கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புலகமும்

Page 1


Page 2

செங்கை ஆழியான் வாழ்வும் படைப்புகளும்
தொகுப்பு: வைத்திய கலாநிதி ரேணுகா பிரதீப்குமார்
LD60solipst LD6)f 25.01.2001

Page 3
முதற் பதிப்பு:
அச்சுப்பதிவு.
அடக்கவிலை:
தொடர்புகளுக்கு:
தொகுப்பு:
கணணிவடிவமைப்பு:
தொலைபேசி:
E-mail:
ஜனவரி,2007
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட், கொழும்பு 13.
தொலைபேசி: 2330195
ரூபா 100/-
கலாநிதி. க. குணராசா, செங்கை ஆழியான், 75/10A, பிறவுன் வீதி, யாழ்ப்பாணம்.
Dr. ரேணுகா பிரதீப்குமார். “பிரணவம்”, 23/4A, ரஜமாவத்தை, இரத்மலாணை.
க. உதயகுமார்
021222 2337.
kunarasakGyagoo.com

முன்னுரை
ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளி செங்கை ஆழியானின் மணிவிழா அகவை 2001, ஜனவரி, 25 ஆம் திகதி நிகழ்ந்தது. பல்வேறு தடங்கல்கள் இந்த மணிவிழா நிறைவு மலரை உரிய காலத்தில் வெளியிடத் தடைகளை ஏற்படுத்தியிருந்தன. மணிவிழாவுக்கெனக் கட்டுரைகளைப் பெறாது செங்கை ஆழியான் குறித்து காலத்திற்குக் காலம் வெளிவந்த கட்டுரைகளையும் வியத்தற் குறிப்புக்களையும் மணிவிழா நினைவாகத் தொகுத்துச் செங்கை ஆழியானின் வாழ்வும் படைப்புக்களும் என்ற தலைப்பில் வெளியிடுவதாக முடிவு செய்ததன் விளைவாக இந்நூல் இன்று வெளிவரு கின்றது.
கல்வியுலகு
செங்கை ஆழியான் க. குணராசா 25 ஜனவரி 1941 இல் யாழ்ப்பாணம் வண்ணர் பண்ணையில் கந்தையா-அன்னம்மா தம்பதிக்கு எட்டாவது மகவாகப் பிறந்தார். இருவர் சிறு வயதிலேயே காலமாகிவிட்டனர். மூன்று அக்காமாரும் இரண்டு அண்ணன்மாரும் மூத்தவர்களாக அமைய, கடைக் குட்டியாக குணராசா விளங்கினார். இவருடைய ஆரம்பக் கல்வி யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக்கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும், உயர் கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பெற்றார். புவியியல் சிறப்புப்பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளி வந்தார். 1984 ஆண்டு முதுகலைமானிப்பட்டத்தையும், 1991 ஆண்டு கலாநிதிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பெற்றார்.
செங்கை ஆழியானுக்கு இலக்கிய உலகு, கல்வி உலகு, நிர்வாக உலகு என மூன்று ஆளுமையாற்றல்கள் உள்ளன. இலக்கிய உலகில் அன்னாருக்குள்ள இடத்தினை அனைவரும் அறிவர். இம்மணிவிழா மலர் அதனைத் தான் விரிவாகப் பேசுகன் றது. கல வியுலகினைப் பொறுத் தளவில் அவர் ஒரு புவியியற் சிறப்புப் பட்டதாரி, கலாநிதி. பேராதனைப் பல கலைக் கழக பயிற்சியாளராகவும் ,
3

Page 4
செங்கை ஆழியான்
கொழும்புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகக் கடடையாற்றியுள்ளார். அக்காலத்தில் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை வருகை விரிவுரையாளராகவும் இருந்துள்ளார். அக்காலங்களிலும், பின்னர் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களின் விரிவுரையாளராகவும் இருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான புவியியலாளர்களை உருவாக்கியுள்ளார். இவர் எழுதிய புவியியல் நூல்கள் இன்றும் உயர் வகுப்பு மாணவர்களின் வழிகாட்டிகளாக விளங்குகின்றன. இவரது ஐம்பதுக்கு மேற்பட்ட புவியியல் நூல்களை வழிகாட்டியாகக் கொள்ளாத புவியியல் மாணவர்கள் எவரும் இருக்க முடியாது. பரந்தளவில் ஒரு புவியியல் சமுகத்தினை இவர் இந்நாடு முழுவதும் கொண்டுள்ளார். இவருடைய ஒரு தொகுதி நூல்கள் பொது அறிவு, பொதுஉளச் சார்பு சார்ந்தவை.
பதவிகள்
1964 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தைவிட்டு பட்டதாரியாக வெளியேறி 1971 வரை ஆசிரியத் தொழிலில் பணியாற்றினார். 1971 இல் இலங்கை நிர்வாகசேவைப் பரிட்சையில் சித்திபெற்று 2001 இல் ஓய்வு பெறும் வரை உயர் நிர்வாகசேவை அதிகாரியாகப் பதவிகள் பல வகித்தார். பதவிகள் இவரைத் தேடி வந்தன. அவள் வகித்த பதவிகள் இவரால் பெருமை பெற்றன. முதலில் காரியாதிகாரியாகக் கிண்ணியாவிலும் பின்னர் செட்டிகுளத்திலும் கடமையாற்றினார். அதன் பின்னர் உதவி அரசாங்க அதிபராகத் துணுக்காய், பாண்டியன்குளம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பணியாற்றி, கிளிநொச்சியின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பிரதிக் காணி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்றார். கிளிநொச்சி மாவட்டம் உருவாகியபோது, அம்மாவட்டத்தின் நிர்வாகத்தினை முதன் முதல் ஒழுங்கு படுத்திய மூன்று நிர்வாகசேவை அதிகாரிகளில் அவர் ஒருவர். 1992 வரை குணராசா தனது நிர்வாகப் பணிகளை, அதாவது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வன்னிப்பிரதேசங்களிலேயே ஆற்றியுள்ளார். அவர் கூறுவதுபோல இப்பிரதேசங்களின் வாழ்வியற் கோலங்களை அவள் அவற்றின் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்து இலக்கிய வடிவங்களுள் சிறைப்படுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவியது.
1992 ஆம் ஆண்டு தான் பிறந்த மண்ணிற்கு அதாவது யாழ்ப்பாணத்திற்கு இ மாற்றம் பெற்று, யாழ்ப்பானைப் பிரதேசச்
4

வாழ்வும் படைப்புகளும்
செயலாளராக அமர்ந்து கொண்டார். இக்கால வேளையில் 1997 - 2000 வரை ஏறக்குறைய மூன்றாண்டுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரைத் தன் பதிவாளராகப் பெற்று அவரது சேவையை அனுபவித்தது. பின்னர் மீண்டும் நல்லூரின் பிரதேசச் செயலாளராகப் பதவியேற்று, 2001 இல் ஓய்வு பெற்றார். ஒய்வு பெற்றபின்பும் அவரது நிர்வாகப் பணி ஓயவில்லை. ஒய்வு பெற்ற பின்னர் இரண்டாண்டுகள் சங்கானை, தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களின் பிரதேசச் செயலாளராகக் கடமையாற்றினார். அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகப் பதவி வகித்தார். அவ்வேளை அவரை யாழ்ப்பாண மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாகாண சபை நியமித்தது. ஓராண்டிற்கு மேல் யாழ்ப்பாண மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்துள்ளார். இன்று உலக வங்கியினால் நிதி உதவப்பட்டு. வடக்கு கிழக்கு மாகாணத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டத்தின், சமுக நிலைப்பாட்டிற்கான அணித் தலைவராகக் கடமையாற்றி வருகின்றார். அவரது நிர்வாகப் பணி இன்னமும் ஓயவில்லை. காரியாதிகாரி, உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயளாளர், பிராந்திய ஆணையாளர், பல்கலைக் கழகப் பதிவாளர், மாகரசபை ஆணையாளர் என அவர் வகித்த பதவிகள் பலவாகும். அவை அவரால் பெருமையுற்றன.
சமுகப் பணிகள்
யாழ் இலக்கிய வட்டத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் இன்று அதன் தலைவராகவும் உள்ளார். இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் விளங்குகிறார். தமிழ் எழுத்ததாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இலக்கியக் கலாநிதி பண்டிதமணி க.கணபதிப்பிள்ளையின் நினைவாக வழங்கப்படும் சம்பந்தர் விருதுக்குழுவின் இணைப்பாளர். கனகசெந்தி கதா விருது அமைப்பின் பணிப்பாளர். இவற்றைவிட கலட்டி எச்சாட்டி மஹாமாரி அம்மன் தேவஸ்தானம், வில் லூன்றி புனித திர்த்தக்கேணிப் பரிபாலன சபை, வண்கோம்பயன்மணல் பரிபாலனசபை என்பனவற்றின் தலைவராகவும விளங்குகிறார்.
சிறுகதைத்துறை
ஈழத்தின் சிறுகதைத் துறையில் செங்கை ஆழியான் தனக்கென
ஓரிடத்தினைக் கொண்டுள்ளார். சுமார் 150 சிறுகதைகளுக்கு மேல்
எழுதியுள்ளார். இலங்கை, இந்தியா, கனடா, பிரான்ஸ், லண்டன்
5

Page 5
செங்கை ஆழியான்
முதலான நாட்டுச் சஞ்சிகைகளில் அவை வெளிவந்துள்ளன. ஈழநாடு, வீரகேசரி, தினகரன், புதினம், செய்தி, சஞ்சீவி, சுதந்திரன், சிந்தாமணி, இளங்கதிர், தமிழின்பம், கதம்பம், கலைச்செல்வி, தேனருவி, அமுதம், விவேகி, இலக்கியம், மலர், அஞ்சலி, மல்லிகை, மாணிக்கம், அமிர்தகங்கை, மாலை முரசு, வெளிச்சம், நான், ஆதாரம், அறிவுக்க ளஞ்சியம், நுண்ணறிவியல், ஞானம், அர்ச்சுனா, தினக்குரல், ஈழமுரசு, சிரித்திரன், மறுமலர்ச்சி, ஈழநாதம், புதிய உலகம் முதலான இலங்கைச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் அனைத்திலும் செங்கை ஆழியானின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
உமா, தாமரை, கணையாழி, குமுதம், சுபமங்களா, கலைக்கதிர், கலைமகள், ஆனந்தவிகடன் முதலான தமிழகச் சஞ்சிகைகளில் இவருடைய சிறுகதைகள் வெளிவந்தள்ளன. ஈழநாடு (பாரிஸ்), ஈழகேசரி (லண்டன்), நம்நாடு (கனடா), தாயகம் (கனடா), செந்தாமரை (கனடா), உதயன் (கனடா) முதலான வெளிநாட்டுச் சஞ்சிகைகளிலும் அவருடைய சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
சிங்களப் பத்திரிகைகளான ராவய, சிலுமின, லங்காதீப முதலான பத்திரிகைகளில் இவரது தமிழ்ச்சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. செங்கை ஆழியானின் சிறுகதைகளின் தொகுப்புகளாக இதயமே அமைதி கொள், யாழ்ப்பாண இராத்திரிகள், இரவு நேரப் பயணிகள், கூடில்லா நத்தை களும் ஒடில்லா ஆமைகளும் வெளிவந்துள்ளன. குந்தியிருக்க ஒரு குடிநிலம் என்ற தொகுதி வெளிவரவுள்ளது. செங்கை ஆழியானின் இரவு நேரப் பயணிகள் என்ற தொகுதி, ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமலால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. இரவு நேரப் பயணிகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு வடக்கு கிழக்கு மாகாண சாகித்யப் பரிசும் இலங்கை இலக்கியப்பேரவைப் பரிசும் கிடைத்துள்ளன. யாழ்ப்பாண இராத்திரிகள் என்ற தொகுதி இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசினைப் பெற்றுக்கொண்டது. இத்தோடு யாழ்ப்பாண இராத்திரிகள் தொகுதிக்கு தமிழ் நாடு லில்லி தேவநாயகம் நினைவு, சிறுகதைத் துறைக்கான வெளிநாட்டுச் சிறப்பு இலக்கியப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
செங்கை ஆழியானின் சிறுகதைகள் பரிசில்கள் பலவற்றினைப் பெற்றுள்ளன. பேராதனைப் பல்கலைக் கழக இளங்கதிர் நடாத்திய சிறுகதைப்போட்டியில் இவருடைய ‘பரிகாரம்’(1902) என்ற சிறுகதை இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கியிருந்தது. பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையிடமிருந்து அப்பரிசினை அவர்
(

வாழ்வும் படைப்புகளும்
பெருமையுடன் பெற்றுக் கொண்டார். சுதந்திரன் மாநாட்டுச் மலருக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய நாட்டிற்கு இருவர் (1962) என்ற சிறுகதை முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. கலைச்செல்வி சிறுகதைப்போடடியில் ‘ராசாத்தி’ (1964) இரண்டாம் பரிசினைப் பெற்றது. ஈழநாடு 10 வது ஆண்டு நிறைவுச் சிறுகதைப்போட்டியில் இவரது ‘கங்கு மட்டை’(1969) முதலாவது பரிசு பெற்ற சிறுகதைகளில் ஒன்றாகவும் அமைந்தது
செங்கை ஆழியானின் ‘உப்பங்கழி', (1981),'நம்ப முடியாத சாதி’ (1981), ‘விடியாத இரவும் ஒரு மனிதனும்.’ (1988), ‘பிச்சைக்காரர் ஆக்க வேண்டாம்’ (1990), திசநாயக்காவும் கந்தசாமியும் (1991) எனும் சிறுகதைகள் தமிழ்க் கதைஞர் வட்டத்தின் (தகவம்) சிறந்த மாதச்சிறுகதைகளாகத் தெரிவாகின. 1989, ஜூலை மாதத்தில் தமிழ் நாட்டில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாக செங்கை ஆழியானின் தாமரை இதழில் வெளிவந்த "அறுவடை’ தெரிவாகி ஆகி சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசினைப் பெற்றது. 1993 ஆகஸ்ட் மாதத்தில் தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்ததாக செங்கை ஆழியானின் “ல்ெலும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்’ சுஜாதாவினால் குமுதம் அவார்ட்டுக்காகத் தெரிவாகியது.
செங்கை ஆழியானின் சிறுகதைகள் வேறு பல சிறுகதைக் தொகுதிகளில் இடம் பிடித்துள்ளன. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல்கலைவெளியீட்டினரின் முதலாவது தொகுதியான கதைப்பூங்கா (1962)வில் “அவன் சமாதியில்.’ என்ற சிறுகதையும், இரண்டாவது தொகுதியான “விண்ணும் மண்ணும்’ (1963) தொகுப்பில் ‘அந்த ஒரு நாள்’ சிறுகதையும், மூன்றாவது தொகுதியான ‘காலத்தின் குரல்களில் (1984) சாதி என்ற சிறுகதையும் இடம் பெற்றுள்ளன. கொழும்பு தமிழ் எழுத்தாளர் மன்றம் வெளியிட்ட 'ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்' (1963) என்ற தொகுதியில் செங்கை ஆழியானின் ‘நாட்டிற்கு இருவள்’ என்ற சிறுகதையும், தகவம் பரிசுச்சிறுகதைகள்(1990) தொகுதியில் ‘உப்பங்கழி’ என்ற சிறுகதையும், சென்னை வானதி பதிப்பகம் வெளியிட்ட ‘அற்றது பற்றெனில்’ (1990) தொகுதியில் 'அறுவடை' என்ற சிறுகதையும், படைப்பாளி செ.யோகநாதன் தொகுத்து வெளியிட்ட "வெள்ளிப்பாதசரம்’ (1993) என்ற பெரும் தொகுதியில் கங்குமட்டை, அறுவடை ஆகிய சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. இலங்கைக் கலைக்கழக வெளியீடான “சுதந்திர
இலங்கையின் தமிழ்சிறுகதைகள் 50 (1998) என்ற தொகுதியில் தெருவிளக்கு
7

Page 6
செங்கை ஆழியான்
என்ற சிறுகதையும், சென்னை தாமரைச்சிறுகதைகள் தொகுப்பில் (1999) வெளவால்கள் என்ற சிறுகதையும், மல்லிகைச் சிறுகதைகள் தொகுப்பில் (2002) ‘ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்’ என்ற சிறுகதையும், சுதந்திரன் சிறுகதைத் தொகுப்பில் (2002) 'ஏதோ ஒன்று' என்ற சிறுகதையும் இடம் பிடித்துள்ளன. வெளிவரவுள்ள ஈழநாடு சிறுகதைகள் தொகுப்பில் (2007) செங்கை ஆழியானின் “கங்கு மட்டை’ இடம் பெறவுள்ளது. ஈழநாடு பத்திரிகை வெளியிட்ட கங்குமட்டை என்ற தொகுதியிலும் இச்சிறுகதை இடம் பிடித்துள்ளது.
நாவல்கள்
ஈழத்து இலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியான் முக்கியமான ஒரு நாவலாசிரியராகக் கணிக்கப்படுகின்றார். இதுவரை 40 நாவல்கள் நூல்களாக வெளிவந்துள்ளன. நந்திக்கடல், ஆச்சி பயணம்போகிறாள், சித்திராபெளர்ணமி, கடல் கோட்டை, கந்தவேள் கோட்டம், முற்றத்து ஒற்றைப்பனை, கொத்தியின் காதல், நடந்தாய் வாழி வழுக்கியாறு, பிரளயம், அக்கினி, வாடைக்காற்று, யானை, ஒரு மைய வட்டங்கள், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, அக்கினிக் குஞ்சு, செங்கை ஆழியான் நாவல்கள், கங்கைக்கரையோரம், இரவின் முடிவு, காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள், கனவுகள் கற்பனைகள் ஆசைகள், அலை கடல் தான் ஒயாதோ? காவோலை, கிடுகு வேலி, மழைக்காலம், யாககுண்டம், ஒ அந்த அழகிய பழைய உலகம், இந்த நாடு உருப்படாது?, தீம்தரிகிடதித்தோம், காட்டாறு, ஜன்மபூமி, குவேனி, கொழும்பு லொட்ஜ், மரணங்கள் மலிந்த பூமி, போரே நீ போ, வானும் கனல் சொரியும், சாம்பவி, ஆயிரமாயிரம் ஆண்டுகள், ஈழராஜா எல்லாளன், பூதத்தீவப்புதிர்கள், ஆறுகால்மடம் என்பனவாம். போராடப்பிறந்தவர்கள், மெல்ல இருள் இனி விலகும் , அலையரின் கதம் என்பன நூலுருப்பெறவிருக்கின்ற நாவல்கள்.
இவற்றில் யானை என்ற நாவல் The Beast என ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. காட்டாறு என்ற நாவல் சிங்களத்தில் "வன மத கங்க’ என கொடகே பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். வாடைக்காற்று என்ற நாவல் தர்மமவன்சதேரரால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவரவுள்ளது. ஒரு மைய வட்டங்கள் சென்னை நியூசெஞ்சுரி புக் ஹவுசால் வெளியிடப்பட்டது. காட்டாறு, மரணங்கள் மலிந்த பூமி என்பன சென்னை காவியா வெளியீட்டினரால் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளன. பத்துக் குறுநாவல்களின் தொகுப்பான 'ஆயிரமாயிரம் ஆண்டுகள்’ சென்னை மித்ரா பதிப்பகத்தால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. சென்னையிலும் திருச்சியிலும் வெளியீட்டு விழா நிகழ்ந்தது.
8

வாழ்வும் படைப்புகளும்
செங்கை ஆழியானின் நாவல்களில் பிரளயம் (1976), காட்டாறு (1977), மரணங்கள் மலிந்த பூமி (2000) என்பன தேசிய சாகித்ய மண்டலப் பரிசினை சுவீகரித்துக் கொண்டன. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, குவேனி, மண்ணின் தாகம், கொழும்பு லொட்ஜ் என்பன வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசினைப் பெற்றன. கிடுகுவேலி நாவல் தகவத்தின் பரிசினைப் பெற்றது. கந்தவேள் கோட்டம், கடல் கோட்டை என்பன கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை பரிசினைப் பெற்றன. காட்டாறு, அக்கினி, மண்ணின் தாகம் என்பன இலங்கை இலக்கியப்பரிசினைப் பெற்றன. அரசகரும மொழித் திணைக்கள கலாச்சார நிகழ்ச்சித்திட்டப் பரிசு, காட்டாறு நாவலுக்குக் கிடைத்தது. வீரகேசரி நாவல் போட்டியிலும் காட்டாறு முதற் பரிசினைச் சுவிகரித்துக் கொண்டது. ஈழநாடு நாவல் போட்டியில் இரவின் முடிவு, போராடப்பிறந்தவர்கள் என்ற தலைப்பில் முதற் பரிசு பெற்றது. மரணங்கள் மலிந்த பூமி நாவலுக்கு தமிழ் நாட்டு இலக்கியப் பெருமன்றம் சிறந்த நாவலுக்கான பரிசினை வழங்கியது. எட்டையபுரத்தில் நடந்த பாரதி விழாவில் இதற்கான பரிசும் கெளரவமும் வழங்கப்பட்டன. கணையாழி நடாத்திய தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் செங்கை ஆழியானின் யாழ்ப்பாணக்கிராமம் ஒன்று இரண்டாம் பரிசினைப் பெற்றது. கலைமகள் நடாத்திய அமரர் நாகரெத்தினம் குறுநாவல் போட்டியில் செங்கை ஆழியானின் 'மீண்டும் ஒரு சீதை' முதற் பரிசினைப் பெற்றுக் கொண்டது. விஜய குமாரதுங்க நினைவு மன்றம் செங்கை ஆழியானின் பாடிப்பறந்த பறவைகள் என்ற திரைப்பட எழுத்துப் பிரதிக்கு முதற் பரிசு வழங்கியது. அவரின் கஞ்சித்தொட்டி என்ற நாடகம், நாவலர் நூற்றாண்டு விழாப் போட்டியில் முதலாம் பரிசினைப் பெற்றது. 50 இற்க்கு மேற்பட்ட வானொலி நாடகங்களை அவர் எழுதி அவை ஒலி பரப்பாகியுள்ளன. கனடா சூரியன் சஞ்சிகை நடாத்திய இலங்கை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில், செங்கை ஆழியானின் நாளை எழுவான் ஒரு மனிதன்' என்ற சிறுகதை முதலாம் பரிசினைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம்.
புனைகதை சாராப் படைப்புகள்
இருபத்து நான்கு மணிநேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, பன்னிரண்டு மணி நேரம், களம் பல கண்ட கோட்டை என்பன செங்கை ஆழியானின புனைகதை சாராப் படைப்புகளாகும். அவரின் சுனாமி நூலையும் அவ்வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
()

Page 7
செங்கை ஆழியான்
ஆய்வு நூல்கள் ஈழத்தவர் வரலாறு, நல்லை நகர் நூல், யாழ்ப்பாண அரச பரம்பரை, Jaffna Dynasty, ஈழத்துச் சிறுகதை வரலாறு, சுருட்டுக் கைத்தொழில் என்பன செங்கை ஆழியானின் ஆய்வு நூல்களாகும். மகாவம்சத்தைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்து நூலுருவாக வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண தேசம், பூதத்தம்பி எனும் இரு சிறிய நூல்களை வரதர் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
தொகுப்பு நூல்கள்
சம்பந்தன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச்சிறுகதைகள், முன்னோடிச்சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் நானும் எனது கார்ட்டுன்களும், ஈழகேசரிச்சிறுகதைகள், முனியப்பதாசன் சிறுகதைகள், புதுமைலோலன் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச்சிறுகதைகள், சிங்களச் சிறுகதைகள். முதலானவை செங்கை ஆழியானின் தொகுப்பு நூல்களாகும்.
பட்டங்கள், விருதுகள்
இலங்கை இந்து கலாசார அமைச்சு, ‘இலக்கியச் செம்மல் என்ற பட்டத்தை வழங்கிப் பெருமைபெற்றது. கனடா சி.வை.தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ என்ற விருதை செங்கை ஆழியான் கனடா சென்றிருந்தபோது வழங்கிக் கெளரவித்தது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சு, 2001 ஆம் ஆண்டு நடந்த தமிழ் இலக்கிய விழாவில் செங்கை ஆழியானுக்கு 'ஆளுநர் விருது' வழங்கிக் கெளரவம் பெற்றது. 2005 ஆம் ஆண்டு கொழும்பு கம்பன் கழகம் தனது பெருவிழாவில் செங்கை ஆழியானுக்கு அவர் ஆற்றிய இலக்கியச் சேவையை மெச்சி விருது வழங்கிக் கெளரவித்தது.
செங்கை ஆழியானை ஆய்வுக்குட்படுத்தியோர்
செங்கை ஆழியானின் படைப்புக்களை ஆராய்ந்து தமது பட்டப்படிப்புக்களைப் பலர் பூர்த்தி செய்துள்ளனர்.
1. கந்தையா முருகதாசன் என்பார் தனது எம்.பில். முதுகலைப் பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் "செங்கை ஆழியான் நாவல்கள்-ஒரு திறனாய்வு நோக்கு என்ற ஆய்வினைச் சமர்ட்பித்து 2005 இல் தன் உயர்பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வாழ்வும் படைப்புகளும்
2. தமிழ் நாடு அய்யப்ப நாடார் ஜானகி அம்மாள் கல்லுரியைச்சேர்ந்த, ஜெ. ரதிதேவி என்பார் 2006 ஆண்டு, “செங்கை ஆழியானின் இருபுதினங்கள் காட்டும் சமுதாயம்' என்ற ஆய்வினை முதுகலைத்துறை தமிழாய்வு மையத்திற்குச் சமர்ப்பித்து, தனது எம். ஏ. முதுகலைமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். 3. “செங்கை ஆழியானின் நாவல்கள்-ஓர் ஆய்வு' (1990) என்ற கட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு செல்வி தி. செம்மனச் செல்வியும், 4. 'வன்னிப்பிரதேச நாவல்கள்’ (1984) என்ற ஆய்வுக்கட்டுரையை பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு இராஜேந்திரம்பிள்ளை சிவலிங்கமும் , 5. “செங்கை ஆழியானின் சிறுகதைகள்’ என்ற ஆய்வுக்கட்டுரையை யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்திற்குச் செல் வி அருள் ஞானமலர் ஐயனும் சமர்ப்பித் துத் தமது சிறப்புப்பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ளனர்.
குடும்பம் செங்கை ஆழியானின் மனைவி கமலாம்பிகை ஓய்வுபெற்ற ஒரு பாடசாலை அதிபர். மூத்த மகள் ரேணுகா ஒரு வைத்தியக்கலாநிதி. க்னவர் பிரதீப்குமார் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் டாக்டர். யதுர்சன், பிரணவி, விதுள்சன் ஆகியோர் ரேணுகா - பிரதீப்குமார் தம்பதியின் பிள்ளைகளும் செங்கை ஆழியானின் பேரருமாவள். இரண்டாவது மகள் பிரியா புவியியற் சிறப்புப்பட்டதாரியாவார். கல்கிசை- தெகிவளை மாநகர சபையின் உதவித்திட்டப் பணிப்பாளராகவுள்ளார். அவருடைய கணவர் பாலேந்திரன் ஒரு பொறியியலாளாராக் கொழும்பில் கடமையாற்றுகிறார் நிலானி அவர்களின் புதல்வி. மூன்றாவது மகள் ஹம்சா கொம்பியூட்டர் GeFTI6)luft 6T65f60fulfil (Software Engineering) Gifu aspirit. பெற்றோருடன் உள்ளார்.
LD60ofolpst
செங்கை ஆழியானின் மணிவிழா 25.01.2001 ஆந் திகதி அவரது இல்லத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவரது பிள்ளைகள் இவ்விழானை முன்னின்று நடாத்தினர். உற்றார் உறவினர், அயலவர், இலக்கிய நண்பர்கள், நிர்வாக நண்பர்கள், செங்கை ஆழியானினைக் கற்பித்த ஆசிரியர்கள் என செங்கை ஆழியானின் இல்லம் நிரம்பிக்களைகட்டியது. மூதறிஞள் சொக்கனின் தலைமையில் விழா எடுக்கப்பட்டது. செங்கை ஆழியானின்

Page 8
செங்கை ஆழியான்
ஆசிரியர்களான அமாரர் குணபாலசிங்கம், அமரர் சிவராமலிங்கம் ஆகியோரும் மூத்த இலக்கியப் படைப்பாளிகளான வரதர், நந்தி ஆகியோரும் முதலில் ஆழியானுக்கு ஆசி கூறினர். யாழ்ப்பாணத்தின் எழுத்தாளர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.
செங்கை ஆழியானின் பொன்விழாவை (50 வயது நிறைவு) கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் நல்லூர் கம்பன் கோட்டத்தில், 10.02.1999 ஆம் திகதி வரதர், நந்தி, செம்பியன் செல்வன், டிவகலாலா, பாலசுந்தரம்பிள்ளை, ஜெயராஜ் ஆகியோருடன் இணைந்து நடாத்துவதில் முன்னின்ற டொமினிக் ஜீவா, செங்கை ஆழியானுக்குக் கொழும்பில் மணிவிழா எடுத்தார். 07.03.2001 ஆம் திகதி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமையில் கொட்டாஞ்சேனை விவேகானந்தா மண்டபத்தில் இம்மணிவிழாப் பாராட்டுக் கூட்டத்தை டொமினிக் ஜீவா நடாத்தினார். திரளாக இலக்கிய நண்பர்கள் இப்பாராட்டில் கலந்து கொண்டனர். மூத்த படைப்பாளி அமரர் கசின், மணிவிழா நாயகனுக்குப் பொன்னாடை அணிவித்துக் கெளரவித்தார்.
பொன்விழாக் கண்ட கொழும்புத் தமிழ்ச் சங்கம் 16.02.2001 ஆம் திகதி, தமிழ்ச்சங்க மண்டபத்தில் செங்கை ஆழியானின் மணிவிழாவை நடாத்தியது. இலக்கிய அன்பர்கள், படைப்பாளிகள் திரளாகக் கலந்து கொண்டனர். கவிஞர் ஜின்னர் ஷெரிப்புத்தீன் பாமாலையால் மணிவிழா நாயகனை வாழ்த்தினார். இலக்கிய அன்பர்கள் புகழாரம் சூட்டினர். அன்று மாலை திருமதி. வினோதன் அவர்கள் செங்கைஆழியானையும் இலக்கிய அன்பர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைத் தன்னில்லத்திற்குத் தேநீர் விருந்திற்கு அழைத்தார். அதற்கு சென்ற பின்னர் தான் அது ஒரு விழா எனத் தெரிந்தது. செங்கை ஆழியானின் மணிவிழா அவரது இல்லத்திலும் கொண்டாடப்பட்டது.
மணிவிழா நிறைவாக யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம், தனது தமிழ் விழாவின் ஆறாம் நாள் நிகழ்வில், 10 05.2001 ஆம் திகதி, செங்கை ஆழியானின் அகவை அறுபதின் நிறைவினை நினைவு கூர்ந்து, பாராட்டு விழா ஒன்றினை நடாத்தியது. மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செங்கை ஆழியான் தம்பதி அங்கு கெளரவிக்கப்பட்டனர். அருட்திரு. அடிகளார் செங்கை ஆழியானுக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். இம்மணிவிழாவை நான்கு இடங்களில் நடாத்தியவர் களுக்கும் கலந்து கொண்டு வாழ்த் தியவர்களுக்கும்
வணக்கத்தோடு நன்றி கூறுகின்றோம்.
Dr. ரேணுகா பிரதீப்குமார்
12

செங்கை ஆழியானின் இலக்கிய நோக்கும் போக்கும் பேராசிரியர் சு.வித்தியானந்தன்.
எழுத்துலகிலே பலர் குறித்த சில துறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதுண்டு. அத்துறைகளில் குறித்த சில ஆண்டுகளில் மட்டும் தீவிரமாக இயங்குவதுண்டு. பல்வேறு சிலருள் ஒருவராக எம்மத்தியில் வாழ்பவர் செங்கை அழியான் என்ற புனைபெயர் கொண்ட திரு.க.குணராசா அவர்கள். இலங்கை நிர்வாக சேவையிற் பணி செய்யும் இந்த முதுகலைப் பட்டதாரி ஆக்க இலக்கியற் துறைகளான புவியியலாய்வு, பாடநூற் பிரசுரம் ஆகியவற்றிலுங் கடந்த கால் நூற்றாண்டுக் காலப் பகுதியிலே தொடர்ந்து பணியாற்றி வருபவர். கலை இலக்கிய நிறுவன அமைப்புக்களிலே பங்கு கொண்டு இயங்கிவருபவர். இலக்கியச் சாதனைகளுக்காகச் சாகித்திய மண்டலப் பரிசில்களையும் வேறு பல உயர் பரிசில்களையும் ஈட்டிக் கொண்டவர். இத்தகைய சிறப்புக்கள் பெற்ற ஒருவரின் இலக்கியப் ப்டைப்புக்கு அணிந்துரை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
செங்கை ஆழியானின் இலக்கியப் பணி தொடர்பாகச் சிந்திக்கும்போது அவர் பல்கலைக்கழக மாணவனாகத் திகழ்ந்து எழுத்துப் பணிகள் செய்து கொண்டிருந்த அறுபதுகளின் தொடக்க ஆண்டுகள் எனது நினைவுக்கு வருகின்றன. அக்காலப்பகுதி பொதுவாக ஈழத்துத் தமிழரின் சமுதாய, பண்பாட்டு வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாக அமைந்தது. மொழி, மதம், இனம் முதலிய பண்பாட்டுத் துறைகளிலே அந்நிய அடக்கு முறைக்கு எதிராகவும், சமூக ஏற்றத் தாழ்வு, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகிய உள்முரண்பாடுகளுக்கு எதிராகவும் ஒரு விழிப்பும் வேகமும் உருவாகி வந்த காலகட்டம் அது.
அத்தகைய சூழ்நிலையிலே ஈழத்துக்கலை, இலக்கியம்
ஆகிய துறைகள் சார்ந்த சிந்தனையாளர்கள் முன் பாரிய
தொரு சமூகப்பணி காத்திருந்தது. அப்பணி இருவகைப்பட்ட
தேவைகளை உள்ளடக்கியிருந்தது. ஒன்று, ஈழத்துத் தமிழரின்
பாரம்பரியக் கலை மரபுகளை நவீன காலத் தேவைகளுக்கு
ஏற்றவகையில் பாதுகாத்து வளர்த்தெடுத்தல்; இன்னொன்று 13

Page 9
செங்கை ஆழியான்
சமகாலச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பவல்ல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபடல். இவ்விருவகைத் தேவைகளையும் நிறைவு செய்வதற்குரிய களமாக அக்காலத்திற் பேராதனைப் பல்கலைக்கழகம் அமைந்தது.
இவ்விருவகைத் தேவைகட்கும் அடிநாதமாக அமைந்தது ஈழத்துத் தமிழருக்கெனத் தேசியத் தன்மைகொண்ட ஒரு கலை இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உயர் கல்வித்துறையிலே குறிப்பிடத்தக்க மாற்றமொன்று அக்காலப் பகுதியில் நிகழ்ந்தது. அதுவரை ஆங்கிலத்தையே போதனாமொழியாகக் கொண்டிருந்த பல்கலைக்கழக உயர்கல்வி குறிப்பிட்ட சில துறைகளிலே தேசிய மொழிகளைப் பயன்படுத்தத் தொடங்கியது. தமிழிலக்கியம், இலக்கணம், புவியியல், வரலாறு, பொருளியல், அரசறிவியல் முதலிய பாடங்கள் தமிழ் மொழியிற் கற்பிக்கப்படலாயின. இதன் விளைவாக அதுவரை காலமும் ஆங்கிலத்திலேயே சிந்தித்துக்கொண்டிருந்த பலருக்குத் தமிழிலே சிந்திக்கவும் செயற்படவும் வாய்ப்பு எற்பட்டது. தமது சமுதாயத்தின் பன்முகப்பட்ட பிரச்சினைகளையும் சுயமொழியினுடாகச் சிந்திக்கவும் அவற்றைப்பற்றிய தமது மனப்பதிவுகளைக் கலை இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தவும் ஏற்றதொரு வாய்ப்பை இந்த உயர்கல்வித் துறை மாற்றம் வழங்கியது.
இத்தகைய சூழ்நிலையையும் வாய்ப்பையும் உரிய வகையிற் பயன்படுத்தி ஆக்கப் பணி செய்யவல்ல இளைஞர் அணியொன்று அன்று பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைத்தது. தகுந்த வழிகாட்டலுடன், பல்கலைக்கழகத்தின் தமிழ் முயற்சிகள் அனைத்திலும் பங்குகொண்டு செயற்பட்டது. இவ்வணியினருள் ஒருவராக அன்று செயற்பட்டவர் செங்கை ஆழியான் அவர்கள். குறிப்பாகப் புனைகதைத்துறையிலே இவருடைய செயற் பாடுகள் அமைந்தன.
தொடக்கத்திலே இவர் சிறுகதைத்துறையிலே கவனம் செலுத்தினார். சமகாலச் சமுதாயப் பிரச்சினைகள் பலவற்றிற்கு எழுத்தில் வடிவம் தந்தார். தாம் எழுதியதோடு அமையாது பிறரையும் எழுதத்துண்டி நின்றார். செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்), க.நவசோதி ஆகியவர்களோடு இணைந்து நூல் வெளியீட்டுக்கெனப் பல்கலைக்கழகச் சூழலிலே ஓர்அமைப்பை உருவாக்கினார். பல்கலை வெளியீடு என்ற பெயரில் இடம்பெற்ற அந்த அமைப்பு மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளிக்கொணர்ந்தது. கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள் ஆகிய தலைப்புக்களில் அமைந்த அத்தொகுதிகள் பல புதிய எழுத்தாளர்களை அன்றைய ஈழத்துத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தது. செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், க.பரராஜசிங்கம் (துருவன்), அ.கயிலாயநாகன் (அங்கையன்). யோகேஸ்வரி, குந்தவை, முத்து சிவஞானம், கலா பரமேஸ்வரன், சி. மெளனகுரு, எம்.ஏ.எம். சுக்ரி, செல்வபத்மநாதன், சண்முகநாதன், சபா ஜெயராஜா முதலிய இப்புதிய எழுத்தாளர்களிற் செ.கதிர்காமநாதன், அங்கையன், கலா பரமேஸ்வரன் ஆகியோர் இன்று எம்மத்தி
14

வாழ்வும் படைப்புகளும்
யிலில்லை. ஏனையோருட் பலர் கலை, இலக்கியம், கல்வி, நிர்வாகப்பணி முதலிய துறைகளிலே சிறப்பாகத் தமது ஆற்றல்களை அன்றைய காலகட்டத்தில் இனங்கண்டு வெளிக்கொணரத் தூண்டி நின்றமை மூலம் செங்கை ஆழியான் ஓர் உந்து சக்தியாகத் திகழ்ந்தமை புலப்படும்.
செங்கைஆழியான் உட்பட மேலே குறிப்பிட்ட பலருடைய புடைப்புக்கள் அக்காலங்களில் வெளியான பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க ஏடான இளங் கதிரில் வெளிவந்தன. இவ்வெழுத்தாளர்கள் உருவாக்கியதில் இளங்கதிருக்கும் பெரும்பங்குண்டு. 1961ம் ஆண்டு இளங்கதிர் நடத்திய சிறுகதைப்போட்டியிற் செ.யோகநாகன், செங்கை ஆழியான், எஸ் மெளனகுரு ஆகியோர் பங்குபற்றினர். செ.கதிர்காமநாதன் இளங்கதிர் 15ஆவது இதழாசிரியராக இருந்தபோது சிறுகதையில் வேறெவரும் நினைத்துப்பாராத புதிய பரிசீலனை செய்யப்பட்டது. அதன் பயனாகச் “சோழகம்” என்ற தலையிற் சிந்தித்து உதித்த 'கரு' ஒவ்வொன்றும் ஒரு தனி ரகம். இம்மலரிற் செ.கதிர்காமநாதன், பே.செம்மணச்செல்வி, செங்கைஆழியான், சி.மெளனகுரு, முத்து சிவஞானம், அங்கையன், எம்.ஏ.சுக்ரி முதலியோரது படைப்புக்கள் இடம் பெற்றன. வேல்முருகை ஆசிரியராகக் கொண்ட அடுத்த மலரில் சி. மெளனகுரு, ஆசிச்செல்வன், சபா ஜெயராஜா, க.பரராஜசிங்கன் ஆகியோர் படைப்புக்கள் இடம் பெற்றன. இப்போது வீரகேசரி ஆசிரியராக விளங்கும் ஆ. சிவநேசச்செல்வன் (ஆசிச்செல்வன்) 17வது மலரின் ஆசிரியராக விளங்கினார். இம்மலரில் ம.சற்குணம், மு.பொன்னம்பலம், ஆசிச்செல்வன், சபா ஜெயராஜா ஆகியோர் படைப்புக்கள் வெளிவந்தன. 1966 - 67ம் ஆண்டில் வெளிவந்த மலரில் ஆசிச்செல்வன், கலா பரமேஸ்வரன், ஆ.பஞ்சாட்சரம், மு.பொன்னம்பலம் முதலியோர் படைப்புக்கள் இடம்பெற்றன.
எனவே செங்கை ஆழியான் பல்கலை வெளியீடுகள் மூலமும் இளங்கதிர் மூலமும் தம் காலத்து எழுத்தாளர் பலருடன் தனது எழுத்தாற்றலை வளம்படுத்தினார். பல்கலைக்கழக வாழ்க்கைக்குப் பின்னர் இவர் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் தமது செயலூக்கத்திறனை தொடர்ந்து புலப்படுத்தி வந்தார்: புதிய தலைமுறைகள் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்குப் பின்னர் இவர் யாழ் இலக்கிய வட்டத்துடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் தமது செயலூக்கத் திறனை தொடர்ந்து புலப்படுத்தி வந்தார்: புதிய தலைமுறைகள் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தார்.
இவ்வாறு இயக்க சக்தியாகத் திகழ்ந்ததோடு தமது எழுத்தாற்றலையும் தொடர்ந்து பேணி வளர்ந்து வந்தார். தொடக்கத்திலே சிறுகதைகள் எழுதிய இவர் அத்துறையிலே கைவந்த ஆற்றலுடன் நாவலியக்கியத் துறையிலே சிறப்பாகக் கவனம் செலுத்தினார். தொடர் கதைகளும், குறுநாவல்களும். முழுநாவல்களுமாக ஏறத்தாழ இருபது ஆக்கங்கள் இவரால் இதுவரை எழுதப்பட்டு நூல்வடிவம் பெற்றுள்ளன. இத்தொகை, எழுத்துத் துறையிலும் வெளியீட்டுத் துறையிலும்
5

Page 10
செங்கை ஆழியான் ஒரு சாதனை என்பது தெளிவு. குறிப்பாகத் தனிப்பட்ட எழுத்தாளரொருவர் தொடர்ந்து பல நூல்களை வெளிக்கொணர்ந்து, இத்துறையில் ஒரு வரலாற்றை உருவாக்கியுள்ளரென்பது தெரிகிறது. அவ்வாறு வெளிவந்த வந்த நாவல்களில் ஒன்றான காட்டாறு இப்பொழுது இரண்டாவது பதிப்பாக வெளிவருகின்றது. இந்நாவல் தொடர்பாக நோக்குவதற்கு முன்பு செங்கை ஆழியானுடைய இலக்கிய நோக்கும் போக்கும் இங்கு கவனத்திற்குரியனவாகின்றன.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை என்பன நடைமுை முதாயத்தை நடப்பியல்புடன் சித்தரிக்கும் கலை வடிவங்களாகும். செங்ை ujiT5)60)Lu மேற்படி பெரும்பான்மையான ஆக்கங்கள் நடைமுறைச் சமுதாய நடப்பியல்புச் சித்திரங்களேயாம். இவற்றின் மூலம் செங்கை ஆழியான் அவர்கள் தமது சமூகப் பார்வையைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். குறிப்பாக சமூக பொருளாதாரக் குறைபாடுகள், தலைமுறை இடைவெளி, நகரமயப்பட்ட வாழ்க்கை முறையிற் சிதைவுறும் கிராமியம், அழிந்துவரும் பாரம்பரியக்கலை மரபுகள், மண்ணோடியைந்த வாழ்க்கை முறை முதலிய பல்வேறு விடயங்கள் இவரது புனைகதைகளுக்கு பொருளாக அமைந்தன. இவற்றின் மூலம் ஈழத்துத் தமிழர் சமுதாயத்தின் பதிவேடுகளெனத் தக்க பல படைப்புக்களை இவர் தந்துள்ளார்.
குறிப்பாக சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டு இவராற் படைக்கப்பட்ட பிரளயம் நாவல் யாழ்ப்பாணக் கிராமமொன்றிலே நிகழ்ந்துவரும் சமுதாயத்தின் மாற்றத்தை அதன் இயல்பான நடப்பியல்புடன் காட்டுவது. நீண்ட காலமாக உயர்சாதிக்குக் குடிமை செய்து வந்த சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒன்று கல்வி, பிற தொழில் முயற்சிகள் என்பவற்றால் அக்குடிமை நிலையினின்று விலகிப் புதிய வாழ்க்கை முறைக்கு அடியெடுத்து வைக்க முயல்வதே இந்நாவலின் கதைப்பொருள். இம்மாற்றத்திற்கு இளைய தலைமுறை முனைந்து நிற்கிறது. ஆனால் முதிய தலைமுறை பாரம்பரியச் சிந்தனையோட்டத்திலிருந்து விடுபடமுடியாமல் திணறுகிறது. இதனைப் பிரளயம் சுவைபட எடுத்துக்காட்டுகிறது. யாழ்ப்பாணத்தின் பாரம்பரியக் கலைமரபுகளில் ஒன்றான காற்றாடிக் கலை (பட்டம் விடுதல்) முற்றத்துஒற்றைப்பனை என்ற குறுநாவலுக்குப் பொருளாயிற்று. இதிலே யாழ்ப்பாணக் கிராமமொன்று அதன் வகை மாதிரியான கதைமாந்தருடன் வாசகர் முன் வருகிறது. கொத்தியின் காதல் என்ற நாவல் தமிழரின் சமூகக் குறைபாடுகளைப் பேய்களின் வாழ்க்கை முறையில் உருவகித்துச் செய்யப்பட்ட ஒரு கற்பனை ஆக்கம். சமுதாயமாற்றங் களையும் உலக நடப்புக்களையும் யாழ்ப்பாணப் பிரதேச முதிய தலைமுறையின் கண்ணோட்டத்திற் சுவைபடச் சித்தரிப்பது. ஆச்சி பயணம் போகிறாள் என்ற நாவல். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தீவுப் பகுதி ஒன்றின் வாழ்க்கை முறைகளை அதன் மண்மணமும் கடல் மணமும் தமிழ்க் காதல் உணர்வும் இழையோடச் சித்திரிப்பது வாடைக் காற்று. யாழ்ப்பாணத்தின் சுருட்டுத் தொழிலாளர் குடும்பமொன்றின் பொருளாதாரப் பிரச்சினைக்கு வடிவம் தருவது இரவின் முடிவு.

வாழ்வும் படைப்புகளும்
இவ்வாறு அவர் எழுதியுள்ள பல நாவல்களிலும் அடிநாதமாக இழையோடி நிற்கும் பண்பு அவரது சமூகப் பார்வையாகும் சமகால சமூகப்பிரச்சினைகளுக்கு வடிவம் கொடுக்க வேண்டுமென்பதிலே அவர் கொண்டுள்ள தணியாத தாகம் இந்த ஆக்கங்களிலே புலப்படும். இத்தாகம் இன்னும் அவருக்குத் தீரவில்லையென்பதை அவரது அண்மைக்கால எழுத்துக்கள் புலப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சமூகப்பிரச்சினைகளுக்கு இலக்கிய வடிவம் தருவதிலே செங்கை ஆழியான் தனது சமகால எழுத்தாளர்களிலிருந்தும் வேறுபட்டுத் தனக்கெனச் சில தனித்தன்மைகளைக் கொண்டவராகத் திகழ்கிறார். குறிப்பாகப் பிரச்சி னைகளிலிருந்து கதையம்சத்தைத் தேர்ந்து கொள்வதிலும் கதை மாந்தரின் குணநலன்களை உருவாக்கி வளர்த்துச் செல்வதிலும் கதையை விபரிக்கும் முறையிலும் அவரது தனித்தன்மைகள் வெளிப்பட்டன.
சமூகப் பிரச்சினைகளிலிருந்து கதையம்சத்தைத் தேர்ந்து கொள்வதிற் சிலரைப் போலக் கோட்பாடு ரீதியான அணுகுமுறைகளை அவர் கடைப்பிடிப்பதில்லை. சமூக மாந்தரின் சராசரி உணர்வுகளினடியாகவே அதனைத் தேர்ந்தெடுப்பார். இந்தப் பண்பை அறுபதுகளின் தொடக்க ஆண்டுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அறுபதுகளிற் காலத்தின் குரல்கள் என்ற சிறுகதைத் தொகுதியில் இவர் எழுதிய ‘சாதி’ என்ற கதையும், எழுபதுகளில் எழுதிய 'பிரளயம்' என்ற நாவலும் சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டவை. பொதுவாகக் கோட்பாடு ரீதியில் இப்பிரச்சினையை அணுகுவோர் தாழ்த்துவோர் தாழத்தப் பட்டோர் ஆகிய இருசாராருக்குமிடையிலான போராட்டமாக மட்டுமே இதனை நோக்குவர். ஆயின் செங்கை ஆழியான் அவர்கள் கோட்பாட்டு அடிப்படைக்கு அப்பாற் சென்று தாழ்த்தப்படுவோரின் உள்ளேயே காணப்படும் தீண்டாமையையும் புதிய தலைமுறை எழுச்சிகளையும் உயர் சாதியினரிடமும் நிகழ்ந்துவரும் மனமாற்றத்தையும் கதையம்சங்களாகக் கொண்டார். குறிப்பாகச் சாதி என்ற சிறுகதையிலே தாழ்த்தப்பட்டோர் தம்மைத் தாழ்த்து வோருக்கு எதிராக இயக்க ரீதியாகப் போராடமுனையும் வேளையிலே கூடத் தமக்குள்ள ஏற்றத் தாழ்வுகளை மறக்காமற் பேணிக்கொள்ளும் மனப்பான்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார். பிரளயம் நாவலிற் சமுதாயத்தின் இயல்பான மாறிவரும் நிலை கதையம்சமாகிறது. உயர்சாதியினரின் கொடுமைகட்கு ஆளாகும் சலவைத் தொழிலாளி குடும்பம் முன்னேறுவதற்கு இவ்வுயர் சாதியினருளொருவனே கைகொடுக்கும் வரலாற்றுப்போக்கு கதையில் அமைகிறது.
கதைமாந்தரின் குணநல உருவாக்கம் என்ற வகையிலும் மேற்படி பிரளயம் நாவல் செங்கை ஆழியானின் தனித்தன்மையைப் புலப்படுத்துகின்றது. உயர்சாதியினனும் இயல்பாகவே சமூகநோக்கம் கொண்டிருந்தவனுமாகிய மகாலிங்கம் கதையின் முடிவிலே தாழ்த்தப்பட்ட சாதியின் பாதிக்கப்பட்ட
17

Page 11
செங்கை ஆழியான் பெண் ணொருத்திக்கு வாழ்வு கொடுக் கும் உயர்ந்த மனிதனாக நிறைவடைகிறான். இதன் மூலம் நெஞ்சைவிட்டகலாத கதாபாத்திரமாகவும் நிலைத்து விடுகிறான். வாடைக்காற்று நாவலில் வரும் செமியோன, மரியதாஸ் என்ற முரண்நிலைப் பாத்திரங்களும் செங்கை ஆழியானின் கதைமாந்தர் சித்திரிப்புக்குத் தக்க சான்றுகளைாக அமைபவையாகும்
செங்கை ஆழியானுடைய கதை கூறும் முறைமையில் இருவகைச் சிறப்புக்களை அவதானிக்கலாம். ஒன்று, அவரது நுணுக்க விவரணமுறை: இன்னொன்று சமூகத் தைப் படம்பிடித்து முன்னிறுத்தும் அவரது மொழிநடை புனைகதைத்துறையில் நுணுக்கவிவரணம் என்பது சமுதாயத்தின் பண்பாட்டம்சங்களைப் பதியும் முயற்சியாகும். பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், சூழ்நிலைகள் முதலியவற்றை அவற்றின் மண்ணின் மணத்துடன் காட்டுந் திறனே நுணுக்க விவரணத்திற்கு அடிப்படையாகும். இத்திறன் செங்கை ஆழியான் அவர்களிடம் நிறையவே காணப்படுகின்றது. அவரது எல்லா நாவல்களிலும் இப்பண்பை நோக்க முடியும். எனினும், 'வாடைக்காற்று இவ்வகையிற் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த நெடுந்தீவுக் கிராமத்தைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் இந்நாவல் ஈழத்தின் மண்வாசனை இலக்கியங்கிலொன்றாகக் கணிக்கத்தக்க சிறப்புடையது.
இத்தகைய விவரணங்களுக்கு அவர் கையாளும் மொழிநடையும் மிகத் துணை செய்வதாகவுள்ளது. நகைச் சுவையும் இரசனையுணர்வும் இழையோடும் இவரது கதைசொல்லும் முறைமையிலே யாழ்ப்பாணத்துப் பிரதேச மொழிவழக்கின் வளத்தை நன்கு அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு கடந்த கால் நூற்றாண்டு காலமாகத் தமது சமூகப்பார்வையையும் யாழ்ப்பாணப் பிரதேசச் சமூகத்தைச் சித்திரிப்பதிலே தனது படைப்பாற்றலையும் புலப்படுத்தி வந்துள்ள செங்கை ஆழியான் அவர்களின் சற்று வேறுபட்ட சமூகக் களத்தைப் பகைப்புலமாகக் கொண்ட படைப்பே ‘காட்டாறு' நாவலாகும். இந்நாவல் வன்னிப்பிரதேசக் களத்தில் எழுதப்பட்டது. வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் என்ற கிராமத்தின் சாயலிலே கற்பனை செய்யப்பட்ட "கடலாஞ்சி' என்ற கிராமத்தில் இதன் கதை நிகழ்கிறது.
விவசாயக் கிராமமாகிய கடலாஞ்சியிலே நிகழும் சமுதாயச் சுரண்டல்களும் அவற்றுக்கெதிராக நிகழும் எழுச்சியுணர்வுமே இந்நாவலின் கதையம்சம். விளைந்து வரும் பயிருக்குத் தண்ணிர் பெறமுடியாமல் விவசாயிகள் வாடி வருந்தி நிற்கும் வேளையிலே சமூகத்தில் பணம் படைத்தவர்களும் அரச பணியாளர்களும் சகல வசதிகளையும் வாய்ப்புக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய ஊழலும் சுரண்டலும் இளம் தலைமுறையினரையும் ஏழைகளையும் வர்க்க ரீதியாகச் சிந்திக்கத்தாண்டி நிற்கின்றன. இந்நிகழ்ச்சிகளே காட்டாறு என்ற நாவலாக விரிவடைகின்றன.
18

வாழ்வும் படைப்புகளும்
யாழ்ப்பாணக் குடாநாட்டையும் அதனைச் சார்ந்த தீவுப் பகுதியினையும் பிறப்பிடமாகக் கொண்ட பலர் புலம் பெயர்ந்து வந்து கடலாஞ்சியிலே குடியேறுகின்றனர். மலையகத்தோட்டங்களிலிருந்து வந்தவர்களும் அங்கு தொழில் செய்கின்றனர். அக்கிராமத்தில் உருவாகிவரும் புதுப்பணக்காரர்களும், தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களும், பாடசாலை ஆசிரியர், மருத்துவர், நீர்ப்பாசனை அலுவலர் முதலியோரும் சுரண்டும் வர்க்கங்களாகச் செயற்படுகின்றனர். இச் சுரண்டலை விவரிக்கும் வகையில் வன்னிப்பிரதேச மண்வளம், கிராமிய சமுதாய அமைப்பு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, தொழில் முறை என்பன நுணுக்க விபரங்களுடன் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விவரணங்களினூடே காதல் நட்பு முதலிய உணர்வு நிலைகளும் இணைந்து கதை வளர்கின்றது.
இவ்வாறு ஒரு விவசாய சமூக விவரணமாக அமையும், இந்நாவலை எழுதுவதற்கு அடிப்படையாகத் தன்னைத் தூண்டிநின்ற உணர்வை ஆசிரியர் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்: V
“விவசாய தொழிலாள மக்கள் கூட்டமாக காடுகளை வெட்டிக் கொழுத்திக் கழனியாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னொரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையிலே உலாவும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோகக் கூட்டமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றனர் என்பதை நான் என் கண்களால் காணநேர்ந்தது. மண்ணையும், பொன்னையும் ம்ட்டுமா அவர்கள் சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? கிராமப்புறங்களின் அபிவிருத்திக்காக நல்ல மனத்துடன் ஒதுக்கப்படுகின்ற கிராமமக்களுக்கான செல்வம் ஐஸ்கட்டி கைமாறுவதைப் போலக் கைமாறி ஒரு துளியாக நிலைப்பதையும் கண்டேன். இந்தத் தேசத் துரோகிகளை-மக்கள் விரோதிகளை-மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானதுதான் காட்டாறு’ (காட்டாறு ஆசிரியர் முன்னுரை)
இவ்வாறு சமூகத்தின் குறைபாடுகளைக் கண்டெழுந்த சத்திய ஆவேசத்தின் தொனியை இந்த நாவலில் முழுவதுமாக நாம் தரிசிக்க முடியும்.
செங்கை ஆழியானுடைய இந்த நாவல் அவரது ஏனைய நாவல்களிலிருந்து கதை, கதைக்களம், கதையம்சம் என்பனவற்றில் மட்டுமன்றிச் சமூகப் பிரச்சினைகள் பற்றிய அவரது அணுகுமுறையிலும் வேறுபட்டு நிற்பது தெரிகிறது. ஏனைய நாவல்களிலிருந்து சமூக வரலாற்றின் இயல்பான நோக்கிலும் மனிதாபிமான உணர்வுகளினதும். அடியாகத் தீர்வுநாடிய செங்கை ஆழியான் இந்த நாவலிலே இயக்க ரீதியான ஆயுதந் தாங்கிய போராட்ட மூலமே தீர்வு காண முடியுமென்ற கருத்தை நாவலில் இழையோடவிட்டுள்ளார். இது அவரது சமூகப்பார்வை, இலக்கிய நோக்கு என்பனவற்றில் நிகழ்ந்த ஒரு வளர்ச்சியென்பது புலனாகிறது.
19

Page 12
செங்கை ஆழியான்
காட்டாறு நாவல் செங்கை ஆழியானுடைய படைப்பு என்ற வகையில் மட்டுமன்றி வன்னிப்பிரதேச நாவல் என்ற வகையிலும் பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல் வரிசையிலும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாவலாகும். இந்த நாவல் வன்னிமக்களின் பிரச்சினைகளுக்கு வடிவம் கொடுத்த தரமான படைப்பு என்ற சிறப்புக்குரியது. கடந்த ஒரு நூற்றாண்டுத் தமிழ் நாவல் வரலாற்றிலே வெளிவந்த ஐநூறுக்கு மேற்பட்ட நாவல்களிலே விரல்விட்டு எண்ணத்தக்க பத்துத்தரமான படைப்புக்களிலே ஒன்றாக அமையும் சிறப்பு இந்த நாவலுக்கு உளது.
குணராசாவின் தொழில் உதவி அரசாங்க பதவியா அல்லது எழுத்துத் துறையா என்று கேட்குமளவுக்குக் கடந்த கால் நூற்றாண்டுக்காலமாக எழுத்துத் துறையில் இடைவிடாது பணியாற்றிவரும் செங்கை ஆழியான் அவர்கள் காட்டாறு போன்ற தரமான படைப்புக்களை மேலும் தர வேண்டுமென ஈழத்து இலக்கிய உலகம் எதிர்பார்க்கின்றது. அதுவே எனது வேணவாவுமாகும். (முன்னுரை - 10.12.1986)
காட்டாறு குறித்து நா.சுப்பிரமணியம்
"செங்கைஆழியானின் காட்டாறு விதந்துரைக்கத் தக்கது. வன்னிப்பிரதேச விவசாயிகளினது அடிப்படைப் பிரச்சினைகளைச் சற்று ஆழமாக அலசும் இந்த நாவலில் அதற்கேற்பச் சமுகவர்க்கங்களை இனங்கண்டு காட்டும் பண்பு அமைந்துள்ளது. வன்னிப்பிரதேச நாவல் வரலாற்றிலும் செங்கை ஆழியானின் நாவல் வரலாற்றிலும் ஒரு திருப்புமுனை எனலாம். விளைந்து வரும் பயிருக்குத் தண்ணிர் பெற முடியாமல் ஏழை விவசாயிகள் வாடி வருந்தும்போது, பணமத் படைத்தவர்களும், கிராமத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களும் மக்கள் நலன் கருதிப் பணியாற்ற வேண்டிய அரசாங்க அலுவலர்களும் சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் தமக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏழைகளைப் பல வழிகளிலும் சுரண்டுகிறார்கள். இச் சுரண்டல்களால் பாதிக்கப்பட்ட கிராம விவசாயிகளின் இளைய தலைமுறை வர்க்க உணர்வு பெறத்தொடங்குகிறது. சுரண்டுவோருக்கெதிராக வன்முறை தலை தூக்குகிறது.
கடலாஞ்சி' என்ற கற்பனைக்கிராமமே கதை நிகழிடம். வவுனியா, மன்னார், செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களின் புவியியற் சூழலைப் புலப்படுத்துவதாக கொள்ள முடிகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு, தீவுப்பகுதிகள் ஆகியவற்றிலிருந்து ‘நிலமகளைத் தேடி வந்து குடியேறியவர்களும் தொழில் நாடி வந்த இந்திய வம்சாவழியினரும் விவசாயம் செய்து வாழ்கின்றனர். சந்தனம், கணபதி, தாமரைக்கண்டு ஆகிய பாத்திரங்கள் இச்சமுகப்பிரதிநிதிகள். புதுப்பணம் படைத்தவர்களும், கிராமத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள சியாமன்', விதானையார் போன்றவரும், பாடசாலை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், நீர்ப்பாசன காணி அலுவலர்கள் முதலிய அரச பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினரும் சுரண்டும் சமுக விரோதப் போக்குடையவராகக் காட்டப்படுகின்றனர். மக்களையும் அரசையும்
20

