கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமையும் தேசிய சிறுபான்மை இனப்பிரச்சினையும்

Page 1
இலங்கையி அரசியல்
தேசிய சி. இனப் பிர
 
 

பங் பீடம், SITT. L.
ー 三ー

Page 2

இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமையும், தேசிய சிறுபான்மை இனப் பிரச்சினையும்.
நமது நாட்டின் இன்றைய நிலைமை பற்றிய சரியானதோரி கணிப்பீடும், நாட்டின் அரசியல் நிலைமைக்கும். உலகின் அரசியல் நிலைமைக்கும் உள்ள உறவு பற்றிய தெளி்வும், நாட்டின் பல்வேறு அரசியல் சக்திகளது நிலைப்பாடு, வர்க்க அடிப்படை ஆகியன பற்றிய ஆழமான அறிவும், நாட்டின் சமுதாயப் புரட்சியின் உடனடிக் கடமைகள் எவை? நீண்ட காலக் கடமைகள் எவை? என்ற விளக்க் மும் இன்றி நாம் சமுதாய மாற்றப் பணியை வெற்றிகரமாச கொண்டு நடாத்துவது அசாத்தியம்,
நாட்டின் நீண்டகால அரசியல் எதிர்காலமும், உலகின் பொது வான அரசியல் அபிவிருத்தியும் புரட்சிக்குச் சாதகமானவை. ஆயி னும், குறுகிய காணக் கண்ணுேட்டத்தில் நோக்கும்போது பல பிரச் சினைகளும், இடர்ப்பாடுகளும் புலப்படவே செய்கின்றன. தற்காலிக மாகப் பிற்போக்குச் சக்திகனது கை ஓங்குவதோ, ஏகாதிபத்தியவாதி களது ஆதிக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படுவதோ, புரட்சி ாைதிகள் மத்தியில் மனத்தளர்வை ஏற்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில் புரட்சிகர இயக்கத்தினதும், புரட்சியினதும் வளர்ச்சி என்றுமே நேரான பாதையைக் கொண்டதல்ல.
குறுகிய கால கட்டத்தின் பிரசினைகள் எவ்வாறு இனம் காணப் படுகின்றன, அவை எவ்வாறு கையாளப்படுகின்றன என்பன இயக் கத்தின் எதிர்கால வளர்ச்சியும், வெற்றியும் எவ்வளவு துரித மானவை. பெரியவை எனத் தீர்மானிக்கும் முக்கிய அம்சம்களாகும்.
நமது நாட்டின் இன்றைய காலகட்டம் "புதிய ஜனநாயகப் புரட்சிக் காலகட்டமாகும். இதன் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தி யத்திற்கும், பரந்துபட்ட வெகுஜனங்களுக்கும் இடையிலானதாகும். மீண்டும் ஏழுச்சி பெற முனையும் தரகு முதலாளித்துவமும், பெரு முதலாளித்துவ சக்திகளும், பிற்போக்குவாத அதிகாரத்துவ முத

Page 3
லாளிகளும் அவர் சளுக்கு, உடந்தையாக மடிந்துவிட்ட நிலையிலுள்ள நிலப் பிரபுத்துவ உற்பத்தி முறைக்குரிய சிந்தனைகளும். பிற மிச்ச சொச்சங்களும் ஏகாதியபத்திய அணியில் திரண்டு நிற்கின்றன. உலக முதலாளித்துவ அமைப்பின் பொருளாதார நெருக்கடியாலும், அதன் விளைவாக எமது நாட்டில் ஏற்பட்டுள்ன பொருளாதார நெருக்கடி யாலும், இரு பெரும் வல்லரசுகளின்து மேளாதிக்கப் போட்டியின் விளைவான நெருக்கடிநியோலும், ரகாதிபத்திய விரோத அரசியல் பணியை நிறைவு செய்யும் வலிமையற்ற தேசிய முதலாளித்துவம், தனக்கே இயல்பான உறுதியற்ற நிைையக் காட்டிக்கொள்ளும் முறை யில் இன்று நடந்துகொள்கிறது. தேசிய முதலாளித்துவத்தின் சட் டைப்  ைபசு குள் சவாரி செய்து கொண்டு அதனைக் கொண்டே "சோஷலிசக் கடமைகளை" நிறைவேற்றலாம் என்று மக்களை ஏமாற்றி. இன்று அரசியல் அனதைகளாகிவிட்ட சமசமாஜிகள் தங்களது அர சியன் வெற்றுவேட்டுத் சனத்தை இதனல் அம்பலமாக்கிக் கொண்ட னர். பராாளுமன்றப்பாதைக்கும் சோஷலிசத்திற்குமுள்ள சம்பந்தம் பற்றிய சகல மாயைகளும், அவற்றின் காரணகர்த்தாக்களும் இன்று அரசியல் அழிவை எதிர்நோக்குகின்றனர். இந்த அம்பலப்படுத்தலை மாத்திரம் மனதிற்கொண்டு நாட்டின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஒரு பக்க முடிவுகளுக்கு வந்துவிட முடியாது. அண்மைய, கடந்த கால நிகழ்ச்சிகளை அவதானிக்கையில் நமது நாடு பெரு வல்லரசு அரசியலில் ஒரு பகடைக் காயாக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள் ளது என்பது மிகவும் பொருத்தமானது. இதில் உலக நிலைவரத்தை ஆராயும்போது, குரங்கே எந்தப் பெரு வல்லரசுக்குச் சாதகமான நிலை யுள்ளது என்பதை வைத்தே - அதாவது அமெரிக்காவிற்கு சார் பாக விருந்தால் வலதெனவும், சோவியத் யூனியனிற்கு சாதகமாக விருந்தால் இடதெனவும் நமது பாராளுமன்ற இடது சாரிகளும் அவற் றின் சிதறல்களும் நாட்டின் 'வலது", "இடது முனப்புகளை அளிக் கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய நாடுகளிலும் வலிமை குன்றிய நாடுகளிலுமுள்ள அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தியும், வேண்டுமானபோது குழப்பங்களை உருவாக்கியும், தூண்டியும் பெரு வல்லரசுகள் (இன்று முக்கியமாக சோவியத் சமூக ஏகாதிபதியம்) தொடர்ச்சியாகப் பிற நாடுகளது உள்நாட்டு விவகாரங்களில் துணையிடு வது பற்றிய எந்தவிதத் தெளிவையும் இவர்கள் காட்டவில்லை. சோவி யத் சமூக ஏகாதிபத்தியத்தின் சில எடுபிடிகளும், கேவன நிலையிலுள்ள ரொட்ஸ்க்கிய வாத கும்பல்களும், பங்களாதேஷ், அங்கோலா விவ காரங்களில் சமூக ஏகாதிபத்தியத் தலையீட்டை ஆதரிக்கவும் செய்கின் றன. சைப்பிரஸ், சிக்கிம் விஷயங்களிலும் சோவியத் தயிைட்டிற்கு இவர்களது ஆசீர்வாதம் உண்டு. கம்போடிய, கிழக்கு திமோர் விடு தலைப் போராட்டங்களில் சோவியத் நடவடிக்கையைப் பார்க்கையில்
8

