கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துளிர்

Page 1

"J.
կի

Page 2

e
வி. ஆனந்தன்
வியூகம்

Page 3
துளிர்.
வி. ஆனந்தனின் சொந்தமும் (மோசேயின் டயரி )
பங்குமான ( ராகு - கேது ) நிரல்களின் தொகுப்பு.
(C) திருமதி. வத்சலா ஆனந்தன்
முதல் பதிப்பு: ஜனவரி 1996, Go Giacs (6: வியூகம், கல்முனை.
அச்சு: குட்வின், கல்முனை. a soad: ரூபா. 30.00
THULIR
A Collection of the Columns written by V. Anandan and Collaborated partly by R. Mahadevan.
(C) Mrs. Vathsala Anandan
First Edition: January 1996 Publication: Vieuham, Kalimunai. Printed at: Goodwin, Kalmunai.
Price: Rs, 30-0)

இழப்பிலே துளிர்க்கும் இருத்தல்
ஆனந்தனின் அகால மரணம் கேட்டு அதிர்ந்தோம், கலங்கினோம் அழுதோம்.
அந்த இழப்பினுள் எம்மை இழந்து நாம் இல்லாமல் போன சில தினங்களில், அந்த இழப்பினை இல்லாமல் செய்யும் பகல் கனவுகள் தொடங்கின.
ஆனந்தனுக்கு நாங்கள் சிலை எழுப்ப முடியாது, ஆனந்தனுக்கு நாங்கள் மணி மண்டபம் கட்ட முடியாது, ஆனந்தனது பெயரை தெருப்பலகைகளில் எழுதி அவனுடைய படிமத்தை அசிங்கப்படுத்த (Մ)ւգ-աfrՖի,
ஆனந்தனின் எழுத்துக்களை நூலாக்க முடியும், அவனுடைய உரைகளின் ஒலி நாடாக்களை பதிப்பிக்க முடியும்.
ஆனந்தனின் புகுந்த வீட்டு நகரத்தார் அவனுடைய பொக்கி ஷங்கள் என தாங்கள் கருதியதை தமக்குள்ளேயே பொத்திக் கொண் டார்கள். ஆனந்தனின் கவிதைகளை மட்டக்களப்பு வாசகர் வட்டம் தனக்குத்தானே ரிசேவ் செய்து கொண்டனர். அவனுடைய மொழி பெயர்ப்புக்களை மட்டக் களப்பு கலை இலக்கிய பேரவை புக்பண்ணிக் கொண்டது. ஆனந்தனுடைய பிறந்த வீட்டரர், கல்முனை எழுத்தரளர் சங்கமும், வியூகமும் அங்கு போய் பொறுக்கிக் கொண்டு வந்தவை, அவனுடைய சில நிரல்களும் (Columns) ஒரு கட்டுரையும், இரண்டு பேச்சுக் குறிப்புகளும், ஒரு பேச்சின் ஒலிப் பதிவு நாடாவுந்தான்.
கழித்த கல் மூலைக்கு முதல் கல் ஆவது பழமொழி. ஆனந்தனு டைய கவிதைகளையும் மொழிபெயர்ப்புகளையும் விட ஆனந்தனைப் பற்றி அதிகமாகக் கூறக் கூடியன அவனுடைய நிரல்களே என கலாநிதி எம். ஏ. நுஃமான் போன்ற விமசகர்கள் கூறுகின்றார்கள். ஆனந்தனை
III

Page 4
நமக்கு மீள புத்துயிர்ப்பு செய்து தர இந்த நிரல்களே இவருடைய அதிகப் பற்றான இரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் ஆகப் போகின்றன.
இவை "படி இதழ்களிலும் 'களம்' இதழ்களிலும் வெளிவந்தவை படியில் மோசேயின் டயரி என்னும் பகுதியில் ஆனந்தன் மோசே என்னும் புனை பெயரிலும், களம் இதழ்களில் பெட்டகம் என்னும் பகுதியில் ஆனந்தனும், மகாதேவனும் ராகு - கேது என்னும் புனை பெயர்களில் எழுதியவை. களம் இதழ்களில் வெளியான நிரல்கள், குறித்து சொல்லும் வசதிக்காக வெளியீடு செய்யப்பட்டுள்ளன. நிரல்கள் 1 . 3, 13 - 19, 32, 33 - 36 ஆகியன 1992 - 1993ல் படி இதழ்களில் வெளிவந்துள்ளன ஏனையவை 1984 - 1985 கால களம் இதழ்களில் வெளிவந்தன.
துளி என்பது சிறியது துளிர் என்பது சிறிய அரும்பு. அத்துடன் துளிர் என்பது உயிர்ப்புக் கொள்வதும் ஆகும். இந்தச் சிறிய நிரல்களில் ஆனந்தன் உயிர்பெற்றுத் துளிர்ப்பான். எம்மையும் துளிர்க்கச் செய்வான் என்பது எமது நம்பிக்கை.
இத் தொகுப்புக்கு உதவிய சகலருக்கும் நன்றி
W

கலங்கிய கோடுகளுக்கு இடையில் ஒரு தெளிந்த கோடு
நிரலியல்கள் Columns அல்லது நிரல் எழுத்துக்கள் புதியன அல்ல. பத்திரிகைகள் எப்போது தோன்றினவோ அப்போதே நிரல்களும் தோன்றின. சிலர் இவற்றை "பந்தி எழுத்து" என்றும் குறிப்டர்
தமிழ் பத்திரிகையுடனும் சஞ்சிகைகளுடனும் தொடர்பு கொண்ட பலரும் தமிழில் நிரலியல் எழுதியிருக்கிறார்கள். கே. எஸ். சிவகுமாரன், டொமினிக் ஜீவா, எச். எம். பி. முகைதீன், அ. யேசுராசா, உமா. வரதராஜன், கலாநிதி மெளனகுரு முதலியோர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இலங்கை தமிழ் நிரலியல் எழுத்தாளர்கள் அல்லது நிரலியலாளர் கள் (Columnists). தமிழ் நாட்டில் சுஜாதா, அசோகமித்திரன் ஞானி, ஆகிய பிரசித்தி பெற்ற நிரலியலாளர்களை ஒர் இனங்காட் டலுக்காக குறிப்பிடலாம்.
எனினும் நிரல் எழுத்துக்களின் தன்மை, அவற்றின் இலக்கியத் தரம் ஆகியவை பற்றிய அலசல்கள் தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ இதுவாை இடம் பெறவில்லை. ஆசிரிய தலையங்கங்கள், முன்னுரைகள் மதிப்புரைகள் பெற்ற ஒரு வித தெரிந்தெடுத்த கவனிப்பை நிரலியல்கள் இதுவரை பெறவில்லை. கே. எஸ். சிவகுமாரனின் Tamil Writings in Sri Lanka என்ற ஆங்கில நிரலியல்கள் கூட ஓர் வடிவமைப்பு என்ற வகையில் அதிகம் பேசப்படவில்லை.
இந்த நிலையில் நிரலியலின் சில பொது அம்சங்கள் பற்றி நினை வுறுத்திப் பரர்க்கலாம் •
1. முதலில் எனக்குப்படுவது நிரலியல்களின் அளவுதான். பொது வாக் அவை ஒரு பத்திரிகையின் முழு நீள நிரல் ஒன்றையோ அல்லது பத்திரிகையினது அரைப்பக்கத்தின் அல்லது கால் பக்கத்தின் இரண்டு மூன்று நிரல் பகுதிகளையோ, கொண்டிருக்கக் காணலாம். இதன் நிறையளவை (Optimum Size) நாம் 40 வரிகளுக்கு மேற்கொண்டு போவது நல்லதல்ல எனினும் இது நிரலியலாளரின் செல்வாக்கையும், மேதைமையையும் பொறுத்தது.
25 நிரலியல்கள் பத்திரிகையின் குழந்தையாதலால் எளிதான வாசிப்புக்கு உரியவை. இறுக்கமும், கட்டுரைப் பாங்கும் அற்ற உதிரித் தன்மையும் உதிர்வுத் தன்மையும் உடையவை. எனினும் செட்டாக ரத்தினச் சுருக்கமாக குறைந்த சொற்களில் கூடிய விபரங்களை சிக்க லின்றி சொல்லக் கூடியவை.
V

Page 5
3. நிரலியல்கள் சூடாகவும், காரமாகவும் யதேச்சையாகவுழ் கட்டுப்பாடு இன்றியும் காணப்படுகின்றன. சூடு என்பது புதினத்தன்மையை Topical Interestஐ குறிக்கும். புதினங்களின் அலசல் அரட்டைத்தன்மை பெறுவதும் உண்டு. அவ்வாறில்லாமல் புதிய, அரிய தகவல்களாக அமைவதும் உண்டு. காரம் என்பதில் எள்ளல், அங்கதம், நகைச்சுவை யுக்தி, குயுக்தி முதலியன சேரும். எதேச்சையும் கட்டுப்பாடின்மையும் அதன் விரி எல்லைகளை குறிக்கும். எனினும் கூர்மையான சமூக அரசியல் கலை இலக்கிய விமர்சனப் பொறிகளின் பிரதேசத்தை அவை அண்டிப் பிழைக்கும்.
4. நிரலியல்களில் கற்பனைக்கு இட்ம் இல்லை. ஒரு நிர்லியலாளின் சொந்தச் சிருஷ்டிகளின் வெளிப்பாட்டுக்களமாய் அவனுடைய நிரலியல் அமைய முடியாது. மேற்கோள்களுக்கு மட்டுமே இடம் உண்டு. ”
5. நிரலியல்களுக்கு ஒர் உருவம் அல்லது வடிவமைப்பு அழகியல் ஏதேனும் உண்டா என்பது வினவப்படக் கூடியது. எந்த எழுத்துக்கும் அது ஏற்படுத்துகின்ற தாக்கம் அல்லது பாதிப்பு இருந்தே தீரவேண்டும் அக்கத் தாக்கத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைவதே அந்த எழுத்தின் உருவம் அல்லது வடிவமைப்பு அழகியல், நிரலியல்கள் அவ்வவவு உதிரிகளாக, எதேச்சைகளாக இருந்த போதும் அவை தம் உயிரை பேண வேண்டும். வேறு வகையாகச் சொன்னால் அவை வெறும் வளாவளாக்களாகவோ, வெறும் புதினங்களாகவோ, வெறும் தகவல்களாகவோ அமைய முடியாது.
மேற்குறிப்பிட்வையெல்லாம் அவற்றின் வடிவம்ைப்பு பற்றியவே இந்தப் பின்னணியில் ஆனந்தனின் நிரலியல்களை பார்க்கலாம்.
பொதுவர்க ஆனந்தனின் நிரலியல்கள் குறுகியனவே. சுரேஸ் இன் பிரியா விடை என்னும் முழுச் சிறுகதையையும், திணித்து ஆனந்தன் நிரலியல் ஆக்கியது ஒர் ஆபூர்வமான செயல். சிறுகதை நிரலியலுக்குள் திணிக்கப்பட்ட போது சிறுகதை குற்றுயிராகியது. எனினும் செய்தி மிஞ்சுகிறது. விமல மித்ரா வைப் பற்றிய குறிப்புகளும், நிரலியலுக்குள் அடங்க மறுக்கின்றன. இவை தவிர பெரும்பாலான நிரலியல்களின் அளவு சுமாராகவே உள்ளது. சில நிரலியல்கள் பொறி தெறிக்கும் அளவுக்கு குறுகலாக உள்ளன.
உதாரணம்: புதுக் கவிதையில் சிலேடை.
உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை இத் தொகுப்பின் வெளியீட் பாளர்கள் அதனை நன்கு வெளிச்சப்படுத்தி உள்ளார்கள். பொருள் வைப்பிலேயே அவை வெளிப்பட்டுள்ளன. கலை இலக்கிய விமர்சனங் களாவும், கலை இலக்கியத் தகவல்களாகவும், சமூக அரசியல் விமர்சனங் களாகவும் நினைவு குறிப்புகளாகவும் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
VI

