கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நான்

Page 1
ஆக்கிே கவிஞர் அப்துல்
பதிப்பா
கலாநிதி அ
School of Soc Murdoch U Western Aus

шптойт
காதர் லெப்பை
ԳլիայrՒ
அமீர் அலி
:ial Inquiry Jniversity tralia, 6150

Page 2
முதற்பதிப்பு: மார்ச் 1986
அச்சிட்டோர்:
ஆண்டவர் அச்சகம் 140, அம்பலதாடையர் மடத்து வீதி புதுவை - 605001

GOD
கடவுள்
NATURE
இயற்கை
TS LAW
அதன் சட்டம்
REASON
மெய்யறிவு
MAN
மனிதன்

Page 3

முன்னுரை
மனித சக்தியின் உன்னத நிலையையிட்டு உய்த்துணர வைப்பதே எனது நோக்கம். இறைவன் மனிதனை ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துள்ளான். “உலகைப்படைத் தவன், மனிதனல்லன், உலகை ஆள்பவன், மனிதனேயா கும், இக்கூற்றின் நிரூபணமே உலக வரலாறு என்பது. மறைந்து கிடக்கும் தனது சக்தியை வெளிப்படுத்துபவனே விற்பன்னன். இந்த விற்பன்னத்துவத்தின் பிரதி பலனே கிற்றுள்ள நவ உலகம்.
இச்சிறிய நூலுக்குக் கருத்துமிக்க ஓர் அணிந்துரை தந்துதவிய திரு. சி. தில்லை நாதன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி உரித்தாகுக.
அ.கா.லெ"
‘கரவன் ஸெராய்'
ஆமன் கோணர் மட்டக்களப்பு

Page 4

அணிந்துரை
“நீண்ட வரலாறும் ஆழமும் அகலமும் வாய்க்கப் பெற்ற தமிழ்க் கவிதைத் துறையிலே நிலைத்துப் பெய ரெடுத்துப் புகழெடுத்துப் பாராட்டப்படுவதென்பது சாதாரணமானதன்று. ஆயினும், தன் கவியாற்றலினால் அத்தகைய பாராட்டைப் பெறுகிறார் மூத்த பெருங் கவி ஞர் அப்துல் காதர் லெப்பை, அவர்தம் நீண்டகால அனு பவத்தில் பல பழைய நல்ல சேதிகளைச் சொல்வதோடு புதுமைக்கும் எழுச்சிதந்து வருகிறார்” என்று, 16. 1. 72 அன்று யாழ்நகரில் இலங்கைக் கலாசாரப் பேரவை நடத் திய தமிழ் இலக்கிய விழாவிலே கவிஞர் அப்துல் காதர் லெப்பை அவர்கள் மாண்புமிகு கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு. எஸ். எஸ். குலதிலக அவர்களினாற் பாராட்டிக் கெளரவிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலே, யான் குறிப்பிட்டமை எனது மனத்திற் பசுமையான நினைவாயு
ளது.
அத்தகைய புகழுக்கும் பாராட்டுக்கும் உரித்தாகும் படைப்பாளிகள், அதற்குப்பின் தாம்பெற்ற புகழினைப் பங்கப்படுத்திவிடுவோமோ என்ற தயக்கத்தினாற் படைப் புத் துறையினின்றும் ஒதுங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறு ஒதுங்கிவிடாது, இப்போது இந்நூலினையும் ஆக்கியுள்ளார் கவிஞர் அப்துல் காதர் லெப்பை எனின், அதற்குக்காரணம் அவரது தன்னம்பிக்கையும் கவித்திறனும் மட்டுமன்று. புதிய மானிடத்தின் முன்னேற்றத்தில் அவர் கொண்டுள்ள ஆர்வமும் அதற்கான காரணமாகும். “பழமையில் வேரூன்றி நின்றுகொண்டு புதுமையைப் புறக்கணிக்காது மனிதாபி மானத்தோடு காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கவிதை

Page 5
8
யில் வடிக்கிறார் கவிஞர்” என்றும் அவர் கெளரவிக்கப் பட்ட வேளையில் யான் கூறியதன் உண்மையை மேலும் உறுதிப்படுத்துகின்றது இந்நூல்.
*காயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்ததிப் பையடா’ என்று கூறிக்கொண்டு தம்மிலும் உலகிலும் சலிப்பினை வளர்க்கும் மனிதர்கள் கூடிய மண்ணிலே வீடு களையும் வீதிகளையும் மலர்ச்சோலைகளையும் மருத்துவ மனைகளையும் கல்விச் சாலைகளையும் தொழிற் கூடங் களையும் வாகனங்களையும் ஏனைப் பல வசதிகளையும் காணவியலுமா? இந்த மாநிலம் பயனுறத் தக்க வகையி?ே தம் வல்லமையை வளர்த்துக் கொள்ள விழைந்த மனிதர் களாலேதான் மனித வாழ்வு மேம்பட்டதென்பதை வர லாறு உணர்த்தும். அவ்வுண்மைக்கு அழுத்தம் தந்து, எமது மக்களுக்குத் தம் வாழ்வை மேலும் செம்மைப் படுத் தும் ஆர்வத்தினை அளிக்கும் ஆவலில் வருவது இந்நூல் 'தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்’ என்ற திருக்குறளுக்கு உரையெழுதியோர் பலர், எச்சம் என்பதற்கு நன்மக்கள் என்றே பொருள் கூறிச் சென்றனர். ஆயினும், அக்குறளுக்கு, “செவ்வையுடையார் செவ்வையில ரென்பது அவரவர் ஆரவாரத் தொழிலினாலே காணப் படும் என்றவாறு’ என்று மணக்குடவர் வகுத்துள்ள உரையே சிறப்பும் பொருத்தமும் உடையதாகத் தோன்று கின்றது. இவ்வுலகில் ஒருவர் தனக்குப்பின் விட்டுச்செல் வது தான்பெற்ற மக்களைத் தானா? அவர்களிலும் பார்க் கச் சிறந்து நிலைக்கவல்ல சாதனைகளை நிலை நாட்டும் வேட்கை ஒருவனுக்கு வேண்டாவா?
நவ உலகின் நுட்பங்களும் கலைகளும் தத்துவங்களும் சட்டங்களும் மானிடத்தின் சாதனைகள் என்பதில் உறுதி

