கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சன்மார்க்க சட்ட விளக்கங்கள்

Page 1
d
விள
க
CB
o
Ahli
情
ஏ.ஸி.இ.கா
Eagmamamaman
W 7:AŽK
ΕΣΚΣ ΣΚΣ
 

|- ___
g) 儿——感心
鳄
Kâ==

Page 2

சன்மார்க்க 8FL விளக்கங்கள்
6J. ஸி. அகார் முஹம்மத்
அல்-கலம் வெளியீடு
பேருவலை

Page 3
SANMARKA SHATTA VILAKKANGAL
(CRuestions & Answers)
Author Go A. C. Agar Mohammed
First Edition 20th December 1996
Published by: AI Kalam Pathippaham 26/2, Yusuf Avenue, China fort, Beruwala.
Printed by: Quick Graphics Print 5-1/20, Super Market, Kotahena, Colombo -13.
ISBN 955-9454-02-1

dyFLDiil IL 600TLb
எனதன்பின் தாய் ஏ. எச். கமருன் நிஹார் அவர்கட்கும் அருமைத் தந்தை எம். ஐ. அப்துல் கரிம் அவர்கட்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்கின்றேன்.

Page 4
உள்ளடக்கம்
அணிந்துரை பதிப்புரை முகவுரை
அத்தியாயம் - 01
நம்பிக்கை சார்ந்தவை
ஆவிகளும் பிசாசுகளும்
மறுபிறப்புக் கொள்கை
Fണ്ഡIഇൺബഖft|
பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்தல் அறுத்தலின் போது நபி இப்றாஹீமின் பெயர் கூறல் ஸலவாத், திக்ர், அவ்ராதுகளில் உயர்ந்தவை
தாயத்துக்கட்டுதல், மந்திரித்தல் போன்றன மூலம் நோய்களுக்கு சிகிச்சையளித்தல்
முஹம்மத் (ஸல்) அவர்களை பிற நபிமார்களுடன் ஒப்பிட்டுப்பேசுதல்
ஷபாஅத் பற்றிய கண்ணோட்டம் ஆஷ்றா தினம்
ரஸ"லுல்லாஹ்வின் மரணம்
ஸஹாபாக்களின் நிலை
படைப்புகள் மீது சத்தியம் செய்தல்
சூனியம்
17.
2O
23
25
28
28
29
32
34
36
39
40
42
43

அத்தியாயம் - 02
வாக்க வழிபாடுகள் தொடர்பானவை
责
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழுஉ முறிதல்
நின்றுகொண்டு சிறுநீர் கழித்தல்
தி வெளிப்படல்
ஸ்கலிதமும் குளிப்பும்
அதானுக்குப் பதில் கூறல்
கழாத் தொழுகை
தொழுகையின் ஸ"ஜ"தில் துஆ கேட்டல்
தொழுகையில் குனுத்
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
சிலதொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மெளனமாகவும் ஓதுவதன் ரகசியம்
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடாத்தல்
தஹஜ்ஜத்துடைய நேரம்
ஜும்ஆவுக்கான முந்திய இரண்டு ரக்கஆத் ஸ"ன்னத் தொழுகை
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
குத்பாவின் போது தொழுதல் பெண்கள் பள்ளி வாசல் சென்று தொழுதல் குல்லதைன்
துன்யாவுடைய விஷயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
லக்காத்தும் காலதாமதமும்
47
48
49
50
50
51
52
53
54
55
56
57
58
59
60
61 63
64
65
66
66
67

Page 5
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
நோன்பைக் கழாச் செய்தல் சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
ம..மூம்கள் தொழுகையில் பாதிஹா ஸராவை ஓதுதல் மிருகங்களின் மலசலம்
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
அத்தியாயம் - 03
கொடுக்கல் வாங்கல், சமூக உறவுகள்
ஆயுட் காப்புறுதி
பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்
வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்
பதுக்கல்
சேமிப்பு வைப்புக்கான வட்டி
வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு காபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு ரெஜிஷ்ரேஷனும் நிகாஹ"ம்
மஹரும் சீதனமும்
மஹற்ரமிகளின் விபரம்
குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்
தலாக்
செல்லுபடியற்ற வஸிய்யத்
69
70
71
72
73
74
76
78
79
80
81
82
83
84
88
89
89
90
93
94

அத்தியாயம் - 04
உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள்
பிற சமூகத்தவர் வீட்டில் உணவருந்துதல்
பியர் அருந்துதல்
கொலோன் பூசுதல்
உணவு உடை, ஒழுங்குகள்
பர்தா உடை
ஆண்கள் தங்கம், பட்டாடை அணிதல் பர்தாவும் முகத்தை மறைத்தலும்
பாடல் கேட்டல்
புகைப்படம் எடுத்தல்
புகைபிடித்தல்
ஸ்வீப் டிக்கட் (லொத்தர் சீட்டு) வாங்குதல்
சினிமா பார்த்தல்
கிரிக்கட், உதைப்பந்தாட்டம்
வீடுகளில் நாய் வளர்த்தல்
சூது விளையாடுதல்
மருந்தாக போதை வஸ்துக்களைப் பாவித்தல்
அத்தியாயம் - 05 பகுதி - 1
குற்றமும் தண்டனையும்
责
"தாருல் குப்ரில்" இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றல்
குற்றத்திற்கான இம்மை மறுமைத் தண்டனைகள்
கரப்பழக்கத்திற்குரிய தண்டனை
95
96
97
97
99
100
101
103
104
105
O7
108
108
111
112
114
116
117
118

Page 6
அத்தியாயம் - 05 பகுதி - 2
பொதுவானவை
மூட்டைப்பூச்சு முதலானவற்றைக் கொல்லுதல்
முஸ்லிம் அல்லாதாருக்கு ஸலாம் கூறுதல்
அரபு மொழி கற்றல்
கனவில் செய்யும் நன்மை தீமைகள்
உலகக் கல்வி, மார்க்கக் கல்வி - பாகுபாடு தலைமயிருக்குச் சாயமிடுதல்
ழஈபான, மெளழுஆன ஹதீஸ்களை அறிவித்தல்
இரத்ததானம்
காபிர்களின் இரத்தத்தை முஸ்லிம்களுக்கு ஏற்றுதல்
"பீ ஸ்பீல்" பற்றிய விளக்கம்
ஜீவகாருண்யம்
பரிசோதனைக்குழாய்க் குழந்தை ஹராமான காரியம் செய்பவர் செய்யும் நல் அமல்கள்
"முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைக்காவிட்டால்." என்ற ஹதீஸின் தரம்
ஜிஹாத்
இஹற்யா உலூமித்தீன்
பர்ளுகளை முடியுமானவரை நிறைவேற்றல்
நன்மையை ஏவுதல், தீமையை விலக்குதல்
கருவில் உள்ள குழந்தையை ஆண், பெண் எனத் தீர்மானித்தல்
நூறு ஷஹித்களின் நன்மையைப் பெற்றுத்தரும் சுன்னத் பற்றிக் கூறும் ஹதீஸின் விளக்கம்
120
121
123
124
125
126
127
130
130
131
132
34
135
136
137
137
139
140
141
143

அணிந்துரை
ஜாமிஆ நளீமிய்யா கல்வித்துறைப் பீடாதிபதி, அஷ்-ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்களின் சன்மார்க்க சட்ட விளக்கங்கள் கேள்வி-பதில் என்ற தலைப்பிலான இந்நூலுக்கு சிறப்புரை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். நளிமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தின் காலாண்டு சஞ்சிகையான "இஸ்லாமிய சிந்தனை”யில் பிக்ஹ"ஷரிஆ எனும் பகுதியில் வாசகர்களின் சன்மார்க்க வினாக்களுக்கு அவர் வழங்கிய விளக்கங்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. "நம்பிக்கைசார்ந்தவை”, “வணக்கவழிபாடுகள்", "கொடுக்கல் வாங்கல்”, "சமூக உறவுகள்", "உணவு, உடை, பொழுதுபோக்குகள்", "குற்றமும் தண்டனையும் பொதுவானவையும்" ஆகிய ஐந்து பகுதிகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
சமகால உலகில் ஆர்த்தெழுந்துள்ள இஸ்லாமிய எழுச்சியானது உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மட்டுமன்றி முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக இஸ்லாத்தை சரியாகவும் தெளிவாகவும் விளங்குதல் வேண்டும் என்ற ஆர்வமும் அதன் போதனை களை நடைமுறை வாழ்வில் செயல்படுத்தல் வேண்டும் என்ற துடிப்பும் சமூகத்தில் குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில் தோன்றியுள்ளது. இஸ்லாத்தின் விசுவாசக் கோட்பாடுகள், அதன் வணக்க வழிபாடுகள், நடைமுறைவாழ்வு சார்ந்த அதன் சட்டங்கள், பரஸ்பர சமூக உறவுகள், கொடுக்கல்-வாங்கல், அதன் விதிமுறைகள் பற்றிய மயக்கங்கள், தெளிவின்மை தோன்றும் போது அதனை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளல் வேண்டும் என்ற ஆவல் பரவலாக இன்று சமூகத்தில் தோன்றியுள்ளது. இந்த நூலில் காணப்படும் வாசகர்களின் வினாக்கள்
இந்த ஆர்வத்தினதும் வேட்கையினதும் பிரதிபலிப்பாகும்.
வாசகர்களின் வினாக்களுக்கு குர்ஆன், ஹதீஸ், இமாம்களின் சட்டத்திர்ப்புகள், சமகால அறிஞர்களின் விளக்கங்களின் பின்னணியில் பரந்த மனப்பான்மையுடன் அவற்றை அணுகி ஆசிரியர் விளக்கங்களை

Page 7
வழங்கியுள்ளார். இவ்வாறு அளிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் வெறுமனே சித்தாந்த ரீதியாக அமையாமல் நடைமுறைசாத்தியமானதாக அமைந் துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். இந்நூலில் காணப்படுவது போன்ற வினாக்களில் குறிப்பிடப்படும் சில சட்டப் பிரச்சினைகள் இந்நாட்டு முஸ்லிம் கள் மட்டும் எதிர்நோக்கும் பிரச்சினைகளன்று. சர்வதேசரீதியாக இன்று சமகால முஸ்லிம் உலகம் இவற்றை எதிர்கொண்டுள்ளது. எனவே இவை அவ்வப்போது இஸ்லாமிய உலகில் நடைபெறும் சட்ட அறிஞர்களின் ஆய்வு மன்றங்களில் ஆராயப்படுகின்றன. இத்தகைய மாநாடுகளில் அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களில் சிலவற்றை ஆசிரியர் சுட்டிக்காட்டி இருப்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும். "பீஸபீல்" என்னும் பதம் பற்றிய விளக்கம் ளஈபான, மெளமூஆன ஹதீஸ்களை அறிவித்தல், பரிசோதனைக் குழாய் குழந்தை, சேமிப்பு வைப்புக்கான வட்டி, காபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு, குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும் போன்றவை தொடர்பான வினாக்களுக்கான விளக்கங்கள் நிச்சயம் சமூகத்தில் இதுபோன்ற விடயங்கள் தொடர்பாக காணப்படும் சிந்தனைச் சிக்கலுக்கு ஒரு சிறந்த தெளிவைக் கொடுக்கின்றன. ஆசிரியர் அவரது விளக்கங்களில் எத்தகைய தீவிர போக்கையும் சாராது நிதான நிலையைக் கடைப் பிடித்துள்ளமைக்கு "இஹற்யாஉலூமித்தீன்" தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கம் மிகச்சிறந்த உதாரணமாகவுள்ளது.
இஸ்லாமிய சட்டம் என்பது அசைவும் இயக்கமும் கொண்டது. சமூகங்களின் மாற்றங்கள், நிகழ்வுகள், புதுத்தேவைகள், அறைகூவல்கள் ஆகிய அனைத்தையும் சமாளித்து நெகிழ்ந்து கொடுத்து காலத்தோடு வளர்ச்சி அடையும் தன்மையை இஸ்லாமிய சட்டம் கொண்டுள்ளது. சில சட்டப்பிரச்சின்ைகளுக்கான விளக்கங்களை வழங்குவதில் அறிஞர்கள் மத்தியில் பரஸ்பரம் வித்தியாசமான கருத்துகள், அணுகுமுறைகள் காணப்படுதல் இஸ்லாமிய சட்டத்தின் ஒரு முக்கிய பண்பாகும். அத்தகைய கருத்து வித்தியாசங்களை இஸ்லாம் வரவேற்பது மட்டுமன்றி சமூக ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகவும் கருதுகின்றது. இந்தப் பின்னணியில் இந்நூலின் விளக்கங்கள் நோக்கப்பட்டால் மேலோட்டமாக நோக்கும்போது சர்ச்சைக்குரியதாக தென்படும் சில விளக் கங்கள் பற்றி சில வாசகர்கள் பால் ஏற்படக்கூடிய மயக்கம் தவிர்க்கப் UL6)Tib.
நூலாசிரியர் வினாக்களுக்கான விடைகளை சன்மார்க்கத் தீர்ப்பாக கருதாது விளக்கமாக கருதியுள்ளார். எனவே “சன்மார்க்கத் தீர்ப்புகள்” என்ற சொல்லுக்குப் பதிலாக "விளக்கங்கள்” என்ற சொல்லை அவர் கையாண்டுள்ளார். இப்பிரயோகம் இந்நூலின் நோக்கத்தை தெளிவுபடுத்து கின்றது.

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் நாடறிந்த ஒரு இஸ்லாமிய அறிஞர்; ஆற்றல் மிக்க எழுத்தாளர்; நாவன்மையும், பேச்சாற்றலும் உடையவர்; எல்லாவற்றிற்கும் மேலாக நிதானமான, தீவிரமற்ற சிந்தனைப்பாங்கு கொண்டவர். இந்த நிதானமான, சமநிலையான சிந்தனைப்பாங்கின் பிரதிபலிப்பாக இந்நூலில் காணப்படும் விளக்கங்கள் உள்ளன. ஹதீஸ் துறை சார்ந்த இரு நூற்களை வெளியிட்டுள்ள அவர் இஸ்லாமியச் சட்டம் சார்ந்த இந்நூலை சமூகத்துக்கு வழங்கியுள்ளார். அவரது பணி தொடர்ந்து, இன்னும் பல ஆக்கங்களை அவர் வழங்குதல் வேண்டும் என ஆசிக்கிறேன். அல்லாஹற் அருள்புரிவானாக!
கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி 15-12-1996 (பணிப்பாளர் ஜாமிய்யா நளிமிய்யா, பேருவலை)

Page 8

பதிப்புரை
இலங்கையின் தலைசிறந்த இஸ்லாமிய கல்வி நிறுவனமான ஜாமிஆ நளிமிய்யாவின் முத்திங்கள் வெளியீடான "இஸ்லாமிய சிந்தனை" “பிக்ஹ"ஷஷரீஆ" சன்மார்க்க கேள்வி பதில் பகுதி அதன் வாசகள்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றதாகும்.
பலநூறு இஸ்லாமிய வாசகர்களினது அபிமானம் பெற்ற இப்பகுதி யில் வெளிவந்த விளக்கங்களை அல்-கலம் பதிப்பகம் தனது இரண்டாவது வெளியீடாக வாசகர் முன் வைப்பதில் பெருமையடைகின்றது.
எனது நீண்ட கால உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடாகவும் பல இஸ்லாமிய உள்ளங்களின் எதிர்பார்ப்பின் விளைவாகவும் "சன்மார்க்க சட்டவிளக்கங்கள்” எனும் இவ்வறிவுக்கருவூலம் வெளிவருகின்றது
இந்நூலின் ஆசிரியர் எனதன்புக்குரிய சகோதர நண்பர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் அவர்கள் ஜாமிஆ நளிமிய்யாவின் கல்வித்துறைப் பீடாதிபதியும் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆவார். இவர் மார்க்கக்கல்வியில் ஆழ்ந்த அறிவுடையவர்; தனது எழுத்தாலும் பேச்சாலும் பல அன்பு நெஞ்சங்களை வெகுமதியாகப் பெற்றவர். இவரது இந்நூல் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் நம்முன் எழுந்து நிற்கும் பிரச்சினைகளுக்கான இஸ்லாமியப் பரிகாரங்களைத் தருவதாய் உள்ளது; நாம் அறிந்து கொள்ளத்துடிக்கும் பல விடயங்களுக்கான தெளிவை வழங்குவதாகவும், அமைந்துள்ளது என்பது எனது நம்பிக்கையாகும். பலதரப்பட்ட இஸ்லாமிய வாசகர்களும் பயனடையும் பொருட்டு இலகு தமிழில் ஆக்கப்பட்டிருக்கும் இம்முயற்சியை அல்லஹத்தஆலா அங்கீகரிப்பானாக.
ஆசிரியரின் ஏனைய ஆக்கங்களும் நூலுருவில் வெளிவரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
6)16}6m)6OTD
1996-2-20 எம். ஏ. எம். இனாமுல் ஹஸன்

Page 9

முன்னுரை
ஒரு முஸ்லிம் தனது வாழ்வை இஸ்லாமிய மயப்படுத்திக் கொள்வ ாயின் சிறிய, பெரிய விடயங்கள் அனைத்திலும் இஸ்லாத்தின் நிலைப் ாட்டை, ஹலால், ஹராம் பற்றிய விபரங்களை அறிந்து வைத்திருப்பது இன்றியமையாததாகும். அவ்வாறில்லாத போது அவர் இஸ்லாத்தின் பேரிலேயே பல பாவங்களையும் தவறுகளையும் செய்வது தவிர்க்க முடியாதவொன்றாய் இருக்கும்.
இன்று நாம் காணும் உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் விளைவாக முஸ்லிம்கள் மத்தியில் எந்தவொரு பிரச்சினையின் போதும் அது பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை அறிந்து கொள்வதில் ஒரு வகை முனைப்பு காணப்படுவது தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னால் நளிமிய்யா வெளியீட்டுப் பணியகத்தின் பருவ வெளியீடான “இஸ்லாமிய சிந்தனை”யில் "பிக்ஹ"ஷஷரீஆ என்ற பேரில் கேள்வி, பதில் பகுதியொன்றை அறிமுகப்படுத்தி ஆரம்பித்தபோது வந்து குவிந்த கேள்விகள் இதற்கு சிறந்த சான்றாக அமைந்தது.
இவ்வாறு வாசக்ள்களிடமிருந்து வந்த கேள்விகளில் பிரதானமான வற்றை தெரிவு செய்து "இஸ்லாமிய சிந்தனை” இதழ்களில் அவற்றிற்கான விளக்கங்களை அளித்து வந்தோம். இவ்விளக்கங்களைத் தொகுத்து நூலுரு வில் கொண்டு வருவது மிகவும் பயனுள்ளதாக அமையும் என பலர் ஆலோசனை கூறினர். அந்த வகையில் உருவானதே உங்கள் கரங்களில் தவழ்கின்ற இந்தநூல். s
இந்நூலில் இடம்பெற்றுள்ள சட்ட விளக்கங்கள் எனது சொந்த ஆய்வினடிப்படையில் பிறந்தவையல்ல; மாறாக அல்குள்ஆன், அஸ்ஸான்னா ஆகியவற்றின் ஒளியிலும் ஆரம்பகால இமாம்களின் தீர்ப்புக்களைத்தழுவியும் அமைந்தவையாகும். மேலும், பல சட்ட விளக்கங்களை எழுதுவதில், குறிப்பாக நவீன கால பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் ஆரய்பகால அறிஞர்களின் ஆக்கங்களைப் போலவே அஷ்ஷெய்க் யூஸட் அல் கர்ழாவி, அஷ்ஷெய்க் முகம்மது அல் கஸ்ஸாலி, மெளலானா

Page 10
அபுல் ஹஸன் அலி நத்வி, ஸெய்யித் ஸாபிக் உட்பட மற்றும் பல பிற்பட்ட கால, சமகால அறிஞர்களின் எழுத்துக்கள் எமக்கு பேருதவியாக அமைந்தன என்பதையும் இங்கு நன்றியுடன் நினைவு கூற விரும்புகின்றோம்.
இறுதியாக இந்நூலுக்கு மனமுவந்து பெறுமதி மிக்கதோர் அணிந்துரையை வழங்கிய ஜாமிஆ நளிமிய்யாவின் பணிப்பாளர், எனது அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய கலாநிதி எம். ஏ. எம் ஷ"க்ரி அவர்களுக் கும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், இந்நூலை அச்சிட்டு வெளியிடுவ தில் முனைப்புடன் செயற்பட்ட அல்-கலம் பதிப்பக உரிமையாளர் எம். ஏ. எம். இனாமுல் ஹஸன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹற் எமது குற்றங்குறைகளை மன்னித்து, முயற்சிகளை அங்கீகரித்து கபூல் செய்வானாக ஆமீன், வல்ஹம்து "லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
ஏ.ஸி. அகார் முஹம்மது த.பெ. இல: 1, சீனன் கோட்டை, பேருவல, இலங்கை. ஷ..பான் 5, 1417 16 196m) but 1996

அத்தியாயம் - 01
நம்பிக்கை சார்ந்தவை
ஆவிகளும் பிசாசுகளும்
கேளிவி இறந்தவர்களிற் சிலர் ஆவியாக உலவுவதாகப் பலர் கூறு கிறார்கள்; பிசாசுகள் இருப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகின்றது. இவ்விடயம் பற்றி இஸ்லாம் கூறுவதென்ன?
பதில் கட்புலனாகாத பல சக்திகளும் புலன்களுக்கப்பாற்பட்ட பல படைப்பினங்களும் பிரபஞ்சத்தில் இருக்கின்றன என்பது இஸ்லாம் கூறும் ஓர் அடிப்படை உண்மையாகும். இவற்றில் மரணித்தவர் காரின் ஆன்மாக்களும் அடங்கும். எங்களது அகீதா-நம்பிக்கை யின் அடிப்படையில், ஆன்மாவானது மரணித்த பின்பும் நிலைத் திருப்பதாகும்; உடலுடன் அது அழிந்து விடுவதில்லை; மாறாக அது இன்பத்தையோ துன்பத்தையோ தொடர்ந்து அனுபவித்துக் Goldbli body (bdib (Götb.
"அல்லாவற்வின் பாதையில் கொலை செய்யப்பட்டோரை இறந்து

Page 11
18 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
விட்டவர்கள் என நீங்கள் எண்ணவே வேண்டாம். அவர்கள் நிச்சயமாக உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் இறைவன் புறத்திலிருந்து அவர்களுக்கு
~ ஆகாரமும் அளிக்கப்பட்டு வருகின்றது." (3:169)
ஷஹிதுகளைப் பற்றிக் குறிப்பிடும் மேற்போந்த அல்குர்ஆன் வசனங்கள் மேலே கண்ட உண்மையை விளக்கி நிற்கின்றன.
ஆன்மாவானது உடல் அழிந்த பின்னரும் நிலைத்திருப்பதன் காரணத்தினாலேயே நபி (ஸல்) அவர்கள், "மரணித்தவர், தன்னை அடக்கம் செய்தவர்கள் திரும்பும் போது அவர்களின் பாதணிகளில் எழும் ஓசையைக் கூடச் செவிமடுக்கிறார்” என்றார்கள். (முஸ்லிம்)
மேலும் இவ்வடிப்படையிலேயே, கபுறுகளைக் கடந்து செல்லவோர், அவற்றில் அடக்கப்பட்டுள்ளவர்களை விளித்து ஸலாம் கூறவேண்டுமென நபி (ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள். (முஸ்லிம்)
ஆன்மாவானது உடலின்றியே தன்னில் நிலைத்திருக்கக் கூடியது என்பது அஹற்லுஸ்ஸ"ன்னா வல்ஜமாஆவினது கொள்கையாகும். இதற்கு இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களிலும் தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பல ஆதாரங்கள் உண்டு. இமாம் இப்னுல் கையிம் (ரஹற்) இவ்வுண்மையை நூற்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களை எடுத்துக் கூறி நிறுவியுள்ளார்.
கட்புலனாகா மேலுமோர் படைப்பினமாக இருப்பவர்கள் மலக்கு களாவர். ஜின்கள், ஷைத்தான்கள் ஆகியோரும் புலன்களுக்கு அப்பாற்பட் (3LT(3J.
மேலே கண்ட கட்புலனாகாப் படைப்பினங்கள் மனித உலகில் உலவுவதாகவும் பல அசாதாரண காரியங்களைச் செய்வதாகவும் காலா காலமாக நம்பப்பட்டு வரும் பல போது உண்மைப்படுத்தப்பட்டும் வரும்சர்ச்சைக்குரிய குறித்த பிரிவு எது என்பதே தெளிவு காண வேண்டிய பிரச்சினையாகும்.
பலரும் நினைப்பது போன்று மரணித்தவர்களின் ஆன்மாக்களே இப்பிரிவினர் என்று கூற முடியாதுள்ளது. அவை இவ்வாறு சுதந்திரமாக, கட்டுப்பாடின்றி உலவிவர முடியும் என நம்பக்கூடியதாக இல்லை; ஏனெனில் அவை இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவித்துக் கொண்டிருக்கும்; சுவர்க்கத்தின் பூங்காவிலோ நரகப்படுகுழியிலோ இருக்கும் என்பது இஸ்லாம் கூறும் ஒரு தெளிவான கருத்தாகும்.
மரணித்ததைத் தொடர்ந்து ஆன்மாக்கள் இவ்வுலகுடன் காலத்தால், இடத்தால் வேறுபடுகின்ற ஒரு தனியுலகுக்குச் சென்றுவிடும் என இஸ்லாம்

ዘነዘዛ Wቀ,ሰpንሐ ታffilib፵ኝ6oD6m! 19
கூறுகிறது. காபிர்களினதும் பாவிகளினதும் ஆன்மாக்கள் மரணமடைந்த வு னேயே தமக்குரிய வேதனைகளை அனுபவிக்க ஆரம்பித்து விடுகின்றன என அல்குர்ஆனின் பலவசனங்கள் மிகத்தெளிவாகக் கூறுகின்றன. உதாரணத்திற்குக் கீழ்வரும் வசனங்களைக் குறிப்பிட முடியும்.
"(இறந்தவர் இறைவனுக்கு) நெருங்கியவர்களில் உள்ளவராக இருந்தால், அவருக்கு செளக்கியமும், திருப்தியும் உண்டு; இன்பமளிக்கும் சுவன பதியுமுண்டு. அவர் வலது சாரியாக இருந்தாலோ (அவரை நோக்கி) வலது சாரிகளைச் சேர்ந்தவரே, உமக்கு சாந்தியும் சமாதானமும் உண்டா வதாக (என்று கூறப்படும்). அன்றி அவன் வழிகெட்டு பொய்யாக்கியவர்களில் உள்ளவனாக இருந்தால் கொதிக்கும் நீரே அவனுக்கு விருந்தாவதுடன் நரகிலும் தள்ளப்படுவான். (56:88-94)
கெட்டவர்களின் ஆன்மாக்கள் தண்டனை அனுபவிப்பதற்குப் பதிலாகக் கட்டுப்பாடின்றிச் சுதந்திரமாக விரும்பிய இடம் போக, நாடியதைச் செய்ய அனுமதிக்கப்பட முடியுமா?
பத்ரு யுத்தத்தில் கொலையுண்ட காபிர்களை விளித்துப் பேசிய நபியவர்கள் அங்கிருந்த தோழர்களை நேர்க்கி, "இவர்கள் நாம் கூறுவதைச் செவிமடுக்கிறார்கள். ஆனால் அவர்களால் பதில் கூற முடியவில்லை" எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஆழமான ஆன்மீக அடிப்படையைப் பெற்றிருந்த நபியவர்களுட னேயே கதைக்க முடியாத நிலையில் ஆன்மாக்கள் இருப்பின், பின் எங்கே ஏனைய சாதாரண மனிதர்களுடன் உரையாடச்சக்தி பெறப் போகின்றன.
ஆகவே உலகில் உலவித்திரிவதாகவும் பல கெடுபிடிகளில் ஈடுபடுவ தாகவும் கூறப்படும் இம்மறைந்த படைப்பினங்கள் இறந்தவர்களின் ஆன்மாக் கள் அல்ல என்பது தெளிவாகிறது. அவை மலக்குகளாகவும் இருக்க முடியாது; ஏனெனில் மலக்குகள் என்போர் வீண் விவகாரங்களிலோ குழப்பங்களிலோ ஈடுபடுபவர்கள் அல்லர். மாறாக, அவர்கள் கெளரவமான இறையடியார்கள். "யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசாதாவர்கள். அவனிட்ட கட்டளையையே செய்து கொண்டிருப்பவர்கள்" (21:27)
எனவே, பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியும் ஆவிகள் என்றும் பிசாசுகள் என்றும் வழங்கப்படும் இவை ஜின், ஷைத்தான்களாக இருக்க முடியும். ஜின்கள், ஷைத்தான்கள் என்போரின் உள்ளமை பற்றி இஸ்லாம் தெளிவாகக் கூறியுள்ளது. "ஒவ்வொரு மனிதனுடனும் ஒவ்வொரு ஷைத் தானிருக்கிறான்” என்கிறது ஒரு நபி மொழி. (முஸ்லிம்)

Page 12
2O சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஆயினும், இவற்றைக் கொண்டு மறைவான அம்சங்களை அறிய முடியும் என்ற வாதம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பிழையானதாகும். ஸ"லைமான் (அலை) அவர்களுடனிருந்த ஜின்களைப்பற்றிக் கூற வந்த அல்குர்ஆன் இவ்வுண்மையை அழகுற விளக்குகிறது. (பார்க்க. 34:14)
மறைவான அம்சங்கள் பற்றித் தமக்குத் தெரியாததையிட்டு ஜின்கள் குறிப்பிடும் கருத்தையும் அல்குர்ஆனில் காண முடிகிறது. (பார்க்க 72:10)
மறைவான விஷயங்களை மொத்தமாக அனைத்துப்படைப்பினங் களுமே அறியாமல் இருப்பதனைப் பல அல்குர்ஆன் வசனங்கள் விளக்கி நிற்பதனைக் காணலாம். (பார்க்க 27:75, 6:59, 7:188)
பெரும்பாலும் குறிசொல்வோரும் சாஸ்திரக்காரர்களுமே ஜின்கள் ஷைத்தான்கள் மூலம் தாம் மறைவான அம்சங்களை அறிந்து கூறுவதாக வாதிக்கின்றனர். ஜின், ஷைத்தான்கள் செய்திகள் கூறுவது உண்மையா யினும், அவற்றில் பெரும்பாலானவை பொய்யானவையாகவும் தவறான வையாகவுமே இருக்கும். அவை கூறும் முன்னறிவிப்புக்கள் அரிதாக, தற்செயலாகவே அன்றி உண்மையாக இருப்பதில்லை.
குறித்த ஆவிகளைக் கொண்டு நோய் நிவாரணம் பெறுவதைப் பொறுத்தவரையில், அதனை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. நோய்களுக்கு வெளிப்படையான பெளதீக ரீதியிலான காரணிகளையே நிவாரணியாகக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கருத்தாகும். அனைத்து நோய்களுக்கும் மருந்து உண்டு என்று கூறிய நபியவர்கள், தாமும் சிகிச்சை பெற்றுள்ளார்கள். தாயத்துக்கட்டுதல் போன்ற பெளதீகக் காரணி களுக்கு அப்பாற்பட்ட சிகிச்சை முறைகளை நபியவர்கள் கண்டித்தது மாத்திரமன்றி, அவற்றைச் ஷிர்க்ஆகவும் வர்ணித்துள்ளார்கள்.
மறுபிறப்புக்கொள்கை
கேள்வி மறுபிறப்புக் கொள்கைக்கும் மறுமைக்குமிடையில் தொடர்புண்டா? மறு பிறப்புக் கொள்கையின் அசாத்திய நிலையை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
பதில்; மறு பிறப்புக் கொள்கைக்கும் மறுமை பற்றிய கண்ணோட்டத் துக்குமிடையில் எத்தகைய தொடர்புமில்லை. மறுமை என்பது மரணத்துக்குப் பின்னுள்ள, இவ்வுலகுடன் தொடர்பற்ற தனியான ஓர் உலகையும் வாழ்வையும் குறிப்பதாகும். மறு பிறப்புக் கொள்கையோ, ஒரு சிருஷ்டி தான் செய்யும் நன்மை-தீமைகளுக் கேற்ப, இவ்வுலகிலேயே பல நிலைகளில் பிறவியெடுப்பதைப் பற்றிப் பேசுகின்றது. இது பெளத்தர்கள், இந்துக்கள் போன் றோரின் கொள்கையாகும்.

til i l'1,f,1),'t, óf titi föU560D6) 21
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மாத்திரமன்றி, அறிவியல் நோக்கிலும் மறுபிறப்பு பற்றிய வாதம் ஏற்கத்தக்கதாக இல்லை. ஒருவர் தான் செய்த நன்மையையோ குற்றத்தையோ உணர வேண்டும் என்பதே கூலி வழங்குவதன் பிரதான நோக்கமாகும். ஆனால், மறு பிறப்புவாதத்தை ஏற்றுக்கொள்வதாக வைத்துக்கொண்டாலும், உலகில் வாழும் எவரும் தற்போதைய நிலையில் தான் இருப்பதற்கான காரணத்தை-முன்னைய பிறப்பில் செய்த நன்மையை அல்லது தீமையை, இருந்த நிலையைஅறிந்தோராய் இல்லை. மேலும், மனிதப்பிறவி அடைந்தவனைப் பொறுத்த வரையில் அவன் தனது பகுத்தறிவு A செயற் சுதந்திரம் ஆகியவற்றைக் கொண்டு தீயவற்றைத் தவிர்த்து கருமங்களில் ஈடுபட்டு, நிலவுகின்ற "நிர்வாண" நிலையை அடையவோ அல்லது குறைந்தபட்சம் தனது மறுபிறப்பை நன்னிலையில் அமைத்துக்கொள்ளவோ முயல்வதற்கு வாய்ப்புண்டு. ஆனால், முற்பிறப்பில் செய்த பாவங்களின் காரணமாக, ஒரு ஜீவன் ஆடு, மாடு போன்ற மனிதனல்லாத பிறவி எடுத்தால், பகுத்தறிவோ செயற் சுதந்திரமோ இல்லாத நிலையில், தனது தற்போதைய நிலைக்கான காரணத்தை உணர முடியாதிருப்பது போக "நிர்வாண" நிலையை அடைந்துகொள்ளவோ மறுபிறப்பைச் சீர் செய்து கொள்ளவோ முயற்சி செய்வது எப்படி?
மறுபிறப்புக் கொள்கையின்படி, உலகில் உயிரினங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட தொகையாகவே ஆரம்ப முதல் இறுதிவரை இருக்க முடியும். உலகில் உயிரினங்களின் எண்ணிக்கை எவ்வகையிலும் அதி கரிக்க முடியாது. உலகில் பிறக்கும் எந்த ஒன்றும் ஒரு புதுப் பிறவியாகக் கொள்ளப்பட முடியாது போகின்றது. இது, அறிவியல் உண்மையுடனும் நடைமுறையுடனும் முரண்படுகிறது.
மறுபிறப்புக் கொள்கையை நோக்கும் போது, பிறக்கின்ற மற்றுமொரு கேள்வியும் உண்டு. உலகில் முதன் முதலாகத் தோன்றிய உயிரினம் ஒரு முற்பிறவியைப் பெற்றிராத நிலையில், அது செய்த எந்த நன்மைக்காக அல்லது எந்தத் தீமைக்காகக் குறித்த பிறவி எடுத்தது என்பதே அக்கேள்வி 1ாகும.
மேலும், இக்கொள்கை இந்துக்களின் மிக முக்கிய ஓர் அடிப்படை யான குலவாதத்துடன் முரண்படுகிறது. இவ்வாதம் பரம்பரையையும் இரத்த உறவையும் அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். ஆனால், மறு பிறப்புக் கொள்கயிைன் படி ஒரு பிறவியில், ஒரு குலத்தில் பிறப்பவர் அடுத்த பிறவியில் மற்றுமொரு குலத்தில் பிறக்கலாம். (உ-ம்) ஒரு பிராமணன் தனது மறுபிறப்பில் ஒரு ஹரிஜனனாகவோ ஏன் ஒரு மிருகமாகவோ பிறக்க முடியும். இங்கு மறுபிறப்புக் கொள்கையை ஏற்கும் போது இந்துக்களின் குலவாதம் அர்த்தமற்றதாகி விடுகிறது.

Page 13
22 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ரl11ரை பற்றிய நவீன ஆய்வுகள் ஒவ்வொரு மனிதனும் தனது பெரோரின் வாரிசாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. ஒருவன் தனது பண் , திறன்கள் உட்பட உடல், கண்கள், தலைமயிர் ஆகியவற்றின் நிறத்தையும் தனது பெற்றோரிடமிருந்தே வாரிசாகப் பெறுகின்றான்; உடல் நிலையும் பெற்றோரிடமிருந்து வாரிசாகப் பெறப்படுவதாகும். இப்படி நவீன ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வுண்மைகளுக்கு முற்றும் முரணாக மறு பிறப்புக் கொள்கை அமைந்திருப்பதைக் காணலாம். ஒருவர் செய்த செயலுக்குக் கூலியாக ஒருவரது மறுபிறப்பு அமைகிறது என்றிருப்பின், பிறந்தவுடனே இறந்து விடும் குழந்தையின் நிலையைப்பற்றி என்ன கூறமுடியும்?
குடித்தொகைப் பெருக்கத்தை பற்றியும் யுத்தங்களின் போது ஏற்படும் குடித்தொகை வீழ்ச்சி பற்றியும் இக்கொள்கை கூறும் விளக்கம் என்ன? புதியவர்கள் எங்கிருந்து வருகின்றனர்? இறந்தவர்களை விடப் பிறந்தவர்கள் குறைவாக இருக்கும் போது, இறந்தவர்களில் ஏனையோர் எங்கு செல்கின்றனர்? இத்தகைய கேள்விகளுக்கு இக்கொள்கையால் பதிலளிக்க
(ԼՔԼԳեւ IT35l.
மறுபிறப்புக் கோட்பாடு குடும்ப அமைப்பைச் சிதைப்பதாகவும் விளங்கின்றது. இந்நம்பிக்கையுள்ள ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் உண்மையான உறவும் பாசமும் காணப்பட முடியாது. எங்கெங் கோ, எப்படியெப்படியோ இருந்தவர்களின் ஒரு தற்செயல் இணைப்பாகவே ஒவ்வொரு அங்கத்தவனும் அடுத்தவனைக் கருதுவான்.
தனது முற்பிறப்பை நினைவில் வைத்துப் பேசும் சிலரைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். ஆனால், அத்தகைய சம்பவங்கள் மிகவும் அரிதாகவே ந ைபெறுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகில் வாழும் கோடான கோடி மக்களில் ஓரிருவரிலேயே இந்நிலை காணப்படு கின்றது. அவர்களும் பெரும்பாலும் மறுபிறப்புக் கொள்கையை நம்புபவர் களாகவோ அல்லது மூட நம்பிக்கையைக் கொன் வர்களாகவோ இருப் பதை அவதானிக்கலாம். மேலும், இவl4ளிi லl பலவீனமான சிறுவர்களா கவும், பெண்களாகவும் விளங்குகின்றனர். அத்தோடு இவர்கள் தமது பூர்வ ஜென்மத்துடன் தொடர்பானது எனக்கூறும் செய்திகளை, ஒரு குறிப் பிட்ட காலம் வரை மட்டும் ஞாபகத்தில் வைத்திருந்து, பின்னர், மறந்து விடுகின்றனர். உண்மையில் இந்நிலை ஷைத்தானின் சேட்டையே அன்றி வேறில்லை.
"ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஷைத்தான் இல்லாமல் இருப்பதில்லை" (முஸ்லிம்) என ஒரு நபி மொழி கூறுகின்றது.

பிக்கை சார்ந்தவை 29
இத்தகைய ஷைத்தான்கள் சிலவேளைகளில் தம்முடனிருந்தவர்கள் இறந்ததைத் தொடர்ந்து, வேறு சிலரில் குடிகொண்டு அவர்களினுடகத் தாம் முன்னர் இருந்தவர்கள் பற்றிய தகவல்களைக் கூற முடியும்.
ஈஸாலுஸ்ஸவாப்
கேள்வி பாடசாலை, பள்ளிவாசல், கிணறு, ‘சத்திரம் போன்றவற்றைக் የ፡ · ' கட்டிக்கொடுத்தல், குர்ஆன் ஓதுதல், அன்னதானம் கொடுத்தல்,
ஏழைகட்கு உதவுதல் போன்ற செயல்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை காலஞ்சென்ற எமது தாய், தகப்பன், உற்றார், உறவினர் மற்றும் பெரியோர்களுக்குச் சேர்ப்பிக்க முடியுமா?
பதில்: மரணித்தவர் தான் வாழும் காலத்தில் செய்த நன்மையான காரியங்களிலிருந்து பயனடைவார் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். இது பற்றிக் கூறுகின்ற ஆதாரபூர்வமான பல நபிமொழிகளும் உண்டு. மரணித்தவருக்கு பிறர் செய்து சேர்ப்பிக்கின்ற நன்மைகள் அவருக்கு பயனளிக்குமா என்ற விடயத்தைப் பொறுத்தளவில் அது விரிவாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
மரணித்தவர்களுக்காகச் செய்யப்படுகின்ற பிரார்த்தனையும், பாவ மன்னிப்புக் கோரலும் அவருக்குப் பயனளிக்கும் என்ற விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமை காணப்படுகின்றது. அவ்வாறே பாடசாலை, பள்ளிவாசல், கிணறு போன்றவற்றைக் கட்டிக்கொடுப்பதன் மூலமும் தர்மங்கள் செய்வதன் மூலமும் கிடைக்கின்ற நன்மையை மரணித்தவருக்குச் சேர்ப்பித்தால் அது அவருக்குப் பயனளிக்கும் எனும் விடயத்திலும் கூட "இஜ்மா.." என வழங்கப்படும் ஏகோபித்த முடிவு காணப்படுவதாக இமாம் நவவி குறிப்பிடுகின்றார். இக்கருத்துக்கு ஆதாரமாக கீழ்க்காணும் இரு ஹதீஸ்களும் கொள்ளப்படுகின்றன.
(1) ஒருமுறை ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து "எனது தகப்பனார் மரணித்துவிட்டார். உயில் எழுதாமலேயே அவர் தன் செல்வத்தை விட்டுச் சென்றிருக்கின்றார். நான் அவருக்காக தர்மம் செய்தால் அவரது பாவங்கள் மன்னிக்கப்படுமா?” என்று கேட்டார். அதற்கு நபிகளார் "ஆம்" எனப் பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹ"றைறா, ஆதாரம்: அஹற்மத், முஸ்லிம்)
(2) ஸ..த் பின் உபாதாவின் தாயார் மரணித்த பொழுது அவர்
நபிகளாரிடம் வந்து “அல்லாஹற்வின் தூதரே! எனது தாயார் மரணித்து விட்டார். நான் அவளுக்காக தர்மம் செய்யட்டுமா?" என வினாவினார்.