வாழ்வும் படைப்புகளும்
ஏமாற்றி இவர்கள் புரியும் சமுக விரோதச் செயல்கள் நாவலின் கதை அம்சமாக அமைகின்றன. இவற்றை எதிர்த்து கிராம இளைஞரிடையே வன்முறை தலை தூக்குகின்றது. சந்தனம் இளைஞரியக்கத்தைத் தூண்டும் பாத்திரமாக அமைந்துள்ளான்.
விவசாயிகளது அன்றாட வாழ்க்கை முறை, வேட்டையாடுதல், புதுக்காடு வெட்டிப் பயிர் செய்தல் முதலிய தொழில் முறை விபரணங்கள் நாவலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. காதல், நட்பு முதலிய உணர்ச்சிகளும் கதை வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன. காட்டாறு மண்ணையும் மக்களையும் உள்ளும் புறமுமாகக் காட்டும் முயற்சியில் ஈடுபட்டது. அனுபவபூர்வமான அணுகல் முறையும், சமுதாயத்தின் இயக்கத்தை அவதானிக்கும் மனிதாபிமானக் கண்ணோட்டமும் இதற்குத் துணைபுரிந்துள்ளன.
வீரகேசரிப் பிரசுரகளத்தைத் தக்க வகையில் பயன் படுத்திக் கொண்டவர் செங்கை ஆழியான். பல்வேறு பிரதேச சமுகங்களை ஈழத்து நாவலுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்துள்ளார். மீனவர்கள், சலவைத் தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர், விவசாயிகள் ஆகியோரது சமுகப்பிரச்சினைகளை அணுகியுள்ள அவர் படைப்புகளில் சமுகப்பார்வை விரிவடைந்து வருவதை பிரளயம், காட்டாறு இரண்டிலும் நன்கு அவதானிக்க முடிகிறது.
(வீரகேசரிப்பிரசுர நாவல்கள்.1977)
தினகரன் காலம் வாழி!
சங்கமா தமிழ்பூத்த கலாச்சாரங்கள்
தரணியெலாம் பரப்புகின்ற சிந்தை தாங்கி பொங்குநூல் பலநுகர்ந்து தெளிவு கண்டு
புனித மிகு கட்டுரைகள் கதைக்கொத்து தங்குநா டகநெறிகள் இவை புகட்டும்
தலைமகனாம் குணராசா என்னும் செம்மல் செங்கையா ழியான்பாதத் துணையினாலே
தினகரன்கா லம்சுகமாய் வாழிவாழி.
-கலாநிதி அருட்கவி சி. விநாசித்தம்பி (01.07.2005)
21

Page 13
இலக்கிய சாதனை இரசிகமணி கனக செந்திநாதன்
அன்புள்ள செங்கை ஆழியானைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. ஆம். ஐம்பது பக்கங்களுள்ள புத்தகத்திற்குச் சொல்லக் கூடிய விடயங்கள் என் நினைவில் இருக்கின்றன. அவற்றில் எதைச் சொல்வது? எதை விடுவது? என மனம் ஊசலாடுகிறது.
தங்களது கதைகளையும், தங்களைச் சேர்ந்தவர்களது படைப்புக்களையும் மாத்திரம் படித்துவிட்டு, “ஆகா நாங்கள் தான் இந்த நாட்டின் இலக்கியச் சாம்ராட்டுகள்’ என்று தங்கள் முதுகிலேயே தாங்களே சொட்டிக் கொள்ளும் இலக்கியவாதிகள், செங்கை ஆழியானின் இலக்கிய முயற்சிகள் பற்றிப் பேசாமலிருக்கலாம். எழுதாமல் விடலாம். இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால் அவர் எழுதிய பல்வகைப்பட்ட கதைகளையும் அவரது விடா முயற்சியையும் நன்மனமுடையவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்தாமல் இருக்க (Մ9ԼԳԱ IITՖl. h
பல்வகைக் கதைகள், பலவித முயற்சிகள் என்று கூறினேன். அவை என்ன? அவர் எப்படிப்பட்ட கதைகளை எழுதுகிறார்? அவள் பார்வைகள் எங்கெல்லாம் பட்டிருக்கின்றன? இவ்வினாக்களுக்கு விடை காண்பதன் மூலந்தான் தான் "செங்கை ஆழியானை இனம் காண முடியும்.
அவருடைய "ஆச்சி பயணம் போகிறாள்’ என்ற நாவல் மெல்லிய நகைச்சுவை கொண்ட படைப்பு. "கொத்தியின் காதல்’ சமூகத்தில் புரையோடி இருக்கும் சில குறைகளை எடுத்துக் காட்டி நல்ல கற்பனையோடு எழுதப்பட்ட நகைச்சுவைக் கதை. ‘முற்றத்து ஒற்றைப்பனை சாதாரண மனிதர்கள் சிலவிடயங்களில் - பொருட்களில் வைக்கின்ற அபரிமிதமான ஆசையை எடுத்துக்காட்டும் மனோ தத்துவ ரீதியான கதை. தனது பனை தறிக்கப்பட்டதும் இறந்துவிடும் அந்தக்கிழவர் மாரிமுத்தர் அழியாத சித்திரம். அது ஒரு குறு நாவலாக இருந்தாலும் செங்கை ஆழியானுக்குப் பெருமை தரும் படைப்பு. வானொலி நாடகமாகச் செய்யப்பட்டபோது அது இன்னமும் வெற்றியைப் பெற்றது.
இவற்றைவிட இவர் எழுதிய பெரிய நாவல்கள் வேறு களத்தில் வெவ்வேறு கோணத்தில் எழுதப்பட்டவை. 'வாடைக்காற்று நெடுந்தீவைக் களமாகக் கொண்டு வாடி அமைத்து மீன்பிடித்தொழில் செய்யும் மக்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைக் கூறும் கதை. இக்கதையின் அமைப்பையும் வெற்றியையும் கண்ட அன்பர்கள், முக்கியமாகக் குரும்பசிட்டி அன்பர்கள் அதைத் திரைப் படமாகத் தயாரித்தார்கள். இது செங்கை ஆழியானின் கதை அமைப்பிற்கு ஒரு வெற்றி.
2

வாழ்வும் படைப்புகளும்
‘பிரளயம்’ என்ற அடுத்த நாவல் வண்ணார்பண்ணையிலுள்ள நரியன்குண்டுக் குளத்தையும் அதன் சுற்றாடலையும் நிலைக்களனாகக் கொண்டது. சேலை தோய்க்கும் சலவைத் தொழிலாள சமூகத்தின் வாழ்க்கையையும் அவலத்தையும் மேல் சாதியென்போரின் சாதி அகம்பாவத்தையும் சித்திரிக்கும் நாவல். மேல் சாதியென வீமபு பேசும் கூட்டத்தில் இருக்கும் ஆண்மையுள்ள வாலிபன் ஒருவன் தன் அண்ணன் செய்த முறை தவறிய நடத்தைக்காக தானே சலவைத் தொழிலாள சமூகத்துப் பெண்ணைக் கைப்பிடிக்க முன்வரும் புரட்சிக் கதை. இந்நாவல் 1975 இல் சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுக் கொண்டது.
வாடைக்காற்றையும் பிரளயத்தையும் வெளியிட்ட வீரகேசரி நிறுவனமே செங்கை ஆழியானின் “இரவின் முடிவு' என்ற நாவலையும் வெளியிட்டது. அதனை இன்னமும் வாசிக்குப் பேறு கிட்டவில்லை. ஆனால் அது ‘ஈழநாடு’ தன் பத்தாண்டு நிறைவிற்காக நடாத்திய நாவல் போட்டியில் பரிசிலைப் பெற்ற நாவலென அறிகிறேன். அது ஒரு சுருட்டுத் தொழிலாளியின் வாழ்வு பற்றிய குடும்பச்சித்திரம் என்பது என் ஞாபகம். நல்லதொரு நாவலென நடுவராக இருந்த அன்றே என் மனதில் அது பட்டிருந்தது.
“காட்டாறு வீரகேசரியின் 50 ஆவது நாவலாகப் பிரசுரமாகி 1500 ரூபா பரிசு பெற்ற நாவல். சாகித்திய மண்டலப் பரிசினைப் பற்றிக் கூறுவோர் வீரகேசரிப் பரிசைப் பற்றி என்ன சொல்லப்போகின்றார்கள்? குறுநாவல்களையும் பெரு நாவல்களையும் தவிர செங்கை ஆழியான், ‘இதயமே அமைதி கொள்’, என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கிறார். சுதந்திரன், ஈழநாடு, கலைச்செல்வி" ஆகிய பத்திரிகைகள் நடாத்திய சிறுகதைப்போட்டிகளில் பரிசில்களைப் பெற்றவர். நாவலர் நூற்றாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடகப்போட்டியில் முதற் பரிசினைப் பெற்றவள் செங்கை ஆழியான்.
நாவல், சிறுகதைகளைவிட அவர் 'வழுக்கியாறு பற்றி எழுதிய சித்திரமும் போற்றக் கூடியதே. யாழ்ப்பாண மாதா மலடி என்ற பெயர் கேளாமல் சத்திரசிகிச்சை மூலம் பெற்றெடுத்த குழந்தை அது. அதைப்பற்றி யார் கவனித்தார்கள்? சிலர் ஒரு வரியில் பாடியிருக்கிறார்கள். செங்கை ஆழியான் அருமையாக ஒரு சிறுநூல் அளவிற்கு நல்ல சித்திரமாகவல்லவா தீட்டியிருக்கிறார்?
அவருடைய இன்னொரு நூல் ‘சுருட்டுக் கைத்தொழில்’ பற்றியது. யாழ்ப்பாண முக்கிய குடிசைக் கைத்தொழில் பற்றி ஏனோ தானோ என்று எழுதாமல் சரியான புள்ளி விபரங்களுடன் எழுதப்பட்டது இந்நூல். இந்த நூலிற்கு நானே அணிந்துரை வழங்கியுள்ளேன்.
குறுநாவல்கள், நாவல்கள், சிறுகதைகள் என்பனவற்றோடு அவருடைய ஆற்றல்கள் நின்று விடவில்லை. இலக்கிய உலகில் செங்கை ஆழியான் என்ற பெயர் எவ்வளவு தூரம் பரவலாகப் பேசப்படுகின்றதோ, அவ்வளவுக்குக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பூமிசாஸ்திரப்பாட நூல்களுக்காகக் குணராசா என்ற பெயர் புகழேங்கியிருக்கின்றது. தமிழில் பூமிசாஸ்திரத்தை இலகுவாக்கியவர்
குனராசா என்பது மறுக்க முடியாத, உண்மை.
23

Page 14
செங்கை ஆழியான்
இன்னும் செங்கை ஆழியானைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கின்றது. முக்கியமாகச் செட்டிகுளத்தில் அவரது வாடைக்காற்று புத்தக வெளியீட்டில் அன்று நடந்த இன்ப நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. முக்கியமாக அங்கு வந்திருந்த எழுத்தாளர்களுக்கு நடந்த கெளரவம் வழி நெடுக நடந்த வரவேற்பு, நான் செங்கை ஆழியானுக்குப் பொன்னாடை போர்த்து அவரின் இலக்கிய முயற்சிகளைப் பற்றிப் பேசிய விதம் எல்லாம் ஞாபகத்தில் எழுகின்றன.
இது மாத்திரமல்ல - சென்ற மாதம் அவரது ‘காட்டின் அழகு’ என்ற உரைச்சித்திரத்தை வானொலியில் ஒலிபரப்பினார்கள். எத்தனையோ புலவர்கள் ஆற்றையும் காட்டையும் வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் அருவியாற்றையும் மதவாச்சிப் பகுதிக்காட்டையும் நடைச்சித்திரமாக்கி, அங்கு வாழும் மிருகங்கள், பாம்புகள், பறவைகள் அவற்றின் இயற்கைத் தன்மைகள் இவற்றை அப்படியே படம் பிடித்து, அவற்றிடையே மனிதர்களின் குணங்களைச் செருகி எழுதியிருந்த முறை மிகக் கவர்ச்சியாக இருந்தது. தமிழ் நாட்டில் இவர் எழுதுகிறார், ஈழத்தில் அவர் எழுதுகிறார் என்றெல்லாம் பேசும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை. காட்டின் அழகு என்ற இந்தச் சித்திரத்தை ஒரு முறை கேளுங்கள். செங்கை ஆழியானைப் பற்றி ஈழம் நிச்சயம் பெருமைப்படலாம் என்ற முடிவிற்கு வருவீர்கள்.
இன்னும் செங்கை ஆழியான் “புவியியல்’ என்ற அறிவியற் பத்திரிகையை நடாத்தியிருக்கிறார். 'விவேகி' என்ற இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். யாவற்றிலும் செங்கை ஆழியானின் திறமை வெளிப்பட்டிருக்கின்றது.
இறுதியாக வாழ்த்து என்று தொடங்கி கொஞ்சம் கூடுதலாகச் சொல்லிவிட்டேன் போல இருக்கிறது. அதனால் என்ன? "என்ன செந்தி’ என்று கேட்பார் இலங்கையர்கோன், ‘செந்தி மாஸ்ரர்’ என்பார் ஜீவா. ‘என்ன மாஸ்ரர்’- இது டானியல். ‘என்ன எப்படிச் சட்த்பியார் -இது வீரகேசரி செல்லத்துரை. அடிக்கொரு தடவை இரசிகமணி ' என்பது எஸ்.பொன்னுத்துரை. ‘வாத்தியார் என்ன புதினம் -இது கலைப்பேரரசு பொன்னுத்துரை. இவை எல்லாம் அடிமனதில் இருந்து வரும் அன்பான வார்த்தைகள் தாம். இந்த வார்த்தைகளினுாடே ‘இரசிகமணி ஐயா’ என்று பரிவுடன் ஒரு வார்த்தை கேட்கின்றது. அது என் காதில் இனிக்கின்றது. ஆம் அந்த வார்த்தைகளுக்குரியவர்கள் இருவர். ஒருவர் செங்கை ஆழியான். மற்றவர் செம்பியன் செல்வன். அந்த அன்பு வார்த்தைக்குரிய செங்கை ஆழியாரைன வாழ்த்துகின்றேன். இன்னும் பவ சாதனைகள் புரிந்து பல காலம் நீடுழி வாழ்க என வாழ்த்துகின்றேன்.
(10.06. 1976)

செங்கை ஆழியானின் குறுநாவல்கள் எஸ்.பொன்னுத்துரை
ஆண்டின் பெரும்பகுதியைத் தமிழ்நாட்டில் வாழ்தலை இப்போது என் வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். ‘ஈழநாடு’ வார மலர் ஆசிரியராகப் பணியாற்றிய சசிபாரதி சபாரத்தினம் மற்றும் ஈழநாடு செய்தி ஆசிரியராக விருந்த கே.ஜி. மகாதேவா ஆகிய இருவரும் திருச்சியில் வாழ்கிறார்கள். சில வேளை களில் அவர்களைச் சந்தித்து, ஈழத்திலே வாழ்ந்த அக்கால நிகழ்வுகடாகப் பயணித்தல் அற்புத சுகானுபவமாகும். அது போதை தருவது.
அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் செங்கை ஆழியானின் கதைத்தொகுதி ஒன்றினை மித்ர வெளியிடவேண்டுமென்ற சசிபாரதியின் கோரிக்கைக்கு இசைந்தேன். ஆண்டு ஒன்று கழிந்து, என் வாக்கு சித்திக்கின்றது.
இந்நிலையிலே கடந்த மாதம் தமிழ்நாடு வந்திருந்த செங்கை ஆழியான் தனது தொகுதிக்கு நானே முன்னிடு தருதல் வேண்டுமென வற்புறுத்தினார். 'ஈழத்தமிழ் முன்னெடுப்புகளின் பீமராய் வாழும் உங்கள் ஆசி எனக்குத் தேவை. எழுதித் தாருங்கள். அதனை ஓர் அங்கீகாரமாக எண்ணி மகிழ்வேன்; என்றார். அன்புக்கு மசிதல் என்றும் என் பலவீனம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் என்கிற கோவையில் இடம் பெற்றுள்ள குறுநாவல்களை ஒரு சேர வாசிக்கத் துவங்கினேன். அதன் சுவையில் ஒன்றினேன். இந்நூலுக்கு முன்னிடு எழுதுதல் ஈழத்து இலக்கியக் கோலங்களுக்கு நான் அளிக்கும் மரியாதை என்பதைப் பூரணமாக உணரலானேன் ஆயிரமாயிரம் ஆண்டுகள் படனமானபோது ஓர் இலக்கியச் சுவைஞன் என்கிற உரிமை பாராட்டுதலுடன் வாழும் என் மனசில் ஏற்பட்ட சலனங்களின் நேர்மையான பதிவுகளே இம்முன்னிடு.
நான் நைஜீரியாவில் வாழ்ந்த காலம் 1983 ஆம் ஆண், ஜூலை மாதம், சொக்கோட்டோ மாநிலத்தின் அறுகுங்கூ என்னும் சுற்றுலா நகரில் அமைந்துள்ள ஆசிரியர் பிற்சிக் கலாசாலையின் மூத்த கணித விரிவுரை யாளராகப் பணியாற்றிய நண்பர் பத்மநாதன் வீட்டில் மரண துக்கம் அபூட்டிக்கிறார்கள் என அறிந்து அங்கு
25

Page 15
செங்கை ஆழியான்
விரைந்தேன். இறந்தவர் எனது இனிய நண்பன் கலா பரமேஸ்வரன் என்பதை அறிந்து அதிர்ந்தேன். யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்திலே அவர் பலியானார் என்று பேசிக் கொண்டார்கள்.
இக்கோவையிலுள்ள சாம்பவி என்ற குறுநாவலிலே கலா பரமேஸ்வரன் சிங்கள இராணுவத்தின் காட்டுத்தனமான வெறியாட்டத்தில் எவ்வாறு இறந்தார் என்கிற பதிவினை வாசித்தபோது என் பார்வை மங்கிற்று. கலா பற்றிய என் நினைவுகள் மறக்கக் கூடியனவல்ல என்பதும் புரிந்தது.
ஆயிரமாயிரம் இனிய கனவுகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுதல் இளமைக்காலம். இவற்றைத் தொலைத்து, ஈழத்தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமது மண்ணையும் மானத்தையும் மீட்கும் போரிலே தற்கொடையாளராய் சமர் செய்யும் ஒர்மமும், வைராக்கியமும் அவல வாழ்க்கையிலிருந்து எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை சாம்பவி அற்புதமாகச் சித்திரிக்கின்றது.
குளத்தில், சிங்கள இராணுவ முகாமுக்குள் உளவு பார்க்கும் பணியிலிடுபட்டிருக்கும் போராளியான சாம்பவி, கண்ணி வெடியின் ஆபத்திற்குள் சிக்கிக் கொள்கிறாள். இப்போது அவள் சுமதியாக வாழ்ந்த காலத்தின் நினைவுச் சிதறல்களாய் சிங்களப் பேரினவாத அடக்கு முறைகளும் அதுக் எதிர் வினையான தமிழர் சினங்களும் கோவைப்படுத்தியிருக்கும் உபாயம், கதைக்குக் கனதியும் கலை யழகும் சேர்க்கின்றது.
1972 இல் எழுதப்பட்ட நிலமகளைத்தேடி என்கிற குறுநாவல் துவங்கி, 2001 இல் எழுதப்பட்ட தவமும் வரமும் வரை சுமார் பத்துக் குறுநாவல்கள் ஒரு தொகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ மூன்று தசாப்த இடைவெளியில் எழுதப்பட்டுள்ள கதைகள் இவை என்பது சிரத்தைக்குரியது. அது மட்டுமன்றி கொட்டடி, யாழ்ப்பாணம், விசுவமடு, பூநகரி, கிண்ணியா என்று கதைகள் நிகழும் களங்களும் பல்வேறு பட்டன. பதிவு செய்யப்பட்ட வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து, சிங்கள இராணுவம், மற்றும் இந்திய அமைதிப்படை என்கிற மாயையில் நடாத்தப்பட்ட இந்தியப்படையெடுப்புக் காலம் வரை கதைநிகழ் காலங்கள் பலதரப்பட்டன. ஆனாலும் இந்தக் கதைகளின் வைப்பு முறையில் ஓர் ஒழுங்கு, அன்றேல் இசைவு பேணப்பட்டுள்ளது. இது இதற்கு அழகும் ஆழமும் சேர்க்கிறது.
இந்தக் கதைகளிலே எடுத்துக் கொண்ட தொனிப் பொருளைப் பிரசாரத் தொனியின்றி சித்திரித்தல் வேண்டுமென்கிற அவதானத்தினை ஆசிரியர் கெட்டியாகவே பயின்றுள்ளார். மண்ணின் மைந்தருடைய பேச்சு வழக்கிற்கு அழுத்தந் தராத ஒரு நடையைச் செங்கை ஆழியான் கையாளுகிறார். தான் தெரிவு செய்துள்ள கதை சொல்லும் முறைக்கு அத்தகைய அழுத்தம் அவசியமில்லை என்று அவர் கருதக் கூடும். அவர் வழி அவருடையது.
பெரும்பாலும் ஊதிப்பொருக்கச் செய்த சிறுகதையே குறுநாவல் என்றும் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. இக்காலத்தில் நெடுங்கதை என்கிற தொடரும் பாமரத்தனமாகப் பயிற்சிக்கு வந்துள்ளது. இத்தொகுதியிலுள்ள பழைய வானத்தின் கீழ், நிலமகளைத்தேடி, அக்கினிக் குஞ்சு, சாம்பவி, யாழ்ப்பாணக்கிராமம்
26

வாழ்வும் படைப்புகளும்
ஒன்று, மீண்டும் ஒரு சீதை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளவை குறுநாவலுக்கான இலக்கணங்களை உள் வாங்கிய செய்நேர்த்தி பொருந்தியனவாக அமைந்துள்ளன. தமிழிலக்கிய வயலில், இத்துறையில் இது பாராட்டத்தக்க எழுத்து வெற்றியே. குறுநாவலுக்கான நேர்த்தியான அழகும் வடிவமும் தேடும் புதிய படைப்பாளிகள், இதில் இடம்பெற்றுள்ள குறுநாவல்கள் சிலவற்றை முன் மாதிரி யாகக் கொள்ளினும் தகும்.
பழைய வானத்தின் கீழ் என்ற குறுநாவல் ஈழத்தமிழரின் ஆதி வேர்களைத் தேட முனையும் ஒரு கதை. குாமிரபரணி என்கிற தமிழ் நாட்டின் ஆற்றங் கரையிலிருந்து சேது அணையில் எஞ்சியுள்ள மணல் திட்டிகளிலே நடந்து, தம்பபண்ணை என்கிற முதல் ஈழத்தலைநகரை தொல் தமிழர் நிறுவுதல் பற்றிய மான்மியமே கதைக் கரு. தேரல் திராவிடர் கலாசாரம், அவர்களுடைய நம்பிக்கைகள், உழுகலாறுகள் பற்றி இத்துறை சார்ந்த ஆய்வாளர் முன் மொழிந்த கருத்துக்கள் பிசிறின்றி இணைக்கப்பட்டுள்ளன. பெருந்தாய் தலைமையில் குழுக்கள் வசதியான வாழிடங்கள் தேடி, புலம் பெயர்ந்து செல்லும் பொழுது சந்திக்கும் இழப்புகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், மகிழ்வுகள் அனைத்துமே பாடு பொருளாகி யுள்ளன. M
கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈழத்தமிழரின் புலப் பெயர்வுகள் பற்றி அதிகமாக எழுதி வருகின்றோம். தமிழில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் தனி இலக்கியக் கூறாக அடையாளம் காணப்பட்டுப் பல்கலைக்கழக மட்டத் தில் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்தப் புதிய புலப்பெயர்வுகளின் அனுபவங்களை இலக்கியமாகத் தரிசிப்பவர்களுக்கு பழைய வானத்தின் கீழ் ஓர் நுழைவாயிலாக அமைகின்றது என்பது என் பிரேரிப்பு.
இன்றைய தமிழ் ஆய்வாளர்களுடைய தலையாய அக்கறை தமிழ்த்தேசிய அடையாளங்களின் தன்மைகளையும் தொன்மையையும் அறியும் தேடலாகும். இலங்கையில் தமிழர் வந்தேறு குடிகள் என வசை பாடப்பட்டு உரிமை பறிக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். உண்மையில் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் தமிழ்க்கூறு இணைந்த மொழி பேசிய தொல் திராவிடர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஆய்வாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளை உள் வாங்கிய நிலையில் முதல் மூன்று குறுநாவல்களும் தமிழர் தேசியத்தின் தோற்றுவாயை அறிய முனைகின்றன. தேவையான தேடல்.
சிங்களவரின் இனத்துவ அடையாளம் மொழி சார்ந்தது மட்டுமல்ல. பெளத்த
மதத்தின் கலாச்சாரக் கூறுகளைச் சிங்ளவரின் தேசியம் முதன்மைப்படுத்துகின்றது.
இதனை வலியுறுத்தும் வகைளில் தான் விஜயனின் வருகையும், பெளத்த மதத்தை
ஸ்தாபித்த காக்கிய முனிவரின் சந்ததியாருடன் இலங்கையின் ஆரம்ப சிங்கள
அரசருக்கு இரத்த உறவு உண்டு என்றும், பெளத்தம் இலங்கைக்கு வருவதற்கு 2.

Page 16
செங்கை ஆழியான்
முற்பட்ட வரலாறு புனையப்பட்டுள்ளது. தமிழர்களை திராவிடர்கள் என அந்நியப்படுத்தவே சிங்களவருடைய ஆரியத் தோற்றுவாய் புனையப்பட்டுள்ளது. சிங்களவரின் ஆரியக் கூறு மிக அற்பமானது. எ."து எவ்வாறிருப்பினும் விஜயன் என்ற ஒருவனின் வருகையுடன் இலங்கை வரலாற்றை எழுதத் தொடங்குதல் மரபாக நிலைத்துள்ளது. விஜயன் வந்தபொழுது வாழ்ந்த மக்களுடைய பண்பாட்டுக் கோலங்கள் என்ன? அது தொல் திராவிட நாகரிகமா? இதனைத் தரிசிக்கும் ஒரு முயற்சி தான் முதல் தவறு என்ற குறுநாவல். தமிழர்களுடைய அநுராதபுர ஆட்சியின் ஊடாகத்தான் தமிழர் தேசியத்தைத் தரிசிக்க வேண்டுமென்கிற உந்துதலில் ஒரு பெளர்ணமிக் காலம் என்ற குறுநாவல் எழுதப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
இவ்வாறு முதல் மூன்று குறுநாவல்களும் கிறிஸ்து சகாப்த்திற்கு முன்பிருந்தே தமிழர் நாகரிகம் ஈழமண்ணின் வாழ்க்கையில் சுவறியுள்ளது என்பதைச் சொல்லுகின்றன. ஏனைய குறுநாவல்கள் இருபதாம் நூற்றாண்டின் வாழ்வியலை ஆதரவாகவும் களமாகவுங் கொண்டுள்ளன.
நிலமகளைத் தேடி, யாழ்ப்பாணக்கிராமம் ஒன்று ஆகிய இரண்டிலும் யாழ்ப்பாணத்தின் சாபக்கேடாக அமைந்துள்ள வேளாளச் சாதியினரின் மேலாதிக்க அசிங்கங்கள் மிக நொய்மையான ஊடு பாவாக இழைக்கப்பட்டுள்ளன. ஜாதிக் கொடுமை, அதன் அவலம், அதன் அசிங்க முகம் என்கிற பிவசாரத் தொனியின்றி யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்டவர்களெனக் கணிக்கப்படும் மக்கள், உழைப்பின் உபாசகர்களாகத் தலை நிமிரும் மாட்சி சொல்லப்படுகின்றது. யாழ்ப்பான வாழ்க்கைக் கோலத்திலே இந்த ஜாதிய ஆதிக்கக் கொடுரம் புரையோடிக்கிடக்கிறது என்கிற உண்மையை உள்வாங்கி இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. பிரசாரம் சாராத நேர்த்தி, இவற்றிற்கு யதார்த்தம் என்கிற ஒரு பரிமானத்தைப் பொருத்துவதில் வெற்றி சாதிக்கின்றது.
தமிழருடைய வாழ்க்கைக் கோலங்கள் என வந்து விட்டால் தமிழ் பேசும் இஸ்லாமியரும் இயல்பாகவே இணைந்து கொள்வார்கள். யொகாறா என்ற குறுநாவல் கிண்ணியாவைக் கதைக்களமாகக் கொண்டது. கவிஞர் அண்ணலைத் தேடியும், கிண்ணியா மகா வித்தியாலயத்தின் அதிபராய் ஈ.ஆர். திருச்செல்வம் பணியாற்றியபோது அவருடைய அழைப்பினை ஏற்றும் கிண்ணியாவிற்குப் பல தடவைகள் சென்றுள்ளேன். தமிழ் நேசிப்பைப் போன்றே, இஸ்லர்மிய ஆசாரங்களைப் பேணும் ஈமானும் அம்மக்களுடைய வாழ்க்கையில் கலந்துள்ளது. சற்று பிரச்சினைக்குரிய கதைக் கரு. ஆனாலும் யொகாறாவின் தியாகம் நம்மைஓர் அடர்ந்த சோக உலகத்துக்குள் ஆழ்த்தி வைக்கின்றது.
செங்கை ஆழியான், க.குணராசாவாகக் கல்வித்துறையில் மிளிர்ந்தவர். தமது
கற்கைநெறியில் கலாநிதியாகப் பட்டம் பெற்றவள். இலங்கை நிர்வாக சேவையில்
உயரதிகாரியாகப் பல பதவிகளிலே சிறந்தவர். சேங்கை ஆழியான் 28

வாழ்வும் படைப்புகளும்
தனது உயர் உத்தியோகத் தொடர்புகளை மேலதிகத் தமிழ்ச்சேவைகளுக்குப் பயன் படுத்தியுள்ளமை மனநிறைவினைத் தருகின்றது. யுத்த அனர்த்தங்களிலே தொலைந்திருக்கக் கூடிய பல இலக்கியங்களை சம காலத்தவரின் வாசிப்புக்குக் கிடைக்கச் செய்த பரோபகாரி யாகவும் அவள் வாழ்கின்றார். ஈழகேசரிக் கதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், முன்னோடிச் சிறுகதைகள், சுதந்திரன் கதைகள், ஈழத்தின் திரி மூலர்களில் ஒருவரான சம்பந்தன் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், புதுமைலோலன் சிறுகதைகள், தேவன் - யாழ்ப்பாணம் சிறுகதைகள், தையிட்டி இராசதுரை சிறுகதைகள் (அகத் அரிசி), சிரித்திரன் சுந்தர் கார்ட்டூன்கள், மல்லிகைச் சிறுகதைகள் எனப் பல தொகுதிகளை அரும்பாடுபட்டுத் தந்துள்ளார். ஈழத்தின் தமிழ் இலக்கித் தடங்களைப் பாதுகாத்துப் பேணி, அடுத்த தலைமுறைக்கு அளித்திடல் வேண்டுமென்ற தமிழ் நேசிப்பின் செயற்பாடாகவே நான் இந்தப் பணிகளைப் பாராட்டுகின்றேன். இத்தகு தொகுப்புத் தொண்டுக்குத் தமிழ் இலக்கிய நேசர்களின் சார்பாக அவருக்கு நன்றி கூறுவதற்கும் இச்சந்தர்ப்பத்தை எடுத்தல் ஆகுமானது.
எண்பதுகளில் தொடங்கிய தமிழ் விடுதலைப் போராட்டத்தின் கோலங்களைக் குறுநாவல்களாக எழுதுவதற்கு இனநேசிப்பும், சத்தியத்தில் அழுத்தமான பிடிப்பும் மிக அவசியம். போர்க்காலக் கோலங்களைத் தரிசிப்பதந்கு இந்நூலிலுள்ள அக்கினிக்குஞ்சு, சாம்பவி, யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று ஆகிய மூன்றும் உதவும். இவை கற்பனை செறிந்த புனைவுகள் அல்ல. யாழ் மண்ணின் போர்க்காலக் கோலங்களை அன்றேல் அலங்கோலங்களை அச்சாவாகச் சித்திரிப்பன. ஈழம் நிஜமாகி, தமிழரின் வாழ்க்கை சுகமாகி, தமிழ்மொழியின் விமுக்தி சாதனையாகக் கூடிய எதிர் காலத்திலே, போர்க்கால ஈழத்தைச் சித்திரிக்கும் கதைத் தொகுதி ஒன்று தொகுக்கப்படுமானால் அதிலே சாம்பவி முதலிடம் பெறத்தக்கது.
இக்கதைகளிலே தனித்து விலகி நிற்பது வரமும் தவமும். மிகச் சாதாரண கதை போலத் தோன்றும். முதல் மரியாதை, மறுபக்கம் ஆகிய இரண்டு தமிழ்த்திரைப் படங்களில் பாரதிராஜாவும், சேதுமாதவனும் அமரத்துவ காதலுணர்வுகளை அற்புதமாகச் சித்திரித்திருந்தார்கள். வரமும் தவமும் அச்சினிமாக்களைப் போல ஒர் அமரத்துவக் காதலைத் தான் சித்திரிக்கின்றது. அவை இரண்டும் ஆண்களை முதன்மைப்படுத்திச் சித்திரிக்கின்றன. ஆனால் செங்கை ஆழியான் மாம்பழநாச்சியார் என்கிற பெண்ணின் ஊடாக இதனைச் சித்திரித்தல் வித்தியாசமான ஒர் அனுபவத்தினை ஏற்படுத்துகிறது. பூநகரி என்கிற பிரதேசத்தின் இயற்கைக் காட்சிகளினூடாக நிகழ்த்தப்படும் வண்டில் பயணம் கலாதினான முடிவில் மாம்பழ ஆச்சியின் குரலிலே குதிரும் ஆக்ரோசம் செறிவான முத்தாய்ப்பு
மீண்டும் ஒரு சீதை - ஒரு வெற்றிப் படைப்பு. கலைமகள் ஸ்தாபகர் ராமரத்தினத்தின் நினைவாக, புத்தாயிரத்தின் விடியலில் நடாத்தப்பட்ட குறுநாவல்
போட்டியில் முதல் பரிசு பெற்றது. என்கிற பெருமையும் உண்டு.
X)

Page 17
செங்கை ஆழியான்
காதல் உணர்வுகளுக்கு அப்பாலானதும், மேலானதும், பெண்ணின் தன்மானமும் கெளரவமும் என்பது தான் இக்கதையின் தொனிப்பொருள். பேண்ணியம் பற்றி எவ்வித பிரச்சாரங்களுமின்றி இற்ைகையின் இன்றைய யதார்த்த வாழ்க்கை யினுடாக, சோதனைகளின் ஊடாக, வெளிநாட்டிலிருந்து வந்து சேரும் சடங்குகளின் ஊடாக, சீதையைப்போன்றே அக்கினிப் பிரவேசத்தினுள் தன்னை உட்படுத்தித் தன் கற்பின் மாட்சியை நிலைநாட்டும் ஒரு பெண்ணின் கதை. இந்த நவீன அக்கினிப்பிரவேசத்தில் வென்றது அராமரல்ல; சீதையே!. வார்ப்பிலும் தொடுப்பிலும் அருமையாக அமைந்துள்ளது.
செங்கை ஆழியான் சோராது எழுதிக் கொண்டிருக்கும் இயல்பினர். எழுத்தில் அவர் ஊன்றும் அக்கறை அசாதாரணமானது. ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் எட்டு நூல்கள் பூரீலங்கா/வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்றுள்ளன. இது தமிழ் எழுத்தாளரைப் பொறுத்தமட்டில் சாதனையே. இன்னும் ஒன்று இவருடைய வாடைக்காற்று என்னும் நாவல் விசேடமாகக் குறிப்பிடவேண்டிய படைப்பாகும் நல்ல நாவல்கள் வெற்றிகரமான சினிமாவாக ளெரிவந்ததில்லை. சினிமாவாக வெளிவந்தும் வாடைக்காற்று வெற்றி சாதித்தது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் என்பது தொகுக்கப்பட்டுள்ள குருநாவல் ஒன்றின்
தலைப்பு அல்ல. இந்தப் பொதுத்தலைப்பு அனைத்தினதும் ஆன்மாவைத் தரிசிக்க உதவுகின்றது. இத் தொகுதியில் உள்ள குரு நாவல்களை வாசிக்கும் போது ஆயிரம் ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுடைய வாழ்க்கைத் தேடல்களின் ஊடாகப் பயணிக்கும் ஓர் அபூர்வ இலக்கிய ரஸானுபவம் நமக்கு கிட்டுகின்றது.
(முன்னுரையில் - 2006)
“செங்கை ஆழியான் எழுதியுள்ள “யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று குறுநாவல் இந்த இதழின் சிறப்பம்சம். இதைப் படிக்கும்போது ஈழத்தமிழர்களின் சுதந்தரப் போராட்டம் கொடுமையான வாழ்க்கைப்போராட்டமாக மாறிவிட்டதே என்ற ஆதங்கமே மேலோங்குகிறது.’
(கணையாழி செப்டம்பர் 1994)
‘ஒரு எழுத்தாளனுக்கு தான் எழுதும் வார்த்தைகள் ஒருசில உள்ளங்களையாவது ஆழத்தொடவேண்டும் என்ற உணர்வு இருக்கவேண்டும் அந்த உணர்வு நிச்சயம் செங்கை ஆழியானிடம் நிறையவே உண்டு ஒரு காரியாதிகாரியாக (இப்பொழுது உதவி அரசாங்க அதிபர்) பணியாற்றிய ஒருவரால் நிச்சயம் அந்த உணர்வைப் பெறமுடியும் தான் எங்கு இருக்கின்றாரோ அந்த இடத்தின் குறைகளை முறையாகக் கண்டு அந்தக் குறைகளை தீர்க்கமுடியும் “நாடி’ பிடிக்கும் சாமர்த்தியம் அவரது எழுத்தில் பரிணமித்தல் வழக்கம். அவரது 'அக்கினிக் குஞ்சு” நூலில் இந்த நாடி பிடித்துப் பூர்க்கும் பணியை மிக நேர்த்தியாகச் செய்துள்ளார் அக்கினிக் குஞ்சில் இரண்டு குறு நாவல்கள் உள்ளன.
30

வாழ்வும் படைப்புகளும்
“யொகாறா’ என்னும் குறுநாவலில் கிழக்கிலங்கைப் பகுதியில் வாழும் ஓர் அவலைப்பெண்ணை சித்திரிக்கின்றார் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் ஜனநாயக உணர்வுகள், சமூக விழிப்புணர்வுகள் பெருகிச் சமூகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள வேளையிலும் கிராமப் பகுதிகளின் சுரண்டல் விசுவரூபம் எடுத்திருப்பதை யாரும் உணரலாம். ஒரு ஏழைப்பெண்ணை, அவளது வறுமையும் - ஆற்றாமையும் தங்களுக்கு வசமாக்க முயலும் ஹாஜியார் அபுதாபி, சங்கக்கடை மனேஜர் ஹமீட் சயிக்கின் போன்ற கயவர்களை நன்றாகவே இனங்காட்டி உள்ளார். நெருப்பாக வாழ்ந்த யொகாறா கடைசியில் பிழைத்துவிட்ட தனது மகளைக் காட்டிக் கொடுக்காமல் தானே பழியைச் சுமந்து குடிசையில் இருந்து வெளியே வரும்போது நமது இதயம் வலிக்கின்றது. கதையை வாசித்து முடிந்தாலும் 'யொகாறா - என் ஆசை யொகாறா குரல் ஒரு சோகத்துடன் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
அவரது மற்றக் கதையான அக்கினிக் குஞ்சு -நெருக்கடி நிறைந்த காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. கதையை வாசிக்கத் தொடங்கியதும் முடிவுவரை ஒரு பரபரப்பு மனதில் ஏற்பட்டு விடுகிறது. தமிழ் சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் பிரச்சினையை நன்றாக உள்நோக்கிப் பார்க்கும் ஆசிரியர் நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்த்துள்ளார்.
பிரச்சனைகள் தீர்ப்பதற்கு ஆயுதம் ஏந்துதல் பரிகாரணமாக அமையுமா? அல்லது சாத்வீகமான அணுகுமுறைதான் உகந்ததா?
இரு கேள்விகளுக்கும் வாசகர்களே விடையைத் தேடி கண்டு பிடிக்கட்டும் என்ற எண்ணமே அவரது எழுத்துக்களில் நிழலாடுகிறது. இன்றைய தமிழ் இளைஞன் - அவனது எண்ண ஓட்டங்கள் சந்தர்ப்ப வசங்களால் அவன் ஆபத்தில் மாட்டிக் கொள்வது படித்துவிட்டு பயனில்லாமல் ஏக்கத்துடன் திரிவது போன்ற வெகு யதார்த்தத்தை காண முயன்றுள்ள செங்கை ஆழியான் பதிலையும் விண்டு வைக்கின்றார்.
பாதிக்கப்பட்ட தமிழ் இளம் சந்ததியின் ஏக பிரதிநிதியாக செல்வன் காணப்படுகின்றான். தமிழ் சமுதாயத்தை வாட்டும் ஏன் முழுச்சமுதாயமே தலைக் குனியத்தக்க அளவுக்கு சீதனக் கொடுமையும், சாதிக் கொடுமையும் ஒழியாமல் பூதாகரமாக இன்றும் நிலை பெற்றிருப்பதை வன்மையாக சாடுகின்றார் ஆசிரியர். படித்தவர்கள் வெட்கித் தலை குனியுமளவிற்கு இன்னும் தமிழ் சமுதாயத்தில் இவ்வியாதிகள் மாறாமல் இருப்பதை இக்கதை நன்கு வெளிப்படுத்துகின்றது.
து. வைத்திலிங்கன்,
ஈழநாடு 08-07-1984
31

Page 18
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து.
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
இன்றைய ஈழத்து முன்னணித் தமிழ் நாவலாசிரியர் செங்கை ஆழியான்
என்று கூறினால், அது எல்லோர்க்கும் ஒப்ப முடிந்த கூற்றாகும். யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுக் கொலங்களை டானியல் தன் நாவல்களில் ஆவணப் படுத்தினார். செங்கை ஆழியானோ, யாழ்ப்பாண-வன்னிப் பிரதேசங்களின் சமுக பொருளாதார வளர்ச்சியையும், வரலாற்று நிகழ்வுகளையும் தன்னுடைய நாவல்களில் ஆவணப்படுத்தி வருகின்றார். ‘மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து' என்ற இந்நாவலும் அப்பணியைச் சிறப்பாகச் செய்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சி பற்றி பொருளியலாளர், புவியியலாளர், சமுகவியலாளர் ஆகியோர் சிற்சில ஆய்வுகள் மேற்கொண்டு வந்துள்ளனர். புவியியலாளனான செங்கை ஆழியான் புவியியற் கண்ணாலும், இலக்கியக் கண்ணாலும் இவ்வளர்ச்சியை நோக்குகிறார். எத்தனை பேருடைய எத்தனை கதைகள் அவ்வளர்ச்சியோடு பிணைந்திருக்கும்? அறிந்தனவாயும், அறியாதனவாயும் அவை அமைந்திருக்கும். வகை மாதிரி இவ்வளர்ச்சியினூடே முத்தையா அம்மானுடைய கதையினை இந்நாவல் மூலமாக ஆசிரியர் தருகிறார்.
களத்தினுள் நின்று நேரடியாகவோ, தகவல் மூலமாகவோபெறும் அனுபவத்தின் அடிப்படையில் எழும் நாவல் உயிர்த்துடிப்புடையதாக இருக்கும். செங்கை ஆழியான் தன் நாவலுக்கு அடிப்படையான களத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டவர். புல்கலைகட கழகப் பட்டத்தின் பின்னர் நிர்வாக சேவையில் சேர்ந்தார். இவ்வாறு நிர்வாக சேவையில் சேர்ந்த காலம் தொடக்கம் இன்று வரை, வன்னிப்பிரதேசத்தில் சிறப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றார். அப்பகுதி மக்களுடைய வாழ்வுக் கூறுகள், வாழ்வு வரலாறு என்பன பற்றியெல்லாம் நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக் கிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதார, சமுக வளர்ச்சியும் புவியியற் காரணிகளும் எவ்வாறு அம்மக்களுடைய வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தின என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்துள்ளார். இவருடைய “காட்டாறு’ என்னும் நாவல் இத்தகைய வாழ்வினைப் பிரதிபலிக்க எடுத்த சிறந்த முதல் முயற்சியாகும்.
32
 

வாழ்வும் படைப்புகளும்
இம்முயற்சியின் தொடர்ச்சியாக அமைவது 'மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’ என்னும் அந்நாவல்.
கதையம்சத்தில் டானியலுடைய 'அடிமைகள்’ நாவலில் வரும் கண்ணம்மா எனும் பாத்திரம் கமை முடிவில் நிற்பது போலத்தான் செங்கை ஆழியானின் இந்நாவலில் வரும் சொர்ணம் எனும் பாத்திரமும் கதை முடிவில் நிற்கின்றது. அங்கு கண்ணம்மா காதலிக்கும் கருணைப் பிரகாசம் அவளுடைய சகோதரன் என இறுதியில் தெரிய வருகின்றது. இங்கு சொர்ணம் காதலித்த தம்பிராசா அவளுக்குப் பெறாமகன் முறையாக இறுதியிலே அறிய வருகின்றது. டானியலுடைய கதை சாதி எதிர்ப்புக் களத்திலே. செங்கை ஆழியானுடைய கதை வந்தேறு குடிகளாக வந்தோருக்கும் இயற்கைக்குமிடையே நடந்து வந்த முரண்பாட்டுக் களத்திலே.
செங்கை ஆழியானின் முத்தையா அம்மான் என்னும் பாத்திரத்தின் வளர்ச்சியும் கிளிநொச்சி மாவட்டத்து இரணை மடுக்குள வளர்ச்சியும் ஒன்றாக அமைந்துள்ளன.
‘ஆனைக்காடடா பொடி அங்க போகாதை’ என்று தாய் தடுக்கவும் நீர்ப்பாசனப் பொறியிலாளர் கென்னடியுடன் இரணைமடுக் கட்டுமான வேலை செய்வதற்காகக் கிளிநொச்சி வந்த முத்தையா அங்கு சிவபாக்கியத்தைச் சந்தித்து அவளுடைய வயிற்றிலே ஒரு பிள்ளை தங்கக் காரணமாக இருந்துவிட்டு, அவளைக் கைவிட்டு பின்னாடி அன்னத்தைத் திருமணம் முடித்து, பன்னிரண்டு பிள்ளைகளைப் பெற்று, கடைசிப்பிள்ளை சொர்ணத்துடன் முதுமைக் காலத்திலே தன் கடந்த கால வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்ப்பதாகக் கதை அமைந்து செல்கிறது. இக்கதையினுாடாக முத்தையா அம்மானின் முதுமைக்காலக் கிளிநொச்சி நிலைமைகளையும், (கதையிலே கொடுக்கப்பட்ட தரவுகளின் படி எண்பதுகள் எனக்கொள்ளலாம்.) அவருடைய பதினெட்டாவது வயது தொடக்கம் (1920 முதல் என நாவலில் குறிக்கப்பட்டுள்ளது) இருந்த நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. அக்கால கட்டத்துள் எத்தனை விடயங்கள் நடந்துவிட்டன. பல வரலாற்று உண்மைகளை ஆசிரியர் கதையினுடாக லாவகமாக வெளிப்படுத்திவிடுகிறார். கிளிநொச்சியிலே குடியேற்றம் நடைபெற்ற ஆரம்பகாலத் திலே மலேரியா நோயினால் பலர் இறந்தது வரலாற்று உண்மை. ஆசிரியர் அதை நாவலின் தொடக்கத்திலே ஓர் உவமை காட்டுவது போலக் குறிப்பிடுவது ரசிக்கக் கூடியதாயுள்ளது.
‘வானத்தின் வடகீழ்க் கோடியில் கரு முகில் திரள் ஒன்று மிதந்ததை முத்தையா அம்மான் வியப்புடனும் திருப்தியுடனும் பார்த்தார். மாரி காலத்தின் ஆரம்பம் நம்பிக்கையுடன் பிறப்பதாக அவர் எண்ணிக் கொண்டார். அதிகாலையில் திரள் திரளாகக் காணப்பட்ட கருமுகில் மிக வேகமாக கீழ் வானத்தின் அரைப்பகுதியைத் தன்னுள் அடக்கிப் பரவி. கருமுகில் வியாபித்த வேகம் அவருக்கு ஒன்றினை நினைவு படுத்தியது. தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தின் இருந்து அவர் ஏனையோருடன் இரணைமடுக்
குடியேற்றத்தில் குடியேற்றப்பட்டார். குடியேற்றப்பட்ட முதல் வருட
33

Page 19
செங்கை ஆழியான் அறுவடையின் போது, கிராமத்தில் ஒருவருக்கு மலேரியா பிடித்தது. மூன்று நாட்களுக்குள் அக்கிராமத்திலுள்ள அனைவரையும் ஒருங்கே பற்றிக் கொண்டது. மழை முகில் பரவிய வேகத்திலும் மலேரியா மக்களைப் பற்றிய வேகம் அதிகமாக அவருக்குத் தெரிந்தது.
இத்தகைய வரலாற்றுத் தகவல்கள், புவியியல் விபரங்கள் நாவலிலே இடம் பெறுவதால் கதை அம்சம் குறைவாகவுள்ளது எனக் கூறுவதற்கு ஆசிரியர் இடம் வைக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் நாவல் வடிவத்திலே புதிய உத்திகளை உபயோகிப்பது, உதாரணத்திற்கு இந்நாவலாசிரியரின் தீம்தரிகிடதித்தோம்’ நாவலைக் குறிப்பிடலாம். எம்முடைய முதற் போராளிகள் ஆரம்பத்தில் வன்னியிலே போய்க் குடியேறியவர்கள். அவள்கள் தங்கள் கைகளையும் ஏனைய கருவிகளையும் ஆயுதங்களாகக் கொண்டு, காடு, மழை, வெயில் ஆகிய இயற்கைச் சக்திகளை எதிர்த்துப் போராடினார்கள். இப்போராட்ட வாழ்வில் பங்கு பற்றியவர்களின் உணர்வுகள், அவர்களுடைய குடும்ப, சமூக வாழ்வுப் போக்குகள், முறைகள் ஆகியன வரலாற்று நூல்களாலே முற்று முழுதாக அறியக்கூடியனவல்ல. எனினும் ஆங்காங்கே சிற்சில இடங்களிலே குறிக்கப்பட்டும் உள்ளன. இவை எல்லாவற்றையும் நாவல் என்ற கட்டுக் கோப்புக்குள்ளே கொண்டு வந்து, இயற்கையை எதிர்த்துப் போரிட்ட வரலாற்றையும், அவ்வாறு போரிட்ட மக்களின் மன உணர்வுகளையும், அவ்வுணர்வுகளின் போராட்ட அடிப்படைகளையும் புலப்படுத்தும் ஒரு சிறந்த நாவலாசிரியர் செங்கை ஆழியான் என்று கூறுவதிலே தவறில்லை என நினைக்கிறேன்.
கிளிநொச்சி தண்ணீர் நிறையவுள்ள இடமாயது போலக் கண்ணி தோய்ந்த கதைகளையும் நிறையத் தன்னகத்தே கொண்டு தான் வளர்ந்து வந்தது. மலையக மக்களின் வாழ்வும் இதனுடன் சேர்ந்து கொண்டது. இலங்கையில் நிகழ்ந்த மூன்று இனக்கலவரங்கள் பெருந் தொகையான மலைநாட்டு மக்களைக் கிளிநொச்சிக்குத் துரத்தியுள்ளன. "எழுபத்தேழில் மிண்டும் மலைநாட்டு மக்களில் ஒரு பகுதியினர் அடிபட்டுக் கிளிநொச்சிக்கு ஓடிவந்தனர். அவர்களில் பலர் தமக்குத் தெரிந்த உறவினர் வாழ்ந்த உருத்திரபுரத்தில் குடியேற, மிகுதியானோர் முருகண்டிக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட காடுகளை வெட்டி, மேற்குப் புறமாக புதுமுறிப்பு வரை குடிசைகளை அமைத்துக் கொண்டு வாழ முயன்றனர். காட்டு யானைகளின் தொல்லைகள் ஒரு புறம், அத்து மீறிக் காடு வெட்டியதால் அதிகாரிகளின் தொல்லைகள் மறுபுறம். மாதத்தில் ஒருவராவது யானையால் மிதிபட்டனர்.” என்று ஆசிரியர் கூறிச்செல்வதை வகை மாதிரிக்கு இங்கு தந்துள்ளேன்.
நாவலின் முக்கிய பாத்திரமாகிய முத்தையா அம்மானின் நினைவலையாக அரைப்பகுதிக் கதையும் அவருடைய சமகால நிகழ்வுகளாக மிகுதிக் கதையுமாக நாவல் செல்கின்றது. இடையிடையே கிளைக் கதைகள் போல அப்பிரதேசத்துப் பண்பாட்டுத் தகவல்களைச் சேர்த்துக்கொள்கிறார் ஆசிரியர். உதாரணமாக, எட்டாம் அத்தியாயத்தில் சிவக் கொழுந்து குடும் பத்தினர் புளியம் பொக் கனை
34

வாழ்வும் படைப்புகளும்
நாகதம்பிரான் பொங்கலுக்குச் செல்வதாகக் கூறி, அங்கு ஒலிபெருக்கியில் கிராமசேவையாளர் சின்னத்தம்பி நாக தம் பிரான் தல வரலாற்ற்ை கூறிக்கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டு, அப்பாத்திரத்தின் வாயாலேயே அப்பிரதேச மக்களிடையே நிலவிவரும் வாய் மொழிக்கதை கூறப்படுகின்றது. நாவலின் கதைப்போக்கும், கிளிநொச்சி இயற்கைப் பின்னணிக்குமேற்ற தமிழ்நடையினைச் சிறப்புடனே ஆசிரியர் கையாண்டுள்ளார் என்றே கூறவேண்டும்.
சமூக அறிவியல் தரவுகளைச் செவ்வனே உணந்து கொண்டு ஆக்கவிலக்கியம் படைப்பவன் அவ்விலக்கியத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்குகிறான். ஒரு சமூக ஆய்வாளனாகிய செங்கை ஆழியானுடைய ஆக்கவிலக்கியங்கள் பல இவ்வகையில் புதிய பரிமாணத்தைப் பெறுகின்றன. 'மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து' என்னும் நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல.
(17.12.1989)
‘சாம்பவி செங்கை ஆழியானின் நல்ல குறுநாவல். எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினையைத் தன் எழுத்துக்குள் அடக்கி வைத்துக் கண்களை நிறைத்துவிட்டார். இங்கு சுமதியின் வயதொத்த என் சகோதரி கண்ணாடிக்கு முன்னே நின்று கனவு காண்கிறாள். என் கலாசாரமும் கனவுகளும் Bar -ன் இருண்ட மூளைக்குள் அலறும் Stereo சப்தத்திற்குள் நெளியும் நிக்கோட்டின் புகைக்கள் ஒடுங்கி சுவாசிக்கத் திணறிக் கொண்டிருக்கின்றன. எங்களின் வயதொத்த யுவன்களும் யுவதிகளும் ஒரு இனத்தை அழிவிலிருந்து மீட்க, அங்கே அழிவை நோக்கி நகர்ந்த வண்ணமிருக்கிறார்கள். படித்து முடிந்தவுடன் ஊசியால் நெஞ்சில் சொல்லொணா வேதனை இறங்கிற்று.
(கணையாழி-மார்ச் 1996)
த.செந்தில்குமாரன்(சென்னை)
நூறாண்டாக்கம் அறுவதிலே நூறாண் டாக்கம் எனவியக்க உம்பணிகள் ஓங்கித் தமிழுலகம் - நம்பவெனச் சித்தத் திருத்தியமை செங்கையாழி யான்வாழ்க நித்தமும் இன்பம் நிறைந்து.
-கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) (25.05.2001)

Page 20
இந்த நாடு உருப்படாது? பேராசிரியர் கா. சிவத்தம்பி
செங்கை ஆழியானது ‘இந்த நாடு உருப்படாது' என்ற நாவலின் தட்டச்சுப்பிரதியை வாசித்து முடிந்ததும், இந்நாவலுக்கு எழுதும் முன்னுரையில் செங்கை ஆழியானின் நாவலாசிரியப்பண்புகள், அப்பண்புகளின் வளர்ச்சி, நாவலா சிரியன் என்னும் வகையில் அவனுடைய வளர்ச்சி, முதிர்ச்சி, இயல்புகள் பற்றி நோக்குதல் அத்தியாவசியமே. தனது நாவலில் வரும் சமூக அல்லது மனித உறவுகளை பிரச்சினைகளை நாவலின் தலைப்பாகக் கொள்ளாது, தான் சித்திரித்துள்னவற்றின் அடிப்படையில் தர்க்க ரீதியாகக் கிளம்பும் பிரச்சினைகளின் பூதாகாரத் தன்மையைக் கண்டு, தானே ஒரு சாதாரண வாசகன் போல நின்று. நிலைமைகள் இப்படியிருக்கும் போது இந்த நாடு உருப்படுமா என்று ஆதங்கப்பட்டு, அந்த ஆதங்கத்தையே நாவலின் தலைப்பாகக் கொடுக்க முன் வந்துள்ளான் எனில், இலக்கிய விமர்சகன், இலக்கியப் படைப்பாளியோடு தான் வைத்துக் கொள்ள வேண்டிய உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டம் வந்து விட்டது என்பது தெளிவாகத் தெரிகின்றது. எல்லை வழக்கு ஆடாமல் நாற்றுக்களை நன்கு நடத்தொடங்க வேண்டும்.
இலங்கைத் தமிழ் மக்களைத் தாக்கும் பிரச்சினைகளின் திரள் நிலையைச் செங்கை ஆழியான் இந்த நாவலில் காட்ட முனைந்துள்ளார். தமிழ் மக்களின் அகப்புற முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகிறார். இலக்கிய வரலாற்றுப் பின்னணியில் வைத்து நோக்கும்போது, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ‘சிரத்தை மாற்றம் 哭/ ஆலு இந்த நாவலில் நன்கு தெரிகின்றது.
செங்கை ஆழியான் குணராசா, 1960 களின் பிற்பகுதி யில் முன்னணிக்கு வந்த எழுத்தாளர். ஈழத்தின் இன்றைய படைப்பாளிகளுள் மிக வெற்றிகரமானவர் செங்கை ஆழி யானே எனலாம். செங்கை ஆழியான் தனது இலக்கியப் * பயணத்தை வெறுமனே வாசக ரஞ்சகம், வெகு சனக் கவர்ச்சி என்பனவற்றுடன் நிறுத்திக் கொள்ளாமல் தனது முயற்சியில் தானே ஒரு முற்போக்கான வளர்ச்சியைக் கண்டுள்ளார். சென்னை என்.சி.பி.ஏச்சின் வெளியீடாக வெளிவந்துள்ள
36
 