9
யான நம்பிக்கை பூண்ட கவிஞர் அப்துல் காதர் லெப்பை மனிதன் தன் சுயத்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டு மென்று விரும்புகிறார். சுயமற்ற சருகுகளாகவும் சுழலும் பொம்மைகளாகவும் வாழ்ந்துவிட்டுத் தாம் வாழ்ந்த சுவடு தெரியாமலே மனிதர் தம் வாழ்வினை முடித்துக் கொள் வதிற் கவிஞருக்கு உடன்பாடில்லை.
நமது நம்பிக்கைகளும் மரபுகளும் பண்டைப் பெருமை களும் நமது எதிர்கால வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப் படுத்துவனவாக உள்ளனவா என்ற ஐயம் சிலவேளைகளில் எழுப்பப் படுவதுண்டு. இவ்விடயத்திற் கவிஞரின் கருத்து நம் சிந்தையைக் கவருகிறது. முன்னோர் வகுத்தவழி யினை மந்தைக்கதியிற் பின்பற்றும் செயலைக் கவிஞர் வெறுக்கிறார். மனித சுயத்துவத்தை வலியுறுத்தும் கவி ஞர், முன்னோர் வகுத்த நெறிகளை வழிகாட்டிகளாகக் கொள்ளலாமேயன்றிப் பிணிக்கும் விலங்குகளாக மாட்டிக் கொள்ளல் சாலா தென்பதை உணர்த்துகிறார் “மனிதன் முன்னேறுகின்றான் - மந்தைகள் பின்தொடர்கின்ற’ என்ற கவிதையடி மனத்தைப் பிணித்துச் சிந்தனையைத் தூண்டுவதாகும்.
மனித முன்னேற்றத்தை நாடும் கவிஞர், வறுமை வைதீகம், அறியாமை, சுரண்டல் முதலியவை அம் முன் னேற்றத்திற்குத் தடைக்கற்களாகக் கிடப்பதை இனங் கண்டு கொள்கிறார். போலி வேஷங்களும், வீண் சண்டை களும், கவலைகளும், வெற்றுப் பேச்சுக்களும், சோம்பலும், சுயநலமும், சுரண்டலும், சூழ்ச்சியும், மனித முன்னேற்றத் திற்குத் தடையாய் அமைவதையும் கவிஞர் விண்டுரைக் கிறார். அத்தகைய நிலையில் மானிட சமூகம் மறுகிக் கிடப்பதை வெறுக்கும் கவிஞர், அத்தகைய நிலைக்குக் காரணமானவர்கள் வளர்ந்துவிட்ட இழிந்த சூழலை

Page 6
10
ஒத்துக் கொள்பவருக்கு வாழ்வே ஒரு சிறையாகும் என் கிறார், அவ்வாறு ஒத்துக் கொண்டு அஞ்சி ஒதுங்கி உலகை வெறுத்து விதியினை நொந்து சிந்தனையொழிந்து செயலற்றுக் கிடப்பவர்களைச்,
‘சோம்பற் கூட்டம்
சோற்றுப் பிண்டம்’
என வையுமிடத்துக் கவிஞரின் வெறுப்புணர்ச்சி தெற் றெனத் தெரிகிறது. புதிய மனிதனையும் புதிய சமூகத் தையும் காணும் அவரது வேட்கையும் வெளிப்படுகிறது. எண்ணத்திற் புரட்சியும், கொள்கையில் மறு மலர்ச்சியும் கண்டு ஏதாயினும் ஒரு வகையிலே தமது ஆக்கத்தை உலகத்திற்கு நன்கொடையாக அளிக்காது மாய்கிறவர்கள் குப்பையோடு குப்பையாகப் போவார்களேயன்றி இறை தந்த சக்திக்கு இலக்கணமாக அமையார் என்பது கவிஞரது தீர்க்கமான கருத்து.
இறைபடைத்த உலகினை இயக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு என்றும், ஒரே இயற்கையில் ஒரே கடவுளை அவன் கண்டு, நம்பிக்கைக்கு, அடிமையாகாது, அச்சத்தை அகற்றி சுதந்திர சிந்தனையின் துணையோடு செயலாற்ற வேண்டும் என்றும் கவிஞர் விழைகிறார். ஆசிரமங்களை யும் ஆய்வுக் கூடங்களையும் நயமாக ஒப்பிட்டுக் காட்டு மிடத்துக் கவிஞர் எதனை உவக்கிறார் என்பது தெளி வாகிறது. ஆசிரமங்களுள் முடங்குவதைவிட ஆய்வுக் கூடங்களில் இயங்குவது மேலானது என்ற கவிஞர் கருத்து கவனத்திற்குரியது. w
ஆராய்ச்சியைத் தூண்டும் மெய் அறிவின் மூலம் இயற்கையில் மறைந்துள்ள அற்புதங்களை வெளிக் கொணரல் அறிவுள்ள மனிதனின் கடமை என்பதும்,

அக்கடமை செவ்விதில் நிறைவேறுமிடத்தே இயற்கையும் அதன் சட்டங்களும் தெளிவாகி அத் தெளிவிலே இறை சக்தி வெளித்தோன்றும் என்பதும் இந்நூலில் அழகாகக் காட்டப்படுகிறது.
நவ உலகம் பல புதுமைகளைக் கண்ணெதிரே கண்டு விட்ட பின்பும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் விட்டுச் சென்ற எண்ணங்களையே எமது இளைஞரின் இதயங்களில் விதைத்து அவர்களை நிகழ் காலத்தைப் பற்றிய நிதர்சன நோக்கற்றவர்களாய்த் தூங்க வைக்கிறோம் என்ற கவிஞர் கருத்து எமது கல்வித் தொண்டர்களாற் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். பல்லாண்டுகள் திறமையுடன் ஆசிரியத் தொழில் புரிந்து ‘ஆசிரியர் திலகம்’ என்ற விருதினைப் பெற்ற கவிஞர் அப்துல் காதர் லெப்பை எமது ஆசிரியர்களின் விழிகளை விசாலமாகத் திறக்கத் தக்க வகையிலும் இந்நூலினை ஆக்கியிருத்தல் விதந்து குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகக் கூறின், தெளிவற்று ஒளியற்ற ‘நான்’ களை ஒழித்து தெளிவுற்று ஒளியற்ற ‘நான் களை உரு வாக்க முனையும் இந்நூல் இன்றைய தமிழ் பேசும் மக்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும்.
-சி. தில்லைநாதன்
தமிழ்த்துறை, இலங்கைப்பல்கலைக் கழகம், பேராதனை வளாகம், பேராதனை.