1984 - 1985 களில் எழுதப்பட்டவற்றில் ஏறத்தாழ அரைவாசி (42%) சமூக அரசியல் விமர்சனங்களும், அதற்கு சற்றுக் குறைய (32%) கலை இலக்கிய விமர்சனங்களாகவும் உள்ளன கலை-இலக்கிய தகவல்களும் நினைவுக் குறிப்புகளும் குறைவு (8% - 16%) ஆனால் 1992 - 1993களில் கலை இலக்கிய தகவல்கள் மேலோங்கவும் (46%) ஏனையவை குறைந் தனவாக ஆனால் சமபரப்புடையனவாகக் (15%) காணப்படுகின்றன. இவைகளிலிருந்து இரண்டு விஷயங்கள் புலனாகின்றன. ஒன்று பிந்திய ஆண்டுகளில் ஆனந்தனின் வாசிப்பு பரப்பு பெருமளவு அதிகரித்து இருக்கிறது, மற்றது பிந்திய ஆண்டுகளில் ஆனந்தனின் அரசியல் சிந்தனை முனைப்பு குறைந்து போயிருக்கிறது. இது ஆனந்தனின் பொதுவான வாழ்க்கை ஒட்டத்தோடு, இந்தக்காலப் பகுதியின் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவோடும் ஒட்டிப் போவதாக தெரிகிறது.
மேற்கோள்களை நிறைய எடுத்தாள்கின்ற ஆனந்தனின் ‘புதுக் கவிதையில் புதுப்பிரார்த்தனை” என்பதும் ஒரு மேற்கோளாகவே கருதப் பட வேண்டும். விகுதி விகற்பங்கள் தவிர மலையாளத்துக்கும், தமிழுக்கும் பொதுவான சொற்களைக் கொண்ட இந்த அற்புதமான துணுக்கு மலையாள முன்மாதிரியைக் கொண்டது என்ற வகையில் தமிழில் இது ஒரு மேற்கோளே.
வடிவமைப்பை பொறுத்த வரை அது ஆனந்தனுக்கு மெல்ல மெல்லவே சித்தித்திருக்கிறது. ஆரம்பத்தில் சொரியலாக அமைந்தாலும் பிந்தியவற்றில் உறுத்தலாக அமைகின்றன. எ டு த் து க் கா ட் டா க ஹை, ஹை, ஹைக்கு, கன்னடத்துத் தங்கம், தி கம்பரக் கவிகள் முதலியன.
களத்தில் வெளியான நிரலியல்களுக்கு இத் தொகுதியின் தொகுப் பாளர் இட்டுள்ள தலைப்புக்கள் அவற்றின் வடிவமைப்பை மேம்படுத்து வதாயினும் ராகு - கேது கருதாத அந்த எதிர்திசை அழகியல் வீச்சு ஓர் இடையீடு ஆகாதா? ܙ ܬ
எவ்வாறிருப்பினும் ஆங்கிலத்தில் கே. எஸ். சிவகுமாரனின் Tamil Writings in Sri Lanka என்ற நிரலியல் தொகுப்புக்கு அடுத்ததாக வெளிவரும் முதல் தமிழ் நிரலியல் தொகுப்பு என்ற பெருமை இந் நூலுக்கு உண்டு. ஏனைய நிரலியல்கள் வெளிறிய பத்திரிகைத் தாளுடன் வெளிறிப் போக ஆனந்தனின் நிரல்கள் இந்த சிறிய நூலில் கலங்கிய கோடுகளுக்கிடையே ஒரு தெளிவான கோடாகத் தெரிகிறது.
** 3。
பிரகாஷ்த்தம் சண்முகம் சிவலிங்கம் பாண்டிருப்பு-2 கல்முனை,
VII

Page 6
நிரல்கள்
பக்கங்கள்
கலை, இலக்கிய விமர்சனங்கள்
புதுக் கவிதையில் சிலேடை l இலக்கிய ரசிகர்களுக்கோர் எச்சரிக்கை l புதுக் கவிதையில் புதுப் பிரார்த்தனை களுதைகளின் கவலை 2 மேத்தாவின் கூத்து 3 மொட்டைத் தலையும், முழங்காலும் 3 சத்துருக்கொண்டான் 4. பரிசுகேடு 4 தெரியுமே உங்கள் தெம்மாங்கு i5 ஒற்றைக் கண்ணர் செருப்புகள் தொடர்பாய் . 6 தலை காய்ந்துபோன சில தருணங்கள் 7
கலை, இலக்கிய தகவல்கள்
ஹை, ஹ்ை, ஹைக்கு. - 8 திகம்பர கவிகள் 9 நேரில் வந்தாண்டி, இப்போ தெருவில் வாராண்டி 9 எப்படி வரைந்தனரோ? 0 இவங்கையும், துப்பறியும் நாவல்களும் 10 கன்னடத்துத் தங்கம் 1 I சிறையில் பிறந்த சினிமா 2 விழுந்து விழுந்து படித்த கதைவசனங்களுக்கு
இப்போது வேறு பெயர் சிலைதானே, திகைப்பு ஏன்? l4 சரணம், சரணம், சங்கர் அண்ணா, சரணம் 15
VIII

நிரல்கள்
பக்கங்கள்
சமூக, அரசியல் விமர்சனங்கள்
இருக்கிற கவலைகள் போதாதென்று 16 லெனினின் சிலை உடைக்கப்பட்ட பின்பும் 6 நீண்டு தெரியும் ஜெயகாந்தனின் நிழல் 17 எம். ஜி. ஆர். மன்னிக்க 18 கண்களை பொத்தலாமே 8 மட்டக்களப்பு சீமையான் வேறென்ன செய்வான்? 18 இலங்கையை மறந்தது ஏனோ? 9 செத்துப்போன நெற்றிக்கண் 20 பிரியாவிடை 2. 1, 22
நினைவலைகள்
ஷொலக்கோவ் 23 பன்சிய பனஸ் ஜாதகவின் காதலன் - ஜி. பி. 24 சகாப்தத்தின் சரிவு - சத்யஜித்ரே 25 தூரத்து மின்னல் - விமல் மித்ரா 26, 27
கன்னடத்து தமிழா, தமிழ்நாட்டு கன்னடமா? 27

Page 7

கலை இலக்கிய விமர்சனம்
புதுக்கவிதையில் சிலேடை
மரபுக்கவிதையைச் சீரழித்த சிலேடை புதுக்கவிதையையும் விடவில்லை என்பதற்கு ஒரு உதாரணம்; -
ஒரு தையில் திருமணம் நடந்தது. மறுதையில் குழந்தை பிறந்தது. இரு தைகளுக்கும் இடையில், ஏதோ நடந்தது. இந்தப் புதுக்கவிதையில் ஒரு சொல் ஆங்கிலச் சொல்லாம். Hதுக்கவிதை நவீன நாயக்கர் காலத்தில் நடைபோடத் தொடங்குகிறதோ,
இலக்கிய இரசிகர்களுக்கோர் எச்சரிக்கை:
- அண்மையில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டடத்திற்கு தலைமைதாங்கிய எழுத்தாளர் ஒருவர் சொன்னார். ** புத்தக வெளியீடு என்பது பூப்பு நீராட்டு விழா போன்றது' என்று. இலக்கிய இரசிகர்களே! புத்தக வெளியீட்டுக் கூட்டங்களுக்குப் போகும் போது கொஞ்சம் எச்சரிக் கையாக இருங்கள். இங்குஉங்களுக்கு மஞ்சள் குளிப்பாட்டி மச்சான் முறை கொண்டாடினாலும் கொண்டாடுவார்கள். "மங்கல” மரபல்லவா அது.
புதுக்கவிதையில் கர்த்தாவே
புதுப் மத்தாயு கள்ளும் குடிக்கும் பிரார்த்தனை பெண்ணும் பிடிக்கும்
கர்த்தர் இரட்சிக்கணும் இரட்சிக்க இல்லேங்கில் மோசே மத்தாயிக்கு மயிராணு.
O

Page 8
02
கழுதைகளின் கவலை
இப்போது எங்கு பார்த்தாலும் "வீடியோ மயம்". மட்டக்களப்பு நகரில் கூட வீடியோ கசட் வாடகைக்கு விடும் நிலையங்கள் ஐந்துக்கும் அதிகமாக இயங்குகின்றன. ஆனால் இந்த "வீடியோ’வினால் மக்கள் பெறும் நன்மைகளை ஆரா யும் போது உதட்டைப் பிதுக்க வேண்டியுள்ளது. சினிமாவை விட்டால் வேறு கதியில்லை. சினிமா என்றாலும், தரமான உயர்ந்த ரசனையை வளர்க்கும் படங்களுக்கு மாபெரும் பஞ்சம்! மனிதனின் பிரச்சினைகளை, கலையுணர்வை, கண்டு பிடிப்புகளை, இயற்கையின் அற்புதங்களை தெரிவிக்கும் எத்தனையோ "டொக்குமென்ரறி’ படங்கள் இருந்தும், அவற்றை வீடியோ’வில் காண்பது குதிரைக் கொம்பைக் காண்பது போல் மட்டக்களப்பின் வீடியோ கசட்"வாடகைக்கு விடும் நிலையங்களின் படிகளில் ஏறிஇறங்கி, 'அக்ரஹாரத்தில் கழுதை' என்ற சினிமாப்படம் இருக்கிறதா என்று விசாரித்த போது அந் நிலையங்களிலிருந்தவர்களுக்கு நாங்கள் "கழுதை" களைப் போன்று இருந்திருக்கக் கூடும்! அவர்களில் ஒருவர் கேட்டார். ‘அப்படி ஒரு படம் வந்ததா”*
அதுபோக, TV மக்களின் ரசனையை மாற்றி வாசிக்கும் பழக்கத்தைக் குறைத்து மக்களைச் சோம்பேறிகளாக்கிவிடும் என்கிறார் மார்ஷல் மெக்லூ ஹன் என்ற அமெரிக்க சமூக வியலாளர். இந்த TV வீடியோ மாயை மக்களை மயக்கி யிருப்பது முற்றிலும் உண்மையே. சமீபத்தில் லண்டனுக்குச் சென்றிருந்த 'தீபம்’ நா. பார்த்தசாரதி அவர் க ள் "தமிழோசை" க்கு அளித்த பேட்டியிலும், தற்கால இளைஞ ரிடையே இலக்கிய ஆர்வம் குன்றியிருப்பதற்கு TVயும், சினிமாவும் முக்கிய காரணங்கள் என்று வலியுறுத்தினார். இலக்கியவாதிகள் இது குறித்து சிந்திப்பார்களாக!

