கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1970.03

Page 1

Lori š. 1970
விலே சதம்.-503

Page 2
நிலையான ஞாபகம்
நல்ல நிழற்ப்டங்கை மக்கள் மனதில் நி பிடித்துக்கொண்ட
ஸ்டுடியே
* திருமண வைபவம் * இலக்கி முதலிய நிகழ்ச்சிகளை நல்ல
கலர் ஸ்லைட் r ܐ
Yr Lul-Lib முதலிய பணிகளை நல் எம்முடன் தொட
Syfyto LAK
புதுவருடம் வருகிறதே! புத் விரைந்து வா பெஷன் தி நவநாகரிக நங்கையர் விரு ஆடவர்க்கேற்ற அழகான சிறுவர்களுக்குத் தேயைா அனைத்தும் விலை சரசமாக
பெஷன் இல. 3. முனைத்தெ
* லங்கா சலுசல பிர * சிலோன் செரமிக்வி & வெலோன ஆடை
கிளை பியூட்டி பலஸ் இல.24. பிரதா

ஒரு நல்ல நிழற்படம் ா எடுத்து i லயான இடத்தைப் ஒரே ஸ்தாபனம்
ா லேக்
, மட்டக்களப்பு.
* கலை விழாக்கள் ப விழாக்கள்
முறையில் படம் பிடிக்கவும் அமெச்சர் போட்டோகிராபி பிரேமிடுதல் ல முறையில் செய்யவும் ர்பு கொள்ளுங்கள்.
No. 21, Munai Street, 然 Batticaloa.
தாடை வாங்க வேண்டாமா! ருங்கள் எங்கள்
!0 Ꮫj ᏛᎠ " Ꮬ Ꮼ நம்பும் நாகரிக உடைகள் சேர்ட், ஸ்லாக், சூட்டிங்ஸ் ன ரெடிமேட் ஆடைகள் ப் பெற்றுக்கொள்ள ஒரே இடம்
ஹவுஸ்
க்ரு, மட்டக்களப்பு.
தம விநியோகஸ்தர்கள் ஸ் ஏஜன்ட் 5ளுக்கு ஏஜன்ட்
ன வீதி, கதுருவெல, பொலன்னறுவை.

Page 3
* மலர்
米
மொட்டு. பருவம் போற்றுந்தவம். தவப் பலிதம். பலிதப் பூரிப்பில் இதழ் நகர்த்தும் விந்தை, விந்தையின் பூரணம். பூரணத்து வத்தைப் பற்றிப் படரும் நாணச் சிலிர்ப்பு. சிலிர்ப்பின் முறுவல். மலரின் மலர்ச்சி!
மனை வாழ் கிழத்தி, அன்பின் திணை பயில இருத்தல் நோன்பியற்றும் கோலம். மலரின் மலர்ச்சி! 'கார் வந்தது. காலம் விடிந்தது. நோன்பு அறுத்திடத் தலைவன் வருவான்!” சிலிர்ப்பின் முனைப்பு. மடை திறந்தது இதழ்கள் வெடித்தன. பாங்கி யிடம் வேட்கை கக்கும் பேச்சுக்கள் அவள் உளம் குழைந்து மலர்ந்தாள்!
மண்ணைக் கிளறும் உழவன். மண்ணின் வளத்தையும் உழைப்பின் சிறப்பையும் கலை யாக இணைக்குந் தவக்கோலம். மலரின் மலர்ச்சி! ‘இது பெண் பூ, காய்க்கும்; கணி தரும்' அறுவடைக் கற்பனையிற் சங்கமித்து மலர்ந்தான்.
மனத்திலே கற்பனை. இயற்கையின் அழகை மென்று சுவைக்கவும், சுவைத் த  ைத ஒவியத்திலே சிறைப் பிடிக்கவும் நாடல். நாடலின் நளினம். மலரின் மலர் ச்சி நிறைவின் நுகும்பு. 'மலரின் தரிச னம் கலையின் தரிசனமே!’ என்ற நினைவு ஊட்டும் மலர்ச்சி.
சொல்லின் லளித அடுக்கிலே காவியக் கலை படைக்கும் கவிஞன். கற்பனையின் யோனியை அம்மணமாக்கிக் கருக்கொள் ளும் முகூர்த்தத்தை எதிர் நோக்கும் தவம். மலரின் மலர்ச்சி. அதைத் தொற்றிப் புதிய உவமை ஒன்றின் திரட்சி. சொல்லிலே கலை மனைகோலும் மலர்ச்சி.
மொட்டு மலரான மலர்ச்சி. அந்த நிகழ்ச்சியின் சலனத்தில் மலரும் மலர்ச்சி கள். தேவி பூரித்துப் போனுள். தெய்வீக வதனம் அலர்த்தும் அபிநயத்தில் முறுகிடும் முறுவல். முறுவலிலே சித்திக்கும் மலர்ச்சி.

፳ 7 MPR ፪970
விந்தனைச் சித்திரம்
※ ※
எம். ஏ. ரஹ்மான் ."
米 米 米
அந்த மலர்ச்சியிலே ஈசன் சொக்கிப் போனன். சொக்கனின் ' சொக்கிப்பு ' விழிக் கோடியிலே வித்தும் ஆயிரம் அர்த் தங்களின் மலர்ச்சிக்கா.
‘ஒரு மலரின் மலர்ச்சி! பல மலர்ச் சிகளை ஒரு சின்னஞ்சிறு பூவின் மலர்ச்சி யிலே எவ்வாறு ஒளித்து வைத்தீர்கள்? படைப்புக் கலையின் மூல விக் கி ர ஹ ம் இதுவா?* கயல் விழிகளிலே புரளும் மலர்ச் சியை மறைக்கும் மயல் மொழிகள்.
'பூவின் மலர்ச்சியிலே நான் சாவின் நித்திய தத்துவத்தை இணைத்து வைத்தி ருக்கின்றேன். ஈசனின் கற்பிதம் ஒன்று; மானிடக் கற்பனை வேறு!" அபசுரம் இழை யுந் தொனியில் ஈசன் நொந்தான்.
* கற்பிதத் தளமும்; கற்பனை நிலை யும். இந்தச் சுருதி பேதத்தினுல் பக்தன் தரிசனம் இழந்தான், ஈசன் மறுகினன்! ’’ சொல்லிலே கீச்சமூட்டிய தேவி, ஈசனின் உடம்பிலே தனக்கு ஒதுக்கப்பட்ட அர்த்த பாகத்திலே ஒட்டினுள். -
இன்னெரு மொட்டு. பருவம் போற் றும் அதனுடைய தவக்கோலம்!
அன்புள்ள வாசகப் பெருமக்களுக்கு - - - -
சென்ற இதழில் அறிவித்திருந்தது போல் இவ்விதழை மாதத்தின் முதல் திகதியிலேயே வெளியிட முடியவில்லை. எங்கள் சக்திக்கு அப் பாற்பட்ட சில காரணங்களினல் இத்தா ம தம் இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு ஏற்படவே செய்யும். ஆரம்ப நிலையில் உள்ள ஒரு சஞ்சிகைக்கு ஏற்படக்கூடிய இடர்ப்பா டுகளை மனதில் கொண்டு இத் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ளுமாறு வாசகப் பெருமக் களைக் கேட்டுக்கொள்ளுகிருேம்.
- மலர் வெளியீட்டுக் குழுவினர்.

Page 4
ஆசிரியர்களிடம் ஒரு
அன்புடையீர்,
ஈழத்தின் இலக்கிய கடமை இந்நாட்டிலுள்ள ட ஆசிரியர்கள் இதில் பெரும் சொல்லாமலே விளங்கும்.
ஆசிரியர்களும், மா கியத்தின் தன்மைபற்றி ந அவசியம். அந்த வகையில், களுக்கும் பயன்தரும் வண்ண இலக்கிய ஏடாக வெளிவருகி
ஈழத்தின் தரமான தும் இம் 'மலர்' சஞ்சிகை விடயங்கள் மட்டுமே இடம்( சஞ்சிகையின் ஆண்டுச் சந்த (1) ஈழத்து இலக்கிய முய
(2) இக்கால இலக்கியத்தில் ஆகவே உங்கள் பாடசாலையி
உயர்வகுப்பு மாணவர்களும் “மலர்” சஞ்சிகையின் நிரந்த கிருேம். ஆண்டுச்சந்தா ரூட

அன்புக் கோரிக்கை
முயற்சிகளுக்கு ஆக்கம்தரும் டித்தவர்களைச் சார்ந்துள்ளது. பங்கு வகிக்கின்றனர் என்பது
ணவர்களும் இன்றைய இலக் ன்கு அறிந்திருக்கவேண்டியது
ஆசிரியர்களுக்கும் மாணவர் ணம் அரசியல் கலப்பில்லாத றது 'மலர்' மாத சஞ்சிகை.
எழுத்தாளர்கள் பலரும் எழு பில் இலக்கியத்தரம் வாய்ந்த
s
பெறுகின்றன. 'மலர்' மாத ாதாரராகச் சேருவதன்மூலம் பற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் பரிச்சயம் பெறவும் முடியும். ல் உள்ள சகல ஆசிரியர்களும், சந்தாதாரர்களாகச் சேர்ந்து ர வாசகர்களாகுமாறு வேண்டு
ா 6/- மட்டுமே.
'மலர்” வெளியீட்டுக் குழு.

Page 5
பரிசுபெற்ற பெப்ரவரி "மலர்”
ਉouਲੰਲੀ।
கதை மலர்கிறது.
அந்த மலர்ச்சியில் நான் இழைகையில், கதை மலரை-அதன் கருவை-என் மனத்தோடு அழுத்த வேண்டும் என்ற மையல்’ என்னை அழுத்துகிறது.
கதை, "யாக குண்டம்’, என் ம ன த் துன் அழுந்தி இதஞ்செய்யத் தொடங்கிய விநாடியே, உள்ளே உதறல் ஒன்று-, மனத்திலே ஒரு கீறல்-; உதிரங் கசிகிறது.
மலரிலே ஒரு முள்ளா? (நல்ல மலர்களுக்கு இலக்கணமே முள்தானே!)
பிள்ளைகள் இருக்கிறவர்கள் அணுதைகளாவ கில்ஆலயா?99
சமுதாயப்பிரச்சினை சாம் புத் தாத் தா வின் கூற்ருக வெளிவந்து, கதை மலரின் இதழ்களோடு இதழ் போலக் கிடந்து, என்மனத்தை உறுத்தி, உதிரந் தோய்ந்த முனையோ டு வெளியே துருத்திக் கொண்டு நிற்கிற இந்த முள், ஒரு சமுதாயப் பிரச்சினை!
இது, இந்தச் சமுதாயப்பிரச்சினை, சாம்புத் தாத் தாவுக்கும், செங்கை ஆழியானுக்கும், வாச கணுகிய எனக்கும் மட்டும் பொதுவான பிரச்சினை யல்ல. சமூகத்தை ஊடுருவி, இன்றைய சமுதா யத்தின் தீராத ஒரு பிரச்சினை யாய், சமுதாயப் பிரக்ஞை கொண்டவர்களின் உள்ளங்களைக் கீறிக் கிழித்து விடும் தோரணையில் நீண்டு வளர்ந்து நிற்கும் ஒன்று.
பெருமூச்சுக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா p
‘சமுதாயப் பிராணி’ என்று வர்ணிக்கப்படுகிற மனிதன், நாகரிக வளர்ச்சியின் முதிர்ச்சியிலே, தனது சமுதாயத்துள்ளே ஒதுக்கப்பட்ட சிறிய ஒரு சமுதாயமாக வயோதிபர்கள் ஒதுங்கிப் போய் விடட்டும் என்ற தோரணையில், கட்டிக்காப்பாற்றி வளர்க்கிற வயோதிபர் இல்லங்கள், உண்மையில் நாகரிகத்தின் சின்னங்களா என்ற வினவைக் கதையினுாடே மருவ விட்டிருக்கிற செங்கை ஆழி யான், வேறெந்தச் சிறுகதையாசிரியனுமே தொட் டிராத ஒரு பிரதேசத்தைத் தொட்டு, சமுதாயத் தைப் பற்றியிருக்கிற " கான்சர் ஒன்றைப் புட்டுக் காட்டுகிற முதல் சிறுகதையாசிரியன் ஆகிருர் .
யாருமற்ற வயோ தி பர் களைப் பராமரிக்க
வயோதிபர் இல் லங்க ள் தேவையானவைதாம். ஆனுல், உண்மையில் யாருமற்ற வயோதிபர் வீதி

| Usölí
களில் விழுந்து கிடக்க, வசதி படைத்த மக்களின் பெற்ருர் சென்று த ஞ் சம  ைட கிற மடங்கள் தேவையா?
நமது நாட்டில் பல வயோதிபர் இல்லங்கள் இருக்கின்றன. உறவினர்களைப் பார்ப்பதற்கோ, வேடிக்கை பார்ப்பதற்கோ நம்மில் பலர் அந்த இல்லங்களுக்குச் சென்றிருக்கக் கூடும். ஆனலும், அங்குள்ள ஒவ்வோர் ஆத்மாவைச் சுற்றியும் ஒவ் வொரு காவியமே கவிந்திருப்பதை நம்மில் 31 த் தனைபேர் காணுகிருேம்?
"வயோதிபர் இல்லங்கள் இந்நாட்டிற்கு ஒரு வகையில் அவமானம்' என்று சில வேளைகளில் நினைக்கிற கதாசிரியர், அவ் வில்லங்களில் ஒலி யுருவோ, வரி வடிவோ பெருமலே சிதைந்து போய் விடுகிற காவியங்களின் "வித்துக்களைக் கண்டு வடித்த கண்ணிர், பெருமூச்சு என்பவற்றின் ஒரு சிறு துளிதான் "யாக குண்டம்".
இசைக்கென ஒரு தனி ஏடு! அதுவும் ஈழத்திலேதான்!!
S 99 "இசை அருவி
(மாத வெளியீடு) கெளரவ ஆசிரியர்- நல்லைக்குமர *. * இசை பயிலும் மாணவ மாணவிகளுக்கு
ஒரு வரப்பிரசாதம். * கலைஞர்கள் கருத்துப் பரிவர்த்தனை செய்ய ஒரு இலக்கியப்பாலம், * இரசிகர்கள், இசை-நடனம் முதலியன பற்றி அறியவிரும்பும் தகவல்கள். * பொதுமக்கள் கை கொடுத்து உதவ
வேண்டிய பெருமுயற்சி. ஈழத்து இலக்கிய முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்
இன்றே சந்தா தாரராகச் சேருங்கள்.
ஆண்டுச் சந்தா ரூ. 4. 00 தனிப்பிரதி சதம் - 25 விபரங்களுக்கு:- நிர்வாகி, 'இசை அருவி' வைரக்கண்டி, கோப்பாய்.

Page 6
*யாக குண்டத்திலே முனிவர்கள் சொரிந்த அவிநெய், பால், பொரி ஆதியன. தோன்றியவன் தேவன் ஒருவன், அசுரர்கள் ஊனையும் உதிரத்தை யும் அவியாகச் சொரியத்தோன்றியது பூதம்'
சாம்புத்தாத்தா ஐந்து ஆண் டு களு க் கு மேலாக, மனித சமுதாயத்துள் ஒதுக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமுதாயமாக, அது பற்றிய பிரக்ஞையினின்று நழுவ முடியாத நிலையிலேயே, தம் சமுதாயத்துக்கென ஒரு நெறிவகுத்து, “ஏதோ, எப்படியோ இங்கை வந்திட்டம்; இங்கையாவது சந்தோஷமாக இருக்கப் பாருங்கோ" என்று கொள் கை பரப்பி, "தலைவர்" ஆகத் திகழ்ந்த சாம்புத் தாத்தாவுக்கு, மேலே கூறிய மு னி வர் க ள் - அசுரர்கள் செய்த யாகம் பற்றிய எடுத்துக் காட்டு எவ்விதம் அர்த்தமாகிறது என்பதைச் சுட்டுகை யில், கதாசிரியர் கதையின் கருவை நெதிழ்த்துக் காட்டுகிறர்.
“எங்கள் இதயமும் ஒரு யாக குண்டம்தான்' SF Tub_j 35 argjö35 nr.
'பிள்ளைகளால் ஒதுக்கப்பட்ட பெற்ருேரின் இதயங்கள் யாககுண்டங்கள் தாம். பிள்ளைகள் அக்குண்டத்தில் சொரிந்த அவி தேவனுக நிச்சயம் உருவாகாது. பூதந்தான் தோன்றும் - ஆசிரியர்,
இந்த முடிவுகளுக்கு வந்து விட்ட சாம்புத் தாத்தாவும், ஆசிரியரும் சிக்கலான கட்டம் தோன்றுகையில் எவ்விதம் நடந்து கொள்கிறர் கள்?
சாம்புத்தாத்தா , “என் பிள்ளைகளை ஒருக்கா நான் பார்க்க வேணும்" என்கிற நப்பாசையில்
உழல ஆரம்பிக்கிருர்,
'செத்த பிறகு அறிவிக்கிறேன். விரும்பினல் வந்து பிணத்தைக் கொண்டுபோய் ஊருக்குக் காட்டுங்கள்' என்று பொறுக்கமுடியாத ஒரு நிலை யில் வெடித்து, மக்கள் போன பிறகு, "உணர்ச்சி வசப்பட எனக்கு இவ்விஷயத்தில் உரிமையில்லை" என்ற பச்சாத்தாபத்தில் பொருமுகிருர், ஆசிரியர்.
இந்த உணர்ச்சி வசப்பாடுதான், சமுதாயத் திலிருந்து புறக்கணிக்கப்பட்ட ஒருவன், பொய் யாக வேனும் அச் சமுதாயத்துள் சேர்க்கப்படா மல், புறக்கணிக்கப் பட்டவணுகவே செத்து மடி வதற்குக் காரணம் என்பதை எண்ணும்போதும்,
வயோதிபர் இல்லச் சமுதாயத்தையும் வெளி யேயுள்ள சமுதாயத்தையும் நல்ல பாலமாக இருந்து இணைத்து விடவேண்டிய அதிகாரி, இந்தச் சிறு பான்மைச் சமுதாயத்தைச் சா சுவதமாக்க முயன்றுவிட்டாரோ என்று ஐயுறும் போதும்,
கதாசிரியர் சமுதாயப்பிரக்ஞையில், சமுதாய நோக்கில் ஏதும் ஊனம் இருக்குமோ என்று நான் எண்ண வேண்டி நேர்ந்துவிட்ட ஒரு குறைபாட் டைத் தவிர, சியாக குண்டம் நிறைவுக்கு நிறை வாகி நிற்கிறது ܖ