Page 7
5T60 ‘நான்’ என்னும் தனித்துவம்
முன்னோர் வகுத்தவழி
முறைப்படியே வாழுவது நன்மைதரு மென்று சொல்
"நான்’ இங்கே மறைந்துவிட்டேன், பின்பற்றும் குணமதனாற்
பிறக்கின்ற சுயப் பிரமை மங்கி மறைந்துவிடும்
மந்தையிலே ‘நான்’ ஒருவன், என்னில் மறைந்திருக்கும்
எத்தனையோ அற்புதங்கள் முன்னிற்க வழியின்றி
முடங்கிவிடும், முன்னோர்கள் தன்னறிவு கொண்டு
தத்துவங்கள் கண்டதுபோல் என்னில் ‘நான்’ காணாக்கால்
இருந்தென்ன மானுடனாய்? பின்பற்றிப் பின்பற்றிப்
பிறர் வழியே செல்லுவது பொம்மைக்கே இலக்கணம்
புவியினிலே ‘நர்ன்’ என்னும் தனித்தன்மை இங்கில்லை
தன் உணர்வு மிங்கில்லை; அற்புதங்கள் நிறைந்த இந்த அழகான பிரபஞ்சம் மற்றவரைப் பின்பற்றும்
மனிதனை யொதுக்கிவிடும்;

13
என்னில் ‘நான்’ மறைந்துள்ளேன் எத்தனையோ சக்திகளை மண்ணில் இறைவன்
மறைத்துள்ளான் ‘நான்’ என்னும் அற்புதக் கருவியினால்
ஆராய்ந்து புதுமைகளை வெளிப்படுத்தல் இறைவன்
விருப்பமிது; மற்றவரின் அறிவுரைகள் வழிகாட்டி,
அன்றி எனைப்பிணைத்தால் அன்று ‘நான் இறந்துவிட்டேன்
ஆடுவது பொம்மைநிலை; ‘நான்’ என்னும் சக்தியினை நன்கு வெளிப்படுத்தித் தானாக உயர்ந்தவன்தான்
தனிமனிதன்; அற்புதங்கள் பலதந்த ‘நான் 'கள்
பண்ணியதே இன்றுள்ள கலைகளும் காட்சிகளும்,
கணக்கில்லா நவீனங்கள், தத்துவங்கள், மக்கணலம்
தாங்குகின்ற சட்டங்கள், யாவும் நிறைந்த இந்த
நலஉலகம் வளர்ந்த கதை,
米 米 来

Page 8
14
சித்திரத்தில் மறைந்துள்ளான்
‘நான்’ என்னும் சைத்திரிகன், வீணையில் மறைந்துள்ளான்
‘நான்’ என்னும் இசைவல்லான், விஞ்ஞான வித்தைக்கே
வித்திட்ட பல நான்கள் எத்தனையோ உண்டு
இன்னும் பிறந்துவரும், ஆத்மீகப் பாதையிலே
அறிவுற்ற பல"நான்’கள் அனந்த முண்டின்னும்
அவதரித் துலகு வரும், மற்றவரைப் பின்பற்றி
மந்தையிலே நிற்கும் ‘நான்’ பெற்றதெலா மடிமைநிலை
பேசுவதற் குரிமையிலை இயற்கையாம் இவ்வுலகம்
எக்காலும் ஒன்றேதான், ஆனால், ‘நான்’வாழும் உலகு
நவிலிற் பல பல: சிலநான்’ உலகில்
அறிவும் தெளிவும் சிறந்து விளங்கும் சிலநான் உலகில்
மருளும் இருளும் மண்டிக்கிடக்கும் சில நான் உலகில் வம்பும் சண்டையும் மலிந்து விளங்கும், சிலநான் உலகில் ஆசையும் வேஷமும் ஒன்றி நெருங்கும்

15
சிலநான் உலகில் அன்பும் இன்பமும் நெருங்கி மிளிரும் சிலநான் உலகில் மரணமும் கவலையும் மல்கிக் கிடக்கும் இவ்விதம் நான்கள் தமக்கென உலகைத் தாமேயாக்கி வாழும்
ஒளிரும், தாமும், மறையும்; இந்த நிலைக்கு ‘நான்’
எப்படி வந்தது? வாழும் சமூகம்
வளர்த்த அடிப்படைச் சூழல் மோதச்
சொந்தமாகக் கியதாம். சர்வாதி காரி
வைதீகர் கூட்டம் சுயநல வாதி
சோம்பேறி மக்கள் போகிகள் யோகிகள்
பொன்னாசை மிக்கோர் வேஷம் போடுவோர்
வீண்பேச்சு வீரர் கோத்திரம் பேசுவோர்
குலத்தை மெச்சுவோர் பணத்தைக் கொண்டே
குணத்தை அளப்போர் சுரண்டுங் கூட்டம்
சூழ்ச்சிக் கும்பல் உழைப் பில்லாமல்
உண்ணும் குரம்பை

Page 9
16
இன்னோர் வளர்த்த
இழிந்த சூழலில் நான்கள் கூட்டம்
மந்தைகள் கூட்டம் gF/Trf) sgrifir fflu uTunisi:
சோர்வுடன் சென்னி கவிழ்ந்த நிலையில்
குவிந்த கரத்துடன் விதியை நொந்து
மதியை இழந்து அச்சமும் கவலையும் அண்டி நெருங்க உலகம் சிறையென ஊர்ந்து திரியும், ஏன்தான் பிறந்தோம்
ஏன்தான் வளர்ந்தோம் எல்லாம் தீமை
எல்லாம் நரகம் அழியும் உலகம்
அழியும் சடலம் பொய்யே வாழ்க்கை
பொய்யே யாக்கை தன்வினை செய்வினை
முன்வினை ஊழ்வினை கொட்டாவி நெட்டி
குறட்டை பெருமூச்சு எட்டாத வாழ்க்கை
என்று மெய்சோரும் சோம்பற் கூட்டம்
சோற்றுப் பிண்டம்,

7
சிந்தனை இங்கே
செத்து விட்டது வந்தனை என்பது
வரட்டு வேதாந்தம், இயந்திரம் போன்று
இயங்கும் நிலையிது, உணர்ச்சி இல்லை, உந்துதலில்லை, அச்சமும் கவலையும்
ஆட்டிப் படைக்க அடுத்தவர் அடிமேல்
அடிவைத்து நகரும் உணர்வற்ற பொம்மை
உயிரற்ற பாவை, நான் இங்குண்டா
நாட்சென்ற கதையிது.
භුදු
ஒவ்வொரு நான் உம்
தன்னில் பூரணம் தனித் தன்மையும்,
தனி வரலாறும் தானே கொண்டது,
தன்னில் நிலைத்தது, ஒன்றுக் கடிமையாய்
மற்றொன் றில்லை, ஒவ்வொரு நானும்
ஒவ்வோ ருலகம் அந்தஅந்த உலகுக்
கதுவே அதிபதி,

