ஏற்பட்டது. மற்றொரு கட்டடத்தில் வேடஉடைகள், காட்சிப்பொருட்கள் செய்யப்பட்டுக்
4● ஜனவரி - ஜ0
 

கொண்டிருந்தன. தையல் செய்வோரும், அணிகலன்கள் செய்வோரும், ஒவியம் வரைவோரும் எனப் பலரந்த செயற்களத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் நன்கு திட்டமிடப்பட்ட வரைபடங்கள் , ஒளிப் படங்களை தமக்கு முன் பாக வைத்துக்கொண்டே வேலைகளில் கவனமாக இருந்தனர். நாடகத்திற்கு இந்தளவு முயற்சிகள் நடைபெறுகின்றதா என்ற பிரமிப்பு ஒவ்வொருவரின் முகங்களிலும் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாடகம் நடக்கப்போகும் மண்டபத்திற்கு அழைத்துச்சென்றார்கள். ஆயிரம் பேர்வரை அமரக்கூடிய அந்த மண்டபத்தின் ஆடுகளம் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த நாடகத்தின் தேவைக்கேற்ப புதிய ஆடுகளம் அமைப்பதற்காக அது உடைக்கப்படுவதாக தகவல் தெரிவித்தனர். மேடையை உடைத்து அரங்க வெளியை ஏற்றமுறையில் அமைக்கும் அவர்கள் செயற்பாடு ஆச்சரியத்தைத் தந்தது.
இவை அனைத்தையும் விட ஆச்சரியம் தந்த மற்றொரு கூடம் இசையமைப்பாளரின் தொழிற்கூடமாகும். அந்த அரங்க இயக்கத்தின் பிரதான இசையமைப்பாளர் ஜோண் ஜாக் லமெத்தள் இசைக் கருவிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். 8அடி விட்டமுள்ள மிகப்பெரிய முரசு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. அவரோடு உரையாடியபோது நாடகத்திற்குத் தேவையான இசையை வழங்குவதற்குரிய கருவிகளை தானே உருவாக்குவதாக குறிப்பிட்டார். குறிப்பாக அரங்கிற்குரிய Effect ஐ தரத்தக்க கருவிகளை தானே தேவைக்கேற்ப உருவாக்கி பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். அவர் செய்து வைத்து ஏற்கனவே பயன்படுத்திய பல இசை நுட்பங்கள் ஆச்சரியத்தைத் தந்தன. தகட்டினால் உருவான ஒரு பொறியை இயக்க, போத்தல்கள் உடையும் ஒசை கிளம்பியது. உருளை ஒன்றினை சுற்றும் போது மரவண்டில் செல்லும் ஓசை எழுந்தது. ஜோண் லமெத்தரின் படைப்பாளுமை கலைஞர்களை வியக்கவைத்தது.
மற்றொரு மண்டபத்தில் நாடகத்திற்கான ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. திபெத்திய நடனக் கோலம் ஒன்றினை அவ்வொத்திகையில் பழகிக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு ஒவ்வொரு களத்திலும் கண்ட நாடக உருவாக்கக் காட்சிகள் நாடகம் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற முன் வரைபடத்தை கலைஞர்களின் மனதில் பதித்தது. அந்த அரங்க அமைப்பினையும், அதன் இயக்குநர் அரியானியையும் நினைத்தபோது அவர்களின் ஆற்றலும் அரங்கத்தரமும் எந்தளவு என்பதனை ஒவ்வொருவராலும் உணரமுடிந்தது. வாயடைத்து நின்ற கலைஞர்களை மீளவும் அரியானி நூக்சின் அழைத்து உரையாடி
st 2006 - 酶

Page 49
*క్ష్పక్ట్ల్క స్ట్కో క్షే 美를
இலங்கையின் யுத்தம் பற்றியும் திருமறைக் கலாமன்றம் பற்றியும் உரையாடினார். கலைஞர்கள் கொண்டு வந்த நாடகங்கள் பற்றிக் கூறியபோது பாரம்பரிய நாடகம் பற்றி அறிய விரும்பியதாக கூறியதும், கூத்தின் சில அடவுகளை மன்றக் கலைஞர் சிலர் ஆடிக்காட்டினர். உடனே அவர்களைத் தடுத்து நிறுத்திய அவர், தனது 64 கலைஞர்களையும் ஒன்று கூடப்பணித்தார். அவர்கள் முன்பாக அந்த அடவுகளை செய்யப்பணித்து, பாராட்டியதுடன், இந்திய கதகளி, பரதம் போன்றவற்றைத் தான் அறிந்துள்ளார் என்றும், இக்கூத்து தனக்குப் புதிது என்றும் கூறி ரசித்ததுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து அனைவரையும் மதிய உணவுக்கு அழைத்தார்.
அங்கிருந்த 64 கலைஞர்களுடன் வடலிக்கூத்தர் இணைந்து மதிய விருந்தை உண்டதுடன் மொழி தெரியாவிடினும் நாடகமொழியால் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்டனர். எங்கோ பிறந்து வளர்ந்த பன்மொழி பேசும் அந்த கலைச்சமூகத்தில் இணைந்திருந்த சில மணிப்பொழுதுகளை வாழ்வில் மறக்க முடியாது என ஒவ்வொரு கலைஞர்களும் கூறக்கூடிய வகையில் அந்த சந்திப்பு நடைபெற்றது.
நிறைவாக அரியானி நூக்சின், வடலிக்கூத்தரின் நாடக நிகழ்ச்சிக்கு தமது கலைஞரையும் அனுப்புவதாக கூறி அன்புடன் விடைகொடுத்தார். அவர் எழுதிக்கொடுத்த நினைவுக் குறிப்பில் பின்வருமாறு எழுதியிருந்தார் "என்ன இனிமையான சந்திப்பு, நாங்கள் நிச்சயமாக மீண்டும் இலங்கையில் சந்திக்க வேண்டும். சமாதானமே எமது நம்பிக்கை சமாதானத்தை அடைவோம்” மிகுந்த அன்புடனும் இரசனையுடனும் - அரியானி
ஐரோப்பிய கலைப்பயணத்தின் பயனில் மறக்கமுடியாத அந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு கலைஞர் மீண்டும் பயணமாயினர். மறு நாள் மற்றொரு உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியர் பீற்றர் புறுக்கின் ஒரு நாடகத்தை தரிசிக்கப் போவதாக, இயக்குநர் மரியசேவியர் அடிகள் முன்மொழிந்தார். அந்த மகிழ்ச்சி கலைஞரின் முகங்களில் நிறைந்து நின்றது.
II. Éîibsoñ Lypná,âSão L homme qui
பாரீஸ் நகரில் கிடைத்த மற்றொரு மறக்கமுடியாத அனுபவம், உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியராகிய பீற்றர் புறுக்கின் Lhomme qui என்ற பிரஞ்ச் மொழி நாடகத்தினை பார்வையிட கிடைத்தமையாகும்.
"மகாபாரதம்' என்ற இந்தியக் கதைப்பொருளை பின்னணியாகக் கொண்ட நாடகத்தை தயாரித்ததனூடாக எமக்கு 酶 ஜனவரி -
 

அதிகமாக அறிமுகமான பீற்றர் புறூக் ஒரு உலகப் புகழ் பெற்ற நாடக ஆசிரியரும், நெறியாளருமாவார். பெற்ரோல்ட் பிரக்டின் நாடகங்களைப் பின்பற்றி தனது நாடகங்களை ஆக்கிய இவர் புதிய பண்பாடுகள், கலாசார கூறுகளினூடாக உலகப் பொது அரங்கை உருவாக்கும் பரிசோதனைகளை அதிகம் மேற்கொள்பவள். அவரது அந்த நோக்கத்தினை அந்த நாடகம் பற்றிய பிரசுரத்திலும் குறிப்பிட்டிருந்தார். "பல நாட்களுக்குப் பின் மக்களோடு பேச ஒரு நாடக வடிவத்தைத் தேடினேன். அது முழு உலகத்தோடும் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன்' என்று கூறுகின்ற ஆசிரியர் அந்நாடகத்தை வேறுபட்ட முறையிலே அமைத்திருந்தார்.
பாரீஸ் நகரின் பிரபல்யமான சென் டெனிஸ் தெருவில் இருந்த தேசிய அரங்கில் அந்நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒன்றரை மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்நாடகத்தில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அரைவட்ட பார்ப்போர் கூடம் உயர்ந்து செல்லும் குளோப் அரங்கின் சாயலைக் கொண்டதாக அமைந்திருந்தது. அரங்கும், ஆற்றுகை முறையும் செய்து காட்டும் பண்புக்குரியவையாக இருந்தன.
The man Who' என்ற ஆங்கில மொழி பெயர்ப்புக்குரிய, பெயரைக் கொண்டிருந்த அந்நாடகம் ஒலிவர் சைக்ஸ் எழுதிய தனது மனைவியை தொப்பியாக எண்ணலாமா' என்ற உளவியல் சார் நூலின் தழுவலாக்கமாக ஆக்கப்பட்டிருந்தது. நான்கு நடிகர்கள் மட்டுமே நடிக்கின்ற அந் நாடகம் வார்த்தைகளிலும், தொழில்நுட்பங்களிலும் பெருமளவில் தங்கியிருந்தது. நரம்பியல் நோய்களுடன் தொடர்புடைய நாடகத்தில், வைத்தியராகவும், நோயாளிகளாகவும் நான்கு நடிகர்கள் பல்வேறு பாத்திரங்களை செய்து காட்டி நடித்தனர். பார்ப்போர் வயிறு குலுங்கச் சிரித்து, சிந்தனை பெற்ற நாடகமாக அது அமைந்திருந்தது. கலைஞர்களுக்கு பிரஞ்சு மொழிவிளங்காத போதும் அருகில் இருந்த மரியசேவியர் அடிகளாரின் மொழி பெயர்ப்பினாலும், உடல் மொழி வெளிப்பாட்டினாலும் ஓரளவு நாடகத்தை விளங்கிக் கொள்ள முற்பட்டனர்.
செய்து காட்டுகைப் பண்புக்குரிய நடிப்பு முறையை நுணுக்கமாக அந்நடிகர்கள் மேற்கொண்ட முறைமையும், அரங்கில் தொலைக்காட்சி, எறியம் (Projacter), வானொலி போன்ற ஊடகங்களைப் பயன்படுத்திய விதமும், கணணி மயப்படுத்தப்பட்ட ஒளி விதானிப்பு நுட்பமும், வியக்கத்தக்கவையாக இருந்தன. மனிதனின் நரம்பியல் மண்டல இயக்கமும் அதன் குறைபாடுகளும்
& 緣
g o j sa Es D U ng G Rio
25 octobre - 31 décembre 1987
50
FEpFésentations setiefnert
L'HOMME 9UI
feçhäffhệ théằffale đe Peter 3reak
à partir du #vre d'Oliver Sacks "L'HOMME QUE PRENATSAFEMME POUR UN CHAPEAU"
stacle callsboreticide Marie-Hélène Estiene
insgrèsss
Maurice 8énichau Sotgui Kouyatě Bruca Myers Yoshiii Oidae
mustigte Rhaffigudd fabrizi-Zacish
avec l'aidé de * Jean-Claidē Cāfriêre
ஜூன் 2006