நமக்குத் தெளிவாகத் தெரிவது, சமூக ஏகாதிபத்தியத்தின் "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்" அரசியல்தான். இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தென்கிழக்காசியாவிலிருத்து விரட்டப்பட் டதையடுத்து வல்லரசுப்போட்டி, நாம் வாழும் இந்துசமுத்திரப்பிராந் தியத்தில் (தென் ஆசிய) உக்கிரமாயுள்ள நிலையில், நம் நாட்டில் தேசிய ஒற்றுமையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்ச்சியையும் சீர் குலைக்க முனையும் சக்திகள் பற்றி நாம் அசட்டையாக இருக்க முடி யாது. நாம், தாட்டின் இன்றைய நிலமையைப் புதிய ஜனநாயகப் புரட்சியின் கண்ணுேட்டத்திலிருந்து ஏ கா தி பத் தி ய விரோதப் போராட்டத்தை மனதிற்கொண்டு நோக்குகையில் நாட்டின் தேசிய சிறுபான்மை இனப்பிரச்சினையின் இன்றைய அபாயகரமான நிலை, இதன் வரலாறு, வளர்ச்சி, தொடர்புடைய அரசியல் வர்ச் க சக்தி கள், புரட்சிகர சக்திகள், மக்கள் மத்தியிலான இம் முரண்பாட்டை எவ்விதம் கையாள்வது என்பன பற்றிய ஆழ்ந்த அறிவு அவசியமா கின்றது.
நமது நாட்டின் தேசிய இனப்பிரச்சினையின் இன்றைய சிக்கலான நிலைமை முக்கியமாகப் பிரித்தானிய காலனித்துவத்தினுல் ஏற்படுத் தப்பட்ட நிலைமைகள் காரணமானதே. காலனித்துவ வாதிகளுள் மிகவும் தந்திரசா லிகளான பிரித்தானிய காலனித்துவ வாதிகள் பல்வேறு நாடுகளில் செய்தது போன்று இலங்கையிலும் தம் பிரித் தாளும் சூழ்ச்சிகள்ே வெற்றிகரமாக நடத்தினர்.
தேயிலைத் தோட்டங்களை நிறுவி, இ ல ங் கை யின் பொருளா தாரத்தை முழுக்க முழுக்க சில தோட்டப் பயிர்களின் உற்பத்தி யிலேயே தங்கியிருக்கும் பெருந்தோட்டப் பொருளாதாரமாக மாற்றி இலங்கை மீது தம் பொருளாதாரப் பிடியை இறுக்கிய அதே தேரம் தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து ஏமாற்றி அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழ்த் தொழிலாளர்கள் மலை நாட்டுப் புறங்களிலிருந்த சிங்கள விவசாய வெகுஜனங்களுடன் உற au /T L— (yp uq uu rT 35 QJ PT AD/ அவர்களைப் பிரித்தானிய காலனித்துவவாதிகள் பிரித்து வைத்தனர். அத்துடன் தமக்கும் மலைநாட்டுச் சிங்கள மக்க ளுக்குமிடையிலான முரண்பாட்டைத் திசைதிருப்பி, அதை ஒரு சிங் கள - தமிழ் வகுப்புவாத முரண்பாடாக மாற்றுவதிலும் வெற்றி கண்டனர். இதன்மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கும், சிங்கள விவசாயிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைப் பயன்படுத்தவும் செய்தனர்.
அரச நிர்வாகத்தில் (ஆரம்பத்தில் பறங்கிய, கிறிஸ்தவ சமூகங் களைச் சேர்ந்தவர்களையும் பின்னர்) பெருமளவில் யாழ்ப்பாணப் பிர
3

Page 4
தேசத்து மக்களையும் புகுத்துவதன்மூலம் இரு பெருந் தேசிய இனங் களுக்குமிடையில் ஆழ்ந்தமுரண்பாடுகளை வளர்த்தனர். யாழ்ப்பாணப் பிரதேச உயர் - நடுத்தர வர்க்கங்களை அரசாங்க உத்தியோகங்களில் தங்கியிருக்கச் செய்து, அவர்கள் மத்தியில், முக்கிய உயர் வகுப்பினர் மத்தியில், தமக்கு ஆதரவான சக்திகளைச் சிருஷ்டித்தனர். இதே போல சிங்கள மக்கள் மத்தியிலும், சில வசதி படைத்த வர்க்கத் தினரையும், தம் எடுபிடிகளையும் வளர்த்துவந்த போதிலும் இந்தப் பிற்போக்கு வர்க்கங்களிடையே இருந்த இனவாத முரண்பாடு களைத் தம் தேவைகளை அனுசரித்து பயன்படுத்தி வந்தனர். இந்த வர்க்கங்களது தலைமையில் வளர்க்கப்பட்ட அரசியலில் வகுப்புவாத விஷ வித்துக்கள் நன்கு முளைத்துத் தழைத்தன. 1948-ம் ஆண்டை அடுத்து வந்த வகுப்புவாத அரசியலின் எந்த அம்சத்தினது ஆரம்ப மும் பிரித்தானிய ஆட்சிக் காலத்துடன் தொடர்புடையதே.
1948 சுகந்திரத்தையடுத்து இலங்கையின் படுபிற்போக்குச் சக்தி களின் பிரதிநிதியான டீ. எஸ். சேனநாயக்கா வ.பிரதேச பிற் போக்குத் தமிழ்க் காங்கிரஸின் அனுசரணையுடன் நிறைவேற்றிய பிரஜாவுரிமைச் சட்டம் தேசிய இனங்கள் மத்தியிலான முரண்பாடு களின் வளர்ச்சியை ஊக்குவித்ததோடு, இலங்கைத் தொழிலாளி வரிக்கத்தின் மிகப் பெரிய பகுதியான தோட்டத் தொழிலாளரின் அடிப்படையுரிமைகளைப் பறித்து, அவர் கட்கும், பிற தொழிலாளருக் கம் இடையிலான ஒற்றுமையைக் குலைக்கவும், தொழிலாள வர்க்க இயக்கத்தைப் பலவீனப்படுத்தவும் வழி கோலியது. இப்பிரச்சினை பற்றிப் போராட முனைந்த தொண்டமான் பிற்போக்குத் தலமை தன் கையாலா காத்தனத்தைக் காட்டிக்கொண்டது ஒருபுறமிருக்க, பாராளுமன்ற இடதுசாரி" அரசியல் தலைமைகளும் தங்கள் பாராளு மன்ற அரசியல் ச ந் த ர் ப் ப வா த த்  ைத முன்னிட்டுக் காலப் போக்கில் இப்பிரச்சினை பற்றி ய நிலைப்பாட்டைக் கைகழுவின. இப்பிரச்சினைரைச் சாட்டி தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமி ழரசுக் கட்சியை ஏற்படுத்தியவர்களும் இப்பிரச்சினை பற்றி வேண் டிய நடவடிக்கை எடுக்கத் தகுதியின்மை காரணமாகவும், தாம் எதிர்பார்த்த அரசியல் லாபம் மலையகத்தில் கிடைக்காததாலும் மலைநாட்டு அரசியலத் தொண்டமானிடம் "தாரை" வார்த்து விட்ட தாகப் பிரகடனப்படுத்திக் கொண் டனர். எதிர்பார்க்க வேண் டிய விதமாகவே தோண்டமான் 1965-ல் யூ.என். பி. அரசாங்கத் துடன் சங்கமமானுசி. பாராளுமன்ற அரசியலினின்றும் நீக்கப்பட்ட மலையக மக்கள் தொழிற்சங்க அரசியலில் மாத்திரமே தங்கியிருக்க நேர்த்தது. பாராளுமன்ற அரசியலில் இவர்களின் "பயனின்மை" சந் தர்ப்பவாத அரசியல் தலைமைகள் இவர்களைப் புறக்கணிக்கவும், இவர்களுக்கு விரோதமான பிரச்சாரத்தில் இறங்கவும் கூட வசதி