Page 10
8
அந்த உலகை
அமைக்கும் விதத்தில் சமூக நிலையே
தலையிடும் சக்தி, அறிவற்ற சமூகம்
ஆக்கும் நான்கள் ஒளி யற்றிருப்பது
உலகில் மனிதன் ஆக்கிய நியதி
காரணி சமூகம்; சமூகம் மாற
நான்களும் மாறும் நான்கள் மாற
சமூகம் மாறும் ஒரே வழிமூலம்
இரண்டும் காணலாம் வறுமை இதற்கோர் தடைக்கல்லாகும் வைதீகம் வேறு
தடைக் கல்லாகும் மற்றவர் உழைப்பில்
தங்கிவாழ் கூட்டம் மறைந்தா லல்லது
விடிவொன் றில்லை, கல்வியிற் சமத்துவம் காணா விடத்து ஒருநான் தெரியும்
மறுநான் மருளும் ஒருநான் மகிழும்
மறுநான் அலறும்

19
ஒருநான் எஜமான்
மறுநான் அடிமை அடிமை நான்கள்
ஆயிர மாயிரம் பெருகுவ தாலென்
பெறுமதி காணும், இயற்கையி லிந்த
நியதிக் கிடமிலை, மனிதன் சுயநயம்
மாற்றிய நிலையிது.
米 ※ 来
வெளித்தோற்றம் ‘நான்' அல்ல
என்னில் ‘நான்’ மறைந்துள்ளேன்
எப்படி நான் அறிந்திடுதல்; உடற் தோற்றம் பெற்றோரால்
உருவாக்கி யளித்த ஒன்று, பெயரும் அவர் வைத்ததுதான்,
பிணைக்கும் சமூக மதாற் பழக்கங்கள் வழக்கங்கள்
பற்றும், பின் பற்று மதம் கொள்கை களைப் படிப்பிக்கும்,
கூட்டுறவா லெனை இணைக்கும் பொதுக் கல்வி என் அறிவைப் புதுப்பித்துப் பெருக்கிவிடும். இவையெல்லாம் பக்குவமாய்
என்னையொரு நல்லவனாய்

Page 11
20
ஆக்கிஇவ் வையத்தில்
அமைதியுடன் வாழ வழி செய்தாலும் என்னில் ‘நான்'
மறைந்துள்ள இரகசியத்தை வெளிப்படுத்தா; மற்றவரைப்
பின்பற்றி வாழவே பின்தள்ளும்? ஆதவினால், வழிகாட்டும் இவையெல்லாம்
வழிகாட்டி; நான் என்னும் தனித்துவத்தை இவற்றுக்காய்த் தள்ளிவிட்டால் என்னுருவம் பொய்ம்மையே யன்றியொரு புதுமையிலை இதுசரதம், ‘நான்' என்னுந் தனித்துவத்தை
நன்கு வெளிப்படுத்தின் ஏதோவோர் விற்பனத்வம் என்னில் ஒளிர்வதனை நிச்சயம் நான்காண்பேன்
இந்நிலைதான் ‘நான்’ என்னும் தனித்துவத்தை உருப்படுத்தி
தாரணிக் களிக்கவைக்கும்
முதற்சலனம்
米 米 串
எண்ணத்தி லொருபுரட்சி
கொள்கையிலே மறுமலர்ச்சி
செய்திக்கோர் புதுவிளக்கம்
செயலிலே புதுத்தோற்றம்
ஏதோ ஒரு கோணத்தில்
எனதாக்கம் உலகுக்கு

2.
நன்கொடையாய் அளித்திடுதல் நான்பிறந்த பிரதிபலன்
இல்லையேல் குப்பையொடு
குப்பையெனப் போவதன்றி
இறைதந்த சக்திக்கோர்
இலக்கணமே இல்லையென்க.
米 米 米
இயற்கைக்கே விரோதமிது
எத்தனையோ புதுமைகளை மறைத்துள்ள இவ்வியற்கை
மனிதசக்தி இல்லையெனில் மறைந்துவிட்ட மாதிரிதான் மருள்துஞ்சும் பிரபஞ்சம் இராகத்தை மீட்டுகின்ற
இசைஞானி வீணையிலே அதிரும் நரம்புகளை
ஆட்டுவது ‘நான்’ என்னும் இசைஞனில் மறைந்துநின்று
இயங்குமொரு தனித்துவந்தான், கணிதத்தில் புதுத்தேற்றம்
கல்வியிலே புதுமுறைகள் கற்பனையிற் புதுப்போக்கு
கைவினையிற் புதுப்பொருள்கள் இயற்கையிலே புதுச்சக்தி
இறையுண்மைக் கோர்விளக்கம் என்றபடி 'நான்’ என்னும்
இச்சக்தி இயங்காமல் மற்றவரைப் பின்பற்றி
மண்ணில் மறைந்திடுமேல்

Page 12
22
குப்பையொடு குப்பையெனக்
குவிந்தோய்ந்த பழங்கதைதான்.
来 米 se
ஆயிரம் ஆண்டுகள்முன்
அறைந்த ஒரு விதிப்படியே அப்பாலே பிறந்தவர்கள்
அடியொற்றி வாழ்வதுதான் இசைவுற்ற நியதியெனில்
இதுவரையும் வாழ்ந்தவர்கள் உணர்வற்ற பொம்மைகள்போல் ஊர்ந்ததே கண்டபலன்; தம்மில் மறைந்துள்ள
தனிச்சக்தி மூலமொரு புதுமையினை யாராய்ந்து
புத்துலகுக் களிக்காமல் வந்தார்கள் போனார்கள்
வரலாற்றுக் கணிகலனாய் எந்தவொர் ஆக்கமெனும்
இவர்கண்ட தில்லையென இயற்கையே நகுமிவரை
இறைசக்தி சபித்துவிடும்.
来 米 冰 ‘நான்’ என்னும் தனித்தன்மை
சயனித்து விடுமாயின் மிஞ்சுவது வெளித்தோற்றம்
விலங்கிடப்பட்ட உரு பூசாரி ஆசாரி
பொய்வேஷம் போட்டலையும்