விளைவு:**** தம்பி, என் பிணத்தை இங்கேயே எ ரித்து வி டு" என்று சாம்புத்தாத்தாவின் யாக குண்டத்திலிருந்து புகைந்து வெளிவரும் 'பூதம், விமரிசகளுகிய என்னைப் பொறுத்தவரையில், சமு தாயம் தன் இதயமாகிய யாக குண்டத்தில் சொரிந்த சுய நலம் - போலிக் கெளரவம் என் பவற்றின் விளைவேயன்றி வேறல்ல,
ஆயினும் சாம்புத்தாத்தாவின் யாக குண்டத் திலிருந்து வெளி வந்தது பூதந்தான் என்ற செங்கை ஆழியானது கூற்றைப் பெருமூச்சோடு ஆமோதிக் கிருேம்.
இச் சிறுகதையை, எங்காவது ஓர் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வயோதிபர் இல்லத்தில், அங்கு ஸ் ள எல்லாரையும் கூட்டி வைத்து வாசித்து காட்டுங்கள். யாராவது ஒரு வயோதிபர், அவர் "மலடு"ஆக இருந்தாலும் கூட, கண்ணிர் விடவில்லை என்ருல், செங்கை ஆழியான் மட்டுமல்ல, அவரை ஒத்த மற்றையோரும் எழுது வதை நிறுத்திக் கொள்ளட்டும்!
மொத்தத்தில், "மலர் செய்கிற இலக்கிய யாக குண்டத்தில் நெய்யாயும் பாலாயம் பொரியாயும் சொரியப் பட்ட அவியே செங்கை ஆழியானின் நல்ல கருவும்,
அதற்கு இளைத்துவிடாத உருவும்கொண் 'urt 35 குண்டம் " y
SZaka wagasa akya
விமர்சனக் கட்டுரைக்குப் பரிசு
இம்மாத 'மலர்' சஞ்சிகையில் இடம் பெற்றுள்ள, கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றைப் படித்து மு டி த் த பி ன் இவற்றுள் : சிறந்த படைப்பு எது என்று நீங்கள் கருது கிறீர்களோ, அதையிட்டு ஒரு விமர் சனம் எழுதுங்கள். உங்கள் கட்டுரை ** மலர்' சஞ்சிகையின் இரண்டு பக்கங் களுக்கு மேற்படக்கூடாது. (பூல்ஸ்காப் தாளில் 4 பக்கம்) கட்டுரை இம்மாதம் 31ம் திகதி க்கு முன்னர் எங்களுக் க் கிடைக்கவேண்டும். ேெரிவு செய்யப் படும் சிறந்த கட்டு ைக்குப் பரிசு ரூபா 25/- வழங்கப்படும். ர
கட்டுரை அனுப்பப்பட வேண்டிய முகவரி;- ஆசிரியர் 'மலர் 99 21, மத்திய வீதி, மட்டக்களப்பு.

Page 7
உள்ளத்தில்
செடி:
Xibe
s3s2.
கதை
அது . கிழவன். துருவ நினை6 தேர் தீர்த்தட நான் வணங் "மலர்" .
கவிதை
*4, 6íouD6oi '..... என்ன கருத் என்றுமே வ பென்சனர் பி உலகம் ஓங்கி நித்திய கல்ய
கட்டுரை
சிந்தை கவர் 'மலர் அறிமு விரக்தி மனட் வர்ண மயக்க இலக்கிய யா
வணக்கம் . ரசனையைத் கலை ஈழம். ரிங்காரம் . வீசு தென்றல் ஒரு அனுபவ ஈழத்துரத்திை
கதைகள் யாவும் கருத்துகளுக்கு அவற்றின்
 
 
 

உண்மையொளி யுண்டாயின் ஒளியுண்டாகும்-பாரதியார்.
ni, 1970 மலர் 3
மகரந்தம்
பக்கம்
8 v 8 w & 8 we ss ss * - உ.தாக பத்மநாதன் . 15
oto o eo o s a es a es es se அருள் சுப்பிரமணியம் . 33 வுகளும். எஸ். பொன்னுத்துரை . 17 ......................... நல்லை அமிழ்தன் . 24 கும் தெய்வம் ஆரையூர் இளவல் . 28 -- " .............. எம்.ஏ. ரஹ்மான் ம .:
a 99 s so a .திமிலக் கண்ணன் . 16 திலடி .3 sa s s t wna • • • - • • நீலாவணன் . 22 1ாழ்க இனிது . மஹாகவி . 42 ரலாபம் . ஆ. மு. சரிபுத்தீன் . 27 கிடுமே . யூ. எல். தாவூத் . 41 17ணி.மு. ஹ. சேகு இஸ்ஸதீன் . 32
ந்த மாந்தை ."கரவைகிழான்" . 12
Pக விழா. “ “ upGööffi”” ... 46 பான்மை.நெ. பி. பழனிவேல் . 43 ம்ே.அ. ஸ். அப்துஸ்ஸமது . 45 "கம் . எஸ். இராசநாயகம் . 3
LLLCLC0 LLLLLL LL00 L0LL0L0LL0LLLLLL00LL LLLL00L L000LL00 LLL00LL0 L LLLLLLLLS 7 திருப்புவோம் . 9
LLLLLL 00L0LLLL0000LLLLLLL LLLLLLLL00LLLLL0000LLLLLLL0LLLL 47
LL0 L LLLLLLLL0LLLL00LLLLLLL0LLLLL00LLLLLLLLLLL00LLLL LLLLLL 44 9................ or........................ 。48 ................................................. فt" சங்கள் . 8
கற்பனை, கட்டுரை கவிதைகளில் உள்ள
படைப்பாளிகளே உரிமையாளர்.
-ஆசிரியர்,
酋
脚
翌
影

Page 8
5
ஈழத்தில் மிகச் சிறப்பான முன் ஏடு 'மலர்'. இச்சஞ்சிகைக்கு உங்க தெரிவிப்பதற்கு ஒரேவழி உடனடியாக அதேபோல், உங்கள் நண்பர்களையும், ம சந்தாதாரர் ஆக்குவது, நீங்கள் இச்சஞ் குக்கும், உங்கள் சக்திக்குட்பட ஆற்றும் மல்ல, உங்களுக்கு மிகவும் வேண்டிய மிகச்சிறந்த - நிலையான ஞாபகமுள்ள ஆகும். ܗܝ
கீழே உள்ள விண்ணப்பப்படிவ
நிர்வாகி 'மலர்' 21, மத்திய வீதி,
மட்டக்களப்பு.
அன்புடையீர்,
** மலர்' இலக்கிய மா
ரூபா 6/- இத்துடன் காசோ
ஒடராக அனுப்புகிறேன்.
0LCLLL LL LLL LLL 0L LLS S LLLLL LLS LLLLLSLLLLL LS LLL LLLL LLLLLL 0L00 LCL மாதம் பிரதிகளை கீழ்க்காணும் முகவரி கொள்ளுகிறேன்.
மலர் அனுப்பவேண்டிய முகவரி;-
SLLLLSS S LLS SSS LLL0 LS 00 L LLLLS LLLLCLLL LL 000LL LLLLLLY 0LLL00 L 0L CL S CLLLL C 000LL LL C

றயில் வெளிவரும் இலக்கிய மாத ர் பாராட்டுதல்களைச் செயல்மூலம் * மலர்' சந்தாதாரர் ஆகுவதுதான். ற்றும் சுற்றத்தவர்களையும் 'மலர்' நசிகைக்கும், ஈழத்து இலக்கிய உல மகத்தான பணியாகும். அதுமட்டு வர்களுக்கு நீங்கள் அளிக்கக்கூடிய ஒரு பரிசு 'மலர்' ஆண்டுச்சந்தா
ந்தைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.
- ஆசிரியர்.
த ஏட்டினுக்கு ஆண்டுச்சந்தாவாக லையாக / மணி ஒடராக / போஸ்டல்
முதல் ஒரு வருடத்துக்கு 'மலர்' க்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்
LLL0LCCYL0 L LL 0L 0 0S S 0LLLLL CLLL LLL 0LLL L LLLLLL 0L00 00 0LLL00LL0 LLLLLLLLLLLLS
கையொப்பம்
திகதி.

Page 9
630
S۔
*ipá)f” முதல் g
இதழ் இன்னும் சிறப்பா
பர்கள் பலரும் ஏகோபித் தெரிவித்துள்ளனர். IfTt பூர்வமான நன்றி.
பாராட்டுவதுடன், s மேலும் சிறப்படைவதற்க வழிவகைகளையும் தெரிவிக் களைக் கேட்டுக்கொள்ளுகி
LlsTD TLG 36it வெறும் செயலிலும் பரிணமிக்கவே * * լf) 6)rՒ** ஏட்டின் சந்தா பெருக்குவதுதான். நீங்களு சுற்றத்தின்ரும் சந்தாதார செய்யமுடியும். இது உா
'மலர்' ஏட்டின் விற் களைக் கூட்டமுடியும். அல் முடியும். கூடுதல் விற்பனைய வாசகர்களே பகிர்ந்துகொ இலக்கியப் பத்திரிகைகளு விலையில் நிறைந்த பக்கங். யிடவேண்டுமென்பது எமது கர்கள்தான் இதற்குத் து
 
 
 

* 念、
WエWズ^W。
స్ట్కా AN As ዜጋሪ”ዏጐ A. •
ఎన్నె
ు. జ్ఞపెళ్లాడతాx. “ து -* * ՞ ՞ Հ:
ilÄ\y الي Nכ-"עו
女子
WS WKWTAVA Şწმეტრ
آنتوڑ کر کہا க்கம் _ క•
தழைவிட இரண்டாவது N
த குரலில் பாராட்டுகளைத் Tாட்டுகளுக்கு எம்: இதய
நின்று விடா து, 'மலர்' ான ஆலோசனைகளையும், குமாறு இலக்கிய அன்பர் ருேம்.
சொல்லளவில் இல்லாமல் ண்டும். அதற்கு ஒரே வழி தாரர் தொ 6ð) eð5 6ð) t_1 ('t நம் உங்கள் நண்பர்களும், ‘ர் ஆவதன்மூலம் இதைச் வ்கள் சக்திக்குட்பட்டது. Liðaðr பெருகினல், பக்கங்
rள்ள முடியும். தமிழக க்கு 8 நிகராக, குறைந்த களுடன் மலரை வெளி 5. அந்தரங்க ஆவல். வாச
ட்ஆசிரியர்

Page 10
ஈழத்து ர
இன்பம் என்பது மனதின் மயக்கநிலைே ஏற்ப, இன்பத்தைப்பற்றிய கருத்துகள் மாறு போக இன்பம் தொடுவானைப் போன்றது. மட்டும் தருகின்றது. அதை - அந்தத் தொடு அத்தனை பிரயாணிகளுக்கும் கிடைத்த வெகும
米
உலகின் ஒவ்வோர் அணுவையும் த பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் இருளை உ போல் ஓடிக்கொண்டிருக்கிறது புகையிரதம்.
§ද
ஆணுல், இன்னமும் தோணி எனக் அதனலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க ந
3&
அவர் ஹோட்டலின் ஒரமாக ஒரு ( குள்ளே யாரோ சாக்கடை நீரை வீசியெறி அவிந்து சுருங்கியது.
米
நீர்த்துளி என்று கடலுடன் கலந்து விடு அதேபோலத்தான் நாம் தனித்துணிகள் தமிழ் கொண்டால்தான் நமக்கு நித்தியவாழ்வுண்டு.
ஈழத்து ர
ஈழத்து எழுத்தாளர்கள் பலரது உவமை, கச்சிதமான வர்ணனை, கலை கிடப்பதை வாசகர்கள் அவதானித்திருப் அவை உங்கள் நெஞ்சைத் தொட்டிரு அப்படியான பகுதிகளை எழுதி அனுப் என்ற பகுதியில் அவற்றை மகிழ்ச்சியே கள் அனுப்பும் பகுதி எந்த நூலிலிருந். (உரிய பக்கத்துடன்) குறித்து அனுப்ப
பத்திரிகை, சஞ்சிகைகள் முதலிய லிருந்து பொறுக்கி எடுத்த 'ரத்தினங்க டுரை, பிரசுரமான பத்திரிகைப் பெ அனுப்ப வேண்டும். "ஈழத்து ரத்தினங்

த்தினங்கள்
யே மனதின் பருவத்திற்கும் பக்குவத்திற்கும் படுகின்றன. சிற்றின்ப விவகாரம் என்ற இக வெறும் போலி உண்மையென்ற மயக்கத்தை வானை - தொட்டுவிட வேண்டுமென்று முனைந்த தி, தோல்வி; ஏமாற்றம்; துன்பம்; மனக் கசப்பு! (எஸ். பொன்னுத்துரை - "சுவடு??) அபூஷனுTபா, ஒட்டமாவடி .
米
னது கருங்கல் வண்ணக் கொடுங்கரங்களாற் தாசீனஞ் செய்து, பலன் கருதாத கர்மயோகி (இ. நகாராஜன் - 'துணை *) சு. சதாசிவம், திருக்கேதீச்சுரம்
米
குக் கனவுப் பொருளாகத்தான் இருக்கின்றது. னவின் ஆரம்பம்தான்.
(வ. அ. இராசரெத்தினம் - தோணி??)
மு. கணபதிப்பிள்ளை, குருக்கள் மடம் 米
முறை பார்த்தார். அந்தக்கணத்தில் நெஞ்சிற் ந்த உணர்வின் தகிப்பில் அவரது பார்வை (செ. யோகநாதன் - 'கலைஞன்??)
சேது மட்டக்களப்பு. k
டுகிறதோ அன்றே அதற்கு நித்திய வாழ்வுண்டு. ச்சமூகம் என்னும் தண்டமிழ்க் கடலில் கலந்து (கரவைகிழான் - ‘தணியாத தாகம்?) சே, நாகேந்திரன் கல்லடி
த்தினங்கள்
படைப்புகளில், கருத்துச் செறிவுள்ள பழகு மிக்க சிந்தனை நிறைய விரவிக் பார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் க்கும். உங்கள் கருத்தில் பதிந்துவிட்ட பி வைத்தால் 'ஈழத்து ரத்தினங்கள்’’ ாடு வரவேற்றுப் பிரசுரிப்போம். நீங் து எடுக்கப்பட்டது என்ற விபரத்தையும்
வேண்டும். பவற்றில் வெளிவந்த, கதை கட்டுரைகளி *ளாக இருந்தால் குறித்த கதை, கட் பர், திகதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு கள்’ அனுப்பவேண்டிய முகவரி :
ஆசிரியர், 'மலர்' 21, மத்திய வீதி, மட்டக்களப்பு,

Page 11
演
خی
உள்ளத்தில் உண்ை வாக்கினிலே ஒளி உ6
Glasg.: 1 மார்ச்
ரசனையைத்
一★
இலக்கியம், காலத் தோடு ஒட்டி மாற்றமடைந்து வந்திருக்கிறது - வளர்ச்சி யடைந்து வருகிறது. இந்த வளர்ச்சியை ஆங்கில மொழியில் நிறையக்காணலாம். வங்காளம், மலையாளம், ஏன் சிங்களம், ஆகிய மொழிகளிலும் இந்த வளர்ச்சி ஒர ளவு பிரதிபலிக்கிறது. ஆனல் தமிழ் மொழி யில் மட்டும் இதனை க்காண முடியவில்லை. ஏன்?
ஏனெனில் , இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யக் கூடிய சாதன மான தமிழ்ப்பத்திரிகைகள், சஞ்சிகைகள், அதைச் செய்யவில்லை, அ த ஞ ல் மக்க ளிடையே இலக்கியரசனை வளரவில்லை. அத னல் இலக்கியம் வளரவில்லை.
மனித மனம் எப்போதும் தீயவிஷயங் களை மிக இலகுவாகக் கிரகித்துக்கொள் கிறது. நல்ல விஷயங்களை அவ்வளவு சுலப மாக ஏற்றுக்கொள்வதில்லை. இது சாதா ரண உளத் தத்துவம். அதிலும் குறிப்பாக பாலியல் (Sex) சம்பந்தமான விஷயங்கள் என்ருல், இயல்பாகவே ஆண் - பெண் இரு பாலாருக்கும் அதில் ஒரு தனி ஈடுபாடு உண்டு. இயற்கைநியதி அது. இந்தக் கார ணத்தினுல், பாலியல் அடிப்படையில் அமைந்த எந்த விஷயமானலும் கற்பழிப்பு, கள்ளக்காதல், சினிமா, சி ரு ங் கா ரம், கொலை, கொள்ளை முதலிய எந்த விஷய மானலு ம், சாதாரண வாசகன் விரும்பிப்

மயொளி யுண்டாயின் ண்டாகும்?? -பாரதியார்.
1970 DGo: 3
திருப்புவோம்!
rー
படிக்கவே செய்வான், வாச க ன் விரும்பு கிருன் என்பதற்காக, அந்த விஷயங்களையே மேலும் மேலும் கொடுப்பதும், அந்த விஷ யங்களைக் கொடுப்பதில் போட்டி போட்டுக் கொண்டு பக்கங்களை நிரப்புவதும், சரி யானதா? அப்படியென்ருல் மனித னின் பாலியல் பலவீனத்தைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் விபச்சாரிக்கும் இந்தப் பத்திரிகைகளுக்கும் என்ன வித்தியாசம்?
இதை எடுத்துச் சொன்னல், சில பத் திரிகைகளுக்கு மூக்கின்மேல் கோபம் வரு கிறது. ‘இலக்கியத் தரமான விடயங்களைப் பிரசுரித்தால் இந்தக்காலத்தில் யார் படிக் கிருர்கள்? அவைகளைப் போட்டால் விற் பனை அப்படியே சரிந்துவிடுகிறது. "லைட் மட்டராகப் போட்டால்தான் விற்பனை வளர்கிறது. பெரும் மூலதனத்தைப் போட் டுத் தொழில் செய்யும் நாங்கள், முதலீட் டுக்கான லாபத்தைக் கவனிப்பதா, அல் லது இலக்கிய வளர்ச்சியைக் கவனிப்பதா? என்ற ரீதியில் அவர்கள் வாதம் அமை கிறது.
ஒத்துக்கொள்ளுகிருேம், பெரும் பத் திரிகைகள் பெரும் மூலதனம் போட்டும் தொழில் செய்வதையும், அதன் மூலத் லாபம் சம்பாதிப்பதையும் நாம் ஆட் சேபிக்கவில்லை. ஆனல் அந்த வியாபாரத் தின்மூலம் தமிழ் இலக்கிய உலகில் நச்சுக் காற்றுப் பரம்பி, அந்த நச்சுக்காற்று ஒரு

