கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் விளக்கு

Page 1
-
 


Page 2

சுடர் விளக்கு
பா. பாலேஸ்வரி
திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 471, திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை
6-6-1966. ,

Page 3
இருக்கோணமலத் தமிழ் எழுத்தாளர் சங்க வெளியிடு-2
முதற்பகிப். 1966
( 2/50
மட்டக்கன்ப்பு 25, முனைத்தெருவிலுள்ள ராஜன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

முன்னுரை
எழுத்தாளராக வேண்டுமென்று நான் இளமையிலே கொண்டிருந்த எண்ணம் என்னை எழுதும்படி தூண்டிற்று எழு தினேன். எழுத்தில் உருவான என் சிருஷ்டிகள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், கலைச்செல்வி, அமுதம், ஈழச்சுடர் போன்ற ஈழத்துப் பத்திரிகைகளிலும் கல்கி, உமா, பூந் தொட்டி போன்ற வெளிநாட்டுப் பத்திரிகைகளிலும் வெளி வந்து வாசகர்களின் பாராட்டலைப் பெற்றன.
சிறுகதைக்கு வாசகநேயர்கள் காட்டிய வரவேற்பு வேல் எழுதவேண்டுமென்ற நல்லார்வத்தை மனதில் உதய மாக்கிற்று. அதன் பலன்தான் வீரகேசரி வார இதழில் தொடர்ந்து வெளியாகிய இச் "சுடர் விளக்கு '
இச் சுடர்விளக்கு மக்கள் மத்தியிலே ஒளியூட்டுவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்த பெருமை அப்போது வீரகேசரி ஆசிரியராயிருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களுக்கே உரியதென்றல் அது மிகையாகாது. அன்னருக்கு எனது நன்றி. அன்ருட வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பாத்திரங் களைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்ட இச் சுடர்விளக்கைப் பாராட்டி யெழுதிய பல நேயர்கள் இதனைப் புத்தக உருவில் வெளியிட வேண்டுமென்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். இக்கருத்து நிறைவுபெற்று விளங் கும் வகையிலே புத்தகமாக இச் சுடர்விளக்கை வெளியிட ஒப்புதல் வழங்கியதுடன் அதற்கான படங்களையும் தந்து தவிய'வீரகேசரி ஸ்தாபனத்தாருக்கு எனது நன்றி உரித் தாக வேண்டியது. மேலும் இச் சுடர்விளக்கு புத்தக உருவம் பெறுவதற்கு மனங்கோணது சகல உதவிகளையும் அளித்த கவிஞர் திமிலை மகாலிங்கம் அவர்களுக்கு எனது நன்றி உரிய தாகுக w
சுடர்விளக்கு பத்திரிகையில் வெளிவந்து கொண்டி ருந்த பொழுது அதனைப்பாராட்டுவதன் மூலம் என் முயற் சிக்கு உற்சாகமூட்டிய வாசக நேயர்கள், இதனை அழகுற அச்சிட்டுப் புத்தகமாக்கிக் கொடுத்த அச்சகத்தார், ஒவியா கள் ஆகியோருக்கும் இவ்வெளியீட்டினைச் செய்வதில் முன் னின்றுழைத்த திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங் கத்தினருக்கும் நன்றி கூறி, என்னை இத்தகைய நிலைக்கு ஆளாக்கிவிட்டு இயற்கையெய்திய எனது அருமை அன்னை யின் பாதகமலங்களில் இதனைச் சமர்ப்பிக்கிறேன்.
திருக்கோணமலை rr. La Gabin A* oo
25-3-66,

Page 4
சமர்ப்பணம்.
இ ன் நிலை க்கு எ ன் னை உருவாக்கி
இறைவன் திருவடி நிழலே யெய் தி ய அன்புத் தெய்வமாம் என் அன்னைக்கு
ܨܰܬ݂ܐ
இந்நூலினைச் சமர்ப்பணமாக்குகிறேன்.
ی
مم-سسسسسسسسسهٔ
 
 

செல்வி பாலேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் வாசகர்களை நன்ருகக் கவரக்கூடிய பல நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். இத்துறையில் அவர்களின் முயற்சி மென் மேலும் வளரமேண்டுமென ஆசைப்படும் அதே நேரத்தில் அன்னர் எழுதிய "சுடர் விளக்கு நாவலினத் திருக்கோண மலைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது வெளி யீட்ாக வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிருேம்.
சுடர் விளக்கு அழகுறுவதற்கு ஓவியம் வரைந்த ஓவி பேருக்கும், நூலினை அச்சிட்டுக்கொடுத்த ராஜன் அச்சகத் தாருக்கும் இந்நூல் அச்சுருவம் பெறுவதில் ஊக்கமும் உத வியுமளித்த திமிலை மகாலிங்கம் அவர்களுக்கும் எமது உள்ளங்கனிந்த நன்றி உரியதாகுக.
வை. சோமாஸ்கந்தர்
செயலாளர்,
திருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 471, திருஞானசம்பந்தர் வீதி,
திருக்கோணமலை, 5-6-66,

Page 5
மதிப்புரை.
-era-r
நாவல் எழுதுபவர்களில் இரண்டு ரகம், ஒரு சாரார் எடுத்துக்கொண்ட கதையை சிக்கலோ இதறலோ இன்றி வாசகர்களுக்குச் ஆளமாகச் சொல்லி முடித்து விட்டு, ‘முடிந்தது விஷயம்" என்று மறு காரியம் பார்ப்பவர்கள்.
இன்னெரு சாரார் கதை சொல்வதாகப் புறப்பட்டு தங்களுடைய சொந்த மேதாவிலாசத்தை எல்லாம சாதா ரன வாசகர்களின் தலையில் பரிதாபகரமாகச் சுமத்தி அவர் களைச் சித்திரவதை செய்பவர்கள்
முதலாவது ரகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்குத் தான் வாசகர்கள் தொகை அதிகம். பெண் வாசகா ளைத் தம்பால் கவர்ந்தி முத்துக் கட்டி வைத்திருப்பவர்களும் இவர்களே.
இரண்டாவது ரக எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் தொகை மிகக் குறைவு ஆணுல் சிரமப்பட்டு வாசிப்பவர்களில் சிலர் விஷயம் விளங்காமலே சகலதும் புரிந்து விட்டதாக நாடகமாடுவார்கள்,
முதலாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் செல்வி பா பாலேஸ்வரி பெண் எழுத்தாளர்கள் இங்கும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, அரிதாக இருக்கிருர்கள். அதை மனதில் வைத்துப் பார்க்கும்போது தன்னை ஒரு எழுத்தாளராக் கொண்ட பாலேஸ்வரி மதிப்பைப் பெறுகிருர்,
செல்வி பாலேஸ்வரி சிறுகதைகள் பல எழுதியிருக்கிருர் அவற்றில் சில சிறந்தவை என் மனதிற்கு பிடித்தமானவை.
* சுடர் விளக்கு பாலேஸ்வரியின் முதல் நாவல்தான். அடுத்து அவர் எழுதும் நாவல்கள் மிக நன்கு அமையும் என்ற நம்பிக்கையை இந்த முதல் நாவல்தான் தவறவில்லை.
முதல் முயற்சி சகலருடைய பாராட்டுக்கும் உரிய தென்பதல்லவா!
கொழும்!!. எஸ். டி. சிவநாயகம்
I - 3-66

சுடர் விளக்கு
1. அன்பென்னும் அருமருந்து!
தென்னையும், பனையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு வானளாவ வளர்ந்திருந்த அந்த நெடிய சாலையின் கடைசித் தொங்கலில் இருந்தது அந்தத் தோப்பு. தென் றலும், வாடையும் இணைந்து வீசிய அத்தோப்புக்குள் கெம் பீரமாகக் காட்சியளித்தது அந்த இரண்டடுக்கு மாளிகை. அதன் முற்றத்தில் வட்ட வடிவமாக அமைந்திருந்தது ஒரு பூந்தோட்டம். அங்கே பல ஜாதிப் பூக்களும் கொள்ளை கொள்ளையாக மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தன-இது தான் முன்புறம்,
u95ár புறம் ses a so see P
*ச்சோ" என்ற இரைச்சலுடன் அலைகளை அள்ளி வீசிக் கொந்தளிக்கும் சமுத்திரா தேவியின் வெண்மணற்பரப்பை ஒட்டியபடி நீண்டு சென்றது கல் மதிற் சுவர், இந்தக்கடலில் இருந்து பெயர்ந்து வந்த குளிர் காற்றுத்திறந்திருந்த சாரளங் களின் வழியாக உள்ளே நுழைந்து ஜிலு ஜிலு என்று வீசி அந் தப்பக்கத்து மாடியின் குளிர் சாதனமற்ற குறையைப் போக் கிக்கொண்டிருந்தது. தூரத்தே ஆழ்கடலில் பவனிவரும் பெரிய மரக்கலங்களும் மீன்பிடி வள்ளங்களும் அந்த உப்பரி கையில் நின்று பார்ப்போரின் கணைகளுக்கு நல் விருந்தாகி நோயின் பழுவைக் குறைக்க நல்ல காட்சியாக அமைந்தது. இன்னும் சிறிது ஊன்றிப் பார்த்தால் வலது கோடி மூலையில் தனிமை யாக ஓங்கி நிற்கும் கோணேசர்மலை அழகாகத் தெரி Այ! D

Page 6
6 சுடர் விளக்கு
இப்படியாக இயற்கையின் எழிலுடன் அமைந்திருந்த அந்த மாளிகையின் திறந்திருந்த முன்புற வாயிலினுாடாக மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்த புத்தம் புதிய "பிளை மவுத்" கார் திடீர் எனத் தன் வேகத்தைக் குறைக்க அத ஞல் எழுந்த "கிறிச்" என்ற ஒலியுடன் ஒரு பெரிய மரத்தின் நிழலில் சென்று நின்றது. அக்காரின் பின்புறக் கதவின் பக்க ஆசனத்தில்ரு ருந்து இறங்கினுள் ஒரு இள நங்கை. மூங்கில் போல் அழகாக உருண்டு திரண்டிருந்த அவள் இடது தோளில் இருந்து முழங்கால் வரை தொங்கியது ஒரு நீண்டவெள்ளை அங்கி, வலது கையில் மெல்லிய கருநாகப் பாம்பு போற் சுழன்று விளையாடியது 'ஸ்ரெதெஸ்கோப்". அவள் உட லைச்சுற்றியிருந்த அழகிய ரோஜாவர்ண "நைலெக்ஸ் சாரி அவள் மேனியிற் சுற்றப்பட்டதால் கூடிய அழகு பெற்று ஜொலித்தது. நெற்றியிலே நீண்ட அம்புக்குறியில் ஒரு திலகம் கழுத்தில் மிகவும் மெல்லிய தங்கச் சங்கிலி. இடது கை மணிக்கட்டில் தங்கச்சங்கிலியுடன் கூடிய சிறிய கைக்கடிகா ரம. இவற்றில் இருந்து அவள் ஒரு லேடி டாக்டராக இருக்க வேண்டும் என்பது சொல்லாமல் விளங்கியது.
ஆமாம் ! நாங்கள் ஆரம்பத்திற் பார்த்த கட்டடம் தான் திருகோணமலை அரசாங்க வைத்தியசாலை.
அந்தக்கட்டடத்தின் உள்ளே நுழைந்து சென்ற அவள் மாடிக்குச்செல்லும் படிகள் வழியாக மேலே சென்று, தனக் குக் கொடுக்கப்பட்டிருந்த வார்டுகளை ஒவ்வொன்ரு கப்பார் வையிட்டுச் சென்ருள். ஒவ்வொரு நோயாளியிடமும்சென்று நோயை மட்டும் பரீட்சிப்பதே தன் கடமை என்று கருதா மல் அவர்களிடம் இருந்து ஒரு சிறு புன்னகையாவது வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஏதோ தமாஷாகக் கூறி விட்டுக்கபடமற்றுக் "கலகல என்று சிரித்த அவளை ஏனைய நோயாளிகள் அவள் தங்களிடம் எப்போ வருவாள் என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.
இப்படியாக ஒவ்வொரு வார்டுக்கும் போய்விட்டுக் கடைசியில் ஐந்தாம் வார்டுக்குள் கால் வைத்த அவளைக் "குட்மோணிங் சுமதி' என்ற வரவேற்பு எதிர்க்பக்கம் திரும்ப வைத்தது. அங்கே ஒரு நோயாளியின் அருகில் நின்று ஏதோ ஒரு ஊசி மருந்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் டாக்டர் ፊቻ[h!ፊ፵፫T.

சுடர் விளக்கு 7
"மோனிங் சங்கர்!’ பதில் வணக்கம் செலுத்திய சுமதி டாக்டர் சங்கரின் அருகிற்சென்று அறிவு மயங்கிய நிலையிற் கிடந்த அந்த நோயாளியை மிகவும் கவலையேர்டு பார்த்
5ror
இது நெக்லெக்டட் டை பாயிட கேஸ்’சுமதி. நேற் றுப் பின்நேரந்தான் "அட்மிட்' பண்ணினேன். கடைசி வேளை யில் உயிர் உடலை விட்டுப்பிரியப் போகும் நேரத்திற்கூட "உயிரை மீட்டுத்தாருங்சள் டாக்டர்’ என்று கேட்கும் நிலை இந்த "ஸ்பேஸ் ஏஜில்" கூட மாறவில்லை. எனக்கென்னவோ காஞ்சம் சந்தேகந்தான்’ என்று ஆங்கிலத்தில் மற்றவர்க ளுக்கு கேட்காத முறையில் சுமதிக்கு மட்டும் கேட்கக்கூடி யதாக மிகவும் மெதுவாக கூறினன் சங்கர்.
ஏதோ சிந்தித்த சுமதி திடுமென நோயாளியின் கை நாடியைப் பிடித்துப்பார்த்து ‘நானும் அப்படித்தான் நினைக் கிறேன். ரொம்ப மோசமான நிலை. கவலைக்கிடமானதுதான்” என்று பதிலுக்கு சங்கருக்கு மட்டும் கேட்கும்படி கூறினுள்.
'ஏதோ எம்மால் முடிந்தவரை முயற்சிப்போம். எங்க ளுக்கும் மேலாக ஒருவன் இருக்கிருன் அல்லவா . . ? அவன் விருப்பம் எப்படியோ’ என்று கூறிவிட்டு மீண்டும் தன் வேலை யில் கவனத்தைச் செலுத்தினுன் சங்கர். சுமதியும் தன் நோயாளிகளைக் கவனிக்கச் சென்ருள். அன்றைய பகலும் எப்படியோ கழிந்து ஆதவன் தன் அழகிய கிரணங்களை அள்ளி வீசி ஆழ்கடலை அழகுறச் செய்து கொண்டிருந்தான்; அதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி போலும். அதையடுத்து ஆஸ் பத்திரிக்கடிகாரமும் ஐந்துமுறை அடித்து விட்டு ஓய்ந்தது. அந்த ஒலியைத்தொடர்ந்து அங்கே கட்டப்பட்டிருந்தபெரிய மணி "டாண் டணுர்’ எனப்பல முறை அடித்து விட்டு ஒய்ந் தது. கோயில் பூசை காண்டதற்கு தெய்வ சந்நிதானத்தில் அடித்து முந்திக்கொள்ளும் பக்தர் கூட்டத்தைப்போல அந்த ஆஸ்பத்திரி வெளி வாயிலில் அதுவரை கால்கடுக்க காத்து நின்ற மக்கள் இந்த மணியோசைக்குத்தான் காத்திருந்தவர் கள் போல நான் முந்தி நீ முந்தி என்று ஒருவரை ஒருவர் தள்ளி முந்திக் கொண்டிருந்தார்கள்.
அந்த ஒரு மணிநேர இடைவெளிக்குள் அந்த ஆஸ் பத்திரியை ஓர் இல்லிடம் போற்காட்சியளித்தது. நாட்பூரா

Page 7
சுடர் விளக்கு 8
வும் அந்த நான்கு மதிற் சுவர்க் கட்டடத்துக்குள் அகப் பட்டு டாக்டர்களின் கண்டிப்புக்கும், கங்காணிமாரின் கருணை யற்ற கட்டுப்பாட்டிற்கும் தாதிமார்களின் ஏச்சுக்கும், ஊசி மருந்தின் உக்கிரத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் பட்ட வேதனையெல்லாம் அந்த ஒரு மணிநேரத்துக்குள் மறந்த வர்களாய் பாசமும், பந்தமும் ஒன்ருகப்பின்னிப் பிணைய ஆசையும், ஆவலும் கண்களிற் பிரதிபலிக்கத் தங்களுக்கு வேண்டியவர்களின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந் தனர் நோயாளிகள் இந்த ஒரு மணி நேர அவகாசத்துக் குள் பேசித்தீர்க்க வேண்டியதை யெல்லாம் பேசி முடித்து விட வேண்டுமே !
மாதக்கணக்காக நோயுடன் போராடி அதன் கோரப் பிடியில் இருந்து விடுபட வழியின்றி வாழ்வுக்கும், சர்வுக் கும் இடைப்பட்ட ஒரு நிலையில் வருந்திக் கொண்டிருந்த நோயாளிகளின் இன்னுமொரு சாரார் இப்படியே வேத னைப்பட்டு இறக்கப்போகிருேமே; இந்த நேரத்திற்கூடவா எங்கள் பக்கத்தில் நின்று ஆறுதல் வார்த்தை சொல்ல அன் பான ஜீவனைப்படைக்காமல் விட்டான் இந்த இதயமற்ற றைவன் ! என்ற ஏக்கம் கண்களிற் பிரதிபலிக்கப் பக்கத் தில் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த ஏனைய நோயா ளிகளை பபார்த்துப் பொருமையோடு உள்ளம் வெம்பினர்கள்.
பத்து, பதினைந்து வயதுக்குட்பட்ட பாலர்கள் தங் கள் தாய் தந்தையர்களின் முகத்தைப்பார்த்த பார்வை எங்களுக்கு இந்த ஆஸ்பத்திரி வாழ்க்கை போதும் உங்களு டன் எங்களையும் அழைத்துச்செல்லுங்கள் என்று கெஞ்சு வதுபோல் இருந்தது. அவர்களிற் சிலர் திரும்பிச் செல்வ தற்கு ஆயத்தமாகக் கிளம்பிய தம் தாய்மாரின் முந்தானைச் சேலையைப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டது பார்ப் போர் மனதை ஈர்த்தெடுத்தது.
மரணத்தின் வாயிலில் அடியெடுத்து வைத்த பின்பும் அதற்குள் முற்ருகப் போவதா விடுவதா என்ற கவலை மனதைச் சுமையாக அழுத்த அந்தப்பாரத்தின் பழுவைத் தாங்க முடியாமல் கண்கள் பச்சடைந்து, கை கால் மரத்த நிலையில் இப்பவோ பின்னையோ என்று நெடு மூச்செறிய அருகில் நிற்பவர்களை ஆருத துயரத்தில் ஆழ்த் தி விட்டு அறிவற்ற நிலையிற் கூடக் கடைசி மூச்சை எட்டிப்பிடிக்கும் ஒலி அந்த ஆஸ்பத்திரியையே ஒரு பயங்கர பிரதேசமாக்க
-حی ۔

சுடர் விளக்கு 9
எவ்விதக் கவலையுமின்றி சொரணையற்றுப் படுக்கையிற் கிடந்தார்கள் இன்னும் சிலர். இப்படியே அந்த ஒரு மணி நேரமும் ஆஸ்பத்திரி யந்திரம்போல் இயங்கிக்கொண்டிருந் தது, இவற்றைப்பற்றிய கவலை ஒரு சிறிதுமின்றி மீண்டும் சரியாக ஆறுமணிக்கு ‘டாண் டணுர்’ என்று அடித்தோய்ந் தது அந்தப் பெரிய மணி.
ஒரு சில நிமிட நேரத்துக்குள் அந்த மணியோசை அந்த மணியோசையைத் தொடர்ந்து உள்ளே சென்ற அத்தனை பேரும் வெளியேவர மனமற்றவர்களாய்த் தங்க ளுக்கு மிகவும் வேண்டிய ஒரு ஜீவனை உள்ளே விட்டுப்போகி ருேம் என்கிற துன்ப ரேகை முகத்திற்படிய போகும்போது இருந்த சுறுசுறுப்பு, உத்வேகம் உற்சாகம் அத்தனையுமிழந்து சோகமே உருவெடுத்தவர்களாய் முகம் களையிழந்து வெளி யேறிக்கொண்டிருந்தனர்.
இப்படியாகக் கடைசிப்படியில் கால்வைத்து விட்ட சிலர் அடுத்த அடி நிலத்தில் வைத்து வெளியேற விருப் பமற்ற வர்களாய் தங்களுக்கு வேண்டியவர்களை மீண்டும் ஒரு முறை பார்த்து விடுவோம் என்ற ஆவலில் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றனர், இதுதான் I JIT gCLort
இதே நேரம் திருகோணமலை மாளிகை வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு மோட்டார் திசைதப்பி வந்து விட்டதுபோல பிரேக் போட்டு, வந்த வளியே திரும்பிச் சென்று அந்தத்தெருவின் வலப்புறமாக இருந்த ஒரு கல் வீட்டின் முன் "கிறீச்சி'ட்டு நின்றது. அதிலிருந்து பரபரப் போடு இறங்கிய இளைஞன் தன் விரலிடையில் அதுவரை புகைந்து கொண்டிருந்த "சிகரெற்றில் "கடைசிப்பாகத்தை எறிய மனமின்றி மீண்டுந் தன் உதடுகளின் மத்தியில் வைத்து உறுஞ்சி உள்ளே இழுத்த புகைமண்டலத்தை வெளி யே ஊதித்தள்ளி அதை வேடிக்கையோடு பார்த்துக் கை யில் எடுத்த சிகறெற்றின் அடிப்பாகத்தைத்தூர வீசிவிட்டு அந்த வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்
தான்.

Page 8
2. உதயம் கண்ட தாமரை
ஆஸ்பத்திரியில் அன்றைய தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டோம் என்ற திருப்தியில் மலர்ந்த முகத்தோடு வீட்டுக்குப்போகப் புறப்பட்டுக்கொண்டிருந்த டாக்டர் சும தியை அங்கே "திடும்’ என வந்து நின்ற அம்புலன்ஸ்’ வண்டி தடுத்து நிறுத்தியது.
வழக்கமாக அந்த ஆஸ்பத்திரிக்கு முதல் வருவதும் கடைசியாகப் போவதும் சுமதிதான். அன்றுகூட ஏனைய டாக்டர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்ட .ார்கள் என்பது அவளுக்குத் தெரியும். விரும்பினுல் அவள்கூட அவர்களைப் பின்பற்றியிருக்கலாம். அவளது கடமை நேரம் எப்போதோ முடிந்து விட்டிருந்தது.
ஆனல்-அவளுடைய மனச்சாட்சி என்ற ஒன்றிருக்கின் றதே அதை மட்டும் அலட்சியம் செய்ய அவளால் எப்போ துமே முடிந்ததில்லை. முடிந்திருந்தால் மற்றவர்களைப்போல் கவலையற்ற வானம்பாடியாக அவளும் சுற்றித்திருந்திருக்க லாம். அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக அமைந் திருக்கும். வாழ்க்கையில் கடமையென்ற ஒன்றுக்கு முத லிடம் கொடுத்துப் பழக்கப்பட்ட அவள் அன்றுமட்டும் அதை எப்படி மறந்திருக்க முடியும்.?
மோட்டார் காரினுல் தாக்குண்டு ஏற்பட்ட விபத்தில் ஒற்றைக்கால் சேதமுற்ற நிலையில் இரத்தந் தோய்ந்த உடை களுடன் உள்ளே 'ஸ்றெச்சரில்’ தூக்கிக்கொண்டு வரப் பட்ட அந்த இளைஞனின் பரிதாப நிலை அவள் உள்ளத்தை ஈர்த்தெடுத்தது. வந்த வழியே திரும்பிய அவள் அந்த இளைஞனுக்குத் தன்னலியன்ற சிகிச்சையைச் செய்து ஒர ளவு வெற்றிகரமாக முடிந்த பின் முதல் டாக்டராகிய பூரீத ருக்கு விஷயத்தைப் போன் மூலம் அறிவித்து விட்டு வாச லைக் கடந்து காரை நோக்கி விரைந்தாள். உடலின் களைப்பு வியர்வைத் துளிகளாக உடலெங்கும் பரவியது.
அங்கே மாளிகை வீதியில் வாசற்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்ற இளைஞன் கதவிற் பொருத்தப் பட்டிருந்த பிளாஸ்டிக் பலகையைப்படித்தான். அதில் "டாக்

சுடர் விளக்கு
டர் சுமதி வெளியே” என்று அழகிய தமிழ் எழுத்துக்களிற் கண்ட செய்தி அவன் முகத்தில் ஏமாற்றத்தின் சாயலைப் படியவைத்தது.
சில நிமிட நேரம் ஏதோ சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தவனுகப் பக்கத்திலிருந்த மின்சாரப் பொத்தானைத் தன் எரிச்சல் தீரும்வரை இறுக்கி அமுக்கினன். 'கிளிங்" என்ற நீண்ட ஒலியைத்தொடர்ந்து ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்கதோர் பெண் முன்கதவை அரைகுறையாகத் திறந்து எட்டிப்பார்த்து விட்டு 'யார் டாக்டர் ஐயாவா..? சுமதியம்மா இன்னும் ஆஸ்பத்திரியால் வரவில்லை, காலையில் போனவர்கள் இன்று மத்தியானம் சாப்பாட்டிற்குக் கூட வரவில்லை. கேட்பதற்கு யாருமில்லை. எல்லாந் தன் விருப் பந்தான். நான் தப்பித்தவறி வாயைத் திறந்தால் என்னை அப்படியே அடக்கி விடுகிருர், உடம்பு என்னமாய்த்தான் இளைத்து விட்டது. பார்க்கும் போது வளர்த்த என் வயிறு பற்றி எரியுது. என் சொல்லைக் கேட்கவா போகுது..? ம் ! பெரியம்மா மட்டும் இப்போது இருந்தால் م««
ஏதோ தொடர்பில்லாமல் தன் பாட்டுக்கே பேசி முடித்த அப்பெண் தன் முந்தானைச்சேலையை இழுத்து மூக் கைச் சிந்திக்கொண்டாள். அவள் நிஜமாகவே சுமதியின் நலனில் அக்கறை கொண்டுள்ளாள் என்பதை அவள் பேச் சின் மூலம் உணர்ந்து கொண்ட அவன் "கவலைப்படாதே தங்கம், நான் இப்போதே சென்று சுமதியைக் கூட்டி வரு கிறேன் ! “ என அவளுக்கு ஆறுதல் கூறி விட்டு மீண் டுந் தன் மோட்டாரில் ஏறி "ஸ்ரியறிங் விலைப் பிடித்தான்.
அவனுடைய கையில் அகப்பட்ட அந்தச் சக்கரம் அங்கு மிங்குமாகச் சுற்றியதைவிட அவனுடைய உள்ளம் எண்ணச் சுழலில் அகப்பட்டு இன்னும் வேகமாகச் சுற்றி யது. எதற்காக அவன் இவ்வளவு அவசரமாகப் போகிருன்? ஏன் போகிருன் ? அவனது போக்கு அவனுக்கே ஒன்றுமா கப் புரிய வில்லை. சுமதியைப்போல இன்னும் எத்தனையோ பெணகள் அவனுடன் கடமையாற்றுகிருர்கள்.
ஆணுல்- அவர்களிடம் ஏற்படாத ஒர் அக் க  ைற, விருப்பு, பாசம், உரிமை, இவளிடம் மட்டுந் தோன்றுவ தற்குக் காரணம்.? இவ்வளவு தூரம் இவளைத் தேடிவரும்

Page 9
2 சுடர் விளக்கு
படி என்ன நடந்து விட்டது ? எங்கோ செல்வதற்காக அவன் எடுத்த கார் சுமதியின் வீட்டு வாசலில் வந்து பிரேக் போட்டு நிற்க வேண்டிய நியாயம் ?
இத்தனைக்கும் அவள் அவன்மேல் அக்கறை காட்டிய தில்லை. அத்தியந்த பாசங் கொண்டிருப்பதாகவுந் தெரிய வில்லை. அப்படியிருந்தும் அவளுக்காக அவன் இதயந் துடிப் பதேன்? அவள் மட்டும் அவனருகில் இருந்தால் அவனுக்கு வேறு எதுவுமே வேண்டியிருப்பதில்லை அவனுடைய உள்ளம் அவளுக்காக இரவும், பகலும் ஏங்கித்தவிப்பதை அவனல் உணர முடிகிறது. ஆனல் அதன் விளக்கங்தான் அவனுக் குப்புரிய வில்லை.
சந்திரனைக் கண்டு கடல் கொந்தளிக்கிறது ஆதவன் உதயங்கண்டு தாமரை மலர்கிறது. மழை மந்தாரங் கண்டு மயில் தோகை விரித்தாடுகிறது . அப்படித்தான் அவனது மகிழ்ச்சியும். காரணமில்லாமல் அவளைக் கண்டவுடன் கட்ட விழ்ந்துகளித்தாடும் அவன் இதயத்தை அவனுற் கட்டுப் படுத்தவே முடியவில்லை. அவனது மனுே வேகத்தை விடக் கனவேகமாகப் புறப்பட்ட கார் நெருப்புப் புழுதியை அள்ளி இறைத்து விட்டு ஆஸ்பத்திரி வாயிலிற் சென்று நின்றது.
காரிலிருந்து கதவைத் திறந்து கொண்டு அவன் கீழே இறங்க சுமதி ஆஸ்பத்திரியின் கடைசிப் படியைக் கடந்து வாயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள்.
வியர்வைத் துளிகள் முத்து முத்தாக இரு புருவத்தின் மத்தியிலும் அரும்பி நிற்க களைத்த உடலுடன், அலுத்த நடை போட்டு வந்த சுமதியைப் பார்த்த அவனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது.
‘ஏன் சுமதி 1 மணி ஏழடிக்கப்போகிறது., இன்னும் உணக்கு வீட்டுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் வர வில்லையாக்கும். மற்றவர்களைப்பார், அவர்களும் உன்னைப் போல தான் நாள் முழுவதும் ஆஸ்பத்திரியையே கதியென்று கிடக்கிரு?ர்களா என்று . வீட்டில் தட்டிப்பேச ஆளில்லக விட் டால் இப்படி உடலைப்போட்டுப் பாழடிக்க வேண்டுமா ?” உரிமையுடன் கண்டிப்பதுபோல் இருந்தது அவன் பேசிய தோரனை.

சுடர் விளக்கு 13
சுமதிக்கு அலுப்பின் மத்தியிலும் ஆச்சரியமாக இருந்தது. யார். ? இது வரை பேசியது சங்கர்தாஞ.? அவ்வளவு உரிமை அவருக்கு எங்கிருந்து வந்ததாம்.? அவள் இவள் சங்கருடன் பல மாதங்களாகப் பழகி வருகிருள் ஆணுல் அவன் இன்று அவள் மேல் காட்டிய உரிமைபோல் அவன் காட்டியதுமில்லை. அது அத்தனை அப்பட்டமாகத் தெரியவுமில்லை.
ஆச்சரியம் நிறைந்த விழிகளால் அவள் சங்கரைப் பார்த்தபடியே ஏது சங்கர் ! உங்கள் பாட்டுக்கே பேசிக் கொண்டு போகிறீர்கள் ? எனக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங் களேன். கடமை என்ற ஒன்று உண்டு என்பது ஏன் உங் களளவில் மறந்து விடுகிறது.?’ என்று அமைதியாகக்கேட்
டாள்.
* கடமை ! கடமை !! கடமை ?!! சதா உன் வாயி ஆலும், மனதிலும் இதுதான எண்ணம்? “ எப்போது பார்த் தாலும் பிறருக்கு உழைக்க வேண்டுமென்பதே உன் மூச் சாக இருந்தால் உன்னைப்பற்றி-உன் வாழ்வைப்பற்றி எப் போதுதான் சிந்தித்துப்பார்க்கப் போகிருயோ ... ? சங்கர் சற்று ஆத்திரமாகப் பேசினன்.
சுமதிக்கு அவன் நிலை சிரிப்பைத்தான் மூட்டியது. "நீங்கள் இவ்வளவு சுயநலக்காரராக இருக்கிறீர்கள் சங்கர்? என்னுல் இப்படி உங்களை நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. பிறருக்குச் செய்யுந் தொண்டு என் மனதுக்கு எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கிறது தெரியுமா? நான் செய் யுங் காரியங்கள் ஒவ்வொன்றும் பிறருக்கு இன்பமளிப்ப தாக இருந்தால் அந்த இன்பத்தில் தனி மகிழ்ச்சி அடை பவள் நான். முடிந்தால் என் முழு வாழ்க்கையையுமே பிற ருக்காகச் செலவிட வேண்டுமென்பதே என் வேணவா. ஆனல் எம் எண்ணப்படி என்னதான் நடக்க முடிகிறது.?"
‘போதும் சுமதி ! இனிமேல் தயவு செய்து எனக்கு முன்னுல் இந்தக் கடமையென்ற ப்ேச்சை மட்டும் எடுக் காதே. அதைக் கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்து விட்டது உன்னைப் பார்ப்பதற்காக உன் வீட்டுக்குக் சென்றேன்; நீ காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டபின் இன்னும் வீடு கிரும்பவில்லை. என்று தங்கம் சொன்னுள். நீ இங்கே இருப்

Page 10
14 சுடர் விளக்கு
பாய் என்பது எனக்குத் தெரிந்த விஷயந்தானே. இங்கு வந்தேன் இப்போது காரில் ஏறிக்கொள். உன்னைப்பத்திர மாகக் கொண்டுபோய்த் தங்கத்திடம் சேர்த்து விட்டு நான் போகிறேன்." என்று கூறியபடி பின் கதவைத் திறந்து விட்டான்.
சுமதி இப்படி அவன் கேட்பான் என்று எதிர்பார்க் காத நிலையில் சொல்லுவது அறியாது திகைத்தாள். அவன் வேண்டு கோளைக் தட்டவும் முடியவில்லை. அதற்கு இணங் கவும் முடியாத இக்கட்டான நிலையில் " என்னுடைய கார் கூட அதோ நிற்கிறது சங்கர்’ என்ருள் மெதுவாக,
பரவாயில்லை காவற்காரக் கந்தனிடம் கூறினுற் கவ னித்துக்கொள்கிருன், நாளைக்கு நீ வந்து எடுத்துக் கொள் ளலாம்' என்ருன் சங்கர் விடாப்பிடியாக.
“மீண்டும் நாளைக்காலை நான் "டியூட்டிக்கு வரவேண் டும் சங்கர் எப்படியாவது சங்கரை மெதுவாகத் தட்டிக் கழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சாட்டா கக் கூறினள்.
* காலையில் வேண்டுமானல் நானே உன்னை வந்து ஏற்றிச்செல்கிறேன்" என்று சமாதானஞ் சொன்னன் சங் கர். சுமதியின் நிலை கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக முடிந்தது. இப்போ ஒரு நேரம் அவனுடன் தனியாகப்போக வேண்டி வருமே என்ற எண்ணத்தில் அவள் ஒன்றை நினைத்துக்கூற அவன் காலையிலும் வந்து அழைத்துப்போவதாக அல்லவா கூறி விட்டான். அவளு டைய வாழ்க்கையில் இப்படியான எதிர்பாராத சம்பவங் கள் பல நடந்து பழக்கமாய் விட்ட போதும் சங்கருடன் இப்படித்தனியாகப் போக வேண்டிய கட்டம் ஒன்று வந்து எதிரே நிற்கும் என்று அவள் கனவுகூடக் கண்டதில்லை.
மேலும் பேச்சை வளர்த்தால் அது விவாதத்தில் முடிந்து கசப்பான சம்பவங்களுக்கு இடங் கொடுக்கலாம் என்ற பயத்தில் மறுக்க முடியாத நிலையில் மெளனமாகப் பின் ஆசனத்தில் ஒரு தங்கப் பதுமைபோல் ஏறி உட் காந்ததும் கார் "கிர்" என்ற சத்தத்துடன் புறப்பட்டது.

3. கவ்விக்கொண்ட ஜோடிக் கண்கள்.
பல சாலைகளையும் தெருக்களையும் பின்விட்டு முன்னே றிக் கொண்டிருந்த மோட்டார் சுமதியின் வீட்டு வாயிலை அடைந்ததும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு நின்றது
"அப்பாடா’ என்று தன்னை மறந்தபெரு மூச்சு வெளிப் பட இறங்கிய சுமதியை கண் வெட்டா மற் பாாத்துக் கொண்டிருந்த சங்கர் எதோ நினைத்துக் கொண்டவனுய் முன்புறக் கதவைத்திறந்து தானும் இறங்கி விட்டு கார் கதவைப் படார்’ என அடித்து மூடிவிட்டு அவளைப் பின் தொடர்ந்து சென்று முன்புறத் திண்ணையிலிருந்த நாற்கா லியில் ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்த் தான. -
கார் சத்தங்பேட்டு வெளியே வந்த சமையற்காரி தங்கம் சுமதியைக் கண்ட களிப்பில் "வந்திட்டீர்களா சுமதி யம்மா, யாருக்காகத்தான் இப்படி இரவு பகல் எனப்பா ராது உழைக்கிறிர்களோ தெரியாது ? ம் 1 பெரியம்மா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் காலாகாலத் தில் ஒரு. தொடங்கிய வசனத்தை முடிக்காமல் ஒரக் கண்ணுல் சங்கரைப்பர்ர்த்தாள்.
'அம்மாடி! ஆரம்பித்து விட்டாயா உன் பழம் பல்ல வியை..!’ என்று கூறிவிட்டுத் தங்கத்தை முறைத்துப் பார்த்தபடியே பக்கத்து மேஜைமேற் பத்திரமாக இருந்த மல்லிகைச் சரத்தை எடுத்துக்கொண்டு அந்த ஹாலின் மத்தியில் அழகாகச் சட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த தன் தாயின் படத்தில் அணிந்து அஞ்சலிசெய்து விட்டு மீண் டும் முன்பக்கம் சென்று டாக்டர் சங்கர் இருந்த ஆசனத் திற்குப் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள் சுமதி 'காப்பி’ சாப்பிடுங்கள் சங்கர் ! கங்கம் அப்போதுதான் சுடச் சுடக் கொண்டு வந்து வைத்த இரண்டு பாத்திரங்க ளில் ஒன்றை எடுத்து டாக்டரிடய நீட்டி விட்டு மற்றதைத் தான் எடுத்துக் கொண்டாள்.
உதடுகள் காப்பியைச் சுவைக்க அவள் உள்ளம் மட் டும்’வைத்தியசாலையைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டி ருந்தது. இடையில் ஏதோ நினைத்தக் கொண்டவளாய் சங் கரின் பக்கம் திருப்பினுள். அங்கே அந்தக் கருவிழிகள்

Page 11
16 சுடர் விளக்கு
நோக்குவதைக் கண்டு சற்று நாணத்தோடு தலை கவிழ்ந்தாள் இரண்டும் இமைக்காமல் அணுவணுவாய்த் தன்னையே உற்று நோக்குவதைக் கண்டு சற்று நாணத்தோடு தலை கவிழ்ந் தாள். அந்த விழிகளை எதிர்க்கும் சக்தி தன்னிடம் இல்லை என்பதை அவள் முற்ருக உணர்ந்த போதும் தன் பல வீனத்தை வெளிக்காட்டுவதற்கு இந்த மெளனம் சாதக மாய் விடக்கூடாதே என்ற பயத்தில் ஏதாவது பேசிவைக்க வேணடும் என்ற துடிப்போடு தைரியமாக நிமிர்ந்து எது வித சலன முந்தன் முகத்திற் றெரியாதபடி இன்று மாலை வந்த அந்த அக்ஸிடென் கேஸ் ரொம்பப் பரிதாபமானது சங்கர் இனி அவன் ஒரு கால் முடம், பாவம்! எப்படித்தான் எஞ்சிய வாழ்நாளைக் கழிக்கப் போகிருனே..? என்று கூறி விட்டுத் தரையை உற்று நோக்கினள்.
"சரியாட்போச்சு 1 மீண்டும் அதே பேச்சுத்தானு . ? ஆஸ்பத்திரியையும் நோயாளிகளையும் விட்டால் உனக்குப் பேசுவதற்கே விடையம கிடைக்காதுபோல் இருக்கே ! அலுத்துக் கொண்டே கூறினன் சங்கர்.
"ஓ! மன்னித்து விடுங்கள் சங்கர்? உங்களுக்கு இந் தப்பேச்சுப் பிடிக்க வில்லையென்ருல் இதுபற்றி இனி உங்க ளிடம் பேசவேயில்லை. ஆமாம் என்னை அவசியம் பார்க்க வந்ததாகச் சொன்னீர்களே ?’ என்ன விஷயம்.? மனதிற் களங்கமின்றிக் கேட்டாள் அவள்.
ஆணுல்-உள்ளத்தில் அவனுக்கு முட்போற் குத்தியது அந்த வின. அவசியமாக ஏதாவது பேசவேண்டுமானுற்தான் உன்னைப் பார்க்க முடியுமா? இல்லை சுமதி! நீ இன்னும் என் ணைப்புரிந்து கொள்ள வில்லை. புரிந்து கொள்ளவும் முடியாது ஏதாவது விஷேசம் இல்லாமலே சதா உன்னைப் பார்க்க வேண்டும்; உன்னுடன் பேச வேண்டும். என்று என் மனம் என்னமா துடிக்கிறது தெரியுமா..? என் மன வேதனையில் ஓர் அணுவையேனும் உணராமல் நீ பேசுகிருய் சுமதி. என்னுடன் பழகும் போதாவது என் விழிகளின் ஏக்கத்தை நீ புரிந்து கொள்ளக்கூடாதா? கடைசியில் இந்த உறவு எங் கள் இருவரையும் எந்த அதல பாதாளத்திற் தள்ளிவிடப் போகிறதேர் தெரியவில்லை.

சுடர் விளக்கு 17
என்னைப்பார்த்து; என் பேச்சைக்கேட்டு; நான் உன் னிடம் காட்டும் அக்கறையைக்கண்டாவது நீஎன்னை அறிந்து கொள்ளவில்லையா ? நான் உன்னைக் காதலிக்கிறேன் சும , !
நீ ? ஆமாம் நீ ?
உன்னைப்பற்றி எனக்குத் தெரியாது. என்னைப்பற்றி நீ என்ன நினைத்துள்ளாயோ..? அதுகூட எனக்குத் தெரி யாது. அதைப்பற்றி நான் கவலைப் படவுமில்லை காரணம் ? நீ என்னை வெறுக்கவில்லை என்பது மட்டும் நிச்சயம். அதை என்னுல் புரிந்துகொள்ள முடிகிறது:
என்னுடைய காதல் காட்டாற்று வெள்ளம் போன் றது. உன்னுடையது "இல்லை நீ.? அடியிலே ஆழங்காண முடியாத அதல பாதாளத்தை மூடி மறைத்து மேற்பரப் பில் மட்டும் மெல்லிய நீலக் கடலலைகளை அள்ளி வீசும் சமுத்திராதேவி போன்றவள்.
சாமதியின் விஞ அவனுடைய உள்ளத்தையே ஓர் பேச்சரங்கமாக்கி விட்டது. உள்ளத்தில் நிகழ்ந்த பேச்சு உள்ளத்துடனேயே நிற்கப், "பொழுது போகவில்லை என்று டாக்டர் பூரீதர் வீட்டுக்குப் போனேன். அவர் வீட்டில் இல்லை. ஆகவே அப்படியே உன்னையும் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். உன்னை நினைத்தவுடன் பார்க்க முடிகிறதா..? இந்த நாட்களில் மந்திரிகளைக்கூடப் பேட்டி யின்றிக் கண்டு விடலாம். ஆணுல். உன்னை-சங்கர் பொய்க் கோபத்துடன் அவளைப்பார்த்தான்.
சங்கரின் பேச்சு சுமதிக்கு சிரிப்பைத்தான் உண்டாக் கியது. அவள் புன்சிரிப்புடன் கோபம் வரும்போது? உங்கள் பேச்சும் நடையுமே ஒரு தஒரி ரகம் சங்கர் ! "ஆமாம் தங் கம் கூறியது போல என்னைப்பற்றிக் கவலைப் படத்தான் யாருமில்லை. வருடம் முழுவதும் ஜைத்தியசாலையே கதி யென்று கிடந்தாற்கூட ப்ாரும்தவலைப்படப் போவதில்லை
ஆல்ை, நீங்கள்! நீங்களும் இப்பூடிடிலேத்தரில் உங் கள்"நீலனில் அக்கறை ஜெரண்ட் எதிதனைக்ஜீவ்ன்கள் இருக் கிருர்கள். நாளைக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு சிறு நோய்

Page 12
8 சுடர் விளக்கு
கண்டாலும் எத்தனைபேர் கவலைப்பட வேண்டும். பேசி முடித்துவிட்டு அவனையே நோக்கினுள் சுமதி.
அவன் எங்கோ பார்த்தபடி ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளம் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் அசை போட்டுப் பார்த்துக்கொண்டிருந்
5.
அப்படியென்ருல் -
சுமதிக்கு நான் வருவது பிடிக்க வில்லையா..? மறை முகமாக என்னை வரவேண்டாம் என்று கூறுகிருளா ? இல்லை-! நிச்சயமாக இதில் அவளுக்கு விருப்பமில்லாமல் இல்லை. இருந்தும் எதற்காகத்தன் இதயத்தைத் திறந்து காட்டப்பயப் படுகிருள். ஒரு வேளை - என் வாயாலேயே நான் அவளைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிருளோ..? ச்சா சுமதி அப்படிப்பட்ட வள் இல்லை. அவளிடம் வரட்டுக்கர்வம் துளிகூட இல்லை இருந்தும் அவளை என்னல் இன்னும் நன்ருகப் புரிந்து கொள்ள முடிய வில்லை. எதற்கும் அவசரங் கூடாது. காலம் பரந்து கிடக்கிறது. அமைதியாக இருந்துதான் பார்ப்போம்; நம்பிக்கை மட்டும் இழக்காமல் இருக்க வேண்டும். சங்கர் தன் மனதுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டவனுய்த் திடீர் எனத்தன்பார்வையைச் சுமதியின் பக்கந் திருப்பினன். அந்தக்காந்தக் கண்கள் அதுவரை அவனையே விழுங்கிக்கொண்டிருந்தன என்பதை அப்போது தான் அவனுல் உணர முடிந்தது.
இரு ஜோடி விழிகள் ஒன்றையொன்று கவர்ந்து கொண்ட அதிர்ச்சியில் செயலற்று இமைந்தன.
புரியாத ஒன்றைப் புரிந்து கொண்டுவிட்ட நிம்மதி யுடன் சங்கர் தன் கைக்கடிகாரத்தை உற்று நோக்கி விட்டு "சரி நேரமாகிறது சுமதி! நான் சென்று நாளைக்காலை ஆஸ் பத்திரிக்குப் போகும்போது வருகிறேன், ஆயத்தமாகஇரு” என்று கூறிக்கொண்டே அவளைப் பார்க்காமல் இருளிற் சென்று மறைந்தான்,

சுடர் விளக்கு 19
அவன் ஒரு முறையாவது தன்னைத் திரும்பிப்பார்த் துக் கண்களால் விடைபெற மாட்டாஞ என்ற பைத் தியக்கார எண்ணம் என்றுமில்லாதபடி அன்று அவளைப் பிடித்து உலுக்க அவள் ஏமாற்றத்துடன் அவன் செல்வ
தையே பார்த்து நின்ருள். அவளுக்கு வாய்விட்டு அழ
வேண்டும்போல இருந்தது. என்றுமில்லாத திருநாளாய் அன்று அவளுக்குச் சங்கர் மேற் கோபங்கோபமாக வந்தது எதுவுமே செய்யத்தோன்ற மல் சிலையாக நின்ற அவள் கார் 'ஸ்ராட்’ பண்ணுங் சத்தங்கேட்டதுந்தான் தன் நினைவு பெற்றவளாய் உள்ளே சென்ருள்.
உள்ளே தங்கம் போட்டு வைத்த வெந்நீரில் உடலலுப்புத்தீர நன்ருகக்குளித்து விட்டு இராப்போச னத்தையுங் கையோடு முடித்துக்கொண்டு ‘அம்மா’ என்று அலுத்தபடியே படுக்கையிற் சாய்ந்தாள். அவள் சிந்தனைக் குதிரை அவளை உதைத்துக்கீழே தள்ளிவிட்டுச் சங்கரைத் தேடி ராஜநடை போட்டது.

Page 13
4. அவளை அறியா அன்பு மனம்
சுமதி இவ் வைத்தியசாலையில் வேலையேற்ற இரண் டாண்டுகளின் பின்னர்தான் சங்கர் இவ்வைத்தியசாலைக்கு நியமனஞ் செய்யப்பட்டான். அந்த வைத்தியசாலையில் பத் துக்கு மேற்பட்ட ஆண் டாக்டர்கள் கடமை யாற்றிய போதும் அவளுக்கு மிகவும் பிடித்தமானவாகள் இருவர் தான். அவர்களில் ஒருவர் சங்கர். மற்றவர் டாக்டர் பூரீதர். பூர்தர் மனமாகியவர், வேண்டியபோது சுமதிக்குப் புத்திமதி: கூறுவதோடு தன் உறவைத் துண்டித்துக் கொள்ளும் சுபா வம உள்ளவர். சுமதிக்கு இந்த இருவரிடமும் ஒரு தனிமரி யாதை உண்டு. இந்த இரண்டாண்டுப் பழக்கத்தில் சங்கர் தன்னை மிகவும் நேசிப்பதாக உணர்ந்தாள் ஆணுல் அதைத் திட்டவட்டமாக அவளால் அறிந்துகொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ள அவள் ஆசைப்படவும் இல்லே. அப்படி யான நேசம் இருக்கும் பட்சத்தில் அதைச் சங்கரால் ஒழித்து வைக்க முடியாது என்பதையும் என்ருே ஒருநாள் அவன் அதைக் கூறியே ஆகவேண்டும் என்பதையும் அவள் உணர்ந் திருந்தாள். அவன் தன்னுடன் எந்த உறவு கொண்டு பழகுகிருன் என்பதைக் கிஞ்சித்தும் அவளாள் அறிந்து கொள்ளவே முடியவில்லே, அதை அறிந்திருந்தாற்ருனே அவ ளும் அதற்கு ஏற்ற வகையிற் தன்னை மாற்றியமைத்துக் கொள்ள முடியு10.
சுமதி பிறந்து தன்னறிவு பெற்ற பின் தந்தையைக் கண்ணுல் கண்டதேயில்லே. அவள் ஐந்து வயதாக இருக்கும் போது பார்த்த ஞாபகம். த யitர்தான் அவளுக்கு எல்லா மாக இருந்து வந்தாள். அந்தத் தாயாரின் அயராத உழைப் பின் மூலம் முன்னேறியவள். தன் மகள் படிக்க வேண்டும் படித்து ஏதாவது உத்தியோகம் பெறக்கூடிய வகையில் ஒரு தராதரப் பத்திரம் பெறவேண்டும் என்ற எண்ணம் அத் தாயின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது. பிற்காலத்தில் துரதிர்ஷ்டவசமாகத்தoன கதி தன் மகளுக்கும் ஏற்பட நேர்ந்தால் தன்னைப்போற் கஷ்டமின்றி வாழ்க்கை நடத்த வழிவகுக்க வேண்டும் என்றுதான் அவள் அலுக்காமல் உழைத்தாள்.உடலில் உள்ள இரத்தம் அவ்வளவும் வியர்வை யாக வெளியேற, உடல் எலும்புந் தோலுமாக மாறும்வரை எஸ். எஸ். ஸி. வரை சுமதியைப் படிக்க வைத்தாள் அத் தாய். அதிர்ஷ்டம் சுமதியின் பக்கம் இருந்ததாலோ என் னவோ அந்த வட்டாரத்திலேயே மிகவுந் திறமையாகச்சித்தி யடைந்து ஐந்தாண்டு உயர்தரப் படிப்பிற்குரிய உபகாரச் சம்பளத்தையும் பெற்ருள்.