28
ஆஷாட பூதிமுதல்
அகிலத்தை ஏமாற்றும் அத்தனையும் இவ்வுருவை
ஆட்டிப் படைத்துவிடும். கட்டுண்ட பாவையெனக்
கயிறுகொண்டு விதியிழுக்க சுயமற்று மருளுற்றுச்
சுழல்காற்றுச் சருகென்னச் சுழன்றோய்ந்து மூலையிலே
பழியெல்லாம் விதிமீதும் பிறர் மீதும் போட்டுறங்கும்
புன்குரம்பைத் தோற்றமிது. வைதீகர் பிரபுக்கள்
வன்கண்ணர் கொடுங்கோலர் கைதியாய் மாற்றியிதைக்
கடிவாள மிட்டவர்கள் சுரண்டலுக் கிரையாக்கும்
தோற்குரம்பைத் தோன்றமிது இத்தோற்ற முடனுலகில்
இருப்பதுவும் போவதுவும் இயற்கைக்கே முரண்வஞ்சர்
இயற்றிவிட்ட பொய்மார்க்கம்.
事 来源 米
தன்விலங்கைத் தான்மாட்டும்
தன்மைகொண்ட வெளித்தோற்றம் மந்தையினைப் போல் வாழ்ந்து
மதியிழந்து போவதனால் நான்’ என்னுந் தனித்துவமும்
தற்சிறையிற் சிக்கிவிடும்.

Page 13
24
குமுறலுடன் குற்றுயிராய்க்
குழைந்துதன் ஒளிமழுங்கி வாழ்வையே சிறையாக்கி
வலுவிழந்து வையத்தில் தீமைக்கே இவ்வாழ்வு
திருப்பமெல்லாம் தீமைமயம் என்றவோர் பிடியினிலே
இறுகித் தவித்தோயும், இந்நிலைக்குக் காலியற்கை
என்று முடித்திடுதல் சுயநலத்தாற் சிலர் செய்த
சூழ்ச்சிக் கணிப்பென்க.
ck 米 米
மனிதன்முன் னேறுகிறான்
மந்தைகள் பின் தொடர்கின்ற மனிதன்கை வேதமதில்
மருளுக்கே இடமில்லை, இயற்கையின் இரகசியங்கள்
எல்லாம் வெளிச்சமயம், ஒன்றன்பின் ஒன்றாக
உய்த்துணர்ந்து நோக்குகிறான், புதுமைபல காண்கின்றான்,
புத்துலகு சமைக்கின்றான், அவனுக்கோர் தனித்திருப்தி,
அகிலத்துக் கோர்மகிழ்ச்சி, இயற்கையைப் படைத்தவனும்
இவன்அமரன் என்கின்றான்; மந்தைகளின் கைவேதம்
மருட்சியின் தனிப்பீடம்

25
எல்லாம் இருட்டுமயம்
இயக்குவதோ விதிக்கடவுள், இயற்கையோ அச்சமயம்,
இறைஞ்சுவதே மனத்திருப்தி, சிறையினிலே "நான் துஞ்சும்,
கறைபடிந்த வெளித்தோற்றம் கை கட்டி வாய்புதைத்துக்
கற்பனையைச் சுயம்பாக்கிப் பிரேமையே வெளிச்சமெனப்
பிறர்வைத்த அடியின்மேல் அடிவைத்து நகருகின்ற
ஆகிருதி அன்றியொரு சுயப்பிரபை இங்கில்லை,
சுதந்திரத்துக் கிடமில்லை நம்பிக்கை ஒன்றாலே
நடைகொள்ளும் பிரகிருதி.
米 §ද 来源
மற்றவரைப் பின்பற்றும்
மனப்பான்மை நீங்கிடுமேல் ‘நான்'என்னும் ஒளிப்பிழம்பு நன்குபிர காசிக்கும் ‘நான்’படைக்கும் உலகுக்கு
“நானே'தான் அதிபதியாம், பிராமணனோ பாதிரியோ
பீரோவேறு ஷெய்குகளோ இங்கில்லை, இயற்கையெனும்
மெய்ஞ்ஞானி ஒருவன்தான் உலாவிடுவான், அவனுரைகள்
உறுதிதரும் நிருபணங்கள்,

Page 14
26
பொய்ப்பதில்லை ஒருகாலும்,
புகழ்விரும்பா மெய்ஞ்ஞானி; இறையுன்மை யெடுத்தோதும்
இவ்வியற்கைத் தூதுவனோ என்னையே நானறிய
இயக்கிடுவான், தளையற்ற சுதந்திரப் பறவையெனச்
சுற்றிடவே வழிசெய்வான், புதுப்புதுத் தோற்றங்கள்
பொங்கிவரும் சுனையூற்று ஆயாசம் இங்கில்லை,
அவ்வளவு ரம்மியமாம்; அறிவென்னும் ஆழியிலே
அசைந்துவரும் நாவாயில் அதிபதியாம் ‘நான்’ஏறி
அகிலமெலாம் அளந்துவரும், அழகென்னும் பூங்காவில்
ஆடிவரும், நவநவமாம் வெளிப்படுத்தல் பலகண்டு
வியனுலகுக் களித்துவரும் இவையெல்லாம் கற்பனையா? இல்லை,"நான்’ தனிபெற்ற விடுதலையின் விளையாட்டு
வினை இயற்றும் விற்பனத்வம்,
来 米 宗
நான்’இயற்றும் உலகமதன்
நடைமுறைகள் ஆச்சரியம்!
மதுச்சாலை இல்லை,உற்ஹூர்
மங்கையரும் அங்கில்லை,

27
மயங்கிக் கிடக்கவைக்கும்
மந்திரங்கள் ஒன்றுமில்லை, கல்லுக்கும் மண்ணுக்கும்
கையெடுத்துக் கும்பிடுவோர், கஷாயத்துள் மாயவித்தை
காட்டுகின்ற சாமியர்கள் அங்கில்லை, அறிவென்னும் அகல்விளக் கின்முன்னே ஆவிகளும் அகன்றுவிடும்,
அவ்வளவு சுயப்பிரமை, அறிவென்னும் தீபத்தின்
அசையாத ஒளியின்முன் இயற்கையின் இரகசியங்கள்
இலங்கும், இறை படைப்பினங்கள் ஒவ்வொன்றாய் முன்தோன்றி
உரைக்குமவை சக்தியெலாம், "நான்’ காணும் அற்புதங்கள் நவிலிற் பல பெருகும், இறையுண்மை நிதர்சனமாய்
இலங்குவதை நான்காணும், இறைபடைத்த உலகத்தை
இயக்குகின்ற சக்தியினை ‘நான்’ பெற்ற இரகசியமும்
நன்கு வெளிப் பட்டுவிடும்
ck 米 米
மந்தைகளாய் மக்களெலாம் மாறிவிடச் சாத்தானும்
மதமென்னும் போர்வையின்கீழ்
மருளூட்டி வெறியூட்டும்,