Page 12
10
இனத்தின் இலக்கியத்தையே அழித்துவிடும் பேரா பத்  ைத உண்டாக்கி வருகிறதே. இதைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டாமா?
இந்த ஆவேசக்குரல் காலத் துக் குக் காலம் இலக்கிய வட்டாரத்திலே ஒலிக்கத் தான் செய்கிறது. ஆனல் கடலில் புளி கரைத்தாற்போல் இந்தக்குரல் ஒலியும் அப் படியே காற்றில் கரைந்து விடுகிறது. கார ணம் என்ன? அவ்வளவு தூரத்துக்கு மக் களின் ரசனை விஷப்படுத்தப்பட்டிருக்கிறது.
பல வருடங்களாக மேற்சொன்ன *வியாபாரத்தை நடத்திவந்துள்ள சாக் கடைச் சஞ்சிகைகள், மர்ம நாவல் கள் , கவர்ச்சிக்கன்னிகளின் கதைகள், சினிமா ஏடுகள், சிங்காரச் செய்திகள், அவ்வளவு தூரத்துக்கு சாதாரண வாசகனின் ரசனை யைக் கீழ்த்தரமாக்கி விட்டிருக்கின்றன. ஒரு இலக்கிய ஏட்டையும், சினிமாக்கவர்ச்சி இதழையும் பக்கத்தில் பக்கத்தில் வைத் தால், இலக்கிய ஏட்டை ஒதுக்கிவிட்டு, என்ன விலையான லும் அந்த சினிமாக் கவர்ச்சி இதழை வாங்கிச் செல்கிற நிலை யிலேயே இன்றைய வாசகன் இருக்கிருன். இது வாசகனின் குற்றமல்ல. இன்றையப் பத்திரிகைகளும் கீழ்த்தர சஞ்சிகைகளும் ஏற்றிவிட்ட “போதை அது!
ஆம்; எப்படி, கஞ்சா, அபின், மது போன்ற போதைப் பொருட்கள் மனிதனின் அறிவை மயக்கி அவனை அடிமை கொள் கின்றனவோ, அதுபோலவே இன்றையக் கவர்ச்சி ஏடுகளும், சாதாரண வாசகனின் அறிவை மயக்கி, தமது கவர்ச்சிக்கு அவனை அடிமை கொண்டு விட்டன. இந்தப் பத் திரிகைகளின் புதிய இதழ் வெளிவந்ததும், அதை ஒரு தடவை புரட்டிப்பார்க்கா விட் டால் பைத்தியம் பிடித்த நிலையை அடைந்து விடுகிற, லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழ் மக்கள் மத்தியிலே இன்று இருக்கிருர் கள். “போதை’ என்ற பத உபயோகத்தின் பொருத்தத்தையும், அர்த்த புஷ்டியையும் இதிலிருந்து வாசகர்கள் தெரிந்து கொள்ள 6DfTLD
இந்தப் போதையை நாம் தெளிவிக்க வேண்டும். அதன் முதற்படியாக மக்களின் ரசனையை நச்சு இலக்கியத்திலிருந்து நல்லி லக்கியத்தின் பால் திருப்பவேண்டும்.

இது அவ்வளவு சுலபமான வேலையல்ல.
மகாவலிகங்கையைத் திசைதிருப்புவது எவ்வளவு சிரமசாத்தியமானதோ, அவ் வளவு சிரமசாத்தியமானது. ஆனல் மகா வலிகங்கையைத் திசைதிருப்புவது எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளது. மகாவலிகங்கையைத் தி  ைச தி ரு ப் பும் முயற்சி தொடங்கியுள்ள இக்கால கட்டத் தில், வாசகனின் ரசனையைத் திசைதிருப் பும் முயற்சியையும் நாம் மேற்கொள்வது மிகப் பொருத்தமானதாகும். அதுவும் ஈழத் திலே இம்முயற்சி ஆரம்பமாவது இன்னும் விசேஷமானதாகும்.
முயற்சியைத் தொடங்கிவிட்டால் மட் டும் போதாது. அல்லும் பகலும் அதில் நாம் ஈடுபடவேண்டும். ஒரு பெரும் இயக்க மாக இதை நடத்தவேண்டும், நாடெங்கும் பரந்த அளவில் இதையிட்டுப் பிரச்சாரம் செய்யவேண்டும். பகிரங்கக் கூட்டங்கள், மட்டரகக் கவர்க்சி ஏடுகளைப் பகிரங்க மாகத் தீயிடல், நல்லி லக் கி ய வ ரா ரம் போன்ற இன்னுேரன்ன முயற்சிகள் நல்ல பயனைத் தரக்கூடும். ‘வியாபார நோக்கம் கொண்ட பெரும் பத்திரிகைகள் இம்முயற் சிக்கு முழு ஆதரவு நல்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகையால் இலக் கிய நோக்குக்கொண்ட ஈழத்துச் சஞ்சிகை கள், சகோதர இலக்கி ஏடுகள் அனைத்தும் இம்முயற்சியில் ஒன்றுபட்டு உழைக்க வேண் டும்; திட்டமிட்டுச் செயல்படவேண்டும். சிந்தனைப் புரட்சி ஒன்றே நாம் எதிர்பார்க் கும் பலனைத் தரமுடியும்.
இத்தகைய ஒரு முயற்சியினுல் தமது ‘வியாபாரம் படுத்துவிடுமே என்று பெரும் வியாபாரப்பத்திரிகைகள் கவலை கொள்ள வேண்டியதில்லை. எமது முயற்சியி ன ல் ஈழத்து வாசகர்களின் ரசனையை நல்லிலக் கத்தின்பால் திருப்பிவிட முடிந்தால், தமது *வியாபார நோக்கத்திற்குக் குந்தகமில் லாமலே பெரும் வியாபாரப் பத்திரிகை களும் இலக்கிய சேவையில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடுமல்லவா? இதை மன தில் கொண்டாவது ஈழத்துப் பெரும்’ பத் திரிகைகளும், இம்முயற்சிக்குத் தம்மா லான ஒத்துழைப்பை நல்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிருேம்.
-ஆசிரியர்.

Page 13
ஒரு அ
இப்படியும் ஒரு ட்றைவர்
மலைநாட்டு ரஸ்தாலில் பஸ் வளைந்து வனைந்து ஒடிக்கொண்டிருந்தது" திடீரென்று என் முதுகில் ஏதோ "சளார்" என்று விழுந்தது. திரும்பிப்பார்த் தேன். பின்னல் இருந்த பிரயாணி என் முதுகுச் சேட்மேல் வாந்தி எடுத்துவிட்டார். திடீரென்று பஸ் நின்றது. ட்ரைவர் எழுந்துவந்து என்னை வெளியே கூட்டிச்சென் ருர். என்சேட்டைக்கழற்றி அக்கேயிருந்த அருவி ஒன்றில் சேட்டை நன்ற கழுவி பஸ் உள்ளே ‘பொனட்"டில் காயப்போட் டார். தனது கைப்பையைத்திறத்து, தான் மறு நாள் பாவிக்க வைத்திருந்த சேட்டை என்னிடம் கொடுத்தார். பிரயாணம் தொடர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் பஸ் ஒருஸ்டொப்பில் நின்றது. ட்ரைவர் இறங்கி 'பொனட்"டில் காயப்போட்டி ருந்த சேட்டை எடுத்துப்பார்த்தார். சேட் தன்கு காய்ந்திருந்தது. சேட்டை மாற்றிக்கொண்டேன். ட்றைவர்களும் கண்டக்டர்களும் செய்யும் அட்டகாசத்தை நிதமும் அனுபவித்திருக்கும் வாச கர்களுக்கு இச்சம்பவம் நம்பமுடியாததாக இருக்
கலாம். ஆனல் இது உண்மையில் நடந்தது.
என். விவேகானந்தன்
கோவில் வீதி, மட்டக்களப்பு. இம்முறை பிரசுரமாகும் "ஒரு அனுபவம்' துணுக்குகளில் அன்பளிப்புப் பெறத்தக்க துணுக்கு இதுவே. ஆணுல் இதை எழுதியவர் 'மலர்' இலக்கியக்குழுவைச்சேர்ந்தவராகையால் இவருக்கு அன்பளிப்புச்செய்யப்படவில்லை. ஏனைய துணுக்கு எவை யேனும் அன்பளிப்புப் பெறத்தக்க சிறப்பில்லாமை குறித்து வருந்துகிருேம். - ஆசிரியர்)
ஒசிப்பத்திரிகை
மட்டுநகர் நோக்கி, விரைந்துகொண்டிருந்தது 'உதயதேவி" புகையிரதம். எனது தோல்பை யினுள் மடிந்து கிடந்த அந்த 'மலர்' சஞ்சிகை யை வெளியில் எடுத்தேன். அதிலுள்ள எல்லாக் கதை, கட்டுரைகளையும் வாசித்திருந்தாலும், மீண் டும் வாசிக்க எண்ணி இதழை விரித்தேன்.
முன் இருந்தவர் 'தம்பி, ஒருக்காத் தாருங் கோ, பாத்திற்றுத்தாறேன்' என்றர்.
என்கையிலிருந்த 'மலர்” அவர்கைக்கு மாறி யது. ரயிலும் வேகமாகச்சென்றுகொண்டிருந்தது. அவரும் ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக்கொண் டிருந்தார்.
புகையிரதம் வாழைச்சேனையையும் தாண்டி இருக்கும். அப்போதும் அவர் படித்துமுடிக்கவில்லை நான் ஞாபகமூட்டியபின் தான் அவர் அந்த "மலர்' பிரதியைத் தந்தார்.

11
6)IUG) st
-
"மட்டக்களப்பிலிருந்து வெளியிடுருங்களாம். இப்ப அடிக்கடி, புத்தகம், பத்திரிகை என்று வெளி யிடுறதுதான் எல்லாருக்கும் வேலை. ஆனல் ஒன் றுக்கும் சரிவராது. அதை இதை என்டு உளறி வைச்சிருப்பினம். ஆணுல் இது, நல்ல புத்தகமாக் கிடக்கு' என்ருர்,
இதைக்கேட்க எனக்கு எவ்வளவோ பெரு மையாக இருந்தது ஆனலும் ஒசிப்பத்திரிகை படிப்பவர்கள் குறைந்தால் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு நல்லது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
வதன். களுவாஞ்சிக்குடி.
மனிதாபிமானம்
"மலர்”அறிமுகவிழா யாழ்ப்பாணம் திறந்தவெளி
யரங்கில் மிகவும் அமைதியாகவும் ஆடம்பரமற்ற முறையிலும் நடந்து கொண்டிருந்தது. நானும் எனது மிக நெருங்கிய நண்பஞெருவனுமாக புல் தரையில் ச ப் பா னி கொட்டி இருந்தவண்ணம் கேட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் வேலையில்லாமல் க ஷ் டப்படுகின்ற வர் கள். ஆளுக்கு ஐம்பது ஐம்பது சதம் எப்பாடுபட்டோ மிச்சப்படுத்தி வைத்திருந்தோம். தைமாதஇதழை நான் வாங்குவதென்றும் மாசி இதழை நண்டன் வாங்குவதென்றும் தீர்மானித்திருந்தோம். பேச் சாளரின் பேச்சை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த எங்களை 'ஐயா பிச்சை" என்ற குரல் கவர்ந்தது. பார்த்தால் ஒரு கர்ப்பிணி. இரு கண்களும் தெரி யாதவள். ஒரு சிறுவனின் கையைப்பிடித்தவாறு வந்துகொண்டிருந்தாள்.
அவளுக்காக மனதால் இரங்கினேன். ஆனல் உதவிசெய்ய மனம் பின்வாங்கியது. இப்படி நான் யோசித்துக்கொணடிருக்கும்போது, என் நண்பனே சிறிதும் யோசியாமல் அவள் நீட்டிக்கொண்டிருந்த தகரக் குவளையில் தான் வைத்திருந்த ஐம்பதுசதக் குத்தியைப் போட்டுவிட்டு ஏதும் நடக்காததுபோல் பேச்சை கேட்கத்தொடங்கிஞன். இதைக் கவனித்த நான் ' என்னடாப்பா, மலர் வாங்க வைத்திருந்த காசைப் போட்டு விட்டாயே, வாங்க வில்லையா?" என்றேன்.
அவன் சொன்ன பதில் 'நாங்கள் அறிவுப் பசியை தீர்க்கப்பார்க்கின்ருேம். ஆனல் அவளோ தனது வயிற்றுப்பசியைத் தீர்க்கப் பாடுபடுகின் ருள். முதலில் தீர்க்கப்படவேண்டியது அது!"
“இராநேசன்’
கந்தர்மடம், யாழ்ப்பாணம்.

Page 14
12
பழமை, பாரம்பரியம், பண்பாடு என்பனபற்றி எழுதுவதோ, எடுத்துரைப்பதோ, புதுமைக்கு எதி ரான செயல் என எண்ணுவார் சிலர். அவ்வண் ணம் எண்ணுவோர் வாழ்ந்திடும் தாய்நாடும், டழமையானது. அவர்களைப் பெற்றெடுத்த தாய் மாரும் பழமையில் ஊறியவர்கள். புதுமைபேசி புத்துலகம் சமைக்க, புத்தெழுச்சி ஊட்ட, கருவுக்கு உருதந்து உயிராக்கி உ ல வ வி ட் ட பழமையை உதாசீனம் செய்வதோ உதறித்தள்ளுவதோ அறி வுடைமை அல்ல. பழமையிலிருந்துதான் புதுமை முகிழ்க்கிறது. அந்தப் புதுமை பொலிவுடனும் வலிவுடனும் திகழ்ந்து, உருவிலும், திருவிலும், சிறக்க ஊன்று கோலாய் உறுதுணையாய் என்றும் உரிமையுடன் நிற்பது பழமைதான். அழகான மலர்த்தோட்டம், கணித் தோட்டம் அமைத்து அழகும், மணமும், சுவையும், பயனும் பெற்றிட
 

சிந்தை கவர்ந்த மாந்தையும் - வீரச் செம்மல் உலவிய வன்னியும்.
*கரவை கிழான்’
எமக்கு நிலம் வேண்டும். அறம் தழைத்து அருள் பூக்க அன்பகலா நல் நாடு வேண்டும்.
நமது ஈழநாட்டின் பண்டைய வரலாற்றை
சிறப்பாக தமிழராண்ட நாட்டின் வரலாற்றை ஆராயும்போது மாந்தை எத்தகைய மாண்புடன்
திகழ்ந்து மாநிலத்திற்கே கலங்கரை விளக்க மாக விளங்கியது என்ற உண்மையை உணர முடிகிறது. ஈழத்தின் தொன்மையை, பண்டைய வரலாற்றை அறியவிரும்புவோர் மாந்தைபற்றி ஆராயவேண்டும். தென்னிந்தியாவில் பூம்புகார், கொற்கை, தொண்டி, முசிறி முதலிய துறை முகங்கள் எத்தகைய சீருடனும் சிறப்புடனும் திகழ்ந்தனவோ அத்தகைய சீருடனும் சிறப்புட னும் மாந்தைத் துறைமுகம் விளங்கிற்று. “இவ் வுலகிற்கே ஒரு பெரிய வா னி ப நிலையமாக (Emporium) மாந்தை மாண்புடன் ஒளிர்ந்தது. பண்டைக்கால கிரேக்கர் மாந்தை மாநகரை GoLunt 666ňvLD GðITg. (Polig Mundi *) 6T 6ör sp6oTrř. gng) ஒர் உலகமாநகரென்ற கருத்திலேயே அவ்வாறு அழைத்தனர். மாந்தைபற்றி சங்க இலக்கிய மாகிய அகநாநூற்றில் பின்வருமாறு மாமூலனுர் என்னும் சங்கப் புலவர் பாடியுள்ளார்.
“நன்னகர் மாந்தை முற்றத் தான்னர் பணிதிறை கொணர்ந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிர மொடாம்ப லொன்றுவாய் நிறையக்குவை இ யன்றவண் னிலந்தினத் துறந்த நிதியத்தன்ன.”
(அகம் 127) மாந்தைபற்றி சங்கப்புலவர் பரணரும் பின் வருமாட பாடியுள்ளார்:-
*நந்தூம்பு ஸ்ளை யழற்கொடி மயக்கி வண்டோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத் துய்த்தலை முடங்கிருத்தெறிக்கும் பொற்பு
குரங்குளைப் புரவிக் குட்டுவன் (டைக் மாந்தையன்ன வென்னலந்தந்து சென்மே” (அகம் 378)
மகாவம்சத்தில் மாந்தை “மகாதீர்த்த” எனக் குறிக்கப்பட்டுள்ளது. மாந்தைக்கே மாதோட் டம் என்ற இன்னெரு பெயரும் வழங்கியது.
மாதோட்ட மன்னனின் ஆட்சிக்குட்பட்ட
அரிப்பு என்னும் துறைமுகத்தில் முத்துக் குளிப்பு
* Polis Mundi - City of the world.