மேத்தாவின் கூத்து
கவிஞர் மு. மேத்தாவின் புதுக்கவிதை ஒன்று - ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப் பட்டது, 'தன்னம்பிக்கை’ என்ற தலைப்பில்.
எங்களை நாங்களே நம்புவதென்று இறுதி முடிவெடுத்தோம்! சமூக விரோதிகளிடமிருந்து தப்பிக்க போலீஸை நம்பினோம்போலீஸிடமிருந்து தப்பிக்க கோர்ட்டுகளை நம்பினோம் கோர்ட்டுகளிடமிருந்து தப்பிக்க இனிஎங்களை நாங்களே நம்புவதென்று இறுதி முடிவெடுத்தோம்! இப்புதுக்கவிதை உங்களிடம் ஏதாவது புதிய சிந்தனைகளை ஏற்படுத்துகிறதா?
மொட்டைத் தலையும் முழங்காலும்
* சுந்தரம்பிள்ளை ஆங்கில ஏகாதிபத்தி யத்தை எதிர்க்கும் துனிச்சல் கொள்ளவில்லை. அதன் விளைவாக அவர் படைத்த நாடக நூலான ‘மனோன்மணியம் துணிச்சலான படைப்பாக இருக்கவில்லை. அதே காலத்தில் வாழ்ந்த டாரதியின் கதை வேறு- பொலிஸ் தொல்லை; சி. ஐ. டி.கள் எப்பேரதும் பாரதி யைத் தேடிக் கொண்டிருந்தார்கள். வறுமை, அரசியற்பகை காரணமாக, பாரதி அரசியலை விட்டு ஒதுங்கி 'உன்னதம் வானத்திலிருந்து விழாதா என்று தேடிக் கொண்டிருக்கவில்லை; வாழ்க்கையை அதன் தீவிர மட்டத்திலே வாழ்ந்தான் அன்றைய காலகட்ட வாழ்க்கையை வாழாத சுந்தரம்பிள்ளை போலி இலக்கியவாதியாக விளங்க, பாரதி தன் வாழ்க்கையின் மூலம் உரை நடையிலே புதிய உரை நடையைத் தருகிறான். கவிதையிலே புதிய கவிதையைத் தருகிறான். (படிகள். நீங்கள் நாங்கள்.)
இது ஏதோ பழங்கதையில்லை! இன்றும் எமது இலக்கியக் காரரிடையே இவ்விரு வகை யினரும் உள்ளனர். தொடரும் சுந்தரம்பிள்ளை களுக்காகத் துக்கப்படுவதா? அல்லது பாரதி களுக்காகத் திருப்திப்பட்டுக் கொள்வதா?
O3

Page 9
சத்துருக் கொண்டான்
"பரஸத்துரோ" (அந்நிய விரோதிகள்) என்ற சிங்களப்படம் தொடர்பாக "முஸ்லீம்களா பரஸத்துரோ?’ என்ற தலைப்பில், அஷ்ஷ"ரா என்ற இஸ்லாமிய சஞ்சிகையில் ஒரு குறிப்பு வெளிவந்துள்ளது. அதில்
'' . . . . . . தேசிய வீரன் கெப்பிட்டிபொல அமைத்த விடுதலைப் படையில் முஸ்லிம் வீரர்களும் அணிவகுத்தார்கள். அம் மட்டோ! மட்டக்களப்புத் தமிழ் மகன் துரைசாமி தளபதியாக இருந்து கடமையாற்றியதற்கும் ஆதாரமுண்டு. உண்மையான சரித்திரம் இப்ப டியிருக்க.“ என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
இந்த ‘மட்டக்களப்புத் தமிழ் மகன் தளபதி துரைசாமி பற்றி தகவல் தெரிந்தவர்கள் தெரிவிப்பார்களாக!
04
பரிசு கேடு
'மனித குலத்தை உயர்த்தும் உண் மையான இலக்கியப் ப ைட ப் புக் களு க் கே இலக்கியத்துக்கான (நோபல்) பரிசு வழங்கப்பட வேண்டும்? என்று தமது உயிலில் எழுதியுள்ளார் அல்பிரட் நோபல்,
* ஸ்டொக்ஹோம் ந க ரத் தி லுள்ள * சுவிடிஷ் அக்கடமி நோபல் பரிசு பெறு வோரைத் தெரிவு செய்கின்றது. ஆனால் *ஜெனீவா, பல்கலைக் கழக ஆங்கிலப் பேரா சிரியர் 'ஸ்ரைன்' அண்மையில் ‘நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றி எழுதியுள்ள கட்டுரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் எழுதுகிறார்- 1901 முதல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அரசியல் கண்ணோட்ட அடிப் படையில், பிரச்சினைகளை உருவாக்காத வகையில், செல்வாக்குள்ளவர்களுக்கே வழங்கப் பட்டு வருகின்றது? இதற்கு உதாரணமாக முன்பு பரிசு பெற்ற பலரையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

தெரியும்ே உங்கள் தெம்மாங்கு
தமிழ் சினிமாவைப் பற்றி சில வார்த்தைகள். * ஜனங்களுக்குக் கல்வி புகட்டுவதாக அமை யாமல், அவர்களுக்கு விழிப்பேற்படுத்துவதாக இல்லாமல், வெறும் பொழுது போக்காக இருப்பதால், சினிமா என்பது வெறும் காலிப் பயல் போலத் தெரிகிறது. அந்தக் கரலிப்பயல் சகல வக்கிரங்களோடும் விளங்குகிறான், பணம் கொண்டு வருகிறரன் என் ப த ர ல் மட்டும் அவனைச் சகித்துக் கொள்ள வேண்டுமா..? இது தமிழ்ச் சினிமாவைப் பற்றிய ஜெய காந்தன் பார்வை. -
சினிமா சிலருக்கு ஒரு போதையாக மாறி விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. சிலர் எதற்கெடுத்தாலும் சினிமாவிலிருந்து உதாரணம் காட்டுவது அவர்கள் அதிலேயே மூழ்கி உண்மை நிலையை மறக்குமளவுக்குப்
போய் விட்டார்களா எனவும் எ ன் ண த்
தோன்றுகிறது. புதிய புதிய தமிழ்ச் சினிமாப் படங்கள் வீடியோ மூலம் விரைவாக வந்து அவர்களை மயக்குகின்றனவா? வானத்தில் மாளிகை கட்டுங்கள்; ஆனால் தரையில் அத்திவாரமிடுங்கள்!
ஒற்றைக் கண்ணா
மட்டக்களப்புப் பொது நூலகம் காலத் துக்குக் காலம் அடையும் அபிவிருத்தி, ‘சட்" டென்று கண்ணில் படத்தக்கதாக இல்லை! பல வருடங்களாக அங்கு ஒரு புதிய கட்டடத் தொகுதி அல்லது விசாலிப்பு எதுவுமில்லாதது கண்ணை உறுத்துகிறது. அதிகரிக்கும் வாசகர் எண்ணிக்கைக்கு இப்போதுள்ள கட்டடம் போது மானதாக இல்லை அதேவேளை, பொதுநூலகம் இருக்குமிடத்திலிருந்து அரை மைல் சுற்று வட்டாாத்தில் இன்னொரு புதிய நூலகத் திற்கான கட்டிடத் தொகுதி கட்டப்பட்டு முடி யும் தறுவாயிலுள்ளது. இவ்வளவு அருகில் இன்னொரு நூலகம்.
05

Page 10
செருப்புகள் தொடர்பாய்
உங்கள் சிந்தனைக்கு
1) இனியாவது
கடந்த காலச் செருப்புகளைக் கழற்றி எறிவோம் எதிர் காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்.
தோள்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தோல்விகளை நாம் துரத்தி அடிப்போம் உறங்கிக் கொண்டிருக்கும் போர்வாளைக் காட்டிலும் ஊர்ந்து கொண்டிருக்கும் புழுக் கூட உயர்ந்ததுதான்! காத்திருக்கும் வரை நம் பெயர் காற்றென்றே இருக்கட்டும்; புறப்பட்டு விட்டால் புயலென்று புரிய வைப்போம்!
கவிஞர் மு. மேத்தாவின் இப் புதுக் கவிதை ஏறக்குறைய இரு வருடங்கட்கு முன் தமிழக சஞ்சிகை ஒன்றில் பி ர சு ரிக் கப்பட்டது ‘இனியொரு விதி செய்வோம்" என்ற தலைப்பில்.
2) **இந்தச் செருப்பைப் போல்
எத்தனை பேர் தேய்கிறார்களோ இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைபேர் பிழிந்தெடுக்கப் படுகிறார்களோ இந்தச் சட்டையைப் போல் எத்தனைபேர் கசங்குகிறார்களோ அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு!’’
அண்மையில் மறைந்த கவிஞர் ஆத்ம நாம் அவர்களின் "காகிதத்தில் ஒரு கேரடு என்ற புதுக் கவிதைப் புத்தகத்திலிருந்து * மாதிரி’க்கு ஒன்று இது!
O6

தலை காய்ந்து போன சில தருணங்கள்
உங்கள் சிந்தனைக்கு
1)
சிலர் கூறுகிறார்கள்நாங்கள்தானே சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தோம் என்று ஆம்சுதந்திரத்தை வாங்கினீர்கள். ஆனால்
எங்கே கொடுத்தீர்கள்?
* கைது செய்யப்பட்ட நியாயங்கள்" என்ற தலைப்பில் தமிழக கவிஞர் பொன். செல்வகணபதி அவர்களின் புதுக்கவிதைப் புத்தகத்திலிருந்து "மாதிரி" க்கு ஒன்று இது.
2)
3)
*சகல விதமான அயோக்கியத்தனங்களும் சட்ட அங்கீகாரம் பெற்று உலாவரும் ஒரு தேசத்தில் அறிவாளிகள் போராட்டக் காரர் களாக மாறி விடுவார்கள் என்பது சரித்திரம். ஒரு தேசத்தின் ஆன்மாவையே இன்று கதை, கவிதை என்று சொல்லப்படுபவை மாற்றி யமைக்கும் சக்தி வாய்ந்தவை" * வண்ணமயில்" சஞ்சிகையில் "கெளதமன் எழுதிய "சாகித்திய அக்கடமிக்கு ஒரு பரிசு’ என்ற கட்டுரையிலிருந்து.
**சமத்துவம் -Equality- என்றால் என்ன? உலகில் எல்லோருமே ஒருவருக்கொருவர் சமனா? கெட்டிக்காரத்தனம் எ ன் ப து என்ன ஆவது? அவ்வாறாயின் சமத்துவம் என்பது சம சந்தர்ப்பம் என்று ஆகுமா? சம சந்தர்ப்பம் எல்லா நேரத்திலும் எல்லா இடங்களிலும் சாத்தியமா???
07