Page 14
24 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அதற்கு நபியவர்கள் "ஆம்" என்றார்கள். அப்பொழுது ஸ்.ட்த் பின் ற பாரா "கந்த தர்மம் சிறந்தது?" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் "நீ புகட்டல்" எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் அல்ஹஸன்;ஆதாரம்: SplijDф, bolului)
மரணித்தவருக்காக நோற்கப்படுகின்ற நோன்பும் கூட அவருக்குப் பயனளிக்கும் என்பதற்கும் ஆதாரங்கள் உண்டு. ஒரு மனிதர் நபியவர் களி ம் வந்து “அல்லாஹற்வின் தூதரே, எனது தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு ஒரு மாத கால நோன்பு கடமையாக இருக்கின்றது. நான் அதனை அவளுக்காக நோற்கட்டுமா?" என வினாவினார். அதற்கு நபியவர் கள் "உனது தாய் ஒரு கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதனை நீர் கொடுப்பாயல்லவா?" எனக்கேட்க அந்த மனிதர் "ஆம்" என்றார். அப்பொழுது "அல்லாஹ்வுடைய கடன் அதனைவிட கொடுக்கப்படத்தகுந்ததாகும்" என நபிகளார் கூறினார்கள். (அறிவிப்பாளர்; இப்னு அப்பாஸ்;ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
மரணித்தவருக்காகச் செய்யும் ஹஜ்ஜும் கூட அவருக்கு பயனளிக்கும். ஜூஹைனா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபியவர்களிடம் வந்து, "எனது தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை வைத்தாள். ஆனாலி அதனை நிறைவேற்றாமலேயே அவள் மரணித்து விட்டாள், எனவே அவளுக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யட்டுமா?" எனக் கேட்டாள். அதற்கு நபியர்வர்கள் "நீ அவளுக்காக ஹஜ் செய்வாயாக. உனது தாய் ஒரு கடன் கொடுக்க வேண்டியிருந்தால் அதனை நீ கொடுப்பாய் அல்லவா? அல்லாஹற்வுடைய கடன் அதனை விடவும் கொடுக்கத்தக்கது" எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ், ஆதாரம்: புகாரி)
அல்குர்ஆனை ஓதுவதனால் கிடைக்கும் நன்மையை மரணித்த வருக்குச் சேர்ப்பிபதன் மூலம் அவருக்கு நன்மை கிட்டுமா? என்ற விடயத் தில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு நிலவுகின்றது. குறித்த நன்மை மரணித்தவரை அடையாது என்பது ஷாபிஈ மஸ்ஹபின் பிரபல்ய மான கருத்தாகும். ஆயினும், குறித்த நன்மை மரணித்தவரைச் சென்றடை யும் என்பதே ஷாபிஈ மத்வா ைச் சேர்ந்தோரின் பொதுவான கருத்தாகும். இம்மத்ஹபின் முக்கிய கிரந்தமான அல்மின்னுராஜம் இதனையே ஆதரிக் கின்றது.
அல்-குர்ஆனை ஓதி அதனால் கிடைக்கும் நன்மையை மரணித்த வருக்கு மாத்திரமன்றி உயிரோடிருப்போருக்கும் சேர்ப்பிக்க முடியும் என்றும், அது அவர்களை அடையும் என்றும் ஹனபியாக்கள் கருதுகின்றனர். இக்கருத்து ஹனபி மத்ஹபின் கிரந்தங்களான "அல் ஹிதாயா", "அல்பதாயி", "அல்பஹற்ர்" போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அல்-பத்ஹற்” என்ற கிரந்தமும் இதனை விரிவாக விளக்குகின்றது.

| ltகை சார்ந்தவை 25
மாலிகீ மத்ஹபின் பிற்பட்ட கால இமாம்களில் அதிகமானோரும் மேற்குறிப்பிட்ட கருத்துக்குச் சார்பாகவே இருந்துள்ளனர். இதனை இபணு அபிஸைத், இப்னு பர்ஹன் கூறுவதாக தனது "ரிஸாலா" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஹன்பலி மத்ஹபின் முக்கிய இமாமொருவரான இப்னு குதாமா தனது "முக்னி" என்ற நூலில் மரணித்தவர் பிறர் தனக்காகச் செய்கின்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளிலிருந்தும் பயன் பெறுவார். அல்-குர்ஆன் ஓதுவதும் இதில் அடங்கும் எனக் குறிப்பிடுகின்றார்.
இமாம் இப்னு தைமியாவும் மரணித்தவர் பிறர் தனக்காகச் செய்கின்ற தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் போன்ற இபாதத்துகள் மூலமும், துஆ, இஸ்தி.பார் போன்றன மூலமும் பயனடைவார் எனக் குறிப்பிடு கின்றார். இவரின் மாணவரான இமாம் இப்னுல் கையிம் மரணித்தவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்படுபவைகளில் ஸதகா, இஸ்தி.பார், துஆ, ஹஜ் ஆகியவையே மிகவும் சிறந்தவையாகும் என்று குறிப்பிடுவதுடன் அல்குர்ஆனை ஓதி அதன் நன்மையை மரணித்தவருக்குச் சேர்ப்பிப்பதை பொறுத்த வரையில் ஒதலுக்காகக் கூலி எடுக்காதிருந்தால் அந்த நன்மை அவரைப்போய் அடையும் எனக் கூறுகின்றார். o -
அல்குர்ஆனை ஓதி கூலி பெறுவது ஹறாமாகும் என்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்தல்
கேள்வி: பெண்கள் கப்றுகளை எமியாரத் செய்வதற்கு மார்க்கத்தில்
அனுமதி உண்டா?
பதில்: இமாம் மாலிக் உட்பட ஹனபி மத்ஹபுடைய சில இமாம்களும் மற்றும் பல உலமாக்களும் பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்வதை அனுமதித்துள்ளனர். இமாம் அஹற்மத் அவர்களின் ஒரு கருத்துப்படியும் இது அனுமதிக்கப்பட்டதாகும். இத்தீர்ப் புக்குப் பல ஆதாரங்கள் உண்டு. அவற்றில் பிரதானமானவை பின்வருமாறு:
(1) "அல்லாஹற்வின் தூதரே நான் கப்றுகளை ஸலியாரத் செய்கின்ற போது கப்றுகளில் அடக்கப்பட்டுள்ள அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்” என்று அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் வினவிய போது நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். (பார்க்க: ஸஹிஹற் முஸ்லிம், ஸ“னன் அந்நஸாஈ, முஸ்னத் அஹற்மத்)

Page 15
26
(2)
சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
yருமு|ை நபி (ஸல்) அவர்கள் ஒரு கப்றுக்குப் பக்கத்தில் அமர்ந்து அ(புது கொண்டிருக்கும் ஒரு பெண்ணைக் கண்டபோது “அல்லாஹற் வை யந்து பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக" என்றார்கள். தனக்கு
இவ்வாறு கூறியவர் அல்லாஹற்வுடைய தூதர் என்பதை அறிந்து கொள்ளாத அந்தப் பெண், "என்னை விட்டுப் போய்விடும். எனக் கேற்பட்ட அனர்த்தம் உமக்கு ஏற்படவில்லை" என்று கூறினாள். (புகாரி, முஸ்லிம்)
இங்கு நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண் பொறுமையிழந்து
அழுது புலம்புவதைத் கண்டித்தார்களேயன்றி, ஸியாரத் செய்வதைக் கண்டிக்கவில்லை என்பது புலனாகின்றது.
(3)
(4)
அப்துல்லாஹ் இப்னு அபீமுலைக்கா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நாள் அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் மையவாடியில் இருந்து திரும்புவதை அவதானித்த நான், "முட்மீன்களின் தாயாரே! எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவினேன். அதற்கு அவர்கள் “எனது சகோதரன் அப்துர் ரஹ்மானுடைய கப்றுக்குச் சென்று திரும்புகின்றேன்" என்றார்கள். அதற்கு நான் "அல்லாஹற்வுடைய தூதர் கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்திருக்கிறார்கள் அல்லவா?” என்று கூறினேன். அதற்கு அன்னை அவர்கள் "ஆம், கப்றுகளை ஸியாரத் செய்வதைத் தடுத்திருந்தார்கள். ஆனால் பின்னர் அவற்றைப் போய் தரிசிக்குமாறு பணித்தார்கள்” என்றார்கள். (அல்ஹாகிம், அல்பைஹகீ)
ரஹலுல்லாஹ்வின் மகள் அன்னை பாத்திமா (றழி) அவர்கள் தமது பெரிய தந்தையாரான ஹம்ஸாவின் கப்றை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தரிசித்து ஸியாரத் செய்து அங்கு தொழுது, அழுபவர் களாக இருந்தார்கள். (அல்ஹாகிம்)
கட்றுகளை ஸியாரத் செய்யுமாறு நபியவர்கள் வேண்டியதற்கான
காரணம் அதன் மூலம் மறுமையின், மரணத்தின் ஞாபகத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடியும் என்பதனால் ஆகும்.
"கறுகளை ஸியாரத் செய்யுங்கள்; அது உங்களுக்கு மரணத்தை
ஞாபகமூட்டும்" (முஸ்லிம்)
மரணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம்
ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் உண்டு என்ற வகையில் பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்வதனை தடுப்பதற்கில்லை.
இவ்வாறு பல நம்பகமானதும் உறுதியானதுமான ஆதாரங்களை

நம்பிக்கை சார்ந்தவை 27
முன்வைத்து பெண்கள் கப்றுகளை ஸியாரத் செய்யலாம் என்ற கருது வலியுறுத்தப்பட்டாலும், மற்றும் சில அறிஞர்கள் இதனை ஆதரிப்பதிலலை. பெண்கள் ஜனாஸா ஊர்வலத்தில் கலந்து கொள்வதைத் தடை செய்யும் ஹதீஸ்கள், அவர்கள் கப்றுகளை ஸயாரத் செய்வதையும் தடுப்பதற்குப் போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன என்று இவர்கள் கருதுகின்றார்கள். மேலும், பெண்கள் பொறுமை குறைந்தவர்களாவும் பலவீனமான உளநிலை உடையவர்களாகவும் இருப்பதும் அவர்கள் கப்றுகளை ஸியாரத் செய் வதனைத் தடுப்பதற்கான நியாயங்களாக முன்வைக்கப்படுகின்றன.
மேலும் இவர்கள் தமது கருத்துக்குப் பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாக் கொள்கின்றார்கள்.
"அல்லாஹற்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களைச் சபித்தார்கள்."
(அறிவிப்பாளர்-அபூஹ"ரைரா, ஆதாரம்:-அஹற்மத், இப்னுமாஜா, திர்மிதி, இப்னு ஹிப்பான்)
ஆயினும், இந்த ஹதீஸில் இடம் பெறும் "ஸவ்வாராத்துல் குயூர்” என்ற சொற் பிரயோகம் சாதாரணமாக கப்றுகளை ஸியாரத் செய்யும் பெண்களைக் குறிக்காது என்றும் மொழி ரீதியாகவும் இது அதிகமாக ஸியாரத்தில் ஈடுபடும் பெண்களையே குறிக்கும் என்றும் இமாம் அல்குர்துபி விளக்குகின்றார். இவரது விளக்கத்தைப் பல அறிஞர்களும் ஆதரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெண்கள் அடிக்கடி ஸியாரத்தில் ஈடுபடும்போது கணவருக்குரிய கடமைகள் விடுபடுதல், அலங்காரத்தை வெளிக்காட்டுதல், ஒப்பாரி வைத்து அழுதல் போன்ற தீங்குகள் ஏற்பட இடமுண்டு என்பதனாலேயே நபியவர்கள் அதிருப்தி அடைந்திருக்க முடியும் என்று இமாம் அல்-குர்துபி விளக்கு கின்றார்.
இத்தகைய கேடுகள் இடம்பெறாது என்று காணும் போது பெண் களுக்கு கப்றுகளை ஸியாரத் செய்ய அனுமதிப்பதில் தடை ஏதும் இருக்காது; ஏனெனில், மரணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் உண்டு என்றும் இமாம் குறிப்பிடுகின்றார்.
இமாம் குர்துபியின் இவ்விளக்கத்தைத் தனது நூலில் குறிப்பிடும் இமாம் அஷ்ஷெளகானி அவர்கள் "இது விடயமாக வந்துள்ள முரண்பட்ட ஹதீஸ்கள் மத்தியில் இணக்கம் காண்பதற்கு இவ்விளக்கமே அடிப்படையா கக் கொள்ளத்தக்கதாகும்” என்று கூறுகின்றார். (பார்க்க: நைலுல் அவ்தார், பாகம்:4 பக்கம் 166)

Page 16
28 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
இறுதியாக, ஆண்களாயினும், பெண்களாயினும் கப்றுகளை
ஸிபாரதி செய்வதன் நோக்கம் மறுமையையும், மரணத்தையும் ஞாபகப் படுத்தி, புல்லுனர்ச்சி பெறுவதேயன்றி வேறில்லை என்பது மனதிற் கொள்ளபI வேணடியதாகும். பித்னாக்கள், மார்க்க முரணான காரியங்கள்
ந க்கும் என அஞ்சப்படும் போது பெண்கள் ஸியாரத்துக்காகச் செல்வதை y)0)óbb)/lub,
அறுத்தலின் போது நபி இப்றாஹீமின் பெயர் கூறல்
கேள்வி: உயிரினங்களை அறுக்கும் போது இப்றாஹிம் நபியின் பெயர் கூறி அறுக்காவிடின் அவ்வுயிரினத்தின் மாமிசம் ஹராமாகி விடுமெனக் கூறுகின்றனர். இது உண்மையானதா?
பதில்: இது எத்தகைய அடிப்படையுமில்லாத கருத்தாகும். உயிரினங் களை அறுக்கும் போது அல்லாஹற்வின் பெயர் கூறப்பட வேண்டு மென்பதே ஷரீஆ கூறும் சட்டமாகும். "(அறுக்கும் போது) அல்லாஹற்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் சாப்பிட வேண்டாம். நிச்சயமாக அது கொடிய பாவமாகும்." (அல்அன்ஆம்121) உயிரினங்களை அறுப்பதற்குரிய, இஸ்லாம் கூறும் தகுதியைப் பெற்ற ஒருவர் வேண்டுமென்றோ, தவறாகவோ அல்லாஹற்வின் பெயர் கூறுவதை (பிஸ்மில்லாஹற்வை) விடுவதும் கூட ஆகுமாக்கப்பட்டதென இமாம் ஷாபிஈ கூறுகிறார். ஆயினும் அவ்வாறு விடுவதால் குறித்த பிராணியைச் சாப்பிடுவது ஹராமாகும் என்பது இமாம் மாலிக், இமாம் இப்னு ஸிரின் டோன்றோரின் கருத்தாகும்.
ஸலவாத், திக்ர், அவ்ராதுகளில் உயர்ந்தவை
கேள்வி. எமக்குக் கிடைக்கின்ற ஸலவாத், திக்ர், அவ்ராதுகளில் சிறந்
தவை, உயர்ந்தவை எவை?
பதில்: பொதுவாக ஸலவாத், திக்ர், அவராத் விடயங்களில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவற்றை ஒதுவதே பாதுகாப்பானதும் மிகப் பொருத்தமானதாகும். இதற்குப் பல நியாயங்களைக் காண (Uριψι μί),
அ. ரஸலுல்லாஹற் (ஸல்) அவர்கள் ஒதிய திக்ர், அவ்ராதுகள் ஏனைய வர்கள் இபற்றியவற்றை வி ட் பொருளடக்கத்திலும், சொற் சுருக்கத் திலும், தெளிவிலும், தாக்கத்திலும், மொழி நடையிலும் தன்னி கரற்றவையாகும். அனைத்துக்கும் மேலாக அன்னாரின் திக்ர்அவ்ராதுகள் நுபுவ்வத்தின் அருளைப் பொதிந்தவையாகும்.

நம்பிக்கை சார்ந்தவை 29
ஆ, ஏனையோர் இயற்றிய திக்ர்-அவ்ராதுகளில் பிழைகள் இடம்பெற வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்கள்-ம..ஸPக்கள்-பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்.
இ. நபி (ஸல்) அவர்களின் திக்ர், அவ்ராதுகளை ஒதுவதன் மூலம்
இரு நன்மைகள் கிட்டும்:
1. திக்ர் செய்த நன்மை 2. நபியைப பின்பற்றிய நன்மை
நபி மீது ஸலவாத்துச் சொல்லவும் அன்னார் கற்றுத்தந்த அருமையான ஸலவாத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக நாம் எங்களது தொழுகைகளில் இறுதி அத்ஹிய்யாயத்தில் ஒதும் அஸ்ஸவாத்துல் இப்றாஹிமீயாவை விடச் சிறந்த ஒரு ஸலவாத் இருக்க முடியாது.
தாயத்துக்கட்டுதல், மந்திரித்தல் போன்றன முலம் நோய் களுக்கு சிகிச்சையளித்தல்
கேள்வி: தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது போன்ற வழிமுறைகளைக் கொண்டு நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பது பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்ன? விளக்கம் அவசியம்.
பதில்; தாயத்துக் கட்டுதல், மந்திரித்தல், வசியம் செய்தல் போன்ற வழிமுறைகளைக் கையாண்டு நோய்களுக்குச் சிகிச்சை அளிப் பதையிட்டு எச்சரிக்கை செய்கின்ற ப்ல ஹதீஸ்கள் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, "மந்திரித்தல், தாயத்துக்கட்டுதல், வசியம் செய்தல் வழிர்க் ஆகும்" என்ற ஹதீஸை இங்கு குறிப்பிடலாம். (ஆதாரம்: அஹற்மத், அபூதாவூத், அல்-பைஹகி)
ஒதிப்பார்த்தல் என்ற அம்சத்தைப் பொறுத்தவரையில், சில நிபந்தனைகளுடன் அதனை அறிஞர்கள் அனுமதித்துள்ளனர். அந்நிபந் தனைகள் பின்வருமாறு:
1. அது அல்லாஹற்வின் திக்ரைக் கொண்டோ அல்லது அவனது
திருநாமங்களைக் கொண்டோ இருத்தல் வேண்டும்.
2. அது அரபு மொழியில், கருத்து விளங்கும் விதத்தில் அமைதல்
(36603TGD.
3. அல்லாஹற்வின் நாட்டப்படியே அது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்
என நம்புதல் வேண்டும்.

Page 17
30 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஆனால், ராயத்துக் கட்டுவதைப் பொறுத்தவரையில் இஸ்லாம் அதனை முiபாகத் தடை செய்கின்றது என்றே கூற வேண்டும். ஒருமுறை பத்து நபர்களி நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் கொடுப்பதற்காக வந்தனர். நபியவlகள் அவர்களில் ஒன்பது பேரிடம் பைஅத் வாங்கிக் கொண்ட போதிலும், ஒருவரிடம் மாத்திரம் பைஅத் வாங்கிக் கொள்ள மறுத்து விட Ilகள். இது பற்றி அவர்களிடம் வினவப்பட்டபோது, "அவரது கையில் ஒரு தாயத்து இருக்கின்றது" என்றார்கள். உடன் அம்மனிதன் தன் கையை விட்டு அதனை அறுத்தெறியவே நபியவர்கள் அவரிடம் பைஅத் வாங்கிக்கொண்டார்கள். தொடர்ந்து அன்னார் பின்வருமாறு கூறினார்கள்: "எவர் ஒரு தாயத்தைக் கட்டுகின்றாரோ, அவர் அல்லாஹற்வுக்கு வழிர்க் வைத்தவர் ஆவார்." (அஹற்மத், அல்ஹாகிம்)
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் கையில் ஒரு வளை யத்தைக் கண்டு "அது என்ன?" என்று அவரிடம் விசாரித்தார்கள். அதற்கு அவர், "எனது தோளில் ஏற்பட்டுள்ள ஒரு நோய்க்காக (பலவீனத்திற்காக) இதனை அணிந்திருக்கின்றேன்" என்றார். அதற்கு நபியவர்கள், "அறிந்து கொள்ளும்; இது உமது பலவீனத்தை மேலும் கூட்டுமே அன்றி வேறேதும் செய்யாது. இதனைக் கழற்றி எறிவீராக. இதனை அணிந்த நிலையில் நீர் மரணித்தால் வெற்றியடையவே மாட்டீர்” என்றார்கள். (அஹற்மத்)
ஸஹாபாப் பெருமக்களும் இத்தகைய தாயத்துக் கட்டும் முறை யைக் கடுமையாக எதிர்த்தே வந்துள்ளனர். நூள் ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்த ஒருவரை அவதானித்த ஹ"தைபா(றழி) அவர்கள், "அவர் களில் பெரும்பாலோர் அல்லாஹற்வை விசுவாசித்த போதிலும், அவர்கள் இணைவைக்காமல் இல்லை" (12:106) என்ற பொருள்படும் அல்குர்ஆன் வசனத்தை ஒதினார்கள். "ஒருவரின் கழுத்திலுள்ள தாயத்தை அறுத்து எறிபவருக்கு ஓர் அடிமையை விடுதலை செய்த நன்மை கிட்டும்" என்றார் ஸஈத் இப்னு ஜுபைர் (றழி) அவர்கள்.
மூத்த தாபிஈன்களில் ஒருவரான இமாம் இப்றாஹீம் அந்நகா(ரஹற்) பின்வருமாறு கூறுகின்றார்: "(ஸலபுஸ்ஸாலிஹரீன்களான) அவர்கள் அல்குர்ஆனைக் கொண்டு அமைந்த தாயத்துக்கள் உட்பட எல்லா வகையான தாயத்துக்களையும் வெறுப்பவர்களாகவே இருந்தனர்.”
சில அறிஞர்கள் அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டு தாயத்துக் கட்டுவதில் தவறில்லை என்று குறிப்பிட்டிருப்பினும், மற்றும் பலர் அத்தகைய தாயத்துக்களும் தடைசெய்யப்பட வேண்டியவையே என்று கூறுகின்றனர். இரண்டாம் தரப்பினரின் கருத்தே பலமானதாகக் கொள்ளக் கூடியது எனக் கூறும் கலாநிதி யூஸப் அல்-கர்ளாவி அதற்குப் பின்வரும் நியாயங்களைக் குறிப்பிடுகின்றார்:

| liலக சார்ந்தவை 31
தாயத்துக் கட்டுவதைத் தடை செய்துள்ள ஹதீஸ்கள் பொதுப்படையா கவே வந்துள்ளன. அவற்றில் விதிவிலக்குகள் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. தாயத்தொன்றைக் கட்டிய நிலையில் ஒருவரைக் கண்ட நபி அவர்கள், அதில் இருப்பது குர்ஆனின் வசனங்களா அல்லது மற்றேதுமா என்று விசாரிக்காமலே கண்டித்தமை, எல்லா வகையான தாயத்துக்களும் தடைசெய்யப்பட்டவை என்பதைக் காட்டுகின்றது.
2. ஸத்துத்-தரீஆ என்ற ஷரீஅத் கண்ணோட்டத்தில் முன்னெச்சரிக்கை யாக, எல்லா வகையான தாயத்துக்களையும் தடை செய்ய வேண்டி யுள்ளது. ஏனெனில், குர்ஆனைக் கொண்டு தாயத்துக் கட்டுபவன் குர்ஆன் அல்லாததையும் நாட முற்படக்கூடும் அல்லது உட்பொதிவு எது என்பதனை அறிந்து கொள்ளாமல் நடக்க முற்படவும் முடியும்.
3. அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டு தாயத்துக் கட்டுவதற்கு அனு மதித்தால் அல்குர்ஆன் அவமதிக்கப்பட இடமுண்டு. ஏனெனில் அதனைக் கட்டிக்கொண்டு ஒருவர் அசுத்தமான (மலசல கூடம் போன்ற) இடங்களுக்குச் செல்வார். முழுக்குடன் இருப்பவர், ஹைளு டன் இருக்கும் பெண் போன்றோர் இத்தகைய தாயத்துக்களை அணி வதினாலும் அல்குர்ஆனின் கெளரவம் பாதிக்கப்படக்கூடும்.
நோய்களுக்குப் பெளதீகக் காரணங்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பதே இஸ்லாமிய வழிமுறையாகும்.
"அல்லாஹ்வின் அடியார்களே, மருந்து உபயோகியுங்கள். ஏனெனில், அல்லாஹற். தான் ஏற்படுத்தியுள்ள ஒவ்வொரு நோய்க்கும் மருந்தையும் அமைத்தே வைத்திருக்கின்றான்." (அஹற்மத், இப்னு ஹிப்பான், மற்றும் U6)f)
"நிவாரணம் இருப்பது எல்லாம் மூன்றில் ஆகும். அவையாவன: தேன் பருகுதல், இரத்தம் எடுத்தல், நெருப்பினால் சுடுதல்." (புகாரி) இந் நபிமொழி கூறும் சிகிச்சைகள் மூன்றும் முறையே (இன்று) மருந்துவகைகள், சத்திரசிகிச்சை, மின்னேற்றுமுறைச் சிகிச்சை ஆகியவற்றைக் குறித்து நிற்கின்றது என ஷெய்க் யூஸப் அல்-கர்ளாவி விளக்குகின்றார்.
நபி(ஸல்) அவர்களும் தான் நோய் வாய்ப்பட்டபோது மருத்துவம் செய்திருக்கின்றார்கள்; தமது தோழர்களுக்கும் உம்மத்தினருக்கும் மருந்துகளைப் பாவிக்குமாறு பணித்தும் உள்ளார்கள்.
இவை தவிர ஜின்கள், ஷைத்தான்கள் போன்றவற்றின் பாதிப்பு களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக நபி (ஸல்)அவர்கள் ஏராளமான திக்ர்கள், ஒளராதுகள், துஆக்கள் போன்றவற்றைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

Page 18
32 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
எனவே, நபி(ஸல்)அவர்கள் கற்றுத் தந்துள்ள இத்தகைய பிரார்த்தனைகளை ஒதுவதன் மூலமும் பெளதிகக் காரணிகளை கொண்டு மருத்துவம் செய்வதன் மூலமே நோய்களுக்குப் பரிகாரம் தேடுவது சரியானதும் முறையானதுமான ஷரீஅத் வழிமுறையாகும்.
முஹம்மத் (ஸல்) அவர்களை பிற நபிமார்களுடன் ஒப்பிட்டுப் பேசுதல்
கேள்வி: கொழும்பில் ஆலிம் ஒருவர் தனது ஜும்ஆப் பேருரையில் பெரியார் ஒருவரின் கவிதை வரிகள் சிலவற்றைப் படித்து, ரஸ?ல் (ஸல்) அவர்கள் பெரும் மழையென்றால் மற்ற நபிமார்கள் அதில் ஒரு சிறுதுளி நீர் என்றும் ரஸ?ல்(ஸல்) அவர்கள் பெரும் கடல் என்றால் மற்ற நபிமார்கள் அதில் சிறு அலை என்றும் ரஸ?ல் (ஸல்) அவர்களுக்கும் மற்றைய நபிமார்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளை ஒப்பிட்டுக் கூறினார். ஆனால், அல்லாஹற்வோ தனது திருமறையில் பல இடங்களில் தனது தூதர்கள் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவ தற்கில்லை என்று கூறச் சொல்கின்றான். இந்த ஆலிமின் உரை திருமறை வசனத்திற்கு முரண்படுகின்றதே. விளக்கம் தேவை.
பதில்: குறித்த ஆலிமின் கூற்றில் குறிப்பிடத்தக்க பிழையேதும் இருப்பதாகத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள அல்குர்ஆன் வசனத்துடன் அவ்வாலிமின் கருத்து முரண்படுவதாகவும் கூறுவதற்கில்லை. மு.மின்கள், யூத கிறஸ்தவர்களைப் போன்று இறைத் தூதர்களில் சிலரை ஏற்று மற்றும் சிலரை நிரா கரிப்பவர்களாக இருக்கமாட்டார்கள்; மாறாக எல்லா நபிமார்களை யும் ரஸல்மார்களையும் எத்தகைய வேற்றுமையையும் காட்டாது ஏற்று விசுவாசிப்பார்கள் என்பதுதான் குறித்த அல்குர்ஆன் வசனத்தின் விளக்கமாகும். இந்த வகையில், அவ் வசனமும் அதையொத்த பிற வசனங்களும் இறை தூதர்களுக்கிடையே தர வித்தியாசங்கள் இருப்பதனை மறுப்பதாக அமையாது.
நபிமார்களை விட ரஸ%ல்மார்கள் தரத்தில் கூடியவர்கள் என்பதும், ரஸ?ல் மார்களில் "உலுல் அஸ்ம்" என்போர் அந்தஸ்தில் கூடியவர்கள் என்பதும் தெரிந்ததே. இந்த உண்மையை அல்-குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது:

நhபிக்கை சார்ந்தவை 33
"(நம்மால் அனுப்பப்பட்ட) அத்துதர்கள் (யாவரும் ஒரே பதவியுடை பவர்கள் அல்லர்) அவர்களிற் சிலரை, சிலரை விட நாம் மேன்மையாகக் கியிருக்கின்றோம். அவர்களிற் சிலருடன் அல்லாஹற் பேசியிருக்கின்றான். அவர்களிற் சிலரை, சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தியும் இருக் நின்றான்."(2:253)
"மேலும், நபிமார்களிற் சிலரை, சிலரை விட உண்மையில் மேன்மைப்படுத்தியுள்ளோம்." (17:55)
அவ்வாறே எல்லா இறைதூதர்களிலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்பதும் ஓர் அடிப்படையான உண்மை யாகும். அவர்கள் காதமுல் அன்பியா-நபிமார்களில் இறுதியானவராகவும் இமாமுல் அத்கியா-இறைபக்தர்களின் தலைவராகவும் இருப்பது மாத்திர மல்ல, ஸையிதுல் முர்ஸலின்-இறைதூதர்களின் தலைவராகவும் கொள்ளப் படுகின்றார்கள். கீழ்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரங்களாக அமைகின்றன:
"(முஹம்மதாகிய) நானே மறுமையில் மனித சமுதாயத்தின் தலைவராக இருப்பேன். முதலில் பிளப்பது எனது கப்றாகும். ஷபாஅத் செய்பவர்களில் முதலானவனாகவும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில் முதலோனாகவும் நானே இருப்பேன்." (முஸ்லிம்)
"அல்லாஹற் இஸ்மாயீலின் சந்ததியிலிருந்து கானானாவைத் தெரிவு செய்தான். குறைஷியரைக் கனானாவிலிருந்து தெரிவு செய்தான். பனு ஹாஷிமை குறைஷியரிலிருந்து தெரிவு செய்தான். (முஹம்மதாகிய) என்னை பனூ ஹாஷிமில் இருந்து தெரிவு செய்தான்." (முஸ்லிம்)
"நான் ஆறு விடயங்கள் அளிக்கப்பட்டு ஏனைய நபிமார்களை விட உயர்ந்தவனாக இருக்கின்றேன். அவையாவன: நான் சொற் சுருக்கத்துடனும் பொருட் செறிவுடனும் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப்பற்றிய) பயத்தைக் கொண்டு உதவி செய்யப்பட்டுள்ளேன். கனிமத் பொருட்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. மேலும், முழுப் பூமியும் தொழும் தளமாகவும் சுத்தமானதாகவும் எனக்கு ஆக்கித் தரப்பட்டுள்ளது. நான் அகிலத்தார் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். என்னுடன் நபிமார்களின் வருகைக்கு முற்றப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது." (முஸ்லிம்)
பொதுப்படையாக முஹம்மத் (ஸல்) அவர்கள் மற்றைய இறை தூதர்களை விட உயர்ந்தவர்கள் என்று கூறுவதில் தவறில்லை. ஆயினும் ஒரு நபியைக் குறிப்பிட்டு அவரை விட முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறப்புக்குரியவர்கள் என்று கூறுவது முறையல்ல.

Page 19
34 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஒருமுறை ஒரு முஸ்லிமும் ஒரு யூதனும் வாக்குவாதப்பட்டுக்கொண்ட போது, பூதன் ஒரு கட்டத்தில் "மனிதர்கள் மத்தியில் மூஸாவைத் தெரிவு rெதவன் மீது சத்தியமாக, அப்படியல்ல"என்றான். இதனைக்கேட்ட முகtலி கோபமடைந்து, "அல்லாஹற்வின் ரஸல் எங்கள் மத்தியில் இருதுபோது, நீ இப்படிச் சொல்கிறாயா?" என்று கூறி அவனது கன்னத்தில் அறைந்து விட்டார். இதனைப்பற்றி அந்த யூதன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறைப்பட்டபோது அவர்கள், "என்னை மூஸாவை விட உயர்த்திப் பேசாதீர்கள்." என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸிலிருந்து ஒரு நபியைக் குறிப்பிட்டு, அவரை விட தன்னை உயர்ந்தவர் என்று கூறுவதனை நபி (ஸல்) அவர்கள் வரவேற்க வில்லை என்பது தெரிகிறது. மேலும், "நான் இறைத் தூதர்களில் சிறந்தவன்; மனித சமுதாயத்தின் தலைவன்" என்று அவர்கள் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது பெருமைக்காக அன்றி, ஓர் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகும். எனவேதான் "நான் ஆதமுடைய மக்களின் தலைவனாவேன்" என்று கூறிய நபியவர்கள், “இதனை நான் பெருமைக்காகக் கூறவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பொதுவாகப் பிற நபிமார்கள் மீது கொண்ட துவேஷத்தின் காரணமா கவோ பெருமைக்காகவோ, மற்றைய நபிமார்களைக் குறைத்து மதிக்கும் நோக்குடனோ முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்றிப் போற்றுவதே பிழை யானதாகும் என இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஷபாஅத் பற்றிய கண்ணோட்டம்
கேள்வி: ஹாபிழ், நல்லடியார்கள் போன்றோரின் சிபாரிசின் மூலம் நரகத்துக்குரியவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டவர்களைக் கூட விடுதலை செய்யமுடியும் எனக் கூறப்படுகின்றது. இக்கருத்து உண்மையானதா? "ஷபாஅத்" பற்றிய ஒரு விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.
பதில்: ஷபாஅத் (சிபாரிசு செய்தல், பரிந்து பேசுதல்) என்பது
மறுமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இது அஹற்லுஸ்ஸ"ன்னாவல்ஜமாஆவின் நம்பிக்கையாகும்.
ஷபாஅத் பல வகைப்படும்; அவற்றிற் சில கருத்து வேறுபாட்டிற்குட் பட்டவையாகும். ஷபாஅத்தின் பிரிவுகளில் முதலாவதாகக் கொள்ளப்படுவது "அஷ்ஷபாஅத்துல் உழ்மா” எனும் மிகப்பெரும் சிபாரிசாகும். இது

|பிக்கை சார்ந்தவை - 35
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட ஒரு சிறப்பாகும். மறுமையில் விசாரணை தாமதிக்கும் வேளையில், அதனை அவசரப்படுத்தி தீர்ப்பு வழங்குமாறு நபியவர்கள் அல்லாஹற்விடம் விடுக்கும் விசேட வேண்டுகோளை இது குறிக்கும்.
நன்மைகளும் தீமைகளும் சமநிலையிலமைந்த ஒரு கூட்டத் தினருக்காகவும், நரகத்துக்குத் தீர்மானிக்கப்பட்ட ஒரு பிரிவினருக்காகவும் நபியவர்கள் செய்யும் ஷபாஅத் இரண்டாம், மூன்றாம் பிரிவுகளாகும்.
நான்காவது வகை, ஷபாஅத் நபிகளார் சுவர்க்கத்தைப் பெற்ற ஒரு பிரிவினரின் அந்தஸ்தை மேலும் உயர்த்துமாறு வேண்டுவதாகும்:
ஒரு கூட்டத்தினரை விசாரணை இன்றியே சுவனத்தில் நுழைவிப்பதற் காகவும் அன்னார் சிபாரிசு செய்வார்கள். இது ஷபாஅத்தின் ஐந்தாவது வகையாகும்.
தண்டனை பெற்ற சிலரின் தண்டனையைக் குறைப்பதற்காகவும், இறுதியாக அனைத்து மு.மின்களும் சுவர்க்கம் புகவேண்டும் என்பதற் காகவும் தம் உம்மத்தைச் சேர்ந்த பெரும்பாவிகள் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் நபியவர்கள் செய்யும் ஷபாஆக்கள் ஆறாம், ஏழாம், எட்டாம் பிரிவுகளாகும்.
நபி (ஸல்) அவர்களைப் போன்றே ஏனைய நபிமார்கள், உலமாக்கள், ஷஹித்கள் போன்றோரும் பிறருக்காக ஷபாஅத் செய்யும் சந்தர்ப்பத்தைப் பெறுவார்கள் என்பதற்கு ஆதாரங்களுண்டு. உதாரணமாக, கீழ்வரும் நபி மொழியைக் குறிப்பிடலாம்: "மலக்குகள் ஷபாஅத் செய்துவிட்டனர். நபிமார்களும் ஷபாஅத் செய்துவிட்டனர். மு.மின்களும் ஷபாஅத் செய்விட்டனர். அருளாளருக்கெல்லாம் அருளாளன் மாத்திரமே இனி மீதி என்று அல்லாஹ் கூறி நரகிலிருந்து ஒரு பிடியை எடுப்பான். அங்கே நரகவாசிகளில் ஒரு பிரிவினர் வெளியேறுவர். அவர்கள் எந்த நல்லமலும் செய்யாதவர்களாயிருப்பர்."
இந்த வகையில், மு.மின்களில் பலரும் பிறருக்காக ஷபாஅத் செய்யும் வாய்ப்பைப் பெறுவர். ஆயினும், அல்லாஹற்வின் அனுமதியின்றி எவரும் எவருக்காகவும் சிபாரிசு செய்யும் வாய்ப்பையோ, பிறரின் சிபாரிசைப் பெறும் வர்ய்ப்பையோ அடையமாட்டார்கள்.

Page 20
38 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
(9, anseoII ofaoith
கேelவி ஆஷா தினம் இஸ்லாத்தில் எவ்வாறு முக்கியத்துவம் பெறு ன்ெபது என்பது பற்றியும் அத்தினத்துடன் தொடர்பான நம்பிக்கை கள், அனுஷ்டானங்கள் பற்றியும் ஒரு பூரண விளக்கத்தை கதிர்பார்க்கிறேன்.
பதில்: முஹர்ரம் மாதம் பத்தாம் நாளே ஆஷ"றா தினமென அழைக்கப் படுகின்றது. அந்நாளில் நோன்பு நோற்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவுப்படி ஸ"ன்னத்தாகும். ஆயிஷா (ரலி) அறி விக்கும் ஹதீஸ் இதற்காதாரமாகும். "நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் ஆஷ”றா நோன்பை நோற்கும் படி ஏவினார்கள்." (ஆதாரம் - அல்பஸ்ஸார்)
இந்த ஆஷ?றா தினம் இஸ்லாத்துக்கு முன்னைய ஜாஹிலிய்யாக் கால மக்களாலும் கெளரவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்: “மதீனாவுக்குச் சென்ற நபி (ஸல்) அவர்கள் யூதர்கள் ஆஷ"றா தினத்தில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அதுபற்றி அவர்களிடம் வினவப்பட்டபோது, இந்த நாளிலேதான் அல்லாஹற் மூஸா (அலை) அவர்களுக்கு பிர்ஒளன் மீது வெற்றியைக் கொடுத்தான். அதனைக் கெளரவிக்கவே நோன்பு நோற்கிறோம் என்றனர். இதனைக்கேட்ட நபிய வர்கள், மூஸா (அலை) அவர்களுடைய விடயத்தில் (அதாவது அவர்களை நினைவு கூர்வதற்கு) உங்களை விட நாங்கள் மிகவும் தகுதியானவர்கள் என்று கூறி, அந்நாளில் அவர்களும் நோன்பு நோற்றதோடு பிறருக்கும் நோற்கும்படி ஏவினர்." (ஆதாரம்-புகாரி, தாரமி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அஹ்மத்)
இம்மகத்துவம் மிக்க நாளில் சில புதுமை விரும்பிகள் மார்க்கத்தில் இல்லாத பல நூதன அனுஷ் பனங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே தருகின்றோம்.
* ஆஷறா தினத்தில் லுஹருக்கும் அஸருக்குமிடையில் நாற்பது ரக்அத்துக்கள் தொழுவது. இவ்வழிபாட்டுக்கு எவ்வித ஆதாரமுமில்லை.
* இத்தினத்தில் எவர் ஒவ்வொரு ரக்அத்திலும் ஸரத்துல் பாத்திஹாவை ஒரு முறையும் ஸ"ரத்துல் இக்லாஸை ஐம்பத்தியொரு முறையும் ஒதி, முறைப்படி நான்கு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அல்லாஹற் அவரது பாவங்கைள மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும், அபூ ஹ"ரைறா (ரலி) அறிவிப்பதாகவும் கூறப்படும் ஹதீஸிற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

tከዘዛ )lተ,ሴን)ዳs ሪፓfffiffjቓ60p6ol 37
ர் இத்தினத்தில் குளிப்பது, சுர்மா இடுவது சம்பந்தமாக அறிவிக் கபபட்டுள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப்பட்டவையாகும். "ஆஷ”றா தினத்தில் எவர் கண்களுக்கு சுர்மா இட்டுக்கொள்கின்றாறோ, அவருக்கு என்றுமே கண்நோய் ஏற்பமாட்டாது" என்ற இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாகக் கூறப்படும் ஹதீஸ் ஆதாரமற்றது. "மகாஸித்” எனும் நூலில், குறித்த ஹதீஸ் பொய்யானதும் இட்டுக்கட்டப்பட்டதுமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அல்லஆலி” என்ற நூலில், இத்தினத்தில் சுர்மா இடுவது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்கள் கூறிய எந்தவொரு ஹதீஸஉம் இல்லையென்றும் இது ஹ"ஸைன் (ரலி) வைக்கொலை செய்தவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பித்அத் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னு ரஜப் (ரஹ்) தனது "லதாயிபுல் மஆரிப்" என்ற நூலில், ஆஷ?றா தினத்தில் கண்களுக்கு சுர்மா இடுவது, சாயமிடுவது, குளிப்பது பேன்றவை சம்பந்தமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையாகும் எனக் குறிப்பிடு கின்றார்.
* ஆஷ?றா தினத்தில் எவர் குளித்துத் தூய்மையாக இருக்கின்றாரோ மரண வேளையிலேற்படும் நோயைத் தவிர வேறெந்த நோயும் அவரை அவ்வருடம் முழுவதும் பிடிக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹ"ரைறா (ரலி) அறிவிப்பதாகக் கூறப்படும் ஹதீஸ், ஹ"ஸைன் (ரலி)வைக் கொலை செய்தவர்களால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்றாகும்.
* ஆஷ"றா வடை என்று மாவினால் சில உருண்டைகளைச் சமைப்பதும்
பித்அத்தாகும். -
* இத்தினத்தில் குளித்துவிட்டு ஆலிம்களைத் தரிசிப்பது, நோயாளிகளைச் சேமம் விசாரிப்பது, அநாதைகளின் தலையைத் தடவி விடுவது, நகம் களைவது, ஆயிரம் முறை ஸ"ரத்துல் இக்லாஸை ஒதுவது, இனபந்துத் தொடர்பை அதிகரித்துக்கொள்வது போன்ற கிரியைகளைச் செய்வதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. (மேற்கூறிய அமல்களைக் குறிப்பாக இத்தினத்தில் செய்வது தான் பித்அத் ஆகும். மாறாக, பொதுவாக எந்நாளையிலும் எந்நேரத்திலும் செய்வதை மார்க்கம் தடைசெய்யவில்லை; வரவேற்கின்றது.)
இப்னு ஹாஜ் கூறுகிறார்: ஆஷ"றா தினம் மார்க்கம் சிறப்பாகக் கருதும் ஒரு தினமாகும். இந்நாளில் தனது குடும்பத்திற்கும், அநாதை களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் தாராளமாகச் செலவு செய்வது, தான தர்மம் செய்வது ஸ"ன்னத்தாகும். ஆயினும் இவற்றை நிரந்தர வழிமுறையாக்கிக் கொள்வது கூடாத ஒன்றாகும். இந்நிலை ஏற்படும் போது இவற்றைச் செய்வது மக்ரூஹாகக் கருதப்படும். எமது முன்னோர்கள்

Page 21
3. சன்மார்க்க சட்ட விளக்கங்க
இத்தினத்தில் குறிப்பிட்ட உணவை வழமையாகச் சுவைத்து வந்ததாக தெரியவில்லை. இவர்களுள் சிலர் இத்தினத்தில் தாராளமாகச் செலவு செய்வது சுன்னத்தேயன்றி கடமையானதொன்றல்ல என்பதை உணர்த்து வதற்காக அந்த அமலை விட்டுமிருக்கிறார்கள். இன்று சிலர் இத்தினத்தில் கோழி அறுப்பது, வடை சுடுவது போன்ற குறிப்பிட்ட சில உணவு வகைகன்ளச் சமைப்பது போன்று நம்முன்னோர் செய்யவில்லை. அவர்கள் அதிகமான இபாதத்துகளைச் செய்தல், ஸதகா கொடுத்தல் போன்ற நன்மையான காரியங்களைச் செய்தவன் மூலம் இத்தினத்தைக் கண்ணியப் படுத்தினார்களேயன்றி வகை வகையான உணவுகளைச் செய்தல்ல.
* இத்தினத்தில் ஆண்களும் பெண்களும் கப்ருகளை ஸியாரத் செய்வதும் ஆதாரமற்ற ஒன்றாகும். இத்தினத்தில் பெண்கள் மருதோன்றி இடும் பழக்கமும் பித்அத் ஆகும்.
* இந்நாளிலே அல்லாஹற் ஆதம் (அலை) அவர்களுக்கு மன்னிப் பளித்தான்; இப்றாஹீம் (அலை) அவர்களை நெருப்பிலிருந்து காப் பாற்றினான்; ஐயூப் (அலை) அவர்களுக்கு சுகத்தைக் கொடுத்தான்; யூனுஸ் (அலை) அவர்களை மீனின் வயிற்றிலிருந்து வெளியேற்றினான் என்று கூறப்படும் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையாகும். அவ்வாறே இந்நாளில்தான் நீண்ட பிரிவுக்குப் பிறகு ய..கூப் (அலை) அவர்களும், யூசுப் (அலை) அவர்களும் சந்தித்தார்கள் என்று கூறும் சரித்திரங்களும் பொய்யானவையாகும்.
மேற்கூறிய விளக்கத்திலிருந்து இஸ்லாத்தில் ஆஷறா தினம் கவ்வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதும், அத்தினத்தோடு தொடர்பான பிழையான நம்பிக்கைகளும் அனுஷ்டானங்களும் எவை என்பதும் தெளிவாகிறது.
இத்தினத்தில் நோன்பு நோற்பதன் மூலமும், குடும்பத்தாருக்கும் இனபந்துக்களுக்கும் ஏழை, எளியவர்களுக்கும் தாராளமாகச் செலவு செயவதன் மூலமும் இதனை கெளரவப்படுத்துவதே ஸ"ன்னத்தாகும்.
"இllாளில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் எவன் தாராளமாகச் செலவுசெயன்ெறானோ, அவனுக்கு அவ்வருடம் முழுவதிலும் அல்லாஹற் அருக! பாலிபபான்" என நபியவர்கள் கூறினார்கள்.

பிக்கை சார்ந்தவை
ஸலுைல்லாஹ்வின் மரணம்
கேள்வி: முஹம்மத் (ஸல்) அவர்கள் மெளத்தாகி விட்டார்களா? அலலது
மறைந்திருக்கின்றார்களா?
தில்: ரஸஉல் (ஸல்) அவர்கள் ஏனைய மனிதர்களைப் போல மரணமடைந்து விட்டார்கள் என்பதே இஸ்லாமிய அகீதா கூறும் கருத்தாகும். ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 13ம் பிறையில் அன்னார் மரணமானார்கள். ஆங்கிலத் திகதிப்படி கி.பி. 633, ஜூன் 8ம் திகதி திங்கட்கிழமை அன்னார் மரண மடைந்தார்கள்.
ரஸ?லுல்லாவின் மரணச்செய்தியைக் கேள்வியற்ற உமர் (ரலி) அவர்கள் அதனை நம்ப மறுத்து தனது வாளை உருவி கையிலேந்தி, எவர் ரஸ%ல்லாஹற் மரணித்துவிட்டதாகக் கூறுகின்றாரோ அவரைத் தன் வாளால் வெட்டிக் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தினார்கள். ஆயினும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு மரணச்செய்தி கிடைத்ததும் அவர்கள் உடன் ஆயிஷா (ரலி)வின் வீட்டுக்கு வந்து நபியவர்களின் முகத்தைத் திறந்து பார்த்து விட்டு உடன் முழங்காலில் அமர்ந்து அழுதவர்களாக அன்னாருக்கு முத்தம் கொடுத்து கீழ்வருமாறு கூறினார்கள்:
"எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக (நபி) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். அல்லாஹவின் தூதரே! உங்கள் மீது அல்லாஹ்வின் ஸலவாத்து உண்டாவதாக. உயிரோடிருக்கும் போதும் மரணமாகியுள்ள நிலையிலும் நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றீர்கள்." பின்னர் வெளியே வந்த அபூபக்ர் (ரலி), அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு பின்வருமாறு கூறினார்கள்:
"அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அந்த முஹம்மத் நிச்சயமாகவே மரணித்துவிட்டார். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கி வந்தாரோ அந்த அல்லாஹற் நித்திய ஜீவன். அவன் மரணிக்கவே மாட்டான்." இவ்வாறு கூறிவிட்டு கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்களை ஒதினார்கள்:
"(நபியே) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே; நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக்கூடியவர்களே.” (39:30)
"முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்ல. அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்றிருக்கின்றனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொலை செய்யப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ..? (3:144)

Page 22
40 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
இவ்வசனங்களை செவியுற்ற உமர் (ரலி) அவர்கள் உண்மை நிலையை உணர்ந்தார்கள். "இந்த குர்ஆன் வசனத்தை இதுவே முதற் த வையாகக் கேட்கிறேனோ என்ற உணர்வை நான் அடைந்தேன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
ஸஹபாக்களின் நிலை
கேள்வி: "ஸஹாபாக்கள் அனைவரும் வானத்தில் மின்னக்கூடிய நட்சத்திரங்களைப் போன்றவர்கள்; அவர்களில் யாரைப் பின்பற்றினாலும் வழி தவறமாட்டீர்கள்” என்றொரு ஹதீஸ் இருப்பதாக அடிக்கடி கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், இதற்கு மாற்றமாக "ஸஹாபாக்கள் அனைவரும் பிழை செய்யாதவர்களும் அல்லர்” என்றும் கூறக்கேட்டுள்ளேன். இந்த முரண்பாட்டைத் தெளிவுபடுத்தவும்.
பதில்: முஹத்தஸன்களில் பலர் நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸை ஆதாரமற்ற ஒன்றாகக் கருதுகின்றனர். “இதனை அறிவிக்கும் "ராவி"களில் ஒருவரான "அல்-ஹாரிஸ்” என்பார் இனங்காணப் படாத ஒருவராக இருப்பதனால், இந்த அறிவிப்பாளர் வரிசையை (ஸனதை) ஆதாரமாகக் கொள்ள முடியாது" என்கிறார் இமாம் இப்னு அப்தில்பர்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் "ராவி"களில் அபூஸஸுப்பான், ஸல்லாம் இப்னு சுலைம் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவரும் ஏற்றுக் கொள்ளத் தக்கவர்கள் அல்லர் என்பது இமாம் இப்னு ஹஸ்மின் கருத் தாகும். இரண்டாமவர் பெரும் பொய்யர் என்பது மேலும் பல அறிஞர்களின் முடிவாகும்.
"இந்த ஹதீஸ் ஸஹரிஹானதல்ல" என்கிறார் இமாம் இப்னு குதாமா.
"இது ஹதீஸ்கலை வல்லுநர்கள் மத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், ஞானிகள் மத்தியில் ஆதாரமாகக் கொள்ளக்கூடியது" என்று அஷ்ஷ..ராணி கூறுகிறார். "இது அர்த்தமற்ற, அபத்தமான கருத்தாகும்" என்கிறார் அஷஷெய்க் நாஸிருத்தின் அல்பானி.
குறித்த ஹதீஸ் போலியானது (மவ்ளு.") என்பதே அல்பானியினதும் அபிப்பிராயமாகும்.
நபித்தோழர்களின் சிறப்புகளைக் கூறுகின்ற ஆதாரபூர்வமான, வேறு குர்ஆன், ஹதீஸ் வசனங்கள் உண்டு. உதாரணத்திற்காகக் கீழ்வரும் வசனங்களைக் கூறலாம்:

பிக்கை சார்ந்தவை 41
ܫܫܕ
"மனித இனத்திற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமூகம் நீங்களே."
"மேலும், உங்களை நாம் நடுநிலையான (அல்லது உயர்ந்த) சமூகமாக ஆக்கியுள்ளோம்."
இவை போன்ற வசனங்கள் பொதுவாக முழு முஸ்லிம் சமூகத்தை யும் அடக்குவதாக அமைந்தாலும், அடிப்படையில் ஸஹாபா சமூகத்தைக் குறிப்பதாகவே உள்ளன. அவ்வசனங்கள் ஆரம்பமாக ஸஹாபாக்களையே விழித்துப் பேசின.
கீழ்வரும் அல்-குர்ஆன் வனங்களும் ஸஹபாக்களின் சிறப்பை எடுத்துக் காட்டுவனவாகும். பார்க்க. 49:29, 668, 9:100, 49:18 சில நபிமொழிகள் கீழ்வருமாறு: -
"மனிதர்களிற் சிறந்தவர்கள் எனது காலத்தில் வாழும் பரம்பரை யினரே. அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களைத் தொடர்ந்து வருவோராவார். அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களைத் தொடர்ந்து வருவோராவார்." (புகாரி, முஸ்லிம்)
பொதுவாக ஸஹாபாக்களைப் பற்றியும், குறிப்பாக நான்கு கலீபாக் களைப்பற்றியும், மேலும் பல நபித்தோழர்களைப் பற்றியும் குறிப்பிடும் பல ஹதீஸ்களைக் காணமுடிகின்றது. அவற்றையெல்லாம் நோக்கும்போது, ஸஹாபா சமூகம் மனித இன வரலாற்றில் தனித்துவமான சிறப்புக்குரிய சமூகம் என்பதனை அறிய முடியும்.
ஹதீஸ் அறிவிப்பாளர் வகுப்புகளில் முதல் வகுப்பினராகத்திகழும் ஸஹாபாக்கள் அனைவரும், நீதியும் நேர்மையும் மிக்கவர்கள். அந்த வகையில், ஏனைய "ராவி"களைப்பற்றி ஆராயவேண்டிய தேவை இருப்பது போன்று ஸஹாபாக்களின் நீதி, நேர்மையை அறிய அவர்களைப் பற்றித் திறனாய்வு செய்ய வேண்டியதில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
ஸஹாபாக்களின் இம்மாண்பு நிலையை வைத்து, அவர்களைத் தவறுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்று கூறுவதற்கில்லை. மாறாக, இவ்விடயத்தில் அவர்கள் ஏனைய மனிதர்களைப் போன்றோராவர். அவர்களது கருத்துக்களும், முடிவுகளும், நடத்தைகளும் ஏற்கப்படவும், மறுக்கப்படவும் முடியும். இதுவே பெரும்பாலான இமாம்களின் கருத்தாகும்.
ஸஹபாக்களின் சிறப்பைக் கூறும் ஹதீஸ்கள், அவர்கள் நபிமார் களைப்போன்று தவறுகள், பிழைகள் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என்ற கருத்தை உணர்த்த வந்தவையல்ல என்பதனை விளங்க வேண்டும்.