களை ஏற்படுத்தியது. வலதுசஏரிகள் மட்டுமின்றி, பாராளுமன்ற இடதுசாரிகளும் இதில் பங்குகொண்டனர், எதிர்ப்புரட்சி ஜனதா விமுக்தி பெரமுனையினரும் 1970 - 71-ல் மலைநாட்டுத் தொழிலாள ருக்கு விரோதமான உணர்வுகளைத் தூண்டிவிட முனைந்தனர்.
பிரிட்டிசாரின் பிரித்தாளும் தந்திரம் காரணமாக வடபிர தேச குட்டி பூர்ஷ"மவா வர்க்கம் (அதாவது நடுத்தர வர்க்கம்) அர சாங்க உத்தியோகங்களில் பெரும் பங்கைப் பெற்றபோது கல்வி வசதிகள் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலுமே முன்னேறியிருந் தன, பிற பிரதேசங்கட்குக் கல்வி வசதிகளது பரவுதலும், கிராமப் பொருளாதாரத்தின் தேக்கமும், நகரங்களின் வளர்ச்சியும் காரண மாக ஏற்பட்ட வேலையின்மையும், அர சா ங் க உத்தியோகத்தின் *சொ கு சும்" சிங்களக் குட்டி பூர் ஷ-சவா வர்க்கத்தின் ஆசைகளை வளர்த்ததால் தவிர்க்க முடியாதபடி உத்தியோகங்கட்கான போடடி வளர்ந்தது. இச்சூழ்நிலையில் இயல்பான அந்நிய ஆதிக்கக்திற்கும் ஆங்கில மொழிக் கலாச்சார ஆதிக்கத்திற்கு முட்ட வர்க்கங்கட்கும் அவர்களது அதிகாரத்திற்கும் விரோதமான உணர்வுகள் காரண மாசு ஒரு புறமும் தமிழ் இனத்தவரது கையிலுள்ள உத்தியோ சுங் களைத் தம் கைக்கு மாற்றும் குட்டி பூர் ஷ"மவா வர்க்கம் ஆசை காரணமாக மறு புற மு ம் (இன்னும் பிரித்த சனிய காலனித்துவ வாதிகளால் வளர்ததுவிடப்பட்ட வகுப்புவாத உணர்வுகனது 3 ந்து தலின் துணையுடன்) சிங்கள மக்கள் மத்தியில் "சிங்களம் மட்டுமே அரச கரும மொழியாக வேண்டுமெனும் கோஷம் எழுந்தது. இதை எழுப்பியவர் க்ள் சிங்கள முதலாளி வர்க்க தலைமையினரே யாயினும் ரீ ல.சு கடசியின் தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் நின்ற சக்தி கள் இதை வெறுமே வகுப்புவாத நோக்கங்கட்கு மட்டுமல்லாமல் ஏகா திபத்திய விரோதத் தேவைகட்க) கவும் முன் வைத்தது என்பது முக் கியமானது, ஆங்கிலம் அகற்றப்படுவதும், சிங்களம் ஆட்சிமொழியா வதும் முற்போக்கான அம்சங்கள். ஆனல் தமிழின் தேசிய மொழி அந்தஸ்து மறுக்கப்படுவது பிற்போக்கான ஒன்று. இதனை இடது சாரிகள் சரியாக விளங்கி மொழிப் பிரச்சினை பற்றிய கொள்கையை சரியான முறையில் வைக்காததாலும். அவர்களின் வேலைகள் பெரு மளவும் நகரங்கட்க வரையறுக்கப்பட்டிருந்ததாலும் (யூ.என். பி. யே முதன்முதலில் சிங்கள மொழிக் கோஷத்தை முன் வைத்த போதும்) சிங்கள மக்கள் மத்தியிலான ஏ கா தி பத் தி ய விரோத சக்திகள் ரீ. எஸ். சு. கட்சியின் பின்னல் அணி திரண்டனர். பண்டாரநாயக்கா வினதும், பூரீ ல. சு. கட்சியினதும் ஏகாதிபத்திய விரோதம் தேசிய முதலாளி வர்க்கத்தினது என்பதால் அது தவிர்க்க முடியாத குறு கிய தேசிய இனவாதம் போன்ற பிற்போக்குக் கொள்கைகளுடன்

Page 5
பிணைந்தேயிருந்தது. ஆயினும் நீ. ல, சு. கட்சி ஏ கா தி பத் தி ய விரோத சக்திகளது ஆதரவில் தங்கி நின்ற காரணத்தால் தொடர்ந் தும், பல ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
சோஷலிசப் புரட்சிக்குரிய கால கட்டம், ஏகாபத்திய விரோ தப் போராட்டக் காலகட்டம் என்பனவற்றை ரொட்ஸ்கிய வாதி கள் எங்கும் இனங்கண்டதில்லை. அதேபோல் எதிரிக்கும் மக்களுக்கு மிடையிலான முரண்பாடு, மக்கள் மத்தி பிலான முரண்பாடுகள், பிரதான முரண்பாடு, இரண்டாந்தர முரண்பாடுகள் என்பன பற்றி யும் அவர்கள் விளங்கிக்கொண்டதில்லை. இயல்பாகவே வலமும், இடமூமாக ஊசலாடும் ரொ ட் ஸ் கி ய வ ரா த சமசமாஜக் கட்சி தன் புரட்சிகரக் கோ ஷங் க ாே மூட்டை கட்டி வைத்து விட்டுப் பாராளுமன்ற அரசியலில் மூழ்கிய நேரத்திலும் சிங்களம் மட்டுமே கோஷத்தின் முற்போக்கான அம்சங்களே யும் பிற்போக்கான அம்சங் களையும் இனங்காணத் தவறிவிட்டது. 1956-ல் சிங்களம் மட்டுமே கொள்கையை முழுமூச்சாக எதிர்த்த அதே சமயம் "சம அந்தஸ்து" என்ருல் என்ன என்ற தெளிவான விளக்கத்தையோ தமது சிறு பான்மை இனக் கொள்கை என்ன என்பதையோ அவர்கள் முன் வைக்கவில்லை. பூரீ. ல, த. கட்சியையும , த மி ழ ர சு வாதிகளையும் எதிர்த்த அதே சமயம் தம் மாற்று என்ன என்பதை மக்கள் மத்தி யில் சரியாக விளக்க முடியாத இவர்களது தேர்தல் தோல்வி அதி சயமர்ண ஒன்றல்ல. 1960 தேர்தல் கிளிலும் தமிழ் மக்கள் தம் "சம அந்தஸ்து" கோஷத்தை நம்பித் தம்மை ஆசரிக்காததால் வெகுண் டவர்கள் 1961-ல் சிங்களம் மட்டுமே கொ ஸ்கையை ஏற்றதாகப் பரவிய வதந்திகளையடுத்து 1962-ல் கட்சி அடக்கமாக" சிங்கள மொழிக் கொள்கையை ஏற்றலும் இது பற்றிய பகிரங்க விளக்கம் 1972-ல் தான் (லெஸ்லி குணவர்த் தனவால்) வெளியிடப்பட்டது. தோட்டத் தொழிலாளர் பிரச்சினை பற்றிய சமசமாஜக் கட்சியின் நடவடிக்கைகளும் இதைவிட அதிகம் வேறுபட்டனவல்ல . 1963-ல் (பிலிப் குணவர்த்தணுவின் மக்கள் ஐக்கிய முன்னணி, திரிபு வாதிகள், சமசமாஜக் கட்சி இணைந்த) இடதுசாரி ஐக்கிய மு ன் ன ன  ையக் குலேத்து பூரீ. ல. சு. கட்சி அரசில் இணைந்த சமசமாஜிகள் மந்திரிப் பதவிகளைப் பெறுவதற்காகத் தொ ழி லா ள ர் கோரிக்கைகளைக் காட்டிக் கொடுத்ததுடன், மலேயக மக்கள் பி ர ச் சினை பற்றியும், மொழிப் பிரச்சினை பற்றியும் தம் முன்னைய நிலைப்பாடுகளை முற்ரு கவே கைகழுவிவிட்டனர்:
கம்யூனிஸ்ட் கட்சி சிங்களத்தை ஆட்சி மொழியாகவும் தமி ழைப் பிரதேச மொழியாகவும் ஏற்று பிரதேச சுயாட்சி முறை ஒன் றுக்கான கருத்துக்களை முன்வைத்தது. கட்சிக்குள் திரிபுவாதப்
6