Page 50
மனித உறவுகளிலும் செயல் வினைகளிலும் ஏற்படுத்தும் தாக்கமே அந்நாடகத்தின் மையப்பொருளாக இருந்தது.
நாடகம் முடிவடைந்ததும், நெறியாளர் பீற்றர் புறுக்கினை காணும் ஆவலில் சென்றபோது சந்திக்க முடியாமை கலைஞர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. (அவர் அமெரிக்கா சென்றிருந்தார்.) ஆனால், அந்த நாடகத்தில் நடித்த, Maurice Berichou, Stoigui Kougake, Brucemyers, yoshioda seasu நான்கு நடிகர்களையும் சந்தித்து இலங்கையில் இருந்து வந்த கலைக்குழு என்று அறிமுகம் செய்துகொண்டு அவர்களுடன் உரையாடினர். அவர்கள் அந்த நாடகத்திற்காக செய்த பல்வகைப் பயிற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டதுடன் அதனை நடிப்பதற்கு முன் ஆறு மாதங்கள் நரம்பியல் வைத்தியசாலையில் பணிபுரிந்ததாகவும் பாத்திரச் சித்திரிப்பில் அதிக கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டதுடன், நெறியாளர் பீற்றர் புறுக்கைப்
வீட்டுச்சூழல் சின்னவயசிலேயே என்னை வாசகனாக்கியது. கல்கி, குமுதம், விகடன், ஈழத்துத் தமிழின்பம் எல்லாமும் வாசிப்பேன். சுதந்திரனில் வரும் கவிதைப்பூங்காவில் கொய்த பூக்களை கோப்புகளில் பத்திரப்படுத்துவேன்.
இந்த வாசிப்புப் பழக்கம்
இளந்தாரி வயசிலேயே என்னையொரு வீட்டுநூலகத்திற்குச் சொந்தக்காரன் ஆக்கியது. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எல்லோரும் இங்கே ஒன்றாய்க் குடிகொண்டார்கள் புதுமைப்பித்தன், ஜானகிராமன், ஜெயகாந்தன், பொன்னுத்துரை, சிவத்தம்பி, தளையசிங்கம் எல்லாரும் கூடியிருந்து குலவிக் கதைத்தார்கள் மாணவ நண்பர்கள் கூடிப்படிப்பதற்கென்றே ஊரில் ஒரு விடுதியை உருவாக்கியபோதில் எனது வீட்டு நூலகமும் அங்கு விடுதிகொண்டது. பதிவேட்டில் குறித்துக் கொண்டு பல்வேறு
闻 @
இ
@g
君
君
நண்பருக்கும்
படிக்கக்கொடுத்தவற்றில் திரும்பி வந்தவை @
சிலவேதான் @ ஆனாலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்தியதில்லை. 출
திரும்பவும் நிரம்பவும் புத்தகங்கள் சேர்ந்தன இன்று தேடியும் பெறமுடியாத சேகரங்கள்,
எனது சிறிய முயற்சியில் பதிப்புகள் கண்ட
நூல்களின் பலநூறு பிரதிகள், இந்திய ராணுவம் முட்டிய தியில் எரிந்து போயின.
○
9
எனினும் புத்தகங்கள் மீதான காதலை - நான் விட்டபாடில்லை. -
95ல் திருமலைக்கு இடம்பெயர்வு
இன்னொரு பயணம் திரும்பிப்போய் ஊரில் விட்டிற்று வந்த புத்தகங்களை
48 ஜனவரி - ஜ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றியும் அவரது தயாரிப்பு முறைமை பற்றியும் கலந்துரையாடி விடை பெற்றனர்.
பிரான்சில் நடைபெற்ற ஒரு நாடகத்தை முழுமையாகப் பார்த்த நிறைவோடு கலைஞர்கள் திரும்பினார்கள். இந்தளவு தொழில் நுட்பம், சினிமா, தொலைக்காட்சி என அனைத்தும் வளர்ந்த நாட்டில் ஒரு நாடகம் ஒன்றரை மாதங்களாக நிறைந்த சனக்கூட்டத்துடன் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆச்சரியத்தைத் தந்தது மட்டுமன்றி வளராத எமது மக்களின் இரசனை பற்றிய வெறுப்பும் ஏற்பட்டது.
தொடர்ந்து வடலிக்ககூத்தர்கள் பாரீஸ் நகரில் 'Amorc அரங்கில் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்தால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட 'கலைவண்ணம் 97 நிகழ்ச்சிக்குத் தயாராகினார்கள்.
(பயணங்கள் தொடரும்.) ܓ ܡܐ ܩܡܐ ܩܐ ܡܘ ܩ ܩܐ மீட்டு வரலாமென்ற நம்பிக்கை பொய்த்தது பொய்யாகிப்போன சமாதானம் போல,
யுத்தம் தொடங்கியது மீளவும் நூல்களின் சேகரம் இழந்தேன் பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்களை இழந்ததுவும் குழந்தைகள் கலைக் களஞ்சிய தொகுதிகளை இழந்ததுவும் தான் என்னைப்பாடாய்படுத்தியது ஆனாலும் புத்தகங்கள் சேகரிப்பதை நான்விட்டதில்லை.
மீண்டும் எனது புத்தகங்களுக்கு வந்தது ஓர் விபத்து
சுனாமி வந்ததும் ஊமையாய்க் கிடந்த உவர்மலையின் ஒடைக் கடல் ஆயிரம் கொடுநாவுகள் வளைத்து வீசி கொண்டு போனது புத்தகங்களை எஞ்சிய புத்தகங்களில் இன்னும் அந்தச் சுனாமிநாற்றம் எதையோ எச்சரிக்கை செய்த படி ஆனாலும் என்ன இன்னமும் புத்தகங்கள் அலுமாரிகளில் நிறைகின்றன.
தீதின்னும் தான் பெயர்வு பிடுங்கும் தான் கடலும் காவுகொள்ளும்தான் எனினும் புத்தகங்களால் நான்பெற்ற புத்தறிவை, பூத்து விரிந்தபடி புதிது தேடுகின்ற காதலினை, எந்தத் தீ தான் தின்று விடும் எந்தப் பெயர்வுதான் பிடுங்கிச்செல்லும் எந்தக் கடல்தான் காவுகொள்ளும் இனியும்நான் எடுப்பேன் வராக அவதாரம் மண்ணைக்கிண்டி மறுபடியும் வேதம் புதிது கொணர்வேன் இன்னுமொரு நாகரீக எழுச்சிக்கு வித்தாக
அ. வில்வரெத்திம்ை நன்றி : வாசிகம் 28.09.2005
56টা 2006 aggai

Page 51
நீளப்பரந்த பச்சை வயல்வெளி கண்களின் எட்டும் தூரத்திற்கு அப்பாலும் விரிந்திருந்தது. ஊரின் மத்தியிலிருந்து கிளைத்துச்செல்லும் ஒரு ஒடுங்கிய பாதை மட்டுமே அந்தப் பச்சைவிரிப்புகளுக்கான தொடுசலாக இருந்தது. அப்படியான பாதையினைக் கொஞ் சத் துTரம் கடந்துவந்துவிட்டால் இயற் கையின் அந்த அழகிய பசுமையைக் கணி டு களிக கலா மீ அப் போது யாராவது உலகத்தின் நிறமெது என்று கேட்டால் நிச்சயமாக வானத்தின் நீலத்தைத் தள்ளிவிட்டு பச்சையென்றே மனம் பதிலளிக்க விழையும். அந்தளவிற்கு கண்களை நிறைக்கும் பச்சை
கால்களை முன் நீட்டி தலையைப் பின் பக்கமாய் ச் சாய்த்துக் கொண்டு அண்ணாந்து சாயங்கால வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதியான பிரியம். மதியம் தணிந்து மாலை கவிழும் அந்தப் பொழுதில் காதோரம் காற்று சில்லிட்டுச் செல்ல, வானை அப்படித் தரிசிப்பதில் அவனுக்கு அளவற்ற ஆனந் தம் அழகிய பசுமையிலிருந்து கொஞ்சம் நீங்கி ஆகாய நீலத்தைக் கண்ணுக்குள் நிறைத்துக் கொள் வான். அப்படியிருக் கையில் புவியீர்ப்பைக் கொஞ்சநேரத்திற்கு ஒய்வெடுத்துக் கொள்ளக்கூடாதா. அப்படி மட்டும் இருந்துவிட்டால் காற்றுவெளிக்குள் கையடித்துக்கொஞ்சம் பறந்து பார்க்கலாம் அல்லவா? அந்தரத்தில் தொங்கிக்கொண்டு எத்தனையோ வலிகளையெல்லாம் தனக்குள் தாங்கிக்கொண்டிருக்கும் பூமித்தாயின் மீது அவன் அளவற்ற நேசம் வைத்திருந்தான். மனிதனின் அற்ப மூளைக்கு முழுதுமாய் எட்டாத படைப்பின் ரகசியத்தை, அந்த அறிய முடியாத சிற்பியின் ஆளுமையில், ரசனையில் அடிக்கடி உள்ளத்தைப் பறிகொடுப்பது அவனது வழக்கம்.
நினைவுவானை விட்டு மீண்டும் நீலவானிற்குத் திரும்பினான். நீலத்திற்கு இடையிடையே சில வெண்முகில்கள் உண்ட நீர் செரிக்க கொஞ்சம் உலாப்போகின்றன போலும் மனிதனின் பிறப்பைப் போலத்தானே முகில்களின் ஜனனமும் இரண்டினது முடிவுகளும் கூட கண்ணீரில் தானே விடைபெறுகின்றன. படைப்பின் கர்த்தா என்று யாரும் குறிப்பாக இருப்பாரோ.? ஒருவன், ஒருத்தி அல்லது
அநாமதேயமாக
அவனுடைய ஆ6 முகில்களைப் பார்க் ஒவ்வொரு வடி ( மற்றையதைவிட தென்பட்டன. அப்போ நிகழ்ந்தது. முன்னே திரளோடு பின்னே ெ இரண்டுமே ஒன்றாக திரும்பியது. என்ன முடியாத அற்புத சிரு எண்ணி வியந்து ெ இப்படி இன்னுமொ அவனுக்கென்றே அ ÉlėF 3FuuLDIT அவன் கண் கலை தோற்றப்பாடல்ல. ஆ தன் சேயை அணை அன்னையின் வடிவ கண்களைக் கசக் பார்க்கிறான். சம்மா தன் சின்னஞ்சிறு இருக்கும் தாயி அபிநயிக்கும் வாய் முகில்களால் முழுை உயிரோவியமாய்! பனிக் கின்றன. மலைக்கிறான். மன இந்த அற்புதத்தரிக் உரியதல்ல. எல்ே மற்ற வர் களு க கு சொல்லவேண்டும். சென்று எல் லே காணச்செய்ய வேை
சைக்கிை அவசரமாக மிதித் அடிக்கடி பார்த்துக்ெ மட்டும் வேகமாகவே வீதிகள் என்பதால் ( மேலேயே அதிகம் ப அதே மகவு.
ஜனவரி -
 
 

ஏதோவொன்று! வல் கரைபுரண் டது. கிறான்; ஒவ்வொன்றும்
ஒன்று வேகமானதாகக்கூடத் துதான் அந்த அதிசயம் சென்றதொரு முகில் சன்றது ஒட்டிக்கொள்ள, இணைந்து கொஞ்சம் ஆச்சரியம். அறிய ஷ்டியின் ஆற்றல்களை கொண்டிருக்கும்போதே ன்று பிரத்தியேகமாக ரங்கேறியதுபோல். க அது வெறுமனே ா மயக்கி நிற்கும் அது நிஜமே! கையோடு த்தெடுத்துத் தாலாட்டும் Iம் அங்கு தெரிந்தது. கிக்கொண்டு மீண்டும் டிகொட்டிய நிலையில் சேயை அணைத்தபடி ன் 'ஆராரோவென புடன் கூடிய முகம். மையாகவே தீட்டப்பட்ட அவனுடைய கண்கள் தன் னை மறந் து துக்குள் களிக்கிறான். Fனம் எனக்கு மட்டும் லாருக்கும் உரியது. j LĎ இதுபற்றிச் ஆமாம். ஊருக்குச் ாரையும் இதைக் ன்டும். ள எடுத்து அவசர தான்; உச்சிவானை காண்டு பலம்கொண்ட உழக்கினான்; பழகிய முன்னே பார்ப்பதைவிட ார்த்தான். அதே தாய். தலையைத் தாங்கி
நெஞ்சோடு அணைத்து வைத்திருக்கும் கை நிச்சயமாக இதை மற்றவர்களும் காண வேண் டும் என்று மீண் டும் ஆர்வப்பட்டவனுக்குத் திடீரென்றொரு சந்தேகம் வந்தது. மற்றவர்களிடம் சொன்னால் இதை ஏற்றுக்கொள்வார்களா? ஒருவேளை பரிகாசம் செய்யக்கூடும் அல்லவா? முகில்களாலான இந்த சுயம்புச் சிற்பத்தின் அற்புத தரிசனத் தை இனங் கண் டு ஏற் றுக் கொள்வார்களா? ம்..ம். ஏன் கூடாது. நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் மரவேர்களுக்கிடையில் கூட இறைமையை, மகேசனைக் கண்டு போற்றுபவர்கள் சிருஷ்டியின் சகல அற்புதங்களையும் கட்டாயம் மதிப்பார்கள். ஆமாம் நிச்சயமாக உறுதியான நம்பிக்கையுடன் சைக்கிளை ஊருக்குள் செலுத்தியவன். கூடியிருந்த சனத்திரளின் அமளியினால் அங்கே திரும்பிப்பார்க்க நேரிட்டது.
கூட்டத்தினிடையே புகுந்து எட்டிப்பார்த்தான். அந்த வீதிக்குப் பழக்கப்பட்ட அனைவராலும் பொதுவாக பூக்கண்டு வீடு' என குறிப்பிடப்படும் அந்த வீட்டுப்படலைக்கு முன்பாக அந்த அக்கா கையில் தன் குழந்தையுடன் சுட்டிக்காட்டும் பல விரல்களுக்கு நடுவே மிரண்டுபோன விழிகளுடன் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள். என்ன நடந்ததென்று அவனால் உடனடியாக ஊகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. அந்த அக்கா சிலநேரம் வீட்டுக்கு வருவதுண்டு. செவிப்புலனும் பேசும் சக்தியும் அற்ற அவளுக்கு மூன்று வயது மதிக்கத்தக்க தொரு குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு எந்தவித குறைபாடு இல்லாதிருந்தும் தாயுடனேயே எப்போதும் சேர்ந்திருப்பதால் பேசுவதற்கான தனது ஆற்றலை வளர்த்துகொள்ள முடியாமல் போய்விட்டது என்பதை தாய் மூலம் அவன் அறிந்திருந்தான். கணவனால் கைவிடப்பட்ட நிலையில் தகப்பனைச் சார்ந்தும், தெரிந்த வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய வேலைகளில் சிறுசிறு ஒத்தாசை புரிந்துவிட்டு அவர்கள் கொடுப்பதை வாங்கியும் வாழ்பவளாக அவள் இருந்தாள். வருவதென்றால் காலைவேளைகளிலேயே அதிகமாக வரும் அவள் அவர்களுடைய காலையுணவில் தானும் பங்கெடுத்து நன்றாகப் பசியாறிவிட்டு அவனுடைய தாயாருடன் ஏதோ கணக்கப் பேசிக்கொள்வாள். அவனுக்கு அவள்
ஜூன் 2006
49