Page 23
42 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
படைப்புக்கள் மீது சத்தியம் செய்தல்
கேள்வி சிலர், குறிப்பாக தாய்மார்கள் தமது பிள்ளைகள் மீதும் வேறு ல) கடைப்புகள் மீதும் சத்தியம் செய்கின்றார்கள். இவ்வாறு சத்தியம் செய்வது சம்பந்தமான இஸ்லாத்தின் தீர்ப்பு யாது என்பதை அறிய விரும்புகின்றேன்.
பதில்: நீங்கள் குறிப்பிட்ட விதத்தில் படைப்புகள் மீது சத்தியம் செய்வது கூடாது. நபி, இறைநேசர், பெரியார், பெற்றோர், பிள்ளைகள் போன்றோர் மீது சத்தியம் செய்வதும் அல்லது புனிதமாகக் கருதப்படும் கட்பதுல்லாஹற் போன்றவற்றின் மீது சத்தியம் செய்வதும் "விர்க் அஸ்கர்” எனும் சிறிய வழிர்க் வகையைச் சேர்ந்ததாகும்.
சிறிய வழிர்க்குகள் எனப்படுபவை இஸ்லாம் குறிப்பிடும் மிகப்பெரும் பாவங்களை விடப் பாரதூரமானவையாகும்; அவை பெரிய வழிர்க்கின் பால் இட்டுச் செல்லும் பயங்கரக் குற்றங்களாகும்.
பொதுவாக அல்லாஹற் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. ஒன்றின் மகத்துவம் உணரப்பட்டே அதன் மீது சத்தியம் செய்யப்படுகின்றது. அத்தகைய மகத்துவத்துக் குரியவன் அல்லாஹற் ஒருவன் மட்டுமேயாவான்.
குறித்த விதத்தில் சத்தியம் செய்வதைத் தடைசெய்யும் சில ஹதீஸ்கள் பின்வருமாறு:
"எவர் அல்லாஹர்) அல்லாதவற்றில் சத்தியம் செய்தாரோ அவர் காபிராகிவிட்டார்; அல்லது ஷிக்கைச் செய்து விட்டார்." (திர்மிதி)
"எவர் சத்தியம் செய்கின்றாரோ, அவர் அல்லாஹiவைக்கொண்டு சத்தியம் செய்யட்டும். அல்லது (சத்தியம் செய்வதனை) விட்டு விடட்டும்.”
அல்லாஹ்வைக் கொண்டு பொய்ச் சத்தியம் செய்வது பெரும் பாவமாகும். அல்லாஹற் அல்லாதவை மீது சத்தியம் செய்வதோ ஷிர்க்கின் பால் இட்டுச் செல்லும் பெரும் குற்றமாகும்.
சத்தியம் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். அதனை முறித்தால் “கப்பாரா” கொடுக்க வேண்டும் என்பது பொது விதியாகும். ஆனால், அல்லாஹற் அல்லாதவை மீது சத்தியம் செய்தால், அதனை நிறைவேற்ற வேண்டியதில்லை; முறித்தால் "கப்பாரா” கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில், அது வழிர்க் ஆகும். வழிர்க்கிற்கு

n க்கை சார்ந்தவை 43
கத்தகைய பெறுமானமும் கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு சத்தியம் பெதவர் அதற்காக வருந்திப் பாவமன்னிப்புக் கோர வேண்டும்; தனது *மானைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
"எவர் லாத் மீது சத்தியமாக “உஸ்ஸா மீது சத்தியமாக” என்று சத்தியம் செய்தாரோ, அவர் "லாஇலாஹ இல்லல்லாஹற்” என்று கூறிக்கொள்ளட்டும்” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (புகாரி)
கேள்வி. சில வரையறைகளுடன் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆனால் எம்மில் பலர் புனிதக் குர்ஆனிலடித் தும் சத்தியம் செய்கிறார்கள். இவ்வாறு செய்யப்படும் சத்தியம் நிறைவேறுமா?
பதில்: அல்லாஹற் அல்லாத எதன்மீதும் சத்தியம் செய்வது ஹராமாகும். இவ்வடிப்படையில் நபி, வலி, தந்தை போன்றவர் மீதோ அல்லது குர்ஆன், க.பா போன்றவை மீதோ செய்யப்படும் சத்தியம் நிறைவேறமாட்டாது. முறித்தால் குற்றப்பரிகாரம் கொடுக்க வேண்டியதுமில்லை.
"616ରାif அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தாரோ அவர் இணை வைத்துவிட்டார்” எனும் நபி மொழியைக் கவனத்தில் கொள்ளவும். (ஆதாரம்-நஸாயி, திர்மிதி, இப்னுமாஜா)
குர்ஆனில் கையை வைத்துச் சத்தியம் செய்வதைப் பொறுத்த வரையில் அது பிழையானதல்ல. ஆயினும் சத்தியம் நிறைவேற இது நிபந்தனையாகக் கொள்ளப்படுவதில்லை. சத்தியம் செய்பவர் பொய்ச் சத்தியம் செய்யாதிருக்க அவரில் பய உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குர்ஆனில் கையை வைத்து (அல்லாஹற்வின் மீது) சத்தியம் செய்யுமாறு வேண்டுவதில் தவறில்லை.
சூனியம்
கேள்வி: சூனியம் பற்றிய இஸ்லாத்தின் கருத்தை அறிய விரும்புகிறேன். எனக்கு சூனியம் செய்திருக்கலாமென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்குரிய பரிகாரம் என்ன? விளக்கம்
A. தருமாறு தயவாய் வேண்டுகின்றேன்.
பதில்: சூனியம் என்பது எத்தகைய அடிப்படையுமில்லாத, போல்யான
பொய்யான ஒரு வித்தையாகுமென தீவிர பகுத்தறிவுவாதிகளான மு.தஸிலாக்களும் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த சில

Page 24
44
சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அறிஞர்களும் கருதியுள்ளனர். ஆயினும் பெரும்பாலான இமாம் களும் உலமாக்களும் சூனியத்துக்கு ஓர் அடிப்படை உண்டு; அதற்குத் தாக்கமும் உண்டு என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இவர்கள் தமது கருத்தை நிருபிதற்கு குர்ஆனிலிருந்தும் போதிய ஆதாரங்களைக் காட்டுகின்றனர்.
அவர்கள் காட்டும் ஆதாரங்கள் சில வருமாறு:
女
"(அந்தச் சூனியக்காரர்கள்) மக்களின் கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படி செய்து மகத்தான சூனியத்தைக் காட்டினர்." (7:114)
இவ்வசனத்தில் வரும் மகத்தான சூனியத்தைக் காட்டினர் எனும்
பகுதியிலிருந்து சூனியத்திற்கு ஓர் உண்மை நிலை-அடிப்படை உண்டு என்பதைப் புரிய முடிகின்றது.
★
"கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்தக்கூடிய (சூனியத்தை) அவ்விருவரி மிருந்தும் அவர்கள் கற்றுக்கொள்கின்றார் கள்.” (2:102) இவ்வசனம் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் பரஸ்பர வெறுப்பையும், கசப்பையும் ஏற்படுத்தி, அவ்விருவரையும் பிரித்துவிடு மளவிற்கு சூனியம் சக்தி வாய்ந்தது எனும் கருத்தை விளக்குகிறது.
"முடிச்சுப் போட்டு ஊதுகின்ற (சூனியக்காரப்) பெண்களின் தீங்கை விட்டும் (பாதுகாப்புக் கோருகின்றேன்)" (113:4) சூனியம் செய்யக் கூடியவர்களின் தீங்குகளிலிருந்து தன்னிடம் பாதுகாப்புக் கோருமாறு அல்லாஹற் அல்குர்ஆனின் கட்டளையிடுமளவிற்கு சூனியத்திற்குச் சக்தியும் தாக்கமும் உண்டென்பதை விளங்க முடியும்.
ஒருமுறை ஒரு யூதன் அல்லாஹற்வின் தூதருக்குச் சூனியம் செய்தான். அதனால் அவர்கள் பல நாட்கள் துன்பப்பட வேண்டியிருந்தது. இந்நிலை யில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் வந்து அன்னாருக்கு சூனியம் செய்திருக்கும் விடயத்தை அறிவித்ததுடன் யூதன் போட்ட சூனிய முடிச்சுகள் வைக்கப்பட்டிருக்கும் கிணற்றையும் அறிவித்துக் கொடுத்தார். உடன் நபியவர்கள் ஒருவரை அக்கிணற்றுக்கு அனுப்பி வைத்து அதில் போடப்பட்டிருந்த முடிச்சுகளை எடுத்து வரச் செய்து அதனை அவிழ்த்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் பூரண குணமடைந்தார்கள்.
சூனியம் பற்றி அல்காழி இயாழ் (ரஹற்) விளக்குகையில், சூனியம்
என்பது ஒருவகை நோயெனக் குறிப்பிடுவதுடன், அல்லாஹ்வின் தூதருக்குக் கூட ஏனைய நோய்கள் ஏற்படுவது சாத்தியமாயிருப்பது போல சூனிய

பிக்கை சார்ந்தவை M
மெனும் இந்நோயும் அவர்களைப் பீடிப்பது சாத்தியமானது எனக் குறிபிடு கின்றார். தொடர்ந்து விளக்குகையில் இந்த வகையில் நபியவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டு அவர்கள் பாதிப்புக்குள்ளானது அன்னாரது நுபுவ் வத்தில் எத்தகைய குறையையும், தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் விளக்குகிறார்.
சூனியம் என்ற இந்நோய்க்குச் சிகிச்சை செய்வதைப் பொறுத்த வரையில் "ஷிர்க்"கான முறைகளைக் கடைப்பிடிப்பது முற்றாகத் தவிர்க்கப் படல் வேண்டும். நபியவர்கள் இந்நோய்க்கு இரு முறைகளில் பரிகாரம் கண்டிருக்கின்றார்கள்.
1. மறைக்கப்பட்டிருக்குமிடத்திலிருந்து சூனியத்தை வெளியேற்றி அதனைச்
செயலிழக்கச் செய்வது.
2. சூனியத்தினால் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பின், பாதிக்கப்பட்ட
இடத்தினுள் உள்ள சீர்குலைந்த பதார்த்தத்தை அகற்றி விடுவது.
சூனியத்துக்கான மிகச் சிறந்த பிரயோசனமான சிகிச்கையாக அமைவது தெய்வீக மருந்துகளேயாகுமெனக் கூறும் இமாம் இப்னுல் கையிம் அல்ஜெளஸி, இதுபற்றித் தொடர்ந்து விளக்குகையில் சூனியம் என்பது கீழான, கெட்ட ஆன்மாக்களின் தாக்கங்களையே குறிக்கும்; இத்தகைய தாக்கங்களை அதற்கெதிரானதும் முரணானதுமான திக்ரு கள்,அல்குர்ஆன் வசனங்கள், துஆக்கள் (பிரார்த்தனைகள்) ஆகியவற்றைப் பயன்படுத்தியே தவிர்க்க முடியும். இவற்றின் சக்தி பலமாக இருக்கு மளவிற்கு சூனியத்தின் சக்தி முறியடிக்கப்படும். எந்த உள்ளம் அல்லாஹ் வைக் கொண்டும் அவனது நினைவைக் கொண்டும் திக்ர், ஒளராதுகள் போன்றவற்றைக் கொண்டும் நிரம்பியதாக இருக்கின்றதோ, அவ்வுள்ளத்தை சூனியம் தாக்குவது சிரமமானது. மேலும் சூனியத்தால் பாதிக்கப் பட்டுவிட்டால் அதற்குச் சிறந்த சிகிச்சையாக அமைவதும் இவற்றைக் கண்டுபிடிப்பதேயாகும் எனக் கூறுகிறார்.
இதுபற்றி மேலும் விளக்குகின்ற இமாம் அல் ஜெளஸி பெரும்பாலும் சூனியம் பலவீனமான உள்ளங்களையும் கீழ்த்தரமானவைகளுடன் தொடர்புடைய ஆசாபாசங்களுக்கும் இச்சைகளுக்கும் அடிமைப்பட்ட உள்ளங்களையுமே தாக்குகிறது. அதனாலேயே பெண்கள், குழந்தைகள், அறிவீனர்கள், கிராமப்புறவாசிகள், தீன், தவக்குல், தெளஹரீத் போன்ற அடிப்படை விடயங்களில் பலவீனமானவர்கள், திக்ர் ஒளராதுகள், துஆக்கள் போன்றவற்றுடன் தொடர்பற்றோர் போன்றோரையே மிகக் கூடுதலாக சூனியம் தாக்குவதனை அவதானிக்க முடிகிறது.

Page 25
46 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
சூனியம் போன்ற தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு ரஸலுல்லாஹற் எமக்குக் கற்றுத் தந்த துஆக்கள், திக்ர், ஒளராதுகள் நிறைய உண்டு. அவற்றையெல்லாம் இங்கு குறிப்பிடுவது சிரமமானது.
உண்மையில், சூனியம் செய்வதானது நபியவர்கள் குறிப்பிட்ட ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அல்லாஹ் அல்லாத நட்சத்திரங்கள், ஷைத்தான்கள், தெய்வங்கள் போன்றன சூனியம் செய்யும் வேளையில் மகத்துவப்படுத்தப்படுமாயின் அந்நிலையில் சூனியம் செய்வது குப்ராகக் கொள்ளப்படும் என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும். பெரும் பாலான இமாம்கள் சூனியம் செய்யும் முறையைப் படிப்பதைக் கூட ஹராம் என்றே கருதுகின்றனர். சூனியக்காரனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பது அதிகமான இமாம்களின் கருத்தாகும்.

அத்தியாயம் - 02
வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
பெண்ணின் உடம்பில் பட்டால் வுழுஉ முறிதல்
கேள்வி. வீட்டிலிருந்து வுழுவுடன் பள்ளிவாயலுக்குச் செல்லும் வழியில் ஒரு பெண்ணின் உடம்பில் எதிர்பாராத விதமாகப் பட்டுவிட்டால் அவருக்கு மீண்டும் வுழு செய்தல் கடமையாகுமா?
பதில்: ஷாபிஈ மத்ஹபின் படி அவர் மீண்டும் வுழு செய்தல் வேண்டும். திரையின்றி ஒரு பெண்ணைத் தொட்டாலும் வுழு முறியாது என்பதற்கு தகுந்த, உறுதியான ஆதாரங்கள் உண்டு. ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்: "ரஸஉல் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் என்னை முத்தமிட்டனர். பின்னர் கீழ்வருமாறு கூறினர்:
"நிச்சயமாக முத்தமிடுவது வுழுவையும் முறிக்காது, நோன்பையும் முறிக்காது." (இஸ்ஹாக் பின் ராஹவைஹி, அல் பஸ்ஸார்) ஆயிஷா (ரலி) அறிவிக்கும் மேலும் ஓர் அறிவிப்பு வருமாறு:

Page 26
48 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
"நபிகளாரவர்கள் தமது மனைவிமார்களுள் ஒருவரை முத்தமிட்டு விட்டு மீண்டும் வுழு செய்து கொள்ளாமலேயே தொழுகைக்காகச் சென்றார் கள்" (ஆதாரம்-அஹற்மத், திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா, அபூதாவூத்)
அவர்கள் அறிவிக்கும் இன்னுமோர் அறிவிப்பும் இங்கு. குறிப்பிடத்தக்கது:
"நான் ரஸலுல்லாஹற் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது கால்கள் இரண்டும் (அவர்கள் தொழுது கொண்டிருந்த) கிப்லாவின் பக்கம் இருந்தன. எனவே, அவர்கள் ஸ"ஜத் செய்யும் போது எனது காலைத் தொட்டு சாடை செய்வார்கள். நான் அப்போது எனது காலை மடித்துக்கொள்வேன்" (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
இத்தகைய ஆதாரங்களை வைத்தே சில மத்ஹப்களும், முக்கிய சில இமாம்களும் பொதுவாக பெண்களைத் தொடுவது வுழுவை முறிக்காது என்ற கருத்தை கொண்டிருக்கின்றனர். ஆயினும், இச்சையோடு முத்த மிடுவது, தொடுவது வுழுவை முறிக்கும் என்ற கருத்தையுடைய இமாம் களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நின்று கொண்டு சிறுநீர் கழித்தல்
கேள்வி நீள் காற்சட்டை அணியும் போது நின்ற நிலையில் சிறு நீர் கழிக்க வேண்டியுள்ளது. இது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளதா?
பதில்: நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது இஸ்லாமியக் கண்ணோட் டத்தில் முறையற்ற, பண்பாடற்ற, அகெளரவமான ஒரு செயலாகக் கருதப்படுகின்றது. மேலும், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கும் போது தெறித்து உடல், உடை போன்றன அசுத்த மடையவும் இடமுண்டு.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்ற நிலையில் சிறுநீர் கழித்தார்கள் என எவரும் உங்களுக்கு அறிவித்தால், அதனை நீங்கள் நம்ப வேண்டாம். அன்னார் அமர்ந்த நிலையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஆயினும், ஸஹிஹ"ல் புகாரி, ஸஹரீஹற் முஸ்லிம் உட்பட இன்னும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸில் ஹ"தைபாரலி), நபி (ஸல்) அவர்கள் நின்றவாறு சிறுநீர் கழித்ததைத் தான் கண்டதாகத் தெரிவித்துள்ளார். அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் தான் அறிந்து

hnoக்க வழிபாடுகள் தொடர்பானவை 49
வைத்திருந்ததையே அறிவித்துள்ளார். அதற்கு மாற்றமாகவும் நபி (ஸல்) அவர்கள் நடந்திருக்கின்றார்கள் என்பது நபித்தோழர் ஹ"தைபாவின் அறிவிப்பிலிருந்து தெளிவாகின்றது. இந்த வகையில் இரு அறிவிப்புகளுக் கிடையிலும் முரண்பாடு இருப்பதாகக் கூற முடியாது.
சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குபற்றி விளக்கவந்த இமாம் நவவி, "அமர்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பது எனக்கு மிகவும் விருப்பமானது. அதனை நின்ற நிலையில் செய்வதும் ஆகுமானதே; இரண்டிற்கும் நபி வாழ்வில் ஆதாரங்களுண்டு” என்கிறார்.
மதி வெளிப்படல்
கேள்வி: ஒருவருக்குச் சிறிதளவோ அல்லது அதிகமாகவோ "மதி” வெளியானால் அவருக்குக் குளிப்பு கடமையாகிவிடுமா? தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதற்கு "வுழு" செய்தால் மாத்திரம் போதுமானதா? விளக்கம் தேவை.
பதில்: இந்திரியத்திற்கு முன்னர், சிற்றின்பத்தின் காரணமாக வெளி யாகும் ஒருவகை நீரே "மதி” ஆகும். இது நஜீஸானது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால், “மதி" வெளியாகி அது உடம்பில் பட்டால் குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மர்மஸ்தானத்தைக் கழுவிக் கொண்டால் போதுமானது. உடம்பில் பட்டாலும் கழுவிக்கொள்ள வேண்டும். "மதி" ஆடையில் பட்டால் கழுவ வேண்டியதில்லை. நீரைத் தெளித்துவிட்டால் போதுமானது. இது சிரமத்தைத் தவிர்ப்பதற்கு வழங்கப்பட்டுள்ள ஒரு சலுகையாகும்.
தொழுகை போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேலே (குறிப்பிட்ட விதத்தில் சுத்தம் செய்து விட்டு “வுழு" செய்து கொள்ள வேண்டும்; குளிக்க வேண்டியதில்லை.
அலி(றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: "எனக்கு அதிகம் "மதி" வெளிப்படுவதுண்டு. நான் நபி (ஸல்) அவர்களின் மகளைத் திருமணம் முடித்திருந்ததால், அன்னாரிடம் இது பற்றி கேட்டறியுமாறு ஒருவரைப் பணித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது ஆண் உறுப்பைக் கழுவிக் கொண்டு “வுழு" செய்வீராக” என்றார்கள். (புகாரி)
மேலும் ஸஹற்ல் இப்னு ஹனிப் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் மதித் தொல்லையினால் பெரிதும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக அதிகம் குளிப்பவனாகவும் இருந்தேன். இந்நிலை பற்றி றஸலுல்லாஹற்விடம் நான் கூறிய போது அன்னார், "நீர்

Page 27
50 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
வுழு செய்து கொண்டால் போதுமானது" என்றார்கள். "ஆடையில் அது பட்டால் என்ன செய்வது?" என்று நான் கேட்டேன். அதற்கு, அன்னார் "அது ஆடையில் பட்ட இடத்தில் படும் அளவுக்குக் கையில் நீரை எடுத்துத் தெளித்து விட்டால் போதுமானது" என்றார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா)
ஸ்கலிதமும் குளிப்பும்
கேள்வி ஒருவருக்கு உடலுறவினாலன்றி வேறு வகைகளில் ஸ்கலிதமானால் அவருக்கு உடல் முழுவதும் குளித்தல் கடமை யாகுமா? தலை நீங்கக் குளித்தால் போதுமாகாதா? தலையில் குளிப்பதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளும்படி ஒருவருக்கு வைத்தியர் எச்சரித்திருந்தால், அவர் மனைவியுடன் சேர்க்கையில் ஈடுபட்டபின் மேற்கண்டவாறு தலை நீங்கக் குளித்தால் போது மானதா? விளக்கம் தரவும்.
பதில்: தலை உட்பட உடலின் அனைத்து உறுப்புக்களையும் நீரினால் கழுவுவதையே இஸ்லாமிய ஷரீஅத் "அல்குஸ்லு” (குளித்தல்) எனக் கூறுகிறது. ஒருவருக்கு உடலுறவினாலோ வேறு வழிகளிலோ இந்திரியம் வெளிப்பட்டால் அனைத்து உறுப்புகளும் நனையும்படி குளிப்பது கடமையாகும். இன்றேல் "ஜனாபத்” எனும் பெருந்துடக்கு நீங்க மாட்டாது.
நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் குளிப்பதன் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட இடமுண்டு என ஒரு நோயாளியை எச்சரித்தால் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்து கொள்ள மார்க்கம் அவரை அனுமதிக்கின்றது.
அதானுக்குப் பதில் கூறல்
கேள்வி: அதான் சொல்லப்படும் போது அதனைச் செவிமடுப்பர் ஒவ்வொரு வசனத்திற்கும் எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்குவீர்களா?
பதில்: முஅத்தின் கூறுகின்ற ஒவ்வொரு வசனத்தையும் திருப்பிக் கூறல் வேண்டும். ஹய்ய அலஸ்ஸலாஹற், ஹய்ய அலல் பலாஹற் என்ற இரு வசனங்கள் கூறப்படும்போது மாத்திரம் "லாஹல்ல வலா குவ்வத இல்லா பில்லாஹற்” என்று சொல்ல வேண்டும்.
"நீங்கள் அதான் ஒலியைச் செவிமடுத்தால் முஅத்தின் சொல்வது போன்று சொல்லுங்கள்" என்பது நபி வாக்காகும்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை -- 51
மேலும் ஒரு நபி மொழி அதான் சொல்லக் கேட்பவர் அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டுமென்பதை விளக்கமாகக் கூறுகிறது. அது பின்வருமாறு:
"முஅத்தின் அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர் எனக் கூறும் போது நீங்களும் அல்லாஹ" அக்பர் அல்லாஹ" அக்பர் எனச் சொல் வேண்டும். அவர் அஷஹது அல்லா இலாஹ இல்லல்லாஹம் # கூறும் போது நீங்களும் அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் எனக் கூற வேண்டும். அவர் அஷஹது அன்ன முஹம்மதர் ரஸலுல்லாஹற் எனக் கூறும் போது நீங்களும் அவஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸலுல் லாஹற் எனக் கூற வேண்டும். அவர் ஹய்ய அலஸ் ஸலாஹற் எனக் கூறும்போது நீங்கள் லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹற் எனக் கூறல் வேண்டும். அவர் அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர் எனக் கூறும்போது நீங்கள் அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர் எனக் கூறல் வேண்டும். அவர் லாஇலாஹ இல்லல்லலாஹற் என்று கூறும் போது நீங்களும் லாஇலாஹ இல்லல்லாஹற் என்று கூறல் வேண்டும். இவ்வாறு யார் தனது உள்ளத்தினால் கூறுகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்."
ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத் அறிவிப்பாளர்: உமர் (ரலி)
மேலே கூறப்பட்ட முறையில் அதானுக்குப் பதில் சொல்வது ஸ“ன்னத்தாகும். வுழுவுடன் இருப்பவர், வுழு இன்றி இருப்பவர், முழுக்குடன் இருப்பவர், ஹைழ் உடன் இருக்கும் பெண், பெரியவர், சிறியவர் உட்பட அனைவரும் அதானுக்குப் பதில் சொல்வது ஸான்னத்தாகும். ஆயினும் தொழுகையில் இருப்பவர், உடலுறவில் ஈடுபட்டிருப்பவர் ஆகியோர் அதானுக்குப் பதில் சொல்லக்கூடாது. இத்தகையோர் குறித்த தம் கருமத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் மொத்தமாக பதில் சொல்லலாம்.
படித்தல், குர்ஆன் ஒதுதல், திக்ர் செய்தல் போன்ற விடயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் அதான் ஒலியைக் கேட்டால் உடனே அவற்றை நிறுத்தி விட்டு அதானுக்குப் பதில் கூறல் வேண்டும்.
கழாத் தொழுகை
கேள்வி ஐவேளைத் தொழுகையில் கழா தொழுகையுண்டா? அதை எப்படிச் செய்வது? கழாத் தொழாவிட்டால் குற்றமா? விளக்கம் தேவை.
பதில்; மறதி, தூக்கம் ஆகிய இரண்டின் காரணத்தினால் ஒரு தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றத் தவறியவர்

Page 28
52 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அதனைக் கழாச் செய்ய வேண்டும் எனும் விடயத்தில் உலமாக்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக "ஒருவர் ஒரு தொழுகையை மறந்து விட்டால் அல்லது தூக்கத்தின் காரணமாக விட்டால், ஞாபகம் வந்தவுடன் அதனை நிறைவேற்றல் வேண்டும்” எனும் நபிமொழி கொள்ளப்படுகின்றது. மயக்கத்தில் இருந்தவரைப் பொறுத்த வரையில் மயக்க நேரத்தில் விடுபட்ட தொழுகையை அவர் கழாச் செய்ய வேண்டியதில்லை. இப்னு உமர் (ரலி) ஒருமுறை மயக்கத்திலிருந்தார். அதனால் ஒரு நேரத்தொழுகையை அவரால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. எனினும், அவர் அதனை மயக்கம் தெளிந்த பின்னரும் கழாச் செய்யவில்லை என நாபி. (ரலி) கூறுகின்றார். தாவூத், ஸ"ஹற்ரி, அல்ஹஸனுல் பஸரி, முஹம்மதிப்னு ஸிரீன் ஆகியோரும் மயக்கத்திலிருந்ததனால் தொழுகையை விட்டவர் அதனைப் பின்னர் கழாச்செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.
ஆனால் மேற் குறிப்பிட்ட காரணங்களின்றி வேண்டுமென்றே ஒரு தொழுகையை விட்டவர் அதனைக் கழாச் செய்ய வேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. வேண்டுமென்றே தொழுகையை விட்டவர் பாவியாவார்; அவர் விட்ட தொழுகையைக் கழாச் செய்வது அவர் மீது கடமையாகும் என்பதே ஷாபிஈ, ஹனபி, மாலிகீ, ஹன்பலீ ஆகிய நான்கு மத்ஹபுகளினதும் கருத்தாகும். இமாம்களான இப்னு தைமியா, இப்னு ஹஸ்ம் போன்றோர் மனமுரண்டாகத் தொழுகையை விட்டவர் அதனைக் கழாக் செய்ய முடியாது என்றும், தொழுகையை விட்ட பாவத்துக்காக தெளபா செய்வதும் அதிகமான ஸ"ன்னத்தான தொழுகைகளைத் தொழுவதுமே முறையாகும் என்றும் கூறுகின்றனர். அவர்கள் தமது
கருத்துக்குச் சார்பாகப் பல ஆதாரங்களையும் காட்டியுள்ளனர். குறிப்பாக இமாம் இப்னு ஹாஸ்ம் இது பற்றித் தனது ”அல்-முஹல்லா” எனும் நூலில் மிக விரிவாக எழுதியுள்ளார். குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டிலிருந்தும் மேற்கோள் காட்டியும், தர்க்க ரீதியாகவும் அவர்
இக்கருத்தை நிறுவ முயன்றுள்ளார்.
தொழுகையின் ஸஜதில் துஆ கேட்டல்
கேள்வி. தொழுகையின் ஸ"ஜூதில் கேட்கப்படும் துஆக்கள் ஏற்றுச் கொள்ளப்படுமென்று கூறப்படுகின்றது. எனவே றப்பி வித்)ை இல்மா" போன்ற துவாக்களை ஒதலாமா?
பதில்: ஸ"ஜூதில் நாம் விரும்பிய பிரார்த்தனைகளை அல்லாஹற்விடம்

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை 53
கேட்கலாம். அது "முஸ்தஹப்" வரவேற்கதக்கதாகும். இதற்கு கீழ்வரும் நபி மொழி ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. "உங் களில் ஒருவர் ஸ"ஜூதில் இருக்கும் நிலையில்தான், தனது இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். எனவே, அதில் பிரார்த்தனைகளை அதிகரிக்கத்துக் கொள்ளுங்கள்" (ஆதாரம்முஸ்லிம்) நபியவர்கள் ஸ"ஜதில் ஒதிய துஆக்கள், பல ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நாமும் அவற்றை ஒதுவதே சாலச் சிறந்ததாகும்.
தொழுகையில் குனூத்
கேள்வி: அசாதாரண சூழ்நிலைகள் நிலவும் சந்தர்ப்பங்களில் அவற்றின்
பதில்:
விளைவுகளிலிருந்து பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள ஐவேளை
பர்ளுத் தொழுகைகளில் "குனுத்” ஒத ரஸலுல்லாஹற்வின் ஸ்"ன்னாவில் ஆதாரமுண்டா?
சுபஹற் தவிர மற்றைய பர்ளுத் தொழுகைகளில் குனுத் ஒதுவதினால் தொழுகையில் பாதிப்பு (முறிவு) நிகழாதா?
இக்குனுத்தின் போது ஒரு ஷாபிஈயை பின்பற்றித் தொழும் ஹனபியின் நிலை என்ன?
நீங்கள் குறிப்பிட்டுள்ள குனூத் அமைப்பு இஸ்லாமிய சட்ட வழக்கில் “குனுதுன்னவாஸில்" என அழைக்கப்படுகிறது. கஷ்ட துன்பங்கள், அனர்தங்களின் போது ஒதப்படுகின்ற இந்தக் குனூத் சட்டபூர்வமானதென்பது இமாம்களின் கருத்தாகும். ஹனபியாக் கள், ஷாபியாக்கள் இரு தரப்பினரும் இக்கருத்தில் ஒத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இக்குனுத்தமைப்பு சட்ட ரீதியான தென்பதற்கு ஸ"ன்னாவிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
பனுாஸ"லைமெனும் கோத்திரத்தைச் சேர்ந்த ரிட்ல், தக்வான்,
உஸையா என்ற பிரிவினர் தங்களுக்குப் போதனை செய்வதற்கு நபித்
தோழர்களை அனுப்பி வைக்குமாறு நபியவர் களைக் கேட்டுக்கொண்டனர்.
நபியவர்களும் இக்கோத்திரத்தவரின் வேண்டு கோளை ஏற்று எழுபது ஸஹாபாக்களை அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நயவஞ்ச கர்களாகவிருந்த அவர்களோ நபித்தோழர்களைப் படுகொலை செய்து
விட்டனர்.
இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள் இப்பிரிவினருக்கு
எதிராகத் தொடர்ந்து ஒரு மாதகாலமாக ஐங்காலத் தொழுகைகளில்

Page 29
አላ சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
fறுதி ஓதினார்கள். பின்னால் நின்று தொழுதோர் அதற்கு ஆமின் hபினார்கள், (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (றழி), ஆதாரம்- புகாரி,
eðlili hib, TD1þAŤBUDģ5)
அபூஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கும் மேலும் ஒரு ஹதீஸ் கீழ் வருமாறு:
"ரஸலுல்லாஹற் அவர்கள் ஒருவருக்கு சார்பாகவோ அல்லது எதிரா வோ பிரார்த்தனை செய்ய விரும்பினால் “ருகூஉ” க்குப் பின்னால் (வறாத் ஒதுபவர்களாக இருந்தார்கள்." (ஆதாரம்: அஹற்மத், புகாரி)
எனவே ஸய்ஹத் தொழுகையில் வழமையாக ஒதப்படுகின்ற குனுத் விடயத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள், நீங்கள் கேட்கும் “குனுத்துன் அவாஸில்" தொடர்பாக இல்லை என்பதைக் கருத்திற் கொள்ளவும்.
தொழுகையில் உமிழ்நீரை விழுங்குதல்
கேள்வி தொழுகையில் இருக்கும்போது உமிழ்நீர் சுரந்தால் அதை
விழுங்கலாமா? விளக்கம் தரவும்.
பதில்; தொழும்போது வாயில் சுரக்கும் உமிழ்நீரை விழுங்குவதில் தவறில்லை. தொழுகையில் இருக்கும் போது வேண்டுமென்றே உண்பதும் பருகுவதுமே தொழுகையை முறிக்கும். இமாம் இப்னுல் முன்திர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: “பர்ளான தொழுகையில் வேண்டுமென்றே உண்பவரினதோ அல்லது பருகியவரினதோ தொழுகை முறிந்து விடும்; அவர் அத்தொழு கைை மீட்டி நிறைவேற்ற வேண்டும் என்பது உலமாக்களின் அசோபித்த முடிவாகும். ஸான்னத்தான தொழுகையைப் பொறுத்த வரையில் அதிலும் இச்சட்டமே செல்லுபடியாகும்; ஏனெனில், ரிகளை முறிக்கக்கூடியது ஸ"ன்னத்தானதையும் முறிக்கும் ாது பெரும்பாலான உலமாக்களின் அபிப்பிராயமாகும்.”

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை 丐8
சில தொழுகைகளில் சத்தமாகவும் சிலவற்றில் மெளனமாக வும் ஓதுவதன் ரகசியம்
கேள்வி ஜங்காலத் தொழுகைகளில் ஸ"பஹற். மக்ரிப், இஷா ஆகியவற்றில் இமாம் ஸர்ாக்களைச் சத்தமிட்டு ஒதுகிறார். ஆனால், லுஹர், அஸர் ஆகிய இரு நேரத் தொழுகைகளிலும் அவ்வாறு சத்தமிட்டு ஒதுவதில்லை. அத்துடன் ஜும்ஆத் தொழுகையின் போதும் ஸ?ராக்கள் இமாமினால் சத்தமிட்டே ஒதப்படுகின்றன. இவற்றுக்கான காரணம் யாது? விளக்கம் தரவும்.
பதில்: நபி (ஸல்) அவர்கள் ஆரம்பகாலப்பிரிவில் அனைத்துத் தொழுகைகளிலும் ஸ"ராக்களைச் சப்தமாகவே ஓதி வந்தார்கள். ஆயினும், முஷ்ரிக்கீன்களோ தொழுகைகளையும் ஒதல்களையும் குழப்பும் விதத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒத ஆரம்பிக்கும் போது அவர்கள் உரத்த குரலில் கவிதைகள் பாடவும், மோசமான வார்த்தைகளைப் பேசவும் முற்பட்டிதுடன் அல்குர்ஆனையும் அதனை இறக்கிய இறைவனையும் அது இறக்கப்பட்ட நபியையும் ஏசவும் தூற்றவும் ஆரம்பித்தார்கள். இச்சந்தர்ப்பத்திலேயே கீழ்வரும் குர்ஆன் வசனம் இறங்கியது. "நபியே, உம்முடைய தொழுகையில் நீர் மிக்க சத்தமிட்டும் ஒதாதீர். அதிக மெதுவாகவும் ஒதாதீர்.” (17:110) இதன் பின்னரே நபியவர்கள் ஞஹர், அஸர் ஆகிய தொழுகைளில் எதிரிகளின் அட்டகாசங்களைத் தவிர்க்கும் விதத்தில் சத்தமிடாது மெளனமாக ஒதலானார்கள். மக்ரிப் தொழுகைக்குரிய நேரத்தைப் பொறுத்தவரையில், அது எதிரிகள் உணவு உட்கொள்ளும் நேரமாகவும், ஸ"பஹற், இஷா ஆகியவற்றுக்குரிய நேரங்கள் அவர்கள் தூங்கும் நேரங்களாகவும் இருந்தமையினால் இத்தொழுகைகளில் நபியவர்கள் உரத்த குரலில் ஒதலானார்கள்.
ஜும்ஆத் தொழுகையும், இரு பெருநாள் தொழுகையும் அவை மதீனாவிலே ஆரம்பித்து வைக்கப்பட்டமையினால் அவற்றில் ஸ?ராக்கள் சத்தமாகவே ஒதப்பட்டு வரலாயின.
சில அறிஞர்களின் கருத்துப்படி ஞஹரிலும் அஸரிலும் தாழ்ந்த குரலில் ஸ?ராக்கள் ஓதப்படுவதன் இரகசியம், அவை நிறைவேற்றப்படும் நேரம் சத்தமும், சந்தடியும் உள்ளதாக இருப்பதனால் ஆகும். ஏனைய தொழுகைகளின் நேரங்கள் அமைதியானதாக இருப்பதனால், அவ் வேளைகளில் சத்தமாக ஒதுவது செவிமடுப்போருக்குப் படிப்பினை பெறவும் நல்லுணர்ச்சி பெறவும் துணைபுரியும்.

Page 30
56 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
"பகற் காலத் தொழுகைகளைச் சத்தமாக அமைத்துக்கொள்ளாதீர். இரவு காலத் தொழுகைகளை அமைதியாக அமைத்துக்கொள்ளாதீர்.” என்ற இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள் ஒரு சக்தியாக மாறி, எவரையிட்டும் அஞ்ச வேண்டிய அவசயிமற்றவர்களாக ஆகிய பின்னரும் நபியவர்கள் குறித்த அமைப்பைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தமை, எங்களை இரண்டாவதாகக் கூறப்பட்ட கருத்தை மிகப் பொருத்தமானதாகக் கருத வைக்கின்றது.
எப்படியாயினும், வணக்க வழிபாடுகளில் காரணங்களையும், நியாயங் களையும் தேடுவதனை விடுத்து, ஸ"ன்னாவைக் கருத்திற் கொள்வதே முறையாகும் என்பது மாத்திரமன்றி அதுவே சட்ட விதியுமாகும்.
ஸஜ்தாக்கள் பற்றிய விபரம்
கேள்வி: ஸஜ்தா திலாவத், ஸஜ்தா ஷ"க்ர், ஸஜ்தா ஸஹற்வு ஆகிய ஸஜ்தாக்கள் பற்றிப் பூரண விளக்கம் ஒன்றை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: அல்குர்அனில் ஸஜ்தாவுடைய வசனங்கள் பதினைந்து காணப்படுகின்றன. அவற்றிலொன்றை ஓதியவரும், ஒதக் கேட்டவரும் தக்பீர் சொல்லி ஒரு ஸ"ஜூத் செய்வது ஸ"ன்னத் ஆகும். இதனையே ஸஜ்தா திலாவத் என வழங்குகின்றோம். இதில் தஷஹற்ஹ”த் (அத்தஹறிய்யாத்) ஸலாம் ஆகிய இரண்டும் இடம் பெறுவதில்லை. ஸ"ஜூது செய்யும் போது தக்பீர் சொல்வது போன்றே அதிலிருந்து எழும்போது அல்லாஹ" அக்பர் எனக் கூறவேண்டும். "ஸஜ்தாவுடைய வசனமொன்றை நீர் ஓதினால், தக் கூறி ஸ"ஜுது செய்ய வேண்டும். அதிலிருந்து தலையை த யர்த்தும் போதும் தக்ரீர் செல்ல வேண்டும்" என அப்துல்லாஹர்) இனு மஸ்ஊத் (ரலி) கூறியுள்ளார்.
தொழுகைக்குரிய அனைத்து நிபந்தனைகளும் ஸஜ்தா திலாவத்திற் குரிய நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் வுழுவுடன் இருப்பதுவும், கிட்லாவை முன்னோக்குவதும் ஒளரத்தை மறைத்திருப்பதுவும் குறிப்பிடத்தக்க நிபந்தனைகளாகும்.
மேற்கண்ட ஸஜ்தாவில் விரும்பிய துஆக்களை ஒதலாம். வழமை யாக ஸ"ஜூதில் ஒதுகின்ற "ஸ"ட்வான ரப்பியல் அட்லா” என்பதனையும் "ஸஐத வஜ்ஹிய லில்லதீ கலகஹ" வ ஷக்க ஸம்அஹ" வ பஸரஹ" பிஹவ்லிஹி பி குவ்வத்திஹறி வ தபாரகள்ளாஹ" அஹற்ஸனுல் காலிகீன்" என்பதனையும் ஒதுவது சிறந்ததாகும்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை לה
தொழுகையில் ஸஜ்தாவுடைய வசனங்களை ஒதினால் இமாமும் ம..மூமும் இருவரும் ஸஜ்தா செய்யலாம்.
ஸஜ்தாவுடைய ஒரு வசனத்தைப் பலமுறை ஒதும் போதும் அத்தகைய ஒரு வசனத்தைத் தொடர்ந்து பல தடவைகள் செவிமடுக்கும் போதும் ஒரு ஸஜ்தா செய்வது போதுமானதாகும்.
தனக்குக் கிட்டிய ஒரு பாக்கியத்துக்காகவோ அல்லது தன்னை விட்டகன்ற ஓர் அனர்த்தத்துக்காகவோ அல்லாஹற்வுக்கு நன்றி தெரிவித்து ஒரு ஸஜ்தா செய்வது முஸ்தஹப் ஆகும். இத்தகைய ஸஜ்தாவே ஸஜ்ததுஷ் ஷ"க்ர் என வழங்கப்படுகிறது. "நபிபவர்கள் தமக்கு மகிழ்வூட்டும் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றாலும் ஒரு சுப செய்தி கூறப்பெற்றாலும் அல்லாஹற்வுக்கு நன்றி தெரிவிப்பான் வேண்டி ஸ"ஜூதில் விழுபவர்களாய் இருந்தார்கள்” என அபூபக்கர் (ரலி) அறிவிக்கிறார். (ஆதாரம்: அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி)
தொழுகையில் ஏற்படும் மறதிக்காகச் செய்யும் ஸ"ஜூத் ஸஜ்ததுஸ் ஸஹற்ஷ் எனப்படும். இது இரண்டு ஸ"ஜூதுகளைக் கொண்டது. இதனை ஸலாம் கொடுக்க முன்னரோ பின்னரோ செய்யலாம்.
தொழுகையை முடிக்க முன்னர் ஸலாம் கொடுத்தல், ரஅத்துக் களைக் கூட்டித் தொழுதல், முதலாம் அத்திஹய்யாத்தை விடல், தொழு கையில் ஏதாவது ஒரு ஸ"ன்னத் விடுபடல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் தொழுகையில் ஏதும் சந்தேகம் ஏற்படும் வேளைகளிலும் ஸஜ்தா ஸஹற்வு செய்தல் வேண்டும். இந்த ஸஜ்தாவைச் செய்யாது விடுவதனால் தொழுகை செல்லுபடியற்றதாக ஆகமாட்டாது என்பதனைக் கருத்தில் கொள்க.
பெண்களுக்கு ஓர் ஆண் தொழுகை நடத்தல்
கேள்வி: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் தனியாகத் தொழுகை நடத்தலாமா? ஒரு தந்தை தனது வயது வந்த பெண் மக்கள், மனைவி, தாய் போன்றோருக்குத் திரையின்றித் தொழுகை நடாத்தலாமா? விளக்கம் தேவை.
பதில்: ஓர் ஆண் பெண்களுக்கு மாத்திரம் இமாமாக நின்று தொழுகை நடாத்துவதற்கு ஷரீஅத்தில் தடை ஏதும் இல்லை. ஒருபோது உபை இப்னு க.ப் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹற்வின் தூதரே நேற்றிரவு நான் ஒரு வேலை செய்தேன்" என்றார். அதற்கு அன்னார் "அது என்ன?” என்று வினவவே உபை இப்னு கட்ப், "வீட்டில் என்னுடனிருக்கும் பெண்கள்,