Page 11
08
கலை இலக்கியத் தகவல்கள்
ஹை, ஹை, ஹைக்கு
ஹைகூ ஹைகு. ஹைய்கு எனப் பலவாறு அழைக்கப்படும். ஹைக்கு ஜப்பானிய கவிதைத்துறையில் ஒரு சிறிய வடிவம். இது 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வளர்ச்சி பெற்றது. மூன்று அடிகளாலான இக்கவிதை இரண்டு அலகுகளைக் கொண்டது. முதல் இரண்டு அடிகளும் ஒரு அலகு. மூன்றாம் அடி ஒரு அலகு. முதல் இரண்டு அடிகளும் ஒரு ஒரு வினாவை ஒரு வியப்பை ஏற்படுத்த மூன்றாம் அடி அதற்குரிய விடையைச் சொல்லும் . ஹைக்குவை விடையோடு கூடிய விடுகதை எனச் சொல்லலாம். ஹைக்குவைப்பற்றி " ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் பாரதியார் 1916ம் ஆண்டு அக் டோபர் மாதம் 16ம் திகதி சுதேச மித்திரனில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஹைக்கு அண்மையில் தமிழுக்கு வந்த செய்யுள் வடிவம். ஹைக்கு முதலடி 5 அசையும் இரண்டாவது அடி 7 அசையும் மூ ன் றா வது அடி 5 அ  ைச யு மாக 17 அசைகளைக் கொண்டது. ஹைக்குவின் அ ைசக ள் உயிரொலியையே மையமாகக் கொண்டிருப்பதால் தமிழில் ஹைக்கு எழுதுபவர்கள் ஓர் அசையாக நேரசையையே கொள்ள வேண்டும். நிரையசையை இரண்டு அசையாக அலகிட வேண்டும். இதோ இரண்டு ஹைக்குகள்.
ஜப்பானிய ஹைக்கு:
கிளைக்குத் திரும்பும் உதிர்ந்த மலர் பட்டுப் பூச்சி - மேரிடேக்
இந்திய ஹைககு.
வானமும் ஏழையா ஏனிந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பாதிருக்கும் பிறை - அமுத!!ாரதி

திகம்பரக்கவிகள்
திகம்பரக்கவிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட நிகிலேஸ்வர்
நக்னமுணி, சொபண்டராஜி, ஜிவாலமுகி, பைரவப்யா, மஹாஸ் வரன் என்ற ஆறுபேரும் 5ம் ஆண்டளவில் ஆந்திராவை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தார்கள், ஜனபாத சாஹித்ய என்ற மக்களிலக்கிய கதையை மக்கள் மொழியிலே படைத்துக் கொடுத்தார்கள். இவர்களது கவிதைகளை ஆபாசம் என்றும் தேசத்துரோகம் என்றும் கூறி இவர்களைச் சிறையில டைத்தது, இந்திய அரசு சிறைக் கதவுகளை ஊடறுத்து மக்களைச் சென் றடைந்த இவர்கள் கவிதைகள் விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதையும் ஒரு வீச்சில் பாதித்தது என்கிறார் தமிழ் நாடன். இவர்களுடைய கவிதைத் தொகுதியான "திகம்பர காவுலுவில் "லிருந்து உதாரணமொன்று.
போதிமரம் ۔
ஒரு துளி நிழல் தரவில்லை.
காந்தி வழி
ஒரு கர ண்டிக் கஞ்சி ஊற்றவில்லை.
தேரில் வந்தான்டி இப்போ தெருவில் வாரான்டி
இலங்கைத் தெருநாடகத்தின் (Street Play) தந்தை காமினி - ஹத் தெட்டுவேகம பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர் தெரு நாடகத்தின் மூலம் சமுதாயத்தின் பொய்மை, போலித்தனம் போன்றவற்றைக் கிழித் தெறிய முயல்கிறார். 17 ஆண்டுகளுக்கு முன் இவர் தொடங்கிய தெரு நாடகக் குழு மூடிய நாடக அரங்கின் கட்டுப்பாடுகளைத் தகர்த் தெறிந்து நாடக அரங்குகளுக்குச் செல்ல பணமோ, நேரமோ இல்லாத சாதாரண மக்களுக்காக நாடகம் நடத்தியது. இவர்களது ஒவ்வொரு நாடகமும் ஒரு மணித்தியாலத்துக்குக் குறைவாகவே நடைபெறும் . அண்மையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியோ; இன்றைய நிகழ்வுகளைப் பழைய கதை மூலம் விளக்கும் முயற்சியோ புதியதொரு நாடகத்தை உருவாக்க இவர்களுக்கு உதவும். இக் குழுவினரின் சாதனைகளில் உதாரணத்திற்கு ஒன்று.
ஐ. நா. உணவு விவசாயக் கழகம் நடாத்திய ஒரு கருத்தரங்கின் போது இக்குழுவினர் உள்ளே புகுந்து அங்கேயுள்ள பிரதிநிதிகள் உயர்தர உணவுகளை உண்டுகளித்திருப்பதைக் கேலி செய்து தெரு நாடகத்தை நடத்தினர். உணவு விவசாயக் கழகம் இக்கருத்துக்களை ஏற்றுக் கொண்டு இந் நாடகத்தின் உரையாடல்களைத் தனது காலாண்டு இதழில் வெளியிட்டது.
--மோசே
09

Page 12
எப்படி வரைந்தனரோ
'தன் நாட்டு மந்திரியைத் தெரியாதவர்களுக்குக் கூட பிக்காஸோவைத் தெரியும். புத்தரை விடவும் கன்னி மேரியை விடவும் பிக்காஸோ புகழ் பெற்றவர் ”. உலகப்புகழ் பெற்ற ஒவியர் பிக்காஸோவைப்பற்றி பிரபல ஒவிய விமர்சகர் ஜோர்ச்பெஸ்ஸன் கூறினார். பிக்காஸோ குழந்தையாக இருந்த போது உச்சரித்த முதல் வார்த்தை பிஸ் என்ற வார்த்தையாகும் , இது லாபிஸ் என்ற வார்த்தையின் மழலைச் சொல்லாகும். லாபிஸ் என்ற ஸ்பானியச் சொல்லின் அர்த்தம் பென்சிலாகும். இது போல பல கதைகள் பிக்காஸோவைப்பற்றி உண்டு. பிக்காஸோ தனது சிருஷ்டி இரகசியத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.
‘என் ஒவியங்கள் அடுத்தவரை எதிர் நோக்கும் செயல். இன்னொருவர் என் மீது ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்களை நான் கான்வாஸில் பதிக்கிறேன். படத்தை ஆரம்பிக்கு முன் என்னென்ன வர்ணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றோ, என் ஒவியம் எப்படி அமைய வேண்டும் என்றோ எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஒவியத்திற்காக நான் அமரும் போதும் ஏதோ ஒரு படத்தைப் போடப்போகிறோம் என்ற உணர்வே எனக்கு இருக்கும். ஏதோ ஒரு வெளியில் என்னைத் தூக்கி எறிந்த உணர்வே
என் உணர்வு"
இலங்கையும் துப்பறியும் நாவல்களும்
தெஹ்ரானில் உள்ள இத்தாலியத் தூதரகத்தில் கலாசார அதிகாரியாகக் கடமையாற்றும் பேராசிரியர் அஞ்ஜலோ மீஷல் பீமோண்டஸ் 50 அவர்கள் *கேஹான்" என்ற பாரசீகப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாரசீக மொழியிலிருந்து ஐரோப்பிய மொழி ஒன்றுக்கு முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட "ஹஸ்தபெஹெக்ஸ் (எட்டுச் சுவர்க்கங்கள்) என்ற கவிதை நூலில் இலங்கையைச் சேர்ந்த மூன்று இளவரசர்களின் துப்பறியும் துணி
கரச்செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுதான் ஐரோப்பிய துப்பறியும் நாவல்களின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய துப்பறியும் நாவலின் தோற்றத் திற்கும் இலங்கைக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பது ஆச்சரியப்படத்தக்கதுதான்.
O

கன்னடத்துத் தங்கம்
நாட்டுப் பாடல்களைத் தொகுத்து வெளியிடுவதிலும் அறிமுகம் செய் வதிலும், ஆய்வு செய்வதிலும் தமிழர்கள் மத்தியில் இன்று ஆர்வம் பிறந்துள்ளது. ஆனால் கன்னடத்தோடு ஒப்பிடும் போது நாம் இந்தப் பணியில் பின் தங்கியே உள்ளோம். நாட்டுப்புற இயலுக்கு கன்னட அரசு தனி அக்கடமி அமைத்திருக்கிறது. கர்நாடகப் பல்கலைக்கழகம் ஆயிரக் கணக்கான நாட்டுப் பாடல்களைத் தொகுத்து புத்தகங்களாக வெளியிட் டுள்ளது. கன்னடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாட்டுப்பாடல் தொகுதியாவது இருக்கும். கன்னடத்தில் முதல் நாட்டுப்பாடல் தொகுதி 1802ம் ஆண்டு ஜோன் லெய்டன் என்ற ஸ்கொத்தலாந்துக் காரரால் தொகுக்கப்பட்டது. அதன் பின்' அப்பணியில் ஹட்ஸன் ஸ்டிவன்ஸன், லைல் போன்ற கிறிஸ்த்வ பாதிரிமார்கள் ஈடுபட்டார்கள், இந்த நூற் றாண்டின் ஆரம்பத்திலிருந்தே பி. எம். சிறி கண்டையா, மாஸ்தி வெங்கடேஸ் அய்யங்கார். தாரா பெந்தரே. கோரூர் ராமசாமி அய்யங்கார் போன்றகன்னட இலக்கியகர்த்தாக்கள் நாட்டுப்பாடல்களைத்தொகுப்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள். வங்காளமொழிக்கு அடுத்ததாக மிக அதிகமான நாட்டுப் பாடல்களைக் கொண்டமொழி கன்னடம் தான் என்று சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு பிரபலமான கன்னட நாட்டுப்பாடல்.
ஆலுக்கே ஹஜூவில்லா
சாலக்கே கொனேயில்லா
ஜாலிய மரவு நெரலில்லா
ஹெண்ணிக்கே
தாயிய மனய ஸ்திரவில்லா "ஆலைக்கு பூவில்லை. கடனுக்கு முடிவில்லை. ஜாலியமரத்திற்கு நிழல் இல்லை. பெண்ணுக்கு தாயின் வீடு ஸ்திரமில்லை" என்பது இந்த நாட்டுப் பாடலின் அர்த்தம் ஜாலிமரம் என்பது கன்னடத்தில் காணப்படும் ஒரு மரவகை முள்முரம்.