Page 15
நடைபெற்றது. அங்கே எடுக்கப்பட்ட முத்துக்கள் “தாமரவர்ணிகா” என அழைக்கப்பட்டது என்று வரலாற்ருசிரியர் கூறுகின்றனர். சுந்தரமூர்த்தி நாயனராலும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயன ராலும் பாடப்பெற்ற திருக்கேதீச்சரம் அருள் ஒளி உமிழ்ந்துகொண்டிருந்ததும் மாதோட்டத்திலே தான். மாதோட்ட மன்னன் ஆண்டபோது இருந்த மாடமாளிகைகளும், கூட கோபுரங்களும் மண் ணுேடு மண்ணுய் மறைந்துவிட்டன. ஆனல், சில ஆண்டுகளுக்குமுன் திருக்கேதீச்சரத்தில் அகழ் வாராய்ச்சி நடந்தபோது மண்ணுக்கடியில் மாட மாளிகையின் செங்கல்லாலாகிய அத்திவாரத்தை யும், சிவலிங்கத்தையும் காணக்கூடியதாக இருந் தது. அகழிகள் தூர்ந்துபோய்ச்கிடந்தன. அங்கே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கததையே திருக்கேதீச்சரத்தில் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்
St.
போத்துக்கேயர் ஈழத்தில் வந்திறங்கியபோது கிழக்கே திருகோணமலையிலிருந்து மேற்கே மன்னர் மட்டும் வன்னிநாடு பரவிக்கிடந்தது. வன்னி தாட்டின் மேற்குப்பகுதியில் முன்பு மக்கள் நெருக்க மாகக் குடியேறியிருந்தார்கள் இப்பகுதி தான் இன்று மன்னர் மாவட்டமொ அழைக்கப்படுகிறது. இங்கேதான் பாடல்பெற்ற தலமாகிய திருக்கேதீச்சரமும் திகழ்கிறது. தூர்ந்துபோன குளங்களும் வாய்க்கால்களும் இன்று வாழ்விழந்த வனிதையர் கள்போல காட்சியளிக்கின்றன. வன்னியில் இன்று பாய்ந்துகொண்டிருக்கும் ஆறுகளின் பெயர்கள் பின் வருமாறு:- 1. பறங்கிஆறு, - இது மன்னரின் வட பால் உள்ள கடலுடன் சங்கமமாகிறது. 2. அருவி ஆறு அல்லது மல்வத்தை ஒயா-பண்டைய நாளில் கடம்பநதி என இது அழைக்கப்பட்டது. இது மன்ன ரில் தென் பால் அரிப்பு (சரித்திரப் பிரசித்தி பெற்ற துறைமுகம்) அருகில் கடலு f ன் கலக்கிறது. 3. மோத ரகம ஆறு அல்லது மோர்க்கமான் ஆறு. 4. கனகராயன் ஆறு, g - நாய் ஆறு. 6. பேர் -9է Ո}.
வன்னியில் கிறிஸ் துவுக்கு முன் இருந்த குளங்களின் பெயர் கள்:- கட்டுக்கரைக் குளம், வவுனிக்குளம், பாவற் குளம், கிறிஸ் துவின் ஆரம்பகாலத் தில் இருந்த வை:- பெரியகுளம், மாமடு, ஒலுமடு, கன கராயன் குளம், tu 6 Lir T
குளம். ப தி னை ந் து
နှီ??ဋီ ဂျူTးစွဲ
 

13
உணர்ச்சிமிக்க இளை ஞர் கரவை கிழான். தமி ழர்களின் பாரம்பரியப் பெரு மையில் பெரும் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுத் துக்கள் யாவும், தமிழையே உயிர் மூச் சாகக் கொண் டவை. சிறந்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சிறந்த நாடகாசிரியர். இ வ. ர து ‘தணியாத தாகம்’ என்ற நாடக நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. **ஆதவனே மன்னிப்பாப்" என்ற நாடகம் கலைக்கழக நாடகப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
-ஆசிரியர்.
கத்திலே உள்ள நீண்ட குளங்களில் இன்று நாலா வது இடத்தை வகிக்கிறது.
குளம், மடு, கேணி, ஓடை, ஆகிய தூய தமிழ்ப்பெயர்களை இறுதியாகக் கொண்டே வன் னியின் பல இடங்களின் பெயர்கள் விளங்குகின் றன. எடுத்துக்காட்டாக பின் வருவனவற்றைக் கூறலாம்: கனகராயன் குளம், மாமடுநெடுங்கேணி மருதோடை. வேறு சில இடங்கள் மரங்களின் பெயர்களைக்கொண்டு விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக உள்ளவை: புளியங்குளம், மருதமடு, நொச்சிக்குளம், பூவரசங்குளம், இரணைஇலுப்பைக்
referen

Page 16
14
குளம், விளாத்திக்குளம், கருங்காலி குளம். வன்னி நாடு நீர்வளத்தாலும் நிலவளத்தாலும் சிறப் புற்று விளங்குவதென்ற உண்மையையும், நாட் டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு போன் றது என்பதையும் உணரவேண்டும்.
இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த வன்னியை பண்டைநாளில் ஏழு குறுநில மன்னர் கள் ஆண்டனர் என்று வரலாறு கூறுகிறது. போத் துக்கேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப் பற்றி ஆட்சி செலுத்தினர்கள். ஆனல், வன்னிப் பகுதியை சுலபமாகக் கைப்பற்ற மூடியவில்லை. நாளடைவில் சில வன்னி மன்னர்களை நயமாக ஆசை வார்த்தைகூறி அடிபணிய வைத்துவிட்டார் கள். பனங்காமம் மட்டும் அடிபணிய மறுத்து விட்டது. போத்துக்கேயர் ஆண்டகாலத்தில் பனங் காமத்தைக் கைப்பற்ற முடியாது போய்விட்டது. பின்பு டச்சுக்காரர் காலத்திலே வன்னியர்களின் இராசதானியாக விளங்கிய பனங்காமத்தை ஆண்ட வன்னிமன்னன் கயிலைவன்னியன் அஞ்சா நெஞ்சத் துடன் ஆண்டுவந்தான். யாழ்ப்பாணம், மட்டக் களப்பு, மன்னர், நீர்கொழும்பு, கோட்டை, திரு கோணமலை யாவும் டச்சு ஆட்சிக்கு அடிபணிந்து வரி செலுத்திக்கொண்டிருந்தன. பனங்காம மன் னனும் திறைசெலுத்த வேண்டுமென யாழ்ப் பாணத்தை ஆண்ட டச்சுக்கவர்னர் 12 ஆண்டு கள் தொடர்ந்து ஒலை அனுப்பிக்கொண்டே இருந் தார். 17ம் நூற்ருண்டில் வாழ்ந்த வீரகேசரி கயிலைவன்னியன் கவர்ணரின் ஆணையை மீறி 12 ஆண்டுகள் வரிசெலுத்த மறுத்து நாட்டின் சுதந் திரத்தைப் பேணிப் பாதுகாத்திருக்கிறன். திரு. சி. நவ ரத் தினம் அவர்கள் எழுதிய (Vanni and the Vanniyae) என்ற ஆங்கில நூல் இதற்குச் சான்று பகர்கிறது:
“It was Thomas Van Rhee (1692–1697) the Dutch Governor who wrote “the Wanni Fulers were standing with one foot on the Company's land and the Other on the King's territory'. They were a constant source of irritation to the Dutch as they had been to the Portuguese. The Chiefs would not often pay their annual tribute of elephants and their land rents and some even would not appear at the annual durbar when they were summoned by governors. This was especially ths case with Kayla Wanniya of Panankamam who failed to appear before the Dutch Governor for twelve consecutive years'.
"வீரம் என்பது வெற்றியிலும் பலத்திலும் மட்டுமே தங்கியிருக்கிறது என்ற குழப்பமான எண்ணம் நிலவி வருகிறது. வீரன் என்ற சொல் தியாகத்தையும் சாவையும் ஏன் தோல்வியையும் உள்ளடக்கியதுதான். வீரன் மக்களின் உள்ளத்தை தொடவேண்டும்.” இத்தகைய வீரனுக விளங்கிய கயிலை வன்னியனின் வீரம் தனித்தன்மை வாய்ந்தது.

போத்துக்கேயரை எதிர்த்த சங்கிலி மன்னனைச் சிறைப்படுத்தித் தூக்கிலிட்டார்கள். ஆங்கிலேயரை எதிர்த்த பண்டாரவன்னியனுக்கும் அதே கதிதான் நேர்ந்தது. ஆஞல், கயிலைவன்னியன் ஆண்ட காலத் திலே அவனைச் சிறைப்படுத்த முடியாது போய் விட்டது. அதுமட்டுமல்ல. கயிலைவன்னியன் 1678ல் மாண்டபின், பனங்காம மக்கள் தங்கள் வாரிசை, டச்சு அதிகாரிகளுக்கு அறிவி க் கா ம ல் தாங் களே நியமித்தார்கள் எனவும், கயிலைவன்னியனு டைய பேரப்பிள்ளையினுடைய காலத்திலேதான் பனங்காமம் டச்சுக்காரர் ஆட்சிக்குட்பட்டது என வும் சரித்திரம் சான்று பகருகிறது.
“When this fearless wealthy chief died in 1678, the Wanniyas appointed a successor with out reference to the Dutch authorities. The Dag register of that time notes “affairs in Jaffna as regards the Wanniyas had improved, for the obstinate Kayla Wanniya was dead and his grand nephew Kaysianar had succeeded him and sworn allegiance to the company'.
விடுதலை வேட்கை தனியானது, மாற்ருன் தாள், பணியாது பனங்காமத்தை ஆண்டு, ஆதிபத் தியக் - காரர்களை எதிர்த்து, சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாத்த அரசகேசரி கயிலைவன்னியனே ஈழ மக்கள், அகத்தில் உரிமை விளக்காக ஏற்றி உணர்ச்சியும், எழுச்சியும் பெறவேண்டும்.
'தூங்காமை கல்வி துணிவுடமை இம்மூன்றும்
நீங்கா நிலஞள் பவர்க்கு”
(திருக்குறள்) இவ்விதம் அந்நியனை எதிர்த்து வளம் பெருக்கி அரசுரிமையை நிலைநாட்டிய அடலேரும் வன்னி யரை ஈன்ற பெருமை மாண்புடைய மாந்தை
மண்ணையே சாரும்.
வருந்துகிருேம்!
பாலைதீவு கோரப் படகுவிபத்தில் உயிர்துறந்த சகோதர சகோதரியரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக் கிருேம். அவர்கள் பிரிவால் நிலை குலேந்துநிற்கும் தாய், தந்தை, மனைவி, மக்கள், சகோதரர் மற்றும் சுற்றத் தினர் அனைவருக்கும் எமது இதய பூர்வமான அனுதாபத்தைத் தெரி வித்துக்கொள்ளுகிருேம்,
- “மலர்' வெளியீட்டுக்குழுவினர்.

Page 17
உருவகக் கதை
நாக. பத்மநாதன்.
9岛 மலர் அல்ல. எனினும் அது செடியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.
அவ்விதமாயின் இலையா? இல்லை, இல்லை.
எனினும் அது செடியுடன் ஒன்றி இணைந்து அதன் ஒரு பகுதியாய் வாழ்ந்து வந்தது.
அவ்விதமாயின் ஏதோ பூச்சி புழு அல்லது தண்டைத் துளைத்து வேரோடும் புல்லுருவி இனமா? ஐயோ, அவ்விதம் எண்ணுதீர், அது பெரும் அநீ தியாய் முடியும்! அது தவம் செய்யும் மனிதனி லும் பார்க்கப் பெரு வைராக்கியத்தோடு இருந்து வந்தது. அதைக் கைகூப்பித் தொழவே என்னுல் முடிந்தது.
வெயில் தழுவ அது இலங்கிற்று.
மேலே வெண்முகில் ஒளிரும் நீல வானம், கீழே தூரத்துத் தரைக்கப்பால் தொடுவான் வரை தெரியும் கடல், அத்தோடு தொலைப் பார்வைக்கு மட்டும் எட்டக்கூடிய தூரத்து பனந் தோப்பின் சாயல், இடைக்கடலிற் தெரியும் ஒரிரு வள்ளம், மீண்டும் அங்கிருந்து இங்குவரை தரை, இதைக் காய்ந்த பசுந்தரை என்றும் கூறலாம்.
இங்குதான் அது . .
. . அது வெயில் தழுவ ஒளிர்ந்தது. என் நெஞ்சத்தோடு அது நெருங்கி நின்றது. அதை அணைத்துக் கசிந்துருக என்னல் முடிந்தது.
சீ, பைத்தியமா ?
 

15
அது நறு மணம் கமழும் மலரா? இல்லை! பச்சைப்பசேலென்ற அழகு இலையா? இல்லை!
துவஞம் மென்கொடியும் அதுவல்ல. அவ்வித எதுவும் அங்கில்லை. குத்துச்செடியின் ஒரு பகுதி யாய் அது இருந்தது.
கண்ணே எ ன் பது உட்தொனிக்க **உன்னை எவ்விதம் அழைத்திட?' என்றேன்.
* "என் பெயரா? என்னை மனிதர் எவ்வித மெல் லாமோ எண்ணுகிருர்கள் பலருக்கு என்னைப் பிடிப் பதில்லையே' என்று அது மெல்லென நகைத்தது. அந்த அசைவிலே வெயில் த வ ழ் ந் து விளையா டிற்று.
என் பார்வை அதனையே வருடிற்று. உள்ளம் காத்து நின்றது.
'என் பெயரா? நான் நல்ல மலரென்ற பெய ருக்கு உள்ளாகி இருக்கலாம். மென்தளிராய் மாறி இருக்கலாம், அ ல் லது மற்ற நல் உறுப்பென இலங்கியிருக்கலாம். இன்று நான் அது எதுவும் அல்ல . .
நான் . என் பெயர் . ஒரு. முள் என்றது.’
அதன் எதிரொலியாய் என் நெஞ்சம் அதை அணைத்துக்கொண்டது, இணைத்துக் கிடந்தது. .
அதன் குரல் மட்டும் மெல்லெனக் கேட்டது.
* "என் பெயர் முள். நான் மென்மையுமல்ல, நான் காப்பது மென்மலர்க் கொடியையும் அல்ல. இருந்தும் எம் நிலம் கருகிப் பாலையாய் விடாமல் அதற்கொரு போர்வையாய் மாறி முள்ளாய் வாழ் வதில் எத்தனை சுகம், எவ்வளவு இன்பம் தெரி யுமா?" என்றது.
பூமி மெய் சிலிர்த்தது.
நாங்கள் காய்ந்து விறகாகிக் கொண்டிருந் தோம். அதில் எத்தகை இன்பம்,
A
வள்ளுவர் வழியில்.
965 y 60 - sol D.
புற அழகிருந்தும் அக அழகிற்கு அன் புதான் தேவை. அந்த அ ன் பை அறிந் தோரே இன்புற்று வாழும் வகையை அறிந் தவராவர். அன்புதான் ஒருவரைப் பிறர்க் கென உரித்தாகும் பெரு நிலைக்கு ஆக்கி வைக் கிறது. அதனுல் நட்பெனும் சிறப்பும் தானே பொலிகிறது. அன்புடைமையானது நீர்மை நெறிக்கு மட்டுமின்றி உண்மை வீரத்துக்கும் தூண்டுகோலாய் நிற்கும் தன்மைவாய்ந்தது.
- நாக. பத்.

Page 18
16
வண்ணக் கவி மலர்
எண்ணக் கவி மலர் வாழ்வுக் கவி மலராள், -என்
கண்ணினில் தோன்றும்
கவினெலாம் ஒன்றிய. காதற் கவிமலராள் - இந்த
மண்ணக மெங்கணும்
விண்ணக மெங்கணும் வாழும் எழில் மலராள்.-கவிப்
பெண்ணின்பப் பெண்னென
தெண்ணத்தி லொன்றிய பேரின்பத் தேன் மலராள்
அன்புக் கவி மலர்
இன்பக் கவி மலர்; ஆசைக் கவி மலராள் - கொடும் துன்பத்தைத் தீர்க்கும்.
துணிவெலாம் ஒன்றிடும் தூய்மைக் கவி மலராள் - நிதம் என்னுடன் ஒன்றியென்
இன்னுயிர்க் கன்னியாய் எழுச்சி தரும் எழிலாள் - வரும் இன்பத்தும் துன்பத்தும் "
அன்புத் துணைவியாய் இருந்தமை திதருவாள்.
திமிலை சகோதரர்களில் இ ஆத்மீகத் துறையையே கருப்பொ சஞ்சிகைகளிலும், மற்றும் ஈழத்தி கவிதைகள் வெளிவந்திருக்கின்றன எழுதியுள்ளர். ஆளுல் இதுவரை
 
 

பாசக் கவி மலர்
நேசக் கவி மலர் பண்புக் கவி மலரான் - பக்திப் பூசைக் குக ந்தவள்;
புனிதம் உடையவள் புதுமைக் கவி மலராள் - உயர் ஈசற் கினியவள்
என்னுள் இருப் பவள் இனிய கவி மலராள் - என். ஆசை தணிப்பவள்:
அனபை வளாபபவள அழியாக் கவி மலராள்.
உதயக் கவி மலர்
உணர்ச்சி தரும் மலர்; உண்மைக் கவி மலராள் - நல்ல இதயத் தெளிவுடன் t
இலக்கியம் யாப் பவள் இலக்கியப் பொன் மலராள் - இங்கு நித நிதம் புது மணம்;
நிறைநறை சேர் எழில் நிறைந்த புது மலராள் - இவள் இதயத்தில் உண்மை
ஒளிதர நீ! நிதம் உற்றுப் படி பதி! பார்!
ளையவர் திமிலைக்கண்ணன். இவர் கவிதைகள் பெரும்பலும் ருளாகக் கொண்டவை. "ஆத்மஜோதி” "விவேகி" முதலிய
ல் பிரபலமாக உள்ள எல்லப் பத்திரிகைகளிலும் இவரது . ஏராளமான கவிதைத் தொகுதிகளை வெளியிடும் அளவுக்கு r எதுவு நூலுருப் பெறவில்லை.
-ஆசிரியர்.

