கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: லைலா மஜ்னு

Page 1
| } | '',
 


Page 2

லைலா மஜ்னு
முஹம்மது ஸெயின் J. P.M.M.C.
வெளியிடுவோர்: ஸெயின்ஸ்தான் டிரேடிங் கம்பனி லிமிடட் 703" வRரிமாவோ பண்டாரநாயக மாவத்தை
கொழும்பு 14,

Page 3
முதற் பதிப்பு 1977
அச்சிட்டோர்: த டயமண்ட் பிரிண்டர்ஸ் 41 சென் மைகல் ரோட் கொழும்பு 3

லைலா என்பதின் கருத்து நள்ளிரவின் முத்தென்பதாகும்
அவள் தொடுவானத்தில் தோன்றும் சந்திர மதியைப் போன்று அவ்வளவு அழகாக இருந் தாள் இருண்ட வானத்தை ஒளியுள்ளதாகச் செய்யும் கோடானுகோடி நட்சத்திரங்களே போன்று இவளின் பிரகாசம் பொருந்திய மேனி தகதகவென ஜொலித்தது. முற்ருகக் கருநிறத் தையுடையதாக இருந்த இவளின் உரோமம் இப்பிரகாசத்தைப் பன்மடங்காகச் செய்தது; வில் வளைவே போன்ற புருவத்தில் அடக்கப் பட்டிருந்த இவளின் கண்கள் கூரிய பார்வையை உடையதாகவும் பிரகாசமிக்கதாகவும் இருந் தன, உறுதியாக அமைந்திருந்த இவளின் அழ கிய உதடுகள் இவள் புன்முறுவல் செய்யும் பொழுது சற்றுப் பிரிந்து செல்வது காலைப் பொழுதில் கிழக்கு வானில் செந்நிறமாகக் கதி ரவன் தோன்றுகையில் உள்ளக் களிப்பை உண்டு பண்ணுவது போன்று பார்ப்போரைப் பரவச மடையச் செய்யும். காதல் இவளைக் கொள்ளை கொண்ட பொழுது இவள் தன் காதலனின் மார்பில் வைத்து நசுக்கிவிடுவதற்காக சுவர்க்

Page 4
2 .
கத்திலிருந்து பறிக்கப்பட்ட ஒரு சென் ரோஜா வைப் போன்று காட்சியளித்தாள். இவள் காத லனுக்கும் ஒருவிதத் துக்கம் தன்னை அறியா மலே தோன்றியிருந்தது போலும்! அந்தோ பரிதாபம்! இவனை அஹ்ரிமானின் கையிலிருந்து உர்மாஸ் பிடுங்கி எடுக்கையில் வாடி வதங்கிச் சிதைந்து போவதற்காகச் சுவனபதியிலிருந்து ஒரு ரம்மியமிக்க ரோஜாப் புஷ்பம் பறித்தெ டுக்கப்படுகிறது.
காதலால் இழுக்கப்பட்ட லைலா, நள்ளிரவில் தன் இல்லத்தை விட்டு வெளிவந்தாள். கவிக ளால்கூட வர்ணிக்க முடியாத அவ்வளவு அழ கிய ஆடை ஆபரணங்களை அவள் அணிந்திருந் தாள். தன் காதலனைக் கழிபேருவகை கொள் ளச் செய்ய வேண்டுமென்பதற்காக இவள் பேராச்சரியமான ஆடைகளை அணிந்து வந்தாள் போலும். இவள் பூரணச் சந்திர ஒளியில் தோன் றியபொழுது அங்கு வீசிக்கொண்டிருந்த இளந். தென்றல் இவளின் காதல் கதையை அக்கம் பக்கத்திலிருந்த செடி கொடிகளிடம் கூறியது அதேசமயத்தில், சந்திரனின் பிரகாசத்தா ஒளி மங்கியிருந்த நட்சத்திரங்கள் லைலாவை கண்ட உற்சாகத்தினல் எழுப்பப்பட்டு அங்கு ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்திருந்த லைலாவை நோக்கி, ‘லைலா மறைந்துவிடவில்லை; இவள்

3.
எங்களிடமிருந்து தோன்றியவள்; அவள் நம்மி டம் மீண்டிருக்கிருள். அதோ பார்! அதோ பார்! லைலா அமர்ந்திருக்கும் இரவு பிரகாசம் பொருந்தியிருக்கிறது. லைலா அமர்ந்திருக்கும் எல்கையே அழகு பெற்று ஜொலிக்கிறது" என்று கூறுவது போலிருந்தது.
சந்திரன் ஏகமானதேயாயினும் இது பல நதி களிலும் பிரதிபிம்பிப்பதே போன்று லைலாவின் அழகு எல்லாருடையவும் இதயங்களைக் கொள்ளை கொள்ளச் செய்தது. லைலாவின் தந்தை ஒரு மாபெரும் தலைவர். இவளின் ஆச்சரியத்துக்குரிய அழகைக் கேள்வியுற்று பல தேசங்களையும் சார்ந்த இளவரசர்களும்கூட இவரிடம் வந்தார் கள். ஆனல் எவராலும் இவளை அடைய முடிய வில்லை. ஐஸ்வர்யங்களாலும், அரச தர்பார் களின் ஆடம்பரங்களாலும் லைலாவை வெற்றி கொள்ள முடியவில்லை; ஆயினும் எமன் தேசத் தின் ஒரு மாபெரும் தலைவரின் மைந்தனுக இருந்த கைஸ் தான் லைலாவின் இதயத்தில் இடம்பெறும் பாக்கியத்தை அடைந்தார்.
துரதிர்ஷ்டவசமாக லைலா வின் தந்தை கைஸின்' தந்தையோடு சினேகப்பான்மையில் இருக்கவில்லை. உண்மையில் இவர்கள் இருவருக் குமிடையில் அடிக்கடி யுத்தங்கள் மூள்வதுண்டு.

Page 5
4
இவர்களுக்கிடையிலிருந்த பகைமை தலைமுறை தலைமுறையாக வருவது. இவர்களின் மூதாதை யர்கள் சண்டையிட்டுக் கொண்டதஞல் இது இவர்களுக்கிடையில் குடும்பப் பகையாக முடிந் திருந்தது. பெரும் திருநாட்களின் போதும், கொண்டாட்டங்களின் போதும் இவர்கள் சந் திப்பதுண்டு. இவ்விதச் சந்திப்புகளின் பயணுய் இவர்கள் சிறிது காலத்துக்கு இவர்களுடைய பகைமையை மறந்துவிடுவதுண்டு. இவ்வித நிலைமை ஏற்பட்ட காலங்களில் கூட இவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து முகமன் கூறுகை யில் இவர்களின் கண்களில் பகைமை உணர்ச்சி ததும்புவதைக் காணலாம். இவ்விதச் சந்திப்பு எப்பொழுதும் ஏற்படுவதுண்டா? இல்லை; எப் பொழுதும் ஏற்படுவதில்லை. ஆனல் ஒரு குறித்த கொண்டாட்டத்தில் இவர்கள் ஒன்ருகக் கூடுவ துண்டு. இப்படிப்பட்ட ஒரு கொண்டாட்டத் தின் போதுதான் நமது வனப்புமிக்க வாலிபர் கைஸ், லைலாவை முதன்முதலாகச் சந்தித்தார். வாய்விட்டுப் பேசிக்கொள்ள முடியாதிருந்ததே யாயினும் இவர்களுடைய கண்கள் பேசிக்கொண் டன. வார்த்தைகள் மாற்றிக்கொள்ளப்பட வில்லையேயாயினும் இளங் காளைகளான இவர் கள் இருவர் உள்ளத்திலும் காதல் ஆழமாகப்
பதிந்துவிட்டது. இச்சமயத்திலிருந்து கைஸ்

5
முற்றும் மாறுபட்ட ஒரு வாலிபராகக் காணப் பட்டார். இவர் களியாட்டங்களில் கலந்து கொள்ளாதிருந்துவிட்டார்; விருந்தின் போதும் இதன் பிறகு எல்லோரும் ஒன்று கூடியபொழு தும் மெளனமாக இருந்துவிட்டார்; இவர் தனி மையாக உட்கார்ந்திருந்தார்; இவரின் கண்களில் ஒருவித நூதனத் தோற்றம் காணப்பட்டது. இவரின் சிநேகிதர்களாலோ அல்லது வேறு எந்த வாலிபராலோ இவரை விளையாட்டிற்கு க் கொண்டுவர முடியவில்ஃப். எந்தக் கன்னிகை யாலும் இவருக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை. இவரின் உள்ளம் வேருெரு குடும்பத்தை நோக் கிச் சென்றிருந்தது. இது இவரின் தந்தையு டைய விரோதியின் குடும்பம்.
லைலாவின் நிலைமையும் இவ்வாறுதானிருந்தது. இவள் தனது தோழிகளின் மத்தியில் அமர்ந் திருந்தாலேயர்யினும் எதுவும் பேசாது தன் பார் வையைக் கீழே செலுத்திக் கொண்டிருந்தாள். இவ்வமயம் அங்கிருந்த அழகிய அணங்குகளில் ஒருவள் தனது வீணையின் உதவியோடு பூரணச் சந்திர இரவின் ஒளியில் ஒரு நீரருவியின் அரு கில் காதலர்கள் கூடி விளையாடுவதைப் பற்றி ஓர் இனிய கீதத்தைப் பாடினுள். இதுகாறும் தனது தலையைத் தாழ்த்திக் கொண்டிருந்த லைலா ஏதோ ஒருவித உள்ளக் களிப்பினுல் உந்தப்

Page 6
6
பட்டு இக்கீதம் முடிவுறும்போது தனது சென் னியை உயர்த்தி இக்கீதத்தை மீண்டும் பாடு மாறு வேண்டினள். இவ்வாறு இதே கீதம் மூன்று முறைகள் பாடப்பட்டன. இதன் பிறகு மாலைவேளைகளில் கதிரவன் தனது பல வர்ணக் கதிர்களையும் மர உச்சிகளிலும் வீசி இயற்கை அழகின் அற்புதங்களைக் காட்டுகையில் லைலா தனது தந்தையின் பூஞ்சோலைகளில் தனிமையில் உலாத்தி வருவாள். மாலைப்பொழுதில் உலர் வச் செல்லும் வழக்கம் இராப்பொழுதிலும் செல்லுவதாக முடிந்தது. ஒரு மாதரசியின் உள் ளத்தில் காதல் உணர்ச்சி நன்கு வேலைசெய்ய ஆரம்பித்து விடுமாயின் இவள் தனது இயற் கையான அச்சத்தையும் கூட இழந்துவிடுகின் ருள். ஆகவே இராப்பொழுதிலும் லைலா வெகு தூரம்வரை ஏகாந்தமாக உலாவச் சென்றதில் ஆச்சரியமில்லை. இவ்வாறு ஒரு பூரணச் சந்திர இரவில் உலாவச் செல்லுகையில் லைலா நீண்ட தூரம்வரை சென்று தனது தந்தையின் சோலை யை அடுத்திருந்த பெரிய கானகத்தை அடைந் தாள். தனது ஆழ்ந்த சிந்தையில் - சந்திரப் பிரகாசத்தில் இவள் சென்றுகொண்டிருந்தாலா தலின் தான் எங்கு செல்வதென்பது இவ்வனி தைக்கு விளங்கவில்லை. தன் சோலையின் எல்லை யைக் கடந்து செல்லுகையில் இவ்வணங்கு தன்

7
முன் குறுக்கிட்ட விரிந்த கிளைகளையுடைய ஒரு மரத்தண்டை வந்து நின்ருள். இம்மரத்தின் இரு பெரும் கிளைகளினுாடே தெரிந்த ஒரு சிறு திறந்தவெளி லைலாவின் மனதைக் கவர்ந்தது. இன்னும் சற்றுக் கூர்ந்து நோக்குகையில் பூர ணச் சந்திரப் பிரகாசத்தினல் ஜொலித்துக் கொண்டிருந்த இவ்விடை வெளியில் ஒர் அழ கிய நீரருவி அமைந்திருந்தது. இந்நீரருவிதான் தன் அருமைத் தோழிகளில் ஒருத்தியால் பாடப் பட்ட இன்னிசைக் கீதத்தில் கண்ட அழியாப் புகழ்வாய்ந்த நீரருவி என்பதை இவ்வணங்கு விளங்கிக் கொண்டாள். இந்நீரருவியின் அருகில் தான் சந்திரி ஒளியின்போது காதலர்கள் சந் தித்து உல்லாசமாக விளையாடுவார்கள் என்று பாடப்பட்டது. இங்குதான் ஞாபகத்துக்கு எட் டாத காலம் தொட்டு காதலர்கள் ஒன்றுகூடி பிரதிக்கினைகள் செய்துகொண்டார்கள். இந்த நடுநிசியில் இவ்வளவு தூரம் வந்து காதலர்களை ஒன்றுசேர்க்கும் இவ்வழியாப் புகழ்வாய்ந்த நீர் அருவியின் பக்கலில் இருப்பதை நினைவிற் கொண்ட லைலாவின் உள்ளத்தில் தோன்றிய ஒருவிதத் துணிச்சலான உணர்ச்சியினலும், அதிர்ச்சியினலும் இப்பாவையின் தேகம் நடுங்க ஆரம்பித்தது. திடீரென இவளின் முகம் சிவந்து விட்டது; இவளின் இருதயம் வேகமாக அடிக்க

Page 7
8
ஆரம்பித்தது; இவ்வித உணர்ச்சியில் தன் தந் தையின் மாளிகையை நோக்கி வேகமாக ஒடி ஞள். தான் செய்தது ஒரு பெண் அணங்குக்கு அடுக்காத துணிகரச் செய்கை என்பதை எண்ணி ஒடினள் போலும்!
இதன் பிறகு லைலா இரவில் உலாவச் செல் லத் துணிவுகொள்ளவில்லை. மாலை வேலைகளில் சிறிது நேரம் தன் மாளிகையைச் சேர்ந்த சோலைகளில் திரிந்துவிட்டு வீடு திரும்பிவிடுவாள். இதைத் தவிர இவ்வணங்கு வேறு எதுவும் செய் வதாயில்லை. தன் மனத்தில் பெரும் பளுவாக இருந்துவரும் காதல் கதையை எவரிடமும் எடுத்தியம்புவதற்குத் துணிவு எழவுமில்லை; இவ ளுக்காகச் சிறிது ஆறுதலை அளிப்பவைகளாக இருந்தவை இவளின் இரு வெண்புருக்களாகும்.
லைலாவின் தந்தைக்குரிய மாளிகை ஓர் அரச மாளிகைக்கொப்ப அவ்வளவு அற்புத அலங்கா ரத்தை உடையதாக இருந்தது. இம்மாளிகை யின் ஓர் உன்னத அறையில் லைலா ஒய்வுகொள் ளச் செல்வது வழக்கம். இவ்வறையின் ஒரு சாளரத்தின் அருகே நின்றுகொண்டு அங்கிருந்த மர உச்சிகளை உற்றுநோக்கிக் கொண்டிருப்பாள். நீண்ட நாட்களாகத் தன்னிடம் மிக்க அன்பாக
வளர்ந்து வரும் இரு வெண்புருக்களும் இரு

9
மரங்களில் மிக்க உல்லாசமாக விலையாடிக் கொண்டிருக்கும். லைலாவின் தொனியைக் கேட் டதும் இப்பறவைகள் விரைந்து வந்து இவளின் தோள்களில் அமர்ந்துகொண்டு ‘கூ.கூ.கூ" வென இறைவதோடு லைலாவின் கன்னங்களை மிருதுவாகக் கொத்தும். லைலாவின் தலையிலும் தோள்களிலும் உட்கார்ந்து இப்பறவைகள் அங்குமிங்குமாக விளையாடுவது இவளுக்கு ஒரு வித உற்சாகத்தை அளித்து வந்தது. இப்புருக் களுக்கு லைலா தன் உள்ளங்கையில் வைத்து உண வளித்துவிட்டு, ஒன்றைத் தன் மார்பில் அணைத் துக்கொண்டு மற்றதை சாளரத்துக்கு வெளியே வீசுகையில், வீசப்பட்ட இப்பறவை அங்கொரு மரத்தில் அமர்ந்து கொண்டு தன் தோழியைக் கூவிக்கூவி அழைக்கும். லைலா தன் மார்பில் அணைத்துக் கொண்டிருக்கும் பறவையை விடு விக்கும் வரை இப்பறவை இவ்வாறு கூவிக் கொண்டே இருக்கும். தன் கையிலுள்ள பற வையை விடுவிக்கையில் அது தன் தோழனை அடைந்து மிக்க அன்னியோன்னியத்தோடு குலாவிக்கொண்டிருக்ன்கயில் லைலா பெருமூச்சு விடுவாள். 'ஆ! சிறகுள்ள பறவை தன் காத லனைத்தேடிப் பறந்து செல்கிறது; அந்தோ என் னல் பறக்க முடியவில்லையே; எனக்கும் சிறகு இருந்திருக்குமாயின் எவ்வளவு நன்ருக இருக்

Page 8
10
கும்' என்று லைலா தனக்குள்ளேயே கூறிக் கொள்வாள். ஆயினும் இச்சிறகையுடைய பற வையின் மூலமாகத்தான் தன் காதலனிடமி ருந்து இவளுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலை யும் அளித்த உருக்கமான வொரு நிருபம் வந் தது. இக்கடிதம் சந்தோஷத்தையும் பயத்தை யும் அளிப்பதாக இருந்தது. இதே கடிதம்தான் இவளைக் காதலர்கள் சந்திக்கும் இடத்துக்கு இழுத்துச் சென்றது.
கைஸ் எப்பொழுதுமே முகவாட்டமுடனிருய் பது இவரின் நண்பர்களுக்கும் தாய்தந்தையருக் கும் கவலையைத் தந்தது. எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தையில் ஆழ்ந்திருந்த கைஸ"க்கு லைலாவின் இரு வெண்புருக்களின் கதை ஞாபகத்துக்கு வந் தது. பொதுமக்களுக்கிடையில் நன்கு பரவியி ருந்த இப்புருக்களின் கதை கைஸ்"க்கு எட்டி யது இவருக்கு ஒருவிதத்தில் ஆறுதல் அளிப்ப தாக இருந்தது. இக்கதை கைஸின் ஞாபகத் துக்கு வந்தவுடன் தனது தலையை உயர்த்திக் கொண்டு "நான் அவளின் தந்தையிடம் சென்று அவளை நான் வரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கோருவேனுயின் இவர் என்னை எவ்வாறு நடத்துவார்? நான் ஒரு தூதரை அனுப்பினல் அத்தூதரை இவர் எவ்வாறு வர வேற்பார்? ஆனல் லைலாவின் புருக்கள் நேரடி