Page 13
சிறையில் பிறந்த சினிமா
சிறையில் பிறந்த நாவல்கள், கவிதைகள், அரசியல் நூல்கள் பற்றி அறிந்துள்ளோம். அந்த வரிசையில் சிறையில் பிறந்த ஒரு சினிமா பற்றி,
எல்மாஜ்குனே துருக்கியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நாவலாசிரியன். 20வது வயதிலே நாவல்கள் எழுதத் தொடங்கினான். **பொதுஉடமை என்ற புதுயுகம் இந்தத் துருக்கி மண்ணில் என்று மலரும்" என்ற கேள்வியுடன் முடியும் இவனது நாவல் ஒன்று ‘துருக்கிய மண்ணில் இருக்கத் தகுதியற்ற கம்யூனிஸ்ட்" என்ற பட்டத்தையும் 18 மாதச் சிறைத் தண்டனையையும் இவனுக்குப் பெற்றுக் கொடுத்தது. சிறை மீண்ட இவன் சினிமாவைத் தனது போராட்ட ஆயுதமாக்கிக் கொண்டான். I 9706āv ganu Gör GTGG THE POOR ONES, ANXIETY, ELEGY 6 TGörp மூன்று படங்களும் துருக்கியை அதிர வைத்ததுடன் பாஸிஸ் ஆட்சியாளர் களையும் பதற வைத்தது. இதன் பயன் மீண்டும் சிறை. சிறையில் இருந்து தப்பச் சந்தர்ப்பம் கிடைத்தும் அதை நிராகரித்து இந்தப் பரஸிஸ் ஆட்சிக்கெதிரான எனது போராட்டம் இறுதிவரை இந்த மண்ணிலே தொடரும் எனச் சூளுரைத்தான். இவன் சிறையிலிருந்தே ஒரு சினிமாவிற் கான ஸ்கிரீப்டை, எழுதினான். அது சிறையிலிருந்து பிரான்சுக்குக் கடத் தப்பட்டு அவனது நண்பர்களால் அவன் எழுதிய குறிப்புக்களின் படியே படமாக்கப்பட்டு 1984ம் ஆண்டு வெளிவந்தது. THE WALL என்ற அந்தப்படம் டைரக்டர் எழ்மாஜ்குனே என்ற அவனது பெயரைத் தாங்கியே வெளிவந்தது.இந்தப்படம்வெளிவருவதற்கு மூன்றுமாதங்களுக்கு முன்பே துருக்கிய இராணுவ அரசு அவனைச் சிறையில் சுட்டுக் கொன்று விட்டது.
2

விழுந்து விழுந்து படித்த கதை வசனங்களுக்கு இப்போது வேறு பெயர்
560J 15ft L3, th' (Film Script or Screen Play) - நவீன தமிழ் கலைத்துறைக்கு ஒரு புதிய வடிவம். "திரை நாடகம் எழுதுவது ஒரு தனியான கலை. இதற்கு தகுந்த பயிற்சி அவசியம். இதுவரை தமிழில் சில்லையூர் செல்வராசனின் ‘தணியாத தாகம்", ஜெயகாந்தனின், சில நேரங்களில் சில மனிதர்கள்" வெங்கட் சாமிநாதனின் “அக்ரஹாரத்தில் கழுதை", வி. எம். ஷாஜஹானின் "கற்புகள் கற்பனைகள்" என்பன அச்சில் வந்துள்ளன. (அச்சில் வெளிவராத பல திரை நாடகங்களும் இருப்பதாகக் கேள்வி!) ஆனால், இது ஒரு கலைவடிவமா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது. "திரை நாடகம்" திரைப்பட ஆக்கத்திற்குத் துணைச் சாதனமாக ஒரு இயக்குனருக் காக - எழுதப்பட்ட ‘அட்டவணை'. இது கலை வடிவமாக முடியாது - இது சிலர்! திரை நாடகமே ஒரு சினிமாதான், “கொடார்ட் போன்ற நவீன திரைப்பட இயக்குனர்களின் "திரை நாடகங்கள்" சிறந்த இலக்கியங்களாகவே கருதப் படுகின்றன. இப்படிச் சிலர்!
நாவலும், சிறு கதையும், புதுக்கவிதையும் தமிழுக்கு அறிமுகமாகிய போது இவை இலக்கிய வடிவமா இல்லையா என்ற சர்ச்சை நடந்ததை
நாமறிவோம்.
அதெல்லாம் சரிதான் இடையில் யாராவது தமிழ்ப் பண்டிதர் புகுந்து "திரை நாடகம்’ ஒன்றும் தமிழுக்குப் புதியதல்ல; சங்ககாலம் தொடக்கம் தமிழில் இருந்து வருகிறதென்று வாதுக்கு வராமல் விட்டால் சரி!

Page 14
சிலைதானே திகைப்பு 66öTP
சமீபத்தில் ஒரு தென்னிந்திய சஞ்சிகை
யில், தமிழகத்தின் அரசியல்வாதி ஒருவர்,
லண்டன் அரும் பொருட் காட்சிச் சா  ைல அனுபவம் பற்றி எழுதியிருக்கிறார். அங்கு, வெண்கலத்தினாலான 5 அடி உயர முள் ள *கண்ணகி சிலை" ஒன்றிருப்பதாகவும் ஆனால் அச் சிலையினடியில் - இலங்கையிலுள்ள திரு கோணமலையில் கண்டெடுக்கப்பட்டது. கி. பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, சேர். ராபர்ட் பிரவுன்ரிக் என்பவரால் 1830 இல் வழங்கப்பட்டது. இது போதி சத்துவதாராவின்
சிலை என்று குறிப்பிடப்பட்டிருப்பதையும்
பார்த்து அவர் திகைத்துப் போனாராம். (சிலை யின் வண்ணப்படம் சஞ்சிகையில் பிரசுரிக்கப்
பட்டுள்ளது)
இதே சிலையின் படம் ஒன்று, பண்டிதர்.
வீ சி. கந்தையா அவர்களின் "மட்டக்களப்புத் தமிழகம்” நூலிலும் உள்ளது. அதில் இது பத்தினித் தெய்வத்தின் சிலை, லண்டன்
பிரிட்டிஷ் மியூசியத்தில் காண்ப்படுவதும், மட்டக்களப்புப் பகுதியிலிருந்து கொண்டு
செல்லப்பட்டதுமான கண்ணகி சிலை" என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்கள் தமது "இந்திய இந்தோனீஷியக் கலை வரலாறு (History of Indian and Indonesian Art by
* Dr. K. Ananda Kumaraswamy, Page 167)
எனும் நூலிலும் இது குறித்து எழுதியிருப்பதாக * மட்டக்களப்புத் தமிழகம்” கூறுகிறது.
எது சரித்திரம்? எது உண்மை? பாமறியோம் பராபரமே!

சரணம் சரணம் சங்கர் அண்ணா சரணம்
ஆங்கிலம் தெரியாததால் உலக நடப்புகளின் பின்னணி களை, விபரங்களை உடனுக்குடன் அறியமுடியாது தவிப் பவர்களுக்குக் கைகொடுத்துதவுகிறது . "தமிழோசை" ! உலக நாடுகள் பலவற்றின் வானொலிகளில் தமிழ் ஒலிபரப்பாகிறது. என்றாலும், B B C யின் ‘தமிழோசை" ஒரு தரமான இடத்தை வகிக்கிறது. செய்திகளைப் பொறுத்தவரை, சார் பின்மை என்பது நூறுவீதம் இல்லாவிடினும், உண்மைகளைத் தேடுபவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் BBC செய்தி 'களை வெளியிடுகிறது. அதன் ஒர் அங்கமான தமிழோசை" யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆங்கிலத்திலிருந்து தமிழில், செய்திகளையும் பல்வேறு விடயங்களையும் உடனுக்குடன் தரும் விதம் எளிமையாகவும்,பாராட்டுக்குரியதாகவுமுள்ளது. "தமிழோசை"யின் முதுகெலும்பாக விளங்கும் அதன் தயாரிப் பாளர் திரு. சங்கரமூர்த்தி மொழி பெயர்ப்பு’ என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர். அதற்குப் பதிலாக *தமிழ் வடிவம்’ என்ற பதத்தையே உபயோகிப்பதுடன், ஆங்கில வடிவங்களை எளிமையாகத் தமிழ்ப்படுத்துவதில் கணிசமான வெற்றியடைந்திருக்கிறார் என்பது ‘தமிழோசை" யைக் கேட்பவர்களுக்கு நன்கு புரியும். ஷேக்ஸ்பியரின் "கிங் லீயர்", "த ரெம்பஸ்ற்’, மில்டனின் "பரடைஸ் லொஸ்ட்” ஆகியவற்றைத் தமிழ்க் கவிதை வடிவில் ஒலி பரப்பியிருப்பது இதற்கு மிகச் சிறந்த சான்று. 'ருவிங்கிள் ருவிங்கிள் லிட்டில் ஸ்ரார்" என்ற நேசறி றைம்’ தமிழில்
*சிரிக்கும் சிரிக்கும் சின்ன நட்சத்திரமே என்ன ஆவலம்மா உன்னை அறிய .' என்று மாறியிருக்கிறது. வா னொ வி நேயர் கள் கவனிப்பார்களாக!
1S

Page 15
6
இருக்கிற கவலைகள் போதாதென்று
ஏறக்குறைய பதினான்கு வருடங்கட்கு முன் கவிஞர் * மஹாகவி அவர்கள் எழுதிய, "பழையதும் புதியதும் என்ற கவிதை- . . . . . **ஆண்டுகள் ஏழோ ஆறின் பின்னர் மட்டக்களப்பை மறுபடி பார்க்கிறேன்.
, . என்று ஆரம்பிக்கிறது. அதில்
* மட்டக்களப்பில் மறுபடி அந்தக் கோட்டையைக் கண்டு கொண்டு நடக்கிறேன்
பழையவை இவைகள் பக்க மதிலிலே வெடிப்பினைக் கண்டு துடித்துப் போகிறேன். படிப்படியாகப் பழையன விழுந்தால்!
தற்போது எல்லோரது கண்களிலும் படக் கூடியதாயுள்ள, புகழ் பெற்ற மட்டக்களப்பு டச்சுக் கோட்டைச் சுவர் வெடிப்பு பற்றி அன்றே 'மஹாகவி' எழுதிய பின்பும், இன்று ரூபவாஹினி'யில் காட்டிய பின்பும், அது பற்றிக் கவலைப்
படுவோர் யாரோ?
"லெனின் சிலை உடைக்கப்பட்ட பின்பும்
மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள மகாத்மா காந்தி சிலைக்குப் பூசப்பட்டிருக்கும் வர்ணங்கள் கண்ணை உறுத் துகின்றன! இச்சிலையை வடித்தவர் உலகப் புகழ் பெற்ற சிற்பி எம். எஸ். நாகப்பா அவர்களின் புதல்வரான், புகழ் பெற்ற சிற்பி எம். எஸ்.என். மணி அவர்கள். கொழும்பு வை. எம். பீ. ஏ. யிலுள்ள புத்தர் பெருமானின் வெண்கலச் சிலையும், அநகாரிக தர்மபால, ப ா ர ன் ஜ ய தி லக முதலியோரது சிலைகளும் அவரால் வடிக்கப்பட்டவையே. அவரது மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றென அவராலேயே ஒரு தடவை சொல்லப்பட்ட சிலையே மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள மகாத்மாவின் சிலை. இச் சிலைக்கு வர்ணந் தீட்டியவர்களுக்கும், காந்தி மகாத்மாவின் குடும்பத்தினருக்கும் ஜென்மப் பகை ஏதுமுண்டா என்று கேட்கத் தோன்றுகிறது!
இவ்வாறே மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள சுவாமி விபுலானந்தர் சிலைக்கு வர்ணந் தீட்டப்பட்டிருப்பதும்! இவ்விஷயத்தில் கலாரசனையற்றவர்களின் செ ய ல் கள் கண்டிக்கத் தக்கவை. மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள் கவனிப்பார்களாக !