Page 15
28
வாதாட்டம் போராட்டம்
வார்த்தைகளின் திரிபாட்டம், பிளவுகளோ ஒருகோடி,
பேச்சாளர் பலகோடி, சாடுவதே கண்டமுறை,
ஒடுவதே உதிரமெனப் பிரிவாகிப் பிரிவாகிப்
பிரிந்துபல கூறாகித் துயில்கொள்ளும் நிலைவரையும்
தொடர்சண்டை நீண்டுநிற்கும்; அறிவுக்க்ோ இடமில்லை
ஆகவே “நான்’ களெலாம் தாமே மரித்துவிடும்,
தாரணியோ மடமையுந்தும் ஊமர்களும் செவிடர்களும்
உறைதலமாய் மாறிவிடும், அறிவென்னும் ஒளியேந்தி
அகிலத்தில் நிலைகொள்ளும் தெளிவுற்ற நான்களுக்கு
இந் நான்’ கள் என்றென்றும் அடிமையே போல்வாழும்
ஆச்சரியம் இதிலில்லை
索 米 米
இறைவன்தன் சக்தியினை
இயற்கையில் மறைத்துள்ளான், எத்தனையோ சட்டங்கள்
தத்துவங்கள் மறைந்துள்ள, கணக்கியலின் பொறியியலின்
காரணிகள் மறைந்துள்ள

29
இரசாஞானக் கலைக்கெல்லாம்
இயற்கையே பிறப்பிடமாம், தார்மீகச் சிந்தனைகள்
சனிக்குமிட மிவ்வியற்கை, சர்வகலை யாவையுமே
சார்ந்துள்ள திவ்வியற்கை, இறையுண்மை பிம்பிக்கும் ஆடியே இவ்வியற்கை ஒளிபெற்ற ‘நான்’ ஒன்றே
உணர்ந்திதனைக் காட்டிநிற்கும் ஒளிபெற்ற ‘நான்’ முன்னே
உந்துதடை ஒன்றுமில்லை,
※ § ܘܲܕ݂
சந்தேகம் கொள்ளுவதைத்
தடைசெய்யும் வேதங்கள் மந்தைகளைப் பெருப்பிக்கும்
மதிமோதும் தனி நான்” கள் என்றுமச் சூழலிலே
இயங்குவ தில்லையென்க, அறிவுக்குத் திறவுகோல்
ஐயம்கொண் மனமாகும், ஆய்வென்னுந் தணியூற்றுக் கதுவே மடைதிறக்கும், இயற்கையின் இரகசியங்கள்
இவ்வூற்றில் மிதந்துவரும், இறைசக்தி இரகசியங்கள்
இங்கேதான் வெளித்தோன்றும். இதற்கெதிர்தான் ‘நம்பிக்கை”
எனும் பீடம், அறிவினது

Page 16
30
பலிபீடம், மந்தைகளைப்
பக்குவஞ்செய் பீடமென்க
ck 米 来源
ஒரேகடவு ளுண்மைக்
கியற்கையே உதாரணமாம், ஒரே இயற்கை யாவர்க்கும்
ஒரேமுடிபைத் தருவதனால் ஒரே சக்தி யேஇதனை
உருப்படுத்திற் றென்றறிக. தர்க்க நியதியிது
தரித்துள்ள உண்மையிது, எந்தனையோ சக்திகளை
இதனுள் மறைத்திந்த வெளியுருவத் தோற்றமதை
விரித்துள்ள தோர்சக்தி, அச்சக்தி யேகடவுள்
அதற்கிணை வேறில்லை, மனிதன்தன் பிரதிநிதி
மண்ணுக்கோ ரணிவிளக்கு ‘நான்’ என்னும் தனித்துவத்தால்
ஒவ்வொன்றும் தனியுருவம், எச்சத்தி எவ்வுருவில்
இருக்கின்ற தெனுமுண்மை அறிவென்னுந் துணைகொண்டே
அறிந்திடலாம், அதுவன்றி அச்சத்தை நிலைநிறுத்தி
ஆட்கொள்ளும் பான்மையிலே போதனை சென்றிடுமேல்

31
பொம்மைகளே உருவாகும், பொம்மைக்கு ‘நான்’ இல்லை
போக்கில்லை, பிறர்ஆட்ட ஆடுகின்ற நிலையன்றி
அதற்கெனவோர் சுயமில்லை, இந்நிலையில் இயற்கையோ
இருளாக, விதியென்னும் தளை வந்து முன்னிற்கும்
தத்தளிக்கும் மனிதஉரு, சுயமற்ற மனித உரு
சூழ்ந்துள்ள சூழலிலே உண்மைஇறை அங்கில்லை
உள்ளதெலாம் போலிமயம், ஆவிகளும் பேய்களுமாய்
அகங்கொள்ள, இயற்கையெனும் அறிவுதரும் வேதமு மோர்
அர்த்தமற்ற தாகிவிடும்
米 米 来源
‘சர்க்கரை” எனளழுதிச்
சலத்திற் கரைத்துவிட்டால் சலமுடனே சர்க்கரையாய்
மாறிடுமோ சாற்றிடுவீர், “இறையுண்மை’ எனனழுதி
இவ்விதம்நீர் கரைத்துவிட்டால் இறையுண்மை என்பதனைச்
சலம்காட்டு மோஇயம்பீர் ‘இறைசக்தி” என்றுநீர்
இம்மைவரை உரைத்திடினும்