1
யாக என்னுடைய தூதை லைலாவினிடமே எடுத்துச் செல்லக் கூடுமாயின் அது பெரிதும் சாதகமாக இருத்தல் கூடும். இப்புருக்கள் லைலா வின் அறை ஜன்னலில் புகுந்து லைலாவின் மார் பில் போய் தங்குவதாகக் கூறப்படுகின்றது. இது உண்மையாயின் நான் நினைப்பதை நிறை வேற்றுவது கடினமாக இராது என்று தனக் குள்ளேயே கூறிக்கொண்டான்.
இப்புருக்களின் மூலம் தூதனுப்புவதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த கைஸ் தனது சேவகளுன ஜைதைக் கூவியழைத்தான். தனது எஜமானிடம் பெரிதும் பசுஷ்ம் பாராட்டி வந்த ஜைத் உடனே இவ்வழைப்பிற்கு பதில் கூறினன்.
“ஜைத் பஸராவின் தலைவருடைய மாளிகை யில் இரு வெண்புருக்கள் இருப்பதைப் பற்றி நீ கேள்வியுற்று இருக்கிருயல்லவா? இவைகளி லொன்று தனது எஜமானியின் உத்தரவுக்குப் பணிந்து குறித்த இடத்திற்குப் பறந்து சென்று எஜமானியின் கையிலுள்ள மற்றப் பறவை வரும் வரை இடைவிடாது கூவி அழைத்துக்கொண்டே இருக்குமென்று கூறப்படுகிறது" என்று கைஸ் ஜைதிடம் கூறினர்.
ஜைத்: "இவ்விஷயத்தை நான் நன்ருக அறி வேன் எஜமான், இவைகள் வீட்டில் பழக்கப்

Page 9
12
பட்ட பறவைகள். தன் எஜமானி அழைக்கை
யில் இவை எஜமானியின் கையிலும் தோளிலும்
வந்து அமர்கின்றன".
கைஸ்: "அப்பறவைகள் உன் கைக்கு வரும்
என்று நீ நினைக்கிருயா?”
தனது எஜமானின் உள்ளக் கிடக்கையை
நன்கு அறிந்திருந்த ஜைத் இக் கேள்விக்கு வேறு விதமாகப் பதில் அளித்தான்.
ஜைத் "ஓ பிரபு! இப்புருக்களைப் பெறவேண் டுமென்பது தங்களது விருப்பமா? எனது தந்தை அடர்ந்த வனத்தில் வசித்து வந்தவர். இவர் பறவைகளை நாகுக்காகப் பிடிப்பதில் கைதேர்ந் தவர். நான் இவ்வித்தையை நன்ருகக் கற்றி ருக்கிறேன். ஒரு வீட்டில் வளர்க்கப்படும் புருவை மாத்திரமன்றி காட்டில் வதியும் பலவிதப் பற வைகளையும் நான் பிடித்திருக்கிறேன். ஒரு பற வைக்கும் எவ்விதத் தீங்கும் இழைக்காது அத னைக் கையால் மிருதுவாகப் பிடிக்கும் இரகசிய வித்தைகூட எனக்குத் தெரியும்"
கைஸ்: "அவ்வாழுயின் நீ இப்பொழுதே சென்று லைலாவின் இரு வெண்புழுக்களில் ஒன் றை இங்கே கொண்டு வா. ஆனல் அதற்கு எவ்விதத் தீங்கும் விளையக் கூடாது. அதன்

13
இறக்கை ஒன்றுக்கேனும் ஹானி விளையக்
கூடாது'.
ஜைத் ԱՄ6ծr விசுவாசத்தையுடைய நல்ல சேவகன், ஜைத் கூறியவை பூராவும் இதயபூர் வமான உண்மையாகும். இவன் உத்தரவு பெற் றுச் சென்ற மூன்ருவது தினம் கைஸ் விரும்பிய புருக்களில் ஒன்றைக் கொணர்ந்து தன் எஜ மான் கையில் கொடுத்தான். கைஸ் இப்புரு வைக் கெயிலெடுத்து சிறிதுபோழ்தைக்குத் தட விக் கொடுத்தான். பிறகு அதை ஜைதிடம் கொடுத்துப் பிடித்துக்கொள்ளச் சொல்லி, தான் ஏற்கெனவே மிக்க மெல்லிய மிருதுவான காகிதத் தில் எழுதி வைத்திருந்த ஒரு சிறு நிருபத்தை அதன் காலில் கட்டினன். இந்நிருபத்தில் இவ் வாறு வரையப்பட்டிருந்தது:
“இவ்வெண்புரு வைப் போன்று அவ்வளவு பரிசுத்தமாகவுள்ள உன்னுடைய இருதயம் என்னிடம் வந்திருக்கிறது. அப்பாலுள்ள மரங்களிலிருந்து பறந்து வந்துள்ள இப் புழு உன்னுடைய கனிந்த காதலை என்னி டம் கொணர்ந்திருக்கிறது. உன்னுடைய இதயம் இனி ஒரு பொழுதும் உனக்குச் சொந்தமாக இருக்க முடியாது. ஏனெனில் அது என்னிடமே இருந்து வரும். ஆயினும்

Page 10
14
இவ்வளவு தூரத்திலிருந்து வரும் நான் எவ்வளவு தவிக்கிறேன் என்பதையும் எனது உள்ளம் எவ்வாறு பதைபதைக்கிறது என் பதையும் நீ தெரிந்துகொள்ள வேண்டும்'. **ஆங்கோரிடத்தில் காதலர்கள் கூடும் நீரருவி ஒன்றிருக்கிறது. இன்று இரவு உனக் காக நான் அங்கு காத்திருப்பேன். மரக் கிளைகளில் பறவை இனங்கள் எவ்விதக் கட் டுப்பாடுமின்றிச் சர்வ சுதந்திரத்துடன் கூடி விளையாடுவது போன்று நாம் கூடிக் களிப்புற வேண்டுமென்று விரும்புகிறேன். ஒ எனது ஆருயிரே! அப்பாலுள்ள மரத்தி லிருக்கும் பறவையைத் தேடி அதன் தோழி பறந்து செல்வது போன்று என்னிடம் விரைந்து வருவாயாக’’.

I
காதலர்கள் செய்துகொண்ட கடும் பிரதிக்கினை
வழக்கம்போல் லைலா தன்னுடைய புருக்க ளில் ஒன்றைப் பறக்கவிட்டுவிட்டு, தன் மார் பில் அணைத்துக்கொண்டிருந்த மற்ருெரு புழுவை வெளியில் சென்ற புரு கூவி அழைக்கும்வரை கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தாள். இவள் இவ்வாறு நீண்ட நேரம் காத்திருந்தா ளாயினும் வழக்கமான இடத்திலிருந்து அது கூவி அழைக்கவில்லை. மாளிகையின் நாற்புறங் களிலும் தேடிப் பார்த்தாளேயாயினும் இப் பறவை அகப்படவில்லை. தனது சாளரத்தின் அருகே வந்து கையிலிருந்த புருவை வெளியில் காட்டியவாறு மற்றப் புருவின் குரலோசை கேட்கிறதாவென்று லைலா மிக்க ஆவலோடு காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஆணுல், எவ்விதக் கூவுதலையும் கேற்க முடியா ததைக் குறித்து ஏமாற்றம் அடைந்தவளாய் *இதற்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும்? இது எங்கேனும் தூரம் பறந்து சென்றிருக்க முடி யுமா? இதற்கு முன் எப்பொழுதேனும் இவ் வாறு நிகழவில்லை யாதலால் அவ்வாறு சென்

Page 11
6
றிருக்க முடியாது. ஒரு வேலை இது மரக்கிளை களில் துயில் கொள்ளுகிறது போலும்" என்று தனக்குள்ளேயே கூறிக்கொண்டாள்.
இவள் தன் புருவை எதிர்பார்த்திருந்ததன் பயனுய் நேரம் கழிந்துவிட்டதைக்கூட அறிந்து கொள்ளவில்லை. சந்திரன் வானத்தில். மென் மேலும் உச்சி நோக்கி உயர்ந்துகொண்டிருந் தான். இருளடைந்திருந்த மரங்களும், ஒதுக் கிடங்களும் சந்திரனின் வெண் கதிர்களால் பிரகாசிக்க வாரம்பித்தன. ஆனல் தன் புரு வைப் பறிகொடுத்திருந்த லைலாவுக்கு உலகெல் லாம் இருண்டிருந்தது. அப்ஸோஸ்! தன் பற வையினிடமிருந்து கூவுதல் வரவுமில்லை. குர லோசை கேட்கவுமில்லை. இறுதியில் தன் கை யிலிருந்த பறவையைத் தட்டிக்கொடுத்து அத னிடம் அன்பாக உரையாடினுள். 'உன் காத லனை நீ அழைத்துவா’ என்று கூறி லைலா இப் பறவையைச் சாளரத்தின் வெளியில் வீசினல் இப் பறவை வழக்கம்போல் தான் செல்லும் மரத்திற்குச் சென்று நீண்ட நேரம் கூவிக் கொண்டிருந்தது. ஆனல் இதற்கு பதில் கூவு தல் எதுவும் வரவில்லை. இதன் பிறகு இப்பற வை தங்கியிருந்த மரக் கிளையிலிருந்து கிளம் பிப் பல தடவைகள் மாளிகையைச் சுற்றிச் சுற்றி வருவதை லைலா பார்த்துக்கொண்டிருந்

17
தாள், பல முறைகளிலும் இது தனது இறக் கைகளை அடித்துக் கொண்டு தனது ஏமாற்ற த்தை அறிவிப்பதை லைலா கண்டாள். இறுதி யில் இது ஜன்னலில் வந்து அமர்ந்தது. இதை லைலா தன் கையிலெடுத்து மார்பில் அணைத்த பொழுது அது அசாதாரணமாகத் துடித்துக் கொண்டிருந்ததை கண்டாள். நிச்சயமாக அது தனக்கிருந்த துக்கத்தினல் துடித்துக்கொண்டி ருந்தது.
‘ஐயோ பாவம்! அனதைப் பறவை! ஒரு காதலனை இழப்பது சகிக்கக்கூடாத விஷயம் தான். ஆனல் காதலனைக் கண்டு கொள்ளா திருப்பது இதைவிடக் கடினமான துக்கத்தைத் தருவதாகும்’ என்று லைலா தன் புருவைத் தடவிக்கொண்டே கூறினுள்.
இவ்வாறு லைலா தன் பறவையைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கையில் மற்றப் புழு இங்கு திடீரெனத் தோன்றி இவளின் தோளில் அமர்ந்தது. லைலா தன்னையும் அறியாது ஒர் ஆனந்தக் கூச்சலிட்டர்ள். இவ்விரு பறவைகளை யும் எடுத்து மிக்க பாஷத்தோடு தடவிக் கொ டுத்தாள். இவ்வாறு செய்கையில் காணுமற் போய் திரும்பிய பறவையின் காலில் ஏதோ
2

Page 12
18
ஒரு சிறு தடித்த பொருள் கட்டப்பட்டிருப்ப தைக் கண்டாள். பறவையின் காலில் பிணைக்கப் பட்டிருந்த விகிதத்தை அவசர அவசரமாக அவிழ்த்தெடுத்தாள். இவளின் இருதயம் பட படவென அடித்துக்கொண்டிருக்கையில் இதை இவள் பெரும் பரபரப்போடு வாசித்தாள்; இது தன் காதலனிடம் இருந்து வந்துள்ள நிருபம் என்பதை உணர்ந்தாள்; என்ன செய் வதென்பது இவளுக்கு விளங்கவில்லை. காதலர் கள் சந்திர ஒளியில் கூடும் நீர் அருவியின் ஸ்த லத்துக்குப் போகலாமா வென்று இவள் சிந் திக்கலாஞள். ஒருவித முடிவிற்கும் வர முடி யாதவளாய் இரு பறவைகளையும் ஒன்றன்பின் ஒன்ருக முத்தமிட்டாள். பிறகு ஒருவிதத் தீர் மானத்துக்கு வந்து இப் பறவைகள் இரண் டையும் கீழே விட்டுவிட்டுச் சீக்கிரமாக ஓர் நீண்ட அழகிய அங்கியை அணிந்து கொண்டு சத்தம் செய்யாமல் மேல் மாடியிலிருந்து கீழி றங்கி ஒர் பின்புறக் கதவைத் திறந்துகொண்டு வெளிச் சென்ருள். காதல் காட்டினுாடே வழி காட்டியது; இவ் வழி லைலாவைக் காதலர்கள் சந்திக்கும் நீரருவியினிடம் கொண்டு வந்து சேர்த்தது. மரங்களினுாடே வீசிக்கொண்டிரு ந்த சந்திர ஒளியில் ஓர் நிழல் ஊர்ந்து செல் வது போன்று விரைந்து போய்க்கொண்டிருந்

9.
தாள். இறுதியாக இவள் முத்துப் போன்ற தண்ணீர்த் துளிகள் விளையாடிக் கொண்டிரு ந்த திறந்த வெளியில் அமைந்திருந்த நீரருவி யை அடைந்தாள். இந் நீரருவியிலிருந்து பசும் புற்களுக்கு மேல் பாய்ந்தோடிக்கொண்டிருந்த தண்ணிரின் பளபளப்புைத் தவிர லைலாவின் கவனத்தை வேறெதுவுமே ஈர்க்கவில்லை. அங்கு எவ்வித உயிர்ப் பிராணியும் புலப்படவில்லை.
லைலா தீர்மானமற்றவளாய் மர நிழலில் நின்றுகொண்டிருந்தாள். இவளின் இருதயம் வேகமாக அடித்துக்கொண்டது. தான் விரை ந்து வந்ததனல்தான் தன் இருதயம் இவ்வாறு துடிக்கிறதென்று இவள் நினைத்தாள். தன்னு டைய புருவைக் கவர்ந்து சென்று அதை ஒர் நிருபத்தோடு திருப்பி அனுப்பியவர் எங்கிருக்க லாம்? என்று தன்னைக் கேட்டுக் கொண்டாள். சில விநாடிகளுக்குள் லைலாவின் மனதில் இவ் விதக் கேள்விகள் பல ஒன்றன்பின் ஒன்ருய்த் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.
சற்று தூரத்திலிருந்த கைஸின் கூரிய கண் கள் தாமதமின்றி லைலாவை நோக்கின. நிழ லில் நின்றுகொண்டிருந்த லைலாவைக் கண்ட

Page 13
20
கைஸ் நீர் அருவியைக் கடந்து விரைவாகத் தன் காதலியை அடைந்தான்; நிழலில் நின்ற லைலா திறந்த வெளியில் வந்து நின்ருள்.
'நீங்கள் யார்?' என்று லைலா சாந்தமாகக் கேட்டாள்.
*NA
நன்கு பிரகாசித்துக்கொண்டிருந்த சந்திர ஒளி இவர்கள் இருவருடையவும் முகத்தைத் தெளிவாகக்காட்டியது. இருவருடைய கண்க ளும் சந்தித்தன; வேறு வார்த்தைகள் உப யோகிக்கப்படவில்லை. ஏனெனில் முதல் பார் வையிலேயே இருவரும் ஒருவரை யொருவர் அறிந்துகொண்டார்கள்.
கைஸ்:- "லைலா! நீ என்னிடம் வந்திருக்கி முய்; நான் உன்னைக் காதலிக்கிறேன்.'
லைலா- 'நானும் தங்களைக் காதலிக்கிறேன்."
இதன் பி. கு இவர்கள் பேசுவதற்கு ஒன்று மிருக்கவில்லை. இருவரும் நன்கு கட்டித் தழுவிக் கொண்டார்கள். இவர்கள் ஆலிங்கனம் செய்து கொண்டதனல் விளைந்த ஆனந்தத்தை, இத ந்கு முன் பல முறைகளில் இது போன்ற சம் பவங்களைக் கண்டிருந்த சந்திரனைத் தவிர வேறு எவரும் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் என்ன சம்பாஷித்தார்கள் என்பதை-காதலர்

21
கள் என்ன இயம்புகின்றர்கள் என்பதை நீண்ட காலமாய் பதிவு செய்துவரும் நீரருவியைத் தவிர வேறு எவரும் கேட்கவில்லை.
இவ்வாறு லைலாவும், கைஸ"ம் அடிக்கடி அநேக முறைகளில் இராப் பொழுதில் இங்கு ಆf೬೬೬ உல்லாசமாய்க் காலம் கழித்திருக் கிருர்கள். உயிருக்கு ஹானிவரினும் ஒருவரை ஒருவர் மறப்பதில்லை என்று இவர்கள் பிரதிக்கினை செய்துகொண்டார்கள். ஒரு தினம் இவர்கள் விடைபெற்றுச் செல்லுகையில், "ஓ எனது ஆறுயிரே! இப் பாலைவனம் எனது வீடா கவும், நீயும் நானும் சுயேச்சையும் சுதந்திர மும் உள்ளவர்களாகவும் இருப்போமாயின், இப் பொட்டல் நிலத்தில் முளைக்கும் புஷ்பங் களை புசித்தேனும் அல்லது காட்டில் முளைக் கும் தானியத்தைக் கொண்டு உன் கையால் சாதம் சமைத்தேனும் சாப்பிட்டுவிட்டு அதோ பாய்ந்துகொண்டிருக்கும் ஒடையில் நீர் பருகி விட்டு, இதோ இருக்கும் மரக் கிளைகளின் கீழ் ஆறுதலாக ஜீவிக்க முடியுமானல் நான் உலக த்தையே மறந்து விடுவேன். உனது இனத்த வர்களிடம் எவ்விதப் பகையுமில்லாது நான் உன்னேடு உயிர் வாழ்ந்து உன்னையே எப் பொழுதும் காதலிப்பேன்" என்று கைஸ் உருக் கமான தொனியில் கூறினன்.

