கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முறிந்த பனை

Page 1

| s
| ||

Page 2

முறிந்த பனை

Page 3

முறிந்த பனை
இலங்கையில் தமிழர் பிரச்சினை - உள்ளிருந்து ඉෙලී i.
ராஜனி திராணகம
உடற்கூற்றியல் துறை
ராஜன் ஹஜூல்
கணிதவியல் துறை
தயா சோமசுந்தரம்
உளநோய்க்கூற்றுத் துறை
கே.ழீதரன்
கணிதவியல் துறை
கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுறவேண்டும்.
மார்ட்டின் லூதர் கிங் -

Page 4
MURRINDA PANAI
(TAMILTRANSLATION OF 'THE BROKEN PALMYRA")
பதிப்புரிமையும் வெளியீடும் : மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள். (யாழ்ப்பாணம்)
முதற்பதிப்பு
1996
அட்டை வடிவமைப்பு
பாலித தேநுவர
நிதியுதவி : ஹிவோஸ் (HIVOS)
அச்சகம் : பிறஸ்மேற் 90/7. லொறிஸ் வீதி கொழும்பு - 04,
ISBN 955-9447-OO-9

மறைந்த ராஜனி திராணகமவின் இலட்சியத்தை மனதிற்கொண்டு, எமது இந்த முடிவுறாத போராட்டத்தில் எவ்வித அர்த்தமுமின்றி வாழ்வைப் பறிகொடுத்த இளைஞர்கள், யுவதிகள், மெளனிகளாக்கப்பட்ட சாதாரண மக்கள் அனைவருக்கும் இந்நூல் &LDru600TD.

Page 5

冢菱 拿变、藻** 爱
: ? “পূর্ণ
கலாநிதி. ராஜனி திராணகம M.B.B.S. (Colombo), Ph.D. (Liverpool) 23.02.1954 - 21.09. 1989
* என்றாவது ஒரு நாள் ஒரு துப் பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றை பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.”
1989-09-15ம் திகதி ராஜனி தன் நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து . . . . . . . .

Page 6

பொருளடக்கம்
அத்தியாயம்
தமிழ் பதிப்புக்கான முன்னுரை.
முன்னுரை.
ஆசிரியர்களின் முன்னுரை ஏப்ரல் 1988,
இரண்டாவது முன்னுரை பெப்ரவரி 1990.
штабih 1 1 நழுவவிடப்பட்ட வாய்ப்புகளும் இழந்துபோன ஜனநாயகமும். 2 தமிழர் அரசியல் எழுச்சியின் சில மைல் கற்கள். 3 1981 ஆகஸ்ட் முதல் 1983 ஜூலை வரை. 4 தமிழருக்கு எதிரான 1983 ஜூலை வன்முறைகள் .
தமிழ் விடுதலைப்போராட்டத்தின் வளர்ச்சி. 1987; குமிழி வெடிக்கிறது.
5
6
7 ஒப்பரேஷன் லிபரேஷன்.
ஜூன்-ஜூலை: இந்தியா உள்ளே நுழைகிறது. ஒப்பந்தத்தின் பின்: இந்தியாவின் சாவாகாசமான பொழுதுகள்,
8
9
பாகம் 2 1 அந்த அக்டோபர் நாட்கள். 2 இந்தியாவின் பங்கு - ஒரு அலசல், 3 1987 அக்டோபர் யுத்தம். (ஆயுதங்களைக் களையும் இந்திய
நடவடைக்கை) 4 யாழ்ப்பாணத்தில், இந்திய இராணுவ நடவடிக்கையின் உளவியல்
தாக்கங்கள். (1987ம் ஆண்டின் இறுதி) 5 "அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணிர் இல்லை."
பெண்களின் அனுபவங்கள். 1987 அக்டோபர் யுத்தம், 6 இந்தியாவின் திரிசங்கு நிலை, 7 அஹிம்சை ஒரு பார்வை, 3 முடிவுரை (பெப்ரவரி 1988) 9 இன்னும் சில குறிப்புகள்
பின்னிணைப்பு 1 பின்னிணைப்பு 2 பின்னிணைப்பு 3 பின்னிணைப்பு 4
சொல்லடைவு
பக்கம்
iii
vii
Χί
33
69
ገገ
109
133
149
219
229
249
343
377
413
469
483
513
533
555
565

Page 7

தமிழ் பதிப்பிற்கான முன்னுரை 1996
கடந்த ஒன்றரை தசாப்தமாக குரூரமான இவ்யுத்தம் தொடர்ச்சியாகப் பல அழிவுகளை எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது . இடைக் கிடையே பேச் சுவார்த்தை, யுத்தத் தவிர்ப்பு என்பன துளிர்விட்டபோதும் அவை முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிட்டன. மக்கள்! ஆம் இவர்களின் பெயரால்தான் இவை அனைத்தும் நடக்கின்றன. ஆனால் மக்களோ பலமிழந்து செய்வதறியாது தவிக்கின்றர்.
1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தமும் இந்திய அமைதிப்படையினரின் வருகையும் ஒரு சில மாதங்களுக்கு பலவித நம்பிக்கைகளை பரவலாக சாதாரண மக்களுக்குக் கொடுத்திருந்தன . அந் நம்பிக்கைகள் சுக்குநூறாகி திரும்பவும் இந்தியப்படையினரால் ஆயுதங்களை களையும் நடவடிக்கையெனும் பெயரில் முழுஅளவிலான யுத்தம் ஆரம்பித்தது . மக்களையோ அவர்களின் நலன்களையோ முன்னெடுக்க எம் சமுதாயத்தில் எந்தவித ஸ்தாபனங்களும் இல்லாத நிலையில் மக்கள் சின்னாபின்னப்பட்டு அகதிமுகாம்களில் பரிதவித்தனர்.
அவ்வாறான சூழலில் எமது சமுதாயம் மீளப்புத்துயிர்ப்புப் பெறுவதெனில், முதற்கண் எமது யதார்த்தத்தை இனங்கண்டுகொள்வது அவசியம் என எம்மில் சிலர் கருதினோம். இலங்கை அரசின் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்கப் புறப்பட்ட எமது சமுதாயம், அந்நிகழ்வுப்போக்கில் முழுச்சமுதாயத்தின் ஆத்மசக்தியையும் வலுவிழக்கச்செய்யும் உள்ளார்ந்த பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு திணறியது. துப்பாக்கிகளின் முன் மெளனிகளாக்கப்பட்ட மக்கள் கூட்டம் விடுதலை, போராட்டம், தியாகி, துரோகி எனும் வெற்றுச் சொற்களின் மந்திரத்தில் கட்டுண்டு கிடந்தது. மத ஸ்தாபனங்களையும், உயர்கல்வி நிறுவனங்களையும் சேர்ந்தவர்களில் பலர் பொய்மையில் வாழ்வதை தமது இருப்பிற்கான நடைமுறைகளாக்கினர். தவறுகளைச் சுட்டிக் காட்டவோ, உண்மைகளை எடுத்துக் கூறவோ முடியாவிட்டாலும் ஆரோக்கியமற்ற அரசியல், சமூக நிலமைகளை ஆதிக்கம் பெறுவதற்கு மறைமுகமாக உதவிபுரியாமலாவது விட்டிருக்கலாம். இவ்வகையில் எமது சமூத்தின் மனச்சாட்சிக்கான குரல்கள் அங் கொன்றும் இங் கொன் றுமாக நலிவடைந்து மரணித்துக் கொண்டிருந்தன. இக் காலகட்டத்தில் தான். மக்கள் மனந்திறந்து உறுதியுடனும் நேர்மையுடனும் உண்மைகளைத் தேடும் உந்தலுக்கான இடைவெளியினை உருவாக்கும் சிறிய முயற்சியாகவே முறிந்த பனை எனும் நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது .

Page 8
அதன்பின் நடந்தவை யாவரும் அறிந்த வரலாறு. இந்நூலை தமிழில் கொண்டுவரும் முயற்சியானது பலதடங்கல்களையும், இடர்களைகளையும் எதிர்நோக்கியது.இந்நூல் தென்னிலங்கையில் இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மூன்று பதிப்புகளாக ஆயிரக்கணக்கான பிரதிகள் தென்னிலங்கையில் விநியோகிக்கப்பட்டன . ஆனாலும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான சந்தர்பம் தற்போதுதான் கிட்டியுள்ளது.
ஆனால் இன்றும் எமது சமுதாயம் தொடர்ந்தும் அழிவுப்பாதையிலேயே போய்க் கொண்டிருக்கிறது . அதற்கான புறக் காரணிகளை இனங்கண்டுகொள்ளும் அதேவேளை அகக்காரணிகளின் வளர்ச்சிபற்றி வெளிப்படையாக ஆராய்வது எம்மில் பலராலும் தவிர்க்கப்படுகிறது. எதுவித தார்மீகக் கோட்பாடுகளுமற்ற அரசியல் பிதற்றல்களும், வியாக்கியானங்களும் விடுதலைப் போராட்டம் என்ற போர்வையில் எமது மக்களை இருளில் வைத்திருக்க தொடர்ச்சியாகப்பணியாற்றுகின்றன. சாதாரண சிறுவர், சிறுமியரின் எதிர்காலம்பற்றி கிஞ்சித்தும் சிந்தியாத அதேவேளை, அச்சிறார்கள் சிக்குண்டுள்ள நச்சுச் சூழல்களிலிருந்து பலர் தம்மைமட்டும் தக்கவைத்துக்கொண்டனர். அவர்களில் பலர் எமது சமூகத்தை ஆதிக்கம் செய்யும் தற்கொலை அரசியலை கேள்விக்குட்படுத்தாது, அதன்விளைவால் நடைபெறும் வேள்வித்தீயில் குளிர்காய்கின்றனர்.
சுயநிர்ணயத்திற்கான போராட்டம், சுயநிர்மூலத்திற்கான போராட்டமாக மாறியதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்ளுதல் எமது எதிர்கால மீடசிக்கு மிக அவசியமானது.
முறிந்த பனை எனும் இந்நூல் மிகவும் நெருக்குதலான ஒரு கால கட்டத்தில் மேற்கூறிய அபத்தமான போக்குகளை கேள்விக்குட்படுத்தும் ஒரு நடவடிக்கையின் வெளிப்பாடாகும். எனவேதான், அதனை முளையிலேயே கிள்ளும் முயற்சியாக அதன் முக்கிய பங்களிப்பாளரான கலாநிதி. ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டார்.
இம்மொழிபெயர்ப்பில் பலகுறைபாடுகள் உண்டு. இது தனியே அரசியல் ஆராய்வு நுாலுமல்ல . இதில் கூறப்படுபவை விவாதத்திற்கு உரியவையாகக்கூட இருக்கலாம். எனினும், நாம சிக்குணடிருக்கும் சகதியிலிருந்து மீள ஒருவகையில் இது உதவுமாயின் அதனையே எமது முயறசிக்குக் கிடைத்த பலனாகக் கருதுவோம்.
இறுதியாக, இதனை மொழிபெயர்த்து உதவிய மறறும் முடியுமானவரையில் தவறுகளைத் திருத்த, மொழிநடையில் மெருகூட்ட உதவிய சகலருக்கும் எமது நன்றிகள்.

முன்னுரை பேராசிரியர் பிறையின் செனெவிரத்ன்
மருத்துவ ஆலோசகர் இராணி மேரி மருத்துவமனை, அவுஸ்திரேலியா.
முறிந்த பனை என்னும் இந்நூல் வட இலங்கையில் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பன பற்றிய வேதனை மிக்க வெளிப்பாடாகும். இலங்கை அரசும் இந்திய அமைதிப் பாதுகாப்பாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும், பல்வேறு போராளிக் குழுக்களின் நாயகர்கள் (போராட்டக் குழுக்களைச் சாராத அரசியல்வாதிகளும்) உனிமையில் எத்தகையவர்கள் என்பதையும் இந்நூல் விவான தகவல்களுடன் ஆவணப்படுத்தியிருக்கின்றது. அவர்கள் எத்தகையவர்களாகப் பாசாங்கு செய்கிறார்கள் என்பதைவிட உணர்மையில் அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும் எமது விருப்பு வெறுப்புகளும், நம்பிக்கைகளும், கற்பனைகளும், அவர்களை எப்படிப்பட்டவர்களாகக் காட்டுகின்றன என்பதைவிட உணர்மையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்நூல் வெளிக்கொணர்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியினரின் நலன் பாதிக்கப்படும் என்ற பயத்தினால் ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு குழுவோ தவிர்க்கப்படவில்லை. எந்தவொரு தகவலும் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை. இந்நூலின் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி ராஜனி திரணகம படுகொலை செய்யப்பட்டமைக்கு போராளிக்குழுக்களும் இந்திய இராணுவமும் இலங்கை இராணுவமும் உணர்மையில் பதில் சொல்லியாகவேண்டும். அவரை யார் கொன்றதென்று நாம் அறியாமல் இருக்கலாம். ஆனால் ராஜனி ஏன் கொல்லப்பட்டார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்தாக வேண்டும். ராஜனி ஆற்றிய மனித உரிமைப் பணிகளுக்காகவும், முறிந்தபனைக்குச் செய்த பங்களிப்புக்காகவுமே அவர் படுகொலை செய்யப்பட்டார். யாழ்ப்பானத்தில் நிறுவப்பட்டுவரும் ஒரு தனிச் சர்வாதிகார ஆட்சியை அதன் அடையாளச் சின்னம் என்னவாக மாறினாலும் எதிர்க்கவோ, கேள்வி கேட்கவோ, அம்பலப்படுத்தவோ கூடாது என்பதை ஏனையோருக்கு உணர்த்துவதற்கான எச்சரிக்கையே இதுவாகும். ராஜனி திரணகமவைச் கொன்ற கொலையாளிகள் யாழ்ப்பாண மக்களுக்கு அரும்பணியாற்றிய யாழ்ப்பாணத்தின் ஒரு தலை சிறந்த புத்திரியை மாத்திரம் கொல்லவில்லை. அதற்கும் மேலாகப் பெருமளவு நாசத்தைச் செய்ய முயன்றுள்ளார்கள். இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே,

Page 9
w
தமிழ் மக்களின் தலைவிதி பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்டிருப்பவர்களில் ஒருவன் என்ற வகையில், இந்நூல் வெளியிடப்படுவதையிட்டு நான் பரவசமடைகிறேன்.
ஒரு விடுதலைப் போராட்டம் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதுடன், சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீறப்படுவதைக் குறைப்பதற்காகச் செயற்படுவது. அதேவேளை விடுதலையின் பெயரால் இந்த நோக கரு கடகு மாறானவை நிலைநிறுத்தப்படுமானால் என்ன நடந்து கொண்டிருக்கின்றதென மக்கள் கேள்வி கேட்க இயலுமாயிருக்க வேண்டும். முறிந்த பனை நாம் எல்லோரும் அறிந்தவற்றைத்தான் ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் எங்களுக்குத்தான் அதை சொல்லத் திராணி இல்லை. அது என்னவெனில், பொதுமக்கள் ஈனத்தனமான ஒரு அதிகாரப் போராட்டத்தில் மரிக்க வேண்டிய ஒரு வெறும் மக்கள் தொகுதியாக ஆகியுள்ளனர் என்பதாகும். நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சியின் இடத்தை ஆயுதமேந்திய குண்டர்களின் ஆட்சி பிடித்துள்ளது. இலங்கை மனித நாகரிகத்துக்குத் திரும்ப வேண்டுமானால், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பவை அம்பலப்படுத்தப்பட வேண்டும். சர்வதேசரீதியாக நற்பெயர் பெற்ற சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற மனித உரிமைக்குழுக்கள் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன. தகவல் தொடர்புச் சாதனங்கள் அரசாலும் ஆயுதக் குழுக்களாலும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டும், அச்சுறுத்தப்பட்டுமுள்ளன. அதனால், தனித்துவமிக்க தைரியசாலிகள் நாட்டில் உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கின்றதென்பதை வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள். நான் ஒரு சிங்களவன் என்ற முறையில், எனது ஒரே கவலை, நாட்டின் ஏனைய பகுதிகளில் என்ன நடக்கின்றதென்பது பற்றி இதைப்போன்றதொரு விவரணத்தை எழுத தெற்கிலுள்ள நாம் ஒரு குழுவாக முன்வர முடியாதுள்ளோம் என்பதுதான்.
இந்தப் பிரமிப்பூட்டும் நூலைப் படிப்பவர்கள் யாராயிருப்பினும் அவர்கள்
மனதில் முதலாவதாக எழும் கேள்விகள் இதிலுள்ளவற்றை எவ்வளவிற்கு நம்பலாம்? இதிலுள்ள தகவல்கள் எவ்வளவிற்குத் திடமானவை? என்பனவாகும். ஆனால் இந்நூலை எழுதிய ஆசிரியர்களை அறியும் வாய்ப்பைப் பெற்ற எங்களைப் போன்றவர்களுக்கு இக்கேள்விக்கு விடையளிக்க இடர்ப்பாடு ஏதும் இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்களான இந்நூலாசிரியர்கள் ஐயத்துக்கிடமற்ற நேர்மையும், ரிேய நாணயமும் மிக்கவர்கள். இவர்கள், தாம் காட்டிய தரவுகளை உறுதிப்படுத்த, நம்பமுடியாதளவு முயற்சி
எடுததுளளாகள. தகவலகளைச் சேகரிக்க இவர்கள் கையாண்ட வழிமுறைகள்,

V புனைவுகளிலிருந்து உணர்மையைப் பிரித்தெடுக்க அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டுக்கும் மக்கள் நிலைமைகள் எவ்வாறு இருக்கக்கூடுமென்ற கற்பனையாகவன்றி உண்மையான நிலைமைகளை முன்வைப்பதற்கும் வலிமை சேர்க்கின்றன. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழு (U"HRAllNA) உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் செயற்பட்டதுடன், சில வேளைகளில் தனித்தனியாகவும் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களைச் சென்று பார்வையிட்டும், நேரில் கணிட சாட்சிகளைப் பேட்டி கணிடும். உண்மையில் என்ன நடந்ததென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் தாம் கண்டவற்றை நேர்மையாகவும், பயமின்றியும், எந்தவொரு நெருக்கடிகாரர்கட்கும் சார்பில்லாதவகையிலும் முன்வைத்துள்ளார்கள். இந்நூலை எழுதிய ஆசிரியர்களின் நேர்மையும் நாணயமுங் காரணமாக முறிந்த பனை என்ற இந்நூலிலே சொல்லப்பட்டவற்றிற்கும் போராளிக் குழுக்களோ, இலங்கை, இந்திய அரசுகளோ சொல்வதற்கும் இடையில் முரண்பாடு இருக்குமானால் இதில் எதை நம்புவது என்பதில் எனக்கு எந்தக்கவுடமும் இல்லை.
இலங்கையில் நிலவும் குழப்பநிலைக்கு ஒரு தீர்வு காண்பதற்கு, இலங்கையில் வாழத்திராணியற்ற இந்த முன்னுரையின் ஆசிரியராலோ, அவரைப்போன்ற ஆயிரக்கணக்கானவர்களாலோ காத்திரமான பங்களிப்பு எதையும் செய்யமுடியாது. எது வசதியானதோ அல்லது எதைச் சொல்வது சில அதிகார அமைப்புகளுக்கு உகந்ததோ என்றில்லாமல், அவர்கள் பணி எங்கு தேவையோ அங்கு வாழ்வதற்கும் எது சரியோ அதைக் கூறுவதற்குத் தைரியமும் உறுதிப்பாடும், தேசபக்தியும் உள்ள, இந்த முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களைப் போன்றவர்களால் மாத்திரமே அந்தப் பங்களிப்பைச் செய்ய முடியும். அதுதான் நேர்மையானதும், உண்மையானதுமான தலைமைக்குரிய சிறப்பியல்பாகும். இலங்கையின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் முறிந்த பனை என்ற இந் நூலை அவசியம் படித்தாக வேண்டும். யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது, என்ன நடந்து கொணடிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியதற்காக 'விடுதலை, அமைதிகாத்தல், 'தேசியப்பாதுகாப்பு என்பவற்றின் பெயரால் இந்நூல் ஆசிரியர்கள் தமிழ் இனத்துரோகிகள் என தமிழ் வெறியர்களால் அழைக்கப்படுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. நிலைமை சுமூகமாகும் ஒரு காலத்தில் இத்தனித்துவமான நூலின் ஆசிரியர்கள் போலித்தனம் எதுவுமற்ற சத்தியமான தேசப்பற்று மிக்கவர்களென அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களின் இப்பணி, இலங்கையில் அராஜகம் நிலை பெறுவதைத் தடுக்கும் ஒரு தலைசிறந்த பங்களிப்ெ அப்போது ஏற்றுக்கொள்ளப்படும்.

Page 10

ஆசிரியர்களின் முன்னுரை ஏப்ரல் 1988
இந்த இரு தொகுதிகளிலும் அடங்கியுள்ளவை பெரும்பாலும் 1987 நவம்பரையடுத்த மூன்று மாதங்களிலே எம்மால் எழுதப்பட்டவை. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களையும் நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்த காலப்பகுதியை இது குறிக்கும். அணிமைக்காலங்களில் கண்டிராத சமாதானத்தை இரணிடு மாதங்களாக அனுபவித்த பெரும்பான்மையான தமிழருக்கு இத்தாக்குதலின் பயங்கர விளைவுகள் எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தன. இலங்கை இராணுவத்திடமிருந்து அவர்கள் நல்லது எதையும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை இராணுவத்தை நகரவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதைப் பார்க்கிலும் சற்றுக் கூடுதலாகவே போராட்டக் குழுக்களிடமிருந்து எதிர்பார்த்தனர். ஆனால் இந்திய இராணுவத்திடமிருந்தோ அவர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். உச்சநிலையை நோக்கிச் சென்ற இந்திய இராணுவத்தின் நடவடிக்கையின் பாதிப்புக்களோடு, தமிழ் மக்கள், உளரீதியாகவும் அறிவியல்ரீதியாகவும் தாம் ஒரு பாரிசவாத நிலையிலிருப்பதை உணர்ந்தனர். பல்வேறு சக்திகள் ஆடிய விளையாட்டில் சாதாரண மக்கள் இப்பொழுது அனாதரவான கைப்பொம்மைகளாக அகப்பட்டுக்கொண்டனர். மக்கள் பயமுறுத்தப்பட்டும் கொள்ளையடிக்கப்பட்டும் அடித்துத் துன்புறுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டுமுள்ளனர். இவற்றைக் கண்டிக்கும் சமுதாய எதிர்ப்பு அறிகுறிகள் சிறிதளவே தென்பட்டன. இவை எல்லாவற்றினதும் மத்தியிலே பல்வேறு நபர்கள் அதிகமானவற்றை மூடிமறைத்ததுடன் பிரமைகளைப் பரப்பினர். எல்லோரும் உணர்மையை ஒடுக்கியதன் மூலம் தம் நலன்களைப் பேணிக்கொண்டனர்.
சமுதாயம் புத்தெழுச்சி பெறவேணி டுமென நாம் கடுமையாக உணர்ந்துள்ளோம். அதைச் செய்வதற்கு எங்களைப்பற்றியும், எங்கள் மீட்பர்களாக கருதப்படுகிறவர்களைப் பற்றியுமான உணமைகளை அவற்றின் நிர்வாணத்தன்மையில் எதிர்கொள்ள வேண்டும். நாம் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டவர்களோ, வரலாற்றியலாளர்களோ அல்லர். ஆனால், ஆழமாக உணரப்பட்ட இன்றைய தேவையை நிறைவேற்றும் ஆர்வத்தினால் நாம் எழுதத் தொடங்கினோம். அப்பொழுது எமக்கு எமது எழுத்துக்களை எப்படி வெளியிடப்போகின்றோம் என்ற எண்ணமிருக்கவில்லை. இந்நூலில் உள்ள கட்டுரைகளை நோக்கின் நாங்களும் நம்மிடையே கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளோம் என்பதற்கு சான்றுண்டு. எங்களுள் இரு ஆசிரியர்கள், (P(b

Page 11
Wʼ 1 ji
சமூகத்தின் நிலைமை, அச்சமூகத்தின் பொருளாதார அடிப்படைகளில் பிரதானமாக நிர்ணயிக்கப்படுகின்றதென்னும் மாக்ஸியக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் சமூகத்தின் சீர்குலைவுகள், தார்மீக சீரழிவுகளினால் அல்லது கடவுளின் குரலுக்குக் கீழ்ப்படியாமையினால் ஏற்படுகின்றனவென்ற நோக்கைக் கொண்டுள்ளார். மற்றைய ஆசிரியர் வெறுமனே பொருளியல் நோக்கங்களை அடைவதில் மாத்திரம் மிகுந்த ஈடுபாடு கொள்வதனால் தீமைகள் எம்மைச் சூழ்ந்து கொள்கின்றன என்னும் முனைப்பிற் செயற்பட்டுள்ளார். ஆனாலும் நாம் எல்லோரும் மாற்றத்தை ஏற்படுத்த உணர்வுபூர்வமான முயற்சி இருத்தல் வேண்டுமென்பதைப் பொதுவாக ஏற்றுள்ளோம். ஒவ்வொரு கட்டுரையும் அதை எழுதுபவரின் நம்பிக்கைகள் பிரதிபலிக்கும் அதேவேளை, கட்டுரைகள் யாவும் மாதக்கணக்காக நடைபெற்ற ஆலோசனைகள், கலந்துரையாடல்களின் விளைவாக ஒரு கூட்டு இயல்பையும் கொண்டுள்ளன. மேலும், இந்நூலின் வெளியீடு அநேக பகுதிகளில் மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும் ஒரு செயலுமாகும். இது தற்காலிகமானதெனவும் எல்லாக் கட்சிகளும் தனிநபர்களும் இந்நூலை வாசிப்பது மிக நன்மையாக இருக்குமெனவும் நாம் நம்புகிறோம். இக்காரணங்களால் தனித்தனிக்கட்டுரைகளின் ஆசிரியர்களைக் குறிப்பிடாமல், இந்த ஆக்கத்தை ஒரு கூட்டு முயற்சியாக முன்வைக்கிறோம். எமது நோக்கம், உண்மையைக் கூற முயல்வதோடு, தமது மக்களுக்கு உதவுவதற்குத் தாம் என்ன செய்ய வேண்டுமென்பது தொடர்பாகக் குழப்பத்திலிருக்கின்ற உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுப்பதுமாகும்.
ஒரு சிரேஷ்ட எழுத்தாளின் அறிவுரைக்கிணங்க இந்நூல் இரு பாகங்களாக பிரித்தமைய வேண்டுமென நாம் தீர்மானித்தோம். இந்நூலின் முதற்பாகம், (இன்றைய நிகழ்வுகளோடு தொடர்புடைய) தமிழர்களின் வரலாற்றுப் பின்னணியை மேலோட்டமாக எடுத்துக் கூறுகின்றது. குழம்பிய நிலையிலுள்ள இத்தீவுடன் ஈடுபாடு கொண்டிராதவர்களுக்குப் பின்னணித் தகவல்களை அளிப்பதும் இன்றைய நிலைமையைப் புரிந்துகொள்ள ஒரு அத்திவாரமாக அமைப்பதுமே இதன் பிரதான நோக்கமாகும். இவ்விடயம் பற்றி அதிகம் இதற்கு முன்னர் எழுதப்படவில்லை.
இந்நூலின் இரண்டாம் பாகம் யாழ்ப்பாணத்திலே இந்தியப் படைப்ன தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகளுடன் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் கொண்டுள்ளது. இந்தியப் படையின் தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் விரிவானவையாக இருக்க வேண்டுமெனக் கருதப்படவில்லை. அவை,
வெறுமனே, நிகழ்வுகளின் உரு வடிவமைப்பைச் சுட்டிக்காட்டப் பயன்படும்.

ix
யாழ்ப்பாணத் தீபகற்பத்துக்கு வெளியே மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்களை அவை காலத்திலே ஒத்த தன்மைகளைக் கொண்டிருந்தபோதும் நாம் அவற்றைத் தொடவில்லை. கிழக்கு மாகாணத்திலே நடைபெறுகின்ற நிகழ்வுகளுடன் இவற்றையும் சேர்த்துக் கால முறைப்படி ஒழுங்குபடுத்தல் ஒரு கடினமான பணி என்பதோடு அது எம்மிடமுள்ள வசதிகட்கு அப்பாற்பட்டதுமாகும்.
கிழக்கு மாகாணத்திலே பொதுமக்கள் சொல்லொணாத துன்பதுயரங்களைக் குறிப்பாக, 1984-87 காலப்பகுதியில், நடந்த இலங்கை அரசின் அருவருப்பான பேரின்போது அனுபவித்துள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்திலே இலங்கைப் படைகளினால் சகல தமிழ்க் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் நேர்ந்த அழிவுகளை நம்புவதற்கு அவற்றை நேரிற் பார்த்தல் வேண்டும். தங்கள் அபிலாசைகளும் நலன்களும் வடக்கிலே கவனத்திற் கொள்ளப்படுவதில்லையென கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே பரவலாகக் காணப்படுகின்ற உணர்வுகளில் பெருமளவு உணர்மையும் உணர்டு. கிழக்கைப் பொறுத்த வரையில் நிறைவேற்றாமல் விடப்பட்டுள்ளதென நாம் உணர்கின்ற பெரும் இடைவெளியை நிரப்புகின்ற பணியை ஆற்றலும், வாய்ப்புகளும் உள்ள யாராவது பொறுப்பேற்பார்களென நாம் நம்புகிறோம். கிழக்கின் பிரச்சினைகளை நாம் கவனத்திற் கொண்டபோதும், எமது பற்றாக்குறைகளை மறைப்பதற்காக வெறுமனே எதையும் இட்டுக்கட்டி எங்களால் எழுதமுடியாது.
இறுதியாக இருவருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அவர்களுள் ஒருவர் எமது கையெழுத்துப் பிரதிகளை அன்போடு தட்டச்சுச் செய்து தந்தவர். மற்றவர் திருத்தங்களைக் கூறியதுடன், பெறுமதிமிக்க போதுமான தகவல்களையும் தந்துதவிய சிரேஷ்ட எழுத்தாளர். யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழுவினர் பல நிகழ்ச்சிகள் தொடர்பான அத்தியாயத்தின் ஒருபகுதியைப் பங்களிப்புச் செய்தார்கள். அவர்களையும் நாம் நினைவு கூருகிறோம்.
நூல் வடிவமாக வெளியிடுவதற்கு முன் அமைந்த பிரதியை வெளிக்கொணர உதவிய கலிபோனியா கிளேர்மோ ஹாவே மட் கல்லூரியினருக்கும் நாம் நன்றி கூறுகிறோம். வழமையான வெளியீடு ஒரு நீண்ட செயல்முறை, அத்துடன் தாமதியாது இது வெளியிடப்படாவிட்டால் விடயங்களின் முக்கியத்துவம் இழக்கப்பட்டு விடுமென்பதால் இந்த வடிவிலேயே இந்நூலை வெளியிடுவது அவசியமாகிவிட்டது.

Page 12
இரண்டாவது முன்னுரை பெப்ரவரி 1990
மூலக் கையெழுத்துப் பிரதி தயாராகி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. இக்காலப்பகுதியிலே இந்நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான கலாநிதி ராஜனி திராணகமவின் படுகொலையுட்பட பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவை இரண்டாவது முகவுரையின் அவசியத்தை எமக்குணர்த்தின. 1987 அக்டோபர் போரின் உக்கிரமான காலத்திலும், அதைத்தொடர்ந்த காலத்திலும், ஏறக்குறைய இரண்டாண்டுகளுக்கு முன்னர் என்ன எழுதினோம் என மீட்டுப்பார்க்க ஆசிரியர்களுக்கு கால அவகாசமும் கிடைத்தது. இந்த நிகழ்வுகளின் உணர்ச்சிமயமான தாக்கத்தைப் பேணும் அதேவேளை கட்டுரைகளில் அதிக சீர்மையும், புறவயத்தன்மையையும் ஏற்படுத்துவதற்காக பிரசுரத்துக்கு முந்திய பிரதியில் உள்ள விடயங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. முன்னர் எம்மைப் பாதித்தவையாயினும், இப்பொழுது நூலின் பரந்த முக்கியத்துவத்தை மங்கச் செய்யும் அப்பதிவுகளையும் நாம் நீக்கிவிட்டோம். நாம் காலஞ் சென்ற கலாநிதி ராஜனி திராணகம எழுதிய ஒரு கட்டுரையையும் இதில் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளோம். நாம் தனிப்பட்ட முறையில் பிரசுரத்துக்கு முன் பிரதிகளை விநியோகித்தபோதும் நாம் திருத்தங்களைச் செய்ய விரும்பிய காரணத்தால் பெருமளவாய் விநியோகிப்பதைத் தாமதப்படுத்தினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சில நிகழ்வுகள் பிரசுரத்துக்கு முந்திய பிரதியை பெருமளவில் விநியோகிப்பதற்கு எம்மை நிர்ப்பந்தித்தது. மேலும் விடயங்களைச் சேர்க்க இருக்கையில், சென்ற ஆண்டு செப்டெம்பரில் ராஜனி திராணகம கொல்லப்பட்டார். எனவே சிறு மாற்றங்களுடன் இந்நூலைப் பிரசுரிக்க நாம் முடிவு செய்தோம். நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல், இனமேலாதிக்கவாத இலங்கை அரசுக்கு எதிராக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த போரிலே ஒரு இலட்சியத்துடன் சகல தமிழ் மக்களினதும் பெயரால் எண்ணற்ற இளைஞர்கள் தாமாகவே முன்வந்து ஆயுதம் தாங்கினர், தம் உயிர்களைத் தியாகம் செய்தனர். பெரும்பாலும், அவர்கள் தமது இலக்கான தமிழ் ஈழத்தை, ஒரு தனியரசை, எதிர்காலத்தில் நிர்மாணிப்பதற்காகப் போரில் இறங்கினர்கள். போராட்டத்தின் வரலாறு, விரும்பியோ விரும்பாமலோ அதிற் பங்கேற்றவர்கள் பற்றியும் போராட்டத்தின் அநேக கருதுகோள்களையும், கோட்பாடுகளைப் பற்றியும் கேள்வி எழுப்பும் இந்த ஆய்வை இன்று எழுத்துருவில் கொணர்தல் மிகப்பலருக்கு பொறுப்பற்ற மூடத்தனமான பணியாகத் தெரியலாம். தேசியனழுச்சி அலையெறிந்து கொண்டிருக்கும் போது இம்மாதிரி சுய விமர்சனத்தில் இறங்குவது அசாதாரண துணிச்சலானதும் தற்கொலைக்கொப்பானதுமாகும் என்று வேறும் சிலர் கூறக்கூடும்.
மற்றெல்லாக் காரணங்களையும் விட முக்கியமாக உலகின் அதி நவீன ஆயுதங்களைக் காவிக்கொண்டு எமது வீதிகளிலே வலம் வரும் எமது இளைஞர்களின் நலனுக்காகவே நாம் இந்நூலை எழுத வேண்டியிருந்தது.

X. மேலும், வெறுமனே பாசாங்கு, மனச்சோர்வு, நம்பிக்கையின்மை ஆகியவற்றை மாத்திரமே முன்னைய சந்ததியினரிடமிருந்து பெற்றுள்ள இன்றைய இளந்தலைமுறையின் நலனுக்காகவும் நாம் இதனை எழுதவேண்டியதாயிற்று. இன்றைய போக்கு, முழு இளைஞர் பரம்பரையினதும் அபிலாசைகளைப் பயன்படுத்தி, ஒருவரோடொருவர் போரிடுகின்ற எதிரிகளாக அவர்களைத் தள்ளிவிட்டு அவர்களது ஆக்க சக்தியை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், மக்களின் சுயேச்சையான, ஆனால் உண்மையான உணர்வுகளை வெளிக்கொணர்தல் தேவை எனவும் நாம் உணர்ந்துள்ளோம். மக்கள், பொதுவாக நிகழ்ச்சிகளின் தோற்றத்துக்கப்பால் செல்லாது, இயல்பூக்க ரீதியாகவே எதிர்வினைப்படுவர், அவர்கள் அவற்றை விமர்சனக் கணிகொணிடு நோக்குவதில்லை. எனவே மக்களைக் குவிமையமாகக் கொண்டு சுதந்திரமாகவும், புறவயமாகவும் சிந்திப்பதற்கு ஒரு சூழ்நிலையை அல்லது இடைவெளியைத் தோற்றுவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதை எழுதுவதற்கு எம்மைத் துாண்டிற்று.
இந்நூலை நாம் எழுதிக் கொண்டிருக்கும்போது, நமது வரலாற்றின் எந்த ஒரு சாதகமானதும், ஆரோக்கியமானதுமான விருத்தியினதும் அடிப்படை பிரதானமாக எமது சமூகத்திற்குள்ளேயே ஆரம்பிக்கப்படவேண்டும் எனும் முடிவு திரும்பத்திரும்ப எம்மனதில் உருவாகியது. ஆகையால், இந்திய அரசு போன்ற வெளிச் சக்திகள் விடுதலைப் போராட்ட காலத்தில் செய்த சகல வெளிப்படையானதும், இரகசியமானதுமான அரசியற் சதிநாசவேலைகளையும் தமது குறுகிய பார்வையால், மக்கள் விடுதலை பற்றிய ஆரம்பகால இலட்சியத்திலிருந்து விலகிப்போன இந்தியாவின் உள்ளூர்க் கூட்டாளிகளின் நடைமுறைகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளை, எமது அபிலாசைகள், கருதுகோள்கள், பலம், பலவீனங்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவுபெறுவதற்கான தேவை பற்றி பிரதானமாக நாம் அழுத்திக் கூறுகிறோம். விமர்சனத்தை விரும்பாத, அதிதீவிரமான குறுகிய இலட்சியவாதத்தைக் கொண்டவர்களுக்கு இது பெரும் சவாலாக அமையலாம். எமது விடுதலைப் போராட்டம் எப்பொழுதும் இராணுவத்தீர்வுகளையே தெரிந்தெடுக்கின்றது. அதனால் விமர்சனம் செய்வோரும், முரண்படுவோரும் கொல்லப்பட்டார்கள். இயக்கத்தை விட்டு விலகியோர் கொல்லப்பட்டுத் துரோகிகளென முத்திரை குத்தப்பட்டார்கள். விமர்சனம், 'புனிதமான இயக்கத்தைக் களங்கப்படுத்தும் முயற்சி எனக் கூறப்பட்டது. இராணுவரீதியாகப் பலம் பெற்ற குழுவுக்கு அரசியல் அவர்களின் சிறப்புரிமையாகிவிடுகிறது. மேலும் மதிப்பிழந்த சக்திகளின் முன், அக்குழுவின் சரணாகதிகள்கூட ஈழ இலட்சியத்தினை முன் தள்ளத் தேவையானதென விளக்கமளிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்திலே, ராஜனியின் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டுவது சாலப் பொருத்தமானதாகும்.
"எமது சமூகம்முழுமையையும் நம்பிக்கையற்ற விலகிப்போயிருக்கின்ற ஓர் மனோநிலை கவ்விக் கொண்டுள்ளது. துப்பாக்கிகளின் நீண்ட நிழல்கள்,

Page 13
N11 பத்திற்கும் புகழுக்குமானதாக மட்டுமின்றி பீதிக்கும் பயங்கரவாதத்திற்கும் மூலமாக உள்ளது. இந்தப் பீதியூட்டுகின்ற நிழலிலே, ஒன்றையொன்று குறைநிரப்புகின்ற சக்திகள், ஒன்றினாலொன்றான உந்துதலின் பின்னணியில் தாண்டவமாடுகின்றன. இவ்வாறு சமூகத்தை இயக்கமற்று முடங்கவைக்கும் அடக்குமுறை, வெளியில் இருந்து திணிக்கப்பட்ட அதிகாரத்துவத்தால் உருவானதல்ல. உண்மையில், அது எமது சமூகத்தின் கருவறையிலிருந்து உற்பவித்த ஓர் அழிவுத்தன்மையை மட்டுங் கொண்ட வன்முறையினாலேயே உருவானது.
ஏன் ராஜனி திராணகம கொலை செய்யப்பட்டார்? அநாமதேய தந்திரத்தைத் தேர்ந்தெடுத்த கொலையாளிகளால் இக்கேள்விக்குப் பதில் அளிக்கப்படவில்லை. அவரது வாழிவையும் பணியையும் நினைவுகூர முயற்சிகள் மேற்கொண்டபொழுது உலகத்தில் பரந்துவாழும் தமிழர்களால், "அநேகர் கொல்லப்பட்டு நினைவுகூரப்படாமல் இருக்கின்றபோது அவர் மட்டுமேன் நினைவுகூரப்பட வேண்டும்?" எனக்கேள்விகள் எழுப்பப்பட்டன.
அவர் கொலை செய்யப்பட்டார். ஏனெனில், அவரது பொறுப்புணர்வு, சாதாரண மக்களின் அர்த்தமற்ற மரணங்களுக்குக் காரணமான ஆதிக்க அரசியற் போக்குகள் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டுமென அவரைத் தூண்டியதேயாகும். உலகத்தின் தலைநகரங்களிலிருந்து, அவ்வப்போது, அக்கணங்களின் வில்லன்களாகத் தாம் கருதுபவர்களை அம்பலப்படுத்த மட்டுமே மரணமடைந்தவர்களின் புள்ளி விபரங்களைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். பிரச்சார நோக்கங்களுக்காக மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகின்ற உபாயத்துடன் இது நன்கு ஒத்துப்போகின்றது. ராஜனி இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததைச் செய்தார். அவர் கேட்ட கேள்விகள் அழிவின் காரணங்களுக்குள் ஆழமாகச் சென்றன. அவற்றின் பின்னாலுள்ள அரசியல் பற்றியும் அவர் வினா எழுப்பினார். அவர் முறிந்த பனையின் உள்ளடக்கத்தை தனித்தான அறிவியல்சார் சமுகவரலாற்றுப் பகுப்பாய்வாகவன்றி, மக்களின் ஜனநாயகப் பரிகாரமாக நோக்கினார். தங்கள் இலட்சியம் பற்றி ஒன்றும் அறியாது ஆயுதமேந்திய வீரர்களின் தலைவிதியையிட்டு அவர் ஒருபோதும் வாளாவிருக்கவில்லை. அவர்களின் கூறப்பட்ட அபிலாசைகளுக்குப் பெரிதும் அனுதாபமாயிருந்ததுடன், அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதபோதும், அவர்களுடன் கலந்துரையாட முயன்றார். பல்கலைக்கழக மாணவியாக இருந்த நாள்முதல், ராஜனி தீவிர விருப்புடன் சமூக நீதிக்கும், சமத்துவத்துக்குமாக, அவை மாணவர் பிரச்சினையாகவோ, தமிழருக்கெதிரான பாகுபாடாகவோ, தேசியப் பிரச்சினையாகவோ, பொதுவேலை நிறுத்தமாகவோ இருப்பினும் அவற்றுக்காகப் போராடினார். அவர் எப்பொழுதும் அடக்கப்பட்ட பகுதியினரோடு தன்னை அணி சேர்த்துக் கொண்டார். மிக இடர்பாடான நிலைமைகளில் மக்களின் உரிமைகளுக்காக துணிந்து நின்றார், வாதாடினார், பிரச்சினைகளை எதிர் கொண்டார், இணக்கப் பேச்சுகளில் ஈடுபட்டார். பிரித்தானியாவிலே 1983 முதல் 1986 வரை தங்கியிருந்தபோது தமது பட்ட மேற்படிப்புகளுடன், கறுப்பின

Χ11
மக்களின் பல்வேறு அரசியல் சமூக-பணிபாட்டுப் போராட்டங்களிற் பங்குகொண்டார். இனப்பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், தம்மை ஒரு சக்தியாக அங்கீகரிப்பதற்காகவும் கறுப்பின மக்கள் நடத்திய போராட்டங்களில் பங்குபற்றினார். அவர் இதைத் தனக்கேயுரிய உற்சாகத்துடன் செய்தார். குறிப்பாகக் கறுப்பினப் பெண்களும் பெண்நிலைவாதமும் என்ற துறையில், வர்க்கம், கறுப்பினப் போராட்டங்கள், ஏனைய மூன்றாம் உலகத் தோற்றப்பாடுகள் ஆகியவற்றின் பரந்த எல்லைக் கோட்டுக்குள்ளே பெண்கள் சார்ந்த குறிப்பான விடயங்கள், எண்ணக்கருக்கள் பற்றி ஆய்வுகள் நடத்தினார்.
பெண்கள் குழுக்களுடனும் அவர்களது அலுவல்களிலும் ராஜனியின் ஈடுபாடு, மக்கள் பற்றிய, குறிப்பாக அடக்கப்பட்ட மக்கள் பற்றிய, அவரது பரந்த அக்கறையின் ஒருபகுதியாகும். கெளரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான பெண்களின் போராட்டத்திலே, போராடுகின்ற மக்களுக்கான ஒரு செய்தியைக் கண்டார். யாழ்ப்பாணத்தில் பூரணி பெண்கள் நிலையம் என்ற பெயரில், பல்வேறு உதவிகள் அவசியமான பெணிகளுக்கான இல்லமொன்றை நிறுவ முனைந்தபோது அவர் தாராள மனத்துடன் தானாக முன்வந்து அதை நிறுவும் பணியிலும், அது எதிர்நோக்கிய கடுமையான பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் ஈடுபட்டார். பெணர்நிலைவாததத்துவத்தில் அவர் கொண்ட ஈடுபாடும், பல்கலைக்கழகத்துக்கு உள்ளும் புறமும் பாதிக்கப்பட்ட பெண்களுடனான அவரது தனியான உறவுகளும், அவர் எவ்வாறு தத்துவத்தையும் நடைமுறையையும் ஒன்றிணைத்தார் என்பதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இளைஞர்களை இராணுவமயப்படுத்துவது பற்றிய மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு சமாதான யாத்திரை ராஜனியின் இறுதி ஆசைகளில் ஒன்றாகவிருந்தது. "எமக்கு வேண்டும் உணவு, தோட்டாக்கள் அன்று" என்பது அவர் முன்வைத்த சுலோகமாகும். இது அவரால் உள்ளுணர்வு பெற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தச் சமாதான ஊர்வலம் எந்தவொரு அரசியற் குழுவையும் சாராது சுயாதீனமாக நடாத்தப்பட்ட யாத்திரையாகும். அது 1989 நவம்பர் 21ல் நடைபெற்றது. அந்த ஊர்வலத்திலே தெற்கிலுள்ள சிங்களவர், பிரித்தானியா, இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென்னாபிரிக்கா, தன்சானியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதை வாழி திதி உலக நாடுகளிலிருந்து பிரபலமானவர்களும், சாதாரணமானவர்களும் வாழ்த்துக்களை அனுப்பியிருந்தனர்.
சமாதான ஊர்வலத்திற்குப் பின்னர் ராஜனியை நினைவுகூர நடைபெற்ற கூட்டத்திற் பேசிய ஒரு மருத்துவ மாணவர் இராணுவமயப்படுத்தல் தொடர்பாக ராஜனியை நினைவுகூர்ந்தார். அவரது மரணத்துக்குச் சிறிது காலத்துக்கு முன்னர், அவர் இங்கிலாந்திலிருந்து வந்ததன் பின்னர் அம் மாணவரை அழைத்து ஒரு மாணவ இயக்கம் என்ற முறையில் இதுபற்றி என்ன செய்கிறீர்கள் என விசனத்துடன் வினவினார். இந்திய சமாதானப்படையின் பொறுப்பிற் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு உச்ச நிலையிலிருந்தபோது இது நடந்தது.

Page 14
XV அந்த ஞாபகார்த்தக் கூட்டத்தில் அம்மாணவன் மேலும் கூறியதாவது: "இந்தக் கூட்டத்துக்கு முன்னர் நடைபெற்ற சமாதான ஊர்வலத்தின் போது, தமிழ்த்தேசிய இராணுவத்தில் (TNA) கட்டாயமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட இருவரை நாம் கடக்கையில் அவர்கள் கூறியவை என்னைப் பாதித்தன. "சில மாதங்களுக்கு முன்னர் இந்த ஊர்வலத்தை நடத்தியிருந்தால் நாம் இந்த இராணுவ உடையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு இங்கு நின்றிருக்க மாட்டோம் என அவர்கள் கூறினார்கள். மறுபுறத்தில், நான் பிறந்த வடமராட்சியில், ஏறக்குறைய 13 அல்லது 14 வயதுப் பையன்கள் ஸ்துவித அரசியற் புரிந்துணர்வும் இன்றி ஆயுதங்களை ஏந்தத் தூணிடப்பட்டிருக்கிறார்கள். மாயை விரைவாகத் தெளிகிறது. எஞ்சியுள்ளவையெல்லாம் பழிக்குப் பழி வாங்குவதற்கான தாகமேயாகும்."
இந்த மாணவர் தலைவர்கள் தமக்குள்ள இடர் அபாயங்களை அறிந்திருந்தனர். துப்பாக்கி மனிதர் வந்து அவர்களுடன் பேசும்போது அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டனர். அந்த நடவடிக்கையின் கருத்தென்னவென்று அவர்களுக்கு தெரியும். அவர்கள் இருட்டிய பின்னர், வீதிகளில் நடக்கும் போதும், இரவிலே தமது அறைகளுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பின்றியும், அனாதரவாயும் இருந்தனர். அவர்களைப் பயமுறுத்தும் சாவு போராட்ட நெருக்கடியில் விளையும் திடீர்ச்சாவு அன்று. ஆனால் அவர்களுக்கு அது எந்நேரத்திலும் நிகழலாம். தமது ஆலோசகரும் நண்பியுமான ராஜனி ஏன் கொல்லப்பட்டார் என அவர்கள் அறிவார்கள். முன்னாள் மாணவ தலைவரான விமலேஸ்வரனின் கதி பற்றி அவர்கள் அக்கறையோடு அறிந்து வைத்துள்ளார்கள். ராஜனி இந்த மாண வருள் துணிவையுமீ, பகுப்பாய்வு அணுகுமுறையையும், விழிப்புணர்வையும் பாய்ச்சினார். இதே வகையான செல்வாக்கையே தன்னைச் சுற்றியிருந்த பலரிடமும் அவர் ஏற்படுத்தினார். அவரது செயல்கள், எழுத்துக்கள், உள்ளார்ந்த அக்கறை, மனோதிடம் ஆகியவை இந்தச் சமூகத்தில் பொறுப்பான பதவிகள் வகித்துக் கொண்டு தமது சமூகப்பொறுப்புக்களை அசட்டை செய்பவர்களது மனப்பாங்கிற்கு முரணானவை. இதனாற் தான் பலர் அவரின் நினைவின் பலத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். அதன் காரணமாக அதனை மழுங்கடிக்கவோ அடக்கி ஒடுக்கவோ முயல கிணறனர். பலரிறீ கு அவரது இருப்பு அசெளகரியமாகப்பட்டது. சிலர் அவரைக் ஏன் கொல்லவும் விரும்பினர் என்பதையும் இது விளக்குகின்றது.
உடலை இம்சிக்கும் வன்முறை பற்றிய பீதி தமிழரின் வாழ்வில் ஒரு நிரந்தர அம்சமாகிப் போயிற்று. 1983ம் ஆண்டு யூலையில் தமிழருக்கு எதிராக நடந்த வன்முறை, தொடர்ந்து அநேக தமிழர் நாட்டை விட்டு ஓடினார்கள். இப்பொழுது அவர்கள் லண்டன், நியூயோர்க், டொறன்ரோ, ஒஸ்லோ, அம்ஸ்ரடாம் முதலிய நகரங்களில் வாழ்கின்றார்கள். அதன் பின்னரும் பீதி தொடர்கிறது. அப்பீதி மேலும் நுண்ணியதாயினும், தொடர்ந்தும் யதார்த்தமானதாகவேயுள்ளது. இம்முறை, பயமுறுத்தல் உள்ளேயிருந்து வருகிறது. கூட்டத்தில்

XV
உரையாற்றுவார் எனத் துண்டுப்பிரசுரங்களில் அறிவிக்கப்பட்ட பேச்சாளர்கள் திடீரென வரவியலாமைக்கு எதாவது சாட்டுக் கூறுகிறார்கள். கலாச்சார நிகழ்ச்சி ஒன்றிலே பங்குபற்றுபவருக்கு தொலைபேசி மூலம் பயமுறுத்தல் கொடுக்கப்படுகின்றது. ஏனெனிற் பலம் மிக்க ஒரு போராட்டக்குழுவைச் சாராத நபர்களால் அது ஒழுங்கு செய்யப்பட்டமையாகும். பிரதான பிரச்சாரப்போக்குடன் மனமொப்பாதவர்கள் பகிரங்கக் கூட்டங்களிலே தொனியை அடக்கிப் பேசுகின்றனர். தாம் விரும்பாத கருத்துக்களைக் கொண்டவர் கடத்தப்படுவார் என்ற செய்திகள் அவருக்கு விளையாட்டாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இயக்கத்தைவிட்டு வெளிநாடு சென்ற போராளிகளுக்கு உதவுமுகமாக ஏதாவது திட்டத்தை ஒழுங்கு செய்யும் ஆட்களுக்கு இங்கே வாழும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் கொல்லப்படுவார்கள் என கொழும்பிலிருந்தோ, சென்னையிலிருந்தோ தொலைபேசி மூலம் பயமுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இந்த அச்சச் சூழல் சகித்துக் கொள்ளப்படுகின்றமையினாலே நிலைமை மானக்கேடாக மாறிவருகின்றது.
சமுதாய உணர்வில்லாமையாறி தமிழர்கள் தனித்துப் போன தனிநபர்களாகியுள்ளனர். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் சக்திகளிடமிருந்து உதவி கோரக்கூடியதும், பிரச்சார சாதனங்கள் அனுதாபமாயிருக்கக்கூடியதுமான நிலைமைகளினாலும், அவர்களது சுயமரியாதை, மகத்துவம் ஆகியவற்றின் நலன்களைப் பேணுமுகமாக ஐக்கியப்பட்டுத் தாபனமுற முடியாதவர்களாகிறார்கள். சில விதிவிலக்குகள் போக, உலகில் ஆங்காங்கே இயங்கும் தமிழ்ச் சங்கங்கள், தாம் வசதியாக ஒன்று திரளக்கூடிய இடங்களிலே கூடி, தாயகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை விமர்சனமற்ற முறையிலே, பிழையாகத் தமது மனவிருப்பத்திற்கு ஏற்றவகையில் விளங்கிக் கொள்கின்றன. அவர்கள் விடுபடமுடியாதவாறு இந்த நோயுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அதற்குரிய பரிகாரம் தாயகத்திலேதான் உண்டு. இந்தப் போக்கு எமக்கு நுாற்றுக்கணக்கான இளைஞர்களை உருவாக்கித் தந்துள்ளது. இந்த இளைஞர்கள் முன்னொருகால் தாம் சேர்ந்த போராளி இயக்கங்கள் நல்லதெனக் கருதிப் பின்னர் அவற்றை விட்டு விலகி, அடிக்கடி மனம் முறிந்து மாயை தெளிந்து தாம் பிழைப்பதற்காக இந்தியாவிலும் மேற்கு ஐரோப்பிய நகரங்களிலும் "மதுபோதையின் பின்விளைவால்" பாதிக்கப்பட்ட மனிதர்களைப்போல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களுள் அநேகர் தமது இயக்கத்திற்கு அதிக எண்ணிக்கையான உறுப்பினரைத் திரட்ட உதவி புரிந்தவர்கள். ஏனையோர் நன்கறிந்த கொலையாளிகளாயிருந்துமுள்ளனர். சிலர் கொலை செய்த எணர்ணிக்கை பத்துக் கணக்கானவை. இவர்களிடம் யாதாயினும் பொறுப்புணர்ச்சியிருந்தால், அல்லது ஏதேனும் தைரியம் மிஞ்சியிருந்தால், அவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் மெளனம் அவர்களுக்குள்ள கெளரவமான தெரிவு அல்ல. தமது சமுதாயத்திலுள்ளவர்களின் நன்மை கருதி அவர்களுக்காகத் தொடர்ந்து சேவை செய்ய முடியுமானால், இடர் இன்னல் கருதாது பகிரங்கமாக வெளிவந்து தாம் செய்தவை பிழை

Page 15
XV
என்றும், தாம் ஆதரித்து நின்றவை பிழை என்றும் ஒத்துக்கொள்ளலாம். ஒருமுறை ராஜனி ஒரு போராளிக்குழுவுக்கு உதவினார். அவரது பொறுப்புணர்ச்சியின் காரணமாக அவர் துணிந்து அக்குழுவின் கொள்கையைப் பகிரங்கமாக மறுதலித்தார். இந்த விடயத்தில் அவர் பெரும்பாலும் தனித்துவமானவர். அதனாலேயே, அவர் சமுதாயப் பொறுப்பை நமது இளைஞர்கள் ஏற்குமாறு அவர்களை இந்த வழியிற் கொண்டுவரும் பொறுப்பைத் தானே தனது தோள்களிற் கணினிருடன் சுமக்க வேண்டுமென உணர்ந்தார்.
காலவோட்டத்தில் ராஜனிக்கு நடந்ததையடுத்து, அதாவது சகிப்பின்மையின் அதியுச்சச் செயலைத் தொடர்ந்து, கூட்டு ஆக்கமாக இந்நூலை வெளியிடுவது $9(5 மாபெருந் தேவையென எமக்கு மேலும் உணர்த்திற்று. எந்தவொரு வாசகனும் இந்நூலின் பக்கங்களில் வேறுபாடான கருத்துக்களை எதிர்நோக்க வேணிடியிருக்கும். இவற்றுள் அநேகமானவை ஒன்றையொன்று பூர்த்தி செய்வதாயிருக்கும். எமது வேறுபாடுகள் ஒருபுறமிருக்க, நாம் ஒன்றிணைந்து செயற்பட விரும்புகிறோம். நியாயமான விவாதங்களைச் செவி மடுக்க விரும்புகின்றோம். ஒருவர் மற்றவரால் மாற்றப்படுவதற்கு நாம் தயாராக உள்ளோம். இது விஞ்ஞானத்தின் இலட்சியம் மட்டுமன்று, உண்மையைத் தேடுவதற்கான வழிமுறையுமாகும். ஒவ்வொருவரதும் வேறுபட்ட அபிப்பிராயங்களைப் பேணும் உரிமையையும் நாம் பாதுகாப்போம்.
இந்நூலை வெளியிட அனுசரணையாயிருந்தும், இந்நூலின் நேர்மையை கருதி அநேக ஆலோசனைகள் கூறித்துணைபுரிந்தும், விடயங்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, முழு உள்ளடக்கத்தையும் படித்துப் பார்த்து விவரங்களிற் கவனஞ் செலுத்தி பெறுமதிமிக்க தம் நேரத்தைச் செலவிட்ட பல நண்பர்களுக்கும், அறிமுகமானவர்களுக்கும் நாம் நன்றி கூற விரும்புகிறோம். இறுதியாக வெளியிடுவதிலும் விநியோகத்திலும் பல வழிகளில் உதவிய எல்லோருக்கும் நன்றி கூறுகிறோம்.

பாகம் 1

Page 16

அத்தியாயம் - 1 நழுவவிட்ட வாய்ப்புகளும் இழந்துபோன
சனநாயகமும்
1. மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டமை 1948-49
1930ம் ஆண்டு முதல், தமிழரின் அரசியல் வரலாற்றை அவதானித்து வந்தவர்கள், நாம் எத்தனை அரியவாய்ப்புகளைக் கைநழுவவிட்டிருக்கிறோம் என்று வியப்புறவே செய்வர். இவற்றுள் முதலாவது வாய்ப்பு சுதந்திரத்துக்கு முன்னர் வந்து போயிற்று. இலங்கைச் சமஷ்டிக்கூட்டிணைப்பு என்ற யோசனை 1929ம் ஆண்டிலே, பின்னாளில் இலங்கைப் பிரதமராயிருந்த எஸ்.டபிள்யுஆர்டி பண்டாரநாயக்காவினால் முன்வைக்கப்பட்டது. எதிர்கால இனப்பிரச்சனைகள் போன்றவற்றுக்கான அறிகுறிகள் அக்காலத்திலேயே தலைதுாக்கிவிட்டன. ஆனால் எந்தவொரு முக்கிய தமிழ்த்தலைவரும் சுதந்திரத்தின்போது ஒரு கூட்டாட்சி அரசியல் யாப்புக்காகப் போராடவில்லை. தமிழ் மக்களின் இனவாரி நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய திரு.ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ்காங்கிரஸ் கட்சி அதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்திலே ஐம்பதுக்கைம்பது (50:50) பிரதிநிதித்துவத்துக்காகப் போராடியது. அதாவது சனத்தொகையில் 30வீதத்திற்கும் சற்றுக் கூடுதலாக இருந்த சிறுபான்மை இனத்தவருக்கு (இவர்களில் தமிழர்கள் மொத்தசனத்தொகையின் காற்பங்காக இருந்தனர்) முழு நாடாளுமன்ற ஆசனங்களில் அரைப்பங்கை ஒதுக்கவேண்டுமென்பதாகும். சில வேளை ஒரு தமிழ் அரசியல்வாதி இனவாரித் தொகுதிகள் மூலம் பிரதமராக வரும் வாய்ப்பை அளிக்கும் ஒரே வழியாக இது இருந்திருக்கலாம். கூட்டாட்சிக் கோரிக்கை தமிழர் பாதுகாப்பை நியாயமானளவு உறுதிப்படுத்துவதாகத் தோன்றியிருக்கும். ஆனால் ஐம்பதுக்கைம்பது கோரிக்கை சிங்களவருக்கு நியாயமற்றதாகத் தோன்றியது. அதுவே உண்மையாகும். இறுதியாகத் தமிழர் இவற்றுள் எதையும் பெறாமல் இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திரம் பெற்றது.
சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் அப்பொழுது டொமினியன் நாடாக இருந்த இலங்கையின் பிரதமரான திருடொன் ஸ்ரீபன் சேனநாயக்க நல்லெண்ண வாக்குறுதிகளையும், மந்திரி பதவிகளையும் அளித்ததன் மூலம் தமிழ்த்தலைமையின் முக்கிய பகுதியினரின் ஒத்துழைப்பை பெற்றார். முதலாவது நாடாளுமன்றத்தில் 40வீதத்திற்கு மேலான ஆசனங்கள் சிறுபான்மையின உறுப்பினராலும், சிறுபான்மை இனத்தினரின் செல்வாக்குப் பெற்ற இடதுசாரி உறுப்பினராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டன. (சிறுபான்மை இனத்தினரில் இலங்கைத் தமிழர், இந்திய வம்சாவழித் தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோர் அடங்கினர்.) ஆனால் 1948ம் ஆண்டு டிசம்பர் குடியுரிமைச் சட்டமும் 1949ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமும் இதற்கு முடிவு கட்டியதுடன் நாடாளுமன்றத்தில் சிறுபான்மை இனத்தினரின் பிரதிநிதித்துவத்தை 20வீதத்திற்கும் கீழாகக் குறைப்பதற்கு வழி அமைத்தன. இந்தச் சட்டங்கள்

Page 17
2
தேசிய சனத்தொகையில் ஏறக்குறைய 10வீதம் அல்லது சிறுபான்மை சனத்தொகையில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கினரான தமிழ்த் தோட்ட தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கியதுடன், அவர்களின் வாக்களிக்கும் உரிமையையும் பறித்துவிட்டன. இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குகள் மேலும் இருபது தேர்தற்தொகுதிகளில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பாதகமான வகையில் செல்வாக்குச் செலுத்தின என்பது கவனிக்கத்தக்கது.
இதிலே ஆச்சரியம் என்னவென்றால் திருசேனநாயக்கவின் ஐக்கிய தேசியக்கட்சி மூலமும் அதற்கு வெளியிலும் இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்திய பெரும்பாலும் எல்லாத் தமிழ் உயர் குழாத்தினரும் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்காதபட்சத்தில் அவற்றை எதிர்ப்பதில் அதிகம் அக்கறை காட்டவில்லை. தமிழ்க் காங்கிரஸ் தலைவரான திருT. பொன்னம்பலம் முதலாவது மசோதாவை எதிர்த்தார். ஆனால் அமைச்சரவையில் இடம்பெற்ற பின்னர் இரண்டாவது மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். தனது சொந்த அதிகாரத்திலும் குறுகிய சுயநலன்களிலும் தங்கியிருந்த யு.என்.பி.யின் நல்லெண்ணம் பற்றிய கோட்பாடற்ற கணிப்பீட்டினாலேயே இந்தக் குத்துக்கரணம் நிகழ்ந்தது. சிங்கள உயர்குழாத்தினர், தமிழ் உயர்குழாத்தினரின் குறிப்பாக கொழும்புத் தமிழரின் பம்மாத்தை எளிதாகக் கையாள முடியுமென ஆரம்பத்திலேயே கண்டு கொண்டனர்.
குமாரி ஜயவர்த்தனவினது எழுத்துக்களில் (ஆதாரம்: லங்கா கார்டியன். யூன்யூலை 1984) நாடாளுமன்றத்திலே இந்தியவம்சாவளித் தமிழரின் வாக்குரிமையைப் பறித்த வாக்கு வெறுமனே இன அடிப்படை வாக்கு அன்று என்பது வெளிக்கொணரப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்குக் கடுமையான எதிர்ப்பு, முக்கிய இடதுசாரிக் கட்சிகளிடமிருந்தே (கலாநிதி என்.எம்.பெரெரா தலைமை தாங்கிய றொட்ஸ்கியவாத லங்கா சமசமாஜக்கட்சி, கலாநிதி கொல்வின் ஆர்டிசில்வா தலைமை தாங்கிய பொல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி, பீற்றர் கெனமன் தலைமை தாங்கிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி) வந்தன. இக்கட்சிகளில் உள்ள பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவராவர். இம்முறையானது, சட்டத்தின் முதலாவது கோட்பாட்டையே உதாசீனம் செய்கிறதென்ற அடிப்படையில் ஒரு பிரபல பெளத்தரான கலாநிதி எச்பூரீநிசங்க இம்மசோதாவை எதிர்த்தார். திருவாளர்கள் வில்மட் பெரெரா, ஆர்.எஸ்.பெல்பொல, ஐ.எம்.ஆர்.ஏ.இரியகொல்ல, லஷ்மணி ராஜபக்ஷ ஆகியோர் இம்மசோதாவிற்கு எதிராக வாக்களித்த முக்கிய சுயேச்சை உறுப்பினர்களாவர். வாக்குகள், வர்க்க அடிப்படையில் அளிக்கப்பட்டன எனக் கூறினால் அது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். மேலும் திருடிஎஸ்.சேனநாயக்க சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான கடுமையான தமிழர் எதிர்ப்புச் சதியொன்றில் ஈடுபட்டார் என்று கூறுவது பெரும்பாலும் தவறாகும். அதே போல் திரு சேனநாயக்க தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களவரைக் குடியேற்றுவதற்கு ஒரு கொடூரமான பெருந்திட்டத்தை உருவாக்கினார் என்று குற்றஞ்சாட்டுவதும் முழு உண்மையாகாது. கிழக்கு மாகாணத்திலே கல்லோயாக் குடியேற்றத்திட்ட வேலை பூர்த்தியானபோது, அந்த மாகாண மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு பின்னரே, உள்ளூர் விண்ணப்பங்கள் மிகக் குறைவாக இருந்தபோது, ஏனைய மாகாணங்களிலிருந்து

3
விண்ணப்பித்தோருக்கு கதவுகள் திறந்துவிடப்பட்டன. 1948 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தையும் அதன் விளைவையும் பொறுத்தவரையில் டிஎஸ்சேனநாயக்காவைப் பெரும்பாலும் நிச்சயமாக ஊக்கிவிட்டதென்னவென்றால் நாடாளுமன்றத்திலே 95 ஆசனங்களுள் 20 ஆசனங்களைக் கொண்ட தொழிலாளி வர்க்க அடிப்படையில் அமைந்த இடதுசாரிக் கட்சிகளின் பலம் பற்றிய விழிப்புணர்வேயாகும். ஆனால் 1947ம் ஆண்டுத் தேர்தலிலே யு.என்.பி பெற்ற ஆசனங்கள் 47 மாத்திரமே. இது தனிப் பெரும்பான்மைக்கு 7 ஆசனங்கள் குறைவானது. எதிர்காலத்திலே, சிலவேளை இடதுசாரிகளைக் கொண்ட ஒரு கூட்டு அரசாங்கம் ஏற்படக்கூடிய தெளிவான சாத்தியக்கூறு இருந்தது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பெரும் பகுதியை ஒதுக்குவதன் மூலம் தமது அரசியலையும், வர்க்க ஆதிக்கத்தையும் நிலைநிறுத்துவது பற்றிச் சிந்திப்பது யுஎன்பியைப் பொறுத்தவரையில் இயல்பானதே. அதனாலேயே, அத் தொழிலாளர் பகுதி மிக எளிதாகப் புறமொதுக்கப்பட்டது. அதன் பின்னர் 1952ல் நடந்த தேர்தலில் யு.என்.பி தனது ஆசனங்களை 52 ஆக அதிகரித்துக் கொண்டது. (snous: A.J.Wilson, "Electoral Politics in an Emergent State" Cambridge University Press, 1975)
இவ்வாறு, தமிழரின் உடன்பாட்டுடன் இந்த இரு மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கு எதிராக முதலாவதும் மிக மோசமானதுமான அடி விழுந்தது. நாடாளுமன்ற விவாதத்தின் போது, சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி என்.எம்.பெரேரா "இந்த வகையான இனவாதம் ஹுஸ்ரன் சாம்பலினுடனும் அடொல்ப் ஹிற்லருடனும் இறந்துவிட்டதாகவே நான் நினைத்திருந்தேன். தீர்க்கதரிசனம் வாய்ந்த அரசியல்வாதி எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் எவரேனும் இந்த வகையான ஒரு மசோதாவை ஆதரிக்க வேணிடுமென எங்களைக் கேட்பார்கள் என நான் நம்பவில்லை. மீதி உலகத்திலிருந்து ஒதுங்கி நாம் கடவுளாற் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், நாங்கள் மாத்திரமே இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்க உரிமை உடையவர்கள் என்று கருதுவோமானால் நாம் முன்னேற முடியாது," எனக் கூரிய வார்த்தைகளால் சாடினார். அப்பொழுது தமிழ்க்காங்கிரஸ் உறுப்பினராக இருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இந்த மசோதாக்களையிட்டுக் கடுமையான கருத்துவேற்றுமையுற்று தமிழ்க்காங்கிரசை விட்டு விலகிச் "சமஷ்டிக் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியே 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏனைய தமிழ்க்கட்சிகளையும் தன்னுடன் இணைத்துத் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாகியது. டாக்டர் இளம்விநாகநாதன், திருகுவன்னியசிங்கம் ஆகியோர் சமஷ்டிக்கட்சியை அமைக்க தமிழ்க்காங்கிரஸிலிருந்து விலகிய மற்றுமிரு முக்கிய தலைவர்களாவர்கள். சமஷ்டிக் கட்சியின் தமிழ்ப் பெயர் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகும். தமிழரசுக்கட்சி 1957ல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு இட்டுச் சென்ற இணக்கப் பேச்சுவார்த்தைகளில் நெருக்கமாகப் பங்குபற்றியது. இவ்வொப்பந்தமானது இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணிபதற்கு எடுத்த முதலாவது முயற்சியாகும். தீவிரவாத சிங்களவரதும் பெளத்த மதவாதத்தினதும் நெருக்குதலின் விளைவாக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட மாபெரும் ஊர்வலங்களுள் ஒன்று, திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில்

Page 18
4.
நடைபெற்ற கொழும்பு-கண்டி யாத்திரையாகும். திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தன 1958ல் படுதோல்வியுற்ற யு.என்.பிக்குப் புத்துயிரூட்ட இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்த முயற்சித்தார்.
அநேகர் 1948-49 சட்டத்திலே, இனவாதப் பூச்சுப் பூசிய வர்க்க வெறுப்பின் அநாகரிகமானதொரு வெளிப்பாட்டைக் கண்டனர். அதே போல் திருசெல்வநாயகம் தமது விவாத உரைகளில் அதன் இனவாத அம்சத்தை வலியுறுத்தினார். அரசாங்கம், மக்களில் தாம் விரும்பாத எந்த ஒரு பகுதியினரும் தம் கருத்துக்களைக் கூறவிடாமற் தடுப்பதற்கான ஒரு முன்னுதாரணமாக இது அமைகின்றது. ஆகவே இந்தச் சட்டத்தினால் ஒருவரும் அமைதியாக வாழ முடியாது. என்றோ ஒரு நாள் இது பெரும்பாலும் எல்லோரையும் பாதிக்கும்" என அவர் சுட்டிக்காட்டினார். திரு.செல்வநாயகம் தமது உரையின் போது 'இந்த மசோதாவானது இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளையும் தீர்த்துவைக்கப்படவேண்டிய உயர் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டக் கூறு அன்று. முதற்கணி அந்த அடிப்படையில் நான் அதை எதிர்க்கின்றேன்" என்று கூறினார். அவரது அச்சங்கள் நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 1978ன் குடியரசு அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டமூலம் 1983 யூலை இனக்க்லவரத்தின் மத்தியிலே நிறைவேற்றப்பட்டதனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஆசனங்களை இழந்தனர்.
சனநாயகத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று சட்டத்தினதும், அதை அமுல்படுத்தும் நிறுவனங்களினதும் பக்கச் சார்பின்மையாகும். அநாவசியமாக, அதிக செலவு பிடிக்கும் சட்டச் செயன்முறைகள் மூலம் முயன்றும் ஒருவனுக்கு நீதி கிடைக்காத ஒரு நிலைமை இருக்குமானால் அது வன்முறையையும் அராஜகத்தையும் தனக்குள்ளே கருக்கொள்ளும். 1952 தேர்தல் முடிந்தவுடனேயே தமிழரசுக்கட்சி மூன்று முக்கியமானதும் செலவுமிக்கதுமான சட்டப் போராட்டங்களில் தமது சக்தியைக் குவித்தது. இவற்றுள் இரண்டு தேர்தல் ஆட்சேப மனுக்களாகும். இந்தச் சட்டப் போராட்டங்களுள் 1949ன் 18ம் இலக்கக் குடியுரிமைச்சட்டத்தையும் 1949ன் 48ம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் திருத்தச்சட்டத்தையும் எதிர்த்து நடத்திய வழக்கு மூன்றாவதுமாகும்.
1948ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் 29ம் பிரிவின் ஏற்பாட்டின்படி, நாடாளுமன்றமானது,
(அ) எந்தவொரு மதத்தினதும் சுதந்திரமான இயக்கத்தைத் தடைசெய்யும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டமூலங்கள்.
(ஆ) எந்தவொரு சமூகத்தையோ மதத்தையோ சேர்ந்தவர் மீது சுமத்தப்படாத பொறுப்புக்களையோ கட்டுப்பாடுகளையோ இன்னொரு சமூகத்தையோ மதத்தையோ சேர்ந்தவர் மீது சுமத்தும் சட்ட மூலங்கள்.
(இ) ஒரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகளும் சலுகைகளும் ஏனைய சமூகத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்களுக்கு வழங்க மறுக்கும் சட்டமூலங்கள்.

5
(ஈ) எந்தவொரு மத நிறுவனத்தினதும் யாப்பை அந்த நிறுவனத்தின் நிருவாக அதிகாரசபையின் இசைவின்றி மாற்றமுனையும் சட்ட மூலங்கள் ஆகியவற்றைச் சட்டமாகநிறைவேற்ற முடியாது. இவற்றை மீறும் வகையில் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளில் நாடாளுமன்றம் மாற்றம் செய்ய முடியாதெனவும் அரசியல் யாப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலமானது, அரசியல் யாப்பின் அடிப்படை உணர்விற்கு எதிரானது என்பது வெளிப்படை. சகலவிதமான சட்ட வாதங்களுக்கும் அப்பால் அச் சட்டமூலமானது அதர்மமானது. மேலும் சுதந்திர அரசியல்யாப்பை ஏற்றுக்கொள்ள பிரதமர் நல்லெண்ணம், நன்னம்பிக்கை என்ற அடிப்படையில் ஏனையோருக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இருந்தது. குடியுரிமைச்சட்டத்தை எதிர்த்த வழக்கிலே, இச்சட்டமானது பிரிவு 29ற்கு முரணாக, இந்திய வம்சாவளிச் சமூகத்திற்கு எதிராகப் பாகுபாடு காட்டியுள்ளதென வாதிடப்பட்டது. விவாதம்மேலும் இந்தச் சட்டமானது முன்னர் வாக்குரிமையை அனுபவித்த இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளியினரது வாக்குரிமையைப் பறித்துள்ளது என்றும் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வாக்குரிமை இலங்கைப் பிரசைகளுக்கு மாத்திரமென மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியது. w 1949ம் ஆண்டு 34ம் இலக்க இந்திய-பாகிஸ்தானிய வதிவோர் (குடியுரிமை) சட்டமானது இலங்கையில் வாழும் இந்தியரும் பாகிஸ்தானியரும் சில இறுக்கமான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மாத்திரமே இலங்கைப் பிரஜா உரிமையைப் பெற அனுமதித்தது. அந்நாளின் பிரபல இலங்கையர் அனேகரால் (பிரதம மந்திரி உட்பட) இந்த நிபந்தனைகளை நிறைவு செய்ய முடியவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது. ஏனெனில் அவர்கள் பிறந்த காலத்தில் பிறப்புச்சான்றிதழ்கள் முறையாகக் கொடுக்கப்படுவதில்லை. அந்நிலையில் அவர்கள் மூதாதையோரின் கதி எவ்வாறிருந்திருக்கும்.
இங்கு உண்மையான ஒரு மனிதப் பிரச்சினை இருக்கிறதென்பது வெளிப்படை. இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள், சமூக முன்னேற்றத்துக்கு வழியேதுமில்லாமல் மிகவும் ஒடுக்கப்பட்ட வர்க்கமாவர். அவர்கள், ஐரோப்பியப் பெருந்தோட்ட உரிமையாளர்களால் கணிடி விவசாயிகளிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, லயன் காம்பராக்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். வெளியார்கள் தோட்டங்களினுட் பிரவேசிப்பதற்கு அனுமதி பெறவேண்டியிருந்தது. தோட்டங்களை உருவாக்குவதற்காகக் கண்டி விவசாயிகளிடமிருந்த நிலங்களின் ஒரு பகுதியைப் பறிமுதல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தின் அளவு பிரச்சாரகாரர்களினால் மிகைப்படுத்திக் கூறப்பட்டது. சுகாதார வசதியீனங்களும் நோய்களும் மிகுந்த நிலைமைகளில் இந்திய வம்சாவளிக் கூலித்தொழிலாளர்களைக் கொண்டு அடர்ந்த காடுகளை அழித்தே பெரும்பாலான தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், இங்கு கொண்டு வரப்பட்ட ஆரம்ப நாட்களில் மிகையான மரணவீதத்திற்குக் காரணமான நிலைமைகளிற் பிரயாணம் செய்தார்கள். அவர்களுள் அநேகர் இலங்கையைத் தவிர வேறொரு நாட்டையும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். கண்டி விவசாயிகளின் கோபமானது ஐரோப்பிய தோட்ட உரிமையாளருக்கும்,

Page 19
6
மலைநாட்டில் வர்த்தகத்தின் மூலம் பணம் சம்பாதித்த கரைநாட்டுச் சிங்கள வியாபாரிகளுக்கும் எதிராக எழுவதற்குப் பதிலாக, நடைமுறையில், இந்தியத் தொழிலாளருக்கு எதிராகத் திருப்பிவிடப்பட்டது.
அப்பொழுது உள்நாட்டு அலுவலகள் அமைச்சராயிருந்த திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி.யணிடாரநாயக்க, விவாதங்களின் போது தான் இராஜதந்திரம், ஞானம், சமாதானம் ஆகியவற்றின் நலன்களின் பேரில் இச்சட்டத்தை ஆதரித்த போதும், இந்த பிரச்சினை இன்னொரு கோணத்திலிருந்து அணுகப்படுவதையே விரும்பினேன் எனக் கூறியதன் மூலம் யு.என்.பியின் நிலைப்பாட்டிலிருந்து தம்மை சற்று ஒதுக்கிக் கொண்டார். "இந்தியப் பிரதம மந்திரியான நேரு இந்தப் பிரச்சினையை கணிசமானளவு புரிந்துள்ளதை ஏற்கனவே காட்டியுள்ளார்" எனத் தமதுரையில் கூறியுள்ளார். பண்டாரநாயக்கவின் அணுகுமுறை முதலில் இந்தியவம்சாவளியினருள் இலங்கைப் பிரசாயுரிமை வழங்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கையைப் பற்றியதாயிருந்தது. பொறுமை, ஆலோசனை, நீதியைப் பேணல் ஆகியவை தோட்டத் தொழிலாளரும் கண்டியரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு தீர்வை அளித்திருக்கக்கூடும். உதாரணமாக, தமிழரசுக்கட்சி குடியேற்றத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலே தோட்டத்தொழிலாளரை குடியமருமாறு தூண்டியிருக்கலாம் என்று பின்னர் ஆலோசனை கூறியது. அரச சபைக் காலகட்டமான முப்பதுகளில் கலாநிதி என்.எம்.பெரேரா தோட்டத்தொழிலாளர்கள் அதிகமாக வந்து சேர்வதால் எழும் அபாயத்தைச் கட்டிக் காட்டியதைக் கவனத்திற் கொள்ளலாம். தோட்டத் தொழிலாளின் வருகை பெருந்தோட்டத் தொழிலுக்கு மிகப் பயனுடையதென வாதிட்டவர் டி.எஸ்.சேனநாயக்க அல்லாது வேறு யாருமல்லர்.
குடியுரிமைச் சட்டத்துக்கெதிராக முதலாவது வழக்காளிக்குச் சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கு, கேகாலை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. கேகாலை மாவட்ட நீதிபதி என்.சிவஞானசுந்தரம், இச்சட்டம் இந்தியச் சமூகத்தின் வாக்குரிமையைப் பாதிக்கும் நோக்கம் கொணிடதென்றும் அடிப்படையில் செல்லுபடியாகாதெனவுந் தீர்ப்பளித்தார். உயர்நீதிமன்றம் (முதநாயக்க எதிர் சிவஞானசுந்தரம் 53 என்.எஸ்.ஆர். 25, 1952) வழக்கை விசாரணை செய்து அந்தச் சட்டம் தெளிவானது என்றும் அதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் அது எல்லா இனத்தினருக்கும் ஒரே விதமாய் பிரயோகிக்கப்படலாமென்பதால், பாகுபாடற்றது என்ற அடிப்படையில் மாவட்ட நீதிமன்றத்தின் முடிவு செல்லுபடியாகாதென நிராகரித்தது. பிரித்தானிய மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் (PRIWYCOUNCIL) நீதிக்குழுவுக்கு மேன்முறையீடு செய்தபோது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புச் சரியானதென அது தீர்ப்பளித்தது.
பிரச்சினையின் இருசாராரும் கொண்டுவரப்பட்ட இச் சட்டத் தொடர்கள் வெறுமனே சட்ட உபாயங்களையே குறிக்கின்றன என்பதை அறிவார்கள். உண்மையில் பலிக்குக் குறிவைக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவளியினரே என்பதை அனைவரும் அறிவார்கள். விவாதத்தின்போது வெளிப்பட்ட இனவாத உணர்வுகள் இதற்குச் சான்று. சட்டத்தின் பாதிப்பு மூன்று தனித்தனிச் சட்டவிதிகளாகப் பிரிக்கப்பட்டதன்மூலம் தடுக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டவிதியும் தன்னளவில் மதிக்கத்தக்கதாகத் தோன்றலாம். ஆகவே ஒரு நீதிபதி, அவை

7
ஒவ்வொன்றும் பாரபட்சமானவையாகத் தோன்றாத அளவிற் செல்லுபடியாகுமெனக் கூறலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு சர்வதேச நெறிமுறையின்படியும் இச்சட்டம் அநீதியானதும், பாரபட்சமானதுமாகும். இந்த நாட்டிலுள்ள அநேகர் அதை ஏற்றுக்கொண்டனர். எனவே பிரித்தானியா சுதந்திர இலங்கையிலே சனநாயகத்திற்கு முதலாவது உதைகொடுக்க உதவிற்று . பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிரித்தானிய நீதியின் தரம் பிரித்தானியாவின் ஏனைய நலன்களால் ஆளப்படுகின்றது என்பதை பலரும் அறிவர். இலங்கையிலுள்ள தேயிலைத்தோட்டங்களில் அதிகமானவை பிரித்தானியருடையது. பிரித்தானியா திருகோணமலையில் கடற்படைத்தளத்தை வைத்திருந்தது.
அந்தக்காலத்தில் இச்சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் கொழும்பில் ஊர்வலங்களும் எதிர்ப்புக்கூட்டங்களும் சத்தியாக்கிரகங்களும் நடத்துவதற்குக் தடை ஏதும் இருக்கவில்லை. அவர்கள் அவற்றை நடத்தினார்கள். நாளடைவில் இந்தச் சுதந்திரமும் பறிக்கப்பட்டது. இச்சுதந்திரத்தைப் பறிக்கும் செயல்முறை 1948ல் ஆரம்பித்து (பொதுவேலை நிறுத்தத்தின்போது கந்தசாமியின் கொலை, 1952ல் அரிசி வேலைநிறுத்தம்) 30 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்சக்கட்டத்தை அடைந்தது. பொலிஸார் வாளா நிற்க, வேலைநிறுத்தக்காரரும் எதிர்ப்பாளரும் அரசாங்க மந்திரிகளின் கைக்கூலிகளான காடையர்களாற் கத்தியால் குத்தப்பட்டார்கள், சைக்கிள் சங்கிலிகளால் தாக்கப்பட்டார்கள். 1948-49 சட்ட ஆக்கங்கள் கலந்தாலோசனைக்குப் பதிலாக சீர்கேடான ஓர் அரசியலுக்கு முன்னுதாரணத்தை அமைத்தன. ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது, பிரதம நீதியரசர்களின் நியமனங்கள் பற்றி நடந்த சச்சரவுகளை மக்கள் நம்ப முடியாத நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திருமதிசிறிமா பண்டாரநாயக்க பிரதமராயிருந்த காலத்தில் 1970 முதல் 1977 வரை அவரது அதிகார துஷ்பிரயோகங்களைப் பற்றி விசாரணை செய்ய ஜனாதிபதி ஜயவர்த்தனவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளுள் ஒருவரும் திருமதி சிறிமா பண்டாரநாயக்காவின் அரசியலி உரிமைகளை ஏழு ஆணிடுகளுக்கு இடைநிறுத்தி வைக்கவேண்டுமென விதிப்புரை செய்தவருமான ஒருவர் தன் முன்னைய பதவிக்காலமொன்றில் ஒழுங்கீனமான நடத்தை காரணமாக குற்றவாளியாகப் பின்னர் காணப்பட்டார். 1971 ஏப்ரல், மே மாதங்களிலும் 1983 யூலையில் அவசரகாலச்சட்ட ஒழுங்கு 15ஏ நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஆயுதமேந்திய சீருடை அணிந்த ஒவ்வொருவரும் தம் விருப்பப்படி மறைமுக நீதிபதியாக மாறினர். சட்டநீதிமன்றங்கள் முக்கிய சந்தர்ப்பங்களில் அநேகமாக அநாவசியமாகிவிட்டன. இவ்வாறு சனநாயகத்தின் ஒரு முக்கிய தூணான நீதித்துறை களங்கப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், 1957ம் ஆண்டு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தத்தை வஞ்சக நோக்கில் எதிர்த்துப் பிரச்சாரஞ் செய்த ஜயவர்த்தனவிடம், நிர்ப்பந்தத்தின் கீழ் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தையொத்த அரசியல் தீர்வுகளைக் கொண்ட 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்பது பற்றிய முடிவை எடுக்கும் பொறுப்பு விடப்பட்டது. இதைவிட வேறு விபரீதங்களும் உண்டு: 1947-48 விவாதங்களின் போது திரு.ஏரத்நாயக்க, இலங்கை இந்திய காங்கிரஸ் தலைவரான தொண்டமான் இலங்கையை

Page 20
8
இந்தியாவுடன் இணைக்கும் நோக்கம் கொண்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். திருதொண்டமான் காலப்போக்கில் ஜயவர்த்தன தலைமையிலான யூஎன்.பியின் நெருங்கிய கூட்டாளியாக மாறிவிட்டார். அவர் ஜனாதிபதித் தேர்தலிலும், 1982ல் நடைபெற்ற பிரச்சினைக்குரிய பொதுசன வாக்கெடுப்பிலும் ஜயவர்த்தனவை ஆதரித்தார். முக்கியமான அடுத்த ஆறு ஆண்டுக்காலத்திற்கு மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதறி குள்ள உரிமையை இப்பொதுசனவாக்குரிமையானது எவ்வாறு முழுநாட்டிற்குமே இல்லாமலாக்கியது என்பது பற்றிப் பின்னர் விபரிக்கப்படும். தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மைகளைச் செய்யப் போவதாகப் பொய் உறுதிகளை வழங்கி திருஜயவர்த்தன தோட்டப்பகுதிகளில் சமாதானத்தையும் அதனுடன் ஆட்சியில் தடைப்படாது தொடர்வதையும் பேணிக்கொண்டார். திருடிஎஸ்.சேனநாயக்க உண்மையில் இலங்கையின் நலன்களைப் பாதுகாக்கும் எனும் பேரில் இந்தியாவுடன் இலங்கையைச் சேர்க்கும் கூட்டிணைப்பை ஆதரித்து முன்னர் நின்றமை இன்னுமொரு விபரீதமாகும். 1987 யூலையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதும் இலங்கை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளப்படும் என்று திருரத்நாயக்க அஞ்சியது நிஜமாகும் நிலை அண்மித்துவிட்டது எனச் சிலர் எண்ணியிருக்கக் கூடும். ஆனால் இந்த விடயத்தில் பிரச்சினைக்குரிய மசோதாக்களுக்கு திருரத்நாயக்க எவ்வாறு வாக்களித்தார் என்பது இந்த இடைப்பட்ட காலத்தில் திரு தொண்டமான் செய்தவற்றிலும் அதிமுக்கியமானது.
12 இடதுசாரிகள்
1947ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இடதுசாரிகளின் பெறுபேறுகள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்தன. இடதுசரிகட்கு அநேக வாய்ப்புகள் இருந்த போதும், அவர்கள் தம்மிடையேயிருந்த வேறுபாடுகளை பெருமளவு மிகைப்படுத்தியதாலும் நாடாளுமன்றத்தைப் பற்றிக் கொண்டிருந்த தெளிவீனமான பார்வையாலும் முடமாக்கப்பட்டனர். அப்பொ இடதுசாரி எதிர்க்குழுவானது எல்.எல்எஸ்பி, பிஎல்பி(போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி), கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. தேர்தலிலே இக்கட்சிகள் 95 மொத்த ஆசனங்களில் 20ஐக் கைப்பற்றின. யு.என்.பி 41 ஆசனங்களைக் கைப்பற்றினாலும் சிறுபான்மையாகவே இருந்தது. யு.என்.பியை எதிர்த்த சுயேச்சைக் குழுக்களும், ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி, ஒரு மாற்று அரசாங்கம் அமைக்கும் குழுவாக அமையப் பெருமுயற்சி செய்தன. அரசாங்கத்தை அமைக்கின்ற குழு மேலும் ஆறு ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும். இந்த ஆறு ஆசனங்களும் பிரதம மந்திரியின் சிபாரிசின் பேரில் மகாதேசாதிபதியால்(பிரித்தானிய அரச பிரதிநிதி) நியமிக்கப்படுவர். எல்.எஸ்.எஸ்.பி அத்தகைய ஒரு அரசாங்கத்தில் பங்குபற்ற மறுத்தது. அதன் தலைவர் கலாநிதி என்.எம்.பெரேரா தாங்கள் ஒரு புரட்சிகரக் கட்சி என்றும் ஆகவே முதலாளித்துவ அரசாங்கத்தில் பணியாற்ற மாட்டோம் எனவும் விளக்கமளித்தார். ஆயினும் ஒரு முற்போக்கான மாற்று அரசாங்கத்தை அமைப்பவர்களுக்கு உதவி செய்யத் தம் விருப்பைத் தெரிவித்தார்.
அதன் பின்னர், ஏறக்குறைய மூன்றாண்டுகளாக இடதுசாரிகள் எதிர்க்கட்சித் தலைமையை ஏற்கவும் உடன்படவில்லை. 1950ம் ஆண்டு ஜூன் மாதம்

9
கலாநிதி என்.எம்.பெரேரா எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மாட்சிமை தங்கிய மன்னரின் விகவாசமான எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பிரிக்கமுடியாத கூறாக இருப்பதனாற் பதவியை ஏற்றுக்கொள்ளல் இன்றைய சமூக அமைப்புத் தொடரவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வதாகவே கருதப்படும் எனக் கம்யூனிஸ்ட் கட்சி வாதிட்டது.
நாடாளுமன்றத்துக்குட் புகுந்தபின் இடதுசாரிகள் அங்கே என்ன செய்யவேண்டுமென்பதுபற்றித் தெளிவான கருத்தைக் கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய பேச்சுக்கள் நாடாளுமன்றமானது தேசத்தின் தலைவிதிகளை நிர்ணயிக்கின்ற நடுவர் என்பதை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. இது பயமும் சந்தர்ப்பவாதமும் கலந்த ஒரு போக்கை யு.என்.பி மேற்கொள்வதை இயலுமாக்கிற்று. ஒரு தெளிவான பார்வையை முன்வைப்பதற்கு நாடாளுமன்றம் நியாயத்துக்கான ஒரு இடமாயிருப்பதுடன், இடதுசாரிகள் தம் சமூக இலக்குகளை அடைவதற்கான வாய்ப்பைக் கொணி டுள்ளதென்று இடதுசாரிகளை இசையவைப்பதற்கு முயல்வதற்கு மாறாக இடதுசாரிகளின் ஆதரவுத் தளத்தின் பெரும்பகுதியை வாக்குரிமையற்றவர்களாக்குவதில் அது கவனங் காட்டியது. மேலும் இடதுசாரிகளுடன் கலந்தாலோசித்துச் செயலாற்றத் தயக்கம் காட்டியது. அத்துடன் இடதுசாரிப் பிரதிநிதிகளைக் கொண்ட தொகுதிகளின் தேவைகள் கவனிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி பற்றிய யுஎன்பியின் பார்வையை விளக்கிய சேர்.ஜோன்கொத்தலாவலை 1950 ஜூன் 9ல் "இன்று நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியானது ஜனநாயக முறைகளில் நம்பிக்கையே இல்லாத ஒரு எதிர்க்கட்சியாகும். அதனாலேயே அரசாங்கத்திற்கு அதன் பணிகள் இடர்பாடானவையாகக் காணப்படுகின்றன. நாம் இந்த எதிர்க்கட்சியை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்காமல் அரசின் எதிரியாகக் கருதிப் போராடவேண்டும். ஒருமுறை ஆட்சிக்குள் நுழைந்தால் பின் அவர்கள் வெளியேறமாட்டார்கள். அதற்க்குப்பிறகு தேர்தலில் வாக்களிக்கிற வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்குமா என்பது பற்றி உத்தரவாதம் எதுவும் இல்லை" என்று கூறினார்.
பிரித்தானிய பாராளுமன்றக் கீழவை அதன் இலங்கை வாரிசுகளுக்கு சபாநாயகருக்குரிய முத்திரைக் கோலும், நாற்காலியும் அன்பளித்ததையையிட்டு 1949ம் ஆண்டு ஜனவரி 11ம் திகதி நடந்த விழாவைப் புறக்கணிப்பதென இடதுசாரிகள் விட்ட அறிக்கையிலே நாடாளுமன்ற அமைப்புப் பற்றிய இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாடு புலனானது. நாடாளுமன்ற மரபின்படி இவ்வாறான விடயங்கள் அனைத்தையிட்டும் எதிர்க்கட்சியைக் கலந்தாலோசிப்பது அரசாங்கத்தின் கடமையாயிருக்கும்போது, அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்க்கட்சியைக் கலந்தாலோசிக்கத் தவறிவிட்டமை புறக்கணிப்புக்குரிய ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. எதிர்க்கட்சியானது அரசின் விசுவாசமான எதிர்க்கட்சியாக நடத்தப்படவில்லையென்ற முறைப்பாடும் இருந்தது. பிரித்தானியாவில் பயின்று வந்த இடதுசாரிக் கல்விமான்கள் உறுதியற்றநிலையில் சோர்வடைந்தபோது அன்றைய விவகாரங்கள் பெருங்குடிக்கனவான்களாலும், ஓய்வு பெற்ற இராணுவ அலுவலர்களாலும் உலகப் போக்குக்கேற்ப வழி நடத்தப்பட்டன.
1947ம் ஆண்டு முதல் இடதுசாரிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுவந்தன. இவை வரைமுறைக்குட்பட்ட வெற்றியைப் பெற்றன.

Page 21
0
1950ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி போல்ஷவிக் லெனினிஸ்ட் கட்சி லசசகட்சியுடன் இணைந்தது. 1951இன் ஆரம்பத்திலே லசசக தன் இறுதி நோக்கம் நேரடியான மக்கள் போராட்டத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதே தவிர நாடாளுமன்றச் சாதனங்கள் மூலமோ அதன் நிர்வாகத்தின் மூலமோ S96ögpu 6f6ØT 9 gplŝuJTf5f fin-fuu. (-57 Uuh: A.J.Wilson, "Oppositional Politics in Ceylon (1947-68)" Government and Opposition Vol.4 No. 1 Winter 1969)
இடதுசாரிகள் இவ்வாறு தமது செயலி முறைக்கும் வாய்ச்சவடாலுக்குமிடையே மிகுந்த வேறுபாட்டுடன் பகட்டுடன் நடந்து கொண்டனர். இந்த இரண்டக நிலையை அவர்களின் எதிரிகள் பூரணமாகப் பயன்படுத்தினர். இடதுசாரிகளின் பிரச்சாரம் வலதுசாரிகளின் இனவாதப் பிரச்சாரத்துடன் ஒப்பிடுகையில் தீங்கற்றதாயிருந்தபோதும், வலதுசரிகள் அதை நாத்திக சர்வாதிகாரம் பற்றிய பயத்தை அதிகரிப்பதற்குப் பயன்படுத்தினர். என்.எம்.பெரேரா போன்ற இடதுசாரித் தலைவர்கள், ரஷ்யப்புரட்சியை அடுத்து, அதன் தாக்கம் மிகுதியாயிருந்த காலத்தில் பிரித்தானியாவிலே லண்டன் பொருளியற் கல்விக்கூடத்தில் ஹறோல்ட் லாஸ்கி போன்றவர்களின் கீழ்க் கல்வி பெற்றவர்களாவர். அவர்கள் நேரடி மக்கள் போராட்டம் பற்றிப் பேசும்போது ரஷ்யப் புரட்சி பற்றிய பிரச்சாரத்தையும் அதுபற்றிய கற்பனையான வடிவத்தையும் பயன்படுத்தினர். அவை வரைவிலக்கணமின்றியும் தெளிவில்லாமலும் இருந்தன. அவர்கள் தம் நடைமுறையிலும், ஈடுபாடுகளிலும் பெரும்பாலும் ஜனநாயகவாதிகளாயிருந்தனர். யு.என்.பியை விட மிக அதிகமாக அவர்கள் ஜனநாயகவாதிகளாயிருந்தனர் என்பது அதிகாரபூர்வமாகவே பதிவாகியுள்ளது. நேரடி மக்கள் போராட்டம் ஜனநாயகமுறையில் இருக்கமுடியாதென்பதற்கு எதுவித காரணமுமில்லை. எனவே, இடதுசாரிகள் வர்க்கப் போரைப் பற்றிக் கற்பனையில் பேசும்போது, வலதுசாரிகள் ஜனநாயகம் பற்றிப் பேசிக்கொண்டு நடைமுறையில் சட்டத்தின் மூலமும் பொலிஸ் நடவடிக்கை மூலமும் போர் நடத்தினர். மீண்டும், மாக்ஸிஸ்ட் நாத்திக சர்வாதிகாரம் பற்றிய பயங்களும் 1970ம் ஆண்டுத் தேர்தலுக்கு முந்திய பிரச்சாரங்களில் இன்னும் பலமாக எழுப்பப்பட்டது. அந்நாட்களில், இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாடு பயன்களை அளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தத்தக்க திட்டங்களை உருவாக்குவதைத் தடுத்தது. அவர்கள் தமது திட்டங்கள் எப்படியாவது நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையைத் தமது பாராளுமன்றத் தேர்தற்தொகுதியினருக்கு அளித்தனர். ஒரு விவசாய நாட்டிலே இடதுசாரிகள் தம்மோடு இணைந்த தொழிற்சங்கங்கள் மூலம் வேலைநிறுத்தத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியமை வலதுசாரிகளின் பிரச்சாரத்துக்கு வசதியாகியது. அநேக வழிகளில், நாடாளுமன்ற இடதுசாரிகளின் தலைவிதி, 1970களிலும் 1980களின் ஆரம்பத்திலும் தஐ.வி.மு.மின் தலைவிதியை ஒத்திருந்தது. நாடாளுமன்றம் அரசாங்கத்தின் கருவி என்ற விடயத்தில் இடதுசாரிகள் தமது குழப்பநிலையைத் தீர்க்கத்தவறிவிட்டனர். ஒருபுறத்தில், அவர்கள் நாடாளுமன்றத்திலே பிரதிநிதித்துவத்தைத் தேடி அதன் விவகாரங்களில் பூரணமாகப் பங்கு பற்ற விரும்பினர். இப்போக்கில் வெகுதூரம் வந்த பின்னர், நாடாளுமன்ற மூலம் நல்ல விடயங்கள் சாத்தியம் என அங்கீகரித்தனர். அவ்வாறாயின் அதனையடுத்து உடனடியாகவே ஒரு மாற்றுக் கூட்டரசாங்கத்தை

11
அமைப்பதற்கிருந்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அத்துடன் சீர்திருத்தத்திட்டத்தை அமுல்படுத்தும் சகல வாய்ப்புக்களையும் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஒதுங்கி நின்று புரட்சி பற்றிச் சூசகமாகக் குறிப்பிடுவதை விரும்பியதனாலும் இதைச் செய்யத் தவறிவிட்டனர். தேர்தற் தொகுதி வாக்காளர்களோ தமது தொகுதியை முன்னேற்றும் வாய்ப்புள்ள விடயங்களில் சீர்திருத்தத்தையே விரும்பினர். மேலும், இடதுசாரிகள் சுயமொழிமூலம் கல்விபெற்ற, தேசிய உணர்வுடைய புத்திஜீவிகளைக் கொண்ட மத்தியதர வர்க்கத்தினரின் கருத்துக்களை வென்றெடுப்பதற்கேற்பத் தமது அணுகுமுறையை மாற்ற முயலவில்லை. இப் பகுதியினர் தாம் யு.என்.பியால் கைவிடப்பட்டதாக உணர்ந்தனர். இதனால் வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பு எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக்கவின் பூரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விடப்பட்டது. தாங்கள் அளித்த வாக்குறுதிகட்கும் தங்களால் அடைந்து கொள்ள முடிந்தவற்றிற்கும் இடையிலான வேறுபாடு அதிகரித்து வந்ததால், இடதுசரிகள் இறுதியில் நம்பிக்கை இழந்ததுடன், அறுபதுகளின் முற்பகுதியிலும் 1970-76 இற்கு இடையிலும் கோட்பாட்டளவிற் கேவலமான இணக்கப்பாட்டை ஏற்படுத்திய கூட்டு அரசாங்கங்களில் பின்னர் பங்கு கொள்ளவும் நேர்ந்தது. 1971ல் இளைஞர் எழுச்சி ஏற்பட்டபோது அதிகாரத்தில் இருந்த இடதுசாரிகள் தம்மைத் தப்புவிக்க வேண்டிய நிலையில் இருந்தனர். அதேபோல் உயர் வகுப்பினரால் வழிநடத்தப்பட்ட இராணுவமும் பொலிசும் 10 முதல் 15 ஆயிரம் இளைஞர்களை, குறிப்பாக படித்த வேலையற்ற கிராமிய இளைஞர்களைக் கொன்று குவித்தன. மேலும் 1972ம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பை வரைவதற்கு கலாநிதி கொல்வின் ஆர்டிசில்வா தலைமை வகித்தார். அந்த அரசியல் யாப்பு, பெயரளவில் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகக் கருதப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பின் 29ம் பிரிவையும் அகற்றியது. அந்தக் குடியரசு யாப்பு பெளத்தசமயத்தை அரச மதமாக ஆக்கியதுடன் 1950களில் இடதுசாரிகள் துணிகரமாக ஆதரித்து நின்ற சம அந்தஸ்த்துக்கு மாறாக சிங்கள மொழியைத் தனியே அரச கரும மொழியாக ஆக்கியது. 1958ம் ஆண்டு இனக்கலவரக்காலத்தில் இடதுசாரிகள் கொழும்பிலே தமது ஆதரவாளர்களை ஒன்று திரட்டவும் சில பிரதேசங்களில் தமிழர்களைப் பாதுகாக்கவும் முடியுமான அளவு செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஆனால் ஜனாதிபதி ஜயவர்த்தன 1982 டிசம்பரில் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை மோசடியான பொதுசன வாக்கெடுப்பின் மூலம் நீடித்த பொழுது இடதுசாரிகளால் ஓர் எதிர்ப்பு ஊர்வலத்தைத்தானும் நடத்த முடியவில்லை.
இடதுசாரிகள் அதிகம் உணர்ந்து கொள்ளாத போதும் முதலாவது உலகப் போருக்கு (1914-18) முந்திய தசாப்தங்களிலே சில ஐரோப்பிய சமூக ஜனநாயக கட்சிகளின் சோக முடிவுகளையே அவர்கள் இங்கு மீண்டும் கண்டனர். டென்மார்க் சமூக ஜனநாயகக் கட்சி தொழிற்சங்க அடித்தளத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மார்க்ஸிய கோட்பாடுகளைத் தவிர்த்து, விவசாய கூட்டுறவுகளின் தேவைகளுக்கேற்பத் தனது வேலைத்திட்டங்களைச் சரிப்படுத்தியதன் மூலம் தளராது தனது பலத்தை அதிகரித்தது. 35 ஆண்டுகளில் (1913ல்) ஒரு கூட்டு அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பெற்று அக் கட்சி சமூக நலச்சட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு நிலையை அடைந்தது. பிரித்தானியாவிலும் ஸ்கண்டினேவியாவிலும் சோசலிசக்கட்சிகள் அதே நடைமுறையைக்

Page 22
12
கடைப்பிடித்தன. 1875ல் ஸ்தாபிக்கப்பட்டு, ஆகஸ்ட் பேபல் (August BeBel) என்பவரால் தலைமைதாங்கப்பட்ட ஜேர்மன் சமூக ஜனநாயகக்கட்சி கோதாத் திட்டத்தைக் (Gotha programme) கைக்கொண்டது. இது ஒரு வித சமரசத் திட்டமாகும். இது புரட்சிகர மாக்ஸிஸம், சர்வசனவாக்குரிமை இருப்பதால் காலங்கடந்ததாகிவிட்டது என்று கருதியது. வேறு வார்த்தைகளிற் கூறுவதானால், தொழிலாளிவர்க்க நலன்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்துடன் இணக்கமுடையவை என்று கூறும் லாசால் (LaSSale) தலைமையிலான வடக்குப் பிரிவினரின் கருத்தைக் கொண்டிருந்தது. அதேவேளை, அது மாக்ஸினுடைய வர்க்கப் போராட்டப் பார்வையையும் வரலாறு பற்றிய பொருள்முதல்வாத விளக்கத்தையும் ஏற்றுக்கொண்டது. இவ்வாறு அது புரட்சிகரக் கோட்பாடுகளை முன்வைக்கும் அதேவேளை தீர்க்கமான சீர்திருத்தவாத திரிபுவாதக் கோட்பாடுகளையும் தன்னுள் இணைத்திருந்தது. தாராளவாதக் கருத்துக்களையும் மத்தியதர வர்க்கக் கருத்துக்களையும் அன்னியப்படுத்தியதாலும, தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையேயுள்ள தீர்க்கமுடியாத முரணிபாடுகளை நிலைநிறுத்தியதாலும் மேம்போக்கான ஐக்கியம் பேணப்பட்டது. இது சவால்விடும் வீராவேச உரைகட்கும் பலவீனமான செயல்முறைகட்கும் இடையே ஒரு பயனற்ற இணைப்பையே விளைவித்தது. இது எட்வாட் பேர்ன்ஸ்ரைன் (Edward Bernstein) தலைமையில் ஒரு திரிபுவாதக் குழுவையும் கட்சிக்குள்ளேயே வளர்த்தது. அவர் மாக்ஸியப் பகுப்பாய்வும் அதன் தீர்க்க தரிசனங்களும் நடைமுறையில் நிரூபிக்கப்படவில்லை என்று வாதாடினார். அதற்காதாரமாகத் தொழிலாளர்கள் இரக்கமில்லாதவகையில் மேன்மேலும் ஏழைகளாகவில்லை, அடக்கப்படவுமில்லை, அவர்கள் மேலும் வசதியாகவும் சுதந்திரமாகவும் வருகின்றார்கள் எனக் கூறினார். இக்குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், தொழிலாளர்களின் சர்வதேச சகோதரத்துவம் என்ற இலட்சியத்தை கைவிட்டதுடன் , 1914- 18 உலகப் போருக்கு இட்டுச் சென்ற இராணுவவாதத்தையும் தேசியவாதத்தையும் ஆதரித்தார்கள்.
இலங்கையிலே இன்று புனரமைக்கப்பட்ட இடதுசாரிகள், குழுவாதமற்ற சோசலிசத்தின் இழந்த இலட்சியங்களை மீண்டும் பற்றிக் கொண்டு அவற்றை மக்கள் புரிந்து கொள்ளக்கூடியதும், ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான எளிய வார்த்தைகளில் வழங்குவர் எனும் எண்ணம் இன்றும் தொட்டிற் பருவத்திலேயே உள்ளது. இடதுசரிகள் அண்மையில் நம்பிக்கை தரவல்ல இரு தலைவர்களை இழந்துவிட்டார்கள். அவர்கள் சரத் முத்தெட்டுவேகமவும், விஜய குமாரணதுங்கவும் ஆவர். 13 தமிழர்கள்
முன்னர் கூறியது போல 1940களிலிருந்து தமிழர் தலைமை, பொதுவாகத் தனது கோட்பாட்டைப் பார்க்கிலும் தோற்றப்பாட்டிலேனும் பொருளாதார இலாபம் தரவல்ல புத்திசாதுரியத்துக்கு முக்கியத்துவம் தந்தது. தார்மீகத்துக்குப் புறம்பான இச் சாதுரியமான செயற்பாடுகளின் பயன்கள் வெறும் மாயைகளே. சுதந்திரத்துக்கு முன்னர் தமிழர் சமஷ்டி முறைபற்றி அக்கறை காட்டவில்லையெனின் அதற்குத் தகுந்த பொருளியற் காரணங்கள் இருந்தன. தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் தமிழ்ப்பேசும் பிரதேசங்களுக்கு வெளியே அரசாங்கதொழில்களைச் சார்ந்திருந்தனர். ஒற்றையாட்சி அரசு ஒரு தார்மீகப் பிரச்சினையானது. மேலும், இலங்கையில்

13
அத்தகைய ஓர் அரசு, பிரித்தானியாவில் உள்ளதுபோற் போதிய அதிகாரப் பரவலாக்கலுடன் செயற்பட்டிருக்க முடியும். இலங்கை மக்கள் மரபு முறையிலும் பண்பாட்டிலும் பிரித்தானியரை விடப் பலவிதங்களிற் பொதுவான அடிப்படையைக் கொண்டிருந்தனர். கடந்தகாலப் பிணக்குகளிற் கூட மொழி, மதம் சார்ந்தவற்றை விட வம்ச ஆட்சியுரிமை பற்றியவையே முக்கியமாயிருந்தன.
ஒருபுறம், நியாயமற்ற ஐம்பதுக்கைம்பது பிரதிநிதித்துவத்தைக் கேரி அதைப் பெறத்தவறிய பின்பு, மறுபுறம், அதிகாரங்களை மத்தியிற் குவித்த அரசியல் யாப்பின் கீழ் (பிரித்தானியாவினது போலல்ல) சுதந்திரத்தை, அதன் இனவாத அரசியலுடன் ஏற்றுக் கொண்டதன் மூலம் தமிழ்த்தலைமை தவறிழைத்தது. இந்தத் தவறைச் செய்த பின்னரும் தமிழ் மக்களின் நலன்களைத் தெளிவாக முன்வைக்க வல்ல ஒரு தேசிய அமைப்பாகத் தம்மை, இணைத்துக் கொள்ளவில்லை. இனவாத அரசியல் முனைப்பை, அதாவது ஐம்பதுக்கைம்பது கோரிக்கையைத், தொடர்ந்து கேவலமான சரணாகதி நிகழ்ந்தது: பெரும்பாலான தமிழ்த்தலைவர்கள் மந்திரிப் பதவிகளுக்காகவும் இலங்கைத் தமிழ் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற வாக்குறுதிக்கு மதிப்பளித்தும் மலையகத் தமிழர்களைக் கைவிட்டமையாகும். இவையெல்லாம் தற்காலிக பொருளியல் உத்தரவாத வாக்குறுதிகளை வழங்கி விலைக்கு வாங்கக்கூடிய கொள்கையற்ற மனிதரே இலங்கைத்தமிழர் என்ற நிரந்தரமான ஒரு படிமத்தை உருவாக்க உதவியது. தமிழர்கள், தேசியமட்டத்தில் அரசியலிற் பங்குபற்றத் தவறியமை சிங்கள இனவாதிகள் தமிழர்களைப் பற்றிய ஒரு படிமத்தை உருவாக்கி இன வெறுப்பைத் தூண்டிவிடுவதற்கும் உதவியது.
மறுபுறம் அநேக தமிழர்கள் இனவாத அரசியல் தம்மீது திணிக்கப்பட்டதாக வாதாடினர். அநீதியான குடியுரிமைச் சட்டத்துக்குச் சட்டப் பரிகாரம் காணும் சமஷ்டி ஆட்சிக்கான முயற்சி மறிக்கப்பட்டமை சட்டத்தின் மூலமும் அரசியல் யாப்பு மூலமும் தீர்வுக்கு வழிகள் கிடையாதென்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டியது. 1960க்குப் பின் இடதுசாரிகளும் இனவாதக் கொள்கைகளுக்கு இடம்விட்டபோது, தேசிய அரசியலிற் பிரவேசிப்பது மேலும் இடர்பாடாகியது. எனினும் நாடாளுமன்றத்திற் சில நெருக்கடியான காலங்களில் தமிழ் எதிர்க்கட்சிகளே ஐனநாயகத்தை உயிர்ப்புடன் பேண உதவின என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
பிராந்தியக் கட்சிகள் என்ற நிலையிலுங் கூடத், தமிழரசுக்கட்சியும் தஐவி முன்னணியும் தேசியப்பிரச்சினைகளில் உற்சாகமாகப் பங்களித்திருக்கவும் அதன் மூலம் சிங்களவரது நம்பிக்கையைப் பெற்றிருக்கவும் முடியும். சிங்களவர் நம்பிக்கைத்துரோகிகள் என்ற கருத்தாக்கத்தின் மீது உருவான அவர்களது அரசியற் கோட்பாடு அவர்களை அவ்வாறு செயற்படாமற் தடுத்தது. 1980ம் ஆண்டின் பொதுவேலைநிறுத்தமும் அரசாங்கம் வெறுக்கத்தக்க முறையில் அதைக் கையாணிடமையும் 1982 டிசம்பரில் நடந்த மோசடியான பொதுசனவாக்கெடுப்பும் குறிப்பிடத்தக்க பாரிய தேசியப் பிரச்சினைகள். ஆனால் தஐ.வி.மு தலைமை தன் குறுகிய தேசியவாதக் கொள்கையினால் இவை தெற்கிற்குரிய பிரச்சினைகள் என நிராகரித்தது. 194849ல் போல இப்போதும் ஒரு தெரிவு இவர்கள் முன்னால் இருந்தது; முழு நாட்டின் நன்மைக்கு உகந்ததும் நேர்மையானதுமான நிலைப்பாட்டினைத் தெரிவதா அல்லது

Page 23
14
அப்போதைய சந்தர்ப்பத்திற்கு எது வசதியானதுசாதுரியமானது என்று பார்ப்பதா என்பதே அது. ஜே.ஆர்.ஜயவர்த்தனாவின் அரசாங்கம் பயமுறுத்தலும், தெளிவற்ற வாக்குறுதிகளும், சில ஆதாயங்களும் சேர்ந்த ஒரு கலவையின் மூலம் இம் முக்கியமான தேசியப்பிரச்சினைகளில் தஐவிமுயை மெளனம் சாதிக்க செய்தது. இது மீண்டும் தமிழர்களைத் தனிமைப்படுத்தி ஜயவர்த்தன அரசாங்கத்தின் கிருபையிலும் அவநம்பிக்கையிலும் தங்கியிருக்கவும் உதவியது.
அடுத்த விடயம் 1977-83க்கு இடையில் நாடாளுமன்றம் பற்றிய தஐ.வி.முன் இரட்டை நிலைப்பாடாகும். அதற்கு அக்கட்சி ஒரு குறுகிய தேசியவாதக் கருத்தமைவால் வழிநடத்தப்பட்டது. பேச்சளவில், அக்கட்சி தமிழ் பிரதேசங்களில் தான் பெற்ற நாடாளுமன்ற வாக்குகள் தமிழ் ஈழம் என்னும் ஒரு தனிநாட்டை உருவாக்க அளிக்கப்பட்ட அதிகாரம் எனவும் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள இராணுவம் ஒரு ஆக்கிரமிப்புப் படை எனவும் கூறி வந்தது. மேலும், ஒரு தனிநாட்டை நிதர்சனம் ஆக்குவதற்கான ஒரு இரகசிய திட்டம் பற்றியும் அது சூசகமாகக் குறிப்பிட்டிருந்தது. அவ்வாறு பொதுமக்களின் உள்ளங்களில் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டத்துக்கு ஓரளவு அங்கீகாரத்தை வழங்க உதவியது. தஐ.வி.மு அதன் செயற்பாடுகளில் விசுவாசமான ஒரு நாடாளுமன்ற எதிர்க்கட்சியாகவே நடந்து கொண்டது. இந்தத் தீர்க்கமுடியாத இரட்டை, நிலைப்பாடு அபாயகரமான ஒரு கலவையாயிற்று. தஐ.வி.மு போர் பற்றி சூசகமாகக் குறிப்பிட்ட அதேவேளை நடைமுறையிற் சமாதானத்தைக் கடைப்பிடித்துப் போர் செய்வதை மற்றவர்களிடம் விட்டுவிட்டது.
1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தஐவி.மு. யும் அவர்களுக்கு வாக்களித்தோரும், அவர்கள் நாடாளுமன்ற விவகாரங்களில் பங்குபற்றுவதை விரும்பினர். 1977ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவர நிலைமையில், தமிழரின் கருத்துப்படி, அகதிகளை மீளக்குடியமர்த்தலும் வட கிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தியும் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இதற்காகத் தர்ம ஸ்தாபனங்களிடமிருந்தும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டது. தமிழர்கள் இந்தப் பிரதேசங்களில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்பட்டார்கள். இவை நடைபெற அரசினால் வழங்கப்பட்ட சேவைகளான வங்கி, போக்குவரத்து, தொலைத் தகவற் தொடர்பு, பொலிஸ் முதலியன பயன்படுத்தப்பட்டன. முழு நாட்டிற்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட கடன்வழங்கல், விவசாயசேவைகள் ஆகியவற்றிலிருந்து தமிழ் விவசாயிகள் நன்மை பெற்றுக்கொண்டிருந்தார்கள். தமிழரின் இத்தேவைகள் வழங்கப்பட்டபொழுது, சாதாரண அணுகுமுறையினால் நாடாளுமன்றத்தினூடு சாத்தியமான நன்மையின் ஒரு தோற்றுவாய் இனங்காணப்பட்டிருத்தல் வேண்டும். அத்துடன் இன்றைய அரசு இயந்திரம் மேலும் நீதியாக இருக்கும் வகையிலான ஒரு சீர்திருத்தம் வற்புறுத்தப்பட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் அரசியற் செயற்பாடுகள் நாடு தழுவிய எதிர்ப்புகளுடன் ஒரு பொது இலட்சியத்தைக் கண்டு, இனவாத சக்திகளைத் தனிமைப்படுத்துமாறு நெறிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தமிழர்கள் மாத்திரம் பொலிசாருடன் பிரச்சினைப்படவில்லை. பல்தேசியக்கம்பெனிகளின் நலன்களுக்காக நிலங்களைப் பறிகொடுத்த சிங்கள விவசாயிகள், மொனராகலையிலும் வேறு மாவட்டங்களிலும் இருக்கிறார்கள். அரசாங்க ஊழல்கள் பெருமளவில் நிலவின. விரைவாக ஆடம்பரமான வாழ்வை

5
அடைய விரும்பிய அரசியல்வாதிகளின் தயவால் எமது காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. ஆனாற் தஐ.வி.மு. யும் தமிழ்த்தலைமையும், உண்மையில், பொலிகம் இராணுவமும் நாளந்த நிருவாகத் தொழிற்பாடுகளைத் தாக்கிச் சீர்குலைத்தபோது மெளனமாக இருந்தனர். தார்மீக நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தவிர்க்கப்பட்டது. நாம் எவரது சேவைகளைப் பயன்படுத்தினோமோ, அவர்கள், அன்னியர்கள் என்று எமது கோட்பாடு கூறுவதால் அவர்களுக்கு நாம் கடமைப்பாடற்றவர்கள் என்று பாசாங்கு செய்யமுடியுமா? நாம் எல்லோருங் காணக்கூடியவாறு இதன் விளைவு, ஏற்கனவே சீரழிந்த ஒரு அரசாங்கத்தின் மோசமான இயல்புகளை உசுப்பி விட்டமையாகும்.
தமிழ்ப் போராளிக்குழுக்கள் 'சிங்களவர் துரோகம் செய்யும் மோசடிக்காரர்கள் என்ற அடிப்படையிலான உலகப் பார்வையையே தமிழ்த்தலைமையிடமிருந்து பெற்றுக்கொண்டனர். தமிழ்த்தலைமையின் கடந்தகாலத் தந்திரோபாயத் தவறுகளை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் நாம் எமது அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெறவில்லை. பிரதானமாக, தார்மீக பலம் இன்மையினால், நாம் தொடர்ந்தும் வெவ்வேறு வடிவங்களில் அதே தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். பொருளியற் பாதுகாப்புக்கான ஆசை, இன்று அபிவிருத்தி பற்றிய கருத்தரங்குகளில் வெளிப்படுகிறது. சிங்களவர், முஸ்லீம்கள், தமிழர்கள் ஆகிய சகல இனத்தவரும் அர்த்தமற்ற கொலைகளுக்கும், துயரங்களுக்கும் உள்ளாவதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காது, பீதிக்குள்ளான அநேக சிங்களவர்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறுவதையிட்டு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம். தார்மீகத்தின் வக்கிரமானது, ஒரு நாள், இந்தியச் சமாதானப்படைக்கு (I.P.K.F) 6Tigris, அரசாங்கத்துடனும், மறுநாள் சிங்களவருக்கு எதிராக இந்திய சமாதானப்படையுடனும் இன்னும் பலவகையிலும் நிகழும் பேரங்களிற் பிரதிபலிக்கப்படுகின்றன. கிழக்கிலே சிங்களவர் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் முனைப்பிற் சிலர் மலைநாட்டிலிருந்து இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை நாடுகடத்துவதை அதற்குச் சமாந்தரமாகக் காட்டினர். இது மலைநாட்டுச் சிங்களவர் இந்திய வம்சாவளித் தமிழரைச் சுட்டும் அவர்கள் மீது குண்டு, வீசித்தாக்குவதையும் நியாயப்படுத்துவது போன்றதாகும். இது 1983ல் நடந்த பயங்கரமான, தமிழர் விரோத வன்முறையை நியாயப்படுத்துவது போன்றது. அதன் விளைவுகளைச் சிங்களவர் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அநேக தமிழ் உயர் வர்க்கத்தினரின் தார்மீகமற்ற கெட்டித்தனம் இன்று ஓர் மதிகெட்ட குழப்பமான, தெளிவற்ற சூழ்நிலையையே டருவாக்கியிருக்கிறது. எமது கடந்த காலத்தினின்று நாம் எதையும் கற்கவேண்டின் நாம் கைவிட்ட தார்மீக மார்க்கத்தை மீண்டும் மேற்கொண்டு சிங்களவருடன் நம் உறவைச் சுமூகப்படுத்தி, எவருக்கும் கேடு இல்லாத வகையில் எமது நலன்களைக் காக்க தேசிய நலன்களுடன் இணைந்து போராடவேண்டும். இவ்வாறான மாற்றம் சிங்களப் பகுதிகளிலும் நடைபெறவேண்டும்.
மேற்கூறியவை 1940களில் நாம் தவறவிட்டுவிட்ட வாய்ப்புகளின் விளைவுகளே. மேலும் அக்காலத்தின் நாயகர்கள் நடந்து கொண்ட விதம் எவ்வாறு பின்வந்த ஆணிடுகளின் கோலத்தைத் தீர்மானித்து, இறுதியில், நாட்டின் உள்

Page 24
16
விவாகரங்களில் இந்தியா நேரடியாகப் பிரவேசிக்குமளவுக்கு இட்டுச் சென்றதென்பதையும் காட்டுகின்றன. இன்றைய பிரச்சினையை மேலும் தெளிவாக ஆராயுமுகமாக அடுத்து வருகின்ற மேலோட்டமான வரலாறு தவறவிட்ட மேலும் இரணடு வாய்ப்புக் களான 1982ம் ஆணி டு டிசமீபர் பொதுசனவாக்கெடுப்பையும், 1987ம் ஆண்டு ஜூலை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்த இரண்டு மாதங்களையும் பற்றிக் கவனம் செலுத்தியுள்ளது. முதலாவதைத் தொடர்ந்த நிகழ்ச்சிகள் 1983 ஜூலை இனக்கலவரத்துக்கு இட்டுச் சென்றன. இந்தப் பிரச்சினைக்குப் பங்களித்த தமிழரின் நோய் ஒன்றேதான். ஆனாற் கதாபாத்திரங்கள் தான் சிறிது வேறுபட்டுள்ளன.

7
அத் u Tulf-2
தமிழர் அரசியல் எழுச்சியின் சில மைல் கற்கள்
2. இளைஞர் காங்கிரஸ்
யாழ்ப்பாணத்திலே வேரூன்றிய முதலாவது பெரிய அரசியல் இயக்கமான இலங்கை இளைஞர் காங்கிரஸ் 1926ம் ஆண்டளவிற் செயற்படத் தொடங்கியது. மேலும் இவ்வியக்கம் படித்த மத்தியதரவர்க்கத்தினரைக், குறிப்பாக இந்தியப் பல்கலைக்கழகங்கள், புதிதாக நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற யாழ்ப்பாண இளம் பட்டதாரிகள், சிரேட்ட பாடசாலை மாணவர்கள் ஆகியோரை, அடித்தளமாகக் கொண்டிருந்ததுடன் பெரும்பாலும் இந்திய சுதந்திரப்போராட்ட இயக்கத்தினரால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தது. மகாத்மாகாந்தி ஜவஹர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தது. இந்தியாவின் காங்கிரஸைப்போல் அதுவும் மதச்சார்பின்மை, இனபேதமற்ற இலங்கைத் தேசியவாதம், பிரித்தானியாவிடமிருந்து விடுதலை ஆகிய இலட்சியங்களுக்காகப் போராடியது. இக்காரணத்தால் தெற்கிலுள்ள சிங்கள ஆய்வறிவாளர்களின் பெருமதிப்பைப் பெற்றிருந்தது. பிரதானமான இந்தியத் தலைவர்களின் வருகையால் இவ்வியக்கம் உற்சாகமும் தார்மீக உத்வேகமும் அடைந்தது. காந்தி 1927ம் ஆணிடிலும் நேரு 1932ம் ஆணிடிலும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்கள். 1931ல் இலங்கை இளைஞர் காங்கிரஸின் ஆரம்பக்கட்டத்தில் கமலாதேவி சட்டோபாத்தியாய உரையாற்றினார். இவ்வுரை யாழ்ப்பாணத்திலே ஒரு புயலையே ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதான இந்தியத் தலைவர்கள் மாத்திரமன்றி, தெற்கிலிருந்து வந்த எஸ்.டபிள்யுஆர்டி பண்டாரநாயக்க போன்ற பிரபல தலைவர்களும் இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களில் உரையாற்றினார்கள். எஸ்.டபிள்யுஆர்டி பணிடாரநாயக்க இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களிலே, இலங்கைக்கு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பு என்ற கருத்தை முதன்முதலாக முன்வைத்து வாதாடினார். ஹண்டி பேரின்பநாயகம், ஜே.வி.செல்லையா, எஸ்.குலேந்திரன், (இவர் பின்னர் தென்னிந்திய திருச்சபையின் மறை மாவட்டத்தின் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்) ஒறேற்றர் சுப்ரமணியம், கே.நேசையா, என்.சபாரத்தினம். ஏஈதம்பர் ஆகியோர் இளைஞர் காங்கிரஸின் முக்கிய தலைவர்களுட் சிலராவர்.
இளைஞர் காங்கிரஸ் 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நடத்தப்பட்ட தேர்தலை, அவ்வரசியல் யாப்பு பூரண சுயராஜ்யத்தை (பூரணசுதந்திரம்) வழங்கவில்லையெனக் காரணங்காட்டித் தமிழ்ப்பிரதேசங்களிற் பகிஷ்கரிப்பு இயக்கத்தை ஒழுங்குபடுத்தியதன்மூலம் தன் உச்சத்தை எட்டியது. தொடர்ந்து வந்த ஆண்டுகளிலே இளைஞர் காங்கிரஸ் இனவாத அரசியலின் நெருக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாமல் வீழ்ச்சி கண்டது. இதற்குக் காரணம், ஒருவேளை, சர்வசன வாக்குரிமையின் கீழ் பரந்துபட்ட மக்களைத் தளமாகக் கொண்ட அரசியலுக்கு மக்களை எளிதாக ஈர்க்கவும் இலட்சிய வேட்கையில் ஒருமித்த ஒரு தலைமையை வழங்கவும் முடியாது போனமையாகவிருக்கலாம். இருப்பினும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்களுள்

Page 25
8
அநேகர் தமது முத்திரைகளைப் பதித்த உயர்ந்த மனிதர்களே. சாதிப்பிரச்சினை பற்றி இளைஞர்களின் மனச்சாட்சியை விழிப்பூட்டி அவர்களின் உள்ளத்திலே உலகப் பொது ஜனநாயக இலட்சியங்கள் ஆழமாக வேரூன்ற உதவினார்கள். ஹன்டி பேரின்பநாயகம், ஒறேற்றர் கப்பிரமணியம், என்.சபாரத்தினம், கே.நேசையா போன்ற அநேக தலைவர்கள் சிறப்பாகப் பங்களித்தனர். கல்வியாளர்கள் என்ற வகையில், இளந் தலைமுறையின் துடிப்பான இலட்சியங்களின் நேர்மையான பிரச்சாரர்களாக விளங்கினார்கள். மகாத்மா காந்தியின் சமகாலத்தலைவர்களுடன் எழுபதுகளில் கூட அவர்கள் தொடர்பு வைத்திருந்தனர். இன்றைய நோக்கில், தமிழ் மக்கள் உள்ளங்களில் இந்தியா பெற்றிருந்த இடம் இளைஞர் காங்கிரஸின் முக்கியமான வரலாற்று மரபுரிமையெனலாம். தமிழர்களைப் பொறுத்தவரையில், இந்தியா, நற்பண்பு, தார்மீகம், அகிம்சை, இலட்சியம் ஆகியவற்றின் மகத்துவத்தின் படிவமாக இருக்கின்றது. மகாத்மா காந்தியினதும் பிற இந்தியத் தலைவர்களதும் உருவப்படங்கள் அநேக தமிழர் இல்லங்களை அலங்கரிக்கின்றன. இந்தப் பற்று சமயம், கல்வி, மொழி ஆகியவற்றில் ஏற்கனவே நிலவும் உறவுகளினால் பரிணமித்தது.
22 தமிழரசுக்கட்சியும் (த.அக)
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும்(தஐவிமு) 1956ம் ஆணிடு எஸ்.டபிள்யு.ஆர்.டி பணிடாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக, எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கும் நலன்களுக்கும் பிரதான உறைவிடமாகியது. 1961ல் தமிரசுக்கட்சி நடத்திய சத்தியாக்கிரக இயக்கம் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரகத்தை ஒத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 1958, 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர் விரோத இனக்கலவரங்களின் தாக்கமும், அதிகரித்து வந்த இனப்பாகுபாடும் தமிழர்களின் குறைபாடுகள் தீர்க்கப்படும் என வாக்குறுதி அளித்துத் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் நிறைவேற்றாத பல வாக்குறுதிகளும் 1958 முதல் 1983 வரை தமிழர்களின் அரசியற் சிந்தனை விருத்தியின் அடிப்படையாக அமைந்தன. ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னனி - ஜே.வியி) யைச் சேர்ந்த சிங்கள இளைஞர்களின் 1971ம் ஆண்டு எழுச்சியானது தமிழ் இளைஞர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியது. 1970களின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களிலும் உயர் பாடசாலைகளிலும் கற்றுக்கொண்டிருந்த இளைஞர்களுள் ஒரு பகுதியினர் வன்முறையின் அடிப்படையிற் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் அகிம்சையையே வலியுறுத்தி வந்தது. தமிழரசுக்கட்சியின் இடத்தைப் பெற்ற தஐ.வி.மு இன்றும் உத்தியோகபூர்வமாக, ஒரு அகிம்சை அரசியற் கோட்பாட்டையே முன்வைத்திருக்கிறது. தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதை மேலும் இடர்ப்பாடாக்கிய திருமதி சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கம் தொடக்கி வைத்த தரப்படுத்தல் முறையும், பங்களாதேஷின் பிறப்பும், தமிழ் இளைஞர் மத்தியில், தாக்கத்தை

9
ஏற்படுத்திய ஏனைய நிகழ்வுகளாகும். இவற்றுள் பின்னையவை அவர்கள் உள்ளங்களிற் பலமான தாக்கத்தை உண்டாக்கின. இச் சூழ்நிலையில், யாழ்ப்பாணத்திற் கராத்தே, யூடோ வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டன. பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர் குழுவொன்று இந்தப் புதிய போக்கின் தத்துவ முன்னணியாக விளங்கியது. அவர்கள் தமிழ்ப்பிரதேசங்களிலே பொருளாதார சுயதேவைப்பூர்த்தி பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர். ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பேரன்றதொரு முழுமையான கிளர்ச்சி இயக்கம் நெடுங்காலச் சாத்தியப்பாடாகவே இருந்தது. பங்களாதேஷின் பிறப்பினால் உந்தப்பட்ட அவர்கள் ஒரு எளிமையான திட்டம்பற்றியே சிந்தித்தனர். வரைமுறைப்பட்ட ஒரு ஆயுதப்போராட்ட இயக்கமும் பொருளாதார சுயதேவைப்பூர்த்தியுமே அவர்கள் திட்டமாக இருந்தது. தமிழர்கள் ஒருதலைப்பட்சமான சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதும் இந்தியா வந்து, விரைவாக வேலையை முடித்துத், தருமென அவர்கள் கருதினர். இச் செயற்பாடுகளில் முன்னோடிகளாயிருந்த இளைஞர்களில் ஏறக்குறைய அனைவரும் நாட்டைவிட்டு நிரந்தரமாகவே சென்றுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்கூறிய யாவும் தமிழர் மத்தியில் சனநாயக இலட்சியங்களைப் பலவீனப்படுத்தின. அரசியற் தீவிரவாதிகள், இராணுவக் கட்டமைப்புக்கள், இரகசிய இயக்கங்கள், தலைமறைவு வேலைகள் ஆகியவைபற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. முதல், புதியதொரு கற்பனாவாதம் விருத்திபெற்றது. மாறுபட்ட கருத்துகளைக் கொணிடிருப்பது துரோகமெனக் கருதப்பட்டது. சகிப்புத்தன்மையும், பகிரங்க உரையாடலும் வரவேற்பிழந்தன.
தமிழரசுக்கட்சி புதிய எதேச்சாதிகாரச் சூழ்நிலையைப் பயன்படுத்த விரைவாகச் செயற்பட்டது. மூத்த பத்திரிகையாளரும், யாழ்ப்பாணத்தை நீண்டகாலமாக அவதானித்தவருமான ஒருவர் பின்வருமாறு கூறினார்: 1972ல் தமிழரசுக் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி செல்வநாயகம் மேடையில் வீற்றிருந்த ஒரு கூட்டத்தில் நான் பங்குபற்றினேன். பிரபல மேடைப் பேச்சாளரான திருகாசிஆனந்தன் (இப்பொழுது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்) பேசியபோது திரு.துரையப்பா, திரு.சுப்ரமணியம், திருஅருளம்பலம், திருஆனந்தசங்கரி ஆகியோர் தமிழ் இனத்தின் எதிரிகள் அவர்கள் இயற்கையான மரணத்துக்கோ அல்லது விபத்தான மரணத்துக்கோ தகுதியானவர்கள் அல்லர் என்றும், தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அவர்கள் எப்படி மரணிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது அராஜகத்துக்குத்தான் இட்டுச் செல்லுமென நான் அறிவேன் என்ற எனது கருத்தை எனது நண்பர்களிடம் கோபத்துடன் கூறினேன். எனது நண்பர்கள் என்னைச் சாந்தப்படுத்தவேனும் பின்வருமாறு கூறியிருக்கமுடியும். அதாவது, திரு.செல்வநாயகத்தின் செவிப்புலன் பாதிக்கப்பட்டு, அதன்விளைவாக என்ன கூறப்பட்டதென அவர் அறிந்திருக்கமுடியாது என்பதாகும். ஒரு கட்சித்தலைவர் என்ற முறையில் இது செம்மையான காரணமன்று. இப்பேச்சு திரு செல்வநாயத்துக்கு உரித்தான ‘சுதந்திரன் என்ற வார இதழில் ஆசிரியர்

Page 26
2 0
தலையங்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டது. தமிழ்த்தலைமையின் வெளிப்படையான ஆசியைப் பெற்ற அத்தகைய ஒரு பேச்சு இனி நடக்கப்போகின்ற விடயங்களை எதிர்வு கூறுவதாக அமைந்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அரசியலில் அதிகாரத்துக்கு மறுவார்த்தையற்ற தமது சம்மதத்தைத் தெரிவிக்குமாறு நாம் பயிற்றப்பட்டோம். தமிழரசுக் கட்சியோ அல்லது அதன் வாரிசான தஐ.வி.மு.யோ மூன்று நாள் ஹர்த்தால் ஒன்றை அறிவித்தால் நாம் அதை ஏற்றுக்கொண்டு வீட்டில் இருக்கவேண்டும். கலந்துரையாடலுக்கு அங்கு இடமில்லை. அதற்கு எவரேனும் பணியாவிட்டால் இளைஞர்கள் சிலர் அவரைத் தாக்குவர் என எதிர்பார்க்கலாம். எதேச்சதிகார வன்முறைக்குழுக்களின் வளர்ச்சிக்கும் அவர்கள் கையாளுகின்ற இம்சை முறைகளுக்கும் வித்துக்கள் அன்றே விதைக்கப்பட்டன.
திருமதியண்டாரநாயக்கவின் அரசாங்கம் தான் கையாண்ட நடைமுறைகள் மூலம் இந்த விருத்திகளுக்குப் பங்களித்தது. அந்த அரசாங்கம் 1972ல் 42 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி இரண்டாணிடுகளாகச் சிறையில் வைத்திருந்தது. இந்த இளைஞர்கள், பிரதானமாக, தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிபெறுவதைக் கட்டுப்படுத்தும் தரப்படுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாவர். உண்மையான குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் சுவரொட்டிகள் ஒட்டியதைத் தவிர வேறொன்றுமில்லை. நாடாளுமன்றத்திலே தமிழர் உரிமைகள்பற்றிய தமிழரசுக் கட்சியின் குறைந்தபட்ச கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தப்பட்டன. கலாநிதி கொல்வின் ஆர்டிசில்வாவின் 1972ம் ஆண்டு அரசியல் யாப்பு தமிழரின் முகத்தில் திட்டமிட்டு ஓங்கி அறைந்தது. தமிழருக்கெதிரான பாகுபாடும், ஊழலும் மிக அதிகமாய் எங்கும் வெளிப்படையாய்த் தெரிந்தன. அரசாங்கத்தின் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் கடின உழைப்பாளிகளான யாழ்ப்பாண விவசாயிகளுக்கு வாய்ப்புக்களையும் செழுமையையும் வழங்கியமை அவர்களைச் சாந்தப்படுத்திய ஒரு அம்சமாகும். 1974ம் ஆண்டு ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பொலிஸ் தாக்கியமை, தமிழர்களின் அரசியல் சிந்தனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரிய ஆத்திரமூட்டல் எதுவுமின்றி நடந்த இந்தத் தாக்குதலின்போது தற்செயலாக மின்சாரம் தாக்கி ஒன்பது பேர் இறந்தனர். இது அங்கு சமூகமளித்திருந்த சர்வதேச அறிஞர்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. விசாரணைக்கு உத்தரவிட மறுத்தமை திருமதியண்டாரநாயக்கவின் திமிரை வெளிக்காட்டியது. 1975ம் ஆணி டு யாழ்ப்பாண மேயரும் திருமதி.பணி டாரநாயக் கவுக்கு நெருக்கமானவருமான திருஅல்பிறட் துரையப்பாவின் கொலையுடன் தமிழர் கிளர்ச்சியின் முதல் வேட்டு வெடித்தது. திருதுரையப்பா பிரபாலமானவர் என்பதனால் அவரது மரணச்சடங்கில் பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
1976ம் ஆண்டிலே தமிழரசுக்கட்சி ஜிஜிபொன்னம்பலத்தின் தமிழ்க் காங்கிரஸ் உட்பட்ட பிரதான தமிழ்க்கட்சிகள், தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்

2
தொண்டமான், முக்கியமான தமிழ்த் தேசியவாதியான பேராசிரியர் சிசுந்தரலிங்கம், ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணியை அமைத்தனர். இந்த ஆண்டிலே (1976) நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வாகச் சுதந்திரத் தமிழ் ஈழம் என்ற கருத்தை முன்வைத்தது. இந்தத் தனி அரசு அகிம்சை வழியாக வென்றெடுக்கப்படுமெனக் கூறப்பட்டது.
அத்தகைய ஒரு அரசுக்காகப் போராடுவதற்குத் தீர்க்கமான ஒரு திட்டமிருக்கவில்லையெனத் துணிந்து கூறலாம். 1975ம் ஆண்டு ஒறேற்றர் கப்ரமணியத்தின் தலைமையில் சுன்னாகத்தில் நடந்த, ஒரு பகிரங்க விவாதத்தில் அவரது முன்னாள் மாணவர்களான கம்யூனிஸ்ட் கட்சி (சீனச்சார்பு) தலைவர் திரு.என்.சண்முகதாசனும், திருவிதர்மலிங்கமும், பாஉ (தஐவிமு) தனிநாட்டின் நன்மை தீமைகள் பற்றி விவாதித்தனர். திரு சண்முகதாசன் அவரது போராட்டத் திட்டத்தைக் கூறுமாறு திருதர்மலிங்கத்துக்கு அறைகூவல் விடுத்தார். 'அது கட்சி இரகசியம் என்று திருதர்மலிங்கம் பதில் அளித்தார். அவையோரில் பலர் அதிலும் தெளிவான பதிலொன்றைக் கோரினர். "எனது மாணவர்கள் இருவருடனும் உறவும் மதிப்பும் வைத்துள்ளேன். மேலும், நான் ஏன் இந்த விவாதத்திற்குத் தலைவராகத் தெரியப்பட்டேன் என்றும் எனக்குத் தெரியும், ஏனெனில் கண்ணாகத்திலே கூட்டத்தை அடக்குவதில் நான் மிகவும் தகுதியுடையவனாக இருக்கலாம் என்பதுதான். விடயங்கள் மிகுந்த ஆழத்துக்கு இட்டுச் சென்றதால், தலைவர் என்ற முறையில் நான் இதில் தலையிட்டுக் கட்சி இரகசியத்தைப் பாதுகாப்பது திருதர்மலிங்கத்தின் உரிமையெனத் தீர்ப்பளித்தேன். ஆனால் அவர்களிடம் அத்தகைய ஒரு திட்டமுமில்லை என்பதே உண்மையாகும்" என்று ஒறேற்றர் பின்பு கூறினார். இந்தக் காலகட்டத்தில் திரு.செல்வநாயகம் பெரிதும் சுகமீனமாக இருந்தார். அதனால் தஐவிமுயின் செயலாளரான திருஅ.அமிர்தலிங்கம் கட்சித் தலைமைப்பங்கை வகிக்க வேண்டியிருந்தது. ஒரு அறிக்கையின்படி, தஐவி.மு.வின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தனிநாட்டுத் தீர்மானம் எடுக்கப்பட்டபோது கொழும்பில் இருந்தவருமான திருதிருச்செல்வம் அதன் ஆபத்தை உணர்ந்து, "இதன் அர்த்தம் என்ன என்று அமிர்தலிங்கத்திடம் கேட்டார். "இத்தீர்மானம் இளைஞர்களின் நெருக்குதலினால் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்துடன் பேச்சு நடத்தக் காலம் வரும்போது, ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்" என்று பதில் கூறினார். பின்னைய நிகழ்வுகளும் இதுவே தஐவி.மு யின்
உண்மையான நிலைப்பாடாகும் எனக் காட்டின.
23 1977-81க்கு இடைப்பட்ட ஆண்டுகள்
1977 ஜூலையில் அதிகாரத்துக்கு வந்த புதிய ஐதேக அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கைகளை வளர்த்தது. அது சிறிது காலத்துக்குத் தரப்படுத்தலை நிறுத்திவைத்தது. ஆனால் அரசாங்கம் இப்பிரச்சினைகளை இழுத்தடிக்கின்றது என்பதைக் காலம் காட்டியது. 1977ம் ஆண்டின் இனக்கலவரமானது, இந்நாட்டிலே தமிழர்களின் நிலைபற்றி

Page 27
22
முன்னரிலும் உறுதியான உத்தரவாதம் அவசியமெனவும், குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட தன்னாட்சி அந்தஸ்து தமது தாயகத்துக்கு வேண்டுமெனவும் தமிழ்ப் பொதுமக்களை உணர வைத்தது. அரசாங்கம் எவ்வகையிலும் இந்த நியாயமான கோரிக்கைகளை வழங்கத் தயாராக இருக்கவில்லை. மாறாக, சிறில் மத்தியூ காமினி திஸாநாயக்க போன்ற அமைச்சர்கள் தமது அமைச்சுக்களின் வளங்களைக், குறிப்பாகக் கீழ்மாகாணத்திலே, தமது நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினர். சிறில் மத்தியூ திருகோணமலைப் பிரதேசத்திலே புராதன பெளத்த விகாரைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தமிழ் மக்களின் சினமும் அனாதரவான நிலையும் போராளிக்குழுக்களுக்கு இயற்கையான தூண்டுதலாக அமைந்தன.
சிங்களவர்களின் பயத்தைத் தூண்டிவிட்ட விதத்தை நோக்காது, ஒருவர் இந்தப் பிரச்சினையைக் ஆராயமுடியாது. தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த தஐ.வி.மு தலைவர் திரு. அமிர்தலிங்கம் தாங்கள் அதை அடைவதற்குரிய ஒரு இரகசியத் திட்டத்தை வைத்திருக்கிறோம் எனக் கூறிக்கொண்டிருந்தார். ஆயுதப் போராட்ட இயக்க வளர்ச்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபுரிந்த தஐவி.மு இப்போது அதனை முன்நடத்த வேண்டிவந்தது. இரகசியத்திட்டம் பற்றிய கதையும் அதன் விளக்கங்களும் சபையேரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. சில அந்நியச் சக்திகள் அல்லது வெளிநாட்டுத் தமிழர்கள் அல்லது இரு பகுதியினரும் கூட்டாகத் தமிழ் ஈழத்தை தோற்றுவிக்க இராணுவ உதவி வழங்கவிருப்பதாக வதந்தி பரவியது. 1977ம் ஆண்டு இறுதியளவில் அந்தப் பணிக்காகப் போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அநேகர் நம்பினர். தஐ.வி.முயின் பேச்சுக்களைச் செவிமடுத்த சாதாரணத்தமிழர் அகிம்சை என்பது ஒரு புறத்தோற்றமே என்றும் ஆயுதப் போராட்டத்திறன்களை மேம்படுத்துவதற்காக த.ஐ.வி.மு திட்டமிட்டு வருகின்றதெனவும் கருதினர். ஆனால் ஒரு வேறுபட்ட தஐ.விமுயினர் அகிம்சையில் நம்பிக்கை கொண்டுள்ள நாகரிகமான மேலைக் கல்விகற்ற சீரிய பணிபாளர் குழுவாக உருமாறினர். இது சிங்களவரில் பாதிப்பை ஏற்படுத்தாமலில்லை. ஆயுத வன்முறைகளைக் கண்டிக்குமாறு சிங்களவர்களால் அறைகூவப்பட்டபொழுது தஐ.வி.மு அதைத் தட்டிக்கழித்துத் தம்மைப் பாதுகாத்துக் கொணர்டனர். எடுத்துக்காட்டாக, யாழ்ப்பாணத்துப் பொருளாதாரத்திற்கும் வங்கிகளைப் பெரிதும் நம்பியுள்ள யாழ்ப்பாண விவசாயிகள் வளம்பெறவும் வங்கிகளின் இயக்கம் அவசியமானதென்பதில் எதுவித சந்தேகமுமில்லை. பொலிஸ் படையினர் பல வழிகளில் இனவாதிகளாகவும் சட்டத்தை மீறிக் குற்றம் புரிவோராகவும் நடந்தனராயினும் ஒழுங்கை நிலைநாட்ட அவசியமான பணிகளையும் நிறைவேற்றினர். பின்னர், வங்கிகளையும், வங்கிப்பணத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும், பாதுகாக்க பொலிஸ் படை பயன்படுத்தப்பட்டது. இப் பொலிஸ்காரர்கள் பலர் கடமையின்போது கொல்லப்பட்டார்கள். தமிழ்ப்பொதுமக்கள் அதனைக் கவலைக்குரியதாகக்
கருதினாலும், தமிழ் ஈழப் போராட்டத்திற்கு அது அவசியமென நம்பினர்.

2 3
இதன் விளைவாகச் சராசரித் தமிழர் திட்டமிட்டுச் செயற்படுகின்ற சந்தர்ப்பவாதி என்ற இனவாதத்தோற்றம், சராசரிச் சிங்களவருக்குத் தோற்றப்பாட்டில் நம்பத்தக்கதாகவிருந்தது. தமிழர்களால் நசுக்கப்படுவோம் என்ற அச்சத்தைச் சிங்களவர்களிடையே தூண்டிவிடவும் தமிழர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற வகையான உணர்வுகளை உண்டாக்கவும் இது வசதியாயிற்று. இத்தகைய அவநம்பிக்கையின் தூண்டலும் 1981, 83ம் ஆண்டுகளின் தமிழர் விரோத இனக்கலவரங்கட்கு ஏதுவாகின. அதேவேளை த.ஐ.வி.மு அவ்விளைவுகளிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்கச் சாத்தியமான வழிமுறைகள் ஏதும் இருக்கவில்லை. இதற்கிடையே தஐவி.மு தனது கட்சி ஜனநாயத்தையும், கீழ்மட்ட அமைப்புக்களையும் உதாசீனம் செய்து, அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சுக்களை மேற்கொண்டது. இது அதன் ஆதரவாளர் மத்தியில் மேலும் அதிருப்தியை விளைவித்தது.
தமிழ் ஈழம் என்னும் ஒரு தனிநாட்டைக் கோருகின்ற தஐ.வி முயின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் தமிழர்மீது உணர்வுபூர்வமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு உயிர்கொடுக்க 1977 தமிழர் விரோத இனக்கலவரத்தைத் தஐ.வி.ழு பயன்படுத்தியது. கொழும்பைத் தமது வாழ்விடமாகக் கருதி வந்த அநேக மத்தியதரவர்க்கத் தமிழர்கள், தமது பாதுகாப்புக்கும் பொருளாதார சுபீட்சத்துக்கு, தங்களது இனத்தனித்துவத்தைப் பேணவும் தமது பரம்பரைத் தாயகத்துக்குத திரும்பிச் செல்ல வேண்டும் எனவும் பொருளாதாரரீதியாக அதனை வலிமைப்படுத்த வேண்டுமென்றும் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். 1977கு முன்னரும் தொழில் வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இனப்பாகுபாடு காட்டப்பட்டமையால் தமிழர்களின் இந்த ஆவல் அதிகரித்து வந்தது. 1977ம் ஆண்டு இனக்கலவரத்தின்போது அநேக மலையகத் தமிழர்கள் இடம் பெயர்ந்தனர். அரசாங்கம், தனது வசதிகளைப் பயன்படுத்திச் சிங்களவர்களைக் குடியேற்றி வந்த திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா போன்ற எல்லைப்பிரதேசங்களைப் பாதுகாப்பது, தமிழர்களின் பார்வையில் பிரதான பிரச்சினையானது. 1958ம் ஆண்டிலும் 1977ம் ஆண்டிலும் நிகழ்ந்த வன்முறைகள் இந்தப் பிரதேசங்களிலே தமிழர்கள் மிகவும் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தின. யாழ்ப்பாணத்தில் பாடசாலைப் படிப்பை முடித்தவர்கள் இந்தப் பிரதேசங்கள் தமது தாயகத்தின் ஒரு பகுதியென நன்கு உணர்ந்திருந்தும், இந் நிலங்களில் குடியேறி வாழ்க்கைக்கான வருமானத்தைப் பெறுமாறு அவர்களை ஊக்குவிப்பது இலகுவானதன்று என அனுபவங்கள் காட்டின. இந்த நிலங்களிலிருந்து பெறும் வருமானம், அரசாங்கத்தில் வெள்ளை ஆடை உத்தியோக ஊதியங்களிலும் மிக அதிகமாக இருந்திருக்க முடியும். அநேக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இந்த வெற்றிடத்தை நிரப்ப உடனடியாகச் சம்மதித்தனர். உயர் வகுப்புத் தமிழர் அநேகர் இந்த இடப்பெயர்வை ஆதரித்தனர். ரனெனில் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்பவர்கள். மேலும், அவர்கள் சிங்களவருக்கும் யாழ்ப்பாணத் தமிழருக்கும் இடையில் வசதியான பாதுகாப்பு அரணிகளாகக் கருதப்பட்டார்கள்.

Page 28
2 4
எஸ்ஜேவிசெல்வநாயத்தின் மகனான சந்திரகாசன், அத்தகைய கண்ணோட்டத்தை வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தலுக்குத் தூண்டுகோலாயிருந்த தலைமை மிகவும் உணர்வுபூர்வமான தமிழர் மத்தியிலிருந்து வந்தது. பின்னர், அவர்களுள் அநேகர் ஆரம்பநிலையிலிருந்த ஆயுதப்போராட்ட இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணினர். இந்த முன்னோடிகளுள் மிக முக்கியமானோர் மூத்த கட்டிடக்கலைஞரான திரு.ஏ.டேவிட், காலஞ்சென்ற டாக்டர் இராஜசுந்தரம், அவரது மனைவி டாக்டர் சாந்தினி (மணமாகுமுன் காராளசிங்கம்). 1977 இனக்கலவரம் வெடித்தபோது கணவனும் மனைவியும் பிரித்தானியாவில் இருந்தார்கள். அவர்கள் இந்த முன்னோடிப் பணியைப் பொறுப்பேற்கத் தயங்காது முன்வந்தனர். சாந்தினி, சமூகசேவை அடிப்படையில், வவுனியா சிகிச்சைநிலையத்தை நடத்தியபோது இராஜசுந்தரம் காந்தியம் ள்ன்ற தருமஸ்தாபனத்தின் பின்னணியில் நின்று இயங்கும் சக்தியானார். விவசாய அறிவுரைகள், வசதிவாய்ப்புகள், பண்டங்கள் ஆகியவற்றை வவுனியாவை அணி டிய செயற்திட்டப் பிரதேசங்களிலே குடியமர விரும்பிய அகதிக்குடும்பங்களுக்கு காந்தியத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொண்டர்கள் பள்ளிக்கூடங்களை நடத்தினர். பகலிலே குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை நடத்தியதுடன் முதியவர்களுக்கு அறிவுரைகளும் உதவிகளும் வழங்கினர். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் முகவரான கெயர் (CARE) தாபனம் திரிபோஷா பொட்டலங்களை வழங்கியது. அது குழந்தைகளுக்கான நிறை உணவாகும். நோவிப் (NOVTB) ஒக்ஸ்பாம் (OXFAM) ஆகிய சர்வதேச வழங்கும் நிறுவனங்கள் காந்தியத்துக்கு உதவின. முன்னாள் அகதிகள், இரண்டு ஆண்டுகட்குள் உழுந்து போன்ற சத்துள்ள தானியவகைகளைப் பெருமளவில் உற்பத்தி செய்தனர். அதன்விளைவாக, அவற்றின் விலை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது. இந்தக்காலகட்டத்தில் பிரபலமடைந்த இன்னொரு அமைப்பு தமிழ் அகதிகள் புனர்வாழ்வுத் தாபனமாகும் (TRRO) இந்த அமைப்பில் ஈடுபட்டோரில் அதன் நிறுவனரும் தலைவருமான நித்தியானந்தா, அதன் நிறுவனச் செயலாளரான க.கந்தசாமி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கந்தசாமி தலைசிறந்த சட்டத்தரணியாவார். அவர் தமிழரின் விடுதலை இலட்சியத்துக்காகவும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகளின் பரந்த இலட்சியத்துக்காகவும் சுயநலமின்றித் தம் வாழ்வைத் தியாகம் செய்தவர். 1988ம் ஆண்டு மத்தியில் அவர் காணாமற் போனமை, தமிழ் அரசியல் வட்டத்துள் இரகசியமாக வளர்ந்து வந்த பயங்கரவாதத்தின் விளைவாகும். அப் பயங்கரவாதம் தமிழினத்தின் தலைசிறந்த புத்திரர் சிலரை அழித்தொழித்தது.
தமிழ் அகதிகள் புணர்வாழ்வு அமைப்பு (TRRO) இடம் பெயர்ந்தவர்களைக் குடியமர்த்துவதற்கான செயற்திட்டங்களைத் தயாரித்து நிதி சேகரித்து நேரடியாகவும், காந்தியம் போன்ற அமைப்புக்களுக்கூடாகவும் அவற்றை நடைமுறைப்படுத்தியது.
கென்றி, டொலர் ஆகிய விவசாயப்பணிணைகள் அவற்றை உருவாக்கியதற்காக அக்கால இளைஞர்கள் சிலரினதும் மூத்தோரினதும்

2 5
முன்னோடி உணர்வுகளுக்குக் கடமைப்பட்டிருக்கின்றன. இந்த இரு பண்ணைகளும் விவசாயக்குடியிருப்புக்களுடன் பிணைந்திருந்தன. கடல் கடந்து வாழ்கின்ற அநேக தமிழர்கள், உதவி கோரி வரும் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்தபோது இந்த முன்னோடி உணர்வுகளால் கவரப்பட்டனர். லண்டன், சிங்கப்பூர், இபடான்(நைஜீரியா) முதலிய நகரங்களில் பரந்து வாழ்கின்ற தமிழர், தமிழரின் தாயகத்தைப் பொருளாதாரீதியில் பலப்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடினர். நடைமுறைப்படுத்தப்பட்டு வநீத வேலைத்திட்டங்களுக்காக நிதி சேகரித்து அனுப்பினர். இந்தக்காலகட்டத்தில் லணர்டனிற் தொழில்புரியும் தமிழரின் அமைப்பான தமிழ்பேசும் மக்களின் நிலையியற்குழு (SCOT) செயற்படத்தொடங்கியது. தொழிற்தேர்ச்சிபெற்றோர் அநேகர் வந்து இங்கு இப்பணிணைகளில் வாழ்ந்து, பொருளாதார வேலைத்திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தியதால் தமிழ்த் தாயகத்தில் உற்சாக உணர்வு நிலவியது. ஆரம்பக் கட்டங்களின்போது, இந்தக் குடியிருப்புகளுக்கு அருகே ஆயுதப்போராளிகள் இயங்கி வந்தனர். ஆனால், அக்குடியிருப்பைச் சேர்ந்த ஒரு சிலரே இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். ஏனெனில் பொருளாதார விருத்தியும் புனர்வாழ்வுமே அங்கு முனைப்பாயிருந்தன. தஐவி.முயின் தலைமை பாரிய கேள்விகளுக்குட்படுத்தப்படவில்லை. கடல் கடந்த நாடுகளில் உற்சாகமிருந்தபோதும் எண்ணிக்கையிலும், பொருளுதவியிலும் கடல் கடந்த தமிழர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகும். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் பத்தாயிரத்துக்கும் அதிகராயினும் தமிழ்பேசும் மக்களின் நிலையியற்குழு திரட்டிய நிதி ஏறக்குறைய 6000 பவுணர்களே. புனர்வாழ்வுட் பணிகளை ஆரம்பித்தவர்கள், வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடமிருந்து பெரும் ஆதரவை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் நிதியின் பெரும்பாலும் முழுப்பகுதியும் மேற்குலகக் கிறிஸ்தவ தருமஸ்தாபனங்களிடமிருந்தே வந்தன. எவ்வாறாயினும், கடல்கடந்த தமிழர், தாயகத்தில் நடப்பன பற்றி மிக ஆர்வமாக இருந்தனர். போராளிகளின் செயற்பாடுகள் ஒவ்வொரு வீட்டின் அன்றாட உரையாடல்களிலும் முக்கிய இடம்பெற்றன.
1978ம் ஆண்டிலே தமிழ்ப்புலிகள் என்ற ஆயுதப்போராட்ட இயக்கம் வங்கிக்கொள்ளைகளிலும், பொலிஸ்காரரைக் கொல்வதிலும் ஈடுபட்டிருந்தது. சில போராளிகளைக் கைது செய்வதில் வெற்றி கணிட இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளையும் அவரோடிருந்த சில பொலிஸ்காரரும் கொல்லப்பட்டமை, இவற்றுள் மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். திருநெல்வேலி, நீர்வேலி வங்கிக்கொள்ளைகள், கிளிநொச்சி வங்கிக்கொள்ளை (புளொட் இயக்கத்தால்), யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் ஈடுபட்டிருந்த அவிரோ பயணிகள் விமானம் இரத்மலானை விமான நி.ை பத்தில் தரையிறக்கப்பட்டுச் சகல பயணிகளும் வெளியேறிய பின்னர், குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டமை ஆகியன மக்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தின. தனியே பாதுகாப்புப் பிரச்சினையாகப் பார்த்தால் தமிழ்ப்போராளி இயக்கம் வழமையான கண்காணிப்புச் சேவைக்கு அப்பால் சென்று செயற்பட்டது. ஆனால் அரசியல் பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது ஓரளவு

Page 29
2 6
கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. நிலப்பங்கீடு தொடர்பாக ஏதாவது உடன்பாட்டைக் கொண்ட ஒரு நியாயமான சுயாட்சியைத் தமிழ் பிரதேசங்கட்குப் பெறுவதன் மூலம் பிரச்சினையைத் தீர்க்க தஐ.வி.மு விரும்பியது. இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப்போராளிகள் தஐ.வி.மு. மீது இன்னும் மதிப்பு வைத்திருந்தார்கள். அவர்கள் த.ஐவி.மு.யை பெரிதாக எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் கடுமையாக நடக்கத் தீர்மானித்தது. சில பிரதான தலைவர்களின் இனவாத மனப்பாங்குகளுக்கிணங்க அரசாங்கம் மேற்கொண்ட ஒவ்வொரு செயலும் தண்டிக்கும்பான்மையுடையதாகவே தெரிந்தன. 1978ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு சட்டத்தினால் தமிழ் புலிகளைத் தடைசெய்தது.
1978ன் இறுதிவாக்கில் நிகழ்ந்த இரு நிகழ்ச்சிகள் தமிழர்களை மேலும் அந்நியப்படுத்தின. ஐ.தே.க அரசாங்கத்தின் கைத்தொழில் அமைச்சரும், வழமையாகவே தமிழரைத் தூற்றுபவருமான சிறில் மத்தியூ, கொழும்புப் பல்கலைக்கழக இரசாயனத்துறைப் பேராசிரியரான பி.பி.ஜி.எல்.சிறிவர்த்தனவுடன் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டை நடாத்தினார். அம் மகாநாட்டில், தமிழ்ப் பீட்சகர்கள், தமிழ்ப் பரீட்சார்த்திகளுக்கு அதிக புள்ளிகள் வழங்கி ஏமாற்றியதை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள் கணிடுபிடிக்கப்பட்டுள்ளனவென்று அறிவித்தார். இவ்விடயம் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டபோதும் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. இக்குற்றச்சாட்டை அநேக சிங்களவர் நம்பினர். தமிழரைப் பொறுத்தவரையில் இது அருவருப்பானதாயிருந்தது. பொறுப்புள்ள தமிழர் அநேகர் இவ்விடயத்தை ஆராய்ந்த பின்னர், இந்தக் குற்றச்சாட்டு ஒரு நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லையென வாதிட்டனர். பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தத் தனது அமைச்சர்களை அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான இனவாத உணர்வுகளை வளர்த்து விட்டது. இத்தகைய குற்றச்சாட்டுகள், பல்கலைக்கழக அனுமதியில் மறைமுகமான விகிதாசார முறையொன்றை மீள் அறிமுகப்படுத்துவதை மறைக்கும் ஒரு மூடுதிரையாகவும் பயன்பட்டன. புதிய ஐ.தே.க அரசாங்கமே தமிழர்பால் தன் நல்லெண்ணத்தின் ஒரு சமிக்ஞையாக தமிழர்களின் பல்கலைக்கழக அனுமதியை வரையறுக்குமுகமாக முன்னைய அரசாங்கத்தால் புகுத்தப்பட்ட தரப்படுத்தல் முறையை நீக்கிவிட்டது. பல்கலைக்கழக அனுமதி முறையைப் பின்தங்கிய பகுதியினருக்கு வாய்ப்பளிக்குமாறு இனவேறுபாடற்றதும் திறமையினடிப்படையிலானதுமான முறையிற் திருத்தியமைப்பதற்கு அனேக தமிழர்கள் உடன்பட்டனர். இதைச் செய்வதற்கு மனதைப் புண்படுத்தும் பகிரங்க அவதூறுகளைத் தமிழர் மீது பொழியும் ஒரு நாடகம் தேவைப்படவில்லை. இது ஜயவர்த்தன அரசாங்கத்தின் பொறுப்பின்மையை மீண்டும் எடுத்துக் காட்டியது. இந்த அரசாங்கம், 1977ம் ஆண்டு இனக்கலவரத்துக்கு இரையான தமிழர்களைச் சுட்டி, "போர் என்றால் போர்" என்று ஜயவர்த்தன கூறியது. அரசாங்க உத்தியோகங்களை வழங்குவதில் தமிழருக்கு எதிராகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்ட இனப்பாகுபாடு பற்றித் தஐ.வி.மு தலைவர் திருஅமிர்தலிங்கம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதங்களில் அடிக்கடி சுட்டிக்காட்டினார். இன்னொரு நிகழ்ச்சி 1978 டிசம்பரில் கிழக்கு

2 7
மாகாணத்துக்கு நாசம் விளைவித்த புயலாகும். தமிழ்த்தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதில் அரசாங்கம் காட்டிய பகிரங்கமான பாரபட்சம்பற்றி வெறுப்புடன் முறைப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவும் பிற வெளிநாட்டு அரசாங்கங்களும் வழங்கிய பொருள் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையாத சந்தர்ப்பங்கள் பல. ஒரு சந்தர்ப்பத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட தரமான சேலைகள் அரசாங்க வர்த்தக நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டமை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு காலங்கடந்த நிலையில் இந்த விற்பனை மூலம் பெற்ற வருமானம் இடர் நிதியில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அலட்சியப்போக்கு தமிழர் ஐக்கியத்தைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியது. மீண்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூகசேவைத் தாபனங்களுடனும், சமய நிறுவனங்களுடனும் இணைந்து தலைமைப் பாத்திரத்தை வகித்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் வீடு வீடாக நிதி சேகரித்தனர். கட்டடப் பொருட்கள், உணவு, துணிமணிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு அநேக லொறிகள் கிழக்கு மாகாணத்துக்குச் சென்றன. இக்காலப்பகுதி தமிழ்த்தேசிய உணர்வுகள் உச்சமடைந்த உத்வேகமிக்க காலப்பகுதியாகும். தமது மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர்களின் உற்சாகத்தை வழமையாக அசட்டை செய்து யு.என்.பிக்கு வாக்களிக்கின்ற கொழும்புத் தமிழர்களுட்பட ஒவ்வொருவரும் அதில் பங்குகொள்ள விரும்பினர். இந்த மத்தியதர வர்க்க கொழும்புத் தமிழர்கள் தாம் நாகரீகமான, உலக நோக்குடைய, ஆங்கிலம் பேசுகின்ற வர்க்கம் எனக் காட்டிக் கொள்வதைப் பெரிதும் விரும்பியமையால் வழமையாக தேசியவாதக் கருத்துகளுக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதில்லை.
தமிழர் பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு காணவிழைந்த அரசாங்க முயற்சியில் ஒரு முக்கிய நடவடிக்கை 1979 ஜூலையிலே நாடாளுமன்றத்திலே பயங்கரவாதத்தடுப்புச்சட்டத்தை (PTA) நிறைவேற்றியமையாகும். அதுவரை த.ஐ.வி.மு.க்கும் அரசாங்கத்துக்குமிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு வருமென பெரும்பான்மையான தமிழர்கள் நம்பியிருந்தனர். ஆனால், பயங்கரவாதத்தடுப்புச்சட்டம் நிறைவேற்றியதால், அன்றைய நிலையில், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழரின் சினம் சிறிதளவேனும் அதிகரித்தது. அதன் விளைவாக, அவர்கள் ஆயுதப்போராட்ட இயக்கத்தின் இலட்சியத்தை ஆதரித்து நின்றனர். கீழ்வரும் பகுதி பேராசிரியர் எஸ்.ஜே.தம்பையாவின் "யூரீலங்கா - இனச்சகோதரப்படுகொலைகளும் ஜனநாயகம் சிதைந்து போதலும் (SRI LANKA - ETHNIC FRATRICIDE AND THE DISMANTLING OF DEMOCRACY) என்ற நூலிலிருந்து எடுக் கப்பட்டது. இது பயங்கரவாதத்தடுப்புச்சட்டத்தின் பிரதான அம்சங்களை அதையொத்ததான பிரித்தானிய சட்டத்துடன் ஒப்பிடுகின்றது.

Page 30
2 8
பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் (PTA)
இதன் முக்கியமான அம்சங்களாவன: "சிறையிலிருக்கும்போது பொலிசாருக்கு அளிக்கும் சம்மத வாக்குமூலம், ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றாக அனுமதிக்கப்படுகின்றது. மேலும், இச்சட்டமானது, இச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட எந்த ஒருவரதோ அவரது முகவரின் அல்லது பிரதிநிதியினதோ பாதுகாப்பில் அல்லது கட்டுப்பாட்டில் அல்லது உடைமையில் உள்ள ஆவணங்கள் யாதாயினும் அதை எழுதியவர் அல்லது ஆக்கியவரை அழைக்காமல, அவருக்கு எதிராக வழக்கில் சான்றாக பயன்படுத்தப்படக் கூடும். அத்துடன், அத்தகைய ஆவணங்களின் உள்ளடக்கத்தை அதில் குறிப்பிட்ட சான்றாதாரங்களாகப் பொருள் கொள்ளமுடியும் என்றும் இச் சட்டம் கூறுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் அதை அமுல்படுத்தும்போது பின்னோக்கியும் செயற்படலாம். பயங்கரவாத செயலில் ஈடுபட்டால் 5 முதல் 20 ஆணிடுகள் வரை அல்லது ஆயுள்வரை சிறைத்தணிடனை விதிக்க இச்சட்டத்தில் ஏற்பாடுள்ளது. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் இந்த ஏற்பாடுகள் பிடியாணை இன்றி எவரையும் கைது செய்ய அனுமதிக்கிறது. பொலிஸாரும் இராணுவத்தினரும் எவ்வித கட்டுப்பாடுமின்றி இந்த ஏற்பாடுகளுக்கு தாம் விரும்பியவாறு விளக்கம் கொடுத்துள்ளனர். எவரேனும் சட்ட விரோதமான செயலில் சம்பந்தப்பட்டுள்ளார் எனச் சந்தேகிக்க அமைச்சருக்கு காரணமிருந்தால், அவரை 18 மாதங்கள் வரை மறியலில் வைத்திருக்கலாம். இச்சட்டமானது சமய, சமூக, இன அமைதியின்மை, சமூக அல்லது இன அல்லது சமயக் குழுக்களிடையே விரோத உணர்வுகள் அல்லது பகைமை ஆகியவற்றை ஏற்படுத்தக் காரணமான பேச்சுக்கள், எழுத்துக்கள் உட்பட்ட குறிப்பிட்ட சில செயல்களைச் சட்டவிரோதமானவையென வரையறுக்கிறது."
பிரித்தானியச் சட்டம்
வட அயர்லாந்தில் உள்ள நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக வரையப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் சட்டமே பயங்கரவாதத்தடைச்சட்டத்திற்கு (PTA) முன்னுதாரணம் எனக்காட்டி இலங்கைக்காகப் பரிந்துரைப்போருக்குப் பேராசிரியர் தம்பையா பின்வருமாறு பதிலளிக்கிறார்:
இதே பெயரைக் கொண்ட (பயங்கரவாதத் தடுப்பு) ஐக்கிய இராச்சியச் சட்டம், 1974ல் ஆக்கப்பட்டுப் பின்னர் இரத்துச்செய்யப்பட்டுச், சில திருத்தங்களுடன் 1978ல் மீண்டும் சட்டமாக்கப்பட்டது. இலங்கையில் இச் சட்டமானது, ஐக்கியராச்சியத்தைவிட மனித உரிமைகளை பாரதூரமாகப் பாதிக்கவல்லது. ஐக்கிய இராச்சியச் சட்டம் பயங்கரவாதம் எண்பதற்கு, 'அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையைப் பயன்படுத்துதல் என்று மிகக்குறுகியதொரு வரைவிலக்கணத்தைக் கொடுத்துள்ளமை ஒரு முக்கிய விடயம். இத்தலைப்பின்கீழ் மக்களில் ஒரு பகுதியினரையோ மக்கள் எல்லோரையுமோ பயமுறுத்தும் நோக்கத்துக்காகப் பயன்படும் சகல வன்முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இன்னொரு விடயம் யாதெனில் இதே சட்டம், ஒருவரைக்

2 9
குற்றச்சாட்டு ஏதுமின்றித் தடுத்து வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச காலத்தை ஏழு நாட்களாக வரையறுத்துள்ளது. இலங்கைச் சட்டம் அனுமதிப்பதுபோல், எந்த வகையிலும், எவ்வித தொடர்புகளும் இன்றி ஒருவரை அவர்மீது வழக்குத் தொடராமல் நீண்ட காலத்துக்குத் தடுத்து வைத்திருக்கமுடியாது. இறுதியாக, ஐக்கிய இராச்சியத்திலே இச்சட்டம் 12 மாதங்களுக்கு மாத்திரமே அமுலில் இருக்கும். அதை மேலும் தொடர நாடாளுமன்ற அங்கீகாரம் வேண்டும். வேஜினியா லியறி என்பவர் (இலங்கையில் இனப்பிணக்குகள் சட்டநிபுணர்களின் சர்வதேச ஆணைக்குழு, 1981 ஜூலை-ஒகஸ்ட்) "இந்த இலங்கைச் சட்டத்திலுள்ள ஆட்சேபிக்கத்தக்க பல அம்சங்கள் தென்னாபிரிக்காவின் 1967ம் ஆண்டுப் பயங்கரவாதச் சட்டத்திலே பரவலாக விமர்சிக்கப்பட்ட ஏற்பாடுகளை ஒத்துள்ளன" எனக்கூறுகிறார். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், முதன்முறையாக இராணுவம் தமிழ்ப்பிரதேசங்களிலே தீவிரமாகச் செயற்பட்டது. ஜனாதிபதியின் மருமகனான பிரிகேடியர் வீரதுங்க, ஆண்டு இறுதிக்குள் பயங்கரவாதத்தை ஒழித்து விடுவதற்கான உத்தரவுடன் 1979ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடனடியாக அதைத்தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட ஆறு தமிழ் இளைஞர்கள் காணாமற் போயினர். அவர்களுள் இருவரான இன்பம், செல்வம் ஆகிய இருவரின் சடலங்கள் யாழ்ப்பாணக் கடற்கரைக்கு அணிமையிற் காணப்பட்டன. சித்திரவதை பற்றிய அறிக்கைகள் எங்கும் அதிகரித்தன. பொதுவாகத் தமிழர்கள் மத்தியில் தாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், தங்களை அரசாங்கத்தால் வெல்லமுடியாது என்ற நம்பிக்கை நிலவியது. சரியாகவோ பிழையாகவோ, தமிழர்கள், இளைஞர்களைப் பற்றியும் ஆயுதம் ஏந்திப் போராடும் இளைஞர்கள் பற்றியும் பெருமை கொண்டிருந்தனர். தெற்கிலே தமிழர்களின் பட்டப்பெயர் பனங்கொட்டை என்பதிலிருந்து கொட்டியா (புலி) என மாறியது. தமிழர்கள் தாம் அவ்வாறு அறிந்து கொள்ளப்படுவதையிட்டு முன்னர் போல் முகத்துதி செய்யவோ பயப்படவோ இல்லை. புலிகள் தமக்குத் தனித்துவ உணர்வையும் மகத்துவத்தையும் மீட்டுக் கொடுத்தனர் என அவர்கள் எண்ணினர். இந்தக் கால கட்டத்திலே போராளி இயக்கத்துக்குள்ளே சிதறலாகக் கொலைகள் ஆரம்பித்தன.
அதீத நம்பிக்கையுடன் சேர்ந்து சிந்தனையிலும் நடத்தையிலும் தீர்க்க முடியாத முரண்பாடுகள் பல தோன்றலாயின. தமிழ்ப்பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தி மிக மந்தமாகவிருந்தது. அரசாங்கத்திடமிருந்தோ அந்நிய மூலவளங்களிலிருந்தோ மூலதனமெதுவும் வரவில்லை. இதற்கு அரசாங்கம் ஓரளவு காரணமாயிருந்தது. கொழும்பிலுள்ள தமிழ் முதலாளிகள் தமிழ் மக்களிடமிருந்து கணிசமான பணத்தைச் சம்பாதித்தபோதும் அதிற் சிறிய தொகையையேனும் தமிழ்ப் பிரதேசங்களில் திரும்ப முதலீடு செய்யவில்லையெனத் தமிழர்கள் கடுமையாக முறையிட்டனர். அதேவேளை தமிழ் முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக அதிக பணத்தைச் செலவிட்டனர். இக் காலகட்டத்திற் தமிழர், கொழும்பில் தங்கவேண்டிய தேவை அதிகரித்தது. தமிழர் வேலை தேடி வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச்

Page 31
3 0
சென்றனர். தமிழ்ப் பிரதேசங்களில் பொருளாதாரச் செயற்பாடுகளை அதிகரிக்க அவர்கள் எண்ணவில்லை. வெளிநாடுகளிலிருந்து வந்து குவிந்த பணம் விவசாய நிலங்களில் வீடுகட்டவும், நகை, தொலைக்காட்சிப் பெட்டிகள், வீடியோ டெக்குகள் முதலிய ஆடம்பரப் பொருட்களை வாங்கவும் செலவிடப்பட்டது. மீண்டும், கொழும்பு வர்த்தகர்களே இலாபம் பெற்றனர். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே பயணஞ்செய்தல் கணிசமாக அதிகரித்தது. ஒரு சிலரே தங்கள் சேமிப்புக்களை இயந்திர தொழில்நுட்ப நிலையங்கள் போன்ற சிறு தொழில்களை ஆரம்பிக்கப் பயன்படுத்தினர்.
அதே கொழும்புத் தமிழர்கள் தாம் அபாயகரமான இடத்திலே வர்த்தகம் செய்வதாக உணர்ந்தனர். ஆனால், மக்கள் அது பற்றிப் பேசத் தயங்கினர். அரசாங்கம் தன் இயல்பான காடைத்தனத்தில் இறங்கியபோது நிலைமை மோசமடைந்தது. இக் காலகட்டத்தில் ஆண்டுக்கணக்காக ஆயுதப் போராட்டம்பற்றிப் பேசிக் கொண்டிருந்த தெற்கின், இடதுசாரிக் குழுக்கள், தமிழ் போராளிகளின் செயல்களை ஆச்சரியத்துடன் பார்க்கத் தொடங்கினர். தமிழ்ப்போராளிகள். நாட்டை விழிப்யூட்டுவதில் வெற்றிபெற்றனர். தயான் ஜயதிலக இவை பற்றி முதன் முறையாக எழுதினார். அவர் எழுதியவை லங்கா கார்டியன் ஆங்கில சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்டன.
தெற்கிலே சில இடதுசாரிப் புத்திஜீவிகள் தமிழ் ஈழம் எதிர்காலப் புரட்சிக்கான தொட்டிலாக அமையுமெனவும் பேசிக்கொண்டனர். சிறுபான்மை இனங்களும் பிரிந்து போதலும் பற்றிய புத்திஜீவிகளினி உரையாடல்களில் சிறுபான்மையினங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி லெனின், ஸ்டாலின் ஆகியேரின் கருத்துக்கள் வெளிப்பட்டன. மரபுவழி இடதுசாரிகள், தமது கடந்த காலச் செயற்பாடுகளினால் ஓரளவு மதிப்பிழந்து பிளவுபட்டு நவசமசமாஜக்கட்சி (NSSP) போன்ற அமைப்புக்களின் தோற்றத்துக்கு வழி அமைத்தது.
அரசியற் தேக்க நிலையை உடைப்பதற்காக, தேர்தற் தொகுதி உடன்படிக்கையொன்றை அமைக்கும் நோக்கத்துடன் தஐ.வி.மு, இடதுசாரிக் கட்சிகளுடன் (gலசுக, லசசக, கம்யூனிஸ்ட் கட்சி) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. த.ஐ.வி.மு. ஐ.தேகவை விட இடதுசாரிகள் மீது இயல்பாகவே கூடிய அவநம்பிக்கை கொண்டிருந்ததால், இந்த முயற்சி ஒரு புதிய முனைப்பை குறிப்பதாயிருந்தது. இடதுசாரிகள் பற்றிய இந்த தப்பெண்ணம் அனுபவத்தால் ஏற்பட்டதைவிடத் தஐவி.முயின் உள்ளே இயல்பாகப் பொதிந்திருந்த வலதுசரிப் போக்குக்களின் விளைவே எனலாம். இடதுசாரிகளுடன் ஆரம்பக் கருத்துப் பரிமாறல்கள் நம்பிக்கை அளித்தன. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைகள் தஐவிமுயால் திடீரென முறிக்கப்பட்டன. தமிழருக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட ஒரு இனக்கலவரத்தைத் தூண்டிவிட இது வழிவகுக்கலாம் என்று தஐவி.மு பிரமுகர்கட்குப் பலமாகச் சுட்டிக்காட்டப்பட்டதாலேயே தாம் அப்படிச் செய்ததாக மக்களை நம்பவைத்தனர். அதற்குப் பதிலாக, பேராசிரியர் ஏ.ஜே.வில்சன், (கனடாவில் அரச அறிவியல் விரிவுரையாளரும் எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் மருமகனுமான) அமெரிக்காவில் பயிற்சிபெற்ற சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் அமைச்சரின் மகனுமான கலாநிதி. நீலன் திருச்செல்வம் ஆகியோரின்

3
இணக்கப்படுத்தல் மூலம் ஐ.தே.க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஐ.தே.க அரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்று அதனுடன் நல்லுறவு வைத்திருந்தனர். இப்பேச்சு வார்த்தைகளின் விளைவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றிய உடன்பாடு ஏற்பட்டது. இச்சபைகள், தமிழர்களுக்கு அவர்களது நிலத்தின்மீது ஓரளவு ஆளுமையை வழங்குமெனவும் குறிப்பிட்ட சில விடயங்களை மாவட்டங்களுக்குப் பரவலாக்கம் செய்வதனால் தொழில் வாய்ப்பு வழங்குவதிலுள்ள பாகுபாட்டைத் தணிக்குமெனவும் கருதப்பட்டது.
மேலும் இச்சபைகளின் தலைவிதி ஆரம்பத்திலிருந்தே கேடானதாயிருந்தது. 1981 ஜூலையில் மாவட்ட அபிவிருத்திச்சபைத் தேர்தலின்போது, அரசாங்கப்படைகளால் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமை போன்ற அருவருக்கத்தக்க சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும், துரையப்பாவின் கொலைக்குப் பின் முதன்முறையாக தஐவி.மு.மின் அரசியல் எதிரிகள் மீதான தமிழ்ப் போராளிகளின் அரசியற் பயங்கரம் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐதேக வேட்பாளருமான திருதியாகராஜா, ஐதேக அமைப்பாளர் திருநடராஜா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டபோது துணையாற்றியது.
அரச இயந்திரத்தின் சில இடையூறுகள் இருந்த போதும் தஐ.வி.மு எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், மாவட்ட சபைகள் இயங்கவில்லை. ஏனெனில் அரசாங்கம் அவற்றில் நேர்மையான அக்கறை கொள்ளவில்லை. இது தஐவிமுயை அப்பட்டமாகவே ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிட்டது. ஆயுதப்போராட்டத் தலைவர்கள் தஐ.வி.முயின் தலைமையை ஏற்றுக் கொள்ளாதவராயிருந்தனர். தஐவி.மு. ஆதரவாளர் சிலரும் தஐ.வி.மு பயனற்றதென உணரத் தொடங்கினர். 1983 ஜூலை வாக்கில், இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்லல் ஆயுதப்போராளிகளிடம் கைமாறிற்று. பயமுறுத்தலாலோ வேறு காரணங்களாலோ தஐவிமு இடதுசாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை இடையில் முறித்தமையிலும் பேச்சுவார்த்தை மதிப்பளிக்கும் நோக்கமற்ற அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகட்குப் போனதிலும் மிகத் தவறான கணிப்பீட்டைச் செய்ததென அநேக அவதானிகள் கருதினர். ஏ.ஜே.வில்சன், ஆரம்பத்தில் மாவட்ட அபிவிருத்திச் சபையில் அடங்கியிருந்த அரசியல் தீர்வில் மிக நம்பிக்கை வைத்திருந்தார். உண்மையான அதிகாரப் பரவலாக்கத்தில் அரசாங்கத்தின் விருப்பிலும் அதன் தீர்க்கதரிசனத்திலுமே மாவட்ட அபிவிருத்திச் சபைகளின் வெற்றி தங்கியிருந்தது. அதிகாரப் பரவலாக்கம் செய்ய வேண்டிய விடயங்களிற் பெரும்பாலும் அனைத்திலும் மத்திய அரசாங்கம் தனது பிடியை விடாதவகையில் சகல மறைமுகமான சாதனங்களையும் பயன்படுத்தியது. இதற்கு ஒரு தனித்துவமான உதாரணம்: யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச்சபை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையே இந்தியப் பயணத்தை கணிசமாக இலகுபடுத்துவதற்கான ஒரு படகுச் சேவையை ஆரம்பிக்கும் யோசனை ஒன்றை முன்வைத்தது. இவ்வாறான வசதி இல்லாதபோது மன்னார் வழியாக அல்லது கொழும்பு ஊடாகச் சுற்றிச் செல்லும் செலவுமிகுந்த ஒரு

Page 32
3 2
பயணத்தை ஒருவர் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இந்த விடயத்தைக் கைவிடுமாறு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைக்குக் கூறப்பட்டது. இது ஓரளவு நகைப்புக்குரிய விடயம் ஏனெனில் பயணிகளை யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு மூன்று மணித்தியாலத்துக்குள் கொண்டு செல்லும் அரசாங்க அனுமதியற்ற படகுச் சேவைகள் சிறந்த படகோட்டிகளால் நடத்தப்பட்டு வந்தன. இன்னொரு உதாரணம்: பாதுகாப்பு என்பது சிங்கள அரசாங்கத்தின் தனியுரிமையாக உள்ள நிலையில், தமிழர்களின் பயங்களுள் ஒன்று அவர்களது பாதுகாப்புப் பற்றியதாக இருந்ததால், ஊர்காவற்படை ஒன்றை உருவாக்குவதற்காக மாவட்ட அபிவிருத்திச் சபைகளில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது. அவர்களைப் பயிற்சி அளித்துப் பேணுவதற்குரிய நிதி அனுப்பப்படாது போனால் அந்த ஏற்பாடு கருத்தற்றதாய்ப் போய்விடும் என்பதால் நிதியைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையோடு தஐவிமு. அந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டது. ஆனால் நடந்தது வேறு. இந்த ஊர்காவற் படையின் அந்தஸ்து, சாரணர் இயக்கத்தினதிலும் குறைந்ததாக உள்ளதென ஓர் உயர் அதிகாரி விபரித்தார். அவர்கள் தமது பஸ்கட்டணத்தைத் தாமே செலுத்தி வருவார்கள். தங்கள் சீருடைக்கும் பணம் செலுத்துவார்கள். தேனீருக்கும் தாமே பணம் கொடுப்பார்கள். இதைத் தவிர்க்க வாய்ப்பு இல்லை. இறுதியாக மாவட்ட அபிவிருத்திச்சபைகள், தேசிய வரவு-செலவில் ஒரு சதவீதத்தைத் தானும் எட்டாத அற்பமான ஒரு பன்முகப்படுத்தப்பட்ட பங்கீட்டுடன் விடப்பட்டது. இத்தகைய இடர்ப்பாடுகள் எழுந்தபோது த.ஐ.வி.மு. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பின்னர் அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பு காலப்போக்கில் விரக்தியை ஏற்படுத்தியிருக்கலாம். அரசாங்கம் வன்செயல்களைத் தூண்டிவிட்டதுடன், தேர்தற் சாவடிகளில் ஏமாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டமை மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு துர்ச்சகுணமாயிருந்தது. இந்த வன்செயல்களில் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணப் பொது நூலகத்தையும் ஈழநாடு பத்திரிகை அச்சகத்தையும் எரித்தமை பண்பாட்டுப் பேரழிவெனப் பரவலாகக் கருதப்பட்டது. வழமைபோற் பொதுமக்களின் இடர்பாடுகளைத் தமது சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துகின்றவர்களும் நம் மத்தியில் இருந்தனர். நிதியையும் நூல்களையும் சேகரிப்பதற்காக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களாக இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாண நூலகத்தைப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

3 3
அத்தியாயம் - 3
1981 ஆகஸ்ட் முதல் 1983 யூலை வரை
31 அறிமுகம்
அரசியல் தரகர்கள் சிலரின் ஆலோசனைக்கிணங்க விடுதலைக்கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபையின் வெற்றியில் தனது எதிர்காலத்தை பணயம் வைத்து செயலாற்றியது. போராளி இயக்கத்தின் பெரும் பகுதியினரை மாவட்ட அபிவிருத்திச்சபை ஆலோசனைக்கு அது இணங்க வைத்தது. இந்த விடயத்தில் அரசாங்கம் நேர்மையாக நடவாமையும், மறுபுறத்தில், தமிழ் மக்களுக்கு எதிராகத் தனக்கேயுரிய முறையிற் பயங்கரச் செயல்களைத் தொடர்ந்துஞ் செய்தமையும், 1982 நொவம்பருக்கும் 1983 யூலைக்கும் இடையே நிலமைகள் வேகமாகச் சீரழிய ஏதுவாகின. தஐ.வி.முயயும் தொண்டமானின் தலைமையில் இந்தியத் தோட்டத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் சிறந்த தீர்வுகளை வழங்குமென இன்றைய பிரச்சினைகளின் மூலகர்த்தாவான யு.என்.பி. நம்பி எதிர்பார்க்க நேர்ந்தமை துரதிருஷ்டமானது. இந்த வீணி நம்பிக்கையின் விளைவாக நல்லவை நடக்குமென்று எண்ணித் தஐ.வி.மு. மெளனத்தைக் கடைப்பிடித்தது. 1982 ஒக்டோபரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுசன வாக்கெடுப்பிலும் த.ஐ.வி.மு., யு.என்.பி.யை ஆதரிப்பதை பெருவாரியான தமிழ் மக்கள் சகிக்கமாட்டார்கள். எனவே தீர்க்கமான நிலைப்பாட்டையும் எடுக்காமல் த.ஐவி.மு. எந்த வகையிலும் இது பரவலான ஏமாற்றுக்களின் பின்னணியில் நடைபெற்ற ஜயவர்த்தனவின் யுஎன்பிக்கு வெற்றிபெறுவதற்கும் துணை புரிந்தது. கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ச்சியாகத் தூக்கியெறிந்துவந்து முடிவில் இதுகாலவரையும் நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்ற, இரு தேர்தலிலும் தாம் வெற்றிபெறவேணி டுமென்றும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொணடிருக்க வேணடுமென்றும் யு.என்.பி, மீண்டுமொருமுறை தமிழ்மக்களிடம் கெஞ்சியது. 1982 டிசெம்பரில் நடந்த பொதுசனவாக்கெடுப்பு, அடிப்படையில், இந்நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்ற உரிமையைக் பறிக்கும் ஒரு ஜனநாயக விரோதச் செயலாகும். எது வித ஆதாரத்தையும் முன்வைக்காமல், ஒரு நக்ஸலைட் (நக்ஸலைட்டுக்கான விளக்கம் கீழே உள்ளது) சதியை அரசாங்கம் கண்டு பிடித்ததாக இதற்குச் சாட்டுக் கூறியது. இந்நாட்டு மக்களின் தெரிவு செய்யும் உரிமையைப் பறிப்பதற்கு உதவிய சேவைக்காக த.ஐ.வி.மு. இற்கும் இ.தொ.கா.வுக்கும் 1983 யூலை இனக்கலவரமும் அதைத்தொடர்ந்து, தவிஐமுவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றிய ஆறாவது திருத்தமும் வெகுமதியாக அளிக்கப்பட்டன. பொருளாதாரத்தின் முக்கிய துறையிலே தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாலும் இந்நாட்டின் விவகாரங்களில் இந்தியா தலையிட்டதாலும் இ.தொ.காகாப்பாற்றப்பட்டுள்ளது. ஒரு அரசியற் கட்சி தனது போராட்டக் குணாம்சத்தை இழப்பதும் அசமந்தமாகயிருப்பதும் தற்கொலைக்கு இட்டுச் செல்லும். இதுவே தஐவிமுவின் தலைவிதியாக அமைந்தது. 1987ல் தெற்கில் ஜனதா விமுக்தி

Page 33
3 4
பெரமுன (I.VP) யின் எழுச்சியுடன் பல வழிகளில் சிங்களவர் முகங்கொடுத்த சவால்களை ஒத்த விடயங்களை 1977ற்குப் பின்னர், குறிப்பாக நாம் இங்கு கவனத்துக்கு எடுத்துக் கொணர்டுள்ள காலப்பகுதியில், தமிழரும் அனுபவித்துள்ளனர்.
த.ஐ.வி.மு. வீணே காத்துக்கொணடிருந்தபோது, பல்கலைக்கழக மாணவர்கள் தலைமை தாங்கிய எதிர்ப்பு, பொதுமக்களின் உணர்வுகளைச் சுயேச்சையாக வெளிப்பட வைத்தன. இந்த எதிர்ப்புகள், பெரும்பாலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அகிம்சை வழியில் கண்டிப்பவையாக இருந்தன. இந்த எதிர்ப்புகள் தம் சுயேச்சையான தன்மையால் 1985ற்குப் பின்னர் ஆயுதப் போராட்டக் குழுக்கள் பின்னின்று கட்டுப்படுத்தி நடத்தியவற்றிலிருந்து தரத்தில் வேறுபட்டவையாக இருந்தன. 1983 யூலைக்கு முன்னர் ஆயுதப்போராட்டக் குழுக்கள் மாணவர்களின் செயற்பாடுகளிலிருந்து பயனடைந்தன. ஆயுதப் போராளிகளை “எங்கட பெடியள்" என்று மக்கள் அழைக்குமளவு அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் நிலவியது. மாணவர் மத்தியில் செல்வாக்குப் பெற்றவர்கள் ஆயுதப்போராளிகளின் செயற்பாடுகளை விமர்சிக்கக்கூடுமாக இருந்ததுடன் அவர்களும் போராளிகளை விமர்சித்தார்கள். ஆயுதப் போராளிகளும் அத்தகைய விமர்சனங்களைக் கவனத்திற் கொண்டனர். இப்போக்கே தொடர்ந்திருக்குமாயின் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டதும், அக்காரணத்தால், மக்களின் கட்டுப்பாட்டுக்கு இசைவானதுமான ஒரு ஆயுதப் போராட்ட இயக்கம் இருந்திருக்கும் என அநேக அவதானிகள் கருதுகின்றார்கள். 1983 யூலை இனக் கலவரங்களும் ஆயுதப் போராட்டக் குழுக்களை இநீதியா வளர்த்துவிட்டமையும் இந்த நிலைமையை மாற்றிவிட்டன. ஆயுதப்போராட்டக்குழுக்கள் இந்தியாவிடமிருந்து பொருள் உதவி பெற்றமையால் தமிழ்மக்களுக்கன்றி இந்திய உளவு நிறுவனமான "றோ" (RAW) வுக்கு வகை சொல்லும் இராணுவ அமைப்புகளாகப் பெரும்பாலும் மாறின. மக்களோ இவ்வமைப்புக்கள் ஒவ்வொன்றினதும் விளையாட்டுப் பொருளாக மாறினர்.
அரசின் கீழ்த்தர உணர்வுகளை ஆத்திரமூட்டி வெளிக்கொணர்வதன்மூலம் மக்களின் வெறுப்பை வளர்ப்பது புரட்சிக்கு நல்லதென வாதிடுபவர்கள் எப்போதும் இருந்தார்கள். ஆனால், இருபகுதியினர் மத்தியிலும் கட்டவிழ்த்துவிடும் துன்பங்களும் அவலங்களும் வெறிகளும் மனநோயை ஒத்த பார்வைகளும் தப்பிப்பிழைத்து உயிர்வாழ்பவர்களுக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஒருபோதும் அளிக்காது என்ற பாடத்தைத் தமிழர்கள் இன்றும் சரியாக ஜீரணிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்தத் தமிழர்களின் பரிதாப வாழ்வைத் தென்னிலங்கை மீணடும் விரும்புகிறது. தமிழர் சமுதாயம் தார்மீகப் பிரச்சனைகளைத் தெளிவாக்கத் தவறியமை, ஈற்றில் விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்த இளைஞர்கள்மீது சீரழிவான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
32 'சற்றடே றிவ்யூவின் பார்வையில்
பின்வருபவை, யாழ்ப்பாணத்திற் பிரசுரமான ஆங்கில வார இதழான "சற்றடே றிவ்யூ இக்காலப்பகுதியிற் பதிவு செய்த முக்கிய நிகழ்ச்சிகளுக்கூடான ஒரு கண்ணோட்டமாகும். தலைப்புத் திகதி செய்திகள் பிரசுரமாகிய திகதியைக் குறிக்கும். இப்பத்திரிகை அக்காலகட்டங்களில் யாழ்ப்பாணத்தில் நிலவிய உற்சாக

3 5
உணர்வுகளையும், இடையிடையே தோன்றிய ஐயப்பாடுகளையும் துர்க்குறிகளையும் பிரதிபலித்தமையால் இதனை மேற்கோள் காட்டல் சாலப்பொருந்தும்.
1982 | 1
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர் அப்புத்துரை விமலராசாவை பனாகொடை இராணுவ முகாமில், ஒராண்டுக்கு மேலாக வழக்கு விசாரணை ஏதுமின்றித் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக வடக்குக் கிழக்கிலே பட்டதாரி மாணவரும் நேற்று (மே 14) விரிவுரைகளையும், வகுப்புகளையும் பகிஷ்கரித்தனர். கொழும்புப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களும், பின்னேர விரிவுரைகளைப் பகிஷ்கரித்து எதிர்ப்புப்காட்டுவதில் இணைந்தனர். ஏனைய பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்கள், விமலராசாவை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி ஜயவர்த்தனவுக்கு தந்திகளை அனுப்பினர்.
எல்லாத் தமிழ் மாவட்டங்களிலும் இந்த எதிர்ப்புத் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த மாணவர்களைப் பொலிசார் கைது செய்தனர். மே 17ம் திகதி பொலிஸ் தடையையும் மீறிப் பட்டதாரி மாணவர்கள் யாழ்ப்பாணத்திலே மாபெரும் எதிர்ப்பு ஊர்வலமொன்றை நடத்தினர்.
1982 (6.29
"யாழ்ப்பாண வன்முறை அருவருக்கத்தக்க புதிய பரிமாணத்தை எடுக்கின்றது" என்ற முதற்பக்கத் தலைப்பின் கீழ், 'சற்றடே நிவியூ முதன்முதலாக நன்கு பிரபலப்படுத்தப்பட்ட அரசியல் கொலைகள் பற்றி பின்வருமாறு எழுதியது. "ஏழு ஆண்டுகட்கு முன்னர், 1975ஜூலை 25ம் திகதி அப்பொழுது அரசாங்க சார்பாளராயிருந்த மேயர் அல்பிறட் துரையப்பாவின் கொலையுடன் ஆரம்பித்த இளைஞர்களின் அரசியல் வன்முறையின் ஆட்சேபனைக்குரிய போக்கு அளவெட்டியில், ஏழு இளைஞர்களைக்கொண்ட ஒரு கோஷ்டியால் மே 26ம் திகதி பிரபல சமூக சேவையாளரும் தமிழர் விடுதலைத் தீவிரவாதியுமான பி.இறைகுமாரனும் அவரது நணிபர் ரி.உமைகுமாரனும் கட்டுக் கொல்லப்பட்டதுடன் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தது. சம்பவம் நடைபெற்ற அளவெட்டி கிராமம், தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் திருஅ.அமிர்தலிங்கத்தைப் பிரதிநிதியாகக் கொண்ட காங்கேசன்துறைத் தொகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து ஏறக்குறையப் பத்து மைல் தொலைவில் உள்ளது. ஒரு விவசாய அலுவலரான இறைகுமாரன் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணியின் அமைப்புச் செயலாளராயிருந்தார். அதற்கு முன். தஐவிமுஷடன் இணைந்த இளைஞர் முன்னணியில் அவர் ஒரு உறுப்பினராக இருந்தபோது, 1976ல் தஐ.வி.மு. சார்பான "இளைஞர் குரல்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராக செயலாற்றினார். தஐ.வி.மு. மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொணிடதும், இறைகுமாரன் அதைவிட்டு விலகி அக்கட்சியை விமர்சித்துக்கொண்டிருந்தார். உமா மகேஸ்வரனுடன் இணைந்த போராளிகளே இக்கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் என்று பின்னர் வேறு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. விபரீதமான சூரத்தனத்தால் நடந்த ஒரு

Page 34
3 6
கொலையை மூடிமறைப்பதற்காக மற்றைய கொலை செய்யப்பட்டது. அதற்கு முன்னர், பிரபாகரன் குழுவினரது தனிநபர் பயங்கரவாதம், சுத்த ராணுவக் கண்ணோட்டம் போன்றவற்றை விமர்சித்த வெளியேரில் மிகவும் திறமைசாலியான சுந்தரம் என்பவரைச் சித்திரா அச்சகத்திற் படுகொலை செய்ததற்கான பழிவாங்கலாகவும் இது கருதப்பட்டது. சுந்தரம் தலைமையிலான குழுவே "புதிய பாதை" எனும் பத்திரிகையைப் பிரசுரித்தது. காலப்போக்கில் அக்குழு உமாமகேஸ்வரன் தலைமையில் புளொட் ஆக உருவெடுத்தது. இரகசியமாக நடைபெற்ற உட்கொலைகள் வெளிப்படையாக நடைபெறத்தொடங்கின. இப்புதிய பரிமாணம் எதிர்வு கூறத்தக்க போக்கின் ஒரு கூறா இல்லையா என்று தனது வாசகர்களுக்கு விளக்கும் வேலையில் "சற்றடே றிவ்யூ" இறங்கவில்லை. இக் கொலைகள் நடந்த காலம், பரஸ்பர நாசம் விளைவிக்கின்ற உட்கொலைகளின் ஆரம்ப நாட்களாகும். பத்திரிகையாளர் நிர்ப்பந்தத்தின் கீழ் எழுதுகின்ற நிலைமைக்கு அப்போது முகம் கொடுக்கத்தொடங்கவில்லை. அதே இதழில், "சற்றடே றிவ்யூ ஆணித்தரமான ஒரு ஆசிரியர் தலையங்கத்தை எழுதியிருந்தது:
வெளிச்செல்ல மார்க்கம் எதுவுமில்லாத நிலையில் அரசியல் வெம்மையானது இப்பொழுது உள்நோக்கித் திரும்பியுள்ளது. வண்முறை எப்போதுமே நாசகரமானதுதான். இப்பொழுது அது தனி திசையை மாற்றிக்கொண்டிருக்கின்றது. அவ்வளவுதான். அது சுய அழிப்பானதாக மாறி வருகின்றது. அரசியல் காற்றில் பயங்கரக் குளிர் விரவிக் காணப்படுகின்றது. ஒரு புதிய அரசியல் சகிப்புத்தன்மையின்மையினால் வவி சூடேறிக்கொணர்டே வருகின்றது. சகோதரன் சகோதரனுக்கு எதிராக மாறுகிறான். இலக்குகளுக்குச் சுடுமாறு பயிற்றும் துப்பாக்கிகள், அங்கு இலக்குகளே இல்லாதிருப்பதைக் காண்கின்றன. கொலைகளுடன் வாழக் கற்றுக்கொண்டு விட்ட நம் சமூகம் பின்னால் திரும்பிப்பார்த்து, சட்டத்தில் உள்ளது போல் சட்டபூர்வமான - குற்றத்தைச் சுமத்தாத "நியாயப்படுத்தத்தகு கொலை" என்ற தொலைதூர இலக்கையாவது தெரிந்து வைத்திருந்தது. அந்த இலக்கையும் இப்போது காணோம்; அரசியல் அதையும் இல்லாமல் ஆக்கிவிட்டது. −
இறைகுமாரனதும் உமைகுமாரனதும் கொலைகள் சாதாரண கொலைகளல்ல. அவை பயங்கரவாதத்திலும் பெரியன என்றே நாம் காண்கிறோம். தமிழனின் அரசியல் வாழ்வில் விகாரமான ஒரு புதிய முகம் தெரிவதின் துர்ச்சகுனம் இது. கொலை செய்வதற்காக விதிமுறைகளைக் கைவிட்ட ஒரு சமூகம், இப்போது தற்கொலைக்குத் திரும்புகிறது.
இலட்சியம் இல்லாத ஒரு தலைமறைவுச் சக்தி உருவாகிவருகின்றதென்பது உண்மை. அது கண்டிக்கப்படாவிட்டால், யாழ்ப்பாணத்திலே ஒரு உள்நாட்டு யுத்த நிலைமையை அது தோற்றுவிக்கக்கூடும் என்பதோடு குடாநாடு முழுவதையும் குழப்பநிலைக்குள் மூழ்கடிக்கவும் கூடும். அது முளையிலேயே கிள்ளி எறியப்படல் வேண்டும். இதைச் செய்ய ஆற்றலும் அதிகாரமுங் கொண்ட ஒரு தலைவர் இருப்பின் அவர் திருஅஅமிர்தலிங்கம் ஆவார்.
47 மாதங்கட்குப் பின், 1988 ஏப்ரல் பிற்கூற்றில் விடுதலைப்புலிகள் - டெலோ மோதலுடன் உள்நாட்டு யுத்தம் சூடுபிடித்துத் தன் உச்சக்கட்டத்தை அடைந்து, ஒரு நீடித்த கலவர நிலை நிலவியது. இது நடந்தபோது சற்றடே

37
றிவ்யூ ஆசிரியர் குழுவினருக்கோ, யாழ்ப்பாணத்தில் வெளிவரும் வேறு எந்தப் பத்திரிகைக்கோ தடுமாற்றம் இருக்கவில்லை. அவர்கள் 'மெளன விடுமுறையில் சென்றிருக்காவிட்டால், அவர்கள் தற்கொலைப்பக்கம் திரும்புகின்ற பைத்தியகாரர்களாக கருதப்பட்டிருப்பார்கள். புதிய சக்திகள் இலட்சியங்கள் இல்லாதவையன்று. விடுதலைப்புலிகளைப் பொறுத்த வரை அவர்களது இலட்சியங்கள் மதரீதியான அர்ப்பணிப்பின் இயல்புடையனவாயினும் சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றுடன் எதுவித உறவும் அற்றவை. மேற்குறிப்பிட்ட பத்திரிகை ஆசிய எழுத்தாளர் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் வன்முறை பற்றி நிலவும் மனப்பாங்கைப் பிரதிபலித்தனர். அவர் சிலநேரம் வன்முறை அவசியமானதே என்று கருதினாலும் தாம் வன்முறையை விரும்பவில்லையென்பதை நிலைநாட்டிக் கொண்டார். கொலை செய்வதை, தடுக்க அவரும் முயன்றார். விஞ்ஞானப் பரிசோதனைக்காக உயிர்ப்பிராணிகளை வெட்டுகின்ற வைத்தியர்கள் விஞ்ஞானிகள் ஆகியோர் நீங்கலாக, கசாப்புக்கடைக்காரன், நாய்பிடிக்காரர் போன்று கொலைகளில் ஈடுபடுவோர், சேர் தோமஸ் மூரின் "யூட்மோப்பியா" விற்போல், கீழ்ச்சாதி என்று கூறப்படும் குழுக்களைச் சேர்ந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தனர். (தோமஸ் மூர் இந்தியாவைப்பற்றி அறியாதவராயிருந்தார். அதனாலேயே அவரது எண்ணங்கள் வியந்துரைக்கத்தக்கனவாய் விளங்கின). அவ்வாறு சாதிகளை வகைப்படுத்தியோர் மகாபாரதத்தின் புலமை பெற்றிருந்தனர். மகாபாரதத்திலே போரில் கொலை செய்யும் மனிதர்கள் 'க்ஷத்திரியர் என்னும் வர்ணத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். ஆயுதப்போராட்டக்குழுக்கள் பலம் பெற்று வளர்ந்தபோதும் அவர்கள் "எங்கள் பெடியங்கள்" என அழைக்கப்பட்டாலும், தமிழ்ச்சமூகத்தின் உயர்வர்க்கத்திற்கு அவர்கள் அடிப்படையில் தொடர்ந்தும் ஒரு அன்னியமான சாதிக்குழுவாகவேயிருந்தனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போராளிகளுக்குப் பொருள் உதவியும் தார்மீக ஆதரவும் அளித்துவந்த உயர்குழாத்தினர், சிலவேளைகளில் மகாபாரதத்தை மேற்கோள்காட்டி, "விடுதலை பெற்றுக்கொடுப்பது ஆயுதப்போராளிகளின் விவகாரமாயிருக்கலாமாயினும் ஆளுகின்ற விவகாரம் மூளையும் கல்வியும் உடையவர்களின் வகையிலேயே இருக்க வேண்டும்" என வெட்கமில்லாமற் கூறுவதை அடிக்கடி கேட்கக்கூடியதாயிருந்தது. மூளையும் கல்வியும் உடையோர் என்பது வெளிநாட்டிலுள்ள உயர்குழாத்தினரின் பிள்ளைகளையே குறித்தது. ஆயுதப்போராளிகள் இதை அறிந்திருந்தனர். அவர்களுள் அநேகர் பாடசாலைகளில் படித்து வெற்றிகரமாக முன்னேறி பெற்றிருக்க வேண்டிய வாழ்வை, தியாகம் செய்தவர்கள். அவர்களால் இதை எவ்விதத்திலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வன்முறை பற்றிய யாழ்ப்பாணத்தவரின் இரட்டை நிலைப்பாடு ஆயுதப்போராளிகள் பற்றிய இரட்டை நிலைப்பாடாக விவடைந்தது. இதையடுத்து அவர்கள் தம்மைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் என ஆயுதப்போராளிகள் உணர்ந்தார்கள்.
விடுதலைப்புலிகள் பொதுமக்கள்மீது கொண்ட அவநம்பிக்கையும் வெறுப்பும் ஓரளவுக்கு இதனால் ஏற்பட்டதெனலாம். 1987ல் இவை புதிய உச்சங்களை எட்டின. பலரையும்போல, ஆசிரியர் தலையங்க எழுத்தாளரும், 1982 மே மாதம் நடந்த இரு கொலைகள் பற்றிக் கேள்வி கேட்கவும் சந்தேகங்களைக் கிளப்பவும் தொடங்கினர். ஆயினும் மற்றவர்களைப்போல் தற்கொலைக்கு இட்டுச்செல்லாத

Page 35
38
கொலைக்கு ஒரு நியாயமான விளக்கம் உண்டா இல்லையா என்னும் கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். இவ்வாறான இருண்ட காலங்களில் அவர்கள் அமிர்தலிங்கத்தில் நம்பிக்கை வைத்ததையும் கவனித்திற் கொள்க.
1982 யூன் 5ம் திகதி சற்றடே றிவ்யூ பெரும் எதிர்ப்பைத் தொடர்ந்து, ஓராண்டுக்குமேல் வழக்கு விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருந்த விமலராசா மே 31ம் திகதி திங்கட்கிழமை இராணுவ அதிகாரிகளால் மேண்முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார். நீதிவான்கள் செனிவரத்ன, அபயவர்த்தன ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழு ஆவணங்களைச் சமர்ப்பிக்க யூலை 19 வரை அரசுக்கு அவகாசம் கொடுத்தது. வழக்கு விசாரணை யூலை 26ற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதெனக் கூறியது. அப்பத்திரிகைகயின் ஜூன் 12ம் திகதி இதழ், இந்தவிடயமாக தஐவிமு. தலைவர் திருஅமிர்தலிங்கம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர், விமலராசாவும் தடுத்து வைக்கப்பட்ட வேறு ஒன்பது பேரும் ஜூன் 7ம் திகதி விடுதலை செய்யப்பட்டனரென அறிவித்தது. இந்த முயற்சி அமிர்தலிங்கத்தின் வேகத்தைத் தணிக்கும் நோக்குடையதாயிருக்கலாம். அதாவது, யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதியின் முதலாவது அதிகாரபூர்வமான விஜயத்திற்கு முன், தமிழர்களைத் தண்பால் திருப்பும் முயற்சியாக இருக்கலாம் என அப்பத்திரிகை ஆரூடம் கூறியது. அல்லது, நீதிமன்றத்துக்கு வழக்கமாகச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதற்கு முன்னர், வழக்கு பலவீனமானது என அரசாங்கம் அறிந்திருக்கலாம். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ்க்கைது செய்யப்படுகின்றவர்கள் வழக்குகளெல்லாம் இத்தகையனவேயானாலும், இந்த வெற்றி மாணவர்களுக்குப் புதியதொரு கெளரவத்தை அளித்தது.
1982 ஜூன் 5
புலிகள் கோவை என்னும் தலையங்கத்தின்கீழ் "சற்றடே றிவ்யூ இந்நாட்டின் விவகாரங்களில் இந்தியாவின் பங்கைப் புலனாக்கிய ஒரு நிகழ்ச்சிபற்றி எழுதியது. மே 19ம் திகதி சென்னை பாண்டி பஜாரில் நடந்த நிகழ்ச்சி பற்றித்தன் முதற் பக்கத்தில் எழுதியிருந்த செய்திக் குறிப்பில் மே 21ந் திகதி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை அது மேற்கொள் காட்டியது. பொலிஸின் கூற்றுப்படி, இரு குழுக்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டிருந்ததன் விளைவாக, இருபத்தெட்டு வயதான பிரபாகரன் அல்லது கரிகாலன் இருபத்துநான்கு வயதான சிவகுமாரன் அல்லது ராகவன் என்போர் முகுந்தன் எனப்படும் உமா மகேஸ்வரன், இருபத்திரண்டு வயதான ஜோதிஸ்வரன் ஆகிய இருவரை உத்தரவுப்பத்திரம் இல்லாத, சுழல் துப்பாக்கியாற் சுட்டனர். ஜோதீஸ்வரன் காலில் குண்டுக்காயங்கள் ஏற்பட்டு இராயப்பேட்டை ஆளப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முகுந்தன் சூட்டினின்று தப்பிவிட்டார். துப்பாக்கிச்சத்தம் கேட்டதும், பாண்டி பஜார் குற்றப் பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நந்தகுமார் தனது குழுவினருடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்று குற்றவாளிகளைக் கைது செய்தார்.
தனது மோட்டார் சைக்கிளில் ஏறித்தப்பிச் சென்ற உமா மகேஸ்வரன், பெரும் பொலிஸ் தேடலின் பின், மே 25ம் திகதி ஒரு புகையிரத நிலையத்திற்

3 9
கைது செய்யப்பட்டர். அவரிடம் இரண்டு சுழல் துப்பாக்கிகளும் ஒரு சயனைட் குப்பியும் இருந்தன. விடுதலைப்புலிகளுக்கும் புளொட் இயக்கத்தினருக்கும் இடையிலான கசப்பான பிளவு இப்பொழுது பகிரங்கத்துக்கு வந்துள்ளதையே இந்த நிகழ்ச்சி காட்டுகின்றது. அநேக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் சட்டத்தரணிகளும் இந்தப் பிளவைச் சரிக்கட்டுவதில் ஈடுபட்டனர். போராளிகளும் இந்த நிகழ்ச்சியையிட்டு வருத்தம் தெரிவித்ததுடன் ஐக்கியப்பட விருப்பமும் காட்டினர். இருதரப்பினரும் தமக்கிடையிலான ஐக்கியமின்மையின் நீடிப்பு தமிழீழத்தை அடைவதென்ற தமது உண்மையான இலட்சியத்துக்கே ஊறாகுமென உணர்வதாக பிரி.ஐ. (PT) கூறியது. தொழிலால் நில அளவையாளரான உமாமகேஸ்வரன், தமிழ்நாட்டுப் பொலிஸார் தம்மை நடத்தியவிதம் பற்றித் தனது திருப்தியைத் தெரிவித்தார். அவர் தமக்கு சில நில அளவை நூல்கள் தேவையென்று கேட்டபொழுது தமிழ்நாட்டுப் பொலிசார் பல புத்தகக்கடைகளில் நீண்ட தேடுதல் நடத்தி அந்த நூல்களைக் கொண்டுவந்தனர். அவையெல்லாம் தாய்நாட்டுச் சூழலை உணர்த்தின. "பெடியன்கள் பெடியன்கள்தான். அவர்கள் ஓர் உயர் இலட்சியத்துக்காகக் கைகுலுக்கிக்கொண்டு மீண்டும் நண்பர்களாவர்கள் என்பது மக்களின் பரவலான கருத்தாயிருந்தது எனச் சற்றடே றிவ்யூ மேலும் கூறியது. இலங்கை அரசாங்கம் இந்தியாவிலிருந்து போராளிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப எடுத்த பகீரதப்பிரயத்தனங்கள் தோல்வியுற்றதையிட்டுச் சற்றடே றிவ்யூ சூசகமாக வெளியிட்ட திருப்தி பொதுமக்களின் கருத்தையே பிரதிபலித்தது. அது 'சன் (SUN) பத்திரிகையின் முன்பக்க செய்தித்தலைப்பை மேற்கோள் காட்டியது: தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் புலிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். பெருமளவு நிதியையும் பாதுகாப்பான மறைவிடங்களையும் அளிக்கிறார்கள், எம்.ஜி.ஆரின் உயிரும் பயங்கரவாதிகளால் பயமுறுத்தப்பட்டது" என அச் செய்தி கூறியது. இது ஆறு ஆண்டுகள் முன்னர் நடந்தது. இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நெருக்குதலுக்கு அடி பணிகிறது என்ற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை இலங்கையில் இரு சாராருக்கும் திருப்திகரமான விளக்கமாகத் தோன்றியது. ஒருவன் தான் தனது சொந்த நலன்களைப் பெறுவதற்கு மற்றவனைப் புத்திசாதுரியமாகப் பயன்படுத்தமுடியுமென்று ஒவ்வொருவரும் சிந்திக்கின்ற ஒரு அதிமேதாவித்தனமான உலகிலே நாம் அனைவரும் சஞ்சரிக்கிறோம். ஈழம் பெறுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்தலாமென்று அநேக தமிழர்கள் நினைத்திருந்தார்கள். இந்த விளையாட்டின் எஜமான் யார் என்பது மிகப் பிந்தியே புலனாயிற்று. ஆனால் அப்பொழுது எல்லோருடைய பார்வையும் வரலாற்றை ஆக்குபவர்களும் வரலாற்றின் கைதிகளுமான இருவர் மீதே இருந்தது. நாங்கள் சிங்களவருக்கு கேலிச்சைகை காட்டி அவர்களைப் பரிகாசம் பண்ணவும் முடிந்தது. சிலருக்கு மகிழ்ச்சிக்குரிய காலமாக அது இருந்தது. ஆம், நாளையானது தண்பாட்டைப் பார்த்துக் கொள்ளும்

Page 36
4 0
1982 ஜூன் 12
அமரர் ஆயர் லியோ நாணயக்காரவைப்பற்றி பி.அருளானந்தம் எழுதிய நயப்புரையினின்று எடுக்கப்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு: 1973-75ற்கு இடைப்பட்டகாலத்தில் பதுளை வீதிகளில் அனாதைகள் அநேகர் காணப்பட்டார்கள். அவர்களுட் பெரும்பாலோர் தோட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள். ஆயர் லியோ, பிச்சைக்காரர் புனர்வாழ்வு முகாமின் பின்னணியில் அதன் அமைப்பாளராக இருந்தார். தனிப்பட்ட தமது உதவிகளை நல்ல விரும்பிய அலுவலர்களதும் தனியார் தாபனங்களினதும் உதவியுடன் இம்முகாம் நடத்தப்பட்டது. அவர் ஒரு செயல் வீரர், ஒடுக்கப்பட்டவருக்காகப் பரிந்து பேசுபவர். 1971ல் கைதான பயங்கரவாதிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கு நடைமுறையில் உதவ முயன்றார். தமிழரும் தமிழ் மொழியும் இந்த நாட்டில் சம உரிமைகளை அனுபவித்தல் வேணடுமென்ற தமது கருத்தைத் தொடர்ந்தும் வெளியிட்டு வந்தார்.
1982 ஜூலை 3 s
"யாழ்ப்பபாணத்தில் பருத்தித்துறைப் பிரதேசத்திலே நெல்லியடிச் சந்தியில் ஒரு பொலிஸ் ஜீப்பை இனந்தெரியாத துப்பாக்கிக்காரர்கள் மறைந்திருந்து, தாக்கியபோது மூன்று பொலிஸ்காரரும் ஒரு பொலிஸ் சாரதியும் கொல்லப்பட்டனர். ஜூலை 2ம் திகதி வெள்ளிக்கிழமை பிய. 730 அளவில் இது நிகழ்ந்தது. குணபால, அருந்தவராஜா, மல்லவாராச்சி மற்றும் ஜீப் சாரதி ஆரியரட்ன ஆகியோர் இறந்த பொலிஸ்காரராவர். பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகரி இன்ஸ்பெக்டர் ஐதிருச்சிற்றம்பலமும் பொலிஸ்காரர்கள் சிவராஜாவும் ஆனந்தவும் காயங்களுடன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தாக்கியவர்கள் அவ்வழியால் சென்ற கரில் ஏறித் தப்பிச்சென்றதாக நம்பப்படுகிறது. "கொலைசெய்யப்பட்டவர்கள் சூழ்நிலைக்குப்பலியானவர்கள் என்றால் கொலைகளை மேற்கொணிடவர்களும் சூழ்நிலைக்குப்பலியானவர்களே. இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கி வளர்த்துக்கொண்டு வருவதை நிறுத்திக்கொள்ள அரசாங்கத்திற்கு வழிவகைகள் தெரியாது போனால் அரசாங்கமானது அதன் மக்கள் அனைவரின் பேராலும் தனது கடமையிலிருந்து தவறிழைத்திருக்கிறது" என ஆசிரியர் தலையங்கம் எடுத்துக் கூறியது.
இது வெளிப்படையான உண்மையாய் இருந்தது. பெரும்பான்மையான தமிழர்கள் இவ்வாறான கருத்துணர்வுகளைத் தம்மைப் பொறுத்தளவில் முடிந்த விடயமென நினைத்துக் கொண்டார்கள். மறுபக்கம் பார்த்தால் இந்த நிலைமைக்கெல்லாம் காரணமாய் இருந்து கொண்டு - நிலைமையை விளங்கிட் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று ஒருபோதுமே நம்பமுடியாத அரசாங்கத்தைத்தான் திருப்பியும் நம்பிக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
செப்ரெம்பர் 18ம் திகதி இதழின் தலைப்புச் செய்தி தஐ.வி.மு. பொதுச்சபை ஜனாதிபதித் தேர்தலிலிருந்து தமிழ்மக்கள் ஒதுங்கியிருக்க வகைசெய்யுமாறான ஒரு முடிவை எடுக்க இருப்பதாகக் குறிப்பிட்டது. அரசாங்கம் சட்டநடைமுறைகளில் முறைகேடாகத் தலையிடும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, இது போன்ற செயல்கள் தமிழ்மக்கள் மென்மேலும் ஆயுதப்

4
போராளிகளுக்கு அனுதாபங் காட்டவே துணை செய்யும் என்று "சற்றடே றிவ்யூ தன் செப்டெம்பர் 25ம் திகதி இதழில் எழுதியது.
1982 செப்ரெம்பர் 25
சட்ட மாஅதிபர் திருசிவா பசுபதியின் அறிவுறுத்தலிற்கிணங்க, "மல்லாகம் மாவட்ட நீதிபதி திரு.சி.வி.விக்னேஸ்வரன், செப்ரெம்பர் 25ம் திகதி துணைப்படைத்தளபதி மண்டுக்கொடி டி சேரத்தையும் இராணுவ வீரர்களான கே.ஜே.சில்வா, ஆர்ரிசில்வா ஆகியோரையும் விடுதலை செய்தார். இம்மூன்று இராணுவத்தினரும் கந்தையா நவரத்தினம் என்னும் காலூனமுற்ற இளைஞனை பெப்ரவரி 20ம் திகதி இரவு கட்டமை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடப்பட்டவராவர்"
1982 ஒக்ரோபர் 16
பின்வரும் பகுதி, தேசிய இனப்பிரச்சினை (தமிழர் - சிங்களவர் முரண்பாடு) தொடர்பாக ஜேவிபியின் நிலைப்பாடுபற்றி தயான் ஜயதிலகவின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது: (ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராகப் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணித்தலைவர்) ரோஹண விஜேவீர ஒரு கூட்டத்தில் பேசும்போது அப்பாவிப் பொலிஸாரையும் இராணுவ வீரரையும் சாவதற்குத் தானி வடக்கிறீ கு அனுப்புவதையிட்டு அரசாங் கதி திணி மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். பூணூரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பேச்சாளர் கேயிரத்நாயக்க மூலம் தமிழருக்குச் சுயாட்சி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக அக்கட்சியையும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தோழர் விஜேவீர தேசிய இனப் பிரச்சினைபற்றிய அவரது மிகத்திறமையான ஆய்விலிருந்து அங்கு சமுகமளித்திருந்தோருக்கு சந்தேகத்திற்கிடமின்றி மிகப்பயனுடையதும் மிகப் பொருத்தமானதுமான முறையில் ஐந்து உயர் பொலிஸ் அதிகாரிகள் தமிழர்கள் எனத் தனது பேச்சின்போது தெரிவித்தார். உண்மையில் அவர் அங்கு சமூகமளித்திருந்த சிங்கள இளைஞர்களைக் குஷிப்படுத்தும் வகையில் அந்தப் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பு என்று தான் கருதும் உச்சரிப்பிலே கூறினார். வடக்கிலே கூட்டங்கள் நடத்தும் ஒரே கட்சி தனது கட்சிதான் என்ற ரோகணவின் ஜம்பம், ஒரு சண்டியன் தானும் தனது சகாக்களும் மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடபிரதேசத்துக்கு போய்ப் பிரச்சினையில்லாமல் திரும்பி வருமளவுக்குத் துணிந்தவர்கள் என்று பெருமை பேசுவதைப் போன்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யு.என்.பியையும், யூரிலசுகட்சியையும் பார்க்கத் தானும் தனது கட்சியுமே ஈழம் என்ற அச்சுறுத்தலைக் கையாளும் தைரியமுடையவர்கள் என்று தனது தொகுதியினருக்குக் கூறுகிறார்.
1982 அக்டோபர் 23
"சற்றடே நிவ்யூ ஒரு ஆயுதப் போராட்டக்குழுவால் ஒரு பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது பற்றிச் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தக்குழு பின்னர் விடுதன்லப்புலிகள் என இனங்காணப்பட்டது. அக்டோபர் 21ம் திகதி அதிகாலை ஆயுதந்தாங்கிய இளைஞர் குழுவொன்றால் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம்

Page 37
4 2
மின்னல் தாக்குதலுக்குள்ளானபோது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தாக்குதலுக்கு பன்னிரணிடு மணித்தியாலங்களுக்குப் பின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணித்தியாலத் திடீர் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அது பொதுமக்கள் மத்தியில் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. சில கோப்புகளும் துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் பொலிஸ் நிலையத்திலிருந்து களவாடப்பட்டன. களவாடப்பட்ட ஆயுதங்களுள் இரண்டு உப இயந்திரத்துப்பாக்கிகள், ஒன்பது ரைபிள்கள், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், இரண்டு வேட்டைத்துப்பாக்கிகள் என்பன அடங்கும். கந்தையா (மிருசுவில்), கருணானந்தன் (உடுவில்), திலகரத்ன (கேகாலை) ஆகிய பொலிஸ்காரர் கொல்லப்பட்டனர். அந்தப் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த கொலை வழக்கொன்றின் சந்தேகநபரான கந்தையா செல்வம் என்பவரும் துப்பாக்கிச் சூட்டில் அகப்பட்டு மரணமானார்.
பொலிஸ்காரர் ஜயதிலக பொலிஸ் நிலையத்தின் மேல்மாடியிலிருந்து குதித்து வீழ்ந்ததனால் காயமுற்றார். அவரும் துப்பாக்கிச் சூட்டுக் காயம்பட்ட சார்ஜன் கந்தையாவும் யாழ்ப்பாண ஆளப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த வேறும் இரு விசாரணைக் கைதிகளான கார்த்திகேசுவும் ஐயாத்துரையும் காயமுற்றார்கள். பதினைந்து நிமிடங்களாகப் பொலிஸாருக்கும் போராளிக் குழுவினருக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக நம்பப்படுகின்றது. அவர்களில் இரண்டு இளைஞர்களாவது காயப்பட்டிருக்க வேணி டுமெனவும், வேறும் ஒருவர் இறந்திருக்கவேண்டுமெனவும் நம்பப்படுகிறது. தாக்குதல் நடந்த பின் அங்கு சென்ற இராணுவத்தினர், காலித் தோட்டாக்களையும் வெடிக்காத தோட்டா சன்னங்களையும் கண்டெடுத்தனர். பொலிஸ்காரருள் ஒருவர் மறைவிடத்தில் ஒளிந்து நின்று தாக்குதல் கும்பலை நோக்கிச்சுட ஆரம்பித்ததும் அவர்கள் அந்த இடத்தை விட்டு அவசரஅவசரமாக ஓடிவிட்டார்கள் என்று இச்செய்தியையடுத்துத் தெற்கில் வெளிவரும் பத்திரிகைகள் எழுதின.
இதற்கு எதிர்வினையாக வடக்கிலேயுள்ள பாதுகாப்புப்படைகள் கடும் ஆத்திரத்தில் எங்கும் திரிந்து சிறைக்கைதிகளையும் பொதுமக்களையும் கொன்று குவிக்கும் அளவுக்கு அக்கட்டத்தில், அதுவரை குரூர எல்லைக்குப் போகவில்லை.
"சற்றடே றிவ்யூவின் அதே இதழ், தன் தலைப்புச் செய்தியில் அரசாங்கமானது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஆறு ஆண்டுகளால் நீடிப்பதற்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தது. (ஜேஆர்.ஜெயவர்த்தன - யு.என்.பி. 529வீதம், ஹொக்டர் கொப்பேகடுவ - பூரீலசுக. 39.7வீதம். திருமதி பண்டாரநாயக்கவின் குடிசார் உரிமைகள் கேள்விக்குரியவகையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமையால், அவர் பூரீ.ல.சு.கட்சிக்காகக் கூட்டங்களில் தோன்றுவதிலிருந்தும் ஆதரவு திரட்டுவதிலிருந்தும் தடுக்கப்பட்டிருந்தார்.) வாக்காளர்களிடமிருந்து எளிய முறையில் "ஆம்" அல்லது இல்லை எனக் கூறும் வகையிலான பொதுசன வாக்கெடுப்பு கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் நடத்தப்பட இருந்தது. ஒரு புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவுசெய்யும்

4 3
பொதுத்தேர்தலை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தபொழுதே இந்த வியப்புக்குரிய முயற்சி நடந்தது. மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட தமிழ்மக்களின் ஆதரவைக் கவரும் வஞ்சக நோக்குடன் இந்த முயற்சி கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது. அது தொடர்பான வதந்திகளில் ஒன்று த.ஐ.வி.முன்னணித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு அரசாங்கத்திலே உயர் பதவி ஒன்று வழங்கப்படலாம் என்பதாகும். இதன் மூலம், ஈற்றில் ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு வழி ஏற்படலாம் என்ற ஊகம் யாழ்ப்பாணத்தில் பரவலாக நிலவியது. ஆலோசனையில் உள்ளதாகவும் நடைமுறைப்படுத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவையானதாகவும் நம்பப்பட்ட சில அரசியல் யாப்பு மாற்றங்கள் அதை எளிதாக்கும் எனவும் நம்பப்படுகிறது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஆறு ஆண்டுகளால் நீடிக்கச் சம்மதம் கேட்கும் பொதுசனவாக்கெடுப்பை நடத்தலும் அமைச்சரைையயும் நாடாளுமன்றக் குழுவையும் முற்றாக மாற்றியமைத்தலும் இம்முனைப்புடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என நம்பப்படுகின்றன. அத்தகைய அரசாங்கம் கட்சிபேதங்களை ஒழிப்பதுடன் யுஎன்யி. அல்லாத சக்திகளின் ஆதரவையும் கவருவதுடன் அரசாங்கத்தின் பொருளாதாரத்திட்டங்களை இடையீடின்றித் தொடர்வதற்கும் தொல்லை தருகின்ற தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் பெரிதும் உதவும் எனவும் பரவலாக சூசகம் கூறப்பட்டது.
இவ்வாறு தமிழ்மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைத் திரும்பத்திரும்ப கெளரவிக்காத ஓர் அரசாங்கம், இன்று, முழு நாட்டுமக்களதும் தெரிவு செய்யும் உரிமையை ஏமாற்றிப் பறிப்பதற்காக தன்னை மீண்டும் ஒருமுறை நம்புமாறு தமிழ்மக்களை அழைக்கின்றது.
அப் பத்திரிகை முழுநாட்டிலுமிருந்து வந்த எதிர்ப்புக்களைப் பிரசுரிக்கத் தொடங்கியதன்மூலம், தன்னைப்பற்றியிருந்த தவறான அபிப்பிராயத்தைக் களைந்து கொண்டது. மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகக் வரையறுக்கப்பட்ட காலஇடைவெளிகளில் நடக்கின்ற தேர்தல் மூலம் நிறுவப்படும் ஜனநாயக நாடாளுமன்ற அரசாங்கத்தின் அடிப்படையை மிரட்டும் இந்நடவடிக்கையின் அபாயகரமான முன்னுதாரணமற்றதன்மையைப்பற்றி குடிசர் உரிமைகள் இயக்கம் (CRM) தனது மூன்று அறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தது. "குடிசார் அரசியல் டரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் கட்டுப்பாடுகளை மீறுவதாக" இந்த நடவடிக்கைகள் உள்ளதென அவை சுட்டிக்காட்டின. இலங்கை, அதற்கு முந்திய ஆண்டுதான் சர்வசனவாக்குரிமையின் ஐம்பது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
"சகல கெளரவ அமைச்சர்களும் அரசாங்கக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் திகதியிடப்படாத பதவி விலகற் கடிதங்களை வெட்கக்கேடானமுறையிற் தங்கள் தலைவரிடம் கையளித்த நகைப்புக்குரிய காட்சி இவ்வாறான அவநம்பிக்கைக்கு மேலும் ஒரு சான்றாகும். இந்த ஏற்பாடுகளினால் பரஸ்பர நம்பிக்கையீனம் வெளிப்பட்டமை ஒருபுறமிருக்க, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் விருப்பங்களையும் சுதந்திரத்தையும் பூரணமாக ஒப்படைத்தமை, அவர்களது தலைவருக்கு ாவ்வளவு மரியாதை அளிப்பதாயிருந்தாலும், மக்கள் மத்தியில் அவர்களது கெளரவத்தை நிச்சயமாக உயர்த்தாது” என்று ஆர்பிவிஜரட்ண கொழும்பிலிருந்து ாழுதியபோது குறிப்பிட்டார்.

Page 38
4 4
குடிசார் உரிமைகள் இயக்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய தந்தியில், அவசரகாலச்சட்டம் அமுலில் இருப்பதால் பொதுசன வாக்கெடுப்பு நேர்மையானதாகவோ சுதந்திரமானதாகவோ அமையமாட்டாது. அதன்கீழ் அத்த என்ற பத்திரிகை உட்பட பல எதிர்க்கட்சிச் செய்திப் பத்திரிகைகள் வெளியிடப்படமுடியாது தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றின் அச்சகங்களும் மூடப்பட்டுள்ளன." எனச் சுட்டிக்காட்டியது.
மேர்ஜி (MIRGE) எனப்படும் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துமான இயக்கத்தின் சார்பில் அதன் தலைவரும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடுபவருமான வண. பிதா போல் கஸ்பர்ஸ், ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் த.ஐ.வி.மு.க்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டது: பொதுசன வாக்கெடுப்புப்பற்றி அரசாங்கம் ஒரு முடிவுக்கு வரும் வரை தேசிய இனப் பிரச்சினை பற்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளினின்று ஒதுங்கிநிற்குமாறும் தங்கள் சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்குரிய மக்களின் அடிப்படையைப் பாதுகாப்பதற்காக நடைபெறும் பிரச்சாரத்திற் தீவிரமாக ஈடுபடுமாறும் மேர்ஜ் அக் கட்சிகளைக் கேட்டுக் கொண்டது. தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக "வெறும் அடையாளச் சலுகைகளை’ முன்வைக்க அரசாங்கம் எடுத்த முயற்சிகளை அவ்வியக்கம் மேலும் கண்டித்ததுடன், அத்தகைய மேலெழுந்தவரியான நடவடிக்கைகள் சந்தர்ப்பவாதத்தன்மை கொண்டதென்றும் பொதுசன வாக்கெடுப்பில் அரசாங்கம் முன்வைக்கும் பிரேரணைகட்கு எதிரான த.ஐ.வி.மு.வின் பிரசாரத்தை மந்தப்படுத்துமாறு அதை வ்ற்புறுத்தும் நோக்கங்களையுடையதெனவும் தெரிவித்தது. e
அது த.ஐ.வி.மு. ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும், தன் போராளிப் பாத்திரத்தை மீளவும் ஆரம்பிக்கவுமான ஒரு நிலவரத்தை இந்த அறிக்கை ஏற்படுத்தியது. கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்பது ஒரு விடயத்தை மாத்திரமே குறிக்கமுடியும். அதாவது, அரசாங்கம் முழுநாட்டின்மீதும் சுமத்த முனைந்த இந்த வஞ்சனையைப் பூரணமாக எதிர்ப்பதாகும். அத்தகைய எதிர்ப்பு, தஐவி.மு.வுக்கும் தமிழ் மக்களுக்கும் நாடெங்கும் ஒரு புதிய கெளரவத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கும். திருஅமிர்தலிங்கம் தான் விரும்பினால் போராடும் தன்மையுடையவர். ஆனால், 1970களின் பிற்கூறிலிருந்து தன் இளைஞர் சக்திகள் மெல்லக் கழன்று ஆயுதப்போராட்ட அணிகளுடன் இணைந்ததோடு அக்கட்சி அமைப்பு மிகவும் செயலற்ற மந்தமான நிலையில் இருந்து வந்தது. பொது சனவாக கெடுப்புப் பிரச்சினை நாடாளுமன்றத்துக்குக கொண்டுவரப்பட்டபோது, தஐவி.மு. அதற்கு எதிராகப் பேசியபோதும் அதை எதிர்த்து ஒரு வாக்கைத்தானும் அளிக்காமல் இருந்ததன்மூலம் தன் ஊசலாட்டத்தன்மையை காட்டிக்கொண்டது. 1980ன் நடுப்பகுதியில் நிகழ்ந்த பொது வேலைநிறுத்தத்தை நசுக்க அரசாங்கம் பெரிய அளவில் அடக்குமுறையைக் கையாண்டது. அப்போதும், தஐ.வி.மு. தன் ஊசலாடும் மனப்பாங்கை வெளிப்படுத்தியது. வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்திற் பல்கலைக்கழக ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள் எல்லோரும் ஒன்றிணைந்து, ஒருநாள் வேலைநிறுத்தத்தையும், ஊர்வலத்தையும் ஒழுங்கு செய்தனர். தஐ.வி.மு. அதில் இணைய மறுத்தது. இதைப்பற்றி அவர்களிடம்

45
கேட்டபோது, அதன் மிக மூத்த உறுப்பிள் ஒருவர் அந்த விடயம் தெற்குக்குரிய பிரச்சினை எனப் பதிலளித்தார். இது பிரித்தாளும் ஆட்சியின் சிறப்பான எடுத்துக்காட்டாகும். தஐ.வி.மு. தமிழர்களைத் தனிமைப்பட்டு முடங்கிக் குறுகிக்கொண்ட அரசியலுக்கே கொண்டுவந்துவிட்டது. அதற்குத் தூரதிருஷ்டி இருந்திருந்தால், அதனாற் தமிழர்களின் மாணியை உயர்த்தியிருக்கமுடியும். அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிற்சில சலுகைகளையும் தமிழருக்கு நாளைக்குப் பாயாசம் என்ற விதமான வாக்குறுதிகளையும் வழங்கியதன்மூலம் தஐ.வி.மு.யை மெளனிக்கச்செய்தது. நாளை ஒருபோதும் வராது என்ற பிரபல ஆங்கில மெல்லிசைப் பாடல் போல், தமிழர்கள் முற்றிலும் அரசாங்கத்தின் கருணையிற் தங்கியிருக்கும் நிலைக்குட்பட்டமையும் அபாயகரமாகத் தனித்துப் போனமையுமே இதன் விளைவாகும். தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ்ச் சமூகத்தின் விளைபொருளே. அச்சமூகத்தின் ஆதிக்கநிலையிலிருந்த உயர்குழாத்தினர் சரியானதையோ ஒரு கோட்பாட்டினடிப்படையிலானதையோ செய்வதில்லை; தமக்கு புத்திசாதுரியமானதாகவும் வசதியானதாயும் தோன்றியதையே செய்து கொண்டிருந்தார்கள். தெற்கிலுள்ள சகல ஜனநாயக சக்திகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதனாலும் சிங்கள - தமிழ் உறவை மேம்படுத்துவதனாலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தமிழ்மக்கள் முனையவேண்டிய சமயத்தில் (1988) அவர்கள் ஒரு மாயமான் வேட்டையில் இறங்கியதாகத் தெரிந்தது. விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியாவை வேண்டுவதே இன்று தமிழ் உயர்குழாத்தின் கருத்தாகும். அதன் உள்நோக்கம் யாதெனில் அவர்களுக்கு (விடுதலைப்புலிகளுக்கு) ஏதும் வழங்கப்பட்டால், தாம் தம்பாட்டில் விடப்படுவார்கள் என்பதாகும். புலிகளும் இந்திய இராணுவமும் எங்களின் விலைமதிப்பற்ற இரு கண்கள், ஒன்றை இழந்து எம்மால் இருக்கமுடியாது" என்று ஒரு பிரமுகர் தெரிவித்தார். இது அவரின் அசலான வார்த்தைகள். இது 1980களின் ஆரம்பத்தில் தஐவி.மு.மினது நிலைப்பாட்டினை ஒரளவுக்கு ஒத்ததாகும்.
1982 நவம்பர் 13 ۔
ஒரு செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டிய 'சற்றடே றிவ்யூ பொதுசனவாக்கெடுப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் தஜ.வி.மு. மும்முரமாக ஈடுபடாது என அதன் தலைமையிடமிருந்து தாம் வாக்குறுதி பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஜயவர்த்தன தனது மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டது. தஐ.வி.முயின் செயலாளர் நாயகமும் எதிர்க்கட்சித் தலைவருமான திருஅஅமிர்தலிங்கம் கொழும்பு 'வீக்-என்ட் (Week End) பத்திரிகைக்கு அண்மையில் ஒரு பேட்டி அளித்துள்ளார். த.ஐ.வி.மு.வின் தலைவருக்கு, சற்றடே றிவ்யூ தன் அக்டோபர் 23ம் திகதி இதழில் எதிர்வு கூறியவாறு, தேசிய அரசாங்கத்தில் ஓர் உயர்பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்ற ஊகத்துக்கு இது எண்ணை ஊற்றிவிட்டது.
திரு.அமிர்தலிங்கம் பேட்டியின்போது, "தஐ.வி.மு நாடாளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கவோ, பொதுசன வாக்கெடுப்புக்கு எதிரான பிரச்சாரத்தில் பொது முன்னணி என்று அழைக்கப்படும் ஏதாயினும் ஒன்றுடனோ இணைய மாட்டாது" எனத் தெளிவாகக் கூறினார். திருஅமிர்தலிங்கம் "அரசாங்கம் பொதுசன

Page 39
46
வாக்கெடுப்பை நடத்திமுடித்தாலுங் கூட, இந்த நாடாளுமன்றத்தவணை 1983 ஆகஸ்ட் 3ம் திகதி முடியும் வரை நாம் நாடாளுமன்றத்தில் இருப்போம். இந்த நிலையிலே நீடிக்கப்படும் காலத்துக்கு நாடாளுமன்றத்திலே தஐவிமுயை யார் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டுமென்பதைப் பொதுச்சபை தீர்மானிக்கும்" எனவுங் கூறினார்.
எனவே பொதுசன வாக்கெடுப்பையடுத்துத் தான் சொல்லுகிறபடி ஆடுகிற ஒரு அரசாங்கத்தை அமைக்குமுகமாக தனது நாடாளுமன்றக் குழுவினரிடமிருந்து திகதியிடப்படாத பதவி விலகல் கடிதங்களைப் பெற்ற ஜனாதிபதி ஜெயவர்த்தன காட்டிய ஜனநாயக விரோத முன்னுதாரணத்தை த.ஐ.வி.மு. தலைமையும் பின்பற்ற முயல்வதாகத் தோன்றியது. அது தஐ.வி முக்கு ஒரு பேரம் பேசுதலாகத் தோன்றியது. அச்சூழ்நிலையில், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பதே அதற்குரிய விலையாகும். இதனை மேலும் உறுதிப்படுத்த அரசாங்கம் மேலுஞ் சில திருகுதாளங்களையுஞ் செய்தது. அரசாங்கம் த.ஐ.வி.மு. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எல்லா வேண்டுகோள்களையும் நிராககரிக்குமாறு வடக்கு, கிழக்கிலுள்ள தமது அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. அவர்கள் நம்பிக்கையோடு இருப்பதற்காகச் சிறு சலுகைகள் காட்டப்பட்டன. இடமாற்றங்கள், நியமனங்கள் தொடர்பான தஐவி.மு. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றவேண்டாமென நேரடியாக அறிவுறுத்துமாறு வடக்கு, கிழக்கு மாகாணக் கல்வி அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கிடையில் த.ஐ.வி.மு.வின் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினரான திருவி.சிவசிதம்பரம் சிபரிசு செய்த 45 வங்கி ஊழியர்களின் நியமனங்கள் இரத்துச்செய்யப்பட்டன. சலுகைகளை விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரே அரசாங்கத்திடம் செல்லவேண்டும் என்பதற்காக அவர்கள் கல்வி அதிகாரிகளுக்கு விடுக்கும் சகல வேண்டுகோள்களையும் கொழும்பிலுள்ள தலைமையகத்துக்கு அறிவிக்க வேண்டியதாயிருந்தது.
இந்த வாக்குறுதிகள் அரசாங்கத்தால் ஒருநாளுமே கெளரவிக்கப்படாது என்று தெரிந்தும் த.ஐ.வி.மு தன்னையும் தமிழ் மக்களையும் சுயமரியாதைபீனத்திற்கும் அவமதிப்பிற்கும் ஆளாக்கும் நிலைக்கு ஏன் இணங்கிப் போனது என்பதை பின்னோக்கிய பார்வையில் ஒருவரால் புரிந்து கொள்வது கடினம். பின்னால் வரவிருந்த பேராபத்திலிருந்து தமிழர்களைப் பாதுகாத்திருக்கக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் தஐ.வி.மு. ஜனநாயகத்துக்கு விளைத்த துரோகத்தை, தமிழ்ச் சகோதரர்களான இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களை நாடற்றவர்களாக்கிய 1948ம் ஆண்டு மசோதாக்களுக்கு ஆதரவாகத் தமிழ்ப்பிரமுகர்கள் வாக்களித்ததற்கு ஒப்பிடலாம். அந்தச்சமயத்தில் த.ஐ.வி.மு. ஸ்தாபகரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அந்த மசோதாவை உணர்ச்சிகரமாக எதிர்த்ததன் மூலம் கெளரவமான ஒரு காரியத்தைச் செய்தார். தமக்கு ஊட்டமளித்த சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு வலிந்து அடிமையாகப்போகின்ற பழைய பழக்கத்தை தமிழ் உயர்குழாத்தினர் இன்னமும் மாற்றவில்லை.

47
1982 நவம்பர் 27
இதற்கிடையில் போராளிகளுடன் ஈடுபாடு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தால் பல தமிழ்ப் பிரமுகர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமைக்கு மக்களின் எதிர்ப்பு சுயமாக வெளிப்பட்டமையையொட்டி நிலைமைகள் ஒரு புதிய திருப்பத்தைக் கொண்டன. றோமன் கத்தோலிக்க, மெதடிஸ்த, அங்கிலிக்கன் மதகுருமார்கள் பயங்கரவாதம், 1981ம் ஆண்டு நீர்வேலி வங்கிக்கொள்ளை என பன தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணைக குட்படுத்தப்பட்டமையையும், கொழும்பில் அரச கட்டுப்பாட்டிலுள்ள பத்திரிகைச் சாதனங்களும் ஏனையவையும் கிறிஸ்தவ குருமர் மீது விசாரணைக்கு முன்னரே குற்றஞ்சுமத்தியதையும் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலே தமிழர் அரசியல் இவ்வாரம் ஒரு புதிய மக்கள் கிளர்ச்சிக்கட்டத்துள் பிரவேசித்தது.
முழுநாள் எதிர்ப்பு உண்ணாவிரதங்களும் போராட்டங்களும் குடாநாடெங்கும் நடைபெற்றது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தொடர்ச்சியான பல எதிர்ப்புகளின் தீவிரமாகப் பங்குபற்றியது. மதகுருமார்களையும் பல்கலைக்கழகத் துணை விரிவுரையாளர் நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா ஆகியோரையும் எதேச்சாதிகாரமாகச் சிறையில் தடுத்துவைத்திருத்தலுக்கு முடிவு காணவும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கவும் அரசபயங்கரவாதத்துக்கு முடிவுகட்டவும் கோரி 30ம் திகதி செவ்வாய்க்கிழமை வடக்குக்கிழக்கு மாகாணங்களில் கூட்டாக ஒருநாள் உண்ணாவிரதம் அனுட்டிக்கப்பட்டது.
கத்தோலிக்க மதகுருக்களான வணயிதா சிங்கராயர், வணயிதா சின்னராசா, மெதடிஸ்த வணயிதா ஜெயதிலகராஜா, வவுனியாவைச் சேர்ந்த அங்லிகன் வணயிதா டொனால்ட் கனகரத்தினம் ஆகியோர் கைது செய்யப்பட்ட மதகுருக்களாவார். வணயிதா ஜெயதிலகராஜாவின் சகோதரரும் புத்தூர் மிஷன் ஆஸ்பத்திரியைச் சேர்ந்தவருமான டாக்டர் ஜெயகுலராஜாவும் கைது செய்யப்பட்டார். இறையியல் குருமடத்தின் முன்னாள் அதிபரான வண. பிதா கனகரத்தினம், சிறிது காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். 1977 கலவரத்தின்போது நாட்டின் ஒரு பகுதியினரான தமிழ்ப்பேசுமீ மக்கள்மீது துன்புறுத்தும் அடக்குமுறையை அரசாங்கம் அனுமதித்த காரணத்தால் 1978ம் ஆண்டு சுதந்திரதினத்தன்று தேசியக்கொடியை உயர்த்த அவர் மறுத்ததையிட்டுச் சில சிங்கள உறுப்பினர்கள் பிரச்சினை கிளப்பியதால் அவர் பிலிமத்தலாவை இறையியல் குருமடத்தின் அதிபர் பதவியை முன்னர் இராஜினாமாச்செய்திருந்தார். அதன் பின் அவர் வவுனியாவின் எல்லைப்பிரதேசத்திற் சிங்களவர் - தமிழர் ஐக்கியத்துக்காகப் பணிபுரியும் நோக்கத்துடன், ஒற்றுமை இல்லத்தை அமைக்கச் சென்றார். அவர் அந்தப் பிரதேசச் சிங்கள மக்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். வணயிதா சிங்கராயர் ஈற்றில் 1987 ஜூலை சமாதான ஒப்பந்தத்தின் பின் விடுதலையானார். ஏனையோர் மட்டக்களப்புச் சிறைச்சாலையிலிருந்து இந்தியாவுக் குதி தப்பிச் சென்றனர். 1983 ஜூலையில் நடந்த சிறைச்சாலைப்படுகொலைச் சம்பவங்கள் இரண்டின் போதும், அவர்களும்
வணயிதா. சிங்கராயரும் மயிழையில் உயிர் தப்பினர்.

Page 40
48
மறுபுறம் ஹாஸ்யத்திற்குரிய நிகழ்வாகச் சிறைக்கு வெளியே, நித்தியானந்தன் தம்பதிகளின் வீட்டை தேடுதல் நடத்திய இராணுவத்தினரின் நடத்தையைக் குறிப்பிடலாம். நித்தியானந்தன் தம்பதிகளின் வீடு இருக்கும் அதே வளவுக்குள் நிர்மலாவின் பெற்றோரான திருதிருமதி இராஜசிங்கத்தின் வீடும் உள்ளது. உயரதிகாரிகள் சில இராணுவத்தினரை அங்கு காத்திருக்கும்படி கூறினார்கள். அந்த இராணுவத்தினர் அங்கு செய்வதற்கு ஒன்றுமில்லாது சலிப்படைந்தனர். அவர்கள் அந்த வளவுக்குள் சுற்றித்திரிந்து மலர்களைப் பறித்து பெரிய மாலையாகக் கட்டி, அங்கு கட்டியிருந்த பசுவுக்குப் பரிசளித்தனர்.
ஏற்கனவே சற்றடே நிவ்யூ தன் 1982 நவம்பர் 20ம் திகதி இதழில் "பேனையால் முதுகில் குத்தும் இந்த கோழைத்தனமான பத்திரிகைப் பாணியை நிறுத்து என்ற தலைப்புச்செய்தி ஒன்றில் கைது செய்யப்பட்டோருக்கு எதிராக அவதூறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி - வழக்கு, விசாரணையில் இருக்கும்போது அவ்வாறு குற்றஞ்சுமத்தி எழுதுவதால் ஏற்படக்கூடிய வழக்காளிக்குப் பாதகம் ஏற்படுத்தும் சட்டவிளைவின் பாதிப்பு யாதுமின்றி தென்னிலங்கைப் பத்திரிகைகள் கருத்து வெளியிட்டதை வன்மையாகக் கண்டித்தது.
1982 டிசெம்பர் 11
அரசியல் சமா என்ற பகுதியில் கொழும்பிலிருந்து எழுதும் பத்திரிகை எழுத்தாளரான காமினி நவரத்ன ஜனாதிபதி ஜயவர்த்தனவின் நக்ஸலைட்சதி என்ற குற்றச்சாட்டைப் பொதுத்தேர்தலுக்குப் பதிலாக பொதுசன வாக்கெடுப்பு வைப்பதற்கான ஒரு பம்மாத்து என விமர்சித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட நக்ஸலைட்டுகள் என்போர், தமது அபேட்சகரான திரு.ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு ஆதரவாக ஜனாதிபதி தேர்தற் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய திருமதி பண்டாரநாயக்காவின் பூரீலசுகட்சியின் ஒரு குழுவினர் ஆவர். ஜனாதிபதி ஜயவர்த்தனவின் தகவலின்படி தன்னையும் சில அமைச்சர்களையும் திருமதி பண்டாரநாயக்காவின் மகன் அனுராவையும் வேறும் இராணுவ உயர் அதிகாரிகளையும் கொல்ல இக்குழு திட்டமிட்டிருந்தது. ஜயவர்த்தனவின் கூற்றுப்படி, அவர்கள் அதன் பின் அரசியல் யாப்பைத் தூக்கி எறிந்துவிட்டுத் திருமதி பணிடாரநாயக்காவைச் சிறைப்படுத்துவார்கள். திருகொப்பேகடுவவை விசாரணை செய்தது போன்ற கேலிக்கூத்தான நாடகங்கள் நடத்தியதைத்தவிர அப்பொழுதோ அதற்குப் பின்னைய ஆண்டுகளிலோ இது தொடர்பாக ஏதும் நிரூபிக்கப்படவில்லை.
யு.என்.பி. உறுப்பினர்கள் பகிரங்கமாக வன்செயல்களில் ஈடுபட்டதற்கும் அவற்றுக்கு எதிராக் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததற்கும் அநேக உதாரணங்களைக் காமினி நவரத்ன எடுத்துக் காட்டினார். 1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் பின்னும் 1981 ஜூனில் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களின் போதும் 1981 ஆகஸ்ட்டில் பெருந்தோட்டப்பகுதிகள் உட்படப் பல இடங்களில் இனக்கலவரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோதும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னும் இம்மாதிரி நடந்தன. சிங்கள பலமண்டலயவின் கூட்டத்தைத் தாக்கிய நபர்களை மற்றவர்கள் இனங்காட்டிய பின்னரும் அவர்களுக்கெதிராக

49
எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
"அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பூரீலககட்சியின் செயற்பாட்டை நசுக்கிக்கொணர்டே, அரசாங்கத்துக்குச் சொந்தமான மக்கள் தொடர்புச் சாதனங்களை புத்தி சாதுரியமாகக் கையாண்டு, பூதாகரமாக விருத்தியடையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகப் புதிய சதிமுயற்சிக் குற்றச்சாட்டைச் சுமத்தி, நக்ஸலைட் (கம்யூனிஸ்ட்) பற்றிய பயத்தை மக்களின் மனதில் ஏற்றியமை, பொதுசன வாக்கெடுப்பின்போது அவர்களை ஓம் என்று கூறவைப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு மூடிமறைப்பு என்று மக்கள் கருதினால், அதனை தவறென்று கூறமுடியுமா?" என நவரத்ன மேலுங் கேள்வி எழுப்பினர்.
டிசெம்பர் 15ம் திகதி இறம்பைக்குளத்திலுள்ள புனித அந்தோனியார் ஆலயத்துக்குள்ளே தலைக்கவசம் அணிந்த பொலிசார் குண்டாந்தடிகளையும் கண்ணிர்ப்புகையையும் பிரயோகித்தபோது, பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்கும் அணிமைக்காலக்கைதுகளுக்கும் எதிரான ஆட்சேபம் வவுனியாவிலே உச்சக்கட்டத்தை அடைந்தது.
1982 டிசெம்பர் 18
பெளத்த, முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளவயதினரும், பெண்களும், ஆணிகளும் அந்தோனியார் கோயில் வளவுக்குள்ளே எதிர்ப்பு உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்தனர். திட்டமிட்டவாறு வாய்களைக் கட்டியும் கறுப்புப்பட்டிகளை அணிந்தும் பாடசாலை மாணவியர் தலைமையிலான மெளன ஊர்வலம் வீதிக்கு வந்தபோது அவர்களைக் கலைந்து போகுமாறு பொலிசார் இட்ட உத்தரவைப் புறக்கணித்தபோது, பொலிசார் மாணவியரைத் தாக்கி அவர்களது கூந்தலைப் பற்றி இழுத்து உதைத்துக் குண்டாந்தடிகளாற் தாக்கினர். மாணவியர் நகர மறுத்து நிலத்திற் குந்தியபோது, குண்டாந்தடி பிரயோகிக்கப்பட்டது. பின்னர், பொலிசார் கோயிலுக்குட் பாய்ந்து அங்கு அடைக்கலம் புகுந்த எதிர்ப்பாளர்களைக் குண்டாந்தடிகளாற் தாக்கினர்.
காந்தியத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசுந்தரம், திரு.எம்.எஸ்.கந்தையா (சமூக சேவையாளர், 75 வயது) தமிழ் ஈழ விடுதலை முன்னணிச் செயலாளர் திரு.எம்ஈழவேந்தன், டாக்டர் கே.எஸ்.என். பெர்னாண்டோ, டேவிட் நாகநாதன் ஆகியோர் உட்பட, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். பொலிசாரின் வெறியாட்டத்தைத் தொடர்ந்து வவுனியாவிலே பதற்றம் உச்சமாய் இருந்தது. எல்லாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன.
சிங்களவரான கே.எஸ்.என்.பெர்ணாண்டோ வவுனியா ஆஸ்பத்திரியில் சேவையாற்றிய ஒரு வைத்தியர். மனித உரிமைகளுக்காகத் தம்மை அர்ப்பணித்த அந்தச் செயல் வீரரைத் துரோகியெனக் கருதிய உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் குணசிங்ஹ அவரைத் திட்டித் தீர்த்தார். முன்னர், அவர் உயர் நீதிமன்றத்திலே சத்தியக்கடுதாசியைச் சமர்ப்பித்தமைக்காக பொலிசார் அவரை மோசமாகத் தாக்கிப் பழிவாங்கினர். கைதான பின்னர் டொக்டர் பெர்ணான்டோ, ஒரு கட்டத்தில்,

Page 41
50
உணர்வு மயங்கும்வரை தாக்கப்பட்டார். தாக்குதலிற் பங்குபற்றியவர்களைக் கடுமையாகக் கண்டித்த உதவிப்பொலிஸ் இன்ஸ்பெக்டர் குமாரசிங்ஹ என்ற ஒருவரை அவர் தொடர்ந்தும் வவுனியாவிலிருந்தால் அவரைத்தான் கொன்றுவிடப் போவதாகவும் பயமுறுத்தினார். குமாரசிங்ஹ அவர்கள் வவுனியாவிலே இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்துக்காகத் தீவிரமாகச் செயல்பட்ட ஒரு சிங்களவராவர்.
அரசாங்கம் இந்த எதிர்ப்புக்களைக் கையாண்டமுறை, எந்தவகையிலும், அந்த எதிர்ப்புக்களைக் குறைப்பதற்கு மாறாகத் தமிழர்களின் சினத்துக்கு எண்ணெய் ஊற்றுவதாயிருந்தது. பொதுமக்களின் எதிர்ப்பு இயக்கம் தொடர்ந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், 1983 ஜனவரி 26ம் திகதி பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும், அதைத் தொடர்ந்து 1983 பெப்ரவரி முதலாம் திகதி தொடங்கி நாலு நாள் உண்ணாவிரதத்தையும் ஒழுங்குபடுத்தினர்.
பொதுசனவாக்கெடுப்பு முடிவுகள் 1982 டிசெம்பர் 23ம் திகதி அறிவிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகளில் அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்த வாக்குகளின் எண்ணிக்கை 54.86 வீதம் ஆகும். எதிராக விழுந்த வாக்குகள் 4534 வீதம் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்காளருள் ஜனாதிபதித் தேர்தலில் 80 வீதம் வாக்களித்தனர். பொதுசனவாக்கெடுப்பில் 707 வீதம் மட்டுமே வாக்களித்தனர். இவ்வளவோடு கதை முடியவில்லை. அரசாங்கம், அதிகாரபூர்வமாகவும் அதிகாரமற்றவகையிலும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் அரசியந்திரத்தைத் தேர்தல் மோசடிக்காகப் பயன்படுத்தியது. ஒப்பிட்டுப் பார்த்தால், நியாயமான அளவுக்கு நேர்மையாகத் தேர்தல்களை நடத்தும் மரபையுடைய நாடு இது. இது முன்னர் உள்ள நிலைமை.
1977ல் 867 வீதம் என்ற அளவுக்கு வாக்களிப்பு வீதம் மிக உயர்ந்து காணப்பட்ட ஒரு நாட்டில், ஐக்கிய தேசியக்கட்சியையே மீண்டும் அபரிமிதமான பெரும்பான்மையுடன் தெரிவுசெய்து அனுப்புவதென்றாலும் கூட தமது பிரதிநிதிகளைத் தாமே தெரிவு செய்து அனுப்புவதற்கு தேர்தல்கள் இருந்தாக வேண்டும் என்று கோருவதே மக்களின் இயல்பான சுபாவமாக இருந்திருக்கும் என்று திரு.எல்பியதாச தனது, "இலங்கை இனப்படுகொலையும் அதன் பின்பும் என்ற நூலில் சரியாகவே வாதிடுகிறார். இந்த வகையில் நோக்கினால் சர்வசனவாக்கெடுப்பின் முடிவுகள் நிச்சயமாக இப்படி அமைந்திருக்கமுடியாது. ஒரு தலைப்பட்சமான பொலிஸாரின் நடத்தையிலிருந்து எவ்வளவோ முறைகேடான விஷயங்கள் நடந்தேறியுள்ளன என்று எல்லாப் பக்கங்களிலிருந்தும் தெரியவருகிறது.
மேலும் சரியாக ஆராய்ந்து பார்த்ததில் எதிர்க்கட்சி வாக்கெடுப்பு அவதானிகள் கொலைசெய்யப்படுவார்கள் அல்லது அவர்களது வீடுகள் எரிக்கப்படும் என்ற பயமுறுத்தல்களாலும் வேணி டுமென்றே கைதுசெய்தல், தாக்குதல், ஆவணங்களைக் களவாடல் (உதாரணமாக அட்டை) போன்றவற்றாலும் வாக்கெடுப்பு அவதானிகளாகச் செயற்படாது தடுக்கப்பட்டனர். அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட தலைமைதாங்கும் அலுவலர்கள், ஆள்மாறாட்டக்காரர்களைக்

51
கேள்விக்குட்படுத்த முற்பட்டபோதிலும் வாக்கெடுப்பு நிலையங்களுள் சட்டரீதியான அதிகாரமற்ற நபர்களின் சணிடித்தனங்களை நிறுத்த முற்பட்டபோதும் பயமுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டுமுள்ளார்கள். அநேக வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதிலிருந்து தடுக்கப்பட்டார்கள். யு.என்.பிகாடையர்கள் பகிரங்கமாகவே, பொலிஸ் உதவியுடன் அல்லது பொலிசாருடன் இணைந்து, வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டுக்களில் எவ்வாறு அடையாளமிட்டனர் எனக்காட்டும்படி பல வழிகளிலும் வற்புறுத்தியும் இல்லை என்று வாக்களிப்பார்கள் என்று தாம் அறிந்த வாக்காளர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் தம் வீடுகளிலிருந்து வெளிவராமற் தடுத்தும் செயற்பட்டனர். வன்முறையையும் பயமுறுத்தல்களையும் ஒழுங்குசெய்து நடத்தியதில் மிகப் பிரபலமானவர்கள் (பின்னர் மிகக்குறுகியகாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட) திரு போல் பெரேராவும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு திரிந்த நாடாளுமன்ற உறுப்பினரான அனுரா பஸ்தியனும் ஆவர். இதையடுத்து, விரைவிலேயே அனுரா பஸ்தியன் ஜனாதிபதியால் ஊர்காவல்படைக்கு பொறுப்பான துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். முன் ஒருபோதும் நடைபெறாத அளவில் ஆள்மாறாட்டம் இலங்கையில் இவ்வாக்கெடுப்பில் நடந்துள்ளது. ஒரு வாக்களிப்பு நிலையத்தின் தலைமை அலுவலர், ஒரே ஒரு நபர் மட்டும் 72 தடவை வாக்களித்ததை எண்ணியுள்ளதுடன் அதை தனது உயர்அதிகாரிக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கவும் செய்தார். இச்சூழ்நிலையில், 'இல்லை' என வாக்களிப்பதற்கு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளரிற்கு உண்மையான தைரியம் வேண்டியிருந்தது.
சிறிய அற்புதங்கள் சிலவும் நிகழ்ந்தன: திருமதி பணிடாரநாயக்க தன் தேர்தல் தொகுதியான அத்தனகலவில் பூரீலசுக. தலைவர் என்ற முறையில் தனது தொகுதியிலிருந்து தனது அவதானிகளையும் கட்சி முகவர்களையும் திருப்பி அழைக்க தீர்மானித்தார். அவரது முகவர்கள் மிருகத்தனமாகவும் தொடர்ச்சியாகவும் தாக்கப்பட்டு கொலைப் பயமுறுத்தல்களுக்காளனதற்குப் பின்னரே அவர் இவ்வாறு செய்தார். அவர் 1977ம் ஆண்டுத் தேர்தலில் இந்தத் தேர்தற்தொகுதியில் அதிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் ஜயவர்த்தன அவர்கள் 22:351 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தபோதும் சர்வசனவாக்கெடுப்பில் "ஆம்" என 35.747 வாக்குகளைப் பெறமுடிந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 60 வீதம் அதாவது 290849 பேர் வாக்களித்தனர். அவர்களுள் 913 வீதம் நாடாளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பதற்கு எதிராக இல்லை என வாக்களித்தனர். ஜனாதிபதித் தேர்தலிலே வாக்களித்தவர்கள் மொத்த வாக்காளருள் 46வீதம் ஆவர். த.ஐ.வி.மு. இல்லை என்ற வாக்குக்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருந்தால், நிச்சயமாக வாக்களித்தோர் தொகை மிக அதிகமாக இருந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 493,705 பேர் இலங்கையின் வாக்காளர் தொகை 8148015 பேர் ஆகும். அரசாங்கத்தால் கூறப்பட்ட பெரும்பான்மை 535,240 ஆக இருந்தது. பிற தமிழ்மாவட்டங்களின் பொதுத்தேர்தல்

Page 42
52
நடத்தப்படவேண்டுமென்பதற்கு ஆதரவாக வாக்களித்தோர்: வன்னி 849வீதம் திருகோணமலை 56.4வீதம், மட்டக்களப்பு 60lவிதம். பொதுவாகத் தென் மாவட்டங்களிலும் பயமுறுத்தல்களை உதாசீனம் செய்து வாக்களிக்களிக்கப்பட்டிருந்தது களுத்துறை 50.4வீதம், காலி 52.6 வீதம், அம்பாந்தோட்டை 55வீதம், மாத்தறை 492வீதம். இங்கு குறிப்பிட்ட பிரதேசங்களே அரசாங்கத்துக்கு எதிரான இன்றைய வன்முறையில் ஜேவிபியின் தளமாக அமைந்திருந்தன. இன்றைய நாடாளுமன்றத்தை இன்னொரு தவணைக்குத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் பிரேரணை, அதன் தகாத செயல்களுடன் தமிழ்த்தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களில் மிகுந்த ஆதரவைப் பெற்றது. அவர்களின் தலைவரான தொண்டமான் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்தார். அப் பிரதேசங்களில் பெற்ற வாக்குக்களின் நூற்றுவீதம்: நுவரெலியா 72.7வீதம் கண்டி 622வீதம் மாத்தளை 735வீதம், பதுளை 699 வீதம் 1948-49களில், அன்றைய யு.என்யி. அரசாங்கத்தால் இந்தச் சமூகத்தினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் நோக்கும்போது இது விசித்திரமானதே.
மாத்தளை மாவட்டத்தில், லக்கல தேர்தற் தொகுதி முடிவுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டது. வெள்ளப்பெருக்கு, மணிசரிவு ஆகியவற்றின் விளைவாக வாக்காளர்கள் தமது வாக்களிப்பு நிலையங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்கள் என டிசெம்பர் 23ம் திகதி "சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அத்தொகுதியின் 35.129 வாக்காளருள் 26.115 பேர், பொதுசனவாக்கெடுப்பில் வாக்களித்தார்கள் எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனோடு ஒப்பிடும்போது, ஜனாதிபதித் தேர்தலில் 17534 பேரே வாக்களித்துள்ளனர். யாழ் மாவட்டம் தவிர்ந்த தமிழ் மாவட்டங்களில் வாக்களிப்பில் ஒரு திடமான உணர்வு வெளிப்படாததற்கு மிகக் குறைவானோரே (60-70 வீதம்) வாக்களித்தமையுடனும் பொதுத்தேர்தலில் தனக்கு உடன்பாடான கட்சிகளுடன் ஒரு பொது முன்னணியை அமைக்கவும், பொதுசனவாக்கெடுப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாகப் பிரச்சாரத்தை வேகப்படுத்தவும் த.ஐ.வி.மு. தவறியமையுடன் தொடர்புபடுத்தலாம். த.ஐ.வி.மு.வும் இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொணிடமான் தலைமையிலான இ.தொகாவும் அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரச்சாரம் செய்யாமைக்கு முன்வைத்த சாட்டு என்னவெனில், ல.சசக. கம்யூனிஸ்கட்சி ஆகிய இரு இடதுசாரிக்கட்சிகளையும் உள்ளடக்கிய திருமதி பணிடாரநாயக்காவின் முன்னாள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தங்களை முற்றுமுழுதாக அசட்டை செய்தமையாகும். இக் காரணம், உண்மையேயாயினும் இன்றைய ஐ.தே.க. அரசாங்கம் பெயரளவில் மாத்திரமே அவர்களுக்குச் செவிசாய்க்கின்றது. இ.தொ.காவை ஆதரித்த அநேக தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களைப் பாதித்த 1981 ஆகஸ்ட் இனக்கலவரத்தை ஒரு அரசியற் கருவியாகப் பயன்படுத்தும் தன் போக்கை அது ஏற்கனவே காட்டிவிட்டது. ஜனாதிபதி ஜயவர்த்தன தனது கட்சியைச் சேர்ந்த சிலர்மீது குற்றஞ்சாட்டியபோதும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

53
இத்தவறுகளின் குரூரவிளைவு 1983 ஜூலையிலே அம்பலத்துக்கு வந்தது. தஐ.வி.மு.வுக்கு முன்னிருந்த ஒரே தெரிவு யாதெனில், முழுநாட்டினதும் ஜனநாயக உரிமைகளின் பேரால் கோட்பாட்டடிப்படையிலான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கத்தை எதிர்த்திருப்பதாகும். தஐவி.மு. அவ்வாறு செய்திருந்தால் அது நாடெங்கும் அவர்களது மதிப்பை அதிகரிக்கச் செய்திருக்கும். அது ஒதுங்கி நின்று ஆதரிக்கும் அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்கு அவர்களைக் கொண்டுவந்திருக்கும், தமிழர்களது நிலைக்கும் நீண்டகாலத்தில் கூடிய பாதுகாப்பை அளித்திருக்கும்.
ஒரு காலத்தில் உறுதிமிக்க தலைவராகத் தோன்றிய அமிர்தலிங்கத்தின் தலைமையின்கீழ் உள்ள தஐ.வி.மு. இன்று பொய்யான, வாக்குறுதிகளை எதிர்பார்த்து வாளாவிருந்து விடயங்களைத் தம்பாட்டில் நடக்கவிடுவதை அநேகரால் நம்ப முடியவில்லை. பொதுவாக ஜனநாயகத்தில் ஈடுபாடு காட்டாத தமிழ் உயர் குழாத்தினரின் பொதுவான போக்கைத் தஐவி.மு.வும் பிரதிபலித்தது. ஏனெனில் அக்கட்சியின் பகிரங்க நடத்தை பெரும்பாலும் அராசங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. பொதுசன வாக்கெடுப்பின்போது தஐ.வி.மு.வின் செயலின்மை அப்பொழுது பெரிதும் வெளிப்படாதபோதும், அதன் அரசியல் அடித்தளத்திலிருந்து அதன் நிலைதடுமாற்றத்தைக் குறிப்பாகக் காட்டியது. யாழ்ப்பாண வாக்காளர் தமக்கென ஒரு நோக்கமுடையவர்கள் என்பதை அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக 9137வீத வாக்குகளை அளித்ததன்மூலம் காட்டினர். த.ஐ.வி.மு.வின் அரைமனப்போக்கை உதாசீனம் செய்து இடர்பாடுகளைத் துச்சமென மதித்து, (ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைப் பார்க்கிலும் 141வீதம் அதிகமாக) வாக்களித்துள்ளனர். தனது மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல் ஒரு அரசியற்கட்சி அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபடுவது அதன் அரசியல் தற்கொலையே தவிர வேறொன்றுமில்லை.
ஜனாதிபதி ஜயவர்தன, தமிழர்களையும் அவர்களது பிரதிநிதிகளையும் இப்பொழுது அவமரியாதையாக நடத்தக்கூடியதாயிற்று. அவரது உடனடியான பேரவாவைப் பொறுத்தவரை, தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல் தமிழர்களையும் தமது சட்டைப்பையுள் வைத்திருந்தார். இப்பொழுது தமிழர்கள் அவரது சபலத்துக்கும் பொறுப்பின்மைக்கும் உட்பட்டோராயினர். அவர்களுக்கு அவர் எதையும் அளிக்கப்போவதில்லை. பாரிஸ் நகர மக்கள் ரொட்டி கேட்டபோது மேரி அண்துவானெற் வெளிப்படுத்திய உணர்வின் பாங்கிலேயே, அவர் தமிழர்களுக்கு கேக்கைக் கொடுக்கவிருந்தார்.
1983 ஜனவரி 1
இந்த நேரத்திற் தொலைதெற்கில் நடந்த வாக்களிப்புப் பற்றி ஒருவரும் எதுவித கவனமும் செலுத்தவில்லை. பொதுசன வாக்கெடுப்பிற்குப்பின்னர், பதவியணி எழுத்தாளரான சுரேஷ் என்பவர் "சற்றடே றிவ்யூ வில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் 5 அமைச்சர்களினதும், 5 துணை அமைச்சர்களினதும், 19 யு.என்யி. நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் தேர்தற்தொகுதிகளில் இன்றைய

Page 43
54
அரசாங்கத்தைக் கலைத்துவிடுவதற்கு ஆதரவாகத் தெளிவானமுறையில் வாக்களிக்கப்பட்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார். இத் தொகுதிகளில் அதிகமானவை தொலைதெற்கிலிருந்தன.
ஆனால், 1983ம் ஆண்டு ஆரம்பத்தில், தமிழ்த்தலைவர்கள் ஜனாதிபதியின் சட்டைப்பையிலும், தென்பகுதி பொலிசாரின் சப்பாத்தின்கீழும், யுஎன்பிக் குண்டர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தபோது, நடைபெற்ற இந்த மோசடிகள் ஒருவிதமான பீதியுடன் அங்கீகாரத்திற்குள்ளாக்கப்பட்டன. தெற்கே, அடிமட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் சினமும் இழிவுபடுத்தப்பட்ட உணர்வும் வடக்கே அதிகரித்துவரும் வன்முறையும், மக்கள் தொடர்புசாதனங்கள்மீது அரசாங்கத்தின் கட்டுப்பாடும் நிலவிய நிலைமையில், பொறுப்பின்மையும் ஒரு வகையான ஆணவமும் இயல்பாகவே கொண்ட அரசாங்கம், மிக இயல்பாகவே சிங்கள மக்களின் கோப உணர்வுகளைத் தமிழர் எதிர்ப்பு வன்முறைகளில் ஆறுதல் காணுமாறு நெறிப்படுத்தியது.
1983 ஜனவரி 8
சற்றடே நிவ்யூ உருவாகிவரும் புதிய அடக்குமுறைப் போக்கை மோப்பம் பிடித்தது. "நாங்கள் அபாயத்தை முகர்கின்றோம்" என்ற தலைப்புச்செய்தி ஒன்றில் "நாங்கள் மிக நெருங்கிய கண்காணிப்புக்கும் ஆராய்வுக்கும் உட்பட்டுள்ளோம். எவ்வேளையும் எம்மீது கோடரி விழலாம் எனப் பல்வேறு துறைகளிலும் உள்ள எமது நண்பர்களிடமிருந்து, குறிப்பாக அரசிற்கு நெருக்கமான சிலரிடம் இருந்து, செய்தி கிட்டியுள்ளது" எனக் கூறிற்று. 1980ம் ஆணிடுப் பொது வேலைநிறுத்தம் முறியடிக்கப்பட்டு, பின்தங்கிய கிராமங்களின் வாழ்க்கையையும் பாதிக்கின்ற பன்னாட்டுக் கம்பனிகளின் வருகையுடன் ஆரம்பித்து அதிகரித்துவரும் அடக்குமுறைச் சூழலின் முன் இடதுசாரிகள் தமது இயலாமையை உணர்ந்தனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஓரளவு கடும் எதிர்ப்புக்காட்டிய ஒரே சிங்களப்பிரதேசம் மொனராகல மாவட்டமாகும். அங்கே சில இடதுசாரிக்குழுக்கள் பொதுக் காணிகளைப் பல்தேசிய சீனிக்கம்பனிகள் கையேற்பதை எதிர்த்துச் செய்த பிரசாரத்துக்கு கிராம மக்கள் துணை நின்றார்கள். இக்காரணத்தால் தெற்கில் அநேக இடதுசரிப்போக்குடைய தனிமனிதர்களும் தாபனங்களும், அரசாங்கத்துக்குப் பொதுமக்கள் எதிர்ப்புக்காட்டுகின்ற வடக்கிலிருந்து ஒரு உந்துதலை எதிர்பார்த்தார்கள். 1982 ஜூனில் 47,000 உறுப்பினரையுடைய இலங்கை ஆசிரியர் சங்கமும் புரட்சிகர மாக்ஸிஸ்ட் கட்சியும் சில வாரங்கள் முன்னர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட திரு.பிரபாகரனையும், திரு.உமாமகேஸ்வரனையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதை எதிர்த்து அறிக்கைகள் விட்டன.
1983 ஜனவரி 22
சற்றடே றிவ்யூ, இலங்கை வர்த்தக ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர்
பாலாதம்புவுடன் நடத்திய பேட்டியை வெளியிட்டது. அது பின்வரும்
சுருக்கத்தை அடக்கியிருந்தது. "எவ்விதபெயரோ, விளம்பரமோ இல்லாதவராயினும்,

55
தமது அனுபவங்களையும் அவற்றின் படிப்பினையையும், கிரகித்த இளைஞர்கள் அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புதிய தீவிர எதிர்ப்பியக்கத்தை உருவாக்க ஒன்றுதிரள்வதைக் காண்பதாக அவர் சொன்னார். இது, முன்னர் கேள்விப்படாத குட்டிமணி, தேவன் போன்றவர்கள் ஒரு உண்மையான புரட்சிகர சக்தியை உருவாக்கல் காரணிகளைத் தமக்குள் கொண்டிருந்ததைப் போன்றது. ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுசனவாக்கெடுப்பிலும் தோல்வியடைந்தபின், இடதுசாரிகள் நிலைகுலைந்தபோதும், திரு.பாலாதம்பு மிகவும் நம்பிக்கையோடிருக்கிறார். நான் வரலாற்றை அலைகளாகப் பார்க்கின்றேன். இதுவரை நாம் ஓய்ந்து போகின்ற அலைகளில் இருந்தோம். ஆனால் ஜயவர்த்தனவின் அடக்குமுறையினால் உண்டான மந்தமான சூழலில்கூட அதன் முன்னாலுள்ள கொடுங்கோலாட்சிச்சக்திகளையெல்லாம் மிகவிரைவில் அடித்துவாரிச் செல்லத்தக்க முன்னேறும் அலைகளை நான் இப்பொழுது பார்க்கின்றேன்" என்று அவர் பெருமிதமாகக் கூறினார்.
1983 பெப்ரவரி 19
பின்வரும் பகுதி, தெற்கிலுள்ள ஒரு இடதுசாரியான குசல் பெரெரா என்பவர் எழுதிய சற்றடே றிவ்யூ கட்டுரை ஒன்றிற் பிரசுரமானது.
"புதிதாக இடதுசரிகள் எழுப்பும் கேளிக்கைகளை முன்வைத்துக் தொழிலாளர் மத்தியில், தொழிற்சாலை மட்டத்தில் பரந்துபட்ட ஐக்கியத்துக்காகப் போராடியிருக்க வேண்டும். அக் கோரிக்கைகளில் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையும் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ்த் தொழிற்சங்க சம்மேளனம் தன் தூக்கத்திலிருந்து விழித்து அத்தகைய தொழிலாளிவர்க்க ஐக்கியத்திலும் தீவிரமாக இணைந்து செயற்படவேண்டும். சுருங்கச் சொன்னால், இடதுசரிகளும், தமிழ்ப்போராளிகளும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மாபெரும் அரசாங்க விரோத மக்கள் இயக்கத்தை நடத்தவேண்டும். அதுவே தமிழ் ஈழத்தை அடையும் ஒரே செயல்துறையாக இருக்கும். ஏனெனில் இந்த நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அரைச்சர்வாதிகாரத்தின்கீழ் பிரிவினையைச் சாத்தியமாவதற்கு அதுவே பழைய லககலிருந்து பிரிந்த ஒரு பகுதியான நவசமசமாஜக்கட்சி (NSSP) என்னும் இன்னொரு இடதுசரிக்கட்சிக்கு வாசுதேவ நாணயக்காரவும், விக்ரமபாகு கருணரட்னவும் தலைமை தாங்குகின்றனர். இக்கட்சி, யாழ்ப்பாணத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் மாணவர் மத்தியிலும் ஆதரவு பெற்றது. அது தமிழ்மக்களின் சுயநிர்ணயத்துக்காக வாதாடியது. தெற்கிலே அதன் தளம் சிறியதாயினும், சில பிரதேசங்களில் செல்வாக்குடனிருந்தது. திரு.வாசுதேவ நாணயக்கார 1983 ஜூலை இனக்கலவரத்துக்குப் பின் ஒரு குறிப்பிடத்தக்க இடைத்தேர்தலிற் போட்டியிட்டர். அது அரசாங்கத்துக்குக் கவலையைக் கொடுத்தது. தேர்தலில் பிறகட்சிகள் கையாளும் பழைய வழிமுறைகட்கு மாறாக, நவ சமசமாஜக்கட்சி சிங்களத் தேர்தற்தொகுதியிற் தமிழ்மக்கள்பற்றிய தனது கொள்கைகளைத் தெளிவாக முனி வைத்தது. இப் பயமுறுத்தல் ஆழமாகக் கவனத்துக்கு எடுக்கப்பட்டதனாலேயே ஜனாதிபதி ஜயவர்த்தன, தானே அத்தொகுதியினர் தேர்தற்

Page 44
56
பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு அரச காடைத்தனம் அதிகமாயிருந்தது. திருநாணயக்காரவே உண்மையில் அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாரெனப்
லர் நம்புகின்றனர்.
எவ்வாறாயினும், அந்த நேரத்தில் இடதுசாரிகள் பிளவுபட்டமையும் ஒரு ஏற்படுத்தியது. அவர்களால், ஜனாதிபதித் தேர்தலில், தமது சார்பில் り 'சகரைத் தீர்மானிக்கமுடியவில்லை. இடதுசாரிகள் முன்னர் மேற்கே.4 . . டாலாதம்புவின் கருத்தைப் போன்று மிக "நிச்சயமான முடிவுகளை அடிக்கடி எதிர்வு கூறிவிட்டு, பெரும்பாலும் அவை பற்றிக் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் தமிழர் பிரச்சினைமீது இடதுசாரிகள் காட்டிய அக்கறை, தெற்கிலே தமிழ்ப்போராளிகள் பற்றி ஓர்
சிப் படிமத்தை ஏற்படுத்த உதவியது. பெப்ரவரி 19ம் திகதி "சற்றடே றிவ்யூ இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் - கிபற நமிழர் மத்தியில் பலமான தாக்கத்தை ஏற்படுத்திய நீதிமன்ற நாடகம் பும் எழுதியது. நீர்வேலி வங்கிக் கொள்ளை தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்ட து கட்சிக்காரருக்காக வாதிட்ட சட்டத்தரணி நசத்தியேந்திரா வியாழனன்று ரையாற்றுகையில் பின்வருமாறு நீதிமன்றத்தின் தனது வாதத்தை முடித்து .தினார். 'இவ் வழக்கிற் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எனது இனத்தைச் சேர்ந்த பது கட்சிக்காரர்கள், எனது இனத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் அதியுயர்ந்த ப்புள்ளதாக உயிரை, மக்களின் விடுதலை இலட்சியத்துக்காக அர்ப்பணிக்கத் தயாராயுள்ள அவர்கள் முன், இந்த நீதிமன்றத்திலிருந்து கூறவிரும்புவது யாதெனில், அவர்களின் முன் நான் ஒரு அற்பமனிதனென உணர்கின்றேன் என்பதாகும்.
இந்த வழக்கிற் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நவரத்னராஜா தங்கவேலு (தங்கத்துரை) செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி) வைத்திலிங்கம் நடேசதாசன் (தேவன்), நடராஜா (சிவபாலன் மாஸ்டர்), தலைமறைவாகியுள்ள, சிவசுப்பிரமணியம் சிறிசபாரெத்தினம் ஆகியோராவர். பின்னர் உருவான தமிழீழ விடுதலை அமைப்பு (TELO) இக்குழுவினரை முன்னோடிகளாகக்கொண்டே இயங்கியது. மூன்றாவதாகப் பெயர் குறிப்பிடப்பட்ட சிறிசபாரெத்தினம் இவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கினார். குட்டிமணியும் தங்கத்துரையும் 1983 ஜூலை 25ம் திகதி சிறைச்சாலைப் படுகொலைகளின் போது கொல்லப்பட்டார்கள். சிறிசபாரெத்தினம் 34 மாதங்களின் பின், பிரபாகரனது புலிகளியக்கத் தலைமையின் உத்தரவுப்படி கொல்லப்படுவார் என்று அப்பொழுது பொதுமக்கள் கனவிலும் எண்ணியிருக்க முடியாது.
1983 Ln 5
முன்னெப்பொழுதும் நிகழ்ந்திராத அந்த நீதிமன்ற நாடகத்தின் இரண்டாவது காட்சி, 1983 பெப்ரவரி 23ம் திகதி, குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது நபரான திருதங்கத்துரை நீதிமன்றத்தில் உணர்ச்சிபூர்வமாகத் தனது அறிக்கையை வாசித்தபோது நிகழ்ந்தது. அதைத்தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுபேருக்கும் இரு குற்றங்களுக்காக ஆயுட்காலச் சிறைத்தண்டனையும்

57
வேறு இரு குற்றங்களுக்காக 15 ஆண்டு காலக் கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. திருசிஎல்ரிமூனேமலே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் கடமையாற்றினார். தங்கத்துரையின் அரசியல் வாரிசுகள் அரசியலில் வெற்றி கண்டிருப்பார்களாயின் அவரின் இந்த நீதிமன்ற உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உரையாக மாறிப் போயிருக்கும். அந் நேரம் தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்திய அந்த உரையிலிருந்து சகல போராளிக்குழுக்களும் பயன்பெற்றன. வெலிக்கடைப் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் புலிகளால் தஈ.வி.இ. (TE.L.O) தாக்கி அழிக்கப்படுவதற்குச் சிறிது காலம் பின்னர் வந்தது. இவ்வழித்தொழிப்பு நடவடிக்கைகள், 1983 ஜூலை இனப்படுகொலைகள் சிலவற்றின் சாயலைக் கொண்டிருந்தது. குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கொலையுணிட வெலிக்கடைப் படுகொலையை நினைவுகூரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பதைப் பல இடங்களில் புலிகள் தடை செய்தனர்.
தங்கத்துரையின், உணர்வைக்கிளறும் உரை தமிழர்களின் வரலாற்று அனுபவங்களை நினைவூட்டியது. அது பின்வரும் வாக்கியங்களைக் கொண்டிருந்தது: "நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மனநோயாளிகளோ அல்லர். மாறாக விடுதலையை முன்வைத்துப் போராடும் ஓர் ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள். பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஒலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத்தீயினாலும் ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்த போதிலும் தமிழ்ப்பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்குப் பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப்பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பச்சைக்கொலையாக 1977ம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத்தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில பொலிசாரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது?
. கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ள்கள். ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சுவலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக்கலவரங்களின் போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கி, காடையர்களிடமிருந்தும், உங்கள் ஏவல்படைகளினதும் கொடுமைகட்கு தமிழினத்தை முற்றாகப் பலியிடாது

Page 45
58
அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர். . எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான்"
இந்த நேரத்தில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மாணவர் அமைதியின்மை தலைதூக்கியிருந்தது. பல்வேறு பல்கலைக்கழக மாணவர் இயக்கங்களிடையே இருந்த ஒருங்கிணைப்பு அரசாங்கத்தை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும். 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் நிலவிய இனவாதச் சூழ்நிலையின் மத்தியில் இது தனித்துவம் மிக்கதானது. ஆயினும், திறந்திருந்ததைப் பார்க்கிலுத் அதிக காலம் மூடப்பட்டே கிடந்த பல்கலைக்கழகங்களுக்கு இது அமைதியைக் கொண்டுவரவில்லை. அரசாங்கத்தாற் போஷிக்கப்பட்ட இனவாதமும் அரசாங்கத்தின்மீதான விரக்தியும் இணைந்து, அடுத்து வந்த ஆண்டுகளில் ஜே.வியிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தின. எவ்வாறாயினும், அன்றைய உணர்வுகளைச் சற்றடே றிவ்யூ. தனது அறிக்கைகளில் வெளிக்கொணர்ந்தது: "பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குக" என்பது இலங்கையிலே எல்லாப் பல்கலைக்கழகங்களினதும் பல்கலைக்கழக வளாகங்களினதும் முக்கிய கேரிக்கைகளுள் ஒன்றாக இருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் பெப்ரவரி 24ம் திகதி விரிவுரைகளுக்குச் சமூகமளிக்காமல் ஒருநாள் அடையாளப் பகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தினர். அவர்கள் பல்கலைக்கழகங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாதெனவும் கோரிக்கை விடுத்தனர். பல்கலைக்கழக நிருவாகத்தைப் பொறுப்பேற்பதற்குரிய சட்ட விதிகள் வரையப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவர் கலாநிதி ஸ்ரான்லி கல்பகே விட்ட அறிக்கையும் வேலைநிறுத்தம் செய்யும் மாணவர்களின் புலமைப்பரிசில்களையும் கடன்வசதிகளையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு இரத்துச் செய்துவிடும் என்ற அவரது பயமுறுத்தல் தொடர்பாகவுமே, விசேடமாக இந்தக் கேரிக்கை விடப்பட்டிருந்தது. அம் மாணவர்களின் மூன்றாவது கோரிக்கை கொத்தலாவல பாதுகாப்பு அகடமி என்ற இராணுவ நிறுவனத்தின் மாணவர்களைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதாகும். 1983 LD 12
இந்த இதழ், மூன்று மாணவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை பற்றி யாழ்ப்பாணத்திலே அதிகரித்துவரும் அமைதியின்மை பற்றி எழுதியிருந்தது. இதற்கிடையில் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களிலே அதிருப்தி அலை பரவிக் கொண்டிருந்தது. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்தம் இரண்டாவது வாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, பேராதனை, களனி, றுகுண, மட்டக்களப்பு ஆகிய பல்கலைக்கழக வளாகங்களைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்கள், கொழும்பு ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகங்களின் மாணவர் மீது பொலிஸ் கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்துச் சகல விரிவுரைகளையும் பகிஷ்கரிக்கத் தொடங்கினர் என்று அது மேலும் தெரிவித்தது.