Page 31
58 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
"நீர் ஒதக் கூடியவராக இருக்கின்றீர், நாங்களோ ஒதக்கூடியவர் களல்லர். ஆகவே இமாமாக நின்று எங்களுக்குத் தொழுகை நடாத்துவீராக” என்று என்னிடம் கூறினர். நான் (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) எட்டு ரக்அத்துக்களைத் தொழுவித்து
வித்ரையும் தொழுவித்தேன்” என்றார். அதற்கு நபியவர்கள் எதுவும் கூறாது மெளனம் சாதித்தார்கள். "நபியவர்களின் மெளனத்தை நாம் அங்கீகாரமாகக் கருதினோம்" என்றும் உபை இப்னு கஃப் (ரழி) கூறுகிறார்.
இதிலிருந்து ஓர் ஆண் தனியாக பெண்களுக்கு மாத்திரம் தொழுகை நடாத்தலாம் என்பது தெரிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் அவசியம் திரையிட்டுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவகையில் திரையிட்டுக் கொள்வது பாதுகாப்பானதே.
தஹஜ்ஜுத்துடைய நேரம்
கேள்வி: 'தஹஜ்ஜத்" தொழுகைக்குரிய நேரம் என்ன? தூக்கத்தில் இருந்து விழித்துத் தொழும் தொழுகையே 'தஹஜ்ஜத்' என அறிகின்றோம். இதன் உண்மை யாது? தெளிவான விளக்க மொன்றை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: இரவில் நின்று வணங்கும் தொழுகையே "கியாமுல் லைல்” என்றும் "தஹஜ்ஜத்” என்றும் கூறப்படுகின்றது. இதற்குக் கண்டிப்பாகத் துங்கி எழ வேண்டும் என்பது நிபந்தனையல்ல. இஷாத் தொழுகையின் பின்னர் இரவின் ஆரம்பத்திலோ, நடுப்பகுதியிலோ அல்லது இறுதிப் பகுதியிலோ இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றலாம்.
"நபி (ஸல்) அவர்களின் தவnஜஜுத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கவில்லை. அவர்கள் தமது வசதியையும் செளகரியத்தையும் பொறுத்து அதனை அமைத்துக் கொண்டார்கள்" என்கிறார் இமாம் இப்னு ஹஜர் (ரஹற்).
ஆயினும், தஹஜ்ஜத்தை இரவின் மூன்றாம் பகுதியில் தொழுவது மிகச் சிறப்புடையதாகும். இதற்குப் பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
"எங்களது இறைவன் ஒவ்வொரு நாள் இரவிலும் அதன் மூன்றாம் பகுதியில் கீழ் வானத்திற்கு இறங்கி, "என்னை அழைப்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்கப் பதில் அளிக்கின்றேன். என்னிடம் கேட்பவர் இருக்கின்றாரா? நான் அவருக்குக் கொடுக்கின்றேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர்

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை 59
இருக்கின்றாரா? நான் அவருக்கு மன்னிப்பு அளிக்கின்றேன்" என்று கூறுகின்றான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹ"ரைறா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
“அடியான் ரப்புக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது இரவின் கடைசிப் பகுதியிலாகும். எனவே, அவ்வேளையில் அல்லாஹற்வை திக்ர் செய்பவர்களில் ஒருவராக உம்மால் இருக்க முடியுமாயின் அப்படிச் செய்வீராக” என்று தனக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் இப்னு அப்ஸா (றலி) குறிப்பிடுகின்றார். (அல்ஹாகிம், அத்திர்மிதி, 9bb6m) TFF,)
அபூமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் அபூதர் (றழி) அவர்களிடம் "கியாமுல் லைலில் சிறந்தது எது?” என்று வினவினார். அதற்கு அவர் "நீர் என்னிடம் இதனைக் கேட்பது போலவே நானும் இது பற்றி ரஸலுல்லாஹற்விடம் வினவினேன். அதற்கு அவர்கள் "நடுநிசியின் மீதமுள்ள பகுதியாகும். இதனைச் சிலரே செய்பவர்களாக இருப்பர்” என்றார்கள்” எனக்கூறினார். (அஹ்மத்)
மேலும் தஹஜ்ஜத் தொழுகைக்கு வரையறுக்கப்பட்ட ரக்அத்துகள் இல்லை என்பதனையும் கவனத்திற் கொள்க.
ஜும்ஆவுக்கு முந்திய இரண்டு ரக்க9ஆத் ஸஉன்னத் தொழுகை
கேள்வி: ஜ"ம்மா தினத்தில் கதிப் குத்பாப் பிரசங்கம் செய்யத் தொடங்க முன் நம்நாட்டில் பெரும்பாலான மஸ்ஜிதுகளில் ஜும்மாவுக்கான ஸ"ன்னத் என்று இரண்டு ரக்அத்துகள் தொழப்படுகின்றன; இத்தகையதொரு தொழுகை இருக்கின்றதா? விளக்கம் தரவும்.
பதில்: சில இஸ்லாமிய அறிஞர்கள் ஜும்மாத் தொழுகைக்கு முந்திய ஸ"ன்னத் என்றவகையில் இரு ரக்அத்துகள் உண்டு எனக் கூறியிருப்பினும் இத்தொழுகைக்கு "ஸஹரீஹான" ஹதீஸ்களை ஆதாரமாய்க் காண முடியவில்லை. ஜும்மா தொடர்பான ஹதீஸ் களை நோக்குகின்றபோது, ஜும்ஆவுக்கான அதான், குத்பா, தொழுகை ஆகிய மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்த் தேர்ச்சியாக நடைபெற்றிருப்பதையே காண முடிகிறது. அங்கே இரு ரக்அத்துகள் ஸான்னத்தாகத் தொழுவதற்கு நேரமோ, சந்தர்ப்பமோ இருந்ததாகத் தெரியவில்லை. இதனை இமாம் அல்-இறாகி விளக்குகையில் "ரஸஉலுல்லாஹற் ஜூம்ஆத் தொழுகைக்கு முன்னர் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு

Page 32
60 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
எத்தகைய ஆதாரமும் இல்லை. ஏனெனில், அவர்கள் ஜும்ஆவுக் காக மஸ்ஜிதுக்கு வந்தவுடன் அதான் சொல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து குத்பாப் பிரசங்கத்தைச் செய்திருக்கிறார்கள் என்றே தெரிய வருகிறது” என்கிறார். (நூல்: நைலுல் ஒளதார்-பாகம்3, பக்-216) இதே கருத்தை இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி யும் கொண்டிருக்கிறார். (பத்ஹ"ல் பாரீ, பாகம் 2 பக்-341) இமாம் இப்னுல் கையிம் கீழ்வருமாறு கூறுகிறார்:
“பிலால் (ரழி) அவர்கள் (ஜும்ஆவுக்காக) அதான் கூறி முடிவுற்றதும், அனைவரும் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் என நினைப்பவர் ஸ"ன்னாவை அறியாதவரே” (பார்க்க-ஸாதுல் மஆத்)
பெரும்பாலான மத்ஹபுகளின் இமாம்களும் ஜும்ஆவுக்கு முந்திய ஸ"ன்னத் என்ற வகையில் இரு ரக்அத்துக்கள் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இமாம் இப்னு தைமியாவின் கருத்தும் இதுவாகும்.
“இதனால்தான் பிழையாக ஸ"ன்னத் என விளங்கப்பட்ட இத்தொழுகையைப் பற்றி இமாம் ஷாபிஈயின் "உம்மு”விலோ இமாம் அஹற்மதின் "அல்-மஸாயில்" இலோ நான் அறிந்தவரை ஏனைய ஆரம்பகால இமாம்களின் நூல்களிலோ எத்தகைய குறிப்பும் இடம்பெறவில்லை” என்கிறார் இமாம் அல்-மனாவி. (பார்க்க. பைளுள் கதிர்)
ஜும்ஆவுடைய பிந்திய ஸ"ன்னத் தொழுகையைப் பொறுத்த வரை யில், அதற்குத் தெளிவான, ஸ்வரீஹாரான ஆதாரங்களுண்டு. உதாரணத் திற்கு கீழ்வரும் நபிமொழியைக் குறிப்பிடலாம். "உங்களில் ஒருவர் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிவிட் Iல் அதன்பின் நான்கு ரக்அத்துகள் தொழட்டும்." (ஆதாரம்-முஸ்லிம், நஸாயி, திர்மிதி)
ஜும்ஆத்தினத்தில் மஸ்ஜிதுக்கு வந்தவர் "நபில் முத்லக்” எனும் நேரம், ரக்அத்துகள் வரையறுக்கட் த ஸ"ன்னத் தொழுகையை நிறைவேற்றலாம் என் தனைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
ஜும்ஆவுக்குரிய எண்ணிக்கை
கேள்வி. ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஜும்ஆவுக்குக் குறைந்தது நாற்பது பேர் சமுகமளித்திருத்தல் வேண்டும் என்பதும் ஒன்றாகுமா? குறித்த தொகையினர் இல்லாதபோது ஜூம்ஆத் தொழுகையுடன் லுஹர் தொழுகையையும் நிறைவேற்ற வேண்டுமா? விளக்கம் தேவை.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
பதில்: ஜும்ஆ நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில், அது ஜா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும் இதில் அறிஞர்கள் மத்தியில் அபிப்பிராய பேதம் இல்லை. தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கீழ்வருமாறு அறிவிக்கிறார்: “ஜும்ஆவானது ஒவ்வொரு முஸ்லி மும் ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு கடமையாகும்."
ஆயினும், ஜும்ஆ நிறைவேறுவதற்கு அவசியமான் தொகையினர் விடயத்தில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. எண்ணிக்கையைக் குறிப்பிடுவதில் வித்தியாசமான பதினைந்து கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை இமாம்இப்னு ஹஜர் (ரஹற்) தனது பத்ஹ"ல் பாரியில் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்துக்களில் இரண்டு பேரைக் கொண்டும் ஜும்ஆ நிறைவேற்ற முடியும் என்பதே பலமானதாகக் கொள்ளப்பட முடிகிறது. "இருவரும் அதற்கு மேற்பட்டோரும் ஒரு ஜமாஅத்தாகக் கொள்ளப்படும்” எனும் நபி மொழி இக்கருத்துக்குரிய தெளிவான ஆதார மாகும். இமாம் ஷவ்கானி கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இருவரைக் கொண்டு ஏனைய தொழுகைகள் நிறைவேறும் என்பது இஜ்மாவான முடிவாகும். ஜும்ஆவும் ஒரு தொழுகையே. ஏனைய தொழுகைகளை விட்டும் முரண்படும் விதத்தில் அவற்றிற்கு இல்லாத ஒரு பிரத்தியேகமான சட்டம்தக்க ஆதாரம் இல்லாத போது இருத்தல் முடியாது. உண்மையில் ஜும்ஆவில், பிறதொழுகைகளில் கவனத்தில் கொள்ளப்படும் தொகையை விட அதிகமான ஓர் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை.”
"ஜும்ஆவில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் தொகைபற்றிக் குறிப்பிடும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இல்லை" என இமாம் அப்துல் ஹக் கூறுகிறார். இக்கருத்தை இமாம் ஸ"யூத்தியும் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தையே இமாம்களான அத்தபரி, அன்னகயி, இப்னு ஹஸ்ம் போன்றோரும் கொண்டுள்ளனர்.
ஜும்ஆவும் லுஹர் தொழுகையும்
கேள்வி. ஜும்ஆத் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் அத்ஹிய்யா யத்தில் இமாம் இருக்கும் போது, தொழுகையில் வந்து சேர்ந்த ஒருவரின் நிலை என்ன? அவர் ஜூம்ஆவுக்கு நிய்யத் வைத்து லுஹர் தொழ வேண்டுமா? அல்லது லுஹருக்கு நிய்யத் வைத்து லுஹர் தொழுவதா அல்லது நிய்யத் வைத்து ஐ’ம் ஆ தொழுவதா? ஆதாரங்களுடன் விளக்கம் தருக.

Page 33
62 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பதில்: ஒருவர் ஜும்ஆத் தொழுகையில் முதல் ரக்அத்தைத் தவற விட்ட போதிலும், இரண்டாம் ரக்அத்தை அடைந்து கொண்டால் ஜும்ஆவை முழுமையாகப் பெற்றுக்கொண்டவராக கருதப்படுவார். எனவே அவர் தனது தொழுகையைப் பூரணப்படுத்துவதற்காக மேலும் ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதால் போதுமானதாகும். இதுவே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இக் கருத்துக்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்கள் காணப்படுகின்றன:
"ஒருவர் ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்கஅத்தை (இமாமுடன்) அடைந்து கொண்டால், அவர் அத்துடன் மற்றுமொரு ரக்கஅத்தைச் சேர்த்துக் கொள்ளட்டும். (அதனைக் கொண்டு) அவரது தொழுகை சம் பூரணமாகிவிடும்.” (நஸாஈ, இப்னு மாஜா, தாரகுத்ணி, அறிவிப்பாளர்: இப்னு உமர் (றழி)
"தொழுகையின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக்கொண்டவர் அதனை முழுமையாக அடைந்த கொண்டவராவார்." (புகாரி, முஸ்லிம்)
ஆனால் ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்கஅத்தை விடக் குறைந்த அளவைப் பெற்றவர் (இரண்டாம் ரக்கஅத்தில் இமாம் ருகூஇலிருந்து எழுந்ததன் பின்னர் வந்து சேர்ந்து கொண்டவர்) ஜும்ஆத் தொழுகையை அடைந்து கொண்டவர் அல்ல. அவர் தனது தொழுகையை லுஹர்த் தொழுகை என்ற அடிப்படையில் நான்கு ரக்கஅத்துக்களாகத் தொழ வேண்டும். நிய்யத்தைப் பொறுத்த வரையில் ஜும்ஆவுக்கு நிய்யத் வைத்தல் வேண்டும். அப்துல்லாஹர் இப்னு மஸ்ஊத் (றழி) கூறுகின்றார்:
”எவர் ஜும்ஆவின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக்கொள்கின்றாரோ, அவர் மற்றுமொரு ரக்க,அத்தைச் சேர்த்துக்கொள்ளாட்டும். எவருக்கு இரண்டு ரக்கஅத்துக்களும் தவறிப்போய்விடுகின்றனவோ, அவர் நான்கு ரக்கஅத்து கள் தொழட்டும்." (அத்த ராணி)
இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்துப் பின்வருமாறு: நீர் ஜும்ஆவின் ஒரு ரக்கஅத்தைப் பெற்றுக் கொண்டால், அதனோடு மற்று மொன்றைச் சேர்த்துக்கொள்வீராக. அவர்கள் (ஜும்ஆத் தொழும் ஜமா அத்தினர்) இருப்பில் (அத்தனுறிய்யாத்தில்) இருக்கும் போது நீர் அவர் களுடன் இணைந்து கொண்டால் நான்கு ரக்அத்துக்கள் தொழுவீராக." (அல்பைஹகி)
இதுவே, ஷாபிஈ, மாலிகி, ஹன்பலி மத்ஹபுகளின் கருத்துமாகும்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
குத்பாவின் போது தொழுதல்
கேள்வி: வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போது இமாம் குத்பாப் பிரசங்கம்
செய்யும் நேரத்தில் தொழலாமா?
பதில்: ஜும்ஆ தினத்தில் இமாம் குத்பாப் பிரசாங்கத்துக்காக வரமுன்னர் நபில் தொழுவது ஸான்னத்தாகும். சந்தர்ப்பத்தைப் பொறுத்து எவ்வளவும் தொழலாம். ஆனால், இமாம் குத்பா நிகழ்த்துவ தற்காக வந்துவிட்டால் அவ்வாறு தொழுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்நிலையிலும் "தஹிய்யத்துல் மஸ்ஜித்” தொழுகையை நிறைவேற்றலாம். பிரசங்கம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் இதனைத் தொழலாம். ஆனால் தொழு கையை நீட்டிக் கொண்டிராது அவசரமாக முடித்துக் கொள்ளல் வேண்டும். குத்பா முடியும் தறுவாயில் ஒருவர் வந்தால், "தஹிய்யத்துல் மஸ்ஜிதை"த் தொழும் வாய்ப்புக் குறைவாக இருப்பின், அதனை நிறைவேற்ற வேண்டியதில்லை.
அப்துல்லாஹற் இம்னு உமர் (ரலி) ஜும்ஆவுக்கு முன் நீண்டநேரம் தொழுபவராகவும், ஜும்ஆவுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுபவரா கவும் இருந்தார். றஸலுல்லாஹற் அவர்களும் இவ்வாறு செய்து வந்தார்கள் என அறிவிப்பவராகவும் அவர் இருந்தார். (ஆதாரம்: அபூதாவுத்)
நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்: "எவர் ஜும்ஆ தினத்தில் குளித்து, பின்னர் ஜும்ஆவுக்காக வந்து சில ரகஅத்துகள் தொழுது, தொடர்ந்து இமாம் குத்பாவை முடிக்கும் வரை அதனைக் காது தாழ்த்திக் கேட்டு, பின்னர் அவருடன் (ஜும்ஆவையும்) தொழுகிறாரோ. அவரது அந்த ஜூம்ஆவுக்கும், அடுத்துவரும் ஜும்ஆவுக்கும் மேலதிகமாக மேலும் மூன்று நாட்களுக்கும் இடைபட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்." (ஆதாரம்: முஸ்லிம்)
மேலும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு அமைந்துள்ளது: "ஜும்ஆத்தின் தன்று ஒருவர் வந்தால், இமாம் குத்பாவுக்காக வந்திருப்பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழட்டும்." (ஆதாரம்; புகாரி, முஸ்லிம்)
இங்கு நாம் ஜும்ஆவுக்கு முந்திய தொழுகை எனக் குறிப்பிட்டது, குத்பாவுக்கு முந்திய, ரக்அத்துகள் வரையறுக்கப்படாத, நபிலான தொழுகையேயன்றி ஜும்ஆவுக்கு முந்திய ஸ"ன்னத் எனப் பலர் வழங்கும் இரண்டு ரக்அத்துகளும் அல்ல. அத் தொழுகைக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

Page 34
64 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பெண்கள் பள்ளிவாசல் சென்று தொழுதல்
கேள்வி: பெண்கள் பள்ளிவாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையிலும், கூட்டுத்தொழுகையிலும் கலந்து கொள்வது பற்றிய ஷரீஅத்தின் கண்ணோட்டம் என்ன?
பதில்: பெண்களுக்கு ஜும்ஆத் தொழுகை கடமையானதல்ல என்பது ஏகோபித்த முடிவாகும். இவர்கள் ஜும்ஆவுக்குப் பதிலாக ஞஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆயினும் ஒரு பெண் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றினால் அது செல்லுபடியா கும். இந்நிலையில் அவர் ளுஹர்த் தொழுகையை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபியவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளி வாயிலுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையில் பங்கு பற்றினார்
856T.
பெண்கள் பள்ளிவாயிலுக்கு வந்து ஐங்காலக் கூட்டுத் தொழுகை களிலும் கலந்துகொள்ள அனுமதியுண்டு. ஆனால் இச்சையைத் தூண்டக் கூடியவை, கவர்ச்சியான அலங்காரம் போன்றவற்றிலிருந்தும், வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு வருவதிலிருந்தும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.
"பெண்கள் பள்ளிவாயிலுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். ஆயினும் அவர்களுக்கு அவர்களது வீடுகளே (தொழுகைகளை நிறைவேற்றுவதற்கு) மிகவும் சிறந்ததாகும்" என நபியவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார். அபூஹுரைறா (ரலி) அறிவிக்கும் ஒரு நபிமொழி கீழ்வருமாறு:-
"அல்லாஹற்வின் அடிமைகளான பெண்களை அல்லாஹற்வின் மாளிகைக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்கள் அங்கு வாசனைத்
திரவியங்களைப் பூசிக்கொள்ளாது செல்லட்டும்."
(ஆதாரம்-அஹற்மத், அபூதாவூத்)
பொதுவாக பெண்கள் வீடுகளில் தொழுவதே சிறந்ததாகும். இக் கருத்துக்கு ஆதாரமாக முஸ்னத் அவiமத், ")த்தபரானி ஆகிய கிரந் தங்களில் காணப்படும் கீழ்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம்:
உம்மு ஹ"மைத் அஸ்ஸாயிதிய்யா என்ற பெண்மணி நபிகளாரிடம் வந்து “அல்லாஹற்வின் தூதரே! நான் உங்களுடன் தொழ விரும்புகிறேன்" என்றார். அதற்கு நபியவர்கள் "நீர் உமது வீட்டறையில் தொழுவது உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்தது. நீர் உமது சமூகத்தவரின் பள்ளிவாயிலில் தொழுவது பொதுப் பள்ளிவாயிலில் தொழுவதை விடச் சிறந்ததாகும்” எனக் கூறினார்கள்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை
குல்லதைன்
கேள்வி: குல்லதைனுக்குக் குறைவாக உள்ள நீரிலும் கைகளைப் பாத்திரமாகக் கொண்டு வுளு செய்கின்றேன் என்ற நிய்யத்து கன் கைகளை அந்த நீரினுள் விட்டு அள்ளி வுழு செய்ய முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு ஆதாரங்கள் ஏதேனும் உண்டா? தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: இக்கருத்துச் சரியானதே. இதனை ஷாபிஈ மத்ஹப் அங்கீ கரிக்கிறது. இரண்டு குல்லத்துக்குக் குறைந்த நீரில் இத்தகைய நிய்யத் இன்றியே கைகளை இட்டு வுளுச் செய்யவும் பல ஆதாரங்கள் உள்ளன. ஒரு வுளு செய்வதற்காக உபயோகிக்கப் பட்ட நீரை மேலும் இரு வுளு செய்வதற்கு (அது குல்லதைனுக்குக் குறைந்ததாக இருப்பினும்) பயன்படுத்தலாம் எனப் பல இமாம்கள் கருதுகின்றனர்.
"நபியவர்கள் (வுளுவுக்காக) தனது கைகளைக் கழுவிய நீரிலிருந்து தனது தலையை மஸ்ஹற் செய்துள்ளார்கள்” என அர்ருபய்ய,’. பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்துள்ளார்கள். (அபூதாவூத், அஹற்மத்)
"அலி(ரலி), அபூ உமாமா (ரலி), அதா (ரஹற்), அல்-ஹஸன் (ரஹற்), மக்ஹால் (ரஹ்), அன்நகயி (ரஹற்) போன்றோர் தலையை மஸ்ஹற் செய்ய மறந்தவர் தனது தாடியில் படிந்திருக்கும் நீரைக் கொண்டு மஸ்ஹற் செய்து கொள்ள முடியும் எனக் கூறியுள்ளனர்" என்கிறார் இமாம் இப்னுல் முன்ஸிர் (ரஹ்). இது, உபயோகிக்கப்பட்ட நீர் (மாஉன் முஸ்த.மல்) தன்னிலும் சுத்தமானது, பிறவற்றையும் சுத்தம் செய்யக்கூடியது என்பதையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இமாம்களான மாலிக், ஷாபிஈ ஆகிய இருவரினதும் அறிவிப் பொன்றில் இக் கருத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ“ப்யானுஸ்ஸவ்ரீ (ரஹற்), அபூஸவ்ர் (ரஹற்) போன்றோர் உட்பட ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இக்கருத்துக்குச் சார்பாக உள்ளனர் என இமாம் இப்னு ஹாம் கூறுகின்றார்.

Page 35
66 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
துன்யாவுடைய விஷயங்களை மஸ்ஜிதில் பேசுதல்
கேள்வி: துன்யாவுடைய விஷயங்களைப் பள்ளிவாயலில் பேசக்கூடாது
என்பது சரிதானா?
பதில்: “பள்ளிவாயிலில் ஆகுமான பேச்சுக்க்ளைப் பேசுவதும் (துன்யா வுடைய விவகாரங்களையும் அவை போன்ற ஆகுமானவற்றையும் பேசுவது) ஆகுமானதாகும். இத்தகைய பேச்சுக்கள் சிரிப்புடன் கலந்ததாக இருப்பினும் சரியே,” என இமாம் நவவி கூறுகிறார். "நபியவர்களின் காலத்தில் மக்கள் பள்ளிவாயலில் ஜாஹிலிய்யக் காலத்தில் நடந்த விடயங்களை எடுத்துக் கூறிச் சிரிப்புபோராய் இருந்தனர். நபிகளாரும் புன்முறுவல் பூப்பவர்களாய் இருந்தார்கள். (அறிவிப்பவர்ஜாபிர் இப்னு சமுறா. ஆதாரம்: முஸ்லிம்) ஆயினும், பள்ளி வாயலில் வீண் பேச்சுக்களைப் பேசுவது தவிர்க்கப்படல் வேண்டும். தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உரத்த குரலில் பேசுவதும், அல்குர்ஆனை ஓதுவதும் கூட ஹராமானதாகும். ஆயினும், பள்ளி வாயலில் கற்பித்தலின் போது சத்தமிடுவது தவறானதல்ல என அறிஞர்கள் கருது கின்றனர்.
ஸக்காத்தும் தங்கத்தின் நிஸாபும்
கேள்வி: ஸ்க்காத்தில் தங்கத்திற்குரிய "நிஸாப்" -குறைந்த பட்ச
அளவினை விளக்குக?
பதில்: நவீன அளவை முறைப்படி எண்பத்தி ஐந்து கிராம் தங்கமே அதற்குரிய நிஸாபாகக் கொள்ளப்படுகிறது. எனவே குறித்த அளவிற்கு மேல் தங்கம் வைத்திருக்கும் ஒருவர் அதற்குரிய ஸகாத்தைச் செலுத்த வேண்டிய வேளையில் பணமாக வழங்கு வதாயின் அச்சந்தர்ப்பத்தில் என்பத்தைந்து கிராம் தங்கத்துக் குரிய விலையை அறிந்து மொத்தத் தொகையில் இரண்டரை வீதம் கொடுக்க வேண்டும்,
பணத்திற்குரிய நிஸாப் அளவையும் தங்கத்தை அடிப்படையாக வைத்து நிர்ணயிப்பதே மிகப் பொருத்தமானதாகும் என்பதையும் கருத்திற் கொள்க. எண்பத்தைந்து கிராம் தங்கம் சுமார் பத்தரைப்பவுண் தங்கத் திற்குச் சமனானதாகும். பணத்திற்குரிய நிஸாப் அளவை வெள்ளியை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்க வேண்டும் எனக்கூறும் அறிஞர்களும்
2 -6ÎTT.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை ፀ7
ஸக்காத்தும் காலதாமதமும்
கேள்வி ஒருவர் தனது கணக்கிடப்பட்ட ஸ்க் காத் 1600த்தை கணக்கிடப்பட்டதும் உடனே கொடுத்து முடித்து விட வேண்டுமா? சில காரணங்களுக்காக அதனைக் காலம் தாழ்த்திக் கொடுக் கலாமா? சிறிது காலத்துக்கு அதனைத் தனது முதலுடன் இணைத்துத் தொழிலில் ஈடுபடுத்தலாமா? தெளிவான விளக்கம் தேவை.
பதில்: ஒருவர் தனது பொருளில் ஸக்காத்தாகக் கொடுக்கப்பட வேண்டிய தொகையை அதனைக் கணக்கிட்டவுடன் தாமதமின்றி விநியோ கித்துவிட வேண்டுமா அல்லது தாமதித்துக் கொடுக்கவும் அனுமதியுண்டா என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு உண்டு.
கடமையான ஸக்காத்துக்குரிய தொகையைத் தாமதிக்காது உடன் நிறைவேற்றி விட வேண்டும் என்பதே இமாம்களான அஷ்ஷாபிஈ, மாலிக், அஹற்மத் ஆகியோர் உட்பட ஹனபி மத்ஹபைச் சேர்ந்த சில உலமாக்" களினதும் கருத்தாகும்.
ஒருவருக்கு ஸக்காத் கடமையை நிறைவேற்றுவதற்கான எல்லா நிபந்தனைகளும் அமையப் பெற்றிருந்து அதனை உடனே நிறைவேற்று வதற்கு முடியுமான நிலையிலும் அவர் இருந்தால், அதனைப் பிற்படுத்துவது ċin LT ġbi.
ஸக்காத்தைத் தாமதித்து, பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்பது இமாம் அபூஹனிபா (ரஹற்) அவர்களினதும் பெரும்பாலான ஹனபியாக் களினதும் அபிப்பிராயமாகும்.
ஆயினும், முதல் தரப்பினரின் கருத்தே பலமானதாகக் கொள்ளப்படு கின்றது. அவர்கள் தமது முடிவுக்கு ஆதாரங்களாகப் பின்வருவனவற்றை முன்வைத்துள்ளனர்:
1. ஸக்காத்தைக் கொடுங்கள் என்ற அல்லாஹற்வின் கட்டளை உடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே வேண்டி நிற்கிறது.
2. கடமையான ஒன்றை விடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய கடமையொன்றைத் தாமதித்துச் செய்ய முடியும் என்றிருப்பின், அக்கடமையை நிறைவேற்றாத ஒருவரை இறுதிவரை தண்டிப்பது என்பது சாத்தியமற்றதாகிவிடும்.
3. ஏழையின் தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று.

Page 36
68 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
எனவே அதற்காக வகுக்கப்பட்டுள்ள ஸக்காத்தும் உடன் நிறைவேற்றப் பட வேண்டியதாகும்.
4. செல்வத்தை நேசிப்பது, அதனை இழக்க விரும்பாதிருப்பது மனிதனின் சுபாவமாகும். இந்நிலையில் ஸக்காத்தைப் பிற்படுத்தித் தாமதமாகவும் நிறைவேற்றலாம் என்றிருப்பின், ஒருவர் அதனைத் தொடர்ந்தும் பிற் படுத்தி இறுதியில் அவர் மரணித்துவிட இடமுண்டு. அல்லது செல்வ மானது அவர் கையிலிருந்து அழிந்து விடவும் சாத்தியமுண்டு.
5. ஸக்காத் என்பது தொழுகை, நோன்பு ஆகியன போன்ற மீண்டும் மீண்டும் (உ-ம் வருடாந்தம்) தொடர்ந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும். எனவே ஒரு முறைக்குரிய ஸக்காத்தை அடுத்த முறைவரை பிற்போடுவது கூடாது.
ஒருவர் தன்மீது ஸ்க்காத் வாஜிபான நிலையில் அதனை நிறை வேற்றும் சந்தர்ப்பம் கிடைத்தும் நிறைவேற்றாது மரணித்து விட்டால், அது அவரது வாரிசுச் சொத்திலிருந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹற்மத் ஆகியோரின் கருத்தாகும்.
"மனிதருக்குரிய கடன்களே நிறைவேற்றப்பட வேண்டும் என்றிருக்கும் போது அல்லாஹற்வுக்குரிய கடன் (அவற்றைவிட) நிறைவேற்றத் தக்கதாகும்." என்ற ஹதீஸ் இக்கருத்துக்கு ஆதாரமாக கொள்ளப்டுகின்றது.
மேலே கண்டவாறு ஸக்காத் என்பது தாமதமின்றி அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றிருப்பினும் அதனை உடனடியாக நிறைவேற்றுவதில் தனக்கோ அல்லது தனது பொருளுக்கோ கேடேதும் ஏற்படும் என்று அஞ்சும் போது அதனைப் பிற்படுத்துவதில் தவறில்லை. அவ்வாறே, மிகப் பொருத்தமானவரைக் கண்டறியும் மட்டும் அல்லது இது போன்ற பிற நியாயமான நலன்களைக் கருத்திற் கொண்டு ஸக்காத் கடமையை உடன் நிறைவேற்றாது பிற்படுத்துவதற்கு அனுமதியுண்டு.
மேலும் ஒருவர் தனது சொந்தத் தேவைக்காகத் தான் ஸக்காத்தாகக் கொடுக்க வேண்டிய தொகையைச் செலவு செய்து விட்டு பின்னர் அதனை உரியவர்களுக்கு வழங்கவும் இடமுண்டு. ஆனால், அத்தொகை அவரின் பொறுப்பிலுள்ள மிகப் பெரியதொரு கடனாகும் என்பதனை அவர் உணர வேண்டும். பொதுவாக எந்த அமலையும் தாமதப்படுத்தாது விரைவாக நிறைவேற்றும்படியே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்த வகையில் ஸக்காத் போன்ற ஒரு கடமையை முடியுமானவரை துரிதமாக நிறைவேற்ற முயல்வது ஒரு முஸ்லிமின் கடமையாகும்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை - h像
ஸக்காத்தை உடன் பிறப்புகளுக்கும் இனபந்துகளுக்கும் கொடுத்தல்
கேள்வி ஸகாத் விதியாக்கப்பட்ட ஒருவர் தன் ஸகாத்திலிருந்து தன் உடன் பிறப்புகளுக்கும் இனபந்துக்களுக்கும் வழங்குவது ஆகுமா?
பதில்: ஒருவர் தனது ஸக்காத்தைத் தூரத்து உறவினர்களுக்கு வழங்கலாம் என்பதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால், நெருங்கிய இனபந்துக்களான பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், பெரிய, சிறிய தந்தைமார்-தாய்மார், மாமிமார், மாமாமார் போன்றோருக்கு ஒருவர் தனது 'ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பது விரிவாக விளக்கப்படவேண்டிய தொன்றாகும்.
ஸக்காத் கொடுக்கும் ஒருவர் தனது நெருங்கிய உறவினரொருவர்க்கு ஆமில் அல்லது இறைபாதையில் போராடுபவர், அல்லது கடன்காரர் அல்லது பிரயாணி என்ற வகையில் தனது ஸக்காத்தைக் கொடுத்துதவ முடியும். ஆனால், இத்தகைய நெருங்கிய இனபந்துக்களுக்கு பக்கீர் மிஸ்கீன் பங்கிலிருந்து வழங்குவதே சர்ச்சைக்குரியதாக உள்ளது. இங்கும் ஒருவரின் ஸக்காத்தை, அவர் அதனை ஒப்படைத்த அரசோ அல்லது நிறுவனமோ அவரது இனபந்துக்களுக்குக் கொடுப்பது பிழையானதல்ல. ஆனால், ஒருவர் தனது ஸக்காத்தைத் தானே பகிர்வதாக இருப்பின், தனது நெருங்கிய இனபந்துகளுக்கு வழங்கலாமா எனும் விடயத்தில் விரிவான விபரங்கள் கூறப்படுகின்றன.
ஒருவர் தனது ஸ்க்காத் நிதியிலிருந்து தனது பெற்றோருக்கோ,
பிள்ளைகளுக்கோ கொடுக்க முடியாது என்பது தெளிவான தீர்ப்பாகும். '
ஏனெனில், மகனின் சொத்து பெற்றோரினதும் சொத்தாகக் கொள்ளப்படு கிறது. அவ்வாறே தந்தையின் ஓர் அங்கமாகவே பிள்ளைகள் இருக் கின்றனர்.
ஒருவர் தனது ஸக்காத்தைத் தன் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியாதது போலவே தன் மனைவிக்கும் வழங்க முடியாது; ஏனெனில், ஒருவரது மனைவியும் அவரின் ஒரு பகுதியாகவே கொள்ளப்படுகின்றாள்.
ஒரு கணவன் தன் மனைவிக்குத் தனது ஸக்காத்தைக் கொடுக்க முடியாது என்றிருப்பினும், ஒரு மனைவிக்குத் தனது ஸக்காத் நிதியிலிருந்து தன் கணவனுக்கு உதவ முடியும் என்ற கருத்து பல அறிஞர்களாலும்

Page 37
70 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
வலியுறுத்தப்படுகின்றது. இக்கருத்துக்கு நம்பகமானதும் உறுதியானதுமான பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒருவரது பெற்றோர், பிள்ளைகள், மனைவி ஆகியோரல்லாத பிற இனபந்துகளுக்கு (உ-ம்: சகோதர, சகோதரிகள், மாமா, மாமி போன்றோர்) அவரது ஸக்காத்தைக் கொடுக்கலாமா, என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
ஒருவர் தனது ஸக்காத் பொருளிலிருந்து குறித்த இனபந்துகளுக்கு வழங்க முடியும் என்பதே பலமான கருத்தாகக் கொள்ளத்தக்கதாகும். ஹனபி மத்ஹபின் இமாம்கள், இமாம் யஹற்யா, இமாம் அஹமத் போன் றோரும் இன்னும் பலரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ், இப்னு மஸ்ஊத் போன்ற ஸஹாபாக்களும், ஸயீத் இப்னு முஸய்யிய், அல்-ஹஸன், இப்ராஹிம், முஜாஹித், அல்-ழஹற்ஹாக் போன்ற தாபிஈன்களும் மேற்படி கருத்தை ஆதரிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஏழைக்குக் கொடுக்கப்படும் ஸதகா (ஸக்காத்) வெறும் ஸதகா மாத்திரமே. ஆனால், இனபந்துகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸதகாவோ இரண்டு கூலிகளைத் தரக்கூடியதாகும். ஏனெனில், அது ஸதகாவாகவும் இனபந்துக்களுடன் கொண்ட உறவாகவும் உள்ளது. (அஹற்மத், நஸாயி, திர்மிதி) எனும் நபிமொழியும் மேற்போந்த கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
ஸக்காத் பெறத்தகுதியுடையோர் பற்றிக் குறிப்பிடுகின்ற சட்ட வசனங்கள், பக்கீர்களை, உறவினர்கள், அந்நியர்கள் என்று பிரித்துக் காட்டாது பொதுப்படையாகவே வந்துள்ளன. மனைவி, பெற்றோர், குழந்தை கள் ஆகியோரைப் பொறுத்தவரை ஒருவரது ஸக்காத்திலிருந்து அவர்களுக் குக் கொடுக்க முடியாது என்பது இஜ்மாவினது அடிப்படையிலும் மற்றும் பல ஆதாரங்களின் அடிப்படையிலும் நிறுவப்பட்டுள்ளது.
நோன்பைக் கழாச் செய்தல்
கேள்வி: இந்த வருடம் விடுபட்ட நோன்பை அடுத்த ஷ..பான் 15ம் நாள் பிந்தியதன் பின்னர் நோற்பதன் மூலம் கழாவான அந்த நோன்பு நிவர்த்தியாகுமா? அல்லது அதற்கு முன் நோய்ால்த்தான் நிவர்த்தியாகுமா? A.
பதில்: ஒரு வருடத்தில் விடுபட்ட ரமழான் நோன்பை அடுத்த ஷ..
ான் மாதம் பதினைந்தாம் தினத்துக்கு முன் நோற்றால்தான் கழ நிறைவேற வேண்டுமென்பதில்லை. குறித்த தினத்துக்குப்

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை /
பின்னரும் குறித்த நோன்பை நோற்க முடியும். அ(;/1, புயூர் நோன்பு வந்து விடினும், அதனை நோற்று முடிது, 14 முன்னைய வருடம் விடுபட்ட நேன்பைக் கழா செய்ய முடியI,
ஆயினும், தக்க காரணமின்றி அடுத்த ரமழான் வரை கழtவை நிறைவேற்றாது, பின்னர் நிறைவேற்றுபவர் விட்ட ஒவ்வொரு நோன்பிற்காகவும் இரண்டு கைப்பிடியளவு உணவை பித்யாவாகக் கொடுக்க வேண்டுமென இமாம்களான ஷாபிஈ, மாலிக், அவiயத் போன்றோர் கருதுகின்றனர். எந்நிலையிலும் பித்யாக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், நோன்பை நோற்றால் மாத்திரம் போதுமானது என்றும் ஹனபிய்யாக்கள் கருதுகின்றனர். ஹனபிய்யாக்களின் இக்கருத்தே இவ்விடயத்தில் உறுதியான தென நவீன கால அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்.
சிதைந்த உடலைக் குளிப்பாட்டல்
கேள்வி: ஒரு முஸ்லிமின் உடல் எரிக்கப்பட்டு எலும்பு மாத்திரம் எஞ்சி
பதில்:
இருக்கும் போதும், உடல் எரிகாயத்துடன் இருக்கும் போதும் அதனைக் குளிப்பாட்டுவது போன்ற ஜனாஸாவுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமா?
உடலின் ஒரு பகுதி எஞ்சி இருப்பினும் அதனைக்குளிப்பாட்ட வேண்டும்; கபனிடவும் தொழுவிக்கவும் வேண்டும் என்பது இமாம்களான ஷாபிஈ, அஹற்மத், இப்னு ஹஸ்ம் போன்றோரின் கருத்தாகும். ஒரு முஸ்லிமான மையித்தின் கைகால் போன்ற ஓர் உறுப்பு மாத்திரமே காணப்படினும், அதனைக் கழுவியே அடக்கம் செய்யவேண்டும் என்பது அறிஞர்கள் பலரின் தீர்ப்பாகும். ஜமல் யுத்தத்தின்போது இறந்த ஒரு மனிதரின் கையொன்றை ஒரு பறவை தூக்கிச் சென்று மக்காவில் எறிந்தது. அதிலிருந்த மோதிரத்தைக் கொண்டு குறித்த நபரை இனங் கண்டு, அதனைக் கழுவி, தொழுவித்து அடக்கம் செய்தனர். இது பல ஸாஹாபாக்கள் முன்னிலையில் இடம் பெற்றது. இச்சம்பவத்தைத் தான் கேள்விப்பட்டதாக இமாம் ஷாபிஈ அறிவிக்கின்றார்.
அபூ அய்யூப் (ரலி) அவர்கள் ஒரு காலுக்கும், உமர் (ரலி)
அவர்கள் ஓர் எலும்புக்கும் தொழுகை நடத்தியுள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது. (ஆதாரம்-அஹற்மத்)
உடலின் அரைப்பாகத்துக்கு மேல் எஞ்சி இருந்தாலேயே அதனைக்

Page 38
72 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
(hfட்பாட் வும், அதற்காகத் தொழுகை நடாத்தவும் வேண்டும் என்பது இாய்களான அபூஹனிபா, மாலிக் ஆகியோரின் அபிப்பிராயமாகும்.
நீர் கொண்டு கழுவுவதனால் உடல் சிதையும் என்றிருப்பின், தயம்மும் செய்விக்கலாம் என்று கருதும் அறிஞர்களும் உள்ளனர்.
ஜனாலாவைக் கொண்டு செல்லும் போது ஷஹாதா சொல்லுதல்
கேள்வி. எங்களுரில் இரண்டு வகையாக ஜனாஸாவைக் கொண்டு செல்கின்றனர். சிலர் கலிமாவைச் சத்தமிட்டுக் கூறியவாறு கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் மெளனமாகக் கொண்டு செல்கின்றனர். இவ்விரு அமைப்பிலும் எது சரியானது என்பது பற்றி விளக்கம் தாருங்கள்.
பதில்: ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்லும் வேளையில் மெளனமாகச் செல்வதே ஸான்னத்தாகும். நான்கு மத்ஹப்களினதும் சட்டங்களைக் கூறுகின்ற "அல்-பிக்ஹ" அலல் மதாஹிபில் அர்பஆ” எனும் நூலும் இக்கருத்தையே கூறுகின்றது. இதற்கு மாறாக, சத்தமாக "திக்ரு" செய்வதோ, குர்ஆன் போன்றவற்றை ஒதுவதோ கூடாது. அது மக்ரூஹாகும். ஸஈதுப்னுல் முஸையிப், ஸஈதுப்னு ஜுபைர், அல் ஹஸன், அந் நகர், அஹற்மத், இஸ்ஹாக் போன்ற பல தாபிஈன்களும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். ஷாபிஈ மத்ஹபின் முக்கிய இமாமாகக் கருதப்படும் நவவியும் தனது "அல்-அத்கார்” எனும் நூலில் ஜனாஸாவைச் சுமந்து செல்லும் வேளையில் சத்தமாக "திக்ரு" செய்வதோ, ஒதுவதோ கூடாது என்றும், மெளனமாகச் செல்வதே சரியானதும், ஸலபீன்களின் வழிமுறையுமாகும் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஜனாஸாவைக் கொண்டு செல்லும் போது திக்ருகளைக் கூறிச் சத்தமிடும் அமைப்பு நபியவர்களின் காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள், தாபி+ன்கள், தாபிஉத் தாபிஈன்கள் காலத்திலோ இருந்த ஒன்றல்ல என்று இமாம் முஹம்மது அப்துஹ" "அல்-பத்ஹற்” என்ற நூலை மேற்கோள்காட்டிக் கூறுகின்றார். இப்னு நுஜம் போன்ற பல இமாம்கள் சத்தமிடுவதை "மக்ருவர் தஹற்ரீம்" என்று குறிப்பிடுகின்றனர். V
"நெருப்பு னோ சத்தத்துடனோ ஜனாஸாவைத் தொடர வேண்டாம்" எனும் அஹற்மத், அபூ தாவூத், அல்பைஹகீ ஆகியோர் தத்தமது

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை 73
கிரந்தங்களில் பதிவு செய்துள்ள நபி மொழியும், "அல்லாஹற் மூன்று சந்தர்ப்பங்களில் மெளனமாக இருப்பதை விரும்புகிறான்; குர்ஆன் ஓது) போதும், யுத்தம் நடைபெறும் போதும்,ஜனாஸாவைக் கொண்டு செல்லும்
போதும் மெளனம் சாதிப்பதே அம்மூன்று சந்தர்ப்பங்களுமாகும்” எனும்
தபரானி பதிவு செய்துள்ள நபி மொழியும் மேற்குறித்த முடிவுக்கு
ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
மஃமும்கள் தொழுகையில் பாதிஹா ஸ9ராவை ஓதுதல்
கேள்வி: ஜங்காலத்தொழுகையில் இமாம் ..பாதிஹா ஸ்ரோவை ஒதும்போது அதனை ம.மும்கள் செவிமடுத்தால் போதுமான தல்லவா? அதனை அவர்கள் பின்னர் ஓத வேண்டிய தேவை இல்லையல்லவா?
பதில்: ஸ?ரத்துல் ஃபாதிஹா ஒதப்படாத தொழுகை நிறைவேறாது என்பதே அடிப்படையாகும். பர்ளான, ஸ"ன்னத்தான எல்லாத் தொழுகைகளிலும் ஒவ்வொரு ரக்அத்திலும் "பாதிஹாவை ஒதுவது கடமையாகும். ஆனால், ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் சத்தமாக ஒதும் தொழுகைகளில் (உ-ம்: இஷா) ம." மும் ஃபாதிஹாவை ஓதவேண்டியதில்லை; மாறாக அவர் இமாமின் ஓதலுக்குச் செவிமடுக்க வேண்டும். "அல்குர்ஆன் ஒதப்பட்டால் மெளனமாக இருந்து அதற்குக் காது கொடுங்கள். அல்லாஹற் உங்களுக்கு அருள் புரிவான்" என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
"இமாம் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ஒதும் போது மெளனமாக இருங்கள்" என ஹதீஸ் கூறுகின்றது. (முஸ்லிம்) "இமாமின் ஓதல் ம.மூமுக்குரிய ஒதலுமாகும்” என்ற நபி மொழியும் இக்கருத்தையே வலியுறுத்துகின்றது.
இமாம் சத்தமாக ஒதாத தொழுகைகளைப் பொறுத்தவரையில் (உ-ம்: லுஹர்) ம.மும் .பாதிஹாவை ஓதுவது வாஜிப் ஆகும்.
சத்தமாக ஒதப்படும் தொழுகைகளிலும் இமாம் ஸ?ரதுல் ஃபாதிஹா ஓதி முடிந்த பின்னர் ம.மூமும் (முடியுமானவரை) அதனை ஓதவேண்டும் என்பது ஷாபிஈ மத்ஹபின் கருத்தாகும்.

Page 39
74
சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அகிகா
கேள்வி:
அகிகா கொடுப்பது யார் மீது கடமையாகின்றது? அகிகா கொடுக்க வசதியுண்டா இல்லையா என்பதை எவ்வாறு நிர்ணயிக்கலாம்? தனது பெற்றோர் தனக்காக அகரீகா கொடுக்கவில்லையென்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத்தானே அகிகா கொடுக்க வேண்டுமா? தனது மனைவியின் பெற்றோர் அவளுக்காக அகிகோ கொடுக்கவில்லை என்பதைக் கணவன் தெரிந்து கொண்டால் தனது மனைவிக்காக அவன் அகீகா கொடுக்க வேண்டுமென இஸ்லாம் கட்டாயப் படுத்துகின்றதா?
அகீகா கொடுப்பது "ஸ"ன்னா முஅக்கதா"வே (பலவந்தமான சுன்னத்தே) அன்றி வாஜிப் அல்ல. குழந்தையின் தந்தை வசதிபடைத்தவராக இருப்பினும், வசதியற்றவராக இருப்பினும் அவர் தனது குழந்தைக்காக அகீகா கொடுப்பது ஸ"ன்னத்தாகும். தனது பெற்றோர் தனக்காக அகீகா கொடுக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளும் பிள்ளை, தனக்காகத்தானே அகீகா கொடுக்க வேண்டுமெனும் விடயத்தில் கருத்து வேறுபாடுண்டு. இமாம் நவவி தனது "றெளளத்துத் தாலிபீன்” எனும் நூலில் இவ்விடயம் பிள்ளையின் தெரிவுக்கு விடப்பட்டவொன்றாகும் என்றும், அவன் விரும்பியபடி கொடுக்கவோ, கொடுக்காமலிருக் கவோ முடியுமென்றும் கூறுகின்றார். அதா. அல் ஹஸனுல் பஸரி ஆகிய தாபிஈன்கள், கொடுப்பதே சிறந்தது எனக் கருதுகின்றனர். இமாம் இப்னு குதாமா, அகீகா கொடுப்பது தந்தையின் பொறுப்பேயன்றி பிள்ளையின் பொறுப்பல்ல எனக் குறிப்பிடுகின்றார்.
அகீகா கொடுக்கப்படாத தனது மனைவிக்காக அதனைக் கொடுக்க வேண்டிய கடமை கணவனுக்கு இல்லை.
மிருகங்களின் மலசலம்
கேள்வி:
பதில்:
மாடு போன்ற தாவர பட்சனிகளின் மலம் நஜிஸானதா? தயவுசெய்து தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.
எம்மிருகங்களின் மாமிசத்தை உண்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி இல்லையோ, அவற்றின் மலசலம் ஆகியவை நஜீஸானவை யாகும்.