Page 14
22
"நானும் இவ்வாறு வசிக்கத்தான் விரும்பு கின்றேன் என் ஆறுயிரே" என்று பதில் மொழிந் தாள் லைலா,
கைஸ்:- "அவ்வாருயின் எல்லோரையும் மற ந்து விட்டு இப்பொழுதுதே காட்டுக்கு ஓடிவிடு வோம். " இதன் பிறகு சிறிது மெளனம் காணப்பட்டது. கைஸ் மேலும் பேசவாரம் பித்து "இப்பொழுதே போய்விடுவோமா?"
என்று கேட்டான்.
லைலா-'இல்லை; இப்பொழுதல்ல, நீங்கள் ஆயத்தங்கள் செய்துகொள்ள வேண்டும். எனது ஆறுயிரே! நாளையத்தினம் இதே நேரத்தில் நான் இரண்டு குதிரை வரிசைகளுடன் தங்களுக் காகக் காத்திருப்பேன். இக் குதிரைகள் தங்கள் பாதங்களினல் தூசியை மிதித்து தள்ளுவது போன்று நாம் உலகத்தை உதறித் தள்ளு வோம். நாம் இருவரும் இணை பிரியாதிருப்
போம்.

nu
காதலரைப் பிரித்துவைத்த காதகன் இப்னு ஸலாம்
தன் காதலனை விட்டுச்சென்ற லைலாவிற்கு ஆனந்தம் கரை புரண்டோடியது. தான் தன் எதிர்கால மணுளனுக்கு அளித்த வாக்குறுதி யையும் அவனேடு செய்துகொண்ட ஆலிங்கன த்தின் அளப்பரிய ஆனந்தத்தையும் அவள் சதா சிந்தித்துக்கொண்டிருந்தாள். தன் மன தில் தோன்றிக் கொண்டிருந்த புதுப்புது எண் ணங்கள் தூக்கம் வருவதைத் தடுத்துக் கொண் டிருந்தன. வெகு நேரம் கட்டிலில் அங்குமிங் குமாகப் புரண்டு கொண்டிருந்தாள். சிறிது உறக்கம் வரும்பொழுதுகூடத் தனது காதல னைச் சந்தித்த சம்பவத்தைப் பற்றிய நிகழ்ச்சி கள் ஒன்றன்பின் ஒன்ருய்த் தோன்றின; இந்த உல்லாச நினைவில் லைலா ஆழ்ந்த துயிலில் மூழ்கியிருந்தாள். தன்னுடைய அருமைக் காத லனுடன் ஒரு பாலைவன மரக்கிளையின் நிழலின் கீழ் அமர்ந்து, காட்டில் முளைக்கும் கோதுமை யினல் தன் கையினலேயே சமைத்த உணவைப் புசித்துவிட்டு அங்கு ஓடிக்கொண்டிருந்த ஒடையிலிருந்து நீர் பருகிய தா கவு ம்

Page 15
24
மாடமாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதை விடத் தன் காதலனுடன் பாலைவனத்தில் காலங் கழிப்பது மிக்க மகிழ்ச்கியை அளிப்ப தாகவும் லைலா கணுக்கண்டாள்.
அந்தோ பரிதாபம்! இக்கனவு எதிர்கால நிகழ்ச்சிகளுக்கும் எதிரிடையாக இருந்தது. ஆகவே. இது வெறும் மனேராஜ்யமாக முடி ந்தது. இக்காதலர்களுக்கு எதிரியாக ஓர் வன் மை மிக்க விரோதி தோன்றிவிட்டான். இவன் தனது சூழ்ச்சித் திட்டத்தை மிக்க எச்சரிக்கை யோடும் திறமையோடும் தயார் செய்திருந் தான். லைலாவின் மீது நீண்ட நாட்களாய்க் கண் வைத்திருந்த இவ்வெதிரி லைலாவுக்கும் கைஷ"க்குமிடையில் ஏற்பட்டிருந்த சம்பந்தத் தை நன்முக அறிந்திருந்தான். லை லா வும் கைஸ-ஸும் என்ன செய்கிறர்கள் என்பதை அறி ந்துகொள்வதற்கு இவன் தனது நம்பிக்கைக் குப் பாத்திரமான ஆட்களை நியமித்திருந்தான். இவ்விருவரும் எதைச் செய்யினும் அது எதி ரிக்கு அறிவிக்கப்பட்டுவிடும். லைலாவை எவ்வா றேனும் தன் மனைவியாகக் கொள்ள வேண்டு மென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இவ னின் பெயர் இப்னு சலாம் என்பதாகும். இவனும் பலராவைச் சேர்ந்த ஓர் அழகிய

25
வாலிபத் தலைவனவான். லைலா காதல் நோயி ஞல் வாட்டமுற்றிருப்பது இயற்கை யாதலால் இதனை சாதகமாகக் கொண்டு ஓர் வைத்திய நிபுணன் வேஷத்தில் இவன் லைலாவின் தந் தையிடம் ஒர் ஆளனுப்பியிருந்தான். இவ் வைத் தியர் லைலாவைச் சிறிது காலத்துக்கு ஒர் குள்ர் ப்பாங்கான எல்கைக்கு அழைத்துச் செல்ல வேண்மென்று ஆலோசனை கூறினர். லைலாவின் கிழத்தந்தை லைலா சோர்ந்திருப்பதின் காரண த்தினுல் இவ்வாலோசனையை ஏற்றுக்கொண்டு மறுதினமே லைலாவைத் தமது மலைப் பிரதேச விடுதிக்கு அழைத்துச்சென்ருர், மலைப் பிரதேச த்தின் குளிர்ந்த சுத்தக் காற்றும் இயற்கை அமைப்பும் லைலாவுக்கு ஆரோக்கியத்தையும் சந்துஷ்டியையும் அளிக்குமென்று லைலாவின் தந்தை கூறினர். ஆனல், இவர் ஏன் திடீரென இவ்வித முடிவுக்கு வந்தார் என்பதை எவரா லும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெ னில் சிறிது காலமாக லைலா முகவாட்டமடை ந்திருந்தாளே யாயினும் இப்பொழுது அவள் முகத்தில் சந்தோஷத்தின் பிரகாசம் காணப் பட்டது. தன் காதலனை மறுதினம் சந்திப்ப தற்கு ஏற்பாடு செய்திருந்த லைலாவுக்கு இது பெருத்த ஏமாற்றமாக முடிந்தது. இப்னு ஸலா

Page 16
26
மின் முதல் முயற்சி பூரண வெற்றியாக முடிந்தது.
கைஸ் தன் ஆருயிர்க் காதலியைச் சந்திப் பதற்காகக் குறித்த நேரத்தில் வந்து காத்திருந் தான். பல தினங்கள்வரை லைலாவின் திடீர் பிரயானத்தைப்பற்றி இவன் எதையும் அறியா தது துரதிருஷ்டமானதாகும். கைஸின் ஏமா ற்றத்தை நூறுமடங்கானதாகச் செய்வதற்கு இப்னுஸலாம் ஏற்பாடு செய்திருந்தான். பல நாட்களாகியும் லைலா வைக் காணததால் கைஸ் பெருந் துக்கமடைந்திருந்தான். இச்சமயம் இப்னு ஸலாமின் தூதனெருவன் கைஸிடம் வந்து லைலா தன்னிஷ்டப் பிரகாரம் தன்னு டைய தந்தையின் குடும்பத்தோடு மலைப்பிர தேச விடுதிக்குச் சென்றிருப்பதாகவும் இவளின் அன்பிற்குப் பாத்திரமாகியுள்ள இப்னு ஸ்லா மும் கூடச் சென்றிருப்பதாகவும் அறிவித்தான். காதலர்கள் தங்களுக்கு இயற்கையாக ஏற்படும் மனக்கலக்கத்தினல் தாங்கள் கேட்பவைகளை யெல்லாம் நம்பும் சுபாவமுடையவர்களாக இருக்கிருர்கள். கைஸ் இவ்வுண்மைக்குப் புறம் பானவனல்லவாகையால் இக்கூற்றைக் கேட்ட வுடன் சுய அறிவை இழந்தவனேபோல் கதறிக் கொண்டு ஒடவாரம்பித்தான். தன் மனதில் உதயமான அவநம்பிக்கையினலும் துக்க மேலீ

27
ட்டினலும் இவன் பாதிக்கப்பட்டிருந்தமையால் எவ்வாறேனும் தன் காதலியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தவிர கைஸின் மனதில் வேறு எதுவும் செல்லவில்லை. “லைலா லைலா" என்று இடைவிடாது கதறிக்கொண்டு மலைப் பிரதேசத்தை நோக்கி ஓட்டமாகச் சென்ருன், மலைப்பிரதேசத்தை அடைவதற்கு முன் ஒர் பெரும் பாலைவனத்தைக் கடக்க வேண்டியிருந்தது. கால்நடையாக இ  ைத க் கடப்பதென்பது முற்றும் அசாத்தியமான காரிய மாகும். ஆனல் லைலாவின் காதலினல் சுய அறி வைப் பறிகொடுத்திருந்த கைஸ்"க்கு இது அசாத்தியம்போலிருக்கவில்லை அன்று தினம் பூராவும் மறுதின இரவும் கைஸ், “லைலா, லைலா" வென்று இடைவிடாது அலறிக் கொண்டு பாலைவனத்தில் ஒடிக்கொண்டிருந் தான். பாலைவனத்தின் ஒவ்வொரு மூலை முடுக் கிலுமுள்ள கற்பாறைகளுக்கும், செடிகொடி களுக்கும், மரங்களுக்கும், புதர்களுக்கும், மணற் குன்றுகளுக்கும் லைலாவென்ற பெயரை அறிவி க்கும் தோரணையில் கைஸ் கதறித் திரிந்தான். அந்தோ! பரிதாபம் எவ்வளவு நேரந்தான் ஊண், உறக்கமின்றி இவ்வாறு கதறித் திரிய முடியும் மறுதினம் அதிகாலையில் கைஸ் பாலை வனத்தின் ஓர் மூலையில் கலைத்துப்போய் மூர்ச்

Page 17
28
சையுற்று வீழ்ந்து கிடந்தான்.
கைஸின் நண்பர்களும் இவனிடம் மிக்க விசு வாசம் கொண்டிருந்த சேவகன் ஜைதும் அதி காலையில் கைஸைக் கண்டெடுத்து வீட்டுக்குக் கொணர்ந்தார்கள். பசியினலும், களைப்பினலும் பிரக்ஞையற்றிருந்த கைஸ் பாலைவனத்தில் அலைந்து திரிந்ததேபோன்று சிந்தன உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் சுப அறிவு இருக்கவில்லை. இவனைச் சுவதீனமான நிலைமைக்குக் கொண்டு வருவதற்கு இவனது நண்பர்களும் உறவினரும் கடும் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள். இவன் மயக்கம் தெளிந்து சிறிது சுய அறிவைப் பெற்றவுடன் மீண்டும் "லைலா, லைலா" வென்று இடை விடாது கதரவாரம்பித்தான். ஆகவே, கைஸ் தன்னறிவை இழந்துவிட்டான் என்று இவர் கள் கருதினர்கள். இத்தினத்திலிருந்து கிைஸை எல்லோரும் 'மஜ்னுான்’ - காதலினல் பைத் தியங் கொண்டவன் - என்று அழைக்கலானுர் கள். இதன்பிறகு இவனைக் கைஸ் என்பதற்குப் பதிலாக மஜ்னுான் என்றே எல்லோரும் அழை க்கலாஞர்கள்.
தன்னுடைய ஜன்ம சத்துருவான ஒரு தலைவ னின் புதல்வியை நாடி மனம் குழம்புவதை

29
விட்டுவிடுமாறு மஜ்னுானின் தந்தை வெகுவாக வேண்டிக்கொண்டார். ஆனல் மஜ்னுான் எவ் வித நியாய வாதத்துக்கும் தலைசாய்ப்பதா யில்லை. தன் காதலைத்தவிர மற்றெல்லா விஷ யங்களிலும் மஜ்னுான் நிதானமாய் நடந்து கொள்வதைக் கண்ட இவனின் தந்தை "இக் காதல் விஷயத்தில் நான் எனது அருமை மைந்தனுக்கு திருப்தியளிக்கக்கூடுமாயின் மீண் டும் இவன் பூரண மனிதனுக மாறி விடுவான்' என்று தமக்குள்ளேயே கூறிக்கொண்டார். பிறகு இவர் தமக்கும் பஸராவின் தலைவருக்கு மிடையில் இருந்துவந்த பகைமையை நீக்குவ தோடு ஒர் புதிய பாந்தவ்வியக்தையும் ஏற்படு த்திக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டு மென்று தீர்மானித்தார், ஆகவே, இவர் தமது மைந்தன் மஜ்னுரனைத் தம் விசுவாசமுள்ள சேவகன் ஜெய்திடம் ஒப்படைத்துவிட்டு, தம் முடைய பரிவாரங்களோடு மிக்க ஆடம்பரத் துடன் தம் எதிரியாகிய பஸராவின் தலைவரை நேரில் சந்திக்கச் சென்ருர்,
பல நாட்கள் பிரயாணம் செய்தபிறகு இவர் லைலாவின் தந்தையினுடைய மலைப்பிரதேச வாசஸ்தலத்தை அடைந்தார். இவருக்கு விசேஷ உபசரனை எதுவும் அளிக்கப்படவில்லையாயினும்

Page 18
30
லைலாவின் தந்தை இவரை அவமரியாதையாக நடத்தவில்லை. அராபியர்கள் அனைவரிடமும் பொதுவாக இருந்துவரும் விருந்தோம்பும் குணம் லைலாவின் தந்தையினிடம் நிறைய இருந்தது. ஆனல் இவர் சிறிது முரட்டு சுபா வம் கொண்டவராக இருந்தார். மஜ்னுரனின் தந்தை வேறு எவ்விஷயத்தையும் பற்றிப் பேசாது தமது அருமைத் தனயனுக்கு லைலா வைப் பாணிக்கிரணம் செய்து வைப்பதற்கு சம்ம திக்க வேண்டுமென்று தமக்குரிய இறுமாப்பான தொனியில் கோரி நின்ருர் இக்கோரிக்கைக்குச் சம்மதிப்பதால் தங்கள் இருவருடைய குடும் பங்களிடையேயும் இருந்துவரும் பகைமை நீங் கிப் புதிய அன்னியோன்னிய உறவேற்படு மென்பதையும் இக்கோரிக்கைக்குக் காது தாழ் த்தப்படவில்லையாயின் இருவரும் கொடிய யுத் தத்தில் இறங்கவேண்டி ஏற்படுமென்பதையும் இவர் தெளிவாக எடுத்துரைத்தார். இக்கோ ரிக்கை எவ்வளவு அகந்தையுடன் செய்யப் பட்டதோ அவ்வளவு அகந்தையுடன் நிராகரிக் கப்பட்டது. 'நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்தி வெகுதூர்ம் பிரயாணம் செய்கிறது; உம்முடைய மைந்தன் பைத்தியம் கொண்டிருக்கிருன்; முதலில் அவனைச் சொஸ்தம் செய்துவிட்டுப் பிறகு என் சம்மதத்தை நாடுவீராக’ என்று லைலாவின் தந்தை கூறினுர். இக்கூற்று மஜ்னுர னின் தந்தைக்குக் கோபத்தையும் ஏமாற்றத் தையும் உண்டுபண்ணியது.

јII
lu
பஸராமீது எமனின்
யுத்தப் பிரகடனம்
கைஸின் தந்தை மிக்க பெருமையும் ஆக்ரோஷ மும் உடையவர். இதற்கேற்ப இவர் சிறந்த யுத்தவீரராகவும் பராக் கிரம சா லியாக வும் இருந்தார். லைலாவின் தந்தை தமக்களித்த பதில் தமக்கு அவமரியாதை செய்வதாகும் என்று இவர் கருதலானர். இவ்வித அவமானத்தை இவரால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. பஸராவுக்கும், எமனுக்கு மிடையிலுள்ள பகை மை நீங்கி அந்நியோந்நிய உறவேற்படுவதற்கும், லைலாவைத் தன் மைந்தனுக்கு மனைவியாகச் செய்வதற்கும் இவர் மனப்பூர்வமான முயற்சி செய்தார். நல்ல நோக்கத்தோடு இவர் நீட்டிய சிநேகப் பான்மையான கை யுத்தத்தில் மாட்டி வைக்கப்பட்டது. தமது கண்களில் கோபத் தணல் பறக்கும் தோரணையில் இவர் ஒருவித திடசித்தம் கொண்டவராய் த ம் மு  ைட ய பரிவாரங்களோடு பஸராவைவிட்டு வெளியேறி ஞர். பஸ்ராவின் வானத்தில் யுத்த மேகங்கள் குழுமின; இடிகள் முழங்கின. பஸ்ராவின்மீது பழி தீர்த்துக்கொள்வதற்காகப் படையெடுத்

Page 19
32
துச் செல்லவேண்டு மென்ற நோக்கத்தோடு இவர் தமது மாளிகைக்குத் திரும்பினர்.
ஆயினும், கைஸின் தந்தை யுத்த எற்பாடு கள் செய்வதைச் சிறிது காலத்துக்கு ஒத்திப் போட வேண்டியதாயிற்று. இவர் திரும்பி வருகையில் தம் மாளிகையில் கைஸ் இருக்க வில்லை. ஜைத், கைஸை மக்காவுக்கு ஹஜ் செய் வதற்காக அழைத்துச் சென்று இருப்பதாகப் பிறகு கேள்வியுற்ருர். ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஸம்ஸம் கிணற்றில் நீர் பருகுவதன் மூலம் கைஸின் துன்பங்கள் அகன்று விடுமென்று ஜைத் நினைத்தான் போலும்.
'ஹாஜராவையும் இம்மாதரசியின் புதல்வரை யும் காப்பாற்றுவதற்காக வரண்ட பாலைவனத் திலிருந்து கிளம்பிய அப் பரிசுத்த கிணற்றின் நீர் எனது புதல்வனின் ம ன க் கோளாறை நிச்சயமாகக் குணப்படுத்துமென்று நினைக்கி றேன். நானும் அதனைத் தொடர்ந்து சென்று இப்பரிசுத்த ஆலயத்தில் சிரஞ்சாய்த்து வணங்கு வேன்; நானும் அப் பரிசுத்த கிணற்றிலிருந்து நீர் அருந்துவேன். ஆகவே, ஒரு வேளை எனது அருமை மைந்தன் பூரண சுகத்தை அடைந்து விடுதல் கூடும்" என்று கைஸின் தந்தை தமக் குள்ளேயே கூறியவாறு கஃபாவுக்குப் பரிசுத்த யாத்திரை செய்யப் புறப்பட்டார்.