சுடர் விளக்கு 21
சுமதி தான் ஒரு ஆசிரியையாகவேண்டும் என விரும்பி ஞள். ஆணுல் தன் மகள் டாக்டராவதையே அந்தத்தாய் விரும்பினுள். ஈற்றில் தாயாரின் ஆசைக்கு அடி பணிந்து வைத்தியக் கல்லூரியை அடைந்தாள் சுமதி. அங்கே வேடிக்கை விநோதங்களில் தன் காலத்தைச் செலவிடாமல் இரவு பகல் இடைவிடாமற் படித்து ஒரு டாக்டராக வெளி வந்தாள் அவள். ஆனல் ஆரம்பத்தில் அவளுக்குக் கை கொடுத்த அதிர்ஷ்டம் கடைசியில் அவளைக் கை விரித்து விட்டது. ஆமாம் ! விரித்தே விட்டது. தன் மகள் டாக் டராகி வருவதைக் கண்ணுரக்கண்டு களிக்கவேண்டும் என்று கனவு கண்ட அந்தத்தாய், சுமதி டாக்டராகி வெளிவர ஆறு மாதத்திற்கு முன்னா தன் கனவு பூர்த்தியாகாமலே கண்ணை மூடிக்கொண்டாள்.
தன் மரணம் நிச்சயம் என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அந்த மாதரசி தான் இறப்பதற்குச் சிலமணி நேரத்தின் முன் தன் மகளைத் தனிமையில் அழைத்து ஏதோ சில விஷயங்களைக்கூறிக் கண்மூடினள். தாயாரின் திடீர் மரணம் சுமதிக்கு பேரதிர்ச்சியாகியது. தான் டாக்டரா கியபின் தன் தாயாரை எப்படி எப்படி எல்லாமோ வைத்துப் பேண வேண்டும் என்று கட்டியிருந்த மனக் கோட்டை தகர்ந்து மண்ணுேடு மண்ணுகியது. யாருக்காகத் தான் இனி ஒரு டாக்டராக வேண்டும் என்று எண்ணிய அவளுக்கு தன் தாய் கடைசி நேரத்தில் கூறிய சில விஷயங் கள் தான் டாக்டராக வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறின. கடைசியாக அவள் ஏதோ ஒரு இலட்சியத்தைத் தன் வாழ்வின் அஸ்திவாரமாக இட்டு அதற்காகவே வாழத் தொடங்கினுள்,
அவள் கடைசிவரை கன்னியாக வாழவேண்டுமென்று விரும்பினள். ஆனல் இடையிலோ பலர் அவள் வாழ்வில் குறிக்கிட விரும்பினர்.
சந்தர்ப்பங்கள் கூட அவளுக்குச் சதிசெய்வதாக அமைந்தன. டாக்டர் பூரீதர் கூட அவள் இந்த வைத்திய சாலையில் நுழைந்த அந்நிய நாட்களில் அவள் மேல் உயி ரையே வைத்திருந்தான். ஏன் ! சுமதியிடம் அவன் வைத்த அன்பு முற்றிப் பைத்தியமாகி விடுவான் என்றுகூடப் பலர் பலமுறை அவள் காது கேட்கக் கதைத்ததுண்டு அப்படி யான ஒருவரின் மனதையே மாற்றி தன் விருப்பப்படியே

Page 14
22 சுடர் விளக்கு
அவரை வேறு ஒரு பெண்ணை மணக்கச்செய்து வெற்றி பெற்றவள் அவள். அதன்பின் பூரீதர் ஒரு உற்ற சகோதரி யைப்பேணுவதுபோல் அவளைப் பேணி வந்தார். அவர்க ளிடையே நிலவிவந்த வெற்றிடத்தை நிரப்டவந்ததுபோல சங்கர் தற்போது அவள் வாழ்க்கையில் குறுக்கிட்டுள்ளார்
சங்கரோடு பழகிய குறுகிய காலத்தில் அவனுடைய கண்ணியமான போக்கும் பணிவான சுபாவமும் அவளை மிகவும் கவர்ந்தன. அவள் எவ்வித நோக்கமும் இன்றியே அவனுடன் பழகினுள். ஆனல் அவனுடன் பழகப் பழக தன் மண நிலை சிறிது ஆட்டங்கண்டு விடுமோ என்ற பயத்தில் அவள் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் அவனை விட்டுத் தூரத்தூர விலகிச் சென்ருள். ஆனல் சங்கர் அவளை விட்டாக வேண்டுமே ! இவளோடு பழகும் எல்லோருக்குமே இந்தப் பண்பு ஏன் வருகிறதோ? இது அவளிடம் உள்ள பலயினத்தின் காரணமா-? அல் லது பழகுபவர்களை வசீகரிக்கும் காந்த சக்தி ஏதாவது அவளுடன் கூடவே பிறந்து விட்டதா ? அவளுக்கே அது பற்றி எதுவும் புரியவில்லை தாய் இறந்த பின் அவளுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்வதற்கு வேண்டிய உரிமை யைத் தன் உயிர்ச்சிநேகிதியாகிய சீதாவுக்கு மட்டுமே அவள் அளித்திருந்தாள். சீதாவின் அன்பையும்,ஆறுதலையும், கண்டிப் பையும் சுமதி எதிர்பார்த்தாள். ஆனல் சங்கரிடம் இருந்து அவள் எதையும் எதிர்பார்க்கவில்லை! அவன் வலிந்து கொடுக் கும் போதெல்லாம் வேண்டாம் என்று தான் கூறத் துடித் தாள். ஆனல் அவளால் முடிந்ததா? சங்கருக்கு அவளைக்கண் டிக்கும் உரிமை எப்படிக் கிடைத்த து? இதற்குத் தான் அவ ளுக்கு விடை காண முடியவில்லை.
சங்கர்மேல் அவளுக்கு மட்டும் அன்பு இல்லையா?வாஞ் சையில்லையா? பாசம் இல்லையா? ஆசையில்லையா ?எல்லாம் கொள்ளை கொள்ளையாகத் தான் இருந்தன. அவளால் அதை எப்படி மறுக்க முடியும்? மறைக்கத் தான் முடியுமா? ஒன்றை மட்டும் அவளால் மறைக்க முடியவில்லை. அது தான் . அது தான் . அவளுடைய மனம் அவளை யறியாமலே ச ங் க  ைர விரும்புகிறது . ஆனல் அறிவுமறுகோணத்தில் எழுந்து அந்த எண்ணத்தை வேரோடு வெட்டிப் புதைக்கினறது அந்த வெ ளியை நிரப்ப இலட்சியம் என்ற ஒன்று அவளுக்கும் சங்கருக் கும் இடையே பெரிய அரக்கனைப் போல் வானளாவ ஓங்கி

சுடர் விளக்கு 23
நின்றது, தனது இலட்சியம் தாயின் கடைசி ஆசை. அந்த மத்தம ஆத்மாவின் அபிலாசை நிறை வேறச் சங்கரின் உறவு சிறிதாவது தடையாக இருக்கக் கூடாது என்பது அவள் எண்ணம். இந்த ஒரு நோக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் அவள் சதா கடமை கடமை என்று கூறிக் கடமையில் இன்பம் காணத் துடித்தாள். தன் மன நிலை அவ ளுக்கு நன்ரு கப் புரிந்தது. வெண்ணிலாவைக் கண்டதும் ஆர வாரித்து அலைமோதும் சமுத்திராதேவியைப் போல் சங்க ரைக் கண்டதும் பொங்கியெழுந்த தன் உள்ளத் துடிப்பைக் கட்டுப்படுத்து ஞ்சக்தி அவளிடம் கிடையாது என்பதை அவள் நன்கு அறிந்தாள். அதனுற் தன் குறிக்கோள் சுக்கு நூருகித் தகர்ந்து விடும் என்ற பயம் அவளை எபபோதும் வாட் டி வதைத்தது.
அவளுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. அவள் எவ்வளவு தூரம் சங்கரிடம் இருந்து கப்பியோ ட நினைத்தாளோ அதற்கும் வேகமாக அவன் அவளைத் துரத்திப் பிடிக்க முற்பட்டான். அந்தப் பிடியில் இருந்து அவள் விடு பட விரும்ப வில்லை. அவனைக் கண்டவுடன் அவளுக்கு எல்லா மே மறந்து விடும். அவன் வரும் போதெல்லாம் வராமலே இருக்கக் கூடாதா என்று நினைப்பாள். ஆனல் ஒரு நா ள் அவன் வரா விட்டால் அவளால் அதைப் பொறுக்கவே முடி யாது. அவளுக்கு எந்த வேலையுமே செய்ய முடியாமற் போய் விடும்.
அவளுடைய இலட்சியம் என்ன இன்று நாளை முடியக் கூடியதா..? எத்தனை ஆண்டுகள் செல்லுமோ..? ஒருவேளை இந்த ஜென்மத்தில் முடியாமலும் போய் விடலாம்! அதை நினைத்துப் பார்க்கும் போது அவள் இதயம் துணுக்குறும். இருந்தும் அவள் தன்னம்பிக்கையைக் கைவிடவில்லை மனதில் உறுதியை வலிந்து நிரப்பிக் கொள்வாள் ஐந்தாண்டுகளல்ல ஐம்பதாண்டுகள் வேண்டுமானலும் சரி நான் என் எண்ணத் தைப் பூர்த்தி செய்தே தீருவேன் என்று கங்கணங்கட்டுவாள்
அன்று கூட இப்படித்தான் ஏதோ பல் வேறு சிந்தனை களின் மத்தியில் கண்ணயர்ந்தவள் எவ்வளவு நேரந்தான் படுக்கையிற் கிடந்தாளே தெரியாது திடீர் என பூம் பூம, என்று வாசலில் கேட்ட கார் ‘ஹார்ன்' அவளைத் திடுக் கிட்டு விழிக்க வைத்தது. கண் திறந்த அவள் காலைக் கதிரவனின்

Page 15
24 சுடர் விளக்கு
SEq qqSS LLLLLLLEESS SSEE SS SSA SSSSSS SAAASS SLLLH ESS SS LLLLLS SS LLSSSS SS MM T kSkLSTS SkSLLSkS S CLS LLgLSMMLMLMALAL SSLSCCSLCMLSLeLSLCkCESSESMS M AqqAqq SALALLSLLLSAAAALASA S S
ஆல்ை ஒரு நாள் அவன் வரா விட்டால் அவளால் அதைப் பொறுக்கவே முடியாது. அவ
ளுக்கு எந்த வேலை யுமே செய்ய முடியாமல் போய்விடும்
 

சுடர் விளக்கு 25
மெல்லியசெங் கீற்றுக்கதிர்கள் தன் படுக்கையில் விழுந்து ஒளிவீசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் சுவரில் மாட்டப் பட்டிருந்த கடிகாரத்தில் தன் பார்வையைச் செலுத்தினுள். மணி ஏழடிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. வைத்திய சாலைக்குப் போவதற்கு நேரமாகி விட்டதை உணர்ந்த அவள அம்மாடி யோவ் ? என்றபடி கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்து ஹாலுக்குள் நுழைந்தாள் அப்போது வெளியே ஓர் உருவம் நிழலாடியமாதிரி தெரியவே எட்டிப்பார்த்த வள் நாணத்தால் முகம் குங்குமம் போற் சிவப்பேறகதவுத் திரைச்சீலையை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டு சிலைபோல் நிலைபெயராமல் நின்ருள்.

Page 16
26. சுடர் விளக்கு
5. துணிந்தபின் பயமெதற்கு ?
எதிர்பாராத வேளையில் எதிர்பாராத விதத்தில் ஏற் பட்ட சந்திப்பு இரண்டு உள்ளங்களிடையே ஒருவித முல னத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சில நிமிட நேர மெளனம் அவர்கள் நிலையை அவர்களுக்கு உணர்த்தியது.
'உன் துக்கத்தைக் கெடுத்துவிட்டேனக்கும்!” ஏதோ மன்னிக்க முடியா த குற்றத்தைச்செய்து விட்டவன்போல் தயங்கித்தயங்கி அவளைப்பார்த்துக் கேட்டான் சங்கர்.
அதுவரை திரைச்சீலை யின் அசைவுக்குள் உள்ளும் புறமுமாக விளையாடி க கொண்டிருந்த விழிகள் இப்போது அவனையே நோக்கின. வாய் ஊமையாகி விட்டது போன்ற உணர்ச்சியை எப்படியோ சமாளித்துக்கொண்டு பரவா யில்லை சங்கர் ; இருங்கள் ஐந்தே நிமிடத்தில் வந்து விடுகி றேன் ” என்றவள் பதிலுககுக் காத்திராமல் விரைவாகத் திரும்பி உள்ளே சென்ருள்.
சொல்லியபடியே ஐந்தே நிமிடங்களில் தூய வெள்ளை யாடையில் வெளிவந்த சுமதி பக்கத்து மேசைமேல் சுருண்டு கிடந்தஸ்ரெ தஸ்கோப்பை எடுத்துத்தோளில் அணிந்தபடியே ‘நான் ரெடி போகலாமா..? என்று கேட்டு விட்டு தன் பார்வையைச் சங்கரிடம் இருந்து அகற்றி வேறு புறந்திரும்பி நின் ருள்.
'சுமதியம்மா நீங்கள் சாப்பிடவுமில்லை. உடம்பு என் னத்துக்கு ஆகப்போகிறதோ..? டாக்டருக்குப் படித்தால் மட்டும் போதுமா..? உடம்பைக் கவனிக்கத் தெரிய வேண் டாமா..?’ என்று பெரிய சத்தம் போட்டுக் கேட் டுக்கொண்டே வெளியே வந்தாள் சமயற்காரி தங்கம்.
அப்பப்பா! உன் ரகளை எனககு வேறு பிரச்சினை. ஒரு நேரம் சாப்பிடா விட்டால் நான் செத்து விடுவேன் என்று பயந்து விட்டாயாக்கும்' இப்போது பசியே இல்லை. தங்கம் எல்லாம் சாவகாசமாக மத்தியானம் வட்டியோடு சாப் பிட்டுவிடுகிறேன்! திருத்தியா..?’ என்றவள் மீண்டும் மறு பக்கந் திரும்பி "போகலாமா சங்கர் ?" என்று கேடு விட்டு அவனைப் பார்த்தாள்.

சுடர் விளக்கு - 27
தங்கத்துக்கு அவள் செய்கை சிறிதும் பிடிக்க வில்லை அவளது அதிருப்தி முகச்சுளிவுடன் வெளிப்பட்டது. யாருக்காக நீங்கள் இப்படி இரவு பகல் என்று பாரா மல் உழைக்கிறீர்கள்? இந்த வீட்டில் எனக்காகவா சயைக் கிறேன்? நீங்கள் சாப்பிடாதபோது எனக்கு மட்டு:ம் எதற்கு உணவு? நானும் உங்களோடு சேர்ந்து பட்டினி கிடந்து செத்து விடுகிறேன்’ என்று உரிமையோடு வாதாடினுள். தன் முன்னிலையிலேயே சுமதியை இத்தனை தூரம் கண்டிக் கும் இந்தப்பெண் தான் சுமதியோடு இவ்வளவு தாராள மாகப் பழகுவதையிட்டு என ன நினைத்துக்கொள்வாளோ என்று நினைத்தபோது அவனைச் சிறுகச் சிறுகப் பயம் கவ் விக்கொண்டது. எப்படியாவது இந்தப் பெண்ணை என்பக் பம் இழுத்துக்கொண்டால் என் காரியம் வெகு சுலபமாக வெற்றியடைந்து விடும் என்று எண்ணிய போது அவன் பயம் இருந்த இடம்தெரியாமல் ஒடி மறைந்து கொண்டது.
இவ்வளவு இக்கட்டான நிலையிற்கூட அவனது மூளை தீவிரமாக வேலை செய்யத்தவறவில்லை. "ஆமாம் சுமதி நீ யாருக்காகத்தான் இப்படி பட்டினி கிடந்து உழைக்க வேண்டும். தங்கம் கூறுவதில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது’ என்று தங்கத்தின் பக்கம் சாய்ந்து பேசியவன் தங்கம் அந்தச்சாப்பாட்டுத் தட்டை அப்படியே என்னி டங்கொடுத்து விட்டு நீ போய்ச் சாப்பிடு. சுமதியைச் சாப்பிட வைப்பது என் பொறுப்பு!” என்று உரிமையோடு கூறிவிட்டுச் சுமதியை அன்பொழுகப் பார்த்தான்.
தனக்கும் ஒரு மரியாதை கொடுத்துத் தன்னையும் ஒரு ஆளாக மதித்துச் சங்கர் பேசியதில் தங்கத்துக்கு அளவு கடந்த ஆனந்தம். தன் கையில் அதுவரை பிடித்திருந்த உணவுத்தட்டைச் சங்கரிடம் கொடுத்து விட்டுத் தங்கம் தன் தங்கப்பல் தெரியும் வரை சிரித்தபடியே உள்ளே சென்ருள். அவளுடைய பெண்மனம் சங்கரையும், சுமதி யையும் ஜோடி சேர்த்து மகிழ்ந்தது.
சுமதிக்கோ உயிர் தன்னை விட்டுச் சிறுகச் சிறுகப் பிரிந்து போவது போன்ற ஓர் பிரமை. முகமெல்லாம் ஒரேயடியாக வியர்த்துக் கொட்டியது. சங்கரின் விழுங்கும் விழிகளையும் அவன் கையிற் பிடித்திருந்த உணவுத் தட்டை யும் பார்க்கப்பார்க்க அவள் உடலெல்லாம் ஏதோ ஒரு

Page 17
28 சுடர் விளக்கு
வித உணர்ச்சியால் அதிர்ச்சியுற்றது; இரு உள்ளங்களி டையே எழுந்திருக்கும் அந்த ஆசையை மொட்டிலேயே துண்டித்துவிட நினைத்தாள். மனம் என்னென்னவோ எல் லாம் பேச வேண்டும் என்று துடித்தது. ஆனல் மீண்டும் அவளுடைய வாய் அவளைப் பகைத்துக்கொண்டு விட்டது. ஆமாம் அவள் இரண்டாம் முறையாக ஊமையாகிவிட்டாள்
"சுப தி எல, வ யோசிக்கிருய்...? ம் 1 சீக்கிரம் சாப்பிடு .நேரமாகிறது. ம்! கெதி பண்ணு சுமதி !’ உணவுத் தட்டை மேசைமேல் வைத்துவிட்டு அவளைத் துரிதப்படுத் படுத்தினன் சங்கர்.
சுமதிக்கு ஆத்திரம் எல்லாம் தங்கத்தின் மீது திரும் பியது. "சீ! இந்தத்தங்கம் ஒரு சிறிதாவது இங்கிதமில் லாத பெண். நிலைமையை நன்ருகப் புரிந்தும் இப்படி என் னைத் தனியாகத் தவிக்க விட்டுப் போய் விட்டாளே. வாய் விட்டு அவளை அழைத்துவிடுவோமா என்று தனக்குள் பல வாறு சிந்தித்தவள் திடீரெனத் தன் எண்ணத்தை மாற் றிக்கொண்டவளாய் ! தங்கம் ஒரடிபாய்ந்தால் நீங்கள் இரண்டடி பாய்வீாகள் போலிருக்கே..! ஏன் சங்கர். இப்படி என்னை இருவருமாகச் சேர்ந்து வதைக்கிறீர்கள்? பசியிருந் தால் சாப்பிடாமல் இருப்பேனு? பசியில்லாமல் புசிக்க முடியுமா? நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து என்னை ஒரு சின்னப்பாப்பா ஆக்குகிறீர்கள், என்னைப பொறுத்தவரை யில் சாப்பாட்டுக்காக யாருமே என்னை வற்புறுத்த வேண் டிய அவசியமில்லை. பசி மட்டும் இருந்தால் வயிற்றில் காலி யிடம் இருக்கும்வரை உணவை ஒரு கை பார்த்தே தீரு வேன். நீங்கள் சிறுபிள்ளை மாதிரி விளையாடாமல் வாருங் கள் நேரமாகிறது ஹாஸ்பிட்டலுக்குப்போகலாம்" என்று எப்படியாவது அந்த நெருக்கமான சூழ் நிலையில் இருந்து தப்பினுல் போதும் என்ற நோக்கத்துடன் பதிலளித்தாள் சுமதி.
அவளை எப்பாடு பட்டாவது இன்று சாப்பிடவைத் துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் இருந்த அவன் மன தில் சுமதியின் பதில் இன்னும் ஆசையை வளாத்தது. என்ன செய்து அவளைச் சாப்பிட வைக்கலாம் என்று யோசித்த படியே எதிர்புறமிருந்த சாளரத்தின் அருகில் சென்ற அவன் பார்வை வெளியே சென்று நிலைத்தது.

சுடர் விளக்கு 29
ஆமாம்! அங்கே ஒரு தாய்க் காகம் தன் குஞ்சுக் காகத்திற்கு உணவைத் தன் உதடுகளில் அள்ளித் திணித் துக்கொண்டிருந்தது. அந்தக்காட்சி இவன் மனதிலும் ஒரு சபலனத்தை உண்டாக்கி விட்டது. சுமதி சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தால் இதுவே ஒரு இன்பமாக விருக் கும் என்ற நினைவில் அவன் மீண்டும் அவளை வற்புறுத்தி ஞன்.
அவளுமோ சிறிதும் விட்டுக்கொடாமல் "தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர்கள் சங்கர். ஹாஸ்பிட்டலுக்கு போனப்புறம் ஏதாவது லைட்டாக எடுத்துக் கொண்டால் போயிற்று. ப் வீஸ் சங்கர்! மத்தியானம் வேண்டுமானல் நீங்கள் என் கூடவே வாருங்கள். நான் சாப்பிடுவதைப் பார்த்து பிரமித்துப்போய் விடுவீர்கள். இப்போ எனக்காக வாருங்கள். பளிஸ் ப்ளீஸ் சங்கர். ’ என்று கூறிக்கொண்டே வன் பதிலுக்கு காத்திராமல் காலடி எடுத்து வைத்த அவளே அவன் கரம் பிடித்து நிறுத்தியது.
இப்படியான ஒர் நிகழ்ச்சியை எதிர்பார்க்காத சுமதி அவன் பிடியில் இருந்து விலக முயன்றபோது மேசையில் இருந்த 'எவர் சில்வர்” பாத்திரம் கீழே விழுந்து ‘நொய்' என்ற பேரிரைச்சலை உண்டு பண்ணியது. காகமோ கோழி யோ புரளிசெய்கின்றதாக்கும் என்று பார்ப்பதற்காக அவ சா மாக உள்ளே நுழைந்த தங்கம் சுமதி, சங்கரின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பதை கண்டு அடக்க முடியாமற் பீறிட்டு வந்த சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டு இங்கிதந் தெரிந்தவளாக உள்ளே நுழைந்தாள். அவளுக்கு அந்தக் காட்சி அளவிலா மகிழ்ச்சியைக்கொடுத்தது.
சங்கரின் அன்புப்பிடியில் இருந்து விலகிக்கொள்ள முடியாமல் தவித்த சுமதி அவனைப் பரிதாபமாகப் பார்த் தாள். அந்த விழிகளில் பயமும் ஆச்சரியமும் போட்டி போட்டு மிளிர்ந்தன. இருவரும் ஒருவரையொருவர் பார்த்த பார்வையில் செயல் மறந்தனர். சுமதி செய்வதறியாது
தலை குனிந்துடன் உதடுகளைக் கடித்துக்கொண்டாள். அவ
ளுடைய கை பயத்தினுல் உதறல் எடுத்ததும் சங்கரின் பிடி நெழிழ்ந்தது.

Page 18
30 சுடர் விளக்கு
சங்கருக்குத் தான் செய்ததை நினைத்தபோது மிக வும் வெட்கமாக இருந்தது. இவ்வளவு சீக்கிரமாகத் தான் உணர்ச்சி வசப்படுவான் என்று அவன் நினைத்திருக்கவில்லை சுமதி தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாளோ ? என்று நினைக்கவே அவனுக்குப் பயமாக இருந்தது. எப்படியாவது நிலைமையைச் சமாளித்தால் போதும் என்ற எண்ணத்தில் * சீக்கிரம் சாப்பிடு சுமதி, சாப்பிடா விட்ட ல நானே உன் வாய்க்குட்திணித்து விடுவேன்' என்று உரிமையும்அன்பும்போ ட்டிபோடக்கூறினன். அவனது வேண்டுகோளை ஏற்கவும் முடி யாமல் எதிர்க்கவும் துணியாமல் ஸ்ரெதஸ் கோப்பைக்கையில் பிடித்து அதனுடன் விளையாடிய படியே சில நிமிடத்தைக் கழித்தாள் சுமதி. சாப்பிடா விட்டால் சங்கரிடம் இருந்து தப்பவும் முடியாது. அவன் முன்னிலையில் உண்பதற்கு இந்தப் பாழாப்போன நாணம் இடங்கொடுக்கவும் மாட்டாது என்ற இரண்டுங் கெட்டான் நிலையில் யோசித்து நின்ற அவளை 'சுமதி” குறித்த காலம் கடந்து விட்டது இனி மேலும் தாமதிக்க நேரம் இடம் கொடுக்காது எங்கே இப்படித்திரும்பு" என்று கூறியவன் அவள் எதிர்பாராக நிலையில் அவள் கரத்தை அழுத்திப் பிடித்து ஒருபிடி உண வைத் தன் மறுகரத்தால் அள்ளி அவள் வாய்க்குட் திணிக் கப் போனன்.
சுமதியின் உடலெல்லாம் மின்சாரத்தால் தாக்குண் டது போன்ற ஒர் உணர்ச்சி, சங்கரின் போக்கு அவளுக்கு ஒன்றுமாகப் புரிய வில்லை. ஆகவே தன் குரலைச்சிறிது கடு மையாக்கி அவனை ப் பொய்க்கோபத்துடன் பார்த் து ‘இதென்ன சங்கர் சிறுபிள்ளை மாதிரி, என் கையை விடுங் கள், ச் சா! இந்த நிலையில் எங்களை யாராவது பார்த்தால்.’ அவள் பேசி முடிக்க வில்லை “ பார்த்தால் என்ன புதிதாக மணஞ் செய்துகொண்ட தம்பதிகள் "தேன் நிலவு கொண் டாடுகிருர்களாக்கும் என்று நினைப்பார்கள். இவ்வளவு தூரம் துணிந்த பின்பு இதற்குப் போய்ப் பயப்படலாமா? ஓர் ஏளனப் புன்னகை தவழக் கூறியபடி முகத்தில் எள் ளும் கொள்ளும் * வெடிக்கக் கையிற் தோற்பெட்டியோடு பிரசன்னமானன் ஓர் இளம் வாலிபன்.

6. என் எதிர்கால மனைவி நீ !
மரணம் மனிதனின் அழையாத விருந்தாளி என அவள் அறிந்திருக்கிருள். மனிதன் நினையாதபோது; விரும் பாதபோது; வேண்டாம் என்று துடிக்கும் போது ; அது ஒற்றைக்காலில் அவனை அடித்துச்சென்று விடுகிறது மனித வாழ்வில் அது ஒரு சகஜமான சம்பிரதாயமாகப் போய் விட்டது.
ஆனல் துரதிர்ஷ்டம் ..!
அதுகூட மனித வாழ்வில் அழையாத விருந்தாளி தான ? பிறர் வாழ்வில் இல்லா விட்டாலும் அவள் வாழ் வில் அது நிச்சயமாக ஒரு அழைப்பில்லாத விருந்தாளி போற் தான் நுழைந்திருக்கிறது.
இந்த அதிகாலையில் அதுவும் இப்படியான ஒரு நிலை யில் சேகர் அவளைக் கண்டதும அவள் துரதிர்ஷ்டம தான் இல்லையென் ருல் சேகர் சிறிது முன்னர் அல்லது பின்னர் வந்திருக்கக் கூடாதா ? திடுக்கிட்டுத் திரும்பிய சுமதி சங்கரின் பிடியில் இருந்து தன்னை மிகவும் அவசரமாக விடுவித்துக்கொண்டு செய்வதறியாது களவ செய்யும் போது பிடிபட்ட குழந்தை போல் நிமிர்ந்து நிற்கமுடியாத அவமானத்தால் கூனிக் குறுகி நின் ருள்.
சேகர் பேசிய விதமும் அந்தப்பேச்சின் தொனியும், அவளுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. சேகருக்கு ஏதா வது சுடச்சுட சொல்ல வேண்டும் என்று நினைத்த அவள்
*சேகர்-பேசுவதற்கு மு ன் எதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். வா. த்தைகள் கட்டுப்பாட்டுக்கு அடங் காமல் வெளிவந்தால் அப்புறம் அதற்காக மிகவும் மன வருத்தப்பட வேண்டிவரும் ஜாக்கிரதை' என்று சற்றுக் கோபமாகவே கூறினுள்.
சுமதி எதற்காக நீ இப்படி ஆத்திரப்படுகிருய் ? அருமையான கட்டத்தில் இவன் வந்து கெடுத்து விட்டானே என்று கோபமாக்கும். பாவம் ! பரவாயில்லை சுமதி. நான் வேறுயாருமில்லை. உன் மைத்துணன் நீ நடிக்கும் இந்த ரஸ்மான, கட்டத்தைக் கண்டு களிக்க வேண்டியவன் இருந் தாலும் . ச் சர். ஒரு வயது வந்தபெண் அதிலும் ஒரு லேடி

Page 19
32 சுடர் விளக்கு
டாக்டர் ! திருமணத்திற்கு வெயிட்டிங் லிஸ்டில இருக்கும் நங்கை விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு இளம் வாலிபனேடு கொஞ்சிக் குலவுவது நம் கலாச்சாரத்திற்கே ஒத்துக்கொள்ளாது. அடடா என்ன அருமையான காட்சி திரைப்படக் காதலர்கள் பிச்சை வாங்க வேண்டுமாக்கும் . ம். ஆமா இது தினசரி நடக்கும் ஒரு நாடகமா அல்லது இன்றைக்குத் தான் புதிதாக.
அவன் முடிக்க வில்லை ‘சேகர்’ என்று ஆத்திரத்தில் இடைமறித்த சுமதி மைத்துனர் என்று மரியாதை கொடுக் கப் போனல் நீங்கள் மிஞ்சுகிறீர்கள் . எல்லாம் நான் கொடுத்த இடந்தான். . நான் எக்கேடு கெட்டாலும் என் னை ப்பற்றிக் கவலைப்பட நீங்கள் யார்? என்னைக் கண்டிக்சு உங்களுக்கு என்ன உரிமை உண்டு? என்று சுடச் சுடப் பொரிந்து தள்ளினள். நான் யார் .? எனக்கென்ன உரிமை? நல்ல கேள்வி கான் சுமதி. இதற்கு நீ அவசியம் பதில் அறி யத்தான் வேண்டும். உன்னைக் கண்டிக்க உன்னைப் பற்றிக் கவலைப்பட உன் வாழ்க்கைப் பாதையைத் திருத்தியமைக்க எல்லா வற்றிக்கும் எனக்குப் பூரண உரிமை உண்டு. என் எதிர்கால வாழ்க்கை வளம்பெற வேண்டுமென்முல் உள் ளத்தாலோ, உடலாலோ நீ களங்கமின்றித் துலங்க வேண் டும். காரணம். எனக்கு வாழ்க்கைப்பட போகிறவள் நீ நீ.நீ என் எதிாகால மனைவி இப்போ புரிந்ததா ஹ’ ஹா கூறிவிட்டு விகாரமாகச் சிரித்தான் சேகர்.
* மனைவி..இதைக் கூற உங்களுக்கு வெட்கமாயில்லை ! பெண்ணுக இருந்தால் அவளைப் பொம்மை என்று கருதி எப்படியும் ஆட்டிவைக்கலாம் என்பது உங்கள் அபிப்பிரா யமாக இருந்தால் அதைத் தயவு செய்து இந்த நிமிடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ளுங்கள். எள் உள்ளத்தைப்பற்றி ஒரு சிறிதும் கவலைம்படாமல் என்னிடம் ஒரு வார்த்தை கலந்து கொள்ளாமல் என்னை உங்கள் எதிர்கால மனைவி என்று சொல்ல உங்களுக்கு எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்! பாவம் உறவினர் ஆயிற்றே என்று மரியாதை காட்டப்போனுல் மமதை காட்டுகிறீர்கள் என் உத்தரவின் றியே என்னை உங்கள் கற்பனை மனைவியாக்கிக் கொண்டீர் களாக்கும். சீ வெட்கமாயில்லை? 'கோபத்தில் வார்த்தை களைப் படபட எனப்பேசித் தீர்த்து விட்டாள் சுமதி.

சுடர் விளக்கு 33
‘வெட்கம்.ஓ ! அதன் அர்த்தம் கூட உனக்குப் புரிகி றதா ? தெரிந்திருந்தால் அல்லது அதைப்பற்றி ஒரு சிறி தாது கவலைப்பட்டிருந்தால் ஒர் ஆடவனின் அரவணைப் பில் அதுவும் இந்தப்பட்டப்பகல் வேளைமில் சீ இப்போது சொல் யாருக்கு வெட்கமில்லை. ? எனக்கா? உனக்கா? நான் மட்டும் நினைத்தால் இந்த உலகமே உன்னைப்பார்த்துக் கை கொட்டிச்சிரிக்கும் படி செய்யமுடியும் ஜாக்கிரதை ஆமாம்! சேகரும் விட்டுக்கொடுக்காமல் எதிர் வாஞ் செய்து கொண்டே இருந்தான்.
“பூ உனக்கு அத்தனை துணிவா. ? யாருக்கு வெட்க மில்லை என்று கூறினய் ? எங்கள் சுமதியம்மாவுக்கா ? மானங்கெட்ட உனக்கு அந்த உத்தமியின் பெயரைக்கூ என்ன அருகதை இருககு.?
இதுவரை தன் ஆத்திரத்தையெல்லாம் ஒன்று சேர்த்து தன் எஜமானிக்காக மடை திறந்த வெள்ளம்போற்திறந்ாது விட்டாள் தங்கம்.
A.
'உம் சமையற்காரிக்குக் கூட இந்த வீட்டில் இத்தனை செருக்கு. ஏன் இருக்காது.? இன்னும் சிறிது நேரம் சென் ருல் இந்த வீட்டில் உள்ள கதிரை மேசைகள் கூடப்பேசத் தொடங்கி விடும். த ர யந் ற பெண் த னியா க இருக்கிருள் என்ற பச்சாதாபத்தின் பேரில் பார்க்க வந் தால் எதுவும் கேட்கலாந்தானே! போகட்டும் சுமதி நீ என்னை அவமானப்படுத்தி விட்டாய். உனககு ஒன்றுகூற விரும்புகிறேன். ஆண்பிள்ளைக்கு ரோசம் வராது. வந்துவிட் டால் அது சுலபமாக மாறிவிடாது. நான் செல்கிறேன். மரியாதை தெரியாத வீட்டில் இனி ஒரு நிமிடங்கூட நிற் கக் கூடாது. அது என் கொளரவத்திற்கே இழுக்காகும். ஆனல் ஒரு நாள் திரும்பி வருவேன். நிச்சயமாக வருவேன் அப்போது நீ எனக்கு மனைவியா வாய்! இதை மட்டும் நீ மறக்காமல் மனதில் வைத்திருந்தாற் போதும். நான் வருகி றேன். வெடுக்கென்று பேசி விட்டு விரைவாக அவ்விடத்தை விட்டு’ நகர்ந்தான் சேகர்.
அதுவரை மின்சாரத்தால் தாக்குண்டவன் போல் செயலற்று நின்ற சங்கர் பரிவோடு சுமதியின் பக்கந்திரும்பி னன். தான் செய்தது தவறு என்பதைச் சேகர் சுட்டிக்காட்

Page 20
34 சுடர் விளக்கு
டிய பின்புதான் அவன் உணர்ந்தான். தன்னல் சுமதிக்கு வீண் சிரமமும், தொல்லையும், அவமானப்பெயரும் உண் டாகி விட்டது என்று நினைக்கவே அவன் மனம் வேதனைப் பட்டது. அவன் இப்படி யெல்லாம் நடக்கும் என்று நினைத் தானு என்ன...? ஏதோ சுமதியின் மீது ஏற்பட்ட அளவு கடந்த அன்பு அவனை அப்படிச்செய்து வைத்தது. அந்த மோசமான நிலையிலுங்கூட அவன் மனதில் ஒரு தர்க்கம் நடந்தது. ஒரு பெண்ணை ஒர் ஆண் தற்செயலாகத் தீண்ட நேர்ந்து விட்டால் எதற்காக இந்தச் சமூகம் இப்படி அடித் துக்கொள்கிறது.! அவன் ஒரு டாக்டர். அந்த நிலையில் அவன் எத்தனையோ கன்னிப்பெண்களை எல்லாம் தொட் உழைந்து பரீட்சித்திருக்கிருன். அப்படியானுல் அதுவுந் தவறுதானே! ஒரு வயது வந்த ஆண் பெண் இவர்கள் எந்த நிலையிற் பழகினலும் அது எதுவுமற்ற சகோதர பாசத்தின் உறவாக இருந்தாற்கூட எம் சமுகம் ஒற்றைக் கண்கொண்டு தான் நோக்குகிறது. இது ஏன்? எதனுல் இது மனிதஞலே ஏற்பட்ட சம்பிரதாயமோ அல்லது இயற்கை யின் நியதியோ, என்று அவனுக்கே தெரியாது.
*சுமதி என்னை மன்னித்து விடு. இத்தனை கலவரத் திற்கும் நான்தான் காரணம் எள்று நினைக்கும் போது என் நெஞ்சு வேதனையாற் துடிக்கிறது. வீணுக உறவின ரைப் பகைத்துக் கொள்ளவேண்டி வந்து விட்டது. இப்படி யெல்லாம் நடக்கும் என்று நான் எதிாபார்க்கவேயில்லை. தெரிந்திருந்தால் இந்தப்பக்கந் தலை நீட்டியே இருக்க
மாட்டேன்.”
அவன் பேச்சிடையே குறுக்கிட்ட சுமதி இல்லை சங்கர்! எனக்கு யாருமே உறவில்லை. இவர்கள் எல்லாம் நான் டாக்டராகியபின் என் பதவிக்கும், பணத்துக்கும் மதிப்புக் கொடுக்க வந்த உறவினர்கள்தான். என் தாயா ரும் நானும் கஷ்டப்பட்டு அல்லற்பட்டு ஆற்ருது கண்ணிர் விட்டபோது ஏற்படாத உறவு, உரிமை, பந்தம், பாசம் எல்லாம் எங்கிருந்து வந்ததோ ? ஏதோ நடந்தது நடந்து விட்டது. நடந்ததைப் பற்றிக் கவலைப்பட்டு என்னுவது. வீணுகமனதைத்தான் அலட்டிக் கொள்ளவேண்டும், நடப் பவை இனி நல்லவையாக இருக் கட்டும். இப்போது ஆஸ் பத்திரிக்கு நேரமாகிறது. வாருங்கள் போகலாம் என்று கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பாாக்காமலே நடந்தாள்.

சுடர் விளக்கு 35
* சங்கர் நீங்கள் செய்தது மட்டும் என்ன சரியா? 6ான் தான் இருந்தாலும் நான் திருமணமாகாத இளம் பெண் நாளே ஒரு குடும்பத்திற் புகுந்து விளக்கேற்ற வேண்டியவள் நாலு பேர் கண்டமாதிரிப் பேசி எள்ளிநகையாடும் படி நடந்துகொண்டது நீங்கள் செய்த மகா தவறு. அதற்கு மன்னிப்பே கிடையாது’ என்று கூறிவிடு என்று அவள் உள்மனம் தவித்தது. ஆனல் நினைக்க ஏற்பட்ட துணிவு சொல்வற்கு இருக்கவில்லை. தன் மனதில் உதித்த எண்ணத் தை மனதிற்குள்ளேயே புதைத்து விட்டு காரில் ஏறி உட் கார்ந்தாள் அவள். அவளைத்தொடர்ந்து ஏறிய சங்கர் காரை "ஸ்ராட் கெய்தான். தெருவில் உள்ள புழுதியை எல் லாம் வாரி இறைத்துவிட்டுக் கனவேகமாகப் பறந்தது கார்
ஆஸ்பத்திரிவாயிலை அடையும்வரை இருவரும் ஒருவரு டன் ஒருவர் பேசவில்லை பேசிக்கொள்ள முடியவில்லை. மெளனத்துடன் இறங்கிய இருவரும் வெவ்வேறு திசையிற் சென்ருர்கள்.
நடைப்பிணமாக உள்ளே நுழைந்த சுமதிக்கு அன்று தான் கடமை ஒரு பழுவாக அழுத்தியது. அன்று முழுவ தும் அவள் நிம்மதியின்றித் தவித்தாள். நோயாளிகளைக் கூட அவளுக்கு அன்று நன்முகக் கவனிக்க முடியவில்லை 'நீ என் எதிர்கால மனைவி என்ற சேகரின் வசன மதிரும் பத்திரும்ப அவள் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது.
"எங்கள் உறவினர் கன் எங்களுக்கு உதவவில்லை, எங் களைக் கவனிக்கவில்லை என்பதற்கா அவர்கள் எப்பேதாவது உன்வீடு தேடிவந்தால் அவர்களை உதாசீனம் செய்துவிடாதே அவர்களே அன்புடன் உபசரித்து உன்னல் முடிந்த உதவி யைச் செய்து தாங்கள் இழைத்த தவற்றை அவர்கள் உணரும்படி செய்ய வேண்டும். இதுதான் நான் உனக்குக் கூறும் புத்திமதி என்று அவளுடைய தாயார் எப்போதோ சொன்ன மொழிகளை அவள் மறந்து நடந்திருந்துால் இந்த இக்கட்டான நிலையில் இருந்து அவள் ஒருவேளை தப்பி இருக் 635G)fTAD
ஆனல் காலங்கடந்த பின் இவற்றைப் பற்றியெல் லாம் சிந்தித்து என்ன பயன்..? அவள் உறவு என்று உரிமை கொண்டாடி அவளைச் சந்திக்க வந்த முதற் பேர்வழி சேகர்

Page 21
36 சுடர் விளக்கு
தான். அவனைச்சகோதரனுகப் பாவித்து வந்தபோது வீட் டிற் தங்குவதற்கும் இடங் கொடுத்து ஆதரவு காட்டியது எவ்வளவு பெரிய தவருகப்போய் விட்டது.
இதையெல்லாம் சிந்தித்துப்பார்த்த போது அவளுக்கு எங்காவது ஒரு தனி இடத்திற்சென்று வாய்விட்டுக்கதறி அழ வேண்டும்போற் இருந்தது. அவள் த பின் ரத்தியேக அறைக் குட் சென்று கதவை மூடி விட்டுத் தன் துன்பந்தீரும்வரை அழுதாள். அப்படி அழுவதில் அவளுக்கு ஒரு ஆறுதல் ! ஒரு நிப மதி!!
எவ்வளவு நேரம் அவள் அழுதாளோ அவளுக்குத் தெரியாது. மூடியிருந்த கதவு திற்படும் சத்தம் மட்டும் கேட்டது. அவள் தூங்குவது போல மேசையில் முகம் புக்ைத்து அசைவற்றிருந்தாள். திடீர் எனத் தன் கன்னத்தை யாரோ அன்புடன் வருடிய மென்மையான ஸ்டரிசத்தால் தாக்குண்டு திரும்பினுள் அங்கே அவள் கேசத்தை அன்பு டன் கோதி விட்டு அவளையே அன்பொழுகப் பார்த்து நின்ற அந்த இனிய முகத்தைக்கண்டதும் "சீதா என்று ஒலமிட்டு அவள் மடியில் முகம் புகைத்து தன் துன்பம் தீரும்வரை அழுது கொட்டினள்.
 

7. என்னுயிராய் நீ இருந்தாய்
துன்பம் உச்சத்தின் எல்லையை அடையும் போது அதை யாரிடமாவது பரிமாறி ஆறுதல் பெற்ருல்தான் அமைதி கிடைக்கும் போலிருக்கும். ஆனல் அந்த நிலையில் எம் துன்பத்தில் அனுதாபம் காட்டி யாராவது ஆதரவு அளித்தால் நம் கண்ணிர் அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையமாட்டாது. அதிலும் அவர்கள் எங்கள் அன்புக்குப் பாத்திரமானர்களாக இருந்து விட்டால் ?
அந்த நிலையிற்தான் இருந்தாள் சுமதியும் சிதாவைக் கண்டு அவள் அனுதாபத்தைப் பெற்றதும் சுமதியின் அழு கையும் பெருகியது. அவள் தன் துன்பந் தீரும்வரை சீதா வின் மார்பகத்தில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதாள் w
அவள் அளுவதைக் கண்ட சீதாவுக்கும் அவளுடன் சேர்ந்து அழவேண்டும்போலிருந்தது ஆணுல் அவ்ஸ் தன்னைச் சமாளித்துக்கொண்டு சுமதியின் தலையைககோதியபடி ' சுமதி இங்கே பார்! என்னைப் பார் சுமதி பார்க்கமாட்டாயா.? என்மேல் உனக்கன் பில்லையா..? சீதா நீ மட்டும் ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் இந் நேரம் என் கழுத்தை உன்னிடம் நீட்டி ஜாம் ஜா மென்று பேசாமல் மூன்று முடிச்சுப் போட்டுவிடு என்று கூறியிருப்பேன். ! என்று உன் அன்பை இப்படியெல்லாம் வெளிப்படுத்தும் நீதான இன்று எதையோ என்னிடம் இருந்து மறைக்கப் பார்க் கிருய் என்னிடம் நம்பிக்கையில்லையா ? என்று ஆதங் கத்தோடுவினவி அவளை அன்புடன் அரவணைத்தாள்.
சுமதி எதுவும் பேசவில்லை. அவளாற் பேசமுடிய வில்லை. அதற்குப் பதிலாக அவள் விம்மல் அதிகரித்தது. கண்ணீர் ஆருகப் பெருகியது. ‘வேண்டாப சுமதி.நீ என்னிடம் எதையும் கூறவேண்டாம். என்னிடம் பரிமாறக் கூடாத இரகசியமாக இருந்தால் உன் மனத்தோடேயே இருக்கட்டும். நான் விண்டு கேட்டதற்காக என்னை மன் னித்துவிடு. என்னிடம் பகிர்ந்து கொள்வதால் உன் மனச் ᏧᎯᎦᎧᎼᎠ Ꭼ ᏝᎧ சிறிது குறையலாம் என்றுதான் கேட்டேன். நீ உன் துன்பம் தீரும் வரை அழு. நன்ருக அழு சுமதி.நீ அழுது

Page 22
38 சுடர் விளக்கு
ஒய்ந்து தெளிவு பெற்றபின் நான் வருகிறேன் பொய்க் கோபத்துடன் போக எழுந்த சீதாவைத் தன் கையாற் பிடித்து நிறுத்தினுள் சுமதி. 'நில் சீதா நீ எங்கும் போய் விடாதே ! உன்னிடமிருந்து நான் இதுவரை எதையா வதும றைந்திருந்தாற்தானே இதையும் மறைக்க முடியும். நீ என் உயிர். எனக்கு எல்லாமே நீ தான் சீதா ! உன் அன்பு மட்டும் எனக்குக் கிடைக்க வில்லை என்ருல் என் வாழ்க்கை எப்போதோ பாலைவனமாகியிருக்கும். என் துய ரம் என்னுடனேயே மாய்ந்து மடியட்டும் இதனுல் இதைக் கூறி உன்னையும் எதற்காக கவலைப்படுத்த வேண்டும் என்று தான் இதுவரை தயங்கினேன் நீயும் என்னை விடுவதாக இல்லை. இத்தனை நேரமாக உன்னிடம் மறைத்து வைத்தி ருந்த எல்லாவற்றையும் இப்போது உன்னிட்ம் கூறிவிடுகி : என்று தன் சோகக்கதையைக் கூற ஆரம்பித்தாள் do LD 25
"சீதா! டாக்டர் பூரீதர் என்னை விரும்பியதும்; நான் திருமணஞ் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டதும் அதை நான் மறுத்ததும் உனக்கு நன்ருக நினைவிருக்கும். அவருடைய திருமணம் முடிந்ததும் நீ என்னை அம்பிகா நர் ஸிங்கோமில் ஒரு இடங் காலியாக இருப்பதாகவும் உட னடியாக வந்து என்னை அந்த இடத்துக்கு மனுப்போடச் சொன்னதுங்கூட உனக்கு மறந்திருக்காது. அதுவரை உனது வேண்டுகோள் எதையுமே நிராகரிக்காத நான் அனறு மட் டும் மணிக்கணக்காக உன்னுடன் வாதாடி அங்குவர முடி யாதென்று அடம்பிடித்து மறுத்து விட்டேன். அதன்பின்பு என் மனதைப் புரிந்துகொண்டோ, புரிந்து கொள்ளாமலோ *சுமதி உனக்கு இஷ்டமில்லாத ஒன்றைச் செய் என்று இந் தச் சீதா ஒருபோதும் வற்புறுத்த மாட்டாள்’ என்று அந்தப் பேச்சுக்கே அன்று முற்றுப்புள்ளி வைத்தாய் நீ !’
ஆமாம் சீதா ஆனல் அப்போது நீ கூறியதற்கு நீான் ஏன் மறுப்புத் தெரிவித்தேன் தெரியுமா..? உள்ளதை உள்ளபடி கூறப்போனல் எனக்கே அதன் காரணம் தெரி யாது. ஏதோ ஒரு காந்த சக்தி என்னை இந்த சிவில் ஹாஸ் பிட்டலை விட்டு ஒரு அடிகூட நகரவிட மாட்டேன் என்று தடுத்து விட்டது. அப்போது அந்த சக்தியை என்னல் முற்

சுடர் விளக்கு - 39
முகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது காலப் போக்கில் தான் எனக்குப்புரிந்தது சீதா. ஆமாம். அது அந்த சக்தி யின் மறு பெயர் சங்கர் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னை மன்னித்துவிடு சீதா. இதைக் காதல் என்று கூறிக் கொள்ள நான் விரும்ப வில்லை. அவரைத் திருமணம் செய்துகொள்ள நான் விரும்ப வில்லை. அவரைத் திரும ணம் செய்து கொண்டு அவருடன் இன்பமாக வாழ வேண் டும் என்கிற ஆசை எனக்குக் கிஞ்சித்துங் கிடையாதபோது அதை நான் எப்படி என் வாயால் காதல் என்று கூற முடி யும்! ஆனல் அவருக்காக என் இதயத்தில் ஒரு துடிப்பு உள் ளது. என்பதை மட்டும் என்னல் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இதை வேறு விதமாகக் கூற எனக்குக் தெரிய வில்லை சீதா..?
'சுமதி. 1 திடுக்கிட்டழைத்தவள் சீதா தான்; சுமதி யின் முகம் நாணத்தால் குங்குமம் போற் சிவக்க, சீதா வின் முகம் ஏதோ ஒரு பயத்தால், ஒரு திகிலால் சிறுகச் சிறுக வெளுப்பேறிக் கொண்டேயிருந்தது.
"ஏன் சீதா அபபடிப்பார்க்கிருய்..? உன் முகம் ஏன் ஒரு மாதிரியாகவிருக்கிறது. நான் சங்கரே " டு பழகுவது தப்பா ? கூறு சீதா என் குற்றங் குறைகளை நீயாவது எடுத்துக்கூறு! நான் திருந்த வேண்டாமா ?"
ஒரு நிமிடத்தில் உணர்ச்சிக்கு அடிமையாகி விட்ட சீதாவின் உள்ளத்தைத் தொட்டது சுமதியின் உருக்கமான வேண்டுகோள். அவள் ஒரு கணத்தில் தன்னைச் சமாளித்து வலிந்து ஒரு புன்னகையை வெளுப்பேறிய உதடுகளில் ஏற்றி * சுமதி ஒரு நிமிடம் என்னுல் என் காதுகளையே நம்ப முடிய வில்லை. உன் பேச்சு என்னை ஊமையாக்கி விட்டது. உணர்ச்சியற்று சமைந்து விட்டேன். சதா சமூக சேவை! சமூக சேவை என்று அடித்துக் கொள்ளும் நீதான இன்று சம்சார பந்தத்தில் மூழ்கிவிடத்துணிந்தாய் என்று நினைத் துப்பார்த்த போது எனக்கு பேச்சே வரவில்லை என்று கூறித் தப்பித்துக்கொண்டாள்.
"அதுதான் எனக்கும் புரியவில்லை சீதா 1 ஆண்க ளோடு அதிகமாகப்பழகக் கூடாது, அவர்கள் சகவசமோ நமக்குத் தேவையில்லை என்ற எண்ணத்துடன் இந்த வைத்

Page 23
ச்டர் விளக்கு 40. به
தியசாலைப்படிகளில் கால் வைத்த என்ன பைத்தியமாகவே ஆக்கி விட்டார்கள் இங்குள்ளவர்கள். அவர்கள் காட்டும் அன்புக்கு நான் சிறிதும் அருகதை அற்றவள். என்னை எப் பாட்டுக்கே விட்டுவிடுங்கள் என்று நான் பலமுறை குறிப் பால் உணர்த்தியும் கேட்காதவர்களிடம் என் வாயைத் திறந்து சொல்லவா..? சொன்னல் என்னைப் பற்றிக் கேவ லமாக நினைக்க மாட்டார்களா..? நீயே கூறு சீதா ..! டாக் டர் பூரீதர் இப்போதெல்லாம் என்னுடன் ஒரு உடன் பிறந்த சகோதரர் போலவே பழகிக்கொள்கிருர் . அவர் மிகவும் நல்லவர் அவரைக் கணவராகப் பெறுவதற்கு நான் கொடுத்து வைக்கவில்லை. எதற்கும் அதிாஷ்டம் என்ற ஒன் றும் வேண்டுமல்லவா ? ஏணுே என் மனம் அவரிடம் சாதாரண நட்பைத் தவிர வேறு எதையும் பரிமாற மறுத்து விட்டது. இன்று அதே இடத்தில் சங்கர். காதலாவது கத் தரிககாயாவது. என்று அப்போதெல்லாம் மற்றவர்களைக் கேலிசெய்க எனக்குக் காதல் என்ற பாட த்தைக் கற்றுத் தந்தவாகளே அவர்கள்தான். இது உனக்கு ஏற்றதல்ல இதை மறந்துவிடு என்று ஏதோ ஒன்று எனக்கு இராப் பகலாக உபதேசம் செய்துகொண்டே இருக்கிறது. நான் கூட மறந்துவிட வேண்டும் என்றுதான் முயட்சிக்கிறேன் . ஆனல் முடியவில்லை சீதா..!
"அடே டாக்ட்ர் சங்கர் உனக்குக் காதலிக்க மட்டு மில்லை நன்முகப் பேசவுங் கற்றுக் கொடுத்திருக்கிருரே...! பரவாயில்லை. ஆமாம் சுமதி. அப்போ நீ கூட அவரைக் கா. காத. முடிக்க வெட்கப்பட்டவள் போல் சுமதியையே சண் வெட்டாமற் பார்த்தாள் சீதா. இதுவரை எந்தவின அவள் மன்தில் ஆயிரம் முறையாக ஒலித்துக் கொண்டிருந் தோ அதைக் கேட்டே விட்டாள்.
s "அதுதான் எனக்குப் புரிய வில்லை என்று கூறவில் லையா சீதா.நீ கேட்பதற்காக ஒன்றை மட்டும் உன்னிடம் நான் மறைக்க விரும்பவில்லை. அதாவது சதா எக்கால மும் அவரோடு இருக்க வேண்டும், பேச வேண்டும், சிரிக்க வேண்டும் என்றெல்லாம் என் மனம் விரும்புகிறது. அதை நினைக்கும் போதெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஒரு இன் பக்கிளு கிளுப்பு என் உடலெங்கும் பெருக்கெடுத்தேடு வதை என்னல் உணர முடிகிறது. அவ்வளவுதான் சீதா,

சுடர் விளக்கு 41
சீதாவின் மார்பகம் ஒரு முறை விம்மித் தாழ்ந்தது "அப்பாடா” என்று உள்ளத்திலே ஒரு நிம்மதிப் பெருமூச் செறிந்தது. இருந்தும் ஒரு துடிப்பு, ஒரு ஆவல், அதை அடக்க முடியாதவளாய் 'சுமதி உன் உள்ளத்தில் சங்க ருக்கு அப்படியான ஒரு ஸ்தானம் இருந்தால் பேசாமல் அவரை மணந்து கொள்வதுதானே. ஏன் அவர் இதற்குச் சம்மதிக்க மாட்டாரா? இப்படி எதற்காக அழுது கொட்
டுகிருய்?" என்று கேட்டே விட்டாள்.
"அடி பைத்தியக்காரியே நீ எதற்காக அழ வ்ேண்டும்? இப்போது அழவேண்டியவள் நானல்லவா..? நேற்றுவரை எனக்கு மட்டுமே சொந்தமாக இருந்த உன் இதயத்தை இன்று சங்கரும் பங்குபோட வந்து விட்டாரே என்று ’ அவள் இதைத் தமாஷாக கூறிவிட்டபோதும் அவள் உள் ளம் வாய் விட்டுக்கதறுவதை அவளால் உணர முடிந்தது.
ஆனல் அவள் தன் உள்ளக் கிடக்கையை அந்த இடத் தில் வெளிக்காட்ட முடியுமா ..? அவளுடன் போட்டிக்கு நிற்பது அவளின் உயிருக்குயிரான தோழி சுமதியல்லவா ? *உனக்காக எதையுமே நான் விட்டுக்கொடுப்பேன் சுமதி என்று பலமுறை மார்பு தட்டிப் பேசிய அவள் 'சுமதி இந்த விடயத்தில் மட்டுமே என்னை மன்னித்து விடு. சங் கரை எனக்காக விட்டுவிடு. அவரை நானும் விரும்புகி றேன்" என்று எந்த முகத்தைக் கொண்டு சொல்வது, அவ ளே ப்பற்றி சுமதி மிகவும் கேவலமாக நினைத்துக கொள்ள மாட்டாளா என்ன? சங்கருக்குக்கூடத் தெரியாமல் அவள் மனம் இரவும் பகலும் காலம் நேரம் தெரியாமல் அவனே வைத்துத் தாலாட்டுவதை அவளை மட்டுமன்றி வேறு யார் அறிவார்கள்.?
சும்மா போ, சீதா.செல்லமாகச் சிணுங்கிய சுமதி தான் சீதாவின் சிந்தனையைக் கலைத்தாள். உன்னை விட்டு உன் குறும்புப்பேச்சு மட்டும் ஒரு நாளும் போசா தாக்கும் ஆண் புருவம் பெண் புழுவும் சல்லாபித்துச் சந்தோசமாக இருக்கும் வேளை பார்த்து வேடன் ஒருவன் அந்தப் பெண் புருவைக்குறி பார்த்தால் எப்படியிருக்குமாம்.?
'ஓ ஹோ! பரவாயில்லையே வேடன்கூட வந்து விட் டானு ? அவன் யார்.. ??