Page 52
பேசுவது அதிகம் புரிவதில்லை. சைகைகள், வாயசைப்புகள், முகபாவனைகள் என்று பலமாதிரியும் பேசப்படும் அந்த மொழியில் தனக்கும் ஏதாவது விளங்குமா என தனது தாயுடனான அவளது உரையாடலை அவன் விநோதமாக வாயப் பார் ப் பதுண் டு. அவளுடைய தொடர்ச்சியான பேச்சுக்குத் துணையாக தனது தயார் கூறும் பதில்களும் கேட்கும் கேள்விகளும் அமையும். 'அம்மா எங்கை ஊமைப்பாசை படிச்சவா? என்று அவனும் அந்த மொழியற்ற உரையாடலில் பரிச்சயம் பெற ஆவல் கொள்வதுண்டு. தன்னுடைய பழைய சேலைகளைத் தாயார் அவளுக்குக் கொடுத்த போதெல்லாம் அந்த முகத்தில் திடீரென முளைவிடும் சந்தோசம் அலாதியானது. அந்தச் சந்தோசத்தின் தொடர்ச்சியாகத் தனது குழந்தைக்கும் ஏதாவது உடுப்புகள் உணர் டா எனக்கேட்பதுண்டு. “சின்னப்பிள்ளையின்ர சைஸில எங்கட வீட்டில ஆர் துணி தாறன், தைக்கத் தெரியுமே?’ என்ற தாயின் கேள்விக்கு 'ஓம்' என்ற அவசர பதிலை அளித்து துணியை அவள் வாங்கிக் கொள்வாள். "எனக்குத் தெரியும் உனக்குத் தைக்கத் தெரியாதெண்டு. கிடுகுகள் கொஞ்சம் பின்னக்கிடக்கிது. ஊறப்போடிறன், பிள்ளையளோட நான் சேர்ந்து சனிக்கிழமை பின்னி முடிச்சால் இவர் ஞாயிறு வாறநேரம் வேலியை அடைக்கலாம். நீயும் வந்தால் கெதியாய் பின்னிடலாம். என்னமாதிரி? சம்பளம் தாறன், துணியின்ர தையல் கூலிக்கு உதவுமெல்லே!” அந்த அக்கா ஒன்றுக்குப் பல தடவை தலையாட்டிச் சம்மதிப்பாள்.
"ஊமைக்கழுதை பாவம் எண்டு வளவுக்குள்ள அடுக்கினா, அவளுக்கு களவெடுக்கிற அளவுக்கு கை நீளுது.' சத்தம் கேட்டு ஏங்கிப்போனவன் நினைவு களிலிருந்து மீண்டு பார்த்தான். வயதில் முதிர்ந்த ஒரு பெண் சாடினார். “உதுதான் உப்பிடிப்பட்டதுகளை பாவம் பார்க்கப்படா தெண்டு சொல்லிறது. எங்கட காதிலையே பூ சுத்திப்போடுங்கள்', இன்னுமொரு பெண் முன்னையவளை அமோதித்தாள். “உதுக் கொல்லாம் நல்ல பாடம் கற்பிக்காட்டி நாளைக் கு தன் ர பிள்ளையையும் கள்ளியாய்த்தானே வளர்த்தெடுப்பாள்.' “...சரியாய் சொன்னீங்கள் இண்டைக்கு களவெடுக்க கூசாதவள். நாளைக்கு ஆருக்குத் தெரியும். என்னென்னவெல் லாம்”, ஆளுக்காள் தத்தம் அபிப்பிராயங் களை அடுக்கத் தொடங்கினார்கள்.
"நான் எவ்வளவு ஆசைப்பட்டு
a poo வெறிச்சே தெருவைப்போ வெற்றிடமாகி அசாதாரணம் கனதியுடன் தன மேலே வானத்ை சற்று முன்னர்
முகில் சிதைந்துபே
ഞഖ#9 பூக்கண்டு ச பிடுங்காமல் விட்டதை கைவிட்டு எட்டிப்பிடு அந்த 'பூக்கண்டு வீட்டு பொருமினார். அப்ே விளங்கியவனாய் அந்த அவன் பார்த்தான். தன் குழந்தைக்கும் சூடிக் அவளுடைய 60. ரோஜாப்பூக்கள் எஞ்சி பாவம் ஏதோ தெரிய மன்னிச்சு விடுங் ே இளந்தலைமுறையான "என்ன! தெரியாமல் ( திருட்டுக்கழுதை எவ போய் வயித்தை நிரப்பி தெரியும், பூ கள எண்டிறதுதான் தெரிய மினுக்க வெளிக்கிட்டி பாருங்கோ! நான் இவ்: களவெடுத்த பூக்க6ை எண்டு. திமிர்பிடிச்சவ6 கையைத்திற.” எ வைத்திருந்த அந்த 6) HDI5 6L– L–ss UILDs 5 ரோஜாப்பூக்களைப்
முனைந்தாள். அந்த மு ஒவ்வொன்றாக உதிர் விழுந்தன.
அப் போது அக்காவிற்குத் தன்மீது தெரிய வந்திருக் மெளனத்தைக் கை கையிலிருந்த குழந்தை தன்னுடைய மொழியில் தொடங்கினாள். அது முடியாமலிருந்த ஊை அவனுக் குப் புரி
50
ஜனவரி - ஐ
 
 

ாடிக் கிடந்த
வே இதயமும் க் கனத்தது. ாக அந்தக் லயை நிமிர்த்தி தப் பார்த்தான். அவன் கண்ட திரட்சி ாயிருந்தது.
Tமித்தட்டுக்கே நான் மதிலுக்கு மேலால ங்கீட்டாள் கள்ளி', சொந்தக்காரப்பெண் பாதுதான் விடயம் 5 அக்காவை மீண்டும் னுடைய தலையிலும் கொண்டவை போக கயரிலும் 6 யிருந்தன. “சரி சரி1 ாமல் செய்திட்டிது. காவன் ', சற்று ன ஒருவர் கூறினார். செய்துபோட்டாளோ, னோ ஒருத்தனிட்டை க்கொண்டு வரமட்டும் வெடுக்கக் கூடாது பாதாக்கும். பூச்சூடி ட்டா சிங்காரி! உங்க வளவும் சொல்லிறன், ா கீழ போட்டாளோ ர், ஏய் போடடி கீழ! ன்றவாறு பொத்தி அக்காவின் கையை விரித்து, அந்த பிடுங்கிக்கொள்ள >யற்சியில் இதழ்கள் ந்து உதிர்ந்து கீழே
ΘGe)
தான் அந்த சாட்டப்பட்ட குற்றம் வேண்டும் . தன் )லத்துக் கொண்டு யைக் காட்டிக் காட்டி கனக்கக் கதைக்கத் ரை புரிந்துகொள்ள ப்பாஷை அப்போது தது. அவளின்
கண்ணிலும் வார்த்தைகளற்ற கதறலிலும் தன்னுடைய மொழி புரியப்படவில்லையே என்ற வேதனை நெருக்க அவள் பேசிய மொழி மிகத்தெளிவாகவே அவனுக்கு விளங்கியது. நிலத்தில் உதிர்ந்துபோன ரோஜா இதழ்களைக் குனிந்தெடுத்துக் கொண்டு தான் சூடிய பூக்களை ஒற்றைக்கையால் பொத்திப்பிடித்தவாறே, மற்றக்கையாலே தன் குழந்தையின் தலையிலிருந்த மலர்கள் பறிக்கப்படாமல் இருக்கவேண்டுமென்ற ஆதங்கத்தில் நெஞ்சோடு அணைத்தவாறு கூட்டத்தை விலக்கியவாறு சனச்சந்தடி குறைந்த தெருட்பக்கமாக விரைவாக நடந்தாள்; எங்கே யாராவது தன்னைத் தொடர்ந்து வந்து தன்னுடைய பூக்களை பறித்து விடுவார் களோ என்ற அச் சத்தில் நடந்து செல்லும்போதும் இடையிடையே திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு மற்றவர்களுக்குப் புரியாத அல்லது புரிய முயலாத மொழியில் கதறிக்கதறி அழுதுகொண்டே போனாள்.
அவன் திரும்பிப்பார்த்தான். ‘பூக்கண்டு வீடு மயானவெளி போல அவனுக்குக் காட்சியளித்தது. மேலதிகமாக இன்னும் பல கருத்துகளைக் கூறிக் கொண்டிருந்த கூட்டம் சில நிமிடங்களில் முற் றாகவே கலை நீ திருந்தது. வெறிச்சோடிக்கிடந்த தெருவைப்போலவே இதயமும் வெற்றிடமாகிக் கனத்தது. அசாதாரணமான அந்தக் கனதியுடன் தலையை நிமிர்த்தி மேலே வானத்தைப் பார்த்தான். சற்றுமுன்னர் அவன் கண்ட முகில் திரட்சி சிதைந்துபோயிருந்தது. சில கணங்களில் வானம் இருட்டி மழை பொழிந்தது அல்லது முகில்கள் அழுதன. அது எப்படி முகில்களால் அழ முடியும்? அவை கடவுளின் சிருஷ்டிகள் அல்லவா? பூடகமாக இறைமையின் புதினம் அறிவிக்கும் அற்புதங்கள் அல்லவா அவை? தூரத்தில் மெதுவாகக்கேட்ட விம்மல் சத்தத்தினால் மீண்டும் வானத்தைவிட்டு தரையை நோக்கினான். சடப்பொருட் களையே இறைவனின் சிருஷ்டிகளாக அர்த்தப்படுத்த முனையும் நாம் சகமனிதனை மட்டும். தூரத்தில் புரியப்படாத அல்லது எவருமே புரிந்துகொள்ள விழையாத மொழியில் அந்த அக்கா, கையில் குழந்தையுடன் அழுது புலம்பியவாறு சென்றுகொண்டிருந்தாள். மழை தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. அல்லது முகில்களுக்குப் பின்னால் இறைவன் அழுதுகொண்டிருந்தான்.
'6, 2006
酶

Page 53
கலைச்சங்கமம் - 2006 கலை நிகழ்வுகள்
யாழ். திருமறைக் கலாமன்றக் கலைஞர்களும், தென்னிலங்கைத் திருமறைக் கலாமன்றக் கலைஞர்களும் இணைந்து வழங்கிய கலைச் சங்கமம் - 2006 கலை நிகழ்வுகள் 25.02.2006 சனிக்கிழமை மாலை, யாழ். திருமறைக் கலாமன்ற அரங்கில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக லண்டனில் இருந்து வருகை தந்த திருமறைக் கலாமன்றத்தின் முன்னாள் உதவி இயக்குநரான அருள்பணி தேவறாஜன் அடிகளாரும், சிறப்பு விருந்தினர்களாக, ஜேர்மனி, பசாவுவில் இருந்து வருகை தந்த ஸ்ரெய்னர் குளோடியா, றொனால்ட் ஆகியோரும், ஹெல்வற்றாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சில்வான் றெக், ராணி சாமுவேல் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்வுக்கான ஆரம்ப உரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார் வழங்கினார்.
கலை நிகழ்வுகளாக யாழ். திருமறைக் கலாமன்றத்தின் கோல் ஆடல், பாணந்துறை திருமறைக் கலாமன்றத்தின் ஆடுவோம் பள்ளு பாடுவோம்', அவிசாவளை திருமறைக் கலாமன்றத்தின் 'கோல் எடுத்து ஆடுவோம்', கண்டி திருமறைக் கலாமன்றத்தின் குறிஞ்சி மகளிரின் கண்டி நடனம், யாழ்ப்பாணம் - அவிசாவளை - பாணந்துறை திருமறைக் கலாமன்றங்கள் இணைந்து வழங்கிய 'கலாசார சங்கம நர்த்தனம்' என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக, யாழ். திருமறைக் கலாமன்ற மகளிர் அவையினர் வழங்கிய 'ஜெனோவா - தென்மோடி நாட்டுக் கூத்தும் இடம் பெற்றது.
கலை நிகழ்வுகளின் இடையில், இலங்கை மண்ணில் அமைதி நிலைக்க வேண்டி சிறப்புப் பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது. இந் நிகழ்வுகளை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தார்கள்.
இலங்கையில் இயங்கும் அனைத்துத் திருமறைக் கலாமன்ற இணைப்பாளர்களும் 'கலைச் சங்கமம் - 2006 நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், நிகழ்வுகளுக்கு முன்னதாக, திருமறைக் கலாமன்றத்தால் கடந்த ஜனவரியில் திறந்து
酶 ஜனவரி -
 
 
 
 

வைக்கப்பட்ட 'கலைக் கோட்டம் கட்டடத் தொகுதியையும் இணைப்பாளர்கள் பார்வையிட்டார்கள். இதன்போது 'கலைக் கோட்டம் கட்டடத் தொகுதி உருவாக பெருமளவு நிதியுதவியினை 6)]p (E 55) 9)_j56)flul (322ff LD60f), LIFT6), Nieder bronner அருட்சகோதரிகள் சார்பாக, 'கலைச் சங்கமம் நிகழ்வுக்காக வருகை தந்திருந்த ஸ்ரெய்னர் குளோடியாவால் நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்யப்பட்டது.
'கலைச் சங்கமம் - 2005 நிகழ்வுகள் திருமறைக் கலாமன்றத்தின் 40 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் முகமாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரிய அளவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
මූtuග්)ණ්ලෑෂු\ → ශූGQර්
கனடா ரொறொன்றோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கும் தமிழுக்கு ஒருவர் ஆற்றும் வாழ்நாள் பங்களிப்புக்கான இயல் விருது (2005) கலிபோர்னியா பெர்க்கலிப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியரும், அப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட மூலகாரணமாக இருந்தவருமான பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேல் நாட்டு அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் ஹார்ட் தமிழ் உட்பட 18 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன், கணிணியில் தமிழ் எழுத்துரு அமைத்தவர்களில் முன்னோடியும் ஆவார். தமிழை இந்தியாவில் செம்மொழி ஆக்குவதில் பெரும் பங்காற்றியவரான இவர், புறநானூற்றுப் பாடல்கள் உட்பட பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்ததுடன், இப்போதும் இம் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். தமிழுக்கு இப் பேராசிரியர் ஆற்றிய சேவைகளுக்காக இவ் விருது இம் முறை அவருக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இயல் விருதானது இதுவரை சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
DUP35b é9óly:35 Basa "கலைமுகம் - கலை, இலக்கிய, சமூக இதழின் அறிமுக நிகழ்வு கடந்த 26.03.2006 மாலையில், திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் - திருகோணமலை திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கவிஞர் திரு. தில்லைமுகிலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 'கலைமுகம் சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை வடக்கு - கிழக்கு மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளரும், எழுத்தாளருமான வல்வை திரு. ந. அனந்தராஜ் அவர்களும், நயப்புரையை கவிஞர் திரு. சூ வில்வரெத்தினம் அவர்களும் வழங்கினார்கள். முதல் சிறப்புப் பிரதியை திருகோணமலை பூரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் திரு. எம். இராஜரத்தினம் வழங்க, ஈழத்துச் சோலை வெளியீட்டக அதிபர் கலாபூஷணம் சித்தி அமரசிங்கம் பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
ஜூன் 2006 51