வாழ்வும் படைப்புகளும்
‘ஒரு மைய வட்டங்கள்’ என்ற நாவலுக்கு எழுதியுள்ள முன்னுரையில், இதுவரை தான் பெற்றுக் கொண்டுள்ள எழுத்துலக வளர்ச்சியை மூன்று கட்டங்களாக வகுத்து, 'வாடைக்காற்று இரண்டாவது கட்டத்தைச் சார்ந்த தென்றும், 1977 இல் வெளியான ‘காட்டாறு மூன்றாவது கட்டத்தைச் சார்ந்ததென்றும் கருதுகின்றார். ஒரு மைய வட்டங்களுக்கு எழுதிய முன்னுரையில் வரும் பகுதி, காட்டாறுக்கு 1977 இல் எழுதிய ஆசிரியர் முன்னுரையில் கூறப்பட்டுள்ளவற்றுடன் மாறு படாதிருக்கின்றது. பின் வரும் பகுதி 1982 இல் எழுதப்பட்டது:
“ஆசிரியத் தொழிலிருந்து விடுபட்டு நிர்வாக சேவையில் புகுந்து உதவி அரசாங்க அதிபராக என்று கிராமப் புறங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேனோ அன்றுதான் எனக்குப் புரிந்திருக்காத, இது வரை காலமும் தெரிந்திருக்காத ஒரு சமூக வாழ்வு பலத்துடனும் பலவீனத்துடனும் இருப்பதைக் கண்டுணர்ந்தேன். விவசாயத் தொழிலாள மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொளுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையே நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையிலே இன்னொரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். விவசாயக் கிராமங்களில் பெரிய மனிதர் என்ற போர்வையில் உலவும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோக வர்க்கமும் அப்பாவி மக்களை எவ்வாறு சீரழித்துச் சுரண்டு கின்றனர் என்பதை என் கண்களால் காண நேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா சுரண்டினார்கள்? பெண்களைவிட்டார்களா? கல்வியையும் சுரண்டினார்கள். சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. கிராமாந்திர வாழ்க்கையில் எதுவுமறியாத அப்பாவி விவசாயிகள் பல முனைகளிலும் தாம் சுரண்டப்படுவதை அறியாது, அறிய வகையற்றுத் தேங்கிய குட்டைகளாக வாழ்ந்து வருவதையும், அதிகாரத்திற்கும் சண்டித்தனங்களுக்கும் பயந்து ஒதுங்கியிருப்பதையும், ஆங்காங்கு சிறு தீப்பொறிகளாக இளைஞர் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன். இவற்றை மக்கள் முன் காட்ட வேண்டும் என்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு ஆகும்.” இந்தப் பந்தியில் வரும் கோட்பாடுகள் மிக முக்கியமானவையாகும். விவசாயத் தொழிலாளர், உத்தியோக வர்க்கம், சுரண்டல், மக்கள் முன் வைத்தல் சத்திய ஆவேசம் உன வரும் இத்தொடர்கள் இவருடைய நோக்கின் அடிப்படைப் பலத்தையும், விபரங்களை வகைப்படுத்தியுள்ள பலவீனத்தையும் (உத்தியோக வர்க்கம் முதலியன) காட்டுகின்றன. உண்மையில் ‘ஒரு மைய வட்டங்களிற் காணப்படும் சில பலவீனங்களிலிருந்து, “இந்த நாடு உருப்படாது’ நாவலில் விடுபட்டுள்ளார். உத்தியோகத்தரைத் தனி ஒரு வர்க்கமாகக் காணும் நிலை இதிலில்லை. இதில் சற்குணம் மசுக்குட்டியின் தவிர்க்க முடியாத நேச சக்தியாகின்றான். அவன் தான் இறுதியில் அவரைக் காப்பாற்றுகின்றான். செங்கை ஆழியானின் சமுகக்கட்டுப்பாட்டுணர்வு சந்தேகமற நன்கு புலனாகின்றது. உதவி அரசாங்க அதிபராக இருக்கும் குணராசா, செங்கை ஆழியானுக்குப் பெரிதும்
37

Page 21
செங்கை ஆழியான்
உதவுகிறார். அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி. அதன் நிறுவனங்கள், அதன் எடுகோள்களான பெறுமானங்கள், கருத்து நிலைகள் மேலாண்மையுள்ள வாக்கத்தின் நலனுகே பயன்படும் என்பதையும் செங்கை ஆழியானின் சித்திரிப்பிலே காணக் கூடியதாகவுள்ளது. படைப்பாற்றலுள்ள அரசாங்க நிர்வாகிகள் இலங்கையில் பொதுமக்கள் வாழ்க்கை பற்றிய மறக்க முடியாத இலக்கியங்களைத் தோற்றுவித்துள்ளனர். லுயிகாட் வூல்ஃப், முதல் லீல் குணசேகர வரை இதனைக் காணலாம். தமிழ் எழுத்தாளர்களைப் பொறுத்தளவில் செங்கை ஆழியான், யோகநாதன், கதிர்காமநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் தான் கடமையாற்றிய பகுதிகளின் சமுக உறவுகளையே தனது படைப்பிலக்கியங்களின் பிரதான குவிமையமாகக் கொண்டு காட்டுவதில் செங்கை ஆழியான் முன்னுக்கு நிற்கின்றார்.
செங்கை ஆழியானின் முந்திய நாவல்களில் காணப்படாத ஒரு வளர்ச்சி இந்த நாவலில் காணப்படுகின்றது. முந்திய நாவல்களில் காதல் சார்பு (றோமான்றிக் தன்மை) சற்று அழுத்தமாகவே இருக்கும். பிரதான பாத்திரங்களின் இயக்கம் அந் நிலைப் பட்டதாகவே இருக்கும். ஆனால் இந்த நாவலில் அது அச்சாணியாகவில்லை. இளையவன் மலரை இழக்கிறான். இளையவன் - மலர் - சின்னத்துரை உறவு நாவலுக்கு அச்சாணியேயல்ல. அத்துடன் இந்த நாவலில் 'அக்கினிக் குஞ்சில்' காணப்படும் கிராமத்தை - அது கிராமம் என்பதற்காகவே நேசிக்கும் தன்மையும் கைவிடப்பட்டுள்ளது. ஒரு கிராமம் வளரும் தேசிய முதலாளித்துவத்தின் வினைப்புலமாக்கப்பட்டுச் சிதைக்கப்படுவது தான் இங்கு முக்கியமாகின்றது.
இந்த நாவலில் எனக்கு மிக முக்கியமானதாக எனக் குறிப்படுவது அதன் தலைப்புத்தான். இந்தத் தலைப்புத் தான் செங்கை ஆழியானை அவரது நான்காவது கட்டத்திற்கு இட்டுச் செல்லவுள்ளதென நினைக்கிறேன். “மற்றவர்கள் எல்லாரும் நிர்வாணமாக நிற்க ஒருவன் (சற்குணம்) மட்டும் அந்த மற்றவர்களுடன் இணைந்து போகாது மறுத்து நிற்பதும், அப்படி நிற்பவனுக்காக ஒரு மசுக்குட்டியும், ஒரு பண்டாராவும் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதும் வர்க்க ஒருமைப்பாட்டில் மாத்திரம் வரக்கூடிய உண்மையான மனிதாயத்தைக் காட்டுகின்றது. இந்த மனித நேயம் வெளிவரும்போது தான் சமுக அதிகாரத்திற்காக அரசியல் நடத்தும் உலுத்தத்தனம் நன்கு புலப்படுகின்றது.
சமுக உறவுகளின் பன்முகப்பாட்டையும், மனித உறவு நிலையில் அவை தொழிற்படும்பொழுது உணர்வு பிரச்சினைகளாவதையும், இந்தச் சமுக உறவுக்ளின் ஊடாட்டத்தில் தான் சமுக இயக்கமும் காணப்படுகின்றது எனும் உண்மையை இந்த நாவல் உணர்த்துகின்றது. சமுக உறவுகளின் தன்மைகள் தெளிவாக நிச்சயமாக நாடு உருப்படும். அப்படி உருவாக்கப்பட்ட நாடுகளின் வரலாறுகள் எமக்கு நம்பிக்கையாகவும் துணையாகவும் அமையும். செங்கை ஆழியான் எனும் நாவலாசிரியனின் வளர்ச்சி நாடு உருப்படுவதற்கான அந்த முயற்சியில் இலக்கியத்தை ஈடுபடுத்துவதற்கு நிச்சயம் உதவும்.
(21. 1, 1983) 38

பிரளயம் பேராசிரியர். நா. சுப்பிரமணியம்
செங்கை ஆழியான் அவர்கள் ஈழத்தின் நவீன தமிழிலக்கியத்துறையில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாகத் தமது ஆளுமையின் சுவடுகளை ஆழமாகப் பதித்து நிற்பவர். பல சிறுகதைகளையும் இருபத்தைந்து நாவல்களையும் எழுதி முடித்தவர். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். தமது படைப்புக்களின் மூலம் ஈழத்தின் வட புலத்து மாந்தரின் சமுக பண்பாட்டுக் கூறுகள் பலவற்றிற்கு இலக்கிய வாழ்வளித்தவர். இவரது இலக்கியப் பங்களிப்புத் தொடர்பாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிந்திக்கவும் எழுதவும் எனக்கு வாய்ப்பு கிட்டியது. குறிப்பாக 1978 இல் வெளிவந்த எனது ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம் நூலிலும், 1988 மல்லிகை இதழிலும் இவரது படைப்பிலக்கியப் பணி தொடர்பான எனது அபிப்பிராயங்களை முன் வைத்துள்ளேன்.
பிரளம் என்ற இந்நாவல் 1971 ம் ஆண்டில் சிரித்திரன் சஞ்சிகையில் மயானபூமி என்ற தலைப்பில் தொமராக வெளிவந்தது. சில மாறுதல்களுடன் 1975 இல் பிரளயம் எனப் பெயர் மாற்றம் பெற்று வீரகேசரிப் பிரசுரமாயிற்று. இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகின்றது. ஈழத்திலே படைப்பிலக்கியமொன்று இரண்டாம் பதிப்புப் பெறுவதென்பது ஒரு சாதனை தான். இத்தகு சாதனை செங்கை ஆழியான் போன்ற பரந்த வாசக வட்டமுடைய ஒரு படைப்பானுக்கே சாத்தியம். இச்சாதனைத் துணிவு வாழ்த்தி வரவேற்றற்குரியது.
இந்த நாவலின் கதையம்சம் தமிழர் சமுதாயத்தில் சாபக்கேடுகளில் ஒன்றான சாதிப்பிரச்சினை : தொடர்பானது. யாழ்ப் பாணப் பிரதேசத் தல இருபதாண்டுகட்கு முன் இப்பிரச் சினை கொதி நிலையில் இருந்தபோது எழுதப்பட்டது. இப்பிரதேசத்தின் சலவைத் தொழிலாளர் சமுகம் தனது அடிமை குடிமை > நிலையிலிருந்து விடுபடத் துடித்த உணர்வு நிலையே கதைக் கரு. கல்வி, பாரம்பரியத் தினின்று வேறுபட்ட 4 தொழில் முயற்சிகள் என்பன மேற்படி துடிப்புக்குச் செயல் K வடிவம் கொடுக்கத் துணை நிற்கின்றன. உயர் சாதியினர் எனப்படுவோரின் இளையதலைமுறையில் ஒரு சாரார்

Page 22
செங்கை ஆழியான் மத்தியில் நிலவியமனிதாபிமானம், பொதுமை நோக்கு என்பன மேற்படி உணர்வு நிலைக்குக் கைகொடுத்து வரவேற்கின்றன. இவற்றால் அப்பிரதேசத்தில் ஒரு சமுதாய மாற்றம் (பிரளயம்) நிகழத் தொடங்குகிறது. இந்த வரலாற்றுப் போக்கு வண்ணார்பண்ணைக் கிராமத்தின் ஒரு சலவைத் தொழிலாளி குடும்பத்தின் கதையாக விரிகின்றது.
பாரம்பரிய அடிமை குடிமை நிலையிலினின்று விடுபடக் கல்வியை ஒரு வலுவான கருவியாகப் பற்றி நிற்க முயலும் ராணி என்ற பாத்திரத்தை முன் வைத்து இக்கதை நிகழ்த்தப்படுகின்றது. தொடக்கத்தில் அவளது உணர் வோட்டத்தை ஒப்புக்கொள்ளத் தயங்கிய குடும்பம் ஈற்றில் வாழ்த்தி வரவேற்கின்றது. உயர் சாதியினர் எனப்படு வோரால் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் கொடுமை களுக்குப் பிராயச்சித்தமாகத் தன்னையே தியாகம் செய்து கொள்ள முன்வரும் மகாலிங்கம் என்ற பாத்திரம் உயர் சாதி இளைய தலைமுறையின் ஒரு சாரார் மத்தியில் நிலவிய மனிதாபிமானம், பொதுமை நோக்கு என்பன வற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைகிறது. கதை முடிவில் நெஞ்சத்தைவிட்டகலாமல் நிலைத்து விடுகின்றது. குணாம்சங்களுடன் காட்டி சுவை பொருந்தக் கதை கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
இந்த நாவல் ஈழத்தின் தமிழ் நாவல் வரலாற்றிலும், செங்கை ஆழியானின் படைப்பிலக்கிய வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையதாகும். ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதிப்பிரச்சினை இந்த நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டுப் பகுதியிலேயே இடம் பெறத் தொடங்கி விட்டது. இடைக்காடரின் நீலகண்டன் ஒரு சாதி வேளாளன் (1925), எஸ். தம்பிமுத்துப்பிள்ளையின் அழகவல்லி (1926) என்பன இலங்கையின் முதல் முயற்சிகளாகும். இவை இப்பிரச்சினையின் புறத்தோற்றத்தின் சில கூறுகளை மட்டுமே மேலெழுந்தவாரியாகநோக கரி ன. இப் பிரச்சினையின் பல்வகைக் கூறுகளை ஆழ்ந்து நோக்கிச் சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சிகள் ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பித்தன. இளங்கீரனின் தென்றலும் புயலும் ( 1956), செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965) என்பன இம்முயற்சிக்குத் தோற்றுவாய் செய்தன. நீண்ட பயணம் இவ்வகையில் காத்திரமான ஒரு முதல் முயற்சியாகும். இதனைத் தொடர்ந்து இவ்வகையில் பல நாவல்கள் எழுதப்பட்டன. அவற்றில் ஒன்றே இப்பிரளயம். இவ்வாறு சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சியில் முக்கியமான இருவகை அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒரு வகை இப்பிரச்சினையைப் பொதுவுடைமைக் கோட்பாட்டடிப்படையில் ஒரு வர்க்கப் போராட்ட வரலாறாக நோக்குதல். இன்னொரு வகை, சமுதாயத்தின் இயல்பான சிந்தனை மாற்றத்தின் வரலாறாக நோக்குதல். இவற்றில் முதல் வகை அணுகுமுறை செ. கணேசலிங் கன், கே. டானியல் என் போரால் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது அணுகுமுறையை மேற்கொண்டவர் செங்கை ஆழியான். அவரது இந்த நாவல் இவ்வணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தரமான ஆக்கமாகும். தாழ்த்தப்பட்டோர், உயர்த்தப்பட்டோர் இரு
4()

வாழ்வும் படைப்புகளும்
சாராரிடத்தும் நிகழும் சிந்தனை மாற்றங்கள் இயல்பாகவே சமுதாயமாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை இந்நாவல் உணர்த்தியடைகிறது.
சாதிப்பிரச்சினையைப் பொதுவாகக் கொண்ட ஈழத் துத் தமிழ் நாவல்கள் யாவும் சலவைத் தொழிலாளர் சமுகத்தை ஏனைய தாழ்த்தப்பட்டோருடன் இணைத்தே நோக்கியுள்ளன. குறிப்பாக டானியலின் நாவல்களில் பஞ்சமர் என்ற பொதுப்பிரிவில் இச்சமுகத்தினள் காட்டப்பட்டனர். சலவைத் தொழிலாள சமுகத்தை மட்டும் தனிக் கவனத்தில் கொண்ட படைப்பு என்ற வகையிலும் இந்நாவல் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையதாகிறது.
செங்கை ஆழியானின் படைப்பிலக்கிய வரலாற்றிலே, குறிப்பாக நாவல் வரலாற்றிலே தொடக்கத்தில் அவர் கற்பனை கலந்து கதை கூறுபவராகவே இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நந்திக்கடல், நாகநாட்டு இளவரசி என்பன இவ்வகைப் படைப்புக்களே. அடுத்த கட்டத்தில் சமகாலச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் பிரச்சினைகளின் புறத்தோற்றங்களையும் அங்கத அணுகுமுறையிற் சுட்டிக்காட்ட முற்பட்டார். முற்றத்து ஒற்றைப்பனை, கொத்தியின் காதல் என்பன இவ்வகை முயற்சிகளுக்குத் தக்க சான்றுகளாகவுள்ளன. இந்தச் சமுதாயப் பார்வை ஆழம் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தையே பிரளயம் என்ற இந்த நாவல் புலப்படுத்து கின்றது. சமுகப்பிரச்சினைகளை அவற்றின் இயல்பான தளத்தில் அணுக வேண்டும். அவற்றை இயல்பு மாறாது சித்திரிக்க வேண்டும். அச்சித்திரிப்பில் ஒரு தீர்வும் காணப்பட வேண்டும் என்ற வகையில் அவரது இலக்கியக் கொள்கையில் ஏற்பட்ட பரிணாமத்தை இந்நாவல் உணர்த்தி யமைகிறது. இக்கொள்கைப் பரிமாணமே பின்னர் காட்டாறு என்ற . இவரது முக்கிய படைப்புக்கான திசை காட்டியாக அமைந்தது எனலாம். காட்டாறு நாவலில் இவர் சுரண்டும் வர்க்கத்திற்கெதிரான போர்க்குணமுள்ள எழுச்சியை முன் வைத்துள்ளார் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இவ்வகையில் செங்கை ஆழியானினது நாவல் வரலாற்றில் பிரளயம் ஒரு மைல் கல்லாகும்.
புதினான்கு ஆண்டுகளின் முன் பிரளயம் முதற் பதிப்பு வெளிவந்தபோது அதனை ஒரே மூச்சில் வாசித்து முடித்து அதில் வரும் மகாலிங்கம் என்ற பாத்திரத்தின் பண்பில் மனம் நெகிழ்ந்தேன். அப்பாத்திரப் படைப்புக்காக ஆசிரிய ரைப் பாராட்டி கடிதம் எழுதியதாக நினைவு. பின்னர் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற என் நூலில் அதனை நெஞ்சை விட்டகலாத பாத்திரம் எனச் சுட்டியிருந்தேன். தொடர்ந்து தனிமனிதத் தியாகங்கள் மூலம் சமுதாய மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமா என வினா எழுவதாகவும் சுட்டியிருந்தேன். இப்போது இந்நாவலை வாசிக்கும்போது அது தனிமனித தியாகமல்ல ஒரு புதிய தலைமுறைச் சிந்தனை எழுச்சியின் பிரதிபலிப்பே என உணர்ந்தேன். இதனைவிட எனது முன்னைய அபிப்பிராயத்தில் மாற்றமில்லை.
4.

Page 23
செங்கை ஆழியான்
இந்நாவல் பற்றிய முன்னைய கணிப்பில் இதில் வரும் சலவைத் தொழிலாளியின் குடும்பம் அதற்கான இயல்பான தன்மைகளுடன் சித்திரிக்கப்படவில்லை என்றும், ஒரு தூரத்துப் பார்வையாகவே தெரிகிறது என்றும் சுட்டியி ருந்தேன். ஆசிரியர் இவ்விரண்டாம் பதிப்புக்காக திருத்கி எழுதிய வேளையில் அக்குறைகளைக் களைய முயன்றுள்ளமை தெரிகிறது. முக்கியமாகப் பாத்திரங்களின் உரை யாடலில் பிரதேசப் பேச்சு வழக்கினைப் பயன்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இது வரவேற்கத் தக்கது.
செங்கை ஆழியான் அவர்கள் ஒரு படைப்பாளி மட்டுமன்றிப் பொறுப்பு வாய்ந்த ஓர் அரச அலுவலரும் கூட. அத்துடன் அவர் யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவருமாவார். இலக்கிய ஆக்கங்களுக்குத் தரமிட்டுப் பரிசு வழங்கும் இலக்கியப் பேரவையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் அவருக்கு ஒரு தனியிடமுள்ளது.
(10. 10, 1989)
வாழ்க வளம் பல சிறந்தே திருவாளர் கந்தையா பெற்றெடுத்த சேயே திக்கெட்டும் கலைஒளி உழைப்பாயே பெருவாரி நூல்கள் எழுதிக் குவித்தோன் பெரிய எழுத்தாளன் பண்பாளன் தெருவாரும் கலைக் கூத்தரைக் கல்கிக்கலைஞனாக சிருட்டித் தவைமுன் திகழ வைத்தான் மருவாரும் புலமையிலா‘மன்னாதென்னா’ என்றார்க்கும் வாங்கிக் கொடுத்தான் பரிசு கம்பன் அன்னவரே செங்கை ஆழியான் என்றே அகமகிழ்வோம் அவர் மேல் அன்பு கொள்வோம் به
இன்னும் பல நூல்கள் எழுதி யாழ்ப்பாணமாம் தாய்நாட்டுச் சரித்திரத்தில் சற்றேனும் பின்னமில் லாதுணர்ந்து ரசிக்க எல்லோரும் பெரிதுழைக்க வேண்டுமென் றேகேட்கின்றோம் மன்னுக அப்பெரு மகன் மனைவி மக்களுடன் வாழ்க வுழுழி வளம் பல் சிறந்தே
-பண்டிதர் பொ.ஜெகந்நாதன் (19.11.1985)
 

இரவு நேரப் பயணிகள் டொமினிக் ஜீவா
நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்புகளுக்கு முன்னால் என் நிஜமுகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்துவிடுவதுண்டு. கூடிய வரை தட்டிக் கழிப்பேன். காரணம் சகலத்தையும் உன்னிப்பாகப் பார்த்து அவை பற்றி எனக்குள் நானே மதிப்பீடுகளைச் செய்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதோடு நின்று விடுவது எனது இயல்பான வழக்கமாகும். அதிலும் சஞ்சிகையாளனாக மாறிய இந்த இடைக்காலத்தில் மிகநிதானமாக இந்த நத்தை ஒட்டிற்குள் நானே சுருட்டிக் கொள்ளும், ஒதுங்கும் முறையை அனுசரித்து வந்திருக்கிறேன். பல்வேறுபட்ட படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழக வேண்டியது எனது தொழில் முறை நட்பு. கூடிய வரை சொந்த அபிப்பிராயங்களை மனதிற்குள் புதைத்து விட்டுத் தான் காரியமாற்றி வருகின்றேன். அதற்காக எனக்கொரு கருத்தில்லை என்று இதற்கு அர்த்தமன்று. எனக்கேயான சொந்தக் கருத்துக்களுக்காக நான் யாருடனும் மோதிக் கொள்வது இல்லை. அது இக்கால கட்டத்திற்குத் தேவையுமில்லை.
நண்பர் செங்கை ஆழியான் என்னைப் பாதித்து விட்டார். அதற்குக் காரணம் அவரின் பழகும் எளிமை, பந்தா இல்லாத பழக்க வழக்கங்கள், இலக்கிய நேசிப்பு, இவை தவிர, இவரது இடையறாத உழைப்பு. "இந்த மனிதனால் எப்படி இப்படிச் செயற்பட முடிகிறது?’ என விழிகள் அகல நான் வியப்பதுண்டு. அதன் மூலம் என்னை நெறிப்படுதுவதுண்டு. ஒரு வேளை இந்தப்பிரமிப்பின் விளைவு தான் இந்த முன்னுரையோ என எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
ஒருவர் உழைக்கும் விதம் தான் அவருடைய உண்மையான தகுதிகளைக் காலக்கிரமத்தில் நிi60ணயிக்கும .w.
43

Page 24
செங்கை ஆழியான் அளவு கோலாகும். இந்த இரவு நேரப் பயணிகள்’ என்ற தொகுதியில் பதினொரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இந்தப் பதினொன்றில் ஏழு கதைகள் மல்லிகையில் பிரசுரமாகியுள்ளன. பிரசுரிப்பதற்கு முன்னர் இவரது கதைகளை ஆற, அமர படித்துப் பார்ப்பது வழக்கம். இத்துடன் அச்சுக்குப் போகின்ற படிகளை ஒப்பு நோக்கிப் பார்க்கின்ற வேலையும் எனதே. எனவே கருத்துான்றிப் படித்து விடுவேன்.
எனவே இதிலுள்ள கதைகளைப் பற்றி மாத்திரமல்ல, இவரது பல்வேறு கதைகளை, அநேகமாக அவையாவும் மல்லிகையில் வெளிவந்தவையே, எல்லாவற்றைப் பற்றியும் எனக்கு நன்கு பரிச்சயம். இலக்கியக் களத்தில் பன்முகக் கருத்தோட்டங்கள் மலிந்துள்ள சூழலில் இவரது படைப்புக்கள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு மலர்ந்தவையாகும். நமது நிகழ் காலத்தில் கருமையான, கடுமையான வாழ்க்கையின் உக்கிரமான இரவுகளை இவரது இக்கதைகளில் தரிசிக்கின்றோம். இந்த வழி தெரியாமையிருட்டில் பாமரமக்களெனப் படித்தவர்களால் நம்பப்படும் மனிதர்கள் இதய வெளிச்சத்தில் நம்பிக்கையோடு நடைபோடுகின்றனர். வாழ்க்கையை அத்தியாந்த வாத்சல்யத்துடன் நேசிப்பதன் காரணத்தால் தமது வாழ்க்கைக்கு எதிராகத் தம்முன் முகம் காட்டும் பாரிய இடர்களுக்கெதிராக இவர்கள் மன வலிமையுடனும், ஆன்ம பலத்துடனும் போராடுகின்றனர். முகம் கொடுக்கின்றனர். இங்கே தனி மனித வெற்றியல்ல முக்கியம். இன்றைக்கு மானுடம் அந்தச் சிரமங்களுக்கு மத்தியிலான சூழ்நிலையில் நிமிர்ந்து நிற்க முனைகின்றதே அது தான் முக்கியம். இன்றைக்கு இந்த மானுடப் பெரும் முயற்சி நமக்கெல்லாம் வெகு இயல்பானதாகத் தெரியலாம். நுாளை டின்றொரு நாள் வரும். அன்று இந்த மானிடத்தைப் பேணிய சாமானிய மனிதர்கள் நிச்சயம் காவிய புரு'ர்களாகப் பேசப்படுவார்கள்.
அந்நிய ஆக்கிரமிப்புக்குட்பட்ட வியட்னாமிய நெல் வயல்களினுடே வலம் வந்த விவசாயி எப்படி அந்த மண்ணிற்கு நடந்த கொடுமைகளைக் கூட வாழ்வின் சுவையாக்க கருதி, தனது தினசரி வாழ்வைச் செப்பனிட்டு வாழ்ந்தானோ அப்படி வதழ்ந்து காட்டுகிறான் நம்மவன். புரட்சிக்குள்ளாகிய ரிய நாட்டில் ஒரு மில் தொழிலாளி தற்காலிக சிரமங்களப் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்று வாழப் பழகிளானோ அப்படி வாழ்ந்து காட்டுகிறான் நமது மண்ணைச் சேர்ந்த இந்தச் சாதாரணன். இது எவ்வளவு பெரிய அதிசயத்தக்க வியம்.
இந்த சாமானியன் ஈழத்து இலக்கியத்துக்கே ஏன் தமிழிலக்கியத்திற்கே புதியவன். மிகமிகச் சாதாரண மனிதனை முன் எப்போதுமே காணாத கதாநாயகனை இவரது கதைகளில் காண்கின்றோம். பாமரர்களாகக் கருதபட்ட இவர்கள் பிரச்சினை என்று நேர் கொள்ளும் போது காட்டும் பொறுமை, நிதானம், அதே சமயம் வீரியம் என் நெஞ்சைக் கவர்ந்ததுண்டு. அது தான் இத்தொகுதியின் வெற்றியாகக் கணிகின்றது.
இந்த இலக்கியப் புதியவனை நமக்கு இனங்காட்டித் தந்திருக்கிறார் செங்கை ஆழியான். அவரது பாத்திரப் படைப்புகளில் என்னைக் கவர்ந்த அம்சம் இது
44

வாழ்வும் படைப்புகளும்
தான். இந்தச் சோக சூழ்நிலையிலும் வாழ்வின் நேசிப்புத்தான் இச்சிறுகதைகள் அனைத்தினதும் மையக் கருவாகும். இவரது பேனாவுக்கள் ஒரு துயரம் கலந்த வீரம் வெளிப்படுகின்றது.
‘அடிக்கடி நிறைய எழுதுகின்றார்’ என்றொரு குற்றச் சாட்டு இவர் மீது சொல்லப்படுவதுண்டு. இதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று எதுமே சமீப காலங்களில் எழுதாதவர்கள் சொல்வது. இது கையாலாகாத் தனத்தின் வாய் வெளிப்பாடு. அடுத்தது உணர்ந்து சொல்வது. இதில் ஓரளவு நியாயம் உண்டு. அதே சமயம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். படைப்பாளிக்கும் ஒரு நேரமுண்டு. படைப்புக்கும் ஒரு காலமுண்டு. ‘படைக்கலாம் படைக்கலாம்’ எனக்காலம் கடத்திக் கொண்டே போனால், முடிவில் அந்தப் படைப்பாளி மந்தித்துப் போய் மரத்து விடுவான். இறைக்க இறைக்கத்தான் நீர் ஊறும். பல பிரென்சு, ஆங்கில, இத்தாலிய எழுத்தாளர்கள் சம நேரத்திலேயே பல நாவல்களைச் சிருடித்தனர் என்பது இலக்கிய உண்மை. அடிக்கடி எழுதுகிறார் என்று குற்றம் சாட்டுவதைவிட என்ன உழுதுகிறார், அது இலக்கியத் தரமானதாக மிளிர்கின்றதா என்பதையே நாம் பார்க்க வேண்டும்.
நான் நினைக்கின்றேன், செங்கை ஆழியானின் இயல்பான முயற்சிகளின் வெளிப்பாடுகளின் ஓர் அம்சம்தான் இந்தப்படைப்புத் தொழிலும் என்று. அவள் சொல்வதைப் போல, அவரால் எழுதாமலே இருக்க முடியவில்லை. ஆகவே எழுதுகின்றார். பெர்னாட்ாே கூடத் தினசரி பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதி வந்தவர் என்பதை நாம் மறந்து விட முடியாது. 8
ஒரு படைப்பாளி எழுதுவதெல்லாம் உயர்ந்த சிருஷ்டியாக வந்துவிடுவதில்லை. சில வகைதான் தேறும். எனவே அதிகமாக எழுதுகின்றார் என்ற குற்றச்சாட்டை நான் ஓங்கி நிராகரிக்கின்றேன். கற்பனை வளம் இருக்கும்போது தொடர்ந்து எழுதுவது தான் சரி. இதில் ஒரு சுயநலமும் உண்டு. மல்லிகை இவரது படைப்புகளை விரும்பி வரவேற்கக் காத்திருக்கின்றது. ‘ஒரு ல்ெலும் ஏழு சன் னங்களும்’ என்ற ஒரு சிறுகதை மல்லிகையில் வெளி வந்தது. இதன் பின்னர் ‘சுபமங்களா’விலும் வெளியிடப் பட்டது. இக்கதை பற்றித் தமிழகத்தில் பலரும் விதந்தோத்திப் பாராட்டினார்கள். இக்கதை மல்லிகையில் வெளிவந்த காலத்தில் நான் என் நெருக்கமான இலக்கிய நண்பர்களிடம் மனந் திறந்து சொன்னதுண்டு. இக்கதை சர்வதேச தரம் வாய்ந்த சிறுகதை. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் அது சர்வதேசப் பெருமை பெறும்’ என் அப்போதே சொல்லி வைத்தேன். அது பின்னர் நிதர்சனமாகியது. பலரும் பேசினர்.
ஈழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் குறையுண்டு என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. ‘நமது படைப்புக்கள், நமது கருத்துக்கள், சிந்தனைகள் இன்னமும் வெளி உலகிற்கு எட்டாமல் இந்த மண்ணிற்குள்ளேயே புதைந்து போயிருக்கின்றன’ என நான் கவலைப்பட்ட துண்டு. 1லையாள எழுத்தாளர்கள், வங்கத்துப் படைப்பாளிகள் சர்வதேச புகழ் பெறுவதற்கு அந்த நாட்டு ஆங்கில மொழி 45

Page 25
செங்கை ஆழியான்
அறிஞர்கள் பாரிய தொண்டு செய்துள்ளனர். இயன்றளவும் செய்து வருகின்றனர். ஆனால் ஆசியாவிலேயே கல்வித் தரம் உயர்ந்த நாடு என்று போற்றப்படும் நமது நாட்டில் அதிகம் படித்தவர்களில் தமிழர்களில் அநேகள் உளர். எனக் கல்வித் தகைமைபேசும் நமது மண்ணில் நமது படைப்புகளை மொழி ஆக்கம் செய்ய ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் அருகிப் போயுள்ளனர். என்பது அமத்த விசனிக்கத் தக்க தொன்றாகும்.
மற்றவர்கள் மூலம் நமது படைப்புகளின் குறை நிறைகளை அறிவதன் மூலந்தான் எம்மைச் செப்பனிட முடியும். தமிழகத்திலிருந்து கூட ஓர் இலக்கியக் குரல் கேட்கின்றது. நாடகம், கவிதை வளர்ந்த அளவிற்கு நாவல், சிறுகதை வளரவில்லை என்ற குரல் மேலும் தொடர்ந்து கேட்கின்றது. ‘இந்தக் கருத்தை மொத்தமாகச் சொல்ல நமது நாட்டிலிருந்து எத்தனை படைப்பு நூல்களைப் படித்துள்ளிர்கள்’ என்பது தான் நமது கேள்வி, வ.வே.சு. ஐயரிலிருந்து புதுமைப்பித்தன் ஊடாக ஜெயகாந்தன் வரை வந்துள்ள ஈழத்துப் படைப்புக் காலத்தில் தோன்றிய நூல்களில் எதனைப் படித்துப் பார்த்தவிட்டு இக்கருத்தைச் செல்கின்றீர்கள் என்றே நாம் கேட்க வேண்டியவர்களாகவுள்ளோம். அதற்கு அனுசரணையாகச் செங்கை ஆழியானின் மேற்சொன்ன கதையையும் அவரது காட்டாறு நாவலையும் படித்துப் பார்க்குமாறு சிபார்சு பண்ணுகின்றேன்.
மிகவும் ஆச்சரியப்படத்தக்க விதமாகச் செங்கை ஆழியான் மிகக் குறுகிய காலத்தில் இந்நூலிலுள்ள கதைகளை எழுதியுள்ளார். ஓர் எழுத்தாளனை அவனுடைய தத்துவப் பார்வையிலிருந்து பிரித்துவிட முடியாது. அவனுடைய சொற்களுக்கு உணர்ச்சியும், எழுத்திற்கு எழுச்சியும், வாழ்க்கைக்கு அர்த்தமும் தருவது அவனுடைய தத்துவப் பார்வையே. செங்கை ஆழியானுக்கு அவருக்கே யுரித்தான ஒரு தத்துவப் பார்வையுள்ளது. எனக்கும் அப்படியே. இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இங்கு தேவையில்லை. ஆனால் பரஸ்பரம் ஒருவரை யொருவர் நன்கு விளங்கிக் கொண்டிருக்கிறோம். நான்கள் பரஸ்பரம் நெருங்கி வந்துள்ளோம் என்பதே யதார்த்தமாகும். வயது ஒரு காரணம், அனுபவம் வேறொரு காரணம். இந்தப் போர்க்கால அனுபவங்களைப் பார்த்துப் பார்த்து இருவருமே பரதவித்து தவிப்பதும் இன்னோர் காரணமாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான திசை வழியில் நாம் இணைந்து விட்டது தான் உண்மை, மலரும் மல்லிகையில் செங்கை ஆழியானின் படைப்புகள் தொடர்ந்து வருவது உனது ஒப்புதல் வாக்கு மூலத்தை உண்மைப்படுத்தும்.
பல காலங்களுக்கு முன்னர் செங்கை ஆழியானுக்கும் அவரது இலக்கியப் பாதையைப் பின்பற்றியவர்களுக்கும், எனது இலக்கியக் கொள்கையாளர்களுக்கும் இடையே இலக்கிய உறவுகளில் கருமை படர்ந்திருந்தது. ஆனால் அதிசயம் என்னவென்றால் இன்று நாம் அனைவரும் தத்தமது சொந்தக் கோட்பாடுகளை, கொள்கைகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இணைந்தே செயலாற்றி வருகின்றோம். இந்த அளவிற்குச் செங்கை ஆழியான் பெரிதும் பங்காற்றியதுண்டு.
46

வாழ்வும் படைப்புகளும்
எழுத்தாளர்களுக்கென்றே ஓர் இடத்தைக் கட்டிடத்துடன் பெற்றுத் தருவதில் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.
சமீப ஆண்டுகளாக மக்களிடையே நமது படைப்புகளை வாசிக்கும் வழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதற்கு நமது மக்களின் பாரிய அனுபவங்களும், அரசியல் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணங்களாகும். இப்படி அதிகமாக வாசிப்புப் பழக்கமுள்ளவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் படைப்புக்களைத் தந்தவர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான் ஆவார். நமது படைப்புகளில் அதிக நூல்களை வெளியிட்டவரும் அவர் தான். இதன் மூலம் அண்மை ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மீது கணிசமானவளவு தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். இவரது படைப்புகளில் சில காலத்தையும் மீறிப் பேசப்படுமென மெய்யாகவே நம்புகிறேன். சில கதைகள், நாவல்கள் மொழி மாற்றம் செய்யப்படுவதன் மூலம் இவரது பரிமாணம் வேறு பல கட்டங்களை அடையும் எனவும் நம்புகிறேன்.
புதிய வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் வசிக்கின்றோம். இந்தக் கால கட்டத்திற்குரிய அடி ஆதாரமான மனிதனை - அவனுடைய மானிட உணர்வுகளை - எழுத்தாளர்கள் என்கின்ற முறையில் தூர நோக்காகச் சிந்தித்துப் புதிய புதிய கோணங்களில் தரிசித்து எழுத்தில் வடித்து வைக்க வேண்டும். அவை வெறும் பிரசாரக் கோ’ங்களாக அமைந்து விடாது, ஆழமான கலை இலக்கியப் படைப்புகளாக வருங்காலச் சந்ததியினருக்கு நமது பலம்பரையின் முதுசமாக விட்டுச் செல்ல வேண்டும்.
செங்கை ஆழியான் என்கிற படைப்பாளியிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. சாதிக்கப் பிறந்தவர் என்கிற எதிர்பார்ப்புகளும் உண்டு. வருங்காலத்தில்
இந்த எழுத்துக்கள் அதற்குச் சாட்சி சொல்லும்.
(முன்னுரை - 15. 02. 1995)
கலாநிதி என்னின் குணராசா என்றுணர்த்தி உலாவரு முன்றன் உயர் நாமம் - அலாதியாய் எம் மனக் கண்களில் என்றும் நிறைந்திடச் செம்மையுறு நின் சேவைநற் சான்று.
தா. தேவமதுரம் (14. 04, 2005)
47

Page 26
அக்கினி
சுந்தரம் டிவகலாலா
யார் இந்த “செங்கை ஆழியான்’?
பிரபல எழுத்தாளன்.
பல நூற்றுக்கணக்கான சிறு கதைகளையும், 25 க்கும் மேற்பட்ட நாவல்களையும் பல குறு நாவல்களையும் எழுதித்தள்ளி தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு “முத்திரை’ பதித்த- தமிழ் உலகம் போற்றும் ‘எங்கள்’ எழுத்தாளன். கல்வித்துறையில் பல புவியியற் பாட புத்தகங்களையும் சமூகவியற் புத்தகங்களையும் எழுதி அத்துறையிலும் எம் மொழியை வளம்படுத்தியவர் - வளம்படுத்துபவர். காலத்திற்குக் காலம் எம்மத்தியில் ஏற்பட்ட அனர்த்தங்களை வரலாற்றுப் பதிவேடாக்கிப் பிரபல்யம் அடைந்தவர்.
அண்மையில் கூட யாழ் கோட்டையின் வரலாறு பற்றி “முரசொலி”யில் எழுதித் தற்காலத்தில் எம்மக்கள் வாயில் வயது வேறுபாடின்றி அடிக்கடி பேசப்பட்டவர். விமர்சிக்கப்படுகின்றவர். அப்படியிருக்க, இதென்ன கேள்வி என்று எல்லோருக்கும் படும்தான்! ஆனால் நான் கேட்ட கேள்வியின் அர்த்தம் வேறு; ஆம் - அவர் என் நண்பர்.
1954இன் இறுதிக்காலம் 60களின் ஆரம்பம். யாழ் இந்துவின் மாணவர்களாக நாம் இருந்த காலம் குணராசாவாகிய அவர் வகுப்பில் தவேந்திரராஜா என்றும் வீட்டில் “சற்குணம்’ என்றும் எம்மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்த காலம். அக்காலத்தின் எஸ். எஸ். சீ. சோதனையில் முதற் பிரிவில் முதன் முறையிலேயே சித்தியடைந்ததன் மூலம் கலட்டியில் எங்கள்ன் “கதாநாயகன்’ என்னிலும் இரண்டாண்டுகள் முந்திப் படித்து வந்த அவரிடம் எனக்கொரு பிரியம், மரியாதை. ? கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, நல்லூர்த் திருவிழாவிற்குப் போனாலும் இரண்டு பேரும் தான் போவோம். கடலை வாங்கி, ஒரு சால்வையை விரித்து அதன் மேல் அதைப் போட்டு விட்டு
 

வாழ்வும் படைப்புகளும்
சால்வையின் இரு பக்கமும் இருவரும் தலைக்குக் கையை முண்டு கொடுத்துக் கொண்டு படுத்தபடி கடலையை கொறித்துக் கொறித்து பலதும் கதைப்போம்.
படிப்பைப் பற்றி, எங்கள் எதிர்காலம் பற்றி, பெட்டைகளைப் பற்றி எல்லாம் கதைத்துக் கதைத்து நல்லூரான் வாசலில், தேர் முட்டியடியில், கழித்த எமது அந்த இனிய நாட்கள் எமது நட்பிற்கு மென்மேலும் உரமிட்டு வளர்த்தன.
அக்காலத்தில் தான் நண்பன் சிறு கதை எழுதத்தொடங்கினார். அவர் கதைகள் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரத் தொடங்கின.
கதை எழுதிய பின், பத்திரிகைக்கு அனுப்பி அது வெளிவரும் வரை அவர் அனுபவித்த “பிரசவ வேதனை” யிலும், சிறுகதை வெளிவந்ததும். அவர் அடைந்த மகப்பேற்று மகிழ்ச்சியிலும் எனக்கும் சம பங்குண்டு, சுருங்கச் சொன்னால் அவரும் நானும் கணவன், மனைவி மாதிரி.
அந்த நட்பின் உரிமையில் தான் இந்த முன்னுரை. இது போர்க்காலம் இன விடுதலைக்காகப் போராடும் காலம். எம்மக்களின் மண்ணை மீட்கவும், சமுதாய மாற்றத்தைக் காணவும். “இளைஞர்கள்’ ஆயுதம் கொண்டு போராடும் காலம். இன விடுதலையும் போராட்டமும் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இடம் பெற்று வந்தாலும். 1970களில் ஆரம்பங்களில் அது ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, 1983ன் பின்னர் உத்வேகமடைந்து வருகின்றது.
மண் பறிப்பு, இனப் படுகொலை, பெண்கள் மேல் பாலியல் வன்முறைகள், கல்விப் பறிப்பு, பொருளாதாரத் தடை, இவற்றிற்கும் மேலாக சுதந்திரமின்மை “தமிழன்’ என்றால் அவனை எங்கு எவரும் “எதுவும்” செய்யலாம் என்ற நிலை.
இவற்றிக்கெதிராக கிளர்ந்த இளைஞர்கள், போராளிகள் ஆகினர். 80 - களின் ஆரம்பத்தில் தொழிலுக்காகப் பிற நாடுகளுக்கு எம் இளைஞர்கள் சென்ற தன்மை, போராட்டம் தொடங்கியதன் பின் எம் மண்ணில், எம் கண்முன்னிலையில், ஏற்பட்ட அனர்த்தங்கள், இவற்றைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கியப் படைப்பே 'அக்கினி” என்ற இந்த நாவல் என்று துணிந்து கூறலாம்.
கனகசபை, கந்தசாமி, துரை, திலகநாதன், கலாவதி, சிவபாலன், கந்தையா இந்த நாவலின் பிரதான கதாப்பாத்திரங்கள். கதைப் போராட்டத்தையும் அதற்கான காரணங்களையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. நாவலில் நகுலன் என்ற கதாப்பாத்திரத்தின் ஊடாக ஆசிரியர் கூறுகின்றார்.
“ஒடுக்கப்படும் மக்களின் துன் துயரங்களைக் கண்டு அவற்றைத்தாங்க முடியாத ஒருவனே போராளியாகின்றான். அவற்றைச் சகித்துக் கொண்டு வாழ முடிந்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள்."
4)

Page 27
செங்கை ஆழியான்
போராட்டம் உத்வேகம் அடைய அடைய, அன்னியர்களின் அனர்த்தங்களும், அழிப்புக்கள் கூடக் கூட, கெலிச் சூடு, பொம்பர் அடி, ல்ெ வீச்சு, இவற்றினால் எம்மக்கள் அரும்புகளாய், பூக்களாய், பிஞ்சுகளால், காய்களாய், கனிகளாய், அநியயமாக அழிக்கப்படும் போது அதைப் பார்த்துப் பார்த்துச் சகிக்க முடியாமல் மக்களிடையே போராடும் தன்மை அதிகரித்திட ஆயுதம் தூக்கப் பலர் முன்வருகின்றனர். இது எவ்வளவு யதார்த்தம் என்பதை செங்கை ஆழியானின் நாவலில் உணர முடிந்தது.
ஆசிரியர், துரை என்ற கதாப்பாத்திரத்தின் ஊடாக கூறுகின்ற “நானும் இவங்களுடன் சேர்ந்து விடலாம் என்றிருக்கின்றன. இந்த மண்ணில் நடக்கின்ற அநியாயங்களைப் பார்க்கின்ற போது வேறு மார்க்கம் இருப்பதாக தெரியவில்லை’. கூற்றின் மூலம் இன்றைய போராட்டத்தின் “நியாயம்’ தெளிவாகின்றதல்லவா?
நாவலின் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சூழ்நிலையினால் உந்தப்பட்டுப் போராளியாக மாறுகின்றனர் கந்தசாமி, கனகசபை, ஏன் வேலுப்பிள்ளையர் கூட இந்தப் தாக்கத்திலிருந்து தப்பமுடியவில்லை.
வாழத் துடிப்பவர்கள் அழிக்கப்பட்டனர். தாலிகட்டிய கணவனும் மனைவியும் தாம் மாற்றிக் கொண்ட மணமாலைகள், மலர் மாலைகள் வாடுவதற்கு முன்னரே ல்ெ விழுந்து துடிதுடித்து இறந்தனர். தாலிகட்டியவன் இரத்தவெள்ளத்தில் மணமாலையோடு மிதந்த காட்சியைக் கண்ட மணப்பெண்கள். காதலித்தவன் கதைத்து விட்டு போய் வீடு சேருமுன் அழிக்கப்பட்ட கதைகள், தோட்டம் சென்றவர்கள் பிணமாக வீடு வந்த காட்சிகள், கந்தோர் சென்ற கணவனின் உடம்பு சாக்குப் பையுள் துண்டு துண்டாக வந்த காட்சியை கண்ட மனைவிமார், பாடசாலை சென்ற தம் பிள்ளைகள் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இறந்த செய்தி சுமந்த பெற்றோர், நெடுந்தீவு “குமுதினி”யில் சென்றோர் அரக்கர்களால் கத்தரிக்காய் வெண்டிக்காய் போல் துண்டந்துண்டமாகத் துடிக்கத் துடிக்கத் துண்டாடப்பட்ட செய்திகள் கேட்ட மக்கள், தோல கட்டியில் கத்தோலிக்கச் சுவாமி சுட்டுக் கொல்லப்பட்ட புதினம். இவற்றைத் தான் தாங்கி வரும் செய்தித்தாள்கள் இதுதான் இக்கதை நடந்த காலப்பின்னணி கதாநாயகியும் காதலித்தால் கருவுண்டால் “பங்கருக்குள்’ ஒடி ஒதுங்கிய காதலன் தன் தாயின் கதி தெரியாது ஓடுகின்றான் அங்கே அவனின் முடிவு? கதாநாயகி கலங்கினாள், வைரம் கொண்டாள்.
“அக்கினியைக் கருவாகக் கொண்டேன்’ போராளியான தன் சகோதரன் கந்தசாமிக்கு கடிதமெழுது கின்றாள் ‘தம்பி, என்வயிற்றில் வளர்வது கருவன்று, அக்கினி ஆமாம் இந்தப் பாவிகளைப் பழிகாரர்களைச் சுட்டெரிப்பதற்கு நான் என் வயிற்றில் வளர்ப்பது அக்கினிதான்’ ஆசிரியரும் கதையை முடிக்கின்றார்.
“ஒரு அக்கினி புத்திரனல்ல ஒராயிரம் அக்கினி புத்திரர்கள்” என்றது கந்தசாமியின் வாய். இதனை வலுவானக் கதைப் பொருளாகக் கொண்டாலும்,
50

வாழ்வும் படைப்புகளும்
ஆசிரியன் சமுதாயத்தில் உள்ள ஏனைய குறைபாடுகளையும் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை. எம்சமுதாய முரண் பாடுகளைச் சரியாகச் சித்திரிப்பதில் அவருக்கு நிகர் அவரே.
சாதியமைப்பு, பெண் உரிமை மறுப்பு இவற்றையும் ஆசிரியரின் நாவல் சுட்டிக் காட்டத்தவறவில்லை. சாதியடக்கு முறையின் வெளிப்பாடுகள் குறைந்தாலும் அடிப்படையில் அது வேரூன்றி நிற்பதனை ஆசிரியரின் கதாப்பாத்திரங்களின் சம்பானைகள் மூலம் காணலாம்.
“எட நம்மடை சுப்பன்ர பொடி கனகுவே” எனக் கேட்க எண்ணிய மாணிக்கவாசகர் என்ற உயர் சாதிக் கதாபாத்திரம் கனகுவின் வெளிநாட்டுக் கோலத்தைக் கண்டு 'தம்பி கனகசபையோ? இப்பத்தான் டுபாயில் இருந்து வாறிரோ?” எனக் கேட்கின்றார். முன்பென்றால் கனகு அதற்குப்பதில் “ஓம் அய்யா” என்றிருப்பான். ஆனால் மாற்றத்தின் மனம் கண்டு “ஓமண்ணை, நான்கு வருத் துக்குப் பிறகு இப்பத்தான் வாறன்’ என்று கூறினான்.
மாணிக்கவாசகர் தனது தேத்தண்ணிக் கடையில் கனகசபைக்கு தேனீர் கொடுக்கின்றார். அவர் மிக நிதானமாகக் கழுவிய “எவர்சில்வர்” பேனியில் தேநீரை வார்த்து அவனிடம் நீட்டுகின்றார். அதைக் குடித்த கனகசபைக்குச் சிறுவயதில் நடந்த தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டம் நினைவுக்கு வருகின்றது. சந்தியிலுள்ள தேநீர்க்கடைகளில் பஞ்சமர்களுக்கெனப் புறம்பாக வைக்கப்பட்டிருந்த பேணிகள் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம், அது. W
சாதி அமைப்பின் வெளிப்பாடுகள் குறைந்துவரும் தன்மையை இதில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. கனகசபை வீட்டில் வெள்ளாளப் பகுதிக் கந்தையா, வேலியடைக்க வருவதும், கனகசபை வீட்டில் அவர் தேநீர் குடிப்பதும், கால ஓட்டத்தில் சாதிக் கொடுமைகள் குறைந்து வரும் தன்மையைக் காட்டுகின்றன. சமுதாயத்தின் இயல்பான சிந்தனை மாற்றத்தினால், எல்லோரும் படிப்பதன் மூலமும், வருவாயைப் பெருக்குவதன் மூலமும், தொழில் மாற்றத்தின் மூலமும் சாதி முறையைத் தகர்க்கலாம் என்ற சிந்தனை கொண்டவர்போல் ஆசிரியர் தோன்றினாலும், ஒரு சமுதாயப் புரட்சி மூலமே இந்த அமைப்பை மாற்றிலாம் என்பதையும், போரர்ளிகள் அந்த இலட்சியத்திலும் ஈடுபட்டிருப்பதையும் நாவலின் வளர்ச்சியில் காட்டுகின்றார்.
இப்போராட்டம், இனவிடுதலைக்கான போராட்டம் மட்டுமன்றிச் சமுதாய மாற்றத்துக்கும்ானது என்பதை ஆசிரியர் இந்நாவலில் வெளிக்கொண்ர்கின்றார். இப்போராட்ட காலத்தில் இங்கு வாழும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்றும் பார்வையாளனாக அன்றி பங்காளனாக மாறி ஒவ்வொரு துறையினரும் தங்கள் பங்களிப் ை அளிக்க வேண்டும் என்ற கருத்துப் பலமாக வெளிவரும்
56). D.
5

Page 28
செங்கை ஆழியான் இக்கருத்துப் பிழையென ஒட்டு மொத்தமாகக் கூறிவிட முடியாது. இக்காலத்தில் போராட்டத்தைப் பற்றி இலக்கியம் படைக்காமல் விட்டாலும், இக்கால சமுதாயம் முரண்பாடுகளுக்கு எதிராகவேனும் இலக்கியங்கள் படைக்க எம்மவர்கள் முன்வரவேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
செங்கை ஆழியான் பிரபல எழுத்தாளர் இத்துறையிலும் தனது பங்களிப்பைச் செய்ய முன்வந்திருப்பதை நிரூபிக்கும் படைப்புத்தான் 1987 காலகட்டத்தில் ஈழநாடு வாரமலரில் தொடராக பிரசுரமான “அக்கினி” நாவல். கருவாக “அக்கினி” வளர்வது போல செங்கை ஆழியானின் இலக்கிய ஊற்றிலிருந்து நூற்றுக்கணக்கான அக்கினிப் படைப்புக்கள் வெளிவரவேண்டும். எனது இந்த எதிர்பார்ப்பை வேண்டுகோளை என் நண்பன் நிச்சயம் நிறைவுசெய்வார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
(அக்கினி முன்னுரை-02.12.1990)
அக்காலத்தில் கம்பன் இருந்த இடமே தெரியாத
எளியேன் என்னை யூக்குவிக்கப் பொருந்து தமிழ்மன் றெடுத்துக் காட்டிப்
புகழும் விருதும் கிட்ட வைத்தாய் வருந்து கின்ற கலைஞர்கள்
வாட்டம் போக்க வழிகாட்டி இருந்து நாளும் தமிழ் மலர
எழுதும் செங்கை ஆழியனே! உண்ணாமல் உறங்காமல் ஓயாமல்
எழுதியெழுதி ஒவ்வோர் நாளும் அண்ணே! யுன் உடலிளைப்புக் கொளாவண்ணம்
அதனலுப்பு நீக்க வன்றோ தண்ணாரும் தமிழணங்கு பரிவு கூர்ந்து
தக்கபல்வி ருதுன தாக்கி மண்ணாரும் உயர்பட்டம் பலவளித்தும்
மகிழ்ந்துாக்கிக் களிக் கின்றாளே! அக்காலத் திற்கம்பன் கும்பன் அருந்தமிழின் மிக்கா ரவரென்று மெச்சுவர் - இக்காலம் செந்தமிழின் மிக்காரெம் செங்கையாழி யானென்பார் உந்தமிழை யோதி உணர்ந்து.
-கண்டாவளைக் கவிராயர் சி.கு. இராசையா (Ol. 10.2003)

செங்கை ஆழியான் என்ற படைப்பாளி எஸ். பத்மநாதன் (கனடா)
முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகப் புனைகதை இலக்கியத்தில் தன் ஆளுமையைப் பதித்துள்ள செங்கை ஆழியான் (க.குணராசா) மிகவும் சக்தி வாய்ந்த பேனா மன்னராகத் திகழ்ந்து எழுதிக் குவிப்போர் - Prolife Writers - வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரு சிறந்த படைப்பாளியாவார். முப்பத்தைந்து நாவல்கள் 180 க்கு மேற்பட்ட சிறுகதைகள் இவரது இலக்கிய அறுவடைகள் ஆகும். ஏழு தடவை சாகித்திய மண்டலப் பரிசில்களையும் வேறு பல உயர் பரிசில்களையும் பெற்றுள்ள இவரது சாதனைப் பட்டியல்கள் எழுதி முடிக்க முடியாதவை.
இன்றைய ஈழத்து இலக்கிய வாசகர்களிடையே “உங்களுக்குத் தெரிந்த சிறந்த எழுத்தாளரின் பெயரைக் கூறுங்கள்’ என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் முதலில் கூறும் பெயர் செங்கை ஆழியான் என்பதாகவே இருக்கும். அந்த அளவுக்குச் சிறந்த வாசகர் வட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். தமிழகம் தான் சிறந்த எழுத்தாளர்களை உருவாக்கும் தகுதி கொண்டது என்பதனை பொய்யாக்கியவர் இவர் எழுத்துத் திறத்தால் அயராத உழைப்பால் அவரது புனைப்பெயரான “செங்கை ஆழியான்’ நிலைபேறு அடைந்து விட்டது. 1959இல் முதன் முதலாக “கல்கண்டு’ சஞ்சிகையில் இவரது எழுத்துப் பிரவேசம் இடம் , பெற்றுள்ளதெனினும் அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் மொழி மூலமான பட்டப்படிப்பினை மேற்கொண்டு புவியியல் பாடத்தை விசேடநெறியாகக் கற்ற இவருக்குப் பல எழுத்தாள நண்பர்கள் கிடைத்தனர்.
அறுபதுகளில தமிழ் மொழி மூலமான சிந்தனையாளர்கள் உருவாகியமையும். மாற்றமுறும் 羲。 பண்பாட்டு ஆய்வுகளில் தேட்டம் செய்வோர் உருவானமையும் காரணமாக ஒரு மறுமலர்ச்சி யுகம் ஆரம்பித்தது. சமகாலச் சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக மக்களின் மனச்சாட்சியைத் : தட்டியெழுப்பவல்ல ஆக்க இலக்கிய முயற்சிகளில் 'g ஈடுபட்டவர்களுக்கு உரிய களமாக பேராதனைப் பல்கலைக்கழகம் விளங்கியது. డ };

Page 29
செங்கை ஆழியான்
இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்திய தமிழ் மாணவர்களின் சிந்தனையில் உதித்த “இளங்கதிர்’ சஞ்சிகையில் பல எழுத்தாளர் பங்கேற்றனர். புனைகதைத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர் சமகாலப் பிரச்சினைகளை மையமாக்கி எழுத ஆரம்பித்தார்; பிறரையும் எழுதத் தூண்டினார். இந்த வரிசையில் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்), க.நவசோதி, செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், க.பரராஜசிங்கம் (துருவன்), அ.கயிலாய நாதன், யோகேஸ்வரி, குந்தவை, முத்துசிவஞானம், கலாபரமேஸ்வரன், சி.மெளனகுரு, எம். ஏ. எம். சுக்ரி, செல்வபத்மநாதன், சண்முகநாதன், சபாஜெயராசா ஆகிய எழுத்தாளர்கள் உருவாகினர். கலை, இலக்கியம், கல்வி, நிர்வாகப் பணியாளர்களாக இவர்கள் இன்று செயற்படக்கூடிய தூண்டுதல் தன்மைக்கு செங்கை ஆழியானின் அன்றைய செயற்பாடு உதவியிருந்தது.
பேராதனப் பல்கலைக்கழக பட்டப்படிப்புடன் யாழ்ப்பாணம் திரும்பிய அவர் யாழ் இலக்கிய வட்டத்தினைச் சிறப்புற நடத்துவதில் உதவி நின்றார். இவரது வருகையின் பின்பு துடிப்புடன் இயங்கிய இவ்விலக்கிய வட்டம் உலகறிந்த எழுத்தாளர்களை உருவாக்கியதுடன் பலரது படைப்புக்களை வெளியிட்டும் வருகின்றது. கனக செந்திநாதன், கவிஞர் கந்தவனம், சிற்பி, சொக்கன், வரதர், அகஸ்தியர், டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா, தெணியான், முருகையன், எஸ். திருச்செல்வம், குறமகள், கோகிலா மகேந்திரன் போன்ற சிறந்த எழுத்தாளர்களுடன் நட்புரிமை தழுவப் பழகியவர் இவர் யாழ் மட்டத்தில் நீண்டகாலமாகப் பாரம்பரியமாக எழுத்தாளர்களை உருவாக்கிய இவ்விலக்கிய வட்டத்தில் இருந்து கொண்டு வீரகேசரி இதழில் பல நாவல்களை எழுதி வெளியிட்டார். வீரகேசரி வெளியீடுகளாக வாடைக்காற்று, பிரளயம், இரவின் முடிவு, காட்டாறு, கங்கைக் கரையோரம், கனவுகள் கற்பனைகள் ஆசைகள் ஆகிய நூல்கள் வெளிவந்த வேளையில் செங்கை ஆழியானின் பெயர் தமிழ் உலகமெங்கும் பரவியது. சாகித்திய மண்டலப் பரிசில்களை அடுத்தடுத்து பெற்றுக் கொள்ள ஆரம்பித்த இவர் எழுத்துலகில் முடிசூடா மன்னரானார்.
நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை என்பன நடைமுறைச் சமுதாயத்தை நடப்பியல்புடன் சித்திரிக்கும் கலை வடிவங்களாகும். செங்கை ஆழியானுடைய படைப்புக்களில் பெரும்பாலானவை சமுதாய உணர்வுகளைப் பிரதிபலிப்பனவாகும். தனது நிாவாகத் தொழில் காரணமாகப் பல்வேறு பிரதேசங்களிலும் கடமையாற்றிய வேளையில் மிகவும் உன்னிப்பாக அப்பிரதேசங்களை அவதானித்து அவற்றை நினைவிற் பதித்து விபரண வடிவிலும், கதைவடிவிலும் மாற்றிவிடும் திறன் உள்ளவர் இவர் “கதைகளில் இடம் பெறும் பகைப்புலத்தை அக்குவேறு ஆணி வேறாகக் கலை அழகுடன் அலசி ஆராய்வார். கதை மாந்தர்களின் உரையாடல்களில் மண்வாசனை வீசும். இவரிடம் காணும் ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய அவதானிப்புத் திறன் வியந்துரைக்க வைப்பது” என்று “யானை’ என்ற நாவல் முன்னுரையில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை விதந்து கூறியுள்ளார்.
54