Page 24
42 சுடர் விளக்கு
வேறு யாராக இருக்கும் என்று நினைத்துப்பார் எல்லாம் என் மைத்துனன் சேகர் தா ன் !
"ஒ சென்ற முறை நான் உன்னைப்பார்க்க வந்தபோது உன் வீட்டில் இருந்தானே ஒரு வாலிபன், அவனைப்பார்த் ததும் இது யார் இந்த மைனர் என்று உன்னிடம் நான் கேட்டது கூட ஞாபகம! அவனத்தானே குறிப்பிடுகிருய் ?
ஆமாம் சாட்சாத் அவனே தான்.'
"நான் அப்போதே கூற நினைத்தேன் சுமதி. அவன் உடையுt , நடையும், பேச்சும், பார்வையும் அப்பப்பா ! ஒன்றுமே பார்க்கப்பிடிக்க வில்லை. உனக்காக அவன் சேட் டைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தேன். ஆமாம் இப்போது இவனுக்கு என்ன வந்தது. ?”
அவனுக்கு ந} ன் மனைவியாக வேண்டுமாம் சீதா!" என்று அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சீதா விடம் கூறினுள் சுமதி.
"சீ அசட்டுப் பெண்ணுட்டம் ! இதற்குப்போய் அழு வார்களா? யாரும் கையாலாகாதவன் தன் வாய் வரிசை யை காட்டி விட்டுப்போ கிருன். போகட்டும். சுமதி நீயும் தனித்தவள். உற்றவர் உறவினர் என்று யாருமற்றவள். இப்படி எத்தனை நாளைக்கு தனியாக வாழ்வது. நாம் வாழ நினைத்தால் கூட இந்தப் பாழ்பட்ட சமூகம் விடவா போகி றது. நீ சங்கரையே மணந்து கொண்டால் என்ன. சுமதியின் உள்ளத்தில் உள்ளதை அறியவேண்டும் என்ற துடிப்பில் கேட்டுவிட்டு எப்படியான பதில் வரப்போகிற தோ என்ற திகிலில் ஏங்கும் இதயத்துடன் காத்திருந்தாள். அதே சமயம் உள்ளத்தின் ஒரு கோணம் சுமதிக்காகத் தன் காதலைத் தியாகஞ்செய்யவும் திட்டமிட்டது.
*இல்லை சீதா அவரை என் உள்ளம் விரும்புவதென் னவோ உண்மை. தற்போதைய மனநிலையில் அவரை நான் காதலிக்கிறேன், காதலிப்பேன் என்று சொன்னுற் கூடப் பொருந்தும். அதுதான் என் வாழ்க்கையில் நான் செய் யும் பெரிய தவறு. சாதாரணத் தறவல்ல சீதா. இவரு டைய வாழ்க்கையைப் பாதிக்கப்போகும் இமாலயத்தவறு

சுடர் விளிக்கு 43
வாழ்க்கை என்று மனிதர் வாழ்வில் ஒரு முறை ஒளி விடும் சுடர் விளக்கு, என்னைப் பொறுத்தவரையில் இலட்சியம் என்ற எண்ணையில் தான் ஏற்பட வேண்டும். அதுவரை 'திருமணம்’ என்ற அந்தச் சுடரை நான் தொட் டுக்கூடப் பார்க்க முடியாது. இந்த ஒரு காரணத்திற்கா கத்தான் நான் சங்கரை விட்டு விலகிவிட வேண்டும் என்று முயச்சிக்கிறேன்.
"இலட்சியம்.! அத்தனை பயங்கரமானதா உன் இலட் சியம் சுமதி. ? அதைக்கூடிய விரைவில் நிறைவேற்ற முடி யாதா?’ என்று அனுதாபத்துடன் வினவினுள் சீதா.
‘முடியாது சீதா! அது இந்த ஜென்மத்தில் முடியும் என்ற நம்பிக்கையே இல்லை. குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் இருந்தால் ஒரு வேளை அதை அரைகுறையாக முடிக் 3. а) туђ !
'உன் இலட்சியந்தான் என்ன சுமதி! புதிர் போடா மல் கூறேன்!"
at airbor மன்னித்து விடு சீதா! அதை இப்போது கூற முடியாததற்காக நான் வருந்துகிறேன். காலம் வரும் போது கண்டிப்பாகக்கூறுவேன்."
"அப்போது உன் இலட்சியம் நிறைபடத் தேவைப் படுவது பணம். பூ! இவ்வளவுதான? டாக்டர் சங்கர் என்னை மனமார நேசிக்கிருர் என்கிருய்! அவரோ பணக் கார வீட்டுப்பிள்ளை. அப்பா கோடீஸ்வரன். நீ ஒரு வார்த் தை கூறினல் இந்த உதவியை உனக்காகச் செய்ய மாட் டாரா ?”
சீதா. ! என்ன சொன்னுய்...?
"அதுவும் டாக்டர் சங்கரிடமா. ? திடுக்கிட்டுக் கேட் வள் சுமதிதான்
அவர்கள் சம்பாஷணையின் இறுதிக் கட்டத்தில் உள்ளே நுழைந்த சங்கர் தன் பெயர் அடிபடுவதைக்கேட்டு "ஏன் என்னிடம் ஏதாவது கேட்க வேண்டுமா.. ?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

Page 25
8. இரு சொட்டுக் கண்ணிர்.
துன்ப நிலையில் எதிர் பாராதவிதமாக ஏதாவது நடக்கக்கூடாது என்று நினைக்கும் போது அது நடந்து விட் டால் துன்பச்சுவை மனிதனை மேலும் அழுத்தி விடும். அந்த நிலையிற்தான் சுமதியும் இருந்தாள். எதிர்பாராத விதத்தில் எழுந்த சங்கரின் வின அவளை பதற அடித்து விட்டது. என்ன பதில் சொல்வதென்றே அவளுப் புரிய வில்லை. சங்கர் எங்கே தன் அழுத முகத்தைக் கண்டு காரணங் கேட்பான என்ற பயம் அவளைப் பிடிங்கித்தின்றது. இருந்தும் சந்தர்ப்பத் திற்கேற்ற பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கவே, "இல்லை அம்பிகா நர்ஸிங் ஹோமில் ஒரு டிப்தீரியாக் கேஸாம். தன்னுல் ஆனவரை முயன்று தோல்வியுற்ற நிலையில் உங்களிடம் ஆலோசனை கேட்க லாமா என்று சீதா என்னிடம் கேட்டாள். அதற்குத் தான் நான் டாக்டர் சங்கரிடமா..? அம்மாடி யோவ் அவ ருக்குத்தான் கடமை என்ருல் பிடிக்காதே! என்றுசொல்ல வாயெடுத்தேன், அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள். என்று கூறிப் பேச்சையே மாற்றி விட்டாள். சுமதியின் சமயயோசித புத்தியை மெச்சிய சீதாவுக்கு ஒன்றுமே பேச முடியாதபடி வாயடைத்து விட்டது.
சுமதியின் கண்கள் இரத்தச் சிவப்பேறியிருபபதைக் கண்ட சங்கர் 'ஏன் சுமதி அழுதாயT.? கண்கள் இரண் டும் சிவப்பேறியிருக்கின்றனவே. குரலில் கூட ஏதோ ஒரு வித்தியாசம்.
சங்கர் முடிக்கவில்லை இல்லை சங்கர் கண்ணுக்குள் ஏ தோ தூசி விழுந்து இப்போதாள் சீதாவைக் கொண்டு கழு வுவித்தேன் ஒ! அதோ நர்ஸ் நளினி, யாருக்கு அழைப்போ ? என்று சந்தர்ப்பததைப் பயன் படுத்திக் கொண்டே எதிரே வந்து கொணடிருந்த நர்ஸை பார்ததுக் கூறினுள் வந்தநர்ஸ் சங்கரை அழைக்கவே அவன் அத்தோடு எழுந்து சென்று விட்
TGST.

45 சுடர் விளக்கு
"நீ ரொம்பக்கெட்டிக்காரி சுமதி ! உனக்குப் பேச மட்டுமல்லாது நடிக்கவுங்கூடக் கற்றுத்தந்திருக்கிருர் சங்கர் ஆமாம்! ஒருவரையொருவர் ஒரளவுககுப் புரிந்து கொண்ட பின்பும் உனக்கு வேண்டிய பண உதவியை அவரிடம் கேட்க ஏன் தயங்குகிருய்’ அதுவரை வாயடைத்து நின்ற சீதா கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டாள்.
"ஒருவருடைய இலட்சியம் நிறைவேறுவது அவரின் சொந்த முயற்சியினல் ஆக வேண்டுமே தவிர பிறரின் தயவை எப்போதுமே வேண்டக் கூடாது. அதற்காக வாழ் நாள் முழுவதும் வீணுகினற் கூடப் பரவாயில்லை. சீதா. நான் சிறு வயதிலிருந்தே ஏதாவது "ஒன்றை நினைத்தால் அதை எப்படியா வத செய்து முடிக்கும் உறுதி பெற்றவ ளாக வளர்ந்து விட்டேன். ஆகவே என் மனதில் இருக் கும் இலட்சியம் நிறை வேறும்வரை என் வாழ்வைப்பற்றி நான் நினைக்கப்போவதில்லை.
"அவ்வளவு தொகை கிடைப்பது சுலபமா சுமதி.? வீண் பைத்தியக் கார முயற்சி என்பது தான் என் அபிப் பிராயம்" தன் ஆவலை அடக்க முடியாமற் கூறி விட்டாள் சீதா,
'கஷ்ட க்தான் சீதா! முயற்சி செய்து பார்ப்போம். முடியா விட்டால் கன்னியாகவே வாழ்ந்து காலத்தைக் கடத்தி விடுவேன். ஒரு வேளை அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தால், !
"அதிர்ஷ்டம்.! அந்த வார்த்தை தெளிவாக இருந்த குளத்தில் கல்லைத்தூக்கி எறிந்து கலைத்தது போல அமைதி பாக இருந்த சீதாவின் உள்ளத்தைப்பலமாகக் குழப்பி விட்டது அவள் உள்ளத்தில் ஒரே நேரத்தில் ஒராயிரம் எண்ணங்கள் எழுந்தன. அமைதி குலைந்த நிலையில் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே எழுந்த சீதா சுமதி யிடம் விடை பெற்றுக்கொண்டு மாடிப்படிகளின் வழியே கீழிறங்கினள். அதே சமயம் கீழேயிருந்து மாடிப்படிகளின் வழியே மேலே ஏறிக்கொண்டிருந்த சங்கரை எதிர்பாராத விதமாகச் சந்தித்தாள். சங்கரின் விழிகளை ஊடுருவிப்பார்த் கன அவள் விழிகள். அந்த விழிகளில் ஏதோ ஒர் கவர்ச்சி யைக் கனடவள் போல் ஊடுருவிய தன் விழிகளை அகற்ற

Page 26
சுடர் விளக்கு 46
கிஞ்சித்தும் மனமின்றி தன் நிலை மறந்து அப்படியே நின்ற அவளை "சீதா உன்னிடம் ஒரு வார்த்தை’ என்று படியி லேயே தின் முன் சங்கர்.
சீதாவுக்கு உலகமே மறந்து விட்டது. எது கிடைக் காது என்று கவலைப்பட்டு வாழ்ந்தாளோ அது கிடைத்து விட்டது போன்ற ஓர் உணர்ச்சி. பிறவிப்பயனைப் பெற்ற வள் போல் சங்கர் சொல்லப்போவதை ஆவலுடன் எதிர் பார்த்து நின்றது நின்றபடியே நின்ருள். பூரிப்பால் துள் ளிக்குதித்த அவள் உள்ளம் சங்கர் கூறிய செய்தியைக் கேட் டதும் அப்படியே விழுந்து படுத்துக்கொண்டது.
"சீதா உன்னிடம் ஒரு வேண்டுகோள். நான் இன்று இரவு அவசரமாக வதுளைக்குப்போக வேண்டும். வருவதற்குக் குறைந்தது ஐந்து நாட்களாவது எடுக்கலாம். இடையிடை யே சென்று சுமதியைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அருகில் கண்டிக்க ஒருவர் இல்லா விட்டால் அவள் தன் உடம்பைக் கவனிக்க மாட்டாள். இவ்வுதவியை நீ எனக் காக செய்ய வேண்டும், இப்போதுதான் என்னை ஊருக்கு வரும்படி ட்ரங்கால் வந்தது. அப்போ செரியோ’ சீதா !”
அவள் பதிலுக்குக் காத்திராமல் 'மடமட’ என மிகு திப்படிகளையும் கடந்து மாடிக்கு விரைந்து கொண்டிருந்தான அவன். அவன் செல்வதையே பார்த்து நின்ற சீதா தன்னை யும் அறியாமற் பெரு மூச்செறிந்தாள்.
மாடியில் நீட்டி நிமிர்ந்து ஏதோ சிந்தனையில் ஆழ்த் திருந்த சுமதி சங்கரைக்கண்டதும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். இவ்வளவு சீக்கிரமாகச் சங்கர் திரும்பி வாக வான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. அப்படி தெரித் திருந்தால் அவள் நிச்சயம் சீதாவைப் போகவே விட்டி ருக்க மாட்டாள். சீதாவின் துணையில் அவளுக்குச் சங்க ரைச்சமாளித்திருக்க முடியும். ஆனல் இப்போதோ நிலை ை! வேறு விதமாக இருந்தது. தற்போதைய நிலையில் அவள் சங்கருடன் ஒரு நிமிடங்கூடத் தனியாக இருப்பதை விருப்ப வில்லை. அனலின் அருகில் இருக்கும் மெழுகைப்போல் இருந் தது அவள் நிலை. எத்தனை தான் வைராக்கியம் படைத் த வளாக இருந்த போதிலும் சங்கரைக்கண்ட மாத்திரத்தில் தன் வைராக்கியமெல்லாம் தவிடுபொடியாகி விடும் போறை

47 சுடர் விளக்கு
உணர்ச்சி ஏற்பட்டது மனம் தன்னை எந்த நிமிடத்திற் கை விட்டு விடுமோ என்ற பயம் வேதனையை அளித்தது. அவள் எதுவுமே நடக்காதது போல சங்கரைப் பார்த்து "என்ன சங்கர் போனதும் வந்ததுமாக வந்து விட்டீர்கள்? சென்ற வேலை முடிந்து விட்டதா" என்று சாதாரணமா கத்தான் கேட்டான். ஆனல் அந்தக்கேழ்வி சங்கரின் உள் ளத்தில் "சுருக்" என்று தைத்தது. சுமதிக்கு தான் வருவ தில் விருப்பம் இல்லையென்று தவருக விளங்கிக் கொண்ட அவன், "நான் இப்போது இங்கே வந்தது உனக்குப்பிடிக்க வில்லையாக்கும்! ஏன் சுமதி ? இப்படி இனிமேல் நீ என்னைச் சில நாட்களுக்குக் கேட்காமல் இருப்பதற்காக நான் உன்னை விட்டு வெகு தூரம் போகப்போகிறேன். திருப்தி தானே ?” என்று மனதிலுதித்ததை அப்படியே கேட்டு விட்டான்.
சுமதிக்கு சப்தநாடியும் ஒடிங்கிற்று. இப்படியான ஒரு பேரிடியைத் தாங்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டதும் அவள் இதயம் அழுதது. சற்று முன்கூட யார் வரக்கூடாது என்று நினைத்திருந்தாளோ அவர் இல்லாமல் தன்னல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்பதை அவள் மனம் உணர்ந்து கொண்டது. அவளுக்கு அதற்கு முன் நடந்த தெல்லாம் மறந்தே விட்டது. தற்போது அவள் உள்ளத் தில் உறைந்திருந்தது ஒன்றேயொன்றுதான். அது தான் சங்கர். எவ்வளவு சுலபமாக அவன் கூறி விட்டான். ‘சங் கர்’ நீங்கள் எங்குமே போக வேண்டாம்; “இல்லை’ போகக் கூடாது. உங்களைப்பிரிந்து என்னுல் வாழ முடியாது. நான் இது வரை செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து மறந்து விட் டுப் பேசாமல் என்னுடனேயே இருந்து விடுங்கள் எனக்கு நீங்கள்தான் வேண்டும்!" எனறு கூறிவிடத்தான் அவள் உதடுகள் துடித்தன. உள்ளம் தத்தளித்தது. ஆனல் அறிவு ஆட்சி செய்தது.
வெட்கம் செட்டவளே! சில வினடிகளுக்கு முன் தானே ஏதோ பெரிய இலட்சியத்தைப்பற்றி யெல்லாம் உன் தோழியிடம் அளந்து கொட்டினய். பேசி ஒரு மணி நேரங்கூட ஆகவில்லையே. இதற்குள எத்தனை மாற்றம் நீயும் ஒரு பெண் என்பதை எவ்வளவு சுலபமாகக் காட்டி விட்டாய் நாளை உன் தோழி சீதா வந்தால் உன் நிலை கணடு கை கொட்டிச் சரிக்க மாட்டாளா ? உன் பெலயீனத்தை நீயாகவே சங்கரிடம் காட்டிக் கொடுக்கப் போகிருயா ?

Page 27
சுடர் விளக்கு 48
சீ! வேண்டாம் ! அவனுக்காக திறந்திருக்கும் உன் இதயக் கதவை இறுக்கி மூடிவிடு. அதுதான் உன் மனக் குழப்பத்திற் குச்சிறந்த மருத்து.'
அறிவின் ஆட்சியில் கைப்பொம்மை யாக்கப்பட்ட அவள் செய்வதறியாது சங்கரையே பார்த்து நின் ருள். தான் செல்வதை அவள் விரும்ப வில்லையென்பதை அவள் முக பாவத்தில் இருந்தே அறிந்து கொண்ட சங்கருக்கு வெறுமையாய் இருந்த மனதில் ஒரு துளிர்நம்பிக்கை யேற் பட்டது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட விடாமல் "அப்போ வரட்டுமா சுமதி; ஐ ஆம் ஒன் வன் வீக்ஸ் லீவ்' என்று ஆங்கிலத்தில் மொழிந்து விட்டு இலட்சியமாக அடியெடுத்து வைத்த அவனை 'சங்கர்’ என்ற குரல் தடுத்து நிறுத்தியது.
வெற்றிப் பெருமிதத்தில் திரும்பிய அவனை “இப்போ எதற்காகப் போகிறீர்கள்? ஏன் போகிறீர்கள்? என்று தொடர்பாகக் கேட்கப்பட்ட விளுக்கள் மேலும் உவகை அடையச் செய்தன. நெஞ்சின் ஆழத்திலே புதைந்திருந்த கமதியின் இதயத்தைப் புரிந்து விட்டது போன்ற உணர்ச் சியில் தன் சட்டைப்பையில் மறைத்திருந்த தந்தியை எடுத் துச்சுமதியிடம் நீட்டின்ை.
சங்கரிடம் தான் தோற்று விட்டதை நினைத்து உள் ளம் குமுறிய அவள் நடுங்கும் கரங்களால் அவன் நீட்டிய தந்தியை வாங்கிப் படித்தாள். உடனே வரவும்" என்று தகப்பனர் அடித்திருந்த தந்தியைப்படித்த அவளுக்கு ஒன் றுமே புரியவில்லை. விஷயம் எதுவுமே இல்லாமல் வெறு மையாக "வா" என்றழைப்பதில் அர்த்தங்கள் பல இருக்க லாம் என்பதை அறிந்திருந்தாள் அவள். எதற்காக அழைக் கிருர்களென்பதை கேட்டுவிட வேண்டும் என்று ஆவல் உந்திய போதும் ஆணவம் அரண் இட்டது. சங்கரின் மெளனம் அவளைக் கொன்றது. வந்த தந்தியை உன்னிப் பாகக் கவனித்த அவள் "ஏன் சங்கர் தந்தி நேற்று வந்திருக் கின்றதே. இன்றுதான் போகப் போகிறீர்களா ? என்று கேட்டு விட்டு அறுபட்ட சம்பாசணையை மீட்க ஏதோ துப்புக்கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அவனையே உற்றுப் டாாததாள.

சுடர் விளக்கு 49
அப்போதுதான் சங்கர் தான் விட்ட தவற்றை உணர்ந்தான். தந்தி வந்த செய்தியை நேற்றே சொல்லா மல் விட்டது மடமைத் தனமாகப் பட்டது அவனுக்கு, அதை அவன் சுமதியிடம் கூருமல் மறைத்துவிடப் பார்க்கவில்லை. கண்டிப்பாக அவளிடம் கூறியிருப்பான். ஆனல் கூறினல் அதைப்பாரதூரமாகப் பாவித்து எங்கே தன்னை உடனடியா கப் போகும்படி சொல்லிவிடுவாளோ என்ற மனப் பயந் தான் அவனைத்தடுத்தது. அவனுக்கு சுட0 கியை விட்டுப்பிரி யவே மனமில்லை. அதை நேரிடையாக அவளிடம் கூறவும் விருப்பமில்லை. இந்த இரண்டுங் கெட்டான் நிலையில் இப் போது சுமதியின் வினவுடன் அவன் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்தான்"
“போகத்தான் நினைத்தேன் சுமதி. போனல் ஒரு வாரமாவது நிற்க வேண்டும். உனக்குத்தான் லீவு கிடைப் பதன் அருமை தெரியுமே ஆகவே இன்று இரவு புகையிரதத் தில் போகலாம் என்றிருந்தேன். அதற்கிடையில் அப்பா ‘ட்றங்கால் செய்து விட்டார். இப்போதே மோட்டாரில் புறப்படப்போகிறேன். வரட்டுமா ?”
அசட்டுத் துணிச்சலில் அறிந்து ஒரு பொய்யைக் கூறி விட்டு அலட்சியமாக நடந்து சென்ருன் அவன். இரும்பு நன்ருக சூடேறி விட்டது. இனி அது எப்பக்கம் வேண்டு மானலும் வளைந்து கொள்ளும் என்ற உணமையை அறிந் தவன். தன் பிரிவு சுமதியின் உள்ளத்தில் ஏற்படுத்தி யிருக்கும் மாறுதலை அவள் முகபாவத்தில் இருந்தே அறிந்து கொண்ட அவன், பிரிவும் ஒரு வழிக்குப் பரிவை யுண்டாக் கலாம் என்ற எண்ணத்தில் நடந்தான்.
எத்தனையோ ஆண்டுகள் பத்திரமாகப் பேணிக் காக்கப்பட்ட தன் வைராக்கியம் சங்கரின் முன் நிர் மூல மாகி விட்டது போன்ற பிரமையில் செய்வதறியாது நின்ற சுமதி சங்கர் தன் பதிலுக்காகக் காத்திராமலே செல் வதைக் கண்டு மனம் வெதும்பினுள், தற்சமயம் அவளுக்கு உலகத்தில் வேண்டியிருந்ததெல்லாம் சங்கர்தான். அவன் வந்த முதன் முறை அலட்சியம் செய்ததை அவளால் தாங்கவே முடியவில்லை. தன் மெளனம் இந்தப் பிரிவை நிரந்தரமாக்கி விட்டால் என்று நினைக்கவே பயப்பட்ட அவள் மீண்டும் "சங்கர்" என்று அழைத்தாள். சுமதியை

Page 28
50 சுடர் விளக்கு
ஒரு முறை திரும்பிப் பார்க்கலாமா வென்ற நினைவோடு நடந்து கொண்டிருந்த அவனுக்கு அந்த அழைப்பு இத மாக இருந்தது. அவன் திரும்பி வந்து அவள் அருகில் நின்ற போது அவள் கண்கள் நீர் முத்துக்களைச் சொரிந்து கொண்டிருந்தன. அப்போதுதான் சங்கருக்குப் பிரிவின் வேதனை தெரிந்திருக்க வேண்டும். அவன் கண்களிலும் இரண்டொரு நீர்த்துளிகள் திரையிட்டன. 'சுமதி அன்பாக அழைத்து விட்டு மெளனத்தில் தன் உள்ளத்தைப் புரிய வைத்த அவன் தன் கைக்குட்டையை எடுத்து அவள் கண் ணில் இருந்து வழிந்த நீரைத் துடைக்கப் போனுன். ஆனல் அதற்குள் சுமதி ஒரடி பின் வைத்து நிலைமையை சமாளித்து விட்டாள். சங்கர் தன் நடையைத் தொடர்ந்தான். அங்கு மெளனம் நிலவியது.
 

9. தொண்டு செய்யும்
தேவதைப் பெண்:
கிலை மணி ஒன்பதாகியும் பனிப்படலம் மட்டும் பதுளை நகரத்தை விட்டு நீங்க மனமின்றித் தன் முழு ஆட்சியையும் செலுத்திக்கொண்டிருந்தது. அந்தச்சீதோஷ்ண நிலைக்குப் பழக்கப்பட்ட மக்கள் மட்டும் அதைப்பொருட் படுத்தாது தங்கள் நாளாந்த கடமைகளில் ஈடு பட்டிருந் தனர். அந்த ஊரையும் அங்குள்ள தெருக்களையுய நன்ரு கப்பழகினவர்களேயன்றி ஏனையோர் அங்கு மோட்டார் வாகனங்களைச் செலுத்துவது மிகவும் சிரமமான காரியம். அங்கே நிறைந்திருந்த பனித்திரளை கிழித்துக்கொண்டு பல பசுமை நிறைந்த படிவயல்களையும் கண்ணுக்குக் குளிர்ச்சி யான தேயிலைத் தோட்டங்களையும் ஊடறுத்துக் கொண்டு மிகவும் வேகமாக வந்த ஓர் 'பிளைமவுத்" கார் பெரிய பங் களா ஒன்றின் முன்னுல் நின்றது. அதைத் திறந்து கொண்டு பின்புறத்திலிருந்த பெரிய தோற் பெட்டியை இடது கையில் தூக்கியபடி உள்ளே சென்றன் சங்கர்.
* யார் சங்கரா. ? வந்து விட்டாயாப்பா! எவ்வளவு துரும்பாக மெலிந்து விட்டாய் திருகோணமலை கெந்தகப் பூமி எலும்பிருக்கச் சதையை அப்படியே தின்று விடு மென்று தொடக்கத்திலேயே கூறினேன். கேட்டாயா? சிறு வயது முதற்கொண்டே குளிர்ந்த சுவாத்தியத்திற் பழக்கப்பட்ட உடல் உஸ்ணத்தை எப்படித்தாங்கும்? ம் ! சொன்னுலும் கேட்க மாட் டாய்; அவன் வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாய் தன் பாட்டிற்கே பேசிக் கொண்டு போனள், தன்னை முந்திக்கொண்ட தாய்ப்பாசத் தைத்தடுக்க மாட்டாதவளாய், சங்கருக்குத் தன் தாயின் குணம் நன்ருகத் தெரியும். பதினெட்டாவது வயது வரை வேறு குழந்தைகள் இன்றி அவனை அருமையாகப் போற் றிப்பேணி வளர்த்த உள்ளம் அது. அவன் நிஜமாகவே ஒரு சற்றுப் பெருத்திருந்தாற்கூட அந்தத் தாயுள்ளம் அதை ஏற்றுக்கொள்ளாது என்பது அவனுக்குத் தெரியும். நல்ல காலம் உடலோடு மட்டும் நிறுத்திக்கொண்டாளே. ஒரு வேளை உள்ளத்தையும் ஊடுருவிப் பார்க்கும் சக்திமட்டும் அவ49 பெற்றிருந்தால் குடிகெட்டுது என்று நினைத்த சங் கர் அதுவரை பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் ஏழு வயதுத்தங்கை வனஜாவைத் தூக்கி ஆசையாக ஒரு முத்தம் ஈந்து விட்டு அவளுக்காக வாங்கிவந்திருந்த விளை

Page 29
52 • சுடர் விளக்கு
யாட்டுப் பொருட்களை யெடுத்துக்கொடுத்தான். அவற்ருேடு திருப்தியடைந்த அவள் அவற்றை இரண்டு கையிலும் வாரி எடுத்துக்கொண்டு தோட்டப் பக்கஞ் சென்ழுள். சங் கர் பயண அலுப்புத்தீர பக்கத்து அறையில் இருந்த படுக் கையில் நீட்டி நிமிர்ந்து படுத்தான்.
படுத்தவன் எப்படித்தான் கண்ணயர்ந்தானே தெரி யாது. மூன்று மணி நேரத்தை நித்திரையிலாழ்த்தி விட்டு அவன் மீண்டும் கண் விழித்தபோது அவனுக்கே ஆச்சரிய மாக விருந்தது. தான் படுத்திருந்த இடத்திலேதான் படுத் திருக்கிருஞ என்ற சந்தேகத்தில் அந்த அறையைச்சுற்றிப் பார்த்தான். அவன் சந்தேகந் தீருவதாக இல்லை கண்ணை நன்ருகக் கசக்கி விட்டு மீண்டும் படுக்கையில் எழுந்து அவர்ந்து கொண்டு பார்த்தான் சிறுவயதில் ஆங்கிலக்கதை சளில் படித்த தேவதைகளின் ஞாபகய அவனை வந்து குழப் பியது. அப்போதெல்லாம் அந்தத்தேவதைகள் வந்து தனக் கும் உதவி செய்யமாட்டாவா என்று அவன் ஏங்கியதுண்டு. இப்போது ஒரு வேளை அந்தப் பூர்வீக ஆசைதான் நிறை வேறி விட்டதோ என்று சிந்திக்கலாஞன்.
ஆமாம்! அவன் படுக்கைக்குச் செல்லும்போது அத் தனை மோசமான நிலையில் இருந்த அந்த அறை இப்போது அத்தனை ஒழுங்காக சீராக்கப்பட்டிருந்தது தன்னை மீறி வந்த சோம்பலை அடக்க முடியாதவனுகத் தன் சுண்டு விரலை உதட்டின்மேல் வைத்து வாயைத்திறந்து அ ஹ ஹா. என்று பெரிய சத்தத்தோடு கொட்டாவி விட்டுக் கொண்டே திரும்பவும் மறு புறந் திரும்பித் தன் படுக்கையில் விழுந்தான். திடும் எனக் களுக்’ கென்ற சிரிப்பொலி கேட் டுத் திரும்பினன். அங்கு கையில் காப்பிக் கோப்பையோடு காட்சியளித்தாள் ஒரு அழகிய நங்கை.
ஒரு நிமிடம் அமைதி பெற்றிருந்த அவன் உள்ளம் மீண்டும சிந் கிக்கத்தொடங்கியது. ஒரு வேளை தான் காண் பது கனவோ என்ற எண்ணத்திற் கண்களிரண்டையும் வெட்டி விழித்தான்.
* நிச்சயமாக இது கனவல்ல’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான் அப்படியானல் இந்தப் பெண் ? விழிப்பின் மத்தியில் எழுந்த வினவுக்கு விடைகாண அவன்

சுடர் விளக்கு 53
பட்ட பாடு! அவனுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந் தது ஒரு வேளை அம்மாதான் வேலைக்கு. ச சா ! பார்த் தால் வேலைக்காரப் பெண் போலவும் இல்லை. அவள் இந்த அளவில் அப்படி யாரு உறவுப் பெண் இருந்ததாகவும் நினைவில்லை. அவன் உள்ளத்தில் வியாக்கியானம் நடந்தது.
அத்தான் இந்தாங்கள் காப்பி! ஒரு காப்பி டம் ளரை அவனிடம் நீட்டி விட்டுப் பதிலுக்குக்கூடக் காத்தி ராமல் ஓடி மறைந்தாள் அவள்.
நினைவுக்கும் நிஜத்துக்கும் இடைப்பட்ட நிலையில் அறிவுக்கு முன் உயர்வு கொடுத்த வேகத்தில் கை நீண்டு காப்பி டம்ளரை வாங்கிக்கொள்ள உணர்ச்சி அதன் பாட் டுக்குச் சிந்தனையின் தளிர்கரம் பிடித்து துள்ளு நடை
போட்டது.
*அத்தான்!” அந்த இனிமையான வார்த்தை அவன் காதுகளை விட்டு இன்னும் அகலவில்லை. அவனுக்கு ஒன் றுமே புரியவில்லை. ' அத்தான்’ என்று அழைக்க ஒரு முறைப் பெண் இதுவரை இருந்ததாக அவனுக்குத் தெரி யாது. சுமகியிடம் பழக்கம் ஏற்பட முன் இந்த உறவு முறை ஏற்பட்டிருந்தால் அவன் நிச்சயம் கவலைப்பட்டி ருக்கவே மாட்டான்.
ஆமாம்! ஆனல் சுமதியுடன் இதுவரை பழகி உள் ளத்தையும் ஈந்த பின்.சீ என்ன குரங்கு மனம்! வனஜா வைப் பார்க்க, சுமதியைவிட அழகியென்றுதான் கூற வேண்டும். ஆனல் சுமதிக்கு இவள் எந்த வகையில் ஈடாக முடியும் ? அவனது மூளைக்கு அதிக சிரமம் கொடுக்காமல் "வாஸந்தி காப்பி கொண்டு தந்தாளா தம்பி ? என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அவனது தாயார்
"வாஸந்தியா! யாரம்மா இது புதுப்பெயர்; புது உறவு ?? தன் மனதில் உதித்ததைக் கேட்டு விட்டு அது வரை கையில் பிடித்திருந்த பாத்திரத்தை உதடுகளின் மத்தியில் வைத்துக் காப்பியை உறிஞ்சினன் அவன்.

Page 30
S4 சுடர் விளக்கு
"இது உன் அத்தை மகளப்பா!" தாயின் இந்தப் பதில் அவனுக்கு மீண்டும் குழப்பத்தை உண்டாக்கியது கையில் இருந்த காப்பியை ஒரே வாயிற் பருகி விட்டு கோப்பையைப் பக்கத்திலிருந்த சிறு மேசைமேல் வைத் துக்கொண்டே 'அத்தையா அது வேரு.? யாரம்மா இவர் களெல்லாம்? எனக்கு அப்படியொரு அத்தை இருந்ததா கவே ஞாபகமில்லையே! விஞவைத் தொடுத்து விட்டு கதை ரூபத்தில் வெளிவரப்போகும் பதிலைக் கேட்கத்தன்னைத் தயாராக்கிக் கொண்டான் அவன்.
"ஆம் தம்பி ! இதெல்லாம் உனக்குப் புதிராகத் தான் இருக்கும். இந்த உறவு முறை உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைதான. இரத்தத்தோடொன்றிய உறவு பாசத் தினுல் மறைந்து கொண்டது. உன் தகப்பணுருக்கு ஒரு சகோதரி இருந்தாள். அவள் ஒருவரைக் காதலித்தாள். ஆனல் அவர் சாதியில் சிறிது குறைவாக இருந்ததால் உன் அப்பா இந்தத் திருமணத்துக்கு உடன்பட வில்லை சகோதரத்துவத்தை விட உன் அத்தைக்குக் காதலன் மேல் வைத்த பாசம் அதிகமாக இருந்ததால் அவ்ஸ் உன் அப்பா வின் சம்மதமின்றியே அவரை மணந்து கொண்டாள். அத் தோடு உன் அப்பா தனக்கு ஒரு தங்கை பிறந்ததாகவே நினைக்க வில்லை. இடையில் நீ பிறந்தாய். உன் அத்தை யும் அவள் கணவனுேடு சிங்கபூருக்குப்போய் விட்டாள் திடீர் என உன் அப்பாவின் வியாபாரத்திற் பெரிய வீழ்ச்சி ஏற்பட்ட து அப்பா மிகவும் கஷ்டப்பட்டார். அதனுல் பாதிக்கப்பட்டவர்கள். நீயும் நானும் தான். நீ பால இனறி அழுவாய். உன் முகம் பார்த்து நான் அழுவேன். எங்கள் நிலை கண்டு பரிதாபப்பட்ட யாரோ உன் அத்தைக்குச் செய்தி அறிவித்திருக்கிருர்கள். உடனே உன் அத்தை அப்பா செய்தவை யாவையும் மறந்து பணம் ரூபா இரண்டாயிரம் அனுப்பி வைத்தாள் அப்பா ரோசக்காரராக இருந்தும் அவர் இருந்த நிலையில் அந்த உதவியை நிராகரிக்க முடிய வில்லை. உன் அத்தை நல்ல மனதோடு அளித்த மூல தனம் உன் அப்பா வைக் கோடீஸ்வரனுக்கியது. உன் அப் பாவின் நல்ல நிலைமையைப்பார்க்க அத்தைக்குக் கொடுத்து வைக்கவில்லை. தன் கணவனை ஒரு கார் விபத்தில் பறி கொடுத்த அவள் அந்தக்க வலையில் இருந்து மீள முடியாமல் வாஸந்தியை ஒரு நண்பரிடம் ஒப்படைத்து உன் அப்பாவின் கையில் ஒப்புவிக்கும்படி கூறிவிட்டு அடுத்த இரண்டு மாதங்

சுடர் விளக்கு 55
களிற் கண்மூடி விட்டாளாம். மலாயாவில் இருந்து சென்ற மாதம் இவளை அழைத்து வந்த நண்பர் இந்தச் சோகக் கதையைக் கூறி உன் அத்தை கொடுத்ததாக ஓர் கவரை யுங் கொடுத்துச் சென்ருர். அந்தக்கவரில் ஓர் கடிதமும் ரூபா. 50, 000 டிப்பாசிட்டோடு வாஸந்தி பெயரில் ஒரு பாங் புத்தகமும் இருந்தன. வாஸந்திக்குத் தக்கவரனைத் தேடி அவளை வாழ வைக்கும்படி மிகவும் மன்ருட்டமாக வேண்டியிருந்தாள் உன் அத்தை. இவற்றையெல்லாம் கேட்ட உன் அப்பா விக்கி விக்கி அழுதார். மரணத்தறு வாயிலா வது தன் சகோதரியைப்பார்க்கக் கொடுத்து வைக்க வில் லையே என்று கதறி அழுதார். .
இதையெல்லாம் நன்ருக அலசி ஆராய்ந்த பின் கடை சியாக ஓர் நல்ல முடிவுக்கு வந்திருக்கிருர், வாஸந்தியை உனக்குக்கொடுத்துத் தான் செய்த பாவத்திற்குப் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தான் உன்னை உடனடியாக வரும்படி அழைத்தார் என்று ஒரு கதையையே கூறிவிட்டுத் தன் மகனுடைய முகத்தை ஆவ லோடு நோக்கினுள்.
ஆயிரம் சம்மட்டிகளைக் கொண்டு ஒரே நேரத்தில் தலையில் அடித்த உணர்ச்சி ஏற்பட்டது சங்கருக்கு. சில நிமிட நேரம் அவனுல் எதையுமே பேச முடியவில்லை. சில நிமிடங்கள் சிந்தித்த பின் "என் கல்யாணத்திற்கு இப்போ என்னம்மா அவசரம் . ?’ என்று குழந்தையைப் போல
சிணுங்கினன்.
என்ன சங்கர் அப்படிக் கூறிவிட்டாய் ! எங்களுக்கும் வயதாகி விட்டது. நீயும் வனஜாவுத் தான் எங்களுக்கு எல் லாம். வனஜாவுக்கு இப்போது எட்டாவது வயது, ஆரம் பமாயிருக்கு. அவளுடைய திருமணத்தைப்பார்க்க நாங்கள் இருக்கிருேமோ . இல்லையோ ? உன் திருமணத்தையாவது கண் குளிரப்பார்த்துப் பேரக்குழந்தையை கையில் ஏந்தித் தாத்தாவாகிவிட வேண்டும் என்பது உன் அப்பாவின் ஆசை மட்டுமல்ல எனக்குந்தான் சங்கர். சொல்ல வந்த தைச் சொல்ல முடியாமல் வெட்கமும் ஆசையும் போட்டி போடத் தன் மகளைப்பார்த்தாள் அந்தத் தாய். அவளு டைய விழிகளில் சங்கர் "ஆம்" என ஒரு வார்த்தை கூ 10ாட்டானு என்ற ஏக்கம் பிரதிபலித்தது.

Page 31
56 சுடா விளக்கு
சங்கருக்குத் தன் தாய் கூறியதைக் கேட்டதும் கோபங் கோபமாக வந்தது 'உங்களுக்கு என் திருமணத் தைப்பார்க்கத்தானே ஆசை. நன்ருகப்பாருங்கள் கண் குளிரப்பாருங்கள். சுமதி க்கு உடனடியாக ஒரு தந்தி கொடுத்து அழைப்பித்து அவள் கழுத்தில் "ஜாம் ஜாம’ என்று மூன்று முடிச்சுகளைப் போட்டால் முடிந்தது உங்கள் ஆசை. அடுத்த வருடம் ஒன்றென்ன முடிந்தாள் ஒன்பது: பேரக்குழந்தைகளை உங்களுக்குப் பெற்றுக்கொடுத்து உங், கள் அபிலாட்சையைத் தீர்த்து விடுகிறேன்" என்று கூறி விடத்தான் உதடுகள் துடித்தன. ஆனல் தாயை எதிர்த் துப்பேசத் துணிவின்றி இப்போ என்னம்மா அவசரம் நான் தான் ஒரு வாரம் நிற்கப்போகிறேன். சாவசமாகப் பேசிக்கொள்ளலாம்" என்று கூறி மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து உள்ளத்தில் அமைதியை நாடி தோட்டப் பக்கஞ்சென்றன்.
திருகோணமலையில் இருந்துவரும் போது இருந்த மகிழ்ச்சி, உற்சாகம், விறுவிறுப்பு எல்லாமே மறைந்து சோர்வும், அமைதியின் மையும் அவனைப் பீடித்துக்கொண் டன. சிலமணி நேர உணர்ச்சி அவனைக் கொன்று விட்டது அந்த அவல நினைவில் இருந்து விடுபடுவதற்காக அவன் தன் உள்ளத்தை திருகோணமலைக்கு முடுக்கி விட்டான். அங்கே சுமதியின் அழகிய வதனம் நிதர்சனமாய் அவன் அகக் கண்ணில் தோன்றியது. மீண்டும் பழைய உற்சாகமும் மகிழ்ச்சியும் ஒரு வித இன்பக் கிளுகிளுப்பும் அவனை ஆட் கொண்டன. அன்று புறப்படுமுன் தனக்கும் சுமதிக்கும் நடந்த சர்ச்சரவை நினைவு கூர்ந்து பார்த்தான். "சங்கர்" என்று அவள் அழைத்ததும் அந்த பார்வையில் பொதிந் திருந்த அர்த்தமும் மாறி மாறி அவன் உள்ளத்திலே காட்சி, யளித்தன. அந்த நினைவில் ஒர் இன்பம், ஒர் ஆதங்கம் இருப்பதை அவன் உணர்ந்தான் இந்தச் சிந்தனைகளின் மத்தியில் அவன் சற்றுத் தள்ளியிருந்த மல்லிகைச் செடி யை நோக்கி நடந்தான். அடர்ந்து பூத்துக் குலுங்கிய அந் தீப்பந்தலினூடாக இரண்டு கருவண்டு விழிகள் அவனையே விழுங்கி விடுவதுபோலப் பார்த்து நின்றன. 'சுமதி!' என்று ஏதோ நினைவில் அழைக்கப்போன அவன் அழகு தேவதை யாகக் காட்சியளித்தாள் வாஸந்தி !

10 விடு அவன் போகட்டும் !
(ð
நிச்சல் பழகுவதற்கு ஆற்றில் இறங்கச் சிந்திப்பவனை நடுக்கடலிற் தள்ளி விட்டால் அவன் நிலை எப்படி இருக் குமோ அப்படியிருந்தது சங்கரின் நிலையும். வாஸந்தியின் திருமணப்பேச்சை எடுத்தபோதே பயந்து சாம்பிய அவன் இங்கே அந்தப் பெண்ணையே நேருக்கு நேர் சந்தித்தால் ! வந்த சுமதி தெரியாமற் திரும்பி விடலாம் என்று நினைத்து அடியெடுத்து வைத்த அவனை "அத்தான் என்ற குரல் தடுத்து நிறுத்தியது திரும்பினன். ‘அத்தான் இந்த மல்லி கைப்பூ எட்ட மாட்டேன் என்கிறது. அதைப் பறித்துத் தாருங்களேன்' என்று செல்லமாகக்கேட்டு விட்டு உரிமை யோடு பார்த்தாள் அவனை.
"ஆமாம் அண்ணு அண்ணி எவ்வளவு நேரமா அந் தப்பூவோடு போராடுது தெரியுமா ? அதுவும் எட்டவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நீங்கள் அதைப்பறித் துக்கொடுங்களேன் அண்ணு" என்று அவளுக்காகப் பரிந்து பேசிக்கொண்டே செடி மறைவில் இருந்து ஓடி வந்து அவன் கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டாள் வனஜா.
'அடடே முறைகளெல்லாம் பரவாயில்லையே. திரு மணத்திற்கு முன்னமே அண்ணி முறை கொண்டாடுகிருள் வனஜா ! இந்த முறையெல்லாம் உனக்கு யார் அம்மா கற்றுக்கொடுத்தது’ என்று கேட்க வாயெடுத்த சங்கர் தன் மனதிற்குள்ளேயே கர்விக் கொண்டான். வனஜாவை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கிச்சுமந்து கொண்டே * எட்டாத 10லரைப்பறிக்க எத்தனிப்பது மகா தவறு வனஜா இதை உன் அண்ணிடயிங் கூறிவிடு. ஆமாம் இவள் உனக்கு எந்த முறையில் அண்ணி? உனக்குத்தான் அழகான டாக் டர் அணணி வரப்போகிருளே..! என்றெல்லாம் கூற நினைத்தான். நினைக்கத் துணிந்த அளவுக்கு சொல்லத் துணிவு இல்லை தன் ஆத்திரமெல்லாந் தீர பல்லை நறும் பிக்கொண்டே அந்தப் பூக்கொப்பை அப்படியே வளைத்து அந்த மலர்க்கொப்பை பறித்து வனஜாவிடங் கொடுத்து இதை வாஸந்தி அக்காவிடங்கொடு என்ருன்.
* ஐயோ அக் காளாம் ! அண்ணுவுக்கு முறை கூடத் தெரியவில்லைப் பார்த்தீங்களா அண்ணி. அண்ணு இது தான் எங்கள் அண்ணியாக்கும் தெரிஞ்சுதா’ என்று

Page 32
58 சுடர் விளக்கு
கூறி விட்டுக் கைகொட்டிச் சிரித்தாள் அவள். சங்கரின் நிலைதர்ம சங்கடமாகியது அவனுல் அவள் பேச்சை ரசிக்க வும் முடியவில்லை. கண்டிக்கவும் முடியவில்லை. எப்படியாவது அங்கேயிருந்து போய் விட்டாற் போதும் என்று தவித்த அவன் வெளியில் கட்டப்பட்டிருந்த "அல்சேஷன் நாய் குரைக்கும் சத்தங்கேட்க அதையே சாக்காக வைத்து அவ் விடத்தை விட்டு நகர்ந்தான்.
வாஸந்திக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய் விட் டது. அத்தான் என்ற ஒருவர் உண்டென்பதை மட்டும் நேற்றுவரை அறிந்திருந்தாள். இன்று அவரைக் கண்ணுரக் கண்டும் விட்டாள் அவர் வந்ததும் தன்னை வாஸந்தி ! வாஸந்தி!! என்று அழைத்து பின்னலேயே சுற்றித்திரி வார் எள்று நினைத்திருந்ததெல்லாம் வீணுகின. அவள் படித்திருந்த நாவல்களில் வரும் கதாநாயகனையும் கதாநா யகியையும் வைத்துக் கற்பனை செய்திருந்தவையாவும் துகள் துகளாகின. அவள் நேற்றுவரை கற்பனையில் கண்ட அத் தானுக்கும் இன்று நேரில் காணும் அத்தானுக்கும் தான் எத்தனை வித்தியாசம்! அவளுக்குத் தன் துன்பம் தீரும் வரை ஒ என்று கதறியழ வேண்டும் போல இருந்தது. இருந்தும் அவள் தன் மனதைத் தளர விடவில்லை. அவள் என்ன மலாயாவில் இருந்து இங்கு வரும்போது தனக்கு ஒரு அத்தான் இருப்பதாகவும் அவன் தன் கரம் பற்றுவான் என்றும் நினைத்தா வந்தாள்? தாய் மாமன் ஒருவர் இருக் கிருரர். அவர் தனக்கு ஆதரவளிப்பார் என்று நினைத்து வந் தாளே தவிர அவர் தன் மகனையும் தனக்குத்தாரை வார்ப் பார் என்று கனவிற் கூட நினைத்துப் பார்க்க வில்லையே நினைக்கவும் அவளுக்கு உரிமை கிடையாது. அப்படியிருக் கும் போது அவள் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? சங்கர் தன்னை அவமானப்படுத்தி விட்டதுபோன்ற உணர்வு அவளை வேதனைப்படுத்தியது ? எப்படியாவது சங்கரின் அன்பைப்பெற்று விடவேண்டும் என்று துடிப்பு உண்டாகி அவள் நிம்மதியைக் குலைத்தது. ஆனல் அந்தத் துடிப்பின் காரணந்தான் அவளுக்குப் புரியவில்லை. a
சங்கர் பதுளைக்கு வந்தும் நாட்கள் நான்கு சொல் லாமலே மறைந்து விட்டன. அவன் நினைத்து வந்த நாட் களில் ஒன்றுதான் பாக்கி. ஐந்து நாட்களுக்கு மேல் அவ னல் ஒரு நிமிடங்கூடத் தங்க முடியாதென்பதை உணர்ந்

ағL.fr விளக்கு S9
தான். சுமதியைக் காணுத இந்த நான்கு நாட்களும் அவ னுக்கு நான்கு யுகமாக இருந்தன. இந்த நான்கு நாட்க ளும் நிம்மதியுடன் கழிந்து விட்டன. அவன் தன் தந்தை யைத் தனியாகச் சந்திக்கவும் இல்லை. அவர் தன்னை அழைத் ததின் காரணத்தைக் கேட்கவுமில்லை. அவன் எதிர்பார்த்த பூகம்பம் வெடிக்கவும் இல்லை. இன்னும் ஒரு இரவும் பக லும் கழிய வேண்டும் என்று நினைக்கவே அவன் பயந்தான் அந்தக்கால எல்லைக்குள் தந்தையை மட்டும் சந்திக்காமல் செல்ல முடிந்தால். அவன் பின்பு இந்தப்பக்கந் தலை காட் டவே மாட்டான். ஆகவே அவன் தன்னல் இயன்றவரை முயற்சித்து தந்தை இருக்கும் பக்கம் தலை காட்டாமலே நடமாடினன். அவன் தந்தை மிகவும் கண்டிப்பான பேர் வழி என்பதை அவன் நன்கு அறிவான்.
ஆனல் மனிதன் நினைப்பது போல் எல்லாமே நடந்து விடுவதில்லை. அப்படி நடந்தால் வாழ்க்கைகூடச் சாரமற் றதாகிவிடும். அன்று பின்னேரம் சங்கர் வனஜாவுடன் உட் கார்ந்து தேனீர் அருந்திக்கொண்டிருந்தான். ஏதோ அலுவ லாக அந்தப்பக்கம் வந்த அவன் தந்தை அவன் தனியாக இருப்பதை உணர்ந்து அவன் அருகில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சங்கருக்குத் தான் எதிாபார்த் திருந்த வேளை நெருங்கி விட்டது போலவும் தன்னை சூழ இருந்த ஆபத்தில் இருந்து விடுபட முடியாது போலவும் ஒர் மனக் குழப்பம் ஏற்பட்டது. மெளனம் நீடித்தால் நில மை இன்னும் மோசமாகி விடும் என்ற எண்ணத்தில் 'அம்மா தோட்டப்பக்கம் போயிருக்கிருள் அப்பா" என்று அவர் கேட்காமலே கூறினன்.
அதற்குள் "அப்பா தேனீர் சுடுகிறது ஆற்றித்தாங்கோ’ என்ருள் குழந்தை வனஜா. அவள் என்ன கேட்டாலும் தகப்பன் மறுவார்த்தை இன்றி செய்து முடிப்பார் என்பது சங்கருக்குத்தெரியும்.அவன் எதிர்பார்த்ததுவிண்போகவில்லை சாய்வு நாற்காலியை விட்டு எழுந்த அவன் தந்தை மேசை அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டு தேனீரை ஆற்றத்தொடங்கினர். அதுதான் சம யம் என்று உணர்ந்த சங்கர் சத்தங்கேளாமல் நாற்காலியை விட்டு எழுந்து நழுவப்பார்த்தான்.

Page 33
60 சுடர் விளக்கு
அவன் மேலேயே கண்ணுங்கருத்துமாக இருந்த அவன் தந்தை ‘எங்கே எழும்புகிருய் சங்கர். அப்படி உட்கார். உன்னேடு பேசுவதற்காக நல்லதோர் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தேன். நீ எப்போது திரும்பிச்செல்வதாக உத் தேசம்..? தகப்பனரின் கேள்வி அவன் நெஞ்சை அப்படியே குளிர வைத்துவிட்டது. ஏதோ ஒர் அனர்த்தம் விளைவ தர்க்கு இதுதான் முதல் அறிகுறி என்பதை உணர்ந்த அவன் ஆத்திரத்தில் வனஜாவை ஒரு முறைப்பு முறைத்து விட்டு "நாளை இரவு நான் திரும்ப வேண்டுமப்பா!' என் முன் சுருக்கமாக,
நாளை இரவே போகவேண்டு மாப்பா..? ஏன் சங் கர் பல மாதங்களுக்குப்பிறகு வந்திருக்கும் நீ இன்னும் ஒரு வாரம் நின்றுபோகலாமே? ம் ! என்னமோ உன் இஷ்டம் நீ போகத்தான் வேண்டுமென்ருல் எங்களால் என்ன செய்ய முடியும்.? சரி. நாளை நீ போகத்தான் வேண்டுமானல் அதற்குமுன் திருமணத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்து விட லாம் என்பது என் ஆசை! தந்தையின் வார்த்தைகள் நாரா சம்போல அவன் செவிகளில் உறைத்தன. தன் எதிர் காலமே இருண்டு விட்டது போன்ற ஒர் பிரமை ஏற்பட்டது தன் மனகதிலேசத்தை வெளிக்காட்டாமல் "யாருக்கப்பா திருமணம்.?" என்று துணிந்து கேட்டு விட்டான்.
* நல்ல கேழ்வியடா..? இங்கு உன்னைத் தவிர திரு மணத்துக்காக யார் இருக்கிருர்கள் ? அப்பாவுக்குத்தான் இரண்டாந்தாரம் என்று நினைத்து விட்டாயாக்கும்?' ஹாஸ் யமாக கூறிவிட்டு அதை ரசித்தும் சிரித்துக் கொண்டார்
961.
"அப்படியிருந்தாலும் பாதகமில்லையே அப்பா!’ என்று சொல்ல வாயெடுத்தவன் உடனே அதை மாற்றி 'திரு மணத்துக்கு இப்போ என்னப்பா அவசரம்." என்று குழைந் தான். "ஏன் நீ இன்னும் சின்னப் பாப்பா என்ற எண்ண மாக்கும். இந்த வருடத்தோடு உனக்கு இருபத்தாறு வயது முடியப்போகிறது. உன் வயதில் நான் உன்னைப் பெற்று விட்டேனடா ? நீ என்னடா என்ருல் . என்ன அவசர மென்கிருய். நல்லாயிருக்கடா உன் வாதம்..?