Page 54
குனிநாயகம் அழகள் நினைவுப்பேருரை
யாழ் கொழும் புத் துறையில் அமைந்துள்ள யாழ். கத்தோலிக்கத் s! --> திருச்சபையின் குருத்துவ உருவாக்கலுக்கான உயர் பீடமான 'புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி யானது தனியே குருக்களை உருவாக்குவதற்கான பயிற்சியை - கல்வியை வழங்குவதுடன் மட்டும் தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, குருத்துவ உருவாக்கல் பயிற்சிக்காக வரும் அருள்சகோதரர்களை பன்முக ஆளுமை கொண்டவர்களாக உருவாக்குவதிலும் அது பெரும் பங்காற்றி வருகின்றது. இவை ஆன்மீகத் தளத்துடன் நின்று விடாமல் கலை, இலக்கியம், நாடக அரங்கு என பல தளங்களில் நீண்டு செல்கின்றன. கலைத் தளத்தில் இக் கல்லூரியில் இயங்கி வரும் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றம் குறிபிடத்தக்க பணிகளை பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றது. இவற்றில் ஒன்றாக, கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இம் மன்றம் நடத்தி வருகின்ற தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை அமைகின்றது. நாட்டுச் சூழல் மற்றும் இதர காரணங்களால் சில ஆண்டுகளில் இப் பேருரை நடைபெறாமல் போனாலும், தொடர்ச்சி பேணப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக, உலகெங்கும் தமிழை தூதாகக் கொண்டு சென்று, தமிழ் மொழியின் பெருமைகளை, சிறப்புக்களை எட்டுத்திக்கிலும் எட்டவைத்து மறைந்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நினைவுகளை மீட்கவும், புதிய தலைமுறையும் இப் பெருமகனார் பற்றி அறிந்து கொள்ளவும் வழி ஏற்படுகின்றது. தனிநாயகம் அடிகளாரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டிலும் வெவ்வேறு தலைப்புக்களில் இடம்பெறும் இப் பேருரையானது, காற்றோடு கலந்து போகாமல் நூலுருவிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றது. இதுவரை எட்டு நினைவுப் \பேருரைகள் இடம்பெற்றுள்ளது. எட்டாவது நினைவுப் பேருரை
കളിരുക്രീമeCആഗ്ര யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளையோர் அவையின் ஏற்பாட்டில் சிருஷ்டிப்பிற்கான தேடல்' என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான கவிதை பற்றிய முழு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வொன்று 12.02.2006 காலை முதல் மாலை வரை யாழ். மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. கவிதையின் அடிப்படைகள், கவிதைப் பகிர்வு, கவிதை எழுதுதல், கவிதை மதிப்பீடு எனப் பல்வேறு தலைப்புக்களில் இடம்பெற்ற இப்பட்டறை நிகழ்வில் கவிஞர்களான சோ. பத்மநாதன், பா. மகாலிங்கசிவம், நா. சிவசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.
இப்பட்டறையில் யாழ்ப்பாணம், இளவாலை, உரும்பிராய் திருமறைக் கலாமன்ற இளையோர் அவை உறுப்பினர்களும், ஆர்வமுள்ள இளைஞர்கள் பலரும் பங்குபற்றி பயிற்சிகளைப் பெற்றார்கள்.
இளைஞர்களின் 'ஆளுமை' வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இதுபோன்ற பயிற்சிகள் ஏனைய பல துறைகளிலும் திருமறைக் கலாமன்ற இளையோர் அவையால் தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
52 ஜனவரி - ஜ:
 

06.06.2006 அன்று மாலை புனித சவேரியார் குருத்துவகி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது, "இஸ்பானிய - தமிழ் அனுபூதி நெறிப்போக்குகள்: புனித அவிலா திரேசம்மாள் - காரைக்கால் அம்மையார் ஒப்பீடு" என்ற தலைப்பில் திரு. ஆ.சபாரத்தினம் அவர்கள் பேருரையை வழங்கினார்.
கடந்த 7 நினைவுப் பேருரைகளின் விபரங்கள் வருமாறு:
1. 03.07.1993 - "தனி நாயகமானார்”
பேராயர் கலாநிதி வ. தியோகுப்பிள்ளை
2. 06.05.1994 - "தமிழ்த்துது - தத்துவப் போதகள் முதல்
தனிநாயகம் அடிகள் வரை' பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன்
3. 12:05,1995 - "தமிழ்த்துதின் தனி ஆளுமை' அருள்கலாநிதி நீ மரியசேவியர்
4. 24.05.1998 - 'சங்க இலக்கிய ஆய்வும் தனிநாயக
அடிகளாரும்” பேராசிரியர் அ. சண்முகதாஸ்
5. 08:03.1999 - "வட இலங்கையில் அரங்கவியலும் கத்தோ
லிக்கர்களது பங்களிப்பும்" கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
6. 22.03.2001 - “கிறிஸ்தவ தமிழ் நாவல் இலக்கியத்தில்
பெண்களின் நிலை” கலாநிதி (செல் வி) செல்வபுரணம் விமலாதேவி செல்லையா
7. 08.05.2003 - "தமிழ்த் திரையுலகு பிரதான போக்குகளும்,
மாற்று முயற்சிகளும்" எழுத்தாளர், விமர்சகள் அ. யோசுராசா ノ
நூல் அறிமுக விழா
திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் அருள்பணியாளர் செபமாலை அன்புராசா அடிகளாரின் ஆக்கத்தில் உருவான 'சுனாமி சொல்லாத சோகங்கள் என்ற நூலின் அறிமுக விழா 26.02.2006 ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் திருமறைக் கலாமன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
எழுத்தாளர் செ. யோசப்பாலா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வரவேற்புரையை திருமறைக் கலாமன்ற ஊடக இணைப்பாளர் கி. செல்மர் எமிலும், நூலின் அறிமுக உரையை திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமாரும், மதிப்பீட்டுரையை கவிஞர் சோ. பத்மநாதனும், ஏற்புரையை நூலாசிரியர் அருள்பணி செ. அன்புராசாவும், நன்றியுரையை திருமறைக் கலாமன்ற ஆலோசகர் பி. எஸ். அல்பிரட்டும் வழங்கினார்கள். இவ் அறிமுக விழாவில் நூலின் முதற்பிரதியை யாழ். மனித முன்னேற்ற நடுநிலைய பிரதிநிதி பெற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில், சுனாமி இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு மணற்காடு, குடத்தனை இடைத் தங்கல் முகாம்களில் வாழும் இளைஞர்கள், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
6টা 2006 酶

Page 55
இ இது 2ngvu വിട്ടിട്ട്യേടവിട്ട
69 ● இ இ ஆத்த&ஐக்இட்சிஜகுேக் அகவிழி - நிறுவனத்தின் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 17, 18, 19 ஆகிய திகதிகளில் இணுவில் மத்திய கல்லூரி ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியும், மாலைப் பொழுதுகளில் கருத்துரை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. இதன்போது முதலாம், மூன்றாம் நாள்களில் வாசிப்பு படைப்பாக்கம் தொடர்பான கருத்துரைகளும், இரண்டாம் நாளில் திரைப்பட இரசனை தொடர்பான கருத்துரையும், திரைப்படக் காட்சிகளும் இடம்பெற்றன.
மூன்று நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. இக் கண்காட்சியை பல நூற்றுக்கணக்கான மக்கள் பார்வையிட்டதுடன், தமக்கு தேவையான நூல்களையும் கொள்வனவு செய்தார்கள்.
மூன்று நாள்களிலும், மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான கருத்துரை நிகழ்வுகளின் போது, முதலாம் நாளில் த. சிவகுமாரன் தலைமையில், ஆசிரியப் பணியில் வாசிப்புத்திறன், நூல்களுள் நுழைய. வாசகரே வினைப்படும் மனிதராகவும், முழு மனிதராகவும் மாறுகின்றனர் ஆகிய தலைப்புக்களில் முறையே, ஆ. ழரீஸ்கந்தமூர்த்தி, அ. பூரீகாந்தலட்சுமி, பேராசிரியர் சபா. ஜெயராசா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இரண்டாம் நாளில், ந. ஞானசூரியர் தலைமையில், நல்ல திரைப்பட இரசனை பற்றி கலை, இலக்கிய விமர்சகரும், ‘தெரிதல் இதழின் ஆசிரியருமான அ. யேசுராசா கருத்துரை வழங்கினார். தொடர்ந்து இரு குறும்படங்களும், "உப்பு என்ற திரைப்படமும் காண்பிக்கப்பட்டன.
மூன்றாம் நாளில், செ. மதுசூதனன் தலைமையில், மாணவரும் வாசிப்பும், வாசிப்பின்பால் என்னை ஆற்றுப்படுத்தியவை, படைப்பும் இரசனையும், படைப்பாக்க அனுபவம் ஆகிய தலைப்புக்களில் முறையே, கவிஞர் நா. சிவசிதம்பரம், சி. கதிர்காமநாதன், க. சட்டநாதன், கோகிலா மகேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கடந்த ஒக்ரோபர் மாதத்தில் வாசிப்பு மாதம் அனுஷ்டிக்கப் பட்ட போது, வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளிலும் ஈடுபட்ட ‘அகவிழி நிறுவனத்தின் இது போன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியதாக அமைகின்றன.
இதே வேளை, பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியும் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. ஜேர்மன் அரசு பொது நூலகத்திற்கென வழங்கிய நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 31 ஆயிரம் நூல்கள் இக் கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் அண்மையில் வெளிவந்த புதிய நூல்கள் பெருமளவில் அடங்கியிருந்தன.
17 ஆம் திகதி பி. ப. 330 அளவில் இக் கண்காட்சிக்கான ஆரம்ப வைபவம் யாழ். பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ். அரச அதிபர் கே. கணேஷ் அவர்கள் நாடாவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். யாழ் மாநகர ஆணையாளர் சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மதப் பெரியோர்கள் உட்பட, கலை, இலக்கியவாதிகள் சிலரும் கருத்துரை வழங்கினார்கள்.
இக் கண் காட்சியையும் பெருமளவிலானோர் பார்வையிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
酶 ஜனவரி -

/് AS ' N
பலிக்களர் நிறங்ாருகளின் காட்சி
யாழ். திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலப் பகுதியில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பைச் சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகம் இம்முறையும் பலிக்களம்' என்னும் பெயரில் ஏப்பிரல் மாதம் 5, 6, 7, 8, 9 ஆகிய திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது.
திருமறைக் கலாமன்ற இயக்குநர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவாகி, நீண்ட பல ஆண்டுகளாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல மேடையேற்றங்களைக் கண்ட பலிக்களம்' நாடகத்தை இம்முறை புதிய கோணத்தில் கலைஞரும், இளவாலைத் திருமறைக் கலாமன்ற இணைப்பாளருமான ஏ. ஆர். விஜயகுமார் நெறியாள்கை செய்திருந்தார்.
மிகப் பெரிய மனித, தொழில்நுட்ப வளங்களுடன் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்படும் இப் பக்திப் படைப்பானது; ஒவ்வொரு ஆண்டிலும் அதன் அரங்கத் தொழில் நுட்பத்திலும், அளிக்கை முறையிலும் மென் மேலும் வளர்ச்சியடைந்து செல்கின்றது. இவ்வாண்டிலும் இதனை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, கொழும்பு திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கிய கழுமரச் சிலுவை என்னும் திருப்பாடுகளின் காட்சி 25.03.2006 இல் கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலய முன்றலிலும், 09.04.2006 இல் புத்தளம், கட்டைக்காடு புனித சவேரியார் ஆலய முன்றலிலும் மேடையேற்றப்பட்டது. இதனை கொழும்புத் திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த திரு. கொ. ராஜன் நெறியாள்கை செய்திருந்தார்.
ஜூன் 2006 53

Page 56
திருமறைக் கலாமன்றம்
திருமறைக் கலாமன்றம் தனது நாற்பதாவது ஆண்டு நிறைவில் தனது செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும், நுண்கலைகளின் வளர்ச்சி கருதியும் இல 128 டேவிற் விதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைத்த கலைக்கோட்டம்' என்னும் கட்டடத் தொகுதியின் திறப்பு விழா தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று (1401.2006 சனிக்கிழமை) மதியம் 1200 மணியளவில் இடம்பெற்றது.
இறைவழிபாட்டுடன் ஆரம்பமாகிய திறப்பு விழா வைபவத்தின்போது, யாழ். மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வர் ஜே. பி. ஈ. செல்வராசா அடிகள் நாடாவை வெட்டி கட்டடத் தொகுதியை திறந்து வைத்தார். தொடர்ந்து இடம்பெற்ற மங்கல விளக்கேற்றல் நிகழ்வின்போது அருள் திரு ஜே. பி. ஈ. செல்வராசா அடிகள், திருமறைக் கலாமன்ற
|-
54 ஜனவரி - ஐ
 