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை /ዘ
உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களின் மலn',ாத பொறுத்த வரையில் அவை நஜீஸானவை அல்ல என்பதே, இllா மாலிக், அஹற்மத் போன்றோரினதும் சில ஷாபியாக்களினதும் அபிப்பிராயமாகும்.
"இவற்றின் மலசலம் நஜீஸானவை என ஸஹாபாக்களில் எவரும் கருத்துக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், இவை நஜீஸானவை எனக் கூறும் கருத்து நூதனமான ஒன்றாகும். இதற்குச் சார்பாக எந்த ஒரு நபித்தோழரும் இருந்ததில்லை" என்கிறார் இமாம் இப்னு தைமியா (ரஹற்).
அனஸ் (ரலி) கீழ்வருமாறு அறிவிக்கிறார்: “ஒரு தடவை உகல், அல்லது உறைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்த வேளையில் ஒருவகை வயிற்று வலியினால் பீடிக்கப்பட்டனர். அதற்கு நபியவர்கள் ஒட்டகத்தின் பாலையும் சலத்தையும் பெற்றுப்பருகுமாறு அம்மக்களைப் பணித்தார்கள்." (ஆதாரம்:- அஹற்மத், புகாரி, முஸ்லிம்)
இந்நபிமொழியில் இருந்து ஒட்டகத்தின் சிறுநீர் சுத்தமானது என்பதனை விளங்க முடிகிறது. இதனை அடிப்படையாக வைத்து, அறுத்து உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள மிருகங்களினது சிறுநீர் போன்றவையும் சுத்தமானவையாகும் எனும் கருத்தைக் கியாஸின் அடிப்படையில் பெற முடிகிறது.
“இது குறித்த அம்மனிதர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாகக் கூறப்பட்ட ஒரு சட்டமாகும் எனக் கூறும் வாதம் ஏற்புடையதல்ல; ஏனெனில், உரிய ஆதாரம் இன்றி எதுவும் பிரத்தியேகமான - குறிப்பான சட்டங்களா வதில்லை" எனக்கூறும் இமாம் இப்னுல் முன்திர், தொடர்ந்து கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "எத்தகைய ஆட்சேபனையும் இன்றி சந்தைகளில் ஆட்டின் மலத்தை விற்பனை செய்வதற்கு அறிஞர்கள் அனுமதி அளித்து வந்துள்ளமையும் ஒட்டகத்தின் கழிவுப்பொருட்களை மக்கள் அன்றும் இன்றும் தமது மருந்து வகையில் சேர்த்துப் பாவித்து வருகின்றமையும் அவை சுத்தமானவை என்பதனையே காட்டுகிறது" என்கிறார்.
இவ்விடயம் பற்றி இமாம் ஷவ்கானி கூறும் கருத்தை இறுதியாகக் குறிப்பிட முடியும்: "அடிப்படையைக் கருத்திற் கொண்டு, உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து மிருகங்களினதும் கழிவுகள் அதாவது மலசலம் சுத்தமானது என்பதே வலுவான கருத்தாகக் கொள்ளப்பட முடியும்."

Page 40
76 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அல்குர்ஆனை ஓதி கூலி வாங்குதல்
கேள்வி: அல்குர்ஆனை ஓதி அதற்குக் கூலி வாங்க அனுமதி உண்டா?
பூரண விளக்கம் தேவை.
பதில்: "கூலிக்குக் குர்ஆனை ஓதுவதனால் இறந்தவருக்கோ அல்லது ஒதுபவருக்கோ எத்தகைய நன்மையும் கிட்ட முடியாது” என்கிறார் கள் ஹனபி மத்ஹபுடைய இமாம்கள். இதனை மஹற்மூத் இப்னு அஹற்மத் (ரஹ்) தனது "ஷர்ஹத் திராயா"வில் குறிப்பிடுகின்றார்.
இதுபற்றிக் கூற வந்த இமாம் அல்-அய்னி(ரஹற்), கூலி எடுப்பவரும் கொடுப்பவரும் இருவருமே பாவிகள் என்றும் இன்று எம்மத்தியில் பரவலாக உள்ள, அல்-குர்ஆனைக் கூலிக்கு ஒதும் முறையானது ஆகுமான ஒன்றல்ல என்றும் குறிப்பிடுகின்றார். (பார்க்க. பினாயா ஷர்ஹால் ஹிதாயா)
"இவ்வமைப்பு இஸ்லாத்தின் எந்தவொரு மத்ஹபிலும் அனுமதிக்கப் பட்டதில்லை. எந்தவொரு இறை மார்க்கத்திலும் (உ-ம் தவ்றாத், இன்ஜில்) அனுமதிக்கப்பட்டதுமல்ல. இதனால் எத்தகைய ஸவாபும் கிடைக்காது” என்கிறார் இமாம் முஹம்மத் அல் பரகவி (பார்க்க:- மஜ்மூஅது ரஸாஇல்இப்னு ஆபிதீன்)
அல்குர்ஆன் ஓத எவரையும் கூலிக்கு அமர்த்தி, ஒதியதை இறந்த வர்க்குச் சேர்ப்பிப்பது செல்லுபடியாகாது. இதற்கு எந்தவொரு இமாமும் அனுமதி கொடுத்ததாகத் தெரியவில்லை. உலமாக்களின் கருத்து யாதெனில்,
"ஒருவர் பணத்திற்காக அல்-குர்ஆனை ஓதினால் அவருக்கு எதுவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இப்படியிருக்க இறந்தவருக்கு இவர் எதனைக் கொடுக்கப் போகிறார்! உண்மையில் மரணித்தவரை அடைவ தெல்லாம் நற்கருமங்களே ஆகும். அல்-குர்ஆனை ஓதக் கூலிக்கு ஆளை அமர்த்துவதையிட்டு எந்தவொரு இமாமும் கூறியதில்லை" என்கிறார் இப்னு தைமியா. (பார்க்க: மஜ்முஅது ரஸாஇல்-இப்னு ஆபிதீன்)
குறித்த அமைப்பு ஹராமானது என்பதற்கு அறிஞர்கள், கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டுவர்;
“எனது வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்" (241) இவ்வசனத்திற்கு அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் "அல்குர்ஆனுக்கு

வணக்க வழிபாடுகள் தொடர்பானவை fy 풀
கூலி எடுக்காதீாகள்” எனப் பொருள் கொடுக்கிறார்கள். (பார்க்க துடுபீர் அத்தபf, இப்னு கதீர், அல்-குர்துபி)
இறுதியாக இதுபற்றி "ஷர்ஹ" அகீதத்தித் தஹாவிய்யா" எனும் நூலில் இடம்பெற்றுள்ள கருத்தைக் கீழே தருகின்றோம்.
- "சிலரைக் கூலிக்கமர்த்தி அல்-குர்ஆனை ஓத வைத்து, அதனை இறந்தவருக்கு அன்பளிப்புச் செய்யும் அமைப்பை ஸலபுஸ்ஸாலிஹின்கள் எவரும் செய்ததில்லை; இமாம்கள் எவரும் இதனை ஏவியதாகவும் இல்லை. இது விடயத்தில் அவர்களில் எவரும் சலுகை வழங்கியதாகவும் தெரிய வில்லை. அல்-குர்ஆனை ஓதுவதற்காகவே கூலிக்கு அமர்த்துவது கூடாத ஒன்றாகும் என்பதில் கருத்து வேறுபாடில்லை.”

Page 41
அத்தியாயம் - 03
கொடுக்கல், வாங்கல், சமுக உறவுகள்
ஆயுட் காப்புறுதி
கேள்வி ஆயுட் காப்புறுதி செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்
பதில்:
பட்டுள்ளதா?
ஆயுட் காட்புறுதி உட்பட அனைத்து வகையான நவீன காப்புறுதி அமைப்புகளும் ஹராமானதாகும். ஹிஜ்ரி 1398ம் ஆண்டு ஷ.. பான் மாதம் 14ம் திகதி கூடிய "மஜ்லிஸ“ல் மஜ்மஇல் பிக்ஹிய்யில் இஸ்லாமி" எனும் சர்வதேச இஸ்லாமிய சட்ட மன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. நீண்ட ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்கும் பின்பே இம்முடிவு எடுக்கப்பட்டது. சூதுக் குரிய பண்புகள், வட்டி, பிறர் செல்வத்தை எத்தகைய் பிரதியீடும் இன்றிப் பெறும் நிலை ஆகியவை காப்புறுதியோடு தொடர்பு பட்டுள்ளன. அத்தோடு கொடுக்கல் வாங்கல்களில் காணப்படக் கூடாத் மயக்கமான, தெளிவற்ற தன்மைகள் காப்புறுதி ஒப்பந்தங்

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள். 7s
களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றமையால் அனைத்து வhைlவி காப்புறுதிகளும் ஹராமாகும்.
பெண்கள் வெளிநாடு சென்று உழைத்தல்
கேள்வி: இன்று நம் இஸ்லாமியப் பெண்மணிகள் உழைப்பதற்கென்று வெளிநாடு செல்கின்றார்கள். பெண்கள் உழைப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? அத்துடன் தனிமையில் அவர்கள் உழைப்பதற்காக வெளிநாடு செல்லலாமா? விளக்கம் தேவை.
பதில்: பொதுவாக பெண்கள் தொழில் செய்வதை இஸ்லாம் வரவேற்ப தில்லை. ஒரு பெண்ணைக் பராமரிக்கும் பொறுப்பு அவளின் தந்தை, கணவன், சகோதரன் போன்றோருக்கே உரியது என இஸ்லாம் கூறுகிறது. பெண் அவளது தன்மைக்கும் இயல்பிற்கு மேற்றாப் போல் குடும்ப வாழ்க்கையிலும் தாய்மைக்குரிய விவகாரங்களிலும் ஈடுபட வேண்டுமெனவும் அது எதிர்பார்க்கிறது.
ஆயினும் இஸ்லாம் பெண்கள் தொழில் புரிவதைத் தடுப்பதில்லை. ஆனால் அவர்களது தொழிலும் உழைப்பும் இஸ்லாம் பெண்களுக்கென வகுத்துள்ள அடிப்படைகளுக்கும், பண்பாடுகளுக்கும் முரணில்லாத வகையில் அமைதல் வேண்டுமென்பதில் கண்டிப்பாகவுள்ளது. இவ்வகையில் ஒரு பெண் புரியும் தொழில் அவள் தன் வீட்டில் ஒரு தாய் என்ற வகையிலுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும், வீட்டு விவகாரங்களைக் கவனிப்பதற்கும் தடையாக அமைதல் கூடாது.
தொழில் புரியுமிடத்தில் பிற ஆண்களுடன் கலந்திருப்பதும் தனது உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை வெளிக்காட்டிக் கொண்டிருப்பதும் கூடாது.
ஓரிடத்தில் ஓர் ஆணுடனோ அல்லது பல ஆண்களுடனோ தனித்திருத்தல் கூடாது.
தனது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத போது ஒரு மஹ்ரமான (திருமணம் செய்வதற்கு ஹராமான) துணையுடனன்றி பிரயாணத்திலீடு படுவதும், பிற இடங்களில் போய் தங்குவதும் கூடாது.
பெண்கள் உழைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. ஆனால் தற்காலத்தில் அவர்கள் வெளிநாடு சென்று தொழில் செய்வதானது ஹராமானதென்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது.

Page 42
8O சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
வட்டிக்கு கடன் வாங்குதலும் கொடுத்தலும்
கேள்வி: வட்டிக்கு கடன் வாங்குபவர் மீது குற்றமா? அல்லது வட்டிக்குக் கடன் கொடுப்பவர் மீது குற்றமா? விளக்கம் தரவும்.
பதில்: இருவரும் குற்றவாளிகள் என்பதுவே ஷரீஅத்தின் கருத்தாகும். வட்டிக்குக் கடன் கொடுத்தவர் மாத்திரம் குற்றவாளியாக முடியாது. மாறாக, கடன் பெற்று வட்டிக்கொடுப்பவரும் பாவியா கக் கொள்ளப்படல் வேண்டும். ஏனெனில், அவரும் பாவத்திற்கு உடந்தையாக இருக்கிறார். ஏன்? கடன் பெற்று வட்டி செலுத்துவ பவர் மாத்திரமன்றி, வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல் களுக்கு எழுத்து வேலை பார்ப்போரும், சாட்சிகளாக இருப் போரும் கூடக் குற்றவாளிகளே.
"வட்டி உண்பவரையும் உண்ணக் கொடுப்பவரையும் அதற்குச் சாட்சியாக இருப்போரையும் அதனை எழுதுபவரையும் அல்லாஹற் சபிக்கிறான்” (ஆதாரம்: அஹற்மத், அபூதாவூத், திர்மிதி)
ஆயினும் வட்டிக்குக் கடன்பெற வேண்டிய நிர்ப்பந்தம் ஒருவருக்கு இருப்பின் இச்சந்தர்ப்பத்தில் வட்டி பெறுபவரே குற்றவாளியாவார். ஆனால் இந்நிலைக்குப் பல நிபந்தனைகள் உண்டு. அவை கீழ்வருமாறு:
1. உண்மையான தேவையாக இருத்தல் வேண்டும். ஆடம்பரத் தேவை ஒன்றுக்காகவோ அடிப்படைத் தேவை ஒன்றை மேலும் வசதிப்படுத்திக் கொள்வதற்காகவோ பெறப்பட்ட கடனாக இருத்தல் கூடாது. அதாவது குறித்த தேவை நிறைவேறாத போது ஆபத்தும் அழிவும் ஏற்படும் நிலை இருத்தல் வேண்டும். ஹ தாரணத்திற்கு உணவு, உடை, நோய்க்கான சிகிச்சை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2. சரியாக தேவையின் அளவுக்கே இச் சலுகையைப் பயன்படுத்தல் வேண்டும். உதாரணமாக 900 ரூபாய் தேவையாக இருப்பின் 1000e5LT6ou (6) i6b) ä 6olstébi (oli Uoly jnLTg5.
3. மறுபக்கத்தில் தனது இப் பொருளாளாதார நெருக்கடியிலிருந்து வெளியேற முழுமுயற்சி செய்து பார்த்தல் வேண்டும். அடுத்த முஸ்லிம் சகோதரர்கள் (வட்டியின்றி) இவருக்கு(க்கடன்) உதவி வழங்கக் கடமைப்பட்டுள்ளனர். வேறு எத்தகைய வழியும் இல்லையெனக் காணும் போதே வட்டிக்குக் கடன் பெறத் துணிய வேண்டும். அதிலும் வரம்பு மீறாது எல்லையைக் கடக்காது நடந்து கொள்ளல் வேண்டும். அல்லாஹ மிகவும் மன்னிப்பவனாகவும் அருளும் அன்பும் கொண்டவனாகவும் இருக்கின்றான்.

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள். 81
பதுக்கல்
கேள்வி. பதுக்கல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? இதில் பிரதான
உணவுப் பொருட்கள் மாத்திரம் அடங்குமா அல்லது உப உணவுப்பயிர்களான கோப்பி, மிளகு, புளி போன்றவைகளும் அடங்குமா? விளக்கம் தேவை.
விலையேற்றம் கருதிப் பண்டங்களைப்பதுக்குவது ஹராமான தாகும். பேராசையும், பிறர் நலன் பேணாத்தன்மையுமே ஒருவனை இத்தியச் செயலைச் செய்யத் தூண்டுகின்றன. பதுக்கலினால் மக்களுக்கு எத்தகைய அசெளகரியங்கள் ஏற்படும் என்பது தெளிவானதே. இவற்றைக் கருத்திற் கொண்டே இஸ்லாம் பதுக்கலைத் தடை செய்துள்ளது. பதுக்கலைக் கண்டிக்கும் சில நபி மொழிகளைக் கீழே நோக்குவோம். “பதுக்கியவன் பாவி." (அபூதாவூத், முஸ்லிம்)
"உணவுப் பொருளை நாற்பது நாட்களுக்குப் பதுக்கியவன்
அல்லாஹ்வை விட்டும் நீங்கிக் கொள்கிறான். அல்லாஹற்வும் அவனை விட்டு நீங்கிக் கொள்கிறான்." (அஹற்மத், அல்ஹாகிம்)
"மிகக் கெட்ட அடியான் பதுக்கற்காரனே. விலையிறக்கத்தைக்
கேட்பது அவனுக்குக் கவலையைக் கொடுக்கிறது. விலையேற்றத்தைக் கேள்வியுற்றாலோ மகிழ்ச்சியுறுகிறான்." (றஸன்)
அனைத்து வகையான பதுக்கல்களும் ஹராமானவையல்ல. பதுக்கல்
ஹராமானதாகக் கொள்ளப்படுவதற்கு அறிஞர்கள் மூன்று நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர். அவையாவன:
1. பதுக்கிய பொருள் பதுக்கியவனினதும் அவனது பராமரிப்பிலிருப் போரினதும் ஒருவருடத்தேவைக்கும் போதுமான அளவை விடவும் அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு ஒருவருடத் துக்குத் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தேவையான பொருளைச் சேமித்து வைக்க அனுமதியுண்டு.
2. குறித்த பொருளின்பால் மக்களுக்குள்ள கடுந்தேவையைக் கருத்திற் கொண்டு, கூடிய விலையில் விற்க வேண்டுமென்ற நோக்கில், பொருளின் விலையேற்றத்தை எதிர்பார்த்துப் பதுக்கி இருத்தல் வேண்டும்.
3. பதுக்கப்பட்ட பொருளின் பால் மக்களுக்குத் தேவையுள்ள வேளையில், பதுக்கி இருத்தல் வேண்டும். மாறாக பல வியாபாரிகளிடம் குறித்த பொருள் இருந்து, மக்களுக்கு அதன் பால் தேவையில்லாதபோது

Page 43
82 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அதனைத் தேக்கி வைப்பதும், சேமித்து வைப்பதும் தடை செய்யப்பட்ட பதுக்கல் அல்ல. ஏனெனில், இதனால் மனிதருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படுவதில்லை.
எத்தகைய பொருட்களைப் பதுக்குவது கூடாது என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
சில அறிஞர்களின் கருத்துப்படி ஒருவர் தனது சொந்தத் தானியங்களையோ உற்பத்திகளையோ தேக்கி வைப்பது பிழையானதல்ல. இமாம்களான ஷாபிஈ, அஹ்மத் ஆகிய இருவரினதும் அபிப்பிராயப்படி அடிப்படையான அத்தியாவசிய உணவுப் பண்டங்களில் மாத்திரமே பதுக்கல் ஹராமானதாகக் கொள்ளப்படும்.
மேலும் பல அறிஞர்கள் அனைத்துப் பண்டங்களிலும் (மேலே கண்ட நிபந்தனைகள் காணப்படுமிடத்து) பதுக்கல் செய்வது ஹராமான தாகும் எனக் கூறுகின்றனர்.
சேமிப்பு வைப்புக்கான வட்டி
கேள்வி நடைமுறையில் உள்ள, வட்டியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில் சேமிப்புகளுக்காக வழங்கப்படும் வட்டிப்பணத்திற்குரிய தீர்ப்பு என்ன? அவற்றை நற்கருமங்களுக் காகச் செலவு செய்ய முடியுமா? நற்கருமங்கள் எனக் குறிப்பிடப் படுபவை எவை? விளக்கம் தேவை?
பதில்: வங்கிகள் தமது வாடிக்கையாளரின் வைப்புகளுக்கு வழங்கும் வட்டியும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ள வட்டியைச் சார்ந்ததாகும். எனவே, அவ்வட்டித் தொகை யாருக்கு வழங்கப்படுகின்றதோ, அவருக்கு அது ஹலாலாகாது; அதனை அவர் பெற்றுக் கொள்ள முடியாது; அது அவருக்குரியதல்ல; அதே நேரத்தில் அத்தொகை வங்கிக்குரியதுமல்ல.
எனவே, இத்தகைய வட்டிப்பணத்தை தர்மம் செய்து விடுவதே சரியானது. சில அறிஞர்கள் இப்பணத்தை தர்மம் செய்யும் நோக்கத்துடன் கூடப் பெறக்கூடாது என்றும், அதனை அப்படியே வங்கியிலேயே விட்டு விட வேண்டும் அல்லது எடுத்து எறிந்து விட வேண்டும் என்றும் கூறுகின்றனர். ቆ
ஆனால், இக்கருத்து (பேணுதலின் அடிப்படையில் பிறந்த ஒன்றாக இருப்பினும்) ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இக்கருத்து இஸ்லாத்தின் சில அடிப்படைகளுடன் மோதுவதாக உள்ளது. செல்வத்தை எவரும்

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள். 83
பயன்படுத்தாது வீணாக்குவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
ஆகவே, வட்டிப்பணம் உள்ளவர், அது அவருக்கு சொந்தமற்றது என்ற வகையில், அதனை ஏழை எளியவர்களுக்கோ அல்லது ஒரு நற்பணிக்கோ தர்மம் செய்து விட வேண்டும். முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் எத்தகைய ஒரு நலனுக்காகவும் அதனைச் செலவு செய்ய முடியும் என்பதே யூஸ’ப் அல்கர்ளாவி போன்ற நவீன அறிஞர் களினதும் “மஜ்மஉல் பிக்ஹிய்யில் இஸ்லாமி” போன்ற இஸ்லாமிய சட்ட அமைப்புக்களினதும் கருத்தாகும். வட்டிப்பணம் அதனைப் பெற்ற வருக்கோ அல்லது வங்கிக்கோ சொந்தமானதல்ல என்ற காரணத்தினால், அது பொதுப்பணமாகக் கொள்ளப்படும். ஹராமான எல்லாச் செல்வங் களுக்கும் இதுவே சட்டமாகும்.
ஒருவர் தனது வைப்புக்குக் கிடைக்கும் வட்டிப்பணத்தை ஹராம் என்ற வகையில் பெறாது, வங்கியில் விட்டு வைப்பது கூடாது. இதனால் வட்டியை அடிப்படையாகக் கொண்ட அந்த வங்கி பலமடையவோ அல்லது அது அப்பணத்தை இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத் தவோ இடம் ஏற்படுகிறது.
வாடகைக் கொடுப்பனவு பற்றிய தீர்ப்பு
கேள்வி: தற்போது நடைமுறையிலுள்ள வியாபார முறைகளில் "வாடகைக் கொள்வனவும்" ஒன்றாகும். இம்முறைப்படி பணம் தவணையடிப் படையில் செலுத்தப்படுகிறது. பணம் முழுவதையும் செலுத்தி முடிக்கும் போது பொருளை வாங்கும் தினத்திலிருந்த விலையை விட ஒரு தொகை மேலதிகமாகவே அறவிடப்படு கிறது. இம்மேலதிகத் தொகை வட்டியாகுமா? குறித்த வாடகைக் கொள்வனவு முறை ஷரிஅத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்: நீங்கள் குறிப்பிடும் வாடகைக் கொள்வனவு முறையைச் சில அறிஞர்கள் வட்டியெனக் கருதி, ஹராமான கொடுக்கல் வாங்கல் பட்டியலில் அடக்குகின்றனர். ஆயினும், பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் இதனை அனுமதித்துள்ளனர். இவ்வமைப்பை ஹராமெனக் கூறும் எந்தச் சட்ட வசனமும் இல்லாதிருப்பதனாலும், இது எல்லா வகையிலும் வட்டியை ஒத்திராததாலும் இவ்வியாபார முறையை அனுமதிக்கலாம் என இவர்கள் கருதுகின்றனர். ஷாபிய்யாக்ககள், ஹனபிய்யாக்கள் உட்பட பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்தை ஆதரிப்பதாக இமாம் அஷஷெளக்கானி குறிப்பிடுகிறார். ஆயினும் ஒரு

Page 44
84 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பொருளை உடன் பணத்திற்கு வாங்கும்போது அதற்குரிய விலைக்கும் தவணைக் கட்டணத்தினடிப்படையில் வாங்கும் போது அதற்குக் குறிக்கப்படும் விலைக்குமிடையில் மித மிஞ்சிய, நியாயமற்ற வித்தியாசம் இருத்தல் கூடாது என்பதனைக் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
காபிர்களுடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு
கேள்வி. பிறசமூகத்தவருடனான முஸ்லிம்களின் விவாகத் தொடர்பு பற்றிய
ஒரு தெளிவுரையை நான் எதிர்பார்க்கிறேன்.
பதில்: பிறமதத்தவர்கள் எனும் வட்டத்தில் இறைவனுக்கு இணை வைத்து வணங்கும் சிலை வணங்கிகள், விக்கிரக ஆராதனைக் காரர்கள், வேதத்தை உடையவர்கள் என அழைக்கப்படும் யூத, கிறிஸ்தவர்கள், இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய “முர்தத்"கள் உட்பட நாஸ்திகர்கள், மதநம்பிக்கையற்ற கம்யூனிஸ் வாதிகள் போன்றோரும் அடங்குவர்.
ஒரு முஸ்லிம் பெண் மேற்குறிப்பிட்ட எப்பிரிவைச் சேர்ந்த ஆணையும் மணமுடிப்பது ஹராமாகும். இது இமாம்களினதும் இஸ்லாமிய அறிஞர்களினதும் "இஜ்மா.." என வழங்கப்படும் ஏகோபித்த முடிவாகும். கீழ்வரும் அல்குர்அன் வசனம் இம்முடிவுக்கு ஆதாரமாகக் கொள்ளப்படு கிறது.
"ஈமான் கொண்டோர்களே! மு.மினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள். அல்லாஹற் அவர்களது ஈரானை நன்கறிந்தவன். எனவே அவர்கள் மு. மினான பெண்கள் என நீங்கள் அறிந்தால் காபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில் (+1ான் கொண்டுள்ள) இப்பெண்கள் அவர்களுக்கு மனைவியராக அனுமதிக்கப்பட் வர்களல்லர். அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக) அனுமதிக்கப்பட்டவர்களுமல்லர்.” (60:10) மேலும் கீழ் வரும் வசனமும் இக்கருத்துக்கு ஆதாரமாகக் கொள்ளப்படு கின்றது: "அவ்வாறே இணை வைக்கும் ஆண்களுக்கு அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (மு.மினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்" (2:221)
முஸ்லிம் ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் “முஷரிக்" ஆன பெண்களைத் திருமணம் செய்வது ஹறாமாகும். "அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்” (2:221)

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள்.
அவ்வாறே ஒரு முஸ்லிம் ஆண், ஒரு நாஸ்திகப் பெண்ணையோ, ற் நம்பிக்கை அற்ற கம்யூனிஸம் போன்ற கொள்கைகளை ஏறுfin பெண்ணையோ மணமுடிப்பது ஹறாமாகும்.
ஆயினும் முஸ்லிம் ஆண்களுக்கு வேதத்தை உடையர்வர்களான யூத, கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரமாக உள்ளது:
"மு.மின்களான கற்புடைய பெண்களையும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்பட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களையும் விலைப் பெண்களாகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக்கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து மணமுடித்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.” (5:5)
"ஆரம்ப காலத்தவர்களில் யூத கிறிஸ்தவப் பெண்களை மணம் செய்வதை ஹறாம் என்று எவரும் கூறியமைக்கு தக்க ஆதாரம் எதுவும் கிடையாது" என இமாம் இப்னுல் முன்திர் குறிப்பிடுகின்றார்.
இப்னு உமர் (றலி) அவர்கள் இவ்வாறு திருமணம் முடிப்பதை ஹறாம் எனக் கண்டிப்பாக கூறியிருக்கிறர்கள். ஆயினும் பல ஸஹபாக் களும் பல தாபிஈன்களும் ஹறாமாக மாட்டாது என்ற கருத்தையே கொண்டுள்ளனர். உஸ்மான் (றழி), தல்ஹா (றழி), இப்னு அப்பாஸ் (றழி), ஜாபிர் (றழி), ஹ"தைபா (றழி) போன்றோர் இக்கருத்துக்கு ஆதரவானவர்களாவர். தாபியின்களில் ஸஈத் இப்னுல் முஸையிப் (றஹற்), ஸஈத் இப்னு ஜுபைர் (றஹற்), அல்ஹஸன் (றஹற்), முஜாஹித் (றஹற்), தாவூஸ் (றஹற்), இக்ரிமா (றஹற்), அஷ்ஷ..பீ (றஹற்), அழ்ழஹற்ஹாக் (றஹற்) போன்றோர் இக்கருத்துக்கு ஆதாரவானவர்களாவர்.
இமாம் ஷாபிஈயும் யூத, கிறிஸ்தவப் பெண்களை மண முடிப்பது ஆகும் என்ற கருத்தையே கொண்டிருக்கிறார். இமாம் நவவி அவர்களது கருத்தும் இதுவே.
இப்னு உமர் (றழி) அவர்கள் வேதத்தை உடைய யூத, கிறிஸ்த வர்களை முஷ்ரிக்குகள் எனக்கருதியே தனது கருத்தைத் தெரிவித் திருக்கிறார். ஆயினும் அல்குர்ஆன் இவ்விரு பிரிவினரையும் பிரித்துக் குறிப்பிட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
““வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார் களோ, அவர்கள், தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்களல்லர்." (98:1)

Page 45
$36 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
யூத, கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் முடிப்பதை ஆதரிக்கும் அறிஞர்களும் அதனை "மக்றுாஹற்” எனக் குறிப்பிடுகின்றனர். அதிலும் "தாருல்குப்ர்" என அழைக்கப்படும் காபிர்களின் நாட்டில் வாழும் இத்தகைய பெண்ணைத் திருமணம் முடிப்பதை, கடுமையான மக்ரூஹற் என்று சிலரும், ஹறாம் என வேறு சிலரும் கருதுகின்றனர். இப்னு அப்பாஸ் (றழி) ஹறாம் என்ற கருத்தையே கொண்டுள்ளார். தனது கருத்துக்கு ஆதாரமாக கீழ்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் காட்டியுள்ளார்:
"வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹற்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனது தூதரும் ஹறாம் ஆக்கியவற்றை ஹறாம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் (தம்) கைகளால் கீழ்படிதலுடன் "ஜிஸ்யா' கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்” (9:20). இக்கருத்தை இமாம் இப்றாஹிம் அந்நகFயும்
ஆதரிக்கின்றார் என அல்குர்துபி குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும் கருத்திற்கொண்டு குர்ஆனினதும் ஹதீஸினதும் வெளிச்சத்தில் ஒரு யூத அல்லது கிறிஸ்தவப் பெண்ணை மணமுடிக்க விரும்பும் ஒரு முஸ்லிம் ஆண் கருத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களையும் நிபந்தனைகளையும் கலாநிதி யூஸப் கர்ளாவி கீழ்வருமாறு விளக்குகின்றார்.
1. இஸ்லாம், வேதத்தை உடையவர்களின் பெண்களை மாத்திரமே திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. அதாவது, அடிப்படையில் ஓர் வேதத்தைக் கொண்டுள்ள ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்க அனுமதிக்கின்றது. ஒரு தின் இல்லாத, ஒரு தீனை ஏற்றுக்கொள்ளாத நாஸ்திக, கம்யூனிஸ பெண் போன்றவர்களைப் பொறுத்தவரையிலும் இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாத மார்க்கங்களான பஹாயிசம், நுஸைரிய்யா போன்ற கொள்கைகளை ஏற்ற பெண்களையும் திருமணம் முடிப்பது முற்றாகவே விலக்கப்பட்டதாகும். இத்தகைய பெண் அல்லது அவளது குடும்பத்தவர்கள் அவளை கிறிஸ்தவர்களிலோ அல்லது யூதர்களிலோ ஒருவராகக் கருதினாலும் சரியே.
2. மேலும் இஸ்லாம், கற்புடைய சுதந்திரமான, வேதத்தை உடைய பெண்ணை மணமுடிப்பதையே அனுமதிக்கிறது. எந்தவொரு ஆணுக்கும் தன் உடலை விற்கும் பெண்ணை திருமணம் செய்ய அது அனுமதிப்ப தில்லை.
3. எந்த சமூகம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரானதாக இருக்கின்றதோ அத்தகைய சமூகத்தைச் சேர்ந்த வேதத்தை உடைய

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள். ዘ?
பெண்ணைத் திருமணம் செய்வதும் அனுமதிக்கப்பட்டதல்ல. கரMெMn, திருமணம் என்பது பெண்ணின் குடும்பத்துடன் கொளி மின்ற தொடர்பாகும்; அவர்கள் மீது காட்டும் அன்புமாகும். அவ்வாறே அlென் தனது மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் விசுவாசமாக இருப்பாள் கன் வகையில் அவள் முஸ்லிம்களுக்கெதிராக தம் மதத்தினரு உதவியாக இருக்க மாட்டாள் என்பதற்கு எத்தகைய உத்தரவாமும் கிடையாது. இவ்வகையில் இன்றைய இஸ்ரேலியப் பெண்ணை மணப்பது ஆகாது.
4. மார்க்கப்பற்றுள்ள, தனது தீனில் அக்கறையுள்ள முஸ்லிம் பெண்மணி, வெறுமனே தனது பெற்றோரிடமிருந்து இஸ்லாத்தை வாரிசாகப் பெற்ற பெண்மணியைவிடச் சிறந்தவள். றஸஉலுல்லாஹற் (ஸல்) அதனை எமக்குக் கூறுகின்றார்கள்: “மார்க்கமுள்ள பெண்ணை அடைந்து கொள்வீராக, இன்றேல் அழிந்துவிடுவீர்!” (ஆதாரம்:புகாரி), இவ்வகையில் ஒரு முஸ்லிம் பெண் எவ்வகையிலும் எந்த ஒரு வேதத்தை உடைய பெண்ணைவிடவும் சிறந்தவளே.
5. மேலும் ஒரு முஸ்லிம் இத்தகைய ஒரு மனைவியினால் தனது
குழந்தைகளின் அகீதாவுக்குக் குந்தகமோ அல்லது வழிகாட்டலில் குழப்பமோ ஏற்படும் எனப்பயந்தால் தனது தீனைப் பாதுகாத்துக்கொள்ள இவ்வபாயத்தை தவிர்ந்து கொள்ள முயல்வது வாஜிபாகும். குறிப்பாக மனைவியின் சூழலில் - அவளது சமூகத்தில் வாழுபவருக்கு இன்று இத்தகைய நிலை ஏற்படும்.
6. முஸ்லிம்கள் எண்ணிக்கையிற் குறைவாக வாழுகின்ற ஒரு பிரதேசத்தில் அங்குள்ள ஆண்கள் முஸ்லிம்களல்லாத பெண்களை மணப்பது ஹறாமாக்கப்பட வேண்டும் என்பதே பலமான கருத்தாகும். முஸ்லிம் பெண்களுக்கு முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் முடிப்பது ஆகாது என்றிருக்கும் போது இத்தகைய ஒரு சூழலில் முஸ்லிம் ஆண்கள் முஸ்லிமல்லாத எவரையும் திருமணம் செய்வது அங்குள்ள முஸ்லிம் பெண்களை அல்லது அவர்களில் பெருந்தொகையினரை அழிக்கும் செயலாகும். இதனால் முஸ்லிம் சமூகத்திற்குப் பாரிய அளவில் தீமை விளையும். இவ்வனுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இத்தீங்கைத் தவிர்க்க முடியும்.
வேதத்தை உடைய பெண்களைத் திருமணம் முடிக்க அனுமதித்தமைக்கான காரணங்கள்:
இத்திருமணத்தின் மூலமாக வேதத்தை உடையர்வகளுக்கும் இஸ்லாத்துக்குமிடையிலுள்ள தடைகள் நீங்க இடமுண்டு. திருமணத்தினால்

Page 46
88 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
தொடர்புகளும் பரஸ்பர குடும்ப உறவுகளும் ஏற்படும். இதனால், இஸ்லாத்தைப் படிப்பதற்கும் அதன் கொள்கைகளை, அடிப்படைகளை விளங்குவதற்கும் வழி பிறக்கும். இது அவர்களையும் இஸ்லாத்தில் இணையச் செய்வதற்கு வழியாகும். அவர்கள் ஓர் இறை வேதத்தை ஏற்றோர் என்ற வகையிலும் பல கொள்கைகளில் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒற்றுமை காணப்படுகின்றதென்ற வகையிலும் அவர்கள் இத்தகைய ஓர் உறவினால் இஸ்லாத்தை நெருங்குவதற்குக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு என இஸ்லாம் கருதுவதனாற்றான் இத்தகைய திருமணத்தை அனுமதித்துள்ளது.
இதே நேரத்தில், ஒரு முஸ்லிம் பெண் வேதத்தையுடைய ஓர் ஆணை திருமணம் முடிப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. எப்பொழுதும் கணவன், மனைவி மீது ஆதிக்கம் செலுத்துபவனாவான். அவனது கட்டளைகளை ஏற்பது, அவனுக்குக் கட்டுப்படுவது அவளது கடமையாகும். ஒரு முஸ்லிமை ஒரு காபிர் கட்டுப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிப்ப தில்லை. இதனால்தான் இஸ்லாம் இத்தகைய திருமணத்தை அனுமதிப்ப தில்லை. மேலும் காபிரான அந்தக் கணவன் தனது முஸ்லிம் மனைவியின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. மாறாக, அதனைப் பொய்ப் படுத்துவான். இத்தகைய விரிந்த முரண்பாடோடு குடும்ப வாழ்க்கை நடாத்துவது அசாத்தியமானதாகும். இதே நேரத்தில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு வேதத்தை உடைய பெண்ணைத் திருமணம் முடித்தால் அவன் அவளது மார்க்கத்தையும் அங்கீகரிப்பான்; அவளது வேதத்தையும் நபியையும் விசுவாசிப்பான்; தனது ஈமானின் ஒரு பகுதியாக அதைக் கொள்வான்.
ரெஜிஸ்ட்ரேஷனும், நிகாஹிம்
கேள்வி: “ரெஜிஸ்ட்ரேஷன்" செய்யப்பட்ட தம்பதிகள் திருமண வைபவத்திற்கு முன் திருமண தம்பதிகள் போன்று வாழ முடியுமா? அவர்களது "ரெஜிஸ்ட்ரேஷன் "தினத்தன்றே சொல்லப்பட்ட "ஈஜாப்" "கபூல்" என்பதற்கான தீர்ப்பு என்ன?
பதில்: "ஈஜாப்", "கபூல்" நிகழ்வதற்கு முன்னர் நீங்கள் குறிப்பிடும் ரெஜிஸ்ட்ரேஷனை மாத்திரம் செய்து கொண்ட தம்பதி திருமணத் தம்பதிகள் போன்று பழக முடியாது. ஆனால், "ரெஜிஸ்ட்ரேஷ னுடன் "ஈஜாப், கபூல்" நிகழ்ந்திருப்பின் குறித்த தம்பதிகளுக்கு கணவன், மனைவியாக வாழ்வதற்குப் பூரண அனுமதியுண்டு. இஸ்லாத்தில் திருமணம் என்பது "ஈஜாப், கபூலை”யே குறிக்கும். திருமணம் நிறைவேற நீங்கள் கூறும் திருமண வைபவம் நடைபெற வேண்டியதில்லை. அவ்வாறே குறித்த

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள்.
“ரெஜிஸ்ட்ரேஷன்” அரசாங்கத்தின் தேவைக்கான ஒரு Mவே யன்றி அது இஸ்லாமிய திருமணத்துடன் தொடர்பான ஓலைல.
ஒருவர் தான் திருமணமாகவிருக்கும் பெண்ணுடன் "ஈஜாப், கபூல்" நிகழ்வதற்கு முன்னர் தனிமையிலிருப்பதும் கூடிப் பழகுவதும் ஹராமாகு மென்பது குறிப்பிடத்தக்கது.
மஹரும் சீதனமும்
கேள்வி: பெண்ணிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைச் சீதனமாகப்
பெற்று, ஒரு சிறு தொகையை மஹராகக் கொடுத்து நிகழும் திருமணம் இஸ்லாத்தில் செல்லுபடியாகுமா?
பதில்: சீதனம் பெறும் வழக்கம் பற்றி ஹிஜ்ரி 1404 றஜப் மாதம் பிறை 12ல் கூடி ஆராய்ந்த இஸ்லாமிய சட்டமன்றம் மேற்படி வழக்கம் குர்ஆன், ஸான்னா, இஜ்மா ஆகிய சட்ட மூலாதாரங் களுக்கு முரணானதும், காலாகாலமாக இருந்து வரும் முஸ்லிம் களின் வழிமுறைக்கு மாறானதும், மோசமான ஒரு பாவமும், பித்அத்துமாகுமென முடிவெடுத்தது.
மேற்படி வழக்கத்தை ஒழிப்பதற்காக உலமாக்களுட்பட அனைவரும் போராட வேண்டுமெனவும் இம்மன்றம் வேண்டிக்கொண்டுள்ளது. ஆயினும், சீதனம் பெற்று நடந்த திருமணத்தைப் பொறுத்தவரையில் அது ஷரீஅத்திற்கு முரணான ஒரு விடயத்துடன் தொடர்புற்றிருப்பினும், திருமணம் செல்லுபடியானதாகவே கொள்ளப்படும் எனும் விளக்கத்தையும் மன்றம் கொடுத்துள்ளது.
மஹற்ரமிகளின் விபரம்
கேள்வி: சிற்றப்பா, சிற்றன்னை, பெரியப்பா, பெரியம்மா ஆகியோரின் பெண்பிள்ளைகளோடு மஹற்ரமிய்யத்தான தொடர்புகள் வைத்துக் கொள்ளத் தடையுண்டா? அவர்களைத் திரையின்றி பார்ப்பது கூடாதா? திருமணம் செய்ய முடியாதா? விளக்கம் தேவை.
பதில்: ஒருவரின் பெரியம்மா, பெரியப்பா, சிற்றப்பா, சிற்றன்னை, ஆகியோரின் பிள்ளைகள் அவருக்கு மஹற்ரமிய்யத் ஆனவர்கள் அல்ல. எனவே, குறித்த நபர்களைத் திரையின்றிப் பார்ப்பதற்கு அனுமதியில்லை; திருமணம் செய்து கொள்ளத் தடையுமில்லை.
கீழ்வரும் குர்ஆன் வசனங்கள் மஹற்ரமிகளை வரையறுத்துக்

Page 47
90 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
கூறுகின்றன. அவற்றில் நீங்கள் குறிப்பிடுவோர் இடம் பெறாமையை அவதானிக்கலாம்.
"முன்னர் கடந்து போன சம்பவங்களைத் தவிர, நீங்கள் உங்கள் தந்தைகள் மணம் செய்து கொண்ட பெண்களில் எவரையும் மணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கத் தக்கதாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது."
"உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்விகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தகப்பனின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்விகளும், உங்கள் சகோதரியின் புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் செவிலித் தாய்மார்களும், உங்கள் பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் வீடு கூடிய மனைவிக்கு முந்திய கணவனிடத்துப் பிறந்து, உங்களிடம் வளர்ந்து வரும் (மனைவியின்) மகளையும், (நீங்கள் திருமணம் செய்வது கூடாது) ஆனால், அவளுடன் வீடு கூடாதிருந்தால் (அவளை நீக்கி விட்டு அவளுக்கு முந்திய கணவனிடத்துப் பிறந்த மகளைத் திருமணம் செய்து கொள்வது) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் முடிக்கலாகாது) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் (விலக்கப்பட்டுள்ளது) இதற்கு முன்னர் கடந்து விட்டவைகளைத் தவிர; நிச்சயமாக அல்லாஹற் மன்னிப்போனும் கிருபையுடையவனுமாக இருக்கின்றான்!” (4:22, 23)
குடும்பக் கட்டுப்பாடும் கருச்சிதைவும்
கேள்வி: குடும்ப கட்டுப்பாடு, கருச்சிதைவு போன்றன பற்றிய இஸ்லாமிய
வரையறைகளை விளக்குவீர்களா?
பதில்: மனித இனம் நிலைபெற வேண்டுமென்பது திருமண அமைப்பின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாகும். இனப்பெருக்கத்தின் மூலமே மனித இனம் நிலைக்க முடியும். இஸ்லாம் இனப்பெருக்கத்தை விரும்பி உற்சாகப்படுத்துகின்றது. ஆயினும், ஏற்புடைய நியாயமான காரணங்களுகாகக் குடும்ப கட்டுப்பாட்டிற்கு அனுமதி வழங்குகின்றது. நபிகளாரின் காலத்தில் குடும்பக்கட்டுப்பாட்டிற்குரிய வழிமுறையாக அமைந்தது "அஸ்ல்" எனும் செயற்பாடாகும். "அஸ்ல்" என்பது ஆண் தனது

கொடுக்கல், வாங்கல், சமுக உறவுகள். 91
இந்திரியத்தைப் பெண்ணின் கர்ப்பவறையைப் போய் அடைய விடாது தடுத்துக் கொள்வதைக் குறிக்கும். நபித்தோழர்கள் இம்முறையைக் கையாள்வோராய் இருந்துள்ளனர். "அல்குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த வேளையில் நாங்கள் "அஸ்ல்" செய்வோராய் இருந்தோம்." என ஜாபிர் (ரலி) கூறியுள்ளார். (ஆதாரம் - புஹாரி, முஸ்லிம்)
ஒருபோது ஒருவர் நபிகளாரிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு பெண் இருக்கிறாள். நான் அவளிடத்தில் அஸ்ல் செய்கின்றேன். அவள் கர்ப்பமுறுவதை நான் விரும்பவில்லை. ஆயினும், யூதர்களோ அஸ்ல் என்பது சிறிய கொலையாகும் என்கின்றனர்” என்றார். இதனைச் செவிமடுத்த நபியவர்கள் "யூதர்கள் பொய் கூறுகின்றனர். அல்லாஹற் படைக்க நாடினால் அதனை உம்மால் தடுக்க முடியாது." (திர்மிதி, நஸாயி, இப்னு மாஜா) எனக் கூறினார்கள். (அதாவது சிலவேளை கணவன் அஸ்ல் செய்யினும், அவன் அறியாதவாறு ஒரு துளி இந்திரியமாவது தவறி, பெண்ணின் கர்ப்பத்தையடைந்து, அவள் கர்ப்பம் தரிக்க இடமுண்டு என்பதாகும்) "அல்லாஹற்வின் தூதர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் "அஸ்ல்” செய்வோராயிருந்தோம். இவ்விடயம் நபிகளாருக்கு எத்தியபோது அவர்கள் கூடாது என்று தடை செய்யவில்லை" என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய மேலும் ஓர் அறிவிப்பு ஸஹிஹற் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.
மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் உமர் (ரலி) அவர்களது அவையில் "அஸ்ல்" பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டது. அங்கு வீற்றிருந்த ஒருவர், "அது சிறிய கொலை என நம்பப்படுகிறது" என்றார். அவ்வேளை அங்கிருந்த அலி (ரலி), "அதுகொலையல்ல; அது கொலையாக அமைய (குறித்த கரு) ஏழு கட்டங்களைக் கடந்திருக்க வேண்டும். அவையாவன: களிமண் சத்து, இந்திரியத்துளி, இரத்தக்கட்டி, எலும்புத்தொகுதி, சதையமைப்பு, வேறு (முழு) உருவம்” என்றார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) "அலியே, உண்மை சொன்னிர். அல்லாஹற் உமக்கு நீண்ட ஆயுளை அளிப்பானாக" எனக் கூறினார்.
குடும்பக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்ற நியானமான காரணங்கள்:
1. தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால்,குடும்பக்கட்டுபாட்டிற்கு அனுமதியுண்டு. இக்ருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருவசனங்களை அறிஞர்கள் குறிப்பிடுவர். அவையாவன:

Page 48
92 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
“உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்” (2:195)
"மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.” (4:29)
2. லெளகீக ரீதியில் அமைந்த சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்; அது பின்னர் மார்க்க விவகாரங்களையும் பாதிக்கும்; தனது குழந்தை களுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்டியேற்படுமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.
"அல்லாஹற் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பு வதில்லை.”(5:6)
3. தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு. உஸாமா (ரலி) அறிவிக்கின்றார்: “ஒருமுறை ஒருவர் ரஸல் (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹற்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்" என்றார். அதற்கு நபிகளார் "ஏன் அப்படிச் செய்கின்றீர்?" என்று வினவ அதற்கு அம்மனிதர் “நான் எனது குழந்தையையிட்டு அல்லது குழந்தைகளை யிட்டு அஞ்சுகின்றேன்" என்றார். அதற்கு நபிகளார் "அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்" (அதாவது இத்தகைய தனிமனிதர்களின் நிலைகள் முழுச் சமுகத்தையும் பாதிக்காது, அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்"
4. பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.
பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன்
(கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். (ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற் கொள்க.)