போக்குகளது வளர்ச்சியும், பாராளுமன்ற அரசியலில் மிதமிஞ்சிய ஈடுபாடும் முரண்பாடுகளை வளர்த்தபோதும் சரியான உட்கட்சிப் போராட்டமொன்று ஏற்படு முன்னரே சோவியத் தலையீட்டால் கட்சி பிளவு கண்டது. ஆயினும் பெருவாரியான கட்சி உறுப்பினர் களாலும் தொழிலாள ஆதரவாளர்களாலும் திரிபுவாதத் தலைமை நிராகரிக்கப்பட்டது. திரிபுவாதத் தலைமை மேலும் மேலும் பராளு மன்றச் சேற்றிலும், அந்த அரசியலுக்குரிய சந்தர்ப்பவாத நடை முறையிலும் ஆழ்ந்தது. இதன் விளைவாகவே இவர்கள் 1966 ஜன வரி வகுப்புவாத ஊர்வலத்தில் பூரீ. வ. சு. கட்சி, சமசமாஜக் கட்சி யினருடன் பங்குபற்றியதோடு சிங்கள வகுப்புவாதக் கோஷங்களே யும் கூசாமல் எழுப்பினர். சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்கும் அதே சமயம் சிறுபான்மை இன மக்களது அடிப்படை மொழியுரிமை களையும், பிற உரிமைகளையும் பேணும் ஒரு சிறுபான்மை இனக் கொள்கை குறுகிய காலக் கண்ணுேட்டத்தில், பாராளுமன்ற ஆச னங்களை வெல்ல உதவாது என்ருலும், நீண்ட காலத்தில் ஏகாத பத்தியத்திற்கெதிராக மக்களைத் தேசிய ரீதியாக ஒன்றுபடுத்த அவ சியமானது என்பதை இவர்களது பாராளுமன்ற சந்தர்ப்பவாத அர சியல் கண்ணுேட்டம் ஏற்க அனுமதிக்கவில்லை என்பதே அடிப்படை உண்மை யாகும் தி ரிபு வாதிகளிடமிருந்து காப்பாற்றப்பட்ட தொழிற்சங்க ஸ்தாபனமும், கட்சிப் பெரும்பான்மையும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் வந்தன. ஆனல் கட்சிக்குள் சண்முகதாசனின் தவறன தலைமை காரணமாக ஏற்பட்ட ஒரு முனை வாத இடது சந்தர்ப்பவாத அரசியல் வேலைகள் கட்சியையும், தொழிற்சங்கத்தையும் பலவீனப்படுத்தியது மட்டுமன்றி கட்சி ஸ்தா பணத்தையே சீர்குல்த் தன, இதன் காரணமாகப் பல குழுக்கள் தோன்றவும் ஏதுவானது. இதில் பல சக்திகள் ஜ. வி. பெரமுனையின் எதிர்ப்புரட்சி அரசியலுக்குப் பலியாயின. தொடர்ந்து வந்த 1969 மேதின - வெசாக் தினப் பிரச்சி ன பற்றிய தவருண தீர்மானம் போன்ற காரணங்கள் சிங்கா மக்கள் மத்தி பில் நம்பிக்கையின்மையை வளர்த்தது. சிங்கள வெகுஜனங்களைச் சரியாக அணுகாமலும், தமிழ் தேசிய இனத்திலுள்ள முற்போக்குச் சக்திகளைச் சரியாக அணி திரட் டாமலும் விட்ட சண்முகதாசன் தலைமை மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்கத்தை "அரசியல் மயப்படுத்த" முனைத்து அத்தொழிலா ளர் மத்தியிலும் போராட்ட ஒற்றுமைக்கு வேட்டு வைத்ததுடன், கட்சி மலையக மக்களின் பிரச்சினை பற்றி ஒரு சரியான வேலைத்திட் டத்தை முன் வைக்கவும் தவறிவிட்டது. மொத்தத்தில் பார்க்கும் போது சிறுபான்மை இனப்பிரச்சினை பற்றிய சரியான நீண்ட காலத் நீர் வைக் கட்சி முன் வைத்தாலும் குறுகிய காலப் பிரச்சினைகளைப் பற்றியும், அன்ருடப் பிரச்சினைகளின் தன்மை பற்றியும் சரியான
y

Page 6
கண்ணுேட்டத்தை முன் வைக்காததன் காரணமாகத் தமிழரசு, தொண்டமான் போன்ற சக்திகளது அரசியல் ஆதிக்கத்திற்கு வசதி யாக அமைந்தது.
பூரீ. ல. சு. கட்சியின் பின்னணியிலிருந்த பல்வேறு அரசியல் சக்தி களும், அதன் தேசிய முதலாளித்துவ வர்க்க அடிப்படை ஒரு புற மும், சகல தரகு முதலாளித்துவ படு பிற்போக்கு சக்திகளும் பூ. சான். பி. யின் பின் அணி திரண்டமை மறுபுறமுமாக, பூரீ. ல. சு? கட்சியை ஏகாதிபத்திய விரோதப் பாதையில் உந்தின. அதே சமயம் அதன் குறுகிய தேசிய வாத சிந்தனைகளது தாக்கமும் தொடர்ந்து இருந்தே வந்தது. எனினும் தமிழ் மக்கள் மத்தியிலான எதிர்ப் புணர்வை அவதானித்த பண்டாரநாயக்கா இப்பிரச்சினை யின் முக்கி யத்துவத்தை 1957-ல் உணர்ந்து அதனைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈ டு பட் டா ர், இதன் விளைவான பண்டாரநாயக்கா - செல்வ நாயகம் ஒப்பந்தம் கே. எம். பி. ராஜரத் கிணு, ஆர். ஜி. சேனநாயக்கா போன்ற வகுப்புவாதிகளினதும், யூ. என். பி. (கண்டி 'யாத்திரை) யினதும் எதிர்ப்பைச் சந்தித்தது. இதைச் சமாளிக்கப் பண்டார நாயக்கா தடுதாறும்போது, பண்டாரநாயக்கா பின்வாங்க வசதி செய்யும்படியாக "பூரீ எதிர்ப்பு" இயக்க க்தைத் தமிழரசுக் கட்சியின் தீவிரவாதிகள் அவிழ்த்து விட்டனர். இதையொட்டி நடந்த தமி ழுக்குத் தார் பூசும் இயக்கமும், 1958 வகுப்புவாதக் கலவரமும் ராஜரத்தின - ஆர். ஜீ. சேனநாயக்கா சக்திகளினதும், யூரீ. ல, சு: கட்சியிலிருந்த சில வகுப்புவாத சக்திகளினதும், யூ. என். பி. யினதும் தூண்டுதலுடனும், அனுசரணையுடனும் நடந்தவைகளே. பண்டார நாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தத்தின் தோல்விக்கும். 1958 கலவரத்திற்கும், தமிழரசு வாதிகளது பங்கு குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்திற்கு முன்பும், பின்பும் தமிழரசுக் கட்சியின் பிற்போக்குத் தலைமை எப்போதும் ஏகாதிபத்திய சார்பாக இரூந் ததை அறியக்கூடியதாகவுள்ளது. இலங்கையிலிருந்து அந்நியத்தளங் கள் அகற்றப்படுவதை எதிர்த்து மகாராணிக்குத் தந்தியடித்ததன் மூலமூம் மற்றும் எண்ணெய்க் கம்பெனிகள் தேசியமயமாக் ப்பட் டதை எதிர்த்ததன் மூலமும் தமது ஏகாதிபத்திய சார்புத் தன்மையை வெளிக்காட்டினர். இவர்கள் சிறுபான்மையினப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட அவற்றை நீடிப்பதிலேயே தம் கவனத்தைக் காட் டியதோடு தங்களுடைய குறுகிய அரசியல் நலன்களிற்காக சிறு பான்மை இனப் பிரச்சினைகளில் ஏகாதிபத்தியம் தலையிடுவதை அன் றும் இன்றும் தமிழரசுக்கட்சி ஊக்குவித்தே வந்துள்ளது. 1960-ல் தமிழரசுக் கட்சியின் யூ. என். பி. சார்புப் போக்கும், தாமே சிங்கள அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்திகள் எனும் ஜம்பமும், 1944
8