வாழ்வும் படைப்புகளும்
இவ்வாறான தனிச்சிறப்புடன் மண் வாசனையுடன் கூடிய பிரதேச நாவல்கள் பல இவரது வெற்றிப் படைப்புகளாகியுள்ளன. புவியியல் அறிவு, அவதானிப்பு, தர்க்க சிந்தனை, விபரண ஆற்றல், என்பவற்றை தன் மொழியறிவுடன் திரட்டி அதனை வாசகர் மத்தியில் நுழைத்துவிடும் திறன் இவருக்கு கைவந்த கலை. இவரது ஆற்றலைப் புரிந்துகொண்ட பல வெளியீட்டு நிறுவனங்கள் இவரது படைப்புக்களை காலத்திற்குக் காலம் வெளியிட்டுள்ளன. யாழ் இலக்கிய வட்ட வெளியீடுகள், வீரகேசரி வெளியீடுகள், மாணிக்கம் பிரசுரம், ரேகா வெளியீடு, வரதர் வெளியீடு, சுஜாதா பப்ளிக்கேன், நியூசெஞ்சரி புக்ஹவுஸ் வெளியீடு, ரஜனி வெளியீடு, மீரா வெளியீடு, கமலம் பதிப்பகம் மூலமாகப் பல நூல்கள் வெளியாகியுள்ளன.
நூல்களை எழுதி வெளியிடுவது என்பது லேசான விடயமல்ல இது ஒரு பொதுவான உண்மை. அதிலும் முப்பத்தைந்திற்கு மேற்பாட்ட நூல்களை ஒருவர் வெளியிடு வது அசாத்தியமான ஒன்று. இந்த வகையில் செங்கை ஆழியானின் நூல் பட்டியலைப் பார்க்கலாம். நந்திக் கடல், அக்கினிக் குஞ்சு, யாழ்ப்பாணத்து இராத்திரிகள், வாடைக் காற்று, காட்டாறு, கங்கைக்கரை ஓரம், சித்திரா பெளர்ணமி, இதயமே அமைதிகொள், யானை, மழைக் காலம், இந்த நாடு உருப்படாது, கந்தவேள்கோட்டம், யாககுண்டம், கொத்தியின் காதல், காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள், குவேனி, இரவுநேரப் பயணிகள், 24 மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, ஈழத்தவர் வரலாறு, ஆச்சி பயணம் போகிறாள், தீம் திரிகிடகித்தோம், இரவின் முடிவு, பிரளயம், கனவுகள் கற்பனைகள் ஆசைகள், அலைகடல் தான் ஒயாதோ, முற்றத்து ஒற்றைப் பனை, நடந்தாய் வாழி வழுக்கியாறு, மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, அக்கினி, ஜென்மபூமி, ஆறுகால் மடம், ஓ அந்த அழகிய பழைய உலகம், ஒரு மையவட்டங்கள், கடல்கோட்டை, காவோலை, The Beast, 12 மணி நேரம், நல்லைநகர் நூல், யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு என விரியும். இது வரை வெளிவராத நான்கு நாவல்கள் அவரிடம் உள்ளன. மரணங்கள் மலிந்த பூமி, போராடப் பிறந்தவர்கள், வானும் கனல் சொரியும் என்பனவே அவை. இவை வெளிவரும் போது அவரின் ஆற்றல் மேலும் பேசப்படும்.
செங்கை ஆழியானின் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் அனைத்தும் கூற முற்படும் செய்திகள் மிகவும் வலுவுள்ளன. பேராசிரியர் வித்தியானந்தன் பார்வையில் “செங்கை ஆழியானுடைய படைப்புக்கள் சமுதாய நடப்பியல்பு சித்திரங்கள், மண்ணோடிசைந்த வாழ்வுகள். இவருடைய "முற்றத்து ஒற்றைப் பனை'யில் காற்றாடிக் கலைப்பொருள் ஆகிறது. “ஆச்சி பயணம் போகிறாள்’ நாவலில் நகைச்சுவையுடன் கூடிய முதிய தலைமுறை புலனாகிறது. “பிரளயம்’ சாதியைச் சாடுகிறது “வாடைக் காற்று' தீவகத்தின் கிராமியச் சூழலை வெளிக்காட்டுகிறது. “காட்டாறு” கடலாஞ்சி (செட்டிகுளம்) கிராமத்தின் சமூக ஊழல்களை வெளிக்காட்டி நிற்கின்றது. “ஒரு மைய வட்டங்கள்’ 1977ல் இனக்கலவரத்தினை நினைவூட்டுகிறது. ‘தீம்தரிகிடதித்தோம்’ 1956 தனிச்சிங்களச்
55

Page 30
செங்கை ஆழியான் சட்ட காலத்தினை மீட்டுத்தருகின்றது. “அக்கினி’ இனவிடுதலை வேட்கை பற்றியது. “மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து’ வன்னி வாழ்வியலைப் புலப்படுத்துகிறது. இப்படி எத்தனையோ மண்ணியல் நிகழ்வுகளை இவர் கதைக்குள் புகுத்தியுள்ளார். நேரடியான களத்துடன் தொடர்பு கொண்ட தகவல்களை அனுபவங்களாக மாற்றித்தரும் இவர் மிகச் சிறந்த சமூக அறிவியல் பார்வையுள்ளவராகிறார்.
இன்றைய ஈழத்து எழுத்தாளர்களுள் முற்றிலும் வேறுபட்டு நிற்பவர் செங்கை ஆழியான் பல்கலைக்கழக மாணவராக, ஆசிரியராக, பிரதேச நிர்வாகியாக, யாழ் பல்கலைக்கழக பதிவாளராக ஏற்பட்ட அறிவியல்ப் பார்வையும் தொழில் காரணமாக ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று சமூக மாந்தரோடு பழகிப் பெற்ற அனுபவங்களும் இயல்பாகவே அமைந்துள்ள முற்போக்குச் சிந்தனையும் இவரை புடம்போட்ட எழுத்தாளராக, நுணுக்காமான சிந்தனையாளராக, நினைத்ததை எழுதும் ஆற்றல் படைத்தவராக மாற்றியுள்ளன. இதுவரை நான் அறிந்துள்ள எந்த எழுத்தாளருக்கும் இவ்வாறான சந்தர்ப்பம் முழுமைப்படுத்தப்படவில்லை. ஆனால் செங்கை ஆழியான் புனைகதை, புனைகதை சாராத (Fiction and nonfiction) துறைகளில் பூரண வளர்ச்சி பெற்றுள்ளார். எந்தவொரு சமூகத்தினரையும் நோகவைக்காது நுட்பமாகக் கதையை வளர்க்கும் திறன் இவரிடம் தொடர்ந்து வருகின்றது.
“காட்டாறு’ நாவலின் முன்னுரையில் செங்கை ஆழியான் தனது இலக்கிய வரலாற்றுத்திறனை மூன்று கட்டங்களாக கூறியுள்ளார். கற்பனைச்சுவையுடன் கதை சொல்ல முயன்ற காலம், சமூக முரண்பாடுகளை அவதானிக்கும் காலம், சமூக ஊழல்களுக்கு எதிராக எழுந்த காலம் என்பனவே அவை. எனினும் அதற்குப் பின்பு அவரது இலக்கியத்திறன் பல பரிமாணங்களை எடுத்துள்ளது. இவரது நாவல்கள் அனைத்தும் எழுதப்பட்ட காலகட்டத்து சமூகப் பொருளாதார நிலைகளை அப்படியே பிரதிபலிப்பன. அவற்றை ஆவணப்படுத்தும் தன்மையின. இந்த வகையில் இவரால் படைக்கப்படுகின்ற நாவல்கள் தொடர்ந்தும் சமகாலச் சூழ்நிலை மாற்றங்களை வெளிக்காட்டும் கண்ணாடிகளாகவே அமையும். அறிவியல், அழகியல், சமூகவியல் அனைத்தும் இவரது படைப்புக்களில் நுட்பமாக நுழைந்துவிடும் தன்மையின.
அமரர் இரகசிகமணி கனகசெந்திநாதன் முதலாக இவரது ஆற்றல்களைப் பாராட்டாத, வியக்காத எழுத்தாளர்களே ஈழத்தில் இல்லை எனலாம். பல்கல்லக் கழகப் பேராசிரியர்கள், புனைகதை ஆசிரியர்கள் நாடகத் தயாரிப்பாளர்கள், கவிஞர்கள், சாதாரண வாசகர்கள் அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்துள்ள இவரை “சிரித்திரன் ஆசிரியர்’ அமரர் சுந்தர் தனது பாராட்டுரையில் “தனது எழுத்து ஆளுமையால் தனக்கென ஒரு ரசிக சாம்ராச்சியத்தை உருவாக்கியுள்ளார் செங்கை ஆழியான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
56

வாழ்வும் படைப்புகளும்
ஒரு நாவல் போன்று இன்னொரு நாவலைப்படைக்காத எழுத்துத் திறனும், தமிழர்களின் அகப்புற முரண்பாடுகளை வெளிக்காட்டும் ஆற்றலும், பல்வேறு அனர்த்தங்களையும் வரலாற்றுப் பதிவேடாக்கும் விவேகமும் கொண்ட இவரை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் “செங்கை ஆழியானுக்குரிய தத்துவப்பார்வையுண்டு; அவரது படைப்புக்களில் சில காலத்தையும் மீறிப் பேசப்படும் என மெய்யாகவே நம்புகின்றேன்” என்று மனந்திறந்து குறிப்பிட்டுள்ளார். “மக்களை இலக்கியம் சென்றடைய வேண்டும்” என்பதில் மிகவும் கருத்தாக இருந்த செங்கை ஆழியான் எழுத்தைப் படைப்புத் தொழிலாகக் கொண்டவர்; ஒரு யோகமாகக் கொண்டவர்.
(கனடா நம் நாடு இதழில்- 19 ஆகஸ்ட் 1999)
காதை பல காட்டி
காதை பல காட்டிமிகு கற்பனைகள் தூவிமக்கள் பேதமுறப் போந்தசெங்கை யாழியான் - காதையிதம் எக்காலச் சந்ததியும் ஏற்றுப் பருகநல்ல சுக்காகும் உள்ளச் சுமைக்கு.
வீணாளர் கோடி இருந்தென்ன
வித்தை பலதான் கற்றறிந்தும் மாணார் தமைத்தினம் காண்கிலென் அம்
மாமுகில் போலென் நும்மனங் கோணாத கலைவழங்கு செங்கையாழியான்
கோப்பு நாவற் காட்சியினைக் காணாத கண்சித்ரப் பாவைதன்
கண்ணின ஒக்கும் ஒக்குமே!
இலைமறை காயா விருந்தகவி என்னைப் பலரறிமே டைப் பரிசுக்காய்க் - கலையாய்ந்து ஒதுசெங்கை யாழியான் ஓர்ந்தளித்த சான்றதற்கு ஏதுசெய்கு வன்கைம்மா றின்று.
எண்ணிற் சிறிய னிவனெழுதும் பாக்களின் மண்ணிற் சிறந்த தென மதித்த - பண்மையினாற் கற்றோர்மற் றோரும் கவியெனப்பு கழ்ந்தவையில் நற்சான் றுரைத்தார் நயந்து.
性、委、
-கண்டாவளைக் கவிராயர் (5. Ol. 1987)

Page 31
பூதத்தீவுப் புதிர்கள் அநு.வை. நாகராஜன்
ஓர் எழுத்தாளன் - தான் எழுதும் பொருள், அது யாருக்கு எழுதப்படுகிறது எனும் இரு முக்கிய அம்சங்களை முன் வைத்தே எழுகிறான். இதில் காணும் வெற்றியே அவனது எழுத்தை உறுதிப்படுத்தி, நிலைக்க வைக்கிறது. இந்த வகையில் -
சிறுவர் இலக்கியத்துறை, ஏனைய இலக்கியத் துறைகளிலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதிலிருந்து சிறுவர் இலக்கியக்காரன் ஏனைய இலக்கியக் காரர்களிலும் சிறந்த பணியாளனாகக் கணிக்கப் பெறுகின்றான். ஏனெனில் குறிப்பாக நாளைய சிந்தனையாளனை, படைப்பாளியை உருவாக்க அவனே “பிள்ளையார் சுழியை' இடுகிறான். அந்தநோக்கில் -
இலங்கையில் எமது சிறுவர் இலக்கியத்துறை குறிப்பிட்ட விருத்தியை எய்தவில்லை என ஆய்வாளர்கள் கணித்த போதிலும் எழுதிய எழுத்துக்களைக் கொண்டும் எழுத்தாளனைக் கொண்டும் கணிசமான விருத்தியைக் கண்டிருக்கின்றோம் என்பதை மறுப்பதற்கில்லை. எமது படைப்புக்கள் வெறுமனே பொழுது போக்கான மாயா ஜாலம் செறிந்த கற்பனைச் சரடுகளை சிறுவர் முன் வைக்காது, அவரது வாசிப்புச் சுவை, கருத்துப் பரிமாற்றம், சுயவாக்கம், சிந்தனை வளம் என்பன நோக்கியே படைப்புகள் படைக்கப் பெறுகின்றன. மேலும், இவை சிறுவர் உளவியலை மையப்படுத்தி, அவரது சுவை, வயது, பருவம், அறிவுத்
தேடல் என்பன நோக்கியே படைக்கப் பெறுகின்றன.
ஆதலின், சிறுவர் இலக்கியத் துறை பயனுள்ள துறையாகக் கணிக்கப்படுகின்றது, மதிக்கப்படுகிறது. இவ் உண்மையை நம் நாட்டில், இது நாள் வரை வெளி வந்த சிறுவர் பாடல், கதை மற்றும் பல்துறை ஆக்கங்கள் என்பனவற்றிற் காணலாம். இதற்கிணங்க -
அண்மையில் வெளிவந்த செங்கை ஆழியானின்
பூதத்தீவுப் புதிர்கள்’ எனும் சிறுவர் நூலை நோக்குவோம் இவ்வாக்கம், முன்னர் 1994ல் வீரகேசரி வார மஞ்சரியிலிடம்
 
 
 
 
 
 

வாழ்வும் படைப்புகளும்
நாடறிந்த படைப்பாளியான செங்கை ஆழியான் வயது வந்தோருக்கான படைப்புகளைத் தந்தவர் தற்பொழுது, சிறுவர் இலக்கியத் துறைக்கும் தனது கைவண்ணத்தைத் தரவந்தமை மிகவும் பாராட்டுவதற்கு உரியதாம்.
தற்பொழுது, பாடசாலைகளில் முன்னுயர் வகுப்புகளிலும் உயர் வகுப்புகளிலும் பொது அறிவு நுண்ணறிவு, உளச் சார்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. இதற்கான பாடத் திட்டங்கள், கலைத் திட்டங்களிற் சேர்க்கப் பட்டிருக்கின்றன. இதற்கு பாட நூல்கள் இல்லையாயினும், மாணவர்கள் சுயதேடல் முயற்சிகளில் வழிகாட்டப்படுகின்றார்கள். இதன் அடிநோக்கில் செங்கை ஆழியான் புதிர்கள் மூலம் சிறாரின் நுண்ணறிவுத்திறனுக்கு ஏற்ற வகையில் தனது படைப்பை உருவாக்கியிருக்கிறார். இங்கு ஓர் அத்தியாயத்தில் விடுக்கப்படும் புதிரை மீத்திறனுடன் சிறுவர் தம் வாசிப்பினுாடே புதிரை விடுவித்துக் கொள்வார். ஆனால் மந்த திறனுடையோர் அடுத்த அத்தியாயத்தில் அப்புதிருக்கான விடையைப் பெறுவார். இவ்வுத்தியை ஆசிரியர் மிகவும் இலாவகமாக கதை நிகழ்வுகள் மூலம் சுவையாக நகர்த்தியிருக்கிறார்.
ஒரு சாலை மாணவர் குழாம் (எல்லோரும் 15-16 வயதுக்கு உட்பட்டோர்) தமது இரு ஆசிரியர்களுடன் நெடுந்தீவுக்கு விசைப்படகு ஒன்றில் சுற்றுலாவுக்கு செல்கிறார்கள். இடையில் இயந்திரக் கோளாறினால் பயணம் தடைப்பட்டு ஒரு தீவில் கரை ஒதுங்குகிறார்கள். இங்குதான் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக விசித்திரமான, ஆபத்தான அனுபவங்களுக்கு ஊடாக விநோதமான புதிர்களைச் சந்திக்கின்றார்கள். இப்புதிர்களில் வேடன், கமக்காரன், பூதங்கள் என்போருடன் ஒற்றைக் கண்ணர் போன்ற வேற்றுலக மாந்தர்களையும், டைனோசர் போன்ற அழிந்த உயிர் இனங்களையும், நவீன இயந்திர சுடுகணைகளையும் இன்ன பிறவற்றையும் சந்திக்கின்றார்கள். இந்நிகழ்வுகள் கற்பனையாயினும் நிகழ்வோட்டம் யதார்த்தம் போல் முன்னிற்கின்றது. பயம், பீதி, அதிசயம், துயரம், சிரிப்பு, கும்மாளம், குதூகலம் போன்ற சிறுவரின் மெய்ப்பாடுகளுடன் கதை இனிமையாக நகர்கின்றது.
ஆசிரியரின் தெளிந்த நீரோடை போன்ற தமிழ்நடை, வசன அமைப்பு, பொருட்செறிவுடைய சொல் யாவும் இந்நூலை ஓர் இனிய இலக்கியமாகத் தருகின்றது. சிறுவர் சுவைக்கு ஏற்ப விறுவிறுப்பும், ஆவலைத் தூண்டும் சம்பவக் கோவையும் அத்தியாயத்துக்கு அத்தியாயம் இழையோடி நூலை கனதியாக்கி இருப்பது மிகவும் சிறப்புக்குரிய விடயமாகும். ஒட்டுமொத்தத்தில் இப்படைப்பு எமது சிறுவர் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தை இனங்காட்டி நிற்கின்றது. மேலும் இந் நூலுக்கு மெருகூட்ட அத்தியாயத்துக்கு அத்தியாயம் நல்ல கருத்துள்ள அழகிய படங்கள் காட்சி தருகின்றன. இப்படங்களை “ரமணி’ வரைந்திருக்கின்றார். இவர் ஒரு கல்வியாளர், சிறுவர் உளமறிந்து மெய்ப்பாடுகளை சிறப்பாக வெளிப்படுத்துபவர். இவர் சித்திரமே தனிக்கதை பேசும். (05-12-1998)
59

Page 32
மதிப்பிற்குரிய செங்கை ஆழியான் அவர்கட்கு ஆ.கோகுலன்
ழுெத்தாளராக உங்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது யாழ் இந்துக் கல்லூரியின் நூலகமே (அதிபர் பஞ்சலிங்கம் அவர்களின் ஆளுமைக்கு எனது நன்றிகள்) உரும்பிராயில் இருந்து கொண்டு எழுத முடியாத கடிதத்தை திருகோணமலையில் இருந்து எழுதும் காரணம் விந்தையானது. திருமலை நகரசபை பொது நூலகத்துக்கு சென்றபோது ஈழத்து நாவல்கள் வரிசையில் தங்கள் நாவல்களை, கோடிட்ட தாள்களில் அச்சிட்ட நாவல்முதல் யுனிஆட்ஸ் இன் Offset print நாவல் வரை கண்டபோது தங்களின் எழுத்துலக பிரயத்தனத்தின் ஓர்மம் என்னை இதை எழுத வைத்திருக்கிறது.
தென்னிந்திய எழுத்தாளர்களைப் போன்று ஈழத்து எழுத்தாளர்கள் “வாசகர் சந்தையை’ பெற்றுக் கொள்வதில் கணிசமான வெற்றியைப் பெற தவறியுள்ளார்கள் என்பதை- நூலகத்தில் புழங்கி பழசாய்ப்போன தென்னிந்திய நாவல்களின் மத்தியில் புத்தம் புதிதாக காணப்படும் ஈழத்து நாவல்களும், வலி.வடக்கு பிரதேச சபையின் நான் கடமையாற்றிய காலங்களில் எழுத்தாளர்கள் தங்களின் நூல்களை விற்கப்படும் பிரயத்தனங்களும், ஆரியகுளத்தடிக்கு வெளிவாரிப்பட்ட வகுப்பிற்கு வரும் போது ஞாயிறு மாலைகளில் எழுத்தாளர் ஒன்றியத்தில் காணப்படும் குறைந்தளவான துவிச்சக்கர வண்டிகளும் உணர்த்தும்.
எனது வாசக அனுபவத்தில் (நான் ஒரு பொறுமையற்ற வாசகன்) என்னைப் பிரமாண்டமாகக் கவர்ந்த தென்னிந்திய எழுத்தாளர் “சுஜாதா’ அவரின் நாவல் ஒன்றை எழுத்துக் கொண்டால் கம்யூட்டர் இருக்கும், Chess இருக்கும், “பாதுகாப்பான நாள்கள்’ பற்றிய matter இருக்கும் அத்துடன் சைதாப்பேட்டை தூணமும் இருக்கும் துல்லியமான அவரின் அவதானிக்கும் திறனும் , எழுத்துக்களின் வேகமும் வாசகர்களின் Maturity யை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு போகக்கூடியது அவர் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார் “விபத்து ஒன்றில் சிக்கி ஒரு கிழவன் இறக்கும் போது அதில் கதையில்லை, தினம் தினம் விபத்தில் கிழவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விபத்து நடந்த இடத்தில் இறந்த கிழவனின் பக்கத்தில் பையிலிருந்து சிதறிய அரிசியை
60
 

வாழ்வும் படைப்புகளும்
இரத்தம் படாததாகப் பார்த்து சேகரித்து தனது காற்சட்டைப் பைக்குள் போடும் சிறுவனைப் பார்த்ததும் எனக்கு கதை வந்து விடுகிறது.’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில் - யானைகளால் பலர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் கொல்லப்பட்டவர் புதுமணம் மாறாத காதலியாக இருக்கும் போது. “யானை' உங்களுக்கு ஒரு Mega Success. யானையை நான் 90 களில் படித்த ஞாபகம். mm,mm ஆக enjoy பண்ணக்கூடிய ஒரு நாவல். நாவல் முடியும் போது எமக்கு காடும் யானையும் அத்துப்படியாகி விடுவதைவிட (அடக்குமுறைக்கு எதிரான மனிதமுயற்சியின் குறியீட்டு வடிவம் (நானும் எனது நாவல்களும்) என்ற ஆசிரியரின் கருத்தைவிடவும்) நாவல் முடியம் போது எழும் வேறா. என்ற வெறுமையும் துயரமும் கலந்த மனநிலையை வாசகருக்கு ஏற்படுத்துவது அதிசயிக்கத்தக்கது, போற்றத்தக்கது. எழுத்தின் வெற்றியும் இதுவே, நாவலில் ஒரு Vibration எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. தொடராக வெளிவரமுடியாமல் போனதிற்கு இந்த Vibration ஐ உடைக்க முடியாமல் போவது காரணமாய் இருக்கலாம். நாவலில் வரும் ஒவ்வொரு 'வந்தனா. உம் அந்தப்பிரயோகத்திற்கான அதிர்வை வாசகர் மத்தியில் அழுத்தமாக பதியவைப்பதில் யானை வெற்றிபெற்றுள்ளது. உண்மையிலேயே ஒரு Great shot யானை.
“எனது நாவல்களில் உண்மையும் கற்பனையும் கலந்தே இருக்கின்றன. ஆனால் எத்தனை சதவீதம் என்பது எனது தொழில் இரகசியம்’ என்று சுஜாதா ஏதோ ஒரு முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். தங்கள் நாவல்களில் உண்மையின் சதவீதம் அதிகம் என்பதை “நானும் எனது நாவல்களும்’ படித்ததில் இருந்து உணரமுடிகிறது. யானையின் கதையினுாடே கூடவே வரும் அந்த “வலி’யும் பிறிதொரு வடிவத்தில் அனுபவித்ததொன்றோ..? நான் பிறப்பதற்கு மிகச் சரியாக ஏழு மாதங்களுக்கு முன்னால் இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
கந்தனைப் பார்க்க கார்த்திகைக்கு வந்தேனடி உந்தனைக் கண்டேன் - இனி ஊருக்குப் போகமாட்டேன் -என்றதாக Short and Sweet ஆக இறுதியில் தீர்க்கமான முடிவைக் கொண்டு அமைபவை சிறுகதை, சிறுகதை எழுதும் அவஸ்தையை நேரடியாக அனுபவித் தவன் நான். கதைக் கருவை வைத்துக் கொண்டு சிறுகதையின் climax ஐ எவ்வாறு தரலாம் என்பதை சிந்தித்தே mental ஆகும் ஒரு நிலை வந்தது. “ஆறறிவு” என்ற எனது முதலாவது சிறுகதை “சஞ்சீவியில்’ இருவார தாமதத் திற்குப் பின் வெளிவந்தபோதும், "ஓடும் ரயிலில் ஒடும் மனங்கள்’ என்ற எனது இரண்டாவது சிறுகதை பேராதனை பல்கலைக்கழக “கீதம்' இலக்கியப் போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுக்கொண்ட போதும் முதலிரு சிறுகதைகளுமே Success ஆன போதம் கூட எனக்கு ஏனோ தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உணர்வு வரவில்லை. (எண்ணங்களை எழுத்தில் வடிக்கும் போதும் situation ஐ
6

Page 33
செங்கை ஆழியான் தீர்மானிப்பதில் பட்ட அவஸ்தைகள் - பகிரப்படமுடியாத அவஸ்தைகள் காரணமாக இருக்கலாம்.)
இரண்டு சிறுகதைகள் SucceSS ஆக எழுதிய அனுபவத்தில் 93ம் ஆண்டில் என்று நினைக்கிறேன் யாழ் இந்துக்கல்லூரி நூலகத்தில் கணையாழியில் வாசித்த “செருப்பு” என்ற தங்கள் சிறுகதையை நினைக்கும் போது கதையை எழுதுவதில் Climax ஆக கொண்டு வருவதில் choices இல் எவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மலைப்பாக இருக்கிறது. உண்மையில் “செருப்பு’ ஒரு விநோதமான சிறுகதை, இறுதியில் அறுத்த செருப்பை திரும்பவும் தூக்கிக் கொள்ளும் போது வாசிப்பவருக்கும் அப்பாடா. என்ற நிம்மதி பிறக்கிறது. நான் வாசித்து வியந்த சிறுகதை, ஈழத்து வாசகர்கள் எத்தனை பேரை சென்றடைந்திருக்குமோ தெரியவில்லை. y
கடிதம் மிகவும் நீள்கிறது எனக் கருதுகின்றேன் அதனால் Points form ஆக சில அவதானிப்புகள்
* முற்றத்து ஒற்றைப் பனை ஒரு சிலாகிப்பான நாவல் விட்டம் கட்டும் Technic ஐ விளங்கிக் கொள்ளவே குறித்த பந்தியை இரண்டு மூன்று தரம் வாசித்து கற்பனை பண்ணவேண்டி இருந்தது. நகைச்சுவை ஒன்று சோகமாக முடிந்தால். அது முற்றத்து ஒற்றைப்பனை போலத்தான் இருக்கும்.
* மழைக்காலமும் பாடசாலையில் வாசித்தது. சிறுகதை ஒன்றுக்கான climax நாவலில் இருந்தது. முன்னுரையில் தெரியாத பெண்ணொருவர் Park ஒன்றில் சந்தித்து தனது கதையை கூறியதாக இருந்த ஞாபகம் ஆனால் “நானும் எனது நாவல்களும்’ அதை எனக்கு தெரிந்த பெண் என்று குறிப்பிட்டிருந்தது எங்கேயோ உதைக்கிறதே!
* கிடுகுவேலி, வாடைக்காற்று, பிரளயம், ஆறுகால்மடம், கடற்கோட்டை, காட்டாறு, என்பவை நான் அறியாத இடங்களையும், நான் அறியாத காலங்களையும், நான் அறியாத வாழ்க்கையையும், நான் அறியாத மனிதர்களையும் இவற்றில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக் காட்டியது நன்றிகள். W
* மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து கதைக்கும் புவித்தோற்ற வரைபடம் ஒன்று இருப்பின் வாசகர்களை தத்தக்கா பித்தக்கா கற்பனையிலான புவியியல் நினைவுகளில் இருந்து நிஜத்தை அறிய உதவியிருக்கும்.
* இறுதியாக குவேனி, வித்தியாசமான முயற்சி தென்னிந்திய பாலகுமாரன் கதைகளில் வருவது போன்ற ஒரு கருத்து (வரலாற்று) திணிப்பு இருப்பதாக
62 .

வாழ்வும் படைப்புகளும்
உணர்கின்றேன். சைவராக இருந்தவர்கள் பெளத்தராக மாறி பின் சைவத்திற்கு மாறியமை?? நீங்கள் இந்துவா?
மகி'தீவில் 700 பெண்கள் தரையிறங்கியபோது ஏற்பட்ட நாகர்களின் மனநிலைக்கும் 1996 ஏப்பிரலில் தென்மராட்சி கடைகள் உடைக்கப்படும் போது “இவ்வளவும் எனக்கு’ என்று ர்ர்ர்ர்ர்மூடைகளின் மேல் விழுந்த நம்மவரின் மனநிலையும் ஒன்றாகவே இருந்திருக்கும் என உணர்கின்றேன். மகி"தீவு பெண்களின் தரையிறக்கம் பற்றி தாரதத்தன் விஜயனிடம் கூறாமல் விட்டது ஏன்?!!
அன்று நடந்த தவறு புலம்பெயர்வால் இன்றும் நடப்பதாக உணர்கின்றேன் இந்நிலையில் “மனிதன்” பற்றிய ஒரு வரைவிலக்கணம் ஞாபகத்தில் வருகின்றது.
கடந்த காலத்தில் தவறு செய்து
நிகழ் காலத்தில் வருத்தப்பட்டு
எதிர்காலத்தில் தவறு செய்யப் போகின்றவன்
இறுதியாக நான் தங்களுக்கு தெரிவிக்க விரும்புவது யாது என்றால் தங்கள் படைப்புகளுக்கான சரியான Reactions வாசகர்களிடம் இருந்து வரவில்லை என நீங்கள் எண்ணியிருந்தால். நீங்கள் தாராளமாக நம்பலாம் “தங்களைப் பாராட்டும் வாசகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எழுதுகோல் பிடிக்க சோம்பேறிகளாய்..?”
(06-08-2003)
பேராழியாகும்
யாழ்ப் பாடி யாழ்பாடி அன்பளிப் பாய்ப் பெற்றிட்ட
யாழ்ப்பாண நன்னகரின் ஆணையரே - தாழ்விலதைக்
கற்றோரும் மற்றோரும் கண்ணிய மானோருஞ் சேர்
பொற் பதியாய் ஆக்கப் புகு.
எங்கள் எழில் நகரென் றெல்லோரும் ஆர்ப்பரிக்கத் தங்க மென யாழ் நகரைத் தைத்திடுவாய் - செங்கையில் சீராழி கொண்ட திருமாலின் பேர் புனை ந்தாய் பேராழி ஆகும் உன் பீடு.
-சிவ சரவணபவன் (சிற்பி) (09.09.2004)
63

Page 34
யாழ்ப்பாண இராத்திரிகள் ஏ.ஜே.கனகரத்தினா
செங்கை ஆழியானை நான் வினைத்திறன் மிக்க கதைஞனாகவே கணிக்கிறேன். அவருடைய ஆக்கங்களை முன்னர் நான் படித்தபோது, அவரைப்பற்றிய ஒரு படிமம் என் மனதில் படிந்தது. வாசகர்களைக் கவரவல்ல கதை சொல்லும் பாணி- தங்கு தடையின்றிச் சரளமாக ஒடும் மொழி நடை போன்ற அம்சங்கள் - ஆங்கிலத்தில் இத்தன்மையை Readability என்பார்கள். அவருக்குக் கணிசமான வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொடுத்திருக் கின்றன.
செங்கைஆழியான் ஓர் அரசாங்க உத்தியோகத்தராய் இருப்பதால் இக்கதைகளிலே வாசகன் தரிசிக்கும் உலகம் பெரும்பாலும் அத்தகைய உத்தியோகத்தருடன் ஊடாடுபவர்களைச் சார்ந்ததே. அதனால் ஆழமான பாத்திர வார்ப் பையோ வாழ்க்கைத் தரிசனத்தையோ இத்தொகுதியில் எதிர்பார்க்க முடியாது என்று சிலர் வாதிடலாம். அவ்வாதத்துடன் எனக்கு உடன்பாடில்லை.
மனித இனத்துடன் தொடர்புடைய யாவும் ஒரு படைப்பாளிக்கு உரியவை தான். எதுவுமே தீட்டுப் பொருளல்ல. யாழ்ப்பாணத்தில் Civil Service Cadet ஆக வேலை பழகிப் பின்னர் ஹம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய Leonard Woolt - இவர் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்த ஓர் யூதன் என்பது குறிப்பிடத்தக்கது - தான் ஹம்பாந்தோட்டையில் பெற்ற உத்தியோக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, Village in the Jungle என்ற வலுமிக்க ஆங்கில நாவலை எழுதினார். இச்சிறுகதைத் தொகுதியில் வரும் சில பாத்திரங்களை ஒத்தவர்களே அவரது நாவலில் வரும் பாத்திரங்கள். ஓர் படைப்பாளி கையாளும் உலகமோ அல்லது பாத்திரங்களோ அல்ல முக்கியம். வாழ்க் கைத் தரிசனமே உயர் கலைஞனை கதைஞனிடமிருந்து வேறு படுத்துகிறது. அமெரிக்க 6 (Upg, g5T6II á Ernest Hemingway 3) Sjö G þ6Ó 60 எடுத் தக் காட் டு. க ைதஞன் என்ற முறையில் செங்கைஆழியான் எதிர்பாராத திருப்பத்துடன் கதையை முடிக்கும் பாணியை இத்தொகுதியில் கையாளு:கிறார். g5560)85uj Trick Or Surprise ending is(5 90Dfsdó சிறுகதை எழுத்தாளர் O.Henry பெயர் பெற்றவள். இவ்வாறு நோக்கும்போது கங்கு மட்டை தேறும். நிம்மதியாகச் சாகவாவது விடுங்கள் /
64
 

வாழ்வும் படைப்புகளும்
என்ற கதையின் முடிவு, என்னைப் பொறுத்தவரையில் தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படச் சாயலில் அமைந்திருக்கின்றது. விளாமரத்தின் முரண்சுவை (irony) சற்று obvious ஆனது. இறுதிக்கதையான யாழ்ப்பாணத்து இராத்திரிகள் என்ற கதையின் முடிவு தேளின் கொடுக்கிலுள்ள விஷத்தைக் கொண்டது. இத்தொகுப்பிலுள்ள வல்லூறுகள், திசநாயக்காவும் கந்தசாமியும், அறுவடை, பிச்சைக்காரர் ஆக்க வேண்டாம், ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும், மண்ணில் சரியும் விழுமியங்கள், யானைக்காடு ஆகிய கதைகள் எனக்குப் பிடித்தமானவை. உங்களுக்கு எப்படியோ?
(முன்னுரையில் - 05.09.1993)
“...ஈழத்து இலக்கிய வானில் தனக்கென்று ஒரு வலுவான இடத்தை நிரந்தரமாகக் கொண்ட செங்கை ஆழியானின் இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் சுமந்து வரும் சமுகச் செய்திகள், சாதாரண மக்கள் படும் தாங்கொனா இன்னல்களுக்கிடையில் அவர்கள் மனதில் ஏற்படும் எதிர் காலத் தைப் பொறுத்த நம் பிக் கை ஒளிக் கீற்றுகளாகவுள்ளன. இவற்றை மையமாக வைத்து அவரால் வடிக் கப்பட்ட எழுத்துக் களாக இருப்பதால் இவை உண்மையானவை. சத்தியமானவை.”
(யாழ்ப்பாண இராத்திரிகள் பதிப்புரையில் 19.09.1993)
-து. வைத்திலிங்கம்
“...இலங்கை எழுத்தாளர் செங்கை ஆழியானின் பிச்சைக்காரர் ஆக்க வேண்டாம் என்ற சிறுகதை, கருத்திலும் கலை நயத்திலும் சிறப்பிடம் பெறுகிறது என்று கருதுகிறேன். உழைப்பின் பெருமையையும் கம்பீரத்தையும் வலியுறுத்தும் படைப்பு.’ தி.க.சி. (தாமரை ஜூன் 1992)
“.அறுவடை விவசாயப்பயிர் நீரின்றி அழிவதைக்கண்டு ஏழை விவசாயி குமுறுவதைச் சித்திரிக்கும் இக்கதை, அதிகாரவர்க்க மனோபாவத்தை எதிர்க்க வேண்டுமென்ற ஆவேசத்தைத் தூண்டுகிறது. ஓர் உழவனின் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அவனது நற்பண்புகளையும் உயர்த்திக்காட்டும்
ཉཉ
கதை...
(அற்றது பற்றெனில் தொகுதியில்) பசுமைக்குமார்
65

Page 35
செங்கை ஆழியான்
இலக்கியச்சிந்தனையின் ஆகஸ்ட் கூட்டத்தில் ஜூலைச் சிறுகதைகளில் சிறந்ததைத் தெரிவு செய்தவர் பசுமைக்குமார். தாமரையில் வெளிவந்த செங்கை ஆழியானின் கதையைப் பசுமைக்குமார் தெரிவு செய்த முறை விஸ்தாரமாகவும் லொஜிக்கலாகவும் இருந்தது.
(GeFIL-D Jří 1989)
-கணையாழி
“...செங்கை ஆழியானுடைய "ஷெல்லும் ஏழு இஞ்சிச் சன்னங்களும் என்னால் மிகவும் பாராட்டப்பட்ட சிறுகதை. எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று தெரிந்து நிறுத்தியிருக்கிறார். தமிழ் நாட்டிலிருந்து அப்படி வராது. வந்தால் அது பாசாங்கு.” (தினக்குரல் பேட்டி - 06.12.1998) - எழுத்தாளர் சுஜாதா
“செங்கை ஆழியானின் ‘செருப்பு நல்ல படைப்பு. நகைச்சுவையான வசனங்கள் சில இடம் பெற்றிருந்தாலும்
உளவியல் ரீதியான நல்ல சிறுகதை என்பது என் கருத்து’. (மல்லிகையில்)
-சிற்பி
பேறோடு வாழி! நிர்வாகம் கலைஆர்வம் நிறைந்தபல புலமையுடன் நல்லார்வம் கொண்டகுண ராசாவென்(று) ஒருமித்து எல்லாரும் போற்றுகின்ற எழிற்செங்கை ஆழியனே பல்லாண்டு அப்புவியில் பயன்பெருக்கி வாழியவே!
எழுதுகின்ற கோல்கொண்டு ஏற்றமிகு கதைபுனைந்து பொழுதெல்லாம் செந்தமிழால் பூரிப்பை உண்டாக்கி விழுதுகளை ஊன்றிவிட்டு வெளியெல்லாம் கிளைஒச்சிப் பழுதிலாப் பரிசில்பல பெற்றவனே வாழியவே!
அறுபதிலும் குறையாத அழகுணக்கு அமைந்ததுவும் பொறுதியுறு மனையாளும் பிள்ளைகளும் சூழ்ந்ததுவும் திருமிகுந்த நல்வாழ்வும் சிறப்புகளும் சேர்ந்ததுவும் பெருவிருது! இவை தொடரும் பேறோடு வாழியவே!
-நயினைக் கவிஞர் நாக.சண்முகநாதபிள்ளை
(25.01.2001)
 

நந்திக்கடல்
சிற்பி சிவ. சரவணபவன்
நாட்டுப்பற்றினை மக்களுக்கு ஊட்ட விரும்பிய மஹாகவி பாரதியார்,
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அவர்
முந்தையர் ஆயிவம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே’
என்று பாடத் தொடங்குகிறார். "தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்றும் பாடுகிறார். நமது தந்தையரும் மூதாதையரும் வாழ்ந்த அதே நாட்டிலே நாமும் வாழ்கின்றோமென்ற உணர்வே இந்த நாட்டின் மிது பற்றையும் பாசத்தையும் அளிக்குமென்றால், நம் முந்தையர் செய்த விந்தைகளையும் வீரதீரச் செயல்களையும் நாம் அறியும்போது, அவை நமக்குப் பெருமையையும் பேரானந்தத்தையும் அளிக்கு மன்றோ? இந்தப்பணியை நிறைவேற்றுவதற்காகவே வரலாற்று நவீனங்கள் படைக்கப்படுகின்றன. படிக்கப்படுகின்றன.
தமிழில் வரலாற்று நவீனங்களை நயம்பட எழுதிய முதல்வர் 'கல்கி' அவர்கள். தமிழனின் வீரத்தையும் வெற்றிகளையும் , காதலையும் , கலைத்திறன்களையும், பண்பின் உயர்வையும், பக்திச் சிறப்பையும் கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் ஆகிய நவீனங்கள் எடுத்துக் காட்டிப் பார்ப்போருள்ளத்தை எழுச்சி பெறச் செய்கின்றன. கல்கியைப் பின்பற்றி அரு.ராமநாதன், சாண்டில்யன், சோமு, அகிலன், ஜெகசிற்பியன், நா. பார்த்தசாரதி, விக்கிரமன் முதலானோர் நல்ல பல நவீனங்களை உருவாக்கித் தமிழ்த்தாயக்குச் சூட்டியுள்ளனர். ஈழநாட்டிலே அருள் செல்வநாயகம் எஸ்.பொன்னுத்துரை, முதலானோர் வரலாற்று நவீனங்களிலே தம் கைவண்ணத்தைக் காட்டியுள்ளனர். இந்தச்சின்னஞ்சிறு பட்டியலைச் சிறிது நீட்டுகின்றார் நந்திக்க லில் நீந்திக் கரையேறும் நண்பர் : செங்கை ஆழியான் அவர்கள்.
(67

Page 36
செங்கை ஆழியான்
யாழ்ப்பாண அரசில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டு நிற்கின்றது நந்திக்கடல், ஏடுகளிலும் மேடைகளிலும் எத்தனையோ தடவை காட்சியளித்த சற்கிலிகுமாரனையே புதிய கோணமொன்றில் இங்கே காண்கின்றோம். மன்னன் பரராசசேகரனுக்கு மனைவியர் மூவர். முதலாமவள் இராஜலக்குமி தேவியார் அரச பரம்பரையைச் சேர்ந்தவள். அடுத்தவள் வள்ளியம்மையார், பாண்டிமழவன் மரபினைச் சேர்ந்தவள். மூன்றாமவள் மங்கத்தம்மாள், சாதாரண குடிப்பெண். ஆனால் அரசனின் விசேட அன்புக்குப் பாத்திரமான காதல் மனைவி அவளே. இந்த மங்கத்தம்மாளின் மகன் தான் சங்கிலிகுமாரன்.
சங்கிலிகுமாரன் அழகன். அறிஞன், ஆண்மை மிகுந்தவன், அஞ்சாநெஞ்சன். அரசனுக்கு மகனாகப் பிறந்தபோதும் ஆளும் உரிமையற்றவன். முடிக்குரிய இளவர சர்களான சிங்கவாகுவும் வீரபண்டாரமும் சதிகாரரின் சூழ்ச்சியால் உயிர் துறக்கின்றனர். சங்கிலிகுமாரனே சதிகாரன் என்ற பேச்சும் அடிபடுகின்றது. எனினும் சங்கிலிகுமாரனுக்கே ஆட்சியுரிமை அளிக்கின்றான் மன்னன் பரராசசேகரன். சங்கிலிகுமாரனின் அண்ணனும் முடிக்குரிய இளவரசனுமான பரநிருபசிங்கன் அந்த ஏற்பாட்டை ஆரம்பத்தில் ஆதரிக்கின்றான். ஆனால் காலப் போக்கில் சிந்தை திரிகின்றது. உள்ளம் எரிகின்றது. எண்ணெய் ஊற்றுகின்றனர் அவன் மனைவி மாதவியும் மகன் பரராசசிங்கனும். உயிருக்குயிராய் காதலித்த உதயவல்லியை ஓர் உரிமைப்பிரச்சினை காரணமாக உதறித் தள்ளும் சங்கிலிகுமாரன், அரச குலத்தில் பிறந்த அரசமாதேவியை திருமணம் செய்தும் விடுகின்றான். ஏமாற்றத்தைத் தாங்க முடியாத உதயவல்லியிடம் எஞ்சி நிற்பது வஞ்சினம் ஒன்றே. ஏற்கனவே சங்கிலிகுமாரன் மீது வெறுப்புற்றிருந்த தந்தை அப்பாமுதலிக்குப் பக்கபலமாகிறாள். அப்பாமுதலியும் வன்னியர் தலைவன் காக்கைவன்னியனும் பரநிருபசிங்கனுடன் கூட்டுச்சேர்ந்து சங்கிலிகுமாரனுக்கு எதிராகப் போர்த்துக்கீசரின் உதவியை நாடுகின்றனர். உளவறியச் சென்ற சங்கிலிகுமாரனின் உற்ற நண்பன் கனகராஜன் எதிர்பாராத விதத்தில் உயிர் துறக்கிறான். இந்த நிகழ்ச்சி சங்கிலிகுமாரனுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தபோதிலும், போர்த்துக் கஃசப் பறங்கியரைப் புறமுதுகிட்டோடச் செய்வதாகச் சூளுரைத்துப் போருக்குப் புறப்படுகின்றான்.
খৃঃপূঃস্কু
இந்தக்கதையூற்றிலே காதலையும, வீரத்தையும், சதியையும், சண்டையையும், சிரிப்பையும, சிருங்காரத்தையும், அழுகையையும், ஆத்திரத்தையும் அளவோடும் அழகோடும் கலந்து நந்திக்கடலாக்கித் தந்திருக்கிறார் நண்பர் செங்கை ஆழியான்.
"ஈழத்தின் வடகோடியிலுள்ள இந்தச் சின்னஞ்
சிறு யாழ்ப்பாணத்தை என் தந்தை பரராசசேகரர் ஆள்கின்றாள்.
தெற்கே வன்னியர்கள். அதற்குமப் பால் சிங் கள
மன்னர். நமக்குப் பல வழிகளில் துன்பம் விளைவித்து 68
 

வாழ்வும் படைப்புகளும்
வருகின்றார்கள். மூன்று பக்கங்களும் கடல். அந்தக் கடல்களிலே தங்கள் கப்பல்களைக் கொண்டு திரிந்து வருகின்றார்கள் போர்த்துக்கேயப் பறங்கிகள் இன்று தென்னிலங்கையில் பெரும்பகுதியில் இவர்களது ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கின்றது. அவர்கள் என்று யாழ்ப்பாணத்தின் மீது தமது பூனைக் கண்களைக் திருப்புவார்களோ நாமறியோம்! வன்னியர்களை அடக்கவேண்டும் என்றோ படைப்பலத்தை அதிகரிக்கவேண்டும் என்றோ சிறிதும் கவலை கொள்ளாது தமது தலைநகராம் நல்லூர் அரண்மனையில் அமைதியாக வாழ்கிறார் என்தந்தை. வன்னியர்களின் வஞ்சக்கண்களும் பறங்கியரின் பூனைக்கண்களும் யாழ்ப்பான அரசை நோக்கி விழித்துக் கொண்டிருப்பதை உணராது அரண்மனைப் பூந்தோட்டங்களில் தனது காதல் மனைவிகளோடு உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றார் எனது மூத்த சகோதரர் வீரபண்டாரம்! இவை ஒன்றிலுமே மனம் செல்லாததுபோல் தனது வைத்திய விற்பன்னத்தைக் காட்டும் பொருட்டு நாட்டிற்கு நாடு சென்று வந்துகொண்டிருக்கிறார் தனது இளைய அண்ணர் பரநிருபசிங்கன்! யாழ்ப்பாண இராச்சியத்தைப் பகைவர்களில்லாத ஓர் உன்னத அரசாக்கவேண்டும், எனது முன்னோர் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் யாழ்ப்பாணம் விளங்கியது போன்ற உன்னத நிலையில் விளங்க வைக்கவேண்டும் என்ற ஆசைக் கனவுகளை மனதிலே தேக்கிக் குமுறிக் கொண்டிருக்கிறேன் நான்! இம்மண்ணை என்னுயிர் உள்ளவரை பிறர் கரம் போகவிடேன் “பெண்ணைக் கடற் கரையிலிருந்து தன் எண்ணக் குமுறல்களையும் இலட்சிய தாபத்தையும் நண்பன் கனகராயனிடம் வெளியிடும் சங்கிலி குமாரனை நாம் காணும்போது நம் உள்ளமெல்லாம் அவனுடைய வெற்றிக்காகப் பிரார்த்திக்கத் தொடங்குகின்றன. “வைப்பாட்டியின் மகன்’ என்ற காரணத்தினால், விளையாட்டிடத்திற் கூட மற்றைய அரச குமாரர்களினால் ஒதுக்கப்பட்டுச் சங்கிலிகுமாரன் பொங்கிப் பொங்கி அழும் போது நம் நெஞ்சமெல்லாம் அவனுக்காக இரங்குகின்றன. உதயவல்லியைக் காதலிக்கும் போதும் சரி பின்னர் அவளுடைய காதலை உதறித் தள்ளும் போதும் சரி, சங்கிலிகுமாரன் மேல் தவறுகாணத் தயங்குகின்றோம் நாம், சுத்த வீரனாக, சுதந்திரப் பிரியனாக, சிறுமை கண்டு பொங்குபவனாக நாம் மதிக்கும் சங்கிலி குமாரன், இறுதியில் சுயநலக்காரனாக சதிகாரனாக, துரோகியாக மாறுவதைக் கண்டு சற்றுத்திகைக்கவே செய்கிறோம். ஆனால் சங்கிலிகுமாரன் மீது ஆத்திரமும் அசூயையும் ஏற்படுவதற்குப் பதிலாக, அன்பும் அனுதாபமுமே ஏற்படுகின்றன.
“மன்னன் ஒருவனின் மகனாகப் பிறக்கும் பாக்கியம் கிடைத்தும் என் பிறப்பில் ஒரு இழி பெயர் ஒட்டிக் கொண்டது வைப் பாட்டியின் மகன் என்பது என் னை அரச குடும்பத்தவரிடையே தாழ்வாக மதிக்க வைத்தது; வைப் பாட்டி மகன் என்பதை நான் பரவாய் பண்ணியிருக்க மாட்டேன்! ஆனால் பல சந்தர்ப்பங்களில் பலர் என்னை அவ்வாறழைத்தபோது என்னால் அதைப்பற்றி எண்ணா திருக்க முடியவில்லை. நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்தே
()

Page 37
செங்கை ஆழியான் என் பிஞ்சு மனத்தில் நஞ்சு விதையை வளர்க்கக் காரணமாக இந்த இழி பெயர் அமைந்தது. மாதேவி! என்னண்ணன்மார் மூவர் மூவருக்கும் என்னைப் போன்ற இழிபெயரில்லை! அவர்கள் அரசிகளின் பிள்ளைகள்! அதனால் கர்வமடைந்து, தலை நிமிர்ந்து திரிந்தனர். என்னை அவர்கள் கேவலமாக மதித்தனர். ‘தம் பி!’ என்று அழைக்கவே தயங்கினர். என்னைத் தம்பி என்று அழைக்காததற்காக நான் அவ்வளவு வருந்தவில்லை. என்மீது கோபித்த நேரமெல்லாம் வைப்பாட்டி மகனென ஏசுவதைத் தான் என்னால் பொறுக்க முடியவில்லை”. ஆசிரியர் மனத் தத்துவ நிபுணராக மாறி, சங்கிலிகுமாரனின் மன ஆழத்திலுள்ள மர்மங்களை வெளிக்கொணர்ந்து. அவனுடைய மதிப்பை மீண்டும் உயர்த்துவதில் வெற்றியடை கின்றார்.
முல்லைத்தீவுக் குடாக்கடலுக்கு 'நந்திக் கடல்’ என்றும் ஒரு பெயருண்டும். அக்கடலின் தன்மையைக் காக்கைவன்னியன் கூறுகின்றான். ‘நந்தி போன்று மிகவும் அமைதியான கடல் ஆனால் சில காலங்களில் வெறி கொண்டது போல் குமுறத் தொடங்கும்’ சங்கிலி குமாரனுக்கும் இக்கடலுக்கும் தான் எத்துணை பொருத்தம்.
சங்கிலிகுமாரனின் வரலாறு இதுவரை சரியாக எழுதப்படவில்லை. வரலாற்றாசிரியர்களிடையே சங்கிலி குமாரனைப் பற்றிக் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண இராச்சியத்தின் சுதந்திரத்தைக் காப்பதற்கு இறுதிவரை போராடியவன் சங்கிலிகுமாரன் என்பதில் இருவித கருத்துக்கள் இல்லை. நாவல் முழுவதும் இவ்வுண்மை ஊடுருவிச் செல்கின்றது. “மாதேவி! நான் மன்னனான வழி கொடிய வழிதான். ஆனாலும் நாட்டு மக்களுக்கு நான் கொடுமை செய்யவில்லை. இன்று நான் இந்த நாட்டின் மன்னன். என் ஆட்சிக் காலத்தில் இவ்வரசு அன்னியர் வசமாகியது என்ற பெயரை ஏற்படவிடமாட்டேன். போத்துக்கேயப் பறங்கிகளை இம்மண்ணிலிருந்து துரத்தியே தீருவேன்! துரத்திய பின் என் மகன் புவிராஜ பண்டாரத்தை மன்னனாக்கியே தீருவேன்!’ என்ற சங்கிலிகுமாரனின் சபதத்தில், அவனுடைய சுயநலத்தைப் பரநலம் விஞ்சுவதைக் காண்கின்றேன்.
மனைவி வள்ளியம்மையிடமும் மகன் பரநிருபசிங்கனிடமும், “சங்கிலிக்கே அரசுரிமை கொடுக்கப்பட வேண்டும்’ என மன்னன் பரராசசேகரன் வலியுறுத்தும் இடங்கள் ஆசிரியரின் எழுத்துத் திறமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. உண்மைக் காரணத்தை உரைக்காமலே உரிமையை மாற்றும் சிக்கலான பொறுப்பை மன்னன் செம்மையாகவே செய்து முடிகின்றான். ஆசிரியர் மிகவும் நுட்பமாகவே எழுத்தில் வடிக்கின்றார்.
நாவலைப் படிக்கும் போது நம் மனத்திரையிலே பல காட்சிகள் விரிகின்றன.
நாம் வணங்கும் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அரசர்களும் அரசிகளும் அவர்
தம் செல்வப்புதல்வர்களும் ‘காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி’ நாதன் தாள்
போற்றும் நவையறு காட்சி தோன்று கின்றது. நாம் சென்றுவரும் வீதிகள் எல்லாம்
இராஜபாட்டைகளாக விரிய, அங்கு அரச பெருமக்கள் இவர்ந்து செல்லும் 70

வாழ்வும் படைப்புகளும்
பஞ்சகல்யாணிகளில் குழம்பொலி காதில் புகுந்து கதையாய் பதிகன்றது! யமுனை ஏரியும் சங்கிலித்தோப்பும் பழைய இராஜகம்பீரத்துடன் எம்மைத் தம்பால் ஈர்க்கின்றன. நிலாவரையை அடுத்துள்ள நிலப்பிரதேசம் முழுவதும் நெல்லும் கரும்பும் வாழையும் கமுகுமாகச் செழித்து வளர்ந்து கண்ணுக்குக் குளிர்ச்சியையும் நெஞ்சிற்கு நிறை வையும் தருகின்றன.
இரகுவம்சம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதையும் சயவீரசிங்கையாரியச் சக்கரவத்தியின் வேண்டுகோளின்படி மந்திரியாகவிருந்த புவனேகபாகு என்னும் பெயருடைய நீலகண்டஐயர் என்பவரால் நல்லூர்க் கந்தன் ஆலயம் கட்டப்பட்டதையும் இராமேஸ்வரம் கோயிலுக்கு நெடுந்தீவிலிருந்து பாலும், கச்சதீவிலிருந்து பூக்களும் ஒவ்வொரு நாளும் அனுப்பப்பட்டதையும் ஆசிரியர் பொருத்தமான இடங்களில் இணைத்திருப்பது நம் முன்னோரின் தமிழ்க் காதலையும் இறைபக்தியையும் நாம் உணர்ந்து பெருமைப்பட வழிசெய்கின்றது.
ஆடம்பரமற்ற, அமைதியான நடையை ஆசிரியர் கையாண்டுள்ளார். “கட்டுவது நீங்கள் தான்; எங்களுக்கு கட்டும்போது உங்களையே நீங்கள் கட்டிக்கொள்கின்றீர்கள்”, “உன்னில் பிழையில்லை, தாயே என்னைப் பெற்றவள் விட்டபிழை”, “ஒரு தங்கையின் தமையன் அவன்” “ஒருவரால் மறுக்கப்பட்ட நிகழ்ச்சி, இன்னொருவரின் வாழ்வாக மலர்ந்து நிற்பதை அவன் உணர்ந்தான்’ போன்றவை ஆசிரியரின் அர்த்த புடியான வசனத்துக்கு எடுத்துக்காடடுகளாம்.
மேனாட்டார் நாவலில் தொடங்கி சிறுகதைக்கு வந்தார்கள். நாம் சிறு கதையில் ஆரம்பித்து நாவலுக்கு செல்கின்றோம். நல்ல பல சிறுகதைகளைப் படைத்து பரிசும் பாராட்டும் பெற்ற “செங்கை ஆழியான்’ அவர்களின் முதலாவது நாவல் இது. “கலைச்செல்வி’ நடாத்திய அகில இலங்கை நாவல்ப் போட்டியில் நீதிபதிகளின் பாராட்டுதலைப் பெற்ற நாவல்களுள் ஒன்று. நாவல் உலகில் ஆசிரியர்க்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது என்பதை 'நந்திக் கடல்’ முழங்குகின்றது.
( 28 11 1968 )
7

Page 38
UT 60)650) பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
செங்கைஆழியானையும் அவரது நாவலாக்க ஆற்றலையும் நான் இன்று நேற்று அறிந்தனல்லன். இருபத்தைந்து வருடங்களாக அறிந்தவன். யாழ் இந்துக்கல்லூாயில் சிறு வகுப்புகளில் சக மாணவனாகக் கல்வி கற்கும்போது கல்கி. கலைமகள், ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளில் வரும் தொடர் நவீனங்களை ஆர்வத்துடன் வாசித்துவிட்டு அவற்றை அச்சஞ்சிகைகளிலிருந்து கழற்றி ஒன்று சேர்த்துப் புத்தகமாகக் கட்டும் பழக்கத்தையும் தான் படித்து இரசித்தவற்றை எங்களுக்குச் சொல்லி மகிழும் இரசனையையும் கண்டு வியப்பும் மகிழ்வும் அடைந்ததுண்டு.
பள்ளிப்பழக்கம் பல்கலைக்கழகம் வரை சென்றது. ஆனால் ஒரு படி முன்னேற்றம் , இயற்கையாகவே எழுதும் ஆற்றல் மிகுந்த அவர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களையும் மாணவர்களையும் கவர்ந்தார். புவியியற் சிறப்புப் பட்டதாரி என்ற பட்டத்துடன் நின்றுவிடாது எழுத்துலகிலும் பட்டம் பெற்றார்.
அவரது நாவல்கள் அவர் எடுக்கும் பகைப்புலத்தாலும், கூறும் செய்தியாலும் தனித்து நிற்பவை. அவரது நாவல்கள் தொழிலாள பாட்டாளிகளின் வாழ்க்கையுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. கதைகளில் இடம் பெறும் பகைப்புலத்தினை அக்குவேறு ஆணிவேராகக் கலையழ குடன் அலசி ஆராய்வார். கதாமாந்தர்களின் உரையாடல்களில் மண்வாசனை வீசும்.
அவரின் யானை என்ற இந்த நாவல் ஒரு புதுமையான படைப்பு. பழிவாங்குவதில் வல்லது யானை, அந்த * யானையின் பழிவாங்கல் உணர்ச்சியிலும் மேலான பழிவாங் கல் உணர்ச்சி செங்காரனுடையது. அந்தளவிற்கு வந்த னாவை இழந்த அவளின் பிரிவுத்துயர் உணர்ச்சி பூர்வமாகவும் மிக நுட்பமாகவும் அவர் எழுத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆவரின் எழுத்துக்களில் அவரின் புவியியலறிவு ; அப்படியே பளிச்சிடுகின்றது. காட்டு வருணனைகளும் காட்டு * விலங்குகள் பற்றிய குறிப்புகளும் இயற்கையாகச்
72
 

வாழ்வும் படைப்புகளும்
சித்திரிக்கப்பட்டுள்ளன. சூழல், இயற்கையமைப்பு போன்றவற்றை ஆசிரியர் திறன்பட எடுத்து விளக்கியுள்ளார். மிருகங்களின் நடத்தைகள், யானைகளின் தடப்பாதைகள் என்பன மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒரு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய அவதானிப்புத்திறன் விதந்துரைக்கத்தக்கது. அவரின் அவதானிப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டு தம்பலகாமம் தொடக்கம் செட்டிகுளம் வரையுள்ள யானைகளின் தடப்பாதையில் நிகழும் காட்டின் செய்திகள் ஆகும். ஆசிரியரின உரை நடை நெகிழ்ச்சியானது. இடத்திற்கும் பாத்திரங்களுக்கும் ஏற்பநடை.
இறுதியாக இந்த நாவலைப் படித்து முடிந்ததும் என் மனதில் எஞ்சி நிற்கும் உணர்வு, செங்காரன் என்ற மனிதன், பழிவாங்கல் என்ற உணர்வினால் ‘நொண்டி யானை'யின் நிலைக்கு இறங்கியிருப்பதும், இறந்துபோன யானை மனித நிலைக்கு உயர்ந்திருப்பதுமாகும். பழிவாங் கல் மனிதனை மிருகநிலைக்கு இறக்கியிருக்கிறது என்பதை இந்த நாவல் சித்திரிக்கின்றது. மனித குலத்திற்கு ஒவ்வாத பழிவாங்கல் உணர்வின் தீமையை ஆசிரியர் இந்த நாவலில் சுட்டியிருப்பதாக எனக்குப்படுகிறது.
எழுத்துக்கள் சமுகமாற்றத்திற்கும், சமுக உயர்ச்சிக்கும் அடிப்படையாக அமைய வேண்டும். இப்பெரும் பொறுப்பைச் செங்கை ஆழியான் ஏற்று தன் எழுத்துக்களில் வெற்றி கண்டுள்ளார். ( யானை முன்னுரை - 01.01.1991)
"ஆச்சி பயணம் போகிறாள் என்ற பயணநூலையும், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற கிளிநொச்சிப் பகுதி குடியேற்ற நாவலையும், மண்ணின் தாகம் என்ற நாவலையும் உடன் படித்து முடித்தேன். ஆச்சி பயணம் போகிறாள் உன்னத நகைச் சுவைச்சித்திரம். பெரும்தன்மை மிக்க எழுத்து. பாட்டி பேச்சில் தான் பழைமையின் பிரதிநிதி. புத்தி சாதுர்யத்தில் பேத்தியையும் புறங்காண்கிறாள். 'மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வன்னிப் பகுதி மக்களை வஞ்சிக்க முற்படும் அரசியல்வாதிகளின் ஈவிரக்கமற்ற செயல் பற்றிய அப்பட்டமான படப்பிடிப்பு. இந்த நாவலைப் படித்து வன்னிப்பிரதேச சமூக வாழ்க்கைபற்றி ஒரளவு தகவல் அறிந்து கொண்டேன். ஒரு பொறுப்புணர்வு மிக்க இலக்கியவாதியின் சீரிய முயற்சி. சிறந்த நிர்வாகிகளை இனங்கண்டு மதிக்கும் சிலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர் என்பதைக் கோடிட்டுக் காட்டும் செங்கை ஆழியான் போற்றுதற்குரியவர். (30. O7. 1991) -எஸ். போத்திரெட்டி (மதுரை)
73

Page 39
செங்கைஆழியானின் எழுத்தும் எண்ணமும்
கே.எஸ்.சிவகுமாரன்
நமது நாட்டு நாவலாசிரியர்களில் எண்ணிக்கையில் அதிக
நாவல்களைத் தந்திருப்பவர் செங்கை ஆழியான் என்ற புனைப்பெயரில் எழுதும் க.குணராசா. இவர் எழுதி வெளியாகிய நாவல்களின் எண்ணிக்கை 14. இன்னும் 4 நாவல்கள் அச்சில் வெளிவரவிருக்கின்றன. ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவரவிருக்கின்றது. இவர் 150 உக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். நாடகங்களும் விமர்சனங்களும் எழுதியுள்ளார். 40 உக்கும் மேற்பட்ட புவியியல் நூல்களை எழுதியிருக்கும் தமிழ் மொழி மூலம் முதன் முதல் கற்ற புவியியல் சிறப்புப் பட்டதாரி. இலங்கை நிர்வாக சேவையில் இடம் பெற்ற எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். 42 வயதுடைய செங்கை ஆழியான் காரியாதிகாரியாகப் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு புனைகதை படைக்கிறார். இவர் எழுதிய 'வாடைக்காற்று”என்ற நாவல் திரைப்படமாகவும் வெளிவந்தது. பல்கலைக் கழக எழுத்தாள மாணவர்களின் சிறுகதைத் தொகுப்புக்களை மாணவ நிலையில் வெளியிட்டுள்ளார்.
சுமார் 20 வருடங்களாக எழுதிவரும் செங்கை ஆழியான் 1961 வாக்கில் எழுத்துலகில் பிரவேசித்தார். அவரே கூறுவதுபோன்று அவருடைய எழுத்துலக
வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதிரா இளமை, அனுபவக்
&& குறைவு, கற்பனாலயப்போக்கு போன்றவை இவருடைய 闵历园邸亦
ஆரம்பகால எழுத்துக்களில் காணப்பட்டன. இந்த வரிசையில் 'அலைகடல் தான் ஓயாதோ?, நந்திக்கடல், சித்திரா பெளர்ணமி, போன்ற நாவல்களையும், "ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல், முற்றத்து ஒற்றைப்பனை, போன்ற நகைச்சுவை நாவல்களையும் எழுதினார்.
செங்கைஆழியானின் கருத்துப்படி சமுதாய ஊழல்
களைச் சுட்டிக்காட்டும் நோக்கம் 1964 ஆண்டளவில்
ஏற்படத் தொடங்கியது. அதாவது சமுதாயப்பிரச்சினைகளை 74.
 