சுடர் விளக்கு 6.
'இப்போ உங்கள் எண்ணந்தான் என்னப்பா..? பொறுமையற்றவணுய் கேட்டான் சங்கர்.
‘அப்படி வாடா வழிக்கு! அதை விட்டு சும்மா சாக் குப்போக்குச் சொல்லிக்கொண்டு .1 ஆமா விஷயத்துக்கு வந்து விடுகிறேன். இப்போ எனது ஆசையெல்லாம் உனக்கு ஒரு திருமணத்தைச் செய்து நீ குடியும் குடித்தனமுமாக வாழ்வதைப்பார்த்துச் சந்தோஷப்படுவது தான்.
அவர் முடிக்க வில்லை "நிஜமாகத் தான் கூறுகிறீர்க ளாப்பா. ? சந்தேகத்தோடு கேட்டான் சங்கர்,
'இல்லை ! உன்னுேடு விளையாடுகிறேனுக்கும். ஆளைப் பார் ஆளை..?”
"அப்போ பெண் கூடப்பார்த்து விட டீ ர் க ளா அப்பா..?’ தயங்கியபடி கேட்டான் அவன்.
நல்ல கேள்வியடா? பெண்ணில்லாத கல்யாணம் என்று நினைத்து விட்டாயா? பெண்ணெல்லாம் றெடி பண்ணி விட்டுத்தானே உன் சம்மதம் கேட்டேன். ஏன் நீ வாஸந் தியைக் காணவில்லை ? அம்மா உன்னிடம் இதுபற்றி ஒன் றும் கூறவில்லையா? பெண் உன் அத்தை மகள் சம்மதம் தானே?"
"அப்பா..! இதயத்தில் எழுந்த குமுறல் அத்தனையும் சேர்ந்து வார்த்தையாக வெளிவந்தது.
‘என்னடா ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதுபோல அலறுகிருய்..!’
என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. வாஸந்தியை என்னுற் திருமணஞ் செய்து கொள்ள முடியாது.”
"ம் !" என்று பல்லை நரும்பிய அவன் தந்தை "ஓ ஹோ அப்பா சொல்லைத் தட்டுமளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துவிட்டதாக்கும்! ஏன் அவளிடம் என்ன அறிவில்லையா? அந்தஸ்தில்லையா? அழகில்லையா? அவளிடம் நீ என்னகுறை யடா கண்டு விட்டாய் ? என்று ஆத்திரத்திரத்தோடு கேட்டார்.
"அவளிடம் ஒருவித குறையுமில்லையப்பா! ஆனல் எனக்குத் தான் அவளைப் பிடிக்கவில்லை. !

Page 34
62 சுடர் விளக்கு
"உனக்குப்பிடிக்காத காரணம்.? ஆக்ரோஷத்தோடு கேட்ட தந்தையிடம்.
நான்.நான் நான் வேறு பெண்ணுக்கு வாக்குக் கொடுத்து விட்டேனப்பா! என்று நாக்குழையப் பதிலளித் தான் சங்கர்.
*டேய், உன்னைப் பெற்றெடுத்த அப்பனிடமே இந்த வெட்கங்கெட்ட விஷயத்தைத்கூற உனக்கு வெட்கமாயில்லை உனக்கு எத்தனை நெஞ்சழுத்தம் வேண்டும் இதை என்னி டம் கூற உன்னைப் பெற்று, வளர்த்து படிக்க வைத்தேன் பார்! எல்லாம் அதனுல் வந்த வினைதான்! உன் இஷ்டப் படி நான் இருக்கும்வரை நீ செய்யவே முடியாது ! இடி யேறுண்ட சிங்கம்போற் கற்சித்தார் தந்தை.
சங்கரும் ஆத்திரப்பட்டான். ஆனல் பொறு1ை0 இழக்க வில்லை. "அப்பா வீண் பிடிவாதஞ் செய்யாதீர்கள். இது என் வருங்கால வாழ்வை நிர்ணயிக்கும் விடயம். இதில் என் விருப்பத்திற்குத்தானே அதிக மதிப்புக்கொடுக்க வேண்டும் நீங்கள். விருப்பமில்லாத திருமணத்தைச்செய்து அதனல் மூன்று உயிர்கள் கஷ்டப்படுவதைப்பார்க்க ஆசைப் படுகிறீர்களா..? வேண்டாம் அப்பா! தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள்."
"அப்பாவாம் அப்பா!அந்தப்பதத்தை உபயோகிக்க உனக்கு அருகதையிருந்தால் கண்டிப்பாக நீ வாஸந்தியை மணந்து கொண்டேயாக வேண்டும்."
'முடியாதப்பா இப்படிக்கூறுவத ந்காக என்ன மன் னித்து விடுங்கள். கொடுத்த வாக்கை மீறி ஒரு பெண் ணுக்குத்துரோகஞ் செய்ய மாட்டேன். ஆத்திரப்படாமல் அமைதியாக யோசித்துப்பாருங்கள். அன்று உங்கள் ஆத்தி ரம் ஒரு அருமைச் சகோதரியை இழக்கச்செய்தது. நீங்கள் செய்த தவற்றை இப்போது உணர்கிறபடியால் அதற்கு என் மூலம் பிராயச்சித்தம் செய்யப்பார்க்கிறீர்கள், ஆனல் இது எந்தவகையில் பொருந்தும் என்பதைச் சிறிதேனும் சிந்திக்க மறுக்கிறீர்கள் நீங்கள் அன்று நீங்கள் தவறு அல்ல என்று நினைத்துச்செய்தது இன்று பெரிய தவருகத் தெரி கிறது. அதுபோல இன்று நீங்கள் என்னை வற்புறுத்தினல்

சுடர் விளக்கு 63
அதையும் தவறென்று உணர்த்தக் காலம் வழி செய்யும் அப்பா. என் கொள்கையை நான் யாருக்காகவும் மாற்ற முடியாதென்பதை மிகவும் மனவருத்தத்தோடு கூறுகிறேன்.”
* உன் விருப்பப்படி நடந்தால் எனக்கும் உனக்கு முள்ள உறவு இன் ருேடு முறியவேண்டியதுதான். என் சொத் தில் உனக்கு ஒரு சல்லிக்காசுக்கூடக் கிடைக்காது.
"பணத்தைக் காட்டி மிரட்டுகிறீர்களா அப்பா ! மற்ற ஆண்களைப்போல பணத்துக்காக நானும் கொடுத்த வாக்கை மீறிவிடுவேன் என்று எண்ணினல் அது முற்றுந் தவருகும் "துரோகி” என்ற பேர் எடுப்பதை விட பணத்தை இழக்க நான் சித்தமாக இருக்கிறேன் அப்பா!'
"மூடடா வாயை அதிகப்பிரசங்கி! எனக்குப் புத்தி சொல்ல வந்து விட்டாய். உனக்கு மானம் என்ற ஒன்று இருந்தால் இப்போதே இந்த இடத்தை விட்டுப் போய் விடு. ம்! இன்னும் எதற்காக நிற்கிருய்?*
"அப்பா வாயால் கூறிவிடுவது சுலபம்; அதைச் செயற் படுத்துவதும் சுலபம். ஆனல் அதன் பலாபலன்களை அனு பவிப்பதுதான் மிகவும் சிரமம். நீங்கள் என்னைப் போகச் சொன்ன பின்பும் நான் இங்கு தாமதிக்க விரும்பவில்லை ஆனல் நான் இவ்விடத்தை விட்டுப் போகுமுன் அம்மாவை ஒரு முறை. -
"அம்மா! அம்மாவை நினைத்திருந்தா நீ இந்த முடி வுக்கு வந்திருக்கமாட்டாயே! உன் உன் அம்மாவும் அப் பாவும் இறந்து விட்டார்கள் என்று நினைத்துச்சொள். இப்போ நீ இவ்விடத்தை விட்டுப் போய்விடு. .ம் போ GeofGu”
சங்கர் போகாதே நில்லப்பா, தில் ! அப்பாதான் ஆத் திரத்தில் அறிவை இழந்து விட்டாரென்றல்; உனக்குமா அறிவு கெட்டு விட்டது.? போகாதே சங்கர் ! தன் வேண்டு கோளை மீறி நடந்து செல்லும் மகனைத் தொடர்ந்து ஒடி ஞள் அவன் தாயார் பார்பதி.
*பார்வதி உள்ளே போ, உனக்கு இப்படியான ஒரு தறுதலை மகன் பிறக்க வில்லை என்றே நினைத்துக் கொள்!" என்று கூறியபடி அவளைத் தன் முரட்டுக்கரத்தால் பற்றி யிழுத்தார் சங்கரின் தந்தை பரமநாயகம்.

Page 35
64 சுடர் விளக்கு
தாயின் பாசக்குரலில் அழைப்பு சங்கரைத் தடுமாற வைத்தது. சென்றவர் திரும்பித்தன் தாயைப் பார்த்தபடியே நின்ருன் ‘ம் இன்னும் நீ போகவில்லையா ? என்ற பரம நாயகத்தின் கோபக்குரல் அவனைத் திரும்பிச்செல்ல வைத் தது. பாசம் ஒரு புறமும், ரோசம் மறுபுறமும் அவனை உந் தித்தள்ள இதயத்தை இரும்பாக்கி நடந்தான் அவன்.
"சங்கர்’!.என்று அலறிய சத்தம் காற்றுடன் கலந் இவனைப் பின் ਰ றிய சத்த Ո9Ա)] து
 

11 இறுகப் பற்றிய
இன்பக் கரங்கள்.
த்ெதனை தான் வைராக்கியம் படைத்தவராக இருந் தாலும் தாய்ப் பாசத்திற்கு அடிமைப்படாதவர்கள் எவ ருமே இருக்க முடியாது தாய்ப்பாசம் என்பது ஒரு தனிப் பா சந்தான். அந்தப்பாசம் சங்கரின் மனநிலையையும் பாதித் தது. ஏதோ ஒரு வேகத்தில் ஆத்திரப்பட்டுப் பெற்ருேரை அலட்சியப்படுத்தி விட்டானே தவிர அவன் உள்ளத்தில் அது முட்போல் உறுத்திக்கொண்டே இருந்தது அடுத்த நாட்காலை நிம்மதியற்ற மனதுடன் ஆஸ்பத்திரிக்குச் சென்ற சங்கர் சுமதியைச் சென்று பார்க்கும் அளவுக்குத்துணிவு இள் லாது போகவே நேராக நோயாளிகளிடஞ் சென்றன்.
நேரஞ் செல்லச் செல்ல அவனது உள்ளமும் சுமதி யை நாடிச்சென்றது. அவளுல் தன் உணர்ச்சிக்குக் கட்டுப் பாடுபோடவே முடியவில்லை. தன் வரவுக்காகச் சுமதி ஏங் கித்துடித்திருப்பாள் என்று நினைத்து பெற்ருேரைக்கூடவேண் டாம் என்று ஒடோடி வந்த அவனுக்கு சுமதியின் மேல் ஆத்திரமாத்திரமாக வந்தது. "சீ இந்தப் பெண்வர்க்கமே இப்படித்தான்! சிறிதேனும் நன்றியில்லாத பிறவிகள்" என்று நெஞ்சுக்குள்ளேயே கர்விக் கொண்டான் அவன். அவனுல் இனி ஒரு கணமும் தாமதிக்க முடியாதுபோல இருந்தது. கூடவே ரோசமும் பொத்துக்கொண்டு வந்தது. எதற்காக நான் போக வேண்டும்? அவளாகவே வரட்டும் என்று நினைத்த அவன் மனம் அடுத்த கணமே விட்டுக்கொடுப்ப வர்கள்தான் உண்மையான காதலர்கள்' என்று சமாதான மும் கூறிற்று. மேலும் தாமதித்தால் பைத்தியம் வந்து விடும்போல இருக்கவே அவன் சுமதியின் அறையை நோக்கி நடந்தான்
ஆனல் அங்கும் அவனுக்கு ஏமாற்றமே காத்திருந் தது அந்த அறைக்கதவு அன்று வெளிப்புறமாகத் தாளி யிடப்பட்டிருந்தது. அவன் மனம் இல்லாததை எல்லாம் கற்பனை செய்து கவலைப்பட்டது. தான் அன்றுவருவதை அறிந்து தன்னைத்தவிர்க்கவே சுமதி கதவைப் பூட்டியுருக்கி ருள் என்று நினைத்ததும் அவன் ஆத்திரம் எல்லை கடந்தது அவளுக்கு அவன்மேல் உண்மையான அன்பிருந்தால் அவனைச் சந்திக்கத்தானகவே ஒடோடி வந்திருக்கமாட்டாளா..? சி நேற்றுக்கண்ட ஒரு பெண்ணுக்காக என்னைப் பெற்று

Page 36
66 சுடர் விளக்கு
ஆளாக்கிய அப்பாவையே உதறி விட்டு வந்தேனே! எனக்கு இதுவும் வேண்டும்! இன்னமும் வேண்டும்!! என்று அவன் மனம் வேண்டாதவற்றை யெல்லாம் கற்பனை செய்து கண் ணிர் விட்டது. இதயம் நேற்று வீட்டில் நடந்ததையெல் லாம் நினைத்து ஏங்க உள்ளம் சுமதியை நாடியது.
அவன் உள்ளமே ஒரு போர்க்களமாகியது 'சீ நீயும் ஒரு மனிதன? எடுத்ததெற்கெல்லாம் சந்தேகந்தானு? அவள் உன்னை வந்து பார்த்தாற்தான் அன்பு உண்டு என்ற அர்த் தமா ? நீ மட்டும் என்னவாம்? ஐந்து நாட்கள் அவளைப் பாராமல் இருந்து விட்டு இன்று வந்து இத்தனை நேரத்துக் கும் அவளைச் சென்று பார்த்தாயா ? அவர் வந்த இத்தனை நேரத்துக்கு என்னை வந்து பார்க்க வில்லை. நான் மட்டும் எதற்காக அவரிடம் போகவேண்டும் என்ற சுய கெளரவம் அவளுக்கு மட்டும் இருக்காதா..?’ இப்படியெல்லாம் பல தையும் நினைத்து அவன் ’மனம் தவியாய்த் தவித்தது.
அன்பிற்காக விட்டுக்கொடுப்பவர்கள் தான் காத லில் வெற்றியடைவார்கள் என்று அவன் எங்கோ படித்த ஞாபகம் வந்ததும் அன்று டியூட்டியாக இருந்த நர்ஸ் நிர் மலாவை அழைத்து டாக்டர் சுமதி வீடு சென்று விட்டா ளா ? என்று நயமாக வினவினன். "டாக்டர் சுமதி இரண்டு நாட்களாக லீவில் நிற்கிருர்கள்' என்று கூறி அவன் பதி லுக்கு காத்திராமலே சென்ருள் நர்ஸ்,
அதற்கு மேலும் சங்கர் சிந்திக்க வில்லை. தன் அவ சரப்புத்திக்காகத் தன்னையே நொந்து கொண்ட அவன் அவசரமாக சுமதியின் வீட்டை நோக்கிப்பறந்தான்.
ஜுரம் சற்றுத்தணிந்த நிலையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை வைத்துப் படுக்கையிற் சாய்ந்தபடியே படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. இரண்டு நாள் இடைவிடாது அடித்த ஜ"ரட அவள் முகத்தில் ஒரு களைப்பு உணர்ச்சி யை ஏற்படுத்தியிருந்தது சுகபினமாய் இருந்தபோது ஆறுத லுக்கு ஒரு வார்த்தை சொல்ல தங்கத்தையும் சீதாவை யும் தவிர அவளுக்கு வேறு யாருமே இருக்க வில்லை கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அவள் அநுபவித்துப் பழக் கமாய் விட்ட தனிமைதான் துெ. இது காலவரை அவள் அதைப் பொருட்படுத்தியதும் இல்லை.

சுடர் விளக்கு 67
ஆனல்
இந்த மூன்று நாட்களும் அவள் உள்ளம் பட்ட வேதனை. இதயம் துடித்த துடிப்பு. தான் இப்படி நோய் வாய்ப்பட்டிருக்கும் போது சங்கர் மட்டும் அருகில் இருந் தால் . என்று நினைக்கவே புரியாத ஒரு இன்பக் கிளு கிளுப்பு-அவள் உடலைத் தழுவிச் சென்றது. அந்த மூன்று நாட்களும் தன் அருகில் சங்கர் இருப்பதாகவே அவள் கற் பனை செய்தாள். அந்தக் கற்பனையில் நிறைவேற முடியாத எத்தனையோ இன்ப நினைவுகள். அந்த நினைவுகளின் இன்ப போதையில் அவளுக்கு ஜுரத்தின் கடுமைகூட ஒ ே பொருட்டாகத் தோன்ற வில்லை.
நேற்று இரவு அவளுக்கு ஜுரம் மிகவும் உஷ்ணமா கக்காய்ந்தபோது சீதா அவள் பக்கத்தில் இருந்தே அவினி தலையையும், கன்னத்தையும் மாறிமாறி வருடிக்கொ?* ருந்தாள். அந்த அணைப்பிலே அவளுக்கு ஒரு ஆதங்கP ஒரு நிம்மதி அப்போது. அதை நினைத்துப் ப்ார்க்கவே இப் போது அவளுக்கு வெட்கமாக இருந்தது.
ஆமாம் .
அப்போது அவள் தெரிந்துகொன் டேசீதாவை சங் கராக மானசீகஞ்செய்து அவள் கரத்தை இறுகப் பற்றிய போது அடைந்த இன்பம் அதற்கு முன் அவள் வாழ்க்கை யில் அநுபவிக்கவேயில்லை. "என்ன சுமதி ? ஜூரம் மிகவும் கடுமையாக இருக்கா..? டாக்டர் பூரீ தருக்குப் போன் பண்ணட்டுமா?’ என்று சீதா பதைபதைத்துக் கேட்டபோது தன் கரத்தை உயர்த்தி வேண்டாம் என்று சைகை செய்து விட்டு அவளைத் தன் அருகில் அழைத்து, இருக்கும்படி செய்து அவள் மடியில் தன் தலையை வைத்து அந்தக்கரங் கள் இரண்டையும் இறுகப்பற்றிக்கொண்டே படுத்தபோது சங்கரைத்தவிர வேறு எந்த நினைவுமே அவள் உள்ளத்தில் நிலைக்கவில்லை,
அந்த நிலையில் அவள் எப்போதுதான் கண்மூடினளோ அவளுக்கே தெரியாது. திரும்பவும் அவள் கண் விழித்த போது குருவிகளின் கீ! கீ என்ற இன்னிசை தான் அவளே வரவேற்றது. தன்நிலை பெற்றவளாக எழுந்திருக்க முயன்ற

Page 37
68 சுடர் விளக்கு
போது கட்டிற் சட்டத்தை அணையாகக்கொண்டு சாய்ந்து கண்ணயர்ந்த சீதா விழித்துக்கொண்டு ' என்ன சுமதி ! என்ன வேண்டும் ?" என்று பரபரப்புடன் வினவினுள். அப்போதுதான் சீதா தன்னை இரவு முழுவதும மடியிலே யேதாங்கித் தூங்க வைத்திருக்கிருள் என்ற உண்மை புலணு கியது.
தன் செய்கைக்காகத் தன்னையே நொந்து கொண்ட சுமதிக்குத் தான் ஒரு பெரிய சுயநலக்காரியாகத் தோன்றி யது. உடனே அவள் தன் தோழியின் பக்கந் திரும்பி "சீதா உனக்கு ரொம்ப சிரமம் கொடுத்து விட்டேன்! என்னை மன்னித்துவிடு’ என்று மண்டாட்டமாக வேண்டினுள். அதற் குக்கூடச் சீதா அவளைக் கடிந்து கொண்டு அவளுக்கு தேவை யான எல்லாம் செய்து படுககையில் தூக்கியிருத்தி விட்டு தன் கடமையாற்ற "நர் ஸிங் ஹோயை’ நோக்கி விரைந்தாள்
அந்தக்காட்சி இன்னும் அவள் மனக்கண்ணை விட்டு அகலவேயில்லை. சீதாவின் உயர்ந்த பண்பும், அடக்கமான சுபாவமும், அன்பு நிறைந்த உள்ளமும் அவளை மிகவும் கவர்ந்திருந்தது. சங்கரை விட ஆயிரம் முறை மேலாக அவள் சீதாவுக்குக் கடமைப்பட்டுள்ளாள். இருந்தும் உள்ளம் என் பது இருக்கிறதே? அதற்கு நன்றியுணர்ச்சி கொஞ்சங்கூட இருப்பதில்லை. பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்ருேரையே நேற்றுவந்த ஒருவனுக்காகத் துறக்கச் சித்தமாயிருக்கும் போது கேவலம் சீதா எம்மாத்திரம் ! சுமதிக்கும் சங்க ரின் நினைவுதான் நிறைந்திருந்தது. சீதாவைப்பற்றி அவள் கவலைப்படவில்லை.
கையிலே புத்தகம் பிடித்தபடி இருக்க இமைத்திரை யில் சங்கரின் உருவந்தான் நர்த்தனமாடியது. பேருக்குப் புத்தகத்தைப் பிடித் திருக்க அவள் மானசீகமாக சங்க ரோடு ஐக்கியமாய் விட்டாள். இடையிடையே தங்கத்தின் காலடியோசை கேட்கும்போது மட்டும் தன் நினைவுபெறு வாள். அப்போது சீதாவின் நினைவும் வரும். ஒரு கணம் தான். அடுத்த கணமே சங்கரின் நினைவு அவளை ஆட் கொண்டு விடும்,

ர் விளக்கு 69
இந்த நினைவிலே லயித்திருந்த அவள் நினைவின் மூட் த்திலே மார்பிலே புத்தகந்தவழ அப்படியே கண்ணயர்ந்து ட்டாள். எண்ணெய் காணுத அவள் சுருண்ட கேசம் லேசாக வீசிய தென்றலுக்கு ஆடி அசைந்து நெற்றியிலே ாண்டு விளையாடியது மார்பகச் சேலை ஒரு புறம் நழுவி லத்தோடு சொந்தங் கொண்டாடியது. இந்த நிலையில் வள் படுத்திருந்தபோதுதான் அங்கே தயங்கித் தயங்கி ந்தான் சங்கர்,
இப்படியொரு இக்கட்டான நிலையில் அவளைச்சந் க்க நேரும் என்று எதிர்பார்க்காமல் வந்த அவனுக்கு ந்தக்காட்சி நல்லதோர் விருந்தாக இருந்தது கண்ணுக்கு. ந்த நிலையில் அவள் அழகுசுடப் பன்மடங்கு அதிகரித் த் தெரிவதுபோல் இருந்தது. அவள் அழகையே கண் காட்டாமல் பார்த்து நின்ற அவன் கண்சளில் அப்போது ான் அவள் மார்பகத்திலே தவழ்ந்த புத்தகம் தென்பட் து. கொடிபோல் துவண்டுகிடந்த அவள் மேனிக்கு அப் த்தகம் ஓர் பளுவாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் டிமேல் அடிவைத்து மெதுவாக அவளை நெருங்கி அப்புத் த்ெதை எடுத்துவிட கையைப் புத்தக அட்டையில் வைத் ான். அடுத்த நிமிடம் அவன் கரத்தை இறுகப் பற்றிக் காண்டது சுமதியின் பட்டுப்போன்ற மென் கரம். சீதா ன்று நினைத்து சங்கரின் கரங்களை இறுகப்பற்றிய படியே மதுவாகக் கண்விழித்த அவள் திடுக்கிட்டுத் தன் கரங்களை ழத்துக்கொண்டாள்.
"உன் தூக்கத்தைக் கெடுத்து விட்டேனுக்கும் ...!" ண்ணிப்புக் கோருபவன் போல் அவள் முகத்தைப்பார்த்துக் ாண்டே கேட்டான் சங்கர். சுமதி தன்நிலை பெற சில டெநேரஞ் சென்றது.
'உம் இல்லை அசதியாக இருந்தது. படுக்கையில் ய்ந்தேன். எப்படித்தான் கண்மூடினேனே எனக்கே 3ரிய வில்லை 1. ஆமாம் நீங்கள் எப்போ வந்தீர்கள் ட்டு விட்டு அவனையே கண்வெட்டாமற் பார்த்தாள் அவள்
அவள் கேள்விக்குப் பதில் கூருமல் அவளையே பார்த்து ாருன் அவன். இருவர் விழிகளும் ஒன்றையொன்று ஊடு பிய மகா சக்தியில் பேச்சுக்கு அங்கு இடமிருக்க வில்லை.

Page 38
70 சுடர் விளக்கு
சங்கர் அந்த விழி சொன்ன கதையில் எதையோ புரிந்துகொண்டவன் போல ‘என்ன சுகமில்லாமல் இருந் தாயாம்! இப்போ எப்படி..? என்று கேட்டு பக்கத்தில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டான்.
"சும்மா லைற்றன டெம்பரேச்சர் இப்போ தேவலை, சீதாவின் கண்காணிப்பில் ஜாரம் கூடப்பறந்து விட்டது, என்று கூறிவிட்டு மெல்லிய புன்னகை யொன்றை உதிர்த் தாள் அவள்.
/ சுமதியை நேருக்கு நேர் கண்டு அவள் பேசுவதைத் தன் காதுகளாற் கேட்ட பின்புதான் சங்கருக்கு மன நிம் மதி பிறந்தது. அதன் பின்பு அவன் அடிக்கடி சுமதியிடம் வந்து அவள் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டினன். இப்படியாகச் சீதாவும் டாக்டர் சங்கரும் செய்த உதவி யால் சுமதி உடல் நலம் தேறினுள். ஆனல் இருவரின் கண் டிப்பான கட்டளைகளையும் மீறி அவளால் ஒரு வாரம் ஆஸ் பத்திரிக்குச் செல்லவே முடியவில்லை.
அவளுக்குப் பொழுது போக்குக்காக சங்கர் நிறையக் சதைப்புத்தகங்களை கொண்டு தந்திருந்தான். அவற்றில் அவ ளுக்குப் பிடித்தமான ஆங்கில ஆசிரியர்களினதும் தமிழாசி ரியர்களினதும் புத்தகங்கள் இருக்கவே அவள் காண்டேகரின் 'கிரெளஞ்சவதம்’ என்ற நாவலை எடுத்துப்பிரித்தாள். அதற் குள் இருந்து அரைகுறையாக மடிக்கப்பட்ட கடிதம் ஒன்று அவள் மடியில் விழுந்தது. கடிதத்தைத் திரும்பவும் புத்த கத துள் வைப்பதற்காக எடுத்த அவள் தன் ஆவலைக் கட் டுப்படுத்த முடியாமல் அதைப்பிரித்து அதன் கையெழுத்தைப் படித்தாள். அது ஒரு பெண்ணுடைய கடிதமாக இருக்கவே தான் செய்வது தவறு என்று அறிந்தும் கடிதத்தைப்பிரித் துப்படித்தாள். அப்போது அந்த மண்டபமே இடிந்து அவள் மேல் விழுந்தது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. ‘பாழாய்ப் போன ஜூரம் வந்ததுதான் வந்தது. எ ன் உயிரையும்கூடக் கொண்டு செல்லாமல் ஏன் விட்டது 1 என்று கேட்டபடி யே படுக்கையில் தொப்பென விழுந்தாள்.

12. எனக்கும் ஒரு
இதயம் உண்டு!
ஏற்கனவே வருத்தத்தினுல் பலவீனம் அடைந்திருந்த சுமதியின் பூஞ்சை உடம்பு இந்த அதிர்ச்சியினுல் மேலும் பாதிக்கப்பட்டது. அவள் இதயய பட்பட்' என்று அடிப் பதை அவளால் உணர முடிந்தது. நடுங்குங் கரங்களால் அவள் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.
அன்புள்ள அத்தான்,
பல ஆண்டுகள் ஒற்றுமையாக இருந்த உங்கள் குடும் பம் மீண்டும் என் வரவால் பிளவு பட்டுவிட்டதே என்று நினைக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதைச் சொல்லி அழுவதற்கு எனக்கு யாரும் இல்லை.
உங்களுக்கும் உங்கள் பெற்ருேருக்கும் நடைபெற்ற விவாதத்தின்போது நான் மட்டும் இருந்திருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகப்போக விட்டிருக்க மாட்டேன் என் துரதிர்ஷ்டம். அந்தவேளை பார்த்துத்தான நான் கோயிலுக் குப்போயிருக்க வேண்டும் !
விஷயம் இத்தனை தூரம் வந்த பின்பு அதைப்பற் றிப் பேசுவதே தவறு இருந்தும் அதற்கெல்லாம் காரணம் நான் தான் என்று நினைக்கும்போது இதை எழுதாமல் இருக்க முடியவில்லை. உங்களிடம் உங்கள் விருப்பத்தைக் கேட்டவர்கள் என் விருப்பத்தைப் பற்றிக் கவலை யே கொள்ள வில்லை உங்களை நேரிற் காண்பதற்கு முன் மாமா மாமி அவர்கள் உங்களைப்பற்றி அடிக்கடி பேசுவதைக்கேட்டு நான் பல கற்பனைக் கனவுகள் கண்டது என்னமோ உண்மை தான். ஆனல் ஆமாம்! ஆனல் உங்களைக் கண்டபின் உங் கள் மன நிலையை அறிந்த பின் என் ஆசையைக் குழி தோண்டிப்புதைக்க முயற்சிக்கிறேன். என் முயற்சி வெற்றி பெற இறைவன் அருளட்டும்.
நீங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்த மங்கையை மணந்து மகிழ்ச்சியாக இருங்கள் அத்தான்.
உங்கள் அன்பின்
வாஸந்தி.

Page 39
72 - சுடர் விளக்கு
கடிதத்தைப் படித்து முடித்ததும் முகத்திற் துளித்து நின்ற வியர்வை முத்துக்களை மெதுவாக ஒற்றிக்கொண்டு கடிதத்தை மீண்டும் புத்தகத்துள் வைத்துவிட்டு சிந்திக்கத் தொடங்கினுள் சுமதி. அவளது சிந்தனை எல்லாம் சங்கரின் வருங்கால வாழ்வைச் சுற்றி ஓடியது. சங்கரின் எதிர்கால வாழ்வு பாதிக்கப்படுவதற்கு எக்காரணத்தை முன்னிட்டும் தான் ஒரு காரணமாகக்கூடாது என்று நினைத்த அவள் கண்களில் நீர் திரையிட்டது. தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை மட்டும் சங்கர் அறிய நேர்ந்தால் தன் மீது சொரியும் அன்புக்காக அவன் மிகவும் வேதனைப் படுவான் என்பதை உணர்ந்தாள். அவர் என் மீது அன்பு கொள்ளும் படி நடந்தது நான் செய்த முதலாவது தவறு. அதை மேலும் வளர்ப்பதற்கு ஏற்ற சந்தர்ப்பங்களையும் சூழ்நிலை களையும் ஏற்படுத்திக் கொடுத்தது அதைவிடப் பெரிய தவறு. எனக்கு என்னைப்பற்றி நன்முகத் தெரியும். என் வாழ்வு முழுவதுமே ஒரு இலட்சியத்தைப் பொறுத்து அமைய வேண்டும் என்ற உண்மை தெரிந்தும் மனக் கட்டுப் பாடு இன்றி அவரிடம என் மனதை ஐக்கியப்பட வைத் தது இமாலயத்தவறு. இவற்றிற்கு மன்னிப்பே கிடையாது ஏன்.. ? இல்லை இவற்றையெல்லாம சிந்தித்துதான். முதலில் என்னிடம் அணை கடந்த அன்புவைத்த பூரீ தரையே ஒதுக் கித் தள்ளினேன். ஆரம்பத்தில் சங்கரிடமும் அப்படித்தானே நடக்க முயன்றேன். பூரீதர் எதையும் உணரக்கூடியவர் நல்லவர். அவர் தானகவே ஒதுங்கிக்கொண்டார். ஆனல் சங்கர் அவர் என்னை விடுவதாக இல்லையே..!
நானும் இதுவரை எத்தனையோ ஆண்களிடம் பழகி விட்டேன். எவரிடமும் ஏற்படாத ஒரு கவர்ச்சி, அக்கறை அன்பு அவர் மீது மட்டும் ஏற்படக் காரணமென்ன ? இதுதான காதல். இனிமேல் விஷயம் எல்லை கடந்த பின்பு அவர் மனம் விட்டு என்னுடன் இத்தனை தூரம் பழகியபின் "என்னை மறந்து விடுங்கள்' என்று எந்தத் துணிவுடன் கூற (ptsty Lib.
‘உனக்காக நான் என் பெற்ருேரையே துறந்து வந் திருக்கிறேன். நீ என்னை மறந்துவிடுங்கள்' என்று இரண்டு வார்த்தையில் எவ்வளவு சுலபமாகக் கூறி விட்டாய் என்று அவர் என்னைத் திருப்பிக்கேட்டால் !

சுடர் விளக்கு 73
கை தவறிய நூற்கட்டைபோல உருண்டு கொண்டு போன சுமதியின் சிந்தனை தன் பின்னுல் ஏதோ நிழலாடவே அறுபட்டது. யாா என்று பார்ப்பதற்கு திரும்பிய அவள் அங்கு தான் இத்தனை நேரமாகக் கனவு கண்டு கொண்டி குந்த டாக்டர் சங்கர் நிற்பதைக்கண்டு திடுக்கிட்டுத் தன் ஆசனத்தை விட்டெழுந்து இருங்கள் சங்கர்’ என்று உப சரித்து தானும் உட்சார்ந்து கொண்டாள்.
"நான் கொடுத்த புத்தகங்கள் எப்படிப்பிடித்ததா..? ான்று தானகவே பேச்சைத் தொடங்கினன் சங்கர்.
இதுதான் தக்க சமயம் என்று நினைத்த சுமதி 'இன் பனும் ஒரு புத்தகத்தைக் கூடப்படிக்க வில்லை. படிக்க முடிய வில்லை!" என்று கூறி அவன் முகத்தைக்கூர்ந்து கவனித்தாள்.
*ஏன் சுமதி புத்தகங்கள் பி டி க் க வி ல் லை யா ? அல்லது அதை எழுதிய ஆசிரியர்களைப் பிடிக்கவில்லையா ..?" என்று கேட்டுவிட்டுக் குறும்பாகச் சிரித்தான் சங்கர்.
'இல்லை சங்கர்! அப்படி இருந்தாற் கூடப் பாதக மில்லையே? நான் ஒரு பெரிய தவறு செய்து விட்டேன். தவறு என்று தெரிந்தும் அதைச்செய்ததற்காக என்ளை மன்னிக்க வேண்டும் சங்கர்.
'தவரு ? நீ செய்தாயா ? எனக்கொன்றுமாகப் புரியவில்லையே சுமதி. கொஞ்சம் விபரமாகக்கூறு வா யா..." சங்கர் வியப்புடன் வினவினன்.
“உங்கள் புத்தகம் ஒன்றுக்குள் ஒரு கடிதம் இருந்தது அதைப்படிக்கக்கூடாது என்று நினைத்தும் அதைப் படித்து விட்டேன்’ மன்னிப்புக்கோரும் பாவனையிற் கூறினள் சுமதி.
பூ! இவ்வளவுதான ? நானும் என்னமோ ஏதோ என்று பயந்து விட்டேன். ஆமாம்! இப்போ அதற்கு என்ன? எனக்கு வந்த கடிதத்தைத்தானே நீ படித்தாய்! அதில் தவ றென்ன சுமதி ? சாதாரணமாகக் கேட்டாள் அவன்.
'வந்து அது உங்கள் முறைப் பெண்ணுல் எழுதப் பட்ட கடிதம்.

Page 40
74 சுடர் விளக்கு
அவள் முடிக்க வில்லை. "ஓ வாஸந்தியின்கடிதத்தைக் குறிப்பிடுகிருயாக்கும் . அதை நானே உன்னிடம் காட்ட வேண்டுமென்றுதான் இருந்தேன். அதற்குள் அது உன்னி டம் வலியவே சிக்கி விட்டது.அதுவும் நல்லதற்குத்தான்!’ என்ருன் புன் சிரிப்புடன்.
சுமதிக்கு அவனுடைய பேச்சு ஒன்றுமாகப் புரியவில்லை இரகசியத்தில் இருக்க வேண்டிய ஒரு விஷயம் அம்பலமாகி விட்டதற்காக அவன் மிகவும் வருத்தப்படுவான் என்று எண்ணியிருந்ததற்கு மாருக அவன் சந்தோஷப்படுகிருன். அவள் அளவு கடந்த ஆச்சரியத்தோடு "நான் படித்ததால் என்ன நன்மை இருக்க முடியும் சங்கர்.’ என்று கேட்டு விட்டு அவன் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.
"என் இதயத்தை அதில் நீ பெற்றிருக்கும் ஸ்தா னத்தை உனக்கான என் இதயம் கொட்டும் அன்பை நான் விட்டுக்கூருமலே உன்னுல விளங்கிக்கொள்ள முடிந்ததல் லவா ?' என்று சாதாரணமாகக்கூறினுன் சங்கர்,
இத்தனை அப்பட்டமாக ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடியே கூறும் ஆற்றல் பெற்றவன் சங்கர் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டாள் சுமதி. அவன் கூறிய வார்த்தைகள் அவற்றில் தொனித்த உரிமை, உத் வேகம், உறுதி எல்லாமே சுமதியைப் பேசா மடந்தையாக் கின. அந்தப்பேச்சு அவளை உணர்ச்சி வசப்படுத்தி விட்டது.
சங்கர் ஒரு டாக்டர். உயர்ந்த குடும்பத்தில் உதித் தவன் பணத்தில் புரள்கிறவன். பண்பாடுள்ளவன். அப் படியான ஒருவன் தனக்குக் கணவனுகக் கிடைத்தால் அதில் அவள் பெருமைப்படுவாள். அதை அவள் கிடைத் தற்கரிய பெரும் பேருகவே கருதுவாள். ஆனல் அப்படியான ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை அவள் அதற் குரியவர்சளிடமிருந்து கவர்ந்துகொள்ள விரும்பவில்லை. அவர் களாக விரும்பிக் கொடுத்தால் ஒரு வேளை ஆமாம் ஒரு வேளை அவள் தன் லட்சியத்தை மறந்து ஏற்றுக்கொள்ள முன் வரலாம். ஆனல் எக்காரணங்கொண்டும் ஒரு குடும் பத்தைச் சிதைத்து அவள் வாழ்வுபெற விரும்ப வில்லை. சங்கர் கூறியதுபோல வாஸந்தியின் கடிதத்தைப் படித்தது கூட நன்மைக்குத்தான். இல்லையென் ருல் சங்கரின் பெற்

கடர் விளக்கு 7s
ருேரின் மன நிலையைப்பற்றி அவள் அறிந்திருக்கவே முடியாது சங்கரின் இதயத்தைக்காட்ட அவன் சொரியும் அன்பை உணர நிச்சயமாக அவளுக்கு வாஸந்தியின் கடிதம் தேவைப் பட்டிருக்காது. சங்கரின் இதயத்தை அவள் எப்போதோ புரிந்து கொண்டு விட்டாள். அந்த அன்புக்கு அவள் அடி மைப்பட்டு விட்டாள். ஆனல் அதை வெளிக்காட்டத்தான் அவள் விரும்பவில்லை. ஆகவேதான் சங்கரை இன்றும் புரிந்து கொள்ளாதது போல் நாடகமாடினள்.
நேற்றுவரை அவள் தனக்கும் சங்கருக்கும் முடிச்சுப் போடக் குறுக்காக நிற்பது ஒரு இலட்சியம் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனல் இன்று அதையெல்லாம் விடப் பெரிய பிரமாண்டமான குறுக்குச் சுவர் எழுந்து நிற்பது போன்ற பிரமையுண்டாகியது.
அந்த உயரமான சுவரை அவள் உதவியின்றிக் கடக்க முடியாது. அப்படித்தான் முயன்ருலும் அதிக வெற்றிபெற முடியாமள் அது அவள் தவறிவிழ நேர்ந்தால் அந்த வீழ்ச்சி யின் வேதனையை அவளால் தாங்கவே முடியாது. அது அவள் வாழ்வில் ஒரு மாருத வடுவாகிவிடும். இவற்றை யெல்லாந் தவிர்க்க அவளுக்குப் புலணுகியது ஒரேயொரு வழிதான். அது தான் இந்தக் கட்டத்திலேயே சங்கரின் உறவைக்கத்தரித்து விடுவது.
சில நிமிட நேரம் சிந்தனையுடன் போராடிய அவள் தன் மனத்தை நன்ருகத் திடப்படுத்திக்கொண்டு "சங்கர் உங்களை நான் புரிந்து கொண்டேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு அக்கறைக்கு தான் தலை வணங்குகிறேன். ஆனல் உங்கள் இதயத்தை என்னிடம் திறந்து காட்டுவதற்கு முன் எனக்கும் ஒரு இயம் உண்டு என்பதை நீங்கள் சிறிதா வது சிந்தித்தீர்களா?. என்னைப்பற்றி என் விருப்பத்தைப் பற்றி நீங்கள் அக்கறை கொள்ளவில்லையே அவள் முடிக்க வில்லை, சுமதி! நீ என்ன பேசுகிருய். ? அப்படியென்ருல் நீ. நீ. நீ என்னை விரும்ப வில்லை.என்னைக் காதலிக்க வில்லை . என்னைக் கலியாணஞ் செய்துகொள்ளப் போவதுமில்லை "பதற்றத்தோடு ஏமாற்றம் கலந்த குரலிற் கூறிய சங்கரை 'சங்கர்.1’ என்ற சுமதியின் இனிமையான சாந்தமான குரல் அமைதியாக்கியது.
'உங்களை நான் விரும்புகிறேன். காதலிக்கிறேன். காதலிக்கிறேன்.ஆனல் . ஆனல்

Page 41
76 சுடர் விளக்கு
அவள் முடிக்கவில்லை அதற்குள் "கிறிங் கிறிங் கிறிங்’ என்று டெலிபோன் அலறவே விரைவாகச் சென்று றிஸி வரைக் கையில் எடுத்தாள் சுமதி அடுத்த நிமிடமே சங்கர் உங்களுக்குத்தான் "கால் சீதா கூப்பிடுகிருள் என்று நிஸி வரை அவன் கைக்கு மாற்றினுள். ‘ஹல்லோ! யார் சீதாவா’ சங்கர் ஹியர் ! என்ன அவசரம்? சரி, இதோ புறப்படுகி றேன். ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்’ என்றவன் றிஸி வரை வைத்து விட்டு சுமதியின் பக்கந்திரும்பி 'உன் மன நிலை சரியாக இல்லை சாவகாசமாக வந்து உன்னைக்காண் கிறேன்’ என்று கூறி விடைபெற்றன்.
இந்தப் பேச்சு விவாதம் நீடிக்கக்கூடாதே என்று கவலைப்பட்ட சுமதிக்கு தெய்வந்தான் சீதாவுருவில் வந்து தன்னைக் காப்பாற்றியது போன்ற உணர்ச்சி தென்பட்டது. அவள் தன்னை மறந்தவளாக தன் இரண்டு கரங்களையும் குவித்து கடவுளை ஒரு முறை வணங்கிவிட்டுத் தன் விழிக் கடையில் துளிர்த்து நின்ற கண்ணிரைச் சுட்டு விரலால் வழித்தெடுத்துத் தரையிற் சிந்தி விண்டு அதையே கண் வெட்டாமற் பார்த்து நின்ருள்.

13. வெந்த புண்ணில் பாய்ந்த
கூர் நெடும் வேல்!
திருகோணமலையில் இருந்து சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மைலுக்கப்பால் உள்ளதுதான் உப்புவெளிக்கிரா மம். அங்குள்ள ஒரு பிரத்தியேக நர்ஸிங் ஹோமின் பங் காளி டாக்டர் சீதா, அந்த நர்ஸிங் ஹோமிலேயே கட மையும் புரிந்தாள். சுமதியின் பால்யத் தோழியான சீதா வைத்தியக் கல்லூரியிலும் அவளுடனே உடன் கற்ருள். சிறுவயது முதற்கொண்டே பழகியதாலும், குடும்பங்கள் ஒன்றுக்கொன்று உடன் உறவாடியதாலும் அவர்களை அன்பு பிணைத்திருந்தது. அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் உயிரையே விடத்தயாராக இருந்தார்களென்ருல் அது அதிகப்படுத்திக் கூறுவதாகாது. சுமதியின் தாய் மரண மடைந்த பின் சில நாட்கள் சீதாவும் அவள் தாயாரும் மாறி மாறிச் சுமதியின் வீட்டிலேயே தங்கியிருந்தார்கள் இப்போது கூட என்ன? சீதா நேரகாலத்துடன் வீட்டுக்கு வரவில்லையென் ருல் அவள் சுமதியின் வீட்டிற் தங்கி விட் டாள் என்றுதான் அர்த்தம். சில சமயங்களில் தாயாருக்கு அறிவித்து விட்டு அவள் சுமதியின் வீட்டிற் தங்கி இர வைக் கழித்து விடுவதுமுண்டு. இருவரும் அத்தனை ஐக்கிய மாகப் பழகினர்கள். சீதா அந்த நர்ஸிங்ஹோமிலிருந்து சங்கரின் வரவையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுமதியின் வீட்டிலிருந்து குழம்பிய மன நிலையுடன் சென்ற சங்கரின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட வேகத்தில் சென்றுகொண்டிருந்த மோட்டார் பல தெருக்களையும் சாலை களையும் கடந்து முற்றிலும் முரண் பட்ட ஓர் சூழ் நிலை யில் தென்னையும் பனையும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு இரு புறமும் வளர்ந்திருந்த ஒரு தெருவினுரடாக வளைந்து சென்றது மலை நாட்டிற் கார் ஒட்டிப்பழகிய அவனுக்கு திருகோணமலையில் கார் ஒட்டுவது ஒரு விளையாட்டுப்போல இருக்கும். இன்றும் அப்படித்தான் தன் கருத்தைக் கார் ஒட்டுவதிற் செலுத்த முடியாத அவன் கரங்கள் 'ஸ்ரியறிங் வீலைப் பிடிக்க கார் தன் பாட்டிற்கு வந்து நர்ஸிங்ஹோம் வாயிலையடைந்தது. W
அவன் வரவையே வைத்த கண் வாங்காமல் எதிர்
பார்த்திருந்த சீதா அவன் காரைக் கண்டதும் குழந்தை போலத் துள்ளியோடி அவனை மகிழ்ச்சியோடு வரவேற்று

Page 42
78 சுடர் விளக்கு
“டாக்டர்! மிகவும் ஆபத்தான பிரசவக் கேஸ் பெரிய டாக் டர் இரண்டு நாள் லிவிற் போய் விட்டார். இது என் பொறுப்பாகி விட்டது. பெண்ணுக்கு உற்ருர் உறவினர் யாருமே கிடையாதாம். என்னல் ஆனவரை முயற்சித்து விட்டேன். இன்னும் பிரசவம் ஆகவில்லை. ஆகவேதான் ஏனையோரின் அநுமதியுடன் உங்களை அழைத்தேன்!’ என்று விபரமாகக் கூறினுள்
மன நிம்மதியற்று வந்த சங்கருக்குச் சீதா கூறியவை சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவன் கடமை மூலம் கவலையை மறக்க முயன்றன். ஆகவே வர் சிதா பார்க்க லாம் என்றன்.
அவனை அழைத்துக்கொண்டு நோயாளியிடம் சென் முள் சீதா அவளைப் பரிசோதித்த சங்கர் "ஏதோ அதிர்ச்சியில் அவதிப்படுவது போல இருக்கிறது: எதற்கும் இந்த ‘இன் ஜெக்ஷனை'க் கொடுத்துப் பார்ப்போம். இன்னும் அரை மணி நேரத்திற் பிரசவிக்கா விட்டால் ஆப்பரேஷனுக்கு ஆயத் தப் படுத்த வேண்டியதுதான்’ என்று கூறி ஒரு நீண்ட ஊசியை எடுத்து அந்தப் பெண்ணின் வலது கரத்தில் ஏற்றினன்.
பத்துப் பதினைந்து நிமிடங்கள் சென்றிருக்கும் சங்கர் கடிகாரத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான். அவ னுக்குச் சீதா தன்னை அழைத்ததிற் பெருமகிழ்ச்சியும், தன் னைப்பற்றி ஓர் உயர்ந்த எண்ணமும் உண்டாகியது. சீதா எப்போதும் தனக்கு ஒரு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப் பவள் என்று நினைத்ததும் சீதாவின் பால் ஒரு நன்றியுணர்ச்சி பெருக்கெடுத் தோடியது. அதே நேரம் சுமதிக்கு மட்டும் சீதாவின் குணத்தில் ஒரு காற்பங்காவது இருந்தால் என்று அவன் எண்ணுமலும் இல்லை. ஏதோ சிந்தனையில் ஆழ்ந் திருந்த அவனை 'ம் ஆ.அம்மா யோ!' என்ற அந்தப் பெண்ணின் அலறல் தன் நினைவுக்குக் கொண்டு வந்தது. அவள் பிரசவ வேதனையால் அவசிப்படுவதை யுணர்ந்த சங்கர் சீதாவின் பக்கந் திரும்பி ‘இன்னும் சில நிமிடங்க ளிற் பிரசவமாகிவிடும், ஒன்றும் பயமில்லை. நீ கொஞ்சம் கவனித்துக்கொள். நான் இரண்டு நிமிடத்திற் திரும்பி விடு கிறேன்" என்று கூறி விட்டு வெளியே சென்று திரும்பும் போது "குவா! குவா!' என்று ஒரு புதிய பிளுசுக் குரல்

சுடர் விளக்கு 79
கேட்டுத் திருத்தியுடன், புன்னகைத்தான். தன் கடமை வெற்றிகரமாக முடிந்ததில் அவ னு க்கு எல்லையில்லாத இன்பம் 'டாக்டர் என்ன இருந்தாலும் நீங்கள் கைராசிக் காரர்தான்" என்று சீதா கூறியபோது அவனுக்கு சொர்க் கத்தில் நின்றதுபோன்ற உணர்ச்சி உண்டாகியது. சில மணி நேரத்திற்கு முன் சுமதியிடம் ஏதோ கேட்கப்போய் அவன் அடைந்த குழப்பம் எல்லாம் எங்கோ மறைந்து விட்டிருந்தன.
தன் கடமை முடிந்து விட்ட திருத்தியில் சீதாவை யும் அழைத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தான் சங்கர் தன் மோட்டாரில், Y
"ஏன் சீதா, இந்தப்பெண் கணவன் பெயர் என்ன வாம் ? பின் சீற்றில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்த சீதாவை இக்கேள்வி திடுக்கிட வைத்தது.
‘எவ்வளவோ முயன்றேன் அறிவதற்கு, அவள் பெய ரைக்கூற மறுத்துவிட்டாள். இரண்டு மாதங்கட்கு முன் தன் கணவன் இறந்து விட்டதாகவும் சொன்னள். உண்மை பொய் யாருக்குத் தெரியப் போகிறது. பணம் ஐந்நூறு ரூபாயளவில் வைத்திருக்கிருள். உலகம் ரொம்பக்கெட்டுக் கிடக்கிறது. அவளைப் பார்க்கும்போது இவள் யாராலோ ஏமாற்றப் பட்டவள் போலத்தோன்றுகிறது. ஒரு வேளை கண்டதுங் காதல், என்று யாராவது நம்பி மோசம்போன வளாகவும் இருக்கலாம். பாவம்! பெண்! அதிலும் அபலை! கஷ்டத்திற்கும துன்பத்திற்கும் கேட்கவாவேண்டும்! எதற் கும் நாளையும் ஒரு முறை சென்று விசாரித்துப் பார்ப்போம்! என்ருள் விரக்தியுடன்.
‘என்ன சீதா ரொம்பவும் அனுபவப் பட்டவள் போலப்பேசுகிருய்! ஆண்களைப் பிரித்துத் தனியாகக் குற்றஞ் சாட்டாவிட்டால் இந்தப் பெண்களுக்கு எப்போதுமே சரிப் பட்டு வராதாக்கும். ஆமாம்! இவள் நிஜமாகவே ஒரு வஞல் வஞ்சிக்சப் பட்டவள் என்றே வைத்துக்கொள்வோம் அப்படியானுல் அவனுடைய பெயரைச் சொல்லலாமே. நாங்களாவது அவனைக் கண்டுபிடித்து ஏற்ற நடவடிக்கை எடுக்கலாம் . அவன் முடிக்க வில்லை, ஒரு வேளை இவள்

Page 43
80 சுடர் விளக்கு
அவனை மனமாரக் காதலித்திருக்கலாம். அதனுற் தனக்கு என்ன கஷ்டம் வந்தபோதும் கணவனைக் காட்டிக் கொடுக் கக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம் இருக்குமல்லவா. தான் விரும்பும் ஒருவன் எத்தனை தான் கயவனுக இருந் தாலும் அவன் இன்பமாக வாழ்வதைக்கண்டு இன்பமடை வதுதானே பெண்ணுள்ளம். "விட்டுக் கொடுக்காமல் பேசி ஞள் சீதா.
ஓ! அழகாகக் காதல் தத்துவம் பேசுகிருயே! உன் பேச்சைப்பார்த்தால் நீ கூட யாரையோ மறை முகமாகக் காதலிக்சிருயோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடிய வில்லை நான் கூறுவதில் உண்மை உண்டா சீதா !’ என்று புன்ன கையுடன் கேட்டுவிட்டு திரும்பிச் சீதாவைப் பார்த்தான் சங்கர். "அடேயப்பா! முகங்கூட என்னமாச் சிவந்து விட் டது! உன் கரத்தைப் பிடிக்கப் போகும் பாக்கியசாலி யார் என்று நான் அறியலாமா." என்று அவன் கேட்க அதற்குப் பதில் இரண்டு சொட்டுக் கண்ணீர்தான் வழிந் தது. அதைக்கண்டு திடுக்கிட்ட சங்கருக்கு ஏன் இதைக் கேட்டோம் என்றிருந்தது.
т
அவனது உள்ளம் வேதனைப்பட்டது . " ஒரு வேளே நான் கேட்டது அவளுக்குப் பிடிக்கவில்லையோ! அல்லது இவளும் யாரையாவது காதலித்து ஏமாந்த பேர்வழியோ! அல்லது என்னைப்போலவே காதலித்தவனின் மனநிலை அறி யாததால் ஏற்பட்ட தவிப்போ..” என்று இல்லாததை எல் லாம் எண்ணி அவன் உள்ளம் நைந்தது.
"சீதா என் பேச்சில் ஏதாவது உன் மனதைக் குழப்பி மிருந்தால் அதற்காக உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். என்னைப்பெரிய மனதுடன் மன்னித்துவிடு' என்று மன்ருட்ட மாகக்கேட்டான் சங்கர்.
தன் கண்ணீரை ஒற்றிக்கொண்ட சீதா வலிந்து ஒரு புன்னகையை வருவித்து "அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர் ! இதற்கெள்தாம் போய் யாராவது மன்னிப் புக்கோருவார்களா? ஏதோ ஒரு துன்ப நினைவு. அவ்வளவு தான்’ என்ருள்.