59
இக்காலகட்டத்தில், நிகழ்ச்சிகள் ஒரு புதிய போக்கைக் கொண்டிருந்தன. மார்ச் 4ம் திகதி இரணிடு இராணுவ வாகனங்களைச் சிலர் கிளிநொச்சிக்கண்மையிற் பதுங்கியிருந்து தாக்கியதனால், ஐந்து இராணுவவீரர்கள் காயமுற்றனர். மார்ச் 14ம் திகதி அரசாங்க அலுவலர்கள் சிலர், தாம் உதவி அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் செயற்படுவதாகக் கூறிக்கொண்டு இரும்புக்கம்பிகளோடும் பொல்லுகளோடும் சென்று திருகோணமலை மாவட்டத்தில் பண்குளத்தில் இருந்த அகதிகள் குடியிருப்பில் மலையகத் தமிழருக்குச் சொந்தமான 16 குடிசைகளுக்குத் தீமூட்டி எரித்தனர். இந்த அகதிகள் காந்தியத்தால் ஆதரவளிக்கப்பட்டவர்கள். அரசு கடந்தகாலங்களில் தனிப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்ததுபோல், இனங்களுக்கு எதிராகவும் தனது அடக்குமுறையைக் கையாளத்தயாராகிக் கொண்டிருக்கின்றதென்பதற்கு இது ஓர் அறிகுறி.
1983 ஏப்ரல் 5ம் திகதி பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் ஏற்பாடு செய்த ஊர்வலம் பொலிஸாரின் கணிணிர்ப்புகைத்தாக்குதலால் கலைக்கப்பட்டது. ஊர்வலத்தினர், தொடக்கத்தில் அறிவித்தவாறு பிரதான வீதியில் அமைந்துள்ள புனித ஜேம்ஸ் தேவாலய மைதானத்திலிருந்து ஆரம்பிக்காது, பெரியகோயில் (கதீட்றல்) மைதானத்திலிருந்து ஆரம்பித்தமையால் பொலிஸாரின் சுற்றிவளைப்பைத் தவிர்த்தனர். (அரசாங்கம் காந்திய அமைப்பின் மீது பாய்ந்திருக்கும் செய்தி அப்போது உடனடியாக எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது).
1983 ஏப்ரல் 9
"காந்தியம் அமைப்பு இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் சமுதாய அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள ஒரே பாரிய தொண்டுத்தாபனமும், தமிழ் அகதிகள் மீளக்குடியமர்த்தலைப் பராமரிக்கின்ற ஒரு தீவிர நிறுவனமும் ஆகும். இலங்கை இராணுவம், பொலிஸ், குற்றவியல் புலனாய்வுத்திணைக்கள அலுவலர் ஆகியோர் ஒன்றிணைந்த குழுவினரால் ஏப்ரல் 6ம் திகதி புதன் காலை 10.00 மணிக்கு காந்தியம் திடீர்ச்சோதனைக்குள்ளானது. காந்தியத்தின் அமைப்புச் செயலாளர் டாக்டர்.எஸ்.இராஜசுந்தரம் பெயர் குறிக்கப்படாத ஓரிடத்துக்குகொண்டு செல்லப்பட்டார். அவன்ரக் கைது செய்வதற்குப் பிடியாணை இல்லாததாலும் எதுவித காரணமும் கொடுக்கப்படாததாலும், அபகீர்த்திக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரென நம்பப்பட்டது". 1983 ஏப்ரல் 30
இராணுவப் பாதுகாப்பில் இருக்கும்போது நவரத்னராஜா மரணமடைந்தமை, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின்கீழ்ச் சிறைக்கைதிகள் நடத்தப்படும்முறைபற்றி தமிழரின் வெறுப்பான சினத்தைத் தூண்டிவிட்டது. "சற்றடே றிவ்யூவின் தலைப்புச் செய்தியில் இதுபற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
மேலதிகச்சட்டவைத்திய அதிகாரி (AJMO) டாக்டர் சரவணபவானந்தன் யாழ்ப்பாணத்தின் குருநகர் இராணுவமுகாமில், இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது மரணமான, திருகோணமலையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயதான

Page 46
60
நவரத்னராஜாவின் மரணவிசாரணை தொடர்பாக தனது வைத்திய அறிக்கையை சமர்ப்பித்தபோது, மரணமடைந்த நவரத்னராஜாவின் சடலத்தில் இருபத்தைந்து வெளிக்காயங்களும் பத்து உட்காயங்களும் காணப்பட்டன. அவரது நுரையீரல்களிற் காணப்பட்ட ஊமைக் காயங்கள், தாக்குதலினால் ஏற்பட்டிருக்கக்கூடும். இருதயத்திலும் நுரையீரலிலும் ஏற்பட்ட ஊமைக்காயங்கள் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறேன். ஒரு வைத்திய நிறுவனத்திற் போதிய சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அவரது உயிரைப் பாதுகாத்திருக்கமுடியும் என்பது என் அபிப்பிராயம் என்று தெரிவித்தார். நவரத்னராஜா இரு கிழமைகளுக்கு முன்னர் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ்ச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்ட மருத்துவவியல் பேராசிரியரான என்.சரவணபவானந்தன், தனது பிறந்த ஊரின் பனைமரத்தைப்போல எதற்கும் வளைந்து கொடுக்காத ஒரு ஆத்மா. அவர் தனது தொழில்ரீதியான தீர்ப்பிலிருந்து ஒருபோதும் பிசகாதவர், எந்த சமரசத்திற்கும் போகமாட்டாதவர். நவரத்னராஜாவின் விசாரணை முடிவடைந்த பின், பொலிஸார் அக்கோவைக்காக பிரேத அறையில் ஆவணங்களைத் தேடினர். ஆனால் பேராசிரியர் சரவணபவானந்தனி முன்னெச்சரிக்கையுடன் அந்தக் கோவையைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டார். இத்தகைய விடயங்களில் அவர் பழுத்த அனுபவசாலி. 1971ல் சிங்கள இளைஞர்களின் வன்முறை எழுச்சிக் காலகட்டத்தில் காலியிற் சட்ட வைத்திய அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, பாதுகாப்புப்படையினால் கூட்டாகக் கொல்லப்பட்டு கினிகங்கைக்கு அருகே புதைக்கப்பட்ட இளைஞர்களின் சடலக்குவியலை அவர் தோண்டியெடுப்பதை யாராலும் தடுக்கமுடியவில்லை. ஒரு பலாத்காரப் பாலுறவு முறைப்பாட்டு வழக்கிலே இன்னொரு டாக்டரின் கருத்துக்கு மாறான கருத்தினை அவர் தெரிவித்தபோதும் இந்திய அமைதிகாக்கும்படை அவரைக் கெளரவமாகவே நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. 'சற்றடே றிவ்யூவின் அதே இதழ், "இந்த வெறுக்கத்தக்க சட்டத்தை நீக்குக" என்ற தலைப்பின்கீழ் அச்சட்டத்தைக் கடுமையாகத் தாக்கிய ஆசியர் தலையங்கம் தமிழர்கள் தாம் அந்நியமாக உணர்வதைப் புலப்படுத்தியது. அந்த ஆசிரியர் தலையங்கம் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டிருந்தது:
இத்தகைய சட்டங்களில் முதலாவது ‘சுதந்திரம் பெற்ற அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அது 1948ம் ஆண்டின் 18ம் வாக்குரிமைச் சட்டமாகும். இச் சட்டமானது, பிரசா உரிமை பெறுவதிலிருந்து ஒரு பகுதித் தமிழர்களை வெற்றிகரமாக விலக்கிவிட்டது. அதன் பின்னர் 1949ம் ஆண்டின் மூன்றாம் இலக்க இந்திய, பாகிஸ்தானியா குடியிருப்பாளர் (பிரசா உரிமை) சட்டமும், பெரும்பகுதியினரான தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்த, 1949ம் ஆண்டின் 46ம் இலக்க இந்திய - பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (பிரசா உரிமை) சட்டமும் அமுலுக்கு வந்தன. அதன் பின்னர் 1956ல் தனிச் சிங்கள மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டமானது, இந்நாட்டிலுள்ள தமிழருள் சிலர் அவர்கள் எத்தகைய கலாநிதிப்பட்டம் பெற்றிருந்தாலும், அவர் பிறந்த நாட்டிலேயே ஒரு படிப்பறிவுமற்றவர்களாக மாற்றியது. பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுலுக்கு வந்து மூன்றாண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை அரசாங்கம் அதனால் சாதித்ததென்ன?”

6.
1983 ஏப்ரல் 30
இத்திகதிக்குரிய, இதழ், காந்தியத்தின் தலைவரும் சிரேட்ட கட்டிடக் கலைஞருமான அருளானந்தம் டேவிட் என்பவரைப் பனாகொடை இராணுவமுகாமில் தடுத்துவைத்துச் சித்திரவதை செய்வதைச் சுட்டிக்காட்டியது. சட்டத்தரணி குமாரலிங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய தந்தியில், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராஜேந்திரன் என்பவருக்கு இரத்தப்போக்கும் அடிக்கடி மயக்கமும் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். டேவிட்டிடம் சித்திரவதைமூலம் பலவந்தமாக ஒப்புதல் கையெழுத்துப்பெற்ற பின்னர், ஒரு நீதிமன்ற உத்தரவால் சட்டத்தரணிகள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதே இதழ், நாடுதழுவிய அடக்குமுறையை மக்களின் கவனத்துக்கு: கொண்டு வந்தது. குடிஉரிமைகள் இயக்கத்தின் கூட்டமொன்று 1983 ஏப்ரல் 15ம் திகதி அதன் தலைவர் ஆயர் லக்ஷ்மணி விக்ரமசிங்ஹ தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்திற் பொலிஸாரின் முறைகேடான நடத்தைகள் அதிகரித்துவரும் அறிகுறிகள்பற்றிக் கவலை தெரிவிக்கப்பட்டது. அக்கூட்டம் குறிப்பான சில சம்பவங்களைத் தொகுத்துக் கூறியது. அவை, கொத்மலையில் பத்திரிகையாளர்மீது தாக்குதல், கண்டிப் பொலிஸ் நிலையத்திற் 17 வயதுப் பையன் தாக்கப்பட்டுச் சட்டவிரோதமர்கத் தடுத்து வைக்கப்பட்டமை, எக்கலை என்னுமிடத்தில் வேலை நிறுத்தம் செய்த பெண்கள் மீது தாக்குதல்கள், ஐயவர்த்தனபுரவில் மாணவர்மீது தாக்குதல், மாத்தளையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த சந்தேகநபர் மரணம், கொழும்பில் நடைபாதை வியாபாரிகள் மீது தாக்குதல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திருமதி:விவியன் குணவர்த்தன மீது தாக்குதல் ஆகியனவாகும்.
உள்ளூராட்சித் தேர்தல்கள்பற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கிலே மூன்று யு.என்.பியினர் கொல்லப்பட்டனர். (இரத்னசிங்கம், இராஜரத்தினம், - முத்தையா). 1981ல் தியாகராஜாவும், 1983 நவம்பரில் தம்பாப்பிள்ளையும் கொல்லப்பட்டதோடு, கொலையுண்ட யுஎன்பியினர் தொகை ஐந்தாக அதிகரித்தது. விடுதலைப்புலிகள் ஒரு துண்டுப்பிரசுரத்தில் அந்தக் கொலைகளுக்குத் தாமே பொறுப்பேற்று உரிமைகோரியதுடன் தேர்தலில் ஈடுபடுவதில் மாத்திரம் ஈழவாதிகளாக இருக்கும் தஐ.வி.மு.பும் ஒரு தீயசக்தி என்று முத்திரை குத்தினர். மே 18 தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்ததனால் தஐ.விமுமின் சில முக்கிய வேட்பாளர்கள் தேர்தலிருந்து விலகினர். யு.என்.பி. உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகினர். போராளி இளைஞர்கள் ஒரு கூட்டத்தில் (மே 8) துப்பாக்கியால் சுட்டபோது த.ஐ.வி.மு. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான திருஅமிர்தலிங்கத்தைத் தவிர மேடையில் அமர்ந்திருந்த பேச்சாளர் உட்பட அனைவரும் ஓடிவிட்டனர். 1988 , 14
சற்றடே றிவ்யூவின் இந்த இதழில் பின்வருவன வெளியாயின; சில சிங்களட் பட்டதாரி மாணவர்கள் தாக்கியதால் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் மாணவர்களும், சில விரிவுரையாளரும் வியாழனும், வெள்ளியும் வெளியேறினர். காயமுற்ற சில மாணவர்கள் கண்டி வைத்தியசாலையில்

Page 47
62
அனுமதிக்கப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவர் குழு "ஜீன் போல் சார்த்தர்" எழுதிய "நிழலில்லா மனிதர்கள்" என்ற நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து மேடையேற்றினர். நாசிக் காடையர்கள் பிரெஞ்சு எதிர்ப்புப் போராளிகளுக்குச் செய்த சித்திரவதைகளும் கொடுமைகளும் இந்நாட்டு நிலைமைகளைப் பிரதிபலிக்கும்வகையில் இந்நாடகத்தில் காட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. பின்னர் விடுதலைப்புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள் விஞ்ஞானபீடச்சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. பல்கலைக்கழக வாசலில் காணப்பட்ட சிங்கள, ஆங்கில எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டமை இங்கு நடந்த வன்முறைச்சம்பவங்களுக்கு இன்னொரு சீண்டுதலாகத் தோன்றியது. இந்த வேலை திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. பொறியியற்பீடச் சிங்கள மாணவர்கள் தமது சக தமிழ் மாணவர்களைப் பாதுகாத்ததன்மூலம், அப்பீடத்தின் நீண்டகால மரபு பாதுகாக்கப்பட்டது. மற்றைய பீடங்களில் வேசை மக்களே உங்களுக்கு வளாகமும் இல்லை, ஈழமும் இல்லை" என்று தமிழ் மாணவர்கள் நிந்திக்கப்பட்டார்கள்.
மே 18ல் உள்ளூராட்சித் தேர்தல்களில் விடுதலைப்புலிகட்குள்ள ஆதரவு காரணமாகவும் அவர்கள் மீதான பயம் காரணமாகவும் சிறுதொகையினரே வாக்களித்தனர். விடுதலைப்புலிகள் தேர்தல் பகிஷ்கரிப்பு வேண்டுகோளுக்கு அப்பாலும் சென்று ஒரு வாக்களிப்பு . நிலையத்தையும் தாக்கினர். ஆத்திரங்கொண்ட இலங்கை இராணுவத்தினர் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அவசரகாலநிலைமை அமுலுக்கு வந்ததும் மாலை 5.00ற்கு யாழ்ப்பாணத்தில் கந்தர்மடம் என்ற இடத்தில் 64 வீடுகளையும், 5 மினிபஸ்களையும் 9 கார்களையும், 3 மோட்டார் சைக்கிள்களையும், 36 சைக்கிள்களையும் அன்று இரவிற்குள் தீயிட்டனர். அண்மையில் இருந்த வாக்களிப்பு நிலையமொன்றில் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர்தான் காவலில் நின்ற கோப்பறல் ஜயவர்த்தன இளம் போராளிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு இராணுவத்தின் பதிலடியே இது என நம்பப்படுகிறது.
1983 (LD 21
இராணுவம் இப்பொழுது "தமிழ்ச் சமூகத்தின் மீது ஒட்டுமொத்தமான" பதில்தாக்குதல் மூலம் பழி வாங்குவதை தன் செயல்முறைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில் இராணுவம் நிராயுதபாணிகளான பொதுமக்களைப் பழிவாங்கியது. காந்தியம் செயலாளரான டாக்டர் இராஜசுந்தரம், மோசமாய்த் தாக்கப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் உள்ளார் என்பது பெருமளவும் உறுதி எனச் சுட்டிக்காட்டிய கொழும்பு சட்டவைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ் .சல்காடோவின் அறிக்கையைச் சற்றடே றிவியூ வெளியிட்டிருந்தது. ”
பன்குளத்திலும், கந்தர்மடத்திலும் நிகழ்ந்த சம்பவங்கள் அரசாங்கம் பிரக்ஞைபூர்வமாக புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்பதைக் குறித்தது. கந்தர்மடச் சம்பவம், எழுந்தமானமாக நிகழ்ந்ததன்று. அது திட்டமிட்டமுறையில், ஓர் உயர் அதிகாரி அவ்விடத்துக்கு வந்து உத்தரவு

63
பிறப்பித்த பின்னர் நடந்தது. ஒரு ஆடு இறந்ததைத் தவிர மனித இழப்புக்கள் எதுவும் இங்கு நிகழவில்லை. பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளின் அறிவிப்பைத் தொடர்ந்து, அளவுமீறிய அதிகாரம் அளிக்கப்பட்டமையால், கண்டபடி மக்களைக் கொல்லும் சூழ்நிலை உருவானது. அந்த அறிவிப்பிற்கமைய, வடக்குக்கிழக்கில், ஆயுதப்படைகளுக்கும் பொலிஸாருக்கும் சட்டநடைமுறைகளுக்குக் கட்டுப்படாமல் தேடி அழிப்பதற்கான பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கந்தர்மடத்திற் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதற்காக முன்வந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நிதியும் பொருள்களும் சேகரித்துக் கொடுத்தார்கள்.
1983 யூன் 4
சற்றடே றிவ்யூவின் தலைப்புச்செய்தி சன் பத்திரிகையில் வெளிவந்த கூற்றை மேற்கோள்காட்டியது.
அத்தகைய சூழ்நிலைகளிலே படைவீரரையும் பொதுமக்களையும் கொல்லுவதில் ஒருசிறிதும் ஈவிரக்கம் காட்டாத ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகின்ற போது, ஒரு போரில் நடைபெறுவது போலவே, படைவீரர்கள் எதிர்த்தாக்கல் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோக்கிலே, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள படைவீரர்களும் பொலிஸாரும் சட்ட நெறிகளுடன் முரண்பட்டு மனவிரக்தியடைய அனுமதிப்பதற்கு மாறாக அவர்களுக்குப் போர்க்களத்திலே சுதந்திரம் அளிக்கப்படவேண்டும் என உணரப்பட்டுள்ளது. இது ஒரு சமாதானச் சூழ்நிலை அல்ல. பிரச்சினையைக் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும்போது பொலிஸாருக்கும் படைவீரர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும் என்று 'சன் கூறியுள்ளது.
1983 ஜூலை 3ம் திகதிக்குரிய 15 அ அவசரகால விதியே புதிய சட்டப்பாதுகாப்பாகும். பாதுகாப்புப்படைகள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமலோ மரண விசாரணை நடத்தாமலோ புதைப்பதற்கும் தகனம் செய்வதற்கும் அச்சட்டவிதி அவர்களுக்கு அதிகாரம் அளித்தது. இராணுவப்பாதுகாப்பிலிருந்தபோது இறந்த நவரத்னராஜாவின் மரணவிசாரணையின்போது மேலதிகச் சட்டவைத்திய அதிகரி டாக்டர் சரவணபவானந்தனால் அளிக்கப்பட்ட சான்றுகளுக்கு நேரடியான எதிர்வினையே இப்புதிய விதிகள் எனப் பரவலாக நம்பப்படுகிறது. இது போர்க்களத்தின் சுதந்திரத்துடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை அன்று. இது கைதுசெய்யப்பட, நிர்க்கதியான ஒருவனின் கொலை தொடர்பானது. தமிழர்கள் பொதுவாகவே சினமும் பயமும் கொண்டார்கள். அரசாங்கம் சில காரியங்களைச் செய்வதறி காக தீ தனினை அதிகாரங்களால் பலப்படுத்திக்கொண்டிருக்கின்றதென அவர்கள் சரியாகவே விளங்கிக் கொண்டனர். அந்த நடவடிக்கைகள், சட்ட ஒழுங்கு சீரழிந்து போகிறதென ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கும் அப்பாற்சென்றன. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டமத்தின்கீழ் கடுமையான புதிய நடவடிக்கைகள் பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து 12

Page 48
64
மணித்தியாலங்கள் மட்டிற் கழிந்த பின் மாநகரசபைத் தேர்தலில் யு.என்.பி. வேட்பாளராகப் போட்டியிட்ட திலகர் என்ற வைத்தியசாலை ஊழியர் யாழ் பெரியாஸ்பத்திரியில் ஜூன் 4ம் திகதி காலை 615 மணிக்குச் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசாங்கம் தான் எரிநெருப்பைப் பற்றவைக்க முயலுகிறதென்றால் போராளிகளும் அத்திசையில் இயங்க உறுதி பூண்டனர். சற்றடே றிவ்யூவின் அதே இதழ், வவுனியாவில் நடந்த இராணுவ வெறியாட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தது.
"ஜுன் முதலாந்திகதி, புதன்கிழமை, வவுனியா நகரிலிருந்து ஏறக்குறைய ஒன்றரைமைல் தூரத்திலுள்ள கோவில்குளத்தில் அமைக்கப்பட்ட காந்தியத்தின் பண்ணையை இராணுவத்தினர் நிர்மூலமாக்கினர். வெறிகொண்ட படைவீரர் இராணுவ வாகனங்களில் வந்து பயிர்களையும், குடிசைகளையும் அழித்துப் பண்ணையின் கட்டிடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீமூட்டினர். மூன்று உழவுஇயந்திரங்களும் ஒரு வானும் எரிந்து நாசமாயின.
நான்குபேர் கொண்ட ஒரு கெரில்லாக் குழு, விமானப்படை ஜீப்பொன்றின் மீது குணர்டுகளை வீசிய பின் துப்பாக்கிப் பிரயோகமும் செய்தது. யு.எல்.எம்பெரெரா, டபிள்யூஏகுணசேகர ஆகிய விமானப்படையினரைக் கொன்ற பின்னரே இச்சம்பவம் நிகழ்ந்தது. விமானப்படையினர் பொருட்களைக் கொள்வனவு செய்யும் காய்கறிச் சந்தையிலே இது நிகழ்ந்தது. இச்சம்பவம் புதிய நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புக்கு முன்னர் நிகழ்ந்தமையும் பொதுமக்கள் உயிர்களுக்கு எதுவித இழப்பும் ஏற்படாமையும் குறிப்பிடத்தக்கன. இக் கெரில்லாக்கள் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர்களென இனங்காணப்பட்டனர். ஜூன் 4ம் திகதி இதழ், மேலும், "மே 30ம் திகதி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வான் சாரதி சபாரத்னம் பழனிவேல் என்னும் இளைஞர் வல்வெட்டித்துறை இராணுவமுகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு கோப்பறல் எம்.விமலரத்னவால் சுட்டுக் கொல்லப்பட்டர். திருகோணமலை பஸ்ஸைப்பிடிக்கவிருந்த உறவினரை ஏற்றிச்சென்று விட்டுப்பின் அவர் தனது வானில் வீடு திரும்பும்போது, முய 430 மணி அளவில் இது நடந்தது. பின்னர் இராணுவ றக்கொன்று அவரது இறந்த உடலுக்கு மேலால் ஒட்டிச் செல்லப்பட்டது" என்று எழுதியது. இராணுவக் குற்றவாளிகள் நீதிபதிக்கு முன் கொண்டுவரப்பட்ட கடைசிச் சம்பவம் இதுவே. எனவே, நிலைமைகளின் போக்கு பணி பில் வேறுபட்டதாயிருந்தது. தமிழர் வன்முறைக் கிளர்ச்சிக்காலத்தில், இதுவரை, ஒவ்வொரு இறப்பும் ஆழ்ந்த கவலைக்குட்பட்ட விடயமாயிருந்தது. ஆனால், தொடர்ந்துவந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, வடக்கில் மாத்திரமன்றித் தெற்கிலும் சுதந்திரமும் உயிரின் பெறுமதியும் குறைய ஆரம்பித்தன.
1983 ஜூன் 11
குடி உரிமைகள் இயக்கத்தின்பேரில் அதன் செயலாளர் டெஸ்மண்ட்
பெர்னாண்டோவால் ஜனாதிபதிக்கு அனுப்பிய தந்தியில் அமைதிக்கான இறுதி
வேணி டுகோள் அடங்கியிருந்தது. பாதுகாப்புப் படையினருக்கு

65
வழங்கப்பட்டிருந்த புதிய அதிகாரங்கள் அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. குடி உரிமைகள் இயக்கத்தின் தலைவரான ஆயர் லக்ஷ்மணி விக்ரமசிங்ஹ மனம் உடைந்த மனிதராக அதே ஆண்டு ஒக்ரோபர் 23ம் திகதி மரித்தார். நாடு முழுவதையும் சூழப்போகும் குருதி சிந்துதலைப்பற்றி அவர் மனமுடைந்திருந்தார். குடி உரிமைகள் இயக்கம் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியையும் உள்ளடக்கிய 1971ம் ஆண்டு நிகழ்வுகள்பற்றி அடிக்கடி குறிப்பிடுவது அவசியமென உணர்ந்தது. அந்த நிகழிவுகளே திருமதியண்டாரநாயக்கவின் இடதுசாரி அரசாங்கம் ஆட்சி செய்தபோது, குடி உரிமைகள் இயக்கத்தின் உருவாக்கத்துக்கு வழி வகுத்தது. ஜயவர்த்தன தேர்ந்தெடுத்த தந்திரோபாயம், குடி உரிமைகள் இயக்கத்தின் ஆலோசனைகளை அவ்வியக்கம் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் அல்லது கம்யூனிட் உணர்வுகளைக்கொண்ட (எனவே குழிபறிக்கின்ற) அமைப்பெனக் கருதி நிராகரிப்பதாக இருந்ததின் காரணமாக, இது தேவையாயிற்று. இது அரசாங்கத்தின் நாசகார மனப்போக்கைச் சுட்டிக்காட்டியது.
1983 ஜூன் 11ம் திகதி சற்றடே றிவ்யூவிற் பிரசுரிக்கப்பட்ட அத் தந்தியின் சுருக்கம் பின்வருமாறு:
இத்தகைய அதிகாரங்களை வழங்குவது, 1971ல் நடந்தவற்றிலும் அதிகமாக மீண்டும் நடப்பதற்கு வழிவகுக்கும். 1971ல் இதே மாதிரியான அதிகாரங்கள் சித்திரவதை மரணங்கள், கண்டபடி நடந்த கொலைகள், எவரும் பயங்கரவாதியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் நீதிமன்றத்தின் தொழிற்பாடுகளைத் தாமே சுவீகரித்துக்கொண்ட பாதுகாப்புப்படைகளால் விசாரணையின்றி விதிக்கப்பட்ட மரணதண்டனைகள், பயங்கரவாதச்செயல்களில் ஈடுபட்டார்கள் என என்றுமே நிரூபிக்கப்படாதவர்கள் கொலை செய்யப்பட்டமை போன்ற விளைவுகளை ஏற்படுத்தின. குடி உரிமைகள் இயக்கம், 1971ல் அமைக்கப்பட்டவுடனே முன்வைத்த பிரதான கோரிக்கைகளுள் ஒன்று, மனிதரைக் குரூரமாக்கும் சட்டவிதியை நீக்குக என்பதாகும்.
அத்தகைய ஆட்கள் எல்லோர்மீதும் உரிய சட்டச்செயன்முறைகள் மூலமும் நீதியின் அடிப்படைக்கோட்பாடுகளுக்கு இணங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவாதம் அளிக்கப்படுதல் வேண்டும். இல்லாவிடின் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாப்பதில் ஜனநாயகத்தின் உயிர்நாடியாகவுள்ள நீதிக்கோட்பாடுகளை அரசாங்கம் ஏளனஞ் செய்வதாகிவிடும்.
"மேன்மைதங்கிய உங்களது அரசாங்கம் ஒப்பமிட்ட குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம், நாட்டைப்பயமுறுத்துகின்ற அவசரகாலத்திலும், வாழும் உரிமை, சித்திரவதையிலிருந்து பாதுகாப்புக்கான உரிமை ஆகியவற்றைச் செல்லாதனவாக்கமுடியாதெனக் கூறுகிறது என்பதையும் குடியுரிமைகள் இயக்கத்தின் செயற்குழு சுட்டிக்காட்டியது.
நாடுமுழுவதும் நிகழ்ந்துகொண்டிருந்த இனவாதத் தாக்குதல்களின் பின்னணியிலேயே இந்த வேணடுகோள் விடுக்கப்பட்டது. குறிப்பாகத் திருகோணமலையில், நிலைமை பயங்கரமானதாயிருந்தது. அங்கே ஒரு

Page 49
66
கொலையும் பல குண்டுத்தாக்குதல்களும் நடந்துள்ளதாக சற்றடே றிவ்யூவின் யூன் 11ம் திகதி இதழ் குறிப்பிட்டிருந்தது. இவ் வெறித்தாக்குதல்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்போது நடைபெற்றமை உண்மையாயிருப்பதால், ஆயுதப்படைகளின் இரகசியமான சம்மதத்துடனேயே இவை நடந்தமை வெளிப்படை அடுத்த கிழமைகளில் அங்கே நிலைமை படுமோசமடைந்தது. ஒரு சம்பவத்தில் ஒரு வானில் பயணஞ்செய்த தமிழர்கள் தாக்கப்பட்டு வானும் எரிக்கப்பட்டது. திருகோணமலையில் இக்கொடூரமான நாட்களை அனுபவித்த பல தமிழர்கள் ஊரடங்கினபோது அவர்களது வீடுகளில் இனவெறிக் குண்டர்கள் தாக்கியபோது தாங்க முடியாமல் ஓடித்தப்ப முயலும்போது, பாதுகாப்புப்படைகள், ஊரடங்குச்சட்டத்தை மீறினர் என்று தங்கள்மீது துப்பாக்கிப் பிரயோகஞ் செய்தனர் என்று கூறினார்கள். தமிழர்கள் தமக்குப் பாதுகாப்பான பிரதேசமெனக் கருதிய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பல இடங்களிலிருந்து அவர்களை விரட்டியடிக்க கூட்டுப்படைகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துவிட்டதென்பது தெளிவாயிற்று. திருகோணமலை மாவட்டமும், 1977ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் தமிழ் அகதிகள் பல ஆண்டுகள் கடின உழைப்பின்மூலம் பொருளாதாரீதியில் வளமுறச் செய்த குடியேற்றங்களும் விசேடமாக இலக்கு வைக்கப்பட்டன. இரக்கமற்ற அக்கிரமம் எங்கும் வாளேந்தி நின்றது!
1983 ஜூலை 2ம் திகதி சற்றடே றிவ்யூவின் முதற்பக்கமும், கடைசிப்பக்கமும் அச்சடிப்பதற்கு முன் அரசாங்கத்தால் மூடி சீல் இடப்பட்டது. அப்பத்திரிகையில் குறைபாடுகள் இருப்பினும், அது மனிதத்துவத்தின் குரலாகப் பணியாற்றியது. 1982ம் ஆண்டுப் பொதுசனவாக்கெடுப்பு மோசடிக்கு முன்னர், தெற்கிலே பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தபோது, பொதுசனவாக்கெடுப்பு என்னும் ஏமாற்று வேலைக்கு எதிராக நாடெங்கிலுமிருந்து எழுந்த பெருமளவான எதிர்ப்புக்குரல்களைச் சேர்த்து வெளியிட்டதன்மூலம் முழுநாட்டுக்குமே துணிகரமான சேவையை செய்துள்ளது. பொதுசன வாக்கெடுப்பில் தஐவி.மு. மெளனமாயிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு எதிரான தாக்கமான வாக்களிப்பில் அதற்குப் பெரும் பங்குண்டு. அன்றிலிருந்து, இலங்கையில் மனிதத்துவத்துக்கும் நீதிக்குமான போராட்டம் தெற்கிலும் வடக்கிலும் பன்மடங்கு தீவிரமானதாக மாறியது. 1983 ஜூலை இனக்கலவரங்கட்கும் சிறிது பின்னர் அப் பத்திரிகையின் ஆசிரியரான திரு.எஸ்.சிவநாயகம் இந்தியாவில் புகலிடம் தேடவேண்டியதாயிற்று.
பல மாதங்கட்குப் பின் அப் பத்திரிகை மீண்டும் வெளியிடப்பட்டபோது, அதன் பங்கு மிகவும் வேறுபட்டதாயிருந்தது. அதன் பிரதான பணிகள் ஒன்று, முடிவில்லாததாகத் தோன்றிய தொடர்ச்சியான குருதிபடிந்த நிகழ்வுகளைப் பதிவு செய்தலாகும். பத்திரிகைச் சுதந்திரத்தின்மீதான கட்டுப்பாடு எங்கிருந்து வரும் என்று கூறமுடியாது. அரசியல் விவாதத்திலே பழைய ஆர்வங்களும் அபிவிருத்திப் பிரச்சினைகளும் பெருமளவு குறைந்தன. பனையின் முக்கியத்துவம், மரபுரிமை விடயங்கள், வன்னி விவசாயின் பிரச்சினைகள்

67
முதலியன பற்றி வாசகரிடமிருந்து வரும் விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடியாது போயின. நம்பிக்கையும் துணிந்து முன் செல்லும் போக்கும் போய்விட்டன. வெளிச்சங்களில் அநேகமானவை அணைந்துவிட்டன. செய்தவைகளினதும், செய்யாமல் விட்டவைகளினதும் பாவங்கள் இந்நிலைக்கு மூலகாரணங்களாயிருக்க வேண்டும். பத்திரிகை அரசாங்கத்தால் முத்திரையிட்டு மூடப்பட்டிருந்தபோதும், தரத்திலே வேறுபட்ட ஒரு எதிர்காலத்துக்கு அது தயார்ப்படுத்திக் கொணர்டிருந்தது. இப்பத்திரிகையின் எதிர்கால ஆசிரியர் திருகாமினி நவரத்ன பி.எஸ்.ஸி. (பொருளியல்) லண்டன், சீனத்தொடர்பு என்னும் நூலின் ஆசிரியர், வெளிப்ற் மின்ஸ்ற்றர் பாணிப் பாராளுமன்ற நிருபராக முப்பது ஆண்டு காலம் பணியாற்றியவர். வெளிவராத 1983 ஜூலை 2ம் திகதியிடப்பட்ட சற்றடே றிவ்யூவில் அவரது பின்வரும் வரிகளைக் காணலாம். "என்னை என்வழியில் விட்டால், இன்றைய அரசியல்வாதிகளில் அநேகரைச் சந்திரனுக்கு அனுப்பிவைப்பேன். அவர்கள் உண்மையில் அதற்கே உரியவர்கள் எதிர்காலம் பற்றி இது நிறையவே கூறுகிறது.
1977-83ற்கு இடைப்பட்டகாலத்தில் நாடாளுமன்ற அரசியற் பரப்புக்கு வெளியே தமிழ்ச்சமூகத்தில் இரு பிரதான போக்குகளை நாம் காணலாம்.
அவற்றுள் ஒன்று, கிராமமட்டத்தில் சமூக அமைப்புக்களை நிறுவுதலாகும். இந்த அமைப்புகள் பொருளாதார விருத்தியிலும், தனி மனித ரீதியாகவும் சமூகரீதியாவும் மனிதர் தங்களது கெளரவத்தையும் உரிமைகளையும் பேணுவதிலும் கவனம் செலுத்தின. பொதுமக்களின் கெளரவமும் உரிமைகளும் மறுக்கப்படும்போது, அவர்களது எதிர்ப்புணர்வுகளை அகிம்சைவழிகளிற் புலப்படுத்துவதே அவர்களது பிரதான போராட்டக் கருவியாகும். அத்தகைய போக்கை யாழ்ப்பாண மாணவர்களின் செயற்பாடுகள் பிரதிநிதித்துவப்படுத்தின. மற்றப் போக்கு விடுதலைப் புலிகளாலும், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் இயக்கத்தின் ஒரு பகுதியினராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக, விசேடமாக பொலிஸாருக்கும் ஆயுதப்படைகளுக்கும் எதிராக, அவர்களது "தாக்கிவிட்டு மறையும் தாக்குதல்கள், அவற்றுக்கு உகந்த நிலைமைகளையே உருவாக்கி, இது மக்களைப் போராட்டத்தினின்று ஒதுக்கியது. ஈரோஸ் ஈபிஆர்.எல்.எவ். போன்ற இயக்கங்கள் 1983 ஜூலைக்கு முன் மக்கள் மத்தியில் கீழ் மட்டங்களில் வேலைசெய்வதில் கவனஞ்செலுத்தின. அதன் பின்னரும் சில காலத்துக்கு அவை அவ்வாறு தொடர்ந்து செய்தன. ஆனால் இந்தியஅரசின் தலையசடும் போராளிக்குழுக்களை அது சுவீகாரம் செய்துகொண்டமையையும் அடுத்து அக்குழுக்கள் யாவும் அடிப்படையில் இராணுவ அமைப்புக்களாக மாறின.
இக்காலகட்டத்தில், வன்முறைபற்றிய தன் இரட்டை மனப்பாங்கை அறிவுபூர்வமாகவும் நடைமுறையிலும் திட்டவட்டமாக முடிவு எடுக்கும் உறுதிப்பாடு இன்மையே தமிழர் தலைமையின் குறைபாடாகும். 1983ம் ஆண்டு ஜூலை 27ல் இரண்டாவது வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின்போது

Page 50
68
இடம்பெற்ற டாக்டர் இராஜசுந்தரத்தின் மரணம் இந்த யுகத்தின் முடிவைக்குறித்து நின்றது. மிகுதியான இலட்சியத்துடனும், உணர்வுடனும் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் துறந்த தனிநபர்களின் பணிகள் மறக்கப்பட்டன. 1988ம் ஆண்டளவில் டாக்டர் இராஜசுந்தரத்தைப் பற்றி கதைத்தவர்கள் மிகச்சிலரே. நாம் வரலாற்று உணர்வோ, நன்றியோ இல்லாதிருக்கிறோம். நாம் எவ்வாறு மாறி விட்டோம் என்பதை அது விளக்குகின்றது. இறுதி நிகழ்ச்சியை மறந்து, அதற்கு முன் நடந்த நிகழ்ச்சியுடன் உறவுகாண முடியாமலும் கடந்து செல்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் தீவிர உணர்வுகளை ஏற்படுத்துகின்ற ஏதோ ஒரு நோய் நமது சமுதாயத்தைப் பிடித்துள்ளது. தெளிவான மனநிலைக்கு மீள்வதற்குக் கடந்த காலத்தைப்பற்றிய நடுநிலையான மதிப்பீடு தேவையாயுள்ளது. 1983 ஜூலை இனக் கலவரம் தலையிட்டிருக்காவிட்டால் முதலாவது போக்கு இரண்டாவது போக்கை வென்றிருக்குமென அநேகள் நம்புகின்றனர்.

69
அத்தியாயம் 4
தமிழர்களுக்கு எதிரான 1983 ஜூலை வன்முறைகள்
ஜனாதிபதி ஜயவர்த்தன டெய்லி ரெலிக்றாஃப் என்ற பிரித்தானியப் பத்திரிகையின் நிருபரான க்றேம் வாட் என்பவருக்கு அளித்த பேட்டியிற் கூறியவை அரசாங்கத்தின் அன்றைய மனோநிலையைப் பிரதிபலித்தது. இப்பேட்டி அப்பத்திரிகையின் 1983 ஜூலை 15 இதழில் வெளிவந்தது.
இப்பொழுது எனக்கு யாழ்ப்பாண மக்களின் கருத்துக்களைப் பற்றி கவலையில்லை. நாம் அவை பற்றி இப்பொழுது சிந்திப்பதற்கில்லை. அவர்களது உயிர்கள் பற்றியோ எம்மைப்பற்றி அவர்களது கருத்தைப்பற்றியோ நாம் சிந்திப்பதற்கில்லை" என அவர் சொன்னார். இலங்கையில் மோசமடைந்து வருகின்ற நிலைமை பற்றிய தனது கவலையை இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர ரீதியாக தெரிவித்துவந்தது. ஜனாதிபதி கூறியவைகளை இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அரசாங்கம் பயன்படுத்தியது. முக்கியமாக இலங்கைத் தமிழர் பற்றி இந்தியப் பிரதமமந்திரி இந்திரா காந்தியின் கவலை தொடர்பான முதலாவது பகிரங்க அறிக்கை டெய்லி ரெலிக்றாஃப் (DailyTelegraph) பத்திரிகையில் ஜயவர்த்தனவின் குறிப்புகள் வந்த தினத்திற்கும் (அதற்கு ஆறு நாட்களுக்குப் பின்) இனக்கலவரம் மூண்ட தினத்திற்கும் இடையில் பிரசுரமானது. 1983 ஜூலை 23ஐ நோக்கிச் சென்ற வாரங்களில் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிப்பதற்காக ஒரு பரிய படையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்ததை நாம் கண்டோம். வடக்கு கிழக்கிலே 1977 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் கடின உழைப்பால் கட்டப்பட்ட அகதிகள் குடியிருப்புகளை உடைப்பதற்கு அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் விதிகள் வரையப்பட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பயத்தினால் ஓடிச்சென்று வடக்குக் கிழக்கிற் குடியமர்ந்த மலையக தமிழ் அகதிகள் அங்கிருந்து பெரும்பாலும் பலவந்தமாக, 1983 ஜூலை கலவரத்தைச் சாட்டாக கொண்டு, மலையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள், பலவந்தமாக ஏற்றிச் செல்லப்பட்டு, மலைநாட்டில் எறியப்பட்டார்கள். அப்போது அங்கு அவர்களைச் சூழ தமிழர்கள் மீண்டும் கொல்லப்பட்டும் அகதிகளாக்கப்பட்டும் கொண்டிருந்தார்கள். தடுத்து வைக்கப்பட்டவர்கள் பெருமளவிற் சித்திரவதை செய்யப்பட்டதை விபரிக்கும் ஓர் அறிக்கையை 1983 ஜூலையில் சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டது. ஜனாதிபதி ஜயவர்த்தன இந்த அறிக்கை கம்யூனிஸ்டுகளின் தூண்டுதலால் வெளியிடப்பட்டதென நிராகரித்தார். இராணுவ வீரர்கள் பதுங்கியிருந்து கொல்லப்பட்டமை இனக்கலவரத்துக்குக் காரணமாய்க் கூறப்பட்ட போதிலும், அதை ஒரு வசதியான தொடக்கப்புள்ளியாகக் கொள்ளக் கூடிய வகையில் முன்கூட்டியே திட்டமிட்ட தன்மையை இனக்கலவரத்தின் போக்கு உணர்த்தியது. யாழ்பாணத்தில் ஆயுதப்போராட்டச் செயற்பாடுகள் அதிகரித்தன. இராணுவமும் சில வெற்றிகளை பெற்றது. ஒரு சம்பவத்தில்

Page 51
70
இரண்டு ஆயுதப்போராளிகள் பதுங்கியிருந்து தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். ஜூலை 23ம் திகதி இராணுவத்தினர் பயணம்செய்த வாகனம் திருநெல்வேலியில் பலாலி வீதியில் கணிணிவெடியில் சிக்கியபோது விடுதலைப்புலிகள் 13 இராணுவத்தினரைக் கொன்றனர்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் பஸ்ரியாம்பிள்ளையிடம் அகப்பட்டுக்கொண்டு அந்த ஆபத்தான நிலையைச் சாதுரியமாகச் சாதகமாக மாற்றிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்தபோராளியுமான செல்லக்கிளியும் அங்கு கொல்லப்பட்டார். ஒரு தகவலின்படி, சமிக்ஞைகள் குழம்பியதால், செல்லக்கிளி எழுந்து நிற்க நேர்ந்ததால் அது நிகழ்ந்தது. அடுத்தநாள், யாழ்ப்பாணத்தில் 41 பேர் சிலர் தமது வீட்டிலும் சிலர் மானிப்பாயில் பஸ்ஸுக்காகக் காத்திருந்தபோதும், வேறு இடங்களிலும், வெறியாட்டமிட்ட இராணுவத்தினராற் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொழும்பிலே வன்செயல்கள் ஜூலை 25ம் திகதி அதிகாலையில் ஆரம்பிக்கப்பட்டன. 25ம் திகதியும் 27ம் திகதியும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடுத்தடுத்து நடந்த இரு தாக்குதல்களின்போது, அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் 53 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவங்கள் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படவில்லை. அந்தச் சூழ்நிலையில் இச்சிறைக்கொலைகள் உயர்மட்டத்தில் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாக அல்லாமல் வேறுவிதமாக இருக்க முடியாதென்று நம்பப்பட்டது,
"Sri Lanka: The Holocaust and After " by L.Piyadasa, Marram Books, London 1984 என்ற நூலிலிருந்து, பின்வரும் பகுதிகள் எடுக்கப்பட்டன. வன்செயல்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதனை இது விபரிக்கிறது.
"களனியில், கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும் அவரது கோஷ்டியினரும் வன்செயல்களில் ஈடுபட்டதாக அடையாளங் காணப்பட்டனர். கொழும்பு முழுவதும், குறிப்பாக வீதிக்குப் பத்து வீடுகள் வீதம் நிர்மூலமாக்கப்பட்ட வெள்ளவத்தையிலும், அழிவு வேலைகளும், கொலைகளும் செய்த கும்பல்களின் தலைவர், ஜாதிக சேவக சங்கம் (ISS) என்னும் அரசாங்க சார்புத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் என அடையாளம் காணப்பட்டார். கல்கிசையில் தெகிவளை - மாநகரசபையின் யு.என்.பி. மாநகர உறுப்பினர் ஒருவர் கும்பல்களுக்கு தலைமை தாங்கினார். புறக்கோட்டையில் (42 கடைகள் அழிக்கப்பட்டு கொலைகளும் நடந்த சந்தைப்பகுதி) பிரதமமந்திரியின் வலது கையான அலோசியஸ் முதலாளியின் மகன் இச் செயல்களுக்குத் தளபதியாக இருந்தார். இவ்வாறே மற்றவைகளும் நடந்தன.
யு.என்.பி. தலைவர்கட்கும் அரசாங்க அமைச்சர்கட்கும் கட்சித்தலைமைச் செயலகங்கட்கும் வழமையான கையாட்களாகச் தொழிற்பட்ட குண்டர்களும், சில இடங்களிற் சீருடையணிந்த இராணுவத்தினரும் பொலிஸாரும், தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபை (இதற்கு அமைச்சர் எம்.எச்-முகம்மது) ஏனைய அரசாங்கத் திணைக்களங்களதும் மற்றும் கூட்டுத்தாபனங்களதும் வாகனங்களைப் பயன்படுத்தினார்கள். இலங்கைப்

7
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்துக்குச் சொந்தமான ட்றக்குகள் வெள்ளவத்தையில் அதிக அழிவுகளைச் செய்த ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்தன. இதையொத்த நிகழ்ச்சிகள் மேலும் பல நடந்தன. வன்செயல்கள் ஓரளவுக்குப் பங்கு அரசாங்கத்தன்மை கொண்டிருந்தமையால், நடந்த கொலைகளை நேரில் பார்த்த சாட்சிகளுக்கு அவற்றை எதிர்ப்பது கடினமாயிருந்திருக்கலாம். ஆனால் அயலிலுள்ள சிங்களவர்களும், பறங்கியரும் முதலில் அதிர்ச்சியுற்றாலும்,தாங்களாக ஒன்றுகூடி எரிக்கவும், கொல்லவும் ஏவப்பட்டவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
வீதிகளிலோ வாகனங்களிலோ நடமாடிய பொலிஸார் எதுவித எதிர்ப்பும் காட்டாத நிலையில், கொலைகள், சாகும்வரை அடித்தல், அகப்பட்ட தமிழர்களை உயிரோடு தீவைத்தல் முதலிய கொடூரங்களை நேரிற் கண்ட மக்களுடன் நாம் பேசினோம். ஒரு மினிபஸ்ஸில் இருபதுபேரை இத்தகைய கும்பல் ஒன்று உயிருடன் தீமூட்டி எரித்ததை நோர்வேயைச் சேர்ந்த உல்லாசப்பயணிகள் நேரில் பார்த்துள்ளார்கள். இது பற்றிப் பலர் கேட்டும் வாசித்தும் உள்ளார்கள். இது உணமையென நாம் உறுதியுடையோம். இந்த ‘வீரர்களின் குறிப்பிடத்தக்கதொரு கொடுஞ்செயல், அன்றைய தினம், இலங்கையின் பிரதானமான வெலிக்கடைச்சிறையிலே சில குற்றவாளிகளுடன் சேர்ந்து, விசாரணைக் கைதிகளும் இராணுவத்தால் ஏதேச்சாதிகாரமாகத் தடுத்துவைக்கப்பட்டவர்களும் உட்பட்ட 35 பேரைக் குரூரமாகக் கொலை செய்தமையாகும். இறந்த அனைவரும் இலங்கைத்தமிழர்கள். இப் படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள், அரசாங்கத்தினாலும் தேசிய பாதுகாப்புச் சபையினாலும் நீதிமன்றத்தின் முன் கொணர்டுவரப்படவோ பகிரங்க விசாரணைக்குட்படுத்தப்படவோ மாட்டர்கள் என்று உத்தரவாதம் அளிக்கவல்ல ஒரு உயர் மட்ட ஏற்பாடு இல்லாமல் இது நடந்திருக்க முடியாதென நாம் நம்புகிறோம். இந்த அக்கிரமத்தைச் செய்வதற்குச் சதி செய்தவர்களதோ இதை ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தியவர்களதோ பெயர்கள் என்றுமே வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்டவர்களுள் சிலரைக் கொலைசெய்யத்துரண்டுமாறு ஆயுதங்கள் வழங்கப்பெற்ற சக சிறைக்கைதிகள், தனித்தனியாகவன்றிக் கூட்டாக இனங்காட்டப்பட்டபோதும் எவர்மீதும் குற்றஞ் சாட்டப்படவில்லை. இத்தகைய கொலைகள், விசால கொழும்புப் பிரதேசத்தில் ஊரடங்கு அமுலில் இருந்தபோதும், மேலும் மூன்று நாட்களாக, குறைவான உக்கிரத்துடன் தொடர்ந்தன. ஜூலை 28 புதன்கிழமை கொழும்பிலிருந்து 72 மைல் தொலைவில் உள்ள கண்டிக்குத் தாக்கும் கும்பல்களில் சில அனுப்பி வைக்கப்பட்டன. அன்று மாலை 6 மணிக்கு ஊரடங்கு பிரகடனப்படுத்து முன், பிற்பகலிற் கொழும்பில் நடந்தவற்றையொத்த கொடுஞ் செயல்கள் செய்து முடிக்கப்பட்டன. பிறகு அவை மலைநாட்டைத் தாக்கி (பெரு நாசத்துக்குள்ளான) மாத்தளை, நாவலப்பிட்டி போன்ற நகரங்களைக் கடந்து பதுளை, நுவரெலியா போன்ற நகரங்களுக்கு நகர்ந்தன. தாக்கவேண்டிய இடங்களின் பட்டியலில் இந்துக்கோவில்களும் சேர்க்கப்பட்டிருந்தன. பதுளை

Page 52
72
நகரவலயத்தில் 80 வீதம் இராணுவத்தாக்குதலின் விளைவாகச் சின்னாபின்னமானது. 27ம் திகதி, எவரும் நம்ப முடியாதவாறு தமிழ் அரசியல் தடுப்புக் காவற்கைதிகளும், விசாரணைக்கைதிகளும் இரண்டாவதுமுறையாகப் படுகொலை செய்யப்பட்டனர். இம்முறை 18 கைதிகள் கொலையுணர்டனர். இதற்கு மேலும் நடக்கவிருந்தது. ஏனெனில், சில தமிழர்கள் அக்கிழமை முடிவில் மெல்ல மெல்ல வேலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களின் சகநாட்டவரான ஜே.ஆர்.ஜயவர்த்தன, முதன் முறையாக வியாழக்கிழமை மாலை பகிரங்கமாக உரையாற்றியபோது, தெற்கிலும் மத்திய இலங்கையிலும் தமிழர்களுக்கு நடந்தவற்றை நியாயப்படுத்தியதுபோக, அவர்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையும் கூறவில்லை. கிளறிவிடுகின்ற விதமான இந்த உரையும் வேறு செயல்களும், வெள்ளிக்கிழமை மேலும் தீவைப்புகளுக்கும் கொலைகளுக்கும் இட்டுச் சென்றன.
இங்கு நாம் இரண்டாவதாக மேற்கோள் காட்டும் இப்பகுதி, நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினரும், காணி, காணியபிவிருத்தி அமைச்சருமான திருகாமினி திசநாயக்கவின் அசாதாரணமான நடத்தைபற்றி விபரிக்கிறது. தீர்க்க திருஷ்டியுடன் செயற்பட்டவர்களாற் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நுவரெலியா நகரம், அவரது வருகையைத் தொடர்ந்து வெடித்துக் கிளம்பியது. "அந்நகரம் இராணுவத்தால் நெருக்கமாகக் காவல்செய்யப்பட்டது. சகல வாகனங்களும் சோதிக்கப்பட்டன. பஸ் நடத்துனர்கள் தமிழர்களை ஏற்றிச்செல்ல வேண்டாமென உத்தரவிடப்பட்டனர். அமைச்சர் காமினி திசநாயக்க தமது கட்சி உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்த கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு வந்தார். அதற்கு முதல் நாள், பாராளுமன்ற உறுப்பினர் ஹேரத் ரணசிங்ஹ, முன்னெச்சரிக்கையாக, பிரபல காடையர்களைக் கைது செய்வித்தார். காமினி திசநாயக்கவின் கட்சிக்கூட்டம் முடிவடைந்த கையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டர்கள். அவர்கள் உடனே பெற்றோல், இரும்புக்கம்பிகள், ஏனைய ஆயுதங்கள் சகிதம் சென்று, நகரிலே இரு குருமாரைத் தாக்க முயற்சித்தனர். அக் குருமார் எவ்விதமாகவோ தப்பிவிட்டனர். காடையர்கள் ஒரு தமிழ்க்கடைக்குப் பெற்றோல் ஊற்றித் தீமூட்டினர். இச் செயலில் இராணுவம் அவர்களுக்கு கலன் கணக்கில் பெற்றோல் வழங்கி உதவியது. பகல் பொழுதிற்குள் ஏறக்குறைய எல்லாத் தமிழ்க்கடைகளும் எரிக்கப்பட்டன. திருமதி.ஹேரத் ரணசிங்ஹ கொள்ளைக்காரர்களைக் கலைக்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டாராயினும், அதற்குக் காலங்கடந்துவிட்டது. அத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இழிவான தூற்றுதலின் காரணமாக ஒடி ஒளிந்து விட்டார். வீதிகளிற் சென்ற தமிழர்கள் படைவீரர்களால் தாக்கப்பட்டார்கள். காத்துக்கொண்டிருந்த தீயணைக்கும்படை இராணுவத்தால் தடுத்துவைக்கப்பட்டநிலையில், சிங்களக் காடையரின் கும்பல் தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்தது. அக் கும்பலால் எரிக்கப்படாத கடைகள் இராணுவத்தால் எரிக்கப்பட்டன. நண்பகல் அளவில், நுவரெலியா 6isióIT606bisL6)Tsi SITL'éuj6fisg". ("Sri Lanka - Paradise in Ruins" Sri Lanka Co-ordination Centre, Kassel 1983)

73
தொண்டமானின் இதொகாவுக்குப் போட்டியாக, திருதிசாநாயக்க ஆரம்பித்த தொழிற்சங்கமான லங்கா ஜாதிக தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டத்தில், 1983 ஜூலை இனக்கலவரத்திற்குச் சிறிது காலத்தின் பின்னர் உரையாற்றிய திருதிசநாயக்கா, இந்தியா இந்த நாட்டை ஆக்கிரமிக்குமானால் 24 மணி நேரத்துட் தமிழர் எல்லோரும் கொல்லப்படுவர்கள் என்று கூறினர். அப்பொழுது தமிழர்களைப் பாதுகாக்க இந்தியப்படை அனுப்பிவைக்கப்படுமென அதிகமாகப் பேசப்பட்டது. திசநாயக்கா தெருக்காடையர்களின் மரபில் தமிழ் மக்களைத் தூற்றும் செயலில் அளவுக்கதிகமாகப் பங்களித்தார்.
நவீன சிங்களத் தேசியவாதத்தின் எழுச்சியுடன், கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த துட்டகைமுனு என்னும் அரசன், கடந்தகால மங்கலான திரையிலிருந்து வெளிக்கொணரப்பட்டு ஓர் உத்தம சிங்களத் தலைவனாக உயர்த்தப்பட்டான். துட்ட கைமுனுவின் செயல்களில் மிகவும் புகழ்ந்து கொண்டாடப்பட்ட ஒன்று 40 ஆண்டுகள் அனுராதபுரத்தில் அரசாண்ட கிழவனான எல்லாள மன்னனைத் துவந்த யுத்தத்தில் வெற்றிகொணிடமையாகும். எல்லாளன் தனது இளமைப்பருவத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு படைக்குத் தலைமைதாங்கி இலங்கைக்கு வந்தவன். இந்த நிகழ்ச்சி பற்றிக் கூறும் மகாவம்சம், அவன் நீதியும் மக்கள் ஆதரவும் பெற்ற அரசனாய் இருந்தான் என்கிறது. இறந்த பகைவனான எல்லாளனுக்குத் துட்டகைமுனு ஒரு நினைவுத்தூபி கட்டி, அதைக்கடந்து செல்லும் எல்லோரும் அதற்கு தலைவணங்கி மரியாதை செய்தல் வேண்டுமெனப் பணித்தான். எல்லாளன் தமிழன் எனவும் துட்டகைமுனு சிங்களவன் எனவும் குறிப்பிட்டு அழைப்பது, புராதனகாலத்தில் இல்லாத நவீன இன உணர்வுகளை அவர்கள்மீது சுமத்துவதாகும். உண்மையில், 19ம் நூற்றாண்டின் முற் பாதியின் பிற்கூற்றில், பித்தானிய ஆட்சியாளராற் கைதுசெய்யத் தேடப்பட்ட கணிடிய உயர்சாதியினர், யாழ்ப்பாணத்துக்கு ஓடி அங்கே எந்தவகையிலும் தாம் அன்னியர் என்ற உணர்வே இன்றி அங்கு புகலிடம் கணிடமை இயல்பாயிருந்தது. கண்டி உயர்சாதியினரின் மூதாதையர் தங்கள் பிள்ளைகள் கரைப் பிரதேசச் சிங்களவரைத் திருமணம் செய்வதிலும் யாழ்ப்பாணத்தில் உயரிய சாதியிற் திருமணம் செய்வதை உவந்தனர். இதை விளக்கும் சுவாரஸ்யமான குட்டிக்கதைகள் அனேகம் உண்டு. ஒருமுறை, திருமதியண்டாரநாயக்கவின் சகோதரர் செனற்றர் பாணிஸ் ரத்வத்தை எவருடனோ சரளமாக தமிழில் பேசிக்கொண்டிருந்ததைச் சிலர் கேட்டனர். ஒரு தமிழர் இதைக்கேட்டு ஆச்சரியமுற்றபோது, கண்டிய சமூகத்திலே மேலே மேலே போகத் தமிழ் மேலுஞ் சிறப்பாயிருக்கும் என்று திருரத்வத்தை சரியாகவே சொன்னார். இலங்கையர் சமூகமானது மொழி அடிப்படையிலும் பார்க்கச் சாதி அடிப்படையிலேயே பிரிவுபட்டுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இது அண்மைய ஆய்வுகளினால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (ஆதாரம்: "Ethnicity and Social change in Sri Lanka" Published by the Social Scientists Association 1979)

Page 53
74
இன்று எல்லோரும் அறிய வந்துள்ள சிங்கள-பெளத்த தேசிய வாதம், இலங்கையை ஆண்ட பிரித்தானியரால் வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கரைப்பிரதேசத்தைத் தளமாகக்கொண்டு தோற்றம் பெற்ற வர்த்தக வகுப்புடன் தலைதூக்கியது. இந்த வகுப்பினரின் இந்திய எதிர்ப்பு காலத்தாற் தொலைவிலுள்ள பண்டைய முரண்பாடுகளிலும் பார்க்க இன்று சிறப்பாக வர்த்தகம் செய்கிற இந்திய வர்த்தகர்களின் வியாபாரப் போட்டிகளுடனேயே தொடர்புடையது எனக் குமாரி ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார். இத்தேசியவாதத்தின் விருத்தியின் தலைமைப் பங்கை "கராவ" என்னும் மீனவ சாதியினர் வகித்தனர். இச்சாதியினர் 1505ம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு சிறிது காலம் முன்னர் அவர்களுக்குச் சேவை செய்யவெனத் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உள்ளூர்த் தமிழ்ப்பேசும் கூலிப்படைகளின் வழித்தோன்றல்களாவர். நவீன சிங்கள தேசியவாதம், பாடசாலைகளில் வரலாற்றுப்பாடத்தினூடாகப், பல கட்டுக்கதைகளைப் பரப்பியது. நன்கு அறியப்படாத துட்டகைமுனு என்னும் இளவரசன் இந்தியரையும் தமிழரையும் எதிர்த்துப்போராடிய உத்தம வீரத்தலைவனாகக் காட்டப்பட்டான். இந்தியாவிலிருந்து மக்கள் தொடர்ச்சியாக இங்கு இடம்பெயர்ந்தமையையும், நூற்றாண்டு காலமாக ஒன்றுகூடி வாழ்ந்தமையையும் நோக்கும் எவருக்கும் இத்தகையவற்றுக்கு வரலாற்றில் எவ்வித சான்றுமில்லையென்று விளங்கும்.
எழுபதுகளின் பிற்கூற்றில், நன்கு கற்ற அமைச்சர்கள் இருவர் ஈடுபட்ட அதிமூடத்தனமான ஒரு நிகழ்ச்சியைக் காண முடிந்தது. அனுராதபுரத்தில் நீண்டகாலமாக எல்லாளன் நினைவுத் தூபியென அறியப்பட்ட நினைவுச் சின்னம் துட்டகைமுனுவுடையதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான உரிமைக் கோரல்கள், புதைபொருள் ஆராய்ச்சியாளர் பலரின் கடும் எதிர்ப்புக்களால் முந்திய மூன்று தசாப்தங்களாகக் கைவிடப்பட்டிருந்தன. இம்முறை, அந்த நினைவுத்தூபியில் இருந்த மீதங்கள் துட்டகைமுனுவுடையதென உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கப் பகுப்பாய்வாளிடம் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர், வைத்திய வசதிகள் இல்லாத ஒரு வரலாற்றுக் காலத்தில் இறந்த ஒருவின் விடயத்தில் இதை எவ்வாறு செய்வதென எவருக்கும் தெரியாது. இக் கேலிக்கூத்தில் முக்கிய ஆர்வங்காட்டியவர்கள் காமினி திசநாயக்கவும், லலித் அத்துலத்முதலியுமாவர். துட்டகைமுனுப் படிமத்தைத் தங்களுக்குப் பொருத்திக் கொள்வது அவர்களது அரசியலுக்கும், தனிமனிதப் பெருமிதத்துக்கும் முக்கியமானதாக இருந்தது. அவர்களது வீரப்பிரதாபங்களை விளக்க இது ஓரளவு பயன்படலாம். (இந்நினைவுத்தூபி விடயம் பற்றிய மேலதிக விபரங்கட்குக் பார்க்க கலாநிதி ஜேம்ஸ் ரிரத்னம் 6Tugálu "The Tomb ofElara")
இத்தகைய வரலாற்று நாடகமாடல்கள் பெரும்பாலும் வலதுசாரிகளின் பசப்புகளில் விசேடமான ஒரு பகுதியாகும். சிங்கள மக்கள், முதலாளி வர்க்கத்திடம் அனுபவிக்கின்ற துன்பங்களை மறக்கவைக்க, அவர்கட்கு மேலும் மேலும்

75
இத்தகைய அபின் ஊட்டப்பட்டு வந்தது. இவ் வகையான நாடகபாணி அபிநயங்கள் இன்று வேதனைக்குரிய விளைவுகளைத் தந்துள்ளது. அந்த நினைவுத்தூபியிலிருந்து சில மைல்களுக்குள் இந்தியப் படைகள் நிற்கின்றன. ஒரு இந்தியப் படைத் தளபதி "நாங்கள் இங்கு கோலிக்குண்டு விளையாட வரவில்லை" என்ற வார்த்தைகளில் தமது நோக்கத்தை வெளியிட்டனர்.
இந்தியப் படைகளை இங்கு வரவழைத்த சமாதான ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசியவர்களுள் திசநாயக்க பிரதானமானவர். திருதிசநாயக்க பாதுகாப்புச் செலவுக்கு அடுத்தபடியாக அதிக நிதியைப் பெறும் ஒரு அமைச்சை நடத்துபவர். ஜயவர்த்தனவுக்குப் பிறகு ஜனாதிபதித் தானத்துக்கு வரத்தக்க ஒருவர் எனவும் கருதப்பட்டார். இத்தகைய அவாக்களை தம்மகத்தே கொண்டுள்ள இத் துட்டகைமுனுக்கள், பிரித்தானியர் இந்தியாவிற் பாண்டிய நாட்டையும் இலங்கையிற் கண்டியையும் கைப்பற்றும் முயற்சியில், முறையே, அவர்களுடன் இரகசியமாக ஒத்துழைத்து தமது தலைவர்களுக்குத் துரோகஞ்செய்த எட்டப்பனாகவோ அல்லது பிலிமத்தலாவையாகவோ நாளை மாறுவது விளங்கக் கடினமானதன்று.
1983 ஜூலை இனக் கலவரங்கள், பகுதி தறிவற்ற வெறி கட்டவிழ்க்கப்பட்டமையைக் குறித்தன. இதற்குப் பல காரணங்கள் தரப்பட்டன: உயர்மட்டத்திற் பெருமளவில் ஊழலும் கீழ்மட்டத்தில் வறுமையும் நிலவுகையிற், பொதுமக்களின் வாழ்க்கை வாய்ப்புகள் பற்றி நம்பிக்கையற்றவாறு ஒடுங்கிவிட்ட நிலையில், அவர்கள், மன ஆறுதலளிக்கின்ற வகையிற் களிப்பூட்டுகின்ற சமயத்திடம் மேலும் அதிகமாக அடைக்கலம் புகுவதால், உணர்ச்சிகரமான கருத்துகளிற்கு எளிதில் எடுபடக்கூடியவர்களாக மாறுகின்றனர். கிராமங்களின் பொருளாதாரத் தோல்வியால் அதிருப்தியுற்ற நகர்ப்புறத்தொழிலாளின் எண்ணிக்கை அதிகரித்தமையும், பெரும்பாலும் நிச்சயமாக, மோசடியாக பொதுசனவாக்கெடுப்பு மூலம் பொதுத்தேர்தலூடாக மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழியும் மூடப்பட்டமையும் விரக்திக்குரிய காரணங்களுள் அடங்கும். அரசாங்கம், தன் பிரச்சாரம் மூலம் விரக்திகள் எல்லாவற்றையும் தமிழர் மீது திசைதிருப்புவதில் வெற்றிகண்டது. அதன்மூலம் ஒருவித வெறியாட்டத்துக்குப் பலியாக இரைகளை வழங்கியது. ஜாரின் கீழான ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிராகக் காலத்துக்காலம் ஏவிவிடப்பட்ட படுகொலை தாக்குதல்களோடு இதை ஒப்பிடலாம்.
சிங்கள இனஞ்சார்ந்த மனவெழுச்சி மதச்சார்பான மனவெழுச்சிகளின் இயல்பைக் கொண்டிருந்தது. அமைச்சரவை அதை எவ்வாறோ அனுமதித்ததன் மூலம் தானும் மனவெழுச்சி நோய்க்கு ஆளானதாகத் தோன்றியது. இவ்விடயத்தில் ஒரு அமைச்சரும் புனிதமானவர் இல்லை. எஸ்.ஜே.தம்பையா (Ethnic Fraticide in Sri Lanka", Chicago University Press, 1985) fov (på sluJLOTsoT அமைச்சர்களின் நடத்தையைப் பதிவு செய்துள்ளார்:

Page 54
76
"1983 ஜூலை இனக்கலவரம் ஆரம்பித்தபோது, சிலவேளை சிங்களவரின் கூட்டு ஆவேசத்தின் பரிய அலைகளால் நொருக்கி அமுக்கப்பட்டும் விடுவர்கள் என்ற உணர்வினாலோ என்னவோ, கொழும்பில் ஊரடங்குச்சட்டத்தைப் பிறப்பிக்க ஜனாதிபதிக்கு 24 மணிநேரம் எடுத்தது மட்டுமன்றி, அவர் நான்கு நாட்களாக ஒரு வார்த்தையும் பேசவில்லை. வன்செயலில் ஈடுபட்டிருந்த கும்பல்களை மக்கள் இயக்கமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சிங்களமக்களின் கோரிக்கையையும் இனக்கெளரவத்தையும் அங்கீகரிக்கும் காலம் வந்துவிட்டது எனக் கூறினார். இவ்வாறு நியாயப்படுத்தி சாந்தப்படுத்துகின்ற பணியை ஏனைய அமைச்சர்களும் நிறைவேற்றினார்கள். அதே தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரலில் பின்னர், தேசிய பாதுகாப்பு அமைச்சராக மாறிய, அத்துலத்முதலி இப்படி நிகழுமெனத் தான் ஒருபோதும் கனவு கண்டிராத ஒரு காட்சியை, அதாவது இனக்கலவரத்தின் விளைவாக சிங்கள மக்கள் உணவுவாங்குவதற்காக நிரையில் நிற்பதைக் கண்டபோது யோசனை மிகுந்த தோற்றத்துடன் அழுவார் போல் காணப்பட்டார். பயமுற்ற தமிழர்கள் அகதிமுகாம்களிலே விபரிக்கமுடியாதளவு மோசமான நிலைமைகளில் அடைபட்டுக் கிடந்ததையிட்டு அவர் ஒரு அனுதாப வார்த்தையும் கூறவில்லை. ஜனாதிபதியோ அமைச்சர்களோ எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியுமோ சில அனுதாபவார்த்தைகளையேனுங் கூறவோ உதவி புனர்வாழ்வும் பற்றி வாக்குறுதி அளிக்கவோ அவர்களிடம் போகவில்லை. ஆயுதப்படைகளில் சிலர் இனக்கலவரத்தில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்ட அதே ஜனாதிபதி, இந்தியாவின் விஸ்தரிப்புவாத, குறுக்கீட்டு நோக்கங்கள் என கூறப்பட்டவை தொடர்பாக இந்தியாவை நோக்கித் தன் விரல்களை ஆட்டினார். அமைச்சர் சிறில் மத்தியூ 1983 ஓகஸ்ட் 4ம் திகதி, "சிங்களவர் பெரும்பான்மை இனமென்றால் அவர்கள் ஏன் பெரும்பான்மையாக இருக்கமுடியாது?" என நாடாளுமன்றத்திற் கூறினார். பிற்காலத்தில் தமிழர் பற்றிய அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள முயன்ற றொனி டி மெல் கூடக் கறைபடாமல் வெளிவரவில்லை.

77
அத்தியாயம் 5 தமிழ் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சி
5. 1983ம் ஆண்டுக்குப் பின்
1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் அனேகர் ஆயுதப்போராட்டக் குழுக்களிற் சேரத்தொடங்கினர். பிரபாகரனுக்கும் உமாமகேஸ்வரனுக்குமிடையிலான பிளவுடன் 1980ல் போராட்ட இயக்கங்கள் கூறுபட்டன. அதன் பின், பழைய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதனின்று பிரிந்தவர்கள் அமைத்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (PL.O.T) தோன்றின. பாண்டி பசாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையையடுத்துப் பொலிஸ் பாதுகாப்பில் மறியலிலிருந்த பிரபாகரனையும் உமாமகேஸ்வரனையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப இந்தியா மறுத்ததுடன், 1981ல் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அதன் பங்கு ஒரு புதிய வடிவெடுத்தது. அவர்கள் இருவரும் குற்றவியற் சந்தேகநபர்கள் என்ற வகையில் வேண்டப்படுகிறார்களென இலங்கை உரிமை கோரியது. 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின் சகல ஆயுதப்போராட்டக் குழுக்களும் தமிழ் நாட்டைத் தமது தளமாக்கி கொண்டனர். ரெலோ எனும் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஈரோஸ் எனும் மாணவர் ஈழப் புரட்சிகர இயக்கம் (EROS) ஆகியவை ஏனைய முக்கியமான ஆயுதப்போராட்டக் குழுக்களாகும்.
இவ்வியக்கங்கள் அனைத்தும் இந்தியாவிடமிருந்து உதவிபெற்றதுடன் றோ ஆய்வு -பகுப்பாய்வுப்பரிவு எனும் இந்திய உளவு அமைப்பால் வழிநடத்தப்பட்டன. உத்தியோகபூர்வமற்ற மதிப்பீட்டின்படி 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச அபிப்பிராயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மதிப்பு முன் ஒருபோதும் இல்லாத அளவு குறைந்து போயிற்று. ஒரு அரசியல் தீர்வுகாண இந்தியா தனது பேச்சாளர்களை இலங்கைக்கு அனுப்பியது. தனது இழப்புக்களை நிவர்த்தி செய்யவும் தமிழர்களுடன் சமரசத்துக்கு வருவதற்கு பதிலாக, இந்தியாவின் விசேடதுதுவர் திருஜியார்த்தசாரதியால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை முதலில் ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம், பின்னர் இழுத்தடிக்கத் தொடங்கியது. 1984 ஜனவரியில் தேசிய பாதுகாப்புக்காக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இலங்கை அரசாங்கம், திருபார்த்தசாரதியின் ஆலோசனைகளைப் பேச்சளவில் ஏற்று, யதார்த்தத்தில் அவற்றை முற்றாக நிராகரித்துவிட்டதென்பதற்கு இது சான்றாயிற்று. இந்தியாவுடன் இவ்வாறு சின்னத்தனமாக நடந்து கொள்வது ஆபத்தான மூடத்தனம் என அரசாங்கத்தை விமர்சிக்கின்ற அநேக சிங்களவர் உணர்ந்தனர். இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கப் போகின்றதென அரசாங்கம் அடிக்கடி கூறிவந்தது. மிகக் கூர்மையான அவதானிகள், இந்நேரத்தில் ஆக்கிரமிப்புக்கான சாத்தியப்பாடு அற்பமானதென மதிப்பிட்டனர். சர்வதேசப் பத்திரிகைகள் இந்தியாவில் தமிழ்ப் போராளிகள் பயிற்சி பெறுகிறார்கள் எனக் கூறியபோது, இந்தியா தன் மண்ணிலே தமிழ் அகதிகள் மாத்திரமே இருக்கிறார்கள் என மறுத்தது. ஆனால், அப்பொழுது உண்மையான நிலைமை பகிரங்க இரகசியங்களில் ஒன்றாக இருந்தது. இவை

Page 55
78
அனைத்தினதும் விளைவாக அரசாங்கத்தில் இராணுவப் பிரசாரம் தீவிரப்படுத்தப்பட்டது. இந்தப் பிரசாரம் மேன்மேலும் கணிமூடித்தனமான பயங்கரமாகிக் கொண்டிருந்தது. இதையொட்டித் தமிழரின் தாக்கமான ஆயுதக்கிளர்ச்சிகள் அதிகரித்துக் கொண்டிருந்தன.
52 அரசியலில் விடுதலைப் போராளிகள்
1985 ஜூன் 18ம் திகதியின் போர் நிறுத்தத்தின் போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆயுதப்போராளிகள் ஆதிக்கநிலையில் இருந்தனர். இலங்கைப் படைகள் முகாம்களில் முடங்கிக்கிடந்தன. தமிழீழ விடுதலை இயக்கம் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் போட்டியாக வளர்ந்திருந்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் சிறந்த பயிற்சியுடன் ஆயுதப்பலமும் பெற்றிருந்தது. ஆனால், அது ஒரு கெரில்லாப் போராட்டத்துக்காகவன்றி முழு அளவிளான இராணுவப் போராட்டத்துக்காகவே தன்னைக்கட்டி வளர்ப்பதாகக் கூறியது. 1985 ஏப்ரலில் ஈழதேசிய விடுதலை முன்னணியை அமைப்பதற்காக விடுதலைப் புலிகள், ரெலோ, ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் சிறிதுகாலம் ஐக்கியப்பட்டிருந்தன. இது தமிழ் மக்களுக்கு கணிசமான மனஉற்சாகத்தை அளித்தது. அன்றைய நாள்வரை, தமிழ் மக்கள் இப் போட்டிக் குழுக்களை எவ்வகையிலும் வேறுபடுத்தி நோக்கவில்லை. அவர்கள் எல்லோரும் 'எமது பெடியன்கள் என்றும் 'புலிகள் என்றுங் கூட அழைக்கப்பட்டனர். போர் நிறுத்தத்திற்குச் சிறிது காலம் பின்னர் இடையூறான அநேக போக்குகளையும் ஈழ தேசிய விடுதலை முன்னணியின் ஐக்கியம் ஒரு வெளித்தோற்றமே என்றும் பெடியன்கள் தமக்குச் செவிசாய்க்கப் போவதில்லை என்பதையும் மக்கள் உணர ஆரம்பித்தனர். ஏறக்குறைய இதே காலத்தில் 'புதியதோர் உலகம்' என்னும் ஒரு நாவல் புளொட்டிலிருந்து விலகிய ஒரு குழுவினால் வெளியிடப்பட்டது. உயர் இலட்சியங்களும் தங்கள் மக்களின் நலன்களுக்காக தங்களை அர்ப்பணிக்கின்ற ஆர்வமுடைய இளைஞர்கள் எவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டக் குழுவுக்குள் ஈர்க்கப்பட்டார்கள் என்பதையும் எவ்வாறு அந்த இயக்கம் தங்கள் உண்மையான நல்லெண்ணங்களை அபத்தமான தனிநபர் சர்வாதிகார வழிபாட்டுக்குத் திசைதிருப்ப முனைந்தது என்பதையும் அந்நாவல் சித்தரித்தது. கீழ்ப்படியாதவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் குரூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். தீப்பொறிக் குழு என அறியப்பட்டதான விலகிச்சென்ற இக்குழுவைச் சேர்ந்தோர், புளொட் உறுப்பினர்கள் 90 பேர் வரை இவ்வாறு கொல்லப்பட்டாார்கள் எனத் தெரிவித்தனர். விடுதலைப் புலிகள், ரெலோ ஆகிய இயக்ககங்களுக்குள்ளேயும் இயக்கத்துக்குள்ளான கொலைகள் கணிசமான அளவில் நடந்துள்ளன என நம்பலாம். பெருவரியானவை இந்திய மண்ணிலேயே நடந்துள்ளன. தமிழ் மக்களின் ஜனநாயகம், நீதி, நல்வாழ்வு ஆகியவற்றில் இந்தியா உணர்மையிலே அக்கறை கொணி டுள்ளதாவென மக்கள் ஆச்சரியப்படத்தொடங்கினர். உண்மையான அக்கறையிருந்தால், இவை நடந்தபோது தமிழ்நாட்டிலே பொலிஸார் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனும் கேள்வி எழுகின்றது.

79
ஏன் இந்தக் குழுக்கள் மக்களுக்குச் செவிசாய்க்காதவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு காரணம், அவர்கள் மக்கள் மீது குறைவாகவே தங்கியிருந்தமையாகும். பிரதானமாக, மக்கள் ஊர்வலத்திற்குப் பயன்படுத்தும் பொம்மைச் சக்கைகளாகவே கருதப்பட்டனர்.
1984ம் ஆண்டிலும் 1985ம் ஆண்டின் முற்பகுதியிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயமாக விட்டுச்சென்ற இடைவெளியை பிரசைகள் குழுக்கள் நிரப்பின. இப்பிரசைகள் குழுக்கள் பிரதானமாகக் கொடுமைகளை எதிர்ப்பவர்களையும் ஆயுதப் போராட்ட குழுக்களைச் சேராதவர்களையும் கொண்டு அமைக்கப்பட்டன. இராணுவத்தின் கொடுமைகள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதும் இராணுவத்திடமும், அரசாங்கத்திடமும் மக்கள் கருத்துக்களை எடுத்துரைப்பதும் அவர்களது பணிகளாகும்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த அநேக இளைஞர்கள் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வது அவர்களது பணிகளில் ஒன்றாயிருந்தது. பிரசைகள் குழுக்கள் வெளிநாட்டுப் பத்தரிகையாளர்களதும், தூதுவரகங்களதும் பார்வையில் கணிசமானளவு மதிப்பைப் பெற்றன. யாழ்ப்பாண பிரசைகள் குழுவின் முக்கிய உறுப்பினரும் பரியோவான் கல்லூரியின் அதிபருமான திருசிஆனந்தராஜா, போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளாற் கொல்லப்பட்டமை நம்பிக்கைச் சூழ்நிலைக்குக் கொடுக்கப்பட்ட முதல் பலியாகும்.
அநேகள் தாம் இன்னும் ஜனநாயக உரிமைகள் உடையவர்கள் என்ற நம்பிக்கையிற் செயற்பட்டார்கள். பரியோவான் கல்லூரியின் சிரேட்ட மாணவர்கள் எங்கும் சென்று அனுதாபச் சுவரொட்டிகளை ஒட்டினர். ஒரு பத்திரிகை ஆசிரியர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் இந்தக் கொலை பற்றிக் கேள்வி எழுப்பியதால் கடத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டார். ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பாடசாலைகளுக்கு வேண்டுகோள் விடுத்த யாழ்ப்பாணப் பிரசைகள் குழுவினரைச் சநீதித்துப் பேசியவர்களினி தொனி பயமுறுத்துவதாயிருந்ததென்பது தெளிவு. திருஆனந்தராஜாவுக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு அற்பமானது. அதாவது போர் நிறுத்தச் சூழ்நிலையின் நம்பிக்கையில் அவர் யாழ்ப்பாணப் பாடசாலைகளுக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையே ஒரு கிறிக்கட் விளையாட்டுப் போட்டியை ஒழுங்குபடுத்தியதாகும். இது நடந்து ஏறத்தாழ பதினைந்து மாதங்களுக்குப்பின், பேரின்மத்தியில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் சிநேகயூர்வமாகக் காட்சியளித்தார்கள். மக்கள் மத்தியில் இராணுவ அதிகாரி கொத்தலாவல இதன்மூலம் மிகவும் பிரபலமானார்.
இதற்குச் சிறிது முன்னர் முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபர் திருஞானச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். ஒரு துண்டுப்பிரசுரத்தில் அவருக்கெதிராக பதினாறு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புடைய, மிகப்படித்த ஒருவர் அக்கொலையை நியாயப்படுத்துவதற்கு பின்வரும் அசாதாரண கதையைக் கூறினார். 1985ம் ஆண்டில் முல்லைத்தீவு மக்கள் இலங்கை இராணுவ நடவடிக்கைகளினால்

Page 56
80
இடர் மிகுந்த காலத்தை அனுபவிக்க நேர்ந்தது. ராஜீவ் காந்தி, முல்லைத்தீவுப் பிரச்சினைகளையிட்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குத் தொலைபேசிமூலம் எதிர்ப்புத்தெரிவித்தார். ஜனாதிபதி ஜயவர்த்தன அத்தகைய பிரச்சினைகள் அங்கு இருக்கவில்லையென மறுத்து, தனது மறுப்புக்கு ஆதரவாக அந்த இடத்திலுள்ளவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு தனது தொலைபேசியை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஞானச்சந்திரனுக்கு இணைந்துவிட்டார் அரசாங்க அதிபர் ஞானச்சந்திரன் ஜனாதிபதி கூறியவற்றை உறுதிப்படுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், போராளிகள் இதை எவ்வாறு அறிந்தார்கள் என்று கேட்கப்பட்டபோது, இக்கதையைக் கூறியவர் தொலைபேசிக் கட்டுப்பாட்டுத்தானத்திலிருந்த ஊழியர் ஒருவர் ஒட்டுக் கேட்டு விடுதலைப்புலிகளுக்கு அறிவித்திருக்கவேண்டுமென உறுதியாகச் சொன்னார். யாழ்ப்பாணம் இன்று துண்டுப்பிரசுரங்கள், துப்பாக்கி, ஊகங்கள், நாடகபாணி நடத்தைகள் என்பன மூலம் விசாரணை செய்யும் நிலைக்கு இறங்கியுள்ளது. ஆயுத பாணிகளாற் தாம் முற்றுகையிடப்படுவார்கள் என்ற உணர்வினால், யாழ்ப்பாண மக்கள், எல்லா வதந்திகளையும், மறைமுகக் கூற்றுக்களையும் எவ்வித விசாரணையுமின்றித் தமிழ் இலட்சியத்தை முன் தள்ளுகின்றது எனும் பேரில் ஏற்றுக்கொள்கிறார்கள். விடயங்கள் ஆபத்தான வகையில் பிழையான திசைக்குச் சென்றுவிட்டதாகச் சிறுதொகையினரே உணர்ந்தனர். ஆனால், அநேகர், பெடியன்கள் தெரிந்து கொண்டே சிறு தவறுகள் சில செய்தாலும் அவர்கள் சரியான வழிக்குத் திரும்பிவிடுவார்கள் எனக் கருதினர்.
இன்னொரு சம்பவத்தில், நவாலிப் பிரதேசத்தில் உள்ள சகல ஆண்களையும் இராணுவமுகாமுக்கு அடுத்த நாள் வரும்படி இராணுவம் உத்தரவிட்டது. பின்னர் ஒரு ஆயுதப்போராளிக் குழு வந்து ஒருவரும் இராணுவ முகாமுக்கு போகக்கூடாதென உத்தரவிட்டது. யெஹோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவப் பிரிவின் பலமான விசுவாசியான குணரத்தினம் என்பவர் வருவதாக ஏற்றுக்கொண்ட பின் போகாமல் விடுவது திட்டமிட்டுப் பொய் சொன்னதாக இருக்குமென நினைத்தார். தான் ஒரு தவறும் செய்யவில்லையாதலாற், தான் போகவேண்டுமென்றும், போனாற் சிலவேளை படைவீரர்களுக்குத் தன் சமய போதனைகளைக் கூறலாம் என்றும் நினைத்து அவர் அங்கு போனார். அதன் பின் அவர் ஒரு போராட்டக்குழுவால் விசாரணை செய்யப்பட்டார். அவர் கூறிய காரணங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. மனஉபாதைக்குள்ளான அவரது சகோதரி, அவர் எங்கேயோ ஓரிடத்தில் வாழ்கிறார் என இன்றுவரை நம்பிக் கொண்டிருக்கிறார். 6
ரஜனிகாந்த் என்று பிரபலமாக அறியப்பட்ட ஒருவர் டெலோவால் கொலை செய்யப்பட்டமை, நாடகபாணி விசாரணைக்கு ஓர் உதாரணமாகும். அவர் கல்வியங்காட்டில் வசித்தவர், பட்டறைத் தொழில்செய்பவர். அவர் சில வேலைகளிற் டெலோவுக்கு உதவிகள் செய்துள்ளார். ஒருமுறை அவர் சில டெலோ உறுப்பினர்கள் சில பெண்களுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டதைக் கண்டு, ஒரு முதியவர் இளையோரைக் கணிடிப்பதைப்போல் அவர்களைக்

翰量
கண்டித்துள்ளார். அதன் பின்னர் அவர் "டெலோவின் ஒரு பகுதியினரால் கடத்திச் செல்லப்பட்டு, நெல்லியடிச்சந்தியில் ஒரு மேடையில் பகிரங்கமாக நிறுத்தப்பட்டார். ஒரு டெலோ உறுப்பினர் பெண் வேடம் அணிந்து மேடையில் ஏறி, ரஜனிகாந் தன்னைக் கற்பழித்ததாகக் குற்றஞ்சுமத்தினார். அந்தப் பெண்ணிடம் ஒரு கத்தி கொடுக்கப்பட்டு அவருக்கு ஒரு பொருத்தமான தண்டனையை வழங்குமாறு கேட்கப்பட்டது. பொதுமக்களின் முன் ரஜனிகாந்த் குரூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார். 1986ன் இரண்டாங்காற் பகுதியில் இது நடந்தது.
1985 ஜூன் போர் நிறுத்தத்தின் பின் யாழ்ப்பாணத்தில் இன்னொரு தோற்றப்பாடு உருவானது. இங்கே வழிப்பறிகளும் மிகக்கொடூரமான கொள்ளைகளும் அடிக்கடி நடக்கலாயின. பொதுமக்களின் வீடுகள் ஆயுதபாணிகளால் உடைக்கப்பட்டு வீட்டிலுள்ளேர் தாக்கப்பட்டும் சிலவேளைகளிற் சித்திரவதைக்குட்பட்டுமுள்ளனர். அவர்களது நகைகளும் பெறுமதியான பிற பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன. பத்திரிகை ஆசிரியர் தலையங்கங்கள், சுவரொட்டிகள் மூலம் கண்காணிக்கும் தமது கடமையை நிறைவேற்றுமாறு போராளிக்குழுக்களுக்கு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டது. இக்காலத்தில், இலங்கை இராணுவம் முகாம்களில் முடங்கிக் கிடந்தது. எந்தவொரு ஆயுதப் போராளிக் குழுவும் இக்கொள்ளைகளைக் கண்டிக்கவோ, அவை பற்றி நடவடிக்கை எடுக்கவோ முன் வரவில்லை. அவர்களுள் அநேகள் தனிப்பட்ட முறையில், ஒரு விடுதலைப் போராட்டத்திற்கான வளங்களைப் பெற இவை செய்யப்படவேண்டுமென்ற உணர்வை வெளியிட்டனர். பல சம்பவங்களைப் பார்க்கும்போது, சகல போராளிக் குழுக்களும் கொள்ளைகளில் ஈடுபட்டன என்றே தெரிகிறது. வெவ்வேறு போராளிக்குழுக்கள் வெவ்வேறு பிரதேசங்களில் அபகீர்த்தி பெற்றன. ஒரு குழு களவெடுத்துவிட்டு இன்னொரு குழுவைக் குற்றஞ்சுமத்தும் விளையாட்டு நடைபெற்றது. யாழ்ப்பாண நகரத்தில் "டெலோவே இந்தக் கொள்ளைகளில் மிகப் பிரபலமடைந்திருந்தது. இது விடுதலைப் புலிகளுக்கு பயனுடையதாயிற்று. யாழ்ப்பாண நகர மத்தியில், பெருமாள் கோவில் கொள்ளை, விடுதலைப்புலிகள் சுற்றி காவல் நின்றபோது நடைபெற்றதென்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மக்கள் மீண்டும் பயங்கரத்துள் வாழ்ந்தார்கள்.
மக்களின் கேரிக்கையினால் ஈழத்தேசிய விடுதலை முன்னணியில் பெயரளவில் ஐக்கியம் இருந்தபோதும், இயக்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட முயலவில்லை. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் டெலோ இயக்கத் தலைவர் சிறி சபாரத்தினமும் ஒருவரை ஒருவர் வெறுத்தமையை எல்லாரும் அறிவார்கள். ஒரு ஆயுதப் போராட்டக் குழுவை மிஞ்சி இன்னொரு போராட்டக்குழு பெயரெடுக்கப் பாவித்த முறைகளுக்கு ஓர் உதாரணம்: தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் தருமலிங்கமும் ஆலாலசுந்தரமும் 1985 ஆகஸ்ட் 2ம் திகதி கொல்லப்பட்டமை. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுள் திருவாளர்கள் தருமலிங்கமும், ஆலாலசுந்தரமும் யாழ்ப்பாணத்திற் தொடர்ந்து வசித்து வந்தவர்கள். இந்தியாவில் வாழ்ந்து வந்த டெலோ இயக்கத்தினருடன் பேசிய

Page 57
82
அநேகரின் சான்றாதாரங்களின்படி, இக்கொலைகள் பின்வருமாறே நடந்தனவென்று தெரியவந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் த்லைவரான பிரபாகரன் கூட்டணியைக் கடுமையாக மிரட்டி உரையாற்றிய பின், பிரபாகரன் இக்கொலைகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மதிப்பிழக்கப்படுவார் என எதிர்பார்த்த டெலோ தலைவர் சிறி சபாரத்தினம், இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலைசெய்யுமாறு தனது ஆட்களுக்கு இரகசியமாக ஆணையிட்டார்.
எதிர்பார்த்ததுபோல், விடுதலைப் புலிகளே பெரும்பாலும் இக்கொலைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டனர். திருதருமலிங்கத்தின் வீட்டுக்கு அண்மையில் காவல் நின்ற ஒரு புளொட் (PLOT) உறுப்பினர் கொலையாளிகள் வந்த வாகனம் டெலோவுக்குச் சொந்தமானதென இனங்கண்டர். இலங்கைக்கு வெளியே வாழும் டெலோ இயக்கத்தினர் பலர், எவ்வாறு ஆயுதப் போராட்டக்குழுத்தலைவர்கள், தொழிற்பட்டார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணத்தையும் தந்தனர். தன் முன் நிற்கும் தனது ஆட்களுக்குப் பணிவான அச்ச உணர்வூட்டும் ஒரு தலைவராக சிறி சபாரத்தினம் விளங்கினார். சிலவேளைகளில், அவரது இயக்க உறுப்பினர் சிலர் முகாமில் நிலவும் நிலமைகள் போன்ற இடர்ப்பாடுகளை அவருக்கு முறையிடுவார்கள். சிறி சபாரத்தினம் நீக்குவதாக வாக்குறுதி அளித்துச் சென்றுவிடுவார். பின்னர் வேறு நபர்கள் முறையிட்டோரைத் தாக்குவார்கள். முறைப்பாட்டுக்குரிய தலைமைகளில் மாற்றமிராது. கிடைத்த சான்றுகளின்படி, ஆயுதப் போராட்டத் தலைவர்கள் நாடாளுமன்ற அரசியலிற் கையாளப்படும் முறைகளுட் கணிசமானவற்றைக் கற்றுள்ளார்கள். அவர்கள் அம்முறைகளை இன்று நடைமுறைப்படுத்தும் விதம் மட்டும் மிகவும் பயமுறுத்துவதாயிருக்கின்றது.
53 போராளிகளின் மாறுகின்ற இயல்புகள்
1977ம் ஆண்டின் இனக்கலவரமும் நாடாளுமன்றவழியில் முன்னேற்றம் இன்மையும் மதிநுட்பமும், ஆற்றலுமுள்ள இளைஞர்களை, 1970களின் பிற்கூற்றில் ஆயுதப் போராட்ட இயக்கத்தை நோக்கித் தூண்டின. தலைமைக்கும் கோட்பாட்டு வழிக்காட்டலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு குவிவுமையமானமை தவிர்க்க முடியாததாயிருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் பலர் இதில் ஈடுபட்டனர். விரிவுரையாளர்கள் பலர் தீவிர அனுதாபிகளானார்கள். இதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் நிதர்சனமானவை. 1980ல், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உணர்வு என்னும் பத்திரிகையை வெளியிட்டனர். விடுதலைப்புலிகளால் ஆதரிக்கப்பட்ட அப்பத்திரிகை மார்க்ஸிய சுலோகங்கள் பலவற்றை முன்வைத்தது. இதில் ஈடுபட்ட பல்கலைக்கழகப் பிரமுகர்கள் சிலர் 'விடுதலைப் புலிகள் 39(5 மார்க்ஸிய இயக்கமென்ற தவறான மனப்பதிவைக் கொடுத்தனர். ஏறக்குறைய அதேகாலத்தில், விடுதலைப் புலிகளிடமிருந்து பிந்து சென்றவர்கள், புதியாதை எனும் பத்திரிகையை வெளியிட்டனர். அடுத்த ஆண்டு அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், அதாவது புளொட் என்ற இயக்கத்தை ஆரம்பித்தனர். மரபுசார்ந்த நாடாளுமன்ற அரசியலையும், தாக்கிவிட்டு ஓடும் விடுதலைப்புலிகளின்

83
தந்திரோபாயத்தையும் விமர்சிக்கும் அரசியல் நிலைப்பாட்டை மேற்கூறிய பத்திரிகை எடுத்தது. இப் பத்திரிகையின் இரண்டு இதழ்கள் வெளியாகி பின் மூன்றாவது இதழ் அச்சாகிக் கொண்டிருந்தபோது புளொட்டின் முக்கிய உறுப்பினரான திரு.சுந்தரம் விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்பட்டார்.
தமது உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு விலகவோ என்றும் வேறு இயக்கத்தை ஆரம்பிக்கவோ வேறொரு இயக்கத்தில் சேரவோ மாட்டார்கள் என்றும் சத்தியம் செய்து கையெழுத்திட்டவர்கள், இச்சத்தியத்தைச் சுந்தரம் மீறிவிட்டார் என்று விடுதலைப்புலிகள் அக்கொலைக்கு உத்தியோகபூர்வமாகக் காரணங் கூறினர். ஆனாற், பிற அவதானிகள், சுந்தரம் ஆற்றல்மிக்க இயக்க அமைப்பாளரும் திறமையான இராணுவவீரனுமாவார் என்றும் அவரைத் தனது இயக்கத்துக்கு வெளியே செயற்படவிட்டால், தனக்கு எதிராக இன்னொருவர் உருவாகலாம் என்று பிரபாகரன் உணர்ந்ததே உண்மையான காரணமெனக் கூறினர். இதற்கு முன்னமும் உட்கொலைகள் பல நடந்திருப்பினும், பகிரங்கத்துக்கு வந்த முதலாவது உட்கொலை இதுவே. இதைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் அனுதாபிகளான இறைகுமாரனும், உமைகுமாரனும் புளொட்டினால் கொலைசெய்யப்பட்டார்கள். மக்கள் விழித்துக் கொண்டாலும் அவர்கள் இந்த நிகழ்வுகள் ஒரு கடுமையான நோயின் அறிகுறியெனக் கருதமுடியவில்லை. 1988 அளவில் இந்த உட்கொலைகள் தொற்று நோய்ப் பரிமாணத்தை எட்டின.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குக் கணிசமாகப் பங்களித்துள்ளனர். மாணவர்கள் பலர் தமது படிப்பை இடைநிறுத்திக்கொண்டு கிராமப்புறங்களுக்கும், மட்டக்களப்புக்கும் தத்தமது இயக்கங்களுக்காக வேலை செய்யச் செல்லுமளவுக்கு அவர்களது பரித்தியாகம் உயர்ந்திருந்தது. அவர்கள் இயற்கையாகவே நுண்மதியும் உணர்வும் தம் தலைவர்களிடம் ஜனநாயக முறைகளை வற்புறுத்தும் பற்றுறுதியும் உடையவர்கள். உட்கொலைகளும் எதேச்சாதிகார தலைமையும் தோன்றியதும், இந்த மாணவர்கள் மாயையிலிருந்து தெளிவு பெற்றனர். 1985 அளவில் அவர்களுள் அநேகர் தங்கள் இயக்கங்களை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இதற்கிடையே இறந்த மாணவர்களுள் அநேகள் மிக விரக்தியுற்ற மனநிலையிலேயே மரணமாயினர் என்பது அவர்களது நண்பர்களின் வாக்குமூலங்களிலிருந்து தெரிய வந்தது. 1985 வரையில், மாணவர் சங்கத் தலைவராக இருந்த மூவரும் விடுதலைப் புலிகளுடன் ஆழமான கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருந்தனர். அவர்களுள் இருவர் இயக்கத்தை விட்டு வெளியேறினர். ஒருவர் அகதிகள் பணி செய்து கொணடிருந்தபோது மரணமடைந்தார். 1980களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரே இயக்கத்தில் தொடர்ந்துமிருந்தார். 1985ன் பிற்கூற்றில், ஆயுதப்போராட்ட இயக்கத்தில் மாணவர்களின் பங்கு ஒரு தீவிர மாற்றத்துக்குள்ளானது. ஆயுதப் போராட்டக் குழுக்கள் வழிதவறி வெகுதூரம் சென்று தங்களுக்கிடையே வீண் வீம்பு மோதல்களிற் தங்களைக் குறுக்கிக் கொண்டார்கள் என்று மாணவர்கள் அநேகள் உணர்ந்தனர். இது, தமிழ் இனம் ஒரு அபாயகரமான

Page 58
84
கட்டத்திற்கு வந்து விட்டது என அவர்களுக்கு உணர்த்திற்று. இப்பொழுது மாணவர்களது செயற்பாட்டின் பிரதான முனைப்பு, விமர்சனமூலமும் விளங்கப்படுத்தல் மூலமும் ஆயுதப் போராட்ட இயக்கத்தைச் சீர்திருத்தலும் அகதிகளுக்கு உதவிபுரிதலும் பொதுமக்களுக்கும் ஆயுதப் போராளிகளுக்கும் இடையே இணக்கப்படுத்துதலும் ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கிடையே ஐக்கியம் வளரத் தூண்டுதலுமாக இருந்தது. மாணவர் வழமையாக ஆயுதப் போராட்டக் குழுக்களுடன் மோதுவதில்லை. ஆனாலும் ஆயுதப் போராட்டக் குழுக்களின் நடத்தை பற்றிக் குறிப்பான கேள்விகளை எழுப்பினர். அவர்கள் திரு.ஆனந்தராஜா கொல்லப்பட்டமைபற்றிக் கேள்வி எழுப்பி அதற்கான விளக்கத்தையும் கேட்டனர். அவர்கள் ரெலோவிடம் ரஜனிகாந்தின் கொலைபற்றிப் பகிரங்கமாகக் கேள்வி எழுப்பினர். 1986 ஏப்ரலில் ரெலோவால் அவ்வியக்க உறுப்பினரான தாஸும் இன்னும் நால்வரும் கொலைசெய்யப்பட்டதை எதிர்த்து வடமராட்சியிலிருந்து தொடங்கிய ஊர்வலத்தின்மீது ரெலோ கல்வியங்காட்டிற் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. மாணவர்கள் ஈபிஆர்.எல்.எப். உடனும் புளொட்டுடனும் ஊர்வலத்தினரைப் பாதுகாத்துப் புகலிடம் கொடுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். கொல்லப்பட்ட மூன்று ஊர்வலத்தினரின் சடலங்கள் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மாணவர்கள் அகதிகள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஷ்டமான பிரதேசங்களுக்குச் செல்கையில் கணிசமான இடர்ப்பாடுகளை துச்சமென மதித்தனர். 1984ல் முல்லைத்தீவுக்கு அகதிகளுக்கான உதவிப்பொருட்களை ஏற்றிச் சென்றபோது எட்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பங்களிப்புக்காக மாணவர்கள் மதிக்கப்பட்ட அதேவேளை, அவர்கள் மீது ஒருவித பயமும் இருந்தது. விடுதலைப்புலிகள், ரெலோ கைகலப்புவரை விடுதலைப்புலிகள் மாணவர் இயக்கத்தைத் தமக்குப் பயனுடையதாகக் கண்டனர். இயக்கத்தில் மாணவர்கள் சேர்வது குறைந்தபோதும், அவர்களின் விமர்சனம் பிரதானமாக ரெலோவைப் பற்றியதாக அமைந்தமைக்கான ஒரு காரணம், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மிகவும் இரகசியமாயிருந்தமையால் நேரடியாகக் குற்றஞ் சுமத்துவது கடினமாயிருந்தது.
விடுதலைப்புலிகள் - ரெலோ மோதல்களைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மாணவர்களை அடக்க ஆரம்பித்தனர். 1988 நொவம்பரில் விஜிதரன் விவகாரத்துடன் மாணவர்களுடனான உடைவு, முற்றுப்பெற்றது. அன்று முதல், மாணவர்கள் பீதியடைந்ததுடன் மெளன அவதானிகளாகத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, உண்மையாகவே, ஆயுதப் போராட்ட இயக்கத்திற் பல்கலைக்கழகத்தின் பங்கு முடிவுற்றது. கடந்த காலத்தில் ஆயுதப்போராட்ட வளர்ச்சிக்கு தியாக உணர்வுடன் உதவிய மாணவர்கள், தாங்கள் மோசமாகப் பயன்படுத்தப்பட்டதை உணர்ந்தார்கள். மாணவர்களின் அறிவாற்றல் அன்று அவர்களுக்குப் பயனுடையதாக இருந்தது. 1986 இறுதியில் ஆதிக்கம் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், தனக்கே உரிய ஒரு மனப்போக்கை, அதாவது அதிகாரத்துவ மனப்போக்கைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படையாக நிறுவியது.

85
1983 ஜூலை இனக்கலவரம், ஆயுதப் போராட்ட இயக்கங்களில் புதியவர்களைப் பெருவாரியாகச் சேர்த்தது. 1984ல் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கம் உருவாக்கிய நெருக்குவாரத்தின் விளைவாக கிழக்கு மாகாண இளைஞர்கள் பெருமளவில் ஆயுதப் போராட்ட இயக்கத்தில் இணைந்தனர். இந்த இளைஞர்களின் ஆர்வம், பல்கலைக்கழகத்திலிருந்து வந்த, அறிவும், சிந்தனை ஆற்றலும் மிக்க தமது முன்னோடிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். பழிக்குப்பழி, ஆத்திரம் மற்றும் கையாலாகாத்தனம் ஆகியனவே இப்பொழுது ஊக்கங்களுக்குக் காரணமாயின. ஆனாற் கிராமங்களில் அலைந்து திரிந்து கூட்டங்கள் வைத்து அரசியல் விடயங்களை ஓரளவு முன்வைக்கக்கூடிய மாணவர்களால் ஏற்கனவே அடித்தளம் இடப்பட்டு விட்டதாயிற்று. இது ஆயுதப் போராட்டத் தலைமைக்கு உகந்ததாயிருந்தது. புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்காமல், அவர்கட்குச் சொன்னவற்றைச் செய்தார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த நிலையில் சர்வதேசியம், சோஷலிசம் தொடர்பான தனது பாசாங்குகளைக் கைவிட்டு, இறுக்கமான கட்டுப்பாடுடைய வெறும் இராணுவ அமைப்பாகத் தன்னைக் காட்டிக் கொண்டது. ரெலோ, என்றுமே தனது தன்மைபற்றி எதுவிதமான புத்திஜீவிப் பாசாங்குகளையும் கொண்டிருக்கவில்லை. 1985 செப்ரெம்பர் அளவில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அகதிகள் பெருந்தொகையாக யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். எதற்கும் தயாரான நிலையிலிருந்த இந்த அகதிகள், பொதுவாக ஊர்வலங்களுக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அகதிகள் மத்தியிலிருந்த இளவயதுப் பையன்கள் பலர் பிரதானமாக ஈபிஆர்எல்எவ்இலும் ரெலோவிலும் சேர்ந்தார்கள். ஈபிஆர்எல்எவ், இயக்கமே பெண்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்ட முதலாவது இயக்கமாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிகவும் கறாராக இருந்தது. 1986 டிசெம்பர் அளவில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களை அந்நியப்படுத்தியும், கலைத்தும், தடைசெய்தும், ஆதிக்க நிலை பெற்ற இயக்கமாக விளங்கியது. இப்பொழுது அதன் இராணுவப் பணிகள் பாரதூரமாயின. கடுமையான உறுப்பினர் பலக் குறைவை இது எதிர்நோக்க நேர்ந்தது. இச்சூழ்நிலையில் மிகச் சிறுபிராயத்தினரையும் சேர்த்துக் கொள்வதை ஊக்குவித்தது. இந்நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள பழைய பூங்கா, விடுதலைப் புலிகளின் காட்சிக் கூடமாக மாறியது. பாடசாலை விட்ட பின்னர் மாணவர்கள் அங்கே நடந்த உடற்பயிற்சிகளைப் பார்வையிட்டனர். சிலவேளைகளில், இயக்கத்திற் சேர்வதற்காக மாணவர்கள் வீட்டை விட்டு ஓடினார்கள். சிலர், காவலில் நிற்கும் தமது நண்பர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களைப் பார்த்து உண்டான உணர்ச்சியின் உத்வேகத்தினால், பின்னர் பூரணமாக இயக்கத்தில் இணைந்து கொணிடனர். 1987 நடுப்பகுதியளவில் பெண்பிள்ளைகட்கும் இராணுவப் போராட்டத்துக்காக பயிற்சி அளிக்கப்பட்டது. வீட்டை விட்டு ஓடிப்போய் இந்த இயக்கத்தில் சேர்ந்த தமது பிள்ளைகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு விடுதலைப் புலிகளின் முகாம்களைச் சூழ நின்ற இரந்தழுது கேட்கின்ற கலக்கமடைந்த பெற்றோர்களைக் காண்பது நாளாந்த

Page 59
86
நிகழ்ச்சியாகி விட்டது. பெண்பிள்ளைகளும் தாய்மாரும் விடுதலைப் புலிகளின் முகாம்களிலிருந்து தாய்மார் தமது பெண்பிள்ளைகளைத் துரத்திக் கொண்டும் இழுத்துக்கொணிடும் செல்லும் பரிதாபமான காட்சிகளை எவரும் கண்டிருக்கலாம். பழைய பூங்காவிலே குளித்து விட்டு வந்து கொண்டிருந்த பிள்ளைப் பிராயத்து விடுதலைப் புலிகளை அவதானித்த ஓர் ஆசிரியை, தாங்கள் தங்கள் உயிரை என்ன காரணத்துக்காகப் பலிகொடுக்கின்றோம் என்று அறியாது, ஒரு புரியாத இலட்சியத்துக்காக இத்தகைய அப்பாவிகள் தம்மை அர்ப்பணிப்பதை இந்தச் சமூகம் எவ்வாறு அனுமதிக்க முடிகிறதெனக் கவலையுடன் ஆச்சரியப்பட்டார். ஒரு மருத்துவ நிபுணரின் மனைவி தமக்கு அடுத்த வீட்டில் அமைந்திருந்த விடுதலைப் புலிகள் முகாமில் இளம் பையன்கள் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததைத் தான் கண்டதாகக் கூறினார். ஆயுதப் போராட்ட இயக்கமானது, அதுபற்றிப் பேசியும், தத்துவ விளக்கமளித்தும் பின்னர் வெளிநாடு சென்றும் விட்ட பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களின் தோற்றுவாயினின்று தொலைதூரம் வந்து விட்டது. மரணங்கள், இயக்கம் பற்றிய மாயை கலைந்து அதனால் உண்டான விரக்தியும் கொலைகளும், ஆயுதப் போராளிகள் மத்தியிலிருந்து ஆற்றலும் முதிர்ச்சியும் பெற்ற தலைவர்கள் பலரை அகற்றி விட்டன. அவர்களது வயது சராசரியாக 14 அல்லது 18க்கும் 22க்கும் இடையிலாகும். எஞ்சிய சில தலைவர்கள் கேள்வி கேட்காத தமது உறுப்பினர்கள்மீது தமது பூரண அதிகாரத்தை அனுபவித்தனர்.
பின்வரும் உரையாடல்கள் இளைய ஆயுதப் போராளிகளின் உணர்மையான மனோபாவத்தை வெளிக்கொணருகிறது.
1. லண்டனில், ஒரு ரெலோ அகதி "லண்டனிலே இந்த ஆடம்பரங்களைப் பார்க்கும்போது எனக்கு கவலையாயிருந்தது. எமக்கு யாழ்ப்பாணத்தில் அதில் மட்டும் ஓர் குறையும் இல்லை. நாம் புதிய வகையான காரை எப்பொழுது கண்டாலும் அக்காரை நிறுத்தி, அதை சிறிது நேரம் கற்றி ஒட்டி வருவோம்" 2. தமிழ்நாட்டில், தமிழீழ இராணுவத்தின் பழைய உறுப்பினர் ஒருவர்: "எமது முகாம் வேதாரணியத்தில் அமைந்திருந்தது. ஒவ்வொரு பிற்பகலிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வானை ஒட்டிச் செல்வோம். நாம் வீட்டுக்குத் திருப்பிக் கொண்டிருக்கின்ற பாடசாலை மாணவிகளிடையே அந்த வானால் வேடிக்கை பார்ப்பது எமது வழக்கமாயிருந்தது. ஒருநாள் தற்செயலாக அவர்களுள் மூவரைத் தட்டிவிட்டோம். இருவர் இறந்து விட்டார்கள். ஏதோ வழியாக நாம் எமது முகாமை அடைந்து பகல் உணவை உண்டு உறங்கினோம். எமது கூரையில் கல்லெறி விழ நாம் விழித்தோம். வெளியே வந்து, கோபங்கொண்ட ஒரு கும்பலைப் பார்த்ததும் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கியாற் சுட்டு அந்தக் கும்பலைக் கலைத்தோம்.
நாங்கள் காரைநகரில் இருந்தபோது நாம் நல்ல உணவு சாப்பிட விரும்பினால், இலகு இயந்திரத் துப்பாக்கியைச் சுடுவதற்கு ஆயத்தநிலையில் வைத்துக் கொண்டு எமது ட்ரக்கை முழுவேகத்துடன் கடற்கரையை நோக்கிச் செலுத்திக் கடலுக்குட் சில சத்த வெடிகளைத் தீட்டுவோம். நாம் திரும்பிவரும்போது

87
கிராமவாசிகள் என்ன நடந்ததென்று கேட்பார்கள். இலங்கைக் கடற்படை எமது தீவைத் தாக்க முனையும்போது நாம் எதிர்த்தாக்குதல் செய்து துரத்தியடித்தோம் என்போம். அதன் பின், எங்களுக்கு பிட்டும் ஆட்டிறைச்சியும் உணவாகப் பரிமாறப்படும்.
தமிழீழ இராணுவம், லணிடன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவனாயிருந்த பனாகொடை மகேஸ்வரன் என்பவர் தலைமையின் கீழ் இருந்த சிறிய ஒரு குழுவாகும். அவர் ஆற்றல் மிகுந்த இராணுவவீரனாக இருந்த போதும், அவரது குழு எதுவித அரசியல் பார்வையும் இல்லாதது. மகேஸ்வரனுக்கு இருந்த பெருங்கொடை முன் அனுபவம் இன்றி விரைவில் எதையும் செய்யும் ஆற்றலாகும். புலிகளாற் தடைசெய்யப்பட்டு யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற பின்னர், தமிழ் நாட்டிற், சிறு துப்பாக்கி செய்யும் தொழிற்கூடத்தை அமைத்தார். பாரிய ஆயுதங்கள் புழக்கத்தில் உள்ள இக்கட்டத்தில் இது வேடிக்கையாக இருந்தது. ஒருவர் அவரிடம் விளக்கம் கேட்டபோது, "எனது சாதனங்களுக்கு இணங்கவே எனது போர்க்களத்தை நான் தெரிவு செய்கிறேன் என்று மகேஸ்வரன் பதில் சொன்னார். மறுபுறத்தில் விடுதலைப் புலிகள், இத்தகைய ஒருவரைத் தம் இயக்கத்தில் சேர்த்தால், விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை ஒரு மதமாக ஏற்று, அதற்காகத் தன் உயிரையும் கொடுக்க வேண்டுமென ஊக்குவிக்கிறார்கள். ஆயினும் முதிர்ச்சியின்மை, அவநம்பிக்கை, மக்களின் உயிர்ப்பற்றி அக்கறையின்மை ஆகியன இவ் இயக்கத்தின் இயல்புகளாகும். தாம் சேர்ந்த இயக்கத்தின் இயல்பினால் ஒவ்வொருவரின் நடத்தையும் பாதிக்கப்பட்டமையும் அவ்வியக்கம் அவர்களிடம் ஏற்படுத்திய விரக்தியும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். தனது நண்பர்களால் குதூகலமானவனென ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வைத்திய மாணவன் பின்னர் ரெலோ இயக்கத்திலேயே பேர்போன சித்திரவதையாளனாக மாறினான். 1983 ஜுலைக்குப் பின்னர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மேல் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் அனைவரும் ரெலோவிற் சேர்ந்தனர். அவர்களுள் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நுண்மதியுடைய மாணவர்கள் பலர் இரண்டாண்டுகட்குள் ஈழம் பெற்று விடலாம், அதன் பின் தமது கல்வியைத் தொடரலாம் என நம்பியிருந்தார்கள். அவர்களுள் அநேகரைத் தெரிந்த ஒரு அவதானி, பின்வருமாறு கூறமுற்பட்டார்: "அவர்கள், காலப்போக்கில் போராட்டம் இரண்டு ஆண்டுகட்கும் மேலாக நீடிக்குமென உணர்ந்தனர். அவர்கள், முன்பு தம்மோடிருந்து பின்னர் விலகித் தொழில் தேடியும், கல்வி கற்கவும் வெளிநாடு சென்று, வளமாக வாழ்பவர்கள்மீது மன வெறுப்புக் கொண்டனர். தமது இயக்கத்தின் குறைபாடுகளையும் வரையறைகளையும் உணர்ந்தும், அதினின்று விலகி இன்னொரு இயக்கத்திற் சேர அவர்களது தற்பெருமை விடவில்லை. மற்றைய இயக்கங்களுக்கு எதிராக ரெலோவை முன்னுக்குக் கொண்டுவர அவர்கள் வேலை செய்தனர். ஏனெனில் தாம் சேர்ந்த இந்த இயக்கத்தின் வெற்றியிலேயே தங்களது தனிப்பட்ட அபிலாசைகளும் அதிகார எதிர்பார்ப்புகளும் தங்கியுள்ளனவென அவர்கள் கருதினர். அவர்களது மனக் குறைபாடுகள் சாதாரண மக்களின் நலன்களை முன் வைக்கின்றவர்களை

Page 60
88
நிந்திக்கும் அளவுக்கு விரிவடைந்தன. தங்களைப் பொதுமக்களைப் பார்க்கிலும் மேலானவர்களாயும் தங்களுக்கு நன்மை பயக்கின்ற இலட்சியங்களை ஏற்றுக் கொள்ளக் கடமைப்பாடுடையவர்களாகப் பொதுமக்களையும் கருதினர். தமிழ் இனத்தவர் நுண்மதியும், கல்வியறிவும் மிக்க ஒரு சமூகமென அறிந்த அநேகள், நீதிநெறியிலும், அறிவியலிலும் காணப்பட்ட அவர்களது சோம்பேறித்தனமும் தவறான குறுகிய கரியவாதக் கண்ணோட்டமும் இணைந்து பெடியன்களைப் பற்றிய உயர்வான வெறும் கற்பனைகளைக் கட்டி வளர்த்துக் கொணடுள்ளதையிட்டு ஆச்சரியப்பட்டர்கள். ஒரு சில குறைபாடுகள் இருப்பினும் எல்லாம் சிறப்பாக இருக்கும் என்ற பொறுப்பற்ற நம்பிக்கையில், அவர்களது. அதாவது பெடியன்களின், மெல்லிய மெதுமையான தோள்களின் மீது, இனத்தின் தார்மீக - பெளதீக நலன்களுக்கான எல்லாப் பொறுப்புகளும் சுமத்தப்பட்டன.
5.4 தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி.
1985ற் ஆரம்பத்தில் புளொட், விடுதலைப்புலிகள், ரெலோ ஆகிய இயக்கங்கள் சமபலத்துடன் இருந்ததாகக் கருதப்பட்டது. சுழிபுரத்தில் புளொட்டுடன் ஏற்பட்ட சிறு சண்டையில் ஏழு விடுதலைப் புலிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, விடுதலைப் புலிகள் தமது "வீரத்தைக்" காட்டுவதற்குப் பதிலாக வரையறுக்கப்பட்ட செயற்பாட்டைத் தேர்ந்தெடுத்தனர். விடுதலைப் புலிகட்கும் ரெலோவுக்கும் இடையில் சண்டைகள் அதிகரித்த வேளையில் மோட்டார் சைக்கிளிற் சென்று காவலில் நிற்கும் எதிரிக் குழுவைச் சேர்ந்த 'பையன்கள் மீது சுட்டு விட்டு ஓடுவதை விட எதுவும் செய்யவில்லை. காவலில் நிற்கும் இந்தப் பையன்கள் இளம்பிராயத்தினர். இராணுவப் பயிற்சி இல்லாதவர்கள், வழமையாக, யாதாயினும் பயமுறுத்தும், சூழ்நிலை எழுந்தால் எறிந்து விட்டு ஓடுவதற்காகக் கைக்குண்டு வழங்கப்பட்டுள்ளவர்கள்.
இலங்கை இராணுவத்தால் வல்வெட்டித்துறையில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்டமை, பிரபாகரனதும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பலரதும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டமை ஆகியவற்றுக்குப் பழிவாங்குவதற்காக விடுதலைப்புலிகள் 1985 மே 14ல் பிரசித்திபெற்ற அனுராதபுர நகருக்குள் நுழைந்து ஈவு இரக்கமின்றி 150 பேரைச் சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். அந்தப் புராதன சிங்கள நகரத்தில் அப்போது அரசாங்கப் படைகள் காவலில் நிற்கவில்லை. இச்சம்பவம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஆற்றல்மிக்க 'கொலை இயந்திரம் என்ற பெயரைத் தேடிக்கொடுத்தது.
அனுராதபுரப் படுகொலைகளை அங்கீகரித்த அநேகர், நினைத்தபடி சிங்களவர்களின் உயிர்களோடு விளையாடுதல், தமிழர்களின் உயிர்களுக்கு மோசமான பாதுகாப்பின்மையை ஏற்படுத்துமென உணரவில்லை.
எவ்வாறாயினும், 1986 அளவில் இலங்கை இராணுவ பாலத்துக்கு எதிராக எந்தவொரு ஆயுதப் போராட்டக் குழுவும் தனித்து நினறு போராட முடியாதென்ற பொதுவான கருத்து தமிழ்மக்கள் மத்தியில் நிலவியது. 1986 ஆரம்பத்தில் இலங்கை இராணுவம் சுதுமலையிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாமைத்தாக்கிய பின் தெல்லிப்பளைக்குள் நுழைய எடுத்த முயற்சிகளை

89
தமிழீழ இராணுவம், ரெலோ உட்பட சகல இயக்கங்களும் ஒன்றிணைந்து முறியடித்தன.
எல்லா இயக்கங்களும் சுதுமலையில் விடுதலைப்புலிகளின் முகாமை சிறிலங்காப் படைகள் ஹெலிக்கொப்டரிலிருந்து இறங்கித் தாக்கியபோது அத்தாக்குதலை முறியடிக்க உயிராபத்தான உதவிகளைச் செய்ததை விடுதலைப் புலிகள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டனர். வடமராட்சியில் இயங்கிவந்த ரெலோ இயக்கத்தின் ஒரு பிரிவான 'தாஸ் குழு இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்துடன் கருத்து முரண்பாடுகளைக் கொண்டிருந்ததென சிலகாலமாக வதந்திகள் நிலவின. தாஸ், ஆற்றல் மிக்க இராணுவ வீரன். இவரது குழுவே ரெலோவின் இராணுவ முதுகெலும்பாக இருந்ததெனக் கூறப்பட்டது. 1986 ஏப்ரலில் ரெலோ இயக்கத்தில் "பொபி தலைமையிலான குழு தாஸையும் அவரது குழுவைச்சேர்ந்த நால்வரையும் துரோகத்தனமாகச் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அவர்களது குழுவைச்சேர்ந்த ஒருவரைப்பார்க்க சென்றபோதே அவர்கள் சுடப்பட்டார்கள். இச்சம்பவத்தினால் தாஸ் குழு ரெலோவினின்று விலகித் தலைமறைவாகி விட்டது. இது ரெலோவைக் கணிசமாகப் பலவீனப்படுத்தியது. இந்நிலைமை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒரு வாய்ப்பாயிற்று. ஏப்ரல் மாத ஈற்றில் இலங்கை இராணுவத்திற்கெதிராகத் தாக்குதல் நடத்தப் போகிறோம் என்ற பாசாங்கில்,'ரெலோ தனது உறுப்பினர் அனேகரை யாழ்ப்பாணத்துக்கு வெளியில் அனுப்பியது. அதேவேளை விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ முகாமொன்றைத் தாக்கப் போவதாகக் கூறி யாழ்ப்பாணத்துக்குட் தமது உறுப்பினர்களை அனுப்பினர். விடுதலைப் புலிகள் ரேடியோ தொடர்புச் சாதனங்கள் போன்றவற்றை வைத்திருந்தமையும் தீர்க்கமாக அவர்கட்குச் சாதகமாய் அமைந்தது. அம்மாத முடிவில், விடுதலைப் புலிகள் ரெலோ மீது தாக்குதல் நடத்தினர். இவ்விரு இயக்கங்களும் ஒரே நேரத்தில் கடலில் மரித்த தமது உறுப்பினர்களுக்காக ஹர்த்தால் செய்யுமாறு கோரியது தொடர்பாக எழுந்த சிறு முரண்பாடு இதற்குச் சாட்டாக அமைந்தது. இரு இயக்கங்களுக்குமிடையே ஒரு வாரமாக நடைபெற்ற போரின் பின், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் பெற்றனர். 'ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் மே 7ம் திகதி கொல்லப்பட்டார். 'ரெலோ இயக்கத்தைத் தாக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தால் கையாண்ட முறைகள், அனுராதபுரப் படுகொலைகளின்போது சிங்களவருக்கு எதிராக கையாளப்பட்ட அதிர்ச்சிதரும் தந்திரோபாயத்தை நினைவூட்டின. அனுராதபுர படுகொலைகளைச் செய்த முறை, எதிர்காலத்தில் எம்மை ஆட்டிப்படைக்கின்ற இறந்தேரின் ஆவிகளை எம்மத்தியிற் கொண்டு வந்துவிட்டுள்ளது.
ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டமுறை தமிழ் மக்கள் மத்தியிற் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறந்தோரில் அநேகர் தாம் யாரால் கொல்லப்படுகிறார்கள் என அறியாமல் இறந்தார்கள். மானிப்பாய் கிராமத்துக்கு அண்மையில், தூக்கத்தில் இருந்த பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். அநேகள் தமக்குத் தெரியாமலே கைதுசெய்யப்பட்டு, திருநெல்வேலி, மல்லாகம், தெல்லிப்பளை சந்திகளில் நிறுத்திச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஒருவரை

Page 61
90
ஒரு காருக்குள் தள்ளி காரைக் குண்டு வைத்து தகர்த்ததனால் மனித உறுப்புக்களின் துண்டுகள் சுற்றயலிற் காணப்பட்டன.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பரியோவான் கல்லூரி அதிபர் திரு.குணசீலன் இதைக் கேள்வியுற்றதும் அவரது சுகவீனம் மோசமாகி ஓய்வுபெறவேண்டியதாயிற்று. பிற மாவட்டங்களில் இருந்து ரெலோவில் சேர்ந்த உறுப்பினர்கள், பயத்தினால் வழி தெரு தெரியாமலும் எங்கே போகின்றோமென்று தெரியாமலும் தப்பி ஓடினார்கள். மக்கள் மிகப் பயமுறுத்தப்பட்டபோதும், சிலர் தப்பி ஓடியவர்களுக்கு துணிந்து புகலிடம் அளித்தார்கள். முன் எப்போழுதும் நடந்திராத இந்த அகோரம் நிகழும்போதும், எவருமே கொல்லப்படவோ, தாக்கப்படவோ, எரிக்கப்படவோ இல்லையென்ற பாவனையில் மக்கள் சந்திகளில் மெளனமாய் நின்று நடப்பவற்றை அவதானித்தார்கள். இதற்கு ஒருவரும் எதிர்ப்புத் தெரிவிக்காமை புரிந்துகொள்ளக் கூடியதே. சிலர் எமது ஹிற்லர்களை நாமே உருவாக்கிவிட்டோம் என்று கூறிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள். ஏனையோர், அந்தச் சந்தர்ப்பவாதம் யாழ்ப்பாணத்தின் எதிர்கால இயல்பாகிவிட்ட சந்தர்ப்பவாதத்தின் வெளிப்பாடு எனக் கருதினர். அந்தக் கைங்கரியத்தில் ஈடுபட்டுக் களைத்துப்போனவர்களுக்கு சில கடைக்காரர்கள் குளிர்பானங்கள் கூட வழங்கினர். சில பல்கலைக்கழக மாணவர்கள் இந்த யுத்தத்தை நிறுத்துமாறு கோரி ஊர்வலம் செல்ல முயனறனர். ஆனாலி அவர்கள் அதைக கைவிடவேண்டியதாயிற்று. ஒரு கிழமைக்குள் அப்போர் முடிவுற்றது. சிறி சபாரத்தினம் கொல்லப்பட்ட சூழ்நிலைபற்றித் தெளிவான தகவல்கள் இல்லை. அநேகரின் கூற்றுப்படி அவரோடு சேர்ந்திருந்த இருவர் தப்பியோட, அவர் சூட்டுக் காயத்துக்குள்ளானதாகவும் அதன் பின்னரும் எழுந்து நின்று விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவுடன் பேச சந்தர்ப்பம் தருமாறு கேட்டபோதும் அவர் கட்டுக் கொல்லப்பட்டார் என்றே தெரிகிறது. கிட்டு அவரைச் சுட்டுக்கொன்றாரா அல்லது கொல்லும் உத்தரவு பிரபாகரனிடமிருந்தோ கிட்டுவிடமிருந்தோ வந்ததா என்பது பற்றிய தகவல்கள் முரண்படுகின்றன. இக்காலகட்டம் முழுவதும் இலங்கை இராணுவம் ஹெலிக்கொப்டரிலிருந்து சில தடவைகள் சுட்டதோடு அமைதியாக இருந்து விட்டது. இயக்கங்களுக்கு வெளியிலிருப்போர், விடுதலைப் புலிகள் - ரெலோ மோதல், ஆயுதப் போராட்ட இலட்சியத்தைக் கடுமையாகப் பலவீனப்படுத்தியதாகக் கருதினர். 'சண்டே' ஐலண்ட் பத்தி எழுத்தாளரான கெளடில்ய, விடுதலைப் புலிகள் இயக்கம் ரெலோவை அழிப்பதற்குத் தேசிய பாதுகாப்பு அமைச்சுடன் ஒப்பந்தமொன்றைச் செய்துள்ளதாவென அங்கதச்சுவையுடன் கேள்வி எழுப்பினார்.
சம்பவம் நடந்து முடிந்த பின், விடுதலைப்புலிகள் தமது பிரச்சாரத்திற் தமது செயற்பாட்டுக்கு இரு காரணங்களைக் கூறினர். V
(1). ரெலோ உறுப்பினர்கள் மக்களைத் துன்புறுத்திக் கொள்ளையிட்ட குற்றவாளிகள்.
(2). ரெலோ இந்திய ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டாக செயற்பட்டுக் கொண்டிருந்தது.

9.
இதை உறுதிப்படுத்தும்வகையில் விடுதலைப்புலிகள் தாம் மீட்ட களவுப் பொருட்களான நகைகள், மின்உபகரணங்கள், கார்கள் முதலியவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கையளிப்பதாக அறிவித்தனர். உண்மையில் பல கார்கள் ரெலோவினர் பறித்து பயன்படுத்தியவையாகும். வின்சர் படமாளிகைக்கு அருகே காட்சிக்கு வைக்கப்பட்ட, திருடப்பட்டதாகக் கூறப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளும், வீடியோப்பதிவு நாடாக்களும் பொதுமக்களால் உரிமை கொண்டாடப்பட்டன. ஆனால் நகைகள் திருப்பி அளிக்கப்படவில்லை. அதேவேளை தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் களவாடப்பட்ட நகைகள் இரகசியமான முறையில் வெளிக்கொணரப்பட்ட திருவிளையாடலால் அத் தெய்வத்தின் "கடுங்கோபம்" தவிர்க்கப்பட்டது. மக்களில் அநேகர் நடந்தவற்றை ஏற்றுக்கொண்டதுடன் அது நல்லதெனவும் கருதினர்.
விடுதலைப்புலிகள் கொடுத்த முதலாவது காரணம் யாழ்ப்பாண நகரிலே பலமான செல்வாக்கைப் பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எவி.வும் அதேவேளை தங்களுக்குத் தேவையிலி லையெனக் கூறி தம் வசமிருந்த பல தொலைக்காட்சிப்பெட்டிகளையும் கார்களையும் திருப்பிக் கொடுத்தனர். மக்களில் அநேகள், இப்பொருட்களை ஈபிஆர்எல்எவ். தம்வசம் வைத்திருப்பதையே விரும்பியபோதும் வேறுவழியின்றி, அவற்றை ஏற்றுக் கொண்டனர். ஈழ தேசிய விடுதலை முன்னணிக் கூட்டணியினருள் ஈபிஆர்எல்எவ் மாத்திரமே சிறி சபாரதி தினம் கொல்லப்பட்டமைக்கும், இயக்கக் கூட்டணிக் குதி துரோகமிழைத்தமைக்கும் எதிராக ஒரு எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தும் துணிவைப்பெற்றிருந்தது. ஈரோஸ் மெளனம் சாதித்தது. விடுதலைப் புலிகளுக்குட் பொருத்தமில்லாதவர்கள் இணைந்துகொள்ள நல்ல இயக்கமென அவர்களின் தோளில் தட்டி ஊக்கமளித்தனர். பத்திரிகைகளும் திருச்சபைகளும் புதிய போக்கை எதிர்க்கவில்லை. இலங்கை இராணுவத்தின் செயல்களை வெளிப்படையாகக் கணிடித்த ஆயர் தியோகுப்பிள்ளையின் தலைமையிலான றோமன் கத்தோலிக்க திருச்சபை, தமிழர் மத்தியிலுள்ள ஆபத்தான கோழைத்தனப்போக்கிற்கும் அதன் மரத்துப்போன மனநிலைக்கும் எதிராகத் தமது பலமான நிறுவனத்தின் தார்மிக அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. தென்னிந்தியச் திருச்சபையின் (CSI) யாழ்ப்பாண மறைமாவட்டச் சஞ்சிகையான 'மோர்னிங் ஸ்ற்றார், களிப்புமிக்க மே மாதம் என்ற தலைப்பின் கீழ் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் இங்கு நடந்தவைகளால், ஆயுதப் போராட்ட இலட்சியம் பலவீனப்பட்டுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் நடந்த இலங்கை, இராணுவத் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டமை, அது உண்மையாயிருக்க வேண்டியதில்லை எனக் காட்டியது. மேலும், அத்தலையங்கம் அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த குண்டுத்தாக்குதலின் போது மக்கள் போராளிகளுடன் தோளோடு தோள் நின்றனர் எனச் சுட்டிக்காட்டியது.
மிகக் குறைந்த எதிர்ப்புடைய பாதையைத் தெரிந்து கொள்வதில் யாழ்ப்பாணத்தான் மிகப் புத்திசாலித்தனமானவனாக இருந்தான். அந்தப் பாதையில் அடிக்கடி ஏற்பட்ட திசை மாற்றம் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ரெலோவிற்கெதிராகப் பேசியவர்கள், விடுதலைப் புலிகளை அழிக்குமாறு

Page 62
92
இந்தியா ரெலோவுக்கு உத்தரவிட்டதால், விடுதலைப் புலிகளுக்கு வேறு வழியிருக்கவில்லை எனக் கூறினர். விடுதலைப் புலிகள் இந்தியாவின் நிலைப்பாட்டை நிராகரித்ததே அதற்குக் காரணமெனக் கூறப்பட்டது. இந்தியா அத்தகைய விருப்பத்தைத் தெரிவித்திருந்தாலும் ரெலோ அதை காத்திரமாக எடுத்துக்கொண்டதா என்பது வேறு விடயம். ரெலோவின் சந்தேகமான அரசியற் பின்னணியை ஓரளவு கவனத்திற் கொண்டாலும், அது விரைவில் அத்தகைய இலட்சியத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில் இருந்ததா என்பது அன்றைய யாழ்ப்பாண அவதானிகளுக்கு நம்பமுடியாத விடயமாக இருந்தது. அவர்களது அமைப்புச் சீர்குலைந்தும், பிளவுபட்டும் இருந்ததோடு, தொடர்புச்சாதன வசதியுமற்றிருந்தனர். சூழ்நிலையும் கல்வியங்காட்டில் சிறி சபாரத்தினம் குறிப்பிட்டதையும் நோக்கும் போது ரெலோ ஒரு மோதலை எதிர்பார்த்திருக்கவில்லை என்றே தோன்றியது. தனது பயிற்சி பெற்ற போராளிகளை அப்பொழுது யாழ்ப்பாணத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவ முகாமொன்றைத், தாக்கப்போகிறதென்ற வதந்தியின் மத்தியில் அதற்கு எதிர்மாறாகச் செய்து கொண்டிருந்ததெனவும் கூறப்பட்டது. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர், பொபி குழுவினரால் தாஸ் குழுவினரின் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் ரெலோவுக்குள் கடுமையான பிளவு ஏற்படும் முக்கிய சூழ்நிலை உருவானது. அதற்கு ஏழு மாதங்களின் பின்னர், கொலைகள் ஏதும் நடவாமலே, ஈபிஆர்எல்எவ். மீது தாக்குதல் தொடுக்க அதையொத்த வாய்ப்பு விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ். அரசியற் தலைவர் பத்பநாபாவுக்கும் அதன் இராணுவப் பிரிவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் எழுந்த கருத்து வேறுபாட்டினால் விண்ணந்த பிளவை விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர்.
மே மாதம் விடுதலைப் புலிகளுக்கும் ரெலோவுக்கும் இடையில் நடந்த மோதலுக்குச் சிறிது காலம் பின்னர், ஈபிஆர்.எல்.எவ் தலைவர் ஒருவர் தமது தலைமை, விடுதலைப்புலிகளின் தலைமையிடம் அவர்கள் உண்மையாக எதை விரும்புகிறார்கள் என்றும் என்ன நிபந்தனைகளின் அடிப்படையில் தாம் சேர்ந்து இயங்கலாமென்றும் விடுதலைப் புலிகளைக் கேட்டதாக ஒரு முக்கிய பிரசையிடம் கூறியுள்ளார். அதற்குத் தமக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர்கள், இந்தியாவின் பிறர்நலம் பேணும் பரித்தியாகப் பங்குபற்றி யதார்த்தத்துக்கு இசையாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அதேவேளை ஈழத்தைப் பெறுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்துவதில் தாம் எவ்வளவு சாமர்த்தியமானவர்களென்ற நினைவிற் களிப்புற்றிருந்தனர். தாம் இந்தியாவின் அரசியல் அறிந்துள்ளார்கள் என்றும் அதனாறி தமது இலட்சியங்களை அடைவதற்கு அதைக கையாளமுடியுமெனவும் அவர்கள் நினைத்தார்கள். இந்தியாவைப் பற்றிய தமிழரின் நோக்கில் முதன்மை வகித்த இந்தியாவின் பிறர்நலம் பேணும் பரித்தியாகமும் அதன் வஞ்சக நோக்கும் ஆகிய இரு அம்சங்கள் முறையே, உணர்ச்சியுடனும், யதார்த்தத்துடனும் தொடர்புடையவை. அதேபோல, ஆயுதப் பரிமாறல், பயிற்சி, தளவசதிகள், அங்கீகாரம் ஆகியவற்றுக்கான ஆரம்பச் சரணாகதிக்குப் பின்

93
எந்தவொரு ஆயுதப் போராட்ட இயக்கமும் இந்தியாவின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்குகின்றதெனப் பேசுவது கருத்தற்றதாகும். இந்நிலை, 1987 செப்ரம்பருக்குப் பின்னர், விடுதலைப்புலிகள் கணிசமான ஞாபகமறதியினாற் தொடர்ந்தும் முரண்படுநிலைமைகளை ஏற்படுத்தியதுடன் மேலும் கூர்மை அடைந்தது. உண்மையாகத் துன்பப்படுபவர்கள் தமிழ் மக்களே. வல்லரசு அரசியல் நடத்தைக்கமையத் தனது நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியாவுக்கு உரிமை உணர்டெனும் சிந்தனை மக்கள் மனதில் எதிதகைய முக்கியத்துவத்தையும் பெறவில்லை.
விடுதலைப் புலிகள் - ரெலோ மோதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டனர். ஒலிபெருக்கி பூட்டிய வாகனங்கள் எங்கும் சுற்றி வந்து நடந்தவையற்றிப் பேசவோ அவை பற்றி ஆராயவோ வேண்டாமென மக்களுக்குக் கூறியது. பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட முதலாவது தணிக்கைச் செயல் இதுவே. இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளும் ரெலோவும் இதற்கெனப் பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று சில நிகழ்ச்சிகள்பற்றி எழுதவேண்டாமெனக் கூறியுள்ளனர்.
ரெலோ தாக்கப்பட்டுப் பலவீனப்பட்ட பின், ஆயுதப் போராட்ட இயக்கத்தின் பலத்தைப் பீட்சித்துப் பார்ப்பதற்காகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு தாக்குதலை 1986 மே 20 மட்டில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனையிறவு முகாமிலிருந்து முதலில் வந்த இராணுவம் பளையில் திரும்பிச் சென்றது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து புறப்பட்ட ஒரு பகுதியினர் மண்டைதீவில் ஒரு கடற்படைத்தளத்தை அமைத்தனர். கோட்டைக்குள் ஹெலிக்கொப்டரை இறக்குகையில் அண்மையிலிருந்து சுடப்படலாம் என்பதால், படையினரைக் கோட்டைக்குப் பாதுகாப்பாக அனுப்புவதற்காகவே இத்தளத்தை நிறுவினர். இலங்கை இராணுவம் தொண்டமானாற்றிலும் வல்வெட்டித்துறையிலும் உள்ள தமது முகாம்களை விஸ்தரிப்பதிலும் வெற்றிபெற்றனர். மே மாதம் வரை மக்கள் மத்தியில் எழுந்த கேள்வி யாதெனில், இந்த முகாம்களில் ஒன்றைத் தாக்குவதற்குப் போராளிகள் எப்போது முனைவார்கள் என்பதாகும். இப்பொழுதுள்ள கேள்வி என்னவென்றால் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவம் எப்பொழுது தாக்குதலை ஆரம்பிக்கும் என்பதாகும். விடுதலைப் புலிகள் எதிர்ப்பதற்கும் கடினமான ஒரு எதிரியை உருவாக்கிவிட்டார்கள் என நன்கு உணரப்பட்டது.
விடுதலைப் புலிகளின் ஆதிக்க நிலைமையைப் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதற்கு ஒரு சாதகமான அம்சம் களவுகள் உண்மையில் இல்லாமற்போனமையாகும். ஏழைகளும் மத்தியதரவர்க்கங்களும் தம்பாட்டில் விடப்பட்டனர். விடுதலைப்புலிகள் மொத்த வர்த்தகர்களுடனும், பெரும்வியாபாரிகளுடனும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் அவர்களின் திருப்திக்கேற்ப ஏற்பாடுகளைச் செய்துகொண்டனர். இடைக்கிடை பெருந்தொகை கேட்டுக் கடத்தப்படுகின்ற தொல்லைகள் இன்றி அவர்கள் தமது லாபத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர். 1986 மே மாதத்துக்கு முன்னர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டார் என்று கூறப்பட்டால் முதல் நடவடிக்கை எடுக்கின்ற ஒரு ஆயுதப்

Page 63
94
போராளிக்குழு பெரும்பாலும் இரவிலே திடீரென அவர் இருக்குமிடத்திற்குப் பாய்ந்து விசாரணையை மேற்கொள்ளும். குற்றவாளியாகக் கருதப்படுபவர் சுடப்பட்டு மின்சாரக் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பார். அல்லது அவருடன் இணக்கப்பேச்சு நடத்தித் தகுந்த பணத்தைப் பெற்றபின் அவர் விடப்படுவார். 1986 மே மாதத்திற்குப் பின், குளிர்பானங்கள், சிகரெட் போன்ற பொருட்களின் விலைகள் அதிகரித்தன. நெருக்கடியான காலத்தில் வவுனியாவுக்கு வடக்கே ஒரு லீற்றர் பெற்றோல் ரூ.1350ற்கு விற்கப்பட்டபோது இங்கு லீற்றர் ரூபா 19ற்கு விற்கப்பட்டது. வழிப்பாதைகளால் பெற்றோல் கொண்டு வரப்பட்டமையால், போரின்விளைவாகத் தம் தொழிலைக் கைவிட்டிருந்த அநேக விவசாயிகளும், தொழிலாளர்களும் நன்மையடைந்தனர். அநேகர் சிறு அளவில் சைக்கிள்கள் மூலம் பெற்றோலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்து, விற்பனை செய்து இந்தப் பரஸ்பர உழைப்புக்காக ஒத்துழைத்தனர். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்கியது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைச் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு தலைமையாசிரியர் தந்தார்.
1987ம் ஆண்டு மே 26ம் "ஒப்பரேஷன் லிபரேஷன்" (Operation Liberation) நடவடிக்கை ஆரம்பித்ததை உடனடியாக அடுத்து அகதிகள் வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்குட் சொரியத் தொடங்கினர். அதனால் அரிசிக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவியது. அரிசியின் சாதாரணவிலை 15 கொத்து ரூபா 230 ஆகவிருந்தது. பெருமளவு அரிசியை வைத்திருந்த ஓர் அரிசி ஆலை உரிமையாளர், 50,000 ரூபாவை வரியாகச் செலுத்தி, அரிசியை ரூபா 400 வீதம் விற்றுப் பிரமிக்கத்தக்க இலாபத்தைச் சம்பாதித்தார்.
விடுதலைப் புலிகள் முற்றுமுழுதான ஆதிக்கத்தைப் பெறும் ஒரு முயற்சியை விரைவில் மேற்கொள்ளப்போவதாக இப்பொழுது எதிர்பார்க்கப்பட்டது. ஈபிஆர்.எல்.எவ். மாத்திரமே விடுதலைப் புலிகளுக்கு அறைகூவல் விடுக்கும் நிலையில் இருந்ததாகத் தோன்றியது. தமிழீழ இராணுவமும் (TEA) விடுதலைப் புலிகளின் ஆதிக்க நிலையை ஏற்றுக் கொண்டது. ஈரோஸ் மிகச் சிறிய ஒரு குழுவாக இருந்தது. அந்த இயக்கத்தின் அறிவுசார்ந்த கருத்துக்களுக்காகவும், ஒழுக்கக் கட்டுப்பாட்டுக்காகவும் மக்கள் மத்தியில் அது ஒரு காலத்தில் மதிப்புப் பெற்றிருந்தது. ஆனால் அது மார்க்ஸியத்தில் கொண்டிருந்த விசுவாசம் பெரிதும் சந்தேகத்துக்கிடமானதாக இருந்தது. சர்வோதய ஊழியரான கதிரமலையை அவ்வியக்கம் கொன்றமை அதன் நேர்மை பற்றிப் பலமான சந்தேகங்களைக் கிளப்பியது.
1986ன் மத்தியில் தெற்கிற் பரபரப்பான குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கட்டுநாயக்க விமானநிலையத்திற் புறப்பட ஆயத்தமாக நின்ற எயர்லங்கா பயணி விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தமை அவற்றுட் பிரதானமானது. கொழும்புக் கோட்டைப் பகுதியின் நடுவேயமைந்த மத்திய தொலைத் தொடர்பு அலுவலகத்துக்கு குண்டு வைத்துத்தகர்த்தமை, எலிபன்ற் ஹவுஸ் குளிர்பானத் தொழிற்சாலையில் குண்டு வைத்து வெடிக்கவைத்தமை, அனுராதபுரத்திலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன டிப்போவுக்கு குண்டு வைத்தமை என்பனவும் அவற்றுள் முக்கியமானவை. பொதுமக்கள்

95
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அனுராதபுரப் படுகொலைகளிற் போல், இங்கும், அடக்குவோரின் வழிமுறைகளையே அடக்கப்படுவோரும் கையாண்டுள்ளனர். மேலும், இது அடக்குவோரின் நோயுமெனலாம். அனுராதபுரப் பெற்றோலியக் கூட்டுத்தாபன டிப்போவில் வைக்கப்பட்ட வெடி குண்டுத்தாக்குதல், அநாமதேயப் பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டதாகும். அனுராதபுரத்திலிருந்து எரிபொருள் ஏற்றி வருவதற்காகப் புலோலிப் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து சென்ற பௌசருக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த வந்த பௌசர்கள் பல அங்கே வரிசையில் நின்றன. கொல்லப்பட்டவர்களுள் குண்டு வைக்கப்பட்ட பெளசரிற் பயணஞ்செய்த இருவரும் அடங்குவர். இக் குண்டு வெடிப்புகளுக்கு விடுதலைப் புலிகளோ ஈரோஸோ அல்லது இரண்டுமோ பொறுப்பானவை என்று சர்வதேசப்பத்திரிகைகள் பரவலாகக் கூறின. தமிழீழ இராணுவமும் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டது. ஏனெனில், 1984ல் எயார் லங்கா விமானத்துக்கு வைப்பதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து, குண்டுவைப்புடன் இவ்வியக்கம் தொடர்புற்றிருந்தமையாகும்.
அத்தாக்குதல்களுக்கு எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை. ஆனால் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கூற்றுக்கிணங்க, அறிவிலும், ஆய்விலும் மதிநுட்பத்திலும் வெளித்தோற்றத்தில் எல்லா இயக்கங்களையும் விட உயர்ந்தது எனக் காட்டிக்கொண்ட ஒரு ஆயுதப் போராளிக் குழுவின் சிரேட்ட உறுப்பினர்கள் தனிப்பட்டமுறையிற் தாமே பொறுப்பென உரிமை கொணர்டாடினர். வவுனியாவுக்கருகிற். பெரும்பாலும் சிங்களப் பயணிகள் செல்லும் பஸ்களிலும் குண்டுகள் வைக்கப்பட்டன. அந்தக் குண்டு வெடிப்புக்களில் இறந்தவர்களுள் இருவர் ஒரு வயதுபோன சிங்களவரும், அவரது மகனுமாவர். அவர்கள் இருவரும் தமிழ்ப்போக்குவரத்துத் தொழிலாளர்களை ஆதரித்து அனுசரிப்பதில் ஒருபோதும் பின்நிற்காதவர்கள்.
இந்த நிகழ்வுகள், வெளிநாட்டார் மனங்களில் இலங்கை இராணுவத்தினதும், தமிழ்ப் போராளிக் குழுக்களினதும் பயங்கரத்தை வேறுபடுத்துவதில் ஓர் தெளிவீனத்தை ஏற்படுத்தின. மேலும், இவற்றின் விளைவாகப் பெற்றோலிய எரிபொருட்கள், குளிர்பானங்கள், எரிவாயு ஆகியவற்றின் விலை ஏறியதுடன் யாழ்ப்பாணத்தில் அப்பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. சிங்கள மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள், தமிழ் மக்களின் பிரச்சினைபற்றிச் சிங்கள மக்களைக் கடுமையாகச் சிந்திக்க வைத்தன என அநேகர் கூறினர். அவை அவர்களைச் சிந்திக்க வைத்தனதான், ஆனால் மூர்க்கமான வழியில் மாத்திரமே சிந்திக்க வைத்த பயங்கரம் தமது சொகுசுக்குப் பாதகமாக அண்மிக்கும் போது சமாதானப் பேச்சு நடத்துமாறு பத்திரிகை ஆசிரியர்கள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததை எவருங் காணலாம். அவ்வாறே, ஒப்பரேஷன் லிபரேஷனின் போது பெற்றது போன்ற தற்காலிக இராணுவ வெற்றிகளை இராணுவம் பெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் இறுதி இராணுவத்தாக்குதல் நடத்துமாறு அதே அளவு வற்புறுத்தல்கள் செய்யப்பட்டன. எதுவித மனமாற்றமோ எதுவித சனநாயக மீள் உருவாக்கமோ

Page 64
96
இல்லாத நிலையில் பொதுசனத் தொடர்புச் சாதனங்களின் விரிவான தூண்டுதல்களோடு இது முழு விவகாரத்தையும் ஒரு அழிவு வேலையாக மாற்றிவிட்டது.
சிறிலங்கா இராணுவம் இடைக்கிடை செய்யும் ஷெல் தாக்குதலை நிறுத்தியதோடு, யாழ்ப்பாணத்திற் தற்காலிகமான ஒரு அமைதி நிலவியது. விடுதலைப் புலிகள் பிரதான நிறுவனங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கவனஞ்செலுத்தினர். பிரசைகள் குழுக்கள் பிரச்சினையாக இருக்கவில்லை. பல்கலைக்கழகம் தவிர்ந்து எவ்விடத்தும் பலாத்காரமோ பயமுறுத்தலோ தேவைப்படவில்லை. ஆஸ்பத்திரிகளிலும் நிருவாக அமைப்புகளிலும் வைத்தியர்களுக்கும் நிருவாக அலுவலகங்களுக்கும் தமது சுயமரியாதையைப் பாதுகாக்கும் அளவுக்குப் போதிய சுதந்திரம் வழங்கப்பட்டது. மக்கள் இயக்கங்கள் மூலமோ வேறு ஆயுதக் குழுக்கள் மூலமோ வெளிக்காட்டப்படாத கருத்து வேறுபாடு கொண்ட தனிநபர்களின் எதிர்ப்பு சகித்துக்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் தம் பக்கம் சேர்ந்த சில பத்திரிகையாள் மூலம் பத்திரிகையாளர் சங்கமொன்றை நிறுவியது. ஏனெனில் பத்திரிகையாளர் அநேகருக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினமாயிருந்தது. அரசாங்க வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சம்பள விகித அடிப்படையில் யாழ்ப்பாணப் பத்திரிகையாளருக்கு வழங்கப்படாமைபற்றித் தாம் அக்கறை கொண்டிருப்பதே பத்திரில:கயாளர் கூட்டத்தைத் தாம் கூட்டுவதற்கு காரணமென விடுதலைப்புலிகள் கூறினர். இது தொடர்பாக உதயன் ஆசிரியரும் ஏனையோரும் பேசினர். "பத்திரிகையாளரின் சம்பளம் அவர்களது சொந்த விடயம். அது ஆயுதப் போராட்ட அமைப்பின் விடயமன்று. நாம் எதைச் சிந்திப்பது, எதை எழுதுவது என்று எவரும் கட்டுப்படுத்தமுடியாது" என அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆயினும் இந்தத் துணிவான வார்த்தைகள் நடைமுறையிற் பிரதிபலிக்கவில்லை. குறிப்பிட்ட சில எல்லைகளைத் தாண்டுவதற்கு ஒருவர் மிகவும் துணிவானவராக இருக்கவேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஈழநாடு பத்திரிகை நிருவாகம் புதிய நிர்வாகச் சூழ்நிலையில் குறிப்பிட்ட ஓர் பத்திரிகையாளர் அங்கு பணி செய்வது தமக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும் எனக் கருதி அவரை வேலை நீக்கம் செய்தது.
குறிப்பு:
1989 நொவம்பர் 6ம் திகதி, சண்முகலிங்கம் என்னும் அப்பத்திரிகையாளர் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச்செல்லப்பட்ட பின் அவரைக் காணமுடியவில்லை.
விடுதலைப்புலிகள் இயக்கம் கிராமிய நீதிமன்றங்கள், சிற்றுரவைகள், கலாச்சாரக் குழுக்கள், அபிவிருத்திக் குழுக்கள் போன்ற அமைப்புகள் நிறுவி மேலும் முன் சென்றது. விடுதலைப்புலிகள், இந்த அமைப்புகளில் பணியாற்றிய ஆட்கள் மீது தனிப்பட்ட வகையில் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதபோதும் அவர்களைத் தற்காலிகமாக பயன்படுத்துவதாகாகவே கருதினர். "அபாயகரமான நாட்களிலும், இலங்கை இராணுவம் எங்களைத் தேடி வேட்டையாடிய போதும்

97
எங்களோடு முன்னர் நின்றவர்கள் இன்று துடைப்பத்தடியாற் கூட எங்களைத்தொட மறுக்கிறார்கள். ஆனால், பெரும் எண்ணிக்கையில் எங்களோடு இன்று வந்து சேருபவர்கள், எங்களாற் 'சமூகவிரோத சக்திகள் என முன்பு இனங்காணப்பட்டவர்கள்தாம். ஏன் இது?" என்று விடுதலைப்புலிகளின் உயர்தலைவர் ஒருவர் தனது பழைய நண்பனும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான ஒருவரைக் கேட்டார். அந்த நண்பர், "உங்களை நீங்கள் அறிந்து கொள்வதில் உங்களுக்கு சிரமமேதும் இருக்க முடியாது' என்று பதிலளித்தார்.
யாழ்ப்பாண மக்கள் மந்தை வாழ்க்கை வாழத் தொடங்கினர். முன்னர் இலங்கை அரசின் அடக்குமுறையை எதிர்க்கும் உணர்வைக் காட்டிய மக்கள் இப்பொழுது ஜோர்ஜ் ஓர்வலின் "விலங்குப்பண்ணை' (Animal Farm) நூலில் வரும் விலங்குகளின் விலங்குப் பணிணை சமாதானத்தை இப்பொழுது அனுபவித்தார்கள். தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அதுபற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விTதரன், ரஜாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டர்கள். இளைஞர்களின் இலட்சிய வேட்கையை அடக்க முடியவில்லை என்பது ஆறுதல் தரும் ஒரு சிந்தனை.
1988 நொவம்பர் ஆரம்பத்தில் இரு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. அவை அடிப்படைச் சுதந்திரங்களை மீறுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்திலே மக்கள் எதிர்ப்பைக் கிளப்பிய இறுதியான இரு நிகழ்வுகளாகும். இது 1980களின் ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக நடந்த மக்கள் எதிர்ப்பு போன்றதன்று. அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. இப்போதையது, பெரும்பாலும் பின்னணிப் பாதுகாப்பு நடவடிக்கையாக இருந்தது. அந்த எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில் அரியதொரு துணிவைக்காட்டினர்கள். இவ்விரு நிகழ்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடந்தவையாகும். --
அருணகிரிநாதன் விஜிதரன் என்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வர்த்தகத்துறை மாணவர். 1986 நொவம்பர் 4ம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து காணாமற்போகும்வரை, அவரைப்பற்றிப் பொதுவாக யாருக்கும் தெரியாது. விஜிதரன் ஏன் கடத்தப்பட வேண்டுமென்பது பொதுவான கேள்வியாக இருந்தது. அவர் அரசியல் ஈடுபாடில்லாத கேளிக்கைப்போக்கான சாதாரண மாணவன். இந்த அம்சமே அவரைக் கடத்தியது பற்றிச் சில சந்தேகங்களை எழுப்பியது. அவர் முக்கியமான ஒருவரைச் சிறிது பாதிக்கின்றதும் அதேவேளை மாணவர்கள் எவரும் அது பற்றி கூறவிரும்பாததுமான கருத்துக்களைக் கூறினாரா? இவை பற்றிய உண்மையை நாம் என்றுமே அறியாமல் போகலாம்.

Page 65
98
மாணவர்களால் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை. அவர்கள், யாழ்ப்பாணத்திலே மக்களின் பாதுகாப்புக்காக அங்கு செயற்படுகின்ற நான்கு ஆயுதப்போராட்டக் குழுக்களே பொறுப்பெனப் பொதுவாகக் கூறினர். மேலும், அவர்கள் எல்லாவிடங்களிலும் பாதுகாப்பு அரண்களைக் கொண்டிருப்பதால் அவர்களுக்குத் தெரியாது ஒருவர் மறைந்து போவது கடினமானதாகும். தாம் ஏற்றுக்கொண்ட கடமையை நிறைவேற்றி, விஜிதரனைக் கொண்டுவருமாறு ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவர்கள் பயங்கொண்டதுடன், எந்தவொரு ஆயுதப்போராட்டக் குழுவுடனும் மோதும் நிலையிலும் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டக் குழுக்களுடன் இதுவிடயமாகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர், மாணவர்கள் இந்த விடயத்தைப் பகிரங்கப் படுத்துவதில் மிகவும் அவசரப்பட்டு விட்டார்கள் என்ற உணர்வை வெளியிட்டார். மறுபுறத்தில், மாணவர்கள் தாம் மெளனமாக இருந்தால் மாணவர்கள் மறைந்து போகும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என உணர்ந்தனர். ஒரு திருப்திகரமான பதில் கிடைக்காததால், நொவம்பர் 19ம் திகதி மாணவர்கள் உண்ணாவிரத இயக்கத்தை ஆரம்பித்தனர். அந்த இயக்கத்திற், பல்கலைக்கழக நிருவாகக் கட்டிடத்துக்கு முன்னால், தற்காலிக கிடுகுக் கொட்டகையில், ஆணிகளும் பெணிகளுமாக ஆறுபேர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
அடுத்த பத்து நாட்களும், அக்கால நிகழ்வுகள் பற்றித் தமது உணர்வுகளை அடக்கி வைத்திருந்த எல்லோரதும் கவனத்தையும் ஈர்க்கும் நிலையமாகப் பல்கலைக்கழகம் மாறியது. உண்ணாவிரதமிருந்த மாணவர்களுடன் தம்மை இணைத்துக்கொண்ட ஒரு முக்கியமான மக்கள் குழு, விசேஷமாகப், பாஷையூரைச் சேர்ந்த பெண்களாவர். வேறொரு சம்பவத்தில், எட்வர்ட் என்பவர் கொல்லப்பட்டது தொடர்பாகவே அப்பெணிகள் உண்ணாவிரதத்திற் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. பாஷையூர், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து கடற்கரை ஒரமாக கிழக்கே மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மீன் பிடிக் கிராமமாகும். இங்குள்ள மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர்கள்.
அவர்கள் இயல்பாகவே, தம்மைத்தாக்குபவர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் இயல்புடையவர்கள். எட்வர்ட் என்பவர் சவூதி அராபியாவிலிருந்து வந்தவர், அவரது குடும்பம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானதெனக் கூறப்பட்டது. அவர்கள், தமது அயலவருடன் ஏற்பட்ட காணித்தகராறு விடயமாக தமது பங்குக் குருவானவரைக் கலந்தாலோசித்தனர். அது திருப்தி அளிக்காததால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரியாலைப் பொறுப்பாளரான மலரவனை அழைத்தனர். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எட்வர்ட்டின் தாயார் மலரவனைப் புணர்படுத்தும் வார்த்தைகளைக் கூறிவிட்டார் எனக் கூறப்பட்டது. அதைக் கேட்ட மலரவன், அவரைத் தாக்குவதற்காகக் கையை உயர்த்தினார். அதைப் பார்த்த எட்வர்ட் மலரவனை அடித்தார். அதன் பின்னர் எட்வர்ட் அரியாலை முகாமுக்கு விசாரணைக்காக வருமாறு கேட்கப்பட்டார். என்ன நடக்குமோ எனப் பயந்த எட்வர்ட் பாஷையூர் பங்குக் குருவானவருடன்

99
தொடர்புகொண்டார். பங்குக் குருவானவர் முகாமுக்குச் சென்று, எட்வர்ட் சிறு விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவார், அவருக்கு எதுவித ஊறும் விளைவிக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியைப் பெற்றார். பங்குக் குருவானவர் எட்வர்டுடன் முகாமுக்குச் சென்று காத்திருந்தார், எட்வர்ட் உள்ளே கொண்டுசெல்லப்பட்டார். இருபது நிமிடங்களின் பின்னர் எட்வர்ட் இறந்துவிட்டதாகப் பங்குக் குருவானவருக்கு கூறப்பட்டது. அதைக் கேட்ட குருவானவர் மயங்கி விழுந்தார். பின்னர், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எட்வர்ட்டின் உடலைப் பார்க்கச் சென்றவர்கள் அவரது உடலில் எந்தவொரு எலும்பும் உடையாமல் விடப்படவில்லை எனக்கூறினர். அதன் பின்னர், யாழ்ப்பாண விடயங்கள் வழமைக்கு மாறான நிலைக்குத் திரும்பின. பாஷையூர் அந்தோனியார் கோயில் முன்றலிற் பெண்கள் பெருந்தொகையினராகத் திரண்டு, கையால் எழுதப்பட்ட சுலோகங்களைத் தாங்கிய வண்ணம், பல நாட்களாக இக் கொலைக்கு எதிராகத் தம் எதிர்ப்பைக் காட்டினர்.
அன்னையர் முன்னணி உட்பட மத்திய தர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட மகளிர் அமைப்புக்கள் அனைத்தும் உள்ளார்ந்த அடக்குமுறையினாற் தமது உரிமைக்குரலை இழந்து விட்டன.
பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கும் வெளியேயும் சென்று பாடசாலை உயர் வகுப்பு மாணவர்களுக்கு உரையாற்றினர். அதன் விளைவாக, அம்மாணவர்களும் பாடசாலையை விட்டு வெளிவந்து, வீதிமறிப்புப் போராட்டங்களிலும், ஊர்வலங்களிலும் பங்குபற்றினார்கள். இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது ஆயுதங்களையும் தொடர்புச்சாதனங்களையும் சென்னையில் இந்தியப் பொலிஸார் பறிமுதல் செய்தது. அதன் காரணமாக அவர் காந்தியின் பாணியில் உண்ணாவிரதத்தை நடத்தியது அன்றைய நிகழ்வுகளுக்கு ஓர் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. அதாவது வணி முறைக்கான உபகரணங்களை மீளப்பெறுவதற்காக சாத்வீக எதிர்ப்புக் காட்டப்பட்ட ஓர் விநோதமும் நடந்தது! மாணவர்களின் இலட்சியத்துக்கான எதிர்ப்பு ஊர்வலங்களும், பிரபாகரனின் இலட்சியங்களுக்கான ஊர்வலங்களும் சிலவேளைகளில் ஒன்றையொன்று குறுக்கிட்டுக் கொண்டன. இந்த நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. அவற்றுட் பெரும்பாலானவை மாணவர்கள் தமது உணர்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்பதை ஆதரித்தன. மாணவர்கள் மிக அவசியமான பணியை மிகத் திறமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள் எனச் சிலர் உணர்நீதனர். ஆனாலி தமிழிச் சமூகம் உண ணாவிரதமிருப்பவர்களின் மரணங்களுக்கு தகுதியுடையதாயிருக்கவில்லை. அவர்கள் இறந்து போனால் முக்கியமான ஆறு தலைவர்கள் இழக்கப்படுவார்கள். அப்போது மக்கள் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டுப் பழைய போக்கில் வாழ்வார்கள். அதனால் எதனையும் சாதித்ததாய் இருக்காது. அநேகள் உண்ணாவிரதத்திற்கு விரோதமாக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னால் அனைவரும் ஐக்கியப்படும்

Page 66
()()
நேரத்திற் தமிழரகள் பிளவு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அவர்கள் நினைத்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்தை எதிர்த்து ஜீவ மரணப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது தொலைந்துபோன ஒருவருக்காக கருத்தற்ற ஒரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பல்கலைக்கழக ஆசிரியர் ஒருவர் கூறியதையிட்டு மாண்வர்கள் மனமுடைந்து கோபமுற்றார்கள். அத்தகையவர்கள் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் ஒருவர் நூறு பேராக அதிகரிக்கலாம் என்பதை அவர்கள் உணரவில்ைலை. அத்துடன் விடுதலைக்கான போராட்டத்தின் போது இத்தகைய போக்குகளைத் தமிழ்ச்சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதனால், விடுதலைக்கெதிரான நிலைக்கே இது இட்டுச் சென்று இறுதியில் ஆயுதப் போராளிகளின் அர்ப்பணிப்புகள் உட்பட எல்லாப் பரித்தியாகங்களும் கருத்தற்றதாகப் போய்விடும் என்பதும் கணக்கிற்கொள்ளப்படவில்லை.
யாழ்ப்பாணப் பத்திரிகைகள் இராஜதந்திரமாக எல்லா இயக்கங்களினது அறிக்கைகளுக்கும் சமத்துவமான முக்கியத்துவம் கொடுத்துப் பிரகரித்தன. ஈ. பி.ஆர்.எல். எவ் மாணவர்களை ஆதரித்து நின்றது. ஈரோஸ் தன் இயல்புக்கேற்ப மதில் மேற் பூனையாக இருந்தது. கவலைக்குரிய விதமாகக் தங்கள் எதிர்ப்பு, விடுதலைப் புலிகளுக்கு எதிரானதும், அதேவேளை அவர்களுடன் நேரடியாக மோத விரும் பாததுமான போட்டிக்குழுக்களின் உந்துதலின் பின்னணியில் நடைபெறுகிறதென மாணவர்கள் அறிந்திருந்தனர். பல்கலைக்கழகத்தில் ஈ.பி.ஆர்.எல். எவ் தலைவர் ஒருவர் உரையாற்றினார். அவர் பேப்போகும் விஷயம் பற்றி மாணவர்களிடம் முன் அனுமதி பெறாத அப்பேச்சானது இந்தக் கருத்துக்கு மேலும் வலுவூட்டுவதாய் அமைத்தது.
மாணவ தலைவர்களில் இருவர் புளொட்டினதும் ஈ. பி.எல். எவ் வினதும் முன்னாள் உறுப்பினர்களாயினும், அவர்கள் வெறுமனே விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மாத்திரம் எதிரானவர்கள் அல்லவெனக் கிடைக்கப் பெற்ற தகவல்கள் பலமாக வலியுறுத்தின். ஆனால், இப்பொழுது, இந்தியாவின் ஆதரவை அனுபவிக்கின்ற எல்லாக் குழுக்களினதும் ஜனநாயக விரோத இராணுவவாதப் போக்கும் பற்றி வெறுப்புப் கொண்டிருந்தனர். எதிர்ப்பைக் கைவிடுமாறு மாணவர்மீது பலமான நிர்ப்பந்தம் செலுத்தப்பட்டது. மேலும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அதனாற் தர்மசங்கட நிலைக்குள்ளானது. ஆனால் அதை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்பது பிரச்சினையாக இருந்தது. Lu J Grü Lu J fò ஏற்றுக்கொள்ளத்தக்க சூத்திரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த எதிர்ப்பை மெச்சியவர்களும் அது போதுமான காலம் நீண்டு விட்டது, அதை மேலும் நீடிப்பதால் எத்தகைய நோக்கமும் நிறைவேறாது எனக் கருதினர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உட்படப் பல பிரமுகர்களும், அமைப்புக்களும் ஒரு தீர்வை ஏற்படுத்த முன்வந்தனர். சிலர் ஓரளவு நன்மை செய்ய விரும்பினர். ஏனையோர் சிக்கலான வேறு காரணங்களைக் கொண்டிருந்தனர்.

0.
விடுதலைப் புலிகளின் நடத்தை குழப்பமானதாயிருந்தது. அவர்கள் மாணவர்களுக்கு அனுதாபமாயிருக்கிறோம் என்றும், விஜிதரனி கண்டுபிடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுப்போம் என்றும் முதலிலேயே கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் எதிர்ப்பு ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர்கள் ஆணவமான போக்கைக் கடைப்பிடித்தனர். எதிர்ப்பிலே இணைந்து கொண்ட பாடசாலை மாணவர்கள், தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியிலும், யாழ்ப்பாண இந்துக்கல்லூரிக்கு அண்மையிலும் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களாற் பயமுறுத்தப்பட்டனர். பின்னர் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மாணவரின் பெயர் விசேடமாகக் குறிப்பிடப்பட்டது. சிரேட்ட விரிவுரையாளருக்கான பொது அறையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஒரு கூட்டத்துக்குக் கிட்டு அழைக்கப்பட்டார். அங்கே, அவர் எமது தளபதி என அறிமுகப்படுத்தப்பட்டார். அங்கே ஏன் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதென எவரும் ஆச்சரியப்படும்வகையிற் பல்கலைக்கழக உறுப்பினர்கள் மெளனம் சாதித்தனர். ஒரு ஆயுதப்போராட்டக்குழு விஜிதரனைக் கடத்தியிருக்குமானால், இதிதனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அது உணர்மையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் கிட்டு வாதிட்டர். அவர் விடுவிக்கப்படலாம். அதற்கு ஓரளவு காலம் எடுக்கலாம் எனத் தமது நிலைப்பாட்டைக் கூறினார். மேலும், அவர், செல்வபாலா போன்ற துரோகிகள், மாணவர்கள் என்பதற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ மன்னிக்கப்படமாட்டார்கள் எனவுஞ கட்டிக்காட்டினார். யாழ்ப்பாணக் கல்லூரி தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனுக்குக் கிட்டுவையும் ஏனைய முக்கிய விடுதலைப் புலி இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு ஆயுதமும் பணமும் வழங்கப்பட்டிருந்தது என அவர் அங்கு சுட்டிக்காட்டினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி நிலையமான நிதர்சனம் தொலைக்காட்சியில் சிங்கப்பூர் பாணியில் தோன்றித் தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், செல்வபாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.
இறுதியாக, உண்ணாவிரதத்தை முடித்துவைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டது. விடுதலைப் புலிகள் விஜிதரனைத் தேடிக்கண்டு பிடிப்பதாக உறுதி அளித்தனர். சதிக்கதைகள் பலவற்றைப் போல் விஜிதரன் பற்றிய உண்மையும் நீண்டகாலத்துக்கு வெளிவராது. பல்கலைக்கழக மாணவரைப் பொறுத்தவரை, பொது விவகாரகங்களில் அவர்களது பங்களிப்புத் தற்காலிகமாக முடிவுற்றது. அவர்களது பலவீனங்கட்கும் தவறுகளுக்கு மத்தியிலும் அவர்களது பங்களிப்பு மகத்தானதொன்று. அவர்களைப் பார்க்கிலும் அதிக அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர்கள் தலைமைதாங்கி நடத்தவேண்டிய பணிகளைச் செய்யுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். தமிழ் மக்களைப் பொறுத்த வரை, இன்னொரு தீபம் அணைந்துவிட்டது. இப்புதிய போக்குக்குக் கீழ்ப்படிய மறுத்து எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்குத் தலைமைதாங்கிய விமலேஸ்வரன் என்ற மாணவர் தலைவன் தன் பெறுமதிமிக்க அர்ப்பணிப்பைச் செய்தார். 1988 ஜுலையில் அவர் கொலைசெய்யப்பட்டார்.

Page 67
102
உயர் வர்க்கப் பெண்களின் ஊசலாடும் மனநிலையுடன் ஒப்பிடும்போது தாழ்ந்த வர்க்கங்களிலிருந்து வரும் பெண்களின் இயற்கையான எதிர்ப்புணர்வு குறிப்பிடத்தக்க அம்சமாகும். விடுதலைப் புலிகளுக்கும் ரெலோவுக்கும் இடையில் நடந்த இயக்க மோதலை நிறுத்துவதற்காக கிழக்கு மாகாணக் கிராமியட் பெண்கள் உலக்கைகளைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். 1988 டிசெம்பர் 14ம் திகதி விடுதலைப் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைத் தாக்கியபோது, யாழ்ப்பாணத்திற் கீரிமலை, மல்லாகம் ஆகிய கிராமங்களுக்கருகே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குசினிக் கத்திகளையும், மிளகாய்த்தூளையும் கையிற் கொண்டு, வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்த்தனர். அதே பெண்கள், இந்திய இராணுவம் இங்கு வந்தபோது, அவர்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தனர். 1987 ஒக்ரோபர் மாதத்துக்குப் பின்னர், பருத்தித்துறையில் இப்பெண்களிற் சிலர், மீன் சந்தையில் இந்திய இராணுவத்தினருக்கு மீன்களை உயர்விலையில் விற்க வேண்டுமெனத் தீர்மானித்தனர். இந்திய இராணுவச் சிப்பாய்க்கு அடுத்து மீன்வாங்கிய ஒரு வாடிக்கையாளர் இதை அவதானித்து விட்டுக் கேட்டபோது மீன் விற்றுக் கொண்டிருந்த பெண் "அவர்கள் சாப்பிடத்தானே இங்கே வந்தர்கள்? இல்லையா?" என்று பதில் அளித்தார்.
இந்த விவகாரத்தின்போது, நேர்மையாக எழுதிய ஒரு பத்திரிகையாளர் ஈழமுரசு ஆசிரியரான திரு.எஸ்.எம்.கோபாலரத்தினம் ஆவார். அவர் முன்னர் ஈழநாட்டின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மாணவர் எதிர்ப்பிற்குச் சிறிது காலத்திற்கு முன்னர், 'ஈழமுரசு’ ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த நெருக்கடி காலத்தில், அவர் துணிகரமான ஆசிரிய தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்மக்கள் மத்தியில் ஐக்கியத்தின் அவசியம்பற்றி அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஈபிஆர்எல்எவ்வைத் தாக்கியபோது, தாம் கைவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வுத்தெளிவுடன் இறந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களைப்பற்றித் தனது கவலையை வெளிப்படுத்தி ஆசிரிய தலையங்கம் எழுதினார். தமிழர்கள் ஐக்கியப்படத்தவறியமை, அவர்களை எதிரிகள் முன் அம்பலப்படுத்தியுள்ளதென அவர் கூறினார். அவர் அப்பத்திரிகைக்குப் பொறுப்பேற்று இரண்டு மாதங்களின் பின்னர், அப்பத்திரிகை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகத்தின் கைக்கு மாறியது. ஆயினும் விடுதலைப் புலிகள் அவரைக் கெளரவமாக நடத்தியதால் சுயாதீனமான சிலவற்றை அவரால் தொடர்ந்தும் எழுதமுடிந்தது. பல்கலைக்கழக சிரேட்டவிரிவுரையாளர் பொது அறையின் முகாமைத்துவம் பலரும் அன்புடன் எஸ்.எம்.ஜி. என்று அழைக்கும் அவருக்கு எதிர்பாராத ஒரு கெளரவத்தை அளித்தது. எஸ்.எம்.ஜி. ஈழமுரசிற் சுதந்திரமாகத் தனது ஆசிரியர் கருத்துக்களை எழுதியபோது, அப்பத்திரிகை மட்டுமே அப் பொது அறையினுட் தவிர்க்கப்பட்டது. 1987 ஜனவரி முதலாந்திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகாமையின் கீழ், அப்பத்திரிகை வந்த ஓர் மாதத்தின் பின் அப்பத்திரிகை திரும்பவும் பொது அறையிற் தோன்றியது. எஸ்.எம்.ஜியைப் பொறுத்தவரை, விடுதலைப் புலிகள் புத்திஜீவிச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்கிலும் பத்திரிகையின்

103
உயர்தரத்துக்கு மதிப்புக் கொடுக்க முனைந்திருக்கலாம். விடுதலைப் புலிகள் தம்மோடு நேர்மையாகப் பழகுபவர்களுக்கு பெரும்பாலும் மதிப்பளித்தார்கள்.
55 ஆயுதப் போராளிகளுக்கிடையே வேறுபாடுகள்
விடுதலைப் புலிகள் இயக்கம் உள் முரண்பாடுகளற்ற ஒரு தனி இயக்கமென இதுவரை மக்கள் கருதி வந்தனர். ஆனால், 1986ன் பின் அரைக்கூற்றில், தனக்கெனத் தனித்துவமான அரசியலைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் நிலவிய வேறுபாடுகளும், மோதல்களும், தனிப்பட்ட அபிலாசைகளும் புலனாகத் தொடங்கி, அவை பற்றிப் பேசப்பட்டன. அவ்வியக்கத்துடன் நல்லுறவு வைத்துக் கொண்டிருந்தவர்கள், யாழ்ப்பாணத் தலைவர் கிட்டுவுக்கும், வவுனியாத்தலைவர் மாத்தயாவுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றிப் பேசினர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதலைப் புலிகள் பகட்டினாலும் சுகவாழ்க்கையினாலும் பழுதாக்கப்பட்டு விட்டார்கள் என மாத்தயா கருதுவதாகக் கூறப்பட்டது. 1986 மே நிகழ்வுகளின் பின் மூத்த உறுப்பினர்கள் பலர் இயக்கத்தை விட்டு விலகினர். தீவுப்பகுதிக்குப் பொறுப்பாயிருந்த காண்டீபனும் அவர்களுள் ஒருவர். இயக்கத்தைவிட்டு விலகிய பின்னர் அவர் தனது பழைய இயக்க உறுப்பினர்களைச் சந்திக்க விரும்பாது, அரியாலையிற் தமது வீட்டில் எதிலும் ஈடுபடாது இருந்தார். விடுதலைப் புலிகள் அவரைத் தமது இயக்கத்தில் மீண்டும் சேர இசையவைப்பதற்காக அவருடன் பேச விரும்பினர். காணிடிபணி ஆற்றல் மிக்க இராணுவ வீரனி. கடற்கண்ணிவெடிகளைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கினார். அநேக மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு விலகியதாற், கீழ்மட்ட உறுப்பினர்கள் மனந்தளர்ந்திருந்ததாகக் கூறப்பட்டது. பலாத்காரமாகக் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வதற்காகக் காண்டீபன் இருதடவை சுற்றிவளைக்கப்பட்டார். ஆனாற், காண்டீபன் வீட்டுக்குள் ஒடிச்சென்று சயனைட்டை விழுங்கிவிட்டர். விடுதலைப் புலிகள் இயக்கம் அவரது மரணத்தை உறுதிப்படுத்துவதைதி தாமதப்படுத்தியதுடன் அதிகாலையிலேயே அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு அவரது குடும்பத்தை நிர்ப்பந்தித்தது. ரெலோவுடன் நடந்த மோதலின்போது புலிகள் உடனடியாகத் தீவுப் பகுதிக்கு தமது போராளிகளை அனுப்பி வைத்தனர். ஆனால் இலங்கை அரசாங்கம் மண்டைதீவைக் கைப்பற்ற முனைந்தபோது அவர்களை எதிர்க்க காண்டீபன் நியாயமான குறைந்தளவு ஆயுதங்கள் மாத்திரமே தேவைப்படுகிற ஒரு திட்டத்தை புலிகளின் மேலிடத்திற்குச் சமர்ப்பித்தார். ஆனால் தனது இயக்கம் அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லையெனக் காண்டீபன், தான் மரணமடைவதற்கும் முன்னர் தனது பழையநண்பர்களில் ஒருவருக்குக் கூறியிருந்தார். இதனால் மண்டைதீவி இழக்கப்பட்டது. காண்டீபன் மனமுடைந்தார். 1988 ஒக்ரோபரில் அடம்பனில இலங்கை இராணுவத்துடன் நடந்த சண்டையில் மன்னார்த் தலைவர் விக்ட கொல்லப்பட்டார். இச்சண்டையில் இலங்கை இராணுவத்தினர் பதின்மூவ கொல்லப்பட்டனர். இருவர் உயிரோடு பிடிக்கப்பட்டனர். விக்டரின் சடலப பிடிபட்ட இரண்டு இராணுவத்தினருடனும், ஒன்பது சிறிலங்கா இராணுவத்திை

Page 68
04
சடலங்களுடனும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது. பிடிபட்ட இரு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் சடலங்களும் நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கருகிற் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்தவகையான கணிகாட்சிகளில் இது முதலாவது கண்காட்சியாகும். ஆயிரக்கணக்கான மக்கள் அதைப் பார்வையிட்டனர். விக்டரின் சடலம் இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிடுவதற்காக, இராணுவமரியாதையுடன் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டது. கிட்டு இது தொடர்பாகக் கூட்டங்களில் உரையாற்றி தமது படிமத்தைக் கணிசமாக உயர்த்திக் கொண்டார். விக்டர் விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களைப் போல் தனது சக போராளிகளுடன் போர்க்களத்தில் நின்றார் என்ற கிட்டுவின் கூற்றுப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. அந்தக் கூற்று பிரபாகரனுக்கு நேரடியான அறைகூவலாகக் காணப்பட்டது. அதற்கு முன்பான பல ஆண்டுகளாகப் பிரபாகரன் சென்னையில் இருந்தார். பிரபாகரன் கிட்டுவை மட்டந்தட்டி விடுவார் என்ற உணர்வும் பரவலாக நிலவியது. 1987 ஜனவரியில் பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்கு வந்தமை கிட்டுவின் அபிலாசைகளுடன் ஓரளவு தொடர்புடையதென நம்பப்பட்டது.
1988 டிசெம்பர் 14ம் திகதி ஈபிஆர்.எல்.எவ், புளொட், தமிழீழ இராணுவம் ஆகிய இயக்கங்கள், விடுதலைப் புலிகளாற் கலைக்கப்பட்டன. வடமாகாணத்தில் ஈபிஆர்எல்எவ். போரிடாது முகாம்களை விட்டு ஓடியது. தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்ட இடங்களைக் காட்டித்தருமாறு சித்திரவதை செய்யப்பட்டனர். இக்கட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய குழுக்களுக்கும் இடையே கண்ணோட்டத்தில் உள்ள பண்பளவிலான வேறுபாடு என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம். தலைமையின் உத்தரவுகளை கணிமூடித்தனமாக நிறைவேற்றுவதற்கே விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பயிற்றப்பட்டுள்ளார்கள். இலங்கை இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதில் விடுதலைப்புலிகள் காட்டிய அதே அளவு துணிவையே ஏனைய குழுக்களும் காட்டியுள்ளார்கள் என்பதிற் சந்தேகமில்லை. ஆனாற் சகோதர ஆயுதப்போராட்டக் குழுவுடன் மோதல் ஏற்பட்டபொழுது ஏனைய குழுக்கள் ஓரளவு தயக்கமும் கலக்கமும் அடைந்தார்கள். அக்குழுக்களிடம் சகோதரத் தமிழர்களைக் கொல்வதையிட்டு அனுதாப உள்ளுணர்வு ஓரளவு இருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவி உறுப்பினர்களிடையே, விடுதலைப் புலிகளுடன் குருதி சிந்தும் மோதலுக்குப் போக வேண்டுமா அல்லது வெறுமனே தலைமறைவாகி விடுவதா என்ற பிரச்சினையிற் பிளவு நிலவியதாக, உடுவிலில் அமைந்திருந்த அவர்களது முகாமின் அருகே வசித்த ஒரு அவதானி கூறினார். இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண முன்னரே அங்கு வந்ததன் மூலம் ஆயத்தமில்லாத நிலையிலிருந்த அவர்களை விடுதலைப் புலிகள் பிடித்து விட்டனர். கலைந்து போவதை விட வேறு எதையும் செய்ய அவர்களால் முடியவில்லை. ரெலோவுக்குள் நிலவிய பிளவைப் பயன்படுத்தியது போல் ஈபிஆர்எல்எவ்வுக்குள் இராணுவப் பிரிவுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பத்மநாபாவுக்கும் தலைமை வகித்தோருக்கும் இடையே நிலவிய பிளவையும், விடுதலைப்புலிகள்

105
காத்திருந்து பயன்படுத்தினர். இந்தக் குழப்பத்தின் மத்தியில், விஜிதரன் விவகாரத்தில் அரசியல் ரீதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஈயிஆர்.எல்.எப் அறைகூவல் விட்டிருந்தது. ஈபிஆர்.எல்.எவ். விடுதலைப் புலிகளிடமிருந்து இதற்கு இராணுவரீதியான பதிலை எதிர்பார்த்தபோதும் தாம் என்ன செய்யவேண்டுமென்ற முடிவேதும் எடுக்காதிருந்தனர். புளொட் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கிலும், மத்தியிலும் உயர்சாதி மத்தியதர வர்க்கத் தமிழர் மத்தியிற் பலமான அத்திவாரத்தைக் கொண்டிருந்தது. மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கு அழுத்தம் கொடுக்கின்ற அரசியல் வேலைத் திட்டத்தையும் அவ்வியக்கம் வைத்திருந்தது. மக்களோடு பழகுவதில் ஒழுக்க கட்டுப்பாடான இயக்கம் என்ற படிமத்தைச் சில வட்டாரங்களில் உருவாக்க இவை இரண்டும் கூட்டாக உதவின. ஆனாற், புளொட் உறுப்பினர்கள் உயர்சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் ஏற்பட்ட பல சச்சரவுகளில் உயர்சாதியினரால் பயன்படுத்தப்பட்டனர்.
தமிழ் நாட்டில் நிகழ்ந்த உட்கொலைகள், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இரு பயங்கர நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் விளைவாக 'புளொட் 1985ல் மதிப்பிழந்திருந்தது. யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் 1985ல் தனது உறுப்பினர்களான பெண்கள் ஐவர் புளொட் உறுப்பினராற் கொல்லப்பட்டனர். மேலும், 1985 தொடக்கத்தில் சுழிபுரத்தில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஏழுபேர் சங்கிலி என்று அழைக்கப்பட்ட கந்தசாமியின் தலைமையிற் புளொட் உறுப்பினர்களால் மோசமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். 1988 மத்தியில், இந்த இயக்கம் இந்தியாவிற் தலைவர்களின் அசட்டையினாற் பாதிக்கப்பட்டது. அதனிடம் போதிய ஆயுதங்களும் இருக்கவில்லை:'ரெலோ கலைக்கப்பட்டதுடன், எந்த நேரத்திலும் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென்ற உண்மையான பயமுறுத்தல் நிலவியது. யாழ்ப்பாணத்திற் புளொட் உறுப்பினர்கள் இராணுவ முகாமைச் சுற்றிக் காவற்பணி செய்தமையால் மக்களின் மதிப்பைப் பெற்றிருந்தனர். காங்கேசன்துறை வீதி வழியாக மண்மூடைகளின் தடுப்புக்குப் பின்னால் யாழ்பாணக் கோட்டை நோக்கி நகர்வதில் புளொட் தான் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தியது. அதன் உறுப்பினர்கள் கான்கள் ஊடாகத் தவழ்ந்தும் பிற மறைவுகட்கூடாகவும் சென்றும் யாழ்ப்பாணக் கோட்டைக்கு மிக அண்மையில் நிலக்கண்ணிவெடிகளைப் புதைத்தனர். புளொட் கலைக்கப்படப் போகின்றதென்ற செய்தி சூசகமாகக் கொடுக்கப்பட்டதும், யாழ்ப்பாணக் கோட்டையிற் காவலில் நின்ற அதன் உறுப்பினர்கள் தங்கள் கணிணிவெடிகளை வெடிக்க வைத்துக் கொண்டு அங்கிருந்து விலகிக் கொண்டனர். அந்நேரம் இலங்கைப் படைகள் தாம் தாக்கப்படுவதாக்க கருதி பதிலுக்குச் சுடத் தொடங்கினர். அந்நேரம் மத்திய கல்லூரி மாணவதலைவன் ஒருவர் கொல்லப்பட்டார். புளொட்டும் ஈபிஆர்எல்எவ்வும் கலைக்கப்பட்டமையும் பாதுகாப்பு அரணிகளில் நிறுத்துவதற்குப் போதிய ஆட்கள் இல்லாத நெருக்கடியும், நடந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தை முறியுமானால், இலங்கை இராணுவம், காவல் அரணிகளை உடைத்துக் கொண்டு முன்னேறப் பெரும்பாலும் முனையலாம் என்ற நிலைமையையும் உருவாக்கிவிட்டது.

Page 69
106
இக்காலத்தில், யாழ்ப்பாணத்திற் கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கப்ரன் கொத்தலாவல, விஜய குமாரணதுங்க, வின்சன்ற் பெரேரா, அருட்திரு யோகான் தேவானந்தா முதலிய முக்கிய சிங்களப் பிரமுகர்களோடும் சிநேகயூர்வமான உறவை வைத்துக் கொண்டது. கிட்டுவும் அவரது துணைத்தலைவர் ரஹீமும் தெற்கிற் பெரிதும் வரவேற்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கமும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாணும் முயற்சி நடைபெறுகின்றதென்ற கருத்துப்பதிவை ஏற்படுத்தினர். இந்தியாவின் உதவியுடன் வரையப்பட்டு டிசெம்பர் 19 பிரேரணைகள் என்றழைக்கப்பட்ட பிரேரணைகளின் தொகுதியொன்று கலந்துரையாடலுக்காக இலங்கை அரசாங்கத்தால் டிசெம்பர் 26ம் திகதி அறிவிக்கப்பட்டது. நடைமுறையில் வேறுபாடெதையும் ஏற்படுத்தக் கூடியதாய் இல்லாத போதும், 1987 ஜனவரி முதலாந் திகதி முதல், யாழ்ப்பாண குடியியல் நிருவாகத்தைத் தாம் கையேற்கப்போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்ற எரிபொருளையும், விறகையும் தடை செய்வதாய் அரசாங்கம் அறிவித்தது. பிரபாகரன் பல ஆண்டுகள் இந்தியாவில் இருந்துவிட்டு 1987 ஜனவரி ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். பிரச்சினை புதிய தோற்றம் பெற்றது.
5.6 கிழக்கு மாகாணப் பிரச்சினை
1985 வாக்கில், படுகொலைகள் உட்பட இலங்கை இராணுவத்தினால் நாசத்திற்குட்பட்ட யாழ்ப்பாணத்துக்கு வெளியிலான வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்களில், எண்ணிக்கை அளவில், அதிகமான பங்களிப்பைச் செய்தார்கள். தேசிய விடுதலைப் போராட்ட இலட்சியத்தாலும், எல்லோரும் இழிவுபடுத்தப்பட்ட உணர்வைப் பெற்றதாலும், 1980களில் இயக்கங்களில் இணைந்த தெளிவு மிக்க யாழ்ப்பாண இளைஞர்களைப் போலன்றி, இக்கிராமிய இளைஞர்கள் நேரடியாகப் பல துன்புறுத்தல் அனுபவங்களை பெற்றிருந்தனர். 1985 இறுதியில் நகரத்துக்குட் புறத்தே எஞ்சியிருந்த திருகோணமலை மாவட்ட தமிழர்கள் அகதிகளானார்கள். சிங்களவர்களுக்குப் பயமுறுத்தலாயிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் புலேந்திரனின் கண்முன்னே அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினராற் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அத்தகைய நிலையில், தமிழர்கள் சிங்கள மக்களைக் கொல்வதும் சிங்களவர் தமிழ் மக்களைக் கொல்வதும் நாளாந்த விடயமாகிவிட்டது. மேலும், ஆயுதப்போராட்ட இயக்கத்தின் தலைமை யாழ்ப்பாண ஆதிக்கம் பெற்றிருந்தது. 1985 நடுப்பகுதிக்குப் பின், ஒப்பிடுகையில், யாழ்ப்பாணம் அமைதியை அனுபவித்தபோது ஏனைய தமிழ்ப் பிரதேசங்கள் தொடர்ந்துந் தாக்குதல்களுக்குள்ளாகின.
1988 மே மாதத்திற் கொல்லப்பட்ட'ரெலோ இளைஞர்களிற் பெரும்பாலோர் கிராமப்புறத்திலிருந்து வந்தவர்களாவர். 1986 டிசம்பரில், யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்.எல்.எவ். தாக்கப்பட்டுப் பலவீனப்பட்ட பின்னரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்கள் தொடர்ந்து உற்சாகமாக இயங்கி வந்தார்கள்.

107
கிழக்கு மாவட்டங்களில் ஆயுதப்போராட்ட இயக்கத்தின் தனித்துவத்தைப் பேணும் ஒரு காரணி உண்டு; தாங்கள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் அல்லது அழிய வேண்டும் என்ற அடிப்படையில் பொதுவான துன்புறுத்தல் அனுபவங்களினூடாக, கிழக்கு மாகாணத்தமிழர்கள் ஐக்கியப்பட்டுள்ளோம் என்ற உணர்வு கோட்பாட்டு மற்றும் குழு வேறுபாடுகளுக்கும் மேலாக ஆதிக் சம் பெற்றிருந்தமையே அதுவாகும். யாழ்ப்பாணத்திற்போல குழுவேறுபாடுச6 பெரிதும் பொருட்படுத்தப்படவில்லை. அவர்கள் அநேகமாகத் தமது முகாம்களையும், உணவுகளையும் பங்கு போட்டுக் கொண்டனர். 1986 மே மாதத்தில் ரெலோவைத் தாக்குமாறு விடுதலைப் புலிகள் இயக்கம் வானொலி மூலம் உத்தரவிட்டபோதும், யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்களிை எண்ணிக்கைகளினதும் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையினரே கிழக்கில் கொல்லப்பட்டிருந்தனர். திருகோணமலையில் ஒரு ரெலோ உறுப்பினரின் கூற்றின்படி சம்பூரில் உணவு அருந்திக் கொண்டிருந்த ரெலோ உறுப்பினர்கள், முன்னாளில் நண்பர்களாயிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களால் வெளியே வருமாறு அழைக்கப்பட்டனர். தம் மீது கொலை உத்தரவு கொடுக்கப்பட்டிருப்பதை அறியாத ரெலோ உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களைச் சந்திப்பதாகக் கருதி வெளியே வந்தபோது, அவர்களது தலைவரும் ஏனைய இருவரும் கொல்லப்பட்டார்கள். திருகோணமலைவாசி ஒருவரின் கூற்றின்படி சாம்பற்தீவில் எந்தவொரு கொலையும் நடக்காதென்பதை உறுதிப்படுத்தப் பெண்கள் உலக்கைகளைத் தூக்கிக் கொண்டு வெளிவந்தர்கள். யாழ்ப்பாணத்தின் அயற்பிரதேசங்களிலே கொலைகள் நடக்கையில் மக்கள் ஊமைகளாகப் பார்த்துக் கொண்டு நின்றமைக்கு இது முரணானது. எவ்வாறாயினும் 1987 டிசெம்பரில் விடுதலைப் புலிகள் ஈபிஆர்எல்எவ்வைத் தாக்கியபோது, யாழ்ப்பாணத்துக் கிராமிய மக்கள் சிலர், கத்திகளையும் மிளகாய்த்தூளையும் கையிலேந்திச் சென்று, வீதிகளுக்கு குறுக்காக அமர்ந்து தடைசெய்து, ஈபிஆர்.எல்.எவ். உறுப்பினர்களைப் பாதுகாத்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் - ரெலோ மோதல்கள் ஆரம்பித்தபோது, முன்னாள் விஞ்ஞான மாணவரும் புலிகளின் மட்டக்களப்புத் தலைவருமான "கடவுள்" என்பவர், மட்டக்களப்பில் இயக்கங்களின் சகல ஆயுதப்போராட்டக் குழுக்களின் தலைவர்களையும் ஒரு கூட்டத்துக்கு வரவழைத்தார். கிழக்கின் பிரச்சினைகள் வேறுபட்டவை, எனவே அவை வேறு விதமாகக் கையாளப்பட்வேண்டுமென அவர்கள் எல்லோரும் ஒரு கூட்டறிக்கை விட்டனர்; கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கடவுள், மட்டக்களப்பில் எல்லாப் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமென தனிப்பட்ட முறையில் உறுதிய்ளித்தார். பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை, அப்போது மட்டக்களப்பில் இருந்த யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தளபதிகளான குமரப்பாவுக்கும் பொட்டுவுக்கும் ரெலோவைத் தாக்கி அழிக்குமாறு வானொலி மூலம் உத்தரவிட்டது. அத்தாக்குதலில் அநேக உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். கடவுள் விடுதலைப் புலிகளினின்று விலகி, வெளிநாடு சென்றார். நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானித்து வருபவரான

Page 70
08
மட்டக்களப்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், 1988 டிசெம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வைத் தாக்கியதன் மூலம் விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தமிழ் மக்களுக்குப் பாதகமாகச் செயல்பட்டனர் எனக் கூறினார். ஈ.பி.ஆர்.எல்.எவ், விசேட அதிரடிப்படைக்கு எதிரான தாக்குதலில் தமது ஆற்றலை நிரூபித்தனர். அப்பொழுது தான், அவ்வியக்கம் விசேட அதிரடிப்படைக்கு எதிராக வெற்றிகரமாகத் தொடர்ந்து கணிணிவெடித் தாக்குதல்களை நடத்திக் கொணடிருந்தது. விடுதலைப் புலிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு எதிராக நடத்திய சண்டை விசேட அதிரடிப்படைக்கு களத்தைத் திறந்து விட்டது. விசேட அதிரடிப்படை, 1987 புத்தாண்டைக் கொக்கட்டிச்சோலைப் படுகொலைகளுடன் ஆரம்பித்தது. அதில் பெருந்தொகையான பொதுமக்கள் கொலை செய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் தமது பலமானதொரு கோட்டையிலிருந்து விலக வேண்டியதாயிற்று. இவ்விருத்திப் போக்குகளினதும் ஏதாவது ஒரு தீர்வுக்கு ஆயத்தமாக இருக்கும் கிழக்குமாகாணத் தமிழ்மக்களின் பரிதாபகர நிலையினதும் ஒருவிளைவு யாதெனில், வடமாகாணத்துக்கும் கிழக்குமாகாணத்துக்கும் தனித்தனியான மாகாணசபைகள் என்ற அடிப்படையில் பிரேரணைகளுடு ஒரு தீர்வைக் காண்பதற்குக் கிழக்கு மாகணத் தலைவர்கள் சம்மதிக்கும் நிலையில் இருந்தமையாகும். பொலிஸ் படை, நிலப்பங்கீடு ஆகியவற்றில் பொதுவாக அதிகாரப் பரவலாக்கம் போதாது என்று கருதப்பட்டது. ஆனால் அதைப் பேச்சுவார்த்தை மூலம் சரிப்படுத்தப்படலாம் எனக் கருதப்பட்டது. ஒப்பீட்டளவிற். பாதுகாப்பான சூழ்நிலை நிலவிய யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரச்சாரப் பின்னணியினாலும் பயன்படுத்திய பத்திரிகைகளாலும் அறிவு ஜீவிகள் ஒரு பகுதியராலும் போரிடுகின்ற உணர்வே மேலோங்கியிருந்தது. இப்பொழுது, அபாயகரமாய் பலவீனப்பட்டுள்ள தமிழர்களின் பொதுநலன் கருதி, அதி சாதகமான தீர்வுக்காக இந்தியாவின் நல்லெண்ண முனைப்பைப் பயன்படுத்த வேண்டுமென யாழ்ப்பாணத்தில் உள்ள சில தமிழர்கள் உணர்ந்தார்கள். சில சமயங்களிற் தம் கசப்பான அனுபவத்தின் விளைவாக அவர்கள் தம் கருத்துக்களை ஓங்கிக் கூற முடியாதிருந்தனர். தவிர்க்க முடியாதவாறு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே, யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தலைமை தம்மைக் கைவிட்டு விட்டதென்ற உணர்வு பரவலாக நிலவியது. கிழக்கு மாகாணத் தமிழர்கள், எதிர்காலத்தில் வடமாகாணத் தமிழர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, தமது அயலவர்களான கிழக்கு மாகாண முஸ்லிம்களுடனும் சிங்களவருடனும் தமது உறவு என்ன என்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

109
அத் - 6 1987: கு"ேவேடிக்கிறது
81 யாழ்ப்பாணத்துக்குப் பின்வாங்கல்
விடுதலைப் புலிகள் இயக்கம், டிசெம்பர் 19ம் திகதிப் பிரேரணைகளின் அடிப்படையிற் பேச்சுவார்த்தை நடத்துவதில் எதுவித அக்கறையும் காட்டவில்லை. பிரபாகரனின் வருகையுடன் யாழ்ப்பாணப் பொறுப்பாளர் கிட்டு, காலப்போக்கில் மதிப்பிறக்கம் செய்யப்படுவாரென மக்கள் கருதினர்.
ஆண்டின் தொடக்கத்தில், விசேட அதிரடிப்படை (எஸ்பிஎவ்), கிழக்கிலே தீவிர வெற்றிகளைப் பெற்று விடுதலைப் புலிகளை அவர்களது பலமான கோட்டைகள் பலவற்றிலிருந்து விரட்டிப் புதிய முகாம்களை நிறுவியது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பயங்கரங்களை விபரிக்கும்போது, மட்டக்களப்பு பிரசைகள் குழு உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு கூறினார்:
'விசேட அதிரடிப்படை பொதுமக்களைத் தாக்கவும், வதைக்கவும் சிறைப்பிடிக்கவும் கட்டுப்பாடு ஏதுமின்றிச் சுதந்திரமாக விடப்பட்டது. இந்தச் சுதந்திரம் பயங்கரமான முறையிற் பயன்படுத்தப்பட்டது. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டார்கள்"
வடக்கில், யாழ்ப்பாணத்துக்கு வெளியே, பொதுமக்கள் வாழும் சகல பிரதேசங்களையும், பெப்ரவரி மாதமளவில், இலங்கை இராணுவம் கைப்பற்றவும் பல புதிய முகாம்களை நிறுவவும் விமானப்படை பெரிதும் பயன்பட்டது. இலங்கையின் விமானப்படையை எதிர்த்துத் தாக்குகின்ற பலத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் பெறுவதற்கு இந்தியா வெளிப்படையாகக் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் எல்லா ஆயுதப்போராட்டக் குழுக்களும் செயற்பட்டதால், கிளிநொச்சி மாவட்டத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்ற இலங்கை இராணுவத்தின் முயற்சி தோல்வியுற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விகளாற் கவலையுற்ற விடுதலைப் புலிகள், ஏனைய பிரதேசங்களிற் போராடிய தமது உறுப்பினர்களைத் திருப்பியழைத்து அவர்களை யாழ்ப்பாணத்திற் குவித்தது. முக்கியமாக, வவுனியாப் பொறுப்பாளர் மாத்தயா, மன்னார்ப் பொறுப்பாளர் ராதா உட்பட விடுதலைப் புலிகளின் முன்னணித் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் நடமாடினர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதென்ற பயமுறுத்தல் காத்திரமான கவனத்துக்குள்ளானதை இது உணர்த்தியது.
இது விடுதலைப் புலிகள் பற்றிய சில அம்சங்களை எமக்குக் காட்டுகின்றது. 1985 முதல் பரபரப்பான இராணுவத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் தமது ஆதரவாளர்களைக் கவர்வது எல்லா ஆயுதப்போராட்டக் குழுக்களின் பொதுத்தன்மையாக இருந்து வந்தது. முக்கியமில்லாத இயக்கமெனக் கருதப்பட்ட ரெலோ, சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தை வெற்றிகரமாகத் தாக்கியமை, 1984 டிசெம்பரிலும் 1985 ஜனவரியிலும் படைகளை ஏற்றிச் சென்ற புகையிரதங்களை முறிகண்டியிற் தாக்கியமை என்பன காரணமாக முக்கியத்துவமடைந்தது. ஒரு குறிப்பிட்ட இயக்கம் குறிப்பிட்ட எந்த இலட்சியத்திற்காக நிற்கிறது என்பது முக்கியமற்றுப் போயிற்று. இதன் விளைவாக
மக்கள், பார்வையாளர்கள் என்ற வகையில் பெரும்பாலும் அவர்களைப் போற்றிப்

Page 71
110
புகழ்பவர்களாகத் தமது பங்கை ஏற்றுக்கொண்டனர். இதன் மறுதலை வளர்ச்சியாக போராளிக் குழுக்களும் மக்களை அந்தப் பாத்திரத்தை மட்டுமே வகிக்க அனுமதித்தனர். அறிவுரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னுமொரு படி மேலே சென்று, மக்களைத் தமது பக்தர்களாகக் கட்டுப்படுத்தி வைத்தது. அபாயத்தை உணர்ந்து அறிவுரை கூற விரும்பியவர்கள் பவி வியமாகப் பல வேறு மட்டங்களில் மெளனப்படுத்தப்பட்டனர். விடுதலைப் புலிகளின் அரசியல் மதத்தின் பக்தர்களாக மக்களைத் தாழ்த்தியமை 1970களின் ஆரம்பத்திற் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆரம்பித்த செயன்முறையின் உச்சநிைைலயாகும். தமிழரசுக் கட்சியும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ் இனத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான ஒரே கட்சிக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினர். அத்தகைய விசுவாசமற்ற ஏனையோர் பல்வேறு நிலைகளிற் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டனர். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனது ஆதரவாளர்களை உணர்ச்சியைத் தூண்டும் வீராவேசப் பேச்சுக்களினால் உற்சாகமாக வைத்திருந்தது. விடுதலைப் புலிகள், இன்று, தமது வீரத்தை உறுத்திப்படுத்துகின்ற வீரதீரச் செயல்களின் மூலம் அதைச் செய்ய வேண்டியுள்ளது. விடுதலைப் புலிகளின் மதம், அதன் பக்தர்களுக்குக் குருதிப் பரித்தியாகத்தால் உணர்வுமிக்க உத்வேகத்தையும் அளித்துள்ளது. இப்பரித்தியாகத்துக்கு இரையாவோர் தற்செயலாகவோ தாமே விரும்பியோ தாக்குதல்களின்போது மரிப்பவர்களாவர்.
விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் எவரேனும் இறந்துபோனால் ஒலி பெருக்கிகள் மூலம் சோக கீதம் இசைப்பது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. துக்கத்தை தெரிவிக்க, வீதிகள் தென்னை ஒலைகளாலும் வாழை மரங்களாலும் அலங்கரிக்கப்படும். ஒலிபெருக்கி பூட்டிய வாகனங்கள் அதீத நாடக பாணியில் மரண அறிவித்தல் செய்தபடி வீதிகளை வலம் வரும். அதன் விளைவாக, மக்கள் ஆயிரக்கணக்காகத் திரண்டு சடலங்கட்கு இறுதி அஞ்சலி செலுத்துவர். அத்தகைய வைபவங்கள், மக்களின் அதீத மன உணர்வுகளைத் துTணி டுவதற்காகப் பயனபடுத்தப்பட்டன. இலங்கை - இநீதிய உடன்படிக்கையையடுத்துத் திலீபன் இரண்டு மாதங்களாக மேற்கொண்ட சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் இறந்தமை இதை நன்கு விளக்கும். விடுதலைப்புலிகள் தமது உறுப்பினர்கள் தொடர்ந்தும் சாகத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தமது பிடியைத் தாம் இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் உறுதிப்படுத்துவது அவசியமென உணர்ந்தார்கள்.
மனிதர்கள் சமத்துவமானவர்கள், சகல உயிரினங்களுங் கூடச் சமத்துவமானவையெனக் கொள்ளும் உயர் மதங்களைப் போலன்றி, விடுதலைப்புலிகளின் மதம், மேலிருந்து கீழான அதிகாரப் பிடியைகொண்ட மரபைப் பேணியது. அவர்களது மதம் பொது மக்களைப் பக்தர்களாக மாத்திரமே கணித்தது. ஏனைய இயக்கப் போராளிகள் எத்தகைய பங்களிப்பைச் செய்திருந்தபோதும் குற்றவாளிகளாகவும் சமூக விரோத சக்திகளாகவும் கணிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் மாத்திரமே அர்ப்பணம் செய்யவும் தியாகிகளாகப் போற்றப்படவும் தகுந்தவர். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சொர்க்கத்தில் அவர்கள் கடவுளாக மாறிவருவர் என்ற ஒரு நம்பிக்கை தீலிபனின் மரணக் கூற்றிலே வெளிப்படுத்தப்பட்டது.

11
நாஜி ஆட்சியின் போது நிலவிய ஒருவித சமயர்த்த வெறித்தனத்தினை ஒத்த பல அம்சங்கள் இங்கேயும் காணப்பட்டது என்றால் அது மிகையாகாது. மனித உள்ளங்களை ஆட்படுத்தி, நாகரிகத்தினதும் ஒழுக்க சீலத்தினதும் சகல விழுமியங்களையும் மறக்கச் செய்து, அதீத உணர்வுள்ள அழிக்கும் சக்தியாக வலிவுடன் ஒன்றிணைக்கின்ற அத்தகைய வெறியின் ஆற்றல் அளவிடற்கவியது. ஆனாற் பெரும்பான்மையான தமிழ்ப் பொதுமக்கள் தமது பாதுகாப்பை எதிர்பார்த்திருந்தனர். விடுதைைலப்புலிகள் தங்களுக்கு அளிப்பவை நிரந்தரப் பிணக்குகளும்அழிவும், வெறும் தற்கொலையும் என்றோ, அவைகளை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் நன்றி செலுத்தப்படமாட்டர்கள் என்றோ தமிழ் மக்கள் கிஞ்சித்தும் உணரவில்லை. தொடர்ந்து வந்த மாதங்களின் நிகழ்ச்சிகள் இவற்றைத் தாராளமாகத் தெளிவுபடுத்தின.
1987 ஜனவரியில் இலங்கை இராணுவத்தின் விரைவான முன்னேறுதல்களைத் தொடர்ந்து அதைத் திருப்பித்தாக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமான அவசியத்தை விடுதலைப்புலிகள் உணர்ந்தனர். பெப்ரவரி 14ம் திகதி நாவற்குழி இராணுவ முகாம்மீது தாக்க ஒரு மதிநுட்பமான வழி வகுக்கப்பட்டது. நாவற்குழி முகாமை அடுத்து அமைந்திருந்த அன்ட்றுஸ் கம்பனி இலங்கை இராணுவத்துக்கு குடிநீர் வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் அக்கம்பனியின் தண்ணீர் பெளசரைப் பறித்துத் தண்ணீர் ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு இறங்கியதும் வெடிக்கும் வகையில், அதன் தாங்கியிலே குண்டைப் பொருத்தி வைத்தனர். சில தகவல்களின்படி தண்ணீர்த் தாங்கி ஏதோ ஒரு கோளாறினால் ஒழுகத்தொடங்கியது என அறியமுடிகிறது. கைதடியிலுள்ள ஒரு ஒழுங்கைக்கு அந்த பௌசர் கொண்டு செல்லப்பட்டது. அத் தகவலின்படி ஒரு உருக்கொட்டுனர் (வெல்டர்) கொண்டுவரப்பட்டு, அது திருத்தப்படும்போது தற்செயலாக பௌசர் வெடித்துவிட்டது. அதில் இறந்த பத்து விடுதலைப் புலிகளுள் குகன், கேடில்ஸ், வாசு ஆகிய மூன்று மூத்த தலைவர்கள் அடங்குவர். பிரபாகரனுக்கு நெருங்கியவரும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்தவருமான குகன் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே அத்தாக்குதல் முயற்சி மேற் கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. நாற்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறின. அந்தத் தாக்குதல் கைவிடப்படவேணி டியதாயிற்று. விடுதலைப்புலிகள் தங்கள் இயக்க உறுப்பினர்களின் மரணச் செய்தியை ஒலிபெருக்கி மூலமும் தங்கள் அறிவித்தற் பலகைகள் மூலமும் அறிவித்தனர். அந்த அறிவித்தலில் பொதுமக்களின் மரணங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாமை மனதை வருத்தும் அம்சமாகும்.
பத்திரிகைகளும் பொதுமக்களின் மரணத்துக்குச் சொற்ப முக்கியத்துவமே கொடுத்தன. இது, இனி ஏற்படப் போகின்றவைக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மூடநம்பிக்கையுடையனவென்பதை ஆச்சரியமற்றவகையிற் குறிப்பிடலாம். திகதிகளில் உள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகை ஐந்தாக அமைகின்ற ஒரு தினத்தையே வழமையாக விடுதலைப்புலிகள் இயக்கம் பெருந்தாக்குதல்களை நடத்துவதற்குத் தெரிந்தெடுக்கும். அரசாங்கமோ திகதியின் கூட்டுத்தொகை எட்டாகவரும் தினத்தையே தெரிந்தெடுக்கும். விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் 23ம் திகதிகளிலும் அரசாங்கத்தின் தாக்குதல்கள் 8, 17, 28ம் திகதிகளிலும் நடக்குமெனச் சாதாரணமாக மக்கள் எதிர்பார்ப்பர்.

Page 72
12
அரசாங்கம் மார்ச் 7ம் திகதி யாழ்ப்பாணத்தில் விமானத்தாக்குதலை மீண்டும் ஆரம்பித்தது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து நடத்திய பாரிய ஷெல் தாக்குதலால் வின்சர் படமாளிகைச் சந்தியில் பதினேழு பேர் கொல்லப்பட்டனர், ஐம்பது பேர் காயமுற்றனர். முதன் முறையாக யாழ்ப்பாண வைத்தியசாலையிலும் ஒரு ஷெல் விழுந்தது.
மார்ச் 30ம் திகதி அதிகாலைப் பொழுதிலே யாழ்ப்பாண வைத்தியசாலையில் மீண்டும் ஷெல்கள் வந்து விழுந்தன. 19, 20ம் வாட்டிலே ஒன்பது நோயாளிகள் கொல்லப்பட்டனர். இரு தாதிகளும், ஒரு கங்காணியும் காயமுற்றனர். பாதிப்புக்குள்ளான வார்டு, வயது முதிர்ந்த இருதய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்ற வார்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஷெல் தாக்குதல் இந்தியாவால் பலமாகக் கணிடிக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிடலாம். யாழ் கோட்டையிலிருந்து ஏவப்பட்ட இந்த ஷெல் விடுதலைப்புலிகளால் அடிக்கப்பட்டதெனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் கூறியபோது, இந்தியத்தூதுவர் ஜேஎன்தீக்ஷித், விடுதலைப்புலிகள் முன்னுக்குப் போய் பின்னுக்குத் திரும்பக்கூடிய ஷெல் வைத்திருக்கிறார்களாவென நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மார்ச் 30ம் திகதி இரவு, விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாணத் தலைவர் கிட்டு, யாழ்ப்பாணத்தில் இரண்டாம் குறுக்குத் தெருவில் வசித்த தனது சிநேகிதரைச் சந்திக்கச் சென்ற போது அவர் மீது குண்டெறியப்பட்டது. அவரது மெய்க்காப்பாளரில் ஒருவரான மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்டார். கிட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது காலொன்று துணிடிக்கப்பட்டது. மறுநாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிறவுணி வீதி முகாமிற் சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகளிற் பலர் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது. கிட்டுவைக் கொலை செய்ய முயன்றதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளாற் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள் என அச்செய்தி வெளி வந்த சிறிது நேரத்தின் பின்னர், பியிசி. (B.B.C) தனது ஒலிபரப்புச் செய்தியில் சில செய்தியறிந்த வட்டாரங்களின்படி இறந்தவர்களின் எண்ணிக்கை எழுபது என அறிவித்தது. வதந்திகள் அதிகரித்து வரும் நிலையில் விடுதலைப்புலிகள் ஏப்ரல் 6ம் திகதி வெளியிட்ட தனது பத்திரிகை அறிக்கையில், கைதிகள் சில ஆயுதங்களைப் பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் காவலர் இருவரும் பதினெட்டுக் கைதிகளும் கொல்லப்பட்டனர் எனக் கூறியது. அந்த நிகழ்ச்சியின்போது தப்பி ஓடிப் பின் மட்டக்களப்புக்குச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவி. உறுப்பினர் ஒருவர் பின்வருவனவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சத்தியக்கடதாசியைச் சமர்ப்பித்தார். "சிறைக்கைதிகளாகிய எங்களுட் பலர் விடுதலைப் புலிகளின் பிரவுணி வீதிமுகாமில் ஓர் அறையில் அடைக்கப்பட்டிருந்தோம். மாலையில் (விடுதலைப்புலிகளைச் சேர்ந்த) அருணா இயந்திரத்துப்பாக்கியால் எம்மீது சுடத்தொடங்கினார். எங்களில் மூவர் அடுத்த கதவாற் தப்பி ஓடிவிட்டோம். 18 பேர் அச்சம்பவத்தின் போது இறந்தார்கள். அருணா கிட்டுவோடு மிக நெருக்கமாக விருந்தவர் என அறியப்பட்டது. அந்த நிகழ்ச்சி பற்றி விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட்ட 1987 ஏப்ரல் 7ம் திகதி முரசொலி என்னும் நாளிதழ் 18 குற்றவாளிகள் கொல்லப்பட்டார்கள் எனக் கொட்டை

113
எழுத்துகளில் அறிவித்தது. இது பத்திரிகைத் தொழிலிற் சந்தர்ப்பவாதத்தின் புதிய மட்டத்தைக் குறித்தது. விடுதலைப்புலிகளின் அறிக்கை, இறந்தவர்கள் குற்றவாளிகள் எனக் கூறவில்லை. விடுதலைப் புலிகள், அதே நேரத்தில், தமது ஏனைய முகாம்களினதும் அநேக ஈபிஆர்.எல்.எவ். உறுப்பினர்களைக் கொன்றிருக்கலாமென நம்பப்படுகிறது. அந்தச் சமயத்தில், ஈபிஆர்எல்எவ்வைச் சேர்ந்த டாக்டர் பெஞ்சமினின் கொலைபற்றிப் பரவலாகப் பேசப்பட்டது. அவர் அகதிகளுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர். சற்றடே நிவ்யூ ஆங்கில வார இதழ், விடுதலைப் புலிகள் ஒருவருடன் கலந்தாலோசித்த பின், ஏறக்குறைய 50 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டர்கள் என அறிவித்தது. கிட்டுவைக் கொல்ல முயன்றோரின் அடையாளங்களும் தொடர்புகளும் வெளிப்படுத்தப்படவில்லை. ஏப்ரல் 2ம் திகதி வல்வெட்டித்துறையிற் சிறு இராணுவ முகாம் ஒன்றின் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டு ஐந்து புலிகள் கொல்லப்பட்டனர். ஷெல் தாக்குதலாற் காயமுற்றுப் பருத்தித்துறை ஆஸ்பத்திரியிலிருந்து அம்புலன்ஸ் ஒன்றில் அவர்கள் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, அந்த அம்புலன்சுக்கு, வல்லைவெளியில் ஹெலிக்கொப்டரிலிருந்து ஷெல் அடித்ததாற் காயமுற்றோரும் சாரதியும் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தக் காலத்தை சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தப் பயன்படுத்தும் வகையில், சிங்கள-தமிழ்ப் புத்தாண்டின்போது ஓர் போர் நிறுத்தத்தைச் செய்யலாமென்ற ஆலோசனையை யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு மூத்த பிரமுகர் அமைச்சர் தொண்டமானுக்குத் தெரிவித்தார். திரு.தொண்டமான், ஓரிரு வார காலப் போர் நிறுத்தம் செய்யுமாறு அமைச்சரவையைக் கேட்டார். அமைச்சரவை ஏப்ரல் 11 முதல் 17 வரை ஒன்பது நாட்களுக்கு இருசாராரும் போர் நிறுத்தஞ் செய்வதை ஏற்றுக்கொண்டது. பிரபாகரன் இந்தப் போர் நிறுத்த யோசனையை நிராகரித்து, ஏப்ரல் 20ம் திகதிக்குப் பின்னரே போர் நிறுத்தம் பற்றி யோசிக்கலாமெனக் கூறினார். வெளி உலகம் இதனை பிடிவாதக்குணமுள்ள சிறுபிள்ளைத்தனமான இராஜதந்திரமாகக் கணித்திருக்கும். யாழ்ப்பாணத்தின் மூத்த பிரமுகர், அரசாங்கத்தின் போர் நிறுத்த அறிவிப்பு நேர்மையான நோக்கங்கொண்டதெனக் கருதியபோதும், இன்றைய நிலைமைக்கு முற்று முழுதாக அரசாங்கமே பொறுப்பென்று நம்பியவர்களிடமிருந்து பிரபாகரனின் நிலைப்பாட்டுக்குப் பரவலான ஆதரவு கிடைத்தது. அரசாங்கம் பொது மக்கள் மீது விமானக்குண்டு பொழிந்து, ஷெல் தாக்குதலும் நடத்தியதால் மக்கள் அதன் மீது நம்பிக்கையிழந்திருந்தனர். அரசாங்கத்தின் போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. அரசாங்கம் ஷெல் அடித்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் யார் சீண்டினார்கள் யார் பதிற் தாக்குதல் நடத்தினார்கள் என்று தீர்மானிப்பது கடினமாயிருந்தது.
1987 ஏப்ரல் 16ம் திகதி அனுராதபுரத்திற் புத்தாண்டுக் கொண்டாட்டங்களிற் பங்குபற்றிவிட்டுத் திருகோணமலை நோக்கி 150 சிங்களவர்கள் (இவர்களிற் பெரும்பாலானோர் பொது மக்கள்) பஸ்ஸிற் திரும்பிக் கொண்டிருந்த போது, கித்துலுட்டுவா என்ற இடத்தில், பஸ்ஸிலிருந்து அவர்கள் அனைவரும் இறக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளே இதற்குக்

Page 73
114
காரணமெனப் பரவலாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இப்படுகொலைகளைச் செய்வதற்கு விடுதலைப்புலிகளைச் சேர்ந்த புலேந்திரன் என்பவரே தலைமை தாங்கினார் என அரசாங்கம் கூறியது. அது நடந்து சிறிது காலத்தின் பின், ஏப்ரல் 21ம் திகதி கொழும்பிலே புறக்கோட்டை பஸ் நிலையத்திற் கார் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 100 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இத் தாக்குதலை ஒரு தமிழ்ப் போராளிக் குழுவே செய்திருக்கலாமெனப் பரவலாகக் கருதப்பட்டது. அக்குழு ஈரோசாகவோ அல்லது விடுதலைப்புலிகள் இயக்கமாகவோ இருக்கலாமென நம்பப்பட்டது. சர்வதேசக் கருத்து, தமிழருக்கு அனுதாபமாயிருந்ததிலிருந்து விலகி இலங்கை அரசாங்கம் தமிழ்ப் போராளிகளைத் தாக்கி அழிப்பதை அங்கீகரிக்கின்ற திசையிற் திரும்பியது.
ஏப்ரல் 22ம் திகதி காலை, காங்கேசன்துறை கப்பற்தளத்தில் நின்ற கப்பலில் லங்கா சீமெந்து லிமிட்டட்டிலிருந்து சீமெந்துப் பொதிகள் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது, விடுதலைப்புலிகள் இயக்கக்குழுவொன்று ராதா தலைமையில் தாக்குதல் நடத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் துணிவிற்கும், பரபரப்பான தற்கொலைக்கு ஒப்பான தாக்குதலை நடத்துவதற்கு யுக்தி செய்யும் ஆற்றலுக்கும் இத் தாக்குதல் மற்றுமோர் உதாரணமாகும். இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களுக்கு அதிக அழிவை ஏற்படுத்துவன. அத்துடன் இவை அரசாங்கத்தை மேலும் மிருகத்தனமானதாகவும் பிடிவாதக்குணமுடையதாகவும் மாற்றின.
இது பொதுமக்கள் மேலும் ஆபத்துக்கு ஆளாக்கிய அதேசமயம், விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தமது சமயார்த்த வழிபாட்டு மனப்பாங்கை வைத்திருப்பதற்கு எல்லா வாய்ப்புகளையும் அளித்தது. துறைமுகக் கப்பற் தளத்தின் நுழைவாசலிற் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டிருந்தன. லங்கா சீமெந்து லிமிட்டட் இயந்திரத்திலிருந்து சீமெந்து ஏற்றப்பட்ட லொறிகள் வடக்கு நோக்கிச் சென்று துறைமுகப் பிரதேசத்தைப் புகுமுன், காங்கேசன்துறையிற் கீரிமலை வீதியை அடைந்ததும் வரிசையில் நிற்க வேண்டும். துறைமுகம் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சீமெந்தை இறக்கிய லொறி உடனே வெளி வந்தது. வரிசையிற் காத்து நின்ற முதலாவது லொறி துறைமுகப்பிரதேசத்துள் நுழைவதற்கான வீதியை கடந்து சென்றது. கடக்கும்போது லங்கா சீமெந்து லிமிட்டடைச் சேர்ந்த ஒரு பாதுகாப்பு அலுவலர் லொறியுடன் சிறிது தூரம் நடந்து சென்றார். விடுதலைப்புலிகளின் திட்டம் அதி அபாயகரமானதும் மதி நுட்பமான போர்த்தந்திரமானதும் என்பதால் இராணுவத்தால் எதிர்பார்க்கப்படாமலிருந்தது. விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களின் கூற்றின்படி, தங்கள் உறுப்பினர்கள் அத்தகைய தற்கொலைத் தாக்குதல்களுக்காகச் சுயமாக முன்வருவதில் ஒருவரோடொருவர் போட்டியிடுவார்கள்.
விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் ஒரு லொறியிலே சீமெந்துப் பொதிகளை அரணாக அமைத்து அதன் பின்னால் மறைந்திருந்துகொண்டு அந்த லொறி பொதிகளை இறக்கப் போகின்றதெனக் காட்டினர்கள். கடக்கின்ற இடத்திலிருந்து சில யார்கள் தொலைவில், அந்த லொறி ஒரு ஒழுங்கையிலே, கரைப்பக்கமாகவும் இராணுவத்துக்கு மறைவாகவும் நிறுத்தப்பட்டது. அதிகாலை வேலையில் இராணுவக் காவல் நிலையங்களிற் கவனங் குறைவாயிருக்குமென்பதைக்

15
கணித்துக்கொண்டு, ஒரு லொறி பொதிகளை இறக்கிவிட்டு வெளிவந்தபோது, விடுதலைப்புலிகளின் லொறி, திடீரென அடுத்து உள்நுழையும் லொறிக்கு முன்னால், இடம் பிடித்துக் கொண்டது. தண்ணீர்த்தாங்கியின் மீது காவல் நின்ற இராணுவத்தினர் இதைக் கவனிக்கவில்லை. எதிர்த்துச் செயற்படமுடியாத அளவு அதிக அதிர்ச்சிக்குள்ளான லங்கா சீமெந்து லிமிட்டட் பாதுகாப்பு அலுவலர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் லொறிக்குப் பின்னால் நடந்து சென்றார்.
உள்ளே சென்றதும், விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகஞ் செய்தி 18 இராணுவத்தினரைக் கொன்றுவிட்டு விரைவாக வெளியேறினர். சினமடைந்த இராணுவம் லங்கா சீமெந்து லிமிட்டட்டைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு அலுவலர்களைப் பிடித்துக் கொன்றது. கொல்லப்பட்டவர்களுள் சார்ஜண்ட் மயில்வாகனமும் ஒருவர். அவர் முன்னர் பொலிஸ் சார்ஜண்ட்டாகக் கடமையாற்றியவர். லங்கா சீமெந்து லிமிட்டட்டைச் சேர்ந்த இன்னொரு மேற்பார்வையாளர் குளியலறையிலிருந்து இழுத்து வரப்பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டார். இத் தாக்குதலின்போது துறைமுகக் கப்பற் தளத்தில் சீமெந்துப் பொதிகளை ஏற்றுவதில் 70 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதிட்டவசமாகக் கப்பலில் இருந்த சிங்களக் கப்பற் தலைவர் அவர்கள் தாக்கப்படுவார்கள் என அஞ்சி, அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கப்பலைக் கடலில் விட்டார். தொழிலாளர்கள் தொந்தரவு செய்யப்படமாட்டார்கள் என்ற வாக்குறுதியம்ை பெற்ற பின், அந்தச் சிங்களக் கப்பற் தலைவர் பல மணித்தியாலங்கள் கழித்து அவர்களைக் கரையிற் கொண்டுவந்து சேர்த்தார். கொல்லப்பட்ட இலங்கை சீமெந்து லிமிட்டட் பாதுகாப்பு அலுவலர்களின் உடல்களைச் சன்னந் துளைத்த துணிகளால் மூடி அரசின் ரூபவாஹினித் தொலைக்காட்சியில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எனக் காட்டிய இலங்கை அரசாங்கம் தன் பிரசாரசாதனங்களைப் பிரமாதமாகப் பயன்படுத்தியது. தொலைக்காட்சியைப் பார்த்த எந்தவொரு புத்திசாலியும், 55 வயதான சார்ஜன்ட் நரைத்த தலையுடன் இளம் பயங்கரவாதியாகத் தோற்றமளித்ததைக் கண்டிருக்க முடியும். இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்: பொய் சொல்வதிற் புத்திசாதுரியமான முறை யாதெனில் தேவையற்ற விடயங்களைப் புறந்தள்ளி தமிழ்ப்பாதுகாப்பு அலுவலர்கள் கொல்லப்பட்டமைக்கு விடுதலைப்புலிகள்மீது குற்றஞ்சுமத்தியிருக்கலாம். அரசாங்கம் முழுப் பிரச்சினையையும் எவ்வாறு இராணுவப்பிரச்சினையாக கையாள்கின்றதென்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் அக்கறை கொண்டிருக்கவில்லையென்பதையும் இது மீண்டும் கட்டிக்காட்டுகின்றது. இது விடுதலைப்புலிகளுக்கு நன்மையாகவே அமைந்தது. பொதுமக்களைத் துன்புறுத்துவதைத் தவிர்த்து அரசாங்கப்படைகளை அம்பலப்படுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் மிகவும் வேறுபட்ட எண்ணங்களை வைத்திருந்தது. அடுத்த ஆறு வாரங்களும் பொதுமக்களுக்கு எதிராகக் கண்டபடி கண்மூடித்தனமான பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதைப் பார்க்க முடிந்தது.
காங்கேசன்துறை மக்களும், இரு சீமெந்து தொழிற்சாலைகளிலும் வேலை செய்த தொழிலாளர்களும் திகைப்பும் அச்சமும் அடைந்திருந்தனர். விடுதலைப்புலிகள் அத்தொழிற்சாலை ஊழியர்களிடம் அவர்களுடைய

Page 74
116
செயற்பாட்டுக்கு குந்தகம் செய்யமாட்டோம் என முன்னர் உறுதியளித்திருந்தனர். சீமெந்துத் தொழிலக நிர்வாகத்துக்கும் இராணுவத்துக்குமிடையே உத்தியோகபூர்வ உறவு நல்லதாகவே விளங்கியது. அப் பகுதிப் பிரசைகள் குழுக்கள், இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே, எழுதப்படாத ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தியதால் இராணுவம் காங்கேசன்துறை-பலாலி வீதியைச் சுதந்திரமாகப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இது அப் பிரதேசத்திற் பொதுமக்கள் வாழ வழிவகுத்தது. இப்பொழுது இவையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. விடுதலைப் புலிகள் மேற்கொணி ட நிலக்கண்ணித்தாக்குதல்கள் அதிகரித்தமையால் இராணுவம் பொது மக்களைச் சுட ஆரம்பித்தது, பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு கொல்லப்பட்டவர்களுள் 25ம் திகதி யாழ்ப்பாண வைத்தியசாலையிற் கடமையாற்றிவிட்டுக் காங்கேசன்துறையிலுள்ள தமது வீட்டுக்குத் திரும்பி வந்த டாக்டர் விஸ்வரஞ்சனும் ஒருவர். இது காங்கேசன்துறை, மயிலிட்டி, மாவிட்டபுரம் மக்கள் முற்று முழுதாக வெளியேறுவதற்குக் காரணமாயிற்று. இலங்கை அரசாங்கத்தின் விடாப்பிடியான மிருகத்தனத்தால் மக்கள் எல்லாரும் அனுபவிக்கும் அர்த்தமற்ற அவலங்களின் மீது விடுதலைப்புலிகள் தமது வெறித்தனமான சமயார்த்த தந்த கோபுரத்தைக் கட்டி வளர்த்தனர். தமிழ் மக்கள் மீது கணிமூடித்தனமான ஷெல் அடிகளும், விமானக்குணர்டு பொழிவுகளும் ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பித்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உணர்ச்சிகரமான ஆதரவு அதிகரித்தது. இநீதியா என ன செய்துகொண்டிருக்கின்றதென மக்கள் கேட்டார்கள். புறக்கோட்டைக் குண்டு வெடிப்பு கித்துலுட்டுவா படுகொலைகள் ஆகியவற்றின் பின்னர் இந்தியா தனது எதிர்ப்புத் தெரிவிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டதென ஒரு இந்திய உயர் அதிகாரி ஒரு பத்திரிகை ஆசிரியருக்குக் கூறினார். விடுதலைப் புலிகளினதும் அரசாங்கத்தினதும் அழிவுக் கோட்பாடுகள் மூலம் ஒருவரிடமிருந்து ஒருவர் போசாக்குப் பெற்றுக் கொண்டனர்.
காங்கேசன்துறையைச் சூழ வாழ்ந்த மக்கள், ஒரு வருடமாக விடுதலைப் புலிகளுடனும் இராணுவத்துடனும் வாழு, வாழவிடு என்னும் கொள்கையின் அடிப்படையில் வாழ முயன்றனர். விடுதலைப்புலிகள் சீமெந்துத் தொழிற்சாலையில் உள்ள தமது ஆதரவாளர்கள் மூலம் சில சிறப்புரிமைகள் அனுபவித்தனர். வேலைத்தளப் பொறியியலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளிடமிருந்து வந்த "முதலாவது எச்சரிக்கை" இன் பின் 1987 ஜனவரியில் தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். ஒரு பொறியியலாளர் 'என்ற முறையில் அவரிடமிருந்த தொழிற்பெருமை சில கோரிக்கைகளுக்கு அவரை இணங்கவிடவில்லை. அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெறுவதற்குச் சிலர் தமது சக ஊழியரின் உயிர்களுடன் விளையாடத் தயாராயிருந்தமையும் அவரை விழித்துக் கொள்ளச் செய்தன. கோட்பாட்டு அடிப்படையில்லாத வாழு, வாழவிடு என்ற கொள்கை தோல்வி அடைவது தவிர்க்க முடியாதது. சீமெந்துத் தொழிற்சாலை ஏப்ரல் 22ம் திகதி மூடப்பட்டது.
1987 மார்ச் 25ம் திகதி ரோந்து சென்ற இராணுவம் மீது விடுதலைப்புலிகள் நடத்திய இன்னொரு நிலக்கண்ணி வெடித்தாக்குதல் உள்ளூர் மக்களின் மனதைக் கொள்ளைகொணிடது. அத்தாக்குதலில் இலங்கை இராணுவ வீரனின்

17
துண்டிக்கப்பட்ட பூட்ஸ் அணிந்த பாதம் ஒன்று மாவிட்டபுரம் கோவிலடியிற் காணப்பட்டது. இதற்குப் பதிலாக இலங்கை இராணுவம் இவ்விடயங்களுக்குத் தொடர்ச்சியாக ஷெல் அடித்தது. முதலிரவில் கோயில் பூசாரி தனது காலொன்றை இழந்தார். தெல்லிப்பளைச் சந்தியில் திரு வேணுகோபால் கொல்லப்பட்டார். மார்ச் 23ம் திகதி விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாணத்தலைவர் கிட்டு எறிகுண்டுத் தாக்குதலில் ஒரு காலை இழந்தார். கர்மாவில் ஆழமான நம்பிக்கை கொண்ட மாவிட்டபுரக் கிராமவாசிகள் நடந்தவை பற்றித் தமது சொந்த முடிவுகளை எடுத்துக் கொண்டனர். எவ்வாறாயினும் குருதி தோய்ந்த இக் கொடூரத்தின் காட்சி கணிசமானவர்களின் கவனத்தை ஈர்த்தது. நான்கு மாதங்களுக்கு முன்னர் நல்லூர்க் கந்தசாமி கோவிலில் ஒன்பது இலங்கை இராணுவத்தினரின் இறந்த சடலங்களின் கண் காட்சியைத் தொடர்ந்து இது நடைபெற்றது. இதன் விளைவாக உணர்ச்சிபாவங்களில் மாறுதல்கள் இடம்பெற்றன. இந்துக்கள் பலர் இது பற்றி வெறுப்படைந்தபோதும் மெளனமாயிருந்தனர்.
இலங்கை அரசாங்கம் ஏப்ரல் 22ம் திகதி யாழ்ப்பாணப் பொது மக்கள்மீது ஷெல் தாக்குதலையும் விமானக்குணர்டு பொழிவையும் ஆரம்பித்தது. வழமையாகக் காலை 630 முதல் மாலை 830 வரை பலபகுதிகளில் அடிக்கடி ஷெல் விழுவதை ஒருவர் கேட்கக் கூடியதாக இருந்தது. அநேகர் குடும்பங்களாய் வீடுகளுக்குள்ளும் பதுங்கு குழி இருந்தால் அதற்குள்ளும் சென்று ஒளிந்தவாறு கடவுளிடம் மன்றாடினர். விமானத்தாக்குதல்கள் பெரும்பாலும் குறிதப்பி விழுந்தன. இலங்கை விமானப்படை பருத்தித்துறையில் மக்கள் நெருங்கி வாழும் சந்தைப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முகாமைத் தாக்க நான்கு தடவைகள் முயன்று தோல்விகண்டது. இறுதியாக, ஒரு மாதத்தின் பின் மே மாத முடிவில், வடமராட்சியைக் கைப்பற்றியதும் புல்டோசர் கொண்டு அந்த முகாமை நிர்மூலமாக்கினர். குண்டு வீச்சினாலும் ஷெல் தாக்குதலாலும் மே 26ம் திகதி வரை பொதுமக்கள் 100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
மே முதலாந் திகதி, நாடு முழுவதும் மே தின ஊர்வலங்களுக்கு விதித்த தடையை மீறி, விடுதலைப்புலிகள் உரும்பிராய்ச் சந்தியில் ஆரம்பித்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் ஒரு கூட்டத்துடன் முடிவடையும் மாபெரும் ஊர்வலத்தை ஒழுங்கு செய்தது. வான்களும், பஸ்களும், லொறிகளும், தூர இடங்களிலுள்ள மக்களை ஏற்றி வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி மக்களைக் கூட்டத்துக்கு அழைத்தனர். சிலர் உடனேயே வெளிப்படையாக மறுத்துவிட்டனர். ஏனையோர் விரும்பியோ விரும்பாமலோ பயம் காரணமாகவோ கூட்டத்திற் கலந்து கொள்ளச் சென்றனர். அநேகள் விருப்பத்துடனும் புதினம் பார்க்கும் ஆவலுடனும் சென்றனர். அக்கூட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் குகனுடைய சகோதரரான யோகி, கிளர்ச்சியூட்டுகின்ற ஓர் உரையாற்றினார். அது விடுதலைப் புலிகள் மக்களுக்கு எதை அளிக்கப்போகின்றனரென்பது பற்றிய நேர்மையான கூற்றாகும். "35 இலட்சம் தமிழ் மக்கள் இறந்தாலும் எமது தமிழீழ இலட்சியத்திலிருந்து நாம் மாறமாட்டோம்" என்று யோகி கூறினார். "இன்றைய தமிழ் மக்களின் சனத்தொகையில் ஒரு சிறுதொகையினரே தமிழீழ அரசுக்குப் போதும்" என

Page 75
8
அவர் மேலும் கட்டிக் காட்டினார். அத்தகைய ஒளிவு மறைவற்ற பேச்சைக் கேட்டுச் சிலர் விழிப்படைந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தை விமர்சிப்போர் அதன் அரசியலை சயனைட் அல்லது தற்கொலை அரசியல் எனக் குறிப்பிட்டபோதும், தமிழனி தற்கொலை செய்வதற்கு மிக அப்பாற்பட்டவனாயிருந்தான். தமிழன் பொருளாதாரப் பாதுகாப்பை செய்வதற்கே மிகவும் விரும்பினான் (ஆச்சரியப்படும் வகையில், விடுதலைப்புலிகள் பிரதேசப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியளவுக்கு மக்களின் உயிரைப் பாதுகாப்பதை வலியுறுத்தவில்லை. யாழ்ப்பாணத்திற் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் சராசரியாக 1000 ரூபா செலவில் பதுங்கு குழி வெட்டியமை தாம் தற்கொலைப் பிரதிநிதிகள் அல்ல என்பதை எடுத்துக்காட்டியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இந்த சிந்தனைப்போக்கு பற்றியும் பொதுமக்களின் தலைவிதிபற்றிய எதுவித அக்கறையுமற்ற போக்குப் பற்றியும் மன்னாரிலும் கிழக்கு மாகாணத்திலும் பாதிப்புற்ற மக்கள் வெளிப்படையாகவே தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்தின் சுற்றுப் புறங்களில் வாழ்கின்ற மக்களின் மத்தியில் இவை செவிடன் காதில் ஊதிய சங்காயின. விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை நடத்தியவிதம் அநேகரால் ஏற்றக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அங்கே ஆட்கள் திடீரென்று காணாமல் போதல் சிறு பிரச்சினை. ஆனால் மக்கள் தொந்தரவின்றிப் பணம் சம்பாதிக்கலாம். பயண முகவர்கள், தொழில் முகவர்கள், கொழும்புக்கு வாகனசேவை செய்பவர்கள், ஒப்பந்தக்காரர்கள் முதலியோர் தொடர்ந்தும் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். வாகனப் பயணச் சேவை நடத்துவோரும் விடுதலைப்புலிகள் இயக்கமும், கொழும்புக்குரிய புகையிரதச் சேவையை நிறுத்துவதைப் பரஸ்பரம் அனுகூலமானதெனக் கணிடார்கள். கொழும்புக்குரிய பயணக்கட்டணம் இலங்கை - இந்திய உடன்படிக்கைக்குப் பின் புகையிரத சேவை மீண்டும் தொடங்கியதால் 200 ரூபாவிலிருந்து 65 ரூபாயாகக் குறைந்தது. வாகனப் போக்குவரத்துச் சேவை நடத்துவோருடன் இலங்கை இராணுவம் நல்லுறவை வைத்திருந்தது. ஆனால், இப்பொழுது இவையெல்லாம் மாற்றமடைந்து, துன்பதுயரங்களே பொதுத்தன்மையாக இருக்கப்போகின்ற ஒரு காலத்தை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தனியே தம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்தபோது அது யாழ்ப்பாண மக்களுக்கு "ஊர் ஒழுங்கையும் இலங்கைப் படைகளால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பையும்" கொடுப்பதாக காண்பித்தது இது சில காலம் நன்றாக வேலை செய்தது. ஆனாற் காலப்போக்கிற் சிதைந்து போனது. " ہو۔
இலங்கை இராணுவம் வசாவிளான், கட்டுவன், மண்டைதீவு ஆகிய இடங்களிற் பல மாதங்களாகப் புதிய முகாம்களை நிறுவியதன்மூலம் தனது பாதுகாப்பை வலுப்படுத்திக் கொண்டது. இலங்கை இராணுவத்தின் போர்த் தந்திரோபாயம் எளிமையானது. அது ஒரே சமயத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, ஆனையிறவு பலாலி ஆகிய பல்வேறு நிலைகளிலிருந்து வெளிக்கிடுவது போல் பாவனை செய்துகொண்டு அதேநேரத்தில் குறிப்பிட்ட ஒரு படைப்பகுதியொன்றை மட்டும் விமானப் பாதுகாப்புடன் முன்னேற்றிச்சென்று புதியதொரு முகாமை நிறுவுதல் அவற்றுள் ஒன்றாகும். 1986ம் ஆண்டின் பிற் பகுதியில் ஈபிஆர்எல்எவ்,

119
ஈரோஸ், புளொட் தமிழ் ஈழ இராணுவம் ஆகியவற்றின் ஆதரவு, விடுதலைப்புலிகள் எவ்வளவு வெறுப்புடன் ஏற்றுக்கொள்ள மறுத்தபோதும், இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதிற் தீர்க்கமானதாயிருந்தது. எதிர்த்தாக்குதற் போர்த்தந்திரம் ஆயுதப்போராட்டக்குழுக்களால் விருத்தி செய்யப்பட்டது. அவை காவல் அரண்களில் தமது உறுப்பினர்களை வோக்கி - ரோக்கியுடன் காவலுக்கு விட்டனர். இலங்கை இராணுவம் முன் நகர்வதைக் கண்டதும் பிக்கப், மினிபஸ் போன்ற வாகனங்களால் தங்கள் அணியை ஒன்று திரட்டும் முறை ஒரு குறிப்பிட்ட அளவுக்கே சாத்திமாயிருந்தது. ஆனால் 1987ல் விடுதலைப்புலிகளின் சக்தி அனைத்தும் பரவலாக்கப்பட்டு ஐதாக்கப்பட்டதால் பெப்ரவரி 28ம் திகதி இலங்கை இராணுவம், ஒரு ஹெலிக்கொப்பின் துணையுடன் மட்டும் முன்னேறியபோது, புலிகள் பக்கமிருந்து எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை. அந்தப் பகுதியில் வாழும் ஒருவரின் கூற்றுப்படி, காவல் அரணிகளில் நின்றவர்கள் மேலதிக போராளிகளை உடனே அனுப்புமாறு கிட்டுவை வானொலி மூலம் கேட்டபோது கிட்டு இராணுவத்தை அடித்துத் துரத்துமாறு வெறுமனே அவர்களுக்கு உத்தரவிட்டபோது அவர்கள் திகிலடைந்து போனார்கள்.
முன்னைய ஒரு சம்பவத்தில், இலங்கை இராணுவம், விடுதலைப்புலிகள் தமது காவல் அரண்களை விட்டு ஒடுமளவுக்குச் சுற்றி வளைத்துத் தரையாலும், வானாலும் தாக்கியது அதன் பின்னர் இராணுவம் அங்கிருந்து விலகிக்கொண்டது. மாலையில் கிட்டு தனது காரில் இவ்விடத்துக்கு வந்தார். தனது ஆட்களை அங்கு விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாக மாலை இருளில் நடந்து சென்றார். குள்ளமானதும் தலை வழுக்கையானதுமான உருவத்தையுடைய அவர் மாலையில் ஓரிடத்தில் அமர்ந்து புருவங்களை நெரித்துக்கொண்டு சிந்தனையிலாழ்ந்தார். அவரது காலத்தில், அவர் ஒரு கோப்பைத் தேனீர் குடிப்பது பற்றி யோசிக்க எடுக்கும் நேரத்தைக் கூடச் செலவிடாது சி.ஐ.ஏ. மொசாட், சி.ஐ.டி. ஏஜெண்டுகளெனக் கூறிப் பத்துக் கணக்கில் கொலை செய்துள்ளார். விTதரன் விவகாரத்தின்போது இவரே தனது முரண்பாடுகளைச் சொரிந்து கொண்டு, பல்கலைக்கழக அறிஞர்களைப் பயமுறுத்தி வைத்தார். அவர்களது மெளனம், "ஓம் தளபதி" என்று கூறுவதைப்போல் இருந்தது. யாழ்ப்பாணத்தில் அதி உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். அவர் ஏனையவர்களின் உயிர்களுடன் விளையாடியது மட்டுமன்றித் தன்னைச் சேர்ந்தவர்களின் உயிர்களுடனும் விளையாடினார். அவரது பாதுகாப்பில் இருந்தபோது அவரது நண்பரும் புளொட்டின் யாழ்ப்பாணப் பொறுப்பாளருமான மென்டிஸ் என்பவர் இறந்து போனார். அத்தகைய விடயங்களில் நட்புறவு அவருக்குக் குறுக்கே நிற்கவில்லை. அவருடைய ஆட்களுள் அவரது பகட்டுத்தன்மையால் ஆத்திரமடைந்தவர்களும் இருந்தனர். ஆனாற் போரிடுவதிலே ஏனைய சிலர் வெறித்தனமான நம்பிக்கை வைத்ததுபோல, அவர்கள் அவரது தலைமையிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். அவர் மனதில் அன்று என்ன நினைத்தாரென்று ஒருபோதும் அறிய முடியவில்லை. இப்பொழுதுதாணி அவர் முதற்தடைவையாகக் கவலையுள்ள மனிதராகக் காணப்பட்டார். தனது தலைமைத்துவ எழுச்சி விரைவில் அஸ்தமனமாகிவிடுமென்ற முன்னறிவிப்பை அவர் பெற்றிருந்தாரா?

Page 76
120
விடுதலைப்புலிகளின் தலைமையின் விருத்தி சில வேளை பழைய புராணங்களில் காணப்படுகின்ற மனித மனோதத்துவத்தில் ஆழப்பதிந்த ஏதாவதுதொன்றுடன் தொடர்புற்றிருக்கலாம். விடுதலைப்புலிகளின் தலைவர்கள் புராதனக் கடவுள்களைப் போல வாழ்ந்து வந்துள்ளார்கள். "நீபேலுங்கின் மோதிரத்தில்" வரும் வொட்டாவைப் போற் தமது செயல்களின் எல்லையை எட்டியதும் கடவுள்கள் தாமே தம்மை அழித்துக் கொள்வதை விரும்புவதை ஒத்ததாகின்றது. இது அவர்களது விருத்தியின் ஒரு அம்சத்தை விளக்குகின்ற ஒரு வினோதக் கற்பனையாகும். உள் நோக்கங்களை அறிவது சிக்கலான விடயமே. விடுதலைப்புலிகளின் தலைமை ஒரே நேரத்தில் பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. மாத்தயா, கிட்டு, குமரப்பா போன்ற தலைவர்கள் அப்போது திருமணம் செய்யவில்லை. அல்லது திருமணம் செய்வதற்கு அவர்கள் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களது தலைவர் இரு பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருந்தார். விடுதலைப்புலிகளின் தலைமை. அதிகாரத்தைப் பெறக்கூடிய ஏற்பாடுகளிற் தன் ஆர்வத்தைப் பல சந்தர்ப்பங்களில் வெளிக்காட்டியுள்ளது. 1986 பிற் பகுதியிலே கிட்டு, தெற்கிலுள்ள பிரமுகர்கட்கும், பொதுசனத் தொடர்புச் சாதனங்களுக்கும் இது பற்றிய பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் பற்றிக் கூறியுள்ளார். பெருமளவிற் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்ததுடன் பல இரகசியப் பேச்சுகளும் இடம்பெற்றன. 1987 ஜூலை இலங்கைஇந்திய ஒப்பந்தத்தின் பின் விடுதலைப் புலிகளின் முயற்சிகளிற் பெரும்பான்மையானவை அதிகாரத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. உண்ணாவிரதம் நடைபெற்ற காலத்தில் இந்தியாவுடன் நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட உடன்பாட்டில் பெரும்பாலும் அதிகாரத்தைப் பற்றியே முற்றிலும் பேசப்பட்டது. உண்மையில் அவர்கள் பூரணமான அதிகாரத்தை விரும்பினார்கள். இதற்காக அவர்கள் தமது சூதாட்டத்தில், அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து, அதன் விளிம்பு வரை சென்றனர். ஆனால் 1987 செப்ரம்பரில் திலீபனின் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகள் அதிகாரத்துக்கான கோரிக்கைகளாக இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் எதையாவது விரும்பினால் தனது சொந்த உறுப்பினர்களினதும், பொது மக்களினதும் உயிர்களுடன் விளையாடத் தயாராக இருந்தனர். சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 12 விடுதலைப்புலிகள் 1987 அக்டோபர் 5ம் திகதி தற்கொலை செய்ததனாலும் அதைத் தொடர்ந்து சிங்களவர் படுகொலை செய்யப்பட்டதனாலும் விளைந்த இக்கட்டான நிலை அக்கோலத்தின் ஒரு பகுதியாகும். விடுதலைப்புலிகள் சிலவேளைகளில் தமிழ்நாட்டின் உதவியுடன் ஒரு நெருக்கடியைக் தூண்டி விடுவதன் மூலம் தீர்க்கமான ஒரு பெறுபேற்றை எதிர்பார்த்தது போற் தெரிந்து, "எமது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விடுங்கள். நீங்கள் எதையேனுஞ் செய்ய முயன்றால் உங்கள் விடயங்களை நாம் கெடுத்து விடுவோம்" என்று அவர்கள் சூசகமாக கூறுவதைப்போல் இருந்தது.
இந்தியா விடுதலைப் புலிகளைத் தாக்கியபோது, பிரபாகரன் தனது செய்தியில் நாம் எங்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதனாற் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு இந்தியாவே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று கூறினார். இது உணர்மையில் தாமே தலைமை

121
வகிப்பதாக கூறும் ஒருவர், அதாவது மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை தன் தலையில் எடுத்தவர், எடுக்கக்கூடிய மிக விந்தையான ஒரு நிலைப்பாடாகும். போர் இழுபட்டுச் சென்றது. மோசமான கொலைகள் நடந்து முடிந்ததும், விடுதலைப் புலிகளின் உதவித்தலைவர் மாத்தயா, இந்திய அதிகாரிகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார். விடுதலைப்புலிகளுக்கு இடைக்கால நிர்வாக சபையிலுள்ள 12 இடங்களில் 7 இடங்களை ஒதுக்கிய 28 செப்டம்பர் நிலைக்கு மீண்டும் திரும்ப வேண்டுமென்பதே பிரதான கோரிக்கையாகும். இக் குருதி சிந்தல்களுக்கும், ஹோமர் பாணியிலான நகைச்சுவை நாடகங்களுக்கும் பின்னணியில் நன்குணரக்கூடிய ஏதோவொன்றுக்கான (அதாவது அதிகாரத்துக்கான) முனைப்பு இருந்தது. மரபு சார்ந்த அரசியலில் இயக்கம்பற்றி ஒரு கற்பனாவாத மாயையைக் கொண்டிருப்பது தவறானது. "ஒவ்வொரு மனிதனும் பெரும்பாலான காலத்திற்குப் பரிகாசத்துக்குரியனவானாகத்தான் இருக்கிறான்". அதி கற்பனாவாதியான, கவி பைரன் இதைத் தனது "டொன் யூவான்" என்ற ஆக்கத்தில் நேர்மையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
அதேவேளை விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பெருமையுடையவர்கள், தங்கள் சாதனைகளையிட்டுப் பெருமைப்படுபவர்கள். எனவே தம்மை எவரும் ஒரு தடிபோற் பாவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்தியா இதை ஓர் எல்லை வரை அங்கீகரித்தது. விடுதலைப் புலிகள் தமது இலக்கை அடைவதில், மற்ற அனைவருக்கும் ஏற்படுகின்ற இடர் ஆபத்துகள் ஈறாகத் தம்மிடமுள்ள எல்லாவற்றையும் இழக்கத் தயாராய் இருந்தார்கள். விடுதலைப் புலிகளிடம் உள்ள மதரீதியான மூல அம்சம் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஏனைய கடவுள்களையும் இணைத்துக் கொண்டார்கள். கிட்டு பக்தியான ஓர் இந்து. அவர் கிறிஸ்தவ ஆலயங்களில் மெழுகுவர்த்திகளும் ஏற்றிக்கொள்வார். அதிகார பீடத்தின் உயர்நிலை மிகவும் திட்டமிட்டு செயல்பட்டது. அடி மட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களிடையே, தாக்கமான சிறுபிள்ளைக் குணத்தால், பலமான (கேள்விக்கிடமற்ற) மதரீதியான உற்சாகம் நிலவியது.
1988 மே மாதத்தில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளை மெச்சுபவர்கள் தமக்கு உயிர்ப்பாதுகாப்பும் பொருள் ரீதியான பாதுகாப்புமளித்த ஒரு இர்ாலை; சக்தியாக அவர்களை நோக்கினர். 1987 ஜனவரி-மே கால இடையில் நிர்ழ்ந்த தொடர்ச்சியான இராணுவரீதியான பின்னடைவுகள், இக்கருத்து இனிமேலும் பொருத்தமாயிருக்காதென உறுதிப்படுத்தின. விடுதலைப்புலிகள் இதை ஈடு செய்வதற்கான ஒரு மதரீதியான வேண்டுகோளை விடுத்தது. 1987 மே முதலாந்திகதி, யோகி 35 இலட்சம் மக்கள் மரித்தாலும் தமிழீழம் கிடைக்கும்வரை தமது இலட்சியத்தைக் கைவிடமாட்டோம் என்று அறிவித்தபோது, வெறித்தனமான உணர்வின் சொற் சிலம்ப வெளிப்பாடென அதனை மக்கள் கருதினர். இது இப்பகுதிகளிற் சர்வசாதாரணமானது. தெற்கில் அரசியல்வாதிகள் ஒரு துளி இரத்தம் எஞ்சி இருக்கும்வரை இந்தியாவை எதிர்த்துப் போராடுவதென உறுதி கூறினர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பலமான ஆதரவாளர்களேனும் இந்த உலகை விட்டுப்போக விரும்பவில்லை. ஆயினும் அவர்கள் அதைப் புகழ்ந்தார்கள். புலிகளானது பரந்தளவான ஓர் தற்கொலைக்குச் சமூகத்தை தயார்படுத்துகிறார்கள் என்பது மக்கள் மத்தியில் ஆழமாகப்

Page 77
22
பதியவில்லை. ஆனால் இவ்வாறு விடுதலைப்புலிகள் ஒன்றைக் கூறும்போது மக்கள் வேறொன்றை எதிர்பார்ப்பதும் வேறொருவிதமாகப் புரிந்து கொள்வதும், பின்னர் பல்வேறு விளைவுகட்குத் தள்ளிச் சென்றது. பின்நோக்கிப் பார்க்கும் எவரும் விடுதலைப்புலிகள் இயக்கம் தனது நிலைமையை தெளிவாகக் கூறவில்லையெனக் குற்றஞ்சாட்டமுடியாது. மே தினக் கூட்டம் நல்லூர்க் கந்தசாமி கோயிற் பின் வீதியில் நடைபெற்றது. கூட்டம் நடத்தத் தெரிவுசெய்த இடமே எதிர்காலத்தில் நடக்கப்போவதன் அறிகுறியாக இருந்தது. அரசாங்கம் விதித்த தடையையும் மீறி கந்தசாமி கோயிற் சுற்றுப்புறத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
கோட்டையிலிருந்து ஷெல் அடிபடவோ ஹெலிக்கொப்பிலிருந்து சுடுபடவோ உண்மையில் வாய்ப்புகள் இருந்தன. இது நடந்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய பொதுமக்களின் அழிவுக் காட்சியை நல்லதொரு பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியிருக்கலாம். அதிட்டவசமான உண்மை யாதெனிற் பகுத்தறிவு பயன்படுத்தப்பட்டதால் அத்தகைய தாக்குதல் இடம் பெறவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இது ஒரு வெற்றியென மீண்டும் பிரசாரம் செய்யப்பட்டது. நாட்டின் ஏனைய பகுதியிலுள்ளோர் அரசாங்கத்தின் தடையை மீற முடியாதிருக்கையில் இச் செய்கை எது நடந்தாலும் விடுதலைப்புலிகள் வெற்றிபெறுவர்கள் என்று நம்பப் பண்ணியது. யோகி கூறியவற்றின் உட்கருத்து யாதெனில், மனித இழப்புகள் பொருட்டில்லை. வெளிநாடுகளில் மக்கள் இழப்புகள் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இங்கே விடுதலைப் புலிகளின் இழப்புகள் வெறித்தனமான முழக்கங்களுடன் அறிவிக்கப்பட்ட அதே வேளை, மக்கள் இழப்புக்கள் கிஞ்சித்தும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.
82 காமினி நவரத்னவின் கதை
இலங்கை அரசாங்கம் முழுக்குடா நாட்டையும் மீண்டும் கைப்பற்றுவதற்கான தாக்குதலுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தமை இப்பொழுது அநேகருக்குத் தெளிவாகியது. அவர்கள் வெற்றி பெறுவார்களோவெனச் சிலரே ஐயுற்றனர். இத்தாக்குதலின் விளைவாகக் கிழக்கு மாகாணத்தைப்போல் முழுக்குடா நாடும் அகதி முகாமாக மாற்றப்படும் நிலைமை மிகவும் நிதர்சனமானது. முக்கிய பிரமுகர்கள் சிலர் குறைந்த பட்சம் டிசெம்பர் 19ம் திகதிப் பிரேரணைகளின் அடிப்படையில் அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகளைப் பேச இணங்கவைப்பதற்காக அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டுமென உணர்ந்தனர். அந்த நேரம் அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்ளும் வழிகள் பல இருந்தன. சற்றடே றிவ்யூ ஆசிரியர் காமினி நவரத்ன அத்தொடர்புகள் கொண்டவர் ஆவார். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து ஒரு கடினமான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த சற்றடே றிவ்யூ ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியராக அவர் பணிபுரிந்து வந்தார். சிங்களவரான அவரது பணியின் பங்கு பரித்தியாகமானது. ஆனால், அவர் அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார். அவர் நாடாளுமன்ற நிருபராக இருந்தமையால் அவருக்கு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நன்கு தெரியும். தனது அதிர்ஷ்டத்தை அதன் எல்லைவரை தள்ளி, அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுகிற ஆற்றலும் துணிவும்

123
அவரிடமிருந்தது. மேற்கத்தைய பத்திரிகை ஆசிரியர்களின் நிலைபோல் அன்றிப் பிணக்குகளில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினரும் மறைக்க வேண்டியவை பல இருந்ததால், அவர்கள் பத்திரிகைத் ஆசிரியர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை நவரத்ன அறிந்திருந்தார். உணர்மையை எவ்வாறாயினும் வெளிப்படுத்தப்படவேண்டுமென அவர் உணர்ந்தார். இந்த விடயத்தில் அவரது சாதனை இந் நாட்டில் மிகக் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
ஜயவர்த்தன இனப்பிரச்சினையைக் கையாண்ட முறையை நவரத்ன கடுமையாக விமர்ச்சித்தபோதும் அவர் மீது ஒருவித அன்பான மதிப்பு வைத்திருந்தார். சில ஆயுதப்போராட்டத் தலைவர்களை அவர் ஒரு தந்தையின் பரிவோடு உயர்வாக மதித்தார். அவர்களுள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டுவும் றஹீமும் ஈறோஸ் தலைவர் பாலகுமாரும் ஈபிஆர்.எல்.எவ். வைச் சேர்ந்த அமரர் பெஞ்ஜமினும் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கைப் படைகளை எதிர்ப்பதில் பெடியன்கள் பெருஞ்சாதனை புரிந்துள்ளார்கள், ஆயினும் அவர்கள் இளையவர்கள், முதிர்ந்த ஆலோசனைகளின் வடிவத்தில் அவர்களுக்கு உதவி தேவை என அவர் அடிக்கடி தனது உணர்வுகளை வெளியிட்டார். டிசெம்பர் 19ம் திகதிப் பிரேரணைகள் பேச்சுவார்த்தைகளுக்கு நியாயமான அடிப்படை கொண்டவையெனவும் மிக விரைவாக ஒரு தீர்வைக் காணாவிட்டால் யாழ்ப்பாணம் களைந்து மடிந்துவிடும் எனவும் அவர் கருதினார். சந்தேகமின்றித் தனது கருத்துக்களை வெளியிடுவதில் அவர் நேர்மையாக இருந்தார். பொதுமக்களின் ஒரு பகுதியினர் அவற்றை ஏற்றுக்கொண்டனர். இரக்கங்குறைந்த இன்னொரு பகுதியினர் அவர்மீது ஆழமான ஐயுறவு கொண்டனர். யாழ்ப்பாணத்தில் உயர் வட்டாரங்களில் அவர் ஜே.ஆரினுடைய ஏஜெண்டாக அல்லது வேறு யாரோவொரு சாராரின் ஏஜெணர்டாகச் செயற்படுகிறாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டார். இப்பொழுது விடுதலைப்புலிகளின் தலைவர்களான கிட்டுவும் ரஹீமும், தப்பெண்ணத்தில் அவரைச் சந்தேகித்தனர். டிசெம்பர் 19 பிரேரணைகள் தொடர்பாக விடுதலைப்புலிகளுடன் பேச நவரத்ன எடுத்த அண்மைய முயற்சி பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. மற்றவர்கட்கு அவற்றின் சூசகத்தன்மை புரிந்தபோதும் நவரத்ன அவற்றிற்கு அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுப்பதாகவில்லை.
பயமுறுத்தும் விளைவுகளைத் தவிர்ப்பதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தை எவ்வாறு அணுகுவது என்பது பற்றிக் கலந்துரையாட மே 11ம் திகதி ஒரு குழுவினர் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடினர். நவரத்ன இக் கூட்டம் பற்றிக் கேள்விப்பட்டுப் பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவ்விடயமாகச் சில நிமிடங்கள் தனது கருத்துக்களைக் கூறிவிட்டு வெற்றி பெற வாழ்த்தி அவ்விடத்தை விட்டு அகன்றார். இந்த வைபவத்திலேயே பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகளின் உளவு வலைப்பின்னலின் வேலை முழு அளவில் வெளிப்பட்டது. நவரத்னா விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக ஒரு முறைப்பாட்டை ஒழுங்கு செய்யவே பல்கலைக்கழகத்திற்குச் சமூகமளித்தார் என்றும் இம்முறைப்பாடு தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பினை (SAARC) பத்திரிகை ஆசிரியர் மகாநாட்டிற் சமர்ப்பிக்கப்படவுள்ளதென்ற வெகு கற்பனையான வதந்தியைச் சில மூத்த பிரமுகர்கள் பரப்பிவிட்டனர். தமது சக உறுப்பினர்களைத் தாம் பயங்கரமான ஆபத்தில் விழுத்திவிடலாம் என்ற சாத்தியக்

Page 78
-124
கூறுபற்றிச் சிறிதேனும் சிந்திக்காமல் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கின்றனர் என்பது விரிவுரையாளர் மத்தியிலும், மாணவர் மத்தியிலும் மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. நவரத்னவை ஒரு மாணவன் பின்தொடர்ந்து சிறைப்படுத்தினான். அவரைக் கைதுசெய்த முறை அகெளவரமானதாயிருந்ததுடன், அளவிடமுடியாத அவரது சேவையையும் கவனத்திற்கொள்ளவில்லை. மாத்தயா, தானே முன்னின்று நிாத்திய விசாரணையின் பின் தங்களது சிரேட்ட ஆலோசகர்கள் எனக் கூறப்பட்ட சிலரால் தமக்குப் பிழையான தகவல்கள் கொடுக்கப்பட்டதென்பதை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் ஏற்றுக்கொண்டனர். நவரத்ன நான்கு நாட்களின் பின் விடுவிக்கப்பட்டர். பேரழிவுக்கு முகங்கொடுக்கும் நிலையில்தான் மக்களுக்காக ஏதோவொன்றைச் செய்து கொண்டிருக்கிறதாக நம்பிய ஒரு மனிதர்மீது யாழ்ப்பாணத்தின் உயர் குழாத்தைச் சேர்ந்த சிலர் ஊகத்தின் அடிப்படையிற் பழிச் சொல்களை வீசுவதைப்பார்க்கிலும் உயர்வான எதையும் செய்யமுடியாதிருப்பது யாழ்ப்பாணத்தின் இழிவான நிலைக்கு ஒரு அறிகுறியாகும். பல மாதங்கட்குப் பின் இந்திய சமாதானப்படையின் தாக்குதலின்போது, விடுதலைப்புலிகள் தமது ஆளுமையை இழந்த பின் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த சிலர் சுயாதீனமான பத்திரிகைப்பணியின் பெறுமதியை உணர்ந்தனர். விடுதலைப்புலிகளின் உயரணி உறுப்பினர் ஒருவர், நவரத்ன தமது பத்திரிகை ஆசிரியர் பணியை யாழ்ப்பாணத்திற் தொடர்ந்து செய்வதைத் தாம் விரும்புவதாக ஒரு மூத்த பிரசையிடம் கூறியுள்ளார். அக்டோபர் 5ம் திகதி இரவு நவரத்னா மட்டும் இங்கு இருந்திருந்தால் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி மைதானத்தில் நீங்கள் அவரைத் தீயிட்டுக் கொளுத்தியிருப்பீர்கள் என்று அந்த மூத்த பிரசை அந்த விடுதலைப்புலிக்குப் பதிலளித்தார்.
அக்டோபர் 5ம் திகதி இரவுதான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்களவர்கள் மீது விடுதலைப்புலிகள் இயக்கம் தர வேட்டை ஆடியது.
63 யாழ்ப்பாண வைத்தியசாலை மூடப்பட்டமை
இக்காலப்பகுதியில் நிகழ்ந்த இன்னொரு நிகழ்வு, அரசாங்கம் யாழ்ப்பாண வைத்தியசாலையை மூட எடுத்த முயற்சியாகும். போதனா வைத்தியசாலைகள் அமைச்சினால் ஏப்ரல் 27ம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மே 3ம் திகதி யாழ்ப்பாண வைத்திய அத்தியட்சகருக்குக் கிடைத்தது. இக்கடிதம், யாழ்ப்பாண் வைத்தியசாலையை மூடும் உத்தரவைக் கொண்டிருந்தது. இது அரசாங்கம் தாக்குதலொன்றுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பதன் அறிகுறியாகும். யாழ்ப்பாண வைத்தியசாலைமீது ஷெல்கள் விழுவதாலும் அவற்றால் ஏற்பட்ட சேதங்களினாலும் அரசாங்கத்துக்குக் கெட்டபெயர் ஏற்பட்டிருந்தது. சுடப்பட்டாற் திரும்பச் சுடுமாறு இராணுவத்துக்கு உத்தரவு கொடுக்கப்பட்டதன் பின் இராணுவ மேலதிகாரிகள் கவனமெடுத்தாலுங்கூட யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து ஏவப்பட்ட ஷெல்கள் யாழ்ப்பாண வைத்தியசாலை மீது விழுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும் எனப் பல வைத்தியர்களும் ஒப்புக்கொண்டனர்.
யாழ்ப்பாணத்தில் வெறுமனே நிலை கொண்டிருப்பதைப் பேணும் தவிர்க்க முடியாத பணியில் இராணுவம் ஈடுபட்டிருந்தது. ஏனைய பகுதிகளிற் படைவீரர்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருந்தமையால் வெளியிலிருந்து ஏவப்படும் கணைகளாற் பாதிக்கப்படும் நிலையிலிருந்தார்கள். 1986 ஜனவரியில்

125
பாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து ஒரு கிலோமீற்றர் சுற்றளவுக்குள் பீரங்கிகளால் திருப்பித்தாக்குமாறு இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டது. யாழ்ப்பாண வர்த்தக நிலையப் பகுதியையும், வைத்தியசாலையும் இந்த எல்லைக்குள் அடங்குகின்றன. இது பொது மக்களின் அழிவின்மீது பிணக்கை விவுபடுத்துவதின் ஒரு அடையாளமாகும். 1986 நடுப்பகுதியளவிற் கோட்டையிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள இலக்குகள்மீது ஷெல்கள் ஏவப்பட்டன. விடுதலைப்புலிகளின் முகாமைக் குறிவைத்து அடித்த ஒரு ஷெல் ஒரு திருமண வீட்டில் விழுந்து மணமகனையும் மணமகளின் தந்தையையும் பலியெடுத்தது. காலப்போக்கில் ஷெல் தாக்குதல் அதிகளவு கண்மூடித்தனமான போக்கைப் பெற்றது. ஸ்னைப்பர் தாக்குதலும் பின்னர் நடத்தப்பட்டது. பாங்க்ஷால் வீதியிலும் காங்கேசன்துறை வீதியிலும் பொதும்க்கள் பலர் ஸ்னைப்பர் தாக்குதலுக்கு இரையாகினர். இராணுவத்தினர் சிலவேளைகளிற் கோட்டையிலிருந்து பீதியுடன் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், சிலவேளைகளிற் கோட்டையை நோக்கி சுடப்பட்ட வெடி வைத்தியசாலையிலிருந்து வருவது போற்படுவதாகவும் பொறுப்புள்ளவர் எனக் கருதப்பட்ட ஒரு இராணுவ அதிகாரி ஒரு தமிழ் நண்பருக்குக் கூறினார். அதே வேளை, வைத்தியசாலை நிருவாகத்தினர் வைத்தியசாலைப் பிரதேசம் இராணுவத்தின்மீது சுடுவதற்குப் பயன்படுத்தப்படமாட்டாதென்ற உத்தரவாதத்தை ஆயுதப்போராளிகளிடமிருந்து பெற்றதுடன் அந்த உத்தரவாதம் பேணப்பட்டதென அவர்கள் நிச்சயமாக நம்பினர். ஆனால் அத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலையில் வைத்தியசாலைமீதான அபாயம் நிலவியது. கோட்டைப்பகுதியில் இடைக்காலப் போர்நிறுத்தம் செய்வதே பகுத்தறிவான வழியாகும். ஆனால் உயிராபத்தான வழிமுறைகளைப் பயன்படுத்தக் கூடியவாய்ப்புக்கள் இருக்கும்போது, பகுத்தறிவான காரணிகள் தூக்கியெறியப்பட்டுவிடும். இராணுவம் ஆத்திரத்தில் இருக்கும்போதும் பொது மக்களைத் தாக்க விரும்பியபோதும் பீரங்கிக் குண்டுகள் அவர்களுக்கு லாவகமானதாக இருந்தன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் இராணுவத்தால் அடிக்கப்படுகின்ற ஷெல்கள் பற்றியே குறிப்பிட்டன. ஆனால் கோட்டைக்குள் ஷெல் போன்ற பல வகைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையினால் அங்கு தொடர்ச்சியான சீனிடுதல்களும் இடம் பெற்றனவென்பதை அநேக பத்திரிகையாளர்கள் ஏற்றுக்கொள்வர். 1987 மே மாத வைத்தியசாலை நெருக்கடியின்போது விடுதலைப்புலிகளின் நடத்தையானது பொதுமக்கள் பற்றிய மதிப்பற்ற அவர்களின் ஏளன மனப்பாங்கு பற்றிய சந்தேகத்தை மேலும் பலப்படுத்தவே உதவியது. இந்த மோதலின் போது மக்கள் மீது எந்தக் கரிசனையும் இல்லை என்ற போக்கு பரவலாக எங்கும் வியாபித்திருந்தது. இதனைக் கைக்கொண்ட அனைவருக்கும் இது நீண்ட காலத்தில் நாசத்தையே ஏற்படுத்தப் போகிறது. எங்கோ ஒரு மூலையில் உள்ள கிராமத்தில் நிலக்கண்ணி வெடித்தானதும் அப்பகுதியில் போராளிக்களுக்குள்ள ஆதரவை அழித்துவிட வேண்டும் என்ற யோசனையில் இராணுவத்தினர் அங்குள்ள பொதுமக்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்துவார்கள். எது என்னவானாலும் இராணுவத்தின் இந்நடவடிக்கை தங்களுக்கு இன்னும் ஆதரவைத் தேடித்தரும் என்ற நோக்கில் போராளிகளும் இதனை உள்ளூர வரவேற்கவும் செய்தனர்.

Page 79
126
1983 ஜூலையின் விஸ்தரிப்புத் தான் இது. இத்தகைய மக்கள் பற்றிய குரூரமான போக்கு இயக்கங்களுக்கிடையே எவ்வளவு தூரம் குரோதத்தை வேரூன்றச் செய்தது என்பதற்கு மட்டக்களப்பைச் சேர்ந்த ஈபிஆர்.எல்.எவ்ஐச் சேர்ந்த இளம் உறுப்பினரின் கதை ஒரு நல்ல உதாரணமாகும். ஆளப்பத்திரி வீதி வழியாக அவர் போய்க்கொண்டிருந்தபோது அவரது முதுகில் சன்னம் ஒன்று பாய்ந்தது. சாதாரணமாக யாரும் இதை கோட்டையிலிருந்து விழுந்த ஸ்னைப்பர் அடியோடு தான் தொடர்புபடுத்திப் பார்த்திருப்பார்கள். தான் பின்னால் திரும்பிப் பார்த்த மறுகணத்திலேயே மயங்கி விழுந்து விட்டதாக அப்பையன் பின்னர் ஆளப்பத்திரியில் தெரிவித்தார். அவர் எல்பிரிஈ சென்ரியில் நிற்பதை மட்டுமே பார்த்திருக்கிறார். தனது உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சன்னம் ஸ்னைப்பர் ரைபிளிலிருந்து வந்ததல்ல என்றும் புலிகள் பாவிக்கும் M16லிருந்து வந்த சன்னமே அது என்றும் அவர் கூறுகிறார். சரியோ பிழையோ அவர் இம்மாதிரி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இது குறித்து அவர் மிகுந்த கசப்புணர்வுடன் காணப்பட்டார்.
யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியை மூடிவிடுமாறு வந்த உத்தரவு பரந்த அளவில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல் அதன் உச்சகட்டத்தில் இருந்தபோதுதான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. யாழ் பெரியாஸ்பத்திரி மட்டும் இல்லையானால் இந்த ஷெல் தாக்குதலில் காயமுற்றவர்கள் அனைவருமே இறந்து போயிருப்பார்கள். தெலீலிப்பழை, பருதி திதி துறை ஆஸ்பதி திரிகளும் ஷெல தாக்குதலுக்குள்ளாகியிருந்தன. ஏப்ரல் 4ம் திகதி பருத்தித்துறை ஆஸ்பத்திரியைச் சேர்ந்த அம்புலன்ஸ் வாகனம் ஷெல் தாக்குதலுக்குள்ளானதற்குப் பிறகு நோயாளிகளை எடுத்துச் செல்வது என்பது அபாயம் நிறைந்த விஷயமாகிவிட்டது. பெற்றோல் போதுமான அளவு கிடைக்காமையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. மே 8ம் திகதி எல்லாம் யாழ்ப்பாணம் சனசந்தடி எதுவும் இல்லாமல் வெறிச்சோடிப் போய் விட்டது. கடைகளில் இருந்த பொருட்களை எல்லாம் கடைக்காரர்கள் அப்புறப்படுத்தி விட்டனர், மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால் இதிலும் சிக்கல்கள் இருந்தன. ஊருக்குள் வாடகைக்கு ஒரு வீட்டை ஒழுங்கு செய்து கொண்டு போன அதிர்ஷ்டசாலிகளும் அவ்வீடு முன்னர் போராளிகளின் முகாமாக இருந்தது எனறு தெரியவந்ததும் அங்கிருந்து வெளியேற வேண்டியவர்களானார்கள். அத்தகைய இடங்கள் இராணுவத்தின் குண்டுவீச்சு விமானங்களின் தாக்குதலுக்குரிய இடங்களாகின. மே 4ம் திகதி திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலிருந்து பெருமளவு நோயாளிகள் ஆஸ்பத்திரியிலிருந்து வெளிச்செல்லுமாறு கூறப்பட்டனர். இந்த அச்சம் நிறைந்த காலப்பகுதியில் பெருமளவு மருத்துவ சேவைகள் தொடர்ந்து செயற்பட்டுக் கொணடிருந்தது சாமானியர்களின் மனோதிடத்திற்கு அருங்கொடையாக அமைந்தது. வங்கிகள் காலையில் சில மணித்தியாலங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஷெல் வெடிகளுக்கும் விடுதலைப்புலிகளின் சென்ரிகளிலிருந்து எழுந்த துப்பாக்கிச் சூடுகளுக்கும் இடையில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதானிருந்தது.

127
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நெடுங்காலமாக வசித்துவரும் திருமதிசிவபாக்கியம் நடராஜா என்பவர் மே 5ம் திகதி தனது பொருட்களை சாவகச்சேரிக்கு அனுப்பி வைக்க எல்லா எற்பாடுகளும் செய்து கொண்டிருந்தார். அந்த வீட்டில் அமைதியாகத் தனது சைக்கிளை விட்டிறங்கிய பால்கரன் யாரோ வீட்டிற்குள்ளிருந்து வந்து பால் வாங்கிச் செல்வதற்காக வீட்டுமணியை அழுத்திக்கொண்டு நிற்கும் ஆச்சரியகரமான காட்சியை ஒருவர் அவதானித்தார். அந்தப் பால்காரன் வானத்தையும் மரங்களில் கீச்சிடும் பறவைகளையும் ஏனோதானோவென்ற மாதிரிப் பார்த்தான். ஷெல் வெடிகள் வெடித்துச் சிதறும் ஒசையின் மத்தியில் அவன் விசில் பண்ணிக் கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் வர்த்தக வங்கிக்கு மேற்கே 40 யார் தள்ளி, ஆஸ்பத்திரியின் புதிய புறநோயாளர் பிரிவுக்கு எதிரேயிருந்த கட்டிடத்தில் மூன்று ஷெல்கள் விழுந்தன. எத்தகைய ஆபத்தான நிலைமை அப்போது காணப்பட்டது என்பதை இது புலப்படுத்துகிறது. மரணம் பற்றிய சிந்தனை மக்கள் மனதில் அழுந்த எழுதப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.
இம்மாதிரி ஒரு ஆபத்தான நிலையில் எவ்வாறு நீங்கள் இங்கு வேலை செய்ய இசைந்தீர்கள் என்று வர்த்தக வங்கியைச் சேர்ந்த ஊழியரான திருஅருள் குணசீலனைக் கேட்ட போது அவர் கூறினார்: "நான் கடவுளை நம்பித்தான் இங்கு வேலைக்கு வருகிறேன். நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமுண்டு என்று கடவுள் கருதினால் நான் உயிர் வாழ்வேன். நான் போயாக வேணடுமெனிறால் அது ஆணிடவனின் கையில் தானுள்ளது." திருமோகனச்சந்திரன் என்ற இன்னுமொரு பால்காரனைக் கேட்டபோது தனது கவலையைப் புன்னகையால் மறைத்துக்கொண்ட அவர் பால் கொடுப்பது மிகவும் சிக்கலானதாயிருக்கிறது என்று தெரிவித்தார். தனது வாடிக்கையாளர்கள் சிலரின் வீடுகளில் சென்று அங்கு வீட்டு மணியை அழுத்திக்கொண்டு நீண்ட நேரம் காத்துக்கொண்டு, வீதியில் ஷெல்களின் இன்னிசையைக் கேட்டுக்கொண்டு நிற்க வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார். ஏனெனில் அவரது வாடிக்கையாளர்களில் மிகப்பலர் பதுங்குகுழிகளுக்குள் இருப்பார்கள். ஒரு சிறு இடைவெளிக்குள் வாடிக்கையாளர் மிகவும் அவதானமாக மெல்லெழுந்து கேற்றடிக்குச் சடாரென விரைந்து பாலை ஒரு பாத்திரத்தில் வாங்கிக்கொண்டு வழக்கத்தில் இல்லாதவாறு ஓடி மறைந்து விடுவார்கள். அவர் மேலும் சொன்னார்: நானுமே கோப்பாவில் எனது குடும்பத்துடன் பதுங்கு குழியில் இருந்திருக்கிறேன். இராணுவவீரர்களின் உணர்ச்சிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். புறக்கோட்டை குண்டு வெடிப்பிற்கும் கித்துல்-உத்துவ படுகொலைக்கும் பிறகு அவர்களும் மிக மோசமாகத்தான் உணர்ந்திருப்பார்கள். பால்காரர் போன்ற சாதாரண நிலையில் இருப்போரிடமிருந்துங்கூட உலகின் மிகத் துணிச்சலான யுத்த நிருபர்களுக்கான கனதியான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன என்பது குறித்து யாழ் மக்கள் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
இதற்கிடையில் யாழ் மருத்துவமனை அதிகரிகளின் பிரதிநிதிகளும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியைப்பற்றித் தமது கருத்துகளைத் தெரிவிப்பதற்குக் கொழும்பு சென்றனர். யாழ் பெரியாஸ்பத்திரி மூடப்பட்டு விடும் என்று அச்சுறுத்தல் வருவதற்கு முன்னராகவே யாழ் மாவட்டத்தின் மிகப்பெரிய ஆஸ்பத்திரியான

Page 80
128
இது 1150 நோயாளிகளுக்கான கட்டில்கள் கொண்டு காணப்பட்டபோதும் 550 நோயாளிகளை மட்டுமே கொண்டிருந்தது. கொழும்பில் இருந்த அரசாங்க மருத்துவ அதிகரிகள் சங்கத்தின் பிரதான அமைப்பினர் யாழ் பெரியாஸ்பத்திரியைத் திறந்து வைக்கும் தேவை குறித்து அனுதாபம் மிகுந்தவர்களாகவே இருந்தனர். வைத்திய போதனா ஆஸ்பத்திரிகளின் அமைச்சும் இத்தகைய கருத்தினையே கொணர்டிருந்தது. ஆஸ்பத்திரியை மூடுவதற்கு எதிராகவும் அது வாதாடியிருக்கிறது. விடுதலைப்புலிகளுடன் பேசிப் பார்த்ததிலிருந்து ஆஸ்பத்திரியைத் திறந்து வைப்பதற்கான எந்த நியாயமான ஒழுங்கிற்கும் அவர்கள் இணங்கிப் போவார்கள் என்று யாழ்ப்பாணத்தில் டாக்டர்கள் கருதினர். விடுதலைப்புலிகள் ஆஸ்பத்திரியைத் திறந்து வைக்க வேணிடுமென விரும்பியதற்கு வலுவான இராணுவரீதியான காரணங்கள் இருந்தன. ஆஸ்பத்திரி மூடப்பட்டுவிடுமானால் யாழ்நகர் கைவிடப்பட்ட மாதிரி ஆகிவிடும். இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளின் மீது விதிக்கப்படக்கூடிய சகல கட்டுப்பாடுகளையும் இது இல்லாமல் ஆக்கிவிடும். மக்களைப் பாதுகாப்புக் கேடயமாக வைத்துக்கொண்டு யாழ் கோட்டையைச் சுற்றி விடுதலைப்புலிகள் நடமாடிக் கொண்டு திரிவதையும் இது இல்லாமற் பண்ணிவிடும். ஆஸ்பத்திரியை மூடிவிடும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தியறிந்ததும் அதற்கு எதிராகப் பெருந்தொகை மருத்துவ மாணவர்கள் பங்கு கொண்ட கணிடனப் போராட்டத்திற்கு விடுதலைப்புலிகள் பின்னணியில் ஆதரவு வழங்கினர். இக்கண்டனத்தில் பங்குகொண்டவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆஸ்பத்திவி மூடப்படும் உத்தரவைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் ஆஸ்பத்திரியிலேயே அவர்கள் நிற்க வேண்டுமென்றும் கோரினர். ஆஸ்பத்திரியின் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு, சில டாக்டர்களும் கொல்லப்பட்டால் இலங்கை, ஆட்சியாளர்களுக்கு அது பெருந்தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கும் என்று கூடச் சிலர் தெரிவித்தனர். அம்மாதிரி நிலைமை ஏற்படுவதற்கில்லை என்று டாக்டர்கள் சுட்டிக்காட்டினர். உதாரணத்திற்கு ஆஸ்பத்திரி வார்டிலிருந்து அவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு தூரத்தில் ஒரு ஷெல் விழுந்து ஒரு நோயாளிக்குச் சிறுகாயத்தை ஏற்படுத்தலாம். இந்நிலையில் நோயாளிகள் உடனடியாகவே ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறிவிடுவார்கள், இது ஆஸ்பத்திரியை மூடிவிடச் சிறந்த வாய்ப்பை வழங்கும். இந்நிலையில் தங்கள் அமைச்சின் கட்டளையை மீறிக்காட்டுவதற்கு ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. எல்லாவிதத்தாலும் விடுதலைப்புலிகள் கவலையில் இருந்தனர்.
கொழும்பில் யாழ் பெரியாஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்களின் கோரிக்கைக்கு இந்தியத் தூதரகத்திடமிருந்து தீர்க்கமான ஆதரவு கிடைத்திருந்தது. பல தரப்பிலும் எழுந்த நெருக்குவாரத்தினால் ஆஸ்பத்திரியைச் சுற்றி யுத்தநிறுத்த வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இணக்கம் ஏற்படும் பட்சத்தில், ஆஸ்பத்திரியை மூடிவிடும் கட்டளையைத் தளர்த்தி விடலாம் என்று ஜனாதிபதியும் தேசியப் பாதுகாப்பு அமைச்சரும் ஏற்றுக் கொண்டனர். தங்களுடைய அறிவுக்கெட்டிய வகையில் யாழ் கோட்டையின் மீது சூடு நடத்த ஆஸ்பத்திரி பாவிக்கப்படவில்லை என்று யாழ் டாக்டர்கள் கூறியதை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

129
அப்போதைக்கு ஏற்றுக்கொண்டபோது, தேசியப்பாதுகாப்பு அமைச்சோ அதற்கு மாறான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. யுத்தநிறுத்தவலய ஏற்பாடு இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் என்று அப்போது உணரப்பட்டது. பொது மனிதாபிமானத்திற்குக் கிடைத்த வெற்றியாக இதனைக் கருதலாம். இந்த உற்சாகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தாங்களே மேற்கொள்வதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கும் யாழ் கோட்டைக்கும் இடையிலான தொலைபேசிச் சேவை மீண்டும் இணைக்கப்படுமென்றும் கிட்டு, ரஹீம் போன்ற விடுதலைப்புலித்தலைவர்களுடன் ஏற்கெனவே நல்லுறவு கொண்டிருந்த கெப்டன் கொத்தலாவெலவை மே 10ம் திகதி பின்னேரம் யாழ் கோட்டையில் சந்திக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்த நம்பிக்கை வளர்ந்து கொண்டிருந்தது. இதுபற்றி எப்படியோ தகவல் அறிந்த ஒரு யாழ்ப்பாணச் செய்திப்பத்திரிகை தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தையாக மட்டுமே இருந்த இதனை வித்து ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மகாநாட்டில் திட்டமிட்ட பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டதாகச் செய்தி வெளியிட்டது. محمصیبر م
இச்சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் டாக்டர்கள் மீது பாய்ந்து விழுந்தனர். விடுதலைப்புலிகளின் அதிகார பூர்வமான சம்மதம் இன்றி புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்தது பற்றி டாக்டர்கள் மீது குறை கூறப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தைப் பற்றித் தாங்கள் பத்திரிகையிலிருந்தே அறிய.வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். பத்திரிகை தொடர்பான நுணுக்கமான தவறு நடந்ததை விடத் தாங்கள் பொதுநன்மை கருதியே செயற்பட்டிருந்ததாக டாக்டர்கள் நம்பினர். இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க முன்வரவில்லை. கெப்டன் கொத்தலாவெல தானே தனிப்பட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் மறுநாள் காலை சந்தித்துப் பேச ஒழுங்குகள் மேற்கொண்டு விட்டதாக பின்னர் டாக்டர்களிடம் தெரிவித்தார். கெப்டன் கொத்தலாவெல மேலும் தெரிவிக்கையில் தான் பல்வேறு பிரச்சினைகள் பற்றி ஆராயவே அங்கு வந்திருப்பதாகவும் அந்த முக்கிய பிரச்சினைகளில் ஆஸ்பத்திரிப் பிரச்சினை அவ்வளவு முக்கியமானதல்ல என்ற தொனியில் கருத்துத் தெரிவித்தார். பொறுமை இழந்து காத்துக்கொண்டிருந்த கெப்டன் கெர்ததலாவலையுடன் வேறு ஒருவரும் இருந்தார் என்று ஊகித்து விடுதலைப்புலிகள் தாம் கூறியபடி அச்சந்திப்பிற்குப் போகவில்லை என்று மறுநாள் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தாங்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்றும் தாங்கள் பிரேரிக்கும் ஐந்து பேர் அக்கூட்டத்தில் சமூகமளித்தாலே தாங்கள் இப்பேச்சில் ஈடுபடலாம் என்று விடுதலைப்புலிகள் கோரினர். அந்த ஐந்து பேரில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தேசியச் செயலாளரான டாக்டர்.ரட்னப்ரிய, வணயிதாயோஹான் தேவானந்த ஆகியோரும் உள்ளடங்குவர். சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களது கேளிக்கை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதல்ல என்பதைப் புலிகள் தெரிந்திருக்க வேண்டும். புலிகள் பிரேரித்த தூதுகோஷ்டியில் நால்வரைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதியைத் தாங்கள் அனுமதிக்க முடியாததால் அந்த இடத்திற்கு

Page 81
130
விடுதலைப்புலிகள் இந்நாட்டில் தாங்கள் நம்பிக்கை வைக்கும் இன்னொருவரை நியமிக்கலாம் என்றும் அரசு தெரிவித்தது. ஒரு சமரசத்திற்கு இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியை விடுதலைப்புலிகள் பிரேரிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.
விடுதலைப்புலிகளின் வலுவான நிராகரிப்பு நீண்டகாலம் நீடித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் இவ்விஷயம் மிகப்பெரிய விவகாரமாகப் பிரபல்யப்பட்டதையடுத்து ஆஸ்பத்திரியை மூடிவிடும் தனது திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துக்கொணிடு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. யாழ்ப்பான டாக்டர்களின் நல்ல நோக்கங்களுக்கு வசை கற்பித்து, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினது நன்னோக்கத்தையும் தனது குறிக்கோள்களை அடைந்து கொள்வதில் அரசு காட்டிய மிச்சம் மீதியான கணிணியப் போக்கினையும் அலட்சியம் செய்தும் விடுதலைப் புலிகள் தமது வழக்கமான நாடகத்தை ஆடினர். தற்காலிகமாக விடுதலைப்புலிகள் வெற்றியடைந்தனர் என்பது உண்மையே. செப்டம்பர் மாதத்தில் திலீபனின் உண்ணாவிரதத்தின் போது ஆரம்பத்தில் வெற்றிகரமாகத் தொடங்கி, பிறகு அதனை அளவுக்கு மீறி மிகைப்படுத்தி அனைத்தையும் பாழாக்கித் தோல்வியுற்ற அதே நாடகத்தைத்தான் இப்போதும் தொடங்கியிருந்தனர். சர்வதேச அபிப் பிராயத்திற்கும் தனது அமைச்சரவையில் உள்ள சில உறுப்பினர்களுக்காகவும் அரைகுறைமனதோடு பேச்சுவார்த்தைக்கு முன்வர இணங்கிய இலங்கை அரசாங்கத்திற்கு இச்செயற்பாடு இந்தப் பேச்சுவார்த்தை சமாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு விடக் கூடுமானதாக இருந்தது. தங்களுக்குள்ளேயே விமர்சனங்களை வைத்துக கொண்டிருந்தவர்களின் வாயை அடைக்கச் செய்து தமிழர் பிரச்சினைக்குத் தமது இராணுவத் தீர்வே உகந்தது என்ற கருத்தை வலுப்புடுத்தவும், உலகின் கண்களுக்கு விடுதலைப்புலிகளைப் பொறுப்பற்றவர்களாகவும் ஒன்றுக்கும் விட்டுக்கொடுக்கக்கூடியவர்கள் அல்ல என்பதனை வெளிப்படுத்தவுமே இது உதவியது. இந்த அர்த்தத்தில் நோக்கினால் இலங்கை அரசானது எதனையும் இழந்துவிடவில்லைதான். இலங்கை அரசாங்கமோ தனது பக்கத்திற்கு யார் மீது அது இறைமை கொண்டாடுகிறதோ அந்த மனித ஜீவிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அந்த விதத்தில் நடந்து கொணடதாகத் தெரியவில்லை. ஜெனீவா ஒப்பந்தம் கூட யுத்தத்தின் போது எதிர்த்தரப்பில் இருக்கும் சனக்கூட்டத்தினர் நல்ல முறையில் பேணப்பட வேண்டுமென்று ஒழுங்குகளைச் செய்திருக்கிறது. இந்தியத் தூதரகத்துடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகள் மிகக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்தின் மூத்த பிரமுகர் ஒருவர் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியா இக்கட்டத்தில் டிசெம்பர் 19ம் திகதிப் பிரேரணைகளைப் பெயரளவில் முன்தள்ள முயற்சித்ததே தவிர அதற்கு மேலாக எந்த அக்கறையையுங் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒருவித நேரடித்தலையீட்டிற்கான நிலைமைக்கு இந்தியா சாதகமான சூழலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போலத் தோன்றியது. ஒருவேளை இத்தகைய தீர்மானம் 1987 ஜனவரி-மே மாதங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடும். இவ்வாணர்டின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டபோது, அரசியல் தீர்வு

131
காணப்படாவிட்டால் இலங்கையில் வன்முறைகள் கட்டாயம் அதிகரிக்கும் என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இச்செய்தியின் அர்த்தம் கொழும்பில் உணரப்படாமலில்லை. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுடன் சேர்ந்து இந்தியாவின் நிலைப்பாட்டை பலப்படுத்தவே துணை புரிந்தன.
ஒரு அம்சத்தில் யாழ் பெரியாஸ்பத்திரி தொடர்பாக யாழ்ப்பான டாக்டர்கள் இந்தியத் தூதரகத்திடமிருந்து பெற்ற ஆதரவானது வெற்று விரயமே என்பதைப் பின்னர் நடந்த சம்பவங்கள் நிரூபித்தன. அவ்வாண்டு அக்டோபர் மாதம் யாழ்ப்பாணத்தின் மீது இந்தியா தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது, கடந்த காலத்தில் இந்த ஆஸ்பத்திரியின் நண்பனாகத் திகழ்ந்த இந்தியா தமது தாக்குதல் நடவடிக்கைகளின் போது இந்த ஆஸ்பத்திரியை மிகுந்த அக்கறையோடு நடத்துவார்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர்கள் எதிர்பார்த்தனர். நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த மாதிரியில் மே மாதத்தைப் போலவே அக்டோபர் மாதத்திலும் ஆஸ்பத்திரியின் தேவை மிகப்பெரிதாக உணரப்பட்டிருந்தது. இந்தியாவின் ஷெல் தாக்குதலுக்கு இலக்கான பன்னூற்றுக்கணக்கான சாமானியரான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையாயிருந்தது. அக்டோபர் 21ம் திகதி யாழ்ப்பாணம் இந்தியர் வசமானபோது ஆஸ்பத்திரியைப் பற்றிக் கிஞ்சித்தாவது அவர்கள் அக்கறை கொண்டிருநதனர் என்பதற்கு எந்த அறிகுறியுமே தெரியவில்லை.
அக்டோபரில் நடந்த மனதை வருத்தும் அனுபவங்களின் பின்னணியில் மே மாத நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துரைத்த ஒரு மருத்துவ நிபுணர், "யாழ் பெரியாஸ்பத்திரியை மூடவேண்டும் என்று அப்போது கூறிய தேசியட் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் யோசனையை இப்போது பார்க்கும் போது நாம் வரவேற்க வேண்டியவர்களாகவேயிருக்கிறோம். கோட்டையிலிருந்து முன்னேறியவாறு யாழ்நகரைத் தம்வசப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் ஆஸ்பத்திரியில் அசம்பாவிதமான நிகழ்ச்சிகள் நடக்கக்கூடும் என்று அவர் அறிந்திருந்தார். கடந்த காலத்தில் இதுபற்றி மோசமான செய்திகள் வெளியில் நன்கு உலவியதால் இலங்கை அரசாங்கம் இந்தப் போக்கில் சிந்தித்திருக்கிறது. இந்தியர்களுக்கு இது பற்றி ஒருவித யோசனையுமே இருக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
மருத்துவ நிபுணரும் பேராசிரியருமான இன்னுமொருவர் இதே விஷயத்தைப் பற்றிக் கூறும் போது, "அக்டோபர் 11ம் திகதி நாங்கள் ஆஸ்பத்திரியை மூடியிருக்கவேண்டும். ஆனால் எம்மவர்கள் நோயாளிகளைப் பற்றிப் பெரிதும் அக்கறை கொண்டிருந்தனர். எனவே முடியுமானவரையில் அன்றைய நிலைமைகளின் எல்லைக்கே செல்லத் தயாராகவிருந்தனர். இந்தியர்கள் கடந்த காலங்களில் இதில் காட்டிய அக்கறை காரணமாக நாங்கள் இப்படிச் செய்ய அவர்கள் எங்களை ஊக்குவித்து விட்டார்கள்" என்று தெரிவித்தார்.
மறுபுறத்தில் மே மாத அனுபவங்களில் இருந்து இலங்கை அரசாங்கம் நிறையக் கற்றுக் கொண்டிருந்தது. மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கையை அவர்கள் தொடங்கியபோது

Page 82
132
பருத்தித்துறை ஆஸ்பத்திரியின் மீது மிகுந்த சிரத்தையினை மேற்கொண்டிருந்தனர். இராணுவம் நெல்லியடியிலிருந்து நகர்வதற்கு ஒரு நாளைக்கு முன்பே பருத்தித்துறை ஆஸ்பத்திரியைச் சூழவுள்ள பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கிக் கொண்டமையும் இலங்கை இராணுவத்திற்கு இதில் வசதியாக இருந்தது.
இந்திய இராணுவத்திற்கு இம்மாதிரியான அனுகூலமான நிலைமைகள் இருக்கவில்லை. இதிலிருந்து எந்த ஒப்பீடுகளையும் மேற்கொள்ள முனைவது உசிதமற்றது. சில மாதங்களுக்கு முன்னர்தான் இலங்கை விமானப்படை அடம்பனிலிருந்த ஆஸ்பத்திரி மீது குண்டு வீசியது. அடம்பன் மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகப் பின் தங்கிய பிரதேசமாகும். யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை சர்வதேசப் பிரசித்தத்தின் ஒளிவீச்சிலேயே நடைபெற வேண்டியிருந்தமைக்கு இந்தியாவின் பங்கிற்கு நன்றி கூறுவது பொருந்தும். அடம்பனுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இலங்கை அரசாங்கம் நன்கு புரிந்து கொண்டிருந்தது. இதில் விடுதலைப்புலிகள் ஏதாவது கற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால் எதிர்த்தரப்பினர் பற்றிச் செய்யப்பட்டிருந்த மோசமான பிரச்சாரத்தின் பெறுமதியையேயாகும். அக்டோபரில் இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து அத்தாட்சி வாக்குமூலங்களைப் பெறுவதற்கு விடுதலைப்புலிகள் வழக்குரைஞர்களை அமர்த்தினர். ஆனால் அவர்கள் அனுபவிதித துயரங்களுக்கு புலிகளும் பொறுப்பேற்றுக் கொள்ள வேணடும் எனபதை பலருமீ கணக்கிலெடுத்துக்கொள்வதிலலை.