 
 

வாழ்வும் படைப்புகளும்
வெறுமனே சித்திரிப்பது, பரிகாரம் சுட்டிக்காட்டப்படுவதில்லை என்ற அடிப்படையில் அவர் ‘பிரளயம், வாடைக்காற்று, இரவின் முடிவு' போன்ற நாவல்களை எழுதினார். சமுக மாற்றத்தைக் கல்வியறிவுப் பரம்பல் மூலம் கொண்டு வரலாம் என்று செங்கைஆழியான் இக்கால கட்டத்தில் நம்பினார்.
1977 இல் வெளியான காட்டாறு என்ற பரிசு நாவலுடன் இவர் தனது மூன்றாவது இலக்கிய வாழ்க்கைக் காலகட்டத்தில் இறங்குவதாகக் கூறிக்கொள்கிறார். சமுகக் குறைபாடுகளுக்குத் தீர்வு காண ஆசிசிரியர் என்ன விடைகளைத் தருகிறார்? வாழ்க்கையைப் பொருள் கொண்டு அவர் விளங்கிய" விதம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பதாகக் காட்டாறு விளங்குகின்றது என்று செங்கை ஆழியான் கருதுகிறாள்.
நகர்ப்புறத்தவர் கிராமங்களுக்குச் செல்லும்போது பெறும் வித்தியாசமான அனுபவத்தைச் சிறைபிடிப்பது தமது நோக்கம் என்கிறார். கிராமிய சமுகத்தின் பலம், பலவீனம் இரண்டையும் சித்திரித்துக் காட்டல் ஆசிரியரின் நோக்கமாகையால் இலக்கியக் களம் புதிதாய் அமைகிறது. வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டி அதற்கான உணர்வைத் தனது எழுத்துக்கள் மூலம் பரிவர்த்தனை செய்ய முற்படுகிறார். வாசகர்களுக்கு நம்பிக்கையுணர்வை ஏற்படுத்துவதும், வேறுபட்ட புதிய பகைப்புலத்தை ஒவ்வொரு முறையும் வாசகர்களுக்குக் காட்டுவதும் தமது எழுத்தின் சிறப்பம்சங்கள் என்று இந்த எழுத்தாளர் கூறுகிறார்.
செங்கைஆழியானின் சிந்தனைகள் அவர் தமது காட்டாறு நாவலுக்கு எழுதிய முன் னுரையில் தெளிவாகத் தெரிவிக் கப்பட்டடுள்ளன. ‘.இச்சின்னத்தனங்களை, தேசியத் துரோகிகளை, மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு.” என்கிறார் செங்கை ஆழியான். ஆசிரியரின் கூற்றிற்கிணங்க நாவல் அமைந்திருக்கிறது என்பது உண்மை. செட்டாகவும் எழுதியிருக்கிறார். வழ வழாத் தன்மையில்லை. வேட்டையாடல் பற்றிய விபரணை நேர்த்தியாகவுள்ளது. செங்கைஆழியான் யதார்த்த நெறியில் நின்று எழுதுகிறாள். அவரின் நாவல்களில் சிறந்தது காட்டாறு தான்.
(வீரகேசரி 02, 01. 1982)
“இலங்கை எழுத்தாளர்களில் டேனியலும் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தம் நாவல்களில் இடம் பெறும் மனிதர்கள் பற்றிய சமூகச் சூழல், பொருளியற் சூழல், வரலாற்று விபரங்கள் ஆகியவற்றை நிறையத் தருவதில் தமிழ் நாட்டு
முற்போக்காளர்களைவிடச் சிறந்து இருக்கிறார்கள்.’
(மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்) -ஞானி (கோவை)
Lollid, 1988.
75

Page 40
செங்கைஆழியானும் லில் குணசேகராவும்
எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
செங்கைஆழியான், வீரகேசரியின் ஐம்பதாவது நூல் வெளியீட்டு விழாவின்போது, அவ்வாறு வெளியிடப் பட்ட ‘காட்டாறு’ எனும் நாவலையே “தனது முதலாவது நாவலாகும்’ எனக் குறிப்பிட்டார். காட்டாற்றுக்கு முன்பே பத்துக்கு மேற்பட்ட நாவல்களை, அவற்றுள்ளும் மூன்றை வீரகேசரியின் வெளியீடுகளாக எழுதியுள்ள ஆசிரியர் நாவற் பண்பியல் ரீதியாகவே இவ்வாறு தெளிந்துரைத்தார். அவரது கூற்றிலும் பேருண்மை பொதிந்துள்ளமையால் தமிழ்ப் புனைவிலக்கியத்துறையில் காட்டாற்றுக்கு ஒரு சிறப்பான இடமுள்ளது. மேலும் அதே விழாவில் ஆய்வுரை தந்த கலாநிதி கா. சிவத்தம்பி, ஒரு நிர்வாக அதிகாரி என்ற முறையில் பெற்ற அனுபவங்கள் செங்கை ஆழியானது காட்டாற்று நாவலாக்கத்துக்கு வள மூட்டியுள்ளனவென்றும், அதே போன்று சிங்களத்தில் நாவல்கள் எழுதிய பெருமதிப்புப் பெற்றுள்ள லீல் குணசேகராவுடன் அவரை ஒப்பிட்டு நோக்கலாமென்றும் கூறினார்.
செங்கைஆழியானின் நாவலாக்க வாழ்வில் காட்டாறு ஒரு ‘புதுப்பிறவி. முதற் படைப்பு எனில் "பெத்சம’ (முறைப்பாடு) என்ற குணசேகராவின் நாவல் ஆரம்பம், அத்சன (கையொப்பம்)விலும், மங் நெத்திதா(நான் அல்லாத போதினில்)விலும் தொடர்ந்து ஒரு முதிர்ச்சியைக் கண்டது. எனவே இத்தகையதொரு ஒப்பாய்வு செங்கை ஆழியானின் ஆக்கங்கள் மேலும் மெருகேற உதவும்.
லில் தனது நிகழ்வுகளுக்கு அநுராதபுரத்திற்கு அருகில் சியம்பளாவெவ (புளியங்குளம்) என்ற ஒரு குடியேற்றக்கிராமத்தை நடுவாகக் கொண்டார். ஆழியானின் அமைவு அருவியாற்றங்கரையில் கடலாஞ்சிக் குடியேற்றக் கிராமமாகும். முறையே இவை இரண்டும் அமைந்துள்ள இராஜரட்டையும், வன்னியும் இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றிலிரண்டுக்கு மேற்பட்ட பாகத்தை உள்ளடக்கியவை. பழைய பாரம்பரியத்துக்கமைய மரபு வழியான மக்களுள் பெரும்பாலோரினது வாழ்வும் வளமும் இங்கு தான் சிறந்தன. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின்போது இயல்பாகவும்,
76
 

வாழ்வும் படைப்புகளும் சமுகரீதியிலும் நெருக்கடிகள் இவர்களைப் புலம் பெயர்த்தன. அப்போது முதல் இப்பிரதேசங்கள் வரண்டபிரதேசங்கள் என்றும், பின் தங்கிய பிரதேசங்கள் என்றும் மக்களது கவனத்தினன்றும் ஒதுக்கப் பெற்றிருந்தன. அர்த்தமும் ஆதாரமுமற்ற, இவ்வைதிகம் தகர்க்கப்பெற்று, பழைய பாரம்பரியம் மீட்கப்படவேண்டும் என்ற உணர்வு தழைத்தோங்கிய வேளையில் இங்கு முற்குறித்தன போன்று குடியேற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. எனவே, அவற்றிற்கு மாதிரியான இரு கிராமங்களையே லீலும் ஆழியானும் தேர்ந்தனர். மீண்டும் புதிதாகக் கட்டியெழுப்பப்படவேண்டிய பகுதிகள் இவை. இவற்றைச் சூழ அடர்ந்த காடு. அவற்றிலே மக்களது ஆக்க முயற்சிகளுக்குச் சவாரான யானைகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்றவை. மழை பொய்த்தால் கடும் வரட்சி. மழை மிஞ்சினாலோ காட்டாற்றின் கொடுரம், இயற்கையின் இப்பாதிப்புகளுடன் சமுகத்தில் வசதி படைத்த ஒரு சிலரின் தடைக்கற்களும் இம்மக்களைத் தாக்குகின்றன. இத்தகைய எதிர்ப்புக்களுக்கிடையே வாழப்போராடும் மக்களையே இவர்கள் சித்திரிக்கின்றனர்.
புளியங்குளத்து வாசியான திலகரத்னவினது நோக்கிலேயே லீல் தனது கதையை வழிநடத்துகின்றார். திலகரத்னவின் வளர்ச்சியோடு புளியங்குளமும் பரிமாற்றங் காண்கிறது. பெத்சமவில் கிராமவாசிகள் தமது குறைகளை முறைப்பாடாக அரசாங்க அதிபரிடம் முன் வைக்கின்றனர். ஆழியான் ஆசிரியர் கூற்றாகவே பாத்திரங்களை நிலைப்படுத்திச் செல்கிறார். இங்கு தலைமைப் பாத்திரம் என எவரையும் வகுத்துக் கொள்ளவில்லை. அது எவ்வளவு சிறியவொன்றாயினும் அதன் தலைமைத்துவத்திற்குக் குறைவில்லை. எல்லாக் கதாபாத்திரங்களையும் இயல்பாகவே ஊடாட விடுகிறார்.
புளியங்குள மக்களை அச்சுறுத்துவது குறிப்பாக ஒரு குடும்பமேயாகும். அலாக்கு பண்டா என்ற இந்தக் குடும்பத் தலைவர் ஒரு போலி விதானை. தான் விதானையாக இருந்தவரென மக்களை ஏமாற்றி வந்தவர். நடப்பு விதானை இவரது மருமகன். மற்றொரு மருமகன் கூட்டுறவுச் சங்க மனேச்சர். குளத்து அதிகாரி இவரது நண்பர். இந்தக் கொஞ்சப் பேரே புளியங்குளத்தில் நடப்புக்காட்டுகின்றனர். ஆனால் கடலாஞ்சியிலோ ஒரு நாசகாரக் கும்பலையே’ ஆழியான் காட்டுகிறார். லில் இவர்களைப் புதிர் முதலாளித்துவக் கூட்டமாயும், உத்தியோக வர்க்கமாயும் இனங்காட்டுகின்றார். இவர்களோடு இவர்களது எடுபிடிகள் இவர்களது அடிவருடிகளாகின்றனர்.
புளியங்குள வாசிகளின் குறைகளை லீல் குணசேகராவினால் ஒரு சிறிய முறைப்பாட்டின் மூலம் வகுத்துக் காட்டிவிட முடிகிறது. ஆனால் செங்கைஆழியான் சம்பவங்களின் மூலமாகவே இவற்றை முன்னிறுத்துகிறாள். எனவே பக்கத்திற்குப் பக்கம் ஓர் ஊழல் பட்டியலே விரிகின்றது. லீல் கிராமமக்களின் குறைகளுக்கு ஸ்தாபனரீதியான ஒரு தீர்வினைக் காட்ட முயன்றுள்ளார். ஆனால் கடலாஞ்சிக் கிராமமக்களுக்கு இவ்வாறான ஒரு தீர்வு கிட்டவில்லை. காட்டாற்று நாவலில் ஆழியான் மக்களின் எழுச்சியையே காட்டாற்றின் பெருக்கமாக உருவகப்
77

Page 41
செங்கை ஆழியான்
படுத்தியுள்ளார். காட்டாற்றில் மக்களின் எழுச்சி தனிமனித எழுச்சிகள் மட்டுமே. தினசகாயம் வாத்தியாரைச் சந்திரனும் மாரிமுத்துவும் அடித்துப் போடுகின்றனர். கணபதி குளத்தின் சுலுசை உடைத்துக் கமவிதானையைக் கலைக்கிறான். சந்தனம் செவந்தியின் மரணத்திற்காகச் சியாமனைப் பழிவாங்கக் கறுவுகிறான். இவ்வெ ழுச்சிகள் இவர்களைச் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக ஒடுக்கி விடவே வழிவகுக்கக்கூடும். காட்டாறு பெருகினால் அணைக்கட்டு அவசியம். எனநே ஆழியான் காட்டாற்றின் தொடர்ச்சியான ஓர் அணைக்கட்டைக் காணுதல் அவசிய LDT(35 p.
செங்கைஆழியான் இந்திய வம்சாவளியினரை தமது நாவலில் பிரதிதிதித்துவப் படுத்தியுள்ள பாங்கு மிகவும் பாராட்டப் படத்தக்கதொன்றாகும். இந்திய வம்சாவளியினர் பிரச்சினைகளுடன் பரந்த வாழ்வது மலைநாட்டில் மட்டுமன்று. இந்த வகையில் ஏனைய பகுதிகளில் வாழும் அவர்களின் நிலையை மனிதாபிமான நோக்குடன் அவர் அணுகியுள்ளார். தாமரைக்கண்டும் அவள் மகன் மாயழகும் கடலாஞ்சிக் கிராம மக்களுடன் எவ்வித வேற்றுமையுமின்றி பிணைந்து உலாவுகின்றனர். செங்கை ஆழியான் மெல்லுணர்வுகளைத் தமது நாவலில் குறிப்பிடத் தக்களவிற்கு இழையோடவிட்டுள்ளார். மாயழகு - மகேஸ்வரி, சந்தனம் - விதவையான செவந்தி, அதனால் புவனேஸ்வரியின் மனமுறிவும் இவ்வகையில் குறிப்பிடலாம். (வீரகேசரி 16, 10. 1977)
வாழிய நீயே! வாழிய நீயே வாழிய நீயே மங்காப் புகழொடும் வாழிய நீயே செங்கையாழியான் திருமால் நம்பி செங்கையாழியான் திருமால் சக்கரம் அங்கையிற் கொண்ட அரும்பொருள் நாமம் மக்கள் மகிழ்தர மாண்புறு நூல்கள் மிக்க தொகை கொள விழுமிய படைத்தாய் அற்புதமான கற்பனைக் கதைகள் அகம் மிகக், குழைய ஆக்கினை நீயே நூலின் விழுப்பமும் நுவன்றோன் விழுப்பமும் அறியோ மேநாம் சிறிதே யளவும் வரிசை யறியாது பரிசில் பாவால் w தருதற் கியலா(து) தயங்குகின்றேன் எண்டிசையும்புக ழேற ஏறி கற்றோர் அமிழ்தெனக் களிகொளக் கருத்து முற்றவும் வடித்து முதனுால் ஆசானாய் பெற்ற பெரும்புகழ்ப் பீடோடு நீயே ஊழுழி பெருக உயர்வோடும் வாழியவே. (06 .05 - 1984) -பண்டிதர் பொ.ஜெகந்நாதன்
78
 

செங்கை ஆழியானின் தொகுப்பாக்கப் பணிகள் து.வைத்திலிங்கம்
தமிழில் வெளிவந்த நல்ல சிறுகதைகளைத் தொகுத்துத் தொகுதிகளாக வெளியிட்ட முதற் பெருமை அல்லயன்ஸ் கம்பனியின் வீ. குப்புசாமிஜயரையே சாரும். அவ்வகையில் அவர் நான்கு தொகுதிகளைக் “கதைக் கோவை’ என்ற பெயரில் 1938 உக்கும் 1948 உக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் சராசரியாக 50 படைப்பாளிகளின் சிறுகதைகளைக் கொண்டிருந்தன. இத்தொகுதிகளில் ஈழத்துப் படைப்பாளிகளான சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர் கோன், சோ.சிவபாதசுந்தரம், அ.செ.முருகானந்தன், நவாலியூர் சோ. நடராஜன் ஆகியோரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
இவ்வகையில் தொடர்ந்து ‘தீபம் சிறுகதைகள்’ (1987), சா.கந்தசாமி தொகுத்து வெளியிட்ட 'சிறந்த கதைகள்’ (1988), மகரம் தொகுத்த ‘வானதி சிறுகதைகள்’ (1920, மாலன் தொகுத்த 'அன்று’ (1992), விட்டல்ராவ் தொகுத்த ‘இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்’ (1993), இலக்கியச் சிந்தனைச் சிறுகதைகள், கணையாழிக்கதைகள், கண்ணதாசன் இதழ்க்கதைகள், மணிக்கதைகள், விருட்சம் கதைகள், சாகித்ய அகாதெமிக் கதைகள், இந்தியா ரூடே கதைகள், விழிப்புணர்ச்சிக் கதைகள், சரஸ்வதி களஞ்சியம் எனப்பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. இத்தொகுதிகள் சிலவற்றில் செ. யோகநாதன்(தர்மங்கள், வெடிக்காரன்), செங்கை ஆழியான் (அறுவடை), எம்.ஏ.நு. மான் (சதுப்பு நிலம்), சுதாராஜ் (அடைக்கலம்), முருகையன் (எமசாதனை) தள்மு சிவராம் ஆகியோரின் சிறுகதைகள் இடம் பிடித்துள்ளன.
இவ்வகை முயற்சிகள் ஈழத்தில் நிறையவே நடை பெற்று வருகின்றன. ஈழத்து எழுத்தாளர்கள் 13 பேரின் சிறுகதைகளைத் தொகுத்து ‘ஈழத்துச் சிறுகதைகள்’ என்ற பெயரில் 1958 இல் முதன் முதல் வெளியிட்ட பெருமைக் குரியவர் கலைச்செல்வி சிற்பி சிவசரவணபவன். இத்தொகு
79

Page 42
செங்கை ஆழியான்
திக்குப்பின்னர் இலங்கையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகள் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய செங்கைஆழியானின் முயற்சியால் செம்பியன் செல்வன், க. நவசோதி ஆகியோர் இணைந்து நிறுவிய பல்கலை வெளியீடு' என்ற அமைப்பு வெளியிட்ட ‘கதைப் பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம்’ என்ற நான்கு தொகுதிகளாகும். இவை பல்கலைக்கழக எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டன. மாணவ நிலையிலேயே செங்கை ஆழியான் சக படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தொகுத்து வெளிக் கொணர் வதில் நாட்டம் கொண்டவராக விளங்கியுள்ளார். 1962,1963, 1964, 1965 ஆகிய காலகட்டங்களில் மேற்படி தொகுதிகள் வெளிவந்துள்ளன.
செங்கைஆழியானின் தொகுப்பாக்க முயற்சிக் காலத்தில், 1963 இல் கொழும்புத் தமிழ் எழுத்தாளர் மன்றம் ‘ஈழத்துப் பரிசுச்சிறுகதைகள்’ என்றொரு தொகு தியை வெளியிட்டது. 1971 இல் ஈழநாடு பத்திரிகை 'கங்குமட்டை என்றொரு சிறிய தொகுதியை கொணர்ந்தது. 1979 இல் மாத்தளை எழுத்தாளர் ஒன்றியம் ‘தோட்டக் காட்டினிலே’ என்றொரு தொகுதியையும், வீரகேசரி சிறு கதைப்போட்டியில் தெரிவான கதைகளின் தொகுப்பாக ‘கதைக்கனிகள்’ என்றொரு தொகுதியும் வெளிவந்துள்ளன. 'தகவம் இலக்கியவட்டம் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளது. படைப்பாளி செ.யோகநாதனும் அவரது துணைவியாரும் இணைந்து இரண்டு பெரிய தொகுப்புகளை வெளியிட்டார்கள். “வெள்ளிப்பாதசரமீ. ஒரு கூடைக் கொழுந்து' என்பன அவ்விரு தொகுதிகளாகும். ஈழத்து சிறு கதை ஆக்கங்களைத் தமிழகத்துக்கு தக்க முறையில் அறிமுகப் படுத்திய தொகுதிகள் g60D6)Juu ITD.
1994இல் ‘மலையகப் பரிசுக் கதைகள்’ என்ற பெயரில் மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி ஒன்று வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து துரைவி வெளியீடாக தெளிவத்தை யோசெப்பினால் தொகுக் கப்பட்ட ‘மலையகச் சிறுகதைகள், உழைக்கப்பிறந்தவர்கள்’ என்ற இரண்டு தொகுதிகள் வெளிவந்தன. மலையக எழுத்தாளர்களை ஒருங்கே ஈழத்து இலக்கிய உலகம் அறிவதற்கு இத்தொகுதிகள் உதவின. இலங்கையின் சுதந்திரதின பொன்விழாவை ஒட்டி 1998ல் ‘சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தொகுதி வெளிவந்தது. இதில் ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் 50 பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அதேயாண்டு துரைவி வெளியீட்டினர் பரிசுபெற்ற சிறுகதைகள் - 1998’ என்று ஒரு தொகுதியை வெளியிட்டனர்.
இத்தொகுதிகளோடு அணிசேர்க்கும் வகையில் பல தொகுப்புக்களை
வெளியிட்ட பெருமை செங்கை ஆழியா னுக்கு உரியதாகும். 1997ம் ஆண்டு
வடக்குக் கிழக்கு மாகாண கல்வியமைச்சு செங்கை ஆழியானால் தொகுக்கப்
பட்ட 'மறுமலர்ச்சிக்கதைகள்’ என்ற தொகுப்பினை இலக்கிய உலகிற்கு
வழங்கியது. 1946 - 1948 காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் 'மறுமலர்ச்சி’ என்ற 8O

வாழ்வும் படைப்புகளும்
சஞ்சிகை வெளிவந்தது. மறுமலர்ச்சிக்காலம் என்று பேசப்படுகின்ற ஒரு இலக்கியக்கட்டத்தை அது உருவாக்கியது. அச்சஞ்சிகையில் வெளிவந்த 52 சிறுகதைகளில் 25-ஐத் தேர்ந்தெடுத்து இச் சிறுகதைத் தொகுதியை செங்கைஆழியான் வழங்கியுள்ளார். அ.செ.முருகானந்தம் இலங்கையர்கோன் வரதர், து. ருத்திரமூர்த்தி, சு.வே. நாவக்குழியூர் நடராசன், கு.பெரியதம்பி, நடனம், வே.சுப்பிரமணியம், தாளையடி சபாரத்தினம், சு.இராசநாயகன், எஸ்.ழரீநிவாசன், இ.பொன்னுத்துரை, சொக்கன், வல்லிக்கண்ணன் ஆகியோரின் சிறு கதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றன. ஒரு காலகட்டத்தின் சிறுகதை இருப்பினை அறிய இத்தொகுதி உதவுகின்றது.
இவ்வரிசையில் செங்கைஆழியானால் தொகுக்கப்பட்ட இன்னொரு பெரும் சிறுகதைத் தொகுதி ‘ஈழகேசரிச் சிறுகதைகள்’ ஆகும். 1930ம் ஆண்டிலிருந்து 1958ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் ஈழகேசரிப் பத்திரிகை இலக்கியத்துக்கு ஆற்றிய பணி அளப்பரியது. ஈழத்து இலக்கிய புனைகதைத் துறையின் ஈழகேசரிக் காலகட்டத்து சிறுகதைகள் 53 இத்தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றன. ஈழகேசரியில் வெளிவந்த 500 மேற்பட்ட சிறுகதைகளை ஆராய்ந்து அவற்றில் தகுதியான 53- இனைத் தெரிந்தெடுத்து இத்தொகுதியை செங்கைஆழியான் வழங்கியுள்ளார். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் என கருதக் கூடிய "தண்ணிர்த் தாகம் (ஆனந்தன்), கற்சிலை (நவாலியூர் சோ.நடராஜன்), வண்டிற் சவாரி (அ.செ.முருகானந்தன்), வெள்ளிப்பாதசரம் (இலங்கையர்கோன்), வெள்ளம் (இராஜ அரியரத்தினம்), ஒரு பிடி சோறு (கனக செந்திநாகன்), தோணி (வ.அ.இராசரத்தினம்) ஆகிய ஏழு சிறுகதைகள் ஈழகேசரியில் தான் வெளிவந்து இருக்கின்றன.
செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்ட இன்னோர் முக்கிய இலக்கியப்பணியாக ‘ஈழத்து முன்னோடிச் சிறு கதைகள்’ என்ற தொகுதியை குறிப்பிடலாம். ஈழத்தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடிகள் எனக் கருதக்கூடிய 25 எழுத்தாளர்களின் படைப்புகளை கொண்டதாக இச் சிறுக தைத்தொகுப்பு அமைந்துள்ளது. 1936ம் ஆண்டு வெளிவந்த சுயா என்பவரின் படுகொலை என்ற சிறுகதையில் இருந்து 1947ல் வெளிவந்த கு.பெரியதம்பியின் மனமாற்றம்’ என்ற சிறுகதைவரை இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. சோ.சிவபாதசுந்தரம், ஆனந்தன், பாணன், சம்பந்தன், சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், பவன், சி.வி.வேலுப்பிள்ளை, அ.செ.முருகானந்தன், சோதியாகராஜன், ! நவாலியூர் சோ.நட ராஜன், வரதர், அ.ந.கந்தசாமி, ! கனகசெந்திநாதன், சு.வே, நாவக்குழியூர் நடராஜன் , இராஜ அரியரத் தினம் , கே. கணே, கசின் , சொக் கன் , அழகு.சுப்பிரமணியம், சு.இராசநாயகன், தாளையடி | சபாரத்தினம் ஆகியோரின் அரிய சிறு கதைகள் இத்தொகுதியில் உள்ளன. காலம் காலமாக ஈழத் துச்சிறுகதை வரலாற்றில் நினைவு கொள்ளக்கூடிய தொகுதி இதுவாகும்.
8

Page 43
செங்கை ஆழியான்
செங்கைஆழியானின் இன்னொரு மாபெரும் தொகுப்பாக்கப் பணியாக 2002ம் ஆண்டு வெளிவந்த ‘சுதந்திரன் சிறுகதைகள்’ என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். 1947 இல் இருந்து 1983 வரை வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையில் இடம்பிடித்த 582 சிறுகதைகளில், 109 சிறுகதைகளைத் தெரிந்தெடுத்து அவற்றை உள்ளடக்கி, 716 பக்கங்கள் கொண்ட பெரும் தொகுதியாக இத்தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. இலங்கையில் வெளிவந்த மிகப் பெரிய சிறுகதைத் தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் ஈழத்தின் எழுத்தாளர்களில் பெரும்பாலானோரின் படைப்புக் கள் இடம்பிடித்துள்ளன. மூன்றரை தசாப்த காலத்து ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியை இத்தொகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
ஈழத்தின் நவீன இலக்கியத்துக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக நீர்ப்பாய்ச்சிவரும் மல்லிகைச் சஞ்சிகையின் சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு தொகுதிகளாக செங்கைஆழியான் தந்துள்ளார். அவை டொமினிக் ஜீவாவினால் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ளன. 'மல்லிகைச் சிறுகதைகள்’ முதலாவது தொகுதியில் 30 எழுத்தாளர்களின் படைப்புக்களும், தொகுதி இரண்டில் 41 எழுத்தாளர்களின் படைப்புக்களும் வெளிவந்துள்ளன. முன்னோடிச் சிறுகதைகள் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் என்பன எவ்வாறு மூத்த தலைமுறைப் படைப்பாளிகளை நவீன இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய தைப்போல, நவீன சிறுகதைப் படைப்பாளிகளை மல்லிகைச் சிறுகதைகள் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளன.
இவ்வாறு 1936இல் இருந்து 2003 வரையிலான சிறுகதைப்படைப்பாளிகள்
எழுதிய சிறுகதைகளை அப் பழைய பத்திரிகைகளில் இருந்தும் சஞ்சிகைகளில் இருந்தும் தூசுதட்டி சேகரித்து இலக்கிய உலகிற்கு அளித்தது போல, ஈழத்து சிறுகதை உலகிற்கு பெருமைதந்த தனிப்பட்ட படைப்பாளிகளின் சிறுகதைகளையும் தொகுதிகளாக வெளிக்கொண்டுவந்த பெருமை செங்கை ஆழியானுக்கு உண்டு. ஈழத்தின் மூத்த படைப்பாளியான சம்பந்தனின் சிறுகதைகள் பத்தினை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தொகுத்து, செங்கைஆழியானும், செம்பியன் செல்வனும் 1998 இல் ‘சம்பந்தன் சிறுகதைகள்’ என்ற பெயரில் ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கினர். 2005ம் ஆண்டு சம்பந்தனின் ஏனைய சிறுகதைகளையும் க. முருக தாசன் என்பாரின் உதவியுடன் தேடிப் பெற்று "துறவு’ என்ற பெருந்தொகுதியாகத் தந்துள்ளார்.
ஈழத்தின் இன்னொரு மூத்த எழுத்தாளர் புதுமை லோலன் ஆவார். அவர் எழுதிய சிறுகதைகளில் இன்று கிடைக்கக் கூடியவற்றை சேகரித்து ‘புதுமைலோலன் சிறுகதைகள்’ என்ற பெயரில் செங்கை ஆழியான் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஈழத்தின் தன்னிகரில்லாத ஓர் உன்னத படைப்பாளி முனியப்பதாசன் ஆவார். 1966ம் ஆண்டிலிருந்து 1967ம் ஆண்டு வரையிலான குறுகிய காலத்தில் 20க்கு உட்பட்ட அற்புதமான சிறுகதைகளை படைத்துத் தந்துள்ளார்.

வாழ்வும் படைப்புகளும்
இளவயதிலேயே காலமான முனியப்பதாசனின் சிறுகதைகளை தொகுத்து மல்லிகைப்பந்தல் ஊடாக வெளிவரவைத்த பணி செங்கை ஆழியானுடையது. இச்சிறுகதைத் தொகுதி வெளிவராவிடின் முனியப்பதாசன் என்ற உன்னத படைப்பாளியை ஈழத்து இலக்கிய உலகம் அறிந்திருக்க முடியாது போயிருக்கும். இவற்றுக்கெல்லாம் மேலாக சிரித்திரன் சிவஞான சுந்தரத்தின் (சுந்தர்), 'கார்ட்டுன் உலகில் நான்’ என்ற கட்டுரைத்தொடரை தேடிப்பெற்று அவரது முக்கிய கார்ட்டுன்களுடன் தொகுத்து மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவர செங்கைஆழியான் வைத்துள்ளார். மேலும் 'மல்லி கைச் சஞ்சிகையில் வெளிவந்த 25 சிங்கள எழுத்தாளர்களின் தமிழாக்கம் செய்யப்பட்ட சிறுகதைகளை தொகுத்து அதே மல்லிகைப்பந்தல் ஊடாக வெளிவரசெய்த பெருமையும் அன்னாரையே சாரும்.
1959ம் ஆண்டிலிருந்து ஈழத்து புனைகதை வளர்ச்சிக்கு ஈழநாடு பத்திரிகை கணிசமான பணியை ஆற்றி யுள்ளது. ஈழநாடு வார ஏட்டில் வெளிவந்த 799 சிறுகதைகளில் இருந்து 124 சிறுகதைகளைத் தேரிந்தெடுத்து அவற் றினை ஒரு பெரும் தொகுதியாக்கும் பணியில் இன்று செங்கைஆழியான் ஈடுபட்டுள்ளார் என்று அறிகின்றேன். இத்தொகுதியில் முதலாம் தலைமுறைப் படைப்பாளியிலி ருந்து ஏழந்தலைமுறைப் படைபாளிகள் வரை எழுதியுள்ள சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன என அறிய முடிகின்றது. எனவே செங்கைஆழியான் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச்சிறுகதைகள், முன்னோடிச் சிறு கதைகள், சுதந்திரன் சிறுகதைகள், மல்லிகைச் சிறுகதை கள், ஈழநாடு சிறுகதைகள் என ஈழத்தின் பிரதான படைப்பாளிகளின் சிறுகதைகளை ஒருங்கே தொகுத்துத் தந்துள்ளார். அத்தோடு சம்பந்தன் சிறுகதைகள், முனியப்பதாசின் கதைகள், புதுமைலோலன் கதைகள், சிங்களச் சிறுகதைகள் என்பனவும் அடங்குகின்றன. செங்கை ஆழியான் என்ற படைப்பாளி தனது படைப்புத் தொழிலுக்கு அப்பால் இத்தொகுப்புத் தொழிலில் ஏன் ஈடுபட்டார், என்பதை நினைக்க வியப்பாக உள்ளது. தனது இலக்கிய இருப்பை முன்னெடுத்துச் செல்வதோடு நின்று விடாது, ஈழத்தின் இலக்கிய இருப்பையும் முன்னெடுத்துச் செல்லும் பெருவிருப்பு அவருக்கு உள்ளமையின் விளைவே இத்தொகுப்பாக்கப்பணிகள் என நம்புகின்றேன். இத்தொகுப்புப்பணிக்கு செங்கைஆழியான் என்ற படைப்பாளிக்கு ஏனையோர் கூறுவது போல, குணராசா என்ற நிர்வாகி உதவியுள்ளார். நிச்சயமாக ஏனைய எவராலும் ஆற்றயிருக்க முடியாத பணி. காலத்தாலும் நமது நாட்டின் அசாதாரண போர்ச்சூழலாலும் அழிந்து மறைந்து போகக் கூடிய நிலையில் உள்ள நமது பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் தேடிப்பெற்று அவற்றின் புனைகதைகளை ஆவணப்படுத்திய பணியை இலக்கிய உலகம் என்றும் மறக்காது.

Page 44
ஓ! அந்த அழகிய பழைய உலகம் தி.வேலாயுதபிள்ளை
செங்கைஆழியானின் புதியதோர் நாவலான ஓ அந்த அழகிய பழைய உலகத்தில் அவர் கூறுவதுக்கு எடுத்துக் கொண்ட கருப்பொருளும் செய்திகளும் வித்தியாசமானவையாகவும் தத்துவத்துவார்த்தமானவையாகவும் இருக்கின்றன. இந்த நாவல் செங்கைஆழியானின் ஏனைய நாவல்களில் இருந்து வேறுபடுவதற்கு இதுவே காரணமாகும்.
செங்கைஆழியான் நாடறிந்த பிரபல எழுத்தாளர். நல்லதொரு நாவல் ஆசிரியர். இந்த நாவலில் இரு வேறுபட்ட களங்கள், முரண்பட்ட பாத்திரங்கள் என்பன ஒப்பீட்டு வகையாக விபரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களின் சந்தடி மிக்கதும், நவீன நாகரீகம் நிலைத்ததும், இயந்திரமயமானதுமான வாழ்வினையும், கிராமப்புறங்களின் அமைதியும் அழகும் இயற்கையோடு இணைந்ததுமான வாழ் வினையும் ஒப்பிட்டு இந்த நாவல் சித்திரிக்கின்றது.
இந்த நாவலில் வரும் கதாமாந்தரும் முரண்பட்ட இயல்புடையவர். வகைமாதிரி பாத்திரங்கள். நகரவாழ்வில் சந்தடிமிக்க இயந்திர வாழ்வை வெறுத்து அமைதியான கிராமத்துக்கு வரும் கனகவடிவேலர், அமைதியான கிராம வாழ்வை வெறுத்து நாகரிகமான நகர வாழ்வை விரும்பும் பெரியகமக்காரர், வரட்டு இலட்சியம் பேசாது இலட்சிய வாழ்வு வாழும் சீராளன், முற்போக்குப் பேசி முரண்பட சந்தர்ப்ப வாழ்வு வாழும் செல்வச்சந்திரன, சமூக ஒழுக்க வேலிக்குள் வாழும் மயிலம்மை, அந்த ஒழுக்க வரம்பை மீறும் செல்லம்மா, இப்படிப் பாத்திரங்களின் முரண்பட்ட போக்குகளைச் செங்கைஆழியான் "ஓ அந்த அழகிய பழைய உலகம்’ நாவலில் சித்திரித்துள்ளார். அவ்வகையில் இந்த நாவல் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.
செங்கைஆழியானின் நாவல்களில் காணக்கூடிய தனித்துவ முத்திரைகளை இந்த நாவல்களிலும் காண முடியும். கதையம்சம், பகைப்புல விபரணை, புதிய செய்தி கள், வகை மாதிரிப்படைப்பு, எளிமையும் இனிமையும் | நிறைந்த நடை சிந்திக்கத் தூண்டும் உரையாடல். என்பன வற்றோடு, செங்கை ஆழியானின் இந்த நாவலில் சமகால சமூக, அரசியல் , தத் துவ விசாரங்களும் இடம்பெற்றுள்ளன.
84
 

வாழ்வும் படைப்புகளும்
ஒய்வு பெற்ற பொறியியலாளர் கனகவடிவேலர் நகரத்தினை வெறுத்து அமைதியான வாழ்கையைத் தேடி அறுகுவெளிக் கிராமத்துக்கு வருகின்றார். அங்கு அவருக்கு ஏற்கனவே பரீட்சயமான பெரியகமக்காரரும், பெரிய விதானையாரும் தங்க வசதி செய்து கொடுக்கிறார்கள். இயற்கையோடு இணைந்து வாழும் கிராம மக்களின் அமைதியான வாழ்க்கை அவருக்குப் பிடித்துப் போகின்றது. யானையால் அடிக்கப்பட்டு வலுவிழந்த கணவனைப் பராமரித்துவரும் மயிலம்மை, பெண்கள் விடயத்தில் கடும் சபலம் கொண்டலையும் செல்வச்சந்திரன், அப்பாவியான முத்தையா அவர்களுடன் பழகுகிறார்கள். கிராமத்தின் இயற்கை வாழ்வு படிப்படியாக கரையத் தொடங்குகின்றது. நவீன தொழில் நுட்பக்கருவிகள் கிராமத்துக்குள் அறிமுகமாகின்றன. கனகவடிவேலர் அக்கிராமத்தை விட்டு புறப்படுகின்றார். இதுதான் கதை.
செங்கைஆழியானின் நாவல்களில் காட்டுக்கிராமங்கள் பகைப்புலமாக அமைவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். “காட்டாறு, யானை, கனவுகள் கற்பனைகள் ஆசைகள், ஒரு மையவட்டங்கள்’ என்பன இத்தகைய பகைப் புலத்தைக் கொண்டவை. காட்டின் அழகும் கிராமத்தின் அமைதியும் அவரது நாவல்களில் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. பகைப்புல விபரணை செங்கைஆழியானின் நாவல்களில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது. பகைப் புலத்தை கண்முன் நிறுத்துவதும் அப்பகைப்புல இயல்புகளை அறிவுபூர்வமாக முன்வைப்பதும் இந்த நாவலுக்குச் சுவைசேர்க்கின்றன.
‘ஓ அந்த அழகிய பழைய உலகம்’ நாவலில் புதிய செய்திகள் நிறையஆவ உள்ளன. வெறும் கதை மட்டும் நாவல் ஆகாது. அதனுாடே வாசகர்களுக்கு தரும் தகவல்கள் ஒரு நாவலின் சிறப்புக்குச் சுவைகூட்டுவன. காடுபடு திரவியங்ளை மனிதன் சேகரிப்பதில் உள்ள நுட்பங்கள் வியப்பைத்தருகின்றன. அவற்றை செங்கை ஆழியான் விபரிப்பதற்கு கையாலும் உரைநடை எளிமையும் இனிமையும் கலந்தது. படிப்பவனுக்கு களைப்பைத்தராது சிந்திக்கத் தூண்டுவது.
செங்கைஆழியான் இந்த நாவலில் முன்வைக்கும் தத்துவவிசாரங்கள் பிரச்சினைக்கும் விவாதத்துக்கும் உரியவை. “மனிதனுக்கு கல்வி அவசியமா? என்று கனக வடிவேலர் கேட்கின்றார், ‘இயல்பான ஆசைகள் ஒழுக்க வரம்புகளால் சிறைப்பட வேண்டுமா?’ என்றும் கேட்கின்றார். ‘கிராமங்கள் நவீனப்படக்கூடாது' என விரும்புகின்றார். 'வானொலி, தொலைக்காட்சி, ஒலிபரப்பி முதலான நவீன கருவிகள் இயற்கை வாழ்வைச் சீர்குலைப்பன’ என கவலைப்படுகின்றார். கனகவடிவேலரைப் பொறுத்தவரையில் அவர் இவற்றை வாழ்ந்து சுவைத்தவர். அவருக்கு சரியாக இருக்கலாம். ஆனால் காலதேச வர்த்தமானங்களைக் கடந்த மாறுதல்கள் தடுக்கப்பட முடியாதவை. கிராமங்கள் நகரங்கள் ஆவதும் கிராமிய மக்கள் நாகரிகத்தின் பிடியில் தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாதவை. நவீன சாதனங் களின் இனிமையையும், உதவிகளையும், அழிவுகளையும் தெரிந்து அனுபவிக்கும் உரிமை ஒரு பகுதி மக்களுக்கு கிடைக்காமல் போவது இன்றைய
85

Page 45
செங்கை ஆழியான்
உலகின் நியதியாகக் கூடாது. இந்த நாவலில் இரு பக்க நியாயங்களும் எடுத்துக்காட்டப்பட்டுள்ள போதிலும் கனகவடிவேலனின் நியாயமே மேலோங்கி நிற்கின்றது. கிராமங்கள் கிராமங்களாகப் பாதுகாக்கப்படத்தான் வேண்டும். ஆனால் நவீன அபிவிருத்தியினதும் கருவிகளினதும் ஆக்கத்தையும் அழிவையும் கிராமமக்களும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அது மறுக்க முடியாத கால நியதி. இவ் விடயங்களை செங்கை ஆழியான் தனது நாவலில் வற்பு றுத்தியிருக்கலாம்.
எவ்வாறாயினும் செங்கைஆழியானின் "ஓ அந்த அழகிய பழைய உலகம்’ நல்லதொரு நாவல். சமகால சமூக அரசியல் சிந்தனைகள் நிறைந்த நாவல்.
(மல்லிகை மே - 1985)
Fழத்தின் புகழ் மிக்க நாவல் ஆசிரியர் செங்கை ஆழியானின் ‘ஓ அந்த அழகிய பழைய உலகம்’ என்ற நவீனம், ஈழத்தில் வெளிவந்த நாவல்களில் சற்று வேறுபட்ட கருப்பொருளையும் சமூக அணுகலையும் கொண்டதாக உள்ளது. நகரப்புறத்தின் நவீன நாகரிக வாழ்வை வாழ்ந்து வெறுத்த கனகவடிவேலர் என்ற இஞ்சினியர், நவீன தொழில் நுட்ப அறிவுவிருத்தி மனிதனின் அமைதியையும் அழகையும் குறைத்து விட்டதென நம்புகின்றார். இயற்கையோடு இணைந்த வாழ்வைக்கொண்டிருந்த பழைய உலகமே மனித சாந்திக்கும் நிம்மதிக்கும் ஏற்றதென்று எண்ணுபவர் அவர். அந்தப் அழகிய பழைய உலகத்தைத் தேடி காட்டுப்புறக் கிராமம் ஒன்றுக்கு வருகின்றார். அந்தக் கிராமத்தின் சூழல், அமைதி அவருக்குப் பிடித்துக் கொள்கிறது. ஆனால் படிப்படியாக அந்தக் கிராமத்தை நகர்ப்புற நாகரிகக் கருவிகள் ஆக்கிரமிக்க பழைய உலகம் அழிகிறது. இந்தக் கருப்பொருளை செங்கைஆழியான் தனது நாவலில் நன்கு காட்டியுள்ளார்.
செங்கை ஆழியானின் நாவல்களின் வெற்றிக்கு பகைப் புல விபரணை ஒரு முக்கிய காரணமாகும். சாதாரண வாசகனுக்கு பரிட்சியமில்லாத சூழலைக் கூட செங்கை அழியான் தன் வார்த்தைகளால் கண் முன் நிறுத்திக் காட்டி விடுவார். ஆற்றில் கதை மாந்தர் நடக்கும் போது கூடவே நாமும் நடப்பது போலவும், அந்தச் சூழலின் இனிமையை அனுபவிப்பது போலவும் உணருகின்றோம். காட்டினுடாகச் செல்லும் குளக் கட்டில் பயத்துடன் கனகவடிவேலர் ஓடும் போது நாமும் தனிமையின் பயப்பிராந்தியுள் விழுந்து ஓடுகின்றோம். காடும் கழனியும், நதியும் குளமும் செங்கை ஆழியானின் இந்த நாவலில்
86

வாழ்வும் படைப்புகளும்
கதையோட் டத் தோடு இணைந்த விபரணங்களாக காட்டப்பட்டிருக்கின்றன. கிராமத்தின் இனிமையை பழக்கமற்ற வாசகர்களுக்குத் தருகின்றன.
பழமை மாறுவது தவிர்க்க முடியாத நியதி. நவீன தொழில் நுட்ப அறிவியலின் சிறைக்கூடத்துள் மனிதர், கைதிகளாகி வருகின்றனர். இயந்திரங்களின் வருகை மனிதரின் நிம்மதி, அமைதி, இயல்பு என்பனவற்றைப் படிப்படியாக குறைத்து விடுகின்றன. அழிவுக்கருவிகள் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகி வருகின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வை மனிதர் கைவிட்டு இயற்கையை மாற்றி விடும் சிற்பிகளாக மாறிவருவது பழைய இனிய உலகத்தினை நினைத்து ஏங்க வைத்துவிடுகின்ற மேன்மையை இந்த நாவல் சித்திரிக்கின்றது.
கனகவடிவேலரூடாகச் செங்கைஆழியான் காட்ட விரும்பும் புதிய உலகு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது கேள்விக்குரியது. அண்மையில் கூட மகியங்கனை வேடுவத்தலைவர் திசகாமி மாகாவலித் திட்ட பிரதேசத்தில் புதிய வாழ்வை ஏற்க மறுத்தமைக்குக் கூறிய காரணங்கள், “உங்கள் நாகரிக வாழ்வே மக்களைப் பழுதாக்கி விடும். குடியும் போதைவஸ்தும் சண்டை சச்சரவுகளும் எங்கள் அன்பான வாழ்வைச் சீரழித்துவிடும்” என்பதாகும். திசகாமி தனித்து நிற்க ஏனைய வேடுவ மக்கள் புதிய நாகரிக வாழ்வின் சிறையுள் வீழ்திருப்பது தவிர்க்கமுடியாத நியதி தான் செங்கைஆழியானின் "ஓ அந்த அழகிய பழைய உலகம்’ என்ற நாவலும் இத்தகைய ஒரு புதிய செய்தியைத் தான் பேசுகின்றது.
செங்கைஆழியானின் அனுபவ முதிர்ச்சியையும் ஆளுமையையும் இந்த நாவலில் காணமுடிகின்றது. அந்த கிராமத்தின் ஆத்மாவைச் சமகால சமூக அரசியல் பின்னணியில் அதன் பலத்தோடும் பலவீனத்தோடும் இந்த நவீனம் உணர்த்துகின்றது.
(தினகரன் 12 - மே - 1985)
-எஸ்.சுப்பிரமணியம்

Page 46
தீம் தரிகிட தித்தோம் செ.சிவஞானசுந்தரம் (நந்தி)
உலகரீதியில் உன்னதமான நாவல் என்று கணிக்கப்பட்ட ஒரு படைப்பு இன்னும் தமிழில் வெளிவரவில்லை. அத்தகைய ஒரு நாவலை எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் நம்மிடையே இருவர். ஒருவர் கே. டானியல். அவர் இப்போது இல்லை. மற்றவர் செங்கைஆழியான். இன்னும் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேல் எழுதக் கூடிய வயதினர்.
செங்கைஆழியான் தன்னுடைய இன்றைய வளர்ச்சியின் பரிணாமத்தை நன்கு அறிந்தவள். அதை மூன்று கால கட்டங்களாக இனம் கண்டவள். (முன்னுரை காட்டாறு) எதிர் காலத்தில் அவர் சாதிக்க வேண்டியதை எடுத்துக் காட்டுவது இலக்கியத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.
தமிழில், முக்கியமாக நமது நாட்டிலே, வெளிவரும் நாவல்களில் பெரும்பாலானவை குறுநாவல்கள் தாம். அல்லது பூரண வளர்ச்சியடையாத குறளை நாவல்கள். இதற்குப் பல காரணங்கள். முக்கியமாக அவை பொருளா தார வசதி சம்பந்தமானவை. தமிழன் மாடமாளிகைகள் கட்டும் நிலையிலில்லை. சிறு வீடுகளைத்தான் கட்டிப் பெயர் சூட்டி புதுமனை புகுவிழா கொண்டாடி மகிழ முடியும். இலக்கிய முயற்சிகளும் அவ்வாறே. இப்போதைய நிலையில் தாஜ்மகாலும், மீனாட்சி கோயிலும் கட்டுவதற்கோ உட்கார்ந்து இராமாயணம், அன்னாகரீனா, டொக்டர் சிவாகோ எழுதுவதற்கோ வசதிகள் இல்லை. இப்படியாகப் பலவிதங்களில் 'வசதி” என்ற போணை கிடையாவிட்டால் ஒருவரின் ஆற்றல் வளருவதற்கும் வாய்ப்பு மந்தமாகும்.
செங்கை ஆழியான் இயற்கையாகவே எழுதும் ஆற்றல் மிகுந்தவர். 1962 ஆம் வருடம் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலம் தொடக்கம் கால் ஆ நூற்றாண்டு காலமாகச் சரித்திர நாவல், சமுகநாவல், நகைச்சுவை நாவல் என்னும் வகையில் அவருடைய பேனா வைத்த ஆக்கங்களிலே எல்லாம் அந்த ஆற்றல் தெரிகின்றது. இந்த ஆற்றல் பெரும்பாலும் 100-200 பக்கங்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது.
நாவலின் வகையில் மட்டுமல்ல, எடுத்துக் கொண்ட பகைப்புலத்தின் காட்சியிலும், கருத்துக்களின் ஆட்சியிலும் அவரின் புலமை புலனாகின்றது. சுருட்டுத் தொழிலாளர் (இரவின் முடிவு), சலவைத்தொழிலாளர் (பிரளயம்), மீனவர்
88
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வும் படைப்புகளும்
(வாடைக்காற்று), காடுசார்ந்த விவசாயிகள் (காட்டாறு) ஆகியோரின் வாழ்வு தாழ்வுகளை மனிதாபிமானம் மிளிரக் காட்டியுள்ளார். அவருடைய 'வாடைக்காற்று இலக்கிய உலகில் வீசியபோது பலவிதமான விமர்சன ஓசைகளை உண்டு பண்ணியது. அதைத் தொடர்ந்து வந்த "காட்டாறு’ நாவலாசிரியர் என்ற முறையில் அவர் மேல் பெரும் மதிப்பையும் நியாயமான நம்பிக்கையையும் வைக்கச் செய்தது. அந்த நாவல் தரமான உரை நடை இலக்கியத்திற்கு அவரால் ஆற்றக் கூடிய சேவையின் முதற்படியாகும். அநேகரால் இன்னும் காலெடுத்துவைக்காத கட்டம் அது.
தீம் தரிகிட தித்தோம்' - என்ற இந்த நூல் ஒரு புதிய முயற்சி. 800 பக்கங்களில் காவியமாக எழுதப்பட வேண்டிய கருப்பொருளும், உருவப் பொருளும், அப்படி எழுதக் கூடிய ஆற்றல் உள்ள ஒருவரால் 80 பக்கங்களில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. ஆல் ஆகப் பரந்து நிற்க வேண்டிய ஒரு விருட்சம் ஒற்றைக் கொப்பு வைத்த தென்னையாகி, புதுமை என்றதனால் பார்ப்பதற்குக் கவர்ச்சி யாகவுள்ளது. இது இன்றைய சமுகக் குறுநாவல் வருங்காலத்தின் சரித்திரக் குறுநாவல். இது போன்ற கருவும், உருவும், திருவும் கொண்டதாக ஓர் உரை நடைக்காவியம் படைப்பதற்கு மிகவும் தகுதியானவர் செங்கைஆழியான். அது அவருடைய நான்காவது கட்ட வளர்ச்சியாக அமைய வேண்டும். அந்த நாவல் 500 - 1000 பக்கங்கள் கொண்டதாக இருக்கும். பக்கங்களின் எண்ணிக்கையை வைத்துத்தான் காவிய-இலக்கிய மேன்மை ஏற்படுவதென்பதில்லை. ஆனால் அழகான சிட்டுக் குருவிக்கு போயிங் விமானம் காவும் வலிமை இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உரைநடையில் எழுதப்பட்டு, சர்வதேசப் புகழும் பரிசும் பெற்ற இலக்கியப்படைப்புக்கள், விசாலமான பகைப்புலமும், பலரகக்கதாமாந்தரும், காத்திரமான கருத்துக்களும் கொண்ட பெரிய நூல்களாக இருப்பது கண்கூடு. கவிதையில் மட்டுந் தான் விலை உயர்ந்த இலக்கிய ஆபரணம் செய்ய முடியும். அந்த விலை மதிப்பில் நுட்பமான உரைநடை ஆக்கங்கள் மாமல்லபுரம் போலவும், தஞ்சைப் பெரியகோயில் போலவும் விசாலமாகவும் பெரிதாகவும் இருப்பதைத் தவிர்க்க முடியாது.
செங்கைஆழியானின் எழுத்து நடையில் வசீகரமுண்டு. ஆனால் அவர் எழுதியவற்றை ஒருமுறையாவது திருத்தி எழுதுவதில்லை. அது ஒரு தேவையாகவும் அவருக்குத் தோன்றுவதில்லை. பிறந்தமேனியுடனும் பெற்றவரின் அழுக்குடனும் - First Dtaft- ஆக இருக்கும் ஆக்கங்களையே நமக்குத் தருகிறார். இதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. அழகு செய்யாமலேயே 'காட்டாறு போன்ற நாவலை அவர் தர முடியுமானால் மேல் நாட்டு இலக்கிய மேதைகள் 10-15 தரம் திருத்தியமைப்பதுபோல இவர் ஓரிரு தடைவையாவது திருப்பி எழுதினால், இவருடைய படைப்புகளின் ஐசுவரியம் எத்தகையதாக இருக்கும் என எண்ணி அங்கலாய்க்க வேண்டியுள்ளது. எனக்கு வயது 60 வயதின் வலுவை வைத்து ஒரு வேண்டுகோள் செங்கைஆழியான், மக்களுக்குக் குறுநாவல் களைத் தொடர்ந்து தரும் அதே வேளையில் 5 வருடத்திட்டத்தில் தமிழில் ஒரு நாவல் காவியம் படைக்க வேண்டும். அந்த முயற்சி 5 முறையாவது தருத்தி எழுதப்பட்டு, மிகவும் உன்னதமான பரிசாகத் தமிழன்னைக்குத் தரப்படவேண்டும்.
89

Page 47
செங்கை ஆழியான்
அப்போது ஒரு சர்வதேசப் பரிசு செங்கை ஆழியானுக்குக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் வரும் சந்ததியில் அத்தகைய பரிசையும் பெருமையையும் பெறப்போகும் இலக்கியக் கலைஞன் கண்டிப்பாக செங்கை ஆழியானின் வாரிசாக இருப்பான்; அல்லது இருப்பாள்.
30. O3. 1988
‘ஒரு தமிழ் இளைஞனும் சிங்களப் பெண்ணொருத்தியும் உயிருக்குயிராய்க் காதலிக்கிறார்கள். கடைசியிச் அற்தக் காதல் தோல்வி பெற இனவெறி காரணமாகிவிடுகின்றது. அதோடு ஈழப்பிரச்சினையின் வேர் மூலம் எது என்பவை அரசியல் பின்னணியோடு தொட்டுக்காட்டுவதுதான் தீம்தரிக்கிடத்தித்தோம். 1956 இல் சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்டபோது தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம் பலம், சி.சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்விக முறையில் கிளர்ச்சி நடாத்தி, தமிழ் மக்களின் அதிருப்தியைத் தெரிவித்தனர். அறவழியில் நடந்த அந்தத் தலைவர்களின் போராட்டத்தை ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான போர்’ என்று அர்த்தப்படுத்தி, அன்றைய இலங்கைப்பிரதமர் பண்டாரநாயக்கா பொலிசாரின் பலத்த பாதுகாப்போடு சிங்கள ரெளடிகளை ஏவி, போராடிய ஈழத்தமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரையாகத் தமிழ் மக்கள் வாழக் கூடிய தமிழ்ப்பிரதேசங்களில் சிங்கள மக்களை வலிந்து குடியேற்றி, பொருளாதார சமுக கலாசார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதோடு, சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழியாக்கியிருப்பது, தமிழ் பேசும் இனத்தை நசுக்கி தமிழ் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் பிரிவினை உணர்சியாகும். என்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தலைவர்கள் முழங்கினர்.
நின்றால் குத்து', நடந்தால் வெட்டு’ என்பது மாதிரி கண்ணில் கண்ட
தமிழரை எல்லாம் ஒடஒட அடித்து விரட்டினர். தமிழனா சிங்களவனா என்று அடையாளம் தெரியாத சிங்கள ரெளடிகள், அவர்களுடைய தலையை முகர்ந்து பார்த்து ‘நல்லெண்ணெய் மணத்தால் அவன் தமிழன், காதுகளில் கடுக்கன் போடட் துளைகள் தெரிந்தால் அவன் தமிழன்’ என்று வீதிகளில் உருட்டி உருட்டி அடித்தனர். இவையெல்லாம் இந்த நாவலில் வரும் நடுங்க வைக்கும் சம்பவங்களாகும்.
தமிழர்கள் தாக்கப்படும் சூழலில் பிரதமரின் மகனின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அந்தத் தலைவர்கள்,’அரசியல் வேறு. நட்பு வேறு' என்று கதைத்துக் கொண்டு கேளிக்கைக் கூத்துகளில் ஈடுபடுவதாய் நாவலில் வரும் சம்பவம் நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அந்தப் போலித் தலைவர்களின் மித வாதத்தில் நம்பிக்கை இழந்து தமிழிளைஞர்கள் ஆயுதமேந்திப் போராட ஏன் நிர்ப்பந்திக்கப்பட்டர்கள் என் பதை உணர்த்தும் விதமாய் இச்சம்பவம் அமைந்துள்ளது.
முந்தைய மிதவாதிகளின் தலைமையில் நடந்த போராட்ட காலத்தை
தன்னுள் கொண்டுள்ள இவ்வரலாற்று நாவல் ஆரம்ப கால ஈழப்போராட்ட வரலாற்றை அறிய நமக்கு பெரிதும் பயன்படும். நாவலின் படைப்பாளி செங்கை
ஆழியான். -க. சந்திரசேகர்.
90

நடந்தாய் வாழி, வழுக்கியாறு *சிரித்திரன்’ சுந்தர்
ஒரு அபிமான நடிகனுக்கும் ரசிகர்களுக்கு மிடையில் திரை எப்படியோ அப்படித்தான் எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்குமிடையில் முன்னுரை. எனது முன்னுரையாகிய நந்தியை வாசகர்கள், “சற்றே விலகி நில்லும் பிள்ளாய்” எனத்தட்டிவிட்டுத் தமது அபிமான எழுத்தாளனின் இலக்கியத்தைச் சுவைக்க (pbb6M) TLD.
நடந்தாய் வாழி வழுக்கியாறு’ சிரித்திரன் ஆண்டு மலரில் பிரசுரமானது. ஆகவே அது புத்தகமாக வெளிவரும்போது உங்களுடைய முன்னுரையுடன் வெளிவருவதே பொருத்தமானது'எனச் செங்கைஆழியான் கூறிவிட்டார். தட்டிக் கழிக்க முடியாத தர்மசங்கடமானநிலை.
செங்கை ஆழியான் தனது எழுத்து ஆளுமையால் தனக்கென்று ஒரு ரசிக சாம்ராச்சியத்தையே உருவாக்கி எழுது கோலோச்சிக் கொண்டிருக்கிறார். இவரின் சாம்ராச்சியத்தின் பிரஜை ஒருத்தியை நான் கண்ட ஒரு சிறு பேட்டியை இங்கு கூறுவது பொருத்தமாயிருக்கும்.
நான் வீடு தேடும் படலத்தில் அலையாய் அலைந்த காலமது. நல்லூர் கோயில் வீதியில் ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக ஒரு நண்பர் கூறினார். அங்கு விரைந்தேன். வாசலில் நின்ற ஏந்திளையாள் பளிச்சென, மன்னிக்க வேண் டும். வீடு கொடுத்தாச்சு’ என மின்னினாள். அவள் கூற்று என் காதில் FL19u Tull பாயவில்லை. காரணம். ஏந்திளை யாள் சிரித்திரன் ஆண்டு மலரை ஏந்தி நின்றாள்.
'சிரித்திரன் மலர் படித்து முடித்துவிட்டீர்களா?"எனக் கேள்விக்கணை தொடுத்தேன்.
'இப்போது தான் நடந்தாய் வாழி வழுக்கியாறு படித்து முடித் தேன். தரகர் மயில வாகனமும் சண்டியன் செல்லத்துரையும் கதையைச் சுவாரஸ்யமாக நகர் த துகன் றனர் கனவான் முகத் தாரின் முகமூடி கடைசியில் கிழிவது கதையைக் களை கட் டச் செயப் கலிறது. செங் கை ஆழியான்
9.