நம்பிக்கையில்8ாத் தீர்மானம் 1985 தேர்தலின் போதான வேலே களும் ரீ. ல, சு. கட்சிக்குள் தமிழரசுக்கு எதிர ஈ ன போக்கை வளர்த்தது. 1970 வரையிலும் வட-கிழக்கு மாகா என ங் க ளி ல ரீ. ல, சு. கட்சி எதுவித அரசியல் அக்கறையும் காட்டவில்லை. இன்று ஒரு சில எடுபிடிகளே வைத்து வளர்க்கப்படும் "அரசியல்" தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அரசாங்க விரோத உணர்வை வளர்த் துள்ளது.
1956-ல் பெரும் ஆதரவுடன் தேர்தலில் வெற்றிகண்ட தமிழரசு வாதிகள் 1960 தேர்தல்களில் தம் ஆதரவைப் பெருக்கிக் கொண்ட னர். ஆனல் 1981 சத்தியாக்கிரகம் இவர்களால் சப்பாணிப்போராட் டத்தைக் கூடச் சரியாக நடத்த முடியாது என்று தெளிவுபடுத்தி யதையடுத்து 1965-ல் இவர்களது செல்வாக்கு சிறிது சரியத் தொடங்கியது. எந்த யூ என். பி. யுடன் சேர்ந்ததற்காக பொன்னம் பலத்தை விமர்சித்தார்களோ, எந்த யூ.என். பி. திட்டமிட்டு சிங் களக் குடியேற்றத்தை அமுல் நடத்தியதென்று தாக்கிஞர்களோ, ாத்த யூ.என். பி. தமிழுக்கு உரிமை வழங்குவதை எதிர்த்து கண்டி யா த் தி  ைர நடாத்தியதோ, எந்த யூ என். பி. மலேயக மக்களே நாடற்றவர் ஆக்கியதென்று தாக்கினர்களோ ளந்த யூ, என். பி. 58 வகுப்புக் கலவரத்தைத் தூண்டி 1960 ஜுன் தேர்தலில் வகுப்பு வாத விஷத்தைக் கக்கியதோ அதே யூ. என பி யுடன் 1965-ல் ஏழு கூட்டு அரசாங்கத்தில் சேர்ந்த பின்பு, 1965 முதல் 1969 வரை உரிமை எதையுமே பெற்றுத்தரத் தவறிய பின்பு, 1970 தேர்தலை நினத்து "நீ அடிப்பதுபோல் அடி: நான் அழுவதுபோல் அழுகிறேன் என்ற விதமாக வெளியேறிய தமிழர சுவாதிகள் 1970 தேர்தலில் எந்த வொரு தொகுதியிலும் விழுந்த வாக்குகட்குள் 50% க்கு மேல் பெற வில்லை. 1970 தேர்தலில் முக்கிய பிரமுகர்கள கூடத் தடம் புரண்டனர். தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றதற்கான காரணம் அங்கு போட்டியிட உருப்படியான வேறு அரசியற் கட்சி எதுவும் இல்லாமையேதான். இச்சூழ்நிலையில் தேர்தல் பெருமளவும் தனிநபர் அடிப்படையிலேயே ந.ந்தது
தமிழரசுக் கட்சிக்குள் 1958-ல் ஒரு சில ஏகாதிபத்திய விரோத சக்திகள் இருந்தது உண்மை. தமிழ்ப் பெருந்துரைத்தனத்தாரின் கட்சியாக விளங்கிய தமிழ்க் காங்கிரஸின் எதிர்ப்பாளர்களும், ஆங் கில விரோதிகளும், தமிழ் இயக்க வாதிகளும் தமிழரசுக் கட்சி மூலம் தம் உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆனுல் ஏகாதிபத்திய விரோத உணர்வுகளைக் கொண்ட சக்திகள் தமிழரசுக் கட்சிக்குள் ஆதிக்கம் பெற முடியாமைக்கான காரணங்கள் இங்கு குறிப்பிட வேண்டியன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசாங்க உத்தியோக வசதிகளை அனுபவித்த பகுதியினரது தொகை தமிழ் மக்கள் மத்தியில் விகிதா

Page 7
சாரத்தில் அதிகமாக விருந்தும், இவர்களது அரசியல் செல்வாக்கு இனறு தேய்ந்து வந்திர்லும், அன்று குறிப்பிடத்தக்கதாகவிருந்ததும் ஒரு முக்கிய காரணம். சிங்களம் மட்டுமே சட்டத்தையடுத்து அர சாங்க உத்தியோக வாய்ப்புகள் குறையும், சந்தர்ப்பமும், அரசாங் கங்களின் வகுப்புவாத நடவடிக்கைகளான சிங்களக் குடியேற்றம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் போன்றவையும் ஆங்கில ஏகாதிபத்தியம், சிங்கள ஏகாதிபத்திய'த்திலும் நல்லது போன்றகோ ஷங்களை இவர் கள் பரப்ப வசதி செய்தது. சிங்கள ஏகாதிபத்தியம், சிங்கள ஆட்சி, சிங்கள ஆளும் இனம் என்பன போன்ற கோஷங்கள் ஏகாதிபத்தி பம் என்ருல் என்ன என்று புரிந்துகெr mண்டு, ஏகாதிபத்தியமே மக் களது பிரதான எதிரி என்று உணர்ந்து போராடுவதினின்று தமி ழர்களை திசை திருப்ப முனைந்தன. 1960 க்குப் பிள் தமிழ்க் காங்கிர ஸின் அரசியல் அஸ்தமனம் அதன் பின் நின்ற சகல படுபிற்போக்கு சக்திகளையும், கொழும்பு நகரத்து யூ என். பி. நேசக் கனவான்களை யும் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வழிகோலியது. இதை யடுத்து தமிழரசுக் கட்சியில் குட் டி பூர்ஷ"வா வர்க்கத்தினரது செல்வாக்கு விழத் தொடங்கியது.
தமிழரசுக் கட்சி மூலம் எதையும் சாதிக்க முடியாது என்ற தெளிவு தமிழர்களை முக்கியமாக வாலிபர்களை, இடதுசாரிகளை நோக்கித் திருப்பச் செய்திருக்கக் கூடிய நிலையில், இடதுசாரிப் பாராளுமன்ற அரசியல் வாதிகள் தம மை வைத்திருக்கவில்லை. அதே போல் புரட்சிகர அரசியலை நோக்கி அவர்கள் திரும்பமுடியாதபடி சண்முகதாசன் தலைமையினது வரட்டுவாத போலிப் புரட்சிகர கோஷங்களும், சீர்குலைவு வேலே சுளும் அமைந்திருந்தன. மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனயும், சில வகுப்புவாத கோஷங்களும் தமிழ் உாலீபர்களே தனிநாடு கோஷத்தின் கீழ் அணி திரட்ட ஏதுவாக அமைந்தது. 'தனி நாடு’ கோஷம் தமிழ் மக்கட்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் தமிழ் மக்சள் மத்தியில் தமிழரசுக் கட்சியினின்று பிரிந்த முன்னைநாள் ஊர் காவற்றுறைப் பாராளுமன்ற உறுப்பினர் நவரத் தினத்தின் தலமையில7 ன தமிழர் சுயாட்சிக் கழகமோ, அல்லது தொட்டதற்கெல்லாம் பிரிட்டிஷ் மகாராணிக்குத் தந்தியடிக்கும் ஒரு வரது ஈழத்தமிழர் விடுதலை முன்னணிக்கோ அல்லது இங்கேயிருந்து கொண்டு தென்னிந்திய அரசியலடிப்படையில் கற்பனை செய்யும் சகல வித இலங்கை தி. மு. க. களோ என்றும் எவ்வித செல்வாக்கும் பெறவில்லை. இதற்குரிய காரணங்கள் தமிழ் இளைஞர்களது பிரச் சினைகள் அன்றைய சூழ்நிலயில் இ ன்  ைற ய பொதுவான உலக தேசிக நெருக்கடியில் உள்ளதிலும் குறைவாகவிருந்ததும், தமிழ் வகுப்புவாதத் தலைமைகள் எ த ந் கும் தமிழரசுக் கட்சின்ய ஒத்த வலிமை இல்லாததும் அடங்கும். 1970-ல் பல்கலைக்கழக அனுமதி
0