 

f[i][il][sílip II - 14.01.E[][06
இயக்குநர் அருள்திரு. நீ மரியசேவியர் அடிகள், அருள்திரு. ஜெறோ செல்வநாயகம் அடிகள், ஓவியர்களான திரு. ரமணி, திரு. ஆ. இராசையா மற்றும் திருமறைக் கலாமன்ற முத்த கலைஞர்களான திரு. என். எஸ். ஜெயசிங்கம், திரு. அயோசப் ஆகியோர் மங்கல விளக்குகளை ஏற்றி வைத்தர்கள்
தொடர்ந்து, திறப்பு விழா நிகழ்வுகள் பிரதி இயக்குநர் திரு. யோ, யோண்சன் ராஜகுமார் தலைமையில் இடம்பெற்றன. பிரதி இயக்குநரின் தலைமையுரையைத் தொடர்ந்து கட்டடத் தொகுதியை ஆசீர்வதிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனை சுவாமி குணசீலன் அடிகள் நடத்தினார். இதனைத் தொடர்ந்து, 11ல் காச்சும் வைபவமும், பொங்கல் வைபவமும், பரிமாறலும் இடம்பெற்றது.
இதன்பின்னர் சிறப்புரைகள் இடம்பெற்றன. சிறப்புரைகளை அருள்திரு ஜே. பி. ஈ. செல்வராசா அடிகள், 1ாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜே. நீக்கிலஸ் அடிகள் ஆகியோர் வழங்கினார்கள்
நிறைவு நிகழ்வாக, கலைக்கோட்டம் கட்டடத் தொகுதி நிர்மாணிப்புப் பணிகளில் ஈடுபட்ட அனைத்து பணியாளர்களுக்கும் திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ மரியசேவியர் அடிகள் அன்பளிப்புக்கள் வழங்கிக் கெளரவித்தார்.
பிரமாண்டமான கலைவிழா ஒன்றுடன் மிகவும் எழுச்சி பூர்வமாகக் கலைக் கோட்டத்தின் திறப்பு விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடந்த டிசெம்பர் 2005 முதல் யாழ் குடாநாட்டில் தோன்றியிருக்கும் அசாதாரண சூழ்நிலைகளால் எளிமையான முறையிலேயே திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றன. எனினும், இந் நிகழ்வில் திருமறைக் கலாமன்ற அபிமானிகள். அங்கத்தவர்கள், கலை ஆர்வலர்கள், சர்வ மதப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகத் துறை சார்ந்தோர் எனப் பல நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தார்கள்
6gsslD60flussbö7 L/JT6)/606)/jo 6offfö5 Nieder bronner அருள் சகோதரிகளினால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இக் கட்டடத் தொகுதியில், குளிரூட்டப்பட்ட தங்கும் அறைகள்; மற்றும் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், பாசறைகள், மாநாடுகள் நடத்துவதற்கான மண்டப வசதிகள் என்பவற்றுடன், சிறப்பம்சமாக நுண்கலைகள் பயில்வதற்கான கலைத்தூது அழகியல் கல்லூரியும்’ இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலைக்கோட்டம்' கட்டடத் தொகுதி திறப்பு விழா நிகழ்வுகளுக்கு முன்னதாக, காலை 700 மணியளவில் யாழ். திருமறைக் கலாமன்றத்தின் வருடாந்த பொங்கல் வைபவம், யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற பணியகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்விலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தார்கள்
ত5টা 2006 酶

Page 57
திருமறைக் கலாமன்றம்
திருமறைக் கலாமன்றத்தால் கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் அழகியல் கலைகளை பயில்வதற்கென யாழ் நகரில் நடத்தப்பட்டு வந்த கவின் கலைகள் பயிலகம்' கலைத்தூது அழகியல் கல்லூரி' என்னும் புதிய பெயர் மாற்றத்துடன் தரமுயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக் கல்லூரிக்கான ஆரம்ப வைபவம், அக் கல்லூரி இயங்கவுள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலை கோட்டத்தில் பெப்ரவரி 11,2006 இல் சிறப்புற இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஷ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் வி நித்தியானந்தம் ஆகியோரும், கெளரவ விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறைத் தலைவர் செல்வி பாக்கியலட்சுமி நடராஜா, நடனத்துறைத் தலைவர் திருமதி கிருஷாந்தி இரவீந்திரா ஆகியோரும் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள் மு. ப. 1000 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மன்றக் கீதம் இசைக்கப்பட, பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜகுமாரால் மன்றக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தலைவர் உட்பட விருந்தினர்கள் அனைவரும் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் அங்கு ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மங்கல விளக்குகளை நிகழ்வின் தலைவர், பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள், கெளரவ விருந்தினர்கள், யாழ் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வர் அருள்திரு. ஜே. பி. ஈ. செல்வராசா அடிகள், கலைத்தூது அழகியல் கல்லூரியின் அதிபர் திருமதி பி எவ். சின்னத்துரை, திருமறைக் கலாமன்றத்தின் மூத்த கலைஞர்களான கலைக்கோட்ட முகாமையாளர் கலாபூஷணம் ஜி பி பேர்மினஸ், இசைத்தென்றல் ம. யேசுதாசன், டாக்டர் ஜீ எட்வேட் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள் தொடர்ந்து இறைவணக்கம், மெளன அஞ்சலி என்பன இடம்பெற்றன. இறைவணக்கம் இ. ஜெயகாந்தனால் பாடப்பட்டது. அதன் பின்னர், உரை நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது அறிமுக உரையை பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமாரும், வரவேற்புரையை கல்லூரியின் அதிபர் திருமதி பி எவ், சின்னத்துரையும் வழங்கினார்கள் தொடர்ந்து பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைமையில் உரைகள் இடம்பெற்றன. இதன் போது சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் வி
酶 ஜனவரி -
 

1 །
நித்தியானந்தம், பிரதம விருந்தினராக வருக தந்திருந்த யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். நன்றியுரையை கலாபூஷணம் ஜி பி பேர்மினஸ் வழங்கினார். இவ் ஆரம்ப வைபவத்தில் திருமறைக் கலாமன்ற அங்கத்தவர்கள், அபிமானிகள், கலைத்தூது அழகியற் கல்லூரி மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், சர்வமதப் பெரியோர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துசிறப்பித்தார்கள் (கலைத்தூது அழகியல் கல்லூரி தொடர்பான விபரங்கள் இந்த இதழின் பின்புற அட்டையிலும், பின்புற உள் அட்டையிலும் இடம்பெற்றுள்ளன) கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஆரம்பம் யாழ். குடாநாட்டில் அழகியல் கலைகளின் வளர்ச்சியில் புதியதோர் அத்தியாயத்தை தோற்றுவிக்கும்.இந்ன்புது திண்ணம்
ஜூன் 2006 55

Page 58
அஜாயி சற்று நேரம் உழட்டியபின் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். அருகில் கதிரைமேல் இருந்த மலிவான அலார மணிக்கூட்டைப் பார்த்தான். ஆறு பதினைந்து. வெளியே வெளிச்சம். ஆபிரிக்கப் பட்டினம் மெல்ல உயிர்த்துக் கொண்டிருந்தது. சேவல்கள் கூவ தூக்கத்திலிருந்து விழித்த இரவுக் காவலாளிகள் தமக்கும் தம் முதலாளிகளுக்கும் தம் வினைத்திறனை நிரூபிப்போர் போல, மிடுக்காக, களஞ்சிய அறைகள், வீடுகளின் பூட்டுக்களை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தனர். பொருள்களைச் சுமந்து கொண்டு ஊர்வம்பு பேசியவர்களாய் கிராமத் துப் பெண் கள் சந்தைக் குப் போய் க் கொண்டிருந்தார்கள்.
அஜாயி காலைத் தேநீரைப் பருகினான். அவனுக்குப் பிடித்த இனிப்பான வெறுந் தேநீர். முயற்சிசெய்து, எழுந்து யன்னலருகே போன அவன், அங்கே நின்று ஆறு தடவை ஆழமாக மூச்சை இழுத்தான். தினமும் சுவாச அப்பியாசம் செய்வது காச நோயைத் தடுக்கும் என அவன் நம்பினான். முற்றத்தைக் கடந்து, தூர இருக்கும் குளியலறைக்குப் போனான். வாளியில் இருந்த நீரை ஒரு தகரக் கிண்ணத்தால் முகந்து அவசரம் அவசரமாகத் தலையில் ஊற்றிக் கொண்டான்.
இதற்கிடையில் ஆயோ காலை உணவை மேசைமேல் பரப்பியிருந்தாள். ஆயோ அவன் மனைவி. மன்ைவி அல்ல, வைப்பாட்டி என்று தன் நெருங்கிய நண்பர்களிடம் சொல்வான். நல்லவள், அவனுக்கு மூன்று பிள்ளைகள் பெற்றுத் தந்திருக்கிறாள்; இப்பொழுது மூன்று மாதம், நாலாவது. அவர்கள் பன்னிரண்டு வருடம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். அவள் அழகான பெண்; பொறுமைசாலி; கறுப்பி; வெண்மையான பற்களும் விசுவாசமான கண்களும் உடையவள். கூந்தலை எப்பொழுதும் கவனமாகப் பின்னியிருப்பாள். தன் பெற்றோரை மீறி அவள் அவனிடம் வந்த புதிதில் அவள் தன் கருவளத்தை நிரூபித்ததும் திருமணம் செய்யலாம் என்றுதான் அவன் எண்ணியிருந்தான். ஏனோ அது சாத்தியப்படவில்லை. முதலாம் வருடத்தில், தன் தோழிகளின் திருமணம் நடக்கும்போதெல்லாம் அக் கொண்டாட்டங்களின் சிறப்பை வருணித்தபடி, நம்பிக்கையோடு அவன் முகத்தைப் பார்ப்பாள் ஆயோ. ஊாதாரித் தனம் கொடிய பாவம் என்ற கண்டனத்தோடு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பான் அவன். சில காலத்துக்குப் பிறகு அவள் அப்பேச்சை எடுப்பதில்லை. அவள் வீட்டை விட்டு வெளியேறிய பின், அவள் தந்தை அவளோடு பேசியதில்லை. தாய் மட்டும் ரகசியமாக
அவளிடம் வந்து, எல்லாப் பிள்ளைகளின் ஞானஸ்நான
கருமங்களையும் கவனித்திருக்கிறாள். திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் பிள்ளைகளுக்கு வழமையான ஐம்பது சதத்துக்குப் பதில் திருச்சபை இரண்டு டொலர் விதித்தது. இது தவிர வேறெந்த ஆட்சேபணையும் இல்லை. சோரம் போதல், பலதார மணம் மற்றும் மணமாகாது கூடி வாழ்தல் ஆகியவற்றைக் கண்டித்து வருஷத்தில் இரண்டு மூன்று தரம் போதகள் உரையாற்றுவார். அஜாயியும் ஆயோவும் விசுவாசிகள். தேவாலயத்துக்கு ஒழுங்காகப் போவார்கள்; ஆனால் வெவ்வேறு வரிசைகளில் அமர்வார்கள். இது
56
ஜனவரி - ஐ
 
 

போன்ற சந்தர்ப்பங்களையடுத்து அவர்களுடைய நண்பர்கள் இவர்கள் மீதும் இவர்களைப் போன்ற நிலையில் உள்ளவர்கள் மீதும் அநுதாபம் காட்டுவார்கள். சிலர் முணுமுணுக்கவும் செய்வார்கள். சுவிஷேஷத்தைப் போதிப்பதை விட்டுவிட்டு, திருச்சபை ஏன் மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையை நோண்ட வேண்டும் என திருக்கூட்டத்திலுள்ள ஆண்கள் பேசிக்கொள்வர். அஜாயி, கோபத்தில், தேவாலயப் பக்கம் வாரக்கணக்காக போகாது விடுவான். ஆனால் அவனுக்குக் கீதங்கள் பாடுவது விருப்பம் ஆதலால் தேவாலயத்துக்கு மீளப் போவான். தவிரவும் அடி மனதில் போதகள் சொல்வது நியாயம் என்பது அவன் கருத்து.
ஆயோ ஒரு நல்ல மனைவி. அவள் ஒரு கனிஷ்ட எழுதுவினையரோடு சிக்குப்பட்டவேளை, ஒரு கல்லூரி ஆசிரியரையோ மருந்தாளரையோ மணம் புரிந்திருக்கலாம் என்று அவள் தந்தை திடமாக நம்பினார். ஆனால் ஆயோ அஜாயியை தன் பாணியில் நேசித்தாள். அவனுக்கு உணவு சமைத்தாள். பிள்ளை பெற்றாள். நேரம் கிடைத்தால் சிறு வியாபாரம் செய்வாள்; தோழியரைப் போய்ப் பார்ப்பாள்; அல்லது அடுத்த வீட்டு ஒமோவோடு ஊர்க்கதை பேசுவாள். இடுப்பில் கட்டிய துவாயோடு அஜாயி அறைக்குத் திரும்பினான். ஈரந்துவட்டிய பின், இளஞ்சிவப்பு ரஸோர் சூட் அணிந்தான். மருந்தகத்தில் பணிபுரியும் அவன் நண்பன் சிபார்சில் வாங்கிய மருந்துப் போத்தலை எடுத்தான். தேக சுகத்தைப் பேணும் ஒருவன் கிரமமாக, ஏதாவது மருந்து உட்கொள்ள வேண்டும் என அவன் நம்பினான். போத்தலில் ஒட்டியிருந்த லேபிலை வாசித்தான். தினமும் அம் மருந்தை உட்கொள்வதால் தீரக்கூடிய இருபது வெவ்வேறு நோய்க் கூறுகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அஜாயி தனக்கிருப்பதாகக் கருதிய அல்லது வரக்கூடும் என்று நினைத்த ஆறு நோய்களை மனதில் அடிக்கோடிட்டான். தலைச்சுற்று, தசைநோவு, ஆண்மைக்குறைவு, காய்ச்சல், செங்கண்மாரி, வாத நடுக்கம், பெண்களுக்குரிய நோய்களையும், நரம் புதளர்ச்சி, சிறுநீர் க் கோளாறுகளையும் புத்திசாலித்தனமாக ஒதுக்கினான் "ஒரு தேக்கரண்டி தினமும் மூன்றுவேளை’ எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் காலையில் மட்டுந்தான் மருந்துட்கொள்வது அவனுக்கு நினைவு வருவதால், பெரிய மிடறாக இரண்டு விழுங்கினான். மருந்து கசப்பாய் விறைப்பை உண்டு பண்ணுவதாய் இருந்தது. அஜாயி முகஞ்சுளித்தாலும் திருப்தியடைந்தான். நல்ல மருந்தாய் இருக்க வேணும் இல்லாவிடில் இவ்வளவு கசக்காது.
காலை உணவு சோளக்கஞ்சியையும் பொரித்த அவரையையும் கொக்கோவையும் சாப்பிட்டு முடித்தான். பத்து வயதான மூத்த மகனை நன்றாக அடித்தான் முந்திய இரவு அவன் படுக்கையை நனைத்துவிட்டான். பையன் குழறிக்கொண்டு பின் வளவுக்கு ஒட, ஆயோ வந்தாள்.
'அஜாயி, நீ அந்தப் பையனைப் போட்டுக் கடுமையாக அடிக்கிறாய்!” என்றாள்.
“படுக்கையை நனைப்பதை அவன் நிறுத்த வேண்டும். அவன் இப்பொழுது பெரிய பையன். என்னவாயிருந்தாலும், என் மகனை எப்படி வளர்ப்பதென்று யாரும் எனக்குப் போதிக்கத் தேவையில்லை!”
சன் 2006
酶