Page 17
32
இருளன்றி இறைசக்தி என்றுமே நீர்
இறைசக்தி அவன்படைத்த இயற்கையிலே தானுண்டு, எழுத்திலே விவரணந்தான்
இதைப்பருகி என்னபயன்? அகமறிவு பெற்றால்தான்
அச்சக்தி வெளித்தோன்றும், அற்புதங்கள் பல காணும்
அரசாளும் ‘நான்’அங்கே
米 s விளங்காத மொழியினிலே
வேதங்கள் மனப்பாடம், விளங்காத மொழியினிலே
சுலோகங்கள் மனப்பாடம், விளங்காத மொழியினிலே
வார்த்தைபல மனப்பாடம், அகம்செய்த வேலையென்ன
அத்தனைக்கும் பெட்டகமாய் அமைந்ததே யன்றியோர்
அசைவேனும் கண்டதுண்டோ? மந்தைகள் உருவாகும்
மண்டலமே இக்களமாம்.
米 米 本
'அறிவுமுன் னேறுகிறது’ நம்பாத இனமக்கள்
அடிமைபோல் இனம்பெருக்கி
அழிந்திடுதல் சகசநிலை;
பழம்பெருமை எனும்மதுவைப் பருகியதில் மயல் கொண்டு

33
பிரேமையிலே கண்டுஞ்சும்
பிரகிருதி அவ்வினங்கள், வரலாறு வழிகாட்டி,
வளர்ந்தவிதம் உணராமல் திரைமறைவில் நின்று ஜெபம்
செய்வதுவே அவர் மார்க்கம் ; திறந்தவெளி கடவுள்முகம்,
திரும்புதிசை, எங்குமவன், தரங்குறைந்த ‘நான்’களுக்கோ தங்குமிடம் ஆசிரமம், ஆசிர மங்களிலே
அமைதியுண் டறிவில்லை. ஆய்வுகூ டங்களிலோ
அமைதியுமுண் டறிவுமுண்டு, ஆசிரம மாக்குவதை
அடியொற்றி வந்தமக்கள் ஆய்வுக்கூ டஞ்செய்வார்க்
கடிமையாய் இதுவரையும் ஆனதென்மேலும் ஆவதென்?
அமைதியொடு சிந்திக்க, ஒன்றிலே ஆராய்ச்சி
மற்றதில் அதிபக்தி, ஒன்றிலே உயிர்க்கடவுள்
மற்றதில் சிலைக்கடவுள், ஒன்றிலே மறைஇயற்கை
மற்றதில் மறைஎழுத்து, ஒன்றிலே வணக்கம்உயிர்
மற்றதில் வணக்கம் இருள், ஒன்றிலே நிஜஉலகு
மற்றதில் மாயை உலகு

Page 18
34
ஒன்றிலே மதிஅரசு
மற்றதில் விதிஅரசு, இந்தநிலை காரணமாய்
இவ்வேறு பாடென்க. இரண்டுமொன் றித்தநிலை
இவ்வுகில் இடம்பெறுமா? ஆம், அறி வின்னுமகம்
ஆழப் பதியவேண்டும், புத்தொளிர் நான்களின்னும்
பூமியிற் பிறக்கவேண்டும்.
米 sk 米
‘நான்’ என்னுந் தனித்துவத்தை
நசுக்குவதா ஆத்மீகம்? இறை இன்னும் இயங்குகிறான்
இங்கவன் பிரதிநிதி தனிமனையிற் சுவர் நடுவில்
தனித்திருந்து தூங்குகிறான் கண்விழித்துப் பாரென்றாற்
கண்மூடி நிற்கின்றான், சிந்தித்துத் தெளியென்றால்
வந்தித்துப் புலம்புகிறான் வெளிச்சத்தில் இறைநிற்க
இருட்டினிலே தேடுகின்றான், இயங்குகின்ற தவன்சக்தி இயங்கா திவன்சக்தி இஃதென்ன ஏமாற்றம்
யாரிந்த நிலைக்குக்கால்? இறைவன்சொல் பாதைக்கு
இவன்பாதை நேர்மாற்றம்!

35
உண்மையெல்லாம் பொய்யென்பான், வாழ்என்றாற் சாவென்பான், நிஜமென்றால் மாயைளன்பான்,
விரும்பென்றால் வெறுஎன்பான், இஃதென்ன பிரதிநிதி!
எல்லாம் இறைதலையிற் போட்டுவிட்டுச் சும்மா
புலம்புகிறான் சுயமென்னும் ஆணிவேரற்ற அடிமரம்சாய்வதுபோல்
ஆவிபேய்கல்மரம் அத்தனையும் உலகமொரு சிறைக்கூடம்
உள்ளே இவன்கைதி ‘நான்* இங்கே மரித்தநிலை
இதுதானா ஆத்மீகம்? ஏ தர்வேஷ! போர்வையினை
எடுத்தெறிந்து வெளியேவா அழகான இப்பிரபஞ்சம்
அமைத்தவன் இப்லீஸா? அப்படியென் றால் நீயும்
அமைதியாயக் கண்மூடித் துரங்கிவிடு ‘நான்’ என்னும் துடிப்புள்ள உனது சுயம் நசுங்கியே போகட்டும்
நாயனும் சரிகாண்பான், இல்லை இப் பிரஞ்சம்
இறைவனின் சிருட்டியெனில் இந்தநிலை நீசெய்த
இழிநிலையே இதற்குரிய தண்டனையை என்றென்றும்
தடையின்றி அனுபவிப்பாய்,

Page 19
36
நான்’ என்னும் தனித்துவம் தன்னைவில் பூரணம், முதலும் அதுவே தான்
முடிவும் அதுவே தான், ஏதோ ஒரு நோக்குக்காய்
என்றுமது தனித்தியங்கித்
தனையுணர இடமில்லை, ஒன்றுமற் றொன்றை
ஒடுக்குதலும் ஒன்றுக்காய் மற்றதின் தனித்துவத்தை
மறையுமா றாக்குதலும் இயற்கையோ இறைவனோ
இயற்றிவிட்ட நியதியல்ல, மண்ணிலே சுயநலத்தால்
மனிதனுண் டாக்கியதே, சர்வாதி காரத்தில்
தனித்துவத்துக் கிடமில்லை தனிநான்கள் யாவும்
தனிக்கருவி யாகிவிடும், கர்த்தா ஒருவன்
கருவிதான் மற்றவைகள் சுயமற்ற நிலையில்
சுழன்றுநிற்கும் ‘நான் களெலாம் சர்வாதி காரம்
சாற்றில் பலவகை: அரசியற் போர்வையில்
அடக்குமுறை அதிகாரம், அச்சுறுத்தல் மூலம்
ஆத்மீக அதிகாரம்,