தொடர்பாகச் செய்யப்பட்ட தரப்படுத்தல் குறைந்துவரும் உத்தி யோக வாய்ப்புக்களை நம்பியிருந்த தமிழ் மாணவர்களை ஆத்திரத் நிற்குட்படுத்தியது. 1971-ல் நடந்த "பங்களாதேஷ்" விவகாரம் தமிழரசுக் கட்சிக் தள்ளும், வெளியிலும் பிரிவினைவாத கோஷங்களை ாழுப்ப உதவியது, இதனேயொட்டி மாணவர் பேரவை போன்ற ஸ்தாபனங்கள் தீவிர பிரிவினேப் பிரச்சாரத்தில் இறங்கின. 1971-ல் நடந்த ரப்பிரல் சிளர்ச்சியை அடுத்து வன்முறைப் போராட்டம் வேண்டும் என்ற கருத்து தமிழரசுக் கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டது. தேர்தலில் தோற்ற சில தமிழ் அரசியல் வாதிகள் இச்சக்திகளைத் நம் தேவைகளையொட்டி வளர்த்தனர். 1972-ல் புதிய அரசியல் சட் .ம் வெறும் வாயை ாேன்ற தமிழரசுக் கட்சிக்கு ஒரு பிடி அவல் கி.ை த்த மாதிரி அமைந்தது, சோல்பரி அரசியல் அமைப்புச் சட்டத் தின் கீழ் எந்த அரசியல் உரிமைகளையும் தமிழர்கள் பெற வில்லை என்று கூறிச் சமஷ்டி கேட்டதை மறந்து எந்த சோல்பரி அரசியலமைப் பிள் கீழ் உள்ள சட்டரீதியிலான பாதுகாப்புக்களையும் மீறி பிரஜா வுரிமைச் சட்டமும், இவர்கள் எதிர்த்த ஒவ்வொரு சட்டமும் நிறை வேறியது என்பதை மூடிக்கட்டி, தாம் 1965-ல் அரசாங்கத்தில் பங்கு பற்றியதை மழுப்புமுகமாக 1972-ல் அரசியல் சட்டத்தை எதிர்த் தார்கள். இலங்கை குடியரசாவதை எதிர்ப்பதில் இவர் களும், யூ என். பி யும் ஒன்றுபட்டே செயற்பட்டது குறிப்பிடத்தக்கது. இத் தோடு இவர்கள் புதிய அரசியற் சட்டத்தை எரித்ததன் மூலம் சிங்கள மக்களின் எதிர்ப்பையும் ஏற்படுத்தினர். சம அந்த ஸ் து வேண்டுமென்ற கோஷத்தை முன் வைத்த சமசமாஜக் கடசியின் அர சிங்ல் திட்ட நிபுணர் தீட்டிய புதிய அரசியற் சட்டத்தில் சிறு பான்மை இன உரிமைகட்கு எதுவிதமான பாதுகாப்புக்களும் தரப் படவில்லேயாயினும் புதிய அரசியற் திட்டத்தின் மூலம் மட்டும் சிறு LHEtLtt T Ht tL YY T T tLLL TtLCTTS TYT TLCS CLL TS LEtTTTTLLLLLL T சமுதாய மாற்றமின்றி எந்த அரசியற் சட்டமும் அதனப் பூரண மாகத் தீர்க்க முடியாது தமிழரசுக் கட்சி தனது எதிர்ப்பு முறை கள் மூலம் யூ என். பி. - தொண்டமான் - தமிழரசுக் கட்சிபிற் போக்கு ஐக்கியத்தையே மீண்டும் உறுதிப்படுத்தியது. தமிழரசுக் கட்சியின் பிரச்சாரம் ஒருபுறம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை நிலநிறுத்த உதவிஞலும், அது புதிய நெருக்கடிகளையும் ஏற்படுத் நவ செய்தது. தமிழரசுக் கட்சி ஏற்படுத்திய தமிழர் கூட்டணிக் குள் தலைமை தொடர்பான குத்து வெட்டுக்கள் ஒருபுறமிருக்க பாராளுமன்றத் தமிழரசுத் தலைமைக்கும். இளஞர் இயக்கங்களுக்கு மிடையில் முரண்பாடுகள் வளர்த்தன. எந்த வித அரசியல் வேலைத் திட்டமுமின்றி தமிழ் ஈழக் கோரிக்கைக்கு உடன்படவும் அதே சம யம் தம் பாரளுமன்ற அரசியல் நல்ஸ்களப் பேணவும் தலைவர்கட்கு நெரிட்.து. அவர்களது துண்டுதலால் சில தீவிரவாதச் செயல்களே

Page 8
மேற்கொண்ட பல விரக்தியடைந்த வாலிபர்கள் இக்கட்டில் மாட் டியபோது தொடர்ந்து தூண்டிவிடவும் முடியாமல், தடுத்து நிறுத் தவும் முடியாமல் தலைமை தத்தளித்தது: தமிழ்ஈழம் என்ருல் என்ன? அதன் எல்லே எது? அவ்வெல்லைக்குட்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அது பற்றி என்ன கருதுகின்றனர்? தமிழரசுக் கட்சி 1960 ஐ அடுத்து மெல்ல மெல்லப் புறக்சனித்து 1970 க்குப் பின் பகைக்கவும் முனைந்த முஸ்லீம் மக்களது நி*ல என்ன? மலையக மக்களது நிலை என்ன? சிங் களப் பிரதேசங்களில் வாழும் "தமிழ் ஈழத் தலைவர் மார் உட்பட்ட தமிழர்களது நிலை என்ன? என்ற கேள்விகட்கு விடுதலை இயக்கக்காரர்கள் எவரும் இதுவரை திருப்தியான பதில் தரவில்லை. இது மட்டுமன்றிப் போராடுவதானுல் எப்படிப் போராடுவது? அத் நியத் தலையீடு இருக்குமா? யாருடைய தலையீடு? என்ன நிபந்தனை களின் அடிப்படையில்? தலையீட்டுடனே இல்லாமலோ தமிழ் ஈழம் அமைந்தால் எல்லைப் பிரச்சினை போன்ற புதிய சிக்கல்களுக்கு வழி என்ன? இவை போன்ற பல கேள்விகட்கு எந்தவிதமான அர்த்த முள்ள பதிலும் தரப்படவில்லை; தமிழ் மக்களது போராட்டம் ஒன்று நடப்பின் இன்றைய சூழ்நிலைகளில் அது முற்ருக நசுக்கப்படும். அல்லது அந்நியத் தலையீட்டின் துணையுடன் தொடரப்படும். எச்சூழ் நிலையிலும் அதன் மொத்த விளைவு இந்த நாட்டின் தேசிய ஒற்றுமை யின் குலைவும் பெரு வல்லரசுகளின் நேரடி அல்லது மறைமுக தலை யீடுமாகவே இருக்கும். அதே சமயம் தமிழ்த் தேசிய சிறுபான்மை இனத்தவ சீன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்படாமல் இருந்தால் அவர் கள் மத்தியில் தவற ன சக்திகளது ஆதிக்கம் வளர்வது தவிர்க்க முடியாதது. இறுதி ஆராய்வில் இப் பிரச்சினையின் பூரண தீர்வு, ஏகாதிபத்திய விரோத புதிய ஜனநாயகப் புரட்சியின் வெற்றியின் பின் அமையும் சோஷலிச சமுதாயத்தில் மாத்திரமே சாத்தியம். அதுவரை தமிழ் மக்களது உரிமைகள் மறுக் கப்படுவதும், அவர்களது உரிமைகட்காகப் போராடாது இருப்பது ம தான் சரியென்ருே அல்லது அகில இலங்கை ரீதியாக ஒரு பலமான மார்க்ஸிய - லெனினிஸ் இயக்கம் கட்டியெழுப்பப்படும் வரை இப் பிரச்சினைகள் வளராமல் இருக்குமென்று எதிர்பார்ப்பதோ எவ்வகை யிலும் சரியானதல்ல. தமிழ் மக்களது நியாயமான தேசிய இன உரிமைகட்காகப் போராடுவதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்குமுக மாக ஸ்தாபனங்கள் அமைப்பதும் தவறல்ல என்பது மட்டுமல்ல அவசியமானதுங் கூட பெரும்பான்மை இன மக்கள் இ ன் னு ம் பாராளுமன்ற அரசியல் மாயைக்குட்பட்டே இருக்கின்றனர். நாட் டின் பொருளாதார நெருக்கடி காரணமான சிக்கல் இன்னும் போதி யளவு பாரதூரமாமான பாதிப்புக்களை அவர்கள் மத்தியில் ஏற படுத்தவில்லை. அவர்கள் மத்தியில் ஆர். ஜி. சேன நாயக் கா,
2