33
பல சமயங்களில் நாம் நினைத்தவாறு நிகழ்வதி ல்லை இப்பொழுது கைஸின்தந்தை நினைத்ததற்கு நேர் முரணுகக் காரியம் நடப்பதை நாம் காண் கின்ருேம். இவர் மக்கமாநகரை அடைவதற்கு இன்னும் இரண்டுதினப் பிரயாணம்தான் பாக்கி யிருந்தது. இவர் தமது திரளான பரிவாரங் களோடு சென்றுகொண்டிருக்கையில் அப்பாலை வனப் பிரதேசத்திற்கு அரசராக இருந்துவந்த நெளபல் என்பார் இவரை வந்து சந்தித்தார். கைஸின் தந்தை வருவதை ஏற்கனவே கேள்வி யுற்றிருந்த நெளபல், பாலைவனப் புலிகளே போன்ற தமது போர் வீரர்கள் புடைசூழ வாயு வேகமாக அத்திறந்த வெளியில் அரபிக் குதிரை களின்மீது அமர்ந்து வந்துகொண்டிருந்ததனல் அலை அலையாகப் புழுதி கிளம்பிக் கொண்டிருந் ததைக் கண்ட கைஸின் தந்தை எதிரிகள் வருவ தாக நினைத்துப் போருக்கு ஆயத்தமானுர், ஆனல் இவர்களுக்குத் தலைமை வகித்துவந்த நெளபல் முகமன் கூறியது கைஸின் தந்தைக்கு வியப்பாக இருந்தது. இவர் சிநேக முறையில் சந்திக்க வந்திருக்கிருர் என்பதை இவர் சடுதியில் விளங்கிக் கொண்டார்.
பாலை வ ன த் தி ல் வெகு விரைவாகப் பிரயாணஞ்செய்த நெளபல் தமது அழகிய
3

Page 20
34
திடகாத்திரமுள்ள குதிரையின் கடிவாளத் தைப் பிடித்துத் திடீரென நிறுத்தினராதலின் அங்கிருந்த மணலும் கூழான் கற்களும் வெகு தூரம்வரை எறியப்பட்டன.
நெளபல்:- "உங்களை நான் அறிவேன்; தாங்கள் தான் எமனின் தலைவர்.இப்பாலைவனத்தில் நான் சந்தித்த மஜ்னுானின் தந்தையல்லவா நீங்கள்? உங்களுக்கு நான் வாழ்த்துக் கூறுகின்றேன். இறக்கும் தறுவாயில் துன்புற்றுக்கொண்டிருந்த தங்கள் புதல்வனுக்கு நான் உதவி புரிந்திருக் கிறேன். நான் இவ்வாலிபரின் கதையைச் கேட்டுள்ளேன். ஓ ! எமனின் வள்ளலே! நீங்கள் விரும்புவீர்களாயின் நான் உங்களுக்கும் மஜ்னு னுக்கும் உதவியாக நின்று பஸ்ராவின் தலை வருக்கு எதிராகப் போர் புரிவேன். அப்பழுக் கற்ற மனதையுடைய இவ் வழகிய வாலிபரின் பரிதாபகரமான நிலையைக் கண்டு எனதுள்ளம் துயரடைகின்றது. காதல் பீடையால் கரைந்துரு கும் உமது அருமை மைந்தரைக் காப்பாற்று வதற்கு நாம் திடசித்தமான நடவடிக்கை ஏதா வது எடுத்துத்தான் ஆகவேண்டும்’
கைஸின் தந்தை- "ஒ நெளபல் ! உமக்கு நான் வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களுடைய பெயரை நான் அறிந்திருக்கிறேன். தாங்கள் இப்பாலைவனத்தைச் சார்ந்தவர். தங்களுடைய

35
வீரப் பிரதாபங்களையும் தாராளச் செய்கை களையும் நான் கேள்வியுற்றிருக்கிறேன். என் மைந்தனைத் தாங்கள் தங்கள் விடுதியில் வைத் திருப்பதாகக் கூறுகின்றீர்களா? பரிசுத்த யாத் திரைக்காகப் புறப்பட்டுச் சென்ற என் புதல் வன் எவ்வாறு தன் கடமையை மறந்துவிட்டான் என்பதை என்னல் அறிய முடியவில்லை. இப் புனித ஆலயத்தில் நான் அவனைச் சந்திக்க வேண்டுமென்ற நோக்கத்துடனேயே புறப்பட்டு வந்திருக்கிறேன்."
நெளபல்:- "ஐயோ பரிதாபம்! இப்பாதையில் இவன் மூர்ச்சையுற்று வீழ்வதை எனது வீரர் கள் கண்டார்கள். இவ்வீரர்கள் இவனருகே வந்தபொழுது இவன் லைலா லைலா !” வென்று புலம்பிக் கொண்டிருந்தான். எனது வீரர்கள் இவனை என் இல்லத்திற்குக் கொணர்ந்தார்கள். அவன் இடைவிடாது இயம்பிவரும் லைலா லைலா" என்ற தொனியினலும் நான் கேள்வி யுற்ற இவனின் அரை குறையான கதையின லும் இவன் தங்களுடைய மைந்தன் மஜ்னுான் என்பதை அறிந்து கொண்டேன். ஒ எமனின் தலைவரே! காதலையும் அழகையும் பற்றிய கதை இப்பாலைவனத்தில் வெகு தூரம்வரை பிரயா ணம் செய்கிறது."

Page 21
36
கைஸின் தந்தை:- "நெளபல்! அவ்வாறயின் நீர் என்ன ஆலோசனை கூறுகின்றீர்?"
நெளபல்-தங்களுடைய புதல்வரின் நன்மைக் காக, நானும் நீங்களும் பஸ்ராவின் தலைவரிடம் நேரில் சென்று லைலாவைக் கைஸ"க்கு மணம் செய்துவைக்கச் சம்மதிக்குமாறு ஒர் கண்டிப்பான வேண்டுகோளை இவரிடம் சமர்ப்பிப் போம். இதற்கு இவர் சம்மதிக்க வில்லையாயின் நாம் வீரம் செறிந்த வாள்முனையினுல் பஸரா வை வெற்றிகொள்வோம். இப்பாலைவனத்தி லும் இதற்கு அப்பாலும்கூட நான் தங்களு டைய நன்மைக்காகப் போரிடுவேன். நமது கோரிக்கைக்கு இ வ ர் இணங்குவாராயின், நானும் தாங்களும் இவருடன் சிநேகப்பான்மை யில் சமாதானமாக வாழ்வோம். இவ்வித நிலைமை ஏற்படுமாயின் தங்களிஷ்டப் பிரகாரம் நாம் ஆளும் பிரதேசங்களைச் சிநேகக் கயிற் றினுல் பிணைத்து வைக்கலாம். இதற்குமேல் நிபந்தனைகள் ஏதுமில்லை"
கைஸின் தந்தை- "ஒ நெளபல்! உமது அன்பிற்காகவும் என்மீதும் எனது மைந்தன் மீதும் நீர் செலுத்தும் அனுதாபத்திற்காகவும் நான் என்ன கைம்மாறு செய்தல் சாலும் நான் உம்மைப் பூரணமாக நம் பு வ தோ டு நான்

37
உமது ஆலோசனையையும் ஏற்றுக் கொள்கின் றேன். நீர் இப்பொழுது எனது தூதராக பலரா வின் தலைவரிடம் சென்று லைலாவை என் புதல் வ னு க் கு வி வா கம் செய்து  ைவ ப் பதற்குச் சம்மதிக்கவேண்டும் என்ற நமது கண் டிப்பான கோரிக்கையை அவரிடம் சமர்ப்பியும். இக்கோரிக்கைக்கு இவர் இணங்கவில்லையாயின் நாம் பஸராமீது யுத்தம் தொடுப்பது நிச்சயம் என்று இறுதி எச்சரிக்கை செய்யும். நான் உம் மைத் தொடர்ந்து வருவேன். அவர் லைலாவை நமக்கு அளிக்கச் சம்மதிக்கிருர் என்ற நற்செய் தியோடு நீர் திரும்புவீராயின் எல்லாம் சுமுக மாக முடியும்; நாம் அன் போடும் ஆசியோடும் நீட்டும் சிநேகக் கரத்தை இவர் உதறித்தள்ளி விடுவாராயின் உமது ஆலோசனைக்கு ஏ ற்ப நாம் பஸராமீது யுத்தம் தொடுப்போம். நீர் திரும் புகையிலேயே யுத்தப் பிரகரடனம் செய்து விடலாம். நான் எவ்வித நிபத்ந்னையும் விதிக்க விரும்பவில்லை. உம்முடைய விருப்பம்போல் நிபந்தனைகள் செய்துகொள்ளலாம். இதற்குமேல்
எடுக்கவேண்டியுள்ள நடவடிக்கைகளுக்குத் தூது செல்வதற்கு உம்மிடமும் எம்மிடமும் விரைந்து செல்லத்தக்க குதிரைவீரர்கள் இருக்கிருர்கள்’’
இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் நெளபல் தமது குதிரையைத் தட்டிவிட்டார். நெளபல் பாலைவனத்தில் தோன்றிய பாராட்டத்தக்க

Page 22
38
தளபதியாகவும் யுத்த வீரராகவும் இருந்தது போன்று இவரின் குதிரையும் சமயத்திற்கு ஏற்றவாறு கடமையாற்றுவதற்குக் கற்றிருந்தது. நெளபல் தமது குதிரையை இயக்கியவுடன் அது வேகமாகச் சென்று ஆங்கிருந்த மணற் குன்றின்மீது ஏறி நின்றது. இங்கு நெளபல் தமது குதிரையின் மீது அமர்ந்தவாறு தமது வீரர்களில் சிலருக்கு ஏதோ கட்டளை விடுத்தார். உடனே ஆறு படைகள் பாலை வ ன த் தி ன் நானுபக்கங்களுக்கும் சென்று ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைன்னியங்கள் ஓர் குறித்த இடத்தில் கூட வேண்டுமென்ற உத்தரவை அறி வித்தன. இதே சமயத்தில் கைஸின் தந்தையும் எமனிலுள்ள தமது சைன் னியங்களுக்கு அவ சரக் கட்டளைகள் அனுப்பிவைத்தார். பிறகு நெளபல் ஒர் பலம் பொருந்திய குதிரைப் படையுடன் பஸராவை நோக்கிப் பிரயாணமா னர். தாம் எமனுக்கு அனுப்பிய தூதர்கள் திரும்பி வரும்வரை கைஸின் தந்தை காத் திருந்தார்.

சடுதியில் தோன்றிய யுத்த மேகமும் விடுதியினுள் வருந்திய வனிதையும்
ஒருபக்கம் யுத்த முரசு கொட்டப்படுகின்றது. மறுபக்கம் லைலா மலைப்பிரதேச மாளிகையில் பெருந் துன்பத்துக்கும், துயரத்துக்கும் இலக் காகி இருந்தாள். லைலாவின் தந்தையினுடைய மனதை முற்றும் கவர்ந்திருந்த இப்னு ஸ்லாம் இவ்வணங்கைத் தனக்கு விவாகம் செய்துவைக்க வேண்டுமென்று இடைவிடாது வற்புறுத்தி வந்தான். லைலாவின் தந்தையும் தன்னுடைய புதல்வியிடம் இவ் விஷயத்தை அடிக்கடி கூறி இவளின் சம்மதத்தைப் பெறுவதற்கு முயன்று வந்தார். ஆணுல் லைலா இவ்வாலோசனைக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தாள். லைலாவின் கண்ணிரும், கம்பலையும் இவளின் முரட்டு சுபாவங்கொண்ட தந்தையின் மன தைக்கூட உருகச் செய்துவிட்டன. ஆகவே இவர் இப்னுஸ்லாமை நோக்கி 'அவள் இன் னும் போதிய வயதை அடைந்து விடவில்லை; இன்னும் சிறிது காலத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். காலம் செல்லச் செல்ல முட்டுக் கட்டைகளும் நீங்கிவிடும்' என்று கூறலானர்.

Page 23
40
இப்னு ஸலாம் லைலாவின்மீது கண் வைத்தி ருந்ததே போல் லைலாவின் தந்தை இவ்வழகிய வாலிபத் தலைவனிடம் கண் வைத்திருந்தார். ஏனெனில் இவ்வாலிபன் மிக்க செல்வம் பொரு ந்திய பிராந்தியங்களைத் தன்னுடைய கையின் கீழ் வைத்திருந்தான். மேலும் ஆயிரக்கணக் கான யுத்த வீரர்களைக்கொண்ட பல படைப் பிரிவுகளையும் வைத்திருந்தான். இத்தோடு இவன் கவர்ச்சியை அளிக்கும் ஆஜானுபாகு வாகவும் இருந்தான். ஆனல் தன்னுடைய அருமைப் புதல்வி விரும்பாத ஒருவனை இவ ளுக்கு வரணுக வரச் செய்வதனல் இவளின் வாழ்க் கையே பாழாகிவிடும் என்பதை இவர் சிறிதும் லட்சியம் செய்தாரில்லை. லைலா சரியாக உணவு உட்கொள்ளாமலும் வெளியிடங்களுக்குச் செல் லாமலும் உலக வாழ்க்கையிலேயே வெறுப்புக் கொண்டிருந்தாள் என்பதை இவர் அறியாதிருந் தது துரதிர்ஷ்டவசமானதாகும். லைலா தனது தந்தையின் மாளிகையில் இரவையும் பகலையும் கழித்துவந்தாளேயன்றி தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை அறியாதிருந்து வந்தாள். இராக் காலங்களில் காட்சியளிக்கும் நகஷ்த்தி ரங்களும் வான வெளியில் சஞ்சரிக்கும் மேகக் கூட்டங்களும் தான் இவளின் கவனத்தை ஈர் த்திருந்தன. "எவரையும் விவாகம் செய்து

4.
கொள்வதைவிட நான் ஒர் கன்னிப் பெண். ணுகவே மரணமடைவேன்; அந்தோ பரிதாபம்! மஜ்னுரன் என்னைவிட அதிசயமாகவே தனது தேக சுகத்தையும், சந்துஷ்டியையும் இழந்து விட்டான்' என்று இரவு வேளைகளில் நசுஷ்த் திரங்களை நோக்கியவாறு லைலா தனக்குள்ளே யே கூறிக்கொள்வாள்.
வாழ்க்கையில் எவ்வித சுவையுமற்றிருந்த லைலாவுக்கு தன் வெண் புருக்கள் பெரிதும் ஆறுதலை அளித்துவந்தன. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. இருப்பிடம் மாறியதன் பயனுய் தன் அருமைப் புருக்களோடு விளை யாடும் பாக்கியத்தைக் கூட இவள் இழந்து விட்டாள். "அப்பாலுள்ள மரத்தில்' தன்
புருக்கள் பத்திரமாக இருக்கட்டு மென்று கருதி லைலா இவைகளை தன் மாளிகைச் சேவ கர்களின் கண்காணிப்பில் விட்டுவந்திருந்தாள். அம்மரத்தில் இப்பறவைகள் உல்லாசமாக விளை யாடினவேயன்றி தூரப்பிரதேசம் சென்றிரு ந்த தன் எஜமானியின் துயரை அறியவில்லை. இப்பறவைகளில் ஒன்று தன் அருமைக் காத லனிடமிருந்து நிருபம் கொணர்ந்ததிலிருந்து இவைகள் மீது லைலா மிக்க அக்கரையும் அன் பும் செலுத்திவந்தாள். இவைகளை யாரேனும் தன்னிடம் கொணர்ந்து சேர்ப்பார்களா

Page 24
42
வென்று யோசித்துக்கொண்டிருக்கையில் அம் மலைப் பிரதேச விடுதியின் ஒர் மூலையில் கட் டப்பட்டிருந்த புலி உறுமியது இவளின் கவன த்தை ஈர்த்தது. தன்னை வளர்த்துவரும் அபிஸி னிய அடிமைச் சேவகனுக்கல்லாது வேறு எவ ருக்கும் பணியாதிருந்துவந்த இப் புலியினல் புருக்களைப் போன்று காதல் பாஷை பேசவோ அல்லது வேறுவித வேடிக்கையை அளிக்கவோ முடியாதிருந்தது. அதிர்ஷ்டவசமாக லைலாவுக்கு ஒர் கிளி கிடைத்தது. லைலாவின் அடிமைப் பெண் ஒருத்தி ஒரு தினம் இப்பறவையைத் தனது எஜமானிக்குத் தந்துவிட்டு ‘என்னைக் காதலிக்கும் எனது சிநேகிதன் இதை பக்கத் திலிருக்கும் காட்டில் வைத்துப் பிடித்துவந் தான்; என்னிடம் தாங்கள் கொண்டுள்ள அன்பிற்காக இதை உங்களுக்கு அளிக்குமாறு வேண்டிக்கொண்டான்" என்று கூறினுள்.
இப்பறவை தனக்குக் கிடைத்தது ஒரு பெரும் பாக்கியமென்று ஏகாந்த வாழ்க்கையிலிருந்து வந்த லைலா நினைத்தாள். தான் பேசும் வார்த் தைகளைக் கேட்டு இவைகளை இக்கிளி உச்சரிக்க முனைவதைக் கண்டு லைலா சந்தோஷம் கொண் டாள். இக்கிளிக்கு லைலா ஒரேயொரு வார்த் தையை நன்ருகக் கற்றுக் கொடுத்தாள். ‘மஜ் னுான்' என்பதுதான் இவ்வார்த்தையாகும்.

43
இவ்வார்த்தையை லைலாவின் கிளி நன்ருக உச் சரிக்கவாரம்பித்தது. லைலா இப்பறவையைத் தன் கரத்தில் அமரச் செய்துவிட்டு அது இடை விடாது "மஜ்னுான் மஜ்னுரன்" என்று கூறிக் கொண்டிருப்பதை மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருப்பாள். லைலாவின் தோளில் உட் கார்ந்துகொண்டு மிருதுத் தொனியில் இவ்வினி மையான வார்த்தையை இப்பறவை மீண்டும் மீண்டும் மஜ்னுரன் மஜ்னுரன் மஜ்னுரன்’ என்று பல்லாயிரக்கணக்கான முறைகளில் பகர்ந்து கொண்டே இருக்கும். லைலாவின் உலக இன்ப மெல்லாம் இவ்வார்த்தையில்தான் பொதிந்தி ருந்தன. இதைக் கேட்டுக்கொண்டிருக்கையில் லைலாவின் இதயம் இவளின் மார்பை விட்டு அகன்று மஜ்னுரனைக் கண்டுபிடிப்பதற்காகப் பாலைவனத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் ஒய் வின்றி அலைந்து திரியும்.
ஒரு தினம் மாலை வேளையில் லைலா இவ்வாறு தனது இருதயத்தைப் பாலைவனமெல்லாம் அலைந்து திரிய விட்டிருக்கையில் நெளபல் தன் னுடைய யுத்த வீரர்கள் புடைசூழ இவளின் மாளிகையின் முன் கோஷமிட்டுக் கொண்டிருந் தார். 'இப்பொழுதே நான் லைலாவின் தந் தையைக் காணவேண்டும்; அவர் வெளிவரா திருப்பாராயின் நான் இவ் வெளிவாசலைத்

Page 25
44
தகர்த்துக்கொண்டு உள்ளே செல்வேன்' என்று கூறிக்கொண்டு நெளபல் பளபளவென மினுங் கிக் கொண்டிருந்த தமது வாளைச் சுழற்றிஞர். லைலாவின் தந்தை பரபரப்போடு வெளியில் வந்தார்.
மாலைப் பொழுதின் சூரியன் பிரகாசம் பொருந் திய தனது நானவிதக் கதிர்களை வீசி அம்மலைப் பிராந்தியம் பூராவையும் பொன்னிறமாகச் செய்துகொண்டிருக்கையில் நெளபலும் லைலா வின் தந்தையும் ஒருவருக்கொருவர் தீப்பொறி பறப்பதே போன்ற, காரசாரம் பொருந்திய கடுமையான சொற்பிரயோகங்களை மாறி மாறி உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். இவ் வார்த்தைப் போர் சிறிது நேரம்தான் நீடித் திருந்தது. இவர்களை விட்டுப் பிரியும் தறுவா யிலிருந்த கதிரவன் மேலும் சிறிது தாழ்ந்து தன் சாளரத்தில் நின்று உற்றுநோக்கிக் கொண் டிருந்த லைலாவின் வாடிய முகத்தைப் பிரகா சிக்கச் செய்ய எத்தணிக்கையில் இவர்களின் கோபாக்கினியைக் கக்கும் சம்பாஷணையும் முடி வுற்றது. இதன் பிறகு ஒரு கூடிண நேரமேனும் அங்கு சுணங்காது நெளபல் தனது குதிரை வீரர்களோடு பஸராவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த கைஸின் தந்தையினுடைய படை களைச் சந்திப்பதற்காகப் பாய்ந்து சென்றர்.

