கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: திருவருட்பாத் திரட்டு

Page 1


Page 2

6)
திருவருட்பாத் திரட்டு
. Ο
கொழும்பு விவேகானந்த சபையாரால் நடாத்தப்பெறும்
அகில இலங்கைச் சைவ சமய பாடப் பரீசைஷக்குரியது.
அரசாங்க S, S. C. பரீகூைடிக்குரிய தேவார திருவாசகப் பாடல்களைக் கொண்டது.
இஃது டிை சபையின் அங்கத்தவர் சிலரால் தொகுக்கப்பட்டு
அவர்கள் எழுதியுதவிய விளக்கக் குறிப்பு முதலியவற்ருேடு சபையாரால் பிரசுரிக்கப்பட்டது.
நான்காம் தொகுதி
(எட்டாம் பதிப்பு
1 9 6 O உரிமை பெற்றது விலை சதம் 75

Page 3
ஸ்டான்காட் பிரிண்டர்ஸ் லிமிட்டெட்,
196, செட்டியார் தெரு, கொழும்பு-11.

பதிப்புரை
கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக இச்சபையாரால் ஆண்டுதோறும் நடத்தப்பெற்றுவரும் அகில இலங்கைச் சைவ சமய பாடப் பரீகூைடிக்குரிய பாடத்திட்டத்தில் முக்கியமானவை சைவத் திருமுறைகள். சிறுவர்களுக்குப் பாடமாகத் திருமுறை களில் வரும் பாடல்களனைத்தையும் குறிப்பிடுதல் பொருத்த மற்றதும் இயலாததுமாகையால் அவற்றிலிருந்து சிலவற்றை மாத்திரம் தெரிந்து குறிப்பிடவேண்டியதாயிற்று. இவ்வாறு தெரியப்பட்ட பாக்களின் தொகுதியே திருவருட்பாத் திரட்டு என்னும் இச்சிறு நூல்.
இதன் முதற்பதிப்பு, சுமார் இருபத்துநான்கு ஆண்டுகட்கு முன் வெளியிடப்பட்டது. ஒரே பாடற்ருெகுதி நீண்டகாலத்துக்கு ஒரு பரீகூைடிக்குப் பாடமாக அமைந்திருத்தல் உசிதமற்றதாகை யால் இடையே இரண்டு தடவை புதியனவாகப் பாடல்கள் தெரிந்து தொகுக்கப்பட்டன். இதே காரணத்தால் இப்பொழுது ஒரு புதிய (நான்காம்) தொகுதி வெளிவருகிறது.
இதில் வரும் பாடல்களைத் திரட்டிக் குறிப்பு முதலியவை எழுதி உதவிய சபை அங்கத்தினருக்குச் சபையாரின் நன்றி உரியதாகும். இந்நூலினை மேற்பார்வை பார்த்து உரை விளக் கங்களையும் குறிப்புக்களையும் செப்பனிட்டு உதவிய அன்பர் வித்துவான் கி. வா. ஜகந்நாதையர் அவர்களுக்குச் சபையாரின் நன்றி என்றென்றும் உரியது.
இத்தொகுதியின் அமைப்புப்பற்றிச் சில வார்த்தைகள் அவசியமாகின்றன.
வித்தியாசாலைகளில் சைவசமய பாடம் கற்பித்தற்கு ஏற்ற நூல் இல்லாத குறையை இத்தொகுதி ஒரளவு நிவர்த்தி செய் யும் என நம்புகிருேம்.
நான்காம் வகுப்பு முதல் S. S. C. வகுப்பு வரை உபயோகிக் கக் கூடியவாறு இது அமைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆரம்ப பிரிவு : 1-ம் பாகம்-4-ம் வகுப்பு ஆரம்ப பிரிவு : 2-ம் பாகம்-5-ம் வகுப்பு கீழ்ப் பிரிவு 1-ம் பாகம்-6-ம் வகுப்பு கீழ்ப் பிரிவு : 2-ம் பாகம் -7-ம் வகுப்பு

Page 4
( ii ) மத்திய பிரிவு : J. S. C. வகுப்பு மேற் பிரிவு : S. S. C. வகுப்பு ஆரம்ப பிரிவிற் பரிகூைடிக்குத் தோற்றும் மாணவரில் 4-ம் வகுப்பினர் 1-ம் பாகத்தில் வரும் பாடல்களை மாத்திரம் அறிந் திருத்தல் போதுமானது. ஆணுல் 5-ம் வகுப்பினர், முந்திய வரு ஷத்தில் (4-ம் வகுப்பில்) படித்த 1-ம் பாகப் பாடல்களுடன் 2-ம் பாகப் பாடல்களையும் அறிந்திருப்பர் என எதிர்பார்க்கப்படு கின்றது. இவ்வாறே கீழ்ப் பிரிவு வகுப்புகளில், 6-ம் வகுப்பினர் 1-ம் பாகத்தையும், 7-ம் வகுப்பினர் 1-ம், 2-ம் பாகங்களையும் அறிந் திருப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந் நூலில் மத்திய, மேற் பிரிவுகளுக்கெனக் குறித்திருக் கும் பாடல்கள், அரசாங்க S. S. C. பரீகூைடிக்குரிய சைவசமய பாடத் திட்டத்திலும் குறிக்கப்பட்டுள்ளன. h
ஒரு வருஷத்தில் (விடுமுறை நாட்களை நீக்கி) 24 வாரங் களுக்குக் குறையாது வகுப்புகள் நடந்த பின்னரே பரீகூைடி நடத்தப் பெறுமாகையால், வாரத்திற்கு ஒரு பாடல் வீதம் வகுப் பில் கற்பிக்கக் கூடியதாக ஒவ்வொரு பிரிவுக்குமுரிய பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சபையாரின் பரீகூைடிக்குரிய பாடத் திட் டம் வித்தியாசாலைகளின் வேலைத்திட்டத்துடன் ஒன்ருக அமைந் திருக்கவேண்டுமென்பதே சபையாரின் நோக்கம்.
மாணுக்கர் தங்களுக்கேற்பப் படிப்பதற்கும் மனனஞ் செய் வதற்கும் இலகுவானவையாயும், சிவசாதனங்களின் மாண்பைத் தெரிவிப்பனவாயும், சமயாசாரியர்களின் சரித்திரங்களின் பிர தான நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவையாயும் உள்ள திருப் பாடல்களே பெரும்பாலும் தெரியப்பட்டுள்ளன.
* அரியகற்ருசற்ருர் கண்ணுந் தெரியுங்கா, லின்மையரிதே வெளிறு" ஆதலின் இப்பதிப்பில் ஏற்பட்ட குறைகள், பிழைகள் இருப்பின் அன்பர்கள் அவற்றை எமக்குத் தயை கூர்ந்து தெரிவிக்குமாறு வேண்டுகின்ருேம்.
* மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.”
- கொழும்பு 25-60 விவேகானந்த சபையார்

வ் சிவமயம்
திருவருட்பாத் திரட்டு
ஆ ம்ப
1-ஆம் பாகம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தேவாரம் திருவலிவலம் பண்-வியாழக்குறிஞ்சி
பிடியத னுருவுமை கெர்ளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
குறிப்பு -பிடியதன் உரு உமை கொள.பெண் யானை யினது உருவத்தை உமாதேவி கொள்ள, கரியது வடி(வு) கொ(ண்)டு-சிவபெருமான் ஆண்யானையினது உருவத்தைக் கொண்டு. தனது அடி வழிபடும் அவர் இடர் கடி கணபதி-தம் திருப்பாதங்களை வழிபடும் அடியாரது துன்பங்களை நீக்குகின்ற வராகிய விநாயகக் கடவுள். பயில்-வாழ்கின்ற. இறை-சிவ பெருமான். 1.
திருப்பராய்த்துறை பண்-மேகராகக்குறிஞ்சி
நீறு சேர்வதொர் மேனியர் நேரிழை கூறு சேர்வதொர் கோலமாய்ப் பாறு சேர்தலைக் கையர் பராய்த்துறை ஆறு சேர்சடை அண்ணலே.
குறிப்பு :-நேரிழை-நுட்ப்மான தொழிற் சிறப்பைப்பெற்ற ஆபரணத்தையுடைய உமாதேவியார். கூறு-இடப் பாகம், Li Tajபருந்து தலை-கபாலம். 2

Page 5
2 திருவருட்பாத் திரட்டு
திருநெய்த்தானம் பண்-நட்டபாடை
மையாடிய கண்டன்மலை மகள் பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தான மெனிரே.
குறிப்பு :- மையாடியகண்டன் - நீலநிறம் பொருந்திய மிடற்றை உடையவராகிய சிவபெருமான். கையாடியதுதிக்கை தூங்குகின்ற, கரி - யானை, உரி - தோல். செய்யாடிய-வயலிலே உண்டான, நயனம்-கண், நெய்யாடிய-பஞ்ச கெளவியத்தில் ஒன்ருகிய நெய்யிலாடிய. 3
திரு ஆலவாய் பண்-காந்தாரம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான்றிருநீறே.
குறிப்பு :-மந்திரம்-நினைப்பவரைக் காப்பது, வானவர் = தேவர். சுந்தரம்-அழகு, தந்திரம்-முத்திக்கு உபாயம். சமயத் தில் உள்ளது - ஏற்ற தருணத்தில் உதவிய்ாயுள்ளது. துவர். பவளம், திருவாலவாய் - மதுரை. முன்னுெரு காலத்து வம்ச சேகர பாண்டியன் நகரத்தை உண்டாக்கும் பொருட்டு எல்லை காட்டி யருளும்படி சோமசுந்தரக் கடவுளை வேண்டுதல் செய் தான். அவர் தாம் அணிந்திருந்த பாம்பொன்றினுல் எல்லை காட்டியருளிய காரணத்தினுல் திருவாலவாய் என்னும் நாமம் பொருந்திற்று.
பதிக வரவாறு :- இப்பதிகம் பாண்டியனுடைய வெப்பு நோயைத் தீர்த்தற்பொருட்டுத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுராற் பாடப்பெற்றது.

ஆரம்ப பிரிவு 3
பொது பண்-கெளசிகம்
வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
குறிப்பு -ஆன் இனம்-பசுக்கூட்டம், புனல்-மழை. தீய தெல்லாம் ஆழ்க-தீய நெறிகளெல்லாம் அமிழ்ந்துபோக, தீர்கநீங்குக.
பதிக வரலாறு:-திருஞான சம்பந்த மூர்த்தி நாயஞர் பாண்டியனுடைய வெப்பு நோயை நீக்கியபின் அவருடன் வாதஞ்செய்ய எண்ணிய சமணர்கள், “எங்கள் எங்கள் சமய உண்மையை ஏட்டின் எழுதி ஒடுகின்ற வைகை யாற்றிலே இடுவோம். நீரை எதிர்த்துச் செல்லுகிற ஏடே மெய்ப் பொருளுடையது' என்று கூறினர். அதற்கு நாயனூர் சம்மதித் தார். சமணர்கள் எழுதிவிட்ட ஏடு ஆற்றுடன் ஒடிக் கடலை அடைந்தது. நாயனுர் சைவசமயத்துண்மைப் பொருளை விளக் கும் உபதேச மொழியாகிய * வாழ்க அந்தணர் “ என்னுந் திருப்பாசுரத்தைப் பாடி ஏட்டில் எழுதி அத்திருவேட்டைத் தாமே வைகை நதியில் இட்டார். அது எதிரேறிச் சென்றது. * வேந்தனுமோங்குக’ என்று பாடியருளினமையால் கூன் பாண்டியனுட்ைய கூனும் நிமிர்ந்தது. 5
திருநாவுக்கரசு நாயஞர் தேவாரம் திருவங்கமாலை பண் - சாதாரி
தலையே தீவனங்காய்-தலை மாலை தலைக்கணித்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்.
குறிப்பு :-அங்கம் - அவயவம். அவயவம் ஒவ்வொன்றை
யும் விளித்துப் பாடிய பாடல்களின் தொகுதியாதலின் இது

Page 6
4. திருவருட்பாத் திரட்டு
திருவங்கமாலையெனப்பட்டது. தலை மாலை - பிரம விட்டுணுக் களுடைய கபாலங்களால் ஆக்கப்பட்ட மாலை. பலி-பிச்சை, 6
கண்காள் காண்மின்களோ-கடல் நஞ்சுண்ட கண்டன் றன்னை எண்டோள் வீசிதின் குடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ,
குறிப்பு-கண்டம்-கழுத்து. எண்டோள்-எட்டுத் தோள். 7
நெஞ்சே நீநினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணுள&ன நெஞ்சே நீதினையாய்.
குறிப்பு :-நின்மலன் - மலமில்லாதவன். மஞ்சு - முகில். மலை மங்கை - இமயமலையரசன் புத்திரியாகிய உமாதேவியார். மணுளன் - நாயகன். 8
திருமறைக்காடு திருக்குறுந்தொகை
பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னுர் வலஞ் செய்மறைக் காடரோ கண்ணி னுலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.
குறிப்பு :-பண்ணின் நேர்மொழியாள் - இசைப்பாட்டுப் போன்ற சொற்களையுடைய உமாதேவி. பங்கர் - பக்கத்திலே யுள்ளவர். மண்ணினுர்-உலகத்திலே உள்ளவர்கள். மறைக் காடு - வேதாரணியம். திண்ணம் - மெய்ம்மை (நிச்சயம்).
பதிக வரலாறு :-திருநாவுக்கரசு நாயனுரும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனரும் வேதாரணியத்தை அடைந்து திருக்கோயிலை வலம் வந்து வேதங்களாலே அருச்சித்துத் திருக்காப்புச் செய்யப்பட்ட கதவின்(முன் வந்து நின்று அக்கதவு

ஆரம்ப பிரிவு 5
திறக்கப்படாமையை அறிந்தார்கள். அப்பொழுது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனுர் திருநாவுக்கரசு நாயனுரைப் பார்த்து, " அப்பரே! இக்கதவு திறக்கும் பொருட்டுப் பதிகம் பாடும்" என் ருர். உடனே திருநாவுக்கரசு நாயனுர், “பண்ணினேர் மொழி ’ என்னுந் திருப்பதிகத்தைப் பாடத் திருக்கதவு திறந்தது. 9
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே,
குறிப்பு - வண்டுஅறை-வண்டு ஒலிக்கின்ற இணையடிஇரண்டு திருப்பாதங்கள்.
பதிக வரலாறு :-பல்லவராசனின் கட்டளைப்படி சமணர் கள் திருநாவுக்கரசு சுவாமிகளை நீற்றறையில் அடைத்து வைத் திருக்க அவர் பரமசிவனுடைய திருவடி நீழலைத் தலைக் கொண்டு " மாசில் வீணையும் ' என்னும் தேவாரத் திருப்பதிகத் தைப் பாடியருளினுர். நாயனுர் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த நீற்றறை வீணுகானமும், சந்திரனும், தென்ற லும், இளவேனிலும், பொய்கையும் போலக் குளிர்ந்தது. 10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினுல் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
குறிப்பு - பாலிற்படுநெய்பொலில் உண்டாகும் நெய். உறவு-(கடவுளுடன்) ஐக்கியப்படுதல். உணர்வு-அறிவு. 11
கோயில் திருக்குறுந்தொகை
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

Page 7
6 திருவருட்பாத் திரட்டு
என்னன் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
குறிப்பு-பாலிக்கும்.பெருகும். பொன்-திரவியம். ஆலிக் கும்-பரக்கும் (ஆனந்திக்கும்). இன்னம்-இனியும். 2
சுந்தரமூர்த்தி நாயஞர் தேவாரம்
திருவெண்ணெய்நல்லூர் பண்-இந்தள்ம்
பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா எத்தான்மறவாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரரு அத்தா உனக் காளாய் இனி அல்லேனென லாமே.(டுறையுல்
குறிப்பு :-அருளாளா-அருள் உடையவரே. எத்தால்.எ வகையாலும், அத்தா - தந்தையே. அல்லேன் எனலாமே அடிமையல்லேன் என்று கூறலாமோ,
பதிக வரலாறு :- சிவபெருமான் திருக்கைலாயத்திலே சுந்தரமூர்த்தி நாயனருக்கு அருளிச் செய்தபடி அவருடைய கலியாண காலத்திலே "கிழப்பிராமணராய் எழுந்தருளி, ** நீ எனக்கு அடிமை " எனக்கூறி வாதித்துத் திருவெண்ணெய் நல்லூர்ச் சபையில் மூல ஓலை கொண்டு தாபித்துத் தடுத்தாட் கொண்டு திருவருட்டுறையில், உமாதேவியாரோடும் இடப வாகனத்திற் காட்சி கொடுத்து, * நீ நம் மேல் தமிழ் பாடு" என்று அருளினுர். அப்பொழுது நாயனுர், ‘அடியேன் தேவ ரீரைப்பற்றி ஒன்றும் அறியேன்; எவ்வாறு பாடுவேன்?’ என்ருர், அதற்குச் சிவபெருமான், முன்னே நீ எம்மைப் பித்தனென்று கூறினுய்; ஆகையாற் பித்தனென்றே பாடு" என்ருர், நாயனூர், * பித்தா பிறைசூடீ ’ என்னுந் திருப்பதிகத்தைப் பாடித் துதித்து வணங்கினர். இதுவே சுந்தரமூர்த்தி நாயனூர் முதன் முதற் பாடிய தேவாரம். 13

ஆரம்ப பிரிவு 7
திருமழபாடி பண்-நட்டராகம்
பொன்னுர் மேனியனே புலித் தோலே அரைக்கசைத்து மின்னுர் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணித்த மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே வனே அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.
குறிப்பு-பொன் ஆர் மேனியன் - பொன்போன்ற திரு மேனியை உடையவர். அரைக்கு அசைத்து - அரையிலே கட்டி. மன்னே - தலைவரே. -
பதிக வரலாறு :- சுந்தரமூர்த்தி நாயனர் திருவாலம் பொழில் என்னும் சிவஸ்தலத்தில் சுவாமி தரிசனஞ்செய்து இரவு நித்திரை செய்தார். சுவாமி அவருக்குக் கனவிற்ருேன்றி, * மழபாடிக்கு வருவதற்கு மறந்தாயோ?" என்று சொல்லி யருளினர். நாயனுர் மழபாடிக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, “பொன்ஞர் மேனியனே ” என்னுந் திருப்பதிகம் பாடினுர். பாட்டின் இறுதிதோறும், * மழபாடியுள் மாணிக்க மே. உன்னை யல்லால் இனி யாரை நினைக்கேன்" என்று பாடியிருத்தல் நோக்கத் தக்கது.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
திருச்சாழல் பூசுவதும் வெண்றுை பூண்பதுவும் பொங்(கு)அரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி பூசுவதும் பேசுவதும் பூண்டதுவும் கொண் (டு)என்னை ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்புஆனுன் சாழலோ.
குறிப்பு :-பூண்பது-அணிவது. பொங்கு-சீறும். அரவம்பாம்பு. மறை-வேதம்; இரகசியம். காணேடீ-பெண்ணே காண் பாயாக. சாழல்.கைகொட்டி விளையாடுதல், 15
அச்சோப் பதிகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