நீண்டு தெரியும் ஜெயகாந்தனின் நிழல்
தமிழ் நாட்டின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிந்திய நூல்களில் ஒன்றான ‘யோசிக்கும் வேளையிலே." அண்மையில் பார்க்கக் கிடைத்தது, அதில் 'தடையும் தணிக்கையும்" என்ற தலைப்பிலுள்ள கட்டுரையின் சில
பகுதிகள், எமது இன்றைய நிலைக்கு ஒரளவு பொருத்த
மானவை என்று கருதுகிறோம். அவை இவைதான்
'தடையும் தணிக்கையும் ஒரு கலைஞனுக்கு இந்த இரண்டு வார்த்தைகளும் அடிப்படையில் எரிச்சலூட்டக் கூடியவைதான். வர்த்தகமும், இலாப நோக்கமும் கொண்ட சீரழிவாளர்கள் சமூக ரசனையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதென்று கங்கணங் கட்டிக் கொண்டு, கலையுலகில் புகுந்து, கலைஞர்களின் ஆத்மாவைப் பிடித்த நோயாய் அரிக்கிற பொழுது, சமூகப் பொறுப்புடைய அரசு, கலைத்
துறையில் தலையிடுவது தவிர்க்க முடியாததும் அவசியமான
துமாகும்.இதற்கு நியாயத்தின் பேரில் தான் ஒரு படைப்பைத்
தணிக்கை செய்யவும் தடைசெய்யவுமான அதிகாரத்தை
ஓர் அரசு பெறுவதை சமூகம் அங்கீகரித்துள்ளது. ஆனால், நடைமுறையில் நமது அரசாங்கங்கள் இந்த உரிமைகளை பெரும் பாலும் அநாகரீகமாகவும், அநியாயமாகவும் பயன் படுத்துவதைத்தான் கண்டிருக்கிறோம். ஏனெனில், அரசாங் கத்திலிருப்பவர்கள் எப்போதும் மக்களையும், மக்களின் மனத்தோடு உறவாடுபவர்களையும் கண்டு அஞ்சுபவர்களா கவே இருக்கின்றனர். இது ஒர் அவலம். தமக்கெதிரான அல்லது அரசின் தவறைச் சுட்டிக் காட்டுகிற, சரியாகவோ தவறாகவோ கொதிப்படைந்திருக்கும் மக்களைப் பிரதிநிதித் துவப்படுத்துகிற, அரசாங்க வர் க் கத் தி ன் அசட் டுத் தனங்களையும், அறிவற்ற மிடுக்கையும் எள்ளி நகையாடுகிற படைப்புக்களை நசுக்கி ஒடுக்கவே எதேச்சாதிகார அரசுகள் இந்த உரிமையைப் பயன்படுத்தியதாய்,தேசங்களின் சரித்திரம் நமக்குக் கூறுகிறது. எதேச்சாரிகளும், முட்டாள் மன்னர்களும் நடந்து கொண்டது போல் இவ்வுரிமைகளை, இப்படிப்பட்ட அதிகார நோக்கங்களுக்காக ஜனநாயக சமுதாயத்தில் பயன் படுத்துவதுதகாத செயலாகும்'
சிந்திப்பவர்கள் இவற்றைக் கவனிப்பார்களாக !
7

Page 16
எம். ஜி. ஆர். மன்னிக்க
தமிழ்நாட்டு முதில்வர் எம்.ஜி.ஆர். அண்மையில் ஒரு பொதுக் கூட்டமொன்றில் பேசுகையில், தான் சிறுவயதில் கவிதிை எழுத ஆர்வமுள்ள வனாக இருந்ததாகவும், ஆதி அந்தமில்லா ஆதி நாராயணன்' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியதாகவும், அவரது தாய் **இருக் கும் வறுமை போதாதென்று கவிதை எழுதி இன்னும் வறுமையை விலைக்கு வாங்கப் போகி றாயா!' என்று கடிந்து கொண்டதால் அவரது ஆர்வம் குன்றிப்போய் விட்டதாகவும் குறிப் பிட்டார். எம்ஜிஆரைக் கவிதை எழுதாமல் தடுத்ததையிட்டு அவரது தாயாருக்கு இலக்கிய உலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. தமிழ்க் கவிதை தப்பிப் பிழைத்து விட்ட தல்லவர!
பிரபல மலையாள எழுத்தாளரான மாதவிக் குட்டி (கமலா மாதவதாஸ்) 'மாத்ரு பூமி’ வரரப்பதிப்பில் ஜூ லைக் கலவர கால இலங்கை யைப் பின்னணியாகக் கொண்டு, ‘ராஜ வீதிகள்’ என்ற அரு  ைம யான ஒரு சிறு கதையை' அண்மையில் எழுதியுள்ளார். கண்களைப்
அவருடைய “என் கதையை தமிழில் மொழி
பொத்தலாமே
பெயர்த்து அவரை ஒரு பாலுணர்வு எழுத்தாள ராகக் காட்ட முயன்ற வியாபார தமிழ்ப் பத்தி ரிகைகளுக்கு இதுபோன்ற அவரது உயிருள்ள படைப்பு பற்றியெல்லாம் எவ்வித அக்கறையு
மில்லையே!
மட்டக்களப்பு go 65 duu T 6õT வேறென்ன செய்வான்
மட்டக்களப்பு பல்கலைக் கழகக் கல்லூரி மூடப்படப்போவதாக ஒரு செய்தி ஜூன் 4ம் திகதி ‘வீரகேசரி"யின் முன்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்ட பின்பும், மட்டக் களப்புப் பொதுஜனத்திற்கு அதுபற்றிய அக்கறை தோன்றாமலிருந்தது ஆச்சரியப்படவைத்தது! மட் 'க்களப்புப் பொதுஜனம் அந்த அளவுக்கு, தமது மண்ணின் மீது கொண்ட பற்றை மறந்துவிட்டதா என்று எண்ணவேண்டியிருந்தது. இவ்விஷயத்தை
மிகமிகச் சாதாரணமானதாக நினைத்துப் பேசிய
வர்களை நேரில் சந்திக்க முடிந்தது. மட்டக் களப்பு மண்ணின் மைந்தர்களுக்கே இல்லாத அக்கறை, மற்றவர்களுக்கு இருக்குமென்று எப்படி எதிர்பார்ப்பது? ஒரு வழியாக இவ்விஷயம் சாதக மாகத் தீர்த்து வைக்கப்பட்டிருப்பது (அல்லது அப்படியான ஒரு தோற்றம் தருவது!) மனதுக்கு ஒரு தற்காலிக (!) நிம்மதியைத் தருகிறது.

இலங்கையை மறந்தது ஏனோ?
இந்தியாவில் பெண்களைப் பற்றி வந்த கவிதைகள், கதைகள், காவியங்கள் ஏராளம்! ஆனால் இந்தியப் பெண் களின் அடிமைத்தனத்தைப் பற்றி அலசி ஆராய்ந்தோ அவர் களது விடுதலை விமோசனம் குறித்தோ வெளிவந்த நூல்களை விரல் விட்டு, எண்ணி விடலாம்! அவற்றுள் *பத்மினி சென் குப்தா வுடைய "இந்தியாவில் பெண் தொழிலாளர்" (Women Workers in India), * @imp i 6 iš giff23 augs)” u GMLluu "35 IT þš 5 Lil'll ga Till Quajor 567 (Scheduled Castes Women), "காரன்லியோ நாட்டின் "நவீன இந்தியாவில் பெண்களும் FCup3; LDT fbpsälå Elbib" (Women and Social Changes in Modern India) என்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
இந்த வரிசையில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு புத்தகம் "கெயில் ஒம்வெட் (Gai Omvedt) எழுதிய "போராட்டத்தில் giguli Golu Gilasai (Indian Women in Struggle 67 air ugll
"கெயில் ஒம்வெட்" ஒரு அமெரிக்கப் பெண்மணி. இவர் தற்போது இந்தியாவின் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒருவ ரைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வருகிறார். இவர் கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்ற காலத்தில், வியட்நாம் யுத்த எதிர்ப்பு மாணவர் இயக்கத்தை தலைமை தாங்கி வழி நடாத்தினர்; அமெரிக் காவில் நிற வேற்றுமைக்கு எதிரான இயக்கங்களிலும் பிரதான பங்கு எடுத்துக் கொண்டார். தனது பி. எச். டி. பட்ட ஆய்வை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவுக்கு வந்த இவர், தனது ஆய்வுக் காலத்தில் (1975 - 1976) கிடைத்த அனு பவங்களை வைத்தே இந் நூலை எழுதியுள்ளார்.
ஆண் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் இந்தியாவில் "இந்திரா காந்தி" என்ற பெண் எப்படி பிரதமராக வந்தார் என்பதைப் பற்றி இந் நூலில் ஆழமாக ஆராயப்பட்டிருக் கிறது. இந்தியப் பெண் விடுதலை இயக்கத்திற்கு இந் நூல் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இவ்வாறே இங்குள்ள பெண்களின் விடுதலை பற்றி, விமோசனத்தைப் பற்றி எழுதுவதற்கும் அமெரிக்காவிலிருந்து தான் யாராவது வரவேண்டுமா? அல்லது அந்த "மெசியா, எமது பெண்களிடையே தோன்றுவாளா?