33
அத்தியாயம் 7 ஒப்பரேஷன் லிபரேஷன்
7.1 மாற்றுத்தீர்வு ஏதேனும் இருந்ததா?
யாழ்ப்பாணக் குடாநாட்டை மீண்டும் தம்கைவசப்படுத்த இராணுவத்தாக்குதல் நடைபெறவிருக்கிறது என்பது இப்போது மிகவும் தெளிவாகத் தெரிந்தது. இத்தாக்குதலில் பத்தாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை பொதுமக்களும் ஆயிரம் முதல் நாலாயிரம் வரை ஆயுதப்படையினரும் பலியாகக்கூடும் என்றும் நிபுணர்கள் பலரும் மதிப்பீடு செய்திருந்தனர். சர்வதேச ரீதியில் இத்தகைய ஒரு தாக்குதல் நடவடிக்கைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்கவில்லை. நியாயமானவை என்று கூறத்தக்க சில திட்டங்களை மேசைமுன் வைத்தபோதும் அதைப் பொருட்படுத்தாத புலிகளின் அழுங்குப்பிடியினால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அவசியம் ஏற்பட்டிருந்தது என்றே பரவலாகக் கருதப்பட்டது. இத்தகைய கருத்தினை முழுவதுமே நியாயமற்றதென்றும் கூறிவிடமுடியாது. அதேசமயம் அரசாங்கம் கடந்த காலத்தில் நடந்துகொண்ட விதம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இருந்த அனுகூலங்களை ஓரளவு மட்டுப்படுத்தியிருந்தது. 1983ல் தமிழினப்படுகொலைக்கு அரசு தரப்பிலும் பாதுகாப்புப்படையின் தரப்பிலும் சில பகுதியினர் உடந்தையாகவே இருந்தனர். இதனையடுத்து தமிழ்மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையானது தர்மநியாயங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை. அரசு கட்டவிழ்த்துவிட்ட தங்குதடையற்ற பயங்கரவாதத்திற்கு வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் பலியானார்கள். திருகோணமலை மாவட்டத்தில் நகருக்கு வெளியிலிருந்த தமிழ்க்கிராமங்கள் பல திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டன. வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை உள்நுழைய அனுமதிக்காமல் வைத்துவிட்டு மட்டக்களப்பில் கொலை செய்வதற்கான சகல உரிமைகளுடனும் அரசாங்கத்தின் விசேட அதிரடிப்படை ஏவிவிடப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையின் போது நிகழ்ந்த கொலைகளைவிட, கிழக்கில் கொலை செய்வதென்பது நிரந்தர நிகழ்வு மாதிரியேயிருந்தது. அதிரடிப்படை வாகனவரிசை ஒன்றினிடையே சேர்த்துவிடப்பட்டிருந்த ஒரு பயணிகள் வாகனத்தில் பயணம் செய்ய நேர்ந்த மூத்த கிறிஸ்தவ திருச்சபை நிர்வாகஸ்தர் ஒருவர் தனது அனுபவத்தை விபரித்துள்ளார். ஒரு இடத்தில் மூன்று விவசாயிகள் வீதியைக்கடந்து கொணர்டிருந்தார்கள். மறுகணத்திலேயே அம்மூவரும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளப்பட்டனர். தொடர்வாகனங்களில் சென்று கொண்டிருந்த இராணுவமோ எதுவுமே அங்கு நடைபெறாததுபோல் அலட்சியமாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தது. அவர்கள் யார் என்றோ அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நிறுத்திக் கேள்வி கேட்போம் என்பதற்கெல்லாம் அங்கு அறவே இடமில்லை. மத்தியானச் சாப்பாட்டிற்கு முன் யாராவது ஒரு அதிரடிப்படை அதிகாரிக்கு இந்நிகழ்ச்சி ஞாபகத்தில் இருந்திருக்குமானால் ஒரு மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாக லங்காபுவத் என்ற அரசாங்கச் செய்தி ஸ்தாபனத்திற்குத் தொலைபேசி மூலம் செய்தி அறிவித்திருப்பார். இதற்கு அனுசரணையிர்க லங்காபுவத்தும் சில ஜோடனைகளையும் சேர்த்து செய்தி வெளியிடும்.

Page 83
34
சற்றடே றிவியூ என்ற வார இதழ் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தியுள்ள விபரங்களின் அடிப்படையில் 1987 ஜனவரி வரை இலங்கை அரசின் இராணுவத் தாக்குதலுக்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். தமிழ்ப் போராளிகளின் தாக்குதலுக்கு ஏறக்குறைய ஆயிரம் சிங்களப் பொதுமக்கள் பலியாகியிருக்கக்கூடும். அதிகாரபூர்வமான அறிக்கைகளின்படி 1987 ஜூலை இறுதிவரை 689 சிங்கள இராணுவவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை இதைவிட மிகக்குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. 1987 ஆகஸ்ட் வரை 631 பேரை இழந்திருப்பதாக புலிகள் கோருகின்றனர். இயக்கங்களுக்கிடையிலான உட்கொலைகளில் இதேயளவு போராளிகள் கொல்லப்பட்டிருக்கலாம். நாட்டில் நிலவும் கட்டுக்கடங்காத உணர்ச்சிகரமான நிலைமையைச் சுட்டிக்காட்டுவதற்கே இப்புள்ளி விபரங்கள் தரப்பட்டுள்ளன. அரச பயங்கரவாதத்தின் மனிதாபிமானமற்ற நடத்தையின் விளைவிலிருந்து தமிழ்த்தீவிரவாதத்தின் குணாம்சத்தைத் தனித்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இன்று அரசு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் எல்லாமே அரசாங்கம் தானாகவே உருவாக்கிக் கொண்டதுதான்.
இந்தக் கட்டத்திலேனும் அரசாங்கம் தமிழர்களைத் தம்பக்கம் வென்றெடுப்பதற்குத் தீர்க்கமான ஒரு புதுமுயற்சியைக் கையாண்டிருந்தால் எதிர்காலத்தில் நேரவிருந்த அவமானகரமான நிகழ்ச்சிகளைத் தவிர்த்துக்கொள்ள அரசாங்கத்திற்கு மிகச்சிறந்த வாய்ப்பை வழங்கியிருக்கும். கடந்த காலங்களில் தாங்கள் இழைத்த தவறுகளை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு நாட்டை எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்குத் தம்முன் உள்ள வழிவகைகளையும் சிங்கள மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு வெகுஜனத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியிருக்கலாம். பரவலாகக் கூறப்பட்டதைப் போல வட - கிழக்கு ஒருங்கிணைவுதான் தீர்வுக்குத்தடை என்றிருந்தால் அரசாங்கம் கொள்கையளவில் அதை ஏற்றுக்கொணிடு, கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கோரிக்கைகளை வழங்கும்படித் தமிழர்களுக்குச் சவால் விட்டிருக்கலாம். கடைசியில் பார்க்கப்போனால் இதெல்லாம் பிரிவினைக்கு வெகுதூரத்தில் உள்ள கோரிக்கையேயாகும். இதனையும் புலிகள் நிராகரிப்பார்களானால் அரசாங்கம் தங்களின் இராணுவத்தின் கட்டுப்பாடான நடத்தையின் மூலம் தமிழர்களின் நலனில் தங்களுக்கு அக்கறையுண்டு என்று தமிழர்களுக்கு நன்குணர்த்தி புலிகளின் தளம்பலான போக்கினை அம்பலப்படுத்தியிருக்கலாம். அரசாங்கம் உத்தேசித்த இராணுவ நடவடிக்கை மூலம் சாவோலை விடுக்கப்பட்ட சுமார் 11,000 கணக்கான மக்கள் கடைசியில் பார்த்தால் இந்த நாட்டின் குடிமக்கள் தானே! ஆனால் அரசாங்கத்தின் தார்மீக சிந்தனைகளும் புதியன புனையும் ஆற்றலும் அவர்களின் துஷ்பிரயோகப் போக்கினால் கூtணித்துப் போயிருந்தது. பழைய போக்கிலிருந்து முற்றாக விடுபட்டு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தவல்ல வழிகளில் அவர்கள் சிந்திக்கவே இயலாதவர்களாயிருந்தனர். அதற்கான நெஞ்சுரமும் அவர்களிடம் இருக்கவில்லை.
புலிகள் என்ன யோசிக்கிறார்கள் என்பதை அளவிட முடியாமல் உள்ளது. சர்வதேச, இந்திய அபிப்பிராயங்கள் அவர்களுக்கு மாறானவையாகவே இருக்கின்றன. எதையும் சாதித்துக்கொள்வதற்கு பொதுமக்களை நம்பிச் செயற்படவும் அதன்ால் முடியாமலிருந்தது. 19 வயதிற்குக் குறைந்த வயதினரையே பெருமளவில் கொண்ட சில ஆயிரக்கணக்கான உறுதியான

35
விசுவாசங்கொண்ட ஆயுத பாணியினரை மட்டுமே நம்பக்கூடியதாக இருந்தது. அதன் பலமும் எதிர்த்தன்மை கொண்டதாகவே இருந்தது. பொதுமக்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை அரச படையினர் கொண்டிருந்தால் தவிர மற்றபடி தீர்வினை நாடி நிற்கும் எத்தகைய முயற்சியினையும் குழப்பிவிடும் ஆற்றலையே புலிகள் கொண்டிருந்தனர். இந்த பலத்தையே அந்த இயக்கம் நம்பியிருந்திருக்கவும் கூடும். இதனால் மனக்கிலேசமுற்ற பொதுமக்கள் சிலர் இந்தியாவுக்கு எதிராகக் கொணர்டிருந்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு புலிகளின் மிகமுக்கிய தலைவர் ஒருவரிடம் முன்பொருமுறை சந்தித்துக் , கேட்டிருக்கின்றனர். இலங்கை அரசாங்கம் தனது இறுதித்தாக்குதலைத் தொடரும் பட்சத்தில் இந்தியா தலையிடாதிருந்து விடும் என்பது போல் அப்போது தென்பட்டது. "இந்தியாவை என்' காலில் விழச்செய்வேன்" என்று அதற்கு அதி தலைவர் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. நிராயுதபாணிகளாக்கப்பட்ட பயிற்றப்பட்ட ஏனைய இயக்கங்களுடனோ அல்லது தங்களிடமிருந்து அந்நியப்பட்டு நின்ற மக்களின் ஒரு பிரிவினருடனோ ஒரு இணக்கத்திற்கு வருவதற்கான அவசியத்தைப்பற்றி புலிகள் சற்றும் யோசித்தது கிடையாது.
பொதுமக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மீது மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக சாவு வருவித்துக் கொண்டிருந்தது. சுமுகமான வாழ்வும் கல்வியும் மோசமாகச் சீர் குலைந்திருந்தது. வெளிநாடுகளுக்குப் போய்க்கொள்ள முடிந்தவர்கள் அனைவரும் மெதுவாக நழுவிப் போய்க் கொண்டிருந்தனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது தேசியப்பாதுகாப்பு அமைச்சு இப்பிரச்சினையைப் பின்வருமாறு நோக்கியது:
வட கிழக்கில் உள்ள தமிழர்களை இனிமேலும் ஒரு தேர்தல் தொகுதி சார்ந்த சொத்துப்போலக் கருத முடியும் என்ற யோசனையையே அரசு முற்றாகக் கைவிட்டிருந்தது. தமிழி மக்களின் உணர்வுகள் பூரணமாக உதாசீனப்படுத்தப்பட்டன என்பதே இதன் அர்த்தமாகும். (இக்கருத்தினை 1983 ஜுலையில் டெய்லி ரெலிகிராஃப் போன்ற பத்திரிக்கைக்கே ஜனாதிபதி கூறியிருந்தார்) யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய பொதுமக்களின் இழப்பானது சர்வதேச அபிப்பிராயத்தைப் பொறுத்தவரையில் விலைப்பட்டிருக்கக்கூடும். இத்தகைய நடவடிக்கைகளில் துரிதமான தாக்குதல் தான் மிகமுக்கிய அம்சமாகும். அந்நேரத்தில் சர்வதேச அபிப்பிராயமும் இலங்கை அரசின் பக்கமே இருந்தது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை நீண்டு கொண்டு போய், பொதுமக்களின் சேதங்கள் பற்றிய கதைகள் வெளியில் பரவும் பட்சத்தில் சர்வதேச அபிப்பிராயம் மாறி, இந்தியா இந்நிலைமையைத் தனக்குச் சாதகமாகப் பாவித்துக்கொள்ளக்கூடிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கும்.
இவ்வகையில் பார்த்தால் இப்பிரச்சினை தர்மநியாயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத நுட்பவியல் வல்லுநர்களின் அணுகுமுறையாகவே தெரிகிறது. மூன்று நாள் தாக்குதல் என்ற வழியிலேயே அரசாங்கம் சிந்தித்திருந்தது. இது விடுதலைப்புலிகளை மாதக்கணக்கில் சீர்குலைத்துவிடும் என்றும் கருதப்பட்டது. வெற்றிகரமாக இத்தாக்குதலை முடிப்பதன் விளைவாக வரும் பிரபல்யத்தைப்

Page 84
36
பயன்படுத்தி, சடுதியாகத் தேர்தலை நடத்தித் தங்களின் கரங்களை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஓங்கச் செய்வதே அரசின் நோக்கமாகும். இந்நோக்கத்துடன் இராணுவத்திற்கு வெளிநாட்டு நிபுணத்துவ ஏஜென்ஸிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. (2ம் பகுதியின் 21 பிரிவினைப்பார்க்க)
தேசிய வரவு செலவுத்திட்டத்தில் 20 சதவீதத்தை, அதாவது 50 கோடி அமெரிக்க டாலர் தொகை வருடாந்தப் பாதுகாப்புச் செலவினத்திற்கு ஒதுக்கப்பட்டு, விமான, கடற்படைகள் பலப்படுத்தப்பட்டன. இவ்விடத்தில் நுட்பவியல் வல்லுநர்களின் அணுகுமுறை பற்றி ஒன்றைக்குறிப்பிட வேண்டும். 1971ல் தயார்நிலையில் இருந்திராத இராணுவம் சிங்களக் கிளர்ச்சியாளர்களான ஜேவிபியினரைக்கொன்று குவித்ததைவிட வடமராட்சியின் மீதான இராணுவமீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டவர்கள் தொகை குறைவாகவே இருந்தது. இதற்கு மாறாக ஜே.வி.பி.யினரின் புத்தெழுச்சிக்கு எதிராக சிங்களத்தென்பகுதியில் இன்று கையாளப்படும் எதிர்க்கிளர்ச்சி அணுகுமுறை மிகவும் வித்தியாசமானதாகும். "வீக்எண்ட்" பத்திரிகையில் 201287 இதழில் இக்பால் அத்தாஸ் "நிலவர அறிக்கை" என்ற தலைப்பில் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்:"இந்திய அமைதிப்படையினர் வருவதற்கு முன் பிரிவினை கோரும் பயங்கரவாதிகளுடன் அரசு யுத்தம் மேற்கொணடிருந்த வடக்கில் அரசதுருப்புகளுக்கும் அதன் எதிராளிகளுக்குமிடையேயான மோதல் என்பது துப்பாக்கிச் சூட்டில் துரிதம் இல்லையென்றால் அவருக்குச் சாவு தான் என்பதையே குறித்தது. இந்த நிலைமை வடக்கில் மட்டுமே. ஆனால் தெற்கில் அத்துப்பாக்கி எதிரியை நல்லிணக்கத்திற்குக் கொண்டு வரும் யுக்திக்கு இடம் விட்டு நிற்கிறது"
அதே கட்டுரை எம்பிலிப்பிட்டியாவில் உள்ள இராணுவ இணைப்பு அதிகாரியான கேணல் லகூழ்மணி அல்கமவின் கூற்றை மேற்கோள் காட்டுகிறது: ஒரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் போது நான் 100 பேரைக்கைது செய்தால் அதில் 5 பேர் தான் குழப்பவாதிகளாக இருக்கிறார்கள். ஏனைய 95 பேரையும் விடுவிக்கும்போது அவர்கள் எந்தவிதமான மனக்கசப்பும் இல்லாதவர்களாக வெளிச்செல்ல வேண்டும் கட்டுரையாளர் மேலும் கூறுகையில், "இது ஒரு அதிருப்தியை ஏற்படுத்திவிடவல்ல காரியம் தான். அமெரிக்காவில் விசேட பயிற்சி பெற்ற அர்ப்பணிப்போடு கூடிய இப்போர்வீரனின் நல்ல நோக்கிற்கிடையிலும் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கசப்புணர்வுடன் தான் வெளியேறுகின்றனர். பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் ஒரு எல்லைக்குள் தான் செயற்பட முடிகிறது. இப்பிரச்சினைக்கான பதில் அவர்களின் கையில் இல்லை. . பிரச்சினைகள் பொருளாதார ரீதியானதும் அரசியல் ரீதியானதுமாகும். இதில் எவ்வளவு தூரம் காலதாமதம் ஏற்படுகிறதோ அவ்வளவிற்கு பிரச்சினைகளும் பெரிதாகிக்கொண்டே போகும்"
இது மீண்டும் ஒரு நுட்பவியல் வல்லுநரின் அணுகுமுறையைத் தான் சுட்டிநிற்கிறது, தர்ம நியாயத்தைப் பற்றி எந்த அக்கறையுமின்றி தமிழ் மக்களைப் போலவே சிங்களமக்களையும் அவநம்பிக்கையோடு பார்க்கும் அணுகுமுறையே இது. ஆனால் இதில் ஒரு வித்தியாசம் என்னவெனில் கைகழுவிவிட்டு

37
விடக்கூடிய ஒரு தேர்தல் சொத்தாக சிங்களமக்கள் கருதப்படவில்லை என்பது தான் அது.
72 மீட்பு நடவடிக்கை ஆரம்பமாகிறது
யாழ்குடாநாட்டை மீளக்கைப்பற்றுவதற்கான வழிவகைகளும் திசைதிருப்பு நடவடிக்கைகளும் மே மாதம் 18ம் திகதி ஆரம்பமாகியது. ஒப்பரேஷன் லிபரேஷன் என அழைக்கப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கை மெச்சத்தக்க திறமையுடனேயே திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்டது. வரையறுக் கப்பட்ட மூலவளங்களைக்கொண்ட சிறிய நாடாதலால் இவ்வளங்களைப் பிரயோகிக்கும் முறையும் உரிய நேரத்தில் அவற்றைச் செய்தலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதற்கான உளவுத்தகவல்களைச் சேகரிப்பதிலும் அவற்றைப் பரிசீலனை செய்வதிலும் காணப்பட்ட ஆற்றலானது இஸ்ரேல் போன்ற வெளிநாட்டின் வியக்கவேணி டிய அளவிலான உதவியுடன் நன்கு வலுப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அணுகுமுறையைப் பொறுத்தவரையில் அரசாங்கமானது இதனை வெகு திறமையோடு செய்து முடிக்கத்தக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு.லலித் அத்துலத் முதலியைத் தன்னிடங் கொண்டிருந்தது.
இவ்வாண்டின் முற்பகுதியில் அடையப்பட்டிருந்த முன்னேற்றங்களின் காரணமாக யாழ் குடாநாடு முழுவதுமே இலகுவான ஷெல் தாக்குதல் எல்லைகளுக்குள்ளேயே இருந்தன. உரும்பிராய் போன்ற இடங்களில் உள்ள பல வீடுகளில் வீட்டுச்சுவர்களை ஒட்டி மண்மூடைகளை அடுக்கியிருந்தனர். அந்நேரத்தில் இவ்வாறான வேலைகளைச் செய்து கொடுப்பது லாபகரமான வேலைவாய்ப்பாகவும் அமைந்தது. தண்டித்து வஞ்சந்தீர்க்கும் நோக்கத்தில் தொடர்ந்து நடந்த ஷெல் தாக்குதலும் இழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்வதும் மக்களுக்கு வாழ்க்கையைப் பயங்கரமாக்கியிருந்தது.
மே மாதம் 18ம் திகதி திசைதிருப்பும் அரச துருப்புகளின் ஒரு பகுதியினர் ஆனையிறவிலிருந்து வடமேற்காக நகரத் தொடங்கினர். கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த "சேஃப்ரி பஸ் கம்பெனி பஸ்ஸில் இருந்த பயணிகள் பாதைக்குக்குறுக்கே போடப்பட்டிருந்த மரக்குற்றிகளைக் கண்டதும் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கிவிட்டனர். சிலர் அம்மரக்குற்றிகளை அகற்றிவிட்டுத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டனர். சிறிது நேரத்தின் பின் ஒரு சுற்றுத் துப்பாக்கிச் சூட்டினையடுத்து பஸ் நிறுத்தப்பட்டது. பஸ் பயணிகளில் பலர் காயமுற்றனர். படைவீரர்களுடன் தொடர்பு கொண்டு அங்கு என்ன நடந்தது என்று அனுமானம் செய்து கொள்ளவே நீண்டநேரம் ஆகியது. காற்றிறங்கிய டயர்களுடன் பஸ் மீண்டும் ஆனையிறவை நோக்கித் திரும்பிச் சென்றது. யாழ்ப்பாணத்தை நோக்கி வந்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர் கிளிநொச்சிக்குத் திரும்பிச் சென்று இராணுவத் தளபதியைச் சந்தித்து அவர் மூலம் அம்புலன்ஸ் வந்த பின்னர்தான் காயம்பட்ட சிலர் மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். காயமுற்ற சக பயணிகளுக்குத் தன்னால் இயலுமான சகல உதவிகளையும் செய்து கொணடிருந்த யூரீலங்கா சிமெண்ட் லிமிட்டட் நிறுவனத்தைச் சேர்ந்த திருஜெகதீசன் உட்பட காயமுற்ற மூவர் இறந்துவிட்டனர்.

Page 85
138
மே மாதம் 20ம் திகதியளவில் திசைதிருப்பும் நடவடிக்கைகள் நாவற்குழியிலும் பலாலியிலும் மேற்கொள்ளப்பட்டன. மன்னார் மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளபதி கேணல்.ராதா பலாலியில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டார். சாந்தமானவராய்த் தோன்றும் முன்னாள் வங்கி ஊழியரான ராதா துணிவுக்குப் பேர் போனவர். பலாலியிலிருந்து இடைக்காடு ஊடாக அச்சுவேலியை நோக்கி இலங்கை இராணுவம் துரிதமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அரசபடையினர் முன்னேறத் தொடங்கியிருந்த போது அப்பகுதியில் விடுதலைப்புலிகள் பதினைந்துபேர் மட்டுமே நின்றிருந்தனர். அந்நிலையில் மேலும் அதிகமானோர் வாகனங்களில் அங்கு கொண்டுவரப்பட்டு அரசபடைகளின் முன்னேற்றம் கடுமையாகத் தடுக்கப்பட்டது. தமிழ் நாளிதழான 'உதயன் செய்தியறிவிப்பின்படி பதுங்கு குழிகளில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 23ம் திகதி பின்வாங்கிச் சென்றுவிட்ட இராணுவத்தினரின் இந்நடவடிக்கை ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையாகவே அமைந்தது. -
இந்த முழுத்தாக்குதல் நடவடிக்கைகளின் போதும் இலங்கைத்துருப்புகள் வான்வெளியில் எவ்வித எதிர்ப்பும் இல்லாத நிலையில் வெகு சுதந்திரமாக இயங்கினர். விடுதலைப்புலிகள் இக்கட்டத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவதைத்தவிர வேறு எதனையுமே செய்து கொள்ள முடியாது என்று இந்தியா தீர்மானித்திருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில் புலிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுத உபகரணங்கள் எதுவும் அப்போது இருக்கவில்லை.
பின்வரும் சம்பவம் இலங்கை இராணுவம் புதிய, பிரக்ஞைபூர்வமான, பயன்பாட்டுக் கண்ணோட்டத்துடன் இயங்க முற்பட்டிருந்ததை எடுத்து விளக்குகிறது. மே மாதம் 20ம் திகதி இடைக்காடு பகுதியில் வழிதவறிய மூன்று அரசபடைவீரர்கள் தங்களின் தோட்டாக்கள் அனைத்தும் தீர்ந்தநிலையில் புலிகள் கோஷ்டியினை எதிர்கொள்ள நேர்ந்தது. சரணடைவதற்கு தம் விருப்பத்தைத் தெரிவித்த அவர்களைப் பொறுப்பேற்பதற்கு லெப்டினன்ட் கோணேஸ் என்ற புலித்தலைவர் முன்வந்தார். வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்த அந்த நால்வரும் இலங்கை ஹெலிகொப்டரினால் அடையாளங் காணப்பட்டு துரிதமான ஷெல் தாக்குதலுக்கு உள்ளானார்கள். நால்வருமே இறந்து போனார்கள். மேலே ஹெலிகொப்டரில் இருந்தவர்களால் தமது சொந்தச் சீருடையையோ அல்லது தமது குறி இலக்கையோ இனங்கணிடு கொள்ளமுடியவில்லை என்று கூறிவிடமுடியாது. இச்சம்பவம் 24ம் திகதி வீக்என்ட் பத்திரிகையின் நிலவர அறிக்கை தரும் தகவலோடு ஒத்துப்போகிறது. இதில் கொல்லப்பட்ட அனைவருமே விடுதலைப்புலிகள் தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹெலிகொப்டரில் இருந்து குறிவைக்கும் போது புலிகள் தூங்கிக்கொண்டு சும்மா இருப்பவர்கள் இல்லை. ஹெலிகொப்டரில் இறந்தவர்கள் தமது சொந்த இராணுவத்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தமாட்டர்கள் என்ற நம்பிக்கையில் தான் லெப்டினன்ட் கோணேஸ் வெளியில் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகளோ யுத்தக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட படைவீரர்கள் தமக்குத் தொடர்ந்து சுமையாகவோ அல்லது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவதற்கோ இடந்தரக்கூடாது என்று தீர்மானித்து

39
விட்டதாகவே தெரிந்தது. யுத்தக் கைதிகள் என்றானதும் இனி அவர்களின் உறவினர் பத்திரிகை வாயிலாகத் தம் கவனத்தைக் குலைக்கும் வேணடுகோள்களை விடுத்த வணிணமாகவே இருப்பார்கள் என்று கருதப்பட்டது. ஏற்கெனவே யுத்தக் கைதிகளாக உள்ள 11 பேரினால் தேசியப்பாதுகாப்பு அமைச்சர் பெருஞ்சிக்கலுக்குள்ளாகியிருந்தார். காலியில் இருந்த ஒரு இராணுவவீரரின் தந்தையார் தேசிய பாதுகாப்பு அமைச்சரைச் சந்திக்க முயன்று பலமுறை அது தோல்வியில் முடிந்தபின் தனக்குத் தெரிந்த ரோமன் கத்தோலிக்கக் குருவானவரிடம் விண்ணப்பித்திருந்தார். உணர்ச்சிபூர்வமான சிங்கள மக்களுக்கு இந்த அருவருப்பான யுத்தத்தின் இப்புதிய அம்சத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்க வேண்டும். இதெல்லாம் யுத்த நுட்பவல்லுநர்களின் அணுகுமுறையின் ஒரு பகுதி தான். அதிகார உயர் பீடங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்களின் கண்முன்னால் பெரியபெரிய விஷயங்கள் எல்லாம் இருக்கும் போது காலி மாவட்டக் குடியானவன் ஒருவனின் அரைகுறைப் படிப்புக்கொண்ட மகன் எல்லாம் ஒரு பொருளா என்ன?
உண்மையான ஒப்பரேஷன் லிபரேஷன் தாக்குதல் மே மாதம் 26ம் திகதி தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியின் வானொலி ஒலிபரப்பு, (டிஈசிபி) யாழ் வானொலி ஒலிபரப்பாக மாறியதுடன் ஆரம்பமாகியது. தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியின் வானொலி ஒலிபரப்பானது 1986ம் ஆண்டின் பிற்பகுதியில் மர்மமான முறையில் ஆரம்பமாகி ஆங்கிலத்திலும் தமிழிலும் செய்திச்சரங்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. மே மாதம் 26ம் திகதி யாழ் வானொலியில் அதே குரல் ஒலிக்கும் வரை இச்செய்தி அறிவிப்பாளர்கள் பலாலி இராணுவ முகாமில் உள்ள பூரீலங்கா அரசபடையினரைத் தவிர வேறு யாருமில்லை என்பதைப் புரிந்து கொள்வது கஷ்டமாகவே இருந்தது. இந்த ஒலிபரப்பானது இயக்கங்களுக்குள்ளேயும் இயக்கங்களுக்கிடையேயும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய பெருவாரியான உட்தகவல்களைக் கொடுத்து வந்தமையால் மக்கள் இந்த ஒலிபரப்பை பரவலாகக் கேட்டுக்கொண்டு வந்தனர். உச்சரிப்புகள் மறைக்கப்பட்டவாறும் இனங்கண்டு கொள்ள முடியாமலும் இருந்தன. இவை சில சமயங்களில் புலிகள் அல்லது ஈபிஆர்எல்.எப்பிற்கு சார்பானது போலவும் சிலசமயங்களில் புலிகளுக்கு எதிரானது போலவும் ஒலித்தது. முதல்முறையாக மாத்தையா, கிட்டு ஆகியோருக்கு நடைபெறவிருந்த திருமணங்களைப் பற்றியும் இதுவே வெளிப்படையாக அறிவித்தது. இந்த ஒலிபரப்பை நடத்துபவர்கள் யார், அதன் பின்னணி என்ன என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் நிலவின. அவை எவ்வாறிருப்பினும் இந்த ஒலிபரப்பு நல்ல நகைச்சுவையாக இருந்தது. யாழ் வானொலியின் அறிவிப்பாளர் சில சமயங்களில் தவறிப்போய் பழைய ஒலிபரப்பினையும் அடையாளங் காட்டிக் கொள்வார். மே மாதம் 27ம் திகதி காலை யாழ் வானொலியின் செய்தி அறிவிப்பு விளையாட்டாக இருக்கவில்லை. யாழ் குடாநாட்டிலிருந்த மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறி அகதி முகாம்களாக அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு தேவாலயங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இந்த இடங்கள் நடைமுறையில் வெகுதொலைவில் அமைந்திருந்ததால் இந்த ஏற்பாடு வெறும் பேரளவில் தான் என்றாகியது. மேலும் இந்த அகதிமுகாம்களில் வழங்கப்படக்கூடிய இடவசதிகள் யாழ்குடாநாட்டு மக்களின் மிகச்சிறு

Page 86
140
பகுதியினருக்கே தான் போதுமானதாக இருந்தது. இதனால் நிலைமைகள் ஆகவும் மோசமாகுங்கட்டத்தில் மக்கள் அணிமையில் உள்ள தேவாலயங்களுக்கோ கோவிலுக்கோ அல்லது பாடசாலைக்கோ சென்றுவிடலாம் என்று தீர்மானித்திருந்தனர்.
எதிரிகளுக்குத் தகவல்கள் கொடுப்பவர்களெனக் கருதப்பட்டவர்களுக்கு புலிகள் மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்கினர். புலிகளின் ரேடியோ தொடர்பு சாதனங்களையும் அதன் தொலைகாட்சிச் சேவையான நிதர்சனம் நிகழ்ச்சியினையும் நன்கு அவதானித்து பாதுகாப்புப்படையினர் திரட்டிக் கொள்ள முடிந்த பெருமளவிலான தகவல்களைக்கண்டு புலிகள் ஆச்சரியமடைந்தனர். வீக் என்ட் பத்திரிகையின் நிலவர அறிக்கையின்படி நீண்டகால அவதானிப்பின் மூலம் புலிகளின் சங்கேதச் சொற்களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் கையெழுத்துகளும் எந்தெந்தத் தலைவர்களுடையது எனவும் அடையாளங் காணப்பட்டது. உளவாளிகளும் எப்போதும் சுற்றிவர இருந்தார்கள். இது ஒரு புறமிருக்க, பறந்து திரியும் குண்டுவீச்சு விமானங்களில் விமானிகளின் உரையாடல்களை FM அலைவரிசையில் அவதானிப்பது பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. சிலர் விமானத் தாக்குதலின் போது பதுங்குகுழிகளுக்குள் இருக்கும்போது பொழுதுபோக்குவதற்கு ஒலிப்பதிவு செய்யும் கருவிகளுடன் FM ஏரியலையும் பதுங்குகுழிகளுக்குள் பொருத்தியிருந்தனர்.
தமக்குக் கிடைத்த புலனாய்வு அறிக்கையிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் இருக்கிறார் என்பதை அறிந்த பாதுகாப்புப் படையினருக்கு தாக்குதலை ஆரம்பிப்பதற்கான அனுகூலமான சந்தர்ப்பம் கிடைத்தது. வடமராட்சியின் குடிமனைகள் செறிந்த பகுதி வடக்குக் கடற்கரையை நோக்கித் தொகுதி தொகுதியாக அமைந்திருந்தது. தொண்டமானாறு கடலேரியிலிருந்து நீண்டு செல்லும் திறந்த வெளியானது வடமராட்சியை யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து புவியியல் ரீதியில் பிரித்தெடுத்தது. இத்திறந்த வெளிக்கூடாக இடம்பெறும் அசைவுகள் மற்றும் நடமாட்டங்களை அவதானிப்பது இலகுவாய் இருந்தது. பிரபாகரனின் பிரசன்னத்துடன் புவியியல் ரீதியான காரணிகளும் சேர்ந்து வடமராட்சியில் தமது தாக்குதலை மேற்கொள்ளும் இராணுவ உணர்வினை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. வடமராட்சியும் எஞ்சிய வடக்கு கடற்கரையோரங்களும் ஏற்கெனவே கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையானது யாழ்குடாநாட்டின் எஞ்சிய பகுதிகளை பரந்த முனையில் வெளித்தெரியச் செய்திருந்ததால் புலிகளின் ஆற்றலை சாத்தியமாகாத எல்லையில் நலிவடையச் செய்திருந்தது. பிரபாகரன் அப்போது வல்வெட்டித்துறையில் தான் இருந்தார் என்ற தகவலைப் புலிகள் முதலில் மறுத்தாலும் பூரீலங்கா இராணுவத்தின் கேணல் விமலரட்னாவிற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவ்வுரையாடல் பலாலியில் 1987 ஜூலை மாதம் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இடம் பெற்று, இதன் விபரம் 271087 வீக்என்ட் பத்திரிகையின் நிலவர அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. இத்தாக்குதல் நடவடிக்கை கேணல் விமலரட்னாவினாலும் பிகேடியர் கொப்பேகடுவவினாலும்

14
கொண்டு நடத்தப்பட்டது. இந்த உரையாடலில் இருந்து அரசபடையினர் பிரபாகரன் வல்வெட்டித்துறையில் இருந்ததை மட்டுமல்லாமல் அவர் எங்கே இருக்கிறார் என்பதைப் பற்றிய துல்லியமான உளவுத்தகவல்களையும் கொண்டிருந்தார்கள் என்பதையும் அனுமானிக்க முடிகிறது. அவ்வாறாயின் இலங்கை இராணுவத்தினர் பிரபாகரன் தப்பிச் செல்வதை ஏன் தடுத்து வளைக்க முடியவில்லை என்று கேட்கப்பட்டபோது இராணுவத்தினர் தரைக்கணிணி வெடிகளை அகற்றுவதில் சற்று நேரத்தைச் செலவிட வேண்டியதாயிற்று என்று கேணல் பதிலளித்தார். அந்த அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு: "புலிகளின் முன்னைய மட்டக்களப்புத் தளபதியும் தற்போது புலிகளின் உயர்மட்டத்தைச் சேர்ந்தவருமான குமரப்பாவும் அவரது சகாக்களும் பலாலியில் உள்ள இந்திய அமைதிப்படையின் தலைமையகத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த இலங்கை இராணுவத்தின் அதியுயர் அதிகாரிகளில் ஒருவரான கேணல் விஜயா விமலரட்னாவுடன் கடந்த வாரம் தேநீர் விருந்தொன்றின் போது பேசிக்கொண்டிருந்தனர். இவ்வுரையாடல் இருதரப்பினரிடையேயும் நடைபெற்ற சண்டைகளைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடலாகவே அமைந்தது. ஒப்பறேசன் லிபரேசன் தாக்குதலின்போது வடமராட்சிக்கூடாக ஒரு இராணுவப்படைப்பிவை தலைமையேற்று நடத்திச் சென்ற கேணல் விமலரட்னாவை நோக்கி "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் அந்தப் பகுதிப் பொறுப்பாளர் சூசையும் அகப்பட்டுக் கொண்டிருந்த வல்வெட்டித்துறையினி அப்பகுதியின் மீது ஏனி தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை?" என்று விடுதலைப்புலி வீரர் ஒருவர் கேட்டார். அ அதற்கு விடை தெரிந்திருந்தால் கூறமுடியும் என்றும், வல்வெட்டித்துறையை அரசபடையினர் சுற்றிவளைத்த போது ஒரு பகுதி வீரர்கள் தரைக்கண்ணிவெடிககைள எதிர்கொள்ள நேர்ந்ததால் குறித்த அந்தப்பகுதியை வளைத்துக்கொள்வதற்கு அப்பகுதியைச் சென்றடைவதற்குதி தாமதமாகிவிட்டதாக இருக்கலாம் என்றும். அந்த இடத்திற்கூடாகத்தான் புலிகளின் தலைவர் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்றும் கேணல் விமலரட்ன பதிலளித்தார்.
மற்றுமொரு தனிப்பட்ட தகவலின்படி பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுத்து உபசரித்த வல்வெட்டித்துறை வர்த்தகர் ஒருவரின் இரண்டு வீடுகளும் பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிச் சென்ற சிறிது நேரத்திற்குள் குண்டு வீசித்தகர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. கிழக்காகச் சென்று பின்னர் முள்ளி வெளிக்கூடாகத் தெற்கு நோக்கி பிரபாகரனைப் பாதுகாப்பாய்க் கொண்டு செல்லும் கடுமையான பணியில் எண்ணற்ற புலிகள் தங்கள் உயிரைப் பலி கொடுத்தனர். இதைப்பற்றிய விசனம் மட்டுமே புலிகளின் பல்வேறு மட்டங்களில் கணிசமான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
தொண்டமனாற்றிலிருந்து 26ம் திகதி இராணுவம் வெளியேறிவிட்டிருந்தது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் கடுமையான வான்வழிக்குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலின் பின்னணியில் தான் இது நிகழ்ந்தது. யாழ்ப்பாணக் கோட்டைக்கருகிலும் குண்டுவீச்சு, ஷெல் தாக்குதல் என்று இராணுவ நட்வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையே என்று பின்னர் அரசாங்கம் அறிவித்தது. 28ம் திகதியளவில்

Page 87
42
உடுப்பிட்டியையும் வல்வெட்டித்துறையையும் இராணுவம் தன்வசப்படுத்தியது. பெருமளவு நிலக்கணிணித் தடைகளுக்கூடாக மேற்கொள்ளப்பட்ட கடினமான முயற்சி இதுவாகும். இதற்குப் பின் புலிகளின் எதிர்த்தாக்குதல் ஒரு முற்றுகைக்கு வந்துவிட, ஜுன் முதலாம் திகதி வடமராட்சி மீளக் கைப்பற்றப்பட்டது. ஒரு இராணுவப் படைப்பிரிவு முள்ளியில் ஹெலிகொப்டர் மூலம் தரையிறக்கப்பட்டனர். ஒரு பிரிவு நெல்லியடியைத் தம்வசப்படுத்திக் கொண்டு வடக்கே பருத்தித்துறை நோக்கி முன்னேறியது. இன்னுமொரு கோஷ்டியினர் மூன்று அணிகளாக கிழக்கே பருத்தித்துறை நோக்கி முன்னேறினர். தமது குழுக்களை மறுசீரமைத்துக் கொள்வதற்கோ அல்லது புதிய நிலக்கண்ணி வெடித்தடைகளை ஏற்படுத்திக் கொள்ளவோ புலிகளுக்கு அவகாசமே வழங்கப்படவில்லை. புலிகள் தங்கள் வாகனங்களையும் பெருந்தொகையான ஆயுதங்களையும் விட்டுவிட்டு விரைந்து பின்வாங்கினார்கள். வடமராட்சியை மீளவும் கைப்பற்றுவதில் கெமுனு வோச் மற்றும் கஜபாகு ரெஜிமெண்டைச் சேர்ந்த 8,000 துருப்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து நடந்த நிகழ்ச்சிகளால் புலிகள் பெருந்திகைப்பிற்குள்ளானார்கள். கடந்த மூன்று வருட காலத்தில் இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடுகளுக்கிடையே நிதானமான கட்டுப்பாட்டுடன் முன்னேறுவதற்கு போதிய மனோதிடமும் பயிற்சியும் பெற்றிருந்தனர். 1983ல் இருந்த ஒழுங்கீனக்கும்பல் போன்ற இராணுவமாக அது இருக்கவில்லை.
ஆச்சரியமான வேகமும் முன்முயற்சியும் பூனிலங்காவின் பக்கமே தொடர்ந்திருந்தது. காங்கே சனி துறைக்குக் கிழக்கே உள்ள கடலோரப்பகுதியனைத்தையும் அது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இப்போது மேற்குப் புறக் கடற்கரையோரமாகவும் தெற்கே தெல்லிப்பளை நோக்கியும் எவ்வித எதிர்ப்புமின்றி முன்னேறியது. அச்சுவேலி சரமாரியான ஷெல் தாக்குதலுக்குப் பின் மீண்டும் கைப்பற்றப்பட்டது. பியிஸி நிருபரான மார்க் டெலி என்பவர் பலாலியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தலைமையகம் அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நம்பிக்கை கொணர்டிருந்ததாகத் தெரிவித்தார். புலிகள் இயக்கம் மிக மோசமான கதியிலிருந்தது. அவர்களது வாய்வீச்சு அதிகமாயிருந்தாலும் விடுதலைப்புலிகளின் மிகத் தீவிரமான ஆதரவாளர்கள் கூட தெற்கே இலங்கை அரசின் கீழிருந்த பகுதிகளை நோக்கியோ அல்லது இந்தியாவை நோக்கியோ பறந்தோடியமை நடப்பில் அவர்களது எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. இதன் பின் தான் பெரும் பிரசித்தத்தோடு ஜூன் 3ம் திகதி நிவாரணப் பொருட்களுடன் இந்திய மீன்பிடிக்கப்பல்கள் வந்தன. அவை இலங்கை எல்லையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதும் மறுநாளே விமானம் மூலமாக 25 தொன் உணவுப்பொருட்கள் யாழ்ப்பாணத்தில் விமானங்கள் வாயிலாகப் போடப்பட்டன. இது இலங்கை அரசின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்தது. புலிகள் தம்மைப் பற்றியிருந்த பெருமதிப்பு அப்படியே சிதைந்து போனதை உணர்ந்து கொண்டனர். இப்போது எவ்வித முன்முயற்சியும் திடமாக பாக்கு நீரிணையின் மறுபக்கமாகவே அமைவதாயிற்று. இந்தியாவின் மனிதாபிமான உணர்வைப் பாராட்டி பிரபாகரன் வரவேற்பறிக்கையை வெளியிட்டார். இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளால் ஆயுத விற்பனையில் (சுவீடனின் போஃபர்ஸ் ஊழலில்

143
2 கோடி பவுன் என்றும் மேற்கு ஜேர்மனின் நீர்மூழ்கிக்கப்பல் பேரத்தில் ஒன்றரை கோடி பவுன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது) உயர் மட்டத்தில் நடந்த ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் தொடர்பாக அம்பலப்படுத்தப்பட்டுத் தனது அரசாங்கம் பெருமளவில் தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் ராஜீவ் காந்தி இப்போது இலங்கைத் தமிழரின் திடீர்க் கதாநாயகன் ஆனார்.
73 ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் சில அம்சங்கள்
தமிழ் மக்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாத சனக்கூட்டமாகக் கருதிக்கொண்டு பயன்பாட்டுவாத எல்லைக்குள்ளேயே இந்த இராணுவ நடவடிக்கை அமைந்திருந்தது. பிரச்சினை யாதெனில் சர்வதேச அபிப்பிராயத்திற்குச் செலவாணியாகத்தக்க விதத்தில் தமிழ்ப்பிரதேசங்களை எப்படிச் சமாதானப்படுத்திக்கொள்வது என்பதுதான். இந்த வரம்பிற்குள் திட்டநுண்முறையிலும், நடைமுறைப்படுத்திய விதத்திலும் இராணுவரீதியில் இந்நடவடிக்கை மெச்சத்தக்கதுதான். ஆனால் தமிழர்களும் இந்த நாட்டின் சரிநிகரான பிரஜைகள்தான் என்றும் அவர்களும் மனிதஜ்விகள்தான், அவர்களின் வாழ்வும் உணர்ச்சிகளும் மதிக்கப்படவேண்டும் என்றும் இழந்து போன தங்களின் தன்மானத்தை மீளவும் வலியுறுத்த அவர்களுக்கு ஊக்கம் வழங்கப்பட வேணடும் என்றும் கருதப்பட்டால் இந்த இராணுவ நடவடிக்கை ஆட்சேபிக்கத்தக்க பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. உண்மையான மோதல்கள் எதுவுமில்லாத பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தீவிரமான ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனையடுத்து விடுக்கப்பட்ட ஒரு வானொலி அறிவிப்பு பொதுமக்களைக் கோயில்களிலும் பாடசாலைகளிலும் சென்று தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. தஞ்சம் புகுந்து கொள்ளக்கூடிய இடங்களைச் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தியிருந்த முன்னைய வானொலி அறிவிப்பினைத் திருத்தியதாக இது இருந்தது. அகதி முகாம்களாக இயங்கிய மூன்று கோயில்கள் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகின. அல்வாயில் மாரியம்மன் கோயிலில் விழுந்த ஷெல் 35ற்கு மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்டது. பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களைக் கண்டதும் கேள்வி முறையில்லாமல் சுட்டார்கள். அவ்வாறே ஊரடங்கு உத்தரவை மீறிய அப்பாவி மக்களுங்கூட சுடப்பட்டனர். விமானத் தாக்குதலுக்கும் ஷெல் தாக்குதலுக்கும் எதிரான பாதுகாப்புக்காகப் பதுங்குகுழிகளை அமைதிது வைத் திருப்பவர்கள் புலிகளினி ஆதரவாளர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று இராணுவவீரர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரதேசங்களாகக் கருதப்பட்ட வதிரி, கொற்றாவத்தை போன்ற சில பகுதிகளில் பல இளைஞர்கள் கேள்விமுறை எதுவுமின்றிக் கொலை செய்யப்பட்டனர். சில சமயங்களில் அவர்களை விசாரித்து விட்டுத்திருப்பி அனுப்புவோம் என்று பெற்றோரிடம் உறுதிகூறிவிட்டு அவர்களைக் கூட்டிச்சென்று சுட்டனர். கம்பர்மலையில் இறந்துபோன போராளிகளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் சுவரொட்டிகளை ஒவ்வொரு முறையும் காணும்போது இராணுவவீரர்கள் வெறிகொண்டது போல் நடந்து கொண்டனர். பரந்தளவில் குறிப்பாக நகைகள் கொள்ளையிடப்பட்டன. பருத்தித்துறையிலும் இதே மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

Page 88
144
ஜூன் முதலாம்திகதி அகதிமுகாமாக அறிவிக்கப்பட்ட புற்றளை பிள்ளையார் கோவிலைச்சுற்றி வளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த சில இளைஞர்களைச் சந்தேகத்தின் பேரில் அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்றனர். ஒரு பொறியியல் மாணவன் வல்வெட்டித்துறையில் பிறந்த அடையாள அட்டை வைத்திருந்த காரணத்திற்காகவே அவருடைய தாயுடனும் பிற அகதிகளின் முன்னிலையிலும் வைத்துக் கொல்லப்பட்டார். கோயிலிலிருந்து வெளியில் காத்திருக்கும் ட்ரக் வாகனத்தை நோக்கி நடக்குமாறு கூறிவிட்டு ஐந்து பேரைச் சுட்டுக்கொன்று கிணற்றுக்குள் வீசி எறிந்தார்கள். கணிதவியல் உதவி விரிவுரையாளரான திரு.ரகுநீஸ்வரனும் வேறுஞ் சிலரும் நெல்லியடி முருகன் கோயில் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, மே 31ம் திகதி நெல்லியடி சந்தியில் வைத்து பிரிகேடியர் கொப்பேக்கடுவவினால் சொற்பநேரம் விசளிக்கப்பட்டனர். போகும் வழியில் அவர்களில் நால்வரை ஒடுமாறு கூறிவிட்டுப் பின் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். மூவர் இறந்தனர். செத்தவர் போல் கிடந்த திருரகுதீஸ்வரன் கையில் ஏற்பட்ட காயத்துடன் பின்னர் தப்பிவிட்டார். சாதாரண வான்வழிக் குண்டு வீச்சை விட மோசமானது அவ்ரோவிலிருந்து வீசி எறியப்பட்ட பீப்பாய் குண்டுகளாகும். இது கடைகெட்ட யுக்தியாகும். குறிக்கப்பட்ட ஒரு இலக்கை நோக்கி இதனைச் செலுத்துவதற்கில்லை. எரிபொருள் அடங்கிய பீப்பாயுடன் றப்பர் போன்று எரியத்தக்க பொருளைச் சேர்த்திணைத்து இந்த வகைக்குணிடுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. தரையில் விழுந்ததும் இந்த எரிபொருள் வெடிக்கத் தொடங்கும். உருகிய றப்பர் போன்ற பொருள் நாலாதிசையிலும் சீறிப்பாய்ந்து அகப்பட்டுக் கொண்டவரின் தோலில் நன்கு ஒட்டிக்கொண்டு எரிய ஆரம்பிக்கும். இவ்வகைக் குண்டுகள் பெருவாரியாக வல்வெட்டித்துறையில் போடப்பட்டன. ஒரு எண்ணிக்கையின்படி 48 குண்டுகள் போடப்பட்டதாகத் தெரிகிறது. யாழ் குடாநாட்டின் வெவ்வேறு பாகங்களிலும் எழுந்தமானமாக இந்த பீப்பாய் குண்டுகள் போடப்பட்டன. யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதி சிவன் கோயில் மீது விழுந்த இத்தகைய குண்டிற்கு 17 பேர் பலியானார்கள். எந்தவிதமான இராணுவ நோக்கமும் இல்லாத துன்பவதையில் மகிழ்ச்சி காணும் வீம்பைத்தவிர இதில் வேறு எதுவுமில்லை.
வடமராட்சிவாசிகளைப் பொறுத்தவரையில் வல்வெட்டித்துறைக்கு உள்ளேயும் அதனைச் சூழ்ந்தும் பெருமளவு பொருட் சேதங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கையால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்த்ததைவிடக் குறைவானதாகவே இருந்தது. வல்வெட்டித்துறைக்குள்ளும் அதனைச் சூழ்ந்தும் குண்டு வீச்சும் ஷெல் தாக்குதலும் ஆரம்பமானதும் இயலக்கூடுமான மிகப்பலர் கிழக்கு நோக்கியும் அவர்களில் பலர் தென்மராட்சியில் அகதிகளாகவும் வெளியேறிச் சென்றுவிட்டனர். இராணுவம் பருத்தித்துறையை நோக்கி நகர ஆரம்பித்ததும், மூன்றாவது நாளில் புதிதாக நிரந்தரமான நிலைகளில் தரித்து நிற்பதற்கான வாய்ப்போ விருப்பமோ இல்லாத நிலையில் விடுதலைப்புலிகள் பின்வாங்கிச் சென்றமை பொதுமக்களின் உயிரிழப்பைக் குறைப்பதில் பெருமளவு உதவியது. உள்ளுக்கு விருப்பமில்லாத ஒரு வித மதிப்பு இலங்கை இராணுவத்தின் மீது மக்களுக்கு இருந்தது. பலர் விடுதலைப்புலிகளை

145
வெகுவாகக் கடிந்து கொண்டனர். "எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு எங்கு போகிறோம் என்று கூட எங்களிடம் சொல்லிக்கொள்ளாமல் அவர்கள் ஓடித்தப்பி விட்டார்கள் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். கம்பர்மலையைச் சேர்ந்த திருதர்மர் போன்றவர்கள் இதில் தாராளமான இன்னொரு கண்ணோட்டம் கொண்டிருந்தனர். "பையன்கள் நின்று சண்டை பிடிக்கவில்லை என்று நான் சொல்லமாட்டேன். நிலக்கணிணித் தடைகள் அகற்றப்பட்டு இராணுவம் தொண்டமனாற்றை விட்டுப் புறப்பட ஆரம்பித்ததுமே அவர்களுக்கு ஓடித்தப்புவதைவிட வேறொன்றும் செய்து கொண்டிருக்கமுடியாது. ஷெல் அடிகளை பெடியள் ஏகே 47 ஆல் எதிர்கொண்டிருக்க முடியாது. அவர்கள் எங்களையும் ஒடத்தான் சொன்னார்கள், நாங்களும் தான் ஓடினோம். இராணுவம் பிசாசுகளைப் போல வந்தவண்ணமிருந்தது. யாராவது கீழே விழுந்தாலும் மற்றவர்கள் அதனைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நாங்களோ பெடியளோ இதனை எதிர்பார்த்திருக்கவில்லைதான்" என்கிறார் அவர். பிரபாகரன் உட்பட விடுதலைப்புலிகளின் பல தலைவர்களின் பிறப்பிடமான வல்வெட்டித்துறை விடுதலைப்புலிகளின் பலமான கேந்திரநிலையமாகவே கருதப்பட்டிருந்தது. வடமராட்சியில் அன்று தாமிழந்த மரியாதையை இன்றுவரை விடுதலைப்புலிகள் திருப்பியும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. பெரும்பாலானோர் களைத்துப் போய் விட்டனர். யுத்தம் போதும் போதும் என்றாகிவிட்ட நிலையில் இலங்கை இராணுவம் தங்கள் பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்டால் கூட அவர்களுடன் அனுசரித்துப் போகவும் அவர்கள் தயாராக இருந்தனர். "சிங்களவர்களைப் போய்ச் சுரண்டினால் அவர்கள் ஆத்திரத்தில் எதையும் செய்வர்கள்தான். ஆத்திரம் தணிந்து போனதும் அவர்கள் சரியாகி விடுவார்கள்" என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர். விடுதலைப்புலிகள் வடமராட்சிக்குள் வராமல் இருந்தாலே போதும் என்று மக்கள் நம்பிக்கைமேல் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்தனர். இரண்டு கிழமைகள் கழித்து புலிகள் மீண்டும் தோன்றி நிலக்கணிணி வெடிகளைப் புதைக்க முயன்றபோது இராணுவத்திற்கு மிகச்சாதாரணமாகத் தகவல் கொடுக்கப்பட்டு விட்டது. தாங்கள் பட்டது போதும் என்பதுவும் இனி எங்களுக்கு ஆறுதல் வேண்டும் என்பதும்தான் மக்கள் மத்தியில் நிலவிய பொது அபிப்பிராயமாக இருந்தது.
பருத்தித்துறை ஆஸ்பத்திரியைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியானது அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டபோது தென்னிலங்கையிலும் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூட்டுகிறது. நெல்லியடியிலிருந்து இலங்கை இராணுவம் முன்னேறிவர ஆரம்பித்ததும் மே 30ம் திகதி மந்திகையிலிருந்த பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் 2500 அகதிகள் வரை ஒன்று திரண்டனர். அவர்களில் சில முக்கிய பிரமுகர்களின் குழுவினர் அந்த மருத்துவரிடம் சென்று அவரைப் புலிகளை அணுகி அவர்களுக்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்து விளக்கி ஆஸ்பத்திரியின் அரைமைல் சுற்றுக்குள் இலங்கை இராணுவத்தை எதிர்க்க வேண்டாமென்று கேட்டுக்கொள்ளுமாறு வேண்டினார்கள். அந்த மருத்துவர் கூறினார்: "இவர்கள் 41ல்லாருமே விடுதலைப்புலிகளின் மிகமுக்கிய ஆதரவாளர்கள். எங்கள் சமூகத்தை எதிர்நோக்கியுள்ள தீர்வு காணப்படாத ஒரு தார்மீக நெருக்கடியை இது

Page 89
(46
வெளிக்கொணர்கிறது. தொலைவில் இருந்த திருகோணமலையிலோ மட்டக்களப்பிலோ நிலக்கணிணிவெடிகள் வெடித்து இராணுவத்துருப்புகள் கொல்லப்பட்டபோது நாங்கள் ஆரவாரித்து மகிழ்ந்தோம். அதன் பின்னர் அங்கிருந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப்பற்றி நாம் அக்கறைப்படவில்லை. அதே நிலக்கணிணிவெடிகள் நம் வீட்டு வாசலுக்கு வரும்போது முன்பு அதற்காக ஆர்ப்பரித்து மகிழ்ந்த அதே நபர்கள் இப்போது வேறுவிதமாக யோசிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகள் எதிர்ப்பு எதனையும் காட்டாமல் தாமே பின்வாங்கி விடுவதென்று தீர்மானித்திருந்தனர். அஹிம்சைதான் எமது சமூகத்திற்குப் பொருந்தக்கூடிய சிறந்த கொள்கையாகும் இந்தியப்படைகளின் தாக்குதலின்போது அகதிகள் துரதிஷ்டவசமான நிலைமைகளை எதிர்கொண்டமைக்குக் கணக்கற்ற உதாரணங்கள் உண்டு.
74 ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது சிங்கள, தமிழ் ഉ-pഖ
ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ மீட்பு நடவடிக்கையின் போது சிங்களவர்களும் தமிழர்களும் அவர்களுக்கிடையிலேயான குற்றங்குறைகள் எதுவாயிருந்த போதும் மனிதஜ்விகள் என்ற முறையில் தமக்குள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது பற்றிய சில புதுமிையான நிகழ்வுகளை இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறோம். அவர்களுக்கிடையில் இனக்குரோதமோ வன்மமோ இருக்கவில்லை. தங்களையே வைத்துப் பகிடிகள் விடும் பழைய சிங்களப்பழக்கம் முற்றாக மறைந்து விட்டது என்று சொல்ல முடியாது. கொலைகள் அதன்பாட்டில் நடந்து கொண்டிருந்த அக்காலப்பகுதி முழுதும் பல அரசாங்கத்திணைக்களங்கள் தமிழர்களை விரோதிகளாகக் கருதாமல் தமது கடமைகளைச் செவ்வனே செய்தவண்ணமிருந்தன. அநுராதபுரத்திலிருந்த ஒரு சிங்கள ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சிதைந்து போயிருந்த நிலைமையில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரிக்கு ஒக்ஸிஸன் விநியோகம் ஒழுங்காய் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தனது கடமை நேரம் முடிந்தபின்பும் நின்று வேலை பார்த்திருக்கிறார். யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவைகள், மின்சாரசபை, கே.கே.எஸ். சீமேந்துத் தொழிற்சாலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த எந்தப் பொறுப்பதிகாரியும் சிங்கள அதிகாரிகளால் தாம் அநியாயமாக நடத்தப்பட்டதாக எங்குமே முறைப்பாடு தெரிவிக்கவில்லை. இரண்டு சீமேந்துத் தொழிற்சாலைகளின் நிர்வாகமும் நாலுமாதங்களாகத் தொடர்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டுக் கிடந்த காலத்திலுங்கூட அங்கு தற்காலிகக் கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்குக்கூடச் சம்பளம் வழங்கப்படவே வேண்டும் என்று இதற்கு முன்னர் என்றும் நடந்திராத நடவடிக்கைகளை அது மேற்கொண்டது. இலங்கை அரசாங்கம் தனது தமிழ்ப்பிரஜைகளை இராணுவத்தினதும் விசேஷ அதிரடிப்படையினதும் ஊர்காவல்படையினதும் தயாள சிந்தைக்கு விட்டுவிட்டதை இதனால் நாம் மன்னித்துவிடுவதற்கில்லை. மே 20ம் திகதி அம்புலன்ஸ் வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு டாக்டர் ஆனையிறவு செக் - பொய்ண்டை அணுகியபோது மேற்கொண்டு அவர் பயணத்தைத் தொடர முடியாது என்று இலங்கை இராணுவவீரர்கள்

147
அவரிடம் தெரிவித்தனர். "ஏன் நான் பயணத்தைத் தொடர முடியாது?’ என்று அந்த டாக்டர் மிகவும் தயவாகக் கேட்டார். அச்சமயத்தில் விடுதலைப்புலிகள் அடித்த ஷெல்கள் அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கருகில் வந்து விழுந்தன. இராணுவவீரர்கள் சடுதியாகத் தற்காப்பு மறைவிடங்களை தேடிக்கொண்டனர். நடுவீதியில் திடீரென்று தனித்து விடப்பட்ட டாக்டர் அம்புலன்ஸிற்குப் பின்னால் சென்று மறைந்து கொண்டார். கடைசியில் நிலைமை எல்லாம் அமைதியானதும் இராணுவவீரர்கள் மீண்டும் வந்தனர். ஷெல் தாக்குதல் வந்த திசையைச் சுட்டிக்காட்டியவாறு அவர்கள் கூவினார்கள்: "மஹாத்தயா! மஹாத்தயா! பார்த்தீர்களா? பாருங்கள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று! அதனால்தான் நீங்கள் மேற்கொண்டு அங்கு போகமுடியாது என்று சொன்னோம்" மே 26ம் திகதி ஒப்பரேசன் லிபரேசன் தொடங்கியபோது அநுராதபுரத்தில் இருந்த இலங்கை மின்சார சபையின் சுவிச் ரூமிற்குள் இராணுவவீரர்கள் சென்று யாழ்ப்பாணத்திற்கான இணைப்பைத் துண்டித்துவிடுமாறு பணித்தனர். யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் மின்சாரசபையில் சுவிச் ரூமில் இருந்த ஊழியர்கள் மின்சாரம் இல்லை என்று கண்டதும் தொழில்சார் தொலைபேசி வாயிலாக அநுராதபுரத்திற்குத் தொடர்பு கொண்டனர். அநுராதபுரத்தில் உள்ள சிங்கள மின்சாரசபை ஊழியர்கள் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே தெரிவித்துவிட்டு போனை வைத்துவிட்டனர். அநுராதபுரம் சுவிச் ரூமில் நின்றிருந்த இராணுவம் மாலை 8.00 மணிவரை அங்கேயே நின்றுவிட்டுட் போகும்போதுதான் மின்இணைப்பை வழங்கக்கட்டளையிட்டுச் சென்றனர். ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின் மீதமுள்ள நாட்களிலும் இதே நடைமுறைதான் தொடர்ந்திருந்தது. இராணுவம் தங்களை விட்டுச் சென்ற பிறகு அநுராதபுரத்தில் உள்ள இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களின் சகாக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நாங்கள் அப்போது மின் இணைப்பைத் துண்டித்தமைக்கு எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். இராணுவம் இங்கே எங்களுடன் இருந்ததால் எங்களால் உங்களுடன் பேசிக் கொள்ளவும் முடியவில்லை. இனிமேல் இப்படி மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டால் இராணுவத்தின் கட்டளைப்படி தான் அப்படி நடக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் போது எங்களுக்கு போன் எடுக்காதீர்கள். எல்லாம் முடிந்தபிறகு எங்களுக்கு போன் எடுத்தால் நடந்ததெல்லாவற்றையும் உங்களுக்கு விளங்கப்படுத்துவோம் என்று கூறினார்கள். இக்காலப்பகுதியில் சாதாரண மானிட உறவு பேணப்பட்டிருந்தது என்பதும் இராணுவம் யாழ்ப்பாணத்தைப் பூரணமாக இருளில் ஆழ்த்த விரும்பவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மே 28ம் திகதி ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை அதன் உச்சத்தில் இருந்தபோது ஒரு வானில் ஆனையிறவை வந்தடைந்த களைத்துப்போன பயணிகள் கோஷ்டி ஒன்று தங்கள் பயணத்தை மேலும் தொடர அனுமதிக்குமாறு வேண்டினர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்படியானால் எப்போது தாங்கள் போகக் கூடியதாக இருக்கும் என்று அப்பயணிகள் மீண்டும் கேட்டபோது ஒரு இராணுவ வீரன் பின்வருமாறு பதிலிறுத்தான்: "எங்கள் ஆட்களின் கோஷ்டி ஒன்று இப்போது தான் முன்னால் பாதைவழியே போயிருக்கிறது. அவர்கள் அடிவாங்கிக் கொண்டு திரும்பி

Page 90
148
வருவார்கள். அதற்குப் பிறகு நீங்கள் போகலாம்" அப்பயணிகள் பின்னர் பூநகரி வழியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர். பூநகரியில் நின்ற இராணுவத்தினர் பயணிகளைச் சோதனையிட்டனர் எனினும் பாதை வழியை ஒருபோதும் மூடிவிடவில்லை.
ஜூன் 4ம் திகதி யாழ்ப்பாணத்தை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்த பயணிகள் குழுவினரை ஓமந்தையில் இராணுவத்தினர் சோதனையிட்டனர். எலிபண்ட் ஹவுஸ் குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு வந்த லொறி ஒன்று சோதனை செய்யுமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து பல குளிர்பானப் போத்தல்களை வாங்கிய ஒரு சிங்கள இராணுவவீரன் அவற்றை தமிழ்ப்பயணிகளுக்கு வழங்க ஆரம்பித்தார். "ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள். எனக்கு நல்ல சம்பளம் வருகிறது. என்னுடைய தாய் தந்தையர்கள் ஓமந்தையில் தான் விவசாயிகளாக உள்ளனர். நான் இங்குதான் பிறந்தேன். இது என்னுடைய இடமாதலால் இங்கு சனங்கள் வரும்போது அவர்களை வரவேற்றுக் கெளரவிப்பது என்னுடைய கடமை என்று அவர் கூறினார்.
1987 ஏப்ரல் 22ம் திகதி விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து கே.கே.எஸ் சீமேந்து ஆலைகள் இரண்டும் மூடப்பட்டதையும், இராணுவம் பதிலடி கொடுக்கும் விதத்தில் தொழிற்சாலை ஊழியர்களைக் கொன்றது பற்றியும் ஏற்கெனவே விபரித்திருக்கிறோம். இதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு லங்கா சிமெண்ட் லிமிட்டட் பொது முகாமையாளர் திருஜயமானவின் முயற்சியில் மூடப்பட்ட தொழிற்சாலைகளைத் திறக்குமுகமாக, துறைமுகப் பொறியியலாளர் தனது ஊழியர்களுடன் அங்கு நேர்ந்த சேதங்களைத் திருத்தச் சென்றிருந்தார். தங்களை இலங்கை இராணுவவீரர்கள் பார்த்த மாதிரியை அவர்கள் விரும்பவில்லை. பின்னர் அந்தப் பொறியியலாளர் கே.கே.எஸ்.ஹாபர்வியூ முகாமின் கமாணிடரிடம் தாங்கள் அங்கு பணியாற்றுவது உணர்மையிலேயே பாதுகாப்பானதா என்று கேட்டார். "இந்த விளையாட்டில் நாங்கள் எல்லாரும் பணியாளர்கள் தான். எங்களது வாழ்க்கை பற்றி யாருக்கும் கவலையில்லை. என்னுடைய புத்திமதி என்னவென்றால் நீங்கள் இந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுப் போய்விடுவது தான் சரி” என்றார். தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கும் திட்டங்கள் பின்னர் கைவிடப்பட்டன.

149
அத்தியாயம் 8 ஜுன் - ஜூலை: இந்தியா உள்ளே நுழைகிறது
8.1 விமானத்திலிருந்து உணவுப்பொதிகள் போடப்பட்டமையும், விடுதலைப்புலிகளின் இக்கட்டான நிலையும் இந்தியா ஜுன் 4ம் திகதி விமானத்திலிருந்து நிவாரணப் பொருட்களைப் போட்டதுடன், சிறிலங்கா இராணுவம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்த பின்னரும் கூட யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தாமல் விலக வேண்டியதாயிற்று. விடுதலைப்புலிகள் இயக்கம் அதிர்ச்சியுற்றுத் தடுமாறியது. இறுதியாகத் தமிழ்மக்கள் இந்தியாவிடம் தங்கியிருத்தல் வேண்டுமென்பதை இந்தியா காட்டியது. இப்பொழுது, இந்தியா யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒருவிதத்தில் பிாசன்னமாய் இருக்க வேண்டுமென விரும்பியது. இது விடயமாக கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையில் அதிக பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியாவின் நிவாரணப் பொருட்களை யாழ்ப்பாண மக்களுக்கு இந்திய, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கங்கள் இணைந்து பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியா தனது வருகையிலான செயற்பாடு முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலானது என்பதாக காண்பித்துக்கொண்டது. சிறிலங்கா இராணுவத்தின் "ஒப்பறேசன் லிபரேஷனின்" போதும், அதற்கு முன்னரும், பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பற்றிய விடுதலைப்புலிகளின் விவரணத்தை அகில இந்திய வானொலி அப்படியே பிரபல்யப்படுத்தியது. கொல்லப்பட்டவர்களின் எணணிக்கை 2000 எனக்கூறப்பட்டது. பின்னர் அந்த எண்ணிக்கை 400 - 700ற்கும் இடைப்பட்டதென பலராலும் மதிப்பிடப்பட்டது. இந்தியாவும், வடமராட்சி முழுவதும் இலங்கை விமானங்கள் தொடர்ச்சியாக செறியலாக (CarpetBombing) குணிடு பொழிந்ததாகக் குற்றம் சாட்டியது. சிறிலங்கா அரசாங்கமும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக அதிக பயனடைய விரும்பியது. சிறிலங்கா அரசாங்கம் பின்னர் விமான மூலம் கொண்டு வந்திறக்கிய வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களாலும் அவ்வாறான குண்டு பொழிவைப் பற்றிய அதிக அறிகுறிகளைக் காண முடியவில்லை. இவையெல்லாம் அகில இந்திய வானொலி மே மாதத்தில் சிறிலங்கா, இராணுவம் செய்தவைபற்றி மிகைப்படுத்திக் கூறியதிலிருநீது (அதை யிட்டுத் தமிழி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார்கள்) அக்டோபர் பிற்பகுதியில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் நடத்திய தாக்குதல்கள் பற்றிய நம்பமுடியாத பொய்களை கூறுவதற்கு மாறியமை தமிழ் மக்களுக்கு பிற் காலத்தில் வெறுப்பூட்டுவதாயிருந்தது. சிறிலங்கா அரசாங்கம் விமானப் படையைப் பயன்படுத்தியது பற்றிய இந்தியாவின் தீவிர விமர்சனத்தின் ஒரு விளைவு, இந்தியா அக்டோபரில் தான் நடத்திய தாக்குதலின்போது ஆரம்பத்தில் இலங்கை விமானப்படையைப் பயன்படுத்தியமைபற்றி உடனே ஏற்றுக்கொள்ளாமல், பின்னர் தாமதமாக ஏற்றுக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானாதாகும்.
1987ம் ஆண்டிலே சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கத்துடன் விமானப்படையைப் பயன்படுத்தியது. அதனால் பொதுமக்கள்

Page 91
50
கொல்லப்படுவர்களென எதிர்பார்க்கப்பட்டது. விடுதலைப்புலிகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் வீட்டுக்கு மாறப்பண்ணுவது மட்டுமே அதன் பிரதான விளைவாக இருந்தது. அநேகமான தடவைகளில் எவி.எம் (FM) மீற்றரில் விமானப்படையினருக்கிடையே நடந்த உரையாடல் விமானத்தாக்குதல் பெருமளவு கட்டுப்பாட்டுடன் நடத்த முயற்சிக்கப்பட்டதை வெளிப்படுத்தியது. பொதுவாக தாக்கப்பட வேண்டிய இலக்குகள் நிச்சயப்படுத்தப்பட்ட பின்னரே, நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் விமானத்தாக்குதலின் "கட்டுப்பாடென்பது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முகாம்களைச் சுற்றி 1000 யார்களுக்குள் வாழாதவர்கள் விமானத்தாக்குதலின்போது தாங்கள் நியாயமான அளவு பாதுகாப்பாய் இருப்பதாகக் கருதி கொள்ளுகின்ற பாக்கியம் பெற்றவர்களாக்குவதாக மட்டுமே இருந்தது. ஆனால் ஷெல்லடிக்கு இவர்கள் தப்பமுடியாது. தேசிய பாதுகாப்பு அமைச்சிலுள்ள கற்பனா சக்தியுள்ளவர்கள், அவ்றோ - விமானத்திலிருந்து பீப்பாக் குண்டுகளைத் தள்ளிவிடுவதை அறிமுகப்படுத்தியதோடு அந்தப் பாகுபாடும் அடியோடு மறைந்துபோனது.
இந்தியா தமிழர்களைப் பாதுகாப்பது என்பதில் ஒருவித ஆதிக்க நிலையைப் பெற்றதால், விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுது கெளரவப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. தமது ஆதரவைக் கட்டி வளர்க்கும் ஒரு பிரச்சினையை எதிர்பார்த்திருந்த விடுதலைப்புலிகள் இயக்கம், க.பொ.த. (உத) பீட்சையை பிரச்சனைக்குரிய ஒன்றாக எடுத்தது. அதன் மாணவர் இயக்கம் (SALT) வடமராட்சி கல்வியில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், க.பொ.த. (உத) பீட்சை பின்போடப்படாவிட்டால் ஏனையபகுதி மாணவர்கள் பீட்சை எழுதுவது தவறெனக் கருதியது. விடுதலைப்புலிகளின் மாணவர் இயக்கத் (SALT) தலைவர்கள் பாடசாலைகள் தோறும் சென்று அப்பரீட்சையைப் பகிஷ்கரிக்குமாறு ஆதரவு திரட்டினர். இந்த விடயத்தில் பெணிகள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் பாடசாலைகளில் ஆதரவு மிகக் குறைவாக இருந்தது. இராணுவ பாணியில் மேஜர் முரளி தலைமையில் ஆதரவு திரட்டுவதற்காகப் பாடசாலைகளுக்குச் சென்ற இளைஞர்கள், பெண்கள் பாடசாலைகளில் போற்றத்தக்க ஆதரவைப் பெற்றனர். இந்தப் பரீட்சையைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தின் மத்தியதரவர்க்க இளம் பெண்கள் முன்னணி வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பெற்றோரும், பகிஷ்கரிப்பால் பாதிப்புறும் மெளனமாயிருந்த பெரும்பான்மை மாணவரும் இப்பகிஷ்கரிப்பை விரும்பவில்லை. க.பொ.த. உயர்தர வகுப்பில் படிக்கின்ற பிள்ளைகளையுடைய செல்வாக்குப்பெற்ற அநேக பெற்றோர் இப்பகிஷ்கரிப்புக்கு எதிரான கருத்துக்களைப் பெறவும், அவற்றை முக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர்களிடம் எடுத்துக்கூறவும் தீவிரமாகச் செயற்பட்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரபலமான ஆதரவாளரிடமிருந்தும் இந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதே புத்திசாதுரியமானதெனக் கருதியது. பகிஷ்கரிப்பு கெளரவமாகக் கைவிடப்பட்டது. இந்த விடயத்தில் அறிவுபூர்வமாக நடந்து கொண்டதையிட்டு விடுதலைப்புலிகள் இயக்கம் போற்றப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே அழிவுகளுக்குள்ளான பிரதேசங்களில் உள்ள தமிழர்கள், தாம் பாதிப்படைந்துள்ளபோது ஏன் இத்தகைய

151
பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடப்படவில்லையென ஆச்சரியப்பட்டனர். அநேக பெண் பிள்ளைகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் வசீகரிக்கப்பட்டனர். இது உண்மை நிலைமையாக இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்திலே பெண்களின் பங்கு இப்பொழுது முக்கிய இடம் பெற்றது. அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படைக்கெதிரான பேரில் கண்டுக்குளி மகளிர் கல்லூரியிலிருந்து ஆகக்குறைந்தது ஒரு மாணவி உட்பட அநேக பெண்கள் மரணமடைந்தர்கள். ஆங்கிலம் பேசும் மத்தியதர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்த நுணிமதி மிக்க பெண்பிள்ளைகள் கணிமூடித்தனமான உணர்ச்சி உந்துதலால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இலட்சியத்துக்காகச் சேவையாற்ற முன்வந்ததை எவரும் பரவலாக காணக்கூடியதாக இருந்தது. அப்பெண்பிள்ளைகள் தமது பேச்சு வன்மையில், தம்மைப் பின்பற்ற ஆவலாயிருந்த அநேக கிராமப்புறப் பெண்பிள்ளைகளை இயக்கத்தில் சேர்த்தார்கள். ஆனால் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பெண்பிள்ளைகள், இயக்கத்திலுள்ள பாசிசப் போக்குகளால் விரைவில் விரக்தியுற்றனர். அவர்களும் தமது மனச்சாட்சிக்கு விரோதமான பிரச்சினைகளை எதிர் நோக்கியதுடன், தமது சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் இயக்கத்தின் விருப்பத்துக்கேற்ப நடந்து கொள்ளவும் முடியாதவர்களாயிருந்தனர். அநேக பெண்பிள்ளைகள் தமது மாயை தெளிவுற்றதும், இயக்கத்தைவிட்டு வெளியேற விரும்பினர்.
பெற்றோர்கள் துரிதமாகச் செயற்பட்டு, அப்பெணிபிள்ளைகளை மன அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காகக் கொழும்புக்கு அனுப்பித் தம் உறவினருடன் தங்கவைத்தனர். அத்தகைய பெண்பிள்ளைகள் சிலர் பின்னர், இயக்கத்திலிருந்து முழுமையாக விடுவிப்பதற்காக வெளிநாட்டிலுள்ள உறவினரிடம் அனுப்பப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் அங்கு தம் படிப்பைத் தொடர்ந்ததால் பழையவற்றை மறந்து போயினர். ஆனால் மத்தியதர வர்க்கப் பெண்களின் செல்வாக்கால் இயக்கத்தில் சேர்ந்த கிராமப்புறப் பெண்களைப் பொறுத்தவரையில் விடயங்கள் மிகவும் துக்ககரமானதாய் அமைந்தன. அவர்களும் அதே காரணங்களுக்காக இயக்கத்தை விட்டு விலக விரும்பினர். ஆனால் அவர்களுக்குப் போவதற்கு ஒரு இடமுமில்லை. அவர்களது பெற்றேரிடம் அவர்களுக்கு உதவ வழியேதும் இல்லாமலிருந்தது. அவர்களுக்குப் பெருமளவு துணிவே தேவையாயிருந்தது. நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த 'சிறிவஸ்ராவ என்ற இந்தியக்கப்பல் ஜுன் 25ம் திகதி காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வந்து தரித்து நின்றது. இந்தியத் தூதரக அதிகாரிகளான திருயூரியும், கப்டன் குப்தாவும், இந்திய செஞ்சிலுவைச் சங்கக் குழுவும் அங்கிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் வழியெல்லாம் மக்கள் நிரையாக நின்றனர். அது ஒரு வெற்றியடைந்த படையணி பயணஞ் செய்வதை ஒத்திருந்தது. இந்தியர்கள் நேரடியாக மக்களின் ஆதரவைப் பெற நோக்கம் கொண்டிருந்ததால் விடுதலைப்புலிகளின் நிலை அதற்கு இடர்பாடானதாயிருந்தது. தாங்கள் அதிகார முடையவர்களாயிருப்பதாகவும், தங்களின் நோக்கத்தை நிறைவேற்றவே இந்தியாவும் முயற்சிப்பதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் புறம் நடந்து கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு வேறுவிதமான தோற்றத்தைக் கொடுக்க முயற்சித்தது. அவர்கள் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்திடம் வேறு கோரிக்கைகளுடன், தமக்கு ஆயுதம் வேண்டுமெனக் கோஷமிடும்படி தூண்டியது. ஆனால், மக்கள் மீண்டும்

Page 92
52
மீண்டும், இந்திய அதிகாரிகளுக்கு முன்னால் முண்டியடித்துக் கொண்டு சென்று, "இந்தியா எம்மைப் பாதுகாக்கும்" என்று கூறியதில் அவர்களின் உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டன.
ஜூலை 5ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கம் நெல்லியடி மத்திய கல்லூரியில் இருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நடத்தியது. வடமராட்சியிலே சிறிலங்கா இராணுவம் தமது பலத்தை 8000 படைவீரரிலிருந்து 3000 படைவீரராகக் குறைத்துக்கொண்டது. பெரும் வன்முறைத் தாக்குதல் நிகழுமென ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. இந்திய நிவாரணப் பொருட்களை மக்களுக்குப் பங்கிட்டு அளிப்பதற்கு வசதியாக இலங்கை அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்துக்கு சம்மதித்தது. இப்போர் நிறுத்தத்தில் தாமும் பங்குபற்ற வேண்டுமென விடுதலைப்புலிகள் இயக்கமும் உணர்ந்தது. ஆனால் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்காமைக்கு முன்னரைப் போலவே இருசாராரும் நொண்டிச்சாட்டுகள் கூறினர். சிறிலங்கா அதிரடிப்படை மட்டக்களப்பில் தீவிரமாகச் செயற்பட்டது. அந்நாள் அதிகாலை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் நெல்லியடியில் நடமாடியதால் ஏதாவது நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது. நெல்லியடி மத்திய கல்லூரியின் நுழைவாசல் நெல்லியடி நகரத்தை வதிரிச் சந்தியுடன் இணைக்கின்ற ஒடுங்கிய வீதியில் அமைந்திருந்தது. அப்பாடசாலைக்கு எதிரே வாழ்ந்த மக்கள் அந்த வீதியைப் பொதுப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு இராணுவத்தால் தூண்டப்பட்டார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தற்கொலைப்படையான கரும்புலிகள் உறுப்பினரான மில்லர், வெடி குண்டுகள் நிரப்பிய ஒரு வானை அப்பாடசாலை நுழைவாசல் வழியாக ஓடிக்கொண்டு முகப்புக் கட்டிடத்துக்குள் புகுந்தார். அத்தாக்குதலில் தங்கள் படையினருள் 20 பேர் இறந்ததாக அரசாங்கம் கூறியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இத்தாக்குதலைத் தமது விளம்பரப்பலகைகள் மூலம் 'மாபெருஞ் சாதனையாகப் பிரபல்யப்படுத்தினர். அவர்கள் 100 படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறினர். ஏனைய செய்தி மூலங்கள், அரசாங்கம் கூறிய எண்ணிக்கை ஏறக்குறைய உண்மையானதெனக் கூறின. இராணுவம் இந்தவகையான செயலை எதிர்பார்த்திருந்தமையால், நிகழ்ந்த அந்தத் தாக்குதல் பெரியதொரு பின்னடைவாகக் கருதப்படவில்லை. படையினர் தமது நிலைகளை எடுத்து நெல்லியடி முகாமைப் பாதுகாத்து நின்றனர். இந்நிலையில் இராணுவம் நடந்து கொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அரசாங்கம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தி, வடமராட்சியை வெற்றி கொள்ள மிக அக்கறையாகச் செயற்பட்டு வந்தது.
பரவலான மக்கள் தொடர்புச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் இத்தாக்குதலின் பின்னர் இராணுவம் பீரங்கிச் ஷெல்களை அடிக்கத் தொடங்கியதால், இவையாவும் சிதறடிக்கப்பட்டன. பெரும்பாலும், அச்ஷெல்லடியினால் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். ஏனைய பலர் தங்கள் வீடுகளை விட்டுத் தப்பியோடுகையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு சம்பவத்தில் வயது சென்ற 12 பேர் நவிண்டிலிலிருந்து உடுப்பிட்டி நோக்கிக் கூட்டமாகத் தப்பி ஓடிக்கொண்டிருந்தனர். ஒரு சுற்றுச் ஷெல்லடி ஆரம்பமானதும் அவர்கள் ஒரு வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கிருந்து ஓடி விட்டார்கள். அங்கு வந்த படையினர் ஜன்னலூடாகப்

53
பார்த்து, அங்கு பெரிய ஒரு குழுவினருக்குச் சமையல் நடப்பதாகக் கருதினர். அந்தப் பன்னிரண்டு பேரும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு உணவு வழங்குவதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டனர். அவர்கள் அதை மறுத்தபோதும், கஜபாகு படையணியின் நாலாவது பிரிவைச் சேர்ந்த அப்படையினர் அவர்களைச் சுட்டு பதுங்குகுழிக்குள் தள்ளி விட்டனர். சிங்கள் கொம்பனி முகவர் ஒருவரின் மனைவி மாத்திரமே அதில் உயிர் தப்பினார். இன்னொரு நிகழ்ச்சியில், கரவெட்டி றோமன் கத்தோலிக்க ஆலயத்தின்மீது விழுந்த ஒரு ஷெல் 5 பேரைக் கொன்றது. இந்தமுறை மக்கள் வீணாகச் சாவதை விரும்பவில்லை. மக்களில் 90 வீதமானோர், தெற்கு நோக்கி தென்மராட்சிப் பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றனர். பருத்தித்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஆகிய நகரங்களுக்கு அண்மையில் சிலர் எங்கும் போகாது அங்கேயே இருந்தனர். வடமராட்சி தெரு நாய்களும், ஆடுகளும் வாழுமிடமாகக் காட்சியளித்ததாகக் கூறப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்திடம் தெளிவான கொள்கையும், இராணுவக்கட்டுப்பாடும் இன்மையால் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முன்னேற்றத்தில் தடைகள் ஏற்பட்டன. இது இந்தியாவுக்கு அனுகூலமாக அமைந்தது.
சிறிலங்கா இராணுவதி தினி விடுதலைக்கான தாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் ஓடியதன் பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நற்பெயர் அநேக மக்கள் மத்தியில் குறையலாயிற்று. யாழ்ப்பாண மக்களின் பொதுசன அபிப்பிராயம் அடிக்கடி மாறுவதை இது சுட்டிக்காட்டியது. யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் எதுவும் நடக்காததைப் போல் வாழ்க்கை போய்க் கொணர்டிருந்தது. செய்திப் பத்திரிகைகளில் அகதிகளின் துன்பங்கள் வெளியிடப்படுவது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரையில் இது மீண்டும் பொதுமக்களைக் கவசமாகப் பயன்படுத்தும் குறிக்கோளற்ற ஒரு சாதனையாக விளங்கியது. வடமராட்சியிலிருந்து பொதுமக்கள் தப்பி ஓடியதும், விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கு செயற்படுவது இடர்பாடாயிருந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஜூலை 13ம் திகதி வடமராட்சியிலிருந்து பின்வாங்கிச் சென்றது. அதேநாள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, சிறிலங்கா இராணுவத்தின் ஒரு பிரிவினரான - அபகீர்த்தி பெற்ற கறுப்புச்சட்டைக் காரரைக் கொண்ட ஒரு குழு பொலிகண்டியிலிருந்து நவிண்டில் நோக்கிப் புறப்பட்டுச் செல்கையில் ஒவ்வொரு வீடாகத் தேடி, அவ்வீடுகளில் விட்டுச் செல்லப்பட்ட வயதானவர்களைக் கொலை செய்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பொறியியலாளரின் கூற்றுப்படி 70 வயதுக்கு மேற்பட்ட 20 வயோதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜ
ஜூலை 5ம் திகதி இரவு விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்திய தாக்குதல்பற்றி இந்தியா அதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை எனக் கருதலாம். இந்திய அதிகாரிகள் ஆபத்தான நிலையிலிருந்தனர். வடமராட்சியில் அகப்பட்டுக் கொணிடவர்களுள் இந்திய செஞ்சிலுவைக்குழுவின் உறுப்பினரும் அடங்கியிருந்தனர். தமது உறுப்பினர்களை வடமராட்சியில் தங்கியிருக்குமாறு உத தர விட வேணடுமா அலலது அவர்கள் அங்கிருந்து விலக்கிக் கொள்ளவேணி டுமா என்பது பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குள்ளே அக்கட்டத்தில் சூடான விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறின. அங்கு பொது மக்கள் எவரும் இல்லாததால் விடுதலைப்புலிகள்

Page 93
154
அங்கு தொடர்ந்திருப்பது இடர்பாடாய் மாறியது. நிகழ்வுகள் இந்தியாவுக்கு அனுகூலமான நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தினது செயற்பாட்டின் எதிர்பாராத விளைவுகளும், பொதுமக்களோடு உறவு கொள்வதில் சிறிலங்கா இராணுவத்திடம் தேர்ச்சியின்மையுமே காரணங்களாகும்.
82 சமாதான ஒப்பந்தமும் குடியேற்றமும் மனித உரிமைகளும்
ஜூன் 4ம் திகதி இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொதிகளைப் போட்டது முதல் மேற்கொண்ட செயற்பாடுகள் ஜுலை 29ம் திகதி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தது. இந்த ஒப்பந்தத்தில் தமிழருக்காக வகுத்தமைத்த விடயங்கள் காலஞ்சென்ற இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் விசேட தூதுவரான ஜி.பார்த்தசாரதி அவர்களால் முன் வைக்கப்பட்டவற்றை ஒத்திருந்தன. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஓராண்டின் பின்னர், நிரந்தர இணைப்புக்காக கிழக்கிலே ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும். கிழக்கு மாகாணத்திலே சனத்தொகை தமிழர் 42 வீதம், முஸ்லிம் (இவர்களும் தமிழ்ப் பேசுபவர்கள்) 34 வீதம், சிங்களவர் 24 வீதம் ஆக அமைந்துள்ளது. சிங்களவர்கள் கடந்த நாற்பது ஆணிடுகளாக பிரதானமாகக் குடியேற்றத்தினி மூலம் குடியமர்த்தப்பட்டவர்கள். 1940களில் அத்தகைய முதலாவது குடியேற்றத்திட்டமான கல்லோயாத் திட்டத்தில் பணிபுரிந்த ஒரு சிரேட்ட அரசாங்க அதிகாரியின் கூற்றுக்கிணங்க, அக்குடியேற்றத்திட்டத்தில் இடங்கள் குடியேறுவதற்குத் தயாராயிருந்தபோது, அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்த அரசாங்க அதிகாரி, தாமாக விரும்பிக் குடியேறுபவர்களைத் திரட்டுவதற்காக மட்டக்களப்பிலும், அதன் அயல் பிரதேசங்களுக்கும் சென்று அங்கிருந்த உதவி அரசாங்க அதிபர்களுடன் தொடர்பு கொண்டார்.
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து அதிகம் பேர் அதற்கு முன்வரவில்லை. அதனால் வேறு பிரதேச மக்களுக்கு அழைப்பு விட்டதும், பெருமளவு சிங்களவர்கள் கேகாலை போன்ற பிரதேசங்களிலிருந்து, அங்கு குடியேற முன்வந்தனர். அவ்வாறு அங்கு வந்து குடியேறியவர்கள் 18 ஆண்டுகளில் வருமானவரி கட்டும் நிலையை அடைந்தார்கள். இந்த விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தை வெறுமனே குறை கூறமுடியாது. ஆனால் இது ஒரு சனத்தொகைக் கோலத்தை ஏற்படுத்தியது. அரசியல் மென்மேலும் இனமேலாதிக்க வாதக் குணாம்சத்தைப் பெற்று வந்ததால், விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. 1958 இனக்கலவரத்தின்போது, தமிழருக்கெதிரான மிக மோசமான வன்முறைகள் கல்லோயா, பதவியா ஆகிய குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்த சிங்களவரால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் தமிழர் தாயகத்தைப் பாதுகாக்கும் கோரிக்கைகள் எழலாயின. இக்கோரிக்கையை முன்வைத்த ஆரம்பத் தலைவர்களுள் முன்னணியில் நின்றவர் அமரர் பேராசிரியர் சிசுந்தரலிங்கம் ஆவார். அவர் இலங்கைப் பல்கலைக்கழக முன்னாள் கணிதப் பேராசிரியரும் முன்னாள் மந்திரியும், எல்லைத் தொகுதியான வவுனியா நாடாளுமன்ற உறுப்பினருமாவார். இலங்கை பெரும்பான்மைச் சிங்களவருக்குரியது என்ற

155
இலட்சியவாதத்துடன், பிரதான சிங்களப் பிரமுகர்கள் மத்தியில் தோன்றிய அதிதீவிர இன வெறியர்கள் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்ற விரும்பினர். அரசாங்கக் கொள்கையும் இயற்கையாகவே இத்திசை நோக்கித் திரும்பியது. 1957ல் பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம், 1965ல் டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் சிங்கள - பெளத்த இலட்சியக் கோட்பாட்டின் நிர்ப்பந்தத்தின் விளைவாக இந்த இரு பிரதமமந்திரிகளும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாதிருந்தமையால் தோல்வியுற்றன.
இலங்கை புத்தரின் புனிததலம், அது அவரது போதனைகளைச் செய்வதற்குத் தெரிந்தெடுக்கப்பட்ட இடம், இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பாளர்கள் உண்மையில் சிங்க ள மக்களே என்ற கருத்தியலை புத்தகுருமார்கள் பிரசாரஞ் செய்தனர். பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன (in "Ethnicity and Social Change in SriLanka" - Social Scientists Association, 1979) LTTg560T dista) வரலாற்றுப் பதிவேடான மகாவம்சத்தில், சிங்கள என்ற சொல், அந்தக் காலத்தில் புத்த குருமாரால் ஆதரிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அரசவம்சத்தையே உண்மையில் குறிப்பிட்டது. கி.மு. 4ம் நூற்றாண்டில் பதிவேடுகளை எழுதிய புத்தகுருமார்கள் தங்களுக்கும் குறிப்பிட்ட அரச வம்சத்துக்குமிடையே பரம்பரையான உறவுகள் நிலவியதென்பதை புராதன சின்னங்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தும் முயற்சி வரலாற்றுக் கூற்றுக்களிலே மேற்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து குடிவரவு, இனக்கலப்பு, மக்கள் வருவதும் போவதும், மொழி, சமயம் ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் ஏற்படல் ஆகியன நிகழ்ந்தன. தாம் பயன்படுத்திய அரசியல் இலக்குகளுக்கிணங்க சிங்களவர் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாயினர். இந்த இலக்குகள் பெளத்த சங்கத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நலன்களை பேணி முன்னேற்றும் தேவையினால் நிர்ணயிக்கப்பட்டன. வஞ்சகப் புகழ்ச்சியாகக் கூறின், இன்று, தெரிந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு பிரத்தியேகமான குழு சிங்களவர் என்ற சொல்லைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. இவர்கள் 40 நூற்று வீதமான சாதிக்குழுக்களை (கராவே, துருவே, நவன்தனோ, சலங்கம)ச் சேர்ந்தவர்களாகும். இவர்கள் தாம் 450 - 800 ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்தியாவிலிருந்து வந்த வம்சாவழிகள் எனக் கருதுகின்றனர். இன்றைய பிரபலமான பெளத்தமதம் மாற்றமுற்று, இங்கு இடம்பெயர்ந்தோரின் சமய ஆசாரங்களையும், அனுசரணைகளையும் தாமாக உறுதிப்படுத்திக் கொண்டபோதும், சிங்கள பெளத்த கூட்டு இன்று ஆக்கிரமிப்புத் தன்மையானதும், ஆரோக்கியமற்றதாகவும் இருக்கிறது. அது சிறுபான்மையினரை ஓரத்துக்கு விரட்டப்பார்க்கிறது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களவரைக் குடியேற்றும்போது, பெளத்தகுருமார் ஒரு காவற்படையை அமைக்க வேண்டுமென்பது இயற்கையானதே.
கிறிஸ்தவத்துக்கும் சிலுவைப்போர்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லாததைப் போலவே அத்தகைய செயற்பாடுகளுக்கும் பெளத்த மதத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
1970களின் ஆரம்பத்திலே திருகோணமலையில் சிங்களக் குடியேற்றங்களைக் கொண்ட சிறிமாபுர, அபயபுர, மிகிந்தபுர, பட்டிஸ்புர ஆகிய கிராமங்கள்

Page 94
56
உருவாக்கப்பட்டுவிட்டன. இக்கிராமங்கள் 1977ம் ஆண்டு இனக்கலவரத்தின் போதும், 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்குப் ஆபத்தானவையாக மாறின. அரசாங்க அமைச்சுகள் 1977ம் ஆண்டு முதல் தமது வளங்களைத் திருகோணமலையிலே சிங்களவருக்குத் தொழில் வாய்ப்பளிக்கப் பயன்படுத்திவந்தன. அத்தகைய செயலில் ஈடுபட்ட முக்கியமான அமைச்சர்கள் சிறில் மத்தியூ (விஞ்ஞான அலுவல்கள் கைத்தொழில்)வும் காமினி திசநாயக்கா (காணி, நீர்ப்பாசன மின்சக்தி)வுமாவார்கள். 1983ம் ஆண்டு முதல் திட்டமிட்ட குடியேற்றம் மிகவும் பயங்கரமான அம்சத்தைப் பெற்றது. திருகோணமலையில் அநேக கடைகள் அவற்றின் தமிழ் உரிமையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் கைப்பற்றப்பட்டன. அதேபோல் வீடுகளும், நிலங்களும் பறிக்கப்பட்டன. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் அமைப்புக்கள், தமிழர்கள் நீதி கோரிச் சென்றபோது, ஈட்டிமுனைகளாக மாறின. 1985ம் ஆண்டு முதல் தமிழர்களைக் குடியெழுப்புவதில் இராணுவம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. ஒருவர் பன்குளம், அனுராதபுரச் சந்தி, உப்புவெளி ஆகிய இடங்களுக்கூடாக திருகோணமலைக்குச் சென்றால், நம்ப முடியாத அழிவுக்காட்சிகள் இன்றும் சான்றுகளாயிருப்பதைக் காண முடியும். தேசிய பாதுகாப்பு அமைச்சர் திருஅத்துலத்முதலி 1984 டிசெம்பரில் நாடாளுமன்றத்திலே அதிக எண்ணிக்கையான சிங்களவரைத் தமிழ்ப்பிரதேசங்களில் குடியமர்த்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருப்பதாக அறிவித்தார். ஆனால் விடயங்கள் எதுவும் அதற்குத் துணை புரியவில்லை. ஏனெனில், குடியமர்த்த விரும்பிய அநேக குடியேற்ற வாசிகள் சிங்கள மீனவர்களும், விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகளுமாயிருந்தார்கள். இக்காலப் பகுதியில் தமிழ் ஆயுதப் போராளிகள் சிங்களக் குடியேற்ற வாசிகள் மீது முதல் தாக்குதல்களைத் தொடுத்திருந்தார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே தமிழர் - முஸ்லீம்கள் உறவு நல்ல நிலையில் இருந்தது. மட்டக்களப்பிலே தமிழர் கிளர்ச்சியை அடக்குகின்ற ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் தமிழருக்கும் முஸ்லீம்களுக்குமிடையே எவ்வாறு குரோதத்தைத் தூண்டிவிட்டதென பல மேற்கு நாட்டுப் பத்திரிகையாளர்கள் சான்றுகளோடு விபரித்தனர்.
கிழக்கிலே எவ்வாறு பிரச்சினைகள் சிக்கலானதாகவும் அராஜகமானதாகவும் மாறிவிட்டனவென்பதைச் பின்வரும் பகுதி சுருக்கமாக விபரிக்கின்றன. தமிழர்கள் தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். அநேக சிங்கள்வர்கள் கிழக்கை தமது தாயகமாகக் கருதிய் இப்பொழுது கருதத்தொடங்கிவிட்டனர். முஸ்லிம்கள் குழப்பத்திலும் தருமசங்கடமான நிலையிலும் இருந்தனர். அரசாங்கத்தின் செயல்கள், அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிங்கள மக்களை ஒரு இராணுவக் கூறாகக் பாவித்ததன் காரணமாக சிங்களப் பொதுமக்கள்மீது இயக்கங்கள் மேற்கொண்ட தாக்குதல்களைப் பற்றித் தமிழ்மக்கள் சிறிதும் கவலைப்படாமல் விடுவதை மேலும் நியாயப்படுத்தின. தீவிரவாதத் தமிழ்த் இளைஞர்கள் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த கசப்பான அனுபவம், பற்றி முன்னர் குறிப்பாக எடுத்துக் காட்டினேம். 1983ம் ஆண்டி'ல பார்த்தசாரதி இங்கு வருகைகள் தந்த காலம் முதல் கிழக்கு மாகாணம் அரசியற் தரத்தில் மாறிவிட்டது. y

57
1987 ஜுலை ஒப்பந்தத்தில் கிழக்கு பலவீனமான இணைப்பாயிருந்தது. வெளித் தோற்றத்தில், விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதற்காக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு சூத்திரத்தை ஏற்பாடு செய்யும் நோக்குடன் தமிழர்களதும் சிங்களவரதும் நிலைப்பாடுகளுக்கிடையே ஒரு இணக்கப்பாட்டைக் காணுவதே வடக்குக் கிழக்கு இணைப்பின் நோக்கமாகக் காணப்பட்டது. இந்தியத் தரப்பில் பேரம் பேசியோர் கிழக்கில் நிலவும் சிக்கல்களுக்கு அதிக கவனஞ் செலுத்தவில்லைப்போல் தெரிகிறது. சிலவேளை அதற்கு நல்ல காரணங்களிருக்கலாம். பல முன்னணித் தமிழர்கள் வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணசபைகளைக் கொண்டிருப்பதை விரும்பினர். கிழக்கிலே தமிழர்களும், சிங்களவர்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழவேண்டும் என்றும் அவர்கள் அத்தகைய சகவாழ்வு வாழ்வதற்காக அவர்களே மிகவும் பகுத்தறிவான ஒரு அடிப்படையைக் கண்டு கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் உணர்ந்தனர். கிழக்கு முஸ்லிம்கள் ஏனைய மாகாண முஸ்லிம்களிலிருந்து ஒரு தனி வழியில் செல்ல வேண்டுமென்ற விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளனர். தாம் வேறுபட்ட நலன்களையுடையவர்கள் என்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டனர். ஆகக்குறைந்தது, பொருளாதார சுய - நலக்காரணங்களுக்காக, கிழக்கில் வாழும் சிங்களவர்கள் மேலும் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம், ஆனால் வடக்கேயுள்ள தமிழர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கிலே வழிப்படுத்தும் நிலையிலிருந்தால், கிழக்கு மாகாணத் தமிழர்கள் முஸ்லிம்களுக்கெதிராக அவர்களுடன் இணைந்து செயற்படலாம். முஸ்லிம்கள் அதற்குப் பதிலாக, தமிழர்களுக்கெதிராக சிங்களவருடன் இணைந்து செயற்படலாம். இதன் விளைவாக ஏற்படுகின்ற நிலையற்ற நிலை, சிறிலங்கா அரசாங்கம் தலையிடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாமென்று சிறிலங்கா நிருவாகசேவை அதிகாரியான ஒரு தமிழர் சுட்டிக்காட்டினார்.
குடியேற்றம் போன்ற ஏனைய விடயங்கள் மேலும் பேச்சுவாத்தை நடத்தி முடிவெடுப்பதற்காக விடப்பட்டன. ஓராணிடு காலத்திலே இணைப்பு நிரந்தரமாக்கப்படவேண்டுமா இல்லையா என்று முடிவெடுப்பதற்காக கிழக்கிலே நடத்தப்பட வேண்டிய பொதுமக்கள் வாக்கெடுப்பும் உண்டு. எல்லாக்கட்சிகளும், தத்தம் சொந்த நலன்களின் அடிப்படையில் அவநம்பிக்கையாகச் செயற்பட்டால், அரசாங்கம் தனது நிருவாக இயந்திரத்தைக் கபடமாகப் பயன்படுத்தி கிழக்கிலே சிங்களக் குடியேற்றங்களை மேலும் ஏற்படுத்த முயற்சிப்பது மேலும், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவையும் கெடுக்க முயற்சிப்பது போன்றவற்றிற்கான சாத்தியப்பாடுகள் காணப்பட்டன. இந்த நிலையில் தமிழ் ஆயுதப் போராளிகள், சிங்களவர்கள் பெரும்ளவாக வெளியேறுவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் சாத்தியப்பாடு இருந்தது. குறிப்பிடத்தக்க அளவு இவை எல்லாமே பின்னர் நடைபெற்றுள்ளன. ஒப்பந்தம் அமுற்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய சமாதானப்படை வடக்குக் கிழக்கில் நிலைகொள்வதற்கான ஏற்பாடும் அவ்வொப்பந்தத்தில் செய்யப்பட்டுள்ளது. அத்தகைய படையின் தேவையும் அவசியமாயிருந்தன.
இரு முக்கிய காரணிகள் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஒரு பலவீனமான நிலையில் விட்டுள்ளன. முதலாவது, அது மனித உரிமை

Page 95
58
மீறல்களைத் தடுத்து நிறுத்தத்தக்க வழிமுறைகளை ஏற்பாடு செய்யவில்லை. அவ்வாறே அது ஜனநாயக இணக்கப்பாட்டின் முக்கியத்துவத்தையும் புறக்கணித்துள்ளது. காலப்போக்கில், இந்த ஒப்பந்தமானது, இலங்கைத் தீவின் மக்கள் மீது நேரடியாகத் திணிக்கப்படுமொன்றாக மென்மேலும் உணரப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வந்த மாதங்களில், தமிழ்ப்பிரதேசங்களில் இந்திய சமாதானப்படையும், தெற்கிலே சிறிலங்காப்படையும், இராணுவ வழிகள் மூலம் அரசியல் தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டன. அப்போது மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இருபடைகளினதும் இந்த முயற்சி அரசியல் தீர்வு காண முடியாத நிலைமையை மேலும் வலுப்படுத்தின. (பார்க்கவும் தொகுதி 2: பிரிவுகள் 8, 9, 10.4)
ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்திய இரண்டாவது காரணி முதலாவது காரணியுடன் தொடர்புடையது. அத்தகைய ஒரு முக்கியமான விடயம் பற்றி ஜனாதிபதி ஜெயவர்த்தன இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சட்டமுறையான அதிகாரம் பெற்றிருந்தாரா என்ற கேள்வியே அது. கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து வருகின்ற அடக்குமுறையையும் அதிகாரத்தை நிலைநிறுத்த அடிக்கடி செய்த அரசியல் யாப்பு மாற்றங்களையும், 1982ம் ஆண்டு பொதுமக்கள் வாக்கெடுப்பையும் நோக்கிய ஒருவருக்கு இதற்குப் பதில் அளிப்பதில் ஐயுறவே இருக்காது.
83 இலக்கற்ற நீண்ட பாதையின் முடிவு.
சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இறுதியாக அவர்கள் எங்கு போகிறதென்று புரியாத ஒரு நீண்ட பாதையின் முடிவில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளதாக உணர்ந்தனர். "ஒப்பரேஷன் லிபரேஷன் வெற்றியுடன், அவர்கள் சந்தேக மனநிலையிலிருந்து விடுபட்டு ஒரு புளகாங்கித மனநிலையைப் பெற்றனர். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி வந்த மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றதுடன் அது உச்சத்தை அடைந்தது. மூத்த அரசியல்வாதிகளால் விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி எழுத்தாளரின் புகழ்ச்சிகளும் அன்றைய நாட்களை ஆட்சி கொண்டிருந்தன. இந்தியா விமானத்திலிருந்து நிவாரணப் பொதிகளை போட்டதுடன் மக்களின் புத்துயிர்ச்சி பெற்ற சந்தோசம் மிகவெறுப்புக்கலந்த கடுங்கோபமாக மாறியது. ஆனால் அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் ஏதும் காட்டாத ஒரு நீண்ட காலப்பகுதியில் சந்தேகங்கள் மீண்டுந் தோன்றின. சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு அபாயகரமான அளவு, ஏனைய உலகத்திடமிருந்து அன்னியப்பட்டுள்ளதென்பதிலிருந்து அதன் யதார்த்தமற்ற அணுகுமுறையை, இலங்கைக்கு வெளியே வாழ்கின்ற சிங்களவர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்கு மாறாக எந்த வழிமுறையிலாவது, இதற்கிடையே தாம் சாதகமான எதையும் செய்யாது சர்வதேச அனுதாபத்தைப் பெறுவதே பாரிய விடயமெனத் தமிழர்கள் பொதுவாகக் கருதினர்.
1983 இனக்கலவரத்தின் நாலாண்டு நிறைவையொட்டி, 1987 ஜூலை 19ம் திகதி 'வீக் எண்ட் பத்திரிகையில் அக்கலவரத்தின் சில பிரதிபலிப்புக்களைக் கொடுக்கின்ற ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. இக்கட்டுரை குமுதினி

59
ஹெட்டியாராட்சி என்பவரால் "நான்காண்டின் பின்னரும் தொடர்ந்தும் அதே நிலையா?" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக அக்கட்டுரை 'வீக் எண்ட் பத்திரிகையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். அக்கட்டுரையின் சுருக்கத்தைக் கீழே மேற்கோள் காட்டுகிறோம். 'கடந்த நான்கு ஆண்டுகளாக நாம் செய்த பெரும்பாவங்களால் ஒரு பயனுமில்லை. இந்த ஆண்டு இழந்த மதிப்பை இனக்கலவரங்களுக்கு முன்னிருந்த நிலைக்கு மீட்டெடுக்க நாம் என்ன சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்? இலங்கையர்கள், பல்லின, பல்சமய சமுகங்களை உள்ளடக்கியசமாதானமாகவும் சகிப்புத்தன்மையுடனும் உடைய மக்கள் என முன்னர் கருதப்பட்டார்கள். இன நெருக்கடிகள் பற்றி, எமது நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசரீதியிலும் அண்மையில் ஏற்பட்ட அபிவிருத்திகள், எமது இழந்த மகத்துவத்தை மீண்டும் பெறுவதில் வெற்றி பெறுவோமா என்பதில் கடுமையான சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.
இன்று உலகம் சிறிலங்காவைப்பற்றி என்ன நினைக்கிறது? உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறுகின்ற அரசாங்கத்தின் பிரசார இயக்கம் வெற்றியளித்துள்ளதா? பல்வேறு இனங்களுக்கிடையிலான, குறிப்பாக தமிழர்களுடனான உறவுகள் இரக்கத்தின் மீதல்லாமல், தூய்மையான நீதியின் அடிப்படையையும் விழுமியங்களையும் இலட்சியமாகக் கொண்டே இந்நாட்டிலே பெரும்பான்மைச் சமுகம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதென்பதை உலகம் உணரச் செய்வதில் நாம் ஆற்றலுடையவர்களாய் இருந்தோமா?
அண்மையில் நான், பெரிய பிரித்தானியாவிலே பல பேரைச் சந்தித்து அவர்களுடன் எமது இனப்பிரச்சினை பற்றிக் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். அவர்கள் பல்வேறு தேசிய இனங்களின் பிரச்சினை பற்றி அவதானித்தவர்களாவர். நாம் இராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே ஊசலாடுகின்றோம் என்பதே அவர்களது பொதுவான கருத்தாகும். சிறிலங்கா இனப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளதாவென என்னிடம் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் வினவினார்கள்.
உண்மையிலே, அங்குள்ள சிலர் மத்தியிலே நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என எங்களைப்பற்றி நாம் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரு தவறான எண்ணக்கரு நிலவி வருகின்றது. விடாப்பிடித்தனமான மனப்பாங்கு காரணமாக இலங்கையில் இனப்பிணக்குகள் ஒருபோதும் தீர்க்கப்படமாட்டாது என்ற மனப் பதிவை சில அனுபவமிக்க மூத்த பத்திரிகையாளர்களும் உருவாக்கியிருந்தமை வருந்தத்தக்கதொன்றாகும். நூற்றுக்கு மேலானவர்களைக் கொன்று, பலநூற்றுக்கணக்கானவர்களைக் காயப்படுத்திய புற்க்கோட்டை (கொழும்பு) குண்டுவெடிப்பு வடக்குக் கிழக்கு மாகாணங்களிலேயும் அறந்தலாவையிலும் ஏனைய பிரதேசங்களிலும், மன்னிக்க முடியாதவாறு முப்பது பெளத்த குருமாரையும் கொன்றபோதும், மிருகத்தனமாக அப்பாவி சிங்களக் கிராமவாசிகளைப் படுகொலை செய்தபோதும் உலக மக்களை ஆரம்பத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியபோதும், உலகநாடுகள் அனைத்தும் 'சிறிலங்கா இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றையே காணவேண்டுமென விளக்கிக் கூறின.
இன்றைய நிலைமையில், ஒப்பரேஷன் லிபரேசன் பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென அவர்களால் கருதப்பட்டது. பிரச்சினைகளைத்

Page 96
60
தீர்ப்பதற்கு எல்லாரும் விரும்புகின்ற சமாதான முறைகளைக் கையாண்டு, நாடு இழந்துபோன சில கெளரவங்களை மீட்டுப் பெறுவதில் துணைபுரிவதற்குட் பதிலாக, சிறிலங்கா அரசு "அரசியல் தீர்வுக்கு உதட்டளவு சேவையே செய்கின்றதென்ற மனப்பதிவை உருவாக்கிவிட்டுள்ளது. உலக நாடுகள் மத்தியிலே, வன்முறைகள் இந்நாட்டை மேலும், தனித்தொதுக்கிய ஒரு அதலபாதாளத்தில் தள்ளி விட்டதாகத் தோன்றுகின்றது. இந்தியா, மிராஜ் போர் விமானங்களின் பாதுகாப்புடன், விமானங்களிலிருந்து நிவாரணப் பொதிகளைப் போட்டதன் மூலம் சிறிலங்காவின் வானெல்லையை அத்துமீறியபோதும் ஐக்கிய இராட்சியத்திலுள்ள அநேக பத்திரிகையாளரும், பிறரும் பொதுவாக எதிர்ப்புக்காட்டவில்லை. 'மனிதாபிமான வருகை' என்று கூறிக்கொண்டு சிறிலங்காவின் தனித்துவமான நாட்டெல்லை இந்தியாவால் மீறப்பட்டபொழுது, மேற்கு நாடுகளால் கணிடிக்கப்பட வேணர்டியதாயிருந்தும் அவை கணிடிக்கவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றத்தால் மாத்திரமே இது பட்டும்படாமலும் கண்டிக்கப்பட்டது. ஒக்ஸ்போட்டிலே எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், பிரித்தானிய தொலைக்காட்சியில் மூன்று கிழமைகளுக்கு முன்பார்த்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றித் தாம் உணர்ந்த பயங்கரத்தை வெளிப்படுத்தினர். அந்தக் குடும்பத்திலுள்ளோர் "எவ்வாறு சிங்களவர்கள் இத்துணை மிருகத்தனமானவர்களாய் இருக்கமுடியும்?" என்று என்னைக் கேட்டனர். அந்த வீட்டுக்காரர் வடக்கிலே குண்டு பொழிவுகள் நடப்பதாகக் பிடிவாதமாகக் கூறினார். கொடுமையான எரிகாயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன கூறுகிறீர்? என்று அவர் கேட்டார். "உங்கள் நாட்டிலே வியட்நாம் பாணி போர்த்தந்திரங்களைக் கையாளுமாறு உத்தரவிடுவதற்குப் பொறுப்பானவர் யார்?" என்று அவர், தாம் இரவுணவுக்காக அழைத்த பல நாட்டுப்பத்திரிகையாளர் அநேகள் மத்தியில் வைத்து என்னைக் கேள்வி கேட்டார். எமது உரையாடலை உற்றுக்கேட்டுக் கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளர் இலங்கைபற்றிச் சொல்கையில் "மற்றய எல்லாம் மனதிற்கு இனிமையாக இருக்கும்போது அங்கு மனிதன் மட்டுமே கெட்டவனாயிருக்கின்றான் என்ற மேற்கோளைச் சிரித்தவாறு கூறினார். பிரித்தானியாவில் எதேச்சாதிகாரக் கைது செய்தல்களுக்கும் அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் சிலர் காணாமல் போனதாகக் கூறப்படுவதற்கும் விளக்கம் கூறுவது கடினமாகும்.
ஆப்கானிஸ்தான், கிறெனடா, கம்பூச்சியாப் பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் காட்டிய எதிர்ப்புடன் நிக்கரகுவா நெருக்கடியைத் தவிர்த்து, எமது இனப்பிரச்சினையின் எதிர்ப்புகளுடன் ஒப்பிடுகையில், விரைவான தீர்வுக்கான முழுமையான அவசியம் பற்றிக் கடுமையாக மீள்சிந்தனை செய்யப்பட வேண்டுமென்ற தவிர்க்கமுடியாத முடிவுக்கே ஒருவர் வருவர். ஆனால், அமைதிக்கு, மிக முக்கியமானதும், அவசியமானதும் யாதெனில் நேர்மையும், நம்பிக்கையும் தான்."

16
அதீதியாயம் 9 ஒப்பந்தத்தின் பின்: இந்தியாவின் சாவகாசமான பொழுதுகள்
9.1 இந்திய சமாதானப் படையின் வருகை.
இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்திற்கு இலங்கைத் தமிழர்களிடமிருந்து வந்த பிரதிபலிப்பானது துன்பங்களிலிருந்து ஆறுதலும் மகிழ்ச்சி எக்களிப்புமாகும். அரசாங்கத்தின் அடக்குமுறை மிக உச்சமாயிருந்த மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், தமது மகிழ்ச்சி எக்களிப்பை மக்கள் வெளிப்படுத்தினர். ஒரு விதத்தில், மட்டக்களப்பிலே கொலை செய்வதற்கு உத்தரவுப்பத்திரம் பெற்றிருந்த விசேட அதிரடிப்படையானது சினமுற்று மெளனத்துடன் மக்களின் கொண்டாட்டங்களை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. முரண்பாடு வெடிக்கும் சூழ்நிலையை உணர்ந்துகொணிட சில சமூகத்தவர்கள் இந்தியத் தூதரகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்திய சமாதானப்படையை விரைவாக அங்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர், சில நாட்கள், யாழ்ப்பாணத்திலே இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த திருபூரியுடன் விடுதலைப்புலிகள் பேச்சு நடத்தினர். அதன் பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் அதிகார பூர்வமான ஏகப்பிரதிநிதிகள் என்று அங்கீகரிக்க இந்தியா ஏற்றுக்கொண்டதென அவர்கள் அறிக்கை விட்டனர். ஜூலை 24ம் திகதி, இந்திய விமானப் படைக் ஹெலிக் கொப்டர் மூலம் பிரபாகரனி யாழ்ப்பாணத்திலிருந்து புதுடெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவர் புதுடெல்லியிலே ராஜீவ் காந்தியைச் சந்தித்த பின்னர், இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த வேண்டியிருந்தது. இது வெளிப்படையாகவே மகிழ்ச்சியுடன் நிகழவில்லை. ஒப்பந்தம் பற்றிய இணக்கப்பாடு டெல்லிக்கும் கொழும்புக்குமிடையேதான் ஏற்பட்டதென்பது தெளிவு. கொழும்பிலுள்ள ஞாயிறுப் பத்திரிகைகளுக்கு இதுபற்றிய சில விபரங்கள் கிடைக்கப்பெற்று அவற்றை அவை ஜுலை 28ல் வெளியிட்டன. அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் கைச்சாத்திட்ப்படப் போகின்றதென்றும், புதுடெல்லியானது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சம்மதத்தை உறுதிப்படுத்துவதில் நம்பிக்கையுடன் இருக்கின்றனரென்றும் அச்செய்திகள் கூறின. சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுக்கு முக்கியமான சலுகைகளை, விசேடமாக இந்தியாவுக்கெதிரான சக்திகள் திருகோணமலைத் துறைமுகத்தைப் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்பது உட்பட வழங்கியது. சிறிலங்கா அரசாங்கம் தனது குறிக்கோள்களை அடைவதிலோ அல்லது சிங்கள மக்களுக்கு முன்னால் வைத்த பொய்யான வாக்குறுதிகளைத்தானும் நடைமுறையில் பெற்றுக்கிொள்வதில் தோல்விகணிடது. பாதுகாப்புச் செலவீனங்கள் மிகவும் குறைவதால், அபிவிருத்தித்திட்டங்களுக்கு நிதி ஏற்பாடு செய்தல், அரசாங்க ஊழியரின் சம்பளத்தை அதிகரித்தல், குருதி சிந்தலுக்கும்,

Page 97
162
போரின் விளைவாக ஏற்பட்ட நிலையற்ற தன்மைக்கும் முடிவைக் காணலாம் என்ற சாத்தியப்பாடுகள் ஆகியவையே ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற பிரதான இலாபங்களாகும். இது இன்றைய கட்டத்தில் ஒரு புத்திசாதுரியமான நிலைப்பாடு எனச் சிங்களமக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியிருந்தது. ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன் கொழும்பில் தொடங்கிய கலவரமானது இது ஒரு இலகுவான கரியமல்ல என்பதை வெளிப்படுத்தியது.
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதை அணிவகுப்பின் போது, சிங்களக் கடற்படை வீரன் ஒருவன் அவரைத் தனது துப்பாக்கிக் கைப்பிடியால் தாக்கியமை இக்கொண்டாட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்தியப் பிரதமர் கடுமையான காயமெதுவுமின்றித் தப்பிவிட்டார். அரசாங்கத்தின் பிரச்சாரத் திறமை, முற்றாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது எவ்வாறு ஒரு ரக்ஸி சாரதி ஜனாதிபதியை ஆத்திரங்கொண்டு திட்டினான் என்பதை கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருந்தார். ஒரு கிழமையின் பின்னர் அதே சாரதியின் போக்கு மாறிவிட்டது. "எங்கள் ஜனாதிபதி ஒரு புத்திசாலி, புலிகளை மடக்கும் பொறுப்பை அவர் சாதுரியமாக இந்தியாவிடம் விட்டுவிட்டார்” என்று அவன் கூறினான். மறுபுறத்தில், சிங்களத் தீவிரவாதக் குழுவான ஜே.வி.பி. ஒப்பந்தம் கைச்சாத்திட்டது முதல் அதன் பின்னணியில் மிகவும் பயங்கரமான சக்தியாக மாறிக் கொண்டிருந்தது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பொழுது தங்காலை நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜேவிபி ஆகஸ்ட் ம்ே திகதி நாடாளுமன்றத்துக்குள்ளே ஐ.தே.க. உறுப்பினர் மீது தாக்குதல், 1987 டிசெம்பர் 23ம் திகதி ஐ.தே.க. தலைவர் ஹர்ஷா அபயவர்த்தனா கொலையுட்பட அரசாங்கத்தின் முன்னணிப் பிரமுகர்களைத் தாக்கத்தொடங்கியது. அரசாங்கத்தின் இனவாதப் பிரசாரத்தால் ஊறின மண்ணிலே ஜே.வியி இலகுவாக முளைத்தெழுந்தது. இப்பொழுது, சிங்களப் பிரதேசத்திலிருந்து அவி வியக்கத்தை அழிப்பதற்கு முன்னர் தமிழர்களுக்கெதிராகப் பயன்படுத்திய அதே உளவியல் - இராணுவ வழிமுறைகளைக் கையாள வேண்டியதாயிற்று.
இப்பொழுது, விடுதலைப்புலிகள் இயக்கம் சோர்ந்து போயிருந்தது. புதுடெல்லியிலிருந்து, தமது தலைவர் பிரபாகரனிடமிருந்து எதுவித செய்தியும் கிடைக்கவில்லை. ஜுலை 30ம் திகதி முதல் சிறிலங்காப்படைகள் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளைச் செய்வதற்காகத் தெற்கு நோக்கி, விமானமூலம் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்தியப் படைகள் விமானமூலம் பலாலியில் வந்திறங்கின. புதுடெல்லி பிரபாகரனைத் திருப்பி அனுப்புவதை உறுதிப்படுத்துவதே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதற் செயற்பாடாக இருந்தது. இந்த நோக்கத்துக்காக அவர்கள் பலாலியிலிருந்து தொடங்கும் வீதிகளில் மக்களை அமரப் பண்ணி, அவற்றைத் தடை செய்தனர். வீதிகளில் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் கோபத்தைப் பார்க்கிலும் அதிகமாய் வினோத உணர்வுடன் இருந்ததைப் போல் தோன்றியது. இரண்டு நாட்களாக இந்திய இராணுவம் வெளியே புறப்பட்டு வந்து, வீதியில் அமர்ந்திருந்த கூட்டத்தின் முன்னால் நின்று, அவர்களுடன் மரியாதையாக உரையாடிவிட்டு, மீண்டும்

63 தளத்திற்குத் திரும்பிச் சென்றனர். 72 மணித்தியாலங்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் காலக்கெடு விதித்திருந்தது. தாம் தமது தலைவர் இல்லாமல் இதுபற்றி முடிவெடுக்க முடியாதென விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் கூறினர். பின்னர், இந்தியா, பிரபாகரன் ஆகஸ்ட் 2ம் திகதி விமானமூலம் கொண்டுவரப்பட்டு சுதுமலையில் இறக்கப்படுவார் என அறிவித்தது. அங்கிருந்தே அவர் இந்தியாவுக்கு முன்னர் ஹெலிக்கொப்டர் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டார். பிரபாகரனுக்கு பலாலியிலிருந்து, சுதுமலை வரை இந்திய இராணுவத்தினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் முதன்முதலாக, பிரபாகரன் சென்ற பாதைகளை உள்ளடக்கிய பகுதிகளில் ஊரடங்கை அமுற்படுத்தியது. வீடுகளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இந்திய இராணுவத்துக்குக் கையசைக்கக் கூடாதென கடுமையாக எச்சரிக்கப்பட்டாலும், அதனாலி பயனேது மேற்படவில்லை. ஆயுதங்கள் ஒப்படைப்பது பற்றிய தமது இயக்கத்தின் முடிவைப் பிரபாகரன் ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவிப்பார் என விடுதலைப்புலிகள் இயக்கம் அறிவித்தது. அந்தக் கூட்டம் ஆகஸ்ட் 4ம் திகதி சுதுமலையில் நிகழ்ந்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அதில் பங்கு பற்றினர். அவர்களுள் இந்திய இராணுவ அதிகாரிகள், தூதரகத்தைச் சேர்ந்தோர், வெளிநாட்டு, உள்நாட்டுப் பத்திரிகையாளர் முதலானோரும் அடங்குவர். பிரபாகரனது உரை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் ஆற்றப்பட்டது எனப் புகழப்பட்டது. தனது மக்களுக்காகப் போராடிய, நண்பனாகக் காட்டிக் கொண்ட இந்தியாவால் தவறாகப் பயன்படுத்திய ஒரு குலத்தலைவனுடைய பாத்திரத்தை அவர் நன்கு வெளிப்படுத்தினார். இப்பொழுது அவர் நிர்ப்பந்தத்துக்குத் தலை வணங்கினாலும் தனது சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பேணிக் கொண்டவராகக் காணப்பட்டார். அது ஒரு மனதை உருக்கும் பேச்சாக இருப்பினும் இன்னும் முரணர்பாடுகளைக் கொணடிருந்தன. விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை ஒப்படைத்து சமாதானத்தை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பிரதான ஆவலாகும். மக்களுக்குச் சமாதானம் என்பது அடிக்கடி கைக்கெட்டாத கனவாயிருந்தது. தங்களது ஆயுதங்கள் தமிழீழ மக்களையும் அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதெனப் பிரபாகரன் கூறியபோது அவரது உரை துயரத்தின் உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. இப்பொழுது, அவர் அதே ஆயுதங்களை நாம் கைவிட்டு, நிர்ப்பந்தம் காரணமாக அவற்றை ஒப்படைக்கத் தீர்மானித்து விட்டோம் என்று கூறினார். அவரது உரையில் மனம் ஒன்றித்திருந்த மக்கள் கூட்டம் அக்கட்டத்தில் வாய்விட்டு அழுதிருத்தல் வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அவர்கள் கைதட்டி வரவேற்றனர். அதனால் பிரபாகரனின் முகத்தில் தோன்றி மறைந்த கலவர உணர்வுகளைத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தெளிவாகக் காட்டியது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் மக்களுக்கும் இடையே நிலவிய தொடர்பு இடைவெளியின் தொடர்ச்சி, இந்த அம்சம். மே 1ம் திகதி நிகழ்வுகளை முன்னர் விபரித்தபோது சாடையாக எடுத்துக் கூறப்பட்டது.

Page 98
164 அதே கூட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலைப் பொறுப்பாளர் திரு.புலேந்திரன், திருகோணமலையின் தீர்க்கப்படா பிரச்சினைகளைக் காரணங்காட்டி, ஆயுதங்கள் ஒப்படைப்பது பற்றி தனது கவலையை வெளிப்படுத்தினார். தாம் ஆயுதங்களை ஒப்படைப்பதனால் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்தியாவிடம் விடுவதாகவும், இடைக்கால நிருவாகத்திலே தான் முதல் அமைச்சர் பதவியை ஏற்கப்போவதில்லையென்றும் பிரபாகரன் அறிவித்தார்.
விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்ற தீர்மானத்தை எடுத்ததும் இங்கு சமாதானம் நிலை நிற்குமெனப் பொதுவாகக் கருதப்பட்டது. எங்கும் ஒரு ஆறுதல் நிலை நிலவியது. இந்தக்காலப் பகுதியிலே முன்னால் முக்கிய இராணுவப் பொறுப்பு வகித்த திருகுகனின் சகோதரரான யோகி பிரசாரத் தலைவராக உயர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். அதைத் தொடர்ந்து, இந்திய சமாதானப்படையின் மேற்பார்வையின் கீழ் பலாலியில் வைத்து, திரு.யோகி சிறிலங்கா இராணுவத்திடம் ஒரளவு ஆயுதத்தைச் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைத்தார். அத்தகைய ஆயுத ஒப்படைப்பு விழாக்கள் வடக்கு கிழக்குப் பூராவும் நிகழ்ந்தன. எல்ரிபிஈ, ஈரோஸ், ஈபிஆர்எல்எவ், ஈ.என்.டி.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய இயக்கங்களால் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படுவதை சிங்கள மக்களின் நன்மைக்காக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.
ஈ.என்.டி.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய இயக்கங்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தன. ஈ.என்.டி.எல்.எவ் (ஈழம் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, மூன்று நட்சத்திரங்கள் (Three Star) எனப் பரவலாக அறியப்பட்ட அமைப்பு) புளொட்டிலிருந்து பரந்தன் ராஜன் தலைமையில் பிரிந்து சென்ற குழு பிரதானமாகவுள்ள ஓர் அமைப்பு. எல்லா ஆயுதப் போராளிக் குழுக்களும் இலங்கைக்குக் கொணிடு வரப்படுவார்கள், அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, ஜனநாயக அரசியலில் பங்குபற்றுவார்கள் என ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டது.
இப்பிரச்சினையில் ஈடுபாடு கொண்ட சக்திகளான சிறிலங்கா அரசாங்கம், இந்திய அரசாங்கம், ஆயுதப் போராளிக் குழுக்கள், தமிழ்மக்கள் ஆகியவை விட்ட தவறுகள், எவ்வாறு ஒரு வெடிக்கத்தக்க நிலையில் தம்மை இணைத்து வைத்திருந்தன என்பதும் அது பின்னர் 1987 அக்டோபரில் எரியவைக்கப்பட்டது என்பதுமே எஞ்சிய கதையாகும்.
ஒவ்வொரு பகுதியினரும் தம்மை நியாயப்படுத்த தமக்குச் சார்பான உண்மைகளை மாத்திரம் தெரிந்து எடுத்துக்கொண்டன. ஒவ்வொரு பகுதியினரும் தாம் ஓரளவு நீதியுடன் சரியாகச் செயற்பட்டபோது ஏனைய சக்திகள் தவறான வழியில் பயன்படுத்தி, காரியத்தை ஊனமுறச் செய்ததாகக் காட்டிக்கொண்டன. இரக்கம், சகிப்புத்தன்மை விட்டுக் கொடுத்தல் ஆகிய உணர்வுகளுக்கு அங்கு இடமில்லை. ஒப்பந்தத்தின் அடிப்படையில் 72 மணித்தியாலங்களுக்குள் போராளிக் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக இருந்தது. அக்காலக் கெடு முடிந்து ஒரு கிழமைக்குப் பின்னரும் ஆயுத ஒப்படைப்பு சிறிய சிறிய அளவுகளில் நடந்து கொண்டிருந்தது. ஜனாதிபதி ஜெயவர்த்தன தமது பங்குக்கு தடுத்து வைக்கப்பட்ட எல்லாச்

165
சிறைக்கைதிகளையும் விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்திருந்தார். தடுத்து வைக்கப்பட்டவர்களுள் சிறுதொகையினருக்கு எதிராகவே குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. ஆகஸ்ட் ம்ே திகதி யோகி முதலாவது ஆயுத ஒப்படைப்பைச் செய்தபோது, தளபதி சேபால ஆட்டியகல. ஜனாதிபதியின் மண்ணிப்பை வாசித்தார். இந்த நேரத்திலே அரசியல் சிறைக் கைதிகளை விடுவிக்கும் செயன்முறையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சிறுதொகையான ஆயுதங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளதென சிறிலங்கா அரசாங்கம் நம்பகமாக உணர்ந்தது. இந்த விடயத்தில் அரசாங்கம் அநேக அவதானிகளின் அபிப்பிராயங்களை கிரகித்துக்கொண்டது.
அக்டோபர் 8ம் திகதி ஜனாதிபதி, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கேசியந்த் உடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுத ஒப்படைப்பை ஆரம்பிப்பதற்கு முன்னரே தமது பேரம் பேசுதலுக்கு அப்பால் சென்று ஏன் கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுவித்தார் என ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. தமது பணியை முன்னதாகவே ஆரம்பிக்குமாறு இந்தியா தம்மைத் தூண்டியதாகவும் ஆயுதங்களைக் களையும் பணியை இந்தியா தானே பொறுப்பேற்றுள்ளதாக அவர் பதிலளித்தார். "இந்த ஒப்பந்தம் சமாதானத்துக்கானதேயன்றி போருக்கானதன்று" என்று, சுருக்கமாக தாம் செய்ததை நியாயப்படுத்தி தமது விவாதத்தை அழகாக, முன்மொழிந்தார். போர் தொடர்ந்து நடக்குமானால், இந்த ஒப்பந்தத்தைத் துணிகரமாகச் செய்ததில் பயனேதுமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் தாம் போற்றத்தக்க வகையில் துணிந்து செயற்பட்டார் என்பதை ஜனாதிபதி பேணிக் கொண்டார்.
மறுபுறத்தில், கிழக்கிலே இடம்பெயர்ந்த தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காமல், இடம் பெயர்ந்த சிங்களவர்களை மீளக் குடியமர்த்துவதற்காக அரசாங்கம் நேர்மையீனமாக அவசர அவசரமாகச் செயற்பட்டது. திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு குடியேற்றத்திட்டம் திருகோணமலை, ஹபறணை வீதியில் அமைக்கப்பட்டது. புத்தாணர்டின்போது சிங்களவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னர், வீதியின் இருபக்கமுமிருந்த காடுகளை அழித்த பிரதேசத்தில் அக்குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டது.
திருகோணமலைப் பிரசைகள்குழு இது பற்றி அமைச்சர் காமினி திசநாயக்காவிடம் வினவியபோது, பல்வேறு சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவே அக்குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டதெனக் கூறினார். அல்லை கந்தளாய் வீதியில் அமைக்கப்பட்ட குடியேற்றத்திட்டம் அதைப் பார்க்கிலும் தந்திரமானது. 1986 ஏப்ரலில் கந்தளாய் அணைக்கட்டு உடைக்கப்பட்டதனால், அதை அண்டி, ஏறக்குறைய முப்பதாண்டுகளாக நடைபெற்று வந்த விவசாயத்திட்டம் பெருமளவு அழிவுக்குள்ளானது. அங்கே தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் தலா 70 காணித்துண்டுகளும் சிங்களவருக்கு 260 காணித்துண்டுகளும் இருந்தன. திருகோணமலை அரசாங்க அதிபர் அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சரின் முன்னிலையில் பிரசைகள் குழுவுக்கு, 1986 ஏப்ரல் அழிவுக்குப் பின்னர், சிங்களக் குடியேற்ற வாசிகள் வேறோரிடத்தில் தம்மை குடியமர்த்தப்படுவதை ஒத்துக்கொண்டதாகவும் அதேவேளை தமிழரும், முஸ்லிம்களும் தமது பழைய காணித்துண்டுகளில்

Page 99
166
குடியேறுவதையே விரும்பினார்கள் என்றும் கூறினார். ஒவ்வொரு காணித் துணி டுகளுக்கு உரித்துடைய ஒவ்வொரு குடும்பமும் இயற்கையாகவே மூன்று குடும்பங்களாக மாறியதால் சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு அல்லை - கந்தளாய் வீதியில் ஏறக்குறை 600 காணித்துண்டுகள் கொடுக்கப்பட்டன என மேலும் விளக்கினார். இதிலே ஓர்வித ஏமாற்றுக்கான சான்று உண்டு. அதிலொரு விடயம் யாதெனில், ஒவ்வொரு குடும்பமும் அதன் உறுப்பினரின் இயற்கை அதிகரிப்புக்காக மேலதிக நிலங்களை உரிமை கோரலாமென்ற ஒரு பொதுவிதி இல்லை என்பதாகும். தமிழரும், சிங்களவரும், மீளக்குடியமருவதற்கு ஒத்துக்கொண்டால், தமது இயற்கை அதிகரிப்புக்காக மேலதிக நிலங்களை உரிமை கோரலாமென ஒருபோதும் தெளிவாக அவர்களுக்கு கூறப்படவில்லை. வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிருவகிப்பதற்கான இடைக்காலச்சபை ஏற்படுத்தப்படுவதற்கு முன்னர், குடியேற்ற விடயத்தில் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் தனது நிருவாக இயந்திரத்தைப் பயன்படுத்தத் தயாராயிருந்தது என்பதே உண்மையாகும். இது தமிழ் மக்கள் மத்தியில் ஒப்பந்தம் பற்றி ஐயப்பாட்டை உருவாக்கியது. அரசாங்கம் ஒப்பந்தத்தை அமுல்படுத்தவும், தமிழ் மக்களின் நம்பிக்கையை மீட்டுப் பெறவும் விரும்பினால், தமிழர்களது குறைபாடுகள் தீரும்வரை, பிரச்சினைக்குரிய பிரதேசங்களில் செயற்படாமல் விட்டிருத்தல் வேண்டும். பிரச்சினைக்குரிய இக்குடியேற்ற விஸ்தரிப்பு சிறிய மாற்றத்தையே உடனடியாக ஏற்படுத்தும். இதனால் அரசாங்கம் பெரிதாக பயனேதும் பெறப் போவதில்லை என்பதால் தனது மூர்க்கத்தனமான அணுகுமுறையைக் கைவிட்டிருக்கலாம்.
திட்டமிட்ட குடியேற்றம் தமிழர்களின் மனக்கிலேசத்திற்கான உணர்வுகளைத் தூணிடிவிட்டது. தமிழ் மக்களின் மனக்குறைபாடுகள் ஒப்பந்தத்திற்கு எதிராகவும் ஓரளவு நியாயபூர்வமாகவும் பின்வரும் சாராம்சத்துடன் வெளிப்படுத்தப்பட்டது. ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாணசபைகள் ஒரு கண்துடைப்பாகும். அரசாங்கம் குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் பழைய தீய விடயங்களையே செய்து வருகின்றது, இந்தியா அதைத் தடுக்க ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. 1981ம் ஆண்டின் தோல்வியுற்ற மாவட்ட சபைகளைப் போல மாகாணசபைகளும், சம்பிரதாயபூர்வ சடங்குகள், மட்டுமான கேலிக் கூத்தாக அமையும்."
சிங்கள இராணுவத்திடம் கசப்பான அனுபவங்களைப் பெற்று, அதற்குப் பதிலாக சிங்களவர் மத்தியில் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்திய திருபுலேந்திரன் போன்ற விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் குடியேற்றம் பற்றிக் கடுமையான எதிர்ப்புணர்வைக் கொண்டிருந்தனர். முழுவதும் நீதியற்றதெனக் கூறமுடியாத மேலதிக முறைப்பாடுகளும் இத்துடன் சேர்ந்து கொணர்டன. "எல்லாம் சரி, சிறிலங்கா அரசாங்கமும், இந்தியாவும் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை ஒப்படைப்பதை மெதுவாகச் செய்கின்றதெனக் குற்றஞ் சாட்டுகின்றன. ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குச் சற்று முன்னர், ஏனைய ஆயுதப் போராளிக் குழுக்களில் சிலவற்றை இந்திய அரசாங்கம் பயிற்சியளித்து ஆயுதங்களும் வழங்கியுள்ளது. அது விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான திட்டமாக இருக்க முடியாதா? அவர்கள் தமது ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டனர். விடுதலைப்புலிகள் இயக்கம் தனது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைக்க முடியுமா? அவர்கள் தம்மை எவ்வாறு பாதுகாக்க முடியும்? மேலும், அரசாங்கம் சிறைக்கைதிகளை விடுவிப்பதில் இழுத்தடிக்கின்றது" என

167 விடுதலைப் புலிகளின் ஆதாரவாளர்கள் கேட்க முடியும். சிறைக்கைதிகளை விடுதலை செய்வது, ஆயுத ஒப்படைப்புடன் இணைந்தே நடைபெற வேண்டுமென்ற அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் ஆலோசனைகள் பத்திரிகையில் வெளிவந்தன. சிறைக்கைதிகள் விடயமாகவும் குடியேற்றம் பற்றியும் அநேக தமிழர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினருடன் பொது உடன்பாடு கண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, பெரும்பான்மையான சிறைக்கைதிகள் அவர்களுக்கு எதிராக தார்மீகரீதியாகவும் சட்டரீதியாகவும் குறிப்பிட்ட எந்தவொரு குற்றச்சாட்டுமில்லாதவர்கள் என்பதைப் பேணிக் கொள்ள முடியும். எனவே அரசாங்கம் அவர்களை ஒரு நிமிடமேனும் சிறைப்படுத்தி வைக்க நியாயமில்லை. அதன் பின்னரும், ஆயுதங்களை ஒப்படைப்பதை ஈடுசெய்வதற்காக அவர்களைச் சிறையில் தடுத்து வைத்திருப்பது, சட்டத்தின் முன்னே சிங்களவரைப் போல் சமமான உரிமையுடைய தமிழர்கள்மீது சுமத்தப்படுகின்ற மன்னிக்க முடியாத அபத்தமெனலாம்.
மறுபுறத்தில், தமிழ் மக்களின் விடிவுக்காக நாங்களும் பங்களிப்புச் செய்துள்ளோம். நூற்றுக்கணக்கான எமது தோழர்கள் சிங்கள இராணுவத்துடன் போராடியபோது உயிர்த்தியாகம் செய்துள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கம் எமது தோழர்களைக் கொன்று, சித்திரவதைப்படுத்தி, அநேகரை இழிவுபடுத்தியது மட்டுமன்றி, எமது பங்களிப்பை தமிழர் வரலாற்றிலிருந்தும் துடைத்தெறியக் கங்கணம் கட்டி நிற்கின்றது என ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்கள் கூறலாம். -
"தமிழர்கள் எங்களின் பிரசன்னத்தால் முன்னரிலும் அதிக சுதந்திரமாக, அதிக நிம்மதியாக வாழவில்லையா? சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் விரைவாக விடுவிக்கப்பட்டார்கள். மக்கள் எங்களைப்பற்றி அவசர முடிவெடுப்பதற்காகத் துள்ளிக்கொண்டு நிற்கக் கூடாது. நாங்கள் சிங்களவரிடம் சென்று, மூட்டை கட்டிக்கொண்டு போய் விடுங்கள் என்று எளிதாக பொறுப்பில்லாமல் கூறிவிடமுடியாது. எமது அதிகாரிகள், குடியேற்றத்திட்டம் பற்றிக் கவனமாக ஆராய்வதற்காக சென்றுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்திலே ஒரு குடியேற்றத் திட்டத்துக்கான வேலைகளை நாம் இடைநிறுத்தம் செய்யவில்லையா? எல்லா ஆயுதப் போராட்டக் குழுக்களும் இலங்கைக்குத் திரும்பி வரவேண்டுமென்பது ஒப்பந்தத்தின் அவசியமான ஒரு பகுதியாகும். எல்லாத் தமிழரும் இங்கு வாழவும், ஜனநாயக அரசியலில் பங்கு பற்றவும் உரிமையுடையவர்கள் என்பது எமது நிலைப்பாடாகும். நாங்கள் எந்தவொரு ஆளுக்கோ கட்சிக்கோ கட்டுப்பாடெதுவும் விதிக்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம் அதை மெச்ச வேண்டும்" என இந்தியா கூறலாம்.
ஒவ்வொரு சாராரிடமும் பிரச்சினையும் முறைப்பாடுகளும் உண்டு. மற்றவர்கள் அவற்றைத் தீர்க்கத் தவறுவதால் அவை மேலும் இறுகுகின்ஜன. இந்தியாவிட்ட தவறுகளே மிக முக்கியத்துவமானது. ஏனெனில் இந்தியா அறிவிலும், பலத்திலும் அனுபவத்திலும் மிகவும் உயர்ந்த ஒரு நாடாகக் கருதப்படுகிறது. அதன் முதிர்ந்த சாமர்த்தியமே ஒப்பந்தத்தின் வெற்றிக்கு ஆதாரமாயிருந்தது.
ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்ப நாட்களைப்"பின்னோக்கிப் பார்த்தால், விடுதலைப்புலிகள் இயக்கம் அதற்கேயுரிய விந்தையான யுக்தியுடன் ஜனநாயக

Page 100
168
அரசியலில் ஈடுபடப்போவதாகத் தோன்றியது. இந்நோக்கத்துக்காக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஈழமுரசுப் பத்திரிகை தமிழர் விடுதலை ஐக்கிய முன்னணி மீது மிகவும் மரபுமுறையான தாக்குதலை ஆரம்பித்தது. த.வி.ஐ.மு. தேர்தல்களிலே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதான எதிரியாகக் கருதப்பட்டது. த.வி.ஐ.மு யை அம்பலப்படுத்தும் நோக்கத்தோடு 'ஈழமுரசு குத்துக்கரணங்கள் என்ற ஒரு பகுதியை ஆரம்பித்தது. எடுத்துக்காட்டாக, த.வி.ஐ.மு.வின் மூத்த அரசியல்வாதியான திருவிநவரத்தினம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு செல்வதைக் காட்டும் ஒரு புகைப்படத்தை அது பிரசுரித்தது. தமிழீழ இலட்சியத்துக்காக 81 விடுதலைப்புலிகள் தமது உயிரைத் தியாகஞ் செய்துள்ளார்கள் என்று கூறி அப்பத்திரிகை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மதவெறிரீதியான ஆவலை வளர்த்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தம்மில் 831 பேர் வீரமரணமடைந்ததாகக் கூறினார்கள். இந்தக் காலத்திலே 'ஈரோஸ் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவரான திருசங்கள் கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே ஐலண்ட்க்கு அளித்த பேட்டியில் தம்மில் 150 பேர் மரணமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, அவர்களுள் ஒருவரும் 'சையனைட் அருந்தவில்லையென்றும் கூறினார். மேலும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமது கழுத்தில் 'சையனைட் குப்பிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் அநேகர் பிடிபடும் சூழ்நிலை ஏற்பட்டபோது அதை அருந்தி மரணத்தைத் தழுவிக்கொண்டர்கள் எனவும் விளக்கினார். 'ஈழமுரசு சங்கர் அளித்த பேட்டி தொடர்பாக அவருக்கெதிராகச் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இவையெல்லாம் தேர்தல் கால அரசியலில் வீசும் நாற்றங்கள்தானி. அவற்றுக்கு மக்கள் பழக்கப்பட்டிருந்ததால், பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவரான மாத்தயா தனது பாத்திரத்திற்குப் புறம்பாக வெளிநாட்டு, கொழும்புப் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க ஆரம்பித்தார். சிங்களவர் யாழ்ப்பாணத்துக்கு வருவதை வரவேற்போம். அவர்களுக்கு எவ்வித இம்சையும் செய்யப்படமாட்டாதென 'வீக் எண்ட் பத்திரிகைக்குக் கூறினார். சிங்கள மக்களும் தமது இழந்த யாழ் பிரதேசத்தைக் காண சாரசாரையாக வந்தனர். இது எதிர்காலத்திற்கு நற்குறி காட்டியது.
எவ்வாறாயினும், இக்காலத்தில் நிரந்தரமற்ற அம்சங்கள் நிலவியதற்குச் சான்றுகள் இருந்தன. தமிழரின் விடுதலை இலட்சியத்துக்காக தங்களது உறுப்பினர் 631 பேர் மாத்திரமே வீரமரணமடைந்தார்கள் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் வலியுறுத்தி வந்தது. ஏனைய ஆயுதப் போராட்டக் குழு உறுப்பினரதும், பொது மக்களினதும் மரணங்கள் பயனற்ற பதர்கள் என இழிவுபடுத்தப்பட்டன. அத்தகைய பொறுத்துக்கொள்ள முடியாத அம்சங்கள் சினங்கொண்ட வன்முறைக்கு இட்டுச்சென்றன. இன்னொரு அம்சம் மன்னார், வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளில் இயங்கிவந்த புளொட், ஈ.என்.டி.எல்.எவ், ரெலோ ஆகியவற்றின் அநேக உறுப்பினர்கள் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பழிக்குப்பழி வாங்குகின்ற வேட்கையினால் பலமாகத் தூண்டப்பட்டார்கள். அத்தகையவர்களுள், பிரபலமானவர்கள் புளொட் இயக்க உறுப்பினரான சங்கிலி (கந்தசாமி)யும், ஈ.என்.டி.எல்.எப் ராஜனும் ஆவார்கள்.

69
இந்தியா அத்தகைய நிலையற்ற ஒரு ஏற்பாட்டைச் செய்ததையிட்டு அநேகர் அதிருப்தியடைந்தார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில் சமாதான ஒப்பந்தம் எல்லா ஆயுதப் போராளிக் குழுக்களுக்குமானதொன்று. கொலை செய்வதை ஓர் இயக்கத்தின் உரைகல்லாக எடுத்தோமானால் விடுதலைப்புலிகள் இயக்கம் உட்பட எல்லா ஆயுதப் போராட்டக் குழுக்களும் அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட வேண்டும். இது சாத்தியமானதன்று, என்றும் மக்கள் விரும்பியதும் இதுவன்று என இந்தியா மறுபுறம் வாதிடலாம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இன்னொரு அரசியல் வேலை ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் அம்பலமாயிற்று. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான ஆனால் சிறு தொகையினருக்கே தெரிந்த விவகாரம் என்னவெனில், பல்கலைக்கழக மாணவன் ரஜாகரன் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டமையாகும். அந்த மாணவன் பொது நல விடயங்களில் தீவிரமாகச் ச்ெயற்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் 1986 நவம்பரில் காணாமற் போன மாணவன் விஜிதரனின் விவகாரத்தில், நடவடிக்கைக்குழு உறுப்பினனாகப் பங்குபற்றினான். ரஜாகரன் சிறுமார்க்ஸியக் குழுவான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணியுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் அவர்மீது சந்தேகப்பட்டமையே அவரைக் கடத்திச் சென்றமைக்கு உண்மையான காரணமெனப் பின்னர் அம்பலமானது. பொறியியலாளரான திரு.விஸ்வானந்த தேவனே அம்மார்க்ஸியக் குழுவின் தலைவர் ஆவார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவர் அவர் கடந்த இரண்டாண்டுகளாக காணாமற் போய்விட்டார். கடல் மூலம் இந்தியாவிற்கு சென்றபோது இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது. தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (NLFT) மின் ஏனைய உறுப்பினரைத் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் பணமும் ஆயுதங்களும் பற்றி ஏதும் அறியமுடியவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கம், இந்த விடயத்தில் ரஜாகரன் தமக்கு உதவலாமென நம்பினர். ரஜாகரனைக் கடத்திச் சென்ற போது, நெல்லியடியில் விஸ்வானந்ததேவனின் 70 வயதான தந்தையும் கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டார். அவரது வீட்டுக்காணி நிலமும் தோண்டப்பட்டது. விடுதலைப்புலிகள் ரஜாகரன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை மறுதலித்தனர். இதனால் மிகமோசமான முடிவு ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்பட்டது. அதி உற்சாகமும், திறமையும் வாய்ந்த ரஜாகரன் யூலை ஆரம்பத்திலே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிறைவைப்பிலிருந்து தப்பிவிட்டார். 1987 ஜூலை 17ம் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு அவர் அனுப்பிய கடிதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசி, தனக்கு எதுவித இம்சையும் அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் பின்னர் அந்த விடயம் பற்றி விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேசும் பணி மாணவர்களிடமே விடப்பட்டது. ஏனையோர் வேண்டாத பயத்தினால் பின்வாங்கியபோது, மாணவர்கள் மீண்டும் துணிகரமாகச் செயற்பட்டார்கள். மாணவர்கள் விடுதலைப்புலிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை சிநேக பூர்வமாக நடந்தது. மாணவர்கள் பிழையான வழியில் கையாளப்பட்டுள்ளார்கள்

Page 101
170
என்று ஏற்றுக்கொண்ட மாத்தயா, ரஜாகரனுக்கு எவ்வித இம்சையும் செய்யப்படமாட்டாதென உறுதியளித்தார். அத்தகைய வாக்குறுதி பகிரங்கமாகச் செய்யப்பட வேண்டுமென இராஜ தந்திரரீதியாக மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். மாத்தயா அதை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் ஒருநாள் மாத்தயா கைலாசபதி கலையரங்கில் நடந்த கூட்டத்தில், சமூகமளித்து அந்த உறுதிமொழியை அளித்தார். மாத்தயா தனது கூற்றிலே ரஜாகரன் "கிரிமினல்" இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தாரா என விசாரணை செய்யப்பட்டாரெனக் கூறினார். கிரிமினல்கள் வேலைகளில் அசகாய சூரர்களான விடுதலைப்புலிகள் ஏனைய இயக்கங்களை கிரிமினல் இயக்கங்களென முத்திரை குத்துவது வேடிக்கையானது. ரஜாகரன் கைலாசபதி கலையரங்கிலே பிரசன்னமாயிருந்து வேண்டுகோளின்பேரில் மேடையில் தோன்றியமை எதிர்பாராத நிகழ்வாயிருந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கம் அங்கிருந்து வெளிநடப்புச் செய்தது. ரஜாகரன் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனக்குச் செய்த சித்திரவதைகள் உட்படத் தனது அனுபவங்களை விபரமாக எடுத்துக் கூறினார். அவர் வெளியிட்ட முக்கியமான தகவல்களில் ஒன்று, மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவையைச் சேர்ந்த த.வி.ஐ.முவின் முக்கிய பிரமுகரான திரு.கைலாசபிள்ளை தெல்லிப்பளையில் ஒரு முகாமில் தன்னுடன் சிறைவைக்கப்பட்டிருந்தமையாகும். சில நாட்களுக்கு முன்னர் 'ஈழமுரசு பத்திரிகை தனது முக்கிய செய்தியில் திரு.கைலாசபிள்ளை பற்றிக் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தது. ஒரு பேட்டியில் அவர், த.வி.ஐ.மு. இனியும் தேவையில்லையெனக் கூறி, ஆயுதப் போராட்ட இளைஞர்களைப் புகழ்ந்திருந்தார். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில், தவிஐமுயின் தலைவரான அ.அமிர்தலிங்கத்திற்கு மிகவும் நெருக்கமானவரான ஒரு சட்டத்தரணி இதே கருத்தையே வெளியிட்டிருந்தார். இலங்கையில் தேர்தல் அரசியலில் இத்தகைய வழிமுறைகளை அன்னியமானதெனக் கூறமுடியாது. அளவில் தான் வித்தியாசம். முன்பு லஞ்சம் இருந்தது. அந்த இடத்தில் இப்போது அச்சம் உட்கார்ந்திருக்கிறது.
இந்திய சமாதானப்படை எல்லா ஆயுதப் போராட்டக்குழுக்களும் பாதுகாப்புக்கு உரித்துடையவர்களென உறுதியளித்தது. மன்னாரில் விடுதலைப்புலிகள் இயக்கம், இந்திய சமாதானப்படையின் பாதுகாப்பை நாடியது. ஈ.என்.டி.எல்.எவ். ராஜனின் தலைமையின்கீழ் யாழ்ப்பாணத்திலே இந்திய சமாதானப்படையின் பாதுகாப்புடன் தலைகாட்டியது. அது பல்கலைக் கழகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றியது. கடற்கரைவீதியில் அது தனக்கு ஒரு அலுவலகத்தை அமைக்க முயற்சித்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தூண்டப்பட்ட ஒரு கூட்டம், அலுவலகம் திறக்கப்படவிருந்த வீட்டுக்கு முன்னால் அமர்ந்து கோசங்களைக் கத்தியதுடன், கற்களையும் வீசினர். ஒட்டி நின்று பார்க்கச் சென்ற ஒரு ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர் சனங்களால் பலமாகத் தாக்கப்பட்டார். அவரது தோழர்களில் ஒருவர், அங்கு நின்ற இந்திய சமாதானப் படையிடம் வேண்டுகோள் விடுத்து அவர்கள் அதற்கு உடனடியாக செயற்படாததினால், அவர்களில் ஒருவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து, தாமே ஆகாயத்தை

7
நோக்கி வெடி வைத்தார். அங்கு திரண்டிருந்த கூட்டம் கலைந்து சென்றது. பெரும்பாலும் சுதந்திரமற்ற யாழ்ப்பாணப் பத்திரிகைகள் அது ஈ.என்.டி.எல்.எவ்ஐ விரும்பாத மக்களின் செயலென எழுதின. மன்னார் மாவட்டத்தில் இயக்கங்களுக்கிடையிலான மோதலில் மூன்று விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் கொல்லப்பட்டதாக முதல் அறிக்கை கூறியது. இன்னொரு நிகழ்ச்சியில், இந்தக் கொலைகளுக்குப் பழிவாங்கச் சென்ற ஆயுதந்தரித்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்களெனக் கூறப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலே கவலைப்படக் கூடிய நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில், ஆயுதப் போராட்டக் குழுக்களிடையே கொலைகளும், அதற்கு பதில் கொலைகளும் தொடங்கி விட்டன. ஆகஸ்ட் 31ம் திகதி கொழும்புக்கான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் நல்லவை நடக்கப் போகின்றதென்ற உணர்வு யாழ்ப்பாணத்தில் நிலவியது. யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தினசரிப் தமிழ்ப்பத்திரிகையான "உதயன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட யாழ்ப்பாணம் - மட்டக்கள்ப்பு புகையிரதப்பாதையை இந்திய அமைதிகாக்கும் படை திருத்தியமைப்பதாக அறிக்கை வெளியிட்டது. கிழக்குக் கடற்கரையோரம் உட்பட, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய தமிழ்ப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டாலும், அவற்றினூடாகப் பயணஞ் செய்வது முன்பு சிரமமாயிருந்தது, இப்போது ஆபத்தானதாயிருந்தது. இதுவும் ஒரளவு மகிழ்ச்சிக்குரியதுதான். புகையிரத சேவை 18 மாதங்கள் நடைபெறாதிருந்த பின்னர், ஆகஸ்ட் 30ம் திகதி மாலை ஒரு புகையிரதம் பழுதுபார்க்கும் குழு யாழ்ப்பாணம் வந்தது. அது கச்சேரியடியிற் காணாமற் போன சிலிப்பர்க்கட்ன்டகளைப் போடுவதற்காகத் தரித்து நின்றது. மாட்சிமை தங்கிய மாமன்னரை வரவேற்பதுபோல அப்புகையிரதத்தை வரவேற்பதற்காக மகிழ்ச்சியடைந்த ஒரு கூட்டம் அங்கே கூடியது. சிலிப்பர்க் கட்டைகள் போடும் வேலை துரிதமாக நடந்து முடிந்தது. நிரந்தரப் புகையிரதப் பாதைகளின் பீட்சகள் தனது கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, மகாராணியின் சுத்த ஆங்கிலத்தில் இல்லை என்றாலும் அவர்களுக்கேயுரிய பாணி ஆங்கிலத்தில் "தாமதமாகிறது, நாம் போவோம்” என்று கூறி, வேலையாட்களைப் புகையிரதத்துள் ஏறுமாறு சைகை காட்டினார். அறுநூறு யார் தொலைவிலுள்ள யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்துக்கு இலவசமாகப் பயணஞ் செய்யும் மகிழ்ச்சியில் அங்கு நின்ற சிறுவர்கள், புகையிரதம் நகரத் தொடங்கியதும் தொற்றி ஏறிக்கொண்டார்கள்.
பின்னர், யாழ்ப்பாணத்தில் விடயங்கள் நகர ஆரம்பமாயின. செப்ரெம்பர் முதலாந்திகதி, கொக்குவிலில், குழப்பிட்டிச் சந்தியில் காவலுக்கு நின்ற விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர், ஒரு வானில் வந்தவர்களால் தூக்கிச் செல்லப்பட்டு, தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். தேவனின் திருச்சபை என்ற கிறிஸ்தவ மதப்பிரிவைச் சேர்ந்த நான்கு போதகர்கள் ஒரு வானில் பயணஞ் செய்து கொண்டிருந்தபோது உடுவில் சந்தியில் வைத்துச் கட்டுக்கொல்லப்பட்டார்கள். அவர்களுள் இருவர் தெற்கிலிருந்து வந்த சிங்களப் போதகர்களாவர். இந்தக் கொலைகளுக்கான நோக்கம் தெளிவில்லை. ஆனால்

Page 102
172
தவறுதலாக நடந்ததாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் இரவு 10 மணி அளவில் நடந்தது. அந்த வான் இன்னொரு போதகரை ஏற்றுவதற்காக கோவில் ஒழுங்கைக்குள் போகவிருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தம்மீதே அவர்கள் குறி வைத்துக் காத்திருந்தனர் என்றும் புலிகள் என்று நினைத்துக்கொண்டுதான் போதகர்களைக் கொன்றுள்ளனர் என்று கூறியது. அவ்வாறே ஈ.என்.டி.எல்.எவ்வும் கூறியது. இச்சூட்டுச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர், துப்பாக்கி ஏந்திய முகமூடி மனிதர்கள் வோக்கி ரோக்கியுடன் அப்பிரதேசத்தில் தேவனின் திருச்சபையைச் சேர்ந்த இருவரைத் தடுத்து வைத்திருந்ததாகத் தெரியவருகிறது. அப்பகுதியில் வந்து கொண்டிருக்கும் வெள்ளை வானுக்குச் சுடும்படி முகமூடிக்காரர்கள் உத்தரவு பிறப்பித்ததை அவர்கள் கேட்டனர். தங்களது போதகரே அவ்வானில் வந்து கொண்டிருப்பதாக அவ்விருவரும் அவர்களுக்கு எவ்வளவோ எடுத்துக்கூற முயற்சித்தும் அது பயனளிக்கவில்லை.
அடுத்தநாள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஒலிபரப்பி பூட்டிய கார் சுன்னாகப் பிரதேசத்தில் "இந்தக் கொலைஞர் குழுக்கள் எமது உறுப்பினர்களைக் கொல்வது மட்டுமன்றி இப்பொழுது, கிறிஸ்தவப் பாதிரிமார்களையும் கொல்லத் தொடங்கிவிட்டது என ஒலிபரப்பியது. செப்ரம்பர் 3ம் திகதி, மூதூர் உதவி அரசாங்க அதிபரான திரு.ஹபீப் மொகமட் காலையில் பள்ளிவாசலிலிருந்து வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து கொட்டியாரக் குடாவுக்குத் தெற்கே மூதூர் அமைந்துள்ளது. இந்தக் கொலையினால் கோபமுற்று ஊர்வலஞ் சென்ற முஸ்லிம்கள் மூதூர் நகரில் இருந்த விடுதலைப்புலிகளின் அலுவலகத்தை நொறுக்கினர். அந்தக் கொலைக்குத் தாம் பொறுப்பில்லையென விடுதலைப்புலிகள் இயக்கம் மறுத்தது. இக்கொலையின் விளைவாக கிழக்கிலே முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் சந்தேகங்கள் தலைதூக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்காக ஹர்த்தால்களை ஒழுங்குபடுத்துவது வழமையானது. முதலில் இதை த.வி.ஐ.மு. செய்தது. பின்னர் ஒவ்வொரு ஆயுதப் போராட்டக் குழுக்களும் தனித்தனியாக ஹர்த்தால்களை நடத்தின. விடுதலைப் புலிகள் இயக்கம் ஹர்த்தால்களுக்குத் தாம் எதிரானவர்கள் என்று கூறியபோதும், அதுவும் ஹர்த்தால்களை நடத்தியது. இதில் வேறுபாடு என்னவென்றால், "மக்களே” அவற்றை ஒழுங்குபடுத்தினார்கள் எனக் கூறப்பட்டதாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் வேலைக்குச் சென்றவர்களை மிகவும் பிந்தியே வீடு செல்ல அனுமதித்தது. முன்னர் அரசாங்கத்திற்கு எதிர்ப்புக் காட்ட ஹர்த்தால்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. மிக அண்மையில், போராட்டத்தில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் ஹர்த்தால்களை நடத்தினர். த.வி.ஐ.மு. காலத்திலிருந்து ஹர்த்தாலின் வெற்றிக்கு ஓர்வித மறைமுக பலவந்தம் தேவைப்பட்டது. இக்காரணத்தால், ஹர்த்தாலை நடத்துபவர்கள், தமக்கு மக்களின் பூரண ஆதரவு கிடைத்துள்ளதாக தம்மைத்தாமே ஏமாற்றிக் கொண்டனர். எல்லாக் கடைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டு,

173
போக்குவரத்து, மற்றும் நோயாளர்களைக்கொண்டு செல்வதைத் தானும் தடை செய்யுமளவு நிறுத்தப்பட்டால், ஹர்த்தாலை ஒழுங்கு செய்தவர்கள் தமக்கு நூறுவீத வெற்றியென மார்தட்டிக் கொள்வார்கள். அவர்கள் இவ்வாறு
றும் விதமே, ஹர்த்தாலை ஒழுங்குபடுத்தியவர்கள் தங்களுக்கு மக்கள் மத்தியில் பூரண ஆதரவு இருக்கிறது என்று அவர்கள் கூறிக்கொள்ளும் பொய்மையைக் காட்டிக் கொடுத்து விடும்.
செப்டம்பர் 9ம் திகதி திரு.ஹபீப் மொகமட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கல்முனை முஸ்லிம்கள் ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்தனர். அந்த ஊர்வலம் அமைதியாக நடந்தது. அதே காரணத்துக்காக, விடுதலைப்புலிகள் இயக்கம் தாமும் அடுத்தநாள் ஹர்த்தால் நடத்துவதாக அறிவித்தனர்.
காலையில் காடையர்கள் கல்முனையிலே முஸ்லிம் கடைகளைச் சூறையிட்ட பின்னர் அவற்றுக்குத் தீவைத்துக் கொளுத்தினர். அங்குள்ள முஸ்லிம் வாசிகள் துப்பாக்கியுடன் அங்கு சூறையிட்ட மனிதர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். கல்முனையிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் தங்களுக்கு உதவ வருமாறு அக்கரைப்பற்றிலிருந்த இந்திய சமாதானப் படையினரிடம் தொலைபேசி மூலம் கேட்டனர். அக்கறைப்பற்று முஸ்லிம்கள் நிர்ப்பந்தம் செய்ததின் பின்னாலேயே , இந்திய சமாதானப்படை தாமதித்து பிற்பகல் 2 மணியளவில் அங்கு வந்தனரென கல்முனையைச் சேர்ந்த முஸ்லிம் கல்விமான் ஒருவர் கூறினார். விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவரென முஸ்லிம்களால் கருதப்பட்ட வேல்முருகு மாஸ்டருடன் இந்திய சமாதானப்படை அங்கு வந்தது. பின்னர் இந்திய சமாதானப்படையானது, முஸ்லிம்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக போக்குவரத்தைத் தடைசெய்து, போடப்பட்ட வீதித்தடையை அகற்றுவதில் ஈடுபட்டது. தவறான வழிநடத்தலினாலேயே இந்திய சமாதானப்படை அந்த வீதித்தடைகளை அகற்றியதென அதை அவதானித்த ஒரு பாடசாலைத் தமிழ் ஆசிரியர் கூறினார். ஏனெனில் ஓர் ஆயுதப் போராட்டக் குழு தடையைப் போட விரும்பினால் அவர்களிடமிருந்து ஒரு சைகை வந்தாலே போக்குவரத்து உடனே நின்றுவிடும். எல்லாரும் துப்பாக்கிக்குப் பயப்பட்டனர். இந்திய சமாதானப்படை இவ்விடயங்களில் ஒருபோதும் தலையிடவில்லை. ஆனால் முஸ்லிம்கள் துப்பாக்கிபற்றி எதுவு. அறிந்திருக்கவில்லை. வீதித்தடைகள் முஸ்லிம்கள் தமது ஹர்த்தா.ை நடத்துவதற்கும் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குமான ஒரேவழியாக இருந்த பாதுகாப்புக்கோரி முஸ்லிம்கள் விட்ட அழைப்புக்கு இந்திய சமாதானப்ப ை மனமின்றித் தாமதித்து வந்தமைக்கு மேலால், அவர்கள் முஸ்லிம்கள் போட வீதித்தடைகளை அகற்றியமை, பாரபட்சமானதாகத் தோன்றியது. பெருமபாலைவு இந்துக்களைக் கொணிட அமைப்பான இந்திய சமாதானப்ப அமைதிகாக்கும் பணியைச் செய்ய வந்தவர்களாயிருப்பதால், முஸ்லிம்களை பொறுத்தவரையில் அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்திா வேண்டும். கொழும்புப் பத்திரிகையான 'சண்டே ரைம்ஸ்ஸில் குல் இஸ்மாயில் என்பவர் கல்முனைச் சம்பவம் பற்றி இன்னொரு கோ. ) எழுதியபோது எந்தவொரு ஆயுதப் போராட்டக் குழுவாயிருந்தாலும் உயர்மட்ட அரசியல் என்ற அடிப்படையில் தமிழ் ஆயுதபாணிகள்மீது குற்றம்

Page 103
74
சுமத்துவதற்கில்லை எனச் சுட்டிக்காட்டினார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் குடியேற்றமாக இருந்த அவ்விடத்திலிருந்து முஸ்லிம்கள் அவர்களை விரட்டியடித்து விட்டு அங்கு கல்முனைப் பள்ளிவாசலைக் கட்டினார்கள் என்றும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் இன்றைய தலைமுறை தனது பழையகணக்கை தீர்க்க காத்திருந்தது என்றும் இதன் இறுதி விளைவு, முஸ்லிம் மக்கள் மத்தியில் பதற்ற நிலையை அதிகரிக்கச் செய்ததுடன், ஒப்பந்தம் பற்றி நம்பிக்கைமீனத்தையும் ஏற்படுத்தியது என்றும் எழுதியிருக்கிறார்.
செப்டம்பர் 13ம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களின் உறுப்பினர்கள்மீது திடீர்த் தாக்குதலை செய்தது. தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டு நிராயுதபாணிகளாக இருந்த அநேகள் இத்தாக்குதலுக்கு இரையானார்கள். பத்திரிகை அறிக்கையின்படி ஏறக்குறைய 70 பேர் கொல்லப்பட்டார்கள். ஏனையோர் பலர், முன்னர் கண்டு பீதியுற்ற விசேட அதிரடிப்படையிடம் தஞ்சம் புகுந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் அத்தாக்குதலைப் பகிரங்கமாக மறுத்தது. விடுதலைப்புலிகள் இயக்கமானது வடக்குக் கிழக்கிலுள்ள ஒவ்வொருவருக்கும் பெரும், ஆபத்தான விளைவுகளைக் கருக்கொண்ட ஒரு புதிய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் செய்த இந்த அக்கிரமம், சர்வதேச தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒளிபரப்பப்பட்ட ஒரு பகிரங்க இரகசியமாகும். இவ்விடயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழிப்பதற்காக ஏனைய இயக்கங்களைப் பயன்படுத்தும் திட்டங்களை வைத்திருந்ததெனவும் அதேபொழுது, விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரையில், இப்பொழுது செய்துமுடி அல்லது பின்னர் அழிந்து விடு என்ற பிரச்சினையாக இருந்தது எனவும் கூறினர். யார் தம்மைத் தாக்குவார்கள் என்றறியாத நிராயுத பாணிகளான போராளிகளைக் கொன்று குவிப்பதை இது எந்தவகையிலும் நியாயப்படுத்த மாட்டாது. ஏனைய ஆயுதப் போராட்டக் குழுக்களுடன் நாம் பெற்ற அனுபவத்துக்கிணங்க அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது நிச்சயமாகச் சினமுற்றிருந்தார்கள்.
தமிழின மக்கள் மத்தியில் தமது மதிப்பை மீண்டும் நிலை நிறுத்தவும், மக்கள் தமக்கு கெளரவமான இடந்தர வேண்டுமெனவும் ஏனைய இயக்கப் போராளிகள் விரும்பினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் இந்தியாவின் வேடதாரிக் கைக் கருவிகள் என்று கூறுவது, நீதியற்றதும் மிகைப்பட்ட கூற்றுமாகும். விடுதலைப்புலிகள் இயக்கம் கெளரவமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால் ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையானோர், அவர்களுடன் மீள உறவு கொள்வதை விரும்பியிருப்பர்.
ஏனைய இயக்கங்கள், இந்தியாவினி கையில் சிக்கியமைக்கு, விடுதலைப்புலிகள் இயக்கம் எடுத்த நிலைப்பாடும், அதன் பின்னணியில் அவர்களைத் தமிழ்ச் சமுகம் தொடர்ந்து நிராகரித்தமையுமே காரணமென்பது பேருணிமையாகும். இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று தங்கியிருந்தனவாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கம் அரசியல் ரீதியாக விடயங்கள் அபிவிருத்தி அடைந்து செல்லும் போக்கை கண்டு அதிருப்தி அடைந்திருந்தது. எட்டு பேரைக் கொண்ட் இடைக்கால நிருவாகசபையில் விடுதலைப்புலிகள்

175
இயக்கத்துக்கு மூன்று தானங்களே அளிக்கப்பட்டது. தவிஐமுவிற்கு இரண்டு தானங்களும், இன்னொரு ஆயுதப் போராட்டக் குழுவுக்கு ஒரு தானமும், அரசாங்கத்தின் சார்பில் இரண்டு தானங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படும்வரை இந்த இடைக்கால நிருவாகசபை வடக்கு கிழக்கு மாகாணசபையை நிருவகிக்கும். அந்தத் தேர்தல் ஆறு மாதம் முதல் ஓராண்டுக்குள் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்டது. இடைக்கால நிருவாகசபை நிருவகிக்கப் போகின்றதா அல்லது அறிவுரை கூறப்போகின்றதா தேர்தல் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தொகுதிவாரியாக நடக்கப் போகின்றதா அல்லது விகிதாசாராப் பிரநிதித்துவ அடிப்படையில் நடக்கப் போகினிறதா என்ற வினாக்களுக்குத் தெளிவான பதில் கிடைக்கவில்லை. இந்திய, சிறிலங்கா அரசாங்கங்கள் அளிப்பதற்கு மேலாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் அக்கட்டத்தில் விவேகமானதெனக் கருதியதுக்கு மேலாகவும் விடுதலைப்புலிகள் இயக்கம் வெளிப்படையாகவே அதிக அபிலாசைகளை கொண்டிருந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினி கடந்த காலப் போக்குகளினி சான்றாதாரங்களின்படி, அது வடக்குக் கிழக்கைத் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதையே குறிவைத்திருந்தது. தலைப்புச் செய்திகளாக வெளிவரக்கூடிய, பிரமிக்கத்தக்க திருப்பங்களைச் செய்வதிலும், அவர்களோடு தொடர்பு கொள்கின்ற எவரையும் திகைக்க வைக்கின்ற - திருத்தவே முடியாத நடத்தைகளில் ஈடுபடுவதிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தனது ஆற்றலைக் காட்டியது. தமது இலக்குகளை அடைவதிலே, தமது இயக்க உறுப்பினரின் உயிர்களை மட்டுமன்றி ஏனையோரின் உயிர்களை பந்தயம் கட்ட எந்நேரமும் தயாராக இருந்தமையே அவர்களது பலமாகும். இது 'சையனைட் குப்பிகளால் அடையாளங் காட்டப்பட்டது. அவர்களே கடவுளாக இருந்தார்கள். நல்லதோ, கெட்டதோ உண்மையோ பொய்யோ, நணி பரோ பகைவரோ பவித்திரமான உடன்படிக்கைகளோ எதுவும் அவர்களுக்குப் பொருட்டன்று. புராதன ஹெலாஸ் கடவுள்களைப் போல, அவர்கள் தமக்கென உருவாக்கிக் கொண்ட தனித்துவ உலகில் தமது சொந்த ஒலிம்பஸ் குகையின் மலையில் தமது சொந்தத் தலைமையின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். இப்பொழுது அவர்களுக்கு, அவர்களைச் சாதுவாக்கி மதிப்பளிக்கின்ற வெறும் மாகாணசபை உயர்பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எதிர்கால நிகழ்ச்சிகள் அவர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள உந்தப்பட்டார்கள் என்பதையும் அதேவேளை அவற்றை ஏற்பதையிட்டு அசெளகரியமாகவும் தீர்மானம் எடுக்க முடியாமலும் இருந்தார்கள் என்பதையும் காட்டும். அவர்கள் சிறிது காலத்தை கடத்துவதற்காக ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு ஒத்துக்கொண்டதைப் போல் வேறு சிலவற்றுக்கும் நெகிழ்ந்து கொடுத்து, காலத்தைக்கடத்தும் அதே நோக்கில் ஒத்துக்கொள்ளத்தயாராக இருந்தார்கள். ஒப்பந்தத்தின் பின்னர் வாழ்க்கை ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. குமரப்பா, புலேந்திரன் போன்ற பல விடுதலைப்புலிகளின் இயக்கத் தனிலவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சிரேட்ட இந்திய இராணுவ அதிகாரிகள் திருமணக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது உட்பட அவர்கள் சமூக வாழ்வின் புதிய மரியாதைகளை களிப்புடன் அனுபவித்தனர். அவர்கள்

Page 104
176
கடற்கரைகளில் உல்லாசமாகப் பொழுதைப் போக்கினார்கள். ஆயினும், அவர்களது வீரியத்தின் சுயமதிப்புக் குறைந்து கொண்டே வந்தது. முனை மழுங்கிய நகங்களைக் கொணிட புலிக்கு கொடுக்கும் மரியாதையே அவர்களுக்கு இப்போது கொடுக்கும் மனோபாவம் மக்களிடம் அதிகரித்து வந்தது. தெற்கிலுள்ள பிரமுகர்களும், உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும், விலங்குக் காட்சிச்சாலையில் கூட்டில் அடைக்கப்பட்ட விலங்கைப் பார்க்கச் செல்வது போல் அவர்களைப் பார்க்க வந்தார்கள். இவர்கள் சாதுவாக்கப்பட்டால் அவர்கள் தங்கி நிற்பதற்கு வேறொன்றுமே இல்லை.
மக்கள் உண்மையில் அவர்களை நேசிக்கவில்லை. மக்கள் அவர்களை வெறுமனே ரசித்ததுடன் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் தனது பற்களையும், நகங்களையும் இழந்து விட்ட கிழட்டு விலங்கை யார்தான் கெளரவிப்பார்கள்? அதற்குக் கீழ்ப்படிவார்கள்? இது அவர்களுக்கு மிகவும் கவலைக்குரியதாக இருந்தது. புராதன கடவுள் தனது அதிகாரத்துக்குட்பட்ட உலகம் இப்பொழுது பெரிதும் மாற்றமடைந்து தன்னை புறம்பாக தள்ளிவிடும் நிலைக்கு வந்துவிட்டால் என்ன செய்யும்? நீபெலுங்கின் மோதிரம் (Niebelungs Ring) என்ற பழங்கதையில் வரும் வோட்டணி (Wotan) எனும் இதிகாச நாயகன் போல, செய் அல்லது செத்துமடி என்ற நிலையில் மிகவும் விகாரமான சில நிகழ்வுகளை உருவாக்குகின்ற ஒரு தற்கொலைப் பாய்ச்சலுக்குரிய காலம் இதுவாயிருந்தது. அவர்கள் மக்களுக்கு அதிர்ச்சியேற்படுத்தும் தமது ஆற்றலுக்கு மீண்டுமொருமுறை புத்துயிரளிப்பதில் ஈடுபட்டார்கள் அவர்கள் எவற்றுக்காகப் பாடுபட்டார்களோ அவற்றையெல்லாம், பல மாதங்களாக விடாமுயற்சியுடன் விளைவிக்க மேற்கொண்ட நேச உறவுகளையும் அழித்துக் கொண்டும் அநேக உயிர்களைப் பலிகொடுக்கவும் தயாராயிருந்தார்கள். ஆனால் அதில் சம்பந்தப்பட்டிருந்த மற்றைய பகுதியினருக்கு வேறு ஏதேனும் வழிவகைகள் இருந்தனவா?
விடுதலைப்புலிகளுடன் மட்டுமே பிரத்தியேகமாக இந்தியர்கள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தமையானது விடுதலைப்புலிகளைக் கணக்கில் எடுத்தாக வேண்டிய வலிமை வாய்ந்த சக்தியாகத் தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதையும் அவர்களைத் தவிர்ப்பது என்பது வீணர்வம்பை விலைக்கு வாங்கும் முயற்சியே என்றும் இந்தியர்கள் கருதிக் கொண்டதற்கான அறிகுறியாகும். பின்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளும் இதனை உறுதிப்படுத்துவனவாகவே இருந்தன. அக்டோபர் போரின் போது இந்தியா என்னதான் டம்பமாய்ப் பேசித்திரிந்தாலும் விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்கான முஸ் தீபுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டவணிணமே இருந்தன. இந்தியா உணர்மையிலேயே விடுதலைப்புலிகளை நசித்து அழிப்பதில் தீவிரமாக உள்ளதா என்பதில் பொதுமக்களிடையே சந்தேகம் தொடர்ந்து நிலவியது.
தங்களை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்று விடுதலைப்புலிகள் உண்மையிலேயே நம்பியிருந்தால் மக்களுடனான தனது நல்லுறவை அது மேலும் பலப்படுத்த முயன்றிருக்கலாம்; கடந்த காலங்களில் இழைத்த தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கலாம், தங்களின் சுயமரியாதையுடன் ஒத்தியைந்து வருவதற்கான

177
நிபந்தனைகளை ஏனைய போராளிக் குழுக்களுக்கு வழங்கியிருக்கலாம்; தமது இயக்கத்தில் அதிருப்தியுற்று வெளியேறுபவர்கள் மீது சகிப்புத்தன்மையைக் காட்ட முயன்றிருக்கலாம். தமது அமைப்பை ஜனநாயகப்படுத்தியிருக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வெளிச்சக்திகள் அதனைப் பலவீனப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்திருக்கும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அளவுக்கு விடுதலைப்புலிகளிடம் செல்வாக்கும் மிகுந்திருந்தது. யாழ் பல்கலைக்கழகமாணவர்களும் பல புத்திஜீவிகளும் ஓராண்டுக்கும் மேலாக விடுதலைப்புலிகளிடமிருந்து இந்த நல்லொழுங்கிற்காக மன்றாடி வந்திருந்தனராயினும் புலிகள் அதனைச் சடுதியாகவே நிராகரித்து விட்டிருந்தனர். இத்தகைய சலுகைகளைப் புலிகள் வழங்கியிருந்தால் விடாப்பிடியான சிலரைத்தவிர மாற்று இயக்கங்களைச் சேர்ந்த பெரும்பாலான போராளிகள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். இம்மாதிரி நிலைமை உருவாகியிருக்குமானால் பழிவாங்க வேணடும் என்று தீவிரமாக உந்தப்பட்ட சிலரைத்தவிர விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட முனைபவர்களின் தொகை அற்பசொற்பமாகவே இருந்திருக்கும். நிலைமைகளை மோசமாக்கவல்ல தங்களின் அசகாய சூரத்தனத்தைக் காட்ட புலிகள் வன்முறை சாகஸங்களையே
நாடி நின்றனர்.
வேறு போராளிக்குழுக்களும் தமக்கும் சரித்திரத்தில் கெளரவத்திற்குரிய இடம் உண்டு என்று நம்பினர். ஆனால் அந்த இடத்திலிருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட விடுதலைப்புலிகள் திட்டமிட்ட நாசகார நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர். பெரும்பாலான தமிழ் மக்கள் ஏனைய போராளிக் குழுக்களின் மீதும் அனுதாபங் கொண்டவர்களாகவேயிருந்தனர். சில பகுதிகளில் அவர்கள் திரிவதற்கு இந்திய இராணுவமும் உத்தரவாதம் வழங்கியிருந்தது. இதனை அவர்கள் தங்களுக்கு பெருமை தேடித்தரும் வழியில் பாவித்திருக்கலாம். விடுதலைப்புலிகள் தங்களோடு சேர்ந்து செயற்பட விரும்பாவிட்டாலும் அதற்காக விடுதலைப்புலிகள் மீதோ அதன் ஆதரவாளர்கள் மீதோ பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்ளப் போவதில்லை என்று மக்கள் முன் பிரதிக்ஞை எடுத்து அதனை அவ்வாறே பேணியிருந்திருக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய சில திட்டங்களில் அவர்கள் தீவிரமாக இறங்கிச் செயற்பட்டிருக்கலாம். பயணிகளை அச்சுறுத்துவதை விட்டுவிட்டு, விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை விமர்சித்து தங்களின் பங்களிப்பைத் தமிழ் மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரும் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவர்கள் மூலம் விநியோகித்திருக்கலாம். ஆனால் அவர்களோ வேறுவிதமாக யோசித்தனர். தங்களின் விரக்தியில் அவர்கள் தமிழ்ப் பொதுமக்கள் மீது, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருபவர்கள் மீது விடுதலைப்புலிக்கு ஆதரவானவர்கள் என்ற நினைப்பில் பெருங்கசப்புக் கொண்டிருந்தனர். பஸ் பிரயாணிகள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு அடிக்கடி கொள்ளையிடப்பட்டனர், அவர்கள் நடமாடிய இடங்களில் எல்லாம் பணம் பறித்தலும் கொள்ளையும் தலைதூக்கியிருந்தன; வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டன. பரஸ்பர நாசம் ஏற்படுத்தும் கொலைகள் அதிகரித்துச் செல்ல, அவர்கள் மேலும் மேலும் இந்திய, இலங்கை இராணுவங்களின்

Page 105
78 தயவில் வாழ வேண்டியிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து விடுதலைப்புலிகள் அவர்களை எத்தகைய வார்ப்பில் சித்திரித்துக் காட்ட முயன்றனரோ அதற்கு வசதியாகவே அவர்களும் நடந்து கொண்டிருந்தனர்.
இந்திய அமைதிப்படையின் வருகையை இலங்கைத் தமிழர்கள் பெரிதும் வரவேற்றிருந்தனர். அவர்கள் யுத்தத்தை அல்ல, சமாதானத்தைக் கொண்டு நடத்தவே வந்திருந்தனர். சரியான கருமங்களை ஆற்றுவதன் மூலம் அதனை அவர்கள் நல்லவாறே ஆரம்பித்திருந்தனர். அவர்களைப் போய்ச் சுரண்டிய சந்தர்ப்பங்களிலும் கூட அவர்கள் கட்டுப்பாட்டுடனேயே நடந்து கொண்டிருந்தனர். முன்னைய எதிராளிகள் புதைத்துவிட்டுப் போயிருந்த நிலக்கணிணி வெடிகளை எல்லாம் அவர்கள் செயலிழக்கச் செய்திருந்தனர். நிலக்கணிணி வெடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்ச்சியில் விபத்துக்குள்ளாகி எட்டாவது படைப்பிரிவினைச் (பொறியியலாளர்கள்) சேர்ந்த மேஜர் திலீப் சிங், லெப்டினணி ட் விக்ரம் மற்றும் மொஹிந்தர் ராவ் ஆகியோர் கொல்லப்பட்டபோது யாழ்ப்பாணம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்தது. யாழ்ப்பாண மக்களுக்காகவே இவர்கள் தம்முயிரை நல்கியிருந்தனர். மொஹிந்தர் ராவின் தாய் இந்த இதயத்தைப் பிளக்கும் செய்தியைக் கேள்வியுற்றதும், "அவன் அம்மாதிரி இறந்தது குறித்துச் சந்தோஷப்படுகிறேன்" என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் செப்டம்பர் மத்திக்குள் இந்திய அமைதிப்படை மீது இத்தகைய களங்கம் ஏற்பட்டது எவ்வாறு சாத்தியமாயிற்று? அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நூற்றுக்கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களைப் பலி எடுக்கும் கொலைபாதகச்செயலில் அவர்கள் இறங்கியது எப்படி? இந்த வினாக்கள் இத்தொகுதியின் வேறு இடங்களில் ஆராயப்பட்டுள்ளன.
ஒரு மாதகாலத்திற்கு மேலாக நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் செப்டம்பர் மத்தியில் சமாதானத்திற்கு முற்றிலும் எதிர்மாறான நிலைமையையே உருவாக்கியிருந்தது. இந்திய அமைதிப்படையோ செயலற்றுப் போய் நின்று கொணடிருந்தது. பாதுகாப்புக் கோரிய சகல போராளிக்குழுக்களுக்கும் இந்திய அமைதிப்படை பந்தோபஸ்து வழங்கிக் கொண்டிருப்பதாகவே முதலில் தோன்றியது. பரஸ்பரக் கொலைகள் அதிகரித்தபோது சனங்கள் ஒடித்தப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் நான்கு மதகுருமார்கள் கொல்லப்பட்டனர். போராளிக்குழுக்களிடமிருந்து ஆயுதங்களை மீட்டெடுப்பதுதான் தமது நோக்கமே தவிர சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதல்ல என்ற நிலைப்பாட்டை இந்திய அமைதிப் படை கைக்கொண்டிருந்தது போலிருந்தது. இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழ் மக்களை இந்திய அமைதிப்படை பாதுகாக்கும் என்று அதன்மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருந்ததாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். பதிலாக இலங்கை இராணுவம் இங்கேயே நிலை கொண்டிருக்க இலங்கை இராணுவம் கணிணிலும் படாத இடங்களில் இந்திய அமைதிப்படை முகாம்களை அமைத்துக் கொண்டிருந்தமை கபட நோக்கங்களுக்காக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. 1987 ஆகஸ்ட் 30ம் திகதியிடப்பட்ட 'சண்டே ஐலண்ட் பத்திரிகையில் டி.பி.எஸ்.ஜெயராஜ் என்ற பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியின் போது போராளிக் குழுக்களிடையே நடைபெறும் மோதலைத் தடுப்பதற்குத்தான் இந்திய அமைதிப்படை புதிய முகாம்களை

79
அமைத்து வருகிறது என்று இந்தியத் தூதுவர் திரு.ஜே.என்தீக்ஷித் தெரிவித்தார். 85 வீதமான கனரக ஆயுதங்கள் உட்பட 65 வீதமான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். வேறோரிடத்தில் 80 வீதமான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
சிங்களவர்களைப் பொறுத்தவரையில் ஆயுதங்களைக் கையளிப்பதுதான் பெரும் அக்கறைக்குரிய விஷயமாக இருந்தது. செப்டம்பர் 13ம் திகதி இரவு மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய பெருங்கொடூரத் தாக்குதலும் அதனையடுத்துத் தொடர்ந்த கொலைகளும் மேற்சொன்ன கூற்றுக்களை அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆக்கியிருந்தன. விடுதலைப்புலிகள் பெருந்தொகை ஆயுதங்களை வைத்திருந்தனர் என்பதுடன் இந்திய அமைதிப்படை இருந்தாலும் எல்லா இடங்களிலும் சுதந்திரமாக நடமாடித்திரிய முடிந்தது என்பதுடன் ஏனைய போராளிகளுக்கு எதிராக ஆயுதங்களைப் பாவித்துக் கொண்டுமிருந்தனர். இவ்வாறு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் விசேஷமாக திலீபனின் உணர்ணாவிரதத்திற்குப்பின் தமது கருத்தை வெளிவெளியாகத் தெரிவித்து செயற்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் அங்கிருந்து வந்து போய்க் கொண்டிருக்கும் பயணிகளை கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வைத்து இந்திய, இலங்கை இராணுவத்தினர் பார்த்துக்கொண்டிருக்கவே ஏனைய போராளிக் குழுக்கள் மோசமாக அச்சுறுத்தத்தொடங்கினர்.
எல்லாப் பக்கத்தாலும் இந்திய அமைதிப்படை பற்றிய மோசமான சித்திரம் உருப்பெற்றுக் கொண்டிருந்தது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆயுதங்களைக் களைந்து கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களைக் கேட்டால் அவர்கள் சமாதானத்தைப் பேணவில்லை என்றார்கள். இந்திய அமைதிப்படையின் இவ்வாறான குழப்பகரமான நிலையை மேலும் குடியேற்றம், சிறிது சிறிதாகவே தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்படல், குற்றச்செயல்கள் அதிகரிப்பு என்பவற்றுள் இணைத்து கொஞ்சம் ஜோடனைகளும் சேர்த்து விடுதலைப்புலிகள் உற்சாகத்துடன் தமது பிரச்சார இயந்திரத்தை முடுக்கிவிட்டிருந்தனர்.
தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த இந்திய அமைதிப்படை மக்களின் மத்தியிற் செல்வதில் மிகுந்த மெத்தனமாயிருந்தமை மேலும் ஆச்சரியத்தைத் தரும் ஒன்றாகும். அவர்கள் செய்த நல்ல காரியங்கள் மிகப்பல. இராணுவ ரீதியான செயற்பாடுகளால் பொதுமக்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்பட்ட நிலை அநேகமாக முடிவுக்கு வந்திருந்தது. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் அனைவரும் எங்கும் சுதந்திரமாக நடமாட முடிந்தது. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தாங்கள் முன்னர் வெளியேற்றப்பட்ட இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடிந்தது. திருகோணமலை நகருக்குள் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சிங்களக்காடையர்கள் பலாத்காரமாகப் பறிக்கப்பட்ட உடைமைகள் அதன் சொந்தக்காரர்களுக்கு மீளக் கிடைக்கும் நிலைமை தெரிந்தது. ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும் நிலக்கணிணி வெடிகள் யாவும் அகற்றப்பட்டு, ஷெல் தாக்குதல் நின்றுபோன நிலையில் மக்கள் அவ்விடங்களில் தத்தமது வீடுகளுக்கு சென்று வாழக்கூடியதாக இருந்தது. புகையிரதச் சேவைகள்

Page 106
80 -
சீரமைக்கப்பட்டன. புனரமைப்புப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் சாத்தியக்கூறுகள் தென்பட்டன. பெரும் இழப்புகளுக்குள்ளானோருக்கு நிதிகள் வழங்கப்பட்டு உதவி கிடைக்கும் நிலையும் இருந்தது.
இதனைவிட தமிழ் அரசியற் கைதிகளும் உண்மையில் விடுதலை செய்யப்பட்டவண்ணமேயிருந்தனர். சில சட்ட நுணுக்கப் பிரச்சினைகள் இது தொடர்பாக ஏற்பட்ட காலதாமதத்திற்குக் காரணமாக இருக்கலாம். குடியேற்றம் பற்றிய பிரச்சினை ஆராயப்பட்டு, சில விசேஷமான குற்றச்சாட்டுகள் இந்திய அமைதிப்படை அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகக்குறைந்தது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதைக்கூட இந்திய அமைதிப்படை நிறுத்தியிருந்தது. விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை அவர்கள் அறிவுபூர்வமாகக் கண்டித்திருக்கலாம், சமாதான ஒப்பந்தத்தின் கீழ் தமிழ்ப்பகுதிகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் எவ்வளவு தூரம் போதுமானது என்பது பற்றி நிதானமாக விளக்கங் கூறியிருக்கலாம், தேர்தல்கள் நடைபெறும்போது மக்கள் அதனைத் தீர்மானிப்பர் என்றும் மக்கள் மீது நம்பிக்கை வைக்குமாறும் புலிகளைக் கேட்டிருக்கலாம். இதனைவிட தமிழ்ப்பிரதேசங்களில் இந்திய அதிகாரிகள் ஒழுங்காக பத்திரிகையாளர் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி, தமிழ் மக்களின் சுயாதீனமான அபிப்பிராயங்களையும் கேட்டு ஆலோசனை மேற்கொண்டிருக்கலாம். இவ்வாறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தால் பிழைகளைத் திருத்திக் கொள்ளவும், தவறுகள் இழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும், பரிச்சயமில்லாத சூழலை விளங்கிக்கொள்ளவும் அவர்களுக்கு அது பெருந்துணை புரிந்திருக்கும்.
இந்தியர்கள் பத்திரிகைகளைப் பாவிக்க முயன்றிருந்தால் அதனை நாம் விளங்கிக் கொள்ள முடியும். ஆனால் 1987 அக்டோபர் 10ம் திகதி இந்திய அமைதிப் படை இரண டு செய்திப் பதி திரிகைகளைச் சேர்நீத பத்திரிகையாளர்களைத் தடுப்புக் காவலில் வைத்து, பத்திரிகாலயத்தின் அச்சியந்திரத்தையும் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டதானது பொதுமக்களால் காடைத்தனமான, நியாயப்படுத்த முடியாத நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்த பத்திரிகைகள் தாங்கள் பணியப் போவதில்லை என்று வீறாப்பாய்ப் பேசினாலும் அதிகாரத்தின் முன்னால் வளைந்து கொடுத்துப் போகப் பழகிக் கொண்டுவிட்டன. சுதந்திரத்தை மதித்த சில பத்திரிகைகள் பிரச்சினையைத் தவிர்க்க முதல் பக்கத்தையும் கடைசிப்பக்கத்தையும் அவர்கள் சொல்கிற செய்திகளைப் போடுவதற்காக ஒதுக்கிவைத்துக்கொண்டு உள்பக்கங்களில் தமது சுயமான அபிப்பிராயங்களையும் தகவல்களையும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தியர்களின் அக்கறையில் பொதுமக்கள் உணர்மையாகவே மிகக் கீழான இடத்திலேயே வைக்கப்பட்டிருந்தனர், அவர்களின் உணர்ச்சிகளைத் தங்களுக்கேற்றபடி கிளப்பி விட்டுக்கொள்ள அவர்களை அப்படியே புலிகளின் கைகளில் "தாராளமாகக் கொடுத்துவிட்டது போலிருந்தது.
இந்திய அமைதிப்படை மிகவும் பதட்டத்துடன் விடுதலைப்புலிகளுடன் பிரத்தியேகமாக ஏதாவது ஒரு ஒழுங்குக்கு வர முயன்றனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கோ குறித்த ஒரு நிலைப்பாட்டையே உறுதியாகக்

8.
கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு எந்த விசேஷமான கடமைப்பாடும் இருக்கவில்லை. இந்திய அதிகாரிகளுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே தங்களை விட வேறெந்த சாத்தியமான இணைப்பும் இல்லாதவரையில் விடுதலைப்புலிகள் ஒரு பக்கம் இந்திய அதிகாரிகளுடனும் மறுபுறம் மக்களுடனும் தாராளமாக எந்த நாடகமும் ஆட முடிந்தது. விடுதலைப்புலிகளினுாடான எல்லா முயற்சிகளும் எதுவித பயனும் அளிக்காத நிலையில், இந்தியர்கள், அவர்கள் செயற்பட்டுவந்த மனோபாங்கு அவர்களை தயார் நிலையில் இல்லாத ஓர் போர்நிலைக்கு தள்ளிச் சென்றது.
தங்களின் கடந்த காலத் தெரிவுகளால் மட்டுமே வழிநடத்தப்பட்டு தாம் தாம் உருவாக்கிக்கொண்ட சிந்தனைப் படிமத்திற்குள்ளேயே இந்த நாடகத்தின் அனைத்துப் பாத்திரங்களும் சிறையிடப்பட்டு விட்டன. நிகழ்ச்சிகளின் போக்கை மாற்றுவதற்கு வரலாற்றிணி துர்தி தேவதையின் பிடியிலிருந்து வெளியிற்பாயக்கூடிய துணிச்சல் குணாம்சம் மிகுந்த தனிநபர்களும் கூட அப்போது இல்லாது போனதுதான் துரதிர்ஷ்டமானது. ஆழப்படுகுழிக்குள் சிக்குண்டு போய்விட்ட அவர்களுக்கு நிகழ்ச்சிகளின் மீது எந்த ஆதிக்கமுமே செலுத்த முடியாது போய்விட்டது.
இப்போது விடுதலைப்புலிகள் என்ன செய்வதென்றறியாத கண்மூடித்தனமான தாக்குதல் நடவடிக்கையில் இறங்கினர். சாதாரண மனிதாபிமானரீதியில் தொடர்புகளில் பேணக்கூடிய குறைந்தபட்சத் தராதரங்களையும் கூட அவர்கள் கைகழுவி விடத்தயாராகி விட்டார்கள். "சண்டே ஐலண்ட்" பத்திரிகையைச் சேர்ந்த ஜெஹான் ஹனிப் என்ற பத்திரிகையாளர் மாத்தயாவையும் விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அண்டன் பாலசிங்கத்தையும் பேட்டி கண்டபோது மட்டக்களப்பில் 70 போராளிகள் கொலை செய்யப்பட்டதைப் பற்றியும் ஆயுதங்களைக் கையளிப்பதையும் பற்றி வினாவெழுப்பினார். விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்கள் அனைத்தையும் கையளித்துவிட்டன என்றும் பிளவுபட்ட ஏனைய போராளிக் குழுக்களிடையே நடந்த மோதலின் விளைவே மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலைகள் என்றும் அன்டன் பாலசிங்கம் இதற்குப் பதிலளித்தார். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கு முன்னர் பாலசிங்கம் மாத்தயாவிடம் அனுமதி சைகைகள்மூலம் பெற்றது சுவாரஸ்யமானது. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பாலசிங்கத்தின் இடம் என்ன என்பது ஒரு விதமான புதிர்தான். விடுதலைப்புலிகள் ஒரு மாஃ பியாப்பாணி அமைப்புத்தான் என்று பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகைக்குக்கூட இம்மாதிரி ஒரு பதிலை அவர் கொடுத்திருக்கிறார். இதனை மறுக்க விடுதலைப்புலிகள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஆளுக்குள் ஆள் வெடித்துக் குமுறும் உறவினையே இருவரும் கொண்டிருந்தாலுங்கூட பாலசிங்கத்திற்கும் பிரபாகரனுக்கும் ஒருவருக்கு ஒருவர் தேவையாயுள்ளனர் என்று விடுதலைப்புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
92 உணர்ணாவிரதம்
செப்டம்பர் 15ம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் அரசியல் பிரிவுப் பொறுப்பாளரான திலீபன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கருகில்

Page 107
82 சாகும்வரையிலான தன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். உண்ணாவிரத மேடை ஒன்று அமைக்கப்பட்டு திலீபனும் அவரது உதவியாளர்களும் அதில் அமர்ந்திருந்தனர். ஐந்து கோரிக்கைகள் அங்கு முன் வைக்கப்பட்டன. அவற்றில் இரண்டு கோரிக்கைகள் சிங்களக் குடியேற்றம் பற்றியும் தமிழ்க்கைதிகள் விடுதலை செய்யப்படுவது பற்றியும் அமைந்தன. முதலில் இந்த உணர்ணாவிரதம் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இம்மாதிரி உண்ணாவிரதங்கள் சாதாரணமாக முடிந்து விடுவதைப் போலத்தான் இதுவும் முடியும் என்று தீர்மானித்துக்கொண்ட இந்தியர்கள் அதனை அலட்சியப்படுத்துவதன் மூலம் இந்நெருக்கடி நிலையினைச் சமாளித்து விடலாம் என்று நினைத்திருந்தனர். திலீபன் தண்ணி கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தில் இருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள அவர்களுக்குக் காலம் பிடித்தது. ஒரு இலட்சியவாதி என்ற முறையில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை மகாத்மாகாந்தி தானேதான் மேற்கொண்டாரே தவிர இக்கடினமான பரிசோதனையில் தனது உதவியாளர்களில் ஒருவரை அமர்த்தி விட்டுத் தான் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையை அகில இந்திய வானொலி ஒலிபரப்பியது. ஆனால் உண்ணாவிரதமூலம் எழுப்பப்பட்ட உணர்ச்சிமயமான சூழலில் இது அவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நிலைமை கையை விட்டு நழுவிக் கொண்டிருப்பது போலத் தெரிந்ததும் இந்தியர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்க ஆரம்பித்தனர். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளான பண்ருட்டி இராமச்சந்திரன், நெடுமாறன் போன்றோர் அரங்கிற்கு வந்தனர். இந்திய அதிகாரிகளும் திலீபனைப் போய்ப் பார்த்தார்கள். தனது உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதற்கு முன்னராக, தமிழ்த் தேசிய வரலாற்றிற்கு புதுமையான விளக்கந்தரும் ஓர் உரையை யாழ் கோட்டைக்கு முன் திலீபன் நிகழ்த்தினார். "தேசிய எழுச்சி எப்போதெல்லாம் குமுறி எழத் தொடங்கும் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றனவோ அப்போதெல்லாம் அவற்றை அடக்குவதற்காகவே எமது எதிரிகள் ஒப்பந்தங்களுடன் வருகிறார்கள். இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது விடுதலைக்கான மக்களின் தாகத்தை அடக்கி ஒடுக்கும் ஒன்றே" என்று அவர் குறிப்பிட்டார். பின் நாடகபாணியில் யாழ் கோட்டையை நோக்கிச் சுட்டுவிரலை நீட்டிய அவர் தொடர்ந்து பேசினார்: "இந்த யாழ்ப்பாணக் கோட்டையை முதல் ஆக்ரமித்த டச்சுக்காரர் எங்களையும் அடிமையாக்கினர். பின் சிங்களவர்களும் இப்போது இந்தியர்களும் புதிய ஒப்பந்தங்களுடனும் புதிய உறுதி மொழிகளுடனும் வந்துள்ளனர். எமது நோக்கம் இந்த இந்தியர்களை இங்கிருந்து வெளியேற்றி எமது சுதந்திரக் கொடியை இந்தக் கோட்டையில் பறக்கவிடுவதுதான்
கிழக்கில் நடைபெற்ற படுகொலைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் போலி நாடகமாகவே திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பத்தில் தெரிந்தது. விடுதலைப்புலிகள் தமது அமைப்பின் பலத்தைக்கொண்டு உடனடியாகவே ஓர் உணர்ச்சிமயமான சூழலை உருவாக்கினர். கண்ணீர் விட்டுக் கதறும் உணர்ச்சி உரைகளை முழக்கியவாறு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் எல்லா இடங்களிலும் திரிந்தன. மக்களைக்

83
கொண்டு வந்து குவிக்க அரசாங்கப் போக்குவரத்து வாகனங்கள் யாவும் பாவிக்கப்பட்டன. நீண்ட தூரங்களிலிருந்து ஊர்வலமாக வந்தவர்கள் கந்தசாமி கோயிலின் முன் குவிந்தனர். ஒலிபெருக்கிகளில் எழும் இதயத்தைப் பிளக்கும் அழுகை ஒலங்களும் விம்மும் ஓசைகளும் உணர்ச்சிச் சூழலை உருவாக்கின. திலீபன் அண்ணா என்று உச்ச ஸ்தாயியில் எழும் அழுகை ஒலி யாழ்ப்பாணம் எங்கும் சாதாரணமாயிருந்தது. இந்தியர்கள் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டு, ஜயவர்த்தனா அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காகவே இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் திலீபன் என்ற உன்னதமானவர் சாகப் போகிறார் என்ற உணர்ச்சியை எழுப்பி அதற்கு ஆதரவு திரட்டும் வகையிலேயே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
திலீபனின் உணர்ணாவிரதத்தின் போது நடைபெற்ற ஹர்த்தால் போராட்டங்களால் பொதுப் போக்குவரத்து சீர்குலைந்தது, புகையிரத சேவைகள் ஒழுங்காய் நடைபெறவில்லை. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாண மக்களுக்கு என்னென்ன செய்தனர் என்பதைப் பொருட்படுத்தாமல் ஏனைய போராளிக் குழுக்கள் யாழ்ப்பாணத்தின் பத்திரிகைச் செய்திகளையும் மற்றும் ஊர்வலங்களையும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு நடவடிக்கைகள் என்றே விபரித்தனர். அவர்கள் ஆத்திரத்தோடு கூடிய யாழ்ப்பாண எதிர்ப்பு நிலைப்பாட்டினையே கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளுக்கு வசதியாக இருக்கும் போது யாழ்ப்பாணத்து மக்கள் பயணம் செய்யத் தீர்மானித்தால், தாங்களும் தங்களுக்கு வசதியாக இருக்கும் போது தான் அவர்கள் பயணம் செய்வதையும் அனுமதிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சியில் புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டு, தங்களின் மிகுதிப் பயணத்தை முடித்துக்கொள்ள பஸ் வசதியும் இல்லாமல் பயணிகள் பெரும் அவதியுற்றனர். யாழ்ப்பாணத்திற்குப் போய்ச் சேர உள்ள மிகுதி 40 மைலையும் போய்ச் சேர்வதற்கு ஒரு பயணியிடமிருந்து 500 ரூபா வரை வாடகைக்கார்கள் வசூல் செய்தன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் எழுப்பும் இந்திய எதிர்ப்பு ஹிஸ்டீரியாவுக்குப் பதில் தருவது போல இந்தியாவின் தூண்டுதலில் தான் ஈ.என்.டி.எல்.எப். இவ்வாறு பயணிகளை நெருக்கடிக்குள் தள்ளுவதாக பல பயணிகள் தெரிவித்தனர்.
இந்தப் பயணிகள் அநுபவிக்க நேர்ந்த கஷ்டங்கள் உணர்மையில் விடுதலைப்புலிகளின் ஸ்திர புத்தியில்லாத தன்மையிலிருந்தே எழுந்தன. மக்கள் இத்தகைய கஷ்டங்களை எதிர்நோக்கியபோது அவர்களுக்கு உதவுவதன் மூலம்’ இந்தியர்கள் புலிகளின் இத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கலாம். ஆனாலி அவர்களோ யாழ்ப்பாண மக்களை விடுதலைப்புலிகள் என்று அடையாளப்படுத்தி பழிவாங்கும் தன்மையிலேயே நடந்து கொண்டிருந்தனர். இது யாழ்ப்பாண மக்களின் மனதில் மேலும் தூபமிட்டு அவர்கள் விடுதலைப்புலிகளின் கைகளுக்குள் சிக்கிக் கொள்ளவே வழி செய்தது.
தெருச்சந்திகளில் உணர்ச்சி ததும்பும் கூட்டம் என்பது இப்போது மீண்டும் வாடிக்கையாகி விட்டது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இதே கூட்டம்தான் இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தைக் கணிணிர் ததும்ப வரவேற்றது. விடுதலை அரசியலால் யாழ்ப்பாணம் மேலும் மேலும் எந்தக்

Page 108
184 கொள்கை, கோட்பாடு என்று தெரியாமல் பெருங் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்தது. ஆனால் பொதுமக்களை இந்திய எதிர்ப்பாளர்கள் என்று அழைப்பது நிலைமையைப் புரிந்து கொள்ளாத்தனமாகும். இந்தியா அவர்களுக்கு எப்போதுமே புனிதமாதாவாகும். தான் நினைத்ததைப் பெற்றுக்கொள்ளத் தனது தாயை அாக்கம் வீறிட்டும் அலறும் கோபங்கொண்ட ஒரு குழந்தையைப் போலவே மக்கள் நடந்து கொண்டிருந்தனர். மந்திகையில் பெண்களின் கூட்டம் ஒன்று இந்திய இராணுவத்தின் மீது கல்லெறிந்தனர். இந்திய இராணுவவீரர்களை நோக்கித் தனிப்படத் தூஷண மொழிகள் வீசப்பட்டன. அரைபீடிகள் என்று சீக்கிய இராணுவவீரர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் பெரிதும் எரிச்சலூட்டப்பட்டனர். ஆனால் இந்திய இராணுவவீரர்கள் அப்போதெல்லாம் பெருமளவு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். மன்னாரில் மட்டுமே ஒரு துப்பாக்கி சூட்டுச்சம்பவம் இடம்பெற்றது.
மன்னாரிலிருந்து தலைமன்னாரை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்திருந்த இந்திய முகாமை நோக்கி மன்னாரில் மக்கள் கூட்டம் ஒன்று முன்னேறியது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் கார் ஒன்று மக்களை ஊக்குவித்துச் சென்று கொணடிருந்தது. கோஷங்களையே மீண்டும் மீண்டும் உரத்து எழுப்பிக் கொண்டிருந்த மக்களை இராணுவமுகாமிற்குள் உள்ளிடுமாறு ஒலிபெருக்கிக்கார் மக்களைத் தூண்டியது. உள்ளிருந்து ஒரு இந்திய அதிகாரி வெளியில் வந்து, ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்கப்பால் மக்களை உள்ளே வரவேண்டாம் என்று மக்களைக் கைகூப்பி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். ஒலிபெருக்கி தனது உரத்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது. இதற்குப் பிறகு முகாமிற்குள்ளிருந்தவர்கள் சுட்டதில் கூட்டத்தின் முன்னணியில் நின்ற ஒருவர் கொல்லப்பட்டார். கூட்டம் மறுகணத்தில் கலைந்து விட்டது.
இக்கட்டத்தில் சிங்களவர்களின் சமாதானத் தூதுக்குழு ஒன்று யாழ்ப்பாணம் வந்திருந்தது. உதவி நீதி அமைச்சர் திரு.ஷெல்டன் ரனராஜா, வணயிதா.யோஹான் தேவானந்தா மற்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர்ரட்னப்ரிய உட்பட சில டாக்டர்கள் ஆகியோரும் இத்தூதுக்குழுவில் அடங்குவர். ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் துணை அமைச்சுப் பதவியை வகித்தாலும் ஷெல்டன் ரணராஜா சிறுபாண்மை இனப்பிரச்சினை பற்றித் தனது சுயாதீனமான, நியாயபூர்வமான கருத்துகளை வெளிப்படையாகவே தெரிவித்துவருபவராவார். பிரச்சினைகளை நேரே கண்டறிந்து, விளங்கிக் கொண்டு நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கான புண்ணிய யாத்திரையாகவே அது அவருக்கிருந்தது. உச்சமான கொந்தளிப்பு நிலவிய நிலையில் பாதுகாப்பு எதுவுமில்லாத அரசாங்க உறுப்பினராக அவர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல்தான் யாழி வந்திருந்தார். மருத்துவமனைகளைக் கொண்டு நடத்துவதற்கான மருத்துவ உதவிகளுடன் டாக்டர்கள் வந்திருந்தனர். இடதுசாரி மனோபாவங்கொண்ட பல சிங்களவர்கள் விடுதலைப்புலிகளை திறம் மிகுந்த புரட்சிகரச் சக்தியாகக் கருதி அதன் மீது அபிமானமும் கொண்டிருந்தனர். இச்சிங்களவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் வெற்றியைத் தரவில்லை எனினும் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் செயற்பட்டவர்களாவர். அரசாங்கம் அவர்களை ஓர்விதத்தில்

185
கெளரமாக இருக்கவிட்டு அதேவேளையில் மக்கள் மத்தியில் அவர்களது கருத்துக்கள் தாக்க மேற்படுத்தாது வைத்துக்கொள்வதற்கான வழிவகைகளையும் பார்த்துக் கொண்டது. பல்வேறு ஆபத்துக்களிற்கும் முகம்கொடுத்தும் முன்னணிக்குவந்த அவர்களுக்கு விடுதலைப்புலிகளின் வெற்றி ஓர் புதுமைாயகவே தோன்றியது. இந்த வெற்றியோடு சேர்ந்து கிடைத்திருந்த ஏமாற்று, கொலை, மனிதாபிமானமற்ற தன்மை என்பனவற்றை இங்கு கருத்திற் கொள்ளப்படவில்லை. விடுதலைப்புலிகள் மீது அபிமானம் கொண்டிருந்த ஒரு சிங்கள மதகுருவானவர் ஒருமுறை மற்றொரு தமிழ் மதகுருவினை நோக்கி, "அவர்கள் அங்கே சணிடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விமர்சிக்க உங்களுக்குத் தார்மீக உரிமை எதுவும் இல்லை" என்று கூறியிருக்கிறார். ஒரு மதபோதகராக இருந்தும் அப்போது நிலவிய அரசியல் சூழ்நிலையில் ஒரு சமூகம் என்ற வகையில் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றிய எமது புரிதலைப் பாதுகாப்பதற்கு அதி துணிச்சல் தேவையாயிருந்தது என்பதை அவர் நன்கு புரிந்து கொள்ளவில்லை. போராளிக் குழுக்களிற்கு உள்ளேயும் வெளியேயும் நடந்த பன்னூற்றுக்கணக்கான உள்வாரிக் கொலைகள் வெளிப்படுத்தியுள்ள பரீட்சர்த்தமான உண்மைகளைப்போல இந்த விதமான தர்மீகப் போராட்டமும் அபாயங்களைக் கொண்டிருந்தது.
தூண்டுதலின் பேரில் நடைபெற்ற மோசமான நிகழ்ச்சி ஒன்று செப்டம்பர் 18ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஆட்களைத் தூண்டி விடுவதற்காக ஏவப்பட்ட கும்பலால் ஏமாற்றப்பட்ட ஒரு கூட்டத்தினர் மந்திகையில் இலங்கை பொலிஸார் இருந்த பருத்தித்துறை பொலிஸ் ஸ்டேசனைத் தாக்கினார்கள். பொலிஸ் நிலையம் எரிக்கப்பட்டு பொலிஸ்காரர்கள் அவமரியாதைக்குட்படுத்தப்பட்டனர். அருகில் இருந்த இந்திய அமைதிப்படை அதனைத் தடுத்து நிறுத்த எதுவுமே செய்யவில்லை. தங்கள் பெட்டி படுகி கைகளைத் தலையிலி துTக்கி வைத்துக் கொணி டு பருத்தித்துறையிலிருந்த இராணுவ முகாமை நோக்கி நடந்து செல்லுமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அவர்களைத் தூஷித்தவண்ணம் ஒரு கூட்டம் அவர்களுக்குப் பின்னால் போய்க் கொண்டிருந்தது. பெரும்பாலான மக்கள் மெளனித்துப் போன பார்வையாளர்களாகவே இருந்தனர். பரிதாபமாக இருந்த பொலிஸ்காரர்களைப் பார்த்த பலர். அதிர்ச்சியுற்று, மிக வருத்தமும் அடைந்தனர். பருத்தித்துறை பொலிஸ் ஸ்டேசனில் பதவியேற்றுக்கொண்ட பின்னர், அவ்வாறு அவர்களை முறைகேடாக நடத்த வேண்டிய அளவுக்கு அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை. தமிழ்ச் சமூகம் இம்மாதிரிச் செயல்களுக்கு விரைவில் விலை கொடுக்கப்போகிறது என்று பல பொதுமக்கள் தெரிவித்தனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் விருந்தினர்களாகவே தெற்கிலிருந்து இச்சமாதானத்தூது கோஷ்டியினர் வந்திருந்தனர். செப்டம்பர் 18ம் திகதி ஹர்த்தால் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. தூதுக்குழுவினர் தமது வாகனங்களை வடமராட்சிக்குள் செலுத்திக்கொண்டு போவதற்கான விசேஷ அனுமதியை மாத்தயாவிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தனர். அன்றைய தினம் அவர்கள் மிகக் கொடூரமான காட்சியைக் கண்ணுற நேர்ந்தது. பருத்தித்துறையில் ஒரு பொலிஸ் வாகனம் எரிந்து கொணடிருப்பதைப் பார்த்தனர்.

Page 109
86
வல்வெட்டித்துறையில் பொலிஸ் நிலையத்தின் முன்னால் திரணர்டிருந்த ஒரு சனக்கூட்டம் உரத்துத் தூஷித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். ஒரு மாதிரியாகக் கூட்டத்திற்குள் நுழைந்து ஆயுதந் தாங்கிய நிலையில் ஆத்திரத்தோடு நின்று கொண்டிருந்த பொலிஸ்காரர்களின் முன்னால் இத்தூது கோஷ்டியினர் சென்றனர். பொலிஸ்காரர்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் நிகழ்ச்சிகள் யாவும் நடந்து கொண்டிருந்தன. பொலிஸ் ஸ்டேசனைச் சேர்ந்த ஒரு நாற்காலி உடைத்து நொறுக்கப்பட்டு அவர்களின் முன்னால் வீசப்பட்டுக் கிடந்தது. கூட்டத்திற்கு முன்னால் நின்று கொண்டிருப்பவர்கள் சிங்களவர்கள் தானென்றறிந்ததும் அவர்களை நோக்கி பொலிஸ்காரர்கள், "நீங்கள் தான் அவர்களை எல்லாம் இங்கே வரப்பண்ணியிருக்கிறீர்கள் என்று ஆத்திரத்துடன் உரத்துக் கத்தத் தொடங்கிவிட்டார்கள். பொலிஸார் எந்த நேரத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடுமென்றும் அவ்வாறு நடந்தால் அதன் முதல் பலி தாங்களாகத்தான் இருக்கும் என்று சமாதானத் தூதுக் குழுவினர் எண்ணிக்கொண்டனர். பின் அவர்கள் அங்கிருந்து வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கையில், தனது தானியந்தித் துப்பாக்கியில் மகசீனைப் போட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலி ஒருவரைச் சந்தித்தனர். "என்ன பயந்து போனீர்களா?" என்று அவன் அவர்களை நோக்கி ஏளனமாய்க் கேட்டிருக்கிறார். வல்வெட்டித்துறையில் இருந்த இலங்கை இராணுவ முகாமிலும் இதே நிகழ்ச்சியை அவர்கள் கண்டனர். முகாமின் முன் நின்று கொண்டு கூட்டம் தூஷித்துக் கொண்டிருந்தது. குடிபோதையில் நின்ற ஒரு இராணுவவீரன் கூட்டத்திற்கு முன் வந்து கை, கால்களை ஆட்டிக் காட்டியவாறு அவனும் திருப்பித் தூஷணத்தில் ஏசிக்கொண்டு நின்றான். ஒரு அதிகாரி வெளியில் வந்து குடிபோதையிலிருந்த வீரனை உள்ளே இட்டுக்கொண்டு சென்றார். வீதியில் பல அப்பாவிப் பொதுமக்கள் செத்து விழத்தக்கதாக இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளத்தக்க ஒரு சூழ்நிலையை விடுதலைப்புலிகள் உருவாக்கிக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாய்த் தெரிந்தது. இதை வைத்து உலகம் முழுவதும் என்ன மாதிரி அழகிய கதை பணிணியிருக்கலாம்: "காந்தி வழியால் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அஹிம்சைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது, இலங்கை அல்லது இந்திய இராணுவப்படையினர் அப்பாவிப் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் இந்தியப்படைகளும் இலங்கைப்படையினரும் தம்மை முடிந்தளவு கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகப் புலனாகியது.
சமாதானத் தூதுக்குழு மறுநாள் கொழும்பு திரும்ப வேண்டியிருந்தது. ஹர்த்தால் நடந்து கொண்டிருந்ததால் தமது இரு வாகனங்களிலேயே பயணத்தைத் தொடர அவர்கள் அனுமதி பெற்றுக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து வழி நெடுக, சகல சென்ரி நிலையங்களையும் கடந்த வண்ணம் விடுதலைப்புலிகளைக் கொண்ட வாகனம் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ளவர்கள் யார் என்பதைப் பற்றிச் சிறிதளவு சந்தேகத்திற்கும் இடமில்லை. பளையைத் தாண்டியதும் அந்த வான் இவர்களின் வாகனங்களை முந்திக்கொண்டு சென்றது. ஆனையிறவுக்கு நான்கு மைல் முன் யக்கச்சியில்

87
அந்த வான் வீதியில் நிறுத்தப்பட்டது. சில யார் தூரத்தில் கிரனைற்றுகள் மற்றும் இயந்திரத்துப்பாக்கிகள் சகிதம் ஆறு இளைஞர்கள் அத்தூதுக் குழுவினரை வழிமறித்து நிறுத்தினர். தூதுக்குழுவினர் தூஷிக்கப்பட்டு வாகனங்களுக்குள்ளிருந்த சிலர் வெளியில் இழுத்து எறியப்பட்டனர். தங்களின் பொதிகள் எதுவும் இல்லாத நிலையில் தூதுக்குழுவினர் சந்தியில் விடப்பட்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த வான், கடத்தப்பட்ட மற்ற இரு வாகனங்ளையும் தம்முடன் எடுத்துக் கொண்டு பளையை நோக்கிச் சென்றது. வாகனங்களைக் கடத்திக் கொண்டு போனவர்கள் போகும் போது சொல்லி விட்டுப் போனார்கள்: "நாங்கள் ராஜன் கோஷ்டி (ஈ.என்.டி.எல்.எப்) ஒரு நாடகத்தை ஒருவர் ஆடமுடியுமானால், இரண்டு பேரும் அதே மாதிரி நாடகமாடலாம். ஆனையிறவுக்குத் தெற்கே ஈ.என்.டி.எல்.எப். எதைச் செய்ததோ அதையே வடக்கில் புலிகள் செய்து விட்டுப் பழியை ஈ.என்.டி.எல்.எப். மீது போட்டனர். ஆனையிரவுக்கு வடக்கேயுள்ள பிரதேசம் புலிகளின் கடுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பது பொதுவாகத் தெரிந்த விஷயமே. பின் இந்தத்தூது கோஷ்டியினர் ஆனையிரவை நோக்கி இரண்டு மைல் தூரம் நடந்து சென்ற பின்னர் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு பஸ்ஸில் இடம் பிடித்தனர்.
தூது கோஷ்டியினர் நடத்தப்பட்ட விதம் விடுதலைப்புலிகள் அப்போது கைக்கொணடிருந்த அணுகுமுறைக்கு இசைந்ததாகவே உள்ளது. விடுதலைப்புலிகள் ஒருவேளை முந்தி விடுத்திருந்த அழைப்பின் பேரில் தூது கோஷ்டியினர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கக்கூடும். நன்கு அறியப்பட்ட இந்தச் சிங்களவர்களினால் இப்போது அதிக பிரயோசனம் எதுவும் இல்லை என்று புலிகள் தற்போது தமது மனதை மாற்றிக்கொண்டிருந்தால் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்களை வரவேற்று, இனிமையாக எல்லாம் பேசி, பின்னர் பிரிந்து போகும்போது இந்தமாதிரி அவர்களை நடத்தியது. "உங்களோடு எங்கள் அலுவல்கள் முடிந்து விட்டன, இனி நீங்கள் இங்கு வரத் தேவையில்லை" என்பதைச் சுற்றி வளைத்துச் சொன்ன மாதிரித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் புலிகளின் புத்தியைக் காண முடிகிறது. இந்தியாவுடனான இத்தகைய யுத்தத்திற்குப் பின்னரும் கூட விடுதலைப்புலிகளுக்கு சிங்கள நண்பர்கள் மீண்டும் தேவை எனில் அவர்களின் தலைவர்களுக்கு அதில் அவ்வளவு கஷ்டம் இருந்திராது. அவ்ர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இத்தகைய நடத்தைகளைக் கணிடித்து, சிங்களவர்களைக் கொலை செய்ததை சில வெறியர்களின் மீது போட்டு விட்டதாககூறி ஒழுங்கு நடத்தைக்கு உட்படுத்தி, இத்தகைய துரதிஷ்டமான நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாதது போல மீண்டும் உறவுகளை ஆரம்பிப்பது தான்.
பாராளுமன்றத்தில் வினா எழுப்பப்பட்ட போது கசந்து போன அல்லது ஆத்திரங்கொண்ட மனிதனாக அல்லாமல் துயரமுறும் மனிதனாக நின்று பதில் அளித்ததில் ஷெல்டன் ரனராஜா கெளரவத்திற்குரியவராகிறார். பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவின் அக்டோபர் தாக்குதலுக்கும் அதனோடு சேர்த்து அக்டோபர் 5ம் திகதியிலிருந்து சிங்களவர்கள் கொல்லப்பட்டதற்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த விரும்புகின்றனர். பதினேழு

Page 110
88
விடுதலைப்புலிகளையும் கொழும்பிற்குக் கொண்டு செல்ல முயற்சித்து, அவர்களை சயனைற்றை விழுங்கத் தூண்டிய இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கையால்தான் எல்லாப் பிரச்சினைகளும் வந்தன என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் செப்டம்பர் 13ம் திகதி ஆரம்பமான நிகழ்ச்சிகளிலிருந்து நாம் மேலே விபரித்த தத்ரூபமான நிகழ்ச்சிகள் எல்லாம் என்ன நடக்கப்போகிறது என்பதைக் கோடிட்டு காட்டுகிறது. சிங்கள நண்பர்களை விருத்தி செய்வது தொடர்பான முயற்சிகளை விடுதலைப்புலிகள் ைைகவிட்டிருந்தனர். அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன் நட்புப்பூணுவது என்பது வினோதமான, சுயதம்பட்ட மடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து, ஆலோசனைகள் வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள் மீதுகூட சூசகமான எச்சரிக்கைகள் காலப்போக்கில் அவர்கள் மீது சந்தேகம்கொண்டு விடப்பட்டன.
"கிறிஸ்டியன் வேர்க்கர்" என்ற சஞ்சிகையில் (1987ம் ஆண்டின் 2ம் 3ம் காலாண்டு இதழ்கள்) சமாதானத் தூதுக்குழுவினர் எழுதியிருந்த அறிக்கையில் அவர்களிடம் காணப்பட்ட விரக்தி தொனித்தது. "துப்பாக்கிகள் அவற்றிற்கேயுரிய தர்க்கங்களை உருவாக்கிக் கொண்டு விடுகின்றன போலத் தோன்றுகிறது, அதனைப் பிரயோகிப்பவர்களையே அது தனது விஸ்தரிப்பாகவே மாற்றிக்கொண்டு விடுகிறது. துப்பாக்கிகள் வழங்கிய இறுதித் தீர்வில் அறிவுபூர்வமான சிந்தனையும் மனித உறவு முறைகளுமே அமிழ்ந்து போய் விடுகின்றன. லெபனானில் நாம் இதனையே மிகப்பாரிய அளவில் இடம்பெற்றதைக் கணிடிருக்கிறோம். எல்லாருமே எல்லாரையுமே சுட்டுக்கொண்டு திரியும் அதே நிலைமையை நாமே தனிப்பட இங்கும் மீள சிருஷ்டித்து அந்த அனுபவத்திற்கூடாகப் போயாக வேண்டுமா? இலங்கை அரசியலானது மிகப்பலருக்கு ஒரு ஊமைநாடகமாகவே தோன்றுகிறது. ஆனால் இன்று அந்த நாடகம் துரிதமாக மாற்றமுற்று பேரளவுத் துன்பியலாகி விட்டது. உறுதியான நடவடிக்கைகள் இந்நிலைமையைத் தவிர்க்கும் என்பதை நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை" என்று அந்த அறிக்கை கூறுகிறது. இரண்டே வாரங்களுக்குள் பலித்துவிட்ட தீர்க்கதரிசனம் வாய்ந்த வார்த்தைகள் அவை!
திலீபன் தனது சுயநினைவை இழப்பதற்கு முன் தனது நம்பிக்கைகள் சிலவற்றை அவர் வெளிப்படுத்தினார். தான் இறந்ததும் விண்ணுலகுக்குச் சென்று அங்குள்ள விடுதலைப்புலிகளைச் சேர்ந்த 650 அல்லது அதற்கு மேற்பட்ட தியாகிகளுடன் சேர்ந்து கொண்டு விடுவேன் என்று அவர் கூறினார். பின் அந்த உன்னத ஆத்மாக்களுக்கேயுரிய மகிழ்ச்சிப் பரவசத்துடன் மலரப்போகும் தமிழீழத்தைக் காணப்போவதாக அவர் தெரிவித்தார். இத்தகைய ஜனநாயகமற்ற, சமத்துவமற்ற கொள்கையில் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திலீபன் மெதுமெதுவாக கொடும் வேதனையில் செத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளச் சிலகாலம் பிடித்தது. தமிழ் மக்களின் சமய உணர்வுகளைத் தொடும் வகையில் திலீபனின் உண்ணாவிரதம் வெளிக்காட்டப்பட்டது. கந்தசாமி கோயிலுக்கருகில் இது

89
இடம் பெற்றதும் அதிமுக்கியமான சமய நிகழ்வுக்கான பொருத்தமான இடமாக அதனை ஆக்கியிருந்தது. தேவாரங்கள் பாடப்பட்டன. கணிணிர் வடிக்கும் பெணிகள் கவலை நிறைந்த முகத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். நிதர்சனம் என்ற தங்கள் தொலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகள் திலீபன், காந்தி ஆகியோரின் உருவங்களை ஒருங்கியையப் பணிணிக் காட்டினர். மிகப்பலர் இதனால் ஈர்க்கப்பட்டனர். அவ்விடத்திற்கு சென்ற ஒரு மேற்கு நாட்டு ராஜரீகத் தூதர், "காந்தி படம் எடுப்பதற்காக ஒரு காட்சி சிருஷ்டிக்கப்பட்டதைப் போலத் தனக்கு அது தெரிந்தது" என்று மிக வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.
அஹிம்சைப் போராட்டம் பற்றிய தப்பபிப்பிராயத்தை வெளிப்படுத்தி நின்றமைக்காக விடுதலைப்புலிகள் மீது குற்றஞ்சொல்வதற்கில்லை. இத்தகைய தவறான அபிப்பிராயம் படித்த தமிழரிடையேயும் பொதுவாகக் காணப்படவே செய்தது. 1981ன் முன்பகுதியில் தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் உரிமைக்காகச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியது. வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள அரசாங்க அலுவலகங்களின் முன்னால் உட்கார்ந்து மறியல் செய்தல், நீண்ட ஊர்வலங்கள் என்ற வடிவிலேயே இச்சத்தியாக்கிரகப் போராட்டம் அமைந்தது. மாபெருங் கூட்டங்கள் நடந்தன. முறைப்பாட்டு மனுக்கள் மீது தம் ரத்தத்தில் கையொப்பமிட மாணவர்கள் இக்கூட்டத்தில் கியூவரிசையில் நின்றனர். கூட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸ் சில தினங்களாகப் பெரும்பாடுபட்டது. பொலிஸாரின் குண்டாந்தடிப் பிரயோகங்களையும் மீறிக் கூட்டம் நின்று பிடித்தது. இவையெல்லாம் உற்சாகமூட்டும் கணங்கள். 1958 இனக்கலவரத்தின் போது அடி உதை வாங்கி ஓடிய தமிழர்கள் கோழைகள் என்று பேர் வாங்கியிருந்தனர். தமிழர்களின் அநாதரவான நிலை வெறிபிடித்த சிங்களக் காடையர்களுக்கு மேலும் தூபமிட்டு அவர்கள் மேலும் ரத்தபலி கேட்கும் நிலைமையை ஏற்படுத்தியது. கொழும்பில் இருந்த வயதான தமிழர்கள் இந்த இனவெறியின் தீணிடலுக்கு ஆளானவர்கள். 1981ல் தமிழ்ச் சத்தியாக்கிரகிகள் ஒரு இனம் என்ற வகையில் தமிழ் மக்கள் கோழைகள் அல்ல என்பதனை நிரூபித்தனர். தாங்களும் இந்த நாட்டின் சமஉரிமை கொண்ட பிரஜைகள் என்ற வகையில் தங்களின் உரிமைகளையும் கெளரவத்தையும் வென்றெடுக்க சோதனைகளையும் கஷ்டங்களையும் அவர்கள் எதிர்கொண்டனர். தன்னலம் ஒறுத்த துணிச்சல் காட்சிகளை எல்லா இடங்களிலுமே காணக்கூடியதாக இருந்தது. இராணுவ ட்ரக் வண்டிகளின் முன்னால் படுத்துக்கிடந்து மறியல் செய்தவர்கள் அடித்து உதைக்கப்பட்டு உணர்விழந்த நிலையில் ஓரத்தில் இழுத்து எறியப்படும் வரையில் அவர்கள் போராடினார்கள். மக்கள் மீண்டும் ஒருமுறை தம்மை தமிழர்கள் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதங்கொண்டனர். அப்போது ஆட்சியிலிருந்த திருமதியண்டாரநாயக்காவின் அரசு சில தினங்களின் பின்னர் சத்தியாக்கிரகப் போராட்டத்தைப் புறக்கணிப்பது என்று தீர்மானித்தது. சத்தியாக்கிரகப் போராட்டம் மூன்று மாதங்களாக இழுபட்டு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ததன் மூலம் அரசு அதனை முடிவுக்குக் கொண்டு வந்தது. இன்றைய நிலையிலிருந்து பார்க்கும் போது அன்று பாவிக்கப்பட்ட பலாத்காரம் என்பது பாரதூரமானதல்ல. சத்தியாக்கிரகப் போராட்டம் நீண்டு கொண்டே

Page 111
190
போனமையும் அரசதிர்வாகம் மூடப்பட்டதால் நிறுத்தப்பட்ட அரசாங்க அரிசிக் கூப்பன்களுக்கு மாற்று வழி கண்டு பிடிப்பதில் இருந்த கஷ்டங்களும் போராட்ட அமைப்பாளர்களுக்குத் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியது என்று இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் தெரிவித்தார். ஆகவே தபால் முத்திரைகளை அச்சிட்டுத்தாமே தபால் சேவையை நடத்தும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். இது அரசாங்கத்தை தங்களுடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தூண்டும் அல்லது பலாத்காரமாக எமது போராட்டம் நிறுத்தப்படும் என்று கருதப்பட்டது. அரசாங்கம் பின்னைய வழியைத் தெரிவு செய்தது. இது தீராத பிரச்சினையாக உருவெடுத்து, கால் நூற்றாண்டுக்குப் பின்னால் எரிமலையாக வெடிக்கவே வழிவகுத்தது. துணிவையும் தியாகத்தையும் சிரமேற்கொள்ளும் சுமை அடுத்த சந்ததியின் தலையில் வீழ்ந்தது. அதுவல்லாமல், கையாளப்பட்ட அணுகுமுறைகளில் வேறு ஒரு முக்கியமான வித்தியாசமும் இருந்தது. 1961ல் தமிழ் மக்களும் அதன் தலைவர்களும் ஓரணியில் நின்று தாமே அனைத்தையும் அனுபவிக்க முன்வந்தனர். தமிழரசுக்கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அஹிம்சையைத் தமது கொள்கையாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் காலம் கனிந்து வரும்போது நடவடிக்கையில் இறங்குவோம் என்று செயற்பாட்டைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தனர்.
இது அஹிம்சையைப் பற்றிப் பொதுவில் பாரதூரமான பிழையான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில் வந்து முடிந்தது. அஹிம்சையும் வன்முறையும் ஒரே அரசியல் இலக்கினை அடைவதற்கான இரண்டு மாறுபட்ட வழிமுறைகள் என்றே கருதப்பட்டன. பின்னையது பெருந்தொகைப் பணத்தை வேணி டி நிற்பதோடு பெருந் பாதிப்பினையும் ஏற்படுத்தவல்லது எனக்கருதப்பட்டது. ஆனால் தார்மீகரீதியில் இவை இரண்டும் இருவேறுபட்ட விவகாரங்கள் என்பதைக் கணிடு கொள்ள மறந்து விட்டனர். தேவைப்பட்டிருந்த தெல்லாம் தார்மீகப் பாதிப்புகளைப்பற்றி எல்லாம் அக்கறைப்பட்டுக் கொண்டிராமல் துரிதபலனளிக்க வேண்டிய வழி எது என்று கணிடு பிடிப்பதாகவே இருந்தது. அஹிம்சையின் மிகமுக்கிய அம்சத்தை யாருங் கண்டுகொள்ளவில்லை, அது, சின்னச்சின்ன விஷயங்களிலும் நேர்மையும் ஒழுக்கமும் இணைந்த நிலையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்வதாகும். துன்பத்தைத் தாங்குவது தொந்தரவை ஏற்படுத்தும் என்று துன்பத்தைத் தவிர்க்க முனையும் கோழையின் விருப்புணர்விற்கு மாறாக அது அன்பையும் வாழ்விற்கு மதிப்பையும் வழங்குவதாகும். இதனை மறந்ததால், மக்கள் கச்சேரிகளுக்கு முன்னால் ஒரு முறை உட்கார்ந்திருந்து மறியல் செய்தானதும் தம் பழைய கெட்ட வழக்கங்களையே தொடர்ந்தும் கடைப்பிடித்தவணிணமிருந்தனர். சிங்களவர்கள் மீது அவர்கள் எதுவித மனமாற்றத்தையும் கொணடிருக்கவில்லை. பணக்காரர்கள் ஏழைகளை அவமரியாதைப்படுத்தி அவர்கள் மீது நாட்டாணிமை செலுத்தினர். சாதிக்கெளரவம், ஆத்மீக, நிர்வாக, உடல்சார்ந்த காடைத்தனங்கள் முன்னர் போலவே தொடர்ந்ததுடன்" காலம் போக மோசமாகிக்கொண்டும் சென்று கொண்டிருந்தது.

19
காரியங்கள் இப்படியே நடந்துகொண்டு போகும் பட்சத்தில் இளைஞர்களின் கண்முன் அஹிம்சை என்பது அபகீர்த்திக்குள்ளாக்கப்பட்டிருக்கவே முடியும் என்பதை நாம் எதிர்பார்க்கவே வேண்டும். ஆனால் உண்மை யாதெனில் அது ஒருபோதுமே பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை என்பதுதான். அஹிம்சை என்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அதனை மக்கள் நிராகரித்து விட்டதாக எண்பதுகளில் இளம் போராளிகள் திணிணிய நம்பிக்கையோடு கூறிவந்ததையும் நாம் மன்னித்துவிடவே வேண்டும். வன்முறை பய்னளித்ததா என்ற கேள்வியை எழுப்ப யாரும் அக்கறை காட்டுவதில்லை. வன்முறையினையோ அஹிம்சையினையோ பிரயோகிப்பதில் தாங்களே கைதேர்ந்தவர்கள் என்றும் இரணிடு முறைகளிலும் தாங்கள் நன்கு பரிச்சயமானவர்கள் என்றும் விடுதலைப்புலிகள் கூறும் போது அவர்கள் கொணடிருக்கும் தப்பபிப்பிராயம் தெளிவாகப் புலனாகிறது. அவர்கள் வன்முறையின் எஜமான்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையே. திலீபனின் பீட்சார்த்தம் விடுதலைப் புலிகள் அஹிம்சையினதும் எஜமானர்கள்தான் என்பதை மக்கள் மத்தியில் நிறுவ முனைகிறது. அஹிம்சையும் வன்முறையும் இங்கு தார்மீக ரீதியில் வேறுபடுத்திப் பார்க்க முடியாத - கலங்கலான கருவிகளாகவே கருதப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் வன்முறையை எதிர்ப்போர் மத்தியிலும் திலீபனின் உண்ணாவிரதம் உணர்ச்சி மையங்களைத் தொட்டிருக்கிறது.
ஆனால் விடுதலைப்புலிகளால் படிப்படியாகக்கட்டி எழுப்பப்பட்ட
காட்சிச்சித்திரம் அடிப்படையில் வன்முறை சார்ந்த ஒன்றாகும். தூர இடங்களிலிருந்து நல்லூருக்கு ஊர்வலம் வந்த மக்கள் கூட்டத்தினர் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார்களிலிருந்து எழுப்பப்பட்ட அச்சுறுத்தும் கோஷங்களையே உரத்துக் கூறிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பிரபாகரனே எங்கள் தலைவர், திலீபன் மரணமடைந்தால் தமிழீழம் வெடிக்கும் எரிமலையாகும்" என்பன பிரபல்யமான சில கோஷங்களாகும். திலீபனின் மீது ஒளி குவிந்திருந்தாலும் முதலாவது கோஷம் பிரபாகரனைக் காட்சியில் வைத்தது. இரண்டாவது கோஷ்ம் உண்மையில் என்ன கருதுகிறதென்று யாருக்கும் தெரியவில்லை. கந்தசாமி கோயிலில் நடந்த அனைத்து நிகழிவுகளையும் ஆழி நீது அவதானித்தவர்கள் பல வேறுபட்ட்” அபிப்பிராயங்களுடன் வெளிச் சென்றனர். சிலர் திலீபனின் உறுதியை மெச்சினர். சிலர் தில்பனை வேண்டுமென்றே மெதுமெதுவாக கடுமையான வேதனையோடு சாக விட்ட பரீட்சார்த்தத்ை விடுதலைப் புலிகள் திலீபனின் மீது மேற்கொண்டதற்காக புலிகளைக் குறை கூறினார்கள். திலீபன் தான் சுய உணர்வோடு இருந்தபோது தர்ன் தண்ணீர் அருந்தக் கேட்டால் தனது உறுதியின் மீதான கட்டுப்பாட்டினை இழக்கப்பண்ணுகிற பலவீனமாக அது அமைந்து விடும் என்றும் அவ்வாறு தான் கேரினால் அதனை நிராகரித்து விடுமாறு அறிவுறுத்தல்களை விடுத்ததாகச் சில குறிப்புகள் தென்படுகின்றன. எனினும் பிரபாகரன் கருணை கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்தனர். அது அப்படி நடந்திருக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியர்களிடமிருந்து ஐந்து கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காகத் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதமே இது தான் பிரபாகரனின் நிலைப்பாடாக இருந்தது. ஆகவே திலீபனின் தலைவிதிக்தி இந்தியாவே பூரண பொறுப்பேற்க வேண்டும்.

Page 112
92
திலீபன் எதைத் தீர்மானித்திருந்தாலும், அவர் சுயநினைவு இழந்தபோது அவருக்கு உணர்வூட்டும் பிரச்சினையை மூத்த விடுதலைப்புலி நிர்வாகஸ்தர் ஒருவரிடம் ஒரு சனசமூகத் தலைவர் எழுப்பியபோது சிக்கலின் கூறுகள் சில வெளிப்படலாயின. இப்பிரச்சினையில் தாங்கள் இறுதி முடிவு எடுத்துவிட்டதாக அவருக்குக் கூறப்பட்டது. வெளிக்காரணிகளும் நிலைமை அதுதான் என்பதையே புலப்படுத்தின. அக்டோபர் 5ம் திகதி பன்னிரண்டு விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த அனுமானம் மேலும் வலுப்படுவதாகவே இருந்தது. தமிழீழம் குமுறும் எரிமலையாக வேண்டும் என்று விடுதலைப்புலிகள் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாகவே தோன்றியது.
இதற்கிடையில் இந்தியர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்த ஆரம்பித்திருந்தனர். இந்தியத் தரப்பில் தூதுவர் திருதீக்ஷிட், அவரது துணையாளர் திரு.ஸென், இந்தியப்படையின் தென்பிராந்தியத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் திபேந்தர் சிங் ஆகியோர் அடங்குவர். விடுதலைப்புலிகளைப் பிரதிநிதித்துவம் செய்தவர்களில் பிரபாகரன், பாலசிங்கம், மாத்தயா ஆகியோரும் உள்ளடங்கினர். நாம் அறிந்தவரையில் இச்சந்திப்பானது ராஜதந்திர துாதுவர்களிற்கிடையேயான பேச்சுவார்த்தைபோல் அமையவில்லை. சகித்துக் கொள்ள முடியாத ஒரு பள்ளி மாணவனை வெளியே தூக்கிப் போட விரும்பினாலும் அவ்வாறு செய்து கொள்ள முடியாத நிலையில் சொன்ன பேச்சைக் கேட்க வைக்கும் ஸ்கூல் மாஸ்டர் பாணியில்தான் இந்தியா நடந்து கொண்டிருந்தது. ராஜதந்திர நெறிமுறைகளைப் பிரயோகிக்க இலங்கை விசித்திரமான இடமாக இருப்பதை திருதீக்ஷிட் உணர்ந்திருக்க வேண்டும். கொழும்பில், அரசாங்கத்தைச் சேர்ந்த ஒரு பணிபுமிக்க மூத்த அமைச்சர் திருதீக்ஷிட்டைச் சந்தித்து விட்டு வந்தபின் தனது நண்பர் ஒருவரிடம் பின்வருமாறு "எனது சொந்த வீட்டிற்குள்ளேயே பிக் - பாக்கெட் அடித்தவன் மாதிரி நடத்தப்பட்டதாக நான் உணர்ந்தேன்" என முறையிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது:
வடகிழக்கில் இடைக்கால நிர்வாக சபையில் விடுதலைப்புலிகள் பெரும்பான்மை இடங்களை வெளிப்படையாகவே கேட்டு நின்றார்கள். அப்போதிருந்த சூழ்நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் இந்த இடைக்கால நிர்வாக சபை நீண்ட காலத்திற்கு இருக்கும் போலத் தெரிந்தது. இதனால் தான் தீக்ஷிட், "இடைக்காலம் என்பது இடைக்காலம் தான்" என்று குறிப்பிட நேர்ந்தது. தேர்தலை நீண்ட காலத்திற்குப் பின் தள்ளிப்போட விடுதலைப்புலிகள் விரும்பியிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. பொலிஸ் மற்றும் குடியேற்றத் திட்டங்கள் ஆகியவற்றிலும் கட்டுப்பாடு செலுத்தும் அதிகாரத்தைத் தாம் கொண்டிருக்க புலிகள் விரும்பினர். இந்தியருக்கு எதிரான உணர்வைக் கிளறிவிடப் பத்திரிகைகளைப் பாவிப்பதற்கு இந்தியர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்கள். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல விடுதலைப்புலிகளை முஷ்டியால் குத்தி அடக்குவதை தவிர இந்தியாவிற்கு எந்த மாற்றுவழியும் தெரியவில்லை. மக்களை நேரே அணுகுவது பற்றி அவர்களுக்கு ஒரு சிந்தனையும் இருக்கவில்லை.

93
புலிகளைத் தம் வசப்படுத்த அவர்களை அச்சுறுத்தியோ அல்லது வீறாப்பாய்ப் பேசியோ காரியம் சாதிக்கவல்ல தமது சாமார்த்தியத்திலேயே முழுதும் தங்கியிருந்த அவர்கள் புதைசேற்றில்தான் நடந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் சுதந்திரமாக இயங்குகின்றன என்பதைப் பற்றிய பிரச்சினையில் விடுதலைப்புலிகள் மீது தியீந்தர் சிங் நேரடியாகவே சவாலிட்டதைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் சுதந்திரமாகத்தான் இயங்குகின்றன என்று அவருக்கு உறுதி கூறப்பட்டது. தான் தரும் அறிக்கையை வெளியிடுவீர்களா என்று ஜெனரல் தியீந்தர் சிங் அவர்களிடம் கேட்டார். ஜெனரல் சிங் பொதுமக்களுக்கு ஏதோ தெரிவிக்க இருக்கிறார் என்று கருதிய விடுதலைப்புலிகள் அதற்கு உடனேயே சம்மதம் தெரிவித்தனர். தனது சட்டைப் பைக்குள் இருந்து ஒரு கடிதத்தை எடுத்த ஜெனரல் சிங் இதனை நீங்கள் பிரசுரிப்பீர்களா என்று கடுமையான முகத்தோடு அவர்களைப் பார்த்துக் கேட்டார். ஈபிஆர்.எல்.எப்யின் மூத்த தலைவரான டக்ளஸ் தேவானாந்தாவின் தந்தையாரிடமிருந்து வந்துள்ள அக்கடிதத்தில் தேவானந்தாவின் சகோதரர் பிரேமானந்தா ஒப்பந்தத்தையடுத்துக் கடத்தப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் அப்போது தர்மசங்கடமான அமைதி நிலவியது. இந்தியாவிலும் கூடச்சில சமயங்களில் பத்திரிகைத் தணிக்கை உள்ளதுதான் என்று ஜெனரல் சிங் தொடர்ந்து கூறிச் சென்றார். ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்ததோ இதுவரை நாம் என்றுமே கேள்விப்பட்டிராததாகும். 1987 அக்டோபருக்குப் பின் யாழ்ப்பாணத்தில் கவிந்த இந்தியத் தணிக்கை பற்றி ஜெனரல் சிங்கிற்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை.
1987 செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை விடுதலைப்புலிகள் மிகப்பெரிய கூட்டத்தை ஒழுங்கு செய்தனர். ஊர்வலங்கள் யாவும் யாழ் கோட்டையின் முன் ஒருங்கிணைந்தன. இக்கூட்டத்தில் இந்திய அமைதிப்படைக்கு மனுக்கள் சமர்ப்பிப்பதாக இருந்தது. கூட்டத்தினர் அடிப்படையில் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருந்தனரே தவிர சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை விளங்கிக் கொணி டவர்களாகத் தெரியவில்லை. முறைப்பாட்டு மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஒரு இந்திய அதிகாரி சடாரென்று இலங்கையின் மிகப்பெரிய புற உருவப்படமொன்றை எடுத்து வித்தார். "சிங்களக் குடியேற்றம் பற்றி நீங்கள் மிகக் கடுமையாக முறைப்பாடு செய்கிறீர்கள். சிங்களக் குடியேற்றம் எங்கு நடக்கிறது என்று சரியாகக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள், நாங்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறோம்" என்று அங்கு குழுமியிருந்தோரை நோக்கி அவர் கேட்டார். அங்கு சற்று குழப்பமும் திகைப்பும் நிலவியது. சிலர் தயக்கத்தோடு சில இடங்களைச் சுட்டிக் காட்டினார்கள். கூட்டத்தில் இருந்த பெணிகள் வெளிவெளியாய்த் தமது அபிப்பிராயங்களைக் தெரிவிப்பவர்களாய் இருந்தனர். ஒரு பெண்மணி உரத்த குரலில் இந்தியப் பிரதமரை "இந்திராவுக்குப் பிறந்த நாய் என்றும் குறிப்பிட்டுக் கத்தியிருக்கிறார். அந்த இந்திய அதிகாரி அங்கிருந்த மூத்த எஞ்சினியரிங் போர்மன் ஒருவரை நோக்கித் திரும்பி, "ஏன் நீங்கள் இவ்வளவு ஆத்திரப்பட்டுக் கொண்டு எங்களைத் தூற்றுகிறீர்கள்?" என்று கேட்டார். "சிலர் தங்கள் உணர்ச்சிகளை கடுமையாக வெளிப்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் நாங்கள் எப்போதுமே

Page 113
194
இந்தியாவின் மீது அபிமானங் கொண்டவர்கள். இந்தியாதான் எங்கள் தாய் என்று அவர் அந்த அதிகாரியைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்.
பின்னால் இடம்பெற்ற நிகழ்ச்சிகளின் பின்னணியில் இந்தியப் போர் வீரர்களின் உணர்ச்சிகளை இங்கு பிரதிபலிப்பது பொருத்தமாக இருக்கும். இந்திய இராணுவவீரர்களில் பெரும்பாலானோர் வறிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் இலங்கைக்கு வந்தபோது, இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கவே தாம் வந்திருக்கிறோம் என்பது பற்றி அவர்கள் சாடையாகத்தான் தெரிந்து கொணடிருந்தனர். பரிதாபகரமான முறையில் வறுமையில் உழலும் சனக்கூட்டத்தைத்தான் தாங்கள் சந்திக்கப் போவதாக அவர்கள் நினைத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டது அவர்கள் எதிர்பார்த்து வந்ததற்கு முழு நேர் மாறானதாக இருந்தது. தமிழர்களைப் பாதுகாப்பது என்பதில் அவர்கள் செய்து கொள்ளக்கூடியது என்று பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. ஒப்பந்தத்திற்குப்பின் தாங்கள் பிரச்சனைக்குள் மாட்டாது தவிர்த்துக் கொள்வதில் இலங்கை இராணுவம் மகிழ்ச்சி கொண்டிருந்தது. வறுமையை மட்டுமே ஏகமனதாக எதிர்பார்த்து வந்த இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் வசதி மிக்க மத்தியதர வகுப்பினரே கணிசமான தொகையில் இருப்பதைக் கண்ணுற்றனர். பெரும்பாலானவர்கள் நல்ல ஆடைகள் அணிந்து நல்ல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஒரு கிராமத்திற்கே ஒரு ரி.வி.செட் மட்டுமே உள்ள இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டை விட்டு ஒரு வீட்டில் ஒரு கலர் டெலிவிசன் இருந்தது. கடைகள் அனைத்திலும் நவீன ஜப்பான் சாமான்கள் குவிந்திருந்தன. பெரும்பாலான வீடுகள் தத்தமக்குரிய கிணறுகளைக் கொண்டிருந்தன. தண்ணிர் வசதிகளோடு கூடிய கழிவறைகள், மின்சார வசதி என்பது எங்கும் சாதாரணமாக இருந்தது. யாழ்ப்பாணத்தைப் பற்றி ஏன் இந்திய அரசாங்கம் இவ்வளவு அலட்டிக் கொண்டது என்பது குறித்து அவர்கள் ஆச்சரியமடைந்தனர். இந்தியா செய்திருந்த பிரச்சாரம் இந்திய ஜவான்களைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியிருக்க வேணடும். அவர்களின் திரித்தல் கதைகளில் ஒரு நாளைக்குப் புலிகள் தீய கொலைகாரச் சக்தியாகத் தெரிவார்கள் மறுநாளே அவர்களே தீர்க்கதரிசனம் மிகுந்த வீரர்களாகவும் தென்படுவார்கள்.
இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் முதலில் வந்திறங்கியதுமே இந்திய இராணுவவீரர்கள் தமது ஆச்சரியத்தைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். "என்ன செழிப்பான பூமி இது!" என்று தமிழ்நாட்டு ஜவான்கள் வியப்புற்றனர். "இந்த இடம் எங்களுக்குக் கேரளத்தைத்தர்ன் நினைவுக்குக் கொண்டு வருகிறது" என்று மலையாள ஜவான்கள் கூறிக் கொண்டனர். வட இந்தியாவிலிருந்து வந்தவர்களுக்கோ இது கிட்டதட்ட தென்னிந்தியாவை ஒத்த புதிய இடமாக ஒருவேளை தெரிந்திருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்குக் கடைகள் மட்டும் கிங்கப்பூர் மாதிரித் தெரிந்திருக்கிறது. முதல் சில வாரங்களில் இந்திய அமைதிப்படையினர் கஸ்தூரியார் வீதியில் இருந்த ஒரு கடைகளில் தான் முழுகிப் போயிருந்தார்கள். இராணுவ அதிகாரிகள் ஜப்பான் டிவிக்கள், வீடியோ ரெக்கோர்டர்கள் மற்றும் திரி இன் வன் செட்டுகள் ஆகியவற்றை

195
வாங்கினர். சாதாரண ஜவான்கள் ரேடியோ கெசற்றுகள், பேனை டோர்ச்சுகள், போல் - பொய்ண்ட் பேனைகள் ஆகியவற்றை வாங்கினர். சில வாரங்கள் செல்ல சில ஜவான்கள், "நாங்கள் உங்களைச் சிங்களவர்களிடமிருந்து பாதுகாக்கத்தான் வந்திருக்கிறோம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் இங்கு பார்ப்பதெல்லாம் நீங்கள் உங்களுக்குள் ஆளை ஆள் கொன்று கொண்டிருப்பதைத்தான். நாங்கள் எந்தச் சிங்களவரையும் காணவில்லையே என்று பொதுமக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். சிங்களக் குடியேற்றம் என்ற பிரச்சினையும் இந்திய இராணுவத்திற்குப் பெரிதாய் அர்த்தப்படவில்லை. அரசாங்கமே மேற்கொள்ளும் சிங்களக் குடியேற்றம் பற்றி மதிப்பிடுவது அவர்களுக்குக் கஷ்டமாய் இருந்திருக்கிறது. "உங்கள் பிரதேசத்தில் சிங்களவர்கள் இருந்தால் அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? எங்கள் இந்தியாவில் தமிழ்நாட்டுக்காரர்கள் மகாராஷ்திரத்தில் இருக்கிறார்கள், மகாராஷ்திராக்காரர்கள் டில்லியில் இருக்கிறார்கள், டில்லி மக்கள் கர்நாடகத்தில் என்று இப்படித்தான் இருக்கிறோம். இதில் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை" என்று அவர்கள் தெரிவித்தனர்.
திலீபனின் உண்ணாவிரதத்துடன் இந்தியப் போர்வீரர்களை நிந்தித்து, அவமரியாதைப்படுத்த விடுதலைப்புலிகள் மக்களைத் தூண்டிவிட்டிருந்தனர். பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த வீரர்களுக்கோ இங்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி அவர்களுக்கு ஒரு அக்கறையும் இருக்கவில்லை. அவர்களுக்கு ஒரு விளக்கமும் இல்லை. அவர்கள் இதைப்பற்றிக் கவலைப்படவும் இல்லை. அவர்களெல்லாரும் தங்களின் இயல்பான ஆதிதிரத்தினைக் கட்டுப்படுத்திக் கொணர்டு இந்த அவமரியாதைகளை எல்லாம் பல்லைக் கடித்துக் கொணிடு தாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆத்திரத்தை நாம் யோசித்துப் பார்க்க முடியும். "இங்கு வந்து இங்குள்ள மக்களைப் பாதுகாக்குமாறு அழைத்தார்கள். வந்து பார்த்தால் எங்கள் சனங்களை விட மிக வசதியாக நன்கு வாழ்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள் ஆளை ஆள் பிடித்துக் கொன்று கொண்டிருந்தனர். இப்போது என்னவென்றால் எங்கள் மீது கல்லெறிந்து எங்களை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஏனென்று யோசித்துப் பார்க்கத்தக்க ஒரு காரணமும் எங்களுக்குத் தெரியவில்லை. அதிலும் எங்களுடைய சாப்பாட்டையே தின்றுவிட்டு இப்படிச் செய்ய இவர்களுக்கு எவ்வளவு கொழுப்பிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.
இவ்வாறு புலிகளால் ஆத்திரமூட்டப்பட்டுத் துண்டிவிடப்பட்ட ஒரு இராணுவம் அதன் இராணுவ நடவடிக்கையில் இறங்கினால் அது எத்தகைய அனர்த்தத்தை ஏற்படுத்தும் என்பது எவருக்கும் விளங்கும். இப்படித் தமிழீழத்தை குமுறும் எரிமலையாக தாங்கள் மாற்றி விட்ட பிறகு தாங்கள் என்ன செய்வது என்ற பாணியில், பிரபாகரன் "நாங்கள் எங்களை இராணுவரீதியில் பாதுகாத்துக் கொள்ள இப்போது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம். பொதுமக்களுக்கு என்ன தீங்குகள் ஏற்பட்டாலும் இந்தியாதான் அதற்கு முழுப்பொறுப்பும் எடுக்க வேண்டும்" என்று கூறுவதைக் கண்டோம்.

Page 114
196
திலீபன் சாகப்போகிறார் என்பது தெளிவானதும் யாழ்ப்பாணத்தில் எரிமலை வெடிக்கப்போகும் சாத்தியக்கூறையும் நிராகரித்து விடமுடியாத நிலையில் இது எப்படி நிகழப்போகிறது என்பது பற்றிய ஆரூடங்கள் கூறப்பட்டுக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளில் உயர்மட்டத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படும் ஒருவர் யாழ் ஆஸ்பத்திரியில் வைத்துத் தெரிவித்த கருத்து சில வட்டாரங்களில் தீர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியதுடன் என்ன நடக்கப்போகிறதோ என்ற ஊகத்தையும் அச்சத்தையும் பெருமளவில் உருவாக்கியிருந்தது. திலீபன் மரணமுற்றால், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மாலை அணிவித்த அதிகாரிகளுக்கு நேரப்போகிற மோசமான விளைவுகளைப் பற்றி அவர் அங்கு சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தினரை வரவேற்றவர்களில் விடுதலைப்புலிகளை விட பல மூத்த வைத்தியர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், யாழ் பிரஜைகள் குழு உறுப்பினர்கள் என்று பலரும் இருந்தனர். அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை யாரும் லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. நிர்வாகத் துறையிலும் புலமைசார் துறையிலும் இருந்த உயர் குழாத்தினர் விடுதலைப்புலிகளுடன் தாங்கள் முன்னர் கொண்டிருந்த உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை என்றாலும் ஓரளவு பரவாயில்லை என்று இருந்த நிலையில் இப்போது என்ன நடக்குமோ என்று ஏங்கிக் கொண்டிருந்தனர்.
திலீபன் செப்டெம்பர் 26ம் திகதி சனிக்கிழமை, தனது உண்ணாவிரதத்தின் 12வது தினத்தன்று மரணமானார். அதே தினத்தன்று காலையில் பேச்சுவார்த்தைகள் பலனளித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. திலீபனின் சாவு எரிமலையாக வெடிக்காமல் போனதற்கு இது ஒருவேளை காரணமாக இருக்கக்கூடும். திலீபனின் நாடியைப் பிடித்து டாக்டர் பரிசோதித்தபோது நல்லூர் கந்தசாமி கோயிலில் திரண்டிருந்த கூட்டம் பரபரப்போடு ஆனால் அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொணடிருந்தது. டாக்டர் தலையசைத்ததையடுத்து திலீபனின் தந்தை விம்மி அழத் தொடங்கினார். கூடிநின்ற அனைவருமே அழத் தொடங்கி விட்டனர். முழுச்சனமும் அழுதது. நெருக்கடி நிலைமை தணிந்து கொணடிருந்தது. ஒரு கல் கூட எறியப்படவில்லை, ஒரு வாகனங் கூட எரிக்கப்படவில்லை. திலீபனின் உயிர் பிரிந்த அந்தக்கணம் உள்ளத்தை உருக்கும் வகையில் மகோன்னதமாகக் கெளரவிக்கப்பட்டது. அஹிம்சை மரணித்து விட்டது என்று கருதிக் கொண்டிருந்த பழைய காந்தியவாதிகள் இந்நிகழ்வால் பூரணமாக உருகிக் போய் விட்டார்கள். திலீபன் மற்ற எல்லாரையும் விட வித்தியாசமானவர் என்றும் அவர்கள் உறுதியாகத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தனர். வன்முறைக்கு அவர் என்றும் உடைமையாக இருந்ததில்லை என்றும் அவர்கள் கூறிக்கொண்டார்கள். திலீபனின் மரணச்செய்தியை மக்கள் பயபக்தியோடு ஏற்றுக்கொண்ட விதம் தமிழ் மக்கள் பழைய காந்திய அஹிம்சை வழிக்குத் திரும்பி விட்டார்கள் என்பதற்கான நம்பிக்கை அறிகுறியே என்றும் அவர்கள் நம்பினார்கள். திலீபனின் குடும்பத்தினரும் இதனையே உறுதியாக நம்பினார்கள். திலீபனுக்கு அஞ்சலிக்குறிப்பு எழுதுமாறு ஒரு வயதான காந்தியவாதியையே திலீபனின் குடும்பத்தவர்கள் கேட்டனர். அவரும் அதற்கு மகிழ்வோடு இசைந்து எழுதிக் கொடுத்தார், அந்த அஞசலியில் இந்த உணர்வுகள்

197
பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து முரண்படக்கூடிய ஒரு கருத்தைக் கூறுவது என்பது கூட அந்நிலையில் சங்கடமானதாக இருந்தது. திலீபனுடைய அனுபவம் தங்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமானதாக இல்லை என்று கருதியவர்கள் கூட மாறாக எதனையும் கூறவில்லை. திலீபனின் மரணம் தன்னிச்சையாக மேற்கொணிட நடவடிக்கையாகவோ அதியுயர் விசுவாசத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவோ அல்லது ஆராய முடியாத சிக்கலான பரிமாணங்கள் கொண்ட நடத்தையாகவோ, எதுவாக இருந்தாலும் அது பேராச்சரியத்திற்குரியதாகும். சித்திரவதை முகாம்களில், ஏன் போராளிகள் ஆளும் யாழ்ப்பாணத்திலேயே மிகப்பலர் மிக வதைபட்டு, மகத்தான வீரமரணங்களைத் தழுவிக் கொண்டுள்ளனர். ஆனால் பிரபல்யப்படுத்துவதில் விஷயம் இருக்கிறது. தென்னிலங்கைப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர்கள் கூட அவர்களுக்கு விடுதலைப்புலிகளோடு ஒத்துவராவிட்டாலும் இச்சாவினை அபிமானத்தோடு நோக்குவதைத் தவிர்த்துக்கொள்ள முடியவில்லை. 1987 அக்டோபர் 4ம் திகதி சண்டே டைம்ஸ் பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்க என்ற அரசியல் விமர்சகர் சிங்களமொழி இரட்டையர் எனப்படும் ஜயசூரிய, ராஜரட்ண ஆகியோரின் காலத்திலிருந்தே சிங்கள மொழி மேலாண்மைக்கான இலட்சியப் போராட்டத்தில் முன்நின்று தங்களின் கடைசித்துளி ரத்தத்தையும் அர்ப்பணிக்கத்தயாராய் இருப்பதாக என்றென்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மேலாதிக்கவாதிகளுடன் திலீபனை ஒப்பிட்டு உயர்வாக எழுதியிருந்தார்.
திலீபனின் இலட்சியத்துடனோ, அல்லது லொத்தர் டிக்கெட்டுகளை ஒருபக்கம் தங்கள் சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் என்றும் சமாதானத்தை நோக்கி நெடும் பயணம் என்றும் நம் பக்கத்தில் இதே போன்ற இலட்சியங்களை முன்னெடுப்பதாகக் கூறிக்கொள்பவர்களுடனோ நான் ஒத்துப் போகவில்லை. என்றாலும் தங்களின் சுயநலக்கோஷங்களின் வெற்றிக்காக யாரோ ஒருவன் பெற்ற பிள்ளை செத்துக் கொண்டிருப்பதைத் திருப்தியோடு மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, தவறாக வழி நடத்தப்பட்டிருந்தாலுங்கூட எத்துணை அரசியல் அர்ப்பணிப்போடு அவர் மெதுமெதுவாகச் செத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது எவர் மனதிலுமே பாதிப்பை ஏற்படுத்தாமலிருக்க முடியாது.
சிங்கள மக்கள், பொது மேடைகளில் நின்று தாங்கள் உயிரை அர்ப்பணிக்கப் போவதாக உரத்த குரல்களில் முழக்கமிடும் தங்கள் அரசியல்வாதிகளையும் ஏனைய சிங்கள இனநாயகர்களையும் திலீபன் தனது உணர்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த பயணத்தில் அரைவாசித்துாரம் வரையாவது போகத் தயாராக இருக்கிறீர்களா என்று கேட்கத் தொடங்கினால், பெரும்பான்மை என்பதைத் தேசம் என்பதோடு மட்டுமே விசித்திரமாக அடையாளப்படுத்தித் தம்மைத் தேசிய வீரர்களாக, சிங்கள மாவீரர்களின் அலங்கார அங்கிகளில் பீடுநடை போட்டுத்திரியும் அரசியல் வாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்வோரின் தொல்லையிலிருந்து நாங்கள் விடுபட்டுக் கொள்ள உதவும் என்பதைக் கருத்திற் கொள்ளுங்கள்" என லூஸியன் ராஜகருணாநாயக்க எழுதினார்:

Page 115
98
செப்டெம்பர் 28ம் திகதி திங்கட்கிழமை இலங்கை ஜனாதிபதியின் ஒப்புதலோடு, இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கை அறிவிக்கப்பட்டபோது தில்பனின் உண்ணாவிரதத்தின் போது முன்வைக்கப்பட்டிருந்த ஐந்து கோரிக்கைகள் பற்றி அதில் அவ்வளவாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இடைக்கால நிர்வாகசபையின் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 8லிருந்து 12க உயர்த்தப்பட்டு, விடுதலைப்புலிகள் பெரும்பான்மை வகிக்கும் வகையில் அவர்களின் பிரதிநிதித்துவமும் 3லிருந்து 7க அதிகரிக்கப்பட்டிருந்தது. இடைக்கால நிர்வாக சபையின் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் உட்பட பதினைந்து பெயர்களை எழுத்தில் தருவதற்கு விடுதலைப்புலிகள் சம்மதித்திருந்தனர். இந்தப் பெயர்களிலிருந்து ஜனாதிபதி தேவையானோரைத் தெரிவு செய்வார். மக்கள் திருப்தியுற்றனர்.
அவ்வாறாயின் திலீபன் செத்தது எதற்காக? இந்தக் கேள்விக்குத் திருப்திகரமான எந்தப்பதிலுமே கிடைக்கவில்லை. தமிழ் மக்களை முழுமையாக எடுத்து நோக்கினால் இந்த இறுதிப்பலாபலன்களை பெரும் வெற்றியாகக் கருதுவதற்கில்லை. முன்னர் பிரேரிக்கப்பட்டிருந்த எண்மர் கொணிட இடைக்கால நிர்வாக சபையிலும் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்திருப்பார்கள். சில முக்கிய பிரச்சினைகளில் இவர்களுக்கிடையில் ஒருமைப்பாடு நிலவவும் வாய்ப்பிருந்தது. புதிய உடன்பாட்டில் உள்ள வித்தியாசம் யாதெனில் அதிகாரபூர்வமான தேர்தல்கள் நடைபெறும் வரை விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட பெரும்பான்மை இடங்கள்தான். இதன்மூலம் விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக அடைந்து கொணர்ட சாதனை என்னவென்றால் தங்களை விட்டுவிட்டு யாரும் எதனையும் செய்ய முயற்சிகள் மேற்கொண்டால் நிலைமையை மோசமாக்கச் செய்யும் தங்கள் திறமையை அலட்சியப் படுத்துவதற்கிலி லை எனபதை வெளிப்படுத்தியமையேயாகும்.
திலீபன் திடீரென்று அஹிம்சையை நோக்கி மாறிவிட்டிருந்தார் என்று கூறமுடியாது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியற் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் புலிகளின் வன்முறை அரங்கின் முகியமான நபராவார். புலிகளுக்காக தனது அரிய வாழ்வினையே அர்ப்பணித்த விடுதலைப்புலி அவராவார். இந்த அற்ப சொற்பமான பலாபலன்களுக்காகத்தான் அவர் தெரிந்து கொண டே தனது வாழி கீ கையை அர்ப்பணிதிது கி கொணர்டிருந்தாரானால் அது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதுதான். யாழ்ப்பாணத்தில் அவநம்பிக்கை வாதம் என்பது நீணடகாலமாகவே தலைவிரித்தாடி வருகிறது. இங்கு யாரும் எதனையும் பெயரளவிலான பெறுமானம் என்று எடுத்துக் கொள்வதில்லை. போராளிக்குழுக்களில் இருந்த மிகப்பலர் அதிருப்தியுற்றவர்களாய் மாற்று எதுவுமே இல்லாத நிலையில் அப்படியே அள்ளுப்பட்டுக் கொண்டு தாங்கள் இருந்தாலென்ன, இறந்தாலென்ன என்ற மாதிரி விரக்தியில்தானிருந்தனர். தில்பனும் அத்தகையோரில் ஒருவர்தான் என்று கூறுபவர்களும் உள்ளனர். உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட போது திலீபன் சாக நேரிடலாம் என்று அவருக்குக் கூறப்படவில்லை என்று சில வட்டாரங்களில் நிலவும் அபிப்பிராயம் உண்மை போலவும் தோன்றுகிறது. கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் எதுவுமே வராது போலத் தெரிந்த

99 நிலையில், மக்களின் விருப்பங்களை மதித்தாவது பிரபாகரன் கெளரவத்தோடேயே
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றிருக்கலாம். திலீபன் பொதுமேடைக்கு வந்து உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்ததும் நிகழ்ச்சிகளின் மீது அவருக்கு அதிக கட்டுப்பாடுகள் எதனையுமே மேற்கொள்ள முடியவில்லை. அவர் எதனை விரும்பியிருந்தாலுங் கூட தீர்மானங்களை எடுப்பது மற்றவர்களாகவேயிருந்தார்கள்.
ஒருவர் இறந்துபோன பின் அவரின் உள்நோக்கங்கள் குறித்த அனுமானங்களில் இறங்குவது தர்மமாகாது. திலீபனினி மனதில் என்னவிருந்தாலும் சூழ்ந்திருந்தவர்களின் மனதில் வேரூன்றியிருந்த அவநம்பிக்கையைப் புறந்தள்ளி விடுவதற்கில்லை. திலீபனை நன்கு அறிந்திருந்தோர் அளிக்கும் சாட்சியங்களிலிருந்து அவர் தான் நம்பிய இலட்சியத்திற்காக இறுதிவரை தன்னை அர்ப்பணிக்கத் தயாரானவராகவே இருந்திருக்கிறார். அவர் உண்மையில் அஹிம்சைவாதியல்லர். மிக அணிமையில் 1987 ஜூலை 2ம் திகதி உரும்பிராய் சந்தியில் நடந்த மின்கம்பக்கொலையில் திலீபன் பங்கு கொண்டிருக்கிறார். உண்ணாவிரதத்தின் போது திலீபன் விடுதலைப்புலிகளின் சமயார்த்த நம்பிக்கைகளின் சிறந்த வெளிப்பாடாக அமைந்தார். வடமராட்சித் தாக்குதலின் போது திலீபன் குடற்பகுதியில் காயமுற்றிருந்தார். இதற்குப் பின் அவர் அதீத உணர்ச்சி வசப்படும் நிலையில் இருந்ததை அனைவரும் அறிவர்.
தான் உண்ணாவிரதம் இருப்பதற்குச் சற்று முன்னதாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றிருந்த திலீபன், "யானை வந்தாலென்ன, புலிகள் வந்தாலென்ன ஒப்பந்தம் அமுலாக்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்த ஆசிரியர் தலையங்கத்தின் மீது முறையிட்டார். யானை என்பது ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் சின்னமாகும். அன்றிரவு பத்திரிகை அலுவலகத்தில் கடமையிலிருந்த மூத்த அனுபவசாலி ஒருவர் திலீபனுக்குத் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்: "நீங்கள் இதனைப் பிழையாக விளங்கிக் கொண்டு விட்டீர்கள். உங்களுக்குத் தெரியும் உங்களின் பழைய கல்லூரியின் (யாழ் இந்துக்கல்லூரி) அதிபரான அவர் நியாயமானவரும் கல்லூரியின் பெரும் மதிப்புக்குரியவரும் என்று. நீங்கள் அவரோடு கதைத்தால் அவர் அதை உங்களுக்கு நன்கு விளங்கப்படுத்துவார். திலீபன் தரையைக் குனிந்து பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருக்கிறார். பின், "எங்களை அழித்து விடாதீர்கள்" என்று கூறிவிட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார். இந்த மோதலி ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு இனி இல்லை என்று ஆதரவு நல்கிய தமிழ் மக்கள் இப்போது அவர்களிடத்திலிருந்து தம்மை மிகவும் தள்ளி வைத்துக்கொண்டுள்ளனர் என்பதையும் அதனால் என்ன செய்வதென்றறியாத நிலையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று புலிகள் தம்மத்தியில் உணர்ந்திருந்ததையே வெளிப்படுத்துகிறது. 1986ன் நடுப்பகுதியில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமாதானம் பற்றிய கூட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் மேலாண்மையை நிர்த்தாட்சணியமாக வலியுறுத்தியவாறு தான் சொன்னதுதான் சரி என்று விடாப்பிடியாக இருந்த அந்த திலீபன் அல்ல 1987 செப்டம்பரில் நாம் காணும் திலீபன். அப்போது அவர் கூறியதெல்லாம் தமிழ் மக்களின் நலனின் அடிப்படையிலோ தமிழ் மக்களின் ஒருமைப்பாடு

Page 116
200
என்ற நியாயத்தின் அடிப்படையிலிருந்தோ வந்தவையல்ல, அதிகாரம் என்ற தர்க்க நியாயத்திலிருந்து வந்தவையாகும். அதீத உணர்ச்சிக்குள்ளாகும் அவரது புதிய நிலைமையில் புலிகளுக்குள் ஏற்பட்டிருந்த மாற்றம் அவரை எவ்வாறு பாதித்தது? யாழ் இந்துக் கல்லூரியில் திலீபனின் வகுப்பு நண்பரும் தங்களுக்கு சற்று மூத்தவரான யோகியை அறிந்தவருமான ஒரு பத்திரிகையாளர் பின்வருமாறு கூறுகிறார்: "எனக்குத் தெரிந்த காலத்திலிருந்து திலீபன் அர்ப்பணிப்புக் கூடியவராகவே இருந்திருக்கிறார். தமிழ்த் தீவிரவாத இலட்சியத்தில் அவர் உண்மையிலேயே பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்." விடுதலைப்புலிகள் மீது அத்துணை அபிமானங் கொணி டிராத இப்பத்திரிகையாளர் திலீபன் தானே விரும்பித்தான் சாவைத் தழுவிக் கொண்டாரா என்பதில் தனக்குச் சிறிது சந்தேகம் இருக்கிறது என்கிறார். லணர்டனில் யோகிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள உறவு மிகக் குறுகியதாகும். பிரபாகரன் தனது பெரும் நம்பிக்கைக்குரியவராகக் கருதிய அவரது துணையாளரான மறைந்த குகன் என்பவரின் மூத்த சகோதரர் என்பது தான் யோகியின் பெரும் தகுதியாக இருந்தது. யோகியைப் போலன்றி, திலீபன் கஷ்டமான காலங்களில் களத்தில் நின்று நீண்டகாலமாக விசுவாசமாகப் பணியாற்றியவராவார். திலீபனின் மீது நெறிபிறழாத காந்தியத்தியாகி என்ற படிமத்தையோ, கேள்விக்கிடமில்லாத விசுவாசமான தொண்டன் என்ற முத்திரையையோ பதிக்கும் போது அவர்கள் சாதாரண விருப்பு, வெறுப்புகள் கொண்ட ஒரு மனிதஜீவனுக்கு அநியாயம் இழைக்கிறார்கள் என்றே கூறவேண்டும். சாதாரண மக்கள் மத்தியில் திலீபனுக்குப் பெரும் அனுதாபம் இருந்தது, இவை அனைத்துமே பிரபாகரனுக்குப் பெருமை சேர்ப்பன என்று கூறுவதற்கில்லை. எனினும் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளின் வேகத்தில் திலீபன் விரைவிலேயே மறக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
93 மோதலை நோக்கி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இடைக்கால நிருவாக சபைக்கு 15 பேரின் பெயர்களைச் சமர்ப்பித்த பின்னர் அவர்களுள் ஜனாதிபதியின் தெரிவு பற்றி விடுதலைப்புலிகள் இயக்கம் தனது அதிருப்தியை வெளியிட்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் இடைக்கால நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு கொடுத்த மூவரில் திரு.என்.பத்மநாதனை முதற் தெரிவாக முன்வைத்தது. அவர் திருகோணமலை மேலதிக அரசாங்க அதிபராக இருந்தவர். ஆனால் ஜனாதிபதி இரண்டாவது தெரிவாகவிருந்த யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளரான சி.வி.கே.சிவஞானத்தை தெரிவுசெய்தார். அவரை விட தெரிவு செய்யப்பட்ட ஏனையவர்களுள், விடுதலைப்புலிகள் ஒரு கிழக்கு மாகாண முஸ்லிமையும், ஏனைய முக்கியமான ஏழுபேரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களையும் சமர்ப்பித்திருந்தபோதும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரும் இறுதித் தெரிவில் இருக்கவில்லை. திரு.சிவஞானம் நிர்ப்பந்தம் காரணமாக அப்பதவியைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. வடமாகாணத் தமிழர்களிடமிருந்து, கிழக்கு மாகாணத் தமிழரையும் முஸ்லிம்களையும் அன்னியப்படுத்தும் வகையில் தமது தெரிவை ஜனாதிபதி செய்துள்ளாரென

20
பெரும்பான்மையான தமிழருக்குத் தோன்றியது. மேலும் திரு.என்.பத்மநாதன் அனுபவமும் ஆற்றலும் மிக்க நிருவாக அதிகாரி. திரு.சிவஞானம் அரசாங்கத்தின் ஆணையாளர் என்ற வகையில், விடுதலைப்புலிகள் இயக்கம் ஆதிக்கம் பெற்ற யாழ்ப்பாணத்தில் தமக்கு விதிக்கப்பட்ட அரசாங்கக் கடமைகளைச் செய்வதுதான் அவரின் முக்கியமான சாதனையாகும். அவர் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்றவகையில் செயற்பட்டுக்கொள்வார். இதற்கு எந்தவொரு குறிப்பான கோட்பாட்டு நோக்கம் இல்லாத போதும், அவர் தமது சொந்த விடயங்கள் சிலவற்றை மனதில் கொண்டிருந்தார். தான் முகம் கொடுக்க வேண்டிய பலம் மிக்க குழுக்களின் குறிக்கோள்களுடன் தனது சொந்த அபிலாஷைகள் இணங்கிப் போகின்ற விடயங்களில் அவர் தீர்க்கமாக செயற்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கம் அவரது நியமனத்தை நோக்கிய விதம், அநேகருக்கு அது பொதுப் பிரமுகர்களுடன் கொண்டிருந்த உறவின் தன்மையை வெளிக்காட்டுவதாயிருந்தது.
என்பத்மநாதன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 45 மாதங்கள் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் 1987ம் ஆண்டு செப்ரம்பர் 2ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறிலங்கா நிருவாக சேவையில் முதலாந்தரத்தைச் சேர்ந்த அரசாங்க அலுவலர். அவர் திருகோணமலையில் அதே சேவையில் இரண்டாந்தரத்தைச் சோந்த சிங்கள அலுவலரின் கீழ் மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார். அவர் 1983ம் ஆண்டு” டிசெம்பரில் கைது செய்யப்பட்டாராயினும் இரண்டாண்டுகளுக்கு மேலான காலத்தின் பின்னரே அவர்மீது சுமத்திய குற்றச்சாட்டு அவருக்கு அறிவிக்கப்பட்டது. அக்குற்றச்சாட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் புதுமையானது, அது எவ்வகையான குற்றவியல் சட்டத்துக்கும் உட்படாதது. மட்டக்களப்புச் சிறையிலிருந்து தப்பிய சில தமிழ் சிறைக் கைதிகளுக்கு அவர் உதவி செய்தாரெனக் கருதப்பட்டதே அவர் மீது சுமத்தப்பட்ட குற்றமாகும். பத்மநாதனுக்குச் சிலரைத் தெரியுமென்றும், அதற்காக அவர்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது. பத்மநாதன் விசாரணைக்காக அழைக்கப்படவில்லை. அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் சட்டப்படியான 18 மாதகால எல்லைக்கு மேலாக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தாம் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதில்லையென பத்மநாதன் உறுதியாக இருந்தார். அவர் சிறையிலிருந்த போது, சிறைக்கைதிகளின் நலனுக்காக சட்டம் பற்றிக்கற்று, தாமே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்தார். ஏனெனில், சிறைக்கைதிகள் உண்மையில் ஒன்றுந் தெரியாத அப்பாவிகள் அவர்கள் சிறையில் கிடந்து வதைக்கப்பட்டார்கள், ஏனெனில் சிறை நிருவாக முறைமை விகாரமாக இயங்கியது. அநேக சிறைக்கைதிகளிடம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பணம் இருக்கவில்லை. அரசாங்கம் தம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை கைவிட்டு தம்மை விடுதலை செய்யவேண்டுமென்பதே அவரது உறுதிப்பாடாகும். "அவர் நுண்மதி மிக்கவர், உண்மையான தமிழன்' என்று அவரோடு கடமையாற்றிய மூத்த நிருவாக சேவை அதிகாரி ஒருவர் கூறினார்:

Page 117
202
ஜனாதிபதி அத்தகைய ஒருவரை இடைக்கால நிருவாக சபையின் தலைவராக நியமிப்பதற்கு விரும்பாதது புரிந்து கொள்ளத் தக்கது. இதே ஜனாதிபதி, பல்கலைக்கழகங்களில் தமக்கு விரும்பாத துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு நியமனத்துக்காக ஒரு பெயர்ப்பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொணடமையும் சுவாரஸ்யமானதே. விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு ஜனாதிபதிக்கு தெரிவுசெய்யும் அதிகாரம் என்பது பற்றிய விடயம் விளக்கப்பட்டு அவர்கள் தமது சம்மதத்தை எழுத்து மூலம் அளித்திருப்பதால், இப்பொழுது அவர்கள் முறையிடுவது தவறென இந்தியத்தூதுவர் கருதினார். தமிழ் மக்கள் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்தனர். ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் முறையிடுவதற்கு எவ்வித காரணமும் இருக்கவில்லை. சட்ட விடயங்களில் அறிவில்லாத போராளிகளைக் கொண்ட முரட்டுக்குழு மீது சவாரி விட திருதீக்ஷித் முயற்சிக்கின்றாரெனப் பலர் குற்றஞ்சுமத்தினர். விடுதலைப்புலிகள் இயக்கம் தேவைப்பட்டபோதெல்லாம் எல்லாச் சட்ட ஆலோசனைகளையும் பெறும் வாய்ப்பைப் பெற்றிருந்ததால் அந்தக் குற்றச்சாட்டில் அர்த்தமில்லை. அவர்கள் இரு சட்டத்தரணிகளின் சேவைகளைப் பெற்றிருந்தனர். அவர்களுள் ஒருவர் தகுதி வாய்நீத வருமி அனுபவம் மிக கவருமென ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அனிரண் பாலசிங்கம் பிரித்தானியாவில் தத்துவத்துறையில் ஒரு ஆசிரிய பதவியில் இருந்தவர், யோகி பித்தானியாவில் மாணவனாக இருந்தவர். விடுதலைப்புலிகள் இயக்கம் எழுத்துமூலம் சமர்ப்பித்தவற்றின் விளைவுகளை தங்களுக்குள் ஆராய்ந்து அறிய முடியாமல் இருந்தமை நம்ப முடியாத விடயம். திருதீக்ஷித் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பெரும்பாலும் பணி பான முறையில் நடந்து கொள்ளாமலிருக்கலாம். அவர்களைத் தாம் கையாள முடியுமென அவர் அளவுக்கு மீறிய நம்பிக்கையுடன் இருந்திருக்கலாம். அல்லது சிலவேளை அவர்களை அலட்சியப்படுத்துவதன் மூலம் தமக்கு நிச்சயமற்ற அம்சங்களை மறைத்திருக்கலாம். திருதீக்ஷித் கொழும்பில் வாழும் உயர்குழாத்துடன் அவர்களது மொழியில் பேசி அவர்களது சூழ்நிலையில் வாழும்போது தமது வீட்டில் இருப்பதாக உணர்வது இயற்கையானது. தீக்ஷித் தூதுவர் பதவியிலிருந்து ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் ஆளுநராக மாறியபோதும், விடுதலைப்புலிகள் அவர்களைப் புரிந்து கொள்வதிலும் அவர்களை வெற்றி கொள்வதிலும் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. சிறை பிடிக்கப்பட்ட 17 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரை கொழும்புக்கு அனுப்புவதற்கு எதிராக ஜெயவர்த்தன அரசாங்கத்துக்கு அறிவுரை கூறியதலிருந்து அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கியிருப்பதை ஓரளவு காணலாம்.
இடைக்கால நிருவாகசபைக்கு உறுப்பினரை நியமிப்பதில் திருதீக்ஷித் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் இரகசியமாகக் கூட்டுச் சேர்ந்திருந்தார் என்று அவரைக் குற்றஞ்சாட்டுவது, எந்த வகையிலும் நேர்மையானதன்று. எல்லாவற்றுக்கும் மேலாக, பிரச்சினைகள் ஏற்படுவதை அக்கறையுடன் தவிர்க்க விரும்பிய அவர் பெரும்பாலும் ஒரு இணக்கப்படுத்துபவரின் பணியைப் புரிந்துள்ளார். ஏற்கனவே, இந்தியாவுக்கும் சிறிலங்கா ஜனாதிபதிக்கும் இடையில்

203
இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர் பற்றியும் அவர்கள் எவ்வாறு நியமிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் ஒரு உடன்படிக்கை இருந்தது. திருதீக்ஷித், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குப் பெரும்பான்மை ஏற்படும் வகையில் எணணிக்கையை மாற்றி அமைக்கச் சம்மதிக்குமாறு ஜனாதிபதியைக் கேட்டிருக்க வேண்டும். ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிக்கும் முறையினை சில நிபந்தனைகளுடன் அனுமதித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் ஜனாதிபதியின் தெரிவை எதிர்த்தபோது, ஜனாதிபதி கிழக்கு மாகாணத்திலிருந்து, இடைக்கால நிருவாகச் சபைத் தலைவரைத் தெரிவு செய்யும் வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்து மூவரின் பெயர்களைச் சமர்ப்பிப்பதற்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பின்னர் சம்மதம் அளித்துள்ளாரென நம்பகமாகத் தெரியவந்தது. எவ்வாறாயினும் ஜனாதிபதி இதனிலும் மேலாகச் சென்றிருக்க முடியும். அவர் விடுதலைப்புலிகள் இயக்கம் விரும்பிய அபேட்சகர்களை ஏற்றுக்கொள்வதினால் ள்தையும் இழக்கப்போவதில்லை.
ஜெயவர்த்தனவினால் செய்யப்பட்ட அத்தகைய விடுபாடுகள் இன்றைய இக்கட்டான நிலையை உருவாக்குவதற்குத் துணை செய்யும் வகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை முற்று முழுதாகக் கையாண்ட இந்தியாவின் கோட்பாடற்ற இயல்பிலிருந்து அதை விடுவிப்பதிலும் வெகுதூரம் வேறுபட்டது. எவ்வாறாயினும் இந்தியா அவநம்பிக்கையான வகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தியதில் திருதீக்ஷித்திற்கும் பொறுப்புண்டு. அதன் பின்னர் ஓர் எதிர்பாராத பிரச்சினை வந்தது, அத்தகைய கோட்பாடற்ற நடத்தைகளில் அது பொதுவானது. விடுதலைப்புலிகள் இயக்கம் காலப்போக்கில் பிந்திரன்வாலேயும் பஞ்சாப்பும் போல தனக்குத்தானே ஒரு சுயாதீனத்தை பெற்றுக்கொண்டது. உறவுகள் ஏற்கனவே சந்தேகங்கள், பரஸ்பர அவநம்பிக்கையினால் குழப்பமானதாகி விட்டது. சிறிலங்கா அரசாங்கம் பிரச்சினைக்குரிய தீர்வுகளுடன் ஒத்துப் போக நினைத்தபோது, விடுதலைப் புலிகளுக்குக கொடுத்தவைகள் அதற்குப் போதுமானதாயிருக்கவில்லை. இந்தியா இந்தப் பிரச்சினையைத் திறமையாகக் கையாள்வதில் தகுதியற்றதாகத் தோன்றியது. இந்தியாவால் வாய்மூலம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றி விடுதலைப்புலிகள் கோரியவைகளுக்கு, பலர் அதிக முக்கியத்துவம் அளித்தனர். விடுதலைப்புலிகள் இயக்கம் சில ஆயுதங்களைக் கையளிப்பதை அடையாளமாகச் செய்துவிட்டு, தனது ஆயுதங்களை வைத்திருக்கலாம் என ராஜீவ் காந்தி தமக்கு வாக்குறுதி அளித்ததாகப் பிரபாகரன் கூறினாரெனக் கூறப்பட்டது. அதிகமாகப் பேசப்பட்ட இன்னொரு விடயம் தமிழ்நாட்டு அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனின் ஈடுபாடு பற்றியது. விடுதலைப் புலிகள் இயக்கம் 15 பேரின் பெயர்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தாலும், இடைக்கால நிருவாக சபைக்குரிய ஏழு இடங்களுக்கு அப்பட்டியலில் முதலில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என அவர் வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. பணிடிருட்டி இராமச்சந்திரன் பற்றிய இரண்டாவது விடயம் தொடர்பாக முன்னரே விவாதிக்கப்பட்டது. முதலாவது விடயத்தைப் பொறுத்த வரையில், அத்தகைய வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தாலும், கருதிய இறுதி விளைவு தெளிவானது.