Page 8
8 திருவருட்பாத் திரட்டு
சித்தமலம் அறுவித்துச் சிவம் ஆக்கி எனே ஆண்ட அத்தன் எனக்(கு) அருளியவா(று) ஆர்பெறுவார் அச்சோ (வே.
குறிப்பு :-நெறி-மார்க்கம், வழி. மூர்க்கர்-அறிவில்லாதவர். பாறும்வண்ணம்-அழியும் வண்ணம். சித்தமலம்-மனத்திலுள்ள மலம். அத்தன்-ஐயன். 16
Marmamaginosan
திருமூலர்
திருமந்திரம் ஐந்து கரத்தனே ஆனை முகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றன ஞானக் கொழுந்தின புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
குறிப்பு:- இந்து-சந்திரன். எயிறு-பல், நந்தி-சிவபெரு
மான். ஞானக்கொழுந்து-அறிவுச் சுடர். புந்தி-மனம் (இதயம்) - 17 ܚ
I5 & 5 J. if திருமுருகாற்றுப்படை உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வானுேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே.
குறிப்பு :- கோலப்பா - (கோலத்தை) அழகையுடைய ஐயனே. வேலப்பா - வேலையுடைய ஐயனே. கொடியவினை - பிராரப்த, சஞ்சித, ஆகாமிய வினைகள். செந்தி வாழ்வே - திருச்செந்தூரில் வீற்றிருப்பவரே. 18
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே-ஒருகைமுகன்

ஆரம்ப பிரிவு 9
தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். குறிப்பு :-முதல்வனே-தலைவனே. மாயோன்.திருமால், ஒருகைமுகன்-விநாயகர் ( யானை முகத்தை யுடையவன்). தண்டை-காலணி.
திருமுருகாற்றுப்படை :- இது நக்கீரரால் பாடப்பட்டது. செல்வம்பெற வேண்டியவனுக்குச் செல்வம்பெற்ற ஒருவன் செல்வனைப் புகழ்ந்து கூறியதுபோல, அருள்பெற்ற நக்கீரர் அருள்பெற விரும்பும் ஒருவனுக்குக் கடறியதாகப் பாடப்பட்டது. ஆறு படை வீடுகளாவன : 1. திருப்பரங்குன்றம், 2. திருவா வினன்குடி (பழனி), 3. திருச்செந்தூர், 4. திருவேரகம், 5. பழமுதிர்சோலை, 6. குன்றுதோருடல். 19
சேக் கிழார் பெரிய புராணம் உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். குறிப்பு :-நிலவு-சந்திரன். வேணி-சடாமுடி, அலகில் சோதியன்-அளவுபடாத ஒளிப்பிழம்பாகியவன். 20
அருணகிரிநாதர் திருப்புகழ் கதிர்காமம்
இறவாமற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா
கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
குறிப்பு:-எனையாள்.என்னை ஆட்கொள்ளுகின்ற, திரமான. நிலை யா ன . குறமாது . வள்ளிநாயகி. கறையானே - உரல் போன்ற காலையுடைய யானையின் முகத்தை யுடைய விநாயகப் பெருமான். 21

Page 9
ஆரம்ப பிரிவு 2-ஆம் பாகம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் தேவாரம்
திருப்பிரமபுரம் uadT - bill-Lu-Toot
தோடுடையசெவி யன்விடையேறியோர் துரவெண்மதிதடி காடுடையசுட ஜூலப்பொடியூசிஎன் உள்ளங் கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனே நாட்பணிந் தேத்த அருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
குறிப்பு:-தோடு-காதணி. விடை-தரும ரூபமாகிய இடபம், மதி - சந்திரன். உள்ளங்கவர்கள்வன் - மனத்தைத் தன் வயப் படுத்திக்கொண்டவர். அளவிறந்த அன்பினுல் அவ்வாறு கூறி ஞர். காடுடைய சுடலைப்பொடி - சர்வசங்கார மயானத்திற் பிரம விஷ்ணுக்கள் வெந்த நீறு. ஏடுடைய மலரான் - இதழ்களே யுடைய தாமரை மலரில் வீற்றிருப்பவராகிய பிரமதேவர். முனை நாள் - முன்னெருகாலத்து. பீடு - பெருமை. பிரமபுரம் - சீர்காழி (பிரமதேவர் வழிபட்ட தலம்.)
பதிக வரலாறு :-சீர்காழியிலே சிவபாத இருதயர் என்ற பிராமணர் பகவதி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்திவந்தார். அவர்கள் செய்த தவப்பெருமையினுல் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றனர். இக்குழந்தையே தேவாரத் திருமுறைகள் மு த ல் மூன்றையும் திருவாய்மலர்ந்தருளிய திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் ஆவார். குழந்தைக்குரிய வைதிகச் சடங்குகள் உரிய காலத்தே செய்யப்பட்டன. குழந் தைக்கு மூன்றுவது வ ய து நடந்துவரும்போது, ஒருநாள் அது தகப்பணுருடன் திருக்கோயிலுக்குச் செல்ல வேண்டு மெனப் பிடிவாதமாய் அழுதது. தந்தையார் குழந்தையைக் கூட்டிச்சென்று குளக்கரையில் உட்கார வைத்த பின் குளத்தில்

ஆரம்ப பிரிவு c. 11
இறங்கி ஸ்நானம் செய்தார். அவர் தண்ணிருள் மூழ்கியதும் தந்தையாரைக் காணுத குழந்தை, அம்மே ! அப்பா ! 6ான அழத் தொடங்கியது. உடனே தோணிபுரத்தில் எழுந் தருளியிருக்கும் சிவபெருமான் அழுகின்ற பிள்ளையார் முன் தேவியாருடன் இடப வாகனத்தின்மீது தோன்றிப் பொற் கிண்ணத்திலே திருமுலைப்பாலைக் கறந்து சிவஞானத்தைக் கலந்து ஊட்டும்படி பார்வதி தேவியாருக்குக் கட்டளையிட் டார். தேவியாரும் அ வ் வா றே செய்தனர். ஞானப்பாலை உண்டமையால் பிள்ளையாருக்குத் திருஞானசம்பந்தர் என்ற பெயர் உண்டாயிற்று. பாலை ஊட்டியவுடன் இறைவனும் இறைவியும் மறைந்து போயினர். ஸ்நானந்தை முடித்துக் கொண்டு திரும்பிய தந்தையார், பால்படிந்த உதடுகளுடன் நின்ற குழந்தையைக் கண்டு, கோபத்துடன், "உனக்குப் பால் கொடுத்தவர் யார்? வழிப்போக்கர் யாரோ கொடுத்த பாலை நீ ஏன் உண்டாய்?' என ஒரு குச்சியை ஓங்கி அடிப்பவர் போலக் கேட்டார். உடனே பிள்ளையார் ஆகாயத்தில் எழுந்தருளிய அம்மை அப்பரைச் சுட்டிக் காட்டி * தோடுடைய செவியன்’ என்ற திருப்பதிகத்தைப் பாடிஞர். இதுவே சம்பந்த சுவாமிகள் முதன் முதலாகப் பாடியருளிய தேவாரம். 1.
திருப்பழனம் பண்-தக்கேசி
வேதமோதி வெண்ணுல்பூண்டு வெள்ளை எருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியின் உரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாளனநின்று பாதந்தொழுவார் பாவம்தீர்ப்பார் பழனநகராரே.
குறிப்பு - பொலிய - அழகு விளங்க. (உலகத்துக்கு) நாதனே (தலைவனே) என்றும், நக்கனே (ஆடையற்றவனே) என்றும், நம்பியே (பெருமானே) என்றும் (சொல்லிச் சந்நிதி யிலே ) நின்று தம்முடைய திருவடிகளை வணங்குபவர்களது பாவங்களை நீக்கி அருளுவார் திருப்பழனப் பெருமான். 2

Page 10
12 திருவருட்பாத் திரட்டு
திருக்கோலக்கா பண் - தக்கராகம்
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளாய் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட உருவ மென் கொலோ,
குறிப்பு :-மடைநீர்பாயும் வாயில், வாளை-ஒருவகை மீன். குடையும்-நீராடும். பொய்கை-தடாகம், கீழ் உடை-அரைக் கச்சு (கோவணம்).
திருஆலவாய் பண் - கொல்லி மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனிங்கிவ னென்றுநீபனி வெய்திடேல் ஆனைமாமலே யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட்கெளி யேனலேன் திரு ஆலவாயரன் நிற்கவே.
குறிப்பு :-மானின் நேர்விழி-மானைப் போலும் வெருண்ட பார்வையுடைய கண். வழுதி-பாண்டியன், பால் நல்வாய்-பால் மணம் ம்ாருத வாய். பரிவு-இரக்கம். அல்லல்-துன்பம். ஈனர். கெட்டவர் - எளியேனலேன் - எளியவனல்லேன்.
பதிகவரலாறு :-திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் பாண் டியனுடைய வெப்பு நோயை நீக்கும் பொருட்டு அவனுடைய அரண்மனையில் வந்து இருக்கும்போது சமணர்கள் அவரை வாதுக்கழைத்தனர்; அதற்கு நாயனுர், " உங்கள் சமய நூற் றுணிபைக் கிரமமாகப் பேசுங்கள் ” என்று கூறச் சமணர்கள் துள்ளியெழுந்து கதறிஞர்கள். அது கண்ட பாண்டிமாதேவி யாராகிய மங்கையர்க்கரசியார் மனநடுங்கி அரசனை நோக்கி, * நாயனுர் சிறு பாலர்; சமணர்களோ பலர்; இப்பொழுது நாய ஞர் உம்முடைய நோயை நீக்கக்கடவர்; பின் சமணர் பேச வல்லராயிற் பேசக் கடவர் ' என்று கூறினர். அப்பொழுது நாயனுர் பாண்டிமாதேவியை நோக்கி, 18 மாதேவியே! நான் பாலன் என்று நீ வருந்த வேண்டாம்; திருவாலவாய் அரன்

ஆரம்ப பிரிவு 13
நிற்கும்போது நான் சமணருக்கு எளியனல்லேன்” என்று கூறி,
மானினேர்விழி ' என்னும் திருப்பதிகத்தைப் பாடினுர், 4.
பொது பண்-கெளசிகம்
நமச்சிவாயத் திருப்பதிகம்
காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது நாத னும நமச்சி வாயவே.
குறிப்பு :-காதலாகி-அன்பு முதிர்ந்து. கசிந்து-நெக்குருகி. நன்னெறிக்கு உய்ப்பது-முத்தி நெறிக்கண் செலுத்துவது. 5
கொல்வா ரேனுங் குணம்பல தன்மைகள் இல்லா ரேனு மியம்புவ ராயிடின் எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால் நல்லார் நாம நமச்சி வாயவே.
குறிப்பு :- குணம் - நற்குணம். தீங்கையும் நீங்குபவர் - தீங்கினின்று விடுபவர். நல்லார் - சிவபெருமான்.
பதிக வரலாறு :- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் திரு நல்லூர்ப்பெருமணத்தில் எழுந்தருளிய கடவுளே நோக்கித் தம்மை இல்லறத்தினின்றும் நீக்கித் திருவடியிற் சேர்க்கு மாறு பிரார்த்தித்தார். அதனைத் திருச்செவிக் கொண்ட பெருமான், “ நீயும் உன் மனைவியும் விவாகத்தைக் காணவந்த சகலரும் இந்தச் சோதியினுள்ளே வந்து நம்மை யடையுங் கள்’ என்று அருளிச் செய்தார். நாயனுர் கடவுளைத் துதித் துச் சகலரோடும் சோதியிற் பிரவேசிக்கும்பொழுது, ‘காதலாகி" என்னும் பதிகத்தைப் பாடியருளினுர், 6
2

Page 11
14 திருவருட்பாத் திரட்டு
திருநாவுக்கரசு நாயனுர் தேவாரம்
திருக்கச்சியேகம்பம் பண்-காந்தாரம்
கரவாடும் வன்தெஞ்சர்க்(கு) அரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அர வாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி இரவாடும் பெருமானே என்மனத்தே வைத்தேனே,
குறிப்பு :-கரவு - வஞ்சனை. ஆடும் - பொருந்திய, வன் னெஞ்சர் - கொடிய மனத்தையுடையவர். அரியான் - அடைய முடியாதவர். கரவார்பால் - வஞ் சக ம் இல்லாதவரிடத்து. விரவாடும்-கலந்திருக்கும். விடை-இடபம். வித்தகன்-அறிஞர் அரவு-பாம்பு. அங்கை-உள்ளங்கை. அனல்-தி. இரவாடும்(ஊழிக்காலத்து) இருளில் கூத்தாடும். ." 7
பொது பண்-காந்தாரபஞ்சமம்
நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்று?ன வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே.
குறிப்பு -சொல்துணை-சாஸ்திரங்களினுற் பேசிப்பெறுகிற உற்ற துணை. வேதியன்-வேதங்களைத் திருவாய் மலர்ந்தருளிய வர். பொற்றுணைத் திருந்தடி-அழகிய இரண்டு பாதங்கள்.
பதிக வரலாறு :-திருநாவுக்கரசு நாயனுர் சமண் மதத்தை விட்டுச் சைவநெறியைக் கைக்கொண்ட்தை அறிந்து, சமணர் களுடைய வேண்டுகோளின்படி பல்லவராசன் நாயனுரை ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டுவித்துச் சமுத்திரத்திலே தள்ளிவிடச் செய்தான். அப்பொழுது நாயனுர் சிவபெருமானத் துதித்து,

ஆரம்ப பிரிவு 15
" சொற்றுணை வேதியன் ’ என்னும் திருப்பதிகத்தைப் பாடிஞர் ம னே கயிறு அறுந்தது. கல் தெப்பம்போல் மிதந்தது* நாயஞர் அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு திருப்பா கிரிப்புலி பூரை அடைந்தார்.
திருக்கடம்பூர் திருக்குறுந்தொகை
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன்க டன் அடி யேனையுந் தாங்குதல் என்க டன்பரிை செய்து கிடப்பதே,
குறிப்பு :- கடம்பன்-கடம்ப மாலை அணிபவன் ; முருகக் கடவுள். பெற்றவள்-பெற்றவராகிய உமாதேவியார். பங்கினன்பாகத்திலுடையவர். கடன்-கடமை. பணி-தொண்டு. தாங்கு கல்-பாதுகாத்தல். 9
கோயில் திருக்குறுந்தொகை
அல்லல் என்செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயபும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனுர்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே.
குறிப்பு :- அல்லல்-துன்பம் அருவினை-கொடியபாவம். தொல்லை-பழமை. தீொந்தம்-சேர்க்கை; கூட்டம். 10
பாவநாசம் திருக்குறுந்தொகை
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை பாடிலென் ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென் எங்கும் ஈசன்னன் னுதவர்க்(கு) இல்லையே.

Page 12
16 திருவருட்பாத் திட்டு
குறிப்பு - ஆடில் என்-தீர்த்தமாடுவதால் என்ன பிரயோ சனம் ? கொங்குதண்-மணமுள்ள குளிர்ந்த, குமரித்துறை - கன்னியாகுமரித்துறை. ஓங்குமா கடல்-(அலைகள்) ஒங்குகின்ற பெரிய கடல். ஒதநீர்-வெள்ளப்பெருக்கான நீர். என்னுதவர்க்கு இல்லையே - என்று சொல்லி வணங்காதவர்களுக்குப் பயன் இல்லை. 11
திருமருகல் திருக்குறுந்தொகை
பெருக லாந்தவம் பேதைமை தீரலாம் திருக லாகிய சிந்தை திருத்தலாம் பருக லாம்பர மாயதொர் ஆனந்தம் மருக லானடி வாழ்த்தி வணங்கவே.
குறிப்பு :- பேதை-அறியாமை. திருகலாகிய-மாறுபட்ட.
பரமாய-மேலான, 12
சுந்தரமூர்த்தி நாயஞர் தேவாரம்
திருக்கூடலையாற்றுார் பண்-புறநீர்மை
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றுாரில் அடிகளிள் வழிபோந்த அதிசயம் அறியேனே.
குறிப்பு - வடிவுடை-அழகுபொருந்திய, மதகரிஉரி-மத யானைத் தோல், பொடி-விபூதி, புரிகுழல்-சுருண்ட கூந்தல். கொடியணி நெடுமாடம்-கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய மாளிகை.
பதிக வரலாறு :- சுத்தரமூர்த்தி நாயனுர் திருக் கூடலை யாற்றுாருக்குச் சென்றபோது இறைவர் வேதியர் வடிவுடன் நின்ருர், நாயனுர், “திருமுதுகுன்று செல்வதற்கு வழி யாது?’ என்று கேட்க இறைவர் அவருக்கு வழிகாட்டி உடன் சென்று

ஆரம்ப பிரிவு f"y
திடீரென மறைய, வந்தவர் சிவபெருமானே என்று உணர்ந்து " வடிவுடை ' என்னும் திருப்பதிகத்தைப் பாடிஞர். 13
திருக்கோளிலி பண்-நட்டராகம்
நீல நினைந்தடியேன் உமை நித்தலுங் கைதொழுவேன் வாலான கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே \கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்
ஆளிலை யெம்பெருமா னவை யட்டித்தரப் பணியே. (றேன்
குறிப்பு :-நீள-நெடிது தூரம். நித்தலும்-எப்பொழுதும். வாளன கண் மடவாள்-வாள் போலுங் கண்ணுடையவளான பரவை. இலை - இல்லை. அட்டித்தர - கொண்டுபோய்ச் சேர்க்க. பணி - கட்டளையிடு.
பதிக வர்லாறு --சுந்தரமூர்த்தி நாயனுர் பரவையாரை மணந்து திருவாரூரில் இருக்கும்போது அவருக்குத் தேவை யான நெல் முதலியவற்றைக் குண்டையூர் கிழார் என்னும் வேளாளர் தினந்தோறுங் கொடுத்து வந்தார். சில நாளாக மழை யின்மையால் குண்டையூர் கிழார் நெல் அனுப்ப முடியாமல் மனம் வருந்தி உண்ணுமல் துயில் கொள்ளும் போது,சிவபெருமான் அவர் கனவிற்ருேன்றி," ஆரூரனுக்காக நெல்லுத் தந்தோம் ’ என்று குண்டையூர் முழுவதும் நெல் மலையாகச் செய்தருளினுர், குண்டையூர் கிழார் இச் செய்தியை நாயனுருக்குச் சொல்ல, நாயனுர் வந்து நெல் மலையைக் கண்டு வியப்பெய்தி, அருகேயுள்ள திருக்கோளிலி என்னும் சிவஸ்தலத் துக்குச் சென்று, “நெல்லினத் திருவாரூருக்குக் கொண்டு போய்ச் சேர்க்க ஆள் தரவேண்டும் ” என்று சிவபெருமானை வணங்கித் துதித்து, ‘ நீள நினைந் தடியேன்” என்னும் பதிகம் பாடினுர், 14