Page 17
20
செத்துப்போன நெற்றிக்கண்
பிரிட்டிஷ் பிரதமர், "இரும்புச் சீமாட்டி
மார்க்ரெட் தட்சருக்கு, கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு, "ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம், மறுத்து விட்டதாக
அண்மையில் செய்தி ஒன்று வெளி வந்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்ற இரண்டாம் gig)35 LA) 5 fT யுத்தத்துக்குப் பின்னர் பிரிட்டனின் பிரதமர்களாகப் பதவி வகித்தவர்களுக்கு இந்த "கெளரவ டாக்டர்' பட்டம் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது. திருமதி மார்க்ர்ெட் தட்சரும் மேற்படி பல்கலைக் கழகப் பட்டதாரிதான். என்றாலும், அவரது அரசாங்கத்தின் கல்விக் கொள்கை திருப்திகரமானதாக இல்லை என்று
காரணங் காட்டியே இம் மறுப்பு வெளியிடப்
பட்டதாகவும் அச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தச் செய்தி எமது சிந்தனைகளைக் கிளறி விட்டிருப்பது குறித்து எவரும் ஆச்ச ரியப்படத் தேவையில்லை. எமது சிந்தனை கிளறப்பட்டதற்கான காரணங்களையும் நாம் வெளிப்படையாகக் கூறத் தேவையில்லை. தொப்பி அளவானவர்களுக்கு அதை அணி வித்துப் பார்த்துக் கொள்வதில் எமக்கு ஆட்சேபனையுமில்லை! v

பிரியாவிடை
உலகப் பிரசித்திபெற்ற பதிப்பகமான "பென்குயின் iš Saurr* @a6full “L - Moonin Calcutta -- Short Stoties From Bangal - என்ற சிறுகதைத் தொகுதியிலிருந்து * படி' வாசகர்களுக்காக சுரேஸ் பாசுவின் FARE WELL என்ற சிறுகதை.
இந்து - முஸ்லிம் கலவரம் நடைபெற்றுக் கொண் டிருந்த காலம். செக்ஷன் 144 வது சட்டத்திற்கமைய ஊரடங்குச் சட்டம். இருளின் மறைவில் குழந்தைகள் கொல்லப்படுகின்றார்கள். இறந்து கொண்டிருக்கும் பெண் களதும் பிள்ளைகளதும் கூக்குரல்கள். சட்டரீதியான அமைதியை நிலை நாட்டுமுகமாக படைவீரர்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ" அக்பர் என்ற கோஷமும் வந்தே மாதரம் என்ற கோஷமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டு வீதிகள் சந்திக்கும் ஒரு சந்தியில் இரண்டுபேர் பயத் துடன் பதுங்கி இருக்கிறார்கள். ஒருவன் மற்றவனிடம் கேட்டான் "நீ இந்துவா முஸ்லீமா? நீ முதலில் கூறு என்றான். மற்றவன் ஒருவன் தோணி ஒட்டுபவன்" மற்ற வன் பஞ்சு மில் தொழிலாளி. 'யாரோ வருகிறார்கள். இவ்விடத்தை விட்டுப் போவோமா?’ என்றான் ஒருவன், ஏன் சாவதற்கா? என்றான் மற்றவன். ஒருவருக்கு ஒருவர் மீது சந்தேகம். 'பீடி குடிக்கிறாயா?" என்று ஒரு பீடி கொடுத்தான் பஞ்சு மில் தொழிலாளி. அதைவாங்கிக் கொளுத்திக் கொண்டே அல்லாவிற்கு நன்றி என்றான் தோணிக்காரன். அதைக்கேட்டதும் மில் தொழிலாளி பதற் றத்துடன் ‘அப்போ நீ ஒரு.' ஆம் நான் ஒரு முஸ்லீம். அதனால் என்ன? نها ولاtشقة فة في ع
'ஒன்றுமில்லை’ என்றான் மில் தொழிலாளி. தோணிக்காரனிடம் ஒரு பொதி இருந்தது. அது என்ன என்று கேட்டான் மில்தொழிலாளி, "என்ட குழந்தை களுக்கு உடுப்பும், சாரியும்" என்று பதிலளித்தான்
2

Page 18
22
தோணிக்காரன். இப்ப்டி ப்ேசிப் பேசியே நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஏன் இந்த இனக்கலவரம்? அந்த இரண்டு பேருக்குமே ஏன் என்று தெரியவில்லை.
சப்பாத்துச் சத்தம் - அது அவர்களை நெருங்கிவந்து கொண்டிருந்தது. அவர்கள் தப்பித்துக் கொள்ள முயன்
றார்கள். தோணிக்காரன் மில் தொழிலாளியை ஒரு
வெற்றிலை பாக்குக்கடைக்குப் பின் புறத்தில் கொண்டு விட்டு விட்டுச் சொன்னான் நீ இங்கே இருந்துகொள். இது இந்துக்களுடைய பகுதி முஸ்லீமான தோணிக்காரன் முஸ்லீம்கள் வாழும் பகுதிக்குப் போயாக வேண்டும். அது மட்டுமல்ல. அடுத்த நாள் ஹஜ்ஜூப் பெருநாள், அவன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து எட்டு நாட்கள். இந்து பயத்துடன் கேட்டான் 'நீ எப்படிப் போவாய். உன்னை அவர்கள் பிடித்து விட்டால்". "'நான் பிடிபடமாட்டேன். நீ இங்கேயே இரு நான் போகிறேன், இந்த இரவை
மறக்க மாட்டேன். விதி இருந்தால் மீண்டும் சந்திப்போம்"
என்று சொல்லி விட்டு முஸ்லீம் போனான். அவனது மனைவி அன்பாலும், ஆறுதலாலும் அவனது நெஞ்சில் முகம் புதைத்து கண்ணிர் சிந்தும் காட்சியும் குழந்தைகளின் குதூகலமும் மில் தொழிலாளியின் மனத்திரையில் விழுந்தது. சப்பாத்துப் போட்டவர்கள் ஓடுகிறார்கள். இரண்டு வெடிச் சத்தம். போனவனின் மரண ஒலம். மில் தொழிலாளியின்
கற்பனையில் மனைவிக்கு வாங்கிய சாரியையும், குழந்
தைகளுக்கு வாங்கிய உடுப்புகளையும் நெஞ்சோடு இறுக்கிக் கட்டிக் கொண்டு அந்த நண்பன் கிடக்கிறான். அவைகள் இவனின் இரத்தம் தோய்ந்து சிகப்பாகிக் கொண்டிருக் கிறது. அப்போது தோணிக்காரனின் சத்தம் அவனுக்குக் கேட்டது. "சகோதரா, எனக்கு அவர்களிடம் செல்ல முடியவில்லை. பெருநாள் நாளிலே எனது பிரியத்
திற்குரியவர்கள் கண்ணிரில். மூழ்குவார்கள். பகைவன்
என்னை சரியர்ன நேரத்தில் சந்தித்து விட்டிான்?"

ஷொலக்கோவின்
சுவை மிக்க நினைவுகள்
'மனித மனதின் மீதும் உணர்ச்சிகள் செல்வாக்குச் செலுத்தும் மகத்தான சக்தி கலைக்கு உண்டு. கலைஞன் என்று அழைக்கப்படும் உரிமையை ஒருவன் பெற விரும்பினால் மனித சமுதாயத்தின் நலத்திற்காக, மக்கள் உள்ளத்தில் அழகைப் படைப்பதற்கு அந்த சக்தியை பயன்படுத்த வேண்டும்."
கலையையும் கலைஞனையும் பற்றி உயிருள்ள இவ்வார்த் தைகளைக் கூறிய உன்னத கலைஞன் மிகாயில் அலெக்சாந் தரேவிச் ஷொலகோவ் கடந்த பெப்ரவரி 21ம் திகதியன்று தமது 78வது வயதில் காலமானார். சோவியத் ரஷ்யாவின் தலைசிறந்த எழுத்தாளர்களிலொருவரான ஷொ லக்கோவ், 1905 மே 24ல் ராஸ்தோவ் பிரதேசத்தின் குரு ஷிலின் கிரா மத்தில் ஒரு விவசாயியின் மகனாகப்பிறந்தார். 1924இல் * சோதனை " என்ற நகைச்சுவைக் கட்டுரை மூலம் இலக்கியப்பிரவேசம் செய்த இவர், டான் நதி அமைதி யாக ஒடுகிறது, "கன்னி நிலம் தாய் நாட்டுக்காக அவர்கள் போராடினார்கள்' போன்ற புகழ்பெற்ற நா வ ல் களை எழுதினார். சோவியத் - உழைப்பு வீரர் விருதை இரு தடவை களும், "டான் நதி அமைதியாக ஓடுகிறது’ - நாவலுக்காக லெனின் விருதையும் பெற்றார். இவருடைய எழுத்து, சோவியத்தின் பல்வேறு தேசிய மொழிகளிலுமுள்ள எழுத் தாளர்களையும் பாதித்தது. முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்கள், அக்டோபர் புரட்சி, உள்நாட்டு யுத்தம், விவசாயப் புனருத்தாரணம் ஆகிய காலப்பகுதிகளைப் பின் னணியாகக் கொண்டு சோவியத் மக்களின் வாழ்க்கையை சிறு கதைகளிலும், நாவல்களிலும் சிறப்பாகச் சித்தரித் துள்ளார். இவரது நாவல்கள். ரஷ்ய நாவல் இலக்கிய வர லாற்றிலே ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன என்றால் மிகையன்று.
சோவியத் அரசியல்வாதிகளின் ம ர ண த் தின் போது குடம் குடமாகக் கண்ணீர் வடிக்கும் இங்குள்ளவர்கள் இந்த மகத்தான கலைஞனின் மரணத்தில் மெளனம் சாதித்தது, இவர்களின் கலை இலக்கிய கரிசனை’யைக் காட்டுகிறதா?
23

Page 19
24
பன்சிய பன்ஸ் ஜாதகவின் காதலன் - ஜி. பி.
களம்-3 இல் "பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்த ஜி. பி. என்ற, எஸ். எம். ஜே. பைஸ்தீன்' அவர்களது கட்டுரை வெளிவந்தது. ஆனால் கடந்த மார்ச் 16ம் திகதியன்று ஜி. பி. சேனாநாயக்க அவர்கள் மரணமடைந் தார் என்ற செய்தி இலக்கிய வாதிகளின் நெஞ்சை நிச்சயம் நெருடியிருக்கும்! ஜி. பி. அவர்களைப் பற்றி ஒரிரு வார்த்தைகள் - இறக்கும் வரை அவர் பெரும் பொக்கிஷமாகக் கருதி, பாதுகாத்தவை "ப ன் சி ய பன ஸ் ஜாதக புத்தகத்தின் இரு காண்டங்களும், புது சரண’வும் ஆகும். தான் இறந்த பின் தனது சடலத்துக்கருகில் அவை வைக்கப்பட்டு பின்னர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார், ஜீ. பி. காதல், விவாகம் என்பவற்றை நினைத்திராத ஒரு மனிதர். அவருக்கு மனைவியின் அன்பு தேவைப் படவில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள், கதைகள், கவிதைகள் என்பனவே அவரின் மனைவியாயின. மதத்தில் பற்றுள்ள மனித ராகவும் அவர் இருக்கவில்லை. அவர் இறப்ப தற்கு முன் இறுதியாக மார்ச் 15ம் திகதி இரவு 8.30 மணியளவில் ஒரு கவிதையைக் கூறியி ருக்கிறார். அவரது தம்பியின் மகள், அதனைக் குறித்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு அவர் ஒரு காகிதத்தில் கிறுக்கி வைத்திருந்ததிலிருந்து, அக்கவிதையின் தலைப்பு *அம்புசுமியுவள” என்று தெரிய வந்திருக்கிறது. மறு நாள் காலை அவர் மரணமடைந்திருக்கிறார்.
-இறக்கும் வரை இலக்கிய சேவை செய்த ஜீ. பி. அவர்கள் மறக்கப்பட முடியாதவர் களுள் ஒருவர்!