Page 118
204 எந்தவொரு ஆயுதப் போராட்டக் குழுவும் இறுதியில், விட்டு வைக்கப்படமாட்டாது. விடுதலைப் புலிகள் இயக்கம் இது பற்றித் தவறாகப் புரிந்து கொண்டிருக்கவில்லை. இந்திய அரசாங்கத்துக்கு இன்றைய கெளரவம் அளிக்கப்பட்டபோதும், ராஜீவ் காந்தியும், பண்ருட்டி இராமச்சந்திரனும் அத்தகைய வாக்குறுதிகளைத் தங்கள் எல்லைகளை மீறி அளித்திருக்க முடியாது. இந்திய அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குமிடையே இருதரப்பும் ஒத்துக்கொண்ட பிரேரணைகளைக் கொண்ட ஒர் இரகசிய உடன்பாடு பற்றிய அறிக்கைகள் 1988 ஏப்ரல் 3ம் திகதி சன்டே லண்டன் ஒப்சேவரில் வெளிவந்தது.
இந்த அறிக்கை டைறென்பாகட் என்பவரால் கொழும்பிலிருந்து இந்தியத் தூதுவர் திருதீக்ஷித்தை மேற்கோள்காட்டி அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், ஒரு மாதத்துக்கு 200,000 ஸ்ரேலிங் பவுணி (ரூபா 5 மில்லியன்) நிதி விடுதலைப்புலிகளுக்கு அளிக்கப்படும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சாதாரண வாழ்க்கை ஏற்படும் வரை விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரைப் பராமரிப்பதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாயிருந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாடு 43 மில்லியன் ஸ்ரேலிங் பவுணி நிதியை இந்தியாவின் பொருளாதார உதவியாகப் பெறுவதாயிருந்தது. மாதாந்தக் கொடுப்பனவு, 1987 ஆகஸ்ட் மாதத்துக்கு வழங்கப்பட்டதென திருதீக்ஷித் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கம் புதிய நிதி ஏற்பாடுகள் பற்றி இரகசியப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடங்கியதாகக் கூறப்பட்டது. 1987 ஜுலை மாத இறுதியில் பிரபாகரனுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையில் ஆரம்ப உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
சென்னையிலே விடுதலைப் புலிகள் இயக்கப் பேச்சாளர் ஒருவர், இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதென உறுதியளித்ததற்காக அளிக்கப்பட்ட அநேக உத்தர வாதங்களில், இக்கொடுப்பனவு ஒருபகுதியே எனக்கூறினாரென அதே அறிக்கை மேற்கோள் காட்டியது. உடன்பாட்டில் அடங்கிய விடயங்கள் எனக் கூறப்படுவன பின்வருமாறு:
இடைக்கால நிருவாக சபையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குப் பெரும்பான்மை, விடுதலைப்புலிகள் இயக்கம் தாம் ஆதிக்கம் செலுத்தப் போகின்ற இடைக்கால நிருவாகசபை மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற புனருத்தாரண வேலைகளுக்காக ஒரு மில்லியன் ரூபாப் பொருளாதார உதவி, இடைக்கால நிருவாக சபை அமைக்கப்பட்டதும் ஒரு தமிழ்ப் பொலிஸ்படையை உருவாக்க உதவிசெய்தல் என்று இந்தியாவுடன் செய்து கொண்ட இந்த உடன்பாடு கனவான் ஒப்பந்தமென்று விடுதலைப்புலிகள் இயக்கப் பேச்சாளர் வகைப்படுத்திக்காட்டினார். பண்பாளர்கள் தமது பண உறவாடல்களில் ஈடுபட்டிருக்கும்போது நூற்றுக்கணக்கானவர்கள் ஏன் இறக்க வேண்டும்? உயர்பீடங்களில் பெருநிதி பற்றிப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தீங்கற்றதான, சிலவேளைகளில் அதே இந்தியாவின் இராணுவத்துடன் நிர்ப்பந்தமான கொடுக்கல் வாங்கல் விடயங்களுக்காக சாதாரண பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். சிறு தொகைப்

205
பணத்துக்காக தக்காளி போன்றவற்றை இந்தியப் படை வீரருக்கு விற்றவர்கள் மட்டும் ஏன் பயமுறுத்தல் அறிவுறுத்தல்களைப் பெற்றார்கள் என்பது பற்றி எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த நிதிவிடயம் தொடர்பான அறிக்கையானது. பொதுவான நடைமுறையில் நேரிடக் கூடிய ஒன்றையே சுட்டிக்காட்டுகிறது. "றொயிட்டர் செய்தியும் 'டைம்ஸ் ஒப் இந்தியாவும் அதை உறுதிப்படுத்தின. தெற்கிலுள்ள பத்திரிகைகள் காட்ட முனைவது போலி கபடமான விடயமாக இல்லாதிருக்கலாம். ஒப்பந்தத்திற்கு விடுதலைப்புலிகள் இயக்கம் அளிக்கின்ற சம்மதத்தைப் பேணுகின்ற இந்தியாவின் உறுதிமொழிக்கு இது முரணானதன்று. விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழிக்கின்ற ஒரே குறிக்கோளுடன் இந்தியா செயற்படுவதென்றும் கூற முடியாது. இந்தியா நிச்சயமாகப் பல தெரிவுகளை முன்வைத்துள்ளது. போரின் பின்னரும் இந்தியா விடுதலைப்புலிகள் இயக் கதி தின சமீ மதத்தைப் பெறுவதற்காக அவர்களை அணுகிக்கொண்டேயிருந்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தனது பழைய தவறுகளை ஏற்றுக்கொண்டு, மக்கள் மத்தியில் உண்மையான ஜனநாயக அடித்தளத்தைத் தேடியிருந்தால் இந்தியா அதை அந்த வழியில் விடுவது புத்திசாதுரியமானதெனக் கருதியிருக்கும். விடுதலைப்புலிகள் இயக்கம், மக்கள் மீது நம்பிக்கை வைக்காது, இரகசிய வழியில் தனது பாதுகாப்பைத் தேடியதும் ஓர் அன்னிய சக்தியுடன் ஜனநாயக விரோத முறையில் தொடர்பு வைத்துக் கொண்டதும், அதன் பலவீனத்தின் அறிகுறியாகும். இதைத் தொடர்ந்து நடந்தவைகள் மன்னிக்கப்பட முடியாதவைகளாகும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காகப் பரிந்து பேசுவோர் ஒக்ரோபர் 5ம் திகதி நாடுகடத்தலை அடுத்து முன்பின்னாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளைத் தேடிச் சேர்த்து அவை, இந்தியாவினதும் சிறிலங்காவினதும் நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாக நடந்த துன்பியல் நாடகத்தின் திரும்புமுனைகள் எனக் காட்ட விரும்பினர். அரசியல் கதாபாத்திரங்களின் தோல்விகளை இணைத்தே அத்துன்பியல் நாடகத்தின் இழை நெசவு செய்யப்பட்டது. பொய்பேசுதல், ஏமாற்று, படுகொலை ஆகியன அதன் பல்வேறு நூல்களாகும். தனித்தனி நிகழ்வுகளைத் திருப்பு முனைகளாகக் காட்டுவது வெறும்
Lബ്ഥ.
இந்திய அரசாங்கமும் சிறிலங்க அரசாங்கமும் குற்றவாளிகள் என்பது முடிந்த முடிவு. இந்த இரு குற்றவாளிகளின் தவறுகளை காரணம் கூறி, தள்ளிவிடும் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் அறிந்து கொண்டே தீயில் எரிவதற்கு அரசியலை உறுதியாகப் பிடித்து தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்க அவாவுறும் எவரும் மிகக் கடுமையான முறையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டியவர்களாகும். மறுபுறம், விடுதலைப்புலிகள் இயக்கம் மிருகத்தனமான இன்றைய உலகின் உற்பத்தியெனவும் நாம் காரணம்கூறலாம். இந்த உலகிலே பெருந்தலைவர்களும், அவர்களது கல்வி, முதிர்ச்சி ஆகியவை மூலம் நன்கு அறிந்த கொள்ளப்பட்ட மனிதர்களும், சட்டபூர்வமான செயல்களாக ஏமாற்றையும், பாமர மக்களைக் கொலை செய்வதையும்

Page 119
206
வழமையாகப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா நிக்கரகுவாவில் கென்றாஸ் கிளர்ச்சியாளர்களைப் பயன்படுத்தியலும், சோவியத் ருஷியா எரித்திரியாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளிலும் இதை நாம் காண முடியும். ஜனாதிபதி ரீகன் தொலைவிலுள்ள சிஐஏ அலுவலர்களுக்கும் தமது பிரதிநிதிகளுக்கும் கொலை செய்யவும், அரசியற்படுகொலைகளைச் செய்யவும் அதிகாரம் வழங்கியதனால் தன் சொந்த முடிவுகளை எடுக்கும் ஒருகொலையாளி அல்லது கொள்ளைக்காரனிலும் குறைந்த கொலையாளியாக அவரை அது ஆக்கமாட்டாது. வெளிநாட்டுக்காரருடன் விசேடமாகத் தமது ஏஜன்டுக்கள் மூலம் உறவுகள் வைத்துக்கொள்ளும் போது, சட்டமுறையிலும், கோட்பாட்டு ரீதியாகவும் எவ்வித அக்கறையையும் காட்டாத அநேக நாடுகள் பற்றியும் இதையே கூறமுடியும். இந்தியாவின் உளவுத் தாபனமான 'றோ (RAW) தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களும் பார்க்க தார்மீக மேலாண்மை கொண்டிருந்ததாக வைத்திருப்பதாக உரிமை கோர முடியாது. உலகத் தலைவர்கள் பயங்கரவாதத்தைத் தமக்குப் பொருத்தமான நேரமெல்லாம் கையாளும் வரை பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டமும் பயனற்றதாகவேயிருக்கும். தவிஐ-மு. தமிழர் உயர்குழாம், சிறிலங்கா அரசாங்கம், இந்திய அதிகாரிகள் ஆகியோருடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆற்றல் மிக்க இளைஞர்கள் உறவு கொண்டபோது அவர்களுக்குக் கிடைத்த அவநம்பிக்கையும், திட்டமிட்ட ஏமாற்றுகையும் அவர்களை இன்றைய வடிவத்தில் உருவாக்கி விட்டுள்ளன. மற்றவர்களை வெற்றிகொள்ளும் வழி, இதே செயல்களை அவர்களிலும் சிறப்பாகக் கையாள்வதேயென அவர்கள் முடிவு செய்தனர். தமிழ்மக்கள், சரியானவர்கள் தமது தலைவர்களாக வருவதை உறுதிப்படுத்தும் வகையில் விடுதலை இயக்கங்கள் மீது நெறிப்படுத்தும் செல்வாக்கைச் செலுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யத்தவறியதால் அவர்கள் தம்மைத்தாமே இழந்து திக்குத் திசை தெரியாமல் நிற்கிறார்கள்.
இடைக்கால நிருவாகசபை பற்றிய நிச்சயமற்ற தன்மை சில நாட்கள் நீடித்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் இன்றைய ஏற்பாடுகளை மேலும் முன்னேற்றுவதற்கு முதற்படியாக அவற்றை ஏற்றுக் கொண்டு இதற்கொரு தீர்வைக் காணுமெனப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட 17 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் விவகாரமும், தமிழ் ஈழம் இறுதியில் எரியும் எரிமலையாக மாறுமென்ற அவர்களது முடிவும் வெளித்தெரியலாயின.
9.4 ஒரு யுகத்தின் முடிவு
சிறை பிடிக்கப்பட்டிருந்த பன்னிரண்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் தற்கொலை பற்றிய தகவல்கள் தனித்துவமாகக் கைய்ாளப்பட்டுள்ளது. அவர்களுள் குமரப்பாவும் புலேந்திரனும் இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எல்லாச் சாத்தியக் கூறுகளும் இருந்தன. சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் சையனைட்டை அருந்த

207
வேண்டுமென்ற முடிவு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் தலைமையால் எடுக்கப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. இது எங்களுக்கு இருகேள்விகளை எழுப்புகின்றன. உயர் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெற்ற குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் மிக எளிதாகத் தமது வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அவர்களைத் தூண்டிய காரணமென்ன என்பது முதலாவது கேள்வியாகும். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரிடையே உள்ள நட்புறவின் உண்மையான கருத்தென்ன? விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு ஜனநாயக இயக்கமன்று. அதன் உறுப்பினர்கள் அவர்களது தலைவர் திருபிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்போம் என்று சத்தியப்பிரமாணம் செய்தவர்கள். அந்த இயக்கத்தின் இந்த அம்சம் காலப்போக்கில் கழித்தொதுக்கும் செயன் முறை மூலம் பலப்படுத்தப்பட்டது. ஜனநாயக உணர்வுள்ளவர்கள் ஒதுங்கிக் கொண்டதுடன், அநேகர் இயக்கத்தை விட்டும் விலகினர். அந்த இயக்கத்தின் பழைய உறுப்பினர் அனைவரும் எவ்வியக்கத்திலும் சேராது மெளனமாக இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவ்வியக்கத்துடன் இருந்தவர்கள் அதை எதிர்க்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த இயக்கத்தில் தலைமைப் பதவி வகிப்பவர்கள் இயக்கத்தின் தலைவருக்கு கீழ்ப்படிவுள்ளவர்களாக இருப்பார்கள் என்று சத்தியப்பிரமாணம் செய்யவெணிடுமென எதிர்பார்க்கப்பட்டார்கள். காலப் போக்கிலே அவ்வியக்கத்தின் செயற்பாடுகள் சமயநம்பிக்கை வழிபாட்டு வடிவத்தைப் பெற்றன. ஒவ்வொரு மனிதனும் மற்றவனின் உளவாளி என்று கூறப்படும் வகையிலான ஒரு பொலிஸி அமைப்பு முறை மூலம் இயக்கத்துக்குள் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டது. குமரப்பாவின் கீழ்ப்படிவு சோதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்புத் தலைவர் 'கடவுள்' 'ரெலோவைத் தாக்க மறுத்தபோது, அவ்வியக்கம் குமரப்பாவிலும் பொட்டுவிலும் தங்கியிருக்க வேணடியதாயிற்று. கீழிப்படியாமைக்கு, வேறு வழியில்லாவிட்டால், ஒருவருக்குக் கொடுக்கப்படுகின்ற ஆகக் குறைந்த தணடனை, அவரை ஓய்வு எடுக்கவிடுவதாகும். அநேகருக்கு இது மரணத்திலும் மோசமானதாக இருந்தது. பிரபாகரனைப் பொருட்படுத்தாத அளவுக்கு வந்தவர் கிட்டு. அவரது தலைவிதி அனுமானத்துக்குரிய விடயமாக நீண்ட காலமிருக்கும். இது குமரப்பா, புலேந்திரன், திலீபன் ஆகியோரின் தலைவிதி பற்றிச் சிறிது உணர்த்தியிருக்கலாம். மனித இயற்கை மற்றும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் போன்ற ஓர் இயக்கத்தின் வழமைக்கு மாறான தேவைகள் ஆகியவற்றைக் கொண்டு நோக்கும்போது இவ்வியக்கத்தின் தண்டனையும் வெகுமதியும் சேர்ந்த பொலிஸ் அமைப்பு முறையின் முக்கியத்துவத்தைக் குறைவாக மதிப்பிட முடியாது.
இவ்வியக்கத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரினதும் தனிமனித நடத்தைக்கும் குழு நடத்தைக்குமிடையே பெரும் வேறுபாடு உண்டு. அக்டோபரில் இந்திய இராணுவத்தின் தாக்குதல் காலத்தில் தமது குடும்பங்களிலிருந்து தனித்துப்போன விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை

Page 120
208
ஏற்றுக்கொண்டு, சரணடைய மிகத் தயாராக இருந்தார்கள். "விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் அநேகர், யாழ்ப்பாணக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் ஆயுதங்களைக் கொடுத்து விட்டு தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து கொணடிருந்தார்கள். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அங்குமிங்குமாகத் தனித்தனியான பிரதேசங்களிலே தலைமையுடன் தொடர்பும் அற்று, என்ன செய்வதென்றறியாது அலைந்து கொண்டிருந்தார்கள்" என்று சமூக சேவையில் ஈடுபட்டிருந்த மதகுரு ஒருவர் கூறினார். யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேசப் பொறுப்பாளர் தான் சரணடைய விரும்புவதைச் சூசகமாக வெளியிட்டார். பின்னர் அவர் தனது குடும்பத்தின் மீது கடுமையான தணடனை விதிக்கப்படுமெனப் பயந்து, தனது குழுவைச் சேர்ந்த சிலருடன் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி விட்டதாக அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சிப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினரான பரதனும் உறுதிமிக்கவரெனக் கருதப்பட்டவர். இந்திய இராணுவம் நல்லூருக்குள் முன்னேறுவதற்குச் சற்று முன்னர், கந்தசாமி கோவிற் பகுதியில் தனியாக நடமாடியது அவதானிக்கப்பட்டது. அவர் வீடுவீடாகச் சென்றும், சிலவேளைகளில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இடைமறித்தும் 200CC மோட்டார் சைக்கிள் ஒன்றைத் தனக்கு இரவலாகத் தருமாறு கெஞ்சிக்கொண்டிருந்தார். ஒரு குழுவுக்கு ஒரு வாகனம் தேவைப்பட்டால், அதை உத்தரவிட்டுப் பலவந்தமாகப் பறித்திருக்க முடியும். பரதன் தான் ஒரு வாகனத்தைப் பெற முயற்சிப்பதை வெளிக்காட்ட விரும்பவில்லை என்பதே உண்மையாகும்.
இந்திய இராணுவம் முன்னேறிக் கொண்டிருந்த பொழுது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரியாலைப் பொறுப்பாளர் மலரவன், கந்தசாமி கோவில் முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குப் பின்னால் தனது தாய்க்கும் தகப்பனுக்குமிடையில் ஒரு குழந்தையைப்போல் அமர்ந்திருந்ததைப் பலர் கண்டார்கள். 1986ம் ஆண்டு நவம்பரில், அரியாலை முகாமில் வைத்து எட்வர்ட் என்னும் குடிமகனை அடித்துக் கொன்றதன் மூலம் அவர் அபகீர்த்தி பெற்றவர். மலரவனின் பெற்றோர் அவரோடு இருந்திருக்காவிட்டால், அவரது தலைவிதி வேறு விதமாக அமைந்திருக்குமென்பது மிக நம்பத்தகுந்த விடயம். வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குக் கொணிடு செல்லப்பட்ட பொழுது அவர் தடுத்து வைக்கப்பட்டாரெனப் பின்னர் கூறப்பட்டது. அதிருப்தி அடைந்தவர்கள் வெளிநாடு செல்வது பற்றி ஆயுதப் போராளிகளால் தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருந்ததால் மீண்டும் அந்த வாய்ப்புக் கடினமானது. அநேக ஆயுதப் போராளிகள் அதிருப்தி அடைந்ததால், ஒருவருக்கு வெளிநாடு செல்ல ஆகக்கூடியது ஒரு இலட்சம் ரூபா வீதம் 2000 பேருக்கு நிதி வழங்க பாதுகாப்புக்காக பாதீட்டில் ஒதுக்கப்பட்ட 1500 கோடி ரூபாவில் 20 கோடி மாத்திரமே அரசாங்கத்துக்குச் செலவாகும். இது அரசாங்கத்தின் கற்பனை வறுமையின் ஒரு சிறு அம்சத்தை வெளிப்படுத்துகிறது.

209
நியாயமற்ற பொதுமைப்படுத்தல்களாக இல்லாது எல்லா இயக்கங்களையும் போல எந்தவொரு இயக்கத்திலும் சேர்பவர்களின் ஊக்கல்கள் வெவ்வேறானவை என்பதை உணர்தல் வேணடும். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர்களுள் சிலர் குடும்ப உறவால் அல்லது அதிகாரப்பசியால் தூண்டப்பட்டார்கள். இன்னும் சிலர் சாகசஞ் செய்யும் விருப்பத்தாலும், அநேகர் அரசாங்கம் செய்தவற்றினால் அதன் மீது ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியினாலும் ஊக்குவிக்கப்பட்டர்கள். சிலர் மற்றவர்கள் சேர்கிறார்கள், அதனால் நாமும் சேர்வோமென்று சேர்ந்தார்கள். சமூகம் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குகின்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்காததால் செய்வதற்கு ஏதுமின்றிச் சிலர் அதிலே சேர்ந்தார்கள். சமூகத்துக்கு ஏதாவது நல்லவை செய்ய வேண்டுமென்ற நோக்கமுடையவர்களே முதலில் மாயை தெளிந்தார்கள்.
அத்தகையோர் சுதந்திரமான கருத்துக்களை உடையவர்கள், அவர்கள் சத்தியப்பிரமாணஞ் செய்து தலைவருக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படியச் சிறிதும் விரும்பாதவர்கள். 1980களில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த அநேகமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவரும் அதைவிட்டு விலகி விட்டார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களுள் பிரதானமானவர்கள் நித்தியானந்தன் தம்பதிகள். அந்தக்குழுவிலிருந்து விலகாமல் இருந்த ஒரே ஒருவர் அன்ரன் சிவக்குமார். அவரின் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தனது உறவு கேள்விக்குட்பட்டதாகவே இருந்தது. எதையும் நம்ப வைக்கத் தகுந்த பிஞ்சு மனங்களையுடைய பிள்ளைப்பருவத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களே சிறந்த உறுப்பினராக'விளங்கினர்கள். அவர்கள் துப்பாக்கி தூக்குவதில் மகிழ்ச்சி அடைந்தவர்கள், சாகசத்தில் அவாவுறும் சிறுபிள்ளைத்தனமுடையவர்கள், நல்ல முறையில் செல்வாக்குச் செலுத்தத்தக்க பெற்றோரில்லாதவர்கள். பெற்றோரின் வன்முறைக்கும் தொல்லைகளுக்கும் தொடர்ந்து ஆளானோர் அவர்களுள் அடங்குவர். இவ்வியக்கத்தில் பிந்திச் சேர்ந்தவர்கள் பெண்கள். ஒரு இலட்சம் இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்ட ஒரு சீரழிந்த சமூகத்தின் விளைவாக அநேக பெண் பிள்ளைகள் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய ஒளியற்ற எதிர்காலத்தை உடையவர்கள். ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களின் தொகை 15000ற்குக் குறைவாகவேயிருக்கும். மீண்டும் பெண்கள் மத்தியில் இயக்கத்தில் சேரும் ஆர்வம் பரவலாக அதிகரித்தது. சாகசத்துக்கு மிக எளிதில் ஆட்பட்டு, அதிலிருந்து குறுகிய காலத்தில் விடுப்படக்கூடியவர்களான பெண்பிள்ளைகள் பெரும்பாலும், கட்டுப்பாடான மத்திய வர்க்கக் குடும்பங்களிலிருந்து வந்து சேர்ந்தார்கள். அதிக எண்ணிக்கையான பெண்பிள்ளைகள் முல்லைத்தீவு போன்ற கிராமப்புற கீழ்மத்திய வர்க்கக் குடும்பங்களிலிருந்து இவ்வியக்கத்தில் சேர்ந்தார்கள். இவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும் பங்களைச் சேர்ந்தவர்கள். பல வேறு உளைச்சல்களையுடைய இவர்கள் எல்லோரையும், பிரபாகரன் தனது புத்திசாதுரியத்தால் தனக்கு விசுவாசமாக இருக்கத்தக்க ஒரு அமைப்பாக ஒன்றிணைத்தார். எழுத்தாற்றல் உள்ள சிலருக்கு, தங்கள் கீழ்ப்படிவுள்ள

Page 121
210
சேவையைத் தொடர்ந்தாற்றுவதற்குப் பிரபாகரனிடமிருந்து ஒரு புன்னகையும், ஒரு சில புகழ்ச்சி வார்த்தைகளும் போதுமானதாயிருந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் நேச உறவு கொள்வதைப் பொறுத்தவரையில் அவர்களுள் அநேகர் மத்தியில் மிகவும் நேர்மையான தன்மைகள் இருந்ததாகச் சான்றுகள் கூறுகின்றன. கிட்டுவும் றஹீமும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த கப்டன் கொத்தலாவலையுடன் உருவாக்கிக் கொண்ட நட்புறவு நேர்மையானது. அந்த நட்புறவு அதன் மூலம் பயனடைய வேண்டிய காலத்தையும் கடந்து நீடித்தது. கப்டன் கொத்தலாவலை கோட்டையைச் சுற்றிய தமது நிலைகளைப் பரிசோதித்துக் கொண்டிருக்கையில் அவர்மீது விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சினைப்பர் தாக்குதல் நடத்த முனைந்தபோது, அதைத்தடுத்ததால் கிட்டு ஒருமுறை விமர்சனத்துக்குள்ளானார் எனக் கூறப்படுகின்றது. அதைத் தொடர்ந்து கிட்டுவின் குழு, சிறிலங்கா இராணுவ சினைப்பரால் கடப்பட்டதாகக் கூறப்பட்டது. கப்டன் கொத்தலாவலையுடன் தங்களது நட்புறவு, தொழில் ரீதியில் தாங்கள் படைவீரர்களாயிருப்பதால், இருசாராரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் அடிப்படையில் இருந்ததாக, ஒரு சிரேட்ட விடுதலைப் புலிகள் இயக் கதி தலைவர் கூறினார். தலைவருக்கு விசுவாசமாயிருப்பது முதன்மையிடம் பெறும் ஒரு அமைப்பில் கிட்டுவுக்கும் றஹீமுக்கும் இடையிலிருந்த நெருங்கிய பந்தங்கள், அந்த இயக்கத்தின் சிறப்பியல்புகளுக்கு மீறியதாயிருந்தது. இருவரும் சென்னையில் ஒன்றாக இருந்தமையினால் இருவரும் நாடுகடத்தப்பட்டவர்களைப் போல் கருதப்பட்டனர். கிட்டு தனது காலை இழந்த புதுமையான விவகாரத்துக்குப் பின்னரும், யாழ்ப்பாணத்திலே சிறிலங்கா இராணுவத்தால் ஒப்பரேஷன் லிபரேஷன் நடத்தப்பட்டபோது களத்தில் சேனைத் தலைவராக நின்ற தனது பயன்பாட்டை நிறுவிக்கொண்டார். களத்திலே அவர் பிரசன்னமாயிருந்தமை, சாதாரண போராளிகள் இழந்து கொண்டிருந்த மனோவுறுதியை தூண்டி விடுவதாய் அமைந்தது. உறவுகள் குடும்ப வட்டாரங்களுடன் விரிவுபட்டிருந்தன, கிட்டுவின் வயதான தாயார், அண்மையில் நல்லூரில் றஹீம் திருமணம் செய்யவிருந்த மணமகளின் வீட்டுக்கு வருகை தந்தார். 1984ல் பரி-யோவான் கல்லூரியிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ஆறு சகபாடிகளுள் எஞ்சியிருப்பவர் றஹீம் மாத்திரமே. இறுதியாக விலக்கியவர் காரைநகர் பொறுப்பாளராய் இருந்து விட்டு, 1986 செப்ரெம்பரில் வெளிநாட்டுக்குச் சென்றவராவர்.
இறுதிவரை நின்று பிடித்த ரஹீமின் ஆற்றல், அவர் உரையாடலின் போது விரும்பத்தகாததை விலக்கிக்கொண்ட அவரது திறமையுடன் தொடர்புடையது. 1987 ஒக்ரோபரிலே பரி-யோவான் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வதற்கான அவரது விண்ணப்பம், நிருவாகக் குழுவிடம் வந்தபோது, தனது பழைய பாடசாலைச் சகபாடிகளுடன் உறவு வைத்துக் கொள்ளும் அவரது ஆசை வெளிப்பட்டது. கிட்டு அவரது தோற்றத்தில் முரடனாகவும் அநாகரிகமானவராகவும் தர்க்க நியாயமற்றவராகவும்

2.
(பல இராணுவ அலுவலர்களிடம் காணப்படும் அதிகாரதர்க்கம்) காணப்பட்டதுடன் குற்றம்புரிந்த பொதுமக்கள் மீது இரக்கம் காட்டவுமில்லை. ஆனால் அவர் தெற்கிலுள்ள தலைவர்களுடன் வைத்துக் கொண்ட உறவில் நேர்மையான கூறுகள் இருப்பதாகத் தோன்றியது. அவர் உணர்ச்சி ரீதியாக வளைந்து கொடுக்கின்ற நிலையற்ற சுபாவத்தைக் கொண்டவராயிருந்தார்.
கிட்டு யாழ்ப்பாணப் பொறுப்பாளராக இருந்தபோது, கொலைசெய்யப்பட்ட அநேகருள், யாழ்ப்பாணப் புளொட் தலைவரான மென்டிஸும் (விஜயபாலன்) ஒருவர். மென்டிஸ் கிட்டுவின் நண்பராகக் கருதப்பட்டவர். அவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எவ்வித ஊறும் விளைவிக்கப்படமாட்டாதென அவரது குடும்பத்துக்கு வாக்குறுதி அளித்த பின்னர், ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் வைத்திருந்துவிட்டு, 1987 ஜனவரியில் அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தால் தேடப்பட்ட அநேகரை இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவி செய்து கொண்டிருந்தாரென அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. மென்டிசைக் கொல்லும் உத்தரவு கிட்டுவிடமிருந்து வந்ததா, மேலிடத்திலிருந்து வந்ததாவென நிச்சயமாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் முக்கியமாக, பிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே இந்தக் கொலை நடந்தது. சிங்களப் பார்வையாளர்களையும், சிறைக்கைதிகளையும் 1987ம் ஆண்டு செப்ரம்பர் ஒக்ரோபர் மாதங்களில் நடத்தியவிதம் அவரது சுபாவத்துக்கு அப்பாற்பட்டதென ஒருவர் துணிகரமாக ஊகிக்கலாம். இந்தக் கடைசி முடிவு பிரபாகரன், பாலசிங்கம், மாத்தயா ஆகியோர் ஒன்று கூடி எடுத்ததாகத் தோன்றுகிறது. முடிவுகள் எடுப்பதிலே பாலசிங்கத்தின் செல்வாக்கு பெரும் முக்கியத்துவமானதன்று. அவரிடமிருந்து பிரபாகரன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய சொந்தத்தேவைகள் அவரது நிலையைப்பாதுகாக்க உதவுவதாகத் தோன்றியது. பாலசிங்கம் முன்னாள் பிரித்தானியத் தூதுவராலய ஊழியர். அவர் பிரித்தானிய பல் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் அரச அறிவியல் கற்பிக்கும் ஆசிரியராகச் சேவை செய்தார். அவர் தத்துவவியல் விடயங்களில் திறமையாக உரையாடக் கூடியவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தினி முழு நேரப் பேச்சாளாராகக் கடமையாற்றுவதற்காக அவர் தனது அவுஸ்திரேலிய மனைவி, அடெலேயுடன், 1983 ஜுலைக்குப் பின்னர் சென்னைக்கு வந்தார். அவரது எழுத்துக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஒரு மார்க்ஸிய படிமத்தை அளித்தது. ஆனால் அவரது உண்மையான தொழிற்பாடு, முகத்துதி செய்வதிலும் மிகக்குறைவானது. பிரபாகரனின் வார்த்தைகளில், "அவர் ஆயுதப்போராட்ட நெறிமுறையை வழிப்படுத்துபவரன்று, அதற்கு விளக்கமளிப்பதே அவரது வேலையாகும். பிரபாகரன் தனது உணர்வுத் தேவைகளை அவரிடமிருந்து பெறுவதிலிருந்தே அவரது முக்கியத்துவம் எழுந்தது. அவர்களுக்கிடையிலான உறவு உள்ளே கொந்தளிப்பானது. பாலசிங்கம் சென்னையிலே தமது நண்பர்களுடன் குடித்துக் கொணர்டிருக்கையில் "குடியுங்கள், குடியுங்கள், இதைப் போன்ற பொருத்தமற்ற இடத்தில் இருந்து

Page 122
212
கொண்டு வேறு என்னதான் செய்ய முடியும்" என்று சிலவேளைகளில் கூறுவாராம். பின்னர் தனது வேலையில் ஈடுபடும்பொழுது இந்த ஐயுறவு மறைந்துவிட்டதைப் போல் தோன்றும். பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னர் உறுப்பினராயிருந்த அவரது மனைவி, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளே நிலவும் விடயங்கள் பற்றி மற்றவர்கள் ஐயம் தெரிவிக்கையில் சிலவேளைகளில் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால் அவர் தனது கணவருடன் இவை பற்றிக் கலந்துரையாடிய பின்னர் ஐயங்கள் தெளிந்தவராக மீண்டும் வருவார்.
மாத்தயாவின் பிள்ளைப்பருவம் அன்பையும் ஆதரவையும் நாடிய ஏக்கத்தில் கழிந்தது. அவர் பொதுமக்களோடு பழகாமல், தானும் தன்பாடுமாகத் தனித்து வாழ்ந்தவர். அவர் ஒருமுறை பிரபாகரனுடன் கடுமையான வேறுபாடு கொண்டிருந்தாரெனக் கூறப்பட்டது. இது பின்னர் சரிக்கட்டப்பட்டு விட்டதாகத் தோன்றியது. பழைய காலங்களில் அவரோடு நட்புக்கொண்டிருந்தவர்கள், அவர் நட்புறவை நாடுவதில்லை என்பதால் சிலவேளைகளில் அவரது விசுவாசத்தைப் பற்றிச் சூசகமாகக் கூறியிருக்கிறார்கள். கிட்டு உருவாக்கிக் கொண்ட வகையான உறவுகள் பற்றி அவர் ஐயுறவு கொள்வார்.
குமரப்பாவுக்கும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மீண்டும் நேர்மையானதாகத் தோன்றியது. அவர் சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் திருமணம் செய்து கொண்டார், அவர் தனது திருமண உறவில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அத்தகைய உறவிலே மரணம் பற்றிய எண்ணம் ஒருவனுடைய உள்ளத்திலே முக்கியத்துவமானதாக இருக்க முடியாது. அவர் வாழ்வதற்குக் காரணமிருந்ததால் அவரது தற்கொலை சாதாரணமானதன்று. அவர் தற்கொலை செய்வதற்கு முதல்நாள் தனது நண்பராகக் கருதிய ஒரு இந்திய இராணுவ அதிகாரியிடம் "நீங்கள் இன்று எனது மனைவியைப் பார்க்க வேணிடும்” என்று கூறினார். தனது மனைவியைப் பற்றிக் கவலைப்படுகின்ற- மரணத்தறுவாயிலுள்ள ஒருவனின் இதய உணர்வு அதில் தொனித்தது. ஆனால் நிர்ப்பந்திக்கப்பட்ட பிடிவாதமான தலைவிதிக்கு அவன் கீழ்ப்படிந்தாக வேணடும். இது சிலவேளை விடுதலைப்புலிகள் இயக்கத்திலுள்ள உறுப்பினர்களுடன் வைத்துக்கொள்ளும் நட்புறவின் இயல்பைக் காட்டுவதாயிருக்கலாம். வழமையான கருத்தில் அவர்களுள் அநேகள் மனிதர்கள். ஆனால் நம்பிக்கை மூலம் அல்லது பயத்தின் மூலம் சிலவேளைகளில் இவை இரணி டின் மூலமும் இழுத்துக்கொள்ளும் இரக்கமற்ற, பிடிவாதமாக நிர்ப்பந்தப்படுகின்ற தலைவிதிக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள். இந்தத் தலைவிதி அவர்களது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கோட்பாட்டில் அடங்கியுள்ளது. தற்கொலைக்கான இவரது அழைப்புக்களின் ஒரு அமீசம், துணைக்கணிடத்தில் வழிபடுகின்ற ஒருவகையான கடவுளின் சக்தி, பக்தர்களை எழுச்சியுற உத்தரவிட்டுப் பின்னர் அவர்கள் தமது அழிவுக்குத் தாமே கீழ்ப்படிந்து செல்லுமாறு அனுப்புவதை ஞாபகமூட்டுகிறது. இது விசுவாசமாயினும் கண்மூடித்தனமான கீழ்ப்படிவாயினும் அவருக்கு எல்லாம்

23
ஒன்றுதான். போர் செய்து கோடிக்கணக்கில் மனிதர்களைக் கொன்றுவிட்டு, தமது இறுதித் தோல்வி சில தவறான கணிப்பினால் ஏற்பட்ட தற்செயல் நிகழ்ச்சியென விளக்கமளிப்பவர்கள் அவர்களது இராணுவ வெற்றிகளைட் புகழ்ந்து, அவர்களை வரலாற்று நாயகர்களாக காட்டுவது பொதுவான தவறாகும். அவர்களது விகாரமான இயல்புகளும், அவை தோற்றுவித்த நாசகார செயன்முறைகளுமே தமது தோல் விக்கு உணிமையான காரணமென்பதை அவர்கள் பார்க்கத் தவறிவிட்டனர். நெப்போலியன் ஒருபுறம் ஒரு இராணுவ மேதை. ஒஸ்டலிற்சை வெற்றி கொண்டவன், அவன் தனது கையசைப்பின் மூலம் ஒஸ்றியா, புறுசியா, ருஷியா, பிரித்தானியா ஆகியவற்றின் கூட்டுப்படைகளைப் பின் வாங்கச் செய்தவன். 5000 ஆண்டு வரலாற்றையுடைய எகிப்திய பிரமிட்டுகளை வியந்து பார்ப்பதிலும் அவன் ஒரு பெரும் நடிகனாகவும் இருந்தான். அவன் தனது படைவீரர்களை ருஷியாவின் மரிக் குளிருக்குள் சாகவிட்டுவிட்டு, அவசரமாகவும் அவமானகரமாகவும் 1812ம் ஆண்டு மாரியின் உச்சப்பருவத்தில் மொஸ்கோவிலிருந்து பாரிஸ்க்குப் பின்வாங்கியதிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்ன? அவனது வீரசாகசங்களை வியக்கும்போது, அவனது சொந்தச் சோக முடிவையும், அவனது ஆத்மீக பொறுமையையும், அவனது நிச்சயமற்ற விடயங்களையும், ஏனைய மனிதர் மீது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதிலேயே குறியாயிருந்த அவனது நம்பிக்கைகளையும் நாம் பார்க்கத் தவறிடுகிறோம். அவனது தவறு, ருஷ்யா மீது அவன் தப்பாகத் தீர்மானித்து மேற்கொண்ட ஒரு தாக்குதல் அணிறு. ஏற்கனவே 1810ம் ஆணிடளவில் பிரான்ஸ் இராணுவமயப்படுத்தலின் சுமையால் அழுந்திக்கொண்டிருந்தது. அதனால் உடைவுகள் அங்கே ஆரம்பித்துவிட்டன.
அவ்வாறே, திருபிரபாகரனின் விடயத்தில் ஒரு அசம் கவர்ச்சியானது. எதிர்கால நம்பிக்கையற்ற கோட்பாட்டைப் பயன்படுத்தி அவரது மனவுறுதி, விடுதலைப்புலிகள் இயக்கமெனும் ஒரு சக்தியை உருவாக்கியது. அவ்வியக்கம் உலகத்தை விழித்துக் கொண்டிருக்கச் செய்தது. சிறிலங்கா அரசாங்கம் 1978ல் தமிழர் பிரச்சினையை ஏளனமாகவும் 1983ல் மிருகத்தனமாகவும் கையாண்டதினால் அது தனது அத்திவாரத்தையே ஆட்டங்காணச் செய்தது. காலப்போக்கில், இந்திய அரசாங்கமும் நிச்சயமற்றதாக மாறியது. ஐக்கிய அமெரிக்கா அதிக அக்கறை எடுத்தது. சிறியதளவு மன்த இழப்புக்களுடனி பிரச்சினையைத் தீர்க்கும் வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் பிரபாகரன் பெரும் இலாபங்களை அடையப் பிடிவாதமாக நின்றார்.
எல்லாவற்றையும் அவரது வழிக்குக் கொண்டு வருவதற்காக அவற்றைக் கையாள்வதற்குத் தேவைப்பட்டதெல்லாம், ஈவிரக்கமற்ற மனமே.
இப்பொழுது ஒரேயுகம் முடிவுற்றது. இதுவரை நடந்த போராட்டம் அது நடந்த காலப்பகுதியில் அநேக சிறந்த இலட்சியங்களால் வழிநடத்தப்பட்டது, எந்தக் குழுவைச் சேர்ந்தவராயினும் இளைஞர்களின் துணிவையும், அதிக அர்ப்பணிப்புகளையும் அப்போராட்டம் வேண்டிநின்றது.

Page 123
24
அப்போராட்டம் இன்று தமிழ்ச்சமூகம் அதிகாரமற்றதாகவும் பேச முடியாததாகவும் மாறிய ஒருநிலையை அடைந்துள்ளது. அத்தகையதொரு பலவீனமான அடித்தளத்திலே உண்மையான சுயநிர்ணயத்தின் எந்தவொரு நிலையையும் பேணும் வகையில் அம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஒரு இராணுவ சக்தி எவ்வளவு காலத்துக்கு உரிமை பாராட்ட முடியும். உண்மையில் உயிர் வாழ்வதற்கான விருப்பங்களினால் மக்கள் தமது தராதரங்களையும், இலட்சியங்களையும் கைவிட்டு தமது உயிரைக் காப்பாற்றத் தயாரானார்கள். காலப்போக்கில் சிறுவர்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டபோது சமூகத்திலிருந்து எத்தகைய குரலும் அதற்கு எதிராக எழவில்லை. இதனால் நாகரிகத்தினுடன் நாம் வைத்திருந்த இறுதித் தொடர்பும் கேள்விக்குரியதாகியது.
என்ன பிழை நடந்தது? எல்லோரதும் வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்வதற்கு, நாம் வன்முறையை ஒரு கருவியாக ஏற்றுக்கொள்ள அவ்வப்போது வழி நடத்தப்பட்டோமா? ஓர் இறுதிக்காட்சி மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இக்காட்சி 1987 ஒக்ரோபர் 13ம் திகதி அதிகாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நிகழ்ந்தது. அதற்கு முதல்நாள் இந்திய இராணுவம் பல்கலைக்கழகத்துக்கு அணிமையில் தரையிறங்கி ஒரு பெருந்தவறைச் செய்தது. அதன் பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காவலரணிகள் எங்கும் நிறுவப்பட்டன. அந்த விளையாட்டு மைதானத்தைச் சுற்றிப் பெண் போராளிகள் நிரைகட்டி நின்றார்கள். அவர்கள் அநேக தமிழ்ப் பெண்களுள் குடிகொண்டிருக்கின்ற வாழ்க்கை பற்றிய நம்பிக்கைமீனத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்துபவர்களாகத் தோன்றினர். தாம் இறப்போமா வாழ்வோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாதவர்களைப் போல் அவர்களது முகங்கள் எவ்வித உணர்ச்சியுமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. ஜோன் ஒப் ஆர்க்கைப்போன்றோ பேஸ்ரைலைக் கலக்கிய பாரிஸ் பெணிகளினது தனிமைகளையோ அவர்களிடம் காணமுடியவில்லை. அவர்களுள் ஒருபெண் போராளி உணர்ச்சி எதையும் காட்டாது அமைதியான குரலில் "தயவுசெய்து நீங்கள் போகும்போது கேற்றை மூடிவிடுங்கள் என்று கூறினாள். அவளது கண்களில் கண்ணிர் இல்லாமலில்லை.
95 வரலாற்றுச் சக்திகளின் ஒரு திசைவிலகல்
எமக்குள்ள எல்லா வரையறைகளுடனும் (இதை எழுதிய குழுவிலுள்ள எவரும் வரலாற்றியலாளர் அல்லர்) எம்மத்தியில் விடயங்களை நோக்குவதில் உள்ள எல்லா வேறுபாடுகளுடனும் நாங்கள் ஒருவழியில், 2500 ஆண்டுகளுக்கு முன்னர் பெலோப்போனேசியன் யுத்தங் குறித்து துசைடைட்ஸ் என்னும் கிரேக்க அறிஞர் செய்ததையே செய்ய முயற்சித்துள்ளோம். இந்த யுத்தம் எதென்சு நகருக்கும் ஸ்பாட்டா நகருக்கும் இடையே ஒன்றையொன்று பலவீனப்படுத்தும் போராகத் தொடங்கி மத்தியதரைக்கடல் நாடுகளில் கிரேக்கத்தின், மேலாண்மையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. நாம் இங்கு அளித்துள்ளவையெல்லாம் எமது சொந்த நிலைமையின் தொடர்ச்சியான பிரதிபலிப்புகளும் விபரணங்களுமாகும். இந்த நிகழ்ச்சிகளால் மாற்றமடைந்துள்ள

25
ஓர் உலகத்துடன் நாங்களும் ஒத்துப்போக வேண்டியதாயிற்று. இந்த நிகழ்ச்சிகளைப் புரிந்து கொள்வதற்கும், அதன் மூலம் எமது சூழ்நிலைமைகளைச் சிறப்பான நிலைமைக்கு மாற்றுவதற்கும் உதவியாக நாம் சிலவற்றை அளித்துள்ளோமென நம்புகிறோம்.
சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலை நிறுத்தும் ஆயுதப் போராட்ட வடிவம் ஒன்று உள்ளதா? அல்லது வன்முறை முற்றுமுழுதாக வெறுக்கப்பட வேண்டியதா? போராட்டமானது தனிப்பட்ட நேர்மையான நற்குணத்தைப்பும் உணர்மையை நேசிப்பதையும் அவற்றுக்காக துன்புறும் விருப்பத்தையும் உருவாக்கக் கூடியதா என்ற விவாதம் தொடரும். இங்கே இறுதியில் குறிப்பிட்ட விடயத்தைப் பொறுத்த வரையில் மனித குலத்துக்கு மாத்திரம் அகிம்சை வரையறுக்கப்பட்டுள்ளதா? அன்றேல், விலங்குலகுக்கும் அது விரிவுபடுத்தப்படவேண்டுமா என்பதோடு தொடர்புடையது. சாத்தியமான வன்முறையைப் பயன்படுத்த வேண்டுமென்பதை ஆதரிப்பவர்கள் பின்வருமாறு வாதாடுகிறார்கள்:
(1) வன்முறையை வன்முறைக்காக நாம் விரும்பவில்லை.
(2) வன்முறை இவ்வுலகின் நாளாந்த யதார்த்த வாழ்வின் ஓர் அம்சமாகிவிட்டது.
(3) வன்முறை நடப்பதைக் கண்டும் காணாதவர்போல் இருந்து கொண்டு, அதைச் சமுகவிரோதிகளும் குற்றஞ் செய்வோரும் முற்றுமுழுதாகப் பயன்படுத்தவிட்டோரே அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இறுதியில் சமுகத்தின் புறவய யதார்த்த நிலைமை துப்பாக்கி வைத்திருப்போர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றதெனக் கூறுகிறார்கள். இதை ஏற்காதோர், வன்முறையின் பயன்களைத் தீர்மானிப்பதிலே அகவயமான அம்சங்கள் உண்டெனக் கூறுவர். போரினால் விளைகின்ற கொடுர பாதிப்புகள் ஒருபுறமிருக்க, அதனால் உளவியல் ரீதியாக நீண்டகால பாதிப்புக்களும் ஏற்படும். இதன் காலவரையறை பற்றியும் கேள்வி உண்டு. லெனினது இலட்சியவாதம், ஸ்டாலினின் களையெடுப்புச் செயற்பாடுகளுக்கு வழி வகுத்தது. அவரது களையெடுப்பு மனித வரலாற்றிலே மாபெரும் மனிதப்படுகொலைகள் எனக் கூறலாம். லெனின் போன்ற உண்மையான புரட்சியாளர்களால் புரட்சிக்கு அளிக்கப்பட்ட சட்டபூர்வ உரிமை, ஸப்டாலினின் மனிதப்படுகொலைச் செயல்களைச் சகித்தவாறு ஏற்றுக்கொள்ள இடமளிக்கவில்லையா? இரண்டாம் நிக்கோலஸ் சார் மன்னனிலிருந்து மிசெய்ல் கொர்பச்செஷ் வரையிலான நீண்டபயணம் ஸ்டாலினின் களையெடுப்பிற்கூடாகத்தான் சென்றிருக்க வேண்டுமா? வரலாறு வேறுவகையில் அமைந்திருக்க முடியாதாவென ஆறஅமர இருந்து பின்னோக்கிப் பார்த்துத் தீர்மானிக்கும் நிலையில் நாம் இல்லையென இதற்குப் பதில் வரலாம். அவ்வக்காலச் சந்தர்ப்பங்களைக் கிரகித்துக் கொண்டவர்களாலேயே இது செய்யப்பட்டது. அதன் பின்னர் ஏனையோர் விடயங்களைத் தவறாகக் கையாள்வதற்கு எப்பொழுதும் இடமுண்டு. எமது காலத்தின் சந்தர்ப்ப நிலைமைகளைப் புரிந்து கொள்ளாமல் அவற்றிலிருந்து விலகியோட முயற்சிப்போமானால் நாம் கடுமையாக நடுத்தீர்க்கப்படுவோம்.

Page 124
26
வன்முறை அவசியமானதென்ற கருதுகோளின் அடிப்படையில் வாழ்க்கை இத்துணை தூரத்துக்குச் சென்று விட்டதென பதிலளிக்கப்படலாம். மனிதப் பணிபாட்டிலே வன்முறையின் பயன்பாடு ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றுள்ளது. தொடரும் துன்பங்கள மேலும் அதிகரிப்பதை பார்க்கும்போது வன்முறையை நடைமுறைவாழ்வில் இருந்து அகற்றி விடுமொரு பணிபாட்டை நாம் உருவாக்க முயலாவிட்டால் முழுச்சமூகமுமே தற்கொலையை நோக்கிநகர்வது தவிர்க்கமுடியாததாகிவிடும். மனித நியாயத்துக்கு கருத்தற்றதாகத் தோன்றுவது, வேறோர் உலகில் நிதர்சனமாகலாம். கடவுளைத்தேடி அவரிடம் அடைக்கலமாவதே சிலவேளை எங்களுக்குள்ள ஒரேவழியாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மறைபொருளான படைப்புக்களாக மாறுகின்ற அளவுக்கு, புரட்சிபற்றிய நவீனப்படுத்தப்பட்ட எல்லாக் கோட்பாடுகளும் உறுதியானவையாக இல்லையா? அவை ஒருபோதும் பொய்யானவை என நிரூபிக்கப்படமுடியாது, ஏனெனில் ஆரம்ப நிலைமைகள் ஒருபோதும் சரியானதாக அமையவில்லை என்ற விளக்கம் உடனடியாக முன்வைக்கப்படும். புரட்சி நடந்த காலத்தில் வாழ்ந்த எவரையும் கேட்டுப்பாருங்கள1. அறிவியல் உலகிலே, வரலாற்றைப் பற்றிய தார்மீக விளக்கம் குழந்தைத்தனமானதெனக் கருதப்படும். ஆனால் புராதன ஸ்ராயேல் தீர்க்கதரிசிகள், துசிடைட்ஸ் ஆகியோரின் காலம் முதல், பல யுகங்களாக தாம் உண்மையென நம்பியவற்றை அறிவிப்பதற்கு பேரவாக் கொண்டிருந்த அநேக வரலாற்றாசிரியர்களின் கணிணோட்டம் இதுவேயாகும். உண்மையிலே பரவலாக மதிக்கப்பட்ட கிரேக்க அறிஞரான எவ்.எம்.கோண்போர்ட் என்பவர் "இலக்கியத்திலும் தத்துவத்திலும் உணர்வு பூர்வமற்ற அடிப்படைக் கூறுகள்" என்ற தமது கட்டுரையில் "இப்பொழுது, துசிடைட்ஸின் வாழ்க்கை பற்றிய தத்துவம் அதன் எல்லைகளுக்குள் ஒரு உண்மையான தத்துவம் அல்ல என்று நாம் கூறமுன்வரவில்லை. நாம் முன்வைக்கக்கூடிய எந்தவொரு தத்துவத்தைப்போலவும் அது உண்மையானதாக இருக்கலாம். அதனிலும் அதிக உண்மையானதாகவும் இருக்கலாம். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தென்னாபிரிக்கப் போர் (போயாப்போர் 1898 -1900) பற்றி எழுதியபோது ஏகாதிபத்தியத்தின் நிதி அம்சத்துக்கு அதில் அதிக அழுத்தம் கொடுத்தேன். 1914ஆம் ஆண்டு முதல் அதாவது முதலாவது உலகப்போருக்குப்பின் துசிடைட்ஸின் வரலாறு பற்றிய தார்மீக விளக்கம் பூாணத்துவமானதாகவே 6576igépgy" ("The Unwritten Philosophy" Cambridge University Press).

திரு.எஸ். டப்லிவ். ஆர்.டி.
பண்டாரநாயக

Page 125
இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள்
 

ஈ.என்.எல்.எப். கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட போது நான்கு அமைப்புக்களின் தலைவர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படம்.
1984 + என்.எல்.எப். கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்
தி.மு. க.தலைவர் கருணநிதியுடன்,

Page 126
இலங்கையின் முதலாவது தேசிய பந்தோபஸ்து அமைச்சர் திரு லலித் அத்துலத்முதலி இராணுவத்தினருக்கு
உரையாற்றும் போது
இலங்கை இந்திய ஒப்பந்தமான இராஜீவ் ஜே.ஆர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்படல்
 
 

பாகம் 2 அறிக்கைகளும் ஆய்வுகளும்

Page 127

29
அத்தியாயம் 1 அந்த அக்டோபர் நாட்கள்
1. ஒப்பந்தம் முறிவடைந்ததன் பின்னணி:
அது 1987 அக்டோபர் மாதத்தின் பத்தாவது நாள். ஊரடங்குச் சட்டம் இன்னும் அமுலில் இருந்தது. மரங்களுக்கு மேலே தோன்றியிருந்த இருண்ட மேகக் கூட்டங்களும் சலனமற்ற மூடுபனியும் வரவிருக்கும் மழையை முன்னறிவித்தன. மறையும் சூரியனின் கடைசி ஒளிக்கதிர்கள் மேற்கு ஆகாயத்தினுள் மந்தமாக ஊடுருவிக் கொண்டிருந்தன. எங்களின் பனிக்கால ரஷ்ய விருந்தாளிகளான காட்டு வாத்துக்கள் தென் திசையிலிருந்து V வடிவில் பனிக்காலத்தை நாடி யாழ்ப்பாண தீபகற்பத்தின் சதுப்பு நிலங்களை நோக்கிப் பறந்து செல்லும் அழகான காட்சி இப்பொழுது உயரே தெரிந்தது. இருட்டத் தொடங்கியதன் அழகு ஏதாவது கெடுதல் நிகழவிருக்கிறது என்ற எச்சரிக்கையுணர்வையும் தராமல் இல்லை. சமீப காலங்களில் எங்கள் தேசம் எவ்வளவோ துயரங்களைச் சந்தித்திருக்கிறது. ஜுலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் அமைதி நிலவ ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பலர் நம்பிக்கையோடு இருந்தனர். அப்பாவி மக்களை அழித்துக் கொண்டிருந்த ஷெல் ஓசைகளும் குண்டு பொழியும் இரைச்சலும் கடந்த காலத்துடன் முடிந்து போய்விட்டது என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இன்று யாழ் நகர் மீண்டும் ஷெல் தாக்குதலின் இரைச்சலினால் அதிர்ந்தது. மக்கள் மீண்டும் பீதியடைந்தனர். என்ன நடக்குமோ என்ற அச்சமும் அவர்களைக் கெளவிக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரண்டு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அமளிதுமளியான நிகழ்ச்சித் தொடர்களை பலர் திகிலோடு கவனித்து வந்திருந்தனர். ஒப்பந்த ஏற்பாடுகளில் உட்பொதிந்திருந்த நிச்சயமின்மை பிரச்சினை எப்படியோ வெடித்தே தீரும் என்பதனைத் தவிர்க்க முடியாததாக்கியிருந்தது. இதன் காரணமாக மோதல்களில் யார் முதலில் சுட்டது என்பது முக்கியமே இல்லாத ஒரு விஷயமாகப் போய்விட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானதாகக் கருதப்பட்ட ஈழமுரசு, முரசொலி ஆகிய பத்திரிகைக் காரியாலயங்களுக்குள் இந்திய சமாதானப்படை அதிகாலையில் நுழைந்திருந்தது. காரியாலயத்தை உடைத்து நொறுக்கிய பிறகு அங்கிருந்த ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பல செய்தியாளர்களையும் அச்சுக் கூட ஊழியர்களையும் கைது செய்து தம்முடன் இந்திய சமாதானப்படை கொண்டு சென்றுவிட்டது. இந்த இரண்டு பத்திரிகை நிறுவனங்களும் மூடப்பட்டு விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அணிதிரள ஆரம்பித்தனர். அதன் ஆயுதந் தாங்கிய உறுப்பினர்கள் இந்திய சமாதானப்படை முகாம்களின் முன் திரணிடனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணக்கோட்டையின் பக்கத்திலிருந்து சூட்டுச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து ஷெல் வெடித்துச் சிதறும் இரைச்சல் கேட்டது. "எங்களைச் சுடுவது இந்திய இராணுவமாக இருக்கமுடியாது. இது இலங்கை இராணுவமாகத்தான் இருக்க வேண்டும்" என்று பலர்

Page 128
220
நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாதவர்களாய் சொல்லிக் கொண்டனர். யாழ் கோட்டையிலும் தெல்லிப்பளையிலும் இந்தியப்படையினர்மீது விடுதலைப்புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நிகழ்த்தியதாக அன்று மாலை வானொலியில் அறிவிக்கப்பட்டது. மேலும் தெல்லிப்பளையில் துப்பாக்கித் தாக்குதலுக்கு இலக்கானது இந்திய சமாதானப்படையின் சென்னை ரெஜிமண்ட் பிரிவுதான் என்றும் அத்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் சென்னை அகில இந்திய வானொலி ஊர்ஜிதப்படுத்தி செய்தி அறிவித்தது. அதுகாலவரை யாழ் குடாநாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்த இந்திய சமாதானப்படையினர் விடுதலைப்புலிகளின் பல முக்கிய முகாம்களை ஏற்கெனவே பார்வையிட்டிருந்தனர்.
ஒப்பந்தம் நடந்து முடிந்த இரண்டு மாதங்களுக்குள் எதிர்பார்த்திருக்காத வேளையில் விடுதலைப்புலிகளை தாக்குவதற்கான உள்நோக்கம் இருந்திருக்குமெனில் தமக்குத் தேவையான சகல தகவல்களையும் திரட்டிக் கொள்வதில் இந்தியப்படையினருக்கு எந்தச் சிரமமும் இருந்திருக்காது.
உணர்மையில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளினி பிரதான முகாமிலி இநீதியப் படையுமே நிலைகொண்டிருந்தது. மிகவும் அற்ப விஷயங்களில் இரு பத்திரிகை நிறுவனங்களை மூடி-சில தொலைக்காட்சி ஒளிபரப்புச் சாதனங்களைக் கைப்பற்றிய நிகழ்ச்சிகளுக்கூடாக தனது ஆச்சரியகரமான தாக்குதலை இந்தியப்படை ஏன் நிகழ்த்தியது என்பது இன்னும் பலருக்கு புதிராகவே இருக்கிறது. தம்மிடமிருந்த ஆட்பலம், தொழில்நுட்பங்கள் மற்றும் உளவுப்பிரிவின் பலம் ஆகியவற்றுடன் தமக்கு மிகவும் அனுகூலமான முறையில் இந்திய சமாதானப்படை எத்தனையோ வழிகளில் பயன்படுத்தி இத்திடீர்த் தாக்குதலை நடத்தி இருக்க முடியும். விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு, அவர்களின் பதில் தாக்குதலுக்காக இந்தியப்படை இப்போது காத்திருந்தது. விஷயங்கள் மிகவும் பயங்கரமாகத் தடம் புரண்டு கொண்டிருப்பதற்கான முதல் சமிக்ஞை இது. இன்னும் அதிமோசமானவை நடக்கப்போகின்றன. ஒப்பந்தம் தவிடு பொடியாவதற்கான சூழல் எவ்வாறு உருப்பெற்றது என்பது ஏற்கெனவே விபரிக்கப்பட்டிருக்கிறது.
அக்டோபர் 4ம் திகதி பருத்தித்துறைக்கு அப்பால் படகில் வந்து கொண்டிருந்த பதினேழு விடுதலைப்புலிகளை இலங்கைக் கடற்படை கைதுசெய்தது. கைது செய்யப்பட்டவர்களில் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களான திருபுலேந்திரனும் திரு.குமரப்பாவும் அடங்குவர். இந்தப் பதினேழு பேரும் தமிழ்நாட்டிலிருந்து ஆயுதங்களைக் கடத்திக்கொண்டு வந்ததன்மூலம் ஒப்பந்தத்தை மீறியதாகவும் கூடவே இலங்கையின் குடிபெயர் சட்டதிட்டங்களை மீறிவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் இவர்கள்மீது குற்றஞ்சாட்டியது. இவர்கள் விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகத்தை சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் ஆவணங்களை எடுத்துக்கொணிடு வந்துகொணடிருந்ததாகவும், இந்தியப்படையினர் எந்த விதப் பூர்வாங்கச் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்காமல் தங்கள் தலைவர்களை சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விமானமூலம் போய்வர அனுமதித்த நிலையில், இலங்கையின் குடிபெயர்தல்

221
சட்டதிட்டங்களை மீறுதல் குறித்தான கேள்வி எந்தவிதத்திலும் எழவில்லை என்றும் விடுதலைப்புலிகள் வாதாடினார்கள். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கள - தமிழ்ப்புத்தாண்டின்போது இலங்கை அரசு பிரகடனப்படுத்தியிருந்த ஒருபக்க யுத்த நிறுத்தத்தின்போது, விடுதலைப்புலிகளின் திருகோணமலைத் தலைவர் புலேந்திரன் 150 அப்பாவிச் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசுத் தொலைக்காட்சியான ரூபவாஹினியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக உரை நிகழ்த்தினார். அந்தப் பதினெழு பேரும் கடத்தல்காரர்கள் என்றும் எனவே அவர்கள் ஒப்பந்தத்திற்குள் வரமாட்டார்கள் என்றும் அவர் முதல்நாள் உரையில் தெரிவித்தார். ஆயுதத்தளவாடங்களை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து திரும்புகையிலேயே அவர்கள் பிடிபட்டார்கள் என்று அடுத்த நாள் இரவு பேசுகையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் பிரதான அலுவலகத்திலிருந்து தளவாடங்களையும் மற்றும் உபகரணங்களையும் கொணிடு வருவதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சாதாரண மீன்பிடி வள்ளத்தில் சென்று கொண்டிருந்ததாக புலிகள் மேலும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் தங்களுக்கு உதவுமாறு யாழ்ப்பாணத்தில் இருந்த இந்திய சமாதானப்படையின் உயர் அதிகாரபீடத்திடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் தங்களின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் புலிகள் மேற்கொண்டும் தெரிவித்தன்ர். யாழ்ப்பாணத்தலைவரான குமரப்பா, திருகோணமலைத் தலைவரான புலேந்திரன் ஆகிய இருவர் மட்டுமே ஆயுதங்கள் தரித்திருந்ததாகவும், ஒப்பந்தத்தின்படி புலிகள் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்கள் தரித்திருக்க ஷரத்து உள்ளதாகவும் அவர்கள் ஆயுதந் தரித்திருந்தமை ஒப்பந்தத்திற்கு இசைவானதே என்றும் புலிகள் கூறினர். மீன்பிடிப்படகில் வந்து கொண்டிருந்த புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ஆயுதங்களையும் வெடிகளையும் அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினியில் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளைப் பிடித்து வைத்திருப்பதன் காரணத்தைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியைக் கேட்டபோது, அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு வந்து அரசுத் தொலைக்காட்சி கெமராக்களின் முன் போஸ் கொடுக்க வைத்துவிட்டுப் பிறகு திருப்பி அனுப்புவதற்குத்தான் என்று அவர் பதில் அளித்தார்!
பலாலியில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் பதினேழு பேரையும் விசாரணைக்காகக் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்படுவதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. இதனைத் தடுத்து நிறுத்துமாறு விடுதலைப்புலிகள் இந்திய அரசாங்கத்தைக் கோரினர். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களைக் கொழும்புக்குக் கொண்டுசெல்வதைத் தடுப்பதில் இந்திய சமாதானப் படையும் இந்தியத்தூதுவர் திருஜேஎன்தீக்ஷித் அவர்களும் இலங்கை அரசிடம் கணிசமான அக்கறையோடு பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளைப்பற்றி தனக்கு ஏற்கெனவே நன்கு தெரியுமாதலால் அரசின் இந்த நடவடிக்கை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுபற்றி இலங்கை அரசாங்கத்திற்குத்தான்

Page 129
2
எச்சரிக்கை செய்திருப்பதாகப் பின்னர் பிபிபிக்கு அளித்த பேட்டியின்போது திருதீக்ஷித் தெரிவித்திருந்தார். ஆனால் இலங்கை அரசு இதில் வீடாப்பீடியாக இருந்தது. தடுப்புக்காவவில் வைக்கப்பட்டிருந்தவர்களை அக்டோபர் 5ம் திகதி கோழும்பிற்கு விமானமூலம் கொண்டு செல்வதென அரசாங்கம் முடிவெடுத்தது. விமானத்திற்கு ஏற்றப்படுந்தறுவாயில் அந்தப் பதினேழு பேரும் சயனைற்றை விழுங்கியதாகவும் குமரப்பாவையும் புலேந்திரனையும் சேர்த்து அதில் பன்னிரண்டு பேர் பலியானதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களின் கைக்கு சயனைற் எப்படிக் கிடைத்தது எனிது கேள்வி எழுகிறது. தடுப்புக் காவலிப்ே வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட ஆரம்ப சோதனையிலேயே அவர்கள் கழுத்தில் காவித்திரியும் சயனைற் வில்லைகள் அகற்றப்பட்டிருக்கும் என்பதைச் சாதாரணமாகவே ஒருவர் ஊகித்துக் கொள்ளமுடியும்.
இந்தப் புதிருக்கு விடை காண்பது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல. தடுப்புக்காவலின் வைக்கப்பட்டிருந்தவர்கள் துரதிர்ஷ்டமான அத்தினத்தன்று பிற்பகல் 200 மணிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் துணைத்தலைவர் திரு மாத்தயாவாஸ் புலிகளின் பிரதான சித்தாந்தவாதியான திரு அன்ரன் பாலசிங்கத்துடன் உணவருந்த அழைத்துச்செல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பலாலியில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் விமானத்தில் ஏற்ற முயல்வதைக் கடைசி நிமிஷம்வரை இந்திய சமாதானப்படை தடுத்து நிறுத்த முயற்சித்ததாக இந்திய சமாதானப்படையின் ஒரு சிரேஷ்ட அதிகளி தெரிவித்தார். இந்த முயற்சிகளைக் கைவிடுமாறும், நடப்புகளை அப்படியே அவற்றின் போக்கிலேயே விட்டுவிடுமாறும் புதுடிப்லியிலிருந்து 430 மணியளவில் ஒரு தொலைபேசிச் செய்தி அறிவுறுத்தியது. சமாதானப்படையின் அந்த சிரேஷ்ட அதிகாரியிடம் குமரப்பா அதற்கு முன்தினம், "நீங்கள் இன்று என் மனைவியைப் பார்க்க வேண்டும் என்று அவசரத்தோனியில் கூறியதாக அதே செய்தி தெரிவிக்கிறது. குறைந்தது ஒரு நாளாகவாவது கடைசி நிமிஷப் போராட்டம் நடந்திருப்பதை இது காட்டுகிறது.
1989 அக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட கொழும்பு சண்டே டைம்ஸின் அநீ ஈகயின் சாராம்சம் பின்னிணைப்பு-(I)ல் தரப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் வைக்சு "ட்டவர்கள் இறந்துபோனால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்திய சம. "ணப்படை அதீத அக்கறை கொண்டிருந்ததை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இலங்கை இராணுவத்திடமிருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்க இந்திய அமைதிப்படைத் தளபதி ஜெனரஸ் ரொட்ரிகளப் வன்முறையைத் தவிர மற்ற எல்லா வழிவகைகாைபும் முயன்று பார்த்திருக்கிறார். கொழும்புத் தரப்பின் மூர்க்கமான தன் ை"புர். பின்விளைவுகளைப் பற்றி எந்தவிதமான அக்கறையின்மையும் இலது அதிகாரிகளின் ஒரு பகுதியினர் இந்திய அமைதிப்படையை தமிழ்பு விடுதலைப்புலிகளுடன் இராணுவரீதியில் மோதிக்கொள்ளுமாறு தள்ளிவி இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதைக் காட்டுகிறது.

223
ஐக்கிய தேசியக்கட்சி தனது பொருளாதாரக் கொள்கைகளை மேற்கு நாடுகளை நோக்கி அமைத்துக் கொணர்டிருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதானது ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே நடைபெற்றுக் கொணtடிருக்கும் அதிகாரப் போராட்டதி தை வெளிக்கொணர்ந்தது.
காமினி திஸநாயக்கவையும் ரொனி டி மெல்லையும் கொண்ட ஒரு பிரிவு ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பிரேமதாஸ்வை உள்ளடக்கிய மற்றுமொரு பிரிவு-தேவை ஏற்படுமென்றால் மேற்குடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் தயாராயிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து தனது திட்டவட்டமான அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தது. தென்கிழக்கு ஆசியநாடுகவின் அமைப்யான ரசியான் (ASEAN) இலங்கையும் உறுப்பினராக வேணடும் என்பதை பிரேமதாஸா ஒரு காலத்தில் ஆதரித்திருந்தார். தமிழர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு மேற்கத்தைய நிதி உதவியும் இராணுவப் பயிற்சியும் இலங்கையின் பாதுகாப்பு அமைப்பிற்கு மிக மிக முக்கியமான தேவைகளாக இருந்தன. இந்த இரண்டு கோஷ்டியினரிடையே கொள்கை அடிப்படையில் சச்சரவுகள் இல்லாதிருந்தால், இந்த ஒப்பந்தத்தின் தோல்வி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே காணப்பட்ட ஊன்றிய நலன்களுக்கும் பாதுகாப்பு அமைப்புக்கும் அனுகூலமாக அமைந்திருக்கும். பின்னால் 1989ல் இலங்கையில் இந்தியா நிலை கொண்டிருப்பதற்கு எதிராக பிரேமதானuவின் தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் பொதுவான காரணம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
12 வெட்கித் தலைகுணிய வேண்டிய ஓர் இரவு
அன்று இரவு நடந்த சில சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணக் குடிமகன் ஒவ்வொருவனும் வெட்கித் தலைகுனிய வேணடும். ஒப்பந்தம் நடைபெறுவதற்கு முன்னால் நிகழ்ந்த புத்தத்தின் போது எட்டு சிங்கள இராணுவவீரர்கள் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு காவலிப் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் எப்படியும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்றே அனைவரும் நம்பியிருந்தனர். அந்த இராணுவ வீரர்கள் சிலரின் உறவினர்கள் அவர்களின் விடுதலை குறித்து விடுதலப்புலிகளிடம் மன்றாடிக் கொண்டிருந்தனர். தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் உதவியைப் பலமுறை நாடி அது பயனற்றுப் போன நிலையில் யாழ்ப்பாணத்துடள் நெருங்கிய தொடர்பு கொணர்டிருந்த ஒரு பிரபல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரிடம் காலியில் விவசாயியாக இருந்த ஒரு தகப்பனார் ராணுவ வீரனான தனது மகனின் விடுதலைக்காக விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். ஆறாம் திகதி காலையில் கணிகள் கட்டப்பட்ட நிலையில் - குண்டுகள் துணிவிக்கப்பட்ட இந்த எட்டு இராணுவ வீரர்களின் சடலங்களும் யாழ்ப்யாண பளப் நிலையத்தில் வீசி எறியப்பட்டிருந்தன.
அப்பொழுது காங்கேசன்துறையில் தங்கள் தொழிற்சாலையை மீண்டும் செயல்படுத்தும் நோக்கத்துடன் லங்கா சிமெண்ட் லிமிட்டட் கம்பெனியின் பொது முகாமையாளரான திரு.ஐயமான அம், துனைப் பொது

Page 130
224
முகாமையாளரான திரு.கஜநாயக்கவும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். காங்கேசன்துறை துறைமுகத்தில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 18 இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டதும் பதிலுக்கு இலங்கை இராணுவம் 5 சிமெண்ட் தொழிற்சாலை ஊழியர்களைக் கொன்றதையும் தொடர்ந்து ஏப்ரல் 22ம் திகதியிலிருந்து இத்தொழிற்சாலை மூடப்பட்டுக்கிடந்தது. இச்சம்பவ தினத்தன்று இலங்கைத் துருப்புகளின் பதில் தாக்குதல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்த்து அஞ்சி, ஒரு சிங்களக் கப்பல் தலைவர் துறைமுகத்தில் அப்போது வேலைபார்த்துக் கொண்டிருந்த எழுபது ஊழியர்களைத் தக்க தருணத்தில் கப்பலில் ஏற்றி கடலில் செலுத்தி அவர்களைக் காப்பாற்றி விட்டார். இதைத் தொடர்ந்த மாதங்களில் நிகழ்ந்த ஷெல் தாக்குதலின் காரணமாக காங்கேசன்துறையின் இரண்டு சிமெணிட் தொழிற்சாலைகளும் மோசமாகச் சேதமடைந்திருந்தன. தொழிற்சாலை மூடப்பட்டுக்கிடந்த நீண்ட காலத்திற்கும் சேர்த்து அந்த இரண்டு தொழிற்சாலைகளிலும் வேலை பார்த்து வந்த தற்காலிக ஊழியர்களுக்கும்கூட சம்பளம் வழங்கப்படும் என்று முன்னுதாரணம் எதுவுமற்ற புதிய நடவடிக்கை மூலம் வாக்களித்து தொழிலாளர்களின் ஏகோபித்த நன்றியுணர்வை திருஜயமான சம்பாதித்திருந்தார். அவருடைய நிர்வாக முறைகளில் அவரோடு ஒத்துப் போகாதவர்களும்கூட அவரைத்திறமை மிகுந்த, உற்சாகமான ஒரு பொறியியலாளர் என்று மரியாதை செய்தனர். இதற்கு முதல்நாள்தான் திருஜயமான லங்கா சிமெண்ட் சாலைக்கு புது ட்ரான்ஸ்ஃபார்மர் ஒன்றை நிறுவ இலங்கை மின்சார சபைப் பொறியியலாளர்களைப் பார்த்துப் பேசி அவர்களை யாழ்ப்பாணத்திற்கு வரச்சம்மதிக்கப் பண்ணி இருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையடுத்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் வரவிருக்கிறது என்று நம்பிய சிங்களவர்களுள் திரு.ஜயமான யும் ஒருவராவார். அடுத்த நாளில் சிமெண்ட் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பது குறித்து அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
அக்டோபர் 5ம் திகதி இரவு லங்கா சிமெண்ட் தொழிற்சாலையின் விருந்தினர் இல்லத்தில் உணவருந்திய பிறகு ஜயமானபும் கஜநாயக்கவும் சோதிலிங்கம், வேலாயுதம், அறிவழகன் போன்ற பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல சக ஊழியர்களுடன் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் விருந்தினர் இல்லத்திற்குள் திடீரெனப் புகுந்த ஆயுதந் தாங்கிய பலர் ஜயமானயையும் கஜநாயக்கவையும் தம்முடன் அழைத்துச் செல்ல முயன்றனர். சக அதிகாரிகள் இதனை எதிர்த்தனர். தீவிரமாக எதிர்த்த வேலாயுதம் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டார். இறுதியில் ஜயமனயும் கஜநாயகவும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் காலை சிமெண்ட் கூட்டுத்தாபனத்தின் 'கேற்றிற்கு எதிரே அவர்களின் சடலங்கள் காணப்பட்டன.
காங்கேசன்துறையின் இரண்டு தொழிற்சாலைத் தளத்திலும் கோபமும் துக்கமும் கொப்பளித்தன. திருஜயமானயினதும் திருகஜநாயக்கவினதும் கொலைகளைக் கண்டித்து துண்டுப்பிரசுரம் வெளியிடவேண்டுமென்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபச்செய்தி அனுப்ப வேண்டுமென்றும் அங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் விரும்பி நின்றனர். ஆனால் இந்த விருப்புணர்வும் அச்ச மேலீட்டால் அவிந்து விட்டது. காட்டிக் கொடுப்பவர்கள்

225
உள்ளுக்குள்ளேயே இருந்த நிலையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் தலைவர்களில் ஒருவராகத் தங்களையும் இனங்காண யாருமே அஞ்சி முன்வரவில்லை. சிமெணர்ட் தொழிலாளர்களால் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம் பன்னிரண்டு விடுதலைப்புலிகள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. கொலையுண்ட சிங்களவர்களைப் பற்றி அது குறிப்பிடவில்லை.
ஐந்தாம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட மற்றொருவர் ஒப்பந்தத்திற்கு பிறகு சுண்ணாகத்தில் தனது பேக்கரிக் கடையைத் திரும்பவும் தொடங்க வந்திருந்த ஒரு வயதுபோன சிங்களவராவார். இந்தச் சிங்கள பேக்கரிக்காரர் தன்னை வந்து சந்தித்ததைத் பற்றி அவ்வூர் உதவி அரசாங்க அதிபர் நினைவு கூர்கிறார். அவர் தனது அலுவலகத்தில் அலுவலில் மூழ்கிட் போயிருந்தபோது சிரந்தாழ்த்தி வணங்கியவாறு ஒருவர் அவரை அண்மித்தார். பார்த்தால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்தவர் போலத் தோன்றியது. வந்த மனிதர் அவரை மாத்தயா (ஐயா) என்று விளித்தார். யாழ்ப்பாணத்தில் அந்த நேரத்தில் சிங்களம் பேசப்படுவதைக் கேட்டு வியப்புற்ற உதவி அரசாங்க அதிபர் அந்த மனிதரின் கதையை கவனமாய்க் கேட்டார். 1983 இனக் கலவரத்திற்குப் பிறகு தான் கணிணாகத்தில் தனது தொழிலைக் கைவிட்டுவிட்டு தென்னிலங்கைக்குப் போக நேர்ந்து விட்டதாம். சிறிய தொழிலை வைத்து நடத்துபவர் என்ற முறையில் அவருக்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்த வேறுவழிவகை தெரியாததாலும் சுண்ணாகத்திற்கு திரும்பியும் வந்து தனது தொழிலைத் திருப்பியும் தொடங்குவதைத்தவிர வேறு மாற்று வழி இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அந்த ஒரு பாவமும் அறியாத அப்பாவி மனிதர் கொலை செய்யப்பட்டது குறித்து அந்த உதவி அரசாங்க அதிபர் ஆழ்ந்த வருத்தமுற்றார்.
ஐந்தாம் திகதி இரவு வல்வெட்டித்துறையில் கொலை செய்யப்பட்ட ஒரு சிங்களக்காவல்துறை அதிகாரியைப் பற்றிய குறிப்பு கீழே தரப்படுகிறது. அந்தப் பகுதியில் குடியிருந்த ஒரு தொழில்துறை சார்ந்தவர் ஒருவர் கூறிய பிரகாரமே இந்தக் குறிப்பு கூறப்படுகிறது. ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து, அங்கு பணிபுரிந்த சில சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மாலை வேளைகளில் அங்குள்ள உள்ளூர் பார் ஒன்றுக்கு குடிக்கவும் சுமுகமாகப் பழகவுமாக அங்கு வருவதுண்டு. அப்படி ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் அன்று 5ம் திகதி இரவு அந்த பாரில் இருந்திருக்கிறார். எட்டுமணி, அளவில் விடுதலைப்புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளர் சூசையும் இன்னொருவரும் பாருக்குள் நுழைந்து அந்தப்பொலிஸ் உத்தியோகஸ்தரை இரக்கமேயின்றித் தாக்கத் தொடங்கினார்கள். பின் அவர் வெளியே இழுத்து வரப்பட்டு ஒரு மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்ததும் மற்ற சிங்களவர்களைக் கொன்றதும் பொதுமக்களே என்றும் பன்னிரண்டு விடுதலைப்புலிகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சியால் அவர்கள் பெரிதும் ஆத்திரம் கொண்டிருந்தனர் என்றும் மறுநாள் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவித்தன. இத்தகைய மனிதாபிமானமற்ற

Page 131
226
செயலுக்குத் தாங்களே பொறுப்பாளிகள் ஆக்கப்பட்டது குறித்து வல்வெட்டித்துறை மக்கள் ஆழ்ந்த மன வேதனையுற்றனர்.
உண்மையில் இந்தக் கொலைகளை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை என யாழ்ப்பாணத் தினசரிகள் செய்தி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் அப்பாவிச் சிங்கள மக்கள் நிறையப்பேர் கொல்லப்பட்டனர். மட்டக்களப்பில் நீண்டகாலம் வாழ்ந்திருந்த 35 சிங்களவர்கள் துப்பாக்கிக்கு இரையாகினர். மட்டக்களப்பின் விசேஷ இலக்குப் படைத்தலைவர் நிமால் சில்வா நிலக்கணிணி வெடியால் கொல்லப்பட்டார். அதே வாகனத்தில் பயணம் செய்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு.அந்தோணிமுத்துவும் கொல்லப்பட்டார். இதனையடுத்த சில தினங்களுக்குள் மாத்திரம் மொத்தம் சுமார் 200 சிங்களப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக பியிஸி. அறிவித்தது.
ஒப்பந்தம் நிகழ்ந்தேறிய பிறகு, சிங்களப் பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதை வரவேற்கிறோம் என்றும் அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படமாட்டாது என்றும் விடுதலைப்புலிகளின் துணைத்தலைவர் திரு மாத்தயா இலங்கையின் தேசியப்பத்திரிகையான வீக் எண்டில் தெரிவித்திருந்தார். இதையும் நாம் இப்பொழுது இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் இந்தக் கொலைகளைத் தமது விருந்தோம்பும் பணி புக்கு ஒ விவாத நடவடிக்கையாகவே கருதினர். ஒப்பந்தத்திற்குப் பிறகு யாழ்ப்பாணத்திற்கு வந்த சிங்களவர்கள் பலரும் தமிழர்களைத் தங்கள் உடன் பிறப்புக்கள் என்றும் அவர்களுக்கு இதுகால வரையிலும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் கருதி தமிழர்களைப் புரிந்து கொள்ளவும் அவர்களுக்கிடையே இணைப்புப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் இதுவே தருணம் என்ற உணர்வுடனும்தான் யாழ்ப்பாணத்துக்கு வந்தனர் என்பதனையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பல மாதங்களாகத் தங்கள் கைகளாலேயே உணவு ஊட்டி உபசரித்த இராணுவ வீரர்களைக் கொலைசெய்தமை மகத்தான தவறு என்று விசேஷமாகப் பல பெண்கள் உணர்ந்தனர். இன்னுமொரு சம்பவத்தில் அரசுக் குச் சொந்தமான ரூபவாஹினியைச் சேர்ந்த நான்கு அலுவலர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் கொலையுண்ைடிருக்கவேணடும் என்றும் கருதப்பட்டது. சுபாஷ் ஹோட்டலில் தங்களின் தேனிலவைக் கழித்துக் கொண்டிருந்த தமிழர்களான ஓர் ஆங்கில விரிவுரையாளரும் அவரது துணைவியும் அறை அறையாகப் புகுந்து சிங்களவர்களைத் தேடிக் கொணடிருந்த ஆயுத நீ தாங்கிய கும் பலாலி மூர்க்கத்தனமாகப் படுக்கையிலிருந்து எழுப்பப்பட்டனர்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளைக் கொழும்பிற்குக் கொணிடு செல்லும் முயற்சியினால் ஏற்படப் போகும் விளைவுகளைப்பற்றி திருதீக்ஷித்திற்கு முன்னரேயே தெரிந்திருந்தால் அவரால் செய்து முடித்திருக்கக்கூடிய காரியத்தை - தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த முயற்சியைத் தடுப்பதை அவர் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை ஒருவர் கேட்கலாம். ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட இந்திய அமைதிப்படையின் அதிகாரியின் கூற்றுப்படி, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களைக்

227
கொழும்பிற்குக் கொண்டு செல்வதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளைக் கைவிட்டு விடுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது புதுடில்லியிலிருந்து தான். புதுடில்லி அந்த ஆணையை தனது பொறுமையை இழந்து தனது மறுபுறத்தை காண்பிக்க பிறப்பித்தது என்பதும், அது தீக்ஷித்தின் முடிவு அல்ல என்பதும் இதிலிருந்து அர்த்தமாகிறது. திலீபனின் மரணத்தின்போது அச்சந்தர்ப்பத்தில் தாம் கோரியதைப் பெருமளவில் பெற்றுக்கொண்டுவிட்ட புலிகள் ஏன் இந்த மாதிரியாக எதிர்பாராதவிதத்தில் செயற்பட்டார்கள்? ஏதோ ஒரு வழியில் ஒப்பந்தத்தில் அதிருப்தி கொண்டு விட்ட இருதரப்புக்கும் இடையில் நின்று தொடர்ந்து இருபக்கத்திற்காகவும் வாதம் நடத்திக் கொணடிருந்த தனது பங்கினைக் குறித்து இந்தியரும் ஒருவேளை சலிப்படைந்திருக்கக்கூடும்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பதினேழு விடுதலைப்புலிகளும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும், அக்டோபர் 5ம் திகதி இரவிலிருந்து சிங்களவர்கள் கொலைசெய்யப்பட்டதும் சேர்ந்து ஒப்பந்தத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான நேரடிச் சவாலாகும். கை நழுவிப் போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலைகளின் மத்தியில் ஒரு நடவடிக்கையுமே எடுக்காமல் சும்மா இருப்பது குறித்து இந்திய அரசு குற்றஞ்சாட்டப்பட்டு ஏற்கெனவே அது மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. இனியும் இந்திய அரசு எதுவும் செய்யாமல் கம்மா இருந்தால் இந்தியா நிறைவேற்றும் என்று நம்பி அமுல்படுத்தப்படவேண்டிய பல விஷயங்களுக்காக ஒப்பந்தத்திற்காகத் தம்மைப் பணயம் வைத்திறங்கிய இலங்கை அரசாங்கத்தைக் கைகழுவி விட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருகேஸிபந்தும், இந்திய இராணுவத்தளபதி திருகிருஷ்ணா கந்தர்ஜியும் உடனேயே கொழும்பு வந்து சேர்ந்தனர். இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளை முழுமையாக அழித்தொழிக்கத்திட்டம் கொண்டிருப்பதாக சிலோன் டெய்லி நியூஸ் அக்டோபர் 9ம் திகதிய ஏட்டில் தலைப்புச்செய்தி வெளியிட்டிருந்தது. இந்தியா ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது செயற்பட்ட விதமும், அதன் விளைவாக ஏற்பட்ட துக்ககரமான பின்விளைவுகளும்தான் கேள்விக்குரியன. இவை பற்றி வேறொரு அத்தியாயத்தில் விவாதிக்கப்படும்.
தமிழர்களிடையே ஓரளவு பிரபலமடைந்திருந்த ஒரு சூழ்ச்சித் தந்திரோபாயக் கொள்கையைப்பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது ஜனாதிபதி ஜயவர்த்தன மிகவும் தந்திரமான பேர்வழி. அவர் இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டு முடிந்ததும் தன் காரியங்களை திறம்பட செய்வதில் இறங்கி விட்டார். அவரது தந்திரோபாயத்தின் உச்சக்கட்டம்தான் பன்னிரணி டு விடுதலைப்புலிகளின் தற்கொலையும் இதனால் இந்தியா தமிழர்களுக்கு எதிராகப் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதுமாகும். இது ஒரு சூழ்ச்சிவலை. இலங்கை இராணுவத்தால் செய்து முடித்துக் கொள்ளமுடியாத செயலை இந்தியாவே செய்யும்படியான சூழலை உருவாக்கி இந்தியாவை இந்தச் சூழ்ச்சி வலைக்குள் சாதுரியமாக விழச்செய்தார் ஜனாதிபதி ஜயவர்த்தனா. 1988 டிசெம்பரிலிருந்து பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதி ஜயவர்த்தன அவர்களும் இந்த முதற் கொள்கையை இவ்வாறு ஆதரித்தது புரிந்து கொள்ளத்தக்கதே.

Page 132
228
இவ்வாறான சூழ்ச்சித் தந்திரோபாயக் கொள்கைகளில் பலவீனமான அம்சங்கள் நிறையவே உள்ளன. ஏனெனில் மனிதச் செயற்பாடுகளில் தெரிய அல்லது விளங்க முடியாதவைகள் நிறைய இருக்கின்றன. இதனால் ஒரு கொள்கைக்கு நேர் எதிரான இன்னுமொரு சூழ்ச்சிக் கொள்கையையும் எளிதில் உருவாக்கிக் கொள்வதும் சாத்தியமே. உதாரணத்திற்கு இப்படியும் சொல்லலாம்: இலங்கை வாழ் சிங்களவர்களும் தமிழரும் ஸ்திரபுத்தி அற்றவர்களாகவும் பேச்சுவார்த்தைகளைக் கொணர்டு நடத்துவதில் நம்பமுடியாதவர்களாகவும் இருக்கக்கணிட இந்தியர்கள் அவர்களைத் தவறான வழிக்கு இட்டுப் போகும் வலையில் சிக்க வைத்திருக்கலாம். இப்படியாக இரு தரப்பினருக்கும் இந்திய அரசின் மேலாதிக்கம் தவிர்க்கமுடியாததாகியது விசேஷமான ஊன்றிய நலன்களைச் சார்ந்த மற்றய சக்திகளின் செயற்பாடுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், தமிழ் சமூக அரசியலின் உள்ளே உருவாகிவந்த நிலைமைகள் ஒப்பந்தத்தை ஏற்கெனவே சிக்கலுக்குள் வீழ்த்தி விட்டிருந்தன.
மோதலில் இறங்கிய எந்தப் பகுதியினருக்கும் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது கூறப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவோ திறமையோ, வழிவகைகளை வகுத்துக் கொள்ளும் திறனோ இல்லாமல் இருந்தது என்பது சம்பவங்களில் இருந்து தெளிவாகிறது. தேவை ஏற்படுமானால் விடுதலைப்புலிகளை நிராயுதபாணிகளாக்க சாதுரியத் திறமையோடு கூடிய வழி முறைகள் தன்னிடம் இருப்பதாக இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தலைவர் லெஃடினன்ட் ஜெனரல் தெபீந்தர் சிங் ஜூலை 29ம் திகதி ஒப்பந்தத்தையடுத்து விடுத்த அறிக்கைகளிலிருந்து இத்தகைய ஒரு நம்பிக்கை உருவானது உண்மையே. ஆனால் அக்டோபர் 10ம் திகதியிலிருந்து செயற்பட ஆரம்பித்த இந்திய இராணுவத்தினரின் போக்கும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உயிரிழப்புகளும் பொருள் நாசங்களும் நுட்பமான சத்திர சிகிச்சை ஒன்றினை உறுதிகூறி விட்டு ரம்பம் கொண்டு சிகிச்சை நடத்திய ஒரு சித்திரத்தையே மனதில் தோற்றுவிக்கிறது. தமிழ்ப் பிரதேசங்களில் குறிப்பாகப் பொதுமக்கள் வாழ்ந்த பகுதிகளில் ஷெல் தாக்குதலை நடத்தியும் குண்டுகளை வீசியும் நடவடிக்கை மேற்கொண்ட இலங்கை அரசின் இராணுவப் போக்கைக் கடுமையாக விமர்சித்த இந்தியத் தூதரகம், அதே போன்ற செயல்களை இந்திய இராணுவம் செய்த போது சம்பவங்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்ததேதவிர அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் எதனையும் செய்துகொள்ள முடியாத நிலையிலேயே இருந்தது.

229
அத்தியாயம் 2
இந்தியாவின் பங்கு - ஒரு அலசல்
2.1 இந்தியாவின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகள்
1983 ஜூலையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் தாளமுடியாத துயரத்தைத் தொடர்ந்த சில வாரங்களில் இலங்கைத்தமிழர்களின் பெரும்பகுதியினர் தமது பாதுகாப்பிற்கு இந்தியாவையே நம்பியிருந்தனர். முதலில் தனது வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் பினினர் இலங்கை அரசுக்கும் தமிழ்ப்பிரதிநிதிகளுக்குமிடையே சமரசத்தீர்வை ஏற்படுத்துமுகமாக தனது சிறப்புத் தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியையும் இலங்கைக்கு அனுப்பியதன் மூலம் இந்தியாவும் இந்த நெருக்கடி நிலைக்குப் பதிலளிக்கவே முனைந்தது. திரு.பார்த்தசாரதி கணிணியத்துடனும் இனிமையுடனும் கூடிய சிரமமான அறிவார்த்தமான முயற்சிகளை மேற்கொணிடாரென தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த திருநீலன் திருச்செல்வம் 1987 ஆகஸ்ட் 18ம் திகதிய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் பாராட்டியிருந்தார். ஜனாதிபதி ஜயவர்த்தனாவுடன் கலந்தாலோசித்து திருயார்த்தசாரதி வரைந்த திட்ட ஆலோசனைகளின் சாராம்சம் ஜனாதிபதியாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பின்னிணைப்பு C எனக் குறிக்கப்பட்டு பிரதான ஆவணத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் ஜனாதிபதியின் மனதில் வேறு யோசனைகள் தோன்றி, தான் ஏற்றுக்கொண்ட ஆலோசனைகளுக்கு நேர்மாறாக நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார். இந்தத்தீர்வு ஆலோசனைகள் சிற்சில மாறுபாடுகளுடன் அமைந்திருந்தபோதிலும் அவை இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. டிசெம்பர் 19ம் திகதித் தீர்மானங்களிலும் பின்னர் 1987 ஜூலை 29ம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் ஏறத்தாழ ஒரேவிதமான சிந்தனைகளே இழையோடி நிற்கின்றன. இவை அனைத்தும் சட்டம், கல்வி, காவல் ஆகியவற்றில் போதுமான அதிகாரங்கள் கொண்ட மாகாணசபைகளையே கருத்தில் கொண்டிருந்தன. தமிழர்கள் நியாயமாகவே அச்சம் கொண்டிருந்த குடியேற்றத்திட்டங்கள் போன்ற ஏமாற்றப்படக்கூடிய பிரச்சினைகளே ஆலோசனைகளின் போது கணிசமான நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் இலங்கையுடன் சில வெளி உறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட அக்கறை இருந்தது என்பதை அனைவரும் அறிவர். இந்திய உறவுகளைப் பொறுத்தவரையில் இந்தியா கூட்டுச்சேராக் கொள்கையைப் பின்பற்றியமை இலங்கைக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் ஜயவர்த்தன அரசு மேலைநாடுகளுக்குச் சார்பான நிலையை எடுத்ததும் இது இலங்கை-இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. தங்களுக்கு எதிரான சக்திகள் எதுவும் திருகோணமலையில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகத்தை பயன்படுத்திக் கொள்ள மாட்டாது என்பதை இந்தியா உறுதிப்படுத்திக் கொள்ள முனைந்தது. ஆனால் இப்போது இவை குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை. இந்தியா தங்களை ஒருநாளும் கைவிடமிட்டாது என்று தமிழர்கள் உறுதியாக நம்பினர். இந்தக்கட்டம்

Page 133
230 வரை இந்தியாவின் முயற்சிகள் குறித்து பாராட்டு வார்த்தைகள் மட்டுமே கூறப்பட்டன.
1983 ஜூலைக்குப் பின்னர் அகதிகளுடன் சேர்ந்து போராளிகளும் பெருந்தொகையில் தமிழ்நாடு நோக்கிச்சென்று கொணி டிருந்தனர். இப்போராளிகள் பயிற்சி பெறும் நோக்கத்திற்காகவே தமிழகம் சென்றனர். பேச்சு வார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் இந்தியா பாவிக்க முனைந்த இரணடாவது தளமாக இது இருந்தது. இந்தத்தளம் எவ்வாறு கையாளப்பட்டது என்பதிலிருந்து தான் இன்றைய பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன.
திரு பார்த்தசாரதியின் திட்ட ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டதன் பிற்பாடு 1984 ஜனவரியில் லலித் அத்துலத்முதலி புதிதாக அமைக்கப்பட்ட தேசியப்பாதுகாப்பு அமைச்சின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாதுகாப்புக்கான செலவீடு சடுதியாக 1500கோடி ரூபா என்ற அளவுக்கு அதிகரித்தது. இது இலங்கையின் தேசிய வரவு செலவுத்திட்டத்தில் பதினைந்திலிருந்து இருபது வீதமாகும். தமிழர்களின் பிரச்சினைக்கு இராணுவரீதியான தீர்வு காணும் புதிய முயற்சியில் மேற்கு நாடுகளுடன் புதிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இலங்கை மேற்கத்தைய வல்லரசுகளின் பக்கம் நகர்ந்து கொண்டிருந்தது வெகு விரைவிலேயே தெளிவானது. 1970ல் இலங்கை இஸ்ரேலுடன் தூதரகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டிருந்த போதிலும் 1984ல் இஸ்ரேலிய நலன்களுக்கான பிரிவு ஒன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது. இரகசியமான உளவு வேலைகளில் நிபுணத்துவங்கொண்ட இஸ்ரேலிய ஏஜன்ஸிகளான மொசாட், ஷின் -பெட் ஆகியன இலங்கை இராணுவத்திற்கு உதவ ஆரம்பித்தன. (1986 மே மாதம் வெளியான இஸ்ரேலிய வெளி உறவுகள் என்ற சஞ்சிகையில் ஜேன் ஹண்டர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி) பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான K.M.S எனப்படும் கீனி மீனி சேர்விஸஸ் இலங்கையில் பேர்போன பயங்கரமான விசேஷ அதிரடிப்படை (எஸ்.டி.எப்)க்குப் பயிற்சி வழங்க முன்னாள S.A.S அமைப்பானது ஆட்களைத் தந்து உதவியது. இது ஒரு தனியார் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான வெறும் ஒரு வர்த்தக ரீதியான ஏற்பாடு தான் என்கிற பிரிட்டிஷ் அதிகாரிகளின் வாதம் வெறும் சம்பிரதாயத்துக்காக என்றே கருதப்பட்டது. இலங்கை இரானுவத்தின் கறுப்புச்சீருடை தரித்த கருஞ்சட்டைப் பிரிவிற்கும் ஊர்காவல் படைக்கும் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் பயிற்சி வழங்குவதில் பாகிஸ்தான் பயிற்சி நிபுணர்கள் ஈடுபட்டனர்.
கறுப்புப் பிசாசுகள் என்ற பெயரில் பிரபலப்பட்டிருந்த இந்தக் கருஞ்சட்டைகள் தமிழர்களை விரோதிகள் என்று கருதும் அடிப்டையிலேயே அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தில் இருந்த தமிழ்க்கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டதிலிருந்து இது தெளிவானது.
இந்த ஏற்பாடுகளில் எல்லாம் அமெரிக்கா வகித்த பங்கு மிகவும்

231
முக்கியமானது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படவிருந்த ஜெனரல் வெர்னன் வால்டர்ஸ் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் தூதராக 1984 டிசெம்பரில் கொழும்பிற்கு வருகை தந்து ஜனாதிபதி ஜயவர்த்தனவுடனும் லலித் அத்துலத்முதலியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது தெரியவந்தது. இந்தியா தமிழ்ப் போராளிகளுக்குப் புகலிடம் வழங்கிய நிலையில் 1984லிருந்து 1987ம் ஆண்டு நடுப்பகுதி வரை இந்தியாவுக்கும் மேற்கத்தைய நலன்களுக்கும் இடையிலான ஒரு மறைமுகப்போர் இலங்கையில் நடந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. இந்தக்கால கட்டத்தில் இலங்கை அரசு உருவாக்கிய பரா இராணுவ்ப் படையினர் பல்கிப் பெருகி தன்னளவில் தீவிரமடைந்தன.
எவ்வாறாயினும் இலங்கை அரசின் ஏமாற்றமுனையும் கபடத்தனத்தை அதற்குச் சமதையாய் நின்று சமாளிக்கக் கூடியவர் பிரதமர் இந்திரா காந்தி என்று இலங்கைத் தமிழர்கள் பொதுவாக நம்பினர். அக்டோபர் 1984ல் யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் வைத்து இந்திரா காந்தியின் படுகொலை பற்றிய செய்தியைக் கேள்வியுற்ற விடுதலைக்கூட்டணித் தலைவர் திருஅமிர்தலிங்கம் பல நிமிஷங்கள் பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வேறு எந்தப் பகுதியை விடவும் யாழ்ப்பாணத்தில் தான் இந்திரா காந்தியின் மறைவுக்கு ஆழ்ந்த துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அது எப்படித்தானிருந்தாலும், சில நெளிவு சுளிவுகளில் சில மாற்றம் இருந்தாலும்கூட இந்திரா காந்தியின் மறைவுக்குப்பிறகு இந்தியாவின் கண்ணோட்டத்தில் கணிசமான மாறுபாடு தோன்றியது என்று கருதுவது தவறாகும்
அவரது மறைவையடுத்து தமிழ்ப் போராளிகளும் விடுதலைக் கூட்டணியும் உள்ளிட்ட தமிழ்த் தலைமையானது ஓரளவு மரியாதைக் குறைவாகவே நடத்தப்பட்டதாக உணரப்பட்டது. இந்தப் போக்கு விடுதலைப்புலிகளுடன் இந்தியா நடந்து கொள்ளும் முறையில் நீண்ட கால நோக்கில் தீவிர எதிர்மறை விளைவுகளைக் கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும்.
1987 அக்டோபர் யுத்தத்தின் போது இந்தியா நடந்து கொண்டவிதம் தற்போது இலங்கைத் தமிழர்களின் மத்தியில் பெருங்குழப்பத்தையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்திருந்தது. இந்தியா மீது இலங்கைத் தமிழர்கள் கொண்ட வேதனையும் அறிவுபூர்வமாக ஏற்பட்ட அதிருப்தியும் அவர்கள் உடல்ரீதியாக அனுபவித்த துன்பங்களைக் காட்டிலும் ஏதோ கொஞ்சம்தான் குறைவானதாக இருந்தது. ஆகாயத்திலிருந்தும் தரைவழியாயும் இந்தியர்கள் தங்கள்மீது குண்டுமாரி பொழிந்ததை மக்களால் நம்பவே முடியவில்லை. இருக்காது, இது தவறுதலாகத்தான் தெரியாத்தன்மாய் நடந்திருக்கும். இந்திய இராணுவ வீரர்கள் இலங்கை இராணுவ வீரர்களிலிருந்து வித்தியாசமானவர்கள். அவர்கள் ஒருமுறை இங்கு வந்ததும் நல்ல முறையாக நடந்து கொள்வார்கள் என்றுதான் மக்கள் கூறிக் கொண்டனர். இந்த நம்பிக்கையுங்கூட துக்ககரமான முறையில் அதிருப்தியில்தான் முடிந்தது. இந்தியத் துருப்புகள் கோபாவேசம் கொண்டிருந்த போது அந்த இடத்திலே

Page 134
232 இருந்தார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் நூற்றுக்கணக்கானோர் இந்தியப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஏன் இவ்வாறு நடந்தது என்று இந்திய இராணுவ அதிகாரிகளைக் கேட்டபோது அவர்களுக்குக் கிடைத்த பதில் இதுதான்:
"இது போர். நாங்கள் முந்நூறு பேரை இழந்திருக்கிறோம். நீங்கள் உயிரோடு இருப்பது பற்றிச் சந்தோஷப்படுங்கள். இனி எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள்
எங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்தியா தனது படைகளை அனுப்பியதாகக் கூறியது. ஆனால் இப்பொழுதோ இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் எங்களின் குழந்தைகளை, தந்தையரை, தாய்மாரை இழந்து நிற்கிறோம். எங்கள் வீடுகளையும் பொருட்களையும் இழந்திருக்கிறோம் என்று மக்கள் கூறியபோது, "இது போன்ற சம்பவங்கள் போரில் சகஜம். எங்களால் செய்யக்கூடியது எதுவுமில்லை" என்று அவர்களுக்குப் பதில் கிடைத்தது. இந்தியத் தலையீட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி உலகம் என்ன எதிர்பார்த்துக் கொண்டிருந்ததோ அதற்கு முற்றிலும் நேர்மாறாகவே எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக இந்திய அரசு அயராது தொடர்ந்து முன்வைத்த விமர்சனங்களை ஒருமுறை திரும்பிப் பார்ப்பது நல்லது. இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கையால் தமிழ்ப் பொதுமக்கள் துன்புற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா தமிழர்கள் குறித்து தனது அக்கறையைத் தெரிவிப்பதில் ஒருபோதும் தவறியது கிடையாது. பொதுமக்கள் மீது ஷெல் அடிப்பது, குண்டு வீசுவது, ஆஸ்பத்திரிகளுக்கு ஷெல் அடிப்பது, நோயாளிகளைக் கொல்வது, பொது மக்களைப் பெருவாரியாகப் படுகொலை செய்வது, சித்திரவதை செய்வது, மக்களை இடம் பெயர்ப்பது என்று இலங்கை அரசின் இராணுவ வெறியாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது. இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக இந்தியாவினால் மீண்டும் மீண்டும் கண்டிக்கப்பட்டது. ஐ.நா.சபையின் மனித உரிமைகள் துணைக்குழுவிடம் இலங்கைக்கு எதிரான மனுவை இந்தியாவே தொடுத்தது. ஓர் இனப்பிரச்சினைக்கு இராணுவரீதியான தீர்வு காண முயல்வதற்கு எதிராக இந்தியப்பிரதமர் இலங்கை அரசை மீண்டும் மீண்டும் எச்சரித்திருக்கிறார். அரசியல் ரீதியான தீர்வு மட்டுமே அனுகூலமானது எனறும் வலியுறுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண மருத்துமனை மூடப்படுவதைத் தடுக்க மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு இலங்கை அரசாங்கத்தின்மீது தன் நெருக்குதலைப் பிரயோகித்திருந்தது.
1987 ஜூன் 4ம் திகதி இந்திய அரசு விமானமூலம் உணவுப் பொதிகளை யாழ் மக்களுக்கு வழங்கியமையும், இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு வழங்கியமையும் இலங்கை அரசாங்கத்தின் வடமராட்சித் தாக்குதலைத் தொடர்ந்து வெளியேறிய

233
எணர்ணற்ற அகதிகளின் துயரத்தின் காரணமாக வெளிப்படையாகவே ஊக்குவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.
இலங்கையில் இந்திய அமைதிப்படை வகிக்க வேண்டிய பங்கு ஓரளவுக்கு மிகவும் அசாதாரணமானது என்று சர்வதேச சமுதாயத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது. இது குறித்த சட்ட நுணுக்கங்கள் திருப்திகரமாக இருந்த போதிலும் இலங்கையின் தேசிய சுதந்திரமும் இறைமையுமே கேள்விக்கு இலக்காக்கப்பட்டு விட்டன என்ற உணர்வு பரவலாக நிலைபெற்றிருந்தது என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். இருந்த போதிலும் இலங்கை அரசாங்கத்தால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல்போனதால் இந்த ஏற்பாட்டினை சர்வதேச சமூகம் வரவேற்றிருந்தது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உத்வேகம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை. அத்துடன் தான் விளைவித்த சொல்லொணாத மானுடத்துன்பங்களின் பின்னர் இப்பிரச்சினைக்கு மீண்டும் தீர்வு காண முயல்வதற்கான தார்மீக உரித்து இலங்கை அரசுக்கு இல்லாது போய்விட்டது. இவ்வாறாக, இந்தியா மிகவும் உயர்ந்த தரத்தில் இப்பிரச்சினையை அணுகும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்தது. இலங்கை அரசு கைக்கொண்ட வழிவகைகளைப் போல அல்லாமல் இந்தியா இப்பிரச்சினைக்கு உன்னதமான தீர்வு காண வேண்டும் எனிறும் அது எதிர்பார்த்தது. தேவை ஏற்படுமானாலி விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை முழுமையாகக் களைய தம்மிடம் சாமர்த்தியகரமான வழிமுறைகள் உள்ளன என்ற அபிப்பிராயத்தை தெற்கிந்திய படைப்பிரிவின் தலைவர் லெஃப்டினென்ட் ஜெனரல் தெபீந்தர் சிங் உள்ளிட்ட இந்தியப் பிரமுகர்கள் யாவருமே ஏற்படுத்தி வைத்திருந்தனர். இதனைவிட இந்தியா ஒரு அமைதி காக்கும் படை என்ற முறையில் இலங்கைக்கு வந்ததன் காரணமாக தனது நடவடிக்கைகளை ஒரு கூட்டுத் திட்டத்திற்குள் கொணர்ந்து நிதானமாகச் செயற்படும் என்றும் கருதப்பட்டது. அமைதிப்படை வீரர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் பிரச்சினைகள் குறித்து உணர்வு பூர்வமான அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூட எதிர்பார்க்கப்பட்டது.
பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த பகுதிகளில் இந்திய அமைதிப்படை ஷெல் தாக்குதலை நடத்தியமை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும். இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஒரு நகரத்தை தங்களுடைய பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டால் முதலில் தாங்கள் ஷெல் தாக்குதலை மேற்கொண்டே ஆக வேண்டும் என்றும், நாங்கள் குடிமக்கள் தாமென்றும் இராணுவ நடவடிக்கைகள் பற்றித் எமக்கு எதுவும் தெரியா * என்றும் இந்திய அதிகாரிகள் பதில் அளித்தார்கள். ஒரு அமைதி காக்கும் படையின் தன்மைக்குச் சிறிதும் பொருந்தாத வகையில் அமைந்த இத்தகைய நிலைப்பாட்டை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதிலும் இப்பிரச்சினையில் இந்தியா அடிக்கடி வெளிப்படுத்திய உண்ர்வு பூர்வமான புரிதலுக்கும் எதிராக இது உள்ளது. இந்த ஷெல் தாக்குதல்கள்

Page 135
234
விடுதலைப்புலிகளை ஒன்றும் செய்யவில்லை, இது அவர்களை மிக அரிதாகவே பாதித்தது அல்லது அச்சுறுத்தியது எனலாம். எப்போதுமே பலியாக்கப்பட்டவர்கள் அப்பாவிப் பொதுமக்களேயாவர்.
இலங்கைப் பிரச்சினை பஞ்சாப் பிரச்சினை போன்றதுதானா என்று செய்தியாளர்கள் இந்தியப் பிரதமரை 1987ம் ஆண்டின் ஆரம்பத்தில் கேட்டபோது இலங்கை அரசைப் போலன்றி இந்திய அரசு தனது சொந்த மக்களின் மீதே ஷெல் தாக்குதலையோ விமானமூலம் குண்டுத் தாக்குதல்களையோ நடத்தவில்லை என்று இந்தியப்பிரதமர் பதில் அளித்திருந்தார். சர்வதேச சமூகத்தினதும் மற்றும் தமிழர்களதும் எதிர்பார்ப்புகள் ஒரு புறம் இருக்க, அமைதிப்படை இவ்வாறு தனது துப்பாக்கிச் சூட்டின் வலிமையைப் பிரயோகித்தமையை இந்தியப் பிரதமரின் இந்தக் குறிப்பின் பின்னணியில் வைத்து நோக்குதலும் பொருந்தும். இலங்கை அரசு தமிழ்ப்பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய முடியாது போனதினால், இந்திய அரசு தான் இக்கடமைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது என்று நிலவிய நம்பிக்கையின் அடித்தளந்தான் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கான தார்மீக உரிமையினைப் பெற்றுக் கொடுத்திருந்தது.
2.2 இந்தியாவும் போராளிகளும்
போராளிகளில் மூத்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தனர் என்பது பொதுவாகத் தெரிந்த விஷயமே. போராளிகளுக்கு இந்தியாவிலேயே ஆயுதமும் பயிற்சியும் வழங்கப்படுகிறது என்று இலங்கை அரசும் சர்வதேசச் செய்தியாளர்களும் மீண்டும் மீண்டும் கூறி வந்துள்ளனர். இந்தியாவின் நிலையோ தாம் இலங்கை அகதிகளை மட்டுமே கொண்டிருக்கிறோம் என்பது மட்டுந்தான். எனினும் இலங்கை அரசோ தான் கூறி வந்ததைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு தனது கடற்படையைப் பலப்படுத்தி பாக்குநீரிணை வழியான போக்குவரத்துகளைப் பூரணமாகத் தடுப்பதில் கூடிய முக்கியத்துவம் காட்டியது. இந்திய அரசும் அதன் உளவு ஸ்தாபனமான றோவும் போராளிக் குழுக்களுடன் தொடர்புகள் வைத்துள்ளன என்பதைப் போராளிக் குழுக்களின் தலைவர்களும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களும் மிகவும் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளனர். இத்தகைய உறவுகள் தார்மீக மதிப்பீடுகளைப் புறக்கணிக்கின்றன, பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்பாத தன்மையே இத்தகைய உறவுகளை வழி நடத்துகிறது. ஒவ்வொருவரும் தான் மற்றவரைப் பயன்படுத்திக் கொண்டதாக நினைத்துக் கொண்டனர். தங்களை இவர்கள் ஒரு கணக்கிலும் எடுக்கவில்லை, தாங்கள் விளையாட்டில் பாவிக்கப்பட்ட பகடைக் காய்கள் மாத்திரமே என்ற சங்கடமான உணர்வு இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவியது. பொதுவாக மக்கள் இந்தியாவிடமிருந்து உயரிய நடத்தையை எதிர்பார்த்தனர். இந்தியாவில் நடந்த உட்கொலைகள் பற்றிய இந்தியக் காவல் துறையின் போக்கும் தமிழக அரசின் போக்கும் அதிக சந்தேகங்களைக் கிளப்பின. 1985ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் மனச்சாட்சியின்

235
உறுத்தலுடன் இருந்த தங்களின் சொந்த உறுப்பினர்களையே சித்திரவதை செய்ததையும் உறுப்பினர்களையே கொன்றதையும் பற்றிய செய்திகள் பிரபல இந்தியச் செய்தித் தாள்களிலேயே வெளிவந்துள்ளன. இந்தக் கொலைகள் இந்திய மண்ணிலேயே நடந்திருந்தன. காவல் துறையினரோ இந்தச் சம்பவங்களைக் கண்டும் காணாதது போல் நடந்து கொண்டனர். இந்தியக் காவல்துறை இம்மாதிரிப் பல தருணங்களில் நடந்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்கள் இங்கே குறிப்பிடப்படுகின்றன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திலிருந்து வெளியேறியிருந்த மிக முக்கியமான உறுப்பினரான திருசந்ததியார் அந்த இயக்கத்தால் தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார். இலங்கையின் மூத்த கட்டிடக்கலை வல்லுநரான திரு.ஏ.டேவிட் இக்கொலை பற்றிப் புகார் கொடுத்தபோது தமிழகக் காவல்துறை ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து, லண்டனில் வாழும் செல்வாக்கு மிகுந்த இலங்கைத் தமிழர் ஒருவர் தமிழ் நாட்டிலிருந்த தொழிலதிபரான தமது நண்பர் ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண டார். அநீத நண பர் தமிழக அமைச்சர் திரு எஸ்டிஎஸ்.சோமசுந்தரத்துடன் தொடர்பு கொண்டார். இவ்வளவுக்கும் பிறகுதான் குற்றஞ் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார், அவரும் பின்னால் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.
மற்றொரு சம்பவம் ரூபன் பற்றியது. ரூபன் மனச்சாட்சி உறுத்தலின் மேலீட்டினால் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அகதிகளுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். 1984ன் இறுதிப் பகுதியில் ஒரு நாள் இவர் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இவரை எதிர் கொண்டனர். பின் அவர்கள் இவரை அடித்துக் கொன்றுவிட்டனர். தமிழ்நாடு காவல்துறையிடம் இது குறித்து ஒரு பிரபல முக்கியஸ்தர் புகார் செய்துங்கூட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராளித் தலைவர்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான திருயிரபாகரனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைவரான திரு உமாமகேஸ்வரனும் தமிழகத்தில் உயர்பதவி வகித்தவர்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர் என்பதும் இவர்களது இயக்க்ங்களிடம் தாராளமான பொருள் வசதி இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. போதைவஸ்து விற்பனையுடன் சில போராளிக் குழுக்களுக்குத் தொடர்பு இருந்தது குறித்துத் தொடர்ந்து பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. மிகவும் சமீபத்திய செய்தி லண்டன் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புலன் விசாரணைக் குழுவிடமிருந்து வெளிவந்தது. இந்த வியாபாரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முக்கியமாகத் தொடர்பு கொண்டிருப்பதாக அறிவித்தது. (சண்டே டைம்ஸ் - லண்டன் - 30 ஆகஸ்ட் 1987) எது தங்களுக்கு வசதியோ அதன்படி நடந்து கொண்ட தன்மையானது இந்தியாவின் சட்டம், ஒழுங்கு என்பனவற்றைப் பாரதூரமாகப் பாதித்திருந்தது. பல நாடுகளால் இதை ஒருசிறிதும் சகித்துக்கொண்டிருந்திருக்க முடியாது. இனி வரவிருக்கும்

Page 136
236
ஆண்டுகளில் இந்நிலை இந்தியாவை எந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பது வேறு விஷயம்.
இலங்கை அரசின் கரங்களை முறுக்கவே தமிழ்ப்போராளிக் குழுக்களை இந்தியா பயன்படுத்தி வந்தது என்பது சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் வெளிப்படையாகவே தெரிந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குப் போதுமான அளவு ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் உள்ளனர் என்றும் இலங்கை இராணுவம் தங்களை நெருங்காத வண்ணம் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியுமே தவிர அதற்கு மேலால் எதுவும் செய்ய முடியாது என்றும் யாழ்ப்பாணத்தில் விஷயம் தெரிந்த அவதானிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்புத் தாக்குதலுக்கான ஆயுதங்கள் கிடைத்திருக்கவில்லை. இலங்கை அரசு மேற்கொண்ட "ஒப்பரேசன் லிபரேசனைத் தொடர்ந்து அகதிப் பணிகளுக்காக தமிழகத்தின் முதலமைச்சர் திரு.எம்.ஜி.இராமச்சந்திரன் விடுதலைப்புலிகளுக்கு 3 மில்லியன் பவுணிகளும் ஈரோஸ் அமைப்புக்கு 1 மில்லியன் பவுணிகளும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயமாகும். அகதிப் பணிகளில் அனுபவம் மிகுந்த பல ஸ்தாபனங்கள் இருந்தபோது, இது இந்திய அரசின் "லாசிகள் பெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸிற்கும் வழங்கப்பட்ட ஆதரவாகவே பொதுவாகக் கருதப்பட்டது. இதுபற்றி பியிஸி யில் மார்க் டெலியால் கோடி காட்டப்பட்டது.
1987ன் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்த இரண்டு மாதங்களில் இநீதிய அமைதிப்படை பொதுமக்களிடமிருநீது தனினைதீ துணிடித்துக்கொண்டுவிட்டது. ஆனால் இந்தியப்படையின் சில சிரேஷ்ட அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
ஒருவிதமான சமூகத் தொடர்புகள், உறவுகள்கூட அவர்களிடம் நிலவியது. கொழும்புக்குக் கொணி டு செல்லப்படும் தறுவாயில் தற்கொலை செய்து கொண டுவிட்ட விடுதலைப் புலியான குமரப் பாவின திருமணத்திற்குக்கூடத் தான் சென்றிருந்ததாகவும் அத்திருமணத்தின்போது மணப் பெண்ணிற்கு ஒரு சேலையைப் பரிசளித்ததாகவும் இந்திய அமைதிப்படை கேர்னல் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் தனக்கு இறால் மற்றும் கடல் உணவுப் பொருட்களை அன்புடன் பரிசாகக் கொண்டு வந்து கொடுத்ததையும் வருத்த உணர்வோடு நினைவு கூர்ந்தார். கடற்கரைகளில் தன்னோடு அவர்கள் இருந்து எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களைக் கூடக் காட்டினார். புகைப்படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தயா, குமரப்பா ஆகியோரும் இருந்தனர்.
23 அக்டோபர் 1987 போரின் சில காட்சிகள்
மின்சாரம் தடைசெய்யப்பட்டிருந்ததால் ஜெனரேட்டரால் இயக்கப்பட்ட
தொலைக்காட்சித் திரையில் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே
நடைபெற்றுக் கொணர்டிருந்த கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை

237
காரைநகரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. மறுநாள் நவம்பர் 5ம் திகதி ஓர் இந்திய ஹெலிகொப்டர் அதே இடத்தில் ஷெல் தாக்குதல் நடத்தியதில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். உளவுத் தகவல் என்ற பெயரில் நடந்த இந்தத் தாக்குதல் ஆதாரமற்ற ஊர்ஜிதப்படுத்தப்படாத ஊகங்களின் அடிப்படையில் நடந்ததாகவே தோன்றுகிறது. சாவகச்சேரியில் நடந்த ஷெல் தாக்குதலும் இதைப்போன்றதே. 1987 அக்டோபர் 27ம் திகதி நண பகலிலி சாவக கச்சேரி இந்திய ஹெலிகொப்டரினி ஷெல தாக்குதலுக்குள்ளானது. ஷெல் விழுந்த சாவகச்சேரிச் சந்தையில் அப்போது இருந்தவர்கள் சாமானியப் பொதுமக்களும் வடபாகத்தில் இருந்து வந்துநின்ற அகதிகளும் தான். சம்பவத்தை நேரில் கணிட திரு.எஸ்.ஜி.தேவாவின் கூற்றுப்படி, அச்சமயத்தில் அப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இலக்கு என்று குறிப்பிட்டுக்கூறக்கூடிய மாதிரி ஒரு அறிகுறியுமே இல்லை. இத்தாக்குதலில் இருபதிலிருந்து நாற்பது பேர் வரை கொல்லப்பட்டனர். தன் குழந்தையை அணைத்தவாறே இறந்து போய்க் கிடந்த தாயின் உடம்பைத் துளைத்துச் சென்ற சிறுசன்னமானது அவள் அணைத்திருந்த குழந்தையின் மேனியையும் ஊடுருவிச் சென்றிருந்தது. இந்த வான்வழித் தாக்குதல் நடப்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக சாவகச்சேரிச் சந்தைக்கூடாகச் சென்ற ஒரு பயணி 50 கலிபர் இயந்திரத்துப்பாக்கி பொருத்தப்பட்ட டட்ஸன் பிக்அப் வாகனத்தில் ஆயுதந்தாங்கிய விடுதலைப்புலிகள் மெதுவாக நகர்ந்து கொணடிருப்பதைப் பார்த்திருக்கிறார். இந்திய ஹெலிகொப்டர் ஒன்று கணிகாணித்துக் கொணடிருக்கும் நிலையில் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று தனது நணிபர்களிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். எதுவானாலும் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையை ஒரு போதும் நியாயப்படுத்துவதற்கில்லை. தெற்கு நோக்கிச் செல்வதற்காக சங்குப்பிட்டித்துறையில் காத்திருந்த அகதிகள் மீதும் அக்டோபர் 25ம் திகதி ஹெலிகொப்டரிலிருந்து குண்டு வீச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்திருந்த தகவல்கள் நவம்பர் முதல் திகதி வெளியான 'சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. மே 1987ல் இலங்கை இராணுவம் மேற்கொண்ட ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது உயிர்தப்பி ஓடிக்கொண்டிருந்த அகதிகள்கூட இந்தமாதிரி கஷ்டங்களை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 22ம் திகதி அராலித்துறையிலிருந்து தீவுப்பகுதிகளுக்கு சென்று கொண்டிருந்த பலரையும் இது போன்ற துயரச்சம்பவம் பலி கொண்டது. பொதுமக்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த படகுகள்மீது வான்வழியாக சூட்டுத் தாக்குதல் நடத்தியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 3ம் திகதி திருமதி லில்லி ராஜாவும் அவரது இரண்டு பேரன்களும் 9(5 பேத்தியும் இந்திய அமைதிப்படையினரால் கொண்டு செல்லப்படும் வேளையில் உடுவிலில் மருதனாமடம் வீதியில் சொலமன்ஸின் வீட்டுக்கு

Page 137
238
முன்னால் கொல்லப்பட்டனர். இவ்வளவிற்கும் இந்தியப்படையை ஆத்திரமூட்டச் செய்யும் எந்த நிகழ்ச்சியும் இங்கு இடம் பெறவில்லை. ஒரு தகவலின்படி, நிறுத்துங்கள்" என்று ஓர் இந்தியப்படை அதிகாரி கத்தியிருக்கிறார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. வெளியில் வருமாறு அழைக்கப்பட்ட க்லமன்ஸின் இரு மருமகன்மாரும் குடும்பத்தினர் முழங்காலில் நின்று மண்டியிட்டு மன்றாடியதன்பேரில் விடுவிக்கப்பட்டனர்.
இந்திய அமைதிப்படையின் பாலியல் வன்முறை, பெணிகளைப் பாலியல்ரீதியாக தொந்தரவுக்குள்ளாக்குதல், திருட்டு ஆகிய சம்பவங்களின் எண்ணிக்கை நவம்பரிலிருந்து அதிகரிக்கத் தொடங்கியதாகப் புகார்கள் வந்தன. உரும்பிராய்க்கு அருகில் கரந்தன் என்ற இடத்தில் தேடுதல் நடந்து கொண்டிருந்தபோது இந்தியப்படை வீரர்கள் பெண் அகதிகள் மட்டுமே இருந்த ஒரு வீட்டினுள் நுழைய நேர்ந்தது. கதவுகளை உள்ளே தாழிட்டு விட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர்கள் உள்ளே கழித்தனர். கண்டுக்குழியில் ரக்கா லேனில் வசிக்கும் ஒரு பெண்மணி நவம்பர் 16ம் திகதி நடந்த நிகழ்ச்சியை விபரிக்கிறார். முழங்காலில் விழுந்து மன்றாடிக் கதறி அழுத பிறகுதான் இராணுவவீரர்கள் அவரை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். நவம்பர் 28ம் திகதி உரும்பிராய் வடக்கில் ஒரு பெண் இருந்த வீட்டிற்குள் தனி இந்தியப்படை வீரன் ஒருவன் நுழைந்திருக்கிறான். பெண்ணின் தாயும் அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் கூச்சலிட்டவுடன் அவன் ஓட்டம் பிடித்து விட்டான். இந்திய அமைதிப்படை முன்னேறி வந்து கொண்டிருந்தபோது உரும்பிராயில் கட்டதில் தன் தாயையும் பாட்டியையும் பறிகொடுத்திருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை அவரது மாமா நவம்பர் 14ம் திகதி உடுவிலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். மானிப்பாயில் அவள் தனது சிநேகிதியின் வீட்டுக்குப் போகையில் இரண்டு படைவீரர்களின் கண்காணிப்பில் தந்தையும் தாயும் மகனும் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர். பெண்ணை உள்ளே போகுமாறும் மாமாவை வெளியில் நிற்குமாறும் படைவீரர்கள் சைகை செய்தனர். நடக்கவிருப்பதை உணர்ந்த பெண் கூச்சலிட்டாள். எல்லாரையும் சேர்ந்து கூச்சலிடுமாறு மாமாவும் வேண்டினார். சில வீரர்கள் வீட்டை விட்டு வெளியே ஒடி வந்தனர். பின் எல்லாப்படைவீரர்களும் ஓடிவிட்டனர். அந்த வீட்டிலிருந்த பெண் இராணுவ வீரர்களால் இரண்டுமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். தன் குடும்பத்தில் உள்ளவர்களைச் கட்டுக்கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்தப்பெண் கூச்சலிடவும் பயந்து போயிருந்திருக்கிறாள். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த அந்த வீட்டின் ஒரு மகன் அதற்கு முன்தினம் தனது இருபது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தபோது இராணுவவீரர்களால் எட்டி உதைக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருந்தார். அந்த மகன் இதுபற்றி அந்தப்பகுதி இராணுவத் தலைவரிடம் முறையிட்டபோது அந்த இராணுவ கப்டன் பின்வருமாறு பதிலளித்தார். "நான் இதற்காக வருந்துகிறேன். இந்த சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆயுதங்களைத்தேடி, அவற்றைக்

239
கண்டு பிடித்துக்கொள்ள முடியாத ஆத்திரத்தில் நாங்கள் இருந்தோம். சில இளைஞர்களைப் பிடித்து அடித்து உதைக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். அவர்கள் கட்டுப்பாடானவர்கள். அவர்கள் தமக்கு விடுக்கப்பட்ட கட்டளைகளைத்தான் எப்போதும் செய்வார்கள். அந்தப்பெண்கள் அதற்குப் பிறகு கொழும்புக்குப் போய் விட்டார்கள்.
உடுவிலில் இருந்த இந்திய அமைதிப்படையின் தலைவர் மேஜர் பரம்ேஸ்வர ஐயர் நல்ல மனிதர் என்று பரவலாகப் பெயர் எடுத்திருந்தவர். மக்களின் பிரச்சினைகளை அனுதாபத்துடன் கேட்டறிந்து, கட்டுப்பாட்டைப் பேணுவதில் அவர் தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார். நவம்பர் 25ம் திகதி டச்சு வீதிப்பகுதியில் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரும் அவரது மூன்று ஆட்களும் கொல்லப்பட்டனர். உடுவில் மகளிர் கல்லூரியில் பொறுப்பேற்றிருந்த இராணுவ கப்டன் சர்மா இதனால் பெரிதும் ஆத்திரமுற்றார். அந்தப்பகுதி ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. திருதஞ்சரட்ணம் என்ற பென்ஷன காரர் சைக் கிளில் சென்று கொணடிருக்கும் போது சுட்டுக்கொல்லப்பட்டார். எழுபது வயதுக்கும் மேலான திரு.கெமரன் தலைப்பாகை அணிந்தவராய் ஒரு பால் போத்தலுடன் உடுவில் சந்திக்கு பாணி வாங்க வந்தபோது அங்கேயே சுட்டுக்கொல்லப்பட்டார். ஷெல் தாக்குதலால் காயமுற்ற தனது தாயை மருத்துவச் சிகிச்சைக்காக அவரது மகன் சைக்கிளில் எடுத்துக்கொணர்டு உடுவில்-மானிப்பாய் வீதியில் ஆர்க்லேனுக்கருகில் வந்து கொண்டிருக்கையில் உடுவில் சந்தியிலிருந்து இந்தியப்படை வீரர்கள் கட்டதில் தாய் இறந்து போக, மகன் மட்டுமே உயிர்தப்ப முடிந்தது. உடுவில் திருச்சபை உறுப்பினரான ஆசிரியை ஒருவர் அன்று மட்டும் குற்ைந்தது 12 பொதுமக்களாவது கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டார்.
உபண்டத்தரிப்பில் தனது பாட்டியுடன் இருந்த ஒரு பல்கலைக்கழக மாணவி பின்வருமாறு கூறுகிறார்: "பண்டத்தரிப்பிலும் அதற்கு அருகாமையில் உள்ள சண்டிலிப்பாய், சங்கானையிலும் மக்கள் எந்தநேரமும் ஷெல் அடியும் தாக்குதலும் தேடல் வேட்டையும் நடக்கலாம் என்று நிரந்தரமான அச்சத்தில் இருந்தார்கள். விடுதலைப்புலிகள் எங்காவது ஒரு இடத்திற்கு போய் அங்கு சில வெடிகளைத் தீர்த்துவிட்டு பின் ஓடி விடுகிறார்கள். பின் இந்தியப்படை வீரர்கள் அங்கு கொலை வெறியுடன் ஒடுகிறார்கள். சந்தை மீண்டும் ஆரம்பமானதும் யாரோ ஒருவர் அங்கு ஒருமுறை வெடி தீர்த்து விட்டு ஓடி விட்டார். இராணுவ வீரர்கள் பொது மக்களைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். இதில் கீரை விற்றுக்கொண்டிருந்த ஒருவர் கொல்லப்பட்டார். சண்டிலிப்பாய்-பண்டத்தரிப்பு வீதியில் வைத்து இந்திய அமைதிப்படை வீரர்கள் நால்வரை டிசெம்பர் முதல் வாரத்தில் விடுதலைப்புலிகள் கொன்றனர். இராணுவ வீரர்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியைச் கட்டுக் காயப்படுத்தினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மாதகலிலும் பணிடத்தரிப்பிலும் இருந்த இந்திய அமைதிப்படை முகாம்களுக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, சிகிச்சை மறுக்கப்பட்டு அவர்கள்

Page 138
240
திருப்பி அனுப்பப்பட்டனர். விவசாயி இறந்து போனார். மறுநாள் இந்திய அமைதிப்படை முகாம்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கிக்கொண்டிருந்தது.
எங்கள் வீடு வளவுகளுக்குள் எந்த நேரமும் படைவீரர்கள் நுழைந்து தேடுதல் வேட்டையாடுவார்கள் என்று எந்த நேரமும் நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். இதுமாதிரியான ஒரு தேடுதல் நடவடிக்கையின்போது பக்கத்து வீட்டிலிருநத ஒரு பெண்ணை ஒரு இராணுவவீரன் அடித்து அவளை ஓர் அறைக்குள் பலவந்தமாகத் தள்ளினான். வீட்டிலிருந்த மற்றவர்களும் நாங்களுமாய் சேர்ந்து கூச்சலிட்டோம். வேறொரு இராணுவப் படைவீரர்களின் குழு அந்த இடத்திற்கு வர ஆரம்பித்ததும், முதலில் வந்த படைவீரர்களின் கோஷ்டி ஓடி விட்டது. வந்த கேர்ணல் மரியாதையானவர். விஷமிகள் கண்டு பிடிக்கப்பட்டு, இராணுவ நெறி முறைகளை மீறியதற்காக அவர்களுக்குத் தணிடனை வழங்கப்பட்டது. பண்டத்தரிப்பில் ஒருமுறை எனது மாமியும் ஒருமுறை இராணுவவீரர்களால் துன்புறுத்தப்பட்ட போதும் அவள் ஒன்றுக்கும் அசையாமல் உறுதியோடு இருந்தாள். மிகப் பின்தங்கிய இந்தியக்கிராமங்களிலும் கூட இராணுவம் பயிற்சிகளில் ஈடுபடும்போது இந்த மாதிரிப் பிரச்சினைகள் திருப்பியும் திருப்பியும் நடந்த வண்ணமாகவே இருக்கிறது என்று ஒரு கேர்ணல் எங்களிடம் கூறினார். புகார்கள் பெருமளவில் வந்து குவிவதற்கு முன்னதாகவே இராணுவப்பிரிவு அந்த இடத்தை விட்டுப் போய்விட்டது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்த முன்னைய பிரஜைகள் குழு இந்திய அமைதிப்படையின் கீழ் மீண்டும் செயற்படுத்தப்பட்டது. தான் தனது முகாமிலிருந்த போது எப்படித் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று விபரித்து ஒரு இராணுவ கேர்ணல் சில சிறு சன்னங்களையும் பிரஜைகள் குழுவுக்குக் காண்பித்தார். "நீங்கள் இதை நிறுத்த வேண்டும். நான் மற்றவர்கள் மீது அக்கறை கொண்டவன். இந்தத் தடவை நான் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அடுத்த தடவை இப்படி ஒன்று நடந்தால் இந்தப்பகுதி முழுதும் ஷெல் தாக்குதல் நடத்துவேன்" என்று அவர் அவர்களிடம் தெரிவித்தார். பிரஜைகள் குழு அவரிடம் வெகுவாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஒரு இராணுவ நடவடிக்கையின் போது, அந்த கேர்ணல் வயர்லஸ் மூலம் தனது வீரர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பதை நான் கேட்டேன். யாரையும் சுடவேண்டாம் என்றும் தேவைப்பட்டால் துரத்தி அடிக்குமாறும் அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு படைவீரன் கொல்லப்படும் போது இந்த மாதிரியான அறிவுறுத்தல்கள் எவ்வளவு தூரம் நல்லபடியாகக் கடைப்பிடிக்கப்படும் என்பது எனக்குத் தெரியாது.
நவம்பர் 7ம் திகதியன்று விடுதலைப்புலிகளின் நடமாட்டம் பற்றிய தகவல்களின் விளைவாக இணுவிலிலும் மருதனாமடத்திலும் இந்தியப் படைகள் மிகவும் கெடுபிடியாக இருந்தன. மேற்கிலிருந்து ஒரு ஒழுங்கை வழியாக அகதி முகாம்களுக்காக அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த ட்ராக்டர் ஒன்று இணுவில் ஆளப்பத்திரிக்குத் தெற்கில் சில யார் தூரத்தில் காங்கேசன்துறை வீதியைக் கடந்தது. கடக்கும் சமயம் அது இந்திய

24
அமைதிப்படையின் தடைச்சுவர் மீது மோதி, எதிரிலிருந்த கிழக்கு நோக்கிச் செல்லும் ஒழுங்கையில் நுழைந்தது. மருதனாமடத்திலிருந்த இந்திய அமைதிப்படை சென்ற்றி உடனே ஷெல் அடித்ததில் சன்னங்கள் ஆஸ்பத்திரிக்கு மேலாகச் சென்று ஒழுங்கையில் விழுந்தன. ஒரு சன்னம் பேராசிரியர் சந்திரசேகரத்தின் வீட்டின் மீது விழுந்தது. கால்களை வெளியில் நீட்டியவண்ணம் ஒரு மேசையின் அடியில் உறங்கிக் கொண்டிருந்த பேராசிரியரின் கால்கள் இச்சன்னத்தால் மோசமாகச் சிதைந்து போனது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சில மணித்தியாலங்களின் பின்னர் இறந்து போய்விட்டார்.
நவம்பர் முதல் வாரத்தில் அச்சுவேலியில் சில விடுதலைப்புலிகள் இந்திய அமைதிப்படையின் மீது கிறனைற்றுகளை வீசி எறிந்து விட்டு அங்கிருந்த சட்டத்தரணி பாலசிங்கத்தின் வீடு வழியாகத் தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு இந்தியப்படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பாலசிங்கம் வீட்டிற்குள் நுழைந்த இந்தியப்படையினர் இந்தச் சம்பவத்தில் சிறிதும் சம்பந்தப்படாத புரொக்ரரையும் அவரது மனைவியையும் அங்கிருந்த இன்னொரு நபரையும் வெளியே வருமாறு அழைத்தனர். பிறகு அந்த மூவரும் கொல்லப்பட்டனர்.
சகஜநிலைக்குத் திரும்புவது பற்றி இந்திய அதிகாரிகள் வெளிப்படையாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தபோதிலும் பொதுத்துறைப் பணியாளர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் பல்கலைக்கழக ஊழியர்களும் வேலைக்குப் போகும் வழியில் மானிப்பாய், சண்டிலிப்பாய், தாவடி, உடுவில் மற்றும் மருதனாமடம் ஆகிய இடங்களில் இந்தியப்படையினரால் அடித்து, உதைக்கப்பட்டனர்.
டிசெம்பர் 7ம் திகதி இரவு சுமார் முப்பது விடுதலைப்புலிகள் கோண்டாவிலில் உள்ள ஒரு சிறு கோயிலுக்கு வந்தார்கள். அந்தப்பகுதியில் இருந்த மக்கள் அவர்களது வருகையினால் தங்கள் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்று நினைத்து அவர்களை அந்த இடத்தை விட்டுச் சென்று விடுமாறு வேண்டிக்கொண்டனர். விடுதலைப்புலிகள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தனர். அப்படியானால் தாங்கள் இதைப்பற்றி இந்தியப்படைபடையினரிடம் சொல்லி விடப் போவதாக மக்கள் கூறினார்கள். நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை. அதை நாங்களே செய்து கொள்வோம்" என்று விடுதலைப்புலிகள் கூறியவாறு வானத்தை நோக்கிச் சுட்டனர். சனங்கள் அவசர அவசரமாய் அந்தப் பகுதியை விட்டு வெளியேறி கோவிலுக்குள் புகுந்து கொண்டனர். மறுநாள் காலையில் புதிதாக வந்திறங்கிய படைகள் அந்த இடத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டன. அங்கே பின்தங்கி நின்று கொண்டிருந்த சில விடுதலைப்புலிகள் படைவீரர்களை நோக்கிச் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். சகஜ நிலைக்குத் திரும்புமுகமாக இந்திய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையையொட்டி அன்று காலை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் சிலர் வேலைக்குப் போவதற்க்ாக ஒரு பஸ்ஸில் கோண்டாவில் டிப்போவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோணிடாவில் சந்தியில் இந்தியப்படையினரால் பஸ் தடுத்து நிறுத்தப்பட்டு, பஸ் சாரதியும் கண்டக்டரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

Page 139
242
காயமுற்ற நபர் வலியால் முனகிய ஒவ்வொரு தடவையும், சினமுற்றிருந்த இராணுவ வீரர்கள் பஸ்ஸைத் தாக்கி ஜன்னல்களை உடைத்து நொறுக்கினர். பஸ் சாரதியும் கண்டக்டரும் தங்களுடைய உயிர் அன்றோடு முடிந்தது என்றுதான் நினைத்துக் கொண்டனர். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அங்கு வந்து சேர்ந்த அதிகாரி ஒருவர் தாக்குதலை நிறுத்துமாறு பணித்தார். இந்த கொடுஞ்சோதனையான நேரத்தில் மிகுதி இ.போ.ச. ஊழியர்கள் பஸ்ஸிற்குள் படுத்தவாறு கிடந்து கடவுளைப் பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர்.
அன்றிரவு கோணர்டாவிலில் இருந்த தங்கள் வீட்டை யாரும் கொள்ளையடித்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமுகமாக யாழ் பல்கலைக்கழக உபவேந்தரின் அலுவலக உதவியாளராக இருந்த திரு.துரைசிங்கத்தின் சகோதரர் திருபாலசிங்கமும் அவரது மாமனார் திரு.கோபாலசிங்கமும் வீட்டிலேயே நிற்க, மற்றவர்கள் கோயிலில் போய் இருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினர் வீட்டிலிருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்தனர். வெளியில் வந்த திரு.பாலசிங்கம் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். திரு.கோபாலசிங்கம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருபாலசிங்கம் ஒரு வருஷத்திற்கு முன்பு தான் திருமணம் முடித்திருந்தார். கோயிலின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வெளியே அழைக்கப்பட்டுக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். அன்றிரவு மட்டும் இப்படி ஆறு பொதுமக்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.
அன்றைய தினம் (டிசெம்பர் 8ம் திகதி) காலை 1100மணிக்கு இணுவிலில் இருந்து கோப்பாய் வரையிலான பரந்த பகுதியில் திடீரென்று ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. வேலைக்குச் சென்றிருந்த பலரும் டவுனுக்கு அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் சென்றிருந்தவர்களும் இடையில் என்ன செய்வதென்றறியாது ஸ்தம்பித்துப் போயினர். வீடு திரும்பாவிட்டால் வீட்டில் எல்லாரும் தங்களுக்கு என்ன ஆயிற்றோ என்று நித்திரையின்றித் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று பலர் தங்களைப் பணயம் வைத்துக் கொண்டு பிரதான வீதிகளைத் தவிர்த்துக் கொண்டு கிராமத்து ஒழுங்கைகள் வழியே சுற்றிச்சுற்றி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஏழாலையிலுள்ள தனது வீட்டுக்குப் போய்ச் சேர பல்கலைக்கழக நூலகரான திருமுருகவேள் பட்டபாடு ஒரு சரியான உதாரணம். நாங்கள் ராஜபாதை வழியாக மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். ஆனால் தெற்கு நோக்கிச் செல்லும் சிலர் எம்மை அவசரமாகக் கடந்து சென்று கொண்டிருந்தனர். என்ன விஷயம் என்று கேட்டறிய அவர்களை நிறுத்தினோம். அவர்களோ நிறுத்தாமல் எம்மைக் கடந்து சென்றனர். திடீரென்று துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் உஸ்ஸென்று எங்களைக் கடந்து பறந்து செல்ல ஆரம்பித்தன. நாங்கள் சைக்கிளைத் திருப்பிக் கொண்டு கிழக்கு நோக்கிச் செலுத்தினோம். பருத்தித்துறை வீதியைக் கடந்து, இருபாலையிலும் கோப்பாயிலும் நின்றிருந்த இராணுவ சென்ற்றிகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கிய ஒழுங்கைகளுக்கூடாக சென்றோம். கோப்பாய் சென்ற்றி நின்றிருந்த இடத்திற்கு

243
கிழக்கே 300 யார் தள்ளி ஒரு முனையில் கோப்பாய்-கைதடி வீதியைக் கடந்து இன்னொரு ஒழுங்கைக்குள் புகுந்தோம். மேற்கொண்டு, பருத்தித்துறை வீதியைக் கடந்து மேற்கு வழியாக ஒரு ஒழுங்கைக்கூடாக புத்தூர் நோக்கிச் சென்றோம். பிறகு புத்தூர்-சுண்னாகம் வீதி வழியாக வந்து ஏழாலை போய்ச் சேர்ந்தோம் இந்த மாதிரியான "சகஜமான சூழ்நிலையில் தான் ஆயிரக்கணக்கானோர் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தனர்!
நவம்பர் 27ம் திகதியன்று திரு.கணநாதன் சண்டிலிப்பாயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்று கொண்டிருக்கையில் கட்டுடை மதகடியில் இருந்த சென்ற்றியால் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கே இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டிருந்த வேறு ஒன்பது பேருடன் சேர்ந்து கொள்ளுமாறு இவரும் பணிக்கப்பட்டார். அவர்களில் மூன்று பெணிகளும் இந்திய அமைதிப்படை வழி கோலியிருந்த ‘சகஜநிலைமை யையொட்டி யாழ்ப்பாணம் போய் பென்ஷன் பணத்தை எடுத்து வரப்போயிருந்த ஒரு பென்ஷன்காரரும் இருந்தனர். பென்ஷன்காரர் அந்த வீரர்களிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லிக் கெஞ்சினார். "நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம். இந்த அழகில் உனக்கு பென்ஷன் வேண்டிக் கிடக்கிறது" என்று அவர்கள் கூறினார்கள். முப்பது படைவீரர்களைக் கொண்ட தங்கள் கோஷ்டி ஒன்று. விடுதலைப்புலிகளைத் தேடச் சென்றிருப்பதாகவும் அவர்களில் ஒருவருக்கு ஆபத்தென்றாலும் அங்கு நிற்கும் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்றும் படைவீரர்கள் தெரிவித்துள்ளனர். தண்ணிருக்கு மேலேயும் அவர்களைச் சுற்றிலும் அவ்வப்பொழுது துப்பாக்கிச் சூடு நடந்த வண்ணம் இருந்தது. சண்டிலிப்பாய் சென்ற்றியில் நின்ற ஒரு சீக்கியப்படைவீரரிடம் ஏற்கெனவே பரிச்சயம் கொண்டிருந்த கணநாதன், நீங்கள் என் நண்பரல்லவா?" என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் "இன்று நீங்கள் என் நண்பரல்ல" என்று பதில் வந்தது. இந்திய அமைதிப்படையிலிருந்து யாரோ ஒருவர் என்ன நடக்கிறது என்று வயர்லஸ் மூலம் விசாரித்திருக்கிறார். போர் வீரர்களில் ஒருவர், "அரிசிக்காக இங்கு ஒரு கியூ நின்று கொண்டிருக்கிறது" என்று பதிலளித்தார். அந்தச் சிறு நகைச்சுவையை அனைவரும் ரசித்ததாகத் தோன்றியது. நாற்பத்தைந்து நிமிஷங்களுக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அந்த நேரத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் அனைவரும் சகல தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தனர். மறுநாள் விடுதலைப்புலிகளின் ஒரு குழுவைச் சுற்றி வளைத்தபோது இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த பதினொரு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
2.4 யுத்தத்தின் போது இந்தியர்களை எதிர்கொள்ளுதல்
மக்கள் இந்திய அதிகாரிகளை எதிர்கொண்டபோது அதிகாரிகள் திமிருடனும் அதிகாரத் தோரணையுடனும் நடந்து கொண்டதாகவே எங்கள் அறிக்கைகள் கட்டுகின்றன. எங்கு தவறு நடந்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள எந்தவிதமான முயற்சியும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பொதுமக்கள் அடிக்கடி துன்புறுத்தலுக்கும் பரிகாசத்துக்கும் உள்ளானார்கள். தங்கள்

Page 140
244 உணர்ச்சிகளை அவர்கள் தங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
மறுபக்கத்தில் சிந்திக்கவல்ல சில இளம் அதிகாரிகள் நுண்ணறிவுடன் செயற்பட்டனர். மரியாதையுடன் நடந்து கொண்டனர். பொதுமக்களுடன் பேசி நிலைமையைத் தெரிந்து கொள்ள ஆவலுற்றவர்களாக இருந்தனர். இவர்களில் இளம் மேஜர் ஒருவரும் இருந்தார். பெண்களுக்கு அதிக பிரச்சினை ஏற்படுவதுபற்றி அவர் தெரிந்திருந்தார். பெண்கள் தமக்கு ஏதாவது அபாயம் வரவிருப்பதாகத் தெரிந்தால் கூச்சலிடுமாறு அவர் ஆலோசனை வழங்கியிருந்தார். நாங்கள் கேள்விப்பட்ட எல்லாச் சம்பவங்களிலும் இந்த யுக்தி பயனுள்ளதாக இருந்திருப்பதாகவே தெரிகிறது. "வெளியில் வாருங்கள், பயப்படாதீர்கள்" போன்ற தமிழ் வார்த்தைகளை அவர் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்திருந்தார். இந்தியப்படையின் முன்னேற்றத்தின்போது தான் டவுனில் இருந்ததாகவும் மக்கள் தங்களால் முகாம்களுக்குச் சென்று கொள்ளமுடியவில்லை என்று அவரிடம் தெரிவித்தபோது அத்தகைய சந்தர்ப்பங்களில் கதவுகளைத் தாழிட்டுக்கொணர்டு வீட்டுக்குள்ளேயே ' இருக்குமாறு தான் அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் எங்களிடம் கூறினார். அவரை எங்களுக்கு நன்கு தெரியுமாதலால் அவர் உண்மையைச் சொல்வதாகவே நாங்கள் நம்புகிறோம்.
ஒரு முழு அளவு யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததாகவே இந்திய அதிகாரிகள் பொதுவாக நம்பினார்கள். பெரும்பாலான அதிகாரிகள் மோதல்கள் ஆரம்பமான பிறகுதான் கொண்டு வரப்பட்டனர். தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான சூழ்நிலைமைகள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை, அல்லது மிகக்குறைவாகவே தெரிந்திருந்தது. யாழ்ப்பாணத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு அவர்கள் பணிக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டளைப்படி நடந்து கொண்டனர். மிகவும் நவீனமான ஒரு நிலையான இராணுவத்தை எதிர்கொள்வதான எண்ணத்துடனேயே அவர்கள் செயற்பட்டனர். உண்மையில் எதிரிகள் என்போர் 2000 பேர் கொண்ட இளைஞர் குழுதான். சாத்தியமான எந்த வழியையும் கையாண்டு பொதுமக்களின் உயிர்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி அவர்கள் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். கிடைத்த தகவல்களின்படி இந்தியப்படை 20,000 ஆட்களுக்கும் மேற்பட்டதாக இருந்தது. டாங்கிகளுடனும் துப்பாக்கிப்படை வீரர்களின் பலத்துடனும் இந்தியப்படை இருந்தது. ஃப்ரணர்ட் லைன் பத்திரிகையிலிருந்தும் சில தமிழ் நண்பர்களிடமிருந்தும் பெற்றிருந்த தகவல்களை மனதில் இருத்திக்கொண்டு தாங்கள் அங்கு ஒரு அவசரத்தில் வந்து சேர்ந்ததாகவே சில அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
திருநெல்வேலி அருகே நிலை கொண்டிருந்த கூர்க்கா ரெஜிமென்டைச் சேர்ந்த மேஜர் ஒருவர் பல்கலைக்கழக அலுவலர்களிடம் பின்வருமாறு விபரித்தார்:
"இந்தியப்படையில் கூர்க்கா பிரிவு மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து

245
கொள்ளக்கூடியது. சென்ற இரவு (டிசெம்பர் 14ம் திகதி) திருநெல்வேலி குடியிருப்பிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. யாராவது தங்களை நோக்கிச் சுட்டால் ஒழிய நீங்கள் கடவேண்டாம் என்று நான் எனது வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். இத்தகைய மறுதாக்குதல்களின் போது பல பொதுமக்கள் பலியாவார்கள் என்ற எண்ணத்துடன் விடுதலைப்புலிகள் வெறியுடன் இருந்தது எனக்குத் தெரியும்"
விடுதலைப்புலிகளின் யுத்த தந்திரத்தை கூர்க்காப்படைப் பிரிவின் ஒரு மேஜராவது புரிந்து கொள்ளுமளவிற்கு புத்திக்கூர்மை வாய்ந்தவராக இருந்தார். இந்திய அமைதிப்படையைச் சலசலப்புக்கு உள்ளாக்கி, ஏதாவது சகஜ நிலைமை தெரிவதாகத் தோன்றுகிற நிலைமையைக் குழப்பி விடுவதற்கு ஆகச்செய்ய வேண்டியதெல்லாம் கம்மா சில தடவைகள் கட்டுவிட்டு ஓடி விடுவதுதான் என்று விடுதலைப்புலிகள் நினைத்துக் கொணர்டிருப்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். சகஜ நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முன் நிபந்தனை என்னவெனில், இந்திய அமைதிப்படை முதலில் தாங்கள் உண்மையிலேயே அமைதி காக்கும் படையினர்தானா அல்லது கட்டுப்பாடு இல்லாத இராணுவப்படையா என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ள வேணடும். இந்திய இராணுவம் அமைதி காக்கும் பணியை மேற்கொண்டபோது, தன் படையினரின் உயிரிழப்பைப் பற்றி முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வேண்டும். தங்கள் படையினரில் யாராவது கொல்லப்பட்டதும் பொதுமக்கள் மீது திருப்பித் தாக்குதல் நடத்துவது என்பது வழக்கமாகி விட்டிருந்தது. டிசெம்பர் 14ம் திகதி சுன்னாகத்தில் சென்னைப்பிரிவைச் சேர்ந்த இரண்டு போர் வீரர்கள் கொல்லப்பட்டபோது பொதுமக்கள் மீது மறுதாக்குதல் நடவாது போனது ஒரு விதிவிலக்கான சம்பவமே. பொதுமக்களை இந்திய அமைதிப்படை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மறுதாக்குதல்களை அது தீவிரமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நிராயுதபாணியாக இருந்த பொதுமக்களைக் கொன்ற எந்த இராணுவ வீரனும் இராணுவத் தண்டனைக்குள்ளானதாக நாங்கள் கேள்விப்படவேயில்லை. பொதுமக்களின் இறப்பு குறித்த அசட்டையான போக்கு நிச்சயம் உயர் அதிகாரிகளிடமிருந்து வந்ததுதான். பொதுமக்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்துவதுபற்றி ஒரு இராணுவ உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் சொன்னார்: "எனது பகுதியில் நான் எந்த ஷெல் தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் சூழ்நிலை இப்படித் தொடர்ந்து நீடிக்குமானால் நான் இது பற்றி யோசிக்க வேண்டித்தானிருக்கும்"
இங்கு நடந்து கொண்டிருப்பதைத் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த பல இராணுவவீரர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. ஒருமுறை ஒரு ஜவான் சொன்னார்:
'உரும்பிராமிலும் கோப்பாயிலும் நடந்த அழிவுகளை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் புலிகள் தப்பியிருக்கின்றனர். கவனமாய் இருங்கள். வடக்கத்தவர்கள் மிகுந்த ஆத்திரமடைந்த மனநிலையில் இருக்கிறார்கள் வடக்கத்தவர்கள் என்று

Page 141
246
அவர் குறிப்பிட்டது இந்திய அமைதிப்படையிலிருந்த வடஇந்தியர்களைத்தான். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு இராணுவ அதிகாரியிடமிருந்து மனதை நெகிழவைக்கும் ஒர் அறிவுரை வெளிப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நன்கு மதிக்கப்பெற்றிருந்த ஒருவரைத் தனியே அழைத்துச் சென்று தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்ததை அவரிடம் கொட்டியிருக்கிறார் அந்த அதிகாரி. அவர் கூறியிருக்கிறார்: "நீங்கள் யாழ்ப்பாண டவுனிலேயே இருந்து கொண்டிருந்திருந்தால் மக்கள் எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியவராது. உரும்பிராய் பக்கம் போய் அங்கு என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழர்களோ இல்லையோ அதிகாரிகளாகிய எங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் புரிகிறது. ஜவான்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள், பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து வந்தவர்கள், அவர்கள் அத்துணை அறிவுபூர்வமானவர்கள் இல்லை. அவர்களுக்கு தமிழரா, சிங்களவரா என்ற வித்தியாசம் கூடத் தெரியாது. அவர்களுக்கு ஒரு ஐந்து வயதுக் குழந்தை கூட ஒரு புலிதான். ஒரே ஒரு முறை துப்பாக்கிச் சூடு நடந்தாலும் அவர்கள் ஒரு சுற்று வெடி தீர்த்துத்தான் ஒய்வார்கள். அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டாலும் பத்து பொதுமக்களையாவது அவர்கள் கொன்று விடுவார்கள். இப்பொழுது சமீப காலமாகத்தான் நாங்கள் சில விரிவுரைகளை நடத்தி சூழி நிலையை அவர்களுக்கு விளக்க முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம். நான் மிகவும் சோர்ந்து விட்டிருக்கிறேன். நான் இன்னும் நான்கு மாத காலத்திற்குள் இராணுவத்திலிருந்து விலக இருக்கிறேன்"
இலங்கை இராணுவத்தின் செயல்களால் தமிழர்களும் துன்புற்றிருந்தனர் என்று கூறி அப்பெரியவர் அந்த அதிகாரியைச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த அதிகாரி கைகளை விசிறி மறுதலிக்கும் பாங்கில் தலையை ஆட்டினார். அவர் கூறினார்: "இராணுவம் என்பது இராணுவம்தான். எல்லா இராணுவங்களும் ஒரே மாதிரியானவைதான். இந்திய இராணுவம்தான் உலகத்திலேயே உள்ளவற்றில் மிகவும் ஒழுக்கக்கேடான இராணுவமாகும். இந்திய அமைதிப்படை இங்கே இருந்து கொண்டிருப்பதால் மக்கள் இந்திய அமைதிப்படையையோ அல்லது விடுதலைப்புலிகளையோ இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்தாக வேண்டும் என்று நான் நிச்சயமாய்ச் சொல்வேன். இந்திய இராணுவத்தை நீங்கள் சுட்டு வெல்ல முடியாது. புலிகள் ஒருவரைக் கொன்றால் இந்திய இராணுவம் பத்துப் பேரைச் சுடும். நீங்கள் இந்தியப்படைக்கு எதிர்ப்புத் த்ெரிவிக்க வேண்டுமென்றால் உண்மையிலேயே நீங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்லட்சக்கணக்கில் மக்களை ஒன்று திரட்டிக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். எப்பாடுபட்டாவது துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க வேண்டும்"

247
25 ஒரு தனிப்பட்ட கணிப்பு
ஒருவேளை தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொள்ள பல்கலைக்கழக மருத்துவ விரிவுரையாளர் ஒருவரது பின்வரும் குறிப்பு உதவக்கூடும்: I X
"அக்டோபர் 12ம் திகதி திருநெல்வேலியில் கொமாண்டோஸ் எனப்படும் அதிரடிப்படையினர் வந்து தரையிறங்கியதிலிருந்து இந்திய இராணுவத்தின் முழு உளவியலுமே மாறிப்போய்விட்டது என்றுதான் நினைக்கிறேன். திருநெல்வேலிப் பகுதி விடுதலைப்புலிகள் செறிந்திருந்த இடமாகும். விடுதலைப்புலிகளுக்கு இங்கு தம்மை வெற்றிகரமாக எளிதில் அணிதிரட்டிக்கொள்ள முடியும். வான் வழிப்பாதுகாப்பை இளக்காரத்துடன் ஒதுக்கிய கொமாண்டோக்கள் சற்றும் எதிர்பாராதவிதமாகப் பின்வாங்க வேணி டியிருந்தது. இலங்கை இராணுவம் வாணி வழிப்பாதுகாப்பு மேற்கொள்ளாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை. அந்தத் தருணம் வரை இந்திய இராணுவம் பொதுமக்களின் உயிர்கள் மீது கரிசனை காட்டியிருந்தது. அந்தச்சமயம் இந்தியப்படை வீரர்களின் சைனியம் ஒன்று எங்கள் வீட்டைக் கடந்து சென்றது. அவர்கள் ஆசுவாசத்துடன் பொதுமக்களை நோக்கித் தோழமையுடன் கை அசைத்த வண்ணம் சென்றனர். இந்த சைனியத்தின் மீது விடுதலைப்புலிகள் கட்டதையடுத்து என் வீடு யுத்தகளமானது. எனினோடு இருந்த ஒரு பெண மணியுடனும் குழந்தைகளுடனும் நான் அங்கிருந்து ஒடித்தப்ப வேண்டியதாயிற்று. முதலில் எங்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடந்தது. பிறகு நாங்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று தெரிந்ததும் எங்களை ஒன்றும் செய்யாமல் நாங்கள் நடந்து அப்பால் செல்ல அனுமதித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களையும் கைகளை மேலே தூக்கியவாறு வெளியே வருமாறு இராணுவம் பணித்தது. அவ்வாறு அவர்கள் வெளியே வரும்போது விடுதலைப்புலிகளைச் சேர்ந்த ஒரு பையன் அவர்களுக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு இராணுவத்தை நோக்கிச் சுட்டான். அதிகாரி அவர்களை வீட்டுக்குள் நுழைந்து கொள்ளுமாறு கத்தினார். சுட ஆரம்பிப்பதற்கு முன் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்து கொண்டு விடப் போதுமான நேர அவகாசத்தை அவர் அனுமதித்தார். விடுதலைப்புலிகள் மறைந்து நின்று சுடுவதற்கு பொதுமக்களை ஒரு தடுப்பாகப் பாவிப்பது என்பதில் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்தது. அகில இந்திய வானொலி ஒலிபரப்பிய மாதிரி குரூரமான அர்த்தத்தில் அல்ல. அந்தச் சமயத்தில் இந்திய இராணுவம் பொதுமக்களின் உயிர் மீதான அக்கறையைக் கவனத்தில் கொண்டிருந்தது.
பிறகு அவர்களின் மனோபாவம். பெரிதும் மாறிவிட்டது, பயங்கரத்தைப் பிரயோகிப்பதுதான் என்று திட்டவட்டமாகத் தீர்மானம் செய்துகொண்டு விட்ட மாதிரித்தான் எனக்குத் தெரிகிறது. ஒரு கிழமைக்குப் பிறகு உரும்பிராயில் நடைபெற்ற கொலைகளின் உக்கிரத்தைப் பார்க்கும்போது அது நான் முன்பு அனுபவித்ததிலிருந்து எவ்வளவோ வித்தியாசமாக இருந்தது. ஒரு யுத்த களத்தின் பின்புலத்தில் குவிந்திருக்கக்கூடிய பெரிய

Page 142
248
இராணுவப்படையின் மீது ஷெல் தாக்குதல் நடத்துவதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எங்களுடைய சூழலில், அங்குமிங்குமாக சிறு அளவில் பரவியிருக்கும் கெரில்லா படையினர் மீது ஷெல் தாக்குதல் நடத்துவது என்பது பயங்கரத்தை விளைவிக்கும் யுக்தியே. இதனால் வெறும் கசப்புணர்வு மட்டுமே வளர்ந்து செல்லுமி. இந்திய இராணுவம் பல விஷயங்களில் குழம்பியிருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல்கள் சேர்ந்தாற் போல குறிப்பிடும்படியாகத் தொடர்ந்து நடந்தமை. மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்ப வேண்டும் என்ற தீர்மானம் திட்டமிட்டே எடுக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தவே செய்கிறது. "நான் உன்னைச் சுட்டுவிடுவேன், "இந்த இடத்தை அப்படியே தரைமட்டமாக்கிவிடுவேன்" போன்ற பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த அதிகாரிகளினதும் ஜவான்களினதுமான பயமுறுத்தல்கள் மலிந்துதான் போய்விட்டது. மகாத்மா காந்தியின் இந்தியாவைப் பொறுத்தவரை இது துயரமான நடத்தைதான்.

249 அத்தியாயம் 3 1987 அக்டோபர் யுத்தம் (ஆயுதங்களைக்களையும் இந்திய நடவடிக்கை)
3.1 பிரம்படி - ஒரு திருப்பு முனை
பிரம்படி ஒழுங்கையில் என்னதான் நடந்தது என்பது, அதைப்பற்றி சொல்ல வருபவரின் சொந்த விருப்புவெறுப்புகளைப் பொறுத்தும் அவர் எங்கெங்கிருந்து தகவல்களைப் பெற்றார் என்பதைப் பொறுத்தும் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது. தாறுமாறான கட்டுக்கதைகளால் எல்லாம் மூடுண்டு போய்க் கிடக்கிறது. உளவுத்துறையின் பிழையான தகவல்களை ஆதாரமாகக்கொண்டு இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எவ்வாறு குழப்பத்திலும் தோல்வியிலும் முடிந்தது என்பதைப்பற்றியும், இது விடுதலைப்புலிகளுக்கு அவர்களுக்கு உண்மையிலேயே உள்ளூர இருந்த முக்கியத்துவத்தைவிட எவ்வாறு கூடிய முக்கியத்துவத்தைத் தேடிக் கொடுத்தது என்பதைப் பற்றியும், இதனால் ஏற்பட்ட பீதியினால் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைக் களைந்துவிட வேண்டும் என்று இந்தியா மேற்கொண்ட தீர்மானம் எவ்வாறு முழு அளவிலான பெரிய யுத்தத்திற்கு இட்டுச் சென்றது என்பதைப் பற்றியும் நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த யுத்தத்தை இந்தியா நடத்திச் சென்ற விதம் எம் மக்கள்மத்தியில் இந்தியாவைப் பற்றியிருந்த உன்னதமான படிமத்தைக் கணிசமான அளவு கறைப்படுத்தியிருந்தது. இந்தத் துன்பியல் யுகத்தின் திருப்புமுனையாக பிரம்படி அமைந்தது. இந்தப் பிரச்சினைகள் குறித்து எழுதியவர்கள் எல்லாரும் தேசிய நலனையும் புவிசார் அரசியலின் நலனையும் பற்றிய கண்ணோட்டத்திலிருநது மட்டுமே எழுதினார்கள். அங்கிருந்த சாமானிய மக்கள் இதைப்பற்றி என்ன நினைத்தார்கள் என்பது மிகவும் அற்பமான விஷயமாகவே கருதப்பட்டது. எனவே முடிந்த அளவிற்கு இந்த முதல் யுத்தத்தின் பின்புலத்தில் பொதிந்திருக்கக்கூடிய உணர்மைகளை எவ்வளவு சிறப்பாக வெளிக்கொணர முடியுமோ அவ்வளவிற்கு நாம் வெளிக்கொண்டுவர முயன்றிருக்கிறோம். இங்கு குறிப்பிடப்படும் இந்திய இராணுவம் சம்பந்தமான குறிப்புகளிற் சில இந்தியா டுடே' சஞ்சிகையில் சேகர் குப்தா என்ற இந்தியப் பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையிலிருந்து பெறப்பட்டவையாகும்.
பிரம் படி ஒழுங்கை நிறைய வளைவுகளைக் கொண்ட சரளை மணற்பாதையாகும். (இந்நூலின் பின்னிணைப்பில் உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) வடக்கு-தெற்காய் நீளும் இந்த ஒழுங்கை கொக்குவில்திருநெல்வேலி வீதியையும் நாச்சிமார் கோயில் வீதியையும் இணைக்கிறது. ரயில்வே இரும்புப்பாதையிலிருந்து மேற்கே சுமார் 200 யார் தள்ளி இந்த ஒழுங்கை உள்ளது. யாழ் பல்கலைக்கழக வளவிலிருந்து சுமார் அரைமைல் தொலைவில்தான் பிரஸ்தாப சம்பவம் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் இருந்த இந்த இடத்தில் தங்கியிருந்து நிறைய பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். திருநெல்வேலி வீதியிலிருந்து ஒழுங்கைக்குள் நுழைந்ததும் முதல் வளைவில் தென்படும் வீடுதான் சம்பவம் நடைபெற்ற முக்கிய இடமாகும். அமெரிக்காவுக்குப் போகத் தயாராகிக்

Page 143
250
கொண்டிருந்த ஒரு பெண்மணிக்குச் சொந்தமான வீடு அது. வீட்டை வாடகைக்கு விடும் நோக்கில் வாடகைக்கு வரப்போகிறவரிடமிருந்து வாடகை முற்பணமாக 15,000 ரூபாவையும் அப்பெணிமணி வாங்கியிருந்தார். விடுதலைப்புலிகள் அப்பகுதியிலிருந்த தங்களுடைய ஆட்கள் மூலம் இத்தகவலை அறிந்தனர். தாங்கள் அந்த வீட்டில் தங்கி நிற்கப் போவதாகக் கூறி குடிவரவிருந்தவரிடம் வாங்கிய பணத்தை அவரிடமே திரும்பிக் கொடுத்து விடும்படி அப்பெண்மணியிடம் கூறி விட்டனர். விடுதலைப்புலிகளைச் சேர்ந்த மறைந்த வீரர் குகனும் அவரது தம்பி யோகியும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த வீட்டிலிருந்து சுமார் நூறு யார் தூரத்திற்குள் மட்டும் குறைந்தது மூன்று இளைஞர்களாவது விடுதலைப்புலிகளுக்காக தமது உயிரைப் பலி கொடுத்திருந்தார்கள். 1987 பெப்ரவரி 14ம் திகதி நாவற்குழி முகாமைத் தாக்குவதற்கான முஸ்தீபில் எங்கோ தவறு நடந்து தணிணிர் தாங்கி வணிடி வெடித்ததில் குகன் உட்படக் கொல்லப்பட்ட பத்துக்கு மேற்பட்ட விடுதலைப்புலிகளில் இந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் பலியாகியிருந்தார். மற்ற இரு இளைஞர்கள் விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து பின் காணாமல் போய்விட்டவர்களாவர். 1987 மத்தியையடுத்து பிரபாகரன் மேலே குறிப்பிட்ட இந்த வீட்டிலேயே தங்கியிருந்தார். இந்த வீட்டின் அனுகூலம் என்னவென்றால் அது பிரதான வீதியிலிருந்து நன்கு உள்ளே தள்ளி, பசுமையான மரஞ்செடி கொடிகளைக் கொண்டு அமைந்திருந்ததாகும். இந்த வீட்டிலிருந்து வெளியேறிக்கொள்ள ஆறு பாதைகள் இருந்தன. "இலங்கை விமானப்படை இந்த இடத்தின் மீது குண்டு வீசி அழிக்கக்கூடும் என்று முதலில் நாங்கள் பயந்து கொணடிருந்தோம். சமாதான ஒப்பந்தத்திற்குப் பிறகு விடுதலைப்புலிகளின் வாகனங்கள் ஒடித்திரிந்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடக்கலாம் என்று நாங்கள் கொஞ்சமும் யோசித்தது கிடையாது" என்று அப்பகுதியில் குடியிருந்த ஒருவர் கூறினார். அச்சமயத்தில் அந்த இடம் மிகவும் விலாசமாக இருந்தது. நிறையப் பார்வையாளர்கள்-வெளிநாட்டு நிருபர்கள் கூட அங்கு வந்து போய்க் கொண்டிருந்தனர்.
அக்டோபர் 5ம் திகதியிலிருந்து பன்னிரண்டு விடுதலைப்புலிகள் தற்கொலை செய்து கொண்டதும் சிங்களப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுமான சம்பவங்கள் விடுதலைப்புலிகள் ஒரு நேரடி மோதலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள் என்பதைத் தெளிவாக்கியது. அக்டோபர் ம்ே திகதி அளவில் புதுடில்லியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் வெளியான உத்தியோகபூர்வமான அறிக்கைகளிலிருந்து விடுதலைப்புலிகளின் தலைவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை பற்றி ஆலோசனை உள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.
விடுதலைப் புலிகளும் இத்தகைய ஒரு நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்று ஊர்ச்சனங்களுக்கும் தெரிந்திருந்தது. சென்ற்றி எனப்படும் காவல் நிலைகளை அமைப்பதற்காக கடற்கரையிலிருந்து மணல் போன்ற பொருட்கள் சில தினங்களாகக் கொண்டு வந்து குவிக்கப்பட்ட் வண்ணமாக இருந்தன. "இந்தியர்களை வசமாய் விழுத்த நல்ல பொறிக்கிடங்கு தயாராகிக் கொண்டிருந்தது. என்று ஒரு குடும்பத்தலைவி தெரிவித்தார்.

251
சேகர் குப்தாவின் கட்டுரையின்படி, இந்திய அமைதிப்படையின் திட்டங்களை அதன் வானொலித் தொலைத் தொடர்புகளை இடை மறித்துக் கேட்டதன் மூலம் விடுதலைப் புலிகள் தெரிந்து கொண்டு விட்டனர் என்றும் கருத்து நிலவியது. இந்திய அமைதிப் படையிலிருந்து ரகசியத் தகவல் எங்கோ கசிந்து போயிருக்க வேண்டும் என்றும் சிலர் கருதினர். இவற்றில் எது உண்மையாக இருந்தாலும், ஏற்கனவே பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்த விஷயத்தையே இது மீணடும் உறுதிப்படுத்துவதாய் அமைநதது.
அக்டோபர் 9ம் திகதிய அரசு சார்பிலான வானொலித்தலைப்புச் செய்திகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி நடவடிக்கைகளை இந்திய அமைதிப்படை மேற்கொள்ளப் போவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனைவிட வேறு சில அறிகுறிகளும் காணப்பட்டன. அக்டோபர் 9ம் திகதி இரவு 9.00 மணிக்கு பிரபாகரன் தங்கியிருந்த வீட்டிற்கு அரை மைலுக்கும் சற்றுத்தள்ளி பிரவுணி வீதியில் இருந்த ஒருவரின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது வாசல் விளக்கை அணைத்து விட்டு வெளியே வருமாறு அவருக்கு கூறப்பட்டது. வெளி வாசலுக்கு வந்தவர் வெளியில் இராணுவச் சீருடையில் கிட்டத்தட்ட 25 பேர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். யாழ்ப்பாணக் கோட்டைக்கு எந்த வழியாய்ப் போவது என்று "அவர்கள் அவரிடம் விசாரித்திருக்கிறார்கள். வழி கேட்டுத் தெரிந்து கொண்டதும் சுவர்களைத் தாண்டிக்குதித்து யாழ் நகர்ப்பக்கமாய் அவர்கள் நகர ஆரம்பித்திருக்கின்றனர்.
பிரவுணி வீதி சற்று வடக்கே தள்ளிச்சென்று ரயில்வே பாதையில் இணைகிறது. தனியார் வீட்டு மதில் சுவர்களை எல்லாம் தாண்டிக் குதித்துக்கொண்டு இந்திய அதிரடிப்படையினர் இந்த இடத்தில்தான் பிரம்படி ஒழுங்கைக்குள் நுழைந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சன்னல்பின்னலாக நிறையத் தகவல் சொல்பவர்களைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு இந்திய இராணுவத்தின் இந்த முஸ்தீபுகள் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் அது ஆச்சரியமான விடயமாகும். பிரபாகரனைப் பிடிப்பதற்கு சாத்தியமான பல வழிகளைப் பற்றி இந்திய இராணுவம் யோசித்துக் கொண்டிருந்தது என்று நாம் அனுமானிக்கலாம். விடுதலைப்புலிகளும் அதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தயாராயிருந்தார்கள்.
எல்லாம் பண்ணிக் கடைசியில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையோ நம்பமுடியாத அளவுக்கு அபத்தமாயிருந்தது. இந்தியப் போர் வீரர்களின் தரத்தைப் பற்றியல்ல, இந்திய இராணுவ உளவுத்தகவல் பற்றியும் அவர்களது இராணுவத் தந்திரோபாயங்கள் பற்றியும் இது பலத்த ஐயங்களை எழுப்புகிறது. இங்கு தங்கிநின்ற இரண்டு மாதகாலத்தில் இந்திய அமைதிப்படை தொடர்பு கொண்டிருந்ததெல்லாம் யாழ் நகரில் எலெக்ட்ரோனிக் பொருட்களை விற்கும் கடைகளோடும் விடுதலைப்புலிகளோடும்தான் என்பதை இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மற்றபடி யாழ் மக்களுடனோ யாழ் பிரதேசத்துடனோ எந்தவிதமான பரிச்சயத்தையும் ஏற்படுத்திக்கொள்ள இவர்கள் எந்த முயற்சியுமே மேற்கொண்டிருக்கவில்லை. அழிவுத் துயரத்திற்கான

Page 144
252
அரங்கம் அமைக்கப்பட்டு விட்டது. வன்முறை மூடத்தனத்தோடு கைகோர்த்துக் செல்லும் என்பது பண்டைய ஞானம். பிரம்படி ஒழுங்கைக்குள் அதிரடிப்படையினர் நுழைவதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே அப்பகுதி மக்கள் அனைவரும் ஏதோ நடக்கப்போகிறது என்று உஷார் அடைந்து விட்டதனால் அவர்களின் திட்டம் ஒன்றும் சரிவரவில்லை. பிரபாகரன் வீட்டிலிருந்து அறுபது யார் தள்ளி அதிரடிப்படை வீரர்கள் வந்து சேர்ந்தபோது, பிரபாகரன் அந்த வீட்டை விட்டு வெளியேறி இரண்டு மணித்தியாலமாகிவிட்டிருந்தது. அப்போதும் கூட பிரபாகரன் தங்கியிருந்த சரியான வீடு எது என்று தெரியாத நிலையிலேயே அவர்கள் இருந்ததாகத்
தெரிகிறது.
முன்னரே கூறியிருப்பது போல, இந்த நடவடிக்கை ஒரு திருப்பு முனையாக அமைந்துவிட்டமையால் இந்தியாவைப் பொறுத்த வரையிலும் சரி, தமிழரைப் பொறுத்த வரையிலும் சரி தமிழ்த்தேசியப் புராணத்தின் கதைப்பொருளாக இது அமைந்தே தீரும். இந்த அதிரடி நடவடிக்கையில் 40 பொதுமக்களும் 37 இந்திய இராணுவத்தினரும் (பிரம்படியில் 8 அதிரடிப்படை வீரர்களும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கருகில் 13வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச் சேர்ந்த 29 போர் வீரர்களும்) உயிரிழந்தனர். தமிழ் மக்கள் கூறும் கதையின்படி இந்தியர்கள் பிரம்படி ஒழுங்கைக்குள் வந்து 40 அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று சிலரை டாங்கி செல்லும் வழியில் கிடத்தி அவர்களின் மீது டாங்கியையும் செலுத்திச் சென்றிருக்கிறார்கள். சிலர் பாலியல் வன்முறை கூட இங்கு நடந்ததாகக் கூறுகிறார்கள். சேகர் குப்தாவினுடையதைப் போன்ற யதார்த்த பூர்வமான விவரணைகள் கூட வெகுஜனங்களின் துயரைப் பற்றியோ, இந்தியாவின்மீதும் விடுதலைப்புலிகளின்மீதும் பொதுமக்கள் அடைந்த பெரும் ஏமாற்றத்தைப் பற்றியோ, ஒரு ஜனநாயக நாடு என்ற அளவில் மேற்படி நடவடிக்கை இந்தியாவுக்கு எத்தகைய பெயரை ஈட்டித்தரும் என்பதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையையும் தெரிவிக்கவில்லை. ஆனால் உணர்மைகள் எப்பொழுதும் போல் செழுமையாயும் ஆச்சரியங்கள் நிறைந்ததுமாகத்தான் இருக்கின்றன. விடுதலைப்புலிகளின் நடத்தைக்கு அது பெரிதாக பெருமை சேர்ப்பதாக இல்லை. இந்திய இராணுவமும் இதில் ஒழுங்காய் நடந்து கொள்ளவில்லை. யுத்தம் நடந்த விதத்தைப் பார்த்தால் இந்தியப் போர்வீரர்கள் மிகத்தீவிரத்தோடு போராடியிருக்கிறார்கள். கடுமையான இடர்ப்பாடுகளுக்கிடையில் மிகவும் வசதியில்லாத சூழ்நிலையிலும் கூட சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் கடைசி வீரன் வரையிலும்- கடைசித் தோட்டா தீரும் வரையிலும் தளராமல் போராடியிருந்திருக்கிறார்கள். எதிரிகளால் சூழப்பட்ட நிலையிலும் காயம்பட்ட தங்களின் சகாக்களோடு பதினெட்டு மணிநேரம் கழித்து தங்களுக்கு உதவி வந்து சேரும் வரையிலும் இந்திய அதிரடிப்படை வீரர்கள் உறுதியாக நின்று தாக்குப் பிடித்தார்கள். மனிதாபிமான ரீதியில் அவர்கள் எதுவரை சென்றார்கள் எனின், தங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தச் சிறு தொந்தரவினையும் தவிர்த்துக்கொள்ள அவர்கள் யாரையும் கொல்லத் தயாராக இருந்தார்கள் என்பது வரைதான். ஆனால் அதற்காகக் கொல்ல வேண்டும் என்பதற்காக கொலைவெறியோடு கொன்று தீர்த்தார்கள்

253
என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகும். அங்கு பாலியல் வன்முறைச்சம்பவம் எதுவுமே நடைபெறவில்லை. பல்வேறு சாட்சியங்களைச் சந்தித்து விசாரித்துப் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு இந்த அதிரடித்தாக்குதல் பற்றிய விபரங்கள் கீழே தொகுத்துத் தரப்படுகிறது.
ஒரு பட்டாளம் அதிரடிப்படை வீரர்கள் (சேகர் குப்தாவின் கூற்றின்படி 70 பேர்) பிரவுணி வீதியும் திருநெல்வேலி வீதியும் இணையும் சந்திக்கருகில் கொக்குவில் கிராமசபையை அணிடியிருந்த வெளியில் அக்டோபர் 12ம் திகதி நள்ளிரவு கடந்து 1.00 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் தரையிறங்கியிருக்கிறார்கள். (சிலர் இரவு 11.00 மணிக்கு இறங்கியதாகக் கூறுகிறார்கள்) அந்த நிமிஷத்திலிருந்து ஊர்ச்சனங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பித்தவித்துக் கொண்டிருந்தனர். வெளிநாட்டிலிருந்து விட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்திருந்த விரிவுரையாளர் ஒருவர் தானும் தன் குடும்பமும் வெளியேறி விடுவது என்று தீர்மானித்து விட்டு பெட்டி படுக்கையையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எப்போது விடியும் என்று காத்துக் கொண்டிருந்திருக்கிறார். அதிரடிப்படை வீரர்களைத் தொடர்ந்து 13வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச் சேர்ந்த 30 வீரர்கள் அடங்கிய இன்னொரு பட்டாளமும் தரையிறங்கியது. அதிரடிப்படையினர் விடுதலைப்புலித் தலைவரைக் கைது செய்யும் பணியில் இறங்க, சீக்கியப் படையினர் தங்கள் தளத்தைக் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது என்பது தான் ஏற்பாடு. அதிரடிப்படை வீரர்களைக் கொண்டு வந்த ஹெலிகொப்டர்கள் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலுக்கு உள்ளானதால், சீக்கிய காலாட்படையினர் கொக்குவில் கிராமசபைக்கு 300 யார் தள்ளிக் கிழக்கே இருந்த பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு அருகில் தரையிலிறக்கப்பட்டனர். அவர்கள் அசையக்கூட முடியாமல் நாலாபுறமும் விடுதலைப்புலிகளால் துரிதகதியில் சுற்றி வளைக்கப்பட்டுச் சுடப்பட்டனர். மருத்துவ பீடத்தின் பலமான மூன்று மாடிக் கட்டிடத்திற்குள் உட்புகுந்து கொண்ட விடுதலைப்புலிகள் அதன் மேல் மாடியில் பாதுகாப்பான-சுடுவதற்கு வசதியான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். அதிகாலையிலிருந்தே இருதரப்பினருக்குமிடையே துப்பாக்கிச்சூடு ஆரம்பமாகிவிட்டது. எந்த நேரமும் தாக்குதல் நேரலாம் என்று புலிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு தளத்தை-நினைத்த மாத்திரத்தில் நூற்றுக்கணக்கான போராளிகளை புலிகள் நொடிப்பொழுதில் திரட்டிக்கொள்ள வசதியான ஒரு தளத்தை எப்படி 30 பேர் மட்டும் சென்று தாக்கிக் கைப்பற்றித் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார்த்தால் யாருக்கும் வியப்பு ஏற்படவே செய்யும். சேகர் குப்தாவின் அறிக்கையின்படி முப்பது பேரடங்கிய பட்டாளத்தினைச் சேர்ந்த முக்கியமான வானொலித் தொடர்பு வீரர் யுத்தத்தின் அதி ஆரம்ப நிலையிலேயே பலியாகி விட்டிருக்கிறார். இந்தப் பட்டாளத்தின் தலைவர் மேஜர் பிரேந்திரசிங் எங்கே ஆரம்பத்தில் தரையிறங்க முடிவு செய்யப்பட்டிருந்ததோ அதே இடத்திற்கே புறப்பட்டிருக்கிறார். அதிரடிப்படையினரோ குறுகிய தூர வாக்கி-டாக்கி மூலம் அந்த இடத்திலிருந்து தள்ளி தாங்கள் நிற்குமிடத்திற்கு அவரை விரைந்து வரும்படி அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவரோ தன்னுடைய படைவீரர்கள் அனைவருமே விடுதலைப்புலிகளால்

Page 145
254
சுற்றிவளைக்கப்பட்டு விட்டனர் என்பதை அறியாமல் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் அவரும் சுற்றிவளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆள் எண்ணிக்கை அளவிலும் ஆயுதங்களின் அளவிலும் இப்பட்டாளம் துரிதகதியில் அழிக்கப்பட்டு விட்டது. ஒரு சீக்கியப்படை வீரர் எவ்வாறு தன் தலைப்பாகையைக் கழற்றி காயம்பட்ட தனது கையில் கட்டுப்போட்டுக் கொண்டு பின் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்தார் என்பதை ஒரு கதை விபரிக்கிறது. கையிருப்பு ரவைகள் தீர்ந்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் இறுதிக்கும் இறுதியான தாக்குதலில் இறங்கினார்கள். காயமடைந்த நிலையில் ஒரே ஒரு இராணுவவீரனே மிஞ்சியிருந்து, பின் கைது செய்யப்பட்டான். காலை 10.00 மணிக்குள் எல்லாமே முடிந்து விட்டது. முதல் நாள்தான் குவாலியரிலிருந்து ஹெலிகொப்டரில் ஏறியவர்கள் முழுதாய் 24 மணி நேரம் கூட இந்நாட்டில் நிற்க முடியாமல் போய்விட்டது.
இவ்விதமாய் காலாட்படை வீரர்களின் பட்டாளத்திற்கு நேர்ந்த பேரழிவினால் தான் அதிரடிப்படையினரின் செயல் திட்டத்தில் காலதாமதமும், மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட நேர்ந்தது என்று ஊகிக்க முடிகிறது. திட்டமிட்டபடியே இந்த சீக்கியர் படை குறிக்கப்பட்ட இடத்திலேயே இறங்கியிருந்தாலுங் கூட, பிரபாகரனுக்குத் தப்பிச் செல்வதற்குப் போதுமான கால அவகாசம் இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இலங்கை இராணுவம் மிகமிக அவதானத்தோடு செயற்பட்டது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேணடும். இராணுவத் துருப்புகளை இவ்வாறு தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஆகாயமார்க்கப் பாதுகாப்பு அளிப்பது மிக அவசியமானதாகும். இது பயன் மிகுந்தது என்றும் நிரூபணமாகியுள்ளது. எந்தவிதமான ஆகாய மார்க்கப் பாதுகாப்பும் இல்லாமல் இந்திய இராணுவவீரர்களை இவ்வாறு இறக்கியது எதிரிகளின் கைகளிலேயே அவர்களை நேரடியாகக் கையளித்தது மாதிரி ஆகிவிட்டது. இந்திய இராணுவம் எதிர்கொள்ள வேண்டிய இடையூறுகளைக் குறித்து இந்திய இராணுவத்துறைத் திட்டவியலாளர்களுக்கு போதுமான தெளிவு இருந்திருக்குமானால், உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முதலியவற்றைக் கொணிடு தங்களுக்கு வசதியாக அனைத்தையும் புனர் நிர்மாணம் செய்துகொண்டு அவ்வாறே தங்கள் வீரர்களையும் நெறிப் படுத்தி இருக்க முடியும். அவிவாறு செயற்பட்டிருப்பார்களாயின் பிரபாகரன் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு, திட்டம் துரிதமாகவும் வெற்றிகரமாகவும் முடிந்திருக்கும். இங்கோ அதிரடிப்படை வீரர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே திட்டவட்டமாகத் தெரிந்திருக்கவில்லை. ரயில்பாதை இருப்புகளில் சரியான இடத்திலிருந்து புறப்பட்டு, பின் தவறாக அவற்றிற்கு செங்குத்தாக மேற்கு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். ... '
இதற்கிடையில் மருத்துவ பீடத்திற்கு அருகில் விடுதலைப்புலிகளுக்கும் இந்திய காலாட்படையினருக்கும் இடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டை திருநெல்வேலி வீதி வழியே குடியிருந்தவர்களை அங்கிருந்து பீதியில்

255
வெளியேறச் செய்தது. ஜீவா என்ற பல்கலைக்கழக மாணவன் மருத்துவ பீடத்திற்கருகில் இருந்த பொற்பதி வீதியில் இருந்த தனது சகோதரியின் வீட்டிற்குப் போய் அவர்களை அழைத்துக்கொண்டு பாதுகாப்பானதென்று கருதி பிரம்படி ஒழுங்கையில் இருந்த ஒரு வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். அதிரடிப்படையினர் அங்கே நிற்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. அப்பொழுது அதிகாலை 3.30 மணி இருக்கும். அதற்கு முதல் நாள் மாலை பிரபாகரன் அங்கேதான் இருந்ததாக அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தீர்மானமாகக் கூறினார்கள். சர்ச்சைக்குள்ளான அந்தக் காலையில் பிரபாகரன் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஒரு வேன் பல தடவை வெளிக்கிட முயற்சிக்கும் சத்தத்தை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். எஞ்ஞன் ஸ்டார்ட் ஆனதும் அதிகாலை 330 மணி அளவில் அந்த வாகனம் ஒட்டிச் செல்லப்பட்டிருக்கிறது. அதிகாலை 4.00 மணிக்கு அதிரடிப்படை வீரர்கள் ராஜா என்பவரின் வீட்டுக்குள் பின்வளவால் நுழைந்தனர். அதே வழியில் அவர்கள் இன்னும் மேலே நடந்திருந்தால் 100 யார் தள்ளித்தான் பிரபாகரன் தங்கியிருந்த வீடு இருந்தது. அவர்கள் அந்த வீட்டிற் செலவிட்ட நேரத்தை வைத்து யோசித்துப்பார்த்தால், ராஜாவின் வீட்டைத்தான் அவர்கள் பிரபாகரனின் வீடாகக் கருதியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்கள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த வேளையில்தான் ராஜா நித்திரை கொள்ளச் சென்றிருந்தார். 50 பேர் அளவில் அங்கு வந்திருந்ததாக ராஜா தெரிவித்தார். பிரபாகரனையும், சராவையும் பற்றி அவரிடம் விசாரித்திருக்கிறார்கள். தனக்குத் தெரியாது என்று அவர் பதில் கூறி இருக்கிறார். அங்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் போய் விசாரித்திருந்தாலும் இப்படிப் பதில்தான் கிடைத்திருக்கும். வாகனங்கள் எப்போதும் வருவதுமி போவதுமாய் இருப்பதை அவர்கள் அவதானித்திருந்தாலும் பிரபாகரன் எப்போது வருகிறார், போகிறார் என்பதைப் பற்றி அவர்கள் அக்கறை கொண்டது கிடையாது. அப்படியே சிலருக்கு தெரிந்திருந்தாலும், சாதாரணமக்கள் தைரியமாகக் கதைத்துக் கொள்ளக்கூடிய விஷயமல்ல அது. அடுத்ததாக, விடுதலைப்புலிகளின் முகாமைப்பற்றி அவர்கள் ராஜாவிடம் கேட்டிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தான் அந்த முகாம் இருப்பதாக அவர்களுக்குப் பதில் கூறப்பட்டது. பின் ராஜாவின் குடும்பத்தவரை வெளியில் வரச்சொல்லி விட்டு அதிரடிப்படையினர் அவருடைய வீட்டைச் சோதனையிட்டிருக்கிறார்கள். சுவரில் பிரேம் போடப்பட்டு மாட்டப்பட்டிருந்த ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அது பிரபாகரன் படமா என்று ஒரு வீரர் கேட்டிருக்கிறார். இல்லை, அது குருமகராஜின் படம் என்று ராஜா பதில் கூறியிருக்கிறார். படத்தின் மீது டார்ச் அடித்துப்பார்த்து விட்டு அந்த அதிரடிப்படைவீரர் சொன்னார்: "ஐயா மன்னித்துக் கொள்ளுங்கள் பின், காலை 5.00 மணியளவில் ராஜாவுையும் அவரது மருமகன் குலேந்திரனையும் தங்களோடு வந்து விடுதல்ைக்புலிகளின் முகாமைத் தங்களுக்கு காட்டுமாறு கேட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் தாக்கினால் அவர்கள் இருவரும் இறக்கவேண்டி வரும் என்று அவர்கள் ராஜாவிடம் சொல்லியிருக்கிறார்கள். ராஜா, "ஓம்" என்றார். பின்னர் ராஜா கூறியது: "நாங்கள் மோசமான இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. சாகப் போகிறோமோ உயிர்தப்பப் போகிறோமோ எல்லாம் ஆண்டவன் கையில்

Page 146
256
என்று நினைத்துக் கொண்டேன். வீட்டில் உள்ளவர்களைப் பதட்டப்படாமல் இருக்கும்படிச் சொல்லிவிட்டு கமாண்டோக்களுக்கு வழியைக் கிாட்டிவிட்டு விரைவில் திரும்புவதாக அவர்களுக்குச் சொன்னேன்" ராஜாவின் வீட்டிலிருந்து ஒரு ஒற்றையடிப்பாதை பிரம்படி ஒழுங்கைக்குள் இரண்டு வளைவுகளுக்கு இட்டுச் சென்றது. ராஜாவின் வீட்டிலிருந்து வரும்போது எதிர்ப்படும் இடப்புறம் நோக்கிய வளைவு தெற்கு நோக்கிச் சென்றது. முதலாம், இரண்டாம் வளைவுகளைத் தவிர்த்துவிட்டு ஒருவர் நேரே மேலே செல்வாரானால் பிரபாகரன் தங்கியிருக்கும் வீட்டிற்கான ஒழுங்கையைச் சென்றடையலாம். முதலாவது வளைவில் ஓய்வு பெற்ற ஒரு இராணுவ உத்தியோகஸ்தரின் வீடு இருந்தது. அவரது வீட்டிற்குப் பின் வளவில் இருந்த சிறு தென்னங்காணி அவரது வீட்டிற்கும் பிரபாகரனின் வீட்டுக்கும் இடையில் அமைந்திருந்தது.
இதற்கிடையில் ஒரு அதிரடிப்படை அதிகாரி, அந்த வளைவில் 20 யார் தள்ளித் தெற்கே அமைந்திருந்ததும் நாம் முன்னர் குறிப்பிட்ட விரிவுரையாளரினதும் வீட்டுக்குள் பின்வாசல் வழியாக எச்சரிக்கையுடன் நுழைந்தார். அந்த அதிகாரி கெப்டனாகவோ அல்லது மேஜராகவோ இருக்க வேண்டும். "நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? எல்லோரும் அவரவருக்கு என்று கூறப்பட்டுள்ள அகதிகள் முகாமில் அல்லவா இருக்க வேண்டும்?" என்று அந்த அதிகாரி விவுரையாளரிடம் கேட்டிருக்கிறார். "அந்த அறிவித்தல் யாழ்ப்பாண நகரசபைக்குள் வாழும் சனங்களுக்கானது. நாங்கள் வெளியில் இருக்கிறோம். ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறோம். என்று அந்த விரிவுரையாளர் பதில் கூறினார். "நான் உங்களை நம்புகிறேன்" என்று பதில் சொல்லி விட்டுப் போயிருக்கிறார் அந்த அதிகாரி.
அக்டோபர் 11ம் திகதி காலை வானொலி அறிவித்தல் ஒன்று யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் நல்லூர்க்கந்தசாமி கோவில், யாழ் இந்துக் கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்குச் சென்று அடைக்கலம் புகுமாறு கேட்டுக் கொண்டிருந்தது. நாம் முன்பே குறிப்பிட்டிருப்பது போல இந்த அறிவித்தலை அவ்வளவு தீவிரமாகப் பின்பற்ற வழி இல்லை. ஏனெனில் யாழ்நகரில் உள்ள ஜனத்தொகையில் ஒரு சிறு தொகையினரைக் கொள்ளக்கூடப் போதுமான இடப்பரப்போ, வேறு வசதிகளோ இந்த இடங்களில் கிடையாது. விடுதலைப்புலித் தலைவரைப்பற்றி அந்த அதிகாரி அவரிடம் விசாரித்தபோது, தான் அந்த இடத்திற்குப் புதியவர் என்றும் வாகனங்கள் போய்வந்து கொண்டிருப்பது தனக்குத் தெரியும் என்றாலும் அவற்றைத் துருவிப் பார்த்து அறிந்து கொள்ளத் தனக்கு அதில் அவ்வளவு ஆர்வம் இல்லையென்றும் தான் தானும் தனது பாடுமாய் இருப்பவன் என்றும் அந்த விரிவுரையாளர் கூறியிருக்கிறார். தான் அவர் கூறுவதை நம்புவதாகக் குறிப்பிட்ட அந்த அதிகாரி குடும்பத்தில் உள்ள எல்லாரையும் அழைத்துக்கொண்டு போய் ஒரே அறைக்குள்ளேயே இருக்குமாறு கூறியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில், தாங்கள் சமையல் ஆரம்பித்து விட்டோம், அதை முதலில் முடித்துக்கொண்டு விடுகிறோம் என்று அவரது மனைவி குறிப்பிட்டிருக்கிறார். ‘நானும் எனது ஆட்களும் நேற்று மாலையிலிருந்து

257 எதுவுமே சாப்பிடவில்லை. எந்த நேர்த்திலும் பிரச்சினை ஏற்படலாம். நீங்கள் உங்கள் கதவுகளை எல்லாம் மூடிக்கொண்டு அறைக்குள்ளேயே இருங்கள் என்று அதற்கு அந்த அதிகாரி பதிலிறுத்ததாகச் சொல்லப்படுகிறது.
பின் அவர் இராசலிங்கத்தின் வீட்டை நோக்கிச் சென்றார். அவரது வீட்டின் முன்னால் 19 பேர் குழுமியிருந்தனர். அவர்கள் அனைவரையும் ஒரு அறைக்குள் போகச்சொல்லிவிட்டு, பின் அந்த அறைக்கதவைப் பூட்டி விட்டு சாவியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
அதற்குப்பின் சிறிது நேரம் கழித்து இலங்கை இராணுவ யுத்த தளவாட பட்டாளச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான பொன்னம்பலம் தனது வீட்டை விட்டு வெளியேறிவிடும் நோக்கத்தோடு தன் இளைய மகளுடன் வீட்டின் முன்வாசலுக்கு வந்தார். அவரும் நேரங்கெட்ட நேரத்திலேயே விழித்துவிட்டு பின் தனது நாறி காலியிலிலேயே அப்படியே உறங்கிப்போயிருக்கிறார். பின் விழித்துப்பார்த்தபோது தூரத்தே அந்த விடிந்தும் விடியாத வேளையில் மங்கலாக சில உருவங்கள் நடமாடுவதைப் பார்த்ததும் ஏதோ பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டார். அவர் வீட்டின் முன்வாயிலுக்கு வந்து கொண்டிருந்தபோது, ராஜாவின் வீட்டிலிருந்து கணிசமான அதிரடிப்படை வீரர்கள் கோபாலகிருஷ்ணனின் வீட்டு மதில் வழியாக வந்து இடதுபுறமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். பிரம்படி ஒழுங்கையில் இவ்வாறு அதிரடிப்படை வீரர்கள் இடதுபுறமாகத் திரும்பி நகர்ந்த வேளையில் விடுதலைப்புலிகள் அவர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தார்கள். முதல் சூடு பொன்னம்பலத்தின் வீட்டிற்குப் பின்பக்கமாய் இருந்த தென்னங்காணியிலிருந்து வந்தது. மூன்று அதிரடிப்படை வீரர்கள் தரையில் சாய்ந்து வலி தாளாமல் கதறினர். விடுதலைப்புலிகள் பொன்னம்பலத்தின் வீட்டிற்குள்ளிலிருந்துதான் சுடுகிறார்கள் என்று மற்ற அதிரடிப்படை வீரர்கள் கருதுவதற்குப் போதிய நியாயமிருந்தது. தங்களுடைய வீட்டை நீோக்கி அதிரடிப்படைவீரர்கள் மோட்டார் லோஞ்சரை நிலைப்படுத்திக் கொண்டிருப்பதை பொன்னம்பலம் பார்த்தார். உடனே தரையில் விழுந்து படுத்துக் கொள்ளுமாறு குடும்பத்தவரை நோக்கி அவர் கூவினார். அவர்கள் தரையில் கவிழ்ந்து படுத்தது தான் தாமதம், அவரும் அவருடைய மகளும் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேர்மேலே இருந்த மேற்கட்டின் மீது ஷெல் விழுந்தது. அந்த ஷெல் அடியில் கூரை முழுக்க சேதமாகி வீடு பூராவும் ஒடுகளாய் சிதறின. அவரும் அவரது குடும்பத்தினரும் ஒரு கட்டிலின் அடியில் மறுநாள் காலை வரை அப்படியே இருந்தனர். w
அதிரடிப்படையினருடன் இடது புறம் நோக்கித் திரும்பிய நிலையில் மங்கையற்கரசி விசுவலிங்கத்தின் வீட்டின் வாயில் முகப்புத் தூணின் பின்புறமாய் ராஜா அடைக்கலம் புகுந்தார். பின் அந்த வீட்டின் பின் பகுதி வழியாக ஒழுங்கைக்குள் தப்பிப் போய் விட்டார். இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது.
இவ்வேளையில் ஒழுங்கையில் இன்னும் உட்புறத்தே கோபாலகிருஷ்ணன் என்பவர் தனபாலசிங்கத்துடன் கதைத்துக் கொண்டிருந்திருந்தார். இந்திய இராணுவம் தங்களை விசாரித்துவிட்டு எந்தக் கெடுதியும் செய்யாமல் திரும்பிப் போய்விடுவார்களென்றும் அதனால் எல்லாரையும் வீட்டுக்குள்ளேயே இருந்து

Page 147
258
கொள்ளுமாறும் தனபாலசிங்கம் ஆலோசனை கூறிக்கொண்டிருந்தார். பொற்பதி வீதியிலிருந்து வந்திருந்த ஜீவாவின் சகோதரியும் அவரது குழந்தைகளும் இப்போது தனபாலசிங்கத்தின் வீட்டில்தானிருந்தனர். துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டதும் தனபாலசிங்கமும் கோபாலகிருஷ்ணனும் தனபாலசிங்கத்தின் வீட்டிற்குள் ஓடி வந்தனர். இதைப்பார்த்துவிட்ட அதிரடிப்படைவீரர்கள் சிலர் விரைவாய் இவர்களைப் பின் தொடர்ந்தனர். ஜீவாவின் சகோதரி ஜீவாவையும் அவரது நண்பர் கிருபாவையும் ஓடிவிடுமாறு கூவினார். அந்த இரண்டு பேரும் ஒடும்போது சுடப்பட்டார்கள். இராணுவவீரர்கள் தனபாலசிங்கத்தின் வீட்டிற்குள் புகுந்து சுட ஆரம்பித்தனர். தனபாலசிங்கம், அவரது மனைவி, அவர்களின் ஒரு குழந்தை, கோபாலகிருஷ்ணன், ஜீவாவின் சகோதரி, அவரது ஒன்பது வயது மகன் உட்பட அங்கிருந்த வேறு ஆறுபேர் என்று அனைவரையும் சுட்டுக் கொன்றனர். ஜீவாவின் ஏழு வயது மகன் மட்டுமே காயங்களுடன் தப்பினான். இந்த நிகழ்ச்சியை நேரில் கண்ட ஒருவர்தான் இக்கதையை விபரித்தார்.
ராஜாவோடு இராணுவத்தினரால் கூட்டிச்செல்லப்பட்ட அவருடைய மருமகன் குலேந்திரன் அந்த ஒழுங்கைக்கு வந்து தான் சுடப்பட்ட விபரத்தை ராஜாவிடம் கூறினார். அவர் தனது சாரத்திலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து குலேந்திரனின் கையில் ரத்தப் பெருக்கைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு கட்டுப் போட்டார். "இதைவிட என்னால் எதுவும் செய்ய முடியாது. தரையால் தவழ்ந்து போய் எங்காவது மருந்து கட்டப் பார்" என்று ராஜா அவரிடம் கூறினார். அதுதான் அவர் தனது மருமகனைக் கடைசியாகப் பார்த்தது. திருமதி விகவலிங்கத்தின் வீட்டுக்கதவு உதைத்துத் திறக்கப்பட்டதையடுத்து, "ஐயோ, அம்மா" என்ற கதறல் ஒழுங்கையிலிருந்த ராஜாவிற்கு கேட்டது. படபடவென்று துப்பாக்கிச் சூட்டுச்சத்தமும் அதைத்தொடர்ந்து நிர்ச்சலனமும், அந்த வீட்டுக்குள்ளிருந்த பத்துப்பேர் கொல்லப்பட்டனர். இந்தப் பகுதியில் விடுதலைப்புலிகள் யாரும் இல்லாததால் இந்தக் கொலைகள் இந்திய அதிரடிப்படை வீரர்களால்தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. புற எல்லைகளில் தள்ளி நின்று கொண்டு விடுதலைப்புலிகள் சிறு துப்பாக்கிகளாலும் ராக்கெட்டுகளாலும் சுட்டுக்கொண்டிருந்தனர். ஒரு கொஞ்சப்பேர் கோபாலகிருஷ்ணனின் குடிசையின் பின்பக்கமாய் தங்கி நின்றனர். தச்சுத் தொழிலாளியான கோபாலகிருஷ்ணன் ஒரு சயரோக நோயாளியுமாவார். அவருடைய மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட, அவரது மனைவி மாத்திரமே சூட்டுக்காயத்துடன் தப்பினார் என்று பிறகு தான்தெரியவந்தது. இரண்டு பக்கமிருந்தும் துப்பாக்கிச் சூடு நடக்கும்போது இன்னார் தான் இந்தக் கொலைக்குப் பொறுப்பு என்று யார் மீதும் குறிப்பாகப் பொறுப்பைச் சுமத்த முடியாதிருக்கிறது. தவிர, இரு தரப்பினருமே பொதுமக்களின் உயிரைப்பற்றி ஒரு சிறிதும் அக்கறை இல்லாமல் இயங்கிய நிலையில் இப்படி யார் மீதாவது பொறுப்பைச் சுமத்துவது என்பதிலும் ஒரு அர்த்தமும் இல்லை. அந்தப் பகுதிக்குள் வந்து விழுந்த சில ஏவுகணைகளை, அவற்றின் அமைப்பைப் பொறுத்தும் தர்க்கரீதியான அவதானத்தின் படியும், விடுதலைப்புலிகளுடையவைதான் என்று அப்பகுதி மீக்கள் இனங்கண்டனர். தனது வீட்டிற்குள் பாதுகாப்பாய் மறைந்து கொண்டிருந்த ஒருவர் தனது

259
வீட்டின் முன் கதவுக்கூடாக ஒரு ஏவுகணையும் மேற்கூரைக்கூடாக இன்னொரு ஏவுகணையும் வந்து விழுந்ததாகக் கூறுகிறார். மற்றுமொரு ஏவுகணை தவராஜாலிங்கத்தின் ஒரு குழந்தையையும் அவரது மைத்துணியின் குழந்தையையும் காயப்படுத்தியது.
பின் ராஜா ஒரு பாடசாலை ஆசிரியரின் வீட்டிற்குக் கூட்டிச் செல்லப்பட்டார். அந்த ஆசிரியரின் வீட்டரிடம் கையை மேலே உயர்த்திக்கொண்டு நிற்குமாறு கேட்கப்பட்டது. பிறகு அவர்கள் விசாரிக்கப்பட்டு அங்கேயே நிற்குமாறு கூறப்பட்டனர். காலை 9.30 மணியைப் போல ஒரு அதிரடிப்படை வீரர் சிறிது ஹிந்தி தெரிந்த அந்தப் பாடசாலை ஆசிரியரிடம் ராஜாவின் மருமகன் இறந்து போய் விட்டதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்திய அதிரடிப்படை வீரர்கள் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்களையும் நயினாதீவைச் சேர்ந்த இன்னுமொரு பையனையும் பிடித்துக் கொண்டார்கள். மத்தியானம் 100 மணியளவில் அந்த நான்கு இளைஞர்களையும் அவர்களோடு ராஜாவையும் திருமதி விசுவலிங்கத்தின் வீட்டு முன்னறைக்குக் கூட்டி வந்தனர். அங்கே காயமடைந்த அதிரடிப்படை வீரர்களுக்கு மருத்துவ உதவியும், சேலைனும் இராணுவ மருத்துவரால் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதிரடிப்படை வீரர்களின் அப்போதைய யுக்தி எதுவெனில், தங்களுக்கு உதவி வந்து சேரும்வரை ரயில்வே பாதையாலும் கிழக்கேயுள்ள திறந்த வெளியாலும் சூழப்பட்ட ஒரு சதுர நிலப்பரப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்கு வசதியான நிலைகளை எடுத்துக் கொள்வதாகவே இருந்தது தெளிவாகிறது. அதிரடிப்படை வீரர்கள் வீட்டுக் கூரைகளில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டு நின்றனர். திருமதி விசுவலிங்கத்தின் வீட்டை அவர்கள் தங்கள் தற்காலிகத் தலைமையகமாக மாற்றிக் கொணர்டனர். தொடர்ந்து எதிரிகளைத் திசைதிருப்பும் நடவடிக்கைகளைக் கையாண்டு விடுதலைப்புலிகள் தமது தலைமையகத்தைக் கண்டு பிடித்து, அவற்றின் மீது அவர்கள் ஏவுகணைத் தாக்குதலை நடத்துவதைத் தடுத்துக் கொணடிருந்தனர். அதிரடிப்படைகளின் வேணிடுதலின் பேரில் யாழ் கோட்டையிலிருந்து துப்பாக்கி வீரர்கள் அச்சதுரப் பிராந்தியத்தின் வடபகுதியை நோக்கி ஷெல் அடிக்க ஆரம்பித்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த சனங்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே அந்த இடத்தை விட்டு வெளியேறியிருந்தனர். கிட்டத்தட்ட 3.00 மணியளவில் தம்முடனிருந்த 5 பேரிடமும் தங்களிடமிருந்த படைக்கல வரைபடத்தில் திசை மார்க்கங்களைக் காண்பிக்குமாறு கேட்டனர். முதலில் குடிக்கத் தணிணிர் கேட்டவர்களும் எவ்வளவு விரைவில் அந்த அதிரடிப்படை வீரர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற முடியுமோ அவ்வளவு துரிதமாய் வெளியேற்றி விட, அவர்களுக்குத் தேவையான திசைகளைச் சுட்டிக்காட்டி உதவினர்.
மத்தியானம் ஓரளவு அமைதி நிலவியது மாதிரித் தெரிந்த வேளையில் ஊர்ச்சனங்களில் சிலர் அவ்விடத்தை விட்டு வெளியேறினர். தெரிந்தோ o: அந்தப் பகுதிக்குள் வர நேர்ந்தவர்கள் உயிர்ப்பலியாகிக் காண்டிருந்தனர். மணியம் என்பவர் காயமுற்ற நிலையில் பொன்னம்பலத்தின் வீட்டடியில் வந்து நின்று தணிணீருக்காகக் கூவியபோது அவரை உள்ளே

Page 148
260
குளியலறைக்குள் போகுமாறு வீட்டுக்குள் இருந்தவர்கள் வழிகாட்டினார்கள். பின்னர் அவர் குளியலறைக்குள் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அங்கு தனது மாமாவின் குடும்பத்தவர்கள் என்ன ஆனார்கள் என்று அன்று பின்னேரம் பார்க்க வந்திருந்த சோமசுந்தரம் சுடப்பட்டார். மாமா, மாமா என்று கதறிய வண்ணம் அவர் தன் இறுதி மூச்சை விட்டார். இதற்கிடையில் வானொலித் தொடர்பு மூலம் ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கான திட்டம் ஒன்று இராணுவத்தினரால் தீட்டப்பட்டது. மறுநாள் பதின்மூன்றாம் திகதி அதிகாலை 200 மணிக்கு ஹெலிகொப்டர்கள் அப்பகுதியைச் சுற்றிலும் சுட்டு வெடி தீர்த்த வண்ணம் இருந்தன. பாதைகளில் கண்ணி வெடிகள் வைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் இரண்டு டாங்கிகள் ரயில் இருப்புப்பாதையை ஒட்டி தெற்கு நோக்கி செலுத்தப்பட்டு பின் ஊருக்குள் திருப்பப்பட்டது. இந்த பங்கிகளில் ஒன்றைச் செலுத்திக் கொண்டு வந்த மேஜர் அனில் கவுல், தான் வந்து சேர்ந்திருக்கும் இடம் எதுவென்று பார்க்க வணிடிக்கு வெளியே தலை நீட்டியபோது சுடப்பட்டுக் கணிணில் காயமுற்றதாக சேகர் குப்தா தெரிவிக்கிறார். இந்த நேரத்தில்எல்லாம் விடுதலைப்புலிகள் அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஏறத்தாழ 40 நிமிஷங்கள் இறந்தவர்களும் காயமுற்றவர்களும் அவர்களுடைய ஆயுதங்களோடு உள்ளே ஏற்றப்படும் வரையிலும் அந்த டாங்கி வண்டிகள் அங்கேயே நின்றன. இங்கு இறந்தவர்கள் எண்மரும் காயமுற்றோர் அறுவரும் ஆவர். ஒரு தென்னோலைக் குடிலை எரிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவவீரர் அக்குடிலின் மீது தீப்பந்தமொன்றை வீசி எறிந்தபோது உள்ளே தன் தாயோடும் இறந்து போன தனது கணவரோடும் மறைந்திருந்த பெண்மணி ஒருவர் அந்த தீப்பந்தத்தை அணைத்து விட்டு மெதுவாக அந்த வீட்டை விட்டுத் தன் தாயோடு வெளியேறி விட்டார். பின் அவர்கள் இருவரும் ராஜாவின் வீட்டிற்குச் சென்று விரைவாக அவர்களை அங்கிருந்து வெளியேறி விடும்படி கூறினர். மீண்டும் மண்ணெண்ணையுடன் திரும்பி வந்த அந்த இராணுவவீரன் இந்தமுறை குடிசையைக் கொளுத்தியே விட்டான். டாங்கிகள் அவ்விடத்தை விட்டு அகலத் தொடங்கும் போது டாங்கிகள் சகிதம் வந்த ஒருவன் அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கைதிகளையும் சேர்த்துக்கட்டுவதற்காக ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு வந்தான். பிரம்படி ஒழுங்கைத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அப்போது அவனிடம் அந்தக் கயிற்றை வீசி விடுமாறு கூறிவிட்டு, அந்தக் கைதிகளை உள்ளே ஏறும்படி கேட்டுக்கொண்டார். அவரும் கடைசியாக வணிடிக்குள் ஏறிக்கொணர்டார். பொதுமக்களுக்கும் அதிரடிப்படைப் பட்டாளத்திற்கும் நீண்ட பெருஞ் சோதனையாக அமைந்த இத்தாக்குதல் நடவடிக்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்ததாய் டாங்கிகள் அவ்விடத்தை விட்டு அகன்றன.
டாங்கிகள் மேலேறிச் சென்றதால் சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சடலங்களை உலகிற்குக் காட்டிக்கொண்டு மறுநாள் காலை விடிந்தது. டாங்கிகளை வேண்டுமென்றுதான் சடலங்களின் மேலேற்றிச் சென்றார்களா அல்லது தெரியாமலே நடந்ததுதானா என்ற கேள்விக்கு என்றுமே பதில் கிடைக்கப்போவதில்லை. எனினும் அன்றிரவு விஷயங்கள் நடந்த துரிதகதியை

261
வைத்து நோக்கும்போது சடலங்கள் அவ்வாறு டாங்கிகளால் சிதைக்கப்பட்டது யதேச்சையாகத்தான் இருக்கும் என்று கருதுவதற்கு இடமுண்டு. எல்லாமாக அங்கு குவிக்கப்பட்ட 40 சடலங்களும் பின்னர் எரியூட்டப்பட்டன. அந்த இடத்திற்குக் கூட்டி வரப்பட்ட பத்திரிகை நிருபர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் அக்காட்சி இந்தியா செய்த பச்சையான நம்பிக்கைத் துரோகத்திற்கு ஒரு சுயவிளக்கம் போலவே அமைந்தது. நகர்ந்து கொண்டிருந்த டாங்கிகளின் முன்னால் உயிரோடிருந்தவர்கள் கூட பலவந்தமாக வீசி எறியப்பட்டனர் என்று பின்னர் கதைகள் அடிபட ஆரம்பித்தன. அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை என்று ஊர்வாசிகள் அதனைத் திட்டவட்டமாக மறுத்தனர். சாதாரண தமிழ் மக்கள் இந்தியப் படையின் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கைக்கு இந்த இந்திய அதிரடிப்படையினர் துரோகமிழைத்தனர் என்பது உணர்மையே. சாதாரண பொதுமக்களைப் பற்றி சிறிது அக்கறையாவது எடுத்துக் கொள்ள இந்திய இராணுவம் பயிற்றப்பட்டிருக்குமானால் தங்களுக்கான ஆபத்து நிலைமையையும் கூட்டிக்கொண்டு போகாமல் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டிருக்க முடியும். இத்தகைய சூழ்நிலைகளில் நியாயமான, பகுத்தறிவு பூர்வமான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது. என்றாலும் சம்பவத்தை நேரடியாகப் பார்தீத பல சாட்சிகள், இருதரப்பினருக்குமிடையே சணடை மூள ஆரம்பித்ததுமி அதிரடிப்படையினரை அமைதியாக எதிர்கொண்டு வரவேற்றவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டும், பீதியில் அஞ்சியோ பயந்து ஓடவோ முற்பட்டவர்களை-ஆண், பெண், குழந்தை என்று எதுவும் பாராமல்சடுதியாகச் சுட்டும், இதனை ஒரு பொதுவிதி போலக் கருதியும் நடந்து கொண்டனர் என்று கூறுகின்றனர்.
மக்கள் மத்தியில் புதைந்து போயிருந்த கொடுஞ்சினத்தையும் அவநம்பிக்கையையும் யாருமே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. முழுச்சம்பவத்திலும் விடுதலைப்புலிகள் மறைமுகமாகப் பூரணப்பங்கு கொண்டிருந்ததாகவே பெரும்பாலான ஊர்ச்சனங்களுக்குப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு ஒருவித தார்மீக அனுதாபம் பெருமளவு இருந்தது. இந்த இடத்திற்கு அயலில் இந்தச் சம்பவத்தினால் பெரும் இழப்புகளை அனுபவிக்க நேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பின்னர் விடுதலைப்புலிகளுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்திருந்தனர். இந்திய இராணுவத்தின் இத்தாக்குதல் நடவடிக்கையை விடுதலைப்புலிகள் முன்னரே எதிர்நோக்கியிருந்தனர். அதிரடிப்படையினர் முன்னேறுவதை அவதானித்துக் கொண்டிருந்தனர்; விடுதலைப்புலிகளின் தலைவரோ நேரகாலத்தோடேயே (அநேகமாக அதிகாலை 330 மணியாக இருக்கலாம்) அந்த இடத்தைக்காலி செய்துவிட்டு வெளியேறி விட்டார். விடுதலைப்புலிகள் அப்பகுதியைச் சுற்றிலும் காலை 5.00 மணிக்குப் பிறகும்கூட வளைய வந்து கொண்டிருந்தனர். அதிரடிப்படை வீரர்களை நோக்கித் தாங்கள் சுடப் போகிறோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் எந்தச் சமயத்திலும் அது குறித்துப் புலிகள் பொதுமக்களை எச்சரித்து வைத்ததில்லை. விடுதலைப்புலிகளின் பிரச்சாரப் பிரமுகர் யோகி கூட அந்த

Page 149
262
இடத்தில் காணப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் நெருங்கிய ரத்தபந்தம் கொண்டவரும் அவருடைய கோஷ்டியில் ஒருவராய் தனது மகனையே பலி கொடுத்தவருமான ஒரு பெண்மணி பின்வருமாறு கூறினார்:
"காலையில்கூட 5 மணியளவில் எங்கள் வீட்டிற்கு முன்புதான் அவர்கள் (விடுதலைப்புலிகள்) மோட்டார் பைக்குகளை நிறுத்தி வைத்து விட்டு அங்குமிங்குமாய் திரிந்து கொண்டிருந்தார்கள். எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்" அந்தப் பெண்மணியின் குரலில் கோபத்தை விட வருத்தமே தொனித்தது. விடுதலைப்புலிகளுக்கு இந்திய இராணுவத்தைப்பற்றி நன்றாகவே தெரியும். இந்தியப் படையினர் மீது சுட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் தவறாகக் கணித்திருக்க வழியேயில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் முகங்களைப் பார்த்தால் துயருற்ற ஒரு குடும்பத்தினரின் வேதனையுணர்வையோ, அவர்களிடம் குடிகொண்டுள்ள அவநம்பிக்கையைப் பற்றியோ ஒருவர் சுலபமாகத் தவறான கணிப்பிற்கு வரக்கூடும். அந்த அளவிற்கு அம்முகங்கள் உணர்ச்சிகளைத் திரையிட்டு மறைத்திருந்தன. ஒரு வீட்டுக்குள் நாம் நுழைந்தபோது, அந்த வீட்டுக்காரரின் வயது வந்த இளம் பெண்கள் பலர் வசீகரமான புன்னகையோடு எங்களை வரவேற்றனர். அந்த வீட்டுக்காரர் தனக்கு நேர்ந்த கதியை மிகவும் துல்லியமாகக் கூறத்தொடங்கினார். அவ்வப்போது பேசுவதைச்சற்று நிறுத்திவிட்டு, "அதைப்பற்றிப் பேசி இப்போது என்ன ஆகப்போகிறது? எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று எங்கள் தலையில் எழுதியிருக்கிறது." என்று கூறுவார். மெதுமெதுவாய் அவர் கதையைச் சொல்லிக்கொண்டு போகையில் அவர் தனது குடும்பத்தில் மூன்று ஆண்பிள்ளைகளை இழந்துவிட்டிருந்தமை தெரியவந்தது. ஒரு மகன் மேலே விவரிக்கப்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது இறந்து போயிருந்தார். இரண்டு பேர் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு போய்விட்டார்கள். நீண்டகாலமாக அவர்களைப்பற்றி ஒருவிதமான தகவலும் இல்லை. முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர் பல குமர்களை வைத்துக்கொண்டு, மூன்று ஆண்மக்களையும் இழந்து விட்டிருப்பது என்பது நாளாந்த ஜீவியத்தையே பயங்கர சோதனைக்குள்ளாக்கிவிடவல்லது. நாங்கள் அவரிடமிருந்து விடைபெறுகையில் எங்களிடம் அவர் மனந்திறந்து சொன்னார்: "இனியும் என்னால் இங்கே இருக்க முடியாது. என்னுடைய நிலைமையைப்பற்றி அவுஸ்திரேலிய தூதரகத்திற்கு எழுதிப் போட்டிருக்கிறேன். என் நிலைமையை உணர்ந்து இரண்டொரு வாரங்களில் அவர்கள் எனக்கு பதில் அனுப்பக்கூடும். இந்த மாதிரியான குழந்தைத்தனமான நம்பிக்கைதான் தனிமனிதன் அனுபவிக்கும் அந்தரங்கத் துயரத்தின் அளவு கோலாகவும் உள்ளது.
32 ஊரெழு
இந்திய அமைதிப்படையினர் அக்டோபர் 13ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும்
இடையில் ஊரெழு வழியாய் முன்னேறினர். மோசமான ஷெல் தாக்குதலை
நடத்தியவாறு தான் அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தனர். பலாலி வீதியில்

263
உரும்பிராய்க்கு நேர் வடக்கே இருக்கும் ஊரேழுவில் சிறிய அளவில் நடந்த இந்நிகழ்ச்சிகள் பின்னர் உரும்பிராயில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கான ஒரு முன்னறிவிப்பு மாதிரி இருந்தது. ஊர்மக்களின் கணிப்பின்படி ஊரெழுவில் இடம்பெற்ற மொத்தச் சாவுகளின் எண்ணிக்கை 25ற்கும் மேலிருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று தற்போது சிரேஷ்ட ஆசிரியர் பதவியை வகிக்கும் ஓர் இளம் பெண்ணின் வாக்குமூலத்தைக் கீழே பதிவு செய்கிறோம்: *,兹
"அக்டோபர் 12ம் திகதி ஷெல் அடிக்க ஆரம்பித்ததும் நாங்கள் மிகவும் பயந்து போய்விட்டோம். நான் அப்போது எனது சகோதரி, அவளுடைய கணவன், அவர்களின் இரண்டு குழந்தைகளோடு இருந்தேன். நாலாபக்கமும் குணிடு வெடிகளால் அதிர்ந்து கொணர்டிருந்த நிலையில் நாங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்து கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தோம். இராணுவம் வரப் போகிறது என்று கேள்விப்பட்டதும் எங்கள் ஒழுங்கையில் சற்றுத்தள்ளியிருந்த பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்குள் அடைக்கலம் புகுந்தோம். விரைவிலேயே உணவு கிடைப்பதோ, மருந்து கிடைப்பதோ கஷ்டமாகி விட்டது. நல்லவேளையாக வீட்டில் கொஞ்சம் அரிசி மீதமாக இருந்தது. மற்றச் சாப்பாட்டுப் பொருட்களைக் குழந்தைகளுக்காக மிச்சப்படுத்தி வைக்க வேண்டியதாயிற்று. பாலோ சீனியோ இல்லாமல் தேநீர் குடிக்கப் பழகிக் கொண்டு விட்டோம். எங்கள் பகுதியில் நடந்த பல சாவுகளுக்கு ஒரு நாளும் இந்திய இராணுவத்தை மன்னிக்க முடியாது. மதிவதனி கபொத, உயர்தரத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று மருத்துவ பீடம் செல்லும் நம்பிக்கையில் இருந்தாள். சூட்டுச் சத்தம் சற்று அடங்கியிருந்த நேரம் பார்த்து வீட்டு 'கேற்றை சாத்துவதற்காக அவள் வீட்டை விட்டு வெளியில் வந்தாள். அவள் வீட்டு வளவிற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டாள். லலிந்தி என்ற பெண் க.பொ.த. உயர்வகுப்பு மாணவி, அவள் வேறொரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்தவள். தனது அக்காவின் குழந்தையுடைய பால் போத்தலை வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டதை அறிந்து, அதை எடுத்துக் கொண்டுவரத் திரும்பியும் வீட்டுக்குப் போன இடத்தில் லலிந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். என்னுடைய பாடசாலையில் அமைந்திருந்த அகதி முகாமில் நான் தங்கி இருந்தபோது என் கணி முன்னாலேயே ஒருவர் இறந்து கொண்டிருப்பதை நான் முதல் தடவையாகப் பார்க்க நேர்ந்தது. சனங்களிடம் அவர்களுக்குத் தேவைப்பட்ட சாமான்கள் போதுமான அளவு இல்லாததால் அவற்றை எடுத்துக்கொண்டு வர அவர்கள் அடிக்கடி தங்கள் வீடுகளுக்குப் போய்வர வேண்டி இருந்தது. அப்போது 24 மணி நேர ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. வயதுபோன ஒருவர், தான் எப்படியும் வீட்டிற்கு போயாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரைப் போக வேண்டாம் என்று மற்றவர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். வீடு போவதற்கு அவர் சில அடிகள் தான் எடுத்து வைத்திருப்பார். அதற்குள் ஒழுங்கையால் வந்த இராணுவவீரர்கள் அவரை நோக்கிச் சுட்டனர். முகாமிற்குக் கொண்டு வரப்பட்ட அவர் மருத்துவ் வசதி இல்லாத நிலையில் ரத்தம் ஒழுகியோட மெல்ல மெல்லச் செத்துக் கொண்டிருந்தார். இதனைவிட யாழ்ப்பாணம் முழுதும் எதிர்நோக்கும் சமூகப்

Page 150
264
பிரச்சினைகளின் தாக்கம் எங்களுட்ைய அகதி முகாமிலும் தெரிந்தது. வசதி படைத்த உய்ர்சாதி வெள்ளாளர் பாடசாலையின் வசதியான பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ள, எங்கள் தாழ்த்தப்பட்ட சாதி அயலவர்கள் அந்த அகதி முகாமிலும் கூரை ஒழுகும் பகுதியில்தான் தங்க வேண்டிவந்தது. அப்போது சரியான மழை பெய்து கொண்டிருந்த நேரம். அங்கு இருந்த ஒரு தாழி தீதப் பட்ட குடுமிபதி தைச் சேர்ந்த குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு நல்ல இடம்கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். மனிதாபிமானம் கருதி நான் காட்டிய அக்கறைக்கு பல்கலைக்கழகத் திமிரை ஒன்றும் இங்கே காட்ட வேண்டாம் என்று எனக்குக் கூறினார்கள்.
விடுதலைப்புலிகளும் இந்திய இராணுவமும் இரணிடுமே நடந்து கொண்டவிதம் எங்கள் மனதில் அவர்களைப் பற்றி இருந்த உணர்வுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. சில விடுதலைப்புலிப் பிரமுகர்களின் நடத்தை மிகுந்த வெறுப்புக்கிடமளிப்பதாகவும் பச்சோந்தித்தனமாயும் இருந்தது. இந்த நபர்களில் பலர் இரண்டு பக்கமும் நாடகமாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். இடையில் அகப்பட்டுக் கொண்ட மக்கள்தான் உண்மையில் கஷ்டங்களை அனுபவித்தனர். இந்திய இராணுவத்திற்குத் தகவல் கொடுத்ததாக விடுதலைப்புலிகளால் சுடப்பட்டவர்கள் உணர்மையில் அப்பாவிப் பொதுமக்கள்தான். திலீபனின் உணர்ணாவிரதத்தின் போது ஒருவர் ஒலிபெருக்கியில் மனதைக் கொல்லும் சோகத்தோடு உரத்த குரலில் கதறிக் கொண்டிருப்பார். அது என்னையே ஏறத்தாழ கணிணிர் விட்டு அழச் செய்திருக்கிறது. இன்று அதே ஆசாமி வாழைப்பழம், பிரசாதம் எல்லாம் எடுத்துக் கொண்டு பயபக்தியாய் இந்திய இராணுவ முகாமுக்குப் போய் வந்து கொண்டிருக்கிறார்.
பிறகு விடுதலைப்புலிகளின் பிரசன்னம் வெகுவாகக் குறைந்து கொண்டு வந்தது. கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்கள் தினமும் இந்திய அமைதிப்படை முகாமுக்குப் போய் கையெழுத்து வைக்க வேண்டும். அங்குள்ள இராணுவ வீரர்களுக்கோ இதெல்லாம் நல்ல முஸ்பாத்தி. அந்த முகாமில் உள்ள இராணுவ டாக்டருக்கு 5 லட்ச ரூபாய் சீதனத்துடன் அழகான கால்கள் கொண்ட ஒரு பெண்ணைத் தேடித்தருமாறு அங்கு சென்றிருந்த ஒரு பையனிடம் கேட்டிருக்கிறார்கள். சரியான நேரத்திற்கு முகாமிற்கு வந்து கையெழுத்திடவில்லை என்பதற்காக ஒரு பையனை இராணுவவீரர்கள் கொடூரமாகத் தாக்குவதை என் கணிணால் பார்த்தேன். இப்படி அடிவாங்குவதை விட அவன் இறந்து போயிருக்கலாம் என்று நினைக்கக்கூடிய அளவுக்கு அவனை மோசமாக அடித்தார்கள். அந்தக் காட்சியைக் காணச்சகியாமல் நான் அழ ஆரம்பித்தேன். எதற்காக நீர் அழுகிறீர்?" என்று ஒரு இராணுவவீரன் நக்கலாய் கேட்டான். அப்படிக் கேட்கும்போது அவனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்.
"இப்பொழுதெல்லாம் நான் வீட்டிற்குள்ளேயே எப்போதும் அடைந்து கிடக்கிறேன். ஊரெழு முன்போல எதையும் லேசாக எடுத்துக் கொண்டு விடுகிற கிராமம் அல்ல. வெளியில் போனால் பாலியல் பலாத்காரம், அந்த மாதிரி எதுவும் அபாயத்திற்குள்ளாகிப் போவேனோ என்று பயப்படுகிறேன்

265
என்றில்லை. இராணுவ வீரர்களை எதிர்கொள்ளவோ, அவர்களுக்கு முன்னாகப் போவதற்கோ வெறுப்பாக இருக்கிறது. அவர்களில் பலருக்கு எப்படிப் பேசுவதென்ற இங்கிதமே தெரியாது. நான் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவளா என்று ஒரு இராணுவவீரன் கேட்டான். இல்லை என்றேன். எனக்குத் திருமணமாகி விட்டதா என்று அடுத்துக் கேட்டான். திரும்பவும் இல்லை என்றேன். ஏன் திரும்ணம் செய்யவில்லை என்று அவன் அடுத்துக் கேட்டான். அவனை முகத்தில் அறைய வேண்டும் போலிருந்தது எனக்கு. அவன் என்னை எதுவும் செய்துவிடக்கூடும், அவனுடைய தயவில்தான் நான் இருந்தேன். என்னுடைய முக்கிய பயம் ஊரில் உலவும் வதந்திகளைப் பற்றித்தான். ஒரு இராணுவவீரன் ஒரு பெண்ணை சும்மா தொட்டுவிட்டாலே போதும். அவளுடைய எதிர்காலம் அவ்வளவுதான். எதையோ தேடும் பாவனையில் ஒரு இராணுவவீரன் ஒரு பெண்ணின் தோள் மீது கை போட்டிருக்கிறான். கிராமத்திலிருந்த பெண்கள் சிலர் ஏதோ அவள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டதைப் போல பேரும் அனுதாபத்துடன் அழவேறு ஆரம்பித்து விட்டார்கள். அவளுடைய எதிர்காலம் இனிஎன்ன ஆகப் போகிறதோ என்று விசனப்பட்டனர். எல்லாமே குழப்பமாய் இருக்கிறதுஒன்றையும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை"
க.பொ.த. உயர்தரப் பீட்சைப் பெறுபேறுகள் வெளியானதும் லலிந்தியின் தாய் விம்மி அழுதபடி தன்னிடம் வந்ததாக அந்த இளம் பெண் தொடர்ந்தும் கூறினார். லலிந்தி மொத்தம் 400க்கு 285 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். இந்த மதிப்பெண்கள் மருத்துவ பீடத்திற்குள் நுழையத் தகுதி பெற்ற இலங்கையின் முதற்தரமான மாணவர்கள் பட்டியலில் லலிந்தியையும் சேர்த்திருந்தது.
33 உரும்பிராய்
அக்டோபரில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிர் இழப்பைப் பொறுத்தவரை உரும்பிராய்தான் மோசமாகத் தாக்கப்பட்டிருந்தது. பலாலியைத் தங்கள் பிரதான தளமாகக் கொணிடு யாழ்ப்பாணத்தை இந்தியர்கள் அணுகியபோது, உரும் பிராயில் வைத்துத் தானி முதனி முதலாக விடுதலைப்புலிகள் முன்னேறி வரும் இந்தியப்படைக்கு எதிராக ஒழுங்கான ஒரு திட்டமும் இல்லாத-ஒரு பிரயோசனமும் இல்லை என்று தெளிவாகத் தெரியத்தக்க -ஒரு எதிர்ப்பைக் காட்டினர். உரும்பிராய் பெருமளவு வசதியான குடும்பங்களைக் கொணிட குடியிருப்புப் பகுதி. இந்தக் குடும்பங்களில் மிகப்பலர் வெளிநாடுகளில் இருந்தனர். வெளிநாடுகளில் தொழில்புரியும் தங்கள் பிள்ளைகளைக் கொண்ட முதிய பெற்றோரோ அல்லது கணவரைக் கொண்ட மனைவியரோ என்று தான் உரும்பிராயில் பலர் வசித்திருந்தனர். நிராதரவாயும் ஒரு பழிபாவமும் அறியாதவர்களாய் இந்திய இராணுவம் தங்கள் மீது கரிசனம் காட்டும் என்ற நம்பிக்கையில் இந்த உரும்பிராய்வாசிகள் தங்கள் வீட்டிலேயே இருந்துவிடத் தீர்மானித்தனர். இவர்களில் பலர் ஈவிரக்கமில்லாமல் கட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய இராணுவத்தை உரும்பிராய்க்கு வராதபடி தாம் பார்த்துக்கொள்வதாக புலிகள் ஆரம்பத்தில் உறுதி கொடுத்திருந்தனர். எப்போது இந்தியர்கள் வரப் போகிறார்கள் என்று ஒரு இளம் விடுதலைப்புலிப்

Page 151
266
பையனிடம் ஒரு பெண்மணி கேட்டபோது அந்தப் பையன் உண்மையாகவே பின்வருமாறு பதில் கூறியிருக்கிறான்: "நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், அம்மா! இப்போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் இனி இந்தியர்கள் வரமாட்டார்கள்
இந்திய இராணுவத்தைப் பற்றிய இத்தகைய பிரமைகள் எதுவும் இல்லாத வேறு பலரும் இருந்தனர். அக்டோபர் 12ம் திகதி இரவு உரும்பிராயில் இருந்த ஒரு நிர்வாக அதிகாரி ஏதாவது நடக்கலாம் என்று விழிப்பாய் இருந்திருக்கிறார். அதிகாலை நேரத்தில் உரும்பிராய் வடக்கில் முக்கிய பாதைகளில் 'பெடியள் ஏதும் கணிணி வெடிகளைப் புதைத்து வைக்கிறார்களோ என்று கண்காணிக்க அவர் மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தார். அப்படி எதுவும் நடந்தால் தான் குடும்பத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது என்று அவர் தீர்மானித்திருந்தார். உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கருகில் கணிணிவெடி புதைக்கப்படுவதை அவர் அவதானித்தார். அதேசமயத்தில் ஷெல் தாக்குதலும் ஆரம்பமாகி விட்டது. அவர் தனது குடும்பத்தவரையும் அக்கம்பக்கத்தில் உள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு மேற்குப்பக்கமாய் ஊருக்குள் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்த பல வீடுகளை விடுதலைப்புலிகள் தமது இடமாக்கிக்கொண்டு தங்கியிருந்தனர். அவர்கள் அந்த நிர்வாக அதிகாரியை வேறு இடம் நோக்கி நகர்ந்து விடுமாறு கேட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட கால் மைல் தூரம் கடந்து சென்ற பிறகு அவர்கள் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்களிடம், நீங்கள் எங்களிடம் இடம் மாறுங்கோ, இடம் மாறுங்கோ எண்டு சொல்றியள். நாங்கள் எங்கதான் போறது? என்ன வந்தாலும் சரி நாங்கள் இங்கதான் நிக்கப் போறம்" என்று சொல்லி விட்டனர். சுற்றிலும் ஷெல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்க அவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். இந்திய இராணுவம் முன்னேறி வர அந்த நிர்வாக அதிகாரியின் வீடும் உடைமைகளும் நாசமாகின. அவர் தன் குடும்பத்தோடு புத்தூருக்கும் பின் சாவகச்சேரிக்கும் ஓடிச்சென்று ஒரு மாதத்திற்குப் பின் திரும்பி வந்தார்.
அந்த நிர்வாக அதிகாரியின் அயலவர்-ஒரு முதியவர்-அவரதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களதும் உடைமைகளைப் பார்த்துக் கொள்வதற்காகத் தன்னுடைய வீட்டிலேயே தங்கி நின்றார். இளம் வயதுப் பையனிகளைக கொணட புலிகளினி காவல நிலை ஒன்று இந்துக்கல்லூரிக்கருகில் இருந்தது. அக்டோபர் 13ம் திகதி உரும்பிராய் விமானக்குண்டு வீச்சுக்கு இலக்காகியதில் சந்திக்கு அயலில் இருந்த வீடுகள் பெருஞ்சேதமுற்றன. ஒரு ஏவுகணை அந்த முதியவரின் வேலியைத் துளைத்துக்கொண்டு வந்து விழுந்தது. காவல் நிலைகளுக்கு ஓடிப்போய் என்ன நடந்தது என்று அந்த முதியவர் கேட்டிருக்கிறார். "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஐயா! நாங்கள் ஏவுகணைகளை வீதியைக் குறிபார்த்து வீசிக் கொண்டிருக்கிறோம். ஒன்று குறிதப்பி விழுந்துவிட்டது. அவ்வளவுதான் என்று ஒரு பையன் சர்வசாதாரணமாகப் பதில் சொல்லி இருக்கிறான்.
அக்டோபர் 14ம் திகதி புதன்கிழமை இந்திய அமைதிப்படையின் டாங்கி ஒன்று கணிணி வெடி புதைக் கப்பட்ட பிரதான பாதைகளைத்

267
தவிர்த்துக்கொண்டு, பரந்த வெளிகளுக்கூடாக பிரதான சந்தியிலிருந்து கால் மைல் தள்ளி உரும்பிராய்-மருதனாமடம் வீதிக்கு வந்து சேர்ந்தது. அந்த வாகனத்திலிருந்து ஷெல் அடிகள் கிளம்பின. உரும்பிராய் சந்தியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் காவல் நிலையில் இருந்த கிட்டத்தட்ட 25 பையன்களும் சிட்டாகப் பறந்தோடி விட்டனர். இந்துக்கல்லூரிக்கு வடக்கு நோக்கி அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் காவல் நிலைக்கு இந்திய அமைதிப்படை தங்களைத் தாண்டிச்சென்றுவிட்டது என்பது தெரியாது. அவர்கள் வடக்குப் பக்கமாய்ப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அமைதிப்படை டாங்கி வாகனமொன்று தெற்கு நோக்கி சந்தியை அணிமித்து விட்டது என்று அந்த முதியவருக்கு எங்கோ தகவல் கிடைத்திருக்கிறது. அவர் காவல் நிலைக்குப் போய் அந்தத்தகவலைச் சொல்லிவிட்டு, "இங்கிருந்து நீங்கள் எல்லாரும் போய்த் தொலையுங்கள். உங்களால் சனத்திற்கு உபத்திரவம் மட்டும்தான்" என்று சொல்லியிருக்கிறார். காவல்நிலையில் நின்ற பையன்கள் அதிர்ந்து போய் அவர் சொன்னதை மூச்சுப் பேச்சில்லாமல் ஏற்றுக் கொணிடிருந்தனர். இந்திய வாகனம் பின்னர் திரும்பிப் போய் விட்டது.
18ம் திகதி இந்திய இராணுவத்தின் பிரதான படை பிரதான வீதியைச் சுற்றிக்கொண்டு உரும்பிராய்க்குள் நுழைந்தது. சங்கிலி வாகனங்களைப் பின் தொடர்ந்து வந்த இராணுவ வீரர்கள் தாங்கள் சென்ற வழிகளில் போகிற போக்கில் கண்டபடிக்கு சுட்டுக் கொண்டு சென்றனர்.
இலங்கை வானொலித் தேசிய சேவையில் தன் இளம்வயதில் மிகவும் பிரபல்யமானவராகத் திகழ்ந்த ரேடியோ நடராஜா என்பவர் இப்போது ஒரு நோயாளி. எல்லாத் தமிழர்களையும்போல இவரும் இந்தியாமீது மிகுந்த அபிமானம் வைத்திருந்தார். இந்தியர்கள் நியாயமாய் நடந்து கொள்பவர்கள் என்றும் அவர்களுக்கு விஷயங்களை விளக்கிச் சொல்ல முடியும் என்றும் அவர் நம்பிக் கொண்டிருந்தார். இந்தியத் துருப்புக்கள் அவருடைய வீட்டிற்கு வந்தபோது அவருடன் அவரது மனைவியும் மகனும் இருந்தனர். இந்தியப்படை அதிகாரியோடு பேசுவதற்கென்று நடராஜா வாசலுக்குச் :ென்றார். அவரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது தன்னோடு தன் மகனும் இருப்பதாகப் பதிலளித்த அவர் மகனையும் வருமாறு கூப்பிட்டார். தந்தையிடம் செல்வதற்காக மகன் எழுந்து நின்று சட்டை அணிந்து கொள்ள முற்படுவதை எங்கிருந்தோ கம்பி வலைப் பின்னலினூடாகப் பார்த்த ஒரு இராணுவவீரன் தந்தையையும் மகனையும் நோக்கிச் சுடத் தொடங்கினான். ரேடியோ நடராஜா பிணமாகக் கீழே விழுந்தார். துப்பாக்கிச் சூட்டுக்குத்தப்பிய அவரது மகன் படுக்கைக்கு அடியில் தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டு விட்டான். இரண்டு முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட திருமதி நடராஜா தனது கணவரும் மகனும் இறந்து விட்டதாகக் கருதி பின்புற வேலி வழியாகத் தப்பியோடினார். அவர் தப்பி ஓடிய சத்தத்தைக் கேட்ட ஒரு படைவீரன் சிங்களத்தில் கத்தினான்: "பஸ்ஸெங் கியா (பின்வழியால் ஓடிவிட்டாள்) என்று. உரும்பிராயில் இலங்கை இராணுவப்படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதற்கான முதல் அறிகுறி இதுதான். பின்னால் இன்னும் எவ்வளவோ நடக்க இருக்கின்றன. ரேடியோ நடராஜா சிங்கள இராணுவ வீரனால்தான்

Page 152
268
கட்டுக் கொல்லப்பட்டார் என்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் இதிலிருந்து தெரிகின்றன. திருமதி நடராஜா பின்னர் வேறொரு உறவினரின் வீட்டில் தனது மகனைக் கண்டடைந்தார்.
அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த சாந்தி என்பவர் உரும்பிராய் சந்திக்கு அருகிலிருந்த தன் இல்லத்தில் தாயோடு தங்கியிருந்தார். அக்டோபர் 16ம் திகதி பெருங் குண்டு வீச்சுச்சத்தம் கேட்டதும் தாயும் மகனுமாய் தங்கள் நாயுடன் ஒரு கட்டிலுக்கு அடியில் சென்று மறுநாள் காலை துப்பாக்கிச்சூடு ஓரளவு அடங்கும்வரை அங்கேயே மறைந்திருந்தனர். எல்லாம் அடங்கி விட்டது போல் தெரிந்த நேரத்தில் தாய் வெளிவந்து கதவைத் திறந்ததும் பொறுமை இழந்து போயிருந்த அவர்களுடைய நாய் வெளியே குதித்தோடியது. அந்த ஒழுங்கையில் டாங்கி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த யாரோ சுட்டதில் நாய் விழுந்து இறந்தது. சடுதியாகக் கதவைத் தாழிட்டு விட்டு அவர்கள் மீண்டும் கட்டிலுக்கு அடியில் புகுந்து கொண்டனர். இச்சமயத்தில் வெளியில் நின்றவர்கள் தமக்குள் பேசிக்கொண்ட சுவாரஸ்யமான உரையாடலைக் கேட்க முடிந்தது. சிங்களத்தில் ஒரு குரல்:
"மே பரன கெதர கடாண்ட ஹறி அமாரு. மோட்டார் எக்க உஸ்ஸண்ட" (இந்தப் பழைய வீட்டை உடைக்கிறது என்பது கஷ்டம். ஒரு மோட்டார் அடி). ஒரு கட்டத்தில் ஒருவர் சிறு துப்பாக்கியால் கைபோன போக்கில் சுட்டுக்கொண்டிருந்த சமயம் அந்த வழியே வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்று அவருக்கருகில் நின்றது. யாழ்ப்பாணத் தமிழில் ஒரு குரல் எழுந்தது: "டேய், செல்வராஜா, இந்தச் சேட்டையை இங்கே விடாதே. இதைத் தொடர்ந்து யாரோ பெரிய புள்ளிகள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று செல்வராஜாவிற்கு அறிவிக்கப்பட்டது. பின் சூட்டுச்சத்தம் நின்று விட்டது. இந்த அவஸ்தையைத் தாங்க முடியாமல் சாந்தியும் அவரது தாயும் 18ம் திகதி மாலை வீட்டைத் திரும்பியும் பார்க்காமல் பின்வழியால் வெளியேறினார்கள். அவர்களை யாரும் கணிடாலும் யாரும் யாரையும் பொருட்படுத்திக் கொணடதாகவும் தெரியவில்லை. ஊரின் உட்புறமாய் ஒரு நண்பரின் வீட்டில் சில நாட்களைக் கழித்த ைெலயில் ஒருநாள் திருமதி நடராஜாவைச் சந்தித்தனர். பின் வேறும் சிலருடன் ஒழுங்கைகளுக்கூடாய் நடந்து, சிறிது ஒதுக்குப்புறமாயிருந்த கரந்தன் என்ற கிராமத்திற்குப் போய் அங்கு ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தனர். அவர்கள் கரந்தனில் தங்கியிருந்த போது சில இராணுவவீரர்கள் அவர்களுடைய வீடு வரை சென்று கதவைத்தட்டியிருக்கிறார்கள். உள்ளிலிருந்து யாரும் பதில் கூறவில்லை. சிங்களத்தில் தமக்குள் கதைத்துக் கொண்ட அவர்கள் பின் அங்கிருந்த கோழிகளைத் திருடிக் கொண்டு சென்றனர். இத்தாக்குதலில் சிங்களப்படையும் பங்கு பற்றியது என்ற விபரம் பின்னர் வெளியான பத்திரிகைச் செய்திகளில் உறுதிப்படுத்தப்பட்டது. நவம்பர் மத்தியில் இந்தியத் துருப்புக்களில் ஒரு பகுதியினர் தேடுதல் வேட்டையில் அங்கே போயிருக்கிறார்கள். சாந்தியும் அவரது தாயும் தங்கியிருந்த வீட்டிற்கு அடுத்த வீட்டில் பெணிகள் மட்டுமே இருந்தனர். அவர்களில் பலர் பருத்தித்துறையிலிருந்து வந்திருந்தவர்கள். இந்த விபரம் தெரிய வந்ததும் இராணுவ வீரர்கள் கதவுகளை மூடிவிட்டு அங்கே ஒரு மணி நேரத்தைக் கழித்தனர். இங்கு தங்கியிருந்த பெண்களில் ஒருவர் பின்னர் சுண்டிக்குளியில்

269
வசிக்க வந்திருந்தபோது இத்தகவலைத் தெரிவித்தார். தான் அந்த வீரர்களை 0ண்றாடிக் கேட்டுக் கொண்டதில் தன்னை மட்டும் அவர்கள் விட்டுவிட்டனர் என்றும் தெரிவித்தார். ஒரு மாதம் கழித்து ஷெல் தாக்குதலில் தங்கள் வீட்டுக் கூரையைத் துளைத்த ஷெல் துண்டு தாங்கள் முன்னர் ஒளித்திருந்த கட்டிலின் மேல் விழுந்துவிட்டிருந்ததை சாந்தியும் அவரது தாயும் அறிந்தனர்.
16ம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த ஷெல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர் கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கணிணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 88 வயது மனிதர் கணிடபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வீட்டு ஒழுங்கை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். அவர்கள் கண்ணில் கண்டதை எல்லாம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பின் அவர்கள் அவருடைய வீட்டு வளவுக்குள் நுழைந்து முன் வாசல் கதவின் பூட்டைப் பார்த்துச் சுட்டிருக்கிறார்கள். கதவு உட்பக்கத்திலும் பூட்டப்பட்டிருந்ததால் அது அசைந்து கொடுக்கவில்லை. பின் அந்த இராணுவவீரர்கள் இரண்டு மாடிகளின் ஜண்னல் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டனர். பின் அவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு அதற்கு எதிரில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தனர். அவர்களில் மூத்தவருக்கு 93 வயதிருக்கும். இளைய பெண்ணுக்கு ஏறத்தாழ 25 வயது இருக்கலாம். 93 வயது மூதாட்டி படுத்த படுக்கையாயிருந்தார். இந்திய இராணுவம் முதலில் அவளைச் சுட்டது. மற்ற சடலங்கள் வீட்டுப் பின் தோட்டத்தில் காணப்பட்டன. அவர்கள் தப்பித்து வெளியே ஒடிச் செல்ல முயலும்போது சுடப்பட்டிருக்க வேண்டும். மறு நாள் 19ம் திகதி திங்கட்கிழமை இந்தச்சடலங்களைப் புதைத்தவர்தான் இந்தக் கதையை எங்களுக்குச் சொல்கிறார். அத்தினத்தன்று உரும்பிராயில் மீண்டும் பயங்கர சம்பவங்கள் நிகழ ஆரம்பித்து விட்டன.
உரும்பிராய்ச் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கைத் திருச்சபைக்கு எதிரே உள்ள ஒழுங்கையில் இருந்த வீடொன்றிற்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. அந்த வீட்டுக்காரர்களும் அந்த வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்தவர்களுமாய் அந்த வீட்டில் பதினொரு பேர் தங்கியிருந்தனர். இது நடந்தது அக்டோபர் 19ம் திகதி. இந்தியப்படை வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியில் வருமாறு அழைத்தது. வீட்டுச்சொந்தக்காரரான பொன்னம்பலம் வெள்ளைக் கொடியை ஏந்திக் கொண்டு முன்னே வர, வீட்டிற்குள் இருந்தவர்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். உயிர் பிழைத்த பொன்னம்பலம் மட்டுந்தான் இந்தக்கதையை எமக்கு விபரிக்கிறார். மற்றவர்களைவிடச் சற்று முன்னால் நின்று கொண்டிருந்த பொன்னம்பலம் கடுங்கள்" என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதைக் கேட்டிருக்கிறார். அவருக்குட் பின்னால் நின்று கொண்டிருந்த சிலர் தரையில் சரிந்தனர். அவர்களில் பஞ்சரத்னம் என்ற பள்ளியாசிரியரும் ஒருவர். அதைப்பார்த்துக் கொண்டு

Page 153
270 நின்ற அவரது மனைவி "ஐயோ என்று கதற, அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச்சம்பவத்தில் கட்டுக் கொல்லப்பட்ட மூவர் பஞ்சரத்னம் தம்பதிகளும் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாடசாலை மாணவியர் தலைவியாக இருந்த பதினாறு வயதான பிரேமா சின்னத்துரையுமாவார். பிரேமாவின் தாய் திருமதி சின்னத்துரையை ஒருவாறும் சமாதானப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அந்தத் தாயின் கண் எதிரிலேயே பூத்துக்குலுங்கிக் கொண்டிருந்த அவரின் அன்பு மகள் கொல்லப்பட்டாள். அவர்களின் வீடு உரும்பிராய் சந்திக்கு மிக அணிமையில் இருந்ததால் அது அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்று கருதித்தான் சின்னத்துரை, தனது மனைவியையும் மகளையும் பாதுகாப்பாய் பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டுத், தான் மட்டும் அந்த வீட்டில் தங்கி நின்றார். அவரை அவருடைய மனைவி கடைசியாகப் பார்த்தது அவர் சைக்கிளைத் துடைத்துக் கொண்டிருந்த போதுதான். அவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள்: "கவலைப்படாதேயும், அவங்கள் சண்டை பிடிக்க வந்தவங்கள் இல்லை, அவங்கள் அமைதி காக்கும் படையைச் சேர்ந்தவங்கள். நான் அவையஞக்கு விளங்கப்படுத்துவன். மூன்று மாதங்கள் கழித்து அவருடைய எஞ்சிய எலும்புக் கூட்டைத்தான் திருமதி சின்னத்துரை காணமுடிந்தது. திருமதி சின்னத்துரை தனது பேச்சின் நடுவே அடிக்கடி நிறுத்தி மூச்சுத்திணறக் கூறுவார்: "அவையள் சண்டை பிடிக்க வந்த இராணுவம் இல்லை எண்டு அவர் சொன்னாரே.
அக்டோபர் 19ம் திகதி வியூ ஒழுங்கையிலிருந்த திருமதி நேசரட்னம் வீட்டில் இருந்தவர்கள் தம் வீட்டைவிட்டு வெளியேறுவதெனத் தீர்மானித்தனர். தனது கணவரைப் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வெளியேறிப் போகுமாறு திருமதி நேசரட்னம் தனது கணவரைக் கேட்டிருக்கிறார். வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியாகிவிட்ட தனது தாயாருக்காகவும், மூளை வளர்ச்சி குன்றிய தனது 42 வயதுச் சகோதரருக்காகவும் தான் வீட்டிலேயே தங்கிவிடப் போவதாக திருமதி நேசரட்னம் தீர்மானித்திருந்தார். மூளை வளர்ச்சி குன்றிய தனது சகோதரனை வேறெங்காவது அழைத்துச் சென்றால் அவர் புது இடத்தில் பொருந்தி இருக்கமாட்டார் என்றும் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருப்பார் என்றும் அவர் கருதினார். கடைசி நேரத்தில் அவருடைய எட்டு வயது மகளும் தாயுடனேயே நிற்கப் போவதாக அடம்பிடித்ததில், இறுதியில் அவர்களில் நான்கு பேர் வீட்டிலேயே தங்கி நிற்க நேர்ந்தது. தங்களைப் பிரிந்து சென்றவர்களிடம் இந்த அவலமான வார்த்தைகளைக் கூறித்தான் அவர்களை ஆறுதல்படுத்தியிருக்கிறார்கள்: "அவர்கள் வெறும் அமைதி காக்கும் படையினர்தான். அவர்கள் நம்மைச் சிறிது விசாரணை செய்து விட்டுப்பின் விட்டு விடுவார்கள்
அக்டோபர் 20ம் திகதி நிலைமை ஓரளவு அடங்கி விட்டதாகத் தோன்றிய நேரத்தில் காளி கோயிலுக்கருகில் ஒரு நிலக்கண்ணிவெடி வெடித்ததில் சில இராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் மற்ற இராணுவவீரர்கள் வெறி கொண்டவர்கள் போலாகி சனங்களைக் கொன்று குவிக்கத் தொடங்கி விட்டார்கள். கொல்லப்பட்டவர்களிற் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களும் பெண்களும் குழந்தைகளுமாவர். மற்றவர்கள் அதற்குள் உரும்பிராயை விட்டு

271 வெளியேறியிருந்தார்கள். முன்னே குறிப்பிட்ட சாந்தியின் மாமி முறை உற்வினர்களான கேர்லி, சாந்தியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் வசித்து வந்தார். இந்த இராணுவ வெறியாட்டத்தின்போது கேர்லி தனது வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதைத்தன் கண்கொண்டு பார்த்திருந்த கேர்லியின் வயதான தாய் அவரது பக்கத்திலேயே நின்றவாறு துக்கத்தால் உயிர் நீத்தார். உப்பிச் சிதைந்து போயிருந்த அவர்களின் சடலங்கள் ஒரு மாதத்திற்குப் பின் தான் அவர்களின் உறவினரால் தகனம் செய்யப்பட்டன.
பல்கலைக்கழக மாணவியான அம்பிகாவின் தாயும் பாட்டியும் அவரது வயதான மலையக வேலைக்காரர் ஒருவரும் இறந்தவிதம் இன்னொரு சோகக்கதை. உரும்பிராய் வடக்கில் இருந்த தங்கள் வீட்டில் அம்பிகாவின் தாயும் பாட்டியும் அவர்களது குடும்ப நண்பரான இன்னுமொரு கிழவருடன் இருந்திருக்கிறார்கள். இந்திய டாங்கியொன்று காலாட்படைப் பிரிவுகள் தொடர்ந்து வரப் பிரதான வீதியையொட்டியிருந்த திறந்த வெளி வழியாக அவர்களின் வீட்டைக் கடந்து சென்றது. சிறிது நேரங்கழித்து எல்லாம் போயாகிவிட்டதா என்று பார்ப்பதற்காக அம்பிகாவின் தாயார் எச்சரித்ததையும் மீறி அந்த முதியவர் கதவைத் திறக்கச் சென்றிருக்கிறார். அவர் கதவைத் திறந்ததுதான் தாமதம், பீரங்கி வண்டிக்குப் பின்னால் இருந்த படைப்பிரிவினைச் சேர்ந்த இராணுவ வீரனால் ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பின் படைவீரர்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்து அம்பிகாவின் தாய், பாட்டி இருவரையுமே சுட்டுக்கொன்றார்கள்.
இந்தச் சம்பவத்தை நமக்கு விபரித்துச் சொல்பவர் இரணிடு குழந்தைகளுக்குத் தாயான ஒரு நடுத்தர வயது விதவையாவார். இனி இவரது சொந்த கதையை கேளுங்கள்:
சம்பவ தினத்தன்று தங்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு அவர்கள் உரும்பிராயை விட்டு வெளியேறுவதெனத் தீர்மானித்திருந்தனர். அந்த வீட்டிலிருந்த மொத்தம் பதினொரு பேருமே இந்தப் பெண்மணியைப் போலவே அகதிகள்தான். பிரதான வீதியிலிருந்த தங்களின் வீடுகளை விட்டுவிட்டு இங்கு வந்திருந்தவர்கள்தான். இப்பெண்மணியின் சொந்தவீடு சேதமாக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. அன்று அவர்கள் வெளியேறுவதற்கு தயாராக இருந்தார்கள். பைகளில் எல்லாவற்றையும் போட்டு நிரப்பியிருந்தனர். சப்பாத்துக்கள், சிலிப்பர்கள் எல்லாவற்றையும் வீட்டுக்கு வெளியே வைத்தனர். அப்போது தான் ஏழு அல்லது எட்டு இந்திய அமைதிப்படை டாங்கிகள் வந்து அவளின் வீட்டின் முன் நின்றன. அவர்களால் எதுவுமே செய்து கொள்ள முடியவில்லை. தங்கள் வீட்டு வாசல்வரை சத்தம் வந்து கொண்டிருப்பது அவர்களுக்குக் கேட்டது. கதவை யாராவது வந்து தட்டினால் தாங்கள் வெளியில் போய் அவர்களுக்கு எதையாவது விளங்கப்படுத்தலாம் என்று அவர்கள் தங்களுக்குள் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆறு ஆணிகள் வந்து கதவை உடைத்துத் திறக்க முற்பட்டனர். ஜன்னலுக்கூடாக இரண்டு முறை சுட்டர்கள். உள்ளிருந்தவர்கள் பயத்தால் உறைந்து போனார்கள். துப்பாக்கிச் சூட்டினால் உடைந்து தெறித்த சில்லுகள் இப்பெண்மணியின் மகன், மகள் மற்றும்

Page 154
272
இன்னுமொரு பெண்ணையும் காயப்படுத்தின. இவை எல்லாவற்றையும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டு இன்னும் மோசமாக என்ன நடக்கப் போகிறதோ என்ற பயங்கரத்தை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்திய அமைதிப்படை வீரர்கள் அங்கேயே பத்துப் பதினைந்து நிமிடங்கள் நின்றுவிட்டு, தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்து விட்டுப் பின் அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். பின்பு அவர்கள் இன்னொரு வீட்டிற்குச் சென்றார்கள். அங்கும் ஏதும் கஷ்டம் கொடுக்காமல் அந்த வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். ஒரு வழியாக அவர்கள் எல்லாரும் போய் முடிந்த பிறகு எங்களுக்கு இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் மேற்படி பெண்மணி அதே ஒழுங்கையில் சற்றுத் தள்ளியிருக்கும் தன் மைத்துனியிடம் தான் உரும்பிராயை விட்டு வெளியேறப்போகும் விஷயத்தைச் சொல்லி விட்டுப் போகலாம் என்று அங்கே போயிருக்கிறாள். அங்கே அவளுடைய அந்த மச்சாள் முதுகில் சுடப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டாள். அவளுடைய வயதான மாமியும் அவர்களோடு அந்த வீட்டில் தங்கியிருந்த இந்தியக் கிழவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறாள்.
அக்டோபர் 20ம் திகதியன்று மட்டும் அதே ஒழுங்கையில் இன்னும் தள்ளி மேலே வசித்து வரும் சிவப்பிரகாசம் என்பவர் தனது வீட்டிலிருந்து ஒரு அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மட்டும் 18 பேர் கொல்லப்பட்டதாக ஒரு கணக்கைத் தெரிவித்தார். அவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள்அவர்களுமே எல்லாரும் அறுபது வயதைக் கடந்தவர்கள். பெரும்பாலான வீடுகளில் வீட்டைவிட்டு வெளியேறாமல் வீட்டிலேயே தங்கிவிட்டிருந்த தாய், அல்லது பாட்டி, இளைய மகள் அல்லது வயதான தகப்பன் என்றுதான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கராஜ் உரிமையாளரான திரு சிவகுருநாதனின் கதை இன்னுமொரு சோகக்கதை. எட்டு வயதிலிருந்து பதினேழு வயது வரைப்பட்ட கோமதி, கிரிஜா, கிரிதரன், ஜெயகரன், உதயகரன் ஆகிய அவருடைய ஐந்து மக்களையும் இந்திய இராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டனர். காயமுற்ற 42 வயதான தனது மனைவி வரதலட்சுமியை மிகுந்த கஷ்டப்பட்டுத்தான் அவர் யாழ்ப்பாணம் பெரியாளப்பத்திரிக்கு மருத்துவ சிகிச்சைக்குக் கொண்டு போய்ச்சேர்த்தார். அக்டோபர் 21ம் திகதி இந்திய இராணுவம் யாழ் பெரியாஸ் பத்திரியில் நடத்திய வெறியாட்டத்திற்குப் பலியானவர்களில் வரதலட்சுமியும் ஒருவராவர். சிவகுருநாதன் மட்டும் காயத்தோடு ஆளப்பத்திரியிலிருந்து தப்பி ஒரு வழியாக ஊர்ந்து தவழ்ந்துதான் ஆனைப்பந்தியடியைப் போய்ச் சேர்ந்திருக்கிறார். அங்கு அவருக்கு வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் உதவி அளித்திருக்கிறார். தீவுப்பகுதியில் தனது உறவினர்களைக் கொணடிருந்த சிவகுருநாதன் அங்காவது போய்ச்சேர்வோம் என்று தீர்மானித்து அராலித்துறைக்குப் போய் அங்கிருந்து படகில் தீவுக்குப் போகலாம் என்று அங்கு போயிருக்கிறார். அவர் அங்கு இருந்த சமயம் அராலித்துறை மீது ஹெலிகொப்டரிலிருந்து ஷெல் அடித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்தனர். பின்னர் சிவகுருநாதன் சங்கானை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு

273
அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் மரண அறிவித்தல் 1988 ஜனவரி 18ம் திகதிய "ஈழநாடு" பத்திரிகையில் வெளியானது.
நாற்பத்தேழு வயதான வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரமும் முப்பது வயதான அவர் மனைவி டொரொத்தியும், மூன்று வயது மகள் ஷெரினும் பலத்த ஷெல் தாக்குதலுக்கிடையில் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற முயன்ற போது இந்தியப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று முந்திக்கொண்டு பாதையைத் தாண்டிச்சென்றுவிட்டிருந்த ஒன்பது வயதான அவரின் மூத்த மகளும் வேலைக்காரச் சிறுமியுமே இதில் உயிர் தப்பினார்கள். ஒரு கரடுமுரடான குழிக்குள் கிரெவல் கற்களால் மூடப்பட்ட நிலையில் ஏகாம்பரம் குடும்பத்தினரது சடலங்கள் கிடந்தன. அவரது உறவினர்கள் அந்த இடத்தைத் தோணி டி எடுத்தபோது ஏகாம்பரம் தனது பிஞ்சுக்குழந்தையை அணைத்துக் கொண்டபடி கிடந்திருக்கிறார். "தப்பிவிட்ட அந்த ஒன்பது வயதுக் குழந்தையின் நினைவில் இந்தப் பயங்கர நிகழ்ச்சி அலைக்கழிக்கும் அவலத்தை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது என்று அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகிறார்.
ஏகாம்பரம் வீட்டிற்கு அடுத்தாற் போல் டொரொத்தியின் மைத்துணி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவருடைய தாய், அவருடைய சகோதரன், மற்றும் ஒரு ஏழு வயதுக் குழந்தை அனைவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர். உறவினர்கள் அவர்களது எலும்புக்கூடுகளைத்தான் மீட்க முடிந்தது.
நல்லூரில் அடைக்கலம் புகுந்திருந்த திரு ராஜசிங்கம் ஒரு மாதம் கழித்துத்தான் தனது நெருங்கிய உறவான சீனித்தம்பி குடும்பத்தினருக்கு நேர்ந்த கதியைப் பற்றி அறிந்திருக்கிறார். 1988 ஜனவரி 18ம் திகதியன்று, அதாவது அவர்கள் இறந்த 91வது தினத்தில்தான், உரும்பிராய் புனித இம்மானுவல் தேவாலயத்தில் அவர்களுக்கான பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. தேவாலயத்தின் பிராதான பகுதி பலத்த ஷெல் தாக்குதலுக்கு உட்பட்டிருந்ததால் அதனையொட்டியிருந்த கூடமொன்றில்தான் இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. தாங்க முடியாத இந்த அவலத்திற்குள்ளும் ராஜசிங்கம் பெருமைப்பட்டுக்கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. தனது பத்து வயதுப் பேரன் பள்ளிக்குச் செல்லும் வழியில் தமிழரான ஒரு இந்திய இராணுவ அதிகாரியைப் பார்த்து "உங்கட ஆமி தான் எங்கட் அங்கிள், டொரொத்தி அன்ரி, ஷெரின் எல்லாரையும் கொன்றது என்று கூறினானாம். அந்த அதிகாரி குன்றிப் போனவராய், "மகன், நான் ஒரு எஞ்சினியர்-எஞ்சினியரிங் பகுதியைத்தான் சேர்ந்தவன். நான் பெயருக்கு மட்டுந்தான் துப்பாக்கி வைத்திருக்கிறேன். நான் யாரையும் கொல்வதில்லை. வடக்கத்தியர் தான் உங்களின் சொந்தங்களை எல்லாம் இப்படிக் கொன்றிருக்கிறார்கள் என்று பதில் சொன்னாராம். இதே விதமான உணர்வுகளே இன்னுமொரு இராணுவ மருத்துவரின் வார்த்தைகளிலும் எதிரொலித்தது. "இவர்கள் தமிழர்கள் என்றுதான் இந்திய இராணுவம் இப்படி நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பஞ்சாப்பிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே ஜனங்களின் மீது ஒரு

Page 155
274 போதும் ஷெல் தாக்குதல் நடத்தியதில்லை." என்கிறார் அவர். பிரார்த்தனைக் கூட்ட்த்திற்கு வந்து சேர்ந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு பசியோடிருந்த-முதுகு கூனிய கிழவரொருவர் பாதையைக் கடந்து வந்து அங்கு செஞ்சிலுவைச்சங்கம் எதுவும் சனங்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுக்கிறார்களோ என்று விசாரித்தது இதில் தமாஷானது!
3.4 உடுவில் - மருதனாமடம்
இப்பகுதியின் முதல் சூடு அக்டோபர் 12ம் திகதி மருதனாமடத்தில் கிறிஸ்தவ சேவா ஆசிரமத்திற்கருகில் விழுந்தது. திருநெல்வேலியில் அன்று காலை 29 இந்திய அதிரடிப்படையினர் இறந்ததையடுத்து துரிதகதியில் இச்சம்பவம் இடம்பெற்றது. அச்சமயத்தில் ஆசிரமத்தில் 2000 அகதிகள் இருந்தனர். ஆசிரமத்திற்கு வடக்கே சில நூறு யார் தூரத்தே தள்ளியிருந்த திறந்த வெளிகளில் நின்று கொணடிருந்த இந்தியத்துருப்புகள் ஆசிரமத்தின்மீதும் புதிய இறையியல் செமினரியின் மீதும் சிறிய ஏவுகணைகளை வீச ஆரம்பித்தனர். கல்விக்கூடம் மோசமாகச் சேதமடைந்தது. தேவாலயமும் நூல் நிலையமும் அவ்வாறே சேதமுற்றன. பலர் காயமுற்றனராயினும் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை. பிரதமசபைக்குருவானவரான அருட்திரு சாம் அல்பிரட் இருதய நோயாளியாய் இருந்து கொண்டும் காயமுற்றோரைக் கவனித்துக்கொண்டு அங்குமிங்குமாக ஒடியாடித்திரிந்து கொண்டிருந்தவருக்கே தாக்குதலால் உடைந்துவிழுந்த ஒடுகளாலும் சிதறிவிழுந்த மரத்துண்டுகளாலும் முதுகில் காயமேற்பட்டது. இணுவில் மாக்லியட் மருத்துவமனையில் தன் காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டு அவர் திரும்பியும் தன்னுடைய பணியைத்தொடர ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். அக்டோபர் 13ம் திகதி காலை இந்தியத் துருப்புகள் மருதனாமடம் மானிப்பாய் வீதி வழியே நகர்ந்து கொண்டிருந்தன. படையினர் இறுக்கம் தளர்ந்த நிலையில் பொதுமக்களை நோக்கிக் கை அசைத்தபடி போய்க் கொண்டிருந்தனர். மருதனாமடம் சந்திக்கு மேற்கே 200 யார் தள்ளி இந்தியப்படையினர் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காயினர். இந்தியப்படையினர் துரிதமாய் அங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து தம்மை நிலைப்படுத்திக் கொண்டனர். உடனே அத்தகைய வீடுகளை நோக்கியும் புலிகள் சுட ஆரம்பித்தனர். வீட்டில் இருந்தவர்கள் சிறிது நேரத்தின் பின் நெருக்கடியைத் தாங்க முடியாமல் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் தம் வீடுகளை விட்டு விட்டு வெளியேறினார்கள். அங்கிருந்து சிறிது தூரம்கூட அவர்கள் சென்றிருக்கமாட்டார்கள், அதற்குள் அவர்கள் இந்தியப்படையினரின் தாக்குதலுக்கு இலக்காக நேர்ந்ததால் அவர்களும் ஆங்காங்கே தம்மைக்காத்துக்கொள்ள மறைவிடம் தேடி ஒளித்துகொள்ள வேண்டியதாயிற்று. பயத்தில் கரைந்த சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர்கள் மறைவிடத்திலிருந்து எழும்பி தங்கள் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு தோட்டக் காணிகளுக்குக் குறுக்காய் நடந்தனர். இந்த வேளையில் எந்தத் துப்பாக்கிச் சூடும் நிகழவில்லை. இந்தச் சம்பவத்தை விபரித்த மனிதர் விரல்விட்டு எண்ணத்தக்க விடுதலைப்புலிகள் சிலர் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சடுதியாக ஓடிச்சென்றதையும் அவ்வாறு ஓடும்போது

275
சுட்டுக்கொண்டே சென்றதாயும் இவ்வாறு செய்வதன் மூலம் தாங்கள் எண்ணிக்கையில் பெருந்தொகையினராக இருப்பதாக இந்திய இராணுவ வீரர்கள் நம்புவர் என்று அவர்கள் நினைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்தியத் துருப்புகள் பின்னர் உடுவில் மகளிர் கல்லூரியில் முகாமிட்டனர். மானிப்பாய் வீதியில் ஆலடியில் அமைந்திருந்த ரோஸ் பிராண்ட் இனிப்புத் தொழிற்சாலையில் பெரிய முகாமொன்று அமைக்கப்பட்டது. அக்டோபர் 17ம் திகதியன்று இந்திய இராணுவ வீரர்களுக்கு யாரோ நல்ல தமாஷ் காட்டியிருக்கிறார்கள். உடுவில் வை.எம்.சி.ஏக்கு முன்னால் இருந்த வீதிக்குக் குறுக்காக ஒரு கயிறு இழுக்கப்பட்டு அக்கயிற்றின் மறுமுனை வாழை இலைகளால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. அதனைக் கணினுற்ற இந்தியப்படை வீரர்களுக்கு அது கணிணிவெடி அல்ல, வெறும் விஷமத்துக்குத்தான் யாரோ அப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுத்தது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் அந்த வீதி வழியே போய் அங்கிருந்த சில வீடுகளை நோக்கிச் சுட்டனர். ஒரு வீட்டில் அந்த வீட்டுக்காரி சில பெண்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் கூறிய ஏதோ ஒரு ஹாஸ்யத்திற்கு அவர்கள் கேலியாய்ச் சிரித்திருக்கிறார்கள். அந்த வீட்டைக் கடந்து சென்ற இராணுவவீரர்கள் வீட்டிற்குள் கேலிச்சிரிப்பொலி வருவதைக் கேட்டதும் அவ்வீட்டை நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். அந்த வீடு இப்போதும் மிக மோசமாகச் சிதிலமுற்றுக் கிடக்கிறது. நல்ல வேளையாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. அதே தினத்தில் உடுவில்-மானிப்பாய் வீதியிலிருந்த வேறும் சில வீடுகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
நவம்பர் 2ம் திகதி தேடுதல் நடத்துவதற்கு ஓய்வுபெற்ற பள்ளியாசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் சென்ற மூன்று படைவீரர்கள் அவருடைய மகளை இழுத்துக்கொண்டு வெளியேறினார்கள். தனது தம்பியின் கைகளை விடாமல் இறுகப்பற்றிக்கொண்ட அப்பெணி ஓலமிட்டு அழுதாள். அந்தக் குழுவின் தலைவனை அவர்கள் மேஜர் என்றுதான் அழைத்தார்கள். ஆனால் அவன் ஒரு அதிகாரி இல்லை என்றுதான் சொல்லப்படுகிறது. அவர்கள் ஒரு டாக்டரின் வீட்டைக் கடந்து சென்றபோது, "டாக்டர், தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அந்தப்பெணி கூச்சலிட்டாள். டாக்டர் வெளியே எட்டிப் பார்த்தபோது படைவீரர்கள் அவரை அப்பாற் போகச்சொல்லி கை காட்டினார்கள். தம்பியின் கையை இறுகப்பற்றியபடி இருந்த அப்பெண்ணைக் காலியாக இருந்த பக்கத்து வீட்டுக்கு இழுத்துச் சென்றனர். அவளிடமிருந்து அவளுடைய சகோதரன் பலவந்தமாகப் பிரிக்கப்பட்டு அந்தப் பெண்ணை மட்டும் வீட்டுக்குள் இழுத்துச் சென்றனர். நீங்கள் எனக்கு அணிணை மாதிரி. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை வேண்டுமானால் கொல்லுங்கள், ஆனால் அது மட்டும் வேண்டாம்" என்று அப்பெணி அப்படைவீரர்களின் கால்களில் மண்டியிட்டுக் கதறினாள். அவள் அப்படியே தொடர்ந்து கெஞ்சிக்கொண்டிருக்க, அந்த ‘மேஜர் என்பவன் அவளை அடித்தான். அவளை மேற்கொண்டு எதுவும் செய்ய வேண்டாம் என்று அவன் அவர்களிடம் கூறி விட்டுப்பின் எல்லாருமாய் வெளியேறி விட்டனர்.

Page 156
276
பிறிதொரு இடத்தில் விபரிக்கப்பட்டுள்ள திருமதி ராஜாவும் அவரது பேரக்குழந்தைகள் மூவரும் சுடப்பட்ட சம்பவம் இதற்கு அடுத்த நாள் நிகழ்ந்தது. எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இவ்விதக் கொலைகளின் பின்னணி நியாயம் வக்கிரமானதாக இருந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பம் ஒன்றினைக் குறிப்பிடுவது விளக்கத்திற்கு உதவி புரியக்கூடும். சில தினங்களுக்கு முன்னர் சில விடுதலைப்புலி இளைஞர்கள் திருமதி ராஜாவின் அண்டை வீட்டாரான பேங்கள் அரியரட்ணம் வீட்டு வளவுக்குள் குதித்தனர். பேங்கள் அரியரட்ணம் அவர்களிடம் மன்றாடிக் கேட்டதில் அவர்கள் திருமதி ராஜாவின் வீட்டுக்குப் போனார்கள். அச்சமயம் அவ்வீட்டின் சொந்தக்காரர் வேறு இடத்தில் தஞசம் புகுந்திருந்ததால் அந்த வீடு காலியாக இருந்தது. விடுதலைப்புலிகளை அந்த வீட்டில் கண்டதாக யாரோ கொடுத்த துப்பின் மூலந்தான் இராணுவம் அங்கே சென்றிருக்க வேண்டும். இராணுவம் அங்கே போய்ச் சேர்ந்த சமயத்தில்தான் திருமதி லில்லி ராஜாவும் அவரது மகளும் பேரக்குழந்தைகளும் வீடு திரும்பியிருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் இந்திய இராணுவம் மோசமான ஒழுங்கீனமாயும் சரி, பிழை காணத்தெரியாத விதத்திலும் எப்படி நடந்து கொண்டது என்பதை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் எடுத்து விளக்கவல்லது.
அதே தினத்தன்று நவம்பர் 3ம் திகதி இந்தியப்படைவீரர்கள் கோஷ்டி ஒன்று மருதனாமடம்-உரும்பிராய் வீதியில் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் துணைத்தலைவரான திரு ஏ நல்லதம்பியின் வீட்டிற்குச் சென்றது. அவருடைய வீட்டில் பல அகதிகள் தங்கியிருந்தனர். இந்தியப் படைப்பிரிவுகள் ஏற்கெனவே அந்த வீட்டில் தேடல் நடத்தி அந்த அகதிகள் அங்கு தங்கியிருக்கலாம் என்று அனுமதி அளித்திருந்தன. அப்போது அங்கு சென்றிருந்த கோஷ்டி தேடல் குழுவாகத்தான் தெரிந்தது. திரு நல்லதம்பியும் அவரது மைத்துனரும் வந்திருந்த அதிகாரியோடு பேசுவதற்காக முன்னே சென்றார்கள். வாயில் கேற்றைத் திறக்கும்படி அந்த அதிகாரி கேட்டார். அதே சமயத்தில இனனொரு கோவுடி இராணுவவீரர்கள் இராணுவவண்டிகளிலும் இ.போ.ச. பஸ்களிலும் உரும்பிராய்ச் சந்தியை நோக்கிப் போய்க்கொணடிருந்தனர். இந்தப் படைவீரர்கள் காலித்தனமான நிலையில் கணிபோன போக்கில் சுட்டுக் கொண்டே சென்றனர். திரு நல்லதம்பி வாயில் கேற்றின் சாவியை எடுத்துக்கொண்டு திரும்பி வருகையில் அவரது மைத்துனர் அந்த வாகனங்களில் சென்ற படைவீரர்களால் சுடப்பட்டு காயமுற்றிருப்பதைக் கண்டார். "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று அவர் கத்தினார். அவரது வீட்டுக்குள் வரவிருந்த இந்திய அதிகாரி வாகனங்களில் கடந்து சென்று கொண்டிருந்த படைவீரர்களைப் பார்த்துச் சுடுவதை நிறுத்துமாறு கத்தினார். அதேசமயத்தில் நல்லதம்பியின் கால்களில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. அந்த வாகனங்கள் அவர்களை விரைந்து கடந்து சென்றுவிட திரும்பவும் அங்கே அமைதி நிலவியது. ஊரடங்குச்சட்டம் இருந்தாலும் ஒழுங்கைகளுக்கூடாக இணுவில் மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்துவிடக் கூடியதாக இருந்ததாலும், தங்களை அங்கே தூக்கிக்கொண்டு செல்ல ஆட்கள் இருந்ததாலுமே தானும் தன் மைத்துனரும் உயிர்பிழைக்க முடிந்தது என்று திரு நல்லதம்பி கூறுகிறார். போதுமான மருத்துவவசதி

277
கிடைக்காததால் தான் உரும்பிராயில் பெரும்பாலானோர் மரணமுற நேர்ந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார். கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு அருகில் இருந்த வீட்டில் அங்கிருந்த பிறர் ஓடிவிட, தனித்து விடப்பட்ட வயதான இரண்டுபேர் பட்டினியால் இறந்து போன கதையும் அவருக்குத் தெரியும்.
ஆலடி முகாமின் பொறுப்பாளராய் இருந்த மேஜர் பரமேஸ்வரன் அங்கு சுற்று வட்டாரத்திலிருந்த மக்களின் பெருமதிப்புக்குரியவராயிருந்தார். பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களைக் கவனமாகப் பரிசீலித்து ஆவணசெய்து ஒழுங்கைப் பேணி வந்தார். வேலைபார்க்கும் ஒரு தாய் தனது இரண்டு மகள்மாரை இராணுவத்தினர் கொண்டு போய்விட்டனர் என அவரிடம் முறையிட்டார். மேஜர் பரமேஸ்வரன் உடனடியாகத் தன் கீழிருந்த படைவீரர்களை எல்லாம் ஆஜராகச் செய்து அந்த இரண்டு பெண்களையும் மீட்டுக்கொடுத்தார்.
ஏறத்தாழ இந்தச் சமயத்தில் விடுதலைப்புலிகள் அணியினைச் சேர்ந்த கணிசமான தொகையினர் தலைமையிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் பருமட்டாக நீர்வேலியிலிருந்து சங்கானை வரை கிழக்கு மேற்காக விரிந்திருந்த கிராமப் பகுதியில் நடமாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்தக் கோஷ்டியினர் டச்சு வீதிக்கும் கந்தரோடைக்கும் இடையில் உலவுவதாக நவம்பர் 25ம் திகதி இராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது. அன்று இரவு மேஜர் பரமேஸ்வரன் டச்சுவீதியில் இருந்த சில வீடுகளுக்குச் சென்று சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து தான் எங்கு நிலைகொண்டிருக்கிறேன் என்பது பற்றிய விபரங்களைக் கேட்டறிந்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் அப்பகுதிக்குள் ஒரு இராணுவத்துருப்பைத் தலைமைதாங்கி நடத்திச் சென்ற அவர் தனது படைப்பிரிவைச் சேர்ந்த மேலும் மூவருடன் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து நடந்த பதிலடித்தாக்குதலில் திரு கடிரன், திரு தஞ்சரட்ணம் ஆகிய ஒய்வுபெற்ற இருவர் உட்பட குறைந்தது 12 அப்பாவிப் பொதுமக்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று ஒர் ஆசிரியர் கூறினார். உடுவில் மகளிர் கல்லூரி முகாமைச் சேர்ந்த ஒரு அதிகாரி தானே எட்டு ஷெல் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டதாக ஒரு பாடசாலை விளையாட்டுத்துறை ஆசிரியருக்குக் கூறியிருக்கிறார். ஷெல் வெடித்ததில் காயமுற்ற ஒரு தாயை அவரது மகன் சைக்கிளில் வைத்து பிரதான வீதியை நோக்கிய ஆர்க் ஒழுங்கையில் கொண்டு வரும் வழியில் அத்தாய் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை ஒரு மருத்துவரிடம் கொண்டு செல்ல முயன்று கொண்டிருந்த அவர் மகன் தப்பிவிட்டார்.
நவம்பர் 28ம் திகதி உரும்பிராயைச் சேர்ந்த ஒரு பெண்மணி உடுவிலில் இருந்த தனது சகோதரியின் குடும்பம் என்ன ஆனது என்று விசாரிக்கத் தனது மகனையும் கூட்டிக்கொண்டு அங்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். வை.எம்.சி.ஏக்கு அருகில் அவரைத் தடுத்து நிறுத்திய சென்னையைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவர் அவரை வாங்கில் அமரும்படி கூறி, "அம்மா, மேஜர் பரமேஸ்வரன் இப்பகுதியிலிருந்த தமிழர்களைப் பாதுகாத்து வந்தார். இப்போது அவர் கொல்லப்பட்ட நிலையால் துருப்புகளின் மனோபாவம் இப்போது நல்லாயில்லை. உங்களை இப்போது நான் போக அனுமதித்தால் நீங்கள் உயிரோடு திரும்பி வருவீர்களோ என்று எனக்குச் சொல்லத் தெரியாது.