கொடுக்கல், வாங்கல், சமூக உறவுகள்.
மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்கா', 1, 14 கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கரு) . .ாடி அது அனுமதிப்பதில்லை. அக்கருவானது ஹராமான முறையில் தl , l
பினும் சரியே. ஒரு கருவை அதற்குரூஹற்-ஊதப்பட்டதன் பின்னர் சிதை து ஹராமான மாபெரும் குற்றமாகும்.
ஆயினும், குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கு ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவரின் இரு தீங்குகளில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்ய வேண்டியிருப் பின், அவற்றில் குறைந்ததைத் தெரிவு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கு அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது அறிவுடைமையும் ஆகாது. மேலும், சிசுவானது உருக்குலைந்ததாக இருந்து, பிறந்து வாழும் பாக்கியத்தைப் பெறினும், பெரும் அவஸ்தையுடனேயே வாழும் நிலைக்கு உட்படும் என்பது விஞ்ஞான பூர்வமாக உறுதியாகக் கண்டறிய முடியும் நிலையிலும் கருவைச் சிதைக்க ஷரீஅத்தில் இடமுண்டு.
تفن،
தலாக்
கேள்வி: இஸ்லாமிய ஷரீஆவின்படி ஒருவரது மனைவியை அவர் "தலாக்" சொல்ல நேரிட்டால், அவர் விரும்பிய நேரத்தில் தலாக் சொல்ல முடியுமா? அல்லது சொல்லக் கூடாத சந்தர்ப்பங்களும் உண்டா? விரிவான விளக்கம் தேவை.
பதில்: கீழ்வரும் சந்தர்ப்பங்களில் ஒருவர் தனது மனைவியைத் "தலாக்"
சொல்லவது ஹராமானதாகும்.
1. மனைவி "ஹைளு" டனோ, "நிபாஸ"டனோ இருக்கும் நிலை. 2. குறித்த இரண்டிலிருந்தும் சுத்தமாக இருப்பினும், அச்சுத்தமான காலத்தில் உடலுறவு கொண்ட நிலை.
மேலே குறிப்பிட்ட இரு சந்தர்ப்பங்களிலும் தனது மனைவியைத் தலாக் கூறுபவர் பாவியாவார்.
குறித்த சந்தர்ப்பங்களில் கூறப்படும் தலாக் "தலாப் பிதஈ” (ஸ"ன்னத்தான அமைப்புக்கு முரணான "தலாக்" என வழங்கப்படுகின்றது) ஒரேவார்த்தையில் மூன்று "தலாக்" கையும் கூறுதல், ஒரே சந்தர்ப்பத்தில்

Page 49
94 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
மூன்று முறைகளாக "தலாக்” கூறுதல் ஆகிய இரண்டும் தலாக் பிதஈ, ஹராமானதாக இருப்பினும் அது நிறைவேறும், செல்லுபடியாகும் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். "தலாக்" கூறப்படும் பெண்களுக் கேற்படும் சிரமங்களைத் தவிர்ப்பது குறித்த நிலைகளில் "தலாக்” கூறுதல் விலக்கப்பட்டுள்ளமைக்கான ஒரு காரணமாகும்.
s 99 GG
"ஹைள்", "நிபாஸ்" ஆகிய நிலைகளில் கணவனுக்கு மனைவியுடன் தொடர்பு கொள்ளும் வாய்புக் கிடைக்காமையினால், அவன் உணர்ச்சி வசப்பட்டு அவள்மீது அதிருப்தியுற்றுத் "தலாக்” கூற முற்படலாம். எனவே, சுத்தமடையும் வரை எதிர்பார்த்திருந்து இறுதித் தீர்மானத்திற்கு வருவது நல்லதல்லவா? மேலும், சுத்தமான நிலையில் உடலுறவு கொண்டிருந்தால், சிலவேளை அவள் கருவுற்றிருக்க இடமுண்டு. அவசரப்பட்டுத் "தலாக்" சொல்லாமல் தாமதிப்பதனால், அவள் கருவுற்றிப்பதை அறிந்து, கணவனின் மனம் மாறவும் இடமுண்டல்லவா? இத்தகைய விடயங்களைக் கருத்திற் கொண்டும் மேலே குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் "தலாக்" கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
செல்லுபடியற்ற வளிய்யத்
கேள்வி: ஒருவர் தான் வபாத்தாக முன்னர் தன் மனைவியிடம் "இத்தா" இருக்க வேண்டாம் என்று "வஸிய்யத்" செய்திருந்தால் அப்பெண் "இத்தா” இருக்க வேண்டுமா?
பதில்: கணவனின் மரணத்தை தொடர்ந்து மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்கள் “இத்தா” அனுஷ்டிக்க வேண்டும் என்பது இறை கட்டளையாகும். இதை யாவரும் அறிவர். இத்தகைய ஒரு சன்மார்க்கக் கடமையை விட்டுவிடுமாறு வளமிய்யத் செய்வதோ அல்லது பணிப்பதோ பாவமானதாக அமைவதுடன், செல்லு படியற்றதுமாகும். இது போன்ற வஸிய்யத்துக்களையோ வேண்டு கோள்களையோ நிறைவேற்றுவது கூடாது.
"அல்லாஹற்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் சிருஷ்டிகளுக்குக் கட்டுப்படலாகாது" என்பது ஹதீஸாகும்.
பாவமான காரியங்களைச் செய்யுமாறு தலைவரோ கணவரோ அல்லது பெற்றோரோ துண்ைடினால், அவர்களுக்குக் கட்டுப்படலாகாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய கட்டளைகளுக்கு மாறு செய்வது கடமையாகி விடுகின்றது.

அத்தியாயம் - 04
உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுது போக்குகள்
பிற சமுகத்தவர் வீட்டில் உணவருந்துதல்
கேள்வி நமது சமூகத்தினரிடத்தில், முஸ்லிம் அல்லாதார் வீட்டில் அவர்களின் பாத்திரங்களில் உணவு உட்கொள்ளவோ, குடிபானங்கள் அருந்தவோ கூடாது என்று ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. இது பற்றிய சரியான இஸ்லாமியத் தீர்ப்பை எதிர்பார்க்கின்றேன்.
பதில்: காபிர்கள் உபயோகிக்கும் பாத்திரங்களில் உணவு உட்கொள்
வதும் குடிபானங்கள் அருந்துவதும் பிழையானதல்ல.
"இணைவைப்பாளர்கள் (நஜீஸ்) அசுத்தமானவர்களாவர்” எனும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் கொண்டு காபிர்களின் பாத்திரங்களை முஸ்லிம்கள் உபயோகிப்பது கூடாது எனக் கூறப்படுகின்றது. ஆயினும்,

Page 50
96 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
குறித்த வசனம் முஷ்ரிக்குகள் அவர்களின் பிழையான நம்பிக்கைகளின் காரணமாக மானசீகமான அசுத்தத்தில் இருக்கின்றனர் எனும் பொருளைக் கொடுக்கின்றதே தவிர, அவர்களின் உடல், உபயோகிக்கும் பொருட்கள் அசுத்தமானவை எனும் கருத்தைக் கொடுக்காது என இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகின்றனர்.
இஸ்லாத்தின் ஆரம்பகாலம் முதலே காபிர்கள் முஸ்லிம்களுடன் கூடிக்கலந்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் தூதுக்குழுக்கள் ரஸலுல்லாஹற்வைச் சந்திப்பதற்காக பல தடவை மஸ்ஜதுன் நபவிக்கு வந்துள்ளனர். ஆயினும், அவர்கள் கடந்து சென்ற, அமர்ந்திருந்த இடங்களை அசுத்தம் என்ற வகையில் கழுவி விடுமாறு ரஸலுல்லாஹற் அவர்கள் பணித்ததாக எத்தகைய ஆதாரமும் காணக்கிடைக்கவில்லை.
*பியர்” (BEEP) அருந்துதல்
கேள்வி பியர் (Beer) அருந்துவது ஆகுமா? விளக்கம் தருக.
பதில்: பியர் பானம் மதுபான வகையில் அடங்குமா இல்லையா என்பதில் வேறுபட்ட கருத்து இருப்பினும், சர்வதேச போதை வஸ்து எதிர்ப்பு அமைப்பானது பியரையும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களின் பட்டியிலில் அடக்கியுள்ளது.
மேலும் "போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். அனைத்து மதுவும் ஹராமானதாகும். குறைந்த அளவிலோ கூடிய அளவிலோ போதையை ஊட்டக்கூடிய அனைத்தும் ஹராமானதாகும்.” என்பது அல்குர்ஆனினதும் பல நபி மொழிகளினதும் ஒளியில் பெறப்பட்ட சட்ட விதியாகும். இந்த வகையில் நோக்கும் போது, பியரில் குறைந்த பட்சம் சிறிதளவு மதுசாரமாவது உண்டு என்பதனை எவரும் மறுக்காத காரணத்தினால், அதனை அருந்த ஆகுமான ஒரு பானமாகக் கொள்ள முடியாதுள்ளது.
ஒரு குடிவகை சமூகத்தில் மதுபானமாகக் கருதப்படுவதில்லை என்பதனை வைத்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படமுடியாது. இதனையிட்டு நபியவர்கள் கீழ்வருமாறு எச்சரித்துள்ளார்கள்: "எனது சமூகத்தில் சிலர் மதுபானம் அருந்துவர். ஆனால் அதனை அவர்கள் வேறு பெயர் கொண்டு அழைப்போராயிருப்பர்." (ஆதாரம்- நஸாயி)
பியர் போன்ற பானங்களை நாட வேண்டிய தேவை இல்லாத அளவிற்கு மார்க்கம் அனுமதிக்கும் குளிர்பான வகைகள் (Sof drinks) இன்று தாராளமாகக் கிடைக்கக் கூடியனவாயுள்ளன.

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் በ7
ஹராமானவற்றை ஈடு செய்யும் விதத்தில், அவற்றுக்குட் பிரதிபி 1h பலவற்றை ஆகுமானதாக இறைவன் ஆக்கியுள்ளமை அவனின் தனிப்பெரும் அருளாகும்.
'கொலோன்’ பூசுதல்
கேள்வி: வாசனைத் திரவியங்களிலுள்ள "கொலோன்" வகைகளைப் பாவிக்கலாமா? அவை நஜீஸானவை எனக் கூறப்படுகிறது. விளக்கம் தேவை
பதில்: வாசனைத் திரவியங்களைப் பாவிப்பது ஒரு ஸ"ன்னத் என்பது யாவரும் அறிந்ததே. "உலகிலுள்ள மூன்று அம்சங்கள் எனக்கு விருப்பத்துக்குரியவையாக்கப்பட்டுள்ளன. அவையாவன: வாசனை, பெண்கள், தொழுகையிலுள்ள கண்குளிர்ச்சி" என்பது நபிமொழியாகும்.
ஆயினும், மதுசாரம் (Alcohol) கலந்த வாசனைப் பொருட்களை(Cologne) போன்றவற்றை-பாவிக்கலாமா என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. எகிப்து நாட்டின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பத்வாக்குழுவின் தீர்ப்பின்படி அத்தகைய வாசனைப் பொருட்களைப் பாவிப்பது ஆகுமானதுாகும்.
"மதுசாரம் (Sprit) நஜிஸானதல்ல, அந்த வகையில் மதுசாரம் கலக்கப்பட்ட பொருட்களும் அதனால் நஜீஸாகமாட்டா" என அக்குழு தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்னும் பல நவீன கால இஸ்லாமிய அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தாம் வீட்டிலிருக்கும் போது
மணம் பூசிக் கொள்ள முடியும். ஆனால் வாசனைகளைப் பூசிய நிலையில் வெளியே செல்வது ஹராமானதாகும்.
"ஒரு பெண் வாசனை பூசிக் கொண்டு அடுத்தவர்கள் நுகர வேண்டும் என்பதற்காக வெளிச்சென்றால் அவள் ஒரு விபசாரி ஆவாள்” என்கிறது ஒரு நபிமொழி.
உணவு, உடை ஒழுங்குகள்
கேள்வி: உணவு உட்கொள்ளும் போது பேண வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்கள் என்ன? இஸ்லாமிய உடையின் அமைப்பு யாது? தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கின்றோம்.

Page 51
98 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பதில்: இஸ்லாத்தில் உணவு உட்கொள்ளும் போது பேண வேண்டிய சில ஒழுக்கங்கள் உண்டு. ஆனால், இன்று இஸ்லாத்தின் பெயரில் அரபிகள் உணவு பரிமாறும் போது பேணுகின்ற சில பழக்க வழக்கங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிலர் நிலத்தில் அமர்ந்தே சாப்பிட வேண்டும் என்கின்றனர். உண்மையில், நிலத்தல் அமர்ந்து சாப்பிடுவது ஆகுமானதாக இருப்பது போன்று, கதிரையில் அமர்ந்து மேசையின் மீது உணவருந்துவதும் அனுமதிக்கப்பட்டதே. நிலத்தில் அமர்ந்து சாப்பிடுமாறு கட்டளை ஏதும் ஷரீஅத்தில் வந்ததாக இல்லை. மறுபுறம் மேசையின் மீது சாப்பிடுவதைத் தடை செய்யும் சட்ட வசனங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை.
மேலும், பலர் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் சாப்பிடவேண்டும் என்பதில்லை. ஒவ்வொருவரும் தனித்தனிப் பாத்திரத்தில் சாப்பிடலாம்.
"அனைவரும் ஒன்று சேர்ந்தோ தனித்தனியாகவோ உணவருந்தலாம்" (24:61)
எனக் கூறுகின்றது அல்குர்ஆன். பலருக்கும் உணவில் பங்கெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதே முக்கியமானதாகும்.
鞑 உண்மையில், பேண வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று யாதெனில், உணவுட்கொள்ள முன்னர் "பிஸ்மிலை" மொழிவதாகும். மேலும், வலது கையால் சாப்பிடுவதும் பிரதானமான ஒரு ஸான்னத்தாகும்.
"அல்லாஹற்வின் பெயரைக் கூறி உனது வலது கையினால் உணவருந்து; உனக்கு அண்மையில் உள்ளதில் இருந்து உட்கொள்" என்பது ஸஹரீஹான ஹதீஸாகும். இஸ்லாம் வலது கையைச் சுத்தமானவற்றைக் கையாள்வதற்கும், இடது கையை அசுத்தமானவற்றைக் கையாள்வதற்கும் அமைத்துள்ளது.
இங்கு குறிப்பிட வேண்டிய மேலும் ஒரு விடயம் உண்டு. அதாவது ஷரீஅத்தில் கையால் சாப்பிடவும் கரண்டியால் சாப்பிடவும் அனுமதி உண்டு. இது விடயத்தில் அவரவரின் பழக்கத்திற்கும் ஊர் வழமைக்கும் இடமளிக்கப்படலாம். தனது உணவுத் தட்டில் உணவை மீதப்படுத்தாதிருப் பதும் மார்க்கம் வேண்டி நிற்கும் மேலும் ஓர் அம்சமாகும்.
உடையைப் பொறுத்த வரையில் இஸ்லாத்தில் ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கோ குறிப்பிட்ட வடிவத்திலான உடைகள் இல்லை. அரபிகளின் ஆடைகள் எங்களுக்குரிய ஷரீஅத் அடிப்படையிலான ஆடைகளாகக் கொள்ள வேண்டியவை அல்ல. இவ்விடயத்திலும் உணவில்

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் ()
போன்று சூழல், பழக்க வழக்கங்களைக் கவனத்திற் கொள்ள ஷரீஅத் இடமளிக்கிறது. சூடான சீதோஷ்ணத்தை உடைய பிரதேசங்களில தலையையும் பிடரிப்பாகத்தையும் மூடவேண்டிய தேவை உண்டு. இங்கு வெள்ளை நிறமான, உடலோடு ஒட்டியிராத தளர்ந்த ஆடைகள் அணிவதற்கு வசதியாக இருக்கும். ஆனால் குளிரான நாடுகளிலோ சூட்டை நாடி உடலோடு ஒட்டிய இறுக்கமான நிற ஆடைகள் அணிவதே செளகரியமாக இருக்கும்.
"விரும்பியதைச் சாப்பிடு. விரும்பியதை அணி. இவற்றில் பிழையானது இரண்டு பண்புகளாகும். வீண் விரயமும் பெருமையுமே அவை" என ஹதீஸ் கூறுகிறது. எனவே, ஆடை அணிவதிலும் உணவிலும் இஸ்லாம் பேணுமாறு வலியுறுத்துவது வீண்விரயம், ஆடம்பரம், பெருமை ஆகியவற்றைத் தவிர்பதையாகும்.
இவை தவிர இஸ்லாம் ஆண்களினதும் பெண்களினதும் உடைகளுக்கான சில வரையறைகளை வகுத்துள்ளது. ஆண்களுக்குப் பட்டையும் தங்கத்தையும் தடை செய்து அவற்றைப் பெண்களுக்கு ஆகுமாக்கியுள்ளது. மேலும், ஆணும் பெண்ணும் உடலின் எப்பாகங்களை மறைக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளையும் வகுத்துக் கூறியுள்ளது.
எமது தனித்துவத்தை உண்மையான ஈமான், சிறப்பான நடத்தை, பரந்து விரிந்த அறிவு, சீரிய பண்பாடு ஆகியவற்றைக் கொண்டே நிலை நிறுத்த முயலவேண்டும்; உடைகளைக் கொண்டல்ல.
பர்தா உடை
கேள்வி: முழுக்க முழுக்க இஸ்லாமியக் கொள்கைகளை அனுசரித்து வாழும் உண்மையான, ஒரு தூய்மையான முஸ்லிம் பெண், தவிர்க்க முடியாத காரணத்தால் "பர்தா" உடையணி கிறாளில்லை. ஆனால், முந்தானை, சேலை போன்றவைகளால் தனது தலையையும் மார்பையும் மறைத்து உடை அணிகின்றாள். "பர்தா" அணியாத காரணத்தால் இவள் இறைவனிடத்தில் தண்டிக்கப்படுவாளா? இவள் நரகம் பிரவேசிக்க நேரிடுமா? விளக்கம் தேவை.
பதில்: நீங்கள் அணியும் உடை கீழ்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருப்பின் அது இஸ்லாமியப் பெண் அணிவேண்டிய ஷரீஅத் அடிப்படையிலான "பர்தா" (ஹிஜாப்) உடையாகக் கருதப்படும்.

Page 52
100 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
1. அணியும் ஆடை முகத்தையும் மணிக்கட்டையும் தவிர்ந்த உடலின் ஏனைய எல்லாப் பகுதிகளையும் முழுமையாக மறைக்கும் விதத்தில் இருத்தல் வேண்டும். 2. ஆடை, அலங்காரமானதாகவோ கவர்ச்சியானதாகவோ இருத்தல்
கூடாது. 3. கனமானதாக இருத்தல் வேண்டும்; மேனியை வெளிகாட்டும் துணியாக
இருத்தல் கூடாது. 4. இறுக்கமில்லாத, உடலோடு ஒட்டியிராத தளர்ந்த ஆடையாக இருத்தல்
வேண்டும். வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டதாக இருத்தல் கூடாது. ஆண்களின் உடைகளை ஒத்ததாக இருத்தல் கூடாது. காபிரான பெண்களின் ஆடைகளை ஒத்திருத்தலாகாது.
சமூகத்தில் புகழுக்கும் பிரபல்யத்துக்கும் உரியதும், தன்னில் கர்வத்தைத் தூண்டக்கூடியதுமாக உடை இருத்தல் கூடாது.
ஓர் இஸ்லாமியப் பெண் வெளியில் செல்லும் போது மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட எந்த ஆடையையும் அணிந்து செல்லலாம். ஷரீஅத் கூறும் ஹிஜாப் உடைக்கு குறிப்பிட்ட நிபந்தனைகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்தும் ஸலபுஸ்ஸாலிஹரீன்களின் கருத்துக்களிலிருந்தும் பெறப்பட்டதாகும்.
ஆண்கள் தங்கம், பட்டாடை அணிதல்
கேள்வி ஆண்கள் தங்க நகை அணிவதையும் பட்டாடை அணிவதையும் ஹறாமாக்கிய இஸ்லாம், பெண்களுக்கு அவற்றை அணிய அனுமதியளித்திருக்கிறது. இதன் காரணம் யாது?
பதில்: ஆண்களுக்கு மேலானதொரு பண்பாட்டுப் பயிற்சியை வழங்கும் நோக்கத்துடனேயே அவர்கள் தங்காபரணங்கள் அணிவதையும், பட்டாடை அணிவதையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. இஸ்லாம் என்பது போராட்டத்திற்கும், பலத்திற்கும் முக்கியத் துவம் கொடுக்கின்ற ஒரு மார்க்கமாகும்; ஆண்மையை அனைத்து வகையான பலவீனங்களிலிருந்தும் அது பாதுகாக்க விரும்பு கிறது. மேலும், அல்லாஹற் ஆணின் உடலமைப்பை, பெண்ணின் உடலமைப்பிலிருந்தும் வேறுபட்டதாக அமைத்துச் சிறப்பித் துள்ளான். எனவே, வகை வகையான ஆடை ஆபரணங்களை யணிந்து, ஆணும் பெண்ணைப்போல் அதில் பெருமைப்பட முனைவது அவனது ஆண்மைக்கு அழகானதல்ல.

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் O1
மேலும், இஸ்லாம் ஆடம்பரத்தை வெறுக்கிறது. rrilliளி அழிவதற்குப் பல சந்தர்ப்பங்களில் ஆடம்பரம்தான் அடிப்ப ை1ானlli அமைவதாக அது கருதுகின்றது. ஆடம்பரம் மிகைக்கும் போதே, rA அநீதியும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் தோன்றுவதாக இஸ்லாம கூறுகிறது. ஆடம்பரத்திற்கெதிரான போராட்டத்தின் ஓர் அங்கமாகவே இரு ஆ ம் ரப் பொருட்களான பட்டும், தங்கமும் அணிவதை ஆண்களுக்கு ஹராமாக்கி யுள்ளது. இவ்வடிப்படையில் தான் தங்க வெள்ளிப் பாத்திரங்கள் உபயோ கிப்பதும் ஆண் பெண் இரு சாராருக்கம் ஹராமாக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தங்கம் ஆண்களுக்கு ஹராமாக்கப்படுவதற்கு ஒரு பொருளாதாரக் காரணமும் உண்டு. ஏனெனில், தங்கமே சர்வதேச மட்டத் தில் நாணயப் பெறுமதியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக அன்று முதல் இன்றுவரை இருந்து வருகிறது. அத்தகைய பொருள் ஒன்றைப பாத்திரங்களுக்கும் ஆண்களின் அணிகலன்களுக்குமாகப் பயன்படுத்துவது பொருத்தமானதன்று.
பெண்களின் தன்மையையும், இயல்பையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் அவர்களுக்கு விதிவிலக்களித்துள்ளது. பெண்கள் இயல்பிலேயே அலங்காரத்தை விரும்பும் தன்மையுடையவர்கள். இந்நிலையில் தங்க நகை, பட்டாடைகள் அணிவதை அவர்களுக்குத் தடை செய்வது, அவர் களது இயல்புக்கு முரணான ஒன்றைத் திணித்து, அவர்களைச் சங்கடத்துக் குட்படுத்துவதாக அமையும். இதனை இயற்கை மார்க்கமான இஸ்லாம் விரும்பவில்லை.
இதுவரை குறிப்பிட்ட காரணங்கள் தவிர்ந்த மேலும் பல காரணங் களும் இருக்கலாம். அவற்றை அல்லாஹற்வே மிகவம் அறிந்தவன்.
பர்தாவும் முகத்தை மறைத்தலும்
கேள்வி பர்தா அணிந்து முகத்தைத் திறந்து கொண்டு செல்வதை
இஸ்லாம் அனுமதிக்கின்றதா?
பதில்: பெண்கள் அணியும் ஆடைகள் இஸ்லாமிய வரையறைகளுக்குட் பட்டதாக அமைவதற்குரிய நிபந்தனைகளைப்பற்றி மேலே விளக்கப்பட்டது.
பெண்கள் முகத்தையும் மணிக்கட்டுக்குக் கீழுள்ள கைப்பகுதி யையும் மறைக்க வேண்டுமா என்பதில் உலமாக்கள் மத்தியில் அபிப்பிராய பேதம் நிலவுகிறது.

Page 53
102 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
"(நபியே) விசுவாசமுள்ள பெண்களுக்கு நீர் கூறும். அவர்கள் தங்கள் பார்வையை கீழ்நோக்கி வைத்து தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். வெளியில் தெரியக்கூடியவற்றைத் தவிர தங்கள் அழகையும் அலங்காரத்தையும் வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும்.” (24:31)
இத்திருவசனத்தில் வரும் "வெளியில் தெரியக்கூடியவற்றைத் தவிர” எனும் வார்த்தைகள் முகத்தையும் இரு கைகளையுமே (மணிக்கட்டுக்குக் கீழுள்ள பகுதி) குறிக்குமென இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இன்னும் பலரும் விளக்கியுள்ளனர். இமாம் ஷாபிஈயும் இக்கருத்தைக் குறிப் பிட்டுள்ளார். நவீன கால சட்ட அறிஞரான யூசுப் அல் கர்ளாவி முகத்தையும் கைகளையும் மறைக்க வேண்டியதில்லை என்ற கருத்தே வலுவானதாகவும், இக்காலத்தன்மைக்கு ஏற்புடையதாகவும் இருக்கிறது என்கிறார். நவீன கால ஹதீஸ்கலை அறிஞரான நாஸிருத்தீன் அல்பானி தனது "ஹிஜாபுல் மர்அதில் முஸ்லிமா” எனும் நூலில் இக்கருத்தை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார்.
ஆயினும் ஓர் இஸ்லாமியப் பெண் முகம் கைகளுட்பட முழு உடலையும் மறைத்து ஆடையணிவது பிழையானதல்ல. மாறாக அது வரவேற்கத்தக்கதும் பாதுகாப்பானதுமாகும் என்பதை இங்கு குறிப்பிடல் வேண்டும்.
பெண்களனியும் ஆடை முழு உடலையும் மறைக்கக் கூடியதாய் அமைந்தாலும், அது உடலுறுப்புகள் வெளியில் தெரியுமளவிற்கு மெல்லியதாகவோ, உடலோடு ஒட்டியதாகவோ அமையின் அது இஸ்லாமிய உடையாகக் கருதப்படமாட்டாது. இத்தகைய போலி "பர்தா" அணிவோரையே நபியர் வகள் "ஆடையணிந்த நிர்வாணிகள்” என வர்ணித்து, அவர்கள் சுவர்க்கம் போவது ஒருபுறமிருக்க அதன் வாடையைக் கூட நுகரும் பாக்கியத்தைப் பெறமாட்டார்களெனக் குறிப் பிட்டுள்ளார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)
ஒரு தடவை பனூதமீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அவர்களைக் கண்ட அவர் "நீங்கள் மு.'மினான பெண்களாக இருப்பின் இது மு.மினான பெண்களின் ஆடையல்ல" என்று கூறினார். பிறிதொரு சந்தர்ப்பத்தில், ஒரு மெல்லிய முக்காடு அணிந்திருந்த ஒரு மணப் பெண்ணைப் பார்த்த ஆயிஷா (ரலி), "இதனை அணிகின்ற ஒரு பெண் (பெண்களின் ஒழுக்கங்களைப் பற்றிப் பொதுவாகவும் அவர்களது ஆடை யமைப்பு அமைய வேண்டிய முறைபற்றிக் குறிப்பாகவும் விளக்குகின்ற அல்குர்ஆன் அத்தியாயமான) ஸ"ரதுன் நூரை ஈமான் கொண்டவளாக இருக்க முடியாது" என்று கூறினார். (ஆதாரம்:-தப்ஸீர்குர்துபீ)

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் ( )."
ஆகவே பெண்கள் முகம், கை உட்பட முழு உடலையும் பாதுை விதத்தில் ஆடையணிவதாயினும் சரி, அப்பகுதிகளைத் திறந்து ஆை அணிவதாயினும் சரி, தமது ஆடை இஸ்லாமிய அடிப்படையில் அவை தற்கு உரிய அடிப்படைகளையும்-வரையறைகளையும் கவனத்தி கொள்வது மிக அவசியமானதாகும்.
பாடல் கேட்டல்
கேள்வி சினிமாப் பாடல்களையும் இஸ்லாமியப் பாடல்களையும் கேட்பது
g560dlpuist6015IT?
பதில்: ஆபாசம் நிறைந்த, விரசம் கலந்த பாடல்கள், மட்டரகமான கருத்துக்களையும் அநாகரிகமான வார்த்தைகளையும் கொண்ட பாடல்கள், பாவத்திற்குத் தூண்டும் பாடல்கள் ஆகியவற்றைப் பாடுவதும், கேட்பதும் ஹராமானதாகும்.
இவை தவிர்ந்த பாடல்களைப் பொறுத்தவரையில் அவற்றைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் அனுமதி உண்டு. "அடிப்படையில் அனைத்து அம்சங்களும் ஆகுமானவையாகும்” எனும் சட்ட விதிக்கமைய பாடல்கள் ஹராமாக்கப்பட்டுள்ளமைக்கான தெளிவானதும், பலமானதுமான ஆதாரங் களின்மையால் அவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாகும் என்பதே பலமான கருத்தாகக் கொள்ளப்படுகின்றது. இக்கருத்தை நிறுவுவதற்குப் பல சட்ட வசனங்கள் ஆதாரமாக உள்ளன. கீழ்வரும் நபி மொழியை ஓர் ஆதாரமாகக் குறிப்பிடலாம்:
ஒருமுறை அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு ரஸலுல்லாஹற்வைச் சந்திக்கச் சென்றிருந்த வேளையில் அங்கே ஆயிஷா (ரலி) அவர்களுடனிருந்த இரண்டு பெண் பிள்ளைகள் பாடிக் கொண்டிருந்தார்கள். இதனைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதரின் வீட்டில் ஷைத்தானுடைய புல்லாங்குழலா?” எனக் கூறி அவ்விருவரையும் கண்டித்தார்கள். இதனைச் செவியுற்ற அல்லாஹற்வின் தூதர் "அபூபக்ரே! அவ்விருவரையும் (பாட) விட்டுவிடுங்கள். இவை பெருநாட் தினங்களாகும்” என்றார்கள். (ஆதாரம்-புகாரி, முஸ்லிம்)
ஆயினும், ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது கீழ்வரும் நிபந்தனைகளுக்குட்பட்ட பாடல்களே ஹலாலானவையாக
960) LDU (pņuļLD. 960)6)Jur660:-
1. பாடல்களின் உள்ளடக்கம் இஸ்லாமியப் போதனைகளுக்கும், ஒழுக்கப்
பண்பாடுகளுக்கும் முரணில்லாத வகையில் அமைதல் வேண்டும்.

Page 54
104 -- சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
2. பாடல்களின் பொருள் பொருத்தமானதாயிருப்பினும், அவற்றைப் பாடும் பாடகனோ அல்லது பாடகியோ கீழ்த்தரமான மனித உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அவற்றை வலிந்து, குழைந்து பாடக்கூடாது.
3. வணக்க வழிபாடுகளில் கூட அளவு கடந்த போக்கைப் கடைப்பிடிப் பதை இஸ்லாம் விலக்கியுள்ளது என்ற அடிப்படையில், கேளிக்கை களில் ஒன்றான பாடல்களை பாடுவதிலும், கேட்பதிலும் அளவு கடந்து ஈடுபடுவது தவிர்க்கப்படல் வேண்டும்.
4. பாடல்களைக் கேட்கும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைப் பொறுத்து, தான் செவிமடுக்கும் பாடல்கள் தன்னில் எத்தகைய பாதகமான விளைவூகளை ஏற்படுத்தும் என்பதைச் சிந்தித்து உணர்ந்து அத்தகைய பாடல்களைக் கேட்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலே கண்ட நிபந்தனைகளை வைத்து நோக்கும் பொழுது, இன்றுள்ள பாடல்களில் பெரும்பாலானாவை ஹராமான வட்டத்தில் அடங்குவதனைக் காணமுடியும்.
புகைப்படம் எடுத்தல்
கேள்வி புகைப்படம் "பிடிப்பது பற்றிய இஸ்லாமியக் கருத்தை அறிய
விரும்புகின்றேன்.
பதில்: புகைப்படக் கருவியினால் (கமரா) பிடிக்கப்படும் படம் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதாகுமென ஆரம்ப காலத்திலேயே முன்னை நாள் எகிப்து நாட்டின் முப்தி அல்லாமா முஹம்மத் புகைத் அல் முதி". மார்க்கத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் விளக்குகையில் உண்மையில் புகைப்படம் பிடித்தல் என்பது ஹதீஸ்களில் விலக்கப்பட்டுள்ள படைத்தற் செயற்பாட்டில் அடங்கும் ஒன்றல்ல. மாறாக நிழலைப் பிடித்துக் கட்டுப்படுத்தும் ஒரு செயற்பாடே புகைப்படம் பிடித்தலாகும். வேறு வார்த்தையில் சொல்வதாயின், உருவத்தின் பிரதிபிம்பமே புகைப்படமாகும். புகைப்படக் கருவியானது கண்ணாடியைப் போன்று நிழலைப் பிரதிபலிக்கின்றது. எனவே, புகைப்படம் பிடித்தலைச் சிலை செதுக்குதலுடனோ ஓவியம் வரைதலுடனோ ஒப்பிட முடியாது எனக் கூறுகின்றார். முப்தி அவர்களின் மேற்போந்த கருத்தைப் பல இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்றுள்ளார்கள். நவீனகால இஸ்லாமிய சட்ட அறிஞரான கலாநிதி யூசுப் அல்-கர்ளாவியும் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
எனவே புகைப்படமெடுத்தல் ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில்

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் ().
பிழையானதல்ல; ஆயினும், பிடிக்கப்படும் புகைப்படங்கள் ஆகுமIInl Iக இருத்தல் வேண்டுமென்பது நிபந்தனையாகும். உதாரணமாக ஒரு நிவான பெண்ணையோ அல்லது ஷரீஅத் அனுமதிக்காத இதுபோன் காட்சிகளையோ புகைப்படம் எடுப்பது கூடாது. தனது பிள்ளைகள் அல்லது நண்பர்கள், இயற்கைக் காட்சிகள், வைபவங்கள் போன்றவற்றைப் புகைப் படம் எடுப்பதில் தறவில்லை.
கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக புகைப்படமெடுத்தல் ஆகுமானது எனும் கருத்தை அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
புகை பிடித்தல்
கேள்வி புகைபிடித்தல் பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தை
விளக்குவீர்களா?
பதில்: இன்று பாவனையிலிருக்கும் சிகரெட், பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் இல்லாதிருந்ததனால் புகைத்தல் பற்றிய மார்க்கத் தீர்ப்பை அன்றைய இமாம்கள் குறிப்பிடவில்லை. மேலும், இதற்குப் பயன்படுத்தப்படும் புகையிலையின் தன்மை, அதனைப் புகைப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவு ரீதியான ஆய்வினடிப்படையிலமைந்த தெளிவான முடிவுகளும் பெறப்பட்ட தாகக் காண முடியவில்லை. இத்தகைய காரணங்களினால் புகை பிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் இன்றுவரை கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
சிலர் அதனை ஹராமானது என்றும் வேறுசிலர் மக்ரூஹற் என்றும் கருதுகின்றனர். புகைப்பிடிப்பதை ஆகுமானது என்று கூறும் உலமாக்களும் உளர். புகைப்பிடிப்பவரைப் பொறுத்து அதற்கான தீர்ப்பு வேறுபட்டதாக அமையுமென்று சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
ஆயினும், மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு பிரிவினதும் வாதத்திற்கான ஆதாரங்களை நோக்குகின்ற போது புகைத்தல் ஹராமானது என்று கூறுவோர் முன்வைக்கும் ஆதாரங்கள் வலுவானதாக இருக்கின்றன. நவீனகால அறிஞர்கள் பலரும் இக்கருத்தையே ஏற்புடையதாகக் கொள்கின்றனர்.
புகைபிடித்தல் ஹராமானது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காண முடிகின்றது. அவற்றைச் சுருக்கமாக கீழே தருகின்றோம்.

Page 55
106 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
1. போதையை ஏற்படுத்தல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகின்றது. ஏனைய போதை வஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாவிடினும், மிகக் குறைந்தள விலாவது புகைப்பவர் போதை கொள்கிறார். சிறிய அளவில் போதை யை ஏற்படுத்தக் கூடியதும் ஹராமானது என்பது நபிமொழியாகும்.
2. சோர்வை ஏற்படுத்தல்: புகைப்பதனால் போதை ஏற்படுவதில்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகின்றதென்பதனை மறுப்பதில்லை. நபியவர்கள் போதை ஏற்படுத்தக்கூடியவற்றை மாத்திரமன்றி உடலில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்துள்ளார்கள். (ஆதாரம்: முஸ்னத்அஹற்மத், அபூதாவூத்)
3. கேடுகள்: புகைபிடிப்பதனால் மூன்று வகையான தீமைகள்
விளைகின்றன.
அ. உடல்நலத்திற்கு ஏற்படும்கேடு: புகைப்பிடிப்பதனால் உடற்பலம் குன்றுகிறது; முகம் மஞ்சளிக்கிறது; கடும் இருமலும் ஏற்படுகிறது. கடும் இருமலானது காச நோயை ஏற்படுத்தக்கூடும். புகைப்பதனால் உடல்நலம் எந்த அளவு பாதிக்கப்படுகின்றது என்பதனை நவீன உலகம் நன்கு தெரிந்து வைத்துள்ளது. "உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹற் உங்கள் மீது மிக்க அன்புடையோனாக இருக்கின்றான்." என அல்குர்ஆன் கூறுகின்றது. மனிதனுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய அனைத்தையும் நபிகளார் தடுத்துள்ளார்கள் என்பதற்குப் பல ஹதீஸ்கள் ஆதார மாயுள்ளன.
ஆ. பொருள் நஷ்டம்: புகைபிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் வீணாக்கப்படுகின்றது. வீண்விரயம் செய்வதனை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அதனை அல்குர்ஆனும் கண்டிக்கிறது: "வீண்விரயம் செய்யாதீர். ஏனெனில், மிதமிஞ்சிச் செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாவர்"
வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ஹஸ்ம் கீழ்வருமாறு கூறுகிறார். "வீண்விரயம் செய்வது ஹராமானதாகும். வீண்விரயமென்பது,
1. அல்லாஹற் விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின்
இறக்கையளவு அற்பாக இருப்பினும் சரியே.

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் 10 Ꮴ
2.
அல்லது அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவு பெர்டி, இச்செலவினால் குறித்த நபரின் செல்வ நிலை அகல்தல் வேண்டு,
செல்வத்தை வீணாக வீசியெறிதல். இது குறைந்த அளவினையுடை யதாக இருப்பினும் சரியே. "வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹற் வீண்விரயம் செய்வோரை விரும்புவதில்லை." என்று அல்குர்ஆன் கூறுகிறது.
(ஆதாரம்-அல்முஹல்லா, பாகம்7, பக்கம் 503)
உள, ஆத்மீக ரீதியிலான கேடு: புகைத்தலுக்குப் பழக்கப்படுகிறவன் தனது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றான். ஏதோ காரணத்தினால் புகை பிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் அத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும், கீழ்த்தரமானதாகவும் அமைகின்றது என்பதை அவதானிக்க முடியும்.
இவை தவிர புகைப்பிடிப்பதனால் ஏற்படும் கேடுகளை விஞ்ஞான
ரீதியில் பரிசோதனை அடிப்படையில் பல நிறுவனங்களும் தனிப்பட்ட அறிஞர்களும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர் என்பதனை யாவருமறிவர். ஆகவே எக் கண்ணோட்டத்தில் நோக்கினும் புகை பிடித்தல் ஹராமானது எனும் கருத்தே பலமானதாகக் கொள்ளத்தக்கதாகும்.
ஸ்வீப் டிக்கட் (லொத்தர் சீட்டு) வாங்குதல்
கேள்வி: ஒருவர் சுயநலம் கருதாது ஒரு லொத்தர் சீட்டு வாங்கி, அதில்
பரிசும் கிடைத்து, அதை அவர் பள்ளிவாயில் தவிர்ந்த பொது நலனுக்காகப் பிரயோகிக்கிறார். ஆனால் இதன் மூலம் நன்மையை எதிர்பார்க்கவில்லை. இதனால் பாவம் நிகழுமா? என்பதே எனது சந்தேகம், விளக்கம் தரவும்.
பதில்: லொத்தர் சீட்டு இஸ்லாம் ஹராமாக்கியுள்ள சூது என்ற பாவ
வகையைச் சேர்ந்ததாகும். "நன்னோக்கம் ஹராத்தை நியாயப் படுத்தமாட்டாது" எனும் இஸ்லாமிய சட்ட விதியினடிப்படையில், ஒருவர் பரிசு கிடைத்தால் பொது நன்மைக்காகச் செலவு செய்யும் நோக்குடன் லொத்தர் சீட்டு வாங்கினாலும் கூட, அவர் பாவியா கவே கருதப்படுவார். பரிசு கிடைத்து அதனை அவர் பொது நன்மைக்காகச் செலவு செய்தால் எத்தகைய நன்மையும் கிட் டாது. எனினும், கிடைத்த பணத்தை நன்மையான காரிய மொன்றுக்குச் செலவு செய்வது குற்றமோ பாவமோ அல்ல.

Page 56
108 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
சினிமா பார்த்தல்
கேள்வி: திரைப்படம் (சினிமா) பார்ப்பது ஹராமானதா?
பதில்: திரைப்படமென்பது ஒரு பொழுதுபோக்குச் சாதனமாத்திரமன்றி, ஒரு சிறந்த வெகுசனத் தொடர்புச் சாதனமாகவும் காணப்படு கிறது. அதனைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே அது பற்றிய தீர்ப்புப் பெறப்படும். அடிப்படையில் சினிமா என்பது தவறான ஒன்று அல்ல. கீழ்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டதாக அது அமைகின்றபோது பயனுள்ள ஒரு சாதனமாக இருக்கும்.
1. கருப்பொருட்கள் இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகள், ஒழுக்க மாண்புகள், சட்டவரம்புகள் ஆகியவற்றிற்கு முரணில்லாத வகையில் அமைந்திருத்தல் வேண்டும். மாறாக, மனிதரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டிவிடக்கூடிய அல்லது பாவங்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய அல்லது குற்றமிழைக்க வழிவகுக்கின்ற அல்லது பிழையான சிந்தனைகள், கருத்துக்கள் ஆகியவற்றின்பால் அழைப்பு விடுகின்ற விரசமான, ஆபாசமான, மட்டரகமான திரைப்படங்களைப் பார்ப்பது, தயாரிப்பது உட்பட அவற்றுக்காக ஏதோ ஒரு வகையில் ஒத்துழைப்பு வழங்குவதும் ஹராமானதாகும்.
2. திரைப்படத்தைப் பார்ப்பதனால் ஒரு சன்மார்க்கக் கடமையோ அல்லது உலோகாயதக் கடமையொன்றோ விடுபடக்கூடாது. குறிப்பாக ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதன் மூலம் ஒரு கடமையான தொழுகை விடுபடக்கூடாது.
3. (அந்நிய) ஆண்கள், பெண்கள் ஒன்றாகக் கலந்திருப்பது தவிர்க்கப்படல்
வேண்டும்.
நாம் மேலே கண்ட நிபந்தனைகளை வைத்து நோக்கும் போது, இக்காலத் திரைப்படங்களைப் பார்ப்பதுவும், நம் நாட்டுத் திரைப்படமாளிகை களுக்குச் செல்வதுவும் ஹராமானதாகவே அமையும் என்பதனை உறுதியா கக் கூற முடியும்.
கிரிக்கட், உதைப்பந்தாட்டம்
கேள்வி: கிரிக்கட், உதைப்பந்தாட்டம் மற்றும் இது போன்ற ஏனைய விளையாட்டுக்களை இஸ்லாம் எந்தளவு தூரம் அனுமதித் துள்ளது என்பதனை விளக்குவீர்களா?

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் 109.
பதில்: இஸ்லாம் மனிதர்களை மலக்குகள் போலன்றி விருப்பு, வெறுப்பு, ஆசை, அபிலாஷைகள் உடையவர்கள் என ஏற்றுக் கொள்கின்றது. இந்த வகையில் மனிதர்களின் பேச்செல்லாம் திக்ராகவும், மெளனமெல்லாம் சிந்தனையாகவும், கேள்வி யெல்லாம் குர்ஆனாகவும் இருக்க வேண்டும்; ஒய்வு நேரங்கள் எல்லாம் இறை சந்நிதியில் கழிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் எதிர்ப்பார்ப்பதில்லை. இறைவன் மனிதர்களையும் உண்டு, குடித்து, ஒடியாடி, விளையாடி மகிழும் சுபாவம் கொண்ட வர்களாகப் படைத்திருக்கின்றான்.
நபித்தோழரான ஹன்ௗலா (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒருமுறை அபூபக்ர் (றழி) அவர்கள் என்னைச் சந்தித்தபோது, "ஹன்ளலாவே! எப்படி இருக்கின்றீர்கள்?" என்று வினவினார். அதற்கு நான் “ஹன்ளலா முனாபிக்காகி விட்டார்” என்று கூறினேன். அப்போது அவர் "ஸ"ப்ஹானல்லாஹ்! என்ன சொல்கின்றீர்?" என்றார். நான் அதற்கு, "வேறென்ன நாங்கள் அல்லாஹற்வின் தூதருடன் இருக்கும்போது சுவனத்தையும் நரகத்தையும் கண்களால் காணும் உணர்வைப் பெறும் அளவுக்கு அவற்றைப் பற்றி எங்களுக்கு அறிவுறுத்துவார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதரின் சந்நிதானத்திலிருந்து நாங்கள் சென்று விட்டாலோ மனைவிமாருடனும், குழந்தைகளுடனும் விளையாடத் துவங்கி விடுகின்றோம். அதிகமாக (மறுமையின் சிந்தனையை) மறந்து விடுகின்றோம்” என்று கூறினேன். இதனைக் கேட்ட அபூபக்ர் (றழி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்களும் உண்மையில் இத்தகைய நிலையைத் தான் சந்திக்கின்றோம்” என்றார். தொடர்ந்து ஹன்ளலா கூறுகின்றார்: “பின்னர் நானும் அபூபக்ரும் அல்லாஹற்வின் தூதரிடம் சென்றோம். "ஹன்ளலா முனாபிக்காகிவிட்டார் அல்லாஹற்வின் தூதரே! என்று நான் கூறினேன்.” அதற்கு றஸலுல்லாஹ் (ஸல்) அவர்கள் "அது என்ன,” என்ற வினவினார்கள். “அல்லாஹற்வின் தூதரே! நாங்கள் உங்களுடன் இருக்கும்போது, நீங்கள் சுவர்க்கம் நரகம் பற்றி எங்களுக்கு நினைவூட்டும் போது நாங்கள் அவற்றைக் கண்களால் காணும் உணர்வைப் பெறுகின்றோம். ஆயினும், நாம் உங்களின் சமூகத்திலிருந்து வெளியேறிச் சென்று விட்டாலோ அதிகம் மறந்தவர்களாக மாறி மனைவிமாருடனும் குழந்தைகளுடனும் விளையாடுகின்றோம்" என்று நான் கூறினேன்.
இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், “எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் என்னுடன் இருக்கும்போது உள்ள நிலையிலும் திக்ரிலும் தொடர்ந்தும் இருப்பீர் களாயின் மலக்குகள் நீங்கள் உங்களது படுக்கைகளில் இருக்கும்போதும் பாதைகளில் செல்லும் போதும் உங்களுக்குக் கைலாகு கொடுப்பார்கள்.