Page 59
"அவன் என் மகனுந்தான்!” என்றாள் ஆயோ, அவளுக்கென்று தீவிர கொள்கையுள்ள விஷயந்தவிர, எதிலும் அவள் அவனை எதிர்ப்பதில்லை.
"அவன் படுக்கையை நனைக்கும் ஒவ்வொரு தடவையும் நீ அடிக்கிறாய். ஆனால் அது நிற்பதாயில்லை. சொல்லப்போனால் இன்னும் கூடியிருக்கிறது. நீ அடிப்பதை நிறுத்தினால், ஒரு வேளை சுகம் ஏற்படலாம்".
"அப்போ, நான் அடித்தா அவன் அதைத்தொடங்கினான்? - அஜாயி வெற்றிக்களிப்போடு கேட்டான்.
"இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நேர்ஸிங் படித்துவிட்டு வந்திருக்கும் எங்கள் ஊர்ப்பெண் பிம்போலா இதற்காகப் பிள்ளைகளைத் தண்டிப்பது தவறு என்று மாதர்குழுக் கூட்டத்தில் சொன்னாள்.'
"சரி, பார்ப்பம்" என்றான் தொப்பியை எடுத்துக்கொண்டே அன்று முழுவதும் பணிமனையில் இது பற்றியும் பிற விஷயங்கள் பற்றியும் சிந்தித்தான். அப்போ, ஆயோ மாதர் கூட்டங்களுக்குப் போயிருக்கிறாள். ஆர் அறிவார்! அடுத்த முறை பட்டின சபைத் தேர்தலிலும் அவள் போட்டியிடக்கூடும். கள்ளி! சாதுபோல், அமைதியாக இருந்துவிட்டு, வெளிநாட்டு வைத்தியர்கள் சொல்லும் நவீன கோட்பாடுகளை மேற்கோள் காட்டுகிறாள்! பெருமையோடு புன்னகை செய்தான். ஆம், ஆயோ ஒரு பொக்கிஷம், ஐயமில்லை. பையனை அடிப்பது பிழையாக இருக்கலாம். இனி அடிப்பதில்லை என்று தீர்மானித்தான்.
பணிமனை மூடும் நேரம் தலைமை எழுதுவினைஞரிட மிருந்து அழைப்பு வந்தது. ‘இன்றைக்கு என்ன தவறு செய்தேன்? அல்லது என்ன புதிய பணி தரப்போகிறார்? என்று யோசித்துக் கொண்டு முன்னறைக்கு விரைந்தான். தலைமை எழுதுவினைஞர் கச்சிதமாக உடையணிந்த, வயதில் மூத்த கண்ணியமாகத் தோற்றமளிக்கும் ஆபிரிக்கள். அவருக்குப் பக்கத்தில் மூன்று வெள்ளைக்காரர் அமர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் அஜாயியின் நெஞ்சு படபடத்தது "பொலிஸ்காரரா? நான் என்ன செய்துவிட்டேன்?
“மிஸ்ரர் அஜாயி, இவர்கள் உங்களைக் காண வந்திருக்கிறார்கள்"
நெடியவர், முறுவலித்தபடி சொன்னார்: "உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் உலக சுவிசேஷ பிரசாரத் திருக்கூட்டத்தார். மின்னேசொற்றாவி லிருந்து வருகிறோம். நான் ஜொனாதன் ஒல்ஸென்”
மற்றைய இருவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். அஜாயி எல்லோருடனும் கைகுலுக்கினான்.
"நீங்கள் ஒரு வருஷத்துக்கு முன் எங்கள் ஊழியத்தில் ஆர்வம் காட்டியதை நாங்கள் மறக்கவில்லை. இந்தியா போகும் வழியில் உங்களைப் பார்த்துப் போக எண்ணினோம்!”
மூன்று பிரசாரகர்களும் பயணஞ் செய்யும் கப்பல் ஆபிரிக்கத் துறை முகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக சில மணி நேரம் தரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியது. தலைமை எழுதுவினைஞர் அஜாயியை மரியாதையோடு நோக்கினார். உ. சு. பி. தி. உடன் தனக்கென்ன தொடர்பு என்று தலையைக் குடைந்தபடி, தயங்கித் தயங்கி உரையாடலில் கலந்து கொண்டான் அஜாயி, திடீரென்று ஞாபகம் வந்தது. ஐக்கிய அமெரிக்க தகவல் சேவையில் கடமையாற்றும் - தன் வீட்டில் குடியிருக்கும் - ஆளிடம் ஒரு சஞ்சிகையைப் பெற்று வாசித்தபோது, அதில் வெளியாகியிருந்த ஒரு கூப்பனை நிரப்பி உ. சு. பி. தி க்கு அனுப்பியிருந்தான்.
硕毗啶确 ஜனவரி =

அவன் கோரிய தகவலை விட அவர்கள் அனுப்பும் வண்ணப்படங்கள் கொண்ட பைபிள் பிரதிகளை விற்கலாம். அல்லது யாருக்கும் கொடுக்கலாம் என நம்பினான். பெரிய சமய ஓவியங்கள் இரண்டேனும் கிடைத்தால் ஃப்றேம் போட்டு வரவேற்பறையில் தொங்கவிடலாம் அல்லது படுக்கையறைச் சுவரில் ஒட்டலாம் எனக் கனவு கண்டான். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அவனும் விஷயத்தை மறந்து போனான். ஆனால் இப்போ உசுபிதி தரிசனம் தருகிறது உயிராக. மூன்று உயிர்கள். சற்றும் யோசியாது அம்மூவரையும் தலைமை எழுதுவினைஞரையும் தன் வீட்டுக்கு அழைத்தான் - குளிர்பானம் பருக. எல்லோரும் சம்மதித்தனர்.
"என்னுடையது ஒரு சிறு குடில்” என எச்சரிக்கை செய்தான்.
"கிறிஸ்தவ அன்பு ஒளிவீசும் எந்தக் குடிலும் தாழ்ந்தல்ல" என ஒல்ஸன் பதிலளித்தார்.
ஒல்ஸன் டாக்ஸியில் போகலாமா என விசாரித்தார். ஆனால் தெருக்கள் குண்டுங்குழியுமாக இருப்பதால் டாக்ஸி உதவாது என அஜாயி அதை நிராகரித்தான். பணிமனைச் சகா ஒருவனை ரகசியமாக சைக்கிளில் வீட்டுக்கனுப்பி, அரைமணி நேரத்தில் வெள்ளைக்கார நண்பர்களோடு தான் வர இருப்பதாகவும், வீட்டைச் சுத்தப்படுத்தி, குளிர்பானம் ஆயத்தம் செய்யும்படியும் ஆயோவிடம் செய்தி சொல்லச் சொன்னான். இந்தச் செய்தி ஆயோவுக்கு ஒரு புதிராக இருந்தது, ஏனெனில் எல்லா வெள்ளைக்காரரும் விஸ்கி அல்லது குளிர் பியர் பருகுவார்கள்
G: Slagung 15:Gerds
பத்மநாதன்
என அவள் உறுதியாக நம்பினாள். வருவோரிடம் நட்புணர்வும் பக்தியுணர்வும் கலந்திருப்பதால், தான் அவர்கள் மிஷனரிகளாக இருக்கலாம் என ஊகிப்பதாக வந்தவன் கூறினான். அவர்கள் நடந்தே வருவது இதை மேலும் உறுதி செய்தது. ஆயோவின் மனதிலிருந்த ஐயுறவு நீங்கவே, அவள் துரிதமாக கருமமாற்றத் தொடங்கினாள். காலைய அவமானத்திலிருந்து சுதாரித்த ஒஜ" மென்பானங்கள் வாங்கக் கூடையோடு அனுப்பப்பட்டான். சுவரிலிருந்த கவர்ச்சிகரமான வணிகக் கலண்டர்களை ஆயோ வேகமாக அகற்றி விட்டு, மேசை மேல் தலைகுப்புறக்கிடந்த குடும்பப் படங்களைத் தொங்கவிட்டாள். வரவேற்பறையில் இருந்த மேற்கு அமெரிக்க நாவல்களும் காதல் சஞ்சிகைகளும் அகற்றப்பட்டு பன்யனுடைய ரக்ஷண்ய யாத்திரிகமும் ஒரு பிரார்த்தனைப் புத்தகமும் குடிவந்ததோடு அலங்காரம் ஒரு சமய, பண்பாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்டதாக அவள் நம்பினாள் ஞாபகமாக உவைன் குவளைகளையும் பியர் விளம்பரமான மேசைத் தடுக்குகளையும் சோபாவின் கிழே தள்ளினாள். அவள் தன் ஞாயிற்றுக்கிழமை உடைக்குள் நுழைந்து, அடுத்த வீட்டுக்காரியிடம் இரவல் வாங்கிய கல்யாண மோதிரத்தை அணிவதற்கும் அஜாயி விருந்தினரோடு வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது. இவ்வீட்டுக்கு முன்பு வந்து பழகிய தலைமை எழுதுவினைஞர் வரவேற்பறையிலும், ஆயோவின் ஆடை அணிகலன்களிலும் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஆச் சரியப் பட் டார் . ஆனால் தன் உணர்வுகளை வெளிக்காட்டவில்லை. ஆயோ அறிமுகம் செய்து வைக்கப்பட்டாள். இரண்டொரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசினாள். அஜாயிக்கு அது மிக்க மகிழ்ச்சி தந்தது. பிள்ளைகளும் தம் ஞாயிறு
ஜூன் 2006 57