Page 13
18 திருவருட்பாத் திரட்டு
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
திருத்தெள்ளேணம்
திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை உருநாம் அறியவோர் அந்தணனுய் ஆண்டுகொண்டான் ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ,
குறிப்பு :- திருவடியை உரு நாம் அறிய - திருவடிகளின் மெய்வடிவத்தை நாம் அறியும்படியாக, ஒன்றும் இல்லாற்குகுலம், குணம், ஊர் முதலிய எதுவும் இல்லாதவனுக்கு. தெள்ளேணம்-ஒருவிதத் தோல் வாத்தியம். . 15
அச்சப்பத்து
புற்றில்வாள் அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைனம் அண்ணல் கண்ணுதல் பாதம் தண்ணி மற்றும் ஓர் தெய்வந் தன்னை
உண்டென நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே.
குறிப்பு - புற்றில் வாள் அரவு - புற்றில் வாழு கி ன் ) ஒளியையுடைய பாம்பு. பொய்யர்தம் மெய்-பொய் கூறுவார் கூறும் மொழி. கற்றைவார் சடை-நெருங்கிய நீண்ட சடை. அண்ணல் பெருமையுடையவர். கண்ணுதல் - நெற் றி க் கண்ணையுடையவர். பெம்மாற்கு அற்றில்லாதவர் - பெருமா னுக்கு உண்மை (அன்பு ) இல்லாதவர். நாம் அஞ்சுமாறே - நாம் பயப்படும் விதம் என்னென்பேன். 16
P-in-law

ஆரம்ப பிரிவு 19
திருவாலியமுதஞர் திருவிசைப்பா
(காயில் பண்-நட்டராகம்
பவளமால் வரையைப் பனிபடர்ந் தனயதோர்
படரொளித் திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியுங் கொன்றையும் துன்றுபொற் குழல் திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லையுள்
திருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினை தொறும் என் மனம்
தழல்மெழு கொக்கின்றதே.
குறிப்பு :- கண்ணி - தலையில் அணியும் மாலை, துன்று பொற்குழல் திருச்சடையும் - நெருங்கிய பொன்னிறமுள்ள சுருட்டி முடிக்கப்பட்ட திருச்சடையும். திவள - வேலைப்பாடுகள் அமைந்த. தவள வண்ணனை- (வெண்ணிறு அணிந்தமையால்) வெண்ணிறம் பொருந்தியவனை. தழல் மெழுகு ஒக்கின்றதுநெருப்பிலிட்ட மெழுகைப் போல இருக்கின்றது. 17
சேந்தனர் திருப்பல்லாண்டு
\கோயில் பண்-பஞ்சமம்
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே பிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

Page 14
2O திருவருட்பாத் திரட்டு
குறிப்பு - பாலகன் - வியாக்கிர பாத முனிவருடைய புத்திரராகிய உபமன்னியு. ஆலிக்கும்-களிக்கின்ற, இடமாகப் பாலித்து - இடமாகக் கொண்டு. நட்டம் - திருநடனம்.
உபமன்னியு முனிவர் குழந்தைப் பருவத்திலே பால் வேண்டி அழுதபொழுது நடராசப் பெருமான் திருப்பாற்கடலை அழைத்து அவருக்கு உண்ணக் கொடுத்தருளினர். 18
கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம்
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக் கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம். குறிப்பு :- மாசு-குற்றம். முற்றுற-கைகூடும் பொருட்டு. நுதல் - நெற்றி. களிறு - யானை, மலரடி - மலரைப் போன்ற பாதங்கள். 19
தாவறு முலகெலாந் தந்த நான்முகத்
தேவுதன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர் நாவுதொ றிருந்திடு நலங்கொள் வாணிதன்
பூவடி முடிமிசை புனைந்து போற்றுவாம்.
குறிப்பு -தரவறு - கேடுஅற்ற. தந்த - படைத்த, நான் முகத்தேவு-நான்கு முகங்களுடைய பிரமதேவர். துணைவி-சக்தி. வாணி - சரஸ்வதி. 20
அருணகிரிநாதர் திருப்புகழ்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

ஆரம்ப பிரிவு 21
"மாறுபடு சூரனை வதைத்தமுக மொன்றே
வள்ளியைம ணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணுசல மமர்ந்தபெரு மாளே.
குறிப்பு :-ஏறுமயில்-மயிற் சேவல், ஈசன்-சிவபெருமான். குன்று-கிரவுஞ்ச மலை. பொருள்-உண்மைப் பொருள். அருணு சலம்-திருவண்ணுமலை என்னும் திருப்பதி. 21

Page 15
கீழ்ப் பிரிவு
1-ஆம் பாகம் திருஞானசம்பந்தமூர்த்தி காயகுர் தேவாரம்
திருவண்ணுமலை பண் - நட்டபா1ை.
உண்ணுமுலை யுமையாளொடு முடனுகிய வொருவன் பெண்ணுகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணுர்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணுமலே தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே
குறிப்பு :- உண்ணுமுலை யுமையாள் - பாலுண்ணுத முலையையுடைய பார்வதி. பெண்ணுகிய பெருமான் - பாதி பெண்ணுக உடைய சிவபிரான்; அர்த்தநாரீச்சுரர். மலை திருமாமணி திகழ அணிந்த அழகிய மாணிக்கம் விளங்க. மண்ணுர்ந்தன - பூமியிலே நிறைந்துள்ளன. மழலைம்முழவு அதிரும் - மென்மையான ஓசையையுடைய முழவு சத்தஞ் செய்யும்.
திருவண்ணுமலை பண் - தக்கேசி
பூவார் மலர்கொண் டடியார் தொழுவார்
புகழ்வார் வானுேர்கள் மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க் கருள்செய்தார் துரமா மழைதின் றதிர வெருவித்
தொறுவின் திரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ் சாரல்
அண்ணு மலேயாரே.

கீழ்ப் பிரிவு 23
குறிப்பு :- மழை - மேகம். வெருவி - அஞ்சி. தொறு - பகக்கூட்டம். ஆமா - காட்டுப் பசு,
கோயில் - பண்-குறிஞ்சி
கற்ருங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்ருர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்ரு வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்ற நின்றரைப் பற்ரு பாவமே.
குறிப்பு :-எரி-ஓமத் தீ. ஓம்பி-பாதுகாத்து. கலி - கேடு. செற்ருர்-நீங்கியவர். மேய-பொருந்திய, முற்ருவெண்திங்கள் - வெண்மையான இளம்பிறை. பற்ருநின்ருரை - பற்றுகின்ற வரை, பற்ரு - பற்றமாட்டா. 3
திருமறைக்காடு பண்-இந்தளம்
சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைத்தா இதுநன் கிறைவந் தருள் செய்க வெனக்குன் கதவந் திருக்காப் புக்கொள்ளுங் கருத்தாலே.
குறிப்பு :- சதுர் - நான்கு. மதுரம் பொழில் - இனிய அழகிய சோலை (அதிமதுரம் படர்ந்த சோலையுமாம் ). ம்றைக் காடு-வேதாரணியம்.
பதிக வரலாறு. --வேதாரணியத்தை அடைந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனரும் திருநாவுக்கரசு நாயனுரும் வேதங் களால் திருக்காப்புச் செய்யப்பட்ட திருக்கதவு திறக்கப்படா மையை அறிந்தார்கள். சம்பந்தர் கேட்டவாறு அப்பர் பதிகம் பாடத் திருக்கதவு திறந்தது. அவர்கள் பெருமானைத் தரிசித்த பின், சம்பந்தர், “ சதுரம் மறை ’ என்ற பதிகத்தைப் பாடத் திருக்கதவு மூடிக்கொண்டது. -4

Page 16
24 திருவருட்பாத் திரட்டு
திருஆலவாய் திருவிராகம் பண்-கெளசிகம்
குற்றம்நீ குணங்கள் நீ கூடலால வாயிலாய் சுற்றம்நீ பிரானும் தீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்ற நூற் கருத்தும் நீ அருத்தமின்ப மென்றிவை முற்றும் நீ புகழ்ந்துமுன் உரைப்பதென்மு கம்மனே.
குறிப்பு :-கூடல்-மதுரை. சுற்றம்-பந்து. நூற்கருத்துநூல்களின் உட்கருத்து. அருத்தம் - செல்வம். முகம்மன் - உபசார வார்த்தை, 5
]க்கழுமலம் திருவியமகம் பண்-பழம்பஞ்சுரம்
உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனயே
கனல்விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பது முன்பணியே
அமரர்கள் செய்வது முன்பணியே பெற்றும் உகந்தது கந்தனையே
பிரம புரத்தை யுகந்தனையே.
குறிப்பு :-உற்று - இணைந்து. உமை - உமாதேவியார். காய்வது - வெறுப்பது. காமனை - பாதுகாக்கும் மனைவிமக்கள். காய்வது-எரிப்பது. காமனே-மன்மதன. உகந்தது-மகிழ்ந்தது.
திருநாவுக்கரசு நாயனுர் தேவாரம்
திருஅதிகை வீரட்டானம் - பண்-கொல்லி
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோ(டு)இசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம்னன் நாவில் மறந்தறியேன்

கீழ்ப் பிரிவு 25
உலந்தார்தலை யிற்பலி கொண்டு)உழல்வாய்
உடல்உள்ளுறு சூலை தவிர்த்(து)அருளாய் அலந்தேன் அடி யேன் அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
குறிப்பு:-சலம் பூவொடு தூபம் - திருமஞ்சனம் செய்தல், பூச்சாத்துதல், தூபமிடுதல். உலந்தார் - அழிந்தவர் (பிரமன்.) தல - தலையோடு. பலி-பிச்சை. உழல்வாய் - கிரிவாய். அலந் தேன்-துன்பமுற்றேன்.
பதிக வரலாறு :- சைவராகப் பிறந்த மருள்நீக்கியார் கல்வி கற்கப் பாடலிபுரத்துக்குச் சென்றவிடத்து, அங்கு மேலோங்கியிருந்த சமண சமயத்தை மேற் கொண்டார். அச்சமய அறிவிலும் ஒழுக்கத்திலும் மேம்பட்டுப் புத்தர்களை வா கில் வென்று சமணத்தை விளக்கியதால், தருமசேனர் என்ற பட்டம் பெற்ருர், சைவத்தை விட்டுத் தம் தம்பியார் சமண சமயத்தை மேற்கொண்டமையால் மிகவும் மனம் வருந்திய திலகவதி அம்மையார் அவரைச் சைவத்துக்கு மீட்டுத் தருமாறு வீரட்டானேச்சுரரை வேண்டினர். இதற்கு இணங்கிய பெருமான் தருமசேனரைச் சூலை நோய் வருத்தச் செய்தார். அந்நோயைத் தீர்க்கச் சமணரால் இயலாமையால் தமக்கை யாரிடம் முறையிட, திலகவதியார் விபூதியணியச் செய்து பரீ பஞ்சாகூடிர மகிமையை அவருக்கு உணர்த்திச் சிவபிரான வழிபடுதற்காகத் திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்ருர், அங்கே திருவருள்கூட, மருணிக்கியார், கூற்ருயின வாறு ' என்ற முதலையுடைய தேவாாப்பதிகத்தைப் பாடித் தமது நோயைத் தீர்க்குமாறு வேண்டினர். இதற்கிரங்கிய பெருமான் நோயையும் தீர்த்து, சொல்வளம் மிக்க பாடலைக் கேட்ட இன்பத்தினுல் அவருக்கு, ' நாவுக்கரசு ’ என்ற நாமத் தையும் கொடுத்தார். இப்பதிகத்தில் வரும் பாடல்களில் ஒன்று, ‘சலம் பூவொடு’ எனத் தொடங்கும் தேவாரம். 7

Page 17
26 திருவருட்பாத் திரட்டு
தனித்திருநேரிசை
காயமே கோயி லாகக்
கடிமன மடிமை யாக வாய்மையே தூய்மை யாக
மனமணி இலிங்க மாக G3, u IGBID G 5 ui u Luiri u Tsc T
நிறைய நீ ரமைய ஆடடிப பூசனை ஈசனுர்க்குப்
போற்றவிக் காட்டி னுேமே.
குறிப்பு:- காயம் - உடம்பு. கடிமணம் - காக்கப்படுகிற மனம் தூய்மை - பரிசுத்தம், மனமணி - மனத்திலுள்ள ஒளி. நேயம் - அன்பு. 8
திருத்தூங்கான மாடம் திருவிருத்தம்
பொன்னும் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னுவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல மின்னுரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல் குன்னுர் கடந்தையுள் தூங்கான
மாடச் சுடர்க்கொழுந்தே.
w குறிப்பு :- பொன்னர் திரு அடி - பிரகாசம் மிக்க திருப் பாதம். ஆவி - உயிர் கூற்று - யமன். மின் ஆரும் - ஒளி நிறைந்த மூவிலைச்சூலம் - மூன்று இலை வடிவான சூலாயுதம் (சூலாயுதத்தின் அடையாளம்), கொண்டல்-மேகம், துன்னுர்நெருங்கி நிறைந்த,
பதிக வரலாறு :-திருநாவுக்கரசு நாயனுர் சிவஸ்தலங்கள் பலவற்றை வணங்கித் திருத்தூங்கானே மாடம் என்னும்

Ağü Sfen 27
நலத்திற் பிரவேசித்துச் சுவாமியை வணங்கி, “ சுவாமி, அடியேன் இழிவினையுடைய சமண சமயத் தொடக்குண்டு வருந்திய இத் தேகத்துடனே உயிர் வாழ்வதற்குத் தரியேன். அடியேன் தரிக்கும் பொருட்டுத் தேவரீருடைய இலச்சினை ாகிய சூலத்தையும் இடபத்தையும் அடியேன்மேற் பொறித் தருள வேண்டும் ' என்ற கருத்தால் பொன்னுர் திருவடிக் கொன் றுண்டு விண்ணப்பம்’ என்னும் திருப்பதிகத்தைப் பாடினும். உடனே சிவபூதம் ஒன்று வேருெருவருக்கும் தெரி யாதபடி நாயனுருடைய தோளிலே இடபக் குறியையும் சூலக் (துறியையும் பொறித்தது. 9
திருவையாறு பண் - காந்தாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன் கண்டே னவர் திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்.
குறிப்பு:-மாதர் - அழகு. கண்ணி - மாலை, மலையான் - இமய மலையரசன். போது . மலர். சுவடு - தழும்பு. ஐயாறு - திருவையாறு. மடப்பிடி - இளம் பெண் யானை, களிறு - ஆண் u। &তাr.
பதிக வரலாறு :-திருநாவுக்கரசு நாயனுர் திருக்கைலாயத் திற் சிவபெருமானைத் தரிசிக்க விரும்பிச் சென்ருர், செல்லும் பொழுது அவர் உடம் பில் உள் ள சக்தி முழுவதும் நீங்கியது. அப்பொழுது சிவபெருமான் ஒரு முனிவர் போல ೧!! வுகொண்டுவந்து அவுரைத் தடுத்தார். அதற்கு நாயனுர்,

Page 18
28 திருவருட்பாத் திரட்டு
* திருக்கைலாய கிரியிலே எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமா னுடைய திருக்கோலத்தைத் தரிசித்தாலன்றி அழிந்துபோகும் இச்சரீரத்தைக்கொண்டு திரும்பேன்’ என்ருர். அவருடைய துணிவைக் கண்ட சிவபெருமான் அவருடைய இளைப்பு முழுவதையும் நீக்கித் திருவையாற்றிலே, கைலாயகிரியில் தாம் வீற்றிருப்பதுபோலக் காட்சி கொடுத்தருளிஞர். அக் காட்சியைக் காணப்போகும்பொழுது நாயனுர் அவ்விடத்தில் உள்ள சராசரப் பொருள்களை யெல்லாம் சத்தியும் சிவமுமாகப் பாவித்துத் துதித்து, “மாதர்ப் பிறைக் கண்ணியானை ’ என் னும் பதிகத்தைப் பாடினர். O
கோயில் திருவிருத்தம்
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ்
வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல்
மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற்
பாதமும் காணப்பெற்ருல் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.
குறிப்பு :- குனித்த - வளைந்த, குமிண்சிரிப்பு - குமிழ்த்த சிரிப்பு (புன்முறுவல்) பணித்த சடை-நீர்பொருந்திய சடை, எடுத்த பொற்பாதம்-தூக்கிய அழகிய பாதம். மனித்தப் பிறவிமனிதப் பிறவி. 1.
திருஆரூர் திருத்தாண்டகம்
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்

29
தலேயாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலரு நில்லே.
குறிப்பு :- நித்தலும்-ஒவ்வொரு நாளும். புலர்வதன் முன் - சூரியன் உதயமாகுமுன் (வைகறைப் பொழுதில்). அல கிடல்-கூட்டுதல், ஏத்தி-வழிபட்டு. ஆர-மிகுதியாக, புனல்கங்கை ஆதி - முதல் வன். அலருநில்லே - அழைத்துக் கொண்டிரு. 2
தனித் திருத்தாண்டகம் திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணு ராகில் அருநோய்கள் கெடவெண்ணி(று) அணியா ராகில்
அளியற்ருர் பிறந்தவா (று) ஏதோ வென்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் மூரே. (குறிப்பு :-திறம்-தன்மை. செப்பாராகில்-சொல்லாராயின், தீவண்டினர்-நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை உடைய n. சூழாராகில் - வலம் வராதவராயின். அளியற்ருர் - அன் பில்லாதவர். நலிய-வருந்த, பெயர்த்து-திரும்பவும். 13
சுந்தரமூர்த்தி நாயஞர் தேவாரம்
மத்தொகை பண்-பழம்பஞ்சுரம்
காட்டுர்க் கடலே கடம்பூர் மலேயே
கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே யழுந்து ரரசே
கொழுநற் கொல்லேறே

Page 19
3O திருவருட்பாத் திரட்டு
பாட்டுர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டுரானே
மாட்டு ரறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே.
குறிப்பு :- கடலே - கருணைக் கடலே. மலையே - குணக் குன்றே. பாட்டுர் - பாட்டுகளினுற் புகழ்ந்து பேசப்படும் ஊர். மாட்டூர் அறவா - இடபத்தை ஊர்கின்ற தரும சொரூபரே. 14
திருப்பாண்டிக்கொடுமுடி பண் . பழம்பஞ்சுரம்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன் பெற்ற ஒம்பிறந் தேன் இ னிப்பிற
конті) தன்மைவந் தெய்தினேன் கற்ற வர் தொழு தேத் துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி தற்ற வர் உனை நான்ம றக்கினும் சொல்லு நாநமச்சி வாயவே.
குறிப்பு :-பற்று மற்று இன்றி - பற்று வேறு இல்லாமல். பாவித்தேன் - நினைத்தேன். பெற்றலும் - நினைக்கப் பெறுதலும், பிறந்தேன் - பிறவிப் பயனே அடைந்தேன். நற்றவா - நல்ல தவத்தை உடையவரே. சொல்லும்-சொல்லிக்கொண்டிருக்கும். 15
திருஆரூர் பண்-செந்துருத்தி
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே.