Page 19
துருவ நினைவுகளும் இரு பெண்களும் சில பிள்ளைகளும்
மற்றும் பலவும் சிலவும் சேர்ந்த மனித இருபது ஆண்டுகளும் ஒரு வேலியும்
(மகுடத்தைப் பார்த்தவுடன் " என்னவோ, ஏதோ?’ என்று மறுகத்தேவையில்லை. இது எஸ். பொ, எ மு தி ய ஒரு சிறு கதை. இக் கதை பற்றிய வர்த்தமானம் ஒன்றினை நீங்களும் அறிந்து கொள்ளுதல் விரும்பத்தக்கது. ‘இப்பொழுது நீங் கள் சிறு கதைகள் எழுதுவதில்லையா? ‘அன்புமணி’ நடத்தும் மலருக்கு நீங்கள் ஒரு சிறு கதை எழுதி னுல் என்ன?’ என்று, அபிமான வாசகன் என்ற உரிமையோடு எஸ். பொ. விடம் கே ட் டே ன். 'ஈழத்து வராந்திரிகள் இலக்கிய சேவையென்று ஏதேதோ பிஸினஸ் செய்வதினுல், நான் நேசிக்கும் ஒரு துறையை ஒதுக்கிவிட்டேன் என்று அர்த்த மாகிவிடுமா? நான் எழுதித் தள்ளியிருக்கும் கதை கள் பல இந்தக் கூடையிலே தூங்கிக்கொண்டிருக் கின்றன. நீர் விரும்பியதைப் பொறுக்கி மலருக்குக் கொடும்” என்ருர் அந்தக் கூடையிலே பல வகைத் தான கதைகள் இருந்தன. எஸ். பொ. வின் தனித் துவ முத்திரை பெற்ற பி ர ச் சினை க் கதைகள் அநேகம். அவற்றின் போக்குகள் "மலருக்கு ஒத் துக்கொள்ளாது. இந்தக் கதை எனக்குப்பிடித்தது. இக்கதையின் கதாநாயகன் நான் என்பதில் ஏற் பட்ட கவர்ச்சி ஒன்று, நானே மறந்துபோன யாழ்ப்பாணப் பழகு தமிழ்ச் சொற்களின் அநாயா சத் தெளிப்பு மற்றது. ஆனல், "பூரண சந்திரன் அல்லது சரஸ்வதி விஜயம்" என்ற மகுடம் சற்று 'ஒல்ட் மொடலாக எனக்குத் தோன்றியது. என்
*பிரச்சினைக்குரிய "மனிதர்" என்று பெயரெடுத்துவி எஸ். பொ. இலக்கிய உலகில் இவர் சாதனைகள் அனந்தம். சங்கத்தை உருவாக்கியது; அதன்மூலம் மட்டக்களப்பில் நடாத்தியது; வந்தாறுமூலையில் காப்பியப்பெருவிழா நடாத் போகலாம். "தீ", "ல முதலியன அச்சில் வெளிவந்துள்ள ( பொழிவுகள்" "காந்தி தரிசனம்’, ‘காந்தீயக் கதைகள் "முதல்முழக்கம்" இலங்கைக் கலைக்கழகப் பரிசில் பெற்ற இவ

ணும் எஸ். பொன்னுத்துரை.
அபிப்பிராயத்தை எஸ். பொ. விடம் தெரிவில் தேன். அப்பொழுது அவருடன் எழுத்தாளக்குஞ்சி கள் இருவர் இருந்தார்கள். 'இருபது ஆண்டுகளும் ஒர் ஆசையும் என்று தலைப்புவைத்தல் பொருந்தும்' என்ருர் ஒருவர். 'காதல்கள் கல்யாணங்களல்ல’’ என்று பெயர் வைத்தால் ஜெயகாந்தன் பாணியில் அமையும் என்ருர் மற்றவர். எஸ். பொ. சிரித்தார். * 'இலக்கியப் படைப்பு என்ற கலைவிவகாரங்களை மறந்து, தலைப்பு என்ற attraction முக்கியமான தென ஜெயகாந்தன் நினைப்பதற்குக் காரணம் இருக்கலாம். ஆனல், அதனையே கலைவிவகாரம் என்று மோகிப்பது நமது சிந்தனைக்கு மட்டுமல்ல, சுய கெளரவத்திற்கும் உகந்ததல்ல. மிக மிக modern தலைப்பு வேணுமா? இதோ ‘துருவ நினைவு களும் இரு பெண்களும் சில பிள்ளைகளும் மற் றும் பலவும் சிலவும் சேர்ந்த மனிதனும் இருபது ஆண்டுகளும் ஒரு வேலியும்!’ என்று தலைப்பு வைக்கலாம்" என்று எஸ். பொ. கூறினர். அவர் பல்லாண்டுகளுக்கு முன்னர் எழுதிய கதை அவர் கூறிய புதிய மகுடத்துடன் முதன்முத லாக இங்கு பிரசுரமாகின்றது.
சா. சந்திரசேகரம் இக்கதையின் கதாநாயகன்.)
ட்டாலும், எழுத்தாற்றல் மிக்கவர் கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர் எஸ். பொ.
மாபெரும் தமிழ் விழா ஒன்றை தியது; இப்படி அடுக்கிக்கொண்டே இவரது நூல்கள். "காப்பியச் சொற் .剑 இவர் தொகுத்த நூல்கள். ரது நாடகம், - ஆசிரியர்.

Page 20
18
G ..
fச்சேரில் 'விழுந்த சந்திரசேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக் கின் ருர், தாழ்தேவியிலே பகற் பயணம், அகோர வெயில், காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சி வ ச ம் புச் சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவ ருக்கு யாரோ உடம்பைப் பி டி த் து விட்டது போன்ற சுகத்தைக்கொடுத்தது.
வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக் கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி முதல் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக் குஞ்சுகளாகவே பீச்சிவிட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களை யெல்லாம் கையெடுத்துக் கும் பி ட் ட து வீண்போகவில்லை. சோட்டை தீர்க்க ஆரும் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்க ளமாக அமைந்தான்.
பயணக் களைப்பைப் பாராட்டாமல், சரஸ் வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிருர்கள்.
சந்திரசேகரத்தைச் சயன நங்கை முற்ருகச் சரித்துவிடவும் இல்லை. இ மை களை ப் பி ள ந் து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடை கண் களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமை களின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என் கிற வாக்கில் மீண்டும் மூ டி க்கொள்ளும். இமைகள் இ லே சாகத் தோன் று கி ன் ற ன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பி யிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதி ேைலதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அநுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கு அப்பால் "கேற்" தெரிகிறது. அதிலே கறல் மண் டிக்கிடக்கிறது.
கேற்றிலே நிலைகுத்திய விழிகளைப் பிய்த்தெ டுத்து, இடப்பக்கமாக மேய விடுகிருர். மதிலில் பாசிசடைத்து நுதம்பி வழி கின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளருகின்றது. "உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும்!” - ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான்சொல் லார்கள். அந்த எல்லையைப்பற்றியும் அறிக்கை யைப்பற்றியும் க வ லை யி ல் லை. வலப்பக்கமும், கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அங்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத்தொணி யைச் சாதகஞ் சொய்துகொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன . பூரணத்திற்கு வேலியைப்பற்றி என்ன கவலை? சோட்டைக்குத் தானும் அவளுக்கு ஒரு பெட் டைக் குஞ்சு பிறக்க வில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள் .

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலைமோதுகின்றது.
முப்புரம் எரிக்க முனையும் முக்கண்ணனுகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கின்ருர். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகிள் றன.
“உந்த வே லி  ையப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்டவேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன் .ம். பக்கத்திலை பாவங்கள் - ஏழை பாளையள் - வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் எண்டு ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப் பிள்ளையல்லோ கொள்ளப்பாக்கிருளவை . '
‘பொட்டு மேவப்பட்டு, பனையுரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கி யத்தைப் பறைகொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது, தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தம தாக்கிச் சந்திர சேகரம் சாம்பினன்.
அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் த ன தா க் கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடை யோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடை பயில . அந்த நடைபயிலும் நர்த்தனக் கால் களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்கவிட்டு .
விழி மொ ழி க் கொ ஞ் ச ல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற் கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுகமரம் சமத்தான தபாற் காரன்தான். ஆனல் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால், பூரணத்தின் கடி தம் ஒன்று சாம்பசிவத்தாரின் கைகளிலே சிக்கியது. உறவு பிளவுற்றது; வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது!
வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று கொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத் தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல் கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதர வைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப்பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ் தாபிக்கிருன். சித்திரைப் புழுக்கத்திற்காக விருந் தையில் விசிறியுடனிருந்த சாம்பசிவத்தாரின் செவி களிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்துவிடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழு தியை உதிர்த்துக்கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.
“உங்கை என்ன காத்தையைக். . கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட் டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நினையாதையுங்கோ . உதுக்குக் கன்னிக்கால் நடுகிறதிலும் பாக்க நான் பாடையிலை போக ஒமெண்டுவன்.”*

Page 21
அதிலே தொனித்த உறுதி சே க ரத் தி ன் தாய்க்குத் தெரியும், மகனுடைய ஆசையின் பக் கம் தன்னுல் சாயமுடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.
“உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிருன்! இப்ப என்ன நடந்து போச்சு என்டு துள் ளு றிய ஸ்? இவன் வாயுழையப் புசத்துருன் எண்டு கேட்டுக்கொண் டிருந்தால். நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் இடிபடுறன்.” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்ருனைக்கும் வேலை கொத்தாள் தாய்.
தொடர்ந்து புகுந்த மெளனம் நீண்டது.
“டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுருய்? உன் விருப்பப்படி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத் தாவன்! கண்டறியாத பல காரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் ககரியின்ரை வா டி ப் போ ன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகு கிருன்..” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத் தார் டிதிய வேகம் கொடுத்தார்.
அடுக்களையிலிருந்து எ வ் வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலில்லை. அதைப் பெரியவங்களின் ரை பொறுப்பிலை விட்டிடு . . சோதினை பாஸ் பண்ணினுப்போலை போதுமே ?. நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவி விடவேணும் எண்டு நான் ஒடித்திரியிறன். நீ என் னடா எண்டால் குறுக்காலை தெறிக்கப் பாக்கி ருய். இனிமேல், ஒண்டு சொல்லிப்போட்டன் அந்தப் பலகாரக்காரியளின் ரை கதை இந்த வீட் டிலை எடுக்கப்படாது .' எனப் பேசி முடித்தார் சாம்பசிவத்தார்.
பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்ப சிவத்தார் நின்றுவிடவில்லை. ஒடி அலைந்து, பிற் கதவுகளில் நுழைந்து, பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, இழுக்கவேண்டிய கயிறுகளை இழுத்து, மகன் சந்திரசேகரத்தை நல்லதோர் உத்யோகத் திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பிவைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதி 'யாகத் துரங்கினர் என்றுகூடச் சொல்லாம்.
துங்குவதான பாவனையில் பழைய சம்பவங் களை அசைபோட்டுக்கொண்டு கிடக்கிருர் சந்திர சேகரர்.
“சர சக்கா! எப்பிடிப் பாடுகள்? உடம்பு கொஞ் சம் இளைச்சுக் கிடக்குது'' - இது பூரணத்தின் குரல்.
அவளின்ரை குரல் அப்பிடித்தானே கிடக்குது? ஒரு உடைவோ, ஒரு கரகரப்போ?”

19
பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும் பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பரிவு புது மைச் சுவையை ஊட்டுகிறது.
*வாருங்கோ, பூரணமக்கா! புழக்கமில்லாமல் பூட்டிக்கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பர வாக்கிறதுக்கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடு மெணை. உதென்ன சருவச்சட்டீக்கை?”
"இதெனை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டி னனன். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கை பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிருள். ளக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும் . : எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டுபோய்க்குடு தங்கச்சி . . p
சந்திரசேகரத்தார் தாம் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிருர், 'ஐயா நித்திரையெண்டால் எழுப்பக்கூடாது' என்ற ஞாயிற்றுக்கிழமை - பிற் காலத்தில் போயா தின - “மெட்னி த் தூக்கங் களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொது விதி அவரைக் காப்பாற்றுகின்றது.
“பழைய பூரணமே ? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே அந்த மங்குளிப் பெண்ணு இவள்? இப்பொழுது கதை கண்டவிடம் சொர்க்
50.
சந்திரசேகரத்தாரின் ம ன ம் நினைவோடை யைக் கிழித்துச் செல்கின்றது.
உத்தியோகமான புதிதில் கொழும் பி லே போர்டிங் சீவியம். அலாம் மணி - பிளேன் டீ - பேப்பர்-முகச்சவரம்-தந்த சுத்தி - குளிப்பு முதலி யன - பாண் - விறுக்கு நடை - பஸ் - ஒட்டம்கந்தோர் - அலுவல்கள்’ - டீயும் முஸ்பாத்தியும்அலுவல்கள் - சோறு என்ற நினைப் பி ல் கல்லைக் கொறிக்கும் லஞ்ச்’ என்ற வித்தை-வம்பு மடம்அலுவல் - டீ-நடை-பஸ்-மெது நடை-அரட்டைசாப்பாடு-இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்புலைட் அவுட்-தூக்கம்! இராணுவ ஒழுங்கிலே நேரத் தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந் திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை-கடு தாசி விளையாட்டு-வசுக்கோப்புப்படம் என்ற விதி விலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப் பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும்படி பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட் டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு . . நேரத்தின் இராக்கதம் அதனைப்பிடித்து விழுங்கும்.
சாம்பசிவத்தார் அ னு பவ சா லி. மகனைத் தனிக்க விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்ட மான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்த னையோ குழையடி கோசுக்களுக்குப் பிறகு, சரஸ் வதியை அவனுடைய வாக்ழ்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆத ன பாதனங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தாள். அப்பன் கீறிய

Page 22
20
கோட்டைத்தாண்டாத சற்புத்திரனுக’ நற்பெயர் எடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினன். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி தொட்ட சொச்சம் விட்ட சொச்சம் என்று ஐந்து பெண் களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற் றெடுத்துவிட்டாள். அத்துடன் கணவருக்கு 'ஆர்' விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகி மைப்படுத்திவிட்டாள். அவள் தாயில்லாதவள். நல்லதுத்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்ரும் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத் தார் கண்களை மூடினர். ‘பேத்தி பிறந்த ஜாதக பலன்" என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், 'நெய்ப் பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே" என்ற ஒறுவாயையும் சுட்டிக் காட்டியது.
சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆரும் பிள்ளைப்பேறுக்காகப் பழக்க தோஷத்தி லேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவருடைய தாயாருக்கு ஏலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே ‘பெத்தாச்சிக் கிழவி மோசம் போஞள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப் பொழுது வயது நாலு. “ஊமை” என்ற பட்டத்தைச் சுமக்கிருரன். டா க் டர் க ள் அவன் பெரிய ‘பேச்சாளனுக விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறர்கள். அவ னைப்பற்றி வளர்ந்துவரும் விசாரமும் ஒரே யடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற் குக் காரணமாக அமைந்தது.
“மூத்தவன் இந்த கோசுதான் யூனிவே ஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக் கிருங்களாம். எடுபடுவன் எண்டுதானென சொல்லுருன்.’ பூரணம் இன்னும் போக வில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்
டார்கள்.
3V ~1
“என்ன எடுத்தவர்? என்ஜினியரிங்கோ?” சரஸ்வதி மூத்தபெண் திலகம் கேட்கிருள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக்கொள்ளுவாள்.
“இல்லை, புள்ளை. டாக்குத்தர் படிப் புக்குப் போகவேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான் ." பூரணத்தின் குர லிலே எவ்வித பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பெரும்பணத்தின் செருக்குத் துளிகூட இல்லை.
சந்திரசேகரத்தார் மறுபக்கம் .திரும் பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளு கின்றர். மனம் பூரணத்தைப்பற்றியநினை வுகளிலே மொய்த்துச் சுகிக்கின்றது. aunq
"கடையப்பக்காரியள்’ என்று சாம்ப சிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத் தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தி
 
 
 

|်းကြီးစို့။ ಪ್ಲೆ:
as
R
b, Hill
I H

Page 23
髒刪
ଖୁଁ 些 ଖୁଆଡୁଁ
枋 mif 型燃魁期彿 擱 ASA OLLOO
$鹦 鸵残 A
|
隆鞭
ဗျိုး
I S
ÈSAGAI
體臘
፲፭፻፳1 ! 'ዘffi~ዃ}
S.
R arm arms w jAS 呈呜 s 蠶
訓
MASA
垩冒 隔 |蠶 SN22
關量 |蠶
垩皇
雕、奥俊渊雌翌昭
lé|dis H Td
Nij -
4િ
iféal; f
S
I
A N2 &ZAS
I
f
its
m w
|
S2
I
ZS
S2
sts
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

21
“கேட்டியளேய்யா. இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத் தான் நல்ல நாளாம் . .
“கொழும்பிலை இருந்த உமக்குமெண உந்தப் பஞ்சாங்கங்களைப் பாக்க ந ல் லா த் தெரி யு து (3 urta...” ”
"பூரணக்கா தான் சொன்ன . இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப்போறது என்டும் சொன்னவு. . நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிருவு இல்லை . ."
“ஒமெண ... உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெ ண் டு நாளும் ச ரி யா க ப் போகும். s
*"பூரணமக்கா தங்கமான மனுஷி . பொடி யளும் அப்பிடித்தான்.”
‘நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளு றதுக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்.” என்று சிரித்தபடி தேநீரையும் குடித்து முடித்தார்.
**நான் ஒருக்கா வேலியடைக்கிற நாகப்பனைப் பாத்திட்டு வாறன் . .
பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிருள். அவ ரும் பதிலுக்குச் கிரித்தார். 爱
"மனசார இவள் ஒரு மனுஷியுந்தான்; ஒரு வடிவுந்தான். .
நிகப்பனும் சின்னவனும் வேலியடைக்கி முர்கள். கொல்ல வேலி கின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகு தான் காலைச் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.
வெயில் ஏறத்தொடங்கியது. பூரணத்தின் வள வுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாசியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று உதவி செய்கிருர் . " கட்டுக் கோத்துக்" கொடுக்கக்கூட ஒர் ஆண்பிள்ளை இல்லையே.
சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத் தின் இடுப்பிலே குந்தியிருக்கிருன்.
'நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடை யுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்' என்று பூரணம் சொல்லுகின்ருள்.
"இப்படித்தான் அந்த இடையிலே சருவக் குடம் வைச்சு. நெஞ்சத்திலே தைத்துச் சீழ் வைத்துவிட்ட சிரும்பை சந்திரசேகரத்தார் மெது வாக இழுக்கின் ருர்,
இருபது வருடங்களுக்குப் பின்னர் "பொட்டு" ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.
2.