45
தொடு வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த சூரியனுக்கும் தனக்குமிடையிலுள்ள பாலைவன வெளியில் குதிரைகள் விரைந்து செல்கையில் இவைகளின் குளம்புகளினல் கிளப்பப்பட்ட புழு திப் படலங்களை லைலாவின் தந்தை பிரமிப் போடு பார்த்துக்கொண்டிருந்தார். இப்புழுதி அலைகளினுfடே சடுதியில் ஒரு திடீர் யுத்தம் தோன்றப் போகிறதென்பதை இவர் உணர்ந்து கொண்டார்.
இப்னு ஸ்லாமின் ராஜ்யம் லைலாவின் தந் தையினுடைய மலைப் பிரதேசத்தை அடுத்தி ருந்தது. லைலாவைத் தனக்கு விவாகம் செய்து வைக்கப் போவதாகக் கூறியதை ஒட்டி நெளபல் போர்க்கோலம் பூண்டு சென்றிருப்பதையும் உடனடியாக யுத்தம் தோன்றப் போகிறதென் பதையும் அறிந்த இப்னு ஸலாம் லைலாவின் தந்தைக்கு ஆயிரம் யுத்த வீரர்களைக் கொண்ட ஒர் படையைக் கொடுப்பதற்கு முன்வந்தான். லைலாவின் தந்தை இப்படையை ஆவலோடு ஏற்றுக்கொண்டார். ஆனல் இப்னு ஸ்லாமிடம் மேலும் சில ஆயிரம் யுத்த வீரர்கள் இருந் தார்கள். அன்று இராப்பொழுது பூராவும் மலைப் பிரதேச மாளிகையைச் சுற்றி யுத்த ஏற்பாடு கள் பரபரப்போடு செய்யப்பட்டு வந்தன. மறு தினம் மதியத்துக்கு முன் பெருவாரியான துருப்

Page 26
46
புகள் அங்கு குழுமியிருந்தன. இவைகளோடு இப்னு ஸலாமின் துருப்புகளும் வந்து சேர்ந்து கொள்வதைக் கண்ட லைலா வின் மனம் திடுக் கிட்டது. பலவிடங்களிலும் யுத்த வீரர்கள் திரண்டுகொண்டிருப்பதை லைலா ஜன்னல் வழி யே பார்த்துக் கொண்டிருந்தாள். லைலாவின் கண் பார்வை எட்டும் தூரம்வரை பாலைவனத் தை ஊடுருவிக் கொண்டிருந்தது. வெகுதூரத் தில் ஒரு பெரும் படை வரும் வேகத்தினல் கிளப்பப்படும் அலை அலையான தூசி மேகங்கள் பரவுவதையும் லைலா கண்டாள். ஆனல் கூண் டில் அடைக்கப்பட்ட பறவையே போன்று எது வும் செய்யச் சக்தியற்றவளாய் தனது விடுதி யினுள் வருந்திக் கொண்டிருந்தாள் இவ்வுனிதை. "ஐயோ! என்னுடைய நெஞ்சத்தில் துடித்துக் கொண்டிருக்கும் இருதயம்தான் இதற்குக் கார ணமாக இருக்கிறது; நான் எனது தந்தையிடம் பகூடிம் பாராட்டுகின்றேன். நான் எனது மஜ் னுரனைக் காதலிக்கின்றேன். தலைவிதிதான் இவர் களில் ஒருவர் பக்கம் என்னைச் சாய்த்து வைக்க வேண்டும்" என்று லைலா பிரலாபிக்கலானள்.

பஸராவின் படுதோல்வி
தலைவிதிதான் தன்னுடைய நிலைமையை நிர் ணயிக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டி ருந்த லைலாவின் உள்ளம் உறுதியற்ற நிலையி லிருந்தது. தலைவிதி எண்ணிலடங்கா ஏமாற். றங்களையும் சகிக்கவொண்ணுத அதிர்ச்சிகளையும் கொணர்கிறதென்பதையும் அறிந்து கொள்வ தற்கு இவ்வணங்கு போதிய அனுபவம் பெற். றிருக்கவில்லை. ஒரு பக்கத்தில் மஜ்னுரனின் தந்தையுடையவும் நெளபலுடையவும் படைக ளுக்கும், மறுபக்கத்தில் தனது தந்தையின் துருப் புகளுக்கும் இப்னு ஸலாமுடைய துருப்புகளுக் குமிடையில் நடை பெற்றுக்கொண்டிருந்த கோர யுத்தத்தினுல் கிளப்பப்பட்ட ஒசை லைலாவின் காதைச் செவிடுபடச் செய்வதாக இருந்தது. குதிரைகளின் மீதும் ஒட்டகங்களின் மீதும் இருந்துகொண்டு யுத்த வீரர்கள் ஒரு பகுதியி னரை மறுபகுதியினர் ஆவேசமாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள் வீரா வே சத்துடன் போராடிக் கொண்டிருந்த சிப்பாய்கள் தங்க ளுடைய குதிரைகளிலிருந்தும் ஒட்டகைகளிலி ருந்தும் மடிந்து வீழ்ந்து கொண்டிருந்தார்கள்.

Page 27
48
தவறிய அம்புகளுக்கு இலக்கான குதிரைகளும் ஒட்டகைகளும் கதறிக்கொண்டு மண்மீது சாய் ந்து வீழ்ந்தன. மாலைப்பொழுதும் மறைந்து இராப்பொழுது அண்மித்துக் கொண்டிருந்தது. லைலாவின் மனம் நம்பிக்கைக்கும் அவநம்பிக் கைக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருக்கை யில் இப்னு ஸ்லாமின் படைகள் சீர்குலைந்து ஓடுவதை இவள் கண்டாள் உறுதியோடு போரி டும் நெளபலுடையவும் மஜ்னுரனின் தந்தை யினுடையவும் படைகளுக்கு முன் தன்னுடைய தந்தையுடையவும் இப்னு ஸலாமுடையவும் படைகள் நின்று பிடிக்க முடியாது சீர்குலைந்து ஒடுகின்றனர் என்பது இப்பொழுது தெளிவாகி விட்டது. சிதைந்து கலைந்து போயிருந்த இவ் விரு படைகளும் மற்றேர் முறையும் தங்களை ஒன்றுசேர்த்துக் கொண்டு போர்புரிந்தனர். ஆனல் சிறிது போழ்தைக்குள் இவர்களுள் பெரும்பாலோர் உயிர் நீத்தனர். மீதியிருந்த வர்கள் ஒட்டம்பிடித்தார்கள். பின்வாங்கிய இவர்கள் லைலா இருக்கும் மாளிகையின் எல்லைக் குள் பிரவேசித்து வெளி வாயிலைத் தாளிட்டுக் கொண்டார்கள். வெற்றி முழக்கம் செய்து கொண்டு முன்னேறிய படைகள் இவ்வாயிலைத் தகர்த்துக்கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். ஆகவே இந்த யுத்தத்தில் பஸரா படுதோல்வி

49
யடைந்தது. சரணுகதி நிபந்தனைகளை அறிவிப்பு தற்காக மஜ்னுரனின் தந்தை ஒரு தூதுகோஷ் டியை அனுப்பிவைத்தார். என்ன சம்பாஷணை நடைபெறுகிறதென்பதைக் கேட்பதற்காக லைலா தான் நின்றுகொண்டிருந்த சாளரத் துக்கு வெளியே தலையை நீட்டினுள். சிறிது நேரமாக எதுவும் கேட்கவில்லை. ஆனல் திடீ ரெனத் தனது தந்தை தோல்வியைக் கூடப் பொருட்படுத்தாது துணிச்சலான தொணியில் பேசவாரம்பித்த ‘நான் எனது புதல்வியை உங்களிடம் ஒப்படைக்கவில்லையாயின் நீங்கள் அவளை எடுத்துச் செல்லப் போவதாகவா கூறு கின்றீர்கள்? அவ்வாறு செய்யக் கூடுமேயாயினும் அவளை நீங்கள் உயிரோடு கொண்டு செல்ல மாட்டீர்கள். நான் இப்பொழுது எனது கரத் தை உயர்த்திச் சைக்கினை செய்வேனுயின் அவள் உடனேயே கொல்லப்பட்டு விடுவாள். நான் பூரணமாகத் தோல்வியடைந்திருப்பது உண் மையே. ஆனல் இன்னும் எனது சேவகர்கள் எனது வார்த்தைக்கு மரியாதை செய்கிருர்கள், நான் உத்தரவு பிறப்பிப்பேனுயின் அவள் உயிர் இழந்த பிண்டமாக இருப்பதை நீங்கள் காண் பீர்கள். நீங்கள் இஷ்டப்பட்டால் அப்பொழுது
4.

Page 28
50
அவளை எடுத்துச் செல்லலாம்" என்று தீர்மான மாகக் கூறி முடிப்பதைக் கேட்டாள்.
இவ்வார்த்தைகளைக் கேட்ட மஜ்னுானின் தந்தை பெரிதும் கலக்கமடைந்துவிட்டார். இப் படிப்பட்ட குரூரச் செயல் ஏதும் புரிந்துவிட வேண்டாம் என்று இவர் லைலாவின் தந்தையை வேண்டிக் கொண்டார். "ஒ லைலாவின் தந்தை யே! இவ்விஷயத்தை ஆலோசனை செய்து முடிப் பதற்காக நான் ஒரு நாள் தவணை தருகின் றேன். இதில் இரண்டுவித நிபந்தனைகள் இருக் கின்றன. எங்களுக்கிடையே அன்னியோன்னிய உறவும் சினேகப்பான்மையும் நிலவுவதற்கு ஏது வாக லைலாவை எனது மைந்தனுக்கு விவாகம் செய்துவைக்க நீர் சம்மதிக்க வேண்டுமென்பது ஒன்று. இதற்கு இணங்க உமது மனம் இடம ளிக்கவில்லையாயின் உமது புதல்வியை நீர் வைத் துக்கொண்டு உம்முடைய ராஜ்யம் பூராவையும் எமக்கு அளித்துவிட வேண்டு மென்பது மற் ருென்று. நான் உம்மை எனது ஆளுகையின் கீழிருப்பதற்கு அனுமதிப்பேன்' என்று கூறி விட்டு மஜ்னுானின் தந்தை விடைபெற்றுக்
கொண்டார்.
லைலாவின் தந்தை மீண்டும் படை திரட்டுவ தைத் தடுப்பதற்கு நெளபலும் எமன் அரசரும்

5,
எவ்வித முன்னெச்சரிக்கையோ அல்லது முன் னேற்பாடுகளோ செய்யாது இவர்கள் இருவரும் தங்கள் படைகளோடு பஸராவைவிட்டு வெளி யேறினர்கள். தாங்கள் மறுதினம் உதயத்தில் திரும்பி வருகையில் தங்களது நிபந்தனைகளில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கத் தோடு இவர்கள் வாபஸ் பெற்றுச் சென்ருர்க ளேயன்றி தங்களது முன்னெச்சரிக்கை இன்மை யால் பேராபத்து விளையும் என்பதை இவர்கள் சிறிதேனும் சிந்தித்தார்களில்லை.
இப்பொழுது இப்னு ஸலாம் ஒரு புதிய சூழ்ச் சித் திட்டத்தை தயார் செய்திருந்தான். இவன் பாலைவனத்தின் பல பகுதிகளுக்கும் வேகமாகச் செல்லக்கூடிய குதிரை வீரர்களைப் பொறுக்கி எடுத்து அனுப்பி இருந்தான். மஜ்னுரனைக் கண்ட இடத்தில் கொன்றுவிட வேண்டுமென்று இவன் இவ்வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். இவ் வீரர்களில் ஒருவனுக்கு மாத்திரம் வேறுவிதக் கட்டளை பிறப்பிக்சப்பட்டிருந்தது. மற்ற வீரர் கள் மஜ்னுனைக் கொலைசெய்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கையில் இவ்வீரன் திரும்ப வந்து 'தம் பாதுகாவலர்களிடமிருந்து தப்பிச்சென்ற மஜ்னுான் பாலைவனத்தில் மரணமடைந்து கிடக் கிருன்" என்று எல்லோரிடமும் அறிவிக்குமாறு கட்டளை இடப்பட்டிருந்தான். மஜ்னுான் கொல்

Page 29
52
லப்படவில்லையாயினும் இந்த வதந்தியினல் தனக்குச் சாதகம் விளையக் கூடுமென்று இப்னு ஸலாம் நினைத்திருந்தான். மஜ்னுரன் மரண மடைந்துவிட்டான் என்ற சமாசாரத்தினுலும் பஸரா மன்னருக்கு மீண்டும் படைக்ளை அனுப்பி உதவி செய்ய முன்வருவதனுலும் லைலாவின் சம்மதத்தைப் பெறுவதற்கு ஏதுவேற்படும் என்று இவன் நினைத்திருந்தான்.
வாகை மாலை சூடிய எமன் படைகளும் நெளப லின் வீரர்களும் லைலாவின் விடுதியை விட்டுச் சிறிது தூரம் செல்லுகையில் "மஜ்னுான் மரண மடைந்துவிட்டான், மஜ்னுன் மரணமடைந்து விட்டான்" என்று இப்னு ஸ்லாமின் தூதன் உரத்த குரலில் கூவிக்கொண்டு வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். எல்லோரும் இப் பொய் வதந்தியை நம்பினர்கள். மஜ்னுானின் தந்தை இதைக் கேட்டு கண்ணிர் வடித்தார். இதைக் கேட்ட நெளபலின் மனமும் உருகி விட்டது. “இப்பொழுது லைலாவால் நமக்கு ஆகவேண்டுவது எதுவுமில்லை. நாளைய தினம் சூரியோதயத்தின்போது இங்கு திரும்ப வந்து நாம் நமது நிபந்தனைகளை விதிக்க வேண்டும்" என்று நெளபல் கூறினர். இச்சமாசாரத்தைக் கேட்டு வருந்தாதவர்கள் இப்னு ஸலாமும் லைலாவின் தந்தையுமாகும். ஒரு நிமிடத்தை

53
யேனும் வீஞக்காது இப்னு ஸ்லாம் லைலாவின் தந்தையை அணுகி "தங்கள் புதல்வி என்னை மணப்பதற்கு இப்பொழுது எவ்வித முட்டுக் கட்டையும் இல்லை; அவள் ஒரு பெண்தானே, உயிரோடிருப்பது மரணமடைவதைவிட விரும் பத்தக்கதென்பதை இவள் உணர்ந்துகொள்ள வேண்டும். யுத்தத்தில் நான் தங்களுக்கு உதவி புரிந்தேனேயாயினும் தோல்வியடைந்துவிட் டோம். தங்களுடைய புதல்வி என்னை மணக்க சம்மதிக்கிருள் என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் நான் நேற்று அளித்த யுத்த வீரர்களே போன்று மும்மடங்கு அதிகமான வர்களை தங்களுக்குத் தந்துதவ முடியும். அப் பொழுது ஆயிரக்கணக்கான யுத்த வீரர்கள் என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து போர் புரிவதைக் காண்பீர்கள். இம்மாளிகையைப் பாதுகாத்துப் போரிடுவதற்காக என் படைக ளில் ஒரு பிரிவை இங்கு நிறுத்தி வைப்பேன். மற்ருெரு பிரிவு பாலைவனத்தில் பதுங்கி நின்று எமன் படைகளைப் பின்புறமாகத் தாக்கும். இவ்வாறு நாம் உமது எதிரிகளைப் பாக்குவெட் டியில் சிக்கிய பொருளே போன்று நசுக்கிவிட லாம். பாலைவனப் புயலில் சிக்கிய துணுக்கு களே போன்று இவர்கள் சிதறடிக்கப்படுவார் கள். தாங்கள் இப்பொழுதே தங்களுடைய

Page 30
54
புதல்வியினிடம் சென்று அவளின் நாவினின்று உச்சரிக்கப்படும் "சம்மதம்’ என்ற வார்த்தை தங்களை அழிவினின்று காப்பாற்றுவதுடன் தங் களது அந்தஸ்தையும் உன்னதமடையச் செய் யும் என்பதை அவள் உணரச் செய்யுங்கள்’ என்று கூறினன்.
இப்னு ஸ்லாம் கூறியவைகளை எல்லாம் லைலா வின் தந்தை மனப்பூர்வமாக ஆதரித்தார். அவ் வமயமே இவர் தமது புதல்வியிடம் சென்று மஜ்னுரன் மரணச் செய்தியை அறிவித்தார். இவர் சென்ற சிறிது நேரத்துக்குள்ளாக அந் தப்புரத்திலிருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டமையால் மஜ்னுரன் மரணமடைந்துவிட் டான் என்ற பொய் வதந்தியை லைலா நம்பி விட்டாள் என்பதை உணர்ந்து இப்னு ஸ்லாம் சந்தோஷமடைந்தான். லைலாவைச் சாந்தப் படுத்துவதற்காக இவளின் தந்தை நீண்ட நேர மாக முயற்சி செய்தார். மாண்டு மண்ணுக் கிரையாகியுள்ள மஜ்னூனுக்காக வருந்துவதணு லும் அழுவதனலும் எவ்விதப் பிரயோஜனமும் இல்லையென்றும் இப்னு ஸ்லாமை விவாகம் செய்து கொள்வதற்குச் சம்மதிப்பதனல் பஸரா

55
காப்பாற்றப்படுவது மாத்திரமன்றித் தன் தாய் நாடு ஒரு மாபெரும் ராஜ்யமாக உன்னதமடை யும் என்றும் கூறினர். மேலும் ஒரு புதல்வி தனது தந்தைக்காகச் செய்ய வேண்டியுள்ள கடமைகளை இவர் வெகுவாக எடுத்துரைத்தார். தனது தேசம் அந்நியருக்கடிமையாகி தன் குடும் பமும் ராஜ்யமும் அழிக்கப்படவிருக்கும் இப் பேராபத்தான தருணத்தில் நிலைமையைச் சமா ளிப்பதில் தனது தந்தைக்கு லைலா தன்னல் இயன்றதையெல்லாம் செய்ய வேண்டுவது ஒரு புதல்வியின் முதல்தரமான கடமையாகும் என் றும் தனது கோரிக்கைக்குச் சம்மதிப்பதனல் இப்பொழுது முன்னிற்கும் இப்பேராபத்து முற் முகத் தவிர்க்கப்பட்டு விடுமென்றும் இவர் மன் முடும் தொனியில் வாதாடினர். மஜ்னுரன் உயி ரிழந்துவிட்டான் என்று கருதி ஓயாது கண்ணிர் வடித்துக் கொண்டிருந்த லைலா தனது தந்தைக் காக இத்தியாகத்தைச் செய்துதான் ஆகவேண் டுமென்ற தீர்மானத்துக்கு வந்தாள். ஆகவே லைலா தனது தந்தைக்காகச் செய்ய வேண்டி யுள்ள கடமையை உத்தேசித்தும் இவரின் நிர்ப் பந்தத்துக்காளாகியும் வஞ்சக வலை வீசிய இப்னு

Page 31
56
ஸலாமுக்கு மனைவியாவதற்கு வேண்டாவெருப் புடன் சம்மதமளித்தாள். தன்னுடைய நோக் கம் நிறைவேறிய சந்தோஷத்தில் லைலாவின் தந்தை விரைந்து வெளிச் சென்ருர். என்னே தலைவிதி இருந்தவாறு தம்மைப் பிராணுபத்து அண்மித்துக் கொண்டிருக்கிறதென்பதை இவர் அறிந்துகொள்ளவில்லை.