கடர் விளக்கு 81
‘என்னிடம் உங்கள் சோகக் கதையைக் கூறக்கூடா தென்ருல் வேண்டாம் ஒன்றும் கட்டாயம் அல்ல!" என்று பீடிகையோடு கூறிய சங்கரை இடமறித்து, “டாக்டர் என்னை வேதனைப்படுத்தாதீர்கள்! உங்களிடம் சொல்லக் கூடாத இரகசியம் எதுவுமே என்னிடம் இல்லை. உங்களிடம் என் இதயத்தைத் திறந்து கூறுகிறேன். நான் மனதார ஒருவரை விரும்பினேன் .ஆனல் அவர் மனதைப்பற்றி அறிந்து கொள் ளாமல் நான் அவரிடம் காதல் கொண்டது தவறு. காலப் போக்கில் அவர் உள்ளத்தை அறிந்து என் காதலைத்தெரி விக்கலாம் என்றிருந்தேன். ஆனல் காரியம் மிஞ்சி விட்டது. ஆமாம்! அவர் வேருெருத்திக்கு சொந்தமாகி விட்டார். மணமாகப் போகிறவர் மற்ருெருத்தியின் காதலர் மறந்து விடுகிற மனம். மறக்கத்தான் முயற்சிக்கிறேன். ஆனல் முடியவில்லை. அவருக்காக வாழ் நாளெல்லாம் காத்திருக் கவுந்த:1ாராக இருந்தேன். ஆனல் இனி அந்த இன்ப நினை வுடனேயே வாழ் நாளையெல்லாம் ஒட்டிவிட வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
"டாக்டர்! இன்று உங்களிடந்தான் முதன்முறையாக என் உள்ளத்தைத் திறந்து காட்டியிருக்கிறேன். இதை யாரிட மும் கூறிவிடாதீர்கள். அதுதான் நீங்கள் எனக்குச் செய்யும் உபகாரமாகும்’ இவ்வளவையும் கூறிவிட்டு அவள் விம்மினுள் அந்த விம்மல் 'சோ' என்று திறந்திருந்த சாரளத் தினுரடாக வீசிய வாடைக்காற்றையும் மிஞசிக் கேட்டது.
சங்கருக்கு சீதாவை நினைக்க மிகவும் வேதனையாக இருந்தது. அவளைச் சரியாக அவனுல் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இருந்தும் இந்த நிலையில் ஆறுதல் கூற வேண் டியது தன்னுடைய கடமை என்று நினைத்த அவன "சீதா ! உனக்காக உன் நிலைக்காக நான் ரொம்பவும் அனுதாபப் படுகிறேன்' "நீ சாதலிப்பவரின் பெயரை மட்டும் கூறு. அவரை உனக்கு மனம் செய்து வைப்பது என் பொறுப்பு' என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினன். சீதாவுககு தன் காதுகளையே நம்பமுடியவில்லை 'சங்கருக்கு என்மேல் இத் தனை அன்பா-? நினைத்துப் பார்க்கவே அவள் உடலெங் கும் ஓர் இன்பக் கிளுகிளுப்புப் பரந்தது. "உங்களுக்கு மிக்க நன்றி டாக்டர் நீங்கள் நினைக்கிறபடி நடப்பது சாத்திய மில்லை. ஆகவே அதையிட்டுப் பேசுவது வேதனைக்கு வித் திடுவதாகும். இந்தப் பேச்சை இந்த இடத்திலேயே மறந்து விடுவோம் . " என்ருள் வேதனையோடு.

Page 44
82 சுடர் விளக்கு
அறுபது மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த மோட்டார் எங்காவது மோதி அக்குவேறு ஆணிவேருகப் பிரிந்திருந்தாற்கூட சங்கர் இத்தனை அதிர்ச்சியடைந்திருக்க மாட்டான். சீதாவின் பேச்சு மீண்டும் அவனைக் குழப்பி யது என்னத்தைப் பேசுவதென்றே அவனுக்குப்புரியவில்லை. ஏதாவது பேசவேண்டும் என்ற நினைவில் ‘சரி நான் கேட் டால் நீ கூறமாட்டாய் சுமதியிடம் விஷயத்தைக் கூறி உன் உள்ளத்து இரகசியத்தை அறிந்து விடுகிறேன். ! என்ருன் வேண்டுமென்றே ஒரு புன்சிரிப்பை வருவித்து.
வேண்டாம் டாக்டர் உங்களால் எனக்கு ஏதாவது உதவி கிடைக்க முடியுமானல் தயவுசெய்து நான் கேட்டுக் கொண்டபடி இதை யாரிடமுங் கூறவேண்டாம். உங்களை மண்ருட்டமாக வேண்டுகிறேன்."
சங்கர் அதன் பின் எதுவுமே பேசவில்லை. காரைத் தன் வீட்டு வாயிலிற் கொண்டு நிறுத்தினன். வேறு இரண்டு டாக்டர்களும், நண்பர்கள் சிலருமாகச் சேர்ந்து இருக்கும் அந்த இடத்தில் கார் நின்றதும் சீதா திடுக்கிட்டாள். அவளைப் புரிந்துகொண்ட சங்கர் ‘என்ன சீதா பயப்படு கிருயா இதோ ஒரு நொடியில் வந்துவிடுகிறேன் என்று இறங்கிய அவனை "அண்ணு' என்ற குஞ்சுக்குரல் திடுக்கிட வைத்தது.
‘சங்கர் உன் அம்மா ஒரு மணிநேரமாக உன் வர வைக்காத்துக் கொண்டிருக்கிருள்!" என்று கூறிக்கொண்டே அவனுடைய தாயை அழைத்துக் கொண்டுவந்தான் அவன் நண்பன் வேணு. சங்கருக்குக் குழப்பத்தின் மேல் குழப்ப மாக இருந்தது. தாயின் பக்கந்திரும்பி அவன் பினனல் வாஸந்தி வருவதைப்பார்த்து மேலும் திடுக்கிட்டான்.
காரின் அருகாமையில் வந்துவிட்ட அவர்கள் உள்ளே ஒரு பெண் இருப்பதைக்கண்டு ஆச்சரியப் பட்டார்கள். வாஸந்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒரு குடும்பத்தைக் கெடுக்கக் காரணமாய் இருந்தவள் இவள்தான் என்று நினைக்கும்போதே சங்கரின் தாயார் பார்வதியம்மாளின் மனதில் ஒரு குரோதம் தோன்றியது. அவள் சீதாவைத்தான் தன் மகன் காதலிப்பதாக நினைத்து விட்டாள். பாவம் சீதா! ஒன்றும் அறியாத அபலைப்பெண் ஞகச் சங்கரைப்பார்த்து 'மருள மருள விழித்தாள்.

14. இவள் வேண்டாம்
அவள் போதும்
‘பாம்பு’ என்ற சொல்லுக்கே பயப்படு மொருவன் நிஜமாகவே ஒரு பாம்பைக்கண்டு கதிகலங்கி அதன் தலைப் பக்கம் தன்னை நோக்கி இருப்பதுபோற் கற்பனை செய்து நடுங்கும்போது "திடும்’ என அதன் வாற்பக்கந் தெரிந்தால் எப்படி ஒரு சொட்டு ஆறுதலடைவான அதே நிலையில் தான் இருந்தான் சங்கரும்.
தாயைப்பற்றிய துன்ப் நினைவுகளோடு வந்தவன் அந்த நினைவு மாறி சற்று ஆறுதல் அடைந்து இருக்குபோது சற்றும் எதிர்பாராத வேளையில் இப்படித் திடீர்” என அந்தத்தாயையும் பிரிவுக்குக் காரணமாயிருந்த வாஸந்தி யையும் கண்டதில் ஏற்பட்ட திகைப்பில் செய்வதறியாது நின்றன்.
காருக்குள்ளிருந்த சீதாவை அவர்கள் பா ர்த்த பார்வையும் அவள் ஒன்றும் புரியாமல் தன்னைப் பார்த்து மிரள மிரள விழித்ததையும் நினைத்தபோது அவனுக்கு ஒன்று புலணுகியது. தன்னுடைய தாய் சீதாவைத்தான் தான் காதலிப்பதாக நினைக்கிருள் என்று புரிந்ததும் அவ னுக்கு ஒரு நிம்மதி ஏற்பட்டது. நல்லகாலம் சுமதியில்லா மற் போனுள். அல்லது முதற் சந்திப்பே வெறுப்பு நிறைந்த தாக இருந்திருக்குமென்று அவன் மனம் ஆறுதலடைந்தது.
‘என்ன சீதா விழிக்கிருய்? இது என் அம்மா ! அது வாஸந்தி உறவுப்பெண் மற்றவள் என் தங்கை வனஜா பொல்லாத சுட்டி! என்று அறிமுகப்படுத்தியவன் அதே சம யம் தன் தாயாரின் பக்கந்திரும்பி, 'இது டாக்டர் சீதா! திருகோணமலை நர்ஸிங்ஹோமில் கடமையாற்றுபவள். எனக்கு மிகவும் வேண்டியவள்’ என்று கூறிவிட்டு ஒரு வெற்றிப்புன்னகையுடன் வாஸந்தியை நாக்கினன்.
சீதாவுக்கு அந்த அறிமுகம் பரம திருப்தியாக இருந் திருக்க வேண்டும். அதன் சாயல் அவள் அதரங்களிற் புன் னகையாக விளைந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் தன் கரங்குவிந்தது. "வணக்கம் அம்மா! நீங்கள் என் வீட்டிலேயே தங்கலாம். இங்கு டாக்டர் தமது நண்பர்களோடு இருப்ப

Page 45
84 சுடர் விளக்கு
தால் உங்களுக்கு வசதிக்குறைவாக இருக்கும்’ என்று கூறி விட்டு பார்வதியம்மாளையே ஆதங்கத்துடன் பார்த்து நின் ருள்.
தன் மகனுடைய அன்பைப்பறித்துக் கொண்ட பெண்
என்ற கற்பனையில் பார்வதியம்மாளின் மனதில் உருவாகிய சீதாவை அவளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆகவே அவள் சீதா பக்கந்திரும்பி "வேண்டாம் நாங்கள் இங்கேயே தங்கிவிடுவோம்! இங்கு வசதிக்குறைவாக இருந்தால் ஹோட்டல் இருக்கவேயிருக்கு.உனக்கு எதற்கம்மா வீண் சிரமம். ! என்று பட்டும் படாமலும கூறிவைத்தாள்.
"ஆமாம் ஹோட்டலுக்கே போய் விடலாம் ! என் ருள் அவளை முந்திக்கொண்ட வாஸந்தி, வாஸந்திக்கு சீதா வை சங்கருடன் மிகவும் நெருக்கத்திற் கண்டபோது ஏற் பட்ட வெறுப்பு சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டே போயிற்று.
எதிர்பாராத நிலையில் எழுந்த சந்தர்ப்பங்களை தனக் குச்சாதகமாகக் கொண்ட சங்கர் "ஆமாம் சீதா! உனக்கு எதற்கு வீண் சிரமம் ? டாக்டர் சுமதி வீடு இருக்கவே இருக்கு. தனியாக இருக்கும் அவளுக்கும் பொழுது போக் காக இருக்கும். அம்மா அவர்களுக்கு ஆட்சேபனையில்லை யென் ருழல் அங்கேயே. அங்கேயே அவன் முடிக்கவில்லை, ‘சரி அங்கேயே போகலாம்!’ என்ருள் பார வதியம்மாள். அவளுக்கு சீதாவைப்பிடிக்க வில்லை. தன் மகனைத் தன்னிட மிருந்து அபகரித்துக் கொண்டவள் என்ற அர்த்தமற்ற எண்ணம் எப்படியாவது சீதாவிடமிருந்து தப்பினுற் போது மென்ற எண்ணத்தை வலுப்படுத்தி விட்டது. ஆகவேதான் அவள் அப்படியான பதிலைக் கூறிவைத்தாள்.
சங்கருக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. சீதாவை அவன் தன் மனதுக்குள் வாழ்த்திக்கொண்டான். சுமதியைத் தான் காதலிப்பதாக அறிந்திருந்தால் தன் தாயார் இப்படியான ஒரு பதிலைக் கூறியிப்பாளா என்று நினைத்துப்பார்த்த போது அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது தன் தாயார் திரும்பும் வரையும் எப்படியாவது அவளை ஏமாற்றிச் சீதாவைத்தான் தான் காதலிப்பதக ரா நடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழப்பதிந்து விட்டது. தன் தாயாரைக் கண்டபோது ஏற்பட்ட கவலை, திகைப்பு, பயம், ஏமாற்றம் எல்லாமே ஒரு நொடியிற் பறந்து விட்டன.

சுடர் விளக்கு 85
*அம்மா கூறியதைத் தவருக எடுத்துக்கொள்ளாதே சீதா ! உனக்கும் வீட்டில் பெற்ருர் சகோதரர்கள் இருக்கி ருர்கள். எதற்காக வீண் சிரமம். சுமதி வீடு அம்மா அவர் களுக்கு ரொம்பவும் வசதியாக இருக்கும். அங்கேயே தங்கி விடலாம்’ என்று கூறிவிட்டு அவள் பதிலைக் காத்திராமலே காரை ஸ்டார்ட் செய்தான். அவன் மனுேவேகத்தைவிடக் கனவேகமாகச் சென்ற கார் ஐந்தே நிமிடங்களிற் சுமதி யின் வீட்டு வாயிலில் “கிறிச் சிட்டு நின்றது.
சங்கர் திரும்பி வந்தால் அவனுக்கு என்ன பதில் கூறலாம் என்ற சிந்தனையிற் தேங்கித்திளைத்திருந்த சுமதி *கார்’ சத்தங்கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தாள். சங்கரைத் தனிய க எதிர்பார்த்த அவள் அவனைச் சூழ்ந்து ஒரு பள் டாளமே வருவதைக்கண்டு திகைத்து நின்ருள். அவன் திகைப்பு நீங்குமுன்பே அங்கு வந்து சேர்ந்த சங்கர் தன் தாயாரை அவளுக்கு அறிமுகஞ் செய்து வைத்து அவர்கள் அங்கு தங்கப்போகும் விஷயத்தையுங் கூறி வைத்தான்.
'தம்பியின் பங்களாவுக்குச் சென்ருேம் அங்கு தங்க வசதியில்லையென்று இங்கேயே கூட்டிவந்து விட்டான் " அது வாஸந்தி. சங்கரின் அத்தை மகள். அவனுடைய முறைப்பெண். மற்றது என் கடைக்குட்டிப் பெண் வனஜா” என்று பட்டும் படாமலும் வாஸந்தியை அறிமுகஞ்செய்து வைத்தாள் பார்வதியம்மாள் சீதாவின் உள்ளத்தில் அது உறைக்க வேண்டுமென்றே நினைத்துக்கூறினள். ஆனல் அது சுய தியின் இதயத்திற் சவுக்கடியாக விழுந்ததை அவள் எண்ண உணரவா போகிருள்!
சங்கர் தன் தாயாரை அறிமுகப்படுத்தியபோது ஏற் பட்ட இன்பப் பரபரப்பு அவன் தாயாரின் பேச்சைக்கேட் டதும் அடங்கித் துன்பப் பழுவாக மாறியது அவளாற் சி ந் தித்து ச் செ ய ல |ா ற் ற முடியவில்லை. சில மணி நேரத்திற்கு முன் சங்கரிடம் தன்னை மறந்துவிட வேண்டும் என்று கூற நினைத்தவள் தற்போது அவன் வேருெருத்திக் குச் சொந்தமாகப் போகிருன் என்பதைக்கேட்கவே வேதனை யுற்ருள். சங்கரை அவள் யாருக்கும் கொடுக்கத்தயாராக வில்லை என்பதை இந்த வேளையில் அவள் நிச்சயமாகப் புரிந்து கொண்டாள்.

Page 46
86 சுடர் விளக்கு
“என்ன சுமதி வா போய் வேண்டியதைக் கவனிக்க லாம் என்ற சீதாவின் குரல் கேட்ட பின்தான் சுமதி தன்
நினைவு பெற்றவளாய் வந்தவர்களை உபசரிக்கத்தொடங்கி
அன்று அவள் வீட்டு விருந்தினர்களுக்கு ராஜோப சாரம் நடந்தது. சீதாவும் சுமதியுடன் சேர்ந்து அவர்களை உபசரிப்பதில் ஈடுபட்டாள். சமையற்காரி தங்கம் காட்டிய கைவரிசையில் அங்குள்ளவர்களின் நாவில் ஜலம் ஊறியது. மணி எட்டடித்ததும் 'சுமதி நான் வரட்டுமா ?” என்று கேழ்விக்குறியுடன் தன் சிநேகிதியைப் பார்த்தாள் சீதா. 'இது என்ன குறும்பு சீதா..? நீ இல்லாமலா இன்யைய விருந்து..? அம்மையார் அவர்கள் இனி நாளைக்காலையிற் தான் வீடு செல்லலாமா க்கும்!’ என்று இயற்கையான நச்ைகசுவையுடன் கூறினுள் சுமதி.
‘என்னை மட்டும் அம்மா தேடமாட்டாளாக்கும் ! நீ ஒரு நிமிடம் பிந்தி விட்டாற் தங்கம் துடித்து விடுவாள் என்று உயிரையே விடுவாய்! மற்றவர்களைப்பற்றி நீ சிந்திப் பதேயில்லை" என்று செல்லமாகச் சிணுங்கினள் சீதா.
*அப்பப்பா கோபத்தைப்பாரே என்மீது ஏதாவது குற்றஞ் சாட்டா விட்டால் உனக்குத் திருப்தியே இருக் காது. சரி உன் அம்மா தேடுவாள் என்றுதானே பயப்படு கிருய்! அம்மாவுக்கு அறிவிப்பது என் பொறுப்பாக்கும்! இப்போ சம்மதந்தானே ? அவள் முடிக்க வில்லை "உங்கள் பேச்செல்லாம் முடியு மன் எனக்குப்பசியே போய்விடுமா ச் கும் ! பேச்சுக்குப் பெண்களிடம் பிச்சைதான் வாங்க வேண்டும். சரி வாருங்கள் முதலிற் சாப்பிடலாம் !’ சங் கர் வீட்டுச் சொந்தக்காரனைப்போற் துரிதப்படுத்தினுன்
சுமதிக்கு இப்போ பெருமை பிடிபட வில்லை. சங்கர் தன் வீட்டில் அவன் தயாரி ைஎதிரிலே காட்டும் உரி மையை நினைக்க அவளுக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. பொங்கி வந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாமல், அம்மா எழும்புங்கள், ம் வாஸந்தி வனஜா.சீதா ஏன் இருக்கி ருய் அவர்களையும் அழைத்துக்கொண்டு வா சாப்பிடலாம் என்று கூறிக்கொண்டே நடந்தாள் சுமதி. அழகாக அலங் கரிக்கப்பட்டிருந்த ஹாலில் புத்தம் புதிய 'பொக்ஸ்ஸிபிறிங்’

சுடர் விளக்கு 87
தளபாடங்கள் சிறந்த முறையில் ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தன. அந்தச் சுவரின் நிறத்துடன் ஒத்துழைத்த இளம் பச்சை வர்ண “நைலெக்ஸ்’ துணிக்கதவுகளையும் ஜன்னல் களையும் அலங்கரித்தது. அந்த ஹாலில் ஒரு மூலையில் சாந் தமே உருவான மகாத்மாஜியின் அழகான சிலையொன்றும் மறு மூலையில் அன்றலர்ந்த ரோஜா மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட ஒரு நடுத்தர வயதுள்ள அம்மாளின் பட மொன்று பெரிதாகச் சட்டமிட்டு அழகாக வைக்கப்பட்டி ருந்தது. அதன் அடித்தளத்தில் இருந்த சந்தனக்குச்சியின் நறுமணம் வீட்டையே தெய்வ சந்நிதானம் போல் ஆக் கிக்கொண்டிருந்தது.
அந்த அம்மாளின் படத்தையே சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பார்வதியம்மாள் இங்கே வாம்மா இது யார்! நீ எனக்கு ஒன்றையும் காட்டவில்லையே என்ற குரல் கேட்டு அங்கு வந்த சுமதி இதுதான் என தெய்வம் என்னைப்பத்து மாதஞசுமந்து பாடு பட்டுப் பெற்றெடுத்த தெய்வம்' என்றுகூறி அதைத்தொட்டுத்தன் கண்ணில் ஒற் றிக்கொண்டர்ள்
அவளுடைய கண்களில் துளித்த நீரையும் அதற்காய காரணத்தையும் நன்முகப்புரிந்து கொண்ட சங்கர் அந்தப் பேச்சையே மாற்ற விரும்பி 'சுமதி சாப்பிடலாமா..?’ என்று வேண்டுமென்றே கேட்டுவைத்தான்.
அவன் விஞவைத்தொடர்ந்து சுமதி முன் செல்லப் பின் சென்றனர் மற்றவர்கள் அழகாக ஒழுங்கு செய்யப் பட்டிருந்த சாப்பாட்டறையில் அறுசுவை உண்டிகளையும் தாங்கிக்கொண்டு இவர்கள் வருகைக்காகக் காத்துக்கிடந் தன மேசையும் நாற்காலிகளும். எல்லோரும் சாப்பாட்ட றையை அடைந்தனர். சுமதி ஏதோ எடுப்பதற்காக உள்ளே சென்றவேளை மற்றவர்களை உட்கார வைத்தாள் தங்கம். சங்கர் மட்டும் உட்கா ராமல் சுவரில் மாட்டப் பட்டிருந்த படங்களைப்பார்த்த படியே நின்றன்.
இரண்டு கதிரைகள் இணைந்தபடி வெறுமையாக இருக்க மற்றவற்றில் வந்தவர்கள் உட்கார்ந்திருந்தனர். 'ஏன் தங்கம் டாக்டர் ஐயாவுக்கு இடமில்லையாக்கும் ? என்று கேட்டு விட்டுச் சங்கரைப் பொய்க் கோபத்துடன்

Page 47
88 சுடர் விளக்கு
பார்த்தாள் சுமதி. 'வீட்டுக்கார அம்மாள் உட்காராமல் நான் எப்படி உட்காருவதாம்.!’ சங்கரும் களைக்கா மற் பதிலளித்தான், ‘விருந்தினர் முதலில் அமர்ந்து கொள்வது தான் உலக வழக்கம். சுமதியும் விடாமற் பதிலளித்தாள்,
வாஸந்திக்கு இவர்களுடைய கொஞ்சற் பேச்சு ஆத் திரத்தை உண்டாக்கியது. இதுவரை சீதாவின்மேல் இருந்த அவள் கோபலெல்லாம் இப்போ சுமதியின்மேற் திரும்பியது அதனுல் அவள் மேல் வெறுப்புணர்ச்சியே மேலிட்டது.
பார்வதியம்மாளுக்கும் அவர்கள் பேச்சும், கொஞ்ச லும் பிடிக்கவில்லை என்பதை அவள் முகபாவனை காட்டிக் கொடுத்தது. அவள் முகத்தை வேண்டா வெறுப்புடன் சுளித்துக்கொண்டாள். சீதாவோ இதற்லெல்லாம் அப்பாற் பட்ட ஒர் உலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள்.
ஏதோ பேசுவதற்கென்று பார்வதியம்மாள் பக்கம் திரும்பிய சுமதி திடுக்கிட்டாள். தான் இப்படி அப்பட்ட மாகப்பழகுவதை அவள் வெறுக்கிருள் என்பதை முகக்குறிப் பால் உணர்ந்து கொண்டு சங்கர் பக்கம் திரும்பி " உங்க ளுக்காக எல்லாரும் உண்ணுமற் காத்திருக்கிருtrகள் சீக்கிரம் உட்கார்ந்து கொள்ளுங்கள்’ என்று அன் புக் கட்ட ளை யிட்டாள்.
பார்வதியம்மாளுக்கு எதிர்புறமிருந்த நாற்காலியில் சங்கர் உடகார்ந்ததும் அதற்கடுத்த இரண்டு நாற்காலிச ளும் வெற்ருக இருக்க நான்காவது நாற்காலியில் உட் கார்ந்து கொண்டாள் சுமதி. சங்கர் சாட்டையடி பட்ட வன்போல் மனம் வருந்தினன். சுமதியை முறைத்துப் பார்த்தபடியே சாதம் எடுப்ததற்காகக் கரண்டியிற் கை வைத்தான். அதே சமயம் அவனை முந்திக்கொண்ட வளைக் கரம் ஒன்று அவன் கரத்தோடு உராசிக்கொள்ளத் திடுக் கிட்டு நிமிர்ந்தான். அங்கே அவனைக் கேள்விக்குறியோடு பார்த்து நின்றது ஜோடி மான் விழி.

15 அத்தான் இட்ட
தயிர்க் கட்டி!
அந்த அறையில் அழகாகப் பொருத்தப் பட்டிருந்த ‘ரியூப்’ வெளிச்சத்தில் பிரகாசித்த பொன் வளையல்களுடன் கூடிய கரம் கரண்டியைப் பிடித்தபடியே இருக்கத் தன்னையே அனல் தெறிக்கப் பார்த்து நின்ற அந்த ஒடி ஜோடி விழியை அவனும் சாந்தக் கண்களுடன் உற்றுப்பார்த்தான் அப்போது தான் அவனுக்கு ஒரு உண்மை புலணுகியது. ஆமாம் அவன் தட்சணுமூர்த்தி உபாத்தியாயரிடம் இலக்கியப்பாடம் படித்தபோது; மதுரையைத் தன் கோபக் கண்களால் தீக் கிரையாக்கிய கண்ணகியைப் பற்றி அவன் அறிந்திருந்தான் அப்போதெல்லாம் அவனுக்கு அதிற் துளிகூட நம்பிக்கை பிறக்க வில்லை. ஆனல் இன்று இந்தக்காட்சியைத் தற்ரூப் மாகப் பார்த்த பின்பு அவனுக்கு அன்றைய இலக்கியப் பாடத்திற் படித்த கண்ணகியின் பேரில் மேலும் ஒரு நம் பிக்கை, விசுவாசம், பக்தி எல்லாமே ஒருமித்துப் பிறந்து விட்டன. அவனுக்கு ஒரு புறம் பயமும் மறுபுறம் சிரிப்பும் மாறி மாறி வந்தன. இருந்தும் அங்கே நிலவிய அமைதி யான சூழ் நிலையைப் போக்குவதற்காக ‘என்ன வாஸந்தி ரொம்பப் பசியாக்கும் ம் நான் பரிமாறட்டுமா..? என்று வேண்டுமென்றே கேட்டு வைத்தான் ,
வாஸந்தியினுல் ஒரு கணம் தன் காதுகளையே நம்ப, முடியவில்லை. சங்கர் எப்படி என்னுடன் பேசத்துணிந் தார் ? மற்றவர்கள் முன்னிலையில் தான் நல்லவர் என்று நிரூபிக்கவே அவர் இப்படியொரு கபட நாடகம் ஆடியிருக் கிருர் என்று எண்ணியபோது அவளுக்கு ஆத்திரம் பீறிட் டது. அதனல் அறிவு பின்வாங்கியது. "எனக்குக் கடவுள் கொடுத்த கரங்கள் உள்ளன. நீங்கள் உங்களைப்பார்த்துக் கொண்டாற்போதும்" என்ருள் வெடுக்கென்று எப்படித் தான் இத்தனை துணிவு பிறந்ததோ! நினைத்துப் பார்க்கவே அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன் மனப்பல வீனத்தை இப்படிப் பிறர் முன்னிலையில் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்த சங்கரை நினைக்க நினைக்க அவ ளுக்குக் கோபமாக இருந்தது. ஆயினும் கண்கள் மட்டும் அவளை ஏமாற்றி விட்டு அவனை அடிக்கடி பார்த்துக் கொண்டன.

Page 48
90 சுடர் விளக்கு
கைவிரல்கள் ஐந்தும் சாதத்தைக் குழப்பிக்கொண்டி ருக்க அவள் மனம் சிந்திக்கத்தொடங்கியது. அவளுடைய போக்கு அவளுக்கே புரியாத ஒரு புதிராக இருந்தது. சங்கரை அவள் இதற்குமுன் ஒரு முறைதான் பார்த்திருக் கிருள். சிறு வயதில் அவன் சிறுவனக இருந்த போது புகைப்படத்திற் கண்ட ஞாபகம். அதுகூட அவனுடைய தாயார் இலங்கையில் இருந்த தன் தூரத்து உறவினரொ ருவருக்கு எழுதிப்பெற்றுக்கொண்டதுதான். முதற்சந்திப்பே கசப்பாக முடிந்து விட்டது. சங்கர் அவளை ஒரு துளிகூட விரும்ப வில்லை என்பதை அவள் உணரத்தான் செய்தாள். ஆனல் அப்போது அது ஒரு பொருட்டாக அவளுக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி அவள் கவலைகூடப் படவில்லை அவனுக்கு வேண்டிய சகல காரியங்களையும் அவனையறியா மற் தானகவே செய்வதில் அவள் மகிழ்வெய்தினுள். அவன் விரும்பிய பெண் யாராக இருந்தாலும் அவளை மணந்து சுகமாக வாழட்டும். என்று மனதார வாழ்த்தினுள்.
ஆனல்-இன்று அவளுக்கு என்ன வந்து விட்டதாம்? அன்று ஏற்படாத டாசம், பந்தம், பரிவு இன்று ஏற்பட்டு விட்டதா?-இல்லை இதை அவள் நன்ருகப் புரிந்து கொண் டாள். ஆயின் இன்று இந்தக் கலக்கத்திற்குக் காரணம். ! அதுதான் - பொருமை - அவள் அதைத் திட்டவட்டமாக அறிந்தாள். எந்தப்பெண்ணுக்காக அவன் அவளை ஒதுக்கி வைத்தானே அந்தப்பெண்ணுடன் சேர்ந்து அவன் உண வருந்துவதையும், அவளோடு கொஞ்சிக் கொஞ்சிப்பேசு வதையும் பார்த்துக் கொண்டு வேறு எந்தப் பெண்தான் அவள் நிலையில் மெளனமாக இருக்க முடியும்? தனது மனப் போக்கைத் தானே அலசி ஆராயும் போது அவளுக்கே வெட்கமாயிருந்தது. இதுவரை அவளைப் பொறுமையின் சொரூபமென்று போற்றிவந்த அத்தைதான் அவளை எத் தனை மட்டமாக எடை போட்டாளோ..! அவளுக்கு இத யத்தில் துக்கம் அழுகையாய்ப் பீறிட முயற்சித்தது எப்ப டியோ அடக்கிக்கொண்டாள்.
இப்போது அவள் கோபமெல்லாம் மீண்டும் சீதா வின் பக்கந்திரும்பின. இந்தப் பெண்ணுற்தான் இத்தனை வினையும் என்று உள்ளம கர்விக்கொண்டது. அதே சமயம் அவளுக்கு ஒரு சந்தேகமும் எழத்தான் செய்தது. சுமதி யுடன் சங்கர் பழகிய விதத்தை ஊண்றிக் கவனித்தபோது

சுடர் விளக்கு 91.
அவளுக்கு அந்த இரு பெண்கள் மேலுமே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. இருவரில் எவரைச் சங்கர் காதலிக்கிருன் என்ற உண்மையை அறிய வேண்டும் என்று உள்ளம் துடிக் கப்பொறுமையை வலிந்து துணைக்கொண்டாள் அவள்,
‘என்ன வாஸந்தி பசியில்லை .? ஒரு வேளை எங்கள் கறிவகைகள் பிடிக்கவில்லையோ ? அவளின் மன நிலையை ஒரளவுக்குப் புரிந்தகொண்ட சீதா பரிவோடு கேட்டாள்.
"ஊஹ" என் மனந்தான் சரியில்லை. 'டக்"கென்று அவளையுமறியாமல் பதில் வந்தது. தான் வலிந்து துணைக் கழைத்துக்கொண்ட பொறுமை தன்னை விட்டு வெகுதூரம் பிரிந்து செல்வதை அப்போதுதான் உணர்ந்தாள். வாஸந்தி
‘ஓ! நீங்கள் நிச்சயம் கவனமாக இருக்கவேண்டும். வாஸந்தி; ஏன் தெரியுமா ? எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டு விட்டார்கள். ஆனல் இந்த மனவருத்தத் திற்கு மட்டும் இன்னும் மருந்து கண்டு பிடிக்க வில்லை. அதனுற்ருன் இது ஓர் எச்சரிக்கை 1 என்று குறும்புடன் கூறிவிட்டு ‘களுக் கென்று சிரித்தாள் சுமதி.
இதுவரை வாஸந்தியின் இதயத்திற் குள்ளேயே புகைந்து கொண்டிருந்த பொருமைத் தீ இப்போது சுமதி யின் பேச்சைக்கேட்டதும் பெற்ருேல் ஊற்றிப் பற்றவைத்த தீ போல ஜுவாலை விட்டுப்பற்றத்தொடங்கியது,
‘ஓ! தாங்களும் ஒரு டாக்டர் என்பதை ஞாபகப் படுத்துகிறீர்களாக்கும். இருந்தாலும் டாக்டர் சுமதி, உங் களுக்கு ஒன்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அப்படித் எனக்கு மனநோய் மட்டுமல்ல வேறு எந்தநோய் வந்தா லும் ஒரு டாக்டராக இருப்பதால் உங்களுக்கு எந்தவித மான சிரமமும் வைக்கமாட்டேன். என்பதை நீங்கள் உணர்ந்தாற்போதும்" என்று சறறுக் காரசாரமாகவே பேசி விட்டாள்.
பேச்சின் தொனி அசுவாரஸ்யமாகத் திரும்புவதை உணர்ந்த சங்கர் பேச்சின் திசையை வேறு முனையிற் திருப்ப நினைத்து பக்கத்திலிருந்த கட்டித்தயிரை எடுத்து வாஸ்த்தி யின் உணவுத் தட்டிற் போட்டு “வாஸந்திக்கு தயிரென்ருல்

Page 49
92 சுடர் விளக்கு
உயிராமே; எங்கே நீ சமத்தோ இல்லையோ இவ்வளவையும் ஒரு கை பார்த்துவிடு பார்க்கலாம்' என்று கூறி வலிந்து அவளைப்பார்த்து புன்னகைத்தான். "ஆமாம்! அண்ணி! நீங்க நிறையச்சாப்பிட்டாத்தான் அண்ணுவுக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். ம்! சீக்கரம் சாப்பிடுங்களேன்!’ என்று கூறி வைத் தாள் அவனுடன் சேர்ந்துகொண்ட வனஜா,
சுமதிக்கோ வாஸந்தியின் வார்த்தைகள் ஒவ்வொன் றும் சவுக்கடிபோல சுரீர் என்று உறைத்தன. அவள் தன் னையே நொந்துகொண்டாள். வேறு ஒருவருக்குச் சொந்த மாகவேண்டிய ஒரு பொருளை தான் அபகரித்துக்கொள்ள முனைவதுபோன்ற குற்ற உணர்ச்சி அவளைக்குத்தியது. சங்கர் வ1 ஸந்திக்கே உரிமையாக வேண்டியவன் என்பதை உணர்ந் திருந்தா ள் இ ல் லை பார்வதியம்மாளே உணர்த்திவிட் டாளே. அப்படியிருந்தும் சங்கர் தனக்கு உரிமையாக முடி யாதபடி பல தடைகள் உள்ளன என்பதை உணர்ந்த பின் 11 ம் அவள்மனம் எதற்காகச் சங்கருக்காக அடித்துக்கொள்ள வேண்டும். வாஸந்தி சிறு பெண்ணுக இருந்தும் எவ்வளவு கச்சிதமாகத் தனக்கு சங்கர் மேல் உள்ள உரிமையைத் தெளிவாகக் காட்டி விட்டாள். இனிமேலும் சங்கரிடம் நான் அன்பையும் உரிமையையும் எதிர்பார்ப்பது தவறு என்று அவள் உள்ளம் கூறியது.
சீதா வோ இவை எதைப்பற்றியுமே கவலைப்படாமல் நிச்சிந்தையாக அங்கே நடந்து கொண்டிருந்த வாக்குவா தற்திற்குக் காதைக் கொடுத்து இடையிடையே சங்கரை யும் பார்த்த வண்ணம் உணவருந்துவதில் ஈடுபட்டிருந்தாள் ஆணுல் அவளுடைய உள்ளரங்கில் மட்டும் ஒரு பிரச்னை துளிர் விட்டுக்கொண்டேயிருந்தது வாஸந்திக்கும் சுமதிக் கும் எழுந்தவாக்கு வாதம் பற்றிய பிரச்னைதான் அது. அந்த வாக்குவாதம் ஒரு வேளை தனக்குச்சாதகமாக அமை யலாம் என்று கனவு கண்டாள் அந்தப்பேதைப் பெண் .
பார்வதியம்மாளுக்கோ அங்கு அமர்ந்திருப்பது மிக
சிரமமாசி இருந்தது. இப்படியான ஒரு சூழ்நிலை அவ் ட்டில் உருவாகும் எனறு அவள் எதிர்பார்க்கவேயில்லை வயதின் அநுபவம் கூட அவளுக்கு உண்மை நிலையைப் புரி. வைக்க மறுத்தது. சங்கர் யாரைக் காதலிக்கிருன் என்ப தைப் புரிந்துகொள்வதே அவளுக்குத் தர்ம சங்கடமாகிய

சுடர் விளக்கு 93
விட்டது. சங்கரின் புத்திக் கூர்மையையும் சந்தர்ப்பத்திற்கு ஏற்க நடக்கும் சாதுரியத்தையும் அவள் நன்கு அறிவாள். ஆகவே சங்கர் எந்தப் பெண்னைக் க்ாதலிக்கிருன் என்பது இன்னும் அவளுக்கு மர்மமாகவே இருந்தது, ஒருவேளை இர ண்டு பெண்களையுமே காதலிக்கிருணுே என்ற அபூர்வ எண் ணங்கூட எழுந்தது. ஆரம்பத்தில் அவன் சீதாவோடு பேசிக் கொண்ட விதத்திலும் தற்போது அவன் சுமதியுடன் பழ கும் விதத்திலும் ஒரு சிறு வித்தியாசங் கூடத்தெரியவில்லை.
இந்த நிலையை நீடிக்கவிட்டு சங்கரின் உண்மைக்காதலி யார் என்று அறியத்துடித்த அவள் இடையில் வாஸந்திஅவச ரப் பட்டு எல்லாவற்றையுமே குழப்பிவிட்டாளே என்று மனம்நொந்து கொண்டாள். வாஸந்தியை அவசரப்படாமல் அமைதியாக இருக்கும்படி இரகசியமாகப் புத்தி கூறலாம் என்று நினைத்தாள். ஆனல் வாஸந்தியை அவள் அவதானித்த தில் அவள் ஓர் அவசர புத்திக்காரி என்பதை உணர்ந்தாள். ஆகவேதான் நன்மையாக கூறப்போக ஒருவேளை தான் மக னுக்காகப் பரிந்து பேசுவதாக அந்தப் பேதைப் பெண் நினை த்துவிட்டால் , 1 ஆகவே எது எப்படி நடக்கவேண்டுமோ அப்படியே நடந்து முடியட்டும் என்று விதியின்மேற்பாரத் தைப் போட்டுவிட்டு மெளனத்தை அனுஷ்டித்தாள் அவள்.
அப்போதைய நிலையில் வாஸந்திதான் சிறிது உற்சா கமாய் இருந்தாள் என்றுகூறவேண்டும். அவனுடைய வார்த் தைகளுக்காக 'வாஸந்தி’என்று ஒருமுறை கூப்பிடமாட்டரா என்று அவள் தவித்த தவிப்பு அவளுக்குத் தெரியும். இப் போது காலத்தினல் அந்தநிலைமாறி அவனே அவளை அழைத்து விட்டானே ? அது மட்டுமா தனக்குப்பிடித்த மான் உணவு தயிர் என்று அறிந்து அதை அவளுக்கு அள்ளி அள்ளிப் போட்டானே! அதை நினைக்க நினைக்க அவள் உள்ளம் புளகாங்கித மடைந்தது. சுமதிக்குப்பிடித்தமான உணவு தயிர் என்பதை அறிந்திருந்ததால் வேண்டுமென்றே மறைமுகமாக வாஸந்தியிடம் தயிர் வேண்டுமா என்று கேட்டு விட்டு சுமதிக்குப்போடுவதாகக் கற்பனை செய்து வேண்டா வெறுப்புடன் அதை வாஸந்தியின் தட்டில் கொட் டினன் சங்கர் என்பதைப் பாவம் அந்தப்பேதைப் பெண் உணர்ந்தாளா என்ன?
வாஸந்தியின் உள்ளத்தில் பலநாள் ஏற்படாத நிம் மதி இன்று ஏற்பட்டது. வனஜா சின்னஞ்சிறு ஜீவனுக

Page 50
94 சுடர் விளக்கு
இருந்தாலும் தனக்காகப் பேச தன் நிலைக்காக அனுதாபப் பட ஒரு துணை கிடைத்ததே என்பதை நினைக்க நினைக்க அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை. மனிதனுக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் உணவு செல்லாது; அதிகம் துக் கம் வந்தாலும் உணவு செல்லாது என்பதை வாஸந்தி அறிந்திருந்தாள். ஆனல் அதை இன்றுதான் அனுபவித்தாள்.
சங்கர் உண்மையிலேயே ஐந்தாறு கரண்டித் தயிரை அவள் தட்டிற் கொட்டி விட்டான். என்னதான - எத்தனை தான் பிடித்தாலும் எதற்கும் ஒரு அளவுண்டல்லவா ..? வாஸந்திக்கும் தயிர் அதிகமாய்த்தான் விட்டது, ஆனல் அதை வீணுக்க அவள் விரும்ப வில்லை. அது அவள் சிறுவய தில் இருந்தே பழகிய பழக்கம். ஆனல் இன்று இருக்கும் நிலையில் அவள் அந்தப் பழக்கத்துக்குக்கூட அதிக மதிப்புக் கொடுத்திருக்க மாட்டாள். ஆனல் அதைத் தன் தட்டிற் போட்ட கரத்துக்கு உரியவரை அவள் அவமதிக்க விரும்ப வில்லை. இனிமையான தயிர் உள்ளே செல்லச் செல்ல சங் கரின் நினைவும் அவளுக்கு இனித்தது. தன் அங்கத்தின் ஒவ்வொரு அணுவும் அவனுக்காகத் துடிப்பதை உணர்ந்த அவள் எதிரே இருந்த சங்கரையே உற்றுப் பார்த்தாள், அங்கே மற்றவர்கள் சாப்பிட்டு விட்டுத் தனக்காகக் காத் திருப்பதை உணர்ந்து அவசரமாகக் கையை உதறிவிட்டுத் தானும் எழுந்தாள்.
 

16 கைவளை தந்த
இரத்தக் கறை
மனிதனுக்கு எந்தவிதத் துன்பமாக இருந்தாலும் அது இரவு வேளையில் ஏற்பட்டால் அதிலுங்கூட ஒரு நிம் மதிதான். நித்திரா தேவியின் அரவணைப்பில் துன்பத்தின் பழுக்கூட அயிழ்திவிடுகிறது. நித்திரா தேவி அரவணைக்க மறுத்தாற்கூடத் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்ணீரின் வேகத்தில் துன்பத்தையும் ஓரளவு குறைத்து விடலாம். V
அன்று இரவு சுமதியின் வீட்டிலும் மூன்று ஜீவன் கள் நித்திரையின்றித் தவித்தன. இருந்தும் அவர்கள் நிலை மற்றவர் புரியாத வண்ணம் இருளிலே கவிந்து கொண்டது. ஒருவரையொருவர் அறியாத நிலையில் ஒவ்வொருவரும் துன்பத்தின் பிடியிற் சிந்தனையென்னும் கயிற்ருல் பிண்ைக் கப்பட்டுத் தவித்துக்கொண்டிருந்தனர். இதில் விசித்திர மென்ன வென்ருல் யார் உண்மையாக விழித்துத் துன்பப் படவேண்டுமோ அவள் நிம்மதியாகத் துரங்கிக்கொண்டிருந் தாள். அந்த அதிர்ஷ்டசாலி வேறுயாருமல்ல. சுமதியேதான்!
அவளுக்கு எப்போதுமே துணிச்சல் அதிகந்தான். அதுவும் இப்படி ஏதாவது எக்கசக்கமாக நடந்து விடும் சமயங்களில் அவள் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடை யாது. நடப்பது நடந்தே தீரும் என்ற அசட்டு மனுேபா வமோ அல்லது கவலைப்பட்டு ஏன் வீணுக உடலையும் அலட் டிக்கொள்ள வேண்டும் என்ற தாராள மனப்பான்மையோ அவளை அப்படியாக்கி விட்டிருந்தது.
வாஸந்திக்குக் கண் மூடவே முடிய வில்லை. மூடியி ருக்கும் விழித்திரையில் அன்றைய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்முக வந்து மோதுண்டதால் இமைகள் தாமாகவே திறந்து கொண்டன. நினைவுசஞக்கு ஒரு படிமேல் எண்ணங் கள் சங்கரைச்சுற்றி வட்டமிட்டன. தனக்குப் போட்டி யாக இவ்விருபெண்களில் யார் இருந்தாலும் அவரைத் தோற்கடித்தே தீருவது என்ற விசித்திர மனப்பான்மை ஒன்று அவளை அலட்டி அலைக்கழித்தது. எப்பாடு பட்டா வது சங்கரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தீவிர எண்ணம் அவள் உள்ள்த்தில் சிறிது சிறிதாக ஜுவாலை விட்டு எரியத்தொடங்கியது அந்த ஜாவாலையில் அவளும் சிறிது சிறிதாக இரையாகிக்கொண்டிருந்தாள்.

Page 51
96 சுடர் விளக்
சங்கரின் போக்கோ மிகவும் விசித்திரமாக இருந்தது அவனுக்கோ கண் நிறைய நித்திரை குவிந்தும் தன் படுக்சை யறையில் இருந்த நீர்க் குழாயில் தண்ணிர் எடுத்துக் கண், களிற் குவிந்த தூக்கத்தைக் கலைக்க முயற்சித்துக்கொண் டிருந்தான் என்ருல் அது வேடிக்கையானதுதான. அவன் தூக்கத்திற்கூடச் சுமதியை மறக்க விரும்பவில்லை. அந்த நினைவே அவளை மானசீகமாகக் கண்டுகளிக்கும் உணர்வே அவனுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இந்த நிலையிலும கூட அவனுக்குச் சுமதியின் மன நிலையை முற்ரு, கப் புரிந்துகொள்ள முடியவில்லை. புரிந்தும் புரியாத ஒர் புதி ராக இருந்தாள் அவள் இன்று அவனுக்கு வாஸந்தியின் எண்ணமும் சேர்ந்துகொண்டது சில நாட்களுக்கு முன்னர் தன் வீட்டில் கண்ட வாஸந்திக்கும் தற்போது சுமதியின் வீட்டிற்காணும் வாஸந்திக்கும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாத அளவுக்கு வேற்றுமை நிறைந்திருப்பதை அவன் அறிந்தான். அன்று பேசா மடந்தையாகக் கண்ட வாஸந்தி இன்று இத் தனை முன்னேற்றமாக எப்படிப் பேசக் கற்றுக்கொண்டா ளோ ? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை அவ ளும் அவனை விரும்புகிருளோ..? அவனுக்கு அதை நிச்சயப் படுத்த முடியவில்லை. ஆனல் அவள் முன்னிலையில் தான் ம ற்ற ப் பெண்களுடன் பேசுவதையோ பழகுவதையோ அவள் முற்ருக விரும்பவில்லை என்பதை மட்டும் அவனுல் உணர முடிந்தது. அப்படியான அன்புக்குப் பொருள் ! அவன் அதை அறிந்திருந்தான். ஆனல் அதை மீண்டும் தன் சிந்தனைக்கு இரையாக்கித் தன் நினைவை மாசுபடுத்த விரும் பாத நிலையில் கண்களை இறுக மூடித் துயில் கொள்ள முயற் சித்தான். அப்போதுதான் உறக்கத்தின் விலைமதிப்பை அவன் உணர்ந்திருக்வேண்டும் படுக்கையிற் புரண்டான் அவ.ை இந்தவேளையில் வேண்டுமென்றே தன் அமைதியைக்குலைக்க வந்தாளோ என்னும் படி சீதாவும் அவன் நினைவுகளில் ஒட் டிக்கொண்டாள். அன்ருெருநாள் அம்பிகா நர்ஸிங் ஹோமில் இருந்து திரும்பும் வழியில் தனக்கும் சீதாவுக்கும் நடந்து கொண்ட சம்பாஷனையை மெல்ல அசைபோட்டான், அன்று அவள் பார்த்த பார்வையும் பேசிய பேச்சும் அந்தப் பேச் சிற் தொனித்த அர்த்தமும் அவன் மனதை அதிகமாக அலட் டியது. இந்தப் பெண்களின் இதயம் எல்லாம் ஆழ காண முடியாத சமுத்திரத்தைவிட ஆபத்தானவை என்று சொன் னவன் வாயிற் சக்கரைதான் போடவேண்டும் என்று அவன் மனங்கூட ஆமோதித்தது. விசைமுறுக்கிய பம்பரம்போலத் தன் மூளையைக் கலக்கிவிட்டு நிம்மதியாகத் தூங்கிக்கொண்

சுடர் விளக்கு 97
டிருக்கும் அவர்களை நினைக்க நினைக்க அவனுக்கு எரிச்சலாக வந்தது. இந்த நினைவுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு நித்திராதேவியின் அரவணைப்பில் ஆறுதல் பெறத் துடித்
தான் அவன்,
இந்த மூவரின் நினைவுகளுக்கும் அப்பாற்பட்ட நிலை யில் பிறிதொரு ஜீவனும் இவர்களுடன் சேர்ந்து படுக்கை யிற் புரன்டுகொண்டிருந்தது. அந்த ஜீவன்தான் பார்வதி யம்மாள். தன் கணவனைப்போல ஆத்திரப்பட்டு எல்லா வற்றையுமே குட்டிச்சுவராக்காமல் இந்தக் காரியத்தை மெதுவாக உடைப்பதற்குத் "திடீர்" என வந்திறங்கிய அவள் இப்படியானதொரு நெருக்கடியை எதிர்பார்க்கவில்லை இந்த நெருக்கடியை உண்டாக்கிய வாஸந்தியை நினைத்த போது அவளுக்கு ஒரு புறம் கோபமாகவும் மறுபுறம் பாவ மாகவும் இருந்தது. எதுவித சலனமுமின்றி வெள்ளையாக வந்த வாஸந்தியின் உள்ளத்தைக் கறைபடுத்தியதற்காகத் தன்னைத்தானே நொந்து கொண்டாள். இருந்தும் அவள் உள்மனம் சங்கருக்கும் வாஸந்திக்கும் முடிச்சுப் போட்டுப் பார்த்து மகிழவேண்டும். என்று துடியாய்த் துடித்தது. தன் குறிக்கோளை நிறைவேற்றுவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு திடீர் முடிவுகளில் இறங்கி அதனுல் ஏற்படும் பலாபலன்களை அனுபவிக்கப் பெற்ற பாசம் இடந்தரவில்லை. அவள் இத்தனை அவசரமாகத் திருகோண மலைக்குப் புறப் பட்டு வந்ததே இந்த முடிவுக்கோர் தீர்வு காணத்தான்.
ஆனல். அவள் இங்கு வந்த பின்தான் நிலைமை மிக வும் மோசமாகி யுள்ளதை அவதானிக்க முடிந்தது. தன்மகன்மேல் உள்ள அத்தியந்தபாசம் அவளை அவனுடன் சேர்ந்த பெண்களோடெல்லாம் சந்தேகப்பட வைத்தது. இதனுல் சங்கர் உண்மையிற் காதலிக்கும் பெண்ணை அவ ளால் அறிந்துகொள்ள முடியவில்லை. இருந்தும் அவள் மனந்தளர வில்லை. உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரப்படவும் இல்லை. பொறுமையோடு நடக்கும் விஷயங்களை உன்னிப் பாக ஊன்றிக்கவனித்து வந்தாள். s

Page 52
98 சுடர் விளககு
தான் கண்ட இரு பெண்களில் யாருமே வாஸந்திக் குத் தரக்குறைவாகத் தெரியவில்லை. ஆயின் அவளுக்கு வாஸந்தியின் மேல் உள்ள அன்பு, பாசம், வாஞ்சை என் பன அந்த இருபெண்களையும் பல வகையிலும் மட்டுப் படுத்தியே காட்டியது. அதனுற் தன் மகனுக்கேற்ற பெண் வாஸந்தி என்றே அவள் மனம் முடிவு கட்டியது. அதைத் தொடர்ந்து அவள் சிந்தனை வாஸந்தியிடம் தாவியது. வாஸந்திகூட சங்கரைத் தான் கணவனுக அடையவேண்டு மென்று நினைத்திருக்கிருளோ என்னமோ அவளுக்குத்தெரி போது. ஆணுல் வாஸந்தி சங்கரை வெறுக்கவில்லை என்பதை முன்ன்மே அறிந்திருந்தாள். கடந்த இரவு நிகழ்ச்சிகளில் இருந்து அவளும் சங்கரை விரும்புகிருள் என்பதை உணர முடிந்தது. அதுவே அவள் உள்ளத்திற் பூரிப்பாகப்பொங்கி உதட்டோரத்திற் புன்னகையாக மாறியது. இப்படியான ஓர் சந்தர்ப்பத்தை உண்டாக்கி வாஸந்தியின் உள்ளத்தை புரியவைப்பதற்காக மற்ற இரு பெண்களையும் அவள் மனம் வாழ்த்தியது. நேற்றுவரை ஒன்றுமே தெரியாத பச்சைக் குழந்தையென்று நினைத்திருந்த வாஸந்தி இன்று முழு அனு பவம் பெற்ற முதிர்ந்த பெண்ணுக அவள் கண்முன் தோற் றமளித்தாள். அதில் அவளுக்கு ஒரு நிறைவு. இந்த இன்ப நினைவுகளின் மத்தியில் கெட்டி மேளங்கொட்ட வாஸந்தி யின் கழுத்தில் சங்கர் இறுக்கி மூன்று முடிச்சுகளைப் போடு வதுபோல ஒரு காட்சி கனவுக்கும் நினைவுக்கும் அப்பாற் பட்ட நிலையில் தோன்றி மறைந்தது.
அன்றைய இரவுப் பொழுதும் ஒரு படியாகக் கழிந் தது. பறவைகளின் கீச்சொலி அடுத்த நாட் பொழுது விடிந்து விட்டதை உணர்த்தியது. வழமைக்கு விரோதமாக அன்று சுமதி அதிகாலையிலேயே கண் விழித்தாள். அதற்கு மேலும் அவளுக்குப் படுக்கையில் இருக்கப் பிடிக்க வில்லை. தன் இடுப்பை வளைத்துப் பற்றியிருந்த சீதாவின் கரத்தை மிகவும் மென்மையாக அகற்றித் தன் தலையணைமேல் வைத்து விட்டு மறு பக்கந்திரும்பித் தன் பக்கத்தே அயர்ந்து