ஒரு சகாப்தத்தின் சரிவு
சென்ற ஏப்ரல் மாதம் 22ம் திகதியுடன் சத்யஜித்ராய் இறந்து ஒரு வருடமாகியது. பிரம்மசமாஜ இயக்கத்தைச் சேர்ந்த சுகுமார் ராய்க்கும் சுப் பி ர ல "விற்கும் ஏக புதல்வனாக 1921ம் ஆண்டு மே மாதம் 2ம் திகதி சத்ய ஜித்ராய் பிறந்தார். ரவீந்திரநாத் தரகூரின் மேற்பார் வையிலேயே சாந்திநிகேதனில் கல்வி பயின்றார். பதேர் பாஞ்சாலி (1955) முதல் சாகபரோஷ்யா (1990) வரை 31 படங்களை இயக்கினார். ஒஸ்கார் பரிசு உட்பட 25 பரிசுகளும் பட்டங்களும் பெற்றார். 76 நாள்கள் நோயுடன் நீண்ட போராட்டம் நடத்தி, 1992ம் ஆண்டு ஏப்ர்ல் 22ம் திகதி 4.45க்கு மரணமானார். மரண வீட்டில் கீதா ஸென், மாதவிமுகர்ஜி, சுனில் கங்கேகோபாத்தியாய, புத்ததேவ்தர்ஸ், செளமித்ர சட்டர்ஜி, மம்தா, சங்கர் அபர்ணா சென், ஆனந்சங்கர் ஆகிய திரை உலக மேதைக ளோடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணிரும், கம்பலை யுமாகக் கூடி இருந்த நேரத்தில் நீர் நிறைந்த கண்களோடு இந்தியாவின் புகழ் பெற்ற இன்னொரு இயக்குனரான மிருணாள் சென் "இவருடைய வாழ்வு எவ்வளவு மகத்தானது. இவர் மரணத்தோடு நடத்திய போராட்டம் எவ்வளவு தீரமானது" என்று சொன்னார். முழந்தாள் இட்டு பூமியில் தவழ்ந்தபடி இந்தியாவின் யதார்த்தத்திற்குள் - வாழ்வின் மெய்மைக்குள் மிக ஆழமாகப் பயணமாகும் அனுபவத்தை தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்குத் தந்த சத்ய ஜித்ராயின் மரணம் ஒரு சகாப்தத்தின் சரிவு. A.

Page 20
26
தூரத்து மின்ன்ல்
நமது காலத்தின் பிரபல நரவலாசிரியரான விமல்
மித்ரா தனது 79ம் வயதில் 1991ம் ஆண்டு காலமானார்.
இவர் ஒரு வங்காள நாவலாசிரியராக இருந்து இந்தியா முழுவதும் அறியப்பட்டிருந்தார். கல்கத்தாவில் காளி கட்டிற்கு அடுத்துள்ளகிராமத்தில் பிறந்தார். கல்கத்தாவின் காதலன் என்று சிறப்பிக்கப்பட்டார். கல்கத்தா மாநகரை அதன் எல்லா நன்மை தீமைகளோடும் தனது நாவல்களில் சித்தரித்தார்.
ரவீந்திரநாத்தாகூர், பக்கீம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திர சட்டர்ஜி ஆகியோருக்கு பிறகு இந்தியா முழுவதும் அதிகமான வாசகர்களைக் கொண்டிருந்தவர் விமல் மித்ரா, தன்னை சுற்றியுள்ள மனிதர்களையும் அவர்களுடைய
துன்பங்களையும் நிாாசைகளையும் கலாபூர்வமாக சித்தரிப் பதில் அக்கறை கொண்டதுடன் அதில் வெற்றியும் கண்டார்,
விமல் மித்ராவின் பாத்திரங்கள் நமது அண்டை அயலில் வசிப்பவர்கள் போல் பிரமையை உண்டாக்குவார்கள். அதற்கு காரணம் விமல் தனது சமகால மனிதர்களை அவர்களின் நி ைற கு  ைற க ளோ டு பத் தி ர மா கப் படைப்பதுதான். У y
அவருடைய பாத்திரங்கள் எல்லாம் கல்கத்தாவையோ காளிகட்டையோ சேர்ந்தவர்களாகவே இரு ப் பார் கள். கல்கத்தா விலோகா ஸர்கோட்டிலோ மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள்தான் அவர்களுடைய கனவுகளும் ஒரே மாதிரியானவைதான். அதனால்தான் 9 @). CID 63) - tu பாத்திரங்கள் பிரதேச, மொழிவேறுபாடுகளைக் கடந்து எல்லா வாசகர்களின் மனங்களிலும் இடம் பிடித்துள்ளார்கள்.
சகேப் பீபீகுலாம் (பிரபுக்களும் பேரர்களும்), கடிதிய கின்லாம் (விலைக்கு வாங்கல்) ஆகிய நாவல்கள் மூலம் விமல் மித்ரா வங்காளத்தின் முதல்தர நாவலாசிரியராகப் பரிணமித்தார். ஜாகீர்தார்கள் பிரபுகளுடைய ஆடம்பர வாழ்வை சகேப்பீபீகுலாம் என்ற நாவலில் கலை அழகுடன் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அந்த பிரபுக்களின் குடும்ட உடைவையும் அழகாகச் சித்தரித்துள்ளார். விமர்சகர்கள் பலரும் இந்த நாவலை ஒரு மகத்தான படைப்பெனக் கூறுகின்றனர்.

விமல் மித்ரா தனது 49 வயதில் தான் பார்த்து உத்தியோகத்தை ராஜிநாமாச் செய்து விட்டு முழுநேர எழுத்தாளராக மாறினார். மாப்போசானுக்கு கிடைத்ததை போல விமல் மித்திராவுடைய ஒவ்வொரு துளி மைக்கும் பெரும் விலை கிடைத்தது.
சாதாரண மனிதர்களுடைய வாழ்வை சாதாரண நடையில் எழுதிய அசாதாரண எழுத்தாளராக அவர் படைப்புகளுக்கூடாக காட்சி தருகிறார்.
தம்மைச் சுற்றி இயங்கும் வாழ்வை கலை அழகுடன் எப்படி இலக்கியமாக்குவது என்பதை வாசகர்களுக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்களுக்கும் விமல் மித்திரா கற்றுக் கொடுத்துள்ளார்.
கன்னடத்துத் தமிழா தமிழ் நாட்டு கன்னடமா?
பிரபல கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் அவரது சிக்க வீர ராஜேந்திரன்’ என்ற சரித்திர நாவலுக்காக 1983ம் ஆண்டின் ஞானபீடப் பரிசு பெறுகிறார். 93 வயதான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய 135 நூல்களில் மூன்றே மூன்றுதான் நாவல்கள். இவரது தாய்மொழி தமிழ். எழுதுவது கன்னடம். "சீனிவாஸ்" என்ற இவரது புனைபெயர் கன்னட இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமானது. இவரது பரிசு பெற்ற நாவல், கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு பிரதேச அரசன் சிக்கவீர ராஜேந்திரனைப் பற்றியது. இவ்வரசன் காலத்தில்தான் கர்நாடக மாநிலம் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது. இவனது வீழ்ச்சியை இந்நாவல் வெகு அழகாகச் சித்தரிக்கிறது. இவரது மற்ற சரித்திர நாவலான "சென்னப்ப நாயக்கன் குருதட்சணை என்ற சிறுகதைத் தொகுதி, ஞானபீடப் பரிசு பெற்றுள்ள "சிக்க வீர ராஜேந்திரன்' ஆகியன உட்பட இவருடைய பல நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி யிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பரிசு பெற்றுள்ள படைப்பான "சிக்க வீர ராஜேந்திரன் நாவலையும் முன்பு ஞானபீடப் பரிசு பெற்ற அகிலனின் "சித்திரப் பாவை யையும் படிப்பவர்கள் தமிழுக்குக் கிடைத்த ஞானபீடப் பரிசையிட்டு பெருமைப்பட முடியாது.
உலகப் புகழ்பெற்ற சிவராம கரந்த், டாக்டர் அனந்தமூர்த்தி ஆகியோரும் கன்னட எழுத்தாளர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
27

Page 21

இந்நூல் வெளிவர உதவியவர்கள்: சண்முகம் சிவலிங்கம் உமாவரதராஜன் நற்பிட்டிமுனை பளில் சோலைக்கிளி வாரித்தம்பி ருத்ரா அரசரெத்தினம்
பெளசர்
அட்டை அமைப்பு: ரஷ்மி
அச்சுப்பதிவு: குட்வின் ஒட்டோ அச்சகம், கல்முனை.
விற்பனை உரிமை:
டிலானி சொப்பிங் சென்டர், கல்முனை.
விலை: ரூபா நாற்பது
வெளியீடு: வியூகம்

Page 22
sull},\qufigās Jānī)
 

ஆனந்தனைப பறறி நாம போாது விடுவோமானால் நாம நேசிகரும் இலக்கியத்திறகு துரோகமிழைததவாகளாகி விடுவோம்! நிச்சயமாக என்றும் In Illi, ILLIT, FIETITIE, EL FLILL வேனேடியEள்தான வி ஆனந்தன.
னிதம் மலினபபடுததபபட்டு விட்ட இன்றைய சூழலில் போலி வேgங்களையெல்லாம் 1 ITF ok. Is It al, y fl få fallbh FhE) hDOLFI, ETIET II||I|: மீறி மனிதாபிமான தளத்தில் நின்று தன் வாரயின் ஊடே போாாடிய E ஆனந்தன நபமிாடயே இன்று இல்லை எனபது அதிக
து யாம் தருவதாயிறனு
இா, மத மொழி வேறுபாடுகளாபேல்லாா கடந்து ஆனந்தன. பேசபபடுகிறான நினைவு கூாபபடுகினறாள். பானம் வரும தருனா FINISTIT 1,5 till y LM) JE GLI HII PILDIZI DOLI LITT FÅ EN
வாழ்ந்தாள் என்பதற்கு இது அழுத்தமான
சாடசியாகும்
குருட்டு ஆந்தைகளிடமிருந்து விலகி உண்ணா 5IIIsh Fi T:DI III fillET E NJË SIST) | Gul III i EJI TEQI என்பது அ84ாாப பறறித் தெரிந்தவர்களுக்கு
தெரிந்த விடயம்தான்.
St.GUSITFri.