Z
அதிகாலையில் மூண்ட அகோர யுத்தமும் மதிகேட்டினுல் மாண்ட மன்னர்களும்
லைலாவின் சம்மதம் கிட்டிவிட்டதென்பதை இவளின் தந்தை மூலம் அறிந்துகொண்ட இப்னு ஸ்லாம் மறுதினம் உதயத்தில் தோன்றவிருந்த யுத்தத்திற்கு ஆகவேண்டிய ஏற்பாடுகளை ஜரூ. ராகக் கவனிக்கலானன். இவன் உடனே தனது தளபதிகளை அழைத்து எவ்வளவு படைகள் தயாரில் இருக்கின்றன என்று விசாரித்தான். நாலாயிரம் யுத்த வீரர்கள் தயாராக இருக், கிருரர்கள் என்று இவர்கள் பதில் கூறியதைக் கேட்டு *ளதிரிகள் ஏறக்குறைய மூன்ருயிரம் சிப்பாய்களின் பலத்தோடு தாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது; அவ்வாருயின் நாம் நம் விரோதிகளைவிடப் படைபலத்தில் ஓங்கி யிருக்கிருேம்; இதுவுமன்றி நாம் இவர்களுக்குப் பேராச்சரியத்தை உண்டுபண்ணத்தக்க யுத்த தந்திரத்தை கையாளப் போகின்ருேம் என்பதை இவர்கள் அறியவில்லை" என்று இப்னு ஸலாம் கூறினன். பிறகு இவன் இரகசியத் தூதுசெல் லும் பொருக்கியெடுக்கப்பட்ட தனது ஆட்க ளில் சிலரை அழைத்து தனது ஜெனரல்களிடம்

Page 32
58
சேர்ப்பிக்குமாறு சில கட்டளைகளை விடுத்தான். இக்கட்டளைகளின் பிரகாரம் அப்பொழுது தயா ரிலிருந்த நாலாயிரம் வீரர்களில் அரைப்பகுதி யினர் இராவேளையில் எவரும் அறியாத முறை யில் மலைகளுக்கு மறைவில் லைலாவின் தந்தை யினுடைய மலைப்பிரதேச மாளிகைக்குப் பக்கம் குழுமி அதிகாலையில் போருக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் எஞ்சிய மற்ருேர் அரைப்பகுதியினர் பாலைவனத்தின் பல பாகங் களிலும் எவரும் அறிந்துகொள்ள முடியாத முறையில் மணற்குன்றுகளின் பக்கங்களில் பதுங் கிக்கொள்ள வேண்டுமென்றும் உத்தரவிடப் பட்டிருந்தார்கள். மலைப்பிரதேச விடுதியின் முன் அகோர யுத்தம் நடக்கையில் பாலைவனத் தில் பதுங்கிக் கொண்டிருக்கும் படைகள் திடும் பிரவேசமாய் வந்து எதிரிகளைப் பின்புறமாகத் தாக்க வேண்டுமென்பது இப்னு ஸலாமின் கட் டளை. இவ்வாறு இவர்களின் மீது பின்புறமி ருந்து திடீர் தாக்குதல் நடத்துவதனல் எதிரி களின் பலத்தைக் குலைத்து இவர்கள் எங்கும் பின்வாங்காதவாறு வளைந்து கொள்ளுவதோடு இவ்வொரே தாக்குதலோடு விரோதிகளைப் பூர ணமாகத் தோற்கடிக்க வேண்டுமென்பது இப்னு ஸ்லாமின் தந்திரமாக இருந்தது.

59
இப்னு ஸலாம் அனுமானித்தவாறுதான் மறு தினம் துருப்பு நடமாட்டங்கள் இருந்தன. பாலை வனக் குன்றுகளை எல்லாம் தனது எழில்மிக்க நானவிதக் கதிர்களால் கொளுத்திக்கொண்டு கதிரவன் வெளித்தோன்றிய பொழுது ஆங் காங்கு இரகசியமாக அமர்த்தி வைக்கப்பட்டி ருந்த இரண்டாயிரம் போர் வீரர்களும் மலை களுக்கு மறைவிலிருந்த இருளில் பதுங்கிக் கொண்டிருந்தார்கள், எமன் அரசரிடமிருந்து பஸ்ராவுக்கு ஒரு தூதன் சென்றதை இப்போர் வீரர்கள் கவனித்தார்கள். ஆனல் அங்கு சென்று கொண்டிருந்த தூதனுக்கோ அல்லது எமன் வாசிகளுக்கோ அல்லது நெளபலின் ஆட்களுக் கோ இத்துருப்புகள் இங்கு நிறுத்திவைக்கப் பட்டிருக்கும் விஷயம் தெரியாது போய்விட் டது. பொழுது புலரும் வேளையில் லைலாவின் தந்தையை அடைந்த தூதன் சரணுகதி நிபந் தனைகளை அறிவித்தான். மஜ்னுரன் மரண மடைந்துவிட்டான் என்ற செய்தியை இப்னு ஸலாம் பரப்பியபொழுதே மஜ்னுரன் எங்கோ மாயமாக மறைந்துவிட்டதன் பயனுய் எமன் வாசிகளுங்கூட இவன் உயிரிழந்துவிட்டான் என்றே கருதியிருந்தார்களாதலின் இப்பொழுது லைலாவைப் பற்றிய நிபந்தனை எதுவுமின்றிச் சரணுகதி நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்

Page 33
60
டுமென்று இத்தூதன் கூறினன். இதைக்கேட்ட லைலாவின் தந்தை மிக்க அசட்டையோடு சிரிக் கலானர். இப்பொழுது இவர் தமது படைப் பலத்தைப் பற்றி பெரிதும் இறுமாப்படைந்தி ருந்தார். "அவர்கள் என்னுடைய ராஜ்யத் தைப் பெற்றுக்கொள்ள விரும்புவார்களாயின் இதை பலாத்கார யுத்தத்தினல்தான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை எமன் அரசரிட மும் அவருடைய நண்பனகிய பாலைவனத் திரு. டனிடமும் போய்ச்சொல். பஸ்ரா மன்னன் வீரத்தோடு உயிர் வாழ்வதையோ அல்லது யுத்தக்களத்தில் மடிவதையோதான் விரும்புகி ருர் என்பதை அவர்களிடம் அறிவிப்பாயாக" என்று லைலாவின் தந்தை மிக்க ஆக்ரோஷத் துடன் பதில் கூறினர்.
அத்தூதன் இத்துணிச்சலான பதிலை எமன் அரசரிடம் கொண்டுபோய்ச் சேர்த்தான். இப் பதிலைக்கேட்ட மஜ்னுரனின் தந்தை பெரிதும் ஆச்சரியமடைந்தார். இவ்விதத் துணிவுக்குரிய காரணம் பற்றி இவர் பலரிடமும் பலவிதக் கேள்விகளைக் கேட்கலானர். ஆனல் இவரால் எவ்விதத் தீர்மானத்துக்கும் வர முடியவில்லை. ஆனல் சடுதியில் தீர்மானம் செய்வதிலும் விரைந்து காரியம் செய்வதிலும் கைதேர்ந்த பாலைவனப் புலியான நெளபல் பஸராமீது ஒரு

6
திடும் பிரவேசமான தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார். நேருக்கு நேர் நின்று வீரமாகப் போராடுவதைப் பற்றிச் சிந்தித்தார்களேயன்றி இரகசிய ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது தந்திரோபாயங்களைப் பற்றியோ இவர்கள் எதையும் நினைக்கவில்லை.
அதிகாலையில் லைலாவின் தந்தையினுடைய மலைப்பிரதேச மாளிகையின் முன்னிருந்த திறந்த வெளியில் எதிர்பார்க்கப்பட்ட அகோர யுத்தம் மூண்டுவிட்டது. முதலில் பஸராவின் படைக ளும் எமன் துருப்புகளோடு கூடிய நெளபலின் படைகளும் கைகலந்தன. யுத்தம் நிதானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அங்கு தயா ராக வைக்கப்பட்டிருந்த இப்னு ஸ்லாமின் இரண்டாயிரம் வீரர்களும் பஸராப் படைக ளோடு சேர்ந்துகொண்டனராகையால் பஸரா வின் கை ஓங்கியது. இது நெளபலுக்குச் சிறிது அதிர்ச்சியை உண்டுபண்ணியது மாத்திரமின் றித் திடீரெனப் பின்வாங்கிச் செல்லவேண்டி யதும் அவசியமாயிற்று. ஆயினும் நெளபல் தமது படைகளை ஒழுங்கு செய்துகொண்டு மீண் டும் வீராவேசமாகத் தாக்கவாரம்பித்தார். இப் பொழுது எண்ணிக்கையில் ஏறக்குறைய ஒரே வித அளவையுடைய இரு படைகளும் மிக்க ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும் போர்புரிந்

Page 34
62
தனர். பெருந் திகிலோடு லைலா தனது சாள ரத்திலிருந்தவாறு இந்தப் பயங்கர யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். யுத்தம் சிறிது போழ்தைக்கு இப்பக்கம் சாதகமாகவும் சிறிது போழ்தைக்கு அப்பக்கம் சாதகமாகவும் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டிருப்பதை லைலா கவனித்தாள். ஆனல் அதோ பாருங்கள்! இப் பொழுது நெளபலும் மஜ்னுானின் தந்தையும் ஒர் அகோரமான தாக்குதலை ஆரம்பிக்கிருர்கள்; இதனல் யுத்தம் முற்றும் எதிரிகளுக்குச் சாதக மாகிக் கொண்டிருக்கிறதென்பதை இப்னு ஸ்லாம் கவனித்தான். அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இரத்தக் களறி அதன் உச்சஸ் தானத்தை அடைந்திருந்தது. மஜ்னுானின் தந் தையும் நெளபலும் தங்களுடைய எதிரிகளை மிக்க வேகத்துடன் வெட்டி வீழ்த்திக்கொண்டி ருந்தார்கள். இவர்கள் முன்னேறும் வேகம் இன் னும் சிறிது போழ்தைக்கு நீடிக்குமாயின் இவர் கள் வெற்றியடைவது நிச்சயம் என்று லைலா தீர்மானத்துக்கு வருகையில் பாலைவனத்தின் வெகு தூ ர த் தி ல் ஏதோ ஒருவித இயக் கம் தோன்றியதனல் இவளின் கவனம் அங்கு சென்றது. நிலைகுலைந்துகொண்டிருக்கும் தனது படைகள் பின்வாங்கிவிடாதவாறு உற்சாகமூட்
டுவதற்கு லைலாவின் தந்தை பகீரதப்பிரயத்த

63
னம் செய்தாரேயாயினும் இவரின் படைகள் நம்பிக்கையிழந்து பின்சென்றுகொண்டிருந்தன என்பதை லைலா கண்டாள். ஆனல் அதோ தூரத்திலிருந்து அலை அலையாக வந்துகொண் டிருப்பதென்ன? பாலைவனத்திலிருந்து வாயுவேக மாக ஏவிவிடப் பட்டிருப்பதென்ன? என்றெல் லாம் இவள் தன்னைக் கேட்டுக்கொண்டிருந் தாள். பாலைவனத்தில் கிளப்பப்பட்ட ஒரு மாபெரும் புழுதி அலை சமீபித்துக்கொண்டிருந் தது. இவ்வலை மேலும் சமீபத்தை அடைகை யில் இதனூடே ஆயுதம் தாங்கிய திரளான குதிரை வீரர்கள் அதிவேகமாக வந்துகொண்டி ருந்தார்கள் என்பது தெளிவாயிற்று. ஒரு சக்தி வாய்ந்த குதிரைப்படை இப்பொழுது எதிரி களைப் பின்புறமாகத் தாக்குவதற்குப் பாய்ந்து வந்தது. இவர்கள் வந்த வேகத்தின் பயனப் குதிரைகளின் குளம்புகளினல் கிழப்பப்பட்ட பா பெரும் சப்தத்தினுல் பூமியே அதிர்ச்சிய டைந்தது. ஒரு சூரு வளிக் காற்றே போன்று இவர்கள் எதிரிகளின் மீது பாய்ந்து தாக்கினர் கள். ஒரு சிறிது வேளைக்குள் இவர்கள் தங்கள் எதிரிகளை ஹதம் செய்துவிட்டார்கள். புயலில் சிக்கிய துரும்புகள் எவ்வாறு நிலைத்து நிற்க முடியும்? ஆகவே முறியடிக்கப்பட்ட எமன் படைகளும் பாலைவனப் போர்வீரர்களான நெள

Page 35
s64
பலின் துருப்புகளும் பெரும்பாலும் சிதைக்கப் பட்டுவிட்டார்கள். எஞ்சியவர்கள் ஒட்டம்பிடித் தார்கள். கைஸின் தந்தை சரணடைய மறுத்து இறுதிவரை போராடி யுத்தக்களத்திலேயே உயிரிழந்தார். எதிரிகளால் சிறைபிடிக்கப்படுவ தையோ அல்லது தோல்வியில் உயிர்வாழ்வ தையோ விரும்பாத நெளபல் தம்மைத் துரத் திக்கொண்டு வந்த திரளான குதிரை வீரர் களைப் பார்த்து நகைத்தார். குதிரைச் சவாரி செய்வதில் திறமை வாய்ந்திருந்த இவர் வேகத் தில் முதல் ஸ்தானம் வகித்து வந்த தமது அருமந்த குதிரையின் உதவியினல் வெகுதூரம் வரை எதிரிகளைத் தாண்டிச் சென்றிருந்தார். தப்பிச் செல்வது இவருக்குச் சாத்தியமாக இருந்ததேயாயினும் இவர் தமது வீரர்களை இழந்துவிட்டு இவ்விதத் தோல்வியோடு உயிர் வாழ விரும்பவில்லை; தமது குதிரை பூரண வேகத்தில் ஒடிக்கொண்டிருக்கையிலேயே இவர் தம்மை மாய்த்துக் கொண்டார்.
லைலாவின் தந்தை யுத்தத்தில் வெற்றியடைந் தாரேயாயினும் கடுமையான காயமடைந்திருந் தார். அந்த வெற்றித்தின இரவிலேயே இவர் தமது புதல்வியை இப்னு ஸலாமுக்கு மணம் செய்து வைத்தார். நிர்ப்பந்த விவாகம் நடை பெற்ற அதே இரவில் லைலாவின் தந்தை யுத்

65
தத்தில் பட்டிருந்த கொடிய காயத்துக்கு இரை யாகி மரணமடைந்தார். மதிகேட்டினல் மடிந்த மன்னர்களின் ராஜ்யங்களையெல்லாம் சுவீகரித் துக்கொண்டு இப்னு ஸலாம் ஒரு மாபெரும் மன்னனகத் திகழ்ந்தான். தான் செய்த சூழ்ச் சிகளின் வெற்றியைக் கண்டு இவன் மகிழ்ச்சி யடைந்தானேயன்றித் தன் உயிரைக் கொள்ளை யிட்டுச் செல்வதற்கு எமன் தன்னை அண்மித் துக் கொண்டிருக்கிருன் என்பதை இவன் உணர வில்லை. இந்த ராஜ்யத்துக்கு ராணியாக விளங் கிய லைலா தனது காதலனை இழக்க நேரிட்ட மையால் செடியிலிருந்து பிடுங்கப்பட்ட ரோஜா புஷ்பத்தைப் போன்று வாடிக்கொண்டிருந்தாள். வசந்த காலத்தின் செந்நிற ரோஜா மலரைப் போன்ற வசீகரத் தோற்றத்துடன் ஜொலித் துக்கொண்டிருந்த இவ்வணிதை இப்பொழுது கோடைகாலத்தின் வெண்ணிற ரோஜாவைப் போன்று வாடிவதங்கிப் போயிருந்தாள்.

Page 36
8
விவாக பந்தத்தில் மாட்டிவைக்கப்பட்ட லைலா மஜ்னுரன் மரணமடைந்துவிட்டான் என்றே கருதியிருந்தாள். இவ்வித எண்ணத்தில் வருடங் கள் சில கழிந்துவிட்டன. இப்னு ஸலாமுக்கு எதிரியாக எவரும் முளைக்கவில்லையாதலால் இவன் சமாதானமாக ஆட்சிபுரிந்து வந்தான். லைலா சம்பந்தப்பட்டவரை இவனின் ஆட்சி அமைதியற்றதாக இருந்தது. தன் பறவைக ளோடு விளையாடுவதுதான் லைலாவுக்கு முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. லைலாவின் தந் தையினுடைய மாளிகைதான் இப்னு ஸ்லாமின் தலைமைக் காரியாலயமாகவும் இருட் பிடமாகவும் இருந்தது. லைலா இங்கு தன் இரு வெண்புருக் களோடும் துரதிர்ஷ்டம் வாய்ந்த மலைப்பிரதேச மாளிகையில் வசிக்கும்பொழுது தனது பணிப் பெண்ணுல் அளிக்கப்பட்ட கிளியோடும் காலம் கழித்து வந்தாள். ஒருபொழுதும் மறக்க முடி யாத தனது இழந்த காதலைப் பற்றி இறும்பூ தெய்துவதில் இப்பறவைகள் இவளுக்கு உதவி புரிந்து வந்தன. அந்தக் கிளிதான் இவளின் அந்தப்புரத்தில் ஆடசி புரிந்து வந்தது. இது
மஜ்னுனின் வருகை

67
இவளுக்கு மதிக்கவொண்ணுத ஐஸ்வரியமே. போன்றிருந்தது. ஏனெனில் இது இவளுக்குத் தன் காதலனின் பெயரைச் சதா உச்சரித்து ஞாபகமூட்டிக்கொண்டிருந்தது. இக்கிளி சதா *மஜ்னுரன், மஜ்னுன்’ என்று உச்சரித்துக் கொண்டிருப்பதைக் கேட்பதில் லைலா ஆனந்தம் கொண்டாள். மஜ்னுரனிடம் மிக்க விசுவாசம் கொண்டிருந்த ஜைத் தனது எஜமானத் தேடு வதில் பாலைவனத்தைச் சுற்றிச் சுற்றி நீண்ட நாட்களைக் கழித்துவிட்டு இப்பொழுது லைலா வின் முதன்மையான சேவகளுக அமைந்திருந் தான்.
ஒரு தினத்தில் ஜைதுக்கு ஒருவரிடமிருந்து அவசரச் செய்தியொன்று வந்திருந்தது. ஒரு குறித்த இடத்துக்கு வர வேண்டுமென்று ஜைது க்கு அழைப்பு வந்திருந்தது. ஜைத் அவ்விடம் சென்றபொழுது இவன் அடைந்த ஆச்சரியத் துக்கும் ஆனந்தத்துக்கும் அளவேயில்லை. நீண்ட காலத்துக்கு முன்னே மரணமடைந்துவிட்டதா கக் கருதி ஜைதும் லைலாவும் வெகுவாகத் துக் கப்படுவதற்குக் காரணமாக இருந்த மஜ்னுரன் பூரண சுகத்தோடும் சுவாதீனமாகவும் அங்கு அமர்ந்துகொண்டு மிக்க அன்புடன் முகமன் கூறினன். மஜ்னுான் ஒரு வெளிநாட்டு வியா பாரியைப் போன்று மாறுவேடம் பூண்டு வந்

Page 37
68
திருந்தானேயாயினும் இவனை அறிந்துகொள் வதில் ஜைதுக்குக் கஷ்டமேதும் இருக்கவில்லை. கைஸின் நன்மைக்காகத் தன் வாழ்நாள் அனைத் தையும் செலவுசெய்துள்ள ஜைத் தனக்கிடப் படும் எந்தக்கட்டளையையும் நிறைவேற்றுவதா கக் கூறினன். இருவரும் மிக்க அன்னியோன் னியமாகச் சம்பாஷித்தபின் ஒருவித ஏற்பாட் டுடன் விடைபெற்றுக் கொண்டார்கள். இவர் கள் மீண்டும் சந்திப்பதற்குப் பாலைவனத்தின் எல்கையொன்று குறிக்கப்பட்டது. லைலாவிடம் ஜைத் இந்தச் சந்திப்பைப் பற்றியோ அல்லது மஜ்னுரனின் வருகையைப் பற்றியோ எதுவும் கூறவில்லை. அன்றியும் மஜ்னுரனுக்கு அளிப்ப தற்காக ஜைத், லைலாவின் புருக்களில் ஒன் றைக் கைப்பற்றிச் சென்ருன். முன்னெருமுறை நடந்தது போன்ற சம்பவம் மீண்டும் நடை பெறுமென்று இவன் எதிர்பார்த்தான். இவர் கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாலைவன எல்கைக்கு ஜைத் வந்து சேர்ந்த பொழுது மஜ்னுானின் ஆனந்தம் அளவுகடந்த தாக இருந்தது. இவர்கள் சந்தித்தது சூரியஸ் தமன வேளையாக இருந்தமையால் பாலைவனத் தில் தோன்றும் அந்திப் பொழுதின் அழகிய காட்சிகள் மஜ்னுரனின் ஆனந்தத்தைப் பன் மடங்கு அதிகரிக்கச் செய்தன.