Page 157
278
நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிப் போய் விடுங்கள்"
என்று அந்தத் தாய்க்குக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
ஆசீர்வாதம் என்ற அம்புலன்ஸ் சாரதிக்கு ஆங்கிலத்தில் பேசத்தெரியும். அவருக்குக் குடிப்பழக்கம் இருந்தது. திருமதி ராஜாவின் பேத்தி பிரியாந்தி காயமுற்றபோது அவளைச் சிகிச்சைக்கு வாகனத்தில் இட்டுச்செல்ல ஆசீர்வாதம் முன்வந்தார். அன்றைய நிலையில் இப்படி ஒரு செயலைச் செய்ய முன்வருவதற்கு அசாதாரணமான துணிச்சல் தேவைப்பட்டிருந்தது. அதற்குப் பின் ஆசீர்வாதம் கப்டன் சர்மாவுடன் நண்பராய்ப் பழகினார். அவர் தங்கள் பக்கமாகத் தான் பேசுவார் என்ற நம்பிக்கையில் சில இந்தியப் பத்திரிகையாளர்கள் அவரைப் பேட்டி காணலாம் என்று இந்திய அமைதிப்படை அவரைத் தெரிவு செய்திருந்தது. அமைதிப்படையினைப் புகழ்ந்து தள்ளுவதற்குப் பதிலாக ஆசீர்வாதம் அதற்கு எதிர்மாறான அபிப்பிராயங்களையே அவர்களிடம் தெரிவித்தார். இதற்குப் பிறகு ஆசீர்வாதத்தை அங்கு யாரும் பொருட்படுத்துவதில்லை. ஒருநாள் குடித்துவிட்டு ஆசீர்வாதம் ஆர்க்லேன் வழியாக, 'ப் ளடி ஃபூல் சர்மா’ எனறு முணுமுணுத்தபடி போய்க்கொண்டிருந்திருக்கிறார். அங்கு சென்ற்றி பார்த்துக் கொண்டிருந்த சில இராணுவவீரர்களிடம் போய் வாக்குவாதப்பட்டிருக்கிறார். இவருடைய உளறல்களைக் கேட்டுச் சினமுற்ற அவர்கள் அவரை நன்றாக அடித்து இனி இந்தப்பக்கம் தலைகாட்டக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தனர்.
35 நல்லூர்
அக்டோபர் 15ம் திகதி முதல் விட்டுவிட்டு நடைபெற்ற ஷெல் தாக்குதலின் பேரோசை வானெங்கும் வியாபித்திருந்தது. ஷெல் தாக்குதல் நின்று மீண்டும் தொடரும் இடைவேளைக்குள் ஷெல்கள் தங்களை நோக்கி வராது என்ற மணக்கிலேசத்துடன் கூடிய நம்பிக்கையுடன் மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஷெல் அடிக்கத் தொடங்கியதும் அடுத்தடுத்து மூன்று பெரும் சத்தம் கேட்கும். இதைத் தொடர்ந்து விர்ரென்று ஷெல் விழும்போது உச்சஸ்தாபியிலான பெருஞ்சத்தம் கிளம்பும். அடுத்த சில கணங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மும்முறை வெடித்துச் சிதறும் சத்தங்கள் கேட்கும். மக்கள் அப்போதைக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டு அடுத்த தாக்குதல் எப்போதோ என்று காத்திருப்பார்கள். யார் யார் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள பல மணித்தியாலங்கள், சமயங்களில் நாட்கள்கூட ஆகும். அடுத்த பதின்மூன்று தினங்களிலும் காலையில் எழுந்ததும் முதல் கேள்வி, "இந்திய இராணுவம் இப்போது எங்கே இருக்கிறது?" என்பதுதான். அதிகத் துணிச்சல்காரர்கள் சைக்கிளில் போய் என்ன நடந்தது என்று அறிந்து கொண்டு வரப்புறப்படுவார்கள். ஐந்து மைல் ஆரையைக்கொண்ட ஒரு பிரதேசத்தைச் சுற்றி வளைத்துக்கொண்டு முன்னேற இந்திய இராணுவத்திற்கு ஐந்து நாட்கள் பிடித்தது. தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள், படுகொலைகள், யாழ்ப்பாணத்திற்குப் போகும் பாதை வழியே சிதறிக்கிடக்கும் சடலங்கள் என்றெல்லாம் இந்தக் காலங்களில் கதைகள் வந்து குவிந்த வணிணமிருந்தன. அங்கேயே இருந்து கொண்டிருப்பதைவிட வெளியேறிப் போய் விடுவது உசிதமானது என்று

279
கருதியவர்கள் அந்த ஆபத்தான நேரத்தில் அவர்களை அவ்வாறு கொண்டு போய்ச் சேர்க்க முன்வந்த வாகனச்சாரதிகளுக்கு பெருந்தொகைப் பணங் கொடுக்க வேண்டியதாயிருந்தது. சில நாட்களிலேயே பசித்துயர் வதைக்க ஆரம்பித்து விட்டது.
அக்டோபர் 21ம் திகதி அளவில் இந்தியத் துருப்புகள் இருபாலையிலிருந்து நல்லூருக்குள் நுழையத் தயாராக இருந்தது என்பது எல்லாருக்குமே தெரிந்த விஷயந்தான். கந்தசாமி கோயில் (இதில் 30 அல்லது 20ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்திருந்ததாகக் கணக்கிடப்பட்டிருந்தது), சென்ட் ஜேம்ஸ் தேவாலயம், அதையடுத்திருந்த கல்விக்காரியாலயம் (3000 அகதிகளுடன்), ஸ்டான்லி கல்லூரி ஆகிய பெரும் அகதி நிலையங்களைக் கொண்டு நல்லூர் விளங்கியது. இந்திய அமைதிப்படை ஏற்பாடு செய்திருந்த மூன்று அகதி நிலையங்களில் நல்லூர் கந்தசாமி கோயிலே மிகப் பெரியதாகும். அகதிகளுக்கு அங்கு உட்காருவதற்குக் கூட இடமில்லாத நிலைமைதானிருந்தது. இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்றால்கூடத் திரும்பி வரும்போது அவருக்கு உட்காரக் கிடைத்த இடங்கூடப் பறி போய்விடும். சுகாதார வசதி என்பது அங்கு மருந்துக்கும் இல்லை. போகப்போகச் சுற்றயலில் மலசலம் எல்லாம் குவிய ஆரம்பித்து விட்டது. மழை வேறு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பலர் இரவு பூராவும் மழைக்குள்ளும் பனிக்குள்ளும் வெளியிலேயே உட்கார்ந்திருந்தனர். ஒரு டஜனுக்கு மேற்பட்டோர் இப்படித் திடீரென்று மழை, பனியில் கழித்ததாலும் வாந்தி பேதியாலும் இறந்து போனார்கள். கோயிலின் தர்மகர்த்தாவின் இருப்பிடத்தின் ஒரு பகுதி தற்காலிக மருத்துவமனையாக்கப்பட்டு அங்கு காயமடைந்தோர் உடல்களிலிருந்து துப்பாக்கிச் சன்னங்கள், தெறிகுண்டுத் துகள்கள் ஆகியவற்றை வெளியில் எடுக்கும் வெகு நுட்பமான அறுவைச் சிகிச்சைகளை எல்லாம் மருத்துவம் பயிலும் மாணவத் தொண்டர்கள் நடத்தினர். விரைவிலேயே மருந்துகள் தீர்ந்து போய்விட்டன. கோயிலைச் சுற்றியிருந்த நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கிக்கொள்ள முடிந்தவர்கள் பாக கியசாலிகள் எனலாம். வெளியுலகிலிருந்து முற்றாக தி துண்டிக்கப்பட்டநிலையில் கோயில்கூட மக்கள் பீதியுடன் வாழவேண்டிய இடமாக மாறிவிட்டது. இந்த அசுத்தச் சூழலைத் தாங்க முடியாத சிலர் இப்படி வாழ்வதைவிட சுடுபட்டுச் செத்தாலும் பரவாயில்லை என்று கோயிலை விட்டு வெளியேறினர். ஆனால் மற்றவர்கள் அச்சத்தின் காரணமாக தொடர்ந்து அங்கேயே இருந்தனர். யாழ்ப்பாண மனிதனோ சுத்தமான கழிப்பறைகளுடன் தினமும் ஒரு முறையாவது குளித்துக்கொண்டு இயல்பாகவே சுத்தமாய் இருப்பதில் பேர்போனவன்.
இந்தக் காலகட்டத்தில் இலங்கை வானொலி ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் விடுதலைப்புலிகள் தலைவர் திரு பிரபாகரன் அந்தக் கோயிலுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதாக ஒருமுறை அறிவித்தது. ஒருவித கரிசனையுமில்லாது கூறப்பட்ட இந்த தமாஷ் செய்தி மக்களைச் சிறிதுகாலம் நிலைகுலையச் செய்துவிட்டது. கோயிலுக்கு வெளியுலகில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மை இவர்களின் மனத்தில் பாரதூரமாகப் பாதித்திருந்ததால் மற்ற அகதி முகாம்களில் இருந்து மக்கள் திரும்பித் தத்தம் வீட்டுக்குச் சென்றுவிட்ட பல நாட்களின்

Page 158
280
பின்னருங்கூட இவர்கள் கோயிலிலேயே தங்கியிருந்தனர். பசி, மழை, துர்நாற்றம், நோய், குப்பை கூளம், அழுக்கு என அனைத்தையும் அவர்கள் சகித்துக்கொண்டாக வேண்டியிருந்தது. இந்திய இராணுவம் நெருங்கி வரவர, விடுதலைப்புலி அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் மக்கள் கூட்டத்தோடு கலந்து கொள்ளவென வந்து சேர அங்கு பீதியோடு கூடிய அலறல்கள் எழுந்தன. இதற்குச் சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ வீரர்கள் ஒன்பது பேரின் சடலங்கள் உள்ளிட்ட தங்களின் குரூரக்கண்காட்சியைக் கந்தசாமி கோயிலில் நடத்தியிருந்தது. மே தின ஊர்வலத்துடனும் பின் மீண்டும் திலீபனின் உண்ணாவிரதத்துடனும் விடுதலைப்புலிகள் தம்மைச்சுற்றி ஒரு சமயார்த்த ஸப்துதியைக் கிளப்பி அதனை உச்ச கதிக்குக் கொண்டு செல்லும் எத்தனங்கள் இங்கேயே ஆரம்பமாகின. அதே இடம் இப்போது நிராசையின் சின்னமாகப் போயிருந்தது.
ஏனைய அகதிகள் முகாம்களில் நிலைமை இத்தனை மோசமாக இல்லை. இங்கு அகதிகளாய்த் தங்கியிருந்தவர்கள் உட்னுக்குடன் குளிக்கவும் சமைக்கவும் தத்தமது வீடுகளுக்கு சென்றுவரக் கூடியதாக இருந்தது. அகதி முகாம்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் முயற்சிகளைத் தாமாகவே மேற்கொள்ள முன்வந்த சில தனிநபர்களைத் தவிர எல்லா சமூக சேவை நிறுவனங்களும் செயலிழந்து நின்றன. கடைகளையும் கூட்டுறவுப் பணி டகசாலைகளையும் உடைத்துக் கொள்ளையடித்தவர்கள் அப்பொருட்களை அகதி முகாம்களில் மூன்று அல்லது நான்கு மடங்கு விலை வைத்து விற்றார்கள்.
அக்டோபர் 11ம் திகதி யாழ் கோட்டையிலிருந்து ஷெல் அடிகள் நல்லூர் கைலாசபிள்ளையர் கோயிலின் முன்பதாக வீழ்ந்து அதனால் 13 நபர்கள் கொல்லப்பட்டனர். ஷெல் அடித்தாக்குதல் நடந்து கொணர்டிருந்தபோது நேர் மேலே ஒரு ஹெலிகொப்டர் பறந்து கொண்டிருந்தது. இந்தக் கோயிலுக்கு முன்னாலிருந்த நாவலர் வீதிக்குள்ளிருந்த ஒரு சிறு தனியார் ஒழுங்கையில் உதயன் பத்திரிகை அலுவலகமும் அச்சகமும் அமைந்திருந்தது என்பது மட்டுமே இங்கு நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலுக்கு கூறத்தக்க ஒரேயொரு சாத்தியமான விளக்கமாக இருக்க முடியும். ஹெலிகொப்டரின் பிரசன்னமும் ஷெல் தாக்குதல் நடந்த இடமும் மேற்படித் தாக்குதலின் இலக்கு அந்தப்பத்திரிகையே என்பதையே சுட்டுகின்றன. விமானத்திலிருந்து ஷெல் தாக்குதல் நடத்தலாம் என்ற தீர்மானம் எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்தச் சம்பவம் நடந்தது. ஒரு ஷெல் கோயிலின் மேற்கூரையை சேதப்படுத்தியது. ஏனையவை அக்கம்பக்கத்திலுள்ள வீடுகளின் மீது விழுந்தன. ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னால் அனைவரும் பாதுகாப்பாய் மறைந்து கொண்டிருந்த நிலையில் அங்கு ஏழுபேர் கொல்லப்பட்டனர். மிஞ்சி உயிர் பிழைத்தது ஒன்றரை வயதுக் குழந்தையும் அதன் பாட்டனாரும் ஆவர். உதயன் அலுவலகத்தில் மூன்று ஊழியர்கள் காயமுற்றனர், அதில் ஒருவருக்குக் காலை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதற்கு முதல் நாள்தான் இந்திய அமைதிப்படை இரண்டு பத்திரிகைகளை மூடிவிட்டிருந்தது. உதயன் பத்திரிகைக்கு விடுதலைப்புலிகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது. தென்னிலங்கையில் உள்ள இதனையொத்த ஏனைய

281
பத்திரிகைகளைப் போன்றே இந்தப் பத்திரிகையும் அதிகாரபூர்வமாக வழங்கப்படும் செய்தியறிக்கைகளை ஏற்று வந்திருக்கிறது. அக்டோபர் 11ம் திகதி கோட்டையினின்று வெளிவர முடியாத நிலையில் இந்திய அமைதிப்படை இருந்தது. அதனுடைய அநாகரிகத்தன்மையில் ஷெல் தாக்குதல் அபூர்வமான செய்தித்தணிக்கை முறையைப் பிரதிபலிப்பதானது. இந்திய இராணுவம் உள்நுழைவதற்கு முன்பேயே ஷெல் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். நல்லவேளையாக, மருந்து மாத்திரைகள் கிடைக்காது போனாலுங்கூட காயமுற்றவர்களுக்கு ஏதேனும் முடிந்த உதவியைச் செய்ய அகதி முகாமில் மருத்துவத்துறையைச் சேர்ந்த சிலர் இருந்தனர். அகதி முகாம்களில் சில குழந்தைகளும் பிறந்தன. புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் முகாமில் இரண்டு குழந்தைகள் பிறந்தன.
ஊரடங்குச் சட்டம் இழுபட்டவாறு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்தது. வீடுகளில் நின்ற வளர்ப்பு மிருகங்களுக்காக மக்கள் வீடு திரும்பியாக வேண்டியிருந்தது. இந்த வீட்டு மிருகங்களும் பெரும் வதைக்குள்ளாயின. கிழக்கு நல்லூரில் பக்கவாட்டில் ஷெல் அடியால் காயமடைந்த பசுமாடு ஒன்று வலி தாளாமல் சுவரின் மீது சாய்ந்து கொண்டிருக்க காகங்கள் அதன் காயத்தைக் கொத்திக் கொண்டிருந்தன. யாருக்கும் எந்த அநியாயமும் செய்தறியாத அந்த சாதுப்பிராணி மறுநாள் செத்துப் போனது. ஏதாவது மிச்சம் மீதி அகப்படும் என்ற வீண் நம்பிக்கையில் பல நாய்கள் தங்கள் எஜமானர்களைப் பின் தொடர்ந்து அகதி முகாம்களுக்குச் சென்றன. மழையும் சேறும் சகதியுமே மக்களுக்கு அனைத்தும் என்றாகிப் போனநிலையில் மாடு, நாய் போன்ற மிருகங்களும் அதேயளவு கஷ்டங்களை அனுபவித்தன. தனது வீட்டாரைப் பின்தொடர்ந்து முகாமிற்குச் சென்ற நாயொன்று மாலை மங்கி இரவு ஆக, ஆக குளில் தோய்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. அதனுடைய வீட்டுக்காரர்தான் போர்த்திக் கொள்ளத் தனது போர்வையை வெளியே எடுத்தபோது அத்தனை நேரம் மெளனமாய் நடுங்கிக் கொண்டிருந்த நாய் அந்தப் போர்வையை நோக்கிப் பாய்ந்தது. தனது பள்ளி நண்பனுக்கு வீட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இனிப்புப் பொட்டலத்திற்காகப் போராட்டம் நடத்தும் ஆங்கிலேய பில்லி பண்டரைப் போன்று அந்த நாயும் அப்போர்வைக்குள் தனக்கும் ஒரு இடம் தேடி நகங்களால் பிராண்டிப் பெரும் முயற்சி செய்தது. அந்த நாய் இவ்வளவு அழுத்தமாக வெளியிட்ட ஒரு கோரிக்கையை அவ்வளவு எளிதாக நிராகரித்து விடுவதற்கில்லை.
பருத்தித்துறை வீதி எங்கும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்திருந்த இந்திய இராணுவம் நல்லூருக்கு ஒழுங்கைகள் வழியாகச் சென்று சேரக்கூடிய வழிவிபரங்கள் தெரிந்த யாரோ ஒருவரைப் பிடித்து வைத்துக் கொண்டனர். இருபாலையிலிருந்து இந்திய இராணுவம் புதிய செம்மணிப்பாதை வழியாக, கலைமகள் ஒழுங்கைக்கூடாக அக்டோபர் 22ம் திகதி நல்லூருக்குள் நுழைந்தனர். கலைமகள் ஒழுங்கை-ஆடியபாதம் வீதிச்சந்தியில் வெடித்த ஒரு கணிணிவெடியில் ஆறு படைவீரர்கள் கொல்லப்பட்டனர். உடனே நிதானமிழந்து ஆத்திரத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்திய இராணுவம் பின் வந்த வழியில் திரும்பிச் சென்று விட்டது.

Page 159
282
இந்த வெறிகொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதுடன் வீடு வளவுகளும் சேதப்படுத்தப்பட்டன. ஆளில்லாத நேரம் வீடு புகுந்து கொள்ளையடிப்பவர்களிடமிருந்து தங்களின் வீட்டுப் பொருட்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு சிலரை மட்டுமே வீட்டில் நிறுத்தி விட்டு மற்ற எல்லாருமே இந்த நேரத்தில் அகதி முகாம்களுக்குப் போய்விட்டிருந்தார்கள். மகாலிங்கம், சிங்கராசா, ராசையா, பாபு, ரத்தினம் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் கலைமகள் ஒழுங்கையிலிருந்து நூறு யார் தள்ளியிருந்த கல்வியங்காடு சந்தியில் அமைந்திருந்த வர்த்தக ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் சாப்பிட உட்கார்ந்த தருணத்தில் அங்கு உள்நுழைந்த இராணுவம் அவர்கள் அனைவரையும் சுட்டுக்கொன்றது. சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு மனுஷி அயலில் இருந்த வீடொன்றில் தனது பொருட்களை வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். கலைமகள் ஒழுங்கைக்குள் ஒரு தாயும் மகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இராஜேஸ்வரன் என்பவரின் வீடும், பார்லிமெண்ட் ராஜதுரையின் வீடும் சின்னாபின்னமாக்கப்பட்டன.
இராணுவம் மீண்டும் திரும்பி வந்தபோது டாக்டர் ராமசாமியின் டிஸ்பென்சரிக்கு எதிரிலிருந்த ஒழுங்கைக்குள் பேக்கரி சுந்தரலிங்கம், எஸ் வல்லிபுரம், மற்றும் கே வல்லிபுரம் ஆகியோரை அவர்கள் "சுட்டுக்கொன்றனர். அவர்களோடிருந்த திரு கிருஷ்ணசாமி மட்டும் காயத்தோடு தப்பிவிட்டார். பருத்தித்துறை வீதியில் ஒய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான திரு ஈ அப்பாத்துரை வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவு நோய்வாய்ப்பட்டுக் கிடந்தவர் இலங்காத்தம்மன் கோவிலுக்கு எதிரில் இருந்த தனது வீட்டில் இந்தியப்படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அக்டோபர் 22ம் திகதி கல்வியங்காட்டில் பிரசன்னம் கொணடிருந்த விடுதலைப்புலிகள் அவ்வூர்வாசிகளின் வீட்டு வளவுகளுக்குள்ளிருந்து கொண்டு இந்திய இராணுவத்தை நோக்கிச் சுட்டனர். இந்தியத் துருப்புகள் கண்டபடிக்கு ஆட்களைச் சுட்டுத்தள்ள ஆரம்பித்துவிட்டனர். தனியார் வீடுவளவுகளை விடுதலைப்புலிகள் பாவித்தமை ஊர்ச்சனங்களினி பிரச்சினையை குழப்பகரமாக்கிவிட்டது. மோசமான கொடூரத்தாக்குதல்கள் எல்லாம் நடந்து முடிநீ த பினனருங் கூட அப்பகுதியில் நிகழிநித தாக்குதல் நடவடிக்கைகளுக்கெல்லாம் உள்ளூர் வாசிகளே காரணம் என்பதே இந்தியப்படையின் நிலைப்பாடாக இருந்தது. ஏதாவது தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அநேகமாக விடுதலைப்புலிகளிடம் கெஞ்சி மன்றாடியபின் அந்த இடங்களைவிட்டு சனங்கள் ஓடி விடுவதே அப்போது பெருவழக்காக இருந்தது. பல தடவைகளில் இந்திய இராணுவம் ஊர்ச்சனங்களைக் கொன்றும், உடைமைகளை அழித்தும் அல்லது இரண்டையுமே செய்தும் அவர்களுக்குத் தணிடனை வழங்கி வந்தது. வெளிவெளியாக இவ்வாறு துப்பாக்கி முனையில் அமுலாகிய நெறிமுறையற்ற தர்க்கநியாயத்தின் விளைவால் மக்கள் சினங்கொண்டதுடன் நிராதரவாகவும் உணர்ந்தனர்.

283
கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்த பல கடைச் சொந்தக்காரர்களுக்கு நேர்ந்த அநியாயங்கள் இங்கு சுட்டிக்காட்டத்தக்க நல்ல உதாரணமாகும். இந்தக் கடைச் சொந்தக்காரர்கள் பலர் தங்கள் கடை மற்றும் உடமைகளை இழந்ததோடு உயிரையும் இழந்தனர். அந்தச் சந்தியில் விடுதலைப்புலிகள் நிலக்கணிணிவெடியைப் புதைத்தனர். அங்கிருந்த விடுதலைப்புலிகளின் சென்ற்றியிடம் கடைக்காரர்கள் இறைஞ்சி வேண்டிக்கொண்டதன் பேரில் அவர்கள் அதற்கிசைந்து நிலக்கணிணிவெடிகளை அங்கிருந்து அகற்றிவிட முனைந்தனர். ஆனால் அச்சமயத்தில் அவ்விடத்திற்கு வந்த விடுதலைப்புலியின் மூத்த உறுப்பினர் ஒருவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினார். சென்ற்றியில் நின்றவர்கள் விஷயத்தை விளக்கியதும் மீண்டும் அதே இடத்திலேயே நிலக்கணிணி வெடியைத் தாட்டு விடுமாறு அவர்களுக்குப் பணிக்கப்பட்டது.
அக்டோபர் 23ம் திகதி செங்குந்தா பாடசாலையில் அகதிகளாக இருந்த திரு சுந்தரலிங்கமும் இருபாலையைச் சேர்ந்த இன்னொருவரும் குளித்துவிட்டு வருவதற்காக சுந்தரலிங்கத்தின் வீட்டிற்கு ஒரு ஒழுங்கைக்கூடாகப் போகத் தீர்மானித்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்துக்கொண்டு போனதால்-அப்போது, ஊரடங்குச்சட்டம் அமுலாகி 14வது நாளாயிருந்த நிலையில் ஏறத்தாழ எல்லாருமே இம்மாதிரி சிறுசிறு ஆபத்தான காரியங்களைச் செய்யவேண்டியே இருந்தது. ஒழுங்கையில் சென்று கொண்டிருந்த இவர்களைக் கண்ணுற்ற இந்தியப் படைவீரர்கள் இவர்களைக் கூப்பிட்டு டாக்டர் குமரேந்திரனின் வீட்டிற்கு அடுத்திருந்த மாடிவீட்டின் உள்ளே தடுத்து நிறுத்தி வைத்தனர். இவர்களோடு இருந்த ஒருவர் அன்று தப்பிச் சென்றுவிட்டார். பின் மறுநாள் மறைவிடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இரண்டு சீக்கிய இராணுவவீரர்கள் பலியானார்கள். அதற்குப் பின் சில ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வெண்ணிற வேன் வாகனம் கல்வியங்காடு சந்தியில் இராணுவவீரர்களால் நிறுத்தப்பட்டது. மன்னாரை நோக்கிச்சென்று கொண்டிருந்த பயணிகளான அந்த முஸ்லிம் அகதிகள் அச்சுறுத்தப்பட்டு அங்கு காத்திருக்கும்படி பணிக்கப்பட்டனர். அந்தப் பயணிகளில் இரண்டு பெண்களும் இருந்தனர். இதையடுத்து அம்முஸ்லிம்கள் சாத்தனார் கோயிலில் தஞ்சம் புகுந்தனர். தெறிகுண்டால் காயமுற்றிருந்த ஏழுமாதக் கர்ப்பிணியான ஒரு முஸ்லிம் பெண்மணி மருத்துவ சிகிச்சை கிடைக்காத காரணத்தால் இறந்து போனார். இன்னொரு முஸ்லிம் கனவானும் இயற்கையான காரணத்தால் இறந்து போய்விட்டார். எஞ்சிய முஸ்லிம்கள் சாவகச்சேரியை நோக்கி கால்நடையாகப் பயணமானார்கள்.
சிறிது காலங்கழித்து, இந்தியப்படையின் காவலில் வைக்கப்பட்டிருந்த திரு சுந்தரலிங்கத்திற்கும் அவரது சகாவிற்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவலை ஒருவர் தெரிவித்தார். சுந்தரலிங்கத்தின் மனைவி ஜோவிதாவிற்கு இன்றுவரையும் தனது கணவர் எங்கேயிருக்கிறார் என்று கண்டுபிடித்துக்கொள்ள முடியவில்லை. அவர் விசாரித்த சகல இராணுவ முகாம்களிலும் அவரைப்பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றுதான் கூறப்பட்டது. நாலு மாதங்களுக்குப் பிறகு ஜோவிதா தான் ஆரம்பத்தில் கேள்விப்பட்டது உண்மைதான் என்ற தவிர்க்கமுடியாத முடிவிற்கு வந்து

Page 160
284
சேர்ந்திருந்தார். அவருக்குத் திருமணமாகி ஒன்றரை வருஷந்தான் ஆகியிருந்தது. சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையோடு அப்போது அவர் கர்ப்பிணியாயுமிருந்தார். திரு சுந்தரலிங்கம் தொலைத்தொடர்புத் திணைக்களத்தில் ஊழியராக இருந்தார்.
1987 அக்டோபர் 23ம் திகதி இந்தியப்படைகள் நல்லூருக்குள் புகுந்ததுமே நல்லூர் அகதி முகாமுக்கருகே இடம்பெற்ற சம்பவமொன்று கீழே விபரிக்கப்படுகிறது. ரொக்கட் லோஞ்ஞர் மற்றும் உப இயந்திரத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம் போராளிகள் கோஷ்டி ஒன்று இந்த அகதி முகாமிற்கு வந்திருக்கிறது. முகாமிற்கருகில் நின்று கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால் தாங்கள் என்ன கதி ஆகப்போகிறோமோ என்று முகாமிலிருந்தவர்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்தியப் படையினர் மற்ற இடங்களில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாக உலவிக் கொண்டிருந்த கதைகள் எதுவுமே உற்சாகந் தருவதாக இருக்கவில்லை. அப்போது ஒரு இளைஞர் அங்கு வந்திருந்த விடுதலைப்புலிகளிடம், "நீங்கள் சணி டை பிடித்து இந்தியப்படையினரை வெளியேற்றி விட முடியுமென்றால் நீங்கள் சண்டை பிடிப்பதில் ஏதாவது அர்த்தமிருக்கும். ஆனால் இங்கோ நீங்கள் சும்மா சிறிது நேரம் கட்டுவிட்டு ஓடிப்போய் விடுவீர்கள். சனங்கள்தான் இதன் மோசமான விளைவுகளை அனுபவித்து வதைபட வேண்டியிருக்கிறது. கடைசியில் உங்களால் அடைய முடிந்த லாபமெல்லாம் இந்தியப்படையைச் சிறிது நேரம் தாமப்படுத்தி விட்டதாகப் பெருமையடித்துக்கொள்வதுதான்" என்று கூறினார். "அணிணை, நீங்கள் ஒன்றுக்கும் யோசியாதையுங்கள். இந்தியர்கள் சாதாரணப் பொதுமக்களுக்கு ஒன்றுஞ் செய்யமாட்டார்கள்" என்று ஒரு விடுதலைப்புலிப்பையன் பதில் கூறினான். "ஆனால் உங்களுடைய பத்திரிகையான ஈழமுரசிலேயே எவ்வளவோ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மணியந்தோட்டத்தில் ஆறுபெண்கள் பாலியல் வதைக்குட்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றனவே" என்று அந்த இளைஞர் இதற்குப் பதிலளித்தார். கொஞ்சமும் தயக்கமின்றி அந்த விடுதலைப்புலிப்பையன் இடைமறித்துக் கூறினான்: "அண்ணை, இப்படிச் சில விஷயங்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டவையே. ஏதோ நாங்கள் அசந்திருந்த நேரத்தில் ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். அவ்வளவுதான். நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். ஒன்றும் நடக்காது இந்தக் கட்டத்தில் ஒரு வயதான பள்ளியாசிரியர் தலையிட்டு, "நீங்கள் செய்வதைச் செய்யுங்கோ, தம்பிமாரே! எப்போ இந்த இடத்தை விட்டுப் போகப் போறியளோ அப்போ நீங்கள் எங்களிற்கு அறிவிச்சாக் காணும்" என்றார். பின் விடுதலைப்புலிகளிடம் வாதிட்ட அந்த இளைஞரிடம், "அவையளோடு வாதாடுறது ஆபத்தானது என்பதை நீங்கள் தெரிஞ்சு கொள்ள வேணும்" என்று கண்டித்தார். இந்தப் பள்ளியாசிரியரின் கருத்து பல்கலைக்கழகப் பேரறிஞர்களிலிருந்து பெருவாரியான யாழ்ப்பாண மக்கள் இந்தியப் படைகளைப் பற்றியும் விடுதலைப்புலிகளைப் பற்றியும் எத்தகைய அபிப்பிராயத்தைக் கொணடிருந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தங்களுடைய சொந்த உயிரும் தங்களைச் சுற்றியிருந்த சமூகத்தின் வாழ்வும் ஆபத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதுகூட

285
அவர்களால் அதுபற்றிப் பேசவோ, எதிர்க்கவோ எதுவுமே செய்து கொள்ளமுடியவில்லை. காரியம் பார்க்க வேண்டுமானால் விடுதலைப்புலிகள் பொதுமக்களை எவ்வாறு நடத்தினார்களோ சரியாக அதே மாதிரி அவர்களைத் தாங்களும் நடத்துவதுதாணி மிகச்சிறந்த வழி என்று இந்திய அமைதிப்படையினர் முன்பதாகவே தீர்மானித்துக் கொண்டு விட்டனர்.
மாலையில் விடுதலைப்புலிகள் அகதி முகாமை நோக்கித் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்திய இராணுவம் அப்போது ஒரு மைலுக்கும் குறைவான தொலைவில்தான் நிலை கொண்டிருந்தது. சில இளம் பெண்கள் அவர்களிடம் சென்று அங்கிருந்து தாக்குதல் நடத்த வேண்டாமென்றும் திரும்பிப் போய் விடுமாறும் வேண்டிக்கொண்டனர். அவர்களில் ஒரு பையன் ஏதோ பள்ளிச் சுற்றுலாவுக்குப் போவது போல் ஒரு பையினைச் சுமந்து கொண்டிருந்த கொழுகொழுவென்ற பதின்மூன்று வயதுச் சிறுவனாவான். "இங்கிருந்து தாக்கவேணிடுமென்று எங்களுக்கு உத்தரவு வந்தால் இங்கிருந்து தான்தாக்குவோம்" என்று ஒரு பையன் பதிலளித்தான். "கவலைப்படாதீர்கள் அக்கா, இந்தியர்கள் இன்னும் சிறிது முன்னேறி வரும்வரை காத்திருந்து விட்டுப் பின் நூறு யார் தூரத்திற்கு நாங்கள் பின்வாங்கிச் சென்று விடுவோம்" என்று இன்னொருவன் கூறினான். "எங்களுக்குச் சரியான பசியாய் இருக்கிறது. விரைவில் எங்களுக்கு உணவு அனுப்பப்படவில்லை என்றால் நாங்கள் அங்கு முகாமிற்கு வந்துவிடப்போகிறோம் என்று முகாமிற்குச் செய்தி அனுப்பியிருக்கிறோம்" என்று பின் இன்னொரு பையன் கூறினான். பிறகு அப்போது கிடைப்பதே அபூர்வமாயிருந்த பிஸ்கட்டுகள் சில அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பையன்கள் அவற்றை வாங்கிக்கொண்டு சத்தம் போடாமல் அவற்றை மெல்ல ஆரம்பித்து விட்டார்கள். நல்லவேளையாக அவர்கள் அங்கிருந்து போய்விட்டார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்த கூட்டத்தோடு அவர்கள் கலந்து கொண்டு விட்டதாக சிலர் தெரிவித்தனர்.
24ம் திகதி அதிகாலையில் தமிழ்பேசும் இந்தியப்படைவீரர்கள் சிலர் ஜமுனாவெளியில் இறங்கிச்சென்று அங்கே தணிணீர் அள்ளிக் கொண்டிருந்த புனித ஜேம்ஸ் கல்வி அலுவலக அகதி முகாமைச் சேர்ந்த பெண்களுடன் சிநேக பாவதி தோடு கதைதி தார்கள். தங்களுக்குப் பிணி னாலி வந்துகொணடிருக்கும் படைப்பிரிவினர் இப்படி சிநேகிதபூர்வமாய் இருக்கமாட்டார்கள் என்று எச்சரித்துவிட்டு அப்படைவீரர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள்.
திரு டி.எஸ்.குலசிங்கம் நைஜீரியாவிலிருந்து வந்திருந்த ஒரு இளைப்பாறிய பொறியியலாளர் ஆவார். அவர் தனது சகோதரிகளுடன் கல்வியங்காட்டில் வசித்து வந்தார். அவர்களில் ஒருவரான செல் வி.சத்தி சின்னப்பு இருபாலையிலிருந்த கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் ஆவார். இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமானதும் தங்களுக்குப் பின் காணியில் இருந்த புரொக்டர் கனகரட்ணத்தின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். தங்கள் வளவிற்குள் சில புலிகள் ஒடித்திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் தங்களின் வீடு அவ்வளவு பாதுகாப்பானதல்ல என்று அவர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். இராணுவம் இருபாலைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே பயிற்சிக்கல்லூரியிலிருந்து வெளியேறி வந்திருந்த நாற்பது பெண்களும் சற்று முன்னதாகத்தான் வெவ்வேறு இடங்களுக்கு மாறிப் போயிருந்தனர்.

Page 161
286
24ம் திகதி காலையில் விடுதலைப்புலிகள் பூரணமாகப் பின்வாங்கியிருந்தனர். வெடிச்சத்தம் எங்கும் கேட்கவில்லை. திரு குலசிங்கம் அவரது வீட்டுப் பசு மாட்டின் மீது மிகவும் பிரியமானவர். புரொக்டர் கனகரட்ணத்தின் வீட்டிலிருந்த குலசிங்கம் தன்னுடைய பசுமாடு "அம்மா என்று கத்தத் தொடங்கியதும் காலை எட்டு மணி அளவில் பின் வழியாகத் தனது வீட்டுக்குப்போய் மாட்டுக்கு தீனி போடப்புறப்பட்டார். அப்படிப் போகவேண்டாம் என்று அவர் சகோதரி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பார்த்தாலே வயது போனவராய் தெரியும் தன்னை ஒன்றும் செய்யாமல் அவர்கள் விட்டு விடுவார்கள் என்று திரு குலசிங்கம் எண்ணினார். அவர் போய்ச் சிறிது நேரத்தில் ஒரே ஒரு துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டது. போனவர் திரும்பி வராததும் என்ன ஆனதென்று பார்த்துவரச் சென்ற வேலைக்காரப் பையன் அவர் தலையில் துப்பாக்கிச் சூடுபட்டு அங்கு செத்துக் கிடப்பதைக் கண்டான். இராணுவத்தின் அனுமதியுடன் மூன்று நாட்களின் பின் அவருடைய சடலம் தகனம் செய்யப்பட்டது.
பருத்தித்துறை வீதியிலிருந்த அரஸ்கோ கட்டிடம் இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களால் திருகோணமலை மாவட்டத்தில் வீடிழந்து நின்ற அகதிகள் பலருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. அகதிகளுக்கு உணவளிப்பதற்காக அவர்களில் நான்கு பேர் எங்காவது பாணி கிடைக்குமா என்று பார்த்துவர அதிகாலையில் சங்கிலியன் ஒழுங்கைக்கூடாக கந்தசாமி கோயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த வழியாக வேனில் வந்து கொண்டிருந்த நவரத்தினம் என்ற வர்த்தகர் அவர்களையும் தனது வணிடியில் ஏற்றிக் கொண்டார். கோயில் வீதிக்கருகில் நின்ற துருப்புகளால் இந்த வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது. இந்த சம்பவத்தில் உயிர்தப்ப முடிந்த ஒரேஒருவரான மூதூரைச் சேர்ந்த தணிகாசலம் என்ற அகதிதான் இந்தத் துயரக் கதையை விபரித்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அரஸ்கோவிலிருந்த அகதிகள் சிலர் புனித ஜேம்ஸ் அகதி முகாமிற்குள் அடைக்கலம் புகுந்து கொணர்டனர்.
அதேநாள் காலை 9.00மணி அளவில் இந்தியத் துருப்பின் ஒரு பிரிவு ஜமுனாரிக்கூடாக செம்மணி வீதியை வந்தடைந்தது. முதல் கோஷ்டித் துருப்புகள் வந்து சேர்ந்த பின் நிலைமை சுமுகமானதுபோல் எல்லாம் அமைதியாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டாவது படைவரிசைக்குத் தலைமை தாங்கி வந்து கொண்டிருந்த அதிகாரி, தனது வீட்டு கேற்றிற்கு வெளியே ஆறுதலாய் நின்று கொண்டிருந்த திரு நேசதுரை என்ற காப்புறுதி முகவரை வருமாறு அழைத்தார். அவருடைய முதுகில் தட்டிக் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று கூறிய பிறகு புகையிரத நிலையத்திற்குச் செல்லும் குறுக்கு வழியைக் காண்பிக்குமாறு அவரைக் கூட்டிச் சென்றனர். நல்லூர் குறுக்குத்தெரு வழியாகப் போகையில் எதிர்ப்பட்ட சைக்கிளில் வந்து கொண்டிருந்த நான்கு பேர் நிறுத்தப்பட்டு அவர்களை வழிகாட்டச் சொல்லி நேசதுரை வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனால் பின் தொடர்ந்து வந்து கொணடிருந்தவர்களோ அப்படிச் சாதுவானவர்கள் இல்லை. ஜமுனா ஒழுங்கைக்குள் இரண்டு பேரை அவர்கள் கட்டுக் கொன்றனர். ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்த வேஷ்டி, சட்டை அணிந்த, வயதான அப்பாவி

287
மனிதரான திரு ஏ.செல்லசாமி ஆவார். கல்வியங்காட்டில் அவருடைய நண்பர்கள் சொல்லவும் கேட்காமல் முருங்கைக்கட்டு, நாலு முட்டைகள் மற்றும் சட்டைப்பையில் ஒரு ஆயிரம் ரூபாய் தாளோடு புனித ஜேம்ஸ் அகதி முகாமை நோக்கி அவர் போய்க்கொணடிருந்தார். அவருடைய கையிலிருந்த முருங்கைக்கட்டை ரொக்கெற் லோஞ்சராக இராணுவத்தார் தவறாகக் கருதிக் கொண்டிருந்தாலொழிய அந்த மனிதர் நிச்சயமாக ஒரு அப்பாவி மனிதராகத்தான் தென்பட்டிருக்க வேண்டும். அவருடைய சட்டைப் பையிலிருந்த ஆயிரம் ரூபாய்த்தாள்தான் பின்னர் அவருடைய தகனச் செலவுக்காகப் பயன்படுத்தப்பட்டது. முத்திரைச் சந்தையடியில் தனது வீட்டுக்குள்லிருந்து வெளியே எட்டிப்பார்த்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இளைப்பாறிய ஆசிரியையான விசாலாட்சி என்பவர் தனது வீட்டு சமையலறையில் உட்கார்ந்திருந்த நிலையில் முதுகில் குண்டு பாய்ந்த நிலையில் மரணமானார். அரஸ்கோவிலிருந்து அப்போது தான் மாறிவந்திருந்த திருகோணமலையைச் சேர்ந்த அகதியான சுப்பம்மாவின் ஆறுவயது மகள் புனித ஜேம்ஸ் அகதி முகாமிற்கு முன்னால் வீதியைக் கடந்து கொண்டிருக்கும்போது நூறு யார் தூரத்திலிருந்து படைவீரன் ஒருவனால் சுடப்பட்டாள். அலறிய அச்சிறுபெண் கையில் சூட்டுக்காயத்தோடு உயிர் தப்பினார். நாவலர் வீதியும் குறுக்குத்தெருவும் இணையும் சந்திக்கருகில் திருமதி அம்பலவாணரிடம் வேலைபார்த்துக் கொண்டிருந்த மேரி கிளாரா என்ற பெண் வீட்டை விட்டு வெளியே போகப் பார்த்துக் கொண்டிருந்த தங்களின் வீட்டுப் பூனையைப் பிடிப்பதற்காக சமையற்கட்டுக்குப் போயிருக்கிறாள். வீதியில் போய்க் கொண்டிருந்த இராணுவீரர்களால் அப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டாள்.
இந்த எல்லாச்சம்பவங்களுமே ஒரே நாளில் அதுவும் கிடைத்த ஆதாரங்களின்படி விடுதலைப்புலிகளிடமிருந்து சுத்தமாக எந்த எதிர்ப்புமே இல்லாதபோதுதான் நடந்தவை என்பதை அவதானிக்க வேண்டும். கல்வியங்காட்டுப் பகுதியில் இந்திய இராணுவத்தை ஒருவேளை ஒருநாள் மட்டும் தாமதப்படுத்தியிருக்கக் கூடியவகையில் தாங்கள் அங்கே நின்று கொண்டிருந்துவிட்டு ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட அப்பாவி மனிதர்களின் உயிரை எந்த அர்த்தமும் இல்லாமல் இந்திய இராணுவத்திற்குப் பலி கொடுத்துவிட்டு விடுதலைப்புலிகள் அப்பகுதியை விட்டுப் பூரணமாக வெளியேறிக்கொணிடுவிட்டனர். சில நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி விடுதலைப்புலிகளில் ஆயுதங்களைப் பெற்றிருந்த இளம் வயது உறுப்பினர்கள் முதலில் கந்தசாமி கோயிலில் ஒளிந்து கொண்டிருந்துவிட்டுப்பின் மெதுவாய் நழுவிப் போய்விட்டார்கள் என்று தெரிய வருகிறது. யாழ் நகரைத் தாங்கள் கைப்பற்றிக் கொண்டு விட்டதாக இந்திய இராணுவம் இப்போது கூறிக்கொள்ள முடியுந்தான். இவ்வளவு உயிர்கள் அழிந்து போனபின்னரும் கேட்டுக்கொண்டிருக்க ஆள் இருக்குமானால் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைத் தாங்கள் இரண்டு வாரம் அலைக்கழித்து விட்டதாகப் புலிகள் மார்தட்டிக் கொள்ள முடியும்.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான திரு ராஜசிங்கம் இராணுவம் நல்லூருக்குள் நுழைந்து விட்ட பிறகும் அகதி முகாமிலிருந்து தனது வீட்டிற்குத் திரும்பிச்

Page 162
288
செல்ல முடியாத நிலையில் இருந்தார். வீட்டில் தான் ஒரு மூலையில் கட்டிவைத்து விட்டு வந்திருந்த செல்லநாய்க்குட்டியிடம் திரும்பிச் செல்ல அவர் எத்தனையோ முறை முயன்றும் அவை எல்லாமே தடுக்கப்பட்டுவிட்டன. ஒரு வாரம் கழித்து அவர் வீடு வந்தடைந்தபோது இராணுவம் அவர் வீட்டில் முகாம் போட்டிருந்தது. அவருடைய தனிப்பட்ட கடிதங்கள் எல்லாம் பார்வையிடப்பட்டு துவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. வெளிநாட்டிலிருந்து அவருக்கு அவ்வளவு கடிதங்கள் வந்திருப்பதையிட்டு அவர்கள் வியப்பும் சந்தேகமும் கொணடிருந்தனர். ஒரு மலையாளி இராணுவவீரன் அவரிடம் அந்த நல்ல செய்தியைச் சொன்னான். அவருடைய நாய்க்குட்டியை அவர்கள் பரிதாபமான நிலையில் பார்த்திருக்கிறார்கள். சப்பாத்தி, பால் என்று அதற்கு போஜனம் வழங்கி அது இப்போது நல்லாயிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். ஒரு கிழமைக்குப் பின்னர் இராணுவம் அங்கிருந்து அகன்றிருந்த போது, ஒரு தட்டச்சு இயந்திரத்தைக் காணவில்லையே தவிர, மற்றபடி வீட்டில் எல்லாம் உள்ளது உள்ளபடியே ராஜசிங்கத்திற்கு அவருடைய வீடு திரும்பக் கிடைத்து விட்டது.
நவம்பர் 21ம் திகதி காலை இந்திய இராணுவத்தால் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கியூவில் நின்று கொண்டிருக்கையில் முத்திரைச்சந்தைக் கருகில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டது. மக்கள் சிதறி ஓடினர். சங்கிலியன் ஒழுங்கை முனையில் முத்திரைச்சந்தையிலிருந்து 50 யார் தள்ளி தலையில் சூடுபட்ட நிலையில் ஒரு பெண்மணி செத்துக் கிடக்கக் காணப்பட்டாள். வயதை மீறிய தோற்றங்காட்டும் அப்பெண்மணி கவுண் அணிந்து மெல்லிய நீலம் பாய்ந்த பச்சைக்காதணிகள் அணிந்தவராய்க் காணப்பட்டார். நான்கு இளம் பையன்கள் அவரைக் கொண்டு வந்து, கொலைத் தணிடனையை நிறைவேற்றிவிட்டுப் பின் ஓடிவிட்டதாகப் பிறகு தெரியவந்தது. விடுதலைப்புலிகளின் மீது அனுதாபங்கொண்டவர்கள் அப்பெண்மணி ஒன்றில் உளவாளியாக இருக்க வேண்டும் அல்லது விபச்சரியாக இருக்கவேண்டுமென உடனடியாகவே முடிவுகட்டிக்கொண்டு விட்டனர். ஆனால் உணிமை என்னவென்றால் அரஸ்கோவில் தங்கியிருந்த திருகோணமலையைச் சேர்ந்த அகதியான இப்பெண்மணி தன்னை நெருக்கிக் கொண்டிருந்த பணத் தேவைக்காக இந்திய இராணுவத்திற்கு உணவு சமைத்துக் கொடுத்திருந்திருக்கிறாள். இந்திய இராணுவத்துடன் மிகப்பலர் வியாபாரமே நடத்திக் கொண்டிருப்பதுதான் நடப்புண்மையாகும். இவ்விதமான கொலை பாதகங்கள் தமிழ்ச் சமூகத்தைப் பிடித்த சாபக்கேடாகும்.
செம்மணி வீதி முடியும் எல்லையில் நெல்வயலுக்கருகில் ஒரு மூதாட்டியின் வீட்டு வளவில் சுவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த சில வேலையாட்கள் மணிணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது அவர்களின் கைகளில் ஆயுதங்கள் தட்டுப்பட்டது. அன்று மாலையே அவர்கள் இது குறித்து இராணுவத் திடம் தகவல் தெரிவித்தனர். அப்போது இரவாகத் தொடங்கிவிட்டதால் மறுநாள் காலை தாங்கள் அங்கு வருவதாக இராணுவம் அவர்களிடம் கூறியது. அந்த ஆயுதங்களை அன்றிரவே அங்கிருந்து

289 அகற்றிவிட சில விடுதலைப்புலிகள் அங்கு வந்துவிட்டனர். அப்படிச் செய்தால் மறுநாள் காலை இராணுவம் வந்து பார்க்கும்பொழுது தாங்கள் பிரச்சினையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டிவரும் என்று கூறி மக்கள் அவர்களைத் தடுத்தனர். மறுநாள் அந்த ஆயுதங்களை இராணுவம் வந்து எடுத்துக் கொண்டு போய்விட்டது. தனது வீட்டு வளவுக்குள் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது என்று தெரியவந்ததும் அந்த மூதாட்டி மாரடைப்பால் இறந்துவிட்டாள்.
நாட்கள் செல்ல படைப்பிரிவுகள் என்றிருந்தவை மாற்றமுற்றன. ஜனவரி மாதத்திலெல்லாம் இராணுவவீரர்கள் வெறுந்தனிநபர்களாகவே அடையாளங் காணப்பட்டார்கள். ஊரடங்கு உத்தரவை மீறிச் செல்பவர்களை சிலர் வெறுந்தலையசைப்போடு போகவிட்டார்கள். சிலர் அவர்கள் மீது சத்தம் போட்டு தங்கள் சைக்கிள்களைக் கைகளில் தூக்கிக்கொண்டு நடந்து போகுமாறு பணிப்பார்கள். பிரம்பால் அடித்து அவர்களின் வதையில் மகிழும் நபர்களும் இருக்கவே செய்தனர். ஊரின் உட்புறங்களில் நடந்தது போல் நல்லூரில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
ஒருமுறை ஒரு இளம் மலையாளிப் படைவீரர் கண்களில் நீர் மல்க, பிரார்த்தனை செய்வது போன்ற நிலையில் மணிடியிட்டு நிற்பதைக் காண நேர்ந்தது. விசாரித்ததில் தன் தாயார் மிகவும் சுகவீனமாக இருப்பதாகவும் அவரைப் போய்ப்பார்த்து வரத் தனக்கு லீவு கிடையாது என்றும் கூறினார். தனது குடும்பம் வறுமையானது என்றும் தனது தந்தை பாரிசவாதத்தால் தாக்கப்பட்டுப்படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தனது மூத்த அண்ணனுக்குத் திருமணமாகி விட்டதாகவும் தனக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது தாய்க்காக வீட்டுக்குப் போகும்போது ஒரு ரேடியோ கெசற் வாங்கிக்கொண்டு போவதற்காகத்தான் தனது சம்பளத்தில் சேமித்து வருவதாகவும் கூறினார். இந்த நாட்டில் உள்ள பிரச்சினை பற்றி அவருக்கு ஏதாவது தெரியுமா என்று விசாரித்தபோது வெகுளியாகச் சிரித்துக்கொண்டு, "எனக்கு அதுபற்றி ஒன்றுந் தெரியாது" என்று பதில் கூறினார்.
நாட்கள் போகப்போக இந்த ஜவான்களிற் சிலர் தங்களை மனிதாபிமானம் மிகுந்த தனிநபர்களாகவும் இனங்காட்டிக் கொண்டனர். தேவாலயத்திலிருந்தும் அருகிலிருந்த பாடசாலையிலிருந்தும் பாடல் பாடுவதைச் செவிமடுத்த படைவீரர் ஒருவர் அந்தப்பாடல் வரிகள் ஹிந்தியில் இருக்கிறதா என்றும் அப்படியிருந்தால் தானும் அதைப்புரிந்து கொள்ள வசதியாயிருக்கும் என்று சனங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முனைந்திருந்திருக்கிறார். மொழி தெரியாததால் உள்ளுர்ச் சனங்களுடன் பேசிப்பழக முடியாமற் போய்விட்டது என்று இன்னுமொருவர் ஆதங்கப்பட்டுக்கொண்டார்.
1961ல் சத்தியாக்கிரகப் போராட்டம் முறிவடைந்த பின்னர் ஒருநாள் நடந்த நிகழ்ச்சியை இச்சம்பவம் நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்பொழுது நல்லூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக இருந்த இடத்தில்தான் இராணுவவீரர்கள் முகாமிட்டிருந்தனர். அப்பொழுது இராணுவவீரர்கள் இலங்கை மெதுரக ஆயுதக் காலாட்படையிலிருந்துமீ இலங்கை இராணுவக்

Page 163
290
களஞ்சியப்படையிரிவிலிருந்தும் அனுப்பப்பட்டவர்களாய் இருந்தனர். மோசமான சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்தபின் அந்த இராணுவத்தினர் குறிப்பாக உள்ளூர்க் குழந்தைகளுடன் சிநேக பாவத்தோடு பழகினார்கள். குழந்தைகள் திரைப்படங்கள், பனிஸ், கிரிக்கெட் என்று கொஞ்சம் அனுபவித்தார்கள். தாங்கள் எவ்வாறு இரவு ரோந்து போகாமல் டீசலை விற்றுவிட்டுக் கள் வாங்கிக் குடித்துவிட்டு, தங்களின் ட்ரக் வண்டிகளை அங்கே ஒழுங்கையில் நிறுத்தி வைத்துவிட்டு இரவு முழுதும் நிம்மதியாகத் தூங்கிய கதைகளை எல்லாம் இராணுவவீரர்கள் அந்தக் குழந்தைகளுக்குக் கூறுவார்கள்.
இன்று நம்முன் நிற்பது ராஜ்புத் ரைபிள்ஸ். சாதாரணப் போர் வீரர்கள் எங்கும் ஒரே மாதிரித்தான் இருந்தார்கள். குழந்தைகள் அவர்களைச் சூழ எங்காவது உட்கார்ந்து அவர்கள் கரப்பந்தாட்டம் விளையாடுவதை ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலநேரங்களில் குழந்தைகளின் கிரிக்கெட் விளையாட்டில் அவர்கள் ஆர்வங்காட்டுவார்கள். என்றாலும் நம்மைச்சுற்றி இராணுவம் நிற்பதென்பது ஒரு நிம்மதியற்ற சூழலைக் குறிப்பதாகிறது. 1981ல் இராணுவம் இரண்டே மாதங்களில் திரும்பிப் போய்விட்டது. இந்தமுறை எவ்வளவு காலம் பிடிக்கப்போகிறதோ என்பதுதான் எல்லார் மனதிலுமான கேள்விக்குறியாகி நிற்கிறது.
3.6 அரியாலை 3.8.1 பொது
கிழக்கு முகமாக இந்திய இராணுவம் அரியாலை வழியாகத்தான் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்தது. நாவற்குழியிலிருந்து புகையிரத இரும்புப் பாதை வழியாக இராணுவம் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் திருமணம் முடித்திருந்த மேஜர் கோபாலன் இந்திய இராணுவத்தின் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாவதற்குச் சற்று முன்பதாகத்தான் தன் மனைவியை பெங்களூரில் விட்டுவிட்டு இலங்கை வந்திருந்தார். தாங்கள் இரவு நேரங்களில் நகர்ந்ததாகவும் பகல் பொழுதில் மறைகுழிகளில் தங்கி வந்ததாகவும் பின்னர் ஒரு சமயம் அவர் தெரிவித்தார். ஆரம்பக் கட்டத்திலான முனினோக்கிய பயணம் மெதுவாகவே அமைந்தமைக்கு யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏனைய படைப்பிரிவுகள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டமை அநேகமாக காரணமாக இருந்திருக்கலாம். அக்டோபர் 14ம் திகதி அளவில் நாவற்குழியை விட்டுப் புறப்பட்டிருந்த இந்திய இராணுவம் 18ம் திகதிதான் அரியாலையின் புற எலி லைப் பகுதிகளை வந்தடைந்திருந்தது. ஒரு துருப்பு மணியந்தோட்டத்திற்குள் சென்று அங்கிருந்த சனங்களைச் சுற்றி வளைத்து அவர்களுக்கு ஒரு விளக்கவுரை நிகழ்த்தி விட்டுப்பிறகு அங்கிருந்து சென்றுவிட்டது. ஓரிரண்டு இளைஞர்கள் அவர்கள் ஒடமுயன்ற போது சுடப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
கண்டி வீதி வழியாக இராணுவம் முன்னேறிச் செல்வதற்கு அரியாலைச் சந்தியில் இருந்த விடுதலைப்புலிகளின் நன்கு அரணமைக்கப்பட்ட காவல் மையம் பிரதான பெருந்தடையாக அமைந்தது. இந்திய அமைதிப்படை இந்தக்காவல் மையத்தை நேரிடையாகக் கடந்து முன்னேறவில்லை என்று

291
இந்தப் பகுதியிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக பிரதான வீதியின் இருபுறமும் விரிந்திருந்த தென்னந்தோப்பு வழியாக ஒரு இரவு முழுக்கப் பயணஞ்செய்து பின் விடுதலைப்புலிகளின் காவல் அரணைப் பின்புறமாக அணுகித்தாக்கியது. அக்டோபர் 18ம் திகதி அளவில் நிகழ்ந்த இந்த ஊடுருவலுக்குப்பின் ஏறத்தாழ மூன்றரை மைல் தூரமே தள்ளியிருந்த யாழ்நகரை நோக்கிய இந்திய அமைதிப்படையின் முன்னேற்றம் துரிதமாக இருந்தது. 20ம் திகதி இரவு தபாற்கட்டைச் சந்தியைத் தாண்டி பூgபார்வதி வித்தியாசாலையில் இந்திய அமைதிப்படை முகாம் அமைத்துக் கொண்டுவிட்டது. இதற்குள் பெரும்பாலான மக்கள் ஊருக்குள்ளே இருந்த தங்கள் நண பர்களிடமோ, ஸ்டானி லி கல்லூரியிலோ அல்லது கொழும்புத்துறையிலிருந்த கிறிஸ்தவ ஸ்தாபனங்களிலோ அடைக்கலம் தேடிக்கொண்டு விட்டார்கள். கொழும்புத்துறையைச் சார்ந்த பகுதிகளில் ஷெல தாக்குதல் இடம்பெற்ற தனி விளைவாக இந்தியர்கள் கடற்கரையோரமாகவே முன்னேறிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் என்றே கருதப்பட்டது. ஆனால் கண்டிவீதி வழியாக அவர்கள் கச்சேரியை நோக்கி முன்னேறிக் கொணடிருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிய முடியாமலிருந்தது.
தபாற்கட்டைச் சந்திக்கும் யூரீபார்வதி வித்தியாசாலைக்கும் இடையில் அமைந்திருந்த டாக்டர் மோகனதாஸின் வீட்டின் பெரும் பகுதியும் அவரது உடமைகளும் கிட்டத்தட்ட அக்டோபர் 21ம் திகதி அளவில்தான் இந்திய இராணுவத்தால் பெருத்த சேதத்திற்குள்ளானது. புரூடி ஒழுங்கையில் தனது உறவினர் வீடொன்றில்தான் அவர் அப்போது அகதியாக இருந்தார். இருபத்து நான்கு மணிநேர ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால் அந்த மாதக்கடைசியில் மக்கள் வெளியில் போய்வர அமைதிப்படை அனுமதி தரும் வரையில் தனது வீட்டிற்கு என்ன நடந்தது என்பதே அவருக்குத் தெரியாது. தனது வீட்டு வளவிற்குள் ஒருதொகை காலியான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பாரிய வெடிகுண்டுகள் போன்றனவற்றின் மிச்சம் மீதிகள் சிதறியிருக்கக் கண்டார். அவை சிதறிக்கிடந்த விதம் விடுதலைப்புலிகள் அவரது வீட்டு வளவிற்கூடாக இந்தியப்படை வரிசையின் பின்புறமாய் பெரும்பாலும் இரவு நேரத்தில் வந்து சேர்ந்து மேற்கே பூரீபார்வதி வித்தியாலயத்திலும் கிழக்கே தபாற்கட்டைச் சந்தியிலுமாக இந்திய அமைதிப்படையை நோக்கித் தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்தியது. இந்திய அமைதிப்படையும் பதிலுக்கு அப்பகுதி முழுவதும் ஷெல் தாக்குதலைத் தொடர்ந்தது. பின் இராணுவப்படையினர் அங்குசென்று அப்பகுதியிலிருந்த 7 வீடுகளை முற்றாகச் சேதப்படுத்தினர். டாக்டர் மோகனதாஸின் வீட்டில் அவர்கள் சகல அறைகளிலுமிருந்த உடமைகள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்து ஒரு இடத்தில் வைத்து அவற்றிற்குத் தீ வைத்தார்கள். இந்த நாசம் ஷெல் அடியால் ஏற்பட்டதல்ல என்பது தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில் சேதமடையாமல் மிஞ்சியிருந்த ஒரேயொரு அறையான பொதுஅறையில் அவருடைய ஸ்கூட்டர் எரிக்கப்பட்டிருக்க மற்றவை எல்லாம் சேதப்படாமல் அப்படியே இருந்தது.

Page 164
292
அப்பகுதியில் நிகழ்ந்த சாவுகள் பதினைந்திலிருந்து முப்பதிற்குள் இருக்கும் என்று அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்புத்துறையிலிருந்து பூநகரியை நோக்கியோ அல்லது சாவகச்சேரிக்கோ போகப் படகு கிடைக்கும் எனிற நம்பிக்கைகயில் வேறு இடங்களிலிருந்து அப்பகுதிக்கு வந்திருந்தவர்களும் மரணமானவர்களில் அடங்குவர். கொல்லப்பட்டவர்களில் பின்வருவோர் அடங்குவர்: திரு தம்பையா(70)-வீட்டிலிருக்கும் போது ஷெல் வெடித்ததில் மரணமானார். திருமதி தம்பிமுத்து-அதிகாலையில் பூரீபார்வதி கோயிலில் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். கண்ணன் ஐயர் என்ற கணக்காளர் ஆனந்தன் வடலி வீதியில் ஷெல் வெடித்ததில் மரணமானார். நாவலடிக் குடியிருப்புத் திட்டத்தில் ஷெல் வெடித்ததில் நாலுபேர் மரணமுற்றனர். செம்மணி ஒழுங்கையில் வெடித்த ஷெல் தாக்குதலில் ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் அரியாலையில் 24 வீடுகள் மிக மோசமாக நாசப்படுத்தப்பட்டு, நாவலடிக் குடியிருப்பில் 100 குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. தபாற்கட்டைச் சந்தியிலிருந்து இராணுவம் முன்னேறிச் செல்கையில் அது விளைவித்த சேதத்தை பலாலி வீதி வழியால் முன்னேறுகையில் அது கோண்டாவில், உரும்பிராயில் ஏற்படுத்திய அழிவுடனும் கே.கே.எஸ். வீதி வழியால் முன்னேறிச் செல்கையில் கொக்குவில், தாவடி மற்றும் இணுவில் ஆகிய இடங்களில் ஏற்படுத்திய அழிவுடனும் ஒப்பிட்டு நோக்கும்போது அந்த அழிவு குறைவானது என்றுதான் கூறவேண்டும். நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் இராணுவம் வீதிகள் வழியாக நகரத்தீர்மானித்தது. இந்தக் காரணத்திற்காக துப்பாக்கி தாங்கியவர்களுக்கு மறைவான பாதுகாப்பைத் தரக்கூடிய வேலிகளுக்குத் தீ வைக்கவெனப் படைவீரர்கள் தீப்பந்தங்களோடு அனுப்பப்பட்டனர். வெடிக்காத குண்டுகள் குறிப்பாக நெல் வயல்களில் கிடந்து நீண்டகாலமாய் அபாயகரமான சூழலை உருவாக்கியிருந்தது. குண்டுகளை அகற்றும் பிரிவைச் சேர்ந்தவர்கள் டாக்டர் மோகனதாஸின் வீடு, வளவினைச் சோதனையிட்டனர். இருந்தும் இரண்டு மாதங்கள் கழித்து 1988 ஜனவரி மத்தியின் நடுப்பகுதியில் பள்ளி செல்லும் அவரது சிறியமகன் வெடிக்காத சிறு ஷெல் ஒன்றினைக் கண்டு அதன் இயக்கப்பகுதியைத் திருக முயன்றபோது அது வெடித்து அப்பையனின் கைவிரலின் ஒரு பகுதியை சிதறடித்தது.
3.6.2 காணாமற் போனவர்கள்
1987 நவம்பர் 19ம் திகதியன்று காலை 10 மணியளவில் பொன்னையா காந்தரூபன் என்பவர் அரியாலையிலுள்ள காந்தி சனசமூக நிலையத்திற்கருகில் இருந்து தனது நண்பர்கள் சிலரோடு கதைத்துக் கொணிடிருந்தார். அவருடைய குடும்பம் ஆசீர்வாதப்பர் கோவில் வீதியில் இருந்தது. விதவையான அவரது தாய் மா இடிப்பது போன்ற அவ்வப்போது கிடைக்கிற சிறுசிறு வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டு வந்தார். காந்தரூபனுக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்தியான காந்தரூபன்தான் குடும்பத்தைச் சமூகத்தில் மேல்நிலைக்குக் கொணிடு வருவதற்கான குடும்பத்தின் ஒரேயொரு

293
நம்பிக்கையாக இருந்தான். காந்தரூபனும் அவன் நணிபர்களும் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு இராணுவ ஜீப் அந்த வழியாகச் சென்றது. பயந்த சுபாவங்கொண்ட காந்தரூபன் ஒடி ஒளித்துக் கொண்டான். இதைப் பார்த்துவிட்ட இராணுவவீரர்கள் அங்கு நின்றவர்களிடம் அவனைப்பற்றி விசாரித்து, அவனையும் விரைந்து பிடித்துக்கொண்டு தங்களோடு கொண்டு போய்விட்டனர். அந்தப் பகுதியிலிருந்த அனைவருமே காந்தரூபன் ஒரு அப்பாவி என்று தீர்மானமாகக் கூறுகிறார்கள். அதே தினத்தில் மாலையில் இராணுவவீரர்கள் காந்தரூபனோடு திரும்பி வந்து அவனுடைய வீட்டைச் சோதனையிட்டார்கள். காலையில் காந்தரூபனைக் கைது செய்தபோது அவனிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவனது வீட்டைச் சோதனையிட்டதில் தொடர்ந்து மேலும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இராணுவவீரர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார்கள். ஆனால் இந்தக் கூற்றுக்களெல்லாம் பொய் என்று அவனது வீட்டுக்காரரும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் தெரிவிக்கிறார்கள். பையனைப் பார்த்தால் மோசமாக அடிவாங்கியவனைப் போலக் காணப்பட்டான். ஐந்து நாட்களாக தனது மகனைப்பற்றி ஒருவிதத் தகவலுமே கிடைக்காத நிலையில் காந்தரூபனின் தாய் அவர்களுடைய வீட்டிற்கு அண்மையிலிருந்த ஸ்டான்லி கல்லூரி முகாமிற்குப் பொறுப்பாயிருந்த மேஜர் துபாயை அணுகினார். அவருடைய மகன் உயிரோடு தானிருக்க வேண்டும் என்று அந்தத் "தாய்க்கு உறுதியளித்த மேஜர் துபாய் காந்தரூபன் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மேஜர் ஜேம்ஸ் தோமஸுடன் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். என்றாலும் தனது மகனைப் பற்றிய தகவல்களை அறிய அந்தத்தாய் மேற்கொணிட முயற்சிகளெதுவும்
பலனளிக்கவில்லை.
தற்போது இராணுவம் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டுவிட்ட தனது வீட்டிலிருந்து அவ்வப்போது தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொணிடு வர அங்கு அடிக்கடி போய் வந்து கொணடிருக்கும் பெண்மணியொருவரிடம் காந்தரூபனின் தாய் இதைப்பற்றித் தெரிவித்திருக்கிறார். தன்னால் முடிந்தவரை அவனுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துவர முயல்கிறேன் என்று அப்பெண்மணி உறுதியளித்திருக்கிறார். மறுமுறை அப்பெண்மணி அங்கு போயிருந்தபோது அங்கிருந்த இராணுவ வீரர்கள் மறுநாள் வேறொரு பகுதிக்கு ம்ாற்றப்பட்டு அவர்கள் அங்கு போகவிருப்பதால் ஒரு இராணுவவீரன் அப்பெண்மணியை அங்கு உட்காரச் சொல்லி தன்னோடு தேநீர் அருந்துமாறு கேட்டுக்கொண்டான். அவ்வாறே அமர்ந்து தேநீர் அருந்தியபடியே காந்தரூபன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தை விபரித்து அப்பையனுக்கு என்ன நடந்தது என்று அப்பெண்மணி விசாரித்திருக்கிறார். "அம்மா, இன்றுதான் நாங்கள் இங்கு நிற்கப் போகும் கடைசி நாள், என்பதால் உங்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன்பு தேநீர் அருந்தி சந்தோஷமான விஷயங்களைப் பற்றிக் கதைப்போம் என்று தான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்களோ ஒரு துக்ககரமான விஷயத்தைப் பற்றிப் பேச்செடுத்து விட்டீர்கள்" என்று அந்த இராணுவ வீரன் அப்பெண்மணியிடம் கூறினான். பின் சிறிது நேரம் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

Page 165
294
அவனுடைய முகம் விசனத்தில் தோய்ந்து போயிருந்தது. பின் திரும்பியவன் தீர்மானமாய் கூறினான்: "அம்மா, அந்தப் பையனை இந்த உலகத்தில் நீங்கள் இனியும் தேடிக் கொண்டிருக்ககூடாது. அவனை நீங்கள் கடவுளிடம் மட்டுந்தான் கேட்கலாம் காந்தரூபனின் தாயிடம் இதைப்பற்றி எதையுமே சொல்லக்கூடாதென்று அப்பெண்மணி தீர்மானித்துக் கொண்டார்.
அடுத்த மூன்று மாதங்களும் காந்தரூபனின் தாய் முகாம் முகாமாய்த் தேடியலைந்தாள். இன்னொரு பெணிமணி இந்தப் பிரச்சினையை முனினெடுக் கதி தானே முனி வந்தார். தடுப் புககாவலிலி வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர்களை இந்திய அதிகாரிகளிடமிருந்து கச்சேரியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டாலும் அங்கு எந்தவிதமான உதவியும் கிடைப்பதற்கான அறிகுறிகளே இல்லை. சிறிதுகாலம் அப்பெண்மணிக்கு சாக்குப்போக்குக் காட்டிக்கொண்டிருந்த ஒரு அதிகாரி இறுதியில் நவம்பர் 17ம் திகதிக்கும் 19ம் திகதிக்கும் இடையில் கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் தங்களிடமில்லை என்று தெரிவித்தார். சம்பந்தப்பட்ட முகாமுக்குப் பொறுப்பான மேஜரிடம் தொடர்பு கொண்டு கேட்டுப் பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேஜர் தோமஸின் இடத்தில் அவருக்குப் பதிலாகப் பொறுப்பேற்றிருந்த புதிய மேஜர் அந்தப் பையனின் பெயர் தன்னிடம் இல்லை என்றும் மேஜர் தோமஸைத் தனக்குத் தெரியாதென்றும் அவளிடம் கூறினார். அந்தப் பெண்மணி விடவில்லை. "இந்திய அமைதிப்படையால் யாரேனும் கைது செய்யப்பட்டால் இந்திய அமைதிப்படைதான் அதற்குப் பொறுப்பு வகிக்க வேண்டும். ஏதோ இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் எங்களை ஒரு இடத்திற்கும் மறு இடத்திற்குமாய் அனுப்பி அலைக்கழிக்கிறீர்கள். அந்த மகனின் இழப்பு நிரந்தரமான இழப்புத்தான் என்பதையாவது அந்தத் தாய்க்குச் சொல்லும் அக்கறை உங்களுக்கு இருந்தால் அவள் அந்த இழப்பை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக் கொள்ளவாவது முடியும். இப்போது இருக்கும் நிலையில் அவள் வேலைக்கும் போகாமல் தன் உடல்நிலையையும் கவனித்துக்கொள்ளாமல் இருக்கிறாள் என்று அப்பெண்மணி தெரிவித்தார். இறுதியில் தன் மகனை அவள் இனி எதிர்பார்த்திருக்கத் தேவையில்லை என்று அந்தத் தாய்க்குப் பின்னர் தகவல் அனுப்பப்பட்டது. 3.7 கொக்குவில்
மேற்கே கே.கே.எஸ்.வீதியாலும் தெற்கே திருநெல்வேலி வீதியாலும் சூழப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணத்தின் ஜனநெருக்கடி கூடிய புறநகர்ப்பகுதியிலான முக்கிய அகதிகள் மையமாகச் செயற்பட்டு வந்தது. (கொக்குவில் இந்துக்கல்லூரியின் வரைபடத்தை இந்நூலின் பின்பகுதியில் பார்க்க) கே.கே.எஸ்-யாழ் வீதி மார்க்கமாக இந்திய இராணுவம் முன்னேறி வந்து அக்டோபர் 25ம் திகதி கொக்குவிலை அடைந்தபோது கொக்குவில் இந்துக்கல்லூரியில் 5000ற்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர். தெற்குப்பக்கம் திருநெல்வேலி வீதியாலும் மேற்குப்பக்கம் கே.கே.எஸ்.வீதியினாலும் சூழப்பட்டு, கிழக்குப் பக்கத்தில் கீழ் நிலைப்பள்ளி மாணவர்களுக்கான ஒற்றை மாடிக் கட்டிடத்தையும் அதற்கு வடக்கே கட்டிடம் 1, கட்டிடம் 2 என்று நாம் குறிப்பிடும் இரண்டு கட்டிடங்களையும் (கட்டிடம் 2 கிழக்கு மேற்காய்

295
நீண்டிருக்கும் ஒரு மூன்று மாடிக்கட்டிடமாகும்) கொண்ட ஒரு சதுரம் என்று இந்த இடத்தின் வடிவமைப்பைச் சரியாய்க் குறிப்பிடலாம். கட்டிடம் 2ன் வடக்கே பாடசாலையின் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்தச் சதுரத்தின் மத்தியில் ஒரு இந்துக்கோயில் இருக்கிறது. பாடசாலையின் நுழைவாயில் அலுவலகத்தோடு சேர்ந்து அச்சதுரப் பிரதேசத்தின் தென்கிழக்குக் கோடியில் இடம்பெற்றிருக்கிறது. இவ்வாறு யாழ்ப்பாணத்தை நோக்கித் தெற்குப் புறமாக முன்னேறிக்கொண்டிருக்கும் இராணுவத் துருப்புகள் T வடிவிலமைந்த குளப்பிட்டிச் சந்தியைக் கடந்து பின் கட்டிடங்கள் 2, 1 ஆகியவற்றையும் கடந்து தங்களுக்கு இடது தோளுக்கு மேலாகத் தலையுயர்த்திப் பார்த்தால் பாடசாலையின் நுழைவாயில் தெரியும். இந்தப்பாடசாலை அகதிகள் முகாமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தப் பள்ளியின் நுழைவாயிலின் முகப்பில் ஒரு அறிவிப்புப்பலகையை மாட்டினால் போதுமானது என்று இந்த அகதி முகாமை ஒழுங்குபடுத்தியவர்கள் எண்ணியிருந்தனர். இந்தியர்கள் பொதுமக்களைப் பற்றிக் குறைந்தபட்ச அக்கறை கொண்டவர்களாகவாவது இருப்பார்கள் என்றும் பாடசாலைகளும் சமய வழிபாட்டுத் தலங்களும் அகதிகள் முகாம்களாகச் செயற்பட்டுக் கொணடிருக்கும் சாத்தியக்கூறுகளை உணர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற அனுமானத்தில்தான் அவர்கள் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கு முன் நடந்த ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது சில பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலுங்கூட இலங்கை இராணுவங் கூட இந்தச் சாதிதியக் கூறுகளைத் தெளிவாக எண்ணிப்பார்த்துத்தான் செயற்பட்டன. மேலும் கொக்குவில் இந்துக்கல்லூரியும் பரவலாக எல்லாருக்கும் தெரிந்த பாடசாலையே. பாடசாலைக்குப் பின்புறமாக
ஒரு இந்துக் கோயில் வேறு இருந்தது.
கொக்குவில் இந்துக்கல்லூரிக்குள் நுழைகையில் நாம் கட்டிடம் 1ன் முகப்பு மண்டபத்திற்கு அடியில் வருகிறோம். அதற்கு வலதுபுறம் கிழக்கை நோக்கியவாறு அமைந்திருக்கும் பாடசாலை அலுவலகம் தான் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களைக்கொண்ட மருத்துவநிலையமாக இயங்கிக் கொண்டிருந்தது. இடதுபுறமாக கட்டிடம் 1ல் அமைந்திருந்த ஒரு வகுப்பறைதான் நோயாளிகள் தங்கும் அறையாக இருந்தது. இதற்கடுத்து (முகப்பு மண்டபத்திற்கு மேற்கு நோக்கியிருந்த இரண்டாவது அறை) இருந்த வகுப்பறையை அற்ை 1 எனக் குறிப்பிடுவோம். மேல் மாடி தவிர்ந்த 1ம் 2ம் கட்டிடங்களின் சகல அறைகளும் அகதிகளால் நிரம்பி வழிந்தன. 1ம் கட்டிடத்தின் இரண்டு மேல் மாடி அறைகளும் பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறைகளாகப் பாவிக்கப்பட்டன. இந்தியத் துருப்புகள் நெருங்கி வரவர அதியுயர் மாடிகளில் இருப்பதை அகதிகள் தவிர்த்துக் கொண்டனர். ஏனெனில் கீற்றில் அமைந்திருந்த இதன் மேற்கூரை ஷெல் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் அபாயம் இருந்தது. இலங்கை இராணுவத்துடனான கடந்த கால அனுபவங்களிலிருந்து கொங்கிரீற்றினாலான மேற்கூரை இருப்பதில் பல அனுகூலங்கள் உண்டு என்ற ஒரு அபிப்பிராயம் நிலவியிருந்தது. . இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக 1987 மார்ச் 30ம் திகதி யாழ் மருத்துவமனையில் 19, 20ம் இலக்க வார்டுகளில் நடந்த சம்பவத்தைக்

Page 166
296
குறிப்பிடலாம். மேற்கூரையைத் துளைத்து வந்த ஷெல் ஒன்று மேல் மாடியில் வெடித்து எட்டுப்பேரைக் கொன்றுவிட்டுப் பின் ஒரு தீங்கும் நேராத விதத்தில் குழந்தைகள் வார்ட்டுக்குள் போய் விழுந்து விட்டது.
அக்டோபர் 25ம் திகதி யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் டாங்கிகளின் கடகடவென்ற உருளும் பேரோசை வெகு அண்மையில் கேட்டது. இளம் பத்திரிகையாளரும் ஈழநாடு ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினருமான திரு பாலகிருஷ்ணன் ஆனந்தகிருஷ்ணன் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டராக அகதி முகாமை நிர்வகிப்பதில் முக்கிய பணியாற்றிக் கொண்டிருந்தார். பிற்பகல் 2 மணி அளவில் தனது சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சீருடையை அணிந்தவண்ணம் முகப்பு மண்டபத்திலிருந்த பள்ளி அலுவலக வாயிற்படியில் அவர் உட்கார்ந்திருந்தார். மற்ற தொண்டர்களையும் அவ்வாறே சீருடைகளை அணிந்து கொள்ளுமாறு வேண்டினார். சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளின்படி இந்திய இராணுவம் இயங்கும் என்றே அவர் அனுமானித்திருந்தார். இது அகதி முகாம் என்று அறிந்ததும் சில அதிகாரிகள் தம்மிடம் வந்து கதைத்து, விசாரிக்கும்போது எல்லாவற்றையும் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். இந்திய இராணுவத்திடமிருந்து மக்களிடம் பொதுவாக இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நிரம்பியிருந்தது. ஆனால் நிலைமை அந்தமாதிரி அமையவில்லை. கொக்குவில் இந்துக்கல்லூரியில் நடந்தேறிய சம்பவங்களுக்கான முக்கிய இரு காரணிகளில் ஒன்று இந்திய இராணுவம் தனது இழப்புகளால் நிலைகுலைந்து போயிருந்ததும், ஆத்திரங் கொண்டிருந்ததுமாகும். பிரம்படி ஒழுங்கைக்கு 70 அதிரடிப்படை வீரர்களை அனுப்பிப் பிரபாகரனை அப்படியே பிடித்துக் கொண்டு போய்விடுவது இலகுவான காரியம் என்ற தோரணையில்தான் அவர்கள் தங்கள் தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார்கள். மற்றக் காரணம் அப்பகுதியிலான விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் ஆகும். இந்தியத் துருப்புகள் துப்பாக்கிச் சூட்டின் எக்காள முழக்கத்துடன்தான் அங்கு வந்து சேர்ந்தன. வாசகர்கள் தாமே தமது தீர்ப்பை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்களின்பேரில் நாம் திரட்டிய தகவல்களைக் கீழே தருகிறோம்.
இந்தியப்படை அதிகாரிகளின் வருகையை எதிர்நோக்கி ஆனந்தகிருஷ்ணன் படியில் அமர்ந்து காத்திருந்தபோது திடுமென எழுந்த வெடிச்சத்தம் அவரைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. தன் மேற்கையிலிருந்து ரத்தம் பீறிட்டு வழிவதாக அவருடைய நண்பர்களில் ஒருவர் கூவினார். சில கணங்கள் அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதே புரிபடாத அளவிற்கு அவர்கள் திக்பிரமையுற்றிருந்தனர். அப்பொழுது பிற்பகல் 230 மணி. ஒரு டாங்கி 2ம், 1ம் கட்டிடங்கள் இரண்டையும் தாண்டிப்போய் தனது சுடுதளத்தை இடதுபக்கமாய் 120 பாகைக்குத் திருப்பி ஷெல் அடித்திருக்கிறது. நாம் முன்னர் விபரித்த அறை ஒன்றில் ஒரு அரைச்சுவர் சதுரப்பிரதேசத்தை நோக்கியபடி உள்ளது. இந்திய இராணுவத்தைப் பார்ப்பதற்காகப் பெருந்தொகையாய் மக்கள் அச்சுவர்ப்புறம் குழுமியிருந்தார்கள். சில அதிகாரிகள் தம்மிடம் வருவார்கள், தங்களின் சோதனை காலம் இத்தோடு முடிந்தது என்றுதான் அவர்களுங்கூட நம்பியிருந்தார்கள். ஆனால் அதற்கு மாறாக

297
டாங்கியின் குழல்வாய் தாங்கள் நிற்கும் பக்கமாய்த் திரும்புவதைக் கண்டார்கள். பின் அறுபது யார் தூரத்திலிருந்து ஷெல் வெடித்துச் சிதறும் பேரோசையைக் கேட்டனர். தொடர்ந்து தங்கள் வாழ்வினி இறுதிக்கணங்களை கெளவிக்கொண்டுவிட்ட ஒரு சுட்டெரிக்கும் உணர்வு. அந்த ஷெல் ஒரு மூலைக்கு வந்து அறை ஒன்றில் இருந்த தூணினால் கீழ்நோக்கித் திரும்பிப் பின் சுவற்றைத் தகர்த்துத் துளைத்துச் சென்று அங்கிருந்த நோயாளிகள் அறையில் உலோகச் சிம்புகளாகச் சிதறி அங்கிருந்த சுவரை ஊடுருவி வந்து முகப்பு மண்டபத்திற்குள் விழுந்து வலுவிழந்து போனது. அறை ஒன்றில் இருந்த 24 பேரும் நோயாளர் அறையில் இருந்த ஒரு பெண்மணியும் அக்கணத்திலேயே இறந்து போனார்கள்.
இந்தியர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்? அப்படி அவர்களை நடந்து கொள்ளத் தூண்டத்தக்கதாக ஏதேனும் சம்பவம் நிகழ்ந்ததா? கீழே தரப்படும் சாட்சியங்கள் அதற்கடுத்தடுத்த நாட்களில் சில சமயங்களில் வேண்டுமென்றே செய்யப்பட்ட தூணிடுதல்கள் இருந்ததாகக் கருத இடமளிக்கின்றன. ஆனால் அக்டோபர் 25ம் திகதி பிற்பகல் 230 மணிக்கு இந்தியப்படைகள் அவ்வாறு நடந்து கொள்வதற்கான முகாந்தரம் எதுவும் இருந்ததா என்று யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு டாங்கியால் குறிவைத்து மூன்றரை அடி உயரமான ஒரு அரைச் சுவரின் மேலாய்த் தெரிந்த ஆட்களைச் கடுவது என்பதை எந்தக் காரணங்கொண்டும் நியாயப்படுத்த முடியாது. அந்தப் பிற்பகலின் மிகத்தெளிவான வெளிச்சத்தில் அறுபது யாருக்கும் குறைந்த தூரத்தில் டாங்கியின் கமாண்டரால் எதிரே நிற்பவர்கள் நிராயுத பாணிகளான ஆணிகளும் பெணிகளும் குழந்தைகளும் என்பதைத் தெளிவாகவே கண்டிருக்க முடியும்.
ஆதன்பின் அந்த மாலை முழுதும் வெளியே சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருக்க அகதிகள் அறைகளுக்குள் நெருக்கியடித்துக் கொண்டு முடங்கியிருந்தனர். மாலை 4 மணியளவில் குளப்பிட்டி சந்தியில் ஒரு நிலக்கணிணி வெடித்தது. துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் தொடர்ந்து கேட்டது. மேலும் இரண்டு ஷெல்கள் பாடசாலைக் கட்டிடங்களின்மீது விழுந்தது. அவற்றிலொன்று 1ம் கட்டிடத்தின் கூரையில் விழுந்து கே.கே.எஸ். வீதியிலிருந்து தள்ளி மேல்மாடியின் கிழக்குக் கோடியில் தஞ்சம் புகுந்திருந்த இரண்டு பேரைக் காயப்படுத்தியது. மற்ற ஷெல் கட்டிடம் 2ன் மீது அதன் மேல் மாடியின் மேற்குமுனைக்கு அருகில் மாடிப்படியில் விழுந்தது. முப்பது யார் நீண்ட புதர்க்காணியால் கே.கே.எஸ். வீதியிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கூட வளவின் மேற்குப் புறச்சுவர் மீது ஒரு ஷெல் விழுந்து சுவற்றைத் தகர்த்துக்கொண்டு சென்றது. இரவில் சிறுநீர் கழிப்பதற்காக அந்தச்சுவரின் இடைவெளியருகாய்ச் சென்ற கிழவரொருவர் வாயில் குண்டு பாய்ந்திருக்கச் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மறுநாள் காணப்பட்டார். அன்றுமாலை அகதி முகாமின் ஏற்பாட்டாளர்கள் அங்கிருந்த மக்களை ஒன்று திரட்டி, நாங்கள் அகதிகள்" என்று ஆங்கிலத்திலும் தமிழிலுமாக உரத்துக் கோஷம் காப்பச் செய்தார்கள். வெளியே இடைவிடாமல் சணிடை நடந்து கொண்டிருந்த போதிலும் முதல் ஷெல் அடிக்குப்பிறகு ஆயிரக்கணக்கில் அகதிகள் குழுமியிருந்த இடங்களின் மீது ஷெல் தாக்குதல் பிறகு

Page 167
298
நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்திருந்து தாக்குவதற்கு வசதியான இடங்கள் என்று கருதப்பட்டவை தான் இப்போது அவர்களின் தாக்குதல் இலக்காயிருந்தது. 25ம் திகதி இத்தகைய இடங்கள் எதிலிருந்தாவது இந்தியர்கள்மீது யாரும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திக் கொண்டிருந்தார்களா? எந்தச் சாட்சியங்களுக்குமே இதற்குத் திட்டவட்டமான பதிலைக் கூறிக்கொள்ள முடியவில்லை. அறைக்குள் நெருக்கியடித்துக் கொண்டிருந்தவர்களின் கவலை எல்லாம் தங்களினதும் தங்களின் நெருங்கிய உறவுகளினதும் உடனடி உயிர்ப்பாதுகாப்பு பற்றிய கவலையாகவே இருந்தது. அகதி முகாம் அமைப்பாளர்களில் ஒருவரான திரு ரஞ்சித் குமார், "அங்கே ஏறத்தாழ 7000 பேர்கள் வரை இருந்தார்கள். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்பதை எல்லாம் யாரும் கட்டுப்படுத்தியிருக்கவும் முடியாது" என்று கூறுகிறார். 7000 அகதிகளை அபாயத்திற்குள்ளாக்கும் நடவடிக்கைகளில் இறங்குமளவு குரோதசிந்தையுடனும் பொறுப்பற்ற தனத்துடனும் யாரேனும் நடந்து கொண்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளைப் பற்றி யாரும் பெரிதாக அக்கறைப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
இதனையடுத்து வந்த நாட்களில் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய வசதியான இடமாக இந்திய அதிகாரிகள் விடாமல் சுட்டிக்காட்டி வந்த இடம் மூன்று மாடிக்கட்டிடமான 2வது கட்டிடத்தின் மேல் மாடியின் மேற்குக் கோடியாகும். அங்கிருந்து மாடிச்சுவரைத் தாண்டிப் பார்க்க, கீழே தென்மேற்காய் கே.கே.எஸ். வீதியில் இந்திய இராணுவம் எவ்வாறு நிலைகொண்டுள்ளது என்பது தெளிவாய்த் தெரியும். முழுப் பாடசாலையிலும் மேலிருந்து பார்த்தால் அனைத்தும் தெரியத்தக்க அதியுயர் பகுதியாக இதுவே இருந்தது. இந்திய அதிகாரிகளால் சந்தேகத்திற்குரிய இடமாகச் சுட்டிக்காட்டப்பட்ட அந்தக் குறிப்பிட்ட பகுதியில் 25ம் திகதி பிற்பகல் 230மணிக்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்று எந்த அகதியாவது பார்த்தார்களா என்று அகதி முகாம் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
'அந்த நேரத்தில் யாருமே வெளியில் நிற்கவில்லை. எல்லாருமே உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு அறைகளுக்குள் தான் முடங்கிக் கிடந்தனர். நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை 1ம் அறையிலிருந்து மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அதன் மீது பிற்பகல் 230 மணிக்கு ஷெல் விழுந்தது. அந்த இடத்தில் என்ன நடந்தது என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாருமே இறந்து போய்விட்டார்கள்"
2ம் கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் இருந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? பல்வேறு சமயங்களில் மேல்மாடியில் அடிக்கடி ஆட்கள் ஓடிக்கொண்டிருக்கும் சந்தத்தைத்தான் நாங்கள் கேட்டோம் என்று அவர்களிற் பலர் தெரிவிக்கிறார்கள். அந்த நேரத்தில் அம்மாடியில் அப்படி யார் எதற்காக ஓடவேணடும் என்பதெல்லாம் அவர்கள் கற்பனைக்கும் எட்டாத விஷயமாகும். மேல்மாடிகள் குண்டு வீச்சுக்கு எளிதில் இலக்காகும் ஆபத்தான பகுதிகளாக இருந்ததால் பொதுவில் அங்கு ஆள்நடமாட்டம் எதுவும் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

299
திருநெல்வேலி வீதியில் அமைந்திருந்த கீழ்வகுப்புக் கட்டிடத்தின் தென்முனையும் அன்று இரவு ஷெல் தாக்குதலுக்கு இலக்காகி அங்கிருந்த சிலரும் காயமுற்றனர். 26ம் திகதி காலையில் ஒரு வயதான மனிதர் கீழ்வகுப்புக் கட்டிடத்தின் முன் வாயிலுக்கு வந்து தான் சில அகதிகளோடு அங்கே நிற்பதாகவும் காயமடைந்தவர்கள் சிலர் தங்களோடு இருப்பதாகவும் உரத்துக் கத்திக் கூறினார். சிறிது நேரத்தின் பின் கேர்ணல் மிஸ்ரா மற்றும் கெப்டன் பிரகாஷ் தலைமையில் ஒரு இராணுவவீரர் குழு ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. அவர்களோடு பேசியவர்களில் ஆனந்தகிருஷ்ணனும் ஒருவர். நிலைமையை இராணுவத்திற்கு விளக்கிக் கூறியதும் கேர்ணல் மிஸ்ரா கோபமாகக் கூவினார்:
"உங்களுடைய மக்களைக் கொல்வதற்கான எல்லாக் காரியங்களையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அகதி முகாம் என்ற பெயர்ப்பலகையை கே.கே.எஸ். வீதியில் நீங்கள் போட்டிருக்க வேண்டும்" தாங்கள் மேற்கொண்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானவை என்று தாங்கள் கருதியதற்கான காரணங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறியதாகவும் தாங்கள் பயந்து போயிருந்த காரணத்தால் அவர்களுடன் வாதாட்டத்தில் ஈடுபடத் தாங்கள் விரும்பவில்லை என்றும் ஆனந்தகிருஷ்ணன் கூறினார். இது ஒரு அகதி முகாம் என்று தாங்கள் முந்திய நாள் மாலை ஒன்றாகச் சேர்ந்து சத்தமிட்டது அவர்களுக்குக் கேட்டதா என்று ஆனந்தகிருஷ்ணன் கேட்டதற்கு அது தங்களுக்குக் கேட்டது என்று அந்த கேர்ணல் பதிலளித்தார். ஆனால் இந்தப் பாடசாலை விடுதலைப்புலிகளின் முகாம் என்றும் இதில் ஏதோ தந்திரம் இருக்கிறது என்றும் இராணுவம் ஐயங்கொண்டிருந்திருக்கிறது.
முகாமிலிருந்தவர்களின் கூற்றுப்படி இராணுவத்தின் ஆரம்ப அணுகுமுறை திட்டமிட்டரீதியில் மிகக் கடூரமாகவே இருந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு அகதிகளுக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை. மூன்றாம் நாள் கெப்டன் பிரகாஷ் போய் பள்ளி வாயிலுக்கும் கோயிலுக்குமிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெருஞ்சில்லுகளின் மீதான அந்த உயரமான விசித்திரக்கருவி என்னவென்று விசாரித்தார். அகதி முகாம் பொறுப்பாளர்கள் அது தேர் என்றும் உற்சவக் காலங்களில் கடவுளை இத்தேரில் வைத்துத்தான் கோயில் வலம் வருவார்கள் என்றும் விளக்கினார்கள். தேர்க்கோபுரம் ஒரு மாடி உயரங் கொண்டதாயும் அக்கோபுர அமைப்பின் பக்க அமைப்புகள் தேவையானபோது நீக்கிக் கொள்ளத்தக்க மறைப்பைக் கொண்டதாகவும் இருந்தது. அந்தத் தேர்ப்படிக் கட்டுகள் மட்டுமே கொணடதான அமைப்பையுடைய நிர்மாண மொனறின அருகிலி நிறுதி தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப்படிகள் வழியாக ஒருவர் தேருக்குள் உள்ளிட முடியும். மறைந்திருந்து தாக்க முனையும் ஒருவர் மேற்கில் கே.கே.எஸ். வீதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்திற்குத் தெரியாமல் கிழக்கு வழியாக வந்து கோபுரத்திற்குள் ஏறிக்கொண்டு விடமுடியும் என்று சந்தேகித்தவராய், நீங்கள் இந்தத்தேரின் மறைப்பை இரண்டு மணி நேரத்திற்குள் அகற்றி விடவேண்டும். அப்போதுதான் நான் உங்களுக்கு உணவு தருவேன். இல்லாது போனால் எனது பீரங்கியால் இத்தேரைத் தரைமட்டமாக்கி விடுவேன்" என்று கப்டன் அவர்களிடம் கூறியிருக்கிறார். அவர் கேட்டுக் கொண்டபடியே அகதிகள்

Page 168
390
அனைத்தையும் துரிதமாகச் செய்து முடித்தனர். பின்னர் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு வந்த சில விடுதலைப்புலிகள் தேர்க் கோபுரத்திலிருந்து அந்த மறைப்பை அகற்றச் சொன்னது யார் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டதும் அகதிகள் உரத்த குரலில் அலறினார்கள்: "ஐயோ! நாங்கள் ஒன்றுமறியாத அகதிகள். எங்களால் சண்டை போட முடியாது. எங்களுக்குச் சண்டையில் விருப்பமில்லை. உங்களால் நாங்கள் எல்லாரும் சாகப் போகிறோம். தயவுசெய்து இங்கிருந்து போய் விடுங்கள்"
ஏதும் தொடர்புகளுக்கு அகதி முகாம் பொறுப்பாளர்கள் கே.கே.எஸ். வீதிவரை சென்று அதிகாரிகளைப் போய் அழைத்துக் கதைப்பதற்கு ஒரு ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் 3ம் திகதியிலிருந்து இந்தியச் செஞ்சிலுவைச் சங்கத்தால் அகதி முகாமுக்கு உணவும் மருந்து வகைகளும் ஒழுங்கு முறையாக வழங்கப்பட்டது. அண்மையில்தான் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகியிருந்த டாக்டர் சண்முகலிங்கத்தின் சேவை இந்த இடத்தில் மிகமிக முக்கியமாய் அமைந்தது. மயக்க மருந்து கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. வெடித்துச் சிதறிய உலோகத்துகளால் ஒருவரின் காலில் சதை மோசமாகச் சிதையுண்ட நிலையில் அம்மனிதரை மேசையின் மேல் கிடத்தி சிறிது நேரம் கடுமையான வலியைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. காயத்தின்மீது ஐதரசன் பேரொட்சைட்டு ஊற்றப்பட்டு அதைத் தொடர்ந்து துரிதமாகக் காயம் சுத்தம் செய்யப்பட்டு, பின் லாவகமாகச் சில தையல்கள் போடப்பட்டன. அவ்வளவுதான், வேலை கனகச்சிதமாக முடிந்துவிட்டது. நவம்பர் மாதப் பிற்பகுதியில் யாழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் நோயாளி பூரணமாகக் குணமடைந்து விட்டார்.
நவம்பர் 2ம் திகதி வரை மக்கள் கல்லூரியின் கிழக்குப் புறச் சுவரைத் தாண்டிக்குதித்து ஒழுங்கைகளுக்கூடாக அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு விரைந்து போய் குளித்தும் சாப்பிட்டும் போய்வந்தபடியிருந்தனர். ஊரின் உட்புறத்தே ஆயிரம் அகதிகளுக்கு மேல் தங்கியிருந்த மாத்தளை அம்மன் கோயிலுக்கும் பல அகதிகள் மாற்றப்பட்டிருந்தனர். நவம்பர் 2ம் திகதி இந்திய இராணுவம் ஒழுங்கைகள் வழியாக நகர்ந்து திரிய ஆரம்பித்திருந்தது. அப்போது கல்லூரியை விட்டு வெளியில் போய்க் கொண்டிருந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு நவம்பர் 19ம் திகதி அகதி முகாம் கலைக்கப்படும் வரை மக்கள் அகதிமுகாமை விட்டு எங்கும் வெளியில் போகாமல் உள்ளுக்குள்ளேயே முடங்கியிருந்தனர்.
இந்திய இராணுவம் அங்கு வந்து சேர்ந்த நாளிலிருந்து அநேகமாய் ஒவ்வொரு நாளும் பாடசாலைக் கட்டிடங்களின் மேற்பகுதிகளை நோக்கி இந்திய இராணுவம் சிறிய ஆயுதங்களால் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டேயிருந்தது. நவம்பர் 2ம் திகதி தயாளரட்ணத்தின் முகவாயைக் கிழித்துக் கொண்ட ஒரு எகிறிப் பாயும் குண்டு பாய்ந்து இன்னொருவரையும் காயப்படுத்தியது. இதைப்பற்றி அகதி முகாம் பொறுப்பாளர்கள் கேர்ணல் கோவிந்திடம் கேள்வி கேட்டபோது, "யாரோ பாடசாலையில் நாங்கள் குறிப்பிட்ட அந்த இடத்திலிருந்து கொண்டு எங்களை நோக்கிச் சுடுகிறார்கள். எங்கிருந்து

301 துப்பாக்கிச் சூடு வருகிறது என்று கண்டு பிடிக்க நான் பயிற்றப்பட்டவன். எங்களுடைய எஸ்.எல்.ஆர்களுக்கும் ஏகே47க்கும் ஓசை எழுவதில் உள்ள வேறுபாடு எங்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் அங்கே போய்ப் பாருங்கள். காலியான வெடியுறைகளைக் காண்பீர்கள். அவற்றை எங்களிடம் கொண்டு வந்து தாருங்கள்" என்று அவர் கூறினார். அகதி முகாம் பொறுப்பாளர்கள் அவர் சொன்னதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, யாரும் அங்கு போய்ப் பார்க்கவும் இல்லை. இராணுவமும் ஒருபோதும் முகாமிற்குள் அடியெடுத்து வைக்கவும் இல்லை. அகதி முகாம் கலைக்கப்பட்ட பிறகு முகாம் பொறுப்பாளர்களில் ஒருவர் 2ம் கட்டிடத்தின் மேல் மாடியைப் பார்த்து வரப்போயிருக்கிறார். பின் கீழே வந்து ஒரு நண்பரை அழைத்தார். "வாரும், உமக்கு ஒரு விஷயம் காட்டப் போகிறேன்" என்று அவரை மேலே அழைத்துச் சென்றார். அங்கே சிறிய எண்ணிக்கையில் காலி வெடியுறைகளும் பாவிக்கப்படாத ஒரு தோட்டாவும் கிடந்ததை அவர்கள்
5600TL 6.
அகதி முகாம் செயற்பட்டுக் கொண்டிருந்த போது முகாமிலிருந்த சில முக்கியஸ்தர்கள் ஒருமுறை கேர்ணல் கோவிந்தைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டனர். தொழில் ரீதியில் டாக்டர், எஞ்சினியர் என்று அவர்கள் அவருக்கு அறிமுகஞ் செய்து வைக்கப்பட்டனர். எல்லாவற்றையும் கேட்டபிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் விளித்தபடி கேர்ணல் கூறினார்: "ஐ லீ, நீங்கள் ஒரு டாக்டர், நீங்கள் ஒரு எஞ்சினியர். உங்களை அடக்கி ஆள அனுப்பப்பட்டிருக்கும் நான் ஒரு முட்டாள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இப்பொழுது நீங்களெல்லாம் அகதிகள். என்ன வேண்டும் உங்களுக்கு? உங்களுக்கு உணவு வேண்டும். ஆல் ரைட், உங்களுக்கு நான் உணவு தருகிறேன்"
இன்னொரு சமயம் ஆனந்தகிருஷ்ணன் ஒரு பத்திரிகையாளர் என்றறிந்ததும் ஒரு கப்டன் அவரிடம், "நீங்கள் ஒரு பத்திரிகையாளரா? விடுதலைப்புலிகள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரத்தை உங்களால் எனக்குக் கட்டாயம் தரமுடியும்" என்று கேட்டிருக்கிறார். "ஆம், எழுதுவது என்பது உண்மைதான். ஆனால் எனக்குக் கிடைக்கும் தகவல்களில் பெரும்பாலானவை பத்திரிகைகளிலிருந்து குறிப்பாக இந்தியச் சஞ்சிகைகளிலிருந்து தான் கிடைக்கிறது” என்று ஆனந்தகிருஷ்ணன் பதிலளித்திருக்கிறார். "ஏய் பன்றி, நீ அதிகம் பேசுகிறாய். நான் ‘உன்னைச் சுட்டு விடுவேன். ஒரு தோட்டாவை வீணாக்க வேண்டாமேயென்று தான் பேசாமலிருக்கிறேன்" என்று அந்த கப்டன் கூறியிருக்கிறார். அவர் உணர்மையாகத்தான் அப்படிக் கூறுவதாக ஆனந்தகிருஷ்ணன் நினைக்கவில்லை. என்றாலும் அத்தகைய பேச்சு நிலைகுலைய வைப்பதாகவே உள்ளது. கடுமையாக நடந்து கொள்ள வேணடும் என்ற உத்தரவின் கீழ் இராணுவம் இயங்கி வருவது வெளிப்படையாகவே தெரிந்தது. வாரங்கள் செல்லச்செல்ல இப்போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. முகாமில் முன்பு அகதியாகத் தங்கியிருந்த ஒருவர் வீட்டுக்கு கேர்ணல் கோவிந்த் விஜயம் செய்து, "முன்பு நாங்கள் கடுமையாகத்தான் நடந்து கொண்டாக வேண்டியிருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் யாரையும்

Page 169
302
நம்பமுடியவில்லை. இப்போது நாங்களெல்லோரும் நண்பர்க ". நீங்கள் விடுதலைப்புலி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். எப்படி இருகTநீர்கள்? சுகந்தானே!" என்று குசலம் விசாரித்திருக்கிறார்.
முகாமில் தங்கியிருந்த திரு சிவராஜா என்பவர் பின்னர் பேசிக் கொண்டிருந்தபோது, "முகாமை விட்டு வெளியேறிய பின் திரும்பவும் பழைய வாழ்க்கைக்குப் புகுவதில் எங்களுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. சில விஷயங்களில் நாங்கள் தொடர்ந்து முகாமில் தங்கியிருக்கவே விரும்பினோம். எதுவுமே தேவைப்படாத நாடோடிகள் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விட்டோம். எங்களது கழிப்பறை எது தெரியுமா? திறந்த வெளியில் சேறும் சகதியும் மண்டிய மைதானங்கள் தான்" என்று தெரிவிக்கிறார்.
பத்துக்குழந்தைகள் முகாமில் பிறந்தன, அவை எல்லாமே பிழைத்துக் கொண்டன. வயதான ஐந்து பேர் வாந்திபேதியால் மாணிடு போனார்கள். இறந்தவர்கள் எல்லோரும் விளையாட்டு மைதானத்தின் கிழக்குச் சுவரோரமாக வெட்டப்பட்ட இரண்டு குழிகளில் புதைக்கப்பட்டார்கள். தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 25ம் திகதி நடைபெற்ற ஷெல் அடிக்குப் பலியான 25பேரும், 26ம் திகதி அச்சடலங்களைப் புதைப்பதற்குக் குழி தோண்ட முடியாத அளவுக்குத் தொண்டர்கள் களைத்துப் போயிருந்ததால் 27ம் திகதிதான் புதைக்கப்பட்டார்கள். நவம்பர் 19ம் திகதி முகாம் மூடப்பட்டது. அன்று மட்டும் வெளியே ஒழுங்கைகளில் பத்து சடலங்கள் வரை கண்டெடுக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன. ஏனைய அகதி முகாம்களைப் போலவே பசியும் பீதியும் இந்த முகாமிலும் வியாபித்திருந்தது. பொதுவில் பசி பீதியை மீறிவிட்டிருந்தது. பலர் என்ன செய்வதென்று தெரியாமல் முகாம்களில் பட்டினி கிடந்து சாவதைவிட இந்திய ரோந்துப் படையினரால் சுடப்பட்டாலும் பரவாயில்லை என்று பிள்ளை குட்டிகளைக் கூட்டிக்கொண்டு முகாம்களை விட்டுப் பறந்து விட்டார்கள்.
3.8 கணிடுக்குளி - யாழ்ப்பாணம்
அக்டோபர் 10ம் திகதியிலிருந்து யாழ்நகரின் மீதான ஷெல் தாக்குதல் ஆரம்பமான தோடு இறந்தோர், காயமுற்றோரின் எணணிக்கையும் அதிகரித்துக்கொண்டே சென்றது. அக்டோபர் 13ம் திகதி என்ன காரணத்திற்கோ தெரியவில்லை, பொம்மை வெளியில் சிறுசிறு குடிசைகளைக் கொண்டமைந்திருந்த முஸ்லிம் கிராமம் குண்டுவீச்சுக்கு இலக்கானது. இந்தியர்கள் உணர்மையாகவே கொடுரமான செயல் புரியக் கூடியவர்கள் என்று யாருமே எண்ணிப்பார்த்திராததால் மக்கள் உடனடியாகக் கிராமத்தை விட்டுவிட்டு வெளியேறும் நிலையில் இருக்கவில்லை. 20ம் திகதிக்குள் யாழ் நகருக்குள்ளும் பிரதான வீதிக்கருகிலும் குடியிருந்தோர் பலரும் நல்லூர், சுண்டுக்குளி முதலிய இடங்களுக்கும் அல்லது சென்ட்பெற்றிக்ஸ் கல்லூரி, அடைக்கல மாதா தேவாலயம், கொன்வென்ட் மகளிர் பாடசாலை, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, ஜோன் பொஸ்கோ பாடசாலை, சென்.ஜோன்ஸ் கல்லூரி முதலிய இடங்களில் இருந்த அகதிகள் முகாம்களுக்கும் சென்றுவிட்டனர். (யாழ்நகர், கண்டுக்குளியின் வரைபடத்தைப் பின்னிணைப்பில் காண்க) சுண்டுக்குளியிலிருக்கும் யாழ் கச்சேரி ஆங்கிலேயக் காலனிக்காலத்திலிருந்தே

303 யாழ்ப்பாணத்தின் நிர்வாக ஸ்தலமாக இயங்கி வந்திருக்கிறது. இந்திய மாவட்ட ஆட்சியாளருக்கு இணையான இலங்கையின் அரசாங்க அதிபர் வாசம் செய்யும் ரெஸிடெனி ஸியும் பழைய பூங்காவும் இப்பொழுது விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் இடமாகி விட்டிருந்தது. விடுதலைப்புலிகள் பழைய பூங்காவை பயிற்சிக்களமாகவும் இயக்கத்திற்குப் புதிதாக வந்துசேரக் கூடியவர்களுக்குத் தங்கள் பயிற்சியையும் திறமையையும் காண்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு இடமாகவும் பாவித்தனர். ஆகவே முன்னேறி வரும் இந்தியத்துருப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் முதல் இலக்கு கச்சேரியாகவே இருந்தது. பழைய பூங்காவின் எல்லையைத் தொட்டுக்கொண்டு கண்டுக்குளி மகளிர் கல்லூரியும் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் யாழ்ப்பாணத்தின் வசதிமிக்க குடியிருப்புப் பகுதியும் அமைந்திருந்தன.
அக்டோபர் 20ம் திகதி அளவில் இந்திய இராணுவம் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கச்சேரியிலிருந்து முக்கால் மைல் தொலைவில் கண்டி வீதியிலிருந்த இலங்கை பெந்தே கொஸ்தல் மிஸன் வரை முன்னேறி விட்டிருந்தது. அன்றுமாலை சற்று நேரங்கழிய சுண்டுக்குளி பெருத்த ஷெல் தாக்குதலுக்குள்ளானது. அண்றைய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பின்வருவோர் அடங்குவர்.
1. கெனன் சோமசுந்தரம் அவெனியூவைச் சேர்ந்த திருமதி தம்பிராஜா என்ற பாட்டி
2. செல்வி அந்தோனிப்பிள்ளை என்ற பயிற்றப்பட்ட நர்ஸரி ஆசிரியை 3. ஸ்வார்ட்ஸ் ஒழுங்கையில் மரணமான 3ம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஒரு அகதி. இன்னொரு பெண்மணி கதவைத் திறந்தபோது ஷெல் வெடித்து இறந்து போனார். பெரும்பாலான ஷெல் அடிகள் சிறு பீரங்கிகளின் ஷெல்களாக அமைய, இரவு 730 மணியளவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் ஒரு வகுப்பறைக்கு எதிரே விழுந்த ஷெல் மிகவும் கனதியானதாகும். பாடசாலை முழுவதும் அகதிகள் நிரம்பி வழிந்தனர். இந்த ஷெல் வெடித்ததில் ஆறுபேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமுற்றனர். இறந்தவர்களில் 70 வயதான எஸ்.என்.கந்தையா என்ற சமாதான நீதவான், கச்சேரி கிழக்கு ஒழுங்கையைச் சேர்ந்த இளைப்பாறிய ஒரு பாடசாலை அதிபர், ஸ்டான்லி கல்லூரியில் மூத்த ஆசிரியராக இருந்த அவருடைய 46 வயது மகன் என்.கே.தர்மலிங்கம் மற்றும் திருமதி ராஜரட்னத்தின் மகளும் பேத்தியும் உள்ளடங்குவர்.
அதே இரவு சென்.ஜோன்ஸ் கல்லூரியும் பலத்த ஷெல் அடிக்குள்ளான போதும் அங்கு யாரும் இறக்கவோ காயப்படவோ இல்லை. சென்.ஜோன்ஸ் தேவாலயத்தின் சவக்காலையில் ஷெல் அடிக்கு இலக்கான கல்லறைகளுக்கும் வீழ்ந்து சரிந்து கிடக்கும் தேவதைகளின் சிலைகளுக்கும் நடுவில் நின்று பார்த்தால் கல்லூரியின் கூரையில் விழுந்துள்ள குறைந்தது ஐந்து ஷெல் துளைகளையாவது ஒருவர் எண்ணிப்பார்த்துவிட முடியும். ஷெல் அடிக்குப்பிறகு பலர் பீதியுற்று இந்த அகதி முகாம்களை விட்டு வெளியேறிச் சென்று விட்டார்கள். 21ம் திகதி சுண்டுக்குளியில் அனைவரும் என்ன செய்வதென்றறியாத பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். தாங்கள் முகாம்களில் தொடர்ந்தும் தங்கவேண்டுமா என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள் மக்கள். இல்லையானால் தாங்கள் வேறு இடங்களுக்குப் போவதானால்

Page 170
304
அதற்குப் போக்குவரத்து வசதி கிடைக்குமா என்றும் நல்லூருக்கா, சாவகச்சேரிக்கா, கொழும்பிற்கா எங்கு போவது என்றும் அவர்கள் யோசனையில் இருந்தார்கள். எனினும் பலர் தொடர்ந்து முகாம்களிலேயே இருந்தனர். அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி 21ம் திகதிதான் கடைசியாக விடுதலைப்புலிகளைக் கச்சேரியில் பார்த்தது என்று கூறினார்.
இந்நேரத்தில் அனைத்துமே வெகுதுரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபடியால் ஐந்து பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுகூட சனங்களுக்குத் தெரியாது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் என்ன நடந்தது என்ற தகவல் இரண்டு மைல் தள்ளியிருந்த சென்.ஜேம்ஸ் தேவாலய அகதி முகாமிலிருந்தவர்களுக்கு சிறிதுசிறிதாய்ப் போய்ச் சேர்ந்தது. சென்.ஜோன்ஸ் கல்லூரியின் உயர்படிவத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரனும் நல்ல தோற்றப் பொலிவும் கொண்ட லால் சாமுவேல் கணிடுக்குளி மகளிர் கல்லூரியில் என்ன நடந்தது என்றறிந்து கொள்ளத் தனது சைக்கிளில் ஒருவருக்கும் சொல்லாமல் கண்டுக்குளியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நல்லூரிலிருந்து மாம்பழச்சந்தி வீதி, அரியாலைக்கூடாக அவர் போயிருக்கிறார். இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரியாலை உள்ளது என்ற விஷயம் அவருக்குத் தெரியாது. புங்கன்குளத்தில் தமிழ் பேசும் இராணுவவீரர்கள் சிலர் லாலைத் தடுத்து நிறுத்தி, "தம்பி, எங்கே போகிறீர்?" என்று ‘கேட்டனர். அந்த நேரத்தில் அவ்விராணுவவீரர்கள் பெருமளவு இறுக்கம் தளர்ந்த நிலையில் காணப்பட்டனர். அவரை முகாமிற்கு அழைத்துச் சென்ற அவர்கள் அவர் கூறிய விளக்கத்தையும் ஏற்றுக் கொண்டவர்களாகவே தெரிந்தனர். உடனடியாக லாலை நல்லூருக்குத் திரும்பிச் சென்று விடும்படி அவர்கள் அவருக்கு அறிவுறுத்தினர். இத்தகைய சில நிகழ்வுகளின் மூலந்தான் வெளியில் என்ன நடக்கிறது என்று சனங்களுக்கு ஓரளவாவது தெரியவந்தது.
21ம் திகதி 11 மணிக்கு யாழ்நகரம் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. யாழ்நகரையும் யாழ் மருத்துவமனையையும் தம்வசப்படுத்தும் நடவடிக்கையில் இந்திய இராணுவம் இறங்கியிருந்தது. யாழ் மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவங்கள் அடுத்துத்தனியே விபரிக்கப்பட்டுள்ளது. அன்று பின்னேரம் நாவலர் வீதியிலிருந்த நாவலர் மண்டப அகதிகள் முகாமின் மீதும் சென்பெற்றிக்ஸ் கல்லூரி அகதி முகாமின் மீதும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. நாவலர் மண்டப அகதி முகாமில் நால்வர் பலியானார்கள். சென்பெற்றிக்ஸ் பழைய கட்டிடத்தில் அமைந்திருந்த அகதி முகாமின் மீது பிற்பகல் 3 ம்ணிக்கு ஷெல் விழுந்ததில் காயமுற்றவர்களில் வைஜயந்தியும் ஷாமளா பஸ்தியாம்பிள்ளையும் அடங்குவர். இந்திய இராணுவம் வந்து சேரும்போது வீட்டில் இருப்பதை விட அகதிகள் முகாமில் இருப்பதே நல்லது என்ற யோசனையில்தான் அவர்கள் தங்கள் பெற்றோருடன் அங்கு அடைக்கலம் புகுந்திருந்தனர். காயமுற்ற வேறும் சிலருடன் அந்த இரண்டு பெண்களும் வெள்ளைக்கொடியைத் தாங்கிய வேன் ஒன்றில் யாழ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அச்சமயம் சென்பெற்றிக்ஸ் அகதி முகாமிலிருந்த ஆசிரியர் ஒருவர் ஷெல் அடித்ததில் ஆறுபேர் மரணமடைந்ததாய்த் தான்

305
அறியவந்ததாகத் தெரிவித்தார். தேவாலய வாயிலில் மூன்று சடலங்கள் கிடத்தப்பட்டிருந்ததை அவர் தன் கண்ணாலேயே பார்த்திருக்கிறார். அவற்றில் ஒன்று ஜோசப் நெப்போலியன் என்ற பையனுடையது. பாடசாலைக்கடுத்திருந்த தங்கள் வீட்டில் ஷெல் விழுந்து தனது சகோதரி பெருங்காயமுற்றிருக்கிறார் என்று சென்பெற்றிக்ஸ் அகதிமுகாமில் தங்கியிருந்த ஜோசப் மேர்வின் என்ற இன்னுமொரு பையன் கேள்விப்பட்டான். குறிப்பிட்ட அதே இடத்தில் மேலும் ஷெல் விழக்கூடும் என்பதால் சிறிது நேரம் காத்திருந்துவிட்டுப் பின்னர் போய்ப்பார்க்கும்படி மற்றவர்கள் ஆலோசனை கூறியதையும் மீறி அவன் தனது வீடு நோக்கி விரைந்தான். மேர்வின் வீட்டை அடைந்த சமயத்தில் இரண்டாவது ஷெல் அங்கே விழுந்ததில் மேர்வினுக்கும் அவருடைய மற்ற சகோதரிக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. மேர்வினையும் அவரது இரண்டு சகோதரிகளையும் வேறு காயமுற்ற எழுவரையும் ஏற்றிக்கொண்டு முதல் வேன் மருத்துவமனைக்குச் சென்று 5 நிமிடங்களின் பின் விக்டர் என்ற சாரதித்தொண்டர் இரண்டாவது வேனைச் செலுத்திச் சென்றார். அவற்றில் முதலாவது வேன் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டது என்றும் விக்டர் ஒட்டிச்சென்ற வாகனத்தில் இருந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு அந்த வேனும் எரிக்கப்பட்டு விட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. எதிர் நோக்கியிருக்கும் அபாயம் தெரிந்தே சக உயிர்களைக் காப்பதற்காகத்தன் உயிரையே இழந்த விக்டர் அதியுன்னத கருணையாளனாகிறார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே காயங்களின் காரணமாக வைஜயந்தி பஸ்தியாம்பிள்ளை மரணமானார். 21ம் திகதி மாலை பேரவலத்தின் விலையில் இந்திய இராணுவம் யாழ் மருத்துவமனையைத் தன் வசமாக்கியது. 22ம் திகதி காலை 6 மணியளவில் அங்குள்ள நிலவரம் என்னவென்று தெரியாமல் யாழ் மருத்துவமனைக்குச் சென்றிருந்த திரு பஸ்தியாம்பிள்ளையும் அவரது மனைவியும் திரும்பவேயில்லை. பின்னர் ஒரு வாரங்கழித்து ஆஸ்பத்திரி வளவிற்குள் அவர்கள் சென்றிருந்த சைக்கிள் கைப்பிடியில் குண்டு பாய்ந்த அடையாளத்தோடு விழுந்து கிடந்ததை அவர்களின் மகன் அடையாளங்கணிடார்.
21ம் திகதி மருத்துவமனைக்கு வெளியே கொல்லப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தையே தன் சொந்தவீடாகக் கொண்டிருந்த பெயர் பெற்ற மெக்கானிக்கான ஜோர்ஜ் என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும் ஒருவராவார்.
மேஜர் சுகுமார், மேஜர் கோபாலன் ஆகிய இருவரின் தலைமையில் இந்திய இராணுவம் அதிகாலையில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியையும் சென்.ஜோன்ஸ் கல்லூரியையும் சென்றடைந்தன. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி வளவு முழுதும் பெண்களாலும் குழந்தைகளாலும் நிரம்பி வழிவதைக்கண்டு மேஜர் சுகுமாரும் அவரது படையினரும் ஆச்சரியப்பட்டுப் போனதாயும் பின் சனங்கள் தூக்கங்கலைந்து விழித்தெழும்வரை அவர்கள் காத்துக் கொண்டு நின்றதாகவும் கணிடுக்குளி மகளிர் கல்லூரியிலிருந்த பலர் தெரிவித்தனர். பின் பள்ளி நிர்வாகிகள் அவர்களைக் கூட்டிச்சென்று பள்ளிக்கூடம் முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். விடுதலைப்புலிகளின் முகாம்களை எதிர்பார்த்துத்தான் தாங்கள் அங்கு வந்ததாகவும் அகதிகளை அல்ல என்றும் பின்னர் சுகுமாரும் கோபாலனும் அவ்வூர்ச் சனங்களிடம் கூறியிருக்கிறார்கள்.

Page 171
306
வித்தியாசமான மூன்று நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து சென்.ஜோன்ஸ் கல்லூரியும் அதன் சக பெண்கள் கல்லூரியும் உண்மையில் விடுதலைப்புலிகளின் பிரதான முகாம்கள் என்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருந்தமையால் தான் தாங்கள் இந்த இடங்களில் ஷெல் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். அக்டோபர் தாக்குதலுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை நின்றிருந்த இரண்டு மாத காலத்தில் அவர்கள் கட்டி எழுப்பியிருந்த உளவுத்துறையின் தகவல் திரட்டும் தரத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு மாதகாலத்திலும் உள்ளூர்ச் சனங்களிடம் குறைந்தபட்ச அடிப்படையான தொடர்புறவு கொண்டிருந்தால்கூட இந்தத் துயரத்தைத் தவிர்த்துக் கொண்டிருக்க முடியும்.
பல கணிடுக் குளி வாசிகள் சுகுமாரையும் கோபாலனையும் நம்புபவர்களாயிருக்கிறார்கள். வேண்டுமென்றே இந்திய அமைதிப்படைக்கு தவறான, விஷமத்தனமான பொய்த்தகவல் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கருதுகிறார்கள். 1985ல் தங்கள் கல்லூரி அதிபர் படுகொலை செய்யப்பட்டபின் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் மூத்த மாணவர்கள் விடுதலைப்புலிகளிடம் பெரும் விரோதம் பாராட்டாவிட்டாலும் அவர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் ஏனோதானோவென்று ஒதுங்கியிருந்ததும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த நாவலர் மணிடபம், ஜோன் பொஸ்கோ, சென்.பெற்றிக்ஸ் ஆகிய பல பெயர்பெற்ற 'அகதிமுகாம்களும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகின என்பதையும் நாம் மனதிற் கொள்ளவேண்டும். இதனைவிட வேறு ஏதேனும் காரணம் இருக்கமுடியுமா என்பது உடனடி ஊகத்திற்கு உரிய விஷயமல்ல. எனினும் ஓரிரு ஊகங்கள் உலவி வருகின்றன. பொதுமக்கள் கொல்லப்படுவதையோ, காயமுறுவதையோ எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்குக் குறைக்க வேண்டும் என்பதில் விடுதலைப்புலிகள் ஒரு சிறிது அக்கறையையும் காட்டவில்லை. மேலே விபரிக்கப்பட்ட பல நிகழ்ச்சிகள் இதனை நன்கு சுட்டிக்காட்டுகின்றன. ஒருமுறை ஒரு முக்கியஸ்தரின் வீட்டில் வெடிக்காத ஷெல் ஒன்றை வலுவிழக்கச் செய்வதற்காக கப்டன் வேணுகோபால் சென்றிருந்தபோது அந்த ஷெல் இந்திய இராணுவம் பாவிக்கும் ரகத்தைச் சேர்ந்ததல்ல என்று அவருக்குச் சுட்டிக்காட்டியதாக வேணுகோபால் கூறுகிறார். நிலவும் சூழலில் கெப்டன் வேணுகோபால் சொல்வதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடிக்கப்பட்ட ஒவ்வொரு ஷெல்லும் இந்தியப்படையினுடையது தான் என்று நாம் கருதிக்கொள்ளக்கூடாது என்ற தோரணையில் தான் அவர் இந்த மாதிரிச் சொல்லியிருக்கக்கூடும் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். ஆனால் அவரே கூட இதனை ஒரு விதிவிலக்கான சம்பவமாகவும் கருதுகிறார்.
21ம் திகதி இரவு மீண்டும் கண்டுக்குளி பலத்த ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. இதனால் பல சுண்டுக்குளி வாசிகள் 22ம் திகதி அதிகாலையிலேயே நல்லூரை நோக்கி விரைய முற்பட்டனர். அவர்களில் பலர் அப்போது தான் கச்சேரியடிக்கு வந்து சேர்ந்திருந்த இந்திய இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பின்வருவோர் அடங்குவர்:

307 1. ஜேம்ஸ் கணபதிப்பிள்ளை என்ற 19 வயதான சங்கக்கடை ஊழியர் 2. அலெக்ஸாண்டர் என்ற முன்னாள் ஏர் சிலோன் ஊழியர் 3. மோட்டார் சைக்கிளில் ஸ்டான்லி கல்லூரி அகதி முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த பழைய பூங்கா வீதியிலிருந்த சீன உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இரண்டு சமையற்காரர்கள்.
திரு ஞானமாணிக்கம் ஜெயந்தன் என்ற கச்சேரி லேனைச் சேர்ந்த வர்த்தகத்துறை ஊழியரொருவர் தனது சகோதரியுடன் வீட்டை விட்டு வெளியேற முற்படுகையில் கடப்பட்டதில் காயமுற்றார்.
எண்பது வயதைத் தாண்டிய திரு லெஸ்லி சாமுவல் என்ற முதியவர் கண்டிவீதியை நோக்கி பேரின்பநாயகம் ஒழுங்கை வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சுடப்பட்டதில் காயமடைந்தார். மறுநாள் அவருடைய உடல் கணிடெடுக்கப்பட்ட போது சுடப்பட்ட பின் பல மணிநேரமாக இரத்தம் பெருகி ஓடிக் கொண்டிருந்தமையால்தான் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் கச்சேரி கிழக்கு லேனை அவர் கடக்க முற்படும் போதுதான் கச்சேரியிலிருந்த இராணுவவீரர்களால் சுடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஊகிக்க கூடியதாக இருந்தது. ஆழ்ந்த இறைபக்தியும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்குத் தொண்டு செய்வதுமே அவருடைய வாழ்வின் ஆதாரசுருதியாக இருந்தது. 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் நிகழ்ந்த இனக்கலவரங்களின் போது சாவின் விளிம்பிற்குச் சென்று தப்பியவர் அவர். தான் வன்முறையை ஒருபோதுமே நாடாததால்தான் கடவுள் தன்னைக் காத்து வருகிறார் என்ற நம்பிக்கையில் திடங்கொண்டிருந்த அவர் அக்காரணத்தால் போராளிகளை ஆதரிக்க மறுத்திருந்தார். வசதி இல்லாத பிள்ளைகளுக்கு அவர் யாழ்ப்பாணத்தில் இலவசமாகப் போய்ப் பௌதிகவியலில் பாடங்கற்பித்து வந்தார். உதவி வேண்டி நின்றோருக்கெல்லாம் ஒத்தாசை புரிவதிலேயே அவருடைய பொழுதுகள் கழிந்தன. குழந்தைகளில் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களில் சிலருக்குச் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சில குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டுவிட்டும் வருவார். அக்டோபர் 10ம் திகதி யுத்தம் வெடித்தபோது அப்பிரச்சினையினி போது வெளியில் போய் வந்து கொள்ள முடியாதவர்களுக்காக எல்லாம் தேவைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உதவிகள் புரிந்தார். அவர் சுடப்பட்ட அந்தக்கணத்தில் கூட அவர் இத்தகைய நற்பணியொன்றில் தான் ஈடுபட்டிருந்தார்.
அக்டோபர் 21ம் திகதி பிற்பகல், ஆளப்பத்திரிவீதியில் குடியிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுப் பெரும் பீதிக்குள்ளானார்கள். வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில், அவர்களில் ஒருவர் ஜாக்கிரதையாக வீட்டு வாசலுக்குச் சென்று ஆளப்பத்திரி வீதியை மெதுவாய் நோட்டமிட்டார். இது நடந்தபோது மாலை 4 மணி இருக்கும். இராணுவவீரர்களின் ஒரு அணியினர் வீதியைக் கடந்து மருத்துவமனையில் புறநோயாளர் பகுதி அமைந்திருக்கும் கட்டிடத்தை நோக்கி ஓடிச்செல்வதைப் பார்த்திருக்கிறார். துப்பாக்கிச் சத்தம் அப்போதும் கேட்டவணிணமிருந்தது. C.L.S. புத்தகக் கடைக்கருகில் நடந்து கொண்டிருப்பதை அவதானித்தவாறு ஒரு அதிகாரி நின்று கொண்டிருக்கக்

Page 172
308
காணப்பட்டார். அவர் இடுப்பில் தரித்திருந்த கைத்துப்பாக்கி அவர் கேர்ணல் அல்லது அதற்கு மேற்பட்ட பதவிவகிப்பவராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது. (மேஜர் பதவி வரை பீல்டு அதிகாரிகள் தங்களின் தனி சொந்த ஆயுதங்களாக சப் மெஷின் துப்பாக்கிகளையே கொண்டிருந்தனர்) அந்த அதிகாரி நின்று கொண்டிருந்த தோரணையுங் கூட அந்தச்சமயத்தில் மருத்துவமனைக்குள்ளிலிருந்து இராணுவத்தை நோக்கி எந்தச் சூடும் நீகழ்த்தப்படவில்லை என்பதையே புலப்படுத்தியது. இவ்வளவோடு அந்த ஆஸ்பத்திரி வீதிவாசி விரைந்து தன் வீட்டுக்குள் போய் விட்டார்.
1986 இலங்கை இராணுவம் லொக்வுட் இல்லத்தின் மீது ஷெல் அடித்ததையடுத்து சென்பீட்டர்ஸ் மெதடிஸ்ட் திருச்சபையினைச் சேர்ந்த வண.கோவிந்தராஜனும் அவரது குடும்பமும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த வேம்பஸ்தானுக்குக் குடிபெயர்ந்திருந்தார்கள். 22ம் திகதி காலை 6 மணிக்கு ஆஸ்பத்திரி வீதியின் இரு கரையிலும் இராணுவவீரர்கள் துப்பாக்கிகளைத் தயார்நிலையில் வைத்தபடி சிலர் படுத்துக்கிடந்த வணிணமும் சிலர் நின்றவண்ணமுமாய் இருப்பதை வண.கோவிந்தராஜன் பார்த்தார். அவரது வீட்டை நோக்கிக் குறிவைத்தபடி இரண்டு இராணுவவீரர்கள் அவரது கேற்றின் அருகில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நிலையில் நிதானத்தை இழக்காமல் இராணுவத்திடம் சரணடைந்து விடுவதே நல்லது என்று அவர் நினைத்தார். வண.கோவிந்தராஜன் கைகளை மேலே உயர்த்திய வண்ணமும் அவரது மனைவி குழந்தையை ஏந்தியவாறும் அவரது குடும்பம் இராணுவத்தை நோக்கி நடந்தது. ஒரு இராணுவவீரன் சுடும் நோக்கில் தனது துப்பாக்கியை உயர்த்தினான். ஆனால் இன்னொரு படைவீரன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அவர்கள் வீதியை அணுகியதும் மற்ற இராணுவவீரர்களும் அவர்களை நோக்கி வந்தனர். அவரோடு முரட்டுத்தனமாய்ப் பேசியபடி அவரைத் தொடர்ந்து அடித்தார்கள். அந்தப் படைவீரர்களுக்கு தமிழோ எதுவும் தெரியாது, ஆங்கிலமும் மிகக் கொஞ்சமே தெரியும் என்ற நிலையில் அவர்களுக்கு எதையுமே அவரால் சொல்லி விளங்கப்படுத்திட் புரிய வைக்க முடியவில்லை. சில யார் தூரம் தள்ளி ஆஸ்பத்திரி வீதியில் தனது அயலவர்களான பஹாய் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் சிலரை அவர்கள் விசாரித்துக் கொண்டிருப்பதை அவர் அவதானித்தார். அந்த இராணுவீரர்களில் சிலர் பஞ்சாபி மொழி பேசுபவர்களாக இருந்ததால் பஹாய் முஸ்லிம்கள் அவர்களுக்குத் தங்களை விளங்கப்படுத்திச் சொல்லக்கூடியதாக இருந்தது. பின் கோவிந்தராஜன் குடும்பம் அந்த முஸ்லிம் ஆண்களின் குழுவோடு பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மறுநாள் அதிகாலையில் ஆஸ்பத்திரி வீதியால் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் சுடப்படுவதை அப்பகுதியில் வசித்த மக்கள் கேட்டனர். ஆஸ்பத்திரிவீதியில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் தங்களுக்கு வடக்கு நோக்கி ஆளப்பத்திரி நுழைவாயிலுக்கருகில் ஒரு ஆஸ்டின் 40 கார் நிற்பதைப் பார்த்தார்கள். ஆஸ்பத்திரி வீதி மணிக்கூட்டு சந்தியில் மகாத்மா காந்தி சிலைக்குச் சற்றுத்தள்ளி நின்று கொண்டிருந்த வேனிற்குள் மனித சடலங்கள் காணப்பட்டன. காகங்கள் உள்ளே கொத்திக்

309
கொண்டிருந்ததிலிருந்து உள்ளிருந்தவர்கள் இறந்து போயிருக்கவேண்டும் என்று அவர்கள் ஊகித்தனர். முதல்நாள் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு செனயற்றிக்ஸ் அகதி முகாமிலிருந்து புறப்பட்ட இரண்டாவது வேன் இது என்று நாம் கருதுவதற்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றன. ஆஸ்டின் 40 கார் சேர் வைத்தியலிங்கம் துரைசாமியின் புதல்வர்களான ராஜேந்திரா, மகேந்திரா ஆகியோருக்குச் சொந்தமானதாயிருக்க வேண்டும். இவர்கள் இருவரும் பின்னர் மருத்துவமனைக்குள் கொல்லப்பட்டு விட்டனர். மேலும் வீதியில் குறைந்தது ஐந்து சடலங்களும் சைக்கிள்களும் கிடக்கக் காணப்பட்டது. இந்தக் கட்டத்தில் இராணுவம் ஆஸ்பத்திரி வீதியிலிருந்து பருத்தித்துறைச் சந்தியின் கிழக்குப் பகுதிப்பக்கம் போயிருக்கவில்லை. திரு பஸ்தியாம்பிள்ளையும் அவர் மனைவியும் ஆளப்பத்திரி வீதியில் நின்று கொண்டிருந்த இராணுவவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்களுடைய சடலங்கள் எரிக்கப்பட்டபோது அவர்கள் வந்திருந்த சைக்கிளை ஆஸ்பத்திரி வளவிற்குள் தூக்கி எறிந்திருக்க வேண்டும் என்றும் ஊகித்துக் கொள்ளலாம். 21ம் திகதி மாலை 4 மணியிலிருந்து அந்தப் பகுதியில் எங்குமே எதிர்த்தாக்குதல் என்பது நடக்கவே இல்லை என்று பொதுமக்கள் அனைவரும் தீர்மானமாகத் தெரிவிக்கிறார்கள். 22ம் திகதி காலையில் முன்னர் மருத்துவமனையில் நடந்ததைப் போலவே ஆயுதந் தாங்கிய எதிரி எல்லா இடங்களிலும் திரிவதைப் போல் ஆஸ்பத்திரி வீதி வழியால் போய்க் கொண்டிருந்த வயதானவர்களைக் கூட இராணுவம் கட்டுத்தள்ளிக் கொணி டிருந்தது. மருத்துவமனைக்குள் உயிர் தப்பியிருந்தவர்கள் தெரிவித்த சாட்சியங்களின் படி, அங்குள்ள நிலைமை என்ன என்று கணிடறிய குறிப்பிடத்தக்க உயர் பதவியில் உள்ள யாராவது மருத்துவமனைக்குள் சென்று பார்த்தார்கள் என்றால் அது 22ம் திகதி காலையில் விஜயம் செய்த கெப்டன் டாக்டர் சித்தத் டே தான் என்று தெரிகிறது. CLS. புத்தகசாலைக்கு அருகில் ஆஸ்பத்திரியைப்பார்த்த வண்ணமிருந்த கட்டிடங்களில் மிகுதி அதிகாரிகள் தங்கியிருக்க, சுற்றிவர கொலைகள் நடந்த வணிணமாயிருந்தன. குறிப்பாக மத்தியதர மக்கள் அதிகாரிகளிடம் பேசி விட்டுத் திரும்பும் போது அதிகாரிகள் நாகரிகமாகத்தான் நடந்து கொள்கிறார்கள், ஆனால் ஜவான்கள் மிருகத்தனமாக நடந்து கொள்வதைப் பற்றி ஒன்றும் செய்துகொள்ள முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்ற மனப்பதிவோடு தான் வருகிறார்கள். கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு பார்க்கும்போது தங்களைச் சுற்றி நடப்பவற்றைப்பற்றி அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் பயத்தினாலோ அக்கறையின்மையினாலோ அவற்றைத் தடுக்க ஏதும் செய்ய முற்படாமல் அவர்கள் மெளனமாக இருந்த சமயங்களில் இது ஒன்று எனத் தெரிகிறது. 22ம் திகதி காலை 10 மணிக்கு பள்ளிவாசலில் இருந்தவர்களிடம் வேம்பஸ்தானுக்குப் பக்கத்தில் வசித்துவந்த டாக்டர் சபாரட்னத்தின் மைத்துனி சுட்டுக் கொல்லப்பட்டு விட்ட தகவலைத் தெரிவிக்க ஒரு அதிகாரி வந்தார். இராணுவவீரர்கள் வீடுகளைச் சோதனையிடும்போது அப்பாவி மக்கள் இதேபோல் இன்னும் அதிகமாகக் கொல்லப்படக்கூடும் என்று பயந்தோ என்னவோ மேஜர் குப்தா என்பவரும் அவரோடு வயதான இன்னொரு

Page 173
30
கெப்டனும் வீடுகளுக்குள் இருக்கும் மக்களை வெளியே அழைப்பதற்குதவியாகத் தங்களோடு வருமாறு வணகோவிந்தராஜனைக் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே அவர்கள் அழைக்கப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களில் சிலர் பள்ளிவாசலில் வந்து தங்கவும் செய்தனர். அதற்கு முந்தைய தினம் 21ம் திகதி இரண்டு முஸ்லிம் பையன்கள் பள்ளிவாசலுக்கு
முன் ஷெல் வெடித்ததில் மரணமுற்றனர்.
22ம் திகதி காலையில் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கேர்ணல் ப்ராஹற் அங்கிருந்த கோவிந்தராஜனை அடையாளங் கண்டு கொண்டார். சமாதான உடன படிக்கை கீ குப் பிறகு அவருக்கு கோவிந்த ராஜனி பரிச்சயமாயிருந்திருக்கிறார். பின் அவர் வேறும் சில அதிகாரிகளை வண.கோவிந்தராஜனுக்கு அறிமுகஞ்செய்து வைத்தார். அந்த அதிகாரிகளில் ப்ராஹின் சமகாலத்தில் அவரோடு இராணுவத்தில் சேர்ந்த கேர்னல் சட்டர்ஜியும் மேஜர் கோவிந்சிங்கும் அடங்குவர். அன்று மாலை, தாங்கள் உணவோ வேறு எந்த உடைமைகளோ எடுத்துக்கொண்டு வராமல் வந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கியதால் இராணுவப் பாதுகாப்போடு வீட்டிற்குப் போய்வர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வண.கோவிந்தராஜன் அவரது வீட்டிற்குள் சென்றிருந்தபோது ஒரு இராணுவவீரன் அவரிடம் வந்து அடுத்த வீட்டில் இறந்துபோன பெண்மணியின் மகன் அவரைக் கூப்பிடுவதாகத் தெரிவித்தான். வண.கோவிந்தராஜன் அங்கே செல்ல முயன்ற போது ஒரு இராணுவத்தடியன் அச்சுறுத்தும் பாங்கில் அவரைப் பல அடிகள் பின்னால் பிடித்துத்தள்ளி விட்டான். அப்போது வளவில் நின்று கொண்டிருக்கும் மேஜர் ஒருவர் அந்தப்படைவீரனை அப்படிச் செய்ய வேண்டாமென்று சைகை காட்டுவதை அவர் கடைக்கண்ணால் அவதானிக்க முடிந்தது. ஆனால் அந்த முரட்டுத்தனத்திற்காக அவரிடம் மன்னிப்பேதும் கேட்டுக் கொள்ளப்படவில்லை. குழந்தைகளுக்கான சில உடுப்புகளையும் உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொணிட வண.கோவிந்தராஜன் அந்த வளவில் சிலரைச் சந்தித்தார். அவர்களில் கண்ணாடி அணிந்த உயரமான, கூர்மையான நாசியோடு கூடிய மேஜர் ஒருவரும் குள்ளமான தமிழ் நாட்டைச் சேர்ந்த அதிகரி ஒருவரும் இருந்தனர். தமிழ் அதிகாரி அனுதாபங்கொண்டவராக இருப்பார் என்ற எண்ணத்தில் கோவிந்தராஜன் அவரிடம் அங்கு சனங்களெல்லாம் திடுதிப்பென வெளியேற நேர்ந்ததால் இராணுவவீரர்கள் வீடுகளைச் சோதனையிட்டுச் சென்ற பின் திரும்பிப் போய் வீட்டில் பார்க்கையில் தனக்கு நடந்ததைப் போலவே கைக்கடிகாரம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் வீட்டில் காணப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அந்தத் தமிழ்நாட்டு அதிகாரி வழமையான பதிலைச் சொன்னார். அவருடைய ஆட்கள் அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள். அத்தோடு அந்த விஷயம் முடிந்தது. பின் கோவிந்தராஜன் அந்தத் தமிழ் அதிகாரியிடமும் அந்த உயரமான மேஜரிடமும் பருத்தித்துறை வீதிக்குக் கிழக்குப்புறமாய் இன்னும் சனங்கள் தத்தம் வீடுகளில்தான் தங்கியுள்ளனர் என்று தனக்குத் தெரியுமென்றும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால்தான் அவர்களைக் கண்டு கலந்து பேசி இராணுவத்திற்கும் தங்களுக்கும் வசதியான ஏதாவது ஒரு ஒழுங்கைச் செய்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

31 அன்று காலை இராணுவத்திடம் போய் ஆட்களை வெளியே வரச்சொல்லி அழைத்துக்கொணடிருந்த போதுதான் அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது. நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று இராணுவத்திற்குத் தெரியும் என்று சொல்லி அந்த அதிகாரிகள் இவரின் வேண்டுகோளைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை. 22ம் திகதி மேஜர் பாஹீட்டின் தலைமையில் ஒரு இராணுவப் பிரிவு வேம்படி மகளிர் உயர் கல்லூரியில் முகாமிட்டது.
23ம் திகதி அதிகாலையில் பருத்தித்துறை வீதியின் கிழக்கே அடைக்கல மாதா தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றிய இராணுவவீரர்கள் அங்கு குடியிருந்தவர்களை உடனடியாக அடைக்கலமாதா தேவாலயத்திற்குப் போகுமாறு உத்தரவிட்டனர். அவர்களில் பலர் தமது இரவு உடுப்புகளுடன் தானிருந்தனர். எந்தப் பொருளையும் எடுத்துக் கொண்டு போக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சென்பீட்டர்ஸ் லேனில் வசிக்கும் வண.போல்ராஜ் தன்னை சட்டை போட்டுக் கொண்டு போகக்கூட அனுமதி தரவில்லை என்றார். இந்த இராணுவவீரர்கள் ஒன்று ஆஸ்பத்திரிப் பக்கமிருந்தோ அல்லது புகையிரத நிலையப்பக்கத்திலிருந்தோ தான் வந்திருக்க வேண்டும். புகையிரத நிலையம் 22ம் திகதி மாலையிலிருந்து இராணுவத்தார் தங்கும் இடமாகி இருந்தது. வீட்டில் குடியிருந்தவர்கள் வெளியேறிய பின்பு இராணுவம் வீடுகளுக்குள் புகுந்து சோதனை மேற்கொண்டது. அன்று காலை சற்று நேரங்கழித்து அடைக்கல மாதா கோயிலில் இருந்த இராணுவத்திடம் தாங்கள் தேவையான பொருட்கள் எதையும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று மக்கள் முறையிட்டதும் வீட்டிற்குச் சென்று சில அத்தியாவசியப் பொருட்களை எடுத்து வர அவர்களுக்கு சில நிமிஷங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அடைக்கலமாதா தேவாலயத்தைப் பார்த்தபடியிருக்கும் சென்.பீட்டர்ஸ் லேனிலிருந்த தங்கள் வீடுகளை விட்டுவிட்டு அடைக்கல மாதா கோயிலுக்குச் சென்றவர்களில் லங்கா சிமெண்ட் லிமிட்டட் நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரியும் தாரகா தம்பையாவும் ஒருவர். தனது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள நகைகள் அடங்கிய நகைப்பெட்டி பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்த அவர் தங்களின் அவசியப்பொருட்களையும் பெறுமதி மிகுந்த உடைமைப் பொருட்களையும் வீடுகளிலிருந்து எடுத்துக்கொண்டு வர முதலில் புறப்பட்டுப் போனவர்களோடு சேர்ந்து போகவில்லை. அவரது அயல்வீட்டுப் பெண்மணியொருவர் வீட்டிற்குப் போய் விட்டு அடைக்கலமாதா கோயில் முகாமிற்குத் திரும்பி வந்தவர் கனடாவிற்குப் புறப்பட்டுப் போவதற்காகக் குடும்பத்தவர்களுக்கு விமானப்பயணச்சீட்டு வாங்குவதற்கென்று வீட்டில் விட்டுவிட்டு வந்திருந்த 70,000 ரூபாய் பணத்தை அவருடைய வீட்டைச் சோதனையிடச் சென்ற இராணுவவீரர்கள் திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று அதிர்ச்சியோடு தெரிவித்தார். இதைக்கேள்விப்பட்ட தாரகா தானும் தனது வீட்டிற்குப் புறப்பட்டார். பிறகு அவர் முகாமிற்குத் திரும்பி வரவில்லை என்று தெரியவந்தது. அவரது சிநேகிதியும் அயலவருமான திருமதி பிளஞ்சார்ட் அடைக் கலமாதா கோயிலுக்குப் பொறுப்பான வண.பிதா பிலிப் பொன்னையாவுடன் தாரகாவைத் தேடிப்பார்த்து வரப்புறப்பட்டார். ஆஸ்பத்திரி

Page 174
312
வீதியில் சென்.பீட்டர்ஸ் லேன் முனையில் வயதான வணயிதா பொன்னையா வெள்ளைக்கொடியை ஏந்திக்கொண்டு நிற்க, திருமதி பிளஞ்சார்ட் தாரகா என்று அழைத்தவாறே உள்ளே சென்றார். தலையில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் தாரகாவின் சடலம் அவரது வீட்டின் பின்புறத்திலிருந்த கிணற்றடிக்குப் பக்கத்தில் கிடக்கக் காணப்பட்டது. அவருடைய நகைப்பெட்டியைக் காணவில்லை. சில இந்திய அதிகாரிகள் முன்பொருமுறை குறிப்பிட்டது போல் நிலைமையை எப்படிச் சமாளிப்பதென்று அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இந்தச் சம்பவம் பற்றி இரண்டு மாதங்களுக்குட் பின் ஒரு அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டபோது வீடுகளுக்குள் நுழைய அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்றும் தான் பொறுப்பேற்றிருந்த போதெல்லாம் இந்த விதி ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா என்பதில் தான் கணிடிப்பாக இருந்ததாகவே பதில் அளித்தார். ஒருவேளை அவர் கூறியது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் இம்மாதிரி ஒருபோதும் நடந்ததில்லை என்பதைச் சனங்கள் நன்கு அறிவர்.
22ம் திகதி காலை நல்லூரில் கிடைத்த தகவல்களின்படி இந்திய இராணுவம் அப்போது கண்டிவீதியில் சிலோன் பெந்தேகொஸ்டல் மிஷன் வரை மட்டுமே முன்னேறியிருப்பதாகத் தெரியவந்தது. அப்போது ஷெல் அடிகள் ஓய்ந்துபோன மாதிரி இருந்ததால் நல்லூரைச் சேர்ந்த இளம் எஞ்சினியர் ஒருவர் கண்டுக்குளியில் கெனன் சோமசுந்தரம் ஒழுங்கை வரை சென்று வயதான தன் மாமனாரையும் சுகவீனமுற்றிருந்த மாமியையும் இன்னும் மற்றவர்களையும் பார்த்து விட்டு வரப்புறப்பட்டார். கெனன் சோமசுந்தரம் அவெனியூவில் இருந்த ரயில்பாதையைக் கடந்தது தான் தாமதம் மேற்கு முகமாய் செல்லும் ஒரு தனியார் சிறுஒழுங்கை முனையில் நின்று கொணடிருந்த இராணுவ வீரனொருவனால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த இராணுவவீரர் ஒழுங்கைக்குள்ளால் நின்று கொண்டிருந்தார். கையின் மேற்புறத்தில் காயம்பட்ட நிலையிலிருந்த இன்னொரு இராணுவவீரர் தரையில் குந்தி உட்கார்ந்தவாறு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த இன்னொரு இராணுவவீரன் பற்களை அகலத் திறந்து காட்டிக் கொன்று விடுவேன் என்ற மாதிரி சைகைகளைக் காட்டினான். காயம் பட்டுக்கிடந்த இராணுவவீரனோ எதையும் அனுசரித்துப் போகும் சாந்தமான மனிதன் போல் தெரிந்தது. அந்த எஞ்சினியருக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதைத்தான் விரும்பவில்லை என்று குறிப்பாலுணர்த்தினான். இன்னொரு இராணுவவீரன் எஞ்சினியரிடத்தில் வந்து தங்கள் அதிகாரியிடம் பேசும்படியும், பேசினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கிசுகிசுத்தான். இது குறித்து உள்ளே தெரிவிக்கப்பட்டு அந்த அதிகாரி வீட்டை விட்டு வெளியில் வந்தார். அந்த அதிகாரியின் கையை ஒரு தோட்டா உராய்ந்து கொண்டு போயிருக்கிறது. அவர் மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. அடிபட்டுக் கிடக்கும் இராணுவ வீரனையும் தனது காயத்தினையும் சுட்டிக்காட்டியவாறு, "உங்களுடைய . நாட்டில் நாங்கள் கிடந்து அனுபவிக்க வேண்டியிருக்கிறது" (உதிர்க்கப்பட்ட வசைச்சொல் நீக்கப்பட்டிருக்கிறது) என்று கூறினார். காயமுற்றவருக்காகத்தான் பெரிதும் வருந்துவதாயும் யார் சுடப்படுவதையும் தான் பார்க்க விரும்பவில்லை எனவும் அந்த எஞ்சினியர் குறிப்பிட்டார். தான் ஏன் அந்த ஒழுங்கைக்கு

313
வந்தேன் என்பதையும் விளங்கப்படுத்தியிருக்கிறார். அவர் உடம்பைச் சோதனையிட்ட பிறகு சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஒடும்படி அவருக்கு கூறப்பட்டது. பின்பு, ஒருமுறை மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் விருந்தினராக இருந்த அவரது மாமனாருடன் அந்த எஞ்சினியர் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தபோது அவருடைய சைக்கிள் விட்ட இடத்திலேயே கிடக்க, அந்த இராணுவ வீரர்கள் மாயமாய் மறைந்திருந்தனர். சிறிதும் தாமதியாமல் அந்த சைக்கிளை அவர் நல்லூருக்குத் திரும்ப எடுத்துக்கொண்டு போய்விட்டார். இராணுவத்தினர் ஒன்றில் புகையிரத நிலையத்தை நோக்கி ரயில் பாதையில் சென்றால் தங்களை அடையாளங்கண்டு கொள்வர் என்று கருதி அதனைத் தவிர்க்க ரயில் பாதைக்குச் சமாந்தரமாக சுவர்களைத் தாண்டிக் குதித்த வண்ணம் புகையிரத நிலையத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கச்சேரிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும் என்று அவர் ஊகித்தார். 22ம் திகதியன்று பெந்தேகொஸ்தல் மிஷனிலிருந்து கணிடிவீதி வழியாகவும் ரயில்வே லைன் வழியாகவும் முழுத்தூரத்தையுங் கடந்து இராணுவம் துரிதமாய் வெகுவாக முன்னேறி வந்திருந்தது. 22ம் திகதி விடுதலைப்புலிகள் இராணுவத்தை எதிர்த்துத்தடுக்க முனைந்தனர் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் பல்வேறு இராணுவப்படைப் பிரிவினரும் ஒருங்கு சேர்ந்து சந்திக்கும் இடமாகப் புகையிரத நிலையமே அமைந்திருக்கிறது என்பதையும் ஊகிக்க முடிகிறது.
இரணிடு வருடங்களாகப் புகையிரதமே இல்லாத நிலைமை தற்காலிகமாகவாவது 1987 ஆகஸ்டில் ஒரு முடிவுக்கு வந்தது. அதுவரை அவ்வாண்டு முழுதும் புகையிரத நிலையம் அகதிகள் முகாமாகவே இயங்கி வந்தது. இச்சமயத்தில்தான் இலங்கை இராணுவத்தின் ஷெல் அடிகளைத் தாங்க முடியாமல் குருநகர் வாசிகளும் சின்னக்கடை வாசிகளும் புகையிரத நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். புகையிரத நிலையத்தின் கொங்ரீற் சுவர்களும் சுரங்கப்பாதையும் ஷெல் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு வழங்கியது. இங்கு தங்கியிருந்த மக்கள் பொதுவில் ஏழைகளாவர். பத்து வாரங்களாக நிலவிய அமைதிக்குப் பிறகு இந்திய இராணுவம் அக்டோபர் 10ம் திகதி ஷெல் அடித்து பிரதான தெருவில் சென்.ஜேம்ஸ் தேவாலயத்திற்கருகில் சனங்களைக் கொன்றும் காயப்படுத்தியுங் கொண்டிருந்தபோது இந்தச் சனங்கள் புகையிரத நிலையத்தில் போய்த் தஞ்சம் புகுந்தது இயல்பே. ஆஸ்பத்திரி வீதியில் வசித்து வந்த திரு செல்வம் என்ற தச்சுத் தொழிலாளி அக்டோபர் 22ம் திகதி காலை தனது குடும்பத்துடன் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த அகதிகளோடு போய்ச் சேர்ந்து கொள்ளச் சென்றிருந்தார். பிற்பகல் 2 மணியைப் போல ஸ்டேசன் வீதி வழியாக நடந்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன், புகையிரத நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். தெற்கே கடனீரேரியாலும் வடக்கே ஆஸ்பத்திரி வீதியாலும் மேற்கே மத்திய கல்லூரியாலும் கிழக்கே சென்.ஜோன்ஸ் கல்லூரியாலும் சூழப்பட்ட பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் பின்வாங்கி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கத் தெரிந்தது. இந்தப் பகுதியும் இந்திய அமைதிப்படையால் துரிதமாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தச்சமயத்தில் புகையிரத நிலையத்தில் 600க்கும் மேற்பட்ட

Page 175
314
அகதிகள் இருந்தனர். புலிகளைக் கணிடதும் பெணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பற்றிச் சனங்கள் அவர்களிடம் மிகுந்த பயdதியில் முறையிட்டனர். "நாங்கள் சாகப் போகிறோம். நீங்கள் என்னவென்றால் உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத்துடிக்கிறீர்கள்" என்று புலிகள் அவர்களுக்குப் பதில் கூறினார்கள். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த மற்றவர்கள் இவர்களோடு திரும்பிக் கதைப்பதில் ஒரு பிரயோசனமுமில்லை என்றுணர்ந்தனர். பின் சனங்கள் மெதுமெதுவாக புகையிரத நிலையத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். இதற்குச் சற்று நேரங்கழித்து புகையிரதத் தண்டவாளம் பருத்தித்துறை வீதியைக் குறுக்கிடும் இடத்தில் நிலக்கணிணி வெடி வெடிக்கும் சப்தம் கேட்டது. இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை மூள, இதைத் தொடர்ந்து புகையிரத நிலையம் ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. புகையிரத நிலையத்திலிருந்த ஜோர்ஜ் என்ற பள்ளிச்சிறுவன் விடுதலைப்புலிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சாமான் பெட்டிகள் உள்ளிட்ட கிடைத்த சகல மறைவிடங்களையும் பயன்படுத்தியவாறு பருத்தித்துறை வீதியில் ரயில் கடவைக் கருகில் நின்றிருந்த இந்தியத்துருப்புகளின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதைக் கவனித்திருக்கிறான். ஒரு ஷெல் பக்கவாட்டில் வந்து பயணச்சீட்டு வழங்கும் அலுவலகத்தில் வந்து விழுந்ததில் ஒரு தாயும் அவரது மகளும் கொல்லப்பட்டனர். அப்போதுதான் தனது ஒரு குழந்தையை அந்த அறையிலிருந்து வெளியே எடுத்திருந்த திரு செல்வம் இதனைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். ரயில் பாதைகளைக் குறுக்கிட்டுச் செல்லும் சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் ஒரு ஷெல் விழுந்ததையும் அவர் அவதானித்தார். சனங்கள் சாதாரணமாகப் பாதுகாப்பாய் தங்கியிருந்த அச்சுரங்கப்பாதையில் பதினைந்து பேர் வரையில் கொல்லப்பட்டோ, காயம்பட்டோ இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் தன்னிடம் சொன்னதாக திரு செல்வம் பின்னர் தெரிவித்தார்.
புகையிரத நிலையத்திற்குப் பின்னால் வசித்து வரும் திரு தாமோதரமும் அவரது மருமகன் திரு ஹரன் ஸ்நெல் என்பவரும் சுவரில் எட்டிப்பார்த்தபோது நீலநிறச் சேலை அணிந்த பெண்மணியொருவர் பழுப்பு நிறக்காற்சட்டை அணிந்திருந்த ஒருவரின் காலில் ஏற்பட்டிருந்த காயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கணிடனர். அவர்களோடு அவர்களுடைய நாயும் இருந்தது. புகையிரத நிலையத்தின் முதலாவது மேடையில் ஒரு ஷெல் விழுந்து வெடித்தது. திரு தாமோதரம் சட்டென்று கீழே தாழ்ந்து குனிந்து கொண்டுவிட்டார். அவர் பின் மீண்டும் தலையை உயர்த்திப் பார்த்தபோது அந்தப் பெண்மணி வயிற்றிலிருந்து இரத்தம் அளவுக்கதிகமாய் பெருகி ஒட அடிபட்டுக் கிடப்பதைக் கண்டார். "குஞ்சு, என்ரை குஞ்சு" என்றபடி அந்தமனிதர் அவளருகாய் குனிந்து கதறிக் கொண்டிருந்தார். அவர்கள் இருந்த இடத்திலிருந்து ஐந்து சடலங்களை அவர்களால் காண முடிந்தது. தொடர்ந்து ஷெல் அடி நடந்து கொண்டிருந்ததால் தங்களால் அங்கிருந்து வெளியேறிக் கொள்ள முடியவில்லை என்று திரு செல்வம் கூறினார். ஒருவழியாக, ஷெல் தாக்குதல்கள் மாலை 5 மணிக்கு நின்றுவிட்ட போது தங்கள் உடைமைகளை எல்லாம் அங்கே போட்டது போட்டபடி விட்டுவிட்டு

315
எல்லாரும் வெளியேறி விட்டார்கள். வழிநெடுகத் தனது மகளைச் சுமந்தபடி திரு செல்வம் குடும்பத்தோடு வீடு திரும்பினார். ஸ்டான்லி வீதி வழியாக புலிகள் வெளியேறிக் கொண்டிருப்பதை ஜோர்ஜ் பார்த்தான். "இந்தப் பெடியளைப் பாருங்கள். எங்களைக் காப்பாற்றத்தான் எண்டு தொடங்கினவையள். ஆனால் ஸ்டேசனிலை அவையள் எங்களுக்குச் சொன்னதை நினைச்சாத் தான்." என்று திருமதி செல்வம் பின்னர் தெரிவித்தார். பின் அக்குடும்பம் பிரதான வீதி வழியே புனித திருக்குடும்ப கொன்வெண்டிற்குச் சென்றது.
திரு மூத்ததம்பி சாமுவேலும் அவரது மனைவியும்-இவர்கள் நாம் முன்னர் குறிப்பிட்ட லெஸ்லி சாமுவேலிலிருந்து வேறானவர்கள்-புகையிரத நிலையத்திற்குப் பின்புறத்தில் ஸ்டான்லி வீதியில் புகையிரதச் சரக்குக் கூடத்திற்கு எதிரில் வசித்து வந்தவர்கள். 89 வயதான திரு சாமுவேல் இளைப் பாறிய மூத்த அரசாங்க அதிகாரியாவார். கல்லோயா அபிவிருத்திச்சபையிலும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 21ம் திகதி அந்தப்பகுதி முழுவதும் பலத்த ஷெல் தாக்குதலுக்கு இலக்கானது. மூன்று ஷெல்கள் சாமுவேலின் வீட்டைத் தாக்கின. ஆனால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்தனர். அவர் கூறுவதைக் கேட்போம்:
"22ம் திகதி காலையில் சற்றே அமைதி நிலவியது. ஆனால் பின்னேரம் பலத்த ஷெல் தாக்குதல்கள் ஆரம்பமாகி விட்டன. புகையிரத நிலையத்தில் அகதிகள் இருக்கிறார்கள் என்று நாங்கள் அறிந்தோம். பாதுகாப்புக்கருதி கூட்ஸ் ஷெட் வழியாக பிற்பகல் 330 மணி அளவில் நாங்களும் அங்கு போய்ச் சேர்ந்தோம். திடுமென பருத்தித்துறை வீதியிலிருந்து ரயில்பாதை வழியாக புகையிரத நிலையத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்த இந்தியத் துருப்புகள் எங்களை நோக்கிச் சரமரியாகச்சுட ஆரம்பித்தன. ஈவிரக்கமில்லாமல் அவர்கள் எல்லாவற்றின் மீதும் சுட்டுத்தள்ளினார்கள். அகதிகள் பயத்தில் அலறிச் சிதறியோடினார்கள். கிட்டத்தட்ட 30லிருந்து 40 சடலங்கள் வரை அந்த இடம் முழுதும் எங்கு பார்த்தாலும், புகையிரத மேடையில் சுரங்கப்பாதைக்கு அருகில் என்று எல்லா இடங்களிலும் சிதறிக்கிடப்பதை நான் கண்டேன். இரண்டு தோட்டாக்கள் என் தலையின் இருமருங்கிலும் விர்ரென்று சீறிப்பாய்ந்து சென்றன. எனது மனைவிக்கு வயிற்றில் அடிபட்டு இரத்தம் பெருகியோடத் தொடங்கியது. அங்கே ஆளப்பத்திரியில்லை. ஒரு உதவியுமில்லை. ஏதோ சிறுநம்பிக்கை மட்டும். எனக்கும் காலில் அடிபட்டு விட்டது. நல்லவேளையாக துப்பாக்கிச்சூடு நின்றுவிட்டது. ஒருவேளை அது கடவுளின் கிருபையாக இருக்கலாம். என் மனைவி விரைவிலேயே முடிந்து போனாாள். இரவாகிக் கொண்டிருந்தது. நான் வீட்டிற்குப் போய் சைக்கிளை எடுத்துக்கொண்டு ரக்கா லேன் வழியாக ஜோன் பொஸ்கோ பள்ளிக்கருகிலிருந்த கொன்வென்ட்டிற்குப் போனேன். அங்கிருந்த சிஸ்டர்மாரை எங்களுக்குத் தெரியும். என்னுடைய மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு வருவதில் எனக்கு உதவ அவர்கள் ஆனமட்டும் முயன்றார்கள். ஆனால் எப்படி முயற்சித்துப் பார்த்தும் அன்றிரவு கொண்டு வர எங்களால் முடியவில்லை. டிசெம்பர் 12ம் திகதி என் காயம் ஆறும்வரை நான் அவர்களுடனேயே தங்கி இருந்தேன்"

Page 176
316 விடுதலைப்புலிகள் புகையிரத நிலையத்தில் வந்து நிற்கிறார்கள் என்ற விஷயம் திரு சாமுவேலுக்குத் தெரியாது. இந்திய இராணுவத்திற்கு அப்பாவிப் பொதுமக்களின் உயிர் குறித்துக் கிஞ்சித்தேனும் அக்கறையிருந்திருந்தால் அகதிகளின் இந்தச்சாவுகளைத் தவிர்த்திருக்க முடியும். இந்தியர்கள் தங்களுக்கு எந்தச்சிரமமும் இல்லாமல் சனங்களிடம் போய்ப் பேசுவதற்குத் தாமே விரும்பி முன்வந்த வண.கோவிந்தராஜனைப் போன்றவர்களை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். இந்த அதிகாரிகள் என்ன செய்வதென்றறியாமல் குழம்பியிருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்குத் தங்கள் குற்றங்குறைகளை-பலவீனங்களை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையுமில்லை, கற்றுக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை. விடுதலைப்புலிகளே இந்தச் சாவுகளுக்கு அதிகமாய்க் குற்றஞ் சாட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்பாவிப் பொதுமக்களின் உயிர் மீது தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டியது. புகையிரத நிலையத்தில் உண்மையில் எத்தனை பேர் இறந்து போனார்கள் என்ற விபரம் என்றுமே தெரியவராது போகலாம். இறந்தவர்களின் சடலங்களை இந்திய அமைதிப்படை 24ம் திகதியன்று எரித்தது. ஆஸ்பத்திரி வீதியும் ஸ்டேசன் வீதியும் இணையும் சந்தியில் நிலக்கணிணி வெடி வெடித்ததில் நான்கு இராணுவ வீரர்கள் மரணமடைந்ததாக ஒரு பிரிகேடியர் பின்னர் தெரிவித்தார். புகையிரத நிலையத்திற்குப் பின்னால் வசித்து வரும் திரு குணரட்னம் 23ம் திகதி இரவு பெரும்பகுதி நேரமும் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்தபடி இருந்ததாகத் தெரிவித்தார். காலையில் எல்லாம் அடங்கிப் போயிருந்தது. சில அகதிகள் தங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள வந்து வேகமாகத் திரும்பிப் போனார்கள். அன்று காலை 10.00 மணி அளவில் இராணுவம் புகையிரத நிலையத்தைத் தன் வசப்படுத்திக் கொண்டது. உலக தரிசனம் (WORLDVISION) என்ற அமைப்பிற்காகப் பணிபுரியும் திரு குணரட்னம் என்ற இளைப்பாறிய ஆசிரியர் கூறினார்:
"பொதுவாக ஒரு யுத்தத்தைத் தொடர்ந்து படைகள் கடுமையாக நடந்து கொள்வது வழக்கம். அதனால் தான் 23ம் திகதி ஆஸ்பத்திரி வீதியிலும் சென்.பீட்டர்ஸ் லேனிலும் இருந்தவர்களுக்கு கெட்டகாலமாக இருந்தது. 23ம் திகதி என் வீட்டிற்கு விஜயம் செய்த மேஜர் யாதவ் கூறினார்:
நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? இங்கு வேறு யாரும் வந்திருந்தால் கேட்ட கேள்வி இல்லாமல் உங்களைச் சுட்டிருப்பார்கள். தங்கள் வீடுகளுக்குள் இருந்து வெளியில் எட்டிப்பார்த்த பல அப்பாவிப் பொதுமக்களை நாங்கள் சுட்டுக் கொன்றிருக்கிறோம் என்று சொல்லிக் கொள்ள எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. விடுதலைப்புலிகளிலிருந்து பொதுமக்களை வேறுபடுத்திப் பார்க்க எங்களுக்குத் தெரிந்த ஒரே வழி சாதாரண பொதுமக்கள் முகாம்களில் இருக்க வேண்டும், இருப்பார்கள் என்ற எங்கள் அனுமானந்தான்" ஏதாவது விளையாட்டுக்காட்ட முயற்சிக்கக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அவர் எங்களை அயலிலிருந்த வீட்டில் தங்க அனுமதித்தார். நாட்கள் செல்லச் செல்ல அவருக்கும் அவரது ஆட்களுக்கும் எங்கள் மீதிருந்த சந்தேக உணர்வு குறைந்து சிநேகபாவத்துடன் பழக ஆரம்பித்தார்கள். ஓரளவு ஆங்கிலம் பேசக்கூடிய ஜவான் ஒருவர் எங்களைப் பார்க்க அடிக்கடி

317
வருவார். எங்களுக்காக அவர் மனதிற்குள் மிகவும் வருத்தப்படுவதாகக் கூறுவார், நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று விசாரித்துப் போவார். வெகுநாட்கள் சென்றபின் ஒரு ராஜபுத்தானப் படைவீரனைச் சந்தித்தேன். யாழ் நகரைக் கைப்பற்றும் நடவடிக்கையில் தானும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார். ஆஸ்பத்திரியில் ஏன் அப்படி மோசமாக நடந்து கொண்டீர்கள் என்று அவரிடம் கேட்டேன். விடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திக் காணத் தங்களுக்குத் தெரியாததாலேயே அவ்விதம் செய்யவேண்டி வந்தது என்பதுவே அவர் அளித்த பதிலாக இருந்தது"
23ம் திகதி காலை ஒரு இளம் பையன் தன்னுடைய பாட்டியைத் தேடிக்கொண்டு புகையிரத நிலையத்திற்குச் சென்றான். அவள் அதற்கு முந்தைய தினமே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டாள் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது. சுவரேறி மறுபுறம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது குதிக்கும்போது அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த 23ம் திகதி காலையில் டாக்டர் சபாரத்தினத்திடம் அவரின் மைத்துணியின் மரணத்தை அறிவிக்கவும், இறந்து போனவரின் மகன் மிகவும் சிறுபையனாக இருந்ததால் அவரின் இறுதிக்கிரியைகளை எவ்வாறு செய்வது என்பது பற்றிய அவரின் அறிவுறுத்தல்களைப் பெறவும் அடைக்கலமாதா கோவில் முகாமிற்குச் சில அதிகாரிகளினி பாதுகாப்புத்துணையுடன் வண.கோவிந்தராஜன் சென்றிருந்தார். அடைக்கல. மாதா கோயில் முகாமில் தனது திருச்சபைப் பங்கைச் சேர்ந்த தாரகா தம்பையாவின் மரணத்தைப் பற்றியும் அங்கு நிலவிய மோசமான உணவு நிலைமை பற்றியும் அவர் அறிந்தார். வண.பிதா பிலிப் பொன்னையா தேவையானவர்களுக்கு அரிசிக்கஞ்சி கிடைக்குமாறு பார்த்துக்கொண்டார். டாக்டர் சபாரட்னம் கூறியபடி கோவிந்தராஜன் திரும்பி வந்து அவரது மைத்துனியின் உடலைத்தகனம் செய்தார். இராணுவம் யாழ் நகருக்குள் வந்த பின்பு தான் அப்பகுதியின் பிரிகேட் கமாண்டரான பிரிகேடியர் மஞ்சித்சிங் அரங்கில் தோன்ற ஆரம்பித்திருந்தார்.
பெந்தேகொஸ்தல் மிஷனில் அடைக்கலம் புகுந்து இருந்துவிட்டு 23ம் திகதி காலை தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்த இளைப்பாறிய ஆசிரியரான திரு ராஜரட்ணம், பேரின்பநாயகம் ஒழுங்கையில் கிடந்த திரு லெஸ்லி சாமுவேலின் உடலை அடையாளங் கண்டு கொண்டார். உடனடியாக அவர் சைக்கிளில் ஏறி றக்கா லேன் வழியாக சென்.ஜோன்ஸ் கல்லூரிக்குச் சென்று பின் கோயில் வீதி, பிரதான வீதி வழியாக திரு சாமுவேலின் நெருங்கிய நண்பரான வண.சூரி வில்லியம்ஸ் என்ற அயலவரிடம் இத்தகவலைத் தெரிவிக்கச் சென்றார். எதிரே காத்து நிற்கும் அபாயம் பற்றிச் சிறிதும் அறியாதவராய் இப்படிப்பயணம் செய்த திரு ராஜரட்னம், திரு சாமுவேல் தேர்ந்தெடுத்திருந்த துக்ககரமான மார்க்கத்தையே பின்தொட்டுச் சென்றிருக்கிறார். இந்த உண்மை அவருக்குப் பின்னர் புலப்பட்டது. அவர் சுடப்பட்டிருந்தால் பெரும்பாலான மக்கள், இந்திய இராணுவத்தைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை, அவர் முட்டாள்தனமாக நடந்து கொண்டதால்தான் அந்த முடிவு ஏற்பட்டது என்று சொல்லியிருப்பார்கள். அந்த மாதிரிச் சமயங்களில் பலருக்குத் தங்கள் நண்பர்களும் உறவினர்களும் எப்படி

Page 177
318
இருக்கிறார்கள், உணவுக்கு என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் ஒடிப்போய்ப் பார்த்து விட்டு வரும் உத்வேகம் எதற்காகத் தோன்ற வேண்டும்? சென்ட் பெற்றிக்ஸ் வீதியிலிருந்து வெளி வந்தபின் விக்டருக்கு ஏன் பாதுகாப்பான வலதுபுறம் திரும்பி ஹோலி க்ராஸ் நர்ஸிங் ஹோம் நோக்கிச் செல்லத் தோன்றாமல் போயிற்று? அவ்வாறு செய்யாமல் ஏன் காயமுற்ற மனிதர்கள் நிரம்பிய தனது வேனை யாழ் மருத்துவமனையை நோக்கி, மரணத்தை நோக்கி இடப்புறமாய் திருப்பிச் செலுத்தவேண்டும்? ஆம், இப்படித்தான் அந்த இக்கட்டான தருணங்களில் மக்கள் நடந்து கொண்டர்கள். சாதாரணமாக வீரதீர சாகசங்களை அவாவாதவர்களெல்லாம் அந்த நேரத்தில் மிகவும் துணிச்சலான, அசாதாரணமான காரியங்களைச் சாதித்தார்கள். வரலாற்று நூல்களில் இவர்கள் இடம் பெறுவதில்லை.
திரு ராஜரட்ணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியை அடைந்து வண.வில்லியம்ஸ் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது மேஜர் . கோபாலன் அவர்களிடம் சைக்கிள்களை அங்கேயே விட்டுவிட்டு நடந்து எங்கு வேண்டுமானாலும் செல்லும்படியும், ஏனெனில் சைக்கிளில் யார் சென்றாலும் சுடும்படி இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறினார். திரு சாமுவேல் வசித்து வந்த ஸ்டேஷன் அவெனியூவில் இருக்கும் திருமதி பேரின்பநாயகத்தின் வீட்டுக்கு நடந்து சென்று பின் திரு ஹரன் ஸ்நெல், திரு குணரட்னம் ஆகியோரையும் கூட்டிக்கொண்டு வழியில் சென்.ஜோன்ஸ் தேவாலயத்தின் வணயிதாசர்வானந்தனையும் சேர்த்துக்கொண்டு மீண்டும் சென்.ஜோன்ஸ் திரும்பினர். கச்சேரியில் உள்ள இராணுவத்திடம் வானொலி மூலம் தொடர்பு கொண்டபின் மேஜர் கோபாலன் அவர்களிடம் சடலத்தைக் கொண்டு வரும்படி கூறினார். திரு ராஜரட்னம் உடனேயே அப்போதைக்குத் தயாரித்த ஒரு ஸ்ட்ரெச்சரில் அவருடைய உடலை வைத்து அந்நால்வரும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால் மேஜர் கோபாலன் வானொலியில் தொடர்பு கொண்டு அறிவித்திருந்தும் கெனன் சோமசுந்தரம் அவெனியூவில் திரும்பிப் பிரதான வீதியை நோக்கிக் கண்டி வீதியில் இவர்கள் திரும்பும் போது கச்சேரியிலிருந்து இராணுவம் இவர்களை நோக்கிச் சுடுவதை அது தடுத்துவிடவில்லை. திரு சாமுவேல் சென்.ஜோன்ஸி தேவாலயத்தில் புதைக்கப்பட்டார். பிரதானவீதி, கொன்வென்ட் வீதி, ஆளப்பத்திரிவீதி ஆகியவற்றிற்கூடாக ஸ்நெல், குணரட்னம் ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது புனித திருக்குடும்பக் கன்னியர் மடத்திற்குப் பின்னால் மார்ட்டின் வீதியில் மட்டும் தான் அவர்கள் இராணுவ நடமாட்டத்தை அவதானித்தனர். இராணுவம் அவர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
கோப்பாய் சென்.மேரிஸ் தேவாலயத்தைச் சேர்ந்த வணயிதா.ஜெயச்சந்திரன் அவரது குடும்பத்துடனும் வயதான ஒரு பெண்மணியுடனும் சற்றுமுன் நாம் குறிப்பிட்ட கோஷ்டியினர் சென்று அரைமணி நேரங் கழித்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து கெனன் சோமசுந்தரம் அவெனியூவிலிருந்து கண்டி வீதிக்குள் நுழைய முற்படுகையில் கச்சேரியிலிருந்து இராணுவவீரர்கள் சுட ஆரம்பித்ததில் வயதான பெண்மணிக்குக் காலில் காயம் ஏற்பட்டது. பின் அவர்கள் வேறொரு மார்க்கமாக கோயில் வீதியிலிருந்த ரோமன் கத்தோலிக்க ஆசிரமத்திற்குச் சென்றனர். தற்காலிக சிகிச்சைக்குப்பின் அப்பெண்மணியை ஜெயச்சந்திரன்

319
ஒரு இரவல் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிரதான வீதி, கடற்கரை வீதிக்கூடாக ஹோலி க்ராஸ் நர்ஸிங் ஹோமுக்குக் கொண்டு சென்றார். 23ம் திகதி அதிகாலையில் இராணுவம் சென்யற்றிக்ஸ் கல்லூரிக்கு சந்தடியில்லாமல் சென்றிருந்தது. ஒரு கட்டிடத்தில் உள்ள அகதிகளை மட்டும் அங்கிருந்து வெளியேறச் சொல்லி விட்டு இராணுவம் பகல் முழுதும் அங்கு தங்கியிருந்து கொண்டு சமைத்தவாறும், காற்பந்து விளையாடியவாறும் அகதிகளோடு அளவளாவிய வணிணமும் இருந்தனர். அகதிகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் என்னவென்று அவர்களிடம் விசாரிக்கப்பட்டு சில மருந்துகள் அவர்களுக்குத் தரப்பட்டன. இராணுவம் இரவில் சந்தடியின்றி அவ்விடத்தை விட்டு வெளியேறியிருந்தது.
24ம் திகதி தாரகா தம்பையாவின் இறுதிக்கிரியைகளை நிறைவேற்றுவதற்கு வண.கோவிந்தராஜனால் அனுமதி பெற முடியவில்லை. ஆனால் அடைக்கலமாதா கோவில் முகாமின் உணவுநிலை பற்றி முறையிட்டதில் மேஜர் கோவிந்சிங்கின் தலைமையிலான குழு ஒன்றின் துணையோடு அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 5.30 மணிக்கு அங்கு அவர்கள் சென்றிருந்த போது தாரகாவிற்கு நேர்ந்த கதிக்குப் பிறகு மக்கள் மிகவும் பயந்து போயிருந்தார்கள். இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பாக அங்கேயே இருக்கும் என்றும் அங்கு அயலில் உள்ளவர்கள் பிறரோடு பங்கிட்டுக் கொள்ளத்தக்கதாக வீட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்களோ அவற்றைச் சென்று கொண்டு வரலாம் என்றும் சனங்களுக்கு அங்கு கூறப்பட்டது. இரவாகிக் கொண்டிருந்ததால் இதை எல்லாம் செய்து கொண்டு திரும்ப அவர்களுக்கு 15நிமிஷங்களே வழங்கப்பட்டன.
25ம் திகதி காலை கோவிந்தராஜனுக்கு அடைக்கலமாதா கோயிலுக்குச் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு, தாரகாவிற்கும் இன்னுமொருவருக்கும் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி வர சென்னையைச் சேர்ந்த இராணுவவீரர் ஒருவருடன் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்குப் பிறகு ஆஸ்பத்திரி வீதி-ஸ்டேஷன் வீதிச்சந்தியில் ஒருவர் காயமுற்று விழுந்து கிடப்பதாகக் கோவிந்தராஜனுக்குத் தெரியவந்தது. கோவிந்தராஜனோடு போய் அவரைப் பார்த்துக்கொண்டு வர அந்தச் சென்னை வீரர் முன்வந்தார். எதிர்பாராதவிதமாக அந்தக் காயமுற்ற மனிதர் அங்கு உயிரோடிருக்கக் கண்டனர். அவர்கள் அவரைத்தூக்கி ஒரு ட்ரக்கில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காகக் குறைந்த பட்ச ஆபத்தையாவது சந்திக்கத் துணிந்ததற்காக இந்திய இராணுவத்தில் யாருக்காவது விருது வழங்க வேண்டுமென்றால் இது இந்தச் சென்னை வீரருக்காகத் தானிருக்க வேண்டும். அப்படியெல்லாம் எந்த விருதும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. (பிரிகேடியர் மஞ்சித்சிங் தான் 1988 ஜனவரி 6ம் திகதி குடியரசு தினத்தன்று பதக்கம் பெற்றுக் கொண்டவராவார்.)
இந்த நேரத்திற்குள் உச்ச கட்டப் பயங்கரம் முடிந்து ஓய்ந்து விட்டிருந்தது. இதையடுத்து நாம் விவரிக்கப் போகும் மருத்துவமனைச் சம்பவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு என்றும் கசப்பான விஷயமாகவே இருக்கும். நடந்த விஷயத்தைச் சமாளிக்க அவர்கள் காய் நகர்த்தும் பாணி இதுதான்: "ஐ சே! விடுதலைப்புலிகள் பயங்கரமானவர்கள். இந்திய இராணுவத்தின்

Page 178
320
மீது பழியைத் தூக்கிப் போடுவதற்காக அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் நாற்பது பேரைக்கொன்று விட்டு ஓடிப்போய் விட்டர்கள் தாகூரே பிரமித்துப் போகும் அளவிற்கு சத்தியம் பற்றிய-அழகு பற்றிய தாகூரின் கவிதைகளை எல்லாம் வசீகரமாகயும் நம்பிக்கைத்தொனியிலும் சொல்வதற்கு வேறு அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நிற்க, 54 வருஷங்களுக்கு முன்னர் யாழ் கவர்னர் மாளிகையில் விருந்தினராகத் தங்கியிருந்த போது யாழ்ப்பாணப்பள்ளிச் சிறுவர்களுக்கு தாகூரே தனது கவிதைகளை வாசித்துக் காட்டியிருக்கிறார். அந்த உன்னத மனிதரைச் செவிமடுத்துப் பயனடைவதற்காய் தொலைதூரங்களில் இருந்தெல்லாம் பாடசாலை அதிபர்கள் தமது மாணவர்களை அழைத்து வந்திருந்தனர்.
வேறும் சில நிகழ்ச்சிகளை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. அக்டோபர் 25ம் திகதி சில இந்திய அதிகாரிகள் அடைக்கலமாதா கோயில் முகாமிற்கு விஜயம் செய்து அங்குள்ளவர்கள் என்ன மாதிரி உணர்கிறார்கள் என்று அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மதபோதகர் இந்திய இராணுவத்தின் நடத்தையைப்பற்றி மிகுந்த கசப்போடு அவர்களிடம் முறையிட்டார். அந்த உரையாடலைப் பதிவு செய்து கொண்டிருந்த அதிகாரி ஆச்சரியமுற்றவராய், "அப்படியானால் விடுதலைப்புலிகளைத் திரும்ப நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்பர். "விடுதலைப்புலிகள் என்னை எதுவுஞ் செய்யவில்லை. நான் என் பாட்டில் அமைதியாக இருக்க முடிந்தது. விடுதலைப்புலிகள் என்னிடமிருந்து ஒரு சதங் கூட எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய ஒரு நேரச் சாப்பாட்டைக்கூட பறித்ததில்லை. என்னுடைய சட்டையைக் கூடப் போட்டுக்கொள்ளவிடாமல் என்னை வீட்டிலிருந்து வெளியேற்றி குளிருக்குள் 48 மணிநேரம் அவர்கள் என்னை ஒரு நாளும் பட்டினி போட்டதில்லை. என்னை வீட்டிற்குப் போய்த் தங்க அனுமதித்திருந்தாலாவது நான் பட்டினி கிடக்க வேண்டி வந்திருக்காது. நீங்கள் உங்களை அமைதிப்படை என்று சொல்லிக்கொண்டு அமைதிக்கு எதிரான வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று அந்தப் போதகள் அந்த அதிகாரியிடம் தெரிவித்தார். இதனால் சற்றுக் குழப்பமடைந்தவர் போல் தோன்றிய அந்த அதிகாரி, "பின் வேறு எப்படித்தான் நாங்கள் விடுதலைப்புலிகளைச் சமாளிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று கேட்டார். "அந்த வேலையை நீங்கள்தான் உங்கள் தலையில் தூக்கிப்போட்டுக் கொண்டீர்கள். அது என்னுடைய பிரச்சினையில்லை. ஆனால் அப்பாவிப் பொதுமக்களை நீங்கள் நிச்சயமாக இப்படி நடத்த முடியாது" என்று அந்தப் போதகர் பதிலளித்தார். அங்குள்ளவர்களுக்கு உணவுக்கு ஏதாவது வழி செய்யாமல்தான் அந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அந்த அதிகாரி உறுதியளித்தார். ஒரு வானொலிச் செய்தி மூலம் அங்கு சில உணவுப்பொருட்கள் வந்து சேர்ந்தன. இவற்றில் யாழ் நகரில் இருந்த கடைகளில் கொள்ளையிடப்பட்ட வெணிணெய், பாலாடைக் கட்டி ஆகியனவும் இருந்தன. (கிடைத்த தகவல்களின்படி விடுதலைப்புலிகள், இந்திய இராணுவம், பொதுமக்களில் சில பகுதியினர் என்று எல்லாருமே மேற்படி சூறையாடலில் இறங்கியிருந்ததாகத் தெரிகிறது) கடைசியாக, போராளிகளைப் பற்றிய அவரது உண்மையான கண்ணோட்டம்

321
அதுதானோ என்று அந்த போதகரிடம் கேட்கப்பட்டது. (உடுவிலில் ஏழு வாரங்களுக்கு முன் தான் அவரது திருச்சபையைச் சேர்ந்த நான்கு ஊழியர்கள் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்) அவர் பதில் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே புன்னகை செய்தார்.
பள்ளிவாசல் அகதி முகாமிலிருந்து ஏதோ சமையல் செய்து கொண்டுவர ஒரு வங்கி முகாமையாளரின் மனைவி அனுமதிக்கப்பட்டு அவர் அங்கு சென்றிருந்த சமயம் பிரிகேடியர் மஞ்சித்சிங் உள்ளே சென்றிருக்கிறார். பள்ளிவாசல் முகாமில் உள்ள இராணுவக் கெப்டனுக்கு தான் பருப்புக்கறி செய்து கொண்டு போவதாக அப்பெண்மணி பேச்சுவாக்கில் சொல்லியிருக்கிறார். பிரிகேடியர் அந்தக் கெப்டனை வானொலி மூலம் அழைத்து மிகக்கடுமையான வார்த்தைகளால் அதற்காக ஏசியிருக்கிறார். அப்பெண்மணி இடைமறித்துத் தான்தான் பருப்புக்கறி செய்து கொண்டு வந்து தருவதாகச் சொன்னேனே தவிர அவர் ஒன்றும் கேட்கவில்லை என்று கூறியிருக்கிறார். பொதுமக்களிடமிருந்து தங்களுடைய ஆட்கள் எதைப் பெறுவதையும் தான் விரும்பவில்லை என்று பிரிகேடியர் அவருக்குப் பதிலளித்திருக்கிறார். (சாதாரண பருப்புக் கறி மனமுவந்து தரப்பட்டபோது அதனைத் திட்டவட்டமாக மறுத்த ஒரு இராணுவம் பின்னர் அதன் வீரர்கள் மீது தீவிர கொள்ளை, திருட்டுப் புகார்கள் வந்தபோதெல்லாம் அவற்றைப் பூசி மழுப்பும் அளவுக்கு அசட்டையாக இருந்தது எப்படி என்பது இன்றும் பலருக்குப் புரியாத புதிர்தான்) சிநேகபாவம் மிகுந்த கெப்டன் பிறகு அந்தப்பெண்மணியிடம் பின்வருமாறு கூறினார்: "அந்த மனுஷனிடம் இதைப்போன்ற விஷயங்களை எல்லாம் சொல்லாதீர்கள். ஆள் என்னைக் கொன்று போடுவார்"
யாழ் மருத்துவமனையில் மருத்துவ நிபுணராகப் பணிபுரியும் ஒருவர் அக்டோபர் 20ம் திகதி மருத்துவமனையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வழியில் கிட்டத்தட்ட 15 கருகிய எலும்புக்கூடுகள் அடங்கிய பிணக்குவியலைத் தான் கண்டதாகத் தெரிவித்தார்.
கெனன் சோமசுந்தரம் அவெனியூவில் விடுதலைப்புலிகள் தங்கள் முகாமாகப் பயன்படுத்திய ஒரு மாடி வீட்டிற்கு நவம்பர் மாதத் தொடக்கத்தில் சென்றிருந்த இந்திய இராணுவம் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களைக் கண்டெடுத்தது. நகரின் புற எல்லைகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் சில பகுதியினர் தங்கள் ஆயுதங்களைப் பல்வேறு முகாம்களிலும் வெற்றுக்காணி வளவுகளிலும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் என்று கருதப்பட்டது. ஒரு அதிகாரி முன் வீட்டுக்காரரைக் கூப்பிட்டழைத்து பக்கத்திலேயே ஆயுதப்புழக்கம் இருப்பது தெரிந்தும் ஏன் இந்திய அமைதிப்படைக்கு அதைப்பற்றி அறிவிக்கவில்லை என்று கேட்டார். "அங்கு விடுதலைப்புலிகள் தங்கி இருந்ததும் இரவு நேரங்களில் வந்து போய்க்கொண்டிருப்பதும் எனக்குத் தெரியுந்தான். ஆனால் அவர்கள் அந்த வீட்டிலிருந்து என்ன எடுத்துக்கொண்டு போகிறார்கள் அல்லது முகாமிற்குள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்றெல்லாம் என் கேற்றிலிருந்து எட்டிப்பார்க்கும் பழக்கம் என்னிடமில்லை" என்று அவர் பதில் கூறியிருக்கிறார். "சரி அங்கு ஒரு முகாம் இருப்பதைப் பற்றியாவது

Page 179
322
எங்களுக்குத் தெரிவித்திருக்கலாம் தானே” என்று அந்த அதிகாரி கேட்டிருக்கிறார். "அப்போது முழுநேர ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. உங்களிடம் எதையாவது சொல்ல நான் வந்திருந்தாலும் நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றிருப்பீர்கள்" என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார். "அது உண்மைதான்" என்று அந்த அதிகாரி ஒத்துக்கொண்டார். பின் அந்த வீதி வழியாகப் போய்க்கொண்டிருந்த வயதுபோன ஒருவரை நிறுத்தி, "விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல வேணடும்' என்று கேட்டிருக்கிறார் அந்த அதிகாரி. "விடுதலைப்புலிகளோடு எனக்கு எந்தச்சம்பந்தமும் கிடையாது. அவர்களைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள்தான் அவர்களுக்குப் பயிற்சி அளித்ததால் அவர்களைப் பற்றியும் அவர்களை எங்கே கணிடுபிடிப்பது என்பதைப் பற்றியும் வேறுயாரையும் விட உங்களுக்குத்தான் நன்கு தெரிந்திருக்க வேண்டும்" என்று அந்த முதியவர் பதிலளித்திருக்கிறார். அந்த அதிகாரி இதனையும் ஒத்துக்கொண்டார்.
பொதுமக்களை அச்சுறுத்தும் போக்கு தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டிருந்தது. தற்போதைய நிலவரம் தொடருமானால் ஷெல் தாக்குதலைத் தொடங்க வேணடிவருமெண்று கூறி, பொதுமக்கள் எதையாவது அவதானித்தால் இராணுவக் காவல் நிலையங்களுக்குச் சென்று அதனைத் தெரிவிக்க ஒவ்வொரு ஒழுங்கையிலும் மக்கள் கண்காணிப்புக்குழுக்களை இருத்துவது பற்றி ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி சும்மா ஏதோ சொல்லியிருக்கிறார். இரவில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது இராணுவக்காவல் நிலைகளை அணுகுவது என்பது யாருக்கும் சாத்தியப்பட்டு வராத விஷயம் என்பதைச் சுட்டிக்காட்டி அவ்வாறு கணிகாணிப்பு மேற்கொள்ளும் குழுவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்படுமா என்று அந்த அதிகாரியிடம் கேட்கப்பட்டது. அதன்பின் அந்தப் பேச்சு அப்படியே கைகழுவப்பட்டு விட்டது.
1988 ஜனவரி 4ம் திகதி ஒரு பிரிகேடியர் ஒருவர் புகையிரத நிலையத்துக்கு முன்னால் பின்னேரம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. கூட்டத்திற்கு மிகச்சிலரே வந்திருப்பதைக் கண்டதும் இராணுவம் வெளியில் சென்று வீடுகளிலிருந்த மக்களை வெளியே வருமாறு அழைத்தது. வவுனியா, முல்லைத்தீவு போன்ற தொலைதூரப் பஸ்களில் பயணம் செய்து வந்து கொண்டிருந்தவர்கள் உட்பட ஆளப்பத்திரி வீதி வழியால் போய்க்கொண்டிருந்த எல்லோரும் புகையிரத நிலையத்துக் கூட்டத்துக்குப் போகுமாறு திருப்பி விடப்பட்டனர். வீடுகளுக்குள் இருந்த யாராவது சுட்டால் அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்படும் என்று கூட்டத்தில் உள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டதுதான் அங்கு நிகழ்த்தப்பட்ட பேச்சில் நினைவுபடுத்தப்பட வேண்டிய பகுதியாகும். ஏதோ இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது போலத்தான் கருதிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் அங்கு வந்திருந்தவர்களுக்குத் தேநீர் வழங்கப்பட்டுக் கூட்டம் கலைந்தது.
தேவு என்ற பன்னிரண்டு வயதுச்சிறுவன் யாழ் புகையிரத நிலையத்தில் அகதியாக இருந்த சமயத்தில் அங்கு நடைபெற்ற ஷெல் தாக்குதலில்

323
அவனது பெற்றோர் இருவருமே கொல்லப்பட்டு விட்டனர். இப்போது இரண்டு வருஷங்கள் கழித்து அவன் பல்வேறு விலங்கினங்களைப் பராமரித்துவரும் பண்ணையில் வேலைபார்த்து வருகிறான். தேவு சிரித்த முகமும் வெட்கப்படும் சுபாவமும் கொண்டவன். அந்தத் துயரமான நாளைப்பற்றி அவன் என்றுமே பேசியதில்லை. அவன் அந்தப் பண்ணையில் உள்ள மிருகங்களிடம் பேசுகிறான். அவை தன்னோடு திரும்பியும் கதைப்பதாகக் கருதிக்கொள்கிறான். அவற்றோடு சேர்ந்து சிரிக்கிறான்; அக்கம்பக்கத்தில் யாருமில்லாதபோது அவற்றோடு தன் தனிப்பட்ட "ஜோக்குகளையும் பரிமாறி மகிழ்கிறான். அவனை மிகுந்த அன்போடு கவனித்து வரும் பெண்மணி தேவு சில சமயங்களில் கனவு கண்டு வேதனையுறுவதைக் காண முடிகிறது என்கிறார்.
3.9 யாழ் மருத்துவமனை
யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்து கொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். ஷெல் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த வணிணமிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமல் இருந்தது. 70க்கு மேற்பட்ட சடலங்கள் ஆஸ்பத்திரியின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தது. யாழிப்பாணத்தினர் முக்கிய பிரமுகர்கள் அரசாங்க அதிபரிணி அலுவலகத்திலிருந்து இந்தியத் தூதரகத்திற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டதையடுத்து ஷெல் தாக்குதலின் தீவிரங்குறைந்து விட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததால் பாதுகாப்பு பற்றிய ஒரு பிழையான உணர்வு மக்கள் மத்தியில் வியாபித்திருந்தது. அவர்கள் அக்டோபர் 13ம் திகதி ஷெல் தாக்குதலும் வான்வழிக் குண்டுவீச்சும் நடைபெறுவது குறித்துத் தொலைபேசியில் முறைப்பாடு செய்தனர். அப்பாவிப் பொதுமக்களுக்குப் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் எதனைப்பற்றியும் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று இந்தியத் தூதரகம் மறுத்து விட்டிருப்பதாக இந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அக்டோபர் 21ம் திகதி-தீபாவளி தினத்தன்று காலை 11.00 மணியளவில் மருத்துவமனையின் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கோட்டையிலிருந்தும் மேலே ஹெலிகொப்டர்களிலிருந்தும் குண்டு வீச்சுத்தாக்குதலுக்கு இலக்கானது. (யாழ் நகரின் புறக்கோட்டுப் படத்திற்குப் பின்னிணைப்பைப் பார்க்க) காலை 1130 மணியளவில் புறநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கட்டடத்தின் மேல் ஒரு ஷெல் விழுந்தது. புறநோயாளர் சிகிச்சைப்பிரிவு அதிகாரி நிர்வாகக்கட்டிடத்திற்கு ஓடிச்சென்று அங்கிருந்த மருத்துவநிபுணரிடம் என்ன நடந்தது என்று தெரிவித்தார். பிற்பகல் 100 மணி அளவில் சாந்தி தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத் துருப்புகள் காணப்பட்டதாக அம்மருத்துவநிபுணருக்கு தெரிவிக்கப்பட்டது. பிற்பகல் 130 மணிக்கு ம்ே நம்பர் வார்ட்டில் ஒரு ஷெல் விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். நிலவரத்தைக் கண்டறிய

Page 180
324
இன்னொரு வைத்தியருடன் வெளியிற் சென்ற இம்மருத்துவ நிபுணர் ஆஸ்பத்திரி வளவிற்குள் இருந்து ஆட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் காலியான காட்ரிஜுகள் சில அங்கு விழுந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறார். பிற்பகல் 200 மணிக்கு ஆஸ்பத்திரி வளவிற்குள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்புலிகள் சிலர் நிற்பதைக் கவனித் திருக்கிறார். பின் அவர் டாக்டர் கணேசரட்னத்தையும் அழைத்துக்கொண்டு போய் புலிகள் அங்கே நிற்பதால் ஆஸ்பத்திரிக்குள் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைச் சுட்டி காட்டி அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிடுமாறு விடுதலைப்புலிகளை வேண்டினார். அங்கு நின்ற புலிகள் கோஷ்டியின் தலைவன் அதை ஏற்றுக்கொண்டு பின் அங்கிருந்து அனைவரும் வெளியேறிவிட்டனர். அவர்கள் வெளியேறிச் சென்று 5 நிமிஷங்கள் கழித்து விடுதலைப்புலிகளின் வேறொரு கோஷ்டி ஆஸ்பத்திரிக்குள் வந்திருப்பதாக அம்மருத்துவ நிபுணருக்குத் தெரிவிக்கப்பட்டது. தான் எதையும் வெளிப்படையாகச் சொல்லி விடுவதால் தனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருப்பதால் ஆஸ்பத்திரிக்குள் இப்போது வந்திருக்கும் புலிகளுடன் கதைக்க இம்முறை தன்னைவிட்டுவிட்டு வேறு யாருடனாவது போகச்சொல்லி டாக்டர் கணேசரட்னம் அம்மருத்துவ நிபுணரைக் கேட்டுக் கொண்டார். அம்மருத்துவ நிபுணர் இம்முறை ஒரு பெண் டாக்டரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு விடுதலைப்புலிகளிடம் சென்றார். மருத்துவ நிபுணரின் கூற்றுப்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற ஒப்புக்கொண்டு சடுதியில் கரணாமல் போய்விட்டனர்.
பிற்பகல் 2.00 மணிக்குப்பின் அங்கு சற்று அமைதி நிலவியது. "ஆஸ்பத்திரியில் இருந்தவர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வதென்றே உண்மையில் எனக்குத் தெரியவில்லை. ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிப் போய் விடுவது பாதுகாப்பானது என்று எனக்கு நிச்சயமாக தீ தெரிந்திருக்குமானால் எல்லாரையும் ஆஸ்பத்திரியை விட்டுப் போய்விடுமாறு சொல்லியிருப்பேன். அப்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததாலும் இராணுவமும் மிகக்கிட்டத்தில் வந்துவிட்டதாலும் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. எனக்குச் சரியான பசியாக இருந்ததால் தான் அங்கிருந்து வீட்டுக்குப்போக நான் தீர்மானித்தேன். போய்த்தான் பார்ப்போமே என்ற யோசனையில்தான் நான் போகத் தீர்மானித்தேன். என் கூட வேலை செய்யும் இன்னொரு டாக்டருடன் பிற்பகல் 230 மணிக்கு ஆஸ்பத்திரியின் பின்வாசல் வழியாக ஒரு பிரச்சினையுமில்லாமல் வீடு போய்ச் சேர்ந்துவிட்டேன்.
'பிற்பகல் 4.00 மணியைப்போல ஆஸ்பத்திரி வீதியில் பெற்றோல் ஷெட் பக்கத்திலிருந்து 15, 20 நிமிஷங்களுக்கு துப்பாக்கிச் சூட்டுச்சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பிச் சுடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை. அந்தச் சமயத்தில், எங்கள் அறிவுக்கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப்புலிகளும் இல்லை என்று அம்மருத்துவ நிபுணர் கூறினார்.
இவ்வாறுதான் யுத்தத்தால் சிதைந்து சின்னாபின்னப்படுத்தப்பட்டிருந்த வடக்கின் முதன்மையான, மிகப்பெரிய மருத்துவமனையில் - அங்கேயே தங்கிநின்று பணிபுரியும் மருத்துவர்களின் மனதைப் புண்ணாக்கும் துயரக்கதை ஆரம்பமானது. அவர்களில் ஒருவர் தங்களுக்கு நேர்ந்த பயங்கர அனுபவத்தை விபரிக்கிறார்:

325 "நாங்கள் அப்போது கதிரியக்கப் பகுதியில் தேநீர் அறையில் இருந்தோம். அந்த இடம் முழுவதும் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நின்றனர். 7ம் நம்பர் வார்டைக் காலி செய்து விட்டு வந்திருந்த நோயாளிகளும் அங்கிருந்தனர். சூட்டுச்சத்தம் எங்களுக்குக் கிட்டத்தில் வந்து கொண்டிருப்பது கேட்டது. இந்திய இராணுவம் உள்ளே நுழைந்தாலும் அவர்கள் எங்களைச் சோதனையிடுவார்கள், பின் அவர்களுக்கு நாங்கள் விஷயங்களை விளங்கப்படுத்தலாம் என்று நாங்கள் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தோம். எங்களோடிருந்த டாக்டர் கணேசரட்னம் அறையை விட்டு வெளியில் சென்றார். எங்களின் சக ஊழியர்கள் சிலர் இன்னமும் தங்கள் வார்டுகளில் தான் இருந்தனர். சூட்டுச்சத்தம் இப்போது எங்களுக்கு மிகவும் அருகில் வந்துவிட்டது. எங்களைச் சுற்றிலும் ஒரே சூட்டுச்சத்தம். எங்களைச் சுற்றியுள்ள அபாயத்தை உணர்ந்து எல்லாரும் அப்படியே தரையில் படுத்துவிட்டோம். சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவுக்குள் வந்த இந்திய இராணுவம் அங்கே நெருங்கியடித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளியது. நோயாளிகள் இறந்து வீழ்வதைக் கணிணால் கண்டோம். விரலைக்கூட அசைக்காமல் அப்படியே செதிதுப் போனவர்களைப் போலத்தரையில் கிடந்தோம். இறந்து போனவரின் சடலங்களை அகற்ற வரும்போது எங்களையும் அவற்றோடு போட்டு எரித்துவிடுவார்களோ அல்லது சுட்டுவிடுவார்களோ " என்று முழுநேரமும் நடுங்கிக் கொண்டிருந்தோம். இரவில் மேலும் சில வெடிச்சத்தங்களைக் கேட்டோம். எங்களுடைய குவார்ட்டர்ஸ் அமைந்திருந்த மேல்மாடியில் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அங்குமிங்குமாய்ப் போய் வந்து கொண்டிருக்கும் சத்தம் எங்களுக்குக் கேட்டது. மறுநாள் காலை 1100 மணிவரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம்"
இந்த இடத்திலிருந்து இன்னொருவர் விபரிக்கிறார்: "இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து, தாழ்வாரம் வழியாக வந்து கணிடபடி சுட ஆரம்பித்தது. மேற்பார்வையாளர்களின் அலுவலகத்திற்குள்ளும் வேறு அலுவலகங்களுக்கும் அவர்கள் சுட்டார்கள். என்னோடு பணிபுரிந்த என் சக ஊழியர்கள் பலர் இறப்பதைக் கண்டேன். இன்னொரு சக ஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார். அப்படியே அசையாமல், படுத்துக்கிடவுங்கள்.
'எனவே நாங்கள் அன்றிரவு முழுவதும் இம்மி கூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்தவரில் ஒருவருக்கு இருமல் இருந்தது. அவர் இரவில் அவ்வப்பொழுது முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார். ஒரு இந்திய இராணுவ வீரன் அப்போது அவர் மீது ஒரு கிரனைற்றை வீசி எறிந்ததில் அவரோடு வேறு சிலரும் கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் தெரியும். இன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று உரத்துக் கூவினார்:
"நாங்கள் அப்பாவிகள். நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு" அவர் மீதும் ஒரு கிரனைற்றை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அடுத்துக்கிடந்த சகோதரரும் இறந்து போனார்கள்.

Page 181
326
"இரவு கடந்துபோய் காலையாகி விட்டது. நிலைமை பயங்கரமாகவே இருந்தது. காலை 8.30 மணி அளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாதசுந்தரம் மூன்று நர்ஸஸுகளுடன் தாழ்வாரம் வழியாக நடந்து வந்தார். தாங்கள் யார் என்று அடையாளங் காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து விடுவது உசிதமானது என்று அவர்களிடம் அவர் எடுத்துரைத்திருக்கிறார். கைகளை மேலே உயர்த்தியபடி "நாங்கள் சரணடைகிறோம், நாங்கள் ஒன்றுமறியாத டாக்டர்களும், நர்ஸுகளுந்தான்" என்று உரத்துக் கூறியவாறு அவர்கள் நடந்து வந்தனர்.
டாக்டர் சிவபாதசுந்தரத்தை அவர்கள் வெகுகிட்டத்தில் வைத்து நேரே கட்டுக்கொன்றார்கள். நர்ஸுகள் காயமுற்றனர். ஆஸ்பத்திரியில் சிக்கிக்கொண்டு விட்ட குழந்தைகளையும் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் காப்பாற்ற வந்த இந்த உன்னத மனிதன் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். சமாதானத்தினதும் அஹிம்சையினதும் காவலன் என்று தன்னைக்காட்டிக் கொள்ளும் ஒரு தேசத்து இராணுவத்தின் கரங்களிலிருந்து அவருடைய தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு வன்முறையும் மரணமுமே பதிலாகக் கிடைத்தன. உயிர் பிழைத்திருந்தவர்கள் மறுநாள் காலை 11.00 மணிவரையும் இறந்து போனவர்களுடன் தாங்களும் இறந்துவிட்டது போல் அப்படியே கிடந்தனர். இராணுவ அதிகாரி ஒருவர் அந்த ஆஸ்பத்திரி வார்டு ஒன்றிற்கு வந்தபோது அங்கிருந்த பெண் டாக்டர் ஒருவர் அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய பிறகுதான் தாங்கள் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்தோர் அனைவரும் கூறினர். அந்த டாக்டர் அந்த அதிகாரிக்கு நிலைமையை விளக்கிக்கூறி தனது இரு கைகளையும் மேலுயர்த்தியவாறு அவர்கள் இராணுவத்தாரோடு இருக்கும் இடத்திற்கு வந்தார். தன்னுடன் பணி புரிபவர்களையும் காயமுற்றுக் கிடந்தோரையும் அவர் குரல் கொடுத்து அழைத்தார். தங்களின் சக மருத்துவர் டாக்டர் கணேசரட்னம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே இறந்து விழுந்து கிடப்பதையும் கணிடார். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பவர்கள் மேலே தங்களின் அறைகளுக்குச் சென்று பார்தீத போது முழுப்பகுதியும் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டனர். தரையில் சிதறிக்கிடந்த அவர்களின் துணிமணிகளின் மீது ரத்தம் தோய்ந்த பூட்ஸுகளின் தடங்கள் காணப்பட்டன. அவர்களின் விலைமதிப்புள்ள உடைமைகள் எல்லாமே பறிபோய்விட்டன. அதற்குப் பின்னர் அவர்கள் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அவர்களின் கதவருகில் ஒரு காவலர் நின்று கொண்டிருந்தார். அந்த நாட்களில் அவர்கள் பயங்கரப் பீதிக்குள்ளாகியிருந்தார்கள்.
ஆளப்பத்திரியிலேயே தங்கியிருக்கும் இன்னொரு மருத்துவர் தொடர்ந்து கூறினார்: "கதிரியக்கப் பகுதியிலிருக்கும் ஒய்வறையை விட்டு விலகிச்செல்லும் நடைபாதைப் பகுதியில் நான் கிடந்தேன். என் கால்கள் வெளியே நீண்டு கிடந்தன. அவற்றின் மீது திறந்திருந்த ஜன்னலொன்றின் வழியே வந்துகொண்டிருந்த மாலைச்சூரிய ஒளி பட்டுக் கொண்டிருந்தது. பயத்தில் உறைந்து போயிருந்த நான் என்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக் கூடாதே என்பதற்காக மரக்கட்டை போலப் படுத்துக் கிடந்தேன். உண்மையிலேயே நான் உயிர்தப்பியது பெரிய அதிர்ஷ்டம்தான். அந்த இராணுவவீரர்கள் ஒரு கிரனைற்றை வீசி எறிந்திருந்தார்கள். அதனால் எண்முன்

327 படுத்துக் கிடந்தவர்கள் எல்லாம் இறந்து போய்விட்டதைக் காலையில்தான் பார்த்தேன். குண்டுகள் வெடிப்பதைப் போல கிறனைற்றுகள் வெடித்துச் சிதறும்போது பயங்கரச்சத்தத்தை எழுப்பியது. பின் கட்டிடச் சிதறல்களும் பெருந்தூசும் எங்கள் மீது படியும் இறந்த மற்றும் காயமுற்றவர்களிடமிருந்து பெருகி வழியும் ரத்தத்தில் தோய்ந்து கட்டியாகும்.
அந்த இரவு முழுதும் விழித்துக்கொண்டே கிடந்த நான் பல்வேறு சத்தங்கள், குரலோசைகள், அவ்வப்பொழுது எங்கள் தலைகளுக்கு மேலால் சீறிப்பரவும் துப்பாக்கி வேட்டுகள் அல்லது கிரணைற் எறியப்படும் சத்தம் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தேன். "அம்மா, டீ, டீ, டீ" என்று ஒரு குழந்தை அழுவது கேட்டது.
இன்னொரு குழந்தை கதறி அழுதது. ஒருவேளை அதன் தாய் இறந்திருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன்.
"என் கால்கள் விறைத்துப் போயிருக்கிறது. நல்லாய்க் குளிர்ந்து போயிருக்கிறது. என் கால்களின் மேல் ஒரு பிணம் கிடக்கிறது. தயவுசெய்து அதை எடுத்துப் போடுங்கள்” என்று இன்னொரு பெண மணி கேட்டுக்கொண்டிருந்தார்.
"அந்தப்பெண்மணியின் வலி முனகலைப் பொறுக்க முடியாமல், "யாராவது அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள் அந்தப்பிணத்தை எடுத்துதவினால் என்ன? உங்களுக்குக் காது செவிடா?" என்று கத்தினேன்.
"அந்தப்பெண்மணி தொடர்ந்து முனகிக் கொண்டிருந்தாள். காலையில் அங்கு நிலவிய அமைதிக்கான காரணத்தை நான் அறியும் வரை சுற்றியிருந்த எல்லாரும் அந்தப் பெண்மணியும் கூட இறந்து போயிருந்தனர். ஒருவர் சிவபுராணத்தை வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். கூடவே, "ராஜீவ் வாழ்க, இந்திராகாந்தி வாழ்க" என்றும் கூவிக்கொண்டிருந்தார்.
"காலையில் அவரும் ஒரு கிறனைற் வெடிக்குப் பலியாகிக் கிடப்பதைக் கணி டோம். வேறு சிலர் கழிப்பறைக்குள் போய் உயிர்தப்பிப் பிழைத்திருப்பபதையும் பின்னர் நாங்கள் கணிடோம். பின் எங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டோம்:
இதை எல்லாம் கேள்விப்பட்டதும் மருத்துவமனை இயக்குநரும் மற்றவர்களும் உடனடியாக வந்து எங்களை ஆஸ்பத்திரியிலிருந்து அழைத்துச் செல்வார்கள். அவர்களெல்லாம் அகதி முகாமில் இருப்பார்கள். அநேகமாய் அவர்கள் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து முறையிட்டு சிலவேளை ஒரு குழுவாக வெள்ளைக்கொடிகளை ஏந்திக்கொண்டு வெளியே வரக்கூடும். பின் அவர்கள் நம்மை மீட்பர்கள். நாங்கள் காலைவிடியும்வரை அவர்களுக்காகப் பார்த்துக் கொண்டிருப்போம்"
"எப்போது விடியும் என்று ஆவலாய்ப் பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையிலேயே நம்பிக்கையோடு இருந்தோம்.
"22ம் திகதி காலை 8.00 மணி அல்லது 830 மணி இருக்கும். டாக்டர் சிவபாதசுந்தரத்தின் குரலைக்கேட்டேன். நாங்கள் அப்பாவி டாக்டர்கள், நர்ஸுகள். நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் சரணடைகிறோம்' என்று உரக்கக்கத்தியவாறு அவர் வந்து கொண்டிருந்தார்.

Page 182
328 "அந்த ஒய்வறைக்கு அவர் திரும்பியதும், ஒய்வறையிலிருந்து செல்லும் மாடிப்படிகளின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு இராணுவவீரன் விடாமல் தொடர்ந்து சுடுவதை நாம் பார்த்தோம். டாக்டர் சிவபாதசுந்தரம் இறந்து போய்விட்டார். தன் கூட வந்த நர்ஸுகளை தனக்கு இருபுறமாகவும் தள்ளி விட்டதில் அவர்கள் காயங்களோடு தப்பித்து விட்டதை நாங்கள் பின்னர் கண்டோம். எங்களுடைய தலைவிதி இனி அவ்வளவுதான் என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது. மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு அங்கு கிடந்தோம். பின் காலை 1030 அல்லது 11.00 மணியளவில் எங்களோடு சேர்ந்து தங்கியிருக்கும் ஒரு பெணி டாக்டர் உயிரோடிருப்பவர்களையும் காயமடைந்தவர்களையும் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக்கொண்டு எழுந்து நிற்குமாறு கூவியழைப்பதைக் கேட்டோம். எங்கள் அறையில் ஆறுபேர் மாத்திரமே உயிரோடு இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் எங்களில் குறைந்தது பத்துப்பேராவது உயிரோடு இருக்கிறோம் என்பது அப்போது தெரியவந்தது. நாங்களெல்லாரும் கைகளை மேலே உயர்த்தியபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். எங்களின் முன்னால் கிடந்த பிணங்களின் மீதெல்லாம் ஏறி நடந்தோம். அந்தச் சடலங்கள் ஒரு மைல் தூரத்திற்கு மேல் விரவிக் கிடந்தது போல் தோன்றியது. இந்தியப்படை எங்களை நெருங்கி வர முடியாமல் அவை பெருந்தடை போலச் செயற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் நாங்கள் தப்பிப் பிழைத்திருக்கிறோம். எங்களில் சிலர் அழ ஆரம்பித்தார்கள். எங்கள் மத்தியில் அப்போதிருந்த ஒரே ஒரு மருத்துவ நிபுணர்தான் எங்களைச் சாந்தப்படுத்தினார்.
"அழாதீர்கள். நாம் அழுதுகொண்டிருக்கும் நேரமல்ல இது. நாம் நிறைய. மிக நிறைய இழந்து விட்டிருக்கிறோம். ஆனால் நாம் செய்ய வேண்டிய பணிகள், பெரும்பணிகள் நிறைய இருக்கின்றன. நாம் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அவற்றுக்காக உழைப்போம்" என்று அவர் கூறினார்.
"அவர் மட்டும் அந்த வார்த்தைகளை எங்களிடம் கூறியிருக்காவிட்டால் நாங்கள் நிச்சயம் ஒரேயடியாக இடிந்து போயிருப்போம். யாழ் மருத்துவமனையின் மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய இந்தச் சிறு அணியினரின் அபாரமான துணிச்சலும் மகத்தான அர்ப்பணிப்பும் தான் முற்றுகை, பீதி, விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்குண்ட நிலையிலும் கூட இயங்கிக் கொண டிருந்த மருத்துவமனைகளில் யாழி மருத்துவமனையைத் தனித்துவத் தோடும் பெருமையோடும் நிலைநிறுத்துகிறது. இமால் முற்றுகையின் கீழ் பெய்ரூட் இருந்த போது போர்ஜ் அல் பராஜ்னே என்ற முகாமில் இருந்த மருத்துவமனை என் நினைவுக்கு வந்தது"
அக்டோபர் 22ம் திகதியிலிருந்து 29ம் திகதிவரை இக்குழுவினர் தங்களின் மனவிசாரங்கள் அனைத்தோடும் தன்னந்தனியாக இரவுபகலாய் காயமுற்றோருக்கு தேவையான சிகிச்சைகளைத் தைரியமாக அளித்துதவினார்கள். ஒரு அறுவைச் சிகிச்சை நிபுணர் கூறியது போல, "என்னுடைய மனைவிக்கும் எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் என்ன நடந்தது என்று கூட எனக்குத் தெரியாது. அவர்களை அகதி முகாமில் விட்டுவிட்டு வந்திருந்தேன். முதல் இரணிடு நாட்களுக்குப்பிறகு நாங்கள் குரூரமாகக் கொலை

329
செய்யப்படப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. அதுதான் பெரிய ஆறுதல். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில். கத்தியின் மீது நடந்து கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்குத் தெரிந்தது. ஷெல்கள் விழுந்து நோயாளிகள் தாக்குண்டபோது நான் முற்றாய் பொறுமை இழந்து போனேன். ஆத்திரம் எனக்குள் பொங்கி வெடித்தது. நிலக்கணிணி வெடிகளால் காயமடைந்த இந்திய இராணுவ வீரர்களும் எங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தனர் -பூரணமாய் சிதைந்து போன நிலையில். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்குமாறு எங்களைக் கேட்டனர். டாக்டர்களாகிய எங்களுக்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்குள் வந்த கணத்திலிருந்து அவர்கள் நோயாளிகள் மட்டுமே. அவர்கள் சிகிச்சையை நாடிநிற்கிறார்கள். எங்களின் கடமைகளோ அளவிறந்த முக்கியம் கொண்டன"
தன் துயரக்கதையைக் கொட்டி அவருக்கேயுரிய நகைச்சுவையுணர்வு விரவ அவர் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டபோது யுத்தத்தால் சிதையுண்டு போய்க்கிடக்கும் யாழ்நகரின் இந்த மருத்துவமனையில் மருத்துவ அக்கறை குறித்து உத்வேகம் வியாபித்து நிற்கிறது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
இலங்கை அரசபடைகள் எம்மைச் சூழ்ந்திருந்த வேளையில் யுத்தகாலங்களில் கூட ஒரு மருத்துவமனை எவ்வாறு இராணுவத்தால் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியச் செஞ்சிலுவைச்சங்கம் முன்னர் விடுத்திருந்த பிரகடனங்களின் பின்னணியில் வைத்து நோக்கும்போது யாழ் மருத்துவமனைக்கு நேர்ந்த இந்த விஷப்பீட்சை இதற்கு முன் வேறு எங்குமே இப்படி நேர்ந்திராத ஒன்றாகும். பல கேள்விகள் விடைகளின்றி அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றன. நோயாளிகளையும் மருத்துவமனை ஊழியர்களையும் எச்சரிக்கை செய்வதற்கோ, அவ்விடத்தை விட்டு அகற்றுவதற்கோ, நோயாளிகளையும் மருத்துவமனை ஊழியர்களையும் தனியே ஒதுக்கி விடவோ எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்? மருத்துவமனை சுற்றிலும் ஏன் வளைத்து முற்றுகையிடப்படவில்லை? நோயாளர்களும் நோயாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களும் கொல்லப்படுவதற்காகப் பின் தங்கி நின்றது போலிருக்க, தப்பி வெளியேறிக் கொள்ளக்கூடியவர்கள் ஆஸ்பத்திரியின் பின்வாயிலால் வெளியே சென்று விட வசதியாக வெளிவாசல் திறந்து கிடக்க இந்திய இராணுவம் மருத்துவமனைக்குள் முன்வாயில் வழியாக மட்டுமே நுழைந்தது ஏன்?
விடுதலைப்புலிகள் அந்த மருத்துவமனையில் முன்னர் இருந்தார்கள் என்பது உண்மைதான். தங்கள் ஆடைகள் உலர்வதற்காக அவர்கள் அவற்றைக் கொடியில் காயப்போட்டுக் கொண்டிருப்பதைத் தான் கண்டதாக ஒருவர் கூறுகிறார். ஆளப்பத்திரி வளவிற்குள் சில ஆயுதங்களை அவர்கள் விட்டுவிட்டுச் சென்றதை இன்னொருவர் பார்த்திருக்கிறார். அது அவ்வாறே இருந்து விட்டுப் போனாலும் ஒரு மகத்தான தேசத்தின் தொழில் நுண்முறை மிகுந்த இராணுவம் சர்வதேச விதிமுறைகளைப் பற்றியோ, ஒருநாளுமே துல்லியமாக மதிப்பிட்டுக் கூற முடியாத மனித உயிர்களினி பெறுமதியைப்பற்றியோ ஒரு துளிகூட அக்கறை காட்டாமல் பொதுமக்களைக் கொணிட ஒரு மருத்துவமனையைத் தாக்கிச் சிதறடித்தது ஏன்? இந்தச்சம்பவம் குறித்து எந்தப் பொதுவிசாரணையும் இருக்க முடியாதென இந்திய அதிகாரிகள் தீர்மானித்து விட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

Page 183
330
இந்தச் சம்பவத்தின் போது இந்திய இராணுவம் செயற்பட்ட விதம் நிதனமாகவே சொல்வதானால் கூட அது தன்னுடைய கடந்த காலட் பிரகடனங்களிலெல்லாம் வகுத்துக் கொணடதாகக் கூறப்படும் நெறிமுறைகளுக்கு மிக இழிவாய் நடந்து கொண்டது என்று நிச்சயமாகக் கூறலாம். யாழ் மருத்துவமனைக்குள் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருந்த சமயங்களிலெல்லாம் இந்தத் தாக்குதல் நடவடிக்கையைப் பொறுப்பேற்று நடத்திய இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு எதிரே இருந்த கட்டிடங்களில்தான் முகாமிட்டிருந்தனர் என்று நேரிற்பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றன. இந்திய இராணுவத்தின் அத்துமீறிய பிழையான நடவடிக்கைகள் பற்றி வரும் புகார்களை எல்லாம் இதற்கு முந்தைய சமயங்களிலெல்லாம் முரட்டுத்தனமாக உதறித் தள்ளி விடும் ஒரு உயர்மட்ட இராணுவஅதிகாரி சில மாதங்களுக்கு முன் அபூர்வமாக ஒன்றை ஒப்புக்கொண்டார். அந்தத் தாக்குதல் தொடங்கப்பட்ட சமயம் இராணுவம் பல வீரர்களை இழந்து விட்டிருந்ததென்றும் அவர்கள் மிகப்பயந்து போயிருந்தனரென்றும் அவர் தெரிவித்தார். "மாலை ஆகிக்கொண்டே வரவர வேகமாக இருள் சூழ ஆரம்பித்தது, வானத்தில் கருமுகில்கள் திரண்டு கொண்டிருந்தன. யாழ்நகர் இருண்ட விநோதமான தோற்றம் கொண்டிருந்தது என்றார். அச்சங்கொண்டிருந்த-சரியான முறையில் அறிவுறுத்தப்படாத - பொறுப்பான யாருடைய வழிநடத்தலும் இல்லாத-தமிழோ ஆங்கிலமோ அறியாத இந்த நபர்கள் ஆளப்பத்திரிக்குள் உயிர்ப்பிச்சை கேட்டுநிற்கும் குரல்கள், வேதனை முனகல்கள், சத்தங்கள் அனைத்தையுமே தங்களுக்கு எப்படி எப்படி எல்லாம் சரி என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த மாதிரி எல்லாம் விளங்கிக்கொண்டு, நினைத்தபடி நடந்து கொள்ளத்தக்க விதத்தில் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகின்றது. இராணுவ வீரர்களுக்கு அவர்களின் உள்ளுணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களை விட அதிகம் பயந்து, அனாதரவான அப்பாவி மக்களின் மனநிலையை-உணர்ச்சிகளைச் சிந்தித்துப் பார்க்க அவர்களுக்கு யாருமே கற்றுக்கொடுக்கவில்லை போலிருக்கிறது. பயம் என்பது உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான ஒன்று என்பதால், பெருந்தேசங்களின் நெறிசமைக்கும் தளபதிகளெல்லாம் பலநேரங்களில் பயந்துபோன தனிநபர்களே என்பதை ஒத்துக்கொள்வது இந்தியாவிற்கோ அல்லது வேறெந்த வலிமை வாய்ந்த நாட்டிற்கோ தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்றாக நினைத்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
பல மாதங்கள் கழிந்து சமயச்சடங்குகள் சகிதம், தாகூரின் 'வந்தே மாதரம் என்ற பாடலைப்பாடி இராணுவம் தங்கள் முகாம்களைக் கலைத்துக் கொணர்டிருந்த சமயம் கெப்டன் டாக்டர் சித்தத் டே விடைபெற்றுச் செல்லுமுகமாகத் தனக்குப் பரிச்சயமான ஒரு பழைய நண்பரைப் பார்க்க வந்திருந்தார். பார்ப்பதற்கு இளைய, நிதானமான, மென்மையாகப் பேசும் சுபாவத்தினராக அவர் தென்பட்டார். இராணுவ மருத்துவரான இவர் மருத்துவமனை நிகழ்ச்சியில் வகித்த பங்கு பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரைப் பொறுத்தவரை அவர் ஆற்றிய பங்கு நிந்திப்பதற்குரியதல்ல.

33
நண்பரொருவரைப் பார்க்க வந்த நேரம் அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். உங்களுடைய மருத்துவப் பணிக்கான கருவிகளில் ஒன்று அல்ல இது என்று நான் நம்புகிறேன்" என்று அவரின் நண்பர் தமாஷாகக் குறிப்பிட்டார். வெட்கத்தோடு மிகவும் தர்மசங்கடப்பட்டுப்போன அவர், "இல்லை, இல்லை. என்னுடைய சொந்தப் பாதுகாப்புக்காகத்தான் இதை வைத்திருக்கிறேன். என்னுடைய தொழில் சார்ந்த கருவிகளெல்லாம் பேக்கில் வைத்திருக்கிறேன்" என்று சீரியஸாகப் பதிலளித்தார். அவரோடு உரையாடிக்கொண்டிருந்தவர் தான் வேடிக்கையாக ஏன் அப்படிச் சொல்லப் போனோம் என்று மனம் வருந்தினார். இதை வேறு யாருக்காவது சொல்லியிருந்தால் அவர் மனம் புண்பட்டுப்போயிருப்பார். நெஞ்சை வருத்தும் யுத்தத்தின் கரும்புகையினூடே மற்றவர்களின் மத்தியில் மனிதாபிமானத்தைத் தரிசிப்பதென்பது ஒரு வினோதமான அனுபவம் தான்! 3.10 மர்மக்கொலை
கே.கே.எஸ். சீமெந்துத் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த விடானியல் என்ற 48 வயதான ஊழியர் விடாமுயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். தானே பிரயாசைப்பட்டு நட்டு வளர்த்த திராட்சைத் தோட்டம் ஒன்றும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக தனது 28வது வயதில் காசநோயால் பீடிக்கப்பட்ட அவர் 1968லிருந்து 1970 வரை இரண்டு ஆண்டுகளை அவர் ஒரு மருத்துவ ஆரோக்கிய வாசஸ்தலத்தில் கழிக்க வேண்டி வந்தது. இதைத் தொடர்ந்து டானியலுக்குத் தொழிற்சாலையில் இலகுவான வேலைகள் மட்டுமே தரப்பட்டன. அவருடைய சகோதரர் ஒருவர் திராட்சைத் தோட்டத்தில் முழுநேரமும் வேலைபார்த்து வந்ததோடு வேறு இரண்டு வேலையாட்களும் திராட்சைத் தோட்டத்தைப் பராமரிப்பதில் அவருக்கு உதவியாக இருந்தனர்.
"ஒபரேஷன் பவான்" என்ற இந்தியத் தாக்குதல் நடவடிக்கையினையடுத்து சண்டை உச்சகட்டத்திலிருந்த போது - யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மெதுவாக இந்திய அமைதிப்படையின் கைக்கு மாறிக் கொண்டிருந்த சமயம். பின்வாங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் தாங்கள் அவ்விடத்தை விட்டுத் தப்பியோடு முன்னர் தங்களது ஆயுதங்களை ஒளித்து வைப்பதற்கு வசதியான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த நிலையில் டானியலின் திராட்சைத் தோட்டம் அதற்கு மிகவும் பொருத்தமான இடமாக புலிகளுக்குப்பட்டது. டானியல் விடுதலைப்புலிகளைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து புலிகளுக்கு மிக அனுதாபமானது என்று சரியாகச் சொல்லிவிடுவதற்கில்லை. தனது தோட்ட வளவுக்குள் புலிகள் ஆயுதங்களை ஒளித்து வைக்க இடந்தர முடியாது என்று அவர் திட்டவட்டமாக மறுத்து விட்டார். ஆனால் புலிகள் அவரைத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தித் தங்கள் வேலையை முடித்துக்கொண்டு விட்டனர். எந்தச் சந்தர்ப்பச் சூழ்நிலையில் என்றாலும் ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை யாருக்குத் தெரிவித்தாலும் அவர்களுக்கு மரணதணிடனைதான் என்று டானியலுக்கும் அவரது குடும்பத்திற்கும் புலிகள் கூறிவிட்டுப் போனார்கள்.

Page 184
332 அவர் வெறுங் "குடிமகனாக” இருந்ததால் இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து வாயை மூடிக்கொண்டிருப்பதைவிட அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. 1988 பெப்ரவரி 5ம் திகதி காலை 11.05 மணியளவில், ஒபரேஷன் பவான் நடவடிக்கையிலிருந்து யாழ்ப்பாணம் முழுவதாய் மீண்டுகொண்டுவிடாத சூழ்நிலையில் 8, 10 பேரடங்கிய ஒரு இந்திய இராணுவப் படைப்பிரிவு ஒரு செக்கண்ட். லெப்டினென்டின் தலைமையில் தெல்லிப்பழை இந்திய அமைதிப்படைத் தளத்திலிருந்து விளாண் சந்தியிலிருந்து கிட்டத்தட்ட 300 யார் தள்ளி அமைந்திருக்கும் டானியலின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. டானியலின் திராட்சைத் தோட்டத்தில் ஆயுதங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதனால் அந்தப் பகுதியைத் தாங்கள் சோதனையிட விரும்புவதாகவும் அவர்கள் டானியலிடம் தெரிவித்தனர். டானியலை அவர்கள் கைது செய்தார்கள். திராட்சைத் தோட்டத்தில் வேலைசெய்து வந்த டானியலின் சகோதரரை அத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஆயுதங்கள் எங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று அந்த இடத்தை இராணுவத்திற்குச் சரியாகக் காட்டும்படி கேட்டனர். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து வரும் என்றஞ்சிய அவர் அந்த இடத்தை அவர்களுக்குக் காட்டிக் கொடுக்கவில்லை. அதனால் இந்திய அமைதிப்படையினர் அவரை மோசமாக அடித்து உதைத்தனர். அவரின் காலில் முறிவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக யாழ் பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து டானியல் தெல்லிப்பழையில் இருந்த இந்திய அமைதிப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதே காலையில் சற்றுப்பிந்தி டானியல் திரும்பக் கூட்டிக் கொண்டு வரப்பட்டு திராட்சைத் தோட்டத்திற்குள் கொணர்டு செல்லப்படுவதையும் அங்கு இராணுவவீரர்களால் பயங்கரமாக அடிக்கப்படுவதையும் டானியலின் திராட்சைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த ஆட்கள் கண்டிருக்கிறார்கள். அதன்பின் மயக்கமுற்ற நிலையில் டானியல் இந்திய அமைதிப்படை வாகனமொன்றில் ஏற்றப்படுவதையும் அவர்கள் பார்த்தார்கள். (ஒருவேளை டானியல் அப்போது இறந்து போயிருக்கவும் கூடும்)
நடந்த நிகழ்ச்சிகளால் அதிர்ந்து போய், என்ன செய்வது என்று தெரியாதவர்களாய் டானியலின் குடும்பத்தினர் அவர்களின் ரோமன் கத்தோலிக்கப் பங்குக் குருவானவரிடம் ஆலோசனை கேட்டு உதவி பெறச் சென்றனர். அதேநாள் மாலை 5.00 மணிக்கு அப்பாதிரியார் டானியலின் உறவினர்களில் ஒருவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு தெல்லிப்பழையில் உள்ள இந்திய அமைதிப்படை முகாமிற்குச் சென்று அம்முகாமிற்குப் பொறுப்பாயிருந்த மேஜருடன் பேசினார். பாதிரியார் பேசியதற்கு, அந்த மேஜர் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணை முடிந்ததும் விரைவிலேயே டானியல் விடுவிக்கப்பட்டு விடுவார் என்றும் தெரிவித்தார்.
சிறிது நேரம் கழித்து, டானியல் வேலைபார்த்து வந்த கே.கே.எஸ். சீமேந்துத் தொழிற்சாலையின் தொழில் முகாமையாளர் அதே இராணுவ முகாமுக்குச் சென்று, ஏதோ சந்து என்ற பெயருடைய அதே மேஜரிடம் சென்று டானியலைப்பற்றி விசாரித்தார். அவருக்கும் டானியலைப் பற்றி பாதிரியாருக்கும் தரப்பட்ட அதே பதில்தான் கொடுபட்டது. என்றாலும், அம்முகாமையாளர் மேஜரிடம் விடாமல் கதைத்து சீமேந்துத் தொழிற்சாலையில்

333
தனி முன்னிலையில் டானியலி விடுதலை செய்யப்படுவார் என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொணர்டார். இரவு 7.00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் அமுலுக்கு வந்து விடுவதால் அம்முகாமையாளர் வீடு திரும்பி விட்டார். ஆனால் டானியல் 5ம் திகதி வீட்டிற்குத் திரும்பவில்லை.
பெப்ரவரி 6ம் திகதி காலையில் விளான் சந்தியில் மின்கம்பமொன்றில் கட்டப்பட்ட நிலையில் டானியலின் சடலம் காணப்பட்டது. அவருடைய தலையில் துப்பாக்கிக்குணிடு துளைத்த காயமிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் காயம்பட்ட இடத்தைச் சுற்றி இரத்தக்கறை எதுவுமே காணப்படவில்லை. ஈமச்சடங்குகளெல்லாம் முடிந்தபின், எந்தவித நீதி விசாரணையும் நடத்தப்படாமல் டானியலின் உடல் புதைக்கப்பட்டது.
இந்தக்கட்டுரையாசிரியர்கள் மருத்துவச் சட்டவியல் வல்லுநர் ஒருவரை அனுகி விசாரித்தபோது இறப்பதற்கு முன் காயம் ஏற்பட்டால் அந்தக்காயம் பட்ட இடத்தைச்சுற்றி இரத்தம் சாதாரணமாகக் காணப்படும் என்றார். என்றாலும் டானியல் வேறெங்காவது வைத்துச் சுடப்பட்டுப் பின் இப்போது அவர் உடல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டிருப்பதற்கும் சாத்தியமுணிடு. ஆனால் தலையில் காணப்பட்ட துப்பாக்கிக்காயம் மரணத்திற்கு முன் ஏற்பட்டதா அல்லது மரணத்திற்குப் பின் ஏற்பட்டதா என்பதை 'ஆட்டோப்ஸி பிரேதப் பரிசோதனை மூலம் மிகத்துல்லியமாகக் கண்டுபிடித்து விடமுடியும் என்று மருத்துவச்சட்டவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். திடிர்ச்சாவுகள் எவையாயினும் அவை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகப் பின்பற்ற வேண்டிய வழிமுறை எனத் தெரிகிறது. ஆனால் டானியல் மரணத்தில் ஏன் இந்த வழிமுறை பின்பற்றப்படவில்லை என்று விளங்கவில்லை.
3.11 நவாலி
இநீதிய இராணுவத்தால் பெருநீ தொகையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் என்ற வகையில் நவாலி பேர் பெற்றிருந்தது. அங்கு கணிடெடுக்கப்பட்ட ஆயுதங்களை எடுத்துச்செல்ல இந்திய இராணுவத்திற்கு கிட்டத்தட்ட 150 ஆட்கள் தேவைப்பட்டனர் என்றும் அவற்றை இரண டு ட்ரக வண டிகளிலி கொண டு செலல வேண்டியிருந்ததெனவும் அவ்வூர்வாசி ஒருவர் குறிப்பிட்டார். அங்கு நடைபெற்ற சில நிகழ்ச்சிகள் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.
அக்டோபர் 15: அப்பகுதி முழுதும் கடுமையான ஷெல் வீச்சுக்கு இலக்கானது, கிராமங்கள் தாக்கப்பட்டன. அதிர்ஷ்டவசமாக, நவாலியில் மூன்று ஷெல்கள் தான் விழுந்தன. உடைமைகளுக்குச் சேதம் ஏற்பட்டது. உயிர்ச்சேதம் எதுவுமில்லை.
அக்டோபர் 18: காலையில் மூன்று ஷெல்கள் விழுந்தன. மாலையில் சற்றுப்பிந்தி, 530லிருந்து 700 மணிக்கு இடையில் நவாலியின் மேல் 25 ஷெல்கள் விழுந்தன. ஷெல் அடித்ததில் இரண்டு பேர் மரணமானார்கள். 10 அல்லது 11 வயதுச்சிறுவன் அடிவயிற்றைத் துளைத்துச் சென்ற காயத்தினால் மரணமடைந்தான். சங்குப்பிட்டியைச் சேர்ந்த ஒரு சவரத் தொழிலாளியும் அடிவயிற்றில் ஏற்பட்ட ஆழமான காயத்தினால் மூளாய் ஆஸ்பத்திரியில்

Page 185
334
மரணமானார். இரண்டு பெண்கள் காயமுற்றனர். ஒரு பெண்ணுடைய காலின் தசை அழுக ஆரம்பித்திருந்ததால் அவருடைய காலை வெட்டி அகற்ற வேண்டியதாயிற்று. மற்றொரு பெண்மணிக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இன்றும் நடக்கமுடியாத நிலையில் இருக்கிறார்.
அக்டோபர் 18: அன்றிரவு இந்திய அமைதிப்படை வயற்காணி வழியாக ஆனைக்கோட்டையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த ஒருவர் வீட்டிலிருந்து போர்வை ஒன்றை எடுத்துக்கொண்டு வர வயலைக் கடந்து போய்க்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 19ம் திகதியிலிருந்து நவம்பர் 12ம் திகதிவரை நவாலியில் ஒருவித அச்சமூட்டும் அமைதி நிலவியது.
நவம்பர் 12: பலத்த ஷெல் தாக்குதல் மீண்டும் ஆரம்பமாகியது. 55ற்கும் மேற்பட்ட ஷெல்கள் நவாலியின் மீது விழுந்தன. அகதிகள் முகாமாயிருந்த கோயில் சேதமுற்றது. மூவர் லேசான காயமுற்றனர்.
நவம்பர் 20: அன்று அதிகாலையில் இந்திய இராணுவம் நவாலியினுள் நுழைந்தது. அவர்கள் உள்ளே புகுந்து வரும் போது விடுதலைப்புலிகள் தாக்கியதில் (அந்த விடுதலைப்புலி மிகச்சிறிய பையன் என்று தெரிகிறது) இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கெப்டன் சிவசாமி ஆவார். அந்த விடுதலைப்புலி ஒரு வீட்டு வளவிலிருந்து சுட்டிருக்கிறார். வீட்டுக்குள் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்ததால் துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகும் வரை அவர்களுக்கு நடந்தது ஒன்றுமே தெரியாது. இராணுவம் வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. தரையில் படுத்திருந்த 52 வயதான திருமதி ஜெயரட்னம் என்ற பெண்மணி சத்தங்கேட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தார். மிகத் துரிதமாய் அவர் தலையில் வெடி தீர்க்கப்பட்டு அவர் உடனடியாகவே இறந்து போனார். வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை. அன்று மாலை சண்டிலிப்பாயிலிருந்து ஷெல் அடியால் காயமுற்றவர்களை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று இராணுவத்தை வழியில் எதிர்கொள்ள நேர்ந்தது. காரிலிருந்த ஆறுபேரும் வெகு கிட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டதோடு அந்தக்காரும் சேர்த்து எரிக்கப்பட்டது.
3.12 தடுப்புக் காவலில் ஒருவர்: சில அனுபவங்கள்
கிறிஸ்டி ஜெயராஜ் என்பவருடைய அனுபவங்கள் கீழே விபரிக்கப்படுகின்றன. இவை வேறு பலராலும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட விபரங்களாகும்.
"நான் நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்திற்கு அருகே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தேன். எங்களைக் கைது செய்து கொண்டு போன மேஜரின் முகாமில் தான் மூன்று நாட்கள் இருந்தேன். அந்த மூன்று நாட்களிலும் நாங்கள் மோசமாக நடத்தப்படவில்லை. எந்தவிதமான விசாரணையும் நடக்கவில்லை. இதன்பின் மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்த பல கைதிகளை பலாலிக்குக் கூட்டிச் சென்றனர். எங்கள் கைகளைக் கட்டித் தரையில் படுக்கவைத்தனர். பயணத்தின்போது எங்களில் பலரைத் துப்பாக்கிப்பிடியால் அடித்தார்கள். நான் தடுப்புக்காவலில் இருந்தபோது இந்த ஒருமுறைதான் நான் இப்படி அடிவாங்கினேன்.

335
பலாலியிலிருந்து அதே ட்ரக் வண்டி காங்கேசன்துறைக்கு செலுத்தப்பட்டது. கே.கே.எஸ். ஆஸ்பத்திரியின் பாவனையில் இல்லாத-முன்பு மருத்துவ அதிகாரிகளின் குவார்ட்டர்ஸாக இருந்த இடம் இப்போது சிறைக்கூடமாக மாற்றப்பட்டு அங்கு இறக்கப்பட்டோம். உண்மையான ஆஸ்பத்திரி என்பது இப்போது சிங்கள இராணுவத்தின் கையில் உள்ளது.
"பதினெட்டு பேர் கொண்ட அறையொன்றிற்குள் நான் விடப்பட்டேன். அறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை அறையின் அளவைப் பொறுத்திருந்தது. ஆகச்சிறிய அறையில் ஐந்து பேர் இருந்தனர். வரவேற்பறையில் அதிகம் பேரிருந்தனர். ஜன்னலைச் சுற்றி முட்கம்பியிருந்தது. அந்த முகாமிற்குள் ஏறத்தாழ 300 பேர் இருந்தனர். விசாரணைகள் எதுவும் ஆகப்பெரிய ரகசியமாய் நடைபெறவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் யாரும் அடி, உதைபடவில்லை. பங்கிட்டு வழங்கப்பட்ட தண்ணிரை நாங்கள்தான் போய் எடுத்துக் கொண்டுவர வேண்டும். எங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தவர்களை மோசமான ஆட்கள் என்று சொல்ல முடியாது. சமயங்களில் மேலதிகமாகத் தண்ணிரை எடுத்துக்கொள்ளவும் அனுமதித்தனர். சுற்றிலும் தகர வீட்டுகளால் அடைக்கப்பட்ட ஒரு குழிதான் எங்களுக்குக் கழிப்பறையாக இருந்தது. உணவுதான் பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்திய உணவு எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எங்களில் பலருக்கு வயிற்றுக்கோளாறுகள் ஏற்பட்டன. ஆட்கள் பாய்களில் படுத்திருக்கும்போதே என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தணிணிராய் மலங்கழித்தனர். நல்லவேளையாக எனக்கு நான்கு நாட்கள் மட்டுமே வயிற்றுப்பிரச்சினையாக இருந்தது. நான் கும்பிட்டுக்கொண்டே இருந்தேன். அதுவும் சரியாகி விட்டது. வேறு சிலரை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
"காங்கேசன்துறையை நாங்கள் சென்றடைந்த ஒரு வாரத்திற்குள் அந்தப் பெரிய மனிதர் வந்தார். அவர் அச்சொட்டாக நாம் சினிமாவில் பார்க்கும் உளவுத்துறை அதிகாரி மாதிரித்தான் தெரிந்தார். கறுப்புக்கண்ணாடி அணிந்து முரட்டுத்தனமாகக் காட்சியளித்தார். அவருடைய பெயர் அன்ரன் ஜோசப்போ என்னவோ என்று கேட்டுத் தெரிந்து கொண்டோம். அவர் வருகிறார் என்றதும் அவரின் கீழ் இருந்தவர்கள் நடுங்கிக்கொண்டு நின்றார்கள். நாங்கள் அவரைத் தமிழ்ச் சினிமாக் கதாநாயகன் சத்யராஜ் என்று அழைத்தோம். எங்கள் பகுதியிலிருந்து ஒரு டசின் பேரைக் கூப்பிட்டு சுவரைப் பார்த்துக்கொண்டு நிற்கும்படி கூறினார். அவர்கள் எல்லாரும் விடுதலைப்புலிகள் என்று பொதுவாய்க் குற்றஞ்சாட்டினார். அவர்களைப் பற்றிய தகவல் கோப்பினைப் புரட்டியபடி அவர்களை விசாரணை செய்தவர் இலங்கை நிபுணர்கள் தந்திருந்த அந்தத் தகவல்களைக் குறித்துச் சந்தேகப்படத் தொடங்கினார். அப்போதுதான் ஜேர்மனியிலிருந்து வந்த பையன் ஒருவன் மீது வெடி குண்டுத்தாக்குதலில் பங்கேற்றிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சத்யராஜ் அந்தப்பையன் சொல்வதைக் கேட்ட பிறகு ஜேர்மனியிலிருந்து வரும்போது எந்த வழியால் வந்தான் என்று கேட்டார். அவன் தனது கடவுச்சீட்டைக் காண்பித்து வழக்கமான வழியான கொழும்பிற்கூடாகத்தான் வந்ததாக நிரூபித்தான். சத்யராஜ் வேறு சிலரையும் விசாரணை செய்து விட்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்.

Page 186
336
அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக இருந்திருக்கும் அதிர்ஷ்டம் எனக்கும் கிடைத்திருந்தால் நானும் விடுதலையாகி இருப்பேன். ஆனால் எனக்கு அதிஷ்டம் இல்லை. நான் விசாரிக்கப்படுவதற்குப் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
எங்களை விசாரணை செய்தவர்களிடமிருந்து எங்களைப் பிடித்த சிங்கள நிபுணர்கள் எங்கள் மீது மேற்கொண்டிருந்த நயவஞ்சகச் சூழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்து கொண்டோம். வெறுமனே எங்கள் முகங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் அதியற்புதமான விஷயங்களைக் கண்டு கொண்டு விட்டர்கள். கிராமசபை ஊழியனாக இருந்த இளைஞன் ஒருவனை கோப்பாயின் விடுதலைப்புலிகளின் தலைவன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். நான் விடுதலைப் புலிகளுக்கு செனறி றி வேலை பார்தீததாகக குற்றஞ்சாட்டியிருந்தார்கள். முடிவில் எங்களை விசாரித்தவர்களே எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய்யானவை என்பதையும் ஏறத்தாழ நாங்கள் எல்லாருமே நிரபராதிகள்தாம் என்பதையும் நம்பும்படியாகியது.
"எங்களோடு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களோடு கதைகளைட் பரிமாறிக் கொண்டு நாங்கள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம். மாதகல் பகுதியிலிருந்து கொணர்டுவரப்பட்டவர்கள் தாங்கள் எவ்விதம் படைத்துறை வாகனத்தொடரோடு வந்த பஸ் ஒன்றில் கூட்டிவரப்பட்டனர் என்பதைப் பற்றிக் கூறினார்கள். முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களிலிருந்து இராணுவவீரர்கள் வீதிவழியிலிருந்த வீடுகளுக்கு ஷெல் அடித்துக்கொண்டே போயிருக்கிறார்கள். அவர்களோடு பஸ்ஸில் பயணம் செய்து கொணடிருக்கும் இராணுவவீரர்கள் தங்கள் தலையை ஆட்டிக்கொணி டு, குணிடு துளைத்த இடங்களை அவர்களுக்குச் சுட்டிக்காட்டியவாறு, "விடுதலைப்புலிகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள்" என்று கூறுவார்கள். எங்கள் முகாமில் இரண்டு பெண்கள் இருந்தார்கள், ஒருவர் நாவாந்துறையைச் சேர்ந்தவர். இருவருமே மனநோய்க்கு ஆளாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் யாழ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். காங்கேசன்துறைக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன் அவர்களோடு இருந்தவர்கள் அப்பெணிகள் அங்கு பயங்கரமான அனுபவங்களைச் சந்திக்க நேர்ந்ததாகக் கூறினார்கள். அந்த இரானுவ ஆஸ்பத்திரியில் தமிழ் ஆண் தாதி ஒருவர் இருந்தார். அவர் மிகவும் அன்பானவர். தன் பொறுப்பில் இருந்த பெண்ணின் நிலை குறித்துப் பெரிதும் வருந்திய அவர் அப்பெண்ணுக்குத் தானே உணவு ஊட்டியும் வந்தார்.
பருத்தித்துறை ஆஸ்பத்திரியில் தற்காலிக மாவட்ட வைத்திய அதிகாரியாக இருந்த டாக்டர் லலிதகுமார் எங்களுக்கு அடுத்த அறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். எங்கள் அறைகளின் கதவுகள் பெரும்பாலான நேரங்களில் திறந்தே வைக்கப்பட்டிருந்தபடியால் நாங்கள் அடிக்கடி கதைத்துக்கொள்வோம். தன்னிடம் விசாரணை நடத்துபவர்களிடம் பல நேரங்களில் அவர் வாதாடிக் கொண்டிருப்பது எங்களுக்குக் கேட்கும். எங்கள் முகாமைச் சேர்ந்த டாக்டர் அவரை அடிக்கடி போய்ப்பார்த்து நீண்டநேரம் அவரோடு அளவளாவுவார். வெளியுலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை டாக்டர் லலித்குமார்

337
மூலம் முகாம் மருத்துவரிடமிருந்து நாங்கள் தெரிந்து கொள்வோம். ஒரு மாதத்திற்குப் பின் டாக்டர் லலிதகுமார் உண்ணாவிரதமிருக்கத் தொடங்கினார். தான் செய்த எந்தக் குற்றத்திற்காகவும் அவர்கள் அங்கு தன்னைப் பிடித்து வைக்கவில்லை என்றும் பருத்தித்துறை ஆஸ்பத்திரிக்குள் இந்திய இராணுவம் நுழைந்த விதம் குறித்துத் தனது எதிர்ப்பைத் தான் வெளியிடத் துணிந்த காரணத்தினால்தான் தன்னைத் தடுப்புக்காவலில் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர் தீர்மானமாகக் கூறிவந்தார். நாலு நாட்களுக்குப் பிறகு சத்யராஜ் வந்தார். லலிதகுமாரைக் கண்டு கதைத்த பிறகு அவரை விரைவிலேயே விடுதலை செய்வதாய் ஒப்புக்கொண்டார். டிசெம்பர் மத்தியையடுத்து அவர் சீக்கிரமாகவே விடுதலை செய்யப்பட்டார்.
'நான சுகவீனமுற்று இராணுவ மருத்துவமனையிலி அனுமதிக்கப்பட்டிருந்ததால் என்னுடைய விடுதலை மேலும் இரண்டு வாரங்கள் பின்போடப்பட்டது. இராணுவ மருத்துவமனையில் நாங்கள் நல்ல முறையில் நடத்தப்பட்டோம். எங்களுக்கு அங்கு நல்ல உணவும் வழங்கப்பட்டது. நத்தாருக்குச் சில தினங்கள் முன்பாக நான் விடுதலை செய்யப்பட்டேன்" 3.3 :"...îG H (FRIDO)
நாய்கள் கனவான்களாக இருக்க முடியுமென்றால் ஃபிரிடோ நிச்சயமாக ஒரு கனவான்தான். அவனுக்கு சுயமரியாதை பற்றிய உணர்விருந்தது. ஒரு அகம்பாவம் பிடித்த பொமரேனியன் நாய் அந்த வீட்டில் மிகுந்த மரியாதையுடன் வந்து சேர்ந்தபோது ஃபிரிடோ தன்னுடைய பெரும்பாலான நேரத்தைத் தெருக்களிலேயே கழிக்க ஆரம்பித்தான். எப்போதாவது தனது அண்டை அயலாருக்குத் தொந்தரவு கொடுக்கவும் செய்தான். அக்கம்பக்கத்துப் பெண் நாய்கள் வந்து அவனை மொய்த்துக் கொண்டன. அவன் தனது- நாசியால் தங்களை முகரும் ககத்திற்காகவும் தங்கள் மேனியின் பூச்சி, பொட்டுகளைப் போக்கிக் கொள்ளவும் அவை அவனை நாடிவரும். மற்றபடி அவை தங்கள் போக்கில் இயங்கிவர ஃபிரிடோ அவர்களை அனுமதித்திருந்தான். அவை வேறு பிறநாய்களோடு சிநேகமாக இருப்பது பற்றி எல்லாம் சண்டை பிடித்துக் கொள்ளமாட்டான். அக்டோபர் யுத்தத்தின்போது ஒரு அகதி முகாமிலிருந்த நாய்களில் ஃபிடோவும் ஒருவனாய் அமைதியாய் இருந்தான். ஷெல் மோதுண்டு சிதறும் சப்தத்தில் மற்ற நாய்களெல்லாம் பயந்து நடுங்கிப் பதுங்கிய போதெல்லாம் ஃபிரிடோ மட்டும் தனக்கு அதைப்பற்றி அக்கறையே இல்லை என்ற பாணியில் அமைதியாக அங்கு நடந்து திரிவான். ஆனால் அவன் அன்பு மிகச்செலுத்திய மனுஷி ஒருவர் இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தை விட்டு வேறெங்காவது சென்றிருக்கும் நேரங்களில் எல்லாம் ஃபிரிடோ கண்ணிர்த்தடம் பதிந்த முகத்தில் அழுக்கு கரைகட்டி நிற்கக் காணப்படுவான்.
மோதல்கள் ஒரு முடிவுக்கு வந்ததும் வாழ்க்கை திரும்பவும் பழைய நிலைக்கு வந்திருந்தது. ஜனவரி வந்தது. ஃபிடோ வீட்டார் கொழும்புக்கு இடம் பெயர்ந்தார்கள். ஃபிரிடோவும் ஒரு லொறியில் சாமான்களோடு அனுப்பி வைக்கப்பட்டான். கிளிநொச்சியில் சாமான் பெட்டி சேதமடைய, அவன் லொறியிலிருந்து இறக்கப்பட்டு அவனுக்குத் தெரிந்த சிலரோடு இருக்க வேண்டி வந்தது. பத்து நாட்களுக்குப் பிறகு அவன் மீண்டும் யாழ்ப்பாணத்தில் பிரசன்னமானான்.

Page 187
338
45 மைல்கள் போக வேண்டிய பயணத்திற்கென ஒரு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவன் யாழ்ப்பாணத்திற்கு வழி கண்டுபிடித்து எப்படி வந்து சேர்ந்தான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் தான் முன்பிருந்த வீட்டிற்கு ஒடிப்போய் தனது அன்பு எஜமானிக்காக அங்குமிங்கும் பார்வையைச் செலுத்தினான். அந்த வீட்டிலிருந்த இரணிடு பையன்கள் ஃபிரிடோ தன்னந்தனியனாய் சகல காவல் நிலையங்களையும் கடந்து திரும்பி வந்துசேர்ந்த துணிச்சலால் ஈர்க்கப்பட்டு அவனைத் தங்களோடு வைத்துக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் ஃபிடோ மனந்தளர்ந்தவனாய் இராணுவவீரர்களும் வாகனங்களும் நிரம்பி வழியும் வீதியில் திரிந்து கொண்டிருந்தான். ஒருநாள் அந்த இரண்டு பையன்களும் ஃபிரிடோவை வீட்டில் கட்டி வைக்க முயன்றார்கள். ஃபிடோ தன்னை விடுவித்துக்கொண்டு ஓடிவிட்டான். அதற்குப் பிறகு அவன் எங்கும் தென்படவேயில்லை. விசேஷமாக அவன் மீது அன்பு கொண்டு கவலைப்பட்ட இன்னொரு பெண்மணி அவனைப்பற்றித் தேடி விசாரித்ததில் ஒரு பயனுமில்லாது போய் விட்டது. கடந்துபோன பழைய நாட்களில் அவனுடைய விசித்திரப் போக்கை ஏற்காதிருந்த பலரும் கூட அவன் காணாமல் போனதில் மிகவும் துக்கமடைந்தார்கள்.
சிலசமயங்களில் இராணுவவீரர்கள் தெருநாய்களைச் சுடுவது தெரிந்ததுதான். ஒருமுறை இராணுவமுகாம் ஒன்றின் எதிரிலிருந்த தெருவில் ஒரு இராணுவ வீரன் 20 அடி தள்ளி நின்றிருந்த ஒரு நாயைச் சுடுவதை அங்கிருந்த சனங்கள் பார்த்திருக்கிறார்கள். முதல் தோட்டா பாய்ந்ததும் அந்த நாய் முதுகுப்புறம் தரையில் பதிய விழுந்து அதன் வால் அது ஏதோ குழம்பித் தவித்ததாய்த் துடித்தது. இரண்டாவது தோட்டாவில் அதன் துடிப்பு அடங்கிப்போனது. வீதியில் நின்றவர்கள் பயமும் அருவருப்புமாய் அக்காட்சியைக் கண்டு நின்றார்கள். ஏன் இப்படிச் சுட்டீர்கள் என்று ஒருவர் அந்த இராணுவவீரனைப் பார்த்துக் கேட்டார். தர்மசங்கடப்பட்டுப் போன அந்த வீரர் விரலால் தனது தலையைச் சுட்டிக்காட்டி, "மூளைக்கோளாறு என்று பதிலளித்தார். இந்த மாதிரி விஷயங்களில் மக்களின் நிலைப்பாடு பற்றி எதுவும் நிச்சயமாகச் சொல்ல முடியாதிருந்தது. யுத்தத்திற்கு முன்னதாகப் பல மாதங்களாக சுகாதார அதிகாரிகள் தெருநாய்களை ஒழிக்க வேண்டியது பற்றி வலியுறுத்தி வந்தனராயினும் அதைச்செய்து முடிப்பதற்கான வசதிகள் அவர்களிடம் இருக்கவில்லை. இத்தகு நாய்கள் மீது இராணுவவீரர்கள் துப்பாக்கியால் கடுங்காட்சி சோகமான பதிவுகளை விட்டுச் சென்றது. மக்களால் இந்தக் காட்சியைக் கண்கொண்டும் பார்க்க முடியவில்லை. ஆனால் பல சாதாரண இராணுவவீரர்கள் மிருகங்களுடன் அன்பாய் இருந்ததையும் காணமுடிந்தது. கஷ்டமான காலங்களின் போது ஆடுகள் கூட உணவு தேடி இராணுவ உணவுக்கூடங்களுக்குப் போவதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தன. எல்லாவிதக் கஷ்டங்களுக்கு மத்தியில் விலங்குகளுக்கும் அவற்றின் பங்கு கிடைக்கவே செய்தது.
விலங்குகளும் பெருந்தொகையாகக் கொல்லப்பட்டன: காயமுற்று முடமாகின. பசியாலும் பட்டினியாலும் மோசமான காலநிலையாலும் வதையுற்றன. நாய்களின் சொந்தக்காரர்கள் இறந்து போனதாலும் அல்லது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியதாலும் யாழ்நகரில் தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும்

339 அதிகரித்து விட்டது. இராணுவ முகாம்களைச் சுற்றிக்கொணிடு இராணுவவீரர்கள் எறியும் மிச்சம் மீதிகளை உண்டு கொண்டு அவை திரிந்து வருகின்றன.
3.14 ஊரடங்குச் சட்டத்தின்போது நோய்வாய்பட்டால்.
"ஊரடங்கு நேரங்களில் யாருக்காவது சுகமில்லாமல் வந்தால் என்ன செய்வது?" என்று கடந்த காலங்களில் மக்கள் கேட்பதை நாம் அறிவோம். ஆனால் யாழ்ப்பாணம் பிரவுணி வீதியைச் சேர்ந்த திரு திருஞானசம்பந்தர் குடும்பத்திற்கு இது வெறும் ஊகம் சார்ந்த கேள்வியாக அல்லாமல் நிஜமாகவே எதிர்கொள்ள வேண்டிய தொன்றாகிவிட்டது.
திரு சம்பந்தரின் தாய் ஒரு இரத்த அழுத்த நோயாளி. பத்துநாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு மரணமுற்ற விடுதலைப்புலிகளின் அரசியற் பிரிவுத்தலைவர் திலீபனின் மரண ஊர்வலத்தை பார்த்துவிட்டு வந்த பிறகு அவர் சுகவீனமுற்றார். யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் அவசரப்பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு மணித்தியாலத்திற்கும் பென்சிலின் செலுத்துவது உள்ளிட்ட மருத்துவசிகிச்சை அவருக்கு முறையாக வழங்கப்பட்டது. வான் வழித்தாக்குதல் நடக்குமோ என்ற பீதி மற்றும் பல்வேறு வதந்திகளையும் மீறி ஆஸ்பத்திரியைச் சுற்றி யாவும் சீராகவே நடந்து கொண்டிருந்தது. ஆனால் 12ம் திகதி திடுமென ஊரடங்குச்சட்ட்ம் அறிவிக்கப்பட்டு மருந்தகம் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. போதுமான மருந்துகள் இல்லாத நிலையில்தான் செயற்பட்டுக் கொண்டு வந்திருந்த ஆஸ்பத்திரியில் இப்போது பென்சிலின் தீர்ந்துபோய் வெளியில் எங்கும் போய் வாங்கி வருவற்கும் வழி இல்லாது போய்விட்டது. இருக்கிற பிரச்சினைகள் போதாதென்று எங்கிருந்தோ தீர்க்கப்பட்ட ஷெல் ஒன்று ஆஸ்பத்திரி வளவிற்குள் குழந்தைகள் வார்டுக்குள் வந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தத்தீங்கும் ஏற்படவில்லை. எப்போது தலைமீது ஷெல் விழுமோ என்ற நிரந்தர அச்சத்தோடு, சர்வதேச விதிமுறைகளின்படி ஒரு மருத்துவமனை ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்படமாட்டாது என்ற விஷயம் ஆஸ்பத்திரிக்குள் இருந்த மக்களுக்கு எந்த நிம்மதியையும் வழங்கவில்லை. மேலும் தீபகற்பம் முழுதும் மின்வெட்டு வேறு அமுலில் இருந்தது. யாழ் பெரியாஸ்பத்திரியும் இதற்கு விதிவிலக்கில்லை. மின்வெட்டின் காரணமாக ஆஸ்பத்திரியில் தணிணிர் வருவதும் நின்று போனது. நோயாளிகள் நிரம்பி வழியும் ஒரு மருத்துவமனையில் மின்சாரமும் இல்லை தண்ணீரும் இல்லை எனிறாலி நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை பணிணிப்பாருங்கள்.
சுகவீனமுற்றிருக்கும் தங்கள் தாயாரைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான் திருஞானசம்பந்தரின் குடும்பத்தினர் அந்த ஆஸ்பத்திரியில் தங்கிநின்றனர். அங்கு அவர்கள் தங்குகின்ற நேரத்தில்தான் மனித குலத்தின் விதியை நிர்ணயிக்கும் முடிவுகளை மேற்கொள்ளும் பொறுப்பைத் தாங்கியவர்களால் நிகழ்த்தப்பட்ட சில உச்சக்கட்ட கொடூர நிகழ்வுகளுக்கு அவர்கள் சாட்சியங்களாக வேண்டியநிலை ஏற்பட்டது. திரு ஞானசம்பந்தரின் தாயோடு அங்கிருந்த இன்னொரு சக நோயாளி குடும்பமும் ஊரடங்குச் சட்டத்தின்

Page 188
340
காரணமாகவும் போக்குவரத்து வசதியில்லாத காரணத்தாலும் ஆஸ்பத்திரியிலே நின்றுவிடத் தீர்மானித்தனர். 12ம் திகதி பின்னேரம் நாலாதிசைகளிலும் துப்பாக்கிச் சப்தமும் குண்டு வெடிச்சத்தமும் கேட்ட வண்ணமிருந்தபோது தன் மனைவியுடன் தனது மகள் இருவரையும் அங்கேயே இருந்து கொண்டிருக்கச் சொல்லிவிட்டு அந்தத் தகப்பனார் எங்காவது உணவு வாங்கிக் கொண்டுவர முடியுமா என்று பார்க்க ஆஸ்பத்திரியை விட்டு வெளியில் சென்றிருந்தார். இரவாகியும் அவர் திரும்பி வராததால் வெளியில் ஷெல் அடியும் துப்பாக்கிச் குடாயும் இருப்பதால் அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் இருப்பதற்காக அப்பா எங்காவது அடைக்கலம் புகுந்திருக்க வேண்டும் என்று அம்மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அதற்கிடையில் தாங்களிருந்த வார்டில் ரத்தம் தோய்ந்த உடல்கள் சில தங்களைத் தாண்டி எடுத்துச் செல்லப்படுவதை அவர்கள் பார்த்தனர். அவர்களில் சிலர் இறந்து போயிருந்தார்கள் சிலர் மோசமாகக் காயமடைந்திருந்தனர். தங்களின் தந்தை இன்னும் திரும்பி வரவில்லை என்று கவலையுற்ற அப்பெணிகள் மறுநாள் காலை அவரைப் பற்றி அங்குமிங்கும் விசாரித்துப் பார்த்துக்கொண்டு அவரைத் தேடிப்பார்க்க வெளியே செல்ல முற்பட்டபோது இறந்துபோன அவர்களின் தந்தையின் உடல் ஆஸ்பத்திரியின் பிணவறையில் கிடப்பதாக யாரோ அவர்களிடம் தெரிவித்தனர்.
தண்ணிலிருந்து மருந்து வரை எல்லாமே பற்றாக்குறையாயிருப்பதையும் அங்கு நிகழ்ந்த குரூர நிகழ்ச்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தனது தாயை ஆளப்பத்திரியிலிருந்து வீட்டிற்குக் கொண்டு போய் விடுவதுதாணி நல்லது என்று திரு சம்பந்தர் தீர்மானித்தார். நோயாளிகளுக்குக்கூட ஆஸ்பத்திரியைவிட வீட்டில் நிலைமை நிச்சயம் மேலாகவே இருக்கும் என்று அவர் கருதினார்.
செவ்வாய்க்கிழமை திரு சம்பந்தரின் வீட்டுக்கு நேர் மேலேயிருந்து ஒரு ஹெலிகொப்டர் யாழி பல கலைக்கழக வளாகதீதை நோக்கிச் கட்டுக்கொண்டிருந்தது. அதே தினத்தன்று தங்கள் அண்டை வீட்டாரின் சகோதரரும் அவரின் முழுக்குடும்பமும் திருநெல்வேலியில் பிரம்படி ஒழுங்கையில் கொல்லப்பட்டு விட்ட செய்தியை அவர்கள் அறிந்தனர். அந்தக் கதையைச் சொல்ல அந்தக்குடும்பத்தில் ஒரு சிறுகுழந்தை மட்டுமே மிஞ்சியிருந்தது. அன்று பின்னேரம் திரு சம்பந்தரையும் அவரது குடும்பத்தினரையும் தவிர அவரது வீட்டிற்கு அக்கம்பக்கத்திலிருந்த அனைவரும் தத்தம் வீடுகளை விட்டுவிட்டு அகதி முகாம்களுக்குச் சென்றுவிட்டனர். சுகவீனமுற்றிருக்கும் தாய், நடக்க முடியாதிருந்த தந்தை ஆகியோரின் நிலையைக் கருதி என்ன நடந்தாலும் குடும்பமே ஒன்றாய் நின்று வருவதை எதிர்கொள்வதுதான் என்று தீர்மானித்தவர்களாய் வீட்டிலேயே இருப்பதென்று அவர்கள் முடிவு செய்தனர். பன்னிரண்டு நாட்களாக, அந்த அயலில் அவர்கள் மட்டுமே என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுக்கொண்டு

341 மின்சாரமும் தண்ணீரும் இல்லாத சூழலில் சுகவீனமான தங்கள் தாயைப் பராமரித்துக்கொண்டு தனியே இருந்தனர்.
21ம் திகதி அப்பகுதியில் பலத்த ஷெல் தாக்குதல் ஆரம்பமாகியது. ஷெல் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொணி டிருக்க, இந்திய அமைதிப்படைகள் யாழ் கோட்டையிலிருந்து வெலிங்டன் தியேட்டர் சந்திவரை வந்துவிட்டதாக வதந்திகளும் உலாவின. பிரம்படி ஒழுங்கையில் நடந்த நிகழ்ச்சிக்குப்பிறகு அங்கு தொடர்ந்து இருப்பது அபாயமே என்றுணர்ந்தவர்களாய் சம்பந்தரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கோயிலுக்குள் எப்படியோ சமாளித்துக்கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டனர். சுகவீனமுற்றிருந்த தாயை வைத்துக்கொள்ள அங்கு ஒரு அறையும் கிடைத்தது.
இரவின்போது திரு சம்பந்தரின் தாய்க்கு மிகவும் முடியாமல் போய் கிட்டத்தட்ட சுவாசமிழந்த நிலைக்கு வந்துவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டி வந்தது. அங்கே அவருக்கு உதவவும் கொண்டுபோய்க் கொண்டு வரவும் அவருக்கு ஒருவரின் உதவி தேவைப்பட்டது. ஆனால் மோசமான நிலை என்னவெனில் இவை எல்லாவற்றையுமே ஒரு டோர்ச் விளக்கைத் தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லாத இருட்டுக்குள்தான் செய்ய வேண்டியிருந்தது. டோர்ச் விளக்கைக்கூட அவ்வப்போதுதான் பாவிக்க முடிந்தது. ஏனெனில் இராணுவம் அயலண்டையில் வந்திருக்குமென்றும், விளக்கு வெளிச்சத்தைக் கண்ட மாத்திரத்திலேயே சுடத்தொடங்கி விடுவார்கள் என்றும் மக்கள் பயந்து கொண்டிருந்தனர்.
காலையானதும் தாயின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில் இராணுவமும் இன்னும் அங்கு வந்து சேரவில்லை என்றறிந்து வெகு சிரமத்தின் மத்தியில் அவர்கள் ஒரு காரை வாடகைக்குப் பிடித்து நோயுற்றிருந்த அத்தாயை டாக்டர் கங்காதரனுடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு அவசரச்சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அந்த மருத்துமனை மூடப்பட்டு நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. மீண்டும் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நோயாளியோடு அக்குடும்பத்தினர் மூளாய் ஆஸ்பத்திரியை நோக்கிச் சென்றனர்.
வழியில் ஒன்றும் அதிகம் பிரச்சினை இருக்கவில்லை. அவர்கள் மருத்துவமனையை அடைந்தாலும் ஷெல் அடியாலும் துப்பாக்கிச் சூட்டாலும் பாதிப்புக்குள்ளானவர்கள் நிறைந்து வழிந்ததால் இந்த நோயாளித் தாய்க்கு போதுமான கவனம் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரித்ததால் இடமில்லாமல் அம்மருத்துவமனையிலிருந்த உடற்கூற்றுப் பகுப்பாய்வு அறையும் (மூளாய் மருத்துவமனை மருத்துவ போதனா ஆஸ்பத்திரியாகவும் இருந்தது) திறந்துவிடப்பட்டு அங்கும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் நின்றபோது

Page 189
342 . ஷெல் அடியாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 பேர் ஒரு லொறியில் கொண்டு வந்து இறக்கப்படுவதைப் பார்த்தனர். அவர்களிற் பலர் ஏற்கெனவே இறந்து போனார்கள். அவர்களில் ஆகக் குறைந்த வயதுப் பையனுக்கு பதினைந்து வயது இருக்கும்.
இந்த அடிபட்டவர்களோடு, இருந்த கொஞ்சநஞ்ச மருந்துகளோடு அந்தத் தாய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அக்டோபர் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் இறந்து போனார். அப்பகுதியில் அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவருடைய மகனும் அவருடைய சகோதரிகள் மட்டுமே நின்று அவரின் உடலைத் தகனம் செய்தனர்.
இந்த வயதான பெண்மணியின் மரணம், நடந்த எத்தனையோ சாவுகளில் ஒன்றாக மட்டுமே இருக்கலாம். ஆனால் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் போது சுகவீனமுற நேர்ந்தவர்களின் கதி என்னவாயிருக்கும் என்ற உண்மையை இம்மரணம் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

343
அத்தியாயம் 4 யாழ்ப்பாணத்தில், இந்திய இராணுவ நடவடிக்கையின் உளவியல் தாக்கங்கள் (1987ம் ஆண்டின் இறுதி)
4.1 அறிமுகம்
யுத்தத்தால் ஏற்படும சாவுகள், அங்கiனங்கள், சித்திரவதைகள், துயரங்கள், பொருள் நாசங்கள், வாழ்க்கையின் அவசியத்தேவைகளே அழிந்து போன நிலைமைகள், சமூகச்சிதைவு, மனநிலை அதிர்ச்சி முதலியன சரித்திரம் முழுவதையும் நோக்கினால், அந்த யுத்தம் கேட்டு நிற்கும் விலையாக அளப்பரியதாகவே இருந்து வந்திருக்கிறது. அண்மைக் காலங்களில் யுத்தம் என்பது மென்மேலும் பெருஞ்செலவு பிடிப்பதாகவும் பேரழிவுகள் விளைவிப்பதாகவுமே உள்ளது. அடுத்தடுத்து நிகழும் யுத்தங்களும் அதற்கு அனுசரணையான இராணுவங்களின் பிரசன்னமும் அத்தோடு சேர்ந்து நாசம் ஏற்படுத்துவதில் எல்லையற்ற சக்தி வாய்ந்த-விலையுயர்ந்த யுத்த தளவாடங்களைத் தயாரித்து, அவற்றை ஏராளமாய் வாங்கிக்குவிப்பதும் ஒன்றை தெளிவுபடுத்துகிறது அமைதியான முறையில் தனது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியாத மனிதனின் ஏலாமையையும் அதிகாரத்திற்காகப் போராடும் அவனது வெறியினையுமே இவை கட்டிக்காட்டுகின்றன. இம்மாதிரியான யுத்தத்தில் சிக்கிக்கொண்டுவிட்ட மக்களின் விதி சபிக்கப்பட்ட ஒன்றுதான். 1987 ஐப்பசி. கார்த்திகை மாதங்களில் யாழ்ப்பாணம் அதன் சரித்திரத்திலேயே முன்னென்றும் கண்டிராத மரணங்களையும் அனர்த்தங்களையும் சந்தித்தது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தீராத உள்நாட்டு யுத்தத்தின் ஒரம்சமாக கிழக்கிலங்கையில் முழு மூச்சுடனும் வடக்கே ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் இராணுவ நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒப்பரேசன் லிபரேசன் என்று சொல்லிக்கொண்டு 1987ன் மத்தியில் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை யுத்தத்தை ஈழத்தமிழரின் இதயபாகத்திற்கே கொணிடு வந்து சேர்த்திருந்தது. யாழ்குடாநாட்டின் எஞ்சிய பகுதியிலும் இதே நிலைமை நேரக்கூடும் என்ற அச்சுறுதிதல் இருந்தது. நெடுங் காலமாக தமிழர்களின் நலன் பேணுபவர்களாகவும் காவலர்களாகவும் ரட்சகர்களாகவும் கருதப்பட்டு வந்த இந்தியர்களிடமே இந்தக் கைங்கரியத்தினை முடித்து வைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது ஒரு துயரங்கவிந்த முரண்பாடான விதிதான். கொள்ளை நோயினால் இது போன்றபாரிய மரணங்களைக் கடந்த காலங்களில் சம்பவித்துள்ளன. ஆனால் துயரம், பேரழிவு, பயங்கரம் என்று தொடர்ந்த இந்த அனர்த்தங்களின் கால நீட்சியை கணக்கில் எடுத்துப் பார்க்கும் போது, இந்திய இராணுவத்தின் நடவடிக்கையானது யாழ்ப்பாணம் அதுகாலவரை அனுபவித்திருந்த எந்த அழிவையும் விட எல்லை மீறிச்

Page 190
344 சென்றுள்ளது. இறுதியாக அலசிப் பார்க்கும் போது மரணங்களையும் உடல் ரீதியான துன்பங்களையும் பொருட்சேதத்தையும் விட அப்பாவிப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மனரீதியான விளைவுகளே மிகவும் பாரதுாரமானது. ஒரு யுத்தத்தின் சரித்திரத்தில் இது எந்தவிதத்திலும் புதியதோ, நூதனமான அனுபவமோ அல்ல என்றாலும் ஒரு நேரடி பார்வையாளரின் நோக்கிலிருந்து இக்கொடுர போரின் உளவியற் தாக்கத்தைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியே இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1983-87 காலப் பகுதியில் வட இலங்கையில் நடைபெற்ற தீவிர உள்நாட்டு யுத்தத்தின் உளவியல் நோய்க்கூற்று நிலைமைகள் என்ற பொருளில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்த விரிவான மருத்துவ ஆய்வு முடிவுகளையே இது ஆதாரமாகக் கொண்டுள்ளது.
42 LDGOY G55śf69 (STRESS)
தனிநபரின் ஆளுமையின் பல்வேறு கூறுகளுக்கிடையில் ஏற்படக்கூடிய பரஸ்பரத்தாக்கங்கள் மற்றும் அவற்றின் உள இயக்கப்பாடுகளின் கதியைப் பார்த்தால், யுத்தமானது ஒருவரது மனநிலையில் தீவிரமான மனநெருக்கடியை ஏற்படுத்தவல்லது. ஏற்கனவே ஸ்திரமான ஆளுமை கொணிடவர்கள் மத்தியிலும்கூட குறுகிய காலத்தில் யுத்த அழுத்தங்கள் மனப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியன. அளவற்ற மரணங்களையும் பேரழிவுகளையும் காணநேரும் ஒரு மனிதனுக்கு இந்த ஆளுமைப் பிறழ்வு உக்கிரத்துடன் திடீரென்று ஏற்படும். அவன் அகதியாகவோ அல்லது எந்த நேரத்தில் ஷெல் வெடிக்கும் என்று எதிர்பார்கமுடியாத நிச்சயமற்ற சூழ்நிலையில் வாழும் பட்சத்தில் இந்த ஆளுமைப் பிறழ்வு தீராத ஒன்றாகவும் படிப்படியாக அவரை ஆட்கொள்வதாகவும் இருக்கும். பொதுவாக மனநெருக்கீட்டை ஏற்படுத்தும் சூழல் நீங்கியதும் ஒருவன் பழைய இயல்பான நிலைக்குத் திரும்பிவிடுவான். ஆனால் சிலர் அதன் எச்ச சொச்சங்களினாலும் நிரந்தரமாக உளவியல் பாதிப்புக்குள்ளாகக் கூடும். மனப்பாதிப்புக்கு வெகு எளிதில் அவர்கள் இரையாகக்கூடியவர்களாகி விடுகிறார்கள். ஆரம்பத்திலேயே நிலைமையைச் சமாளித்துக் கொள்ள முடியாமற் போபவர்களும் அல்லது மனநோயால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுமாய் இருப்பவர்களைப் பொறுத்த வரையில் சூழல் ரீதியிலான மன அழுத்தமானது மோசமான மனநோய் நிலைமைக்கு இட்டுச் செல்வதுடன் உணர்ச்சிக்கோளாறு சார்ந்த மனநோயையும் ஏற்படுத்திவிட வல்லது. நோய்க்குறி தோன்றுவதற்கு முன்னதாக ஒருவரின் ஆளுமை, மனநெருக்கீடு நிலைமையை அவர் ஏற்கெனவே எதிர்கொண்ட விதம், குடும்பப் பாரம்பரியத்தில் இருந்த மனநோய்கள், தனிநபர் ஒருவரின் அவருக்கேயுரிய பிரத்தியேக வாழ்நிலைமையில் நிகழ்வின் விசேஷ அர்த்தம் மற்றும் மன நெருக்கீடின் தீவிரம் ஆகியன எத்தகைய உளதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான நல்ல குறிகாட்டிகள். சிலரைப் பொறுத்தவரையில் மன நெருக்கீடு நிலைமையானது சூழலுக்கேற்பத் தன்னை மாற்றியமைக்க

345
உதவுவதுடன் அவரது தனித்த ஆளுமையின் வளர்ச்சிக்கும் உத்வேகத்தை வழங்கி, அதிக மன நிலைமையைத் தாங்கிக் கொண்டுவிடுகிற திறனையும் கூடக்கொடுக்கும். "யுத்த உணர்ச்சி கோளாறு" (WARNEUROSIS) என்று பொதுவாக அழைக்கப்படும் மனநோயின் அறிகுறிகளாக கவலையோடு கூடிய மனச்சோர்வு, களைப்பு, மன அழுத்தம், எரிச்சல், உணர்வுகளின் அதீதக் கூர்மை, பதற்ற எதிர்வினை, தூக்கக் கோளாறுகள், மனநடுக்கம் என்பன அமையும். குறிப்பாகச் சொல்வதாயின் மனப்பதற்றம், இனம் புரியாத பயம், மனச்சோர்வு என்பன இதன் முக்கிய குணக்குறிகளாகும். அகதி முகாம்களில் செய்து கொள்ளப்பட்ட நடமாடும் மருத்துவ சேவைகளிலி பெரும்பான்மையோருக்கு சொறி. சிரங்கு போன்ற தோல் வியாதிகள், வயிற்றோட்டம், குடற்புணர் போன்ற வயிறு, குடல் சம்பந்தப்பட்ட வியாதிகள், மேல் சுவாசக்குழாய்த் தொற்று போன்ற நோய்களை விட தற்காலிக மன நெருக்கீடு, சூழல் காரணமான மனச் சோர்வு, பதகளிப்பு என்பனவற்றாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது. தலைவலி, தலைகற்றல் அல்லது மயக்கம், அஜீரணம், முதுகுவலி, வேகமான இதயத்துடிப்பு, நெஞ்சுவலி, மரத்துப் போதல் போன்ற உணர்வு மற்றும் பலவிதமான உடல்சார்ந்த முறையீடுகளையும் அவர்கள் எதிர்கொணடிருந்தனராயினும் இவற்றிற்கு திட்டவட்டமான உடல் சார்ந்த காரணங்கள் எதனையுமே கண்டுபிடித்துக்கொள்ள முடியாதிருந்தது. அவர்களைக் கேள்வி கேட்டபோது உறங்குவதில் தொந்தரவு, எரிச்சல், மனச்சோர்வு, பசியின்மை, "கவலைகள" ஆகியன அவர்களிடம் இருந்தது தெரியவந்தது. வளர்முகநாடுகளின் நோயாளர்கள் போதுமான உளவியல் பிரக்ஞை இல்லாத நிலையில் தங்கள் மனரீதியான, உணர்வு ரீதியான பிரச்சினைகளை உடல்ரீதியான உபாதைகளாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வாழும் நிலைமையினால் ஏற்படும் தீவிர மன நெருக்கீட்டின் எதிர்வினைகளாகவே இந்தப் பல தரப்பட்ட மெய்ப்பாடுகள் பொதுவாகத் திகழ்வதை இது விளக்குகிறது.
இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் மத்தியில் மனநெருக்கீடு ஏற்படுவதற்கு பல காரணிகளை வகுக்கலாம். அக்காலகட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாயிருந்தது பெருந்தொகையான அகதிகள் ஆகும். சில வேளைகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்புற்ற தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில் இருந்தனர். சில பகுதிகளில் இந்த எண்ணிக்கை 100 சதவீதமாகவும் இருந்தது. "போரிடு அல்லது தப்பி ஓடி விடு" என்பதுதான் அச்சுறுத்தலை உண்டுபண்ணும் ஒரு நிலைமையின் போது அதற்கு எதிரான ஒரு உயிரின் இயல்பான நரம்பியல் - உடலியல் சம்பந்தப்பட்ட எதிர்வினையாக அமைகிறது. அச்சுறுத்தல் அதிபயங்கரமாக இருக்கும் போது தப்பி ஓடுவது மிகச் சாதாரணமான ஓர் எதிர்வினையாகும். நீடித்துச் செல்லும் அபாயத்தின் விளைவாக ஒடித்தப்புவது

Page 191
346
ஒருவரை அவரது வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களை நாடிஇடம்பெயர ஊக்குவிக்கின்றது. அகதியாகிவிடும் நிலை ஒருவரினுள் ஒதுக்கப்பட்ட அனாதை என்ற உணர்வையும், வழக்கமான வாழ்க்கைக்கான ஆதாரங்களை இழந்து போய்விட்டகையறு நிலையையும், நாளாந்த வாழ்வின் அச்சாணியான சீரான அன்றாட நடவடிக்கைகளும் அவனுக்குப் பரிச்சயமான உலகமும் சிதையுண்டு போன உணர்வையுமே ஏற்படுத்துகின்றன. இந்திய இராணுவத்தின் அறிவுரைப்படி பெரும்பாலான அகதிகள் கோவில்களிலும் பாடசாலைகளிலும் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் இதே கோவில்களும் பாடசாலைகளும் குண்டுவீச்சுக்கிலக்காகி அதனால் பல அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழக்க நேர்ந்தது. கொக்குவில் இந்துக்கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ் புகையிரத நிலையம், இணுவில் பிள்ளையார் கோயில், கரம்பன் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஆகிய அகதி முகாம்கள் கொலைக்களங்களாக மாறியது துயரமான சம்பவம்தான். எந்த இடத்தையுமே பாதுகாப்பானதாகக் கருத முடியாமல் இருந்தது. சில அகதி முகாம்களில் முகமூடி அணிந்த தலையாட்டிகள் முன்னால் மக்கள் அணிவகுப்பில் நடத்திச் செல்லப்பட்டனர். சில இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மற்றவர்களைத் தங்களுடன் வெளியில் எடுத்துச் சென்றனர். மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரியில் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். அழுகிக் கொண்டிருந்த சடலங்கள் எரிக்கப்படவோ புதைக்கப்படவோ அனுமதிக்கப்படவில்லை. சில யார் தூரங்களில் தனது இறந்த மகனின் சடலத்தை நாய்கள் தின்று கொண்டிருப்பதை ஒரு தாய் பார்த்துக்கொண்டிருக்க நேர்ந்தது என்று ஒரு தகவல் கூறுகிறது. நெருக்கமான இடங்களுக்குள் பெருந்தொகையான மக்கள் நீண்ட நேரத்திற்கு, சிலவேளைகளில் இரண்டு, மூன்று நாட்கள் அடைபட்டுக்கிடக்க நேர்ந்தது. அவர்களுக்கு உணவோ தணிணிரோ கூடக்கிடைக்கவில்லை. சில வேளைகளில் சில இடங்களில் அவர்களுக்குக் கஞ்சி கிடைத்தது. தாங்கள் இருந்த அறைகளுக்குள்ளேயே அவர்கள் தமது இயற்கைக் கடன்களையும் கழித்துக்கொள்ள வேண்டியிருந்தது. வயது போனவர்களும் குழந்தைகளுமீ இதனாலி பெரிதுமி பாதிக்கப்பட்டிருந்தனர். இந்திய இராணுவத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காயின. அல்லாது போனால் சுட்டு விடப்போவதான அச்சுறுத்தலே அவர்களிடமிருந்து பதிலாகக் கிடைத்தது.
இராணுவம் முன்னெறிவர அகதிகள் தப்புவதற்காக வெவ்வேறு மாற்று அகதி முகாம்களை நாடி நீண்ட தூரம் செல்ல நேர்ந்தது. வயது போனவர்களையும் ஊனமுற்றோரையும் கைவிட்டுவிட்டுத்தான் அவர்கள் போகவேண்டி வந்தது. இறுதியாக ஒரு இடம்கூட மிச்சமில்லை என்று தெரியும் வரை மிகப்பலர் யாழ்குடாநாட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை அலைந்து திரிந்தனர். பணவசதி படைத்தவர்கள் கிளிநொச்சி,

347
வவுனியா, கொழும்பு, சிங்கப்பூர், லண்டன், கனடா, அவுஸ்திரேலியா போன்ற இடங்களுக்குத் தப்பி ஓடிச்சென்று விட்டனர்.
பழகிப்போன ஊரையும் வசிப்பிடங்களைவிட்டகல்வதில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான மனநெருக்கீடு இயல்பான வாழ்க்கை பூரணமாகப் பாதிக்கப்பட்டதன் மூலம் மேலும் அதிகரித்தது. போதிய உணவும் ஓய்வும் மருத்துவப் பராமரிப்பும் கிட்டாததுடன் தொடர்ந்து நிலவிய பதற்றம் கலந்த பயங்கரச் சூழலும் இதனுடன் கூடவே சேர்ந்து கொண்டது. பொதுமக்கள் எதிர்கொள்ள நேர்ந்த மற்றொரு முக்கியமான உளவியல் அழுத்த நிலையானது இந்தியர்களில் நேர்ந்த திடீர் நடத்தை மாற்றம் ஆகும். ஒரு குறிப்பிட்ட மனநெருக்கீடு ஏன் ஏற்படுகிறது என்பதனைப் புரிந்து கொண்டு அதனை ஏற்றுக்கொணிடு விட ஒருவரால் முடியுமானால் ஒரு நபர் இந்த மனநெருக்கீட்டீற்கு இயைந்துகொணர்டு போய் விடலாம் என்பது தெரியவருகிறது. தங்களின் நியாயபூர்வமான மனித உரிமைப் போராட்டத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம் என்று தமிழ்மக்கள் உண்மையிலேயே நம்பியதால் இலங்கை இராணுவம் நடத்திய உக்கிரமான உள்நாட்டுப்போரையும் அவற்றின் அட்டூழியங்களையும் அவர்கள் ஓரளவு தாங்கிக்கொணடனர். இலங்கைத் தமிழர்கள் தமது கலாசாரத்தினதும் பாரம்பரியத்தினதும் ஊற்றாகவும், புண்ணிய யாத்திரைத் தலமாகவும் கருதிய இந்தியாவின் மீது மிகுந்த பற்றும் மரியாதை உணர்வும் கொண்டிருந்தனர். இதனால்தான் அவர்களுக்கு இந்தியாவின் நடவடிக்கை துயரந்தரும் சம்பவமாக இருந்தது. இந்திய இராணுவம் திடீரென்று தமிழ் மக்களைத் தங்களின் விரோதிகளாகக் கருதி ஈவிரக்கமின்றிக் கொண் றொழிக்க முனைந்தபோது-நண பணி. பாதுகாவலன் என்ற நிலையிலிருந்து ஆக்கிரமிப்பாளனாகவும் விரோதியாகவும் மாறிய இந்த உருமாற்றம் பெரும் அதிர்ச்சி தருவதாகவும் உளவியல் ரீதியில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாகவும் அமைந்தது.
பொதுமக்கள் தம்மீதான இத்திடீர்த்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய தயார் நிலையில் இருக்கவில்லை. இந்தியர்கள் வந்ததும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களாகவே இருந்தனர். சாதாரணமாக இலங்கை இராணுவ நடவடிக்கைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை எப்போதும் கையிருப்பில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தைக்கூட நிறுத்தியிருந்தனர்.
இந்திய இராணுவத்தின் இந்த நிலைமாற்றத்தைக் குறிப்பாகப் பழைய தலைமுறையினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாறியமைந்துள்ள புதிய நிலைமையினை அனுசரித்துப் போவதற்காக அவர்கள் மனத்தில் நிராகரிப்பு, மறுப்பு. நியாயப்படுத்தல், அறிவுபூர்வமாக அணுகுதல் போன்ற பல்வேறு உளவியல் பாதுகாப்பு யுக்திகள் செயற்படத் தொடங்கின. இந்திய இராணுவம் தான் சுடுகிறது, ஷெல் அடிக்கிறது என்பதைக் கூட அவர்கள் நிராகரித்தார்கள். அது இலங்கை இராணுவத்தின் வேலைதான் என்று கருதினார்கள். மேலும்

Page 192
348
போராளிகள்தான் கொல்லப்படுகிறார்கள் என்றும் பொதுமக்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டனர். வேறு சிலர் இந்த அட்டூழியங்கள் வடஇந்தியர்களால்தான் இழைக்கப்படுகிறது என்றும் தென்னிந்தியர்கள் "நல்லவர்கள் என்றும் அவர்கள் வடஇந்தியர்களின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்பினர். இதெல்லாம் அவசியம்தான் என்றும் பின்னால்தான் நாங்கள் இதனைட் பற்றிப் புரிந்து கொள்வோம் என்றும் கூறிக்கொண்டு சிலர் நிலைமையை நியாயப்படுத்திக்கொள்ளவும் செய்தார்கள். இன்னும் சிறிது ல் இராணுவ நடவடிக்கைகள் முடிந்து விடும் என்றும் அதன் பின. நர அமைதி நிலவும் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
அன்புவழி, வெற்றிமாலை போன்ற இந்திய வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள் உமிழ்ந்து கொண்டிருந்த உளவியல் பிரகடனங்களை அவர்கள் தொடர்ந்தும் பூரணமாக நம்பினார்கள். தங்களின் வீடுகள் ஷெல் தாக்குதலுக்குள்ளாகியும் தங்களது நேசபூர்வமான அணுகுமுறைகளுக்கு துப்பாக்கித் தோட்டாக்களால் பதில் சொல்லப்படும் குரூர யதார்த்தத்தை நேரில் தாமே காணும்வரை அவர்கள் இந்திய இராணுவத்தின் மீது நம்பகம் மிகுந்தவர்களாகவேயிருந்தனர். பொதுவாக இராணுவம் என்றாலே இப்படித்தானிருக்கும் என்றும். இது இலங்கை இராணுவமாக இருந்தால் இதனிலும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் என்று இன்னும் சிலர் இதனைத் தொடர்ந்து நியாயப்படுத்திப் பார்க்கவும் முனைந்தனர். இதனை அறிவுபூர்வமாகப் பார்க்க முயன்றவர்களும் இருக்கவே செய்தனர். உதாரணமாக, ஒரு புற்று நோய்க்கட்டியை அகற்றுவதற்குக் கொஞ்சம் ஆரோக்கியமான திசுக்ககைளயும் அகற்ற வேண்டிவரும் அறுவைச்சிகிச்சையுடன் ஒரு டாக்டர் இதனை ஒப்பிட்டு நோக்கினார். ஆனால் இங்கு கவனக்குறைவான அறுவையின் மூலம் பெருமளவு ஆரோக்கியமான திசுக்கள் அகற்றப்பட்டு நோயாளியின் உயிருக்கே உலை வைக்கும் நிலையை ஏற்படுத்தி புற்றுநோய் கலன்கள் தப்பி புற்று நோய்க்கட்டி வெகுதூரம் பரவவே வழி கோலியது. எதிர்பாராத விதமான இந்தியத் தாக்குதலின் சூழலில் இத்தகைய அல்லது இதனைப் போன்ற "விளக்கங்களை"க் கொடுத்துக்கொண்டு மக்கள் தமது உளவியற் போக்குகளை சமனிலைப்படுத்திக்கொண்டுவிடப் பார்த்தார்கள்.
மனநெருக்கீடு ஏற்படும் போது அதற்குரிய முறையில் அதனை அனுசரித்துக்கொண்டு போவதற்குநடந்த நிகழ்வின் விபரங்கள் அல்லது தகவல்களைத் தெரிந்து கொள்வது பெரிதும் துணைபுரிவதாகத் தெரியவந்திருக்கிறது. சரியான விபரங்களை அறியாமை, தகவல் தொடர்பில் ஏற்படும் தடைகள் என்பன குழப்பத்தையும் தளர்ச்சியையும் சீர்குலைவையும் ஏற்படுத்துகின்றன. தம்மைச்சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்பற்றிய சரியான விபரங்கள் எதுவுமே மக்களுக்குக் கிடைக்கவில்லை.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வதந்திகளும் அரைகுறை

349
உண்மைகளுமே பரவிக் கொண்டிருந்தன. அன்புவழி, வெற்றிமாலை ஆகிய இந்திய வானொலியின் உள்ளூர் நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணப் பத்திரிகையான ஈழமுரசும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறான செய்திகளைத் தந்து கொண்டிருந்தன. எதிரிகளின் மீது பெரும் இழப்புகளை ஏற்படுத்திவிட்டுத் தாங்கள் வெற்றி மீது வெற்றியைக் குவித்துக்கொணடிருப்பதாக இருதரப்பினருமே பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த இழப்புகள் அல்லது மரணங்கள் என்று கூறப்பட்டதெல்லாம் பொதுமக்களைக் குறித்துத்தான் என்பதுவும் பலத்த யுத்தம் வெளியில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுவும் மிகத் தெளிவாகத் தெரிந்தது. ஐப்பசி மாத நடுவில் ஈழமுரசின் வாய் அடைக்கப்பட்டு விட்டது. உண்மையில் முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகள் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மக்கள் தங்களின் சொந்த வீட்டு வளவுக்குள்ளேயே நடமாட அஞ்சிக்கொண்டிருந்தபோது, கடைகள், அலுவலகங்கள், பாடசாலைகள் யாவும் திறந்தாயிற்று, சேவைகள் யாவும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டன என்ற செய்திகளை இந்திய வானொலி சந்தோஷமாகத் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருந்தது. இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரே, தை 1988ல் பகைமை சற்றுத் தணிந்திருந்த நிலையில்தான் பொதுமக்களின் வாழ்க்கை தட்டுத்தடுமாறி இயல்பான நிலைக்குத் திரும்பியது.
இந்திய இராணுவ தரப்பில் ஆங்கிலத்திலோ தமிழிலோ கதைப்பவர்கள் கூட பொது மக்களுடன் முரட்டுத்தனமாகவும் கடுமையாகவும் அச்சுறுத்தும் வகையிலேயே நடந்து கொண்டனர். இந்திய இராணுவம் உண்மையில் மக்களைப்பற்றி அக்கறைப்பட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அதற்கு எல்லோருமே விரோதிகள். பேசுவதற்கு எதுவுமேயில்லை. யாழ்ப்பாணத்தின் மூத்த பிரஜைகள் வெள்ளைக் கொடிகளை ஏந்திக்கொண்டு பேச முயன்றபோது அவர்கள் முரட்டுத்தனமாகப் பதிலளிக்கப்பட்டவர்களாய் தங்கள் தலைக்கு மேலாகப் பறந்து சென்ற சரமாரியான தோட்டாக்களின் முன்னால் தப்பிப்பின்வாங்கி செல்ல வேண்டியதாயிற்று. தெல்லிப்பழை மாவட்ட மருத்துவமனையில் இரண்டரை மணி நேரமாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஆஸ்பத்திரி வளவிற்குள் விழுந்த 67 ஷெல்களால் ஆஸ்பத்திரி ஊழியர்களில் பலர் காயமுற்றதுடன் பல கட்டிடங்களும் சேதமுற்றன. இவ்வளவிற்கும் மருத்துவமனைக்குள்ளோ அதற்கருகிலோ போராளிகளின் பிரசன்னமோ தாக்குதலோ இருக்கவில்லை. ஷெல் தாக்குதல் நின்ற பிறகு மருத்துவமனையின் சீருடை அணிந்த மூத்த ஊழியர்கள் அடங்கிய குழுவினர் நடமாட முடிந்த நோயாளிகளையும் தம்முடன் சேர்த்துக்கொணிடு அருகிலிருந்த இராணுவ முகாமை அணுகினர். ஆனால் முகாமிலிருந்து நூறு யாருக்கு முன்னரே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமின் சென்ரியில் நின்றவன் தொலைபேசியில் ஏதோ பேசுவது தெரிந்தது. பிறகு அவன் அவர்களை நோக்கித் திரும்பிப் போய்விடுமாறும் இல்லையேல்

Page 193
350
கடப்பட்டு விடுவார்கள் என்றும் கத்தினான். ஐப்பசி 17ம் திகதி மீண்டும் துருப்புகள் அவ்வீதியில் நடந்து சென்றபோது மருத்துவமனை மீதும் சீருடை அணிந்திருந்த மருத்துவமனை ஊழியர்கள் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இந்த ஆஸ்பத்திரி வீதி வழியாக அடிக்கடி இராணுவம் சென்று கொண்டிருந்த போதும் இந்தப்பெரிய மருத்துவமனை அமைப்புடன் தொடர்பு கொள்ள அது எவ்வித முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு மாதம் கழித்து, கார்த்திகை 11ம் திகதி தான் அவர்கள் முதன் முதலாக இந்த ஆஸ்பத்திரியுடன் தொடர்பு கொண்டனர். இம்மாதிரியான தொடர்புகளின்மையானது பொதுமக்கள் மத்தியில் நிச்சயமின்மையையும் நிராதரவான உணர்வையுமே தோற்றுவித்தது. தங்களிடமிருந்து மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்றோ என்ன சட்டதிட்டங்களைத் தாங்கள் பின்பற்ற வேண்டும் என்றோ அவர்களுக்குப் புரியவில்லை.
சூழலின் அழுத்தநிலை விலக்கப்பட்டதுமே மன நெருக்கீடு தானாகவே தணிய ஆரம்பித்தது. மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல ஆரம்பித்து, தெளிவான விபரங்கள் கிடைக்கப்பெற்று அவர்கள் தகவல்களையும் தொடர்புகளையும் ஸ்தாபித்துக் கொள்ளத் தொடங்கியதுமே மனஇறுக்கம் தளர்ந்து சென்றது. பகைமையும் பயங்கரமும் கலந்த சூழல் 1988 தையிலிருந்து தணிய ஆரம்பித்திருந்தது. ஆனால் மனநெருக்கீட்டின் தாக்கத்திலிருந்து விடுபட மக்களுக்கு நீண்டகாலம் பிடித்ததிலிருந்து மனஇறுக்கம் தீவிரமாகத்தான் இருந்தது என்ற உண்மை தெளிவாகியது. இலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடனடியாக மக்கள் இயல்பான நிலைக்குத் திரும்பிச் சென்றதைப் போலவோ அல்லது இராணுவ நடவடிக்கைககள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த போதும அவற்றோடு வாழ மக்கள் பழகிக்கொண்டு விட்டதைப் போலவோ அல்லாமல் தற்போது ஒரு இறுகலான நிலை நீண்ட காலம் நீடித்திருந்தது. ஓர் அருவருப்பான உணர்வாய் அதிர்ச்சியும், அவநம்பிக்கையும், விரக்தியும், பய பீதியும், இழப்புணர்வும், துயரமும் தொடர்ந்து கவிந்தவண்ணமிருந்தன. ஒரு தமிழ்மகன் இந்த அனுபவத்தை எளிதில் மறக்கப்போவதில்லை.
இச்சூழ்நிலையின் அனுகூலமான பக்கத்தை நோக்கினால் சிலர் இந்த அழுத்தநிலைக்குத் தங்களை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டதுடன் தங்களிடமி மறைநிதிருநீத பல தி தையும் சிறந்த தலைமைக்குணாதிசயங்களையும் வெளிப்படுத்தினர். சாதாரண காலங்களில் குழப்பம் விளைவிப்பவர்களாகவும் நிர்வாகத்திற்குப் பெருந்தலையிடியாகவும் கருதப்பட்ட சில தனிநபர்கள் உன்னதமான பணிபுகளோடும் துடிப்புடனும் இக் கடுமையான காலகட்டத்தில் செயற்பட்டமை விசேஷமாக உற்சாகமூட்டுவதொன்றாகும். கடுமையான ஷெல் தாக்குதலின் மத்தியில் தனது ஆஸ்பத்திரியிலும் ஆஸ்பத்திரியின் வதிவிடத்தின் மீதும் நேரடியான துப்பாக்கிச் சூடு நடந்த நிலையிலும் தெல்லிப்பழை மாவட்ட

35
மருத்துமனையைச் சேர்ந்த ஒரு பெண் டாக்டர் தனது குழந்தையையும் வைத்துக்கொண்டு அந்த ஆஸ்பத்திரியைக் கொண்டு நடத்தவே செய்தார். மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் பலர் பயந்து ஓடிவிட்ட பின்னரும் நான்கு தாதிகளுடன் மட்டும் அங்கு தங்கி நின்று இரண்டு மாதங்களுக்கு மேலாக அங்கிருந்த நோயாளிகளைப் பராமரித்தமை அந்த இக்கட்டான நிலையில் மேற்கொள்ளப்பட்ட மகத்தான சேவையாகும்.
ஷெல் வெடித்துச் சிதறும் சூழலில், துப்பாக்கி வேட்டுகளின் மத்தியில், கண்டதும் சுடும் உத்தரவு தொடர்ச்சியான அமுலில் இருக்க, சகல சிவில் அமைப்புகளுமே சீர்குலைந்து போய் எல்லா முனைகளிலும் உக்கிரமான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிக்க, மேலும் நாம் பழக்கப்பட்டுப் போய்விட்ட நாகரிக வாழ்வின் சாதாரணமான வசதிகள் திடீரென்று நமக்கு இல்லாமலாகி விட்டது. வாழ்க்கையின் அத்தியாவசியமான தேவைகள் என்று பொதுவாகக் கருதப்படுகின்ற மின்சாரம், தண்ணீர் வசதி, தபால், போக்குவரத்து, பிரதான வீதிகளை எளிதில் சென்று சேரக்கூடியதாக இருத்தல், மருத்துவமனை மற்றும் வைத்திய வசதிகள், வங்கி வசதிகள், பணப் புழக்கம், வேலைகள், சம்பளங்கள் என்று எல்லாமே இரண்டு மாதங்களுக்கும் மேலாக இல்லாமல் போயின. காத்திராப்பிரகாரமாக மக்களின் கையிருப்புகள் எல்லாமே தீர்ந்துவிட்டன. கடைகள் திறந்திருப்பதைப் பார்ப்பதே அபூர்வமாயிருந்தது. அகதிகள் பெருநீ தொகையாக பெருகிக் கொணிப வணிண மேயிருந்தனர். காயமுற்றவர்களுக்கு மருத்துவ உதவி தேவையாயிருந்தது. நோயுற்றோர், ஊனமுற்றோர், சிசுக்கள், கர்ப்பிணிகள், உணவின்றி வாடிய வீட்டு மிருகங்கள் என்று இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு எல்லையேயில்லை. ஆனால் மக்கள் மாறிய சூழ்நிலைகளை எதிர்கொண்டவிதம் உற்சாகமூட்டுவதாயும் மனதுக்கு இதமளிப்பதாயும் இருந்தது. மக்களிள் பலர் எதனையும் அனுசரித்துப் போகக்கூடியவர்களாயிருந்தனர். பழைய சண்டை சச்சரவுகளை மறந்தவர்களாய் முற்றாக முன்பின் தெரியாதவர்களுக்குக் கூட உதவிகள் புரிந்தனர். அகதிகளாக வந்தோருக்குத் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுத்தார்கள், கைவசமிருந்த உணவைப்பகிர்ந்து கொண்டனர். அகதி முகாம்களுக்கு அரிசி மூட்டைகள், மா, பால், காய்கறி ஆகியவற்றை இலவசமாக வழங்க மக்கள் முன்வந்தார்கள். சிசுக்களுக்கு உணவு, நோயுற்றோருக்குப் பராமரிப்பு, துயருற்றோருக்கு ஆறுதல், அகதிகளானோருக்கு நீண்ட காலத்திற்கு உணவு, உடை, வழங்குதல் என்று இப்படியாகப் புதுப்புது உறவுகள் வேரூன்றின.
தங்களுக்கு பேராபத்து ஏற்படுத்தும் நிலைமைக்குள்ளும் காயமுற்றோரைக் கண்டறிந்து அவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற சிறுசிறு வீரச்செயல்களும் நிறையவே இடம்பெற்றிருந்தன. சுன்னாகத்தில் இருந்த புனித அந்தோனியார் கோயிலில் ஒரு தாதியும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களும் சேர்ந்து மோசமாகக் காயமுற்றிருந்த பதினொரு பேரையும் மறுநாள் மதியத்தின் போது அவர்களை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல,

Page 194
352
அந்தோனியார் கோயிலுக்குப் பொறுப்பாயிருந்த குருவானவருக்கு இராணுவம் அனுமதி வழங்கும் வரை, காயமுற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதவாறு பராமரித்து வைத்திருந்தனர். சங்குவேலியில் சில இளம்பெண்களை இந்திய ஜவான்கள் பிடித்துக்கொண்டு சென்றபோது தைரியசாலியான நடுவயதுப் பெண்ணொருத்தி கண்டதும் சுடும் உத்தரவு அமுலில் இருந்த அந்த நாட்களில் அபாயமான நிலைமைக்குள்ளும் துணிந்து அங்கிருந்த இராணுவமுகாமை அணுகினாள். அங்கு அவர் பலமாகப் போட்ட பெருங்கூச்சலைப்பார்த்த அம்முகாமின் இராணுவ அதிகாரி வானத்தை நோக்கிச்சுட்ட சத்தத்தில் ஜவான்கள் மூச்சுப்பேச்சில்லாமல் முகாமுக்குத் திரும்பி விட்டார்கள். அவ்விளம்பெண்கள் பாலியல் வன்முறையிலிருந்து தப்பிக்கொண்டு விட்டனர்.
அவசர, அவசிய விஷயங்களுக்குத் தீர்வு காண மக்கள் குழுக்களாகத் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டனர். சில துடிப்புள்ள கடைக்காரர்கள் ஆபத்தின் மத்தியிலும் அயலிலிருந்து பண்டங்களை வாங்கிச் சேர்த்து ஊரின் உள்ளேயிருந்த பகுதிகளுக்கு அவசியமான பொருட்களை நியாயமான விலையில் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் எந்தவித வெளியார் உதவியும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவிய மோசமான நெருக்கடி நிலைமையினை மக்கள் முழுதும் தாமாகவே நின்று தாக்குப்பிடித்தனர். சுயசார்பினையும் தன்னிறைவையும் அவர்கள் நிலைபெறச் செய்தது மட்டுமன்றி நாகரிக சமுதாயத்தின் நவீன வசதிகள் யாவுமே இல்லாதொழிந்த நிலையிலும் மண்ணை மட்டுமே ஆதாரமாய்க் கொண்டு வாழ்ந்துவிடக் கூடிய தம்மாற்றலை வெளிக்காட்டினர். எமது பழைய பனைப் பாரம்பரியத்தினை அவர்கள் நடைமுறைச் சாத்தியமாக்கியிருந்தனர்.
4.3 list56fly (ANXIETY)
இனம்புரியாத பயங்கலந்த மனப்பதற்றம் என்பது மனிதனைச் செயலிழக்க வைக்கும் பய எதிர்வினையின் ஓர் உளவியல் கூறாகும். இக்காலகட்டத்தில் பயஉணர்வே மேலோங்கிக் காணப்பட்ட ஓர் உணர்ச்சியாக இருந்தது. இத்தகைய யுத்த சூழ்நிலையில் பத்களிப்பு என்ப்து மிகச் சாதாரண மனநிலையாகவே கொள்ளப்படவேண்டியது. உக்கிரமான பீதி, பயம், அழிவோ மரணமோ நிகழப் போகிறது என்ற உணர்வு, மனஇறுக்கம், கோபம், அதி விழிப்புடன் இருத்தல், எளிதில் அதிர்ச்சிக்குள்ளாதல், மூச்சுவிடுவதில் சிரமம், வேகமான இதயத்துடிப்பு, நெஞ்சுவலி, மூச்சுத்திணறும் உணர்வு, வியர்த்தல், வயிற்றுவலி, பேதி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற உபாதைகளால் மக்கள் பீடிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஷெல் தாக்குதல், துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் இராணுவத்தைக் காணும்போது தங்களுக்கு அடிக்கடி குழப்ப உணர்வு ஏற்படுவதாக அவர்கள் கூறினார்கள். குழந்தைகள் ஓடிப்போய், தங்கள் தாய், தந்தையரை இறுகக்கட்டிப்பிடித்துக் கொண்டனர்

353
அல்லது கட்டிலுக்குக்கீழ் போய் ஒளித்துக்கொண்டனர். தூக்கம் வருவதில் கஷ்டம், திடீர்திடீரென்று விழித்துப் பின் நித்திரையாதல், இராணுவத்தினரால் காயமுறுதல் அல்லது தாங்கள் துரத்தப்படுவது போல பயங்கரக்கனவுகள், விட்டுவிட்டு நித்திரை கொள்தலும் அதனால் விழித்தெழும்போது களைப்பு போன்ற நித்திரை தொடர்பான கோளாறுகளை மிகப்பலர் அனுபவித்தனர். இருதயத்திற்குப் போதுமான குருதி பாயாத நிலையில் ஏற்கெனவே நெஞ்சுவலியால் பாதிப்புற்றிருந்த நோயாளிகள் இந்த மனநிலைப்பாதிப்புகளால் மூச்சுத் திணறலினாலும் வலியாலும் பாதிக்கப்பட்டனர். சிலர் இப்பதற்றநிலையிலிருந்து விடுபட உதவும் ஆசுவாச உத்திகள் போல மந்திரங்களைத் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வதையும் சிறு ஜெபங்களை மேற்கொள்வதையும் அவதானிக்க முடிந்தது.
சில நபர்களைப் பொறுத்தவரை இருத்தலியல் பதற்றநிலை (existential anxiety) என்று கூறத்தக்க பதகளிப்புநிலையும் காணப்பட்டது. மரணங்கள் அழுந்திக் கொண்டிருக்கும் யதார்த்தங்களாயின; மக்கள் அன்றாடம் இந்த மரணபயத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாளாந்த வாழ்க்கையின் அக்கறையிலும் நெருக்குவாரத்திலும் பொதுவாய் மறந்து போன அல்லது மறைந்து போன விவகாரங்கள் பேரழிவுகள் மத்தியில் மீண்டும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. மனிதன் தனது இருப்பை உணர்ந்தான். பிறந்த எல்லோருமே ஒரு நாள் சாகத்தான் வேண்டும் என்ற வாழ்க்கையின் நிலையாமை பற்றி அவனுக்கு உணர்த்தப்பட்டது. கண்முன் மரணங்கள் நிகழ்ந்தபோது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மென்திரை அகன்றது. மனிதன் குரூரமான நிஜத்தினை நேருக்கு நேர் எதிர்நோக்கினான். இருத்தல் சார்ந்த பயம் எல்லாரையும் பற்றிக்கொண்டது. அனுபவத்தில் முதிர்ந்த அனுபூதிமான் நடந்து கொண்டிருந்த போரை இயற்கையின் நாசகாராச்சக்திகளான கொடிய பஞ்சம், கொள்ளைநோய், சூறாவளி ஆகியவற்றுடன் ஒப்பிட்டார். தன் ஆழமான அனுபவத்தை வெளிப்படுத்த புராணக் குறியீடுகளைத் தேடித்தடுமாறிய அவர், "அன்னை மகாகாளி தனது அசுர கணங்களுடன் இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கி தாண்டவமாடுகிறாள்" என விளக்கமளித்தார்.
அதீத பயவடிவிலான கொடுர காட்சி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பரவலாகத் தலைவிரித்தாடியது. மக்களைப் பீதிக்குள்ளாக்கும் முயற்சிகள் திட்டமிட்ட முறையிலேயே நடத்தப்பட்டது என்று ஊகிக்கவேண்டியிருந்தது. ஜவான்களின் நடத்தைகளில் தெரிந்த ஒருமித்த செயற்பாடானது இந்தக் கருத்துக்கு வலுத்தருவதாகவே அமைந்தது. ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளவோ, பேசுவதற்கோ எவ்வித முயற்சியுமே மேற்கொள்ளப்படவில்லை. அம்மாதிரி முயற்சிகள் உண்மையில் ஊக்குவிக்கப்படவில்லை. அப்படி ஏதாவது தேடுதல் நடவடிக்கைகளின் போது பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றாலும் அவை அதே போலத்தான் கரடுமுரடாகவும் எடுத்தெறிந்து பேசுவதாகவுமே இருந்தன. "இந்தப்

Page 195
354
பக்கத்திலிருந்து ஏதாவது சத்தம் வந்ததென்றால் உங்கள் வீடுகளைத் தரைமட்டமாக்கி விடுவோம், உங்கள் அனைவரையும் சுட்டுப்பொசுக்கி விடுவோம்" இந்த வார்த்தைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ஜவான்களால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. மேலிடம் வழங்கிய ஏக உத்தரவுதானா இது? மிரட்டல் வார்த்தைவீச்சுகளைத் தவிர அந்த நிசப்தச் சுவர் உடைந்து போகவில்லை. ஸ்திரமற்ற தன்மையையும், ஒதுக்கிவிடப்பட்ட உணர்வையும், தனிமையுணர்வையும் இவை ஏற்படுத்தின. வெளிஉலகத் தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்டது இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது.
இரண்டாவதாக, ஜவான்கள் தாங்கள் தாங்கள் விரும்பியபடி நடந்து கொள்ள பூரண சுதந்திரம் இருந்தது. கட்டுப்பாடின்றி நடந்து கொள்ள மேலிடத்திலிருந்து தங்களுக்கு தாராள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நிரூபித்தன. மக்கள் தாம் கைவிடப்பட்டவர்களாகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்ததை உணர்ந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பை நாடவோ நீதி கோரவோ வழி இருக்கவில்லை. இம்மாதிரி இங்கு மட்டும்தான் நடக்க முடியும் என்று இந்தியச் செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர் என்னிடம் கூறினார். கேள்விகேட்க எவரும் இல்லை. பஞ்சாப்பிலோ பங்களாதேஷிலோ இந்த மாதிரி எல்லாம் நடந்ததில்லை. இராணுவம் நினைத்தால் அழிக்க, கொல்ல, கொள்ளையிட, பாலியல் வன்முறை செய்யப் பூரண சுதந்திரம் இருந்தது. எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு தடையுமின்றிக் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் இவ்வாறு நடந்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இத்தகைய கட்டுப்பாடு எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டமை பீதி நிறைந்த சூழலை உருவாக்கியது. மார்கழியிலிருந்து சூழலில் சில மாற்றங்கள் தென்படலாயின. ஜவான்கள் தங்களின் நடத்தைகளுக்குப் பொறுப்பேற்க வேணி டியும் அவர்கள் பற்றிய முறைபப்பாடுகளின் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டும் இராணுவ உயரதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தனர். இது சூழலை ஓரளவு சுமுகநிலைக்குக் கொண்டு வந்தது. ஜவான்களும் கூடிய கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள முயன்றனர். பயங்கரம் தலைவிரித்தாடியமைக்குத் துணை புரிந்த மூன்றாவது காரணி இராணுவத்தின் மனிதாபிமானமற்ற நடத்தையாகும். ஈவிரக்கமின்றியும் காட்டுமிராண்டித்தனமாகவும் மக்கள் தள்ளி, மோதி, அடித்து நொறுக்கப்பட்டனர். அந்தஸ்து, வயது, ஆணிபெண் வேறுபாடு எதுவுமே ஒரு பொருளாகக் கொள்ளப்படவில்லை. வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எஞ்சினியர்கள், முதியவர்கள், நோயுற்றோர், ஊனமுற்றோர் என்றெல்லாம் தாம் யாரென்று அவர்கள் தம்மை இனங்காட்டிய பின்னருங்கூட அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், முழுக்குடும்பத்தையுமே வீட்டிலிருந்து வெளியில் இழுத்துச் சுட்டுத்தள்ளினார்கள். இங்கு வேறொரிடத்தில் விபரிக்கப்பட்டுள்ள

355
யாழ்ப்பாண மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாவருமே கொல்லப்பட்ட ரத்தவெறி பிடித்த தாக்குதல் சம்பவம் மக்கள். நெஞ்சில் பீதியை வித்திட்ட காட்டுமிராணிடித்தனமான நடத்தைக்கு அப்பட்டமான உதாரணமாகும்.
நான்காவதாக, கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல், குறிப்பாக எப்போது தாக்குதல் நடக்கும் என்று எதிர்வு கூற முடியாத அதன் எதிர்பாராத்தன்மை, அது எழுப்பும் பயங்கரச்சத்தம் ஆகியன உளரீதியான பீதியை ஏற்படுத்திய முக்கிய அம்சமாகும். முழுப்பகுதியிலும் இவ்வளவு செறிவான ஷெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ஏதாவது இராணுவத்தின் குறிக்கோள் அடையப்பட்டதா என்பது கேள்விக்குரியது. யாழ்ப்பாணத்தின் எட்டு லட்சம் மக்களில் கூடிக்கூடிப்போனால் சில ஆயிரம் பேர் தான் போராளிகளாயிருந்தனர். ஆனால் இந்தியர்களோ ஒரு பெரிய இராணுவத்தை எதிர்த்து மாமூலாக நடத்தப்படும் வழமையான தாக்குதலை நடத்துவது போலவே செயற்பட்டனர். யாழ்ப்பாணத்தில் விழுந்த ஆயிரக்கணக்கான ஷெல் தாக்குதல்களில் ஏதாவது போராளிகளைத் தாக்கியிருக்குமோ என்று மக்களுக்குப் புரியவில்லை. உளவியல் தாக்கத்தை ஆவது எடுத்துப் பார்த்தால், ஷெல் வெடித்துச் சிதறும் நிலையிலும் அவற்றை பொருட்டுத்தாமல் போராளிகள் எதற்கும் அஞ்சாதவர்களாய் சர்வசாதாரணமாய் சம்பாஷித்துக்கொண்டு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
பெருமளவிலான எதிர்த்தாக்குதல் தணிந்த பிறகும் கூட மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டமை ஒரு கெட்ட நோக்கத்தைக் கொண்டிருந்தமையையே எடுத்துக்காட்டுகிறது. ஐப்பசி 12ம் திகதி தெல்லிப்பழை ஆஸ்பத்திரியைச் சுற்றி ஒரு போராளியுமே காணப்படாத நிலையிலும் அங்கு அறுபது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐப்பசி 13ம் திகதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் குழுமியிருந்த கிறிஸ்தவ சேவா ஆசிரமத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தீவிர ஷெல் விழுந்துவெடுத்தன. ஆசிரமக்கூரையின் ஒரு பகுதி சிதைந்து ஆசிரமப் பாதிரியார் மீது விழுந்தது. அப்பொழுது சுற்று வட்டாரத்தில் போராளிகள் என்று யாருமே இல்லை. இதுமட்டுமல்ல, இடியோசை போன்ற சப்தத்தை எழுப்பவல்ல "சப்தக் குண்டுகளும் கூட வீசப்பட்டன. பொது மக்கள் மீது பயங்கர விளைவை ஏற்படுத்தக்கூடிய உளவியல் ஆயுதமாகவே இது பாவிக்கப்பட்டது கணிகூடு. எங்கே, எப்போது குண்டு விழும் என்று தெரியாத நிலையில் ஒருவித எதிர்பார்க்கைப் பதற்றத்துடனேயே இரவுகள் கழிந்தன. சிலர் உளவியல் அதிர்ச்சியினாலேயே மரணமுற்றனர். தனி இரண்டாவது குழந்தையைப் பிரசவித்திருந்த ஒரு தாய், சங்கானை ஷெல் தாக்குதலுக்குட்பட்டபோது சடுதியாகவே மரணமானார். பெரும்பாலான குழந்தைகள் குண்டுவீச்சு இரைச்சலின் விளைவிலிருந்து விடுபடவில்லை. எந்தப் பலத்த சத்தமும் அவர்களை எளிதில் பாதிக்கக்கூடியதாக இருந்தது.