Page 48
செங்கை ஆழியான்
தனது புவியியல் அறிவை வரிந்துகாட்டாது இயல்பாக இயற்கை வளத்தை விபரிக்கின்றார். சமுகவியலையும் புவியியலையும் கலந்த சுவையான கலாபாணி அவரின் படைப்புகள்’ எனத் தனது கருத்தைச் சொல்லி முடித்தார்.
வீட்டுப்பிரச்சினையை மறந்து வீடு பேறு பெற்றவனின் பேரின்ப நிலையில் நின்றேன். ஒரு நல்ல வாசகியைச் சந்தித்த பரமானந்தம்.
நீண்ட காலமாக நான் அந்தகக்கவி யாழ்ப்பாடி பரிசாகப் பெற்ற யாழ்ப்பாணத்தில் ஆறுமுகத்தான் கோயில் கள் மலிந்திருப்பதன் மர்மம் என்ன என்று சிந்தித்ததுண்டு. நடந்தாய் வாழி வழுக்கியாறு படித்த பிறகு அந்த மர்மமும் துலங்கியது. அது கள்ணபரம்பரைக் கதையாக இருந்த போதும் மனதிற்கு ஒரு நிறைவைத் தருகின்றது.
விபீணன் இலங்கையை ஆண்ட காலத்தில் பெருமாலியன் என்ற அரக்கன் வழுக்கியாற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துள் ஆழ்த்தப் பார்த்தான். அப்போது பிள்ளையார் தோன்றி அவனைக் கொன்று வழுக்கியாற்றைப் பாயவிட்டு யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றிய தாக பாட்டா கூறியதாக செங்கைஆழியான் எழுதியுள்ளார்.
சிலசீவசெந்துகள் மாரி காலத்தில் தோன்றி கோடை காலத்தில்
மறைவதைப்போல எமது ஜீவநதியாகிய வழுக்கியாறும் தோன்றி மறையும் இயல்புடையது. இருந்தும் மலையில்லாத மண்ணில் ஒரு ஆறு மாரி காலத்திலாவது ஓடுவது ஆறுதல் தருகின்றது. மலைப்பிரதேசங்களில் ஊற்றெடுக்கும் 'ஓயா’க்களே கோடைகாலத்தில் ஒய்வெடுக் கும்போது வழுக்கியாறு கோடைகாலத்தில் முகிலாகி மாரிகாலத்தில் நதியாகினால் என்ன?
தேம்ஸ், வொல்கா, கங்கை போன்ற நதிகள் மண்ணைமட்டும் வளப்படுத்தாது இலக்கியத்தையும் வளப் படுத்துகின்றன. வழுக்கியாறும் தனது கடமையில் வழுவ வில்லை. உழவுக்கும் உதவி செங்கை ஆழியான் பேனாவூடாகப் பாய்ந்து மண்வள இலக்கியத்தையும் வளம் படுத்தியுள்ளது.
ஒரு கையால் நாடித்துடிப்பைப் பார்த்துக் கொண்டு மறுகையால் மருந்து எழுதும் வைத்தியர் போன்றவர் செங்கை ஆழியான். மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து பேனாவை நகர்த்துபவர். அந்தத் துடிப்பின் ஆக்கங்களே அவரின் நாவல்களும் நவீனங்களும்.
விலைவாசி உயர்வு எம்மைக் குலைநடுங்கச் செய்கின்றது. சஞ்சிகைகளின் விலை தலை சொறியச் செய்கின்றது. புத்தகங்களின் விலை தலை சுற்றச் செய் கின்றது. மகுடியார் பதிலை இங்கு நினைவு கூர்வது நல்லது. ‘புத்தகங்களின் விலை உயர்ந்து கொண்டு போகின்றது. ஏழைகள் வாசிப்பதில்லையா?’ என்ற கேள்விக்கு மகுடியார் அளித்த பதில் சிந்திக்கச் செய்கின்றது. ‘பியானோ பணக்கார வீட்டு வாத்தியம். ஏழை வாசிக்க முடியாது. அதேபோன்று புத்தகத்தின் விலையும் உயர்ந்துவிட்டது.’ எனப் பதில் கூறியுள்ளார்.
எமது மேடை இலக்கிய இரட்சகர்கள் இலக்கியத்தைப் பாவ புண்ணிய எடைபோடுவதுடன் மட்டும் நிற்காது ஏழை எழுத்தாளர்களின் புத்தகங்களையும் 92

வாழ்வும் படைப்புகளும்
பிரசுரிக்கும் பிரசுரிக்கும் புண்ணிய மார்க்கங்களையும் கூற வேண்டும். இன்று பணவசதியுடைய எழுத்தாளர்களே தமது கருவைப் புத்தக உருவில் காணும் பாக்கியவான்கள்.
எமது வெளியிடுகள் மக்களின் வாசல்படிக்குப் போக வேண்டும். இந்தப்பாணியில் செங்கை ஆழியானுக்குப் பெரும் பங்குண்டு.
(ஜனவரி 1984)
'வாழி நீ வழுக்கியாறு’ என்னும் சிறு நாவல் சிரிப்பதற்காக எழுதப்பட்டது போலக் காணப்பட்டாலும் அதில் இருக்கும் "சீரியஸ்’ மிகவும் கனமானது. ஆரம்பத்தில் கணவன் மனைவி ஊடலிடையே வெளிப்படும் வார்த்தைகள் கதையின் முடிவிற்கு சிறந்த அத்திவாரமாகின்றது. நகைச்சுவை நவீனம்தான் மேலாகப் படிப்பவர்களுக்கு. ஆனால் ஆழ்ந்து படிப்பவர்களுக்கு.? சமுக அவலங்களை எந்தளவிற்குக் கொடுரமான குரூரச்சிரிப்பாக வெளியிட முடியும் என்பதற்கு இந்த நாவல் சிறந்த எடுத்தக் காட்டு. மண்ணின் நயவஞ்சகங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி அவர்களை முடிவில் அதிர்ச்சியடையச் செய்யும் கலை இலகுவில் கைவராத ஒன்று. (10.07.1984) -செம்பியன் செல்வன்
"முற்றத்து ஒற்றைப்பனை.
பிரபல நாவலாசிரியர் செங்கை ஆழியான் எழுதிய ஒரு குறுநாவல் இது. 1972 ம் ஆண்டு வெளியான நாவல். அப்போது அதைப் படித்தேனோ தெரியவில்லை. படித்திருந்தாலும் துப்புரவாக மறந்து விட்டேனென்று சொல்ல வேண்டும். மறதி என்னுடைய பெரும் சொத்து. இந்த வாரம் முற்றத்து ஒற்றைப் பனையைப் படித்தேன். படித்ததும் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்டது. அப்படி ஒரு நாவல். இந்த நாவலைப்படித்தபோது சில இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்ததும், நூலின் முதலாம் பக்கத்தில் ‘இது ஒரு நகைச் சுவைச் சித்திரம்’ என்று குறிப்பிட்டிருப்பது ஒரு புறமிருக்கட்டும்.
இது வெறும் நகைச்சுவைச் சித்திரம் மட்டுமன்று. யாழ்ப்பாணத்தின் ஒரு பக்கத்தைச் செங்கை ஆழியான் அற்புதமாக- யதார்த்தமாக சித்திரிக்கிறார். கொக்கள் மாரி முத்தர் அம்மான், :
அவர் மனைவி பொன்னு ஆச்சி,
96) busi) bit flui, 93

Page 49
செங்கை ஆழியான் ஏனோ என்னைச் சிரிக்க வைத்த அந்தச்சிறுவன் வேலாயுதம் என்ற சூலாயுதம்.
தம்பையா அண்ணை. விதானையார்.
இந்தப் பாத்திரங்களுக்கெல்லாம் உயிர் கொடுத்து, யாழ்ப்பாண மணம் வீசப் படைத்திருக்கிறார் செங்கை ஆழியான். இப்போது இருபத்தைந்து நாவல்களை வெளியிட்டு, ஈழத்து எழுத்தாளர்களிடையே ஒரு சாதனையைப் படைத்திருப்பவர் செங்கை ஆழியான். இந்தச் சாதனையை முறியடிப்பதற்காக இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார் அவர்.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு அருமையான நாவலாசிரியர் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது முற்றத்து ஒற்றைப்பனை.
(மல்லிகை. 01.07.1989) -மூதறிஞர் வரதா
‘சமுதாயப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விமர் சிக்கும் பண்பு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் துறையில் ஒரு தனிப்பிரிவாக வளர்ச்சியடையவில்லை. இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்ட பெருமை செங்கை ஆழியானையே சாரும். 'விவேகி' மாத இதழில் தொடர்கதையாக வந்து 1969 இல் நூலுருவம் பெற்ற இவரது "ஆச்சி பயணம் போகிறாள்’ நாவல் தான் இவ்வகையில் முதல் முயற்சியாகும்.
இந்நூலைத் தொடர்ந்து செங்கை ஆழியான் மேலும் இரு நகைச்சுவை நாவல்களை எழுதியுள்ளார். வண்ணார் பண்ணைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவிவரும் “காற்றாடிக்கலையின் பெருமையைப் புலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட "முற்றத்து ஒற்றைப்பனை’(1972)ஒரு நகைச்சுவைக் கிராமியச் சித்திரம். யாழ்ப்பாணப்பிரதேசக் கிராமப்புறமொன்று அதன் வகை மாதிரியான பாத்திரங்களுடனும், பிரச்சினைகளுடனும் பேச்சு வழக்கில் நகைச் சுவை ததும்பக் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளது.” (ஈழத்துத் தமிழ் இலக்கியம்- 1978) -நா. சுப்பிரமணியன்

வாடைக்காற்று
ைெடக்காற்று நாவல் வீரகேசரி பிரசுரமாக வெளியிடப்பட்டது. 22.2.1974 ஆம் திகதி அதன் வெளியீட்டு விழா செட்டிகுளத்தில் பெரு விழாவாக நடைபெற்றது. இரசிகமணி கனக செந்திநாதன், டொமினிக்ஜிவா, கே.டானியல், செம்பியன்செல்வன், மாதகல் செல்வா, வன்னியூர்க்கவிராஜர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“இவ்விழா ஈழத்து இலக்கியத்தையும் ஈழத்து எழுத்தாளர்களையும் கெளரவிப்பதற்காக எடுக்கப்பட்ட பெருவிழாவாகும். அவ்வெழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' என்ற இந்த நவீனத்திற்கு வெளியீட்டு விழா எடுப்பதன் மூலம் செட்டிகுள மக்கள் தமது இலக்கிய இரசனையையும், செங்கைஆழியான் மீது அவர்களுக்கிருக்கும் அன்பையும் காட்டிக் கொள்கிறார்கள். இலக்கிய விழாக்களுக்கு மக்கள் கூடுவது குறைவு என நகர்ப்புற எழுத்தாளர்கள் கூறுகின்றனர். அவர்களை உயிர்த் துடிப்பான கிராமப்புறங்களுக்கு வாருங்கள் என அழைக்கின்றேன். இன்று கூடியுள்ளது போன்ற ஆயிரக்கணக்கான மக்கள் விழா ஆர்வலராகக் கூடுகின்ற காட்சியைக் பாருங்கள். வருடாவருடம் வாடைக்காற்றுக் காலங்களில் நெடுந்தீவின் வடமேற்குக் கடற்கரைக்கு மீன் பிடிக்கப் பிறவிடங்களிலிருந்து வரும் மீனவர்களுக்கும், வேறிடங்களிலிருந்து வாடைக்காற்றுடன் வந்து சேரும் பறவையினங்களுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி மீனவர்களின் வாழ்க்கையை அழகாகத் தன் நாவலான வாடைக்காற்றின் மூலம் சித்திரிக்கின்றார் நாவலாசிரியர் செங்கை ஆழியான்’.
பொ.செல்வநாயகம் 'இப்போது சர்வசாதாரணமாக ஒவ்வொரு துறையிலும் பிரபல்யமானவர்களுக்கும், அடியெடுத்து வைத்தவர்களுக்கும் பொன்னாடை போர்த்தப்படுகின்றது. பொன்னாடை போர்த்தப்படுவதற்கு ஒரு தகுதி தேவை. அத் தகுதி செங்கை ஆழியானுக்கு உண்டு. ஈழத்து இலக்கியவுலகில் பூதந்தேவனார் தொடக்கம் செங்கை ஆழியான் வரை ஒரு இலக்கிய வரலாறு உண்டு. வாடைக்காற்று என்ற இந்த நவீனம் நாவல் துறையில் ஒரு மைல் கல்’
-இரசிகமணி கனக செந்திநாதன்
95

Page 50
செங்கை ஆழியான்
நெடுந்தீவு - யாழ்ப்பாணம் - செட்டிகுளம் என்ற இந்த மூன்றையும் செங்கை ஆழியான் என்ற கலைஞன் இணைக்கிறான். நெடுந்தீவில் தொடங்குகின்ற நாவல் யாழ்ப்பாணத்தில் பிறந்த செங்கை ஆழியானால் எழுதப்பட்டு செட்டிகுளத்தில் வெளியிடப்படுகின்றது. கலைஞன் தேசியச் சொத்து. கலைஞனுடைய பெருமை, எழுத்தாளனின் சிறப்பு, அவனுக்கு மக்கள் திரண்டு கிடக்கின்ற விழாவில் தான் இருக்கின்றது. இன்று செட்டிகுளம் வீதியில் எழுத்தாளர்களை மாலை சூட்டி, கும்பம் வைத்து, ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்ச்சியை எண்ண எவ்வளவு பெருமை யாக இருக்கிறது. எழுத்தாளன் ஒரு நாட்டில் தக்கவாறு கெளரவிக்கப்பட்டால் அந்த நாட்டின் ஆத்மாவே கெளர விக்கப்படுகின்றது. நெடுந்தீவுக் கடற்கரையில் தோன்றுகின்ற பல்வேறு பாத்திரங்களின் முரண்பாடுகள். மீனவ சமுகத்தின் பலவீனங்கள், சண்டை சச்சரவுகள், சமாதானங்கள், ஆசா பாசங்கள் என்பன தக்க முறையில் வாடைக்காற்று என்ற நாவலில் சொல்லப்படுகின்றது. செங்கை ஆழியான் ஓர் அசுரக்கலைஞன். இந்த எழுத்தாளனால் எப்படி ஓயாமல் எழுத முடிகின்றது? பாடநூல்கள், சிறுகதைகள், நாவல்கள், தோட்டவேலை, காரியாதிகாரி உத்தியோகம் என்ற இவ்வளவையும் செங்கை ஆழியானால் எப்படித்தான் செய்ய முடிகின்றது? இந்த உழைப்பாளிக்கு நான் தலை வணங்கு கின்றேன்.
-டொமினிக் goist
‘ஒரு மீனவ சமுகத்தின் வாழ்க்கையை மிக அற்புத மாகச் செங்கை ஆழியான் வாடைக்காற்றில் சித்திரித்துள் ளார். இவரால் இதை எப்படிப் படைக்க முடிந்தது என்று எண்ணும்போது அவரின் திறனை நான் வியக்கின்றேன். மீனவ மக்களின் சொற்களையும், மீன்பிடித்தொழில் நுணுக் கங்களையும் கலை அழகோடு சித்திரித்துள்ளார். புதிய களம். புதிய சூழல், நாவலின் படிமம் மிக அற்புதமாக இந்த நவீனத்தில் விழுந்துள்ளது.
-கே. டானியல்
“சமுகநோக்கோடு இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். வாடைக்காற்று அத்தகைய ஒரு ஆக்கம். எழுத்தாளனின் சத்திய வேட்கையை, சமுக நோக்கை இந்த நாவலில் காணலாம். நெடுந்தீவின் பகைப்புலத்தில் அங்கு ஒரு பருவத்திற்கு வந்து தொழில் செய்கின்ற மீனவரின் வாழ்வையும், அப்பருசத்தில் வெகு தூரத்திலிருந்து அத்தீவிற்கு வருகின்ற கூழைக்கடா என்ற பறவைகளையும் இணைத்து சிறப்பாக இந்த நாவலைப் படைத்துள்ளார். பாமரமக்களது. தொழிலாளவர்க்கத்தினது பிரச்சினைகளை வாடைக்காற்றில் செங்கை ஆழியான் சித்திரித்துள்ளார். செங்கை ஆழியான் ஒரு மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார்.’
-செம்பியன்செல்வன்

வாழ்வும் படைப்புகளும்
'வாடைக்காற்று நாவலில் செங்கை ஆழியான் தான் நேரடியாகப் பெற்ற அனுபவங்களை மிக நுணுக்கமாக, நுணுக்குக்காட்டியால் படம் பிடித்துக் காட்டுவது போலப் படம் பிடித்துள்ளார். உண்மையும் இயற்கையும், கற்பனையிலும் பார்க்க எவ்வளவு விசித் தரமானது என்பதை நாவலின் பல விடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் நடையில் நாவல் எழுதப்பட்டிருப்பது மேலும் சுவையை அளிக்கின்றது.
(22.02.1974) -எஸ்.சிவஞானம்
'வாடைக்காற்றில் எடுத்தாளப்பட்ட அத்தனை பாத்திரங்களுமே ஒன்றுக்கொன்று முரணான குணாதிசயம் கொண்டவை. அந்தந்தப் பாத்திரங்களின் இயக்கத்தை மேவிப் பிறழ்வுகள் எதுவுமில்லாமல் கதை பின்னப்பட்டுச் செல்வதைப்பார்த்தால் இப்படியான ஒரு பொருட் தெளிவு செங்கை ஆழியான் போன்றவர்களுக்குத் தான் கைவரும் போல இருக்கின்றது. வருடக்கணக்காகக் கால் சட்டைகளையும் ஆபிஸ் மேசைகளையும் மையமாகச் சுழன்று வந்த கதைகள் இப்போதெல்லாம் மண்ணின் புதல்வர்களையும் கடலின் புத்திரர்களையும் அவர்கள் உழைப்பின் மகிமையையும் உயிர் நாடியாய்த் தாங்கிப் பின்தங்கிய பிரதேசங்களின் வாழ்க்கை நிலைகளையும், அங்குள்ளவர்களின் துயரங்களையும் பிரதிபலித்து மக்களை வாசிக்க வைக்கின்றன. செங்கை ஆழியானின் வாடைக்காற்று அதனையே ஆற்றியுள்ளது.
-அலசையன்
"Vaadaikattru'- A Milestone.
Trying to create a Tamil cinema locally to refelect the traditions, culture and all things the aspirations, of the Tamil community is an utter impossibility. The challenge from the adjoining sub-continent's star spangled fancy is so monstous, that unless we flow the same wave, we will not survive as an industry at all. This the line of thinking of, any who talk about making Tamil films locally. "Vaadaikattru' is a valiant effort - disproving such myths. This film does not try to be too 'arty.
Vaadaikattru is based on a Sahithya Mandala Award winning noval by "Chengai Ahiliyan' (K. Kunarasa) a popular novelist who has earned a name for his vived depiction of grass root life of the country. The story involves the seafaring people living in the northern coastal belt. Simion and Mariyadas are two rich and young fish mudalalis, who are among the many migrants to Delft- a little islet off the peninsula proper- during the north-west monsoon. They fall in love with Philomina and Nagammah respectivity, and what follows is the erux of the story. Professional rivalry, love, petty jealousy and superstitions are all there as typical of the
97

Page 51
செங்கை ஆழியான்
particular community. The not-so- couragaeous Philomina gets crushed under the cruel wheel of fate, while Nagammah walks with the man of her choice, away from her family and village too.
In view of the story attempts in the past to produce Tamil flims, it is difficult to disagree that "Vaadaikattru' is a significant milestone.On the whole "Vaadaikattru' blows out all such shortsighted myths.
- Yoga Balachandran
‘நெடுந்தீவுக் கடற்கரையின் மீனவச் சமுகத்தினரையும் அங்கு மீன் பிடிக்க வரும் மீனவச் சமுகத்தினரையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அப்பிரதேசத்தின் இயற்கைச் சூழலின் பின்னணியில் புனையப்பட்ட காதல் கதையான வாடைக்காற்று ஆசிரியரது எழுத்தாற்றலாற் சுவை பெறுகின்றது. மீன்பிடிப்பதில் சம்மாட்டிமாரிடையே நிலவும் போட்டியும், உள்ர்ப் பெண்கள் மீது அவர்கள் கொள்ளும் காதலுமே கதையை வளர்த்துச் செல்கின்றது. வாசகள் மத்தியில் பெரும் பரபரப்பை இந்நாவல் ஏற்படுத்தியது.”
-பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
"இலக்கிய சர்ச்சையில் ஈடுபட்டுப் பொன்னான நேரத்தை மண்ணாக்காமல் "இப்படி எழுது. அப்படி எழுதாதே’ என்று மற்றையோர்க்கு உபதேசம் செய்து கொண்டிருக்காமல் “இப்படித்தான் நான் எழுதுவேன்’ எனக் கூறுமாப்போல இலக்கிய ஆக்கத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ள தங்களின் ஆற்றலை, அடக்கத்தை, பண்பை நான் எந்நாளுமே பாராட்டி வருபவன். தங்களின் புதிய நாவலான 'வாடைக்காற்றும்’, ‘தீயினில் தூசு படிவதில்லை’ என்ற நாடகமும் தங்களின் புகழை மேலும் ஓங்கச் செய்து, இன்னும் பல நல்ல படைப்புகளைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தர வழிவகுக்குமென நம்புகின்றேன்.”
2.02 1974.
ச. சிவசரவணபவன்(சிற்பி)

கிடுகுவேலி பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
“உங்கள் வீட்டு வாசலிலே தான் செங்கை ஆழியானின் கிடுகுவேலி நாவல் முடிவடைகிறது. வாசித்தீர்களா?' என்று எனக்கொரு கடிதம் வந்தது. ஈழநாடு பத்திரிகையிலே கிடுகுவேலி என்னும் நாவல் பிரசுரமாகி முடிவடைந்த ஒரு வாரத்துள் எனது உறவினர் ஒருவர் அக்கடிதத்தை எழுதியிருந்தார். நேரிலும் சில நண்பர்கள் அக்கருத்தைக் கூறினர். செங்கை ஆழியான் தனக்கென ஒரு வாசகள் கூட்டத்தை வைத்திருக்கிறார். அவர்கள் நாவலுடனும் பாத்திரங்களுடனும் ஒட்டிப்போகிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தவே எனது கடித வியத்தைக் குறிப்பிட்டேன்.
இன்றைய ஈழத்து எழுத்தாளர்களிலே மக்களின் கவன ஈர்ப்புக்குரியவராகச் செங்கை ஆழியான் காணப்படுகிறார். ஈழத்திலே இரண்டாம் பதிப்புகள் வெளிவரும் அளவிற்கு வாசகர் தொகையினை அதிகரிக்கச் செய்யும் திறன் இவரது நாவல்களுக்குண்டு என்பதை இலகுவிலே யாரும் மறுத்துவிடமுடியாது.
ஈழத்து நாவல் ஆசிரியர்களுள் மிகச் சிலரே தமக்கென ஒரு வாசகள் கூட்டத்தை உருவாக்கியவர்களாவர். கே.டானியலும் செங்கை ஆழியானும் இந்த வகையில் விதந்து குறிப்பிடக் கூடியவர்கள். தமக்கென ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கி அதைப் பெருகச் செய்யும் திறமை செங்கை ஆழியானுக்கு நிரம்பவும் உண்டு. இதனை நிதர்சனமாகக் காணும் வாய்ப்பு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற வகையிலே எனக்கு ஏற்படுவதுண்டு. பொதுவாக விரிவுரை மண்டபத்திலே 'நீங்கள் வாசித்த ஈழத்து நாவல் ஒன்று கூறுங்கள்’ என்று கேட்டால் பெரும்பாலான மாணாக்கள்கள் செங்கை ஆழியானின் நாவல்களையே குறிப்பிடுகின்றனர்.
தமக்கென ஒரு வாசகள் கூட்டத்தை உருவாக்குவ தென்பது இலகுவான காரியமல்ல. ஈக்க இலக்கியக்காரன் ! ஒருவன் அடையும் மகத்தான வெற்றிகளுள் ஒன்று தமக்கென ஒரு வாசகர் கூட்டத்தை உருவாக்கி அதைக் காப்பாற்றுவதேயாகும்.
வாசகள் கூட்டம் உருவாகுவதற்கும், அது அதிகரிப் பதற்கும் உரிய காரணங்களை நேர்மையாக ஆராயும்போது அங்கே செங்கை ஆழியான் எனும் நாவலாசிரியன் இனங்காணப்படுவான். ஈழத்து நாவலாசிரியர்களில் எண்ணிக்
99

Page 52
செங்கை ஆழியான் கையளவிலும் அதிகமான நாவல்களை எழுதியவர்களுள் செங்கை ஆழியான் சிறப்பிடம் பெறுபவர்.
செங்கை ஆழியானின் படைப்புகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையிலே புதுமையானதாகவும், சிற் சில விஷயங்களிற் பிரச்சினைக்குரியதாகவும் அமைவதையும் அவதானிக்கலாம். இந்த வகைக்கு ஆச்சி பயணம் போகிறா ளையும், வாடைக்காற்றையும் வகை மாதிரியாகச் சுட்டிக் காட்டலாம்.
கிடுகுவேலி என்ற பெயர் ஒரு வகைக் குறியீடாகவே அமைகின்றது. யாழ்ப்பாணத்தின் உயர் பண்பாட்டுப்பாரம்பரிய அமிசங்களைக் கந்தப்புராண கலாசாரம் என்ற குறியீட்டில் அழைப்பதைப்போலவே, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாரம்பரியங்களின் மற்றொரு புறத்தைக் கிடுகுவேலிக் கலாசாரம் என்று அழைப்பது வழக்கம்.
யாழ்ப்பாணத்துச் சாதிசமய முரண்பாடுகளையும், தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகளையும் அடுத்தவர்க்குத் தெரியாமல் மறைக்கும் திரையான கிடுகுவேலியை ஒரு கலாச் சாரக் குறியீடாகக் காட் டுவது ஒரு ஆக்கவிலக்கியக்காரனின் உணர் திறனையே காட்டி நிற்கின்றது.
சைவத்தமிழ்ப்பாரம்பரியத்திலே குறியீடாக விளங்கும் கந்தப்புராணக் கலாசாரம் என்ற தொடரைப் பலர் பூரணமாக விளங்கிக் கொள்வதில்லை. சைவாலயச் சூழலிலே புராணப் படிப்பு நிகழ்வது மட்டுந்தான் கந்தப்புராண கலாசாரம் என்று கருதியிருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன். ஆனால் கிடுகுவேலிக் கலாசாரம் அப்படியன்று. எமது சமுகப்பிரச்சினைகளை மட்டுமன்றி அக முரண்பாடுகளையும் மூடிமறைக்கும் எமது வாழ்க்கை முறைகளையும் கோடிட்டுக் காட்டும் பெரும்பாலோர் விளங்கிக்கொள்ளும் குறியீட்டுத் தொடராகவே ‘கிடுகுவேலி அமைகின்றது.
தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கும் பாத்திரங்களின் மனப்போராட்டங்களுக்கும் ஏற்ற வகையிலே இந்நாவலின் 'நாமகரணம்’ அமைந்துள்ளது. கிடுகுவேலியின் கதை இன்றைய யாழ்ப்பாணச் சமுகத்தின் பெரும்பாலானவர் களால் நேரடியாக உணரக் கூடியதாகவே அமைந்திருக்கின்றது.
பெண் சகோதரங்களுடன் பிறந்த யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞன் ஒருவன் கிடுகுவேலிக் கதாநாயகன் சண்முகத்தின் மனநிலையை வாழ்க்கையின் எங்கோ ஒரு மூலையிலாவது, எங்கோ ஒரு சந்தர்ப்பத்திலாவது, என்றோ ஒரு காலத்திலாவது சந்தித்திருப்பான் எனத்திடமாக நம்பலாம். இன்றைய தலை முறையிற் பலர் சண்முகத்தின் நிலையிலேயே வாழ்கின்றனர் என்பது ஓர் ஊமை உண்மையே. பலர் வெளிக்காட்டாவிட்டாலும் சண்முகத்தின் சிக்கல் பலரின் வீட்டிலும், சிலரின் இமயத்திலும் இருந்தே தீரும் என்பதில் கருத்து வேறுபாடு கொள்வது கடினம். கிடுகுவேலியைப் படிக்கும் யாழ்ப்பாணத்து இன்றைய இளைஞர் பலர் ஒருகணம் ஏதோ ஒரு வகையில் தம்மை நினைக்காமல் இருக்க முடியாது. இந்த இடத்தில் தான் பேராசிரியர் க. கைலாசபதி கூறிய சுற்றை நினைவு கூர
OO

வாழ்வும் படைப்புகளும்
வேண்டும். அவர் கூற்று பின்வருமாறு: “பொதுவாகக் கூறினால் ஒரு நாவலைப் படிக்கும் வாசகன் தனக்கு மட்டும் அந்த நாவல் எழுதப்பட்டதாகக் கருதத் தழலப்படுகிறான். நாவலாசிரியன் தலையிட்டுக் கூறும் சில குறிப்புரைகள், விளக்கங்கள், எச்சரிக்கைகள், ஆகியன தன்னை நோக்கியே கூறப்பட்டுள்ளன என எண்ணத் தலைப்படுகிறான்.’ (தமிழ் நாவல் இலக்கியம், பக்:84).
என்னைப் பொறுத்த வரையில் கிடுகுவேலிச் சண்முகங்கள் பலரை நாம் தினமும் சந்திக்கின்றோம். வெளிநாடுகளுக்குச் சென்றுழைத்துத் தன் தாய் சகோதரங்களுக்குக் கொடுக்கும் சண்முகங்களோடு, உள்;ரிலேயே உழைத்துக் கொடுத்து, சிக்கல்படும் ‘உள்ர்ச் சண்முகங் களும் நம்மிடையே இல்லாமலில்லை. இன்றைய சமுகத்தில் சண்முகம் போன்றதொரு பாத்திரத்தின் நிலையை நினைக்கும் போது தான் நாம் இன்று தரிசிக்கின்ற பெண் நிலை வாதம், பெண் அடக்கு முறை முதலிய கோங்களிலே சந்தேகமேற்படுகின்ற வாய்ப்பு உண்டாகிறது.
குவைத் வெயிலிலோ, தார் றோட்டிலோ, கொம்பனிகளிலோ, அல்லது எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களிலோ இரத்தம் சிந்தி தன் பெண் சகோதரங்களுக்காக உழைக்கும் ஓர் ஆண் பிறவியைப்பற்றி இன்றைய சமுகம் எவ்வளவு சிந்திக்கின்றது? தமது பெண் சகோதரங்களுக்காகத் தமது வாழ்வின் வசந்தத்தையெல்லாம் இழந்து, நாற்பது மாண்டிய எத்தனை யாழ்ப்பாணத்து ஆண் பிறவிகளைக் கனடாவின் கடைத்தெருக்களிலும், ஜேர்மனி யின் வீதிகளிலும் காணமுடியும்?
பணம் வந்ததும் குணம் மாறித் தனது மைத்துனனை இழக்கும் கிளிகளையும், மற்றவனையும் ஒரு மாதிரி வெளியில் அனுப்பி மற்றைய மகளுக்கும் மாப்பிள்ளை வேட்டையாட நினைக்கும் சண்முகத்தின் தாயும் இன்றைய சமுகத்தின் வகை மாதிரிப் பாத்திரங்களாகும். இவை மாறலாம். மாறவேண்டும். ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலை யாழ்ப்பாணத்தில் நிலவுகிறது என்பதைப் படம் பிடிக்கக் கிடுகுவேலி போன்ற நாவல்கள் தேவைப்படுகின்றன.
ஈழத்தின் ஆரம்பகால நாவல்களைப் படிக்கும் இன்றைய தலைமுறையினர் அவற்றை நம்புவார்களா? அவர்கள் நம்ப மறுப்பதனால் அப்படியான ஒரு சமுகச் சூழல் இருக்கவில்லையென்று மறுக்க முடியுமா? இலக்கியம் காட்டும் பணிகளில் ஒன்றை அவை நிறைவு செய்யவில்லையா?
வெளிநாட்டுப் பண வரவினால் எமது கலாசாரத்தின் பல்வேறு அம்சங்கள் மாறுபடுகின்றன. குடிசை வீடாகலாம். வேலி சுவராகலாம். சாறி சட்டையாகலாம். சிறு தெய்வங்கள் பெருங்கோயிலாகிக் குடமுழுக்கு நிகழலாம். இவை எல்லாம் ஒரு வாசகனின் மனதைப் பெருமளவு உறுத்துபவையல்ல. ஆனால் சங்கக் கடை மனேச்சர் புறக்கணிக்கப்படுவதும், பணத்திற்குத் தக்கதாகப் ‘பண்டம் வாங்க முனையும் திருமணம் பற்றிய எண்ணங்களும் இன்றைய சமுகத்தின் ‘அசூசைகள்’ என்பதைக் கிடுகுவேலி காட்டி நிற்கின்றது.
Ol

Page 53
செங்கை ஆழியான்
வெளிநாட்டு மாயையில் சிக்கியிருக்கும் பெற்றோருக்கும் இளைஞர்களுக்கும் இன்று வெளிநாட்டுப் பணத்தைச் செலவிடுவோருக்கும் கிடுகுவேலி போன்ற நாவல்கள் எச்சரிக்கை செய்யத் தேவைப்படுகின்றன.
கிடுகுவேலி நாவலில் சண்முகத்திற்கு ஏற்படும் முடிவைக் கதாசிரியர் தன்னாற் கூட ஜீரணிக்க முடிய வில்லையென்று குறிப்பிட்டுள்ளார். ‘முழுமனிதனையும் காட்ட முனையும் நாவல் இலக்கியம் எப்படி அரசியலை மட்டும் புறக்கணிக்க முடியும்’ என்ற பேராசிரியர் கைலாசபதியின் கூற்றே இதற்கு விடையாகவும் அமைகின்றது. (நாவல் இலக்கியம்-பக் 249)
இன்று காட்சிப் பொருளாகக் கூடக் காணமுடியாத ’கொட்டைப்பெட்டி அதற்குள்ளே ஐந்து சதத்தைச் சிக்கன மாகச் சேமித்த அம்மம்மா, இவற்றைப் பற்றிச் செங்கை ஆழியான் கூறும்போது நாம் எமது மதிப்புகளில் எதையோ எம்மையறியாமலேயே இழந்து வருகின்றோமோ என்ற ஏக்கம் ஏற்படுகின்றது. முருகானந்தன், அவனது தாயார் போன்ற பாத்திரங்களும் அருந்தலாகவேனும் இருக்கின்றனர், என்ற உண்மையையும் இந்த நாவல் புறக்கணிக்கவில்லை.
இன்றைய யாழ்ப்பாணச் சமுகத்தின் மெய்மையைப் புலப்படுத்தும் கிடுகுவேலி என்னும் நாவல், கதை, பாத்திரங்கள், நிகழ்ச்சிகள், மொழி என்பனவற்றில் பெற்றுக் கொண்ட வெற்றியை நாவல் இலக்கியம் பெறவில்லையெனச் சிலர் குறைபடக் கூடும். யாப்பிலாப்பாடல்களைக் கவிதையென்றும், யாப்பினைச் சரித்து, நெரித்து வெட்டி ஒட்டினால் பரிசோதனைக் கவிதையென்று கூறியும், பாடல்,செய்யுள், கவிதை, ஓவியம், நாடகம் இவற்றிலே புதுமையைப் புகுத்தலாம் என்று ‘விசா வழங்கும் விமர்சகர்கள் நாவலிலும், சிறுகதையிலும் மட்டும் வடிவம்’ எனும் கற்புடைமை பேசுவதையும் அவதானிக்கிறோம்.
எழுத்தாளன் சொல்ல வந்த பொருளைத் தான் சொல்ல நினைத்த சமுகத்தின் செவிகளிற் படவிட்டுவிட்டாற் போதும் அவன் வெற்றி பெற்றவனாகி விடுகின்றான். கிடுகுவேலி இந்த வகையினைச் சேருகின்றது.
ஒரு வாசகன் என்ற முறையிலே தீம்திரிகிட தித்தோம்’ எனும் நாவலுக்கு எழுதிய முகவுரையில் நந்தி குறிப்பிட்ட கோரிக்கையையே நானும் செங்கை ஆழியானுக்கு விடுகின்றேன். மிகப் பெரிய உயர்ந்த நாவல் ஒன்றை இந்த நாடு செங்கை ஆழியானிடம் எதிர்பார்த்து நிற்கின்றது.
( முன்னுரையில் 12, 11 1989)
‘ஐந்து வருடங்களுக்கு முன்னிருந்த யாழ்ப்பாணக் கலாசாரம் புறக்காரணங்களால் எவ்வாறு மாறுபடுகிற தென்றும், மனித உறவுகளில் பணவசதி எப்படி மாற்றத்தைக் கொண்டு வருகிறதென்றும், கணவன் - மனைவி உறவுகள் எவ்வாறு பூசி மெழுகளின்றி நேரடியாக வார்த்தைகளில் எளிமையான நடையில் செங்கை ஆழியான் இந்த நாவலில் காட்டுகிறார்.
கிடுகுவேலிகளுக்குப் பின்னால் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் உழைப்பின் பயன்பாடு,
O2

வாழ்வும் படைப்புகளும்
குற்றமற்ற இளைஞரும் மொழியறியா ஆயுதப்டையினரிடம் சந்தேகத்திற்குள்ளாகி வதையறுதல், சீதனம் வாங்கும் சமுதாயத்தில் செங்கை ஆழியான் முற் போக்காக நடந்து கொள்ளும் பழையவரும் புதியவரும் புழக்கம் என்பவை செங்கை ஆழியான் காட்டும் கோலங்கள்.
இக்கதையில் வரும் நிர்மலாவின் பாத்திர உருவாக்கம் மனதில் பதிய வைக்கிறது. சண்முகமும் நடந்து கொள்ளும் விதமும் இயல்பாகவே இருக்கிறது. சண்முகத்தின் தாயும, தங்கை கிளியும் நடக்கும் விதந் தான் பனநாயக உலகின் மனிதப்பண்புகளும் மாற்றத்திற்குட்பட்டவை என்பதைக் காட்டுகின்றன. சில செய்திகளை நாவலாசிரியர் கூறாமற் கூறுவது வளர்ச்சியைக் காட்டுகிறது. (01.07. 1984)
-கே.எஸ்.சிவகுமாரன்
“மக்களின் அதிக கவனத்தை அண்மைக்கர்லத்தில் இழுத்த நாவல் இதுவாகும். யாழ் மண்ணின் நிகழ் காலப்படப்பிடிப்பு. திருமண ஒப்பந்த வியாபாரங்களும், சீதன வருமானமும், அந்த வருமானத்தைப் பெருக்க அதனை முதலீடாகக் கொண்டு மத்திய கிழக்குப் பயணமும், அதனால் கட்டடியவள் கொள்ளும் ஏக்கமும் சீற்றமும் அழகாகக் காட்டப்பட்டடுள்ளது. நாவலின் உச்சக் கட்டம் சமீப கால கொடுர நிகழ்ச்சி ஒன்றுடன் கலா பூர்வமாக இணைக்கப்பட்டு, சமகால இலக்கியம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது.’
(10.07. 1984)
செம்பியன்செல்வன்.

Page 54
ஒரு மைய வட்டங்கள்
கலாநிதி இ. பாலசுந்தரம்
Fழத்து ஆக்க இலக்கியத் துறையில் கடந்த மூன்று தசாப்தங்களாக சிறுகதை, நாவல் படைப்புகளின் மூலம் நற்பெயரை நிலைபெறச் செய்தவர் செங்கை ஆழியான் என்ற புனைப்பெயர் கொண்ட கந்தையா குணராசா அவர்கள். இவரது கல்விப்புலத்தையும், உத்தியோக ரீதியான அனுபவங்களும், இயற்கையாகவே அவரிடம் காணப்படும் கலை இலக்கிய ஆர்வமும், இலக்கியத் துறையில் அவர் பின்பற்றும் நிதானமும், அவரைச் சிறந்த ‘ஆக்கவிலக்கிய கர்த்தா’ என்ற வரிசையில் நிலைநிறுத்தியுள்ளன. அறுபதுகளில் சிறுகதை எழுத்தாளராகத் தன்னை வெளிப்படுத்திய செங்கை ஆழியானின் முதல் நாவல் ‘நந்திக்கடல்’ (1969) என்பதாகும்.
செங்கை ஆழியான் இதுவரை 31 நாவல்களை எழுதியுள்ளார். ஆவற்றுள் 26 நாவல்கள் நூலுருப் பெற்றுள்ளன. இலக்கிய விமர்சகர்களின் கூர்மையான பார்வையில் பிரகாசம் பெற்று விளங்கும் அளவுக்கு செங்கை ஆழியானின் நாவல்கள் சிறந்து காணப்படுகின்றன. அவரது தொடக்ககால நாவல்களான நந்திக்கடல், சித் திராபெளர்ணமி முதலிய படைப்புகளில் கற்பனை, இன் பச்சுவை மேலிட்டபோதிலும் அவரது இலக்கிய அனுபவ முதிர்ச்சி. சமுகப்பார்வை பின்னர் எழுந்த படைப்புகளில் முனைப்பாக அமையலாயின.
நகைச்சுவையின் மூலம் காத்திரமான விடயங்களை வாசகரிடையே பதிய வைக்கும் வகையில் எழுதப்பட்ட ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல், முற்றத்து ஒற்றைப்பனை என்பன செங்கை ஆழியானின் தனித்துவமான பண்பைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
மண்வாசைன கொண்ட எழுத்தாளர் வரிசையில் செங்ழக ஆழியானுக்கு இடம் பிடித்துக் கொடுத்த வாடைக் காற்று (1973) என்ற நாவல் ஈழத்து நாவல் வரலாற்றில் ஒரு மைல் கல். சேங்கை ஆழியானின் காட்டாறு, கடற்கொட்டை, ஒரு மைய வட்டங்கள் முதலிய நாவல்கள் இத்தளத்தில் எழுதப்பட்டவையாகும். மண்ணும் மக்களும், மக்களின் உரிமைக்குரல்கள்,உழைப்பு, சுரண்டல், சாதிக்கொடுமை, சீதனக்கொடுமை, இனவெறிப்போராட்டம் என்ற வகையில் செங்கை ஆழியானின் சமுகம் நோக்கிய அகலப் பார்வை அவரது நாவல்களின் கருப்பொருளாக அமையலாயின.
O4
 

வாழ்வும் படைப்புகளும்
ஒரு மைய வட்டங்கள் என்ற இந்த நாவல் தமிழகத்தில் முதலில் வெளியிடப்பட்டு இரண்டாம் பதிப்பாக ஈழத்தில் வெளிவருகின்றது. இயற்பண்பு நெறிகொண்ட இந்நாவல் மருதங்குழி என்னும் காட்டு விவசாயக் கிராமத்தில் தமிழ் சிங்கள மக்கள் குடியேறி ஒன்றாக வாழ்ந்த வகையினையும், அவ்வப்போது நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் இக் கிராமிய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயன்றதையும், அம்மக்களின் மன விரிசல்களையும், உணர்வுகளையும், வாழ்க்கைப் பிரச்சினைகளையும் பகைப் புலமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் சிங்களவரும் தமிழரும் ஒரு மைய வட்டங்களாகும். பெரிய வட்டம் சிறிய வட்டத்தை அமுக்கிவிட முயல்கின்றது. இப்பிரச்சினையை அடிமனத்தே கொண்டு சம கால சமுக, பொருளாதார, அரசியல் கண்ணோட்டத்துடன் இந்த நாவல் எழுதப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கதே. 1965 முதல் தொடர்ச்சியாக நாவல் எழுதிவரும் செங்கை ஆழியானின் இலக்கியப் பணி பாராட்டப்பட வேண்டியதே. வாடைக்காற்று, காட்டாறு, பிரளயம் என்ற அதி சிறந்த நாவல்களை எழுதி ஈழத்து நாவல் இலக்கியக் களத்திற்கு பெருமையூட்டிய செங்கை ஆழியானின் எழுத்தாற்றல் மேலும் வளம் பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.
(முன்னுரையில். 25.01.1991)
‘தொடக்கத்தில் தனி மனித உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தி எழுதிய இவர் பின்னர் சமுகத்தின் களத்தை விபரிப்பதிலும் அதன் பின் சமுக மாந்தரின் இயல்புகளைச் சூழலுடன் பொருந்தச் சித்திரிப்பதிலும் கவனம் செலுத்தி யுள்ளார். பிரளயம், இரவின் முடிவு ஆகியவற்றில் இப்போக்குத் தெளிவாகப் புலனாகிள்றது. சமுகத்தில் நேரடியாகக் காணும் மாந்தரை முன்னிறுத்தும் இவரது சித்திரிப்புத்திறன் பாராட்டிற்குரியது. பிரளயம் நாவலிற் காணப்படும் சமுதாய விமர்சனப்பார்வை அவரது இலக்கிய நோக்கின் ஒரு திருப்புமுனை எனலாம். இயல்பான சமுதாய வரலாற்றுப் போக்குடன் முரண்படாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆர்வம் இதிலே புலப்படுகின்றது. பிரளம் நாவலை அடுத்து அவர் படைத்த காட்டாறு (1977) ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாகும்.’
-பேராசிரியர் நா.சுப்பிரமணியன்
105

Page 55
ஈழத்து நகைச்சுவை நாவல்கள் பொ. சண்முகநாதன்
Fழத்தில் வெளிவந்துள்ள நகைச்சுவை நாவல்களைச் செங்கை ஆழியானைத் தவிர, நகைச்சுவை எழுத்தாளர்களாக அறிமுகமானவர்கள் எவரும் நகைச்சுவை நாவல்களைப் படைப்பதில் தம்கைவரிசையைக் காட்ட வில்லை. அவர்களுக்கு அத்துறை இன்னமும் அவ்வளவு தூரம் கைவரவில்லை என்கிற உண்மையை ஒப்புக் கொண்டே ஆக வேண்டியுள்ளது. இந்த வகையில் நாவலா சிரியர் வரிசையில் இன்று முன்னிலையில் திகழும் செங்கை ஆழியான் ஈழத்தின் முதலாவது நகைச்சுவை நாவலைப் படைத்த பெருமையையும், மொத்தம் மூன்று நகைச்சுவை நாவல்களை நூலுருவில் கொணர்ந்த பெருமையையும் ஒருங்கே பெறுகிறார்.
ஈழத்தில் வெளிவந்த முதலாவது நகைச்சுவை நவீனமான செங்கை ஆழியானின் "ஆச்சி பயணம் போகிறாள்' நூலையே முதலில் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்வோம். யாழ்ப்பாணச் சூழலில் கிணற்றுத் தவளையாக வாழ்ந்த செல்லாச்சிக்கிழவி வெளியேயுள்ள உலகத்தைக் காணும்போது ஏற்படும் உணர்வுகளை இந்த நாவல் சித்திரிக்கிறது. செல்லாச்சி அவளின் மகன் சிவராசா, அவனது முறைப் பெண்ணும் காதலியுமான செல்வி ஆகியோர் கதிர்காமம் பார்க்கப்போவது போலமைந்த இந்தப் பயண நாவலில் ஆச்சியின் ஒவ்வொரு செய்கையும் பேச்சுமே எமக்கு நகைச்சுவை விருந்தாக இருக்கின்றன. அத்துடன் சிவராசா செல்வி இருவரின் காதற் குறும்புகளும் மாதிரிக்குக் குறைவில்லை.
அடுத்து எழுபது வயதாகியும் முற்றத்துப் பனையில் விட்டம் போட்டு காற்றாடி விடுகின்ற பழக்கமும் வெறியுந் தீராத வண்ணார்பண்ணைக் கொக்கள் மாரிமுத்தரையும், அந்த நெடுந்துயர்ந்த பனை மரம் எங்கே தனது வீட்டின் மேல் காற்றுக்கு முறிந்து விழுந்துவிடுமோ என்று பயப்படுகின்ற அவரின் மைத்துனர் அலம்பல் காசிநாதரையும் அவர்களிடையே வளர்ந்து வரும் பகைமை உணர்வையும் வைத்துப் புனையப்பட்ட இந்த ஆசிரியரின் இன்னொரு நகைச்சுவை நவீனமே முற்றத்து ஒற்றைப் பனை’.
அதிலே ‘அப்பு ஊரெல்லாம் கொழுத்தாடு பிடிக் கிறார்.
அந்த ஆளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வயதுபோன
காலத்தில எனக்கேன் இந்தத் தலை விதி? நீங்கள்
எல்லோரும் ஒருக்கா வந்து சரிப்பண்ணிவிட்டுப் போகவும்.’
என்றொரு கடிதம் வருகிறது. அவ்வாறு இந்த நாவலில்
106
 
 

வாழ்வும் படைப்புகளும்
வரும் பொன்னாச்சிப்பிள்ளை மக்களுக்கு எழுதிய கடிதத்தை அவளின் கடைசி மகன் எப்படிப் புரிந்து கொண்டு பதில் எழுதினான் என்பதை மட்டும் நல்ல நகைச்சுவைக்கு ஒரு சான்றாக இங்கே தருகிறேன்.
‘அப்பு எங்கே ஆடு பிடித்தவர்? கொழுத்த ஆடு என்று எழுதியுள்ளிர்கள். அதை ஏன் கட்டி அவிழ்க்க முடியாது இருக்கிறது? கடமென்றால் கனகசபையைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாமே? கொழும்பிலே நல்ல ஆட்டிறைச்சி கிடைப்பதில்லை. இன்னும் பத்துப் பதினைந்து நாளில வந்து சரிப்பண்ணுவோம்.' இதுதான் மகனின் பதில். இந்த நாவலையும் நகைச்சுவையாக ஆரம்பித்து நகர்த்திக் கொண்டு வந்த ஆசிரியர் இறுதியில் அந்தப்பனை சாய்ந்ததும் முத்தர் அம்மானும் சரிவதாகவும் பொன்னு ஆச்சி ஒற்றைப் பனையாக நிற்பதாகவும் துன்பியலில் முடித்துள்ளார்.
"கொத்தியன் காதல்’ என்பது செங்கை ஆழியானின் மூன்றாவது நகைச்சுவை நாவலாகும். சுடலைமாடன், எறிமாடன், எருமைப்பல்லன், ஊத்தைக்குடியன், பெரிய பல்லுப்பெத்தாச்சி இப்படிப் பல பேய்களைப் பாத்திரங் களாக்கி, அவைகளுக்கிடையில் கொத்தி என்ற பெண் பேயின் காதல் வரலாற்றைச் சொல்லும் அதீத கற்பனை வகையைச் சேர்ந்த நகைச்சுவை நாவலிது.
பேய்களின் கதையில் அப்படிப் பெரிய நகைச்சுவை எதுவும் இல்லாவிட்டாலும், தள்மாஸ்பத்திரி, சங்கக்கடை, அங்கெல்லாம் நடைபெறும் சமுகவிரோதச் செயல்கள், மனிதக் காதல் போன்றவற்றை பேய்களைக் கொண்டே எள்ளி நகையாடச் செய்திருப்பது உயர்ந்த நகைச்சுவை எனலாம்.
இந்த நாவலில் ஒரு கட்டம் இது: “மனிதக்காதல் இப்படித் தான். கலியாணம் என்றதும் காதலனுக்குப் பேச்சு வராது.’ இப்படிச் சொல்வது எருமைப்பல்லன். ‘ஏன்?’ என்பது சுடலைமாடனின் கேள்வி. 'ஏதோ ஐ வசுக்கோப்புகள் காட்டுறான்களாம் அதுகளைப் பார்த்துவிட்டு இந்தப் பொடியன்கள் காதல் பண்ணுதுகள். பதினாறு வயதில இந்தக் காலப் பொடியன்களுக்குப் பொம்பிளை தேவை. வசுக்கோப்புப் பாக்கத் தேப்பன்ரை காசு தேவை. : அப்பா இருக்கக் கலியாணம் செய்து குடும்பம் நடத்த வக்கேது? ۔۔۔۔۔
நகைச்சுவை நாவல் என்ற சிரமமான படைப்பிலக்கி யத்துறைக்கு முன்னோடியாகச் செங்கை ஆழியான் ஆற்றிய பணி மகத்தானதும் பாராட்டத்தக்கதுமாகும்.
(01.06.1983)
நகைச் சுவை நாவல்கள்
‘சமுதாயப் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விமர்சிக்கும் பண்பு
ஈழத்துத் தமிழ் நாவலிலக் கியத் துறையிலே ஒரு தனிப் பிரிவாக
வளர்ச்சியடையவில்லை. இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆரம்ப முயற்சிகளை
107