சுடர் விளக்கு 99
தூங்கிய சீதாவைக் கண்வெட்டாமற் பார்த்தாள். சீதா இந்த உலகையே மறந்து தூங்கிக்கொண்டிருந்தாள். தன் உதடுகளில் மலர்ந்த புன்னகையுடன் சீதாவின் நெற்றியில் விழுந்து கிடந்த கேசத்தை ஒதுக்கிவிட்டு எழுந்து வெளியே சென்ருள் அவள். r
அவளுக்கு சிறிது முன்னதாகவே எழுந்திருந்த தங்கம் சமையலறையில் மிகவும் மும்முரமாக ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தாள். வெளியே எழுந்துசென்ற சுமதி நேராகக் குளியல் அறைக்குச் சென்று தன் முகத்தைக் கழுவிக்கொ ண்டு மீண்டும் சமையலறைக்குள் வந்து அன்று காலை உண வைத் தாயாரிப்பதில் முனைந்திருந்தாள். 'சின்னம்மா இதை குடித்துவிட்டு வேலையைப்பாருங்கள். என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் பக்கத்தில் ஆவி பறக்கும் ஒரு தம்ளர் பாலைக் கையிற் பிடித்திருந்த தங்கம். சுமதி எழுந்ததும் சிறுவயது முதற்கொண்டே அவள் செய்து வரும் ஒரு வேலை இது, எழுந்ததும் பால் இல்லாமல் சுமதியால் ஒன் றுமே செய்ய முடியாது என்பதையும் அவள் அறிந்திருந் தாள். ஆகவேதான் சுமதியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் அவள். அது அவளுக்கு ஒரு பெரிய குறை. சுயதிக்கோ வேறு ஒரு குறை. எப்படியாவது தன் கைப்பட உருசியாகச் சமைத்துப்போட வேண்டும். அதைப் பார்வதியம்மா.1 பாராட்ட வேண்டும். ஆகவே தங்கத்தின் அன்பு இன்று அவளுக்கு ஓர் சுமையாக இருந்தது.
" ஏன் தங்கம் இன்று கூடவா இந்த நச்சரிப்பு ? இன்று மட்டுமாவது கொஞ்சம் பிந்திப்பருகினல் என்ன வாம் ? நான் இன்னும் ஒரு சிறு குழந்தை என்ற உன் நினைவு எப்போதுதான் போகப்போகிறதோ. ஐயோ ! உன்னை எப்படிக் கடிந்து கொள்வதென்றே தெரியவில்லை எனக்கு. தயவுசெய்து இதைக்கொண்டுபோய் வை. அப்புற மாகக் குடிக்கிறேன்." அலுத்துக் கொண்டே கூறிஞள் SFLD o

Page 53
100 சுடர் விளக்கு
இனி மேலும் கெஞ்சுவதிற் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்ட தங்கம் கையிற் பிடித்திருந்த பாத்திரத் துடன் தோற்றவளாய்த் திரும்பினுள். "திடும்" என அவள் கையிற் பிடித் திருந்த பாத்திரம் பறிபோவதை உணர்ந்து நிமிர்ந்தாள்."என்ன தங்கம்உன் எஜமானியம்மாவேண்டாம் என்று விட்டாவாக்கும். எனக்குத் தெரிந்த விஷயந்தானே! நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று புன் சிரிப்புத் தவழக் கூறிவிட்டு "விர்’ என்று முன்னே நடந்தான் சங்கர். இந்தக் காட்சி சோர்ந்துபோயிருந்த தங்கத்தின் இதயத்துக்கு ஓர் புத்துணர்ச்சியாக இருந்தது. அதன் பிரதிபலிப்பு அ வ ள் இதழ்க்கடையில் புன்னகையாகத் தவழ்ந்தது.
'ஹல்லோ! குட் மோனிங் சுமதி ஏது 1 இன்று இவ் வளவு சீக்கரமாகப் படுக்கைக்கு விடுதலையாய் விட்டது. என்னுல் உனக்குத்தான் எவ்வளவு சிரமம்! அடடேய்! உனக் குச் சமைக்கக்கூடத் தெரியுமா? பரவாயில்லை இன்று உன் சமையலை ஒரு கைபார்த்துத்தான் திருவது. “ஸ்ரெதஸ்கோப்" பிடித்த கைக்கு எங்கே கரண்டிபிடிக்கத் தெரியப்போகிறது என்று நினைத்தேன். சங்கர் ஹாஸ்யமாகப் பேசிக்கொண் டேயிருந்தான்.
சுமதியோ அவன் பேச்சைச் சிறிதும் இலட்சியஞ் செய்யாமல் தன் வேலையிலேயே கண்ணுங்கருத்துமாக இருந் தாள் என்ன சுமதி நான் என் பாட்டுக்கே பேசிக்கொண்டி ருக்கிறேன். நீ உன் பாட்டுக்கு ஏதோ செய்துகொண்டிருக்கி ருயே? . சங்கர்தான் அங்கு நிலவிய மெளனத்தைக் கிழித் தான். அவன் கையில் இருந்த பால்தம்ளர் அவள் பக்கம் நீண்டது.
சுமதிக்கு அவளை அறியாமலே ஒர் புன்சிரிப்பு உதிர்ந் தது “பரவாயில்லையே தங்கம் சரியான ஆளை செலக் பண்ணி அனுப்பியுருக்கிருள். உங்களுக்குக்கூட நான் சிறு பிள்ளை என்ற எண்ணமாக்கும். இதென்ன சங்கர், என் உடலைப் பற்றி எனக்கில்லாத அக்கறையா மற்றவர்களுக்கு? இந்தப் பாலை அப்படியே நீங்களே பருகிவிடுங்கள் நீங்கள்தானே விஸிட்டர்-!"
*ம்! உக்கும்! அருமையான பேச்சு இதுவே ஒரு கலைதானே சுமதி. இருக்கட்டும்

சுடர் விளக்கு 10
*முதலில் நீயே குடி. அப்புறம் நான் உன் வட்டி வாசியெல்லாம் சேர்த்து விளாசி விடுகி றேன* விட்டுக் கொடுக்காமலே வாதாடினன்
சங்கர்,
சுமதிக்கு மீண்டும் ஒர் தர்ம சங்கடமான நிலை உரு வாகியது. முன்னமோர் முறை, நடந்த காட்சி அவள் கண்களில் மின்னி மறைந்தது. அதை நினைக்கவே அவள்

Page 54
02 சுடர் விளக்கு
உள்ளம் பயத்தினுல் நடுங்கியது. அப்படியான ஒரு சந்தர்ப் பம் இனிமேலும் உருவாகுவதற்கு இடமளிப்பதை அவள் அறவே வெறுத்தாள். ஆயினும் சங்கரிடம் இருந்து பால் பாத்திரத்தை வாங்கவும் அவள் மனந்துணியவில்லை. சங் கரை அவள் உள்ளம் விரும்பினுலும் அந்த விருப்பத்தை அவன் அறிவதை அவள் விரும்ப வில்லை. அவள் அவன் மேல் வைத்த அன்பு, பாசம், ஆசை இத்தனையையும் அவள் தன் உள்ளத்தில் அடைக்கலமாக்கி அமுக்கி ஆழ்த்தி விடவே எண்ணினுள். இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்புவ தற்கு அவளுக்கு இப்போது ஒரேயொரு உபாயந்தான் தென்பட்டது. சங்கர் எதிர்பாராத நிலையில் கையில் இருந்த கரண்டியை அப்படியே வைத்து விட்டு மெதுவாக அவ்வி டத்தை விட்டு நழுவினுள் சுமதி. ஆவலோடு எதிர்பார்த்த கட்டம் கை நழுவிப்போவதை விரும்பாத சங்கர் ஒரெட் டில் அவளைத் தொடர்ந்து அவள் வலது பணிக்கட்டை இறுகப்பற்றி பால் பாத்திரத்தை வலோத்காரமாக அவள் உதட்டோரத்திற் கொண்டு சென்றன். சுமதிக்கு மீண்டும் அந்த பழைய காட்சி கண்விற் திரையிட்டு உடலெல்லாம் நடுங்கியது. அவனுடைய பிடியில் இருந்து விடுபட்டாலே போதும் என்ற நினைவில் திமிறினள். பரவாயில்லையே காலைக் காட்சி, சீ கொஞ்சமாவது வெட்கமில்லை-என்ற நாரசமான வார்த்தைகளைக் கேட்டு இருவருமே திடுக்கிட்டு நிமிர்தார்கள், அங்கே காலைக்கதிரவனின் செங்கிரணங்களை விட இரத்தச் சிவப்பேறிய கண்களுடன் நின்ருள் வாஸந்தி அவளை ஒட்டினுற்போல் மெளனமாக ஆனல் கண்களிற் குரோதத்துடன் பக்கத்திலே வந்து கொண்டிருந்தாள் பார் வதியம்மாள். நான் வளர்த்த பிள்ளைதான இவ்வளவு கீழ் நிலைக்கு வந்துள்ளான்" என்று கேட்பது போல் இருந்தது அந்தப்பார்வை,
ஆனல் அந்த நிலையிலுங்கூட அவளுக்கு ஒரு மகிழ்ச்சி தன் மகன் தான் கண்ணுகப் போற்றி வழர்த்த ஒரே பிள்ளை யாரைக் காதலிக்கிருன் என்பதை அறிந்து கொண்டாளல் லவா! தான் சீதாவின் மேல் வீணுகக் கோபப்பட்டதற்

சுடர் விளக்கு 103
காகத் தன்னையே நொந்துகொண்டாள். “இப்போது அவள் அவள் கண்முன் சீதா இரண்டுபடி உயர்வாகவே காணப் பட்டாள்.
சீதாவோ என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்போதுதான் தூக்கங் கலைந்த கண்களுடன் தன் படுக் கையறை ஜன்னலினூடாக சமையலறைப் பக்கம் சத்தம் வந்த திக்கை நோக்கியபடியே ஏதுமறியாமல் நின்ருள்.
சங்கர் பேசும் சக்தியற்று வெட்கத்தினுலும் அவமா னத்தினலும் உடல் கூனிக்குறுக சுமதியின் கைப்பிடியை உணர்ச்சியின்றி நெகிழ்வித்தான். அதுவரை அவன் பிடி யின் இறுக்கத்திலும், சுமதியின் போராட்டத்திலும் நொருங் கிப்போன கைவளையல்கள் இரண்டின் கண்ணுடித் துண்டு கள் ‘கல கல" என கீழே உதிர்ந்தன. இதைத் தொடர்ந்து இரண்டு சொட்டு இரத்தமும் நிலத்திற் புள்ளி கட்டி நின்றது.
இக் காட்சியைக் கண்டு "ஐ ஐயோ!" என்று அங்கு ஒடி வந்த சீதா இருவரின் கரத்திலும் இரத்தக்கறை இருப் பதைக்கண்டு யாருக்கு முதலுதவி செய்வது என்றறியா மற் திகைத்து நின்ருள்.

Page 55
17 வந்த விருந்து
வறிதே திரும்புவதோ ?
உடைந்த வளயற் துண்டுகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி. அவள் காற் பெருவிரல் அத்துண்டு களை ஒன்று சேர்த்து மீண்டும் உருச்கொடுப்பதில் முனைந் திருந்தன. உள்ளமோ 'உடைந்த வளையல்கள் இனி ஒன்று சேர்வதென்பது வடதுருவமும் தென்துருவமும் ஒன்று சேர் வது போலத்தானுக்கும் தத்துவம் பேசிக்கொண்டது. ஒரு கணப்பொழுதில் அவள் வாழ்வே ஒரு பூகம்பமாக முடிந்து விட்டது போன்ற பிரமையில் செய்வதறியாது திகைத்து நின்ற அவள் இரத்தக் கறை படிந்த கரத்தைப் பற்றினுள் சீதா சுமதியின் கையிலிருந்த வெட்டுக்காயத்தை அழுத் திப்பிடித்து இரத்தப் போக்கைக் குறைப்பதில் ஈடுபட்டன சீதாவின் கரங்கள். அதே சமயம் அவள் கண்கள் சங்கரின் கரத்தையும் கவனிக்கத் தவறவில்லை. அந்தப் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட சங்கர் தன் கையில் படிந்தி ருந்த இரத்தக்கறையை மறுகரத்தால் துடைத்து விட்டுத் தனக்குக் காயம் படவில்லை என்பதை லாவகமாகச் சீதா. வுக்கு உணர்த்தினுன். அதே சமயம் அவன் உள்ளம் வேத னையாற் துடித்துக் கொண்டிருந்தது.
‘என்ன வாஸந்தி; நீதான பேசுகிருய் .? எப்போது தொடக்கம் இப்படிப பேசக் கற்றுக் கொண்டாயோ ? தட்டிப்பேச ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண் டம் என்று கூறுவார்கள் அப்படித்தான் இருக்கு உன் போக்கும் இதில் உன்னைக் குற்றம் சொல்லக்கூடாது. எல் லாமே அம்மா கொடுத்த இடந்தான். சங்கரின் உதடு களைப்பீறிக்கொண்டு சொற்கள் பிரவாகமெடுத்தன. பலர் முன்னிலையில் இப்படி அவமானப்பட நேர்ந்து விட்டதே என்பதை விட அருமையான கட்டத்தில் குழப்பி விட்டாளே என்ற ஆத்திரம் அவனை அணு அணுவாகச் சித்திரவதை செய்தது
"என்னதான் படித்திருந்தாலும் திருமணமாகாத பெண்ணுடன் பழகும்போது கண்ணியமும் பண்பாடும் இருக்க வேண்டும் சங்கர்! இதெல்லாம் உனக்கு நான் சொல்லியா தெரிய வேண்டும்.! பார்வதியம்மாள் பட்டும்படாமலும் சங்கரைக் கண்டிப்பதுபோல் சுமதியை நோக்கிச்சொற்களை உதிர்த்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

சுடர் விளக்கு 105
இந்தப் பேச்சையெல்லாம் கேட்கவேண்டியதும் ஏதோ போதாத காலம் என்று எண்ணி ஏங்கிய சுமதி தன்னை மீறிவுந்த அழுகையை அடக்க முடியாமல் சீதாவின் பிடியி லிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன் படுக்கை அறை யைநோக்கி விரைந்தாள்.
'சுமதியம்மா கிழங்குக் கிறிக்கு உப்புப் போதுமா என்று பார்த்துக் கூறுங்கள் ’ நடந்த விஷயந் தெரியா மல் தன் சமையலில் பெருமையை விளம்பரப் படுத்தும் நோக்கத்துடன் சுமதியின் பின் சென்ற தங்கம் சுமதியின் போக்கு விசித்திரமாக இருக்கவே அவளைப் பின் தொடர்ந் தாள.
படுக்கையறைக்குள் விரைந்து படுக்கையைச் சரண டைந்ததும் அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. தன் துன்பம் தீரும்வரை அழுது கொட்டினுள்.
சுமதியின் பின்னலேயே வந்த தங்கம் தன் எஜ மானியின் நிலையறிந்து திடுக்குற்ருள். எஜமானி யென்ற விசுவாசத்தைவிட சிறு வயது முதற்கொண்டே தூக்கி வளர்த்த பாசம் அவளைக் கொடுமைப்படுத்தியது. இதுவரை சுமதி கண்ணிர் சிந்தி அவள் கண்டதில்லை. அப்படி ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து விட்டாற்கூட அதை மிகவும் சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவாள் சுமதி. அப்படியான சுமதி கண்ணிர் விடுவதாக இருந்தால் அவள் வருத்தப்பட் டுத்தானேயாக வேண்டும். ஆகவே அவள் பரிதாபத்தோடு ‘என்ன சுமதியம்மா யாராவது உங்களை ஏதாவது கூறிஞர் களா..? அல்லது ஏதாவது சுகயினமா..? ஏன இப்படி அழுகிறீர்கள் ? என்று வினவினுள்.
தங்கத்துக்கு அன்பு பிரவாக மெடுத்தாற்தான் 'சுமதி அம்மா’ என்று அழைப்பது வழக்கம், அதைச் சுமதியும் அறிந்திருந்தாள். அப்படித் தங்கம் அழைக்கும் போதெல் லாம் சுமதிக்கே அதைக்கேட்க ஆசையாக இருக்கும். அப் படியான சுமதிக்கே இன்று தங்கத்தின் அழைப்பு வெறுப் பாக இருந்தது. அவளுடைய வேதனையும் அதிகரிக்கும்போல் இருக்கவே அவள் தலை நிமிராமலே மிகவும் கண்டிப்பான குரலில் "தங்கம் தயவு செய்து என்னைச் சிறிது நேரத்திற்கு நிம்மதியாக இருக்க விடு. தயவு செய்து நீ போய் வந்தி

Page 56
06 சுடர் விளக்கு
ருப்பவர்களின் சாப்பாட்டைக் கவனி. சிறிது நேரத்தில் நானும் வந்து விடுவேன்’ என்று கட்டளையிட்டு விட்டு மீண்டுந் தலையணையில் முகம் புதைத்தாள்.
சுமதியின் கட்டளை தங்கத்தை நிலைகுலைய வைத்தது அவள் தயங்கியபடியே வெளியேறிஞள். அதேசமயம் அவளே உராசியபடி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் சீதா. தன் தோழியின் நிலையைக் கண்ட அவள் உள்ளம் துணுக் குற்றது. அவள் அடிமேல் அடிவைத்து மெதுவாய் பூனையைப் போற் பதுங்கி வந்து சுமதியைத் தன் இரு கரங்களாலும் இறுகத்தழுவி மார்போ டனைத்துக் கொண்டாள். தன் நிலை யிழந்து கிடந்த சுமதி திடீர் என ஓர் அன்பு ஸ்பரிசத் தற் தாக்குண்டு அது சங்கராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமிறியவள் அங்கு சீதா நிற்பதைக் கண்டு அவள் கழுத்தைச் சுற்றித் தன் இரு கரங்களையும் இறுகப் பிணைத்துத் தன் துன்பம் தீரும்வரை அழுது கொட்டினுள்.
இப்படிப்பட்ட துன்பஞ் சூழ்ந்திருக்கும் வேளையில் ஆறுதல் கூறுவதில் எந்தவித அர்த்தமுமில்லை என்பதைச் சீதா நன்முக புரிந்திருந்தாள். இருந்தும் சுமதி தன் உயி ருக்குயிரான தோழி என்ற ஒரே காரணத்திற்காக 'சுமதி சீ! நீதாஞ இப்படிக் குழந்தைமாதிரி அழுகிருய் ? எங்க ளுக்லெல்லாம் படித்துப் படித்துப் புத்தி கூறும் நீ இப்படி அழலாமா. ? அப்படி நடக்கக்கூடாததுதான் என்ன நடந்து விட்டது. ? என்ற சீதாவின் விஞவைத்தொடர்ந்து அது வரை விசித்து விசித்து அழுது கொண்டிருந்த சுமதி தன் அழுகையைச் சிறிது நிறுத்தி என் வாழ்க்கையில் எது நடக் கக் கூடாது என்று நிளைத்தேனே அது நடந்துவிட்டது சீதா ! என் வாழ்வில் ஏந்தக் களங்கம் ஏற்படக்கூடாது என்று கவலைப்பட்டேனே அது ஏற்பட்டுவிட்டது. ஒரு சிறு கறை கூட என் வாழ்வை மாசுபடுத்தக் கூடாது என்று கண்ணியமாக வாழ முயற்கித்தேன். ஆனல் அசம்பாவித மாக ஏற்பட்ட ஒரு சிறு தவறு என் வாழ்க்கைக்கே ஓர் உரைகல்லாய் போய்விட்டது. என் பெண்மையை மாசுபடுத் திவிட்டார்கள் சீதா..!" கூறிவிட்டுச் சுமதி மீண்டும் கேவிக் கேவி அழுதாள்.
*என்னை மன்னித்துக்கொள் சுமதி. உனக்கேற்பட்ட சிறுமைக்கெல்லாம் காரணம் நான் என்று நினைக்குப் போது

சுடர் விளக்கு 10
என் உடலின் ஒவ்வோர் அணுவும் வாய்விட்டே கதறுகின் றது. சுமதியின் நிலையை எண்ணிப் பரிதாபப்பட்ட சங்கர் சுமதியிடம் மன்னிப்புக் கோரியபடியே உள்ளே நுழைந்தான்.
'இல்லை சங்கர்! இதில் யாருமே யாரையும் குற்றம் கூற இடமில்லை. ஏதோ சந்தர்ப்பம் செய்த தவறு, அவ்வ ளவுதான் ! குனிந்த தலை நிமிராமலே பதிலளித்தாள் சுமதி
*அது உன் வாதமாக இருக்கலாம்! ஆனல் குற்றம் புரிந்தவன் நான். ஆகவே என்னை மன்னித்துவிடு என்று உன்னிடம் யாசிப்பது ஒன்றே எனக்கு ஒரு துளி நிம்மதி யைக் கொடுக்கும். ஆகவே உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்! என்னை மன்னித்துவிடு சுமதி". அழாக்குறையாக யாசித் தான் சங்கர்.
* சங்கர் உங்களை நான் மன்னிப்பதா? நீங்கள் தவறு செய்திருந்தாற்தானே நான் மன்னிக்க முடியும்! உங்களுக் காக நான்தான் மன்னிப்புக் கோர வேண்டும். சங்கர் இப் போது நீங்கள்தான் என்னை மன்னிக்கவேண்டும். எனக்கு ஏகப்பட்ட வேலையுண்டு. சாவகாசமாக உங்களுடன் எல் லாம் விபரமாகப் பேசிக்கொள்கிறேன். பேசுவதைப் பேசி விட்டு அவன் பதிலுக்குக் காத்திராமலே அவன் அங்கு அந்த நேரத்தில் வந்ததை விரும்பவில்லை என்பதை உணர் த்துவதுபோல அறையைவிட்டு வெளியேறிஞள் சுமதி.
பிரளயகாலத்து நிகழ்ச்சிபோல பூமியே வெடித்து அவனை விழுங்கி இருந்தாற்கூட அவன் கவலைப் பட்டிருக்க மாட்டான். ஆனல் சுமதியின் பேச்சும் செய்கையும் சவுக் கடிபோல் அவன் உள்ளத்தில் உறைத்தது. உள்ளம் வேத னைப்பட அவள் போவதையே கண் வெட்டாமற்பார்த்து நின்ற சங்கர் ஏதோ நினைத்துக் கொண்டவனுக எதிர்ப்புறம் திரும்பினன். அங்கே சீதா அவனைப் பரிவோடு பார்த்துநின்ற காட்சி புண்பட்டிருந்த அவன் உள்ளத்தைப் புரையோடச் செய்தது. அவமானமும் ஆத்திரமும் சேர்ந்து அவன் முகத் தை இரத்தச் சிவப்பேறச் செய்தது. ஒரு பெண் முன்னி%ல யில் அதுவும் இதுவரை யார் தன்னை மறைமுகமாக நேசிப் பதாகச் சந்தேகிக்கப்பட்டானே அவள் முன்னிலையில் தான் ஓர் அநுதாபத்துக்குரிய பொருளாக்கப்பட்டதை நினைக்க நினைக்க அவன் உள்ளம் வேதனையால் சமைந்தது.

Page 57
108 சுடர் விளக்கு
தன் முகத்தில் மணி மணியாக அரும்பி நின்ற வியர்வை முத்துக்கள் எங்கே தன் மன நிலையைக் காட்டி விடுமோ என்ற பயம் வேறு அவனைப் பிடுங்கித்தின்றது. தன் நிலையைச் சமாளிப்பதற்காகப் பக்கத்தில் இருந்த மேசைமேல் தன் இரு முழங்கைகளையும் ஊன்றி விரல்க ளிடையே தன் முகம் புதைத்து மெளனமாக நின்றன். அவன் மனத்திரையில் சுமதி அவனை விட்டு வெகுதூரம் போவது போன்ற ஒரு பிரமை. அந்தப் பிரமை கூட அவன் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. அப்படியான ஒரு நினைவை யே அவன் விரும்ப வில்லை. எக்காரணங் கொண்டும். சுமதி யை மறக்க அவன் தயாராகஇல்லை. உலகமே எதிர்த்து நின்ற லுங்கூட அவன் சுமதியையே தன் வாழ்க்கைத் துணைவியா கத் தெரிவு செய்வது என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டான் சுமதியை அடைவதற்கு அவன் எத்தகைய கீழான நிலைக்கும் போகத்தயாராக இருந்தான். அந்த இன்பத்திற்கு ஈடு இணை இல்லையென்பது அவன் வேதாந்தம.
சீதாவுக்கோ அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந் தது. அவன் சுமதியை அளவுக்கதிசமாகக் காதலிக்கிருன் என்பதை முன்கூட்டியே அவள் அறிந்திருந்தாள். அதே சமயம் அவள் இதயம் அவனுக்காக ஏங்குவதையும், அடித் துக் கொள்வதையும் அவளால் மறுக்க முடியவில்லை. அந்த ஆசையை அந்த அன்பை அவள் தன் உள்ளத்திற்குள்ளே யே குழிதோண்டிப் புதைக்கவும் ஆயத்தமாக இருந்தாள். அதனற்ருன் அவள் எந்த சந்தர்ப்பத்திலும் தன் மன நிலை யை மறந்துகூட வெளிக்காட்டியதில்லை தன் மேல் உயி ரையே வைத்திருக்கும் சுமதிக்கு அவள் மனதாற் கூடத் துரோகம் இழைக்க விரும்பவில்லை தன் உயிருக்குயிரான தோழியை ஏமாற்றி வாழும் ஒரு கேவலமான வாழ்க்கையை விட அவள் வாழ் நாள்முழுவதுமே கன்னியாக இருப் பதை மேலாக மதித்தாள். கடந்த சில மாதங்களாக சும திக்கும், சங்கருக்கும் ஏற்பட்ட வாக்குவாதங்களில் இரு ந்து சங்கரின் பெற்ருேர் இந்தத் திருமணத்தை விரும்ப வில்லை என்பதை அவளால் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது அது இன்று காலை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து ஊர்ஜித மாய்விட்டது. யாருமற்ற சுமதிக்காக அவள் மனம் பச்சா தாபப்பட்டது. அதே நேரம் சங்கரின் வாடிய முகம் கண்டு அவள் உள்ளமே வேதனைப்பட்டது. ஆகவே சங்கர் பக்கந் திரும்பிய அவள் ‘இதென்ன சங்கர் இப்படியே நிற்கப்போகி நீர்களா.. ? சற்று நேரம் இந்த ஆசனத்தில் அமர்ந்து

கடர் விளக்கு 09
மனதை ஆற்றிக் கொள்ளுங்கள். காதல் வாழ்வில் இப்படி யான குருவளிகள் ஏற்படுவது வழக்கந்தானே." என்று கூறிய படியே பக்கத்திற் கிடந்த நாற்காலியை இழுத்து அவன் பக்கத்திற் போட்டாள். அவனும் விசை முதுக்கப் பட்ட விளையாட்டுப் பொம்மை மாதிரி நாற்காவியிற் தொப் என அமர்ந்தான்.
இங்கே இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டு வெளியே சென்ற சுமதி அழுத சுவடு தெரியாமல் முகத் தைக் கழுவித் திருநீறு சாற்றிக்கொண்டு நேரே காப்பாட் டறைக்குட் சென்ருள், அங்கே ஏற்கனவே வேலையில் ஈடு பட்டிருந்த தங்கத்துடன் சேர்ந்து அன்றைய காலை ஆகாரத் தை ஆயத்தப்படுத்தி விட்டு ஒன்றுமே நடவாதது போல முகத்தில் வலிந்து ஓர் புன்னகையை வரவழைத்துக்கொண்டு பார்வதி யம்மாளின் அறைக்குட் சென்ருள். s
அங்கு அவள் கண்டகாட்சி இதுவரை அவள் மிகுந்த ஒரமப்பட்டு மெரு கிட்டுக்காத்து வந்த புன்னகைக்கு முற் றுப்புள்ளி வைத்தது. வற்றிப்போயிருந்த கண்ணிர் விழிக் கோணங்களின் வளியே பெருக்கெடுத்து கன்னத்தின் ஒர மாக வடிந்தது. அவள் கண்ட கனவு மண்ணுேடு மண்ணு சுப் புதைந்து விட்டது என்பதை நினைத்துப் பார்க்கவே அவள் மனம் துணுக்குற்றது.
ஆமாம்! அங்கே அவர்கள் போவதற்கு ஆயத்த மாகப் பெட்டி படுக்கைகள் எல்லாம் கட்டப்பட்டிருந்தன பார்வதியம்மாளும், வனஜாவும் ஜன்னல் வழியாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர்' வாஸந்தி தலைவாருவதில் ஈடு பட்டிருந்தாள்.
இந்தக் கோரமான காட்சி சுமதியின் இதயத்தை நெகிழச் செய்து அப்படிய்ே போய் பார்வதியம்மாளின் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவோமா என்று ஏங்கி நின்ற அவளை 'ஸார் தந்தி’ என்ற குரல் திடுக்கிட வைத் தது. தன் சேலைத்தலைப்பை இழுத்து முகத்தைத் துடைத்து விட்டுத் தந்தியைப் பெற்றுக்கொண்டு படபடக்கும் இதயத் தோடும், நடுங்கும் கரங்களுடனும் ஒரு புறமாகச் சென்று நி ன் று த ந் தி யை ப் பிரித் தா ள். அவள் கண்கள் தந்தியைப் படித்தன. அடுத்த கணமே அவள் மார்பகம் வேதனையால் விம்மித் தாழ்ந்தது. செய்வதறியாது நீர்கக் கும் கண்களுடன் பக்கத்துக் கதவு நிலையைப் பிடித்து முன் கையில் முகத்தைப் புதைத் துத் தன் துன்பம் தீரும்வரை தேம்பித் தேம்பி அழுதாள்.

Page 58
18. தூது நீ சென்று வாராய்
நிற்காலியில் எல்லாவற்றையுமே பறிகொடுத்தவன் போல் உட்கார்ந்திருந்த சங்கரை கண் இமைக்காமல் கவனித்துக் கொண்டிருந்த சீதாவின் மனதில் பல எண்ணங் கள் துளிர் விட்டன. சங்கர் எதற்குமே அஞ்சாத வீரபுரு ஷன் என்றும் அவனைச் சுமதி கோழையாக்கி விட்டாள் என்பது போன்றதுமான ஒரு கற்பனை அவள் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. அப்போது அவள் மனதில் பல வருடங் களுக்குமுன் தான் பாடசாலை மாணவியாக இருந்தபோது விரும்பிப் படித்த ஓர் இலக்கியப் பாடல் தான் ஞாபகத் திற்கு வந்தது,
*வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கேற்ப
நயம்பட உரைத்த நாவும் தாரணி மெளலி பத்தும்
சங்கரன் கொடுத்த வாளும் வீரமும் களத்தே போட்டு
வெறுங்கை யோடிலங்கை புக்கான்.
கம்பர் இராமாயணத்தில் பாடிய இந்தப்பாடல் அவ ளுக்கு மிகவும் பிடித்தமானது. ஆனல் அப்போது இராவ ணனுக்கு அப்பாடல் பொருத்தமில்லை யென்பது அவள் எண்ணம். காரணம் இராவணனிடம் குடிபுகுந்திருந்த துர்க் குணங்கள்தாம். ஆனல் இப்போது அவளுக்கு சங்கர்தான் அப்பாடலுக்கு முற்றிலும் பொருத்தமான ஒரு நபராகத் தோன்றியது. எந்நேரமும் கலகலப்பான சுபாவத்தோடும் வீரத்தோடும் திரியும் அவன் கண்கள் கலங்கியதை அவ ளாற் பொறுக்க முடியவில்லை. இருந்தும் அவன் கலங்கி யிருக்கும் இவ்வேளையில் அருகில் இருந்து நாலு ஆறுதல் வார்த்தை கூற ஒரு சந்தர்ப்பங் கிடைத்ததே என்ற நி%னவு மனதில் ஒரு அமைதியையும், சாந்தத்தையும் உண்டு பண் ணியது .
இந்த நிலையிலுங் கூட அவள் மனம் சங்கரையும் சுமதியையும் சீர் தூக்கிச்சமன் செய்து பார்க்கத்தவற வில்லை. சுமதி இளமைப் பருவத்தில் இருந்தே சீதாவுக்கு உயிர்த்தோழி. ஆகவே சொற்பகாலத்தில் அறிமுகமான சங்கரை விட அவளுக்கு சுமதியின் ஒவ்வொரு விருப்பும்

சுடர் விளக்கு
வெறுப்பும், ஆசையும் நேசமும், கோப மும் தாபமும் நன் ருகத் தெரிந்திருந்தன. சுமதியின் பிடிவாத குணமும், அலட்சிய மனப்பான்மையும் ஒர் இலட்சியத்திற்காக அவள் வாழ்வில் எதையுமே துணிந்து தியாகம் செய்து விடக்கூடிய ஆற்றலும், உறுதியும் படைத்தவள் என்பதும் அவள் அறி
f
அன்று காலை அங்கு நடந்த நிகழ்ச்சி வெள்ளத்தின் நினைவு அலைகளில் அவள் நீச்சலடித்துக் கொண்டிருந்தாள்' பார் வதியம்மாளுக்கு சங்கர்-சுமதி திருமணத்தில் சிறிதும் விருப்பமில்லை யென்பதும், தான் விரும்பும் ஒருவரின் பெற் ருேர் தம் மகனின் திருமணத்தை மனதார ஒப்புக்கொள்ளா விட்டால் சுமதி தி ரு மண ம் செய்து கொள்ள மாட் டாள் என்பதும் சிமதி மூலமாகவே அவள் அறிந்த உண் மைகள் அந்த நினைவு அவ உடலெங்கும் ஓர் இன்டக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது அந்த நேரத்தான் அவளும் ஓர் உண்மையை முற்ருக உணர்ந்து கொண்டாள் அது தான் ஆமாம்! அதுதான் அவளும் சங்கரை மனப்பூர் வமாகக் காதலிக்கிருள் என்பது.
சுமதியின் காதல் சுயநல மற்றது. தெய்வீகமானது வாஸந்தியினுடையதோ மிகவுந் தீவிரமானது. அப்படியா ஞல் அவளுடையது ? அந்த விஞவை அவள் மனமே கேட் டுக்கொண்டது. அந்த கேள்விக்கு அவளுக்கே பதில் சொல் லத் தெரிய வில்லை.
சுமதி மட்டும் சங்கரை நிராகரிக்க நேர்ந்த7ல் அவன கண்டிப்பாக வாஸந்தியைத் திருமணஞ் செய்து கொள்ளப்போவதில்லை. இது அவளுக்கு நன்ருகப் புரிந்தது அந்த நிலை யி ல் அங்கே நிறுவப்படும் வெற்றிடத்தை நிரப்பவுந் தன்னல் முடியும் என்பதைத் திட்ட வட்டமாக நம்பினுள். இல்லை. சங்கர் மேல் அவள் வைத்த ஆசை, பாசப் , காதல், இப்படியொரு நம்பிக்கையை அவள் உள் ளதில் உருவாச்கியது என்ருல் அது சாலவும் பொருந்தும் இந்த எண்ண அலைகள் அவள் உள்ளத்தை கிறங்க வைத் தன. அவள் சங்கர் பக்கந்திரும்பி "டாக்டர் சுமதி ஏதோ ஆத்திரத்தில் கூறி விட்டாள். அதற்காக இப்படிக் கலங்க லாமா? அவள் எப் பாதுமே இப்படித்தான். எதையுமே சிந்திப்பதில்லை. சிறு பிள்ளைத்தனம். ஏதோ உணர்ச்சி வசப்

Page 59
112 . சுடர் விளக்கு
பட்டு ஆத்திரத்தில் கூறி விட்டாளே தவிர இதை நினைத்து
நினைத்து அவள் மனமே ஆயிரம் முறைக்கதிகமாக அழு தோய்தி 1 க்கும். அவளை நீங்கள் ஆறுதலாக மனம் சிறிது; அமைதியான பின் சந்தித்து அவள் முடிக்கவில்லை,
இல்லை சீதா சுமதி இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் என்னு
டன் முகங்கொடுத்துப் பேசுவா ள் என்பது எனக்கே சந்தே
கமாக இருக்கிறது. அவள் மிகவும் கண்டிப்பான பேர்வழி, ! ஒரு சிறு விடயமே தன் வாழ்வைக் குட்டிச்சுவர் ஆக்கி
விட்டதாக எண்ணி ஏங்குபவளே மீண்டும் என்னுடன் முகங்
கொடுத்துப் பேசு என்று எப்படிநான் கேட்க முடியும் சீதா !
நீ என்னிடம் உன் வாழ்வின் அந்தாங்க விடயத்தை மனம்
விட்டுக் கூறியது போல நானும் உன்னிடம் பல சந்தர்
ப்பங்களில் பலதை யும் பேசியிருக்கிறேன். இன்றும் பேசு
கிறேன்" அம்மாவும் வாஸந்தியும் எதற்காக இங்கு வந்
தார்கள் என்று நினைத்து நினைத்துக் கண்ணிர் விட வேண்டி
யுள்ளது அம்மாவையோ அல்லது வாஸந்தியையோ திருப்
திப் படுத்துவதற்காக என் வாழ்க்கைப்பாதையை இனிமேல்
ஒரு சிறிது கூட என்னல் திருத்தி அமைக்க முடியாது
வாழ்ந்தால் சுமதியுடன்
அவன் முடிக்கவில்லை "பொறுங்கள் டாக்டர்’ கணிர் என்ற குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். சங்கர் அந்தக் குரல் கேட்டது இடியுண்ட நாகம் போல செய்வதறியாது சிலேயாகி நின்ருன் அழுதகண்களுடன் தன் பேச்சை இடைமறித்தவள் சுமதி என்பதற்காக அவன் கலங்கவில்லை ஆனல் அவள் பேசிய தோறணை! அந்தக் குரலிற் தொனித்த உறுதி அழைத்ததில் இருந்த வேற்று மை அனைத்தும் அவனை ஏங்க வைத்தன "டாக்டர்!" என்று அழைக்கும் அளவிற்கு அவள் எப்போது மாறி ஞள் ? டாக்டர். அந்தக் குரல் அந்த வார்த்தை அவன் உள்ளத்தில் உடைந்த ரெக்கோர்ட் மாதிரித் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டேயிருந்தது.
சுமதியே மீண்டும் அங்கு நிலவிய மெளனத்தைக் கலைத்தாள். 'டாக்டர் .! இப்படி அழைப்பதற்காக என்னை :ன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் என் மீது செ ரியும் மாசற்ற அன்புக்கு நான் என்றென்றும் கட மைப்பட்டவள் ஆனல் இதுவரை நடந்த சம்பவங்களை அலசி ஆராய்ந்த பின் நானுகவே ஒரு முடிவுக்கு வந்து

Li sísmise 13'
விட்டேன். அதை நீங்களும் பெரியமனது பண்ணி ஏற்று என்னுடன் ஒத்துழைக்கவேண்டும் என்றும் உங்களை நான் மிகவும் பணிவாக வேண்டுகிறேன். டாக்டர், நீங்கள் தயவு செய்து என்னை மறந்துவிட வேண்டும்! மறந்தே விட வேண் டும்!! அத்தனையையும் துணிந்து பேசிய சுமதியால் அந்த வார்த்தைகள் அளித்த துன்பத்தைத் தாங்கமுடியவில்லை கூறிவிட்டுத் துக்கந்தாழ மாட்டாமல் அவள் விம்மியழுதாள்.
*சுமதி. சங்கர்தான் ஆத்திரத்தில் அலறிஞன். நீ என்ன பேசுகிருய் என்று உனக்குப்புரிகிறதா ? அல்லது நானும் பச்சோந்திமாதிரி எதற்கும் ஈடு கொடுக்கக் கூடி யவன் என்பது உன் எண்ணமாக்கும் அம்மா, அல்லது அப்பா அல்லது என்னைப் படைத்த இறைவனே வந்து நீ சுமதியை மணக்க முடியாது என்று கூறிஞற்கூட நான் பணிந்து விடம் போவதில்லை "
அவனைப் பேச விடாமல் இடைமறித்த சுமதி நீங் கள் மட்டும் என்ன யோசித்தா பேசுகிறீர்கள் ? எதை யுமே பேசுவதற்கு இப்போது உங்கள் மனநிலை சரியாக இல்லை, முதலில் இதோ இந்தத் தந்தியைப் படித்துப் பாருங்கள். டாக்டர் பூரீதரின் மனைவி அருஞ பிரசவத் தின்போது அகால மரணம் அடைந்து விட்டதாக அறி வித்திருக்கிருர், பாவம்! அவருக்காக நான் ரொம்பவும் அனுதாபப்படுகிறேன். என்று கூறிய அவள் மனக் கண் முன் டாக்டர் பூரீதரின் களங்கமற்ற முகம் காட்சியளித்தது அதைச் சுற்றி அவள் சித்தனையும் பின்னிப் பிணைந்தது. சங்கர்-பூரீதர் இவர்கள் இருவரையும் மனம் என்னும் தரா சில் போட்டு ஊசிமுனையில் நிறுத்துப் பார்த்தது உள்ளம்,
டாக்டர் பூரீதர் கூட ஒரு காலத்தில் சுமதியையே மணஞ்செய்து கொள்வது என்று பிடிவாதஞ் செய்து ஒற்றைக காலில் நின்றவர்தான். அவர் சங்கரைவிட அதிக செல்வந் தர். பூராச்சொத்துக்கும் ஏகபோக உரிமையாளர். பணம் உண்டு என்கிற கர்வம் ஒரு துளிகூட அவரிடம் கிடையாது தன்னுடன் அந்நியோன்னியமாகப் பழகிய ஆண்களில் அவர் மிகவும் கண்ணியமானவர் என்பது அவள் அபிப்பிராயம். பூரீதரின் மேல் அவளுக்கு என்றுமே ஒர் பிரேமை ஆளுல் அதைக் காதல் என்று கூறிக்கொள்ள அவள் விரும்ப வில்லை பூgரீதர் எப்போதுமே சுமத க்கு ஒரு தனியான இடத்தை

Page 60
4 சுடர் விளக்கு
அளித்திருந்தார். அவர் அவளைப் பெரிதாக மதித்தார். தனக்காக் அல்லாமல் அவளுக்காகவே அவர் அவளைக் காத லித் தார் என்ருற்கூட அது மிகையாகாது. ஆமாம் இல்லையென்ருல் அவள் மேல் காதற் பைத்தியமாகவே யிருந்த அவர் அவள் இரண்டொருமுறை தன் மன நிலையை வெளிப்படுத்தி அவரைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தியபோது அவர் அவள் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்துதான் அருணுவை மணந்து கொண் டார். அந்த நாளிலிருந்து இன்றுவரை அவள் பூரீதரைத் தெய்வமாகவே போற்றி வருகிருள். அவர் ஒரு நாட்கூட மறந்தும் அவளைத் தீண்டியது கிடையாது. இவற்றிலெ6: லாம் பூரீதர் சங்கரை விடப் பல படிகள் உயர்ந்தே காணப் பட்டார். இருந்தும் அவள் மனம் ஏனே சங்கரைக்காதலிக் கும் அளவுக்குத் துணியவில்லை. ஆகவேதான் இன்று அந்தத் தந்தியைப் படித்ததும் அவள் கண் கலங்கினுள். இப்போது அந்தப் துன்பச்செய்தியைச்சங்கருக்கு அவள் கூறியதும் மீண் டும் அவள் கண்கள் துன்பத்தின் பழு தாங்க மண்ட்டாமல் பனித்தன. "ஹேர் என்று துன்பந் தீரும்வரை கதறி அழ வேண்டும்போல இருந்தது. அவளுக்கு.
சங்கருக்கோ இடிக்குமேல் இடி விழுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. அவனுல் எதுவுமே பேசமுடியவில்லை டாக்டர் பூரீதர் அவனுக்கு உயிர் நண்பன். இரண்டொரு முறை பூரீதரின் வற்புறுத்தலின் பேரில் அவன் அவர்கள் விட்டிற்கு விடுமுறையின்போது சென்று நாட்களைச் கழித் திருக்கிருன். அப்போதெல்லாம் அவருடைய மனைவி அருளுண அவனுக்கு மிகுந்த அன்புடன் உணவளித்து வேண்டிய ஆத ரவும் காட்டிருக்கிருள், அவனுக்கு அருணுவை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆகவேதான அவளது பிரிவு அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. சீதாவுக்கு டாக்டர் பூரீத ரைப் பெயரளவிலும் உருவத்திலும் தெரியுமே தவிர அவ ருடன் அவளுக்கு அதிகம் பழக்கம் இல்லை. ஆகவே இந்தச் செய்தி அவளிடம் எதுவித மாற்றத்தையும் உண்டு பண்ண வில்லை.
சுமதியின் அழுத முகத்தைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. இப்போது அவளிடம் தோழமை யின் உணர்ச்சி தா ைபெருக்கெடுத் தோடியது. ஆகவே அவள் சுமதியின் பக்கந்திரும்பி அங்கு நிலவிய மெளனத்தை கிழித்தாள், 'சுமதி தினமும் நீ இப்படியே கண்ணிர் வடிப்

சுடர் விளக்கு 15
பதாக இருந்தால் உன் உடல் என்னத்திற்காகும். ? ஏதோ போகவேண்டிய காலம் போய்விட்டார்கள். அதைத்தடுக்க
நாம் யார் ? நடந்ததை மறந்துவிடு. இப்போ காலை
உணவிற்கு நேரமாய் விட்டது. நீ சங்கரையும் அழைத்துச்
சென்று காலை ஆகாரத்தை முடித்துக்கொள்ளலாமே! கூறி
விட்டுக் கடைக்கண்ணுல் சங்கரை நோக்கினுள் சீதா
சுமதிக்கு சீதாவின் யோசனை சரியாகப்படவே அவள் தயங்கியபடி சங்கர் பக்கந்திரும்பி டாக்டர் உங்கள் அம் மாவைக் காலை உணவுக்கு அழைக்கத்தான் சென்றேன். ஆணுல் அங்கு நான் சென்ற சமயம் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் புறப்படுவதற்கு ஆயத்ாமாக இருக்கிருர்கள், நான் சென்ற வேளை சரியில்லையாக்கும் என்று திரும்ப நினைத்தேன். அப்போதுதான் பூரீதரின் தந்தியும் வந்தது நான் தந்தியுடன் நேராக இங்கு வந்து விட்டேன். அவர் களைப்போய் அழைக்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது என்னைக் காணவே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த நிலை யில் நான் அங்கு போவது நன் ருக இல்லை. நீங்களே சென்று அழைத்து வாருங்கள். அல்லது சீதாவையாவது அனுப்பி " அவள் முடிக்கவில்லை "ஆமாம் சீதா சரியான யோசனை நீ சென்றழைத்தால் உன் பேச்சைத் தட்டவே மாட்டார்கள்’ என்று சுமதியின் பேச்சுற்கு அனுசரணையா கப் பேசி வைத்தான் சங்கர். அவனுக்கு எப்படியாவது தான் அங்கு போகாமல் தப்பினுற்போதும் போல இருந்தது. அதே சமயம் சு ம தி அங்கு போவதையும் விரும்ப வில்லை. சீதா எப்படியாவது சமாளித்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை வேறு அவனிடம் நிறைந்து இருந்தது அத்துடன் பார்வதியம்மாளுக்கும், வாஸந்திக்கும் இப்போது சங்கரின் உண்மையான காதலி யார் என்று புரிந்து விட்டது. ஆகவே அவர்கள் சீதாவைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை என்ற ஒர் அலட்சிய மனபபான்மையும் சேர்ந்து கொண்டது. ஆகவேதான் அவன் சுமதியுடன் சேர்ந்து சீதாவைத் துரி தப்படுத்தினன். சுமதிக்கும் அங்குள்ள நிலை நன்ருகப் புரிந் தது. சங்கர் அங்கு சென்ருல் அவர்கள் அவனே ஒரு முடி வுக்கு வரும்படி கூறுவார்கள். அதனுல் வீண் அனர்த்தங்கள் விளையலாம். எனவே தான் சுமதியும் சீதாவை அனுப்பும் படி யோசனை கூறினுள். ஒன்றுமே அறியாத, புரியாத அப் பாவிப்பெண் சீதாவும் அவர்களுக்காகப் பார்வதியம்மாளி டம் தூது சென்ருள்.