Page 24
என்ன கருத்தில -நீ6
ரெரெடுத்தார், இமய இறங்கினர் இளஞ்சிங் வேர்வையிலே குளித் புரிகின்ருர்; விளைவே சோறுடைய நாடென் பிறர் வியந்து பேசக் பேரெடுத்தார்! விவச பெரும் பட்டம் பெறு
ஆர்தடுத்தார் உங்கை விவசாயி ஆகி, நீரும் பேரெடுத்தால் என்ன இரவெல்லாம் விழித் சீர்தளைக்குள் அடிதெ ரசம் புதைத்துச் செ கார்தருவார் அரைச் கண்புதைத்தாய் அன்
கற்பனையில் ஒருதலைய அனுபவித்த கதையை அற்புதமாய் எழுதுகி பன்னுடை அணிந்து
விற்பனமும் தமிழ்க்க விவசாயம் செய்க எ உட்கருத்தை உட்புை புதைக்கின்ரு ய் உயிே
எப்பொழுதும் என்ர8 என் உடம்பின் மறை ஒப்பற்ற கவர்ச்சிகளை ஒருபோதும் தடையில் இப்படியாய்க் கலையுல "இலக்கியக் கட்டுரை கொப்பளிக்கும் உண கோபித்தோ கண்புை
ஆபத்தில் குமரிகளைக் ஆர்வந்து பொருதாg பாவங்கள் நினையாம படுத்தவளின் இதயத் ஆவலொடுந் தூக்கிெ ஆசையொடும் முகம்! தாப மிகும் வசனங்க தலையாய நடிகரவர்
கோழியைப் போல் குளிக்குமுடை நெறுே ஆழியலைக் குள்விழுந் ஆனந்த நடனங்கள்

கண் புதைக்கிறம்?
லாவணன்
一举一
பத்தோள் ஏந்தி வயல்
கங்கள்: ' துநிதம் விவசாயம்
ஈழம் ாறும் சொர்க்க மென்றும் கேட்டார்! Fாய மன்னரெனப் றுகின்ருர்கள்! ள? போய் அவர்போல
ா அத்தான்? பேய்போல திருந்து ாடைக்குள் சிருங்கார ய்த பாட்டுக் சுண்டு அரிசி? யென்றே rபே பேசு!
irrü 65 qr l d öz silib
நல்ல நீர்! ஆர் உமக்கோர் பார்த்தார்? வியும் விழல்! விடுக! ன்ற
தத்தோ ஊடிக் கண் ர ஒது!
t
கேர்க் கின்பமதை நல்க விடங்கள் எதையெனினும் சரியே
உணர்ச்சியுடன் காட்ட லை! உண்மையிது கண்டீர்! கக் கற்பரசி எழுதும் *களினைப் படித்தெனது நெஞ்சில் *ச்சிகளை குறித்து மிக நாணிக்
தத்தாய்? குலமகளே கூறு!
காத்திடுவார்! வீரர் லும் அவரேவென் றிடுவார்! iல் பருவப்பெண் மார்பில் த்தைக் காதுவைத்துக்கேட் பார் யடுத் தணைத்திடுவார் இறுக! புதைப்பார்! அதரங் கள் புருகித் ள் பேசுகையில் - ரசிகர். மயமாகி நிற்போம்!
துரத்தித் தன் நாயகியை பிடிப்பார்! நெறுக்க குளத்திலிருந் தெடுப்பார்! தும் அளைந்து புரண் டுருள்வார்! ஆடி மகிழ்ந் திடுவார்!

Page 25
வாழிய! நம் தமிழ்ச்சினிமா வாழ்த்தியவர் படத்திற்குக் தோளிருத்திக் கொண்டாடு! தோற்றுக் கண் புதைத்தனை
ஆண்டிற் கொருமுறை அல்
வகில மெல்லாம் தோன்றித் தொடர்ந்து நட தொன்மை மிகு நீண்ட யுகம்யுக மாகநின் க நினைப் பெரியுள். ஈண்டு கணமும் எரியும் என இனியவளே! முன்னைப் பழந்தொடர் மோ மூண்ட ஒளி. உன்னை இனங்கண்டு காதலி யும் அதுவே! Υ பின் தொடர்ந் தேன்; எனை கனி விழிகள் - என்ன கருத்தில் புதைத்தலை என்னுயிரே...! கைத்தலம் பற்றிப் பிறர் கr காந்தருவ தத்துவத் தின்படி தான் ம6 தடுப்பதெமை? சித்திரமே, சிறையே, உனை சிரங்குனிய வைத்தவர் யாரடி? வாய்திற புதைப்பதற்கே!.
கள்ளுண் "பிளா"வினைக் கென் கரும்பிதழை அள்ளித் தளும்பும் அமுதை அகன்று உலகை வெல்ல எழுஞ்சிக ரங்களில். விதைத்த கணை கிள்ளித் திருகிப் பிடுங்கிய
மாயங்களோ ..!
என்ன தியாகம் புரிந்தேனும் லாம் இழந்தும், உன்னைப் பிரியா துயிர்வாழ உயர்ந்த தவம் பண்ணிக் கிடக் கின்ற பைய பாவமுண்டோ? கண்ணைப் புதைத் துன்றன் கென் கருத்தே!.
ஈழத்தின் மற்ருெரு முன்னணி கியத் துறையில் இடைவெளியின்றி கொண்டுள்ளார். ஈழத்து இதழ்களிலு வெளிவந்துள்ளன. இவர் இயற்றிய நாடகங்களாகும் கல்முனை எழுத்தா நோக்கு உள்ளவர்.
 

23
நடிகரென நாங்கள் கற்பூரம் கொளுத்தித் b தூயரசனைக்குத் .. யோ? துவஞம் பூங் கொடியே!
0 அன்பேஇவ்
ந்தும் தொலையாத
ாதல்
ாப்பார்
*ப்பத்தி னல் உள்ளில்
த் தேன்; இனி
ப் பித்தாக்கும் பிச்சுக்
ா யோ! அடி
ாணு வாறு, முன்
ணந் தோம்; யார்
தாணிச்
)6u fTül ağsamdur
ாவிய தென்ன.
உறிஞ்சி.
. காமன்
காயங்கள்.
என்னை எல்
- நாளும்
லைப் பார்ப்பதில்
கால்எழு துங்கவிக்
க் கவிஞர் "நீலாவணன்". இருபது வருடமாக இலக் ஈடுபட்டுவந்துள்ளார். கவியரங்குகள் பலவற்றில் கலந்து 1ம், தமிழக இதழ்களிலும் இவரது கவிதைகள் நிறைய மழைக்கை", "சிலம்பு’ என்பன பிரசித்திபெற்ற கவிதை ார் சங்கத்தை உருவாக்கியவர். ஆழமான இ லக் கி ய
-ஆசிரியர்.

Page 26
24
* சிண்ணன் நகராட்சி மன்றத்தில் எழுதுவினைஞன். அக்கா அவ்வூர் அரசி னர் கல்லூரியில் ஆசிரியை. அத்தான் பொலிஸ்இன் ஸ்பெக்டர். அப்பா கிரா மக் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் மனே ஜர். குடும்பமே மாதக் கடைசியில் பத் துச்சத முத்திரையில் கையொப்பமிட்டு வந்தது. இத்தனை வசதியான வாழ்க்கை யோடு சங்கமித்த அவள் வீட்டைப்பற்றி அறியவேண்டிய அவசியமில்லைதான்.
ஆனலும் நான் அந்த வீட்டையும் தெருவையும் அக்கிராமத்தையும் நெஞ் சில் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தம் என் னுள் அலையாகப் புரளத்தான் செய்தது நான் யாழ்ப்பாணப் பகுதியை விட்டு முன்னுரறு மைல்களுக்கு அப்பாலுள்ள மட்டக்களப்பில் எழுது வினை ஞணுகப் பணிபுரிந்ததுதான் அதற்குக் காரணம் ஒருத்தன் எழுத்தாளனுகவேண்டுமானல் ஒரு நூறு புத்தகமாவது படிக்கவேண்டு மாம் ஆணுல் இந்த ஒரு சந்தர்ப்பமே என்னை ஒரு நூறு கதை எழுத வைத்துவிட்டதே.
". . . . . . பெண்ணுக்கு வயது பதினறு. நீ கறுப்பு என்ருலும் அவள் சிகப்பாக இருக்கிருள். படங் கூடத் தந்துள்ளார்கள். சீதனம் பணம் நகையுடன் ஐம்பதினுயிரம் ரூபாயாம். y
அப்பா சொல்லத் தங்கச்சி எழுதிய கடிதத்தை வாசிக்க வாசிக்க என்னை அறியாமலே உள்ளம் குளிர்ந்து கொண்டிருந்தது. இந்த உலகில் யார் தான் திருமணத்தை வெறுப்பார்கள்? அதுவும் அழகான பெண் ஆடம்பரமான வீடு, பத்தாயிரம் ரூபாய் பணம்; எழுதுவினைஞனுக்கு இவ்வளவுதான் என்று தேச வழமைச் சட்டத்தில் கூறியதுபோல், எனக்கும் என் அப்பா பெண் பார்த்து அளவளாவி வீட்டுக்கு வரும்படி கடிதமும் எழுதிவிட்டார்.
இலங்கை அரச சேவையில் எட்டு மணித்தி யாலமும் கடமை புரியும் ஒரு இடம் இருக்குமானுல் அது நிச்சயமாக அந்த அலுவலகத்தின் கணக்குப் பகுதியாகத்தான் இருக்கும். நானும் பாடசாலை
சிறுகதை, நாடகம், கவி துள்ள இனம் எழுத்தாளர் "நல்லை இவர் நாடகம் ஒன்று பாராட்டு தின் மூலம் பல நாடகங்களை மே
 
 

நல்ல அமிழ்தன்.
வாழ்வில் எவ்வளவுக்கு கணக்கை வெறுத்து ஒதுக் கினேனே அவ்வளவுக்கு இந்த அலுவலகத்தில் கணக்கைக் கட்டி அணைக்க வேண்டியிருந்தது. பத் தொன்பதாம் திகதி சம்பளத்தை அனுப்பவேண் டும். மிகுதி பத்து நாளும் கந்தோர் கடிதங்களுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் றெக்கோட் ரூமில் தவம் புரிவதிலும், காலங் கழிந்துவிடும். இரண்டுநாள் விடுமுறை, என்பதுகூட முடியாத காரியம்தான்.
தேனி கொட்டும் என்று பார்த்துக்கொண்டிருந் தால் தேன் குடிக்கமுடியுமா? இரண்டு போயாவும் மாலை நாலரை மணிக்குப்பின் சிலநாளும் எனக்குக் கைகொடுத்ததால் ஆறு நாட்கள் எப்படியோ விடு முறை கிடைத்துவிட்டது.
அப்பா , அண்ணன், அக்கா, அத்தான், எல் லோரும் அரச உத்தியோகம். கல்வீட்டில் ராஜ வாழ்க்கை ஏழ்மையின் நிலலுக்கே இடமில்லை. ஆனல் என் குடும்பத்தில் அப்பா ட்றைவர், அம்மா இல்லை, அண்ணு இல்லை, அக்கா இல்லை, நாங்கள் வாழ்ந்தது ஏழ்மையின் நிலையில் நகர்ப் புறத்தில்.
பச்சைச் சாணத்தால் மயிலிறகாய் திண்ணை மெழுகப்பட்டு இருந்தது. நான்கு இரவல் கதிரை களைத் தூசி துடைத்துப்போட்டு, சுவருக்குப்பதில் ஒலையாலான செத்தையில் பழைய கலண்டர்மட்டை களைத் தொங்கவைத்து நாலு பக்கமும் பம்பர மாய்ச் சுழன்றுகொண்டிருந்தாள் என் தங்கை.
தை ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நற்பெயர் சம்பாதித் அமிழ்தன்', 'ஈழநாடு" நடாத்திய இலக்கியப் போட்டியில் ப் பரிசு பெற்றுள்ளது. நல்லூர் சங்கிலியன் நாடகமன்றத் டையேற்றிப் பாராட்டுப்பெற்றவர் இவர்.
-ஆசிரியர்.

Page 27
சம்பிரதாய முறைப்படி பெண் வீட்டார் மாப் பிள்ளை பார்க்க வரப்போகிறர்கள். இதற்குத்தான் இத்தனை எடுபிடி வேலைப்பாடுகள்,
நல்லூர் கந்தசாமி கோவில் மாலை பூசைநேர மணியும் ஒலியைக் கிளப்ப எமது வீட்டு வாசலில் ஒரு குலுக்கலுடன் கார் நின்ற சப்தம் திண்ணை யில் இரவல் கதிரையில் அமர்ந்து இருந்த எனக் டுக் கேட்டது. நானும் ஏதோ ஒருவித நாணச் சாம்பலில் சோடா ஆயத்தங்களைச் செய்யும்படி தங்கையிடம் கூறிவிட்டு அந்த வாரப் பத்திரிகை யைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இதற்கிடையில் புதிதாகக் கலியாணம் செய்த அயல் வீட்டு மனி தர்கள் மூவர், வந்துவிட்டனர். பெண்வீட்டு அந்த அரச உத் தியோ கஸ்தர் களும் வந்துவிட்டனர். அப்பா மட்டும் சுருட்டொன்றைப் பற்றவைத்துக் கொண்டு முற்றத்தில் அப்பல்லோ சாதனை செய்து விட்டதாக நினைத்து நடந்துகொண்டிருந்தார். வந் தவர்களுக்குச் சோடா பானம் வழங்கப்படுகிறது. புதுக் கலியாணம் முடித்த தியாகராசா பேச்சைத் தொடக்குகிருர்,
** தம்பி அருமையான பிள்ளை, குடி, கிடி, புகை என்று ஒண்டுமேஇல்ல. ஊரிலை ஆரைக் கேட் டாலும் சொல்லுவினம், அவன் ஆள் பெரிய எழுத் தாளனும்கூட. அங்க பாருங்கோ சுவரில தொங் குது நாடகப் படங்கள். '
'இந்த அயலில பாருங்கோ தம்பி நடந்தால் தம்பி நடக்கிற புல்லுக்கூடச் சாகாது. பிள்ளை எங்களோட நிமிர்ந்துகூடக் கதைக்கிற இல்ல. லீவில் வந்தால் வீட்ட இருக்கிற சத்தம் கூட இல்ல. அவளவுக்குத் தங்கமான புள்ளை. இப்படி ஒரு ஆளை மாப்பிள்ளையாக எடுக்க நீங்கள் குடுத்து வைக்க வேணும்,' இது பக்கத்துக் கதிரை பரம்சோதி யின் அறிமுக உரை.
** பொடியன்ட தாய் செத்ததுக்குப் புறகு தேப்பன் உங்கனை குடிச்சுக்கொண்டுதான் திரிகிருா. ஆனல் பொடியன் உதுக்கெல்லாம் மாறு. அவனுக் குக் குடிக்கிற ஆக்களையே புடியாது. இப்படியான மாப்பிள்ளை உங்கட ஊரில கூடக் கிடைக்கமாட் டான்.' இது அடுத்த கதிரை ராஜரெத்தினத் தின் அறிமுகம் .
வந்தவர்கள் அவர்கள் சொம்லுமுன்னமே என் னைப்பற்றிய நற்சாட்சிப் பத்திரங்களை வேறு இடங் களில் பெற்றுவிட்டார்கள். இதை அவர்களது சிரிப்பிலிருந்து அறிந்துகொண்டேன். இதற்கிடை யி எனது தங்கைகளின் கணவன் மார் மூவரும் 'சீதன விஷயம் ஒன்றும் சொல்லவில்லையே. ” என்று மெதுவாக இழுத்தார்கள். அதற்கிடையில் அப்பா குறுக்கிட்டார்.
“உவனை நான் ஏன் வீட்ட விட்டுப்போகச் சம்மதிக்கிறேன் என்ருல் அவன் இங்கின வந்து சகோதரிமாரிட்ட எப்படி நெடுக சாப்புடுறது எனக்கும் ஆசைக்கு ஒரு த் தன் தா ன் உவன். அவன்ட பொடிச்சிட்ட வாங்கித் தின்டிட்டு பேசா மல் கண்ணை மூடிடலாம் பாருங்க."