Page 57
110 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஆயினும் ஹeஹன்ளலாவே ஒவ்வொன்றுக்கும் நேரம் கொடுக்கப்படவேண்டும். என்று கூறி றி இறுதி வசனத்தை மூன்று முறை திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார்கார்கள். (ஸஹிஹற் முஸ்லிம்)
வணக்காக்க வழிபாடுகளில் முனைப்புடன் ஈடுபட்ட நபியவர்கள் சிரித்து மகிழ்பவர்களகளாகவும் வரம்பு மீறாத வண்ணமும் உள்ளங்களைப் புண்படுத்தாத {ாத வகையிலும் பரிகாசம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். நபித்தோழர்கரர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள்.
"உடல்டல் சோர்வடைவது போல உள்ளமும் சோர்வடைகின்றது. எனவே அதற்தற்கு ஞானமுள்ள துணுக்குகளைத் தேடிக் கொடுங்கள்" என்று கூறுகின்கின்றார் அலி (றழி).
"அடிக்கக்கடி உள்ளத்துக்கு ஓய்வையும், சுகத்தையும் கொடுங்கள். உள்ளமானது நூது பிரயாசைக்கு உட்படும்போது குருடாகி விடுகின்றது" என்ற கருத்தும் அலகுலி (ரலி) அவர்களுடையதாகும்.
இந்த ஆ6 அடிப்படையில் தான் இஸ்லாம் பல வகையான பொழுது போக்குகளைய8ளயும், விளையாட்டுக்களையும் அனுமதித்துள்ளது.
இவை உவ உள்ளத்துக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு உற்சாகத்தையும் கொடுக்கின்றனறன. இபாதத்துக்களில் சுறுசுறுப்பாகவும் முனைப்புடனும் ஈடுபடவும் இணஇவை துணை புரியக்கூடியவை. மேலும், விளையாட்டுக்கள் சிறந்த தேகப்பகப்பயிற்சியாகவும் ஜிஹாதுக்குத் தயார்படுத்துபவையாகவும் அமைகின்றன. இன.
இக்கண்கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் ஒட்டப்பந்தயம், மல்யுத்தம், அ , அம்பெறியும் விளையாட்டு, நீச்சல், குதிரைச் சவாரி, வேட்டையாடுதழ்டுதல் போன்ற பல வகையான விளையாட்டுக்களையும் இஸ்லாம் அங்கங்கீகரித்துள்ளது; அவற்றுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத் துள்ளது. எனsேனவே, மேற்சொன்ன கண்ணோட்டத்தில் உதைப்பந்தாட்டம், கிரிக்கட் உட்பட்ட்பட மற்றும் பல விளையாட்டுக்களும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட6ைர்டவையாகக் கொள்வதற்கில்லை. ஆனால், எல்லா வகையான விளையாட்டுக்கடுக்களுக்கும் இஸ்லாம் சில எல்லைகளையும் வரையறை களையும் விதிவிதித்துள்ளது. அவற்றை மீறும் போது அவை மார்க்க அங்கீகாரத்தைப்தைப் பெறாத ஹராமான நடவடிக்கைகளாகவே கொள்ளப்படும்.
எந்தவொவொரு விளையாட்டைப் பொறுத்தவரையிலும் இஸ்லாமிய நிபந்தனைகள் hள் பின்வருமாறு:
(1) தொழுகைகை போன்ற அடிப்படை வணக்க வழிபாடுகளை உரிய நேரத்தில் கில் நிறைவேற்றுவதற்குத் தடையாக அமைதல் கூடாது.

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் 111
(2) சூது கலந்ததாக இருத்தல் கூடாது.
(3) விளையாட்டின் போது, விளையாடுபவர் தனது நாவைக் கெட்ட, தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.
(4) ஒரு விளையாட்டில் மிதமிஞ்சி அளவு கடந்து ஈடுபடுதல் கூடாது.
இஸ்லாம் இபாதத்களில் கூட மித மிஞ்சி ஈடுபடுவதை விரும்புவ தில்லை. இந்நிலையில் விளையாட்டுக்களில் அளவு கடந்த ஈடுபாடு கொண்டு நேரத்தை அதில் விரயம் செய்வதை அங்கீகரிக்குமா? என்பதனைச் சிந்திக்க வேண்டும்.
ஆகுமாக்கப்பட்ட விடயங்களில் காலத்தை அதிகம் ஈடுபடுத்து வதனால் அடிப்படையான கடமைகள் பாழ்படக்கூடும் என்பதில் சந்தேக மில்லை.
வீடுகளில் நாய் வளர்த்தல்
கேள்வி; வீடுகளில் நாய் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கொண்டுள்ள
கருத்தை விரிவாக அறிய விரும்புகிறேன்.
பதில்: தேவைக்காகவன்றி வீடுகளில் நாய் வளர்ப்பதனை நபி (ஸல்)
அவர்கள் விலக்கியுள்ளார்கள்.
இன்றைய உலகில் எத்தனையோ ஆயிரம் மனித ஜீவன்கள் பசியிலும் பட்டினியிலும் சாகும் வேளையில் தமது செல்லக்குழந்தைகளான நாய்களுக்காக பணத்தை இரைக்கின்ற எத்தனையோ மனிதர்களைக் காண்கிறோம். சக மனிதர்களுக்காக இரங்காத இவ்வுள்ளங்கள் தாம் வளர்க்கும் நாய்கள் மீது காட்டும் அன்பும், பாசமும் ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.
இது இவ்வாறிருக்க ஒரு முஸ்லிமின் வீட்டில் நாய் இருப்பதனால் பாத்திரங்கள் போன்றவை அசுத்தமடைய வழியுண்டு. ஏனெனில், நாய் பாத்திரங்களை நக்குவதனால் அவை அகத்தமடைகின்றன. "ஒருவரின் பாத்திரத்தை நாய் நக்கினால் அதனை அவர் ஏழு தடவைகள் கழுவ வேண்டும். அவற்றில் ஒரு முறை மண்ணைக் கொண்டு கழுவ வேண்டும்," (ஆதாரம்-புகாரி) என்பது நபிமொழியாகும்.
வீடுகளில் நாய் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளமைக்கான காரணத்தை விளக்குகின்ற சில அறிஞர்கள், நாயானது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைக் கண்டு குரைக்கும் என்றும், யாசிக்க வருவோருக்குப்

Page 58
112 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பயத்தைக் கொடுக்கும் என்றும், அவ்வழியே செல்வோருக்குத் தொந்தரவு செய்யும் என்றும் கூறுகின்றார்கள்.
ஆயினும், தேவைக்காக வளர்க்கப்படும் நாய் குறித்த தீர்ப்புக்கு உட்டபட மாட்டாது. தேவைக்காக வளர்க்கும் நாய் எனும் போது வேட்டை நாய், வீடு, பயிர் நிலம், கால்நடைகள் போன்றவற்றைக் காவல்புரியும் நாய் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். "எவர் வேட்டைக்காக அல்லது பயிர் நிலத்திற்காக அல்லது கால் நடைகளுக்காக அன்றி, ஒரு நாயை வளர்க்கிறாரோ, ஒவ்வொரு நாளும் அவரின் ஒரு "கீராத்” அளவு நன்மைகள் குறைக்கப்படும்" (ஆதாரம்-புகாரி, முஸ்லிம்) என நபி மொழி கூறுகிறது.
வீடுகளில் நாய் வளர்க்கலாகாது எனும் போது அவற்றோடு காருண்யமின்றி நடந்து கொள்ளல் வேண்டும் என்பது பொருளல்ல. "நாய்களும் (உயிருள்ள) சமூகங்களில் ஒன்று என்றில்லாதிருந்தால் அவற்றைக் கொலை செய்யுமாறு நான் ஏவியிருப்பேன்" எனப் பகர்ந் துள்ளர்கள் நபியவர்கள். (ஆதாரம்-அபூதாவூத், திர்மிதி) இந்நபிமொழி அல்குர்ஆன் கூறும் ஓர் அடிப்படை உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. "பூமியிலுள்ள எப்பிராணியாயினும், தம் இறக்கைகளினால் பறக்கும் எப்பறவையாயினும் அவை உங்களைப் போன்ற (ஜீவனுள்ள) சமூகங்களே” (அல்அன்ஆம்-33)
ஒரு பாலை நிலத்திலே தாகத்தினால் தவித்துக் கொண்டிருந்த ஒரு நாய்க்கு, தன் பாதணியைக் கழற்றி அதனைக் கொண்டு ஒரு கிணற்றிலிருந்து நீர் எடுத்து அதற்கு உளட்டிய காரணத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி நபிகளார் தமது தோழர்களுக்கு எடுத்துக் கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது. (புகாரி)
நாயுடனான சகவாசம் உடல் நலனை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பது பற்றியும் நாய் பரப்பும் பயங்கர நோய்கள் பற்றியும் இன்றைய மருத்துவர்கள் கூறும் கருத்துக்களைக் கவனத்திற் கொள்கின்றபோது, இப்பிராணி விடயத்தில் இஸ்லாம் கொண்டுள்ள நிலைப்பாடு எந்தளவு அர்த்தமுள்ளதாகவும், அறிவார்ந்ததாகவும் அமைந்துள்ளது என்பதைனப் புரிந்து கொள்ள முடியும். V
சூது விளையாடுதல்
கேள்வி சூது பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தை விளக்கமாகத்
தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் 1
பதில்: பல்வேறுபட்ட விளையாட்டுக்களை ஆகும் என அனுமதிதular இஸ்லாம், சூதுகலந்த அத்தனைவிளையாட்டுகளையும் விலகித் தடை செய்துள்ளது.
ஒரு முஸ்லிம் சூதாட்டத்தை எவ்வகையிலும் ஒரு பொழுதுபோக் காகவோ அல்லது உழைப்புக்கான ஒரு வழியாகவோ அமைத்து, கொள்ளலாகாது. இஸ்லாம் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளமைக்கு அறிவார்ந்த காரணங்களும் ஏற்புடைய பல நியாயங்களும் இருப்பதனைக் காண முடிகிறது.
ஒரு முஸ்லிம், பொருள் சம்பாதிப்பதில் அல்லாஹற் வகுத்துள்ள நியதிகளையே பின்பற்ற வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒவ்வொன்றையும் அதற்குரிய முறையிலும் ஒழுங்கிலும் அணுகிப் பெறவேண்டும் என்பது இஸ்லாத்தின் நியதியாகும்.
சூதைப் பொறுத்த வரையில், அது மனித அதிர்ஷ்டம், தற்செயல் நிகழ்வுகள், வீண் கற்பனைகள், ஆசைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச்செய்து, அவனை அவற்றில் தங்கி வாழ வைக்கிறது. உழைப்பு, முயற்சி அல்லாஹற் ஏற்படுத்தியுள்ள நியதிகள், பெளதீகக் காரணிகள் போன்றவற்றை மதித்து நடப்பதில் நின்றும் சூதானது மனிதனைத் தடுக்கிறது.
மேலும், ஒருவரின் செல்வத்தை ஷரீஅத்தின் அடிப்படையில் ஒரு மாற்றீடு இன்றி அல்லது திருப்தியுடன் கூடிய அன்பளிப்பாகவோ அல்லது தர்மமாகவோ அன்றி வேறு விதத்தில் கையாள்வதற்கு அனுமதியில்லை. இவ்வகையில், சூதாட்டம் என்பது பிறர் செல்வத்தைப் பிழையான வழியில் கையாள்வதாகும்.
இவற்றுடன் சூதானது சூதாட்டக்காரர் மத்தியில் குரோத்தையும் பகைமையையும் வளர்த்து, வெற்றியடைந்தவருக்கும் தோல்வியடைந்த வருக்குமிடையில் பரஸ்பர வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. தோல்வியடைந் தவர் தான் அடைந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மீண்டும் மீண்டும் சூதாடத் தலைப்படுவார். வெற்றியடைந்தவரோ வெற்றிமயக்கத்தில் மேலும் மேலும் வெற்றி பெறும் நோக்கில் ஆட்டத்தைத் தொடர விரும்புவார். இவ்வாறு இப்பயங்கர விளையாட்டானது எவரையும் தன்னை விட்டு அகல விடாது.
இந்த வகையில் சூதாட்டம் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் பேராபத்தாகவும் பெரும் அபாயமாகவும் அமைந்துள்ளது. இது நேரத்தையும் காலத்தையும் முயற்சியையும் சக்தியையும் வீணடிக்கிறது. மேலும், மனிதர்களைச் செயற்றிறன் அற்றவர்களாகவும் உதவாக்கரைகளாகவும் ஆக்கிவிடுகின்றது.

Page 59
114 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
சூதாட்டக்காரருக்கு அவர்களது விளையாட்டே முக்கியமானதாக இருக்கிறது. தன்பால், தனது இறைவன்பால், தனது குடும்பத்தின் பால், தனது சமூகத்தின்பால் தனக்குள்ள கடமைகள் அனைத்தைவிட்டும் அவர்கள் பாராமுகமாகவே இருப்பர்.
சூதாட்டத்திற்கு அடிமைப்பட்டவர் தனது மானம், சுயகெளரவம், மார்க்கம் போன்ற எதனையும் விற்பதற்கும் விட்டுக் கொடுப்பதற்கும் தயங்கமாட்டார். அவரின் பார்வையில் தனது விருப்புக்குரிய சூதாட்டத்திற்கு முன்னால் இவை அனைத்தும் மிக அற்பமானவையாகும்.
மதுவும் சூதாட்டமும் தனிமனிதனையும் குடும்பத்தையும் நாட்டையும் பாதிப்பதில் ஒன்றையொன்று நிகர்த்தவையாகும். இதனாலேயே, அல்குர்ஆன் இவ்விரண்டையும் இணைத்து ஒன்றாகக் குறிப்பிட்டு, இவை ஷைத்தானின் செயல்களில் உள்ளவை எனக் கூறுகிறது; கட்டாயம் தவிர்க்க வேண்டிய அசுத்தமாகவும் வர்ணிக்கின்றது. (பார்க்க ஸ?றா அல்-மாயிதா-90-91) e
இன்று நடைமுறையிலுள்ள லொத்தர், குதிரைப் பந்தயம் போன்ற அனைத்தும் ஷரீஅத் தடைசெய்துள்ள சூதில் அடங்கும் என்பதனைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். சமூக நல நோக்கங்களுக்காகவேனும் இத்தகைய சூதாட்டங்களை ஷரீஅத் அனுமதிப்பதில்லை.
மருந்தாக போதை வஸ்துக்களைப் பாவித்தல்
கேள்வி: நோய் நிவாரணியாகப் போதை வஸ்துக்களைப் பாவிக்கலாமா?
பதில்: போதைப் பொருட்களை மருந்தாகப் பாவிப்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒருமுறை ஒருவர் தான் மருந்துக்காக மதுபானம் தயாரிப்பதாகக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர் கள் "அது மருந்தல்ல. உண்மையில் அது நோயாகும்" என்றார் கள். (முஸ்லிம், அஹற்மத்)
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
"அல்லாஹற் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே மருந்தை உபயோகிப்பீர்களாக, ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக" (அபூதாவூத்)

உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் 115
போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிட்ட இப்னு மஸ்ஊத் (றழி) “அல்லாஹற் உங்களுக்கு அவன் தடைசெய்தவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை" என்றார்கள். ' (புகாரி)
போதை வஸ்துக்கள் ஹராமானவையாகும். அவற்றை மருந்துக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது அவற்றில் ஆசையூட்டுவதாக அமையும். அது ஷரீஅத்தின் நோக்கத்திற்கு முரணான ஒன்றாகும். ஷரீஅத் ஒன்றைத் தடைசெய்தால் அதனை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். எல்லா வழிகளிலும் அதனை விட்டும் தூரமாக வேண்டும்.
போதை பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறி அனுமதித்தால், மனிதர்கள் அவற்றில் நன்மைகள் இருக்கின்றனவே என்று நியாயம் கூறி நோயில்லாத சாதாரண நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்த முற்படுவர்.
உண்மையில் இந்த ஹராமான மருந்தில் இருப்பதாகக் கூறப்படும்
நிவாரணத்தை விட நோய்களே அதிகம் என்பதனை மனதிற் கொள்ளல் வேண்டும்.

Page 60
அத்தியாயம் - 05 பகுதி - 1 குற்றமும் தண்டனையும்
தாருல் குப்ரில் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றுதல்
கேள்வி: இஸ்லாமிய ஷரீஆ முழுமையாக அமுல்படுத்தப்படாத இலங்கை போன்ற ஒரு நாட்டில் வாழும் ஒரு முஸ்லிம், விபச்சாரம், களவு, கொலை போன்ற தண்டனை வழங்கப்பட வேண்டிய பாதகச் செயல்களைப் புரிந்து பின், தான் செய்த பெரும் பாவத்துக்குரியபரிகாரம் தேட எண்ணி அதற்குரிய இஸ்லாமிய தண்டனையைப் பெற விரும்புகிறான். ஆனால், அவனது நாட்டிலோ இஸ்லாமிய ஷரீஆ அமுலில் இல்லை. இந்நிலையில் தான் செய்த பாவத்தை உணர்ந்த அந்த முஸ்லிமுக்குரிய மாற்றுப் பரிகாரம் என்ன என்பதைத் தெளிவு படுத்துமாறு கோருகின்றேன்.

குற்றமும் தண்டனையும் 117
பதில்:
"காபிரான நாட்டில் இஸ்லாமியக் குற்றவியல் தண்டனைகள் நிறைவேற்றப்பட மாட்டாது" என்பது சட்டவிதியாகும். இவ்வடிப் படையில், இலங்கை போன்ற ஒரு நாட்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ள குற்றங்களுக்கான இஸ்லாமியத் தண்டனைகளை நிறைவேற்ற முடியாது. அது சாத்தியமானதுமல்ல. மேற்படி குற்றங்களைச் செய்தவர்கள் அல்லாஹற்விடம் முறையாக பாவமன்னிப்புக் கோருவதே ஒரே வழியாகும். உலகில் வழங்கப்படும் தண்டனை கள் மறுமைத் தண்டனையை நீக்கமாட்டாது; சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காவே அவை வழங்கப்படுகின்றன. தெளபா ஒன்றே மறுமைத் தண்டனையை நீக்க வல்லது.
குற்றத்திற்கான இம்மை மறுமைத் தண்டனைகள்
கேள்வி: ஒருவர் செய்த குற்றத்திற்கான தண்டனை இம்மையில்
வழங்கப்பட்டு விட்டால் அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா அல்லது அவர் அக்குற்றத்துக்கு மறுமையிலும் தண்டனை பெறுவாரா?
இம்மையில் கொடுக்கப்படும் தண்டனை மறுமைத் தண்டனையை நீக்காது. உலகில் தண்டனை வழங்கப்படும் அனைத்துக் குற்றங்களுக்கம் மறுமையிலும் தண்டனை வழங்கப்படும் என்பதே அல்குர்ஆனின் கருத்தாகும். உதாரணமாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவருக்குரிய இம்மைத் தண்டனையைக் குறிப்பிடும் அல்குர்ஆன் அத்தகையவர்க்கு மறுமையிலும் மகத்தான வேதனை உண்டு எனக் கூறுகின்றது.
"அல்லாஹற்வுடனும், அவனது தூதருடனும் யுத்தம் தொடுத்தும்,
பூமியில் விஷமம் செய்து கொண்டும் திரிகின்றவர்களுக்குரிய தண்டனை இதுதான். அவர்கள் வெட்டப்படல் வேண்டும். அல்லது தூக்கிலிடப்படல் வேண்டும். அல்லது மாறுகைகள், மாறு கால்கள் துண்டிக்கப்படல் வேண்டும். அல்லது நாடு கடத்தப்படல் வேண்டும். இது இம்மையில் அவர்களுக்கு இழிவாகும். அன்றி மறுமையிலோ மகத்தான வேதனையும் அவர்களுக்கு உண்டு" (5:33)
மேலும் மானக்கேடான விடயங்களைப் பரப்புதல், கற்புடைய
பெண்களுக்கு அவதூறு கூறல் ஆகிய இரு குற்றங்களுக்கும் உரிய தண்டனைகளைக் கூறும் அல்-குர்அன் மறுமைத் தண்டனையையும் இணைத்துக் கூறியிருப்பதனை அவதானிக்கலாம்.

Page 61
118 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
“எவர்கள் விசுவாசிகளுக்கிடையில் மானக்கேடான விடயங்களைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.” (24:19)
“எவர்கள் விசுவாசியான கற்புடைய அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் " நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் முனிவுக்குள்ளாவார்கள். அன்றி (மறுமையில்) அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.” (242:3)
சில குற்றங்களுக்கு மறுமைத் தண்டனை பற்றி அல்-குர்ஆனில் குறிப்பிடப்படாதிருப்பினும் அவை கீழ்வரும் பொது வசனங்களின்படி மறுமைத் தண்டனைக்கு உரியவைகளாகவே கொள்ளப்படுகின்றன.
“எவர் அல்லாஹற்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடக்கின்றாரோ அவரை நீரருவிகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதி களில் அவன் சேர்க்கின்றான். அவற்றிலே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். இது மகத்தான பெரும்பாக்கியமாகும். எவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனின் வரம்புகளைக் கடக் கின்றானோ அவனை அவன் நரகத்தில் புகுத்திவிடுவான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அன்றி இழிவுபடுத்தும் வேதனையும் அதில் அவர்களுக்குண்டு" (4:13,14)
எனவே, மேலே கண்டவாறு இம்மையில் கொடுக்கப்படும் தண்டனை யானது மறுமையில் கொடுக்கப்படும் வேதனையை நீக்கமாட்டாது. முறையான தவ்பாவைக் கொண்டும் அல்லாஹ்வின் அருளினால் கிடைக்கும் மன்னிப்பைக் கொண்டும் மாத்திரமே மறுமை வேதனையிலிருந்து மீட்சி பெற முடியும்.
கறப்பழக்கத்திற்குரிய தண்டனை
கேள்வி: களவு, விபச்சாரம், தன்னினச் சேர்க்கை போன்றவற்றுக்கு ஷரீஅத்தில் குற்றவியல் தண்டனைகள் காணப்படுகின்றன. கரப்பழக்கத்துக்குரிய குற்றவியல் தண்டனை யாது?
பதில்: குறித்த அம்சத்துக்கு ஷரீஅத்தில் குற்றவியல் தண்டனையேதும் உலகில் வழங்கப்படுவதில்லை. ஆயினும், பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி இச்செயல் ஹராமானதாகும். இமாம் மாலிக் அவர்கள் இது ஹராமான்து என்பதற்குக் கீழ்வரும் குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றார்:

குற்றமும் தண்டனையும் 119
"மேலும் அவர்கள் தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக் கொள்வர். ஆனால் அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர. அதற்காக நிச்சய மாக அவர்கள் கண்டிக்கப்படமாட்டார்கள். ஆனால் இதற்கு அப்பால் (வேறு வழிகளை) நாடுகின்றார்களே அத்தகையவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவர்.” (23:5-7)
தன் கரத்தினால் இந்திரியத்தை வெளியேற்றி, தன்னிச்சையைத் தீர்த்துக்கொள்பவர் ஷரீஅத் அனுமதிக்காத முறையைக் கையாண்டு அல்குர்ஆன் குறிப்பிடும் வரம்பு மீறியோர் வட்டத்தில் புகுகின்றார்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் இப்னு ஹஸ்ம் போன்றோர் விபசாரத்தில் ஈடுபடும் நிலைக்கு தான் தள்ளப்படலாம் என்ற அச்சம் தோன்றும் ஒருவருக்கோ அல்லது திருமணம் முடிக்க முடியாத நிலை யிலுள்ள ஒருவருக்கோ குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்வது தவறாகக் கொள்ளப்பட முடியாததாகும் எனும் கருத்தை முன்வைக்கின்றனர்.
ஆயினும், இத்தகைய நிலையில் உள்ளோருக்கு நபிகளார் தேவையான வழிகாட்டலை வழங்கியுள்ளார்கள். அதிகம் நோன்பு நோற்பதன் மூலம் மனோவலிமையையும், பொறுமையையும், இறைபக்தியை யும் வளர்த்து, இச்சையை அடக்கலாம் என்பது நபிகளாரின் வழி 6sTL6)T(5D.
"வாலிபர்களே! உங்களில் சக்தியுள்ளவர்கள் திருமணம் முடித்துக் கொள்ளட்டும் அது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும் கற்பைப் பாதுகாத்துக்கொள்ளவும் பெரிதும் உதவும். இவ்வாறு (திருமணம் முடிக்கச்) சக்தியற்றவர் நோன்பு நோற்கட்டும். அது அவருக்கு (இச்சையைக் குறைக்கும்) தடுப்பாக அமையும். (ஆதாரம்-ஸஹிஹற் அல் புகாரி)
எனவே இப்போதனையைப் பின்பற்றி நடப்பதுவே ஓர் உண்மை மு.மினுக்குப் பொருத்தமுடையதாக அமையும் என்பது தெளிவு.

Page 62
65guruID - 05 பகுதி - 1
பொதுவானவை
முட்டைப்பூச்சு முதலானவற்றைக் கொல்லுதல்
கேள்வி முட்டைப்பூச்சி போன்றவற்றைக் கொல்வதற்கு இஸ்லாத்தில்
பதில்:
அனுமதியுண்டா? அவற்றைக் கொல்வது சிறுபாவத்தில் அடங்குமா? விளக்கம் தேவை.
மனிதருக்குத் தீங்கு செய்யக் கூடிய மூட்டை, பேன் போன்ற வற்றையும் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களையும் கொல்வ தற்கு ஷரீஅத்தில் எத்தகைய தடையுமில்லை. மனிதன் தனக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது. ஒருவர் தொழுகையில் இருக்கும் போதும் பாம்பு போன்றவைகள் தன்பக்கம் வருவ தனைக் கண்டால், தொழுகையை விட்டுவிட்டு அவற்றைக் கொல்லலாம் என்று சில அறிஞர்களும் தொழுது கொண்டே

பொதுவானவை 1Ꭿ |
கொல்ல வேண்டும் என்று வேறு சிலரும் கூறுவர். இது: ஆதாரமாக "நீங்கள் பாம்பையும் தேளையும் தொபூaik) இருக்கும் போது கொல்லுங்கள்” (அஹற்மத், ஸ்னன்கள்) எலும் ஹதீஸ் காணப்படுகிறது.
ஹஜ்ஜின் போது இஹற்ராமுடன் இருப்பவர் அதனைக்களையும் வரை எவ்வுயிரையும் கொல்ல முடியாது. ஆனால், மேலே குறிப்பிட்டவற்பை யும் விஷஜெந்துக்களையும் கொல்வதற்கு அனுமதியுண்டு. பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக உள்ளது:
“ஐந்தை இஹற்ராமுடைய நிலையிலும் அதனைக் களைந்த நிலையிலும் கொல்வது ஹலாலாகும். (மற்றுமோர் அறிவிப்பில் "பாவமா காது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது) அவையாவன:
தேள், காகம், எலி, வல்லூறு, காயப்படுத்தக்கூடிய நாய்." (புகாரி, அபூதாவூத்)
முஸ்லிம் அல்லாதாருக்கு ஸலாம் கூறுதல்
கேள்வி: முஸ்லிம் அல்லாத அந்நியருக்கு ஸலாம் சொல்ல முடியுமா? அவர்கள் ஸலாம் சொன்னால் பதில் சொல்வது எப்படி? விளக்கம் தேவை.
பதில்: தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறவேண்டும் என்று நபியவர்கள் பொதுவாகக் கூறியுள்ளதை வைத்து, சில அறிஞர் கள் முஸ்லிம்கள், காபிர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் ஸலாம் சொல்லலாம் என்கின்றனர். முஸ்லிம்களுடன் போர் தொடுக்கும் காபிர்களுக்கும் கூட இஸ்லாத்தைப் போதித்தல் போன்ற தேவைகள் ஏற்படுகின்ற போது, அவர்களை இஸ்லாத்தின்பால் கவர்வதற்காக அவர்களுக்கு ஸலாம் கூறலாம் எனச் சில அறிஞர்கள் கருது கிறார்கள். அல்லாஹ" தஅபூலா பிர்அவனுடன் கூட அன்பாகவும் நளினமாகவும் உரையாடுமாறு நபிமார்களான மூஸாவையும் ஹாரூனையும் வேண்டிக் கொன் டதையும் அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
ஆயினும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனும் போது அதில்
முஸ்லிம்கள் மாத்திரமே அடங்குவர்; அவர்களுக்கு மாத்திரமே ஸலாம் கூற வேண்டும் என்பது பெரும்பாலான இமாம்களின் கருத்தாகும்.

Page 63
122 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
"யூதர்களையோ கிறிஸ்தவர்களையோ நீங்கள் சந்தித்தால் முதலில் ஸலாம் கூற வேண்டாம்" என்ற ஸஹிஹல் புகாரியில் வரும் ஹதீஸை இவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
காபிர்களுக்கு முதலில் ஸலாம் சொல்வது கூடாது என்றிருப்பினும், நிர்ப்பந்தங்கள், தேவைகள், இனபந்துத் தொடர்புகள் போன்றன காரணமாக அவர்களுக்கு ஸலாம் கூறுவதில் தவறில்லை என்று சில அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
காபிர்களுக்கு முஸ்லிம்கள் முதலில் ஸலாம் சொல்வதில் கருத்து வேறுபாடு இருப்பது போலவே அவர்கள் முதலில் ஸலாம் சொன்னால் அதற்குப் பதில் ஸலாம் சொல்வது சம்பந்தமாகவும் அபிப்பிராய பேதம் உண்டு. ஸலாம் சொன்னவர்கள் காபிர்களாக இருப்பினும் பதில் ஸலாம் சொல்வது பர்ளாகும் என்று சிலர் கூறுகின்றனர்.
பின்வரும் ஆதாரங்களும் இக்கூற்றுக்குச் சார்பானவையாகக் கொள்ளப்படுகின்றன:
(1) “அல்லாஹற்வின் படைப்பைச் சேர்ந்த ஒருவன் உனக்கு ஸலாம் சொன்னால் அதற்குப் பதில் சொல்வாயாக. அவன் ஒரு நெருப்பு வணங்கியாக இருந்தாலும் சரியே." (இப்னு அப்பாஸ்)
(2) "அபூ உமாமா அல்-பாஹிலி என்ற நபித்தோழர் ஒரு முஸ்லிமையோ யூதனையோ, அல்லது கிறிஸ்தவனையோ கண்டாலும் ஸலாம் சொல்பவர்களாக இருந்தார்கள்." (இப்னு அப்தில் பர்ரி)
(3) "இப்னு மஸ்ஊத், அபூ அத்தர்தா, புழாளா இப்னு உபைத் போன்ற நபித்தோழர்களும் வேதத்தையுடையவர்களைக் கண்டால் முதலில் ஸலாம் சொல்பவர்களாக இருந்தார்கள்."
(4) "உமர் இப்னு அப்தில் அஸிஸ் காபிர்களின் ஸலாத்திற்குப் பதில்
ஸலாம் சொல்வார்கள்." (முஹம்மத் இப்னு கஃப்)
காபிர்களின் ஸலாத்திற்குப் பதில் ஸலாமும் சொல்லக் கூடாது என்ற கருத்தை உடையோரும் அநேகர் உள்ளனர்.
காபிர்களுக்குப் பதில் ஸலாம் கூறலாம் என்போர் அதனை எவ்வாறு கூறுவது என்ற விடயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் "வஅலைகு முஸ்ஸலாம்" என்று மாத்திரம் கூறலாம். "வரஹமதுல்லாஹி வபரகாத்துஹ" என்பதனைச் சேர்க்கக் கூடாது என்கின்றனர். மற்றும் சிலர் "வஅலைக்க” அல்லது "வஅலைக்கும்" என்று மாத்திரம் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

பொதுவானவை | '፲
பொதுவாக இப்பிரச்சினையையும் இதுபற்றிய இவunா'பு அறிஞர்களின் வேறுபட்ட கருத்துக்களையும் வைத்து நோசிகுபோது கீழ்வரும் முடிவுக்கு எம்மால் வர முடிகின்றது.
முஸ்லிம்களுக்கு ஸலாம் சொல்வதிலும் அதற்காக முந்திக் கொள்வதிலும் காட்டும் ஆர்வம் காபிர்களின் விடயத்தில் அவசியமானதலால, பொதுவாக காபிர்களுக்கு முதலில் ஸலாம் சொல்லவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அவர்கள் ஸலாம் கூறி விட்டால், சுருக்கமாகப் பதிலை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
ஸலாத்தைப் பொறுத்தவரையில் காபிர்களுடன் இவ்வாறு சற்றுக் கண்டிப்பாக நாம் நடந்து கொண்டாலும், அவர்களோடு அன்பாகவும் பண்பாகவும் தாராள மனப்பான்மையுடனும் சகிப்புத் தன்மையுடனும் பழகுவது அவசியமாகும். அதனை மார்க்கமும் வலியுறுத்துகின்றது.
அரபு மொழி கற்றல்
கேள்வி: இஸ்லாத்தைப் படிப்பதற்கு அரபு மொழியைப் படிப்பது அவசியம்தானே? எனவே, அரபு மொழியைப் படிப்பது பர்ளு ஆகுமா? −
பதில் அரபு மொழி அல்-குர்ஆனினதும் ஸுன்னாவினதும் மொழியாகும். இந்த வகையில், அதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது முஸ்லிம்களின் கடமையாகும். இஸ்லாத்தின் மூலாதாரங்களை, அவை இறக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள மூல மொழியான அரபு மொழியிலேயே சரியாக விளங்க முடியும் என்பதனால், அதனைக் கற்பது குறைந்தபட்சம் பர்ளு கிபாயாவாக அமையும்.
அபூ மன்ஸர் அஸ்ஸஆலிபி அந்நய்ஸாபூரி தனது "பிக்ஹல்லுகா" எனும் நூலில் அரபு மொழி பற்றிப் பின்வருமாறு எழுதுகின்றார்:
"எவர் அல்லாஹவை நேசிக்கின்றாரோ, அவர் அவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிப்பார். எவர் அரபியான தூதரை நேசிக்கின்றாரோ அவர் அரபிகளை நேசிப்பார். எவர் அரபிகளை நேசிக்கின்றாரோ அவர் அரபிகள், அஜமிகள் அனைவரிலும் சிறந்தவர் மீது இறக்கப்பட்ட மிகச் சிறப்பான வேதத்தின் மொழியான அரபு மொழியை நேசிப்பார். எவர் அரபு மொழியை நேசிக்கின்றாரோ அவர் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார். அதன்பால் தனது கவனத்தையும் திருப்பு வார்.”

Page 64
124 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
அரபு மொழியைக் கற்பது முஸ்லிம்களுக்கு வாஜிபான ஒன்று என்பதனை ஷெய்க் ரஷித்ரிழா (ரஹற்) அவர்கள் தனது "தப்ஸருல் மனார்" இல் விரிவாக விளக்கியுள்ளார். இமாம் ஷாபிஈ (ரஹற்) அவர்கள் அரபு மொழி கற்பது வாஜிபாகும் எனும் கருத்தைத் தனது "ரிஸாலா"வில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதுடன், இது இஜ்மாவான ஒரு முடிவாகும் என்றும் கூறியுள்ளார்.
கனவில் செய்யும் நன்மை தீமைகள்
கேள்வி: ஒருவர் கனவில் செய்யும் நன்மை தீமைகளுக்கு கூலி உண்டா?
கனவின் உண்மை நிலை என்ன?
பதில்: கனவு என்பது பொதுவாக மனிதனின் சக்திக்கும், அவனது விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும். மேலும், கனவில் நடப்பவை (நன்மையாயினும் தீமையாயினும்) வெறும் பிரமைகளே அன்றி உண்மைகளல்ல. எனவே, கனவில் நடக்கும் நன்மை, தீமைகளுக்கு எத்தகைய பெறுமானமும் கொடுக்கப்படுவதற்கில்லை.
அனைத்துக் கனவுகளையும் வெறும் பிரமைகள் என்று தட்டிக் கழித்து விடவும் முடியாது. சில கனவுகள் உண்மையானவையாகவும் அர்த்தமுள்ளவையாகவும் அமைவதுண்டு. இவை "அல்-ருட்யா அஸ்ஸா திகா” எனப்படுகின்றன. இவை நபிமார்களுக்கும் நல்லடியார்களுக்கும் தெரியக்கூடியவையாகும்.
நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்குவதற்கு அறிகுறியாக அமைந்தவை நல்ல கனவுகள் ஆகும். நபி யூஸ"ப் (அலை) அவர்கள் சிறு பிராயத்தில் இருந்தபோது கண்ட ஒரு கனவு பற்றியும், அது எவ்வாறு பின்னர் உண்மையானது என்பது பற்றியும் அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது. நபி யூஸஸுப் (அலை) சிறையில் இருக்கும்போது தன்னோடு இருந்த இருவர் கண்ட கனவுகளுக்குக் கொடுத்த விளக்கங்களும் அரசர் கண்ட ஒரு கனவுக்கு அவர் கொடுத்த விளக்கமும் அல்-குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. بر
"உண்மையான கனவு நுபுவத்தின் நாற்பத்தாறு பகுதிகளில் ஒன்றாகும்" என ஒரு ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புகாரி)
சில வேளைகளில் சாதாரண மக்களுக்கும் உண்மையான, அர்த்தமுள்ள கனவுகள் தென்படக்கூடும்.

பொதுவானவை 123
ஆரம்ப காலம் முதல் அறிஞர்கள் கனவு தென்படுவதாகன காரணங்களை ஆராய்ந்து வந்துள்ளனர். ஆயினும் இது lரி விஞ்ஞானிகளும் தத்துவ மேதைகளும் மார்க்க அறிஞர்களும் பரஸபரl) முரண்பட்ட கருத்துக்களையே கூறி வந்துள்ளனர்.
விழிப்பில் நடந்த சில சம்பவங்களுடன் உள்ளம் ஈடுபாடு கொண்டிருக்கும்போது, அதன் விளைவாகச் சில கனவுகள் தெரிவதுண்டு. உடல் நிலையில் ஏற்படும் சில மாறுதல்கள், பாதிப்புகள் காரணமாகவும் சில கனவுகள் தெரியலாம். இத்தகைய கனவுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை; அவை வெறும் பிரமைகளே.
ஆயினும், உண்மையான கனவுகள் இறை அருளுடன் தொடர்பானவை என்பதனை மறுப்பதற்கில்லை.
உலகக் கல்வி, மார்க்கக் கல்வி - பாகுபாடு
கேள்வி: "கல்வியைத் தேடிப்படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்," சிலர், இந்த ஹதீஸை வைத்து மார்க்கக் கல்வியைக் கற்பதே கடமையாகும் என்கின்றனர். இஸ்லாமிய ஷரீஆவில் இவ்வாறு கல்வியைக் கூறுபோட்டு நோக்குவதுண்டா? விரிவான விளக்கம் தேவை.
பதில்: இஸ்லாம் தீன்-துன்யா, லெளகீகம்-ஆன்மீகம் என மனித வாழ்வைப் பாகுபடுத்தி நோக்கும் ஒரு மார்க்கமல்ல. மனித வாழ்வின் எத்துறையையும் அது இவ்வாறு கூறுபடுத்தி, வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. கல்வித் துறையைப் பொறுத்த வரையிலும் இஸ்லாம் லெளகீகக் கல்வி, ஆன்மீகக் கல்வி என்று வித்தியாசப்படுத்தி, ஒன்றை வலியுறுத்தி மற்றதைப் புறக்கணிப்பதில்லை. மனித சமூகத்திற்குத் தேவையான, பயனுள்ள ஆக்க பூர்வமான அனைத்து அறிவு ஞானங்களும் "அல்-இல்முல் நாபி' எனும் பயனுள்ள அறிவின் பாற்பட்டதாகும்.
நேரடியாகச் சன்மார்க்கத்துடன் தொடர்பான அறிவைப் பெறுவது கடமையாக இருப்பது போலவே, ஏனைய பொதுவான கலைகளைக் கற்பதும் கடமையானது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். நவீன அறவியற் துறைகளான மருத்துவம், பொறியியல், இரசாயனவியல், பெளதீகவியல், தொழில் நுட்பக் கல்வி உட்பட அனைத்தையும் முஸ்லிம் இளைஞர்கள் கற்பதில் ஈடுபடுவது உயர்ந்த இபாதத்தும் மேலான ஜிஹாதுமாகும் என்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.

Page 65
126 சன்மார்க்க சட்ட் விளக்கங்கள்
நவீன உலகின் சாவல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான மிகப் பெரும் பலமாக அறிவுப் பலம் காணப்படுகின்றது. “அவர்களை எதிர்ப்பதற்காகப் பலத்தை முடியுமான அளவு தயார்ப்படுத்துங்கள். (8:60) எனும் அல்குர்ஆன் வசனத்தை முஸ்லிம்கள் மனதிற் கொள்ளல் வேண்டும்.
எங்களிடம் போதிய அதி நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையில் எமது பூமிகளை எவ்வாறு விடுவிக்க முடியும்? துரதிர்ஷ்டவசமாக இன்றும் கூட எமது அனைத்துத் தேவைகளுக்காகவும் பிறரை நம்பி வாழும் நிலையிலேயே நாம் இருக்கின்றோம். "இரும்பு எனும் அல்குர்ஆன் ஸ?ராவைப் பெற்ற சமூகம், இன்றும் இரும்புத் தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லை" என்கிறார் அறிஞர் யூஸப் அல்-கர்ளாவி.
ஒரு சந்தர்ப்பத்தில் அறிஞர் கர்ளாவியிடம் ஒரு முஸ்லிம் வாலிபர் "தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது பார்ப்தற்கு ஷரீஅத்தில் அனுமதியுண்டா?" என வினவிய போது, "தொலைக்காட்சிப்பெட்டி என்பது ஒரு கருவி; அதனை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம்; அழிவுக்கும் பயன்படுத்தலாம். அதனைப் பயன்படுத்துபவரைப் பொறுத்தே அதற்குரிய தீர்ப்பு அமையும். தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுது பார்க்கும் பிரச்சினையைப் பொறுத்தவரையில், நாம் இன்று அத்தகைய பழுது பார்க்கும் முஸ்லிம் இளைஞர்களை மாத்திரமன்றி, அவற்றை உற்பத்தி செய்பவர்களையும் வேண்டி நிற்கின்றோம்" என்று அவர் கூறிய விளக்கம் சிந்தனைக்குரியதாகும்.
உண்மையில், நவீன அறிவியற் கலைகளைக் கற்பது ஷரீஅத்தின் கண்ணோட்டத்தில் "பர்ளு கிபாயா"வாகும். மருத்துவர்கள், பொறியி யலாளர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்துத் துறை சார்ந்த அறிஞர்களையும் முஸ்லிம் உம்மத் போதுமான அளவு உருவாக்காத வரை அது பாவத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது.
பொதுவாக அறிவின் முக்கியத்துவத்தைக் குறித்து வந்துள்ள அல்-குர்ஆன், அஸ்ஸான்னா வசனங்கள் வெறும் மார்க்க அறிவை மாத்திரமன்றி, அனைத்து வகையான பயனுள்ள அறிவு ஞானங்களையும் குறிக்கும் என்பதே உண்மையாகும்.
தலை மயிருக்குச் சாயமிடுதல்
கேள்வி நரைத்த மயிர்களை மறைக்கச் சாயமிடுவதை எந்த அளவுக்கு இஸ்லாம் அனுமதிக்கின்றது? அல்லது தலைமயிருக்குச் சாயமிடுவதை இஸ்லாம் மொத்தமாக அனுமதிக்கவில்லையா?