Page 61
19. தூக்கி வளர்த்த கை
சும்மா இருக்கும ?
பர்வதியம்மாள் இருந்த அறைக்குள் பூனையைப் போற் பதுங்கிப் பதுங்கிச் சென்ருள் சீதா. கைதிக் கூண் டுக்குள் அடியெடுத்து வைப்பதுபோல் பயங்கரமாக இரு ந்தது அவள் மனநிலை. அந்தப் பயத்தின் மத்தியிலும் ஒரு தென்பு ஏற்பட்டது அவளுக்கு சங்கருக்காக ஒன்றைச் செய்கிருேமே என்கிற உணர்வுதான் அது அந்த உணர்வு அளித்த உற்சாகத்தில் மிகவும் துணிவுடன் அக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சீதாவுக்கு உதறல் எடுத்தது. ஆமாம்! பார்வதியம்மாள் அவளைப் பார்த்த பார்வைதான் அவளுக்கு அச்சத்தை உண்டாக்கியது! ஆயி னும் அவள் தைரியத்தைக் கைவிடவில்லை. மென்று விழு ங்கி "சாப்பிட்டுவிட்டு ஆறுதலாகப் புறப்படலாமே அம்மா? வாசந்தி நீ கூட வனஜாவை அழைத்துக்கொண்டு வாயேன் எத்ற்காக இப்படி அவசர அவசரமாகப் புறப்படுகிறீர்கள்’ என்று கூறிவிட்டாள்.
பார்வதியம்மாளின் கண்கள் இப்போதுதான் சாந்த மடைந்தன. கதவு திறக்கப்படும் சத்தங் கேட்டதுமே சுமதிதான் வருகிருளாக்கும் என்ற நினைவிற்தான் அவள் அப்படியொரு கொடூரப் பார்வையை வீசினுள். ஆனல் வந்தது சீதா என்றறிந்ததும் அவள் மனங்கூட அமைதியா கியது. சீதாவை முதற்கண்டபோது உண்டாகிய வெறுப்பு அசூசை, பொருமை எல்லாமே இருந்த இடந்தெரியாமல் மறைந்தன.
ஆகவே அவள் மிகவும் அன்புடன் 'யார் சீதாவா ? வேண்டாமம்மா! இனி இந்த வீட்டில் ஒரு முடறு தண் ணிர் கூடக் குடிக்கமாட்டேன் என் விருப்பத்திற்கு என் மகன் நடப்பதாக இருந்தால் என்னுடன் வரட்டும் அல்லது இங்கேயே கிடந்து எக்கேடாவது ്രാ Lufrósi ட்டும். எங்கள் பிணத்தைப் பார்க்கக்கூட , அவன் வரக் கூடாது. அப்படி ஒரு கேடுகெட்ட மகன் எங்களுக்குப் பிறக்கவில்லை என்றே இருந்து விடுவோம். அவள் நல்ல சொக்குப் பொடியாகத்தான் போட்டு விட்டாள். பிறந்து வளந்து இத்தனை காலத்துக்கும் தகப்பனை எதிர்த்து

சுடர் விளக்கு 117
ஒரு வார்த்தை பேசாத பிள்ளை என்னடா தகப்பனை இப் படி எதிர்த்துப் பேசிவிட்டானே என்று அன்று யோசித் தேன். இன்று என்னையே ஒதுக்கித்தள்ளிவிட்டானே: இவ னுக்கு எப்படி இத்தனை தணிவும் வந்ததோ ? எல்லாம் அவள் உபதேசந்தான் பெற்றதாய் தைந்தையர் இரத்தக் கண்ணீர் விட எங்களிடமிருந்து எங்கள் பிள்ளையைப் பிரித்து அவள் சந்தோசமாகவா வாழ்ந்துவிடப் போகிருள். பார்வதியம்மாள் பெருமூச்சுடன் தன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.
அவள் பேசி முடிக்கும்வரை மிகவும் பொறுமையு டன் சகித்துக் கொண்டிருந்தாள் சீதா. சுமதியைப்பற்றி பார் வயம் மாள் ஏளமனமாகப் பேசியது அவளுக்குப் பிடிக் கவேயில்லை இருந்தும் பார்வதியம் மாளின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டுமே என்றுதான் அவள் இடையிற் பேசவில்லை. சுமதியைச் சீதா நன்கு அறிவாள் இப்படியான அபாண்டமான பழிதான் தோழியின் மேல் சுமத்தப்பட்டதும் மூடியிருந்த அவள் வாய் தானுகவே திறந்து கொண்டது. 'அம்மா எதையும் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வருவது தவறு. நீங்கள் நினைப்பது போல சுமதி அத்தனை சுயநலக்கா ரியல்ல ? அவள் மென்மையான இதயம் படைத்தவள். அவளுடன் ஒரு முறை மனம் விட் டுப்பேசிப் பழகியவர்கள் மறுமுறை பழகாமல் இருக்கவே
மாட்டார்கள். அவளது சுடா வமே அதுதான். அவள் முடிக்கவில்லை, ‘என்ன வோம்மா எனக்கென்ருல் அவளைக் கொஞ்சம் கூடப்பிடிக்க வில்லை. பார்வதியம்மாள் தன்
வெறுப்பையெல்லாம் வெளிப்படையாகவே கொட்டி விட் டாள். அதில் அவளுக்கோர் நிம்மதி !
"சரியான வேசைக்காரி மோ சக்காரியுங் கூடத்தத் தான்!" மாயியாருடன் சேர்ந்து ஒத்துப்பாடினுள் வாஸந்தி, அதற்கு மேலும் அங்கு நின்ருல் நிலைமை மோசமாகி விட லாம் என்ற பயத்தில் சீதா மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்து சுமதியிடம் சென்று விஷயத்தை விளக்கி ஞள். தாயை இழந்த பசு பரிதாபத்தோடு தள் எஜகா னைப் பார்ப்பதுபோல சங்கரைப் பார்த்தாள் சுமதி, அந் தப்பார்வையில் நீங்களாவது சென்று அழைத்துப் பாருங் களேன் என்ற அர்த்தம தொங்கி நின்றது. சங்கரும் அந் தப்பார்வையின் பொருளை உணர்ந்தவன் போல் தன் ஆச னத்தை விட்டு எழுந்து தாயிடம் சென்றன். தாயிடம்

Page 62
118 சுடர் விளக்கு
அவன் தன்னல் முடிந்தவரை வாதாடிப்பார்த்தான். ஆனல் பார்வதியம்மாளா விட்டுக்கொடுப்பவள்!
சங்கரின் நிலை மிகவும் பபிதாபமாக இருந்தது. இது வரை அவன் தாய் சொல்லைத் தட்டிப் பழகியதில்லை. ஆகவே அவனுக்குத் தாயை எதிர்க்கும் சக்தியுமில்லை சுமதியைத் துறக்கும் தணிவுமில்லை இந்த இரண்டுங்கெட்டான நிலே யில் நின்று தத்தளித்தவனை "எங்களைக் கொண்டுடே ய் உ ைபங்களாவில் விட்டுப்போட்டு நீ உன் விருப்பப்டி நடந்து கொள். இனி ஒரு நிமிடங்கூட எங்களால் தங்க முடியாது அப்பப்பா ..! அவள் இருக்கும் இடத்தில் நாம் இருக்க லாமா ? அவளென்ன பெண்ணு .? பார்வதிய மாள் தன் பாட்டுக்கே பேசிக்கொண்டு போனுள் .
அன்று காலையில் இருந்து அங்கு நிகழ்ந்தவற்றைப் பார்த்தும் பார்க்காதவள்போல பம்பரம்போல் வேலையில் ஈடுபட்டிருந்த தங்கத்தின் மனதில் அன்று காலை முதல் அமைதியிருக்க வில்லை தன் சின்ன எஜமானிக்க ச அவள் மனம் மிகவும் வேதனைப்பட்டது தன் எஜமானிக்க கப் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த அவள் தற்செயலாக இந்தச் சமயம பார்த் துச் சுமதியின் புடவையை எடுக்க வந்தவள் அங்கே நடந்த சம்பாஷனையைக்கேட்டு வெகுண்டாள். இதுவரை மிகவும் சிரமத்துடன் மூடி வைத்திருந்த வாயை மடைகிறந்த வெள் ளம்போற் திறந்து விட்டாள் எனணம்மா காலை தொடக்க மாக நானுந்தான் பார்க்கிறேன். உங்கள் பேச்சும எல் லைக் கோட்டைத்தாண்டிப் போய்க் கொண்டேயிருக்கிறது ய்ாருமற்ற சுமதியம்மாமை நீங்கள் வேண்டுமானபடி வாயில் வந்ததைலெல்லாங் கூறி ஏளனப்படுத்தி விடலாம் என்ற எண்ணமாக்கும்! நானும் ஒருத்தி இந்த வீட்டில் இருக்கி றேன் என்பது அம்மாவுக்குத் தெரியாதாக்கும் ! கேவலம் சமயக்காரிதானே என்ற அபிப்பிராயம் போலும் நான் வேலைக்காரியாக இருந்தாலும் அவர்க நடைய உப்பைத் தின்று வளர்ந்தவள்தானே! எச்சில் தின்னும் நாய்ககுக் கூட ஒரு துளிநன்றி இருக்குமாம. அந்த நாயைவிட மே சமான
வள் என்ரு நினைத்தீர்கள் இந்தத் தங்கத்தை.
ஒன்பது மாதத்தில் என் இடுப்பிற் தூக்கி வளர்த்த குழந்தை இன்று இருபத்தினுலாவது வயதை வயதை எட்

சுடர் விளக்கு 19
டிப்பிடிக்கப் போகிறது. இத்தனை வருடமாக அந்தக் குழந் தைக்குத் தாய்க்குத் தாயாகவும், தந்தைக்குத் தந்கையாக வும், வேலைக்காரிக்கு வேலைக்காரியாகவும் இருந்து வருப வள் தான். அந்தக் குழந்தையின் குணத்தை நன்ருக அளந்து பார்த்து விட்டேன். அதுமாற்றுக்குறையாத பசும் பொன்..! இனிமேல் அந்தக் குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தை பேசினீர்கள். அப்புறம் இந்தத் தங்கம் பித்தளை யாக மாறிவிடும் ஆமா !”
தங்கம் } தங்கத்தின் அதிர்வெடி போன்ற பேச் சைக்கேட்டு அங்கு வந்த சுமதிதான் அப்படிக் கத்தினுள் ‘தங்கம் நான் திம்மதியாக இருப்பது உனக்குக்கூடப் பிடிக்க வில்லையா ? இப்படியெல்லாம் உன்னை யார் பேசச் சொன்னர்கள் அதுவும் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்கி ருப்பவர்களைத் தூற்றலாமா ? இந்த வீட்டில் நான் ஒருத்தி இருக்கிறேன் எனபது எப்படி மறந்தது உனக்கு ?"
சுமதியின் அதட்டலோ, ஆத்திரமோ இம்முறை தங்கத்தை ஒன்றுமே செய்துவிடவில்லை. சுமதியின அதட் டல் அவளுக்கு மீண்டும் ஆவேசத்தைத்தான் உண்டு பண் ணியது. ஆகவே அவள் மீண்டும் தன் பாட்டுக்கு சுமதி யைநோக்கி "சும்மா இருங்கம்மா! எதற்கும் ஓர் எல்லைக் கோடிருக்க வேண்டும் குட்டக் குட்டக குனியிறவனும் மடையன் குனியக் குனியக் குட்டுறவனும் மடையன் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். நீங்கள் எல்லோரையு. வேண்டுமென்று நடக்கப்போய்த் தான் அவங்க இப்படி மிதிச்சிடப் பார்க்கருங்க நமக்கும் ஆண்டவன் ஒரு வாயைக் கொடுத்திருக்கிருன் என்பதை இப்படிப்பட்ட வர்களுக்குக் காட்ட வேண்டும் அம்மா. அப்பத்தான் அவங்களுக்கும் கொஞ்சம் புத்திவரும். எனக்கென்னம்மா நான் இன்று இருந்து விட்டு நாளை போகிறவள். இருந்தாலும் நீதி நியா யம் என்பதை எப்போதுமே தோற்பதில்லை. நான் படிக்கா தவள்தான் இருந்தும் எனக்கும் ஒரு நன்றி உணர்ச்சி இருக்கம்மா என் கடமையை நான் செய்கிறேன் . உங்களுக் குப் பிடிக்கா விட்டால் என்னை இந்த நிமிடமே வெளியில் அனுப்பி விடுங்கள், உள்ளவனுக்கு ஒரு வீடு; இல்லாதவ ஜக்கு ஆயிரம் வீடு. அதற்காக நான் ஊமையாகிவிட முடியாது ஆமா! நமக்கு வாய் இல்லை என்று கண்டால் இந்த உலகத்தார் நம்மை நாயை அடித்து விரட்டுவது போல விரட்டி விடுவார்கள். என் உடலில் உயிர் உள்ள

Page 63
20 சுடர் விளக்கு
வரை இனி எவரையுமே உங்களைப்பற்றிப் பேசவிட மாட் டேன். யாராவது வாய் திறந்தால் அவர்களை ஒரு கை பார்த்து விடுவேன் என்ன நினைத்துக் கொண்டாங்க. ஆமா , தன் முன்தானைச் சேலையை இழுத்துக் கட்டிக் கொண்டு சண்டைக்கு ஆயத்தமாக நின்ருள் தங்கம்.
தங்கத்துடன் பழகிய இத்தனை காலத்துக்கும் தங் கம் சுமதியை இப்படி முறைத்ததே கிடையாது இன் றைய நிலையில் தங்கத்தை அடக்குவதுதான் நினைத்தது போல அத்தனை சுலபமான காரியமல்ல என்பதைச் சுமதி உணர்ந்து கொண்டாள் ஆகவே மறுவார்த்தையின்றி அவ்விடத்தை விட்டகன்று தன்னை இந்நிலைக்காளாக்கிய இறைவன் முன்னிலையிற் சென்று மண்டியிட்டுத் தன் துன் பத் தீரும்வரை கேவிக் கவி அழுதாள்.
பார்வதியம்மாளுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது தான் நாயாக மதித்த ஒருத்திவீட்டில் அவளு 'டைய நாயே அவளைத் தீண்டி விட்ட்ால் அந்த நிலையிற் தான் இருந்தாள் அவளும், அவளுக்கு சுமதியைப் பிடித்து இரண்டு மூன்று உதை கொடுத்தாற்தான் ஒர் திருப்தி ஏற்படும் போல இருந்தது. ஆனல் தங்கத்தின் மிரட்டலுக்கு அவள் பயந்து விட்டாள் அவள் ஆசை தீருமட்டும் சும தியைத் தன் வாயார மனதிற்குட் திட்டினுள் அதில் அவ ளுக்கு ஓர். திருப்தி அதற்கு மேலும் அங்கு ஒரு நிமிடங் கூடத்தங்கப்பிடிக்காதவளாக வ1 லந்தியையும் அழைத்துக் கொண்டு காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள் அவர்கள் பின்னுற் தயங்கியபடியே நடந்து வந்தாள் வனஜா அந் தப்பிஞ்சு மனதுக்கு இவை ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு எல்லாமே ஒரே குழப்பமாக இருந்தன, திடும் என்று வந்த அம்மா இப்படிக் கோபப் பட்டுக் கொண்டு திடீர் எனக்கிளம் பியது அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அவளுக்குங் சுமதியை யும் சீதாவையும் ரொம்பவும் பிடித்திருந்தது. அதிலும் அவர்கள் இருவருமே டாக்டர்கள் என்று கேள்விப்பட்ட பின் அவர்கள் மேல் ஒரு மதிப்பும் ஏற்பட்டது. ஒரு காலத் தில் தானும் அவர்களைப்போல் ஒரு டாக்டர் ஆக வேண் டும் என்ற ஆசையும் கூடவே துளிர் விட்டது. அப்படி யான அவர்களிடம் அம்மாவுக்கு ஏளும் இவ்வளவு கோபம்? அண்ணுவின் மேல் அவர்கள்தான் எத்தனை பிரியமாக இருக்கிருர்கள் அண்ணுவுக்கும் சுமதியக்கா என்ருல் உயிர்.

சுடர் விளக்கு 21
அதில் என்ன தப்பு ? அப்படி என்ருல் வாஸந்தி அண் ணிக்குக் கூடத்தான் அண்ணுவின் மேல் அன்பு எத்தனை முறை அவள் அறிய வாஸந்தி அண்ணி அவர்கள் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் அண்ணுவின் புகைப்படத்திற்கு முத் தம் கொடுத்திருக்கிருள். அப்போ அண்ணிமேல் அம்மா வுக்கு ஏனம் கோபம் வரவில்லை. அவளுக்கு ஒன்றுமே புரிய வில்லை இதை யாரிடமாவது கேட்க வேண்டும்போல இருந்தது அவளுக்கு. ஆனல் இதைப்போய் அவள் யாரிடம் கேட்பது
சீதா அக்கா தான் அவளுடன் மிகவும் அன் போடு பழகுவாள். அவளிடம் கேட்கலாம் என்ருல் வழக்கமாகச் சிரித்த முகத்துடன் இருக்கும் அவள் இன்று மூஞ்சியை உம் என்று பிடித்திருந்தது அவளுக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை அதற்கிடையில் ‘வனஜா ஏறிக்கொள்!" என்ற தாயின் கட்டளை வேறு அவளைச் சித்திரவதை செய் தது. செய்வதறியாது தயங்கித் தயங்கி "சீதாக்கா போயிட்டு வாறன்! சுமதியக்கா வாறன்!” என்று உரக்கவே கூறினுள், தன் சத்தங்கேட்டாவது சுமதி வெளியில் வருவாள் என்ற அவள் எண்ணம் நிறைவேறவேயில்லை. சீதா தான் கண் கலங்கத் தூரத்தில் நின்று கை அசைத்து அவளுக்குப்பிரியா விடை கூறிக்கொண்டிருந்தாள். அவளைக் கோபக் கனல் தெறிக்கும் கண்களால் பார்த்துக்கொண்டிருந்த பார்வதி யப் மாள் காருக்குள் இருந்தபடியே தன் கைகளை வெளியே நீட்டி வனஜாவின் பிஞ்சுக்கரங்களைப் பற்றிக் காருக்குள் இழுத்தாள் ‘அண்ணு நீங்க வரல்லையா !” குழந்தைக்கே உரிய கபடமற்ற தன்மையில் பக்கத்தில் நின்ற தன் தமய னைப்பார்த்துக் கேட்டாள் வனஜா .
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து தவித்துக் கொண்டிருந்த சங்கர் வனஜாவின் குரல் கேட்டுத் திரும்பி 'நீ முதலில் ஏறிக்கொள் வனஜா. நானும் வருகிறேன் . "என்று கூறி விட்டுத்தானும் சென்று காரின் முன்கதவைத் திறந்து கொண்டு சாரதியின் ஆசனத்தில் ஏறி அமர்ந்து காரை "ஸ்ராட் செய்தான். கார், "கிர்" என்ற சத்தத்துடன் புறப் பட்டுச் சிட்டாகப் பறந்தது. அதைவிட வேகமாக விரைந் தது சங்கரின் சிந்தனைக் குதிரை. இவற்றை யெல்லாம் பார்த்த பார்வதியம்மாளின் முகத்தில் மிளிர்ந்தது ஒரு அழ கான புன்னகை. அதில் வெற்றியின் பெருமிதம் நிரம்பி வழிந்தது.

Page 64
20. மங்கல குங்குமம் வாழ்க !
(Pருகன் படத்தின் முன்னே இரு கரங் குவித்து தன் நிலை மறந்தவளாய் கண்ணில் இருந்து நீர் ஆருகப் பெருகக் கதறி அழுதுகொண்டிருந்த சுமதியைச் சமாதானப் படுத்தி அன்பு வார்த்தைகளால் ஆசுவாசப்படுத்தி உள்ளே அழைத் துச்சென்ருள் சீதா. .வளுக்குச் சுமதியைப்பார்க்கும் ஒவ் வொரு நிமிடமும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அத் தனதுாரம் அவள் சுமதியிடம் அன்பு வைத்து விட்டாள். சில விநாடிகள் இருவருமே பேசவில்லை. பேச முடியவில்லை.
"அவர்கள் எல்லோரும் போய் விட்டார்களா சீதா..? அங்கு நிலவிய மெளனத்தைத் கிழித்தவள் சுமதிதான்."
‘போய்விட்டார்கள் சுமதி. போவதாக உன்னிடம் கூறச்சொன்னுர்கள்!’ என்று வண்டுமென்றே பொய்யையும் சேர்த்துக்கூறி வைத்தாள் சீதா.
அவர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை சுமதி. ஆகவே அவளுக்கு இதை யெல்லாம் நினைக்குந்தோறும் துன்பம் பீறிட்டு வந்தது. "அவர்கள் போய் விட்டார்கள்’ என்று சீதா கூறியதும் அவர் களோடு சங்கரும் போய் விட்டாஞ என்று அறிய மனம் துடி யாய்த் துடித்தது ஆனல் அவன் கேட்கவில்லை. அவளது மன நிலையை அறிந்தோ என்னவோ சங்கரும் அவர்களோடு போய் விட்டார் !" என்று சீதா கூறிவைத்தாள்.
அந்த வார்த்தையைக்கேட்ட சுமதியின் இதயம் துன் பத்தில் அடித்துக்கொண்டது சங்கர் தன்னை விட்டுப்போய் விட்டான் என்பதை நினைக்கவே பயந்த உள்ளம் அவன் போய்விட்டான் என்பதைக் கேட்டதும் அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டது. உலகத்தில் எல்லாவற்றையுமே இழந்து விட்டது போன்ற உணர்ச்சியில் அவளுக்கு வாழ்க்கையிலேயே ஒர் வெறுப்பு ஏற்பட்டது. அடக்கி வைத்திருந்த துன்பம் அத் தனையும் மீண்டும் இதயத்திற் குமுற அது விக்கலும் விம்மலு மாக வெளியே புறப்பட்டது. இா முறை அவளைத் தேற்றுவது சீதாவுக்குப் பகீரதப் பிரயத்தன பாய் விட்டது. துன்பந்தீரும் வரை அழுது ஒயட்டும் என்று விட்டுவிட்டாள்.
சுமதியின் மனநிலை சீர் அடைய ஒரு வாரம் சென்றது அந்த ஒரு வாரமும் அவள் வேலைக்குக்கூடப் போகவில்ஃ' அத்தனைக்கு அவள் மனம் பாதிக்கப்பட்டிருந்தது. ஏழா ! நாள் அவள் வைத்தியசாலைக்குச் செல்ல ஆயத்தமானுள் இப்போது அவளது மனது மிகவும் புனிதமாக இருந்தது. அங்கு எவ்வித ஆபாசத்திற்கும் இடமிருக்கவில்லை.

சுடர் விளக்கு 123
ஆமாம்! இந்த ஒரு வாரப்போராட்டத்தில் அவள் சுயமாகச் சிந்தித்து ஒர் தீர்க்கமான முடிவுக்கும் வந்துவிட் டாள். அந்த முடிவை அவன் மனதும் ஏற்றுக் கொண்டு விட்டது அவள் சங்கரை மறந்துவிட்டாள்.அவளைப்பொறுத்த வரையில் இனி அவளுக்கும் சங்கருக்கும் எந்தவித உறவும் கிடையாது. நடந்தவற்றை யெல்லாம் ஒரு துர்க்கனவாக தினத்து அவள் மறந்து விட்டாள்.
அன்று வைத்தியசாலையை அடைந்த சுமதி யாரிட மும் எந்தவித பேச்சுக்கும் இடம் வைக்காமல் தனது "வாட்' நர்ஸையும் அழைத்துக்கொண்டு நோயாளிகளைப் பார்வை யிடச்சென்ருள். பல நாட்களுக்கப்புறம் தன் நோயாளிக ளைப் பார்க்கப்போகிருேம் என்கிற உணர்ச்சி சுமதியின் உள் ளத்திற்கு உவகையூட்டியது.
நேராகத் தன் அறைக்குட் சென்ற சுமதி அங்கே தயாராகத் தன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த விபரங்க ளடங்கிய நோயாளிகளின் ஜா பிதா வைப் படித்து விட்டு தன் வார்டுகளைப் பார்வையிடச்சென்ருள். அங்கே எதிர் பார்க்காத ஒரு பேராச்சரியங் காத்திருந்தது அவளுக்கு. ஒருவேளை மனப்பிராந்தியாக இருக்குமோ என்ற எண்ணணத் தில் தன் மேலங்கியிலிருந்த கைக்குட்டையை எடுத்துக் கண் களைத் துடைத்து விட்டுப் பார்த்தாள். அப்போதுதான் அது மனப்பிராந்தியல்ல; நிஜக்காட்சிதான் என்பது அவளுக்குப் புரிந்தது. ஆமாம்; அங்கு நோயாளிகளைப் பரீட்சித்துக் கொண்டிருந்தான் பூரீதர். சுமதி அதிர்ச்சி யடைந்தவளாக ஆச்சரியந்தாங்காமல் பூரீதரிடம் சென்று ‘என்ன டாக்டர் ! இவ்வளவு சீக்கிரம் நீங்கள் வருவீர்களென்று நான் எதிர் பார்க்கவேயில்லை. அருமை மனைவி பிரிந்த தால் எப்படியாவது இரண்டு வாரங்களாவது ‘லிவு எடுப்பீர்கள் என நினைத் தேன். நிச்சயமாக நீங்கள் இன்னும் சில நாட்கள் ஒய் வெடுத்திருக்கலாம் ?
சுமதி பேசிக்கொண்டே போனள். பூரீதர் எதையுமே கேளாதவன் போல் தன் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
“என்ன டாக்டர், நான் என் பாட்டிற்கே பேசிக் கொண்டிருக்கிறேன். நீங்கள். முடிக்காமலே அவள் பொய்க் கோபத்துடன் பூரீதரைப் பார்த்தாள்.
'நீ பேசி முடியட்டும் என்றுதான் மெளனம் சாதித் தேன். நீ பேசி முடிந்தாய் விட்டதல்லவா. இன்னும் ஒரு சில நிமிடங்கள் மட்டும் பொறுத்திரு. இந்த நோயாளி

Page 65
24 சுடர் விளக்கு
களைக் கவனித்துவிட்டு வந்து விடுகிறேன்’ என்று சாதா ரணமாகவே கூறிவிட்டு பூரீதர் மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினன்.
சுமதியும் தன் நோயாளிகளைப் பரீட்சிக்கத் தொடங்கி ணுள். இருவரும் வேளை முடிந்ததும் அங்கேயுள்ள ஓர் பிரத்தி யேக அறைக்குட் சென்று அமர்ந்தார்கள். தன் கைக் கடிகாரத்திற் கண்ணுேட்டத்தைவிட்ட பூரீதர் ‘ஒ இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கு (பிளென்டி ஒவ் டைம் மோர்) என்று ஆங்கிலத்திற் கூறி "இதற்குள் பேசி முடிப்பதை யெல்லாம் பேசி விடுவோம். இவ்வளவு நேரமும் நீ பேச நான் கேட்டேன். இனிமேல் நான் பேசப்போகிறேன். கேட்பது உன் முறை. சரிதானே ..!" என்று சற்றுத் தயக் கமாகவே கூறிவிட்டு ஆரம்பித்தான்.
*சுமதி என்! அருமை மனைவி அருளுவைத் தப்ப வைக்க எவ்வளவோ பாடுபட்டேன். எல்லாமே விளலுக் கிறைத்த நீராய் விட்டது. மனித சக்தியை மிஞ்சிய காலன் அவள் உயிரைத் துடிக்கத் துடிக்கக் கவர்ந்து சென்று விட் டான். என்னுடன் அமைதியாக. ஆறுதலாக, அன்பாக ஒரு வார்த்தை பேசாமலே கண்ணை மூடி விட்டாள் அவள். அவள் போய் விட்ட பின் எனக்கு அங்கே என்ன வேலை .? 16களைப் பிரிந்து அல்லற்பட்டு ஆருத் துயருற்றிருக்கும் அவள் பெற்ருேருக்கு நான் ஒரு பாரமாக இருக்க வேண் டாம் என்றுதான் இவ்வளவு சீக்கிரமாகப் புறப்பட்டு வந் தேன். அருணுவின் அந்திமக் கடன்கள் யாவும் அழகாக முடிந்து விட்டன பாவம் பெண்ஜென்மம்! என் உள்ளத்தை மனநிலையை இன்னதென்றறியா பaலே என்ணுேடு இன்பமாக வாழ்வதாகக் கனவு கண்டு இவ்வளவு சீக்கரத்திற் தன் வாழக்கையையும் முடித்துக் கொண்டுவிட்ாள். அவளுக்காக நான் மிகவும் அனுதாபப்படுகிறேன் உள்ளத்தில் அவளுக் காக ஊருத அன்பை நான் என் உதட்டில் இருந்தே வார்த்து விட்டேன். அவள் என உண்மையான மனநிலையை அறிந் திருக்கவே நியாமில்லை. அவள் பட்டும் என்ன? ஏன் நீ கூடத்தான் என் மனநிலையை அறிந்திருக்க முடியாது. நான் வாழ்ச் கையில் அவளுக்கு எந்தவிதமான குறையுமே வைக்க வில்லை. பிறருக்குக்கூட என் உண்மை நிலை தெரிந்திருக காது. சுமதி! நீ கூட நான் இத்தனை நாளும் ஏதோ நிம்மதியாக வாழ்ந்து கழித்து விட்டேன் என்றுதான் நினைத்துக்கொண்டிருப்பாய் . ஆனல் நான் என் வாழ்க் கை. ம்! கூறத்தான் வேண்டும்

சுடர் விளக்கு 125
- - - حـے مع۔
ஆமாம்! சுமதி, உன்னையும் அருணுவையும் ஒருமித் துப்பார்க்கும் சமயங்களில் எல்லாம் என் மனம் படும் வேதனை. என் உள்ளத்திலே எழும் எண்ண அலைகள். மனப்போராட்டங்கள். அப்பப்பா இந்த வேதனைகளை எல் லாம் வெளிக்காட்டாமல் மற்றவர்களாவது இன்பமாக, நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் தா ன் நான் பஞ்சணை மெத்தையில் படுத்துறங்குவ தாகப் பாசாங்கு செய்தேன். அப்பாவிப் பெண்ணுன அரு ணுவை ஏமாற்றி அவள் வாழ்வைப் பாழடித்த தற்காகப் பல முறை நான் எனக்குள்ளேயே ஏங்கி ஏங்கி இதயம் வெடித்ததுமுண்டு இவ்விடத்தில் பூரீதர் சற்று நிறுத்தினன். சுமதிக்கு தலையெல்லாம் சுற்றியது. சற்றுமுன் அவ ளுக்கு இருந்த நிம்மதி, மகிழ்ச்சி எல்லாமே எங்கோ ஓடி ஒழிந்து கொண்ட6ள். அவன் அவனைக் கோபத்துடன் நோக்கி 'டாக்டர் நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?’ என்று சற்று ஆத்திரத்துடனேயே கேட்டாள்.
பூரீதர் அவளை அமைதியாகப் பார்த்தான். "பயப்ப டாதே சுமதி அமைதியாக இரு டாக்டருக்கு மனைவியைப் பறிகொடுத்த துக்கத்தில் பைத்தியமே பிடித்து விட்டதாக் கும் என்றுகூட நீ நினைப்பாய் எதற்காக இவர் இதையெல் லாம் என்னிடம் கூறவேண்டும் என்று உன் மனம் ஏங்கும். அதற்காகத்தான் உன்னை மிகவும் பொறுமையாக இருந்து முழுவதையும் கேட்கும்படி வேண்டுகிறேன்
சுமதி! ஒரு காலத்தில் உன்னை நான் எவ்வளவு தூரம் விரு ம் பி னே ன் என்பதை நான் கூறி நீ அறிய வேண் டியதில்லை. என் மனைவி இறந்து இன்னும் முற்ருக ஒரு வாரங் கூடச்செல்ல வில்லை. அதற்குள் இவர் ஏன் இப்படிப் பேசுகி ருர் என்று உன் மனம் வாதஞ் செய்யும் அருவருக்கும். என் மனைவியுடன் வாழ்ந்த இந்த ஈராண்டு வாழ்க்கையிலும் நீ என் மனதை விட்டு அகன்றிருத்தாற்தானே இப்போது நான் உன்னை மீண்டும் நினைப்பதற்காகத் தப்பபிப்பிராயங் கொள்ளலாம் இவர் எதற்காக இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிருர், முன்போலவே ‘என்னை இப்போதாவது ஏற்றுக் கொள்கிருயா சுமதி" என்று கேட்டு நெஞ்சுத் துணிவிருந் தால் அதற்கு நான் கொடுக்கும் பதிலையும் ஏற்றுக் கொள்வது தானே. என்று உன் உள்ளம் தர்க்கம் செய்யும். ஆனல் எனக்கு அந்த எண்ணமேயில்லை சுமதி உனக்கே அந்த விருப்பம் இல்லாதபோது என்னை மணந்து கொள் என்று உன்னை நான் ஒருபே தும் வற்புறுத்த மாட்டேன். தெய்

Page 66
26 சுடர் விளக்கு
வத்தின் அருள் கிடைக்க வில்லையே என்பதற்காக உண் மையான பக்தன் இறைவனை மறந்து வாழ்ந்துவிட முடியுமா? நானும் உன் பக்தன். நீ.நீ. ஆமா! நீ எனக்குத் தெய்வம் போல, உன்னை வலோற்காரப் படுத்த மாட்டேன். இது சத்தியம் !"இந்த வார்த்தைகளைக்கேட்ட சுமதிக்கு மனதில் ஏற்கனவே நிரம்பியிருந்த துன்பம் கண்ணிராகப் பிரவாக மெடுத்து மளமளவென்று கன்னங்களை நனைத்தது.
'சுமதி எதற்காக நீ அழுகிருய் ? நீ அழக்கூடாது சுமதி.நீ அழுவதைப்பார்த்துக் கொண்டும் என்னல் பொறு மையாக இருக்க முடியாது. நான் பேசுவது உனக்கு வேத னையாகத்தான் இருக்கும் நான் உன்னை விரும்புகிறேன் சுமதி ! என் உயிரிலும் மேலாகப் போற்றுகிறேன். என் அன்பு சுயநல மற்றது. ஒரு அழகான மலரைக் கண்டால் அதைப் பறித்து முகர்ந்து கசக்கி வீசுவதல்ல அதன்மேற் கொண்ட பிரேமை. அது எங்கே இ கூந்தாற் சோபிக்குமோ அங்கே வைத்து அதன் அழகைப்பருக வேண்டும். அதுதான் உண்மையான காதலின் தத்துவம் !
அதைத்தான் நான் உனக்கும் கூறவந்தேன் நான் நேற்றுக்காலை சங்கரைச் சந்தித்தேன். அவன் என்னிடம் ஒன்றுவிடாமல் நடந்தது முழுவதையும் நடந்தபடியே கூறி ஞன் அவனுக்கு ஒரளவுக்கு என் மனநிலையும் தெரியும் தானும் ஒளிவு மறைவு இன்றி நீ கூட அவனைத்தான் திரு மணஞ் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறினேன். நீ பயந்த சுபாவமுள்ள அப்பாவிப்பெண் என்பது எனக்கு நன்ருகத் தெரியும். உன் நன்மையை விரும்பும் நான். நீ மஞ்சளும் குங்குமத்தோடும் வாழவேண்டும் என்று ஆசைப் படும் நான் உனக்குக் கூறும் புத்திமதி ஒன்றுள்ளது அது தான் நீ கண்டிப்பாக சங்கரை மணந்து மங்கலமான மண வாழ்வு நடத்த வேண்டுமென்பதே. எனக்காக நீ இதைச் சய்யவேண்டும் சுமதி. இது நான் உனக்குக் கடைசியாக இடும் அன்புக் கட்டளையாகவே ஏற்றுக்கொள். !’
கூறிவிட்டு சுமதியையே கண்வெட்டாமற் பார்த்தான் பூரீதர்,
"டாக்டர். 'விக்கி விக்கியழுதாள் சுமதி நீங்கள் எல் லாருமாகச்சேர்ந்தே என் துன்பத்தில் ன்ெ பங்காணத்துடிக்கி நீர்கள் முடியாது டாக்டர் முடியவே முடியாது. வேறு எதையாவது கேளுங்கள். ஆணுல் இதைமட்டும் தயவு செய்து கேட்காதீர்கள்",

சுடர் விளக்கு - - 127
*சுமதி ! பூரீதர் தான் அழைத்தான். குரலில் அன்பு தொனித்த போதும் அதிகாரம் ஆட்சிசெய்தது. நீ இப் போது மறுப்பதற்கு ஏற்ற காரணம் கூற முடியுமா..? உன்னை விட்டு உன் பிடிவாதம் என்றுமே அகலாது சுமதி ?"
"டாக்கர் 1* இடைமறித்தவள் சுமதிதான். உங்கள் விருப்பப்படியே இப்போது நான் கூறப்போகும் காரணங் களை சற்று அமைதியாக இருந்து கேளுங்கள். அதன் பின்பு நான் கூறுவதிற் தவறு இருந்தால் என்னைக் கண்டியுங்கள். என் வாழ்க்கையில் இதுவரை யாரிடமும் கூருத பரம இரகசியத்தை இன்று முதன் முதலாக மனந்திறந்து உங்க ளிடந்தான் கூறப்போகிறேன். இது பாது கா க் கப் பட வேண்டிய பரம இரகசியம் டாக்டர்.ம் !" ஒரு பெரு மூச்சுடன் சுமதி கூறுவதற்கு ஆயத்தமானுள். அவள் சொல் லப்போவதைக் கேட்கும் ஆவல் கண்களில் பிரதிபலிக்க நிமிர்ந்து உட்கார்ந்தான் பூரீதர்.

Page 67

21. நானென்னும் நிலை கெட்டு நாமாகும் தனிவாழ்வு
ஏதோ திடீரென நினைத்துக்கொண்டவள்போல் பூரீத ரையே சில நிமிடநேரம் கண் வெட்டாமற் பார்த்திருந்த சுமதி கூறத் தொடங்கினுள். 'டாக்டர் நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத நிலையைப் பார்த்து என் கடந்த கால வாழ்வை நீங்கள் மதிப்பிடுவதாக இருந் தால் அது முற்றும் த வருன ஒர் முடிவாகும். நான் டாக் டராக வெளியேறும்வரை பட்ட கஷ்டங்களும், சிறுமை களும் சொல்லி முடியாது பல நாட்கள் ஒரு நேர உண வாகும், சில நாட்கள் வெறும் வயிற்றேடு பட்டினி கிடந் தும் நாங்கள் கஷ்டப்பட்ட நாட்கள் அநேகம். அப்போது இப்படியான ஒரு உயர்ந்த நிலை எனக்குக் கிடைக்கும் என்று நான் கனவே காண வில்லை. தகப்பனற்ற ஒரு குழந் தையை அதுவும் பெண்ணுகப் பிறந்த ஒரு ஜீவனை கை யில் ஒரு சதக் காசுமின்றி, பிறர் உதவியும் இல்லாமல் மானத்துடன் உழைத்துப் படிக்கவைத்து ஒரு டாக்டராக் குவதென்ருல் தாயொருத்தி எத்தனை தூரங்கஷடப்பட்டிருப் பாள் என்பதை டாக்டராக இருக்குந் தங்களுக்கு நான் எடுத்துக் கூறத்தேவையில்லை. ஆமாம் டாக்டர்! என் தாய் உழைத்து உழைத்து உடல் ஓடாகும்வரை உருக்குலைந்து நோய்வாய்ப் பட்டாள். கடைசியில் தான்பட்ட கஷ் டத்தினல் ஏற்பட்ட பலன் சுகத்தை அனுபவிக்கு முன்பே கருணையற்ற காலன் என் தாயாரின் உயிரைக் கவர்ந்து கொண்டான் டாக்டர்." இவ்விடத்தில் துக்கந்தாழமாட் டாது சுமதி கேவிக்கேவி அழுதாள்.
* சுமதி. உனக்குக் கஷ்டமாக இருந்தால் சொல்ல வேண்டாம்! அவள் படும் வேதனையைப் பொறுக்கமாட் டாமல் இடைமறித்தவன் பூரீதர்தான்.
தன் கைக்குட்டையால் கண்ணிரை ஒற்றிவிட்டு சுமதி தொடர்ந்தாள். * சொன்னலும் வேதனை சொல்லாவிட்டா லும் வேதனைதான்; கேளுங்கள் டாக்டர். என் தாயாரின் நிலை மிகவும் மோசமாகும்வரை நான் என்னைப்ப்ற்றி மிக வும் அறிந்திருக்கவில்லை, அறிந்துகொள்ள ஆசைப்படவும் இல்லை. காரணம். அப்படியான ஒரு குறையை நான் உணரக்கூடாது என்பதற்காக என் தாய் தன் உடல், பொருள் ஆவி அத்தனையும் எனக்காகவே அர்ப்பணிக்

Page 68
129 ܐ ܲ ܝܝ சுடர் விளக்கு
தாள். என் தந்தை நான் சிறுகுழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனல் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய மனநிலை என க்கு என்றுமே ஏற்பட்டதில்லை. அந்த ஆசை, தகப்பனில் லாத குறை என் மனதில் உதிக்காமலே நான் வளர்ந்து விட்டேன். அப்படி என்னை வளர்த்தவள், எனக்கு அரச போகத்தை ஏற்படுத்தியவள் என் அன்னைதான். அணுல் . ஆமாம் டாக்டர் ஆனல் என் தாயார் தன் உயிர் பிரி வதற்குச் சில மணி நேரத்தின் முன் என்னைத் தன் அரு கில் அழைத்து ஒரு இரகசியத்தைக்கூறி உயிர் விட்டாள் . அதைக் கேட்டபோது என் அன்னைக்காக நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இது வரை உதவியற்றவள் - ஒரு பால்ய விதவை என்ற குறைகளுடன்தான் என் அன்னை வாழ்ந்தாள் என்னை வளர்த்தாள் என்று நினைத்து நிம் மதியாக வாழ்ந்தேன். ஆனல் என் தாயார் கூறிய கதை யைக் கேட்டதும் அவள் இந்தப்பெரிய வேதனையை உள் ளத்திற் சுமந்து அதன் புழு ஒரு சிறிதும் வெளியே தெரி யாமல் வாழ்வதற்கு எவ்வளவு சித்திரவதைப் பட்டிருப் பாள் என்பதை நினைத்தபோது கதறி அழவேண்டும்போல் இருந்தது. டாக்டர். அப்படிக் கேவலமான மனப்போக் குள்ள தந்தைக்கு மகளாகப் பிறந்ததையிட்டு வேதனைப் பட்டேன்! வெட்கப்பட்டேன்!! என்னைப் பெற்றவர் மட் டும் அப்போது என் கண்முன் இருந்திருந்தால் என்ன நடந் திருக்குமோ .? இது என் வாழ்க்கையில் ஒரு திருப்பத் தையே உண்டாக்கிவிட்டது. என் தாயார் என்ன கூறி ஞர் என்பதை அறிந்து கொள்ள உங்களுக்கு மிகவும் ஆவ லாக இருக்கும். ஆமாம் டாக்டர் என் தந்தை; என்னைப் பெற்றவர்: என் அன்னையை இந்தக்கோர நிலைக்குள்ளாக் கியவர் இன்னும் உயிருடன் எங்கோ வாழ்ந்து கொண்டி ருக்கிருர் என்பதே அந்த அந்த இரகசியம்.'
*சுமதி.!" டாக்டர் பூரீதர் அளவு கடந்த மகிழ்ச் சியில் துள்ளிக் குதித்தார். “அவர் இப்போது எங்கே இருக் கிருர்? என்ன செய்கிருர் .? அவர் முகவரி என்ன ? எல்லாவற்றையுமே சீக்கிரம் கூறு. ரொம்ப நல்லதாகப் போய் விட்டது. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி..! நான் இப்போதே அவரிடம் சென்றுபேசி உனக் கும் சங்கருக்கும் திருமணத்தை ஜாம் ஜாம் என்று செய்து முடித்துவிடப் போகிறேன்’ பூரீதர் உணர்ச்சியோடு பேசி விட்டு சுமதியையே ஆவலோடு நோக்கினன். . . .

சுடர் விளக்கு 30
சுமதி அவனைப்பார்த்து ஒரு விரக்தியான புன்னகை யைத்தான் உதிர்த்தாள். நீங்கள் நினைக்கிறபடி எதுவு மே அத்தனை சுலபமாக நடந்து விடாது டாக்டர். என் தந்தை. கூறவே நாக்கூசுகிறது, ஆம்! அவர் இப்போது பல குழந்தைகளுக்குத் தந்தையாகத் திகழ்கிருர், ஆமாம்! ஒரு காலத்தில் என் தாயாரைக் காதலித்துக்; காதலுக்கா கத் தன் பெற்ருர், உற்ருர் யாவரையும் வெறுத்து ஒதுக்கி விட்டு, உன்னைவிட்டு இனிநான் பிரியேன்; இது இந்த அக் கினி சாட்சியாக உண்மை என்று பிராமணர் சுலோகம் ஒத, பெரியோர்கள் வாழ்த்த சட்டப்படி கைபிடித்த அந்தக் காதலி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த இன்நாளிலேயே மனங்கசந்து அவளைத் தள்ளி விலக்கிவிட்டுத் தன் பெற்ருே ரைச் சரணடைந்து அவர்கள் விருப்பப்படியே தன் உற வுப்பெண் ஒருத்தியை மணஞ்செய்து கொண்டாராம். அவர் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக அவர்மேல் வழக் குத் தொடரும்படி என் தாயாரை பலர் வற்புறுத்தியும் அவள் தான் நேசித்துக் கைபிடித்த ஒருவரின் இன்ப வாழ் வை நாசமாக்க விரும்பாமல், இருட்டைப் போக்கி ஒழி நல்கி ஈற்றில் தன்னையே மாய்த்துக்கொள்ளும் மெழுகு வர்த்திபோல தன் வாழ்வையே தியாகஞ்செய்து முடித்து விட்டாள். தனக்கு ஏற்பட்ட நிலை தற்செயலாக எனக்கு ஏற்படுங்கால் அந்தக் கொடுமையில் இருந்து தப்பிக்கொள் ளவே என்னை டாக்டருக்குப் படிக்கவைத்ததாகக்கூறி, நான் விரும்பியபோது விரும்பியவரைத் திருமணஞ் செய்து கொள்ள அனுமதியளித்த அன்னை, கூடவே எக்காரணங் கொண்டும் "உனக்காகத் தாய் தகப்பன ஒதுக்கி விட்டு வரும்ஒருவனுக்கு நீ மாலையிடக் கூடாது. இதுதான் நான் உன்னிடம் கடைசியாக வேண்டுவது சுமதி என் வாழ்க்கை உனக்கு ஓர் உாை கல்லாக அமையட்டும். திருமணத்தில் உனக்கு இஷ்டமில்லையென்ருல்; உன் வாழ்நாள் முழுவதை யும் என்னைப்போல் கணவனுற் கைவிடப்பட்ட காரிகை களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணித்துவிடு" என்று கூறிக் கண்மூடினுள். அன்று முதல் என் உள்ளத்தில் ஒரு திடசங்கற்பம் செய்துகொண்டேன். என்னல் முடிந்தவரை முயற்சித்து குடத்தினுள் விளக்காக இருந்து அணைந்து போன என் அன்னையின் ஒளி இந்நாடெங்கும் பரவி ஒளிவீச அதை ஓர் சுடர்விளக்காக்க வேண்டும். அதற்கு என் அன்னை யின் பெயரால் ஓர் அநாதை இல்லம் கட்டி அங்கு ஏழைப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புனர்ஜன்மம் அளிக்க வேண்டும், அதற்கு க ம லா ம் பி கை அநாத இல்லம்

Page 69
3. சுடர் விளக்கு
என்று பெயரிட்டு என் அன்னையின் பெயர் வழங்கிய பின் னேதான் என் திருமணத்தை யோசிக்கவேண்டும். இப் போது கூறுங்கள் டாக்டர் நான் கூறியதில் ஏதாவது தவறுண்டா..?"
* கேட்டுவிட்டுத் தலை குனிந்தாள் சுமதி.
சுமதி கூறியதையே மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண் டிருந்த பூரீதர் திடும் என்று ஏதோ யோசித்தவனுக இப் போது கூட என்ன சுமதி. ஒன்றும் குடிமுழுகிப்போய் விடவில்லையே . உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் “எதற்கும் தடையிராது. சங்கரின் பெற்ரு ரைச் சம்மதிக்க வைப்பது என்பொறுப்பு. இப்போது உன் முடிவு என்ன. ?’’ சாதிக்கமுடியாத எதையோ சாதித்துவிட்டமகிழ்ச்சியில் புன்னகை மேலிடச் சுமதியையே பார்த்தான் பூரீதர்,
சுமதிக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந் தது. அவளால் இதை நினைத்துக்கூடப் பார்க்க முடிய வில்லை. பூரீதரின் சுயநலமற்ற தெய்வீக அன்பை நினைத்து நினைத்து ஏங்கியது அவள் உள்ளம். ஆகவே உணர்ச்சி மேலிட "டாக்டர்!’ என்று அழைத்து 'உங்கள் மாசற்ற அன் புக்கு எப்படிக்கைமாறு செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் என்மீதுவைத்திருக்கும் உண்மையான அன்பு, களங்கமற்ற காதல், உங்களை இப்படியெல்லாம் பேசவைக் கிறது. சரி உங்கள் அபிப்பிராயப்படி அவர்கள் சம்மதித் தாலும் என் "சுடர் விளக்கு’ என்னுவது..? அதைச் சுமக்க ஒரு நிலையான ஆலயத்தை, ஒரு மண்டபத்தை நான் எப் படிக் கட்டிமுடிக்க முடியும்.'
** அதையும் சங்கரைக்கொண்டு செய்து முடித்து விடு வதாக நீங்கள் கூறலாம். நிச்சயமாக சங்கர் என்னிடம் வைத்திருக்கும் , அன்பின் நிமித்தம் இதைச் செய்துமுடிக் கத் தயங்கமாட்டார். எனக்காகப் பெற்றுப் பாலூட்டிச் சீர்ாட்டி வளர்த்த தன் பெற்ற ரையே ஒதுக்கித் தள்ளி விட்டபோது கேவலம்! இந்தப்பணம் அவருக்கு எம்மாத் திரம்..!' -
அவருக்காக நான் ரொம்பவும் அனுதாபப்படுகிறேன் *ாக்டர். அவர் மிகவும் நல்லவர், அன்புக்காக எதையும்

சுடர் விளக்கு - 32
தியாகம் செய்யக்கூடிய ஒரு உத்தமர் என்மேல் கொள் ளை கொள்ளையாக அன்பைச் சொரியும் ஒரு பச்சிளங் குழந்தையுள்ளம் படைத்தவர். எனக்காக அவர் எதை யும் செய்வார். , அந்தப் பலவீனத்தை நாம் சாதக மாக்கிக் கொள்ளலாமா. ?” . . . 'i, அதுமட்டுமல்ல டாக்டர். என் தாயார் பிறர் உதவி யின்றி என்னைப்படிக்க வைத்து டாக்டராக்கிய படியாற் தான் இன்று நானும் பெருமையுடன் ஒரு டாக்டர் என்று சுறிக்கொள்ள முடிகிறது. அதேபோல என் தாயாருக்கு நான் செய்யும் இந்தக் கைங்கரியத்திலும் மற்றவர்கள் பங்கு கொள்வதோ உரிமை கொள்வதோ எனக்கு இஷ்ட மில்லை. அது சுயமாக என்னுல் நிர்மானிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.”
"பரவாயில்லே அதற்குக்கூட நான் ஒரு மாற்று மரு ந்து கூறுகிறேன். சரி காதல் என்பதற்கு சரியான அர்த் தம் என்ன சுமதி .?’ கேட்டுவிட்டுச் சுமதியையே குறும் பாகப் பார்த்தான் பூரீதர்.
சுமதிக்கு முகம் எல்லாம் வெட்கத்தினற் சிவந்தது. ஏதாவது கூறிவைக்க வேண்டுமே என்பதற்காக "எனக்குத் தெரியாது டாக்டர்" என்ருள் சுருக்கமாக. s
"ரீதர் சிரித்தான். “பொய், சுத்தப்பொய்! அப்படி யானல் நீ சங்கரைக் காதலிக்கவில்லை. А Р
e a W II e r * ar e a e a
'உன் மெளனமே பதிலாகி விட்டது சுமதி. உன க்குக் காதலிக்கத் தெரியும்! ஆனல் அதை விளக்கத் தெரிய வில்லை. காதலுக்கு உடல் உறவு அவசியமே இல்லை. உள் ளங்கள் நினைத்தால், விரும்பினல், காதலுடனேயே வாழ் ந்துவிடலாம். கலியாணம் என்பது வீண் சம்பிரதாயம். உண்மைக்காதலுக்கு அது அவசியமே இல்லை சுமதி. காத லில் உயிர் உயிரோடு கலந்து விடுகிறது. அப்போது "நான் என்பதற்கு அங்கு இடமே இல்லை. நாம் ஆகிவிடுகிறது. நாமில் இரு உயிர்கள் கலந்திருந்தாலும் இருப்பது ஒர் உயிர்தான். ஆகவே காதலர்கள் இருவரும் ஒருயிரைப் பகிர்ந்து கொள்ளுகிருர்கள்.'

Page 70
133 சுடர் விளக்கு
•هي
*உண்மையான காதலன் தன் காதலி சந்தோ ஷமாக இன் பமாக, நிம்மதியாக வாழ்வதைத்தான் விரும்புவான். கார ணம் காதலியின் உயிரும் அவனிற்பாதிதானே! அந்த உயிர் கண்ணிர்விட அவன் எப்படி நிம்மதியாக வாழமுடியும்.? சுற்றிவளைக்காமல் உன்னிட்ம் நான் கூறுவது அந்தப் புண் னிய கைங்கரியத்தை வேறுயாருமே செய்யவேண்டாம். என் அன்பின் காணிக்கையாக நானே செய்து விடுகிறேன் சுமதி. எனக்கு அனுமதி கொடு.!
* டாக்டர்..!" உணர்ச்சிப்பெருக்கால் அலறிய சுமதி தலையைத் தன் இரண்டுகரங்களுக்கும் நடுவிற் குவித்து விக்கி விக்கி அழுதாள், 'சுமதி. ஏன் அழுகிருய்.. ? உனக்கு என்ன நடந்து விட்டது ? உன் கண்ணிலிருந்து ஆனந்தக்கண்ணிரைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். !' *றுரீத்ர் என் சுமதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்க களைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்பீர்கள். நிறைவேருத ஆசை.” தலைவிரி கோலமாகப் பயித்தியக் காரனைப்போல் அவ்வறைக்குள் திடீரென நுளைந்த சங்கர் சுமதியின் நிலைகண்டு பரிதவித்து பூரீதரின் தோளைப் பிடித்து உலுப்பிக்கேட்டான். பேசும் சக்தியற்று புன்முறுவலுடன் அவனைப் பார்த்துக்கொண்டே நின் முன் பூரீதர்!
 

22. ஒட்டாது ஒருபோதும்
வெட்டிவிட வேண்டுமையா !
பூரீதரின் மெளனம் சங்கரின் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்தது. ஆகவே அவன் அதுவரை அழுதுகொண்டி ருந்த சுமதியின் பக்கம் திரும்பி 'சுமதி நீ எதற்காக அழ வேண்டும்? இதோ நான் உன் பக்கத்தில் இருக்கும்போது நீ அழக்கூடாது! அழவே கூடாது சுமதி!' கூறியபடியே உணர்ச்சி மேலிட்டவணுக அவள் இரு கரங்களையும் இறுகப் பற்றித் தேற்றமுயன்றன். சுமதி திடுக்கிட்டவளாய்த் தன் இரண்டு கைகளையும் அவன் பிடியினின்றும் விடுவித்து அவ னைக் கோபக்கனல் தெறிக்கும் கண்களாற் பார்த்து 'டாக் டர் இனிமேல் என் அனுமதியின்றி என்னைத் தொடவே கூடாது. இன்று இரண்டாவது முறையாக நீங்கள் இந்தப் பெரிய தவறைச் செய்துவிட்டீர்கள். ஆண்கள் தவறிழைக் கும் இப்படியான சந்தர்ப்பங்களில் பழிவாங்கப்படுவது பெண்கள்தான். அது இயற்கையாகவே எற்பட்ட நியதி யாகிவிட்டது. இந்நிலையில் பெண்கள் பாதுகாப்பாக நட ந்துகொண்டால் மனக் கசப்புகளுக்கும் தப்பபிப்பிராயங் களுக்கும் இடமிருக்காது. நானும் ஒரு பெண் என்ற முறை யில் இதை உங்களுக்கு நினைவூட்டவேண்டியிருக்கிறது." என்று தன் மனதில் உதித்ததை ஒளிவு மறைவு இன்றிக் கூறியேவிட்டாள்.
சங்கர் திடுக்கிட்டான். சுமதி இப்படித் தன்னைச் பூரீதர் எதிரில் அவமானப்படுத்துவாளென்று அவன் கனவு கூடக் காணவில்லை. ஆமாம்! அவனைப் பொறுத்தவரையில் இது அவனுக்குப் பெருத்த அவமானமாகவே பட்டது. அவன் அவளைச் சற்றுக் கோபத்தோடு பார்த்து " சுமதி நீ தானு பேசுகிருய்...? உன்னைத்தான் கேட்கிறேன் சுமதி. இல்லை டாக்டர் பூரீதரின் உபதேசமா..? பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று கூறுவார்கள் ஒரு பழமொழி. காலையில் எனக்காகப் பரிந்துபேசிய பூரீதர் இப்போது உனக்கு உபதேசம் செய்ய வந்துவிட்டாராக்கும்? அப்படி யானவர்களுக்குத்தான் இது காலம்? என்ன நேர்மையற்ற உலகம்!"
“டாக்டர்.! இதுவரை கதிரையில் அமர்ந்து தன் தலையை இரு கைகளாலும் தாங்கிப்பிடித்திருந்த சுமதி தான் வெகுண்டெழுந்தாள். நீங்கள் வாயில் வந்தபடி

Page 71
135 சுடர் விளக்கு
யெல்லாம் பேசுகிறீர்கள். இன்னும் உங்களால் டாக்டர் பூரீதரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவராக இருக் கிறபடியால் இதுவரை நீங்கள் சுமத்திய பழிகளைக் கேட் டுப் பேசாதிருக்கிருர், வேறு யாராகவாவது இருந்தால் இப்போது உங்கள் கன்னம் சிவந்திருக்கும். கடந்த இர ண்டுமணி நேரமாக அவர் உங்களுக்காகத்தான் என்னு டன் வாதாடிக்கொண்டிருந்தார். தன் மனைவி இறந்த தைக்கூட மறந்து ஒரு நண்பனின் நல்வாழ்வுக்காகப் பாடு பட்டார். ஆமாம் இதுவரை அவர் என்னிடம் உங்களைத் திருமணஞ் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் உபதே சம் செய்துகொண்டிருந்தார். அதற்கிடையில் நீங்கள். ஆமாம்! நீங்கள் எங்களிருவரையும் தனியாகப் பார்த்ததும் சந்தேகப்பட்டுவிட்டீர்கள். அதற்குக் காரணம் நீங்கள் என்மேற் கொண்டிருக்கும் அத்யந்த பாசமோ அல்லது சில ஆண்களுக்கே உரித்தான சந்தேகக் குணமோ எனக்குத் தெரியாது. 'நீ முதலிற் குறிப்பிட்டதுதான் சுமதி.” சிரித்துக்கொண்டே இடைமறித்தது டாக்டர் பூரீதர்தான். "டாக்டர் இப்போது நீங்கள் உங்கள் தவறுக்காக டாக்டர் பூரீதரிடம் மல் னிப்புக் கேளுங்கள். அதுதான் அந்த உத்தமரை அப்படிப் பேசியதற்கு ஏற்ற பிராயச் சித்தமாகும்! கூறிவிட்டு சுமதி மெளனமானஸ்.
சங்கருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை; தான் விட்டதவறு அவனுக்கு நன்ரூகப் புரிந்தது. அவன் மிகவும் அமைதியாக பூரீதர் பக்கம் திரும்பி "டாக்டர் என்னை மன்னித்துவிடுங்கள். என் மன நிலை சரியாக இல்லை. அதனுல் வாயில் வந்தபடி ஏதோ பேசிவிட்டேன். என்னை மன்னிப்பீர்களா டாக்டர்..? சங்கர் பூரீதரின் கரங்களை இறுகப் பற்றியபடி மன்னிப்புக் கோரினன்.
பூரீதருக்கு அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந் தது. சங்கரின் முதுகைப் பரிவோடு தடவிக்கொடுத்த பூரீதர் ‘சங்கர் நீங்கள் மிகவும் மனங்குழம்பிய நிலையில் இருக்கிறீர்களென்பதை உங்கள் தோற்றமே எடுத்துக் காட்டுகிறது. ஏன் இப்படி இருக்கிறீர்கள். என்ன நடந் தது..? எதையும் ஒழியாமல் என்னிடம் கூறுங்கள். முடிர் தவரையில் உங்களுக்கு உதவ நான் காத்திருக்கிறேன்" கேட்டுவிட்டு அவனையே பரிவோடு நோக்கினன் பூரீதர்.