25
சாடையான பனங்கள்ளின் தாக்கம் அப்பாவை உக்கிரமாகப் பேச வைத்து விட்டது. வந்தவர்களும் அப்பாவைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அப்பா அவர்கள் வீட்ட போய்ப் பெண்பார்த்துச் சாப்பிட்டபோது இவரது குண விசேஷங்கள் அவர் களுக்குத் தெரிந்திருக்கத்தானே வேண்டும். சிறிது நேரம் ஒரே அமைதி. அவளின் மூத்த அண்ணன் நகராட்சி மன்ற எழுதுவினைஞன் பேச்சைத் தொடக் கினர். பெண்ணின் தகப்பனும் மகனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
'தம்பி தயவு செய்து நான் கேக்கிறன் என்று குறைநினைக்க வேண்டாம். இந்தக் கலியாணத்தில உனக்கு விருப்பம்தானே? வேற எதாவது இருக் கென்ருல் சொல்லும்’ அவரும் வாழ்க்கையில் ஏதோ அனுபவப்பட்டிருந்தபடியால் போலும் எனக்குப் புரியாமல் புரியும்படி சொல்லிவிட்டார். நானும் பதிலுக்குத் தலையை இல்லை என்று ஆட்டி விட்டு, வழக்கமான சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர் சொல்வதையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்
'தங்கச்சிக்குப் பதினறு வயது, பெயர் புஸ்ப ராணி. எட்டாம் வகுப்புத்தான் படிச்சது சீத னம் காசு பத்தாயிரம், அது தங்கச்சியின்ர பேரில தான் வேங்கில போடுவம். இருபத்தையாயிரம் பெறுமதியான காணி இரண்டு பரப்பு மூண்டு பரப்பு வெறும் பனங்காணி. ஐந்து ஏக்கர் வயல், இதுதான் தங்கச்சிக்குக் குடுப்பம். இனி உங்கட விருப்பம்." அவர் பேச்சை முடிக்கவில்லை. அதற் குள் என் பக்கத்தில் இருந்த தியாகராசா வாயில் இருந்த சிகரெட்டை எறிந்துவிட்டு "'பொடியன் படிச்சவன் ஆள் திருகுதாளியல்ல அவனுட்டயே காசக் குடுங்க இல்லாட்டி ஒண்டும் சரிவராது.' என்று ஒரு போடு போட்டார்.
"எங்களுக்கென்ன பெட்ட பொடி ய னு க் குக் குடுத்தாலென்ன பொடியன் பெட்டைக்குக் குடுத் தாலென்ன அவ பட்டபாடு.” அவளின் தகப்பன் சொல்லிவிட்டு வெற்றிலையைக் குதப்பலானர்.
எனது ஆறுநாள் விடுமுறையில் நான்கு நாட் கள் ஓடிவிட்டன. ஊராரின் வாயிலெல்லாம் எனது கலியாணப் பேச்சுத்தான். நண்பர்கள் எல்லாம் ஒரே வருகை. வீடு ஒரே குதூகலம். இதற்கிடை யில் நான் ஏதோ எழுத்தாளன் என்ற முறையிலும் எழுதுவினைஞன் என்ற முறையிலும் சிறு சிறு சங் கங்களில் பேசுவதற்கு அழைப்பு. முன்பெல்லாம் எழுத்தாளனுக எழுதுவினைஞனக இல்லாதபோது எச்சங்கமும் என்னைப் பேச்சுக்கு அழைக்கவில்லை. இப்பமட்டும்?- இல்லை என் கலியாணப் பேச்சைக் கேள்விப்பட்டு அதனுல் எனக்குவரும் சீதன உந் தலில் இவ்வளவு வரவேற்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
நானும் பெண்பார்க்க என் நண்பன் ஒருவனின் காரில் சென்றுவிட்டேன். அவள் வீட்டிலே இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. வானெ லிப் பெட்டியின் முழக்கம் ஒரு பக்கம்- பட்டாசு ம பக்கம் வெடிக்க - சோடாவுடன் பிஸ்கட் கேக் பலகாரங்கள், ஒரு பக்கம் வழங்கப்பட ஒவொரு

Page 28
26
வரும் தங்கள் பாட்டுக்கு ஏதோ கதைத்துக்கொண் டிருந்தனர். இனிக் கதைக்கவேண்டியது எதுவு மில்லை. நானும் அவர்கள் வீட்டுவாசல் படியில் இருந்த பெண்ணின் பெரிய படத்தைப் பார்த்து ஒருவித திருப்தியடைந்துகொண்டேன்,
"எங்க? மாப்பிளைக்குப் பொம்புளையை ஒரு க் காக் காட்டுங்கோவன் அக்கா. பிள்ளையைக் கொண் டாருங்கோவன் பாப்பம்." என்னுடன் வந்த பக் கத்து வீட்டுத் தியாகராசாவின் வாயில் வார்த் தைகள் கட்டுப்பட்டு வெளி வந் தன அவளின் அக்கா, சேலை உடுத்தி அவளை நான் பார்க்கக் கூடியதாக அழைத்துவந்தாள். அவளும் சர்வ சாதாரணமாய் என்னைப் பார்த்துவிட்டு திரும்பி விட்டாள். நானும் பதிலுக்குப் பார்த்தேன். பேச வேண்டியது அனைத்தும் பேசப்பட்டு அடுத்தநாள் பதிவுத் திருமணம் என்றும் நிச்சயிக்கப்பட்டு விட் டது. நாங்கள் அனைவரும் காரில் திரும்பிவிட் டோம். என்வீடும் பெற்ருெமெக்ஸ் ஒளியில் நில வாகிக் கொண்டிருந்தது. அயலவர்களும், நண்பர் களும், வீட்டில் போதிய கதிரை இல்லாததால் முற்றத்தில் பரப்பியிருந்த வெள்ளை மணலில் படுத் திருந்து ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். இரவும் போர்வையைச் சுருக்க நானும் போர்வை யில் நுழைந்துகொண்டேன். விடிந்தால் திருமணம்! "நான்தான் கலியாணம் முடிச்சி கல்வீடு கட்ட முடியவில்லை. பொடியஞ்வுதல் கலியாணம் முடிச்சு உழைச்சு கல்வீட்டைக் கட்டட்டும்' அப்பாவின் குரல் படுக்கையில் கிடந்த என் காதுகளில் விழுந் திது.
பொழுது புலர்ந்துவிட்டது. அவளின் அண்ண னும் வேறு இன்னுமொரு பெருத்த ஆசாமியும் பாரிய காரொன்றில் வந்து படலையில் காரை நிறுத்தி. கோர்ணை அடிக்கிருஜர்கள். நானும் செல் கிறேன். பெருத்த ஆசாமி பேச்சைத் தொடக்கு கிருர்.
'தம்பி எப்ப வேலையில சேர்ந்த நீ... ?” 'ஐம்பத்தியேழாம் ஆண்டு...!” "அப்போ, இப்ப கிளாஸ் ரூவே?" "சேச்சே! கிளாஸ் திரீதான்!”*
ஏன் ???
* சிங்களம் பாஸ் பண்ணயில்ல."
** சிங்களச் சோ தினை கூடப் பாஸ் பண்ண யில்லையே?’’
வந்தவர்களின் முகத்தில் அவநம்பி க் கை பிரதிபலிக்கிறது. எனக்கு மூக்குநுனி துடிக்கிறது.
வந்தவர்கள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பிவிட்டார்கள் திருமணப்பதிவு நிறுத்தப் பட்டுவிட்டது. 多
ஆக, அந்தக் கொழுத்த சீதனம், எனக்கா கவோ, என்னுடைய குணத்துக்காகவோ அல்ல. என்னுடைய உத்தியோகத்துக்காகத்தான். நான்

ஈழத்தின் பண்டைய வரலாறு சொல்லும்
மகா வம்சம்
முதன் முறையாகத் திருத்தமான தமிழில் விரிவான விளக்கவுரைகளுடன்
6 á
வாசகர்களுக்கெனவே எழுதப்படுகின்றது. * கைலாய மாலே ஆ யாழ்ப்பாண வைபவமாலை * மட்டக்களப்பு மான்மியம்
ஆகிய தமிழர் வரலாற்று நூல்களுடன் ஒப்புநோக்கிய புத்தம் புது விடயங்கள்! வரலாறு கற்கும் மானுக்கருக்கும் ஆசிரியருக்கும் இலக்கியச் சுவைஞருக்கும்
அரிய விருத்து. கட்டுரைகளைத் தவறவிடாதிருக்க இன்றே சந்தாதாரர்களாகச் சேர்ந்துவிடுங்கள்,
கறுப்பென்ருலும் அவர்கள் என்னை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிருர்கள் என்று அப்பா எழுதியபோது அவருக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.
பெண்ணை வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட் டார் சொல்வதும், அதனுல் பெண்வீடு, சோக வீடாக மாறுவதும்தான் வழக்கம்.
ஆனல் இங்கே, மாப்பிள்ளை வேண்டாம் என்று பெண் வீட்டார் சொல்ல, அதனுல் மாப்பிள்ளை வீடு சோகவிடாக மாறிவிட்டது இது ஒரு புரட்சி தானே? அல்லது சமுதாய வளர்ச்சியோ?
எதுவானுல் என்ன? கிளாக் உத்தியோகம் ஒரு வரப்பிரசாதம் என்று எண்ணியிருந்த என் கற் பனைக் கோட்டையில் ஒரு பெரிய இடி விழுந்து விட்டது.
அதைப்பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்த போது 'தேர், தீர்த்தம் நடந்தால், பூங்காவன மும் நடக்கத்தானே வேண்டும்!' என்று என் அப்பா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு எழுகிருர். ஆனல் தேர், தீர்த்தம் நடக்கும் சில கோயில் களில், பூங்காவனம் நடக்காமலிருப்பது அப்பா வுக்கும் தெரிந்துதானே இருக்கவேண்டும்.
枣

Page 29
"G660 J6)Tib"
உத்தியோ கம்புருடர்க் கிலட்சண மாகுமென்
றுயர்ந்துளோ ருரைத்த மாற்றம் புத்தியாம் முயற்சிநற் புருடருக் கழகெனும்
போதனை யரசராட்சி உத்தியோ கம்மென வுவந்ததை போற்றதன்
ஊதிப முண்டுவாழ்ந்தும் நித்திய மன்றது நீங்குநா ஞண்டெனு நினைவை நான் மறந்திலேனே
சேவையே யன்றியோர் செய்தொழி லின்றிநாள்
சென்றது வாழ்வு மலரத் தேவைகண் மலிந்தன வூதிபம் வளர்ந்திலை
சிந்தையை யுறுத்திநின்ற யாவையுந் தாங்கியே தலைநின்ற பணியினைத்
தவறிலா தியற்றிமுற்றிச் சேவை நா ளெல்லையி லோய்வுநா ரூதிபம்
சேருமே யென்றிருந்தேன்
அந்தநாள் வந்ததும் ஆற்றிய சேவையு
மமைவரு வாயுமோய்ந்த சொந்தமாய்ச் சீவனந் தொடரவோர் வகையிலை
தொடர்ந்துள செலவினங்கள் சந்ததம் மிஞ்சின தருவதற் கெருவமே
தைரியங் கொள்ளவில்லை வந்த நீர் மடைமறுத் துள்ளதோர் வயலினை
மானுமென் வாழ்க்கைமாதோ,
ஒய்வுநாட் படிபெற வுரியவென் விவரண
வோலை முன் னனுப்பிவைத்தும் போய்த் திரு வாலயம் புகுந்தது தரிசனம்
புரிந்திடா தமைந்ததாலோ வாய்ந்தவர் கடைக்கணும் வழங்கிட விழைந்திலா
வகையது வானதாலோ தோய்ந்தவென் தலைவிதி தொடரவே பலமதி
துயரமே படியதாச்சே,
ஆற்றெணுத் துயருட னங்காரியாலயம்
அண்மினேன் குறையிரக் கப்
போற்றிய முன்னவர் புறக் கணித் தென் கதை
புதிதுபோற் கண் விரித்து
நாடறிந்த கவிஞர் ஆ. மு இவரது "நபிமொழி நாற்பது" கான பரிசைப் பெற்றுள்ளது. இ திருத்தி அச்சிட்டு வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ளார். அத்துடன் நூலையும் இவர் இயற்றியுள்ளார்.
 

-அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்.
நேற்றையே யென்னிடம் வந்தது செய்கிறேன்
நில்லாது போங்களென்ருர்
மாற்றியும் பன்முறை படியேறி மீண்டனன்
பலன்பூச்சி யந்தானந்தோ
சுயவிவர மிங்கில்லை மொழிபெயர்ப் பாரில்லை.
தொடர்சேவைப் பதிவுமில்லை தயவுட னெழுதுவோர் விடுதலை நாலுநாள்
தாமதம் பிறந்தபதிவெம் வய மிலை புதிதுடன் வருகவென் ருெவ்வொரு வார்த்தைசொலி யனுப்பிவைத்தார் நியதியிது நெஞ்சமே நிமலன் நினைத்தபடி
நீகலங் காதேயென்றேன்
விடுதிப் பணங்கேட்டு வீட்டுக்கு வந்த மகன்
வீட்டிலே தங்கிநின்றன் வடுவிலா துடைக்காக வயதான வென்மகள்
பள்ளிசெல மறுத்துவிட்டாள் தடுமாறு மில்லாளு மென்செய்வா ளில்லாளத்
தருவாரு மில்லையையோ படுபாடு தெரியாமற் பல திங்கள் சென்றபின்
வருமஞ்ச லொன்று கண்டேன்
உங்களின் விவரண வோய்வுநாட் படிமட
லுறுதிணைக் களஞ்சென்றது அங்குளா ருடன் தொடர் பாகுங்க ளென்பதே
யஞ்சலிற் கண்டசேதி பொங்குந் துயர்க்கடல் போக்குமோ வதுவங்கு
போகவுங் கதியில்லையே திங்கள் பல சென்றேனுந் தீருநாட் தீருமெனத்
திடங்கொண்டிருந்து விட்டேன்
'திணைக்களஞ் சென்றதா? வேலை செய வேணுமே
திரும்பிவர' வென்று சொன்னர் துணைத்தலை வர் பதம் வருடவா? வையகோ!
தொன்று நா னறிந்திருந்தால் அணுத்துணை விரும்பிலே னரசாங்க வூழியம்
அந்நிய காலந்தன்னை இணக்கமாய்க் கழித்திடவியலுமென்றெண்ணினேன்
இத்தனை துயரமாச்சே
அரசினர்க் கூழிய மாங்கால முற்றினு
மாற்றின நினைத்தபோது அரசாங்க வூழிய ரளிக்கும் பரிசிதா
வையகோ பரிதாபமே அரசாங்க வூழிய மாற்றிடும் போதிலே
யந்திநாள் நமக்குமுண்டென் றரசாங்க வூழிய ரறிந்துதா னிருப்பரென்
றமைதி கொள் வாய்நெஞ்சமே.
. சரிபுத்தீன் ஒரு ஓய்வுபெற்ற வட்டாரக் கல்வி அதிகாரி. என்ற வெண்பா நூல் சாகித்திய மண்டலத்தின் கவிதைக் வரது பாட்டனுரின் “ஞானரை வென்ருன்' என்னும் நூலைத் ார். சீருப் புராணத்தில் பதுறுப்படலுத்துக்கு உரை எழுதி "சீருப்புராண சாரம்’ ‘நபிமொழி நானுற்பது' என்னும் நிறையக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். -ஆசிரியர்.

Page 30
நான் வணங்குட தெய்வ
"ஆரையூர் இளவல்"
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராசா, ஒரே யொரு ரரசாவுக்கு ஒரே யொரு ராணி - ?
பாடிக்கொண்டிருந்த ரேடியோ பட்டென்று நின்றுவிடுகின்றது. ராணியுடன் உலாத் தொடங் கிய ராசா வாசற்படி தாண்டுமுன்பே வழுக்கி விழுந்துவிட்டார்போலும். நிலைய ஒலிபரப்பாளரின் "இயந்திரக்கோளாறு காரணமாக எமது ஒலிபரப் புத் தடைப்பட்டமைக்காக வருந்துகிருேம்’ மைக் கேட்கும் வரையில் எனக்குப் பொறுமை இருந் தால்தானே அடுத்த விஞடியே ரேடியோவைப் பூட்டும் டக் ஒலி எழுகின்றது. அதைத்தொடர்ந்து “டங்’ என இசை கூட்டுகின்றது மணிக்கூடு. அப் போது நேர்ம் ஆறரை மணி.
வீட்டின் முன் கூடத்தில் அந்தக்காலத்துப் பென்னம் பெரியறங்கும், இந்தக்காலத்துச் 'சைஞ’ உறை அணிந்த தலையணையும் தயாராக இருக்கின் றன. ஏழு மணிக்கு கார்த்திகேயன் கார் கொண்டு வருவார். ஏழரை மணிக்கு புகையிரத நிலையம். ரிக்கற் எடுக்கப் பத்து நிமிடம். பெட்டிக்குள் இடம் தேடிப்பிடிக்கப் பத்துநிமிடம். வழி அனுப்பவரும் தோழிகளுடன் அரட்டை அடிக்கப் பத்துநிமிடம்.
மட்டுநகர் இளங்கதிர் நாடகமன்றத்தின் ஸ்தாபகர நாடகங்களை எழுதி மேடையேற்றியிருக்கிருர். இவர் எழுதித் என்ற நாடகம் மட்டக்களப்பு பிரதேச கலாமன்றம் நடத்தி சைப் பெற்றது. இவர் சிறந்த பேச்சாளரும் ஆவார்.

அப்புறம் . அப்புறம் என்ன எட்டு மணிக்கு சொந்த மண்ணையும் பழகிய மனிதர்களை யும் விட்டுத் தற்காலிகமாகப் பிரிந்து செல் லப்போகிறேன்.
இன்னும் பத்தே பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. அதற்குள் கார் வந்துவிடும். O வாசலில் நின்றுகொண்டு “பூம், பூம்’ சத் தம் போடும். தான் புள்ளிமாளைப்போல் துள்ளிக்கொண்டு காரண்டை ஓடுவேன். வேலைக்காரி வேலம்மா பெட்டி படுக்கை களைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்தொ டருவாள். அண்ணுவும், அண்ணியும் அவ சர அவசரமாக வீட்டைப் பூட்டிக்கொண்டு வேகமாக வருவார்கள், காருக்குள் என் அருமைத் தோழி அபிராமி, என் அத்தா னின் அருமைத் தங்கை அழகோவியமாக உட்கார்ந்திருப்பாள். க த வைத் திறந்து வைத்துக்கொண்டு, என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள். என் வரவைக் கண்டதும், "ஹலோ! மாலா! என்று அன்பொழுத அழைப்பாள். நான் அவள் அருகில் பெரு மையோடு உட்கார்ந்துகொள்வேன்.
என்னைப் பின்தொடர்ந்துவந்த வேலைக்காரியும், அண்ணுவும், அண்ணியும், காரில் ஏறிக்கொள்வார் கள். அவர்களுடன் என் பெட்டி படுக்கைகளும்
ஏறிக்கொள்ளும். அடுத்த நிமிடம் கார் புறப்படும்.
அவர் . . அவர்தான் கார்த்திகேயன் மகா குறும்புக்காரர். என்னை அடிக்கடி பார்த்துக்கொண் டே காரைச் செலுத்துவார். நான் அந்தக் கண் ணுடியையே பார்த்துக்கொண்டிருப்பேன். அப் போதுதானே அவர் கண்கள் செய்யும் குறும்பு வித்தைகளை என்னுல் பார்க்கமுடியம். அவரும் அடிக் கடி அந்தக்காரின் முன்புறமுள்ள கண்ணுடியைப் பார்த்துக்கொள்வார். என்னதான் இருந்தாலும், இந்த ஆண் பிள்ளைகளே மகா பொல்லாதவர்கள். இவர் எத்தனைபேர் இருந்தாலும் கள்ளத்தனமாக என் கண்களைச் சந்தித்து விடுவாரே.
ான ‘ஆரையூர் இளவல்’ நிறைய தயாரித்த "சிங்களத்துச்சிங்காரி' நாடகப்போட்டியில் முதற்பரி
-ஆசிரியர்.