கே. எம். பி. ராஜரத்தினு போன்ற சக்திகள் நிராகரிக்கப்பட்டாலும், வகுப்புவாத உணர்வுகள் முற்முக நீங்கிவிடவில்லை. 1958 கலவரம் போனற நிலைமைக்கு வா ய்ப்பில்லை என் ரு லும் முரண்பாடுகள் தொடர்ந்தும் இருக்கவே செய்கின்றன. சமசமாஜிகளும், திரிபுவாதி களும் கூட இம்முரண்பாடுகளில் இலாபம் தேடித்தான் வந்துள்ள ார். இன்று சமசமாஜிகள் தமிழ் மக்களுக்காகவும், மலையகத் தோட் டத் தொழிலாளர்களுக்காகவும் முதலைக் கண்ணிர் வடிக்கிருர்கள், இச்சூழ்நிலையில் சிறுபான்னிம இன உரிமை பற்றிப் போ ரா டு ம் ஒரு தேசிய ஸ்தாபனத்தை வகுப்புவாத கோஷங்கள் மூலம் இவர் களும், பிற்போக்குச் சக்திகளும், தாக்குவதும் அதில் கணிசமான வெற்றி காண்பதும் சாத்தியமானதே. அரசாங்கங்களது தொடர்ச்சி யான வகுப்புவாத நடவடிக்கைகள் காரணமாகவும், தமிழ் இளைஞர் கள் பலரை நியாயமற்ற முறையில் தண்டித்துள்ள சூழ்நிலைகளாலும் குறைந்து வரும் உத்தியோக வாய்ப்புகள், எம். பி. மாரின் "கையா ல காத்தனம்" போன்ற பல காரணங்களினலும் விஷேசமாக வாவி பரி மத்தியில் பாராளுமன்றத்தை நிராகரிககும் போக்கு வட-கிழக் குப் பகுதிகளில் வளர்ந்து வருகிறது. இவர்களிற் பலர் பிரிவினை வாதிகள் பக்கம் ஆரம்பத்தில் திரும்பினுலும் இன்று அவர்களது வெற்றுவேட்டுத்தனத்தை உணர ஆரம்பித்துள்ளனர். இவர்களை வென்றெடுப்பதும், ஸ்தாபன ரீதியாக ஏகாதிபத்திய விரோத அணி யில் திரட்டுவதும் அவசியம். சந்தர்ப்ப வாத இடதுசாரிகளைச் சுட் டிக் காட்டி எந்த தேசிய இயக்கத்தையும், சிங்கள இயக்கம் என்று காட்டும் வகுப்புவாதிகளையும், அதைத் தமிழ் மக்கள் ஏற்கக் கூடிய இன்றைய நிலைமையையும் நாம் மறந்து விட முடியாது. இச் சூழ்நிலை யில் தமிழ் மக்களது அடிப்படை உரிமைக்காகப் போராடவும் அதே சமயம் அவர்களது பிரதான எதிரி ஏகாதிபத்தியம், குறிப்பாக இரு பெரும் வல்லரசுகள் என்று உணர்த்தி அவர்களது உரிமைக்கான போராட்டத்தை ஒரு தேசிய ரீதியான ஏகாதிபத்திய விரோதப் போராட்டத்துடன் இணைக்கவும் ஒரு ஸ்தாபனம் தேவை. குறிப் பிட்ட தேசிய சிறுபான்மை இன ம்க்களது உரிமைக்கான போராட் டத்திற்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவின் ஒரு குறிப் பிட்ட சரித்திர காலகட்டத் தேவையையொட்டியோ அதற்கான ஒரு இயக்கம் கட்டியெழுப்பப்படுவது - அது ஏகாதிபத்திய விரோத இயக்கமாக உள்ள வரையில் அந்த ஏகாதிபத்திய விரோத நோக்கத் தின் அடிப்படையில் தேசிய, சிறுபான்மை இனப் பிரச்சினைகளை அ yகும்வரை - எவ்வகையிலும் தேசிய, சர்வதேச ரீதியான ஏகாதி , திய விரோதப் போராட்டங்கட்கு விரோதமானதல்ல. மாருள் அதுவே தேசிய ஒற்றுமையையும், ஏகாதிபத்திய விரோத இயக்கத் தையும் வலிமைப்படுத்தவும் உதவும். இதை மறந்து பிரச்சினைகளை
1Ꮽ

Page 9
ஏட்டுச்சுரைக்காய்த்தனமாக அணுகுவதோ, சோ ஷ லி சம் வகும் வரை அல்லது பலமான தேசிய ரீதியான ஏகாதிபத்திய விரோத இயக் Fம் வளரும் வரை பிரச்சினைகள் காத்திருக்க வேண்டும் என்று வாதிப். தோ, பிரச்சினை களை மூடிக்கட்ட முயல்வதோ இறுதியில் ஏகாதிபத்திய கரோதப் போராட்டத்திற்கும். தேசிய ஒற்றுமைக்கும் புரட்சிகர இயக்கத்திற்கும் பாதகமானதாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளரது பிரச்சினைகள் வட- கீழ் மாகாண மக்களது பிரச்சினைகளினின்றும் பலவழிகளில் வேறுபட்டது. அவர்கள் வாழ் ச்கை முறை. பிரதேசம், பொருளாதார உறவு. அவர் கள் பெருமளவும் தொழிலாளர்களாக உள்ளமை என்பவற்றுடன், அவர் உளது பிரஜாவுரிமைப் பிரச்சினை காரணமாக எற்பட்ட அர சிபல் நிலை அவர்களைப் பிற தேசிய இனங்களிலிருந்து பிரித்தே காட்டு கின்றது அவர்கள் மத்தியில் பாராளுமன்ற அரசியலை நிராகரிக்கும் பிரச்சினை கிடையாது. பாராளுமன்ற அரசியல் அவர்களை நிரா கரித்துவிட்ட்து. அவர்களது அடிப்படை உரிமைகளை பூ என் , பி. பறித்தது. இடதுசாரிகள் தம் பாராளுமன்ற அரசியலுக்காக அவர் களைக் கைவிட்டனர். இன்றைய கூட்டணி அரசாங்கத்தின் குறுகிய தேசிய இனவாத நடவடிக்கைகளும் அவர்களை இன்னமும் மோச மான நிலைக்குத் தள்ளியது. சமசமாஜக் கட்சி அமைச்சர் அவர் களது அடிப்படைக் கோரிக்கைகளைக் காதில் ஏற்க மறுத்தார். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அவர்களுக்கு வழங்க முனைந்த அரை குறை நீதியைக் கூட, அதை நிறைவேற்றுவதிலான தாமதம் தடுத்து நிறுத்துகிறது. இத்தகைய கெடுபிடிகளின் கீழ் அவர்கள் அரசாங்க விரோதப் பாதையில் திரும்ப முயல்வது இயல்பு. 1973 - 1974 உணவு நெருக்கடி காரணமாக அவர்களிற் பலர் தெருத்தெருவாக அலையும் நிலையும், தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட போது அவர் சளின் தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்பட்டதும், அவர் களை அரசாங்கத்திற்கெதிராகத் தள்ளின. அவர்கள் மத்தியில் ஒரு சரியான தஃ மையைக் கட்டியெழுப்புவதன் மூலமே அவர் சளைத் தொண்டமான் - யூ. என். பி. கூட்டை நோக்கிச் செல்வதினின்று கடுக்க முடியும். தொண்டமானே எதிர்த்து அஸிசும் , இன்னும் பல தொழிற் சங்கங்களும் ஏற்பட்டும். அவை மலைநாட்டுத் தொழிலா ளர் பிரச்சினைக்கு வழிகாட்ட முடியவில்லை. ச ண் முக தா சனி ன் " தொழிற்சங்கத்தை அரசியல் மயப்படுத்தல்" கோஷமும், ஒரு முனை வாத வேலைகளும், மற்றும் தொழிற்சங்சப் பணத்தில், தம் நலனைப் பேணும் தொழிற்சங்க வாதிகளின் புரட்சிகர (!) வாழ்க்கை முறை யும் அவர்களை ஏமாற்றத்திற்குட்படுத்தியது. இன்றைய சூழ்நிலையில் தேசிய ரீதியாகவும், குறிப்பாகத் தோட்டங்களிலும், தொழிற் சங்க அரசியலிற்குப் பாதகமாக உள்ள நிலைமையானது தோட்டத்
l4