Page 196
356
கொழும்புக்கு அகதிகளாகச் சென்றிருந்த இரண்டு குழந்தைகள் அங்கு புத்தாணிடுக்காக பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டபோது மிகுந்த பதற்றத்துடன் தங்கள் பெற்றோரைக் கட்டிப்பிடித்துக் கொணர்டனர். இரைச்சலினால் ஏற்பட்ட சூழலின் கேடு விலங்கினங்களையும் பாதித்திருந்தது. நாய்கள் நடுங்கிக் கொண்டு நாலாபுறமும் ஒடித்திரிந்தன; முயல்கள் இறந்து கிடந்தன, காட்டுப்பறவைகளை யாழ் குடாநாட்டிற்குள் காணவே முடியாமல் போய்ஹிட்டது. கார்த்திகை மாதப்பிற்பகுதியில் ஒரு முதியவரிடமிருந்து வெளிப்பட்ட ஓர் ஒலம் எல்லா உயிரினங்களின் துன்பத்தையுமே பிரதிபலிப்பதாயிருந்தது. அது "எப்போது இந்த நரக இரைச்சல் நிற்கும்? எப்போது இந்தக் குண்டு வீச்சு நிற்கும்? எப்போது இந்த மண்ணுக்கு அமைதி திரும்பும்?" என்பதாக இருந்தது. −
ஷெல் தாக்குதலின் இன்னுமொரு நாசகார விளைவு யாதெனில் அது ஏற்படுத்தும் பொருட் சேதமும் மக்கள் மீது ஏற்படுத்தும் உடற்சிதைவுமாகும். இணுவில் ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் தங்கள் தலைக்கு மேலால் ஷெல் கூவிக்கொணிடு செல்வதைக் கேட்டனர். சற்றைக்கெல்லாம் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சந்திரசேகரம் இரண்டு கால்களும் இழந்த நிலையில் ரத்தப்பெருக்குடன் ஆஸ்பத்திரி மதிற்கவர் வழியாகத் தூக்கிக் கொண்டு வரப்பட்டார். குண்டு வீச்சுச்சத்தம் கேட்டபோதெல்லாம் இந்தச்சம்பவம் அவர்களின் மனக்கண்முன் வந்து அவர்களைக் கலவரப்படுத்திற்று. இந்தியர்கள் இதில் செய்த நல்ல காரியம், இலங்கை இராணுவம் விரும்பி மேற்கொண்ட பாரிய பீரங்கிக் குணிடுத் தாக்குதல்களையோ, பயங்கர உயிராபத்தை ஏற்படுத்தவல்ல சிதறிப் பரவி வெடிக்கும் ஷெல் தாக்குதல்களையோ நடத்தவில்லை என்பதுதான். பாரிய குண்டு வீச்சுத் தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் பொதுமக்கள் மீது பீரங்கிக் குண்டு வீச்சு நடத்த எந்தத் தேவையும் இருக்கவில்லை.
ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட பெருஞ்சேதத்தின் கேள்விக்குரிய அம்சம் என்னவெனில் இந்த ஷெல் அடிகள் யாழ்நகரப்பகுதிக்கு வெளியில் விழுந்தமையாகும். யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் சாலைகள் பெருஞ்சேதத்திற்கு ஆளாயின. ஆனால் இது நகர எல்லைக்குச்சற்று வெளியில்தான். யாழ்ப்பாணத்தில் இராணுவத்திற்கு மிகக்கடுமையான எதிர்ப்பும் பொதுமக்களின் சாவுகள் பெருமளவிலும் இடம்பெற்றன. ஆனால் கட்டிடங்கள் அதிக அளவில் சேதமடையவில்லை. இது ஏனென்று வியப் புற வேணி டியிருக்கிறது. இந்தியர்கள் யாழிப்பாணத்தைக் காக்க விரும்பியிருந்திருக்கலாமா? ஆனால் அதற்குப்பின்னர் நடந்த சம்பவங்கள், யாழ் நகரைச் சுமுக நிலைமைக்குக் கொண்டு வருவதில் அவர்கள் காட்டிய அவசரம் என்பனவும், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களைக் கொண்டு வந்து திட்டப்பிரகாரம் காட்டிச் செல்வதற்கு யாழ்நகரத்தை அப்படியே முழுமையாக வைத்திருக்க விரும்பினர் என்பதையே காட்டுகிறது. இது உண்மை என்றால்,

357
ஏற்கெனவே ஒருவிதத்திட்டம் இருந்துள்ளது என்றும் இராணுவரீதியற்ற காரணங்களுக்காக பீரங்கிகள் வேண்டுமென்றே பயன்படுத்தப்பட்டன என்பதையுமே சுட்டிக்காட்டுகிறது.
மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த வேண்டுமென்ற முடிவு பொதுமக்களைப் பலவந்தமாகத் தமது ஆளுமைக்குக்கீழ் கொண்டு வரவும் விடுதலைப்புலிகளுக்கு அவர்களிடையே இருந்த அனுதாபத்தையும் ஆதரவையும் கைவிடச் செய்வதற்காகவுமே மேற்கொள்ளப்பட்டிருந்தது. துரித வெற்றியை அடைந்து கொள்ள முடியாத தோலி வியினாலுமி விடுதலைப்புலிகளை மிகக்குறைவாக மதிப்பிட்டிருந்தமையாலும் தங்கள் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவும் எந்தப்பாடுபட்டும் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியேயாக வேண்டும் என்றும் இந்திய இராணுவம் கண்மூடித்தனமான யுத்தத்தை நடத்திக் கொணடிருந்தது. இரணடாவது காரணம் விடுதலைப்புலிகள் நகர்ச்சூழலில் கெரில்லா பாணியில் நடத்திய போர்த்தாக்குதல் யுக்திகளின் எதிர்வினையாகவும் இருக்கலாம். புலிகள் பொதுமக்களை பாதுகாப்புக்கான கவசமாகப் பயன்படுததினர். போராளிகள் மக்கள் செறிந்திருந்த மருத்துவமனைகளிலிருந்தும் கோயில்களிலிருந்தும் பாடசாலைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி தப்பிக்கொணர்டனர். பெணிகளும் சிறுவர்களும் இராணுவப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இராணுவ தரப்பில் இறந்தவர்களின் சடலங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவை போரின் நெறிமுறைகளாக இல்லாதிருக்கலாம், இந்திய இராணுவம் எதிர்பார்த்த யுத்த தர்மமாகவும் இல்லாதிருக்கலாம். எவ்வாறாயினும் இந்திய ஜவான்களின் நடத்தையை நியாயப்படுத்த முயல்வதாயின், இத்தகைய ஒரு கெரில்லா யுத்தத்தில் ஈடுபட அவர்கள் உளவியல் ரீதியாகத் தயார் நிலையில் இல்லாததையும், யுத்தம் நடத்தப்பட்ட விதத்தால் எழுந்த கோபாவேச எதிர்வினையையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சில இராணுவவீரர்கள் வான்வழியாக நீண்டதூரம் எடுத்துச் செல்லப்பட்டு, போதுமான ஒய்வு கொடுக்கப்படாத நிலையில் உடனடியாகவே யுத்தத்தில் இறக்கிவிடப்பட்டனர் என்று கூறப்படுகிறது. வேறுஞ் சிலர் இந்த நடவடிக்கைகள் மிகவும் சுலபமானவை சுளுவானவை என்றும் சில தினங்களிலேயே அவை முடிந்து போய்விடும் என்று எதிர்பார்த்து வெறும் மாற்று உடுப்புகளோடு மட்டுமே வந்திருந்தனர். பிடிக்குள் அகப்படாமல் கெரில்லா உத்திகளையும் சம்பிரதாயப் போர் முறைகளை விலக்கி சந்தர்பத்துக்கு ஏற்றறவாறு தாக்கி பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் எதிரியுடன் போராடுவது என்பது அவர்களைப் பாதகமான சூழ்நிலையில் தள்ளியிருந்தது. உதாரணமாக, ஐப்பசி 13ம் திகதி உடுவிலில் வைத்து வரிசையாகச் சென்று கொண்டிருந்த டாங்கிகள் மீது இளம் போராளிகள் சிலர் மறைந்திருந்து பெருந்தாக்குதலை நடத்தினார்கள். இராணுவம் பிரதான வீதியுடனேயோ கூடிப் போனால் பிரதான பாதையை ஒட்டிய வீடுகள்,

Page 197
358
வளவுகளுக்குள் மட்டுமே நடமாடக் கூடியதாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் அங்கிருந்த சில போராளிகளோ பிரதான பாதையிலிருந்து மூன்று, நான்கு வீடுகள் தள்ளியே ஊரின் உட்பகுதி வரையும் வெளிகளிலும் சுதந்திரமாக உலவித்திரிந்து தாக்குதல்களை மேற்கொணர்டனர். சகல திசைகளிலிருந்தும் இலகுவாகத் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய நிலையில் இருந்த இராணுவத்தினர், போராளிகள் தங்களை வட்டவடிவில் சுற்றி வளைத்துக்கொள்ள வசதியாக அனுமதித்திருந்தனர் என்றுதான் கூறவேண்டும். பிரதான வீதிகளையும் முக்கிய சந்திகளையும் கைப்பற்றித் தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. முழு யுத்தத்தையும் கணக்கில் எடுத்துப்பார்க்கும் போது, சில விதிவிலக்குகளை தவிர வேறு எங்குமே நேரடி புத்தம் நடந்ததாகத் தெரியவில்லை.
இந்திய இராணுவத்தில் வெகு சொற்பமானோருக்கு மட்டுமே அரசியல் சூழ்நிலைகள் பற்றி ஏதாவது சிறு விளக்கமிருந்தது. முற்றிலும் அந்நியமான சூழலில், தமிழ் மொழியோ உள்ளூர்ப் பழக்க வழக்கங்களோ தெரியாத நிலையில் அவர்கள் எடுத்ததறி கெலி லாம் சந்தேகம் கொள்ளும் ஒரு மனோபாவத்திற்குள்ளாகியிருக்க வேண்டும். அவர்கள் எல்லோரையும் சந்தேகித்தனர். உள்ளூர் மக்கள் அனைவரும் விடுதலைப்புலிகளுக்குத் தீவிர ஆதரவு கொடுப்பதாகக் கருதி அவர்களை விரோதியாகப் பாவித்தனர்.
"நீ எல்பிரியா? எல்ரிரிஈ. எங்கே?". எல்பிரிஈ, எல்ரிரிஈ. அவர்களுடைய உதடுகளிலிருந்து வந்த ஒரே வார்த்தை இது தான். அதுவே அவர்களின் சிந்தனை முழுவதையும் ஆக்ரமித்திருந்தது. அவர்களில் சில பிரிவினரிடம் அனுபவமின்மையும், சில சூழ்நிலைகளில் அளவுக்கு மிஞ்சிய முறையில் செயற்படும் தன்மையும் காணப்பட்டது. எந்தவிதமான காரணமும் இன்றி நீண்ட காலத்திற்கு துப்பாக்கிச் சூடும், ஷெல் அடிகளும் ஒரு கட்டுப்பாடுமின்றிக் கொடுரமாகத் தீர்க்கப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. துப்பாக்கிகளால் சுட்டுப் பார்க்கும் அநுபவத்திற்காகவும் அல்லது ஆயுதங்களைப் பாவிப்பதில் அடையும் இன்பத்திற்காகவுமே அவர்கள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்று நினைக்கத் தோன்றியது. பின்னிரவில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் அதற்குப் பதில் மாதிரித் தொடர்ந்து சரமாரியான சூட்டுச்சத்தங்களும் பின் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைப்பது போல் சில ஷெல் அடிகளின் இரைசசலும் கேட்கும். நீண்டகால கெரில்லா
யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். சண்டை சட்டென்று முடிந்து விடும் என்று எதிர்பார்த்துப்போய் ஒரு அந்நியச் சூழலில் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேணிடிய நிலையில் அவர்கள் கட்டுக்கடங்காத வெறித்தனத்துடன் செயற்பட்டனர். பின்னாளில் தங்களது நடத்தையைப் பற்றி விளக்கங்கூற முயன்ற ஒரு இராணுவவீரன் பின்வருமாறு கூறினான்:

359 "எங்களில் ஒருவர் இறந்தபோது எங்களின் ரத்தம் கொதித்தது. நாங்கள் என்ன செய்கிறோம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை"
இராணுவத்தில் சேரும்போதே போரையும் மரணத்தையும் அவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்தப் பயங்கரமான யதார்த்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தபோது பொதுமக்கள் மீது தங்கள் கோபத்தைத் திருப்பியிருக்கக்கூடாது. இராணுவம் என்பது இராணுவம் தான். மற்ற இராணுவங்கள் போலவே அவர்கள் நடந்துகொண்டனர். ஆனால் இந்தியாவிடமிருந்து நாங்கள் கொஞ்சம் மேலான நடத்தையை எதிர்பார்த்தோம்.
இறுதியாக அலசிப்பார்க்கும் போது, நடந்து முடிந்த அனைத்திற்கும் இறுதிப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தங்கள் ஆட்களைக் கஷ்டமான சூழலுக்குள் தள்ளிய உயர் அதிகாரிகளும் அதனைவிட புதுடில்லியில் இருந்த அரசியல் நிர்வாகிகளும் கொழும்பிலிருந்த அவர்களின் பிரதிநிதிகளுமேயாவர். இந்த நிலைமை பெருமளவில் அவர்கள் தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட சிக்கல் தான்.
வன்முறையின் மொழியைக் கற்றுக்கொண்டிருந்த-பீதியின் ஆட்சிக்கு வாழப் பழகிக்கொண்டுவிட்ட ஒரு சமூகத்தில் இத்தகைய பயங்கலந்த பீதி ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் பீதியைப் பயன்படுத்தித் தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டிருப்பது மிகவும் செலவு பிடிக்கும் , விஷயமாகும் என்பதுடன் நடைமுறை சாத்தியமுமற்றது. இந்தியர்கள் தமிழர்களின் நெஞ்சங்களில் இடம்பிடிக்கத் தற்போது மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான முறைகளிலிருந்து அவர்கள் இதனை உணர்ந்து கொணர்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. அணிமையில், மாசி 1988ல் மட்டக்களப்பில் அவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை அதிக கட்டுப்பாட்டுடனும் பொதுமக்களைக் கருதி தில் கொணடும் நடத்தப்பட்டிருக்கிறது.
ஐப்பசி நாட்களில் நடந்த பயங்கரங்கள் இனினும் மோசமான துயரநினைவாகவும் திரும்பத் திரும்ப வரும் பயங்கர சொப்பனம் போலவும் மக்கள் மனதில் உலவி வருகிறது. யாழ்ப்பாண குடிமகன் அந்த அனுபவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிடபோவதில்லை. ஆகையால்தான் இராணுவம் நட்புறவோடு அவனைத் தற்போது அனுகும் போதும் அவன் அசமந்தப் போக்குடனேயே அதனை வரவேற்கிறான். இதில் மனங்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் யாதெனில், நட்பு என்பது ஒரு மின்விசையை திடீர்என்று போடுவது போன்றதோ திடீர் என்று அணைப்பது போன்றதோ அல்ல என்பதுதான். 44 f6?ysis, Li (GRIEF REACTION)
இந்தக் கால கட்டத்தில் இழுப்புகலால் ஏற்படும் துக்க எதிர்வினைகள் சர்வசாதாரணமாக இருந்தன. தங்களுக்கு மிக நெருங்கிய ஒருவரின் மரணத்தைச் சூழ்ந்திருக்கும் எதிர்பாராத திடீர்த்தன்மையின் காரணமாகவும், உளவியல் ரீதியில் பேரதிர்ச்சி தருவதாகவும் (பலத்த சத்தம், அழிவு, ரத்தம்

Page 198
360
உடற்சிதைவு தரும் காயங்கள், வலி, மருத்துவ உதவி கிடைக்காமை, தங்களின் அன்புக்குரியவர்கள் மரணிக்கும் போது எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் நிற்றல் போன்றவை) உள்ள நிலைமைகள் அதிதீவிர எதிர்வினைகளை ஏற்படுத்தின.
தனது மூன்று குழந்தைகளும் மாமியும் எந்த ஒரு காரணமும் இன்றி வீட்டிலிருந்து இழுத்து எடுக்கப்பட்டு வீதியில் வைத்துக் கொல்லப்பட்டபின், ஒரு நடுவயதுப் பொறியியலாளர் தீவிர கழிவிரக்க விளைவு களுக்குள்ளாகியிருந்தார். பிறகு குடிநோயினாலும் பாதிக்கப்பட்டார். துயரலைகள் அவரை மோதி அலைக்கழிக்க, திடீர் திடீர் என்று இறந்தவரை நினைத்து அழுதவண்ணம் அவர் தனது நாட்களை ஆழ்ந்த துயரத்தில் கழித்தார். அவரது சிந்தனை முழுதும் அவரது குழந்தைகளைச் சுற்றிய வண்ணமேயிருந்தன. தான் வாழ்வதில் இனி அர்த்தமில்லை என்றார் அவர். தற்கொலை எண்ணங்களால் அவர் அலைக்கழிக்கப்பட்டார். தனது குழந்தைகள் அனுபவிக்க நேர்ந்த வேதனைகள், குறிப்பாகத் தன் அழகிய மகளின் வேதனை திரும்பத் திரும்ப தீய சொப்பனங்களாக வர, அவரது இரவுகள் மிக மோசமான நிலையில் கழிந்தன. ஒரு இராணுவவீரன் அவளின் சிட்டையைத் தூக்கி, அம்மகனின் கவட்டிற்கூடாகச் சுட்டிருந்தான். அவளால் நடந்து செல்ல முடியவில்லை; அவள் தனினை வீதி வழியே இழுத்துக்கொண்டு தான் செல்ல வேண்டியிருந்தது. போதுமான மருத்துவ உதவி இல்லாமல் அவள் ரத்தப்பெருக்கில் இறந்து போனாள். இந்தத் துயரச் சித்திரம் அவரது மனதில் மீண்டும் தோன்றி வருத்தியது. "அவள் மீது எவ்வளவு விருப்பமாயிருந்தேன். அவள் பாட்டிற்கு அவளை எப்படி வளர்த்திருந்தேன். இப்போது அவள் இப்படி ஒரு கஷ்டத்தை அனுபவிக்க நேரிட்டது. என்னால் இதைத் தாங்கவே முடியாது" என்று கூறிவிட்டு அவர் விம்மி விம்மி அழுவார். மருத்துவச் சீர்கேடான தன்மை குறித்தோ, (நானே அந்த இராணுவ வீரர்களைக் கொல்வேன்" என்று) பழிவாங்க நினைக்கும் போதோ, இந்தக் கொலைகள் தொடர்பாக வழக்குத் தொடர வேண்டும் என்று கூறும் போதோ இத்தகைய துயரவிளைவுகளின் அச்சொட்டான பொது அம்சமான பகையுணர்வு மிகத் தெளிவாகப் புலனாகியது. அவரால் தனது மனைவியையும் துயரத்திலிருந்து தேற்றிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது மனைவி அழுதே செத்துப் போய்விடுவாள் என்று அஞ்சினார். குழந்தைகளை இழந்துபோன தங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்று அவர்கள் உணர்ந்தனர். முன்னர் குடிக்கும் பழக்கமுள்ள அவர் இப்போது மோசமாகக் குடிக்க ஆரம்பித்துவிட்டார். பகலில் பெரும் பகுதியிலும் இரவும் அவர் போதைநிலையிலேயே காணப்பட்டார்.
தங்களது பசுமாடுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தபோது தனது தந்தையும் மாமாவும் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அளவெட்டியைச் சேர்ந்த 24 வயது விவசாயி ஒருவர் ஒர் அசாதாரண விளைவினைத் ஒரு கழிவிரக்க தன்மையாக வெளிக்கொணாந்தார். அவர் நிலைகொள்ளாதவராய்,

361
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசிக்கொண்டு சித்த சுவாதீனமுற்றவராய் வினோதமான முறையில் நடந்து கொண்டார். இங்கு நமக்குக் கிடைக்கும் சித்திரம் ஒரு முதிர்மனநோயின் விளைவு சார்ந்தது. இவரைக் குணப்படுத்த மின் அதிர்வுச் சிகிச்சையே தேவைப்பட்டிருந்தது.
சிலரைப் பொறுத்தவரையில், தங்களது நெருங்கிய உறவினர்கள் பலரது மரண இழப்புகள் அவர்களிடம் மனச்சிதைவை உருவாக்கியிருந்தது. கலகலப்பாகக் காணப்படும் ஒரு தாதி அவரது நெருங்கிய உறவினர்கள் பலர் ஒரேநேரத்தில் மரணமுற்றபோது அதீத மனச்சோர்வுக்குள்ளானார். மெதுமெதுவாகத் தேறுவதற்கு அவருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது.
4.5 6.hiroiaodoo LDSOriss-Iriro (Reactive Depression)
தற்போதுள்ள பேரிழப்பு சூழ்நிலையிலிருந்து எழும் மனச்சோர்வு நிலையால் பீடிக்கப்பட்ட பெருந்தொகை நோயாளிகள் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கும் உள்நிலையச் சிகிச்சைக்கும் வந்து சேர்ந்தனர். எதிர்வினை மனச்சோர்வு என்பது எல்லாவிதமான இழப்பின் காரணமாக ஏற்படலாம் என்று தெரிகிறது. தமக்கு நெருக்கமானவர்களின் இழப்பினால் ஏற்பட்ட மனச்சோர்வு நோயுடன் இணைந்து மனச்சோர்வு தீவிரமுற வேறு சில பொதுவான காரணங்களும் இருந்தன. ஷெல் தாக்குதலினால் வீடு அல்லது சொத்து நாசமாதல், தொழிலை அல்லது வருமானம் தரும் மூலாதாரங்களை இழத்தல், கைது செய்யப்படுவதாலோ தாக்கப்படுவதாலோ ஏற்படும் தன்மானக் குறைவும் அவமரியாதையும், பாலியல் வன்முறை காரணமாக கன்னிமைத்தன்மை அல்லது புனிதம் இழத்தலும் அத்தகைய காரணங்களாகும். தங்கள் தாக்குதலுக்குட்பட்டபோது அவர்களின் மனைவிமார்கள் இத்தகைய எதிர்வினை மனச்சோர்வுக்குள்ளாகியிருந்தனர். மறுதலையில், தங்கள் மனைவிமார் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டபோது கணவன்மார்களில் லிபிடோ' எனப்படும் பாலியல் உந்து சக்தியினை இழந்த தன்மையும் வேறும் மனச்சோர்வின் தன்மைகளும் உருவாகியிருந்தன.
ஆடி 87ல் சமாதான உடன்படிக்கையை அடுத்து புதிதாக வந்திறங்கிய ஓர் இந்திய இராணுவ மருத்துவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது வீடுகள் இவ்வளவு பெரிய அளவில் சேதப்படுத்தப்பட்டிருப்பதைக் குறித்துத் தனது அதிர்ச்சியையும் கவலையையும் தெரிவித்தார். இலங்கை இராணுவம் பெருமளவில் வீடுகளை நாசப்படுத்தியிருந்த குரும்பசிட்டிக்கு அருகில் அவரது முகாம் அமைந்திருந்தது. உண்மைதான், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுதும் சேமித்துச் சேர்த்த பணத்தில் அவை கட்டப்பட்டிருந்தன என்று நான் அவருக்குத் தெரிவித்தேன். "இது வெறும் பணம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் எவ்வளவு ஆசாபாசத்தோடு இந்த வீடுகளைக் கட்டிப் பேணியிருப்பார்கள். அவை எல்லாமே இப்படி அழிந்து போயிருப்பதைப்

Page 199
362
பார்க்க அது எப்படி நெஞ்சை வருத்தும்" என்று அவர் அதற்குப் பதில் கூறினார். ஐப்பசியிலும், கார்த்திகையிலும் என்னென்னவெல்லாம் நடந்தது என்பதைக்காண இங்கு அவர் இருந்தாரா என்பதோ, இன்னும் அவர் அத்தகைய இரக்க சுபாவத்துடன்தான் இருக்கிறார் என்பதோ எனக்குத் தெரியாது.
தங்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டு, நாசமாக்கப்பட்டுக் கிடந்தமை தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பேரிழப்பாக இருந்தது என்றால் இந்தப் பெருந்துயரக்கதையின் ஜீரணித்துக் கொள்ள முடியாத இன்னொரு முக்கிய அம்சமும் இருந்தது. கூடவே தங்களின் தனிப்பட்ட உடைமைகள் உள்ளுர்வாசிகளாலேயே சூறையாடப்பட்டமையால் நேர்ந்த இழப்பானது இவர்களின் துயரத்தை என்னும் ஒரு கட்டத்துக்கு உயர்ந்த வழிவகுத்தது. அப்போது நிலவிய சூழ்நிலையின் மிகவும் , துரதிஷ்டவசமான விளைவு யாதெனில் சட்டம், ஒழுங்கு என்று எதுவும் இல்லாத நிலையில் தங்குதடையின்றி பரவலாகப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டமையாகும். இவ்வாறு பாதிப்பிற்கு இலக்கானவர்கள் மற்றும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்போரெல்லாம் பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும்" என்றவாறு ஏற்கெனவேயும் மிகமோசமாக கஷ்டங்களை அனுபவித்தவர்களாகவேயிருந்தனர். இது எமது சமூகத்தைப் பற்றிய சீர்குலைவின் பிரதிபலிப்பாகும்.
4.8 மெய்ப்பாடு, உளம் சார் உடல்நோய்கள் (Psychosomatic Disorders)
மனிதியான இறுக்கம் பல உடல் நோய்களுக்கு வழிகோலுகிறது என்பது தெரிந்ததே. சொறி, முதுகுவலி, தலைவலி, தொய்வு, அதிபர ரத்த அழுத்தம், குடற்புண் ஆகியன இத்தகைய நோய்களிற் சில. நெருக்கடிமிக்க இக்காலப் பகுதியில் இம்மாதிரியான நோய்கள் மிகப்பரவலாகக் காணப்பட்டன. இவற்றில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவை அஜீரணம், மன இறுக்கத் தலைவலி, முதுகுவலி, மூச்சு வாங்கல், பெருமூச்சு, படபடப்பு ஆகியனவாகும். சிலரைப் பொறுத்தவரையில் மனரீதியான நெருக்கீடு உயிரைமாய்க்கும் அளவுக்கு மிகப்பயங்கர விளைவுகளை ஏற்படுத்திற்று. மனரீதியான இறுக் கதீதை ஏற்படுத்த வல்ல சமீப வங்கள் மாரடைப் பைத் துரிதப்படுத்துவதாகக் கணடறியப்பட்டுள்ளது. தெல்லிப்பளை மருத்துவமனையில் பணிபுரிந்த திடகாத்திரமான, நடுவயதிலிருந்த தொலைபேசி இயக்குபவர் ஒருவர் தனது இளம்பிராயப் பிள்ளைகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது திடீரென நெஞ்சுவலி வந்து மரணமானார். அதிபர இரத்த அழுத்த நோயிருந்தாலும் ஆரோக்கியமான நிலையிலேயே காணப்பட்ட ஒருவர் தனது பகுதி தீவிர ஷெல் தாக்குதலுக்குட்பட்டபோது உணர்விழந்த நிலையில் மரணமானார்.

363
மாறாக, நீணடநாள் மூட்டுவலி, முதுகுவலி, மூசசுத் திணறல் முதலியவற்றால் நோய்வாய்ப்பட்டிருந்த சிலரும் தங்களது செளக்கியம் பற்றிய அசாதாரண அக்கறையின் காரணமாக தாங்கள் நோயுற்றிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டிருந்த சிலரும் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் உடல்நலம் மிகுந்தவர்களாகவே இருந்தனர். மருந்துகளின் துணை இல்லாமலேயே ஆரோக்கியமாகக் காணப்பட்டனர். சூழ்நிலை சற்றுத் தளர்ந்து சாதாரண நிலையை எட்டியபோது அவர்களுக்கு நோய்க்குறிகள் பழையபடி வர ஆரம்பித்தன.
4.7 gay 6ond Gs 76Tiga,6fi (Personality Disorder)
அசாதாரண ஆளுமை இயல்புகள் கொணிடவர்கள் தீவிரவாக இயக்கங்களில் சென்று சேருவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. தீயநடத்தை உள்ளவர்கள், முரட்டு சுபாவம் படைத்தவர்கள், சமூக விரோத மனப்பாங்கு கொண்டவர்கள் இராணுவ அமைப்புக்குப் பொருந்திப் போவார்கள். அவர்களது ஆற்றல்கள் தேசிய இலக்குகளை நோக்கித் திசைதிருப்பப்படும். அவர்கள் இராணுவ அமைப்பிற்குள் உள்ளடங்கி இருப்பது சமூகத்திற்கும் ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும்.
வன்செயல்கள், குரூரம், அனாதரவாக அகப்பட்டுக் கொணிடுவிட்ட அப்பாவிகளை வதைத்தல் போன்றவற்றின் மூலம் துன்பவியல் ஆளுமை படைத்தவர்களுக்கு அவற்றின் மூலம் இன்பங்காணும் சந்தர்ப்பங்களைப் போர் கூடுதலாக உருவாக்கித் தருகிறது என்பது இன்று நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு உண்மையாகும். போர் உச்சக்கட்டத்தை அடைந்த பொழுது வெறிநாய்கள் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து ஏவப்பட்டதான எண்ணம்தான் ஏற்பட்டது. இராணுவ நடவடிக்கைகள் தணிந்ததும் மிகவும் வினோதமாக, அந்த ஜவான்கள் ஏதுமறியாத அப்பாவிகளாக, சாதாரண குணாதிசயங்களுடனி சாதாரண சொந்தப் பிரச்சன்ைகளைக் கொணிடவர்களாகக் காணப்பட்டனர். போர் என்னும் இயந்திரமானது மனிதனுடைய இருண்ட தீய பகுதியை வெளிக்கொணர்வதாகவும், சாதாரண காலங்களில் உள்ளே அமுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகளைக் காட்டுமிராண்டித்தனமாக வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. யுத்தத்தின் பொது வழக்கமாயுள்ள கட்டுப்பாட்டையுமி, ஒழுக்கத்தையும் உயர்அதிகாரிகள் தளர்த்துவது ஓரளவு இதற்குக் காரணமாக இருக்கலாம். ஜவான்களின் நடத்தையிலிருந்து இது மிகத் தெளிவாகத் தெரிந்தது. மனச்சாட்சிக்குட் பயப்படாமலும் உயர் அதிகாரிகள் தங்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்சமின்றியும் அவர்கள் நடந்து கொண்டனர். தாங்கள் நினைத்தபடி நடக்கத் தங்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவே அவர்கள் காட்டிக்கொண்டனர். மார்கழியிலும், அதனிலும் பார்க்க 1988ன் ஆரம்பத்திலும், இராணுவத்தின் நடத்தையில் பெரும் மாற்றம் தெரிந்தது.

Page 200
364
1988 தையில் இராணுவ வீரர்கள் நல்லொழுக்கத்துடனும் கண்ணியத்துடனும் நடந்து கொணர்டனா, சமூக விரோதச் செயல்களிலும், சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டபோது அச்சத்துடனும் ஒழித்தும் செயற்பட்டனர். இப்பொழுது ஒழுக்க நடவடிக்கையும் சற்று அமுலாகியது. குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை இனங்காண அடையாள அணிவகுப்புகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. இந்திய இராணுவ வீரர்களின் நோக்கில், மிக மோசமான தணர்டனையானது சம்பளமில்லாமல் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதும் ஓய்வூதியம் நிறுத்தப்படுவதும்தான் என்பது சுவாரஸ்யமான விஷயம். ஆரம்ப தோல்விகளுக்குப் பின், பலத்த உயிர்ச்சேதத்துடன் யுத்தம் அசிங்கமான-அதர்மயுத்தமாக வெடித்த பிறகு துருப்புகளைக் தமது கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது உயர் அதிகாரிகளுக்கு மிகச் சிரமமாயிருந்திருக்கலாம். துருப்புகளினி உற்சாகத்திற்காகவும் அவர்கள் மீதான் கட்டுப்பாட்டைக் கையில் வைத்துக் கொள்ளவுமீ இந்தச் சுதந்திரங்களை அவர்கள் அனுமதித்திருக்கக்கூடும். உணர்மையில் சில விதிவிலக்குகளைத் தவிர, போரின் போது அதிகாரிகளும் பெரும் ஆவேசத்துடனும் எதிர்ப்பு மனநிலையுடனுமே இருந்தனர்.
ஒரு பிரதேசத்தை இலகுவில் ஆக்கிரமித்துக்கொள்ள முடியும், ஆனால் வியட்நாமிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்தது போல ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் நிலைத்து நிற்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியம் அல்ல என்பதைச் சணடையின் ஆரம்ப கட்டத்திலேயே இந்தியர்கள் விளங்கிக் கொண்டு விட்டனர். இது ஒருவேளை உள்ளூர் மக்களுக்குச் சாதகமாக அமைந்திருக்கலாம். அவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மக்களின் நெஞ்சங்களை வென்றெடுக்கும் வேலை முடுக்கிவிடப்பட்டது; ஒழுங்கும் கட்டுப்பாடும் பேணப்பட்டது, மக்களோடு எப்படி நடந்து கொள்வது என்பது பற்றித் துருப்புக்களுக்கு முறையாக வகுப்புகள் நடத்தப்பட்டன. புனர் வாழ்வு மற்றும் மறுசீரமைப்புப்பணிகள் தொடங்கப்பட்டன, ஒவ்வொரு கிராமத்திலும் பிரசித்தமான மருத்துவமனைகளும் உணவு விநியோகமும் துவக்கப்பட்டன.
இறுக்கமான சூழ்நிலை சற்றுத்தணிந்ததும் சாதாரண வீரர்களினதும் இராணுவ அதிகாரிகளினதும் ஆளுமைககைளட் பற்றி அதிகமாக புரிந்து கொள்ள முடிந்தது. இராணுவவீரர்கள் பொதுமக்களுடன் பழக ஆரம்பித்தபோது அவர்களுடைய நடத்தையில் மனிதாபிமானம் மிகுந்த பகுதி புலப்படுவதை அவதானிக்க முடிந்தது. யுத்தத்தின்போது அவர்களிடம் ஒரு உருமாற்றம் ஏற்பட்டிருந்த போதிலும் பின்னர் அவர்கள் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளையே வெளிப்படுத்தினர், அவர்களின் வாழ்க்கை முறை மிக எளிமையாக இருந்தது. அவர்களின் விருப்பு வெறுப்புகளும் மிகச் சாதாரணமானவையாகவே இருந்தன. சண்டையின் போது அவர்களிடம்

365
சளையாத தைரியமும் கணிசமான தாக்குப்பிடித்து நிற்கும் தன்மையும் இருந்தது தெரிந்தது. அவர்களது நடத்தையில் அவதானிக்கத்தக்க மற்றுமொரு முக்கிய அம்சம் அவர்களிடம் காணப்பட்ட தீவிரக் கடவுள் பக்தியாகும். அவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் ஆதலால் இது ஆச்சரியப்படும் ஒன்றல்ல. விபூதி, பொட்டு, வாகனங்களில் சாமிப்படமும் மாலைகளும், வழிபாடும், கோயில்களுக்குக் காட்டும் மரியாதை என்று இவையெல்லாம் பெருமளவில் அவர்களிடம் காணப்பட்டன.
சில சமயங்களில் இது துக்ககரமான - கோமாளித்தனமாயும் இருந்தது. கிறிஸ்தவ சேவா ஆசிரமத்தையும் அத்தோடு சேர்ந்திருந்த செமினரியையும் தொடர்ந்து சுட்டு மிகவும் சேதப்படுத்திய பீரங்கி வாகனத்தின் மேலேயிருந்து அதனைச் செலுத்திக் கொண்டிருந்த ஒரு இராணுவவீரன் அந்த ஆசிரமத்தின் நுழைவாயிலில் சிலுவையைக் கடக்கும் போது தொழுகையில் செய்வது போல் கைகூப்பித் தலைவணங்கிச் சென்றான். மொழித்தடைகளையும் மீறித்துளிர்த்த சில அப்பாவித்தனமான காதல் உறவுகள் உள்ளத்தைத் தொடுவனவாகும். சில உறவுகள் நிரந்தரமாகும் எல்லைக்கும் முன்னேறிச் சென்று கொணர்டிருந்தது. தேடுதல் நடவடிக்கையின் போது அவர்கள் திருடிய சின்னச்சின்னப் பொருட்களிலிருந்தும், "உங்களுக்கு என்ன குறை? உங்களிடம் தான் எல்லாம் இருக்கிறதே!" என்று யாழ்ப்பாணத்தின் செழிப்பைப்பற்றி ஆச்சரியத்தோடு சொன்ன வார்த்தைகளும் அவர்களுடைய பின்னணியைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவியது. (தாங்கள் பார்த்ததெல்லாம் கடுமையான, வறண்டிருந்த பூமியில் வியர்வை சிந்திப்பெற்ற கடுமையான உழைப்பின் சம்பாத்தியமும், அவற்றிலிருந்து கட்டிஎழுப்பப்பட்டவையும்தான் என்பதை அவர்கள் உணரவேயில்லை) அவர்கள் மிக ஏழ்மையான கிராமங்களிலிருந்து வந்தவர்கள் என்பதும் இராணுவ வேலை அவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இது அவர்களின் மறைவில்லா தன்மையையோ, நடைமுறை சாத்தியமான கணிணோட்டத்தையோ அவர்களிடமிருந்து உள்ளூர் மக்களுக்காக எப்பொழுதாவது வெளிப்படும் அன்பான வார்த்தையையோ தடைசெய்யவில்லை. "நாங்கள் பாடுபட்டு அபிவிருத்தி செய்த எங்கள் பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு எங்களுக்குக் கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டு எல்லாவற்றையும் நாசமாக்கிக் கொண்டு திரியும் எளிய பிச்சைக்காரர்களே என்று சினங்கொண்ட ஒரு இளம் விவசாயி ஆத்திரத்துடன் கூறிய போது ஒரு இராணுவவீரன் அவரின் முதுகில் தட்டிக்கொடுத்து, "எனக்கு. எனக்கு இது விளங்குகிறது, ஆனால் மற்றவர்களிடமும் இது மாதிரிப் பேசாதே" என்று கூறிச்சென்றான்.
இதற்கு நேர்மாறாக, அதிகாரிகளுடைய நடத்தை பகட்டானதாகவும் சம்பிராதமுடையதாயுமிருந்தது. இராணுவ அதிகாரத்துவம் பதவிக்கு ஏற்றாற்போல தகமையுடையவர்களை வளர்த்திருந்ததாகத் தெரிகிறது. அவர்கள்

Page 201
366
தமக்கே உரித்தான உச்சரிப்புடன் நல்ல ஆங்கிலத்தில் பேசினார்கள் அனைவரிடமும் பரந்த இந்தியக் கண்ணோட்டமிருந்தது. திடகாத்திரமான தோற்றங்கொணி டவர்களாய், பிறருடன் மிகவும் சகஜமாகப் பழகக் கூடியவர்களாய், சுமூகமானவர்களாய்த் திகழ்ந்தனர். முக்கிய உள்ளூர்ப் பிரமுகர்களை அவர்களது ஆளுமைகள் எளிதில் கவர்ந்தன. அவர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்களாகவும் தமது ஆட்களை நன்கு தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களாகவும் காணப்பட்டனர். இந்திய இராணுவம் நீண்ட பாரம்பரியப் பின்னணி கொண்ட ஒரு சரித்திரபூர்வமான ஸ்தாபனம் என்பது தெளிவாகப் புரிந்தது.
தாங்கள் விரும்பியபோது அதிகாரிகள் அருமையான மக்கள் தொடர்பு அதிகாரிகளாகச் செயற்பட்டனர். "எல்லாவற்றையுமே கவனிப்போம், இனி ஒரு விதப் பிரச்சினையும் இராது, இதெல்லாம் மிகவும் சின்ன விஷயங்கள், வெகுவிரைவில் சுமுகமான நிலையும் அமைதியும் திரும்பி விடும், உள்ள ஒரே ஒரு பிரச்சினை எல்பிரிஈ தான். அவர்களுக்கு புத்தி சொல்லுங்கள்" போன்ற கவர்ச்சியான வெற்று உறுதிமொழிகளை வாரி வழங்குவதன் மூலம் பொதுமக்களைக் கையாளுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. இராணுவத்தின் திறனின்மையைக் குறித்து முறைப்பட்டுக்கொண்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க மருத்துவர் ஒருவர், "இயஸ் , நாளைக்கே இந்தியாவிலிருந்து அதனைத் தருவிக்கிறோம், கவலைப்படாதீர்கள் டாக்டர், ஒன்றும் பிரச்சினை இல்லை" என்று அவர்கள் எந்த உறுதியையும் தருவார்கள், ஆனால் ஒன்றுமே நடக்காது என்று கூறினார். பொதுமக்கள் மீதிருந்த ஆழ்ந்த இளக்காரத்தையும் பகைமை உணர்வையுங் கொண்ட ஒரு பொய்யான பகட்டு இது என்பது புரிந்தது. காரியத்தைக் கொண்டு நடத்த அவர்களுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவையாயிருந்தது. அவ்வளவு தான். சிறு தோல்வி என்றாலும் இந்த வெளிவேஷம் கலைந்து போய் முரட்டுத்தனம் தெரிய ஆரம்பித்துவிடும். இந்திய இராணுவத்திற்கும் இந்திய சிவில் நிர்வாகத்திற்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் இடையே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளுக்கு இந்தப் போக்கும் காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் விதிவிலக்குகள் இருந்தன. மேஜர் பரமேஸ்வரன் உணர்மையிலேயே மக்களுடைய பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவற்றிற்குத் தீர்வு காணுமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டார். யாழ் மக்களின் பெருந் துரதிஷ்டம் அவர் துணிச்சலுடனோ அவசரப்பட்டோ யுத்தத்தில் தனது ஆட்களை இறக்கி அதற்குத் தலைமை தாங்கிச் சென்று அதற்கான விலையைக் கொடுக்க நேர்ந்ததாகும். அவர் மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருந்த உள்ளூர் மக்கள் அவரது இழப்புக் குறித்து ஆழ்ந்த வேதனையுற்றனர். தனது இராணுவப் பின்னணியையும் மீறி அவர் ஒரு உன்னத மனிதராய் திகழ்ந்தார் என்றுதான் அவரைப்பற்றிக் கூறவேண்டும்.

367
4.8 சித்திரவதை (Torture)
இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் இருந்த குறுகிய காலத்தில் அவர்கள் உளவியல் ரீதியில் அதிக அழிவை ஏற்படுத்தவல்ல சித்திரவதை முறைகளைக் கையாளவில்லை என்றே தோன்றுகிறது. நவீன உளவியல் தன்மையுடனோ அல்லது எந்தவிதக் குறிப்பிட்ட காரணமும் இல்லாமல், குறுங்காலத்திலும் நீண்ட காலத்திலும் நரம்புகள் சம்பந்தப்பட்ட மனரீதியான நோய்க்குறிகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் கடைப்பிடிக்கப்பட்ட, தொடர்ந்த-முறையான சித்திரவதை யுத்தியோ கையளப்படவில்லை. இந்திய இராணுவத்தின் சித்திரவதையானது குறுகிய கால அளவிலானதும் தகவல்களைச் சேகரிக்கும் குறிப்பிட்ட நோக்கத்திற்கானதுமாகவே இருந்தது. எலும்பு முறிவு, சில வேளைகளில் இறப்பு போன்ற கொடூரமான உடல் சிதைவுகள் நேர்ந்துள்ள போதிலும் மனரீதியான நோய்விளைவுகள் பொதுவில் காணக்கூடியதாக இருக்க இல்லை. உதாரணமாக, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையில் போர்மனாக வேலைபார்த்த ஒருவர் தவறாக அடையாளங் காணப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு உள்ளங் கால்களிலும் முதுகிலும் அடிக்கப்பட்டுச் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டார். நுண்ணுணர்வு மிகுந்த நாக்கிலும் ஆண்குறியிலும் மின்சாரம் செலுத்தப்பட்டு தீக்காயங்கள் ஏற்படுததப்பட்டன. கனன்று கொண்டிருந்த சிகரட் அவர் கையில் வைத்து அழுத்தப்பட்டது. ஆனால் மறுநாள் அவர் சரியாக அடையாளங் காணப்பட்டதும் உடனே அவர் விடுதலை செய்யப்பட்டார். உடல் ரீதியில் நிறையத்தாக்கம் ஏற்பட்டிருந்த போதிலும் மனரீதியான நோய்க்கூறுகள் அவரிடம் குறைவாகவே காணப்பட்டன.
மாறாக, இதே காலத்தில் பேராதனைக்குப் போய்க் கொண்டிருந்த ஒரு பொறியியலாளர் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டு நீண்ட காலத்திற்குத் தலையில் மின்சாரம் செலுத்தப்படுதல் உள்ளிட்ட பல பயங்கரச் சித்திரவதைகளுக்கு உள்ளானார். அவருக்கு உடல்ரீதியான சேதம் குறைந்த அளவிலேயே இருந்தது. ஆனால் அவர் மனரீதியில் பூரணமாக உருக்குலைந்து, மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டு, சம்பந்தமில்லாமல் வார்த்தைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்த நிலையில் மனநோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆயினும் காலப்போக்கில் இந்திய இராணுவமும் திட்டமிட்ட உளவியல் ரீதியான சித்திரவதை முறைகளை கற்று கையாள தொடங்கியது கவலைக்குரிய விஷயமாகும்.
4.9 பாலியல் வன்முறை (Rape)
வன்முறை என்று நாம் பொதுவாகக் குறித்த அனைத்துமே பாலியல் வன்முறைக்கும் பொருந்துவனவாகும். மேலதிகமாக பாலியல் வன்முறை அதற்கே உரித்தான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. காலங்காலமாக வெற்றியின் சினனமாக யுத்தத்தில் தோற்றடிக்கும் எதிரிகளிடமிருந்து அபகரிக்கும்

Page 202
368
அம்சமாக சூரையாடவும் கற்பழிப்பும் நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்திய இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெற்ற பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை பத்திரிகைகளில் மிகைப்படுத்தப்பட்டுக் கூறப்பட்டாலும், சில தினங்களுக்கு முன்னர்தான் வயதுக்கு வந்திருந்த சிறுமிகளிலிருந்து மாதவிடாய் நின்று போன மூதாட்டிகள் வரை பெருந்தொகையினரான பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பது ஆதாரபூர்வமாக எமது கலாசாரச் சூழலில், பாலியல் வன்முறை என்பது தீவிர முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பாலியல் வன்முறைக்குள்ளானவருக்கும் அவரது கணவன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களுக்கும் அது மனரீதியில் தீவிர அதிர்ச்சி தருகிறது. காலங்காலமாக கற்பு என்பது பெணிகளின் உண்ணத உயர் பணி பாகவும் உயிரைப் போலவே கவனத்துடன் காக்கப்படவேண்டிய ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. துப்பாக்கி முனையில் மூன்று இராணுவ வீரர்கள் ஓர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கொண்டிருந்தபோது அவள் கெஞ்சி மன்றாடி அலறிய ஒலம் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்பெண் அவர்களின் கால்களில் விழுந்து "அண்ணே, என்னைச் சுட்டுக்கொன்று விடுங்கள், ஆனால் இதை மட்டும் செய்து விடாதீர்கள்" என்று கெஞ்சினாள். அதிர்ஷ்டவசமாக அவளது கெஞ்சுதல்கள் ஒரு இராணுவ அதிகாரிக்கு எட்டி அவள் மீது அவருக்கு இரக்கம் ஏற்பட்டு அவளை ஓர் அறை அறைந்து பின்னர் அவளைப் போக அனுமதித்தார். திருநெல்வேலியில் பாலியல் வன்முறைக்கு இலக்காகிய ஒரு இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.
நமது சமூகத்தில் தன்னுடைய சுயவிருப்பத்திற்கு எதிராகவேதானென்றாலும் ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால் அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமான வளாக இருந்தாலி அவள் சமூகத்தில் ஒதுக்கி விலக்கப்படுவதற்குச் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. பாலியல் வன்முறைக்குட்பட்டவர்கள் அனைவருமே சமூகத்தாலும் குடும்பத்தாலுமே புறந்தள்ளி வைக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள். ஆகையால் பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும் மனக்காயங்களையும் மெளனமாக தமக்குள்ளேயே விழுங்கிக் கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிக்கூடப் புகார் செய்ய முன்வராததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
உணர்மையிலேயே இந்தக் கலாசாரச் சூழல் இந்தியர்களுக்குப் பரிச்சயமானதே. அவர்கள் இந்த மெளனத்தையும் பயத்தையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். ஒரு பாடசாலைக் குழுவின் புகைப்படத்தில் பிரபல போராளியுடன் காணப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குக் கொணிடு செல்லப்பட்ட ஒரு பெண இராணுவஅதிகாரியினால்

369
தாக்கப்படப்போவதாக அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். (உண்மையில் அவர் இதனை வெறும் அச்சுறுத்தலாகக் கருதியே கூறியிருக்க வேண்டும்) பின்னர் அவள் விடுவிக்கப்பட்டபோது இரண்டு இராணுவவீரர்கள் அவளது வீடுவரை பின் தொடர்ந்து பெற்றோரை அவளிடமிருந்து பிரித்தெடுத்து விட்டு அவளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கினர். முதலாவது ஆள் அவளின் கன்னிமையை அழிக்க முயன்றதில் அவளிடம் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், மறுநாள் தாங்கள் அதே நேரத்தில் அங்கு வரப்போவதாகவும் அப்போது அவள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். இரண்டு சம்பவங்களில், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் சமூக களங்கத்தையும் இராணுவ அச்சுறுத்தலையும் மீறிப் புகார் செய்தபோது, அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இப்படிப் புகார் செய்வதற்கு அவர்களுக்கு அவ்வளவு தைரியம் வந்திருக்கிறது என்று அதனை விசாரணை செய்த இந்தியர் எடுத்துக் கூறியதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருந்தும். கஷ்டமான சூழலில் முதல் இரண்டு மாதங்களில் துருப்பினர் மத்தியில் தைரியத்தைப் பேண வேண்டும் என்பதால் ஆரம்ப கட்டத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனினும் பின்னர் நடந்த சம்பவங்களில் அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டு, தண்டனையும் விதிக்கப்பட்டு ஒழுக்க நடவடிக்கைகள் பேணப்பட்டன. பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாகக் குற்றவாளிகளை அடித்தல், வேறு பிரிவுகளுக்கு அவர்களை மாற்றுதல் ஆகிய வடிவில் இத்தணர்டனைகள் அமைந்தன. மார்கழிக்குப் பின் இராணுவவீரர்கள் அதிக ஜாக்கிரதையுடன் நடந்து கொண்டனர். 1988ல் யாழ்ப்பாணத்திற்கு வெளியில் பரந்த அளவில் பிரபல்யப்படுத்தப்பட்டதன் காரணமாக பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உயர்அதிகாரிகள் அதிக அக்கறை காட்டினர். உள்ளூர்ப் பெண்களின் அச்சத்தைப் போக்குவதற்காக அவர்கள் பெணி பொலீஸாரையும் இராணுவத்திற்குத் துணையான பெண்களையும் கூடக் கொண்டு வந்தனர்.
பாலியல்வதைக்கு உட்பட்டவர் மீதும் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மீதும் ஏற்பட்ட மனரீதியான பாதிப்பு மிகப் பாரதூரமானதாகும். ஆரம்பத்தில், சில மணி நேரமாகவோ, அல்லது ஓரிரண்டு நாட்களோ அவர் மன அதிர்ச்சியின் காரணமாகப் பேசவும் முடியாத நிலையில் இருப்பாா. தொணி டை அடைத்துக்கொண்ட நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார். பிறகு, பிறரிடமிருந்து ஒதுங்குவது, மிகவும் மெளனமாகி விடுவது, அழுவது போன்ற நிலைகளுடன் அதீத மனச்சோர்வு ஆரம்பித்து விடுகிறது. சாதாரணமாக இச்சம்பவம் நிரந்தர வடுவை ஏற்படுத்தி விடுவதால் சமூக வாழ்க்கை ஓட்டத்தில் அவள் வழமைபோல மீண்டும் பங்குபற்ற முடிவதில்லை. கொழும்பிற்குத் தப்பிச் சென்ற இரண்டு பெண்கள் தொடர்ந்தும் மனச்சோர்வு பீடித்த நிலையில் இருந்ததோடு, வீட்டுக்குத் திரும்பிப் போவதை நினைத்ததுமே அஞ்சி நடுங்கினர்கள். கருத்தரித்து விடுவோமோ என்ற பயம் பல பெண்களை

Page 203
370
சிகிச்சையை நாடுமாறு செய்தது. பெண்ணின் தாயோ அல்லது பெண்ணின் நெருங்கிய உறவினரோ கருத்தரிப்பு நிகழாது என்ற உறுதியை வேண்டி நின்றனர் அல்லது கருச்சிதைவை நாடினர்.
இத்தகைய பாலியல் வன்முறைச் சம்பவங்கள், பரவிய பல வதந்திகள் போன்றவை யாழ்ப்பாணப் பெண்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியது. ஐப்பசியிலும், கார்த்திகையிலும் பெணிகளுக்கிருந்த அச்சுறுத்தல் நிஜமானதேயாகும். பெண்களில் அநேகள் பாலியல் சார்ந்த பதற்ற உணர்வு கொண்டவர்களாக தாங்கள் எளிதில் பாதிக்கப்பட்டு விடுவோம் என்று பயந்து கொண்டிருந்தனர். பலர் பாதுகாப்பான இடங்கள் என்று தாம் கருதிய இடங்களை நோக்கிச் சென்று விட்டனர். மார்கழியில் போக்குவரத்து சீரடைந்ததும் பெருந்தொகையினர் கொழும்பு போய்ச் சேர்ந்தார்கள். வெளியோர்களுக்குத் தப்பி போக முடியாதவர்கள், இரக்க உணர்வு கொண்ட தமிழ் பேசும் ஜவான்களின் நல்லறிவுரைகளைப் பின்பற்றி சேலை அணிந்தவாறும் பொட்டு வைத்துக் கொண்டும், வீட்டுக்குள்ளேயே இருந்தவாறும் வெகு ஜாக்கிரதையுடன் நடந்து கொண்டனர். இந்தியப் பெண்களோடு ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணப்பெண்கள் விடுதலை பெற்று விட்டவர்கள் போலவும் இச்சையைத் தூண்டுபவர்களாகவும் பார்க்கப்பட்டது போன்று தெரிகிறது. மேலும் நெருக்கடியான காலங்களில் ஆண்களுக்கு முரட்டுத்தனமாகப் பதில் கூறப்பட்டு, தாக்கப்பட்டு அவர்கள் சுடப்பட்டபோது பெணிகளே பொறுப்புகளைத் தமது தலையில் சுமந்து இராணுவத்தை அணுகவும் அவர்களிடம் நட்புரீதியாகப் பழகித் தொடர்புகள் ஏற்படுத்தவும் முனைந்ததை அவர்கள் தவறாக விளங்கிக் கொண்டிருந்தனர்.
இந்திய ஆக்கிரமிப்பின் இந்த அம்சத்தின் மீது மார்கழியிலிருந்து அதிகரிக்க ஆரம்பித்திருந்த பொதுமக்களின் கண்டனக்குரலும் இது குறித்த பரந்த செய்திப்பரவலும் எமது பெண்களின் மத்தியில் ஆழமாக வேரோடியிருந்த பாதுகாப்பற்ற உணர்வையும், இந்த அச்சுறுத்தலின் கலாசாரத் தாக்கத்தினையும் பிரதிபலிப்பதாய் அமைந்தது. கொழும்புக்குத் தப்பிச் சென்றிருந்த இளம்பெண் ஒருத்தி தையில் யாழ்ப்பாணம் திரும்பிய போது எல்லா இடங்களிலும் இந்திய இராணுவம் நிற்பதைக்கண்டு, இதயத்தில் பயம் பற்றிக்கொள்ள, உடனே அதே பஸ்ஸில் கொழும்பிற்குப் போய்விடுமாறு அவளது உள்ளுணர்வு உணர்த்தியதாகத் தெரிவித்தார். ஆனால் சற்று நேரத்துக்கு பின் இப்போது ஜவான்கள் முன்னரை விட வித்தியாசமானவர்களாகவும், முன்னை விடக்கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் ஒழுக்கத்துடன் நடப்பதாகவும் ஒரு பெண்ணாக இருந்து மட்டுமே உணரத்தக்க இந்த உணர்வைத்தான் பெற்றதாகக் கூறினார்.
4.0 g GTLNTL G5III (PSYCHOSIS)
சைக்கோஸிஸ் என அழைக்கப்படும் கொடூரமான மனநோய்க்கு சூழலின்
அழுத்தநிலை மட்டுமே பொதுவான காரணியாக அதனளவில் ஆகிவிடாது.
ஆனால் எளிதில் இரையாகி விடக்கூடிய அல்லது சிதைந்துவிடக்கூடிய

37
ஆளுமை உடைய ஒரு மனிதனிடம் அழுத்தநிலை உளமாய்நோயைத் துரிதமாக வரவழைக்கும். ஏற்கெனவே மனநோய்த்தாக்குதலுக்கு உள்ளாகித் தேறிக் கொண்டிருக்கும் ஒரு ஆரோக்கியமான தனிநபரிடத்திலும் சூழலின் அழுத்தநிலை மீண்டும் மனநோயை உருவாக்கிவிடக்கூடும். ஐப்பசி 10ம் திகதி நிலைமை திடுதிப்பென மோசமானபோது தெல்லிப்பழை உளநலப்பிரிவில் இருந்த சில நோயாளிகளைத் தவிர, நடப்புச்சூழலின் காரணமாக உளநலச்சிகிச்சைச் சேவைகள் இரண்டு மாதங்களுக்கு மேலாகச் செயற்பட முடியாமலேயே இருந்தது. தெல்லிப்பழை மருத்துவமனை மீது நிகழ்ந்த பலத்த குணர்டுவீச்சின் காரணமாக ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பல நோயாளிகள் தப்பி ஓடினர். அவர்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒருவர் தொடைவழியாகவும் ஆண்உறுப்பின் புறப்பக்கமாகவும் சுடப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மீண்டும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டார். வெளிநோயாளர் சிகிச்சைப்பிரிவில் நீண்ட கால நலம் பேணும் நோக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த பல நோயாளிகள் மருந்துப் பற்றாக்குறை காரணமாக நோயின் மறுதாக்குதலுக்கு மீண்டும் ஆளாயினர். மறுதாக்குதலுக்கு உள்ளான நோயாளிகள் சிகிச்சைக்குப் பெரும் அளவில் இப்பொழுது வந்து கொணடிருப்பதன் மூலம் இது தெரிந்தது. மருந்துகள் எதுவும் இல்லாமலேயே ஒரு வருடத்துக்கு மேலாக உடல் நிலையில் நன்கு தேறிக்கொண்டிருந்த ஒரு நடுவயதுப் பெண்மணியின் வாய்க்குள் துப்பாக்கிக்குழல் திணிக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் மனநோய்க்கு உள்ளானார். அந்தக் கணத்திலிருந்து அவள் நிலை கொள்ளாதவளாயும் எதனையும் சந்தேகித்துப் பார்க்கும் கற்பனாபூர்வமான மனநோய்க்கும் உள்ளானாள். சிலரைப் பொறுத்தவரையில் அவரின் நெருங்கிய உறவினர்கள்
இக்காலகட்டத்தில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விசேஷ வகையான பல கஷ்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. கவர்ச்சியான ஓர் இளம் பெண் அதீத எண்ணங்கள், உணர்வுகள், செயற்பாடுகள் இவற்றிற்கிடையே தொடர்புகள் 5606055 (florid schizophrenic illness) 9 lost for 6, LOGOf 65.Tuki, 5of TTélufctibási. நிலைகொள்ளாத நிலையில் இவர் வீதியில் திரிந்து கொண்டிருந்தபோது இராணுவத்தால் பிடிக்கப்பட்டார். அவளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் நிலக்கண்ணி வெடிக்குள்ளானதால் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. அப்போது இராணுவப்பாதுகாப்பில் இருந்த யாழ் பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த போது தாதிமார்
உடைமாற்றும் அறைக்கு அவர் ஐவான்களால் கொண்டு செல்லப்பட்டு,

Page 204
372
தங்களுக்கு இணங்குமாறு அச்சுறுத்தப்பட்டு தொடர்ந்து நான்கு இரவுகள் கூட்டாகச் சேர்ந்து பலரால் அவர் கற்பழிக்கப்பட்டார். பின்னர் அவர் காங்கேசன்துறை தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு மீண்டும் இந்திய இராணுவத்தால'பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவள் அங்கிருந்த உயரமான ஜன்னல் வழியே வெளியே குதித்து, மீண்டும் யாழ் பெரியாஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டாள். அங்கு நரம்பியல் பிரிவில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது அங்கும் இராணுவத்தால் அவர் கழிவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு மாறிமாறிப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவர் மிக மோசமான தொந்தரவுக்குள்ளாகிய நிலையில் அவர் பின்னர் மனநலச் சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவளது மனநிலைக் கோளாறு காரணமாக அவர் அதீத பாலியலுணர்வை வெளிப்படுத்திய நிலையில், அவரது இந்நோய்க்குணங்குறியை இராணுவவீரர்கள் தவறாக விளங்கிக்கொண்டு விட்டார்கள்.
சிலஉளமாய நோயாளிகள் சுவாதீனமற்ற நிலையில் அசாதாரணமாகவும் சந்தேகத்திற்கிடமான முறையிலும் நடந்து கொண்டதுடன், வேறு பலர் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் சுற்றித் திரிந்தபோது பிடிக்கப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர். மருந்தகத்திலிருந்து மருந்து பெற்றுக்கொள்ள வந்த வழியில் ஒரு இளம் நோயாளி பிடிபட்டுக் கொண்டார். பின் அவரது கட்டைவிரலைக் கட்டித் தலைகீழாகத் தூக்கி "ஹெலிகொப்டர் பாணி"ச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு நன்கு தாக்கப்பட்டார். மூன்று நாட்களுக்குப்பின் அவர் எங்களிடம் அனுப்பப்பட்டபோது மனநிலையில் அவரிடம் நோய்க்கூறுகள் இருந்ததைக் கண்டுபிடித்தோம். நகைச்சுவையான இன்னொரு நிகழ்ச்சியையும் இங்கு குறிப்பிடலாம். மனநோய்ப் பிரிவில் முன்னர் சிகிச்சை பெற்றிருந்த உளப்பிளவு நோயாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டிருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் சிலரைக் காட்டித் தருவதாக அவர் இந்திய இராணுவத்திடம் உறுதி கூறியிருக்கிறார். மகிழ்ச்சியடைந்த இராணுவம் ஜீப், ட்ரக் வாகனங்கள் சகிதம் அந்த நோயாளியின் அறிவுறுத்தலின்படி ஆளப்பத்திரியின் மனநல வார்டு பிரிவுக்கு வந்து சேர்ந்தது. முழுப்பகுதியும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின் அந்த நோயாளி வார்டில் இருந்த நான்கு நோயாளிகளைச் சுட்டிக்காட்டி, "இவர்தான் துர்க்கை அம்மன் கோயிலில் திருடியவர், இவர் தமிழீழ விடுதலைப்புலிகளில் பெரிய ஆள்." என்று சொல்ல ஆரம்பித்தார். மனநலக் பிரிவிலிருந்த ஊழியர்கள் அவர் ஒரு மனநோயாளி என்றும் தவறான போலி நம்பிக்கை நிலையில்தான் அவர்

373
அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்க முற்பட்டபோது ஆத்திரமுற்ற அவ்விராணுவப்பிரிவின் தலைவர், "இவன் இவ்வளவு தெளிவாகப் பேசிக் கொண்டிருக்கிறான்! இவன் எப்படிப் பைத்தியமாக இருக்க முடியும்" என்று பதில் கூறினார். கடைசியில் அவர்கள் சமாதானம் அடைந்து அந்த இடத்தை விடட்டகன்றனர். போகும்போது அம்மனநோயாளி சுட்டிக்காட்டிய அந்த நால்வரையும் வெளியாட்கள் வந்து பார்க்கவோ, உணவு கொடுக்கவோ அனுமதிக்கக்கூடாது என்றும் ஏனெனில் சயனைற் மாத்திரைகள் உணவில் கள்ளமாகக் கலந்து கொடுக்கப்பட்டு விடலாம் என்றும் அறிவுறுத்திச் சென்றனர். அவர்களில் யாராவது ஒருவர் தப்பிச் சென்றால் அந்த ஊழியர்களே அதற்குப் பொறுப்பு என்றும் அவர்கள் மேலும் பயமுறுத்திவிட்டுச் சென்றனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நீண்டகாலமாகக் குணமாகாமலிருந்த முதிர்மன நோயாளிகளில் சிலருக்கு இந்த இறுக்கமான சூழல் நல்ல குணமளித்திருப்பதாகவும், இது மின் அதிர்வுச் சிகிச்சைக்குப் பிறகு இயல்பான நடத்தைக்குத் திரும்பும் நிலைக்கு ஒத்ததாகவும் இருந்தது என்பதுதான். எந்த உணர்வையும் அக்கறையையுமே வெளிப்படுத்தாத நிலையில், சகலவற்றிலிருந்தும் ஒதுங்கிப் போய் இருந்த ஒரு இளம் எஞ்சினியர் அப்பொழுது வேலையில்லாமலும் இருந்தார். ஆழ்ந்த மனச்சோர்வு காரணமாக அவர் இருமுறை தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார். அவர் இருந்த பகுதி பெருஞ் சாவுகள், அகதிகள் என்று இராணுவ நடவடிக்கைகளால் அமளிதுமளிப்பட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இவர் உற்சாகம் மிகுந்தவராய் மாறி, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பல்வேறு சமூகப்பணிகளையும் பொறுப்பேற்றுப் பேருதவிகள் புரிந்தார். எவ்வளவோ காலத்திற்குப் பிறகு இப்போது தான் அவர் சுமுகநிலையில் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர்.
4.11 குழந்தைப் பருவக் கோளாறுகள் (Childhood Disorders)
நெருக்கிடான சூழலில் இருக்கும் போது குழந்தைகள் பொதுவாக உடல்ரீதியான தொந்தரவுகளை வெளிப்படுத்துகின்றன. படுக்கையில் சிறுநீர் கழித்தல், உடல் ரீதியான காரணம் இல்லாத நிலையில் வயிற்றுப் போக்கு போன்ற உடல் ரீதியான செயற்பாடுகளிலோ, அடிக்கடி அழுதல், பிறருடன் பழகாமல் ஒதுங்குதல் போன்ற உணர்ச்சிகளிலோ அல்லது ஒருவரைக் இறுக்கப் பற்றிக் கொள்ளுதல், தரையில் படுத்துப்புரண்டு அரற்றுதல் போன்ற நடத்தை முறைகளிலோ இம்மாதிரி மாற்றங்கள் நிகழலாம்.

Page 205
374
பல்மருத்துவர் ஒருவரின் பதினொரு வயதுப் பையனுக்குத் தீராத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அது வழக்கமாகக் கொடுக்கப்படும் மருந்துகள் மூலம் மட்டுப்படவில்லை. அவர்களுடைய வீடு பலத்த ஷெல் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர்கள் ஒவ்வொரு இடமாய் மாறிமாறிப் போய்க் கொண்டிருந்தனர். போய்த் தங்கியிருந்த எல்லா இடங்களிலுமே ஷெல் அடிகளும் துப்பாக்கிச் சூடும் தொடர்ந்த வணிண மேயிருந்தது. அப்பையனின் வயிற்றுப்போக்கு ஒருமுறை நின்று பின் மீண்டும் தொடர ஆரம்பிக்கும். இப்படியாக இது தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்தது. சூழல் இயல்பான நிலைமைக்குத் திரும்பி, அமைதி நிலைநாட்டப்பட்டு குடும்பம் தங்களின் சொந்த வீட்டுக்குத் திரும்பியபோது அப்பையனின் வயிற்றுப்போக்கு திடீரென்று தானாக நின்றது.
அதிர்ச்சி தரும் சம்பவங்களையடுத்து, பயங்கரக் கனவுகளுடனும் இரவுப் பயங்கரங்களுடனும் நித்திரையில் பெருந்தொந்தரவுகள் பரவலாக ஏற்பட்டிருந்தன. ஆரோக்கிய இயகக்கப்பாடுகளில் அதிர்ச்சி தரும் சம்பவங்களிலிருந்து விடுபடுதலானது, ஆழ்மனதில்புதைக்கப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுத் தணியும் ஒரு இயற்கைச் செய்முறையாகும். அடிக்கடி இவ்வாறு கனவுகள் காணும் போது குழந்தை வெளியுலகின் அதிர்ச்சிகரமான அனுபவத்தை ஏற்றுக் கொண்டு அதற்கியைந்து ஒழுக முற்படுகிறது. விழிப்பு நிலையில் அது இக்குழந்தைகளுக்குச் சாத்தியமாவதில்லை. குழந்தைகள் இரவில் வியர்வையினால் நனைந்த நிலையில் வீறிட்டு அலறியவண்ணம் விழித்துக் கொள்வார்கள். குழந்தைகள் படுக்கும் போதும் விழித்தெழும் போதும் பெற்றோர் குழந்தையின் பக்கத்திலேயே இருக்க வேணடியிருந்தது. முன்பு தனியாகப்படுத்த ஒரு டாக்டரின் நான்கு வயதுப் பெணி குழந்தை இப்பொழுது விழித்தெழும் போது அருகில் பெற்றோர் இல்லை எனில் பதறிப் போய்விடுகிறது. எழும்பியதும் அது கையை நீட்டித்துளாவி தன் பெற்றோர்கள் இருக்கிறார்களா என்று தொட்டுப் பார்த்துத் தைரியப்பட்டுக் கொள்கிறது.
சூழலின் அழுத்தத்தால் எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியாகப் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. ஷெல் வெடித்துச் சிதறும் போதும் இயந்திரத் துப்பாக்கிகளின் சடசடக்கும் ஓசை எழும் போதும் ஆரம்பத்தில் சிறிது அச்சமுற்று பெற்றோரைப் பற்றிக் கொள்ளும் சில குழந்தைகள் பின்னர் இதனால் அதிகம் பதட்டப்படாமல் நடப்பதை அப்படியே எடுத்துக் கொள்ளப் பழகி விட்டனர். அகதி முகாம்களில் பெரியவர்கள் மன
இறுக்கத்துடன் இருக்கக் குழந்தைகள் பெருஞ்சப்தத்துடன் விளையாடிக்

375
கொண்டு சந்தோஷமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிலர்
மோசமான எதிர்வினையை வெளிக்காட்டினர். நிலைமைகள் சுமுகமாகிய பின்னரும், கொழும்பு போன்ற பாதுகாப்பான இடங்களுக்குக் குடும்பம்
சென்று சேர்ந்த பின்பும் பதற்றம் மற்றும் உணர்வு ரீதியான தொந்தரவுகளுக்குக்
குழந்தைகள் உள்ளாகியிருந்தனர். சூழலின் அழுத்தத்தின் தீவிரத்தையும்
பெற்றோரை இது எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைப் பொறுத்துமே ஓரளவிற்கு குழந்தைகளின் எதிர்வினை அமைந்திருந்தது. இறுக்கத்துடனும் பதற்றத்துடனும் இருந்த பெற்றோர்களின் குழந்தைகள் பதற்றத்தையும் பயத்தையும் வெளிக்காட்டின. நெருக்கீடுகள் காரணமாக தற்காலிக நடத்தை மற்றும் உணர்வு ரீதியான தொந்தரவுகளைக் குழந்தைகள் வெளிக்காட்டுவார்களேயானாலும் இது எவ்வளவு தூரம் அவர்களின் வளரும் ஆளுமையின் மீது நிரந்தரப்பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நிர்ணயிப்பது கடினம். யுத்தச் சூழலில் பிறந்த குழந்தைகள் அல்லது வதைமுகாம்களில் இருந்து பிழைத்த பெற்றோர்களின் குழந்தைகள் பற்றிய ஆய்வு அக்குழந்தைகளில் இவை நிரந்தர வடுக்களை ஏற்படுத்தி விடுவதாகத் தெரிவிக்கின்றன. குழந்தைகளின் ஆளுமை உருப்பெறும் ஆரம்ப காலங்களில் அவர்கள் பாதுகாப்பில்லாத நிலையிலும் வீடற்ற நிலையிலும் வளர்ந்தாலோ, அன்பிற்கினிய ஒருவரின் கொடூரமான சாவு அக்காலத்தில் சம்பவித்தாலோ, குரூரமான - முரட்டுத்தனமான நிகழ்ச்சிகள் நடைபெற்றாலோ, போர் அதன் முழு மூச்சில் ஏற்படுத்தும் நாசங்கள் நிகழ்ந்தாலோ அதனுடைய வளர்ச்சி பாதிக்கப்படும் என்பது சாத்தியமே. நமது குழந்தைகள் விரும்பி விளையாடிக் குவித்து வைத்திருக்கும் போர் விளையாட்டுப் பொம்மைகளிலிருந்தும் விளையாட்டுக்களிலிருந்தும் அன்றாடப் பேச்சுவார்த்தையிலிருந்தும் இப்பாதிப்பைக் கண்டு கொள்ளலாம். ஒரு சிறுமியிடம் விளையாட்டுக் கட்டிடக் கட்டங்கள் கொடுக்கப்பட்டபோது அக்குழந்தை உடனடியாக டாங்கிகளின் சங்கிலித்தொடர் ஒன்றை செய்யத் தொடங்கியது துப்பாக்கிகள் வெளித்துருத்திய நிலையில் ஒரு ஹெலிகொப்டரைச் செய்தது. குழந்தைகள் போர் பற்றிய எண்ணங்களில் எவ்வளவு தூரம் மூழ்கிப்போயிருந்தன என்பதை இது காட்டிற்று. தங்கள் செயலின் அர்த்தத்தையோ அதன் நீண்ட கால விளைவுகளையோ புரிந்து கொள்ளமாட்டாத சின்னஞ்சிறு வயதினரை மேலும் மேலும் சேர்த்து இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் தற்போதைய போக்கும் இந்நிலை சீரடைய உதவுவதாயில்லை. செயலில் இறங்குவதன் குதியாட்டத்திலும் சந்தோஷத்திலும் அவர்கள் உணர்ச்சி வேகத்தில் செயற்படுவது எதிர்காலத்தின் துர்ச்சகுனத்திற்கே கட்டியங் கூறுகிறது.

Page 206
376
முரட்டுத்தனமான நடத்தைகளை குழந்தைகள் அவதானிப்பதன் மூலமாகவும் முரட்டுத்தனமான மாதிரிகளைப் பார்த்து அதைப் போல நடந்து கொள்வதன் மூலமும் அவற்றை எளிதில் கற்றுக்கொள்ளப்பழகி விடுகின்றன என்றும் சாத்தியமான சூழ்நிலைகளில் இது ஸ்தாபிதம் பெறவும் பேணப்படவும் முடியும் என்றும் குழந்தை உளவியலாளர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வணி முறைச் செருக்காளர்கள் சமூக அங்கீகாரம் பெற்றுக கெளரவிக்கப்படும்போது முரட்டுத்தனமான கையாளுகையும், வன்முறையுமே பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வழிகளாகிப் போகின்றன. இதுவே மறுபுறத்தில் சமூக நடத்தைகளை உருவமைக்கிறது. இங்கு முரணி பாடுகள் முரட்டுத்தனத்தாலேயே தீர்க்கப்படுகின்றன. முரட்டுத்தன கையாளுகையை கட்டுப்படுத்தக்கூடிய இயல்பான கட்டுப்பாடுகளான மனச்சாட்சிக்கு அஞ்சுதல், குற்ற உணர்வு கொள்ளுதல் போன்றன தணிந்து போய் விடுகின்றன. அநேகமாக இந்த பிறழ்வுகள் தார்மீக ரீதியிலும் நியாயப்படுத்தப்பட்டு விடுகின்றன.
ஒரு காலத்தில் அமைதியை அணைத்து நின்ற இச்சமுதாயத்தின் மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பீதியும் அச்சமும் நிறைந்த சூழலும் வன்முறை வழிபாடும் கடந்த சில ஆண்டுகளாக குழந்தைகளின் ஆளுமையில் ஏறி படுத்தியிருக்கும் சீரழிவு நீண்டகாலத்துர்க்குறிகளையே ஏற்படுத்திச் செல்லவிருக்கிறது. வணி முறையும் முரட்டுததனமுமீ தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளியாத தனிமையும் எமது சமூகத்தின் முக்கிய கூறாக அமைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது ; இவையே இனிவரும் சில தலைமுறைகளின் வாழ்க்கை முறையாகவும் அமையப்போகிறது என்றே கூறத்தோன்றுகிறது.

377
அத்தியாயம் 5 அத்துரு, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணிர்இல்லை. பெண்களின் அனுபவங்கள் 1987 அக்டோபர் யுத்தம்
5.1 அறிமுகம்
ஏகாதிபத்திய உளவியலானது பல நூற்றாணர்டுகளாக மக்களை அடிமைப்படுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் நுட்பமான, அதிநவீன வழிமுறைகளைக் கணிடுபிடிப்பதில் வேகமாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. ஆனால் பெண்களைப் பொறுத்தமட்டிலோ அவர்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் பழைய காட்டுமிராணிடித்தனமான வடிவங்களைத்தான் இன்றும் கையாண்டு வருகிறது. அதாவது திமிர்அதிகார ஆதிக்கம்-அவர்கள் யுத்த அங்கிகளில் தோன்றும் ஆண்கள் (வாளேந்தியோ துப்பாக்கி தாங்கியோ அல்லது குதிரையின் மீதோ கவசவண்டிகளிலோ எப்படி வந்தாலும்) என்று இப்படித்தான் இந்த ஒடுக்குமுறை வடிவங்கள் அமைகின்றன. ஆக்கிரமிப்பின் அதிகபட்ச விலை என்பது பெண்களின் மீது இழைக்கப்படும் வன்முறையைப் பொறுத்தே நிர்ணயமாகிறது.
பாலியல் ஒடுக்குமுறையானது கேள்விக்கிடமில்லாமல் மனதில் பாரதூரமான தாக்கத்தையும் சுய அழிவையும் ஏற்படுத்திவிடக்கூடிய அநுபவங்களில் மிகக்கொடுமையானதாகும். பெண்களின் யுத்தகால அனுபவங்களை வெறும் பாலியல் ஒடுக்குமுறையாக மட்டுமே வைத்து நோக்குவது ஒரு குறுகிய படப்பிடிப்பாக மட்டுமே அமையும். யுத்த காலத்தின்போது பெண்களுக்கு ஏற்பட்ட இந்த முழுமையான அனுபவங்கள் யுத்தத்தினதும் சமூகத்தினதும் அடிப்படையான பல அம்சங்களை வெளிக்கொணர்ந்திருப்பதாகவே நான் உணர்ந்தேன். எனவேதான் எனது சகோதரிகள் அவர்களுக்கேற்பட்ட கஷ்டங்கள், வேதனைகள், வெற்றிகளை அவர்களின் பார்வையிலேயே சொல்லிக்கேட்க நான் ஆசைப்பட்டேன்.
52 யாழ் மத்தியில் ஒரு கிராமம்: ஒரு பெண்ணின் கதை
நாங்கள் சென்ற பிரதானசாலையூடாக செம்பாட்டு மண்ணை வேறுபடுத்திக் காட்டும் வகையில் நிழல் தரும் மரங்களும் தோட்டவெளிகளும் புள்ளியாகத்தெரிய ஆரம்பிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன் கெட்ட பிணவாடை சாவின் கரும்புகை எனக் கவிந்து போய்க்கிடந்த இந்த இடம் இந்தக் காலைப்பொழுதில் இளமை ததும்ப புத்தம் புதியதுபோல் காட்சி தருகின்றது. வழமையில் சிறந்த பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் செழுமையான மண்வளம் கொண்ட யாழ்ப்பாணத்தின் இந்த முக்கியமான விவசாயப்பகுதி இப்போது கவனிப்பாரற்றுக் கிடந்தது.
யாழ்ப்பாணக் கிராமங்களின் இனிய காலைப்பொழுதுகளைப் பற்றிய மனோரதியக் கற்பனைகளுக்கு இனி இடமில்லை. இந்திய இராணுவம் எங்களை

Page 207
378
வேண்டிக்கொண்டது போல் நாங்கள் கடந்த காலங்களை மறக்கவும் முடியாது. கடந்துபோன நிகழ்ச்சிகள் இன்றும் கூட படுபயங்கரமான யதார்த்தமாக இந்தக்கிராமங்களில் காட்சியளிக்கிறது. ஜீவகளை இழந்துபோய் வாய் பிளந்து குகைகளாய் தெரியும் வீடுகள், வீடுகளாக இருந்து இப்போது எரிந்துபோன ஷெல் சிதறலாகக் காட்சி தரும் இடங்களும் கடந்து போனவற்றைப் பேசிக் கொண்டிருக்கின்றன.
திடீரென்று அமைதியைக் குலைத்துக் கொண்டு இந்திய இராணுவத்தின் திறந்த வாகனங்கள் உள்ளே நுழைகின்றன. ஒலிவ் பச்சைநிறச் சீருடைகளில் அதிகார டம்பமும் ஆண்மையின் வீரியமும் காட்டி பகட்டாகப் பவனிவரும் இராணுவ அதிகாரிகள். ஒவ்வொரு அரை மைலுக்கும் ஒரு காவல் நிலையம். நகரத்தில் எல்லாருக்குமே இது பழகிப் போய்விட்டதால் இத்தகைய காவல்நிலை ஒன்றை ஒருநாள் விசுக்கெனக் கடந்து சென்றேன். அவ்வளவுதான், "மெதுவாய், மெதுவாய், மெதுவாய் நட" என்று பின்னாலிருந்து ஒருவன் முரட்டுக் குரலில் கட்டளையிடுவது என் காதில் விழுந்தது. அதற்குப் பிறகு இந்தமாதிரி இடங்களில் நான் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்வேன். போரின் தொடக்க காலத்தைப் போலவே இப்போதும் ஷெல் அடிக்கும் கருவிகள் போன்றனவற்றைத் தோளில் தூக்கிக் கொண்டு தங்களின் சகல சமீபத்துக்களோடும் இந்தியப்படையினர் வீதிகளில் நடந்து சென்றுகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. இங்கு போர் நடந்தது உணி மைதான். இன்னும் இங்கு போர் நடந்து கொண்டிருப்பதும் உண்மையானதுதான்.
நான் பெண்களைக் குழுக் குழுவாயும் தனித்தனியாகவும் அவர்களின் வேலைத்தளங்களிலும் வீடுகளிலும் சென்று சந்தித்தேன். மிச்சமாயிருந்த தளவாடங்களைப் பொறுக்குவதிலும் இடிந்து போனவைகளைத் துப்புரவு செய்வதுமாய் சிதைந்து போன வாழ்க்கையினை மீண்டும் சீரமைப்பதில் அவர்கள் முனைந்திருந்தார்கள்.
இங்கே நமக்கு முக்கிய நிகழ்ச்சிகளை விபரிக்கும் தொழில் பார்க்கும் இந்த இளம்தாயின் வீடு முழுவதுமே எரிந்து போய்விட்டது. ஊரெழு கிராமத்தின் பிரதான சாலை போகும் வழியிலுள்ள அம்மன் கோவிலுக்கு அருகில் இவர்கள் வசித்து வருகின்றனர். அக்டோபர் 10ம் திகதியிலிருந்து யாழ் குடாநாடு முழுவதிலுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது. அக்டோபர் 11ம் திகதி கிட்டத்தட்ட 40 புலிகள் பூரண 'ஆயுதபாணிகளாய் அந்தச்சாலை வழியாக சத்தம் எதுவுமில்லாமல் நகர்ந்து சென்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். அடுத்த நாள் அதாவது அக்டோபர் 12ம் திகதி அதிகாலையிலேயே பலாலி இராணுவ முகாம் திசையிலிருந்து தீவிர ஷெல் தாக்குதல் ஆரம்பமாகியது. குளியலறையின் மேல் மட்டப்பாறையானது கொங்கிரீட்டில் அமைந்திருந்ததால் தாங்கள் பாதுகாப்புக்காகக் குளியலறைக்குள் புகுந்து கொணிடுவிட்டதாக அப்பெண்மணி கூறினார். நாலரை மணியைப் போல ஏதோ நடமாட்டம் கேட்டு மெதுவாக எட்டிப்பார்த்த போது உரும்பிராயை நோக்கிப்

379
பெருந்தொகையாய் புலிகள் சென்று கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள். வேறு ஒருவரின் தகவலின்படி இந்த புலிகள் கோஷ்டி உரும்பிராய் இந்துக்கல்லூரிக்கருகில் 300-400 யார் தள்ளித் தங்கள் வீட்டருகில் நின்று கொண்டிருந்தனராம்.
காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் ஊரேழுவில் பலாலி வீதி வழியாக இந்திய இராணுவப்படை அடுத்தடுத்து மெதுவாகச் சென்றுகொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அப்பெண்மணி கூறுகிறார்: "மோட்டார் ஷெல் அடிப்பது போல சத்தம் கேட்டோம். இது அநேகமாக புலிகளிடமிருந்து வந்த மாதிரித்தான் இருந்தது. அதன் பிறகு என்ன, எல்லாம் ஒரே நாசம்தான்! பயங்கரமான சண்டை மூள ஆரம்பித்து விட்டது. எல்லாத் திசைகளிலிருந்தும் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடந்தபடி இருந்தது. எனது சின்ன மகளை மார்போடு அனைத்துக்கொண்டு கிடந்தேன். ஒரு பக்கமும் அசையக் கூட முடியவில்லை. ஒன்பது மணிவரை சண்டை கொஞ்சம்கூட ஓயாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகுதான் சாடையாக ஒய ஆரம்பித்தது அவர்கள் வெளியே பார்த்தபோது இராணுவவீரர்கள் கற்றிவர பதுங்கியிருப்பது தெரிந்தது. இந்தப் பெண்மணியும் குடும்பமும் ஊருக்கு உள்ளே மெல்லமாகப் போய்விடுவது பற்றித் தீவிரமாக யோசித்திருக்கின்றார்கள்.
"எங்களுக்கு முன் வீட்டில் ஒரு தாயும் அவளின் இரண்டு வயதேயான சின்னமகளும் பதின்மூன்று வயதான இன்னொரு மகளும் இறந்து கிடந்ததை நான் என் கணிணால் பார்த்தேன்" என்று அப்பெண்மணி கூறினார். கணவரும் பதினொரு வயதான மற்ற குழந்தையும் காயமடைந்த நிலையில் வீட்டுக்குள் இருந்ததை அவர்கள் கணடனராம். அந்தக் கணவன் வெளியே உற்றுப்பார்க்கையில் இராணுவம் கட்டதால் தான் கத்தி அலறிக்கொண்டு எவ்வாறு வீட்டுக்குள் ஒடிப் போனேன் என்பதை அக்கணவர் பின் எங்களிடம் விபரித்தார். அவரது மனைவியும் அவரின் இரண்டு குழந்தைகளும் பின்கதவு வழியாகத் தப்பிச்செல்ல முயன்றபோது ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். அந்தத் தாய் தன் கைகளில் ஏந்தியிருந்தது இரண்டு வயது குழந்தை ஒன்றைத்தான், துப்பாக்கியை அல்ல. (மறுநாள்தான் மருத்துவ சிகிச்சைக்காக தகப்பனையும் மகளையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாட்டு வண்டியில் கோப்பாய் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முடிந்தது) இந்த நிகழ்ச்சிகளை எண்ணிடம் விபரித்த இப்பெண்மணியும் அவரது குடும்பமும் ஊருக்கு உள்ளே நகர்ந்தபோது அவர்கள் இருந்த வீட்டிற்கு எதிரிலிருந்த ஒழுங்கையில் ஒரு வயதான மனுஷியும் அவரது மகனும் பிணமாகக் கிடப்பதைக் கண்டிருக்கிறார்கள். அந்த வயதான மனுஷி ஊர்க்கோயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தவராம். அந்த ஒழுங்கையின் ஒரு பக்கத்தில் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மனிதனின் பிணத்தையும் அவர்கள் கணிடிருக்கிறார்கள்.
பதின்மூன்றாம் திகதி உரும்பிராயின் மேல் குண்டு வீகம் விமானங்களை அவர்கள் பார்க்க முடிந்தது. மறுநாள் அதிகாலையிலேயே ஊரெழுவுக்கு

Page 208
380 வந்து அவை குண்டு வீச ஆரம்பித்து விட்டன. "ஒரே வீட்டிலிருந்து மட்டும் பாட்டி, தாய், ஒரு வயது மகன் என்று மூன்று பேரும் குண்டு வீச்சில் இறந்து போனதும் கணவன் மட்டும் தப்பிக் கொணிடதும் எங்களுக்குத் தெரியும்" என்று அவர்கள் கூறினர்.
அதே நாளில் சற்றுக்கழித்து மீண்டும் தாக்குதல் தீவிரமாக நடந்தது. இத்தாக்குதலில் 35-40 வயதிற்குள் இருந்த இரணிடு சகோதரிகள் மரணமடைந்தனர். இக்கதையை என்னிடம் விபரித்துக் கொண்டிருக்கும் பெண்மணி தொடர்ந்து கூறுகிறார்:
"எங்களால் நீண்ட நாளைக்கு இதைத்தாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. ஒரேயடியாக அந்த இடத்தையே விட்டுவிட்டுப் போய்விடுவதென்ற யோசித்தோம். நாங்கள் ஊருக்கு உள் நோக்கிப் புறப்பட்டு விட்டோம். எங்களில் பலர் தங்கள் குழந்தைகளுடனும் சிலர் தங்களின் வயதான குடும்பத்தினருடனும் ஊருக்குள் போய்ச் சேர்ந்தோம். சைக்கிளிலும் ஸ்கூட்டரிலுமாய் அவர்களை ஏற்றிக்கொண்டு போய்ச்சேர்ந்தோம். சிலர் நடந்தும் போனார்கள். என்றாலும் எங்களில் பலபேர் வயதுபோன மூத்தவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டி இருந்தது. அவர்களை அங்குமிங்குமாகக் கொண்டு திரிவது அவர்களுக்கும் முடியாமல் இருந்தது" வயதுபோனவர்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றும் தாங்கள் ஒன்றுமறியாத அப்பாவிகள் என்று அவர்கள் ஓரளவு இராணுவத்திற்கு விளங்கப்படுத்திப் புரிய வைத்து விடுவார்கள் என்றும் அவர்கள் வெகுவாக நம்பியிருந்தனர். ஆனால் அந்தக் கிராமவாசிகள் மீண்டும் அங்கு திரும்பி வந்தபோது அவர்களால் காணமுடிந்ததெல்லாம் வீடுகளில் அப்படியே தங்கி நின்றுவிட்ட வயதானவர்களதும் ஏனையோரதும் பிறரது எலும்புக்கூடுகளையும் அழுகி நாறும் சடலங்களையும் தான்.
ஒரு பெண்மணி தனது அண்டை வீட்டுக்காரரான 52 வயதான ஒரு கடைச் சொந்தக்காரரையும் 20 வயதான அவரது மகனையும் பல நிலைகளில் சிதைந்து போன சடலங்களாகத் தான் கண்டதாகக் கூறினார். அப்பெண்மணி மேலும் கூறினார்:
"எங்கள் வீட்டிற்கு எதிர் ஒழுங்கையில் ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டை நாங்கள் பார்த்தோம். அதிலிருந்த உடையிலிருந்து தான் அவளை அடையாளம் காண முடிந்தது. அந்த இளம் பெண்ணை எங்களுக்குத் தெரியும். அவளுக்குப் பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கிடைத்திருந்தது
அந்தப்பெணி அந்த வீட்டில் அவசரத்தில் விட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்லத் திருப்பியும் வந்தவள் என்று அவர்கள் விபரித்தனர். கர்ப்பிணியான தனது சகோதரிக்குத் தேவையான சில பொருட்களை எடுத்துக்கொண்டு போகத்தான் அப்பெண் வந்திருக்கிறாள். நோயாளியான தனது தந்தைக்குத் தேவையான சில மருந்துகளை எடுத்துச் செல்ல வந்திருந்த ஒரு பெண்ணினதும் வேறும் இன்னொரு மனிதனதும் எலும்புக்கூடுகளை அவர்களின் உடைகளைக் கொண்டு அடையாளம் காண முடிந்தது என்று அக் கிராமவாசிகள் கூறினார்கள், முதல் பார்த்த

38 எலும்புக்கூட்டிற்கு அருகில் சிதறிய போத்தல்களும் பக்கத்தில் சாமான் வாங்குகிற பையும் கிடந்தது. பதினைந்தாம் திகதி அவளது வீடு குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான போது அவளும் அவளோடு பாதுகாப்புத் தேடி வந்திருந்த அயலவர் ஒருவரும் தப்பித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. மகள் சுடப்பட்டபோது தாயைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அந்தத் துப்பாக்கிச்சூடு தாயைக் காயப்படுத்தியதே தவிர, அதனால் அவள் சாகவில்லை. தனது கணவனதும் மகளினதும் சடலங்கள் அழுகிக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அந்தத் தாய் அதே வீட்டில் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு 20 நாட்கள் இருந்திருக்கிறார்.
ஒரு பெண்மணி கூறுகிறார்: இலங்கை இராணுவத்தைச் சந்திக்க நாங்கள் மனத்தளவில் தயாராக இருந்தோம். அவர்கள் ஒரு வயது வரம்பு வைத்திருந்தார்கள். அதிலும் அவர்கள் ஆணிகளைத்தான் சுட்டுக்கொன்றார்கள். ஆனால் இந்திய இராணுவத்தைப் பொறுத்தவரை எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் எங்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். பெண்களாகிய நாங்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டியதாயிற்று. அதோடு வீதியெல்லாம் ஷெல் அடித்துக் கொணடிருக்கும்போது நாங்களும் எப்படித்தான் நல்லுTருக்குப் போயிருக்கமுடியும்? நானோ நோயாளியான தாயையும் என் சின்ன மகனையும் வைத்துக்கொண்டு இருக்கிறேன். என் கணவரோ இங்கே இல்லை. நான் எப்படித்தான் போவது?"
இன்னுமொரு பெண்மணி கூறுகிறார்: எவ்வளவு பெண்களும் பச்சைக்குழந்தைகளும்தான் செத்துப் போனார்கள்? அவர்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. யாரோ எவரோ ஒரு மனித உருவம் சாடையாய் அசைகிற மாதிரி தெரிந்தாலும் சரி, அவர்கள் சுட்டார்கள்" இந்தப் பெண்களுக்கு நடந்ததிலிருந்து அவர்கள் போராளிகளிலிருந்து பொதுமக்களை வேறுபடுத்திப் பார்க்கவில்லை என்பது திட்டவட்டமாய்த் தெரிகிறது. இந்த இராணுவ நடவடிக்கை புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கானது என்றாலும், போரின் ஆரம்ப கட்டத்தின் போது இந்தக் கிராமங்களில் அசையும் எதுவுமே இந்திய இராணுவத்திற்கு ஒரு புலியாய்த்தான் தெரிந்தது, ஆகவே அதனைச் சுட்டேயாக வேண்டும் என்றாகிவிட்டது. ஒன்று அல்லது இரண்டு வயதிலிருந்து எண்பத்திரண்டு வயதுவரை சகலரும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முற்பட்ட ஆண்டுகளில், இலங்கை இராணுவப் படையினரின் சுற்றி வளைத்து, கைது செய்யும் இராணுவ நடவடிக்கையின் பயங்கரத்திற்கு அஞ்சி. 14ற்கும் 40ற்கும் இடைப்பட்ட வயதுடைய ஆண்கள் (இவர்களே இராணுவத்தின் இலக்கிற்குரிய வயதினராவர்) தாங்கள் பிறந்த கிராமங்களைவிட்டு, அகதிகளாக உலகமெங்கும் தப்பி يpL+ அலையவோ, அல்லது ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவோ நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதைத்தவிர, இலங்கை அரசாங்கம் 35 ஆண்டு காலமாகக் கைக்கொண்ட திட்டமிட்ட வேலைவாய்ப்பு கெடுபிடிகளும்,

Page 209
382 பொருளாதாரப் புறக்கணிப்பும், தமிழ்ப் பிரதேசங்களைத் திட்டமிட்டே பின்தங்கிய நிலையில் வைத்திருந்தமையும் மத்தியகிழக்கு நோக்கியும் வேறு பல இடங்களை நோக்கியும் மிகவும் கீழான தொழில்களைத் தேடி பெருந்தொகையில் இளைஞர்களை செல்லத்தூண்டியது. கவனிக்கவும் காக்கவும் வாழ்க்கையை இழுத்துக்கொண்டு போகவும் பெண்கள் மட்டுமே
மிஞ்சியிருந்தனர்.
5.3 காணாமல் போனவர்களைப் பற்றி
நம்பிக்கையேயற்ற சாவின் கடைசித்துயரார்ந்த நிகழ்வுகளிலிருந்து இப்போது காணாமல் போனவர்கள் மீது நாம் இப்போது எமது கவனத்தைக் குவிக்கிறோம். இங்கு நம்பிக்கை மட்டும் தான் ஆதாரசுருதி. பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தமட்டில் இந்த நம்பிக்கையைச் சுற்றித்தான், அது சிலவேளைகளில் அத்துணை திடமாய் இல்லாத போதிலும் இந்த நம்பிக்கையில் தான் அவர்களது வாழ்க்கையே ஆதாரப்பட்டு நின்றது. காணாமல் போனவர்களில் பலர் இநீதிய இராணுவத்தினி தேடுதலி, சுற்றிவளைத் தலி நடவடிககைகளினி போது கைது செய்யப்பட்டுக் கொண டு செல்லப்பட்டவர்கள்தான். நாளாந்த அலுவல்களைப் பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியே போனவர்களில் பலரும்கூட இவ்வாறு . கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். தெருக்களிலிருந்தும் சந்தையிலிருந்தும் வங்கியிலிருந்தும் கூட அவர்கள் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் மொத்தமாய் கொலைச்சம்பவங்கள் குறைந்து கொண்டுபோனாலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையோ பிரமிப்பூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. இருந்திருந்துவிட்டு இந்திய இராணுவம் தடுப்புக்காவலில் வைத்திருப்போரைப்பற்றி அவ்வப்போது பட்டியலை வெளியிட்டாலும் அவர்களின் உதவாத அசமந்தப்போக்கும் தன்மையும் பலவேளைகளில் தெளிவாகவே தெரிந்தது.
இந்தியப்படை தனது கணவனைக் கைது செய்துகொண்டு சென்ற ஒரு வாரத்திற்குப் பின்தான் அவள் தனது முதல் குழந்தையைப் பிரசவித்திருந்தாள். அவளுடைய கணவனோடு கைது செய்யப்பட்டிருந்த மற்ற எல்லாருமே பிறகு விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். கைது செய்யப்பட்ட நாளிற்குப் பிறகு தனது கணவனை அவள் ஒருநாளும் பார்த்ததில்லை. அகதி முகாமிலிருந்து தன்னை ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிப்பதற்காக தன் கணவன் தேவையான சில அவசியமான பொருட்களை எடுத்துக் கொணிடு வருவதற்காகவே வீட்டுக்குப் போயிருந்த வழியில் இந்தச்சம்பவம் நடந்ததுபற்றி அப்பெண் மிகவும் மனமுடைந்து போயிருந்தாள். இது நடந்தது சரியாக நவம்பர் பத்தொன்பதாம் திகதி. அதைத் தொடர்ந்து 4 மாதங்களாகத் தனது கணவனைக் கணிடு பிடித்து விட அவள் முயற்சித்துப் பார்க்காத வழிகளே இல்லை என்று கூறிவிடலாம். அவள் எதையுமே விட்டு வைக்கவில்லை. ஏதாவது நம்பிக்கை துளிர்க்காதா என்று இந்தியப்படை வெளியிடும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரின் பட்டியல்

383
எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விடுவாள். அக்கம் பக்கத்திலிருந்தவர்களோ அவளுடைய கணவன் இறந்து போய்விட்டான் என்றே குசுகுசுத்தனர். தனது கணவன் இறந்து போய்விட்டதற்கு அடையாளமாய் அவள் நெற்றியில் இட்டிருந்த அழகிய குங்குமப் பொட்டைக் கூட அழித்து விட்டாள்தான். ஆனால் அவளின் இதயத்திற்கு இதயமாகவும் ஏன் எங்களுக்கும் கூட அவர் உயிருடன் தானிருப்பார் என்று அவள் ஆணித்தரமாய் அடித்துச் சொல்கிறாள். அவளுடைய கணவன் இறந்து போய் விட்டான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளுக்கு நம்மால் என்ன உதவிட முடியும்? அவளுக்கும் அவளுடைய மழலைக்கும் நம்பிக்கையூட்டக்கூடியதாக நம்மால் என்ன தான் செய்ய முடியும்?
உஷாவின் கணவருக்கோ இருபத்துநான்கு வயதுதான். ஐந்து மாதத்திற்கு முன்புதான் அவர்களுக்குத் திருமணமாயிருந்தது. இப்போது அவள் நான்கு மாதக்கர்ப்பிணி. அவளுடைய கணவன் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சமாதான ஒப்பந்தத்திற்கும் திருமணத்திற்கும் பிறகு அவர் அரசியலைக் கைவிட்டுவிட்டு சாதாரண பொது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டிருந்தார். ஜனவரி 27ம் திகதி அவர் வீட்டிலிருந்து சந்தைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். அதுதான் அவள் அவரைக் கடைசியாகப் பார்த்தது. அவளுக்கோ இதைப்பற்றிப் பலவிதமான ஊகங்கள் எழுந்தன. இந்தியப் படையோ அல்லது "டெலோ ஆட்களோ அவரைக் கடத்திக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பதே அது.
இன்னொரு பெணி தன்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். அவளுடைய கணவருக்கு 50 வயது. அவர்களுக்கு நான்கு பெண்கள். அந்த சனியன் பிடித்த தினத்தன்று தான் முல்லைத்தீவிற்கு வியாபார விஷயமாய்ப் போயிருந்த அவர் அப்போதுதான் இந்தியப்படை காலி செய்து விட்டிருந்த பகுதிக்குள் போயிருந்திருக்கிறார். அவளுடைய கணவரைப்போன்ற ஒருவரைத்தான் இராணுவம் சுட்டுத் தூக்கிக்கொண்டு போனது என்று அவளுக்குச் செய்திகள் வந்தன. தனி ஆளாய் அந்தப் பெணிதான் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் உள்ள ஒவ்வொரு முகாமுக்கும் போய் தன் கணவனைத் தேட ஆரம்பித்தாள். இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும்கூட அவள் அணுகிப்பார்த்தாள். அவர் உயிரோடிருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று அவர்களாலும் அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் காணாமற் போன 300க்கும் அதிகமானோரின் பட்டியலில் இக்கதைகள் ஒரு சிலதுதான். இந்தப்பட்டியல் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
5.4 பாலியல் வன்முறையும் மானபங்கமும்
"ஏன் எனக்கு அப்படி நடந்தது? ஏதோ சந்தர்ப்பத்தால் என்னில் இருந்த
ஏதோ ஒன்று அவர்கள் இதை என் மீது செய்ய சிலவேளைகளில்
யோசிக்கப் பணிணி இருக்குமோ என்று நானே என னைக்

Page 210
384
கேட்டுக்கொள்வதுண்டு. எனக்குள் நான் மிகவும் உறுதியாக இருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால் எனக்கு நானே அற்பமாகவும் தெரிந்தது. இரண்டு மாதங்கள் ஆன பின்பும் கூட நான் மோசமாகவே உணர்கிறேன். என் கணவரிடம் சொல்லக்கூடப் பயமாக இருக்கிறது. மிகக்கிட்டடியில் தான் அவருக்கு இதைப்பற்றி நான் கடிதம் எழுதினேன். இது மற்றப் பெண்களுக்கு ஏதாவது வகையில் உதவக்கூடுமென்று நீங்கள் சொன்னால் என் கதையை உங்களுக்குச் சொல்கிறேன்"
கன காலமாக எனக்கு இந்தப் பெணிணைத் தெரியும். அவள் அப்போதெல்லாம் உயிர்த்துடிப்பான, மிகவும் குதூகலிப்பான பெண்ணாக இருந்தாள். அவளின் அழகிய புன்னகையும் முகமும் என்னுள் நல்லாய்ப் பதிந்து போய் விட்டிருந்தது. ஓரளவு தானி அவள் எனக்கு பரிச்சயமாகியிருந்தாலும்கூட அவளுடைய பெயரை இப்போதுகூட என்னால் ஞாபகத்திற்குக் கொணிடு வரமுடியும். மிகவும் நிதானமான இப்பெணி பிரமிப்பூட்டும் வகையில் இப்படிப் பேசக்கூடும் என்பதை என்னால் சற்றும் நம்பமுடியவில்லை. 38 வயதான தொழில்சார் பெண்மணியான இவருக்கு பதினொரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடைய கணவர் வெளிநாட்டில் வேலைபார்க்கிறார். அப்பெண்மணி கூறுகிறார்:
நவம்பர் 12ம் திகதி காலை 8 மணியளவில் மூன்று . இந்திய இராணுவப்படையினர் எங்களுடைய வீட்டுக்கு வந்தார்கள். அப்போது எனது அம்மா சமையலறையில் இருந்தாள். நானும் என்னுடைய மகளுமே அவர்களைப் பார்த்தோம். "செக்கிங்" என்று மட்டும் சொல்லி விட்டு எனது மகளை ஒரு அறைக்குள் தள்ளினார்கள். நான் அவளைப்பற்றி இழுத்துக்கொண்டு கத்தினேன். 'அம்மா, அம்மா, தேடுகிறார்கள் என்று சொல்லிக் கத்தினேன். உடனே எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த காவல் நிலையில் இருந்த படைவீரர்கள் வீட்டிற்குள் ஓடிவர ஆரம்பித்தனர். எனது வீட்டிற்குள் இருந்த படைவீரர்கள் அவர்களிடம் தாங்கள் சோதனையிட மட்டுமே வந்ததாகவும் தாங்கள் உடனே போய் விடுவோம் என்றும் கூறினார்கள். எனது தங்கச்சங்கிலியை அவர்கள் திருடிக் கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் நல்லாகப் பயந்து போயிருந்தோம். பிறகு எனது மகளைப் பெட்டி போன்ற வீட்டின் பின்பக்கத்தில் இருந்த சிறுஅறையில் ஒளித்து வைத்துக் கொண்டேன். 930 மணி அளவில் அதே மூன்று படைவீரர்கள் மீண்டும் வருவதைக் கண்டேன். இப்போது அவர்கள் இராணுவக்காவல் நிலையை நோக்கி இருந்த வீட்டின் முன் வாசல் வழியாக வராமல், காலியாக இருந்த இன்னொரு வீட்டிற்கூடாக வீடுகளுக்கிடையே இருந்த தடுப்புச் சுவர்களைத் தாண்டி வந்தனர். பிறகு அவர்கள் எனது பெற்றோரை ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டினார்கள். எண்னை ஒரு அறைக்குள் தள்ளிக் கொண்டு போய், துப்பாக்கி முனையில் ஒருவர் பின் ஒருவராக அந்த மூன்று பேரும் என்மீது பாலியல் வன்முறையினை மேற்கொண்டனர். நான் கூச்சல் போடவில்லை. கூச்சல் போட்டு அதனால் என் பெற்றோரைச் கட்டுவிட்டால் என்ன செய்வது? அந்தக் குழி விழுந்த கண்களை என்னால் இப்போதும் நினைவுக்குக் கொண்டு வர முடிகிறது. என்னால் அதற்கு

385 மேல் எப்படி அதைத் தாங்குவதென்று தெரியவில்லை. கொழும்பிற்கு பஸ்கள் ஓட ஆரம்பித்த முதல்நாளே நான் யாழ்ப்பாணத்தைவிட்டு, எனது கிராமத்தை விட்டுப் போய்விட்டேன். பயங்கரக்கனவுகள் அடிக்கடி தோன்ற ஆரம்பித்தன. அவர்களுடைய முகங்கள் அடிக்கடி தோன்றின, அவர்களுடைய குரல்கள் அடிக்கடி கேட்பதுபோலத் தோன்றியது. எனது மகளைக் கூட்டிக் கொண்டு நான் பிறகு வெளிநாடு போய்விட்டேன். ஒரு மனவியலாளரைக் கூடச் சென்று சந்தித்தேன். அவர் முழுக்க ஒரு அந்நியராக இருந்ததால் அவரிடம் என்னால் எல்லாவற்றையும் கதைக்க முடிந்தது. அவர் எனக்கு மருந்துகள் தந்தார். அவை ஓரளவிற்கு என்னை சாந்தப்படுத்தினாலும் என்னுடைய மனநிலைப் பாதிப்பை அது முற்றாக நீக்கிவிடவில்லை. என் நிலைமையோ இன்னும் மோசமாகிக் கொண்டே போகிறது. என் மகளையாவது என்னால் காப்பாற்ற முடிந்ததே புண்ணியம்"
பதினொரு வயதிற்கு அவளுடைய மகள் நல்ல தோற்றப் பொலிவோடு இனிமையான பெண்ணாயும் இருந்தாள். உண்மைதான், அந்த அதிர்ச்சியான நிகழ்ச்சியிலிருந்து அவள் தன்னுடைய மகளைப் காப்பாற்றிக் கொண்டு விட்டாள்தான். அப்பெண்மணி மேலும் தொடர்கிறாள்:
"நான் என்னுடைய கணவருக்கு இதைப்பற்றி எழுதியபோது, 'ஒன்றுக்கும் கவலைப்படாதே என்று அவர் எனக்கு எழுதியிருக்கிறார்தான். உங்களுக்குத் தெரியுந்தானே எங்களுடைய ஆணிகளைப் பற்றி? அவர் என்னை ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? சமயக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் போக முயற்சித்தாலும் அவற்றில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை. இந்த உலகத்திலிருந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவள் போலவே உணர்கிறேன். எனக்கு என்னவோ மாதிரி இருக்கிறது"
புண்பட்ட ஒரு பெண்மணியின் உடைந்து நொறுங்கிப் போன உள்ளத்தை ஒருவர் இதிலே பார்க்க முடிகிறது. எவ்வளவுதான் ஒருவர் ஆறுதலையும் ஆலோசனையும் வழங்கினாலும்கூட அது முட்டாள்தனமானதாகவே இருந்திருக்கும். வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன், திராணியற்றவளைப் போல உணர்ந்தேன், எங்கள் எல்லார் மீதும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது: எங்களின் வர்க்கத்தின்மீது, எமது ஆணிகளின் மீது, கையாலாகாத - முட்டாள்தனமான எமது முழு சமூகத்தின்மீதும் எனக்கு ஆத்திரம் வந்தது.
இன்னுமொரு இளம் பெண்ணின் கதையும் இங்கு முக்கியமானது. அவளுக்கு ஆகப் பதின்மூன்று வயதுதான் ஆகிறது. ஒரு காலத்தில் அவளுடைய வீடு புலிகளின் ஒரு முகாமாக இருந்தது. தேடல் என்ற பெயரில் வந்த இந்திய இராணுவம் அந்தச்சிறு பெண்ணை வீட்டிலிருந்த மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனியே கொண்டு போய் வைத்து அவளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியது. பின் அந்தப் பெண்ணும் குடும்பம் முழுவதுமே கொழும்புக்கு ஓடிப் போய்விட்டனர். அவர்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ள ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தினராவர். தங்களுக்கு குற்றமிழைத்த நபர்களை அடையாளம் காட்டுவதிலோ அல்லது வேறெந்த

Page 211
386 வழிமுறைகளிலோ இறங்க அவர்கள் விரும்பவில்லை. அதைப்பற்றி அவர்கள் காதால் எதையும் கேட்கக்கூட விரும்பவில்லை. அந்தக் குரூர நிகழ்வை தங்களில் நினைவின் ஒரு இடுக்கில் போட்டுப் புதைத்துவிடவே அவர்கள் விரும்பினார்கள்.
வறிய ரோமன் கத்தோலிக்கர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் 55 வயதுடைய ஒரு விதவையையும், 22 வயதுடைய இன்னொரு பெண்ணையும் இரண்டு இந்தியப்படை வீரர்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பிறிதொரு சம்பவமும் நடைபெற்றுள்ளது. நவம்பர் 18ம் திகதி பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் நடந்த சம்பவம் இது. கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் இந்திய இராணுவப்படை நிலைகொணடிருந்தது. வயதான மனுஷியைத்தான் அந்தப் படைவீரர்கள் முதலில் பார்த்திருக்கிறார்கள். அவள் தனது குடிசைக்குள் போனதும் அவளைப் பின் தொடர்ந்து சென்ற படைவீரர்கள் அவள் கதறக்கதற அவளைப்பாலியல் வன்முறைக்குட்படுத்தினர். அந்த நேரத்தில் கிணற்றில் தணிணிள் அள்ளுவதற்காகச் சென்ற அந்த இளம்பெண் வீட்டின் பின்பக்க வளவில் நின்றிருக்கிறாள். ஏதோ குழப்பமாய் சத்தம் கேட்கிறதை உணர்ந்த அப்பெணி கதவருகில் போய் ஆச்சி, ஆச்சி என்று கூப்பிட்டிருக்கிறாள்.
கதவு திறபட்டு, உள்ளிழுக்கப்பட்ட அவள் அங்கேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாள். அந்த இளவயதுப்பெணி தன்னை விடுவித்துக் கொள்ள முடிந்ததால் அந்த வீதிவழியே ஒடிப்போய் கத்த ஆரம்பித்திருக்கிறாள். அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். "என்னை கெடுத்து விட்டார்கள்" என்று அவள் விம்மி அழுதாள்.
இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் தங்கள் பாட்டில் ஒன்று திரள ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 400 பேர் கொண்ட மக்கள் கூட்டம் பெருங்கூச்சல் எழுப்பியவாறு இராணுவ முகாமிற்குள் உள்ளிட ஆரம்பித்தது. துப்பாக்கிகள் சகிதம் இராணுவ வீரர்கள் உஷாராய் இருந்தனர். கோபமடைந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறி உட்செல்ல முனைந்தனர். அப்போது அந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியில் வந்து மக்களை அங்கேயே தங்கி நிற்கும்படி சொல்லிவிட்டு, மூன்று பேரை மட்டும் விசாரணைக்கு உள்ளே அழைத்தார். அவர்கள் அந்தப் பெண்ணையும் கூட்டிக்கொண்டு போய் நடந்தவற்றைச் சொன்னார்கள். குடிசையில் நோவால் படுத்துக்கிடந்த பெண்ணையும் அழைத்துக்கொண்டு போனார்கள். அடையாள அணி வகுப்பு நடந்தது. அந்த இரண்டு குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்பட்டனர். விசாரணைக்குப்பிறகு அந்த இரண்டு பேரும் தகுந்த முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி உறுதி கூறியிருந்தார். இன்னொரு பெண் தன்னுடைய அனுபவத்தைப் பின்வருமாறு விபரிக்கிறார்: "எங்கள் கிராமத்திற்கு அவர்கள் வந்து நீண்டகாலமான பின்பு ஒரு டிசெம்பரில் அது நடந்தது. மரணத்தாலும் வேறு அழிவாலும் எங்கள் கிராமம் மோசமாகவே பாதிக்கப்பட்டிருந்தது. இந்த குரூர வேதனையோடு நாங்கள் தப்பிவிட்டோம் என்றுதான் நாங்கள் நம்பிக்கொண்டிருந்தோம். டிசெம்பர்

387
19ம் திகதி எங்கள் வீட்டில் குழுமியிருந்தவர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுப்பதற்காக என்னுடைய 25 வயது சிநேகிதியுடன் வெளியில் போகவேணிடியிருந்தது. நாங்கள் எல்லாருமே வீடுகளை விட்டு விட்டு இடம் பெயர்ந்து வந்திருந்தவர்கள்தான். பிரதான வீதியிலிருந்து ஒதுங்கி உட்புறமாயிருந்த வீடுகளில் இருந்தோம். அந்த ஒழுங்கையில் சற்றுத் தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத்தான் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். உண்மையில் அது எனது மச்சாளின் வீடு. அப்போது காலை 1130 மணி இருக்கும். வீட்டை அணிமித்தபோதுதான் ஒழுங்கையின் முடிவில் படைவீரர்கள் நின்று கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். திரும்பிப் போகவும் முடியாததால், சரி வீட்டுக்குள்ளேயே போவதென்று முடிவு செய்தோம். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும், பின் தொடர்ந்து வந்த வீரர்கள் சோதனைக்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள். அது எங்களுடைய வீடு இல்லை என்றும் வீட்டின் எல்லாச் சாவிகள்கூடத் தன்னிடம் இல்லை என்றும் நான் சொன்னேன். அவர்களோ சோதனையிட வேண்டுமென்றுகொண்டு நின்றார்கள். இதற்கிடையில் என்னை எனது இளம் சிநேகிதியிடமிருந்து பிரித்து விட்டார்கள். அவளை ஒரு அறைக்குள் கொண்டு போனார்கள். ஒருவன் என்னை வீட்டைச்சுற்றி அழைத்துச்சென்று அறைகளைக் காட்டும்படி என்னைத் தொந்தரவு செய்தான். எங்களால் கூச்சல் இடவும் முடியவில்லை. அப்போது நாய்கள் பயங்கரமாகக் குலைக்க ஆரம்பித்தன. நாங்கள் உள்ளே இரண்டு பெணிகள் இருக்கிறோம் என்று அக்கம் பக்கத்தவர்களுக்குத் தெரிந்ததும் அவர்கள் கூட்டம் கூட்டமாக வீட்டுக்கு வந்து திரள ஆரம்பித்ததும் அந்தப்படைவீரர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டனர்."
இந்த நிகழ்ச்சியை எங்களுக்கு விபரித்துக் கொண்டிருக்கும் நடுத்தரவயது விதவைப்பெண் தன்னுடைய சிநேகிதியை அவர்கள் எவ்வாறு துப்பாக்கி முனையில் கட்டிலில் சத்தமில்லாமல் படுக்கும்படி பயமுறுத்தினர்கள் என்பதை நன்கு விளக்கினார். தொழில் பார்க்கும் இந்த இளம்பெணி அந்த விஷமிகளிடமிருந்து நிதானமாக தன்னைக் காத்துக்கொள்ள முடிந்த அதே நேரத்தில் அயல் வீட்டாரும் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். ஆனால் அதிகார பீடத்தில் உள்ளவர்களிடம் அவர்கள் இதுபற்றி எந்த முறைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை. மத்தியதர வர்க்கப் பின்னணியைக் கொண்ட அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு திருமணமாகாத இளம் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையை என்னமாதிரி சீரழித்து விடும் என்ற மாதிரித்தான் பேசினார்கள். என்னோடு பேசிக்கொண்டிருந்த பெணிகளும் மோசமானது ஒன்றும் நடந்துவிடவில்லை என்ற மாதிரியும் அந்த இளம் பெண்ணின் எதிர்காலம் இதனால் சீரழிந்து போய்விடக்கூடாது என்ற அவதானத்தோடுமே இதுபற்றிப் பேசினார்கள். அதற்குப்பிறகு அந்த இளம் பெண்ணும், அயலில் இருந்த வேறு பெண்களும் உடனடியாக கொழும்புக்கு புறப்பட்டு விட்டனர்.

Page 212
388
இனிவருவது பதினெட்டு வயதான ஒரு பெண்ணின் கதை. இவளுடைய தகப்பனார் ஒரு சுருட்டுச் சுற்றும் தொழிலாளி. இருந்தாலும் மகளை க.பொ.த. உயர்தரம் வரை படிக்க வைத்திருந்தார். இந்தச்சம்பவம் டிசெம்பர் 23ம் திகதி நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் இந்திய இராணுவத்தினர் கோழி பிடிப்பதற்காக அவர்களுடைய வளவுக்குள் வந்து போயிருக்கிறார்கள். குறிப்பிட்ட அத்தினத்தன்று அங்கு வந்த இரண்டு இராணுவ வீரர்கள் தாயை மகளிடமிருந்து பிரித்து, தாயைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி, மகளை இருவரும் மாறி மாறி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். அவளோ ஒரு இளம் கன்னிப்பெண். இந்தப்பெண் மற்றவர்களைப் போலன்றி, அந்தப் பாதகர்களை அடையாளங்காட்டி அவர்களுக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்தாள். இவளைப் பரிசோதனை செய்த டாக்டர் இந்தக் கதையைத் தெளிவாக ஞாபகத்தில் வைத்திருக்கிறார். அவர் கூறினார்: 'அவ்வளவு துடிப்பான பெண்ணுக்கு இது ஒரு கோரமான சம்பவமே. அந்தப் பெண்ணுடைய துணிவை நான் மெச்சுகிறேன்"
இன்னுமொரு பாலியல் வன்முறைச் சம்பவத்தை ஆராய்ந்த ஒரு டாக்டர் எங்களிடம் கூறினார்: "அது யுத்தத்தின் ஆரம்பக் கட்டம். அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இளம் பெண்ணைக் கொண்டு வந்தார்கள். அவளுடைய பெற்றோர் விவசாயிகள், வயதானவர்கள். ஒரு புகைப்படம் சம்பந்தமாக விசாரிப்பதற்காக இந்திய இராணுவம் நவம்பர் 16ம் திகதி அவளைக் கூட்டிக்கொண்டு போனது. அந்தப் புகைப்படத்தில் இவளும் இவளுடைய பள்ளிச் சிநேகிதியும் உள்ளனர். அந்தச் சிநேகிதியின் சகோதரன் புலி என்று கருதப்படுகிறார். அவள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த இளைஞன் இப்போது எங்கிருக்கிறான் என்பதுபற்றியும் அவனுக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவன் அவளுடைய காதலன்தானென்றும் அந்தப் பையனைப் பற்றிய உணி மைகளைச் சொல்லாவிட்டாலி 9566 அடித்து நொறுக்கப்போவதாகவும், பாலியல் வன்முறையையும் செய்வேன் என்றும் இராணுவ கெப்டன் வார்த்தையால் மிரட்டியிருக்கிறான். எப்படியோ விசாரணை முடிந்ததும் வீட்டிற்கு அவளைக்கொண்டு வந்துவிட்ட கெப்டன் இதுபற்றி யோசித்து முடிவு செய்ய அவளுக்கு 24 மணித்தியால கால அவகாசமும் கொடுத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, அதே இடத்திற்கு இரண்டு படைவீரர்கள் வந்து, பெற்றோரை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, அவளை ஒரு அறைக்குள் கொண்டு போய் ஒருவன் அவள் மீது பாலியல் வன்முறையை மேற்கொண்டான். அவளுக்கு இரத்தம் கசியத் தொடங்கியது. தாங்கள் மறுநாளும் வருவோம் என்றும் நடந்ததைத் தாயிடமும் சொல்லக் கூடாது என்றும் அதில் ஒருவன் எச்சரிக்க, பின் அவர்கள் சென்று விட்டனர். என்ன செய்வதென்றறியாத நிலையில் அந்தப்பெணி கிணற்றுக்குள் குதித்துவிட்டாள். அதிர்ஷ்டவசமாக அயலில் உள்ளவர்கள் வந்து அவளைக் காப்பாற்றி விட்டனர். இந்தக் குழப்பங்கள் நடந்து கொண்டிருக்கையில், அவ்வழியாக ரோந்துப் பணிக்காகவோ வேறெதற்கோ வந்த கெப்டனுடன்

389
பிரஸ்தாப நபர்களும் வந்திருந்தனர். தான் முன்பு பயமுறுத்தியதால்தான். அவள் கிணற்றில் குதித்திருக்க வேண்டும் என்று கருதிக்கொண்ட கெப்டன். அவளுடைய தலையைத் தடவிக் கொடுத்து, தானி அவி வாறு பயமுறுத்தியவாறு செய்யப்போவதில்லை என்றும் ஏதேனும் பிரச்சினைகள் என்றால் தன்னிடம் சொல்லும்படியும் கேட்டான். அவளைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திய நபர்களும் அவனுடன்கூட இருந்ததால் அவள் அந்த நேரத்தில் மெளனம் சாதிக்க வேண்டியதாயிற்று. பின்பு, அக்குடும்பத்தினர் இப்பெண்ணை இந்த டாக்டரிடம் கூட்டிச் சென்றபோது, அவர் தான் இந்தச் சம்பவத்தைப் பற்றி முறையீடு செய்யும் படி அவளைத் தூண்டியிருக்கிறார். அப்பெண்ணும் அவ்வாறே அதனைத் துணிச்சலோடு செய்து, குற்றம் இழைத்த நபர்களையும் அடையாளம் காட்டினாள்.
அன்றாட வாழ்க்கை எல்லாமே சுமுகமான நிலைக்குத் திரும்பிவிட்டதென்று எல்லா மக்களையுமே ஒட்டு மொத்தமாக நம்பும்படி இந்திய இராணுவம் முயற்சி மேற்கொண்ட - முழு சகஜ நிலைமை நிலவிய காலங்கள் இவை தான். ஜனங்கள் தங்களின் பழைய கிராமங்களுக்குத் திரும்பிப் போய், ஷெல் தாக்குதலுக்குள்ளன வீடுகளைத் திருத்தி ஏதோ ஒரு பக்கத்தில் வாழ்க்கையை ஆரம்பிக்க முனைந்து கொண்டிருந்தனர். ஜனவரி மாதம் முடிந்து கொண்டிருந்த தறுவாயிலும்கூட பெண்களைப் பொறுத்தவரை காலம் என்ற காரணியோ அல்லது அவர்கள் சொல்லிக்கொண்ட சகஜநிலை திரும்பிவிட்ட சூழ்நிலையோ கூட அவர்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட இடந்தரவில்லை. யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பை படைவீரர்கள் எங்கள் மீது தீர்த்துக் கொள்ள முனைந்தார்கள் என்றே தெரிந்தது.
அவள் இருபத்திரண்டு வயது மாணவி. அவளுடைய தந்தை பாதி கண் தெரியாதவர். குடும்பம் முழுதும், சிலாபத்தில் கடை வைத்திருக்கும் அவளின் அணிணணிலேயே தங்கியிருந்தது. ஜனவரி 24ம் திகதியிலிருந்து கோயிலில் பிரார்த்தனையில் இருந்து வரும் தாய்க்காக உணவு சமைத்து எடுத்துக்கொண்டு ஜனவரி 29ம் திகதி வீட்டிலிருந்து தகப்பனும் மகளும் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். கோயிலை அணிமித்தபோது அவர்களுடைய அடையாள அட்டைகளை நான்கு இராணுவ வீரர்கள் சோதனை செய்திருக்கிறார்கள். ஒருவன் அவள்மீது நீண்ட நேரமாய் சோதனை, நடத்தினான். நேரம் என்ன என்று கேட்டபோது, அவள் இரவு 120 என்று சொல்லியிருக்கிறாள். தகப்பனை அங்கேயே உட்காரச் சொன்ன அவர்கள். அவளை மாத்திரம் கோயிலுக்கு எதிர்த்தாற் போலுள்ள ஒழுங்கையில் நடக்கும்படி உத்தரவிட்டனர். ஆபத்தான நிலையைப் புரிந்து கொண்ட அவள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டு தனியாக மேலும் நடந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டாள். ஒருவன் தகப்பனுக்குப் பாதுகாப்பாக இருக்க மற்ற மூன்று படைவீரர்களும் அவளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பித்தனர். ஒருவருமில்லாத ஒரு குடிசையை அண்மித்ததும் அவளை அவர்கள் அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்றனர். ஒருவன் அங்கு காவலுக்கு இருக்க, மற்ற இருவரும் அவள் மீது பாலியல்

Page 213
390
வன்முறையைப் பாவித்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போனதும் அந்த இளம் பெண் முடியாத தன் தந்தையையும் கூட்டிக்கொண்டு கோயிலுக்குள் போய் தாயோடு சேர்ந்து கொண்டுவிட்டாள். பின்பு அவளும் அவளுடைய தந்தையும் அருகில் உள்ள முகாமிற்குச் சென்று அந்தச் சம்பவம் பற்றி முறையிட்டனர். பெரிய முகாமுக்குப் போய் முறைப்பாடு செய்யும்படி அங்கே அவளுக்குக் கூறப்பட்டது. பெரிய முகாமில் அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டு, அந்த நான்கு இராணுவ வீரர்களையும் அப்பெணி அடையாளம் காட்டினார். அங்கு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு, மறுநாள் தங்களிடம் அறிக்கையைக் கொண்டு வந்து தரும்படி அவளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இனிவரும் சம்பவமோ தனக்கு இழைக்கப்பட்ட வெட்கக்கேடா நிகழ்வினால் வாழவே விரும்பாத ஒரு இளம் பெண்ணின் துயரக்கதையாகும். ஜனவரி 25ம் திகதி அவளது சடலம் அவளது வீட்டுக்கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 1987 ஜனவரியில் அவளது பெற்றோர்கள் இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலில் பலியாகிப்போனார்கள். இந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கும். 24ம் திகதி இரவு அவளும் அவளோடு கூட வேறு இரண்டு பெண்களும் வீட்டிலிருந்த போது இந்தியப்படை வீரர்கள் வந்து கதவைத் தட்டியிருக்கின்றனர். அவளோடு கூட இருந்த பெணிகள் கதவைத் திறக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ச்சியாகத் தட்டிக் கொண்டிருந்ததும் அவர்கள் ஒருவேளை தேடுதல் நடத்துவதற்காக வந்திருக்கக்கூடும் என்று இப்போது இறந்துபோய்விட்ட இந்தப் பெணி அவர்களுக்குச் சொல்லியிருக்கிறாள். கதவைத் திறப்பதா, இல்லையா என்று இவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும்போதே விடாமல் கதவு தட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களோ கதவைத்திறந்து உள்ளே வந்தபோது இந்த 30 வயதுப்பெண் ஆபத்து வந்துவிட்டது என்று ஒடிப்போயிருக்கிறாள். அந்த இளம்பெண் ஒடிப்போய்விட்டாள் என்று தெரிந்த இராணுவ வீரர்கள் சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டுப்பிறகு போய்விட்டார்கள். அவளுக்கு என்ன நடந்தது என்று அவளுடைய பிரேதம் கிடைக்கும் வரை யாருக்குமே ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. பிரேதப்பரிசோதனை செய்த நீதித்துறை மருத்துவ அதிகாரி அப்பெண்ணின் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டதற்கான தெளிவான அடையாளங்கள் இருப்பதாகத் தெரிவித்தார். (பெணி குறியில் சிராய்ப்புக் காயங்களும், ரத்தம் கன்றிய உட்காயமும்)
பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றிருந்த போதிலும் நாங்கள் இங்கு மாதிரிக்கு சில உதாரணங்களை மட்டுமே தந்திருக்கிறோம். ஒரு பெண் தொண்டர் சொன்னது போல, "அகதி முகாம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் தம் முன்னைய வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நவம்பர், டிசெம்பர் மாதங்களில்தான் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அக்கம் பக்கத்திலும் ஆட்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் பெணிகள் பெரும்பாலும் தனிமைப்

391 படுத்தப்பட்டிருந்திருக்கிறார்கள். படைவீரர்கள் பாலியல் வன்முறையை மேற்கொள்ள அவர்களுக்கு இது போதுமான சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. பாலியல் வன்முறைக்கு முன் பல பெண்கள் அடித்துத் தாக்கப்பட்டுள்ளனர்"
கிராமம் விட்டுக் கிராமமாய் ஒடித்திரிந்து கொண்டிருந்த நேரத்தில் எனது இளவயதுத் தோழியும் அவளது சிறுதங்கையும் ஒருமுறை இந்தியப்படையின் சோதனைச் சாவடிகளைத் தாண்டிச்செல்ல வேண்டி இருந்ததாம். தங்களுடைய உடலின் அந்தரங்கப்பகுதிகளில் எல்லாம் எவ்வாறு இந்தப் படைவீரர்கள் நகங்களால் கீறியும் தடவியும் அசூயையாக நடந்து கொள்ள முடியும் என்று எண் சிநேகிதி கொதித்துப் போய்க் கேட்டாள். இதை எல்லாம்விட மோசமானது, சிறிது நீண்ட அமைதிக்குப்பிறகு அவளுட்ைய சிறிய தங்கை அவளைப் பார்த்து, "அக்கா, இவர்கள் இப்போது எங்களுக்குப் பண்ணியதைத்தான் கற்பழிப்பு என்று சொல்வதா?" என்று கேட்டதுதான். ஒன்றுமறியாத அப்பாவித்தனம் என்ற வருத்தமான இந்நிலைக்கு முற்றிலும் நேர்மாறாக நாம் எதிர்கொள்ள வேணடியிருப்பதோ இந்திய இராணுவ அதிகாரிகளின் ஈவிரக்கமற்ற தன்மையும் எமது பெண்களை இழிவாகப்பார்க்கும் போக்கும்தான். காரசாரமான ஒரு கலந்துரையாடலின்போது ფ2(ხ இந்திய இராணுவ அதிகாரி குறிப்பிட்டார்:
இத்தகைய கதைகள் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்று இந்த இளம் பெண்ணுக்கு நான் விளங்கப்படுத்த முயற்சிக்கிறேன். நேற்று ஒரு பாலியல் வன்முறைச் சம்பவம் பற்றி நாங்கள் விசாரணை மேற்கொண்டபோது, கடைசியில் பார்த்தால் அது வெறும் மானபங்கப்படுத்தல் சம்பவமாகவே முடிந்திருக்கிறது"
எங்க ளது ஆதிதிரமெல்லாம் எங்களுடைய சொந்தக கையாலாகாத்தனத்தினதும் பலமில்லாத தன்மையின் மீதும்தான். எங்களது பெளதிக இருப்புகளும் எங்களின் பெண்மைத்தன்மை என்பதுவும் இந்தக் கொள்ளைக்காரரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியதாய், தங்களது விருப்பத்திற்கும் இன்பத்திற்கும் தேவைப்பட்டபோதெல்லாம் எடுத்துக் கொண்டு போகத்தக்கதாய் இருப்பதாகத்தான் நாங்கள் உணர்கிறோம். ஆனால் அதிகார பீடங்களில் அமர்ந்திருக்கும் இவர்களுக்கு இதெல்லாம் வெறும் வரைவிலக்கணப் பிரச்சினைகள் மட்டும்தான்.
இன்னுமொரு சந்தர்ப்பத்தில், குற்றச்சாட்டுகளுக்கான ஊர்ஜிதங்கள் பலமாக இருந்தபோது இதே அதிகரி சிறிது சமரசத்தொனியில் பேசவேண்டி வந்தபோது பின்வருமாறு குறிப்பிட்டார்:
"பாலியல் வன்முறை என்பதைக் கொடிய குற்றம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மை டியர், இது எல்லா யுத்தங்களிலும் நடக்கிற ஒரு சம்பவம். யுத்தத்தில் ஏற்பட்ட களைப்பு போன்ற உளவியல் காரணங்களை இதற்கு அடிப்படையாகச் சொல்லலாம்.
என் தலைக்குள் ஒரு ராக்கெட் இரைந்து கொண்டு போனதைப் போலிருந்தது. நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன், ஓம்! இதுவும்

Page 214
392 யுத்தத்தின் ஒரு பகுதிதான். இருந்தாலும் பெண்களாகிய நாங்கள் இதை ஜீரணித்துக் கொள்ளமுடியாது. எமது உடல் எமக்குரியது, உங்களின் களை தீர்ப்பதற்காகவானதுவல்ல.
ஏதாவது அத்துமீறிய சம்பவங்கள் நடந்தால் அதற்கு எதிராக இந்திய இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். பாலியல் வன்முறை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்பு இந்திய இராணுவமானது இந்தக் குற்றங்களை இழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கியது தான். ஆனால் மயிர் பிளக்கும் விதத்தில் இவர்கள் சாட்சிகளை சேகரித்த விதமானது, இவர்கள் ஒருவேளை அப்படி நினைக்காமல் இருந்திருக்கக்கூடும், புகார் செய்தவர்களை இது பெருமளவில் ஊக்குவிக்கவில்லை. இது போன்ற நிகழ்வுகளில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் நிலைமையையோ சிலவேளை பொய்ச்சாட்சிகள் உண்மைகளை மறைக்கக்கூடியதாகவும் இருந்ததையோ இவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. பாலியல் வன்முறை தொடர்பான ஒரு சம்பவம் குறித்து நவம்பர் 18ம் திகதி மக்கள் பிரதிநிதிக்குழு ஒன்று இராணுவ முகாமுக்கு சென்று வந்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவர் அடையாள அணி வகுப்பை நடத்தியதோடு மட்டுமல்ல, இந்தப் பிரதிநிதிகளின் குழுவில் முன்னணி வகித்த இளைஞரைப் பற்றிய தகவல்களையும் சேகரித்துக் கொண்டார். சில நாட்கள் கழித்து, சுற்றி வளைத்தல்' என்ற பெயரில் இந்த இளைஞரின் வீட்டுக்குப் பக்கத்தில் இவர்கள் வந்திருக்கிறார்கள். இவரைப் பிடித்துக்கொண்டு போய் மோசமாக அடித்திருக்கிறார்கள். அப்படி அடிக்கும்போது புலிகள் செய்த பாலியல் வன்முறையை மக்கள் ஏன் இந்திய அமைதிப்படை செய்ததாகக் கூறுகிறார்கள் என்றும் சாடைமாடையாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஒன்றுமறியாத அப்பாவி என்று பிறகு அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த மாதிரியான சம்பவங்களால் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான புகார்களை இந்திய அமைதிப்படை அனுதாபத்தோடு நோக்காது என்பது மட்டுமல்ல, அச்சுறுத்தல். அடித்தல் என்பதன் மூலம் சாட்சிகளைக் கூட அழித்துவிடும் என்ற உணர்வும் மக்களிடம் மேலோங்கியிருந்தது.
நாம் முன்பு குறிப்பிட்ட 22 வயது மாணவியின் மீதான பாலியல் வன்முறையின் மீதான விவகாரத்தில் இந்திய இராணுவத்தின் உண்மையான முகம் வெளிக்காட்டப்பட்டது இதற்கு சாட்சியமாகும். இராணுவ முகாமில் குற்றவாளியை அடையாளம் காட்டிய இவள் மறுநாள் மீண்டும் வரும்படி அழைக்கப்பட்டாள். பெற்றோருடன் அவள் மறுநாள் வந்தபோது அரியாலை முகாமுக்கு அவர்கள் ட்ரக் வண்டி மூலம் அனுப்பப்பட்டு அங்குள்ள உயர் அதிகாரிகள் அவர்களைச் சந்திப்பார்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. முழுநாளும் அங்கு காத்திருந்து இறுதியில் அவர்கள் மிகவும் கோபமடைந்தவர்களாய் அங்கு சாப்பிடக்கூட மறுத்துவிட்டனர். நடு ராத்திரியில் கமாண்டர் அந்தப்பெண்ணை மாத்திரம் தனியே பார்க்க விரும்புவதாக

393
ஒரு படைவீரன் வந்து சொல்லியிருக்கிறான். கோபமுற்ற தாய் மகளுடன் சேர்ந்து எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறாள். உடனே வாயில் கைவைத்த வணிணம் அவன் அந்த அறையை விட்டுக் கிளம்பிப் போய்விட்டான். இதைவிடப் பலமான அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த தாய் அறையின் வெளியிலேயே இரவு முழுதும் படுத்துக்கொண்டாள். மறுநாள் காலை வீட்டுக்குத் திரும்பிப் போய்விட முனைந்தவர்களை மீண்டும் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அங்கு எதிர் கொள்ள வேண்டிய பெரிய நாசத்தையும் காத்திருப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை என்பதையும் புரிந்து கொண்ட அந்த இளம் பெண் தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் (அதாவது கால்வலி என்றும்) ஆஸ்பத்திரியில் அவளைச் சேர்ப்பிக்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறாள். அவர்கள் இராணுவ மருத்துவ மனைக்குப் போக ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் தகப்பன் மாத்திரம் முகாமில் காத்திருக்கும்படியும் தாயும் மகளும் யாழ் ஆஸ்பத்திரிக்குச் செல்லலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது. தாயை ஆஸ்பத்திரியில் அனுமதித்துவிட்டு மகள் மீண்டும் முகாமிற்கு ஆஜராகும்படியும் கூறப்பட்டது. அந்த இளம் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். தாங்கள் மருத்துவமனைக்குக் கிளம்பிப் போனதும் முகாமிலிருந்து தகப்பனும் வெளியேறிவிட்டார் என்ற தகவலும் கிடைத்தது.
ஒரு அதிகாரி இப்படியும் கூட எதிர்ப்புக்குரல் காட்டியிருந்தார்:
"நாங்கள் வேண்டுமென்றே பெண்களைச் சோதனையிடுவதில்லை. இதோ பாருங்கள்! எங்கள் அதிகாரிகளில் ஒருவர் திறந்த வாகனத்தில் போகும்போது வீதியில் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு பெண் கையசைக்க, மற்ற பெண் ஸ்கேர்ட்டை உயர்த்தி தானியங்கித் துப்பாக்கியை எடுத்து எங்கள் அதிகாரி மற்றும் ஜவான் மீதும் சுட ஆரம்பித்திருக்கிறாள். பெணிகளையும் நாங்கள் சோதிக்க வேணடும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? தொடைகளுக்கிடையேயும், ஜாக்கெட்டுக்குள்ளும் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பவர்கள் பெண்களாகவே இருக்கின்றனர்
சோதனைச் சாவடிகளில் நூற்றுக்கணக்காக பெண்களின் மீது உடம்பைச் சோதனையிடுவது முழுவதையும் ஆண்களே செய்தனர். ஆயுதங்களைத் தேடுதல் என்பது சகல பெண்களின் உடலிலும் கைவைத்தல் என்பதற்கான அனுமதியாகிவிட்டிருந்தது. ஒரு சோதனைச்சாவடியில் ஒரு பெணி நொந்துபோய் அழுது கொண்டிருந்தாள். அப்போது தான் வயதுக்கு வந்திருந்த அந்தப்பெண்ணின் மாதவிலக்கிற்குப் பாவிக்கும் உள் துணியைக் கூடக் காட்டச் சொல்லும் படி கேட்டார்களாம். இதற்கு மேலாக இந்தியப்பத்திரிகைகள், ஏன் அனிதா பிரதாப் போன்ற பெண் பத்திரிகையாளர்கள் கூட பாலியல் வன்முறை என்பது வெறும் வதந்தி என்றும் இந்திய அமைதிப்படைக்கு எதிராகக் கட்டிவிடப்பட்ட கட்டுக்கதை என்றும் எழுதியிருக்கிறார்கள். பெண்களைச் சோதனையிடுவதற்காக என்று மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் பெண் பிரிவை இந்திய ராணுவம் ஜனவரி மாதத்தன்று வெகு அமர்க்களமாகக் கொண்டுவந்திருந்தது. செளகரியமான

Page 215
394
சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பெணி காவல் நிலைகள் அமைந்திருந்ததால் எதிர்பாராத இடங்களிலும் திடீர்ச் சோதனைகளின் போதும் இவை உதவாததால் இது ஒரு கேலிக்கூத்தாகவே முடிந்தது. இதைவிட ஆனையிறவில் ஒவ்வொரு பெனினும் சோதனையிடப்படுவதை கூண்டுக்குள்ளிருந்து மத்திய ரிசர்வு பொலிஸ் படையின் ஆணி அதிகாரிகள் கவனித்துக் கொண்டிருப்பார்களாம்.
வீடுவீடாய் தேடுதல் நடத்தப்பட்டபோது பாலியல் வன்முறை மாதிரி பல மானபங்கப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. மானிப்பாய் இந்துக்கல்லூரியில் அமைந்திருந்த அகதி முகாமில் நவம்பரின் இறுதியில் நுழைந்த இந்திய இராணுவம் ஆணிகளிலிருந்து பெண்களைத் தனியாகப் பிரித்தெடுத்து பெணிகளை மானபங்கம் செய்திருந்தது. பெணிகள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டதால் அவர்கள் அதை மேலும் தொடர்ந்து செய்யாதபடிக்கு தடுத்து விட்டனர்.
வழமையான வீடுவீடாய் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு டிசெம்பர் மாதத்தில் பாஷையூரில் ஒரு வீட்டில் ஒரு பெண்ணின் கீழாடையை தூக்கியிருக்கின்றனர். ஆத்திரங் கொண்ட பெண்களின் குழு ஒன்று அப்பகுதியின் கட்டுப்பாட்டு அதிகாரியைச் சந்தித்து முறைப்பாடு செய்ததுடன் நல்ல நடத்தையுடனும் கெளரவத்துடனும் அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர். இதற்குப்பிறகு அடையாள அணி வகுப்பு நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட இராணுவ வீரர்கள் அடையாளம் காட்டப்பட்டனர். அதன் பிறகு தேடுதல் நடவடிக்கைகள் என்பது உள்ளூர் வாசிகளும் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவின் முன்னிலையிலேயே நடைபெற வேணி டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இச்சம்பவங்களில் மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள் பொதுவாக உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த, குறிப்பாக மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகையால் அவர்கள் தங்கள் பெண்மைக்கும் கெளரவத்திற்கும் ஏற்படும் சிறிய அவமரியாதையையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். மானிப்பாயில் உள்ள லவுட்டன் வீதியில் டிசெம்பர் மாதத்தில் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும் வகையில் அவர்கள் நடக்க அதனை அப்பெண் எதிர்த்த போது மேலுதடு வெடிக்குமளவு அவள் தாக்கப்பட்டிருக்கிறாள். இன்னும் மோசமாக இன்னொரு பெண்ணுக்கு நடக்கவிருக்கையில் உரத்துக்கத்திக் கூச்சலிட்டதன் மூலம் அப்பெணி தப்பித்துக் கொண்டாள்.
இந்திய இராணுவம் எந்த முற்தடுப்பு நடவடிக்கையையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று நாம் கூறவில்லை. அவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகமெதுவாகவே எடுக்கப்படுவதும், பலவழிகளிலும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டவர்களை மண்ணிப்பதுவும் குற்றவாளிகள் குற்றம் நடந்த இடத்தில் இல்லை என்று ஊர்ஜிதப்படுத்துவதுமே இராணுவத்தின் கடமைகள் மாதிரி ஆகிவிட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைப் போக்கவோ, அவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவோ ஆன முயற்சிகள் எதுவும் நடக்கவேயில்லை. இதை நாங்கள் எழுதிக் கொண்டிருக்கும்

395 போதுகூட பாலியல் வன்முறை, மானபங்கப்படுத்துதல் போன்றவை பற்றிய தகவல்கள் பல இடங்களிலிருந்தும் வந்து குவிந்த வண்ணமாய் உள்ளது. பெண்கள் என்ற வகையில், வஞ்சிக்கப்பட்ட எங்கள் சகோதரிகளின் நிராதரவான கடுஞ்சினத்தையும், சிதைக்கப்பட்ட-களங்கப்படுத்தப்பட்ட அவர்களது வாழ்வின் கஷ்டத்தையும் வேதனையையும் நாங்கள் உணர்கிறோம். இதன் ஒட்டுமொத்த விளைவு யாதெனில் பீதிக்குள்ளான, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையைப் பெணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததுதான். தனியே வீட்டிலிருக்கும் பெண திடீரென்று வீடு வீடாய் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது பயந்து போயிருந்தாள். இதனால் இவர்கள் நேர கலத்தோடு சமையலை முடித்துக்கொண்டு ஒரு பொது வீட்டில் கூடியோ அல்லது ஜன்னல்கள். கதவுகள் கேற்றுகளை முழுக்கச்சாத்திக் கொண்டோ இருக்க வேண்டி நேர்ந்தது. பெண்கள் சைக்கிளில் போவதும், சேலை கட்டிய பெண்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு செல்வதும், வேலைக்குச் செல்வதும், இளம் பெண்கள் தாய்மாரை சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்த்திச் செல்வதும் தமிழ்ப் பகுதிகளில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பொதுவாகக் காணக்கூடிய காட்சியாக ஒரு காலத்தில் இருந்தது. ஒரு பெண் இப்படிச் சொன்னாள்:
"நாங்கள் . நாங்களாகவே எவ்வளவோ காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறோம். அதிலும் விசேஷமாக இலங்கை இராணுவத்தினரின் நடவடிக்கைகளின்போது நாங்கள் மேலும் மேலும் அதிக வேலைகளைச் சுமக்க வேண்டியதாயிற்று. ஆண்மக்களைப் பாதுகாப்பது அல்லது அவர்களை வெளியில் அனுப்பி விடுவது போன்றவற்றிலும் நாங்களே தோள் கொடுத்தோம். இலங்கை இராணுவம் 14-40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களைத் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி இந்த வயது எல்லைக்குள் இருப்பவர்களைக் கைது செய்வதற்காக கிராமங்களை சுற்றி வளைக்க ஆரம்பித்தது. இதனால் சமூகத்தின் காத்திரமான உடலுடைய ஒரு பகுதியினருக்கு வாழ்வு என்பது நிச்சயமற்ற ஒன்றாகவே இருந்தது. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரையும் பிறந்த ஊரில் வாழ்க்கையை நடத்திச் செல்ல விட்டுவிட்டு இளைஞரெல்லாம் வெளியேறி விட்டிருந்தனர்.
அவள் தொடர்ந்தாள்: பாலியல் வன்முறை, மானபங்கப்படுத்துதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு ஆண்துணையில்லாமல் நாங்கள் எங்குமே போகமுடியவில்லை. இதனால் பெரும்பகுதி நேரம் நாங்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறோம்." இப்போது பொதுவில் நிலைமை சிறிது பரவாயில்லை என்றாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் ஒடுக்குமுறைகள் அதிகரித்துக்கொண்டு செல்வதானது குறுகிய மதிப்பீடுகளை நோக்கித் திரும்புவதற்கான சாத்தியங்களை வழங்கி வருகிறது.
ஒரு வயதான மனுஷி கேட்கிறாள்: "ஏன் இந்தப் பெண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருக்கக்கூடாது? பெரிதாய்ச் சிரித்துக் கொண்டும் கதைத்துக் கொண்டும் திரியும் இந்தக் குமர்களைப்

Page 216
396 பாருங்கள். இவ்வளவு நடந்த பிறகும் உதுகள் இன்னும் சுற்றிக்கொண்டுதானே திரியுதுகள் உதுகள் உவையளாப் போய்த்தான் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வரியின"
இந்தியப்படையின் பிரசன்னத்தையடுத்து புதிதாய் வீச ஆரம்பித்திருந்த இந்தப்பழமைவாதக் கருத்து அலையினைப்பற்றி ஒரு பெண் கருத்துத் தெரிவிக்கையில், "இனியும் நாம் நமது பெண்களைப் பயந்தாங்கொள்ளிகளாக வளர்த்துக் கொண்டிருக்க முடியாது. அதே நேரம் இந்த ஆண்களைத் தூண்டி விடுகிற மாதிரியும் இருக்க வேண்டியதில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்கிறார்.
இதன் எதிரொலிபோல அமைந்த ஒரு ருசிகரமான நிகழ்ச்சியை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன். இந்திய இராணுவம் தங்கள் பாடசாலைக்கு அனுப்பி வைத்த குறிப்பை தங்கள் ஆசிரியை வாசித்துக் காட்டியதைப் பற்றி பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலிருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதிலுள்ள வாசகம் பின்வருமாறு: "பெண்கள் சேலை அணிந்து கொள்ள வேண்டும். மற்றும் சைக்கிளில் அவர்கள் சுற்றித்திரியக் கூடாது" இந்தக் கஷ்டங்கள் எல்லாவற்றையும் பற்றிக் கிண்டலோடும் கசப்போடும் ஒரு இளம் பெண் பின்வருமாறு கூறினார்: "சோதனை நிலையங்களில் உள்ள இராணுவவீரர்கள் சும்மா எங்கள் மேல் தட்டிவிட்டாலோ அல்லது எங்களைப் பார்த்து ஏதாவது சொல்லி விட்டாலோ ஊரிலுள்ள வயதான கிழவிகள் அங்கு கூடி நின்று கிசுகிசுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்: "பாவம் இந்தப்பிள்ளை பழுதாப்போட்டுது. எப்படித்தான் இவவுக்கு கல்யாணம் கட்டி வைக்கப்போயினமோ? இதையெல்லாம் தவிர்ப்பதற்காகவே நான் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதுண்டு
இயக்கங்களுக்குள்ளோ அல்லது வெகுஜனமட்டத்திலோ பலம் வாய்ந்த பெண்களின் தலைமை இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொணி டுவிட்ட பெணி சமூகத்திற்கு இந்திய இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் ஒடுக்குமுறை போன்ற கொடுந்தீமைகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்து அமைப்பு ரீதியாகப் போராடக்கூடிய பாதைகள் எதுவுமே இல்லாமலிருந்தது. இந்தப் பிரச்சினைகள் தண்பாட்டில் தீர்ந்துவிடும் என்றரீதியிலேயே சமூகம் விடப்பட்டிருந்தது. இதிலிருந்து இரண்டு விதமான போக்குகள் சமூகத்தில் உருப்பெற்றிருந்தமையைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
முதலாவதாக மத்தியதரவர்க்கக் குடும்பங்களைப் பொறுத்தவரையில் பாலியல் வன்முறை மற்றும் மானபங்கப்படுத்தும் சம்பவங்கள் நடந்தபோது அவர்கள் அவற்றை வெளியில் தெரியவராது மறைத்துவிட முயன்றனர். தனிக்குடும்பங்களாக வாழ்ந்த இவர்கள் குற்றம் இழைத்தவர்களை அடையாளங்காட்டி வெளியில் கொண்டு வரப்பயந்து கொண்டிருந்தனர். வெளியில் தெரியவந்தால் தங்களைச் சுற்றியுள்ள சமூகம் தம்மை நிந்திக்க ஆரம்பிக்குமோ என்ற பயமிருந்தது. குற்றவாளிகள் அடையாளங் காட்டப்பட்ட ஏதாவது சம்பவத்தைச் சொல்ல வேண்டுமென்றால், ஏழைக்குடும்பத்திலிருந்து

397
பாதிக்கப்பட்ட பெணிகளே இவ்வாறு குற்றவாளிகளை அடையாளங் காட்டினார்கள். கல்வியின் சிறந்த அனுகூலங்கள் அனைத்தையும் கொண்டிருந்த இந்த மத்தியதர வர்க்கமானது இந்திய இராணுவத்துடன் ஏதோ ஒருவித விசேஷ சலுகை கொண்ட உறவினை வைத்திருந்ததால் முக்கிய பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் வெளியில் பேசவில்லை. எதிர்ப்புகள், கண்டனங்களைத் தெரிவிக்காதது மட்டுமல்ல, பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றிலிருந்து ஒதுங்கியே வந்துள்ளனர். தனிமனிதன் என்ற வகையிலோ அல்லது சமூகம் என்ற வகையிலோ நீதி என்பது வழங்கப்படவேண்டியது என்ற வகையில்கூட அவர்கள் சிந்திக்கவில்லை. இது எங்கள் மத்தியதரவர்க்கத்தின் நோஞ்சான் தனத்தை அப்பட்டமாகப்படம் பிடித்துக்காட்டுகிறது. இந்த மத்தியதர வர்க்கத்திடம்தான் சமூகம் தனது அதிகாரங்களை எல்லாம் தாரை வார்த்துக் கொடுத்திருந்தது. ஆனால் இவர்களோ சமூகத்திற்கு எந்தவகையிலும் எதுவுமே செய்யவில்லை.
இரண்டாவதில் விஷயத்தைக் கையாண்ட தன்மையானது அதாவது தனியே பெண்ணில் பழியைப் போடுவது என்பது பெண்கள் சுமக்க நேர்ந்த பெருஞ் சுமையினைத் தனிநபர் பிரச்சினையாக்கிப் பார்த்தது. இது துன்பத்தையும் வேதனையையும் பெண்ணுக்குள்ளேயே அகவயப்படுத்தி, பெணிணினி வாழ்வில் அது ஆழமாக - என்றென்றும் நிலைத்து நின்றுவிடக்கூடிய ரணத்தை ஏற்படுத்தி விட்டது. சமூகம் இதிலிருந்து மிகவும் தள்ளி நின்றது. அது கூடிய பட்சம் செய்ததெல்லாம் அனுதாபத் தோரணையில் கிசுகிசுப்பில் திளைப்பது மட்டும்தான். இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளின் போது பெணிகளைத் தனிப்படுத்திப் பார்க்கும் பார்வையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதானால் அது மக்கள் அனைவரதும் கூட்டுப் பிரக்ஞையாலேயே சாத்தியமாகும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் வழங்கித் தேற்றி, அவளுடைய வேதனையைத் துடைக்க முனைவது பெண் சமூகத்தின் கடமையாக இருக்கவேண்டும். இது புணனை தி திறந்து சீழை வெளியேற்றி காயத, தைகி குணப்படுத்துவதைப் போன்றது. ஒரு இளம் பெண் இந்த விஷயத்தில் எனக்கு ஒன்றைத் தெளிவாக்கினாள். அவள் சொல்கிறாள்: "காயப்பட்ட ஒரு சகோதரியாக எங்களைக்கருதி ஏன் அதைக் குணப்படுத்த இவர்கள் முயலக்கூடாது? படைவீரர்கள் எங்களை ஒரு முறைதான் நாசம் பண்ணினார்கள். ஆனால் இந்தக்கிராமமோ எங்களை ஆயிரம் தடவை அழித்துக் கொல்கிறது"
பெண்கள் தாங்களாக ஒன்றிணைந்து செயலில் இறங்குவதற்கான அமைப்பு எதனையும் நாங்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை. (விடுதலை இயக்கங்களில் பெண்களைப்பற்றி புரட்சிகர-வீராவேசப்பாணியில் வார்த்தைகளைப் பொழிந்து தள்ளுவதற்கு மட்டும் ஒரு குறைச் சலும் இருக காது) நெருக்கடிக்கட்டங்களின்போது ஊக்கத்துடன் ஒன்றிணைவதற்கான ஒரு வர்க்கமாகவும் நாங்கள் இல்லை. இந்தப் பழிபாவங்களை எல்லாம் சுமக்கும் பொறுப்பு உழைக்கும் பெண்கள் சமூகத்தின்மீதும் அதிலும் இந்தவர்க்கத்திலும்

Page 217
398
பெண்ணின் மீதும் தனிநபர் என்ற ரீதியில் விழுந்த சுமையை அவர்கள் மிகுந்த துணிச்சலோடு ஒரு சவாலாகவே இதனை எதிர்கொண்டனர். இந்தத்துண்டு, துணிடான உரையாடல்கள் யுத்தத்தின் பின்னர் பெண்கள் என்ற ரீதியில் அவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்த அனுபவங்களை எடுத்துக்கூறுகிறது. நிலவிய ஓரளவு சுதந்திரமும் பறி போன வாழ்க்கை அமைப்பிற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுவிட்ட பெண் சமூகத்தையே இவை எடுத்துக் காட்டுகின்றன. அதிகாரத்தையும் ஆதிம பெலத்தையும் முற்றுமுழுவதாக இழந்து போன நிலையில், இருக்கக்கூடிய சமூக விழுமியங்களில் ஆகலும் கட்டுப்பெட்டித்தனமான நடைமுறைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டியிருக்கும் நிலைமையையே இது காட்டுகிறது. இந்தத் தாக்குதலின் உக்கிரங்களை எல்லாம் தாங்கிக் கொண்டவர்கள் சமூகத்தின் மிகவும் பலவீனமாயிருந்த பெண்கள்தான். ஆனால் அவர்களோ சக்தியற்றுப் போனவர்களாய் மூடுண்ட வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இதெல்லாவற்றையும்விட இந்தியாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட விடுதலை இயக்கங்களால் எழக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய எந்த சீரிய முயற்சிகளுமே சமூக மட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் இந்தியாவுடன் நாங்கள் பெளதிகரீதியில் சிக்குண்ட நிலைமைக்கு இந்த விடுதலை இயக்கங்களே வழிவகுத்திருந்தன. நடைமுறையில் சகல இயக்கங்களும் இந்திய ஆதரவுடன் தாங்கள் இருப்பதாகவே காட்டிக் கொண்டிருந்தன. தங்களின் ஆத்மாவையே கோரமாகக் குலைத்துவிட்ட இன்றைய சரித்திர நிலைமைக்கு முன்பதாக பெரும்பாலான பெண்கள் இந்தியாவின்மீது அடிப்படையான நம்பிக்கை கொண்டிருந்ததில் ஆச்சரியப்பட்டுக்கொள்ள எதுவுமில்லை. இவ்வளவு கேவலமான செயல்களை இந்திய இராணுவம் செய்யும் என்று தாங்கள் ஒரு போதுமே நம்பியதில்லை என்று நாங்கள் சந்தித்த பல பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். இதனால்தான் எல்லா ஆணிகளையும் போலவே இந்தப் பெணிகளும் இந்தியா நேசம் மிக்க நண்பன் என்ற ரீதியில் மட்டுமல்ல, அவர்கள் பெண்களின் மீது வைத்திருப்பதாகக் கூறும் மரியாதையையும் கணிணியத்தையும் காக்கவும் வந்தவர்கள் என்றே நம்பினார்கள்.
5.5 தடுப்புக்காவலில் உள்ளவர்கள்
இருபத்தைந்து வயதான சகு இரண்டு குழந்தைகளின் தாய். ஒரு பச்சிளம் குழந்தைக்கு இன்னும் பாலுTட்டிக் கொணடிருப்பவள். விசாரணைக்காக இந்தப் பெண்ணையும் கொண்டு போயிருந்தார்கள். அவளோடு அவளுடைய கணவனும் இருந்தபோதிலும் குழந்தையையும் வீட்டிலேயே விட்டுவிட்டு அவளை மட்டும் கூட்டிக்கொண்டு போனார்கள். மறுநாள் குடும்பத்தவர்கள் அந்தக் குழந்தையை முகாமிற்கு கொண்டு போயிருந்தனர். குழந்தையைத் தன்னோடு வைத்துக்கொள்ள அவள் அனுமதிக்கப்பட்டாள். புலிகளில் யாரோ ஒருவன் இருக்குமிடத்தைப்பற்றி அவளிடம் விசாரித்திருக்கிறார்கள். அவன் அவளுடைய கள்ளக்காதலன்

399
என்றும் அந்தக் குழந்தையும் அவனுக்குப் பிறந்ததுதான் என்றும் ஜாடையாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு குழியைத் தோண்டி அவளை அதற்குள் இறக்கி மணலை அவளுடைய கமக்கட்டு வரை நிரப்பி அதன் மீது ஒரு இராணுவவீரனைப் பாய்ந்து குதிக்கச்செய்து அவளிடமிருந்து தகவல்களைக் கேட்டிருக்கிறார்கள். உடலிலும் நெஞ்சிலும் இறுக்கத்தையும் அழுத்தத்தையும் அவளால் உணர முடிந்தது. பின் அவள் தன்னுடைய கதையைச் சொல்லியிருக்கிறாள். அவள் புலிகளுக்கு சில சமயங்களில் உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறாள். அதன் பிறகு அவளை வெளியில் எடுத்திருக்கிறார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு அவள் விடுவிக்கப்பட்டாள்.
இருபத்துநான்கு வயதான சுமதி ஜனவரி 10ம் திகதி விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அவளைக் கைது செய்த நேரத்தில் அவளுடைய கணிகளைக் கட்டி முள் முருக்கைக் கம்பாலி அடித்திருக்கிறார்கள். பின் அந்தப் பகுதியிலிருந்த இராணுவ முகாமுக்கு அவளைக் கொண்டு போயிருக்கிறார்கள். அங்கு அவளின் வாயைத் துணியால் அடைத்துவிட்டு தணிணிர் விநியோகத்திற்கு உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக்கினாலான 'எஸ்-லோன் பைப்புகளால் அடித்திருக்கிறார்கள். அந்த எஸ்-லோன் பைப்பிற்குள் மணலடைக்கப்பட்டிருந்தது. அவளைப்பற்றிய முழுத்தகவல்களும் தங்களுக்குத் தெரியுமென்றும் அவள் மரியாதையாய் உண்மைகளைச் சொல்லிவிடவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். விட்டுவிட்டு மூன்று நாட்கள் இதேபோல் அடித்திருக்கிறார்கள். இதனால் அவளுடைய முழங்கால்கள் வீங்கிப் போய்விட்டன.
சுமதியை விசாரணை செய்யும் போது அந்த இராணுவக் கட்டுப்பாட்டு அதிகாரி அவளின் தோள்பட்டைகளில் பிரம்பால் அடித்திருக்கிறார். தான் ஆக விடுதலைப்புலிகளுக்கு சமைத்து மட்டுமே கொடுத்ததாகவும் அவர்களில் இரண்டு பேரை மட்டுமே தனக்குத் தெரியும் என்றும் சுமதி சொல்லி இருக்கிறாள். முதல் மூன்று நாட்களும் அவளை அடித்து விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பிறகு அவளைக் கொண்டு போய் ஒரு பெரிய அறைக்குள் போட்டிருக்கிறார்கள். அங்கு 45 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான பெனினும் சுமதியின் வயதையொத்த இன்னொரு பெண்ணும் இருந்தனர். தாங்க முடியாத வலியாய் இருந்ததால் அவர்கள் கொடுத்த உணவை அவள் சாப்பிடவில்லை. அவர்கள் தரும் சாப்பாட்டை சாப்பிடக்கூடாது என்ற எண்ணத்தாலும் அவள் அந்த உணவினை நிராகரித்து இருந்தாள். ஐந்து நாட்கள் கழித்து அவள் விடுவிக்கப்பட்டாள்.
தடுப்புக்காவல் முகாமில் ஒருமுறை அவள் இருந்தபோது விரைகள் வெளியே தொங்கிய நிலையில் ஒரு இளைஞனைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டிருந்ததைப் பார்த்திருக்கிறாள். அந்தச் சித்திரவதைக்காரர்கள் முகட்டில் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றினால் இறுகக் கட்டியிருந்த அவனுடைய ஒரு காலைப் பிடித்து இழுத்தவாறு அவனை மேலும் கீழுமாக இழுத்துக் கொண்டிருந்தனர். "நேற்றுத்தான் சொன்னேனே, நேற்றுத்தான் சொன்னேனே" என்று அவன் அவர்களிடம் கதறிக் கொண்டிருந்தான்.

Page 218
400 எவ்வளவு கடின சித்தத்தோடு அவள் போராடி மீண்டிருக்கிறாள் என்பதை சுசிலாவைச் சந்திக்கும் ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். சுசிலா ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவள். பதினான்கு வயதிலேயே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த கொஞ்சம் சித்த சுவாதீனமற்ற ஒருவரை அவள் திருமணம் செய்து கொண்டிருந்தாள்.
'அக்கா, எனக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்று ஒன்றில்லை. அவருடைய குடும்பத்தவர்கள் என்னில் அன்பாக இருந்தார்கள் என்பது உண்மைதான். அவர்கள் எனக்கு நகை செய்து போட்டார்கள். எங்களுக்கு சிறிய வீடும் கட்டிக் கொடுத்தார்கள். எனது பெற்றோர் குடும்பம் நல்லாக இருக்கவேண்டுமென்று நான் என்னுடைய நகைகளை அவர்களுக்குக் கொடுத்திருந்தேன். எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. என்னுடைய கணவர் என்னை விட்டுவிட்டு அவருடைய பெற்றோரின் வீட்டுக்குப் போய் அங்குதான் நித்திரை கொள்வார். இந்த நேரங்களில் நான் தனியாய் பயந்து கொண்டிருப்பேன். நான் சமைத்து வைத்திருப்பேன். ஆனால் அவர் கடைகளிலோ அல்லது அவருடைய தாய் வீட்டுக்கோ தான் போய்ச் சாப்பிடுவார். இதனால் கடைசியில் `நான் சமைப்பதையே விட்டுவிட்டேன்" என்று அவள் கூறினாள்.
கடுமையாயும் கொஞ்சம் கோபத்தோடும் அவள் மேலும் தொடர்ந்து சொன்னாள்: p
மீதியுள்ள வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். நான் சமூக சேவையாவது செய்ய விரும்பினேன். மற்றவர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினேன். இப்படித்தான் நான் கிராமத்திலுள்ள மக்களுக்கு உதவ ஆரம்பித்ததும் பிறகு புலிகளுக்கு உதவ ஆரம்பித்ததும். நான் ஏதாவது பிரயோசனமாய் செய்யவேண்டுமென்று விரும்பினேன். அக்கா, சனங்கள் என்னிடம் சிறிது நன்றியோடு நடந்து கொண்டிருந்தாலும் கூட இந்தச் சம்பவங்களெல்லாம் நடந்த பிறகு என்னோடு பழகுவதற்குக்கூட அவர்கள் பயந்து கொணர்டிருக்கிறார்கள். அதிலும் என்னோடு அவர்களுடைய பெண்பிள்ளைகளை அனுப்பவே பயப்படுகிறார்கள். என்னுடைய வாழ்க்கையைப் பற்றியும் சிலவேளைகளில் கிண்டல் அடிப்பார்கள். நான் இராணுவ முகாமில் இருந்துவிட்டு வந்ததைப்பற்றியும் அசிங்கமாய் ஏதாவது சொல்வார்கள். நான் உங்களைச் சந்திக்க வந்திருப்பதை அறிந்தாலும் நான் புலிகளைத்தான் சந்திக்கப் போயிருக்கிறேன் எண்று சொல்வார்கள். இந்த வரணிட வாழ்க்கையையும் வேதனையையும் நினைத்துப் பார்க்கையில், அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணிர் இல்லை"
இந்தச் சமூகத்திற்குப் பயனுள்ள எதையாவது செய்யத் தனக்கு உதவும்படி அவள் என்னிடம் வேண்டிக்கொண்டாள். இந்த இளம் பெண்ணின் ஆர்வமும் நெஞ்சுறுதியும் என்னை வெகுவாகப் பாதித்தது. சுசிலாவைப் போன்ற பெண்கள் பொது நலன் என்ற நோக்கில் எதையும் செய்யவும் எவருடைய தலைமையின் கீழும் செல்லவும் இப்படித்தயாராக இருந்தால் ஏன் தலைவர்கள் என்று இருப்பவர்களின் கைகளில் இவ்வளவு கொள்ளையாக அதிகாரங்கள் கொட்டிக்கிடக்க மாட்டாது என்று யோசித்துப் பார்த்தேன்.

401
5.6 தமிழ்ப் பெண்களும் தேசிய விடுதலைப் போராட்டமும்
சில தென்னாசிய சமூகங்களைவிட ஈழத்துத் தமிழ்ப் பெண்கள் ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்து வருகிறார்கள் என்று பொதுவான கருத்தொன்று நிலவி வருகிறது. இந்த அவசரமான பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துகள் இலங்கைத் தமிழர் சமூகம் தாய்வழிச் சமூகம் அல்லது பெண்கள் தாய் வீட்டிலேயே தொடர்ந்தும் வாழும் சமூகம் என்ற சமூக -மானிடவியல் கருத்துக்களின் பார்வையிலிருந்தும் கூறப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பெண்களில் நிறையப்பேர் படித்திருக்கிறார்கள். உயர் தொழில்சார் கல்வி பெறவும் அதன் மூலம் அந்தஸ்து மிகுந்த பதவிகளை வகிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் தம்பாட்டில் எங்கும் போய்வரக் கூடியவர்களாயும், விரும்பிய ஆடைகளை அணியக்கூடியதாயும் பெரும்பாலான இடங்களில் அவர்களே முக்கிய சம்பாத்தியகாரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் இந்த மேலோட்டமான-பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஆழமாக ஆராய்ந்தால்தான் தமிழ்ச் சமூகத்திலுள்ள பெணிகளின் உணர்மை நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும்.
தென்னாசிய சமூகத்தோடு ஒப்பிடும்போது எமது சமூகத்தில் பெண்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சுதந்திரத்தை அனுபவித்து வரும் ஒரு . பரிணாமம் நிலவுகிறது என்றால் அது சமுதாயம் அடைந்திருக்கும் மொத்தப் பரிணாம வளர்ச்சியின் ஒரு கூறாகவே நோக்கப்படவேண்டும். மற்ற தென்னாசிய நாடுகளைப் போலன்றி இலங்கையில் முதலாளித்துவ உறவுகள் ஆழமாக வேரூனறியுள்ளன. உலக முதலாளித்துவ அமைப்புடனி ஒருங்கிணைக்கப்பட்டதே இந்த வரலாற்றுரீதியான வளர்ச்சிப் போக்கிற்கு முதன்மையான காரணியாக அமைகிறது. காலனித்துவ ஆட்சியின்போது இலங்கையின முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் யாவும். பெருந்தோட்டங்களைச் சார்ந்தே அமைந்தது. இந்தக் காலனித்துவ பொருளாதாரத்திற்கும் நிர்வாகத்திற்கும் சேவை புரிய மத்தியதரவர்க்கத்தினர் இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்டனர். உலகப் பொருளாதார அமைப்புடன் மென்மேலும் ஒருங்கிணைக்கப்பட்டுவரும் இப்போக்கு சிலசில மாற்றங்களுடன் நவகாலனித்துவ காலங்களிலும் தொடர்ந்தது. உல்லாசப் பயணத்துறையைச் சார்ந்திருத்தலையும் சுதந்திர வர்த்தக வலயங்களின் வளர்ச்சியினையும் இதற்கான உதாரணங்களாகக் குறிப்பிடலாம். முதலாளித்துவ பொருளாதார உற்பத்தி முறைமை ஆழமாய் வேரூன்றவில்லை எனினும், சமூகத்தில் முதலாளித்துவ உறவுகள் நன்கு ஸ்திரம் கொண்டுள்ளமை இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த அம்சங்கள் நிலமான்ய சமூகத்தில் நிலவிய சில தடைகளை அகற்றியிருந்தது. எல்லாவற்றையும்விட கல்வியானது தொழில் வாய்ப்புக்கான பெருஞ்சொத்தாக அமைந்ததாலும் கல்வி வசதியினைப் பரவலாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததாலும் பெண்கள் எப்பாடுபட்டேனும் படித்து. உயர் தொழில்களிலும் பதவிகளிலும் அமர்ந்து பொது வாழ்வில்

Page 219
402
இறங்கவும் முனைந்தனர். இந்த வகைப் போராட்டங்களால் தான் குடும்பத்திற்கு வெளி எல்லையிலும் அவர்கள் ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்ள முடிந்தது.
முற்றிலும் வெளித்தோற்றதிற்குத்தான் நடைமுறை வாழ்க்கையில் ஏதோ முன்னேற்றங்கள் ஏற்பட்டதைப் போலத் தெரிந்தது. பெண்களின் வேலைக்கு வழங்கப்படும் குறைவான சம்பளம், ஒரே தொழில், அந்தஸ்தினைக் கொண்டிருந்தாலும் ஒரு ஆணுக்கு பெண் கொடுத்தாக வேண்டிய சீதனம் மற்றும் பெண்களின் மீது அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் கலாச்சார, சமூக நடைமுறைகள் என்பனவற்றிலிருந்து பெண்கள் அனுபவித்துவரும் தாழ்வான அந்தஸ்து நன்கு தெரிய வருகிறது. இந்த ஆணாதிக்க சமுதாயக் கூறுகளும் பொருளாதாரத்திலும் கருத்தியலிலும் பெணிகள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைகளும் சமூகத்தில் ஆழமாக ஸ்திரம் பெற்றுள்ளன. காலனித்துவ முதலாளித்துவ ஊடுருவலும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சீர்திருத்தங்களும் பழைய நிலமான்ய அமைப்பை உடைத்தெறிந்தாலும் நிலமான்ய அமைப்பின் மிச்ச சொச்சங்கள் இப்போதும் திரிபடைந்த வடிவத்தில் செயற்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. தமிழர் மத்தியில் இன்றும் நிலவும் சீதனமுறை இதற்கான அதிசிறந்த உதாரணமாகும். நிலமான்ய காலங்களில் குடும்பச் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு முறையாக சீதனம் அமைந்து காணப்பட்டது. இதன் மூலமே ஆளும். வர்க்கம் தனது சொத்தினையும் பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொண்டது. முதலாளித்துவ உறவுகளில் ஏற்படும் வளர்ச்சியானது சீதனமுறையை உடைத்தெறியுமென்று ஒருவர் நியாயமாக எதிர்பார்த்ததற்கு எதிர்மாறான நிலைமை தான் இன்றைய யாழ்ப்பாண சமூகத்தில் காணப்படுகிறது. இந்த சீதனமுறை மேலும் பொலிவுபடுத்தப்பட்டு சந்தைப் பொருளாதார உறவுகளுடன் இணைந்து போய்க் கொண்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு குடும்பத்தில் ஒரு ஆணக இருப்பவர் மருத்துவர், பொறியியலாளர், கணக்காளர் அல்லது நிர்வாகி போன்ற அந்தஸ்து கூடிய பதவிகளில் அமர்ந்திருந்தால் அந்த ஆளை ஒரு பணக்காரக் குடும்பத்திலுள்ள பெண்ணுக்கு கணவனாக விற்று, 'டொனேசன்" என்ற பேரில் பணம் வசூலித்துக் கொள்வது சாத்தியமானதாகும். மணமகனின் குடும்பத்திற்கு இவ்வாறு வழங்கப்படும் டொனேசன் அல்லது நன்கொடையானது இன்றைய சந்தை விலையின்படி பல லட்சங்களில் முடிகிறது.
படித்த நபர் என்பவருக்கு வழங்கப்படும் உயர்ந்த மரியாதையானது சரித்திரபூர்வமானதாகும். காலனித்துவ காலத்திலிருந்து கல்வி என்பது சமூகத்தில் மேல் தட்டு நோக்கிய நகர்ச்சியாகவும், சமூக அந்தஸ்து கூடிய ஒன்றாகவும், இலங்கையிலோ அல்லது அதிலும் முக்கியமாக வெளிநாட்டிலோ சொத்தைக் குவிக்கும் ஒன்றாகவே முதன்மைப்படுத்தப்பட்டு வந்துள்ளது. நிலமான்ய காலந்தொட்டு தனிநபருக்கு எந்தவிதமான முக்கியமும் இல்லை. குடும்ப, இனசனங்களின் நலன்களே ஆதிக்கம் வகித்தன.
சந்தைப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொணிடுவிட்டாலும் அது கருத்தியல்பூர்வமாக முன்னோக்கி நகரவில்லை என்பது இன்றைய யாழ்ப்பாண

403
சமூகத்தில் அவதானிக்கக்கூடிய இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலான நிலமான்ய மதிப்பீடுகளும் உறவுகளும் போஷக முறையினை அடிப்படையாய்க் கொண்டிருப்பதால் சமுதாய அடுக்கு முறையானது குலையாமல் அப்படியே இருக்கிறது. யாழ்ப்பாண மத்தியதரவர்க்கமானது வேரூன்றிய ஒரு பொருளாதாரத்தளமில்லாமலேயே வளர்ச்சியடைந்து வந்ததுதான். இவர்களின் நகர்வானது சம்பள உத்தியோகம் மற்றும் சேவை சார்ந்த உயர்தொழில்கள் என்பவற்றைச் சார்ந்தே அமைந்தது. இவர்கள் கீழ்ப்பட்ட நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட அதிகார பலம் கொண்டவர்களாகவே எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேல் நோக்கிய முன்னேற்றம் மற்றும் தமது சுயமான கருத்து வெளிப்பாடு என்று வருகின்ற தருணங்களில் ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியாத நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர். இத்தகைய ஒரு நெருக்கடி நிலைமையின் போதுதான் சுய அடையாளத்திற்கான தேடலும் அதைப் பேணிக்காக்க வேண்டிய தேவையும் அவசியமாகிறது. வாழ்க்கையின் உள்ளுறைந்த சாராம்சத்தைப் பற்றிக்கொணி டோ அல்லது அதைப் பேணியவாறோ ஒரு சமூகமாக, குடும்பங்களாக, ஆண்களாக, குடும்பங்களின் தலைவர்களாக அதிகாரபூர்வமான ஒன்றிலிருந்துதான் தங்கள் அடையாளத்தை அவர்கள் தேடிக் கொள்ள முடியும் . ஒரு பிளவுண ட வாழ்க்கையோட்டத்தைத்தான் சமூகத்தில் காண முடிகிறது. பொதுச் சமூக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும் பொருளாய நோக்கும் ஒருங்கிணைப்பும் நிலவும் அதேநேரம் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையில் தூய்மைவாதமும் ஒடுக்கு முறைகளும் வெற்றிகரமாகக் கை கோர்த்துச் செல்வதைக் காணலாம். எனினும், கடந்த பத்தாண்டு கால விடுதலை யுத்தத்தின் சரித்திரத்தில் ஆயுதந்தாங்கிய பெணிகள் பிரிவையும் கொண்டிருப்பதாகப் பறைசாற்றும் பெரும் விடுதலை இயக்கங்கள் செயற்படும் காலகட்டத்தில் தமிழ் சமூகத்தின் கருத்தியலில் கணிசமான விரிசல்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் பெண்களுக்கு விடுதலை நல்கும் அனுபவங்களை அது தேடிக் கொடுத்திருக்கும் என்றும் ஒருவர் எதிர்பார்ப்பது இயல்பானதேயாகும்.
5.7 பெணிகள் அமைப்புகள்
விடுதலை இயக்கங்களில் இருந்த பெண்களின் பிரிவானது வெளி சமூகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் ஸ்தூலமான நிலைமைகளிலிருந்து எழும் பிரக்ஞையிலிருந்து பெண்களின் பிரச்சினைகளை அணுகி சமூகத்தில் பெண்களைப் பிரக்ஞை கொண்டவர்களாக்குவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இயக்கத்தின் தலைமைத்துவத்திலிருந்த பெண்கள் என்றரீதியில் அவர்களும் அடிமட்டத்தில் இருந்த பெண்களின் அமைப்புகளை முன்னோக்கிச் செலுத்தி, மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான ஒரு கருவியாகச் செயற்படவில்லை.

Page 220
404
அன்னையர் முன்னணி அமைக்கப்பட்டபோது எமது போராட்ட காலகட்டத்தில் சமூகத்தில் அது மிகப்பெரும் மாறுதலாகக் கருதப்பட்டது. 1980களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பாரதூரமான நெருக்கடியின் மத்தியில், தொகை தொகையாய் இளைஞர்கள் கைது செய்யப்படுவது வாழ்க்கையின் நிஜமான நிகழ்வாக இருந்த நேரத்தில் பிளாஸா டி மேயோ (ஆர்ஜென்டீனாவில் 1976-83க்கும் இடையில் சர்வாதிகார இராணுவ ஆட்சியின்போது பெருமளவில் இளைஞர்கள் காணாமல் போனபோது இந்த இளைஞர்களின் தாய்மார்கள் 1977ம் ஆண்டிலிருந்து புவனஸ் அயர்ஸில் அமைந்திருந்த ஜனாதிபதியின் மாளிகைக்கு முன்னால் கழுத்தைச்சுற்றி வெள்ளை ஆடை தரித்து, காணாமல்போன தங்களின் பிள்ளைககைளப் பற்றித் தங்களுக்கு தகவல் வேண்டும் என்று கோரி வாராவாரம் மெளன ஊர்வலம் சென்றனர். இவர்களே ப்ளாசா டிமேயோ அன்னையர் ஆவர்) அன்னையர்கள் பாணியிலேயே எமது அன்னையர் முன்னணியும் அமைந்தது. காணாமல் போனவர்களின் தாய்மாரும் சமூகத்தின் பிற பெணிகளுமாய் ஒன்று சேர்ந்து இந்த அன்னையர் முன்னணியை உருவாக்கினர். 1984-85 காலப்பகுதியில் அன்னையர் முன்னணி பொதுமக்கள் பேரணிகளை நடத்தியும் இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், கைது செய்வதை நிறுத்தக் கோரியும் அரசாங்க அலுவலகங்களின் முன் மறியல் செய்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் பேரார்வம் மட்டுமல்ல, அவர்களால் திரட்ட முடிந்த பெருந்திரளான பெண்களின் எண்ணிக்கை வெகுஜன அமைப்புகள், விசேஷமாக பெண்கள் எத்துணை உயர்ந்த இலக்குகளை நோக்கி நகரக்கூடியவர்கள் என்பதை உரத்துப் பிரகடனம் செய்தது. எல்லா வர்க்கத்திலும் உள்ள பெண்கள் இதிலிருந்தார்கள். இது மத்திய அமைப்பையும் கிராம மட்டத்தில் பல அமைப்புகளையும் கொண்டிருந்தது. ஆனால் பின்வந்த ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் மேலாதிக்கம் வளர்ந்ததையடுத்தும், தங்களுக்குக் கீழ்ப்படியுமாறு சகல ஜனநாயக அமைப்புகளையும் நெருக்கி ஒடுக்கியதையடுத்தும் அன்னையர் முன்னணி புலிகளுடன் ஒத்தோட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அதற்கிருந்த பரந்த ஆதரவையும் தீவிரப் போர்க்குணத்தையும் இழந்து விட்டிருந்தது. இதுவும் இன்னுமொரு இளம் பெண்கள் கிறிஸ்தவ அமைப்பை (வைடபிள்யுசி.ஏ) ஒத்ததாக மாறியது. இதற்குப் பிறகு இது அறத்தொண்டு செய்யும் ஒரு அமைப்பாக மட்டுமே தன்னை முக்கியப்படுத்திக்கொண்டது. சமூக மட்டதி திலீ முறி போக்கான விழிப் புணர்வுகள் வளர அனுமதிக்கப்படமாட்டாது என்ற யதார்த்தத்தையே இந்த நிலைமைகள் ருகப்பித்தன. விடுதலை இயக்கங்களில் இருந்த பெண்கள் பிரிவினரிடம் நிலவிய போதிய தெளிவின்மையானது பரந்த முன்னணியை இட்டு நடத்துவதற்கு அதனை இயலாததாக்கியது. அக்டோபர் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் இந்தப் பலவீனங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன. இந்தக் கட்டத்தில், பாலியல் வன்முறையும் மானபங்கப்படுத்தலும் உயிரிழப்பும் குடும்பத்தின் ஒரேயொரு சம்பாத்தியக்காரரை இழத்தலும் போன்ற நிகழ்வுகள் அவசர, அவசியப் பிரச்சினையாக இருக்க, இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகள்

405
அப்போதிருந்த அன்னையர் முன்னணியிடமிருந்தோ அல்லது அது போன்ற வேறு பெண்கள் அமைப்பிடமிருந்தோ வரவில்லை. மனித உரிமை மீறல்கள், பாலியல் ஒடுக்குமுறைகள் போன்ற பிரச்சினைகளை முன்னிட்டு பகிரங்கமாக வெளியில் வந்து எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டியவர்கள் முடங்கிப்போய் அமைதி காதிதனர். பெணிகளுக்கு இழைக்கப்பட்ட குரூரமான அநியாயங்களையும் அவர்களது துயரங்களையும் வெளியே பகிரங்கப்படுத்தாமல் விடப்போவதில்லை என்பதை இந்திய அமைதிப்படைக்கோ அல்லது இந்தியாவிற்கோ உணர்த்தும் எந்த நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. சாராம்சத்தில், எங்களின் தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டிருக்கும் ஆதிக்கவாதிகளுக்கு பெண்களின் சக்தி கட்டாயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேணடும் என்ற உணர்மையைக் கடைசியில் காணிபிக்காமலேயே போய்விட்டார்கள்.
இறுதியில், இந்தியாவும் விடுதலைப்புலிகளும் பேச்சுவார்த்தை நடத்தவேணிடும் என்று வலியுறுத்தி யாழ் அன்னையர் முன்னணி உண்ணாவிரதம் இருப்பதென்று முடிவு செய்தது. மட்டக்களப்பில் உள்ள தங்கள் சகோதரிகளுக்காகவும் தங்கள் ஆதரவை அவர்கள் தெரிவித்துக் கொணர்டது பாராட்டப்பட வேணிடிய ஒன்றுதான். ஆனால் அவர்கள் . உண்ணாவிரத நடவடிக்கைக்காக முன் வைத்த காரணங்களைப் பார்த்தால் எவருக்கும் சந்தேகமே ஏற்படும். கடந்த வரலாறுகளிலிருந்து இந்தியாவோ, விடுதலைப்புலிகளோ, கொலை பாதக இலங்கை அரசாங்கமோ எப்போதும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தயாரானவர்கள் என்ற விஷயம் தெரிந்ததுதான். உள்நாட்டுப் பேரின் போதும், அக்டோபர் யுத்தத்தின் போதும் இலங்கை அரசோ, இந்திய அரசோ தமிழ் மக்களின் அக்கறைகளை ஒருபோதும் பொருட்டாகவே கருதியதில்லை என்பதை நாமறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப்புலிகள்கூட தமது இயக்கத்தின் குறுகிய நலன்களைவிடப் பொதுமக்களின் ஜீவமரணப் பிரச்சினைகளை மிகவும் அற்பமாகவே கருதியிருந்ததை அக்டோபர் யுத்தத்தின்போது அவர்கள் நடந்து கொண்டவிதம் நன்றாகவே தெளிவாக்கியது.
தமிழர்களைப் பொறுத்தவரை இந்த நிலைமைகள் வெளிநாட்டுச் சக்திகள் சாதுரியமாக கையாளத்தக்க ஆபத்தான சூழ்நிலைமையையே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. சி.ஐ.ஏ, மொஸாட் போன்ற அமைப்புகளின் ஏஜெண்டுகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த காலங்களில் போராளிகளால் பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டுமுள்ளனர். எங்களின் கோட்பாடுகள் எதுவுமற்ற அரசியலில் விழுந்துள்ள பெரிய ஒட்டைகள் வழியே இந்த நாசகார சக்திகள் உதாரண புருஷர்களாக வேஷங்கட்டி இலவச ஆயுதம் வழங்குபவர்களாகவும். சமாதானக்காவலர்களாகவும் தலைகாட்டி உள்ளே நுழைய எந்தத்தடையும் இருக்கப்போவதில்லை. அன்னையர் முன்னணி போன்ற பெருந்திரளான மக்களைக் கொண்ட ஒரு அமைப்பு மேலிடத்திருந்து பெரிய மனது பணிணி அவ்வப்போது என்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்கு விடுக்கப்படுகிற பங்கினை மட்டுமே ஆற்ற முன்வரும்போது தங்களின்

Page 221
406
உண்மையான சக்தியை இழந்து போகிறது. வேதனைக்குள்ளான சாதாரண பெண்கள் மத்தியில் நிலை கொண்டும், தங்களின் போராட்ட சக்திகளை ஒன்றுதிரட்டியும், அவர்களின் துயரங்களையும் ஆசை அபிலாஷைகளையும் வெளிப்படுத்தியுமே அது மக்களின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதுடன், தாங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தி தான் என்பதையும் நிறுவமுடியும். துக்ககரமான விஷயம் யாதெனில், இந்தியப் படையினரால் எமது பெண்கள் அனுபவித்த துயரங்களை மூச்சுப் பேச்சில்லாமல் அன்னையர் முன்னணி மெளனமாக ஏற்றுக்கொண்டதும் அதற்கு முன்பதாக விடுதலைப்புலிகளின் உள் இயக்கச் சண்டைகளின் போது அதனைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்ததும் ஒரு சக்தி (அன்னையர் முன்னணியை ஒரு கருவியாகத் தனக்குப் பயன்படுத்திக்) கொண்ட அதே வேளையில் வேறு சக்திகள் அதனைப் புறக்கணித்தும் எள்ளி நகையாடியும் நோக்கிய நிலைமைகளும் யாழ்ப்பாண அன்னையர் முன்னணியை அமானுஷ்யட் பிராந்தியத்திற்குள்ளேயே இட்டுச் சென்றமையாகும்.
5.8 பெண்களும் ஆயுதங்களும்
இது ஒரு ஆழமான ஆய்வோ, போதுமான ஆய்வோ அல்லதான். இருந்தாலும் ஆயுதந்தாங்கிய விடுதலை இயக்கங்களுக்குள் உள்ள பெண்களின் சுயமான அனுபவங்களால் மட்டுமே செழுமைப்படுத்தத்தக்க சில சிந்தனை இழைகளை மட்டுமே இங்கு கோடி காட்ட விரும்புகிறேன். நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் அவை சரியானதாகவோ பிழையானதாகவோ இருப்பினும் முழுப்பெண்கள் சமூகத்தின் வாழ்விலும் பாரதூரமான மாறுதல்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்கள் அவை என்பதை யாருமே மறுப்பதற்கில்லை. ஏ.கே.ரகத்துப்பாக்கிகளைத் தோளில் தொங்கவிட்டுக்கொண்டு இவ்விரண்டு பேராக யாழ் நகரின் நுழைவாயிலில் இரவில் காவல் காத்து நிற்கும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்களால் ஒருவர் ஈர்க்கப்படாமல் இருக்கமுடியாதுதான். விடுதலைப்புலிகள் வெளியிட்டிருக்கும் வீடியோப் படங்களில் காட்டப்படும் இவர்களின் கடினமான பயிற்சியையும் அர்ப்பணிப்பையும் மெச்சத்தான் தோன்றும். நாட்டைக்காக்க பெண்கள் ஆயுதந்தாங்கியபோது அதில் தேசியப்பற்றையும் மனோரஞ்சகமான எணர்ணங்களும் இழையோடியிருந்ததையும் காணமுடிந்தது. போராட்ட இயக்கத்தில் சேர்ந்து கொள்ள ஏனைய பெண்களையும் இழுக்கக்கூடிய சக்தியும் இதற்கிருந்தது. எங்களின் சமூக அமைப்பும், பெண்களின் சிருஷ்டிபூர்வமான சுயமான கருத்து வெளிப்பாடுகளுக்கிருந்த கட்டுப்பாடுகளும், சீதனமுறையின் கொடுமைகளும் ஆரம்பகட்டத்தில் பெண்களைப் போராட்ட இயக்கத்திற்குள் சேரத்தூண்டியது. இதனைவிடக் கடந்த பத்தாண்டு காலப் போராட்டங்களால் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை, அரச பயங்கரவாதத்திற்குப் பெருந்தொகை ஆணிகள் பலியானமை, அகதிகளாகவும் புலம் பெயர்பவர்களாகவும் ஆண்கள் உலகெங்கும் சிதறிப் பரவியமை போன்றவையும் பெண்கள் ஆயுதமேந்திப் போராட முன்வந்தமைக்குத் துணை நின்ற முக்கிய

407
காரணிகளில் சிலவாகும். ஆனால் இளம் பெணிகளை போராட்டங்களை நோக்கிக் கவர்ந்து இழுத்தது "விடுதலை" நோக்கிய சூழலும், வாசிக்கக்கிடைத்த போராட்ட இலக்கியங்களும், உலகளாவிய பெண்களின் போராட்ட அனுபவங்களும் போராட்டங்களிலிருந்து தாங்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற கிளர்ச்சியுணர்வுமே என்று சொல்வது மிகைப்படக்கூறியதாகும்.
1980களின் நடுப்பகுதியிலிருந்து இயக்கங்களுக்குப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தனர். புளொட், ஈபிஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களில் குறிப்பிடத்தக்க அளவும் விடுதலைப்புலிகளில் குறைவான அளவிலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டனர். பிறகே பெண் போராளிகளின் வளர்ச்சி புலிகள் அமைப்பில் துரிதமாக அதிகரித்தது. விடுதலைப்புலிகளின் பெண் பிரிவானது "சுதந்திரப்பறவைகள்” என்றழைக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் வடமராட்சித் தாக்குதல் நடவடிக்கைகளும் அதைத் தொடர்ந்து பெருந்தொகையில் ஆணர்கள் கைது செய்யப்பட்டதுமே பெண்களின் சேர்ப்பிற்குத் தூண்டுகோலாக இருந்தது. விடுதலைப்புலிகளும் பெண்களைச் சேர்ப்பதையே இப்போது தமது இலக்காக்கிக் கொணிடிருந்தனர். போராட்டத்தில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் முன்வந்து கொண்டிருந்த இளம்பெண்களை அவர்கள் துரிதகதியில் சேர்த்துக் கொணர்டனர்.
இவை எல்லாம் சேர்ந்து மாறுதல்களைப் பிரதிபலித்தனவாயினும் சமூகத்தில் இவற்றின் தாக்கம் அத்துணை திட்வட்டமானதாக இருக்கவில்லை. மணியம் தோட்டத்தில் புளொட் அமைப்பைச் சேர்ந்த சில பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற கதைகள் சமூகத்தின் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், அதற்காகப் பெண்களைத்தான் குற்றம் சாட்டியது.
மற்ற இயக்கங்களைப் போலன்றி ஈ.பி.ஆர்.எல்.எப்ஐச் சேர்ந்த பெண்கள் தமது கருத்துகளை வலியுறுத்துவதில் உறுதியாகவே இருந்துள்ளனர். நெருக்கடியான கட்டங்களில் தெளிவான, நேர்மையான அரசியல் நிலைப்பாட்டினையும் இப்பெண்கள் முன்வைத்திருந்தனர். உதாரணமாக, டெலோ உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்தபோது ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ, எல்பிரிஈ. ஆகிய இயக்கங்களின் ஐக்கிய முன்னணியான ஈ.என்.எல்.எப்ல் ஈபிஆர்.எல்.எப் இயக்கம் மட்டுமே இதனை எதிர்த்து கண்டனங்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டது. இந்த எதிர்ப்புப் பிரசாரத்தினை இவ்வியக்கத்தின் பெண் உறுப்பினர்களே முன்நின்று நடத்தினர். இந்த செயலானது ஈ.என்.எல்.எப்பில் அங்கம் வகித்த மற்ற இயக்கங்களின் போக்கிலிருந்து ஈபிஆர்.எல்.எப்.ஐ வேறுபடுத்திக் காட்டுகிறது. ஈரோஸ் இந்த விஷயத்தில் தந்திரோபாயரீதியில் அமைதிகாத்ததுடன் விடுதலைப்புலிகளுடன் அனுசரித்துப் போகவும் வழி ஏற்படுத்திக் கொண்டது. பின்னால் விடுதலைப்புலிகளால் ஈபிஆர்.எல்.எப் அழித்தொழிக்கப்பட்டபோது அதிலுள்ள பெண்களை விடுதலைப்புலிகள் அடித்துத்தாக்கியுள்ளனர். அவ்வாறு

Page 222
4.08
அப்பெண்களை அடிக்கும்போது விடுதலைப்புலியின் பிரபல உறுப்பினர் ஒருவர் சொல்லியிருக்கிறார்:
"உங்களுக்கெல்லாம் என்ன விடுதலையும் மண்ணாங்கட்டியும் நீங்கள் எல்லாம் போய்க் குசினியில் இருங்கள். அதுதான் உங்களுக்கெல்லாம் சரியான இடம்"
இந்த மனப்பாங்கானது விடுதலைப்புலிகளில் உள்ள பெண்கள் மத்தியிலும் கொஞ்சம் ஊறிப்போயிருந்தது. உதாரணத்திற்கு விடுதலைப்புலிகளைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம் உரையாடியபோது, சமூகம் விதித்துள்ள சில நடைமுறைகளை விட்டு ஆகவும் விலகி நிற்பது சரியல்ல என்றும் ஆகவே தாங்கள் முன்னரேயே ஆயுதம் ஏந்திவிட்டது தவறென்றும் அவர்கள் கூறினர். சுத்த இராணுவவாதத்தையே அச்சாணியாகக் கொண்டியங்கும் ஒரு இயக்கத்திலிருந்து வந்த இவர்கள் இவ்வாறு கூறுவது ஆச்சரியமான விஷயமாகவே இருக்கிறது. இராணுவரீதியிலான இயக்கங்களை உற்று நோக்கினால் அதிலுள்ள ஆணிகளுக்கிடையிலான சகோதர உறவு மிக முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். ஆண்மையின் பெருமிதமே அவர்களின் வீரசாகஸங்களின் உந்து சக்தியாக உள்ளது. விடுதலைப்புலிகளின் சரித்திரத்தைப் பார்த்தால் விடுதலைப்புலிகளைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் காணப்படும் அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் இத்தகைய ஒரு அனுசரணையான போக்கு ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றல்லதான். பெணிகளைத் தீங்கு விளைவிப்பவர்களாகவும், ஆணிகள் தங்களின் இலட்சியங்களிலிருந்து பிறழ்ந்து போவதற்கும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள் என்றும் ஒரு காலத்தில் கருதிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ள ஆணிகள் பெணிகளுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தடையையும் விதித்திருந்தது.
நமது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, ஈபிஆர்.எல்.எப்.ஐச் சேர்ந்த பெண்கள்கூட அவர்களின் போராட்ட குணாம்சம் ஒருபுறமிருக்க, அத்துணை பெரிய தாக்கமான அபிப்பிராயம் எதனையும் ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒருவித மானசீகக் கருத்துக் கொண்டவர்களாய் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டும் போயிருந்தனர். நடைமுறையில் நிலவும் அரசியல் விழிப்புணர்ச்சியையும் சமூகத்தின் புறநிலை யதார்த்தங்களையும் தேசியப் போராட்டத்தையும் பெண்களது பிரிவுகளின் குறுகிய வரலாற்றையும் கருத்திற் கொண்டு நோக்கும்போது பெண்கள் பிரிவானது தெளிவான-திட்டவட்டமான கருத்தோட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது வெறும் கனவாகத்தான் போயிருக்கும். இயக்கங்களில் இருந்த எந்த ஒரு பெணிகள் பிரிவினரும் நமது ஸப்துலமான நிலைமைகளின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற கோட்பாடு வரையறைகளை வகுத்துக்கொண்டு செயல்பூர்வமான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருந்தனர். பெண்களை மாத்திரமே இதற்குக் குற்றவாளியாக்க முடியாது. உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்காக அவர்கள் முயற்சித்திருந்தாலும் அதை வெளிப்படுத்தி சாதித்துக்

409
கொள்வதற்கான வழிவகைகள் தடுக்கப்பட்டிருப்பதுடன் அவர்களது முயற்சிகள்கூட காலில் போட்டு மிதித்துத் துவம்சம் செய்யப்பட்டிருக்கும்.
எமது சமூகம் படிமுறைரீதியில் ஒழுங்கமைக்கப்பட்டு, ஆணாதிக்கக் கருத்துகளில் மூழ்கிப் போயும் உள்ளது. தனிப்பட்ட உறவுகளிலும் சரி, சொத்துப் பரிவர்த்தனைகளிலும் சரி, வேலைப்பாகுபாட்டு முறையிலும் சரி. சமூக கலாச்சார ஒழுங்கு விதிகளிலும் சரி ஒவ்வொரு அம்சத்திலும் பெண் ணினி நிலைப்பாடானது ஆணாதிக்க அச் சில தான உருவமைக்கப்படுகிறது. இது போன்ற ஒரு சமூகத்தில், எந்தக் கருத்தோட்டத்தின் கீழ் போராட்டம் கட்டி எழுப்பப்பட்டுள்ளதோ அந்த மேலாதிக்கம் வகிக்கும் கருத்தோட்டமே மிகமிகக் குறுகலான, பழமையை மீட்கின்ற, வெறும் மனோரஞ்சகமான ஆண் கதாநாயகர்களை, ஆணி வீரத்தை மெச்சும் பிம்பங்களாலேயே தெளித்து விடப்பட்ட கருத்தியலாக அமைந்து. போகுமானால்-தேசியவாதமானது தீவிரமான நாட்டுப்பற்று வாதமாகவும் போய்க்கொண்டிருந்தால்-இத்தகைய நிலையில் பெணி விடுதலைக்கான எண்ணக்கரு என்பது இம்மாதிரியான போராட்டத்தின் உள்மையத்திற்கும், எதிராகவ்ே செயற்படப்போகின்ற ஒன்று என்றுதான் அர்த்தமாகும்.
இந்தச்சூழ்நிலையில் ஆணின் பெருமையே போரில்தானுள்ளது என்று நியாயங்கற்பித்த -துணிவு மிகுந்த வீரத்தாய்மார் தாங்களே யுத்த களத்திற்குச் சென்றதும் அல்லது தனது புதல்வர்களையோ, காதலனையோ, கணவனையோ போர் முனைக்கு அனுப்பியதுமான புராதன பிமீ பங்களினி அடிப்படையிலிருந்துதான் பெண்களும் ஆயுதந்தாங்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆகவே ஆயுதந்தாங்கிய பெணிகள் பிரிவு என்பது விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை தேவைக்கு "பாவிக்கலாம்" என்ற அர்த்தத்திலும், ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐப் பொறுத்தவரை மற்ற விடுதலைப் போராட்டங்களிலிருந்து இரவல் பெற்ற சிந்தனைக்கூறினை யாந்திர்கமாகப் பிரதி பண்ணிய மாதிரியுமே முடிந்தது. தமிழ்ச்சமூகம் எந்த எல்லைவரை, பெணிகளை ஏற்று அங்கீகரித்த தோ அந்த அளவிற்குத் தானி, விடுதலைப்புலிகளும் பெண்களின் பங்களிப்பினை அனுமதித்திருந்ததால், விடுதலைப்புலிகளைச் சேர்ந்த பெண்கள் தமது சுயமான நிலைப்பாடு என்றில்லாமல் மேல்மட்டம் கூறுவதை "ஆமாம் என்று ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போவதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். இந்த அம்சத்தில் ஈபிஆர்எல்எப் வளர்ச்சியுற்ற பிரக்ஞையைக் கொண்டிருந்தபோதும் அதனைச் சமூகமட்டத்தில் செயற்படுத்திக்கொள்ள அதனால் முடியவில்லை. ஆயுதப் போராட்டத்திலும், மக்களை அணி திரட்டுவதிலும், வெகுஜன அமைப்புகளை உருவாக்குவதிலும் பொதுவில் தோல்வியையே கண்ட ஈபிஆர்எல்எப்ன் பொதுவான தன்மையின் ஒரு அம்சமே இதுவுமாகும். ஒவ்வொரு முக்கிய அமீ சதீதிலும் ஈ.பி.ஆர்.எல் எப் ஆனது கோட்பாட்டிற்கும் நடைமுறைக்குமிடையே எப்போதுமே முரண்பாடான ஒரு அந்நியத் தனிமையையே வெளிப்படுத்திக் கொணடிருந்தது. இதனால் முழுமையானதொரு பெண்பிரிவுடன் கூடிய ஆயுதப் போராட்ட இயக்கத்தை

Page 223
410 அமைத்துக்கொள்ள பொருண்மையான யதார்த்தங்களோ நமது வரலாறோ இடம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. இந்தப் பெண்களும் தங்களது யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளாது போனதும் வருந்துவதற்குரிய விஷயமாகும். பெண்களின் நிலைபற்றியும் தமிழ்ச் சமூகத்திலும் பெண்கள் வரலாற்றிலும் நாம் எதிர்கொள்ளும் தலையாய பிரச்சினைகள் குறித்தும் போதிய ஆய்வறிவு இருந்திருக்குமானால் அது அவர்களின் சிந்தனையை விசாலமுறச் செய்து தமது அடிப்படையான நோக்கங்கள் பற்றியும் எவை எவற்றிற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதைப் பற்றியும் போதிய தெளிவை ஏற்படுத்தியிருக்கும்.
பெண்களையும் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி சகல இயக்கங்களுமே தமது ஆரம்ப பிரசுரங்களில் அறிக்கையிட்டிருந்தாலும் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பிரச்சினை பற்றிய கோட்பாடுகளும் நடைமுறைகளும் எந்தவித ஆழ்ந்த பரிசீலனைக்கும் உட்படுத்தப்படவில்லை. "சுதந்திரப் பறவைகளைச் சேர்ந்த சிலருடன் உரையாடிய போது இது மேலும் அப்பட்டமாகத் தெளிவானது. பெண்கள் பிரச்சினை பற்றிய கேள்விகள் இயக்கத்திற்குள் இன்னும் குழப்பமாய்த் தானிருக்கிறது என்பதை அவர்கள் ஒத்துக் கொண டார்கள். இறுதியாக தங்கள் விவாத தீதை முடித்துக்கொள்ளும்போது எல்லாப் பிரச்சினைகளையும் தங்கள் தலைவர் தீர்த்து வைத்து விடுவார் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் தெரிவித்தார்கள். அதனால்தான் வருத்தம் தோய்ந்த குரலில் ஒரு பெண் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்:
பெணி வெறுமனே ஆயுதம் தூக்கும் இயந்திரமல்ல, அவளுடைய பங்கு அதனைவிட மேலானது என்பதை மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்"
ஆயுதந்தரித்த பெண்களின் கலவையைப் பார்த்தால் பெரும்பான்மையினர் வறுமையின் பின்னணியிலிருந்தும், ஒரு சிறு பகுதியினர் மத்தியதர வர்க்கத்திலிருந்தும் மிகக்குறைந்த விகிதாசாரத்தில் பல்கலைக்கழகப் பின்னணியிலிருந்தும் வருபவர்களாகத் தெரிந்தது. விடுதலைப்புலிகளின் மாணவ அரசியல் பிரிவில் மத்திய வகுப்பைச் சேர்ந்த பெணிகளே பெருமளவில் காணப்பட்டனர். வறுமையான பின்னணியிலிருந்து வந்த பெண்களோ தங்களை இழிவுபடுத்தும் வறுமை, வாழ்க்கை பூராவுமே கஷ்டமான சீவியம் என்பதற்கும் மேலான ஒன்றுக்காக உயிரை விடுவது உன்னதமானது என்ற ஒரு வகையான நோக்கங்களுடனான பணிகளைத்தான் செய்து வந்தார்கள்.
விடுதலைப்புலிகளின் மாணவர் பிரிவான சால்ட்டைச் (SOLT) சேர்ந்த மத்திய வகுப்புப்பெண்கள் பெரும்பாலும் நகர்ப்புறப்பள்ளி மாணவிகளாகவும் குறுகிய பார்வை கொண்டவர்களாகவுமே இருந்தனர். நாட்டுப்பற்றின் உணர்வெழுச்சி அலைகளால் மாத்திரமே இவர்கள் வழிநடத்தப்பட்டனர். விடுதலைப்புலிகளின் வீராதிவீரர்களையும் அதன் தலைவரையும்பற்றிய லட்சியப் பிம்பங்களையும் மனோரஞ்சகக் கற்பனைகளையும் கொண்டவர்களாய்

411
அவர்களை வணக்கத்துடனும் இவர்கள் பார்க்க ஆரம்பித்திருந்தனர். பெண்கள் சமூகத்தில் இந்தப் பெண் பிரிவினரின் தாக்கத்தைப் பெரிதாகச் சொல்வதற்கு இல்லை என்றாலும் பழைய தவறான சிந்தனைப் போக்கிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வேலையை இவர்கள் செய்து வந்தனர். அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் ஈடுபட்ட இளம் பெண்களை சமூகமே அவதூறு செய்யக்கூடிய சோகமான நிலைமையே ஏற்பட்டது. அக்டோபர் யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் பின்வாங்கியபோது சமூகத்தின் கோபம் பெண்களுக்கு எதிராகத்தான் திரும்பியிருந்தது.
ஒரு வயதான பெண் கூறினார்:
இந்தப் பெண்கள் போய்ச் சேர்வதற்கு முன் புலிகள் ஒழுங்காய்த்தான் இருந்தார்கள். இவர்கள் போய் இயக்கத்தையும் கெடுத்து பையன்களின் ஊக்கத்தையும் அழித்து விட்டார்கள்
இந்த மாதிரிப் பெண்களைப் போன்றவர்களுக்கு, புலிகள் செய்த
பாரதூரமான தவறுகளுக்கெல்லாம் இயக்கத்தில் எந்த அதிகாரமுமே இல்லாத ஒரு சிறிய குழுவாக இருந்த பெண்கள்தான் காரணம் போலத் தெரிந்தது.
"ஏன் இந்த இயக்கத்தில் சேர்ந்தீர்கள் என்று அப்போது இந்தப் பெண்களைக் கேட்டபோது நாட்டுக்காக என்று சொன்னார்கள். இப்போது எங்கே நாடு? ஏன் இந்தப் பெண்கள் போய் சும்மா இருக்கக்கூடாது? அங்குபோய் இவர்கள்தான் அங்குள்ள ஆண்களுக்கு தைரியம் கொடுக்கிறார்கள்" என்று உயர்ந்த பதவியிலிருக்கும் ஒரு பெண்மணி கண்டன்த் தொனியில் குறிப்பிட்டார்.
இந்த மாதிரியான கடுமையான கொடூர வர்த்தைகள் பெண்களிடத்திலிருந்தே வெளிவருவது ஆழ்ந்து வேரோடிப் போயிருக்கும் பெண் ஒடுக்குமுறையின், ஆழமான கூறுகளையே புலப்படுத்துகிறது.
பாலியல் வன்முறை, மானபங்கப்படுத்தல் போன்ற சம்பவங்களுக்கு பெண்கள் நடந்து கொள்ளும் விதம் தான் காரணம் என்று சாதாரணமாகக் கேட்க நேர்கிற மறைமுகக் குறிப்புகள் பெண்கள் தாங்களாகவே தமக்கு ஏற்படுத்திக் கொண்டுவிட்ட ஒரு பொறியாகவே அமைந்துள்ளது எனலாம். ஒரு பெண னாக இருப்பவள் எலி லா நிலைமைகளிலுமீ ஒடுக்குமுறைக்குள்ளாகுகிறாள் என்பது மட்டுமல்ல, எப்போதும் அடங்கிப் பணிந்து செல்பவளாகவும், தனது தன்னுரிமையை முனைப்பாக வலியுறுத்த முடியாதவளாகவுமே நடத்தப்படுகின்றாள். (சில சமயங்களில் ஆணாதிக்க எல்லைகள் அனுமதிக்கும் பட்சத்தில் தமது கருத்துகளை வலியுறுத்திக்கூற இவர்கள் அனுமதிக்கப்படுவதுமுண்டு) அவர்களுக்கென சமூகத்தில் வகுத்துத் தரப்பட்டுள்ள சில பாத்திரங்களின் பங்கினையே அவர்கள் ஆற்றியாக வேண்டும். ஒரு மகளாக, காதலியாக, மனைவியாக, தாயாக மிக நுட்பமான, உணர்வு பூர்வமான பங்கினைப் பரிபூரணமாய் இவர்கள் நிறைவேற்றியாக வேண்டி உள்ளது. அதி தோடு குடும்பத்தையும் அதிலுள்ள ஆணையும் ஸ்திரமாக்குவதற்கான உறுதியான அடித்தளத்தையும் இவளே அமைத்துக் கொடுத்தாக வேண்டும்.
இவையெல்லாம் சேர்ந்து அவளுக்கு அதியுயர் நம்பகத்தன்மையையும் வழங்கவே செய்கிறது. இங்குதான் அவள் தன்னை அடையாளம் கணிடு கொள்கிறாள். தனது நம்பிக்கைகளைத்தானே ஆக்கிக்கொள்ளவும் குடும்ப அமைப்பிற்குள் தனது ஒடுக்கப்பட்ட வாழ்நிலையைப் பேணவும் அதனையே

Page 224
412
வெளியில் பரப்பவும் தலைமுறை, தலைமுறையாகக் கட்டிக்காக்கவும் வேண்டிய வரலாற்றுரீதியான ஓர் ஒழுங்கை சமூகம் அவளுக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. எமது தமிழ்ச்சமூகத்திற்குள் பெண் ஒடுக்குமுறை எவ்வளவு தூரம் ஊடுருவிப் போயிருக்கிறது என்பதை நிர்ணயிப்பதோ, அதனை முறியடிக்க பொருத்தமான யுக்திகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்தெடுப்பது என்பதோ அவ்வளவு இலகுவான காரியமில்லை. மிகவும் கசப்பான நிலைமைகளே சூழ்ந்து தென்பட்டபோதிலும் நமது பெண்கள் முதன்முறையாக சில எத்தனங்களை மேற்கொண்டு துணிச்சலான தங்கள் முதல் காலடியை எடுத்து வைத்தமை இந்த யுகத்தில் நமக்குக் கிடைத்த வெற்றிதான். இதிலிருந்து பலதரப்பட்ட விளைவுகள் வெளிப்பட்டிருக்கக்கூடும். பல பெண்கள் விரக்தியுற்று, கசப்பான, கோபம் மிகுந்தவர்களாய் வாழ்தல் கூடும். சில பெண்கள் சமரசத்துடன் வாழ்க்கையின் பொது நீரோட்டத்தில் இணைந்து வாழ்தலும் கூடும். வேறும் சிலர் இயக்கங்களில் ஏதாவது ஒரு மூலையில் சில அந்தஸ்தினைப் பெற்று, பழைய மாதிரியே பணிந்து தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடும். இதிலிருந்து வெளியில் வந்த ஒரு சிலர் தமக்கு வாய்த்த அனுபவச் செழுமைகளுடன் சுயவிமர்சனத்தோடும் முன்வந்து இந்த மண்ணில் பெண்களின் அந்தஸ்தினை மேலும் முன்னேற்றிச் செல்ல நல்ல கருவியாக நின்று செயற்படுவார்களாயின் அது பயன்மிகுந்த விளைவுகளை நல்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த யுத்தத்தின் போது முன்னெப்போதிையும் விட மிகுந்த துணிச்சலோடு பெண்கள் வெளியே வந்திருக்கின்றனர். தனித்தனியாகவோ அல்லது சிறுசிறு குழுக்களாகவோ இந்திய இராணுவத்தோடு மோத நேர்ந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்கள் நிமிர்ந்து நின்று இந்திய இராணுவத்தின் கொடூரங்களையும் சுயகெளரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் அவர்களின் அநாகரிகங்களையும் பகிரங்கப்படுத்தினர். யாழ்ப்பாணப் பெண்களின் கூர்மையான- துடுதுடுப்பான பேச்சுப்பற்றிய பல நிகழ்வுகளை ஒரு பிரிகேடியர் நினைவு கூர்ந்தும் இருக்கிறார். மறுபுறத்தில் இந்த யுத்தத்தின் மத்தியில் தங்கள் குடும்பத்தினருக்காகவும், ஏன் தங்களின் தேசத்திற்காகவுமே வாழ்வை மீட்டுத்தர புலிகளுடன் வாதாடியும், மன்றாடியும் போராடியவர்களும் பெண்கள்தான். மீண்டும், துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் மட்டக்களப்பில் உள்ளோரைக் காப்பாற்றுவதற்கு உண்ணாவிரதம் இருந்தவர்களும் இவர்கள்தான்.
இந்த மண்ணையும் எமது தேசத்தையும் சூழ்ந்திருக்கின்ற அர்சியல் அந்தகாரத்தை நிதானமாக மதிப்பீடு செய்து பார்த்தால், பெண்களின் வரலாறு ஒரு வெற்றிச்சாதனைதான். எங்கும் அதிருப்திகள்தான், ஏமாற்றங்கள்தான், ஒன்றும் செய்து கொள்ள முடியாத ஆதங்கங்கள்தான். ஆனாலும் நம்பிக்கை துளிர்விடத்தான் செய்கிறது. ஆம், நாங்கள் சாதித்திருக்கிறோம். அது கொஞ்சமாய் இருந்தால் தான் என்ன!

43 அத்தியமும் 6
இந்தியாவின் திரிசங்கு நிலை
8.1 அறிமுகம்
அக்டோபர் யுத்தத்தின் துயரங்கள் நவம்பர், டிசெம்பர் மாதங்களிலும் இரக்கமில்லாமல் தொடர்ந்தன. இறந்தவர்கள், இடிபாடுகள், இடிந்து விழும் கட்டிடங்கள் - இவைதானி மிஞ சிப் போயிருந்தன. துய்மையான காலைத்தென்றலில் அழுகலடைந்த நாற்றமடித்தது. மானபங்கப்படுத்தல், பாலியல் வன்முறை என்று இராணுவம் நடத்திய வெறியாட்டம் ஒவ்வொரு தெரு முனையிலும் வாழ்க்கையின் நிஜங்களாக மாறிப்போய் இருந்தன.
அரசியலிலும் சமூக அமைப்பிலும் கவிந்திருந்த சூனியத்தில் சமூகம் முழுமையும் முடங்கிப் போய் வாயடைத்து நின்றது. மக்களை எண்ணிப் பார்த்துக் கொணடிருப்பது தேவையில்லாத ஒன்று என்ற பயங்கர உண்மையை அது சொல்லிக் கொண்டிருந்தது. பாலியல் வன்முறையும் மானபங்கப்படுத்துதலும் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு தவிர்த்துக் கொள்ள முடியாத நடைமுறைகளாக மாறிப்போயிருந்தன. மக்கள் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு இந்த கோர விளைவுகளெல்லாம் உலகளாவிய பிரச்சாரத்துக்கு உதவக்கூடிய வசதியான நல்ல சமாச்சாரமாகத் தெரிந்த போது - நல்ல திருப்தியோடு அவர்கள் இதறி காகவே காத்துக்கொண்டிருந்தவர்கள் போலத் தோன்றிய போது-கசப்பும் கோபமும் தான் எமக்கு மிஞ்சியிருந்தது. குரூரத்தில் சுகம் காணும் இந்தச்சூழ்நிலை சமூகத்திற்கு விழுந்த பெரிய அடியாக அமைந்தது. இந்திய இராணுவம் எமது மண்ணிலும் கடலிலும் ஆகாயத்திலும் அதிவன்மையோடு பிரசன்னமாகி நின்றதை -இந்திய அரசியலின் மேலாதிக்கம் மெதுமெதுவாக விஸ்தாரம் பெற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை நாங்கள் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது.
இதுகாலவரை இதுபற்றி வெளிவந்துள்ள ஆய்வுகளைப் போல், இப்போதைய நெருக்கடியானது தனித்த சில சுயேச்சையான நிகழ்ச்சிகளின் விளைவு என்றோ அதனால் இப்பிரச்சினையை தனிச்சில நிகழ்ச்சிகளின் கதைப்பின்னலாக வைத்து ஆராய்வோம் என்றோ நாம் கருதவில்லை. அதனால் தான் புலிகளாலோ, இந்தியாவாலோ ஏற்பட்ட தப்புக்கணக்கால்தான் பெரும் நாசம் விளைவிக்கப்படக்கூடிய இந்தப்போர் ஏற்பட்டது என்றும் நாங்கள் கருதவில்லை. அதுபோலவே தேர்தலும் ஜனநாயகமும் நாட்டில் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற புலிகளின் உள்ளுறைந்துள்ள பயத்தால்தான் இந்த யுத்தம் மூண்டது என்றும் நாங்கள் நம்பவில்லை. பரவலாக நம்பப்படுவதைப் போல, பதினேழு விடுதலைப்புலிகளையும் இலங்கை அரசிடம் கையளிக்கும் ஒரு சம்பவம் மட்டும் நடக்காமல் போயிருந்தால் சமாதான ஒப்பந்தத்திற்கும், விடுதலைப்புலிகள், தமிழ் மக்கள், இந்திய அமைதிப்படை ஆகிய அனைவருக்கும் எல்லாம் சுமுகமாகவும் நன்மையாகவும் முடிந்திருக்கும் என்றும் நாங்கள் நம்பவில்லை. இவை எல்லாவற்றிலும் உண்மையின் சிற்சிறு கூறுகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றனவெனினும் இந்த யுத்தத்தை

Page 225
414
புவிசார் அரசியலின் பின்னணியில் வைத்து நோக்குவோருடன் நாங்கள் ஒத்துப் போகின்றோம். இப்படிக் கூறும் போது, வெளிநாட்டுக் கொள்கைகளை உருவாக்கும் நிறுவனங்களை சரியான, முறையான வழிகளில் அணுகியிருந்தாலோ அல்லது வெளிநாட்டுக் கொள்கையைச் சாதுரியமாக நிர்வகித்திருந்தாலோ இந்த புவிசார் அரசியல் யதார்த்தம் மிக எளிதாக எமக்குச் சாதகமாகத் திரும்பியிருந்திருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம் என்றாகாது.
இந்தக் கருத்தோட்டங்களெல்லாம் வரலாறு என்பதை நிகழ்ச்சிகளின் சங்கிலித் தொடராக மட்டுமே நோக்குகின்றன. உண்மையில் வரலாறு என்பது பரிணாம வரர்ச்சிச் செய்முறையாகும், இங்கு நிகழ்ச்சிகள் என்பன இப்பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடாகவே அமைகின்றன. தமிழ், சிங்கள தேசங்களுக்கிடையில் உள்ள சமூக சக்திகளின் வளர்ச்சியும் அவற்றிற்கிடையேயான ஊடுபாவுமாக நமது வரலாறு விட்டுச்சென்ற பாரம்பரியமான ஒரு மரபே இப்போதைய யுத்தமாக வெளிப்பட்டிருப்பதாக நாங்கள் நோக்குகிறோம். இந்த யுத்தத்தின் அரசியல் பின்னணியையும், இலங்கைஇந்திய உறவுகளையும் நன்கு பரிசீலனை செய்தால் அது புவிசார் அரசியல் சூழ்நிலைமைகளை மட்டுமல்ல, தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான உள் முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் உதவக்கூடும். பெரும்பாலான தேசியச்சார்பு கொணிட தமிழ் புத்திஜீவிகள் தென்னிலங்கையைத் தள்ளிவைத்துவிட்டு தமிழ்த்தேசத்தின் முரண்பாடுகளையும், குறிக்கோள்களையும் ஊடாட்டங்களையும் மிக எளிமையான வரையறைக்குள் வைத்து நோக்குவதால் முற்குறித்த அணுகுமுறை மிக அவசியமானதென்று நாங்கள் கருதுகிறோம். இப்படியான ஒரு குறுகிய மூடுண்ட பார்வை சாத்தியமாகக்கூடிய தேசிய இலக்குகளைக்கட்டி எழுப்புவதற்குத் தடையாகவே அமையும்.
சரித்திரபூர்வமான ஆய்வு என்ற வரம்பிற்குள் சகலவற்றையும் கருத்திற் கொண்ட ஒரு பார்வையிலேயே இச்சித்திரத்தைத் தீட்ட முனைகிறோம். ஆனால் இந்த ஆய்வு இடதுசாரிப் புத்திஜீவிகளையும் மார்க்ஸியச் சிந்தனாவாதிகளையும் வசீகரிக்கக்கூடிய உன்னதமான வாதப்பிரதி வாதங்களைக் கொண்டு அமையும் என்றில்லை. உணர்வுபூர்வமான விவரணச் சித்தரிப்பாகவே இது முடிந்து போதலுங்கூடும். இந்தத் தேசத்தின் துயரத்திலும் வேதனையிலும் பங்கு கொண்டோர் என்ற வகையில் இத்தகைய போக்கு தவிர்த்துக் கொள்ளமுடியாத ஒன்றாகவே எங்களுக்குத் தெரிகிறது. வேதனைகளைப் புறந்தள்ளி, நினைவுகளின் இடுக்கில் ஆழப்புதைத்துக் கொண்டுவிட்டு, வாழ்க்கையின் யதார்த்தங்களுடன் மக்கள் வாழப்பழகிக்கொண்டுவிட்ட நிலையில். ஓரளவுதான் வெளியில் தெரியவந்திருக்கும் எமது தேசத்தை, அதன் பின்னணியில் இயங்கும் காரண, காரியச் செய்முறைகளை, சமூக சக்திகளை வெளிச்சத்தில் தரிசிக்கும் முயற்சியே இந்த ஆராய்ச்சியாகும். எந்தத்தனிப்பட்ட சக்தியும் பரிபூரண விபரங்களுடன் இங்கு ஆராயப்படாததால் இந்த ஆய்வு முழுமையாக அமையமாட்டாது. பொதுவான போக்குகளைக் கோடிட்டுக் காட்டும் பரந்த ஒரு துரிகைச் சித்திரமாகவே இது அமையும்.

45
6.2 இன்றைய நெருக்கடியின் பின்னணியைப் பற்றிய ஒரு கணக்கெடுப்பு 62.1 பாரதமாதா: உண்மையா அல்லது போலித் தோற்றமா?
ஒக்டோபர் யுத்தத்தை இந்தியா நடத்திய விதத்தைக் குறித்து ஈழத் தமிழர்கள் அதிர்ச்சியுற்றனர். இப்படியும் இந்தியா நடந்து கொள்ளமுடியுமா என்று தம் அவநம்பிக்கையை வெளிப்படுத்தவும் செய்தனர். தமிழர் பகுதியில் உள்ள ஆளும் வர்க்கம் இந்தியாவை எப்போதுமே தங்கள் இரட்சகனாக நடுநின்று தீர்ப்பு வழங்குபவனாக, தமிழர்களது உணர்வுகளின் பிரசாரகனாகவே கருதிவந்துள்ளது. இத்தகைய மானசீகக் கருத்து தென்னிந்தியாவுடன் ஈழத்தமிழர்கள் கொண்டிருந்த கலாச்சார, உணர்ச்சிகளின் இறுக்கமான நெருக்கத்திலிருந்து மட்டுமல்ல. அறிஞர்களின் ஆய்வுபூர்வமான அணுகுமுறையிலிருந்தும் எழுந்திருக்கிறது. இந்தியாவின் பெரும் வல்லரசுத் தோற்றத்தை நன்கு பயன்படுத்தி தமிழீழப் பிரிவினையை முடுக்கிவிடலாம் என்ற கருத்தினையும் தமிழ் அறிஞர்கள் முன்வைத்திருந்தனர். இது சரியான கருத்தாகுமா? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எத்தகையதாக இருந்தது?
6.2.2 வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு
தென்னாசியாவின் ஆதிக்க உறவுகளில் இந்தியா ஒரளவு க்யாதீனத்தோடு இயங்குகிறது என்றும் சிலசமயங்களில் இது ஏகாதிபத்திய நாடுகளுடன் முரண்பட்டும் உள்ளது என்றும் வாதாடினாலும் கூட அடிப்படையில் அது ஏகாதிபத்தியங்களைச் சார்ந்துதான செயற்படுகிறது. இந்திய முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது அதனை வெளிநாடுகளில் சந்தையையும் மூலவளங்களையும் தேடிச் செல்ல நிர்ப்பந்திக்கிறது. இந்தியா பெரும் வல்லரசாக உருப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொணடிருப்பதாகவும் கருதப்படுவது இன்னும் அதனை ஊக்குவிப்பதாக உள்ளது. பிரித்தானியருக்கு ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாக மேட்டுக்குடியினர் செயற்பட்டுக் கொண்டிருந்த காலனித்துவ காலத்திலிருந்தே இந்த இந்திய வல்லரசுக் கர்ைனோட்டம் உருவாக்கம் பெற்றுவிட்டது என்று இந்த ஆய்வுகள் சுட்டுகின்றன.
இந்தியாவின் வெளிநாட்டுச் செல்வாக்கு தொடர்பாகக் கூறப்படும் இன்னுமொரு காரணம், இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு முந்திய சமூக உருவாக்கமும் வளர்ந்து சென்று கொண்டிருக்கும் இந்தியக் கைத்தொழிலின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத உள்நாட்டுச் சந்தையும் மூலதனக்குவியலுக்கு போதுமான வசதிகள் காணப்படாத நிலையுமாகும். தமக்கு அண்மையில் உள்ள நாடுகளின் மீதான இந்தியாவின் ராஜதந்திரச் செல்வாக்கின் ஒரம்சமாகவே இதனையும் பார்க்க வேண்டும். மலிவான விலையில் பொருட்களை வழங்கச் சாத்தியமான இந்நிலையில் இந்தியாவின் நலன்கள் ஜப்பான் மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக அமையும் சாத்தியமும் உண்டு.
பரப்பளவிலும் செயற்பாடுகளிலும் இப்பிராந்தியத்தின் மிகப்பெரும் தேசமாக இந்தியா அமைந்தாலும் வெளிநாடுகளில் அது செலுத்தக் கூடிய செல்வாக்கு அதன் உள் முரண்பாடுகளினால் தடைபட்டுப் போகிறது. இதற்கும் மேலாக

Page 226
416 இப்பிராந்தியங்களில் இதன் செல்வாக்கும் ஏற்றத் தாழ்வானதாகவே உள்ளது. தென் அண்டையில் உள்ள இலங்கையையும், மேற்குப்பிராந்தியத்தில் உள்ள நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளையும் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். நேபாளமும் பூட்டானும் பொருளாதார ரீதியாகக் கிட்டத்தட்ட இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாகவே கூற வேண்டும். மேலும் வட எல்லையில் அமைந்துள்ள இந் நாடுகளின் கேந்திர முக்கியத்துவத்தாலும் இவை அரசியல் ரீதியிலும் இராணுவரீதியிலும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய ஒருங்கிணைப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் இலங்கை சாமர்த்தியத்துடன் விலகி நிற்க முடிந்திருக்கிறது. ஓரளவிற்கு இலங்கை இவ்வாறு ஒரு சுயாதீன நிலைமையைக் கொண்டிருந்தமைக்கான காரணங்களை அறிவதாயின், காலனித்துவ காலத்திலிருந்து நிலவிய இலங்கை-இந்திய உறவின் வரலாற்று மூலங்களை நாம் தேடியாக வேண்டும்.
8.2.3 காலனித்துவ வரலாறும் இலங்கைப் பொருளாதாரத்தின் படிமுறை வளர்ச்சியும்
பிரித்தானிய ஆட்சியின் போது இந்திய மேட்டுக்குடியினரின் ஒரு பகுதியினர் இந்தியாவில் மட்டுமல்ல, பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் சகல நாடுகளிலும் காலனித்துவ ஆட்சி நிர்வாகத்திற்கும் ஆங்கிலேய முதலாளித்துவ அமைப்பிற்கும் பெருஞ் சேவையாற்றியுள்ளனர். ஏகாதிபத்திய நலன் கருதி இலங்கைக்கு முடிக்குரிய காலனி என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டு, இப்பிராந்தியத்தில் இலங்கை சிறிய நாடாக இருந்த காரணத்தால் அதற்கென்று சில முன்னுரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன. இது கட்டுப்பாடு மேற்கொள்ளுவதற்கான ஒரு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்திய ஆளும் வர்க்கம் ஒப்பீட்டளவில் உள்ளார்ந்த வலிமையுடன் சுயாதீனம் கொண்டிருந்ததும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தை விட பிரித்தானிய நிர்வாகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. இதனைவிட இந்து சமுத்திரத்தின் மத்தியில் புவியியல்ரீதியில் இலங்கையின் அமைவும், திருகோணமலையில் இயற்கைத் துறைமுகத்தைக் கொண்டிருந்தமையும் சேர்ந்து இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் மார்க்கங்களின் மீது தொடர்ந்தும் கண்காணிப்பை வைத்துக்கொள்ள இங்கிலாந்து இலங்கைக்கு வழங்கிய இந்த வசதிகளையும் முன்னுரிமைகளையும் நன்கு பயன்படுத்திக்கொண்டது. முழுப்பிராந்தியத்தையுமே தமக்குக்கீழ் கொணரும் பிரித்தானியாவின் முஸ்தீபுகள் ஒருபுறமிருக்க, இந்தியாவிலிருந்து இலங்கையினை ஓரளவு சுயாதீனம் கொண்ட நாடாக வைத்திருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் உள்ளூர அவர்களிடம் மிகப்பெரும் இணக்கம் காணப்பட்டிருந்தது. உதாரணமாக, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகமானது இலங்கை மக்களின் கிளர்ச்சி காரணமாக தமது சேவையிலிருந்து இந்திய ஆட்சி நிர்வாகிகளை நீக்கியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் நேபாளத்திலும் பூட்டானிலும் இந்த அனுபவங்கள் எதிர்மாறானதாக இருந்தன. இந்நாடுகளின் சுதேசமக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சாதனமாக இந்திய ஆட்சி நிர்வாகிகளும் அங்கு போன வர்த்தகர்களும் அமைந்தனர்.

47
இந்தியாவின் செல்வாக்கு ஆதிக்கத்திற்கு எதிராக அமைந்த இக்கதைக்கு இன்னொரு முகமும் இருந்தது. பெருந்தோட்டத் துறைக்குள் தங்களையும் ஒருங்கிணைத்துக்கொள்ள உள்நாட்டுச்சிங்களவர்கள் மறுத்தநிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் இலங்கையின் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு வறுமையில் உழன்ற இந்தியத் தமிழ் விவசாயிகள் தென்னிந்தியாவிலிருந்து பெருந்தொகையில் பிரித்தானிய காலனித்துவ நிர்வாகத்தினால் இங்கு தருவிக்கப்பட்டனர். இந்த இந்தியத் தமிழ்த் தொழிலாளர்கள் அடிமை நிலைக்கு சமமான ஒப்பந்த கூலிகளாகவே இங்கு கொண்டுவரப்பட்டனர். பெருந்தோட்டத்துறையைக் கட்டி எழுப்பி, இன்றுவரையும் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தமிழர் காலனித்துவ எசமானர்களால் இலங்கைச் சமூகத்திற்குள் திணிக்கப்பட்ட அதே நேரத்தில், சிங்கள மக்களோ அவர்களை அந்நியரென்று ஒதுக்கித்தள்ளினார்கள். இலங்கை சுதந்திரமடைந்த பின்னால் இவர்களின் நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இவர்களது வாக்குரிமை மறுக்கப்பட்டு, இலங்கையில் மிக மோசமான சுரண்டலுக்குள்ளாகி ஒடுக்கப்பட்ட ஒரு சமூகக் குழுவினராக இவர்கள் மாறினர். உள்நாட்டின் பிழைப்புமட்ட விவசாயத்திற்கும் பீெருந்தோட்டத்துறைக்கும் இடையில் வளர்ந்து சென்ற முரண்பாடானது இந்தப் பின்தள்ளப்பட்ட சமூகக் கூட்டத்தினருக்கு எதிரான மிகதி தீவிரமான பகை உணர்வாகவே வெளிப்பட்டது மிகுந்த துரதிர்ஷ்டவசமானதாகும். இம்முரண்பாட்டைப் பாவித்து நிர்க்கதியான இந்த வறிய சனசமூகத்தை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்களாகச் சித்தரித்து ஈவிரக்கமில்லாத சில அரசியல் சக்திகள் தமக்கு ஆதாயம் தேடவும் முனைந்தன. மலையகத்தில் இந்திய மேலாதிக்கத்திற்கான எதிர்ப்பு என்பதும் இந்தச்சிறுபான்மை இனத்தின் மீது பழியைப் போட்டுக்கொண்டு தான் கிளம்பியது.
இலங்கையின் உள்ளூர் ஆளும் வர்க்கத்தினரான இலங்கைத் தமிழரும் சிங்களவரும் காலனித்துவ ஆட்சியின் போது முன்னோக்கி நன்கு வளர்ச்சியடிைய முடிந்தது. உள்ளாட்சிச் சேவைகளின் கீழ் மட்டத்தில் தமிழர்கள் பணிபுரிய, சிங்களவர்கள் உள்ளாட்சிச் சேவையுடன், வர்த்தகத்திலும், சிறுதோட்டச் செய்கையிலும், பெருந் தோட்டத்துறை சார்ந்து சில தொழில்களிலும் ஈடுபட்டிருந்தனர். உண்மையில் இலங்கையில் செழிப்பு மிக்க இந்திய, மூர் இன வர்த்தகர்கள் இருந்தனரேனும் அவர்களைச் சிங்கள வர்த்தகக் குழுவினர் தீவிர வெறுப்புடனே நோக்கினர். இந்த இந்திய எதிர்ப்புவாதத்தின் உண்மையான சாராம்சம் யாதெனில், உள்ளூர் ஆளும் வர்க்கமானது, தம்மிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய இன்னொரு வகுப்பு உருவாவதை விரும்பவில்லை என்பதேயாகும்.
6.2.4 காலனித்துவத்திற்குப் பின் இலங்கை:குறுந்தேசியவாதத்தின் எழுச்சி
தென் ஆசியப்பிராந்தியத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய முஸ்தீபுகளில் இப்பிராந்தியத்தில் அமைந்திருந்த பிற சிறிய நாடுகளைப் போலன்றி காலனித்துவ இலங்கைக்கு நிர்ணயமான இடம் இருந்தது. இலங்கைக்கு வந்த இந்திய

Page 227
48
ஆளும் வர்க்கத்துடன் இலங்கை ஆளும் வர்க்கம் பெரும் போட்டா போட்டியில் ஈடுபட்டிருந்தது. இலங்கையின் காலனித்துவ எதிர்ப்புக் கருத்தியலானது இந்திய தேசிய இயக்கத்திற்கு சமமானதாகவும் அதிலிருந்து உத்வேகம் கொண்டதாகவும் திகழ்ந்த அதே நேரத்தில் அடிப்படையில் அவற்றுடன் முரண்பாடான போக்கையும் கொண்டிருந்ததை இலங்கையின் தேசிய இயக்கத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சிப் போக்கு காட்டி நிற்கவே செய்கிறது. இந்த முரணி பாடு இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரத் தளத்திலிருந்து எழுந்த தேசியவாதத்தின் சாராம்சத்திலேயே அடங்கியிருந்தது. காலனித்துவ ஊடுருவலானது இலங்கைப் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய பொருளாதார அமைப்புடன் பூரணமாக ஒருங்கிணைத்து அதனை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு விட்டது. இலங்கையின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக பெருந்தோட்டத்துறையே அமைந்தது. அப்போது தான் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சிங்கள, தமிழ் மத்திய வர்க்கத்தினர் காலனித்துவ பொருளாதாரத்தையும் நிருவாகத்தையும் கொணிடு நடத்துவதில் சேவையாற்றுபவர்களாக இணைக்கப்பட்டனர். எனவே தானி காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து, தேசியவாதத்தை முன்னெடுத்தபோதும் ஒரு எல்லைக்கு அப்பால் இந்த மத்திய வர்க்கம் போக முடியாமல் போய்விட்டது. காலனித்துவ பொருளாதாரத்தைத்தவிர, தாங்கள் காலூன்றி நிற்கத்தக்க வலிமை வாய்ந்த பொருளாதார அடிப்படைகள் மத்திய வர்க்கத்தினரின் கைவசம் இல்லை என்பது மட்டுமல்ல, காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போட்டியிட சுதேச பொருளாதார வேர்களைக் கொணி டவர்களாகவும் அவர்கள் அமையவில்லை. அதனால்தான் இந்த வர்க்கத்தின் காலனித்துவ எதிர்ப்பும், அவர்களினி ஆதிக் கதி திற்கு எதிரான ஆதிதிரமும் வெறும் உணர்ச்சிபூர்வமானதாக மட்டுமே இருந்தது. தேசத்துடனும் நாட்டு மக்களுடனும் இவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் கலாச்சார, சமய ரீதியிலேயே அடையாளங்கண்டு கொள்ளப்பட்டது. அவர்கள் அந்நியப்பட்டு நின்ற தன்மையும் தாங்களும் பரந்த மக்கள் அணியின் ஒரு பகுதிதான் என்று அவர்களும் பிரகடனப்படுத்திக்கொள்வதை அவசியமாக்கியிருந்தது. கலாச்சாரத்திலும் கடந்தகால வரலாறுகளின் மீதும் இவர்கள் கொண்டிருந்த உணர்ச்சி பூர்வமான உத்வேகத்திற்கூடாக இந்த முனைப்பு வெளிப்பட்டது. சிங்களப்பக்கத்திலிருந்து அவர்களின் உண்மையான பொருளாதார முரண்பாடானது காலனியத்தின் மிச்சம் மீதிகளுக்காக தமிழ் மத்திய வர்க்கத்துடனும் இந்திய வர்த்தக வகுப்பினருடனும் கொண்டிருந்த போட்டா போட்டியிலேயே தங்கியிருந்தது. ஒருபுறம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் சிங்கள மத்திய வகுப்பினருக்கும் மறுபுறம் தமிழ் மத்திய வகுப்பிற்கும் இந்திய வர்த்தக வகுப்பினருக்கும் இடையில் அமைந்த முரண்பாடுகளே சிங்கள தேசிய வாதமானது தமிழ் விரோத, இந்தியர் விரோத உணர்வு வித்துக்களைக் கொண்டமைந்தமைக்கு காரணமாக அமைகிறது. இந்த அம்சத்தைப்பற்றி குமாரி ஜயவர்த்தன மிகச்சிறந்த ஆய்வுகளை நடத்தியிருக்கிறார்.
காலனி ஆதிக்கத்தின் பின்னர், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின்கீழ் புதிதாகச் சுதந்திரம் எய்திய இலங்கையின் பொருளாதார, அரசியல்

419
நடவடிக்கைகள் மீது தமக்குப் போட்டியாக இருந்த தமிழ் சமூகத்தினரை விட தாம் மேலாதிக்கம் பெறவெண்டும் என்பதில் சிங்கள மத்திய வர்க்கம் குறியாக இருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் தென்னிந்தியத் தமிழர்களுக்கும் இடையிலான கலாச்சாரத் தொடர்புகளைக் குறிப்பிட்டு தமிழர்கள் இந்தியாவுடன் மறைமுகக்கூட்டு வைத்துக்கொண்டு சிங்கள தேசத்தைக் கபள்கரம் செய்து சிங்கள மொழியையும் பௌத்த சமயத்தையும் அழித்துவிடப் போகிறார்கள் என்று கதை பரப்பினர். சிங்கள மேலாதிக்க வெறியர்கள் பெளத்த சமயத்தையும் சிங்கள இனத்தையும் சிங்களமொழியையும் பாதுகாக்க தாமே அவதாரம் செய்தவர்கள் என்ற வகையில் இந்த பெளத்தசிங்களக் கருத்தியல் மூலமாக வர்க்கம், சாதி, சமயங் கடந்து பரந்துபட்ட சிங்கள மக்களை இவர்களால் அணுகிக் கொள்ள முடிந்தது. பாராளுமன்றத்திற்கூடாக அதிகாரத்தை நாடிநின்ற அதிகார வர்க்கத்திற்கு இது மிகவும் பிரயோசனப்படத்தக்க கருத்தியலாக அமைந்தது. மறுபக்கத்தில் இதனையொத்த வர்க்க அடித்தளத்தையும் அபிலாஷைகளையும் கொண்ட தமிழ்த் தேசியவாதமானது சுதந்திர இலங்கையில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது சாத்தியமில்லாது போய்விட்டது. எனவே தலைதூக்க ஆரம்பித்திருந்த சிங்கள எதிர்ப்பு உணர்ச்சிகள் எதிர்த்தாக்குதலுக்கான ஸ்தூலமான வடிவை எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தொகுத்துக் கூறுவதானால், தங்களின் குறுகிய தேசியவாதக் கருத்தியலை முன்நிறுத்தித்தான் இரு சமூகங்களையும் சேர்ந்த ஆளும் வர்க்கத்தினர் தத்தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. மேலும் சுதந்திரத்திற்குப்பின்னர் 'ஆட்சி அதிகாரம் என்பது சிங்கள ஆளும் வர்க்கத்தின் கைகளிலேயே இருந்ததால் சிங்கள பெளத்த மேலாதிக்கவாதம் காலஓட்டத்தில் ஸ்தாபனமயமாக்கப்பட்டுமிருந்ததி:
62.5 சிங்கள மேலாதிக்கவாதமும் தமிழ்த் தேசியவாதமும்
இங்கு தரப்படும் கருத்துக்கள் தமிழ்த்தேசியவாதத்தின் வரலாற்றைப் பற்றிய பூரண விபரங்களை ஆராயும் எல்லைக்கு நம்மை இழுத்துச் செல்லாது. இதற்குப் பதிலாக, குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தமிழர் வரலாற்றை உருவாக்கிய சக்திகளின் தன்மைகளை வெளிக்கொணரும் குறித்த சில அம்சங்களையே இங்கு ஆராயவிருக்கிறோம்.
இந்த இரண்டு சமூகங்களையும் சேர்ந்த ஆளும் வர்க்கத்தினரின் பொருளாதார அடித்தளங்களில் அடிப்படையான வேறுபாடு இருந்தது. காலனித்துவப் பொருளாதாரத்தினி ஆதாரமாக அமைந்த பெருந்தோட்டத்துறையானது தென்பகுதியிலேயே அமைந்திருந்ததால் சிங்கள் ஆளும் வர்க்கம் காலனித்துவ முதலாளித்துவ அமைப்பிற்குள் தாராளமாய் நுழைந்து கொள்ள பல வழிவகைகளைத் திறந்து விட்டிருந்தது. இதற்குச் சமமான அளவில் உள்ளூர் பொருளாதார முயற்சிகளை ஊக்குவித்து, செல்வத்தைத் திரட்டவல்ல பொருளாதார நடவடிக்கைகளை காலனித்துவ ஆட்சியாளர் தமிழ்ப்பிரதேசங்களில் அறிமுகப்படுத்தவில்லை. இதனால் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தமிழ் மத்தியதரவர்க்கம் தெற்கிலும் வேறு பகுதிகளிலும் காலனித்துவ நிர்வாகத்திற்குச் சேவையாற்றுவதன் மூலமே

Page 228
42O பொருளாதாரச் செழிப்பை அடைந்து கொள்ள முடிந்தது. விடாமுயற்சியோடு ஆங்கிலக் கல்வியைத் தொடர்வதன் மூலமே தமிழ் மத்தியதரவர்க்கம் வளம் காண முனைந்தது. இவ்வாறு தான் காலனித்துவ அதிகாரப் படிமுறையின் கீழ்மட்டங்களில் தமிழ் மத்தியதரவர்க்கம் பணியாற்றிக் கொண்டிருந்தது. பாடசாலை போன்ற மக்கள் சேவை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய உயர்கல்விமான்களையும் சேவையாளர்களையும் இந்த வர்க்கமே உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது. பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய ஒரு வர்க்கமாகவே அது விளங்கியது.
காலனித்துவ காலத்தில் தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த இந்த மரபான உரிமைகள் தெற்கே சிங்களவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட இடைமட்டத் தளவில் ஒரு வித கீ கட்டுப்பாட்டைச் செலுத்தக்கூடியவர்களாக இவர்களது அந்தஸ்தினை உறுதிப்படுத்தியிருந்தது. இவ்வாறு சலுகைகளை அனுபவித்த நிலைமை தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற அளவுக்கு மீறிய உயர்மனோபாவத்தை உண்டாக்கியது. ஆனால் இவர்களின் பொருளாதாரத்திற்கான சூட்சுமமான அடித்தளமானது ஆட்சி அமைப்பின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்தும் தெற்கை அண்டியதாகவுமே இருந்தது. இந்த நலிந்த முரண்பாடான நிலைமை ஏககாலத்தில் தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாயும் இடையூறாகவும் அமைந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழருக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளை அரசு ஒளிவுமறைவில்லாமலேயே சிறிது சிறிதாகக் கொண்டு நடத்த ஆரம்பிததுவிட்டது. பெளதி த - சிங் கள பேரினவாதமி ஸ்தாபனமயப்படுத்தப்பட்டபின் அதன் வக்கிரமான கருத்துருவங்களின் தாக்கங்கள் தமிழர்களின் வாழ்நிலையின் ஒவ்வோர் அம்சத்திலும் வேலைவாய்ப்பு, காணி, கல்வி, கைத்தொழில் வளர்ச்சி அனைத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்த பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகள் தமிழ் மத்தியதர வர்க்கத்தின் பொருளாதார அடித்தளங்களை அளித்தெடுத்தது. அரசாங்க அமைப்புக்களிலும் தெற்கிலும் தங்கள் வாழ்நிலைக்கான அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டு செல்ல, தாங்கள் பின்தள்ளப்பட்டு இரண்டாந்தரப்பிரஜைகளாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வும் மத்தியதரவர்க்கத்தின் தமிழர்கள் மத்தியில் விரக்தியையும் சினத்தையும் ஊட்டியிருந்தது. ஆனால் பொருளாதாரரீதியாக தெற்கைச் சார்ந்தே வாழவேண்டியிருந்ததால் இவர்கள் சுயமாக வெளிப்பட முடியவில்லை. ஆகவே தங்களின் கசப்பையும் கோபத்தையும் அடக்கிக்கொணர்டு நிலைமையைச் சமாளித்து வாழப்பழகிக் கொண்டிருந்தனர். இந்த வர்க்கத்திலிருந்து வந்த அரசியல் கட்சிகளும் இந்த ஆத்திரவுணர்வை நெறிப்படுத்தி தமது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளப் பாவித்துக் கொண்டன. அவர்களது உணர்ச்சிகளுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே நிலவிய உள்முரண்பாட்டினை இவை பிரதிபலிக்கவே செய்தன. சிங்களவரை விடத் தங்களை அறிவுபூர்வமாக உயர்ந்தவர்கள் என்று கருதிக்கொண்ட இவர்கள் தமிழர்களைத்தட்டி எழுப்பும் வகையில் மேடைகளில் கனல் கக்கப் பேசினார்கள். ஆனால் நடைமுறை அரசியலிலோ பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வதில் சிங்கள அரசியல் தலைமையுடன்

421.
பேரம் பேசிக்கொணடிருந்தனர். சில அடிப்படையான விஷயங்களில் தமிழ்த்தலைமை அவர்களை அண்டி நடந்து கொள்ளவேண்டியிருந்ததையே இது பிரதிபலிக்கிறது.
அரசின் உதவியுடன் சிங்களவர்களைக் கொண்டு தமிழ்ப்பகுதிகளில் புதிய குடியேற்றங்களை ஏற்படுத்துவதும், அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மீன்பிடிப் பகுதிக்குள் சிங்கள மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்களை அபகரித்துச் செல்வதும் போன்ற தேசிய ஒடுக்குமுறையின் முக்கிய அம்சங்கள் தமிழ் விடுதலைக் கூட்டணியின் தேசியத் தலைமைக்கு ஒரு பெரும் பிரச்சினையாகவே தெரியவில்லை. தேசிய ஒடுக்குமுறைகள் பற்றிப் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டவர்கள் தங்கள் பேச்சுத்திறமையைக் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே இப்பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். அரசின் இந்த நடவடிக்கைகளால் தங்களின் அன்றாட ஜீவியமே பாதிக்கப்பட்டுப் போயிருந்த தமிழ் சமூகத்தின் மிகவும் பின்னடைந்திருந்த ஏழைகளை அணிதிரட்டி அவர்களின் நலன்களை முன்னெடுக்க எத்தகைய முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பரந்துபட்ட தமிழ் மக்களின் பொருளாதாரத்தளங்கள் அரித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருப்பதைக் கவனத்தில் கொள்ளாமல் தமிழ் ஆளும் வர்க்கத்தின் அற்ப சொற்பப் பிரச்சினைகளைப் பற்றியே அவர்கள் கவனம் செலுத்தினர். சிங்கள அரசியல் தலைமையும் தமது சிங்கள மேலாதிக்க கருத்தியலில் மூழ்கிப் போயிருந்ததால் தமிழர்களுடன் உணிமையாகவே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என்பது அவர்களுக்குச் சற்றேனும் சகித்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. 1970கள் வரையிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு சிங்கள அரசியல் கட்சிகளும் தமிழ்த்தேசியக் குழுக்களில் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் அதிகாரப்பங்கீடு பற்றித் தமிழ் மக்களும் சில பிரமைகளில் இருந்து வந்துள்ளனர். 1970ல் பூரீலங்கா சுதந்திரக்கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபோது பாராளுமன்ற அரசியலுக்குள் தமிழ்த்தலைமை எவ்வளவு தூரம் போகமுடியும் என்பது வெளித் தெரியவந்தது. 1970லிருந்து அரசின் பாரபட்சமான போக்கும் ஒடுக்குமுறையும் தீவிரமாகிக் கொண்டு வந்தது. தமிழ்த் தேசியவாதிகளின் சாத்வீக எதிர்ப்புகள் அரசினால் பலாத்காரமாக அடக்கி ஒடுக்கப்பட்டது இதிலும் மோசமாக, 1977ம் ஆண்டிலிருந்து இனக்கலவரம் என்று நாசூக்காகக் கூறப்படும் தமிழருக்கு எதிரான காடைக்கும்பலின் வன்முறை அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது.
தமிழ் வாக்காளர் மத்தியில் தமது ஆவேசத்தைக் காட்டி வீராவேசப் பேச்சுகளை நடத்திக்கொண்டிருந்த தமிழ்த் தேசியத் தலைமையால் பாராளுமன்றத்தின் மூலமாகச் சிங்கள ஆளும் வர்க்கத்திடமிருந்து தமிழ்மக்களுக்கு ஒன்றையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதன் பயனாக ஏமாற்ற உணர்வும் கசப்பும் தமிழரிடையே தலைதூக்கியது. அஹிம்சைப் போராட்டத்திற்கு காடைக்கும்பலின் வன்முறைத் தாக்குதலே பதிலாக இருந்ததால் தமிழ்த் தேசியமானது தொடர்ந்தும் அதன் வர்க்க எல்லைக்குள் மட்டும் இயங்கிக்கொண்டிருப்பது சாத்தியமற்றுப்போய் வர்க்கம், சாதி, பிரதேச வேறுபாடுகள் போன்ற அனைத்தையும் மீறி சகல தமிழ் மக்கள் மத்தியிலும் தீவிரமாக வலுப்பெற்றுக் கொண்டிருந்தது. சிங்கள

Page 229
422
மேலாதிக்க ஒடுக்குமுறை ஒன்று தான் நிர்ணயமான சக்தியாக மாறியிருந்தது. இந்த அவமானகரமான சூழலில் எழுந்த கோபமும் விரக்தியும், உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழலும் தமிழ் மக்களை உணர்வு பூர்வமாக ஒன்றிணைத்தது. உயர்கல்வியில் மொழிவரித் தரப்படுத்தல், வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு முறை போன்ற அரசின் பாரபட்சமான கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சுதந்திர வாழ்வு தேடி நின்றதுடன் பரந்த தமிழ்மக்களின் ஆவேசக்குரலாகவும் மிளிர்ந்தனர்.
சிங்களவர்களுடன் இனியும் சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லையென்றும் பிரிந்து போகும் நிலைக்கு வந்துவிட்டோமென்றும் இளைஞர்களும் பிற தீவிர சக்திகளும் உணரத் தலைப்பட்டனர். இவ்வாறு தானி தமிழ் பூர்ஷவாத்தலைமையும் தங்களது அரசியலைக்கொண்டு நடத்துவதற்காக தனிநாடு கோரி "தமிழ் ஈழம்" என்னும் புதிய கோஷத்தை முன்வைக்க நேர்ந்தது. ஆனால் இக்குறிக்கோளை அடைய அவர்களிடம் திட்டவட்டமான எந்தச் செயற்திட்டமும் இருக்கவில்லை. பாராளுமன்ற மந்திரக்கோலால் மாங்காய் வரவழைக்க தமிழ் தேசியத்தலைமையால் முடியாது என்பது தெரிந்தது தான். தாங்கள் முன்வைத்த கோஷம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒருநாளும் நிறைவேற்றப்பட முடியாதது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதிதோடு அவர்கள் சார்ந்திருந்த வர்க்கத்தின் பொருளாதார ஒன்றிணைப்போடும், தென்னிலங்கையைச் சார்ந்து நிற்க வேண்டிய நிலையோடும் ஈழக்கோரிக்கை அவர்களுக்கு ஒருநாளுமே சரிப்பட்டு வரும் விஷயமாக இருந்ததில்லை. இதைவிட இந்த யதார்த்தமான உண்மைகளை மக்களிடம் விளக்கிக் கூறி சாத்தியமான மாற்றுத்தீர்வுகள் எதனையும் இவர்கள் முன்வைக்கவும் இல்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் செல்வநாயகத்தை ஈழத்தின் முஜிபூர் என்று வர்ணித்தும், அதற்கும் மேலாகத் தாம் ஆயுதம் ஏந்திப்போராடப் போவதாகவும் கூடத் தேர்தல் மேடையில் சாடைமாடையாகக் குறிப்பிட்டுப் பேசியும் தமிழ் மக்களை வெற்றுப்பிரமைகளில் மிதக்க விட்டுக் கொணடிருந்தனர். தமிழ் ஈழக் கோரிக்கையை விமர்சித்தவர்களை தமிழ் ஈழத்தைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்றும் கூறினர். தென் ஆசியாவிலேயே நமது ஜனாதிபதி தான் தலைசிறந்த ஜனநாயகவாதி என்று தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைமை புகழ்ந்து தள்ளியதைத் தவிர பாராளுமன்றத்திற்கு உள்ளேயோ வெளியேயோ உருப்படியாக எதுவுமே நடக்கவில்லை. அதே நேரம் தமிழ்மக்கள் 1977ல் மீண்டும் ஒரு இனக்கலவரத்துக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஒடிச்சிதறிய தமிழர்கள் மீண்டும் வேட்டையாடப்பட்டனர். கையாலாகாத நிலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்தது. இதன் விளைவாக தங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைக்கப்பட்டு விட்டதான உணர்வு இளைஞர் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் மேலோங்கி நின்றது. அரச அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த சிங்களத் தேசியவாதிகளின் ஒன்றுக்கும் விட்டுத்தராத நிலைமையானது தமிழ் தி தேசியப் போராட்டத்தை மென் மேலும் தனிமைப்படுத்தியது மட்டுமன்றி பிரிவினைவாதத்திற்கும் இட்டுச்சென்றது. மூன்று தசாப்தங்களாக அதிகரித்துச்சென்ற இன ஒடுக்குமுறையின் விளைவாகத்தான் பிரிவினைக்கோஷம் எழுந்ததாயினும் தமிழ்த்தேசியவாதம்

423
சகல அம்சங்களிலும் தற்காப்புநிலையிலேயே செயற்பட்டது என்றோ, போராளிகள் முதன்மை ஸ்தாபனத்திற்கு வந்த பிறகு தான் இது குறுகிய தேசியவாதமாயும் ஆக்கிரமிப்பு நோக்குடனும் செயற்பட ஆரம்பித்துவிட்டதாகவோ கருதுவது தவறானதாகும். சிங்களத் தேசியவாதிகளைப்போலவே தமிழ்த்தேசியவாதிகளுக்கும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற உணர்விருந்தது. நிலமான்ய வரலாற்றால் உருவாக்கப்பட்ட அவர்கள் புராணக் கனவுகளிலும் மனோரதியக் கற்பனைகளிலும் திளைத்திருந்தனர். தமது தேர்தல் தொகுதிகளிலும் இளைஞர்கள் மத்தியிலும் தமிழர் வீரம் பற்றிய உன்னதச் சித்திரங்களையும் இனத்தையும் மொழியையும் பாதுகாத்தாக வேண்டுவது பற்றியும் சிங்கள எதிர்ப்பும் இந்திய சார்பும் நிறைந்து வழிந்த ஒரு சரித்திரத்தையும் விதைத்திருந்தனர்.
தென்னிந்தியாவின் உன்னத சோழப் பேரரசின் காலத்தையும் தமிழ் மன்னர்கள் ஆண்ட பொற்காலத்தையும் கொண்ட பழைய வரலாற்றை நினைவுமீட்டு அந்த பிம்பங்களிலேயே தமிழ் அரசியல் வாதிகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். தமிழ் மொழியின் பழமையையும் தூய்மையையும் தற்போதுதான் வளர்ச்சியடைந்த சிங்கள மொழியுடன் வேறுபடுத்திக் காட்டி வேறு இந்திய மொழிகளிலிருந்து உருவாகியதுதான் சிங்களம் என்றும் எள்ளி நகையாடினர். சிங் களவர்களை விடத் தமிழர்கள் கூர்மையான நுணிணறிவு கொண்டவர்களாதலால்தான் தமிழர்கள் கூடிய எழுத்தறிவும் கல்வியும் கொண்டவர்களாக உள்ளனர்’ என்றும் சிங்களவர்கள் சோம்பேறிகள் என்றும் தம்மைப்போல புத்திசாதுரியம் இல்லாதவர்கள் என்றும் கருதினர். ஆண்ட பரம்பரை அந்நியனின் கீழ் அடிமைப்பட்டிருப்பதா என்ற கருத்தோட்டத்தில்தான் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராக பழைய தமிழ்த்தலைமை ஆத்திரம் கொண்டிருந்தது.
இலங்கை அரசின் கீழி உயிர் வாழிவது எனபதே அச்சுறுத்தலுக்குட்பட்டபோது தேசியவாதம் என்பதற்கு அர்த்தம் இருந்ததுதான். ஆனால், அதன் குறுகிய நோக்கும் வீராவேச வெற்றுரைகளும் அவற்றின் வெறிகொணிட கணிமூடித்தனமான வழிபாடுகளும் பிற்போக்கானவை மட்டுமல்ல-அவை மக்களுடன் ஒன்று கலந்துவிட்டது போலாகிவிட்டது. போராளிகள் தான் இவற்றின் மூலநாயகர்கள் அல்லர். அவர்கள் வரலாற்றின் ஒரு தொடர்ச்சிதான். இத்தகைய குறுகிய தேசியவாதக் கருத்தியலை அதன் முழு அளவில் தொடக்கி வைத்தவர்கள் மிதவாதத்தலைவர்களும், நடுநிலைப்பாதையைக் கடைப்பிடித்த தலைவர்களும் தான்.
இக்கருத்தியலின் தீவிர குறுகியவாதமே தேசிய இனஒடுக்குமுறையினால் ஏற்பட்ட முக்கிய பிரச்சினைகளை கீழ்மட்ட மக்களிடம் எடுத்துக்கூறி
அவர்களை அணிதிரட்டிக்கொள்ள இவர்களுக்குத் தடையாக இருந்தது.
தேர்தல் மேடைகளில் தேசிய எழுச்சியை ஊட்டி, மக்கள் மத்தியில் பிற்போக்குப் பிம்பங்களையும் உணர்ச்சிகளையும் கிளறி விட்டுக்கொண்டிருந்தனர். மக்கள் சரியான அரசியல் பிரக்ஞை கொண்டவர்களாகவோ அல்லது எதிர்காலத்தில் வரப்போகும் நிகழ்வுகளைச் சந்திக்கும் தயார்நிலையிலோ இருக்கவில்லை. தங்களது கட்சியின் அரசியல் இருப்புக்கும். அதன்மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழையவுமே பிரிவினைவாதம் என்ற அளவில்தான் மக்கள் அரசியல் போதமூட்டப்பட்டிருந்தனர்.