கீழ்ப் பிரிவு . 8
குறிப்பு :-மீளா அடிமை-ஒரு காலத்தும் மீட்சியில்லாத அடிமை. அல்லல்-துன்பம். உள்ளே கனன்று-மனத்திலே அன்பு சேர்ந்து உருகி. சொன்னக்கால் - சொன்னவிடத்து. வாளாங்கு - ஒன்றும் பேசாமல், வாழ்ந்து போதிரே - நீரே வாழ்ந்து போம். −
பதிக வரலாறு :-சுந்தரமூர்த்தி நாயனுர் சங்கிலியாரைப் பிரிந்த காரணத்தினுலே அவருடைய கண்கள் மறைந்தன. நாயனும் சிவபெருமானிடம் முறையிட்டுப் பல பதிகம் பாடி, கிருவெண்பாக்கம் என்னும் தலத்தில் இடக்கண்ணைப் பெற்ருர், பின் திருவாரூரில் வந்து சிவபெருமானே வணங்கி, “ வலக் கண்ணையும் தந்தருளுவீர்' என்று முறையிட்டு, “மீளா அடிமை” என்னும் திருப்பதிகத்தைப் பாடி வலக்கண்ணையும் பெற்ருர், 16
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
திருச்சதகம்
மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்(து) உன்விரை யார் கழற்(கு)என் கைதான் தலைவைத்துக் கண்ணிர்
ததும்பி வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்த்(து) உன்னைப் போற்றி
சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை
பாய்என்னைக் கண்டுகொள்ளே.
குறிப்பு -மெய்-உடல். அரும்பி-மயிர்க்கச் செறிந்து. மிதிர்த்து-நடுங்கி. விரை ஆர்-வாசனை பொருந்திய, கழல்கிருவடி. வெதும்பி-கொதித்து. தவிர்ந்து-நீக்கி, கை-ஒழுக்கம்.  ையாய்-எல்லாவற்றையும் உடையவனே. 17

Page 20
32 திருவருட்பாத் திரட்டு
திருப்பள்ளியெழுச்சி
போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்(கு) இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்(து) எனக்(கு) அருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்(று) இதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்தழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
ஏற்று(உயர்) கொடிஉடை யாய்என உடையாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு - வாழ்முதல் ஆகிய-வாழ்வுக்குக் காரணமாகிய புலர்ந்தது - விடிந்தது. பூங்கழல் - தாமரைப் பூப்போன்ற திருப்பாதம். ஏற்றி - அருச்சித்து. அருள் மலரும் - அருளைச் செய்யும். எழில் நகை - அழகிய புன்முறுவல். சேற்று இதழ்க் கமலங்கள் - சேற்றில் வளரும் இதழ்களோடு கூடிய தாமரை. தண்வயல் - குளிர்ந்த வயல், ஏற்றுயர் கொடி - உயர்ந்த இடபக் கொடி. 8
திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா
கோயில் - பண்-பஞ்சமம்,
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுதழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குத் தேனே அளிவள ருள்ளத்(து) ஆனத்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகத் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
குறிப்பு :- ஒளிவளர் விளக்கே - ஒளி மிகுகின்ற தீபமே உலப்பிலா ஒன்றே - அழிவில்லாத ஒப் பற்ற பொருளே

33
அணி - அன்பு, அருள். அம்பலம் - தி ல் லை வெளி . ஆடு அங்கு நடனம் செய்யும் சபை, உகந்தாயை - விரும்பிச் செய்யும் உன் னை விளம்புமா விளம்பே - புகழுமாறு நீ சொல்வாயாக. 19
கபிலதேவ நாயஞர்
மூத்த நாயனர் திருவிரட்டை மணிமாலை
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும் ஆதலால் வானுேரும் ஆன முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
குறிப்பு - திரு - செல்வம். கைகூட்டும் - முடிவிக்கும் செஞ்சொற் பெருவாக்கு - சிறந்த சொல்லாகிய வா க் குச் சாதுரியம். பீடு - பெருமை, உருவாக்கும்-வடிவழகை உண் புக்கும். காதல் - பக்தி. 20
சேக்கிழார்
இஇ33 பெரிய புராணம்
ஆதியாய் நடுவு மாகி
அளவிலா வளவு மாகிச் சோதியாய் உணர்வு மாகித்
தோன்றிய பொருளு மாகிப் பேதியா வேக மாகிப்
பெண்ணுமாய் ஆணு மாகிப் போதியா நிற்குந் தில்லைப்
பொதுநடம் போற்றி போற்றி.
குறிப்பு :- பேதியா ஏகமாகி - மாறுதலின்றி எப்பொழு தும் ஒன்ருகவே நின்று. போதியா நிற்கும் - உபதேசஞ்

Page 21
84 திருவருட்பாத திரட்டு
செய்யும். பொது - சபை (கனகசபை). நடம் - திருக்கூத்து. 21
கச்சியப்ப சிவாசாரியார்
கந்த புராணம் விநாயகர் துதி
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின் மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
குறிப்பு :-திகழ் தசக்கரம், திகடசக்கரம் என நின்றது; விளங்குகின்ற பத்துக் கைகள் என்பது பொருள். சகடம் - தேர். சக்கரம்-தேர்ச்சில்லு. தாமரை நாயகன்-சூரியன். சகட சக்கரத் தாமரை நாயகன்-உருளுகின்ற ஒற்றைச் சில்லையுடைய தேரின் கண்ணே வருகின்றவனுகிய சூரியன். அகடு அசக்கு அரவின் மணியா - திருவயிற்றிற் கட்டிய உதரபந்தனமாக உள்ள பாம்பின் மாணிக்கமாக. ( சூரியன் விநாயகப் பெருமா னுடைய உதரபந்தனத்தின் இரத்தினமாக உறைகின்றன். ) விகடசக்கரன் தக்கன் யாகம் அழித்தபோது விட்டுணு விடுத்த சக்கரத்தை வீரபத்திரக் கடவுள் பூண்ட வெண்டலை யொன்று கெளவியது. விட்டுணுவின் பொருட்டு அச்சக்கரத்தைப் பெறக் கருதி விடுவசேனன் காஞ்சிபுரத்திற் சிவலிங்கம் தாபித்துப் பூசை செய்தான். வீரபத்திரக் கடவுள் அங்கெழுந்தருளிய போது விடுவசேனன் அச்சக்கரத்தைத் தரும்படி பிரார்த்திக்க, அவர், “ சக்கரம் நமது கையிலில்லை; கபாலங் கெளவியது; எது விதத்திலாயினும், அதுவே தரப் பெற்றுக்கொள் ” என்ருர், விடுவசேனன் காலிரண்டையும் வளைத்து வாயையும் நாசியை யும் கண்களையும் சுரித்து அசைத்துப் பற்கள் தோன்ற விகடக் கூத்தாடினுன். அதனைக் கண்டோ ரெல்லாரும் நகைக்க, வெண்டலையும் நகைத்தது. நகைத்தலும் சக்கரம் அதன். வாயினின்றும் பூமியில் விழ, விநாயகக் கடவுள் அதனை விரைந்து கவர்ந்து கொண்டு ஒன்றும் அறியாத்ார்போன்றிருந் *னர். விடுவசேனன் அதுகண்டு, அவர் திருமுன்னும்

35
விகடக் கூத்தாடி வேண்ட, அவர் அச்சக்கரத்தை அவன் கைக் கொடுத்தருளினுர். இக்காரணத்தால் விநாயகக் கடவுளுக்கு விக சக்கர விநாயகர் என்று பெயராயிற்று. விடுவசேனன் விட்டுணுவினுடைய சேணுதிபதி. 22
வாழ்த்து ஆறிரு தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க வெற்டைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க செள்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீ ரடியா ரெல்லாம்.
குறிப்பு :-வெற்பு-கிரவுஞ்சமலை, கூறுசெய் தனிவேல்பிளந்த ஒப்பற்ற வேல். குக்குடம்-கோழிக் கொடி, மஞ்ஞைபயில்வாகனம். யானைதன் அணங்கு-தெய்வயானை அம்மை
Iu III ir. 23
அருணகிரிநாதர் திருப்புகழ்
அடகார நிந்தைபட் டுழலாதே அறியாத வஞ்சரைக் குறியாதே உபதேச மந்திரப் பொருளாலே
உனேநா னினைந்தருட் பெறுவேனுே இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தையுத் தமிபாலா செபமாலை தந்தசற் குருநாதா
திருவாவி னன்குடிப் பெருமாளே.
குறிப்பு :-உழலாதே-அலையாமல், இபமாமுகன் - யானை முகத்தி?னயுடைய விநாயகர். இமவான்-இமயமலை அரசன். 24

Page 22
கீழ்ப் பிரிவு
2-ஆம் பாகம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் தேவாரம்
திருத்தருமபுரம் பண்-யாழ்முரி
மாதர்ம டப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வார் பூதஇ னப்படைநின் றிசை பாடவும் ஆடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர் வேதமோ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்திரை
இரைத் துரை கரை பொரு துவிம் மிநின் றயலே தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
குறிப்பு :-மாதர் - அழகிய, பிடி - யானை. படர்சடை - விரிந்த சடை. புனலர் - (கங்கை) ஆற்றை உடையவர். இரைந் நுரை - இரைத்து நுரைத்து. கரைபொருது-கரையைத் தாக்கி. தாது - மகரந்தம். அவிழ் - சொரியும், தயங்கும் - விளங்கும். எழில் - அழகு. பொழில் - சோலை. பயில் - வாழும்.
பதிக வரலாறு :- சம்பந்த சுவாமிகள் தலந்தோறும் அருளி வரும் திருப்பதிகங்களை அவருடன் தொடர்ந்து சென்ற திருநீலகண்டத்துப் பாணனர் என்பவர் யாழில் இசைப்பது வழக்கம். சுவாமிகள் தருமபுரத்திற்கு எழுந் தருளியபொழுது அங்குள்ள பாணனரின் உறவினர் சிலர் அவரது யாழ் இசையின் திறமையினலேயே சுவாமிகளுடைய திருப்பதிகங்கள் புகழடைந்தன என்றனர். இதைக் கேட்டு உள்ளம் வருந்திய பாணனுர், திருப்பதிகம் இசைக்கு உட்படா

கீழ்ப் பிரிவு 37
வகையை அவர்களும் உலகத்தவர்களும் அறியுமாறு ஒரு பதிகம் பாடும்படி சுவாமிகளை வேண்ட, அவர் இப்பதிகத்தை அருளிஞர். இது யாழில் அடங்காமையைக் கண்ட பாணனுர் யாழை உடைக்க ஓங்கினர். உடனே சுவாமிகள் அதனை வாங்கி, ‘அம்மையப்பர் திருவருளின் பெருமை எல்லாம் இக் கருவியினில் அளவு படுமோ ? இயன்றவரையிலேயே வாசிப் பீர்” எனக் கூறி மீண்டும் பாணனுரிடம் கொடுத்தார். பாணஞர் அதைப் பெற்று வழக்கம்போல் யாழ்த்தொண்டு புரிந்திருந்த
னர். 1
திருப்பிரமபுரம் பண் = சீகாமரம்
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன் அடியார்க்(கு) இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக் கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும் சங்கேயொத் தொளிர் மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
குறிப்பு -கொங்கு ஏயும் மலர் - தாது பொருந்திய பூக்கள். ஒளிர் - பிரகாசிக்கும். 2
திருவெண்காடு பண் சீகாமரம்
கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.
குறிப்பு:-கண்காட்டும் நுதல் - அக்கினித் திருக்கண்ணைக் காட்டுகின்ற நெற்றி, கனல் - அக்கினி, பெண்காட்டும் உருபார்வதியம்மையைப் பாதியாகக் கொண்ட திருவடிவம்; அர்த்த நாரீசுரமூர்த்தம். பண்காட்டும் இசையான் - பண்ணிற் பொருந் தப் பாடும் இசைவடிவாயுள்ளவர். புயல் - முகில். விடைகாட்டும் கொடி - இடபக்கொடி. 3

Page 23
38 திருவருட்பாத் திரட்டு
திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
குறிப்பு :-குடியாக - பரம்பரையாகத் தொண்டராகி. பரஞ் சோதி - பேரொளியாகிய பெருமான். பயிலும் - தங்கும். வெண் மணலே சிவமாக - வெண்மையான மணலே சிவலிங்கமாக, போதத்தால் வழிபட்டான் - சிவஞான மேலீட்டினுல் பூசித்து வழிபட்டவன் ( சடாயு).
இத்தலம் வைத்தீசுவரன் கோயில் எனவும் வழங்கும். இங்கே சிவபெருமானை, சம்பாதி, ஜடாயு என்ற கழுகுகளும், வேதங்களும், சுப்பிரமணியப் பெருமானும் வழிபட்டமையால் புள் இருக்கு வேள் ஊர் என்ற பெயர் உண்டாயிற்று என்பர். 4
பொது பண் -பியந்தைக் காந்தாரம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனுல் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே,
குறிப்பு :-வேய் உறு தோளி-மூங்கில்போலுந் தோள்களை உடைய உமாதேவியார். பங்கன் - பாகத்திலுடையவர். விடம் - விஷம், ஞாயிறு - சூரியன். திங்கள் - சந்திரன். பாம்பு இரண்டுஇராகு கேதுக்கள். ஞாயிறு முதல் கேது ஈருகிய ஒன்பது கிரகங்கள். நல்ல - நல்லன.

கீழ்ப் பிரிவு 39
பதிக வரலாறு :-சம்பந்த சுவாமிகள் வேதாரணியத்தில் எழுந்தருளியிருக்கும் நாட்களில் பாண்டி நாட்டில் சைவ சமயம் குன்றியது. சமணம் விருத்தியாயது. பாண்டியனும் அச்சமயத் தைத் தழுவினுன். இதனுற் கவலையுற்ற பாண்டிமா தேவி மங்கையர்க்கரசியும் முதல் மந்திரியாகிய குலச்சிறையாரும் சுவாமிகளைப் பாண்டிநாட்டுக்கு வருமாறு அழைத்தனர். இதற் கிணங்கிய சம்பந்தர் அப்போது அவருடனிருந்த அப்பருக்குத் தமது எண்ணத்தைத் தெரிவித்தார். * நீரோ சிறுபிள்ளை; சமண ருடைய வஞ்சனைக்கோ அளவில்லை. ஆதலால் அங்குப் போதல் தகாது’ என்று அப்பர் தடுத்தார். “ சிவபெருமான் நமது சிந்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருப்பதனுல் நமக்கு ஒரு தீங்கும் நேராது” எனக் கூறி, சம்பந்தர் சிவபெரு மானை வணங்கி, ‘வேயுறுதோளி பங்கன்’ என்ற திருப்பதிகத் தையும் பாடியருளினர். பின் அப்பரும் உடன்பட்டார். 5
திருக்கழுமலம்' பண் - கொல்லி
மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணினல் லஃதுறுங் கழுமல வள நகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.
குறிப்பு :- மண்ணில் - பூவுலகில், வைகலும் - தினமும்" பெருந்தகை - பெருந்தன்மையை உடையவர். 6
திரு ஆலவாய் பண் - புறநீர்மை
மங்கையர்க் கரசி வளவர் கோன் பாவை
வரிவ?ளக் கைம்மா. மானி பங்கuச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவப்

Page 24
40 திருவருட்பாத் திரட்டு
பொங்கழ லுருவன் பூதநா யகனுல்
வேதமும் பொருள்களு மருளி
அங்கயற் கண்ணி தன்னுெடு மமர்ந்த
ஆலவா யாவது மிதுவே.
குறிப்பு:-வளவர்கோன் பாவை-சோழ அரசன் புத்திரி யாகிய மங்கையர்க்கரசியார். மடமானி - மடமும் மானமும் உடையவள். பங்கயம் - தாமரை. பரவ - வணங்க, பொங்கு அழலுருவன்-ஓங்கி எரிகின்ற சோதி வடிவாகிய சிவபெருமான் அங்கயற்கண்ணி - அழகிய கயல்மீன்போலும் கண்ணையுடையவ ராகிய உமாதேவியார்; மீனுட்சியம்மையார். அமர்ந்த - எழுந் தருளியிருந்த.
பதிக வரலாறு :- திருஞான சம்பந்தமூர்த்தி நாயஞர் பாண்டிநாட்டுக்குப் போனபோது பாண்டிநாட்டு முதல் மந்திரி யாகிய குலச்சிறை நாயனுர் எதிர்கொண்டு வணங்க, அப் பொழுது நாயனுர் அவருக்கு அருண்மொழி கூறி அடியாரை நோக்கி, "நம் சிவபெருமானுடைய திருவாலவாய் எம்மருங்கில் உள்ளது?’ என்று கேட்டார். அடியவர் நாயனுரை வணங்கி நின்று, “இங்கே கோபுரந் தோன்றுகின்றது; திருவாலவாய் இது” என்ருர் ; நாயனுர் கைகுவித்து அன்போடு பூமியில் விழுந்து நமஸ்கரித்து, ‘ மங்கையர்க்கரசி’ என்னுந் திருப் பதிகத்தைப் பாடினுர், 7
பொது பண்-காந்தார பஞ்சமம்
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்(று) அஞ்சவு தைத்தன வஞ்செ முத்துமே.
குறிப்பு :-துஞ்சல்-நித்திரை செய்தல். நெஞ்சகம்நைந்துமனம் கசிந்துருகி, வஞ்சகம் அற்று அடி வாழ்த்த - ( மார்க்கண் டேயர் ) உண்மையான அன்போடும் சிவபெருமானைத் துதிக்க. கூற்று - யமன். அஞ்செழுத்து - பூரீ பஞ்சாட்சரம், 8

கீழ்ப் பிரிவு 4.
தும்ம லிருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையி னுந்துணை அஞ்செ முத்துமே.
குறிப்பு:-தொடர்தல்-வந்து சேர்தல். வெம்மை-கொடுமை. இம்மை - இப்பிறப்பு. அம்மை - மறு பிறப்பு.
பதிக வரலாறு :- திருஞானசம்பந்தமூர்த்தி நாய னு ர் தோணியப்பரை வணங்கிப் பாடிக்கொண்டிருக்கும் நாளிலே உபநயனப் பருவம் வந்தது. தமக்கு அது வேண்டியதன்ரு யினும் மற்றைப் பிராமணர்களின் வேண்டுகோளின்படி உப நயனம் செய்தார்; செய்தபோது அவர் எண்ணிறந்த வேதங்களை யோதி அந்தப் பிராமணர்களுடைய சந்தேகங்களை நீக்கினுர். பின் சகல மந்திரங்கட்கும் வித்து பூரீ பஞ்சாகூடிரம் என்பதை எல்லோரும் அறியும் பொருட்டு, ‘ துஞ்சலுந் துஞ்ச லிலாத போழ்தினும் " எ ன் னும் பஞ்சாகூடிரத் திருப்பதிகத்தைப் J Tlei. 9
திருநாவுக்கரசு நாயஞர் தேவாரம்
திருஒற்றியூர் திருநேரிசை
மனமெனுந் தோணி பற்றி
மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச்
செறிகடல் ஓடும் போது மதனெனும் பாறை தாக்கி
மறியும்போ(து) அறிய வொண்ணு(து) உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.
குறிப்பு :-மதி - புத்தி. சினம் - கோபம், செறி - பரந்த, மதன் எனும் - அலங்காரம் என்னும், மறியும்போது - கவி