69
மாலையில் வழக்கம்போல் லைலா தனது அந் தப்புரத்தின் ஏகாந்த அறைக்குச் சென்ற பொழுது தனது புருக்களில் ஒன்று காணப் படவில்லை என்பதை அறிந்தாள். இது இவ ளுக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணியது. ஒரு வேளை அகஸ்மாத்தாக இது 'அப்பாலுள்ள மரத்தில் அமர்ந்திருக்கக் கூடுமென்றும் மற்றப் புரு அங்கு செல்லுகையில் அதுவும் கூட வந்து விடுமென்றும் நினைத்துத் தன் கையிலிருந்த புருவை வெளியில் அனுப்பினள். ஆனல் இது இவள் நினைத்ததற்கு மாருக தனிமையாகத் திரும்பி வந்தது. இச்சம்பவம் இவளுக்கு ஆச் சரியத்தை உண்டுபண்ணியது மாத்திரமன்றிப் பழைய ஞாபகங்களையும் நினைவூட்டியது. சிந்த னையில் ஆழ்ந்தவளாய் இவள் சாளரத்தின் அரு கில் அமர்ந்தாள். ‘மூன்று வருடங்களுக்கு முன் எனது அருமைப் புருக்களில் ஒன்று காணுமற் போய்விட்டது; ஆனல் சிறிது நேரத்துக்குள் ளாக என் அருமை மஜ்னுரனிடமிருந்து ஒரு காதற்கடிதத்துடன் திரும்பி வந்தது. இதன் பிறகு நான் காதலர்களைக் கூட்டுவிக்கும் காண்க நீர் அருவியில் வைத்து எனது உயிர்த்தோழ னைச் சந்தித்து ஆனந்தமாய்க் காலம் கழித்து வந்தேன்; ஆ! என்ன துரதிர்ஷ்டம்; ஆனந்த அதிர்ச்சியினல் எனது உள்ளத்தைக் குளிரச்

Page 38
70
செய்த அக்காலம் என்னிடமிருந்து விடைபெற் றுச் சென்றுவிட்டது. மஜ்னுரன் மரணமடைந்து விட்டான். நான் மற்ருெருவரின் மனைவியாக இருக்கிறேன்" என்றெல்லாம் இவள் நினைக்கை யில் வாடி வதங்கியிருந்த இவளின் அழகிய கன்னங்கள் வழியாக முத்துப் போன்ற கண் ணிர்த்துளிகள் வடிந்துகொண்டிருந்தன. இவ ளின் மனத்துயர் சகிக்க முடியாததாக இருந் தது. சாளர உத்தரத்தின் மீது ஒன்றின் மேல் ஒன்முக வைக்கப்பட்டிருந்த தனது கரங்களின் மீது நெற்றியை வைத்தவாறு இவள் சிறு பிள். ளையைப் போன்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
நீண்ட நேரமாக இவ்வாறு இவள் அசைவற்று இருந்தாள். திடீரென ஒருவித சப்தம் கேட் கவே அழுதுகொண்டிருந்த லைலா தலையை நிமிர்த்தினுள் காணுமற்போன தனது புருவின் கூவுதல்தான் இச்சப்தம் என்பதை இவள் அறிந் தாள். இவ்வொலி எதிரிலிருந்த மரத்திலிருந்து வந்துகொண்டிருந்தது. உடனே தன்னருகே இருந்த புரு அம்மரத்தை நோக்கிப் பறந்து சென்றது. 'நான் உன்னை நீண்ட நேரமாக எங் கெங்கெல்லாமோ தேடினேன்; என்னை விட்டு விட்டு நீ எங்கு சென்றிருந்தாய்" என்று கேட் பது போலிருந்தது, பிரிந்து கூடிய அவ்விரு பற

7
வைகளுடையவும் குலாவுதல். இதைப் பார்த் துக்கொண்டிருந்த லைலா “எனக்கும் இறக்கை களிருக்குமாயின் நானும் என் உயிர்த் தோழ னைத் தேடிப் பறந்து சென்றிருப்பேன்" என்று நினைத்தாள்.
இவள் இவ்வாறு நினைக்கையில் மரத்திலிருந்த இரு பறவைகளும் வந்து லைலாவின் தோள்க ளில் அமர்ந்தன. இதென்ன ஆச்சரியம்! முன் ணுெரு முறை இப்பறவையின் காலில் கட்டப் பட்டிருந்தது போன்று இப்பொழுதும் இதன் காலொன்றில் ஒரு மிருதுவான காகிதச் சுருளை ஒன்று இணைக்கப் பட்டிருப்பதைப் பார்த்து லைலாவின் இருதயம் வேகமாக அடிக்க ஆரம் பித்தது. நடுங்கிக்கொண்டிருந்த தன் விரல்களி ணுல் இவள் அதை அவிழ்த்து அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பதை மிக்க ஆவலோடு வாசித்தாள். இந்த லிகிதம் மஜ்னுானிடமிருந்து வந்திருக்கிறதென்பதை இவள் சந்தேகமின்றி உணர்ந்து கொண்டாள். அவ்வாருயின் இவன் எவ்விதப் பிணியுமின்றி உயிரோடிருக்கிருன்! முந்திய வழக்கம்போல் அன்றிரவு சந்திரன் தோன்றுகையில் காதலர்கள் கூடும் கானக நீரருவியில் வந்து சந்திக்க வேண்டுமென்று இக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

Page 39
72
தன்னுடைய காதலன் பூரண சுகத்துடன் உயிரோடிருக்கிருன் என்ற செய்தியினல் திடீ ரென லைலாவுக்கேற்பட்ட சந்தோஷத்தினுல் இவள் மற்றெல்லா விஷயங்களையும் மறந்து விட்டாள். நடுநிசிவரை இவளின் மனநிலை அமைதியற்றதாக இருந்தது. சந்திரன் தோன் றியதால் இருளடைந்திருந்த பாலைவனப் பிர தேசமெல்லாம் பிரகாசிக்க ஆரம்பித்த வேளை யில் லைலா ஒரு நீண்ட அழகிய அங்கியை அணிந்துகொண்டு சப்தம் செய்யாது கீழ்மாடி யையடைந்தாள். யாரும் காணுதவாறு இவள் மாளிகையின் பின்புற வாயிலொன்றை அடைந் தாள். மிருதுவாக இதைத் தன் பின்புறமாகத் தாளிட்டுக்கொண்டு வெளிச் சென்ழுள். இவள் செல்லுமுன்பாகவே இவளின் இருதயம் மஜ் னுானை நோக்கி விரைந்து சென்றது. அவள் வேகமாக அடிவைத்துச் சென்றுகொண்டிருந் தாள். ஆனல் லைலாவின் மனதில் திடீரென ஓர் உணர்ச்சி தோன்றியது. விரைவாக அடித் துக்கொண்டிருந்த இவளின் இருதயம் திடீரென நின்றுவிடும்போலிருந்தது. இவளின் கண் இருண்டுவிட்டது; தலை சுழலவாரம்பித்தது; காலடி தத்தளித்தது; தரையில் சாய்ந்து வீழ்ந்து விடும் தறுவாயில் ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டு அதன் ஆதரவில் நேராக நின்ருள்.

73
"எனது கணவன், எனது கடமை! கடமைக் காக ஏற்கனவே நான் என்னைத் தியாகம் செய் துள்ளேன். இப்பொழுது நான் இந்த தர்மத் துக்கு எதிராகக் காரியம் செய்யத் துணிவது நியாயமாகுமா? இதன் விளைவு என்னவாகும்? மஜ்னுான் என்னை ஆலிங்கனம் செய்தவுடன் எனது கடமை, எனது கணவன், எனது பிர ஜைகள், எனது தேசம் ஆகியவை அனைத்தை யும் மறந்துவிடுவேன். இது பெரும் பிழையாக முடியும். ஒருமுறை இக்குற்றத்தை இழைத்து விடுவேனயின் ஒருபொழுதும் இதிலிருந்து தப் புவது முடியாது. ஆ1 என்ன துரதிருஷ்டம் இது ஒரு உண்மையான மனைவியின் செய்கை யாகாது!’ என்றெல்லாம் இவள் அக்கிளையைப் பிடித்தவாறு சிந்திக்கலானள். என்ன செய்வ தென்ற தீர்மானத்துக்கு வரமுடியாதவாறு தவித்துக்கொண்டிருந்தாள். ஆனல் இறுதியில் இவளுக்கிருந்த கடமை என்ற உணர்ச்சி வெற்றி பெற்றுவிட்டது. தனது தீர்மானத்தை மாற்றிக் கொண்டு தலைவிதியை ஏற்றுக்கொள்வதென்ற முடிவுக்கு வந்தாள். V
லைலா ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொள்ள மூயன்ருள். பிறகு கனவு காண்பவளே போன்று பெருமூச்சுவிட்டவாறு அழுதுகொண்டே தனது மாளிகையை நோக்கி நடக்கலானள். இவள்

Page 40
74
வெளியில் சென்றதையோ அல்லது திரும்பி வந் ததையோ ஜைதைத் தவிர வேறு எவரும் அறிய வில்லை. அன்றிரவு பூராவும் அவள் துயில்கொள்ள வில்லை. தனது துக்கமேலிட்டினல் இடைவிடாது ஏங்கியேங்கிக் கண்ணிர் வடித்துக்கொண்டே இருந்தாள். பொழுது புலர்ந்தபோதுதான் இவ ளின் அழுகையும் கண்ணிரும் நின்றன. தனது துயரத்தை அடக்கிக் கொள்வது கஷ்டமாக இருந்ததேயாயினும் வேறு எவரும் சந்தேகித்து விடக் கூடாதென்பதை உத்தேசித்துக் கண்க ளைத் துடைத்துக்கொண்டாள்.
மஜ்னுரன் நீண்ட நேரமாக கான கநீரருவியி னண்டை காத்திருந்தானேயாயினும் ஏமாற்ற மடைந்தான். தன் காதலி தன்னைச் சந்திப்ப தற்காக வெளியில் வந்துவிட்டுத் திரும்பச் சென்றுவிட்டாள் என்ற விஷயத்தை ஜைத் இவனிடம் அறிவித்தான். லைலாவின் துரதிர்ஷ்ட நிலையையும் அவள் மஜ்னுரனைச் சந்திக்க முடி யாது போனது பற்றிக் கொண்டுள்ள துயரத் தையும் ஜைத் விரிவாக எடுத்துரைத்தான். தனது உயிரைத் தியாகம் செய்யுமுன் தன்னரு மைக் காதலியை ஒருமுறையேனும் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு மஜ்னுான் மற்றேர் முறையும் மறைந்துவிட்டான்,

பிரிந்து கூடிய காதலர்களும் விரைந்து வந்த வினையும்
தன்னுடைய கடமைக்காகத் தன்னை இரு முறை அர்ப்பணம் செய்த லைலா, மஜ்னுரனைப் பார்க்க முடியாது போனது பற்றி பெருந் துய ரடைந்தாள். இவள் திடசித்தத்தோடு தன்னு டைய மாளிகையை நோக்கித் திரும்பிச் சென் றதே போன்று அளவற்ற ஏமாற்றமடைந்த மஜ்னுான் தூரதேசங்களை நோக்கித் துரிதமாக நடந்தான். ஒருவிதத் துணிவு இவனைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்தது. லைலாவின் காத லினல் கிடைக்கக்கூடிய ஆனந்த பரவசம் இல் லாது போய்விடினும் முன்வரும் வருடங்களில் தன்னுடைய பெருந்துயரேனும் அடங்க வேண் டுமென்று இவனின் உள்ளம் பிரார்த்தனை புரிந்
5gil.
இரண்டு வருடங்கள் கழிந்தன; எதிர்பாரா
தது நிகழ்ந்தது. இப்னு ஸலாம் நோய்வாய்ப் பட்டு படுக்கையில் வீழ்ந்தான். இதன் பயனய் இவன் வெகுகாலம் செல்லுமுன்பாகவே மரண மடைந்துவிட்டான். மூன்று ராஜ்யங்களுக்கு

Page 41
76
மன்னணுகத் திகழ்ந்த இப்னு ஸ்லாமின் மர ணச் செய்தி பல தேசங்களிலும் துரிதமாய்ப் பரவியது. இச்சமயம் ஓர் தூரதேசத்தில் அஞ்சா வாசம் செய்துவந்த மஜ்னுரனின் காதில் இச் செய்தி எட்டியது. இப்பொழுது தான், தன் காதல் களஞ்சியத்தை அடைவதில் எவ்விதத் தடையுமில்லை என்பதை இவன் உணர்ந்தான். ஒரு மாபெரும் சாம்ராஜ்யமும் அதன் ராணியும் இவனை நல்வரவேற்று உபசரிப்பதற்குத் தயா ராக இருந்தனர். எதிர்பாராத முறையில் தனக் குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண் ணிய மஜ்னுரன் தன் குதிரையின் மீதமர்ந்து வாயுவேகமாக அதைத் தட்டிவிட்டான். ஒரு வினுடியையேனும் வீணுக்காது கூடிய விரைவில் பஸராவை அடைய வேண்டுமென்பதுதான் இவனின் அப்பொழுதைய அவாவாக இருந்தது. ஆணுல் மற்ருேர் முக்கிய விஷயத்தைப் பற்றிய எண்ணம் தன்னுடைய மனதில் புகவே, தன் குதிரையின் வேகத்தைத் தளர்த்திக் கொண்டு சாவதானமாகச் சென்ருன், லைலா ஏற்கனவே இருமுறைகள் தன்னைக் கடமைக்காகத் தியாகம் செய்திருக்கிருள். தன் கணவன் மரணமடைந் ததன் விளைவாய் விதவையாக மாறியுள்ள இவள் நான்கரை மாகங்கள்வரை மறைவிலி

77
ருக்க (இத்தா) வேண்டுமென்பது மதக்கட்டளை என்பதையும் இக்கட்டளையை இருவராலும் மீற முடியாதென்பதையும் நினைவிற்குக் கொணர்ந்த மஜ்னுான் மிகவாக வருந்திஞன். இந்த நான் கரை மாதங்களும் இவனுக்கு நான்கரை யுகங் களே போன்றிருந்தன. இவன் இக்காலத்தை மாறுவேடத்தில் கழிப்பதென்று தீர்மானித் தான். லைலாவின் மாளிகையின் வெளிச்சம் தெரியும் தூரத்தில் தன்னுடைய இருப்பிடத் தை அமைத்துக்கொண்டு ஏகாந்தமாக இக் காலத்தை இவன் கழித்து வந்தான். எதிர் பார்த்திருப்பதென்பது மரணத் தை விட க் கொடியதென்று கூறப்படுகின்றது. மஜ்னுரனின் விஷயத்தில் இவ்விஷயம் முற்றும் உண்மையாக இருந்தது. இவனுடைய இப்பொழுதைய நிலை மை இவன் மஜ்னூன் என்று பட்டம் வாங்கு வதற்குக் காரணமாக இருந்த இவனின் ஆரம்ப நிலை மை யை விட மோசமாக இருந்தது. ஆனல் ஆரம்ப உபத்திரவத்தைச் சகித்துக் கொண்டதேபோல் இப்பொழுது தோன்றிய மகத்தான மனக்கிலேசத்தையும் இவன் ஒரு வாறு சகித்துக்கொண்டு தான் மனதிற் கொண் டிருந்த சுவர்க்க வாயிலில் காத்திருந்தான்.
*தான் லைலாவை நேரில் சந்திக்க முடியாதிருப் பினும் தன்னுடைய வருகையைப் பற்றிய செய்

Page 42
78
தியை இவன் ஜைதின் மூலம் அவளுக்கு அறி வித்திருந்தான். ஜைதின் மூலம் லைலா அடிக் கடி மஜ்னுானுக்குச் செய்தி அனுப்பி வந்தாள். ஆனல் இத்தாவின் காலம் சழியும்வரை தன் காதலிக்கு மஜ்னுரன் எவ்விதச் செய்தியும் அனுப் பத் துணியவில்லை. குறித்த நாட்கள் காலா வதியான மறுதினம் ஜைதின் மூலம் லைலா வுக்கு மஜ்னுரன் அனுப்பிய தூதின் மூலம் 'நான் இன்று ம புதியான வேளையில் உன் மாளிகை யில் உன்னை வந்து சந்திக்க விழைகின்றேன்; அல்லது நீ விரும்புவாயாயின் சூரியஸ்தமன மாகி இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு நான் உனக்காகக் காதலர்கள் சந்திக்கும் கானக நீரருவியினண்டை காத்திருப்பேன்" என்று அறிவித்திருந்தான்.
இதற்குப் பதிலாக லைலாவிடமிருந்து சிறிது தாமதித்து வந்த செய்தியில் "மத்தியான வேளை மறைந்துவிட்டது; ஆனல் இன்றைய மாலைப்பொழுது கழிந்த பிறகும் மத்தியான வேளை வரவிருக்கிறது" என்று அறிவிக்கப்பட் டது. இப்பதில் மஜ்னுான் எதிர்பார்த்ததற்கு எதிரிடையாக இருக்கவில்லை.
துரதிருஷ்டம் வாய்க்கப்பெற்ற இக்காதலர் களுக்கு இதுவரை ஏற்பட்ட சோக சம்பவங்