Page 56
செங்கை ஆழியான்
மேற் கொண்ட பெருமை செங்கை ஆழியானையே சாரும். 'விவேகி மாத இதழில் தொடர்கதையாக வந்து 1969 இல் நூலுருவம் பெற்ற இவரது ‘ஆச்சி பயணம் போகிறாள்’ நாவல் தான் இவ்வகையில் முதல் முயற்சியாகும்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முதிய தலைமுறையின் பிரதிநிதியான ஆச்சி. இளைய தலைமுறையினைச் சேர்ந்த 'கடைக்குட்டி' மகன் சிவராசாவுடனும், அவனுடைய காதலி செல்வியுடனும் கதிர்காம யாத்திரை போகிறாள். இப்பிர யாணம் கோண்டாவில் புகை வண்டி நிலையத்தில் தொடங்கிப் பொல்காவலை கண்டி ஊடாக நடைபெறுகிறது. பிரயாண நிகழ்ச்சிகளின் பகைப்புலத்தில் ஆச்சியினுடைய முதிய தலைமுறை மனப்போக்குடன் நிகழ் கால நிலை அணுகப்படும்போது அந்த முரண்பாட்டில் நகைச்சுவை பிறக்கிறது. பல்கலைக் கழக மாணவர்களான சிவராசா, செல்வி இருவரதும் காதற் குறும்புகள் இந்த நகைச்சுவைக்கு மெருகூட்டுகின்றன. யாழ்ப்பாணப்பிரதேசப் பேச்சு வழக்கின் பிரயோகமே இந்த நகைச்சுவைக்கு உயிரோட்டமாயமைந்துள்ளது. புவியியற் சிறப்புப் பட்டதாரியான செங்கை ஆழியானின் இந்நூல் அடிப்படையில் ஒரு புவியியல் விபரணமாகவும் வெளிப்பாட்டுப் பண்பில் நகைச்சுவை யாகவும் அமைந்துள்ளது. இந்நாவலைத் தொடர்ந்து செங்கை ஆழியான் மேலும் இரு நகைச்சுவை நாவல்களை எழுதியுள்ளார். வண்ணார்பண்ணைக் கிராமத்தைக் களமாகக் கொண்டு அங்கு பாரம்பரியமாக நிலவி வரும் ‘காற்றாடி’க் கலையின் பெருமை யைப் புலப்படுத்தும் வகையில் எழுதப்பட்ட முற்றத்து ஒற்றைப்பனை (1972) ஒரு நகைச்சுவைக் கிராமியச் சித்திரமாகும். யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமப்புறமொன்று அதன் வகை மாதிரியான பாத்திரங்களுடனும் பிரச்சினைகளுடனும் பேச்சு வழக்கில் நகைச்சுவை ததும்பக் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளது.
சிரித்திரன் மாத இதழிலே தொடர்கதையாக வெளிவந்து நூலுருப்பெற்ற கொத்தியின் காதல் (1975) நாவல் பேய்களைப் பாத்திரங்களாகக் கொண்ட ஒரு கற்பனைப் படைப்பு கொத்தி என்ற பேய்ப்பெண் சுடலை மாடன் என்ற பேய் வாலிபனைக் காதலிக்கிறாள். எறிமாடன் என்ற முரட்டுப் பேய் இதற்குத் தடையாக வந்து கொத்தியைத் தானே மணம் புரிய விழைகிறான். குழப்பங்களின் முடிவிற் சுடலைமாடனும் எறிமாடனும் சண்டையிட்டிறக்கின்றனர். கொத்தி தற்கொலை செய்து கொள்கிறாள். யாழ்ப்பாணக் கிராமப்புறத்தில் நேரடியாக நாம் காணும் கதை மாந்தரை இங்கே பேய்களின் வடிவில் தரிசிக்கின்றோம். நேரில் காணும் அரசியல் ஊழல்கள், சமுகக் குறைபாடுகள் என்பனவற்றைப் பேய்களின் சமுகத்தில் உருவகப் படுத்திக் காட்டியுள்ளார் எனலாம். Xა.
சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் கைவந்த ஆற்றலுடன் நாவல்கள் எழுத முன்வந்த செங்கை ஆழியான் நகைச்சுவை, பிரதேச விபரணம் ஆகிய அம்சங்களுக்குத் தமது நாவல்களில் இடமளித்தன் மூலம் ஈழத்தின் தமிழ் நாவலிலக்கியப் போக்கில் புதிய மரபுகள் உருவாகுவதற்குத் துணைபுரிந்துள்ளார் எனலாம்.
(ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்-1978) -நா. சுப்பிரமணியன்
108

சாதனையாளர் செங்கை ஆழியான்
கவிஞர். சோ. பத்மநாதன் Proligic Writters' என ஆங்கிலத்தில் ஒரு தொடருண்டு. ‘எழுதிக்குவிப்போர்’ என்று தமிழில் சொல்லலாம். ஈழத்து எழுத்தாளர்களில் செங்கை ஆழியானுக்கு இது பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்தாது. கலாநிதி நா.சுப்பிரமணியன் கணிப்பின் படி ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் 407 (1980). அவற்றுள் செங்கை ஆழியானுடையவை 26. நூலுருப் பெறாதவை 7. இவை தவிர சிறுகதைகள், குறுநாவல்கள், சமகால நிகழ்வுகள் பற்றிய விபரணங்கள் என இந்த மனிதர் நிரம்ப எழுதியிருக்கிறார்.
இதையெல்லாம் எப்படிச் சாதித்தீர்கள்?’எனக்கேட்டால் ‘உன்னுடைய வாழ்நாளில் அரைவாசியும் நீ என்ன செய்தாய்? என்ற கேள்விக்கு நான் விடை அளிக்க வேண்டாமா?’ என்று பாரசீகக் கவிஞர் சா அதியை நினைவூட்டுகிறார் இந்த சாதனையாளர்.
மேலதிக அரசாங்க அதிபராக, புகழ் பூத்த புவியியல் ஆசிரியராக, எழுத்தாளனாக ஓயாது உழைக்கும் செங்கை ஆழியான் ‘ஒவ்வொரு நாளையும் பூரணமாகப் பயன்படுத்துபவன் நான். எழுதுவதற்கு எனக்கு மூட் தேவையில்லை. நான் எப்பொழுதுமே 'றெடி’ என்கிறார்.
ஆரம்பத்தில் (கல்கியின் செல்வாக்கு?) வரலாற்று நாவல்களை எழுதிக் கொண்டிருந்த செங்கை ஆழியான் அதற்காக யாரிடமும் மன்னிப்பு (apology)க் கேட்கத் தயாராய் இல்லை. சரித்திர நாவல்களை விமர்சகர்கள் ‘தலையணை நூல்கள்’ என எள்ளளோடு குறிப்பிட்டுள்ள போதும் மக்களிடையே அவற்றிற்கு ஆதரவு அதிகம் என்று சரியாக மதிப்பிட்டு வைத்திருக்கும் செங்ை இலக்கியம் மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதில் தெளிவாகவிருக்கிறார்.
யாழ்ப்பாணச் சமுகத்தில் ஆழமாக வேரோடியுள்ள சாதிப்பிரச்சினையைக் கருவாகக் கொண்டவை பிரளயம்' (1971), ! 'அக்கினி'(1987) ஆகிய நாவல்கள். கல்வி வாய்ப்பாலும், செல்வவளத்தாலும், தொழில் மாற்றத்தாலும் சாதி ஒழியும் ! என்ற கருத்தை ஒரு தத்துவமாக முன்வைக்கிறார் செங்கை : ஆழியான் சலவைத் தொழிலாளர் சமுகத்தின் மீது தனிக்கவனம் செலுத்திய ஒரே நாவல் ‘பிரளம்’ எனலாம்.
109

Page 57
செங்கை ஆழியான் ‘முற்றத்து ஒற்றைப் பனை’ என்ற குறுநாவல் ஆசிரியர் பிறந்து வளர்ந்த வண்ணார்பண்ணைப் பகுதியைக் களமாக் கொண்டது. சுமார் 35, 40 வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் ‘கொடி கட்டிப் பறந்த பட்டம் விடும் கலையின் மகத்துவத்தை உணர்த்துவது.
தான் கண்டவற்றை, உணர்ந்தவற்றைக் கலையாக்குவதில் கைதேர்ந்தவர் செங்கை ஆழியான். சலவைத் தொழிலாளர் வாழ்வைப் பிரளயமும், சுருட்டுத் தொழிலாளர் அவலத்தை “இரவின் முடிவும், இடம்பெயரும் மீனவருடைய பிரச்சினையை 'வாடைக்காற்றும்’, சித்திரிக்கின்றன. உண்மையில் இந்த Variety தான் செங்கை ஆழியானுக்குப் பெருமை சேர்ப்பது.
தனது படைப்புகளில் உச்சமானதாக ஆசிரியரே கருதும் “காட்டாறு ஒரு காட்டுக்கிராமம் எவ்வாறு உத்தியோகத்தர்களாலும், நிலச்சுவாந்தர்களாலும் சீரழிக்கப்படுகிறது என்பதைச் சித்திரிப்பது. Woolf க்கு "The Village in the Jungle' போல செங்கை ஆழியானுக்குக் காட்டாறு. நிர்வாகச் சேவையைச் சேர்ந்த லீல் குணசேகர எழுதிய பெத் சம ‘பெட்டிசத்’தை விட இது பாத்திரப்படைப்பில் சிறந்து விளங் குகின்றது.
புனைகதை ஜாம்பவான்களான ரொல்ஸ்ரோய், ாேல கோவ், டொஸ்ரோவ்ஸ்பி ஆகியோரைப் பார்த்து நான் ஏங்குவதுண்டு. இரண்டு உலகப்போரையும் ஒரு யுகப்புரட்சி யையும் சந்தித்த ரியர்களுக்கு வாய்த்த அனுபவ வாய்ப்பு நம்மவர்களுக்கு வாய்க்குனுமா என்று! ஆனால் கிடைத்த வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்திய ஒருவரைக் காட்டச் சொன்னால் என் விரல் செங்கை ஆழியானையே சுட்டும். 'எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் லேசில் வேறு யாருக்கும் கிடைப்பது அரிது.”என்று சொல்லும் இந்த மனிதர், தான் ஒரு புவியிலாளன் என்பது குறித்து நியாயமான பெருமை அடைகிறார்.
இதற்குத் தக்க உதாரணம் ‘யானை'. யானைகள் உணவு, நீர்த்தேவைகளுக்காக இடம் பெயரும் இயல்பின. அவை நூற்றுக் கணக்கான மைல் தூரம் செல்லும் பாதை Elephant Track' எனப்படும். 'யானைத்தடம் மனிதன் காடுகளை அழிப்பதால் யானைத் தடம் அழிந்துவிட யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அழிவைச் ஏற்படுத்துகின்றன.
காலில் காயத்தோடு அலைந்து திரிந்த யானை ஓர் இளம் பெண்ணைக் கொன்றுவிடுகின்றது. காரியாதிகாரி குணராசா மரணவிசாரணை நடாத்துகிறார். சொல்லி வைத்தாற்போல சில தினங்களில் யானை சுடப்பட்டுக் கிடக்கிறது. பாதுகாக்கப்பட்ட விலங்கான யானையைக் கொல்வது சட்டப்படி குற்றம். டி.ஆர்.ஒ. மீண்டும் விசாரணை நடாத்துகிறார். “சேர் நான் தான் இந்த யானையைக் கொன் றேன்’ என ஓர் இளைஞன் பகிரங்கமாக அறிவிக்கிறான். முன்பு யானையால் அடித்துக் கொல்லப்பட்டவள் இவனது இளம் மனைவி என்று தெரியவருகிறது. இச்சம்பவம் யானைக்குக் கருவாகிறது.
ஒரு சிறு கதை தான் ஆனால் அவ்விளைஞன் யானை பின்னால் போவது எண்பது பக்கங்களுக்கு மேல் நீளுகிறது. யானை நடந்த தடம் தோறும் காட்டின் 110

வாழ்வும் படைப்புகளும்
அழகும் காம்பீரியமும் கொலுவிருக்கின்றன. கலாநிதி. க.குணராசா இதில் விபரணத்தன்மை அதிகம் என்பார். ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும் கூட நாலு வரியில் சொல்லக் கூடிய கதைதான். ஒரு மீனுக்கெதிராக மட்டுமா அந்தக் கிழவன் போராடுகதிறான். இயற்கைக் கெதிராக, மாறுபடும் சக்திகளுக்கெதிராக. அது போன்றதே தன் காதலியைக் கொன்ற யானை மீது வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட செங்காரனுடைய கதையும்.
தமிழர்-சிங்களவர் உறவில் ஏற்படும் விரிசல்களைப் பகைப்புலமாகக் கொண்ட ‘ஒரு மைய வட்டங்கள்’ தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. இன விடுதலைப் போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘அக்கினி' வெளிவந்துள்ளது. தற்போது அச்சில் இருக்கும் 'குவேனி’ இந்நாட்டில் தமிழருக்கிருக்கும் பாத்யதையைக் கூறும்.
நாவலாசிரியர் என்ற “இமேஜ் விசுவரூபம் எடுக்க செங்கை ஆழியானின் இன்னொரு பரிமாணம் அமுங்கி விடுகிறது. அது தான் புனை கதை சாராத (Non-fiction) துறையில் அவர் செய்துள்ள சாதனை, செங்கை ஆழியான் பல சமகால நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருப்பது பாராட்டுதற்குரியது. 1977 ல் யாழ்ப்பாணத்தில் பொலீஸ் வெறியாட்டம், "24 மணி நேரம்’ ஆகவும், 1978 ல் மட்டக்களப்பைத் தாக்கிய சூறாவளி 12 மணி நேரம்’ ஆகவும், 1981 ல் யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை 'மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது’ ஆகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் கோட்டை முற்றுகைக்குள்ளாகியிருந்த வேளை யில் 'களம் பல கண்ட கோட்டை' வாசகரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குணராசா கல்வியுலகிற்குத் தந்துள்ளவை “கிரகித்தல்’, ‘பொதுஅறிவு', “பொதுளச்சார்பு பல புவியியல் நூல்கள். தமிழ்நாடு பாட நூற் சபைக்கு அனுப்பப்பட்ட நூற்றிற்கு மேற்பட்ட நூல்களுள் இவருடைய பொதுளச்சார்பு ஒன்றே தெரிவு செய்யப்பட்டதென்பது நமக்கெல்லாம் பெருமை தருகிற வியம். இதை NCBH தமிழ்நாட்டில் வெளியிட்டது.
தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் மாணவர்கள், முதுகலைமானி மாணவர்கள் இவரது நாவல்களை ஆராயும் அளவிற்கு முக்கியமானவள் இந்தப் படைப்பாளி. ஐம்பது வயதிலும் ‘என்றும் அகலாத இளமைக்காரராக 'விளங்கும் செங்கை ஆழியான் மணிவிழாவுக்கு முன் தமது நாவல்கள் ஸ்கோரை ஐம்பதாக்கிவிடுவார். அவற்றுள் ஒன்று அவருக்கு அழியாப் புனழைத் தருவதாக அவருடைய “MZgnum Opns ஆக விளங்கும். நூற்றாண்டு கண்டுள்ள யாழ் இந்துக் i கல்லூரி இந்த மைந்தனையிட்டு நியாயமான பெருமை 赛 C60)Luj6)ITLD.
(செங்கை ஆழியானின் 50 வது வயது நிறைவின் போது முரசொலியில் சோ.ப.வின் கணிப்பீடு. 25.01.1991)
: శుభ్రతకు
ll

Page 58
செங்கை ஆழியானின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள் கலாநிதி ம. இரகுநாதன்
ரிழநாட்டின் வடபுலத்து யாழ்ப்பாணத்திலே பிறந்த கந்தையா குணராசா ஒரு புவியியலாளன். சிறந்த நிர்வாகி. தமிழ் இலக்கிய உலகம் அவரை "செங்கை ஆழியான்’ என்ற புனைகதை எழுத்தாளராகவே அறிந்து வைத்திருக்கின்றது. அந்த அளவிற்கு ஈழத்துத் தமிழ் புனைகதைத் துறையில் அவரின் அடையாளங்கள் பதிந்து வைக்கப்பட்டுள்ளன. 1960 களின் ஆரம்பத்தில் நாவல் உலகில் அடியெடுத்துவைத்த செங்கை ஆழியான் இன்று வரை எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை நாற்பதுக்கும் அதிகமான நாவல்களை வெளியிட்டுள்ளார். இந்நாவல்களை வரலாறு சார்ந்தவை, நகைச்சுவை பொருந்தியவை, சமுகம் சார்ந்தவை எனப் பலவாறாக வகுத்து நோக்கலாம். இவற்றுள் சமுதாயம் சார்ந்த நாவல்களில் புலப்படுத்தப்படும் சமுதாயப் பிரச்சினைகள் இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன.
செங்கை ஆழியான் நாவல்களில் ஈழத்தின் வடபுலக் கிராமங்கள் பலவும் களங்களாக இடம் பெற்றுள்ளன. இக்களங்கள் பலவற்றிலும் பிரதானமான சமுதாயப் பிரச்சினைகளாக சாதியம், சீதனம் ஆகியவற்றுடன் உழைக்கும் மக்கள் எதிர் நோக்கிய பல்வேறு பிரச்சினைகளையும் இவரின் நாவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
தமிழர் சமுதாய அமைப்பிலே காணப்படுகின்ற பிரதானமான சமுதாயச் சிக்கல்களில் ஒன்று தீண்டாமை ஆகும். ஈழத்து மக்களிடையே குறிப்பாக யாழ்ப்பாணச் சமுகத்தின ரிடையே சாதியமைப்பின் இறுக்கம் மிகக் கடினமான அளவில் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இங்கு அதிகார மேன்மையுடையவர்களாக இருந்த வேளாளர்கள், ஒரு சில சாதியினரை அடிமை குடிமைகளாக - Sʻr — n-f2 அவர்களின் சமுக உரிமைகளையும் மறுத்து வந்தனர். இதனால் -- யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் பல போர்க்கோலம் கொண் டன. இத்தகைய சமுகப் பின்னணியில எழுத்தாளர்கள் பலருக்கும் சாதியமே இலக்கியப் பொருளானது. செங்கை ஆழியானின் பிரளயம் (1989), அக்கினி (1991) ஆகிய நாவல்கள் சாதியம் தொடர்பான * ஒடுக்குமுறையினையும் அது தொடர்பான அவரின் * பார்வையினையும் எடுத்துக்காட்டுகின்றன.
& 4 ‘பிரளயம்’ யாழ்ப்பாணத்துக் கிராமத்திலுள்ள f வண்ணார் பண்ணைக் கிராமத்தைக் களமாகக் கொண்டது.
12
 

வாழ்வும் படைப்புகளும்
இக்கிராமத்தில் வாழும் சலவைத் தொழிலாளியான வேலுப்பிள்ளையின் குடும்பம் கல்வி கற்று முன்னேறி வருகின்றது. இந்நிலையில் உயர் சாதியைச் சேர்ந்த வாமதேவன் எனும் இளைஞன் வேலுப்பிள்ளையின் மகள் சுபத்திராவைக் காதலிக்கிறான். சாதியை மீறிய இக்காதலை வாமதேவனின் பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை. இதனால் வாமதேவனுக்கு அவனது சாதிக்குள் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வயிற்றிலே கருவோடு நின்ற சுபத்திராவை வாமதேவனும் அவனது பெற்றோரும் பொருட்படுத்தாத நிலையில் வாமதேவனின் தம்பியான மகாலிங்கம் அவளை ஏற்றுக்கொள்ள முன்வருகிறான். மகாலிங்கத்தின் செயல் இளைய தலைமுறையினரிடையே ஏற்பட்டுவரும் மனமாற்றத்தை எடுத்துக் காட்டியானாலும் சாதியை மீறிய காதல் துன்பத்தையே தரும் என்பதையே சுபத்திராவின் நிலை எமக்கு உணர்த்துகின்றது.
இவரின் மற்றொரு நாவலான அக்கினி யாழ்ப்பாணத்தின் கலட்டிக் கிராமத்தைக் களமாகக் கொண்டது. இந்நாவலில் வருகின்ற கனகு கலட்டியில் வாழும் அடிநிலை மக்களில் ஒருவன். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்தவன். இக்காதலை வாமதேவனின் பெற்றோரால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை. இதனால் வாமதேவனுக்கு அவனது சாதிக்குள் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வயிற்றிலே கருவோடு நின்ற சுபத்திராவை வாமதேவனும் அவனது பெற்றோரும் பொருட்படுத்தாத நிலையில் வாமதேவனின் தம்பியான மகாலிங்கம் அவளை ஏற்றுக் கொள்ள முன் வருகிறான். மகாலிங்கத்தின் செயல் இளைய தலைமுறையினரிடையே ஏற்பட்டுவரும் மனமாற்றத்தை எடுத்துக் காட்டியானாலும் சாதியை மீறிய காதல் துன்பத்தையே தரும் என்பதையே சுபத்திராவின் நிலை எமக்கு உணர்த்துகின்றது.
இவரின் மற்றொரு நாவலான அக்கினி யாழ்ப்பாணத்தின் கலட்டிக் கிராமத்தைக் களமாகக் கொண்டது. இந்நாவலில் வருகின்ற கனகு கலட்டியில் வாழும் அடிநிலை மக்களில் ஒருவன். பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்தவன். யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றபோது கனகுவும் புலம் பெயர்கிறான். கனகுவின் வெளிநாட்டுப் பணத்தால் அவனின் குடும்பநிலை உயர்வடைகின்றது. மண்வீடு கல்வீடாகின்றது. வசதிகளும் அதிகரிக்கின்றன. சகோதரர்கள் படித்து முன்னேறுகிறார்கள். இந்நிலையில் கனகு ஊருக்குத் திரும்பி வருகிறான். வெளி நாட்டுப் பணத்தால் அவனின் சமுதாயநிலை மாறுகின்றது. கனகு கனகசபை ஆகின்றான். கனகசபையின் தம்பி சிவபாலன் உயர்சாதிப் பெண்ணொருத்தியைக் காதலிக்கின்றான். இக்காதலுக்குத் தடை ஏற்பட்டபோது கனகசபை நண்பனுக்கு,
“இது தனி மனித விவகாரமல்ல. சமுக விவகாரம். ஒரு கலியாணத்தின் பின்னணியில் எத்தனை சமுக உறவு கள் இருக்கின்றன தெரியுமா? பிரிக்க முடியாதவாறு யாழ்ப்பாணத்தில் சமூகத்தோடு ஒட்டிவிட்ட சாதிப்பாகுபாடு என்ன தான் மாற்றம் நேரிட்டாலும் அழியும் என என்னால் நம்பமுடியவில்லை.
3

Page 59
செங்கை ஆழியான்
“மாற்றங்கள் சமூகத்தில் திடீரென ஏற்படுவதில்லை. படிப்படியாகத்தான் ஏற்படுகின்றன. முன்னைய காலத்திலும் பார்க்க இந்தக் கிராமத்தில் இன்று எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அடிமை குடிமை முறை இருக்கின்றதா? கட்டுப்பாடிருக்கின்றதா? கோயிலுக்குள் வரக்கூடாதெனத் தடுக்கிறார்களா? இவ்வளவும் படிகப்படியான சமூக மாற்றம் தான். கல்வியால் என் தம்பி உயர்வதால் அப்பெண் அவனிடம் காதல் கொள்ள நேர்ந்தது என நினைக்கிறன். இருவரும் மணந்து கொள்வதற்கு இந்தச் சமூகத்தால் தடை விதிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. “முதலில் எங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுக்குப் பிறகு தான், பணத்தாலும் கல்வியாலும் அந்தஸ்தில் உயர்ந்திருக்கிற அவங்களுடன் சரி நிகள் சமானமாக நின்று பேச முடியும். உரிமைகளை வென்றெடுக்கிற மாதிரி உறவுகளை அவ்வளவு லேசாக வென்றெடுக்க முடியாது.” எனக் கூறுகின்றான்.
எனவே, கல்வி வசதி, செல்வம் ஆகியவற்றால் தாழ்த்தப்பட்ட மக்களது சமுக அந்தஸ்து தானாகவே உயர்வடையும் என்பதையே செங்கை ஆழியான் தன்னிரு நாவல்களிலும் எடுத்துக் காட்டுகின்றார். ‘சமூக அந்தஸ்து மாற்றமடைவதற்கும், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றபோது கனகுவும் புலம் பெயர்கிறான். கனகுவின் வெளிநாட்டுப் பணத்தால் அவனின் குடும்பநிலை உயர்வடைகின்றது. மண்வீடு கல்வீடாகின்றது. வசதிகளும் அதிகரிக்கின்றன. சகோதரர்கள் படித்து முன்னேறுகிறார்கள். இந்நிலையில் கனகு ஊருக்குத் திரும்பி வருகிறான். வெளிநாட்டுப் பணத்தால் அவனின் சமுதாயநிலை மாறுகின்றது. கனகு கனகசபை ஆகின்றான். கனகசபையின் தம்பி சிவபாலன் உயர்சாதிப் பெண்ணொருத்தியைக் காதலிக்கின்றான். இக்காதலுக்குத் தடை ஏற்பட்டபோது கனகசபை நண்பனுக்கு,
“இது தனி மனித விவகாரமல்ல. சமுக விவகாரம். ஒரு கலியாணத்தின் பின்னணியில் எத்தனை சமுக உறவுகள் இருக்கின்றன தெரியுமா? பிரிக்க முடியாதவாறு யாழ்ப்பாணத்தில் சமூகத்தோடு ஒட்டிவிட்ட சாதிப்பாகுபாடு என்ன தான் மாற்றம் நேரிட்டாலும் அழியும் என என்னால் நம்பமுடியவில்லை.
“மாற்றங்கள் சமூகத்தில் திடீரென ஏற்படுவதில்லை. படிப்படியாகத்தான்
இ! ஏற்படுகின்றன. முன்னைய காலத்திலும் பார்க்க இந்தக் கிராமத்தில் இன்று எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. se9 tç? 60) LD (ğ5 Lç? 60) LD (ᏞᏁ 6Ꮱ) [Ᏼ இருக் கரின் றதா? கட்டுப்பாடிருக்கின்றதா? கோயிலுக்குள் வரக்கூடாதெனத் தடுக்கிறார்களா? இவ்வளவும் படிகப்படியான சமூக மாற்றம் தான். கல்வியால் என் தம்பி உயர்வதால் அப்பெண் அவனிடம் காதல் கொள்ள நேர்ந்தது என நினைக்கிறன். இருவரும் மணந்து கொள்வதற்கு இந்தச் சமூகத்தால் தடை விதிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. “முதலில் எங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
14
 

வாழ்வும் படைப்புகளும்
அதுக்குப் பிறகு தான், பணத்தாலும் கல்வியாலும் அந்தஸ்தில் உயர்ந்திருக்கிற அவங்களுடன் சரி நிகள் சமானமாக நின்று பேச முடியும். உரிமைகளை வென்றெடுக்கிற மாதிரி உறவுகளை அவ்வளவு லேசாக வென்றெடுக்க முடியாது.” எனக் கூறுகின்றான்.
எனவே, கல்வி வசதி, செல்வம் ஆகியவற்றால் தாழ்த்தப்பட்ட மக்களது சமுக அந்தஸ்து தானாகவே உயர்வடையும் என்பதையே செங்கை ஆழியான் தன்னிரு நாவல்களிலும் எடுத்துக் காட்டுகின்றார். ‘சமூக அந்தஸ்து மாற்றமடைவதற்கும், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் அகல்வதற்கும் புரட்சியின் மூலமாக்கிடைக்கும் புதிய சமுதாயமே வழி’ என்று அக்கினியில் வருகின்ற கந்தசாமி கூறியபோது கனகு, “நம்புவோம்” என்று கூறிச்சிரிப்பதாக ஆசிரியர் சித்திரிப்பது தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையினத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகின்றது. எனவே தடையின்றி எல்லாருக்கும் கிடைக்கின்ற கல்வியைத் தக்கபடி பயன்படுத்துவதாலும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாலும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் படிப் படியாக அகன்றுவிடும் என்பதே ஆசிரியரின் சாதியம் தொடர்பான UTÄ60)6) 6T6OT6)TLb.
தமிழர் சமூக அமைப்பில் குடும்பம் என்ற கட்டமைப்பு பிரதானமானதாகும். திருமணத்தின் மூலம் ஓர் ஆணுடன் இணைந்து குடும்பத்தவளாகி அதாவது இல்லாளாகி வாழும் வாழ்வே பெண்ணுக்குச் சிறப்பானதென்றும் இவர்கள் கருதுகின்றனர். ஆனால் குடும்ப அமைப்பு ஆணாதிக்கத்தை மையப்படுத்தியே உருவானதால் அதன் உருவாகத்தில் ஆண்களின் நலனே பெரிதும் கவனிக்கப்படுகின்றது. ஆண்கள் தமதும் தமது குடும்பத்தவரதும் நலனைக் கருத்திற் கொண்டே தமக்குரிய பெண்களைத் தெரிவு செய்கின்றனர். இத்தகைய பெண் தெரிவின்போது சீதனம், சாதி ஆகிய இரண்டு அம்சங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாண சமூகத்தில் சீதனம் இரண்டு வகையாகப் பெற்றுக் கொள்ளப்படுகிறது. பெண் வீட்டார் தம் பெண்ணுக் காகக் கொடுக்கும் வீடு, காணி முதலிய அசையாச் சொத்துக்களும், ஆபரணங்களும் பணமும் சீதனம் என்ற பெயரில் குறிக்கப்படுகின்றன. இவற்றைவிட அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளையின் வீட்டாருக்கும் ஒரு தொகைப் பணம் வழங்கப்படுகின்றது. இது மாப்பிள்ளையின் பெற்றோருக்கோ மணமாகாத சகோதரிகளுக்கோ வழங்கப் படுகின்றது. இப்பணம் மணமகனின் சகோதரியின் வாழ்வுக்கு அவசியமானது என்பதால் ஆணின் தரப்பிலிருந்து அது நியாயப்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிலைமையினால் பெண்ணைத் தெரிவு செய்யும்போது ஆண்கள் தமது விருப்புகளைப் புறக்கணித்து சீதனம், நன்கொடை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே பெண்ணைத் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. இது ஒரு வகையில் ஆணையும் பாதித்தாலும், இதனால் வாழ்வை இழந்து நிற்பவள் பெண்ணே. சீதனப் பணமில்லாமல் வாழ்வை இழந்து நிற்கும் பெண்களால் சமூகத்தில் பல்வேறுவிதமான பிரச்சினைகள் உருவாகின்றன. இவ்வாறான பிரச்சினைகள் சிலவற்றைச் செங்கை ஆழியான் நாவல்களினூடாகவும் காணமுடிகின்றது.
15

Page 60
செங்கை ஆழியான்
வறிய குடும்பத்தில் பிறந்து பல்கலைக் கழகம் சென்றவன் சிவராசா. அவனின் காதலி கங்காவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். சிவராசாவின் கல்விக்காக ஈடு வைக்கப்பட்ட காணி, அவனின் உழைப்பை எதிர்பார்த்திருக்கும் சகோதரிகள் இவ்வளவை யும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மாமன் ஈடு மீண்டு, சகோதரிகளுக்கும் வாழ்க்கை தேடித் தந்து சிவராசனையும் தனது மகள் சரோசாவுக்கு மணம் செய்துவைக்க விரும்புகிறார். சிவராசாவின் பெற்றோரும் இதற்கு உடன்படுகின்றனர். சிவராசாவின் குடும்பநிலையை அறிந்த கங்கா தனது காதலைத் தியாகம் செய்கிறாள். சிவராசன் தனக்காக வாழ முடியாதவன். அவனை எதிர் பார்த்துச் சகோதரிகள், ஈடு வைத்த காணி இவையெல்லாம் இருக்கும் போது அவையனைத்தையும் தன்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் காதலும் பணக்காரர்களுக்கே உரியது என நினைத்து கங்கா தனது காதலைத் தியாகம் செய்கிறாள். சீதனம் இல்லாத ஏழைகள் காதலிக்க முடியாத சமூகத்தில் பணக்கார சரோசாவிடம் கங்காவின் காதல் தோற்றுப் போய் விடுகின்றது. இதனால் கங்கா திருமணமாகாமல் கன்னியாகவே வாழ்கிறாள்.
கங்காவிடம் சீதனம் இல்லை. அவளைச் சீதனமின்றி மணந்து கொண்டால் சிவராசனின் சகோதரிகள் வாழ்வு பாதிக்கப்படும். இத்தகைய முரண்பாடான நிலையில் சிவராசன் தரப்பிலிருந்து சீதனம் வாங்க வேண்டிய தேவை எடுத்துக் காட்டப்படுகின்றது. சிவராசன் சீதனம் வாங்கியே சகோதரிகளின் வாழ்வை மலர வைக்க முடியும் என்ற நிலையில் அவனும் தனக்காக வாழ முடியாதவனாகின்றான். இதனால் காதலும் பணக்காரர்களுக்கேயுரியது என்பதை ஆசிரியர் உணர்த்திவிடுகின்றார். எனவே தற்போதுள்ள சமூக அமைப்பு மாறாதவரை சீதனக் கொடுமையும் ஒழியப் போவதில்லை. சீதனக் கொடுமை நிலைத்திருக்கும் வரை பெண்களின் வாழ்வு துன்பமாகவே இருக்கும். இதற்கு எடுத்துக்காட்டு கங்காவின் வாழ்வு மறுபக்கத்தில் ஆண்கள் கூடத் தமக்காக வாழ முடியாமல் துன்பப்படுவதற்கும் இச்சீதனக்கொடுமையே காரணமாகி விடுகின்றது என்பதற்குச் சிவராசனின் வாழ்வு எடுத்தக் காட்டுகின்றது. எனவே சீதனக் கொடுமை தனியே பெண்களை மட்டும் பாதிக்கவில்லை. அது ஆண்களையும் பாதிக்கின்றது என்பது இந்நாவலினுாடாக உணர்த்தப்படுகின்றது.
காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் (1983) என்னும் நாவலில் யாழ்ப்பாணச் சமூகத்திலுள்ள திருமணமாகாத இளம் பெண்கள் பலரின் பெருமூச்சுக்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்நாவலின் பிரதான பாத்திரமாக வருகின்ற மனோரஞ்சிதம் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் ரவீந்திரனைக் காதலிக்கிறாள். அவள் படித்து முடிந்ததும் அவளின் பெற்றோர் அவளின் உழைப்பைக் கருத்திற் கொண்டு அவளின் காதலுக்குத் தடையாக இருக்கின்றனர். அவளுக்காகக் காத்திருந்த ரவீந்திரன் வேறு திருமணம் செய்து விடுகின்றான். இதன் பின்னர் மனோரஞ்சிதத்திற்குப் பேசப்படும் திருமணங்கள் அனைத்தும் சீதனப்பிரச்சினை யால் குழம்பி விடுகின்றன. இதனால் அவள் திருமண வாய்ப்பை இழக்கிறாள்.
116

வாழ்வும் படைப்புகளும்
இந்நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ணான சித்திராவும் சீதனக் கொடுமையால் திருமணவாய்ப்பை இழக்கிறாள். அவள்,
“பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பெண்ணாகப் பிறந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒருக்காலும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பாவம் செய்த சமூகம்.பேராசை பிடித்த சமூகம்.’ (பக்.49) என்று சமூகத்தின் மீதான தனது வெறுப்பை வெளிக்காட்டுகிறாள். அவள் தனது தகுதிக்கு ஏற்ற வாழ்வையே தேடினாள். சீதனக் கொடுமையால் அதைக் கூட அவளால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவளே தனது நிலைமையை எடுத்துக் கூறுகின்றாள்.
'எனக்கொன்றும் பெரியதொரு உத்தியோகத்தன் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று நான் ஒருக்காலும் எண்ணியதில்லை. எங்களிடம் இருக்கின்ற சீதனத்திற்கு அளவாக ஒரு மாப்பிள்ளையைத்தான் என் தகப்பனார் தேடினார். எத்தனை பேர் வந்தார்கள். அவர்களுக்காக அலங்கரித்து அலங்கரித்தே நான் தேய்ந்து போனேன். ஒருவருக்குப் பொம்பிளை பிடிக்கவில்லை. இன்னொருவருக்குச் சீதனம் போதவில்லை. இன்னொருவருக்குத் தன் தங்கைக்கு டொனேசன் வேணுமாம். இப்படி.இப்படி.என் வயது ஏறியது தான் மிச்சம்.’ (பக்.49)
திருமண வாய்ப்பை இழந்தபோது அவள்,
'கலியாணம் இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு வர்த்தகம் போல . இலாப நோக்கம் பார்க்கும் வர்த்தகம் போல. பணம் படைத்தவர்கள் சற்றுப் படித்த நல்ல உத்தியோகத் கிற்கு வந்த இளைஞர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சீதனத்தைப் போட்டி போட்டு அதிகரிக்க வைக்கிறாள்கள். அந்த வர்த்தகப் போட்டியில் எங்களைப்போன்ற சாதாரண பெண்கள் மூலையில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான். (பக்.50) என்ற முடிவிற்கு வருகிறாள். இந்த முடிவு சமூக யதார்த்தத்தினூடாக ஆசிரியர் கூறும் முடிவாகவே கருதத்தக்கதாகும்.
இந்த நாவலில் வருகின்ற இன்னொரு பெண்ணான ராஜி சீதனக் கொடுமையால் திருமண வாய்ப்பை இழந்தவள். எனினும் தன் இளமையைப் பழுதாக்க விரும்பாமல் தனது காதலனுடன் ஒழுக்கப்பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் காண்கிறாள். தனது சகோதரிகளினதும் தனதும் வாழ்வைப் பாழாக்கிய சமூகத்தை வெறுக்கின்றாள்.
‘ஆடு கத்தினால் கூட பருவத்திற்கு அழைத்துச் செல்கின்ற இந்தச் சமூகம் .சீச்சீ. கிழடாகிற குமருகளைப் பற்றி .? அவர்களின் இயல்பான உணர்வுகளைப் பற்றிச் சிந்திக்கிறதா? நான் இந்தச் சமூகத்தைப் பழி வாங்கப் போகிறேன். இந்தச் சமுதாயம் சொல்கிற சம்பிரதாயங்களை உடைக்கப் போகின்றேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வாழப்போகிறேன். சம்பிரதாயச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற என் அக்காமாருக்கு வாழ்வளிக்க முயற்சிக்கின்ற அதே வேளை என் இளமையை அவமாக்க நான் தயாராகவில்லை.’ (பக்.20-21) எனக் கூறி ராஜி தனது காதலனோடு கூடி இளமையை அனுபவிக்கிறாள். மேலும் சீதனக் கொடுமையால் பெண்களோடு
7

Page 61
செங்கை ஆழியான்
கூடப்பிறந்த ஆண்களும் தமது இளமையை அவமாக்க வேண்டியிருக்கின்றது என்பதையும் ராஜி எடுத்துக் கூறுகின்றாள்.
"அவரும் என்னைப்போலத் தான். அவரை நம்பி வீட்டில் இரண்டு அக்காமாரும் ஒரு தங்கைளும் காத்திருக்கிறார்கள். சீதனப் பேயும் காத்திருக்கிறது. வி ஆர் ஜஸ்ற் பிறன்ட்ஸ். அங்க இருக்கும் வரை வாழ்வோம். வெளியே போனதும் அவர் யாரோ நான் யாரோ.எங்கள் முன் கிடக்கும் கடமைகள் முடிய நானும் கிழவியாகி விடுவேன். அவரும் கிழவனாகி விடுவார்.’ (பக்.20)
ராஜியின் வார்த்தைகள் தமது சகோதரிகளின் வாழ்வுக்காகத் தம்மைத் தியாகம் செய்யும் ஆண்களின் பரிதாப நிலையை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறானவர்களைப் பொறுத்தவரை சீதனம் வாங்குவது நியாயப்படுத்தப்படலாம். எனினும் இது தனிப்பட்ட முறையில் ஒரு சிலரது பிரச்சினையல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சினை. எனவே தனிப்பட்ட முறையில் ஆண்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. அவர்களும் தமக்காக வாழ முடியாதவர்களாகி விடுகின்றார்கள்.
இத்தகைய நிலையில் தான் ராஜியும் அவனும் தமது இளமையை அனுபவிக்கத் துணிகின்றனர். இங்கு ராஜி என்ற பாத்திரத்தின் மூலமாக ஆசிரியர் எமது சமூகத்தை எச்சரிக்கின்றார். சீதனக் கொடுமை சமூகத்தை இவ்வாறு தான் பாதிக்கும். எனவே சமூகம் திருந்த வேண்டும் என்பது ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.
அடுத்து இலங்கை ஒரு விவசாய நாடாகும். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் விவசாயிகளே அதிக எண்ணிக்கையினராக உள்ளனர். விவசாயத்தைப் பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களின் பிரச்சினைகளும், வாழ்க்கைத் தரமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சிலர் விவசாயிகள் என்ற பெயரில் குட்டி நிலச் சுவாந்தர்களாக விளங்குகின்றனர். சிலர் சிறிய சிறிய துண்டு நிலங்களையே சொந்தமாக வைத்திருக்கின்றனர். வேறு சிலர் சொந்த நிலம் எதுவுமின்றி குத்தகை விவசாயிகளாகவுள்ளனர்.
இவர்களைவிட மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்ற மக்களும் ஈழத்துத் தமிழர்களில் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் எதிர் நோக்கும் பொதுவான பிரச்சினை வறுமை, பணக்கார வர்க்கத்தினரின் சுரண்டல் ஆகியனவே. செங்கை ஆழியானின் காட்டாறு (1977), என்னும் நாவலில் வன்னிப்பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்நாவலின் தோற்றம் பற்றி செங்கை ஆழியான் நாவலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார்.
‘விவசாய தொழிலாள மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொளுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னொரு வாக்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். நிலந் தேடிய பின் அதனையும் இழந்து சீரழிவதைக் காணமுடிந்தது. அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையில் உலவும்
18

வாழ்வும் படைப்புகளும்
முதலாளித்துவக் கூட்டமும், உத்தியோக வர்க்கமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன என்பதை நான் என் கண்களால் காண நேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. பல முனைகளிலும் தாம் சுரண்டப்படுவதை அறியாது, அறிய வகையற்ற தேங்கிய குட்டையாகக் கிராம மக்கள் வாழ்ந்து வருவதையும், அதிகாரத்திற்கும் சண்டித்தனங்களுக்கும் பயந்து ஒதுங்கி யிருப்பதையும் ஆங்காங்கு சிறு தீப்பொறியாக இளைஞர் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன். என் மனதில் இவை அனைத்தும் ஆழப்பதிந்து வெளிவரத் துடியாத் துடித்தன. இச்சின்னத்தனங்களை, தேசியத் துரோகிகளை, மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு.
ஆசிரியரின் நோக்கத்திற்கு ஏற்ப நாவலில் விவசாயிகள் பல்வேறு விதமாகவும் சுரண்டப்படுவது காட்டப்படுகின்றது. கிராமசபையால் வீதிகளைத் திருத்துவதற்காக ஒதுக்கப்படும் பணத்தை கிராமசபையின் தலைவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து எவ்வாறு கையாடுகிறார்கள் என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். ஒப்பந்தக்காரனான கந்தசாமியிடமிருந்து சேர்மன் தனக்குரிய பங்கைக் கேட்டு நிற்கும்போது ஒப்பந்தத்தில் எவ்வாறு கையாடல் நடைபெறுகின்றது என்பது தெரிய வருகின்றது.
“இரண்டாயிரத்திலை செய்து முடித்துவிடக் கூடிய வேலையை நான் பத்தாயிரத்திற்கு எஸ்ரிமேற் போடச்செய்து உமக்குக்கொன்றாக் தந்தன். ஏன் தந்தன்? எல்லாரும் பிழைக்க வேண்டும் என்றததுக்காகத்தான். நீர் நினைக்கிறீர் ஏதோ நான் தனிய இரண்டாயிரத்தைக் கொண்டு போகப் போறன் எண்டு. எத்தனை பேருக்குப் பிரிச்சுக் கொடுக்க வேணும். (பக்.14)
இங்கு இரண்டாயிரத்தில் செய்து முடிக்க வேண்டிய வேலைக்குப் பத்தாயிரம் போட்டதால் எண்ணாயிரம் ரூபாவை இந்த அதிகாரிகள் சுரண்டிவிடுகிறாள்கள் என்பது காட்டப்படுகிறது.
மேலும் விதானையார், அப்போதிக்கரி, காணி ஓவிசியர், கிளாக்கள்மார், ரி.ஓ.மார், ஓவிசியாமார் முதலியோரெல்லாம் கிராமமக்களைச் சுரண்டுவதைக் கண்டு இளைஞர்கள் சிலர் விழித்துக் கொள்கின்றனர். அவர்களில் ஒருவனான சந்தனம், எதுவுமே அறியாத தாமரைக்கண்டு போன்ற விவசாயிகளுக்கு அவர்களின் சுரண்டல் பற்றி எடுத்துக் கூறுகின்றான்.
‘கடலாஞ்சி விதானையாரிடம் ஒரு முறைப்பாடு கொடுக்கிறதெண்டால் மூன்று ரூபா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கள் அரசாங்கக் காணிக்கு விதானையாரின் சிபார்சு பெறுவதற்குக் குறைந்தது ஒரு புசல் நெல், ஐந்து கொத்து உளுந்து ஏதாவது தேவைப்படுகுது. ஒரு கூப்பன் பெறுவதற்கு விதானையாரின் றிப்போர்ட் பெற ஒருவன் எத்தனை தடவை அலைய வேண்டியிருக்குது. பத்துப் பன்னிரண்டு தடவை அலைஞ்ச பிறகும் இரண்டு ரூபா வாங்கிக் கொண்டுதான் றிப்போர்ட் கொடுக்கிறார்.’ (பக்.104)
9

Page 62
செங்கை ஆழியான்
‘எங்கட கிராமத்து வைத்தியசாலை எப்படி இயங்குது? அந்த அப்போதிக்கரி ஐம்பது சதத்திலிருந்து ஐந்து ரூபா வரை வாங்காமல் ஆருக்காவது வைத்தியம் பார்த்திருக்கிறாரா? நல்ல மருந்து கொடுக்கிறதெண்டால் அவருக்கு மேசையில் வைக்க வேணும். காசில்லாவிட்டால் கத்தரிக்காய் பிஞ்சு அல்லது முட்டைகள் கொடுக்க வேணும். நல்ல மருந்துகளை ஓடலி எடுத்து வித்துவிடுவான் எண்டு மேசை லாச்சிக்குள்ள பூட்டிவைச்சு காசுக்கு இலவச வைத்தியம் செய்யிறவர். தமிழ்ப்பகுதியெண்டு நல்ல திறமான மருந்துகள் வாறதல்லை எண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிற அந்த அப்போதிக்கரி வாற மருந்துகளை எல்லாம் சேகரித்து வைக்கிறார். ஏன் தெரியுமே? பென்சன் எடுத்ததும் தனிப்பட்ட டிஸ்பென்சரி போட. அரசாங்கம் மக்களுக்குத் தருகிற இலவச மருந்துகளை வைத்துக் கொண்டு காசு சம்பாதித்து வீடு, காணி, பூமி என்று தேடியது போதாமல் இப்ப மருந்து சேமிப்பும் நடக்குது. இது சுரண்டலில்லையா? (பக். 104-195)
சந்தனம் இவ்வாறு கூறக்கேட்ட சந்திரன்,
‘உணவு உற்பத்திக் கிணறுகளுக்கு அரசாங்கம் தாற இரண்டாயிரத்து எண்ணுாறு ரூபாவில் கடலாஞ்சிக் காணி ஓவிசியமார் அடிக்கிறது எவ்வளவு தெரியுமோ? வார முடிவில் கடலாஞ்சியிலிருந்து ஊருக்குப்போகிற காணி ஒவிசியாமார் கொண்டு போற ஆட்டுக்கிடாய், கோழிகள், முட்டைகள் லக்ஸ்பிறேக்கள் எல்லாம் ஆர் கொடுத்தது? கிராம மக்களிடம் வாங்கிய லஞ்சங்கள் தான்.இவர்கள் எல்லாரும் கடலாஞ்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.’ (பக்.105-106) என்று தனது கருத்தைக் கூறினான். இதைக் கேட்ட கணபதி, தினசகாயம் வாத்தியை மட்டும் இதற்குள் இழுக்காதீர்கள்’ என்றுகூறிய போது சந்தனம், ‘இந்தக் கிராமத்திலேயே மிக ஆபத்தானவன் இந்த வாத்தி தான். அறிவுச் சுரண்டலைச் செய்யிறவன். எங்கட கிராமத்துப் பிள்ளையஸ் படிப்பறிவைப் பெற்றுவிடக் கூடாது.அப்படிப் பெற்றுவிட்டால் இவங்களின்ர விளையாட்டுகளுக்கு இடம் இருக்காது என்பதை நல்லாத் தெரிந்து வைச்சுக் கொண்டு திட்மிட்டு நமது சந்ததியைப் பாழடிச்சு வாறான்கள்.பத்து மணிக்குப் பள்ளிக்கூடம் திறந்து பதினொன்றிற்குப் பூட்டி விட்டு. பள்ளிக்குப் போற பிள்ளையளைக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்விக்கின்ற யாழ்ப்பாணத்து வாத்தி .வாரத்தில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்து வியாழக் கிழமை மத்தியானம் காய்கறியோடும் மல்லிச்சாமான்களுடனும் திரும்பிச் செல்வதை நீங்கள் ஒருத்தரும் காண்பதில்லையா? இவற்றைவிடவா நமது கிராமத்திற்குக் கேடு வேண்டும்.’ (பக். 109) என்று தினசகாயம் வாத்தியின் கல்விச் சுரண்டலை எடுத்தக் காட்டினான். w
ஏழை விவசாயிகள் அதிகாரிகளாலும் பணக்காரர்களாலும் சுரண்டப்பட்டு தொடர்ந்தும் வறுமையிலும் அறியாமையிலும் வாழ்வாகிப்போன மண்ணிலே இளைஞர் களின் விழிப்புணர்வு மாத்திரமன்று. இந்தச் சுரண்டலை வெளியுலகிற்கு அம்பலப்படுத்திய செங்கை ஆழியானின் துணிவும் சமுகநல நாட்டமும் பாராட்டப்படவேண்டியவை.
2O

வாழ்வும் படைப்புகளும்
1980 களின் பின்னர் ஈழத்துத் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தவர் மத்தியில் ஏற்பட்ட சமுதாயப் பிரச்சினைகள் பல புலம் பெயர்வு காரணமாகவும் ஏற்பட்டன. கொழும்பு லொட்ஜ், கிடுகுவேலி, மழைக்காலம் போன்ற நாவல்களில் புலம் பெயர்வால் விளைந்த பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. விரிவஞ்சி அவை இங்கு அவை எடுத்துக் காட்டப்படவில்லை.
முடிவாக செங்கை ஆழியானின் நாவல்களில் யாழ்ப்பா னத்தின் கிராமங்கள் பலவும் களங்களாக இடம் பெற்றுள் ளன. சுருட்டுத் தொழிலாளர் முதல் மீன்பிடித் தொழிலாளர்வரையும் பல்வேறு தொழிலாளர்களினதும், சாதாரண மக்களினதும் பிரச்சினைகள் பலவும் இவரது நாவல்களில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. எனினும் பிரதானதான சமுதாயச் சிக்கல்களாக உள்ள சாதியம், சீதனம், வறுமையும் சுரண்டலும் ஆகியனவே வகைமாதிரியாக இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இது ஓர் ஆய்வின் சுருக்கமா கவே அமைகின்றது. முழுமையான ஆய்வுக்கு இங்கு இடமில்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
பணிமேலும் பரவ.
செங்கை ஆழியான் - தமிழுக்குச் செய்த பல சிறப்புக்களால் பொங்கும் புகழ் பெற்றார் போற்றுகிறேன் இவர் வாழ்க! இலக்கியங்கள் பல செய்தார் இலக்கியங்கள் செய்வாரை இயங்கும் படி செய்வார். முன்பே இலக்கியங்கள் செய்தாரை இலங்கும் படி செய்வார் இலக்கியத்தின் புரவலனாய் இன்று இவர் திகழ்வதனால் போற்றுகிறேன் இவர் வாழ்க!
ஊக்கத்தால் உயர்ந்து உலகமெலாம் புகழ் பரப்பி - தமிழ் ஆக்கங்கள் பல செய்தார் அண்ணல் இவர் வாழ்க!
மணி விழாக் கண்டிருக்கும் மாண்பு மிகு எழுத்தாளர் பணி மேலும் பரவ எனப் பல்லாண்டு கூறுகிறேன்!
(25.01.2001) -மூதறிஞர் வரதர்
121

Page 63
கடல் கோட்டை சு.சபாரத்தினம் (சசிபாரதி)
யோகி ழறி சுத்தானந்தபாரதி அவர்களைப் பற்றி ராஜாஜி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகையில், “யோகியார் ஒரு நாளுக்கு ஒரு நூல் எழுத வல்லார்’ என்றார். நண்பர் செங்கை ஆழியான் பற்றி நான் சொல்வ தென்றாலும் யோகியார் பற்றி ராஜாஜி சொன்ன அதே வார்த்தைகளையே திருப்பிச் சொல்லாம். ஆம், செங்கை ஆழியான் எழுதுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருப்பாரானால் நாளுக்கொரு புத்தகத்தை நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். மிக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அவரது ஆற்றலை அறிவர்.
செங்கை ஆழியான் பத்திரிகைத் தொழிலில் எனக்கு அளித்த ஆதரவும் ஒத்துழைப்பும் என்னால் என்றும் மறக்க முடியாதவை. சிறுகதையோ, நெடுங்கதையோ, கட்டுரையோ எதுவானாலும் நான் கேட்டபோதெல்லாம் எவ்வித சாக்குப் போக்கும் சொல்லாமல் இன்முகத்துடன் எழுதித்தரும் இலக்கிய சுரபி e|ബി.
அவருடைய நாவல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பகைப் புலத்தையும் வேறுபட்ட மாந்தர்களையும் சித்திரிப்பவை. அவருடைய ஒரு நாவலைப்போல அவருடைய இன்னொரு நாவல் அமைவதில்லை. 'வாடைக்காற்றிலிருந்து கிடுகுவேலி'வரை இத்தகைய பண்பு நிலவி வந்தமையை அவரது நாவல்களைப் படித்தவர்கள் அவதானித்திருப்பர். அவ்வகையில் 'கடல் கோட்டை' என்ற இந்த நவீனம் முற்றிலும் வேறுபட்ட ஓர் இலக்கிய ஆக்கமாகும்.
ஒரு வரலாற்றை இவ்வாறும் கூறலாம் என்ற ஒரு புதிய கோணத்தில் ‘கடல் கோட்டை ஆக்கப்பட்டிருக்கின்றது. கடல் கோட்டையிலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனி நாவலாக எழுதுவதற்கேற்ற கதை அம்சமும், ჯa.კაჭარჯ xx கதைப்பரப்பும் கொண்டிருந்தபோதிலும் அவற்றையெல்லாம் & ஒன்றிணைத்து ஒரு வரைவிற்குட்படுத்தி சுவைஞர்களின் மனவுணர்வுக்கு ஏற்ற விருந்தாக-ஒர் இறுக்கமான நாவலாக - அதனை அமைத்துள்ளமை செங்கை ஆழியானின் எழுத்தாற்றலுக்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
செங்கை ஆழியான் இதுவரை ‘ஈழநாடு’ இதழில் மட்டும் ஆறு நாவல்களை எழுதியுள்ளார். ஈழநாட்டில் அவரது நாவல்கள் வெளிவரும் போதெல்லாம் வாசகர் மத்தியில் | பரபரப்பும் சலசலப்பும் ஏற்படுவதை நான் அவதா
22
Şპჯ X%
 

வாழ்வும் படைப்புகளும்
னித்திருக்கின்றேன். அவரது நாவல்கள் அவ்வளவு தூரம் வாசகர்களிடையே ஊடுருவியிருக்கின்றன.
‘கடல் கோட்டை’ ஈழநாடு வாரமலரில் வெளிவரத் தொடங்கியபோது ‘இது பூதத்தம்பி முதலியாரின் கதை’ என்ற ஒரு தவறான கருத்துப் பலரிடையே உருவாகியிருந்தது. எழுத்து மூலமும் நேரிலும் பலர் உன்னிடம் இது பற்றி விசாரித்தனர். ஆனால் இது பூதத்தம்பியின் கதையன்று. ஆக மூன்று அத்தியாயங்களில் மட்டுந்தான் பூதத்தம்பியின் கதை கூறப்படுகின்றது. அவ்வாறாயின் இது கச்சாய் வன்னிமை திசைவீரசிங்கனின் கதையென்றோ, வைஸ் கமாண்டர் கஸ்பார் பிகாறோவின் கதையென்றோ, பான்ஸ் கூன்ஸ் என வழங்கப்பட்ட வன் கோயனின் கதை யென்றோ முடிவு செய்துவிடவும் கூடாது.
இக்கதையில் கதைத்தலைவன் என்று எவருமில்லை. கடல்கோட்டை யாழ்ப்பாணவரலாற்றின் ஒரு கால கட்டத்தின் கதை’ என்பதே பொருத்தமானதாகும். போர்த்துக்கேயரின் ஆட்சி மறைவும் ஒல்லாந்தரின் ஆட்சி உதயமும் நிலவிய யாழ்ப்பாணத்தை இக்கதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது. அதாவது அக்கால சமுக, சமய, கலாசார, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளை இந்நவீனம் யதார்த்தமாகச் சித்திரிக்கிறது எனலாம். இன்றைய காலகட்டத்தில் நேற்றைய சரித்திரங்களான கடல் கோட்டை போன்ற வரலாறுகள் மக்கள் இலகுவில் புரிந்து கொள்ளும் வகையிலும் சுவைத்துப் படிக்கும் வகையிலும் இலக்கிய அமைவு பெறுவது அவசியம். இந்த வகையில் செங்கை ஆழியானின் ‘கடல் கோட்டை’ நாவல் ஈழத்து வரலாற்றில் புதியதொரு தோற்றம் எனலாம்.
(கடல்கோட்டை முன்னுரை. 01.01.1985)
‘வரலாற்று நூல் எழுதுவதென்பது ஒரு கலை. அதற்கு வரலாற்றுக் குறிப்புகளே முக்கியம். ஆனால் வரலாற்றினை முக்கியமாகக் கொண்ட நவீனம் ஒன்றைப் படைப்பதென்பது முற்றிலும் மாறுபட்டதொரு தனிக்கலை. இதற்கு வரலாற்றுக் குறிப்புகளும் கற்பனைத்திறனும் மட்டுமன்றி, நூற்பயிற்சியும் ஆராய்கின்ற அனுபவமும் அவசியம். இவையனைத்தும் கைவரப் பெற்றவராக இப்புதுமை எழுத்தாளர் விளங்குகிறார். கடல் கோட்டையைப் படைப்பதற்கு அவர் செய்துள்ள ஆய்வுகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் இதனைப் புலப்படுத்துகின்றன.
(01.01.19850
-பி.எஸ்.பெருமாள்
ஆசிரியர் ஈழநாடு.
23

Page 64
செங்கை ஆழியான் *கங்கைக்கரையோரம் வாசித்தபோது “இவ்வளவு தானா?” என்றிருந்த உணர்வு, வாடைக்காற்று, காட்டாறு வாசித்தபோது, இது கொஞ்சம் சங்கடமான காரியம்தான்’ என்று வளர்ந்து, கடல்கோட்டை வாசித்தபோது, ஒரு சிறந்த நாவலாசிரியராவதற்கு இவ்வளவு முயற்சியும், ஆராய்ச்சியும், இவ்வளவு வாசிப்பும் தேவைப்படுகிறதே என்று நினைக்க வைத்தது. ஆம் வித்தியாசமாக இருக்கிறதாலோ என்னவோ எனக்கு உங்கள் நாவல்களில் மிகவும் பிடித்தது கடல் கோட்டை தான்.’ (23.04.1985) கோகிலா மகேந்திரன்
‘கடல்கோட்டை நாவல் சரித்திரம் திறமையாகப் பவனி வந்துவிட்டது. அகமகிழ்ந்தவர்களுள் யானும் ஓர் ஜீவன். கதாசிரியர் செங்கை ஆழியானை எனக்குத் தெரியாது. எனது அபிப்பிராயத்தை எழுதி இதனோடு அனுப்பி வைத்துள்ளேன். அதைச் செங்கை ஆழியானிடம் சமர்ப்பித்து எனது ஆசிகளை வழங்கிவிடவும். கடல் கோட்டை மூலம் ஈழநாடு ஒரு மகத்தான பணியைச் செய் துள்ளது. சரித்திர வரலாறுகள் எழுதுவதற்கும் நாவல்கள் எழுதுவதற்கும் "வல்லமை பல வழிகளாலும் தீவிர சிந்தனைகளூடாகப் பெறல் வேண்டும். சரித்திரம் எழுதுபவர்கள் நிகழ்ச்சிகளை அப்படியே கலையின்றி ‘டயறி” எழுதுவது (8u T6) பூரணப் படுத் துவார் கள் . நாவல் கள் எழுதுபவர் கள் நிகழ்ச்சிகளைஒன்றோடொன்று தொடர்புபடுத்தி, பிணைத்து, அலங்கரித்து, வர்ணனைகளுடன் கவர்ச்சிகரமாக எழுதிவிடுவார்கள். திடீரென ஒரு நாள் வழமைபோல ஈழநாடு பத்திரிகையைப் பார்த்த சமயம் கடல் கோட்டை கதை ஆரம்பமானதை அவதானித்தேன். சரித்திர வரலாறாக அமையுமென எதிர்பார்த்தேன். பின் அக்காலத்தில் இடம் பெற்ற கதைகள் சரித்திர வரலாறுகளுடன் பிணைக்கப்படுவதையும் பார்த்தேன். இது நாவலா அல்லது வரலாற்று நவீனமா என்றெல்லாம் நினைக்கும்போது இது நாவலோடு கலந்த சரித்திரக் கதையாகத்தான் தென்படுகிறது.
செங்கை ஆழியான் இக்கால கட்டத்தில் ஈழமக் களுக்குத் தந்த அருமையான பொக்கிம். மன்னாரிலிருந்து பாதிரி பால்தேயஸ் பட்டாளத்தோடு வந்த வரலாறு மகா திருப்தி. உண்மையில் நிகழ்வை அப்படியே காட்டிவிட்டார். இன்னும் இந்நவீனத்தில் காட்சி தந்த கதாபாத்திரங்கள் யாவும் அக்காலத்தில் இடம் பெற்ற உண்மையான கலையம்சத்தை அப்படியே வாசகருக்குத் தந்துள்ளது.
(10.10.1984)
மஹாராஜ ரீ சு. து. சண்முகநாதக் குருக்கள்
“செங்கை ஆழியானது கடல் கோட்டை சரித்திர நாவலா என ஆராய முற்பட்டால் அது அந்த வரம்பிற்குள் அமையவில்லை என்பது என் கருத்து என நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரலாற்று மேன்மையை உண்மைப்
124