Page 25
42 திருவருட்பாத் திரட்டு
ழும்போது. உனை உனும் - உன்னை நினைக்கும். நல்காய்கொடுப்பாய், கோ - தலைவர். 10
திருப்பாதிரிப்புலியூர் திருவிருத்தம்
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே வழுவா(து) இருக்க வரந்தர வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க்(கு) இரங்கி யிருந்தருள் செய்பா திரிப்புலியூர்ச் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த
தீவண்ணனே.
குறிப்பு :- வழுவாது - நீங்காது. வையகத்தே - உலகத் கிலே. வளநீர் - வளப்பம் மிக்க நீர். புனல் - ஆறு. தீவண் ணன் - நெருப்புப் போன்ற செந்நிறமுடையவர்.
மறுமாற்றத் திருத்தாண்டகம்
நாமார்க்குங் குடிஅல்லோம் நமன அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற் சங்கவெண் குழைஓர் காதிற் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னுேமே.
குறிப்பு :- குடி - அடிமை. இடர்ப்படோம் - துன்பப்பட மாட்டோம். நடலை - பொய் வாழ்வு. ஏமாப்போம் - துணிந்” திருப்போம். பிணி - பந்தம், நோய், நற்சங்கம் - நல்லசங்கு வெண்குழை - வெண்மையான காது அணி. கோமாற்கே T தலைவருக்கே. மீளா - மாறுபடாத, ஆளாய் - அடிமையாய்

கீழ்ப் பிரிவு 43
கொய்ம்மலர்ச்சேவடி - பூக்கள் நிறைந்துள்ள சிவந்த திருப் பாதங்கள். இணை - இரட்டை. குறுகினுேம் - அடைந்தோம்.
பதிக வரலாறு :-அப்பர் சுவாமிகள் சூலை நோயால் வருந் திய பின் மீண்டும் சைவ சமயத்தைத் தழுவியதை அறிந்த சமணர் தங்கள் சமயத்திற்குக் கேடு வந்ததென அஞ்சிப் பல்லவ அரசனிடம் முறையிட்டுச் சுவாமிகளுக்குத் தண்டனே விதிக்கு மாறு வேண்டினர். அதற்கு இணங்க அரசன் அவரைச் சபைக்கு அழைத்து வருமாறு மந்திரிகளுக்குக் கட்டளையிட் டான். அவர்கள் அழைப்புக்குப் பதிலாக இத் திருத்தாண்ட கத்தை சுவாமிகள் அருளினர்கள். 12
திருமறைக்காடு திருத்தாண்டகம்
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மனுளன் ருனே
குறிப்பு: - தூண்டு சுடர் - திரியைத் தூண்ட எரிகின்ற சுடர் (பிரகாசம் நிறைந்ததாயிருக்கும்). சூளாமணி - சூடாமணி: முடியிலே வைக்கப்படும் இரத்தினம். ஆற்ற எளியான் - மிகவும் எளியவன். மாண்ட - தவத்திலும் அன்பிலும் மேம்பட்ட, 13
தனித் திருத்தாண்டகம்
அப்பன் நீ அம்மை நீ ஐய லும் நீ
அன்புடைய மாமனும் மாமி யும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம் நீ ஒருகுலமும் சுற்றமும் ஓர்ஊ ரும் தீ

Page 26
44 திருவருட்பாத் திரட்டு
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்தீ
துணையாயென் நெஞ்சந் துரப்பிப் பாய்நீ
இப்பொன் நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன் நீ ஏ (று)ஊர்ந்த செல்வன் நீயே.
குறிப்பு :-ஐயன் - ஆசான். ஒண்பொருள் - சிறந்த செல் வம். துய்ப்பன - அனுபவிக்கும் பொருள்கள். உய்ப்பன - கடைத் தேறச் செய்யும் பொருள்கள். ஏறு - இடபம். 14
திருஒற்றியூர் திருத்தாண்டகம்
மண்ணல்ல விண்ணல்லை வலய மல்லே
மலையல்ல கடலல்லை வாயு வல்லை எண்னல்லை எழுத்தல்லை எரியு மல்லை
இரவல்லே பகலல்லை யாவு மல்லை பெண்ணல்லை ஆனால்லே பேடு மல்லே
பிறிதல்லை யானுயும் பெரியாய் நீயே உண்ணல்ல நல்லார்க்குத் தீயை யல்ல
உணர்வரிய ஒற்றியூர் உடைய கோவே.
குறிப்பு :-விண் - ஆகாயம். வலயம் - மண்டலம். எரி - தீ. யான்ஆயும் - நான் ஆராயும். உண்ணல்லை - உள் நல்லை. உணர் வரிய - அறிதற்கு அருமையான. 15
சுந்தரமூர்த்தி நாயஞர் தேவாரம் திருத்தொண்டத் தொகை பண் - கொல்லிக்கெளவாணம்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனுர்க் கடியேன்
இல்லையே என்னுத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

கீழ்ப் பிரிவு 45
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்தழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடி அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் (யேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
குறிப்பு :- திருத்தொண்டத்தொகை - கிருத்தொண்டர் கூட்டத்தின் திறம் கூறிய பதிகம். அடியார்க்கும் அடியேன் - அடியவர்களுக்கும் அடியேன். இல்லையே என்னுத - எதையும் இல்லையென்று சொல்லாத. வெல்லுமா மிகவல்ல - வெற்றி பெறுந்தன்மையில் மிக்க வலிமையுள்ள. பொழில் - சோலை. அம் தார் - அழகிய மாலை. ஆரூரன் - ஆரூரனுகிய யான். அம்மான் - சிவபெருமான். ஆள் - அடிமை.
பதிக வரலாறு :- ஒரு நாள் நம்பியாரூரர் திருவாரூர்த் திருக்கோயிலுக்குப் போஞர். அங்கே சிவனடியாரெல்லாரும் கூடியிருந்தனர். அப்பொழுது அவர், “ இவர்களுக்கு நான் அடிமையாகும் நாள் எந்நாளோ ?” என்று நினைத்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி அவருக்குக் காட்சி கொடுத்து, ‘ நீ அடியார்களை வணங்கி அவர்கள் மேலே பதிகம் பாடு” என்று கூறிஞர். ஆரூரர் சுவாமியை வணங்கி, ‘அடியார் தம்மை எதுவும் அறியாத தமியேன் எவ்வாறு பாடுவேன் ??? என்ருர், சுவாமி அவருக்கு அடியார்களுடைய த்ன்மையை அறிவித்து, “தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுத்தார். நாயனுர் பதிகம் பாடி அவர்களே வணங்கினுர்,
திருப்புகலூர் பண் - கொல்லி
தம்மை யேபுகழ்ந்(து) இச்சை பேசினும்
சார்வி னும்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்

Page 27
46 திருவருட்பாத் திரட்டு
இம்மை யேதரும் சோறும் கூறையும்
ஏத்த லாம் இடர் கெடலும் ஆம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்(கு)
யாதும் ஐயுற வில் இலயே.
குறிப்பு :- சார்வினும்-அடுத்திருப்பினும், தருகிலா-தத மாட்டாத, பொய்ம்மையாளர்-பொய்ம்மையுடைய (அற்ப)மனிதர். எந்தை-என்னப்பன். ஏத்தலாம் - (இறைவனைத்) துதித்தலும் ஆகும். இடர் கெடல்-துன்பம் அறுதல். அம்மை- மறுமை. 17
திருச்சோற்றுத்துறை பண்-கெளசிகம்
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம் தலையால் தாழும் தவத்தோர்க் கென்றும் தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே,
குறிப்பு-ஏத்தும்-துதிக்கும். நிலையா-நிலையில்லாத, நீத் தார்-நீக்கியருளுபவர். தாழும் - வணங்கும். தவத்தோர்க்கு
தவமுடையவர்களுக்கு. தெரலையாச் செல்வம் - அழியாத முத்திச் செல்வம், 18
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

கீழ்ப் பிரிவு * M 47
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு)இங்நன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னே என்னே
ஈதேளம் தோழி பரிசு ஏல்ஒர் எம்பாவாய்.
குறிப்பு -ஆதி - முதல். அந்தம் - முடிவு. சோதி - ஒளி வடிவான சிவபெருமான். வாள் தடங்கண் - வாளைப் போன்ற தும் அகன்றதுமான கண். வளருதியோ - உறங்குகின்ரு யோ. வன் செவி - வலிய (செவிடான) காது. மெய்ம்மறந்துதன்னை மறந்து. போது ஆர் அமளி - பூக்கள் பொருந்திய சயனம். ஈது - இது. பரிசு - தன்மை. ஏல் - (சொல்வதை ) ஏற்றுக்கொள். ஓர் - (அதன் பொருளை ) ஆராய்ந்து பார் எம்பாவாய் - எம் பதுமை போன்ற பெண்ணே. 19
கோயில் மூத்த திருப்பதிகம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீஇருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானுல் அடியேன் உன் அடியார் நடுவு னிருக்கும்
அருளைப் புரியாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
குறிப்பு - உடையாள் - நம்மை ஆளாக el 63) y S-DT தேவியார். பொன்னம்பலத்து எம் முடியா முதலே - பொற் சபையில் ஆடும் எமது அந்தமில்லாத முதல்வனே. 20

Page 28
48 திருவருட்பாத் திரட்டு
சேந்தனர் திருப்பல்லாண்டு
கோயில் பண் - பஞ்சமம்
மிண்டு மனத்தவர் போமின்கள் 哆
மெய்யடி யார்கள் விரைந்துவம்மின், கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
ஈசற்காட் செய்மின் குழாம்புகுந்து அண்டங் கடந்த பொருள் அளவி
லாததோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள
பொருளென்றே பல்லாண்டு கூறுதுமே.
குறிப்பு:- மிண்டு மனத்தவர் - முரட்டு மனத்தவர். பண்டு - முன்னே. 21
ğ8 (b eyp G) ir
திருமந்திரம்
அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்திலர் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே.
குறிப்பு - அறிவிலார் - அறியாதவர். அமர்ந்திருப்பர் - பொருந்தியிருப்பர். 22 محوع
சேக்கிழார் பெரிய புராணம்
ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக

கீழ்ப் பிரிவு 49
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
குறிப்பு :-ஐந்து பேரறிவு-மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து புலன்களாலும் உண்டாகும் அறிவு. கண்களே கொள்ள-மற்றப் புலன்களின் உணர்ச்சி குறைய, காண்பதாகிய உணர்ச்சி கூடி நிற்க, கரணங்கள் நான்கு - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை. முக்குணங்கள் - சாத்வீகம், இராசதம், தாமதம். இந்து - சந்திரன். தனிப்பெருங்கூத்து - ஆனந்த தாண்டவம். திளைத்து-அனுபவித்து. 23
கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராணம்
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க
குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்க ளோங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
குறிப்பு :-மலிவளம்-நிறைந்த செல்வம். கோல்முறைசெங்கோல் முறைப்படி, வேள்வி-யாகம். r 24
t-m-m-m--

Page 29
50 திருவருட்பாத் திரட்டு
அருணகிரிநாதர் திருப்புகழ்
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும் இலங்கு ருாலும் புலியத ளாடையும் மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா 2.சந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங் கயிருெடு தூதுவர் நலியாதே
அசைந்த போதென் துயர்கெட மாமயில் வர வேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே.
குறிப்பு -ஏறு - இடபம். கரி - யானை. அதள் - தோல், மழு-மழு ஆயுதம், கிளை-சுற்றம், உகந்த-விரும்பிய, நலியா தே-வருந்தாமல். புயமிசை-தோளில், மேவிய-பொருந்திய, 25

மத்திய பிரிவு
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுர் தேவாரம்
திருக்கேதீச்சரம் பண் - நட்டராகம்
விருது குன்றமா மேருவில் நாணர
வாஅழல் எரியம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
றுறைபதி யெந்நாளும் கருது கின்றவூர் கனகடற் கடிகமழ்
பொழிலனி மாதோட்டம் கருத நின்றகே நீச்சரங் கைதொழக்
கடுவினை யடையாவே.
குறிப்பு :- விருது குன்ற - (திரிபுரத்திலுள்ளோர்கள் ) வெற்றி கெட. நாணரவா - (ஆதிசேடன் என்னும் ) பாம்பு நாணுகவும். அனலெரி-சுடுகின்ற அக்கினி. பொருது மூவெயில் செற்றவன்-போர் செய்து முப்புரங்களையும் அழித்தவர். பற்றிவிரும்பி. கனை கடற் கடி கமழ் பொழிலணி - முழங்குகின்ற கடல் சூழ்ந்த வாசனை கமழும் சோலை செறிந்த. கடுவினை - 662 ar. 1.
பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவ ரமரர்கள் வேண்டநஞ்
சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது இருங்கடற் கரையினி லெழில்திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரம் தொழுதெழக்
கெடுமிடர் வினைதானே,

Page 30
52 திருவருட்பாத் திரட்டு
குறிப்பு :- சரிதையர் - ஒழுக்கத்தை உடையவர். எரு துகைத்து-இடபத்தைச் செலுத்தி. அருநட்டம் - அரிய நடனம். பேணுவர்-விரும்புவர். அமரர்கள்-தேவர்கள். ஈடம் - இடம்: இரும்-பெரிய எழில் திகழ்-அழகு விளங்கும். இடர்வினை - வருத்தத்தைச் செய்யும் தீவினை.
பெண்ணுெர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறு மிடுபிச்சைக் குண்ண லாவதோ ரிச்சையி னுழல்பவர்
உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சர மடைபவர்க்
கருவினை யடையாவே.
குறிப்பு -ஆர்க்க - ஒலிக்க. சுண்ணம் ஆதரித் தாடுவர்விபூதியை விரும்பி அணிபவர், அகம்-வீடு. உண்ணலாவதோர் இச்சையினுழல்பவர் - உண்ண வேண்டுமென்னும் விருப்ப முடையவர்போலச் சென்றவர்.
பொடிகொள் மேனியர் புலியத வரையினர்
விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
மறிகடல் மாதோட்டத் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
மொய்த்தெழும் வினைபோமே.
குறிப்பு-பொடி-விபூதி. அதள்-தோல், வடிகொள் மூவிஃல வேலினர்-கூர்மை பொருந்திய முத்தலைச் சூலத்தை உடைய வர். மறிகடல் - திரைபொருங்கடல் ஆதரித்து - விரும்பி.

மத்திய பிரிவு 58
பரிந்த சிந்தையர்-அன்புகொண்ட மனத்தை உடையவர். அடி பேண-பாதங்களை வணங்க, மொய்த்து-திரண்டு. 4.
நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
அடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
மலிகடன் மாதோட்டத் தெல்ல யில்புக ழெந்தைகே தீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி அல்ல லாசறுத் தரனடி யிணைதொழும்
அன்பரா மடியாரே.
குறிப்பு: - ஆற்றவும் - மிகவும். பார்மிசை - உலகத்தில். வான்-உயர்ந்த, மலி - நிறைந்த, எல்லையில் புகழ் எந்தை - அளவில்லாத கீர்த்தியையுடைய எம் தந்தை போன்றவர். அல்லல் - துன்பம். 5
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
பொருந்தவைத் தொருபாகம் மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
பொருளினர் குடிவாழ்க்கை வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
தீச்சரம் பிரியாரே.
குறிப்பு-பேழை - பெட்டி. வார் - நீண்ட, திருமகள் - கங்காதேவி. மாழை - மாவடு. அங்கயற்கண்ணி - அழகிய கயல்மீன் போன்ற கண்ணையுடைய உமாதேவியார். அம் பொழில் - அழகிய சோலை, மந்திகள் - குரங்குகள். கேழல் வெண் மருப்பு - (விஷ்ணுவாகிய) பன்றியினது வெண்மையான கொம்பு. 6

Page 31
54 திருவருட்பாத் திரட்டு
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
லுலகினி லுயிர்வாழ்க்கை
கண்ட நாதனுர் கடலிடங் கைதொழக்
காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாள் தொறுந் துதிசெய அருள்செய்கே
தீச்சர மதுதானே.
குறிப்பு - பண்டு-முற்காலத்தில், நால்வருக்கு - சனகா, சநாதனர், சனற்குமாரர், சனந்தனர் ஆகிய நால்வருக்கு. கட லிடம்-கடல் சூழ்ந்த உலகத்துள்ளார். காதலித்து - விரும்பி, பண்செயும்-கீதங்களைப் பாடும். மலர்ப்பொழில் - பூஞ்சோலை மஞ்ஞை நடமிடும்-மயில்கள் கூத்தாடும். 7
தென்னி லங்கையர் குலபதி மலைநவிந்
தெடுத்தவன் முடிதிண்தோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
தலைவனுர் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
பொருந்திய மாதோட்டத் துன்னி யன்பொடு மடியவ ரிறைஞ்சுகே
தீச்சரத் துள்ளாரே.
குறிப்பு :-பதி-தலைவன். நலிந்து-வருந்தி. திண்தோள்வலியபுயம்: அடர்த்து-நெரித்து. உன்னி-சிந்தித்து. 8
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் ,
புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் னடியிணை காண்கிலா
வித்தக மென்னுகும்

மத்திய பிரிவு 55
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னுெடுந் திருந்துகே தீச்சரத்
திருந்தனம் பெருமானே.
குறிப்பு - பூவுளான் - தாமரை ஆசனத்தவராகிய பிரமா. கடல்வண்ணன் - சமுத்திரம்போன்ற நீல நிற த்த வரா கிய விஷ்ணு. புவியிடந்து -(பன்றியாய்ப்) பூமியைக் கிழித்து. எழுந் தோடி - (அன்னமாய்) மேலே எழுந்து சென்று. நாடி - தேடி. வித்தகமென்னுகும் - கடவுட்டன்மை எவ்வாருகும். பூகம்-கமுகு. கதலி - வாழை, A. 9
w armw-wow
புத்த ராய்ச்சில புனை துகி லுடையவர்
புறனுரைச் சமண் ஆதர் எத்த ராகிநின் றுண்பன ரியம்பிய
ஏழைமை கேளேன்மின் மத்த யானையை மறுகிட உரிசெய்து
போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
தீச்சர மடைமின்னே.
குறிப்பு - புனைதுகில் - தைத்த வஸ்திரம். புறனுரைபுறங்கூறல். எத்தர் - வஞ்சிப்பவர். ஏழைமை - அறியாமை. கேளேன்மின் - கேளாதொழியுங்கள். மத்த யானை - மதயானே. மறுகிட - அஞ்சும்படி. 10
மாடெ லாம்மண முரசெனக் கடலின
தொலிகவர் மாதோட்டத் தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின் பத்தர்கள்
பரகதி பெறலாமே.