சுடர் விளக்கு 136
சில நிமிடநேரம் ஏதோ சிந்தித்துவிட்டு 'டாக்டர்! நான் அம் மா வோ டு சண்டைபோட்டுவிட்டு வீட்டை விட்டே வெளியேறிவிட்டேன். பெரியப்பாவும் இன்றுகாலை திடீரென வந்துவிட்டார். வந்ததும் நான் வாஸந்தியைத் திருமணஞ் செய்துகொள்ளவேண்டும் என்று என்னுடன் வாதாடினர். கடைசியில் அதை ஒரு கட்டளையாகவே ஆக்கி விட்டார்’ அவருடைய சொல்லுக்கு நான் அதிகம் மதிப் புக் கொடுப்பவன் என்பது அப்பாவுக்கு நன்முகத் தெரி யும். பெரியப்பாவின் சொல்லை மீறவும் முடியாமல் ஏற். கவும் முடியாமல் வீட்டைவிட்டே வந்துவிட்டேன். அவர் கள் என்னைப் பின்தொடர்கிருர்கள். டாக்டர் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.? சுமதிமட்டும் துணி ந்து என்னை ஏற்றுக்கொள்வாளாயிருந்தால் இந்த நிமிடமே நாங்கள் இரகசியமாகச் சென்று எங்கள் திருமணத்தைப் பதிவுசெய்துகொள்ளலாம். ஏன்சுமதி. இப்போதாவது கூறு உன்னி. ம் இன்றுதான் என் வாய்திறந்து கேட்கி றேன் என்னைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம் மதமா ?' கேட்டுவிட்டு அவளிடமிருந்து வரும் பதிலை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தான் அவன். அவன் உள் ளத்தில் ஒரு இன்ப வேதனை. சுமதி சம்மதப்பட்டுவிட் டதுபோலவும், தாங்கள் பதிவுசெய்து தம்பதிகளாய்விட்ட படியால் தன்னைத் தொடர்ந்து துரத்தி வந்தவர்கள் யாவ ரும் குனிந்த தலையோடு திரும்பிவிட்டது போன்றதுமான ஒரு சிறு கற்பனை அவன் உள்ளத்தை உந்தித் தள்ள மீண் டும் சுமதியைப் பார்த்தான்.
» «) w ». I ND * *» d e o es e a 9
அங்கே நிலவிய மெளனம் அவனை உயிருடன் கொன்றது. "சுமதி உன்னைத்தானே கேட்கிறேன். பதில் சொல் சுமதி. டாக்டர் நீங்களாவது அவளிடம் கூறுங் கள் டாக்டர். சிறு குழந்தைபோல் பூரீதரிடம் கெஞ்சிய அவன் நிலை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
பூரீதர் வாய் திறக்கவில்லை. ஆனல் சுமதியை அவர் பார்த்த பார்வை அவளை வாய் திறக்கச்செய்தது. கண் ணில் இருந்து வழிந்தோடிய நீர்த்தேக்கம் மளமள" என அவள் கன்னங்களை நனேக்க அவள் சங்கர் பக்கந் திரும்பி “டாக்டர் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் உங்

Page 72
137 V சுடர் விளக்கு
களை நான் திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் கூறவேண்டியிருக்கி றது. இத்தனை நாளும் நாங்கள் இருவருமே ஏதோ ஒரு வித உறவில் மிகவும் நெருக்கமாகப் பழகிவிட்டோம். அதன் முடிவு எங்கள் இருவரையும் எங்கே கொண்டு நிறுத் துமோ என்பதை அறியாமல் அதைப்பற்றிய கவலையில்லா மல் கண்டபடி பழகியது எங்கள் இருவர்மேலும் குற்றந் தான். இதில் பெரிய குற்றவாளி நான்தான். ஒரு பெண் ணுக இருந்தும் என் ஆசை, அபிலாகூைடி, பாசம், நேசம் இவற்றைக் கட்டுப்படுததாமல் மனம் போனபடிக்குப் பழ கியது நான் செய்த இமாலயத் தவறு. அதற்காகத்தான் நான் உங்களிடம் இருந்து ஒதுங்கிவாழ நினைத்தேன். நினைத்தபடி எதுதான் நடந்துவிடுகிறது. நான் ஆரம்பத் திலேயே உங்களிடம் என் மன நிலையை எடுத்துக் கூறியி ருக்கலாம் கூற முயற்சித்தேன். முடிவு தோல்விதான். ஏதோ ஒரு சக்தி என்னைத் தடுத்துவிட்டது. அந்த சக்திக்கு என்ன பெயர் கொடுப்பது என்றே எனக்குப் புரியவில்லை. அதைச் சகோதர பாசம் என்று கூறி என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளவும் விரும்பவில்லை. அதைக் காதல் என்று அழைக்கவும் நான் விரும்பவில்லை. அது ஏதோ ஒரு தெய்வீக சக்தி என்றுதான் உணர்கிறேன். டாக்டர் நீங்கள் நினைத்தால், மனம் வைத்தால், என்மேல் வைத்த அன்பு சுயநலமற்றதாக இருந்தால் இதற்கு நிச்சயமாக ஒரு முடிவு காணலாம். என்னை மீறந்துவிடுங்கள். அது முடியாவிட்டால் என்னை உங்கள் சகோதரியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதுவும் முடியாத பட்சத்தில் நானே இவ் விடத்தைவிட்டுப் போய்விடுகிறேன். இதுதான் என் தீர்க்க மான முடிவு டாக்டர்.'
கூறிவிட்டுக்கேவிக்கேவி அழுதாள் சுமதி.
சங்கருக்கு இந்த வார்த்தைகள் நாரசம்போல் இருந் தன. அவனுல் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. சுமதி இப்படிக் கூறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே யில்லை. தன்னுடன் கூடக்குலாவித் தன்னை வஞ்சித்துவிட் டதுபோன்ற ஒரு பிரமை ஏற்பட்டது. அவனுக்கு 'ஹோ. என்று கதறியழவேண்டும்போல இருந்தது. இந்த இக்கட் டான நிலையில் இருந்து தன்னைச் சமாளிக்க அவனுக்கு ஒரேயொரு வழிதான் புலப்பட்டது. சில நிமிடந்ேரம் அவன் செய்வதறியாது பக்கத்து மேசையில் முகம்புதைத்து

சுடர் விளக்கு 138 ۔۔۔۔۔
சிறு குழந்தைபோல விம்மினன். இந்த உலகத்தில் இருக் கவே பிடிக்கவில்லை அவனுக்கு. வாழ்க்கையே வெறுமை யாகியபின் வாழ்வும் சாவும் அவனுக்கு ஒன்றுதான். இத் தனை காலமும் அவன் கனவுகண்ட வாழ்வு கானல் நீரா கியபின் வாழ்வதில் அர்த்தமில்லையென்பதை உணர்ந்த அவன் திடும் எனத் தன் ஆசனத்தை விட்டெழுந்து அது வரை பத்திரமாகத் தன் சட்டைப் பைக்குள் மறைந்திருந்த கைத்துப்பாக்கியைக் கையில் எடுத்தான். இப் போ து அவன் நின்ற நிலையைப் பார்த்த எவரும் அவனை அசல் பைத்தியம் என்றே கூறுவார்கள். அவன் தன் கையிலிருந்த துப்பாக்கியுடன் சுமதியை வெறித்துப் பார்த்தான். அவன் பேசவேண்டிய தெல்லாவற்றையும் அந்தப்பார்வை கூறியது.
"ஐயோ சங்கர்.! சுமதி தன் நிலை மறந்து கூக் குரலிட்டாள். அதே நேரம் வெளியே இருந்து அவசர மாக உள்ளே நுழைந்துகொண்டிருந்த ஓர் உருவம் முது குப்புறந் திரும்பிநின்ற சங்கரின் கையில் இருந்த துப்பாக் கியை அவன் எதிர்பார்க்காத நிலையில் 'லபக்' என்று பறித்துக்கொண்டது. − ·
"சீதா. திடுக்கிட்டுத் திரும்பிய சங்கர் ஆத்திரத் திற் கூச்சலிட்டான். ஆமாம்! அன்று நேரத்தோடேயே தன் "டியூட்டி முடிந்து சுமதியைக் காணவந்த சீதா அவளை வார்டில் காணுது அறைக்குள் நுழையும்போது அங்கே கண்ட காட்சியில் இருந்து நடக்கப்போவதை ஒர ளவு ஊகித்து சங்கரின் கையில் இருந்த துப்பாக்கியைப் பறித்துக்கொண்டாள். வாசல்பக்கம் சங்கர் தன் பின்புறம் காட்டியிருந்ததால் சீதாவுக்கு தன் முயற்சியில் பெரும் வெற்றி கிட்டியது. அதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி! ஒரு திருப்தி!! வெற்றிப் புன்னகையுடன் அவள் சங்கரைப் பார்த்துநின்ற சமயம் பின்புறமாக இரண்டு மூன்று கால டிச் சத்தங்கேட்டுத் திரும்பினர்கள்.
* யார் நீங்களா..! வாருங்கள். நல்ல சமயத்தில் வந் தீர்கள்" என்று அவர்களை வரவேற்ருன் பூரீதர். யாரெ ன்று பார்ப்பதற்காகத் திரும்பிய சங்கர் பேயறைந்தவன் போல் சிலையாகச் சமைந்துநின்றன். சீதாவோ துப்பாக்கி யைக் கெட்டியாகப் பிடித்தபடி வந்தவர்களைப் பார்த்து

Page 73
139 சுடர் விளக்கு
நின்ருள். சுமதி எந்தவித சலனமுமின்றி புதித்ாக வந்த வர்களைப் பார்த்தாள்.
‘இதெல்லாம் என்ன டாக்டர். இவனுக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது. ? சங்கரின் தந்தைதான் பூரீதரிடம் கேட்டார். அவரைத் தொடர்ந்து உள்ளே நுழைந்த பெரியவர் "எங்கே நீ கட்டப்போகிற பெண்ணை எனக்கும் கொஞ்சம் காட்டு, உன்னைக் கவர்ந்துகொண்ட அந்த அப்ஸ்ரஸ் நம்ப வாஸந்தியை விட எந்தவகையில் உயர்ந்தவள் என்று பார்க்கலாம்" என்று கேலியாகவே கேட்டார். அதைக்கேட்டு அங்கு அவருடன் கூட வந்த வாஸந்தியும் பார்வதியம்மாளும் வாய்விட்டே சிரித்தனர். அப்போதுதான் அவர்கள் எல்லாருமே தன்மீது படை யெடுத்து வந்துள்ளனர் என்பது சுமதிக்குப் புரிந்தது.
அங்கு வந்தவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவ்வ ளவுதான் அவள் உடலில் ஒரு இரத்தவெறி பெருக்கெடுத் தோடியது. அவள் தன்னை மறந்தாள். தன் சூழ்நிலையை மறந்தாள். சுருக்கமாகக் கூறிஞல் இப்போது அவள் மன திற் "டழிக்குப் பழி' என்ற சுலோகத்தைவிட மற்ற எல் லாமே மறந்துவிட்டது. அவள் கண்களில் வஞ்சம் தீர்க் கும் குரோத எண்ணம்ே பிரதிபலித்தது. வெறிபிடித்த வள்போல நின்றவள் திடீர் என அங்கேயொரு ‘பூட்ஸ்" சத்தம் கேட்டு சுயநினைவு பெற்ருள். அந்த உருவம் அவள் அருகில் வந்துநின்றது.
சுமதிக்கு தலை சுற்றியது. "சே.க. ர்' என்று நாக் குழற கீச்சிட்டு மூர்ச்சையானள்.
 

23. எல்லோரும் கூடி
எதை முடிக்க நினைத்தனரோ
மூர்ச்சையாகிக் கீழே விழப்போன சுமதியை தன் கைகளிற் தாங்கிப்பிடித்தான் பூரீதர். தன் செய்கை பிழை யோ சரியோ என்று அந்த நேரத்தில் அவஞற் சிந்தித் துப் பார்க்கமுடியவில்லை. தன் உதவிக்கு வந்த சீதாவின் துணைகொண்டு அருகில் இருந்த வாங்கில் அவளை மெது வாக வளர்த்திய பின்புதான் அவனுக்குத் தன் செய்கை யைப் பற்றிய தவறு புரிந்தது. திருமணமாகாத ஒரு பெண், தான் காதலித்த பெண், தற்போது அவ்விடத்தில் நின்ற சங்கரால் காதலிக்கப்படும் ஒரு பெண் தன் கைப் > பிடிக்குள் கொடிபோற் துவண்டதை அவனுல் மறக்க
முடியவில்லை.
தன் கைப்பிடிக்குட் துவண்டதை சுமதி அறிய நேர்த் தால் அவள் என்ன நினைப்பாளோ ன்ன்ற எண்ணத்தை விடத் தான் அவளைத் தாங்கிப்பிடித்ததை சங்கர் எப்படி அர்த்தஞ் செய்துகொண்டானே என்ற எண் ண ந் தா ன் அவன் உள்ளத்தை அதிகம் உறுத்தியது. ஒரு கன்னிப் பெண்ணைத் தீண்டுவதற்கு ஒரு டாக்டருக்கும் மத குருவுக் கும் விதிவிலக்கு உண்டு என்றதை அவன் எப்போதோ அறிந்திருந்தான். அந்த நினைவு இப்போது அவனுக்குக் கை கொடுத்தது. ஆமாம்! இப்போது சுமதியின்முன் அவ னும் ஒரு சாதாரண டாக்டர் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம்கொடுப்பது பெரிய தவறு என்பதை அவன் உணர்ந்தான். அந்த உணர்வு ஒன்றே அவனை மனிதனுக்கிவிட்டது. அவன் யாரைப்பற்றியும். கவலைப்படவில்லை. அவனுள்ளே மனித உணர்ச்சி பெருக் கெடுத்தோடியது. -
அங்கு குழுமிநின்றவர்களை விழித்து 'இதெல்லாம் என்ன கூத்து. இது வைத்தியசாலை என்பதுகூட உங்க ளுக்கு மறந்துவிட்டதா ? இப்போது நான் நினைத்தால் உங்கள் யாவரையுமே போலீஸில் ஒப்படைக்கலாம். ஒரு அபலைப்பெண்ணை எல்லாருமாகச் சேர்ந்து எதற்காகச் சித் திரவதை செய்கிறீர்கள். நீங்கள் செய்வது நன்ருக இருக் கிறதா என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.'" என்று சற்றுக் கண்டிப்பாகவே பேசிய பூரீதர், சீதா பக்கந் திரு ம்பி "சீதா நீ சுமதிய்ைக் கவனி; அவள் விஷயத்தில் இனி

Page 74
4. சுடர் விளக்கு
என் அனுமதி இல்லாமல் எதுவுமே நடைபெறப்போவ தில்லை' என்ருன். அப்போதும் அவன் கோபம் அடங்கிய தாக இல்லை. அவன் கோபமெல்லாம் இப்போது அங்கே 'திடும்' என்று நுழைந்து சுமதியை இந்த நிலைக்கு ஆளாக் கிய சேகர்பக்கம் திரும்பவே அவன் சேகரைப் பார்த்து சேகர் நீ இப்போது இங்கு எதற்காக வந்து "திடுதிப் பென்று குதித்தாய்..? உன்னைப் பார்த்ததும் சுமதி பேயைக் கண்டவள்போல் மூர்ச்சையாகிவிட்டாளே. மனிதர்கள்கூட இப்படியான நிலைக்கு மாறமுடியும் என்பதை இன்றுதான் என்னுல் உணரமுடிந்தது என்று சுடச்சுடக் கூறினன்.
* டாக்டர் நான் ஒன்றும் திடுதிப்பென வரவுமில்லை, குதிக்கவுமில்லை. "சுமதி ஆபத்தான நிலை; உடனே வர வும் சங்கர்’ என்ற தந்தி கிடைத்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தேன். ஆனல் இங்கே நடப்பதோ..? எனக்கு ஒன்றுமே புரியவில்லை டாக்டர். எல்லாமே ஒரே குழப்பமாக இருக்கிறது.' கூறிவிட்டு சுமதியைப் பரிதாபத் தோடு பார்த்தான் சேகர். அளவுக்கு மீறிய ஆத்திரத் தில் பூரீதரின் இரண்டு கன்னங்களும் சிவந்தன. புருவங் கள் இரண்டும் துடித்தன. உடலெங்கும் ஒருவித நடுக் கம். துடிதுடித்த உதடுகளால் அவன் சங்கர் பக்கந் திரும் "நீங்களா இந்தத் தந்தியை அடித்தீர்கள் டாக்டர்.? என்று வினவினன். -
அதுவரை ஒரே குழப்பத்தோடு போராடிக்கொண் டிருந்த சங்கர் 'ஊஹ"ம்!’ என்ற ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு மெளனமானன். ' அதை நான்தான் அடித் தேன் .' நறுக்குத் தறித்தாற்போல் பதிலளித்தது சங் கரின் தந்தைதான். சேகர் தான் முதன்முதலாகச் சங்கரை ச் சுமதியுடன் சந்தித்தபோது அந்தத் தொடர்பை முளையி லேயே கிள்ளிஎறிந்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் சங்கரின் வீட்டு முகவரியை யாரிடமோ விசாரித்து பது ளைக்குப்போய் அங்கு சங்கரின் தந்தையைக்கண்டு தனக்குத் தெரிந்த அத்தனையையும் அவரிடம் கூறி தான் சுமதிக்கு சொந்த மைத்துனனென்றும் கூறிவைத்தான். அதஞற் தான் பரமசிவம்பிள்ளையும் தன் மகன் அந்த வலையில் விழு வதற்கு முன்பே ஒரு கால் கட்டைப் போட்டுவிட வேண்டு மென்று வாஸந்தி-சங்கர் திருமணத்தைச் சீக்கிரமாகவே
முடித்துவிடத் தீர்மானித்தார். ஆனல் அவர் போட்ட

சுடர் விளக்கு 142
திட்டம் தவிடுபொடியானது. அதன்பின் அவர் தயாரித்த சூழ்ச்சிக்கு ஒத்தாசையாக சேகர் இருப்பான் என்ற எண் ணத்திற்தான் அப்படியொரு தந்தியையும் அவன் கொடுத் திருந்த முகவரிக்கு அனுப்பியிருந்தார். இந்த விடயங்கள் பற்றி அவர் இதுவரை யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. எனவேதான் தன் சதி வெற்றியடையும் என்ற உன்னத நம்பிக்கையில் தான் தந்தியடித்த விடயத்தையும் வெளிப் படையாகவே கூறிவிட்டார்.
இதற்குள் சீதாவின் கண்காணிப்பில் விடப்பட்டி ருந்த சுமதியும் மூர்ச்சை தெளிந்து எழுந்து பக்கத்திலிருந்த மேசையின் ஒரத்தைத் துணைக்காகப் பற்றிக்கொண்டாள். அவளது உடல் நடுங்கியது. உள்ளம் வேதனையிற் சாம்பி யது. ஆத்திாத்தில் மார்பகம் விம்மித் தாழ்ந்தது. அவள் பேசும் சக்தியற்று ஒரு வெண்கலச் சிலைபோல அங்கே நடந்துகொண்டிருந்த நி க ழ்ச்சிகளை க் கண்வெட்டாமற் பார்த்து நின்ருள்.
"சங்கர்! உன் முடிவுக்காகத்தான் நாங்கள் யாவரும் எங்கள் வேலையையும் சிரமத்தையும் பாராமல் வதுளையில் இருந்து இவ்வளவுதூரம் இரவோடு இரவாகப் பயணம் பண்ணி வந்தோமடா..! பெற்ற தந்தை உன்னிடம் பிச்சை கேட்பதாகவே வைத்துக்கொள். இப்போதுகூட ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. உன் வாய் திறந்து வாஸந் தியைத் திருமணஞ் செய்துகொள்ள உன் சம்மதத்தைக் கூறு' என்று பரமசிவம் பிள்ளை தன் பிள்ளையிடம் பிச்சை கேட்டார். −
"அப்பா!' உச்சஸ்தாயியில் அந்த அறைக்கூன்ரயே பெயர்ந்து விழும்படி கத்தினுன் சங்கர். 'உங்கள் வாஸந்தி தேவலோகத்து ரம்பையாக இருந்தாற்கூட அவளை நான் திருமணஞ் செய்துகொள்ள முடியாது! முடியாது! முடி யாது!’ தன் எரிச்சல் தீரும் வரை கத்தினு ன். -
'சங்கர்! விளையாட்டு பிள்ளைமாதிரிப் பேசாதீர்கள். நீங்கள் கண்டிப்பாக வாஸந்தியைத் திருமணஞ் செய்து கொள்ளத்தான் வேண்டும்! விஞக என்னைச் சித்திரவதை செய்யாதீர்கள். அவள் உங்களுக்கு எல்லா வகையிலுமே ஏற்ற பெண். நீங்கள் அவளை மணந்து உங்கள் பெற்றர்

Page 75
143 சுடர் விளக்கு
விருப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். இது என் அன்புக் கட்டளை! அதுவரை சிலையாக நின்ற சுமதி மிகவும் அமை தியாகக் கூறினள்!
சங்கருக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. சுமதிதான இப்படிப் பேசுகிருள் என்பதை நினைக்கவே அவன் நெஞ்சம் வெடித்தது. " சுமதி எனக்குக் கட்டளை யிட நீ யார்..? என்னை வேறு ஒரு பெண்ணை மணந்து கொள் என்று நீ எப்போது கூறினயோ கூறுந் துணிவு உனக்கு எப்போது ஏற்பட்டதோ அந்த நிமிடத்தில் இரு ந்தே உனக்கு என்மீது இருந்த உறவு, உரிமை, பந்தம், பாசம் அத்தனையும் அற்றுப்போய் விட்டது. இனிமேல் எனக்காக - என் நன்மைக்காக நீங்கள் யாருமே கவலைப் படத் தேவையில்லை’ கோபத்தில் எல்லைமீறிப் பேசிய சங் கர் அதுவரை தன்முன் தேடுவாரற்றுக் கிடந்த துப்பாக் கியை எடுக்கக் குனிந்தான். அதற்குள் அவனை முந்திக் கொண்டது ஒரு மென் கரம். w
'சுமதி!' ஏககாலத்தில் பல குரல்கள் ஒலித்தன. சீதா, பூரீதர், சேகர், சங்கர் இத்தனைபேரும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் "சுமதி' என்றழைத்து செய்வதறியாது அப்படியே நின்றனர்” என்னை ஒருவரும் தடுக்காதீர்கள். யாராவது என்னை நெருங்கினல் அப்புறம் என்னையே நான் சுட்டுக்கொள்வேன். ஜாக்கிரதை' துப் பாக்கியுடன் அடிமேல் அடிவைத்துப் பின்னேக்கி நடந்தாள் சுமதி அவள் இப்போது வெறிபிடித்தவள் போல் யாருமே கிட்டவும் நெருங்கமுடியாத நிலையில் பயங்கரத் தோற்றத் துடன் நின்ருள். V.
அவளையே பார்த்துநின்ற வாஸந்திக்கு உட்லெல் லாம் உதறல் எடுத்தது. தன்னல் ஒரு பெருங்கொலையே விழப்போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே அவள் உடலின் ஒவ்வொரு அணுவும் வேதனைப்பட்டது. சுமதி அவள் மனக்கண்முன் தற்போது முற்றிலும் மாறியவளா கக் காட்சி தந்தாள். தான் மனதிற் கற்பனை செய்திரு ந்த சும்திக்கும் இன்று காணும் சுமதிக்கும் இடையிற் பெரிய வேற்றுமை இருப்பதை உணர்ந்த அவள் உள்ளம் சுமதிக் காகப் பரிதாபப்பட்டது. சுமதியின் முன் தான் மிகவும் இழித்தவளாகப் போய்விட்டது போன்ற உணர்வும் ஏற்

சுடர் விளக்கு 144
பட்டது. சுமதி இப்போது மிகவும் உயர்ந்த படியில் இருப் பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதும் அவள் என்ன நினைத் தாளோ திடும் என்று சுமதியின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து 'அக்கா என்னை மன்னித்துவிடுங்கள்! உங்கள் உயர் வான குணத்தைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒருவித உணர்வால் வாயில் வந்தபடி எல்லாம் பேசி உங்களை மிகவும் மன வருத்தத்துக்குள்ளாக்கிவிட்டேன். அத்தானை இனி நான் மணந்துகொள்ளப் போவதில்லை. அவர் அது தாபத்தின்பேரில் என்னை மணந்துகொள்ள முன்வந்தாற் கூட நான் இந்தத் திருமணத்திற்கு ஒருபோதும் உடன் படப்போவதில்லை. இனிமேல் என் முடிவை யாருமே மாற்றமுடியாது. அத்தான் உங்களுக்கே உரியவர். அவரை இனி நீங்கள் எந்தவிதமான தடையுமின்றி திருமணம் செய்து சந்தோஷமாக வாழுங்கள். இதுதான் இந்த அபலை யின் வேண்டுகோள்!’ என்று அங்கு குழுமிநின்றேரின் கண் களில் இருந்து நீர் வடியக் கூறினள். இவள் இப்படிச் செய்வாள் என்று எதிர்பார்க்காத சங்கரின் பெற்றேர் ஒருவரை யொருவர் பார்த்து விழித்தனர்.
வாஸந்தியின் பெருந்தன்மையைக் கண்ட சேகரின் மனச்சாட்சிகூட அவனே உலுப்பி உந்தித்தள்ளியிருக்கவேண் டும். அதுவரை மெளனமாக எதிலுமே கலந்துகொள்ளா மல் ஒரு பக்கமாக நின்ற அவன் 'சுமதி என்னையும் மன் னித்துவிடு. ஏதோ ஒரு மிருக வெறியில் அன்று ஏதோ பேசிவிட்டேன். இனிமேல் நீ எனக்கோர் அன்புச் சகோ தரி. அன்று அறியாமையால் நான் செய்த வாக்குறுதியை இன்று வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். நீ உன் விருப்பப் படியே டாக்டர் சங்கரை மணந்துகொண்டு சுகமாக வாழ வேண்டும் அம்மா! உன் துப்பாக்கியைக் கீழே போடு சுமதி!' என்று கல்லும் கனியும் குரலில் மொழிந்தான்.
சுமதிக்கு யார் பேசியதும் கேட்டதாகத் தெரிய வில்லை. அவற்றைப்பற்றி அவள் அக்கறை கொண்டதாக வுங் காட்டிக்கொள்ளவில்லை. முகம் வெளுப்பேற கையிற் பிடித்திருந்த துப்பாக்கி பிடித்தபடியே இருக்க எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் திடீர் எனத் தன் கையில் இருந்த துப்பாக்கியை சங்கரின் பெரியதந்தைமுன் நீட்டிக் குறிபார்த்து ‘இன்று இங்கே இரண்டு பீணங்கள் விழப்போகின்றன. ஒன்று அவர். மற்றது நான். பல காலமாகக் காத்திருந்த என் ஆசை இன்றுதான் நிறை

Page 76
145 சுடர் விளக்கு
வேறப்போகிறது. அவள் கூறிமுடிப்பதற்குள்ளாகவே அவள் கரத்தில் இருந்த துப்பாக்கி ‘டும் டுமீல்" என்று வெடித்தது. அங்கு நின்றவர்கள் ஐயோ! என்று கத்தினர். சங்கர் ‘பெரியப்பா!' என்று ஒலமிட்டான். வாஸந்தி தன் இரு கண்களையும் இறுகப் பொத்திக்கொண்டு " மாமா என்று அலறிஞள், ஆனல் யாருமே எதிர்பார்க்காத நிலை யில் ஒரு இமைப் பொழுதிற்குள் பாய்ந்து அவரைத் தன் பக்கத்தில் இழுத்துக் காப்பாற்றிவிட்டு அவர் முன்னிலையில் அவரை மறைத்தவாறே அடுத்த வெடியைத் தாங்குவ தற்கு ஆயத்தமாக நின்ருன் பூரீதர்.! பாய்ந்த குண்டு குறிதவறி எதிரேயிருந்த ஜன்னற் கண்ணுடியைத் துகள் துகளாக்கியது.
சுமதியும், பூரீதரும் இப்போது எதிரும்புதிருமாக நின்றனர். சுமதி பூரீதரைத் தன் எதிரிற் கண்டதும் அவள் கையில் இருந்த துப்பாக்கி பிடி நெகிழ்ந்து தானுகவே கீழே விழுந்தது. அவள் தன் கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு விம்மிஞள்.
*சுமதி ஏன் நிறுத்திவிட்டாய் சுடு! கடு சுமதி. உன் குண்டுக்கு இரையாக இதோ நான் ஆயத்தமாக நிற்கி றேன். எய்தவன் இருக்க அம்பை நோவதுபோல் குற்றம் செய்தவர் யாரோ இருக்க நீ அவரை எதற்காகச் சுட வேண்டும்.? உனக்கென்ன மூளை குழம்பிவிட்டதா..? பூரீதர் சற்று ஆத்திரத்துடன் பேசினன்.
சுமதி அவன் கேள்விக்குப் பதில் கூறவில்லை. அவன் பேசி முடித்ததும் அப்படியே ஒடிவந்து அத்தப் பெரியவரின் காலில் விழுந்து "அப்பா ! என்னை மன்னித்துவிடுங்கள்!' என்று உணர்ச்சி மேலிடக் கத்தினுள். அங்கு நின்றவர் கள் ஒன்றுமே புரியாமல் ஆச்சரியம் மேலிட்டவர்களாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துநின்றனர்.

24. சேர்ந்து நின்ற
சிறப்பான ஜோடிகள்
சங்கரின் பெரிய தந்தை என்றழைக்கப்பட்ட சிதம் பரப்பிள்ளை தன் வாழ்க்கையில் கடந்துபோன பல வரு டங்களை பின்நோக்கிப் பார்த்தார். அவரது முதல்த் திரு. மணமும், அப்போது கைப்பிடித்த அவர் மனைவி கமல மும் அவர் மனக்கண்முன் தோன்றினர். என்ன யோசிக் கிறீர்கள்..? என்னை ஒதுக்கி வைத்ததுபோல் உங்கள் மக் களையும் ஒதுக்கித்தள்ளிவிடலாம் என்று எண்ணுகிறீர்களா?. அது உங்களால் முடியுமா..? அவள் உங்கள் இரத்தத் தின் இரத்தம்! தன் உரிமையைப்பெருமல் அவள் இருக்க: மாட்டாள். குனிந்து அவளை எடுத்து ஆசீர்வதியுங்கள். நீங்கள் செய்த தவற்றையெல்லாம் நான் மறந்து விட் டேன்." அவர் எதிரில் கமலம் தோன்றிப்பேசுவதுபோன்ற ஒரு பிரமை. w − W
அதற்குமேல் அவர் சிந்திக்க வில்லை. சிந்திக்க முடி யவில்லை. அவளை அப்படியே குனிந்து எடுத்துத் தன் மார் போடணைத்து நாக் குழற நீ. நீ . நீ. கம. லத்தின். கமலத்தின் அவர் தடுமாற்றத்தை உணர்ந்த சுமதி ஆமாம்! நான் அவருடைய மகள். அதனுல் நீங்கள் எனக்கு அப்பா!, என்று கூறி அவர் மார்பில் முகம் புதைத்து தான் இத் தனை நாளும் பட்ட துன்பம் தீரும்வரை விக்கி விக்கி அழு தாள். தன் தந்தையைக்கண்டதில், அவர் அரவணைப்பில் இருப்பதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி இத்தனை காலமும் கண் டறியாத - உணர்ந்திராத ஒரு இன்பக் கிளுகிளுப்பு. அவள் உடலெங்கும் ஊற்றெடுத்தது. இந்த அரிய காட்சியைத் தன் தாய் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்பதை நினைக்க அவள் நெஞ்சம் ஏங்கியது, எப்படியெப்படியெல்லா மோ தன் தந்தையை வஞ்சந்தீர்த்துக் கொள்ள வேண்டு மென்று அவள் போட்ட திட்டமெல்லாம் இருந்த இடந் தெரியாமல் ஓடி மறைந்து விட்டன. அவர் தன் தந்தை; தன்னைப் பெற்றவர் என்ற உணர்வு அவளைக் கோளையாக் கிவிட்டது. அவள் பாசத்துக்குப் பணிந்துவிட்டாள். அன் புக்கு அடிமையாகி விட்டாள். உறவுக்கு உயிர் கொடுத்து விட்டாள். இப்போது அவள் ஓர் ஊமை! ஆமாம்! அவ ளுக்குத்தன் தந்தையை எதிர்த்துப்பேசமுடியவில்லை. அவளே நினைக்க அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பாசம் இத்தனை

Page 77
147. SSSLS LSSSS SSSSSSS SSqSq S TAAS SSLSLSS SS Sqqqqq SqS SLSS SLSLSSSqqqqqSSS qqSSS கடர் விளக்கு
வலிமையுள்ளதா..? அவள் தன்னைத்தானேகேட்டுக்கொண் டாள். s
தந்தையும் மகளும் ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி நின்ற காட்சி பூரீதரை உருக்கிவிட்டது. அவனுக்கு மற்ற வர் விளக்கமின்றியே எல்லாம் புரிந்துவிட்டது.
சங்கருக்கு ஆச்சரியத்தின்மேல் ஆச்சரியமாக இருந் தது. சிதம்பரம்பிள்ளை அவனுக்குப் பெரியதந்தையாக இருந் தால் சுமதி. ஆமாம் நிச்சயமாக சுமதி அவனுக்குச் சகோ தரியேதான். ஒரு வேளை அவள் தீர்க்கதரிசியோ. சங் கர் நான் உங்கள் அன்புச்சகோதரி! அவள் அன்று கூறி புது இன்று மெய்யாகிவிட்டது. ’சகோதரி! ஒரு தாய் வயிற் யிற் பிறக்காவிட்டாற் கூட எங்கள் இருவரின் பெற்ருே ரும் ஒரு தாய் வயிற்றில்ப் பிறந்தவர்களல்லவா. சட்டம் சிம்பிரதாயம்தான் ஒரு புறமிருந்தாலும் மனம் என்ற ஒன்று இருக்கிறதே...? தங்கை அண்ணனுக்கு மனைவியாவது..? சீ. கொடுமை! எம் தமிழ்ப் பண்பாட்டிற்கே இது ஒர் இழிவு! இனி இதுவரை நடந்து முடிந்தவற்றை ஒரு கசப் ப்ான ஒரு கனவாக எண்ணி மறந்து விடவேண்டும். நல்ல காலம்! எங்கள் உறவு இப்போதே தெரிந்தது. இல்லாமல் எங்கள் திருமணம் நடந்தபின் இந்த உறவு வெளிப்பட் டிருந்தால். எவ்வளவு கேவலமாக இருக்கும். இதனுல்த் தான் எல்லாம் நன்மைக்கு என்ற பழமொழிகூட ஏற்பட் டதோ: ஏதோ சிந்தித்த சங்கர் 'சுமதி நீ என் சகோதரி எங்கள் உறவை, பாசத்தை, அன்பை, இரத்தத் தொடர் பை இனி இறைவனே வந்தாலும் பிரிக்க முடியாது” என்று கூறி உணர்ச்சிமேலிட்டவனக ஓடிச்சென்று சுமதி யை இறுகத் தழுவிக்கொண்டான். இப்போது இருவரும் ஒருவரையொருவர் அன்பு விழிகளால் பார்த்துக் கொண் டனர். அந்தப் பார்வையிலேயே இப்போது வெறியில்லை. வேகம் இல்லை, துடிப்பு இல்லை, அந்த விழிகளில் தேங்கி நின்றது எல்லாம் சகோதரத்துவம்தான். பலநாள் பிரிந் திருந்த சகோதரர்கள் ஒன்றுபட்டுப் பிரிவதுபோலிருந்தது அவர்கள் ஒருவர் பிடியில் இருந்து ஒருவர் விடுபட்ட காட்சி.
"சங்கர் அதோ..!" புன்சிரிப்பும் குறும்பும் ஒருமித் துத் தவழ அங்கேஓருபுறம் செயலற்று நின்ற வாஸந்தி

சுடர் விளக்கு 148 - نظسس سلسسلت دلهٔ
யைத்தான் சுட்டிக்காட்டினுள் சுமதி. சங்கர் சிரித்துக் கொண்டான். அந்தச்சிரிப்பில் ஒருவித சலனமுமில்லை.
"ஊஹ"ம்! அத்தான் இனி எனக்கும் சகோதரர் தான். அவரை நான் திருமணம் செய்துகொள்ள முடி யாது. "ஏன் அத்தான் அப்படித்தானே...!" என்று கூறி விட்டு கபடமற்ற சிரிப்புடன் அவனை நோக்கினுள் வாசந்தி.
* அப்போ இப்படிக் கன்னியாகவே இருந்து விடலாம் என்ற எண்ணமாக்கும். இடையிற் குறுக்கிட்டார் பரம சிவம்பிள்ளை.
'உம்.? இம்.இல்லை. உங்களுக்குத் தடையில்லா விட்டால் நான்.நான். மிகுதியைக்கூறமுடியாத வெட் கம். இல்லை பயம் அவளை ஆட்கொண்டது.
"பரவாயில்லை கூறு வாஸந்தி",
உன் மனதில் இருப்பதை என்னிடம்சொல். நீ யாரை விரும்பினுலும் அவரை உன் கணவனுக்குவது என்பொறுப்பு கூறம்மா உனக்கு யாரை திருமணம் செய்துகொள்ள விருப். பம்.! பரசிவம்பிள்ளை அன்போடு அவளை விஞவிஞர். எல். லோர் கண்களும் இப்போ வாஸந்தியின்பக்கம் சென்று நிலை த்தன. அவள் மனதைக் கவர்ந்த மணுளன் யாராக இருக் குமோ என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆசை பரிணமித்தது அந்த விழிகளில், “அதோ அவரை..!’ கூறிவிட்டுப் பக்கத் தில் நின்ற சுமதியின் முந்தானைச் சேலைத்தலைப்பை இழு த்து வெட்கம் நிரம்பிய தன் முகத்தை மூடிக்கொண்டாள் வாஸந்தி. ..
இப்போது அங்கு நின்றவர்கள் அனைவரும் சேக ரைத் திரும்பிப் பார்த்தனர். சேகர் முகத்திற் புன்சிரிப்புத் தவழ தன் சிரத்தைத் தாழ்த்திக்கொண்டான். கடந்த ஒரு மணி நேரம் அங்கு நின்றபடியே வாஸந்தியின் விழிகளு டன் உறவாடிய அவன் விழிகளின் பாஷை அவனுக்கும் புரிந்திருக்கும் தானே..! அடேய்! பரவாயில்லையே ஜோடி! இதுதான் சரியான முறை. இந்த முறையை ஆரம்பத்தி லேயே கடைப்பிடித்திருந்தால் இத்தனை தொல்லைகளும், மர்மங்களும் நடந்திருக்காதல்லவா..?

Page 78
149 சுடர் விளக்கு
டாக்டர் பூரீதர் தனக்கே உரித்தான ஹாஸ்யத் தோடு கூறினர்.
"ஐயோ நல்லாச் சொன்னிங்க டாக்டர்! இப்படி யெல்லாம் நடக்காமல் இருந்தால்.ஐயோ! நான் என் அப் பா வைக் கண்டுகொண்டிருக்கவே முடியாதே." குழந்தை போல் சிணுங்கினள் சுமதி.
"அடேயப்பா ! பரவ. யில்லையே..! இந்த விடயத்தி லாவது நீ சுயநலக்காரியாக மாறினயே அது போதும், அதுவே நல்ல சகுனத்தின் அறிகுறி. ஆமாம்! ஒரு சந்தே கம் சுமதி. எடுத்த எடுப்பில் இவர்தான் உன் அப்பா என்று உனக்கு எப்படித் தெரிந்தது’ கேட்டு விட்டு அவள் பதிலையே ஆவலோடு எதிர்பார்த்தான் பூரீதர்.
அந்த விஞவை எதிர்பார்த்திருந்தவள் போல் நடு. மேசையில் கிடந்த தன் அழகான கைப்பையைத் திறந்து அதற்குள் பத்திரமாக ஒரு பட்டுத்தாளில் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரு சிறு புகைப்படத்தை எடுத்து நீட்டி ஞள் சுமதி. அதை வாங்கிப்பார்த்த பூரீதர் ஆச்சரிரியங் கலந்த விழிகளால் தன் எதிரே நின்ற சிதம்பரப்பிள்ளை யையும் படத்தையும் மாறி மாறிப்ப் பார்த்தான். ஆமாம்; அங்கே அவன் எதிரே சிதம்பரப்பிள்ளையின் இளமைத் தோற் றந்தான் அந்தப் படத்திலிருந்தது. ܢ
‘இந்தப் படத்தை என் தாயார் பல காலமாகப் பாதுகாத்துப் போற்றிவந்தது எனக்கே தெரியாது. அவள் இறக்கும்போதுதான் இதை என்னிடம் நீட்டி அப்பாவுக்கே சொந்தமான சில சிருஷ்டி வினேதங்களையும் கூறினுள். அப்பாவின் இடக்காலின் கடைசி இரண்டு விரல்களும் இணைந்துள்ளன என்பது ஒன்று. மற்றது அப்பாவின் கிராப் புக்கு அடங்காத கேசம் சீப்புக்கு அடங்காமல் எப்போதும் முன் நெற்றிக்குப் பாரமாக இருக்குமாம். அந்தக் கேசந் தான் அம்மாவை மிகவும் கவர்ந்ததாம். அந்தக் கேசத் தைப்போல பிடிவாதக்காரர்தான் உன் அப்பா என்று கண் கலங்கக் கூறினுள். பல முறை படத்தைப்பார்த்து பதியவைத்திருந்த என் மனமும் என் கண்ணும் அப்பா வைப் பார்த்ததும் புரிந்து கொண்டன. இப்போது நெற் றியின் அரைப் பாகத்தை மூடியிருக்கும் வெள்ளிக்கம்பிகள்

சுடர் விளக்கு . 篮50
போன்ற கேசம் என் சந்தேகத்தில் ஒரு பகுதியைத் தீர்த் தது. நல்லகாலம் அப்பா செருப்புமட்டுமே அணிந்திருந் தார். அதனல் காலையும் கண்டேன். அவர் என் அப்பா என்று நிச்சயமானதும் என் தாயார் பட்ட கஷ்டமும், விட்ட கண்ணிருந்தான் என் கண்முன்னே தெரிந்தது. அப் பா விட்ட தவறுதானே என் அம்மாவை ஏங்கி ஏங்கி உருக் குலைய வைத்தது என்ற எண்ணம் என்மனதை வெறிக்க ளமாக்கியது. நான் உணர்ச்சி வசப்பட்டேன். என்ன செய் கிறேனென்று சிந்திக்குமுன்பே சுட்டுவிட்டேன். நீங்கள் மட்டும் சமயோசிதமாக நடந்திராவிட்டால் நான் இந்நே ரம் தகப்பனைக்கொன்ற பாவி என்று. ஐயோ! எனக்கு நினைக்கவே பயமாயிருக்கிறது. அப்பா சுடப்படவில்லை யென்பது தெரிந்ததும் என் ஆத்திரம் பஞ்சாய்ப் பறந் தது. இரத்த பாசம்ஒன்றுதான் எஞ்சிநின்றது. அவர் அப்பா; நான் மகள் என்ற உணர்ச்சி பிறந்ததும் ஒடிச் சென்று அப்பா வைக் கட்டிக்கொண்டேன்." என்று பூரீதருக்கு விளக்கந்தந்தவள் தன் தந்தையின் பக்கம் திரும்பி 'அப்பா என்னை மன்னித்து விடுங்கள். மன்னிப்பீர்களா அப்பா?" என்று கண்கலங்க அவர் கரங்களைக் கெட்டியாகப் பற் றிக்கொண்டாள்.
சிதம்பரம்பிள்ளைக்குக் கண்ணில் நீர் முட்டியது. உணர்ச்சி வசப்பட்ட அவர் அங்கம் நடுங்கியது.
பெற்ற பாசத்தினுல் உந்தப்பட்டவராகத் தன் மகளே அணைத்து, "இல்லை அம்மா! நான் உன்னை மன்னிக்கவேண் டிய அவசியமேயில்லை. மன்னிக்கப்படவேண்டியவன் நான் தான் அம்மா' என்று அவள் தலையை வருடினர்.
'நடந்தது எல்லாவற்றையுமே ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விட்டு இனிமேல் நடக்கவேண்டியதைச் சிந்திப்போம்’ என்ருர் சங்கரின் தந்தை,
இப்போதுதான் பரமசிவம்பிள்ளை தனக்குச் சித்தப் பாவாக வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட சும "சித்தப்பா! சின்னம்மா!! என்னை மன்னித்துவிடுங்கள் என்று சேட்டு வனஜா வின் அருகில்ச் சென்று, அவளை அப்படியே வாரியணைத்து முத்தமிட்டு, பக்கத்தில் நின்ற வாஸந்தியை விழித்து பலே கெட்டிக்காரி. சேகர் நீ

Page 79
51 சுடர் விளக்கு
என்னை வெருட்டியதுபோல வாஸந்தியைமட்டும் வெரு ட்ட எண்ணுதே! அப்புறம் அவள் உன்னை விட்டு வைக்க மாட்டாள். ஜாக்கிரதை ஆமாம். என்று புன்னகையும் குறும்பும் கலந்த தொனியில்க் கூறினுள்.
அவளுக்கு அப்போதுதான் தேடுவாரற்று ஒருபுற மாக ஒதுக்கப்பட்டவள்போல் நின்ற சீதாவின் நினைவு வந்தது. அவள் சிரித்துக்கொண்டே சீதாவின் பக்கம் திரும்பி "ஹலோ சீதா ! என்ன இப்படிப் பேசா மடந்தை போல் நிற்கிறீர்கள். சேரவேண்டியவர்கள் எல்லோரும் சேர்ந்தாய் விட்டது. நான் தனித்துவிட்டேன் என்ற எண் ணமாக்கும். அப்படியெல்லாம் நீ தவிக்க உன்னை நான் விட்டுவிடுவேன.? உன் டயரியின் தொண்ணுாற்றி மூன் ரும் பக்கத்தை நான் பார்க்கவில்லை என்று நினைத்தாயா..? பச்சைக்கள்ளி! என்னையே ஏமாற்றிவிடலாம் என்று நினைத் தாயாக்கும். அதைப்படித்தது குற்றம்தான் சீதா...! ஆனல் நீ என் உயிர்த்தோழி அல்லவா? நமக்குள் என்ன வேற்றுமை. படித்தது எத்தனை நல்லதாகப் போய்விட் டது தெரியுமா..? எங்கே உன் செவ்வல்லிக் கரத்தை இப்படிக்கொடு. உம் கொடு சீதா. என்னிடம் கொடுக் கவும் வெட்கமா..? சங்கர் எங்கே. உங்கள் கையையும் கொடுங்கள் இதோ இத்தனைபேர் சாட்சியாக என் உயிர்த்தோழி சீதாவை என் சகோதரர் திரு. விஜயன் சங் கரிடம் ஒப்புவிக்கிறேன். நீங்கள் இருவரும் பதினறும்பெற் றுப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று ஆசீர்வதிக்கிறேன்." என்று அவர்களை ஒன்றுசேர்த்த சுமதி சங்கரின் பெற்ருர் பக்கந் திரும்பி "சித்தப்பா இப்படிச்செய்து விட்டேன் என்று கோபமா. சின்னம்மா நீங்கள்."
என்று அவர்களைக் குறும்போடு பார்த்தாள்.
"ஹ"ம் எங்களுக்கும் சம்மதமே முகத்தில் அசடு வழிய இருவரும் ஒருமித்துக் கூறினர்கள். "அப்போ நம்ம சின்னம்மாவுக்கு.? கடந்த அரைமணிநேரமாக அங்கே நடந்தவற்றை அவதானித்துக்கொண்டிருந்த தங்கந்தான் கேட்டாள்.
அப்போதுதான், அன்றுகாலை அவள் பல்வலியால் அவஸ்தைப்பட்டதும் அவளை வைத்தியசாலைக்கு வரச்

சுடர் விளக்கு 52
சொன்னதும் சுமதிக்கு ஒன்றன்பின் ஒன்ருக நினைவுக்கு வந்தன. இருந்தும் அதைவெளிக்காட்டாமல் "அடே இங் கேசுட நீ வந்துவிட்டாயா' - அதோடார் என் அப்பாஎன்று தன் தகப்பனை தங்கத்துக்கு அறிமுகப்படுத்திய சுமதி தன் தந்தையின் பக்கந் திரும்பி ‘அப்பா இவள் தான் தங்கம். எனக்கு எல்லாமே இவள்தான். எனக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டவள் அப்பா..!" என்று தங்கத்தை
யும் அறிமுகப்படுத்தினுள்.
* அப்படியா உனக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன் தங்கம். இனி அவளுக்கு ஏற்ற ஒரு வரன் பார்த்து அவள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டியதும் உன் பொறுப்புத்தான். நீ தான் என் மகளை வளர்த்தவள்’ என்று உணர்ச்சி மேலிடக் கூறிஞர் சிதம் பரம்பிள்ளை.
*அதற்குத்தான் சுமதியின் உள்ளத்தில் ஒரு இலட் சியம் புகுந்து திருமணத்திற்குத் தடையாக நிற்கிறதே" என்று மீண்டும் ஹாஸ்யத்தோடு கூறினன் பூரீதர்.
“இலட்சியமா அது என்னம்மா..? அதிசயத்தோடு வினவினர் அவள் தந்தை.
பூரீதர் அவள் தன்னிடம் கூறியதை ஒன்றும் விடா மல் அப்படியே அவள் தந்தையிடம் ஒப்புவித்துவிட்டு அவளைக் குறும்போடு பார்த்தான்.
"ஹ"ம்! கிண்டல் செய்யத் தெரியாது. இனி என் இலட்சியமான கமலாம்பிகை அநாதை இல்லத்தின் பொறு ப்பு என்னுடையதல்ல. அது அப்பாவினுடையது. அதுதான் அப்பா அம்மாவிற்கு இழைத்த துரோகத்திற்கு ஏற்ற பிராயச் சித்தம். ஏனப்பா. குழந்தைபோல தன் தகப் பனைப் பார்த்துக்கேட்டாள் சுமதி.
"ஆமாம் அம்மா! அந்தப் புண்ணிய கைங்கரியத்தைச் சரிவர நிறைவேற்றினல் க்தான் எனக்கு நிம்மதி, கமலமும் என்னை மன்னிப்பாள்...! இனி உன் திருமணத்திற்கு ஒரு வித் தடையுமில்லையே அம்மா..!" •
கமலாம்பிகை அநாதை இல்லம் எழுப்பியதும் அந்தச்
சுடர் விளக்கின் பிரகாசத்தில்த் தான் என். சுமதி இழுத் தாள்.

Page 80
1s3 s சுடர் விளக்கு
"சரி உன் விருப்பப்படியே அதற்கான வேலைகள் இன்றே இங்கு ஆரம்பமாகட்டும். அதன்பின் உன் திரு மணம்..!’ உறுதியோடு பதிலளித்தார் தந்தை.
"பக்கத்தில் யாருமில்லையே ஜோடிதேர்ந்தெடுக்கதிரும்பவும் ஹாஸ்யமாகப் பேசிவிட்டு சிரித்தது பூரீதர் தான்.
'உம் ஆளைப்பார்.! ஏன் நீங்கள் மனிதர் இல்லை யா. நான் உங்களையே. சொன்னதை முடிக்கமுடியாத வெட்கத்தில் தலைகுனிந்தாள் சுமதி.
**ஒ! காங்கிரஜூலேஷன் டாக்டர். சங்கரும்? சீதா வும் ஒருமித்து வாழ்த்தினர். ‘நான் எதிர்பார்த்திருந்த ஜோடிதான். ஆண்டவன் சரியான ஜோடிதந்தானே." தங்கத்தின் உதடுகள் மெதுவாக அசைந்தன.
பூgதர் பேசும் சக்தியற்று சுமதியையே கண்வெட் டாமல்ப் பார்த்தான். பெரியவர்கள் ஏதோ புரிந்துகொண் டதுபோல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றன்ர். அதையடுத்து மற்ற ஜோடிகளும் தனித்தனியாகப் பிரிந் தனர்.
இப்போது பூgதரும் சுமதியுந்தான் தனிமையாக நின்றனர். 'சுமதி நீ என்னை மனப்பூர்வமாகவா.
“என் இதயமறிந்து மனப்பூர்வமாக நான்செய்தமுடி வுதான் இது டாக்டர்.! உங்கள் அன்பு என்னை வெற்றி கொண்டுவிட்டது"
இடைமறித்த சுமதி அவனை முதன்முதலாக அன் பும் ஆசையும் நிறைந்த விழிகளால் நோக்கினுள்.
* சுமதி. ' தன்னை மறந்து அவள் இருகரங்களையும் இறுகப் பற்றினன் பூரீதர். உணர்ச்சி மேலீட்டால் அவர் கள் உதடுகள் துடித்தன. கண்கள் ஏதோ பேசிக்கொண்
law.
"டாக்டர் கட்டுண்டோம் பொறுத்திருப்போம்." என்று தன்னை விடுவித்துக்கொண்டாள் சுமதி.
மூன்றுமாத இடைவெளியின் பின் "கமலாம்பிகை அநாதையில்லம்" என்ற எழுத்துக்களைத் தாங்கி எழுந்து

சுடர் விளக்கு − 154
நின்றது ஒரு பெரிய மண்டபம். அதன் முகப்பிலே சட்ட மிட்டு மாட்டப்பட்டிருந்த அந்த முதியவளின் அடியில் இருந்த குத்துவிழக்கை முதன்முதலாக ஏற்றி வைத்தவள் சுமதிதான். அந்த ஒளி எங்கும் பிரமாண்டமான வெளிச் சத்தோடு திகழ்வது போன்ற பிரமையில் தன்னை மறந்து நின்ற சுமதியை. 'சுமதி' என்ற அன்புக்குரல் திடுக்கிட வைத்தது.
அவள் திரும்பினுள். அங்கே பாசமும் நேசமும் அன்பும் ஆசையும் பொங்கி வழியும் விழிகளோடு நின்ற பூரீதரின் அகன்ற மார்புக்குள் சரண் புகுந்தாள் அவள்.
*சுமதி "டாக்டர்’
அந்த அன்பின் ஒளியில் அவர்கள் ஒரு புது உல கத்தையே சிருஷ்டித்துக்கொண்டனர். அவர்கள் மகிழ்ச் சியை ஆசீர்வதிப்பதுபோல் அந்த சுடர் விளக்கும் கண் சிமிட்டியது.
- முற்றும் -