Page 230
424
தமிழ்த் தேசியவாதத்தில் இருந்த மற்றுமொரு பிரதான குறைபாடு அதன் பிராந்தியத் தலைமையாகும். ஆளும் வட்டாரத்திற்குள்ளும் தேசியத் தலைமையானது பெரும்பாலும் யாழ் குடாநாட்டைச் சேர்ந்த படித்த மத்திய வர்க்கத்திற்குள்ளேயே இருந்தது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசின் பாரபட்சமான கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்தக் குழுவினரே போராட்டத்தின் தலைமைச்சக்தியாகத் திகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானதாகும்.
யாழ்ப்பாணத் தோடும் தென்னிலங்கையோடும் ஒப்பிடுமிடத்து கிழக்குமாகாணம் மிகப் பின்தங்கியிருந்தாலும் நெல் உற்பத்தியில் தன்னிறைவு கொண்டதாய் செழிப்பான விவசாயப்பகுதியாகத் திகழ்ந்தது. கிழக்கு மாகாணத்தின் ஆளும் வர்க்கத்தினைச் சேர்ந்த பலர் பெரும் நில உடமையாளராக இருந்தனர். தெற்கை அண்டி வாழவேண்டியவர்களாகவோ அல்லது யாழ்ப்பாணத் தமிழர்களைப்போல அரசாங்க கடாட்சத்தில் தங்கியிருப்பவர்களாகவோ திகழவில்லை. எனவே யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலன்றி அரசின் இனஒடுக்கு முறைகளை அவர்கள் எதிர்கொண்ட விதம் வேறுபட்டமைந்தது. வரலாற்று ரீதியாக, பொருளாதார, சமூக உருவாக்கங்கள், கலாச்சார செயற்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்த இரண்டு பிராந்தியங்களும் இருவேறுபட்ட திசைகளில் வளர்ந்து சென்றுள்ளன. இதைவிட யாழ்ப்பாணத்தமிழர்கள் அரசின் உயர்நிர்வாக அதிகாரிகளாகவும் பிற அலுவலர்களாகவும் கிழக்கு மாகாணத்தில் தமது ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத் தமிழர்களையும் அவர்களது நோக்கங்களையும் மட்டக்களப்புத் தமிழர்கள் மிகுந்த சந்தேகத்துடனேயே நோக்கினார்கள். இந்தக் காரணிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து தமிழ்த் தேசியவாதத்திற்கு ஒரு யாழ்ப்பாண முகத்தையே கொடுத்தது. மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறித்து, சிங்களவர்களை கொண்டு தமிழ்பிரதேசங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தி சிங்கள மேலாதிக்கவாதம் தனது வஞ்சக நோக்கங்களை வெளிப்படுத்தியபோதெல்லாம் தெளிவான எந்த வழிவகைகளையும் காட்டமுடியாத நிலையிலேயே தமிழ்த்தலைமை இருந்தது.
சுதந்திரத்திற்குப் பின்னர் தொடர்ந்து பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகளில் காணிகளைக் கையேற்று அவற்றில் சிங்களவர்களைக் குடியேற்றும் கொள்கையைக் கடைப்பிடித்தது. தமிழ்க்கிராமங்களில் அரசாங்க ஆதரவுடன் சிங்களக்குடிகள் கும்பல் கும்பலாய் குடியேற்றப்பட்டனர். இவை காலப்போக்கில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான திருகோணமலை மற்றும் அதைச் சூழ்ந்துள்ள கிராமங்கள் ஆகியவற்றின் முழு ஜனத்தொகை அமைப்பிலுமே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இப்பிரதேசங்களில் எல்லாம் பெரும்பான்மையினராக இருந்த தமிழர்கள் இப்போது இப்பகுதிகளில் சிறுபான்மையினராக்கப்பட்டனர். இங்கு தேர்தல் தொகுதிகளும் சிங்களவருக்கு சாதகமாக மாற்றப்பட்டது. மலையகத்தமிழர்கள் சுற்றிலும் சிங்களக் கிராமங்களைக்கொண்ட தேயிலைத் தோட்டங்களிலேயே செறிந்து வாழ்ந்தனர். புவியியல் ரீதியில் இவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த இலங்கைத் தமிழரில் இருந்து வேறுபட்டு

425 அமைந்திருந்தனர். கீழ்வர்க்கம், குறைந்த சாதி போன்ற பின்னணிகளால் ஈழத்தமிழர்கள் இவர்களை எப்போதுமே சமூகரீதியில் தள்ளியே வைத்திருந்தனர். முதன்முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கம் இந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தது. இலங்கைத் தமிழர்களின் மேல்மட்டத்தைச் சேர்ந்த சில பிரிவினர் இந்தியத் தமிழர்கள் எதிர்காலத்தில் தம்மை அச்சுறுத்தக்கூடிய சக்தியாகத் திகழக்கூடும் என்று கருதி, அவர்களின் வாக்குரிமையைப் பறித்ததற்கு ஆதரவாகவும் நடந்து கொண்டனர். மிகவும் மிதமான அல்லது தாராளவாதத் தமிழ் அரசியல்வாதிகள் தோட்டத் தொழிலாளர்களின் இந்த மோசமான நிலையைக் கண்டு கொள்ளாமலே இருந்துவிட்டனர். பிரச்சார யுத்தத்திற்கு தேவையானபொழுது மட்டும் அவர்களின் பிரச்சினைகளை அவ்வப்போது எடுத்துக் கொண்டனர். பின்னால் போராளிகள் இயக்கங்கள் தேசியப் போர்வையைத் தரித்துத் திரிந்த போதிலும் இந்த நிலைமையே தொடர்ந்தது. 62.6 சிங்கள மேலாதிக்கவாதமும் இலங்கை, இந்திய உறவுகளும்:
ஆதிக்கப்பிரயோகமா? சகஜீவனமா?
நாம் முன்னர் பார்த்தது போல், சிங்கள மேலாதிக்கவாதம் என்பது அடிப்படையில் இந்திய எதிர்ப்பாகவே இருந்தது. இந்தக்காரணிகளால் இந்தியாவின் ஆதிக்க எல்லையின் விளிம்பிலேயே இலங்கை எப்போதும் தன்னை வைத்துக் கொண்டிருந்தது. அத்துடன் இந்தியாவின் அதிகார எல்லைக்கு வெளியே, குறிப்பாக கைத்தொழில் வளர்ச்சி கண்ட மேற்கு நாடுகளுடனும் சீனாவுடனும் சிங்கள ஆளும் வர்க்கம் தனது உறவுகளை வளர்த்துச் செல்வதில் முனைந்தது.
எனினும் இந்த உறவுகள் அனைத்தும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை. 1977ம் ஆண்டு வரை ஆட்சிக்கு வந்த சகல இலங்கை அரசியல் கட்சிகளும் இந்தியாவின் அபிலாஷைகளைத் தந்திரமாகப்புரிந்து கொண்டு ஒரு மாதிரி சகஜீவனம் நடத்திக் கொண்டு வந்துள்ளன. உற்றுநோக்கினால், இந்தியாவும் தென்முனையில் இருந்த சிறிய தேசமான இலங்கையின் மீது தனது செல்வாக்கைத் திணிக்கவும் விரும்பியிருக்கவில்லை. இந்தியா இங்கு தனது செல்வாக்கைச் சற்று வன்மையாகப் பிரயோகிக்க வேண்டுமென்றால் அதற்கு பின்வரும் இரண்டு காரணங்களில் ஏதாவது ஒன்றுதான் அடிப்படையாக இருக்க முடியும். ஒன்று, தனது கேந்திரரீதியான பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுவது, மற்றது அதன் வளர்ந்து செல்லும் பொருளாதாரத் தேவை தொடர்பானது.
இந்தியாவின் சில சொந்தக்கணிணோட்டங்களும் இந்தியா இலங்கை மீது ஆக்கிரமிப்பு ரீதியிலான செல்வாக்கைச் செலுத்துவதை மட்டுப்படுத்தியிருக்கக்கூடும். இந்தியாவின் ஐந்தாம் படையாகச் சிங்களவர்களால் கருதப்படும் இலங்கையில் உள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் மோசமான நிலைமை கண்முன் நிற்கிறது. சிங்கள இனவாதக் கட்சிகள் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவிற்கு நாடுகடத்த விரும்பியபோது இந்திய அரசாங்கம் எந்தத் தயக்கமும் காட்டாமல் பூரீமாவோ

Page 231
426
சாஸ்திரி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்த யூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தோட்டத்தொழிலாளர்களை நாடுகடத்தியது. இது மிகப்பலரின் விருப்பத்துக்கு மாறாக, அச்சமூகத்தையே சிதறடித்து கடைசியில் குடும்பங்களையுமே பிரித்துச் சிதறடித்தது. இந்தியா இலங்கையில் கால் பதிக்க இந்தத் தொழிலாளர்களைப் பாவிக்கும் என்ற சிங்களவரின் கணிணோட்டம் தவறாகிக் போனது. ஏனெனில், இந்தத் தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் தான், வருங்காலத்தில் ஒன்றும் ஆளக்கூடியவர்கள் அல்ல என்ற உண்மையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருந்தது.
62.7 சிங்களத் தேசியவாதமும் இலங்கை அரசாங்கங்களும்
1958ல் எஸ்.டபிள்யுஆர்டியணிடாரநாயக்கவின் யூரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு சிங்களவர் ஆதிபத்தியம் என்பது தான் அடித்தளமாக இருந்தது. ஆனால் பொருளாதார ரீதியாக அரசு முதலாளித்துவ அமைப்பையும் சமூக நலக் கொள்கையையும் சீர்திருத்தக் கொள்கையையும் பிரகடனம் செய்தது. இத்திட்டங்கள் சில சமூக சமத்துவக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தபோதும் சிங்கள மேலாதிக்கவாதப்போக்கினால் தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர். ஆதிக்க வெறி பிடித்த அரசாங்கங்கள் வழங்கக்கூடியதில் மிகத்தாராளமானதும் அறிவுபூர்வமானதுமான தீர்வுகள் அடங்கிய பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டாலும் பெளத்த குருமாரின் இரகசிய ஒப்புதலுடன் ஐக்கிய தேசியக்கட்சி காட்டிய எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தம் கைவிடப்பட நேர்ந்தது. சிங்கள, தமிழ் சமூகங்களுக்கிடையிலான உறவுகள் சீரழிந்து போவதற்கான நிலைமை ஆரம்பமாகி விட்டது.
சிற் சில மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்தவரை ஒரே மாதிரியே இருந்தது. ஆனால் சிங்கள மேலாதிக்கவாதமே ஆதிக்கம் வகிக்கும் கருத்தியலாக தமிழர்க்கு எதிரான ஒடுக்கு முறையைத் தொடர்ந்தவண்ணம் இருந்தது. திறந்த சந்தை என்னும் பொருளாதாரத்திட்டக் கொள்கையின் அடிப்படையில் 1977ல் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிப்டம் ஏறியபோது பொருளாதார அமைப்பில் பாரிய மாற்றம் ஏற்பட்டதோடு அரசியல் சிந்தனையிலும் மாறுதல் நிகழ்ந்தது. திருமதியண்டாரநாயக்கவின் சமூகநல முதலாளித்துவம் பிரதிபலித்த பொருளாதாரத் தேக்கம், கியூ வரிசைகள், வேலையின்மை போன்ற சீரழிவுகளுக்கு மாற்றான சர்வரோக நிவாரணியாக புதிய பொருளாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அறிக்கையானது தனது திறந்த முதலாளித்துவ பொருளாதாரத் திட்டங்களுடன் தேசியப் பிரச்சினையைப் பொறுத்தவரை சமரசமான குரலை எழுப்பியிருந்தாலும் அதன் அரசியல் இருப்பு என்பது பெளத்த சிங்கள் மேலாதிக்க வாதத்தை ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாகக் கொண்ட அடித்தளத்தைச் சார்ந்து தான் அமைந்திருந்தது. தேர்தல் காலத்தின் போது முக்கியமாகத் தெரிந்த பொருளாதார அக்கறைகள் உள்ளுறைவான கருத்தியல்களை மூடி மறைத்து விட்டது போலத் தெரிந்தாலும், செயலற்றதாகிவிட்டது போலிருந்த ஆதிக்க வெறியென்பது 1977ல் நடைபெற்ற இனக்கலவரங்களின் போது சீறிப்பாய்ந்தது.

427.
தமிழ்த் தேசியவாதிகளைத் தள்ளி ஒதுக்கியமையும் அதிகரித்துக்கொண்டு போன இனஒடுக்குதலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையான ஒடுக்குமுறைகளும் மலரப்போகும் ஆயுதப் போராட்டத்துக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது. அழுங்குப் பேர்வழியும் அமெரிக்க ஆதரவாளருமான ஜேஆர். மேற்கு நோக்கிய பொருளாதாரத்திட்டங்களை வகுத்துக் கொண்டதோடு அவர்களுடன் கூட்டுகளையும் ஏற்படுத்திக்கொண்டார். தமிழ்த் தாக்குதல் போராட்டங்களை அடக்கி நசுக்க மேற்கு நாடுகளின் உதவியையும் நாடினார். அமெரிக்காவின் நல்லெண்ணங்கொண்ட அலுவலர்கள் இராணுவ ஆலோசகராக இஸ்ரேலை இலங்கைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அமெரிக்கப் பிரச்சாரத்தைப்பரப்ப சிலாபத்தில் "வொய்ஸ் ஒப் அமெரிக்கா" வானொலித் தளமும் நிறுவப்பட்டது. அமெரிக்கக் கப்பலுக்கு எரிசக்தி வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு திருகோணமலைத்துறைமுகம் அவர்களுக்குத் திறந்துவிடப்பட்டது. வேறும் பாரதூரமான திட்டங்களையும் அரசு வைத்திருப்பதாக வதந்திகள் வெளிவந்தன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் வெளிப்படையாகவே தங்கள் நலன்களுக்கு நாசந்தேடும் முயற்சிகளாகவே இந்தியா நோக்கியது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இலங்கையைத் தங்களின் உறுதியான நண்பனாகக் கருதின. சோவியத் யூனியனுடன் இந்திய உறவுகள் நெருக்கமாகி வலுப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், பிராந்திய வல்லரசாக இந்தியா வளர்ந்து கொண்டிருப்பதை ஒரு நிலையில் தடுத்து நிறுத்தும் வழியாக அவர்கள் இலங்கையை நோக்கினர். கேந்திர முக்கியத்துவங்கொண்ட திருகோணமலை இயற்கைத் துறைமுகம் வல்லரசுகளின் கணிகளை உறுத்தியது.
628 1983 - ஒரு திருப்புமுனை
1983ம் ஆண்டு உள்ளூர் சக்திகளைப் பொறுத்தும் பிராந்திய அளவிலான சக்திகளைப் பொறுத்தும்-சிங்கள இனவாத அரசு, தமிழ்ப் போராளிகள், இந்தியாவின் நலன்கள், புரட்சிகர அரசியல், இரானுவமயப்போக்கு அனைத்தையும் பொறுத்தும் ஒரு முக்கிய காலக்கோடாகவே அமைகிறது. ஜூன் 83ன் காடைக்கும்பலின் வன்முறை தளம்பிக்கொண்டிருந்த சமநிலையை உடைத்தெறிந்தது. முரண்பாடு கொண்ட பல சக்திகள் ஒன்றுக்கொன்று மோதியும் போராடியும் வெடித்தும் வெளிவர ஆரம்பித்தன. இதுவரவிருந்த, 1987ன் அக்டோபர் யுத்தத்திற்கான மாபெரும் இயங்குதளத்தை அமைத்துக் கொடுத்தது. அழிவும் குழப்பமும் அதன்பாட்டில் எல்லாம் இயற்கை மாதிரி நடந்து கொண்டிருந்தது. தமிழருக்கு எதிராக அரசாங்கமே முன்நின்று நடத்திய ஜூலை 83ன் காடையர் வன்முறையின் போது இந்தியா மனிதாபிமான" அடிப்படையில் குரல் கொடுத்தது. தமிழர்களின் இலட்சியங்களை இந்தியா ஆதரிப்பது குறித்து எப்போதும் அஞ்சிக்கொண்டிருந்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு இந்த சமிக்ஞைகள் பயப்பிராந்தியையே அளித்தன. பெருவாரியான பத்திரிகைகளும் பெளத்த சிங்கள அமைப்புகளும் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தூபமிட்டு வளர்த்தன.

Page 232
428
தமிழர்களின் அபிலாஷைகளைத் தனது சொந்த நலன்களுக்காக உபயோகித்ததன் மூலம் இந்தியா கணிசமான அனுகூலங்களைப் பெற முடிந்தது. இந்திய அரசாங்கமானது தனது கேந்திர முக்கியம் வாய்ந்த நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இலங்கையின் நடவடிக்கைகளில் இருந்து எழுவதைத் தடுப்பதற்கான வழிமுறையாக, இலங்கை அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதற்கு ஆயுதந் தாங்கிய தமிழ் விடுதலைப் போராட்ட இயக்கங்களை சிறந்த சாதனமாகக் கருதியது. ஆயுதந்தாங்கிய தமிழ்க் குழுக்களுக்கு இராணுவரீதியில் இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் இத்தீர்மானம் என்றுமே வெளிப்படையாக ஒத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும் இந்தியாவில் இந்த ஆயுதக்குழுக்களுக்கான பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டன. இருந்தாலும் தமிழர்களின் பாராளுமன்றக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே இந்தியா தனது அரசியல் ஆதரவைத் தெரிவித்தது.
இதற்கிடையில் லண்டனிலும் 'நியூயோர்க்கிலும் பொஸ்டனிலும் வாழ்ந்த புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வரவேற்பறைகளில் இந்திய உதவி பற்றியே பேச்சாக இருந்தது. இந்தியா இராணுவரீதியாக உதவி வழங்க முன்வந்தமையானது புலம்பெயர்ந்த தமிழ்ச்சமுதாயத்தின் மத்தியில் ஈழத்தமிழருக்கு தனியரசு என்பது வரலாற்றுச்சாத்தியப்பாடு தான் என்றும் இது போற்றப்படத்தக்க இலட்சியமே என்பதிலும் பெரும் நம்பிக்கையை ஊட்டியது. இவர்கள் தொலைதுாரங்களில் இருந்தாலும் கூட எதிர்காலத்திற்காகத் தாங்கள் எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். உதவிகள் என்றுமே தயார் நிலையில் இருந்தமை தமிழீழ இலட்சியத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. ஆயுதக்குழுக்களுக்கு நிதி வழங்குவதற்காக சிற்றுணர்டி நிகழ்ச்சிகளும் இராப்போசனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இயக்கத்திற்காக நிதி சேகரித்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தலைவர்கள் ஆனார்கள். சகல ஆயுதக்குழுக்களையும் சார்ந்த முன்னணி அரசியல் பிரமுகர்கள் அரசியல் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர். ஆயுதக்குழுக்கள் நிதிர்தியில் பலம் பெற்றிருந்ததுடன் அரசியல் ரீதியிலும் முக்கியம் வாய்ந்தவையாக மாறின. வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழ்ப்பெருந்தலைகள் இந்திரா காந்தியைச் சந்தித்துப் பேச புதுடில்லிக்கும் சென்னைக்குமாகப் பறந்து கொண்டிருந்தனர். பிரபாகரனுடனும் உமா மகேஸ்வரனுடனும் தனித்தனி அறைகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இவர்கள் இருவரையும் ஒன்றாய் ஒரு அறையில் வைத்துப் பேசிக் கொள்ள முடியவில்லையே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்களே தவிர அதற்காக எதுவும் கலக்கம் கொள்ளவில்லை. ஈழத்தமிழரின் மேடைப்பிரசங்கிகள் தமிழ்நாட்டில் வலம் வந்தனர். அமெரிக்காவில் குடியேறிய தமிழ் டாக்டர் ஒருவர் அவரே வடிவமைத்த தமிழ்ஈழக் கொடியுடன் தமிழ் ஈழத் தேசிய கீதங்களைக்கொண்ட இசைத்தட்டு ஒன்றையும் பதிவுசெய்து கொண்டு வந்திருந்தார். இந்தியா உதவி வழங்கியமையானது திடீரென்று ஆட்களைத்திரட்ட உதவியதுடன் சகல குழுக்களினதும் எண்ணிக்கை பலத்தையும் பெருக்கியது. அளவில் சிறிதாயும் வெகு ஆரம்பநிலையிலும் காணப்பட்ட ஆயுதக்குழுக்களின் அரசியல், இராணுவ அமைப்புக்களை

429
இவை இயல்பிற்கு மீறி வீங்க வைத்திருந்தது. இந்திய இராணுவத்தின் பெரும் உதவி அரசியல் கருத்துகளில் மட்டுமல்ல, போராட்டத்தின் வர்க்கக் குணாம்சத்தையும் பெருமளவில் மாற்றிவிட்டதென்பது இப்போது மிகவும் உறுதியாகிவிட்டிருந்தது. 83ம் ஆண்டுக் கலவரத்தையடுத்தும், இந்திய உதவி என்பதற்கப்புறமும் தான் மத்தியவர்க்க இளைஞர்கள் மத்தியில் ஆயுதம்
மத்தியதரவர்க்கத்தினரதும், தோரணையான பேச்சுக்கள் அவர்களின் பிரக்ஞையிலிருந்துமே எழுந்தபோதும், தலைமறைவு வாழ்க்கையின் கஷ்டங்களும், பொலிஸின் பெருங்கெடுபிடிகளும் ஆரம்ப நாட்களில் இந்த மத்தியதர இளைஞர்கள் மத்தியில் அத்துணை அளவு ஈடுபாட்டைக் கொணிடுவரவில்லை.
1983ம் ஆண்டிற்கு முன்னர் இந்தக் குழுக்களில் சாதாரண நிலைகளில் இருந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த இளைஞர்களாகவே இருந்தனர். 1983ன் கொடூரமான காடையர் வன்முறையும், இதனால் பெருவாரியான மக்களுற்ற வேதனையும், இந்திய உதவியும் சமன்பாட்டையே தலைகீழாக்கியது. இதெல்லாம் சேர்ந்து ஆயுத நடவடிக்கையையே சகல குழுக்களினதும், பொதுவாக சமூகத்தினதும் போராட்டத்தினது முக்கியகுறியாக மாற்றியது. சகல மக்கள் போராட்டங்களிலும், மிகவும் ஆதாரமான அனுபவமாக விளங்கிய இராணுவ நடவடிக்கைக்கான அரசியல் பொறுப்பு என்பது இந்தப் போராட்டத்தில் இல்லாமல் பேர்ய்விட்டது. விடுதலைப் போராட்டம்தான் ஆயுத நடவடிக்கை என்றாகிவிட்டது. சமூக மட்டத்திலும் இயக்கங்களுக்குள்ளும் அரசியல் என்பது மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இந்தியாவின் நலன்களைப் பொறுத்தவரை இத்தகைய அரசியல் நோஞ்சான் தனம் கொணிட அமைப்புக்களை விட வேறு எந்தவிதத்தாலும் இலங்கையை நிலைகுலையச் செய்ய முடியாது என்று அவர்கள் கருதினர். இந்த இயக்கங்களுக்கான உதவியை இந்தியா றோ(RAW)-ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு என்ற தனது உளவுத்துறை ஸ்தாபனத்தின் மூலமே மேற்கொண்டு வந்தது. இந்த உதவி முக்கியமாக இராணுவப்பயிற்சி என்ற வடிவில் இருந்தது. இந்த இந்திய உளவுத்துறையின் நடவடிக்கைகளைப் பற்றிய நடைமுறை அனுபவங்களைப் பரிசீலனை செய்தால் இந்திய அரசிற்கும் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இடையே அரசியல் சிந்தனைகளில் ஒப்புமை இருந்தது நன்கு தெரியவரும்.
6.2.9 இந்திய உளவுத்துறையும் தமிழ் விடுதலை இயக்கங்களும்
இந்திய உளவுத் துறையால் ஆயுதப் பயிற் சிக்காக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு டெலோ ஆக இருந்தது. திட்டவட்டமான அமைப்பு ரீதியான அடித்தளமோ அல்லது கோட்பாட்டுத் தெளிவோ இல்லாத நிலையில் மிகச் சிலரையே உள்ளடக்கியதாய் டெலோ அப்போது இயங்கி வந்தது. இந்தியா பயிற்சி வழங்கிய பின்பு டெலோ முன்னணி ஆயுதக்குழுவாக மாறியது. தமிழீழத்தில் புதிதாக ஆள்திரட்டும் வேலைகள் பெருமளவில் நடைபெற ஆரம்பித்தது. பயிற்சி ஆரம்பமானதும் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக டெலோ துணிகரமான, வெற்றிகரமான ஆயுதத்தாக்குதலை மேற்கொண்டது.

Page 233
430
இந்தியா வழங்கிய இராணுவப்பயிற்சியைப் பெற்றுக்கொள்வதில் இக்கட்டத்தில் போட்டா போட்டிகள் துரிதமுற்றன. பல்வேறு குழுக்களிலிருந்து ஆக ஐந்து போராளிக்குழுக்களே இந்திய உளவுத்துறையால் தெரிவு செய்யப்பட்டு வெவ்வேறு ஒழுங்குகளில் அவர்களுக்குத் தனித்தனியே பயிற்சி வழங்கப்பட்டது. பல்வேறு ஆயுத நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழீழ லட்சியத்திற்காகத் தாமே அரிய அர்ப்பணிப்புகளை மேற்கொண்டிருப்பதாயும், தங்களினி இலட்சியத்திற்காக தாமே பெரும் கஷடங்களை எதிர்கொண்டுள்ளதாயும் எனவே இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்க தமக்கே தார்மீக உரிமை உணர்டு என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் எப்போதுமே கருதி வந்துள்ளனர். இதனைவிட இவர்கள் கொண்டிருந்த குறுகிய தேசியவாதக் கருத்தியலானது வேறு எந்த விடுதலை இயக்கங்கள் செயற்படுவதையும் இவர்களை ஏற்றுக்கொள்ளவிடவில்லை. தமிழீழ இலட்சியத்திற்காக மற்ற விடுதலை இயக்கங்களும் ஆற்றியுள்ள வரலாற்று ரீதியான பங்களிப்பை விடுதலைப்புலிகள் தாம் ஒரு குழு என்ற வகையில் நிராகரித்தே வந்துள்ளனர். இந்தியா வழங்கும் உதவியைப் பெறத் தாங்கள் மட்டுமே தனித்துத் தெரிவு செய்யப்படாமல் போனதும் இவர்கள் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே உணர்ந்தனர். தமக்குப் போட்டியாகவிருந்த பிற விடுதலை இயக்கங்களை பின்னாளில் நிர்மூலமாக அழித்துவிடும் முடிவை அவர்கள் மேற்கொண்டமைக்கு வித்திட்ட பல காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இருந்தபோதிலும் தாம் கொண்டிருந்த கசப்புணர்வால் இந்திய உளவுத் துறையுடனோ இந்தியாவுடனோ தாம் கொண்டிருந்த உறவுகளை விடுதலைப்புலிகள் குலைத்துக்கொள்ள விரும்பவில்லை. மற்ற இயக்கங்களைப் போலவே தங்களுக்கும் இராணுவ உதவிகள் வழங்குமாறு விடுதலைப்புலிகளும் மிகுந்த சிரதி தையோடு வேணடிக் கொணடிருநீதனர். மேலும் விடுதலைப்புலிகளும் மற்ற இயக்கங்களும் தமிழ்நாட்டு அரசியலில் தமது நோக்கங்களையும் புகுத்தி அவற்றிற்கு ஆதரவும் தெரிவிக்க ஆரம்பித்தனர். இயக்கங்களின் உட்சண்டைகள் வெளியில் தெரியும் வரை சகல இயக்கங்களும் "புலிகள்" என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்பட்டனர். ஆனால் புலிகளின் கவர்ச்சியான-வீரதீர சாகஸங்கள்தான் தமிழக மக்களை வெகுவாகக் கவர்ந்தது எனலாம்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவவாதப் போக்கை விமர்சித்த அளவில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற இடது சார்புடைய இயக்கங்கள் இந்திய இராணுவப்பயிற்சியை மிகுந்த எச்சரிக்கையுடனேயே அணுகியிருக்க வேண்டும் என்றே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யதார்த்தத்தில் இராணுவ மற்றும் ஆயுத நடவடிக்கைகளில் தான் முழுக்கவனத்தையும் குவித்தாக வேண்டிய சூழ்நிலையே காணப்பட்டது. இச்சூழலின் தாக்கத்திலிருந்து இந்த இயக்கங்களும் விடுபட்டுக்கொள்ள முடியாது போய்விட்டது. இந்த இராணுவ முனைப்பை நோக்கிய போக்கிற்கு எதிராக இயங்குவதற்கு தமக்கென்ற சுயமான திறனோடு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களும் இவர்களிடம் இருக்கவில்லை. இந்திய யதார்த்தத்தினையும், இந்திய உதவியின் நன்மை, தீமைகளைக் கணிப்பிடவும் கூடிய ஆழ்ந்த தத்துவார்த்தக் கண்ணோட்டமும் இவர்களிடம் காணப்படவில்லை. இதனால்

431
மற்றவர்களைப் போலவே இவர்களும் இநீதியதி திட்டததிற்கு முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விட்டனர். இராணுவ உதவியைப் பெற்றுக் கொண்டதன்றி, இந்தியாவின் மேலாதிக்கத்திற்கு விட்டுக்கொடுத்துவிடாமல் தங்கள் செயற்பாடுகள் அனைத்தையும் தங்களது அதிகாரத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த அமைப்போ, அரசியல் கோட்பாடோ, மக்களின் பரந்த ஆதரவோ இல்லாமை தான் இவர்களின் பெருந்தவறாகும். இதனால் மெதுவாக ஆனால் சீராக இந்தியாவிடம் சரணாகதி அடைவதுதான் அவர்களின் தலைவிதியாகியது.
இயக்கங்களில் இந்திய உளவுத்துறையின் ஊடுருவலையும் செல்வாக்கினையும் நாம் ஆராய்ந்த போது ஒரு அம்சம் மிகத்தெளிவாயிருந்தது. சகல இயக்கங்களிலும் அதன் செல்வாக்கு பாரதூரமாகப் படர்ந்து பரவியிருந்தது. ஆனால் இந்த ஊடுருவலின் தீவிரங்கள் வேறுபட்டிருந்தன. டெலோ முற்று முழுவதுமாக ஊடுருவப்பட்டிருந்தது. மற்றவர்கள் இந்த இரகசிய உளவுப் படையிலிருந்து கொஞ்சம் தள்ளி நிற்கவே விரும்பியிருந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் என்பன அதனுடன் தெளிவற்ற உறவையே வைத்திருந்தனர். இந்த ஐந்து குழுக்களிலும் இந்திய உளவுத்துறையின் செல்வாக்கிற்கு விடுதலைப்புலிகள் தான் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாக அமைந்தனர். தமிழீழத்தில் பரந்த தேசிய இயக்கத்தின் அரசியல் வரலாற்றுடன் இணைந்து உருவாகியிருந்த புலிகள் தங்கள் இயக்கத்தின் இலட்சியத்திற்காக” அதிலும் விசேஷமாக தங்கள் தலைவருக்காக கண்மூடித்தனமான வெறியுடன் தங்களையே அர்ப்பணிக்கத்தயாரான-மிகவும் இறுக்கமான-மையப்படுத்தப்பட்ட இராணுவ அமைப்பொன்றினை ஏற்கனவே ஸ்தாபித்திருந்தனர். எனவே விடுதலைப்புலிகள் அமைப்பு பிற்போக்கானதும் ஒடுக்குமுறை அமைப்பாகவும் இருந்தபோதும் இந்திய உளவுத்துறையினால் அதற்குள் பூரணமாக ஊடுருவவோ அதன் அமைப்பை சீர்குலைக்கவோ முடியாமல் போய்விட்டது.
இந்திய உளவுத்துறை ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியான ஒழுங்குகளுடனும் தனித்தனிக் கட்டுத்திட்டங்களுடனும் வெவ்வேறு இடங்களில் பயிற்சிகளை வழங்கியது. இயக்கங்களுக்கிடையிலான பகைமையை இது தீவிரமாக்கியது மட்டுமல்ல, பயிற்றப்பட்டவர்கள் பலவாறாகச் சிதறிக்கிடந்தமையினால் ஒரு இயக்கம் மற்ற இயக்கத்தை விட முன்னேறிச் சென்று விடாதபடிக்கும் இந்திய உளவுத்துறை பார்த்துக் கொண்டது. இதில் அபாயகரமானதும் துக் ககரமானதுமான விஷயம் யாதெனில் குழுக்களுக்கிடையிலான பகைமையுணர்வைப் பாவித்து ஒரு குழுவிடமிருந்து மற்றக்குழுக்களைப்பற்றி இந்திய உளவுத்துறை தனக்கு வசதியான தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டதுதான். அதேசமயத்தில் எந்த இயக்கமும் வேறு எங்கிலும் உள்ள விடுதலைப்போராட்டங்களுடனோ அல்லது வேறு நாடுகளுடனோ உறுதியான தொடர்புகள் எதனையும் ஸ்தாபித்துக் கொண்டுவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் இந்தியா குறியாக இருந்தது.
இந்திய உளவுத்துறையும் இந்தியாவும் ஆயுதந்தாங்கிய தமிழ்க் குழுக்களின் வளர்ச்சியை விரும்பியிருந்தாலும் எந்த குழுவும் மற்றைய குழுவைவிடப் பலம் பெற்றுப்போய் இறுதியில் இந்தியாவுக்கோ இலங்கைக்கோ ஒரு அச்சுறுத்தலாக அமைந்து விடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக

Page 234
432
இருந்தனர் என்ற முடிவிற்கு மேற்கூறிய அவதானங்களிலிருந்து நாம் வரமுடியும். இயக்கங்களிலேயே மிகவும் அரசியல் சாதுரியமற்றிருந்த டெலோவிற்குள் நன்கு ஊடுருவி அவர்களைத் தமது ஏஜெண்டாக பாவித்துக் கொண்டனர். ஆயுத நடவடிக்கைகளில் இந்திய உளவுத்துறை அவர்களுக்கு வழங்கிய தாராளமான உதவிகள் அவர்களது உட்குழுப்போட்டாபோட்டிகளை சமநிலைக்கு கொண்டுவந்ததுடன் அவர்களுக்கிருந்த மக்கள் ஆதரவையும் சிதறடிக்கச் செய்திருந்தது.
போராளி இயக்கங்களைப் பாவித்து தமிழ்மக்களுக்கு சில அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன் இந்தியாவின் சில நலன்களுக்கு விட்டுத்தருமாறு இலங்கை அரசின் மீது நெருக்குதலைப் பிரயோகிப்பதுதான் இந்திய உளவுத்துறையின் நோக்கமாயிருந்தது என்பதை எமக்குக் கிடைக்கக்கூடிய எல்லா அறிக்கைகளும் சொல்லுகின்றன. தமிழருக்கு அதிகாரப்பரவலாக்கம் பெற்றுத்தரும் முயற்சியின் தோல்விகரமான முடிவிற்கு 1985ல் நடைபெற்ற திம்புப் பேச்சு வார்த்தைகளைக் குறிப்பிடலாம். இந்தப் பேச்சு வார்த்தைகளுக்கும் 1986 டிசெம்பர் 19ம் திகதித் தீர்மானங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கும் இந்திய உளவுத் துறை போராளிகளைத் தள்ளிக்கொண்டு போய்த்தான் சேர்ந்திருக்கிறது. ஆனால் அங்கே அவர்கள் வழங்க முன்வந்ததற்கும் போராளிகளின் இலட்சியமான தனித்தமிழ்ஈழத்திற்கும் காததுர இடைவெளி இருந்தது. தமிழ்மக்களின் சமூக, அரசியல் பிரக்ஞையில் இந்திய உளவுத்துறையின் ஈடுபாட்டின் தாக்கம் பாரதூரமான நாசத்திலேயே முடிந்தது.
62.10 இந்தியா வழங்கிய ஆயுதப் பயிற்சியும் தமிழர்களின்
தேசியப்போராட்டமும் இலங்கை அரசும் இலங்கையின் ஆயுதப்படைகளுடன் நின்று பிடிப்பதில் தமிழ் இயக்கங்கள் வெற்றிகரமாகச் செயற்பட இந்திய இராணுவப்பயிற்சி உதவி புரிந்திருக்கிறது. மறுபுறம், வடக்கில் தமது கட்டுப்பாட்டை இழந்து போன இலங்கை அரசு தேசிய விவாதத்திலிருந்தும் விலகிப்போய் தமிழர்களின் பிரதேச ஒருமைப்பாட்டை நிராகரித்து தமிழ் ஈழம் என்பது சாரமற்ற ஒரு கோரிக்கை என நிறுவ முனைந்தது. தமிழ் ஈழத்தின் மிகச்செழிப்பான பிராந்தியமான கிழக்கில் இலங்கை இப்போது தீவிர அரசு நடவடிக்கையில் இறங்கியது. இப்பிரதேசத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் சிங்களக் குடியேற்றங்களை இங்கு விஸ்தரித்துச் செல்ல முயன்றது. இந்தச் சிங்களக் குடியேற்ற வாசிகளிலிருந்து ஊர்காவல் படை போன்ற இராணுவத்திற்குத் துணையான அமைப்புகளை உருவாக்கி, இந்த ஊர்காவல்படையினர் அங்கு வாழ்ந்த தமிழருக்கு எதிரான வன்முறைகளில் இறங்கினர். இது விசேஷமாக திருகோணமலை மாவட்டத்தில் ஒரு எல்லை யுத்தம் போல வெடித்தது. இது கொடூரமாகத் தமிழர்கள் கொலை செய்யப்படுவதிலும், கிழக்கில் உயிரபாயம் மிகுந்த பயங்கரச்சூழலை உருவாக்குவதிலுமே முடிந்தது. இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ்மக்களுக்கு ஒழுங்கு முறையான பாதுகாப்பை வழங்கிக்கொள்ள முடியாத நிலையில் இதற்கு பதிலடி கொடுக்குமுகமாக குடியேற்றவாசிகள் மீது மட்டுமல்ல, தமிழ்ப்பிரதேசங்களுக்கு வெளியே இருந்த

433
பாரம்பரிய சிங்களக் கிராமங்களிலும் புலிகள் பதிற் தாக்குதலை மேற்கொண்டு பயங்கரக்கொலைச் சம்பவங்களிலும் தீவைப்பு போன்றவற்றிலும் ஈடுபட்டனர். 1983ற்கு முன்னர் விடுதலைப்புலிகள் கொண்டிருந்த நிதானமான கோஷங்கள் கைவிடப்பட்டு, இப்போது வெறும் உணர்ச்சிக் கோஷங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
மேலும் விடுதலை இயக்கங்களின் நவீனத்துவம் மிக்க ஆயுத நடவடிக்கைகள் இலங்கை அரசினை ஒரு நாசகரமான யுத்தத்தில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை கட்டிப்போட்டதோடல்லாமல் இலங்கைப் பொருளாதாரத்தையுமே முடக்கிவிட்டது.
62.11 தேசிய நல்லிணக்கம்: ஒரு பொய்த் தோற்றம்
ஒரு மூன்றாண்டுக்காலம் வடமாகாணத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிந்தது போன்ற அம்சங்களால் இந்தியா இராணுவரீதியில் உதவி வழங்கியதையடுத்த காலப்பகுதி தமிழ்த் தேசியப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் குறிப்பதாகப் பலர் கருதிக் கொணி டாலும் வெளித்தோற்றத்திற்குத் தெரிந்த இந்த முன்னேற்றமும் வெற்றியும் போராட்டத்தின் மற்ற அம்சங்களை மறைக்கவே செய்தது. தமிழர்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணம் நீண்ட காலமாக தமிழ்த்தேசிய அரங்கிற்கு வெளியிலேயே இருந்தது. மட்டக்களப்புத் தமிழர்களும் பிற கிழக்கு மாகாணத் தமிழர்களும் யாழ்ப்பாணம் ஆதிக்கம் செலுத்திய ஒரு போராட்டத்தில் பங்கு கொள்ளத் தயக்கம் காட்டியே வந்துள்ளனர்.
கிழக்கில இலங்கை இராணுவம் மென மேலும் தங்களை ஸ்திரப்படுத்திக் கொணி டு சென்றதும், சிங் களக் குடியேற்றம் அதிகரித்துக்கொணிடு போனதும் கிழக்கில் சூழ்நிலையை மிகுந்த சிக்கலுக்குள்ளாக்கியிருந்தது. வடக்கிலே ஓரளவு அமைதி நிலவிக் கொண்டிருந்த நிலையில், கிழக்கில் சிறுஅளவிலேயே இயங்கிக் கொண்டிருந்த முன்னணி இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் தமது தூரதிருஷ்டியற்ற நோக்கினால் இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படையினரதும் ஊர்காவல் படையினரதும் கொடூர அட்டூழியங்களுக்கு கிழக்கு மாகாணத் தமிழரைத் தாரை வர்த்துக் கொடுத்தது போலாகிவிட்டது. இது மேலும் பிரிவுகளை உருவாக்கி வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையில் நிலவிய தப்பபிப்பிராயங்களை மேலும் கூர்மைப்படுத்தியது, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தாங்கள் நடத்தப்படுவதும் கிழக்கின் மீதான வடக்கின் ஆதிக்கமும் அவர்களின் மத்தியில் சினத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. 1983ன் தமிழருக்கு எதிரான காடையர் வன்முறைக்குப் பிறகு இவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த ஒற்றுமையுணர்வைக் குலைத்தது.
தமிழீழ தேச நிர்மாணத்தின் மிகவும் அடிப்படையான குறிக்கோள்கள் மறுதலிக்கப்பட்ட நிலையில்தான் கிழக்கு முனையில் இந்தப் பிரச்சினைகள் கிளர்ந்தன. தமிழீழம் என்ற எண்ணக்கருவில் முஸ்லிம் மக்கள் அல்லது இஸ்லாமியத் தமிழர், மலையகத்தமிழர் ஆகிய இரு பெரும் தமிழ் பேகம் மக்களின் பிரச்சினை இருண்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளது. தமிழ்த் தேசியவாதம் என்பது இலங்கைத்தமிழரின் கருத்தியலாகவே இருந்தது.

Page 235
434 வரலாற்று ரீதியாக, முஸ்லிம் மக்களுடனோ மலையகத் தமிழருடனோ இது மிகவும் நொய்மையான தொடர்புகளையே கொண்டிருந்தது.
முஸ்லிம் மக்களின் பிரச்சினையில் தான் தமிழ்த்தேசிய வாதத்தின் முக்கிய பலவீனமான அம்சங்கள் தெட்டத்தெளிவாக வெளித்தெரிகிறது. முஸ்லிம் மக்கள் தமக்கென்ற தனித்துவமான பொருளாதார, சமூக-அரசியல் அமைப்பினையும் கலாச்சாரச் சிறப்பியல்புகளையும் கொண்ட சமூகமாவர். இவர்களில் பெரும்பான்மையினர் கிழக்கில் வாழ, எஞ்சியோர் போதுமான தொடர்புகளற்று இலங்கை எங்கிலும் பரவலாக நிலைகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருப்பது இஸ்லாமே தவிர தமிழ் அல்ல. சிங்களவர்களுடன் அவர்களுக்கேயுரிய வரலாற்று முரண்பாடுகளை முஸ்லிம் மக்கள் கொண்டிருந்ததுடன் தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தின் போதும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம் மக்களின் உரிமை பற்றி இயக்கங்களின் திட்டங்களும் கோஷங்களும் வெறும் பேச்சளவிலேயே இருந்ததே தவிர போராட்ட காலத்தில் அவர்களுடைய இலட்சியங்களை அடைவதற்கான திட்டவட்டமான திட்டங்கள் முனி வைக்கப்படவோ அல்லது அவர்களது தேவைகளையும் குறிக்கோள்களையும் அறிந்து அதை அடைவதற்கான வழிவகைகளைத் தேடும் முயற்சியோ மேற்கொள்ளப்படவில்லை. முஸ்லிம்களுக்காக தமிழர்கள் தயாரித்தளித்த திட்டம் தான் பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழர்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பெருமளவு முரணி பாடுகளும் தப்பபிப்பிராயங்களும் நிலவியே வருகின்றன. போராட்ட காலத்தின்போது இவை நேர்த்தியாகக் கையாளப்பட்டு, பொதுவான அடிப்படைகள் உருவாக்கப்பட்டு, அனைத்திலும் ஒத்திசைவு காண முயன்றிருக்கலாம். ஆனால் எங்களிடம் இருந்ததோ வெறும் அடையாளத்திற்கு ஆள் இருந்தால் சரி என்ற மனோபாவம்தானி , சில தெளிவற்ற கோஷங்கள் இயக்கங்களில் அடையாளத்திற்கு சில முஸ்லிம்களின் பிரசன்னம். இந்நிலையில் விசேஷமாக யாழ்ப்பாணத் தமிழரின் ஆதிபத்தியத் திணிப்பானது முரண்பாடுகளை மேலும் வளர்த்துக்கொண்டு செல்வதிலேயே முடிந்தது. இதனால் வடமுனையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம் என்பது ஒரு பொய்த் தோற்றமாகவே இருந்தது. உள்ளூரத் தேசத்தின் இதயபாகம் அரிப்புண்டு போய்க் கிடந்தது. பெரும்பாலோர் செயலற்று, தனிமைப்படுத்தப்பட்டு, எல்லாமே குழம்பிப்போன நிலையில் இருந்தனர். தமிழருக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையேயான பகைமை உணர்வை மேலும் வளர்த்துச்செல்ல இலங்கை அரசாங்கம் இச்சூழ்நிலையை வெற்றிகரமாகக் கையாண்டது. மோதல்களை உருவாக்குவதற்கு முஸ்லிம் இளைஞர்களின் சிறுபகுதியினருக்கு ஆயுதங்களையும் வழங்கியது.
பிராந்திய வாரியாக நாடுதான் பிளவுண்டு போயிருந்தது என்றில்லை. இயக்கங்களுக்கிடையேயான பகைமைகள் தீவிரமுற்று அது கடைசியில் எந்த விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் ஒப்புமை காண முடியாத அளவுக்கு விடுதலைப்புலிகள் ஒவ்வொரு குழுவாக எல்லா இயக்கங்களையும் ஈவிரக்கமின்றி நிர்மூலமாக்கி அழித்து ஒழிப்பதில்தான் போய் முடிந்தது. இதை அங்கீகரிக்க மறுக்கும் கூறுகள் தமிழ் சமூகத்தில் கிளைத்தன. விடுதலைப்புலிகளினதும் பிற முன்னணி இயக்கங்களினதும் பயங்கரவாதத்தால்

435 இவர்களின் மனக் குமுறல்களும் வெறுப்பும் உள்ளே கனன் று கொண்டிருந்தாலும் வெளியில் இவர்கள் ஆழ்ந்த மெளனிகளாக்கப்பட்டனர். நாம் எமது மண்ணில்தான் தோல்வியுற்றுக் கொண்டிருக்கிறோம் என்றில்லை. குழுவிற்குள்ளும் குழுக்களுக்கிடையேயும் சிங்களவர்களுக்கு எதிராகவும் கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே செல்ல சர்வதேச ரீதியில் எமக்கிருந்த ஆதரவும் சிறுகச் சிறுக பலமாக வலுவிழந்து கொண்டு போக ஆரம்பித்திருந்தது.
ஆயுத நடவடிக்கைகளையே தாரகமந்திரமாகக் கொண்டியங்கிய விடுதலைப்புலிகள், டெலோ போன்ற சகல இயக்கங்களிலும் இந்திய உதவியின் காரணமாக நாசகரமான ஒரு கேடு சம்பவித்திருந்தது.
இந்த இயக்கங்களின் இராணுவ யந்திரமானது அவர்களது அரசியல் அமைப்பைக் காட்டிலும் தாறுமாறான விகிதாசாரத்தில் வளர்ந்திருந்ததே இந்தக் கேடாகும். இந்த அமைப்புக்கள் மக்களில் தங்கியோ மக்களுடன் நெருக்கம் கொண்டோ திகழவில்லை. மக்களுக்குப் பொறுப்பானவர்கள் என்ற எண்ணம் இவர்களிடம் துளியும் இருந்ததில்லை. மக்களுக்குப்பதில் சொல்ல வேண்டும் என்ற தன்மை சிறிதும் காணப்படாத நிலைமையும் விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்கள் தமது தலைமைத்துவத்திற்காக கொடுரமான போராட்டங்களில் திளைத்தமைக்கும், புளொட், டெலோ போன்ற இயக்கங்கள் இயக்கங்களை விட்டுவிலகிச் சென்றவர்களை நஷ்டபயம் எதுவுமின்றி கொலை செய்தும் பெருமளவில் சித் திரவதைகளில் ஈடுபட்டமைக்கும் ஒரு காரணமாகும்.
விடுதலைப்புலிகள் மற்ற இயக்கங்களைத்தான் கொடுரமாக அழித்து ஒழித்தார்கள் என்றில்லை. மக்கள் மத்தியிலிருந்து தமக்கு எதிராக எழக்கூடிய எந்த மாறுபட்ட கருத்தையும் அடக்கினர். தங்கள் வழியில் மட்டுமே நின்றாக வேண்டும் என்று துப்பாக்கிகளின் அதிகாரத்தில் சகல மக்கள் அமைப்புகளும் பயங்கர அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்டன. இதன் பின்னர் மக்களின் தனிப்பட்ட சுய முயற்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்கள் அமைப்புக்களான அன்னையர் முன்னணி, தொழிற்சங்கங்கள், பிரஜைகள் குழு, ஆசிரியர் சங்கங்கள், உள்ளூர்ப் பத்திரிகைகள் அனைத்தும் துரிதமாக விடுதலைப்புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டன அல்லது அவர்களால் விழுங்கப்பட்டு விட்டன. விடுதலைப்புலிகள் மேலாதிக்கத்திற்கு வந்திருந்தாலும் இயல்பான-சகல கூறுகளும் ஒன்றிணைந்து வளர்ந்த வளர்ச்சியல்ல அது. பயங்கரவாதத்தால் மட்டுமே ஆதிக்கத்திற்கு வந்த அமைப்பு அது.
சகல இயக்கங்களுமே இந்தியாவைத் தாங்கள் பின் தளமாகவே பயன்படுத்துகிறோம் என்று கூறிக்கெ1ண்டாலும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட எந்தக் குழுவுமே இந்தியாவிலிருந்து அமைப்பு ரீதியாக உண்மையான சுயாதீனத்தோடு செயற்பட முனைந்ததில்லை. கொள்கை அடிப்படையில் இந்தியாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு, ஏதோ ஒரு குறுகிய வரம் பிற்குள் ளாயினும் மாற்று அமைப்புக் களை உருவாக கி. பொருளாதாரரீதியிலோ, சமூகரீதியிலோ, அல்லது அரசியலிலோ சுயசார்பினை அடைய மக்களை ஒன்று திரட்டுவதில் இவர்கள் யாருமே தீவிர அக்கறை காட்ட முன்வராமையே இதற்கு காரணமாகும். இந்தியாவையே அனைத்திற்கும்

Page 236
436 சார்ந்திருந்த இத்தன்மைதான் இந்தியா இலங்கை அரசுடன் அரசியல், ராஜதந்திர முஸ்தீபுகளில் இறங்கிய போது தமிழ்ப் போராளிக்குழுக்களை நயத்தாலும் பயத்தாலும் நிர்ப்பந்திப்பதற்கு வசதியாக இடங்கொடுத்தது. திம்புப் பேச்சுவார்த்தைகளிலிருந்து ஜூலை 29 சமாதான ஒப்பந்தம் வரை தமிழ் விடுதலை இயக்கங்களிடம் ஒருவித சுயாதீனமும் இருக்கவில்லை.
6.2.12 பேச்சு வார்த்தைகள்: கசக்கிறது!
தமிழ்ப் போராட்டக்குழுக்களின் வெற்றிக்காலமாகக் கூறப்படும் காலப்பகுதியில் தமிழ்ப் பிரதேசங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக சிங்களக் கிராமங்களில் நடத்தப்பட்ட ஆயுத நடவடிக்கை நிகழ்வுகளும் தூவப்பட்டேயுள்ளன. இது சிங்கள ஆதிக்க வெறியினை உண்டுபண்ணி, தெற்கின் அரசியல் அரங்கில் பிற்போக்குச்சக்திகளுக்கு பேருந்துதலை ஏற்படுத்திக்கொடுத்தது. ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக நாடு முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நடைபோட்டுச் சென்றிருந்தாலும் ஜே.வி.பி.யின் புத்தெழுச்சியும், மகாஜன எக்சத் பெரமுனவின் எழுச்சியும் பூரீ.ல.சு.கட்சியின் இனவெறிச்சாய்வும் குறுந் தேசியவாதம் எவ்வாறு தென்னிலங்கையில் பொருத்தமான அரசியல் கருத்தியலாக அமைந்தது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகும். ஜயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் அதிகரித்துக்கொண்டு சென்ற நவகாலனித்துவ ஊடுருவலும் மேலைநாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தன்மையும், சிங்கள மக்களின் சமூக அமைப்புகளும் சமூக உறவுகளும் சமூக விழுமியங்களும் சிதைந்து செல்லும் நிலைமை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு இட்டுச்சென்றது. இதுவும் விடுதலைப்புலிகளை முறியடிக்கத் திறமையில்லாத அரசாங்கத்தின் மீதான சிங்கள மக்களின் ஆத்திரமும் ஒன்றுசேர்ந்து குட்டியூர்ஷ்வாக்களின் தீவிரவாத எழுச்சிக்கு வழிவகுத்தது. குறுந்தேசியவாதம், மனோரதியக்கற்பனை, கடந்தகால வரலாற்றையும் மரபான நிலமானிய மதிப்பீடுகளையும் மகோன்னதப்படுத்துதல் என்பன இந்தப் புதிய தீவிரவாதத்தின் சாராம்சமாக இருந்தது. அண்மைக்காலங்களில் ஜனரஞ்சகத்தளத்தில் ஜேவிபி. பெற்றிருந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது புதிய வீரியத்துடன் எழுந்த குறுகிய தேசியவாதப் புத்தெழுச்சியையே சமிக்ஞை செய்கிறது.
இந்திய அரசாங்கத்தின் ஈடுபாட்டைச் சாத்தியமான முறையில் குறைத்து, சிங்கள, தமிழ் சமூகங்களின் தலைமைகள் இணைந்து காண்கின்ற அரசியல் தீர்வுகள்தான் இன்றைய தேசிய நெருக்கடிக்கான பகுத்தறிவு பூர்வமான அணுகுமுறையாக அமையும் என்பது தெளிவான உண்மை எனினும் அரசாங்கம் தானே ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருந்த தனது சொந்தக்கருத்தியல் பொறிக்குள் மாட்டிக்கொண்டிருந்தது. புலிகளுக்கு எதிராகத் தான் பலம் வாய்ந்த நிலையில் இருந்தால்தான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதைப் பற்றி அரசாங்கத்தால் யோசித்துப்பார்க்கக் கூடுமாக இருந்தது. இதனால் தான் இந்தியாவின் ஆணைக்கிணங்கவும் சர்வதேச சமூகத்தின் நெருக்குதலுக்காகவும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவுமே தோல்வியில் முடிந்தன. அரசாங்கமோ தனது இராணுவ ஆற்றலைத் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டிருந்தது.

437
இதையடுத்து முதல் நடவடிக்கையாக, வடக்கின் மீது தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட இலங்கை அரசு தனது முதல் தாக்குதலைத் தொடர்ந்தது. உட்கொலைகளினால் தமிழ்ப் பிரதேசங்களில் பாதுகாப்பு நிலை பெரிதும் பலவீனமுற்றிருந்தது. சண்டையை நின்று பிடித்துச் சமாளிக்க முடியாமல் முக்கிய எல்லைப்பிராந்தியங்களையும் கிழக்குடனான தரைவழித் தொடர்பைபும் இழந்த நிலையில் விடுதலைப்புலிகள் பின்வாங்க நேர்ந்தது. விடுதலைப்புலிகள் தமது பாதுகாப்புத்தளங்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தபோதும் ஓரளவு சுதந்திரமாக நடமாடித்திரிய முடிந்தாலும் முன்பு போல மிகத்தாராளமாக நடமாடித் திரிந்த சுதந்திரம் இப்போது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டு வலயம் ஆனையிறவுக்கு அப்பால் வடக்கே குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டது. இந்த வெற்றியானது இலங்கைப் பாதுகாப்புப்படைகளுக்கு உளவியல் ரீதியாக புதிய உந்துதலைக் கொடுத்தது. இந்தியாவின் டிசெம்பர் 19ம் திகதித் தீர்மானங்கள் ஆலோசனைக்காக மேசையில் விரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கமோ இராணுவத்தீர்வும், பலம் வாய்ந்த நிலையிலிருந்து கொண்டு பேச்சு வார்த்தை நடத்தும் நிலைமையும் சாத்தியம் என்ற நிலைமைக்கு முன்னேறியிருந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்னர் தாங்கள் எப்போதுமே பலம் வாய்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதையே என்றும் விரும்பியிருந்த புலிகளுக்கு இது ஒரு பெருத்த அடியாகவே இருந்தது. தமிழ் ஆதரவுத் தளங்களின் மீது இலங்கை அரசு தனது நெருக்குதலை இடையறாது தொடர்ந்து நடத்த ஆரம்பித்தது. வடபகுதி மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது. புலிகளின் முகாம்கள் என்று சொல்லிக்கொணிடு அந்த இடங்களில் எல்லாம் இருந்திருந்து ஆகாயமார்க்கமாக இலங்கை அரசு குணர்டுமாரி பொழிய ஆரம்பித்தமை ஒப்பரேஷன் லிபரேஷன் என்று கூறப்பட்ட இறுதித்தாக்குதலுக்கான பல்லவியாக அமைந்தது.
1987 ஏப்ரல் 21ம் திகதி கொழும்பின் வர்த்தக மையத்தில் நேரம் குறித்து வைக்கப்பட்ட குண்டு வெடித்த நேரத்தில் எல்லாம், யாழ் குடாநாட்டை வெற்றி கொள்வது என்பது அத்துணை அளவு ஊர்ஜிதமாகி இருந்தது. இந்த வெற்றியை கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த சிங்கள ஆதிக்க வெறிச்சக்திகள் வேண்டி நின்றன.
8.2.13 ஒப்பரேஷன் லிபரேஷன் அல்லது ஜூன் யுத்தம்
மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இலங்கை அரசுக்கு இது வெற்றியாகவே தோன்றியது. தமிழ் தேசியவாதத்தின் முன்னணிப் பிரதேசமாகவும் புலிகளின் பலமிக்க பிடியாகவும் இருந்த வடமராட்சியை இது நொறுக்கியிருந்தது. ஆனால் அந்த புத்தமும் அதை நடத்திய விதமும் உலகளவில் கிளர்ச்சியை உண்டுபண்ணியது. இந்நிலையில் தனது தார்மீகக் கடமை என்ற வகையில் இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கியது. நேரடிப்படையெடுப்பு போல எதுவுமில்லாமல் தனது பலத்தை மட்டுமே காட்டி மக்கள் செறிந்து வாழ்ந்த யாழ் நகர் மீதும் அதன் அயல் பிரதேசங்கள் மீதும் இலங்கை மேற்கொள்ளவிருந்த கடைசித் தாக்குதலை இந்தியா

Page 237
438
இடையில் தடுத்து நிறுத்தியது. இலங்கையின் நேசநாடுகள் பொருளாதாரத் தடையைக் கொண்டு வரப்போவதாக அச்சுறுத்தி, அரசியல் தீர்வை மேற்கொள்ளுமாறு வேண்டின. தமிழர் பக்கம் நின்று பார்த்தால், விடுதலைப்புலிகளும் தமிழ்த் தேசியப் போராட்டமும் இந்தவிதமான ஒரு பின்வாங்கிய நிலைமையில் எப்போதும் இருந்ததில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு வலயம் நறுக்கப்பட்டு யாழ் குடாநாட்டின் ஒரு மூலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
மற்ற பக்கத்தில், இந்தியாவுக்கு தனது நல்அலுவலர்களை இலங்கைக்கு நல்குவதற்கு இதனை விட பொருத்தமான சந்தர்ப்பம் ஒருபோதும் கிடைத்ததில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா தனது இறுதித்தீர்மானங்களை வழங்கியது. அதில் தனது கேந்திர தேவைகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டது மட்டுமன்றி, இலங்கையின் இறைமையை மீண்டும் வலியுறுத்தியும் இத்தீர்மானங்களை ஏற்கும்படி புலிகளையும் வலுவாகக் கட்டாயப்படுத்தியிருந்தது. இந்தியா பற்றி நிலவியிருந்த இந்திய விஸ்தரிப்புவாதம் என்ற பிம்பத்தை இது உலகளவில் நீக்கியதுடன், இந்தியாவை உன்னதமான ஒரு "சமாதானக் காவலன்" என்றும் இது சித்திரித்துக்காட்ட இது உதவியது. புத்தத்தில் சலித்துக் களைத்துப் போயிருந்த தமிழ் சமூகத்திற்கு சமாதானம் என்பது இனிமை மிக்க யதார்த்தமாகவே தோன்றியது.
8.2.14 சமாதான ஒப்பந்தம்
சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான போது தமிழர்கள் குதூகலமான ஆரவாரத்தில் திளைத்தனர். ஆனால் விடுதலைப்புலிகளால் இந்த ஒப்பந்தத்தை நியாயப்படுத்தி அதன் உறுப்பினர்களுக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் ஒப்பந்தத்தை ஏற்றாக வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.
தங்களைப் பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்து கொள்ளமுடியாத மிகக்கீழான கஷ்ட நிலைமையில் புலிகள் இருநீத போதுதாணி இத்தகைய நிலைப்பாட்டிற்கு அவர்கள் வரவேண்டியதாயிற்று. இந்தியாவுடனான உறவைக்கட்டி எழுப்புவது சம்பந்தமாக புலிகள் தப்புக்கணக்குப் போட்டு வைத்திருந்ததிலும் புலிகளின தலைமைப் பீடம் ஓரளவு தவறிழைத்திருக்கிறது. இப் பிராந்தியத்திலி இநீதியா கொணடிருந்த அரசியல அபிலாஷைகளானவை மேற்கைச் சார்ந்து நின்ற இலங்கையை நிலை குலையச் செய்வதற்கான ஏஜணடுகளை அது தேடத்துணடும் என்று புலிகள் ஊகித் திருந்தனர். இந்தியா இலங்கையில் நுழைவதற்கான வழியை தமிழி விடுதலைப் போராட்டமும் தங்கள் "இயக்கமும்" திறந்து வைத்துள்ளது என்றும் தமிழீழத் தனியரசு தொடர்ந்தும் இந்தியாவுடன் நல்லுறவு கொண்டு விளங்கும் என்றும் தென்னிலங்கையின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை உறுதிப்படுத்துமென்றும் புலிகள் பகிரங்கமாகவே அரசியல் மேடைகளில் பிரகடனம் செய்துவந்துள்ளனர். அப்போது தமிழ்ப்புத்திஜீவிகளிடையே குடிகொண்டிருந்த கருத்தோட்டத்தின்

439
அடிப்படையிலேயே புலிகளினி இக் கணிணோட்டமும் அமைந்திருந்தது. இத்தகைய கண்ணோட்டத்தோடு, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் தாங்கள் மதித்துவருவதாக இந்தியா தொடர்ந்து வலியுறுத்திக்கொணிடு வந்த தனி பின்னணியில் இருந்த யதார் தீதத்தை புலிகளால் கிரகித்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.
தங்களின் சொந்த நாட்டிற்குள்ளேயே இயங்கிக் கொண்டிருக்கும் தேசிய இயக்கங்களுக்கு உத்வேகம் கொடுப்பதாக அமைந்து விடும் என்ற அச்சத்தில் தான் மொழி வாரித் தமிழீழத் தனிஅரசிற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது என்றும் மேற்கத்தைய அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கண்ணோட்டத்தில் இது மிக முக்கியமான அம்சம்தான் என்பதை யாரும் மறுத்துரை செய்ய முடியாது. எனினும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரத் தேவைகளினதும் கேந்திரப் பாதுகாப்புத் தேவைகளினதும் அடிப்படையில் இதனை நுணுகி ஆராய்வது மிகவும் இன்றியமையாததாகும்.
இலங்கையின் படைபலப் பாதுகாப்பைப் பொறுத்தவரை அது மேற்கு நாடுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தமை இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கவல்லது என்று அது கருதியிருந்தாலும் இலங்கை அரசு கைக்கொண்டிருந்த தாராள பொருளாதாரக் கொள்கைகள் இந்திய மூலதன நலன்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது. நாம் முன்னரே, குறிப்பிட்டிருந்தது போல, இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சியானது வெளிநாடுகளில் குறிப்பாக தென் ஆசியப் பிராந்தியத்தில் புதிய சந்தைகளைத் தேடுவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது. ஜப்பானுடனும் மேற்கு நாடுகளுடனும் மற்றும் புதிதாக கைத்தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளுடனும் போட்டியிடுவதற்கு இந்தியா தனது தொழில்நுட்பங்களையும் முகாமைத்துவம் மற்றும் சந்தைப்படுத்தல் நுணுக்கங்களையும் நவீனப்படுதீதி மெருகேற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், டாட்டா, பிர்லா போன்ற இந்தியப் பெரும் முதலாளிகள் சர்வதேச அளவில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ் தரித்த 1து மட்டுமன்றி பல பணி னாட்டு நிறுவனங்களுடனும் கூட்டு ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே இலங்கையின் சுதந்திர வர்த்தக வலயத்திலும் இலங்கையின் வங்கித் துறையிலும் இந்தியா கணிசமான அளவில் முதலீடு செய்திருந்தது. இந்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது சீனாவுக்கு எப்படி ஹொங்ஹொங் அமைந்ததோ அதுபோல இந்தியாவுக்கு இலங்கையும் அமையப்போகிறது என்று கூறப்பட்ட ஆரூடத்திலும் உண்மை இல்லாமல் போகவில்லை. இந்தியாவின் பொருளாதார விரிவாக்கத்தையும் பாதுகாப்புத் தேவைகளையும் திருப்திப்படுத்தத்தக்க கொள்கைகளைக் கொண்ட ஸ்திரமான ஐக்கிய இலங்கையை அமைத்துக்கொள்வது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்தது. எனவேதான் சமாதான ஒப்பந்தத்தில் தேசியப்பிரச்சினையைப் பற்றிய மிக முக்கியமான அம்சங்கள் தெளிவற்றும் அவை பற்றிய பொதுவான குறிப்புகள் மட்டுமே கொண்டதாவும் அமைய, ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்த கடிதங்களிலும் அனுபவங்களிலும் இந்திய நலன்களைப் பற்றிய அம்சங்கள்

Page 238
440
நுணுக்க விபரங்களோடு மிகத்திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டிருந்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் சமாதான ஒப்பந்தமானது ஜே.ஆர்.ஜயவர்த்தனவிற்கு நல்லதொரு தீர்வை-குறைந்த பட்சம் சிங்கள ஆதிக்க வெறிப்பிடியினின்று தப்பித்துக் கொள்ளவும் அந்திய முதலீட்டுக்கு உந்துதலையும் பொருளாதாரத்திற்கு உண்மையான ஒரு முதலாளித்துவ உத்வேகத்தையும் வழங்கியிருக்கக்கூடும் என்று ஒருவர் எதிர்பார்ப்பது நியாயமானது தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இலங்கை அதன் கருத்தியலுக்கும் பொருளாதாரத்திற்குமிடையேயான முரண்பாடுகளினால் என்றுமே தொடர்ச்சியாகக் குழப்பத்தில் ஆழ்ந்து போயிருந்திருக்கிறது. அதனுடைய பொருளாதாரத் திட்டங்கள் முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டிருந்த போதும், அதன் அரசியல் ஜீவனம் தமிழ் எதிர்ப்பு, தீவிர இந்திய வெறுப்பு என்ற பிற்போக்குக் கருத்தியலையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. எனவே, தான் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் தென்னிலங்கையில் உள்ள ஜனரஞ்சக சக்திகள் "இலங்கை விற்கப்பட்டு விட்டதாக" கோஷம் எழுப்பின. ஐக்கிய தேசியக் கட்சி புத்தி பூர்வமான ஒரு தீர்வை நாடி, தேசியப்பிரச்சினை சமரசப்படுத்தப்படாவிடின் இந்தியாவினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி மக்களுக்கு விளக்கியிருந்திருந்தால் இந்தளவு பிரச்சினை எழுந்திருக்கமாட்டாது. ஆனால் சமரசம் காணிபதாயின் அதிகாரப் பரவலாக்கத்தையும், வட கிழக்குத் தமிழர்களுக்குச் சில அதிகாரங்களையும் நாட்டைக்கூறு போடாமல் தமிழ்ப் பாரம்பரியப் பிரதேசங்களின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் கூடிய ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டியிருந்தது. இது பெரும்பான்மைச் சிங்கள மக்களின் அச்சத்தைக் களைத்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கும் இடந்தந்து ஒரு பகுத்தறிவு பூர்வமான பூர்ஷ்வா தீர்வுக்காவது இட்டுச்சென்றிருக்கும். ஆனால் இலங்கை அரசின் பகுத்தறிவற்ற, இராணுவரீதியிலான அணுகுமுறையானது இந்தியாவிற்கு தோற்றத்தில் சமாதானபூர்வமாகத் தென்பட்டாலும் பலம்மிகுந்த உயர்ந்த ஸ்தானத்திலிருந்து செயற்பட இடத்தைக் கொடுத்தது. ஆக்கிரமிப்பு என்று சொல்ல முடியாதபடிக்கு இந்தியா இலங்கைக்குள் கால்பதித்துக் கொள்ள இது உதவியது. மறுபக்கத்தில் விடுதலைப்புலிகளின் தலைமையிலமைந்த தமிழ் தேசிய விடுதலைப்போராட்டம் உள்ளுக்குள்ளேயே இயக்கங்களை அழித தலி, பயங்கரவாதம் ஆகியவற்றால் தமிழிச் சமூகத்தை அந்நியப்படுத்திக் கூறு போட்டிருந்தது. இலகுவில் விடுவித்துக் கொள்ளாதபடிக்கு பூரீலங்கா அரசுடன் பிணைத்திருந்த தொடர்பிலிருந்து கூடுமானவரை தன்னிறைவு கொண்ட, சுயாதிக்கம் கொண்ட தமிழீழத்தனியரசை அமைப்பதற்கான அடிப்படைப் போராட்டத் தேவைகளைக் கருத்துருவாக்கி வெளிப்படுத்தலில் அது பெரிதும் தவறியிருந்தது. இந்தியாவின் உண்மையான அபிலாஷைகளையும் அது புரிந்து கொள்ளத்தவறியிருந்தது. இந்தியாவில் பூரணமாகத் தங்கியிருப்பதையும் அதற்குப் பணிந்து போவதையும் தவிர்த்துக்கொண்டு புவியியல்-அரசியல் யதார்த்தத்தை ஆராய்வதற்கான எந்தவித வழி முறைகளையும் அமைத்துக்கொள்ளாதது அதன் தோல்வியாக முடிந்தது. இந்தக்கடைசி நேரத்திலும் கூட, தமிழ் ஈழம் என்பது ஒரு

441
வெற்றுக் கோஷமாகி விட்ட அவலத்தை விடுதலைப்புலிகளால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. இது ஓரளவுக்கு அவர்களாலும்தான் நிகழ்ந்தது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பூரண இந்திய ஆதிக்கத்திலிருந்தும் இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்தும் தமிழ்த்தேசத்தை பாதுகாப்பதற்கான அறிவுபூர்வமான தீர்வை நோக்கிய பணியே நம்முன் இன்று நிற்கும் அவசரப்பணியாகும். இருபக்கங்களிலும் செயற்பட்ட குறுகிய தேசியவாத சக்திகளின் சகிப்பின்மை, விட்டுக்கொடுத்துப் போகத் தெரியாத தன்மை ஆகியனவே பிராந்திய வல்லரசின் நெளிவு சுழிவுகளுக்கு இலங்கையைச் சரணாகதியடையச் செய்தது.
6.2.15 இடதுசாரிகள்: சாத்தியமான ஒரு மாற்றுத்தானா?
இந்தக் குறுகிய தேசியவாதத்தை எதிர்க்கக்கூடிய ஒரு மூன்றாவது சக்தி சாத்தியமான மாற்றுத்தீர்வாக அமைய முடியாமல் போனது எமது கடைசியான ஆனால் குறைத்துக்கூறமுடியாத தோல்விகளில் ஒன்றாகும். இது இடதுசாரிகள் பற்றிய கட்டத்திற்கு நம்மைக் கொண்டு வருகிறது. தமிழ், சிங்கள சமூகங்களின் மத்தியில் அரசியல், வரலாற்று ரீதியாக முக்கிய சக்தியாக விளங்கிய இந்தச் சிறிய சக்தியின் வளர்ச்சியைப் பற்றி நாம் இதுவரை விபரிக்கவில்லை. இங்கு சில பொதுவான குறிப்புகளை மட்டுமே கூறிச்செல்ல விரும்புகிறோம். வரலாற்றில் இந்தச்சக்தியின் தோல்விகள் தான் குறுந்தேசியவாதம் எமது அரசியல் வாழ்வின் இதயபாகத்தை ஆக்ரமித்துக் கொள்வதற்கான வழிவகைகளை அமைத்துக் கொடுத்துவிட்டிருந்தது. இந்தச் சேற்றிலிருந்து எம்மை மீட்டெடுக்கக்கூடிய அருகதையானது இடதுசரிகளிடம் தான் இருந்தது.
1947ம் ஆண்டளவிலேயே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தமிழருக்கான பிரதேச சுயாட்சியைக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தது. 1958ல் எஸ்.டபிள்யுஆர்டியண்டாரநாயக்க கொணர்ந்த ஒரு மொழிக் கொள்கைக்கு எதிரான வாதங்களில் ட்ரொஸிகிய இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் மொழிகளுக்கான சம அந்தஸ்து பற்றிக் கொண்டிருந்த உன்னதமான நிலைப்பாடும், "ஒரு மொழி இரண்டு தேசங்கள் இரண்டு மொழி ஒரு தேசம்" என்று எதிர்காலம் பற்றி இவர்கள் தெரிவித்த தீர்க்கதரிசனமான பிரகடனமும் வரலாற்றின் மகத்தான கட்டங்களைக் குறித்து நிற்பதோடு, இடதுசாரிகள் எத்தகைய முக்கியத்துவம் மிக்க பணியினை ஆற்றியிருக்க முடியும் என்பதையும் புலப்படுத்துகிறது. ஆனால் அதன் பிறகு இவர்கள் அடிபணிந்து போன தன்மையும், ஆக்கவலிவின்மையும் அவர்கள் தேசியசக்திகளாகத் திகழ்வதற்குரிய சாத்தியத்தை அழித்துவிட்டது.
இன்றைய சமகால நவகாலனித்துவ யுகத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி போன்ற மரபு சார்ந்த தேசியவாதிகள் தமது பலவீனமான பொருளாதாரத்தளம் காரணமாக ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து போகாமல் விடுதலையை நோக்கி ஒரு தேசியப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியாது. அவர்களுக்கெனச் சுயமான பொருளாதார சக்திகள் இல்லாத காரணத்தால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு

Page 239
442 மூலதனத்துடன் ஒருங்கிணைந்தும் சார்ந்துமே செயற்பட வேண்டியதாயிற்று. காலனிய மற்றும் இன்றைய நவகாலனிய ஆதிக்கங்களால் எழுந்த தமது தேசிய அபிலாஷைகளை நிலைநிறுத்திக்கொள்ள அவர்கள் முன்னிருந்த ஒரே வழி அலங்காரப் பேச்சளவிலான-உணர்ச்சிமயமான கருத்தியல்களைத் தழுவிக்கொள்வதாக மட்டுமே இருந்தது. உண்மையில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினர் தமது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்த வழிவகைகளையே உபயோகித்துக்கொள்கின்றனர். அந்நிய மூலதனத்தைச் சார்ந்த பொருளாதார நிலைமைகளை எதிர்க்கும் உழைக்கும் வர்க்கத்தின் பரந்துபட்ட வெகுஜனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகள் தான் நவகாலனித்துவ ஊடுருவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் ஸ்தூலமான திட்டங்களையும் தீட்டி, தேசியப்பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை நிர்மாணிக்க முடியும் என்பது மிகத் தெளிவானதாகும். சர்வதேச மூலதனத்துடன் எமது பொருளாதாரம் ஏற்கெனவே நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாலும், எமது சமூக உருவாக்கத்திற்கேயுரிய பிரத்தியேகமான குணாம்சத்தினாலும் பிற்போக்குச் சக்திகளுக்கு எதிரான உறுதியான நீடித்த போராட்டத்தை நடத்தவல்ல ஆற்றல்மிக்கதொலைநோக்கோடு கூடிய தலைமையையே தேசியப்போராட்டம் வேண்டி நின்றது. இத்தகைய தலைமை நமக்குக் கிட்டவில்லை.
இலங்கை இடதுசாரிகளின் அடித்தளமானது மரபாகவே நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தையே சார்ந்திருந்தது. மார்க்ஸியப் பார்வை கொண்ட குட்டி பூர்ஷ்வாப் புத்திஜீவிகளே தலைமையில் இருந்தனர். தேசியப் பிரச்சினை எந்தப் போக்கில் செல்லப்போகிறது என்பதை அவர்களால் ஒரு கட்டத்தில் சரியாகச் சொல்லக்கூடியதாக இருந்தது. காலப்போக்கில், எப்போது அவர்கள் பாராளுமன்ற அரசியலில் பங்கு பெறுவதற்கான ஆர்வத்தைக் காட்டினார்களோ அப்போதே சிங்கள பெளத்த தேசியவாதச்சக்திகளையும் தங்களுடன் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. பிற போராட்ட வடிவங்கள் அனைத்தையும் கைகழுவிவிட்டு, பாராளுமன்றத் தேர்தல் அரசியலில் இவர்கள் குதித்தபோதுதான் விசேஷமாக கிராம மக்களின் ஜனரஞ்சக உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் பௌத்த சிங்களத் தேசியவாதத்தின் சக்தி வாய்ந்த மீட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. கிராமத்து வறிய மக்களை இடதுசாரியினர் ஒருபோதுமே பிரதிநிதித்துவப்படுத்தியிராதபடியால் அவர்கள் இடதுசாரிகளை வெகு தீர்க்கமாகவே நிராகரித்து விட்டிருந்தனர். இதனால் பெருந்தொகையான மக்கள் பூர்ஷ்வா அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்தனர். நிர்க்கதியான நிலையில் மிச்சம் மீதி இருந்ததைக்கொண்டு எதையாவது பணிணி தமது பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள இவர்கள் சிங்கள ஆதிக்க வெறிச்சக்திகளைத் தழுவியபோது இடதுசாரிகளின் பலம் உண்மையில் மேலும் சிதைந்து போனது.
இடதுசாரிச் சக்திகளிடம் தெளிவான அரசியல் தலைமை இல்லாது பாராளுமன்றப்பாதைக்கு அடிபணிந்துபோனது மட்டுமோ காரணங்களாகாது. சர்வதேசக் கம்யூனிஸ இயக்கத்தில் ஏற்பட்டிருந்த நெருக்கடியும்,

443
எதிர்காலப்போக்கு பற்றி 1960களில் நடந்த மாபெரும் வாதப்பிரதிவாதங்களும் இத்தெளிவற்ற தலைமைக்கு இன்னுமொரு காரணமாக இருந்தது. சர்வதேசக் கம்யூனிஸ இயக்கத்திற்குள் ஏற்பட்டிருந்த பிளவு இலங்கையிலிருந்த இடதுசாரிச் சக்திகளை மேலும் பிளவுபடுத்தியிருந்தது. உலகின் வேறு பாகங்களில் நடந்த புரட்சிகரப் போராட்ட அநுபவங்களை வரட்டுப் பிடிவாதத்துடனும் யாந்திர்கமாகவும் இந்தப் பிளவுண்ட இடதுசாரிக் கட்சிகள் பிரயோகிக்க முயன்றபோது, இவர்கள் இரண்டு சமூகங்களிலுமே மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு விட்டனர். அவர்களது கோட்பாட்டுரீதியான அணுகுமுறையும், உட்கட்சிப் போராட்டங்களும் சர்வதேச கம்யூனிஸ இயக்கங்களின் வரையறைகளை அப்படியே ஏற்று அவற்றை யாந்திர்கமாகத் திணித்ததன் விளைவேயாகும். கம்யூனிஸ இயக்கத்தில் சோவியத் யூனியனும் சீனாவும் மேலாதிக்கம் வகித்தமையும் இந்த இடதுசாரி இயக்கங்களின் கண்ணோட்டங்கள் குறுகிய பார்வையில் அமைந்தமைக்கும். அச்சொட்டாக வார்க்கப்பட்ட கருத்துக்களையே அவை பிரபலித்துக்கொண்டிருந்த மைக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாராளுமன்றத்திற்கு வெளியே தீவிரமாகச் செயற்பட்ட முக்கிய இடதுசாரிக் கட்சியான சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியானது இலங்கை இடதுசாரிகளின் மத்தியிலிருந்த தீவிர, போர்க்குணங்கொண்ட சக்திகளை ஒருங்கிணைத்தது. ஏனைய பாராளுமன்ற இடதுசாரிகளைப் போலன்றி இக்கட்சிக்கு யாழ்ப்பாணத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் சில பிரிவினரின் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. 1960களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்தான் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான உக்கிரமான போராட்டங்கள் நடைபெற்றிருந்தன. தமிழர் மத்தியிலிருந்த பெரும்பான்மையான இடதுசாரி புத்திஜீவிகள் இந்த சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்தார்கள். மலையகத் தமிழர் மத்தியிலும் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த முதல் இடதுசரிக்கட்சியும் இதுவேயாகும். எல்லாம் இருந்தும் சிங் கள மேலாதிக்க சிந்தனைக் கூறுகள் இதனையும் தொற்றிக்கொள்ளாமலில்லை. இலங்கை அரசியலில் தேசியப்பிரச்சினையின் முதன்மை முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளத்தவறிய இக்கட்சி தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை தமிழ் பூர்ஷ்வா கட்சிகளின் கையில் விட்டு விட்டது. வர்க்கப் போராட்டத்தையும் தேசியப்பிரச்சினையையும் ஒன்றிணைத்து நோக்கத்தக்க பார்வை இதனிடம் இருக்கவில்லை. எனவே மலையகத்தமிழர் மத்தியிலும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் தனது தளத்தை அதனால் நிலைநிறுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. இலங்கையின் பின்னணியில் வர்க்கப் போராட்டம் பற்றிய கோட்பாடு ரீதியான புரிதலில் ஏற்பட்ட தவறின் காரணமாக இக்கட்சி அவ்வப்போது நிகழும் சம்பவங்களால் அள்ளுப்பட்டுச் சென்றவாறும், அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மாத்திரம் வெறுமனே பதிலளித்துக் கொணிடும் இருக்க வேண்டிய நிலைமையிலேயே இருந்தது.
1960களின் பிற்பகுதியில் இதன் விளைவாக இக்கட்சி தனக்கிருந்த ஆதரவை இழந்து சிதறிப்போக நேர்ந்தது. ஆயுதப் போராட்டத்தின் தன்மை எத்தகையது என்பதிலும் அதனை யார் முன்னெடுத்துச் செல்வது என்பதிலும் ஏற்பட்ட

Page 240
444 கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள் இச்சிதைவுக்கு வழிகோலின. ஆயுதப் போராட்டத்தின் விளைவுகள் எவை, அரசுக்கெதிராக ஆயுதப்போராட்டத்தை மேற்கொள்ளும்போது எத்தகைய அரசியல், தந்திரோபாய யுக்திகளைக் கையாள்வது என்பதைப் பரிசோதித்து இது ஊர்ஜிதப்படுத்த வேண்டியிருந்தது. சிங்கள பெளத்த தேசியவாதம் என்ற வலிமை மிகுந்த ஆயுதத்தைக் கையில் ஏந்தியது தான் ஜே.வியியின் மிகப்பெரும் பலமாக அமைந்தது. இதன் தலைவரான ரோஹன விஜேயவீர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியில் வந்தவராவார். ஜே.வியி. நடத்திய பிரசித்தமான "ஐந்து வகுப்புகள் நிகழ்ச்சியில் ஒரு வகுப்பில் இந்திய விஸ்தரிப்பு வாதம் பற்றிய தலைப்பில் இந்தியாவின் ஐந்தாம் படையாக மலையகத்தமிழர்கள் சித்திரிக்கப்பட்டனர். தென்னிலங்கையின் கிராமியக் குட்டி பூர்ஷ்வா இளைஞர் மத்தியில் நிலவிய இனவாத உணர்வுக்கு இவர்களின் தமிழர் விரோத நிலைப்பாடு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. மார்க்ஸிய அலங்கார உச்சாடனங்களோடு இந்தத் தேசபக்தி கோஷத்தையும் சேர்த்து எழுப்பிய ஜேவிபி. மக்கள் மத்தியில் செல்வாக்குப்பெற ஆரம்பித்தது. இந்த எழுச்சி 1971 கிளர்ச்சியாக வெடித்தபோது திருமதியண்டாரநாயக்கவின் ஆட்சியில் இது கொடூரமாக நசுக்கி ஒடுக்கப்பட்டது. இவரே பின்னாளில் 1987ல் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபின்பு சில காலம் ஜேவிபியுடன் கூட்டாகவும் இருந்தார். 1971ம் ஆணிடின் இளைஞர் கிளர்ச்சி தென்னிலங்கையின் சிங்களப் பகுதிக்குள் மட்டுமே நடந்தேறியது. வடக்கும் கிழக்கும் இக்கிளர்ச்சியினை வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது.
1970களின் நடுப்ப்குதியில் அரசுக்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தத்தயாரானபோது இலங்கையின் இடதுசாரிகளை எங்குமே காணக்கிடைக்கவில்லை. இலங்கையின் வரலாற்றில் மிகவும் தீர்க்கமான அரசியல் நெருக்கடியை நிர்ணயிக்கப்போகின்ற ஒரு போராட்டத் தலைமையானது இவ்வாறு மெதுமெதுவாகவும் சீராகவுமீ குறுந்தேசியவாதத்தின் கைகளைச் சென்றடைந்தது. இடதுசாரிகளின் மத்தியில் உள்ளுறைந்திருந்த பலவீனமும் முரண்பாடுகளுமே அந்நிய சக்திகள் எமது தேசதி திறிகுள் ஊடுருவி எம்மைக் கட்டுப் படுதி த பிரதான வழிசமைத்துக்கொடுத்தது என்பது இதிலிருந்து மிகத்தெளிவாகப் புலனாகிறது.
83. அடுத்த புதிய கட்டம்: 1987 அக்டோபருக்குப் பின் 8.3.1. அக்டோபர் யுத்தம்: சனத்தைப் பற்றிக் கவலையில்லை
நீங்கள் உயிரோடு இருப்பதை நினைத்துச் சந்தோஷப்படுங்கள்" என்று இந்திய அமைதிப்படை பிரிகேடியர் மஞ்சித்சிங் ஒருமுறை யாழ்ப்பாணத்தில் ஒரு இளைஞரைப்பார்த்துக்கூறினார். உண்மைதான். இந்தக் கொடூரமான யுத்தத்தில் மரணம் என்பது நமது உரிமையாகவும் உயிர் வாழ்வதென்பது நமக்கு அளிக்கப்பட்ட சலுகையாகவும் மாறிப்போயிருந்தது. அந்த அக்டோபர் நாட்களின் பீதி நிறைந்த இரவுகளில் தொடர்ச்சியாக ஷெல் அடிக்கும் சத்தத்தையும் ராசஷஸ் பீரங்கிகள் அரைத்துக்கொண்டு உருண்டு போகும் பேரோசையையும் பாதைத்தடைகளை நீக்கிக்கொண்டுபோகும் வாகனங்களின் முழக்கத்தையும் தானியங்கித்துப்பாக்கிகள் வெடித்துத் துளைக்கும்

445 துல்லியமான சத்தத்தையும் செவிமடுத்துக்கொண்டு ஒருவன் உயிருடன் இருப்பதென்பது உண்மையில் நமக்கு வழங்கப்பட்ட சலுகையாகத்தான் இருக்கவேண்டும். பொழுதுகள் விடியும். மறுநாள் என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியாமல் அச்சம் நிறைந்த இரவுகள் நீண்டு கொண்டே செல்லும். தேசம் முழுவதுமே தெருவில் வந்து நின்றது. தங்களின் சகல உடைமைகளையும் பிளாஸ்டிக் பைகளில் திணித்துக்கொண்டு, இடுப்பில் குழந்தைகளைச் சுமந்த வண்ணம் சுட்டெரிக்கும் மத்தியான வெயிலில் ஒவ்வொரு அகதிமுகாமாய், கிராமம் கிராமமாய், பின்வாங்கிக் கொண்டிருக்கும் புலிகளுக்கும் முன்னேறிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கும் மத்தியில் மக்கள் உயிர்தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.
யாழ் மத்தியிலிருந்த கோப்பாய், உரும்பிராய் கிராமங்களில் 1987 அக்டோபர் 12ம் திகதிக்கும் 20ம் திகதிக்குமிடையில் நடந்த மூர்க்கமான யுத்தத்தின் போதுதான் இது நடந்தது.
இதோ வாய் விட்டுக்கதறும் பெண்கள்: ‘என்ரை குஞ்சுகள், ஒடித்தப்புங்கோ! உங்கை ஒரு நிமிஷமும் நில்லாதீங்கோ. உங்கட அப்பாட்ட சொல்லுங்கோ நான் செத்துப் போனனான் எண்டு. அம்மாவை ஆமி சுட்டு சாகக்கிடக்கிறா. நாங்கள் அவவை அப்படியே விட்டுப் போட்டு ஓடி வந்திட்டம்
"நாங்கள் மூச்சுப் பேச்சில்லாமல் நிண்டம். பிள்ளை சத்தம் போடுமெண்டு அவவுக்கு பாலூட்டினன். நாலு பக்கமும் ஓயாமல் சூட்டுச்சத்தம். செத்துப் போயிருந்தா நல்லாயிருந்திருக்கும் எண்டு நினைச்சன்."
"ஷெல் அடிக்கிலையும் துப்பாக்கிச் சூட்டுக்கிலையும் பயந்த நாங்கள் ஒடேக்க ரோட்டில கிடந்த சவங்கள் மேலே தான் தாண்டி ஓடினனாங்கள்" நான் பயத்திலே கண்ணை மூடிக்கொண்டுதான் சைக்கிளை விட்டன். ரோட்டு வழிய எங்க பார்த்தாலும் வீடுகளெல்லாம் உடஞ்சு நொறுங்கியும்வழியெல்லாம் சவங்கள் -குடலைப் பிரட்டிக் கொண்டு அப்படிக் கெட்ட மணம்."
செத்துப்போன சவத்தோட சவமா, நாங்களும் செத்துப்போன மாதிரி அப்படியே 18 மணிநேரம் தரையிலே கிடந்தம்" ܫ
‘எங்கட அறைக்குள்ளே புகுந்து கொள்ளையடிச்சிருக்கிறாங்கள். உடுப்புகளை எல்லாம் இழுத்துப் பார்த்திருக்கினம். எங்கட உடுப்பில சப்பாத்து அடையாளம் ரத்தத்தோட இருந்தது. சுட்டுத் தரையிலே செத்துக் கிடந்தவங்கட ரத்தக்கறை தான் அந்த பூட்ஸுகள்ள அப்பியிருக்க வேணும்"
நாங்கள் அவவை வீட்டு வளவுலே புதைச்சம். பிறகு சுற்றி நிண்டு ஸ்தோத்திரப்பாடல் பாடி ஜெபம் பண்ணினோம். அவள் குசினிக்குள்ளே அரைச்ச சம்பல் அப்படியே அம்மியில இருக்கத்தக்கனையா அவவைச் கட்டுக் கொண்டு போட்டாங்கள்"
யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் வெற்றிகரமான கண்ணி வெடித்தாக்குதல்கள் கணிசமான இந்திய இராணுவ ஜவான்களின் உயிரை எடுத்திருக்கிறது. அக்டோபர் 12ன் வீர சாகஸத் தாக்குதலில் 29 இந்திய அதிரடிப்படைவீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் இதைப்பற்றிப் பெருமிதத்தோடு பேசினார்கள்:
பெடியள் பெரிய வேலை செஞ்சிருக்கினம். உலகத்திலே நாலாவது

Page 241
446 பெரிய ஆமியையல்லே அடிச்சிருக்கினம்"
ஆனால் நாட்கள் செல்லச்செல்ல இந்த வீர சாகஸக் கதாநாயகர்களால் இந்தியா கட்டவிழ்த்துவிட்ட கொடூரத்தின் ஒரு தூசைக்கூட ஒன்றும் செய்து கொள்ளமுடியவில்லை என்பது புரிந்தது. இந்த வேள்வித் தீ பெருந்தொகை மக்களை வாரி விழுங்கிவிட்டிருந்தது.
பிறகு ஷெல் தாக்குதல்கள், பீரங்கிகள், டாங்கித் தாக்குதல்கள், ஹெலிகொப்டரிலிருந்து சூடுகள் மற்றும் இலங்கைக் குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும் குண்டுத் தாக்குதல்கள் என்று தொடர்ந்தன. இந்திய இராணுவத்தின் கவனத்தை ஈர்க்க இயந்திரத் துப்பாக்கிகளால் சில ரவுண்டுகள் கட்டுவிட்டு, எந்தச் சிணுக்கமும் இல்லாமல் புலிகள் ஒவ்வொரு காவல் நிலையையும் காலி பண்ணிவிட்டுப் பின்வாங்கி ஓடி விட்டார்கள். மக்கள் மட்டுமே பலியானார்கள். வீராவேசப் பேச்செல்லாம் வெற்றுச் சவடால் பேச்சாகிப் போனது.
அக்டோபர் 21ம் திகதிதான் யாழ் மருத்துவமனையில் படுகொலைகள் நிகழ்ந்த தினமாகும். அப்போது புலிகள் அங்கே இருந்தார்கள். எல்டிடிஈ வேண்டுமென்றே செய்த நாடகமாகவும் இது இருந்திருக்கலாம். அவர்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வந்திருந்தார்கள். புலிகளை அவ்விடத்தைவிட்டு வெளியேறிவிடுமாறு டாக்டர்கள் மன்றாடியபோது, பரவலாய் அங்குமிங்கும் வெடி தீர்த்துவிட்டும் உள்ளே சில ஆயுதங்களையும் விட்டு வைத்த வண ன மும் தானி வெளியேறினார்கள். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்குப்பின் இந்திய இராணுவம் அங்கு வந்து சேர்ந்தபோது அவர்களை எதிர்த்துச் சுடுவதற்கு அங்கு யாரும் இருக்கவில்லை. திடீரென்று பெருந்தொகையாய் மருத்துவமனைக்குள் புகுந்த அவர்கள் நோயாளிகளையும், உள்ளேயும் அயலிலேயும் நோயாளிகளைப் பராமரித்துப் பார்த்துக் கொணடிருந்தவர்களையும் கொடூரமான முறையிலி கொலை செய்திருக்கிறார்கள். அன்று மாலையும் இரவும் மறுநாள் காலை வரையும் இந்தக் கொலை வெறித்தாக்குதல் நடந்தவண்ணம் இருந்தது.
இதிலிருந்து ஒரு நடப்பு முறைமை தெளிவாகத் தெரிந்தது. அதாவது புலிகள் துTணிடி விடுவார்கள், சிலவேளைகளில் சில ஜவான்களைக் கொல்வார்கள். இதனால் ஆத்திரமடையும் இந்திய இராணுவம் கண்டபடி சுட்டு, குத்திக்கொன்று, மானபங்கப்படுத்தி, பாலியல் வன்முறை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். எந்தவிதப் பாதுகாப்புமற்ற- நிராயுத பாணிகளான பொதுமக்களே இதற்கான விலையைச் செலுத்த வேண்டியிருந்தது. பெருமை மிகு யாழ்ப்பாணத்தின் படலை வேலிகள் எரியுண்டன. சிலவேளைகளில் முழுக்குடில் வீடுகளுமே எரிக்கப்பட்டன. வீடுகள், பொதுக்கட்டிடங்கள் என்று எந்தவித வேறுபாடுமில்லாமல் அனைத்துமே ஷெல் தாக்குதலுக்கும் குண்டுத்தாக்குதலுக்கும் இலக்கானது. கோண்டாவில், கொக்குவில், உரும்பிராய், கோப்பாய், மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சாவகச்சேரி, சுதுமலை. இதிலிருந்து வேறுபட்ட கதையொன்றைச் சொல்வதற்கு அங்கு ஒரு கிராமமுமே இருக்கவில்லை.

447 632 அச்சுறுத்தல்: சமாதானக் காவலரின் கட்டுப்பாட்டு யுக்தி
இந்தப் பதிலடித் தாக்குதல்கள் தங்களது சக ஜவானின் சாவால் மட்டும் எழுந்த கணப்பொழுது ஆத்திரத்தின் வெளிப்பாடு என்றும் கூறமுடியாது. ஒழுங்கீனமான ஒரு பெரும் இராணுவத்தின் அம்சமாகவும் இதனைச் சொல்ல முடியாது. போர்த்தந்திரத்தின் ஒரு யுக்தியாகவே இதனை நோக்க வேண்டும். ஒரு பொறுப்பு வாய்ந்த இராணுவ அதிகாரி யாழ்ப்பாணத்தின் சில மூத்த பிரஜைகளிடம், "புலிகள் இங்கிருந்துகொண்டு ஒரு ஜவானையாகிலும் சாகடித்தால் நாங்கள் அந்த இடத்தையே நாசம் பணிணி விடுவோம்" என்று கூறியிருக்கிறார்.
தனிப்பட்டவர் கூறிய வார்த்தையாக மட்டும் இதனை எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெரு முனையிலும் இதே செய்தியைத்தான் இராணுவ அதிகாரிகள் மக்களுக்கு சொன்னார்கள். இந்தப் பதிலடித்தாக்குதல்கள் போர்த்தந்திரத்தின் ஒரு அம்சமாக-அச்சுறுத்தும் ஒரு செய்தியை வழங்குவதைவிட வேறு எதற்காக அவை இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்? பயங்கரவாதம் என்பது நாட்டின் ஏகபோக சட்டமாக மாறியிருந்தது. இது ஓரளவு வேலை செய்திருக்கிறது; வேலை செய்தும் கொண்டிருக்கிறது. ஆனால் எத்தனை நாட்களுக்கு?
மருத்துவமனையில் நிகழ்ந்த தாக்குதல் மனிதசாவைச் சற்றும் கணக்கில் எடுக்காமல் கணிமூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றோ அச்சுறுத்தல் யுத்த தந்திரமென்றோ பதிலடித்தாக்குதல்கள் நாளாந்த மாமூல் நடவடிக்கைதான் என்றோ கூறிவிடமுடியாது. ஆயுதம் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதாகக் கூறிக்கொண்டு காவல் நிலைகளிலும் அவர்களின் சொந்த வீடுகளிலும் அகதி முகாம்களிலும் தங்கள் பெண்கள் மிகப்பெரிய அளவில் மானபங்கப்படுத்தப்பட்டமை முழுச்சமூகமுமே கேவலப்படுத்தப்பட்ட உணர்வையே மக்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தது. பாலியல் வன்முறை என்பது தனியே ஒருவரால் மட்டுமல்ல, சில சமயங்களில் இரணிடு பேராலி, ஒரு சம்பவத்தில் மூன்று பேராலுமே கூட மேற்கொள்ளப்பட்டது. இந்த மிருகத்தனங்களின்போது பெண்களுக்குத் துணையாக அமைந்தது அனாதரவான அவர்களின் கதறலும் கூச்சலும் மட்டுந்தான்.
மிகச் சாதாரணமான விஷயங்களிலும் இந்திய இராணுவம் ஒரு துளி அக்கறையைக்கூடக் காட்டவில்லை. யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டவடன், மக்கள் அனைவரும் மூன்று அகதிகள் முகாம்களுக்குப் போக வேண்டுமென்று இராணுவத்தினர் வானொலி மூலம் அறிவித்திருந்தனர். அவை இரண்டு பள்ளிக்கூடங்களும் நல்லூர் கந்தசாமி கோயிலுமாகும். இவற்றில் நல்லூர் கோயிலில் எந்தவிதமான சுகாதார வசதிகளும் கிடையாது. ஒரு சமயத்தில் பலமாக அடித்த பருவமழையின்போது எந்தவித உறைவிடமுமின்றி இந்தக்கோயிலில் இருபதாயிரம் முதல் முப்பதாயிரம் பேர் வரையிலான மக்கள் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மருத்துவ வசதிகளேர் மருந்துகளோ எதுவுமேயில்லை. வயிற்றோட்டத்தாலும் காய்ச்சலாலும் குழந்தைகள் பலர் செத்துக் கொண்டிருந்தனர். இந்திய இராணுவத்திற்கு இது ஒரு இராணுவ நடவடிக்கையாக மட்டுமே தெரிந்தது. இந்த நடவடிக்கைகள் கட்டாயம்

Page 242
448 நடந்தேயாக வேண்டியிருந்ததால் இப்பகுதியிலிருந்த மக்கள் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அப்படி மக்கள் கவனத்திற் கொள்ளப்பட்டாலும் அது காலந்தாழ்த்தியே நிகழ்ந்தது.
ஆக்கிரமித்துக் கொண்ட இந்திய இராணுவத்திற்கு மட்டுமல்ல புலிகளுக்குங்கூட மக்கள் கொலை என்பது ஒரு தீனியாகவே இருந்தது. விசித்திரமான விடயமென்னவெனில் மக்கள் தலைவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் எந்தவிதப் பாதுகாப்புமற்ற நிலையில் மரணிப்பது என்பது ஒரு தேவையாக இருந்தது.
அகதி முகாம்களின் அருகாமையில் இருந்துகொண்டுதான் தங்களின் தாக்குதல்களை மேற்கொள்ளும் புலிகள் (உதாரணமாக கொக்குவில் இந்துக்கல்லூரியில் 34பேர் மரணமுற்றனர்) பின்வாங்கும்போது மக்களை அபாயகரமான நிலைமைக்கு விட்டுச் சென்றுவிடுகிறார்கள். மக்களின் துயரங்களுக்கும் வேண்டுகோள்களுக்கும் அவர்கள் கொஞ்சங்கூடச் செவி சாய்ப்பதில்லை.
தாங்கள் ஒடித்தப்பிக்கொண்டு அதன் விளைவுகளை மக்கள் அனுபவிக்க விட்டுவிட்டு அவர்கள் இராணுவத்தைத் தொடர்ந்து உசுப்பிக்கொண்டிருந்தனர். உலகளாவிய சிறந்த பிரச்சாரத்திற்கு இன்னும் 500 முதல் 1000 பேர் வரை மக்கள் இறக்கவேண்டும் என்று அவர்கள் மக்களிடம் கூறியது கொடுரத்தின் உச்சத்தையே காட்டுகிறது. இதனை ஒரு தனிப்பட்ட கூற்றாகவோ தலைமையோடு சம்பந்தமில்லாத ஒரு குழுவினி கூற்றாகவோ கருதுவதற்கில்லை. இது பல இடங்களிலும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது. சோற்றுக்காக நாய்களைப்போல மக்கள் பட்டினியால் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்போது இந்தியா வழங்கிய உணவுகளை மக்கள் பகிஷ்கரிக்கவேணி டுமென்று புலிகள் துணிடுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
நோயாலி செதிதுக் கொணடிருக்கும் குழந்தைகளை அக்கறையோடு கவனித்துக் கொணடிருந்தவர்களிடம் கூட இந்திய மருந்துகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாமென்று இவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இதற்கு மாற்று நடவடிக்கையாக 'புலிகள் உணவு', 'புலிகள் மருந்துகள் கிடைக்கும்படி இவர்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருந்தார்களா? இந்த நெருக்கடியான காலங்களில் மிகமுக்கியமான, ஆராய்ந்து பார்க்க வேணி டிய கேள்விகள் பல எழுந்தன. மக்களின் தலைவர்கள் தாமே என்று கூறிக்கொணிட இயக்கமானது மக்களைப் பற்றிச் சிறிதுகூட கவலைப்படாமல் நடவடிக்கைகளில் இறங்கியதை என னவென்று கூறுவது? பாதுகாப்பற்ற எமது நிலைமையை நன்கு தெரிந்து கொணிட பின்னரும் எருமை மாடுகள் ஒன்றுக்கொண்று முட்டி மோதிக்கொள்வது போன்ற ஒரு மோதலை இவர்கள் மேற்கொண்டது ஏணி? அப்போதைய பலவீனமான நிலையிலிருந்து இநீதிய இராணுவத்தினதும் அரசியல் மேலாதிக்கத்தினதும் பிடியிலிருந்து தேசத்தை மீட்டெடுக்கும் பணியானது எளிய கோஷங்கள், வெற்றுணர்ச்சி உரைகள் என்பததையும் விட-தாங்கள் எதற்கும்

449 விட்டுக் கொடுக்காதவர்கள் என்பதனை விட- பேராற்றல் மிகுந்த gdi35fp60601 (Enormous creativity)66.60ig Eibéps என்பனை இவர்கள் ஏன் விளங்கிக் கொள்ளவில்லை? வரலாற்றின் இந்த அம்சங்களைப் புரிந்து கொள்ள புலிகளைப் பற்றிய அடிப்படையான புரிதலி அவசியமாகும். புலிகளின் குறுகிய பார்வைக்குப் பல காரணிகள் பங்களித்திருந்தாலும் அவர்களது உளவியலின் சில அம்சங்களைப் புரிந்து கொள்வது இங்கு அவசியமானதாக இருக்கும , '
6.3.3 தீர்க்கதரிசிகளும் மக்களும்
தேசியக்கருத்தியலின் வரலாற்று உருவாக்கமாக வந்த புலிகள் தாங்களே அதன் உண்மையான பிரதிநிதிகளென்று கருதிக்கொண்டனர். பாராளுமன்ற அரசியலில் திளைத்திருந்த தமிழ்த்தேசியத் தலைவர்களின் வங்குரோத்தான, போலித்தனமான போக்குகளுக்கு எதிராகக் கிளர்ந்த இளைஞர்களின் அதிருப்திக்குரலை ஒலித்ததன் மூலம் இவர்கள் வளர்ச்சியுற்றனர். அத்தமிழ்த்தேசியத்தலைவர்களின் சாதுரிய வக்கீல் அரசியலையும் வெற்று விவாதங்களையும் அறவே வெறுத்த இவர்கள் இதற்கு மாற்றாக செயல் என்பதனை நடைமுறையாகக் கொண்டு வந்தனர். திட்டவட்டமான செயல்திட்டத்தை இவர்கள் வலியுறுத்தியதுடன் இறுக்கமானமையப்படுத்தப்பட்ட ஆயுதக் குழுவினைக்கட்டி எழுப்பினர். இக்குழுவினைச் சார்ந்த இளைஞர்களுக்கு மக்கள் அர்ப்பணிப்பு, தேசிய விழிப்பு, உறுதி, எதிர்ப்புணர்வு என்பன அடிப்படைகளாக இருந்தன. தமிழீழ இலட்சியம், என்பதையும் விட இயக்கத்திற்கு விசுவாசம் என்பதே இந்த இயக்கத்தின் மிக முக்கிய அடிப்படையாக இருந்தது. புனித இயக்கத்தின் பெயரால் எந்த நடவடிக்கையும் நியாயப்படுத்தப்பட்டது. மேன்மைப்படுத்தப்பட்ட இத்தகைய சமய உணர்ச்சித் தன்மையானது அதன் சகல அங்கத்தவர்களின் மத்தியிலும் விதைக்கப்பட்டது. துணிச்சலான ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவர்கள் ஒருவித வீர சாகஸ அரசியலை வரலாற்றில் முன்னெடுத்தார்கள். விடுதலைப்புலிகளின் வீர தீர சாகஸ அரசியல் என்பது தனி வீர புருஷர்கள் முன்னணியில் சென்று, பதாகையை உயர்த்திப்பிடித்து, செயற்கரிய சாதனைகளைச் செய்பவர்கள் என்பதாகும்.
இவர்களை வழிப்படுத்தும் கருத்தியலாக தீவிரமான குறுகிய தேசியவாதமே அமைந்தது. இது புராதன உணர்ச்சி பூர்வமான விசுவாசங்களில் இருந்து, எம்மைப் பொறுத்தவரை மொழி, இனம் ஆகியவற்றிலிருந்து தன் தீவிர உணர்வுகளைப் பெற்றுக்கொணடது. தேசத்தின் சினத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் மிகவும் இயைந்த மனோரஞ்சிதக் கற்பனை, இலட்சியமயப்படுத்தப்பட்ட படிமங்கள், வெற்றுணர்ச்சிக் கோஷங்கள் ஆகியனவே இக்கருத்தியலின் உட்கூறாக அமைந்தது. இந்தக் கோஷங்களுக்குப் பின்னால் ஒரு சூனியத்தையே காணமுடிந்தது. மிக நல்ல உதாரணம் "தமிழ் ஈழம்" என்ற கோஷம். புலிகள் தங்களைத் தேசத்தின் முன்னணிச் சக்தியாகவும் மலரப் போகும் தனிநாட்டின் தலைவர்களாகவும் தம்மைக் கருதிக்கொண்டாலும் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கான எந்த அடிப்படையான விஷயங்களைப்

Page 243
450 பற்றியும் ஆராய்ந்து பார்க்கவேயில்லை. தற்போதைய சமூகப் பலவீனங்களைக்கூட அவர்கள் சுட்டிக்காட்டியதில்லை. தென்னிலங்கையையும் அரசியந்திரத்தையும் சார்ந்து நிற்பதாயும் அவற்றுடன் நன்கு நெருங்கிப் பிணைந்து போயும் தமிழ்த் தேசத்தின் பொருளாதாரத்தளம் மிகப்பலவீனமாக இருப்பதைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வர்க்க, சாதி முரண்பாடுகள் ஒருபுறம் இருக்க, பிராந்தியரீதியில் சிறுபான்மையினராய் அமைந்த மக்களின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சிறு முயற்சி கூட மேற்கொள்ளப்படவில்லை. புத்தத்தின் போது இந்தப் பிரிவுகளை மேவி மக்களை வழி நடத்திச் செல்லத்தக்க ஒருங்கிணைந்த கொள்கையும் இவர்களிடம் இருக்கவில்லை. வெளிநாட்டுக் காரணிகளைப் பொறுத்தவரை இந்தியாவின் உதவியையும் பாதுகாப்பையும் வேண்டி சிரத்தையுடன் முயற்சிகள் மேற்கொண்டனராயினும் புவிசார் அரசியல் பின்னணி குறித்தோ, இந்திய மேலாதிக்கத்தின் பிடிமானங்களின் அளவைப் பற்றியோ அவர்களிடம் எந்தக் கருத்தோட்டமும் இருந்ததில்லை.
சிக்கலான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான கோட்பாடோ, பகுத்தறிவதற்கான வழிவகைகளோ அவர்களிடம் இல்லை. லேசான பதில்களைக் கொண்டு எளிமையான தீர்வுகளை மக்களுக்குச் சொல்வதையே அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். இந்த எளிமையில் மண்ணின் இயல்பும் மக்களைக் கவரும் தன்மையும் இருந்தது. மக்கள் அரசியல் என்று அவர்கள் கூறியது ஜனரஞ்ச்கமான அபிலாஷைகள், அச்சங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றுக்கு தீனி போடுவதற்கான அரசியலாகும். இத்தகைய கருத்தோட்டங்களைக் கொண்ட குழுக்களின் சரித்திரத்தின் மற்ற பக்கத்தையும் பார்க்கவேண்டும் இவர்களின் கற்பனாவாதப் படிமங்கள் தேசம், மொழி, இயக்கம் என்று முழு மொத்தமான பிமீ பங்களைக் கொணடிருந்ததால் இவர்களது இலட்சியமயப்படுத்தப்பட்ட, உணர்ச்சி பூர்வமான உள்ளடக்கங்கள் வெறித்தனத்திற்கே இவர்களை இட்டுச்சென்றது. இவர்கள் பிற தேசிய இனங்களையோ, குழுக்களையோ, மாற்று அபிப்பிராயங்களையோ சகித்துக் கொள்ள முடியாதவர்களாகவே காணப்பட்டனர். தங்களின் மகோன்னதம் பற்றியும் தங்களது மகத்தான கடமை பற்றியும் இவர்களிடம் காணப்பட்ட உணர்வு எத்தகைய கொடுமையையும் நியாயப்படுத்தி புனிதமாக்கியது. இவர்களோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு பெண் சரியாகக் கூறுவது போல, "தம்பி (பிரபாகரன்)க்கு தன்னைப்பற்றி ஒரு தீர்க்கதரிசன வீறு கொண்ட ஒரு சரித்திரப்புரிதல் இருந்ததால்தான் ஆரம்பத்திலிருந்தே அது இவரைத் தனியான தலைவராக அடையாளப்படுத்தியது. இலட்சியமயப்படுத்த, குறுகிய கருத்தியலைக் கொண்டிருந்த இவரிடம் இத்தகைய குணாம்சங்கள் வெறித்தனத்திற்கும் கொடூரத்திற்குமே இவரை இட்டுச்சென்றது"
பிரபாகரன் தனது இயக்கத்தவர்களுடன் உரையாடுகையில் கூறிய இரண்டு மேற்கோள்களை எடுத்துக்காட்டி அவை எவ்வாறு கவர்ச்சிகரமானதாயும், பிற்போக்குத்தனமாயும் உள்ளன என்று அப்பெணி விபரித்தார்.
1. நல்ல சமையற்காரன் ஒருவன் மட்டுமே நல்ல போராளியாக இருக்க முடியும். (இயக்கத்தில் உள்ளோர் சமையலை இழிவாக நினைத்தபோது கூறியது)

45 2. ஆயுதநடவடிக்கைகளை விளக்குவதற்குத்தான் அரசியல் இருக்கிறதே தவிர, அதை வழிநடத்துவதற்கல்ல.
விடுதலைப்புலிகளின் "கோட்பாட்டாளர்" எனப்படும் அன்ரன் பாலசிங்கம் இதுபற்றித் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தார்.
இந்த இலட்சியமயப்படுத்தப்பட்ட கோட்பாட்டின் மிகவும் கசப்பான விளைவுதான் தற்கொலைக்குத் துணிந்த வீர சாகஸமாகும். புலிகளின் தனித்துவமான குணாம்சம் அவர்கள் பிடிபட்டதும் சயனைட்டுக்களை விழுங்கி விடுவதுதான். இச்செயல் அதியுன்னதமானதென்றும் தனிநாட்டிற்கான இறுதி அர்ப்பணிப்பு என்றும் பிரகடனப்படுத்தப்பட்டது. விடுதலைப் போராட்ட வரலாறுகளில் ஒப்புவமை கூறமுடியாத உன்னத தியாகம் என்று தேசம் முழுதும் பரணி பாடப்பட்டது. பொருண்மையான யதார்த்தத்தையும் அதன் சிக்கலான தன்மைகளையும் நேருக்கு நேர் சந்தித்துப் போராட முடியாதவர்களுக்கு சயனைட்டை உட்கொள்வது என்பது யதார்த்தத்திலிருந்து தப்பிச் செல்வதற்கான தூண்டுகோலாகத்தானிருந்தது. பிரச்சினைகளை வெல்வதற்கான பற்றுறுதியை உருவாக்குவதற்குப் பதிலாக, சட்ட நடவடிக்கைகள், சித்திரவதைகள் எனும் யதார்த்த சூழ்நிலைகளிலிருந்து ஒரு தனிப்பட்ட உறுப்பினன் தப்பிச் செல்வதற்கான மார்க்கமாகவே இது இருந்தது. இயக்கத்தைப் பொறுத்தவரையில் யதார்த்த நிலைமைகளுக்கு பதில் கூறத் தேவையற்ற ஒரு வழிமுறையாக இது அமைந்தது. கற்பனா பூர்வமான அபிலாஷைகள், தேவைகள் என்பனவற்றோடு கூடிய இந்த மனவியல் நிலைமை ஒருவித நியாயப்படுத்தல் செய்முறை மூலம் அழிவுக்கான முடிவைத் தேடிக்கொள்ளவே மென்மேலும் வழிவகுத்துக் கொடுத்தது.
பொருள்சார் நலன்களையே அடிப்படையாகக் கொண்ட யாழ்ப்பாண சமூகத்திலிருந்து தனிநாட்டிற்காக அனைத்தையுமே இழக்கத் தயாரான இலட்சியமயமான இளைஞர்கள் எவ்வாறு உருவானார்கள் என்பது ஆச்சரியமூட்டக்கூடிய விடயமாக இருக்கலாம். மேலோட்டமாக நோக்கும்போது இது ஒரு முரண்பாடாகவும் தோன்றக்கூடும். ஆழமாகப் பார்க்கும் பொழுது இந்தப் பொருளாய உந்துதலும் இக்குறுகிய தேசியவாதமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே தொடர்பு கொண்டு செயற்படுவதைப்பார்க்க முடியும். சில சூழ்நிலைமைகளில் மக்கள் தமது குறுகிய புரிதலின் காரணமாக, தமது இருப்பிற்கு இன்றியமையாதனவாக சில வரப்பிரசாதங்களையும் உரிமைகளையும் மாத்திரம் அடையாளம் காணிகின்றனர். கலாச்சார விதிமுறைகளைக் கட்டுப்படுத்தும் மேலாதிக்கப்பிரிவினர் தான் இந்த வகையான மதிப்பீடுகளைப் அலலது பெறுமானங்களை (Va 1 ue : ) பிரச்சாரப்படுத்துபவர்கள். உதாரணமாக அரசாங்க உத்தியோகங்கள், வெறும் கல்வித்தகமை என்னும் சமூக அந்தஸ்த்தை தீர்மானிக்கும் பெறுமானங்களை கருதலாம். இந்த மதிப்பீடுகள் அதன் வரலாற்று, சமூக, பொருளாதார அடிப்படைகளிலேயே வேரோடியுள்ளன.
சமூகத்தின் இருப்புக்கு அத்தியாவசியமானவையெனக் கருதப்பட்ட இந்தத் வரப்பிரசாதங்கள் மீதும் உரிமைகளின் மீதும் சவால் விடப்படும்போது இதனால் பாதிக்கப்படுவோரின் மத்தியில், தீர்க்கமான மனஉறுதியோடு இவற்றைக்

Page 244
452 கணி மூடித்தனமாகத் திருப்பித் தாக்கும்படியான வெற்றுணர்ச்சிகள் (Idealist emotions) 9 (56JT6...g5. Fr;55600TLDT673). 956 TT65 இந்த வெற்றுக் கருத்துக்கள் நிலைத்து நிற்பதற்கான பொருண்மையான அடித்தளங்களைக் கொண்டிராதவிடத்து இவை வெறித்தனத்திற்கே இட்டுச் செல்கின்றது.
விசேஷமாக யாழ்ப்பாணத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கல்வியையும், மடிப்புக்குலையாத அரசாங்க சேவை உத்தியோகங்களின் மத்திய, கீழ்மட்ட பதவிகளையுமே பெரிதாகக கருதுமி ஒரு சமூக அமைப்பே உருவாக்கப்பட்டிருந்தது. இதிலடையும் வெற்றியைப் பொறுத்துத்தான் சமூக அந்தஸ்தும் பணபலமிக்க, செல்வாக்கான மணமகளை அடைதல் என்பனவெல்லாம் தீர்மானிக்கப்பட்டது.
1971லிருந்து பல்கலைக்கழக அனுமதியில் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான தரப்படுத்தலானது தமிழர்களின் வாழ்வில் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு உரிமையின் மீது சவால்விடுவதாயிருந்தது. காணி வசதிகள், வங்கிக்கடன்கள் என்பன போதுமான அளவு கிடைத்து விவசாயத்துறை நன்கு வளர்ச்சியுற ஆரம்பித்திருந்தால் நிலைமை இவ்வாறு இருந்திருக்க மாட்டாது. மந்தமான நிலைமையின் காரணமாகவோ என்னவோ பொருளாதார அடித்தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிப் பொதுமக்கள் அளவில் சிந்திக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக, தமிழர்களின் துன்பங்களுக்கு ஒரே ஒரு தீர்வாக தமிழீழத் தனிஅரசுதான் என்று மட்டுமே சிந்திக்க முடிந்திருந்தது. இந்த வகைக் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்றவர்கள் 1970களின் முற்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தவர்களாவர்.
விடுதலைக்குழுக்களுக்குக்கூட ஈழம் என்பது ஒரு சுலோகமாக இருந்ததே தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை. ஈழம் என்ற கருத்துருவாக்கத்திற்கு இரதி தமும் சதையுமான பொருணிமையான அடித்தளங்களை உருவாக்குவதற்கான எந்த வகையான செயற்பாடுகளிலும் இவர்கள் இறங்கவில்லை. பழைய அரசியல் தலைமை, அவர்களின் தீவிரத்தன்மை ஆகியன பற்றி சகல குழுக்களுக்கும் விமர்சனங்கள் இருந்தனவே தவிர, தமிழிப் பிரதேச திதினி ஒருமைப்பாட்டிற்கு அதீதியாவசியமான குடியேற்றத்திட்டங்களின் பரிமாணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கிழக்கில் தமிழர்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமான வழிவகைகளையோ, அரசாங் கமி திட்டமிட்டு மேற் கொண ட குடியேற்றத்திட்டங்களை தடுப்பதற்கான எந்த ஆக்கபூர்வமான முயற்சிகளையோ அவர்களால் மேற்கொள்ள முடியவில்லை. சிங்களக் குடியேற்றவாசிகளையும் கிராமத்தவர்களையும் கொடூரமாயும் ஈவிரக்கமின்றியும் கொலை செய்து பழி தீர்ப்பதே இவர்களின் ஒரே பதிலாக இருந்தது. இலங்கையின் விசேஷ அதிரடிப்படையினரும் மற்றும் ஊர்காவல் படையினரும் தங்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டபோது அப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தாங்கமுடியாத பயங்கவிந்த சூழலில்தான் உயிர்வாழ நேர்ந்தது. மறுபுறத்தில் தேசியப்போராட்டத்தில் அத்துணை ஈடுபாடு கொண்டிராத மலையகத் தமிழர்களோ சிங்களக் காடையர்களின் வன்முறைக்கு மட்டுமே இலக்காக நேர்ந்தது. தங்களது அரசியல் லாபத்திற்காக எல்லாக் குழுக்களுமே

453 மலையகத் தமிழர்களுக்காக சில கோஷங்களைச் சேர்த்துக்கொண்ட போதும் அவர்களையும் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு எந்தப்பிரயத்தனங்களும் மேற்கொள்ளாமல் அவர்களைப் பாதுகாப்பற்ற நிலையிலேயே விட்டுவிட்டனர்.
வளர்ச்சியடைந்து கொணடிருக்கும் விடுதலைப் புலிகளின் வெறித்தன்மையையும் அதன் ஆதரவாளர்கள் மத்தியில் காணப்பட்ட கணநேரத்தில் மறைந்து போகக்கூடிய ஹிஸ்டீரியாவையும் ஈழத்தை அடைவதற்கான அவர்களின் யதார்த்தமற்ற திட்டங்களின் பின்னணியிலிருந்து தான் நோக்கவேண்டும். விடுதலைப்புலிகளின் அரசியல் நோக்கங்களும் அதை அடைவதற்காக அவர்கள் பிரயோகித்த வழிமுறைகளும் யதார்த்தத்திலிருந்து பூரணமாக விலகிய நிலையிலேயே இருந்தது.
இந்தக் குழுக்களின் குறுகிய இலட்சிய வாதத்திற்கும் இவர்கள் மக்களுடன் கொண்டிருந்த உறவிற்குமிடையில் முக்கியமான இயங்கியலொன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் சமூகத்தின் சகல பிரிவினரையும் புலிகள் கவர்ந்துள்ளனர் என்றும் அவர்களின் உணர்ச்சிகளையும் பெருமிதங்களையும் புலிகள் பிரதிபலிப்பதால்தான் மக்கள் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்ற வாதம் அடிக்கடி சொல்லப்படுகிறது.
புலிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எந்தவகையில் இருந்தது? பொதுமக்கள் மத்தியில் எந்தவிதமான களவேலைகளிலும் ஈடுபட்டிராத நிலையில், ஆயுத நடவடிக்கைகளை முன்னெடுத்த பல்வேறு நரோத்ணிக் குழுக்களும் வேறு பல குழுவினரும் சேர்ந்த சோஷலிஸ் புரட்சிகரக்கட்சியினை லெனின் ஒரு துண்டுபிரசுரத்தில் விமர்சித்திருந்தார். மயிர்க்கூச்செறியச் செய்யும் பயங்கரவாதத்தைப் பற்றிய கோட்பாட்டை விளக்கும்போது அவர் எழுதினார்:
ஒவ்வொரு முறையும் ஒரு வீரன் ஒரு தனித்த இராணுவத்தாக்குதலில் ஈடுபடும்போது அது நம் மத்தியில் போராட்டத்திற்கும் துணிச்சலுக்குமான பேருணர்ச்சியை எழுப்பிவிடுகிறதென்று நம்மிடம் கூறப்படுகிறது. கடந்த காலங்களிலும் சரி தற்காலத்திலும் சரி புதிய புதிய வடிவிலான வெகுஜன இயக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்காக மக்களிலிருந்து எழும் புதிய பிரிவினரின் விழிப்புணர்வுமே போராட்டத்திற்கும் துணிச்சலுக்குமான உணர்ச்சியினை எழுப்பவல்லது என்பதை நாம் அறிவோம். ஒரு தனித்த தாக்குதல் என்பது- அதுவும் பால்மஷோவிகளால் நடத்தப்படும் தனித்த தாக்குதலாக இருக்கும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு நின்றுபிடிக்கக்கூடிய ஒரு உணர்ச்சியை உடனடியாக அது ஏற்படுத்திவிடக்கூடுமாயினும் மறைமுகமாக அது அக்கறையின்மைக்கும் அடுத்த தாக்குதலை வெறுமனே எதிர்பார்த்து காத்துக்கிடப்பதற்குமான நிலைமைக்கும் இட்டுச் சென்றுவிடும்" லெனின் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இந்த இயங்கியல் புலிகளுக்கும் மிக நன்றாகப் பொருந்தக்கூடியதாகவே இருக்கிறது. புலிகளைப் பொறுத்தமட்டில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே வைக்கப்பட்டிருந்த மக்களுடன் எந்தவித சேதனாபூர்வமான இணைப்பும் இல்லை என்பதற்கும் மேலாக மக்களை அவர்கள் எப்போதுமே அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர். இதுவே புலிகள் மக்களை மந்தைகள் என்று குறிப்பிடும் நிலைமைக்கும்

Page 245
454 இட்டுச்சென்றது. புலிகள் மக்களின் விமர்சனங்களை ஒரு போதுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாத நிலைமைக்கும் இந்த மனப்பாங்கு தான் காரணமானது. மக்களின் மீதான இந்த அக்கறையின்மையும், அவர்களின் மீதான வெறுப்பும் அக்டோபர் மாதத்தின் இருண்ட காலப்பகுதியில் பட்டவர்த்தனமாக வெளிவந்தது. கடைசியில் மக்களின் வாழ்க்கை கூடப் புலிகளுக்கு முக்கியத்துவம் அற்ற விஷயமாகப் போய்விட்டது என்பது இந்த இருணிட காலத்தின் நடப்புகளிலிருந்து தெரியவந்தது. இப்போராட்டத்தின் மீது உயிர்நீத்த 858 புலி உறுப்பினர்களை மட்டுமே தமிழீழத்துக்கான தியாகிகள் என்று புலிகள் அடிக்கடி பிரகடனப்படுத்தினர். இராணுவத் தாக்குதலின் போது இறந்த ஆயிரக்கணக்கான மக்களும் மற்ற குழுக்களைச் சேர்ந்த போராளிகளும் இவர்களின் கணக்கில் ஒருபோதும் வருவதில்லை.
மக்களுக்கும் தங்களுக்குமிடையிலான உறவு மீனுக்கும் கடலுக்கும் இடையிலான உறவு போன்றது என்று புலிகள் தமது கோட்பாட்டுப் பிரசுரங்களில் தெரிவித்துள்ளனர். அரசின் பாதுகாப்புப் படைகளின் ஊடுருவலுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக நின்று தியாகங்கள் புரிந்த மக்களை-வட்டமிட்டு சுற்றி வளைத்துக் கொண்டிருந்த இரகசியப்படைகளுக்கு எதிராக ஒளித்துக்கொள்ள இடங்களை வழங்கியவர்களை - போராளிகளுக்கு உணவும் உறைவிடமும் வழங்கியவர்களை-ஆரம்ப கட்டத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்துக் காலங்களில் உதவியவர்களை புலிகள் போற்றியதோ நினைவு கூர்ந்ததோ கிடையாது. இலங்கை அரசிற்கு எதிரான உலகளாவிய பிரச்சாரத்திற்கு எவ்வாறு சாதாரண குடிமக்களின் சாவுகளைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டார்களோ அவ்வாறே தனிநபர்களும் பொது மக்களும் இவர்களால் பாவிக்கப்பட்டனர். தியாகம் என்பது புலிகளின் தனிப்பட்ட சொத்தாக மாறியிருந்தது. இந்தவிதமான அரசியலின் இன்னொரு விளைவு யாதெனில், மக்களின் விழிப்புணர்வைத் தூண்டுவது என்பது உயிர்வாழ் மட்டத்து இயல்புணர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் தட்டி எழுப்புவதுதான் என்றாகியது. திலீபனின் உண்ணாவிரதக் கட்டத்தினைப் போல, திலீபனைக் கடவுளாக்கி அவரின் சாவிற்காக எந்தக் கொடூரமான செயலையோ, நாசவேலையையோ செய்ய மக்கள் தயார் என்ற அளவிற்கு உணர்ச்சிகரமான ஹிஸ்டீரியாவை-புலிகள் மக்களிடம் எழுப்பியிருந்தார்கள்.
தொகுதிதுக் கூறுவதானாலி, இனக் குழு விசுவாசத்தினி இயல்புணர்ச்சிகளையும் வெற்றுணர்ச்சிகளையும் ஆதாரமாகக் கொண ட, பிறரைச் சகித்துக் கொள்ள மாட்டாத, தமது தனித்துவமான மகோன்னதப் பெருமை உணர்வை மட்டுமே கொணிட ஒரு கருதிதியலையே புலிகள் கொணடிருந்தனர். சிக்கலான சூழ்நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கான அவசியமான அணுகுநெறியை இக் கருதி தியலால் வழங்க முடியவில்லை. இதனாலி தானி உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எழுகின்ற முரண்பாடுகளை எல்லாம் எளிதான ஒரு சட்டத்தில் பார்த்து, மிக இலகுவான தீர்வுகளை அவர்கள் அளிக்க முடிந்தது. இவர்களது அரசியலில் மக்களுக்கு மிகச்சிறிய பங்குதான் வழங்கப்பட்டது. அவர்கள் எங்காவது மக்களை அணி

455
திரட்டினார்கள் எனிறால் அது தமது இயக்கத்தின் குறுகிய இலட்சியங்களை முன்னெடுப்பதற்காக மக்களினி வெற்று உணர்வெழுச்சிகளைத் தட்டி எழுப்புதல் என்ற அளவில் தான் அமைந்தது.
83.4 எல்.டி.டி.ஈ: இந்தியாவின் ஊதாரிப் புதல்வன்
இந்தப் பின்னணியில் எல்டிடிஈயின் இந்தியாவுடனான உறவை, அதன் குத்துக்கரணங்கள், இறுதியான மோதல்கள் ஆகியவற்றை நோக்கும் போது சில அம்சங்கள் தெளிவாகப் புலனாகின்றது. புலிகள் தாமே உன்னதமானவர்கள் என்று கொண்டிருந்த தன்னுணர்வும், தமிழ்த் தேசிய தீபத்தை தாங்களே ஏந்திச் செல்பவர்கள் என்ற உணர்ச்சியும் தலைமைக்கான தார்மீக உரிமை தம்முடையது மட்டுமே என்று அவர்களைக் கருதிக் கொள்ளச் செய்தது. ஆயுதப் போராட்டத்துக்கான தளத்தை உருவாக்குவதற்கு தாமே மிக அதிகமாகப் பலி கொடுத்தவர்கள் என்று அவர்கள் உணிமையாக நம்பிக்கொண்டது மேற்கூறியவைகளை மேலும் வலுப்படுத்தச் செய்தது. இத்தகைய புரிதலால் தமது மேலாண்மையை இந்தியா கேள்விக்கிலக்காக்கிய போதும், மற்ற குழுக்களோடு சேர்ந்து தாமும் அதிகாரப்பங்கீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்தியா எதிர்பார்த்தபோதும் புலிகள் கோபங்கொண்டனர். இவர்களின் இந்திய எதிர்ப்பு வாதம் இந்த நடவடிக்கையிலிருந்து தான் ஆரம்பமாகியதே தவிர, அதற்கும் தமிழ்மக்களின் நலன்களுக்கும் ஒருவிதச் சம்பந்தமும் இல்லை. புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான முரண்பாடான நிலைப்பாடுகளை சில சம்பவங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன.
1987 ஜூன் 4ம் திகதி விமானமூலம் இந்தியா உணவுப்பொருட்களை இறக்கிய நிகழ்ச்சி மற்றும் தோல்வியில் முடிந்த மூன்றாவது கட்ட ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையையடுத்து ஜுன் மாதத்தின் இறுதிப்பகுதியில் இந்திய அதிகாரிகளை விடுதலைப்புலிகள் சடங்காசாரத்துடன் வரவேற்ற போது, எல்டிடிஈஐ தமிழ்மக்களின் ஏக பிரதிநிதியாகவும் பிரபாகரனை அவர்களின் தலைவராகவும் அங்கீகரிக்க வேண்டுமென்றும் இந்திய அரசாங்கத்தைக் கோரும் மகஜரை புலிகள் அவர்களிடம் கையளித்தனர். இந்தியா பெரிய இயக்கங்களைத்தான் அதாவது எல்.டி.டி.ஈ. ஐத் தான் அங்கீகரிக்கப் போகிறதென்று புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த செய்திச்சாதனங்கள் முழக்கின. விமானத்திலிருந்து இந்தியா உணவுப் பொட்டலங்களைப் போட்ட போது பிரபாகரன் உட்பட புலிகளின் பேச்சாளர்கள் இந்நடவடிக்கையைப் பெரிதும் பாராட்டியதுடன் இந்தியாவிற்கு நன்றியறிதலையும் தெரிவித்துக்கொண்டனர். இன்று இந்தியா வழங்கும் உணவுப்பொருட்களைப் பகிஷ்கரிக்குமாறும், சில அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மக்களுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் இடையே தொடர்பு கொண்டிருந்தவர்களைக் கொலை செய்ததும் முரண்பாடானதாக இருக்கவில்லையா? சமாதான உடன்படிக்கை கையெழுத்தாக இருக்கும்போது அதனை ஆதரித்த ஏனைய குழுக்களைத் துரோகிகள் என்று நிராகரித்தனர். பின்னால், 1987 ஜூலை 24ம் திகதியன்று சமாதான உடன்படிக்கை பற்றி இந்திய அதிகாரிகளுடன்

Page 246
456
பேசுவதற்காக பிரபாகரன் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டபோது, அதே செய்தித் தொடர்புச் சாதனங்கள் அது மகத்தான வெற்றி என்றும் தலைமை இயக்கமாக எல்.டி.டி.ஈ அங்கீகாரம் பெற்றுவிட்டது என்றும் பிரகடனம் செய்துகொண்டன.
புலிகளின் அரசியற் போக்கில் அவர்கள் போட்ட இந்தக் குத்துக்கரணங்கள் மேலாதிக்கத்திற்கான இந்திய ஊடுருவலின் முழுமையான பரிமாணங்களைப் புரிந்து கொண்டுதான் இவர்களின் இந்திய எதிர்ப்புவாதம் அமைந்திருந்தது என்பதை நிறுவமாட்டாது. மாறாக இயக்கத்தினதும் அதன் தலைவர்களினதும் மேலாதிக்கத்திற்கான மேலோட்டமான தனிமனிதமயமாக்கப்பட்ட அரசியலே காரணமாக அமைந்தது. ஏனைய பிற குழுக்களையோ வேறு அபிப்பிராயங்களையோ சகித்துக்கொள்ள முடியாத தன்மையின் ஒருபக்க விளைவு என்றும் இதனை நோக்கலாம். இந்தக் குறுகிய லட்சியங்களை அடைவதற்காக தீவிர ஈடுபாட்டுடன் கூடிய நடவடிக்கைகளில் இறங்கவும் தங்கள் உறுப்பினர்களின் கண்மூடித்தனமான அர்ப்பணிப்பையும் அவர்கள் தூண்டிவிட்டுக் கொண்டிருப்பார்கள். இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கான திட்டம் தயார் நிலையில் இருந்தபோது திலீபன் தற்கொலைத்தனமான உணர்ணாவிரதமிருக்க, நாடே மீண்டும் ஒருமுறை ஹிஸ்டீரியாவில் மூழ்கியிருந்தது. ஐந்து மாபெரும் கோரிக்கைகளுக்காகவே உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது என்று பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. இதனையொத்த கோரிக்கைகளை முன்வைத்து ஈரோஸ் இயக்கம் நடவடிக்கைகளில் ஈடுபட முனைந்தபோது புலிகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது எவ்வளவு முரண்பாடானது!
ஈரோஸ் ஒழுங்கு செய்த பேரணியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைக் கலந்து கொள்ளவிடாது புலிகள் தடுத்ததுடன், ஈரோஸின் பேரணியில் கலந்து கொள்ளப் போய்க்கொண்டிருந்த மக்கள் அடங்கிய இரண்டு பஸ்களை தடம் மாற்றி திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூருக்குத் திருப்பி விட்டனர். இந்த உண்ணாவிரதக் கோரிக்கைகள் வெறும் மேல் பூச்சுக்குத்தான். விடுதலைப்புலிகள் வேண்டி நின்றதெல்லாம் இடைக்கால அரசாங்கத்தில் கூடிய நிர்வாக அதிகாரங்களுடன் தங்களுக்கு முதன்மையான பங்கு வழங்கப்படவேண்டும் என்பதும் ஏனைய போராளிக் குழுக்களுக்கு எந்தப்பங்கும் வழங்கப்படக்கூடாது என்பதுமாகும். தில்பன் இறந்ததும் இந்தியா தன் வேலையைச் செய்ய ஆரம்பித்த போது புலிகளின் இந்த நோக்கங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. விடுதலைப்புலிகளுக்கு தலைமை ஸ்தானம் வழங்கப்பட்டதுடன் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு போராளிக் குழுவாக அவர்களே அங்கீகரிக்கவும் பட்டனர். விடுதலைப்புலிகள் இதனை மகத்தான வெற்றி என வர்ணித்தனர். சமாதான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் தங்களது ஆசைகளுக்கு இந்தியா அனுசரித்துத்தான் போகும் என்ற நிலைமைக்கு இந்திய அரசின் இந்தச் செயற்பாடுகள் கொண்டு வந்து தள்ளியது.
சமாதான ஒப்பந்தம் வெற்றிபெறுவதற்கு தாங்கள் இல்லாமல் எதுவும் ஆகாது என்ற உணர்வுடனும், தங்களது சொந்த வலிமையின் வரையறைகளையோ, தமிழ்ப் பிரதேசத்தின் தற்பாதுகாப்பு நிலைமை எவ்வளவு

457
தூரம் சாத்தியமானது என்பதைப்பற்றியோ எதுவித விளக்கமுமின்றி விடுதலைப்புலிகள் தொடர்ந்து மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் அவர்களை யதார்த்தத்திலிருந்து முற்றாக அந்நியப்பட்ட நிலைக்கே இட்டுச் சென்றிருந்தது. அவர்களுடைய எளிமைப்படுத்தப்பட்ட சிந்தன்ை?" தென்னிலங்கையையோ, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் இருப்பினையோ, ஜே.ஆரையோ அவர்களுடைய கணக்கில் சேர்த்துக்கொள்ள இடந்தரவில்லை. தென்னிலங்கை அரசையும் ஜே.ஆரின் தலைமையையும் ஸ்திரப்படுத்தியாக வேணி டிய இந்தியாவின் தேவையினையோ, தென்னிலங்கையில் தங்களுக்கெதிரான பிரச்சாரத்தினையும் அரசியல் போக்கினையும் சமப்படுத்தியாக வேண்டிய இந்தியாவின் நோக்கத்தினையோ, இறுதியான, ஆனால் முக்கியமான இந்தியாவின் பெரு வல்லரசு உளவியலையோ புலிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை. A.
இத்தகைய இலட்சியமயப்படுத்தப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டிருந்த இயக்கங்களின் பரிணாமத் தோற்றத்தினைப் பற்றி ரெஜி சிறிவர்த்தனவுமி ராதிகா குமாரசாமியும் தங்களது கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் போது, 'இலட்சியவாதங்களின கலவை, தங்களது சுயத்தையும சரித்திரத்தையும் பற்றிய பெருமித உணர்வு, இனத்திலும் சமயத்திலும் அடையாளங்கணிடு கொள்வதில் உறைந்திருக்கும் தீர்க்கதரிசனத் தோற்றங்கள் போன்றன தீவிரமான வெறித்தனத்திற்கு இட்டுச் செல்வதற்கே அனுசரணையானது. யதார்த்த நிலைமைகளைப் பற்றிய ஒரு தனிநபரின் பார்வை வெளிப்புறச் சூழ்நிலைமைகளிலிருந்து ப்ாரதூரமாக வேறுபட்டு அமைந்தாலும் கூட சிற்சில நம்பிக்கைகளில் தாம் கொணடுள்ள உணர்வெழுச்சி மிக்க பற்றுதல்கள் அந்த நபரை முன்னோக்கி உந்தித்தள்ளும் ஒரு சூழ்நிலையே தீவிர வெறிவாதம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தோல்வியும் தனது நம்பிக்கைகளை மீண்டும் மறுபரிசீலனை செய்யத் துணிடுவதற்குப் பதிலாக அதற்கு எதிர்மாறான விளைவுகளையே உண டு பண னுகிறது; அந்தத் தனிநபரை தியாக மீ எனற சூழ்நிலைக்குத் தள்ளி விடுகிறது. விட்டுக்கொடுத்து அனுசரித்து போவதற்கான சகல கூறுகளையும் இழந்து போய், மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கவோ மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கோ இந்த வெறித்தனங்கொண்ட இயக்கங்கள் யோக்கியதையற்று இருக்கும்' என்கின்றனர்.
புலிகளின் சமகால சரித்திரத்தை இது மிகத் தெளிவாக விபரிக்கிறது: எதிர்கால விளைவுகளைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் அப்பாவிச் சிங்கள மக்களை மூர்க்கமான கோபாவேசத்தில் படுகொலை செய்து இந்தியாவை இக்கட்டில் தள்ளிவிட்டதைப் பற்றி ஆச்சரியப்பட எதுவுமில்லை. எனவே யதார்த்தத்தில் சமாதானத்திற்கு உத்தரவாதமளிப்பதில் இந்தியா பெருந்தவறு இழைத்தது என்பது மட்டுமல்ல, இந்த வழியில் யுத்தத்தைத் திசை திருப்பியது விடுதலைப்புலிகளின் தலைமையினது பெருந் தோல்வியுமேயாகும்.
புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமா" அரசியற் பார்வை இன்ம்ை, சகிப்புத்தன்மையின்மை, வெறித்தனமா? ` அர்ப்பணிப்பு போன்றனவே அவர்களின் சீரழிவுக்கும் இறுதிக்

Page 247
458
காரணமாக அமையப் போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கணிணிரோடும் அவர்களின் ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட இதிகாசங்களுடன் அழிவையே நோக்கிச் செல்வர். இந்த சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும் அதனி மேலாதிக்க கி கருத்தியலிலிருந்துமீ பூரணமாகத் தங்களை விடுவித்துக் கொள்ளும் போது தானி விடுதலைக்கான புதிய பார்வை பிறக்க முடியும்.
83.5 வன்முறையின் சுழல்மையம்:மீள முடியாத இந்தியாவின் கையறுநிலை
எல்டிடிஈ அமைப்பு ஒழுங்கு சிதறிய, உடைந்த நிலையில் இருந்தாலும், சிறுசிறு குழுக்களாக எதிரிகளைத் தாக்கி விட்டுத் தப்பித்து ஓடிவிடும் செல்லமுடியும். மக்களின் ஆதரவின் அடிப்படையிலன்றி பயமுறுத்தலின் மூலமே புலிகளால் இதனைச் சாதித்துக்கொள்ள முடிகிறது. வாழ்க்கை சகஜநிலைமைக்குத் திரும்பி விட்டதென்று இந்தியா அறிவித்தாலும் மோதல் சண்டைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமேயுள்ளன. மூன்று மாதங்கள் முடிந்துபோன பின்னரும் கூட விடுதலைப்புலிகளின் சிறுசிறு படையினர் அவ்வப்போது ஆங்காங்கே ஆயுதத்தாக்குதல்களை நடத்திய வண்ணமும், இந்திய இராணுவமும் தொடர்ந்து தங்களின் பதிலடித்தாக்குதலை நடத்தியவாறும் சுற்றி வளைத்தல், தேடுதல் நடவடிக்கைககள், விசேஷ ஊரடங்குச்சட்டம் ஆகியவற்றை மேற்கொண்டவாறுமே உள்ளனர். சகஜநிலை திரும்பி விட்டது என்பது ஒரு பிரமையே ஆகும். புத்தாண்டின் விடியலிலும் பயங்கரவாதமே எங்கும் பரவி வியாபித்திருந்தது.
விடுதலைப்புலிகள் தற்பாதுகாப்பு நிலையில் மட்டுமே இயங்க வேண்டிய சூழ்நிலையில் இந்த இரண்டு அம்சங்களுடன் சேர்ந்து இன்னொரு அம்சமாக, ஏனைய குழுக்கள் வெளிப்படையாக வெளியே வந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். யாழ் குடாநாட்டிற்குள் இந்திய இராணுவத்துடன் கூட்டாகச் செயற்பட புளொட், டெலோ, ஈ.என்.டி.எல்.எப் ஆகிய குழுக்கள் முன்னணிக்கு வந்தன. இதில் வருந்தத்திற்குரிய விஷயம் யாதெனில் மாற்றுத்திட்டம் எதுவுே இல்லாத நிலையில் மிச்சம் மீதியாயிருந்த பெரும்பாலான அங்கத்தவர்களே இப்போது இயங்க ஆரம்பித்திருந்தனர். புளொட் டெலோ போன்ற இயக்கங்களின் அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த உறுப்பினர்கள் உள் இயக்க அல்லது இயக்கங்களுக்கிடையேயான வன்முறை, சித்திரவதை, படுகொலைகளால் நீக்கப்பட்டோ அல்லது உயிராபத்திற்கு அஞ்சி விரக்தியுற்ற தனிநபர்களாயும் அகதிகளாயும் உலகின் சகல மூலைகளையும் நோக்கி ஓடித்தப்பிய வண்ணமே இருந்தனர். இப்போது வெளி அங்கத்திற்கு வந்த கூறுகள் பழிக்குப்பழி வாங்கும் அரசியலையே பின்பற்றினார்கள். தங்கள் இயக்கங்களை அழித்த எல்டிடிஈ ற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாளர்கள் என்று கருதப்பட்ட குடாநாட்டுத் தமிழருக்கு எதிராகவும் பழிவாங்கல்

459
நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இந்திய இராணுவத்திற்குத் தகவல் அளிப்பவர்களாக இவர்கள் செயற்பட்டதும் இந்த இயக்கங்களிலிருந்து ஏதாவது தலைமை உருவாகக் கூடும் என்ற நம்பிக்கையை முழுக்கச் சிதறடித்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் மற்ற இயக்கங்களைப் போலன்றி தங்கள் கரங்கள் இரத்தக்கறை படியாதன என்று எப்போதுமே கூறிக்கொண்டு வந்திருக்கிறது. ஆனால் அண்மைக்காலங்களில் அவர்கள் தாம் வரித்துக்கொண்ட நோக்கங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு, மக்கள் நலன்களைக் காற்றில் வீசி எறிந்துவிட்டு, இந்தியப் படையினருக்கு தகவல் அளிப்பவர்களாகவும் அவர்களுக்குப் பதிலாக கொலைகளில் ஈடுபடுபவர்களாகவுமே மாறிப் போயிருந்தனர். பழிக்குப்பழி எனும் கோட்பாட்டை முழுமையாகப் பின்பற்றுவது தவிர்க்கமுடியாதது போல் ஆகிவிட்டிருந்தது. புலிகள் தற்பாதுகாப்பு நிலையிலேயே இருந்தாலும் அவர்கள் செய்யும் கொலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கிழக்கில் இலங்கையின் விசேஷ அதிரடிப்படை (STF) ஜிஹாத் போன்ற சக்திகளையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. இவை இன்னுமதிகமான ஸ்திரமற்ற நிலைக்கே வழி கோலியுள்ளன.
இந்தக் கட்டத்தில் இந்தியா தனது சொந்த நலன்களுக்காக தனது இராணுவ பலத்தின் மூலம் இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. இனியும் முயற்சிக்கும். இந்த வகையான கட்டாயப்படுத்தப்பட்ட சமநிலை (ஒரு ஸ்திரமற்ற சமநிலை) யானது சேதனபூர்வமாக (OrganiC) அமையாததால் இது நிலைத்து நிற்பது சாத்தியமில்லை. உள்வாரியாகவே ஆதிக்க சக்திகள் இயல்பாகவே தமக்குள் முரண்பட்டுக் கிடப்பதும், ஸ்திரத்தன்மைக்கான சக்திகள் பலவீனமான நிலைமையில் இருப்பதும் இதற்கான காரணங்களாகும். அதாவது, சிங்கள ஆதிக்கவாத அரசின் ஆதிக்க சக்திகளான ஜே.வி.பி.யும் பிறவும் தமிழ் மக்களின் குறுகிய தேசியவாதச் சக்திகளான புலிகளும் தேசியப் பிரச்சினையில் அடிப்படையில் இதே பார்வையைக் கொண்டிருந்த பிற குழுக்களும் முரண்பட்டே நிற்கின்றன. ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய சக்திகள் இனவாத எதிர்ப்புக் கொண்ட இடதுசாரிக் கூட்டுகளும் முற்போக்கான தேசிய இயக்கங்களும் என அமைந்தன. ஆகவே, சகஜநிலைமை திரும்பிவிட்டதென்று சொல்லக்கூடியதற்கு எதிராக சூழ்நிலைகளில் அவ்வப்போது வெடிப்புகள் தொடர்ந்து தோன்றவே செய்யும்.
63.8 சமாதான உடன்படிக்கையும் சிங்கள மேலாதிக்கவாதமும்
தென்னிலங்கையில் சூழ்நிலை அதிவேகமாகச் சீரழிந்து சென்று கொண்டிருப்பதால் முழுத்தேசமுமே வன்முறைச் சூழலுக்குள் அமிழ்ந்து போக நீண்ட காலம் எதுவும் தேவையில்லை. சமாதான உடன்படிக்கையும் இந்திய இராணுவத்தின் பிரசன்னமும் சிங்கள ஆதிக்க வெறிச்சக்திகளுக்கு மேலதிக ஊட்டத்தைக் கொடுத்திருந்தது. இந்த ஜனரஞ்சக சக்திகள் ஜேவிபியைச் சுற்றிக்கொண்டு நிற்க ஆரம்பித்துவிட்டன. இந்த ஜே.வியிதான் பலகாலமாக தமிழ் விரோத, இந்திய எதிர்ப்பு என்ற குறுகிய தேசியவாதக் கருத்தியலைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. இதன் தமிழ் விரோத

Page 248
460
உணர்வு யாதெனில், தமிழி மக்கள் எவ்வளவு துTரம் ஒடுக் குமுறைக் குள்ளாகியுள்ளனர் என்பதனை அது ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்பதுடன் அவர்களுக்கு "எந்தவிதமான சலுகையும் கிடையாது" என்ற நிலைப்பாட்டையே முன்னெடுத்ததுடன் தமிழர்களின் "உரிமை என்று ஒரு தெளிவற்ற பூடகமான தீர்வினை மட்டுமே முன்வைத்தது. தற்போது சில தந்திரோபாயங்களின் அடிப்படையில்தான் பேச்சளவிலோ அல்லது மூர்க்கமாகவோ அது தமிழ் விரோதப் போக்கில் இறங்காமல் இருக்கிறது. ஆனால் அதன் பூடகமான-அர்த்தமற்ற தீர்வுகளிலும் அதன் கொள்கைப் பிரசுரங்களிலும் அதன் தமிழ் இன எதிர்ப்பு என்பது மிகத்தெளிவாகவே தெரிகிறது. அண்மைக்காலத்தில் தனது கருத்தியலுக்கேற்றவாறு தனது ஆயுத நடவடிக்கைகளை வெற்றிகரமாக அது திருத்தி அமைத்துக் கொண்டுள்ளது. அதன் பேச்சுகள் வெற்று அலங்கார மனோரதியக்கற்பனை சார்ந்ததாயும் செயற்பாடுகள் வன்முறை சார்ந்ததாகவுமே உள்ளது. வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமுதாயச் சீரழிவு, வாழ்க்கை நிலைமைகள் போன்ற சமூகப்பிரச்சினைகளைப் பற்றியும் ஜேவிபி. இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. அதன் பகுப்பாய்வுகள் எளிய சட்டகங்களுக்குள் அமையக்கூடியதாக இருந்ததுடன் அதற்கான பதில்களும் மிக எளிமையானதாக இருந்தன. உதாரணமாக, "பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தால்தான் புரட்சி நடைபெறுவது சாத்தியமாகும் போன்ற அவர்களின் கூற்றுக்களும் அவர்களது தீர்வுகளும் மேலோட்டமானவை. எனினும் ஜேவிபி. சிங்கள மக்களின் தர்மீக உரிமைகளைப் பிரதிபலிப்பதாகவே தென்னிலங்கை மக்கள் கருதுவதுடன் தென்னிலங்கை சமூகத்தின் கணிசமான பிரிவினர் இக்கருத்திற்கு இசைவுடையவர்களாகவே உள்ளனர்.
ஜேவிபியின் உண்மையான வர்க்க அடித்தளம் சிறு உற்பத்தியாளர்கள் சார்ந்ததாகும். சிங்கள் கிராமியப் பகுதிகளில் நிலவும் உற்பத்தி முறைமையினை ஆராயும்போது, இலங்கையின் விவசாய அடித்தளத்திலும் சிறு விவசாயப் பொருளாதாரத்திலும் பல்வேறுவகைப்பட்ட அடுக்குகளைக் கொண்ட சொத்துடைய வர்க்கம் காணப்படுவதை அறியலாம். இந்த வர்க்கமே சிங்கள ஆதிக்க வெறிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்லும் வர்க்கமாகும். கிராமியப் பொருளாதாரத்தில் நிலவும் முதலாளியத்திற்கு முந்திய உற்பத்தி முறை காரணமாக கிராமியப் பாட்டாளி வர்க்கத்தின் மத்தியிலும் சிறு உற்பத்தியாளர்களின் பிரமைகள் தொற்றிக் கொண்டு விட்டன. நகரங்களையே சார்ந்திருந்த இடதுசாரிக்கட்சிகள், பூர்ஷவாக் கட்சிகளின் அரசியற் கட்டுப்பாட்டுக்குள் கிராமிய உழைப்பாளிகளைக் கைவிட நேர்ந்தது. கிராமிய மக்களின் மத்தியில் சிங்கள மேலாதிக்கவாதக் கருத்தியலை இது மென்மேலும் உயிர்ப்புடையதாக்கியது. தற்போது தென்னிலங்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நவகாலனித்துவ ஊடுருவலினால் கிராமியப் பாட்டாளி வர்க்கம் மிக மோசமான பொருளாதார நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஆகவே இந்த வர்க்கம் மாற்றுத்தலைமைக்கான வழிகளைத் தேடமுனைவது புரிந்துகொள்ளக்கூடியதேயாகும். இதற்கான சரியான கலவையாக பொருளாதார சமத்துவம், தாய்நாட்டுப்பற்று, ஆதிக்கவெறி ஆகியவற்றை ஜேவிபி. இணைத்து வழங்கியது.

46 நேர்மையான தேர்தல்ககைளக் கிரமமாக நடத்திக்கொண்டு பூர்ஷவா ஜனநாயக வரம்பிற்குள் ஐ.தே.கட்சி தொடர்ந்து இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவாகவே உள்ளன. மறுபுறம் ரொனி டி மெல் (முன்னைய அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்து பின் தனது பதவியை ராஜினாமா செய்தவர்) அறிவுபூர்வமான பூர்வுவாத் தீர்வொன்றைக் காணும்படி வலியுறுத்தி வருகிறார். இராணுவத்தீர்வுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் இவர் ஐ.தே.கட்சி தேர்தல் தொகுதிகளுக்குச் சென்று சமாதான ஒப்பந்தத்தை மக்களுக்கு விளக்கிக்கூறி செல்வாக்கை வளர்த்தெடுப்பதுடன் ஜே.வி.பி.யையும், ஐ.தே.கட்சிக்குள்ளும் வெளியிலும் உள்ள மேலாதிக்கவாதச்சக்திகளையும் தனிமைப்படுத்தவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் இந்தக் கருத்திற்கும் சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவான கருத்துக்கும் மாறுபட்டே ஐ.தே.க.வின் வெகுஜனக்கருத்து இருந்து வருகிறது. அறிவுபூர்வமான பூர்ஷ"வாத் தீர்வென்பது பெருந்தொழில் அதிபர்கள் மற்றும் தரகு முதலாளிட் பிரிவினர் போன்ற சிறுபிரிவினரின் நலன்களுக்கு மட்டுமே சாதகமானதாய் அமையும். வெகுஜனக் கருத்தை முன்னெடுப்பவரோ ஜனாதிபதியின் அந்தஸ்திற்கு சற்றும் குறையாத -அப்போதைய பிரதமரான பிரேமதாஸ் ஆவார். ஆகவே ஐ.தே.கட்சியும் கட்சிக்குள் அதிகார நெருக்கடிப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
ஜனாதிபதிகூட ஆதிக்க வெறித்தனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் அதனைச் சார்ந்தும் இருப்பதால் கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டிச்சண்டைகளைத் தீர்ப்பதற்குக்கூட வாக்காளர்களிடையேயும் வெகுஜன சக்திகளிடையேயும் ஆதரவுக்காகச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சாதாரண மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய இவர் ஜனரஞ்சக இந்திய எதிர்ப்பு அரசியல் பூசப்பட்ட மாபெரும் அடிமட்ட மக்கள் சார்ந்த திட்டங்களை அறிவிக்க வேண்டியிருந்தது. இறுதியாக, பரந்த முன்னணிக்கும் வெளியில் இயங்கிய ஏனைய ஆதிக்கவெறிச் சக்திகளுடனும் கூட்டுச் சேரவேண்டிய நிலைமைக்கே இது இட்டுச் சென்றது.
பாராளுமன்றக்கட்சி என்ற வகையில் ஐ.தே.கட்சிக்கு இத்தகைய கூட்டு பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
சகல எதிர்ப்புகளையும் அடக்கி ஒடுக்குவதற்கு கொடூரமான பலத்தையும் அடக்குமுறைச்சட்டங்களையுமே உபயோகிக்க வேணி டியிருக்கும். 'பச்சைப்புலிகள்” என்றழைக்கப்படும் ஐ.தே.கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்கான புற இராணுவப் பயிற்சியானது வளர்ந்துவரும் நாசகார நிலைமையைக் கோடி காட்டுகிறது. மார்க்கோஸ் ஆட்சியின் மரணப்படைகளை ஒத்ததாகவே இதுவும் அமையப் போகிறது. இந்தப் பின்னணியில் இலங்கையின் இராணுவ அபிலாஷைகளும் இந்தியாவின் நலன்களுடன் அது கொண்டுள்ள உறவுகளும் எதிர்கால வளர்ச்சிகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.
இரு தேசங்களின் அரசியல் சக்திகளின் பரிணாமம் என்பது ஒன்றையொன்று தவிர்த்துச்செல்வது போலத் தோன்றினாலும் இந்த முழுச்செய்முறையும் ஒன்றோடு ஒன்று பிணைந்ததாகவே உள்ளது. ஜேவிபியும் விடுதலைப்புலிகளும்

Page 249
462
வெவ்வேறு பின்னணிகளில் தங்களை வளர்த்துக்கொண்ட குழுக்களாயினும் இரண்டுமே ஒரேவிதமான கருத்தியல்களையே பிரகடனப்படுத்துகின்றன. ஒரே சட்டகங்களில்தான் இயங்குகின்றன தத்தமது இனக்குழுக்களுக்கிடையில் இணையான சமூகத்தளங்களையே கொண்டுள்ளன. ஏனைய குழுக்களையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக்கொள்ள முடியாத தன்மையில் இவர்கள் ஒத்துப் போகிறார்கள். தமது இயக் கதி திலி மாறுபாடான கருத்துடையவர்களையும் போட்டிக் குழுக்களில் உள்ளவர்களையும் சித்திரவதை செய்வதிலும் கொடூரமாகக் கொலை செய்வதிலும் இருசாராருமே திளைக்கிறார்கள். ஜேவிபிக்கு வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்கள் இந்த அம்சங்களை மறந்துவிட முனைகின்றனர். இயக்கங்கள் பெரிதாக வளரும்போது இவை பிசாசுத்தனமாக வளர்ந்துவிடுகின்றன. இது விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு சமமான சரித்திரத் தோற்றப்பாடாகும்.
தமிழ்ச்சமூகம் பின்னாளில் மிகுந்த கசப்போடு கற்றுக்கொள்ள நேர்ந்ததைப் போல, ஆரம்ப காலங்களிலேயே போதுமான கட்டுத்திட்டங்களை மேற்கொள்ளாது போனால் - கேள்விகள் எழுப்பாது போனால் மக்களுக்கு பின்னால் ஒருவிதக் கட்டுப்பாடும் செலுத்த முடியாத நிலைமைதான் ஏற்படும். விடுதலைப்புலிகள் தமது துப்பாக்கிகளை டெலோ, ஈபிஆர்.எல்.எப், புளொட் மற்றும் சாதாரண மக்கள் மீது திருப்பியபோது, டெலோ மாறுபட்ட கருத்துக்கொண்ட தமது இயக்கத்தவர்கள் மீதும் சாதாரண மக்கள் மீதும் வன்முறையைப் பிரயோகித்தபோது, புளொட் தனது மாறுபட்ட கருத்துடைய தோழர்களைச் சித் திரவதை செய்து, கொலை செய்த போது, நாட்கணக்கிலி இந்தப்படுகொலைகள் தொடர்ந்தபோது எமது வரலாறு எமது சொந்தமக்களின் இரத்தத்தால் கறைப்படுத்தப்பட்டது. இதேபோல தெற்கிலும் நிலவும் கொடுரப் போக்கானது தனிப்பட்ட, குழுநலன்களுக்காக ஐ.தே.கட்சி பிரயோகிக்கும் அரச வன்முறைக்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும்.
குறுகிய தேசியவாதங்களை ஆதரிப்பதன் மூலம் இந்திய மேலாதிக்கத்தை அடக்க முடியுமென்றோ அல்லது இந்திய ஊடுருவலின் மூலம் தீவிரமாகக் கிளர்ந்தெழும் சிங்கள மேலாதிக்க வெறியைக் கட்டுப்படுத்தலாமென்றோ நம்புவது தவறானது என்பது உணரப்பட வேண்டும். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொள்வதாகவே உள்ளது. ஜேவிபியின் "இந்தியாவை நொறுக்கும்" எளிமையான கோஷம் புவிசார் அரசியல் யதார்த்தங்களையோ இந்தியாவின் அபிலாஷைகளையோ ஆதிக்க வெறித்தனக்கருத்தியலைக் கொண்ட தீவிர சிங்களத் தேசியவாதக்குழு என்ற அடிப்படையில் அதன் சொந்த புவிஅரசியல் வரைமுறைகளையோ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இது தமிழ்ப்பகுதிகளில் இந்தியா வலுவாக வந்தமர்ந்து கொள்வதற்கும், வட கிழக்கிலும் பின்னர் தெற்கிலுமாக இந்தியா தனது மேலாதிக்கத்தினை நிலைநாட்டிக்கொள்வதற்குமான அடித்தளத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. மறுபுறத்தில், இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியாவின் பங்கு அதிகரித்ததால் தெற்கில் குறுகிய தேசியவாத இயக்கங்கள் வளர்வதற்கான தூண்டும் விசையைக் கொடுப்பதாக அமைந்தது.
திருகோணமலையின் தற்போதைய நிலைமை இதற்கு மிக நல்ல உதாரணமாகும். திருகோணமலையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னமானது

463
இலங்கை பாதுகாப்புப்படையும் அரச இயந்திரமும் சிங்களமக்களுக்கு வழங்கிய ஆதரவை அகற்றியது. இந்த ஆதரவு அகற்றப்பட்டதும் அச்சத்துடனும் நலிந்த நிலையுடனும் சிங்களவர்கள் அகதி முகாம்களை நோக்கி ஒடத்தொடங்கினர். சிங்களவர்களால் பல ஆண்டுகளாக அச்சுறுத்தப்பட்ட தமிழர்கள் இப்போது பதிலடி கொடுக்க முனைந்தார்கள். இதனால் பழைய வாழ்க்கை முறையை மீண்டும் தொடங்க சிங்கள அகதிகள் பயப்பட ஆரம்பித்தனர். திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள வன்முறையின் போஷகர்களாக இருந்த இலங்கைப் பாதுகாப்புப்படையினர் தமது விரக்தியை வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினர். வெறித்தனமான தமிழர் விரோத, இந்திய எதிர்ப்புணர்வு கொண்டிருந்த சிங்கள அகதிகள் ஜேவிபியின் புதிய ஆட்திரட்டலுக்கான செழுமையான விளைநிலமாயினர். மறுபுறத்தில், திருகோணமலையில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பவர்களாக இந்திய அமைதிப்படையினரே திகழ்ந்தனர். பிற தமிழ் விடுதலை இயக்கங்களையும் இந்திய இராணுவம் வெற்றிகரமாக ஓரங்கட்டியதுடன் தமிழ் மக்கள் இந்தியாவை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய நிலைமைக்கு மாற்றியிருந்தனர். இந்தப் பின்னணியில் தான் இந்திய இராணுவம் அதிரக பாதுகாப்பு தளவாடங்களை சீனக்குடாப்பகுதியில் நகர்த்தி தங்களின் பாதுகாப்பை நன்கு பலப்படுத்திக்கொண்டது.
இந்த சக்திகளின் சிக்கலான வலைப்பின்னலில் இந்தியாவின் பங்கு வெளிவாரியானதாக இருந்தாலும் அது ஒன்றுடன் ஒன்று முழுமையாகப் பின்னப்பட்டிருந்தது. மேற்கத்தைய வெளியுறவுக் கொள்கை பற்றி எழுதும் விமர்சகர்கள் இந்தியாவின் பங்கினை 'பிராந்திய நெருக்கடிகளை மேலாண்மை செய்தல் என்ற அடிப்படையிலேயே நோக்கினார்கள். மேற்கு நாடுகளாலும் சோவியத் யூனியனாலும் சமாதானக் காவலர்களாகவும் நெருக்கடிகளைக் களைபவர்களாகவும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையிலேயே இந்தியா தனது தென் அண்டை நாட்டின் அரசியலிலும் அப்பிராந்தியத்திலும் தனது காலடிகளை வலுவாகப் பதித்துக்கொண்டதை நோக்கவேண்டும்.
ஆனால் இங்கு இந்தியா மிகவும் கஷ்டமான சூழ்நிலைக்குள் தன்னைச் சிக்க வைத்துக்கொணிடுவிட்டது. எப்போதும் நழுவிப் போய்க் கொண்டிருக்கும் ஸ்திரத்தன்மை என்பதனை அடைந்து கொள்ளாதவரை இந்தியா தனது முக்கிய குறிக்கோள்களைச் சாதித்துக்கொள்ள முடியாது. பாதுகாப்புரீதியிலும் பொருளாதாரர்தியிலும் லாபமடைய வேண்டுமானால் ஸ்திரத்தன்மை என்பது இந்தியாவுக்கு மிக அவசியப்பட்டிருந்தது. இதனைவிட இலங்கையில் தாங்கள் இருப்பதனை இதுவே அவசியமாய் நியாயப்படுத்துவதாகவும் இருந்தது. ஐக்கிய இலங்கையினைப் பேணுவதுடன் தமிழ்மக்களின் தார்மீக உரிமைகளை மீளப்பெறுவதற்கு உத்தரவாதம் வழங்கும் நாடாக இந்தியா திகழும் நிலையில் இலங்கையின் ஸ்திரத்தன்மையை இந்தியா சிறப்பாக விரும்பி நின்றது.
எவ்வாறாயினும் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகள் நீண்டகாலம் நிலைபெற்று நிற்பர். புலிகளின் ஆயுதங்களைக்களையும் நடவடிக்கையானது பொதுமக்களின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் பெருஞ் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இயக்கங்களுக்கிடையிலான போட்டாபோட்டிகளும்

Page 250
464
அர்த்தமற்ற படுகொலைகளும் நாளாந்த நிகழ்வாக மாறிப்போயிருந்தன. பொதுமக்கள் அச்சுறுத்தப்பட்ட சூழலில, அரசியல் சூனியத்தில் வாழவிடப்பட்டனர். ஐ.தே.கட்சி பல வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும் தங்களின் அரசியல் இருப்பிற்கு ஊறு விளைவித்துக்கொள்ளாமல் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இலகுவான எந்த வழிமுறைகளையும் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இதனால் தமிழர் பற்றிய பல பிரச்சினைகளில் இந்தியா பின்வாங்க நேர்ந்ததுடன் சிலவேளைகளில் தங்களின் வலிமையைக் காட்டும் தந்திரோபாயங்களையும் கைக்கொள்ள நேர்ந்தது. எவ்வாறாயினும் சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் குறுகிய தேசியவாத வளர்ச்சியையும், இந்திய விரோதக் கசப்புணர்வையும் இது அதிகரிக்கவே செய்தது.
ஆகவே இந்த முரண்பாடுகளைத் தீர்த்துவைக்க இந்தியாவால் முடியாது. தூங்கிக்கிடந்த நாசகார, வன்முறையில் வெடிக்கப்போகிற போக்குகளை இந்தியா தட்டி எழுப்பிவிட்டது என்பது மட்டுமல்ல, தானுமே அந்த வலைப்பின்னலுக்குள் இம்முறை சிக்கிக்கொண்டும் விட்டது. மத்தியஸ்தம் வகிப்பதற்கு நல்லுதாரணமாகத் திகழக்கூடிய பெருமையை இந்தியா சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாதுபோனாலும் உலகிலுள்ள ஏனைய பெருவல்லரசுகளைப் போல இதுவும் அத்துணை முதிர்ச்சியடையாத ஒரு பிராந்திய வல்லரசு என்ற அளவில் அதனைச் சகித்துக்கொண்டுதானாக வேண்டும்.
8.4 பிராந்திய நெருக்கடிக்கான பொருளாதாரக் காரணிகள் பற்றிய ஒரு குறிப்பு
அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையிலான ஊடுபாவாய் அமைந்துள்ள தொடர்புகளின் அடிப்படையில் ருசிகரமான ஒரு மாதிரி ஆய்வாக இலங்கையின் இன்றைய சூழ்நிலையானது ஆய்வுமனப்பான்மை கொண்ட ஒருவருக்கு பயன்தரவல்லது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கையின் ஆளும் வர்க்கமானது பல்வேறு அரசியல் அமைப்புகள் மூலமாயும் பல செய்முறைகள் மூலமாயும் அதிகாரங்களை ஒருங்கிணைத்து ஸ்திரப்படுத்திக்கொள்ளவே முயற்சித்து வந்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற முறையிலிருந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை உருவாக்கம் வரை, சமூக நல அரசாக-மையப்படுத்தப்பட்ட அரச முதலாளித்துவமாக இருந்து தாராள பொருளாதார அமைப்பு வரை பல மாறுதல்களை மேற்கொண்டு ஆளும் வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரும் அதிகாரங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும் சொத்தைக்குவித்துக் கொள்ளவுமே முயன்று வந்துள்ளனர். அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளில் பல்வேறு பாராளுமன்ற ஜனநாயக அமைப்புகள் ஆளும் உயர் குழாத்தினருக்காக அதிகாரப் பேரம் பேசுதலில் ஈடுபட்டு, ஏனைய சமூக வகுப்பினர் மத்தியிலும் திருப்திகரமான உணர்வினை ஏற்படுத்தி, ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்திருக்கின்றன. உலகளாவிய முதலாளியக்

465
கட்டமைப்பின் வெளிச்சுற்றில் அமைந்து பணப்பயிர்களுக்கான தளம்பல் சந்தைகளைக் கையாள வேண்டியும், குறைந்த தொழில் வளர்ச்சியுடனும் தேக்கமுற்ற கிராமிய விவசாயத்துறையுடனும் இயங்க வேண்டிய நிலையில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது முழு அமைப்பையும் அரவணைத்து ஆளும் வர்க்கத்தின் ஏகநலன்களுக்கு வசதியானதொரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் இருந்தது. காலனிய காலத்திலும் நவகாலனிய காலத்திலும் ஆளும் வர்க்கம் அடைந்த சகல சம்பாத்தியங்களும் கூட ஆளும் வர்க்கத்தின் அதியுயர் சுரண்டல் முறைக்கு ஈடுகட்ட முடியாததாகவே போய்விட்டது. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் இது சாத்தியமானதாகவே இருந்தது. இந்த சுரண்டல் மிக அப்பட்டமானது. வெகுஜனங்கள் தமது வாழ்விடங்களிலேயே நிர்க்கதியாக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில் நாட்டின் அற்ப சொற்ப மூலவளங்களுடன் பாராளுமன்ற ஜனநாயகத்திற் கூடாக அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியிருந்ததால் மேற்கு நாடுகளின் பொருளாதாரக் கோட்பாட்டாளர்களிடமிருந்து 'மெதுவான அபிவிருத்திப்பரவல் என்ற கருத்தாக்கத்தை ஆளும் வர்க்கம் கையாள ஆரம்பித்தது. பொருளாதாரம் சார்ந்த முக்கிய பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு, தேர்தல் வாக்குகளுக்கு அடிப்படையான இரணி டாந்தரத்தமைந்த உணர்வெழுச்சி மிக்க பிரச்சினைகளுக்காகப் போர்க்கொடி தூக்கியதன் மூலம் வாக்காளர்களைத் திருப்திப்படுத்த இவர்களால் முடிந்தது. ஆகவே, இலங்கையில் பெரும்பான்மை சமூகத்தினி அபிலாஷைகளைத் திருப்திப்படுத்துவதன் மூலமே தேர்தலில் வெற்றி என்பதும், அரசு இயந்திரத்தின் மீதான ஆதிக்கமும் கிடைப்பதாயிற்று. தங்களின் அவலங்கள் சிறுபான்மையினர், அவர்களின் இனம், மொழி, சமயம் போன்றனவற்றால்தான் அடிப்படையில் உருவாகின என்ற நம்பிக்கையிலிருந்தே இவர்களின் அபிலாஷைகள் எழலாயின. இவ்வகையான பிரச்சினைகளை பிரச்சாரப்படுத்துவதற்கு குட்டி பூர்ஷ~வாக்களுடனான கூட்டு அவசியமாயிருந்தது. சிங்கள மக்களின் தென்னிலங்கைக் கிராமியப் பகுதி அனைத்திலும் குட்டி பூர்வு"வாக்களதும் சிறு உற்பத்தியாளர்களதும் கருத்தியலே ஆதிக்கம் செலுத்தியதால் இந்தவர்க்கம் பாராளுமன்றத்தில் மிகமுக்கிய பங்காற்றியது. முன்னரே நாம் கூறியது போல், பூரணமான தாராளப் பொருளாதார அமைப்பாக இருந்தாலென்ன அல்லது பாதுகாப்புப் பொருளாதாரத் தனிமை கொணட தேசிய அரச முதலாளித்துவமாக இருந்தாலென்ன குறுகிய தேசியக் கருத்தியலின் வெற்றியானது மிகத்தெளிவாகத் தெரிந்தது.
இத்தகைய சார்புப்பொருளாதாரமானது உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் அதிர்ச்சிகளை தி தாங்கிக் கொள்ளக் கூடிய நிலைமைகளைக் கொண்டிருப்பதில்லை. ஆரம்பகாலங்களில் இருந்தே, 1971ம் ஆண்டு ஜேவிபி. கிளர்ச்சியாயினும் சரி அல்லது தற்போதைய ஜே.வியி கிளர்ச்சியாயினும் சரி, ஆயுத மோதல்கள் அரசியல் சூழ்நிலைகளைச் சிதறடித்து, பொருளாதாரத்தை கீழ்மட்டத்தில் அமிழ்த்தியது. இத்தகைய நிகழ்வு பெருமளவு சார்பு

Page 251
466
முதலாளித்துவத்தின் பொருளாதார ஸ்திரமின்மையிலிருந்தும் முரண்பாடான முறையில் குறுகிய தேசியவாதக் கருத்தியலில் தங்கியிருப்பதிலுமிருந்தே உருவாகிறது. ஐ.தே.க. கட்சி சந்தைப்பொருளாதார அமைப்பினைப் பூரணமாக ஏற்று அதனைப்பின்பற்றிய போதிலும் பன்னாட்டு முதலீட்டிற்கான ஒரு சொர்க்கபுரியாக தன்னை விற்றுக்கொள்ள அதனால் முடியவில்லை. அதன் சுதந்திர வர்த்தக வலயங்கள் வெற்றி தராததுடன் பெரிய அளவிலான முதலீடுகளும் இடம் பெறாததால் கொழும்பு "சொர்க்கநகர்" என்ற பெயர் தோலி வியைத் தழுவியதுடன அதன் மோசமான விளைவுகள் சுற்றுலாத்துறையையும் பாதிக்கத் தொடங்கியது. நாட்டையே அழிக்கக்கூடிய உள்நாட்டு யுத்தம் மூண்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் தான் ஆளும் கட்சி அதன் முதலாளித்துவ உணர்வுகளின் புரிதலுக்கியைந்து இனங்களுக்கிடையிலான நெருக்கடி நிலையினைச் சமனப்படுத்த முயற்சி மேற்கொண்டது. இது தெற்கிலுள்ள குட்டியூர்ஷ"வாத் தேசியவாதம் மீண்டும் தாக்குதலைத் தொடுப்பதற்கும். ஜே.வி.பி. புதிய உத்வேகத்துடன் தன்னை மீளாக்கம் செய்து கொள்வதற்குமே வழிவகுத்தது.
தீவிரவாதத்தால் உருவாக்கப்பட்ட வன்முறையான சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கும் அரசியலி, பொருளாதார ஸ்திரத் தனிமையை ஏற்படுத்துவதற்குமான முயற்சியில் ஆளும் கட்சியானது கட்சிக்குள் முதலாளித்துவத்திட்டங்களைப் பரிபூரணமாக ஆதரித்து நின்ற பிரிவினருக்குப் பதிலாக, வெகுஜன, குறுகிய தேசியவாதிகளின் பிரிவைச் சேர்த்துக் கொண்டது. அதாவது, தங்களின் பிரமாண்டமான கீழ்மட்டமக்களுக்கான திட்டங்களுடன் பிரேமதாசாவின் அணியினர் மேற்கு நோக்கிய ஜயவர்த்தன அணியினருக்குப் பதிலாக அரங்கில் முன்னணிக்கு வந்தனர். இவ்வாறு அரசியல் புரட்டல்களும், கையாளுகைகளும் சட்டமன்றத்திலும் அரசமைப்பிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தும் உள்ளூர் ஆளும் வர்க்கத்திற்குத் தேவையான அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொடுக்க முடியவில்லை.
முதலாளித்துவ சார்புடைய அரசின் பொருளாதாரத் தடுமாற்றங்களும், கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து பேதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான திறமையின்மையும், இந்தப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற அபாயகரமான தன்மையும் ஒன்று சேர்ந்து ஆளும் வர்க்கம் அரசியல் ஸ்திரம் பெறுவதற்குக் குந்தகமாக அமைந்து அதற்கு ஊறு தேடியது. இதனால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத ஒரு குழம்பிப் போன நிலையில் இலங்கையின் பூர்வு வா வர்க்கம் உள்ளது. இந்தச் சூழ்நிலைகள் திறந்த பொருளாதாரத் திட்டங்களினதும் உலக முதலாளித்துவ அமைப்பின் சுற்றயல் எல்லைகளில் கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தைச் சக்திகளினதும் பொருளாதார, அரசியல் யதார்த்தங்களைப் பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படவேண்டும்.
நவகாலனிய சூழ்நிலைகளும் அதன் பொருளாதார, புவிசார் அரசியல் யதார்த்தங்களும் தான் ஜே.வியியின் குறுகிய தேசியவாதப் பார்வைக்கு சவாலாக இருந்ததென்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஜே.வியியின்

467
நடவடிக்கைகளில் இருந்து அது அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே குறியாய் இருக்கிறதென்பது வெளிப்படையாகவே தெரிந்ததொன்றாகும். எப்போதாவது ஜே.வி.பி. அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அதன் எளிமையான வெற்றுக் கோஷங்களும், இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான அதன் சவடால்தனமும், உலக முதலாளித்துவ அமைப்பிற்குள் சிக்குண்டு போன ஒரு நாட்டின் யதார்த்தங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாத நிலையில் அது முன்வைத்த அரசியல், பொருளாதாரத் திட்டங்களின் வெறுமை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருக்கும். ஒன்றில் அது வீழ்ச்சியுற வேண்டும் அல்லது சமரசமாகிப் போயிருக்க வேண்டும். பிறகு அதன் குட்டிப்பூர்ஷ"வா வர்க்க நலன்களின் உண்மையான குணங்கள் வெளித்தெரிய வந்திருக்கும்.
மீண்டும் வரலாற்றின் ஒரு மூடுண்ட பாதைக்குத் தான் நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். பூர்ஷவாக்கள் அவர்கள் எந்த இனத்தை, எந்த அணியைச் சேர்ந்தவராயினும் குட்டி பூர்ஷவாக்களுடன் காத்திரமான கூட்டு வைத்துக் கொள்ளாமல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. குட்டி பூர்வு"வாக்கள் மேலாதிக்கத்திற்கும் நவகாலனியத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதில் வெளிப்படையாக முற்போக்கானவர்களாக இருந்தாலும், அவர்களின் வர்க்கக் குணாம்சத்திற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டோ அல்லது சுய அழிவில் முடிந்து போகிற வீர சாகஜப் பாதையையோதான் பின்பற்ற வேண்டியிருந்தது. ஒருபுறம் பூர்ஷவாக்கள் பல்வேறு அளவுகளில் நவகாலனிய ஊடுருவல்களை மேற்கொண்டு மக்களை வதைத்துக் கொண்டிருக்க, கொடூரமான வன்முறை கலாச்சாரத்தைத் தாங்கிய குறுகிய தேசியவாதக் கருத்தியலைக் கொண்ட குட்டிப்பூர்ஷாவா வர்க்கமோ மக்களின் தார்மீக பலத்தை முடக்கியதுடன் ஒடுக்குமுறைக்கு எதிராக அமைப்புரீதியாக எழுந்த எதிர்ப்பியக்கங்களையும் பலமிழக்கச் செய்தது. இதைவிட குட்டி பூர்வு”வாக்களின் குருட்டு அரசியல் பார்வைகள் பயனற்ற வெற்று நிகழ்வுகளுக்கே நாட்டை இட்டுச் சென்று இன்னுமதிகமான மேலாதிக்கம், பேரிழப்பு, பெருஞ்சோகம் என்பனவற்றிற்கே வழிவகுத்தது. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அதன் சுயபிம்பமும் இலட்சியங்களும் உன்னதமானவையாகவே இருந்தாலும்-இப்பிராந்தியத்தில் தங்கள் மேலாதிக்கத்தினை வலுப்படுத்துவதற்கான பிரயத்தனங்கள் மிகமிகத் துல்லியமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் -உலக முதலாளித்துவ அமைப்பின் தாளத்திற்கு ஆடவேண்டிய ஒரு சார்பு நிலை முதலாளித்துவ நாடு என்றவகையில் அதன் பொருளாதார, அரசியற் சூழ்நிலைமைகள் என்பன, தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு மெதுமெதுவாகவே வெற்றிகாணவேண்டிய ஒரு யுத்தத்தில் இந்தியா இறங்குவதென்பது அதன் ஆளும் வர்க்கத்தின் அதிகார நோக்கத்திற்கு அனர்த்தம் விளைவிப்பதாயும் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தும் போக்கிற்கு இட்டுச் செல்வதாயுமே அமையும். ஆனால் இந்த யுத்தங்கள் விரிவடைந்து கொணிடிருக்கும் இந்தியாவின் ஆயுதத்தொழிற்சாலைகளுக்கு நன்மை தேடித்தருவதாயும் அதிகாரத்தைத்

Page 252
468
தங்கள் கையில் வைத்திருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு லாபம் தருவதுமாக இருந்தது. ஒடுக்குமுறை யந்திரத்தை நன்கு கூர்மையுறச் செய்வதற்கான வழிவகையாக இது அமைந்ததுடன் இராணுவம் மற்றும் மத்திய ரிசர்வு பொலிஸ் படை ஆகியன உள்நாட்டுக் கிளர்ச்சிகளை அழித்தொழிப்பதில் திறமையாகச் செயற்படவும் தயாராக்கியது. ஆளும் வர்க்கத்திற்கு சிறிது காலத்திற்கு இது நன்மையாக இருந்தாலும் ஒரு நீண்ட கால அளவில் அதன் பொருளாதார சார்புத்தன்மை, சமனற்ற அபிவிருத்தி போன்றவை தொடர்ந்து கொண்டு சென்று இதனால் ஏற்படும் முரண்பாடுகளின் அதிர்ச்சிகளை உள்வாங்குவதற்கான சக்திகள் அதனிடம் உள்ளன என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட ஏழைகளான பலகோடி மக்களுக்குத்தான் இந்த அர்த்தமற்ற சம்பவங்கள் பெரும் இழப்புகளையும் அபாயங்களையும் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றன.

469
அத்தியாயம் 7 அஹிம்சை: ஒரு பார்வை
யுத்தம் என்ற நிறுவனமானது இன்று 5000 வருடங்கள் பழமையுடையதாக உள்ளது. நமது முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின் அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு அதற்கும் மேலாக உபரியாக உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டு விட்டதுமே ஒருவருக்கொருவர் யுத்தம் செய்துகொள்ள ஆரம்பித்து விட்டனர். யுத்தம் சங்கிலித்தொடர் போல பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. யுத்தம் முடிவே இல்லாமல் இன்னொரு யுத்தத்தையே உருவாக்குகிறது. இந்த யுத்தம் என்ற தீங்கு பயக்கும் நிறுவனத்துடன் நாம் ஒருபோதும் நம்மை இணைத்துக் கொள்ளக்கூடாது. கி.மு.3000 ஆண்டுகளின் மத்தியிலேயே இதை ஒழித் திருந்தால் அதன் தீய பலன்களை நாம் சந்தித் திருக்க வேண்டியதில்லையென்று அனுபவங்களிலிருந்து நாம் இப்போது தெரிந்து கொணர்டுள்ளோம். யுத்தம் என்ற கர்மத்திலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியுமா? இது சாத்தியப்பட்டுவிடுமென்றால் நாம் மிக "மகத்தான ஆத்மீக சாதனையையே செய்து முடித்தவர்களாவோம். முடியாவிட்டால் நாம் அழிந்துபடப் போகிறோம் என்றே அர்த்தமாகும்". (ஆர்னால்டு டொய்ன்பி, "எதிர்காலத்தைக் காப்பாற்றுதல்" என்ற நூலில், ஒக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், இங்கிலாந்து, 1971)
7.1 அமைதிக்கான சாத்தியக்கூறுகள் மறைந்து கொண்டு போதல்
இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கான சாதிதியக் கூறுகள் மிகக் குறைவாகவே தென்படுகின்றன. இனமோதலில் ஆரம்பிதீத இந்தச்சண்டைகள் தமிழ்மக்கள் மத்தியில் பரஸ்பரம் நாசமேற்படுத்தக்கூடிய, தங்களின் சொந்த சகோதரர்களையே கொலை செய்யுமளவிற்கு இட்டுச்சென்று இந்தியா தலையீடு செய்யவும் சிங்களவரிடையே அதிகாரத்திற்கான கடும் சண்டை மூளவும் வழிசெய்தது. இப்போது வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மென்மேலும் வன்முறைரீதியாகவே சிந்திக்கும் நிலைமைக்கு வளர்ந்திருப்பதுடன் வண்முறைத் தீர்வுகளையே காணவும் முனைகின்றனர். "சகலவிதமான அஹிம்சைப் போராட்ட வழி முறைகளும் தீர்ந்து போனபிறகு கையாளப்படுகின்ற தடுப்பு அல்லது தற்காப்புக்கான வன்முறை போன்ற கருத்துக்களுக்கு அறிவுபூர்வமான விளக்கம் கொடுத்து, வன்முறைக்கு இடம் வழங்கி அதனை நியாயப்படுத்தவும் மக்கள் தரப்பு வக்கீல்கள் பலர் தயாராகவே இருக்கிறார்கள். இந்த நச்சுச்சுழல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வன்முறைக்கான சூழ்நிலைமைகளையும் வெளித்தலையீடுகளுக்கு அனுகூலமான அதிகார வெற்றிடத்தையும் ஏற்படுத்திக்கொடுத்த பெரும்பழி

Page 253
470 ஒரு சமூகம் என்ற வகையில் நம்மேல் தான் உள்ளது. யாழ்ப்பாணத்தில் புகலிடம் தேடிய ஒரு சிங்களத் தொழிற்சங்க அவதானி ஒருவர் தமிழ் சமூகத்தில் மறைந்திருந்த அபிலாஷைகளினதும் சிந்தனைகளினதும் பிரதிபலிப்பாகவே-அச்சமூகத்தின் ஊற்றாகவே இளம் போராளிகள் அமைகிறார்கள் என்று அனுமானித்தார்.
"வன்முறை: குற்றமிழைக்காதவர்கள் யார்?" (லங்கா கார்டியன், 10 (23), 20-24, 1988) என்ற கட்டுரையில் பேராசிரியர் எம்பலியவதான சிங்களவர்களையும் தமிழர்களையும் சேர்த்தே அவர் பேசும் போது வன்முறையின் மூலங்களை எம்சிந்தனைக்குத் தொட்டுக்காட்டுகிறார்:
நாமே எமக்குள் பொதுவான குழப்பத்திலும் வன்முறையிலும் போலித்தனங்களிலும் மூழ்கிப்போய் எமது நாளாந்த உறவுகளிலும் இந்த விஷயங்களையே பரஸ்பரம் பலப்படுத்திக் கொள்ளும் விதத்திலேயே என்றும் நடந்து கொண்டு வருகிறோம். மனுக்குலத்தின் இந்நெருக்கடி ஏதோ மாயமான, குறிப்பாகக் கூறிக்கொள்ள முடியாத சிலரது நடத்தையின் விளைவு அல்ல. நாமே இதற்குப் பொறுப்பாவோம். நமது மனங்களும் மற்றவர்களின் மனங்களைப் போலத்தான். ஆசைகளும் போலித்தனங்களும் வன்முறையும் பாறாங்கற்களைப் போல நம் மனதில் குடிகொணர்டிருக்கின்றன. எமது மனங்கள் அடிப்படையிலேயே பிரிவினைவாதத்தன்மை கொண்டு காணப்படுகின்றன. எமது மனம் இந்த நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் வரை தற்போதைய இந்தக் குழப்பநிலைக்கு நாமும் தொடர்ந்து பங்களிப்பவர்களாகவே இருப்போம். இந்தப் பிரச்சினைகளைச் சிருஷ்டித்தவர்களில் நாமும் அடங்குவோம் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள முயல்வோம்" என்று அவர் கூறுகிறார். நாகரிகமும் அதன் குறைபாடுகளும்" எனும் ஆய்வில் அழிவுக்கும் மற்றும் சாவுக்குமான இயல்புணர்ச்சியான தன்டோஸ் எனும் மனநிலையின் இருணிட பகுதியைப்பற்றிக் கூறும் போது அறிஞர் சிக்மண்ட் பிராய்டு தனது அவநம்பிக்கையையே அதில் பெருமளவில் தெரிவித்துக் கொண்டிருந்தார்:
மக்கள் இதனை உடனடியாகவே மறுதலித்தாலும் இவற்றின் பின்னால் உள்ள ஓர் உண்மை என்னவென்றால் மனிதர்கள் அன்பு செலுத்தப்பட வேண்டிய மிகவும் மென்மையான உன்னத சிருஷ்டிகள் என்றும். அவர்கள் தாக்கப்பட நேர்ந்தால் மட்டுமே கூடிய பட்சம் தம்மைத் தற்காத்துக் கொள்ளக்கூடும் என்றும் தவறாக கருதுவுதுதான். ஆனால் இதற்கு மாறாக, இந்த மனித சிருஷ்டிகளிடம் அவர்களிடம் இயல்பாகவே குடிகொணடுள்ள இயல்புணர்ச்சியில் அராஜகத்தின் வலிமையான கூறுகள் நன்கு

471
விரவிக்கொண்டுள்ளன. இதன் விளைவாக, இவர்களின் அண்டை அயலார் என்போர் இவர்களுக்கு உதவிக்கு வரக்கூடியவர்களாகவோ, பாலியல் உறவு கொள்ளத்தக்கவர்களாகவோ மட்டுமல்லாமல் அவர்களை நன்கு ஆககிரமித்துக் கொள்ளவும், எந்தவித உபகாரமுமின்றி அவர்களின் உழைப்புச் சக்தியினைச் சுரண்டிக்கொள்ளவும், அவர்களின் சம்மதமின்றியே அவர்கள் மீது பாலியல் உறவு வைத்துக் கொள்ளவும், அவர்களது உடமைகளை அபகரித்துக்கொள்ளவும், இழிவுபடுத்தவும், வேதனை ஏற்படுத்தவும், சித்திரவதை செய்யவும், கொலை செய்யப்படுவதற்கும் கூட உரியவர்கள் போலாாகிறார்கள். (Homo homini lupus) மனிதனுக்கு மனிதன் நரித்தனமாகவே செயற்படுகிறான். வாழ்வின்மீதும் வரலாற்றின்மீதும் கொண்டுள்ள அனுபவத்தின்பேரில் எழும் இந்தக் கூற்றை மறுத்து வாதாடும் துணிச்சல் கொண்டவர்கள் யார்? ஆனால் ஒரு விதியே போன்று இந்தக் கொடூரமான அராஜகமானது ஏதாகிலும் ஒரு சின்னத்தூணிடலுக்காகக் காத்திருக்கின்றது, அல்லது இதனை விடத் தீவிரம் குறைந்த நடவடிக்கைகள் மூலம் அடைந்து கொள்ளத்தக்க இலக்குகளைக் கொண்ட சில நோக்கங்களின் சேவைக்குத் தம்மை வழங்கக் காத்திருக்கின்றன. அதற்கு அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்பட்டு, அதற்கெதிராக நம்மிடம் உறைந்து கிடக்கும் மனச்சக்திகள் செயற்படாமலி போகும் போது அது தனி னிச்சையாகச் செயற்பட ஆரம்பித்து தனது சொந்த மனித குலத்தையே அந்நியமாக நினைக்கக் கூடிய வகையில் மனிதனை ஒரு காட்டுமிராணிடித்தனமான மிருகமாக انتق98ی வெளிப்படுத்துகிறது’ உண்மையில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வளவு குழப்பகரமான நிலைமைகள் ஏற்பட்ட பின்னருங்கூட உறவினர்களுக்கு சலுகை வழங்குதல், சீதனம் போன்ற சமூக நிறுவன முறைமைகள் முன்னெப்போதையும் விட இப்போது மேலும் வேரூன்றியுள்ளன. பழமையான சாதியமைப்பு முறைகள் ஒரு தர்மசங்கடம் போலக்கருதப்பட்டு வெளியில் நிராகரிக்கப்பட்டிருந்தாலும் நயவஞ சகமான முறையில் சாதிப் பிரிவினைகள் முளை விடவே ஆரம்பித்துள்ளன. சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை, அரசியல் ரீதியான பாரபட்சத்திற்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கோள்ளப்படும் தற்காப்பு ஆக்கிரமிப்புகளை அடிக்கடி நிகழும் கும்பல் வன்முறைக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு இயற்கையான விளைவாக ஒருவர் நியாயங் கற்பிக்க முடியும். ஆனால், இந்த அக்கிரமங்கள் உள்நோக்கி அதாவது சமூகத்தையே நோக்கிச்சென்று, எதிர்ப்புகள் எந்த வடிவில் வந்தாலும் அவற்றையோ மாறுபட்ட கருத்துக்களையோ

Page 254
472 சகித்துக்கொள்ள முடியாத நிலைக்கு இட்டுச் செல்வதும், நாசகார
சகோதரப் படுகொலைகளை மேற்கொள்வதும், சட்ட நீதிவரைமுறைகளுக்கு அப்பாற்பட்டு சாதாரண மக்களை அரசியல் கொலைக்குட்படுத்துவதும், ஆணி - பெண் குழந்தைகளைப் படுகொலை செய்வது மி , சடலங்களைக் கேவலப் படுதி திச்
சிதைப்பதும், சித்திரவதைக்குட்படுத்தலும், வெறுங்கூலிப்படைகளை போல வன்முறையை ஏற்றுமதி செய்தலும் என்று ஆகிப்போகுமானால் எரிக் ஃப்ரொம் வர்ணிக்கும் நாசகார உருமாற்ற நிலைமை (மனித அழிவு பற்றிய ஒரு பகுப்பாய்வு (நூலில்) பெங்குயின் புக்ஸ், இங்கிலாந்து, 1973)யின் கட்டத்தினை நாங்கள் அடைந்து விட்டோம் என்பதற்கான அறிகுறிகள் தான் இவை என்று தான் அர்த்தமாகும்.
7.2 மறந்து போன ஆன்மீக பாரம்பரியம்
விடுதலை பற்றி நாம் பெருங்கூச்சலிட்டாலும் நம்மிடம் மேலோங்கியிருந்த பொருளாய நலன்கள் பொதுநன்மை கருதி சமூக, பொருளாதார உறவுகளை நாம் மீளமைத்துக்கொள்வதற்கு ஒரு தடையாகவே அமைந்துவிட்டது. முழு சமுதாயத்திற்குமே கேடு விளைவிக்கத்தக்க வகையில் எமது விவசாயிகளைப் பொருளாதார நலன் கருதி பணப்பயிர்களை மட்டுமே உற்பத்தி செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறோம். தனிநாடு பற்றியும் காலனித்துவத்திற்கு முடிவு கட்டுவது என்றெல்லாம் நாம் உரத்துக் கோஷமிட்டாலும் திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு போன்ற நவீன வசதிகள் அற்ற, இலகுவில் லாபம் தேடிக் கொள்ள முடியாத எல்லைப்புறப் பிராந்தியங்களில் போய் வாழ்வதற்கு மிகச்சில தமிழர்களே தயாராக இருந்தனர். இங்கு போராட்டத்துடனும் அர்ப்பணிப்புடனும் தான் வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருந்தது.
பாரம்பரியமாக எமது கலாச்சாரத்தில் பரியாரிகள், ஆசிரியர்கள், சமயவாதிகள் ஆகியோரின் தொழில்கள் மிக உயர்வாகவே மதிக்கப்பட்டிருந்தன. பொருளாய நலன் கருதி இந்த உன்னதத் தொழில்களுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது கவலைக்குரியதாகும். முதற் பாதிக்கப்பட்டது நோவைத் தீர்ப்பதனையும் பிணியை அகற்றுவதனையும் நோக்கமாகக் கொண்ட மருத்துவத் தொழிலாகும். இரண்டாவது, அளவிறந்த வகையில் கல்வியைப் பகிர்ந்தளிக்கும் தொழிலாகும். இன்று இவை இரண்டுமே பணம் சம்பாதிக்கும் தொழில் முயற்சிகளாக மாறிப் போய்விட்டன. போரின் சீர்க்குலைவுக்குப்பின் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் டியூட்டரிகள் எனப்படும் தனியார் போதனா நிலையங்களும், தனியார் மருத்துவ ஆலோசனைக் கூடங்களுமாகவே அமைந்தன. மேற்கின் பாதிப்பால் கல்வியின் அடிப்படை நோக்கங்களாக பணிடைய காலத்தில் இருந்த தன்னையுணரும் சுயதெளிவு என்பது இன்று பொருளாதார இலக்குகளை நோக்கியதாய் மாறி அமைந்துவிட்டது என்று கல்வியியலாளரான பேராசிரியர் கு.நேசையா குறிப்பிடுகிறார்.

473 வாழ்க்கை பற்றிய விசாரணையில் இன்னொரு முக்கிய காரணியும் நமது ஆராய்ச்சிக்கு சவால்விடுவதுபோல் தெரிகின்றது. விதியின் விபரீதமான திருப்பமும் வலிமை மிகுந்த சக்திகளால் தயாரான உன்னத திட்டங்களின் தோல்வியும் மற்றும் பல நிகழ்ச்சிகளின் எதிர்பாராத திருப்பமும் விளக்கப்பட முடியாததாகும். சூழ்நிலைகள் இன்று வளர்ச்சியடைந்து வந்துள்ள நிலைமையைப் பார்க்க்ைமில், சூழ்நிலைகளைக் கையாளுவதில் பேர்போன நிபுணர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டாலும் ராஜ்வ் காந்தியாலோ, ஜே.ஆர்.ஜயவர்த்தனவாலோ அல்லது வே.பிரபாகரனாலோ மட்டும் தனியே தீர்மானிக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டதாகக் கூறி விடுவதற்கில்லை. பல்வேறு சக்திகளின் பரஸ்பரத் தாக்கங்களால் மொத்தமாக வெளிப்பட்ட ஒரு செயலாகக் கூட அது இருக்கவில்லை. இதற்கு மேலாக அதற்கே உரித்தான ஒரு தர்க்கத்தோடு அது வெளிப்பட்டு, குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையும் மீறிக்கொண்டு பல அர்த்தங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழ் மக்கள் தாமே இன்று அனுபவிக்கும் தாங்கொணாத வேதனையானது அதற்கான காரணங்களையும் ஆழமான விளக்கங்களையும் கேட்டு நிற்கின்றது.
ஒருவேளை இவை எல்லாவற்றினதும் முடிவில்-நமது பொருள்சார் ஆசைகள் எல்லாம் தீர்ந்து போனபின், வன்முறையால் நல்லாகவே களைத்துப் போனபின், துயரங்களை எல்லாம் அனுபவித்துத் தீர்த்தபின், அனுபவங்கள் எல்லாம் கடந்து போன பின்னர்தான் நாம் யார், நாம் எங்கிருக்கிறோம் என்ற மதிப்பீடுகளுக்கே இறுதியில் வந்து சேர்வோம் போல் தெரிகிறது. டி.எஸ்.எலியட் மிகப் பொருத்தமாகச் சொல்கிறார்:
தேடுவதை நாம் நிறுத்தப் போவதில்லை. முதன்முதலாக நாம் எங்கு ஆரம்பித்தோம், எந்த இடத்தில் ஆரம்பித்தோம் என்று தெரிந்து கொள்வதில் தான் நமது தேடுதலின் முடிவு இருக்கிறது"
7.3 அஹிம்சை
ஒரு அடிமை தான் இனிமேல் ஒரு அடிமையில்லை என்று எந்தக்கணத்தில் தீர்மானிக்கின்றானோ அப்போதே அவனது விலங்குகள் அகன்றுவிடுகின்றன. அவன் தன்னை விடுவித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அந்த வழியைக் காட்டுகிறவன் ஆகின்றான். விடுதலை, அடிமைத்தனம் என்பதெல்லாம் நம் மனதைப் பொறுத்தவை (எம்.கேகாந்தி, "அமைதி மற்றும் போர்க்காலத்தில் அஹிம்சை, நவஜீவன், இந்தியா 1946)
சீதனம் என்னும் சமூக அமைப்பு முறைமையானது வர்த்தகரீதியான கொடுக்கல் வாங்கலாகச் சீரழிந்து போயிருக்கும் நிலைமை பொருளாய நலன்கள் எவ்வளவு மேலோங்கியுள்ளன என்பதைக் காட்டும் நல்ல உதாரணமாகும்.

Page 255
474
எமது ஆத்மீக சுதந்திரத்தை மிக இலகுவாகவே அடமானம் வைத்து விட்டு பெளதிக மற்றும் பொருள்சார் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்காகக் கூச்சல் இடுகிறோம். தற்போதைய நிகழ்வுகளுக்கு நாம் எவ்வளவு தான் பூடகமான பல விளக்கங்களைக் கொடுத்திருந்தாலும் எமது முன்னோர் பலர் கூறிப் போயிருந்த உன்னத இலக்குகளிலிருந்து வெகுதூரம் விலகிச்சென்று இன்னும் அலைந்து திரிந்து கொண்டுதாணிருக்கிறோம். அவ்வையார் பாடும் போது,
அரிது அரிது மானிடராதல் அரிது
என்று கூறிப் போந்தார்.
ஆழமான-நம்மைப் பற்றிய தெளிவான சுயதரிசனத்திற்கான இந்த அழைப்பினை நாம் ஓரத்தில் ஒதுக்கித்தள்ளி விட்டோம். உன்னத இலட்சியங்களை நோக்கிய முழுமையான மாற்றங்கள் இல்லை என்றாலும் குறைந்தது அன்பு, அஹிம்சை ஆகியவற்றின் தார்மீக, ஆத்மீக மதிப்பீடுகளின் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கூட இல்லாமல் நமது நோக்கங்களை அடைய வன்முறையிலும் வெறுப்பிலுமே நாம் தஞ்சம் புகுந்துள்ளோம். மேலும் மேலும் நாசகார சக்திகள் வளர்ச்சியுற்று தமிழ்ச் சமூகத்தையே சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டதையே இன்று நாம் காண்கிறோம். கொலை செய்யப்பட்ட யாரோ ஒவ்வொருவருக்காகவும் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ, ஒரு தந்தையோ அல்லது ஒரு இரத்த உறவினனோ அல்லது ஒரு தோழனோ பழிக்குப்பழி வாங்கக் காத்திருக்கிறார். உயிரென்பது மிக மலிவானதாக மாறிப் போய்விட்டது. வாழ்க்கை மீதான சகல மதிப்புகளையும் நாம் இழந்து போய்விட்டோம். செழுமையான ஆத்மீக பாரம்பரியத்தைக் கொணிட பழமையான நமது நாகரிகத்தைப் பொறுத்தவரையில் இது கொடூரமான மிகவேதனையான நிலைமையாகும்.
இதற்குச் சமமாகவே உயிர்வாழ்வன எதுவாயினும் அது மனிதனாகட்டும், மிருகமாகட்டும் அதற்கு கருணை காட்டுவதே பெளத்த மதத்தின் அடிப்படையாகத் திகழ்ந்தது. அந்த மதநம்பிக்கையைப் பிரச்சாரம் செய்பவர்கள் கூட இந்த உன்னத கோட்பாட்டை கைவிட்டு மறந்து போனது துக்ககரமானதாகும். மிக உயர்ந்த உட்டோப்பியன் கற்பனாவாத அரசியல் அமைப்புகளால் கூட பூரண விடுதலையை வழங்கிக்கொள்ள முடியாது. ஒருத்தருக்கொருத்தர் ஆதிக்கம் செலுத்தும் நிலையும், வரையறுக்கப்பட்ட மூலவளங்களுக்காகவும் அசமத்துவமான செல்வங்களின் பங்கீட்டிற்காகவும் மோசமான இழுபறிப் போராட்டமும் எப்போதும் நிலவவே போகிறது.
அன்பு, கருணை பற்றி அற்புதமான பிரசங்கங்கள் நிகழ்த்தலாம். ஆனால் அந்த வகையான தார்மீக, ஆன்மீக உரைகளை நடைமுறைப்படுத்தும் போது அது கடினமாக இருப்பதுடன் யதார்த்த வாழ்க்கைக்கு அத்துணை பொருந்திவரக்கூடிய ஒன்றாகவும் கூட இருப்பதில்லை. அரசின் தொடர்ந்த இன ஒதுக்கலுக்கும் கடுமையான அடக்குமுறைக்கும் தமிழ்சமூகம் பதிலளிக்க

475
வேண்டியிருந்தது. இது ஒன்று சகித்துக்கொண்டு அடங்கிச் செல்வதாகவோ அல்லது அதனை நிராகரித்துக் கிளர்ந்தெழுவதாகவோ தானிருந்தது. இரக்கமற்ற, கொடூரமான எதிரியைச் சந்திக்கக்கூடியதான ஒரே வழியாக வன்முறைப் போராட்டம் ஒன்றே திகழ்ந்தது. இதுவே மிகுந்த பலனளிப்பதாயும் விரைவானதாயும் இலக்குகளை நிச்சயம் அடையக்கூடியதாயும் இருந்தது என்பது மட்டுமல்ல, வசீகரமானதாயும் உணர்ச்சியை எழுப்பக்கூடியதாகவும் இருந்ததால் இளைஞர்களின் இதயத்தை இவை ஈர்த்தன. அஹிம்சையானது சரியான முறையில் விளங்கிக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால் மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கப் போவதுடன் அதிக சேதத்தை ஏற்படுத்தாததாயும் உறுதி, ஒழுக்கம், அஹிம்சை வாதியின் நடைமுறை நுட்பங்கள் என்பனவற்றுடன் மக்களின் நல்லாதரவும் இருந்தால் அது மந்தகதியில் செல்லவேண்டுமென்ற அவசியம் இருக்கத் தேவையில்லை. விருப்பு வெறுப்பற்ற ரீதியில், ஒழுக்கம் மற்றும் நெறிகளைத் தனது கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஜெனே ஷார்ஃப் என்ற ஆய்வாளர் அஹிம்சையின் அரசியலை மிகநவீன இறுதிப்பீட்சைக்குட்படுத்தி அது குறைந்த சேதாரத்தில் நிறைந்த பயனளிக்கக்கூடியதுதான் என்று ஆராய்ந்து தெரிவித்திருக்கிறார். (அஹிம்சை நடவடிக்கையின் அரசியல், ஹொரைஸன் புக்ஸ், அமெரிக்கா, 1973)
ஒடுக்குமுறை அரசுக்கு எதிரான ஒரு உயிரோட்டமான போராட்டத்தை விளங்கிக் கொள்வதற்கு அரசியல் அதிகாரத்தின் தன்மை எத்தகையது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். இறுதி ஆய்வில் அரசியல் அதிகாரம் எப்போது பிரயோகிக்கப்படும் என்று நோக்கினால் அதற்கு இலக்காபவர்களின் மறைமுகமான அல்லது ஏதோ ஒருவகைப்பட்ட இணக்கத்தின் பேரில் தான் அது சாத்தியமாகும்.
அஹிம்சைப் போராட்டமானது அதனை முன்னெடுத்தவர்களால் ஆழ்ந்த அக்கறையோடு நோக்கப்பட்டதா என்பது சந்தேகத்திற்கிடமானதேயாகும். தமிழர் விடுதலைக் கூட்டணி அஹிம்சையை வெளிவெளியாக அனுசரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், தமிழீழம் பற்றிய இரகசியத்திட்டத்தைப் பற்றிக் கதைத்ததுடன் அதன் பாராளுமன்றப் பிரதிநிதியாக பிரபல்யமான தீவிரவாதத்தலைவர் ஒருவரையே நியமனம் செய்தது. இவர்களின் சகல பொது நடவடிக்கைகளிலும் காந்தியின் நடவடிக்கைகளில் திகழ்ந்த ஜீவசக்தியை ஒருசிறிதும் காணமுடியவில்லை. இவர்கள் மேற்கொண்ட பல பகிரங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் வெறும் கேலிக்கூத்தாக இருந்தது. உதாரணமாக, இவர்கள் நடத்திய உண்ணாவிரதங்களில் பல முக்கியஸ்தர்கள் சாப்பாட்டு வேளையின் போது வெளியில் போய்விடுவது சகஜமாயிருந்தது. இந்திய படைகளின்ஆக்கிரமிப்பின் போது அதற்கு எதிரான போராட்ட வழிமுறைகளில் பெரும் போலித்தனமே காணப்பட்டது. ஆக, அஹிம்சை என்பது வெற்றிகரமான

Page 256
476
முறையாகக் கருதப்படவேயில்லை. எனவே இதற்கு பொதுமக்கள் ஆதரவினையோ மரியாதையையோ தேடிக்கொள்ள முடியவில்லை.
அஹிம்சை என்பது தற்காலிக ஒரு மாற்று நடவடிக்கையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மற்றபடி வன்முறையின் மீதே நம்பிக்கை செலுத்தப்பட்டது. அஹிம்சையானது அது பிரயோகிக்கப்படும் ஒவ்வொரு தடவையும் வெற்றியைத் தேடித்தரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எந்த இராணுவப் போராட்டத்திலும் போலவே இங்கும் தோல்விகள் ஏற்படவே செய்யும். ஆனால், தோல்விகரமான ஒவ்வொரு நடவடிக்கையும் மேலும் ஐக்கியமான, தீர்க்கமான செயற்பாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதாயும், தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு மேலும் முன்னோக்கி நகரவும் வழியமைப்பதாய் இருக்கவேண்டும். சாதாரண யுத்தத்தைப் போலவே அஹிம்சைப் போராட்டமும் "யுத்தம் நடத்துவது போன்றதும் எதிரிகளைச் சமநிலையில் சந்திப்பதும் ஆகும். இது சாதுரியமான யுக்தியையும் தந்திரோபாயத்தையும் கோருவதுடன், அஹிம்சைப் போராளியின் துணிவு, கட்டுப்பாடு, தியாகம் ஆகியவற்றையும் வேண்டி நிற்கிறது. (ஜெனே ஷார்ஃ ப், அஹிம்சை நடவடிக்கையின் அரசியல், ஹொரைசன் புக்ஸ், அமெரிக்கா 1973)
நமது சமூகத்தில் அஹிம்சை குறித்து பல தப்பபிப்பிராயங்கள் நிலவுகின்றன. வன்முறைக்கு கொடுக்க வேண்டிய விலை அதிகமாகிவிட்டதால், அதை ஒழுங்கு முறையோடு முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாகிவிட்டது.
7.4 காட்டுமிராண்டித்தனத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் இடையிலான போட்டாபோட்டி
இறுதி இலக்குகளைப் போலவே அந்த முரண்பாடுகளைச் சந்திக்கும் வழிமுறைகளும் மிக முக்கியமானவை. ஏனெனில் இந்த வழிமுறைகள்தான் அதனைப் பிரயோகிப்பவனையும் இச்செய்முறையின் இறுதி விளைவினையும் கூட மாற்றியமைத்து விடுகின்றன. ஒரு இயக்கத்தின் உள்ளூர்த்தலைவர் ஒருவரை இன்னுமொரு இயக்கம் கொலை செய்தபோது இது குறித்து ஒரு உள்ளூர் எழுத்தாளர் பின்வருமாறு எழுதினார்:
ஒரு காலைப்பொழுதில் விடுதலை எனணங்களோடும் சகோதரத்துவ சிந்தனைகளோடும் புறப்பட்டுப்போன இளைஞர்கள் மற்றும் சிறுவயதினருக்கு மக்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுக் கூடி நின்றதை என் மனம் காணிகிறது. இந்த உயர்ந்த துணிகரச் செயல்கள் அபிப்பிராய பேதங்களாலும் சகோதரத்துவக் கொலைகளாலும் துக்ககரமான முடிவைத்தழுவிக் கொண்டது என்பதெல்லாம் ஒரு பழைய கதையாகிவிட்டது. எங்கு தவறு நேர்ந்தது? இதற்கான விடையானது பரந்துபட்ட மக்களிடமிருந்து தான் வரவேண்டும்.

477
இந்த விடைகள் துணிவோடும் கருணையோடும் வெளிநாடுகளில் ஒலிக்க வேண்டும். தோல்வியும் அவமரியாதையும் நம்முகத்தை உற்றுப்பார்க்கின்றன. இந்தப் பூமியை மூழ்கடித்திருக்கும் கண்ணிர் அவர்களின் வழக்கப்பட்டுப்போன கருஞ்சிவப்பு அறுவடைகளில் ததும்பி வழிய கடவுள் அனுமதியாமல் இருப்பாராக!" வன்முறையின் பிரச்சினையானது அதன் இயல்பான சுபாவத்திலேே குடிகொண்டுள்ளதுடன் அது நாசகார வடிவங்களோடு தான் தவிர்க் முடியாமல் வளர்ச்சியடைந்து கொண்டும் செல்கிறது. வன்முறையானது அதைப் பிரயோகிப்பவனின் மனிதநேயத்தை அழித்து அவனை காட்டுமிராண்டியுமாக்குகிறது. ஒருமுறை அவனது கரங்கள் குருதியில தோய்ந்து போகுமானால் வழமையான தயக்கங்களும் உள்ளுணர்வில் செயற்படுடி மனத்தடைகளும் இப்போது நடந்து விட்டதுபோல சிதறடிக்கப்பட்டு விடுகின்றன. இந்தக் கட்டுப்பாடிண்மையும், கட்டுப்பாட்டையே பூரணமாக இழந்துவிட்ட தன்மையும் அதிகாரம் குறித்த உணர்ச்சிக்கு, அதாவது முழுமையான அதிகாரம் என்னும் நிலைமைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறது. மாறுபட்ட கருத்துக்களைச் சகித்துக்கொள்ள இயலாமை, தனது சொந்தல் கருத்துக்களில் வெறித்தனமான நம்பிக்கை வைப்பது, தலைமைக்கு குருட்டுத்தனமாக அடிபணிந்து நடப்பது, பிழையே நடக்க முடியாது என்ற உறுதியான நம்பிக்கை மற்றும் வலி, வேதனை, உயிர் போன்றவற்றைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை காட்டாமை என்பனவெல்லாம் கால ஓட்டத்தில் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. பல இராணுவ அதிகாரிகள், போராட்டல் குழுக்களின் தலைவர்கள், ஜனநாயக விரோத அரசின் பிரதிநிதிகள் போன்றோரிட பேசும்போது அவர்கள் மத்தியில் முழுமையான அதிகாரம் பற்றிய தப்பான உணர்வுகள் நிலவுவதை நன்குணர முடிகிறது. மற்றவர்கள் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதற்கு தங்களுக்கு அவர்கள் நன்றிக்கடன்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்றும் மற்றவர்களது உயிரின் மீது தங்களுக்கு சட்டபூர்வமான அதிகாரம் உள்ளது என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களது பேச்சு காட்டிக்கொடுத்து விடுகிறது. அவர்களிடம் உள்ளுறைந்து போயிருக்கும் பாதுகாப்பற்ற உணர்ச்சியைக் கணிடு பிடித்துக்கொள்ள ஆழமான ஆராய்ச்சி எதுவும் அவசியமில்லை.
இதைவிட வன்முறையும் இரத்தம் சிந்துதலும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் பகைமையையும் வெறுப்பையும் அச்சத்தையும் சந்தேகத்தையும் பிறர் மீதான அவநம்பிக்கை போன்ற மனநோயையும் கொண்ட சூழ்நிலையை ஏற்படுத்தி தெளிவாக ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது என்பதைபுே சாத்தியமில்லாது செய்து விட்டது. இது தொடர்ச்சியாக தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நாகரிகமான-அனுசரித்துப் போகும்

Page 257
478 கொள்கையைக் கடைப்பிடித்த சிங்களத் தலைவர்களும் இத்தகு வன்முறைகளின் போது ஆற்றிய உரைகளில் பொறுப்பற்ற விதத்தில் தமது சகிப்புத்தன்மையின்மை வெளிப்படுத்தியிருந்தனர். மனித நடவடிக்கைகளில் இன்னொரு முரண்பாடான விஷயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவனை விட ஆக்கிரமிப்பாளன் தான்தான் அதிகமான தீங்குக்கு ஆளானவன் என்ற மனப்போக்கைக் கொண்டிருப்பவனாக இருப்பதாகும்.
கொலைச்செயலானது பழிவேண்டி அலையும் எதிரிகள் கூட்டத்தையே அதிகப்படியாக உருவாக்கக்கூடியதாகும். தாங்களே கட்டவிழ்த்துவிட்ட வன்முறையால் அச்சம், எவரிலும் நம்பிக்கையின்மை என்ற மனநோய்உலகில் சிக்கிக்கொண்டு விட்ட ஒருவன் யாரையும் நம்பத்தயாராக இல்லாமலிருப்பதுடன் எப்போதும் சந்தேகத்துடனேயே வாழ நேர்ந்து விடுகிறது. கொடூரங்கள் பல புரிந்த பெரும் யுத்த அதிகாரிகளை ஆராய்ந்து வெளியான முடிவுகளின்படி திடுக்திடுக்கென பயங்கரக்கனவுகளை எதிர்கொள்ளுதல், அவநம்பிக்கை, நடத்தையில் பிரச்சினைகள், போதைவஸ்து பாவனைகள் போன்ற மனஇறுக்க நோய்க்குறிகளின் அதிகரிப்பு இவர்களிடம் காணப்படுவது தெரியவந்தது. இத்தோடு வன்முறையின் உணர்வெழுச்சிக்கும், மயிர்க்கூச்செரியும் செயலுக்குமே அடிமைப்பட்டுப் போகும் அபாயமும் இருப்பதால்தான் இவை மனதளவில் நிலைத்த காயங்களை ஏற்படுத்தி, மன இறுக்கத்தை உண்டாக்கி, பிறகு கொல்லக்கூடிய நோயாகவும் அமைந்து விடுகிறது. கடுமையான சண்டைகள், மற்றும் உண்மையான அபாயகரமான சூழ்நிலைகளில் உயிர்த்துடிப்பாக உணரும் இவர்கள் அம்மாதிரியான சூழ்நிலைகள் இல்லாதபோது சோர்வடைந்து விரக்தியுடன் காணப்படுவார்கள். அதிகமானோர் மக்கள் கூட்டங்களிலும் பொது இடங்களிலும் திடுதிப்பாகவும் நம்பிக்கையின்மை போனிற நோயுடனும் காணப்படுவதுடன அதிசீக கிரத திலி எரிச்சலுறுபவர்களாகவும் விவாதத் தொனியில் பேசவும் முற்படுவர். தங்களிடம் சுயவெறுப்பையும் சுயவிரோதத்தையும் வளர்த்துக் கொள்வதுடன் அத்தகைய சுயவெறுப்பு நிலையில் தங்களை உயர்வாகக்காட்டிக் கொள்ளவும் அவற்றை வெளிப்படையாக மற்றவர்கள் முன் வெளிப்படுத்திக்கொள்ளவும் முனைவர். இதன் மூலம் வன்முறை மற்றும் எதிர்வன்முறைக்கான ஓர் இடைவிடாத ஓட்டத்தை இவர்கள் விரும்பி நிற்பர். குழந்தைகள் மத்தியில், இவர்களின் இத்தகைய வன்முறையின் அனுபவங்கள் அவர்களின் ஆளுமை வளர்ச்சியில் நிரந்தரமான விகாரங்களையும் உருக்குலைவையும் ஏற்படுத்தி விடுகிறது. நாம்டா (NAMDA) அறிக்கை ஒன்று குறிப்பிடுவது போல்,
அவர்களின் நண்பர்கள் மற்றும் அவரைச் சூழ இருப்போரின் மத்தியில் கூட நம்பிக்கையை வழங்க இவர்கள் இயலாதவர்களாய் இருப்பதால், இதனைத் தொடர்ந்து அவர்களின் குழந்தைகளுக்குக் கூட நம்பிக்கையூட்ட முடியாதவர்களாகி விடுகிறார்கள். கசப்பையும் ஆத்திரத்தையும் உள்ளுக்குள்ளேயே எரியவிட்டுக் கொண்டிருப்பதுடன்

479 பழி வாங்கும் தகிப்பும் அவர்களை அழுத்திக்கொண்டு விடுகிறது. தங்களின் சுயஉணர்ச்சிகளைக் கூடக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியாமல் போவதால் இவர்களின் உள்ளுணர்வு சமூகவிரோத வழியில் செயற்படவும் ஏதுவாக இருக்கிறது" (கசப்பான தண்ணிர்: கிளர்ச்சி உண்டாக்கும் மனஇறுக்கம் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் விளைவுகள், மூலம்: ரெட் பார்னா (RED BARNA), ஒஸ்லோ). சீரழிவான எமது நிலைமையை ஆயுதங்களைக் காவித் திரியும் குழந்தைகளின் காட்சியைவிட வேறு எதுவுமே இவி வளவு தெளிவாகச் சித்திரித்துக் காட்டமாட்டாது. ஆனால் இதற்கான காரணங்களைச் சிலர் வேறெங்கோ தேடுகின்றனா!.
இதற்கு மாறாக அஹிம்சையானது அதனை உபயோகிப்பவன் மீது முழுநிறைவான விளைவை ஏற்படுத்தி, அவனை ஆன்மீகரீதியில் வலிமையுறச் செய்வதால்தான் காந்தி அதனை "ஆன்மசக்தி என்று அழைத்தார். அஹிம்சைப் போராட்டத்திற்காக மகாத்மா காந்தி வகுத்த நியமங்கள் அன்பையும் அஹிம்சையையும் ஒளி பெறச் செய்வதற்கான ஒரு மனநிலையை உண்டாக்குவதற்கான கட்டுப்பாடான விதிகளை உட்கொண்டிருந்தது மட்டுமன்றி அதன் மூலம் யார் மீதும், பகைவனின் மீது கூட உடல், சொல் மற்றும் மனரீதியான தீங்கைக்கூட வரவழைக்காத செயற்பாடாகவும் அது இருந்தது. பகுத்தறிவு விளக்கங்களை மறுதலித்தவண்ணம் ஆண்மசக்தி அல்லது எதிரியை அன்பு செய்வதென்பது எதிரியை மாற்றியமைக்கக்கூடிய சக்தியைக் கொண்டமைந்தது. அதனால் தான் இதைப்பற்றி மார்ட்டின் லூதர் கிங் பேசும்போது, "நாம் எதிரிகளை அன்பு செய்ய வேண்டும். ஏனென்றால், அன்புக்குத்தான் எதிரியை நண்பனாக்கும் சக்தியுள்ளது" என்றார். ஒவ்வொரு அஹிம்சை நடவடிக்கையும் எதிரியின் மத்தியிலிருந்து ஐந்துவிதமான எதிர்விளைவுகளில் ஒன்றையோ அல்லது அதற்கு மேலேயோ எழுப்பியுள்ளது என்று காந்தி குறிப்பிட்டார். அலட்சியம், கேலி, துஷ்பிரயோகம், அடக்குமுறை, கடைசியில் மரியாதை என்பவையே அவை. அஹிம்சைப் போராட்டத்தின் வெற்றியானது
ஆரம்ப கட்டங்களில் அனுதாபம், நன்மதிப்பு, எதிரியின் மனச்சாட்சியின் மீதான தார்மீக வேண்டுதல் என்பனவற்றைச் சார்ந்திருந்தாலும் அஹிம்சையைக் கைக்கொள்பவனின் ஆன்மீக வளர்ச்சியானது மென்மேலும் முன்னேறிச் செல்லும் நிலையில்-அவனது ஆன்மீக சக்தியானது வலிமை மிகுந்ததாக அமையும் பட்சத்தில் எதிரியையும், சூழ்நிலையையுமே முற்று முழுவதாக மாற்றியமைத்துவிடக்கூடிய ஆற்றலையும் சக்தியையும் அவன் கொண்டவனாகி விடுகிறான். இது ஒரு புதிய பரிணாமமாகும். ஜெனே ஷார்ஃப் எடுத்துக்காட்டியிருப்பது போல அஹிம்சையானது அரசியல் அல்லது பெளதிக நிலையில் பிரயோகிக்கப்படும் போது அது ஓரளவில் மறைமுகமான வன்முறை போலவும், இணங்கிப் போக மறுக்கும் ஒரு கிளர்ச்சியைப் போன்றும்,

Page 258
480
பதிலடியினை யோ அல்லது பாரதுTரமான விளைவுகளையோ ஏற்படுத்திவிடக்கூடிய ஒரு அச்சுறுத்தலைக் கொடுத்தும், பல்வேறு சக்திகளின் சமமான மோதல் போன்றோ அல்லது தாக்குதல் போன்றோ வெற்றிகரமாகப் பலனளிக்கக் கூடியதேயாகும். காந்தியின் வழிமுறைகள் இன்னும் ஒருபடி மேலே சென்று சத்தியத்தையும் அஹிம்சையையும் அடித்தளமாகக் கொண்ட ஆன்மீகத்துறைக்கு இட்டுச் செல்கிறது. ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கும் ஒரு கலாச்சாரத்தில் ஊறியவர்கள் என்ற வகையில் இது நமக்கு மேலுமதிக கவர்ச்சியுடையதாய் விளங்கியிருக்க வேண்டும்.
சமூகமட்டத்தில் அஹிம்சையானது பொதுமக்களின் பங்குபற்றலோடு செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் அது மக்களை, இளைஞரையும் முதியோரையும் ஆண்களையும் பெண்களையும் ஒன்றுபடுத்தி, ஐக்கியமுறச்செய்து அவர்களின் நோக்கத்திற்கு ஒரு அர்த்தத்தையும் அவர்களது நடவடிக்கைகளுக்கு ஒரு பெருமிதத்தையும் வழங்கியிருக்கும். நடைமுறைச் சாத்தியத்தைப் பொறுத்த வரையில், இரக்க மற்ற வணி முறைத்தன்மையுடைய எதிரியை அஹிம்சை மூலம் வெற்றி கொள்வதென்பது முடியாதென்றே விவாதிக்கின்றனர். ஆனால் இது உண்மையானதாகத் தோன்றவில்லை. நோர்வேயை நாஜிகள் கைப்பற்றியிருந்த போது அங்கு ஒரு பொம்மை அரசைத் திணிக்க முயன்ற குயிஸ்லிங்கின் முயற்சிகளை அங்குள்ள ஆசிரியர்கள் அஹிம்சைப் போராட்டத்தின் மூலமே எதிர்த்தார்கள். நோர்வே, டென்மார்க், ஒல்லாந்து போன்ற நாடுகளில் நடந்த அஹிம்சைப் போராட்டங்கள் ஏனைய நாஜி ஊடுருவல் நாடுகளில் நடந்த வன்முறைப் போராட்டங்களை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தியதை ஹிட்லரின் ஜெனரல்கள் கண்டதாக இராணுவ யுக்தியியல் ஆராய்ச்சியாளரான லிட்டல் ஹர்ட் (IIDDEL HART) கூறியிருக்கிறார். அடக்குமுறை குறித்து அச்சமோ ஆச்சரியமோ கொள்ளத் தேவையில்லை. அஹிம்சை நடவடிக்கைகள் தனது கொள்கைக்கோ அல்லது ஆட்சிக்கோ ஒரு அச்சுறுத்தலாக வரும் அபாயமிருப்பதாக எதிரியொருவன் ஏற்றுக்கொள்வதன் விளைவாகத்தான் இந்த அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அஹிம்சாவாதிகள் சில சந்தர்ப்பங்களில் இவற்றின் விலையாகத் தண்டனைகளை அனுபவிக்கவும் விருப்போடு முன்வரவேண்டியுள்ளது. இரண்டு தரப்பினரும் வன்முறையை உபயோகிக் தம்போது அதிலும் அபாயங்கள் உள்ளன. ஐந்து ஆண்டு கால வன்முறைப் போராட்டத்தின் பின்னர் முழுத் தமிழ்ச்சமூகமுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கணிகூடான உணர்மையாகும். அஹிம்சை வழிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால் தமக்குத் திறந்து விடப்பட்டிருக்கக்கூடிய வழிமுறைகளை விட மிகக் குறைவான வழிவகைகள் தான் நம் முன்னால் இப்போது உள்ளன.
அரசு தமிழருக்கு மேல் கட்டவிழ்த்துவிட்ட பெரும்பாலான வன்முறைகள் அதிகரித்துச் சென்ற எதிர்வன்முறைகளின் விளைவுமாகும். ஆனால் இது ஒருபோதுமே அரசு மேற்கொணட அட்டூழியங்களுக்கு நியாயங்

48
கற்பிக்கமாட்டாது. ஆனால் நாம் வன்முறை, எதிர்வன்முறை என்ற நச்சுச்சுழல் வட்டத்தின் விளைவுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இவ்வளவு அழிவுகள், துயரங்களுக்குப் பின்னரும் நாம் மனித விடுதலை என்ற இலட்சியத்தினை நெருங்கிக்கொள்ளக் கூட முடியவில்லை. இன்று நாம் பெற்றுக் கொணி டுள்ள அரசியல் சலுகைகள் 1957லும் 1966லும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் எழுத்தில் பெற்றுக் கொண்டவற்றை விடக் கணிசமாக உயர்ந்ததுதானா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேணடும். இந்த யுத்தத்தின்போது அனுபவித்ததைவிட சிறிதளவு துன்பங்களைச் சந்திக்கத் தயாராக இருந்து மக்கள் தாமே விரும்பி அஹிம்சை வழிமுறையை ஏற்றுக்கொண்டிருந்திருந்தால் விடுதலைக்கான விலை இன்னும் குறைவானதாகவே இருந்திருக்கும். இதெல்லாவற்றையும் விட முக்கியமாக ஒற்றுமைப்பட்ட பலம் வாய்ந்த சமூகமாக நாம் மாறியிருப்போம். வன்முறையின் தவிர்க்க முடியாத விளைவுகளையே நாம் இன்று எதிர்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் அழிந்து போன பின்னரும் தன் தலைவிதியை நிர்ணயிக்கமாட்டாத சீர்குலைந்த சமூகமாகவே நாம் உள்ளோம். எதிர்காலத் தலைமுறையினரையும் இந்த நிதர்சனமான வன்முறை வழிபாட்டிற்கு பலியாக்கிவிட்டோம். o
இனவெறுப்புணர்வும் இனம் குறித்த தப்பபிப்ராயங்களும் இரு துருவங்களாகிப் போய் விட்ட இன்றைய சூழலில் தமிழர்கள் சிங்களவர்களைப்பற்றி காட்டுமிராண்டிகள், வன்முறையாளர்கள், தார்மீக மனச்சாட்சியற்றவர்கள் என்ற கருத்துப்படிமத்தையே கொணிடுள்ளனர். சிங்களவர்களுக்கு வன்முறை என்ற பாஷையில் பேசினால் தான் விளங்குவர்கள் என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். அஹிம்சையானது அவர்களிடம் எந்தவித அனுதாபத்தையும் தோற்றுவிக்கப்போவதில்லை என்றும் வன்முறை ரீதியிலான ஒடுக்கு முறைகளை இவ்வண்ணம் எதிர்க்க முனைந்தால் அது தோல்வியுறவும் செய்யும் என்றும் கருதினார்கள். ஒரு கணத்திற்கு சிங்களவர்கள் பற்றிய இந்தத் தீவிரமான கருத்துப் படிமத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டதைப் போல, அஹிம்சை வழிமுறைகள் எதிரியின் வன்முறைத்தனமான அடக்கு முறைகளைத்தான் எதிர்நோக்கி நிற்கின்றதே தவிர, எதிராளியின் நல்லெண்ணத்தையோ அவனை மனந்திருப்பிவிடுவதற்கான சாத்தியங்களையோ மட்டும் சார்ந்திருக்கவில்லை. அடிபணிந்து போக மறுக்கும் தன்மையிலேயே அது செயற்படுகிறது. வரலாற்றின் மிகவும் ஒடுக்குமுறையான நாஜிகளின் ஆக்கிரமிப்பினையே நோர்வே ஆசிரியர்கள் எதிர்த்து நின்றமை நமக்கு உற்சாகந்தரும் ஒரு உதாரணமாகவே திகழ்கின்றது. தீவிர வன்முறைக்கு எதிராகவும் அஹரிம்சை வெற்றியடையவல்லது என்பதையே இது வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கள மக்கள் கூடப் பொதுவாக சாதாரணமான காலங்களில் இரக்கமுள்ள, மிகவும் அன்பு செலுத்தும் மக்களாகவே இருந்துள்ளனர். ஆனால் தங்கள் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு தமிழர்கள் மீது சாவினையும்

Page 259
482
பயங்கரதீதையும் கட்ட விழித்துவிட்டதோடு பின்னர் அதை நியாயப்படுத்தியதற்கான முழுக்குற்றத்திலும் அவர்களுக்கும் பங்குண்டு. மனச்சாட்சி உறுத்திய பல தனிப்பட்ட சிங்களவர்கள் இது உண்மை தான் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். மறுபுறம் தமிழ்ப் போராளிகளிடம் வெற்றுக் கூச்சல்களைவிட அரசாங்கத்தின் இதுபோன்ற கொள்கைகளிலிருந்து தமிழ் மக்களை உரியமுறையில் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு மார்க்கமும் இருக்கவில்லை. சிங்களவர்கள் கூட இன்றைய நிலையில் மிகக்கடுமையான உள்மனமாற்றத்திற்குள்ளாகியிருப்பதால் இனரீதியான வேறுபாடுகள் என்பது முக்கியமில்லாத விஷயமாக மாறியுள்ளது. தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் பிரதிபலனாகவே இவை நிகழ்ந்தது. வன்முறை, எதிர் வன்முறை என்று சென்றுகொண்டிருக்கும் கழல் வட்டத்தை உடைத்தெறிந்தால் தான் நாம் அமைதி காண முடியும். தொடக்கப்பட்டு விட்டதை இனிமேல் நிறுத்திப் பார்ப்பதென்பது கடினமானதொன்றாகவே
சிங்களவரும் தமிழர்களும் சகோதரர்கள் என்ற அளவில் இந்தப் பிரச்சினையை இலகுவாக தீ தீர்த்துக் கொள்ளலாமே எண்று மேலெழுந்தவாரியாகக் கூறத்தோன்றும். இறுதிக்கும் இறுதியில் இந்தச் சிறிய தீவில் அடுத்தடுத்து வாழ விதிக்கப்பட்டுவிட்ட இந்த இரண்டு சமூகங்களும் அரசியல் தீர்வுகள் எந்தவிதமாக அமைந்தபோதிலும் அது இரண்டு தனியரசுகளாக அமைந்தாலும் சரி, அல்லது இந்தியாவின் பாதுகாப்பிற்குட்பட்ட பிராந்தியமாக அமைந்தாலும் சரி சகோதர அயலவர்கள் என்ற அடிப்படையில் ஒரு உடன்பாட்டிற்கு வந்தேயாக வேண்டியுள்ளது. இதில் சம்பந்தம் கொண்டுள்ள அனைத்துத் தரப்பினரதும் நலன்களின் அடிப்படையில் ஏதோ ஒரு இணக்கத்திற்கு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. அவ்வாறாயின் அவர்களை இவ்வாறு செய்ய விடாது தடுப்பது எது? நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் நுண்ணிய - ஆனால் உளவியல் சார்ந்த போக்குகளே யுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் இடையில் குறுக்கிட்டுச் செல்வனவாய் உள்ளன. இருந்தாலும் யுத்தமும் சமாதானமும் என்பது கூட இறுதியில் மனக்கருத்தைப் பொறுத்த விஷயங்களேயாகும்.

483 அத்தியாயம் 8 முடிவுரை (பெப்ரவரி, 1988)
8.1 யாழ்ப்பாணம்
ஆண்டின் ஆரம்ப மாதங்களில் யாழ்ப்பாணத்தின் திறந்த வெளிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும் அற்புதமான காட்சியாக விவனவாகும். நகருக்குக் கிழக்கே மூன்று மைல்கள் தள்ளித் தெரிய ஆரம்பிக்கும் இரண்டு மைல் தூரத்திறந்த வெளியானது வலிகாமத்தையும் தென்மராட்சியையும் பிரிக்கும் கடல்நீரேரியைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. ஜனவரியில் வயல் வெளிகள் பச்சைப் பசேலென்று புதிதாக வளர்ந்து நிற்கும் நெற்பயிர்களாய் காட்சி தரும். மழைக்காலங்களில் தேங்கிய அதன் நீர்நிறைந்த வாய்க்கால்கள் பறவைகளை ரசிக்கும் ஒரு உற்சாகமான ஆர்வலனுக்கு செழுமையான காட்சியைத் தரவல்லது. காட்டு வாத்து, மீன் கொத்திப்பறவை, நாரை மற்றும் வேறு அருமையான பறவையினங்களையும் இங்கே ஒருவர் ரசித்து மகிழலாம். வாத்துகள் காற்றிலே நழுவிய வண்ணம், தணிணிருக்குள் மூக்கு வரை முழுகிச் சென்று துடிதுடிக்கும் மீன் ஒன்றை தனது சொண்டால் பற்றிக்கொண்டு வரும் காட்சி வசீகரமானதாயிருக்கும். மாதங்கள் செல்ல, நெற்கதிர்கள் பருவமடைய நெற்தண்டுகள் தங்க நிறமாய் பொலிகின்றன. எழில் சிந்தும் இந்தக் காட்சிக்கு மத்தியில் ஒதுக்கித் தள்ளப்பட்டு துருப்பிடித்துப் போய்கிடக்கும் மோட்டார் வாகனங்களை அலட்சியப்படுத்திக் கொள்ளவும் நாம் பழகிக்கொள்ள வேண்டும். யாழ்நகர் இப்போது ஒரு அனாதைக் குழந்தையைப் போல. இதற்கு நகர பிதாக்கள் என்று யாரும் இல்லை. முகமில்லாத மனிதர்கள் வருகிறார்கள் போகிறார்கள், தாங்கள் நினைத்த இடங்களில் வீடுகளைக் கட்டுகிறார்கள் குப்பை கூளங்களை எங்கு வேண்டுமானாலும் இரைந்து விட்டுப் போகிறார்கள்.
இந்தக் காட்சிகளை இரண்டு வாரங்களாக நீங்கள் பார்த்து மகிழும் வாய்ப்பை இழந்து போயிருந்தால் பெப்ரவரியின் நடுப்பகுதியில் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட காட்சிகள் உங்களின் கண்களைப் பறிக்கும். இப்போது பசுமையான காட்சிகள் எதுவுமில்லை. வயல்வெளிகள் எங்கனும் கதிரறுத்த நெற்பயிர்கள். ஒவ்வொரு சதுக்கத்திலும் வைக்கோற் போர்கள். கதிரடிக்கும் பெண்களின் குரல்களை வடகிழக்காய் வீசும் காற்றுகள் சுமந்து வருகின்றன. இப்போது வயல் வெளிகள் வேறுவிதமான பறவையினங்களால் நிறைந்து போய்க்கிடக்கிறது. வயலில் சிதறிக்கிடக்கும் தானிய மணிகளைப் பொறுக்குவதற்காக குருவிகளும் கிளிகளும் வேறு பறவைகளும் குவிந்துள்ளன. தனியாக நாய் ஒன்று புதுவாசனையை முகர்ந்தவாறு அங்குமிங்குமாய் திரிந்து கொண்டிருக்கிறது. அஸ்தமித்துக் கொண்டிருக்கும் சூரியனின் பளிச்சிடும் சிகப்புக் கதிர்களின் பின்புலத்தில் விவசாயக் குடும்பங்கள் தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு டிஃபன் காரியர்கள், தண்ணிர்ப் போத்தல்கள், பிளாஸ்குகளைக் கொண்ட கூடைகளை ஏந்தியவாறு வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஊரடங்குச் சட்டத்திற்கு முன்னால் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்று எந்தவிதப் பரபரப்பும் அவர்களிடம்

Page 260
484
இல்லை. மாலை மங்கும் அந்த வேளையுடன் ஒன்றிவிடுவதே போல் நீண்ட அலகு கொண்ட லேசான மணிநிற வண்ணத்தில் தனித்த, பெரிய பறவை ஒன்று தியானத்தில் மூழ்கியிருக்கிறது. பல்வேறு உள்ளூர்ப் பறவைகளின் கூடுகட்டும் ஓசைகள் இரவின் வருகைக்குப் பண்ணிசைக்கின்றன. இனி வருவது கால் நடைகள். சூரிய வெளிச்சத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புதிதாகப் பிறந்த கன்றுகளின் சந்தோஷகரமான காட்சியை காலையில் அனுபவிக்க முடியும்.
ஆண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்காய் வீசும் பருவக்காற்றின் போது இதே வயல்வெளிகள் பட்டம் விட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகளால் நிறைந்து போயிருக்கும். நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது கேட்ட மாத்திரத்திலேயே பத்து விதம்விதமான பட்டங்களைச் செய்து தரக்கூடிய ஒரு வயதான கூலியாள் இருந்தார். இப்போது அவர் இல்லை. அவரின் சில மகன்மார்கள் இப்போது மேற்கு ஜேர்மனியில் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் இப்போது எங்களுக்கு நேரமில்லை. குழந்தைப்பருவச் சந்தோஷ காலங்களை நாம் கடந்துவந்துவிட்டோம். கணக்காளர்களாக, டாக்டர்களாக, எஞ்சினியர்களாக கடைசி மிகக்குறைந்த தரந்தானென்றாலும் ஒரு பள்ளி ஆசிரியராகவாவது வருவதற்கான முயற்சிகளில் நாங்கள் 'பிஸியாகிப் போனோம். தமது சமூக, பொருளாதாரச் சுமைகள் எதுவாயிருந்தாலும் புராதன கிரேக்கர்கள் கருதிய 'சகல விதங்களிலும் 2 Gof 607 is Lot 60' ("arete" , all out excellence) oup 60)p 3.6.f6 (Li தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு என்னும் சுமையையும் அவ் ஆசிரியர்கள் கூடவே சுமந்தனர். ஒருவரின் வாழ்க்கையின் கடந்த காலங்களின் உன்னதமான பாதிப்புகளைப் பற்றி நினைவு கூர்ந்து பார்த்தால் பளிங்கு நீரூற்றுப் போல, கணினுக்குத் தெரியாதது மாதிரி, ஒரு ஆன்மீக வழிகாட்டியாய் தன்னலமற்ற - எளிதில் தன்னையே மறைத்துக் கொண்டு விடுகிற ஒரு பள்ளி ஆசிரியரின் நினைவுதான் மனதில் எழுகிறது. ஒரு டாக்டரையோ, எஞ்சினியரையோ, ஒரு கணக்காளரையோ யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. இப்போது குழந்தைகளுக்குக் கூட அதற்கான நேரமில்லாமல் போய்விட்டது. பெரிய குடும்பங்களைச் சோந்த பிள்ளைகள் சின்ன வயதிலேயே நான் பிஸியாக இருக்கிறேன்" என்று சொல்லக்கற்றுக் கொண்டுவிட்டனர். ஆங்கில நாவலாசிரியர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் தனது 'கஷ்டமான காலங்கள் (HARI) MIS) என்ற நாவலில் தெய்வீகப் படுத்திய-தரங்களை வடித்தெடுக்கும் உன்னத மாதிரியிலமைந்த தந்த கோபுரமாகத்தான் நமது கல்வி அமைப்பு இருந்து வருகிறது. சிறந்த வரலாற்றறிஞர்களையும் காத்திரமான சிந்தனையாளர்களையும் தீர்க்கதரிசனமான பார்வை கொண்டவர்களையும் நாம் பெருமளவில் உருவாக்கிக் கொள்ளவில்லை. இன்று யுத்தத்தின் விலையைக் கொடுத்து விட்டு, நாலாண்டு கால யுத்தம் விட்டுச் சென்றுள்ள மிச்சம் மீதிகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நமக்கு நிறைய நேரம் கிடைத்துள்ளது. நாம் கண்டுகொள்ள விரும்பாத பல விஷயங்கள் இப்போது நம் கவனத்திற்குக் கொணிடுவரப்பட்டுள்ளன. வெளிநாடு

485
செல்வதற்கான விஸாவுக்காக விண்ணப்பித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இப்போது மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
யாழ்ப்பாணம் இப்போது காலத்தால் நாற்பது ஆண்டுகள் பின் தள்ளிப் போய்விட்டதென்று அடிக்கடி சொல்லப்படுகிறது. இது நல்லதோ கெட்டதோ அது அவருடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பினைப் பொறுத்த விஷயமாகும். வணிடில் மாடுகள் மீணடும் தொழிலுக்குத் திரும்பி விட்டிருப்பதைப் பார்க்கையில் ஒரு அர்த்தத்தில் இது உண்மையும் தான். உடுவிலையும் சண்டிலிப்பாயையும் இணைக்கும் பழைய டச்சு வீதி ஆண்டு முழுதுமே கண்கொள்ளாக்காட்சி நிறைந்தது. டச்சு வீதி ஆரம்பமாகும் உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவியரின் அழகில் மனதைப் பறிகொடுக்க இளவட்டங்கள் எப்போதுமே தயாராயிருந்தாலும், கவர் வழியே பரிமாறிக் கொள்ளப்படும் காதல் கடிதங்களை இடை மறித்துப் பார்க்க நடைத்தடிகளோடு உலாவரும் சினங்கொணிட தகப்பன்மாரும் அங்கு இல்லையென்றால் அவர்கள் பாடு மிகவும் கொண்டாட்டம்தான். பழைய காலங்களை ரசித்து மகிழும் சிலர் இன்னும் சிறிது தள்ளிப் போவார்களானால் நாம் வாழும் இன்றைய உலகத்தை உணர்த்தக் கூடியதாக அங்கு தெரிவது உயர்ந்த மின் கம்பங்களும் யாழ் கோட்டைக்கும் பலாலிக்கும் இடையே பறந்து திரியும் இராணுவ ஹெலிகொப்டர்களும்தான். பாதைவழி செல்லும் சிலர் எப்போதோ இல்லாமல் ஒழிந்து போய்விட்ட காட்சி ஒன்றை மீண்டும் காண்பது போல் பார்த்துக் கொணிடு நிற்கின்றனர் - எருது மாடுகளைக் கொணி டு வயலி உழுதுகொண்டிருக்கும் ஒரு மனிதனின் காட்சி அது. அவர்கள் அங்கு நின்றுகொண்டு எதைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் உழுவதை நிறுத்திவிட்டு அவர்களைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது" என்று அவர்கள் பதில் சொன்னார்கள். "ஓ! அதுவா?" என்று சொல்லி விட்டுப் புன்னகைத்த அவர் காலைச் சூரியனின் கதிர்களிலிருந்து தன் கண்களை மறைப்பதற்காக தனது கைகளை மேலுயர்த்திக் கொண்டார். பின் தொடர்ந்தார்: "இப்போதெல்லாம் வசதி கூடிய விவசாயிகள்தான் ட்ராக்டர்கள் வைத்து உழ முடியும். எரிபொருள் வாங்கிக்கட்டாது. இரண்டு எருது மாடுகளை என்னிடம் தந்து பாருங்கள். அரை ஏக்கர் காணியை மூன்றே மணித்தியாலத்தில் உழுது காட்டுகிறேன்"
82 தெற்கு
கடந்த ஓராண்டில் இலங்கை அதன் நம்பிக்கைக்குரிய இரண்டு முக்கிய தேசியத்தலைவர்களை இழந்துவிட்டிருந்தது. ஒருவர் பாராளுமன்றத்தின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான திருசரத் முததெட்டுவேகம மற்றவர் பூரீலங்கா மக்கள் கட்சித் தலைவரான திரு.விஜய குமாரணதுங்க ஆவார். இவர்களின் முக்கியத்துவம் யாதெனில் பெரும்பான்மை சிங்கள வாக்காளர் தொகுதிகளிலே தமிழர்களினதும் வறிய சிங்கள மக்களதும் பிரச்சினைகளை அவர்கள் முதன்மைப்படுத்தியதாகும். 1956லிருந்து மக்கள் ஆதரவு

Page 261
486
கொண்டிருந்த மிகச்சிலர்தான் இத்தகைய நேர்மையோடும் செயல் சாதுரியத்துடனும் நம்பிக்கையுடனும் இத்தகைய அரசியற் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். சரத் முத்தெட்டுவேகம ஒரு மோட்டார் வாகன விபத்தில் காலமானார். விஜய குமாரணதுங்க ஜேவிபி. இயக்கத்தைச் சேர்ந்த ஒரு கொலையாளியால் 1988 பெப்ரவரி 14ம் திகதி கொலை செய்யப்பட்டார். 1983 ஜூலையில் தமிழருக்கு எதிரான வன்முறை ஆரம்பமானதிலிருந்து மறைந்த மற்றுமிரு தேசியத்தலைவர்கள் அங்கிலிக்கன் திருச்சபையைச் சேர்ந்த மேற்றிராணியார் லகூழ்மன் விக்ரமசிங்க அவர்களும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த லியோ நாணயக்காரா அவர்களும் ஆவர். நாடு முழுதும் இவர்கள் மிகுந்த மரியாதைக்குரியவர்களாகத் திகழ்ந்தனர். நாம் மேலே குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள் நடைபயின்ற அரசியல் பாதைக்கு வழிவகுத்தவர்கள் சந்தேகத்திற்கிடமில்லாமல் இத்தகைய உன்னத சமயப் பாதிரிகளே ஆவர். கல்வி கற்ற மத்தியவர்க்க சிங்களக் குடும்பத்திலிருந்து சிங்களத் தேசிய வாதக் கருதுகோள்களை உடைத்துக்கொண்டு ஒருவர் வெளியில் வருவதென்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை பிஷப் லகூழ்மன் விக்ரமசிங்கவின் அறிவுப் பயணத்தின் கதை எடுத்துக் காட்டுகிறது. தெற்கின் அறிவுஜீவிகள் தங்களின் கடமை குறித்துச் சிந்திக்கத் தவறியதன் விளைவால் இன்று நாடு முழுவதுமே ஆழ்ந்த நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பது தான் இன்று தெற்கில் எழுந்துள்ள நோய்க்கூறான போக்காகும். 1987ம் ஆண்டின் கடைசி மாதங்களில் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் முன்னேறிச் சென்றபோது தமிழர்களின் தலைவிதி குறித்து இவர்கள் களிப்பில் மூழ்கிப் போயிருந்தனர். இதே வேலையை இலங்கை இராணுவம் செய்திருந்தால் தமிழர்கள் எவ்வளவு மரியாதையாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நிறுவுவதிலேயே அவர்கள் கருத்தெல்லாம் குவிந்திருந்தது. நாலாண்டு காலமாக இரத்தம் சிந்திக் கொண்டிருப்பது பற்றி எந்த அக்கறையும் காட்டாதவர்கள் இந்தியத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது அனுதாபம் தெரிவிக்க
முனைந்தார்கள். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவருக்குமான நீதி கோருவதில் அசைந்து கொடுக்காத திடசித்தங் கொண்டவர்கள் தெற்கில் மிகப் பலராயும் வடக்கே மிகச்சிலராயும் இருந்தனர் என்பதையும் கூறவே வேண்டும். இலங்கை இராணுவத்தின் அட்டூழியங்களைப் பற்றி யார் குரல் கொடுத்தாலும் அவரைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்திக் கொண்டிருந்த
தெனி னரிலங்கைப் பதி திரிகைகள் திடீரெனினு உணர்மை பேச
முன்வந்திருப்பதைப் போலத் தெரிந்தது. "இந்திய இராணுவத்தை விட இலங்கை இராணுவம் எவ்வளவோ நல்லது என்றும் இந்திய இராணுவத்தைப் பிச்சைக்கார இராணுவம் என்றும் இந்திய இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
ஆத்திரத்தில் தெரிவித்த இத்தகைய கருத்துக்களுக்கு மிகவிரிவான பிரச்சார முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இரண்டு இராணுவங்களுமே மோசமான முறையில் நடந்து கொண்டன என்பதுதான் உண்மையாகும். கொழும்புப் பத்திரிகைகள் இதைச் சொல்லாது விட்டாலும் இலங்கை இராணுவமும் பெருமளவில் கொலை, கொள்ளைகளிலும் பாலியல் வன்முறையிலும்

487
ஈடுபட்டேயிருந்தனர். இந்தியாவைத் தூஷித்தலிலேயே சிரத்தையாயிருத்தல் என்பது சிங்களத் தேசியவாதத்தின் சிதைந்து போன ஒரு முகத்தின் இன்னொரு வெளிப்பாடேயாகும்.
இலங்கை அரசாங்கத்தின் இராணுவ வாதத்தை முன்பு ஆதரித்தவர்கள்தான், அந்த இராணுவவாதத்தின் அறுவடையாக விளைந்த-இலங்கையின் விவகாரங்களில் இந்திய ஊடுருவலை இப்போது கோபத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். இந்தக் கோபம் ஜே.வியியின் மீதான குருட்டுத்தனமான அனுதாபமாக மாறியது. காரணம் யாதெனில் ஜே.வியி. இந்திய எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் இறங்கியிருந்ததுதான். விடுதலைக் கருத்தியல்களின் கலப்படங்களை உட்கொண்டதோடு துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன்னை விடுதலை இயக்கம் என்று கூறிக்கொள்ளும் எந்த இயக்கத்தையும் அனுதாபத்தோடு நோக்க ஆரம்பித்திருந்த அறிவுஜீவிக் குழுக்களின் ஆதரவையும் ஜேவிபி. பெற்றிருந்தது. சில புறக்காரணிகளின் அடிப்படையில் அமைந்த இவர்களின் நோக்கின்படி, தமிழர்களுக்கு எவ்வாறு எல்.டி.டி.ஈ.யோ அது போலவே சிங்கள மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை ஜேவிபி.யே பிரதி பலிக்கிறது என்பதாகும்.
சரியான அர்த்தத்தில், சிங்கள ஆதிக்க வெறிக் கருத்துக்களைக் கொண்ட பிரதான கட்சிகளின் தர்க்கரீதியான நீட்சியாகவே ஜேவிபியைக் காண வேண்டும். 1971ல் திருமதியூரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சி மேற்கொண்ட ஜேவிபியானது (1971ல் சேகுவேரா இயக்கமென்று பிரபல்யமாக அழைக்கப்பட்டது) ஆறு வாரங்களுக்குள் மிகக் கொடூரமாக அடக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் 15,000 சிங்கள இளைஞர்கள் கொலையுண்டதாக மதிப்பிடப்பட்டது. 1977ல் புதிதாகப் பதவியேற்ற ஜயவர்த்தன அரசு இந்த இயக்கத் தலைவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்ததுடன் இந்தக் கட்சியையும் சட்டபூர்வமாக்கியது. இந்நடவடிக்கைக்கு பொதுவான ஆதரவு இருந்தாலும், ஜே.வியியின் எதற்கும் ஒத்துவராத மனோபாவத்தை வைத்துப் பார்க்கும்போது பூg.ல.சு.கட்சி, ல.ச.ச.கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்கப் பண்ணுவதற்காக ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சி மேற்கொண்ட மாக்கியவல்லித் தந்திரமே இது என்பது பின்னர் பரவலாகவே உணரப்பட்டது. 1983ல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டுமென்று சர்வதேச சமூகமானது அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியபோது, தனது கொள்கையற்ற - எதிலும் குறை காண்கிற போக்குக்கு ஏற்ப, அரசாங்கம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி, ஜேவிபி. ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகள் மீதும் பழியைச் சுமத்தியது. இக்கட்சிகள் தடைசெய்யப்பட்டன. ஜே.வியியின் மீதான தடை மட்டும் தொடர்ந்து நீடித்தது. 1982 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரோஹன விஜேவீர உட்பட இக்கட்சித் தலைவர்கள் அனைவரும் தலைமறைவாயினர். இவர்களைப் பலிகடாவாக்க மேற்கொண்ட முயற்சி எதுவுமே பலிக்கவில்லை. இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த

Page 262
488
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக்கட்சி ஆகியவற்றிற்கு எதிரான தடைகள் நீக்கப்பட்டன. 1983ன் இனக்கலவரங்களில் ஜேவிபியும் கலந்து கொண்டிருந்திருப்பின் அரசாங்கம் வசதி செய்து கொடுத்த ஒரு மெல்லிய திரைக்குப் பின்தான் இது நடந்திருக்க வேணடும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளையே எடுத்துக் கொண்டிருந்தபோது ஜேவிபிக்கான சந்தர்ப்பங்கள் இதில் மிகக் குறைவாகவே இருந்தன. தனது நடவடிக்கைகளின் அவசிய விளைவுகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையிலும் இந்திய அபிலாஷைகளுக்குப் பணிந்து போகவும் வேணடிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டபோது ஜே.வி.பி.க்கு சந்தர்ப்பங்கள் சரியாக வந்து வாய்த்தன.
அரசாங்கத்தின் ஒடுக்குமுறையோடு தமது சொந்த இயலாமையின் விளைவு காரணமாக ஏற்பட்ட இடதுசாரிக் கட்சிகளின் தோல்வியும் ஜே.வியியின் பலத்திற்கான ஒரு ஆதாரமாக இருந்தது. 1980ல் அரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் உயர்ந்த பணவீக்கத்தை ஏற்படுத்தியது. அவ்வாண்டு தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய அதிருப்தியானது பொது வேலை நிறுத்தத்திற்கு வழிவகுத்தது. பரந்த அளவில் கையாளப்பட்ட காடைத்தனத்தால் இந்த வேலை நிறுத்தம் முறியடிக்கப்பட்டதுடன் 40.000 பேர் வேலை நீக்கப்பட்டனர். அப்போது கைத்தொழில் அமைச்சராக இருந்த சிரில் மாத்தியூவும் அப்போது பிரதமராக இருந்த பிரேமதாஸவும் இந்தக் குணர்டர்படைகளுடன் பெருமளவில் தொடர்பு கொண்டிருந்தனர். இதே குணி டர்படையினர் தான் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையிலும் பங்கு கொண்டனர். பொது வேலை நிறுத்தம் தோல்வியுற்ற நிலையில் இடதுசாரிகளின் அனாதரவான நிலைமையானது அதனைக் கேவலத்திற்குட்படுத்தியதுடன் அரசாங்கத்திற்கும் மகத்தான வெற்றியாய் அமைந்தது. இந்திய எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு, அரசாங்க எதிர்ப்பு, சோஷலிஸ சார்பு என்று ஜே.வி.பி. அனைத்தும் அடங்கிய ஒன்றாகக் காட்டிக்கொண்டது. ஜே.வி.பி.க்கு கிடைத்த அனுதாபங்கள் அது ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்கவல்லது என்பதற்காக அல்லாமல், பொலிஸ்காரர்களையும் அரசியல்வாதிகளையும் கட்டுத்தீர்த்து சிங்கள மக்களின் பழிதீர்க்கும் வெஞ்சினத்தின் பிரதிநிதியாக அது சிங்கள மக்களின் நெஞ சிற்கு ஒத்தடம் கொடுத்ததாலேயே இந்த அனுதாபங்கள் அதற்குக் கிடைத்தன. அரசாங்கத்தால் மோசமாக இழிவுபடுத்தப்பட்ட தமிழ்மக்களின் மத்தியில் விடுதலைப் போராட்டக் குழுக்களுக்கு, குறிப்பாக புலிகளுக்குக் கிடைத்த செல்வாக்கை ஒத்ததாகவே இது பலவிதங்களில் அமைந்துள்ளது. 1983 ஜூலையில் நடந்த வன்முறைக்குப்பின் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் "யார் பலத்த அடி கொடுத்து, செயலில் இறங்குகிறார்களோ அவர்களுக்கே நாண் பணம் கொடுப்பேன்" என்ற வார்தீதைகள் மிகப்பிரசித்தம்.

489
ஆங்கிலமொழியின் பாவனை குறைய ஆரம்பித்து, சுதேச மொழிகளில் இதற்கு பிரதியீடான வாசிப்பினைப் பெற்றுக் கொள்வதில் கஷ்டங்கள் நிலவிய சூழலில், பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கு நாடுகளிலிருந்து பெறப்பட்ட பெரிய பெயர்களையும் பெரிய வார்த்தைகளையும் அள்ளி வீசத்தெரிந்த பணிடிதர்களுக்கு வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. மார்க்ஸியத்திலிருந்து பாசிஸத்திற்கான கடினமான பயணத்தை விடுதலைப் புலிகளுக்கு அணி ரனி பாலசிங்கம் நடைமுறைப்படுத்திக் காட்டியது போல ஜே.வி.பி.க்காக தெற்கிலும் பலர் இதே பணியினைச் செய்ய முன்வந்துள்ளனர். நியூட்டணி இயற்பியல் ஐன்ஸ்டீனின் இயற்பியலால் பொய்ப்பிக்கப்பட்டு, பின்னர் ஐனிஸி டீனினி இயற்பியல் குவாணிடம் பெளதீகவியலால பொய்ப்பிக்கப்பட்டது போல மேற்குலகத்தின் மார்க்ஸியத் தத்துவம் பொருந்தாத ஒன்றாக மாறிவிட்டதென்று தென்னிலங்கை அறிவுஜீவி ஒருவர் சிங்களத்தில் எழுதுகையில் குறிப்பிடுகிறார். இயங்கியலின் இன்னொரு திருப்பம் மாதிரி ஜே.வி.பி.யானது மார்க்ஸியத்துடன் தனக்குள்ள மிச்சம் மீதித்தொடர்பையும் துணிடித்துக்கொண்டு பெளத்தக் குறியீடுகள் சிலவற்றையும் தன்னுடன் இணைத்துக் கொண்டால் அது யாருக்கும் அவ்வளவு ஆச்சரியத்தைத் தராது.
ஜனநாயகமின்மையால் ஏற்பட்ட விரக்தியே இந்நாட்டை ஆட்டிப்படைக்கும் பெரும் பிரச்சினை என்பதனைப் பலரும் இன்று ஏற்றுக்கொள்வர். இன்று நிலவும் அதன் வடிவங்கள் மிகமுரடானவையாயும் அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களும் சிறு குழுக்கள் முன்வைக்கக்கூடிய நியாயபூர்வமான கோரிக்கைகளைக் கூடத் தீர்த்து வைக்கும் லாயக்கற்றவர்களாகவுமே உள்ளனர். தாங்களே சிருஷ்டித்த நிலைமைகளில் உட்பொதிந்துள்ள ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலில்-எந்தப் புதிய கருத்துகளும் இல்லாத நிலையில் தமிழர்கள் மீது பாவித்துத் தோல்வி கணிட அதே அணுகுமுறைகளையே அரசாங்கம் பின்பற்றிச் செல்கிறது. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் மகன் ரவி ஜயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட விசேஷ அதிரடிப்படை (S.T), இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் எஸ்.ஏ.எஸ். நபர்களால் பயிற்றப்பட்டு, தமிழர்களுக்கு எதிராகப் பாவிக்கப்பட்டு இப்போது தென்முனையில் ஜேவிபிக்கு எதிராக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு தொகையினர் காணாமல் போகிறார்கள் என்பதைப்பற்றி யாரும் பேசுவதாகக் காணோம். குறைந்தது தமிழ் மக்களைப் பற்றிப் பேசும் போதாவது அரசாங்கம் இந்தியாவையும் உலகளாவிய அபிப்பிராயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்ப்பகுதிகளில் அடக்குமுறை மெதுமெதுவாகச் செயற்பட ஆரம்பித்ததாலும், மக்களும் தாங்கள் போராடுவதில் நியாயமுண்டு என்று உறுதியாகவே நம்பியதாலும் 1983ன் முற்பகுதிவரை பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பொதுசன எதிர்ப்புணர்வை வெற்றிகரமாக அணிதிரட்டிக்கொள்வது சாத்தியமாகிற்று.

Page 263
490
தமிழர்களின் பிரச்சினைகளை நீதியாக அணுக முடியாமலும், அதிருப்தி கொண்ட தங்களின் சொந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையுமே தீர்க்கமுடியாமலும்போன கூட்டுத்தோல்வியின் காரணமாக சிங்கள சமூகமானது மிக மோசமான ஆபத்தான நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. ஆளும் வர்க்கம் அநியாயமான வழிகளில் பெற்றுக்கொண்ட பணத்தில் புரண்டு கொண்டிருக்க, தமிழர்களை இராணுவரீதியில் அடக்க வேண்டும் என்று பெரிதுபடுத்தப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் கிராமிய ஏழைமக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டு யுத்தகளத்திற்கு பலிக்கடாக்களாக அனுப்பப்படுகின்றனர். சேனைப் படையினராகவும், ஊர்காவல்படையினராகவும், குடியேற்றவாசிகளாகவும் தமிழர் பகுதிகளுக்கு அனுப்பப்படும் இவர்கள் இந்தியா அரங்கிற்கு வந்ததுமே அப்படி அப்படியே கைகழுவி விடப்பட்டனர்.
8.3 பத்திரிகைகள்
அரசாங்கம் தமிழர்க்கு இழைத்தவை பற்றித் தாங்கள் மெளனம் சாதித்தது குறித்து கொழும்புப் பத்திரிகைகள் சில குறைந்தது வருத்தம் தெரிவிக்க ஆரம்பித்திருந்தன. 1987 ஜனவரியில் கொழும்பிலிருந்து வெளியாகும் "த ஐலண்ட்" என்ற பத்திரிகை பொதுவாக உயர் அதிகாரிகள் வழங்கும் அதிகாரபூர்வ அறிக்கைகளிலிருந்து சில வரிகளை எடுத்துப் போடும் வழக்கத்திலிருந்து விலகி, கொக்கட்டிச்சோலையில் அரசாங்கத்தின் விசேஷ அதிரடிப்படையினரால் பெருமளவு அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நடவடிக்கையை மட்டக்களப்பிலுள்ள ஒரு மூத்த பிரஜையின் அறிக்கையாக பரந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டமையானது காலம் கனிவதற்கு முன்பேயே மேற்கொள்ளப்பட்டுவிட்ட மாற்றத்தைக் காட்டுவது போலிருந்தது. யுத்தமானது ஸ்தம்பித நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையில், கொழும்பின் "சண்டே ஐலண்ட்" பத்திரிகையானது தேசியத் தலைவர்களுடன் நடத்திய பேட்டிகளில் விடுக்கப்பட்ட கேள்விகள் தயவுதாட்சணியமற்றனவாய் இருந்ததைக் காண முடிந்தது. ஆனால் இந்த அசிங்கமான போரைப் பூசி மெழுகும் வேலை தொடர்ந்த வண்ணமே இருந்தது. உதாரணமாக யாழ்நகர் மீதும் யாழ் மருத்துவமனை மீதும் 1987 மார்ச் 7ம் திகதி இலங்கை இரானுவம் ஷெல் தாக்குதல் நடத்தி பதினேழு பேரைக் கொன்ற சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். பிபிஸிக்காக அறிக்கையிட்ட நிருபர் ஜூலியட் ரிக்ஸைப் போலல்லாமல், சண்டே ஐலண்ட் பத்திரிகைக்காகச் செய்தி வழங்க யாழ்ப்பாணத்திற்கு வந்த லூஸியன் ராஜகருணநாயக்க பிரஸ்தாப சம்பவதி தில காயமுற்ற பலர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததற்கு ஆதாரம் எதுவுமில்லையென்று (1987 மார்ச் 22ம் திகதிச் செய்தியறிக்கை) குறிப்பிட்டார். மாறாக இந்த நிகழ்ச்சியினையே நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் என்று அதனை மறுதலிக்கும் வகையிலும் எழுதினார். 1987 ஜூன் மாதம் அரசாங்கப்படைகள் வடமராட்சியைக் கட்டுப்பாட்டிற்குள் கொணிடுவந்தபோது கொழும்புப் பத்திரிகைகள்

49
தென்னிலங்கையில் எழுந்த ஆர்ப்பளிப்பினையே பிரதிபலித்தன. நிவாரணப் பணிகளுக்காக வந்து கொண்டிருந்த இந்திய செஞ்சிலுவைச்சங்கக் கப்பல்களை இலங்கைக் கடற்படையினர் இடைமறித்துத் திருப்பிவிட்டபோது இந்த ஆர்ப்பளிப்புகள் உச்சகட்டத்தை அடைந்தன. இந்தியா அந்த உணவுப் பொருட்களைப் பட்டினி கிடக்கும் தங்களின் சொந்தமக்களுக்கு அதை வழங்கட்டும் என்று உயர் கடற்படை அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டபோது, இந்தியா பற்றி சிங்களமக்கள் மத்தியில் நிலவிய வெறுப்பினைப் பிரதிபலிப்பதாகவே அது அமைந்தது. பத்திரிகையாளர்களும் சேர்ந்து கொண்டு மதுபானக் கேளிக்கைகளில் கொழும்பு மூழ்கி நின்றது. 1987 ஜூனி 4ம் திகதி இந்தியா ஹெலிகொப்டர்கள் மூலம் உணவுப்பொருட்களைத் தரையிலிறக்கியபோது அரசியல் வாதிகளின் ஆர்ப்பரிப்பும் டம்பப் பேச்சும் தடமே இல்லாமல் மறைந்து போய்விட்டது. அதன்பின் ஒருவகையான அடிபணியவைக்கும் நோக்கத்துடனான எழுத்துக்கள் வெளிப்பட்டன. 1987 ஜூன் 19ம் திகதி கொழும்பு வீக் எண்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் இந்த நெருக்கடிநிலையை அணுகுவதில் பிற உலகுடன் சிங்கள மக்கள் எவ்வளவு தூரம் சம்பந்தமற்றஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதை குமுதினி ஹெட்டியாராச்சி என்ற நிருபர் எழுதி விளக்க முற்படுவதை முதலாம் தொகுதியின் எட்டாவது அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். பத்திரிகைகள் அனைத்தும் கேள்வியின்றி எடுத்தாளும் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான தகவல்களைத் தரும் செய்தி நிறுவனமான "லங்காபுவத் சிங்கள மக்கள் பற்றிய பிம்பங்களை நன்முறையில் வலுப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்-கேலி பண்ணும் வேலையையே செய்து வருகிறது என்றே பரவலாக உணரப்படுகிறது. 1988 ஜனவரியில் கொழும்பில் வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்னுமொரு படி மேலே போய், மட்டக்களப்பில் நடைபெற்ற ஒரு பதிலடித்தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை பொலிஸ் தான் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று அறிக்கையிட்டது.
தென்னிலங்கையில் இருந்தவர்கள் குறைந்தது தங்கள் மனத்தளவாகிலும் வடக்கையும் கிழக்கையும் ஓர் அந்நிய நாடாகவே கருதினர். ஆனால் கோழைத்தனம், பொய்மை என்ற தளைகளை விரும்பியே பூண்டு கொண்டுவிட்ட தென்னிலங்கைப் பத்திரிகைகள் தங்கள் வாயிற்படிக்கே வந்துவிட்ட வன்முறைச் சூழலுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறார்கள்? அதற்குள்ளேயே குடிகொணி டுள்ள கேடுகெட்ட பேதாபேதங்களிலிருந்து தப்பிப்போக ஒரு மார்க்கமும் இல்லை. அவர்களின் துணிச்சலான உள்ளுணர்வுகளே இப்போது அவர்களின் காலை வாரிவிட்டுவிட்டன. பழைய பழக்கவழக்கங்களை உடைத்துக் கொணிடு வருவது மிகக்கஷ்டமான ஒன்றுதான். இருந்தாலும் கொழும்புப் பத்திரிகைகளில் நம்பிக்கையின் அறிகுறிகளும் தென்படாமல் இல்லை.
வடக்கில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் கொழும்புப் பத்திரிகைகள் நிறையவே செய்திகள் தந்தாலும் தெற்கில் காணாமல் போகும் நபர்களைப்

Page 264
492
பற்றிய விஷயத்தைப் பற்றி எழுதுவது கடினமான விஷயமாக உள்ளது என்பதை உணரமுடிகிறது. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் பந்தோபஸ்து ஆலோசகரும் அவரது மகனுமான ரவி ஜயவர்த்தனவுடன் சண்டே ஐலண்ட் பத்திரிகை நடத்திய பேட்டி (1988 பெப்ரவரி 21) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ரவி ஜயவர்த்தனவால் வளர்த்தெடுக்கப்பட்ட விசேஷ அதிரடிப்படை (எஸ்டிஎப்) குறித்து லஸந்த விக்ரமதுங்க ரவியைக் கேள்வி கேட்டபோது, பதிலை விடக் கேள்வியில் இந்த விஷயங்கள் குறித்துப்பல தகவல்கள் கிடைத்தன. அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன.
கேள்வி: தெற்கில் "பச்சைப்புலிகளின்" நடவடிக்கைகள் எஸ்.டி.எப். உடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. பெருமளவு இளைஞர்களின் திடீர் மறைவுகளுக்குக் காரணமாகச் செயற்படும் பச்சைப்புலிகளின் நடவடிக்கைகளில் எஸ்.டி.எப்பிற்கு எந்தளவு ஈடுபாடு உள்ளது?
பதில்: ஒரு தொடர்பும் இல்லை. வ்ெளிப்படையாகச் சொல்லப் போனால், பச்சைப்புலிகள் யார் என்றோ, அதைக் கொண்டு நடத்துவது யார் என்றோ எனக்குத் தெரியாது. எஸ்.டி.எப். அந்தவகையான செயல்களில் ஒருபோதுமே ஈடுபட்டிருக்க முடியாது. அது உயர்ந்த கட்டுப்பாடு மிகுந்த படையானதால் இந்த வகையான கொடூரங்களை அவை செய்திருக்குமென்று சொல்லப்படுவதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
கேள்வி: குழப்பமடைந்து போன மக்கள் எஸ்.டி.எப்.ஐக் குற்றஞ் சாட்டுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இந்த வகையான தவறு எவ்வாறு நிகழ்ந்திருக்க முடியும் என்பது எனக்குத் தெரிகிறது. கரந்துறை சீருடைகளில் பொலிஸ் மற்றும் அமைப்புக்களிலிருந்தும் பல்வேறு பிரிவுகள் நாட்டின் நாலாபகுதிகளுக்கும் அனுப்பப்படுவதால் அவை எஸ்.டி.எப். ஆகத்தானிருக்க வேண்டும் என்று மக்கள் தப்பாக அடையாளங் கண்டிருக்கலாம். இது எஸ்.டி.எப். மீது ஒரு கெட்ட பெயரையே தேடிக்கொடுத்துள்ளது" பச்சைப்புலிகள்” என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு, அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவும் செயற்படும் இந்தப்படை அரசாங்கத்தின் ஜென்ம விரோதியான புலிகளின் பெயரைத் தாங்கியிருப்பதிலிருந்து அரசும் தனது எதிரிகளின் வழிகளையே பின்பற்றிச் செல்ல முனைவது தெளிவாகிறது. ரவி ஜயவர்த்தன அளித்துள்ள பதில்கள் அரசாங்கம் வெட்கப்பட வேண்டிய பல நிகழ்ச்சிகள் தென்னிலங்கையில் நடைபெற்ற வண்ணம் உள்ளன என்பதை ஒத்துக் கொள்ளும் வாக்குமூலங்களாகும். காணாமற் போனவர்களைப் பற்றிப் பத்திரிகைகள் எந்தவிதமான தகவல்களையும் வழங்குவதில்லை எனில், அந்தப் பத்திரிகைகளும் அதற்கு உடந்தையாக உள்ளன என்றோ அல்லது அத்தகவல்களை வெளியிட அவை தயக்கங்காட்டுகின்றன என்றோ தான் ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து "சற்றடே றிவ்யூ பத்திரிகையை வெளியிட்ட திரு.எஸ்.சிவநாயகமும் பின்

493 அதைத் தொடர்ந்து நடத்திய திருகாமினி நவரட்னேயும் குறைந்தபட்சம் முன்னோடிகளாகவே திகழ்ந்துள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து அவற்றை விபரங்களுடன் இது பிரசுரித்தது மட்டுமன்றி தெற்கிலிருந்து தங்களுக்குக் கிடைத்த செய்திகளையும் அவர்கள் பிரசுரித்தார்கள். (விடுதலைக் குழுக்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களைப் பற்றி "சற்றடே றிவ்யூ மிகக் குறைவாகத்தான் சொல்லியதென்று ஒருவர் சொல்லக்கூடும். இருந்தாலும் மற்றவர்கள் மனதாரச் சொல்ல விரும்பியிருந்ததைவிட இவர்கள் செயல்ரீதியாகவே செய்தது அதிகப்படியானது என்றுதான் சொல்ல வேண்டும்) தமிழ் மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத்தடைச்சட்டம் முன் அனுமானிக்கப்பட்டது போலவே தெற்கையும் தாக்கத் தொடங்கி விட்டதற்கான திட்டவட்டமான அறிகுறி இதுவாகும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் பணிபுரிய வரும் பத்திரிகையாசிரியருக்கு ஒரு விளிம்பு வரை சென்று அபாயங்களைச் சந்திக்கக்கூடிய துணிச்சலும் உணர்ச்சியும் தேவையானதாக இருந்தது. கொழும்பிலிருந்த எந்தப் பத்திரிகையாசிரியர்க்கும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேயில்லை.
கொழும்பில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் கொலை செய்யப்படுவதற்கான மிரட்டலுக்கு உட்பட்டிருந்தபோது, பத்திரிகையாளர்களும் இப்போதில்லாதுவிடினும் எப்போதாவது இதே கதிக்கு ஆளாக நேரிடும் என்று நிச்சயமாய் அஞ்சியிருப்பார்கள். வடக்கில் தீவிரவாதிகளின் கொலைச் செயல்களுக்கு எதிராக நிலைப்பாடுகள் எழுந்ததை விட தெற்கே அத்தகைய தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க மிகப்பலர் முன்வந்திருப்பதைக் காண முடியும். தமிழ் மக்களின் குரலாக விடுதலை இயக்கங்களை மக்கள் கருதிக்கொண்டது போல் ஜேவியியை சிங்கள மக்களின் அதிகார பூர்வமான குரலாக சிங்கள மக்கள் கருதாமை இதற்கு ஒரு காரணமாகும். இதே போலி தமிழ்மக்கள் மத்தியில் எழுந்த குழப்பநிலைமையும் பாரதூரமானதாகும். ஜே.வியியினால் விஜய குமாரணதுங்க கொலைசெய்யப்பட்ட விஷயத்தைப் பற்றி காட்ரி இஸ்மாயில் 1987 ப்ெபரவரி 21ம் திகதி வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருந்த கட்டுரையின் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்:
ஜே.வியி. அவரைக் கொன்றதால் இனிமேலும் தாங்கள் ஒரு இனவாத அமைப்பில்லை என்று அவர்கள் வாதாடுவதற்கில்லை, குறைந்தது ஜனநாயக அமைப் பெண்ணு கூட அதனால் தன்னைக்கூறிக்கொள்ள முடியாது. குருட்டுத்தனமான வக்ரபுக்தி கொண்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இது பல மாதங்களுக்கு முன்பே தெரிந்த விஷயம்தான். ஜே.வி.பி. இப்போது இன்னொன்றையும் நிரூபணம் செய்திருக்கிறது. தங்களின் உன்னதமான கருத்துக்களின் மூலம் மக்களை அணுகி அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கம் அதற்குச் சிறிதும் இல்லை என்பதே அது. ஏனெனில் அவர்களிடம் அத்தகைய கருத்துக்கள் எதுவுமேயில்லை. அத்தகைய உண்னத கருத்துக்களைக் கொணடிருந்த

Page 265
494
அனைவரையுமே மெளனிக்கச் செய்து விடுவதன் மூலமே அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இப்போது மிஞ்சியிருப்பதெல்லாம் ஜேவிபி. என்ற ஒன்றும் துப்பாக்கியும் தான். விஜேவீரவுக்கு முன்னுள்ள ஒரே ஒரு வழி அவருடைய பாதையில் குறுக்கே நிற்கும் எல்லாரையும் கொலை செய்து விடுவதுதான். அவர்களில் சிலர் இப்போதைக்கு அவருடைய நெருங்கிய துணைவர்களாகவும் ஆதரவாளர்களாகவும் இருக்கக்கூடும். இலங்கை அரசியலின் கெளரவத்திற்குரிய ஒருவர் நாட்டை ஒன்றுபடுத்த முயற்சி செய்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்" ஜனநாயகபூர்வமான அபிப்பிராயங்களை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அரசாங்கம் தடுமாறித் தவறிழைத்துக் கொணடிருக்க, ஜே.வி.பி.யானது அதனது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களிடமிருந்தும் கூட குருட்டுத்தனமான ஒரு அனுதாபத்தை ஒருவேளை பெற்றுக் கொண்டிருக்கக்கூடும். பயப்தி காரணமாக நேர்மையான ஒரு அபிப்பிராயத்தை வெளியிடத் தயங்கும் ஒரு கட்டம் விரைவில் வந்துசேர இருக்கிறது. ஜே.வியியின் கொலைப்பட்டியலிலோ அல்லது அரசாங்கத்தின் சந்தேக நபர்கள் பட்டியலிலோ தங்கள் பெயரும் உள்ளது என்பதை அறிய வந்த மிகப்பலர் தென்னிலங்கையில் மெளனம் சாதிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழ் மக்களும் இத்தகைய ஒரு நிலைமையையே சந்திக்க வேண்டியிருந்தது. 1983 ஜூலை வரை ஓரளவு துணிச்சலும் மக்கள் ஆதரவும் கொண்டிருந்த சிலர் விடுதலை இயக்கங்களின் பாசிஸப் போக்குகளை விமர்சிக்கக்கூடிய நிலைமை இருந்தது. தமிழருக்கு எதிரான ஜூலை 83 வன்முறைக்குப் பின்னர் போராளிகளுக்கு குருட்டு ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்ததுடன், இந்தியாவின் உதவியும் அவர்களுக்குக் கிடைத்ததும் பகுத்தறிவு சார்ந்த குரல்கள் தேய்ந்துபோய் ஒலிக்க ஆரம்பித்ததுடன் மனச்சாட்சி என்பதும் இறுகிக்கல்லாய் சமைந்துவிட்டது. போராளிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்க முனையும் எவரும் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டதோடு கொலை செய்யப்படுவதற்கும் விதிக்கப்பட்டிருந்தார்.
இந்த வகையான குழப்பங்களுக்கிடையே, அரசாங்கமானது தனது நடததையிலி உயர்நீத மனிதாபிமானக் கண னோட்டத்தைப் புகுத்தத்தவறியபோது, பயமுறுத்தலின் மூலமே பாமரமக்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொள்ள இரு தரப்பினருமே முயற்சித்தனர். விடுதலை இயக்கங்கள் கைக்கொணிட அணுகு முறைகள் ஆகவும் விசனந்தருவனவாக அமைந்தபோது அரசானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய ஆதரவுடன் எல்லையற்ற பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதற்கான நியாயத்தைத் தேடிக்கொண்டு விடுகிறது. ஜே.வியியினதும் விடுதலைப்புலிகளினதும் பாரம்பரியத்தை இந்தப் பின்னணியிலேயே வைத்து நோக்க வேண்டும். இனி வருங்காலங்களில் பத்திரிகைத் துறையானது மிகக் கடுமையான

495 கஷ்டநிலைமைகளைச் சந்திக்க நேரிடும் என்பது மட்டுமல்ல, ஆக்கபூர்வமாக அது செயற்படுவதற்கான சாத்தியங்களையும் அது வழங்கக்கூடும்.
8.4 இந்தியா
கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் (1987 பெப்ரவரி 14) பத்திரிகையில் வெளியான "கல்கத்தா டெலிகிரப்" பத்திரிகை ஆசிரியர் கே.ஜே.அக்பரின் கட்டுரையானது இலங்கையில் நிலை கொண்டுள்ள இந்தியப்படையினருக்கு ஆதரவாக நின்ற இந்திய மேட்டுக்குடியினரின் சிந்தனையின் உள்ளோட்டங்களை தெளிவாகவே குறிப்பிடுகிறது. இந்தியாவின் தலையீடானது மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக எழுந்த செயலென்று (இலங்கை இராணுவத்திடமிருந்து தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவும் நடவடிக்கை) சொல்லும் அவர் இந்தியாவுக்கு அண்மையில் ஒரு புதிய தேசம் (அதாவது தமிழ் ஈழம்) உருவாவதில் உள்ளுறைந்த அபாயமிருப்பதாகவும் சரியாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்:
பங்களாதேஷ் உருவாகிச் சில மாதங்களுக்குள் எழுந்த ஆனந்யூர் சாஹிப் தீர்மானத்தில்தான் காலிஸ்தான் கோரிக்கையின் மூலவித்து காணக் கிடக்கிறது. (பாகிஸ்தான் உருவாவதற்கு லாகூர் தீர்மானம் காரணமாயிருந்ததுபோல) அதேபோல இலங்கைக்குள் இன்னொரு நாடு உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்குள்ளாகவே இது போன்ற எண்ணற்ற தீர்மானங்கள் உருவாக மாட்டாது என்றோ அவற்றை நாம் சமாளித்துக்கொள்வோம் என்றோ நம்மிடம் எந்தவிதமான மாயைகளும் நிலவத்தேவையில்லை. உலகின் எங்காவது ஒரு பகுதியில் புதியகொடி பறக்கிறது என்பது எப்போதுமே அபாயகரமான விஷயந்தான். அது புதிய சிந்தனைகளை வளர்க்கிறது. ஐக்கிய இலங்கை என்னும் சட்டகத்திற்குள்ளாகவே எமது நலன்களைக் காப்பாற்றிக் கொள்வதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. ஒன்றை நாம் பொறுப்பேற்றுவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இலங்கையின் ஒருமைப்பாட்டிற்குச் சவால்விடும் வகையில் புலிகளின் ஆற்றலை வளர்த்தெடுப்பதில் நாம் ஆற்றியுள்ள பங்கு கொஞ்சநஞ்சமானதல்ல என்ற வகையில், இப்போது அந்நாட்டின் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கான எந்தவிதமான விலையைக் கொடுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம். ஒரு அர்த்தத்தில் புலிகளை அழித்துக்கொள்ள முடியாத இலங்கை இராணுவத்தின் இயலாமையால்தான் அதிர்ஷ்டவசமாக அணிடையில் பாகிஸ்தான் போன்ற ஒரு நிரந்தரமான பகை நாட்டை ஏற்படுத்திக் கொள்ளவில்லை , பின் திருகோணமலையின் முக்கியத்தைப்பற்றிக் குறிப்பிடும் அவர் இலங்கையின் கடற்பிரதேசங்கள் ஒரு பகைச்சக்தியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் இருப்பது எவ்வளவு முக்கியமானது என்பதுபற்றிப் பேசுகிறார்:
"சிறுபடகுகள் மூலம் ஆயுதங்களைக் கடல் வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வந்து, இந்திய அரசிற்கு எதிரான யுத்தங்களில்

Page 266
496 ஈடுபட்டிருக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி செய்ய எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? இத்தகைய கிளர்ச்சிக்குழுக்களுக்கு இங்கு குறைவேயில்லை. ஆந்திரப் பிரதேசம், வங்காளம் மற்றும் பீகாரில் நக்ஸலைட்டுகளின் விடுதலைப் போராட்டங்களுக்கு இத்தகைய ஆயுத உதவிகள் பேருதவியாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். இன்னொரு பஞ்சாப் உருவாக மாட்டாது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஹைதராபாத்தில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளுக்கோ, ஆந்திராவிலுள்ள நக்ஸலைட்டுகளுக்கோ பாகிஸ்தான் ஆயுதம் கொடுத்து உதவ விரும்பாது என்று எப்படிச் சொல்ல முடியும்? வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளாக யார் யார் வரப் போகிறார்களென்று யாருக்குத் தெரியும்? அல்லது நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் இன மத பீதிகளுக்கு இன்னும் யார் யார் தூபமிடப்போகிறார்களோ?" தேசிய பாதுகாப்பு எனினும் விஷயம் குறித்த இந்தியாவின் முனனெச்சரிக்கையானது இலங்கையின பாதுகாப்பு குறித்த யோசனைகளிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. பிரிவினைப் போக்குகள் ஏன் எழுகின்றன என்ற கேள்விகளை மட்டும் இந்திய மேட்டுக்குடிமக்கள் கேட்டுக்கொள்வதில்லை. ஜனநாயக அமைப்பிற்குள் அரவணைத்து ஏற்றுத்தீர்வு காணப்படக்கூடிய உண்மையான பிராந்திய பிரச்சினைகள் என்னவாக இருக்கும்? சிறந்த ராஜதந்திரத்தைப் பிரதிபலிக்கக்கூடிய அடையாள நடவடிக்கைகள்கூடத் தவறாக முடிந்து போய்விடுவதுண்டு. இதை அகாலி தளம் விஷயத்தில் நாம் பார்க்கமுடிந்தது. மத்திய அரசினி சிரத்தையின்மை, நம்பிக்கையின்மை, தாங்கள் கெட்டித்தனமானவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ள முனைவதால் எழும் சந்தேகக் கணிணோட்டம் என்பன எந்த முயற்சிக்கும் வெற்றியைத் தேடித்தரவில்லை. மனிதாபிமானரீதியல் தமிழர்களைப் பாதுகாத்தல் என்னும் அடிப்படையில் புலிகளுக்கு முதலில் ஆயுதம் வழங்கியதும் பின்னர் தேசிய நலன் என்ற அடிப்படையில் அவர்களோடு சண்டையிட்டு தமிழர்களைத் திட்டித்தீர்ப்பதுமான செயலானது அவர்களுக்கு இயல்பான ஒன்றாகவே இருந்தது. பிந்திரன்வாலே கதையிலிருந்து ஆரம்பித்து இந்தியாவின் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருந்தது அதன் நிலையற்ற சந்தேகப் பிறவிக்குணமேயாகும். நிபுணர்களின் திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்து, இந்திய ஆளும் வர்க்கம் ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளிவிடப்படும்போது ஒரு முறை நல்ல பலமான அடி கொடுத்தால் மக்கள் மறுமுறை பணிந்து விடுவார்கள்’ என்ற நம்பிக்கையில் மத்திய ரிசர்வு பொலிஸ் படையை அனுப்புவது என்று கொள்கையை மாற்றிக்கொள்வது அவர்களுக்கு இயல்பே. இதன் விளைவாக சித்திரவதை, காணாமல் போனவர்களின் கதை ஒரு புறமும் மறுபக்கம் என்றும் தீர்க்க முடியாத பயங்கரவாதப் பிரச்சினைகளும் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். இனப்பிரச்சினைக்கான அரசியல்

497
தீர்வுக்கான தேவைபற்றி இலங்கை அரசாங்கத்திற்கு விடாப்பீடியாகப் போதனை செய்வதில் இந்திய மேட்டுக்குடியினர் களைத்துப் போனதாகவே தெரியவில்லை. ஆனால் இதே ஆலோசனைகளை தங்கள் நாட்டில் செயற்படுத்துவதற்கான தார்மீகப் பிடிப்போ, நேர்மையோ அவர்களிடம் இருக்கவில்லை.
இந்திய சுதந்திரத்தின் பிதாமகர்களுக்கு மனிதாபிமானத்தின் பேரிலும், ஜனநாயகத்தின்பேரிலும் நம்பிக்கையும் உறுதியும் இருந்தபோதும் அவர்களால் சத்ய நேர்மையை (Self-righteOusness) அதிக நாள் தக்கிவைக்க முடியவில்லை. இச் சத்யநேர்மையை இந்திய ஆளும் வர்க்கம் எரிச்சலூட்டும் வகையில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தாலும் அதனோடு தொடர்புடைய தர்மீக நெறிகள் எதுவுமில்லாத நிலையில் இன்று குழம்பிய வண்ணம் உள்ளது. சுதந்திரத்திற்காக ஆங்கிலேயருடன் போரிட்ட பின்பு, ஆங்கிலேயர் விட்டுச் சென்றதையும்விட ஒருபடி கீழான அரசியல் அமைப்பு உருவாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையையே இந்திய மேட்டுக்குடியினர் சந்திக்க நேர்ந்தது. பாதுகாப்புத் தொடர்பான இந்தியாவின் பாரிய ஆலோசனைகளானது புவிசார்அரசியலில் மிக நவீன, கெட்டித்தனமான விஷயங்களை ஆழ்ந்து கற்றுக்கொணிட தொழில் நுணி முறைச் சிந்தனையாளர்களாலேயே வழிநடத்தப்பட்டது பிரச்சினைக்குரியதாகும். இது பிரச்சினைகளை அணுகுவதற்கு ஒரு சாதாரண தார்மீக உணர்வுக்குப் பதிலாக இராணுவச் சிந்தனையை வேண்டி நின்றது. இது அவர்களின் சுயசெருக்கை மிகைப்படுத்தி இராணுவத்தை நகர்த்தித் தங்களின் நலன்களுக்காகப் பேரம் பேசும் பழம் பெருச்சாளியான ஹென்றி கீஸிங்கரைப்போல் அவர்களையும் சிந்திக்க வைத்தது. பாதுகாப்பான கார்களிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களிலும் இருந்து கொணர்டு பார்ப்போருக்கு சடலங்களின் சிதைவுகளிலிருந்து கிளம்பும் நாற்றமும் வேதனை தரும் காட்சிகளும் அந்நியமாகவே தோன்றும். அவர்களும் ஒருநாள் இறந்துபடக் கூடியவர்கள்தான் என்பதை அவர்கள் இலகுவாகவே மறந்துவிட்டிருநதார்கள்.
அடைய வேணி டிய குறிக்கோள்கள் விரும்பத்தக்கவையாக இருந்தாலி அதை அடைவதற்கான வழிவகைகள் எதுவாக இருந்தாலும் சரிதான் எண்று நடிப்பது அர்த்தமற்றது. சிந்திக்கும் ஆற்றல் கொண டவர்கள் இதனைப் புரிந்து கொள் வர் . விடுதலைப்புலிகள் சிங்களவர்களை அநுராதபுரத்தில் படுகொலை செய்தது குறித்து தமிழ்மக்கள் எவ்வாறு அக்கறைப்பட்டுக் கொள்ளவில்லையோ அது போலவே தமிழ்ப்பிரதேசங்களில் இலங்கை அரசின் விசேஷ் அதிரடிப்படையினர் கைக்கொண்ட அணுகுமுறையும் தமிழ்மக்கள் பிரச்சினையை வன்முறை மூலமே அணுகிய பொதுவான போக்கும் தெற்கில் கண்மூடித்தனமான படுகொலைகளிலேயே போய் முடிந்தது. இந்தியா இலங்கையில் பிரயோகித்த ஈவிரக்கமற்ற வழிமுறைகள் இந்தியாவிற்குள்ளேயும் கடைப்பிடிக்கப்படுவதற்கான உளவியல்ரீதியான, தார்மீக ரீதியான உரிமையை இது இந்தியாவிற்கு ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது.