79
களைப் பற்றி வாசகர்கள் பெரிதும் துயரடைந் திருப்பார்கள். ஆனல் நாம் இன்னும் இக்கதை யின் துயரச் சிகரத்தை அடைந்துவிடவில்லை. இதற்கு மேல்தான் இக்கதையின் உண்மையான 'சோகக் கட்டம் கூறப்பட வேண்டியிருக்கிறது.
சூரியஸ்தமனமாகி இரண்டு மணி நேரம் கழிந்த பிறகு மஜ்னுான் காதலர்கள் கூடும் கானக நீரருவிக்குச் சென்று லைலாவுக்காகக் காத்திருந்தான். இதேவேளையில் லைலா முன் போல் கவர்ச்சியைத் தரும் ஆடை ஆபரணங் களை அணிந்துகொண்டு பின்புற வாயில்வழி யாக வெளியில் சென்ருள். இவளின் உள்ளம் புளகாங்கிதம் கொண்டிருந்தது; கண்கள் பிர காசம் பொருந்தியிருந்தன. அப்பொழுது வான த்தில் சந்திரன் இருக்கவில்லை. ஆனல் அன்று இரவு என்றுமில்லாதவாறு நட்சத்திரங்கள் நிறைய இருந்தன. "அதோ பார்! அன்ருெரு இரவில் அழகு மிக்க அணங்காக ஜொலித்துக் கொண்டிருந்த லைலா நீண்டநாட்களுக்குப் பின் பிரகாசம் பொருந்திய முகார விந்தத்துடன் இன்றிரவு நம்மிடம் மீண்டிருக்கிருள். இன்று இவள் இவ்வளவு சுறுசுறுப்பாகவும் சந்துஷ்டி யோடும் இருப்பதற்குக் காரணமென்ன?" என்று கேட்கும் தோரணையில் நட்சத்திரங்கள் லைலா விரைந்து சென்றுகொண்டிருந்த பிராந்

Page 43
80
தியத்தில் அதிக ஒளியை வீசின. தனது தந் தையின் உத்தியான வனத்திலிருந்த அடர்ந்த மரங்களினூடே லைலா விரைந்து சென்றுகொண் டிருந்தாள். அவளின் இருதயம் படபடவென வேகமாக அடித்துக்கொண்டிருந்தது; அவள் விரைந்து செல்லும் வேகத்தில் மூச்சுத் திணர் வதாக இருந்தது. விரைந்து சென்றுகொண்டி ருந்த இவளின் பாதங்கள் ஒடவாரம்பித்தன. அவளின் உயிர் வாழ்க்கையே அவ்விரு பாதங் களின் மீது அமைந்திருப்பதே போன்று காணப் பட்டது. அடுத்துள்ள காட்டின் எல்லையை அடைந்தவுடன் இவள் தனது மார்பின் மீது கைகளைக் கட்டிக்கொண்டு சிறிது போழ்தைக்கு நின்ருள். தான் மஜ்னுரனைச் சந்திக்கும்பொழுது இளைப்பின்றிச் சாவதானமாகப் பேசவேண்டு மென்பது அவளின் அவா. அன்றியும் தான் ஒட்டமாக வந்த விஷயத்தை அவன் அறிந்து கொள்ளக் கூடாதென்று இவள் கருதினுள்
ஆனல் அவள் தன் களைப்பு தீருவதற்கு முன் மீண்டும் ஒடலானள். ஆதலின் அவளின் சுவா சம் மேலும் வேகமாகச் செல்லவாரம்பித்தது. மஜ்னுரனை வெகுநேரம் காக்கவைக்கக் கூடா தென்ற இவளின் கவலைதான் இவளை இவ்வாறு ஒடச் செய்தது. இப்பொழுது லைலா கானக நீரருவியை அடைந்துவிட்டாள். அது மரங்களி

8.
னுாடே அவளுக்குக் காட்சியளித்தது. அந்த நட் சத்திர ஒளியிலுங்கூட அந்த நீரருவி பளபள வெனப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இந் நீரருவியின் திறந்த வெளியின் அருகில் லைலா அமைதியற்றவளாய் நின்றுகொண்டிருந்தாள். அவள் நேர்த்தியாக அணிந்துகொண்டிருந்த ஆடைகள் குலைந்துவிட்டன; அவள் அதிக ஜாக் கிரதையோடு வாரி முடித்துக்கொண்டு வந்தி ருந்த அவளின் தலைமுடி நெகிழ்ந்துவிட்டது; அவளின் மார்பு வெகுவாக விம்மிக்கொண்டி ருந்தது.
ஒரு வினடியேனும் கழிவதற்கு முன் நீரருவி யின் பக்கமிருந்து ஓர் உருவம் விரைந்து வந் தது. லைலா தள்ளாடிக்கொண்டே அவ்வுரு வத்தை நோக்கிச் சென்ருள். இரு காதலர்களும் சந்தித்தார்கள். ஆணுல் வார்த்தைகள் ஏதும் உபயோகிக்கப்படவில்லை. இவர்களின் விழிகள் மாத்திரம் சிறிது போழ்தைக்கு உரையாடின. மிக்க ஆவேசத்துடன் மஜ்னுான் லைலாவை இறு கக் கட்டி ஆலிங்கனம் செய்தான். லைலா தன்னை அறியாமலே ஒருவித ஆனந்தக் கூச்சலிட்டாள்.
காதலுக்குக் காலவரையறை கிடையாதாகை யால் இவர்கள் இருவரும் இவ்வாறு இறுகத்
6

Page 44
82
தழுவிக்கொண்ட வேளை ஒரு நொடி நேரம அல்லது ஆயிரம் வருடங்களாவென்பதை யார் அறிவர்? ஆனல் சூரியாஸ்தமனமாகி இரண்டு மணிநேரம் கழிந்த பிறகு அன்று வந்த அவ் வேளைதான் அவர்களுக்கு மாபெரும் அனர்த்த மாக முடிந்தது. இதுவரை இவர்களைக் காத் திருந்த விதி அன்று தினம் அதிவிரைவில் வந்து விட்டது. வசந்தகால ரோஜா மலரின் இதழ் களே போன்றிருந்த லைலாவின் உதடுகள் தன் உதடுகளில் பதிந்துவிட்ட அதேவேளையில் மஜ் னுான் தன்னுடைய அறிவை இழந்துவிட்டான். அவனுடைய ஆவல்மிக்க உதடுகள் அவளின் விம்மிய உதடுகளில் செம்மையாய்ப் பதிக்கப் பட்டவுடன் லைலா மூர்ச்சையடைந்து உயிரற்ற உருவமே போன்று அவனின் கரங்களில் சாய்ந் தாள். அவன் அவளை விழ விட்டு விட்டு காட் டினுாடே கதறிக்கொண்டு ஓட்டமாகச் சென்று அருகாமையிலிருந்த பாலைவனத்தை அடைந் தான். முன்னெருமுறை செய்ததேபோல் இவன் இப்பொழுதும் இவளின் பெயரைப் பாலைவனத் தின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்துச் சென்றன். **லைலா, லைலா, லைலா" என்று இவன் இடைவிடாது செய்து சென்ற கூச்சலின் எதி ரொலி பாலைவனமெங்கும் பிரதிபலிப்பதாக
இருந்தது. இவனது கதறலைக் கேட்டுக் கரைந்

83.
துருகாத பாபை 'ப் பிராணி எதுவுமிருக்க வில்லை. இவனின் பாதங்களுக்கோ அல்லது நாவிற்கோ ஒய்வென்பது சற்றும் இருக்கவில்லை. இறுதியில் இவன் ஆங்கோர் இடத்தில் மூர்ச்சை யாகி வீழ்ந்து கிடந்தான். இவனது குரலோ சையைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஜைத் இவனைக் கண்டெடுத்துச் சென்றன். பல தினங்கள் இராப்பகலாக மஜ்னுானை அவனது சுய அறிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜைத் பகீரதப் பிரயத்தனங்கள் செய்து வந்தானயி னும் எவ்விதப் பயனும் விளையவில்லை. பல வரு டங்களின் துயரமும், துன்பமும் செய்யமுடி யாத தீதைச் சில விநாடிகளின் ஆனந்தக் களிப்பு அளித்துவிட்டது. அளவை மீறிய ஆனந் தம் வினையாக முடிந்தது. இப்பொழுது மஜ்னுான் பூரணமாகப் பைத்தியம் கொண்டுவிட்டான்.
மூர்ச்சையாகி வீழ்ந்து கிடந்த லைலா உணர்வு பெற்று எழுந்தாள். "எனது மஜ்னுரன் எங்கே?' என்று கூறியவாறு இவள் நாற்புறமும் நோக் கினள். எனினும் மஜ்னுன் காணப்படவில்லை. ஆனல் தன்னுடைய பெயர் இடைவிடாது உச் சரிக்கப்படுவதைக் கேட்டு அங்குமிங்குமாக ஒடி ஞள். இவள் மஜ்னுானை அவ்வனத்தில் தேடிக் கொண்டிருக்கையில் இதுவரை கேட்டுக்கொண் டிருந்த தொணி சிறிது சிறிதாகக் குறைந்து

Page 45
84 இறுதியில் அப்பாலைவன வெளியிலேயே மறை ந்துவிட்டது. பெருத்த ஏமாற்றத்துக்குள்ளான லைலா தனது மஜ்னுானை மற்முேர் முறையும் தன்னிடம் சேர்ப்பிக்குமாறு ஆண்டவனைப் பிரார்த்தித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே தன் மாளிகையை நோக்கிச் சென்ருள்.
ஜைத் அடிக்கடி மஜ்னுரனைப் பற்றியும் அவ னது அழியாப் புகழ்பெற்ற காதலைப் பற்றியும் லைலாவுக்குச் செய்தி அனுப்பி வந்தான். அவன் பூரணமாகப் பைத்தியங் கொண்டிருந்துங்கூட அவனுடைய காதலின் பரிசுத்தத் தன்மை அவனைவிட்டு அகலவில்லை.
லைலாவின் உண்மையான மனத்துயர் இப் பொழுதுதான் வேலைசெய்ய ஆரம்பித்தது. நாட்கள் பல சென்று வாரங்கள் வர வர அவ ளின் அழகிய வதனம் வாட ஆரம்பித்தது. அவளின் கண்கள் குழிவிழுந்தன; அவளின் பிர காசம் பொருந்திய கன்னங்கள் மங்கவாரம்பித் தன. இவளின் தேகம் தினம் தினம் மெலிவ டைந்துகொண்டிருந்தது; இவளின் இணையற்ற சோகம் இவளைச் சோர்வுறச் செவ்தது. இவ ளின் மனமுடைந்துவிடவே இறுதியில் திடீரென மரணமடைந்தாள். மரணத் தறுவாயில் இவள் மஜ்னுரனைப் பற்றியே சதா பேசிக்கொண்டிருந்

85
தாள். இச்சமயம் இவள் அழியாப் புகழ்வாய்ந்த ஒரு காதல் தூதை தன்னுடைய மஜ்னுானுக்கு அனுப்பிவைத்தாள். துரதிருஷ்ட வசத்தால் சொல்லொணுத் துன்பங்களுக்கும் துயரங்களுக் கும் ஆளாய, அழிந்துவிடக்கூடிய ஓர் அழகிய உருவத்தில் இக்காதல் அமைக்கப்பட்டிருந்ததே யாயினும் இது பரிசுத்தமானதென்பதையும் அழியக்கூடாதென்பதையும் லைலா, மஜ்னுர னுக்கனுப்பிய மாண்புமிக்க இறுதிச் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
தனது உயிர் பிரியும் தறுவாயில் லைலா அனுப் பிய செய்தியில் 'அவர் முதன் முதலில் என் னைக் கட்டித் தழுவிய அதே இடத்தில் என்னை அடக்கம் செய்ய வேண்டுமென்று மஜ்னுரனிடம் சொல்லுங்கள்; அத்துடன் இவ்வார்த்தைகளை யும் எடுத்துரையுங்கள் மஜ்னுன் தங்களுடைய கண்களை உயர்த்திப் பாருங்கள்; அதோ இருக் டும் அச்சோலையின் வெளியிடங்களைப் பாருங் கள்; அதோ பாருங்கள் ஆங்கோரிடத்தில், பிர காசம் பொருந்திய சூரிய ஒளியில், ஒரு நீரருவி வானத்தை 7 நோக்கிக் கிளம்பிக்கொண்டிருக் கிறது. அங்கு - அந்நீரோட்டத்தின் அருகே காதலர்கள் ஒருபோதும் மீண்டும் பிரியாதிருக் கக்கூடும் அவ்வழியாத் தன்மை வாய்ந்த" நீரரு வியின் பக்கல் என்னைக் காண்பீர்கள்' என்று

Page 46
86
அறிவித்திருந்தாள். இவ்வார்த்தைகளைக் கூறி முடிக்கையில் லைலாவின் உயிர் அவளின் உடலை விட்டுப் பிரிந்துவிட்டதற்கு அறிகுறியாக அவ ளின் தலை அந்த நீரருவி இருந்த பக்கமாகச் சார்ந்து விழுந்தது. இவளை விட்டுப் பிரிந்த ஆன்மா அழியாப் புகழ்பெற்றுள்ள காதலர்கள் கூடும் அந்த அருவியை நோக்கி விரைந்து சென் றதுபோலும்!
கிழக்கு வானில் கதிரவன் தோன்றுகையில் இரு மனிதர்கள் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். இவர்களில் ஒருவர் பற்றவரின் கையைப்பிடித் துக்கொண்டே ஓடிச் சென்ருர், மற்ருெருவரின் முகத்தோற்றம் அவர் காதலினல் பைத்தியம் கொண்டிருந்தார் என்பதைத் தெளிவாகக் காட் டியது. லைலாவின் செய்தி எட்டியதிலிருந்து மஜ்னுரனின் மனப்புண் பெரிதாகிவிட்டது. கட் டுப்பாட்டுக்குள்ளாகியிருந்த இவன் கானக நீரரு வியை அடைவதற்குத் துடியாய்த் துடித்தான். சமயம் வாய்த்ததும் அவ்விடத்தை நோக்கி வாயுவேகமாக ஒடலானன். ஜைத் அவனைத் தொடர்ந்து சென்று அவன் கைகளைப் பற்றிப் பிடித்துக்கோண்டு ஓடினன். ஆனல் ஆவேசம் கொண்டிருந்த மஜ்னுரன் ஒட்டத்தில் ஜைதைத் தோல்வியுறச் செய்தான். ஜைத் கடுமுயற்சி செய்தும் மஜ்னுானை அணுக முடியவில்லை. இதற்

87
குள்ளாக மஜ்னுான் அக்காட்டில் புகுந்து ஒட லானன். அவன் தன் முன்னிருந்த தடைக் கல்லையோ அல்லது முள்ளையோ பொருட்படுத்த வில்லை. இவன் வெகு சீக்கிரத்தில் நீர்த்துளிகள் துள்ளி விளையாடிக்கொண்டிருந்த அந்த நீரருவி இருக்கும் வெளியை அடைந்தான். அவன் பைத்தியம் கொண்டிருந்தானேயாயினும் லைலா வைத் தான் முதன் முதலில் கட்டித்தழுவிய இடத்தைக் கண்டுபிடிப்பதில் அவனுக்குக் கஷ்ட மிருக்கவில்லை. அங்கு புதிதாக ஓர் சமாதி அமை க்கப்பட்டிருந்தது.
மெலிந்து தளர்ந்து போயிருந்த மஜ்னுன் ஆவேசத்துடனும் ஆத்திரத்துடனும் தப்பி யோடி வந்திருந்தாணுதலின் முற்றும் கலைப்புற் நிருந்தான். அவனது காதலும், சோகமும், பின்தோன்றிய பைத்தியமும் அவனின் உயி ருக்கே உலைவைத்திருந்தன. ஆனல் இப்பொ ழுது அவனது உள்ளத்தில் உதித்திருந்த ஆவேச உணர்ச்சியின் மேலீட்டினல் மஜ்னுான் பூரண பலம் பெற்ற ஒரு புது மனிதனே போன்று காட்சியளித்தான். அவனது தேகம் பூராவிலும் வியர்வை கொட்டியது; அவனது முகம் பயங் கரமாகத் தோன்றியது; அவனின் கண்கள் ಕ್ಲಿಕ್ಹ-: அவனின் தலை சுழன்றது; துக்க மலீட்டால் அவனின் இருதயம் பிளப்பதாக ருந்தது; ஆவேசம் பொங்கி எழுந்தது. "ஓ! லா லைலா! நான் இதோ வருகிறேன்; இதோ வருகிறேன்-உன்னிடம் விரைந்து வருகிறேன். ஆ! உன்னை மறைத்துக்கொண்டிருக்கும் இக்

Page 47
88
கொடிய திரையை நீக்கு. நான் உன்னை அடை யும்வரை ஒளி நிறைந்த இவ்வெளியில் உன் அழகை மறைத்துக்கொள்' என்று உரத்த குர லில் கூறிக்கொண்டே மஜனுான் அந்தச் சமா தியின் மீது வேகமாகச் சாடினன். மறுநிமிடத் தில் அவன் உயிரற்ற பிண்டமாகத் தரையில் சாய்ந்து வீழ்ந்தான். -
மஜ்னுரனின் மறைவைப் பற்றிய துக்கச் செய் தியை அவனியெங்கும் பிரகடனப்படுத்துவதற் காக சூரியன் பூரணப் பிரகாசத்துடன் தோன் றினன். மஜ்னுான் தரையில் சாய்கையில் அங்கு வந்து நின்ற ஜைதின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தோடிக்கொண்டிருந்தது. அப் பொழுது ஆங்கொரு பெரியார் மனித வாழ்க் கையின் அணித்தியத்தையும் அதன் ஏமாற்றங் களையும் விளக்கும் தோரணையில் துயரம் தரும் நீண்ட தொனியில் பாடிக்கொண்டே சென்ருர், தன் வாணுள் பூராவையும் தனது எஜமானின் நன்மைக்காகவே கழித்து வந்த ஜைதுக்கு இக் காட்சி பெருத்த அதிர்ச்சியை அளித்தது. அவ் விருவருடைய காதலின் பரிசுத்தத்தை எடுத் தியம்புவதற்காக அவன் உயிர் வாழ்ந்தான்.
(முற்றிற்று)


Page 48
முஹம்மது லெயின்
I. P. м. м, с,
நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட பிற பட்ட பல்வேறு விஷயங்கள் ப பெயருடன் தொடர்ந்து ( "இஸ்லாமிய தாரகை"யின் பிறகு இப் பத்திரிகையையும் அ. மாசு வாங்கி நடத்தி வந்தார். ஈடுபட்டுள்ள இவர் முன்ஞள் புள்ார்; 1962 முதல் கொழும் துவருவதுடன் சமாதான நீத
 

இவரது தந்தையின் பெயர் மீகஹயட்டகெதற குருஞன் ஸ்லாசுேமுஹம்மதுவிெப்பை, கண்டி மாகாணத்திலுள்ள தஸ்கஹ என்ற கிராமத்தில் 1918 ஏப்ரில் 29 ம் திகதி பிறந்த முஹம்மது ைெயின் பிரபல வர்த்தகரும் எழுத்தா ளரும், சிங்கள சலனப் படத் தயாரிப்பாளரும், ஹெயின்ஸ் தான் படமாளிகையின் உரி மையாளருமாவர்.இவர் முன் னர் "தாருல் இஸ்லாம்" பத்திரிகையிலும் உள்ளூர் பத்திரிகைகளிலும் கட்டுரை கள் எழுதி வந்தார். இலங் இகை வானுெவியில் முஸ்லிம்
கு 1940 முதல் இஸ்லாம் சம்பந்தப் ற்றி மு. ஸெயினுல்லாபிதீன் என்ற சொற்பொழிவாற்றி வந்துள்ளார். ஆசிரியர் களில் ஒருவராக இருந்து தன் அச்சகத்தையும் இவர் சொந்த அரசியலிலும் சமூக சேவையிலும் பிரதி ம்ேயராகக் கடமையாற்றி பு மாநகரசபையில் அங்கம் வகித் வாளுகவும் இருந்துவருகின்ருர்,