37
பணங்கொண் டெதையும்
பணியவைக்கு மதிகாரம்,
என்றின்ன ரூபத்தில்
இவைதோன்றி ஆட்சிசெய்யும்.
米 米 §
சுதந்திரம் பெற்ற ‘நான் எச்'
சூழலில் வாழ்ந்தாலும் சூழலுக் கடிமையல்ல,
சூழலை யுயர்த்துமொரு சுயஒளி அதற்குண்டு,
சூழலுக் கடிபணிந்தால் சூழலே மிகைத்துநிற்கும்
"நான்’ பொம்மையாகிவிடும், பொம்மைகள் பெருகுவதால்
பூமியில் இறையுண்மை இறைசக்தி யாவும்
இருட்டிலே ஆகிவிடும், இதுதான் இயற்கைவிதி
இதுவரை கண்டவிதி,
米 岑 米
ஆராய்ச்சி யைத்தூண்டும்
அறிவுதான் மெய்யறிவு, அவ்வறிவே “நான் நிலையை
அமரத்வ நிலையாக்கும், ஏதோ ஒரு கோணத்தில்
இஃது வெளிப்படலாம், வியனுலகு வளர்ந்த கதை
விற்பன்ன *நான்’ கள்கதை

Page 20
38
இயற்கையே தூண்டுகோல்
இத்தகைய ‘நான்’ களுக்கு
இறந்தாலும் இறவாத
‘நான்’ களே இந் நான்’ கள்,
※ 米 米
தன்னொளி பெற்ற நான்”
தனித்தியங்கும் வையத்தில் இதன்பொருள் சந்யாசம்
என்பதல்ல சுயமாக தன்னில் மறைந்துள்ள
தனிச்சக்தி எதுவென்று கண்டறிய இரவுபகல்
கரிசனையில் ஆழ்ந்திருக்கும், இதுவுமொரு தியானமே
இயற்கையி லெழுந்தியானம், இயற்கையோ எழுதா மறை,
இறையுண்மை இதிலுண்டு, எத்தனையோ அற்புதங்கள்
இதிலே மறைந்துள்ள, ஆய்ந்திதனை வெளியாக்கல்
அறிவுள்ள "நான்” கள்கடன்; இக்கடன் நிறைவேறின்
இறைசக்தி வெளித்தோன்றும். சிந்தனையைத் தூண்டாது
சிலையுரு வாக்குகின்ற கல்வி யொரு கல்வியல்ல
கதையளக்கும் வெளித்தோற்றம், அடக்குமுறை ஆயுதமாய்
அச்சத்தை வருவிக்கும்,

39
அறிவுறுத்த லென்றும்
ஆய்வை நசுக்கிவிடும், ஆய்வற்ற ‘நான்” கள்
அசந்து முகங்கவிழும் தலைவிதி ஊழ்வினை
தான்செய்த முன்வினை தலையெழுத் திறைசெயல்
தள்ளிடும் விதிசெயல் என்றுதன் இயலாமை
எனுந்தாழ்வு மனப்பான்மை தூண்டவும் ‘நான்’ கள்
தூங்கி யுளம் சோம்பும், இந்நிலையில் இயற்கையின்
எதிர்சக்தி இயங்குமென்க; அறிவுள்ள நான்களுக்கு
இவையடிமை யாகிவிடும்.
米 米 本
பின்னுரை
நவீனங்கள் பலநிறைந்த
நவஉலகம் கண்டுள்ள அறிவு வளர்ச்சியினை
ஆர்மறுப்பார் இந்நாளில், ஆயிரம் வருடங்கள்
அப்பாலே வாழ்ந்தவர்கள் எவ்விதம் சொன்னார்கள்
வாழ்ந்தார்கள் என்றபடி இன்றுள்ள பாலகரின்
இதயத்தில் பதித்தவரின்

Page 21
4U
நாளாந்த வாழ்க்கையின்
நடைமுறையைத் திருப்பிவிட்டால் நம்மைநாம் உணராமல் நமதுசிறு பாலகரை ஆயிரம் வருடத்துக்
கப்பா லிருந்தவொரு மானிட உலகுக்கு
மாற்றுகிறோ மெனவுணர்க; அப்பால் நடப்பதென்ன?
அப்பழுக் கற்ற அவன் *காலம் கெட்டு விட்ட
தென்னுமொரு கருத்தோடு வாழத் தொடங்குகின்றான்
வரண்டஅவன் வாழ்க்கையிலே குறித்தஅவன் வாழ்காலம்
குருடாக்கப் பட்டுவிடத் தன் காலம் தனக்கே
தனியெதிரி என நினைத்து வெறுப்பும், சலிப்பும்
s வியாகுலமும், சோம்பலுமாய்த் துணிவற்று வாழ்க்கையிலே
துடிப்பறுந்து தூங்குகின்றான்;
米 米 米
உடலுலகும் மனேவுலகும்
ஒவ்வாத காரணத்தால் வந்ததே இந்த நிலை
வருமுடிவோ பரிதாபம்! அறிவுள்ள மக்களுக்கு

41
அடிமைஇவன் ஆகின்றான், இந்தவிதி இயற்கைவிதி
இனத்துக்கும் இதேநிலைதான், வெளிமாற்றம் ஒன்றாலே
விரும்புநிலை அணையாது, எவ்வளவு காலந்தான்
இவ்விதம் ஊற்றுவது ‘புதிய கலசந்தோறும்
பழைய மதுவை' என்பேன். என்னில், நான் மறைந்திருக்கும்
இரகசியத்தை வெளிப்படுத்தி நன்மைதரும் செயலொன்றை நவஉலகு நயக்குமா றென்னை வழிப்படுத்தும்
இயல்பினனே எனதுகுரு. இத்தகைய குருவை நாம்
எங்குதான் தேடுவது? இறைவனின் தூதனவன்
இவ்வுலகில் மறைந்துள்ளான், சாதி, மொழி பற்றிஎந்தச்
சர்ச்சைக்கும் அவனில்லை, எம்மொழியும் அவனறிவான்
எவ்வினமும் அவன்சொந்தம், அரசியற் காரணிகள்
அவனையே தீண்டாவே! அப்பாலே நின்றெம்மை
அறிவுக்கு வழிநடத்தும் ஒப்பற்ற வழிகாட்டி
உயர்ந்தவர்கள் பல மக்கள்

Page 22
42
அக்குருவால் ஒளிபெற் ஆயிர மாயிரமாம் அழியாத குருஅவனும் அகில மிருக்கும்வ6 அதில் மக்கள் வாழும் வ அவனும் நிலைத்தி அக்குருவே எனதுகுரு
அவன்வழியே செ
-தமாம்

றோர்
ரை
ரை
ருப்பான்
ல்கின்றேன்.