பொதுவானவை 127
பதில்: நரைத்த தலை மயிருக்குச் சாயமிடுமாறு நபி(ஸல்) அவர்கள்
வேண்டியுள்ளார்கள்:
"யூதர்களும் கிறிஸ்தவர்களும் சாயமிடுவதில்லை. எனவே, நீங்கள் அதற்கு மாறு செய்யும் விதத்தில் (சாயமிட்டு) நடந்து கொள்வீர்களாக" (புகாரி, முஸ்லிம்)
இத்தகைய நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய அறிஞர்கள் நரைத்த மயிருக்குச் சாயமிடுவதனை ஸ“ன்னா எனக் கருது கின்றனர். ஆரம்ப கால ஸலபுஸ்ஸாலிஹின்களில் அதிகமானோர் இவ்வாறு செய்வோராக இருந்துள்ளனர்.
இவ்வாறு தலைமயிருக்குச் சாயம் போடுவதில் இரு நன்மைகள் இருப்பதாகக் கூறுகின்றனர். அவையாவன:
(1) தலைமயிரைச் சுத்தமாக வைத்துக்கொள்ளல் (2) யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறு கெய்தல்
சிலர் மருதோன்றி போன்றவற்றைக் கொண்டு கறுப்பல்லாத நிறத்திலேயே சாயமிடலாம் என்றும், கறுப்பில் சாயமிடுவது விரும்பத்தக்கதல்ல என்றும் கூறுகின்றனர்.
ஆயினும், பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, வயது முதிர்ச்சியின் காரணமாக மயிர் நரைத்தவர்களைத் தவிர ஏனையோர் கறுப்பு நிறச்சாயம் இடுவதில் தவறில்லை. உஸ்மான், அல்-ஹஸன், அல்-ஹ"ஸைன், உக்பா இப்னு ஆமிர், இப்னு ஸரின் போன்ற பல ஸஹாபாக்களும் தாபிஈன்களும் இவ்வாறு செய்துள்ளனர்.
சாயம் போடுவதற்கு வயதுகட்டுப்பாடு ஏதும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆயினும் இடும் சாயம் மயிரில் நீர் படுவதைத் தடுக்கக் கூடியதாக அமையக் கூடாது. நீர் உட்புகுவதைத் தடுக்கக் கூடிய “டை” வகைகள் இருப்பின் அவற்றை தலைக்கு இடலாகாது.
ழஈபான மெளமுஆன ஹதீஸ்களை அறிவித்தல்
கேள்வி: அமல்களின் சிறப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது "ழஈ."பா"ன
"மெளழு"ஆன ஹதீஸ்களைச் சொல்லலாமா?
பதில்: முதலில் "மெளழுஉ", "ழஈ.ட்ப்" ஆகிய இரு பதப் பிரயோகங்களையும் பிரித்தறிதல் வேண்டும். மெளழுஉ என்பது

Page 66
128 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பொய்யான, போலியான ஹதீஸ்களை -அதாவது நபியவர் களுடன் தொடர்பற்ற செய்திகளைக் குறிக்கும் சொல்லாகும். உண்மையானது என்பதற்கான போதிய ஆதாரமற்ற நபிமொழியே "ழஈ."ப்" என வழங்கப்படுகின்றது. "ழஈ.'பா'ன ஹதீஸ்கள் அனைத்தும் போலியானவையோ, பொய்யானவையோ அல்ல.
ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதும் அவற்றை அறிவிப்பதும் மிகப் பெரும் பாவமாகும். இதனையிட்டு நபியவர்கள் கீழ்வருமாறு கூறினார்கள்:
"அறிந்து கொண்டே எவர் என்மீது மனமுரண்டாகப் பொய்யுரைக் கின்றாரோ, அவர் தனக்குரிய இடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்." (ஆதாரம்-புகாரி, முஸ்லிம்)
உண்மையில், நபிகளார் மீது பொய்யுரைப்பது அல்லாஹற்வின் மீது பொய்யுரைப்பதாகும். ஏனெனில், "அன்னார் தமது இஷடப்படி எதனையும் கூறுவதில்லை; அவர் பேசுவதெல்லாம் வஹியாகவே இருக்கிறது" (53:3-4) இந்த வகையில், இறை தூதர் கூறாத ஒன்றைக் கூறுபவர் இறைவன் தன் தூதருக்குக் கூறாத ஒன்றைக் கூறுகின்ற ஒருவராகக் கருதப்படுவார். இது வஹியின் தூய்மைக்கெதிரான பாரதூரமான வரம்பு மீறலாகும். இத்தகையோரை இறைவன் மிகப் பெரும் அநியாயக்காரர்கள் என வர்ணிக்கின்றான். (பார்க்க: 6:114)
எனவேதான் பொய்யான ஹதீஸ்களைக் கூறுவதனை மிகப்பெரும் பாவமாகக் கருதும் அறிஞர்கள், அத்தகையோரின் தெளபா அங்கீகரிக் கப்படுமா என்பதில் கூட கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
நீங்கள் குறிப்பிடும் சட்டங்களுடன் தொடர்பற்ற "பழாயில்" எனப்படும் அமல்கள் பற்றிய சிறப்புகள் தொடர்பான விடயங்களில், மக்களுக்கு "தீனில்" ஆசையையும் ஆர்வத்தையும் ஊட்டும் நோக்கில் போலி ஹதீஸ்களைக் குறிப்பிடலாம் எனக்கருதும் ஒரு கூட்டத்தினர் இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர். ஆயினும், எவ்விடயத்திலும் இறைதூதர் மீது பொய்யுரைப்பது பெரும் பாவம் என்பது இமாம்களின் "இஜ்மா" எனப்படும் ஏகோபித்த முடிவாகும்.
இஸ்லாம் உலகில் நிலைபெற, பொய்யர்களின் தேவை இறை வனுக்கும் அவனது தூதருக்கும் இருந்திருக்க முடியாதல்லவா? அன்றி, இறைதூதர் சொல்லாதவற்றைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட அன்னார் மார்க்கத்தை எத்தி வைப்பதில் குறை செய்திருக்க வேண்டுமல்லவா? சாதாரண மக்கள் விடயத்தில் பொய்யுரைப்பதையே பெரும்பாவமாகக் கருதும் இஸ்லாம், வஹியைப் பேசிய நபி மீது பொய்யுரைப்பதை எங்கே

பொதுவானவை "
அனுமதிக்கப்போகின்றது? இதனால்தான் ஒரு போலி ஹதீuைl, j,il Il வேண்டி ஏற்படின், அதன் உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவு (pத வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இனி ழஈ.ட்பான ஹதீஸ்களை அறிவிக்கலாமா? ஆதாரங்களாகக் கொள்ளலாமா? என்பதைப் பொறுத்த வரையில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு.
பெரும்பாலான அறிஞர்கள் சில நிபந்தனைகளுடன் ழஈ.ட்பான ஹதீஸை அறிவிப்பதனையும் அனுமதிக்கின்றனர். அவை கீழ்வருமாறு:
1. குறித்த ஹதீஸ் அகீதா (நம்பிக்கை சார்ந்த அம்சங்கள்), அஹற்காம் (சட்டங்கள்), ஹலால் ஹராம் (ஆகுமானவை, விலக்கப்பட்டவை) ஆகியன தொடர்பானதாய் இருத்தலாகாது. மாறாக, அமல்களின் சிறப்புகள் பற்றிக் கூறுவதாகவோ பாவங்களின் பயங்கரம் பற்றிக் குறிப்பிடுவதாகவோ இருத்தல் வேண்டும். குறித்த அமல்களோ பாவங்களோ ஆதாரபூர்வமான சட்ட வசனங்களைக் கொண்டு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
2. அது மிகப் பலவீனமானதாக இருத்தல் கூடாது. உதாரணமாக பலவீனத்துக்கான காரணமாக அறிவிப்பாளர்களில் ஒருவர் கடும் ஞாபகமறதியுடையவராய் இருத்தல்.
3. இத்தகைய ழஈ.ட்பான ஹதீஸை அறிவிக்கும் போது முடிவான,
உறுதியான வார்த்தைகளில் குறிப்பிடலாகாது.
4. ழஈ.ட்பான ஹதீஸை ஆதாரமாக வைத்து அமல் செய்யும் போது ஸஹிஹான ஆதாரபூர்வமான நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு அமல் செய்யும் போதுள்ள உணர்வைப் பெற்றிருத்தல் கூடாது.
மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், குறித்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளும் போது மேலும் இரு நிபந்தனைகள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என நவீன அறிஞர்கள் பலர் கருதுகின்றனர். அவ்விரு நிபந்தனைகளாவன:
1. பகுத்தறிவோ, ஷரீஆவோ அல்லது மொழியோ ஏற்க மறுக்கும்
கூற்றுக்களைக் கொண்டதாய் அமைந்திருத்தலாகாது.
2. ஒரு ழஈ.ட்பான ஹதீஸை ஆதாரமாகக் கொள்வதாயின், அது அதனைவிடப் பலத்தில் கூடிய ஒரு சட்ட வசனத்துடன் முரண்படா திருத்தல் வேண்டும்.

Page 67
130 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
சில அறிஞர்கள் மொத்தமாகவே, எத்துறையிலும் எவ்விடயம் பற்றியும் ழஈ.ட்டான ஹதீஸ்களை ஆதாரமாக் கொள்ளலாகாது எனக் கருதுகின்றனர். அமல் செய்வதற்கு, இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களே போதுமானவை என்பது இவர்கள் குறிப்பிடும் முக்கிய நியாயமாகும்.
இமாம்களான புகாரி, முஸ்லிம், யஹற்யா இப்னுமஈன் போன்ற ஆரம்ப கால அறிஞர்களும் இப்னு ஹஸ்ம், இப்னுல் அறபி, அபூஷாமா போன்ற பிற்பட்ட கால அறிஞர்களும், நவீன கால அறிஞர்களான அஹற்மத் முஹம்மத் ஷாகிர், நாஸிருத்தீன் அல்பானி போன்றோரும் ழஈ.ட்பான ஹதீஸ் களை ஆதாரங்களாகக் கொள்ளவோ அறிவிக்கவோ வேண்டியதில்லை எனும் கருத்தைக் கொண்டுள்ளனர். m
குறைந்த பட்சம் ஒரு விடயத்தில் ஸஹிஹற், ஹஸன் போன்ற ஆதார பூர்வமான ஹதீஸ்கள் இருப்பின், அது தொடர்பாகவுள்ள ழஈ.. பான ஹதீஸ்களை அறிவிக்காதிருப்பது நலம்.
இரத்ததானம்
கேள்வி: இரத்த தானம் செய்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?
பதில்: இரத்த தானம் செய்வதற்கு இஸ்லாமிய ஷரீஅத்தில் எத்தகைய தடையுமிருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில், அது ஒர் உயர்ந்த நற்காரியமாகும். இஸ்லாம் இத்தகைய நற்காரியங் களைச் செய்யுமாறு தூண்டுவதுடன் அவற்றை வெற்றிக்குரிய காரியங்களிலொன்றாகவும் குறிப்பிடுகின்றது. "நீங்கள் நல்லதைச் செய்யுங்கள். அதனால் வெற்றியடைவீர்கள்.” (22:77)
நவீன கால இஸ்லாமிய அறிஞர்கள் இரத்த தானம் செய்வது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே கூறுகின்றனர்.
காபிர்களின் இரத்தத்தை முஸ்லிம்களுக்கு ஏற்றுதல்
கேள்வி: அவசர சிகிச்சைக்காக, நோயாளியின் உறவினர்கள் இல்லாத போது அல்லது இருந்தும் இரத்தப் பொருத்தம் காணப்படாத போது இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெறப்படுகின்றது. இதில் ஹராமான இரத்தம், காபிர்களின் இரத்தம் ஆகியனவும் கலந்திருக்க இடமுண்டல்லவா? இத்தகைய இரத்தத்தை ஏற்கலாமா? இதற்கான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்.

பொதுவானவை
பதில்: நீங்கள் குறிப்பிடுவது போன்று, முஸ்லி பல லாராரின் இரத்தத்தையோ அல்லது இரத்த வங்கியிலிருந்து பெ . இரத்தத்தையோ ஒரு முஸ்லிமுக்கு செலுத்துவதில் தவறில்லை என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில், இவ்வாறு நடந்து கொள்வதிலேயே முஸ்லிமை மரண ஆத் திலிருந்து காப்பாற்ற முடியுமாயுள்ளது. இது அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கும் ஒரு முயற்சியாகும், இத்தகைய முயற்சி அவசியமானது என இறைவன் கூறுகிறான். “உங்களை நீங்களே ஆபத்துக்குள்ளாகிக் கொள்ளா தீர்கள்."(2.195)
இஸ்லாத்தில் ஓர் ஆண் சில நிபந்தனைகளுடன் வேதத்தையுடைய பெண்ணைத் திருமண முடிக்க அனுமதியுண்டு என்பதனை நீங்கள் அறிவீர்கள். இங்கு இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் முஸ்லிமல்லாத ஒருவரின் (அவரின் இரத்தம் நீங்கள் குறிப்பிடுவது போன்று ஹராமானதாக இருக்கலாம்) இரத்தத்துடனும் கலந்தே உருவாகின்றன என்பதையும் காண்கிறோம். அப்படியிருந்தும் இத்தகைய திருமண உறவுக்கு இஸ்லாம் அனுமதித்திருப்பதிலிருந்து சிகிச்சைக்காக இரத்தம் பெறும் போது அதன் பொருத்தத்தையும், இனத்தையும்(Group) நோக்க வேண்டிய அவசியம் இருப்பது போன்று அதன் ஹலால், ஹராம், ஈமான், குப்ர் புோன்ற நிலை களை அறிய வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்ைைல. எங்களுக்கு நெருங்கியவர்களின் இரத்தத்திலும் இந்நிலைகளைத் தீர்மானிப் பது சாத்தியமானதன்று.
"பீ ஸ்பீல்” பற்றிய விளக்கம்
கேள்வி: "பீ ஸ்பீல்" என்றால் என்ன?
பதில்: "பீஸபீலில்லாஹற்” என்னும், பிரயோகத்தையே பலர் "பீஸபீல்" எனச் சுருக்கமாக வழங்குகின்றனர். “அல்லாஹ்வின் பாதையில்" என்பது இதன் பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் அடிப்படையாக இச்சொற்பிரயோகம் ஆயுதமேந்தி இஸ்லாத்தின் எதிரிகளுடன் மேற்கொள்ளும் யுத்தத்தையே குறிக்கும்.
அல்லாஹ்வின் திருப்தியை நாடி மேற்கொள்ளப்படும் அனைத்து நற்காரியங்களைக் குறிக்கவும் இச்சொல் இஸ்லாமியப் பரிபாஷையில் கையாளப்படுவதுண்டு. ஆனால், இக்கருத்து "பீஸபீலில்லாஹற்" வின் அடிப்படைப்பொருள் அல்ல என்பதனை மனதிற்கொள்ள வேண்டும்.
தன்மானத்துடன் வாழ உழைக்கச் செல்பவர், தன் பெற்றோரை,

Page 68
132 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
மனைவி, மக்கள் போன்றோரை வாழவைக்க உழைப்பிலீடுபடச் செல்பவர் போன்ற நற்காரியங்களிலீடுபடுவோரையும் நபி (ஸல்) அவர்கள் "பீஸபீலில்லலாஹற்’வில் இருப்பாரோகப் பல ஹதீஸ்களில் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஆயினும், நேரடியாக ஆயுதம் ஏந்திய போராட்டத்தையும் அதன் முக்கியத்துவம், சிறப்பு ஆகியவற்றையும் குறித்து வரும் அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் நாம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பிரசாரம் போன்ற நற்பணிகளையே குறிப்பதாகக் காட்டும் விதத்தில் அவற்றை மொழிப்பெயர்ப்பதும் விளக்குவதும் பிழையானதாகும். இத்தகைய சட்ட வசனங்கள், அடிப்படையில் "ஜிஹாதை,” அதன் சிறப்பை எடுத்துக்கூறினாலும், அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி மேற்கொள்ளும் நற்காரியங்களையும், குறிப்பாக, இஸ்லாமியப் பிரசாரப்பணி போன்றவை களையும் இவை குறிக்கும் என்று கூறுவதே சரியானதாகும்.
ஜீவகாருண்யம்
கேள்வி. பிறமதத்தவர்கள், முஸ்லிம்களாகிய நாம் ஆடுமாடு போன்ற
மிருகங்களை ஈவிரக்கமின்றி அறுப்பதாகக் குற்றம் சாட்டுவதோடு
எம்மை ஜீவகாருண்யமற்றோர்களென்றும் வர்ணிக்கின்றனர்." இவர்களுக்கு நாம் கூறும் விளக்கம் என்ன?
பதில்: உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் மனிதனது நலனுக்காகவும் அவனது உபயோகத்திற்காகவுமே படைக்கப் பட்டுள்ளன என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். இந்த வகையில் உயிருள்ள கால்நடைகள் மாத்திரமன்றி, நவீன விஞ்ஞானம் எடுத்துக்காட்டுவது போல் உயிருள்ள தாவரங்களும் கூட மனிதனது உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளவையாகும். உயிருள்ள இம் மிருகங்களும் தாவரங்களுமே மனித வாழ்விற்கு ஜீவாதாரமாகும். ஆயினும் இவற்றை-கால்நடைகளாயினும் சரி தாவரங்களாயினும் சரி-அன்பினடிப்படையில் கையாளல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளையாகும். தேவையின்றி வீணாக எந்தவொரு ஜீவராசியையும் அழிப்பதை இஸ்லாம் பெருங்குற்றமாகக் கருதுகின்றது.
ஒரு பூனையைக் கட்டிவைத்து, அதற்கு உணவும் கொடுக்காமல் வெளியில் சென்று 2 ணவுட் கொள்ளச் சந்தர்ப்பமும் வழங்காமல் செய்த ஒரே காரணத்தினால் நரகம் நழைந்த ஒரு பெண்ணைப்பற்றி நபிகளார்

பொதுவானவை 133
ஒரு தடவை குறிப்பிட்டார்கள். (ஆதாரம்-புகாரி) அதேவேளை தாகத்தினால் அவதியுற்ற நிலையிலிருந்த ஒரு நாய்க்காக மனமிரங்கி, அதற்குத் தண்ணீர் புகட்டிய காரணத்தினால் பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒரு விபச்சாரியைப் பற்றியும் அன்னார் கூறியுள்ளார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)
சில கால்நடைகளின் மாமிசத்தைப் புசிப்பதற்கு அனுமதியளித்துள்ள இஸ்லாம் அவற்றை அறுக்கும் போது எவ்வளவு தூரம் ஜீவகாருண்யத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளது. அதற்கான ஒழுங்குகளையும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு பிராணியை அறுக்கும் போது நல்ல முறையில் பண்பாடாக அறுக்குமாறும் அறுப்பதற்குப் பயன்படுத்தும் உபகரணத்தை கூர்மையான தாக அமைத்து, அறுக்கப்படும் பிராணிக்கு சுகத்தைக் கொடுக்குமாறும் நபியவர்கள் பணித்துள்ளார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)
அறுப்பதற்கு உபயோகிக்கும் உபகரணத்தை திட்டும் போது அறுக்கப்படவுள்ள மிருகத்திற்குத் தெரியாதவாறு மறைத்துக் கொள்ளல் வேண்டுமென்றும் அன்னார் கூறியுள்ளார்கள். (ஆதாரம் -முஸ்னத் அஹ்மத்)
அறுக்கப்பட்ட பிராணியின் உயிர் பிரிய முன்னால் அவரசப்பட்டு அதன் கழுத்தை நீக்குவதையும், அதன் தோலை உரித்து சுத்தப்படுத்துவதில் ஈடுபடுவதையும் நபிகளார் விலக்கியுள்ளார்கள். (ஆதாரம்:தாரக்குத்ணி)
ஒருவர் தான் வளர்க்கும் கால்நடைகளைப் பராமரிப்பதற்கும் அவற்றிற்குத் தேவையான தீனியை வழங்குவதற்கும் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையளிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளார். அவர் இக்கடமைகளை அவசியம் நிறைவேற்றல் வேண்டும் என ஷரீஅத் சட்டமும், இஸ்லாமிய ஒழுக்கவியலும் அவரைப் பணித்து நிற்கின்றன. ஒருவர் தனது பராமரிப்பிலிருக்கும் கால்நடைகளுக்குரிய கடமைகளை முறைப்படி நிறைவேற்றாத போது இஸ்லாமிய அரசு அவற்றை விற்றுவிடுமாறோ அல்லது சுதந்திரமாகச் செல்ல விட்டுவிடுமாறோ பணிக்கும்.
இவை தவிர மிருகங்களிடம் அவற்றின் சக்திக்குமேல் வேலை வாங்குவதனையும், சுமைகளை ஏற்றுவதனையும் நபிகளார் தடுத்துள்ளார் கள். ஜீவகாருண்யத்தின் காரணமாகவே மிருகங்களைச் சண்டைக்கு விட்டு ரசிக்கும் பழக்கத்தையும் அன்னார் விலக்கினார்கள். (ஆதாரம்அபூதாவூத், திர்மிதி) கால்நடைகளை முறையாக வளர்ப்பதற்குக் கூட நற்கூலி உண்டு என்பது நபிமொழியாகும். (ஆதாரம்-புகாரி)

Page 69
134 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஆகவே, உண்மையில் அர்த்தமுள்ள - பொருத்தமான, மனித வாழ்வின் நடைமுறைக்குச் சாத்தியமுள்ள ஜீவகாருண்யத்தைப் போதிக்கும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே என்று தயங்காமல் கூற முடியும்.
பரிசோதனைக் குழாய் குழந்தை
கேள்வி பரிசோதனைக்குழாய்க் குழந்தை -Test Tube Baby- பற்றிய
இஸ்லாத்தின் தீர்ப்பை அறிய விரும்புகிறேன்.
பதில்: பரிசோதனைக் குழாய்க் குழந்தை பற்றி அண்மையில் அம்மான் நகரில் கூடிய இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் மகாநாட்டில் பெறப்பட்ட மார்க்கத் தீர்ப்பின் சுருக்கத்தை கீழே தருகின்றோம்.
பரிசோதனைக் குழாய்க் குழந்தை பெறும் முறை எட்டு வகையில் நடைபெறுகின்றது. அவையாவன:-
1. கணவனின் விந்தணுவையும் அவனது மனைவியல்லாத அந்நியப் பெண் ஒருத்தியின் அண்டவணுவையும் பெற்று, பரிசோதனைக் குழாயில் கருக்கட்டவைத்து, பின்னர் அதனை அவனது மனைவியின் கருப்பையினுள் செலுத்துதல்.
2. மனைவியின் அண்டவணுவையும் அந்நிய ஆண் ஒருவனின் விந்தணுவையும் பெற்று, பரிசோதனைக் குழாயில் கருக்கட்டவைத்து, அதனை மனைவியின் கருப்பையினுள் செலுத்துதல்.
3. கணவனின் விந்தணுவையும் அவனது மனைவியின் அண்டவணு வையும் எடுத்து வெளியில் கருக்கட்டவைத்து அந்நிய பெண் ஒருத்தியின் கருப்பையினுள் செலுத்துதல்.
4. அந்நிய ஆணினது விந்தணுவையும் ஓர் அந்நிய பெண்ணினது அண்டவணுவையும் பெற்று, வெளியில் கருக்கட்டவைத்து, வேறொரு அந்நிய பெண்ணின் கருப்பையினுள் செலுத்துதல்.
5. கணவனின் விந்தணுவையும் அவனது மனைவியின் அண்டவணுவை யும் பெற்று, அவற்றைக் கருக்கட்ட வைத்து, அவனது இன்னொரு மனைவியின் கருப்பையினுள் செலுத்துதல்.
6. ஓர் ஆணின் விந்தணுவைப் பெற்று, ஒருவனது மனைவியின் கருப்பையில் செலுத்துல். கணவன் மலடனாக இருக்கும்போது இம்முறை பின்பற்றப்படும்.
7. கணவனது விந்தணுவையும் மனைவியனது அண்டவணுவையும் பெற்று, வெளியில் கருக்கட்ட வைத்து அவனது மனைவியின் கருப்பை யினுள் செலுத்துல்.

பொதுவானவை 18
8. கணவனது விந்தணுவை எடுத்து அவனது மனைவியின் (IIM)
யினுள் செலுத்துதல். கணவன் ஏதாவதொரு காரணத்தால் தான் விந்தணுவை இயற்கையான முறையில் செலுத்த முடியாதிருது போது இம்முறை பின்பற்றப்படுகிறது.
ஆறாம், எட்டாம் முறையானது கருவறையினுள் நடைபெறும்
செயற்கைக் கருக்கட்டல் முறையாகும்.
மேலே கண்ட எட்டு முறைகளில் முதல் ஆறு முறைகளும் இஸ்லாமிய சட்ட விதிகளின்படி ஹராமானவையாகும். கடைசி இரு முறைகளும் தேவைகளைப் பொறுத்து அனுமதிக்கப்படலாம். s
மேற்கூறிய முடிவுக்கான தகுந்த சட்ட ஆதாரங்களையும் குறித்த
மகாநாட்டை ஏற்பாடு செய்த இஸ்லாமிய சட்டமன்றத்தின் வெளியீடு விரிவாகத் குறிப்பிடுகின்றது. V−
ஹராமான காரியம் செய்பவர் செய்யும் நல் அமல்கள்
கேள்வி: ஒருவர் ஒரு ஹராமான காரியத்தைச் செய்து கொண்டே
நல்லமலையும் செய்கிறார். அந்த அமல் ஏற்றுக் கொள்ளப்படுமா? உதாரணமாக தங்கமணிந்த நிலையில் செய்யப்படும் நிகாஹற். உடம்பில் மறைக்க வேண்டிய பகுதி தெரியக்கூடிய வகையில் செய்யும் வுழு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். விளக்கம் தேவை.
ஒரு செயலை ஷரீஆ கூறும் அச்செயலுக்குரிய நிபந்தனைகளுட் பட்டு நிறைவேற்றும் பொழுது அது ஒரு ஹராத்துடன் தொடர்பு டையதாக இருப்பினும் (புஹாக்கள்) சட்ட அறிஞர்களின் கண்ணோட்டத்தில் செல்லுபடியானதாகவே கருதப்படும். இவ் வகையில் மணவாளன் தங்கமணிந்த நிலையில் செய்கின்ற நிகாஹ"ம், வுழு செய்கின்றவர் மறைக்க வேண்டிய பகுதிகளைத் திறந்த நிலையில் செய்த வுழுவும் நிறைவேறும். ஏனெனில், மணவாளன் தங்கமணிந்திருக்கக் கூடாதென்பது நிகாஹற் நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்றல்ல. அவ்வாறே வுழு செய்பவர் ஒளரத்தை மறைத்திருத்தல் வேண்டுமென்பது வுழுவின் பர்ளுகளிலோ ஷர்த்துக்களிலோ உள்ளதல்ல. ஹராத்தைச் செய்த பாவமும் அவற்றிற்குரிய தண்டனையும் குறித்த நபருக்குக் கிடைக்கும்.

Page 70
136 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
*முஹம்மத் (ஸல்) அவர்களைப் படைக்காவிட்டால்". என்ற ஹதீஸின் தரம்
கேள்வி: "முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் படைக்காவிட்டால் இவ்வுலகத்தையே படைத்திருக்கமாட்டேன்” என்ற ஹதீஸ், ஹதீஸ் குத்ளியியில் வருவதாகப் பலர் கூறுகின்றனர். "லவ்லாக லவ்லாக” என ஆரம்பிக்கும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது பற்றித் தெளிவான ஒரு விளக்கம் தேவை.
பதில்: குறித்த ஹதீஸ் புனைந்துரைக்கப்பட்ட ஒன்றென அஸ்ஸக்கானி (ரஹற்), தனது "அல் அஹாதீஸல்மவழுஆ” எனும் நூலில் குறிப்பிடுகின்றார். இக்கருத்தையே அல்-அஜலூனி (ரஹ்) தனது "கஸ்புல் ஹபா வ முஸிலுல் இல்பாஸ்" எனும் நூலில் எழுதியுள்ளார். இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹற்) அவர்களின் கருத்தும் இதுவாகும்.
இது ஒரு ஹதீஸ் அல்லாவிட்டாலும் இதன் கருத்துச் சரியானதே எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதனை நவீன கால ஹதீஸ் துறை அறிஞரான அஷ்-ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானி மறுத்துரைத்துள்ளார்.
தைலமி எனும் கிரந்தத்தில் மேற்படி ஹதீஸ் பதியப்பட்டுள்ளதாகவும், குறைந்த பட்சம் அது பலவீனமான ஒன்றாக இருக்குமென்பதைத் தனக்கு உறுதியாகக் கூறமுடியுமென்றும் அல்அல்பானி தனது "ஸில்ஸிலதுல் அஹாதீஸில் ழஈபா வல் மவ்ழுஆ” எனும் நூலில் கூறியுள்ளார்.
மேலும் ஓர் அறிவிப்பு இப்னு அஸாகீருடைய நூலில் பதியப்பட்டிருந் தாலும் அது இட்டுக்கட்டப்பட்டது என இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹற்) குறிப்பிட்டுள்ளார். •k.“ʻ
"உம்மைப் படைக்காவிட்டால் உலகையே படைத்திருக்கமாட்டேன்" எனும் கருத்தை அல்லாமா இக்பால் (ரஹற்) விளக்குகையில், "மனிதனைப் படைத்திருக்காவிடில் உலகையே படைத்திருக்கமாட்டேன்” எனும் கருத்தை கூறுவதற்காகவே அல்லாஹற் மனிதர்களில் உயர்ந்தவர்களான நபி(ஸல்) அவர்களை நோக்கி, "உம்மைப் படைத்திருக்காவிடில் உலகையே படைத்திருக்க மாட்டேன்" எனக்கூறியிருக்க வேண்டும் என்கிறார். இக்கருத்தை மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி தனது "ரவாயிஉ இக்பால்” எனும் நூலில் எழுதியுள்ளார். எனவே சிலர் கருதுவது போல, இதில் கருத்துப்பிழை இல்லையெனக் கொண்டால் இதற்கான பொருத்த மான விளக்கம் இதுவாகவே இருக்க முடியும் எனலாம்.

பொதுவானவை 17
gampTb
கேள்வி: இக்காலத்தில் ஜிஹாத் இல்லையெனவும், தியாக தான்
உண்டெனவும் சிலர் கூறுகின்றனர். இக்கருத்து சரியானதா?
பதில்: இது நிராகரிக்கப்பட வேண்டிய பிழையான ஒரு கருத்தாகும். ஏகாதிபத்தியவாதிகளின் அடிவருடியாக இருந்த மிர்ஸா குலாய் அஹற்மத் காதியானியே இஸ்லாத்தின் பெயரில் இந்நூற்றாண்டில் ஜிஹாத் கடமையை மறுத்தவராவார். ஆனால், இஸ்லாத்தின் உயிரோட்டமும் அதன் நிலைப்பாடும் தங்கியிருப்பதே ஜிஹாதில் தான் என்பது அடிப்படை உண்மையாகும். "ஜிஹாத் மறுமை நாள் வரை தொடரும்" என்று நபிமொழி கூறுகின்றது. இந்நபி மொழியை புகாரி (ரஹற்) தனது கிரந்தத்தில் ஒரு தலைப்பாக அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அல்குர்ஆன் மற்றெந்தக் கடமையைப்பார்க்கிலும் ஜிஹாதைக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து விளக்கியிருப்பதைக் காணலாம்.
அல்-அன்பால், அத்தவ்பா, அல்பத்ஹற், முஹம்மத் போன்ற நீண்ட அத்தியாயங்கள் முழுக்க முழுக்க ஜிஹாத் பற்றியும் அதன் சிறப்பு, அது தொடர்பான சட்டங்கள் பற்றியும் பேசுகின்றன. ஏனைய ஸஈராக்களிலும் ஜிஹாத் பற்றிய திருவசனங்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. ஜிஹாதின் அவசியத்தை வலியுறுத்தும் நபி மொழிகளும் ஏராளம் உண்டு.
இஸ்லாமிய வரலாற்றில் தொடர்ந்தேர்ச்சியாக ஜிஹாத் நடைபெற்றே வந்திருக்கின்றது. துரதிர்ஷ்ட வசமாக அது இடைநிறுத்தப்பட்ட வேளை யிற்றான் இஸ்லாமிய சாம்ராஜ்யமே வீழ்ச்சியடைந்தது. முஸ்லிம்கள் தமக்குரிய பூமிகளை இழந்தும் பல நாடுகளில் அவர்கள் இம்சிக்கப்பட்டும் வருவதனால் "பர்ளு கிபாயா"வான ஜிஹாத் இன்றைய காலகட்டத்தில் "பர்ளுஜன்" ஆக மாறியுள்ளது என உலமாக்கள் கருதுகின்றனர். இவ்வாறு ஜிஹாத் அத்தியாவசியமாக உள்ள இவ்வேளையில், ஜிஹாத் அவசிய மற்றது; தியாகம் செய்தால் போதுமானது என்ற கருத்து எவ்வளவு அபத்தமானது
'இஹ்யா உலூமித்தின்’
கேள்வி: இஹற்யா உலூமுத்தின் எனும் கஸ்ஸாலி (ரஹற்)வின் நூலைச் சிலர் மிகவும் மோசமாக விமர்ச்சிக்கின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: "இஹற்யா உலூமுத்தின்" ஓர் உயர்ந்த கிரந்தமாகும். அதனை

Page 71
138 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
ஓர் இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்றே கூறலாம். அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு), பிக்ஹற் (சட்டம்), தஸ்கியத்துன்னப்ஸ் (உளத்தூய்மை), அக்லாக் (நற்பண்புகள்) போன்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் பற்றி இந்நூல் பேசுகின்றது. உள்ளத்தை நெகிழச்செய்யும், ஈமானின் பாலும் அமலின் பாலும் மனிதனைத் துாண்டும், ஞானமிக்க உபதேசங்களைக் கொண்டதாகவும் இந்நூல் காணப்படுகின்றது. மேலும், இந்நூல் உள்ளத்தின் நோய்களையும் அவற்றுக்கான பரிகாரங்களையும் மிகவும் சிறப்பாக விளக்குகின்றது.
“ஸிஹாஹற் ஸித்தா” என வழங்கப்படும் ஆறு ஹதீஸ் கிரந்தங்களையும் மேலும் ஒரு சில கிரந்தங்களையும் தவிர இஹற்யா உலூமுத்தினைப்போல கூடிய அங்கீகாரத்தையும், நன்மதிப்பையும், பிரபல்யத்தையும் பெற்ற வேறொரு நூல் இல்லை. மக்கள் இந்நூலைப் பரம்பரை பரம்பரையாக, காலா காலாமாக வாழ்க்கைக்கு முன்மாதிரி யாகவும், வழிகாட்டியாகவும் கொண்டுவந்துள்ளனர்" என மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி தனது "அல்அகீதா வஸ்ஸ"லூக்" எனும் நூலில் குறிப்பிடுகின்றார். . .
"இஹற்யா"விற்குப் பல விளக்கவுரைகளும் இருக்கின்றன. இமாம் அஸ்ஸபீதி ஒரு சிறந்த விளக்கவுரையை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள ஹதீஸ்களையும் இமாம் அல் இறாகி திறனாய்வு செய்துள்ளார்.
இஹற்யா உலூமுத்தீன் எனும் இப்பெரு நூலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தரீக்காவே (ஞானவழி) உருவானது. ஒரு காலத்தில் இத்தரீக்கா ”அத்தரீக்கத்துல் கஸ்ஸாலிய்யா” எனும் பெயரில் ஹழரமெளத் போன்ற அரபுப் பிரதேசங்களில் பரவியிருந்தது.
இந்நூலில் சில தத்துவ ஞானிகளின் கருத்துக்களும், பலவீனமான ஹதீஸ்களும் ஏன் போலியான சில ஹதீஸ்களும் கூட இடம் பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. (உ-ம்: இந்நூலின் “இல்ம்" பற்றிய அத்தியாத்தில் இடம் பெற்றுள்ள சுமார் 55 ஹதீஸ்களில் 13 ஹதீஸ்களே "ஸஹிஹற்” அல்லது "ஹஸன்” ஆகிய தரங்களைக் கொண்டவையாகும். எஞ்சியவை மிக பலயினமான ஹதீஸ்களாகும்!) இந்நூலில் காணப்படும் இத்தகைய குறைகளையும், குற்றங்களையும் இமாம் இப்னுல் ஜெளஸியும் இமாம் இப்னு தைமியாவும் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களும் கூட இந்நூலின் சிறப்பை விதந்துரைத்துள்ளனர்.

பொதுவானவை it)
பர்ளுகளை முடியுமானவரை நிறைவேற்றல்
கேள்வி பர்ளுகள் அனைத்தையும் கட்டாயம் செய்ய வேண்டு
என்றிருக்கும் போது ஒருவர் "பர்ளுகளை முடியIMவகரை செய்யுங்கள்” என்று தனது உரையொன்றில் குறிபி ! இக்கருத்து மயக்கமாகவும், குழப்பமாகவும் இருக்கின்Uது. இது பற்றி விளக்கம் தேவை!
பதில்: இக்கருத்துக்கு சார்பாக கீழ்வரும் ஆதாரபூர்பவமான ஹதீஸ்
காணப்படுகிறது.
"நான் தடுத்தவற்றை (ஹராமாக்கியவற்றை) முற்றாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நான் ஏவியவற்றை (பர்ழாக்கியவற்றை) முடியுமானவரை செய்யுங்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் வரும் "நான் ஏவியவற்றை முடியுமானவரை செய்யுங்கள்” என்ற பகுதியை அடிப்படையாக வைத்தே பர்ழானவற்றை முடியுமான வரை செய்ய வேண்டும் என விளக்கம் கொடுக்கப்படுகின்றது. ஏனெனில், ஓர் ஏவல் அதாவது ஒரு பர்ழ் இடம்பெற-நடைபெற- ஒருசெயல் அமல்-நடைபெறவேண்டும். ஓர் அமல் நடைபெற பல நிபந்தனைகளும் காரணங்களும் காணப்படுகின்றன. நிபந்தனைகளுக்கும் காரணங்களுக்கும் உட்படுபவரே குறித்த செயலை -பர்ழை- செய்யக் கடமைப்படுகிறார். எல்லாப் பர்ளுகளையும் எல்லோரும் செய்யக் கடமைப்பட்டவர்களல்லர். உதாரணமாக, ஹஜ் செய்யும் கடமை எல்லோருக்கும் கிடையாது; அதற்குச் சக்தி பெற்றவரே அதனை நிறைவேற்ற வேண்டும். ஸகாத் கொடுத்தல் அனைவர் மீதும் கடமையானதல்ல. அதற்கு முடியுமானவரே. அதாவது குறித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டவரே அதனை நிறைவேற்றல் வேண்டும். ஆனால், ஹராம்கள் அப்படிப்பட்டவைகளல்ல. அவற்றை அனைவரும் முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். எல்லா ஹராம்களும் எல்லோருக்கும் ஹராமாகும். "ஹராம் என்பது அனைவருக்கும் ஹராமாகும்” என மார்க்கச் சட்ட விதி கூறுகின்றது. இதில் பர்ளுகளைப் போல விதிவிலக்குகள் கிடையாது. (இங்கு நாம் நிர்ப்பந்தத்தைப் பற்றி குறிப்பிடவில்லை என்பதை மனதில் கொள்ளவும்)
பர்ளுகள் அனைத்தையும் அனைவராலும் அனைத்துச் சந்தர்ப்பங் களிலும் முழுமைகயாகச் செய்ய முடியாது என்பதனாற்றான் மார்க்கத்தில் பர்ளுகள் விடயத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக தொழுகைக்காக வுழுச் செய்வது பர்ழாக இருப்பினும், நோயாளர் போன்றோருக்கு அந்த பர்ழை நிறைவேற்ற முடியாதபோது அதனை விட்டுவிட்டு தயம்மும் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல

Page 72
140 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
பிரயாணிக்கு ஜும்மாக் கடமையை நிறைவேற்றுவது சிரமமாகையால் அதனைவிட்டு விடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. நின்றுதொழ முடியாத வருக்கு முறையே இருந்தும், சாய்ந்தும், சாடை காட்டியும் தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஹராத்தைப் பொறுத்த வரையில் இந்நிலையைக் காணமுடியாது. அவற்றை முற்றாக, முழுதாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். எனவேதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்:
"விலக்கல் அதாவது ஹராம் ஏவலை அதாவது பர்ழை விடக்கடுமையானது: பாரதூரமானது"
கீழ்வரும் ஹதீஸையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்:
VM "மனிதர்களே! நான் ஏவிய (பர்ழான) அனைத்தையும் உங்களால் செய்ய முடியாது. அதற்கு நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள். ஆயினும் முடியுமானவரை சீராகச் செய்ய முயலுங்கள்" (ஆதாரம்: அஹற்மத், அபூதாவூத்)
அல்லாஹற்வும் குர்ஆனில் கீழ்வருமாறு கூறுகின்றான்:
"நீங்கள் முடியுமானவரை அல்லாஹற்வைப் பயந்து கொள்ளுங்கள்."
நன்மையை ஏவுதல், தீமையை விலக்குதல்
கேள்வி: சிலர் "நாம் நன்மையின் பக்கம் சனங்களை ஏவினால் போதுமானது. தீமை தானாகவே அகன்றுவிடும்" என்று கூறு கின்றார்கள். அவர்கள் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக "எங்கு வெளிச்சம் தோன்றுகின்றதோ அங்கு இருட்டு இல்லாமல் அகன்றுவிடும்" என்று விளக்கம் தருகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்தை விளக்கவும்.
பதில்: இக்கூற்று முற்றாகவே பிழையானதாகும். அல்குர்ஆன், அஸ்ஸான்னா, நபிமார்களின் வரலாறு ஆகியவற்றினை நோக்கும் போதும், தர்க்க ரீதியாக நோக்கும் போதும் இக்கூற்று பிழையான தேயாகும்.
அல்குர்ஆனும் அஸ்ஸான்னாவும் நன்மையை ஏவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் போது, பெரும்பாலும் தீமையை விலக்க வேண்டியதன் அவசியத்தையும் இணைத்து குறிப்பிடுவதனை அவதானிக்கலாம்.

பொதுவானவை 141
நபிமார்களின் த.வா வரலாற்றைக் குறிப்பிடுகின்ற அல்-குர்ஆன், எவ்வாறு நபிமார்கள் அனைவரும் நன்மையை ஏவிய அதே நேரத்தில் தீமைகளை ஒழிப்பதற்காகப் போராடினர் என்பதை விளக்குகின்றது. உதாரணமாக, நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் விக்கிரக ஆராதனைக்கு எதிராகத் தொடுத்த போராட்டத்தை அல்-குர்ஆன் விரிவாக விளக்குகின்றது. மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைக் குறிப்பிடுகின்ற அல்குர்ஆன் அவர்கள் பிர்அவ்னின் அரசியல் அநீதிகளுக்கெதிராக எவ்வாறு தீவிரமாகப் போராடினார்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது. சுஹைப் (அலை) அவர்கள் தமது சமூகத்தில் காணப்பட்ட பொருளாதார அநீதிகளுக்கெதிராக குரலெழுப்பினார்கள் என்பதையும் அது கூறுகின்றது. நபி லூத் (அலை) அவர்கள் அன்று தமது சமூகத்தில் கண்ட துர்நடத்தைக் கெதிராகப் போராடிய வரலாற்றை அல்குர்ஆன் அழகாகக் குறிப்பிடுகின்றது. ஆத், ஸ்மூத் கூட்டத்தாரிடம் மிகைத்து நின்ற சடfதியான சிந்தனைப் போக்கிற்கு எதிராக நபி ஹரத் (அலை) அவர்களும் நபி ஸாலிஹற் (அலை) அவர்களும் செயல்பட்ட முறையையும் அல்குர்ஆன் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களும் தீமைகளை ஒழிக்க எவ்வாறெல்லாம் செயல்பட்டார்கள் என்பதற்கு அன்னாரின் ஸிரா (வாழ்க்கைச் சரிதை) சான்று பகர்கின்றது.
ஒளிபரவும் போது இருள் அகன்று விடும் என்பது உண்மையேயாயினும் அவ்வொளி குறித்த இடத்தில் உள்ள அசுத்தங் களையும், குறைகளையும் காட்டுமேயன்றி அவற்றை அகற்றும் சக்தியைப் பெறாது என்பதை கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
ரஸலுல்லாஹற்வின் பாசறையில் வளர்ந்த ஸஹபாக்களும் கூட நபிகளார் பாவங்களை, தீமைகளை குறித்துக்காட்டி அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கியபோதே அவற்றை விட்டுவிலகிக் கொண்டனர் என்பதை அறிவோமாக,
கருவில் உள்ள குழந்தையை ஆண், பெண் எனத் தீர்மானித்தல்
கேள்வி: ஒரு தாயின் கருப்பத்தில் இருக்கும் கருவை அல்லது குழந்தையை ஆண் அல்லது பெண் என்று மருத்துவர்களால் கூற முடியுமா? இதுபற்றி இஸ்லாத்தின் கருத்து என்ன?
பதில்: இன்றைய மருத்துவ உலகம் அது அடைந்துள்ள முன்னேற்றத் தின் பலனாக, மிக நுண்ணிய கருவிகளைக் கண்டுபிடித்து, அவற்றினுடாக சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அதன் பாலைக் கூறுகின்ற ஆற்றலைப் பெற்றுள்ளது. இது

Page 73
42 சன்மார்க்க சட்ட விளக்கங்கள்
சாத்தியமானதே. மேலும் இது இஸ்லாமியக் கண்ணோட்டத்திற்கு முரணானதுமல்ல.
அல்லாஹிமாத்திரம் அறிந்த மறைவான அம்சங்கள் ஐந்து பற்றி ஸ?ரா லுக்மானின் கடைசி வசனங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றிலொன்று கர்ப்பவறையிலிருக்கும் சிசுவுடன் தொடர்பானதாகும். இது பற்றிய வசனம் கீழ்வருமாறு அமைகின்றது: "வய.லமு மா பில் அர்ஹாம்" "அவனே கர்ப்பவறைகளில் இருப்பவை தொடர்பான அனைத்தையும் அறிவான்" என்பது இவ்வசனத்தின் தமிழ் வடிவமாகும். இங்கு "மா" எனும் இடைச் சொல்லே "இருப்பவை தொடர்பான அனைத்தையும்" என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்த "மா"வுக்குப் பதிலாக “மன்” என்ற இடைச்சொல் கையாளப்பட்டிருப்பின் குறித்த வசனத்தின் பொருள் “கர்ப்பவறைகளில் இருப்பவர் யார்? எவர்? (ஆனா? பெண்ணா?) என்பதனை அல்லாஹற்வே அறிவான்" என அமைந்திருக்கும். அவ்வாறிருப்பின், நவீன விஞ்ஞானம் அல்குர்ஆனின் வசனமொன்றைப் பொய்ப்பித்து விட்டதாகக் கொள்ள இடம் ஏற்பட்டிருக்கும். ஆனால் அல்குர்ஆனோ "மா" எனும் இடைச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு சிசு பற்றிய விபரங்களை, அதன் ஆயுள், அது உலக வாழ்வில் பெற இருக்கின்ற வருமானம், இரண பாக்கியம், அதனது செயற்பாடுகள், நடத்தைகள், அதன் இறுதிமுடிவு போன்றவற்றை அல்லாஹற் ஒருவனே அறிவான் என்ற கருத்தைக் கூறுகிறது. இவ்வகையில் நவீன மருத்துவர்கள் கருப்பையிலுள்ள சிசுவின் பால் பற்றிப் பிரசவத்திற்கு முன்பே அறியும் ஆற்றலைப் பெற்றிருப்பதானது அல்குர்ஆனின் கருத்திற்கு முரணானதாகவோ அல்லது அதனைப் பொய்ப்பிப்பதாகவோ அமைய முடியாது என்பது தெளிவு.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வாக்கு, யுகம் முடியும்வரை நிலைத்து நிற்கப்போகின்ற அவனின் நிரந்தர அற்புதம்; அதன் எந்த ஒரு கருத்தும் நிச்சயமாக என்றுமே பொய்ப்பிக்கப்பட முடியாததாகும்.
"இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி, (திருக்குர்ஆனாகிய) இதனைப்பொய் அணுகவே முடியாது. மிக்க புகழுக்குரியவ"ைh ஞானமுடையவனுமால் இது இறக்கப்பட்டது.” (41:42)

பொதுவானவை 1ላ&)
நூறு ஷஹிதுகளின் நன்மையைப் பெற்றுத்தரும் ஸுன்கணக் பற்றி கூறும் ஹதீஸின் விளக்கம்
கேள்வி: "பித்னாவுடைய காலத்தில் ஒரு ஸ்"ன்னத்தை ஹயாத்தாக்கினாஸ் 100 ஷஹீத்களுடைய நன்மை கிடைக்கும்" என்று ஒரு வயதில0 இருப்பதாக அடிக்கடி கேட்டுவருகின்றோம். ஒரே ஒரு சாதாரணை ஸ்"ன்னத்தைக் கடைப்பிடித்தவருக்கு 100 ஷஹிதுகளின் நன்மை கிடைக்க முடியுமா? இந்த நபிமொழி, குறித்த இக்கருத்தைத் தருகின்றதா? அல்லது இதற்கு வேறு விளக்கம் உண்டா? அறிய விரும்புகின்றேன்.
பதில்: உங்களது சந்தேகம் நியாமானதே. குறித்த கருத்து ஒரு நபிமொழியாயினும், அதனை மொழிபெயர்ப்பதிலும் அதற்கு விளக்கம் கூறுவதிலும் தவறிழைக்கப்பட்டிருக்கிறது. குறித்த நபி மொழியின் சரியான மொழிபெயர்ப்பு கீழ்வருமாறு அமைதல் வேண்டும்:
“எவர் எனது ஸ“ன்னாவை அதாவது வாழ்க்கை முறையை - எனது சமுதாயம் சீர்கெட்டுள்ள வேளையில் உயிர்ப்பிக்கிறாரோ, அவருக்கு 100 ஷஹிதுகளின் நன்மை கிட்டும்.”
இங்கு நபியவர்கள் தமது ஒரு சுன்னத்தை உயிர்பிப்போர் பற்றிக் குறிப்பிடவில்லை; மாறாக இந்நபிமொழியில் வரும் "ஸ"ன்னதி" என்னும் பதப்பிரயோகம் அன்னாரின் முழு வாழ்க்கையையும் குறிக்கும் விதத்திலேயே கையாளப்பட்டுள்ளது. ஸ"ன்னதி" எனும் பதத்தையே "எனது ஒரு ஸ"ன்னத்” எனச் சிலர் பிழையாக மொழி பெயர்க்கின்றனர். இதனை "எனது ஸான்னத்" என்று மொழி பெயர்ப்பதே சரியானது என்பதனை , அறபு மொழி தெரிந்த எவரும் மறுக்கப் போவதில்லை.
எனவே, இவ்வகையில் இத்தயை ஒரு காலப்பிரிவில், வாழ்வின் அனைத்துறைகளிலும் நபிகள1ார் காட்டித் தந்த முழு அளவிலான வழிகாட்டலை மீண்டும் உயிர்ப்பிட் வருக்குக் கூறப்பட்ட சுப செய்தியாகவே இந்நபி மொழியைக் கொள்ள முடியும்.
அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.
குறித்த நபி மொழி ழஈபானது எனக்கூறும் அறிஞர் நாஸிருத்தின் அல்-அல்பானியின் கருத்தையும் கவனத்திற் கொள்க.

Page 74
நூலாசிரியரின்
* நபி வழி - (1)
* நபி வழி - (II)
வெளிவர இருட்
* மறைவழி (அல்
* மிஹற்ராஜ் வகுக் * இஸ்லாமிய நே
* இஸ்லாமிய உ
ISBN 955 - 9454 - 02 - 1

ILIEDEl
குர்ஆன் விளக்கத் தொகுப்பு)
5கும் வாழ்க்கை வழி
ாக்கில் கல்வி
லகம். பகுதி - (1)