Page 32
56. திருவருட்பாத் திரட்டு
குறிப்பு 2-மாடு-பக்கம். ஏறு-இடபம். அணிகாழி-அழகிய சீர்காழி, பரகதி - மோட்சம். 11
திருநாவுக்கரசு நாயனர் தேவாரம்
பொது பண்-காந்தார பஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
குறிப்பு :-சொற்றுணை வேதியன்-ஆன்மாக்களுக்கு உற்ற துணை யென்று கூறப்படும் வேத முதல்வன். பொற்றுணைத் திருந்தடி - பொலிவுள்ள திருத்தமாகிய இணையடிகள். கற் றுணைப் பூட்டி - கல்லோடு சேர்த்துக் கட்டி, நற்றுணை - நல்ல துணை. * 1.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கலம் அரன் அஞ் சாடுதல் கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
குறிப்பு :- அருங்கலம் - அரிய அணிகலம், பொங்கு - பொலிவுள்ள. ஆவினுக்கு - பசுவுக்கு, அரனஞ்சாடுதல் - சிவ பிரான் பால், தயிர், நெய், கோசலம், கோமயமாகிய ஐந்து கெளவியங்களையும் அபிஷேகமாகக் கொண்டருளுதல், கோவி னுக்கு - அரசனுக்கு. கோட்டமில்லது-கோணுதல் இல்லாமை
செங்கோன்மை. 2
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

மத்திய பிரிவு 57
குறிப்பு :- விண்ணுற - வானத்தைப் பொருந்த, வெவ் வழல் - கொடிய நெருப்பு. உண்ணிய புகில் - உண்ணுதற் குப் புகுந்தால். பண்ணிய - படைத்த. பயின்ற-பிறவிதோறும் செய்து திரண்ட, நண்ணி நின்றறுப்பது - பொருந்தி நின் ருெழிப்பது. 3
இடுக்கண் பட் டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவு வோமல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாம்உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
குறிப்பு :-இடுக்கண் - துன்பம். அடுக்கல் - மலை. அரு ளின் - கருணையினுல். நடுக்கத்தை - அச்சத்தை. 4
வெந்த நீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
குறிப்பு -வெந்த நீறு - சிவாக்கினியில் விளைந்த விபூதி. விரதிகள் - தபசிகள். அந்தணர் - பிராமணர். அருமறை - அரியவேதம். ஆறங்கம் - வேதாங்கம் ஆறு ; சிகூைடி, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தோபிசிதம், சோதிடம். 5
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
குறிப்பு:-சலமிலன் சங்கரன் - சங்கரர் ( எவரிடத்தும் ) வைரமில்லாதவர். சார்ந்தவர்க்கு-அடியவர்க்கு. நலம்-நன்மை. நல்குவான் நலன் - (அடியவர்க்கு) நன்மை புரிவார். குலமில ராகிலும் - குலநல மற்றவர்களாயினும். 6

Page 33
58 திருவருட்பாத் திரட்டு
வீடினுர் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினுர் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினேன் ஓடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
குறிப்பு :-வீடினுர் உலகினில் - உலகில் (பாவிகள் ) கெட் டொழிந்தார்கள். விழுமிய - சிறந்த, அந்நெறி - அம்முத்தி நெறி. உருவம்-(இறைவன்) திருவுரு. நாடினேன்-உண்மை (இலக்கணத்தை) ஆராய்ந்தேன். நாடிற்று-தலைப்பட்டது. 7
இல்லக விளக்கது இருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
குறிப்பு :- இல்லக விளக்கு - வீட்டினுள் வி ள க்கு . சொல்லக விளக்கு-சொல்லினுள் விளக்கு. பல்லக விளக்கு - பலவிடத்து விளக்கு. நல்லக விளக்கு - நல்ல மனவிளக்கு. 8
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணுதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.
குறிப்பு :-முன்னெறி - (எல்லா நெறிகளுக்கும்) முற்பட்ட நெறி. முக்கனன் தன்நெறி - மூன்று கண்களையுடைய சிவ
பிரானது மார்க்கம். சரண் - புகலிடம், திண்ணம் - நிச்சயம். அந்நெறி - அம்மார்க்கம். அடைந்தவர்க்கு - (சிவஞானத்தை) அடைந்த அடியார்களுக்கு. நல்நெறி - நல்வழி. 9
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பினை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணரில்லையே.

மத்திய பிரிவு 59
குறிப்பு :-மாப்பினை தழுவிய மாது-பெருமை வாய்ந்த பெண்மான் போன்ற உமாதேவியார். பூப்பிணை திருந்தடிபூமாலைகளை அணிந்த சிறந்த திருவடிகள். நாப்பிணை தழுவியநா இயைந்து தழுவிய, 10

Page 34
மேற் பிரிவு
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் தேவாரம்
திருக்கோணமலை பண்-புறநீர்மை
நிரைகழ லரவஞ் சிலம்பொலி அலம்பும்
நிமலர் நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோதம் நித்திலங் கொழிக்கும்
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு :-நிரைகழல் அரவம்-வரிசையான வீரக்கழலின் ஒலி. அலம்பும்-ஒலிக்கும். நிமலர்-மலமற்றவர். வரைகெழு மகள்-மலையில் தோன்றிய உமாதேவியார், விடையர்-இடபத்தை உடையவர். சந்து-சந்தனம். வரன்றி-கொழித்து. குரைகடல் ஒதம் - ஒலிக்கின்ற கடல் அலை. நித்திலம் - முத்து. 1.
கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு முடனுய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமு னித்திலஞ் சுமந்து குடிதனை நெருக்கிப் பெருக்கமாய்த் தோன்றும்
கோணமா மலையமர்ந் தாரே.

மேற் பிரிவு 6
குறிப்பு 3-கடிதென-விரைவாக. கரி - யானை, உரி-தோல். பிடியன - பெண் யானைபோன்ற, பெய்வளை மடந்தை - வளையலை யணிந்த உமாதேவியார். பிறைநுதலவள் - பிறைபோன்ற
நெற்றியை உடையவர். நித்திலம் - முத்து. 2
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார் கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதில்மேல் தனித்தபே ருருவ விழித்தழல் நாகம் தங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு :-பணித்து இளந்திங்கள் - குளிர்ச்சியுடையதாகிய பிறைச் சந்திரனே, பைந்தலை - பசிய தலை. துவர்வாய்க் காரிகைக பவளம் போன்ற வாயினையுடைய உமா தேவியார். தனித்த பேருருவ விழித்தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையா . நெருப்புப் போன்ற கண்களையுடைய (வாசுகியெனும்) பாம்பினே (அம்பாகக்)கொண்ட ஒப்பற்ற பெரிய உருவத்தினையுடைய மேருமலையினைக் கொடிய வில்லாக, 3
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனுர் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றும் செழுங்கடற் றரளம்
செம்பொனு மிப்பியும் சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்கும்
கோணமா மலையமர்ந் தாரே.

Page 35
82 திருவருட்பாத் திரட்டு
குறிப்பு --மதனஃனப் பொடியா விழித்து அவன் தேவி வேண்ட முன் கொடுத்த விமலனுர்-மன்மதனேச் சாம்பராகும் படி கோபித்துப் பார்த்துப் பின் அவன் மனைவியாகிய இர, தேவி வேண்டிக்கொள்ள மீண்டும் எழுப்பிக் கொடுத்த நின் மலர். கமலம்-தாமரை. தெழித்து-பேரொலி செய்து. தரளம் முத்து. இப்பி - சிப்பி. வன்றிரைகள்-வலிய அலைகள்,
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினு மனத்து மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையங் கடலுடன் தழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே,
குறிப்பு -போற்றிசைப்பார்கள்-வணங்கித் துதிப்பார்கள் மருவி நின்று அகலா மாண்பினர் - பொருந்தி நின்று நீங்காத பெருமையுடையவர்.
பரிந்துதன் மனத்தால் வழிபடு மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளும்
செம்மையார் நம்மையா ஞடையார் விரிந்துயர் மெளவல் மாதவி புன்ன
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு:-பரிந்து - மனம் கசிந்து. மாணி- பிரமசாரியாகிய மார்க்கண்டேயர். கூற்றை - யமனே, செம்மையார் - செவ்வியூ

மேற் பிரிவு 68
தன்மையுடையவர். ஆளுடையார் - அடிமையாகக் கொண்டவர்.
மெளவல்-மல்லிகை. மாதவி - குருக்கத்தி. பொழில்-சோலை. 8
எடுத்தவன் தருக்கை யிழித்தவர் விரலால்
ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு :-எடுத்தவன் தருக்கை இழித்தவர் விரலால். கைலாய மலையைத் தூக்கியவனுகிய இராவணனது கர்வத் தினைப் பெருவிரலால் அடக்கியவர், ஆத்தம்-இஷ்டம், 7
அருவரா தொருகை வெண்டலை யேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவரு மறியா வண்ண மொள் கொரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்கும் குருவராய் நின்ருர் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு:- அருவராது - அருவருப்படையாது. வெண் டலை - வெண்மையான மண்டையோடு. அகம் - வீடு பலிபிச்சை. பெருவர் - பெரியவர். நீர்  ைம ய ர் - தன்மையர் சீர்மை - சிறப்பு. கடல்வண்ணன் - சமுத்திரம்போன்ற

Page 36
64 திருவருட்பாத் திரட்டு
நிறத்தையுடைய விஷ்ணு . ஒள்ளெரி - ஒளி பொருந்திய சோதி. மாற்கு - விஷ்ணுவுக்கு. . . . 8
நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும்
நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசின ரொருபால்
மெல்லிய லோடுட னுகித் துன்றுமொண் பெளவ மவ்வலும் சூழ்ந்து
தாழ்ந்துறு திரை பல மோதிக், குன்றுமொண் கானல் வாசம்வந் துலவும்
கோணமா மலையமர்ந் தாரே.
குறிப்பு: - உணும்" - உண்ணும். சமணும் - சமணரும் தேரும் - புத்தரும். நெறியலாதன - நன்னெறியல்லாதனவா கிய சொற்களை. பரிசினர் - தன்மையுடையவர். பால் - பக்கம்.
மெல்லியல் - மெல்லிய தன்மையுடைய உமாதேவியார். துன்றும் - பொருந்தும். பெளவம் - க்டல், மவ்வல் - மல்லிகை, கானல் - கடற்கரைச் சோலை. 9
குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் கழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன் உற்ற செந் தமிழார் மாலையீ ரைந்தும் உரைப்பலர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாகித் தொல்வினையடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.
குறிப்பு :-கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் - நூல் களைக் கற்றுணர்ந்த கேள்வியறிவினையுடைய சீகாழிப்பதியில் வாழும் பெரியவர். தொல்வினை - பழைய பாவங்கள். 10
mത്തnംn

மேற் பிரிவு 65
திருநீற்றுப்பதிகம் . . . திரு ஆலவாய் பண் - காந்தாரம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.
குறிப்பு:-வானவர் - தேவர். சுந்தரம் - அழகு. தந்திரம்(மோட்சத்திற்கு) உபாயம். செந்துவர் வாய் உமை பங்கன் - சிவந்த பவளம் போன்ற திருவாயினையுடைய உமாதேவியாரைப் பாகத்திற் கொண்டவர். திருவாலவாய் - மதுரை. 1
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது 0 ஒதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.
குறிப்பு :-வெந்துயர் - கொடிய துன்பம். போதம்-ஞானம். புன்மை - குற்றம். ஓதத் தகுவது - (பெருமையை எடுத்துக்) கூறிப் பாராட்டத் தக்கது. உண்மை - உண்மை நூல்கள். சீதப்புனல் - குளிர்ந்த நீர். 2
鑫“
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு புத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீரு திருஆல வாயான் திருநீறே:
குறிப்பு --முத்தி - மோட்சம். சத்தியம் - உண்மை. தக்
கோர் - பெரியோர். பரவ இனியது - துதிக்க இன்பந்தருவது. சித்தி - விருப்ப நிறைவு; வெற்றி. 3
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேனந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

Page 37
66 திருவருட்பர்த் திரட்டு
குறிப்பு :- கவின் - அழகு. பேணி - போற்றி. மாணந் தகைவது-குற்றத்தை அழிப்பது; டிானம் என்பது மாணம் என நின்றது. பதி-அறிவு. சேணம்-பெருமை. 4.
பூச இனியது நீறு புண்ணிய புறாவது நீறு பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லசம் ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.
குறிப்பு:- புண்ணியம் - புண்ணிய வடிவம். அந்தம் " முடிவு 5
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு வருத்தந் தணிப்டாது நீறு வானம் அளிப்பது நீறு பொருத்தம தாவது நீறு புண்ரிையர் பூசும்வெண் ணிறு திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.
குறிப்பு --- அருத்தம் ઉોક-6 ulti. அவலமறுப்பது --- துன் பத்தை நீக்குவது. வானம் அளிப்பது - மோட்சத்தைக் கொடுப் பது. திருத்தகு - செல்வம் பொருந்திய, 6
எயிலது அட்டது நீறு இருமை $கும் உள்ளது நீறு பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு துயிலேத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.
குறிப்பு:-எயில் - புரம். அட்டது-அழித்தது. இருமைக் கும் உள்ளது-இம்மைக்கும் மறுடிைக்கும் உறுதுணையாயுள்ளது. பயிலப்படுவது-மிகுதியும் அணியப்படுவது. பாக்கியம் - செல வம். துயில் - மரணம். அயில் - கூர்மை, ཆ །
இராவணன் மேலது நீறு எண் எனத் தகுவது நீறு பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

மேற் பிரிவு 67.
குறிப்பு :-பராவணம்-பராசக்தியின் தன்மை, தராவணம்பூமிதேவியின் தன்மை, தத்துவம்-உண்மை. அரா-பாம்பு. 8
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.
குறிப்பு :-மால் - விஷ்ணு. அயன் - பிரமா. மெய்யது - உடம்பிலுள்ளது. ஏல - பொருந்த, இடர் - துன்பம். ஆலம் - நஞ்சு. மிடறு - கழுத்து. 9
குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக் கண்திகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆலவாயான் திருநீறே.
குறிப்பு :-குண்டிகைக் கையர்-குடத்தைக் கையில் தாங்
கிய சமணர், சாக்கியர் - புத்தர். எண் திசைப்பட்ட பொரு ளார்-அட்டதிக்குப் பாலகர், தகை-தன்மை. அண்டத்தவர் - தேவர். 10
ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
குறிப்பு :-ஆற்றல் அடல் விடை - வல்லமையும் வெற்றியு முடைய இடபம். புகலி நிலாவும் பூசுரன் - சீகாழியில் விளங் கும் பிராமணர். தென்னன் - பாண்டியன். தீப்பிணி - கொடிய வியாதி. சாற்றிய - சொல்லிய, 11

Page 38
68 திருவருட்பாத் திரட்டு
சுந்தரமூர்த்தி நாயனுர் தேவாரம் திருக்கேதீச்சரம் u soot - நட்டபாடை
நத்தார்படை ஞானன்பசு வேறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானைஉரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு :-நத்தார் - பகைவர்களை. படைஞானன்-(கொல் லுந் தன்மையுள்ள) ஞானமாகிய படையை உடையவன். பசுஎறி. இடபவாகனன். நனே கவிழ்வாய் - (மதநீரால்) நனைந்த தொங் கும் வாயையுடைய. உரி - தோல். பத்தாகிய - அன்புமயமாகிய, * நத்தார்படை ஞானன் பசுவேறி ' என்பதற்கு, “ பாஞ்சசன்னிய மென்னும் சங்கையேந்திய ஞானியாகிய விஷ்ணுவென்னும் இட பத்திலேறினவர் எனவும் பொருள் கூறலாம்.
சுடுவார்பொடி நீறுந்நல்ல துண்டப்பிறை கீளும் கடமார்களி யானையுரி அணிந்தகறைக் கண்டன் படஏரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் திடமாவுறை கின்ருன்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு:-சுடுவார் பொடிநீறும் - சுடப்பட்டவர்களின் சாம் பரையும். துண்டப்பிறை கீளும் - பிறைச்சந்திரனையும், அதை ஞாணையும். கடமார் - மதத்தையுடைய, உரி-தோல், படவேரிடை மடவாள் - படத்தினையொத்த இடையினையுடைய உமாதேவி யார். திடமா - உறுதியாக.
அங்கம்மொழி யன்னுரவர் அமரர் தொழு தேத்த வங்கம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பங்கம்செய்த பிறைசூடினன் டாலாவியின் கரைமேல் செங்கண்ணர வசைத்தான் திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு - அங்கம் மொழியன்னுரவர் - வேதாங்கங்களை ஒதிய பிராமணர்கள். வங்கம் - கப்பல். பங்கம் செய்த பிறை

மேற் பிரிவு 69
துண்டப் பிறை, செங்கண் அரவசைத்தான்-சிவந்த கண்களை யுடைய சர்ப்பக் கச்சை யணிந்தவர். 3
கரியகறைக் கண்டன் நல்ல கண்மேலொரு கண்ணுன் வசியசிறை வண்டு யாழ்செயும் மாதோட்டநன் னகருள் பரியதிரை எறியாவரு பாலாவியின் கரைமேல் தெரியுமறை வல்லான்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு:-வரிய சிறை-வரிகளோடு கூடிய சிறகு, பரிய திரை-பெரிய அலைகள். எறியா-வீசி. 4.
அங்கத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி வங்கம்மலி கின்றகடல் மாதோட்ட நன் னகரில் பங்கம்செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல் தெங்கம்பொழில் சூழ்ந்ததிருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு :- அங்கம் - உடம்பு. வங்கம் - கப்பல். பங்கம் செய்த மடவாளொடு-திருமேனியைப் பகிர்ந்துகொண்ட உமா தேவியாரோடு. தெங்கம் பொழில்-தென்னஞ்சோலை. 5
வெய்யவினை யாய அடி யார்மேலொழித் தருளி வையம்மலி கின்றகடல் மாதோட்டநன் னகரில் பையேரிடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்யசடை முடியான்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு :- வெய்ய-கொடிய. வையம் மலிகின்ற-பூமியைச் சூழ்ந்துள்ள. பையேரிடை மடவாள்-படத்தை யொத்த இடை யினையுடைய கெளரியம்மை. செய்ய சடைமுடியான் - சிவந்த ச்டாமுடியை யுடையவர். 6
ஊனத்துறு நோய்கள்ளடி யார்மேலொழித் தருளி வானத்துறு மலியுங்கடல் மாதோட்டநன் னகரில் பால்நத்துறு மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்தெயி றணிந்தான் திருக் கேதீச்சரத் தானே.