Page 60
உடைகளில், முகம் கழுவப்பட்டு, தலை வாரப்பட்டு கச்சிதமாக இருந்தார்கள். ஒல்ஸன் பேருவகை அடைந்தார். திருக்கூட்டத்தின் சஞ்சிகைக்கென அவர்களைப் படம்பிடித்தார். மென்பானங்கள் பரிமாறிய பின் ஆயோ, ஆண்களை, தீவிர விஷயங்கள் பற்றி உரையாட விட்டுவிட்டு உட்புறம் போனாள். ஒல்ஸன் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றியும் அஜாயியைக் குருத்துவத்துக்குள் அனுமதிப்பது பற்றியும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
மிஷனறிகளின் விஜயம் இனிது முடிய, அவர்கள் தங்கள் கப்பலைப் பிடிக்கச் சென்றார்கள். அரசாங்க ஊழியர்கள் தனிப்பட்ட அமைப்புக் களில் அங்கத்துவம் பெறுவது அரசாங்க பிரமாணங்களுக்கு மாறானது என தலைமை எழுதுவினைஞர் அளித்த வியாக்கியானத்தால் அஜாயி குருத்துவத்துள் நுழையாது தடுத்தாட்கொள்ளப்பட்டான். அஜாயியை சங்கடத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக, அவள் ஒரு படி மேலே சென்று, மீறுவோருக்கு அபராதமும் சிறையும் விதிக்கப்படும் என்றார். மிஷனரிகளில் இளையவர் சொன்னார்: “இந்த லட்சணத்தில் கொலனித்துவ ஒடுக்குமுறை பற்றிப் பேசுகிறார்கள்!”
தலைமை எழுதுவினைஞர் சந்தர்ப்பத்தில் செய்த உதவி கருதி, அடுத்தநாள் ஒரு பியர் போத்தலைப் பக்குவமாகப் பொதி செய்து கொண்டு போய் அவரிடம் கொடுத்தான். வெள்ளைக்காரர்
s
கருமுகில்களுள் புதைந்து மங்கிவடியும் நிலவொளியில் நனையும் என் கடந்த காலத்தின் திசைதெரியாத் தெருக்களில் நடக்கையில் ஏதோவோர் எதிர்பாராக் கணத்தில் வழுக்கி விழச்செய்கிறது அங்கு படர்ந்திருக்கும் குருதி நிறத்தாலேயான பாசி - துருப்பிடித்துக் கறளடைந்திருக்கும் வீதியோரக் கைப்பிடிகளில் ஊன்றியெழ யத்தனிக்கும் போதில் கைகளினின்றும் பீரிட்டோடுகிறது நீலநிறக்குருதி.
வேதனையிலோ அல்லது 'குரூர இன்பத்திலோ ஓங்கியெழும் என் குரலின் இடுக்குகளில் ஆயிரமாயிரம் வருடங்களின் ஏக்கமும், ஆசைகளும், பயங்களும், துயரங்களும் சீறுபொலி கேட்டுப் பயந்தொதுங்கிறது கதவருகில் நிற்கும் ஒளிநிற உடல் கொண்ட புறா.
责女★
கனவுகள் எரிந்துருகிக் கண்ணீருடன் கலந்தோடும் பாதாள நதியின் நடுவிருக்கும் இவ்வறையில் எதிர்காலத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட இருளைப் போர்த்தியவாறு அமர்ந்திருக்கிறேன் நான்.
நினைவுகள் உக்கிநாறும் இச்சிறையினுள் அடைந்திருந்து என் பாலகாண்டத்தைத் தூசி துடைத்தெடுத்துப் படிக்க முனையும் போதெல்லாம்; அதன் கதைகளில் வரும் தெருக்களில் இருந்து பெரும் புழுதி கிளர்ந்ததெழுந்து என் கண்களினுள் செல்வதை பேரச்சத்துடன் உணர்கிறேன்.
மூச்சடைக்க வைக்கும் இப்புழுதித்துகல்கள் என்
மனதின் புதிர்வட்டப் பாதையோரமெங்கும் படிந்திருப்பதை பார்த்த வாறேயிருக்கின்றது சாத்தானின் கண். தூசிகள் ஒட்டடைகளாக மாறுமளவுக்கு ஆகிய பின் இப்புதிர் வட்டப்பாதையுள் வசிப்பது பற்றி அவன் யோசிக்கக்கூடும்.
★★责
முக்காலங்களினதும் மீ
58 ஜனவரி - ஜூ

5ாட்டிய நட்புணர்வும் அக்கறையும் குறித்து இருவரும் 5லந்துரையாடினர்.
இந்தச் சம்பவமும் சமய ஒழுங்கை மீறுவதற்கான தண்டனை பற்றி ஆயோ கூறியதும் சேர்ந்து ஒருவாரமாகக் அஜாயியை சிந்தனை வயப்பட வைத்தன. ஆயோவைத் திருமணம் புரிய அவன் முடிவு செய்தான். இம்முடிவை வலியுறுத்திய மற்றொரு காரணி ஒல்ஸன் தன் சஞ்சிகைக்காக எடுத்த படம். ஒல்ஸன் அடித்துச் சொன்னபடி “ரட்சிகப்பட்ட மகிழ்ச்சிகரமான ஆபிரிக்கக் தடும்பம்’ என மகுடமிடப்பட்ட படத்தை லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் பார்க்கும்போது ஆயோவும் தானும் கல்யாணம் செய்திருக்க வேண்டும் என்ற விசித்திரமான ஆசை அஜாயிக்கு உண்டானது. ஒரு நாள் மாலை, நல்ல உணவு உண்டு திருப்தியாக ரப்பமும் விட்டபிறகு தன் நோக்கத்தை ஆயோவிடம் சொன்னான். மிகுந்த கரிசனையோடு எழுந்து அவனை நோக்கிய ஆயோ கேட்டாள். "உனக்கு உடல் நலம் இல்லையா? பணிமனையில் ரதும் பிரச்சினையா? யாராவது உன்னை அவமதித்தார்களா?” இல்லை. ஏன், கல்யாணம் செய்து கொள்வதில் என்ன தவறு? அல்லது வேறு எவரையாவது உன் மனதில் வைத்திருக்கிறாயா?” ஆயோ சிரித்தாள். “சரி உன்விருப்பப்படியே கல்யாணம் செய்துகொள்ளலாம். ஆனால் நான் வற்புறுத்தியதாக மட்டும்
மாயச் செயற்பாடுகள்
பல தருணங்களில், இக்காலங்கள் இருள்நிறத்திலான எருமைக்கடாக்களாக மாறிவிடுகின்றன. குரூரத்தின் அரூபக்கரம் தீண்டிய வெம்மையிற் கருகிய ரோஜாச்செடிகள் மண்டியிருக்கும் என் தனிமையின் சூழல் வட்டப் பாதையினுள் அவை குதிக்கின்றன.
அவை தின்று துப்பும் இனிய பழ விதைகளினின்றும் விஷச் செடிகள் முளைத்துக் கிளைப்பதை சந்தோஷத்துடன் அவதானிக்கிறது இருளின் கண்.
குருதி கழுவியகற்றப்பட்ட பின்னும் விரல்களின் இடுக்கில் ஒட்டியிருக்கும் குற்றவுணர்வின் வாசனையே போலான கடந்த கால வாசனை எப்போதும் என் கூடவேயிருக்கிறது.
துயரம் முற்றிப் பழுக்கும் தனிமையின் கும்மிருட்டு வேளையில் முக்காலங்களுக்கும் இடைநடந்த வன்புணர்வின் உச்சவேதனையிலெழும் ஒப்பாரி, நடுநிசியின்மயான அமைதி கிழித்தெறியும் பறைநாயின் ஊளைபோல் வெடித்தெழுந்து பரவி அனைவரதும் தூக்கம் கலைக்கிறது.
★★女
மூன்று காலங்களினின்றும் எழும் ஒப்பாரி ஏவாள், மகதலேனா, கண்ணகி, யசோதரை எனப்பலரால் இசைக்கப் படுவதையும் கணத்துக்குக் கணம் அவர்களின் முகங்கள் வெவ்வேறாகித் தோன்றுவதையும் யுகாந்திர யுகாந்திரங்களுக்கு நீளும் ஒப்பாரியின் அதிர்வையும் காலவெளிகளுக்கப்பாற்பட்ட என் அலறலையும் மூன்று காலங்களினாலான முக்கோணத்துள் நின்று அச்சத்துடன் உணர்கிறான் முக்காலமுமுணர்ந்த கடவுள்.
வறfகரன்
6, 2006 酶凹萌前

Page 61
گل وی: آموجب به جه
சொல்லக்கூடாது',
அன்றிரவு திருமண ஏற்பாடு பற்றி பேசிக் கொண்டார்கள் செம்மஞ்சள் பூப்போட்ட வெண்ணிற ஆடையை அஜாயி விரும்பினான். ஆயோ அது பொருத்தமாயிராது என்று கருதினாள். இருவரும் சாம்பல் நிறத்தை ஏற்றுக் கொண்டனர். தன் பருத்த உடலை மறைக்க ஒரு "கோர்செற் அணிய விரும்பினாள் ஆயோ, இது பெண்ணுக்கேயுரிய டாம்பீகம்' என்று இணங்கினான் அஜாயி, அவளை அணைத்தபடி, ஆனால் தேனிலவு போவதில்லை என்பதில் அவன் உறுதியாய் இருந்தான் "அது கட்டுபடியாகாது; தவிரவும் எந்தப் படுக்கையும் மற்றதை விடக் குறைந்ததல்ல" என வாதிட்டான் அவன். அவள் விட்டுக்கொடுத்தாள். தேவாலயத்தில் திருமணம் செய்வது என்பதில் இருவருக்கும் ஒத்த கருத்து மணப்பெண்ணுக்குத் தோழியராக பிள்ளைகளே செயற்படலாம். அவர்களுடைய ஆடைகளுக்குச் செய்யும் செலவு குடும்பத்துக்குள்ளேயே நிற்கும் அல்லவா?
அன்றிரவு, கல்யாணக் கற்பனைகளால் கிளர்ச்சியுள்ள அஜாயி, பக்கத்தில் கிடந்த ஆயோவை ஆசையோடு அருகே இழுத்தான். மெல்ல அவனைத் தள்ளியபடி அவள் சொன்னாள்: “வேண்டாம், கல்யாணம் வரை காத்திரு” “ஏனாம்?” என்றான் அஜாயி, வியட்புடன் "ஏனோ அது முறையாக இருக்காது" என்றாள் ஆயோ உறுதியாக
திருமணச் செய்தி கூட ஆயோவின் தந்தையை அசைக்கவில்லை. ஆயோ தன் உடமைகளோடு தன் வீட்டுக்குத் திரும்ப வரவேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். பிள்ளைகள் ஆயோவின் மணமான சகோதரியிடம் விடப்பட்டனர். அஜாயியின் குடும்பத்தார் பெரும்பாலும் இத் திருமணத்துக்கு ஆதரவாய் இருந்தனர் - அவன் சகோதரியைத் தவிர, ஆயோவின் அந்தஸ்து ஏற்றம் தன்னை மதிப்பிறக்கம் செய்யும் என அஞ்சிய அவள், முதலில் ஒரு நிமித்திகனைக் கலந்தாலோசிக்கப்படும்படி அஜாயிக்கு புத்தி கூறினாள். சனிக்கிழமை சந்தையில் அவளுடைய தோழியர் இந்த நகள்வு குறித்துத் தெரியப்படுத்தவே, நிமித்திகனை முன் கூட்டியே சந்தித்து ஏற்பாடுகள் செய்து கொண்டாள் ஆயோ. ஆக, அஜாயி அன்றிரவு சகோதரியுடன் அவனைப் போய்க் கண்டபோது தெய்வங்களோடு உரையாடிவிட்டு சகோதரியின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டு, இத் திருமணத்தால் எதிர்காலம் வளமாக அமையும் என்றான். கிழவன் மேல் பாய்ந்து அவனைக் கிழித்துப் போட, எழுந்த உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ജൂഖണ്.
திருமண மகிழ்ச்சிக்குக் குந்தகமாக இன்னும் ஒரேயொரு சிக்கலே இருந்தது; அவசரத் தேவைகளுக்குத் தன் திருமண மோதிரத்தை இரவல் தரும் அடுத்த வீட்டுக்காரி ஒமோ, அஜாயி தனக்களிக்கவிருக்கும் திருமணப் பதிவுகளை ஆயோ காட்டிய பிறகு அவள் போக்கில் மாற்றம் ஏற்படலாயிற்று. அந்த மெல்லிய நைலோன் உடைகளை பொறாமையும் கோபமும் கலந்த உணர்வோடு தடவிப்பார்த்தாள்.
'இதையெல் லாம் உண்மையில் அணிந்து கொள்ளப்போகிறாயா?"
"ஆம்" "இஞ்சை பார் பிள்ளை; இதை அணிந்தால் தடிமன் பிடிக்கும். ஒரு விபத்தில் சிக்குகிறாய் எண்டு வைச்சுக்கொள். மருத்துவமனையில் வைத்தியர்கள் இவற்றினூடு எல்லாவற்றையும் பார்ப்பார்கள்!”
"நான் விபத்துகளில் அகப்படுவதில்லை. ஹொலிவூட்
酶 ஜனவரி =

కీ
நடிகைகள் இவற்றை அணிவதாக அஜாயி சொல்கிறான். இஞ்சைபார் "ஹொலிவூட்” எண்டு அடிச்சிருக்கு!”
"வெட்கமில்லையே, எல்லாம் தெரிய இதை அணிய? என்று பொறாமையோடு கேட்டபடி வேலிக்கு மேலாலை அவற்றைத் திருப்பி நீட்டினாள் ஒமோ.
"கல்யாணம் ஆன பிறகு என் புருஷனிடமிருந்து நான் ஏன் எதையும் மறைக்க வேண்டும்?” என்று வெற்றிக்களிப்போடு சொல்லிக்க்ொண்டே அடுப்பங்கரைக்குப் போனாள் ஆயோ, பெரிய மனிதத் தோரணையில் அவள் இரவல் தரும் மோதிரத்தை இனிமேல் கை நீட்டி வாங்கவேண்டிய தேவை இராது.
ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டியிருந்தது - காலமும் 'கோசெற்" வளையங்களும் எதிராகத் தொழிற்பட்டுக் கொண்டிருந்தபடியால், அஜாயின் அன்றாடக் கருமங்களும் - குறிப்பாக அவனுடைய காலைத் தேநீர் - பாதிக்கப்பட்டன. பரிசக் காசுக்காகவும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கும் விருந்துக்கும், ஆயோவும் உறவுப் பெண்களும் திருமண நாளன்று அணியப் போகும் ஆடைகளுக்கும் என அவன் வட்டிக்குக் கடன் வாங்கினான். நிச்சயதார்த்தம் அமைதியாக நடந்தது. திருமணத்துக்கு முதல் நாள், அஜாயியுடைய பெரியப்பாவும் மற்றும் சில உறவினர்களும் பைபிளும் மோதிரமும் எடுத்துக்கொண்டு ஆயோவின் தந்தையிடம் போய் முறையாகப் பெண் கேட்டனர். ஊசிகள், நாணயங்கள், பழங்கள், கோலா விதைகள், துணி முதலிய பொருள்களை சுரைக் குடுவைகளுள் வைத்து சிறுமியர் இருவர் தலையிற் சுமந்து சென்றனர். இவை மாப் பிள்ளை மணப்பெண்ணுக்கு அளிக்கும் பரிசுகள். "ஓர் ஊசியோ, ஒரு செப்புக் காசோ அந்த அயோக்கியன் எனக்குத் தந்ததில்லை' என்று பின்னாளில் சச்சரவுகள் எழும்போது சொல்லக்கூடாதல்லவா?
ஆயோவின் தந்தை வீடு தெரியாதவர்கள் போல் மாப்பிள்ளை பக்கத்தார் கடந்து போயினர். இது ஒர் எச்சரிக்கையாக விளங்கிக் கொள்ளப்படும். திரும்பிவந்து பெரியதகப்பன் பலமுறை கதவைத்தட்டினார். உள்ளேயிருந்து ஒரு குரல் அவர் பெயரையும் பரம்பரையையும் கேட்டது; சொன்னார். தர்க்கமும் இருபக்கத்திலுமிருந்து ஏச்சும் தொடர்ந்தன. தன் குடும்ப வேர்கள் ஆராயப்பட்டபின், அஜாயியின் பெரியப்பா கெஞ்சவும் குழையடிக்கவும் தொடங்கினார். அரை மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சியை ஆயோவின் உறவினர்கள் ரசித்தனர். ஈற்றில் ஆயோவின் தந்தை கதவைத் திறந்தார். தாங்கள் சம்பந்தம் வைத்துக்கொள்ளப்போவது மதிப்புமிக்க, குடும்பப் பெருமையைக் காக்க விரும்பும் ஒரு குடும்பத்துடன்தான் என்பது அஜாயி பக்கத்தாருக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
"நீங்கள் வந்த காரியம் என்ன? கடுமையான தொனியில் கேட்டார் ஆயோவின் தந்தை அஜாயியின் பெரியப்பா பணிவோடு சொன்னார்.
"உங்கள் அழகிய தோட்டத்தில் மலர்ந்த பூ இதுவரை யாரும் பறிக்காப் பூ செக்கச் சிவந்த ரோஜாப்பூ பறித்துப் போக வந்தோமே!”
ஆயோவின் மற்றோர் உறவினர் கேட்டார். "எங்கள் அழகு ரோஜாவைப் பேணமுடியுமா உங்களால்? மாப்பிள்ளை பக்கத்தார் பதிலளித்தார்கள். "நன்றாய் பேணி நாம் வளர்ப்போம் - அது வேறு பல பூ ஈன்றிடுமே!’
இறுதியாக அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பானங்கள் பரிமாறப்பட்டன. பிரார்த்தனை நடைபெற்றது. பரிசுகள்
ஜூன் 2006 59