தொழிலாளர்களது சட்ட ரீதியான ஸ்தாபனமான தொழிற்சங்கத் நிற்கும் வேட்டு வைத்துள்ளது இன்றைய சூழ்நிலையில் தம் பிரச் சினைக்குத் தீர்வு காண முடியாத மலைநாட்டுத் தோட்டத் தொழி லாளர்களது குறிப்பான நிலைமை காரணமாக அவர்கள் மத்தியி னின்று ஒரு தேசிய தொழிலாளி வர்க்கத் தலைமை ஏற்பட்டாலுங் கூட அதற்கும் இனத்துவேஷ முத்திரை குத்தக் கூடிய வசதி உண்டு. அதே சமயம் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பலமான மார்க்ஸிய - லெனினிச இயக்கம் தற்போதில்லை. இதஞல் மலையக மக்களது அடிப் படை உரிமைகளுக்காகப் போராடவும், தொண்டமான் த ஃலமை யையும் அதன் பிற்போக்கு இயல்பையும் அம்பலப்படு கதவும் அதே ச ம ய ம் தேசிய ரீதியில் ஏகாதிபத்திய விரோத - சக்திகளுடன் இணைந்து போராடவும் வல்ல ஒரு பரந்துபட்ட மலேயக மக்கள் ஸ்தாபனத்திற்கான தேவை உண்டு. அதற்கான ஸ்தாபனம் மலையக மக்கள் மத்தியில் தோன்றியிருப்பதும் வரவேற்கத்தக்கது. −
தேசிய சிறுபான்மை இனங்களது உரிமைக்காசப் போராடும் புதிய ஜனநாயக புரட்சிகர ஸ்தாபனங்களைக் கட்டியெழுப்புதல் எவ் வகையிலும் தேசிய ஒற்றுமைக்கும், ஏகாதிபத்திய விரேரதப் போரட் டத்திற்கும் பாதகமானவையல்ல. சிறுபான்மை இன மக்களது உரி மைகள் மறுக்கப்பட்டு, அவர்கள் மீது ஒடுக்கலும், அடக்கு முறை யும் பிரயோகிக்கப்படும் வேளையில் அதற்கெதிரஈ சுப் போராடவும், தேசிய ஒற்றுமையைப் பேணவும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட் டத்தை முன்னெடுக்கும் போராட்டத்தில் பங்குபற்றவும் இந்த ஸ்தாபனங்களால் முடியும், அரசாங்கம் ஒரு சில ஏகாதிபத்திய விரோத நடவடிக்கைகளை எடுத்தாலும், அதனல் இன்று ஏகாதிபதி ழிய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அதன் வரிக்க இயல்பான கு று கி ய தேசிய வாதம் சாரணமாகப் பல இனவாத நடவடிக்கைளை எடுக்கின்றது. உத்தியோகம், உயர் கல்வி பில் பாரபட்சம், பொருளாதாா அபிவிருத்தியில் பிரதேச ரீதியிலான பாகுபாடு, திட்டமிட்ட வகுப்புவாத ரீதியிலான கு டி யே த் ற ம், பொலீஸ், இராணுவம் ஆகியவற்றின் அடக்குமுறை - கெடுபிடிகள் தோட்டத் தொழிலாளர்களைத் தோட்டங்களை விட்டு வெளியேற்றுதல் மற்றும் மொழி உரிமைகள் மறுக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் நடத்தி வகுகின்றது. இவைகளின் காரண மாகவும், ஏற்கனவே சிறிபான்மை மக்கள் மத்தியில் உள்ள நிலைமை காரணமாகவும். பிரிவினை வாத, வகுப்புவாத உணர்வுகள் வளர்ச்சி படைகின்றன. வடக்கே வளர்ந்து வரும் பிரிவினைக் கோஷம் தேசிய ஒற்றுமைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், சுயாதிபத்தியத்திற் கும் நாட்டின் தமிழ் - சிங்கள இனங்களது நலனுக்கும் பாதகமானது
5

Page 10
இன்று தொண்டமான் மற்றும் வட பிரதேச வகுப்புவாதச் சக்தி களது திட்டமிட்ட அரசியல் நடவடிக் கைகள் ஒன்றுடனென்று தொடர்புடையன; இவர்களது வேலை முறைகள் ஏகாதிபத்தியவாதி *ளுக்கும், நாட்டை அவர்களுக்கு அடகுவைக்க முனையும் சக்திகளுக் குமே இலாபகரமானவை. அத்துடன் தேசிய ஒற்றுமை என்பது தேசிய சிறுபான்மை இனங்களது கலாச்சாரம், கல்வி, மொமியுரிமை கள், ஜனநாயக உரிமைகள், பிரதேசப் பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை மறுப்பதன் மூலம் பெmப்படும் ஒன்றல்ல. மா(ாக இவ் வுரிமைகளது உத்தரவாதமே தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்து கிறது. எனவே, இவ்வுரிமைகளுக்காகப் போராடும் ஸ் காபனங் கிள் இந்த அடிப்படை உரிமைக்காகவும், தேசிய ஒற்றுமையைப் பேண அவர்களுக்குள்ள மறுக்க முடியாத உரிமைக்காகவும் டோரா ம்ே வரை இவற்றிற்கு மத்தியிலும் தேசிய ஜனநாயசப் புரட்சிகர இயக்கத்திற்கும் முரண்பாடு இல்லை; இந்த ஸ்தாபனங்கள் புதிய ஜனநாயகப் புரட்சியில் புரட்சிக் கடமைகளை நிறைவேற்றும் துனே ஸ்திாபனங்களாக இருக்க முடியும்:
* புதிய ஜனநாயகப் புரட்சி;
காலனித்துவத்தினதும், நவ காலனித்துவத்தினதும். எகாசிபக் தியத்தினதும் ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் தொழிலாளி வர்க்கம் பலமானதொன்றக இல்ல. இந்த நாடுகளில் முதலாளித்து வளர்ச்சி நாட்டுக்கு நாடு வேறுப்பட்டிருந்தாலும், பொதுவாக அவ்வளர்ச்சி பூரணமானதாக இல்லாததோடு, அடிப்படைப் பொருளாதாரம் ஏகாதிபத்தியவாதிகளது கையிலேயே உள்ளது. இத்தகை சூழ்நில யில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நாட்டில் அவர்களது ஆதிக் கத்திற்குச் சாதகமாக உள்ள சக்திகட்கு எதிராகவும் செய்யப்படும் புரட்சி புதிய ஜனநாயகப் புரட்சி எனப்படும். இதற்கும், பூர் ஷ"சி" ஜனநாயகப் புரட்சிக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இப்புரட்சியின் நோக்கம் நாட்டில் பூர் ஷ0 வா ஜனநாயகத்தை நிறுவுவதல்ல மா?சி தொழிலாளர் - விவசாயிகளது தலைமையின் கீழ் பரந்த மக்கள் ஒன நாயகத்தைத் தோற்றுவிப்பதும் ஏகாதிபத்திய பிற்போக்கு அதிகா ரத்தைத் தூக்கியெறிவதன் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத் திற்கும், சோஷலிசப் புரட்சிக்கும் அத்திவாரமிடுவதும் ஆகும் இப் புரட்சியின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும், பரந்து பட்ட வெகுஜனங்களுக்கு மிடையிலானது; எனவே இப்புரட்சியில் நாட்டின் தொழிலாளிகள், விவசாயிகள் மட்டுமன்றிக் கணிசமான தொகையில் குட்டி பூர்ஷ"வா வர்க்கத்தினரையும், தேசிய முதலா ளித்துவத்தின் ஒரு ப்குதியையுங் கூட ஏகாதிபத்தியத்திற்கும், அதன் ஆதரவு சக்திகட்கும் எதிராக அணிதிரட்ட முடிகிறது.
6


Page 11
|- | .
',
) |- |-|-
 
 
 

|×s s )