Page 39
7C) திருவருட்பாத் திரட்டு
குறிப்பு :-ஊனத்துறு நோய்-குற்றம் மிகுந்த நோய். வால்நத்து உறுமலியும்-வெண்சங்குகள் மிகுந்து நிறையும். பால் நத்துறுமொழியாள்-பாலைப் போன்ற இனிய மொழியை யுடையவரான உமாதேவியார், ஏனத்து எயிறு - பன்றியின் கொம்பு. 7
அட்டன் அழ காகஅரை தன்மேலரவு ஆர்த்து மட்டுண்டுவண் டாலும்பொழில் மாதோட்டநன் னகரில் பட்டவரி நுதலாளொடு பாலாவியின் கரைமேல் சிட்டன் நமை யாள்வான்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு:- அட்டன்-அஷ்டமூர்த்தத்தையுடையவன். அரவு ஆர்த்து-பாம்பினை அணிந்து. மட்டு - தேன். வண்டாலும் பொழில்-வண்டுகள் சப்திக்கும் சோலை. பட்டவரி நுதலாள் - பட்டத்தினை பணிந்த நீண்ட நெற்றியையுடைய உமாதேவி
யார். சிட்டன் - மேலானவன். 8
மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி துரங்கும்பொழில் மாதோட்டநன் னகரில் பாவம்வினை யறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவன்னெனை யாள்வான்திருக் கேதீச்சரத் தானே.
குறிப்பு :-மூவர்-பிரமா, விஷ்ணு, உருத்திரர். இருவர் - சக்தி, சிவம். தூங்கும் பொழில்-தொங்குகின்ற சோலை. 9
கறையார்கடல் சூழ்ந்தகழி மாதோட்டநன் னகருள் சிறையார்பொழில் வண்டுயாழ்செயுங் கேதீச்சரத்தான மறையார்புக ஆரன்னடித் தொண்டனுரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ்சொலக் கூடாகொடு வினையே.
குறிப்பு:-கறையார் - கருமை பொருந்திய, கழி-உப்பளம், சிறையார் பொழில் வண்டு யாழ் செய்யும் - சிறகுகளையுடைய வண்டுகள் பண்பாடுகின்ற சோலை சூழ்ந்த, மறையார் புகழுரன்பிராமணர்கள் புகழும் நம்பியாரூரன். கூடா கொடுவினை-தீவினை கள் அடையா. 10

மேற் பிரிவு 7
மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்
கோயிற்றிருப்பதிகம்
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனந்தின் வழியடைத்து அமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவத் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே,
குறிப்பு :-மாறி-(என் வழி வராமல்) மாறுபட்டு, வழி அடைத்து - வாயில்களை மூடி, அமுதே ஊறிநின்று என்னுள் எழுபரஞ்சோதி - பேரானந்தமே சுரந்துகொண்டிருக்கச் செய்து என் உள்ளத்தில் எழுகின்ற மேலான ஒளியே. உள்ளவா காண - (உன்) உண்மையான சொரூபத்தை (நான்) காணும் படி. தேறல் - தேன். ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே - பதவிகள் எல்லாவற்றையும் கடந்த முடிவில்லாத இன்பமயமானவனே. அன்பே-அன்பு வடிவாயிருப்பவனே. 1
அன்பினுல் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனுெர்கைம் மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரசே,
குறிப்பு -ஆவி- உயிர். ஆக்கை - உடம்பு என் பரம் அல்லா - எனக்குக் கிடைக்கத் தகுதியில்லாத. இன் னருள்-இனிய அருள். முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப்

Page 40
72 திருவருட்பாத் திரட்டு
பரந்த முத்தனே - ( எல்லாவற்றிற்கும் ) முன்னுமாய் ( அவற் றிற்குப் பின்னுமாய்க் கலப்பினுல் ) அவை முழுதுமாய் வியா பித்துள்ள பாசநீக்கமுள்ளவனே. 2
அரைசனே அன்பர்க் கடியனே ஆறுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.
குறிப்பு :-புரைபுரைகனிய - உள்துளை (எலும்புத்துளை ) வரையில் நெகிழ இருள் கடிந்த - அஞ்ஞானத்தைப் போக் கிய. திரை பொரா மன்னும் அமுதத் தெண்கடலே - அலை மோதாத ( கலக்கம் இல்லாத) நிலை பெற்ற அமுதமாகிய தெளிந்த (ஆனந்தக்) கடலே. உரை உணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே-சொல்லையும் சுட்டறிவையும் கடந்து நின்று (சிவஞானத்தால்) அறியப்படும் பேரறிவே. உரைக்கு மாறு-புகழ்ந்து கூறும் விதத்தை. . 3
உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்குந் தெரிவரும் பொருளே இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
எனப்பிறப் பறுக்கும் எம்மருந்தே திணிந்ததோர் இருளில் தெளித்ததுா வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தா மில்லா இன்பமே உன்னைக்
குறுகினேற்கு இனியென்ன குறையே.
குறிப்பு :-உணர்ந்த - கலைஞானம் கைவரப்பெற்ற, உம் பர்-தேவர். ஒழிந்தார்-பிறர். இணங்கிலி - (ஒன்றற்கொன்று) தொடர்பில்லாத, எனப் பிறப்பறுக்கும் எம் மருந்தே -

(éLDjō uါf ၈ 78
என்னுடைய பிறவிப் பிணியைப் போக்கும் மருந்துபோல் பவனே." திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே - (உயிரைப்பற்றியுள்ள) மிகுந்த ஒப்பற்ற (ஆணவ) இருள் நீங் கித் தெளிவடைதற்கேதுவாகிய பரிசுத்தமான அருள்வெளியே. குணங்கள் தாமிலா இன்பமே-முக்குணங்களின் தொடர்பில்லாத பேரானந்தமே. குறுகினேற்கு-அடைந்த எனக்கு,
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெரு நீர் போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை யென்னிரக் கேனே.
குறிப்பு :-கோது - குற்றம், கொழும் - வளமான, மறைவேதம். மன்னிய மன்னே - நிலைபெற்று நின்ற தலைவனே. சிறைபெரு நீர்போல்-அணைபெருத நீரைப்போல. உடலிடங் கொண்டாய்-உடலை இடமாகக் கொண்டாய். என் இரக்கேன் -
எதற்காக இரப்பேன் ? (இரப்பதற்கு ஒன்றும் இல்லை ) 5
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த ஆ காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே.
குறிப்பு :- இமையோர்-தேவர். கமலச் சேவடி - தாமரை போலும் திருவடி. நிரந்த - எல்லாப் பொருள்களிலும்

Page 41
74 திருவருட்பாத் திரட்டு
கலந்துள்ள. தி-நெருப்பு. கால்-காற்று. ஆயவை அல்லை யாய் - (கலப்பினுல்) அவைகளாயும் (பிரித்து நோக்கும்போது அவைகளினின்று) வேறுபட்டும். கரந்து - மறைந்ததாகிய, கண்ணுற - கண்ணுர. 6
இன்றெனக் கருளி இருள் கடித் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்புற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்ரும்
திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றும்நீ யல்ல அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே.
குறிப்பு:-இருள் கடிந்து - அறியாமையைப் போக்கி ஞாயிறு - சூரியன். நினைப்பற நினைந்தேன் - (நினைக்கின்றேன் என்ற தற்போத) உணர்ச்சிகெட்டு நினைந்தேன். பிறிது மற்: றின்மை சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்ருய் - (உன்னையல்லாமல்) வேறு (தோற்றம்) ஒன்றும் இல்லாதபடி (பிற பொருள்கள் எல்லாம் ) சுருங்கிச் சுருங்கி அணுவளவினவாகி (உன்னுேடு ஷேர்ந்து) ஒன்ருய் விட்டன. ஒன்றும் நீயல்லை-(காணப்படுகின்ற பொருள்) ஒன்றும் நீ அல்ல. அன்றியொன்றில்லை - (உன்னே) அல்லாமல் ஒரு பொருளும் தனித்து இருக்கமாட்டாது. அறியகிற்பார் - அறியவல்லவர். 7
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெர்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
திருப்பெருந் துறையுறை சிவனே யாருற வெனக்கிங் "காரய லுSrளார் ஆனந்தம் ஆக்குமென் சோதி.

மேற் பிரிவு 75
குறிப்பு:-பார்பதம் - பூமண்டலம். முளைத்து - தோன்றி. பரந்ததோர்-வியாபித்திருக்கும் ஒப்பற்ற, நீர் உறு தீயே-நீரினி டத்துள்ள வெப்பம் போன்றவனே. நின்மலா-மலம் இல்லாத வரே. நின் அருள் வெள்ளச் சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே-உன் திருவருள் வெள்ளத்தில் (மூழ்கிய) சிறப்பினை யுடைய சிந்தையில் எழுகின்ற பேரின்ப உணர்வே. 8
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம்
அறுக்கும்ஆ னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே யாது.நீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே.
குறிப்பு:-அருவாம் ஒருவனே - ஒரு வடிவமும் இல்லாத ஒப்பற்றவனே. யாது நீ போவதோர் வகை - நீ என்னை எப் படிக் கைவிடலாம் ? எனக்கருளாய் வந்து நின் இணையடி தந்தே - உன் இரண்டு திருவடிகளையும் தந்து எனக்கு அருள் புரியவேண்டும். , 9
தந்ததுன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தம்ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதுஒன்று என்பால் சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந் துறைஉறை சிவனே எந்தையே ஈசா உடல்இடங் கொண்டாய்
யான் இதற்கு இலன்ஒர்கைம் மாறே.
குறிப்பு :-தந்தது உன் தன்னை - உன்னை (எனக்கு)க் கொடுத்தாய், கொண்டது என் தன்னை - (அதற்கு ஈடாக )

Page 42
76 4 திருவருட்பாத் திரட்டு
என்னை நீ ஏற்றுக்கொண்டாய். சதுரர் - சாமர்த்தியசாலி அந்தம்-முடிவு. சிந்தை - எனது நெஞ்சம், உறை - எழுந் தருளியிருக்கும். யான் இதற்குக் கைம்மாறு இலன் - நான் இதற்குச் செய்யக்கூடியது இல்லை. O
திருப்பள்ளி எழுச்சி
பள்ளி-படுக்கை , துயிலை உணர்த்திற்று. பள்ளி எழுச்சி - துயில் எழுப்புகை.
போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்குஅருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்தழ்
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே ஏற்றுஉயர் கொடிஉடை யாய்எனை உடையாய்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :- போற்றி - வணக்கம். புலர்ந்தது - விடிந்தது. என் வாழ்முதலாகிய பொருளே - என் வாழ்க்கைக்கு மூலப் பொருளாகிய கடவுளே. பூங்கழற்கு இணைதுணைமலர்கொண்டுபூக்கள் பொறிக்கப்பட்ட வீரக்கழலை அணிந்த பாதங்கட்கு அவற்ருேடு பொருந்தித் துணையாக மலர்களைக் கொண்டு. ஏற்றி-வணங்கி, எழில்நகை - அழகிய பொலிவு, சேற்றிதழ்க்
லுண்டாகும் தாமரை, தண் - குளிர்ச்சி. ஏற்றுயர்கொடி - (ஏறு + உயர் கொடி ) இடபத்தின் வடிவம் எழுதிய உயர்ந்த கொடி. பள்ளி எழுந்தருளாய் - நித்திரை விட்டு எழுந்தருள்
6 Tu J 5.

மேற் பிரிவு 77
அருணன் இந் திரன்திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நளினக்
கடிமலர் மலரமற்று அண்ணல் அம் கண்ணுர் திரள் நிரை அறுபதம் முரல்வன இவைஒர் ;
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :-இந்திரன் திசை - கிழக்குத் திசை, நளினம் - தாமரை. திரள் நிரை-கூட்டமாயுள்ள வரிசைப்பட்ட அறுபதம்ஆறு கால்களையுடைய வண்டுகள். முரல்வன-பாடுவன, சப்தம் செய்வன. ஓர்-உணர்வாயாக. அருள்நிதி-அருளாகிய செல் வம். அலைகடலே-அலைப் பெருக்கினையுடைய கடல் போன்ற வனே. 2
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம் ; ஒவின தாரகை ஒளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் ;
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே யாவரும் அறிவரி யாய்எமக்கு எளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :-குருகுகள்-பறவைகள். இயம்பின-சத்தம் செய் தன. தாரகை ஒவின-நட்சத்திரங்கள் ஒளியிழந்தன. ஒளி ஒருப் படுகின்றது-ஒளி ஒன்றுபட்டு மிளிர்கின்றது. செறிகழல் தாளிணை-வீரக்கழல் செறிந்த இரண்டு பாதங்கள். 3
6

Page 43
78. திருவருட்பாத் திரட்டு
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே என்னைபும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :- இருக்கொடு - வேதத்துடனே. இயம்பினர் - இசைத்தனர்; பாடினர். துன்னிய - நெருங்கிய, பிணைமலர் - தொடுக்கப்பட்ட மாலை. துவள்கையர் - வாடுபவர். சென்னி - தலை, அஞ்சலி - வணக்கம். இன்னருள் - இனிய அருள். 4
பூதங்கள் தோறும்நின் ருய்எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னு
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டருள் புரியும்
எப்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :- பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம். சீதம்-குளிர்ச்சி. மன்னு-அரசனே. ஏதங்கள்-குற்றங்கள். 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின் ருர்அணங் கின்மண வாளா

மேற் பிரிவு 79
செப்புறு கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறைஉறை சிவபெரு மானே
இப்பிறப்பு அறுத்துளமை ஆண்டுஅருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :- பப்பற -காலம் இடம் என்பவற்ரூலுண்டாகும் நெருக்கம் நீங்க. வீட்டிருந்து-மோட்சத்திலிருந்து, பந்தனை வந்தறுத்தார்-தம் கட்டுகளை வந்தறுத்தவர்கள். மைப்புறுகண்கருநிறம் பொருந்திய கண், அணங்கு - உமையம்மையார்.
செப்புறு - செப்புப் போலக் குவிந்த, 6
அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதுனன எளிதுஎன அமரரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களே ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கைஉள் ளாய்திருப் பெருந்துறை மன்னு எதுளமைப் பணிகொள்ளும் ஆறு அது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு --மதுவளர் பொழில்-தேன் உண்டாகும் சோலை, பணிகொள்ளும் ஆறு-தொண்டாகக் கொள்ளும் வழி.
முந்திய முதல்நடு இறுதியும் ஆணுய்
முவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருத் துறைஉறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவத்து ஆண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :-முந்திய முதல் நடு இறுதியுமானுய் - முற்பட்ட உலகம் தோன்றும் தோற்றத்துக்கும் இடைப்பட்ட வளர்ச்

Page 44
8O திருவருட்பாத் திரட்டு
சிக்கும் கடைப்பட்ட மற்றதன் அழிவுக்கும் காரணமானுய் மூவர்-பிரமா, விஷ்ணு உருத்திரன். பந்தணை விரலி-பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவி. பழங்குடில்சரீரம். செந்தழல்புரை திருமேனி-சிவந்த தீயைப்போன்ற அழகிய தேகம். ஆரமுதே - அரிதாகிய அமுதம் போன்ற வனே. s 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேஉன தொழுப்புஅடி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம் கண்ணகத் தேநின்று கணிதரு தேனே
கடல் அமு தேகரும் பேவிரும்பு அடியார் எண்ணகத் தாய்உல குக்குயிர் ஆனுய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு :-விழுப்பொருள்-மேலாகிய பொருள். தொழுப் படியோம்- (தொழும்பு அடியோம்) குற்றேவல் செய்யும் அடி யோம். களி-இன்பம். கண்ணகத்தே நின்று-கண்ணுக்குள்ளே நின்று. அடியார் எண்ணகத்தாய்-அடியவர்களின் நினைவில் இருப்பவரே. 9
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் ருேம் அவ மேஇந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறுஎன்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்துளமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.
குறிப்பு-புவனி - பூமி. அவமே-வீணுக, அலரவன் - பிரமா. அவனி-பூமி. 10

மேற் பிரிவு 81
கோயில் மூத்த திருப்பதிகம்
தில்லைக் கோயிலைச் சேர்ந்து முத்தி பெற விரும்பிப் பாடிய பத்துப் பாடல்களையுடைய பகுதி.
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானுல் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும்அரு
ளைப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
குறிப்பு - உடையாள் - எம்மை அடிமையாக உடைய இறைவி. பொன்னம்பலம் - சிதம்பரம். முன்னின்று - உறு துணையாய் நின்று. முன்னின்று அருளைப் புரியாய் எனச்
சேர்க்க. 1.
முன்நின் முண்டாய் எனைமுன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப் பின்நின் றேவல் செய்கின்றேன்
பிற்பட் டொழிந்தேன் பெம்மானே என்நின் றருளி வரநின்று
போந்திடு என்னு விடில் அடியார் உன்நின் றிவனுர் என்னுரோ
பொன்னம் பலக்கூத் துகந்தானே.
குறிப்பு :-அதுவே முயல்வுற்று-நீ காட்டிய வழியையே பின்பற்றி. பிற்பட்டு ஒழிந்தேன் - பின்னே தங்கி நின்று மோசம் அடைந்தேன். உன் நின்று இவன் ஆர் - உன்பால் தங்கி நின்று இவன் யார்.