Page 62
ஏற்றுக்கொள்ளப்பட்டன. பதிலாக வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அடுத்த அரை மணிநேரமாக, வந்த விஷயம் தவிர, அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்பட்டன. இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்க, ஆயோவும் அவள் சகோதரிகளும் வேறு உறவுக்காரப் பெண்களும் அடுத்த அறையில் ஒளித்து வைக்கப்பட்டனர். ஈற்றில் விஷயத்துக்கு வர ஆயோவின் தந்தை ஒரு வழி திறந்தார்: "நாம் இன்று உங்களை வரவேற்று உபசரிப்பதை விட வேறு ஏதாவது செய்யக்கூடுமா? அஜாயியின் பெரியப்பா சொன்னார், "ஆயோ என்ற பெயர்கொண்ட அழகிய ஒழுக்கமான, பணிவுள்ள கன்னி ஒருத்தி இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அவளை எங்கள் பையன் அஜாயிக்கு மனைவியாக்க விரும்புகிறோம்!”
ஆயோவின் தகப்பனார் பக்கத்து அறையைத் திறந்தார். ஆயோவின் தங்கையை அழைத்து வந்தார். 'இவளைச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார், அவர்களைச் சோதிக்க. "இவள் குள்ளம்” என்றனர் அவர்கள். பிறகு ஒன்றுவிட்ட தங்கை ஒருத்தி அழைத்து வரப்பட்டாள். இவளா?. “இல்லை, இவள் பருத்தவள்!” என்றனர் வந்தவர்கள். இவ்வாறு பத் துப் பெண் கள் அழைத்துவரப்பட்டனர். ஒவ்வொருத்தியும் அவர்கள் தேடிவந்த பெண்ணிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் வேறுபட்டிருந்தாள் இந்தக் கட்டத்தில் பெரியப்பா தன் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன என்ற பாவனையில் நாம் இப்படி விடாப்பிடியாக நிற்பது நல்லது; இல்லாவிடில் நம் தலையில் வேறு பெண்ணையல்லவா கட்டிவிடுவார்கள்? என்றார். அவர்களும் ஒத்துக்கொண்டனர். “சரி, சரி பொறுமை இழக்க வேண்டியதில்லை. உங்களுக்கு யார் வேண்டும் என நான் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டாமா?” என்ற ஆயோவின் தந்தை அறைவாசலில் நின்றபடி, கண்கள் நீர்மல்க, உள்ளே இருந்த மகளை அழைத்தார். நடந்தவைகளை மன்னிக்கும் பாங்கில், அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவளை அழைத்து வந்தவர்கள் முன்நிறுத்தி, கடுமையான தொனியில் கேட்டார்:
"நீங்கள் கேட்டபெண் இவள்தானா?” “இவளேதான்!’ என்று அஜாயியின் பெரியப்பா மகிழ்ச்சியில் கூவினார். எல்லோரும் ஆயோவின் தலையைச் சுற்றி வெள்ளை லேஞ்சிகளை அசைத்து ஆரவாரித்தனர். வாத்தியகாரர் கிற்றாரை மீட்டினர். யாரோ வெற்று உவைன் போத்தல்மீது திறப்பினால் தாளமிட்டான். ஆலாபனைகள் முடிய மெலடி உயரத்தாவியது. ஆயோவைச் சுற்றி எல்லோரும் ஆடினர். அவர்கள் நடுவே, தனக்கு இது காறும் மறுக்கப்பட்ட ஒரு கெளரவத்தை நல்கும் சடங்கின் நாயகியாய், கற்பு, பணிவு, அழகு என காலங்காலமாய் செய்யப்பட்டு வந்த வர்ணனைகளை நினைந்து ஆனந்தக் கண்ணிர்பெருக, பிறக்கவிருக்கும் குழந்தை உள்ளே துடிக்க, தலையில் ஓரிரு வெள்ளிக் கம்பிகள் தென்படும் முப்பத்தைந்து வயதுப் பெண்ணாகிய ஆயோ நின்றாள்.
அடுத்த நாள் காலை மதிப்புக்குரிய மூதாட்டி ஒருத்தி அவளை நீராட்டினாள். தாய் அவளுக்கு ஆடை அணிவித்தாள். தேவாலயத்தில் நடந்த திருமண வைபவத்தில் அவளுடைய தந்தை அவளைத் தத்தம் செய்தார். அறுபது விருந்தினர் வரை கலந்துகொண்ட அமைதியான திருமணம், அஜாயி விசேஷ வைபவங்களின்போது அணியும் 'டின்னர் ஜாக்கெற் அணிந்து கம்பீரமாக நின்றான். ஆயோவின் வீட்டுக்கு, திருமண விருந்துக்குப் போனார்கள். வாசலில் ஆயோவின் பெரியதாய் நின்றாள். ஒரு தண்ணீர் கிளாஸ் ஐ நீட்டினாள். முதலில் அஜாயியும் தொடர்ந்து
60 ஜனவரி - ஐ

ஏனைய விருந்தாளிகளும் 'ஒரு வாய் உறிஞ்சினர். தம்பதிக்குப் பின்னே விருந்தினர் குழுமினர். பெரியதாய் ஒரு பிரசங்கம் செய்தாள். மற்றைப் பெண்களோடு நெருக்கமான நட்புக் கொள்ளக் கூடாதென ஆயேவுக்கு அறிவுரை சொன்னாள். அவள் கணவனை அவர்கள் திருடிவிடுவார்கள். கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருக்கவேணும். சூரியாஸ்தமனத்தில் அவர்களிடையே எந்த சச்சரவும் நிலவக்கூடாது. அஜாயியை நோக்கிக் குறும்பாகச் சொன்னாள். 'ஒரு மனைவியால் கூட வைப்பாட்டி அளவு கிளர்ச்சியைத் தரமுடியும். எங்கள் பிள்ளைமேல் உடல் ரீதியான வன்முறை பிரயோகிக்கக் கூடாது!”
அதன் பின் அவர்கள் உள்ளே செல்ல, மேனாட்டு அம்சங்கள் தொடங்கின. ஆயோ கைப்படச் செய்திருந்த திருமண கேக் வெட்டப்பட்டது. பேச்சுக்கள் நிகழ்ந்தன. அவை முடிய அஜாய் தன் வீட்டுக்குப் போனான். அங்கே வேறு கொண்டாட்டங்கள் தொடர்ந்தன. பிறகு 'லெறன்ஜ் சூற்’ அணிந்துகொண்டு பெண் வீடுபோய், அவளைத் தன்னோடு அனுப்பும்படி கேட்டான். ஏதோ அவள் நெடும் பயணம் போவதுபோல ஆயோ வீட்டார் அழுதார்கள். அவளுடைய தாய், கண்ணிாசிந்தியபடி சொன்னாள், "நாளைக் காலை ஆயோவின் கன்னிமைக்குச் சாட்சியைக் காட்டும் பேறு எனக்கில்லாவிட்டாலும், பெண்மையின் உன்னதமாகிய கருவளத்தில் அவள் குறைந்தவளென்று யாராவது சொன்னால் அவர் குருடாகவோ செவிடாகவோ இருக்க வேண்டும்.”
இருபக்கத்து உறவினர் வீடுகளுக்கும் போய் விடைபெற்றபின், மணமக்கள் தம் வீடு போய்ச் சேர்ந்தனர். அஜாயியின் கண்களுக்கு ஆயா வேறொருத்தியாகத் தோன்றினாள். அவன் முன்னெப்போதும் அவளைக் கவனமாகப் பார்த்ததில்லை. இப்பொழுது பார்க்கிறான். பிள்ளைப் பருவத்திலிருந்து பொருள்களைச் சுமந்து பழகியதால் தலையை நேரே வைத்திருக்கிறாள். கழுத்தில் - பக்கவாட்டில் - விழுந்திருந்த மூன்று மடிப்புகளும், அவள் தோள்களும் கூட அழகாய் இருக்கின்றன. ஒரு புதிய மென்மையோடு அவளை அணைத்தான்.
அடுத்த நாள் காலை, அலாரம் அடிக்கவே கண்விழித்து தன் காலைத் தேநீரைத் தேடினான்; காணவில்லை. துள்ளி எழுந்து பார்த்தான். ஒன்றுமில்லை. அடுப்பங்கரையில் அவள் காலடியோசை கேட்கிறதா என்று உற்றுக்கேட்டான். ஒன்றுமில்லை. திரும்பிப் பக்கத்தைப் பார்த்தான் ஆயோ கிடந்தாள். அவளுடைய கருங்காலி வண்ண முதுகில் மூச்சு இழையோடுவதால் ஏற்படும் அசைவு. ‘ஓ, நேற்றைய பரபரப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவாய் இருக்கலாம்!
"ஆயோ, ஆயோ, உனக்கென்ன? சுகமில்லையா?” நிமிர்ந்து படுத்தவள், அவனைப் பார்த்தாள். பருத்திப் போர்வைக்குள் கிடந்த தன் கால் விரல்களை சாவகாசமாக மடக்கினாள், மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவள் முகத்தில் ஓர் அமைதி.
"இல்லை, அஜாயி உனக்கு? உன் கால்கள் செயலிழந்து விட்டனவா?’ என்றாள் ஆயோ,
"இல்லை” என்று பதிலளித்த அஜாயிக்கு ஒரே குழப்பம், 'இவளுக்குப் புத்தி பேதலித்துவிட்டதா?
'அஜாயி, என் கண்ணாளா, பன்னிரண்டு வருடமாக ஐந்து மணிக்கு எழுந்து உனக்குத் தேநீரும், காலை உணவும் தயாரித்திருக்கிறேன். இப்பொழுது நான், உண்மையாகவே மணமான ஒருத்தி என்பதால் நீ என்னை மரியாதையாக நடத்த வேண்டும். நீ இப்பொழுது கணவன், காதலன் அல்ல. எங்கே எழுந்து உன் தேநீரைக் கலக்கு, பார்ப்பம்' 獸
ত5টা 2006 jās

Page 63
கலைத்துது Dis 128, டேவிற்விதி யாழ் Tel. 021-222 9419, 021-222 239
 
 
 
 

கலாமன்றம்
கியல் கல்லூரி
3, Fax: 021-222 2393

Page 64

முதுநுண்கலைஞானி(MFA) Master of fine Arts (esim:Soib: 265 iii) பெருஞ்சான்றிதழ்கற்கை Dance in Diploma (rootb. 16 guii) நுண்கலைமானி (B.FA), அல்லது பெருஞ்சான்றிதழ்
ma), கற்கை நெறியை பயில விரும்புபவர்களுக்கான அடிப்படைத்தகுதிகள் (GCEOL)இல் ஆங்கிலம் உட்பட 5திறமைச்சித்திகள். (G.C.E. AVL)@so 2p6ODLDëéâğ856T
9 O .C.E. O/L)36ò 45psol Déé53ssi5L6ör (G.C.E.A/L)36ò3
தி ச்சித்திகள் கலைக்கழகத்தில் வேறு பாடங்களைத் தொடர்பவர்களும் கலைத்துறை சாராத பாடங்களைக் கற்பவர்களும் கூட இக்கற்கை நெறியைத் தொடரமுடியும். மலதிக விபரங்களுக்குதிருமறைக்கலாமன்ற கலைத்துது
அழகியல் கல்லூரியுடன்தொடர்புகொள்ளவும்
தூது அழகியல் கல்லூரி, (3sтi i lib, 8. டேவிற் வீதி, யாழ்ப்பாணம், 563 ië: O21 - 2229419