வாழ்வும் படைப்புகளும்
பாத்திரங்களை வைத்து எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தளவில் இந்த நூல் சரித்திர நாவலுமல்ல, நாவல் சரித்திரமுமல்ல. ஈழத்தில் புதியதொரு இலக்கிய வடிவமொன்றைச் செங்கை ஆழியான் படைத்திருக்கிறார் என்றே நான் சொல்வேன். ஆங்கிலத்தில் இதனை ‘நியூஜெர்னலிஸம்’ என்று சொல்லப்படுகின்றது. ‘நியூஜெர்னலிஸம்’ என்ற புதிய தோற்றத்தையே செங்கை ஆழியான் தந்துள்ளார். கடந்த கால உண்மை வழுவாது எழுதியுள்ளார். கடற்கோட்டையில் கற்பனைகள் இல்லை. வரலாற்றை அழியாது பாதுகாப்பதில் செங்கை ஆழியானின் பணி மகத்தானது.
(09:07.1985)
-பேராசிரியர் அ.சண்முகதாஸ்
‘உடல் நலக்குறைவு காரணமாகவே உமது கடல் கோட்டை நூல் வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போய்விட்டது. அங்கு வந்து கலந்து கொள்ள வேண்டும். வலியவே கேட்டுச் சில வார்த்தைகள் பேசவேண்டும் என்ற ஆவலோடு இருந்தேன். கலிங்கத்துப் பரணி என்பது ஒரு பழந்தமிழ் நூல். வீரம் விளைத்த போர்க்களம் பற்றிப் பாடப்பட்டுள்ளது. அதிலே காமச் சுவைக்கு இடமில்லை. SEX என்ற சர்க்கரையைச் சேர்க்காவிட்டால் சுவைக்காது என்றோ என்னவோ தொடக்கத்தில் கடைத்திறப்பு என்றொரு பகுதியை ஜெயங்கொண்டார் பாடி வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க 'அது' தான். உமது கடல் கோட்டையில் வந்த அழகவல்லியிலும் இந்த வாடை வீசியதை உணர்ந்தேன். பரவாயில்லை. ஒரேயொரு சின்னவிடம். நான் இதைக் குறையாகக் கூறவில்லை. இக்காலம் வேலை வெட்டியின்றி வீதியோரங்களில் கூட்டம்போடும் ‘முதிரா இளைஞர்களுடைய ஆருயிர் இதனைப் படிக்கும்போது என்ன பாடுபடும்?
‘கடல் கோட்டை’யைக் கட்ட நீர் பட்டபாட்டையும், தளரா முயற்சியையும், அதன் போக்கினையும் மற்றைய எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களைப் போலல்லாது முழுக்கமுழுக்கச் சரித்திரச் சான்றுகளை அமைத்து எழுதிய விதத்தையும் நான் மனமார வியந்து பாராட்டுகிறேன். கற்பனைக்கு முக்கியம் கொடுக்காமல் சரித்திரச் சான்றுகளுக்கு முக்கியம் கொடுத்து நல்ல தமிழில் இப்படியொரு நவீனம் இதுவரை தமிழ் நாட்டில் வந்ததில்லையென்று துணிந்து கூறுவேன். கடல் கோட்டை ஒரு விதிவிலக்கு! அது தமிழ்த்தாயின் முடியில் சூட்டக் கூடிய ஒரு மலர்! முகமனல்ல. என் மனமார்ந்த கருத்து இது. (2009. 1985)
-வி. ஏரம்பமூர்த்தி (ஈழத்துறைவன்) (செங்கை ஆழியானின் குரு.)
125

Page 65
இலக்கிய உலகில் முத்திரை பதித்தவர்
வண்ணை கே. சிவராஜா
ரிழத்து இலக்கிய உலகில் தனது முத்திரையைப் பதித்ததுமட்டுமல்லாது, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக நாவல் உலகிலும், சிறுகதை உலகிலும் பெரும் புகழீட்டிய செங்கை ஆழியானுக்கு அண்மையில் மணிவிழா எடுக்கப்பட்டது.
கலாநிதி கந்தையா குணராசா எனும் இயற் பெயர் கொண்ட செங்கை ஆழியான் பாடசாலைக் காலத்திலேயே இலக்கியத்துறையில் விற்பன்னராக விளங்கினார். ஈழத்து இலக்கிய உலகில் எல்லாராலும் மதிக்கப்பட்டவரும், இலக்கிய உலகில் பெரும் பங்களிப்புச் செய்தவரும், அத்தோடு கல்வியுலகிலும் பெரும் பணியாற்றியவரும் இவராவார்.
சுறுசுறுப்பாகப் பம்பரம்போல எழுதிக்குவிக்கும் அவ ருக்கு மணிவிழாக் காணும் வயது வந்தவிட்டதென்று எண் ணும் போது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இலக்கிய்திதற்காக எந்தச்சிரமமும் பாராது முயற்சி எடுக்கும் அன்னார் இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட எதனையும் செய்யும் வல்லுநராகச் செயற்பட்டமையை நாடு நன்கறியும்.
யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னோடியான கனக செந்திநாதன் அமரரான பின், யாழ் இலக்கிய வட்டத்தின் முதுகெலும்பாகச் செயற்பட்டவர் செங்கை ஆழியான். பல்கலைக்கழகப் பதிவாளராகவும், உதவி அரசாங்க அதிபராகவும், தக்க நிர்வாகியாகவும் இருந்தாலும், இவர் சிறந்த இலக்கியவாதியாகவும், ஆக்கவிலக்கிய கர்த்தா வாகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு மாமலையாக விளங்கி வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது. ஓர் உன்னத இலக்கியவாதியாக மட்டுமல்லாமல் சிறுகதை, நாவல் துறைகளில் ஒரு மேதையாகவும் விளங்கிவருகின்றார்.
தமிழ் இலக்கியத்துறையில் ஈழத்தவர்கள் எந்த விதத்திலும் மற்றவர்களிலும் பார்க்க முக்கியமாக தமிழ் நாட்டவர்களிலும் பார்க்க முத்திரை பதித்தவர்கள் என்று வாதிடவும் வல்லவராவார்.
26
 

வாழ்வும் படைப்புகளும்
அமரர் கனகசெந்திநாதனின் பின்னர் இலக்கியத் துறையில் எவருடனும் சவால் விடக்கூடியவர் கலாநிதி குணராசாவாவார். இலக்கியத்துறையில் மட்டுமல்லாது கல்வித்துறையிலும் இவர் தனது தடத்தை ஆழமாகப் பதித்தவராவார். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் புவியியல் துறையில் இவரது பங்களிப்பு அளப்பரியதாகும். கடந்த முப்பத்தைந்து வருடங்களில் புவியியல் மாணவராகவிருந்து வெளியேறிய கலைத்துறை மாணவர் மனதில் தனது இலகு நூல்கள் வாயிலாக இடம் பிடித்துக் கொண்வராவார். மேலும் பல போட்டிப் பரீட்சைகளுக்கான விவேகப் பயிற்சிகளை உருவாக்கியும் வெளியிட்டும் பல போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மத்தியிலும் அழியாப் புகழ் பெற்றார்.
நாவல்துறையில் பெரும் புகழீட்டியதுடன்,அவரது நாவல்கள் பல் சாகித்தியப் பரிசுகளையும் அத்தோடு பல இலக்கியப் பரிசுகளையும் பெற்றவையாகும். இவற்றில் வாடைக்காற்று திரைப்படமாகவும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆக்கவிலக்கியத்துறையில் புகழ் பெற்றிருந்தும் இவர் பிற இலக்கிய கர்த்தாக்களின் மேல் பொறாமையோ வித்துவக் காய்ச்சலோ அற்றவராக எப்போதும் விளங்கினார். பிற எழுத்தாளர்களைக் காணும்போதும் பழகும்போதும் இலக்கியம் பற்றிய பேச்சுக்களாகவே இருக்கும். இவர் சக எழுத்தாளர்களை முழுமனதோடு ஊக்குவிப்பதில் பின்நிற்க மாட்டார்.
(வீரகேசரி - 25. 2. 2001)
127

Page 66
கங்கைக்கரை ஓரம் கலாநிதி செல்லத்துரை குணசிங்கம்
தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றக் காலமான பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலான இன்றுவரை, தமிழ் இலக்கியத்துறையில் நாவலிலக்கியம் ஈர்த்துள்ள கவனத்தின் அளவைப் பிற இலக்கிய அம்சம் எதுவும் ஈர்க்காவில்லை என்பது மிகையாகாது. இதுவரை தோன்றியுள்ள நாவல்களின் எண்ணிக்கை, அவைபற்றிய விமர்சனங்கள் கலந்துரையாடல்கள், கருத்துரைகள் ஆகியன நாவலிலக்கியத்துறையின் அபரிமிதமான வளர்ச்சி நிலையைப் பிரதிபலிப்பனவாகக் காணப்படுகின்றன. பல்கிப் பெருகி வரும் பல்வேறுபட்ட சமுதாயப் பிரச்சினைகள் நாவலாக வடிக்கப்படுகின்றபோது அதுபற்றிய ஆரம்பகால இலக்கண விதிகள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் அவை மேலும் மேலும் விரிந்தன. இதனாலேயே காலத்துக்குக் காலம், ஏன் ஒரே காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விதிகள், இன்னும் சிறப்பாக ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கண விதிகளை நாவலிலக்கியம் குறித்துக் கற்பிக்குமளவிற்கு அதன் இலக்கண விதிகள் விரிந்தன. கற்றுத் தேர்ந்தோரிலிருந்து கற்றுக்குட்டிகள் வரையிலான பல்வகைப்பட்ட கர்த்தாக்களின் கையிலே நாவலிலக்கண விதிகள் எண்ணிக்கையிற் பெருகினாலும் அவற்றின் பொதுப் பண்பிலே கருத்தொருமைப்பாடு இழையோடுவதையும் நாம் காணத்தவறுவதில்லை, அதாவது, வசனவடிவத்திலே நடைமுறை வாழ்க் கையோடு ஒட்டிய கதைப்பொருளைக் கதாபாத்திரங்களின் இயல் புணர்ச்சி மோதல்களுடன் சித்திரிப்பதாக அமைவதே நாவல் என்பதில் இத்துறை வல்லோர் கருத்தமைதி காண்பர். இத்தகையதோர் பொதுப்பண்பினை அடியொற்றியே இன்றைய "கங்கைக் கரையோரம்’ அழைக்கப்படுகின்றது. பல்கலைக்கழக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அங்கு கல்வி பயின்று நாட்டின் எதிர்காலச் சிற்பிகளாக வரவிருக்கும் மாணவ சமுதாயத்தின் மனநிலையில் எழும் உணர்ச்சியலையின் ஏற்ற இறக்கங்களைக் காட்டி அதனால் ஏற்படும் வெளி யுலகத்தாக்கத்தைச் சித்திரிக்குமொன்றாகக் கங்கைக்கரை ஒரம் காணப்படும்.
குணராசா அவர்களின் கங்கைக் கரையோரம் வெளிவந்த போது, நாவல்த்துறையில் ஆசிரியரின் ஆற்றலை யாரும் சந்தேகிக்காத போதிலும், அதன் கதையோட்டம்
128
 

வாழ்வும் படைப்புகளும்
பற்றிய விமர்சனங்களில் ஒருமைப்பாடு காணப்படவில் லை. இவ்விமர்சனங்களை மிக ஆழமாக அவதானிக்கையில், இந் நூல் இருவகைப்பட்ட விமர்சனங்களை தோற்றுவித்தது எனலாம். அதாவது இன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகத்தில் பயின்றோரும் மிக அண்மையில் பல்கலைக்கழகக் கல்வியை முடித்து வெளியேறியோரும் ஒரு வகையில் அடங்க அறுபதாம் ஆண்டின் முன்னரும் அதன் ஆரம்பத்திலும் அதனை அண்டியிருந்த காலப்பகுதியிலும் பல்கலைக்கழத்திற் பயின்று வெளியேறி யோரும் பல்கலைக்கழகத்தின் படியையே என்றும் காணாத பிறரும் மறுபிரிவில் அடங்குவர். பின்னவர் கங்கைக்கரை யோரத்தின் கதையோட்டத்தில் யதார்த்தம் காணுகின்ற போது முன்னவர், கங்கைக்கரையோரம் ஒரு கற்பனைப் படைப்போவென்று ஐயமுறுமளவிற்கு அதன் கதையோட்டத்தைக் கடுமையாக விமர்சிப்பர். தொடர்ந்து வந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் பல்கலைக்கழகச் சூழலின் பல்வேறு அம்சங்களிலும் அதிகளவில் ஏற்பட்ட மாற்றங்களே இந்நூலின் கதைப்போக்கினைச் சந்தேகிக்க காரணமாக இருந்ததெனலாம்.
பல்கலைக்கழகத்தில் அரசியல்துறை சார்ந்த நடவடிக்கைக்கைகளே மேலோங்கி நிற்கும் இன்றைய நிலை ஒருபுறமிருக்க, பாடவிதானங்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் “கார்னிவல்’ வருடங்களையே கனவிலும் அறியாது ஆண்டாண்டு வரும் பரீட்சைகளுக்காகத் தம் முழுப்பொழுதையும் பாடநூற் கல்வியில் ஒரு முகப்படுத்தும் மாணவ சமுதாயம் வாழ்கின்ற இன்றைய நிலையில், ஒரு காலத்தில் அந்தி வேளையில் காதலர்களின் ஆக்கிரமிப்புக்காளாகிக் களைகாட்டிக் காணப்பட்ட கங்கைக் கரையோரம், அண்மைக்காலமாக அடிக்கடி ஏற்பட்டு வரும் மிகையான வெள்ளோட்டங்களினால் பற்றைகள் சூழ்ந்து வெறிச்சோடிச் சோபையிழந்து கிடக்கையில், சிதைந்து இடிந்து சிதிலமாகிக் காலதேவனின் கடைசி உதைக்காகக் காத்திருக்கும் கட்டிடங்கள் வழிபடுதலங்கள் ஆகியன காதலர்களின் அந்திப்பொழுது அட்டகாசத்துக்குரிய இடங்களாக மாறியிருக்கும் இன்றைய நிலையில், உணவின் தரத்திலே ஏற்பட்ட தவிர்க்கமுடியாத தரக்குறைவினால் உடல் சுருங்கித் தவணை விடுமுறைக்காகத் தவங்கிடக்கும் மாணவ சமுதாயம் வாழ்கின்ற இன்றைய நிலையிலே தமிழ்ச் சமுதாயத்தின் ஆணிவேரையே அரிக்கும் அளவிற்கு வரம்பெற்று விளங்கும் வரதட்சணையின் கொடுமையில் இருந்தும் தப்பிக் கொள்வதற்காகத் துணைவேண்டுகின்ற போது தூரவிலகாது இலேசாக இணையும் இதயங்கள் வாழும் இன்றைய பல்கலைக்கழகச் சூழலிலே சோககிதம் பரப்பும் ஒன்றாக இந்நாவல் வெளிவந்தமை, இதன் கதையோட்டம் பற்றிய ஒருவகைப்பட்டோரின் சந்தேகத்தை நியாயப்படுத்துவதாகவே அமைகின்றது. இருந்தும் இதற்கான தவறு எவ்விதத்திலும் ஆசிரியரை சார்ந்ததல்ல.
தன் படைப்பொன்றுக்குக் கதைப்பொருளைத் தேர்ந்தெடுக்கையில் நாவல்
ஆசிரியன் “காலம்” பற்றிய கட்டுப்பாட்டுக்கு ஆளாவதில்லை எத்தேசத்தினதும்
நீண்ட கால வரலாற்றில் எக்கட்டத்தையாவது தேர்ந்தெடுத்து அப்படிப்பட்ட
உண்மைகள் மாறுபடாதவிதத்தில் கதைப்பொருளை அமைத்துக் கொள்ளும்
29

Page 67
வாழ்வும் படைப்புகளும்
சுதந்திரம் நாவலாசிரியனுக்குண்டு இதுபோன்றே குணராசா அவர்களும் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான் பல்கலைக் கழகத்தில் வாழ்ந்த அறுபதாம் ஆண்டுக் காலப் பகுதியையே கங்கைக் கரையோரத்தின் கருப்பொருளாகக் கொண்டுள்ளார் என்பதனை அதன் பக்கங்களை ஊடறுத்துச் செல்லுகையில் காணமுடியும் கோபாலரத்தினம், வசந்தி, போன்ற பாத்திரங்களும் பேராசிரியர் வித்தியானங்தனின் விரிவுரை பற்றி பேச்சுக்களும் எக்காலத்துக்கும் உரியனவாய்ப் பல்கலைக்கழகத்து நீண்டகாலச் சூழலில் ஒருமைப்பாடு காட்டும் சாதனங்களாக இந்நூலில் வந்துபோனாலும், ஆசிரியர். அடிக்கடி கையாளுகின்ற இன்றைய பல்கலைக் கழகத்தில் வழக்கொழிந்த ‘ஹாய்’, ‘யோக்கர்”, “பிளடி பிறசர்’ சள்பண்ணுதல் போன்ற வார்த்தைகளும் தற்போது கனவிலும் காணமுடியாத கோழிக்கறி போன்ற உணவு வகைகளைப் பற்றிய செய்திகளும் பல வருடங்களுக்கு முன் ஆசிரியர் வாழ்ந்த பல்கலைக் கழகச் சூழலையே இந் நாவல் பிரதிபலிக்கின்றதெனக் கொள்ளப் போதுமானளவு சான்றுகளாக அமைகின்றன. இதேவேளயிைல் தான் கற்ற கல்லூரிக்கும் இப்போது கற்கின்ற பல்கலைக் கழகத்துக்கும் இடையே வேறுபாடு காணமுடியாத விதத்திலே விரிவுரையாளரின் ஆற்றலைக் கடுமையாக விமர்சிக்கும் அறுபதாம் ஆண்டளவிற்கொவ்வாத முதல் வருட மாணவி கங்காவை, நாவலிலே நடமாடவிட்டுள்ளமை ஆசிரியர் தானறிந்த பல்கலைக்கழகத்தின் தற்காலச் சூழ்நிலையின் செல்வாக்கில் இருந்தும் தன்னை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியவில்லை எனக் காட்டுவதாக அமைகிறது.
நாவலின் கதையோட்டத்தை வழிநடத்திச் செல்லும் பாத்திரமாகச் சிவராசன் அமைய அதற்குதவியாக வந்து போகும் கமலம், கங்கா, சரோசா, வசந்தி, கோபாலரத்தினம் போன்ற பாத்திரங்கள் அவற்றுக்கேயுரிய இயல்பான மாறுபட்ட சுபாவங்களோடு குறிப்பிடத்தக் கள விற்கு உணர்வுள்ள கதாபாத்திரங்களாக அமைகின்றன. சந்தர்ப்பம் சதி செய்தால் ஞானிகள் கூடத்தம் இலட்சியத்தையிழந்து விடுவர் என்பதற்கு இக்கணமாயமைந்து “பண்புகள் நிறைந்த ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக வர வேண்டிய பட்டதாரி மாணவர் கூட்டம், பல்கலைக்கழகத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கின்றது” என்ற ஆசிரியரின் அவலக் குரலைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சிவராசன் தன் மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்களை இடையிடையே நினைந்து கொண்டாலும் மலர்விட்டு மலர் தாவி ஈற்றிலே மதியிழந்தவனாய்ப் பல்கலைக்கழக வாழ்வின் எக்காலத்துக்கும் பொருந்தவல்ல பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.
எத்தகைய வறுமையிலும் குடும்பத்தில் ஒருவன் உயர்ந்துவிட்டால் அவனை அம்முழுக் குடும்பமுமே பற்றுக் கோடாகக் கொண்டு தன் நிலை மாறி ஈற்றிலே விபரீத விளைவுகளுக்குள்ளாகி வருவதனைத் தமிழ்ச் சமுதாய சூழலில் அடிக்கடி காண முடிகின்றது. ஆரம்பத்தில் கதையை வாசித்துச் செல்லும் போது இத்தகையதோர் நிலையினை கமலம் என்ற பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் விளக்கிச் செல்வது கண்டு மகிழ்ச்சி காணமுடிந்தாலும், ஈற்றில் அம்மகிழ்ச்சி மறைந்து போகிறது. தம்பி சிவராசனின் பட்டப்படிப்பிலே கோட்டை கட்டித் தன்
130

வாழ்வும் படைப்புகளும்
குடும்பப் பழுவை நன்கறிந்தும், பேசிவரும் முதிசம் பெற்ற கமக்கார மாப்பிள்ளையைக் கரம்பற்ற மறுக்கும் கமலம், பல தமிழ்க் குடும்பங்களின் சீரழிவைச் சித்திரிக்கும் பாத்திரமாக ஆரம்பத்தில் தோன்றிக் காட்டும் யதார்த்த நிலை, அவள் நான் காத்திருந்தமைக்கான கைமேற்பலனை அடைவது போல ஆசிரியன் ஒருவனை மணக்க முடிகின்ற போது மறைந்து விடுவதனை" அவதானிக்கிறோம்.
ஆகாரத்திற்கான அழுக்கைச் சாப்பிட்டு, ஈற்றிலே தடாகத்தையே சுத்திகரித்துச் சுயநலத்திலே பொது நலம் காணும் மீனைப் போன்று “கன்டோஸ்’ உணவின் மூலம் சிவராசனுடன் உறவு வளர்த்து, சிவராசனுடன் தோய்ந்தெழுகின்ற கங்கா, ஈற்றிலே சிவராசாவின் குடும்பத்திற்குச் சுகங்காணும் நோக்கிலே சிவராசனை விலகி நிற்கும் செயல் ஓரளவிற்குச் செயற்கைத் தன்மை கொண்டதாகவே காணப்பட்டாலும் கங்கா கதைப்போக்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்த பாத்திரமாகவே காணப்படுகின்றாள்.
ஆசிரியரின் பிரசாரச் செயலுக்குக் கருவிகளாக அமைந்த பாத்திரங்களின் பல்வகைப்பட்ட உரையாடல்களும் நாவலின் போக்கை முழுமை பெறச் செய்வனவாகக் காணப்படுகின்றன. “சீனியேஸஸுக்கும் யூனி யேஸஉக்குமிடையில் நெருங்கிய தொடர்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காகத்தான், றாகிங்’ எனப்பல்கலைக் கழகத்தில் நீண்ட கால வரலாறு கொண்ட றாகிங் நிகழ்ச்சிக்குச் சுந்தரம் கொடுக்கும் விளக்கம் ஆரம்பத்தில் அந்நிகழ்ச்சி கொண்டிருந்த புனித நோக்குக் காலகதியில் திரிந்து அழிந்தொழிந்தமையை இன்றைய சந்ததிக்குக் காட்டி நிற்கின்றது. காதற்சுரங் கொண்ட சிவராசனுக்கு “ஒருத்தியையும் நீ காதலிக்காதே யூனிவேசிற்றியில் காதலிப்பதென்பது காசுச் செலவைத் தான் ஏற்படுத்தும் அடிக்கடி அவளைக் கன்ரீனுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். நீ மத்தியதர வாழ்க்கைத் தரமுள்ள குடும்பத்தவன்” எனச் சத்தியலிங்கம் வழங்கும் அன்பு கலந்த அறிவுரை நித்தியத்தன்மை கொண்ட உரையாடலாக இருப்பதோடு, பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட மாணவ சமுதாயத்தினர் ஒவ்வொரினது தாழ்விலும் ஏற்றத்திலும் ஒருங்கிணைந்து செயலாற்றும் யதார்த்தத்தினை வெளியுலகுக்குக் காட்டுவதாக அமைகின்றது.
ஒரு கால கட்டத்துப் பல்கலைக்கழக வாழ்வின் பெரும்பாலும் முழு அம்சங்களையும் குறுகிய பக்கங்களில் ஒன்று சேர்த்துக் காட்டும் முதல் நாவலாகக் கங்கைக் கரையோரத்தைக் கொள்ளலாம். எண்ணிக்கையிற் குறைந்த பாத்திரங்கள் மூலம் அளவான, ஆனால் உயிருள்ள உரையாடல்களை அமைத்து, ஆரம்பத்தில் நாம் காட்டிய நாவல் இலக்கியத்தினது பொது அம்சத்தினின்றும் வழுவாத முறையிலே இந்நாவலைச் சிருடித்த குணராசா அவர்களும் அதனை ஊக்குவித்த வீரகேசரி வெளியீட்டுத் துறை நிர்வாகி திரு. எஸ். பாலச்சந்திரனும் பாராட்டுக் குரியோராவர். (வீரகேசரி 01-07-1979)
3

Page 68
இரவின் முடிவு
“வால் சுத்துக் கட்டும் பையனாக’ அந்தச் சுருட்டுக் கொட்டிலுக்குள் நுழைந்து, புகையிலைக் காம்பால் அடிவாங்கி, நாளென்றுக்கு ஆயிரக்கணக்கில் சுருட்டித் தள்ளும் லாவகம் பெற்று 45 வருடங்களைச் சுருட் கழித்துக்கூட, அத்தொழிலால் தனது வாழ்க்கையில் வளமாக்கிக் ர்ளமுடியாது அத்தியாவசிய தேவைகளின் நெருடுதல்களுக்கு ஈடுகொடுக்கமுடியாது “மாறிச் சாறி’ச் செக் கிழுத்துக் கொண்டிருந்தும் ஒடிந்துவிழாத அந்த ஏழை உழைப்பாளியின் முதுகெலும்பு, மானம், என்ற அந்த ஊன்றுகோல் சரிந்ததாக கேள்விப்பட்டபோது ஒடிந்து விழுகிறது. அத்தகைய மானஸ்தன் கொண்டிருந்த அபிலா'ைகளும், வாழ்வு நோக்கங்களும், போக்குகளும் தான் எத்தகையவை? ஐயாத்துரை என்ற அந்த உழைப்பாளிக்கு வாய்த்த மனைவி பாக்கியம், தான் அடைய முடியாதவற்றிற்காக ஏங்கி வாழ்க்கையைச் சோகமாக்கி, நரகமாக்கிக் கொள்கின்றாள். அவள் வயிற்றிற் பிறந்த பெண்ணோ தாயைப்போலப் பிள்ளை என்ற செல்லுக்கு விதிவிலக்காகி வாழ்க்கையை யதார்த்தமாக எதிர்கொள்கிறாள். மூத்தவன் என்று பிறந்தவன் தான் தாயை குணத்தில் உரித்துவைத்துப் பிறந்தவனோ! இரண்டாவது மகனான சண்முகநாதன் குடும்பப் பொறுப்புணர்ந்த பிள்ளை. மானஸ்தனான அத்தந்தையின் மனங்கோணாது இறுதிவரை சீராகநடந்து, அவர் இறந்த போதுங்கூட, அவர் மானத்தைக் காப்பாற்ற முயல்கிறான். ஆனால் கடைசிவரை உற்ற நண்பனாயிருந்து தேவையான நேரத்தில் பொருள் உதவியோ, சரீர உதவியோ செய்து பக்க ஒரு ஊன்று கோளாக இருந்த கணபதிப்பிள்ளை மாஸ்டர் இறுதியில் அப்படியொரு குண்டைத்துாக்கிப் போட்டது அச்சம்பவக் கோலங்களின் சிகரம்.
யதார்த்தமான பாத்திரப்படைப்புக்கு, அந்தப் பாத்திரங்களின் இயல்பான பலவீனங்களை ஒளிவு மறைவின்றி வெளிக்கொணர்ந்து படைக்கும் ஆற்றலுக்கு செங்கை ஆழியான் ஈடிணையற்றவர் என்பதை அவர் ஏற்கனவே வெளியாக்கிய தமது நவீனங்கள் மூலம் நிறுவியவர். இன்னும், ஒரு நாவலின் ஓட்டத்திற்கு ஈடும் எடுப்பும் கொடுக்கும் வகையிற் சம்பவங்களைக் கோர்ப்பதிலும் வல்லவர் அவர். எனவே “இரவின் முடிவு’ என்ற இந்த நாவலும் எந்த வகையிலும் அந்த அம்சங்களில் சோடை போகவில்லை. செங்கை ஆழியானின் முத்திரை செவ்வனே படிந்துள்ளது. எனினும், கோடாக் காய்ச்சும் கணேசனின் அப்பழுக்கற்ற அன்பிலும் மகேஸ்வரி. கணேசனே தன்னைப் புரிந்து கொண்டவன் என்று கூறி, அவனோடு வாழ்வதில் தனக்கு நிறைவேற்படும் என்று பேசி வந்த நல்ல இடத்துச் சம்பந்தத்தை தட்டிக்
132
 

வாழ்வும் படைப்புகளும்
கழிப்பதிலும் வாசகனைப் பாத்திரங்களோடு இணையச் செய்வதில் பெரு வெற்றி கண்டபோதிலும் சுருட்டுத் தொழில் பற்றிய விமர்சனங்கள் குன்றியிருப்பது ஒரு குறைபாடே.
அக்குறைபாடு தானும், பெண்கள் என்றால் அதிக தார்மீக உதாரகுண மேம்பாடுகளின் சின்னம் என்ற இலட்சியக் கோட்பாடு மலினமாகி இந்நாவலில் பாக்கியமும், இந்திராவும் அவரவர் குணங்களோடும், அபிலாஷைகளோடும் புனைதல் பெறும்போது பகலவன் முன் சிறு விளக்குப்போல கரைந்துவிடுகிறது. கணபதிப்பிள்ளை மாஸ்டர் மரணப்படுக்கையில் “சண்முகநாதா! நீ என் மகன்’ என்ற போது வாசகனுக்கு ஒரு இக்கட்டான நிலை தோன்றும் “அப்பா!” என்று ஓடிச் சென்று கட்டிக்கொள்வானா? அல்லது அமைதியாகவே அதைத் தாங்கிக் கொள்வானா? இத்தகைய ஒரு சந்தர்ப்பத்திலே ஐயாத்துரையினால் புடம்போடப்பட்ட ஒழுக்க சீலம் அவனை அருவருப்புக்குள்ளாக்குகிறது. ஒரு எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தின் ஒழுக்கத்திலும், உணர்விலும் ஆரோக்கிய நோக்குக் கொண்டிருக்க வேண்டும் என்பது இங்கு நிரூபணமாகின்றது. பலரும் படித்துப் பயனடைய வேண்டிய ஒரு நூல்
(வீரகேசரி 1977)
"செங்கை ஆழியானின் இரவின் முடிவு என்ற நாவல் ‘ஈழநாடு’ நாவல் போட்டியில் ‘போராடப்பிறந்தவர்கள்’ என்ற தலைப்புடன் பரிசு பெற்றுத் தொடராக வெளிவந்தது. சிற்சில மாற்றங்களுடன் நூலுருப் பெற்றுள்ளது. இந்த நாவலின் கதை யாழ்ப்பாணத்துக் கிராமப்புறமொன்றின் சுருட்டுத் தொழிலாளர் சமுகத்தைச் சித்திரிப்பது. வறுமையிலும் செம்மையாக வாழ முயல்கிறார் சுருட்டுத் தொழிலாளியான ஐயாத்துரை. கிடைக்காத ஆடம்பர வாழ்க்கைக்காக ஏங்கும் மனைவி பாக்கியலட்சுமி குடும்பப் பொறுப் பை அலட் சரியம் செயப் கிறாள். மூத்த மகன் பொறுப்புக்களிலிருந்து விலகிச் சீரழிகழறான். தொடரான துன்பங்களின் முடிவில் மகள் மகேஸ்வரியும் இளைய மகன் சண்முகநாதனும் குடும்பப் பாரத்தைச் சுமக்கின்றனர். தொழிலாள குடும்ப அவல வாழ்க்கையைக் காட்டும் இந்நாவலில் கதையம்சம் நிறைவு பெறவில்லை.
நா. சுப்பிரமணியன்
133

Page 69
செங்கைஆழியானின் சமகாலப் புனைகதைகள்
செங்கை ஆழியான் சமகால எரியும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஏராளமான சிறுகதைகளையும் நாவல்களையும் தந்துள்ளார். 1983 களிலிருந்தே அவருடைய படைப்புகளில் சமகாலப்பிரச்சினைகளும் மானிட அவலங்களும் முக்கியம் பெற்றுவருகின்றன. அவருடைய "இரவு நேரப் பயணிகள்’ என்ற சிறுகதைத் தொகுதியிலுள்ள அனைத்துச் சிறுகதைகளினதும் பேசும் பொருள் மானிட அவலங்களாகும். யுத்த நெருக்கடிகளும், தீராத இனப்பிரச்சினையின் பாதிப்புகளும், தொடர்ந்த இடப்பெயர்வுகளும், வறுமையின் கொடூரமும் மக்களை தாங்கொணாத் துயரத்தினுள் தள்ளிவிட்டன. நித்தம் அவலப்படும் அம்மக்களின் துயரங்களை அவரின் புனைகதைகள் பேசுகின்றன. அவருடைய இன்னொரு சிறுகதைத் தொகுதியான “யாழ்ப்பாண இராத்திரிகளிலுள்ள பெரும்பாலான சிறுகதைகள் தற்போதைய மானிட அவலங்களைத் தான் பேசுகின்றன. அவர் எழுதி முதலில் மல்லிகையிலும், பின்னர் சுபமங்களாவிலும், பின்னர் மேலைத் தேசத் தமிழ்ப் பத்திரிகைகள் பலவற்றிலும் வெளிவந்து பலரதும் கவனத்தை ஈர்ந்த ‘ல்ெலும் ஏழு இஞ்சிச் சன்னங்களும்’ சித்திரிக்கின்ற மானிட அவலமும்
சோகமும் ஏற்படுத்துகின்ற வலி கொடுமையானது.
- கிருபானந்தா
‘போர்க்கால வடமாகாண அவலங்களை உங்களுடைய ஆக்கங்கள் பதிவு செய்தது போல, ஏனையன பதிவு செய்யவில்லை என்பது எனது அபிப்பிராயம். பிரசாரங்களுக்கு வளைந்து கொடுக்காது, அதே சமயம் இலக்கியவாதி உண்மையின் நித்திய உபாசகன் என்கிற கோட்பாட்டிற்கு உடைவு ஏற்படாமல், இந்தப் படைப்புகள் அமைந்தன. எண்பதுகளின் மிகத் தாக்கமான படைப்பாளி நீங்கள் என்கிற அபிப்பிராயம் என் கருத்து.' Na
(14. O7. 1999) -எஸ். பொன்னுத்துரை
செங்கை ஆழியான் ஏற்கனவே அக்கினிக்குஞ்சு, யாழ்ப்பாணக்கிராமம் ஒன்று, சாம்பவி, மீண்டும் ஒரு சீதை முதலான சமகாலச் சூழலை எடுத்து விபரிக்கும் பல
34
 

வாழ்வும் படைப்புகளும்
குறுநாவல்களைத் தந்துள்ளார். பெரும் நாவல்களாக மரணங்கள் மலிந்த பூமி, போரே நீ போ, வானும் கனல் சொரியும், மெல்ல இருள் இனி விலகும், போராடப் பிறந்தவர்கள் என்பனவற்றைப் படைத்தளித்துள்ளார். இவற்றில் முதல் மூன்று நாவல்களும் நூலுருப் பெற்றுள்ளன. மெல்ல இருள் இனி விலகும் தினகரனில் தொடராக வெளிவந்தது. போராடப்பிறந்தவர்கள் நூலுருப் பெறாது பிரதியாகவுள்ளது.
‘ஒரு வரலாற்றை எழுதுபவன் தனது உள்ளக்கிடக்கையை அதில் கூறமுடியாது. ஆனால் ஒரு இலக்கிய கர்த்தா தான் பார்த்த விடயம் குறித்தும் தனது விருப்பம் எப்படி அமையவேண்டும் என்பதை இணைத்தும் எழுதும்போது அது இலக்கியமாகிறது’ கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) எழுதிய மரணங்கள் மலிந்த பூமி நூல் வெளியீட்டு விழாவில் மதிப்புரையாற்றிய சிற்பி சிவ சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.
இடப்பெயர்வைப் பகைப்புலமாகக் கொண்டு இரண்டு பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்த நூலில் பெரும்பாலான பாத்திரங்கள் வரலாற்றை ஒரு இலக்கிய கர்த்தா பார்க்கும் பார்வையாக உருவாக்கப்பட்டுள்ளன.
சகலரிடமும் இருக்கும் ஆயுதங்கள் கீழே போடப்பட வேண்டும். எல்லாரும் அமைதியான வாழ்வு வாழவேண்டும் எனக் கூறும் ஆசிரியர் ஒரு கால கட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலையை ஆதரித்து ஏராளமாக எழுதியவர். அவருடைய மரணங்கள் மலிந்த பூமி இன்றைய யதார்த்த நிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.’ என்றார் வரதர். ‘ஒரு ஆசிரியருக்கு இருக்கக் கூடிய ப்ெருமையும் உச்சமான மகிழ்ச்சியும் தனது மாணவன் தன்னிலும் பார்க்க உயர்ந்த நிலையிலிருப்பதே. வள்ளுவனும் அதனையே சொல்கிறான். இவரது சில நூல்கள் பிரச்சினைக்குட்பட்டவை. எழுத்தாளனுக்குத் தனி உரிமையுண்டு. சில கசப்பான உண்மைகளையும் சமுதாயம் ஏற்கத்தான் வேண்டும். ‘என்றார் நூலாசிரியரின் ஆசிரியரான எஸ். சிவராமலிங்கம்.
‘இன்றைய சமுக பொருளாதாரப் பிரச்சினைகளையும் இன்று வரை தொடரும் மரணங்கள் குறித்த நிகழ்வுகளையும் சித்திரிக்கும் இந்நூலின் வாயிலாகக் கூறப்படும் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் நினைத்த உணர்ந்த அனுபவித்த விடயங்கள் மரணங்கள் மலிந்த பூமியாக இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது. இதில் சமுக இடர்ப்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை மையமாகக் கொண்டு S சத்தியஜித்ரே ஒரு படத்தை எடுத்தார். அது போல எமது நிலைகளை எடுத்துக் காட்டும் நூலாக இந்நூல் அமைந்துள்ளது.’ என்ற பேராசிரியர் இரா சிவச்சந்திரன்
குறிப்பிட்டார். * 'ಳ'¥¥ಿ
0§ሃለይሏለኝ0ላ!
35

Page 70
வாழ்வும் படைப்புகளும்
மரணங்கள் மலிந்த பூமி நாவலை கனடா உதயன் பத்திரிகை 1000 கனேடிய டொலர் கொடுத்து வாங்கித் தன் பத்திரிகையில் தொடராக வெளியிட்டது. அதன் பின்னர் நூலுருப் பெற்று தேசிய சாகித்யப் பரிசினையும் தமிழ்நாடு இலக்கியப் பெருமன்றத்தின் பரிசினையும் பெற்றுக் கொண்டது. இலங்கையில் இரண்டு பதிப்புகள் வெளிவந்த நிலையில் தமிழ் நாடு காவியா பதிப்பகம் அடுத்த பதிப்பை அங்குவெளியிட்டுள்ளது.
செங்கை ஆழியானின் ‘போரே நீ போ’ வலிகாமத்தில் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வின்போது இடம் பெயராது இங்கு தங்கிவிட்ட மக்களின் துயரத்தினைப் பேசுகின்றது. போராளிகளின் வாழ்வு நிலை, அந்தஸ்து மீறிய காதல் உறவு, குடும்ப நெருக்கம், யுத்த அவலங்கள் என்பன போரே நீ போவில் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. ஒவியர் ரமணியின் சித்திரங்களுடன் மாபெரும் இடப்பெயர்வை மீண்டும் கண் முன் நிறுத்துகின்றன.
‘வானும் கனல் சொரியும்’ நாவல் ஒரு சோக காவியமாகும். சிறு வயதில் தந்தை கொல்லப்பட்டதும் கனடாவிற்கு ஓடிச்செல்லும் கதாநாயகன் பல வருடங்களின் பின்னர் இளைஞனாக இலங்கைக்குத் திரும்பி வருகிறான். அவன் இங்கு சந்திக்கும் பேரிடர்கள், அவலங்கள் வானும் கனல் சொரியுமாகவுள்ளது.
136
 

ஆசை அண்ணை
செங்கை ஆழியான் தனது இரண்டாவது தமையனின் மறைவின்போது எழுதிய நினைவஞ்சலி ஒரு புனைகதை உரைச்சித்திரமாக அமைந்துவிட்டது. அந்தப் படைப்புக் குறித்த கணிப்புகள்
‘என் அன்பைக் கவர்ந்த பழைய மாணவர்களுள் நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்ட நீர். எழுத்துத் துறையில் நான் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்கிறேன் என்ற மனத்தாங்கல் உமக்கும் என் மருமகன் து. வைத்திலிங்கத்திற்கும், ராஜகோபாலுக்கும் இன்னும் பலருக்கும் உண்டு என்பது எனக்கு நன்றாகத் தெரியும். சென்ற இரவு ஏதோ இந்த நினைவுகளும், உம்மைப்பற்றிய நினைவுகளுமாக நடுச்சாமம் வரை தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். விடியத் தபால்காரர் ஆசை அண்ணை’யைக் கொண்டு வந்து தந்தார். ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். ஜெயராசசிங்கத்தை நினைத்துக் கண்கள் கலங்கவில்லை. ஆனால் செங்கை ஆழியானின் பாசக் குரலைக் கேட்டுக் கண்கள் உண்மையிலேயே குளமாகித்தான் விட்டன.”
(20 01. 1985) - வி. ஏரம்பமூர்த்தி
தாங்கள் அனுப்பிய ஆசை அண்ணை நினைவு மலர் கிடைத்தது. உடனேயே முடிவறியும் வேட்கையோடு ஒரே மூச்சில் படித்து முடித்ததும் ஒரு சொட்டுக் கண்ணிர் விழுந்தது. அருமையான தம்பி! இப்படியான தம்பி எனக் கில்லை. தனி மரமாக நிற்கும் வேளையில் சகோதர பாசமும் வலிமையும் நெஞ்சத்தைத் (ogIILITLD6) 6LT.'
(03.10.1985) -மூதறிஞர் க. சி. குலரத்தினம்
ஆசை அண்ணை தேன் துளிக்குது. பொருள் EB)
கொப்பளிக்குது. இது ஒரு முதற் படைப்பு ஒப்பாரி, கல் வெட்டோடு போய்க் கொண்டிருந்த உலகத்தை இந்த வகைக்குத் திருப்பி எளிதாக்கிவிட்டீர்கள். ஒப்பாரியை ஒப்பாரி தெரிந்த பெண் தான் சொல்லிக் கவலையைத் தொலைக் கிறாள். ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தப்பாக்களால் கல்வெட் டைப் படித்தவர்களை கொண்டெழுதுவித்து ஆள் கூட்டிப் பாடுவித்துத்தான் மக்கள் தங்கள் கவலையைப் போக்கி வந்தார்கள்.
37

Page 71
வாழ்வும் படைப்புகளும்
இறப்பு நாட்களில் ஒப்பாரி தெரிந்த பெண்டாட்டி கவலையைத் தெரிவிக்கிறாள். தெரியாத பெண் தொலைக்காமல் கவலையை அனுபவிக்கிறாள். கவலை தொலைக் கப்பட வேண்டிய நீங்கள் உங்கள் கவலையை இந்த நூலின் வசன ஒப்பாரிகளால் தொலைத்து விட்டீர்கள். இனி ஒரு சொட்டுக்கூடக் கவலை இருக்க நியாயமில்லை. இருக்காது.
எல்லா இடங்களிலும் அண்ணன் தொடர்பு கொண்ட இடங்களை எடுத்துச் சுட்டிக் கவலையைத் தீர்க்கிறீர்கள். ‘ஒரு தாயின் முலை சுரந்த அமுதத்தையே நாங்கள் அனைவரும் உண்டு வளர்ந்தோம். சில வேளைகளில் ஐயா வருவதற்கு முன் நீ உறங்கிவிட நேரும். ஐயா மறக்காமல் அச்சரையை உன் தலைமாட்டில் வைத்துவிடுவார். நீ அதே நினைவாக நடுச்சாமத்தில் எழுவாய். தலைமாட்டில் இருந்து எடுத்து நற நற வென்று நீ கற்கண்டு கடிக்கிற சத்தத்தில் அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்துவாள். வாழைப் பழத்தையும் சாப்பிட்டுவிட்டுத் தான் நீ மீண்டும் உறங்கு வாய்.” இன்னோரன்ன அவரது வாழ்க்கைச் சரித்திர சம்பவங்களைச் சுட்டிக்காட்டிப் பேசி இருப்பதும் அவர் சோகத் தடிப்பைக் கழற்றக்கூடிய முக்கியவிடங்களாகும்.
“இந்நூல் ஒப்பாரி வகையில் ஒரு புதுப் படைப்பு. என்னிடம் கல்வெட்டுப் பாடித்தரும்படி வருபவர்களை யெல்லாம் உங்கள் ‘ஆசை அண்ணை’ புத்தகத்தை வாசித்துக் காட்டி, அதில் சொல்லிய வண்ணத்தின் படி நீங்கள் உங்கள் கவலையை எழுதிக் கொண்டு வாருங்கள். நான் சொற்பிழை, வசனப்பிழைகளைத் திருத்தித் தருகிறேன் என்று சொல்லி, அப்படியே அவர்களின் கூற்றைத்தான் அச்சாக்கிக் கொடுக்க எண்ணுகிறேன். உங்கள் இந்த நவீன ஒப்பாரி எனக்குத் தேனாய், கருப்பஞ்சாறாய், தீங்கனி ரசமாய்த் தான் எனக்கிருக்கிறது.
‘என்னா சைத்தம்பி செங்கை ஆழியாற்
கெழுது நிருபம்
உன்னா சையண்ணை வந்தென் உள்ளத்தை
உலுப்பிய துதம்பி
பொன்னா கவெழுதி விட்டாய் பொற்பாகப்
படைத்து விட்டாய்
நின்னொப்பார் பிறரில்லை எனக்கினிய செய்தவருள்
நீயே யானாய்’
(10.10.1985) -வேலணைப்பண்டிதர் பொ.ஜெகந்நாதன்
'மூன்று மாத காலம் மலேசியாவில் தங்கியிருந்து, மூன்று நாட்களுக்கு முன் தான் யாழ் வந்தேன். உங்கள் ஆசைஅண்ணையைப் படித்தேன். அழுதேன். மனம் புனிதமாகியது. பரதன் என்ற பாத்திரத்தின் உண்மைகளை அப்போது முற்றாக உணர முடிகிறது.’
(O3.10. 1985) நந்தி
138

வாழ்வும் படைப்புகளும்
‘ஆசை அண்ணை கிடைக்கப் பெற்றேன். நின் கலைப் படைப்புகன் சிலவற்றைப் படித்து மகிழும் பேறு பெற்றவன். ஆனால் அன்பினால் உருகி, பாசத்தில் கரைந்து நிற்கும் ஓர் உள்ளத்தை உருவாகக் காட்டும் ஆசை அண்ணை என்னை உருக்கி நிற்கிறது. காலம் கடந்து நிற்கும் ஆற்றல் படைத்த வாக்கியங்கள் பல. உ-ம்- ஆண் பிள்ளைகளின் கழுத்தில் அவர்களின் சீதன விலையை மாட்டிவிடும் .நின் யதார்த்த வெளிப்பாட்டைக் காட்டி நிற்கின்றன. வளர்க நின் தமிழ். (19.09. 1985) -6. f6)lymLD6SilastbhairGO)6T (செங்கை ஆழியானின் குரு)
தங்களின் சகோதரரின் நினைவஞ்சலி வாசித்தேன். வேகமாக வாசித்துச் சென்றபோது கண்களில் இருந்து நீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை. ஒரு நல்ல எழுத்தா ளரைச் சகோதரனாகப் பெற்றது உங்கள் ‘அண்ணா செய்த பாக்கியம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்புதிய முயற்சி மனதைத் தொடும் நல்ல முயற்சி. எழுத்தாளர் பலர் எதிர்காலத்தில் உங்களைப் பின்பற்றக் கூடும். உங்களைப்பற்றியும் உங்கள் சகோதரரைப் பற்றியும் நிறையவே அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி. நீங்கள் ஒரு சுயசரிதை எழுதினால் மிகச் சுவாரஸ்யமாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
(23.09. 1985) -கோகிலா மகேந்திரன்
139

Page 72
வாழி நீ செங்கைஆழியான்!
கலாநிதியாகியபோது. ‘இந்துவின்நின்றும் எழுந்ததோர் கொழுந்து இற்றைநாள் கலாநிதி யாக வந்ததென் றறியும் போதுறு மகிழ்ச்சி
வார்த்தையில் அடங்குவ தன்று செந்தமிழ்க் கரிய அணிகலன் சமைத்த
“செங்கைஆழியான்’ என உன்னைச் சந்ததி வியக்கும் சாதனை படைத்தாய்
தகுமொரு கலாநிதிப் பட்டம்! ஆறுகால் மடமும் கலட்டியும் வழுக்கி
ஆறுபாய் அராலியும் காற்றில் ஏறுபட் டத்தின் “விண்’ஒலி கூவும்
இளமை நாள் நினைவெலாம் கதைகள் தோறும்நீ பயில விட்டனை அவற்றின்
சுவையினில் கிறங்குமென் மனசு! ஆறுவதில்லை இவை யெலாம் நின்போல்
ஆர்கொலோ எழுதினார் நிறைய!
ஒற்றையாய் நின்று சோளகக் காற்றில்
ஊசலா டிடும்உன்றன் வீட்டு முற்றத்துப் பனைக்கோர் இலக்கியம் மற்று
மீனவர் வாழ்க்கையின் சுமைகள் பற்றிய 'வாடைக்காற்று’ ‘காட்டாறு
“பிரளயம்’ ‘ஆச்சியின் பயணம்’ 'அக்கினி’ ‘யாககுண்டம் உன் 'யானை'
அனைத்தும் நெஞ்சரங்கினில் உலவும்! வீழ்ந்துபட் டிருக்கும் தமிழினம் நிமிர
வேண்டுவ எழுதுக ஈழம் தாழ்ந்திட வில்லைப் புனைகதைத் துறையில்
தலைநிமிர்ந் துள்ளதென் றுலகம் சூழ்ந்திடு மாறெம் இன்றைய நிலையும்
இனிவரும் எழுச்சியும் சுட்டி வாழ்ந்திடும் அரிய இலக்கியம் ஒன்று
வழங்குக வாழிய நீடு!
(30.10.1993) -கவிஞர் சோ. பத்மநாதன்
140
 

வாழ்வும் படைப்புகளும்
மணிவிழாவின்போது.
அள்ளிக் கொடுத்துச் சிவந்தன கர்ணன்
அங்கையும் அதுபோன்றே
அள்ளக் கொடுத்தனை தமிழை நின் விரல் வழி அவைகளுஞ் சிவந்தனவோ
கொள்ளை நின் படைப்புகள் கலையொடு இலக்கியம்
கற்பனையுடன் தமிழின்
வள்ளலே செங்கை ஆழியா னேநீ
வாழிய பல்லாண்டே.
படைக்குந் திறன் இறை கொடையாம்
படைத்தவன் நினக் களித்தான் படைத்தனை பல்வகைச் சிறுகதை நாவல்
பிரதேசச் சிறப்புடனே படைத்தனை ஆய்வுகள் பிற பல தொகுத்தனை
புகன்றிடிற் கொள்ளையதாம் புடைத்தவ ரிலைநினைப் போலவிவ் வீழப்
பதிதனில் வாழியவே.
தோன்றிற் புகழொடு தோன்றுக என்றன்
சேந்நாப் போதகனும் தோன்றினைப் புகழைத் தேடினை நின் திறன் தோன்றிடத் தமிழ் செய்தே தோன்றிலை புகழில் திளைத்தும் கள்வம் வித்துவச் செருக்கு முகம் ‘தோன்றிடும் புன்னகை தோற்றிடும் மனதின்
தூய்மை நீ வாழியவே.
உலகுல வரைதமிழ் வாழும் அதனொடு
வாழும்நின் செந்தமிழே
பலமாம் நினது படைப்புகள் தமிழின்
பெருநிதி புகழ்ச்சியிலை
நிலமிசை இன்றுள நிலைமையைச் சொன்னனை நிகழ்ந்ததும் சொல்லி வைத்தாய்
அயலகடல் சூழ்இவ் ஈழமண் பெற்ற
ஏந்தலே வழியவே.
14

Page 73
வாழ்வும் படைப்புகளும்
சங்கம் வளர்த்த தமிழ்வளர்த் துயர்ந்தாய் செந்தமிழ் வளர்க்குமெங்கள் சங்கம் கொழும்பில் செய்நலத் தொண்டாம்
திறன்மிகு தமிழரினைச் சங்கைசெய் தவர்தம் திறன்பிற ரறிந்திடச் செய்தலாம் நின்னையும்நாம் சங்கைசெய் திவ்விழாச் செய்தனம் வாழி நீ
செங்கை ஆழியானே!
(16.02.2001-கொழும்புத் தமிழ்ச்சங்கம் எடுத்த மணிவிழாவின் போது)
-கவிஞர் ஜின்னாஹற்
செங்கை ஆழியான் கை
செங்கை ஆழியான்கை செங்கை - ஆமாம் எழுதிச் சிவந்திட்ட மென்கை சமகால நிகழ்வுகளை சரித்தில் உண்மைகளை புனைகதைகளாய்
புதுப்புதுப்பாணியில் சுடச்சுடக்கொடுத்ததால் சிவக்காது என் செய்யும்?
ஈழத்து இலக்கிய வரலாற்றை எதிர்கால இளவல்கள் படிக்கின்ற காலத்தில் செங்கை ஆழியான் காலம் என்றொன்றை செப்பிடும் வகையில் சிவந்த கை இவர் கை.
பாடப் புத்தகங்கள் எழுதுகின்றார் புனைகதைகள் எழுதுகின்றார்-உயர் உத்தியோகம் பார்க்கின்றார் ஊர் சுற்றி வருகின்றார் எத்தனையோ பிரச்சினைகள் எல்லாமே சமாளித்து- கலாநி வித்தகனாய் கூட விருது இப்போ பெற்றுவிட்டார் இத்தனைக்கும் இப்போ எனக்கு ஒரு சந்தேகம் மனிதர் வீட்டில் நித்திரை கொள்வதுண்டா? இத்தனை உழைப்புள்ளும்
142
 

வாழ்வும் படைப்புகளும்
இளன்மயாய் இருப்பதன் இரகசியம் கூட எனக்கோர் வியப்புத்தான்! எப்படியோ ஐயா. நீங்கள் எங்களவர் என்கின்ற பெருமையிலே எங்களுக்கும் பங்குண்டு. இறைக்கின்ற கேணிதான் சுரக்குமாம் என்பது போல --கல்வியை இறைக்கின்றீர் அதனால் சுரக்கின்றீர் மென்மேலும் ஊருணி நீர் நிறைந்தற்றே உலகெலாம் பேரறிவாளன் திரு. யானை ஒடித்தெறியும் கொப்புகளில் இலை மேயும் மானைப் போல நாங்கள் உங்கள் சிந்தனைச் சிதறல்களை செருக்கோடு கொள உள்ளோம் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பணியாற்ற வேண்டும்! (25.01.2001)
-கவிஞர் நாவண்ணன் கவிமாலை
ஆசிரிய வாண்மையிலே சிறந்து அரசாங்க அதிபரென விளங்கி தேவபுகழ் எழுத்தாலே உயர்ந்து தேசமது மகிழ்ந்திடவே வாழ்ந்து நேசமதை இலக்கியத்தில் வைத்து நெடுங்கதைகள் பலவற்றைத் தொகுத்து வாசமுள்ள ராசாவாய் மலர்ந்து வையமதில் சிறந்தே உயர்ந்தாய்.
செங்கை ஆழியான் என்றிந்த நாமம் செந்தமிழர் பதியெங்கும் ஒலிக்க மங்காத புகழு ை கதைகள் மானுட உணர்வுகளைச் சுமக்க நீங்காத இடத்தினைப் பிடித்தே நிறைவுக்கோர் நிலையமாய் நின்றே தாங்கி வரும் பதவிகளும் செழிக்க தமிழர் நிலமின்றும் வாழ்த்தும்
4.

Page 74
வாழ்புப் படப்புரம்
மணிவிழா இன்றேன் அறிந்தோம் Iான்ைபெண்ணி வாபுத்தினைப் புனைந்தோம் பணிகளை அதனுள் கோாத்தோம் பதவிகள் சிலதைக் குறித்தோம் இணையாய் குணநலம் காத்தாய் ஈழத்தில் இலக்கியம் பார்த்தாய் தனிமையாய் ஒரு விதி வகுத்தாய் தமிழரின் எண்னத்தைத் தொகுத்தாய்
ஆசானாய் அரிய பல விருதுக்குரிபவனாய் ஆளுமைமிக்க நல்ல எழுத்தாளனாய் ஆதசாக மிளிர நின்ற செயல் வல்லனாய் சிறந்ததொரு இலக்கிபக் கலைக்கூடமாட் நேசமுடன் சேவை பல புரிந்த ராசா நிதுை புகழ் அவனி தனில் நிலைக்கு மென்றும் ஆசிதரும் கலைமகளின் அருளினாலே அவனியிலே பல்லாண்டு வாழி வாழி!
(நல்லுர் சமுத்தி முகாமையாளர், உத்தியோகத்தர் மணிவிழாவின் போது
மதுரகவி
144
 

வாழ்வும் படைப்புரு
量
.
== 擂 』丁霄J
செங்கை ஆழியானின் பெற்றோர்- கந்தையா
கல்லூரி மாணவத் தலைவனாக
15

Page 75
வாபுயும் படைப்புகளும்
蠶 பல்கலைக்கழக மானவனாக
பட்டதாரியாக
 
 
 

Լւյ|| Li filLili | | fii ll I II | 'I ii iil I, III
சிறப்பு பட்டதாரி மானவனாக

Page 76
irəlil II 4 |Adil || 3 || 5 || | | | Hilfil bəli
உதவி விரிவுரையாளராக
'... . . . . . ت:';
உதவி அரசாங்க அதிபராக
|4
 
 
 
 
 
 
 
 
 

III படIIIII
கணவராக
குடும்பத்தினருடன்
|의g)

Page 77
ாபுவும் படைப்புகளும்
யாழ் இலக்கியவட்டத் தலைவராக
அகதியாக
15()
 
 

பதிவாளராக
fili|| ||I/E||Lİ | Ifill Lil' Illi

Page 78
வாழ்வும் படைப்புகளும்
பேரா (1963)
ஜனாதிபதி சந்திரிக்காவிடமிருந்து சாகித்தியமண்டலப் பரிசு (2004)
15?
 
 

til ||||||||||||||||| || ||A|| || ||||||||||||||||||||||||||
மூதறிஞர் ຜູ້ກກພງ தலைமையில் மணிவிழா
சிற்பி சரவணபவன் El mi மகாராஜ பூரீ
"ண்முகநாதக் குருக்குள்
孺而 飞
செம்பியன்செல்வன் ம்

Page 79
வா|| படைப்புகளும்
மரர் கசின் பொன்னாடை
கொழும்பில் டொமினிக்ஜிவா எடுத்த மணிவிழாவில்
போர்க்க ஜீவா வாழ்த்துகிறார்
நாயகனை ஊர்வலமாக அழைத்துச் அடிகளார் பொன்னாடை போர்த்தலும்
岛
பெற்ற விருதுகள் சில
|4
 
 
 
 
 

III பட பு

Page 80
İıl |||||||| ||i)LLİL|İıllık'ıllı
விரி (5%)IIIбіII
* 25°03′′9)
|5ն
 
 


Page 81
「디F
■ |- 『디] = 帕 | -5 H = |3= 圆 町
■ 偃 山
■ 『대] No 「日그 肝
■ No.
 

LLLLLLLLLLLLLLLLLS SLS LLS 0S00LLLLLS