Page 45
82 திருவருட்பாத் திரட்டு
உகந்தா னே அன் புடைஅடிமைக்கு
உருகா உள்ளத்து உணர்விலியேன் சகந்தான் அறிய முறையிட்டால்
தக்க வாறு அன்று என்னுரோ மகந்தான் செய்து வழிவந்தார்
வாழ வாழ்ந்தாய் அடியேற்குஉன் முகந்தான் தாரா விடில்முடிவேன்
பொன்னம் பலத்துனம் முழுமுதலே.
குறிப்பு:- உகந்தானே - விரும்பியவனே. உணர்விலி யேன் - உணர்வு இல்லாதவன். சகம்-பூமி ; ஆகு பெயராய்ப் பூமியிலுள்ளோரை உணர்த்திற்று. மகந்தான் செய்து வழிவந் தார்-யாகம் செய்து வழிவந்தவர்கள். முடிவேன்-இறப்பேன். 3
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க் கும்என்ற னக்கும் வழிமுத லேநின் பழஅடி யார்திரள் வான்குழுமிக் pl கெழுமுத லேஅருள் தந்திருக்க இரங்குங் கொல்லோ என் அழுமது வேயன்றி மற்றென் செய்கேன் பொன்னம்
பலத்தரசே,
குறிப்பு :- ஐம்புலன் - மெய், வாய், கண், மூக்கு, செவி
என்பவற்றின் செயல்கள். மூவர்-பிரம, விஷ்ணு, உருத்திரர்கள். வான்-ஆகாசம். குழு-கூட்டம். மிக்கு-மிகுந்து. 4.
அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற்று இருந்தே வே சற்றேன் கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துஉன் அடியேன்பாற் பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசாது இருந்தால் ஏசாரோ,

மேற் பிரிவு 83
குறிப்பு :- இரைதேர் கொக்கொத்து - இரையை நாடும் கொக்கினை யொத்து. ஏசற்று இருந்தே வேசற்றேன்-விரும்பி நின்று பயன் பெருது வருந்திப் போனேன். கரை சேர் அடி யார்-துன்பக் கடலின் கரையை அடைத்த அடியார்கள், பிரை சேர் பால் - உறையிட்ட பால்.
ஏசா நிற்பர் என்னை யுனக்கு
அடியான் என்று பிறரெல்லாம் பேசா நிற்பர் யான்தானும்
பேணு நிற்பேன் நின்னருளே தேசா நேசர் சூழ்ந்திருக்கும்
திருவோ லக்கம் சேவிக்க ஈசா பொன்னம் பலத்தாடும்
எந்தாய் இனித்தான் இரங்காயே!.
குறிப்பு :-பிறர்-பிற சமயத்தவர். பேணுநிற்பேன்-பேணி நிற்பேன். தேசா-ஒளி பொருந்தியவனே. திருவோலக்கம் - வீற்றிருக்கும் கோலம். 6
இரங்கும் நமக்கு அம் பலக்கூத்தன்
என்றுஎன்று ஏமாந்து இருப்பேனை
அருங்கற் பனைகற் பித்து ஆண்டாய்
ஆள்வார் இலிமாடு ஆவேனுே
நெருங்கும் அடியார் களும் நீயும்
நின்று நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரளங்கள்
வாழ்வே வாளன்று அருளாயே.
குறிப்பு - அம்பலக் கூத்தன்-சிவபெருமான், ஆள்வார் இலிமாடு-உடையவர் இல்லாத மாடு. நீலாவி - நிலைபெற்று. மருங்கு-பக்கம். 7
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் ஆரிங்குப் பொருளா என்னைப் புகுந்தாண்ட
பொன்னே பொன்னம் பலக்கூத்தா

Page 46
84 திருவருட்பாத் திரட்டு
மருளார் மனத்தோடு உனப்புரிந்து வருந்து வேனை வாளன்றுன் தெருளார் கூட்டங் காட்டாயேற்
செத்தே போனுல் சிரியாரோ.
குறிப்பு-பொருளா-என்னையும் ஒரு பொருளாகக் கருதி மருளார் மனத்தோடு-மயக்கம் நிறைந்த மனத்தோடு, தெரு ளார் கூட்டம்-தெளிவு நிறைந்த அடியார் கூட்டம். 8
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்
திரண்டு திரண்டுன் திருவார்த்தை விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெவ்வே றிருந்துன் திருநாமம் தரிப்பார் பொன்னம் பலத்தாடும்
தலைவா என்பார் அவர்முன்னே நரிப்பாய் நாயேன் இருப்பேனுே
நம்பி இனித்தான் நல்காயே.
குறிப்பு :-களிப்பார் - சந்தோஷமடைவார்கள். தேனிப் பார் - இன்புறுவார்கள்; தியானிப்பார் என்பதும் பொருந்தும். விரிப்பார்-விரித்துரைப்பார்கள். நரிப்பாய் நாயேன் இருப்பே னுே - நரித்தன்மை யுடையவனுய் நாய் போன்ற நானிருப் பேனுே. நல்காய் - கொடுத்தருளாய். 9
நல்கா தொழியான் நமக்கென்றுன்
நாமம் பிதற்றி நயனநீர் மல்கா வாழ்த்தா வாய்குழரு
வனங்கா மனத்தால் நினைந்துருகிப் பல்கால் உன்னைப் பாவித்துப்
பரவிப் பொன்னம் பலமென்றே ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி
அருளாய் என்னை உடையானே.

மேற் பிரிவு 85
குறிப்பு 3-பிதற்றி - அலறி. நயனம் - கண். மல்குதல்நிறைதல். பரவி - துதி செய்து. ஒல்கா நிற்கும் - தளர்ந்து நிற்கும். ی O
செத்திலாப் பத்து
செத்திலாமையாகிய பொருளைக் கூறிய பத்துப் பாட்டுக் களைக் கொண்ட நூற்பகுதி, செத்திலாமை சிவ போ தம் கழலாமை,
பொய்யனேன் அகம்நெகப் புகுந்துஅமு தூறும்
புதும லர்க்கழல் இணையடி பிரிந்தும் கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே
அத்த னே அயன் மாற்கு அறி யொண்ணுச் செய்யமே ணியனே செய்வகை அறியேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு -அகம்நெக - மனம் உருகும்படி, கையனேன் - இழிதகைமை உடையேன். விழித்திருந்தும் - கருத்துணர்ச்சி யோடிருந்தும். அத்தனே' - அப்பனே. அயன் - பிரமா. மால்விஷ்ணு. செய்வகை - செய்யும் செயல் முறை. மேவிய-எழுந் தருளிய, 1
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும் வற்றி யாரும்நின் மலரடி காணு
மன்ன என்னஓர் வார்த்தையுட் படுத்துப் பற்றினுய் பதையேன் மனம்மிக உருகேன் பரிகி லேன்பரி யாஉடல் தன்னைச் செற்றி லேன் இன்னும் திரிதரு கின்றேன் திருப்டிெ ருந்துறை மேவிய சிவனே.

Page 47
86 திருவருட்பாத் திரட்டு
குறிப்பு - புனல்-நீர், கால்-காற்று அண்டவாணர்தேவலோகத்துள்ள தேவர். வற்றி-உடல் வற்றி. பற்றினுய் - அடிமை செய்துகொண்டாய். பதையேன்-துடித்தேனில்லை. பரி கிலேன்-வருந்துகின்றிலேன். பரியா-வருந்தாத, திரிதருகின் றேன்-திரிகின்றேன். 2
புலைய னேனையும் பொருளென நினைந்துஉன் அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையி னுல்நடந் தேன்விடைப் பாகா
சங்க ராஎண்ணில் வானவர்க்கு எல்லாம் நிலைய னே அலை நீர்விடம் உண்ட
நித்த னே அடை யார்புரம் எரித்த சிலைய னேளனைச் செத்திடப் பணியாய்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு :-புலையன்-இழிந்தவன். விடைப் பாகா-இடபத்தை வாகனமாக உடையவனே. அலைநீர் விடம் - பாற்கடற் கண்ணே எழுந்த நஞ்சு, நித்தன் - நித்தியமாக உள்ளவன் ; என்றும் உள்ளவன். அடையார்புரம்-பகைவருடைய திரிபுரங்கள். சிலை யனே-வில்லையுடையவனே. . . . 3
அன்பர் ஆகிமற்று அருந்தவம் முயல்வார்
அயனும் மாலும்மற்று அழலுறு மெழுகாம் என்பர் ஆய்நினை வார் எ னைப்பலர் '
நிற்க இங்குஎன எற்றினுக்கு ஆண்டாய் வன்ட ராய்முருடு ஒக்கும்என் சிந்தை
மரக்கண் என்செவி இருப்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு -அழல்-நெருப்பு. எனை-என்னை. எற்றினுக்குஎதற்காக. வன்பராய் முருடு-வலிமை பொருந்திய பராய் என் னும் மரத்தின் முண்டு. மரக்கண் - மரம்போன்ற வலிய கண். சிவலோகா-சிவலோகத்தை உடையவனே. 4

மேற் பிரிவு 87
ஆட்டுத் தேவர்தம் விதிஒழித்து அன்பால்
ஐய னே என்றுன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடரும் பொருளே
தாத னேஉனைப் பிரிவுரு அருளைக் காட்டித் தேவநின் கழலிணை காட்டிக்
காய மாயத்தைக் கழித்தருள் செய்யாய் சேட்டைத் தேவர்தம் தேவர் பிரானே
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு:-ஆட்டுத்தேவர்-ஊழை அநுபவிக்கப் பண்ணும் அயன் முதலிய தேவர்கள். நாட்டுத்தேவர்-அடிமுடியை நாடிய பிரமா விஷ்ணு முதலிய தேவர்கள். பிரிவுரு - விட்டுப் பிரியாத காய மாயம்-உடல் மேலுள்ள மயக்க ஆசை. சேட்டைத் தேவர்பலவகையான தொழில்களைப் புரியும் தேவர்கள். 5
அறுக்கி லேன்உடல் துணிபடத் தீப்புக்கு
ஆர்கி லேன் திரு வருள்வகை அறியேன் பொறுக்கி லேன் உடல் போக்கிடம் காணேன்
போற்றி போற்றிஎன் போர் விடைப் பாகா இறக்கி லேன்உனைப் பிரிந்து இனிது இருக்க
என் செய் கேன் இது செய்களன்று அருளாய் சிறைக்க ணேபுனல் நிலவிய வயல்தழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு -அறுக்கிலேன் உடல் துணிபட-உடலைச் சிறு துண்டுகளாக வெட்டிலேன். தீப் புக்கு - நெருப்பில் விழுந்து. ஆர்கிலேன்-அழிகிறேனில்லை. போக்கிடம்-போகுமிடம். சிறைக் கணே புனல் நிலவிய-வரம்புவரை நீர் நிரம்பியுள்ள. 6
மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்துஎம் அமுதே நாயி னேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சி வாயளன்று உன்னடி பணியாய்

Page 48
88 திருவருட்பாத் திரட்டு
பேய னுகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாம்சடைப் பிஞ்ஞக னேயோ
சேய ஒகிநின்று அலறுவது அழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு :-மாயன்-மயக்குபவன். மறிகடல்-மறிந்துவீழும் அலைகளையுடைய கடல், மணி கண்டம்-நீலமணிபோன்ற நிற முடைய திருக்கழுத்து. நமச் சிவாய - சிவனுக்கு வணக்கம்பெருநெறி-திருவடி பெறும் வழி. குலாம்-உலாவும்; பொருந் தும், பிஞ்ஞகா-சடையை உடையவரே. சேயன் - தூரத்தி லுள்ளவன். 7
போது சேர் அயன் பொருகடற் கிடந்தோன் புரந்த ராதிகள் நிற்கமற்று என்னைக் கோது மாட்டிநின் குரைகழல் காட்டிக்
குறிக்கொள்க என்றுநின் தொண்டரிற் கூட்டாய் யாது செய்வதென்று இருந்தனன் மருந்தே
அடிய னேன்இடர்ப் படுவதும் இனிதோ சீத வார்புனல் நிலவிய வயல்தழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு -போதுசேர் அயன்-தாமரை மலரில் இருக்கும் பிரமா. புரந்தராதிகள்-இந்திரன் முதலிய தேவர்கள். கோது மாட்டி-குற்றங்களை ஒழித்து. குரைகழல்-சப்திக்கின்ற வீரக் கழலை அணிந்த பாதம். இடர்ப்படுவது-துன்பம் அடைவது. சீதவார் புனல்-குளிர்ச்சி பொருந்திய அதிக நீர். 8
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
நிற்க மற்றுஎனை நயந்துஇனிது ஆண்டாய்
காலன் ஆருயிர் கொண்டபூங் கழலாய்
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்

மேற் பிரிவு 89
மாலும் ஒலமிட்டு அலறும்அம் மலர்க்கே
மரக்க னேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமூம் நிலவிய வயல்சூழ்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
குறிப்பு :-ஞாலம் - பூமி. காலன் - யமன். கங்கையாய்கங்கையைச் சடையிலே தரித்தவரே. அங்கி தங்கிய கையாய் - தீத் தங்கிய கையை உடையவனே. மாலும் ஓலமிட்டு அல றும் அம்மலர்க்கே - விஷ்ணுவும் அடைய விரும்பி அலறித் தேடும் பூப் போன்ற நின் திருவடி யிடத்தில், சேல்-மீன்கள் நீலம் - நீலோற்பலங்கள். 9
அளித்து வந்துஎனக்கு ஆவஎன் றருளி
அச்சம் தீர்த்தநின் அருட்பெருங் கடலுள் திளைத்தும் தேக்கியும் பருகியும் உருகேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே வளைக்கை யானுெடு மலரவன் அறியா வான வாமலை மாதொரு பாகா களிப்பெ லாம்மிகக் கலங்கிடு கின்றேன் கயிலை மாமலை மேவிய கடலே.
குறிப்பு :-ஆவ என்று-ஐயோ என்று இரங்கி. திளைத் தும் - மூழ்கியும். தேக்கியும் - நிறைவித்தும். வளைக்கையான் - சங்கைக் கையிலுடையவர்; விஷ்ணு. மாதொரு பாகா-உமா தேவியாரை இடப் பாகத்தில் உடையவரே. 10
அடைக்கலப் பத்து
அடைக்கலப் பத்தென்பது, மாணிக்கவாசக சுவாமிகள் தாம் எவ்விதச் செயலும் ஆற்ற வலியிழந்தவராய், இன் வனே நான் நின்னடைக்கலப் பொருளாவேன் எனக்
யருளிய பத்துப் பாட்டுக்களைக் கொண்ட பகுதி.

Page 49
90 திருவருட்பாத் திரட்டு
செழுக்கம லத்திரள் அனநின் சேவடி சேர்ந்து அமைந்த
பழுத்த மனத்து அடியருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கண் உடைப்புன் குரம்பைப்பொல்லாக்கல்விஞானமிலா அழுக்கு மனத்து அடியேன் உடையாய்உன் அடைக்கலமே.
குறிப்பு:- செழுக்கமலம்-செழுமையாகிய கமலம், அன போன்ற, பழுத்த மனத்து-கனிந்த மனத்தையுடைய, புன் குரம்பை-எளிய உடம்பை, அடைக்கலம்-அடைக்கலப் பொரு ளாவேன், 1.
வெறுப்பன வேசெய்யும் என்சிறு மையைதின் பெருமையி [னுல் பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கைசடைச் செறுப்பவ னேநின் திருவருளால்என் பிறவியைவேர் அறுப்பவனே உடை யாய் அடி யேன் உன் அடைக்கலமே.
குறிப்பு:- அராப் பூண்பவனே - பாம்பை அணிபவனே, செறுப்பவனே - அடக்குவோனே. 2
பெரும்பெருமான் என் பிறவியை வேர் அறுத்துப்பெரும்பிச்சு தரும்பெரு மான் சதுரப்பெருமான் என்மனத்தின் உள்ளேத் வரும்பெரு மான்மல ரோன்நெடு மால் அறி யாமல்நின்ற
அரும்பெரு மான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
குறிப்பு :-பிச்சு-பித்து (பைத்தியம்). சதுரப் பெருமான் - திறமையுடைய பெருமானே. மலரோன் - பிரமா, 3
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்
தில்நின் கழற்புணை கொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர்
வான்யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக்
காமச் சுறவுஎதிர அழிகின்ற னன்உடை யாய் அடி
யேன்உன் அடைக்கலமே.

மேற் பிரிவு 91
குறிப்பு 3-புணை-தெப்பம் ( பற்றுக்கோடு), இழிகின்றநீங்குகின்ற, வான்-மோட்சம். மாதர்த்திரை - பெண்களாகிய அலை, பொர-தாக்க காமச் சுறவு-ஆசையாகிய சுருமின்கள். 4
சுருள்புரி கூழையர் சூழலுள் பட்டுஉன் திறம்மறந்துஇங்கு இருள்புரி யாக்கையி லேகிடந்து எய்த்தனன் மைத்தடங்
&ቿ56ሻ}Qፕ வெருள்புரி மானன்ன நோக்கிதன் பங்கவிண் னுேர்பெரு
A 6 அருள்புரி யாய்உடை யாய் அடியேன் உன் அடைக்கலமே.
குறிப்பு: - சுருள்புரி கூழையர் - சுருள்தலையுடைய கூந்த லுடைய பெண்கள். இருள் புரி யாக்கை-அறியாமையை வளர்க் கின்ற உடம்பு. எய்த்தனன்-இளைத்துப் போனேன். வெருள் புரி-வெருட்சி பொருந்திய, மானன்ன நோக்கி பங்க - மான் போன்ற பார்வையையுடைய உமையம்மையை இடப்பாகத்தில் உடையவனே.
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்து இட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள் வாழிடப் போதுவந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன் ஆழி, அப் பாP டை யாய் அடி யேன் உன் அடைக்கலமே.
குறிப்பு :- மாழை மைப் பாவிய - மாம்பிஞ்சின் பிளவினை யொத்த மை பூசிய, கண்ணியர் - கண்களையுடைய பெண்கள். தாழியைப் பாவு தயிர்போல-தாழி (பாத்திரம்) யிலே பரந்துள்ள தயிர்போல, ஆழியப்பா-அறமாகிய கடலை உடையவனே. 6
மின்கணிர்ை துடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப் புன்கடைய்ைப் புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி பட்டுப் என்கரிைலே அமுதுவை ஹித்தித் தித்துஎன் பிழைக்குஇரங்கும் அங்கன னே உடை யாய் அடி யேன் உன் அடைக்கலமே.
குறிப்பு :- மின்கணிஞர் - மின்னலைப் போலத் தாக்கும் கண் களை யு  ை. ய பெண் கள் . நுடங்கும் - வருந்தும். வெகுளி- கோபம், புன் கண ன ய் - துன்ப்முடைய்வஞய்.

Page 50
92 திருவருட்பாத் திரட்டு
அங்கணன் - (அம் + கண்ணன் ) அழகிய கண்ணை உடை யவன். 7 மாவடு வகிர்அன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே கூவிடு வாய்கும்பிக் கேஇடு வாய்நின் குறிப்பறியேன் பாஇடை ஆடு குழல்போல் கரந்து பரந்ததுள்ளம் ஆகெடு வேன் உடை யாய் அடி யேன்உன் அடைக்கலமே.
குறிப்பு :-மாவடு வகிர்அன்ன - மாம்பிஞ்சின் பிளவு போன்ற, கண்ணிபங்கா - கண்ணையுடைய உமையம்மையை இடப்பக்கத்துடையவனே. கும்பிக்கே இடுவாய் - நரகத்திலே இடுவாய். பாவிடை ஆடு குழல்-சேஃல நெய்யும் நூலிழைப் பரப்பிலே அங்குமிங்கும் ஒடித்திரியும் குழல் போல. 8
பிறிவுஅறி யாஅன்பர் நின் அருட் பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவுஅறி யாச்செல்வம் வந்துபெற் ருர் உன்னை வந்திப்ப
G35 Tir நெறிஅறி யேன்நின்னை யேஅறியேன்நின்னை யேஅறியும் அறிவுஅறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.
குறிப்பு :- பிறிவறியா - நின் திருவருளேவிட்டுப் பிரிதலை அறியாத, மறிவறியா - மீண்டும் திரும்பாத. வந்திப்பதோர் நெறி-வணங்குதலாகிய வழி. அருளார் அமுதம்-அருளாகிய நிறைந்த அமுதம், 9
வழங்குகின் ருய்க்குஉன் அருளார்
அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை
யேன் என் விதிஇன்மையால் தழங்கரும் தேன் அன்ன தண்ணிர்
பருகத்தந்து உய்யக்கொள்ளாய் அழுங்குகின் றேன்உடை யாய் அடி யேன் உன் அடைக்கலமே. குறிப்பு :-வழங்குகின்ருய் - கொடுக்கின்ருய். தழங்கரும் - ஒலிக்கின்ற அரிதாகிய, அழுங்குகின்றேன் - வருந்துகின்றேன்