Page 267
498
இந்தியாவிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இந்திய அதிகாரிகள் பொய் சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில் இந்திய சமாதானப்படையின் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிவிக்க சுயாதீனமான மக்கள் தொடர்புச் சாதனங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தால் பல விஷயங்களை நாம் சாதித்திருக்கலாம். 1987 அக்டோபர் 11ம் திகதி உதயன் பத்திரிக்ை அலுவலகத்தை மூடி, கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் ஷெல் தாக்குதல் நடத்தி பதின்மூன்று பொதுமக்களைக் கொலை செய்த கொடூரமான இராணுவ மூளையுடையவர்களைக் கட்டுப்படுத்த இது ஓரளவு துணைபுரிந்திருக்கக்கூடும்.
இராணுவ உளவியல் பற்றிய பிரசங்கங்களை நடத்திவிட்டுத் தங்கள் இராணுவ வீரர்கள் இலங்கையில் நடந்து கொண்டவிதத்தைப் பற்றிய பொறுப்பை இந்தியர்கள் இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. இதுபற்றி எதுவுமே தெரியாமல் அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க, அவர்களின் உயர் இராணுவ அதிகாரிகளோ தமிழர்களின் அவலநிலை குறித்துத் தங்கள் இதயம் இரத்தம் சிந்துவதாகக் கூறிக்கொணர்டு, கொலை, பாலியல் வன்முறை ஆகியனவற்றை இராணுவ வீரர்களின் உளவியல் மற்றும் அவர்களின் போர்க்களை என்ற பாணியில் விளக்கம் தரமுயல்கிறார்கள். நடந்து முடிந்து போனவற்றிற்காகவோ அல்லது இப்போதும் நடந்து கொண்டிருக்கும் கேவலமான செயல்கள் குறித்தோ அவர்கள் சிறிதளவாவது பச்சாதாபப்படுபவர்களாகவே தெரியவில்லை. இராணுவவீரர்களின் உளவியல் என்பதனை விட வேறுபல முக்கிய அம்சங்களும் இதில் உள்ளன என்பதனை மேலே விபரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை நோக்கும் ஒரு வாசகன் தெளிவாக உணர முடியும். அது அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் அவர்களிடம் காணப் பட்ட திறமையீனமுமீ உயர்மட்டத்தில் நிலவிய ஈவிரக்கமற்றதன்மையுமாகும்.
இலங்கை அரசாங்கத்திற்கு அதன் இராணுவத்தின் அட்டூழியமான நடத்தைபற்றி களைத்துப் போகாது அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்த ஒரு நாட்டிற்கு இத்தகைய சாக்குப்போக்குகள் பொருந்திவரமாட்டாது. இந்திய இராணுவவீரனுக்குப் போலவே சிங்கள இராணுவவீரனின் உளவியல் அடிப் படையிலான விளக்க தி தை இந்தியா ஒரு போதுமி ஏற்றுக்கொண்டதில்லை. இனியும் ஏற்கப் போவதில்லை. மற்றபடி பார்த்தால் சாதாரன வேளைகளில் இலங்கை இராணுவவீரன் மகிழ்ச்சிகரமானவனாகவே இருப்பான்.
எமது அறிவுக்கெட்டியவரையில், மனித உரிமை மீறல்கள் மிகப்பெருமளவில் நடந்திருந்தபோதிலும் ஒரு இந்திய இராணுவவீரனாவது இது பற்றி விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. கேள்விக்குள்ளாக்கப்பட்ட கைதிகள் இது மிக இயல்பான விஷயம் போல எப்போதும் பொதுஇடங்களில் உலாவந்த வணிணமேயுள்ளனர். இந்திய இராணுவத்தால் திருப்பி அழைக்கப்பட்ட பலரை மீண்டும் காணமுடியவில்லை. இவற்றிற்கு மன்னிப்புகள் கோருவது என்பது அவசியமாகப்படாததுபோல எல்லாம் வழமையாக நடப்பது

499
மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இந்தியர்களின் இதயம் உலகின் துயரங்களுக்காக இரத்தம் சொரியும் போலும்! ஆனால் தங்கள் சொந்த இரத்தமும் சதையுமானவர்கள் துன்பப்படும்போது மட்டும் அது அவர்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயமாகிவிடுகிறது.
1919ல் அம்ரித்சார் படுகொலையிலிருந்து ஆங்கிலேயர் இழைத்த ஒவ்வொரு கொடூரமும், ஒவ்வொரு லத்தி அடியும், சிறையில் அனுபவிக்க நேர்ந்த ஒவ்வொரு மணித்தியாலமும் அடைமாலையின் ஒவ்வொரு பகுதியாக இணைந்துதான் ஒருமைப்பாடான இந்தியதேசம் உருவாகியது. இந்நிகழ்ச்சி பற்றி விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஹண்டர் குழுவின் உறுப்பினர் சேர்சிமண்லால் செடல்வாட் அவர்களின் மதிப்பீட்டின்படி 1919 ஏப்ரல் மாதம் பைசாகித் திருவிழாவின்போது ஜாலியன்வாலாபாக்கில் குறைந்தது 400 நிராயுதபாணிகளான பஞ்சாபியர்கள் கட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். ஆங்கிலேய இராணுவத்திற்கும் அதன் உளவியல் பிரச்சினைகள் இருந்தன. 1857 இந்தியக் கலகத்தின் பின் அவர்களுக்கும் ஒருவித கலகம் சார்ந்த மனச்சிக்கல் உருவாகி கூட்டம் கூடுகிறது என்றாலே அவர்களுக்குக் கிலி பிடித்துவிடும். மனிதத்தவறுகள் என்று சொல்லப்பட்டு அந்தச் சாட்டில் இவை எல்லாம் மன்னிக்கப்பட்டுப் போகுமானால் நாகரிக வாழ்வின் அடிப்படையான சட்டம் என்பதற்கே தேவை இருக்காது. சட்டம் குறித்து ஓரளவாவது தங்காது பொறுப்புப்பற்றிச் சுயஉணர்வு கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் இந்தச் சம்பவத்திற்கு சாக்குப்போக்கு எதுவும் கூறவில்லை. ஹண்டர் பிரபு தலைமையில் ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு இந்தியாவில் நம்பிக்கை கொண்டிருந்தனரோ அதேபோல் ஆங்கிலேயர் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த மகாத்மா காந்தி அம்ரித்சார் சம்பவத்தால் நம்பிக்கை இழந்து காணப்பட்டார். ஆனால் ஹண்டர் அறிக்கை வெளியானதும் மெதுவாகப் பூசி மெழுகுவதைக்காட்டிலும் இது சிறந்த விஷயந்தான் என்று காந்தி கருதியதுடன், மகத்தான பிரித்தானியப்பேரரசு மர்ைடியிட்டு வணங்கும் அளவு இந்தியாவின் அதிகார வர்க்கத்தை நிர்வகிக்கும் ரகசிய நன்னடத்தை நெறி எதுவும் உள்ளதா என்று அவர் கேட்கவும் செய்தார். (மகாத்மா காந்தி-பிஆர்நந்தா, அன்வின் புக்ஸ்) இது ஒருநாளும் முழுமையான நிராகரிப்பாக அமையமாட்டாது.
ஆயுதங் களைவதை மட்டுமே முக்கியமாகக் கொணிடிருந்திருக்க வேண்டிய ஒரு நடவடிக்கையின்போது இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒருபாவமும் அறியாத நிராயுத பாணிகளான-தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடாத அப்பாவிப் பொதுமக்கள் 100க்கும் அதிகமானோர் பலியானதை இலங்கைத் தமிழர்கள் கண்கூடாகப் பார்த்தனர். இவற்றில் பெரும்பாலான சாவுகள் கட்டுப்பாடும் திறமையும் மிகுந்ததெனக் கருதப்பட்ட ஒரு பெரிய தேசத்தின் படைகளின் தாறுமாறான அலட்சிய மனோபாவத்தினால்தான் சம்பவித்தது. இந்தியப் பாராளுமன்றமானது என்னதான் நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு விசாரணைக்குழுகூட நியமிக்கப்படவில்லை.

Page 268
500
நாகரிக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உண்மையாக இந்தியா மதிக்க ஆசைப் பட்டிருந்தால் விடுதலைப் புலிகளினி கோபமூட்டும்படியான நடவடிக்கைகள், படைவீரர்களின் ஆத்திரம் என்பனவற்றைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பது ஒரு பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பொதுமக்களும் பெருஞ்சினங் கொண்டிருந்தனர். புலிகள்மீதும் இந்தியர்கள்மீதும் அவர்கள் பெருங்கோபம் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அனாதரவான நிலையில் தானிருநீதனர். அனாதரவானவர்களைப் பாதுகாப்பதுதான் நாகரிக சமுதாயத்தின் முதற்பணி. சுதந்திரம் அடைந்த கடந்த 40 ஆண்டு காலப்பகுதியில் இந்திய அரசு எத்தனை பிரிகேடியர்-ஜெனரல் டயர்களையும் அம்ரித்ஸார்களையும் உருவாகிக்கியிருக்கிறது? இந்தியாவிற்கு இது சாத்தியமாகலாமா?
பஞ்சாப் வீதி ஒன்றில் ஐரோப்பியப் பெண்மணி ஒருத்தி தாக்கப்பட்டார் என்பதற்காக ஜெனரல் டயர் பிறப்பித்த ஒரு மோசமான கட்டளைப்படி அவ்வீதியில் இந்தியர்கள் தங்கள் வயிற்றால் ஊர்ந்துதான் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தங்களுக்குத் தகவல் கூறும் பேர்வழிகள் அவர்களைப் பார்வையிட்டுச் செல்லும் வரை மக்களைச்சுற்றி வளைத்து, இழிவுபடுத்தும் வகையில் அவர்களைப் பலமணிநேரம் காக்க வைத்து இலங்கையில் இந்தியர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளை இது நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஒரு முகாந்திரமும் இல்லாமலே சில சமயங்களில் அவர்கள் ஈவிரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தப்பட்டார்கள். 1988 ஜனவரி 7ம் திகதி யாழ்நகரின் முக்கிய வர்த்தகப் மையமான பகுதி ஒன்றில் காலை 930 மணியிலிருந்து கொதிக்கும் வெயிலிலும் இரவு 700 மணிவரை எதுவித பாகுபாடின்றி சகலரும் சுற்றி வளைக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். யாரோ ஒருவன் இராணுவவீரனைச் சுட்டுக்கொன்றுவிட்டான் என்பதற்காகத்தான் இப்படி நடந்தது. குடிப்பதற்கு தண்ணிர்கூடக் கொடுபடவில்லை. வசதியாக ஓரங்களில் அகப்பட்டுக்கொண்டவர்கள் தொடர்ந்து அடிக்கப்பட்டனர். அங்குள்ள அதிகாரி ஒருவர் அவர்களைப் பல தடவைகள் வேசிமக்கள் என்று சொல்லி அழைத்திருக்கிறார். அவர்கள் விடுவிக்கப்பட்டபோது ஊரடங்குச்சட்ட நேரமாயிருந்தது. இரவுப் பொழுதை கடைவாசலில் எங்காவது படுத்துக் கிடந்து கழித்துவிட்டு காலையில் வீடு போப் விட முயன்று கொண்டிருந்தவர்கள் மீண்டும் அடித்துத்தாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வரலாற்றிலிருந்து இந்தியர்கள் எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லையா?
இஸ்ரேலில் நடக்கும் கொடுமைகள் குறித்தும் ஆபிரிக்காவின் வெள்ளையர்களின் நிறவெறி குறித்தும் சரியாகவே கடுமையாக விமர்சிக்கும் இந்தியா, இந்தக் கொடுமைகளைத் தாமுமே ஒரு காலத்தில் கண்கூடாக அனுபவித்திருந்தாலும் நூற்றாண்டு காலமான சிந்தனைமரபை மகிமைப்படுத்தும் சட்டங்களை மேலெழுந்தவாரியாகத் திணிப்பதை விட்டுவிட்டு அந்தச் சட்டங்களின் சாராம்சத்திற்கு பெருமதிப்புக் கொடுக்கப் பழகிக்கொண்டிருக்க வேண்டும்.

50
சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு இன்னும் தாங்கள் மதிப்பு வழங்க வேண்டுமா என்பதை இந்தியர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். நமது பெரும் அணிடை நாடாகவும் பெருமளவில் ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும் உள்ள இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுமானால் அதை நாம் தாங்கிக் கொள்ள மாட்டோம் என்றுதான் அவர்கள் சீருடன் வாழ வேண்டுமென நாம் அவாவுகிறோம். தார்மீக இலட்சியங்களில் எதனை முதன்மைப்படுத்தப் போகிறோம் என்று மறுமதிப்ப்ட்டினை இது வேண்டி நிற்கிறது.
8.5 முடிவாகச் சில சிந்தனைகள் மக்கள் வாழ்க்கையும் மாற்றுத்தீர்வுகளும்
இந்த யுத்தம் ஒழுங்கிலமைந்திருந்த வாழ்க்கை முறையைச் சிதறடித்திருக்கிறது. பொதுவாழ்க்கை அமைப்புகளின் மீது சமூகம் கொணிடிருந்த சகலவிதமான கட்டுத்திட்டங்களையும் துடைத்து எடுத்துவிட்டது. சமூகத்தின் சகல பலவீனங்களையும் அது வெளிக்கொணர்ந்ததுடன் சமூகத்தைப் பூரணமான மந்தநிலைமைக்குக் கொண்டுபோய்விட்டது. இந்தியா இராணுவம் மற்றும் அரசியல் வழிவகைகள் மூலம் தன்னை இங்கு உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. புதிதாக எதையும் தாமே உருவாக்க இயலாதவர்களாய் மற்றவர்களுக்கு அடிபணிந்து வேலை செய்வதையே மரபாகக் கொண்டுவிட்ட மத்தியவர்க்கத்தினரோ இந்நிலைமையை உடைத்துக்கொண்டு முன்வரவோ அல்லது தலைவர்கள் என்று யார் வருகிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டு பட்டும்படாமலும் தங்களது சேவைகளை வழமைபோல் செய்து கொணர்டிருக்கவோ முடியாதவர்களாக இருந்தனர்.
இத்தகைய ஒரு சூழலில் ஊமையாய் முடங்கிப்போய்க் கிடந்த சமூகத்தை மாற்றுவதற்கான சக்தியை வழங்கக்கூடிய அறிவுஜீவிகளும் செயலிழந்து நின்றனர். இந்திய அமைதிப்படையுடன் பல சந்தர்ப்பங்களில் பெரும் முரண்பாடான பிரச்சினைகளில்கூட விடுதலை இயக்கங்களுடன் நடந்து கொண்டது போலவே ஒதுங்கிப்போய் எந்த வகையான முனைப்பான செயற்பாட்டையும் காண்பிக்காமலேயே இருந்தனர். இதுதான் அவர்களின் வரலாறாக இருந்தது. கடந்த காலங்களில் போலவே கருத்தியலிலும் தார்மீகரீதியிலும் இவர்களிடம் காணப்பட்ட ஆழமற்ற தன்மையானது விடுதலைப்புலிகளின் ஆணவ அதிகாரத்திற்கு இவர்களை அடிபணியச் செய்து அவர்களின் கொடூரங்களைப் பூச்சு இட்டு மறைப்பவர்களாக மாற்றியிருந்தது. இன்னும் கொஞ்சப்பேர் அவர்கள் இழைத்த அட்டூழியங்களை சரிபோலத் தோன்றும் கோட்பாடுகள் கொண்டு விளக்கம் கொடுக்கவும் முனைந்தனர். இந்த இயக்கங்களை விமர்சித்தவர்களை தனிமைப்படுத்தி அவர்களைக் குற்றவாளிகளாகப் படம் பிடித்துக் காட்டவும் சிலர் முயற்சி மேற்கொண்டனர். இயங்கு சக்தியாக இருந்த இந்த அறிவுஜீவிகளின் கூட்டம் எப்போதும் சந்தர்ப்பவாதப் போக்கையே முக்கிய குணாம்சமாகக்

Page 269
502
கொண்டிருந்தது. எது அவசியம் செய்யப்பட்டாக வேண்டுமோ அதை விடுத்து எது தங்களுக்கு வசதியானதோ அதனையே செய்ய முனைந்தனர் என்பதனையே அவர்களது நடவடிக்கைகள், அறிவார்ந்த பங்களிப்புகள், அவர்களின் பொது வாழ்க்கை நடத்தைகள் அனைத்தும் பிரதிபலித்தன. இத்தகைய நிலைப்பாட்டின் குணாம்சங்களான சர்வாதிகாரத்துவம் மற்றும் காட்டுமிராணிடித்தனம் என்பன அவர்களின் தலைமைத்துவத்திலும் பிரதிபலித்தது. தங்களுக்கென்று ஒரு மூலையைப் பிடித்துக்கொண்டு அதற்குள் கெளரவ படாடோபங்களுடனும் பெயரளவில் சொல்லிக்கொள்ளக்கூடிய அதிகாரங்களுடனும் அவர்கள் வாழவிரும்பி நின்றதனையே அவர்களின் கொள்கைப்பிடிப்பு எதுவுமேயில்லாத நடத்தைகள் வெளிப்படுத்தின. அதேசமயத்தில் இந்தப் போக்குகளில் தங்களை முற்றுமுழுதாக ஈடுபடுத்திக் கொண்டுவிடாமல், இப்போக்குகளின் தூர எல்லைகளில் போய்க் கவனமாய் நின்றுகொண்டு இந்தப் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்குத் தாங்கள் பொறுப்பாளிகள் அல்லர் என்று தமக்கு மன்னிப்புப்பத்திரமும் வழங்கிக் கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இத்தளம்பல் நிலைக்கு அடிப்படையாக இருந்தது எது? சேதனபூர்வமான அல்லது மரபார்ந்த அறிவுஜீவிகள் பற்றிய செம்மைசால் வரைவிலக்கணங்களுக்குள் இவர்களது அபிலாஷைகள் ஏன் பொருந்திவரவில்லை? ஏனெனில் இந்தக் கூட்டம் காலனிய மத்தியதரவர்க்கத்தின் விளைச்சலாகும். இவர்களின் புத்திஜீவிப் பாசாங்குத்தனங்கள் பொருளாதார அபிலாஷைகளை மட்டுமே கருத்திற்கொண்டு கல்வியில் இறங்கிய ஒரு போக்கின் பக்க விளைவே இது.
கொழும்பிலிருந்த ஆளும் வர்க்கத்தினரைப் போஷித்தாக வேண்டிய தமது கடமைப்பாடுகளையும் முற்றுமுழுவதாகக் கைகழுவிவிட இவர்களால் முடியவில்லை. ஊசலாட்டமும் எதிலும் ஊன்றி நிற்க முடியாத தன்மையும் இவர்களை இந்த பலவீனமான ஈரடிநிலைக்குள் கொண்டுபோய்த் தள்ளியது. உதிரிப்புத்திஜீவிகள் என்ற பதம் இவர்களுக்கு அச்சொட்டாகப் பொருந்தும். இவ்வாறு இயங்குசக்தியாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் மக்களுக்கு எதுவுமே நல்க முடியாத நிலையில் இதற்கு மாற்று வழிதான் என்ன? ஏற்கெனவே அமைப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த அரசியல் குரல்கள் இதற்கு வழி திறந்து விடுமா?
புலிகளின் அரசியல்போக்கும் அதன் வெற்றுப் பிடிவாதமும் தொலை நோக்கமற்ற பார்வையும் நாம் கணிசமாக எதையுமே சாதித்துக்கொள்ள முடியாமற் செய்துவிட்டது. இப்போதும் கூட அவர்களது நடவடிக்கைகள் இந்திய மேலாதிக்கத்திற்கு எம்மை அப்படியே தாரைவார்க்கும் நிலைமைக்கே இட்டுச் செல்கிறது. உதாரணமாக, சிவில் நிர்வாகத்தைப் பகிஷ்கரிக்கக்கேரி அவர் களி அணி மையில் விடுதி த எச்சரிக்கை அப்படியே செவிமடுக்கப்பட்டிருக்குமானால் சிவில் அமைப்புகளின் மீது மக்கள் கொண்டிருந்த கொஞ்சநஞ்சக் கட்டுப்பாடும் அகற்றப்பட்டு, இந்திய அதிகாரம் சமூகத்தின் சகல மட்டங்களிலும் முழுமையாக ஊடுருவிச் செல்லத்தக்க சூழ்நிலைமையே உருவாகியிருந்திருக்கும். சமூகத்தின் சிவில் வாழ்க்கை மீதான கட்டுப்பாடு தப்புதலாக இந்தியாவின் கைகளிலே போய் விழுந்துவிட வழிவகுக்கும் இந்த நடவடிக்கை ஆக்கபூர்வமற்றதோடு அழிவையே குறித்து நின்றது.

503
மறுபுறம் ஈ.பி.ஆர்.எல்.எப். அல்லது ஈரோஸ் இயக்கம் தலைமை தாங்கக்கூடியனவாக இருந்தனவா? சில சீர்திருத்தத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிகுறிகள் இவர்களிடம் தென்பட்டதாயினும் இந்தியாவிற்குக் கீழ்ப்படிந்து சென்ற இவர்களின் எல்லைவரையறையானது இப்போதில்லாவிடினும் பின்னர் மக்கள்மீதான இந்திய மேலாதிக்கம் தொடர்பான தீவிரமான பிரச்சினைகளில் சமரசம் செய்து கொண்டு போகும் நிலைமைக்கே இட்டுச் சென்றிருக்கும். அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக இந்திய அமைதிப்படை நடத்திய அட்டூழியங்களை இதுகாலவரை இவர்கள் எதிர்க்க முன்வராததிலிருந்து இதனைக்கண்டு கொள்ளலாம். எனவே சாத்தியமான மாற்றுத்தீர்வினை இவர்கள் வழங்கப் போவதில்லை என்று நாம் முடிவுக்கு வரலாம்.
அவ்வாறாயின் மிதவாதிகளான விடுதலைக் கூட்டணியினர்தான் இப்பிரச்சினையைத் தீர்க்கவல்லவர்களா? இவர்களையும் பிரதான அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டுவர இந்தியா நிச்சயமாக முயற்சிக்கும். ஆனால் இவர்கள்தான் தமிழ்ச்சமூகத்தின் வெறித்தனமான இனவாத அரசியலின் பிதாமகர்கள் ஆவர். தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள விரோத ஹிஸ்டீரியா உணர்ச்சியை ஒரு பக்கத்தில் எழுப்பிவிட்டுக் கொண்டு, மறுபுறம் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் தேநீர் விருந்துபசாரங்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தனர். மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்கள் ஓரளவாவது விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த மிதவாதிகள் தேவையான நேரத்தில் அதனை இழந்து போயிருந்தனர்.
இந்திய மேலாதிக்கவாதமும் தமிழ் குறுந்தேசியவாதமும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது. இந்த இரண்டு சக்திகளும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒன்றின் உத்வேகத்திற்கு மற்றது உதவக் கூடியவகையில் பிணைந்திருந்தது. ஒன்றிலிருந்து மற்றதைத் தனித்துப் பிரித்தெடுத்து மேற்கொள்ளப்படும் எந்தத் தந்திரோபாயத்தாலும் இந்தச் சக்திகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது. பரஸ்பரம் ஒன்றில் மற்றொன்று தங்கியிருப்பதன் காரணத்தால் எந்த மாற்று நடவடிக்கையும் இவற்றை முழுமையாக அணுகும் யுக்தியினையே சார்ந்து அமைதல் வேண்டும். நவகாலனிய ஊடுருவலையும் இந்திய மேலாதிக்க வாதத்தையும் எதிர்த்து, தீவிரத் தேசியவாதம் திவாலாகிப் போய்விட்ட நிலைமையை வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டுமென்றால் இனவாதத்திற்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்டுவதன்மூலமே இதனைச் சாதிக்கமுடியும். தமிழ்ப்பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் தோல்வியும் யுத்தங்களும் மக்களிடமிருந்த பிரமைகளைக் களைந்திருக்கிறது. குறுந்தேசியவாதத்தின் ஆதரவுத்தளம் அதிருப்தியுற்ற நிலையில் இருந்தாலும் இன்னும் பூரண தெளிவு பிறக்காத நிலையில் குறுந்தேசிய வாதம் கருத்தியல் என்றரீதியில் இன்னும் வலிமையோடுதான் உள்ளது. அக்டோபர் யுத்தம் அதன் சுகானுபவத்தைச் சிதைத்துவிட்டிருந்தாலும் அது இன்னும் சிங்கள எதிர்ப்புடன் இந்தியாவுடனான உறவைப் பொறுத்த வரையில் சுய தம்பட்டம் அடித்துக் கொள்வதாயுமே உள்ளது.

Page 270
504
புலிகளுக்கு இணையாக தெற்கில் ஜேவிபியின் எழுச்சிதான் இந்தியாவின் பிரசன்னத்திற்குப் பதில் அளிப்பதாக இருந்தது. தந்திரோபாயம் கருதி தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுத நடவடிக்கையையோ, தீவிர வெற்றுணர்ச்சிப் பிரசங்கங்களையோ இப்போதைக்கு ஜேவிபி. வெளிவெளியாக நடத்தாவிட்டாலும் அவர்களின் தமிழர் விரோத உணர்வுகள் அவர்களது கொள்கைவிளக்கக் கட்டுரைகளில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருப்பதுடன் அந்த இயக்கத்திலிருந்து வெளியேறியவர்கள் முன்வைத்த விமர்சனங்களிலும் அவர்களின் தமிழர் விரோத உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழர்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்கப்படுவதை அவர்கள் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டதில்லை. தெளிவற்ற - அர்த்தமில்லாத கோஷங்களை உச்சாடனம் செய்வதைவிட தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தத்திட்டவட்டமான திட்டமும் அவர்களிடம் இல்லை. துங்கிக் கொண்டிருப்பதுபோல் தெரியும் இப்போக்குகள் முரண்பாடுகள் கூர்மையுறத் தொடங்கி நாசகார விளைவுகளைச் சந்திக்கும்போது மேலெழுந்து செயற்பட ஆரம்பிக்கும். விடுதலைப்புலிகள் விஷயத்திலும் இதுவே நடந்தது. 1983ற்கு முதல் வெளிவெளியாக சிங்கள விரோத உணர்வைக் காட்டாத புலிகள் பின்னர் தங்களின் உண்மையான குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். அதிகாரப்பங்கீடு, மாநிலங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படுதல், தமிழர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஆகியவற்றை முன்னெடுக்கும் எந்தத்திட்டமும் இல்லாமல் இந்தியாவை வெளியேற்றுவதல்ல, அதனைக்கட்டுக்குள் கொண்டு வருவதுகூட சாத்தியமில்லை. ஆகவே சமாதான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவு பூர்வமான தீர்வினை அதனுடைய சரியான தளத்தில் வைத்து ஒவ்வொரு தனித்தனி அமைப்பும் பரிசீலனை செய்து எதிர்காலத்தில் நம்முன்னுள்ள பணிகளை வரையறுத்துக்கொள்ள முன்வர வேண்டும். இந்திய மேலாதிக்கத்துடன் தமிழர்களுக்கு நீதி கிட்டும் என்றோ தமிழர்கள் பற்றிய பொறுப்பினை இந்தியாவிற்குக் கைகழுவிவிடுவது என்றோ இது நம்மைக் குழப்பத் தேவையில்லை.
ஒரு முதற்படியாக சமாதான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை மிக யதார்த்தமானதாகும். ஆகவே இந்த நிலைப் பாடு இநீ தியாவின பிரசனின தி தை நியாயபூர்வமானதாக்கிவிடும். மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் ஒரு அரசியல் சக்தி இதனை எவ்வாறு நோக்குவது? இந்த அதிகாரப் பங்கீடானது உள்நாட்டுச் சக்திகளின் போராட்டத்தின் விளைவாக வருவதற்கு மாறாக உள்நாட்டுச் சக்திகளின் பலவீனங் காரணமாக வெளிச்சக்திகளினால் திணிக்கப்பட்ட ஒன்றே இது என்பதை நாம் வெளிப்படுத்த வேணடும். இத்தகைய பின்புலத்தில் மாற்றுவழியின் மூலம் இந்த மேலாதிக்க நிலைமையை சீர்குலைப்பதாயின் உள்ளுக்குள்ளேயே உள்ள ஜனநாயக சக்திகளைப் பலப்படுத்துவதே ஒரே வழியாகும். அப்போதுதான் சமாதான ஒப்பந்தத்தில் உள்ள அதிகாரப்பங்கீட்டு அம்சங்களை நாம் சாதித்துக்கொள்ள முடியும்.

505
இதனை அடைவதற்கு ஒரு முன்நிபந்தனையாக நலிவடைந்து போயிருக்கும் நமது ஜனநாயக அமைப்புக்களை நாம் மீளவும் கட்டி எழுப்ப வேண்டும். சமூகத்தின் பரந்துபட்ட நலன் கருதி, அடிமட்டத்தில் அதிகாரக்கையேற்பு நிகழவேண்டுமாயின் சமூகங்களின் மத்தியில் ஜனநாயகமயமாக்கம் உருப்பெற்றாக வேணடும்.
தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரையில் மக்களின் நலன்கள் முழுமையாக காத்திரமான முறையில் ஒருபோதுமே வெளிப்படுத்தப்பட்டிராததால் இது மிகவும் தீர்க்காதாரமான நடவடிக்கையாகும். மக்கள் போராட்டங்கள் பற்றிய விடுதலைப்புலிகளின் பார்வையோ வீரசாகஸக் கதாநாயகர்கள்-குடிமக்கள் என்ற பாணியில் அமைய, விடுதலைப்புலிகளின் செயல்திட்டங்களை விமர்சித்து மக்களை அணிதிரட்ட வேண்டிய தேவையினைப் பற்றிப் பேசிய ஈபிஆர்எல்எப். மற்றும் ஈரோஸ் போன்ற இயக்கங்களோ அவர்களைப் பொறுத்தவரையிலுங்கூட எமது யதார்த்த நிலைமைகளுக்குப் பொருத்தமான திட்டவட்டமான கருத்தோட்டமோ, திட்டமோ கொண்டிராதவர்களாகவே காணப்பட்டனர். மக்கள் பங்கேற்பது தொடர்பான அமைப்புகள் யாந்திரீக முறையில் தயாரிக்கப்பட்டு அவர்களின் கொள்கைத்திட்டங்களில் மட்டுமே குடியிருந்தன. இந்த இயக்கங்களைச் சேர்ந்த சில தனிநபர்கள் காத்திரமான ஒரு கணனோட்டததினை உருவாக கிக் கொள்ள முயற்சிகள் மேற்கொணி டனராயினும் அமைப்பினி செயற்திட்டங்களில் போதிய ஒருங்கிணைவு காணப்படாமையினாலும் நடைமுறையிலிருந்து கோட்பாடு அந்நியப்பட்டு நின்றமையினாலும் இதுவும் வெற்றுச் சுலோகமாகவே முடிந்தது. அதனால்தான் இயக்கத்திற்குள்ளேயே வன்முறையும் இயக்கங்களுக்கிடையிலான கொடூர அட்டூழியங்களும் நடைபெற்றபோது வெளித் தெரியத்தக்கவகையில் இவர்கள் காட்டிக்கொண்ட எதிர்ப்பு என்பது மிகக்குறைவாகவே இருந்தது. எனினும் டெலோவின் இயக்கத்திற்குள் நிகழ்ந்த வன்முறையின்போதும் புலிகளின் வெறுப்புண்டாக்கும் நடவடிக்கைகளின் போதும் மக்கள் சில இடங்களில் ஒன்றுசேர்ந்து ஆத்திரமான எதிர்ப்பினைத் தெரிவிக்கவே செய்தனர். கிராமிய மட்டத்திலும் சமூக மட்டத்திலும் நிலவிய ஒத்துழைப்பினாலேயே இது சாத்தியமானது.
ஆக, புத்துயிரூட்டப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் குடியேற்றத்திட்டங்கள் போன்ற தீர்க்கமான பிரச்சினைகளில் அதிகாரக்கைமாற்றம் பற்றிய மக்களின் தேவை குறித்துக் குரல் எழுப்பக்கூடியதாக இருக்கும். வரையறுக்கப்பட்ட அளவில் பரவலாக்கப்பட்ட அதிகாரத்தினை அமுல்படுத்துவதை ஒரு கண்காணிப்பாளன் போன்று இவை பார்த்துக்கொள்ள முடியும். தவறான நடத்தைகளிலும் அட்டூழியங்களிலும் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக மக்களைத் தயார்ப்படுத்தி ஒழுங்குபடுத்தவும் இந்த ஸ்தாபனங்களால் முடியக்கூடியதாக இருக்கும். இதெல்லாவற்றையும் விட விடுதலைப்புலிகளினதும் பிற இயக்கங்களின் சீரழிந்த கும்பல்களும் திளைத்துப் போயிருக்கும் தனிநபர் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கவும், சமூகத்தின் தனிநபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு விடாமல் பார்த்துக்

Page 271
506
கொள்ளவும் இத்தகைய அமைப்புக்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். இறுதியாக, வெளிநாட்டு ஏஜென்ஸிகளின் கைப்பாவைகளாக மாறிப் போய்விடாமல் சமூகத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் இவற்றாலேயே முடியும். மீளாக்கப்பட்டு அல்லது மறுகட்டமைப்புக்குள்ள்ாக்கப்படும் இத்தகைய அமைப்புகளின் கருதி தியலானது நிச்சயம் இனவாத எதிர்ப்பை அடிப்படையானதாகக் கொண்டிருக்க வேண்டும். குறுகிய சிங்கள எதிர்ப்பு அரசியல் வேரோடு பிடுங்கி எறியப்பட வேண்டும். தமிழர்களுக்கு அதிகாரப்பங்கீடு வழங்கப்படவேண்டுமென்று தொடர்ந்தும் உறுதியாயும் குரல் கொடுத்துவரும், மனித உரிமை மீறல்களை எதிர்த்து நிற்கும் தென்னிலங்கை சக்திகளையும், தெற்கின் இனவிரோதக் குழுக்களையும் தனிநபர்களையும் இவை அரவணைத்துக் கொண்டு போகவேண்டும். தமிழர்களைக் காத்தருள்வதாகக் கருதிக் கொண்டிருக்கும் இந்தியாவினின்று தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினையை விடுபடச் செய்து, பாதுகாப்பாளனாகவும் மத்தியஸ்தனாகவும் இந்தியா வகிக்கும் பங்கினை தடுத்து நிறுத்தவும் இது ஒன்றே உத்தரவாதம் தரமுடியும்.
யதார்த்தத்தில், எமது விவகாரங்களில் இந்திய ஆதிக்கமானது இங்கேயே நிலை கொண்டுவிடும் நோக்கில் வந்திருக்கிறது. (இந்திய அமைதிப்படை ஒரு சோதனைச்சாவடியில் ஒட்டியிருந்த சுவரொட்டியில், "அப்பாவிக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது) இராணுவ ஆட்சி என்பது வெட்ட வெளிச்சமாயும் என்றும் நம்மைச் சிராய்த்துக் கொண்டுமிருக்கும் போது அரசியல் ஆதிக்கம் என்பது வெகு சூக்குமமாயும் ஆக்கிரமிப்பு பூர்வமாயும் உள்ளது. எமது சிவில் அமைப்புக்களில் இந்திய அதிகாரத்தின் கட்டுப்பாட்டை மிகக்குறைந்த எல்லைக்குள் மட்டுப்படுத்துவதே இப்போது நம் முன் உள்ள பணியாகும். கிழக்கில் கரையோர புகையிரதப் பாதைகளைத் தாங்கள் அமைக்கப்போவதாகவும் வடக்கிலும் கிழக்கிலும் சில முதலீட்டுத் திட்டங்களைத் தாங்கள் நடைமுறைப்படுத்தப்போவதாயும் இந்தியா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இதற்கு நாங்கள் அலங்காரபாணிப் பிரசங்கங்களில் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எங்களின் செயற்திட்டங்களை எமது கரங்களிலேயே தாங்கும் நுட்பங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்த நேரத்தில் தென்னிலங்கையில் இந்திய ஊடுருவல் என்பது வெறும் கோட்பாடு என்ற ரீதியில்தானிருந்தது. ஆனால் இராணுவச்சதிகள் பற்றிய வதந்திகளும் இலங்கை இராணுவத்தின் ஆயுதவலிமை சார்ந்த முஸ்தீபுகளும் இத்தகைய ஊடுருவல் பற்றிய சாத்தியப்பாட்டை வெற்றுக் கற்பனை என்று எளிதாக நிராகரித்து விட முடியாமற் செய்கிறது. இந்திய எதிர்ப்புவாதம் என்பது தங்களிடம் அத்துணை வலிமையாயும் நிரந்தரமாயும் ஊன்றிப் போயுள்ளது என்ற அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் தென்னிலங்கை சிங்கள ஆதிக்க வெறியர்கள் மலையகத்தமிழர்கள் என்ற தீர்க்கமான காரணியை மிக எளிதாக மறந்துவிட்டிருக்கிறார்கள். இந்த வாதத்தில் நாம் இன்னும் மலையகத் தமிழர்கள் பற்றிய பிரச்சினை குறித்துப் பேசவில்லை. மலையகத் தமிழர்கள்

507
தனித்த சித்தரிப்பையும் பகுப்பாய்வினையும் வேண்டி நிற்கின்றனர். இன்று இலங்கை அரசியலின் மையமான பாத்திரமாக அவர்களே பேசப்படுகின்றனர். சில தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஈழப்போராட்டத்தில் விசேட சில காரணங்கள் கருதி மலையகத் தமிழர்களுக்கும் ஒரு இடத்தை ஒதுக்கி அவர்கள் மத்தியிலும் வேலை செய்ய முனைந்துள்ளனர். ஆனால் மலையகத் தமிழர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முழுமையான அரசியல் ஆதிக்கத்திற்குள் இருந்து வருகின்றனர். இலங்கையின் மிகப்பெரிய, மிக மோசமாகச் சுரண்டப்பட்ட தொழிலாளர் வர்க்கமாக அவர்கள் அமைந்த போதும் தொழிலாளர் இயக்கத்தினரிடையே அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்பட்டதில்லை; மந்தமானவர்களாயும் செயல் முனைப்பற்றவர்களாயுமே அவர்கள் நோக்கப்பட்டனர். இடதுசாரிகளின் இந்தத் தோல்வியானது சிங்கள பெளத்த மேலாதிக்கவாதத்திற்கு அவர்கள் அடிபணிந்து சென்றதாலேயே நிகழ்ந்தது.
இலங்கையின் தென்முனையில் வளர்ந்து கொணிடு போகும் குறுந்தேசியவாதத்தின் எழுச்சியுடனும் இந்தியா இலங்கையில் நிலை கொணிடிருக்கும் சூழலுடனும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பங்கீடு வழங்கப்படவேண்டும் என்று போராடும் இனவாதத்திற்கு எதிரான சக்திகளின் பணி மிகமிகக் கடினமானதாகவே உள்ளது. ஆனால் இத்தகைய போக்குகளை சமனப்படுத்துவது மிக அவசியமானதொன்றாகும். இத்தகைய நோக்கில் அமைந்த திட்டத்திற்கூடாகவே இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் இந்தியா அரும்பெரும் போஷகராக இருக்கும் நிலைமையை ஓரங்கட்டுவது பற்றி யோசிக்க முடியும். இந்த வழியிலேயே குறுந்தேசியவாதத்தின் விறுவிறுப்பினைத் தணிக்க முடிவதோடு நவகாலனிய ஊடுருவலுக்கும் பெருஞ்சிக்கல்களை ஏற்படுத்த முடியும்.
எவ்வாறாயினும் தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் கடந்த காலங்களில் இழைத்த துரோகத்தினி காரணமாக மலையகதி தமிழர்களினி போராட்டத்துடனும் ஐக்கியமுறுவது என்பது முடிந்து போன கதையாகிவிட்டது. ஒவ்வொரு தேசிய இனமும் நியாயம் கோரி இந்த உள்வாரிப் பிளவுகளை ஏற்படுத்தக் காரணமாயிருந்த தமது மனக்குறைகளை வெளியில் கொணர்ந்து சேதனபூர்வமான ஒருமையை உருவாக்கும் நோக்கில் ஐக்கியமுற வேண்டும்.
இவை பரந்துபட்ட கோட்பாடுகள் சார்ந்தவை, இவற்றிற்கு உடனடி நிவாரணப் பெறுமானங்கள் எதுவுமில்லை. எங்காவது ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கும் என்ற நல்ல நம்பிக்கையில் இந்தச் சிந்தனைகளில் பங்கு கொள்ளும் தனிநபர்களே நாமாவோம். இந்தப் பணியை ஏதாவது அமைப்புகள் பொறுப்பெடுத்துக் கொள்ள முன்வருமா என்பதை எதிர்காலம்தான் சொல்ல வேண்டும்.
11. நல்லிணக்கத்தை நோக்கி
இந்தக் கட்டத்தில் மக்கள் கேட்கக்கூடும்: இதெல்லாம் சரிதான். என்ன தான் தீர்வு?" என்று.

Page 272
508
சில தனிநபர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டிய கேள்வி அல்ல இது. உடனடியாகச் சொல்வதற்கு கைவசமும் பதில் எதுவுமில்லைதான். நல்ல புரிந்துணர்வு, துணிச்சல், மக்கள் மட்டத்தில் இறங்கிச் செயற்படும் ஆர்வம் ஆகியவற்றை இது வேண்டி நிற்கிறது. நிகழ்ச்சிகள் எல்லாமே துரிதகதியில் நடந்து கொண்டிருக்கும் போது-இப்போது எல்லாமே மிகத் தெளிவாய்த் தெரியும் விஷயங்கள் எழுத்தில் வருகின்ற நேரத்தில் ரொம்பவும் மங்கலாய்த் தெரியும் நிலையில் இது தான் தீர்வு என்று கூறி நடித்து வியாக்கியானங்கள் செய்து கொணர்டிருப்பதில் பயனேதுமில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. படுகொலைகள், அதனை எதிர்த்து இன்னும் படுகொலைகள் என்று உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொணி டிருந்த நிலையில் உணர்ச்சிவசப்படாமல் சிந்தனையோடு செயற்பட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய சில சிங்களவர்களில் விஜய குமாரணதுங்க ஒருவர். தார்மீக லட்சியத்தில் சற்றுப்பிடிப்புக் குறைந்த எந்த மனிதனும் நழுவிப் போயிருப்பான். அவர் இடதுசாரி அரசியலைத் தழுவியிருந்தபோதிலும் உள்ளொன்று வைத்துட் புறமொன்று பேசும் போலிக்கோஷங்களில் உலாவரவில்லை. எனவேதான் போலிகளுக்கும் வேஷதாரிகளுக்கும் அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவர் கொலை செய்யப்படுவதற்கு பதினாறு தினங்களுக்கு முன் "சண்டே டைம்ஸ்’ பதிதிரிகை அவரது நேர்மையையும் எளிமையையும் கோடிட்டுக்காட்டும் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருந்தது. உணர்மையிலேயே எளிமையான சிந்தனைகள்தான் வேலை செய்கின்றன என்பதை இது காட்டுகிறது. அக்கட்டுரையின் சில பகுதிகளைக் கீழே தருகிறோம்: V
"சரி, இந்த ஒப்பத்தத்தில் என்னதான் தவறு நடந்தது? இந்த ஒப்பந்தத்தை அமுலாக்குவதில் அரசாங்கம் வேண்டுமென்றே காலந்தாழ்த்தியது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் விடுதலைப்புலிகளின் தவறான அனுமானங்களும் முன்யோசனையில்லாத நடவடிக்கைகளும் தான் ஏற்கெனவே இந்த ஒப்பந்தம் குறித்து ஆழமாய் தமக்குள் வேறுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்குக் காலந்தாழ்த்திக் கொண்டிருக்க நல்ல சாக்குப்போக்குக் கூறிக்கொண்டிருக்க வழிவகுத்தது என்று. இந்தக்குழப்பகரமான சூழ்நிலையில் தீர்க்கமாகவும் துரிதமாகவும் செயற்படமுடியாது போனதால், மூன்றாவது தரப்பான இந்தியா சிங்களவர்களின் பார்வையில் மட்டுமல்ல, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் மதிப்பிழந்து நின்றது. இன்று நாட்டில் நிலவும் இந்தத் துக்ககரமான நிலைமைக்கு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தம் கொண்ட சகல தரப்பினருமே தத்தமது பங்கிற்கு காரணஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நாம் கேட்ட கேள்வியைச் சந்திக்கும் நேரம் இப்போது வந்துவிட்டது: இங்கிருந்து நாம் இனி எங்கே போவது? வேண்டுமானால் விஷயங்களை ஆறப்போட்டுவிட்டு விடுதலைப்புலிகளுக்கும் அதனை எதிர்க்கும் சக்திகளுக்குமிடையே நீடித்த கெரில்லா யுத்தத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கலாம். ஆனால் அந்தப்பாதையில் இலங்கை மக்களுக்கு சமாதானமும் பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை.

509 ஜனநாயகத்தை மீட்கவும், அந்நிய இராணுவ ஊடுருவலிலிருந்து இலங்கையை விடுவிக்கவும் கூடிய ஒரு பாதையை நாம் தெரிவுசெய்வோமெனில் இலங்கை அரசும் இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தினைத் தீவிரமாயும் தீர்மானகரமாயும் அமுலாக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இராணுவரீதியான "சாந்தப்படுத்தல்களால் இலங்கைக்கு ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் மீட்டுத்தர முடியாது. இந்த ஒப்பந்தத்தில் உள்ளுறைந்துள்ள அரசியல் தீர்வினை நடைமுறைப்படுத்துவதாலேயே இது சாத்தியமாகும். காலதாமதம் எதுவுமின்றி மாகாண சபைகளை உடனடியாக அமைப்பதே அந்தத்தீர்வாகும்.
"ஆனால் ஒன்று, அவசரமாய் தப்புக்கணக்குப்போட்டு விடாதீர்கள். இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கி விடுவதனால் மட்டும் எமது இனப்பிரச்சினை தீர்ந்துவிடப் போவதில்லை. எதுவாயினும், இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒரு முதற்படியேயாகும்.
‘கடந்த பத்தாண்டு காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூகச் சீரழிவுகளிலிருந்து எமது நாட்டை மீட்கும் போராட்டத்துடன்தான் இந்த இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு வேறுபடுத்திப் பார்க்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. இந்தப் போராட்டமே ஜனநாயக சோஷலிஸ் இலங்கையைக் கட்டி எழுப்புவதற்கான போராட்டமாகவும் இருக்கும்"
இதன் அர்த்தம் யாதெனில் குடியேற்றத்திட்டம் போன்ற மிச்சம்மீதியான பிரச்சினைகளைத் தாமதமின்றித் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான தாராளமனப்பான்மையோடு முன்வருதல் வேண்டும். தமிழ் மக்களும் தங்கள் பங்கிற்கு இந்த ஒப்பந்தத்தினை அதன் சகல பலவீனங்களுடனும் இதுவொன்றே சாத்தியமான சிறந்த நம்பிக்கையைக் காட்டி நிற்கிறது என்று இதனை ஏற்றுக்கொள்வதோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்து ஆயுதங்களைக் கையளிக்குமாறு மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்கவும் வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படையான அபிலாஷைகளை இந்த ஒப்பந்தம் திருப்தி செய்யவில்லை என்று தமிழர் பலர் இதனை நிராகரிக்கவும் கூடும். ஜனாதிபதியிடமும் பாராளுமன்றத்திடமும் மிதமிஞ்சிய அதிகாரங்கள் குவிந்து கிடந்ததால் மாவட்ட சபைகள் என்பது நைந்து உருப்படியில்லாமல் தான் திகழும் என்று இவர்கள் வாதிடக்கூடும். ஆனால் இதற்கு மறுதலையாக நாம் பார்க்கக் கூடியதாக இருப்பது நீடித்த ஸ்திரமின்மையும் பயங்கரவாதச் சூழலும் கல்வி மற்றும் பொருளாதார உறுதித்தன்மையோடு ஜனநாயகத்திற்கு உதவக்கூடியவர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதும் ஆகும். எமது தாயகத்தைக் காப்பாற்ற மக்களில் 75 வீதத்தைக் கூட யுத்தத்திற்குப் பலி கொடுக்கத் தயார்தான் என்ற யோகி போன்றோரின் வெற்றுணர்ச்சிப் பேச்சுக்களை கல்வி ஞானமுள்ள ஒருவன் ஏற்றுக்கொள்ள முன்வருகிறான் என்றால் அவர் இந்த நாட்டைத்தான் நிரந்தரமாக வாழுமிடமாகக் கருதிக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தமாகும்.

Page 273
510
சுதந்திரம் எனபது சட்டப் புதிதகங்களில் நன்கு சுற்றி வைக்கப்பட்டிருந்தால்தான் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்ற பழக்கதோஷம் தமிழர்களிடம் ஆழமாக ஊறிப்போயிருக்கிறது. சட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவைதாம். நல்ல சட்டங்கள் காலப்போக்கில் ஸ்திரமிக்க சமூகப்பிரக்ஞையை உருவாக்குவதற்கான, தூண்டுகோலாக அமையலாம். இவ்வாறு ஆழ்ந்துணரப்படும் சமூகப்பிரக்ஞையானது பூரண செல்வாக்குடன் செயற்படாத நிலையில், தீங்கு பயக்கும் அரசாங்கங்களால் நஷ்டபயம் எதுவுமின்றி இந்த நல்ல சட்டங்களும் உடைத்து எறியப்பட்டு விடலாம். ஆகவே சட்டங்கள் என்பதனை விட தமிழ் மக்களுக்கும் பிறருக்கும் இப்போது மிக முக்கியமானதாக இருப்பது சகலருக்கும் நீதிநியாயத்தை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமைக்காகத் தொடர்ந்து போராடும் பற்றுறுதியைக் கொண்ட பொதுமனச்சாட்சியின் நல்லிணக்கப்பாடாகும். வெறுமனே அரசாங்கத்தைத் தெரிந்தெடுத்துவிட்டு, சகலதையும் அரசியல்வாதிகள் கையிலும் சட்ட அறிஞர்கள் கையிலும் ஒப்படைத்துவிட்டு செளகரியமாய் நித்திரைகொள்ளப் போய்விடுவதற்குப் பதிலாக, செயற்திறமை கொண்ட ஜனநாயகத்தை நாம் உருவாக்க வேண்டும். இந்நாட்டில் வாழும் சகல சமூகத்தினர் மத்தியிலும் பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டு, ஜனநாயகமானது மீளவும் ஸ்திரப்படுத்தப்படும்பட்சத்தில் நீதிநியாயத்தை நிலைநாட்டும் சட்டங்கள் செயற்படக்கூடும். இந்த அர்த்தத்தில், சிங்கள மக்களுக்கு எதிரான விரோதமனப்பான்மையைத் தூண்டாத வகையில் சட்டத்தை நிலைநிறுத்துதல், உழைப்புச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமான கல்வி மற்றும் சட்டவாக்கத்திற்குப் புறம்பான அரசின் அதிகாரங்களை நீக்குதல் ஆகியவற்றை வலியுறுத்துவது மிக இன்றியமையாததாகும். இந்த ஒப்பந்தத்தில் தலைவணங்கத்தக்க ஒரு சிறப்பம்சம் யாதெனில் இலங்கை பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பதை இது முதற்தடவையாக கொள்கைபூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பதுடன், சிங்கள மொழியுடன் சேர்த்து தமிழையும் ஆங்கிலத்தையும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரித்திருப்பதுமாகும்.
நீதி, ஜனநாயகம் போன்ற இலட்சியங்கள் என்பன விழுமியங்கள் தொடர்பான நீடித்த போராட்டங்களை நாடி நிற்கின்றன என்பதனையும் இது அடிப்படையில் சட்டவியாக்கியானங்கள் சம்பந்தமான விவகாரம் மட்டுமல்ல என்பதனையும் நாம் ஒருமுறை ஏற்றுக் கொண்டுவிட்டால் ஸ்திரப்பாட்டைக் குலைத்துக் கொண்டிருக்கும் ஆயுத நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமுகமாக இந்த ஒப்பந்தத்தினை அதன் நோய்க்கூறான அம்சங்களுடனேயே கூட ஏற்றுக் கொள்வதென பது அவி வளவு மோசமான விஷயமாக இருக்கப்போவதில்லை.
"தமிழர்களாகிய நாங்கள் ஒருநாளும் சிங்களவர்களை நம்பமுடியாது. போராளிகளின் ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்டுவிட்டால் இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் நம்மை ஏமாற்றி விடும்" என்று இன்னொரு ஆட்சேபனை எழுகிறது. ஆயுதங்களை வைத்துக்கொண்டு எண்னத்தை

511
அடையப்போகிறோம் என்பது தான் இங்கு எழுகிற கேள்வியாகும். இலங்கை பொலிஸ் மற்றும் படைவீரர்களைக் கணிசமாகச் சுட்டுக்கொன்றால் அது பாதுகாப்பு நடவடிக்கைகளின் அளவை விஸ்தரித்து பொருளாதாரத்தில் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி, பிறகு இலங்கை அரசை அது அடிபணியச் செய்துவிடும் என்று உயர்குழாத்தினர் முன்பு இப்படி ஒரு வாதத்தை முன்வைத்திருந்தனர். 1982லிருந்து இத்தகைய வாதம் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் இலங்கை அரசாங்கம் அசைந்து கொடுப்பதற்கான எந்த அறிகுறியையுமே காட்டவில்லை. இந்தப் போருக்குப் பலிகடாக்களானவர்கள் கிராமங்களைச் சார்ந்த தமிழரும் சிங்களவருமேயாவர். இந்த யுத்தத்திற்கு தூபமிட்ட-இருபக்கங்களையும் சேர்ந்த மேட்டுக்குடியினரோ இலங்கையில் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் செளகரியமாக உட்கார்ந்து கொணிடிருந்தனர். மற்ற கேள்வி இதுதான். ஒருவேளை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் விட்டுக் கொடுப்பதாக முடிவெடுத்தால் தமிழ்மக்கள் மத்தியில் ஜனநாயகமும், தமது விவகாரங்களைத் தாமே நிர்வகிக்கும் நிலைமையையும் பெற்றிருப்பார்களா? இத்தகைய எதிர்பார்க்கைகளுக்கு ஒருவிதமான அடிப்படையும் இல்லை என்பதை அனுபவம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
உதாரணமாக, இதுகாலவரை தமிழர்கள் அனுபவித்து வந்ததெல்லாம் வெளி வெளியான உடல்ரீதியான, சட்டரீதியான ஒடுக்குமுறைகள் தான். ஆனால் நவீனகாலத்தின் சூக்குமம் மிகுந்த, கபடத்தனமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்ப்பதற்கு பொதுநன்மை சம்பந்தப்பட்ட விடயங்களில் அக்கறையும் விழிப்புணர்வும் கொணிட பொதுமகனைக் கொணர்ட சமூகத்தாலேயே சாத்தியமாகும். தீர்மானங்களை எடுக்கும் செய்முறைகளின் போது போஷகர்களாக இருக்கக்கூடியவர்களின் அதிகரித்துச் செல்லும் முக்கியத்துவமும் எமது அண்மைக்கால அரசியல் அனுபவமும் சாதாரண குடிமகனை ஒரு ஜந்தாகக் கூட மதிக்காத - அவனுடைய இருப்பே அங்கீகரிக்கப்படாத நிலைமைக்குத்தான் விட்டிருக்கிறது. கவர்ச்சிகரமாகப் புனைந்து தரப்படும் நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் பொருளாதார ஊக்குவிப்புக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயப்படுத்தல்களின் போது எவ்வாறு அதனை எதிர்கொள்வது என்பதில் ஒருவர் எப்போதும் ஐயுறவு நோக்குடனேயே திகழ வேண்டும். இவற்றினை ஏற்றுக் கொள்வதற்கு முன் அக்குவேறு ஆணிவேறாக இவற்றை நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த நிலையில், தென்னிலங்கையுடன் பகுத்தறிவுபூர்வமான தொடர்பினைக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, இதே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணைக்கண்டத்தின் ஏனைய நாடுகளுடனும் உறவைப் பேண வேண்டும். இத்தகைய மாற்றத்தினைக் கொண்டு வந்து சேர்க்கவல்ல உதார குணாம்சம் மிகுந்த அரசியல் செல்வாக்கானது இப்போது நிலவும் குழுவாத அரசியலிருந்து உருவாவதற்கில்லை.
திருகோணமலைத் தமிழர்களின் இக்கட்டான நிலைமை போன்ற அம்சங்கள் தமிழர் பிரச்சினையை மேலும் அதிக சிக்கலுக்குள் கொணர்ந்துவிட்டிருக்கிறது.

Page 274
512
இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கைகளினதும், ஒப்பந்தத்திற்குப் பிறகு சிங்களப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதனதும் மொத்த விளைவு யாதெனில் இந்திய அமைதிப்படை வெளியேறிவிடுமோ என்று தமிழர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் நிலைமையாகும். இதே மாதிரியான சூழ்நிலை தான் மட்டக்களப்பிலும் நிலவுகிறது. துப்பாக்கிச்சூட்டின் மூலம் இந்தியர்களை விரட்டி அடிக்கலாம் என்னும் கொள்கை சரிப்பட்டுவரும் என்று தோன்றினாலும் தமிழர்களிடமிருந்து இதற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்க மாட்டாது.
நமது சகல பிரச்சினைகளுக்கும் சாத்தியமான ஒரேயொரு தீர்வு சகலமுனைகளிலும் உள்ள சமூகக் குழுக்களுடனும், விசேஷமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நல்லுறவினை வளர்த்துக்கொள்வது மட்டுமேயாகும். இல்லாவிட்டால் இந்தியாவின் தயவில்தான் தங்கவேண்டியிருக்கும். இந்தத்தீர்வை நாம் ஏற்றுக்கொண்டாலும் இந்தியா இலங்கையில் தொடர்ந்து பிரசன்னமாயிருப்பதை உறுதி செய்வதென்பது நம் கையில் இல்லை. தார்மீகரீதியிலோ அல்லது நடைமுறை சாத்தியப்பாட்டுரீதியிலோ ஒருவர் எப்படி நோக்கினாலும் சிங்களவரின் நம்பிக்கையை வென்றெடுப்பது மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான வழியாக அமைய முடியும். இதற்கான ஆரம்பமாக, இதில் உள்ள கஷ்டநஷ்டங்களை விசுவாசத்தோடு எதிர்கொள்வது தான் முக்கிய தேவையே தவிர பெரும் புத்திசாதுரியங்கள் அல்ல.

513 அத்தியாயம் 9
இன்னும் சில குறிப்புகள்
9.1 1989 நடுப்பகுதி நிகழ்ச்சிகள்: ஒரு ஆழ்ந்த நோக்கு அறிமுகம்
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல் சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக்கொண்டு விடுவதற்காக நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுவிட்ட மக்கள் முகங்களையும் நாம் பார்க்க முடிகிறது. மோசமாகிக் கொண்டிருக்கும் நோய்வாய்ப்பட்ட நிலையில் எதையாவது உடல்ரீதியில் செய்து பார்க்க முயற்சிப்பதைப் போலவே இன்றைய சூழ்நிலையில் தெளிவான பார்வையுடனேயோ அல்லது ஆராய்ச்சி மனப்பாங்குடனேயோ நாம் எதையாவது செய்வது என்பது இருக்கின்றது.
எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்தத்திற்குள் நாமும் புதைந்து போய்விடுகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையையும் இழந்து, எந்தவிதமான எதிர்ப்புணர்வுமின்றி இந்தப் பயங்கரவாத, வன்முறைப் புதைகுழிக்கு சமூகம் இடங் கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகிறோம். மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலையில் நமது சமூகம் இருக்கிறது. ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறான். எங்கள் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் இல்லை பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லை. எஞ்சினியர்களோ, மேசன்மாரோ அல்லது வேறு தொழிலாளர்களோ இல்லாததால் யுத்தத்தால் இடியுண்டுபோன கட்டடங்களை மீணடும் கட்டிக்கொள்ள முடியாமல் இருக்கிறது. குடும்பங்களைப் பெண்கள்தான் பொறுப்பேற்றுக்கொண்டு நடத்துகிறார்கள். வயதானவர்களும் நோயுற்றவர்களும் உடல்நலம் ஓய்ந்து போனவர்களும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக அழுது புலம்ய குடும்பத்தில் யாருமில்லை. இறந்து போனவர்களைப் புதைப்பதற்கு அவர்களின் மகன்மார்கள் இல்லை.
யாரோ ஒருவர் பொருத்தமாகக் குறிப்பிட்டதுபோல எமது முன்னைய விவரணங்கள் 'ஏதோ ஒரு நூலிழையைப் பற்றிக் கொள்ள முயல்வதாகத் தோன்றினால் அது எமது பகுப்பாய்வில் ஒருங்கிணைந்த பூரணத்துவத்தை வெளிக்கொணரவும், ஒரு புரிதலைத் தேடிக் கொள்ளவும், ஒதுங்கிப் போய் நிற்கும் நிலைமைக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிரூட்டவும் அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிவகைகளைத் தேடவும் இது முக்கியம் என்பதற்காகத்தான். புறநிலை ஆய்வு என்பதை வெறும் கல்விவளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக, மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்தியத் தேடலும், விமர்சன பூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது

Page 275
514
சமூகத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனைவிட்டால் நமது சமுகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்றரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம். இங்கே கூறப்பட்ட விஷயங்களைக் குறித்து ஒரு பின்னிணைப்பைத் தயாரிப்பது பற்றி நாங்கள் ஒருநாள் கூடி ஆலோசித்தோம். முதலில் ஒரு பயிற்சி போல ஒன்றுடன் ஒன்று ஊடாடிச் செல்லும் சிக்கலான சக்திகள் எவை என்று வரையறுக்க முயற்சித்தோம். இந்தப் பயிற்சியின் இறுதியில் எங்களில் ஒருவர் தனது தாளில் தடித்த எழுத்துக்களில் பின்வருமாறு எழுதியிருந்தார்: 'துயரந்தரும் பெருங்குழப்பம் (A TRAGTC MESS) .
எவ்வாறாயினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாம் எமது ஆய்வில் தெரிவித்திருந்தது போல, சில போக்குகள் மெதுவாக இயங்க ஆரம்பித்து அண்மைய ஆண்டுகளைத்தனது பிடிக்குள் வைத்துக்கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. இதன் பொருள் நிலைமைகளில் மாற்றம் எதுவுமின்றி நிலையாகவே உள்ளன என்றோ, அரசியலில் மந்தம் நிலவும் சித்திரம்தான் விகிறது என்றோ அர்த்தமாகாது. மாறாக, இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் எவ்வளவோ விஷயங்கள் நடந்தேறியுள்ளன. ஜனநாயகரீதியில் நடந்தேறியதாகக் கூறப்படும் மூன்று தேர்தல்கள், அதாவது 1988 நவம்பரில் வட, கிழக்கில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள், 1988 டிசெம்பரில் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல், 1989 பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுங்கட்சிக்குள்ளேயே முன்னர் அதிகாரச் செல்வாக்குப் படைத்திருந்த கோஷ்டியினர் ஓரங்கட்டுப்பட்டு விட்டனர். அரசியல் தலைமையிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பூர்ஷ”வாக்களின் அப்பட்டமான பிரதிநிதியான ஜனாதிபதி ஜயவர்த்தனவின் இடத்தை ஜனரஞ்சகமான புதிதாக மேல் மட்டத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கும் பிரேமதாஸ் பிடித்துக்கொண்டார். பாராளுமன்றத்தில் பல புதிய சட்டங்கள் இயற்றப்படலாயின. புதிர் என்னவெனில், இவை எல்லாம் வெளிவெளியாக ஜனநாயக நடவடிக்கைகள் போல தோன்றினாலும் நிலைமை சீரழிந்து போய்க்கொண்டிருந்ததாகும். அரசியல் சூழலில் கேடு அதிகரித்துக்கொண்டு சென்றது. தென்னிலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் சீர்கேடடைந்து, தெற்கே அரசியல் விழிப்புணர்வு கொண்ட ஒருவர் வர்ணித்தது போல, இந்தக் கொடுரமான வன்முறைகி கலாச்சாரமானது பாசிஸ் முமீ ஆசியக்கொடுங்கோன்மையும் சேர்ந்த கலவையை ஒத்ததாக இருந்தது. வன்முறை, பயங்கரம் என்னும் மாயப்பிசாசு முழுத்தேசத்தையும் உலுக்கியது. பதட்டப்படாமலோ அல்லது ஒதுங்கி நின்றோ இதனை யாரும் பார்த்துக் கொண்டிருக்க முடியாத நிலைமையே ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் ஸ்திரமில்லாமலும், பொதுமக்கள் அமைப்புகள் சிக்குப்பட்டும் நாடெங்கனும் முடங்கிப்போயும் கிடந்தன. மனித உரிமை மீறல்கள் கணக்கிடப்பட முடியாத அளவிற்கு அதிகரித்திருந்தது. அரசும் மற்றும் உள்ள ஒவ்வொரு சக்தியும் பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விடுவதென்பது நிரந்தரமாகிப் போய் அதுவே தினசரி வாழ்க்கையாக மாறிப் போயிருந்தது. மறுபக்கத்தில் இந்திய அமைதிப்படையும் மேலும் வன முறையை உணர்டுபணிணி ஸ்திரத்தன்மையைக் குலைத்தது.

515
ஜனநாயகமும் பிரமைகளும்
தேர்தல் போன்ற ஜனநாயகத்தின் ஒவ்வொரு பரபரப்பு அம்சமும் பிரச்சார இயந்திரத்தால் ஒரு திருப்பமாகவே காட்டப்பட்டது. இந்தப் பரபரப்பிலிருந்து ஏதாவது மாற்றங்கள் நிகழக்கூடுமா என்று மேற்கையும் இந்தியாவையும் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆரூடம் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தப் பெருங்கூச்சல்கள் எல்லாம் எங்களுக்கு அர்த்தமில்லாமலேயே தோன்றியது. ஏனெனில் இந்த உக்திரமான ஜனநாயக நடவடிக்கைகள் (தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள், மாறிக் கொணடிருக்கும் கோஷங்கள், அதிகாரப் பங்கீட்டிற்கும் அரசியல் கட்டமைப்பினை உருவாக்குவதற்காக இந்தியா காட்டிக்கொண்ட முயற்சிகள், எல்லாமே கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்ட முனைந்த இலங்கை அரசு போன்றன) யதார்த்தத்தில் மக்களை மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு இவர்கள் யாருமே பொறுப்புக் கூற வேண்டியதில்லை என்ற நிலைமையையே உருவாக்கியிருந்தது.
ஜனநாயக நடவடிக்கைகளில் மக்களின் பக்கத்திலிருந்து அவர்கள் தெரிவித்த உற்சாகமற்ற மிகக்குறைந்த ஆதரவு மிகப்பலரை வியப்பிற்குள்ளாக்கிறது. பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் பெரும் நம்பிக்கை வைத்து சிறந்த சாதனைகள் படைத்திருந்த ஒரு தேசம் ஆழ்ந்த மெளனத்தில் உறைந்து போய் வாக்களிக்கக் கூட மறுத்திருந்தது விசித்திரமான ஒன்றாகும். அரசியல் பேரம் பேசலுக்காகவும் அதிகாரப் பங்கீட்டிற்காகவும் உதவக்கூடிய அமைப்பாகச் சித்திரிக்கப்பட்ட மாகாணசபைகளை வடபிரதேசத்தில் தமிழ்மக்கள் நிராகரித்தது ஏன்? மீண்டும், இந்தியாவின் வற்புறுத்தலின்பேரில் தமிழர்களின் பாரம்பரியத் தாயகத்திற்கு மிகக்கிட்டியதென்று கூறத்தக்க அளவில் வட கிழக்கு மாகாண சபைகளை ஒன்றிணைப்பதனை உறுதி செய்கின்ற சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டபோது மக்கள் இதிலிருந்து வெகுதூரம் ஏன் விலகி நின்றனர்? தேர்தலை முற்றுமுழுவதாகப் பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அச்சுறுத்தல் பிரச்சாரத்தால் தான் இவ்வாறு நேர்ந்தது என்று கூறி இந்தியா எங்களை அதனை நம்பச் சொன்னது. அது அவ்வாறே இருந்தாலும் புலிகளின் பிரச்சாரத்திலும் பலம் இருந்திருக்கிறது. சகல அரசியற் சக்திகள் மீதும் கொண்டிருந்த பிரமைகள் களைந்து போய், வாக்களிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்ற முடிவுதான் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொண்டு இக்காரியங்களில் ஈடுபட வேண்டுமா என்று மக்களைத் தடுத்து நிறுத்தியது. அரசியல் பிரேரணைகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் துப்பாக்கி முனையிலேயே பெறப்பட்டது. மாகாணசபைத் தேர்தல்கள் மக்கள் பிரதிநிதிகளுக்காக அல்ல ஆளுபவர்களைக் கொண்டு வருவதற்காகவே நடத்தப்பட்டமாதிரித்தானிருந்தது. (கொழும்பிற்கான இந்தியத்தூதர் திரு.ஜே.என்.தீக்ஷிட் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரைக்குப் பதிலளிக்கும் வகையில் "பிரமைகளைக் களையுங்கள்" என்ற தலைப்பில் 50 பல்கலைக்கழக ஆசிரியர்களால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட ஆவணத்தை பிற்சேர்க்கை (4)ல் பார்க்க)
இநீதியாவினாலும் அதனோடு கூட்டுச் சேர்நீத வர்களாலுமி கட்டவிழ்த்துவிடப்பட்ட மனிதஉரிமை மீறல்களால் ஜனநாயகம் என்பது

Page 276
516
முக்கியமாக வடக்கில் ஒரு மாயையாகவே இருந்தது. அப்பாவி மக்களையும் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்களையும் கண்மூடித்தனமாகக் கொலை செய்ததைப் பற்றி எந்தவிதமான விளக்கமும் இல்லை. பொதுமக்கள் மீதான ஒட்டுமொத்தச் சித்திரவதை என்பது சாதாரண நிகழ்ச்சியாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு கிராமத்தில் இருந்த சகல ஆண்மக்களையும் தலைகீழாகத் தொங்கவிட்டு மூக்கு வழியாகத் தண்ணிர் ஊற்றியதும், பயணிகள் வாகனத்திலிருந்து ஒரு பெண்மணியை இறக்கிவிட்டு அந்த வாகனத்தைச் சுற்றி முழங்காலில் நடந்துவரச் செய்ததும் இதிலடங்கும். தடுப்புக் காவலில் வைக் கப்பட்டிருந்த வர்கள் அனைவரும் மாமூலாய் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டனர். இதைப் பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் செய்து அதற்கான நியாயமான விளக்கங்கள் எதனையும் அவர்களிடமிருந்து பெறுவதற்கில்லை. திரைமறைவு அச்சுறுத்தல்களும் அச்சுறுத்திச் சம்மதிக்கச் செய்யும் நடவடிக்கையும் நாளாந்த நிகழ்ச்சியாக இருந்தது. ஒருவர் அதிகமாய்க் கதைத்து விட்டாலோ அவர் இணங்கும் வரை வைத்து வதைக்கவும், கொலை செய்யவும், அவருடைய வீட்டையோ கடையையோ குண்டு வைத்துத்தகர்க்கவும் செய்தனர். ஒரு அமைதிப் போராட்டத்தின்போது இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டது குறித்து யாழ் பல்கலைக்கழகத் துணை வேந்தர் எழுதியது போன்று ஏதாவது ஒரு நிகழ்ச்சியைப்பற்றி அவர்களுக்கு எழுதினால் பட்டென்று அதனை மறுதலித்து விடுவார்கள். இந்திய ராஜாங்கத்தினதும், அதன் அமைதிப்படை மற்றும் இராஜதந்திரிகளின் அலட்சிய மனோபாவத்தையே இது வெளிப்படுத்துகிறது.
இறுதியாக, சிங்கள மேலாதிக்க வெறியர்களின் கை ஓங்கியிருந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பங்கிட்டு வழங்க முயலும் என்றோ வழங்க முடியும் என்றோ யாரும் நம்பத்தயாராக இல்லை. இலங்கை அரசாங்கமானது மாகாணசபைகளுக்கு உண்மையான பொருளாதார, அரசியல் அதிகாரம் எதனையுமே வழங்கத் தயாராக இல்லை என்று ஒருங்கிணைந்த வட, கிழக்கு மாகாண முதலமைச்சர் தொடர்ந்து முன்வைத்த புகார்களில் மிகவும் துலாம்பரமாகத் தெரிந்தது.
புதைசேற்றில் இந்தியா
அரசியல்ரீதியான மென்னுணர்வுகளைக் கணக்கில் கொள்ளாத பெருவல்லரசு ஒன்றிடமிருந்து ஸ்திரப்பாட்டையும் சமாதானத்தையும் கோரும் முயற்சியானது நெருக்கடி நிலையில் மென்மேலும் பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்திச் செல்லும். புலிகளைப் போஷித்து தனது அரவணைப்பிற்குள் கொண்டு வரும் முயற்சி தோல்வியுற்றதும், தனது அருட்கடாட்சத்தில் உள்ள ஏனைய உள்ளூர் அரசியல் சக்திகளை வளர்த்துவிட முனைந்தது. ஈபிஆர்.எல.எப். மற்றும் உள்ள பிற தீவிரவாதக் குழுக்களுக்கும் இராணுவ அதிகாரத்தை நிருவகிப்பவர்கள் என்ற ரீதியில் ஆயுதமும் பயிற்சியும் வழங்கியதன் மூலம் இந்தியா தனது அரசியல் கட்டுப்பாட்டுக்கு ஒரு சுதேசிய முகத்தை உலகிற்குச் சித்தரித்துக்காட்ட உண்மையாகவே முயற்சி செய்தது. எனினும் பிரதான இராணுவ எதிரிகளான புலிகளோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கே காடுகளுக்குள் தாக்குப் பிடித்து நின்று கொண்டிருந்ததுடன் நகர மையங்களில்

57
திடீர் தாக்குதலை நடத்திவிட்டு ஒடி ஒளித்து கொள்ளக்கூடிய ஆற்றலையும் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். ஏனிந்தக் காரியத்தில் இறங்கினோம் என்று கழிவிரக்கம் கொள்ள வேண்டிய-ஆளுமை அழிந்த நிலைமைக்கு இந்திய இராணுவத்தையும் அதன் உள்ளூர் சகபாடிகளையும் வெற்றிகரமாக ஒரு கட்டுக்குள் வைக்கவும் அவர்களால் முடிந்தது. விரக்தியடைந்து போய் பலிவாங்கும் இராணுவ நடவடிக்கையில் இறங்கிய தனது துருப்புகளின் மனித உரிமைமீறல்களின் துரிதகதியை மட்டுப்படுத்தவோ, மோதல்களின் மட்டத்தை அளவில் குறைத்துக்கொள்ளவோ இந்தியாவால் முடியவில்லை. உதவிசெய்ய வந்ததாக வெளிக்கு கூறிக்கொண்டு வந்திருந்த இந்தியா இதனால் சமூகத்திடமிருந்து தொடர்ந்து அந்நியப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.
உள்ளூர் அரசியல் முகத்தை சிருஷ்டிக்கும் முயற்சியாக - அரசியல் தலைமைக்கு ஒரு மாற்றாக இந்தியா வளர்ந்தெடுத்த ஈபிஆர்எல்எப். ஆயினும், தமிழர் விடுதலைக் கூட்டணியாயினும் பலன் தரவில்லை. இந்திய சார்புக் குழுக்களுக்கு மிகுந்த ஸ்திரமான சூழலும் இந்திய சமாதானப்படையின் பெருந்தேவையும் உணரப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திலும் இந்திய சமாதானப்படையினால் அமைதியினையோ ஸ்திரப்பாட்டினையோ கொண்டு வரமுடியவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தேர்தலில் மிக மோசமாகத் தோல்வி கண்டது. கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு குறிப்பாக சம்மாந்துறையில் மே மாதம் நிகழ்ந்த வன்முறையின் போது இந்தியா சார்புக்குழுக்கள் ஈடுபட்டதானது இந்திய அமைதிப்படைக்கு மேலும் அவமதிப்பையே உண்டாக்கியது. தமிழர்களே ஆதிக்கம் செலுத்தும் அரசியலில் ஒரு சமூகம் என்ற வகையில் தங்களின் எதிர்காலம் குறித்து சிறுபான்மை முஸ்லிம் மக்கள் அச்சமுறுவதற்கு இந்த சம்பவங்கள் திட்டவட்டமான களங்களை உருவாக்கிக்கொடுத்தது. இதனால் முஸ்லிம் காங்கிரஸ் (இஸ்லாமியத் தேசியவாதம் என்னும் கருத்தியலை வலியுறுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சி) முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபல்யம் பெற ஆரம்பித்திருந்ததுடன் முஸ்லிம்களுக்கும் தமிழ்மக்களுக்குமிடையே இருந்த பிளவுகளுக்கு அரசியல் உயிரூட்டம் வழங்கவும் முன்வந்தது.
புலிகளும் பிற தமிழ்ப் போராளிகளும்
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் அரசியல் அரங்கில் புலிகளே பிரதான பாத்திரத்தை வகித்திருந்திருக்கிறார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் இவர்கள் நடத்திய யுத்தம் உலகின் நாலாவது பெரிய இராணுவத்தை நிலைகுலையச் செய்திருந்தது. இந்திய இராணுவமும் அதன் உள்ளூர் சகபாடிகளும் சேர்ந்து நடத்திய கொடுரமான பழிவாங்கும் நடவடிக்கைகளும் ஈவிரக்கமற்ற படுகொலைகளும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கசப்பையும் வேதனையையும் பெருகிடச் செய்து அதுவே ஆட்கள் தொடர்ந்து போய் புலிகளில் சேர்வதற்கான மூலாதாரமாகத் திகழ்ந்தது. புலிகளின் யுத்த தந்திரோபாயங்களில் (தொடர்ந்து கொண்டிருந்த உயிரிழப்பும், அன்றாட வாழ்வு சீர்குலைதலும்) மக்கள் பிரமைகள் கலைந்தவர்களாய் அதிருப்தியுற்றிருந்தாலும் தமிழ் இலட்சியத்தின் காவலர்களாகவே புலிகள் பெரிதும் இனங்காணப்பட்டிருந்தனர்.

Page 277
518
இந்திய சமாதானப்படை குறித்து நடைமுறை சாத்தியமான சிறந்த நிலைப்பாட்டை புலிகள் கைக்கொண்டிருக்க வேண்டும் என்று மக்கள் கருதியிருந்ததோடு, ஒருங்கிணைந்த வட கிழக்கு மாகாணங்களில் புதிதாக அமையவிருக்கும் மாகாணசபையிலும் புலிகளே தலைவர்களாக வருவதையும் கண்டு மகிழ மக்கள் விரும்பியிருந்தனர் என்று கூறுவதும் சரியானதேயாகும். புலிகளின் தந்திரங்கள் மக்களை அச்சுறுத்தி மெளனப்படுத்தியிருந்தாலும் சமூகத்தின் ஒருபகுதியினர் புலிகள் மீது நம்பிக்கை வைத்து, ஒத்துழைப்பும் நல்கிக் கொண்டிருந்தனர். ஈயிஆர்.எல்.எப் போன்ற பிற குழுக்கள் தமது அரசியல் குருட்டுத்தனத்தின் காரணத்தால் இந்த சமிக்ஞைகளைத் தவறாக விளங்கிக் கொண்டு, சமாதான ஒப்பந்தத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் புலிகள் பாணியில் தமது யுக்திகளை மாற்றிக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி, கொலைகள் செய்து அவர்களைப் பீதிக்குள்ளாக்கினர். பயங்கரவாததி தைவிட குறுகிய தேசியவாதக் கருத்தியலோடு, மத்தியதரவர்க்கத்தின் அபிலாஷைகளுக்குப் பூரண அர்ப்பணிப்போடு செயற்பட்டு அவர்களின் பேராதரவையும் மரியாதையையும் பெற்றுக்கொண்டமையும் அவர்களது ஆதரவுக்கு வலுச்சேர்த்தது.
1989 பெப்ரவரி பாராளுமன்றத்தில் ஈரோஸ் அடைந்த பெரும் வெற்றியில் புலிகளின் செல்வாக்கு இன்னும் அதிகமாகத் தெரியவந்தது. ஈரோஸ் புலிகளுடன் ஒருவிதக் கூட்டு வைத்துக் கொண்டிருந்ததால், தேர்தலில் பங்கு கொள்ளும் ஏனைய குழுக்களுக்கு புலிகள் கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தாலும் ஈரோஸைத் தேர்தலில் பங்கு கொள்ள புலிகள் அனுமதித்திருந்தனர். புலிகளின் இந்தக்கொலை மிரட்டல் நவசமசமாஜக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மேர்ஜ் அமைப்பின் செயலாற்றல் மிக்க உறுப்பினருமான அண்ணாமலையைக் கொலை செய்வதில் முடிந்தது மிகுந்த துயரமான ஒன்றாகும். கடந்து போன இருண்ட தசாப்தத்தில் யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்து அம்மக்களோடும் அவர்களின் துயரங்களோடும் தன்னை இனங்கண்டவராக அண்ணாமலை திகழ்ந்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் தமிழ்மக்கள் பற்றிய கொள்கையினை நவசமசமாஜக் கட்சி நீண்டகாலமாகவே எதிர்த்து வந்திருப்பதுடன், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகத் தென்னிலங்கையிலும் பிரச்சாரம் செய்து வந்தது.
எவ்வாறு வடமாகாணத் தமிழர்களின் மத்தியில் நிலவும் குறுகிய தேசியவாதக் கருத்தியலின் வலிமையினைக் குறைத்து மதிப்பிட முடியாதோ அதே போன்று புலிகளின் வலிமையினையும் குறைத்து மதிப்பிடுவது தவறானதாகும். எனினும் புலிகளின் ஆதிக்கத்திற்கும் சரிவு விழ ஆரம்பித்துவிட்டது. அலை எப்போதுமே அவர்கள் சார்பாக மட்டுமே அடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கும் துர்ச்சகுனங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. கஷ்டமான சூழ்நிலைகளில் காடுகளில் நீண்டகாலம் வாழ நேர்ந்தமையும், இந்திய அமைதிப்படையினாலும் அதன் கூட்டாளிகளினாலும் கிராமமட்டங்களில் அவர்களுக்கிருந்த ஆதரவு அமைப்புக்கள் அழிக்கப்பட்டுவிட்டமையும் புலிகளின் கீழ்மட்டத்தில் பெருமளவு மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. 1987 அக்டோபர் யுத்தத்தில் அவர்களின் அனுபவம் மிகுந்த பலர் மரணமுற்றதும், அதனைத் தொடர்ந்து நடந்துகொணடிருக்கும் ஆயுத நடவடிக்கைகளும்

519
இயக்கத்தின் ஆதிமா, அறிவு, நிபுணத்துவம் அனைத்தையுமே உறிஞ்சிக்சென்று விட்டது. எனினும் தொடர்ச்சியாக புதிய ஆட்கள் இயக்கத்திற்கு வந்து சேர்ந்து கொணிடிருந்தாலும் இவர்கள் வித்தியாசமான தலைமுறையைச் சேர்ந்தவர்களாவர். எங்களில் ஒருவர் எழுதியதுபோல, குழந்தைப் போராளிகளின் காலம் தொடங்கி விட்டதென்றே சொல்லவேண்டும். இந்தத் தேசத்தையும் புலிகள் இயக்கத்தையும் தழுவிய மிகப்பெரும் சோகம் யாதெனில், இந்தச் சிறுபிராயத்தினர் செறிவாகச் சிந்திக்கும் ஆற்றலோ, அரசியல் - இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனோ அற்றவர்களாய் நெஞ்சிலே கொழுந்து விட்டெரியும் வெறுப்புடன் உயிர்குடிக்கும் மோசமான ஆயுதங்களை ஏந்திக் கொணிடு அலைந்ததும் பின்பு அவர்கள் வேட்டையாடப்பட்டதும்தான்.
இந்திய இராணுவத்திற்குச் சவால் விட்டு இந்திய மேலாதிக்கத்தைத் திசைதிருப்பிவிட புலிகள் அணிதிரண்டாலும் அவர்களின் யுக்திகளும் தந்திரோபாயங்களும் அரசியல்ரீதியிலும் இராணுவரீதியிலும் சமூகத்தின் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த எதிர்ப்பியக்கத்தை வெளிப்படையாகவே ஒன்றுமில்லாமலாக்கிவிட்டது என்றே கூற வேண்டும். இராணுவரீதியில், மக்கள் செறிந்த நகர்ப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கணிணி வெடி யுத்தத்திற்கு பொதுமக்களின் பெருமளவு உயிரிழப்புகளே விலையாக அமைந்தன. இது அவர்களுக்கிருந்த ஆதரவுத் தளத்தின் பூரண ஒத்துழைப்பைச் சிதைத்தது. 1987 அக்டோபர் யுத்தத்தை அடுத்து உள்ளுர் அமைப்புக்களைப் பகிஷ்கரிக்குமாறு புலிகள் அறைகூவியபோது மக்கள் அதனை அர்த்தமில்லாத அனர்த்தம் ஏற்படுத்தும் செயலாகவே நோக்கினாலும் அச்சத்தின் காரணமாகவே அவர்கள் அடிபணிந்து நடக்க வேண்டியதாயிற்று. உள்ளூராட்சி அமைப்பினை இயங்கச் செய்த குற்றத்திற்காக சில மூத்த சிவில் அதிகாரிகள் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டபோது சமூகம் முழுவதுமே இதனை மிகுந்த அவநம்பிக்கையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து ஏற்படுத்திய சீர்குலைவும் சாதாரண மக்கள்மீது திணிக்கப்பட்ட கடுஞ்சுமைகளும் அதே நேரத்தில் மக்கள் விருப்பமில்லாமலேயே புலிகளுக்கு ஆதரவு செலுத்த வேண்டிய அடிப்படைகளையும் கொடுத்திருந்தது. இதனைவிட இலங்கை அரசுடன் பேரம் பேக்ம் நடவடிக்கையில் புலிகள் இறங்கியபோது, தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணம் செய்து கொண்ட எதற்கும் அஞ்சாத இயக்கமென்று புலிகள் பற்றித் தீட்டப்பட்டிருந்த உன்னத பிம்பத்தின்மீது மக்களுக்கு மெதுவாகச் சந்தேகமே குடிகொள்ளத் தலைப்பட்டதோடு சமூகம் திகைப்பிலும் ஆழ்ந்தது. O
புலிகள் இயக்கத்தின் வெறித்தனமான கருத்தியல்களில் இவ்வாறு விழுந்திருக்கும் சிதறல்கள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதல்ல. இலங்கை அரசுக்கு புலிகள் ஏன் இம்மாதிரி சைகை காட்டினர் என்பது பலருக்கு வியப்பூட்டும் ஒன்றாகும். அவர்களின் மனவலிமை தேய்ந்து நலிந்து போய்க்கொண்டிருப்பது ஒரு காரணமாகுமா? அல்லது புலிகளின் சிந்தனையில் புதிய நடைமுறைச் சாத்தியப்பாடு பற்றிய யோச்னை எதுவும் இருந்ததா?

Page 278
520 அதிகாரமேயில்லாத மாகாணசபைகளாக இருந்தாலும், தமிழர்களின் தலைவர்கள் என்ற ரீதியில் அரசியல், இராணுவ அதிகாரப் படாடோபங்களுடன் வாழ விரும்பும் ஆசை இதுவா? அல்லது தமிழ் அரசியல் அரங்கின் பிரதான நாயகர்களுடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்திற்கு வருவதன் மூலம் இந்திய பிரசன்னத்தைக் குறைத்தாக வேண்டும் என்று பெருவல்லரசுகளின் வற்புறுத்தலின் பேரில் இது நடக்கிறதா? உண்மையில் இந்தக் காரணங்கள் அனைத்தினதும் சாறாகவே இதற்கான பதில் அமையும். புலிகள் அடிப்படையிலேயே தாமே ஒரேயொரு சக்தி என்ற வகையில் அதிகாரத்தைச் செலுத்த வேண்டுமென்றே நினைத்திருந்தனர். அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பலவற்றை இந்த ஒரு காரணி மட்டுமே விளக்கவல்லது. 1988ன் நடுப்பகுதியில் அமெரிக்காவின் தமிழீழப் பிரச்சாரக் கோஷ்டியின் சில ரகசியத் தூதர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவரது காட்டு மறைவிடத்தில் சந்தித்து யுத்தத்தைச் சற்றுத்தணித்து, இலங்கை அரசுடன் ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுத்து, இநீதியாவை வெளியேற்றுவதற்கான வழிவகைகளைத் தேடி, அதிகாரத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்ட விவகாரம் வடக்கில் எல்லாருக்கும் தெரிந்த கதை தான். இந்த முயற்சி அந்த நேரத்தில் தோல்வியில் முடிந்ததென்பதும் தெரிந்த செய்தியாகும். கணிசமாக மனவலிமை குன்றிப் போயிருந்த இந்த ஓராண்டிற்குப் பின்னர் இப்போது புலிகளுக்கு இதே யோசனை பொருத்தமாக அமையக்கூடுமா?
ஒரு தசாப்த கால தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னர், பேரளவு உயிரிழப்பிலும் மக்களின் தார்மீக பலத்தை வறிதாக்கியும் ஈவிரக்கமில்லாமல் தலைமைக்காக நடத்திய தீவிர எத்தனங்களுக்கும் பின்னர் புலிகள் இப்போது இறுதியான கட்டத்தில் வந்து நிற்கிறார்கள். விடுதலை என்ற எண்ணக்கருவினையே பலியிட்டு இவர்கள் தொடர்ந்து வந்த யுத்தமும், தலைவருக்கும் இயக்கத்திற்குமே வெறித்தனமாகத் தங்களை அர்ப்பணிக்கும்படியான ஒரு உத்வேக உணர்வை வளர்த்தது எல்லாம் இப்போது அதன் அழிவிற்கேயாகப் போகிறது.
இது சகல குறுகிய தேசியவாத இயக்கங்களுக்குள்ளும் பாசிஸ் அமைப்புகளுக்குள்ளும் நடந்த விஷயமேயாகும். மக்கள் என்ற வகையில் நாமும் சில சமயங்களில் காலத்தை எண்ணிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது. பல ஆணிடுகள் நாம் காத்திருக்கலாம். மக்களைப் பொறுதி த வரையில் வரலாறு ஒரு இரவிலேயே மாறி அமைந்துவிடப்போவதில்லை.
இந்திய ஆதரவு இயக்கங்களை நோக்கினால் அரசியல் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாத அவர்களின் போக்கானது கிழக்கிலே அவர்கள் கொண்டிருந்த ஸ்திரமான நிலைமைக்கு ஊறு விளைவித்தது. கிழக்கில் பல் இன சமூகங்களிடையே தோன்றிய கெடுபிடித்தன்மைகளை அவர்கள் கையாண்ட விதத்தில் இது நன்கு வெளிப்பட்டது. திடீர் பிரபல்யம் கருதி முஸ்லிம் மக்கள் மீது தமிழ்மக்கள் கொண்டிருந்த எதிர்ப்பை அவர்கள் பாவித்துக் கொண்டனர். சந்தேகத்தையும் அச்சத்தையும் கோபத்தையும் இனரீதியான வன்முறையையும் விசிறும் வகையில் சிங்களக்

521
குடியேற்றவாசிகளுக்கு எதிரான பழிக்குப்பழிவாங்கும் உணர்ச்சிகளுக்கும் இடம் விட்டுக்கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்த்து அனைத்தையும் குளறுபடியாக்கி குறைந்தது கிழக்கிலாவது தமிழ்மக்களின் நியாயமான பிரதிநிதிகள் தாமே என்று சித்திரித்துக்காட்ட அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கும் இடையூறு ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் அனைத்துத் தமிழ் விடுதலை இயக்கங்களுக்குள்ளும் அத்துணை இனவெறுப்புக் கொண்டிராத ஈபிஆர்.எல்.எப்பிற்கு இத்தகைய கதி நேர்ந்தது துயரமானதே. எமது முன்னைய பகுதிகளிலும் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, ஈபிஆர்.எல்.எப்பின் அடிப்படையான பலவீனங்கள் அவர்களின் மேலோட்டமான கோட்பாட்டிலும் நடைமுறையிலுமிருந்தும், ஆக்கபூர்வமான அரசியல் சிந்தனை இன்மையிலிருந்தும் இறுக்கமேயில்லாத கட்சி அமைப்பிலிருந்துமே கிளைக்கின்றன. இந்த அம்சங்கள் அவர்களது பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளோடும் சேர்ந்து அவர்கள் என்னதான் புரட்சிகர கோஷங்களை முழக்கினாலும் குறுகிய தேசியவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் ஆட்பட்டு, இந்தியாவின் கைப்பொம்மைகளாக இயங்குவதைத் தவிர வேறு ஒரு வழியிலும் முன்னே போக முடியாத நிலைமைக்கே இட்டுச்சென்றது. வட்க்கே மக்கள் மத்தியில் ஏற்கெனவேயே அவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்திராத ஈ.பி.ஆர்.எல்.எப் தனது அட்டூழிய நடவடிக்கைகளால் மக்களிடமிருந்து மென்மேலும் அந்நியப்பட்டுவிட்டிருந்தது.
தென்னிலங்கை நிலைமை
தெற்கில் இருபதாண்டு காலமாய் அமுக்கி வைக்கப்பட்டிருந்த சிங்கள மேலாதிக்கவாதப் போக்கின் விளைவுகளும், ஒரு தசாப்த கால தேசபக்த யுத்தமும் கடந்த மூன்றாண்டுகளில் அலையெறிந்திருந்தது. உணர்ச்சிகளைக் கிளறியும் சந்தர்ப்பவாத அரசியலைக் கையாணி டும் அதிகாரத்தில் தொடர்ந்துமிருக்க சிங்கள ஆளும் வர்க்கம் கையாண்ட யுக்திகள் அதன் தர்க்கபூர்வமான விளைவுகளுக்கு இட்டுச் சென்றிருந்தது. சூறையிட்டுத் திரிந்த அதிரடிப்படையின் பயங்கரவாதக்குழுக்களும், "பச்சைப் புலிகள்" "கரும்பூனை" என்ற இன்னோரன்ன பல நிறங்களில் திரிந்த நானாவிதமான மரணப்படைகளும் தென்னிலங்கைக்குள்ளேயே அதன் மரணச் சுவடுகளைப் பதித்திருந்தது. கடந்த காலங்களில் இலங்கையின் பாராளுமன்ற அரசியலின் தூர எல்லையில் நின்று-மூலையில் தள்ளப்பட்டுவிட்ட சிறுபான்மை இனத்திற்கெதிராகவே பயங்கரவாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்று அது முழு இலங்கையின் அரசியல் செய்முறையின் இதயத்திற்குள்ளும் இலங்கையின் பொருளாதாரத் தளத்தின் மையத்திற்குள்ளும் ஊடுருவிச் சென்றுவிட்டது.
மறுபுறத்தில், புலிகள் போன்ற தமிழ் விடுதலை இயக்கங்கள் தேர்ந்திருந்த பயங்கரவாத யுக்திகளை ஜே.வி.பி. இப்போது மிக அழகாகப் பூரணப்படுத்தியிருந்தது. வேலை நிறுத்தங்களும் சிவில் ஒத்துழையாமை. இயக்கங்களும் பயமுறுத்தல் கடிதங்கள் மூலமும் மரண அச்சுறுத்தல் மூலமும் கொண்டு நடத்தப்பட்டது. வெறுஞ் சாட்டுக்காகக்கூட மக்களை அணிதிரட்டுவது பற்றிய யோசனையே அவர்களிடம் இருந்திருக்கவில்லை. எனினும் ஜே.வி.பி. பின்னணியில் இருந்து கொண்டு இயக்கிய அணிமைக்கால வேலை நிறுத்தங்கள் பலவற்றில் தொழிலாளர்களுக்கான கூலி போன்ற

Page 279
522
நியாயமான கோரிக்கைகளும் ஒன்றாக முன்வைக்கப்பட்டிருந்தது. ஜேவிபியின் கொலை மிரட்டல் தான் அவர்களுக்குப் பெருமளவு வெற்றியளிப்பதாய் இருந்தது. மரணதணிடனைகள் மிகக் குரூரமான முறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. வதையில் மகிழ்ந்து காட்டுமிராணிடித்தனமாக நடத்தப்பட்ட இந்தக் குரூர கொலைகளுக்கு சமகால வரலாற்றில் ஒப்புவமை எதுவுமே கிடையாது. ஒருவரைக் கொலை செய்த பின்பும் கூட ஜேவிபி. அதனோடு அதை விட்டு விட்டதில்லை. கொலையுணர்டவரை எவ்வாறு அடக்கஞ்செய்ய வேண்டும் என்றும் கட்டளைகள் பிறப்பித்தனர். உதாரணமாக, இறந்தவரின் உடலை மயானத்திற்கு தரையில் இழுத்துக்கொண்டு தான் போகவேண்டும் என்று குடும்பத்தினருக்குப் பணிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பணிந்து செய்யாவிட்டால் மறுநாள் அவர்களின் வீட்டு வாசலில் அந்தச்சடலம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஆளுங்கட்சி ஆதரவாளர்களும், அரசாங்க அதிகாரிகளும், இனவாதத்திற்கு எதிரான குறிப்பாக இடதுசாரியினரும் ஜேவிபியின் இலக்காக அமைந்தனர். அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டிருந்த பயங்கரவாதத்திற்கு இணையாக ஜேவிபியின் பயங்கரவாதமும் அமைந்தது. இதனால் கொலையுணர்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் போய்க்கொண்டிருந்தது. பல சாதாரண ஆட்களும் எதிர்க்கட்சிகளுக்குத் தீவிரமாக வேலை செய்த பலரும் கொலை செய்யப்பட்டதில் யார் இந்தக் கொலைகளைச் செய்தது என்பதில் மக்கள் மனதில் இன்னும் சந்தேகம் நிலவிய வண்ணமே உள்ளது. உண்மையில் யாருக்கு அதிகம் பயப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்தியப்படைகளுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து கொள்ள ஜே.வியியினால் துப்பாக்கி முனையில் வீதிகளுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட சாதாரணச் சிங்களக் குடிமக்கள் 1989 ஜூலை 29ம் திகதி பாதுகாப்புப்படையினரால் கொல்லப்பட்டனர். அப்போது ஊரடங்குச் சட்டம் வேறு அமுலில் இருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குப் பேட்டியளித்தபோது ஜே.வியியின் துப்பாக்கிகளுக்கு அஞ்சுவதை விட அரசின் துப்பாக்கிகளுக்கு மக்கள் அதிகம் பயப்படப் பழகிக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒரு காலத்தில் அமைதி தழுவியிருந்த சமூகம் இன்று உயிர்குடிக்கும் கொலைக்கருவிகளின் பேயாட்டத்திற்கு இரையாகிப் போயிருந்தது. சிறுபிராயத்திலும் இளமைக்காலத்திலும் செழித்த புல்வெளிகளிலும் மணல் வெளியிலும் சிரித்து விளையாடி நாம் மகிழ்ந்திருந்த இந்த எழில் கொஞ்சும் மரகதத்தீவின் எதிர்காலத் தலைமுறையினருக்கு வன்முறைக் கலாச்சாரமே இன்று விளை நிலமாகிப் போய்விட்டது.
எங்களின் முன்னைய கட்டுரைகள் இடதுசாரிகளின் இயலாமையோடும் தோல்வியோடும் சேர்ந்து இனரீதியான காரணி மிகை அழுத்தம் பெற்று, குறுகிய தேசியவாதக் கருத்தியல் எழுச்சியுற ஆரம்பித்ததன் இயங்கியல் பரிமாணத்தை ஏற்கெனவே விவரித்துள்ளது. வடக்கே இடதுசாரிகள் எப்போதுமே ஒரு சிறு சக்தியாகவே இருந்ததுடன் விசித்திரமாக தேசியவாத
* பிற்சேர்க்கையின் இம்முன்பகுதியின் பெரும்பகுதி கலாநிதிராஜனி திராணகம் 1989 செப்டம்பர் மாதத்தில் கொலை செய்யப்படுவதற்குச் சற்று முன்பதாகத் தான் அவரால் எழுதப்பட்டது.

523
எழுச்சிக்குள் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டுமிருந்தனர். தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை இந்திய அரசுக்குக் கை கழுவிவிட்டதிலிருந்து தெற்கே இடதுசரிகளின் நிலை மோசமாகி விட்டது. நன்னோக்கத்தின்பேரிலேயே இருந்திருந்தாலும்கூட எந்தச் சந்தேகத்திற்கும் இடமற்ற வகையில் இடதுசாரிகள் சமாதான ஒப்பந்தத்தைத் திட்டவட்டமாக ஆதரித்ததனை ஜேவிபி. தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களின் அரசியல் இருப்பிற்கே உலை வைத்தது. இதைவிட மோசமானது என்னவெனில் அக்டோபர் யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவின் மனித உரிமை மீறல்களைப் பற்றி இடதுசாரிகள் மெளனம் சாதித்தமை சகல முனைகளிலுமிருந்தும் அவர்களை விமர்சனத்திற்குள்ளாக்கியது.
ஜே.வி.பி.யின் கொன்றொழிக்கும் நடவடிக்கை இடதுசாரிகளுக்கு எதிராகத்தான் மிகுந்த நச்சுத்தனத்துடன் அமுல்படுத்தப்பட்டது. வசீகர ஆளுமையுடன் இடதுசாரிக் கூட்டின் மனிதாபிமான மிகுந்த தலைவராகவும் திகழ்ந்த விஜய குமாரணதுங்க போன்றோர் கொலை செய்யப்பட்டமை இந்த நாட்டிற்கு நேர்ந்த துயரார்ந்த இழப்பின் உச்சமாக அமைந்தது. இலங்கையின் 27 தொழிற்சங்கங்களின் இணைப்பாளராகச் செயற்பட்ட எல்.டபிள்யுயணிடித போன்ற தலையாய தொழிற்சங்கவாதி உட்பட இடதுசாரிகளின் நீண்டகாலப் பிரசாரகர்கள் கொலை செய்யப்பட்டனர். தென்னிலங்கையின் ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்டகால உறுப்பினரான ஜோர்ஜ் ரட்னாயக்க என்ற ஸ்கூல் மாஸ்டரின் கதையோ மனதை உறுத்தும் துயரமான கதையாகும். இந்தக் கிராமம் எப்போதுமே 'சிவப்பிற்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறது. இதற்கு இவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் என்பதல்ல காரணம், இந்த 'ஸ்கூல் மாஸ்டர் தான் இதற்குக் காரணமாயமைந்தார். எளிமையான, அர்ப்பணிப்புடன் கூடிய இந்த மனிதர் தனது கிராமத்தின் பிரதான வீதியில் புஸ்ஸிலிருந்து இறங்கும்போது பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஆழ்ந்து நேசித்த அந்தக்கிராமம் திகைப்பில் மெளனித்துப் போய்விட்டது.
எதிர்காலம்
இந்தச் சோகவரலாற்றிலுங்கூட சமூக அக்கறை மிகுந்தோர் சிலர் எதிர்காலத்தைப்பற்றி ஆக்கபூர்வமாகச் சிந்தித்து வருகின்றனர். நிலைமைகளைத் தாக்குப்பிடித்து நிற்கக் கூடிய சரியான பாதை குறித்தும், அமைப்புகள் பற்றியும் இந்நிலையிலிருந்து உடைத்துக் கொண்டு முன்னேறும் சாத்தியப்பாடு பற்றியும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒடுக்குமுறைச் சூழலையும் எல்லாப்பக்கங்களிலும் வன்முறை தலைவிரித்தாடுவதையும் எவ்வாறு கையாளுவது என்பது பற்றி விசேஷமாக வடக்கில் வெகுஜனமட்டத்தில் ஒழுங்கமைப்புகளை மேற்கொள்வது பற்றி ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள்தான் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உண்மையில் இவை மிகச்சிறு தொடக்கங்களே. தெற்கில் உயிர்வாழ்தல் என்பதே இன்றும் தலையாய பிரச்சினையாக இருந்து வருகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள யதார்த்த நிலைமைகளில் உள்ள பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி அக்கறை மிகுந்தோர் தனிநபர்களாகவும்

Page 280
S24
குழுக்களாகவும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் இரு சமூகங்களின் மத்தியிலுமே இத்தகைய ஆரம்ப முயற்சிகள் மிகப்பெரும் சோதனைகளையே எதிர் கொள்ள வேண்டியுள்ளன. பிற்போக்குச் சக்திகளின் காலமாகவே இன்றைய நிலைமை உள்ளது. அட்டூழியங்கள் முற்றுகையிட்டு நிற்கும் இந்தத் தேசத்தின் எதிர்காலந்தான் என்ன?
இந்தியா பிராந்தியக் கூட்டுறவுக்கான தென்னாசியக்கழகம் போன்ற ராஜக முறைகளுக்கூடாகவும் மாலைதீவுக்குள் உள்ளிட்டமை, நேபாளத்தில் பொருளாதாரத்தடை ஏற்படுத்தியமை போன்ற இராணுவ, பொருளாதார நடவடிக்கைகளுக்கூடாகவும் தனது பிராந்தியச் செல்வாக்கினை விஸ்தரித்துக் கொண்டு வருகிறது. இலங்கைக்குள் அது இறங்கியமை நாம் முன்னரே கூறியிருப்பது போன்று மிகுந்த பிரச்சினைக்குரியதாயும் உடனடித்தீர்வு எதனையும் கொண்டுவர முடியாத நிலைமையில் உள்நாட்டில் அதிருப்தி அதிகரித்துச் செல்ல வழி வகுத்திருப்பதுடன் வெளியுலகிலும் இதன் பிரமைகளைக் களைந்துள்ளது. ஆகவே ஒன்றில் இது இப்பிரச்சினையிலிருந்து தனினை விடுவித்துக் கொள்ளவேணிடும் அல்லது இலங்கையின் இனமுரண்பாட்டினை ஒரு முடிவுக்குக் கொண்டுவரப் போவதாகத்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த குறிக்கோளினை அடைந்து கொண்டிருப்பதாக நிறுவ வேண்டும்.
இந்தியா வெளியேறுவதாகவே எடுத்துக்கொண்டாலும் ஐ.தே.கட்சியும் ஜே.வி.பி.யும் புலிகளும் சேர்ந்து கோரஸ் வைப்பது போல் அதுவே முழுப்பிரச்சினையையும் தீர்த்துவிடப்போகிறதா? வடகிழக்கில் தமிழர்களுக்கு உண்மையான அதிகாரப் பங்கீடு வழங்கப்படும் சூழ்நிலையிலேயே இந்தியா வெளியேறுவது சாதிதியமாகும் எனபது தெளிவானதாகும். மாகாண சபைகளையும் வட, கிழக்கு மாகாண சபைகளை ஒருங்கிணைப்பதையும் உறுதியாக எதிர்த்துக் கொண்டிருக்கும் ஜேவிபி. இத்தகைய ஒரு அதிகாரக் கைமாற்றத்தை மூர்க்கமாக எதிர்க்கும் என்பது உறுதி. புலிகளைப் பொறுத்தவரையில் இந்தியா வெளியேறுவது என்பது ஒரு இராணுவ வெற்றியாகவே சித்தரிக்கப்படும். ஒருங்கிணைந்த மாகாணசபைகளைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய செயலமைப்பு முறையையே புலிகள் கொண்டிருக்க விரும்புவர். ஆனால் இத்தகைய சூழ்நிலை ஜே.வி.பி.யையும் அதன் ஆதரவுத் தளத்தையும் சினந்து எழச்செய்யும். இந்தியா வெளியேறுவது பற்றிய வினா இலங்கை பூராவும் ஆதிக்கம் செலுத்துவதற்காகப் போட்டாபோட்டியில் இறங்கியிருக்கும் அரசியல் சக்திகளின் சிலந்தி வலைப்பின்னலைப்பற்றிய தெளிவான பகுப்பாய்வை நாடி நிற்கிறது. மக்களைப் பொறுத்தவரையில் கொடூரமான-தீர்க்கமான இந்த வன்முறைக்கான தீர்வு சமூகத்திற்குள்ளிலிருந்து தான் வரவேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிப்பதால் உருவாக மாட்டாது. இத்தகைய உள்ளக அமைப்புகளை விருத்தியுறச் செய்வதென்பது நீண்ட, கடினமான பணியாகும். இச்செயற்பாடு பற்றி இப்போது தான் ஒழுங்குமுறையாக நோக்கப்பட்டு வருகிறது.*

525 9.2 இன்னுமொரு பிற்சேர்க்கை :* பெப்ரவரி
அணி மைக் காலத்தில் எவ்வளவோ விஷயங்கள் மேற்பரப்பில் நடந்தேறியுள்ளனவாயினும் ஆழ்ந்த/பகுப்பாய்வின்றி ஒரு முடிவு பெறாத கதையின் சில அம்சங்களை மட்டும் தொட்டுச்செல்வது உகந்ததல்ல என்ற காரணத்தால் இது குறித்து எழுத ஒருவர் தயக்கமுறக்கூடும். இந்த
விவகாரங்கள் * நூலுக்கான விஷயதானங்களைக்
கொண்டனவாகும்.
அண்மையில் நடந்தேறியுள்ள சில விஷயங்கள் எட்டியிருக்கும் கசப்பான எல்லைகளைப் பார்க்கும்போது தமிழர்கள் ஒரு சமூகம் என்ற வகையிலும் இலங்கை S(C) தேசம் என்ற வகையிலும் நாம் அவற்றை அலட்சியப்படுத்துவோமானால் எமது எதிர்காலம் எந்தவித நம்பிக்கையுமற்ற ஒன்றாகவே ஆகிவிடும். இந்த மாற்றங்கள் சிலவற்றை நாம் இங்கு கோடி காட்டிச் செல்ல விரும்புகிறோம்.
யாழ்ப்பாணம், திருகோணமலையில் சிறுசிறு எல்லைகளுக்குள்ளேயே இந்திய அமைதிப்படையும் அதன் சகபாடிகளும் முடங்கியிருந்ததால் விடுதலைப்புலிகள் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியல் பலம்" ஒரு நிலையில் இருப்பதாகவே தோன்றியது. இந்த நிலைமை வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்ற இலங்கைத் தமிழர்களின் பிரச்சாரக் குழுக்களினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதுடன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் தம் உள்ளூர் அரசியலுக்கு இதனைப் பாவித்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் பிரச்சாரக் குழுவினர் ஒலிநாடாக்களில் பதிவுசெய்து வழங்கிய பேச்சுக்களும் விசேஷ பாடல்களும் அங்கு மிகுந்த பிரபல்யம் பெற்றிருந்தன. இந்த ஆரவாரங்களின் பின்னால் வலிந்த பிரச்சாரத்தன்மையும் மேலெழுந்தவளி உணர்வும் நிலவுவதைக் கண்டுபிடித்துக்கொள்ள பெரிய ஆராய்ச்சி ஒன்றும் தேவையில்லை. இந்தக் கொடிகள், வண்ண அலங்காரங்கள். பேச்சுக்கள், பாடல்கள் எல்லாம் இருந்தாலும் இதற்குப் பின்னால் புலிகளுக்குத் தடுமாற்றம் இல்லையென்றாலும் ஒருவிதப் பதைப்பு இருந்து வந்தது. அவர்களின் அணுகுமுறையும் கருத்தியலும் அதற்குரிய விளைவுகளை ஏற்படுத்தியேயிருந்தது. ஒவ்வொரு புதிய நெருக்கடியும் புதுப்புதுப் சந்தேகங்களைக் கொண்டு வந்து இதனால் இயக்கத்திலிருந்து பல மூத்த உறுப்பினர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். விடுதலைப் போராட்டம் மீதான பிரமைகள் களைந்து போவதற்குக் குறிப்பிடத்தக்க ஒரு காரணியாக அமைந்தது விடுதலைப் புலிகளில் புதிதாகத் திரட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மிகச்சிறு பிராயத்தினராக இருந்தமையாகும். குழந்தைப் போராளிகள் அல்லது "கவ் அண்ட் கேட் (COW AND GATE) போராளிகள் எனப்பட்ட இவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே பெருமளவில் வந்திருந்தனர். போராட்டத்தின் ஆரம்பகாலங்களைப் போலன்றி இப்போதெல்லாம் உயர்கல்வி அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தரத்தில் ஆட்களைப் பெறுவது என்பது மிக அரிதாக இருந்தது. சில காரியங்களைச் சாதிப்பதற்காக வயதான பையன்களும் விடுதலைப்புலிகளோடு சேர்ந்து அவர்களுக்காகச் சில பிரச்சார வேலைகள் செய்யக்கூடிய நிலைமை இருந்தது. இது சிறுபிராயத்தினரைத் திரட்ட உதவியது. ஆனால் இந்த வயதானவர்களோ

Page 281
526
விடுதலைப்புலிகளுக்காகப் போய் சண்டைகள் எதிலும் ஈடுபட்டுக்கொள்ளாமல் கவனமாகத் தம்மைத் தவிர்த்துக்கொண்டு விடுவார்கள்.
ஆதிக்க அரசியல் உருவகித்துக் கொடுத்திருக்கும் விடுதலை நிலை என்பதற்கு சமூகம் எந்த அளவு ஈடுபாடு கொண்டுள்ளது என்ற கேள்வி அடுத்து எழுகிறது. அரசியல் ஆதிக்கத்தின் உள்ளுறையாக இருக்கக்கூடியதுதான் இந்த நிரந்தரமான முரண்பாடு என்பதையும் மக்கள் அவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. 1983 ஜூலையிலிருந்து மேற்கு நோக்கிய பெருமளவிலான புலப் பெயர் வானது யாழ்ப்பாணத்தின் சமூக அசைவாக்கத்தினை கணிசமாகத் துரிதமுறச் செய்திருந்தது. ஒரு சராசரி வயதான நபரின் அல்லது பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக்கொணட ஒருவரின் ஆதர்ஷ இலக்காக வெளிநாடு நோக்கிப் புலம் பெயர் வதொன றே அமைந்தது. 1983ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றவர்கள் 2 இலட்சம் பேர் அல்லது யாழிப் பாணக் குடித்தொகையின் 25 வீதம் என்று சில ஆதாரங்களிலிருந்து தெரியவருகிறது. தமது சொந்தப் பாதுகாப்பினி மைக் காரணங்களால், நாட்டைவிட்டு வெளியேறிப் போய் வாழும் இந்த வகுப்பினர் தம் தாய்நாட்டுக்குள் அழிவு மற்றும் அதிதீவிரவாத அரசியலுக்குள் புதையுணி டு அதீதகைய போக்கினையே உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினை பிறிதொரு இடத்தில் ஆராயப்பட்டுள்ளது. (பார்க்க: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கை, யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாண அரசியல் ஆதிக்கத்திற்கெதிராக கிழக்கு மாகாணத் தமிழர்கள் கொண்டிருந்த அதிருப்தி நிலைமையைக் களைய விடுதலை இயக்கங்கள் ஒன்றுஞ் செய்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திறமை வாய்ந்த, அரசியல் மென்னுணர்வு கொண்டிருந்த சில தலைவர்களும் இயக்கத்தின் அதிகார வரண்முறைக்குள் பெருங்கஷ்டங்களையே எதிர்கொள்ளவேண்டி வந்தது. சிங்களவர் ஆதிக்கம் வகித்த அரசின் கைகளில் அனுபவித்த தமது சொந்தச் சரித்திரபூர்வமான அனுபவங்களின் பின்னரும் வடகிழக்கு முஸ்லிம் மக்களின்மேல் தமிழின அடையாளத்தைத் திணிக்கும் கைங்கரியத்தையே தமிழர்கள் மேற்கொண்டனர். யாரும் சவால்விட முடியாத அளவு அதிகார வலிமையைக் கொண்டிருந்த புலிகள் இந்த விஷயங்களைப் பற்றி அறியாதிருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. சிறு பிராயத்தினர் இயக்கத்தில் வந்து சேர்வதுபற்றிய அவர்களின் அணுகுமுறையில் ஒருவித மனச்சோர்வு நிலை பிரதிபலிக்கவே செய்கிறது. போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் முதிர்ச்சியான நபர்கள் பெருமளவில் இயக்கத்திற்குள் வந்து கொண்டிருந்தபோது விடுதலை இலட்சியங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டது. இன்றோ எல்லாம் விதிவட்ட எல்லையில்தான் காரணங்கள் பேசப்படுகின்றன. வீட்டைவிட்டு இயக்கத்தில் தாமே விரும்பிச் சேர்ந்து கொண்டுவிட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்காக விடுதலைப்புலித் தலைவர்களை அணுகியபோது தமது

527 பெற்றோரும் தங்களை இழந்த நிலையில்தான் தாங்கள் இருப்பதாக அப்பெற்றோர்களுக்கு இத்தலைவர்கிள் அடிக்கடி நினைவுபடுத்தியுள்ளனர். இலட்சியப் பயணங்களைப் பற்றி/எல்லாம் எவருமே பேசுவதில்லை. "துரோகி, தியாகி" என்ற இரண்டு பதங்களைச் சுற்றித்தான் போராட்டப் பிரச்சாரத்தின் முழு அழுத்தமும் ஆதாரங்கொண்டு நின்றது பற்றி எவரும் வியப்புறத் தேவையில்லை. ஒரே இலட்சியத்திற்காக இறுதிவரை தமது அர்ப்பணிப்புகளை நல்கியும் துரோகிகள் என்று பரிதாபகரமாகக் கொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோரும் விரயமாக்கப்பட்டுவிட்ட பெரும் ஆற்றல் வாய்ந்த சக்திகளைப் பற்றி மட்டுமல்ல, நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும் சினத்தையும் பரந்த அதிருப்தியையுமே வெளிப்படுத்தியுள்ளனர். ஜனநாயக நடவடிக்கைகளுக்கான எந்தப் போக்கிடமும் அற்றுப் போய்விட்ட நிலையில் இத்தகைய சினத்தினையோ இதன் விளைவால் புலிகளின் அபிலாஷைகள் ஆட்டங்கண்டு கொண்டிருப்பதையோ ஒட்டுமொத்தமாக குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடிய நிலைமை சகஜமானதுதான். "துரோகிகள்" என்பதில் இவர்கள் மென்மேலும் ஆவேசவெறி கொண்டிருப்பதில் இது நன்கு புலனாகிறது.
கருத்து முரண்பாடு கொண்டவர்கள் என்பதற்காகத் தமிழர்களையே
இவர்கள் கையாண்ட விதத்திற்கு முழுமாறாக, தாங்கள் செய்த தவறுகளுக்காக என்றுமே மனம் வருந்தாத - பாரம்பரியப் பகைவனான சிங்கள அரசுடன் ஒரே மேசையில் உட்கார்ந்து தமாஷாய் கதைத்துக் கொண்டிருக்க புலிகளால் முடிகிறது. சிங்கள அரசு பற்றிப் பகிரங்கமாய் புகழ்பாடவும் அவர்கள் மீது நம்பிக்கையினை வாரிச் சொரியவும் இவர்களால் முடிந்தது. ஆயிரமாயிரம் சிங்கள இளைஞர்களின் பயங்கரமான எதிர்காலம் தங்களின் கைகளில் நிர்ணயமாகிக் கொண்டிருந்த ஒரு நிலைமையை அரசு பிரதிபலித்துக் கொண்டிருந்த கட்டத்தில் தமிழர்கள் தம் பங்கிற்கு இந்த விவகாரங்கள் பற்றிய தமது அபாயகரமான தார்மீக உணர்ச்சி எதுவுமேயற்ற நிலைப்பாட்டையே மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருந்தனர்.
பரந்த அளவில் மதிக்கப்பட்டு வருவது புலிகளின் நாசகார அம்சங்கள் தான். நல்லதோ கெட்டதோ மற்ற எவரும் எதுவும் செய்ய அனுமதி இல்லை என்பதை உறுதி செய்வதாகத்தான் அவர்களின் அணுகுமுறைகள் அமைந்தன. புலிகளை எதிர்கொள்ளும் ஆற்றலிழந்து, தத்தமது பலவீனங்களால் பிற இயக்கங்கள் அனைத்துமே சாதுரியமற்றனவாக நோக்கப்பட, புலிகள் பரந்த ஆதரவுடன் மீண்டும் வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கு சட்டப்படியான அங்கீகாரமும் வழங்கப்பட்டது. யாரும் சவாலிட்டால் கொடூரமான இராணுவ பாணியில் புலிகளும் பொதுமக்களை நடத்துவார்கள் என்பதைக் கிழக்கின் அண்மைக்காலச் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன. புலிகள் இல்லாவிட்டால் தாங்கள் மறுபடியும் போரிட வேணடிவரும் என்று புலிகளை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்மறையான காரணம் ஒன்றை பலர் பிரக்ஞை பூர்வமாகவே அங்கீகரிக்கின்றனர்.
புலிகளின் குறிப்பிடத்தக்க வெற்றிகளும் அவர்களின் நாசகாரப் பலவீனங்களும் யாழ்ப்பாண சமூகத்தின் பிரதிபலிப்புகள்தான் எண்பதில்

Page 282
528
நாம் பார்வைக்குறை கொண்டவர்களாக இருக்கமுடியாது.உள்வாரி நிலைமைகளில் பெருந்தொகை உயிர்களையும், ஆற்றல்களையும் நாசமாக்கி வருவது பற்றி அச்சமூகம் எந்தவிதமாகவும் கேள்வி எழுப்பவில்லை எனபதோ அது பற்றி எந்த விதமான நிலைப்பாட்டையோ எடுக்கவில்லை என்பதோ மட்டுமல்ல அதன் அழிவை நோக்கிய அரசியலையும், அனர்த்தம் விளைவிக்கும் விழுமியங்களின் அமைப்பையும் விஸ் தாரமாகப் பிரதிபலிக்கும் அம்சமாகவும் இது இருந்தது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதுபற்றி எந்த விதமான சிந்தனையும் இல்லாமல் தங்களின் சொந்தக் குழந்தைகளே பசப்பு வார்தி தைகளால் ஈர்க்கப்பட்டு ஆயுதங்களை ஏந்தித்திரியும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கணிடு கொள்ளவும் இச்சமூகம் மறந்து போயிருக்கிறது. இந்த விஷயத்தில் எல்லா ஆயுதக்குழுக்களும் தவறிழைத்துள்ளன. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப்பற்றி மக்கள் ஒன்றும் தெரியாமல் இருந்தார்களென்று சொல்ல முடியாது. இதற்கு முதல் தமிழ்த்தேசிய இராணுவம் (TNA) கட்டாய ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருந்ததும் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. அவர்களின் ஆயுதக் காவல் சாவடிகள் சிறு அளவிலேயே வியாபகம் கொண்டிருந்ததால் சுவர்களுக்கூடாக நீட்டிக் கொண்டிருக்கும் துப்பாக்கிக் குழல்களிலிருந்துதான் பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரியும் என யாழ்ப்பாணத்தில் அப்போது எல்லாரும் பேசிக் கொண்டார்கள். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுத் துப்பாக்கிகளைப் போல ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைத் தாங்கிய வண்ணம் காட்சியளிக்கும் குழந்தை முகங்களின் புகைப்படங்களைத் தேசிய நாளிதழ்கள் அப்போது வெளியிட்டிருந்தன.
ஆனால் சமூகத்தின் தலைமைப்பிரிவுகள் அவை சமய அமைப்புகளாக இருந்தாலென்ன, தொழில்சார் உத்தியோகஸ்தர்களின் சங்கங்களாக இருந்தாலென்ன, ஆசிரியர் சங்கங்களாக இருந்தாலென்ன அனைவருமே இப்படி ஒரு பிரச்சினை உண்டு என்பதையே அங்கீகரித்துக் கொள்ளாத மாதிரித்தான் தெரிந்தது. பதிலாக "பெடியள் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வழவழப்பாய் பேசிக் கொண்டிருந்தார்கள். வயதான பையன்கள் ஈடுபாடு காட்ட வெட்கப்பட்டுக் கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள போதுமான மனித வலுவின்மையினால் இச்சிறுவர்கள் நெறிப்படுத்தப்பட்டு பாவிக்கப்படுவதாகவும் இதனைச் சிலர் நியாயப்படுத்தி விளக்கும் எல்லைக்கும் போனார்கள். ஏற்கெனவே எவ்வளவையோ இந்தப் போராட்டத்தில் நாம் இழந்து போயிருப்பதால் போராட்டம் மூலம் அடைந்த பலாபலன்களைப் பாதுகாக்க இவர்களின் அர்ப்பணிப்பு அவசியமாகிறது என்றும் சிலர் வாதாடினர். இந்தப் போராட்டத்தின் மூலம் எந்தவகையான சமூகத்தை நாம் உருவாக்கப் போகிறோம் என்பது பற்றிய கேள்வியே நம்மிடம் இல்லை. இங்கு விஜயம் செய்த பல வெளிநாட்டவர்கள் இந்தவகையான மனப்பாங்குகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுபற்றி ஆச்சரியமுற எதுவுமில்லை. தமிழ் உயர் குழாத்தினர் முன்னிறுத்திய அரசியலை உற்று நோக்கினால் இந்த உணர்ச்சியற்ற நிலையும் தார்மீகச் சீரழிவும் இன்னும் ஆழமாக வேரோடிச் செல்வதைக் காணலாம். இவற்றிலிருந்து

529
குணாம்சரீதியில் வேறுபட்டு தனித்து யாராவது சிந்தித்துச் செயற்பட முனைந்தால் அவர் தனித்து ஒதுக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகிறார் அவதூறு, ஸ்தாபன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், இன்னும் மறைமுகமாக கொலை செய்தல் போன்ற வழிமுறைகளே இதில் கையாளப்படுகின்றன. だ
பாசிஸத்திற்குள் அை படுவதை நோக்கி நகரும் பலவீனமான சமூகமாக தீதான இன்று நாமிருக்கிறோம். துரோகிகள் என்றழைக்கப்படும் பலரையும் தலைசுற்றிப் போகுமளவிற்கு உற்பத்தி செய்து விட்டதால் ஆக்கரீதியாகச் சிறிதளவே செய்ய முடிந்துள்ளது. தங்களது அதிசராசரித்தனத்தையும் தங்களின் தலைமையில் பொதிந்துள்ள မှူးးးးးရှိ குணாம்சங்களின் வறுமையையும் மூடி மறைக்க இவர்கள் தாங்கள் போஷகர்களாக இருக்கக்கூடிய நிலையைப் பலப்படுத்தி, அறிவார்ந்த வளர்ச்சிகளை நெரித்து அடக்க வேணி டிய தேவை ஏற்படுகிறது. இவை அவர்களினி அரசியலிலும் பிரதிபலிக்கவே செய்தன. பூடகமான திராவிட இனப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் சோழப் பேரரசின் (கி.பி 105 நூற்றாண டிலிருந்து 13ம் நூற்றாண டுவரை) இராணுவவாதத்துடன் இலங்கையினி தமிழ் விடுதலைப் போராட்டத்தையும் இணைத்து தமிழ்நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சார கோபுரத்திற்கு ஒரு விலை இருக்கிறது. கடைசியில் இந்த விலையை தவறாகப் பயன்படுத்தப்பட்ட சிறுவர்களே செலுத்த வேண்டியதாயிற்று, வஞ்சிக்கப்பட்ட இந்தத் துரதிஷ்டசாலிகளின் இரத்தத்திலேயே இந்தவிலை செலுத்தப்பட்டது.
தெற்கில் ஜேவிபி. ஏற்படுத்திய அனர்த்தங்களோ தமிழ்ப்போராட்டத்தில் நிகழ்ந்தனவற்றை விடப் பெருமளவில் இராணுவப்படைகளையும் சமூகத்தையும் குரூரமயமாக்கும் விலை கொடுத்துத்தான் எய்தப்பெற்றன. ஒரு குறைந்த பட்ச மதிப்பீட்டின்படி அரசபடைகளும் இராணுவத்திற்குத் துணையாசி இயங்கும் குழுக்களும் சேர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட அல்லது காணாமற் போன சிங்கள இளைஞர்களின் எணணிக்கை எண்ணாயிரத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. சடலங்கள் நதிகளில் மிதந்து செல்வது பற்றியும் சாதாரணமாக ஒரு அரை டசன் பேரின் எரியுண்ட சடலங்கள் எங்காவது ஒரு சின்னக் கிராமத்தின் பாதையோரத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறித்தும் பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது என்பது சர்வ சாதாரணமான விடயமாய்ப்போய் விட்டது. இரண்டு வழக்கறிஞர்கள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்வதற்கே மக்கள் அச்சமுற்றனர். தமிழ்ப்பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் 1979ல் பயங்கரவாதத்தடைச் FL فالا அமுலானதிலிருந்து சட்டத்தின் ஆட்சி என்பது திசைதிருப்பிச் செலுத்தப்பட்டதை அனுமதித்ததற்கு தென்னிலங்கை மிகப்பயங்கரமான விரிை செலுத்த நேர்ந்தது. இவற்றிற்கெல்லாம் அரசாங்கம் பொறுப்பு வகிக்சி வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதை சாத்தியப்படுத்திக்கொள்ளக்கூடிய இலக்காகக் கருதுபவர்கள் யாருமில்லை. சட்ட ஒழுங்கு அற்றுப்போ"

Page 283
530 நிலையுடன் அரசியலும் பிணைந்து சிக்குண்டு போயிருப்பதால் சட்ட ஆட்சியை மீண்டும் கொணரமுடியும் என்பதோ சட்டவாக்கத்திற்கு மீள்வதன் மூலம் கொலைப்படைகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதோ சந்தேகத்திற்குரியதாகும்.
ஆளும் கட்சியின் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்திற்கு மிக நெருக்கமாயிருந்த ரிச்சார்ட் டி சொய்ஸா என்ற பத்திரிகையாளரும் நன்மதிப்புப் பெற்றிருந்த நாடகவியலாளரும் அண்மையில் கொலை செய்யப்பட்டதும், மவுண்ட் லெவினியாவின் ஐ.தே.க. நகரசபை உறுப்பினரான லக்ஷமணி பெரேரா காணாமற் போனதும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு தாங்கள் சிருஷ்டித்த கொலைச்செயல் செய்தொழிக்கும் அரசியலுக்கு ஆளுங்கட்சியின் உள்விவகார அரசியல் கூட விதிவிலக்கில்லையா என்று கேள்வி எழுகிறது. குடிசார் அதிகாரத்திற்கு-சிவில் அமைப்பிற்கு கீழ்ப்படிந்து இராணுவம் செயற்படுகின்ற நீண்ட பாரம்பரியம் கொண்ட இலங்கையில் இன்று இந்த இரண்டிற்கும் இடையிலான அதிகாரச் சமநிலை எங்கே காணக்கிடக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பக்கூடும். ரிச்சார்ட் டி சொய்ஸா, லக்ஷமணி பெரேரா விவகாரங்கள் குறித்து அமைச்சரவையின் பெரும்பகுதியினருக்கு எதுவுமே தெரியாது என்றே தோன்றுகிறது.
1990 பெப்ரவரியில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பற்றி உள்ளூர்ப்பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் விஷயங்கள் அரசு வட்டாரங்களின் மத்தியில் தர்மசங்கடமான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பத்திரிகையாளர் சமூகம் தங்களின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொண்டிருப்பதோடு அரசு தரப்பிலிருந்து வந்து கொணி டிருக்கும் அறிக்கைகளை மிகுந்த சந்தேகத்துடனேயே நோக்குகின்றனர். ரிச்சார்ட் டி சொய்ஸா கடத்தப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவுத் துறையான 'றோவின் தலையீட்டின் சாத்தியப்பாடு உள்ளது என்பதைத் தெரிவிக்குமுகமாக பெப்ரவரி 19ம் திகதி தகவல், ஒலிபரப்பு அமைச்சர் விசேஷ பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதே தினத்தன்று பத்திரிகையாளர் மத்தியில் பேசிய பாதுகாப்பு, வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் 'றோவின் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை என்று குறிப்பிட்டார். அரசாங்கத்தரப்பிலிருந்து இம்மாதிரி ஒன்றுக் கொண்று முரண பாடான அறிக்கைகள் நிறையவே வந்துகொண்டிருந்தன. சில முக்கியம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் அபாய நிலைமை தெரிந்ததும் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
இப்பிரச்சினை பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றிலிருந்து தென்னிலங்கையில் சாதாரண இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையின் விஷமத்தனம் தெரியவருகிறது.
இதுபோல நூற்றுக் கணக்கான ரிச்சார்ட் டி சொய்ஸாக்கள் அம்பாந்தோட்டையில் கொல்லப்பட்டுள்ளமை பற்றி நாம் கவலைப்படாவிட்டாலும் இவை இன்னும் நடந்து கொண்டு தானிருக்கின்றன. ஆனால் ரிச்சார்ட் டி சொய்ஸா இந்த மனிதனின் சாவானது மயக்கநிலையில் உறைந்து போயிருக்கும் மத்தியதரவர்க்கத்தின் மனச்சாட்சியைத் துளைத்து விழிப்பேற்படுத்தியிருக்கிறது’ தமிழ்மக்களின் பிரச்சினை குறித்து ஐ.தே.கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையில் எந்தவிதமான சித்தாந்த முரண்பாடும் இல்லை. விடுதலைப்புலிகளுடன் அரசு

531
ஏதோ இணக்கத்திற்கு வந்திருந்தாலுங்கூட தமிழர்களுக்கு அதிகாரம் ஏன் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதை அரசாங்கம் அதன் சிங்களத் தேர்தல் தொகுதிகளுக்கு எடுத்துச்சென்று விளக்க வேண்டும். அரசாங்கத்திற்கும் ஜே.வி.பி.க்கும் இடையிலான முரண்பாட்டை எது இனம் பிரித்துக் காட்டுகிறதென்றால் அரசாங்கமீ தங்கள் மூச்சைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதற்காகப் போராட ஜேவிபி.யோ அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறது. நடைமுறைரீதியான காரணங்களை அனுசரித்து இந்தியாவின் ஈடுபாட்டைக் குறைத்து, தமிழ்மக்களுக்குச் சில அதிகாரங்களையேனும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்தாலும் ஆயுதப்படைகள் மீதும் நிர்வாக யந்திரத்தின் மீதும் அது தேவையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளதா என்பது இன்னுமொரு விவகாரமாகும்.
இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்து நிலைமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளத் தவறியமைக்கான காரணங்கள் அவர்களின் கருத்தியல் முரண்பாடுகளிலிருந்தும் முரண்பாடான குறிக்கோள்களிலிருந்தும் இரு சாராரினதும் இயல்பான பலவீனங்களிலிருந்துமே எழுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்தியாவின் நோக்கங்களை நாம் முறியடித்துவிட்டோம் என்று சொல்வது மிகைபடக்கூறுவதாகும். உண்மையில் புலிகளும் இலங்கை அரசாங்கமும் ஒத்துப்பாடிய நிலைமைதான் இந்தியத் துருப்புகள் இங்கே நிலைகொள்ள நேர்ந்ததன் பாரதூரமான அரசியல் சுமையினை உருவாக்கிக் கொடுத்தது. இப்போது இந்தியா என்ன யோசித்திருக்கிறதென்றால் தனது பொறுப்புகளைக் களைந்துவிட்டு, பலமான நிலைப்பாட்டுடன் பிரச்சினையை வித்தியாசமாகக் கையாளவேண்டும் என்பது தான். இந்திய நடமாட்டம் இன்று மிகக் குறைந்து போயுள்ள நிலைமையில், எதிர்காலம் பற்றி பத்திரிகைகளில் எழுந்துள்ள கேள்விகளும் சங்கடம் தரும் அறிக்கைகளும் தென்னிலங்கையில் எழுந்த ஆரவாரங்களைச் சுத்தமாகத் துடைத்துவிட்டிருந்தது.
கடந்து போன தசாப்தங்களில் உருவாக்கப்பட்டிருந்த குறுகிய கருத்துருவங்களின் நிலைப்பாட்டிலிருந்து முக்கியமாக எதிரணியினரும் தங்களுடன் கருத்து முரண்பாடு கொண்டு வெளியேறினோரும் அவர்களுடைய கருத்தியல் கோட்டைக்குள்ளேயே புகுந்து அவர்களை நிலைகுலையச் செய்ய முனையும்போது தமிழ்க்கட்சிகளுக்கோ இலங்கை அரசாங்கத்திற்கோ, அவற்றினின்று விலகிச் செல்லவும் முடியாமற் போயிருந்தது. இந்த வேலையைத் தான் ஜே.வியியும் செய்து கொண்டிருந்தது. 1984ல் கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் வணி முறையைத் தூண்டிவிட்டதுபோல் இன்னும் சிலவற்றையும் தூண்டிவிடக்கூடிய அளவிற்கு அதிருப்தியில் முடிந்த சில விவகாரங்கள் இருந்து கொண்டிருந்தன. அதிகாரச் சமநிலையை நிர்ணயிப்பதில் இந்தியாவிற்கிருந்த முக்கியமான பங்கைக் குறித்து யாரும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
இலங்கையில் தங்களின் அயலுறவுக் கொள்கையின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டில் தேசிய உணர்ச்சிகளைத் தூணி டிவிடுவதானது இந்தியாவிற்கு அதன் சொந்த உள்நாட்டு ஸ்திரத்தன்மையைப் பொறுத்த மட்டில் அது பேரம் பேசிப் பெற்ற லாபத்தைவிட மிக அதிகமான விலையையே கொடுக்க வேண்டிவரும்.

Page 284
532
எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து நோக்கும்போது எத்தனையோ சித்திரங்களைத் தீட்டிக் கொள்ள முடியுமாயினும் எல்லாமே இருள் நிறைந்துதான் தெரிகின்றது. ஒருவேளை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு படிப்பினை யாதெனில், இலங்கையின் சகல பிரச்சினைகளும் வரலாற்றுரீதியில் ஏற்பட் அதன் சுரணையின்மை சார்ந்ததாயும் அதனால் விளைந்த மஞ்சள் காமாலை மனங்கொணி டோரின் இயல்பு சார்ந்ததாயும் இருப்பதால் வெளியிலிருந்து வருபவர்களால் இதனை ஒரே இரவுக்குள் மாற்றியமைத்துக்கொண்டுவிட முடியாது. விழலும் அழிவுமே கண்முன்னே தெரியும் நிலையில், தங்களது தவறான மதிப்பீடுகளைக் களைந்தெறிவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதற்கு முன் இந்நாட்டு மக்கள் இந்த வரலாற்று அனுபவங்களை வாழ்ந்துதான் தீர வேண்டும் ' என்றும் சிலர் வலியுறுத்த முனையலாம். இது ஒரு யாந்திகமான செய்முறை அல்ல. பதிலாக, தனிமனித துணிச்சலை தீவிரமான வேண்டிநிற்கும் ஒரு செய்முறை இது. இத்தகைய சூழல்களில் தானி சக்திமிக்க பல சமயார் தீத அனுபவங்களும் கைகூடப்பெற்றிருக்கின்றன. இதனை மனதிற்கொண்டு, வெளியில் உள்ளவர்கள் அதிலுங் குறிப்பாக இத்தகைய அனுபவங்களுக்கூடாகச் சென்றவர்கள். உலகளாவிய உன்னத விழுமியங்களுக்காகக் குரல் கொடுப்பதற்கு தம்மை எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளையும் பாராது முன்வந்திருப்பவர்களை பாதுகாக்கவும், அதிகாரங்களைக் கையில் வைத்திருப்போர் மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக நடக்க வேண்டுமென்று குரல் கொடுப்போருக்கு
ஊக்கமும் வழங்கமுடியும்.

1987 ஜூலை மாதத்தில் சுதுமலையில் திரு. வே. பிரபாகரன் முதன் முதலாக உரையாற்றிய பொதுக்கூட்டம்.
சுதுமலை பொதுக்கூட்டத்தில் பங்குபற்றிய பொதுமக்களில் ஒரு பகுதியினர்.

Page 285
விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத்தின் பெண்கள் அணி
விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவத்தில்
சேர்க்கப்பட்ட இளம்பராய சிறார்கள்.
 
 

1989-10-22அன்று சாவகச்சேரி சந்தைக்கருகில் இந்திய விமானப்படை தாக்குதலினால் உயிர் இழந்தோர்.

Page 286
த.வி.பு. தலைவர்கள் இந்திய தூதுவர் ஜே.என். டிக்சிற்றுடன் கலந்துரையாடிய போது.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க நிர்பந்திக்கப்பட்ட தீலிபனை வே.பிரபாகரன் சந்தித்தபோது.
 
 
 

a 1 -
O } } பின்னிணைப்பு 1 1990ன் ஆரம்ப காலப்பகுதிச் சூழ்நிலை பற்றிய சில மனப்பதிவுகள்
1.1 1990 ஜனவரி: நேரங்கெட்ட நேரத்தில்.
1989 டிசெம்பர் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை தவிர்ந்த ஏனைய வடகிழக்குப்பகுதிகளிலிருந்து இந்திய அமைதிப்படை தன்படைகளை விலக்கிக் கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் தீவிரமாக வலியுறுத்தியது போன்று தன் படைகளைப் பூரணமாக வாபஸ் பெறுவதானது இந்தியாவிற்கு கிலேசத்தை உண்டுபண்ணும் தர்மசங்கடமான விவகாரமாகவே இருந்தது. இந்தியா சாதித்துக்கொண்டதை ஒருபக்கம் வைத்துக்கொண்டு அதற்காகக் கொடுக்கப்பட்ட விலையைக் கணக்கிடும்போது இந்தச் சம்பவங்கள் இந்தியாவில் கடினமான கேள்விகளை எழுப்பக் கூடும். சுயமுனைப்புக்கான சகல வல்லமையையும் இழந்து களைத்துப் போயிருந்த தமிழ்ச்சணமோ முன்பிருந்த நிலைமை திரும்ப வந்துவிட்டாலே போதும் என்ற நிலைக்கு வந்திருந்தது. ஒரே இயக்கத்தின் கழ்டுப்பாட்டில் இருந்தால் வாழ்க்கை நிலைமைகள் ஒழுங்கில் அமையும் என்ற நம்பிக்கையில் 1986ல் புலிகள் வகித்திருந்த மேலாதிக்கத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். 1987 மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் தனது ஒப்பரேஷன் லிபரேஷன் தாக்குதலைத் தொடுத்து யாழ்ப்பாணத்திற்குள் உள்ளிட முஸ்தீபுகள் மேற்கொண்டபோது புலிகள் இதனை எதிர்த்தால் அதற்கு அதிகவிலை கொடுக்க நேரிடும் என்பதோடு வீணாக இரத்தம் சிந்தியும் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் கருதி புலிகள் இதிலிருந்து விலகிக்கொண்டால் நல்லது என்றும் இம்மக்கள் விரும்பியிருந்தனர். யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கையேற்பதை இந்தியா தடுத்து நிறுத்தியபோது அவர்கள் பெரும் மனநிம்மதியோடு இந்திய இராணுவத்தை வரவேற்றிருந்தனர். பின்னர் விரைவிலேயே இந்தியா புலிகளுடன் முரணி பட்ட போது பழைய பகையாளியான இலங்கை அரசாங்கத்திற்கு இது அனுகூலமாக அமைந்துவிடப் போகிறதே என்ற பயத்தில் புலிகள் இந்தியாவுடன் துரிதமாய் சமாதானமாகிக் கொண்டுவிட வேண்டுமென்று மக்கள் ஆழமாக விரும்பினார்கள். 1988 அக்டோபரில் புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதியில் தோல்வியில் முடிந்து மாகாணசபைகளின் தலைமைக் கு ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ ஆதரிக்க இந்தியா தீர்மானித்தபோது புலிகள் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள் என்றும் ஏதாவது இனி ஒரு ஒழுங்கு ஏற்படுமென்றும் பலர் நினைத்திருந்தார்கள்.
இந்திய சமாதானப்படை அண்மையில் விலகிக்கொண்ட பகுதிகளில் அதிகாரத்தைக் கையேற்க புலிகளும் இலங்கை அரசாங்கமும் முயன்றதை மக்கள் சந்தோஷத்துடனும் அதே நேரம் பீதியுடனுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இலங்கை. இந்திய உடன்படிக்கைக்குப் பிறகு 1987 ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் ஏற்பட்டதைப்போல

Page 287
534
இப்போது இராணுவ நடவடிக்கைகளால் எழக்கூடிய எரிச்சல்கள் தற்காலிகமாகவேனும் இல்லாமலிருந்தது ஒரு ஆசுவாசத்தையே கொடுத்தது. யாழ்ப்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் இந்திய ஆதரவுக்குழுக்கள் பழிக்குப்பழிக் கொலைகளில் ஈடுபடும் ஒரு இருண்ட யதார்த்தத்தைப் பற்றிய பேச்சே எங்கும் நீக்கமற நிறைந்திருந்தமையால், 1987 ஜூலையில் இலங்கை தாக்குதலை ஆரம்பித்திருந்த நேரத்தில் புலிகள் அப்போது விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்ததைப் போலவே இப்போது இந்திய அமைதிப்படையும் விலகிக் கொண்டுவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். மற்ற இடங்களில் புலிகள் செய்த கொலைகளைப் பற்றி அவ்வளவாகப் பேசப்படவில்லை.
வடமராட்சிப் பகுதியில் உறுதியாகத் தமிழர்களினுடைய சடலங்கள் தான் என்று கருதத்தக்க விதத்தில் அவை கரையொதுங்கிய போது அது குறித்து அத்துணை அக்கறை காட்டப்படாதது ஆச்சரியமூட்டுவதாகும். ஜனவரியின் இறுதிப் பகுதியில் இத்தகைய பல சடலங்கள் எரிக்கப்பட்டிருந்தன. பொலிகண்டிக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஜனவரி 26ம் திகதி : கரையொதுங்கிய எட்டுச் சடலங்களில் ஒரு சடலம் இரண்டு வயதுக் குழந்தையினுடையதாகும். சில சடலங்கள் பெணிகளினுடையதாகும். இச்சடலங்களில் காணப்பட்ட காயங்கள் இவர்கள் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என்பதையே சுட்டுவதாக உள்ளது என்று பல சாட்சிகள் கூறினார்கள். இந்தச் சாவுகளுக்கு இலங்கையின் கடற்படையினர் தான் காரணமாக இருக்கக்கூடுமென்று மக்கள் பெருமளவில் நம்பினர். இப்பிரச்சினை குறித்து இந்தியா கேள்வி எழுப்பியபோது தங்களுக்கு இதில் எந்தச்சம்பந்தமும் இல்லை என்று இலங்கை அரசு மறுத்துவிட்டது.
1985 ல் குமுதினி படகில் சென்ற பயணிகளையும் 1986ல் மண்டைதீவிற்கப்பால் மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தபோது மிகச்சரியாகவே பிரஜைகள் குழுக்களும் கிறிஸ்தவ திருச்சபைகளும் சனசமூகத் தலைவர்களும் பலத்த கண்டனக் குரல் எழுப்பியதைப் போலன்றி இப்போது பூரண மௌனமே நிலவியது. தற்ப்ோது பலியானவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய குடும்பங்கள் என்றும் பழிக்குப் பழி நடவடிக்கைகளுக்கு அஞ்சி இவர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடிக் கொண்டிருப்பதாகவும் பரவலாகப் பேசப்பட்டது. பொது ஒடுக்குமுறைக்குள்ளான அனுபவத்திலிருந்து எழுந்த தமிழர் என்ற உணர்வு மற்றும் தனித்துவ அடையாளம் என்று சொல்லப்படுவதற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் உள்ளதா என்ற கேள்வியை இந்த மெளனம் எழுப்புகிறது. தமிழர்களுக்கிடையிலான பேதங்கள் எவ்வளவு சாவகாசமாகப் பாவித்துக் கொள்ளப்படமுடியும் என்பதனையும் இது கோடி காட்டுகிறது.
யதார்த்தம் அர்த்தப்படுத்தும் விஷயங்களிலிருந்து விலகி வேறு அர்த்தங்களையும் காட்டக்கூடியதாக சம்பவங்களின் குறியீடுகள் அமைந்து போகும் தருணம் இதுவாக இருந்தது. உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் இணைத்து மீட்டி மனம் சஞ்சலமுறும் நிலையிலேயே தமிழர்கள் இருந்தனர். 1988 அக்டோபரில் மாகாணசபைத் தேர்தல்களைத் தொடர்ந்து புலிகள

535
இத்தேர்தலில் பங்கு கொள்ள மறுத்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற தமிழ் இயக்கத் தலைமையில் வட, கிழக்குத் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று பிரத்தியட்சமானதாகும். இந்தியாவின் வற்புறுத்தலின் பேரில் இந்த அரசாங்கத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுமென்ற வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் தாங்கள் ஒரு காலத்தில் நினைத்திருந்ததை விடவும் கூடுதலாக வழங்கப்படவுள்ள இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பது பற்றிப் போதுமான உற்சாகமோ அக்கறையோ காட்டவில்லை என்பது தெளிவாய் இருந்தது.
தமிழர்களைப் பாதுகாப்பதற்காக என்ற பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கத்துடன் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய இராணுவம் கட்டாய ஆட்சேர்ப்பு முறையையே கைக்கொண்டது. ஆனால் புலிகளும் இலங்கை இராணுவமும் ஒத்துப்போய் இதனைப் பெருமளவில் அழித்தொழித்தபோது அதனை யாருமே கண்டு கொள்ளவில்லை. வறிய குடும்பங்களிலிருந்து இப்படையில் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டிருந்த அப்பாவிகளின் தலைவிதியைப் பற்றி மிகக் குறைந்த அக்கறையே காட்டப்பட்டிருந்தது அல்லது எந்தவிதமான அக்கறையும் காட்டப்படவில்லை என்றே கூறவேண்டும். இவ்வாறு கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்த மிகப்பலருக்கு எந்தவிதமான பயிற்சியுமளிக்கப்படாததோடு அவர்களும் அத்துணை உற்சாகங் கொண்டவர்களாகவும் காணப்படவில்லை. இவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதுடன் பலர் கைது செய்யவும்பட்டனர். சிலர் சரணடைய முற்பட்டபோது அவர்களுடைய ஆட்களாலேயே கொல்லவும்பட்டனர். இவர்களில் பெரும் அதிர்ஷ்டம் அடித்தவர்கள் புலிகளால் சடங்காசாரங்களோடு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசித்திரம் என்னவென்றால் ஒரு காலத்தில் வெறுக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் பெயரளவிலான கட்டுப்பாட்டுக்குள் வந்த பகுதிகள் கூட இப்போது தடைகள் அகற்றப்பட்டு சுத்தமாக்கப்பட்டுவிட்ட பகுதிகளாகப் பேசப்பட்டதுதான். ஐக்கிய சோஷலிஸ் இலங்கையை ஆதரித்து ஒரு கட்டத்தில் தமிழ்த்தேசிய வட்டாரங்களில் சினத்தை மூட்டிய ஈ.பி.ஆர்.எல்.எப். ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்தை இப்போது அச்சுறுத்திக் கொண்டிருந்தது. மறுபக்கத்தில் தமிழீழத் தனியரசுக்கான தங்கள் கோரிக்கைகளைத் திருப்தி செய்யக்கூடிய வகையில் இலங்கை அரசின் முன்மொழிவுகள் இல்லாததால் இலங்கை அரசுடன் பல ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்துவந்த புலிகள் இப்போது இலங்கை அரசுடன் செயல்பாடுரீதியிலான இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமளவிற்கு தந்திரோபாய ரீதியில் புரிந்துணர்வுடன் இயங்க ஆரம்பித்திருந்தனர்.
இலங்கையில் நிலைகொணடிருந்த இந்தியப்படைவீரர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கசப்பையும் குழப்பத்தையும் கோபத்தையும் சேர்ந்த உணர்ச்சிகளையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். தமிழர்களுக்கு உதவுவதற்கென்று வந்து இப்போது தங்களுக்குள்ளேயே ஆயிரம் பேருக்கு மேல் பலி கொடுக்க நேர்ந்துவிட்டதே என்றுதான் அவர்கள் நினைக்க

Page 288
53
ஆரம்பித்தார்கள். தமிழர்களின் நயவஞ்சகமான அரசியல் தங்களின் உதார குணத்தை இழிவுபடுத்தி ஒன்றுக்கும் உதவாததாக்கிவிட்டதென்றே அவர்கள் உணர ஆரம்பித்தனர். தங்களது அரசினதும் இராணுவத்தினதும் பங்கு குறித்தும் இந்த விவகாரத்தில் எவ்வளவு பொதுமக்கள் துயரங்களை அனுபவித்துள்ளனர் என்பது பற்றியும் அவர்களுக்கு விளங்காதிருந்தது.
1989 ஜூலை 13ம் திகதி அனுபவமுதிர்ந்த தமிழ்த் தேசியத் தலைவர்களான அ.அமிர்தலிங்கமும் வெ.யோகேஸ்வரனும் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டனர். இன ஒதுக்கலின் முதல் உந்துதலை எதிர்நோக்கிய 50களில் கல்விகற்ற தமிழர்களின் புதிய தலைமுறையின் உணர்ச்சிகளுக்கு இத்தலைவர்களின் அரசியல் உருவம் சமைத்தது. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் முக்கியத்துவம் என்பனவற்றைப்பற்றி எல்லாம் எழுதுவது தேர்ந்த வாழ்க்கைச் சரிதவியலாளர்களே மேற்கொள்ளக்கூடிய பணியாகும். அவர்களின் பலங்களும் பலவீனங்களும் ஏன் அவர்களின் சரணாகதியும் கூட அவர்கள் யாரின் மத்தியில் வெறுப்புணர்வையும் தாங்கள் துரோகமிழைக்கப்பட்டதான உணர்ச்சியையும் ஊட்டுவித்தார்களோ அதே இளைய தலைமுறைத் தீவிரவாதத் தலைவர்களிடமிருந்து ஒன்றும் வேறுபட்டதாக அமைந்துவிடவில்லை என்பதை மட்டும் இங்கு கூறிச்செல்வது போதுமானதாகும். மக்கள் மத்தியில் துயரத்தையும் பழைய காலத்தைப் பற்றிய ஏக்க உணர்வையும் மட்டுமல்ல அவர்கள் சினமுறவும் இடங்கொடுத்துவிட்டே சென்றுள்ளனர்.
கொலைகாரர்களின் கூட்டுகள் யாருடன் இருந்திருக்குமென்பது குறைந்தது அதிகார பூர்வமாகவேனும் கொழும்பில் பல மாதங்களாக ஒரு மர்மமாகவே இருந்ததைப் பலரால் புரிந்து கொள்ள முடிந்தது. 1990ன் முற்பகுதியில் அப்போதைய கால ஓட்டத்தின் பொதுப் போக்கிற்கேற்ப கொழும்புப் பத்திரிகைகள் மக்களுக்கு முரண்பாடான செய்திகளைக் கொடுத்து வந்தன. வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் விடுதலைப் புலிகளின் பிரமுகர்கள் அமிர்தலிங்கத்தை ஏன் கொலை செய்தோம் என்பதற்கான காரணங்களைக் கூறிவரும் செய்திகளை கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ்த் தினசரியான "வீரகேசரி தாங்கி வந்தது. மறுபுறம் கொழும்பிலிருந்த விடுதலைப் புலிகளின் மூத்த பிரமுகர்கள் இக் கொலைகளில் விடுதலைப்புலிகளுக்குச் சம்பந்தம் உண்டு என்று கூறப்படுவதை மறுத்துக்கூறும் செய்திகளை ஆங்கில மொழிப் பத்திரிகைகள் பிரசுரித்து வந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் தாங்கள் தாம் செய்தோம் என்று உறுதிப்படுத்துதலும் இல்லை என்று மறுத்தலும் சில சந்தர்ப்பங்களில் ஒரே தினத்திலேயே வெளியானதுதான்.
இந்தக் கொலைகளைச் செய்தவர்கள் பாதுகாப்புப்படையினரால் ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழீழத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் தியாகிகளாகவும் கொண்டாடப்பட்டிருந்தனர். 1981ல் யாழ்ப்பாணத்தில் அரச உதவியுடன் நடத்தப்பட்ட பொலிஸ் அட்டூழியத்தின்போது மயிரிழையில் உயிர் தப்பிய யோகேஸ்வரன் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்து போயிருப்பாரானால் அவருமே நிச்சயமாக தமிழர் போராட்டதி தினி உ னினத தீ தியாகியாக

53
ஏற்றிப்போற்றப்பட்டிருப்பார். ஒரு குடும்பத்தின் தகப்பனைப் பிள்ளைகளே கொலை செய்ததற்கு சமமாக அமைந்த இந்தத் தேசியத்தலைவர்களின் கொலை நடவடிக்கையானது அரசியலிலோ அல்லது அதனை இயக்கும் அடிப்படைக் கொள்கைகளிலோ மாற்றங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அரசியல் நாயகர்களில்தான் மாற்றங்களைக் கொண்டு வந்தது.
தெற்கில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சியும் அதற்குக் கண்மூடித்தனமான கொலைகளின் மூலம் இலங்கை அரசின் இராணுவம் பதிலளிக்க முனைந்தமையும் பல ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவிப்பதில் போய் முடிந்தது. தமிழர் எழுச்சியின் போது அரசு மேற்கொண்ட கொடிய அணுகுமுறைகள் மேலும் மெருகூட்டப்பட்டு விட்டதையே இவை பிரதிபலிக்கின்றன. குவியல் குவியலாகப் பிணங்கள் எரியுண்டிருப்பது பற்றியும், அங்கங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் நதியில் சடலங்கள் மிதந்து செல்வது பற்றியும் நம்பகமான அறிக்கைகள் பல வெளிவந்துள்ளன. 1989ல் ஓர் உதவிப் பதிவாளர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகம் குரூரமான பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையின் அரங்காக மாறியிருந்தது, பல்கலைக்கழகத்தின் மத்தியில் அமைந்திருந்த குளத்தைச் சுற்றித் துணிடிக்கப்பட்ட பதினைந்து பேரின் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலிருந்தும் புனர்வாழ்வு மையங்களிலிருந்தும் மனம் போன போக்கில் பொறுக்கி எடுக்கப்பட்டவர்களே இவ்வாறு பலியானார்கள் என்பது பற்றி தென்னிலங்கையின் மனித உரிமைவாதிகளுக்கு நிறையத் தகவல்கள் கிடைத்துள்ளன. தென்னிலங்கையில் காணாமற் போன பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கை 240ற்கு மேலிருக்கும் என்றும் இது இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கிறது. தற்காலிகமாகவேனும் தமிழ்ப்பகுதிகளில் தற்போது அரசு காருண்யமுகம் காட்டி நிற்பதற்குக் காரணங்கள் உண்டு. இதே ஐ.தே.கட்சித்தலைமையில் தாங்கள் பெற்றிருந்த சரித்திரரீதியான அனுபவத்தையும் மீறி, தென்னிலங்கையை ஆழ்த்திக் கொண்டிருந்த இந்தத் துயரமான சூழ்நிலையில் ஜனாதிபதி பிரேமதாஸவின் புதிய தலைமையின் மீது நம்பிக்கை தெரிவிப்பதில் தமிழ்த் தலைமையின் கணிசமான பிரிவினருக்குக் கொஞ்ச நஞ்ச சந்தேகங்கள்தானிருந்தன.
உண்மையில் ஏதோ கொஞ்சம்தான் மாறிப் போயிருந்தது. இந்தச் சம்பவங்களை இயக்கிய சந்தர்ப்பவாதத்திற்கும் கொள்கையின்மைக்கும் பின்னால் மீண்டும் மீண்டும் ஒரே தன்மை வாய்ந்த குணாம்சங்களே செயற்பட்டுக் கொண்டிருந்தன. எதையாவது புதிதாகக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இந்த அரசியல் கதாநாயகர்கள் தாம் வகுத்த திட்டங்களிலும் தமது சித்தாந்த வசீகரிப்பிலும் தாமே நன்கு சிக்குண்டு கிடந்தனர். அவர்களின் ஒவ்வொரு அசைவுமே அப்போதைக்கு உடனடியாகத் தாங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பதற்கப்பால் நம்பிக்கையின்மையின் அறிகுறியாகவே அமைந்தது.

Page 289
538 உடனடி இலாபங்களுக்காகக் கூட்டுக்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த இச்சூழ்நிலையில், எந்த அரசியல் நாயகனும் எப்போதோ ஒருமுறை எவ்வாறு தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவனை முற்றாக ஒதுக்கித் தள்ளுவது என்பது இயலாததாகியது. இதனால் நிரந்தர அமைதிக்கான சாத்தியப்பாடுகள் மிக நீண்ட காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
12 தமிழ் தேசிய இராணுவம்
பழைய விடுதலைக் குழுக்கள் தாமே விரும்பி இயக்கத்தில் சேர்ந்தவர்களையே இந்தியாவில் பயிற்சிக்காக அனுப்பினரெனினும் இவர்களும் நாளடைவில் பொதுமக்களை வெறுக்கவும் நிந்திக்கவும் தலைப்பட்டிருந்தனர் என்பதை நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளோம். 1989 ஜூன் மாதத்தில் இந்தியா கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் இளம் பையன்களைக் கொண்டு தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கியது. இவர்கள் போர் புரிய விருப்பமில்லாதவர்கள் என்பதோடு சண்டையிடுவதற்கான தார்மீகக் காரணங்களையும் நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. இவ்வாறு மிகப்பெரும் சமூக நாசத்திற்கான தயாரிப்பிற்கு அரங்கம் தயாராக இருந்தது. இவர்களுக்கு இந்திய அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்பட்டது என்பது பெருந்தொகைச் சாட்சியங்களிலிருந்து நிரூபணமாகிறது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு 1989 ஜுன் முதலாம் திகதி ஜனாதிபதி பிரேமதாஸ் அறைகூவல் விடுத்தபோது இந்தியாவிற்கு ஏற்பட்ட தந்திரோபாயப் பிரச்சினைகளை ஊன்றி நோக்கினால் இது தெரியவரும். இந்தியா ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் கொண்டிருந்த உறவால் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ். போட்டிருந்த திட்டங்களுக்கெல்லாம் இந்தியா இவ்வளவு பெருந்தொகையைக் கொட்டிக் குவித்தது என்று சொல்வதற்கில்லை. 1989 செப்டெம்பர் 20ம் திகதியிலிருந்து இந்திய அமைதிப்படை தனது நடவடிக்கைகளை சம்பிரதாயபூர்வமாக நிறுத்தி வைத்திருந்தாலும் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட ஆட்கள் தப்பிப் போனதைத் தேடுவதற்காக அது ஊரைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபடவே செய்தது. தமிழ் தேசிய இராணுவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லையென்று இந்தியா வெளியில் சொல்லிக்கொண்டது.
அநாதரவான உணர்வுடன் எந்தவித இலட்சிய நோக்கமும் இல்லாத நிலையில் சும்மா சில வாரப்பயிற்சியுடன் அனுப்பப்பட்ட தமிழ் இராணுவப் படையினர் தாராளமாக ஆயுதங்களைக் கொண்டு திரிந்தாலும் அவர்கள் யுத்த களத்திற்குத் தீனியாக அனுப்பப்பட்டவர்கள்தான் என்பது புரிந்தது. உயிர் காத்துக் கொள்ளும் தேவை கருதியும் சில சமயங்களில் சுத்த வெறுப்பினாலும் உந்தப்பட்டதாகவே இவர்களின் நடவடிக்கைகள் அமைந்தன. தம்மைச் சுற்றிலுமிருந்த அதிகார சக்திகள் போட்டிருந்த திட்டங்களினால் எந்த நம்பிக்கைக்கும் இடமில்லாத சூனியத்தை நோக்கித் தள்ளப்பட்டிருந்த இவர்களில் பலர், ஏற்கனவே நல்ல நிலைமையில் வாழ்ந்த பலர் கஷ்டங்களை எதிர்நோக்கிய தருணங்களில் அவர்களுக்கு மனதை நெகிழ்விக்கும் வகையில் உதவிகளும் புரிந்துள்ளனர்.

539
1989 அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் அம்பாறையில் ஒரு கூட்டத்தில் இருந்த தமிழர்களை தமிழ் இராணுவப்படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு அங்கிருந்த 40 முஸ்லிம் மக்களை அங்கேயே கொன்று குவித்தனர். தமிழ் இராணுவப்படையின் சில உறுப்பினர்கள் சரணடைய முயற்சி செய்தபோது சக ஆட்களாலேயே அவர்கள் சுடப்பட்டனர். விருப்பமில்லாத தமிழ் இளைஞர்களையும் பள்ளிச் சிறுவர்களையும் கட்டாயப்படுத்தியே ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது என்று புலிகள் மிகப்பெரும் பிரச்சாரம் செய்திருந்தபோதிலும் புலிகளின் கைகளில் தமிழ் இராணுவப்படையினர் வீழ்ந்தபோது அவர்களின் தலைவிதியோ வேறு மாதிரி அமைந்தது. பலர் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டனர். வெற்றியுற்ற-கோபங்கொண்ட ஒரு இராணுவத்தின் கையில் சிக்கிக்கொண்ட மக்கள் எவ்வளவு துன்பத்திற்குள்ளாயினரோ அவ்வாறே மற்றவர்கள் துன்பம் அனுபவித்தனர். மட்டக்களப்பில் டிசெம்பர் மத்தியில் விடுதலைப்புலிகளின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, சரணாகதி அடைந்த 50 அல்லது அதற்கும் மேற்பட்ட தமிழ் இராணுவப்படையினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மற்றவர்களின் விஷயத்தில் மிகுந்த அனுதாப நோக்குடன் தமிழ் இராணுவப் படை உறுப்பினர்கள் பல சந்தர்ப்பங்களில் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள். டிசெம்பர் மாதம் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற சம்பவமொன்று இவர்களில் மிகப் பெரும்பாலானோரின் மத்தியில் குடிகொணடிருந்த ஆழ்ந்த அவநம்பிக்கையைப் புலப்படுத்துகிறது. வடமராட்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன் பாஸ் இல்லாத காரணத்தால் இந்திய அமைதிப்படையாலும் தமிழ் இராணுவப்படையாலும் தடுத்து நிறுத்தப்பட்டார். பின் அவனைப் பார்த்துக் கொள்வதற்கு தமிழ் இராணுவப் படையைச் சேர்ந்த பையன் ஒருவன் நியமிக்கப்பட்டிருக்கிறான். சுகவீனமாயிருக்கும் தன் தாயைப் பார்ப்பதற்கு அவசரமாகக் கிளம்பியதால்தான் தன் அனுமதிச்சீட்டை விட்டுவிட்டு வந்துவிட்டதாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட அந்த இளைஞன் அப்பையனிடம் சொல்லியிருக்கிறான். அந்தப் பையனும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, "எனக்கும் அம்மா இருக்கிறா என்று மெதுவாய் முணுமுணுத்திருக்கிறான். பின் அந்தப் பையன் அந்த இளைஞனிடம் தனது ஏகே 47 துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, "நான் உன்னைப் போக விட்டுவிட்டால் நான் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். இந்தத் துப்பாக்கியை எடுத்து என்னைச் சுட்டுவிட்டு நீ போய்விடு, நீ தப்பிப் போய் விட்டாய் என்று அப்போது அவர்கள் நினைப்பார்கள் என்று கூறியிருக்கிறான். இதைத்தன் செவிகளாலேயே நம்ப முடியாத அந்த இளைஞன் அப்பையன் உண்மையாகத்தான் அப்படிச் சொல்கிறான் என்பதை உணர்ந்தான். பின் அவன் அப்பையனிடம் கதைத்து அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான். பின் இன்னொரு தமிழ் இராணுவப்படை உறுப்பினன் வந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அந்த இளைஞன் தனது மச்சான் தான் என்று இந்திய அதிகாரியிடம் கூறி அவனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்திருக்கிறான்.

Page 290
540
ஈ.பி.ஆர்.எல்.எப்.பிற்குள்ளேயே இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பில் அதிருப்தி கொண்டிருந்த பலர் தங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த தமிழ் இராணுவப்படையினைச் சேர்ந்தவர்கள் தப்பிச் செல்வதற்கு முன்னின்று, உதவி செய்துள்ளனர். 1989 டிசெம்பர் மத்தியில் விடுதலைப்புலிகளால் நீர்வேலியில் விடுவிக்கப்பட்ட இவ்வாறு தப்பிய 9 பேர் தங்களின் உணவு மற்றும் வசதிகள் எல்லாம் மிகக் கேவலமாயிருந்தது என்று தெரிவித்துள்ளனர். குடிசைத் தரைகளில் படுக்க நேர்ந்த இவர்கள் மழையிலிருந்து நனையாமல் இருக்க சாக்குகளை அங்கு பயன்படுத்த நேர்ந்ததாம். தங்கள் தலைவர்களும் ரயில்வே சிலிப்பர் கட்டைகளில்தான் படுத்திருந்தார்களாம். சாவகச்சேரியில் சில அனுதாபமிக்க ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்கள் அவர்களைப் பண்டத்தரிப்பிற்கு மாற்றம் கேட்டுப் போகுமாறும் அங்கிருந்து அவர்கள் தப்பிப் போகத் தாங்கள் உதவலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பண்டத்தரிப்பில் அவர்களின் ஈ.பி.ஆர.எல்.எப். தலைவர் அவர்களை ஒடித்தப்புமாறு கூறிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றமைக்குண்டான தண்டனையைத் தான் அனுபவிக்கின்றேன். என்றிருக்கிறார். தண்டனை என்பது அவர்களின் அதிகாரம் மற்றும் வசதிகள் பறிக்கப்படுவதுடன் அவர்கள் அடிக்கவும் படுவார்கள்.
சில இடங்களில் டெலோவின் மனப்பாங்கு ஆச்சரியமுறத்தக்கவிதத்தில் அவர்களின் சுயமான யோசனையாக இருந்தது. யாராவது கட்டாய ஆட்சேர்ப்புக்காக அழைக்கப்பட்டால் டெலோவின் இராணுவப்பயிற்சிக்காகத் தாங்கள் ஏற்கெனவே பதிவுசெய்து கொண்டு விட்டதாக அவர்களுக்குக் கூறிவிடும்படி அங்குள்ள இளைஞர்களுக்கு அறிவித்ததன் மூலம் ஈபிஆர்.எல்.எப். மற்றும் ஈ.என்.டி.எல்.எப். ஆகியோரின் புண் ணியத்தில் டெலோ திருகோணமலையில் பெரிதும் பிரபல்யமாகி இருந்தது. பின் வெறும் கண்துடைப்புக்காக இவர்களைச் சில காலம் துப்பர்க்கியைத் தூக்கிக் கொண்டு திரியச்சொல்லி விட்டு பிறகு விட்டுவிடுவார்கள். வேறு இடங்களில் டெலோ இளம் வயதினரைக் கொண்டு சில பத்திரங்களைப் பூர்த்தி செய்து தரச் சொல்லிவிட்டு அவர்களைப் போக விட்டுவிடுவார்கள். இந்தப் பத்திரங்களை வைத்து இந்தியாவிடம் நிதி மற்றும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இது அமைந்தது.
தமிழ் இராணுவப்படையைச் சேர்ந்த பையன்கள் கொல்லப்பட்டபோது, 40, 60 அல்லது 100 என்று அது வரலாற்றின் பயணத்தில் வெறும் புள்ளிவிபரத் தகவலாகவே அமைந்தது. இந்தியாவுடன் கூட்டு வைத்துக் கொண்ட போராளிகள் கொல்லப்பட்டபோது பொதுமக்கள் அவர்களைத் துரோகிகள் என்று கூறி நிராகரித்து விட்டனர். அவர்களின் சோகக்கதை, அவர்களின் உள்ளார்ந்த வேதனைகள், பல சந்தர்ப்பங்களில் அவர்கள் காட்டிய மேன்மைக்குணம், வீரசாகஸம் ஆகியனவற்றைப் பற்றியெல்லாம் பேசுவார் யாருமில்லை. அவர்களின் சொந்த மக்களைப் பொறுத்தவரையிலும் அவர்களைப் புரிந்து கொள்ள முனைவது என்பது அநாவசியமான சுமையாக இருந்தது. புதுடில்லியின் அதிஉயர் மட்டங்களில் இருந்து கொண்டு திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர்களை விட இங்கு இவ்வாறு பலியாகிப் போனவர்கள் மிக உன்னதமான மனிதர்கள் என்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது.

541
13 தமிழீழ விடுதலைக்குழுக்கள்
தமிழ் விடுதலைக் குழுக்களில் ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ மற்றும் ஈ.என்.டி.எல்.எப். என்பன இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டன. புளொட் தனது அரசியற் கவர்ச்சியை இழந்திருந்தாலும் சண்டை செய்வதற்குரிய பலமான ஆட்களை வன்னிப் பிரதேசத்தில் கொண்டிருந்தது. 1980களின் முற்பகுதியில் அதற்குப் பெருஞ் செல்வாக்கு இருந்தபோது அது இப்பகுதியில் நிறைய ஆட்களைத் திரட்டியிருந்தது. 1987 அக்டோபருக்குப்பின் இந்திய அமைதிப்படையிலிருந்து வேறுபட்டு அது தானாக ஒரு பாதையை வகுத்துக் கொண்டியங்கியது. 1989ன் இறுதிப்பாதி ஆண்டின் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கப்படைகளின் உதவியுடன் நடத்தியதாகக் கூறப்பட்ட மிகப்பெரும் தாக்குதைைல இவர்கள் நின்று பிடித்தனர். 1990 ஜனவரியின் ஆரம்பத்தில் நடைபெற்ற கடுஞ்சண்டையின் பின் செட்டிகுளம் பகுதியிலிருந்து அகற்றப்பட்ட இவர்களின் தற்போதைய நிலைபற்றி ஒன்றும் தெளிவாய் தெரியவில்லை. தற்போது நிலவும் தங்களுக்கு விரோதமான சூழ்நிலைமையில் மிச்சம் மீதியுள்ள தனது செல்வாக்கைக்கொண்டு திருப்திப்பட்டுக் கொள்வதைத் தவிர அதற்கு வேறுவழியில்லை. அதன் தலைவர் உமா மகேஸ்வரன் 1989 ஜூலை மாதத்தில் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
ஈரோஸ் ஆனது ஒரு கட்டம் வரையில் அபாயத்தில் மாட்டிக்கொள்ளும்படியான காரியங்களில் இறங்குவதைத் தவிர்த்துக்கொண்டு விடுவதில் வெற்றிகரமாகவே இயங்கி வந்திருக்கிறது. அதற்கு நன்றி பாராட்ட யாருமில்லாவிட்டாலுங்கூட ஏதோ ஒரு அமைப்பாக அது இதுவரை நின்றுபிடித்து வந்திருக்கிறது. கொள்கைகளைக் கைகழுவிவிட்டு உயிர்வாழ்வதற்கான தந்திரோபாய வழிபாடுகளில் மூழ்கியதுதான் அதன் அரசியல் பலவீனமாக அமைந்தது. இந்தியாவுடன் விடுதலைப் புலிகள் யுத்தத்திற்குப்போனது அதற்கு அவ்வளவு சந்தோஷமான சமாச்சாரம் அல்ல எனினும் பின்னர் அது விடுதலைப்புலிகளுடன் ஒரு புரிந்துணர்விற்கு வந்திருப்பதுபோல் தெரிந்தது.
தங்களைக் கற்றவர்கள் என்று வெளித்தோற்றத்திற்குக் காட்டிக்கொண்டு எங்கு இலகுவாய் கோரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியுமோ அங்கு துப்பாக்கியையும் அச்சுறுத்தலையும் கைக்கொள்வதுதான் அன்றும் இன்றும் ஈரோஸின் நடவடிக்கையாக இருந்தது. திரு.கந்தசாமி காணாமல்போன விசேஷமான கதை இந்த இடத்தில் மிகவும் உதவக் கூடும். புனர்வாழ்வுப்பணிகளில் பூரண அர்ப்பணிப்புடன் செயலாற்றியவரும் பல்வேறு நிதிவழங்கும் அமைப்புகளின் நம்பிக்கைக்குரியவருமான திரு.கந்தசாமி தனது புலம்பெயர் வாழ்விலிருந்து திரும்பி 1988ன் ஆரம்பத்தில் வடகிழக்கில் புனர்வாழ்வுக்கான திட்டங்களைச் செயற்படுத்த முனைந்திருந்தார். இவர் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகச் செயலாளருமாவார்.

Page 291
542
தங்களுடைய அமைப்பு ஒன்றிற் கூடாக திருகோணமலையில் சில திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டுமென்று ஈரோஸ் இவரை வற்புறுத்தியிருக்கிறது. இந்த வற்புறுத்தலைப் பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதியாக நின்ற கந்தசாமி பின்பு அச்சுறுத்தப்பட்டிருக்கிறார். 1988 ஜூன் 19ம் திகதி கந்தசாமி கடத்தப்பட்டார். தனிப்பட்ட நபர்கள் பலர் கந்தசாமியை விடுவிக்கக்கோரி ஈரோஸ் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது கந்தசாமி மீது அகம்பாவத்தோடு பழிகூறும் வடிவிலேயே அவர்களின் பதில்கள் அமைந்தன. இருதய நோயாளியான கந்தசாமி பின்பு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். பின்பு கந்தசாமியைப் புகழ்ந்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் ஈரோஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது. கந்தசாமி விட்டுச் சென்றிருந்த ஆவணங்களில் அடங்கியிருந்த உண்மை விபரங்கள் லண்டனில் அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்களால் பின்னர் வெளியிடப்பட்டன. ஆவணங்களைச் சீராகப் பேணுவதில் வல்லவரான கந்தசாமி நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட செயலாற்றல் கொண்டவராவார்.
தேர்தல் நடவடிக்கைகளில் யாரும் பங்கு கொள்ளக்கூடாது என்று தடை விதித்து, அதற்காக ஏனைய கட்சிகளைச் சேர்ந்த இரண்டு வேட்பாளர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்திருந்த போதிலும் 1989 பெப்ரவரி 15ம் திகதி ஈரோஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பெரும் வெற்றி ஈட்டியது. விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதிலோ, கருத்துகளை வெளியிடும் சுதந்திரத்தைச் சகல கட்சிகளும் கெளரவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பதிலோ ஈரோஸ் எதுவுமே செய்ய முன்வரவில்லை. ஜனநாயகம் என்ற கொள்கைக்கான போராட்டத்தில் எழக்கூடிய எந்த ஆபத்துகளையும் எதிர்கொள்ளாமல் அது தனது பரிசைத் தட்டிக்கொண்டு விட்டது. ஈரோஸ் விடுதலைப்புலிகளுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டது.
1989 மார்ச் மாதம் ஈரோஸ் ஒழுங்கு செய்திருந்த பொதுப்பணி நிகழ்ச்சியின்போது ஈரோஸ் எம்பி கடுஞ்சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில் முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பொதுமக்கள் படும் அவலத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அவர்களின் நடைமுறைகள் எல்லா விதத்திலும் மனக்கசப்பைத்தான் அதிகரிக்கச் செய்திருந்தது. ஒளிவுமறைவாய் வேலைகள் பார்த்து லாபம் அடைந்து கொண்டிருப்பதாக எண்ணிய இந்திய ஆதரவுக் குழுக்கள் ஈரோஸ் ஆட்களை அவ்வப்போது பழி வாங்கினார்கள். 1989ன் முற்பாதி ஆண்டில் வன்னியில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் முகாமிற்குச் சென்றிருந்த ஈரோஸின் 6 உறுப்பினர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 1989ன் இறுதியில் இந்திய உளவுப்படையான றோவிடம் ஈரோஸ் பயிற்சி பெற்று வருவதைக் கண்டனம் செய்து விடுதலைப்புலிகள் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.

543
ஆரம்ப காலங்களில் ஈரோஸில் நன்னோக்கமும் ஆற்றல் மிகுந்தவர்களும் சேர்ந்திருந்தனரெனினும் பின்னர் அவ்வமைப்பின் சமரஸப் போக்குகளை அறிந்த அவர்களிற் பலர் பெரும் அதிருப்தி கொண்டிருந்தனர். ஈரோஸ் தலைமை நிலைமைகளை மீளாய்வு செய்து அவ்வமைப்பிற்கு ஒரு எதிர்காலத்தைத் தேடிக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐப் பொறுத்தவரையில், இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட இராணுவமயப்போக்கும், அதன் பிறகு புலிகளும் டெலோவும் வெற்றிகரமாக எழுச்சியடைந்ததும் முதலில் அதனை நம்பிக்கை இழக்கச் செய்து கடைசியில் பைத்தியக்கார நிலைக்கு இட்டுச்சென்று விட்டது. ஆரம்ப காலத்திலிருந்தே ஈ.பி.ஆர்.எல்.எப். ஆனது யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்கப் போக்குகளுக்கு எதிராக எதிர் நீச்சல் போடவேண்டியிருந்தது. இதன் ஆரம்பகால உறுப்பினர்கள் மார்க்ஸியக் கருத்துகளில் ஈடுபாடு கொண்ட திறமை மிகுந்த இளைஞர்களாக இருந்ததோடு, பள்ளிக்கூடங்களை விட்டுவிட்டு கிராமங்களில் அரசியல் வேலைகளில் ஈடுபடச் சென்றவர்களாகவும் இருந்தனர். ஆனால் இராணுவ சாகசங்களை நடத்திக்காட்டிய குழுக்களுக்கே பெருமளவு சமூகக் கெளரவமும் அவர்களுக்கே நிதியும் குவிந்த வண்ணமிருந்தன. ஈ.பி.ஆர்.எல்.எப். தனது சொந்த இராணுவமயமாக்கும் முயற்சியில் பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து பெருமளவில் ஆட்களை அணி திரட்டி அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய இலட்சிய உணர்வினை எழுப்பக் கூடிய-ஆதிக்கம் வகிக்கும் மேட்டுக்குடியினரின் கருத்தியலுக்குச் சவாலிடும் பிரக்ஞையை வழங்கக்கூடிய அரசியல் போதம் எதுவுமின்றி அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களைப் பற்றிய கெளரவமான உணர்வினை அவர்கள் மத்தியில் ஊன்றாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதமானது பொதுவில் சமூகத்திற்கு எதிராக அவர்கள் கொண்டிருந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வழிவகைகளைத் திறந்து விடுவதாகவே இருந்தது. மேலாதிக்கக் கருத்தியலுக்கும், தமிழ்ச் சமூகப் பாரம்பரியத்தின் ஒடுக்குமுறை அம்சங்களுக்கும் எதிராகச் சவால் விடுவதற்குப் பதிலாக இந்த அம்சங்களிலிருந்து எழுந்த பாரபட்சமான கருத்துக்களையே மீண்டும் பலப்படுத்துவதாகவே இது அமைந்தது. இராணுவவாத அமைப்பாக எல்.டி.டி.ஈ. திகழ்ந்ததால் அது எந்தவிதமான சமூகச்செயல் திட்டத்தினையும் கொண்டிராத நிலையில், சமூகத்தின் மரபு சார்ந்த சில கூறுகள் இவர்களுடன் அனுதாபங்கொண்டு தந்திரோபாயக் கூட்டுக்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் விடுதலை உத்வேகத்தை எழுப்பி அவர்களை அரசியல் சக்தியாக வார்த்தெடுத்துக் கொள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.ஆல் முடியாது போன அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் இதே வர்க்கத்திலிருந்து ஆட்களைத் திரட்டி அவர்களை இராணுவச் சக்தியாக வார்த்தெடுப்பதில் வெற்றி கண்டனர்.

Page 292
544
1987 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அமைதிப்படை புடைசூழ ஈயிஆர்.எல்.எப். மீண்டு வந்தபோது விடுதலைப்புலிகளைப் பழி வாங்க வேண்டும் என்ற வீறுடனும், மக்கள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த கசப்புணர்வுடனும் செயற்பட ஆரம்பித்திருந்தனர். இந்திய அமைதிப்படை இவர்களைப் பாவித்த விதத்தில் நாளடைவில் மக்களைச் சந்தேகிப்பவர்களாகவும். பொதுவில் அவர்களை வெறுப்பவர்களாகவும் இவர்களை மாற்றியிருந்தது. இந்தியப்படை முகாம்களில் இருந்துகொண்டு செயற்படும் அடி ஆட்களாகவும் உளவாளிகளாகவும் இவர்களை இந்திய அமைதிப்படை பாவித்த முறையானது அவர்களின் அரசியல் ஆளுமைகளை அடியோடு அழித்து விட்டது. மாகாணசபைகள் மூலம் அவர்கள் அதிகாரத்தைப் பெற்ற பின்னருங்கூட அவர்களிடம் போதுமான கட்சிக்கட்டுத்திட்டங்கள் காணப்படவில்லை. யாழ்ப்பாண மேன்மக்கள்குழு அரசியலில் பேசப்படாத யாழ்ப்பாணத்தின் பிற்படுத்தப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட நியாயமான குறைபாடுகளையோ, மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளையோ, வேறுள்ள பிரச்சினைகளில் முஸ்லிம் மக்கள் குறித்த பிரச்சினையையோ கையாண்டு இம் மக்கள் கூட்டத்தின் ஆதரவை அணி திரட்டிக் கொள்ள இவர்களால் இயலாது போயிற்று. விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பின் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இந்திய அமைதிப்படையின் சமிக்ஞைகளுக்கே காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். விடுதலையை நோக்கிய நகர்வுக்கு மாறாக, செல்வாக்குப் படைத்த வகுப்பினர் கையில் தாம் முன்னர் அடைந்த துயரங்களை விட இவர்களிடம் விவரிக்க முடியாத பெருங் கொடூரத்தையே பிற்படுத்தப்பட்ட மக்கள் தரிசிக்க நேர்ந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே மோசமான கொலைகள், அடி, உடைமை நாசம் ஆகியவற்றிற்குப் பெரிதும் இலக்காயினர். இந்திய அமைதிப்படையினரால் பிடிபடுவதென்பது அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள இம்மண்ணின் மைந்தர்களிடம் பிடிபடுவதைவிட அதிர்ஷ்டம் மிகுந்தது என்று சில சந்தர்ப்பங்களில் மக்கள் கருத ஆரம்பித்துவிட்டனர். இந்திய அமைதிப்படையின் கட்டாய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். பங்கு கொண்டது அதற்கு எந்த பலமும் இல்லை என்பதைப் பிரதிபலித்ததோடு யதார்த்தம் குறித்த பார்வையின்மையையுமே குறிக்கிறது. தமிழ் தேசிய இராணுவம் பாதுகாப்புத் தரும் என்று பாவனை காட்டி, அவர்களைத் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திய அமைதிப்படை 1990ன் முற்பகுதியில் வெளியேறும் சாத்தியப்பாடு தெரிந்ததும் இவர்களின் ஆத்திரம் இந்தியாவை விட மக்களுக்கு எதிராகவே திரும்பியது. தங்களின் நாசகார நடத்தையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர இந்திய அமைதிப்படையும் ஒன்றுமே செய்யவில்லை. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் அனுதாபப்படுவதாகக் கருதப்பட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடிய அபாயம் காத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை கடைசியாக நின்ற நாட்களில் அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐச் சேர்ந்த சில உறுப்பினர்களும் வேறும் தீவிரவாதக்

545
குழுக்களும் நியாயமற்ற ஒரு உத்தரவுக்கு எதிராக வாதாடிய யாழ் கச்சேரிக் கணக்காளரைக் கொலை செய்தது உட்பட பொதுமக்கள் மீது பெரும் அட்டூழியங்களை இழைத்திருந்தனர். மறுபடியும் வழமைபோல பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இந்த ஒழுங்கு முறையற்ற காட்டு தர்பாருக்கும் குருட்டு வெறித்தனத்திற்கும் எதிராக ஒன்றுஞ் செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தனர். சோஷலிஸ், ஜனநாயக இலட்சியங்களோடு தோற்றங்கொண்ட ஒரியக்கம் இறுதியில் தமிழ்ச்சமூகத்தின் மேலாதிக்கவாத அரசியலையே பலப்படுத்தி, அதனி அதிகார வன்முறைக்கும் சர்வாதிகாரக் கொடுங்கோன்மையை நோக்கிய நகர்வுக்குமே உத்வேகம் கொடுத்துவிட்டு, நீண்ட நெடுங்காலத்திற்கு ஒரு மாற்று வழிமுறைக்கான சாத்தியப்பாட்டினையே அழித்துவிட்ட பங்கினையே ஆற்றியிருந்தது.
தலைமைப்பீடத்திற்கு அவாவி நிற்பவர்கள் தங்களின் வாய்ப்புகளையும் அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும்போது, யாரைத் தாங்கள் பாதுகாக்க வேண்டுமோ அவர்களையே கொலை செய்யும் போது அவர்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனினும் இச்சூழ்நிலையைப் பார்த்து இதனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதென்பது நமக்குப் பயன்தருவதாகும். அதே நேரம் சமூகத்தின் பங்கினை, அதன் சந்தர்ப்பவாதத்தை, சுரணையற்ற தன்மையை, மேலோட்டமான தன்மையினை, இளம் ஆற்றல்களை மழுங்கச் செய்து நாசமாக்கி விடக்கூடிய அதன் அளவிறந்த ஆற்றலையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் கூறுகளின் அழிவேற்படுத்தும் தன்மையினையும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் பங்கினையும் ஆராய வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எப்.ன் ஆரம்பகாலத் தலைவர்கள் இளைஞர்களாக இருந்தபோது அரசியல் பணிகளில் இறங்கும்போது பின்பற்ற வேண்டிய உன்னத இலட்சியங்களால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். நமது சமூகம் அவர்களுக்கு ஆதரவையோ மரியாதையையோ செலுத்த முன்வரவில்லை. 1986 டிசெம்பர் மாதத்தில் அந்த இயக்கத்தினை விடுதலைப்புலிகள் தடைசெய்தபோதோ, 1987ல் புலிகளின் காவலில் வைக்கப்பட்டிருந்த அவ்வியக்கத்தின் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் புலிகளால் கொலை செய்யப்பட்டபோதோ, முதலில் அவர்களைச் சமூக விரோத சக்திகள் என்றும் பின்னர் துரோகிகள் என்றும் முத்திரை குத்தியபோதோ அவை குறித்து தீர்க்கமான எதிர்ப்பு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் அவர்களை அரசியல் வேலைகள் எதனையுமே செய்ய அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு அளித்தாக வேண்டிய கெளரவத்தையும் அழிக்கக்கூடிய வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். இத்தகைய ஒரு நிலைமைக்குள் தள்ளப்பட்டுவிட்ட ஒரு இளைஞனின் சினத்தை அரசியல்ரீதியிலோ தார்மீகரீதியிலோ நியாயப்படுத்த முடியாதெனினும் அதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

Page 293
546 இந்திய அமைதிப்படையின் கும்பமேளாவில் சங்கமித்ததும் ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் முன்னர் இணைந்திருந்த அதன் திறமை மிக்க பல தலைவர்களை அது இழக்க நேர்ந்தது. அதன் மிகப்பல தொண்டர்களுக்கு தங்களுக்கு மேல் ஒரு அவமானகரமான சாவு தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தவிரத் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதுபற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் திருகோணமலையின் மறைந்த தலைவர் ஜோர்ஜ் தம்பிராஜா 1987 ஆகஸ்ட் மாதம் திருகோணமலைக்குத் திரும்பிய போது தனது வகுப்பு நண்பர் ஒருவரிடம், "விடுதலைப்புலிகள் என்னை ஒருநாள் கொல்வார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அழிவதற்கு முன் அவர்களில் எவ்வளவு பேரை அழிக்க முடியுமோ அவ்வளவு பேரை அழிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
தனது அரசியலின் ஆரம்ப காலங்களில் அர்ப்பணிப்போடும் வசீகரத்தோடும் செயற்பட்ட இன்னுமொரு தலைவர், "நாங்கள். ஒரு காலத்தில் அரசியல் வேலை செய்திருக்கிறோம்தான். ஆனால் அதை யாரும் பாராட்டவில்லை. நாங்கள் இப்போது அரசியல் வேலை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. ஸ்டாலினைப் போல உயிர் வாழ்வதற்காக நாங்கள் சில முடிவுகளை எடுத்தாக வேண்டியிருக்கிறது. அதனால் கொலை செய்வது என்று இறுதியில் முடிவு செய்தோம்" என்கிறார்.
1986ல் ஒரு ஜனநாயக அமைப்பைப் பேணி, வேறு பிரபல்யம் மிகுந்த விடுதலைக்குழுக்கள் உட்கொலைகளிலும் வேறு கொலைகளிலும் திளைத்திருந்தபோதெல்லாம் தாங்கள் இத்தகைய போக்கிற்குச் சென்று விடாமல் பெரிதும் தவிர்த்துக்கொண்டு வந்த இந்த இயக்கம் அன்றிலிருந்து இன்றுவரை எங்கெங்கொ நீண்ட பயணம் நடத்தியிருக்கிறது.
ஈ.பி.ஆர்.எல்.எப். பொதுமக்களிடமிருந்து நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொண்ட இடத்தில் மன்னார் ஒரு இடமாகும். 1989 டிசெம்பரில் இந்திய அமைதிப்படை வெளியேறுவதற்கும் புலிகள் மீள நுழைவதற்கும் சில தினங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் ஆதரவில் நடைபெற்ற உதைபந்தாட்டப்போட்டிக்கு பாடசாலைகளைச் சேர்ந்த சில விளையாட்டு வீரர்கள் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். அவர்களை வழி மறித்துக் கேட்டபோது அப்படிப் போகாது விட்டால் தங்களுக்குத்தான் வீண் தொந்தரவு என்று சொல்லியிருக்கிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்கள் இதனால் பெரிதும் விசனமுற்றுக் காணப்பட்டனர். "உங்களை நாங்கள் தடுக்கவோ அல்லது உங்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தவோ போவதில்லை. இங்கு ஏதும் சண்டை நடக்கப் போகிறதோ என்றும் நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. நாங்கள் விலகிப் போகிறோம். இப்பகுதி மக்களுடன் நாங்கள் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவே எப்போதும் முயன்று வந்திருக்கிறோம். ஆனால் இப்போது நாங்கள் செய்யக்கூடியது எதுவுமேயில்லை. எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் வேறெங்காவது

547
மக்களுடன் தவறாக நடந்து கொண்டிருந்திருக்கக்கூடும் நாங்கள் இந்த ஊரை விட்டுவிட்டு ஏதாவது ஒரு நாட்டுக்குப் போகப் போகிறோம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
"என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பலரை நான் இயக்கத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் துரோகிகள் என்று சொல்லிக் கொல்லப்பட்டு விட்டனர். என்னுடைய பெற்றோர்கள் செல்வாக்குள்ளவர்கள்தான். நான் வசதியாக வாழ்ந்திருக்கலாம்தான். செத்துப் போன என் நண்பர்கள் துரோகிகள் இல்லை என்பதை நிரூபிப்பதற்குத்தான் நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருக்கிறேன் என்று இன்னொருவர் கூறினார்.
பொதுவாகவே பொதுமக்கள் மீது சந்தேகமும் இயல்புணர்ச்சியிலேயே ஒருவித அராஜகத்தன்மையும் கொண்டிருந்தபோதும் இந்தப் போராளிகளில் சிலர் தங்களுக்கு ஏதும் தீங்கு இல்லை என்று தெரிந்தபின் யாராவது திருப்பிச் சத்தம் போட ஆரம்பித்ததும் சிறிது காது கொடுத்து அவர்கள் சொல்வதைக் கேட்கிறார்கள். அவர்கள் இனிமேலும் ஒரு அரசியற்சக்தி இல்லையென்றும், இளைஞர்களாக இருந்தபோது ஏதாவது நல்ல பணிகளைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதியிருந்தாலும் இப்போது அவர்கள் மனநோயாளிகளாக மாறியுள்ளனர் என்றும் கூறப்படுவதை அவர்கள் மிகவும் பவ்யமாகச் செவிமடுக்கவே செய்கிறார்கள். தமிழ் தேசிய இராணுவம் ஒரு முழு நாசமே என்பதை அவர்களிற் சிலர் ஏற்றுக்கொண்டாலும் அதை யார் வளர்த்து விட்டார்கள் என்பதை மாத்திரம் சொல்லமாட்டார்கள். தமிழ் தேசிய இராணுவத்தைக் கலைத்து, பெற்றோரிடம் அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்து, மக்களின் முன் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதுதான் மக்களிடம் ஏதாவது நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொள்ள உள்ள ஒரே வழி என்றும் அவர்களிற் சிலர் கருதுகின்றனர். ஆனால் தலைமைப்பீடம் இதனை ஏற்றுக்கொள்ளுமா என்பதில் அவர்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. தங்களது பாதுகாப்பிற்கு அவர்கள் இந்தியாவையே தீர்க்கமாக நம்பியிருக்க வேண்டியவர்களாக உள்ளனர். பொதுமக்கள் முன் அனைத்தையும் ஒப்புக்கொள்வது என்பது பல விஷயங்களை வெளிக்கொணரச் செய்து இந்தியாவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும். பெரும் வல்லரசுகளால் பாவிக்கப்பட்டுவிட்டுப் பின்னர் அவர்களுக்குத் தொந்தரவாகக் கருதப்படுபவர்களின் துயரவிளைவுகளையே இந்தியாவைச் சார்ந்திருக்க வேண்டியவர்கள் காலப் போக்கில் அனுபவிக்க நேரிடும். பெருங்கவிழ்டமுற்று இந்தியக்கரையைச் சென்றடைந்து விட முடிகின்றவர்களும் 1983 ஜூலை மாதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த நிலைமைக்கு மாறாக மோசமான இழிவுபடுத்தலையும் வரவேற்பின்மையையுமே அங்கும் சந்திக்க வேண்டியிருந்தது.

Page 294
548
1.4 இந்தியாவும் இந்திய அமைதி காக்கும் படையும்
இந்தக் கதைப்பின்னலை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இது நம்மில் எழுப்பியுள்ள பலமான உணர்ச்சித் தளைகளிலிருந்து முதலில் நம்மை விடுவித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். மரணித்துப் போன தங்களின் பல தோழர்களுக்கு எதிர்முனையில் நன்றிகெட்ட ஒரு சனக்கூட்டம் என்ற விதத்திலேயே ஒரு சராசரி இந்திய அதிகாரி இதனை நோக்குவான். பொதுமக்களின் சாவு, வேதனை, ஆத்திரம் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்களுக்குத் தெரிந்த ஒரே வழியில் தாங்கள் எவ்வாறு பயிற்றப்பட்டார்களோ அதில் சிறிதும் பிசகாது தங்கள் வேலையைத் தாங்கள் செய்து முடித்துவிட்டதாக அவர்கள் திருப்தியுறவும் கூடும். நீங்கள் யாரையாவது குற்றஞ்சாட்ட வேண்டும் என்றால் அரசியல்வாதிகளைக் குற்றஞ்சாட்டுங்கள் என்று அவர்கள் கூறலாம். ஒரு ஏழ்மையான மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த இராணுவம் ஒன்றினைத் தூவிப்பதற்கு மேற்குலகில் காணப்படும் இனத்துவேஷ உணர்ச்சிக் கருத்துக்களைப் பாவிக்கப் பல தமிழர்கள் உந்தப்படுவார்கள். அது நேர்மையற்றது. கட்டுத்திட்டங்களுக்குட்பட்ட படையாக உபயோகப்படுத்துவதற்கான தொழில் ரீதியான திறமைகளை இந்திய இராணுவம் கொண்டிருக்கவே செய்தது. பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கைகள் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே நடத்தப்பட்டது.
அராஜகமும் அதன் விளைவாகப் பொதுமக்களின் உணர்ச்சிகளை மதித்து அதனைப் புரிந்து கொள்ள் மறுத்தமையும்தான் இந்திய இராணுவத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் நலன்களைக் கருத்திற்கொள்ளும்போது இந்நிலைமையை ஆழமாக ஆராய்வதற்கு மேலை நாடுகளிலிருந்து வந்தவர்களைவிட இந்தியாவிலிருந்து வந்த ஆய்வாளவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதாகும். மிகக் கஷ்டமான நிலைமைகளில் பயங்கரவாதத்தைப் பாவிப்பது பற்றித் திட்டவட்டமான தீர்மானம் எடுத்ததையும்விட மிகமோசமானது என்னவெனில் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட அரசியல் தீர்மானங்களாகும். தாங்கள் அரசியல்வாதிகளல்ல, இராணுவ வேலையை மட்டுமே பார்க்க வந்த இராணுவ வீரர்கள் மட்டுமே என்று அவர்கள் மன்றாட்டமாய் வேண்டிக்கொண்டாலும் பிரஜைகள் குழுக்களை அமைத்தல், பத்திரிகைகளைத் தணிக்கை செய்தல், விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல் போன்ற இன்னோரன்ன அரசியல் விவகாரங்களில் பரிசோதனைகள் செய்து பார்க்க அவர்கள் தமது அதிகாரங்களை மிகத் தாராளமாகப் பயன்படுத்தினர். 1988 அக்டோபரில் மாகாணசபைக்கான தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது கொலைக்கூடாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதென்ற தீர்மானம் இந்திய அமைதிப்படையின் அரசியல் தீர்மானமாகும். ஒழுங்கு

549
பேணப்பட வேண்டும் என்பதற்காக 1986ன் நடுப்பகுதியில் தொகைதொகையாக டெலோ உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதைச் சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டுவிட்ட சந்தர்ப்பவாத யாழ்ப்பாணத் தமிழர்கள் அதே காரணத்திற்காக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களையும் கொன்றொழிப்பதை மீண்டும் ஒருமுறை ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது சில அதிகாரிகளின் பேச்சிலிருந்து புலனாகிறது. இத்தகைய தீர்மானங்கள் ஈபிஆர்.எல்.எப். தலைமையில் நடந்த மாகாணசபை நிர்வாகத்திற்கு அழிவைத் தேடிக்கொடுத்த எதிர்மாறான பண்புகளையே நிர்ணயித்தது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய அமைதிப்படையின் நிலைப்பாடு விடுதலைப்புலிகளின் மீதான அரசியல் விமர்சனத்தை ஆதாரமாகக் கொண்டதன்று. உண்மையில் அமைதிப்படை அதிகாரிகள் விடுதலைப்புலிகள் மீது மிகுந்த அபிமானமே கொண்டிருந்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் இடத்திலிருந்த எந்த ஒரு இராணுவத்திற்கும் அரசியல் தீர்மானங்கள் என்பது நிச்சயமாக இன்றியமையாதனவேயாகும். அவ்வப்போது அவர்கள் காட்டிய அராஜகத்தின் முடிவுக்கு விடாமல் குறைந்தது இந்தியாவால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஜனநாயக விதிகளுக்கியையவாவது அவர்கள் நடந்து கொண்டிருந்திருக்கலாம்.
கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தமிழ் தேசிய இராணுவத்தை உருவாக்கியது ஒருவேளை இந்தியாவின் மன்னிக்கவே முடியாத தீர்மானமாக அமையக்கூடும். மக்களுக்குக் கணக்குக் காட்டியாக வேண்டிய பொறுப்பிலிருந்தும் சட்டபூர்வ நியாயத்திலிருந்தும் விலகிய நிலைமைகளில் தானி இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அமைதிப்படைக்கோ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப். தலைமையிலான நிர்வாகத்திற்கோ சட்டபூர்வ நியாயம் அல்லது மக்கள் ஏற்பு என்பதனைச் சம்பாதித்துக்கொள்ள முடியவில்லை. ஈவிரக்கமற்ற, கோபமூட்டும், இழிவுபடுத்தும் தோரணையில்தான் இது அமைக்கப்பட்டது. வீதிகளிலும் நீண்ட தூர பஸ்வண்டிகளிலும் புகையிரதங்களிலும் இளம் பையன்கள் பிடித்துக் கொண்டு செல்லப்பட்டனர். வறுமையான-அனாதரவான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எங்கே என்று தேடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்குமாய் அலைந்து சோர்ந்து பட்ட வேதனை வேறு. ஆயிரக்கணக்கிலான இந்தத் துர்ப்பாக்கியசாலிகளை எவ்வளவிற்கு முடியுமோ அவ்வளவிற்கு போராடிப்பாருங்கள் என்ற வகையில் குறைந்த பயிற்சியோடு ஆயுதங்களையும் கொடுத்து விட்டு விட்டார்கள். இந்தியா உட்பட அநேகமாக அனைவராலும் அவர்கள் கைவிடப்பட்டனர். மிகப்பலருக்கு கட்டாய ஆட்சேர்ப்பு என்ற இந்த ஒற்றைத்தனி நடவடிக்கை மட்டுமே இந்தியா ஒரு ஆக்கபூர்வமான பங்கினை நிறைவேற்றும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

Page 295
550 சமாதானம் கூறிக்கொள்ள முடியாத, பொறுப்பில்லாத, தநதிரோபாயரீதியிலும் பலவீனமான -ஏககாலத்தில் இவை எல்லாமுமான இந்த உயர்மட்டத் தீர்மானத்தைத் தூண்டியதுதான் என்ன? இந்திய அதிகார மட்டத்திலிருந்து இந்தக்கட்டாய ஆட்சேர்ப்பு ஆலோசனையை வழங்கியவர்கள் யார்? யாரின் நலன்கள் இதில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன? எவ்வளவு முட்டாள்தனமாய் இருந்தாலும் அதையும் சோதித்துப் பார்த்து விடலாமென்று வங்குரோத்தாகிக் போன அதிகார பீடங்களில் அமர்ந்துள்ளோரின் ஆலோசனைதான் இதுவா? 1988ம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்கலைக்கழகத் தூது கோஷ்டி ஒன்றிடம் இந்திய ஜெனரல் ஒருவர் பேசும்போது ஆயுதங்களை மீட்டெடுப்பது என்பது மிகமிகக் கஷ்டமான வேலையாக இருப்பதால், இதற்கு துப்பாக்கியில் விளையாடும் இந்த ராஸ்கல்களை இப்போதைக்கு உபயோகித்துக் கொண்டு பிறகு இவர்களிடமிருந்தும் ஆயுதங்களைக் களைந்து விட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார். இங்கு இந்திய ஆதரவுக் குழுக்களைத்தான் அவர் இப்படிக் குறிக்கிறார். தொழில்ரீதியாக அல்லாமல் துப்பாக்கி ஏந்தும் ஒவ்வொருவனும் அயோக்கியனே என்று அவர் மேலும் விளக்கங் கூறினார். ஆயுதங்களைக் களையும் நடவடிக்கையோடு தொடங்கி, இப்போது இந்தியாவால் ஆயுதங்கள் இடங்கள் தோறும் நிரம்பி வழிவதோடு, ஏற்கெனவே நடந்து முடிந்த விஷயங்களால் பிரமை தெளிந்திருந்தவர்களையும் இப்போது இந்தியா இராணுவமயப்படுத்தி வருகிறது. புனர்வாழ்வு குறித்து இப்போது பேச்சே கிடையாது.
இளம் இந்திய இராணுவ வீரர்களுக்கோ இது தாயக நினைவுகளை மீட்கும் நேரம், தையற்காரனிடம் தாங்கள் வாங்கிய புதிய காற்சட்டைகளை அவர்கள் சரிபார்த்துக் கொண்டிருப்பதை நீங்கள் வீதிகளில் காணலாம். இன்னுமொருவர் தான் புதிதாக வாங்கிய 'பொக்கெற் ரேடியோவை போட்டுப் பார்த்துக் கொண்டிருப்பார். இன்னும் நிலைமைகளை அறிய ஆவல் மிகுந்தவர்கள் பொதுமக்களுடன் சற்றே பேசிக்கொண்டிருப்பார்கள். "மன்னார் என்றால் மக்கள் அங்கு எங்களுடன் நன்றாக நடந்து கொள்வார்கள். யாழ்ப்பாணமென்றால் வித்தியாசமாக இருக்கிறது" என்றும் சிலர் சொல்வர். யாழ்ப்பாணத்தில் உள்ள பல வீடுகளில் யாராவது ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளனர். 'ஆக குழப்பம் ஆரம்பித்துவிட்டால் மற்றவர்களை விட்டுவிட்டு நீங்கள் கிளம்பிப் போய் விடுவீர்கள் என்று அவர்கள் கூறுவதையும் நாம் கேட்கலாம். எங்களைப் போலவே அவர்களும் எளிமையான மனிதர்களே சிறு விஷயங்களிலும் சாதாரண விஷயங்களிலும் எளிமையான சந்தோஷத்தை அனுபவிப்பவர்களே அவர்களும். எமது வளர்ப்பு முறையின் ஒரு பகுதியாக இந்தியாவே விளங்கியபோதும் எங்களின் பிரத்தியட்சமான சந்திப்புக்கள் பல கசப்பான நினைவுகளையே விட்டுச்சென்றுள்ளது என்பது வருந்தந்தருவதாகும்.
எந்தச் சிந்தனையுமில்லாமல் இந்தியா பாவித்துக் கொணி ட பல்லாயிரக்கணக்கான எங்களின் இளைஞர்களுக்கோ தாயக மண்ணின் நினைவுகள் என்பது என்றென்றைக்குமே கிட்டாத ஒன்றாகப் போய்விட்டது!

551
பின்னிணைப்பு 2
சுஜீஸ்வர சேனாதீர என்ற பத்திரிகையாளர் "மத்தியஸ்தர் ராஜீவை கோதாவிற்குள் இறக்கிய சயனைற் நாடகம்” என்ற தலைப்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே டைம் எம் (1-10-89) பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: புலேந்திரன் மற்றும் குமரப்பா என்னும் இரண்டு பிரதேசப் பொறுப்பாளர்கள் உட்பட 17 விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டமையும் திருப்புமுனையாக அமைந்தது என்ற கருத்தை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன உட்பட மிகப்பலர் ஏற்றுக்கொள்கின்றனர். இது பற்றி திரு.ஜயவர்த்தன ஒரு பேட்டியில் கூறும்போது, "நான் போட வேண்டிய குஸ்திச் சர்ை டையை தான் போடுவதற்காக மத்தியஸ்தர் ராஜிவ் கோதாவிற்குள் குதித்துவிட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த சுவாரஸ்யமான கதையின் உள் உண்மைகள் என்னவென்று இதுவரை கூறப்பட்டதில்லை. விடுதலைப்புலிகள், இந்திய அமைதிப்படையினர் மற்றும் மூத்த இலங்கை அதிகாரிகள் உட்பட மிகப்பலரிடம் நான் உரையாடிப் பெற்றுக்கொண்ட விபரங்கள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தபோது அந்தக்கதை பின்வரும் கோவை போல் அமைகிறது.
1987 அக்டோபர் 2ம் திகதி பாக்கு நீரிணையில் ஒரு படகு தென்படுவதாகவும் அது அநேகமாக ஆயுதங்களைக் கொணர்டு செல்லக்கூடுமென்றும் இலங்கைக் கடற்படைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இது இந்திய அமைதிப்படையிலிருந்து கிடைத்த தகவல்தான் என்று கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன. கடற்படையின் ரோந்து வள்ளம் ஒன்று உடனே அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இலங்கைக் $j !, நோக்கி ஒரு படகு விரைந்து கொண்டிருப்பதைக் கப்பற்படை வீரர்கள் அவதானித்திருக்கின்றனர். பின் அவர்களை விரட்டிச்சென்று இறுதியில் அவர்களைப் பிடித்துவிட்டனர். படகை நெருங்கியபோது அதில் துப்பாக்கி பொருத்தப்பட்டிருப்பதை கடற்படைவீரர்கள் அவதானித்ததும் தமிழ்த் தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் படகுதான் அது என்று தெரியவந்தனர். ஆனால் படகிலிருந்தவர்களைச் சரணடையுமாறு
கட்டளையிட்டபோது அவர்கள் சண்டையிட முன்வராது சரணடைந்தனர்.

Page 296
552
5
கைதிகளையும் படகிலிருந்த பெருந்தொகை ஆயுதங்களையும் காங்கேசன்துறைக்குக் கொண்டு சென்று அங்கேயிருந்த ஒரு இராணுவவீரன் புலேந்திரனை அடையாளம் காணும்வரை தாங்கள் பெறுமதி மிக்க ஆளைத்தான் பிடித்திருக்கிறோம் என்று கடற்படை வீரர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கெரில்லா கோஷ்டியுடன் சென்று ஹபரணையில் கித்துலொட்டுவ என்ற இடத்தில் இரண்டு பஸ்களை வழிமறித்து 128 அப்பாவி மக்களைப் படுகொலை செய்த அச்சமூட்டும் பயங்கரவாதத் தலைவன்தான் விடுதலைப்புலிகளின் இந்தத் திருகோணமலைப்பகுதிப் பொறுப்பாளர் புலேந்திரன் என்பதை ஒரு இராணுவவீரன் நன்கு அடையாளங்கண்டு கொண்டு விட்டான்.
பின் புலேந்திரனும் மட்டக்களப்பு விடுதைைலப்புலிகள் தலைவரும் இலங்கை இராணுவத்தின் துணைக்கமாண்டரான பிரிகேடியர் ஜயந்த ஜயரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டனர். »
கைதிகளிடம் ஆயுதங்கள் உள்ளனவா என்று சோதனை செய்யப்பட்டு அவர்களிடமிருந்த சயனைற் குப்பிகள் அகற்றப்பட்டன. பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததால் தாங்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவோம் என்று நினைத்ததால் புலிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று திலிப் யோகி கூறுகிறார்.
பிரிகேடியர் ஜயரட்ன (பின்னால் இவர் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டு 1988 அக்டோபரில் மரணமுற்றார்) இச்செய்தியை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அறிவித்ததும் அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு வருவதற்கு விரைவில் விசேஷ விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்று அங்கிருந்து இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்கள் சகாக்கள் கைது செய்யப்பட்டு விட்டதை அறிந்த புலிகள், இலங்கை அரசு தமிழ்ப் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதால் அவர்களை விடுதலை செய்து தரும்படி இந்திய அமைதிப்படை கமாண்டர் ஜெனரல் ரொட்ரி.ஸ் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெனரல் ரொட்ரி.ஸ் ஒன்றில் அவர்களை விடுதலை செய்யுமாறு அல்லது அவர்களை இந்திய அமைதிப்படையின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு பிரிகேடியர் ஜயரட்னவைக் கேட்டிருக்கிறார். கொழும்புடன் ஜயரட்ன தொடர்பு கொண்டபின் இந்தக் கைதிகள் கொழும்பிற்குத்தான் அனுப்பப்படுவார்கள் என்று அவர் இந்திய ஜெனரலிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் புலிகளின் சித்தாந்தவாதி டாக்டர்.அன்ரன் பாலசிங்கம் உட்பட சில விடுதலைப்புலித் தலைவர்கள் கைதிகளைச் சந்திக்க இணக்கம் தெரிவித்தனர்.

553
புலிகளுக்குப் பாதுகாப்பு வழங்க சில இந்தியப்படைவீரர்களும் அங்கு நிற்கவேண்டும் என்று இந்திய அமைதிப்படையின் பிரதம அதிகாரி கேட்டுக்கொண்டதும் கைதிகளைக் காவலில் வைத்திருக்கும் இலங்கைத் துருப்புகளுக்குப் பின்னால் பத்து யார் தூரம் தள்ளி இந்தியர்கள் நிற்கலாம் என்று பிரிகேடியர் ஜயரட்ன அதற்குச் சம்மதம் கொடுத்திருக்கிறார்.
இது நடந்து சில வினாடிகளில் 3000ற்கும் அதிகமான பெண்களும் குழந்தைகளும் பலாலி முகாமிற்கு வந்து இந்த 17 கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பலாலியில் இருந்த பிரிகேடியர் ஜயரட்னவின் தற்காலிக அலுவலகத்திற்குள் நுழைந்து புலிகளை விடுதலை செய்து விடுமாறு ரொட்ரிஃஸ் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
"கொழும்பிற்கு அவர்களைக் கொண்டு போக நீங்கள் முயற்சித்தால் வெளியில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பவர்கள் பலாத்காரமாக முகாமிற்குள் நுழைந்து விடுவார்கள். அவர்களை நாம் எவ்வாறு கட்டுப்படுத்துவது? பெணிகளையும் குழந்தைகளையும் எங்களால் சுடமுடியாது என்று அவர் வாதாடியிருக்கிறார். கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டியது தனது கடமை என்று பிரிகேடியர் ஜயரட்ன விளக்கமளித்திருக்கிறார்.
புலிகளை விமானத்தில் ஏறும்படிச் சொல்வதற்காக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஜயரட்ன சென்றபோது அவர் ஆச்சரியமடைந்து நின்றார். 17 விடுதலைப் புலிகளும் சயனைற் குப்பிகளை எடுத்துக்காட்டித் தங்களைக் கொழும்பிற்குக் கொண்டு செல்ல முயன்றால் தாங்கள் சயனைற்றை விழுங்கி விடப் போவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். (விடுதலைப்புலித் தலைவர்கள் அவர்களைச் சந்தித்தபோது இந்த சயனைற் குப்பிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.)
இந்தப் புதிய நிலைமையை ஜயரட்ன கொழும்பிற்குத் தெரிவித்திருக்கிறார். புலிகளை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பி வைக்கும்படி அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொலைபேசியை ஜயரட்ன கீழே வைத்தபோது இந்திய அமைதிப்படை கமாண்டர் மீண்டும் அவரிடம் சென்று, "அவர்களைக் கொழும்பிற்கு அனுப்பாதீர்கள். அவர்கள் இறக்க நேர்ந்தால் இங்கு இரத்த வெள்ளம்தான் ஒடும் என்று சொல்லி இருக்கிறார். "இல்லை. எனக்கு உத்தரவு வந்துள்ளது. அவர்களைக் கொழும்பிற்கு நான் அனுப்பியாக வேண்டும் என்று ஜயரட்ன பதிலளித்திருக்கிறார்.

Page 297
54
5
"உங்களுக்குக் கட்டளைகள் போடப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த இடத்திற்கு நீங்கள்தான் பொறுப்பாய் இருக்கிறீர்கள். அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய எந்த நடவடிக்கையையும் தவிர்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்று ரொட்ரி.ஸ் வாதாடியிருக்கிறார்.
ஜயரட்ன தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்ததும், விமானத்தை 12 மணித்தியாலம் காலந் தாழ்த்தியாவது அனுப்பும்படி ரொட்ரிஃஸ் அவரைக் கேட்டிருக்கிறார். "தீக்ஷித் (இந்தியத் தூதுவர்) இப்போது டெல்லியில் இருக்கிறார். மாலை 5மணி அளவில் அவர் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்து விடுவார். வந்ததும் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று கைதிகளை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைக் கும் படி ஜனாதிபதி ஜயவர்த்தனவிடமிருந்து அவர் உத்தரவு வாங்கி விடுவார் என்றும் சொல்லி இருக்கிறார்.
அதற்கும் ஜயரட்ன மசிந்து கொடுக்காத போது ரொட்ரிஃஸ் மிரட்டும் பாணியில் பேசியிருக்கிறார். ’கைதிகளை ஏற்றிக் கொண்டு உங்கள் விமானத்தை இங்கிருந்து கிளம்ப நான் விடப் போவதில்லை. விமான ஒடு தளத்தில் பி.எம்.பி (கவசவண்டிகள்)யைச் செலுத்துமாறு கட்டளையிடுவேன்' என்று ரொட்ரி.ஸ் அவரை அச்சுறுத்தியிருக்கிறார்.
"சேர், அப்படியானால் உங்கள் கவசவண்டிகளை நான் சுட வேண்டி வரும் என்று இலங்கை அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.
இருந்தும் இன்னொரு முயற்சியாக ஜயரட்ன மறுபடியும் கொழும்பிற்குத் +1லைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார். "இன்னும் இரண்டு ரித்தியாலங்களில் அந்தக் கைதிகளை நீர் இங்கு அனுப்பி வைக்காவிட்டால் உமது பொறுப்புகளை உமக்குக் கீழிருக்கும் அடுத்த கமாண்டரிடம் ஒப்படைத்து விட்டு கைது உத்தரவின் கீழ் நீர் கொழும்பு வர வேண்டும் என்று தான் மேலிடத்திலிருந்து அவருக்கு உத்தரவு வந்தது.
தனது படைவீரர்களில் பலம் மிகுந்த 34 பேரைத் தேர்ந்தெடுத்த ஜயரட்ன புலிகள் தங்கியிருக்கும் இடத்திற்கு சடுதியாக விரைந்து தான் சைகை கொடுத்ததும் அவர்கள் ധങ്ങിങ്ങ്) விழுங்கி விடாமல் தடுத்துவிடவேண்டும் என்று கூறியிருக்கிறார். டாக்டர்கள், அம்புலன்ஸ் வண்டிகள், வயிற்றை அழுத்தும் பம்புகள் அனைத்தையும் அவர் தயார் நிலையில் வைத்திருந்தார். பின் தனது படைவீரர்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நடந்தார். ஆனால் புலிகள் சயனைற் குப்பிகளை விழுங்குவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. புலேந்திரனும் குமரப்பாவும் வேறு ஏழு பேரும் உடனடியாக மரணமுற்றனர். நால்வர் ஆளப்பத்திரியில் மரணமுற்றனர். நால்வரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

55
5
பின்னிணைப்பு 3
யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் 1989 அக்டோபர் மாதம் 2ம் திகதி நடந்த ராஜனி திராணகம ஞாபகார்த்தக் கூட்டத்தை முன்னிட்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் சார்பில் ராஜன் ஹ°ல் ஆற்றிய உரை.
3.1 கலாநிதி ராஜனி திராணகம: மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR) அமைப்பில் அவர் வகித்த பங்கு
மனித உரிமைகளுக்கான பணியில் ராஜனியின் பங்களிப்பினை நெறிப்படுத்திய அவரின் தரிசன ஆழத்தை இதுபோன்ற ஒரு சிற்றுரையில் கொண்டுவந்து சேர்க்கும் கடினமான பணி நம்முன் உள்ளது. அவரின் தரிசனத்தைக் கோடி காட்டும் ஒரு சுருக்கமான மேற்கோளை அவரது எழுத்துக்களிலிருந்து எடுத்துக்காட்ட ஒருவர் விரும்பினால் பின்வரும் மேற்கோள் மிகப்பொருத்தமாக அமையும:
புறநிலை நோக்கும், சத்தியத் தேடலும், விமர்சன பூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும் எமது சமூகத்திற்கு இன்று மிக அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனைவிட்டால் நமது சமுகத்திற்கு வேறு மார்க்கமில்லை என்றரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்.
தான் கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ”முறிந்த பனை நூலுக்காக அவர் எழுதிய பின்குறிப்பிலிருந்தே இந்த மேற்கோள் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனம் போலத் தெரிந்தாலும் தீர்க்கதரிசியாக அவர் இருக்க விரும்பியதில்லை. அவர் என்ன கருதினார் என்பதை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த முயல்கிறேன்.
3.2 அரசியல் சீரழிவும் மனித உரிமைகளுக்கான பணியின் தாற்பரியமும்
1980களின் ஆரம்பகாலம் வரையில் தமிழ் இளைஞர்களின் கணிசமான பகுதியினர் உன்னத இலட்சியங்களால் உந்தப்பெற்று அரசியல் பிரச்சினைகளில் காத்திரமான அக்கறையைக் காட்டிநின்றனர். அநேகமாக அவர்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சினைகள் சமூக அநீதிகளும் அவற்றின் தேசிய, உலகளாவிய பரிமாணங்களாகவுமே இருந்தன. இன்று நமது போரட்டத்தில் விஷக்காற்றாக வீசிக்கொண்டிருக்கும் இனவாதம் அந்த நேரத்தில் கொஞ்சம்கூட இல்லாமல் இருந்தது ஆச்சரியம் தரும் விஷயமாகும். ஆனால் 1983 இனக்கலவரமும், நமது இளைஞர்களை இராணுவமயப்படுத்துவதில் வெளிநாட்டு வளங்களின்

Page 298
556 ஈடுபாடும், இராணுவச் சாதனைகளையே மண்டியிட்டுத் தொழுத தீவிர தேசியவாதத்தையும் அதன் உள்ளார்ந்த இயல்பேயான சகிப்புத்தன்மையற்ற மனப்பாங் கினையும் வேரூனிறச் செய்யும் ஒரு போக்கினையே உறுதிப்படுத்தியிருந்தது. ஒவ்வொரு அரசியற் போக்குகளும் தாங்கள் இரண்டாவதாக வருகிறோமோ, மூன்றாவதாக வருகிறோமோ என்ற அடிப் படையில் இதனையே நகல் செய்யும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது. நரபலிக் குழுக்கள் அதிகரித்தபோது அரசியல் செத்துப்போக நேர்ந்தது. இன்றைய பல்கலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரையில் எந்தவித சமூக, அரசியல் நடவடிக்கைககளிலும் ஒருவிதமான அக்கறையுமின்றி வாளாவிருக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ள எமது அண்மைக்கால வரலாறு நமக்குப் பரிச்சயமானதே. துப்பாக்கிகளே அனைத்தையும் தீர்மானித்தன. இத்தகைய அதிருப்திகரமான சூழ்நிலையில் போராளிக்குழுக்கள் கேள்விக்கிடமான பல்வேறு வழிகளிலும் மிகச்சிறு பிராயத்தவர்களைச் சேர்த்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் எதிராகத் தங்களை எவ்வாறேனும் பலப்படுத்தும் வழிவகைகளையே பார்த்துக் கொண்டிருந்தன. இந்த விஷயத்தில் இந்திய, இலங்கை அரசுகள் வகித்த பங்கு வெட்கக்கேடானது. இந்த இளம்பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ராஜனி பெரும் அக்கறை கொண்டிருந்தார். தாங்கள் என்ன செய்கிறோம் என்பதனையே புரிந்து கொள்ளமாட்டாமல் சாவினை வரவேற்றேயாகவேண்டிய நிச்சயமான உண்மை எனக்கருதிக் கொண்டிருந்த இளம்பிள்ளைகளின்மீது ஆழ்ந்த அனுதாபங்கொண்டிருந்த ராஜனி இத்தகைய இழிவான அடிமைத்தனத்திற்குள் அவர்கள் தள்ளப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக எதனையுமே செய்ய முன்வராத சமூகத்தின் அக்கறையின்மையின்மீதும் வெறுப்புக் கொண்டிருந்தார்.
நாம் முன்னர் குறிப்பிட்டிருந்த 1970களிலும் 1980களின் முற்பகுதியிலும்
இருந்த இளம் இலட்சியவாதிகளுக்கு என்ன நடந்தது? வெளிந்ாடு சென்றுவிட்டவர்களை விட அவர்களில் பலர் பணிணைகளிலும் தொழிற்சாலைகளிலும் கடைகளிலும் காணப்பட்டார்கள். பயிற்றப்பட்ட நுண்ணறிவு கொண்ட அவர்கள் தம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நிச்சயமாகப் புரிந்து கொண்டிருந்திருப்பர். தாங்கள் சேர்ந்து இயங்கத்தக்க அரசியல் சக்திகள் எதுவும் காணப்படாத நிலையில் இவர்களில் சிலர் விரக்தியுள் மூழ்கினர். என்ன செய்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று கருதிய சிலர் அமைதியாயிருப்பதுதான் உகந்தது என்று மெளனித்தனர். பொதுவில், ஒரு தரப்பினர் மற்ற தரப்பினைப் பூண்டோடு அழித்துவிடுவதென்ற நோக்கத்தில் ஏதோ ஒரு இராணுவ அமைப்பில் சேரவே வேண்டும் என்று நம்பிக்கொண்டு ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு துருவத்தில் வாழும் நிலையில் சமூகம் இருந்தது. மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகளுக்கு இதுவே அவசியமான முதற்படி என்றே நம்பப்பட்டது.

557
ஹோமரின் இலியாட் என்ற காவியத்தில் வரும் கருத்திலும் செயலிலும் கணத்துக்குக்கணம் மாறும் தெய்வங்களைப்போல இலங்கை, இந்திய அரசுக்கள் ஒருபுறம் செயற்பட்டுக் கொண்டிருக்க, ஒருபக்கத்தை இல்லாமல் அழிக்க இன்னொரு பக்கத்தில் எமது பையன்களை ஏவிவட்டு மார்தட்டும் விவகாரங்கள் மிக முக்கியமானவை எனக்கருதும் இன்றைய சூழலில, ஒருபக்கமும் சாராமல் அல்லது புறநிலையில் நின்று பார்த்தல் என்பதனை குறைந்தமட்டில் அர்த்தமில்லா ஒரு வெறும் ஆய்வுக்களப் பயிற்சி என்றோ இல்லையேல் பெரிய தடை போல - ஒரு பிரயோசனமுமில்லாத உபத்திரவமாகவே நோக்கப்படும்
மக்கள் முன்னால் தெரிவுசெய்துகொள்வதற்கிருந்த இவ்வாறன வழிமுறைகள் நாசகாரமானதென்றும் , அநீதியானதென றும் , மேலோட்டமானதென்றும், கோழைத்தனமானதென்றும் ராஜனியும் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவைச்சேர்ந்த மற்றவர்களும் நம்பினார்கள். இதற்கான ஒரு மாற்றுத்தீர்வினைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று ராஜனி உறுதியாய் இருந்தார். 1987 அக்டோபர் யுத்தத்திற்குப் பின் யாழ் பல்கலைக்கழகம் பற்றிய அவரது தரிசனத்தோடு இது மிகவும் நெருக்கமாயிருந்தது. இத்தகைய சூழ்நிலைமைகளில் பராமுகமாய் இருப்பது என்பது ஒரு பல்கலைக்கழகத்திற்கு வெட்கக்கேடான அக்கறையின்மை என்பது மட்டுமல்ல, இத்தகைய அலட்சியப் போக்கை ஒரு பல்கலைக்கழகம் கொண்டிருந்தால் அது பல்கலைக்கழகமாக இருப்பதற்கே லாயக்கற்றது என்று ராஜனி நம்பினார்.
நம்மைச்சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையினைப் பக்கச் சார்பின்றி எடுத்துரைத்தலும் இந்தத் துன்பியலை மக்கள் உணரச் செய்வதும் ராஜனியின் பார்வையில் அழிவிலிருந்து மீட்சிக்கான ஒரேயொரு பணியாகவே இருந்தது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழு (யாழ்ப்பாணம்) தனது முதல் இரண்டு அறிக்கைகளில் இதைத்தான் செய்து பார்க்க முயன்றிருக்கிறது. இந்தப் பணியைப் பற்றி விபரிக்கையில் ஒரு தளத்தை அல்லது 6616f 60L 2 (56.11555oß (Creating a space) என்ற பதப்பிரயோகத்தை ராஜனி பயன்படுத்தினார். நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிக் குறைந்தபட்சம் பல்கலைக்கழகத்திற்குள்ளேயாவது இது ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த உதவும் என்று அவர் கருதினார். அழிவிலிருந்து மீட்சி பெறுவதற்கான பயணத்தில் காத்திரமான விழுமியங்களும் பச்சைப் பாசாங்குத்தனத்திற்கும் அநீதிக்கும் எதிரான கோபாவேசமும் அரும்பெரும் சொத்துக்கள் என்று ராஜனி நம்பினார். இத்தகைய அரும்பண்புகள் பலவற்றைக் கொண்டிருந்த எமது கடற்கரையோரக் கிராமங்களின் பெண்களை அவர் பெரும் ஆதர்சமாகக் கருதினார். துணிச்சல்தான் இதன் சாரம் என அவர் நம்பினார். தங்கள் உயிரைப்

Page 299
558 பெரிதாய் மதியாத தன்மை ஒன்றினாலேயே கெளரவம் பெற்றுவிடும் நாசகாரச் சக்திகளின்மீது நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் நாமும் நாம் வரித்துக்கொண்ட கொள்கைகளுக்காக நம் சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் தயாராய் இருக்கவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார். இந்த இலட்சியத்திலிருந்து அவர் ஒரு துளிகூட அசைந்து கொடுக்கவில்லை.
3.3 மனித உரிமைகளும் அரசியலும்
ராஜனி அரசியலில்தான் பெரும் அக்கறை கொண்டிருந்தார். மனித உரிமைகளுக்கான பணியினை அனைத்திலிருந்தும் தனித்த ஒன்றாக நோக்குவது அவரிற்கு உடன்பாடற்றது. மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் பணியினைப்பற்றி விபரிக்கும் போது, ஒரு உயிர் என்பது அடிப்படையில் ஒரு உயிர்தான். ஒரு உயிரைக் கொல்லும் எவரும் எந்தவிதக் கட்சிச்சார்பு உணர்வுக்கும் அப்பால் சுயேச்சாபூர்வமாக அம்பலப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் ஒரு உயிருக்கு மதிப்பு அளிக்கிறோம் என்பதை முதலாவதாகக் கருதுகிறோம் என்பதை நாம் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்" என்று அவர் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன். மனித உரிமைகள் அமைப்பு அதன் பணியினுடைய சுயேச்சையான தன்மை காரணமாக எந்த அரசியற் கட்சியுடனும் இணைக்கப்பட முடியாது என்று அவர் கருதினார். ஆனால் மனித உரிமைகள் சம்பந்தமான உறுதியான ஈடுபாடு மிகுந்தவர்களாயிருக்கும் பட்சத்தில் வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாயிருக்கலாம் என அவர் கருதினார். ஒரு அரசியல் அமைப்பு மனித உரிமைகள் சம்பந்தமாக கரிசனை காட்டும் போது மனித உரிமைகள் அமைப்பு அதனை வரவேற்கவும் வேண்டும். இன்றைய எமது சூழ்நிலையில் மனிதஉரிமைகளைக் கெளரவித்து அதனைப் பாதுகாக்க முனையும் எந்த அரசியற் கட்சியும் நம்மிடம் இல்லை. மனித உரிமைகள் அமைப்பு தனது நேரத்தை அரசியற் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பதில் செலவிட்டுக் கொண்டிருப்பதா என்ற கேள்விக்கும் இடமில்லை. மேலைநாட்டில் உன்னதக் கல்விப் புலமைத் தராதரங்களைக் கொண்டிருந்தவர்களை ஆலோசகர்களாகவும், தமது தலைவர்களாகவும் கொண்ட இராணுவ அமைப்புகளையே உண்மையில் நாம் இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு உள்ளூர்த் தொண்டர் நீங்கள் சொல்வதை அனுதாபத்தோடு கேட்டாலும் உயர்மட்டத்திலிருந்து இம்மென்று உத்தரவு வந்ததுமே அவர் அதற்கு அப்படியே பணிந்துபோய் விடுவார். ஆகவே இன்றைய எமது நிலையில் மனித உரிமைகளைப்

559
பாதுகாப்பதற்கான பொதுமக்களின் கரிசனை மற்றும் தார்மீக அழுத்தங்கள் என்ற ஊன்றுகோலில்தான் மனிதஉரிமைகள் அமைப்பு நிலைபெறமுடியும். பல்கலைக்கழக சமூகத்திலிருந்து ராஜனி எதிர்பார்த்த குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளும் இவைதான்.
3.4 மாணவர்களின் மத்தியில் ராஜனியின் பணி
இந்த சமூகத்தில் ஊடாடித்திரிந்த மனித உரிமைவாதி என்ற வகையில் அவரின் பணி பன்முகத்தோற்றங்கொண்டது. பெண்களின் பிரச்சினைகளில் அக்கறை மிகுந்தவர் என்பதுடன் ஒரு மருத்துவர், ஆலோசகர் என்ற விதத்திலும் நம்பிக்கையின்மையின் விளிம்புக்கே தள்ளப்பட்டுவிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு முன்வந்து உதவிகள் நல்கியவர் என்ற வகையிலும் அவரது பணி பலவாறானது. இவற்றின் சில அம்சங்களைப் பற்றிப் பொருத்தமான பல பேச்சாளர்கள் இங்கு பேசிச் சென்றுள்ளனர். நான் முன்னர் கூறிய கருத்துகளுக்கு நடைமுறை சாத்தியமான தொழிற்பாடு உண்டு என்பது உணரப்படாவிட்டால் இது வெறும் அரூபக்கோட்பாடாகவே ஒலிக்கக் கூடும். பல்கலைக்கழக வாழ்விலிருந்து பெறப்பட்ட உதாரணங்களுக்குள் மட்டும் எனது உரையை வரையறுத்துக் கொள்ள விரும்புகிறேன்.
நோய்க்கூறான இச்சமூகச் சூழலில் பல மாணவர்கள் கடந்த காலங்களில் தாம் கொண்டிருந்த இயக்கத் தொடர்புகளாலும் எதனையும் சந்தேகிக்கும் சிந்தனைப்பாங்கு போன்றவற்றாலும் பிரச்சினைகளைக் கொண்டிருப்பர் என்பதனை ராஜனி அங்கீகரித்தார். நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட அக்கறை ஆகிய தொடர்புமுறைகளோடு திறந்த கலந்துரையாடல்களின் மூலம் அவர்களை ஆக்கபூர்வமான வழிகளில் நெறிப்படுத்த வேண்டுமென அவர் நம்பினார். அதற்கு ஒரு தொடக்கம் போன்று, ஒரு மாணவன் அல்லது மாணவிதான் தனது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டிருக்க-ராஜனி ஒருநாளும் ஒத்துக்கொள்ளமாட்டாத கருத்துக்களையே அவர்கள் கொணி டிருந்தாலும் - அக் கருத்துச் சுதந்திரம் மாணவர்களின் அடிப்படையிலான உரிமை சார்ந்தது என்று அவர் வாதாடினார். இங்கிலாந்திலிருந்து அவர் திரும்பியதும், தனது கிளினிக்கல் வேலையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு மருத்துவபீட மாணவன் 1989 ஜூலை 31ம் திகதி சுடப்பட்டு, காயமுற்றது குறித்து பல்கலைக்கழகம் எந்தவிதமான கண்டன முறைப்பாட்டையும் தெரிவிக்கவில்லை என்று ஆத்திரமுற்றார். ஆயுதங்களை ஏந்தித்திரியாத பட்சத்தில் எந்த அரசியற் கருத்தினையும் ஆதரிக்க மக்களுக்கு சுதந்திரம் உண டு என்று ஒரு பக்கம் பிரகடனப்படுத்திக்கொண்டு மறுபக்கத்தில் எந்தக் கேள்வியும் விசாரணையுமின்றி ஒருவரைச் சுட்டுவிட்டு சட்ட விரோதமான நடவடிக்கைகளில் அவர்

Page 300
560
ஈடுபட்டதாகச் சாக்குப் போக்குத் தெரிவிக்கும் இந்திய அமைதிப்படையின் மீது அவர் சினமும் வெறுப்புங்கொண்டிருந்தார். பல்கலைக்கழகம் அடிப்படையான கொள்கையினைப் பலியிட்டுவிட்டதெனி றும் மருத்துவப்பீடமாணவன் மீது துப்பாக்கிபிரயோகம் நடத்தியதைப்பற்றிக் காலங்கடந்து போனாலும் முறைப்பாடு செய்யப்படவே வேண்டும் என்றும் ராஜனி வலியுறுத்தினார்.
அரசியல் ஈடுபாடுகளுடைய ஒரு மாணவரின் பிரச்சினைகளைப்பற்றி அம்மாணவருடன் மணிக்கணக்கில் நேரஞ்செலவிட்டு உரையாடுவார். மாணவருக்கு அவ்வாறு உதவும் அதே நேரத்தில் அவருடைய அரசியற் கருத்துகள் அழிவையே ஏற்படுத்தவல்லது என்பதையும் அவருக்குத் திட்டவட்டம்ாக எடுத்துக்கூறுவார். அம்மாணவர் தனது போக்கினைக் குறித்து ஒரு மறுபரிசீலனை மேற்கொண்டு அதனின்று அவர் மேலும் வளர்ந்து செல்ல வேண்டும் என்பதே ராஜனியின் நம்பிக்கையாக இருந்தது. தன்னை விசாரணைக்காக வரச்சொல்லி இருக்கிறார்கள் என்று ஒரு மாணவன் ஒருமுறை ராஜனியை அணுகியிருக்கிறான். சித்திரவதை செய்கிற எவருக்கும் யாரையும் விசாரணை செய்வதற்குத் தார்மீக உரிமை இல்லை என்று ராஜனி கருதினார். அந்த விசாரணைக்கு அம்மாணவனைப் போக வேண்டாம் என்றும், அப்படிக் கேட்டால் அவரின் மாணவ ஆலோசகர் என்ற முறையில்தான் தான் அவரைப் போகவேண்டாம் என்று பணித்ததாகவும் சொல்லும்படிக் கூறினார். அந்தப் பிரச்சினை அத்தோடு முடிந்தது.
அவர் உயிர்களை மதித்தார். விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளியாக இருந்தாலென்ன, இந்திய இராணுவவீரனாக இருந்தாலென்ன யாரும் கொல்லப்பட்டபோது அதற்காக அவர் வருந்தினார். என்ன காரணங்களுக்காகத் தாங்கள் தமது உயிரை அர்ப்பணிக்கிறோம் என்பதே தெரியாமல் மரணித்தவர்களுக்காக அவர் பெருந்துயருற்றார்.
3.5 ராஜனியும் 1987 அக்டோபருக்குப் பின் பல்கலைக்கழகத்தைத் திருப்பித் தொடங்குதலும்
1987 அக்டோபரில் இந்தியத் தாக்குதலைத் தொடர்ந்து சமூகம் எதிர்நோக்கி நின்ற நெருக்கடி நிலையில் அவரது தளராத ஊக்கமும் கொள்கை உறுதியும் அபாரமாய் வெளிப்பட்டது. நல்லூர் கந்தசாமி கோயிலில் தங்கிய அகதிகளின் நிலைமையைப் பார்த்து நொந்துபோன அவர் ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுத உட்கார்ந்தார். பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்கச் செய்வதுதான் சமூகத்தைக் காப்பதற்காகச் சில வழிவகைகளையாவது மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கக்கூடிய சிறந்தவழி எனக் கருதினார். எங்களை வரச்சொல்லி விரிவுரைகளை நடத்தும்படி இந்தியர்கள் வந்து கேட்கும்வரை நாங்கள் இங்கு சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

561
தனது நண்பர்களிடம், விரைந்து போய் பல்கலைக்கழக ஆசிரியர்கள் உடனடியாகப் பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அவர் வேண்டினார். பல்கலைக்கழகத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் நவம்பர் 10ம் திகதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 15ம் திகதியன்று பல்கலைக்கழகத்திற்குள் போவதற்கான அனுமதி பெறப்பட்டு, நவம்பர் 18ம் திகதி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சந்திப்பது என்றும் ஒழுங்குகள் செய்யப்பட்டன. பல்கலைக்கழக வளவு அப்போது இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்கலைக்கழகம் சேதப்படுத்தப்பட்ட விதத்தைப் பார்த்து உறைந்துபோன பல்கலைக்கழக ஊழியர்களில் ஒரு பகுதியினர் வெளியாட்கள் வந்து இதைப் பார்க்கும் வரையிலும் - இச்சேதத்தை வெளியில் நன்கு பிரசித்தப்படுத்தும் வரையிலும் தாம் எதனையுமே செய்யக்கூடாது என்று கருத்துரைத்தனர். எங்களின் ரணங்களை வெளியில் காட்டி மற்றவர்களின் இரக்கத்தை யாசிக்கும் சமூமமாகத்தான் நாங்கள் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறோம் என்று ராஜனி குறிப்பிட்டார். இத்தகைய கோர நிகழ்வு மீண்டும் நடைபெறாது தடுக்கவேண்டுமானால் எங்களின் எதிர்காலத்தை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடிய திடசித்தம் நம்மிடம் உணர்டு என்பதை நாம் வெளிக்காட்டவேண்டும் என்று அவர் உணர்ந்தார். யுத்தத்தினால் அழிந்ததுபோக மிச்சம் மீதியாய் இருந்ததை வைத்துக்கொண்டு இதன் பின் வேலை ஆரம்பமாகியது. சற்றே தள்ளி ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த மருத்துவபீடத்திற்குள் முதலாக உள்நுழைந்த ஊழியர் ராஜனியேயாவார். இராணுவ வீரர்களுக்கு மக்கள் பயந்து போயிருந்த நேரம் அது. பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச்சட்டம் ஆரம்பித்து விடுவதால் பகல் 12 மணிக்கெல்லாம் வீதிகள் வெறிச்சோடிப்போய்விடும். ஆனால் ராஜனி தனி ஒரு பெண்ணாய் ஒரு தச்சாள் வேறும் ஓரிரண்டு பேருடன் மருத்துவபீடத்தில் கதவுகளுக்குப் பூட்டுகளைப் பொருத்தியவாறு சிலவேளைகளில் பிற்பபகல் 1.30 மணிவரை அங்கே நிற்பார். பாதுகாப்பான அறைகளுக்குள் அவருடைய மேற்பார்வையின் கீழ் வேலையாட்கள் தட்டச்சு இயந்திரம் மற்றும் உபகரணங்களைக் கொண்டுபோய் வைப்பதை என்னால் நினைவுபடுத்திப்பார்க்க முடிகிறது. மருத்துவ பீடத்திற்குள் திரிகிற இராணுவ வீரர்கள் ராஜனியை "அதிபர் அம்மா என்றே குறிப்பிட்டனர்.
ஒருமுறை ராஜனி மருத்துவபீடத்தை ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போது ஒரு சீக்கிய இராணுவவீரன் அவருடைய அறைக்குள் விரைந்தான். ராஜனி ஒரு டாக்டர் என்று தெரிந்து கொண்ட அவன் அங்கே உட்கார்ந்து தனது தனிப்பட்ட மருத்துவப் பிரச்சினையொன்றை அவருக்கு விபரித்தான். பங்களாதேஷை உருவாக்கிய 1971 யுத்தத்தின் போது அவனுக்குத் தலையில் ஒரு காயம் ஏற்பட்டிருந்திருக்கிறது. அவன் சண்டிகாரில் மருத்துவமனையில்

Page 301
562
சிகிச்சை பெற்றும் இன்றும் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். ராஜனி மிகுந்த அனுதாபத்தோடு அவனுடைய பிரச்சினையைக் கேட்டறிந்தார். மிகப்பலர் அதிலும் விசேஷமாக ஆசிரியத்துறை சாராத பல்கலைக்கழக ஊழியர்கள் தாம் உற்சாகத்தோடு என்ன விதமாய் இயங்குவது என்பதற்கு இவரிலேயே தங்கியிருக்குமளவிற்கு அவரது தைரியமும் முன்மாதிரி நடத்தையும் அமைந்தது.
போராளிகளைத் தாக்கி, எல்லாப்பழிகளையும் அவர்கள் மேலேயே போட்டுவிடுவதென்பது இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு அப்போது மிகச்சாதாரண விஷயமாக இருந்தது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தங்களுக்கு அந்தப் போராளிகளைத் தெரியாது என்றும் தாங்கள் நிரபராதிகள் என்றும் மக்கள், குறிப்பாக எமது பிரமுகர்கள், பொதுவில் இதற்குப் பதில் சொல்லித் தப்பித்துக்கொண்டிருந்தனர். "எங்களின் இந்தக் கோர நிகழ்ச்சிகளுக்கு சமூகம் என்ற வகையில் நாம் பொறுப்பேற்க வேண்டும். போராளிகள் எமது வரலாற்றின் ஒரு அம்சம், எமது சமூகத்தின் ஒரு பகுதியினர். போராளிகளிடமிருந்து செயற்கையாக என்னைப் பிரித்துத் தூரவைத்துக்கொண்டு அவர்களை நிந்தித்துக் கொண்டிருக்க என்னால் முடியாது’ என்று ராஜனி இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அவர்களின் முகத்திற்கு நேரேயே கூறி அவர்களுக்கு இதனைத் தீர்க்கமாகத் தெளிவுபடுத்தினார். எத்தனையோ ஆபத்துகளை ஏற்று சமூகத்தை இந்நிலைக்குக் கொணர்ந்த இளைஞர்கள், ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளவர்களையே மதிப்பார்கள் என்ற காரணத்தால் அந்த நேரத்தில்தான் எதிர்நோக்கிய ஆபத்துகள் அனைத்தையும் தான் எதிர் கொண்டிருந்திருக்கவே வேண்டும் என்று அவர் நம்பினார்.
3.8 யாழ் மருத்துவமனை
1987 அக்டோபர் யுத்தத்தையடுத்த சில வாரங்களில் ராஜனி பல்வேறு அலுவல்களில் மூழ்கிப்போயிருந்தார். யுத்ததத்தின்போது தாய்மார்கள், இளம் பெண்கள், வயதானவர்கள் எத்தகைய அனுபவங்களைச் சந்தித்துள்ளனர் என்பனவற்றைச் சேகரிக்குமுகமாக ராஜனி வேறு பெண்களுடன் சேர்ந்து தூர இடங்களுக்கெல்லாம் சைக்கிளில் போய்வந்திருக்கிறார். பாதை பூராவும் புள்ளியிட்ட மாதிரி காவல் நிலைகள். மக்களோ இன்னும் பயந்து போயிருந்தனர். அவர் பதிவு செய்தவை அனைத்தும் முறிந்த பனையில் வெளியாகியுள்ளது. பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களுக்கு உதவுவதிலும் ஆலோசனை வழங்குவதிலும் நெருங்கியவர்களின் மரணத்தின்போது அல்லது அவர்கள் காணாமற் போகும்போது அவற்றிற்கெல்லாம் கணிசமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். ராஜனி தன்னால் உதவ முடிந்த எதனையும் செய்யக்கூடியவர் என்ற செய்தி பரவ ஆரம்பித்ததும் பலரும் அவரது உதவியை நாடிப் போயிருக்கிறார்கள்.

563 1987 அக்டோபர் 21ம் திகதி இந்தியத் தாக்குதலின் போது 70 பேர் மரணமுற நேர்ந்த யாழ் மருத்துவமனைப் படுகொலை அவரது கரிசனையை ஈர்த்த முக்கியமான நிகழ்ச்சியாகும். ஈவிரக்கமின்றி இந்திய இராணுவம் அங்கு உள் நுழைந்து புரிந்த அட்டூழியங்கள் ஒருநாளுமே மன்னிக்கப்பட முடியாதென என்றே ராஜனி கருதினார். \
அச்சந்தர்ப்பத்தில் உண்மைகளை வெளிக்கொணர்வது பெரும் ஆபத்தானது என்றே டாக்டர்களில் பலர் கருதினர். தகுந்த சமயம் வரும்வரை காத்திருப்போம் என்றும் சிலர் நினைத்தனர். வைத்தியசாலை ஊழியர்கள் கொல்லப்பட்டதைக் குறித்து அஞ்சலிப் பிரசுரங்களை வெளியிடக்கூட அப்போது பயப்படும் சூழ்நிலையே இருந்தது. எவ்வளவு விரையில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட முடியுமோ அவ்வளவு துரிதமாய் அவை வெளிப்படுத்தப்படவேண்டும் என்றுணர்ந்த ராஜனி தான் முன்னர் பணிபுரிந்த யாழ் மருத்துவமனையில் வைத்தியசாலை ஊழியர்களைச் சந்தித்துப் பேட்டி காணும் நடவடிக்கையில் இறங்கினார். அவருக்கேயுரிய ஆளுமை வாய்ந்த எழுத்து நடையில் அவர் முறிந்த பனையில் எழுதிய ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்:
"அப்படியே இரவு பூராவும் இறந்துபோன சடலங்களுக்கடியில் சத்தமில்லாமல் படுத்துக்கிடந்தோம். ஆஸ்பத்திரிக் கங்காணிகளில் ஒருவர் இருமலால் அவதியுற்றபடி இரவில் ஒருமுறை இருமிவிட்டார். ஒரு இந்திய இராணுவவீரன் அந்த ஆளை நோக்கி கிரனைற்றை எறிந்ததில் அவரோடு சேர்த்து வேறும் பலரும் கொல்லப்பட்டனர். அம்புலன்ஸ் சாரதி இறந்து போனார் என்று எனக்குத் தெரியும். ஒரு இடத்தில் தன் கைகளை மேலே உயர்த்தியவண்ணம் ஒரு ஆள் எழுந்து நின்று கத்தினார்: "நாங்கள் ஒன்றுமறியாதவர்கள். நாங்கள் இந்திரா காந்திக்குத்தான் ஆதரவு அந்த ஆளை நோக்கி ஒரு கிரனைற் எறியப்பட்டது. அவரும் அவருக்கு அடுத்திருந்த அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர்.
'. குண்டுகள் வெடிப்பதைப்போல கிறனைற்றுகள் வெடித்துச் சிதறியபோது பயங்கரமான ஓசை எழுந்தது. அவற்றின் சிதைவுகளும் தூசும் அப்படியே எங்களில் ஒட்டிக் கொண்டதோடு இறந்தோரினதும் காயமுற்றோரதும் அப்போதுதான் சிந்தப்பட்ட ரத்தத்தில் படிந்து கொண்டது
37 பல்கலைக்கழகத்திற்கு ஒரு சவால்
வெறும் அரூபமான தத்துவத்திலல்ல, சமூகப் பிரக்ஞையின் தேவைகளிலிருந்து எழும் கருணையையும் உறுதியையும் வலியுறுத்தும் தத்துவத்திலேயே ராஜனி நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது மகத்தான துணிச்சல் அவரின் பொறுப்புணர்ச்சியில் வேரூன்றி நின்றது. நடைமுறையில் அவர் வெற்றிகரமாகச் செயற்பட்டார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும்

Page 302
564
இல்லை. அவரினி சேவைகளைப் பெறுமதி மிகுநீ த தென்று கொண்டாடிய சமூகம், அவரது பொறுப்புணர்ச்சியினை விஞ்சிச் செல்ல முடியாத அதி கோழைத்தனத்தையும் தற்காப்புணர்ச்சியையும் கொண்டிருந்ததால் ராஜனி மரணமுற நேர்ந்தது. தாங்கள் எந்த ஆபத்திலும் போய் மாட்டிக்கொண்டுவிடாமல், அதே ஆபத்துக்களை எதிர்கொள்ளுபவர்களின் தயவில் ஒட்டிக் கொண்டுவிடுவதுதான் புதிதிசாலித்தனம் என்று பிழைகி கதி தெரிந்தவர்கள் கருதிக் கொண்டனர். நம்முன்னால் நிற்பதோ நிச்சயமில்லாத ஒரு எதிர்காலம். சுற்றியிருப்பவர்களோ தமது தார்மீகப் பொறுப்புகளை உதறி எறிந்துவிட்டு பதவிகளை மட்டும் சிக்கெனப்பிடித்துக் கொண்டிருப் பவர்கள்; இந்த மாணவ சமூகத்தின் எதிர்கால நலன்களைப்பற்றி சிறிதளவேனும் அக்கறை கொள்ளாமல் தங்களின் பட்டங்களுடன் நழுவிப் போய்க் கொண்டிருப்பவர்கள். ஆம், இவர்கள் மத்தியில் ராஜினி ஒரு முட்டாள்தான்.
இந்த நெருக்கடியான துக்ககரமான நிலைமைகளில் பல மாணவர்கள் தங்களின் துணிச்சலையும் பொறுப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தவே செய்தனர். பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மிகப்பலர் மெச்சத்தக்க தலைமைத்துவத்திற்கான பண்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெளிப்பாடுகள் பல்கலைக்கழகத்தின் குணாதிசயங்களில் ஒரு பகுதியாக இணைக்கப்படாவிட்டால் இந்த வெளிப்பாடுகளில் பயனேதும் விளையப்போவதில்லை. பாராமுகங் கொண்டவர்களாகவும் மெளனம் சாதிப்போராயும் எம்மை மாற்றி வைத்துக் கொண்டிருப்பது எம்மைச் சூழ்ந்துள்ள அதிகார சக்திகளின் இயல்பான தன்மைக்குரிய அம்சமாகும். ஒரு சிறுகூட்டம் மாத்திரமே இந்த இலட்சியங்களைப் பற்றிச் சிந்திப்பவர்களாக இருந்தால் நாம் ஒரு பல்கலைக்கழகமாக இருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. தனித்து ஒதுக்கப்படும்போது களைத்துப் போவது மனித இயல்பே.

565
பின்னிணைப்பு 4
1988 நவம்பர் மாகாணசபைத் தேர்தலின் போது
50 பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளியிட்ட அறிக்கை
பிரமைகளைக் களையுங்கள்! யாழ் பல்கலைக்கழகம் அக்டோபரின் இறுதிப்பகுதி, 1988
1988 செப்டம்பர் 17ம் திகதி இந்தியத்துதுவர் ஜே.என்.தீக்ஷித் யாழ்ப்பாணப் பொதுமக்களின் பல்வேறு தரப்பினருடனும் யாழ் கச்சேரியில் கூட்டங்களை நடத்தினார். M
அவருடைய செய்தியின் சாராம்சம் இதுதான்: தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள நடைமுறைசாத்தியமான, புத்திபூர்வமான ஒரே ஒரு வழி தற்காலிகமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் வட, கிழக்கு மாகாணத்திற்காக நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கு கொள்வதாகும். அரசியல் வெற்றிடத்தை இட்டு நிரப்பவும் சிக்கல் மிகுந்த குடியேற்றத்திட்டம் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும். தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை அதிகாரப்பரவலாக்கத்தை யதார்த்த நடைமுறையாக்கி, சமாதானத்தையும் சாத்தியமாக்கும்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் கூறுவது சரி போலத் தோன்றக்கூடும். ஆனால் இது நடைமுறை யதார்த்தத்தோடு ஒத்துப் போகக்கூடியதா?
இவர்கள் கூறுகிற தேர்தல் நடைமுறைகளில் மக்கள் பங்கு கொள்வது என்பது இன்று சாத்தியம்தானா?
சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்பது யார் துப்பாக்கியை வைத்திருந்தாலும் சரி துப்பாக்கி முனையில் மக்களை நெருக்குதலுக்கு ஆளாக்காமல் அவர்கள் தாமே சிந்தித்து முடிவு மேற்கொள்கிற ஒரு சூழ்நிலை அமைந்திருக்க வேண்டும் என்பதை முன்அனுமானம் செய்கிறது.
இன்றைய யதார்த்தம் என்ன? தனிநபர்களோ அல்லது சமூக அமைப்புகளோ இன்று தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பலமனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தங்களின் குரலைச் சரியாக உயர்த்த முடியாத நிலையிலேயே உள்ளன என்பதை நாமறிவோம். மக்கள் பீதியில் வாழ்கின்றனர். விட்டும் தொட்டும் இந்திய அமைதிப்படை மற்றும் பல்வேறு ஆயுதந்தாங்கிய விடுதலைக் குழுக்களின் புண்ணியத்தில் மக்கள் எதிர்காலம் குறித்து எந்தவிதமான நிச்சயமும் இல்லாமல் பயங்கரத்தால் மெளனிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர். தேர்தல் நியமன காலத்தின் போது நிலைமை மேலும் மோசமாகி விட்டது. அநேகமாக ஒவ்வொரு நாளும் பழி வாங்கும் கொலைகள் நடந்தவண்ணமேயுள்ளன. ஒரு பாவமும் அறியாத மத்திய வயது ஆண், பெண்கள்தான் இவ்வாறு பலியாகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் இந்திய அமைதிப்படையும் இந்த அநியாயங்களுக்குத் துணை போயிருக்கிறது என்பதும் அனைவருக்கும்

Page 303
566
தெரிந்த விஷயமே. இந்திய அமைதிப்படைக்கும் பிற பெரும் விடுதலை இயக்கங்களுக்கும் பயந்துபோன நிலையில் இதற்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் தைரியமோ அல்லது வழிவகைகளோ யாரிடத்திலும் இல்லை. இந்த மாதிரி ஒரு நிலைமையில் சுதந்திரமான, நீதியான தேர்தல் என்று சித்திரித்துக் காட்டப்படும் இத்தேர்தலில் மக்கள் பூரண பங்கேற்க வேண்டும் என்று இந்தியா வெகுவாக முனைவது கேலிக்குரியது. அதிலும் விசேஷமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நம் சமூகத்தில் இத்தகைய அரசியற் சூழலைச் சிருஷ்டித்ததில் இந்தியாவும் ஒரு பகுதிப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.
மக்களை ஒரங்கட்டும் விதத்தில் இந்தியா தலையிட்டுச் செயற்பட்டமை 1983ல் இந்தியா விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியதிலிருந்தே ஆரம்பமாகிறது. இவர்களில் பலர் இந்திய மண்ணிலேயே நடத்திய பெருந்தொகைக் கொலைகள் உட்பட பல குற்றவியல் நடவடிக்கைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டன. சகல குழுக்களுக்கும் பொதுவான பெரும் போஷகராக இந்தியாவே திகழ்ந்தாலும் பல்வேறு குழுக்களுக்கிடையிலான பிரிவினைகளும் மோதல்களும் துரிதகதியில் அதிகரித்துச் சென்று ஒருவரையொருவர் அழித்தொழிக்கும் எல்லை வரை சென்று விட்டது.
இந்தப்பிரிவினைகளைப் பேணுவதன் மூலமே இந்தியாவின் சொந்த நலன்கள் பாதுகாக்கப்படுகிறது என்று கருதுவதில் தவறில்லை என்றே கூறத்தோன்றுகிறது. இந்தத் தீவிரவாதக் குழுக்கள் பெரும் இராணுவ அமைப்புகளாக வளர்ந்து இந்தியாவின் ரகசிய மாநில ஏஜெண்டுகளாகச் செயற்படுவது உள்ளி. வெவ்வேறுபட்ட நலன்களுக்கு சேவகம் செய்வனவாக மாறிப்போயிருந்தன. இந்தக் குழுக்களின் நடவடிக்கையின்மீது மக்களுக்குச் சுத்தமாக எந்தக் கட்டுப்பாடுமே இல்லாமலிருந்தது. சமூகத்தில் கொலைகள் நிகழ்ந்த வீதமும் அளவும் இவை உருவாக்கிய சூழலும் சேர்ந்து மக்களைப் பயங்கரத்திலேயே வாழவிட்டுவிட்டது. ஒரு வழிவகையும் தெரியாத நிலையில் அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க நேர்ந்தது. இவ்வகையான கடந்த காலங்களும் நிகழ்காலமும் சாத்தியமான ஜனநாயக அரசியல் நடைமுறைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் தாங்கள் மேற்கொள்ளப் போகிறோம் என்று இந்தியா கோரும்போது அது இந்தியாவைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
சட்டபூர்வமாக தேர்தல்கள் நடைபெற்றாலும் தமிழ்மக்கள் தம் பிரதிநிதிகளாக யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? இத்தனை பிரிவுகளும் ஸ்திரமற்ற நிலையும் காணப்படும் சூழலில் ஆள்பவர்களைத் தவிர மக்களின் பிரதிநிதிகளாகச் செயற்படக்கூடிய யாரையாவது "சிந்தித்துப் பார்ப்பதுகூட இயலாத காரியமாய் உள்ளது. இந்தியாவும் பல்வேறுபட்ட குழுக்களும் தத்தம் நலன்களை எவ்வாறு நோக்குகின்றன என்பதைப் பொறுத்துத்தான் எதிர்காலத் தேர்தல் நடைமுறைகள் தீர்மானிக்கப்படும். கொலையும் அரசியற் படுகொலைகளும் மேலோங்கியிருப்பதால் உக்கிரமாகிப் போய்விட்ட பழக்கங்களிலிருந்து எழுகின்ற பிரச்சினைகளைத் தேர்தல் விளைவுகள் ஒருபோதும் தீர்த்து வைக்கப்போவதில்லை. இத்தகைய சூழலில் எழுந்துள்ள உணர்ச்சிகள் தணிந்து, மக்கள் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை

567
வெளியிட முன்வரும் வரை தேர்தல்கள் எந்தவிதமான ஆர்வத்தோடும் வரவேற்கப்படமாட்டாது.
பெரும்பாலான தமிழர்கள் இந்தியாவை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறார்கள் என்பதைச் சொல்லித்தானாக வேண்டும். இருசாராருக்கும் சமய, கலாச்சார பிணைப்புக்கள் உள்ளன. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களை விசுவாசத்தோடு பின்பற்றுவோர் இங்குள்ளனர். இதனைவிட அண்மைக்காலத்தில் அரச உதவியுடன் இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளின் போது நாட்டைவிட்டு ஓடிய தமிழர்களை அரவணைத்து புகலிடம் கொடுத்தவர்கள் இந்தியர்கள் என்ற நன்றியுணர்வும் தமிழர்க்கு உண்டு. இலங்கை அரசின் இனத்துவேஷத்தை சர்வதேசரீதியல் அம்பலப்படுத்தியதில் இந்தியா அதிக பங்கேற்றிருக்கிறது. ஆனால் 1987 அக்டோபருக்குப்பின் நிலைமைகள் துரிதமாக மாறத்தொடங்கி விட்டன.
1987ன் இறுதி மாதங்களில் இந்திய இராணுவம் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் -ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொலை செய்ததும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதும், இன்றுவரை தடுப்புக்காவலில் சித்திரவதைக்கும் சாவுக்கும் இலக்கானவர்கள் தங்கு தடையின்றித் தொடர்வதும்தான் இந்தியாவின் மேல் தமிழருக்கிருந்த நம்பிக்கையில் விரிசலேற்படக் காரணமாயிருந்தது. இந்தக் குரூரமான யதார்த்தங்களையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு தந்தையின் தோரணையிலும் அச்சுறுத்தும் தொனியிலும் இந்தியா பேசமுயலும் போது எமது சொந்த பலவீனங்களால் தானி இவையெல்லாம் அனுமதிக்கப்படுகின்றன என்பதை சமூகம் உணரவேண்டும். சமாதானத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு இந்தியாவின் தயவை நம்பியிருப்பதில் உள்ள பிரச்சினைகளைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சமூகத்தின் வளமான எதிர்காலத்திற்கான திறவுகோலாக தற்போதைய தேர்தல்கள் திகழும் என்பது இன்று பெரும் சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது. இதற்கெல்லாம் மாற்று என்ன? மக்களுக்கு ஒரு பலமுமில்லை என்பதைப் பிரகடனப்படுத்திவிட்டு எல்லாமே இந்தியாவின் தலையீட்டால்தான் வந்தது என்று குற்றஞ் சுமத்திக் கொண டிருப்பது பொறுப் பற்றதுமி நம் மை நாமே அழிக்கக்கூடியதுமாகும. இத்தகைய நிலைப்பாடுகள் சமூகம் இன்று அமிழ்ந்துள்ள புதைசேற்றிலிருந்து அதனை விடுவித்துக்கொள்ள ஒரு சிறிதும் உதவாததோடு வெறுமனே இந்தியாவைத் திட்டித் தீர்த்தல் என்பதில்தான் கொண்டுபோய் விடும். இது இப்போதும் முன்முயற்சிகளையும் கட்டுப்படுத்தும் ஆதிக்கத்தினையும் வெளிச்சக்திகளின் கரங்களிலேயே விட்டுவிடச் செய்யும்.
இலங்கை, இந்திய அரசுகளுடனான நமது உறவுகளை மட்டுமல்ல, எம்மையே நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். நம் சமூகத்திற்குள்ளேயே பயங்கரவாதத்திற்கு நாம் வந்தனை செய்து நிற்பதும், எமது சந்தர்ப்பவாதமும் பெருவாரியான உட்கொலைகளின்போது கொள்கைப்பிடிப்புகளை இழந்து நின்றதும் போன்ற அதே ஆயுதங்களை வைத்தே வெளிசக்திகள் நம்மைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதை இவை இலகுவாக்கி விட்டன. எம் சமூகத்திற்குள்ளேயே ஜனநாயக விரோதப் போக்குகளை ஆட்சேபனை

Page 304
568 எதுவுமின்றி நாம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில் ஜனநாயகத்திற்காக நாம் கூக்குரலிடுவது அர்த்தமற்ற நடவடிக்கையாகப் போய்விட்டது. அரசியல் சக்திகளுக்கு எதிராக விமர்சனக்குரல் எழுப்பிய பல தனிநபர்களும் இளைஞர்களும் பழிவாங்கப்பட்டோ, விரட்டப்பட்டோ அல்லது நாம் பார்த்துக் கொண்டிருக்க கொலை செய்யவோ பட்டனர்.
ஆகவே மக்கள் இழந்து போன தமது சுயநம்பிக்கை, பெருமைகளை மீண்டும் பெறுவதாயின் கொள்கை அடிப்படையிலான கூட்டு நடவடிக்கை என்ற வழியில் இயங்க ஆரம்பிக்க வேண்டும். அறிவு பூர்வமாயும் உணர்வு பூர்வமாயும் நாம் வரித்துக்கொண்டு விட்ட உலகளாவிய விழுமியங்களை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இத்தகைய ஒரு ஈடுபாடின்மைதான் மற்றவர்களின் பிள்ளைகள் விஷயம் என்றதும் கொலையுடனும் நாம் சமரசம் செய்து கொண்டுவிட்டு, பின் அந்தப் புற்றுநோய் வளர்ந்து எமது சொந்தக் குழந்தைகளையே அச்சுறுத்தியபோது பீதியோடு அனாதரவாகப் பார்த்துக் கொண்டு நிற்கவேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது. கடந்த காலங்களில் நாம் காட்டிய அக்கறையின்மைக்கான விலையைத்தான் இப்போது நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
திரும்பி நின்று பார்க்கும்போது மக்களாக, உத்தியோகஸ்தர்களாக, நிறுவனங்களாக அல்லது தொழிற்சங்கங்களைச் சார்ந்த சாதாரண தொழிலாளர்களாக நாம் கூட்டாக ஒன்று சேர்ந்து நிற்க முடியாமற் போனதில் இரண்டு அம்சங்களை அவதானிக்க முடிகிறது. முதலில் அடிப்படையான கொள்கைகளில் நாம் குழப்பமுற்றவர்களாய் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான எந்த இணக்கத்திற்கும் வரத்தவறிவிட்டிருக்கிறோம். இரண்டாவது, ஒருவர் உறுதியாக நிமிர்ந்து நின்றாலும் அடுத்திருப்பவர் காலை வாரிவிட்டு அவரை அபாயத்திற்குள் தள்ளி விடுவாரோ என்ற அச்சம். இதனால் உண்மையோ பொய்யோ தனிப்பட்ட சில அச்சுறுத்தல்கள், அல்லது துப்பாக்கியைப் பற்றிய சாடையான பேச்சுக் கூட ஸ்தாபனங்களை மூடிவிடப்போதுமான காரணமாக இருந்தது. தொழில் செய்தல், சேவைகளை நல்குவதில் உள்ள பெருமித உணர்வுகளை இழந்து அவற்றை இரண்டாந்தரமானவையாக்கி நமது மனிதாபிமானங்களை நாமே அழித்து விட்டிருந்தோம்.
அழுத்திக் கொண்டிருக்கும் பல பிரச்சினைகள் குறித்து யாருமே துணிவுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்காத நிலையில் நாம் நம்மை மக்களாக வலியுறுத்துவது எவ்வாறு? எங்கள் அயலில், பணிமனைகளில், தொழிற்சங்கங்களில், சங்கங்களில் தனிநபர்களாகவும் சிறுசிறு குழுக்களாகவும் இருக்கும் நாம் நமது கடந்த காலங்களைப் பற்றிக் கேள்விகள் எழுப்பி, எங்கே தவறிழைத்திருக்கிறோம் என்பதைப்புரிந்துகொண்டு, நமது கொள்கைகளை மீட்டெடுக்க முனையவேண்டும். மற்றவர்களுக்காகப் போராடும்போது நாம் 64ܐܳܬ݂ܶܐ ܐܸ܂ போராடுகிறோம் என்ற கடந்த கால அனுபவம் வழங்கியிருக்கும் செய்யிெனை நாம் எப்போதும் பிரக்ஞையில் கொண்டிருக்க வேண்டும். இந்தப்பானித துணிச்சலை வேண்டி நிற்கிறது, வேறு பாதை எதுவும் திறந்திருப்பதாகத் தெரியவில்லை. கடந்த காலங்களில் எதிலும்

569
பட்டுக்கொள்ளாமல் கவனமாக வாழப்பழகிக் கொண்டிருந்திருக்கிறோம். இதன் விளைவுதான் பல்வேறு திசைகளிலும் இருந்து வந்த பெருந்தொகைப் படுகொலைகள். போருக்கான தயார்நிலையில் இல்லாத பொதுமக்கள்கூட முன்னேறிவரும் இராணுவத்தின் உக்கிர ஆவேசத்திற்கு எதிே நிராயுதபாணிகளாய் முன்வரிசைத் துருப்புகளாக மாற நேர்ந்தது.
குறுகிய அரசியற் பார்வைகொண்ட சக்திகள் தென்னிலங்கையி) துரித வளர்ச்சியுற்று, ஸ்திரம் பெற்றுக்கொண்டிருப்பதை நோக்கும்போது எதிர்காலம் இன்னும் இருண்டதாகவே தெரிகிறது. வெளிசக்திகள் மேலும் தலையீடுகளை மேற்கொள்வதற்காக அது இன்னும் கதவைத் திறந்து விட்டிருக்கிறது. தயாரற்ற நிலைமையில் நாம் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க முடியாது. இன்னொருவர் நமக்கு விடுதலை வாங்கித் தருவார் என்று நம்பிக்கொண்டு இயங்காமை என்ற தர்க்கத்தில் சிக்கிக்கொண்டு விடாமல் நாம் நம்மைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த அறிக்கை யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரால் கைச்சாத்திடப்பட்டதாகும். 1988 அக்டோபர் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் கையொப்பமிட்டவர்களின் விபரங்கள் கீழே தரப்படுகின்றன.
01. வி.ஆறுமுகம் (கல்வித்துறை) 02. கே.கே.அருள்வேல் (பொருளியல்) 03. செல்வி.எஸ்.அருளானந்தம் 04. எஸ்யாலச்சந்திரன் (புவியியல்) 05. பியாலசுந்தரம்பிள்ளை (புவியியல் பேராசிரியர்) 06. ஏ.கே.கனகரட்னா (ஆங்கிலம்) 07. வி.கே.கணேசலிங்கம் (மிருகவியல் பேராசிரியர்) 08. பி.கோபாலகிருஷ்ணன் (இந்துநாகரிகம்) 09. எம்.ஆர்.ஆர்.ஹுல் (கணிதவியல்) 10. செல்வி.எஸ்.இந்திராதேவி 11. எஸ்.கந்தையா (தாவரவியல்) 12. திருமதியார்வதி கந்தசாமி (மொழியியல்) 13. கே.குகபாலன் (புவியியல்) 14. ஏ.கணபதிப்பிள்ளை (புவியியல்) 15. செல்வி.கே.கந்தசாமி
16. ஆர்.கைலைநாதன் 17. பி.மஹினன் (கணிதவியல்) 18. எம்.ஏ.நுஃமான் (மொழியியல்) 19. பியுஷ்பரட்ணம் 20. எஸ்.வியரமேஸ்வரன் (உடலியற் பேராசிரியர்) 21. என்.பேரின்பநாதன் (பொருளியல்) 22. வண.ஜி.எஃப்ராஜேந்திரன் (மிருகவியல்) 23. ஆர்.ராஜ்மோகன் (மெய்யியல்) 24. கே.ரூபமூர்த்தி (புவியியல்) 25. எஸ்டியிராஜேஸ்வரன்

Page 305
26.
27.
28. 29.
30.
31.
32.
33.
34.
35.
36. 37.
38.
39.
40. 4. 42. 43.
44.
45. 46.
47.
48. 49.
50.
570
என்.சிவபாலன் (இரசாயனவியல்) ஏ.எம்.டி.சவரிமுத்து (தாவரவியல்) ஆர்.வி.எஸ்.சுந்தரேசன் (தாவரவியல்) கேபூரீதரன் (கணிதவியல்) திருமதி.என்.செல்வராஜா (மிருகவியல்) எஸ்.கே.சிற்றம்பலம் (வரலாறு) செல்வி.சி.சின்னராஜா (இந்துநாகரிகம்) வி.சிவசாமி (சமஸ்கிருதம்) அ.சண்முகதாஸ் (தமிழ், மொழியியல், துணைப் பேராசிரியர்) எஸ்.ஜி.சிவகுருநாதன் (ஆங்கிலம்) ஜே.சத்தியதாஸ் (புள்ளிவிபரவியல்) ஜி.எம்.செபஸ்டியாம்பிள்ளை (சமூகவியல்) எஸ்.சத்தியசீலன் (வரலாறு) செல்வி.எஸ்.சுபத்திரை
எம்.சண்முகலிங்கம் இரா.சிவச்சந்திரன் (புவியியல்) செல்வி.ஏ.சவரிமுத்து (ஆங்கிலம்) அ.துரைராஜா (குடிசார் எந்திரவியற் பேராசிரியர்) திருமதிராஜனி திராணகம (உடற்கூற்றியல்) டபிள்யு.வெங்கடேஷ் (மிருகவியல்) பி.வினோபாவே (மிருகவியல்) திருமதி.சி.வாமதேவா (இந்துநாகரிகம்) எம்.வேதநாதன் செல்வி.வி.வீரகத்தி (ஆங்கிலம்) செல்வி.எஸ்.வாசுகி (மெய்யியல்)

57
சொல்லடைவு
அன்னையர் முன்னணி
99. 04. 405. 406 அனில் கவுல். மேஜர் 260 அனுராதபுரப்படுகொலை 88, 95 அத்தாளப், இக்பால் 136 அமிர்தலிங்கம், அ 38, 38, 43, 45, 231536 அடெலே, பாலசிங்கம் 211
அருளானந்தம் 40, 6, 575 அருளம்பலம் 9 அருணா 12
அல்கம லக்ஷமன், கேணல் 138 அல்பிரட் சாம் அருட்திரு 274 அண்ணாமலை 518
ஆனந்தசங்கரி 19 ஆனந்தராஜா 79, 84
இலங்கை இந்திய காங்கிரஸ் 7 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 2 இலங்கை இளைஞர் காங்கிரஸ் 17 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 33 இராமச்சந்திரன் எம்.ஜி.ஆர் 238 இராமச்சந்திரன்யாண்டிருட்டி 182, 203, 204 இறைகுமாரன் 35, 38
இன்பம் 29 இந்திய உளவுத்துறை 429, 430, 431, 432 இந்திய விஸ்தரிப்பு வாதம் 444 இந்திராகாந்தி 327
எ.பி.ஆர்.எல்.எப் 67, 77, 78, 84, 91. 92 100. 104. 113, 139, 164, 407
408. 09, 430,459. 462, 503.
505. 57, 58. 莎2里、,5部3、
53, 535, 588, 5 0.
542. 543, 544, 545, 546, 549
ஈ.என்.டி.எல்.எப்
68, 83, 87, 458. 540, 54.
67, 77, 78, 9, 94, 00
119、164,168、236、407、
490,46 50g,505、58,54,542,543
ஈரியகொல்ல 2 ஈழ தேசிய விடுதலை முன்னணி 78, 9 ஈழநாடு 32, 96, 199, 273. 296 ஈழமுரசு 102, 18, 170, 219, 349 ஈழவேந்தன் 49
உமைகுமாரன் 35, 36
96, 38, 7, 280. 498
Lof Ln69,656.Jgs 35, 38, 39
உதயன்
ஊரடங்குச்சட்டம் 256, 263, 276, 283, 322, 324, 333, 339, 342,
458, 56.
ஊர்காவற்படை 32
ஒப்பரேஷன் லிபரேஷன் 94, 131, 133, 137,139,158、210,237437、455,
533
ஐ.நா.சபை 232
ஐ.தே.கட்சி 461,462、463,464,487,524,537
90, 178, 182, 490, 492
(55
கமலாதேவி 17 கதிரமலை 94
ஐலண்ட்
கனகரட்ணம், புரக்டர் 286 கனகரட்ணம், டொனால்ட், வணபிதா 47 கல்லோயா திட்டம் 2, 154 கடவுள் 107
கங்காதரன், டாக்டர் 341 கரும்புலிகள் 152
காந்தரூபன் 283, 294 காந்தியம் 24, 59, 61, 64 காசி ஆனந்தன் 19 காலிஸ்தான் 495 காண்டீபன் 103 கிட்டு 90, 103, 129 கிங், மாட்டின் லூதர் 384,

Page 306
572
கிருஷ்ணா, சுந்தர்ஜி 227 கிறிஸ்டியன் வேர்க்கா 188
கு
குடிசார் உரிமைகள் இயக்கம் (CRM )
43,44,63,64,530 குகன் 111, 200, 250 குப்தா மேஜர் 151, 310 குப்தா சேகர் 251, 252, 253
குமாரசாமி, ராதிகா 457 குமாரணதுங்க, விஜய 12, 106, 485,
486, 493, 508, 523
10 7, 20, 14, 175,
206, 22, 220, 22, 222, 236,
55, 552, 554 குட்டிமணி 58, 57 குலேந்திரன், ஆயர் 17, குலேந்திரன் 258 குறுந்தேசியவாதம் 436, 441 குணவர்த்தன, விவியன் !ே
குமரப்பா
குணவர்த்தன, லெஸ்லி 155
கெனமன் பீற்றர் 2 கேடில்ஸ் 11
கொப்பேகடுவ, ஹெக்டர் 42, 48, கொப்பேகடுவ, பிரிகேடியர் 140 கொத்தலாவல கப்டன் 79, 106
கொத்தலாவல சேர் ஜோன் 9
290, 306, 38 கோபாலரத்தினம் 102
கோபாலன் மேஜர்
கோணேஸ் லெப்டினன்ட் 138 கோவிந் கேணல் 301 கோவிந்தராஜன், வணக்கத்திற்குரிய 308, 309, 310
கைலாசபிள்ளை 170
子
சந்ததியார் 235 சந்திரகாசன் 23 சபாரத்தினம், என் 17, 18, சாந்தினி, டாக்டர் 24 சர்வதேச மன்னிப்புச்சபை 89
சத்தியாக்கிரகம் 7, 18, 189, 289 சத்தியேந்திரா, ந 58 சட்டர்ஜி 310
சங்கர் 168
சங்கிலி 18,
சண்முகலிங்கம் 96, 576 சண்முகதாசன், எண் 21 சின்னராசா, வண. பிதா 47 சிமன்லால் செடல்வாட்,சேர் 499 சிங்கராயர் 48 சிவநாயகம், எஸ் 87, 492 சிவக்குமார் 209 சிவபாதசுந்தரம், டாக்டர் 326, 328 சிவஞானம் 200, 201 சிவஞானசுந்தரம் என் 8 சிவசாமி, கெப்டன் 334, சிறிசபாரத்தினம் 56, 81, 82, 89, 90, 91 சிறிவர்த்தன, ரெஜி 457 சில்வா, கொல்வின் ஆர் டி 2, 11, 20 சில்வா, நிமால் 226
சுதந்திரன் 19 சுதந்திரப்பறவைகள் 407 கந்தரம் 36, 83 சுந்தரலிங்கம், சி, பேராசிரியர் 21, 154 சுகுமார் மேஜர் 306
சுப்ரமணியம், ஒரேற்றர் 17, 19, 21 சுரேஷ் 53
செல்வம் 29, 42, 313, 314, 315
செல்வநாயகம் எஸ் ஜே வி 3, 4, 7,
19, 21, 46, 155, 426, 481
செஞ்சிலுவைச்சங்கம் 274, 329

சேனநாயக்க டட்லி 1, 2, 3, 6, 8, 155
சொய்ஸா, ரிச்சட் டி 530, 531
சோல்பரி 1, 4, 11
டட்லி - செல்வா ஒப்பந்தம் 155 டயர் ஜெனரல் 500
டி மெல், ரொணி 76, 223, 461
டிசெம்பர் 19 பிரேரணை 05, 06, 209, 22, 23, 30, 229,
432, 437
டெலோ 36, 80, 8, 8.2, 383, 407,
430, 431, 432, 435, 458,
462,505,540,541。543,549 டேவிட் அருளானந்தம் 24, 81, 235 டேவிட் நாகநாதன் 49 டொனமூர் 17
த தர்மலிங்கம், வீ 21 தம்பர் ஏ.ஈ 17 தம்பையா எஸ்.ஜே. பேராசிரியர்
27, 28, 75, 292, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் 87,
78, 82, 234 தமிழ் தேசிய இராணுவம் 535, 538,
544, 547, 549 தமிழ்க்காங்கிரஸ் 1, 2, 3, 20 தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 4,
8 தமிழர் விடுதலைக் கூட்டணி 33, 35,
20, 229, 422, 44 4.75, 57
தமிழீழ இராணுவம் 86, 87, 103 தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி
69
தமிழரசுக்கட்சி 34, 8, 18, 19, 20, 190 தங்கத்துரை 57
573
திஸநாயக்க, காமினி 223
தியாகராஜா 31
தியோகுப்பிள்ளை, ஆயர் 91
திருச்செல்வம் 21
திலீப் சிங், மேஜர் 178
திலீபனி 10, 18283189, 92, 197, 99, 200, 207, 456
தீக்ஷித்12, 179, 203, 204, 21, 222, 27, 54 தீப்பொறி 78
துரையப்பா, அல்பிரட் 19, 20, 31, 35 துட்டகைமுனு 73, 74, 75 துசிடைட்ஸ் 217
துபாய் மேஜர் 293 தெபீந்தர் சிங், லெப் ஜெனரல் 228, 233 தேவானந்தா யோகான் 108, 129, 184 தேவானந்தா, டக்ளஸ் 92, 104, 193, தொண்டமான் 8, 20, 52, 113
தோட்டத்தொழிலாளர் 52, 425
நக்ஸலைட்டுகள் 49 நடராஜா 31, 56, 127, 267, 268 நவசமசமாஜக்கட்சி 30, 56, 487, 488,
58
நவரட்னே, காமினி 48, 122, 123, 124, 493 நவரத்தினம். வி 18 நரசிம்மராவோ 229 நாகநாதன், ஈ.எம்.வி 3, நாகநாதன், டேவிட் 49 நாணயக்கார லியோ 40, 486
நாணயக்கார, வுாசுதேவ 55
நிர்மலா, நித்தியானந்தன் 47, 48 நித்தியானந்தன் 47, 48, 209 நிசங்க, எச்பூரீ 2
நீர்வேலி, வங்கி 47, 58 நீலன் திருச்செல்வம் 30, 29

Page 307
574
நெப்போலியன், ஜோசப் 213 நெடுமாறன் 182
17, 18, 4.72
17, 33
நேசையா கு நேரு, ஜவார்ஹலால்
L
பங்களாதேஷ் 495
95, 203, 234, 273, 496, 500 பச்சைப்புலிகள் 481, 492 புவிசார் அரசியல் 414, 450, 462, 486 பரதன் 208
பஞ்சாப்
பரமேஸ்வர ஐயர், மேஜர் 239, 277, 386 பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் 100 பலியவதான 470
1, 3, 6, 7, 17, 18, 20,
4349、52、53、6、73 90、426、444 பண்டாரநாயக்க. எஸ்.டபிள்யூஆர்டி 1.
3, 6, 11, 17, 18, 426, 441 பண்டாரநாயக்கா, பூஞரீமாவோ 7, 20, 42, 48, 5., 52, 65. 73, 89, 426,
444, 487 பஸ்தியான், அனுரா 51
25, 305, 309 பயங்கரவாதத்தடைச்சட்டம் 80, 493 பந்த, கே.ஸி 165, 227 பத்மநாபா 92, 104
பண்டாரநாயக்க
பஸ்தியாம்பிள்ளை
பத்மநாதன், என் 201
பார்த்தசாரதி 77, 154, 229, 230
பாலாதம்பு 55, 56
பாலசிங்கம். அன்ரன் 181, 193, 202, 211,
222, 45
பாலசிங்கம், புரக்டர் 241, 242
புதிய பாதை 38
புதியதோர் உலகம் 78
புலேந்திரன் 114, 164, 166, 175, 207, 221
551, 552, 554
பியதாச 50
பிரேமானந்தா 193
223, 46, 466. 488. 514,
537, 538
பிரகாஷ், கெப்டன் 299 பிரபாகரன் 36, 38, 54, 56, 77, 81, 83, 88, 90.
99. 04, 206, 11, 3, 20, 40.
141. 142, 145, 16, 162, 163,
164、18丑、192、丑93,j95、200、209、
203,205, 207, 21, 212, 23, 235,
250, 25, 252, 254, 255, 256, 279,
296, 428, 450, 455, 451, 456, 473,
520 பிரேந்திரசிங், மேஜர் 253 பெர்னாண்டோ, கே.எஸ்.எண் 50 பெரேரா, போல் 51 பெரேரா, வின்சன்ற் 108
3, 6, 8, 10 பெரேரா, லக்ஷ்மன் 530
பிரேமதாஸ்
பெரேரா, என்.எம்
பெஞ்சமின் டாக்டர் 113 பெல்பொல, ஆர்.எஸ் 2 பேரின்பநாயகம், ஹண்டி 17, 18 பொன்னம்பலம் ஜி.ஜி 2 போல்ஷ்விக் லெனினிஸ்ட் கட்சி 8, 10
Ls)
மலரவன் 98, 208 மனித உரிமைகள்
558, 565 மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக
ஆசிரியர்கள் 26, 557, 558 மகாஜன எக்சத் பொமுன 436 மகாத்மா காந்தி 18, 248, 308, 479, 499 மலையகத்தமிழர் 417, 425, 444, 453, 507 மத்தியூ சிறில் 22, 26 மகேஸ்வரன் பாைகொடை 37
158, 232, 555, 557,
மருத்துவ அதிகாரிகள் சங்கம் 129
மஞ்சித்சிங், பிரிகேடியர் 317 319, 321, 444
மாகாணடிபை 107, 157, 166, 175. 178,
223,51型、51ä、516、汤18,函20、
524, 533, 534, 544, 548, 549,
565

மாத்தயா 103. 09. 20, 2, 24,
22, 222, 226, 236
மிஸ்ரா, கேணல் 299
மில்லர் 152
முத்தெட்டுவேகம. சரத் 12, 486
2, 29 முஸ்லிம் காங்கிரஸ் 517 முஸ்லிம்மக்கள்!74, 434, 508, 57, 521, 544
9, 2
முரசொலி
மென்டிஸ் மேர்ஜ் 44 மொஹிந்தர், ராவ் 178
மொழிவாரித் தரப்படுத்தல் 422
மொசாட் 119, 230
மோர்னிங் ஸ்ரார் 91
யாதவ், மேஜர் 316 யோகி 117, 121, 122, 184,165, 202.
250, 26, 509
J
ரஜாகரன் 97, 169, 170 ரஹீம் 129, 210 ரனராஜா. ஷெல்டன் 185, 188 ராஜன் ஹூல் 555, ராஜன், பரந்தன் 164, 187 ராஜனி, திராணகம 555, 555, 558, 557,
558., 559., 560., 561., 562., 5წ3.
564 ராஜகருணாநாயக்க, லூஸியண் 197 ராஜீள் காந்தி 80. 131, 143, 203, 204 ராஜசுந்தரம், டாக்டர் 24, 49, 59, 83 ராஜரட்ண கே.எம்.பி 197 ாாதா 109 ராவ், மொஹிந்தர் 178 ரத்னம, ஜேம்ஸ், ரி 74
ரட்னப்ரிய, டாக்டர் 129, 184
!68、170,181、185、132,
575
ரத்நாயக்க 7. 8 ரூபன் 235 ரொட்ரிகஸ், ஜெனரல் 222, 502, 553, 554
6)
லங்கா கார்டியன் 470 லங்கா சமசமாஜக்கட்சி 2, 441 லங்காபுவத் 133, 491 லலித்அத்துலத்முதலி74, 131, 137 21, 230, 23 லலிதகுமார், டாக்டர் 337 லெனின் 30, 215, 453
6.
வன்னியசிங்கம், கு 3
21, 23 2, 5, 6, 8, 9, 12, 17, 60
417. 424, 425
வால்டர்ஸ்.வெர்னன் 231
விஜிதரன் 84. 97, 98, 101, 105, 119, 169
விஸ்வானந்ததேவன் 189
விக்டர் 103, 104, 305
விக்ரம், லெப்டினண்ட் 178
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
வாக்குரிமை
விக்ரமபாகு, கருணாரட்ன 55 விக்ரமதுங்க, லஸந்த 492 விக்ரமசிங்க, லஷ்மன் 486 விமலேஸ்வரன் 101
35, 38
140, 4
487, 494
விமலராசா, அப்புத்துரை விமலரட்ன, விஜய, கேணல் விஜேவீர. ரோகண 41, வில்மட், பெரேரா 2 விஸ்வானந்த தேவன் 169 வீரதுங்க. பிரிகேடியர் 29 வேஜினியா லியறி 29
வேனுகோபால். காப் ஷ் 30ம்
ஜயசூரிய, எஃப்.ஆர் 197
ஜயதிலக தயான் 30, 41
ஜயவர்த்தன. ஜே. ஆர் 4, 33, 35, 43, 48, 48, 51, 52, 53, 55, 65, 80

Page 308
576
23, 158, 64, 168, 183, 202.
203 22, 227, 229, 23, 426.
436, 440, 466, 473, 487, 489,
492. 54 ஜயவர்த்தன, ரவி 492 ஜயவர்த்தன, குமாரி 418 ஜயரட்ன, பிரிகேடியர் 552, 553, 554 ஜாதிக சேவக சங்கம் (JSS) 70
ஜூலை இனக்கலவரம் 18
ஜெயகுலராஜா, டாக்டர் 47 ஜெயதிலகராஜா, வண பிதா 47 ஜெயராஜ், டி.பி.எஸ் 178 ஜோதிஸ்வரன் 38 ஜேம்ஸ், தோமஸ், மேஜர் 293 ஜேவிபி 18, 34, 41, 52, 58, 136, 182, 436, 444, 459, 460, 46,
462, 465, 466, 467, 486, 487,
488, 489, 493, 494, 504,
522, 523, 524, 529, 53, 537
பூரீ
பூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் 428 பூனிலங்கா சுதந்திரக்கட்சி 11, 421, 428
6)
ஸ்டாலின் 30
ஹ
ஹனிப், ஜெஹான் 18 ஹர்ட், லிட்டல் 480 ஹண்டர் பிரபு 499 ஹண்டர். ஜேன் 230 ஹிற்லர் 90 ஹெட்டியாராச்சி, குமுதினி 491
வடி ஷார்ஃப், ஜேனே 475, 476, 479
ஞ ஞானச்சந்திரன் 79, 80


Page 309


Page 310
எப்போதல்லாம் நாம் எழுத நிை
இந்த யதார்த்தத்திந்குள் நாமும்
ඇගl7%l3%; &|pද්ධිගgගu. தீர்ப்புணர்வுமின்ந் இந்தப் பங்க சமூகம் இடங் காடுத்துவிட அஞ்சுகிறோம்மன் ஆளுை பறிகொடுத்துவிட்ட நிலையில் நமது புத்தியுள்ள மன்தனும் பிரிந்து மிக விட்டு ஓடிக்காண்டிருக்கிநால் விவரணங்கள் ஏதோ နှီး
கருதினால், அது Ague பூரணத்துவத்தை வலிக்க தேடிக்காள்ளவும், ஒதுங்கிப்போ
கொண்டிருக்கும் மது சமூகத் அதனை ஒழுங்குரிச் ಫಿಶರಿನ್ದಿತj
ཀྱི་ལྷ(༦་ཀྱི་
 

னக்கிறாமோ அப்போதல்லாம் தைந்து போய்விடுகிறாம். புத்தி
ம் இழந்து எந்தவிதமான வாத வன்முறைப் புதைகுழிக்கு போந்தோ என்றும் நாம் கள், ஆற்றல்களை பில்லாம் சமூகம் இருக்கிறது. ஒவ்வொரு ண்டிருக்கும் இந்த தேசத்தை யாராவது ஒருவர், மது தை முன்தள்ள முனைவதாகக் பாய்வில் ஒருங்கிணைந்த ணரவும், ஒரு புரிதலைத் ந்கும் நிலைமைக்குள் அமிழ்ந்து ந்கு மீண்டும் புத்துருட்டம்
இல் வழிவகைகளைத் தேடவும்