Page 31
கார் சென்று கொண்டே இருக்கும். அவர் அதை மிகவும் நிதானமாகவும், மெதுவாகவும் செ லுத்திக்கொண்டே இருப்பார். "வேகமாகப் போக லாமே இந்த வேளையில் தெருவிலே ஜனநடமாட் டம் அதிகமாய் இருக்காதே’ நான் முணுமுணுத் துக் கொள்வது அவருக்கு எங்கே கேட்கப்போகி றது. அவர் மெதுவாகத்தான் செலுத்துவார் ஏன் தெரியுமா? மெதுவாகச் சென்ருல்தானே என்னை அதிகநேரம் பார்க்கமுடியும், கார் சென்றுகொண் டேயிருக்கும். அவர் என்னைப்பார்த்துக்கொண்டே இருப்பார். எனக்கு நாணம் வந்துவிடும் திடீ ரென்று தலையைக்குனிந்து கொண்டு முகத்தைக் கைகளால் பொத்திக்கொள்வேன். தோழி என்னைப் பார்த்து விடுவாளா? பார்க்கட்டுமே. "இது ஒரு பைத்தியம்’ என்று சொல்லிக்கொள்வாள். சொல் லட்டுமே எனக்கென்ன வந்கதாம்.
அவர், . .அவர்தான் கார்த்திகேயன் என் ஆசை அத்தான் மிகவும் நல்லவர். தங்கமானவர் “தங்க மான பிள்ளை” என்று அண்ணு எப்போது பார்த் தாலும் அவரைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்.
மூன்று வருடங்களுக்கு முன் ஒரு நாள் வீட் டிற்கு அண்ணுவைப் பார்க்க வந்திருந்தார். அண் ணுவுடன் அரசியலைப்பற்றி ஆங்கிலத்தில் முழங்கிக் கொண்டிருந்தார். அடேயப்பா! வெள்ளைக்காரனைப் போல் என்ன அழகாக ஆங்கிலம் பேசுகிருர். அப்போது அவர் ஒரு சட்டக்கல்லூரி மாணவராம். சும்மாவா ஒரு உயிரின் தலைவிதியை நிர்ணயிக்கும் தொழிலாச்சே. அண்ணுவுக்கும் அவருக்கும் நெடு நாளையச் சிநேகிதமாம். ஆணுல், அன்று தா ன் முதற்தடவையாக வீட்டிற்கு வந்திருந்தார்.
அன்று அண்ணி பிறந்தகம் போயிருந்தாள்
ஆதலால் நான்தான் இருவருக்குமாக காப்பி எடுத் துச்சென்றேன். ஆனல் அந்தப் பிடிவாதக்காரர் “வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். எனக்கு “திக்” என்றிருந்தது. அண்ணுவுக்கோ பெரிய ஆச் சரியமாகப் போய்விட்டது. பிறகுதான் அவர் காரணத்தை விளக்கினர். தான் காப்பி தேனீர் எதுவுமே சாப்பிடுவதில்லையாம். அதனல் “ஒரு கிளாஸ் பச்சைத் தண்ணீர் தந்தால் போதும்” என்ருர்.
அதைக்கேட்டஎனக்கு ஆச்சரியமாய்இருந்தது. இந்தப் பச்சைத் தண்ணீர் "மனிதர்தான சற்று நேரத்திற்குமுன் அத்தனை காரசாரமாக விவாதித் துக்கொண்டிருந்தார். அன்று என்கைப்பட ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணீரைக் கொடுத்து அவரை அனுப்பிவைத்தோம்.
அன்று போனவர் சென்ற ஜுலைமாதந்தான் திரும்பவும் வீட்டிற்கு வந்தார். 'அன்று அண்ணு தான் அவரை அழைத்து வந்திருந்தார். அப்போது அவர் ஒரு பிரபல வழக்கறிஞராக விளங்கினர். இந்தச் சின்ன வயதிலேயே அவர் இப்படிப் பெரும் புகழடைந்திருப்பதுபற்றி அண்ணு மிகவும் பெரு மைப்பட்டுக் கொண்டிருந்தார்.

29
அன்று அண்ணி வீட்டில் இருந்தார். அண்ணி எடுத்து வந்த காப்பியை நான வலிந்து சென்று வாங் கி க் கொண் டு அவரிடம் வந்தேன். அவர் “வேண்டாம்' எனத் தலையசைத்திார். நான் திடீ ரென்று'ஒரு கிளாஸ் பச்சைத் தண்ணிர்வேண்டுமா? என்று கேட்டேன். அவர் சிரித்து விட்டு 'மகா குறும்புக் காரியாயிருக்கிறீர்களே! இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டார். நான் ‘சர்வகலாசாலைப் புகுமுகப்பரீட்சை எழுதி விட்டு இருக்கிறேன்' என்றேன். "அ ப் படி யா? சந்தோஷம். கண், டிப்பாக பரீட்சையில் சித்தி யடைந்து சர்வகலாசாலைக்குள் புகுந்து, வெளி யேறும் பொழுது மிஸ், மாலா பி. ஏ. என்றபட்டத் தையும் தட்டிக்கொண்டு வருவீர்கள்' என்ருர், * "மிக்க நன்றி!' என்றேன். "எதற்காக?? என்ருர், "என்னை வாழ்த்தியதற்காக' என்றேன். அவர் கனிவுடன் என்னைப் பார்த்தார். என்முகம் நாணத் தால் சிவக்க நான் ஓடிவந்து விட்டேன்.
திரும்பவும் நான் அவரிடம் சென்றபோது ஒரு கிளாஸ் பச்சைத்தண்ணிர் இருந்தது, என் கரங் களில், அவர் அதைப்பருகிக்கொண்டே 'அமிர்த மாக இருக்கின்றது' என்ருர். "தண்ணீர்தானே! நிறம், மணம், சுவை எதுவுமே அற்றதல்லவா? அப்படி இருக்கும் பொழுது, எப்படித்தங்களுக்கு அமிர்தமாக இருக்கும்" எனக்கேட்டேன். அவர் சொன்னர் 'தண்ணீருக்கு நிறமுமில்லை, மணமும் இல்லை, சுவையுமில்லை, உண்மைதான். ஆனல், நிறம், மணம், சுவை எதுவுமே இல்லாத இந்நன் னிர் இல்லாது போனல், உங்களாலும், என்னுலும் உயிர்வாழமுடியுமா? இல்லை; அதுபோல்தான் ...", அவர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனல் வார்த்தைகள் வெளிவரவில்லை. அவர் சொல்ல நினைத்ததை என்னுள்ளம் புரிந்து கொண்டுவிட் டது. என் உடம் பெல் லா ம் ஒருவித இன்பக் கிளுகிளுப்பு, இதுவரை எ ன் று மே அனுபவித் திராத ஏதோ ஒரு . அதை எப்படிச் சொல்வ தென்றே தெரியவில்லை. என்னை வெட்கம் துரத்தி விட நான் வீட்டுக்குள் ஓடி ஒளித்துக்கொண்டேன். சில நிமிடங்களின் பின் நான் வெளியே வந்த பொழுது கூடம் வெறிச்சிட்டுக் கிடந்தது அன்று மாலை அபிராமி வந்தாள். அவள் கையில் ஒரு கடிதஉறை. கண்களில் குறும்பு. அது என் அத்தா னின் முதற்கடிதம்.
அன்பே 1 . . .
இன்று இரவு ரயிலில் கொழும்பு செல்கின்றேன். அங்கு முக்கியமான சில கடமைகள் இருக்கின்றன. அடுத்தநாள் அவ்விடமிருந்து யாழ்ப் பாணம் செல்கிறேன். அங்கு மூன்று தினங்களுக் குக் கோர்ட்டில் வேலை இருக்கிறது. பின்பு அவ் விடமிருந்து விமானமார்க்கமாக டெல்லி செல் கின்றேன். திரும்பிவரக் குறைந்தது ஆறு மாத மாகலாம். அங்கிருந்து திரும்பும்பொழுது உனக் காக ஏதாவது அன்புப்பரிசு கொண்டுவர விரும்பு கின்றேன். எங்கே எதுவேண்டும் சொல் பார்க்க Gorrub.

Page 32
30
அன்பே உன் வேண்டுதலை வெள்ளி நிலாவிடம் இரகசியமாகச் சொல்லியனுப்பு. அது என்னிடம் வந்து உன் உள்ளக் கோரிக் கையை ஒளிக்காமல் அப்படியே சொல்லும், நீ நல்ல பெண். என்னேக் கோபிக்கமாட்டா பல்லவா? நான் உன் நினைவாகவே இருக்கின் றேன்.
உன்
கார்த்திகேயன்.
அதைப் படித்ததும் என் வாய் என்னை யறியாமலே முணுமுணுத்தது. ‘அத்தான்! வரும்பொழுது உங்கள் புனிதமான இந்த அன்பைமட்டும் எனக்கு பரிசாகக் கொண்டு வாருங்கள். வேறு எந்தப் பரிசுமே எனக்கு வேண்டாம். சீக்கிரமாகப் - பத்திரமாக என் னிடம் ஓடி வந்துவிடுங்கள், அத்தான்!"
அன்றிலிருந்து அவர் நினைவாகவே இருக் கின்றேன். வினடிக்கு வினுடி நிமிடத்துக்கு நிமிடம் மணித்தியாலத்திற்கு மணித்தியா லம் அவரைப்பற்றிய கோடானுகோடி இன்ப நினைவுகளுடன் வீட்டையும் தோட்டத்தை யும் வலம்வருகிறேன். கையில் அகப்படும் புத்தகங்களிலெல்லாம் மிசிஸ் மாலா கார்த்தி கேயன் என்று எழுதி எழுதி அழகு பார்க்கின் றேன். என்உயிர் இப்போது என்னிடம் இல்லை.
அது அவருடனேயே அவர் செல்லும் இடங்
களுக்கெல்லாம் சென்றுகொண்டிருக்கிறது. நான் தனியளாகிவிட்டேன். அவரை எதிர் பார்த்து, எதிர்பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் துரும்பாக இளைத்துக்கொண்டிருக்கிறேன்.
அவர் இந்தியா சென்றபின் இரண்டு கடி
தங்கள் என் பெயருக்கு எழுதியிருந்தார். அவ்
-(r
 
 


Page 33
ரும் என்னைப்போலத்தான் இருக்கிருராம். அங்கு அவருக்கு எதுவுமே பிடிக்கவில்லையாம். எப்போது என்னிடம் ஓடிவந்துவிடலாம் எனத் துடி த் து க் கொண்டிருக்கிருராம். அங்கு வழக்குகளில் அவருக் குக்கிடைக்கும் வெற்றிகளெல்லாம் என்னுடைய வெற்றிகள்-தாணும். ஏனெனில் அவர் போகும் பொழுது தன் உயிரையும் என்னிடம் விட்டுச் சென்றுவிட்டாராம். என் உயிர் அவரிடம்! அவர் உயிர் என்னிடம்! இது என்ன விந்தை!
சென்ற வாரம்தான் அவருக்கு ஒரு கடிதம் போட்டிருந்தேன். ஒரு நல்ல சேதி. அவர் வாக் குப் பலித்துவிட்டது. நான் பரீட்சையில் தேறி விட்டேன். சர்வகலாசாலையிலிருந்து அழைப்பு வந் திருக்கின்றது. இந்த வாரமே வந்துவிடவேண்டு மாம். நான் வெறும் மிஸ். மாலாவாக இருப்பது அத்தானுக்குப் பிடிக்கவில்லை. மிஸ். மாலா பி. ஏ. ஆக வேண்டும். இன்னும் சில வருடங்களில் அந் தப்பட்டத்தையும் சம்பாதித்து விடுவேன். அப் புறம் என்ன அவருடன் நிாந்தரமாக . . எனக்கு வெட்கமாக இருக்கிறது. கரங்களால் முகத்தைப் பொத்திக் கொள்கின்றேன். கண்களை மறைத்திருக் கும் விரல்களைச் சற்று நீக்கி அந்த இடைவெளி மூலம் அவரின் திருவுருவப்படத்தை இமைக்காமல் பார்த்துக் கொண்டிக்கின்றேன். அந்த அழகிய முகத்தில்தான் எத்தனை காந்தி, அந்தச் சுட்டும் விழிகளில்தான் எத்தனை பிரகாசம்.
இன்று காலை என் தோழி அபிராமி என்னி
டம் ஓடிவந்தாள். இந்தியாவிலிருந்து தந்தி வந்த தாம். அவர் இன்று பிற்பகலே வீட்டிற்கு வந்து விடுவாராம் மாலை றெயினில் நான் சர்வகலா சாலை செல்லத் தயாராக இருக்கவேண்டுமாம் அந்தத் தந்தியைப் படித்ததும் எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. அந்த இன்பக்கிறுக்கில் எனக்கு எதுவுமே ஒடவில்லை. சேதி கொண்டுவந்த தோழி என்னுடன் கோபித்துக்கொண்டு போய்விட்டாள்.
என்னைச் சர்வ கலாசாலைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்பதில் எவ்வளவு அக்கரை அவருக்கு. இதற்கென்றே இந்தியாவிலிருந்து பறந்துவருகிருரே!
டாங். ஐயோ! மணி ஏழரையாகிவிட்டதே. இன்னும் அவரைக் காணவில்லையே. எனக்கு இருப் புக்கொள்ளவில்லை. அண்ணுவிடம் ஒடுகின்றேன். 'அண்ணு! இ ன் னு ம் அவரைக் காணவில்லைய. போய்ப் பா ர் த் து வா ரு ங் க ளே ன அண்ணு!" ' கொஞ்சம் பொறுத் திருஅம்மா! இன்னும் சொற்ப நேரத்தில் வந்துவிடுவார் இங்கிருந்து ஏழே முக் காலுக்குப் புறப்பட்டால் போதுந்தானே!’’ அந்த வார்த்தைகள் எனக்கு சமாதானத்தைக் கொடுக்க வில்லை. நான் திரும்பவும் திரும்பவும் கட்டாயப் படுத்துகிறேன். என் தொந்தரவு பொறுக்கமுடியா மல் அண்ணு அவரைப் பார்த்துவரக் கிளம்புகிருர்,
நேரம் நகர நகர மணிக்கூட்டின் ‘டிக், டிக்' ஒலியைப்போல் என் இதயமும் அடித்துக்கொள் கின்றது. மணி ஒன்பதாகியும் அண்ணு திரும்ப

31
வில்லை. தீயை மிதித்தவள்போல் பதறுகிறேன் நான். மேலும், மேலும் என்னுல் காத்திருக்கமுடிய வில்லை. வேலைக்காரி வே லம் மா வை க் கூட்டிக் கொண்டு அவர் வீட்டைத்தேடி ஒடுகின்றேன்.
என்னைக் கண்டதும் அவரின் அம்மா ஒடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு கதறுகிருள். ** என்னம்மா! என்ன நடந்தது?" என்று கேட்கின் றேன். ஒருவரும் பதில் கூறவில்லை. அங்கிருந்த எல்லோரும் அழுகிருர்கள். அவர் தங்கை, என் அண்ணு அனைவரும் விம்மி விம்மி அழுகிருர்கள். நான் ஒடிச்சென்று அண்ணுவின் கையில் இருந்த தந்தியைப் பறித்துப் படிக்கின்றேன். "ஐயோ! அத்தான். . ’ ஆயிரம் சம்மட்டிகளால் என் தலையை யாரோ நொறுக்குகிருர்கள். வானமும் பூமியும் வெடித்துச் சிதறுகின்றன. நான் பம்பர மாய்ச் சுழலுகின்றேன். என் கண்களில் ஒளி மங் கிக்கொண்டு வருகின்றது. நான்தடாரென்று தரை யில் வீழ்கின்றேன்.
அந்தப் பெரிய பங்களாவில் ஒரு சின்னஞ் சிறிய அறைக்குள் நான் முடங்கிக்கிடக்கின்றேன். என் கூந்தல் இன்னும் முடிக்காமல் அவிழ்ந்து கிடக்கின்றது. அது பூவிழந்துவிட்டது, நெற்றி பொட்டிழந்துவிட்டது. கழுத்தும் கைகளும் நகை யிழந்துவிட்டன. உடல் பட்டிழந்துவிட்டது. வயிறு பசியிழந்து விட்டது. கண்கள் தூக்கமிழந்து விட் டன. நான் அழவில்லை என் விழிகள் அழுதழுது ஒய்ந்துவிட்டன. க ண் ணி ர் கட்டுப்பட்டு விட் டது. வெளியில் காலடியோசை கேட்கின்றது. அறைக்குள் அண்ணு வருகிறர். ஆதரவோடு என் கூந்தலை வருடிவிடுகின்ருர்.
“ஏனம்மா இந்த விதவைக் கோலம்? எழுந் திரம்மா! எழுந்து ஏதாவது சாப்பிடு. எங்களுக்கு மட்டும் துக்கமில்லையா? இறந்தவரை நினைந்து வருந்தி என்னம்மா செய்வது? இறந்தவர் திரும் பவும் வந்துவிடப்போகிருரா? நீவாழவேண்டியவள் நாளை சர்வகலாசாலைக்குப் போகவேண்டும். எழுந் திரம்மா! என்னம்மா இது! கணவனைப்பறிகொடுத் தவளைப்போல் இப்படி விதவைக்கோலம் பூண்டி ருக்கிருயே. அவர் என்ன உன் கணவரா? இல்லையே. நீ அவரை நேசித்தாய் அதுதான் உனக்குக் கொடுத்து வைக்கவில்லையே. அவரை மறந்துவிடு வதுதான் புத்திசாலித்தனம் எழுந்திரம்மா!
நான் அசையவில்லை. அண்ணு போய்விடுகின் ருர். அவர்! அந்த உத்தமர் என் கணவரில்லை யாம். நான் அவரை மறந்து விட வேண்டுமாம். மறந்துவிட்டு மங்களவாழ்வு வாழவேண்டுமாம். பைத்தியக்காரர். தாலி கட்டிவிட்டால் மட்டுந் தான் கணவரா? w
அத்தான்! நான் உங்களை மனப்பூர்வமாக நேசித்தேன். நீங்களே என் கணவரெனத் தீர் மானமும் செய்துகொண்டேன். அல்லும், பகலும், அனவரதமும் உங்கள் நினைவாகவே உங்கள் நல் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். இது தப்பா அத்தான்! என் மீது தவறில்லையே அத்தான்!

Page 34
32
J5j5jSLI ö6.LIT6OT மு. ஹ. சேஹ" இஸ்ஸதீன். -----
மினம்தன்னைக் குவித்துஒரு மாதவத்தைச் செய்6 மலைத்து நின்றேன், மதியாது எதை நினைத்தோ எனப்பார்த்து மன மறுத்தாய் நீயும். சினவாது உன்னிதயக் கதவுகளின் தாழ்ப்பாள் திறக்கும் ஒர்நாள், சீராக நம்காதல் செய்திகளைச் சொல்லிடுவோம் என்றி ருந்தேன். கனவாகப் பொழுதெல்லாம் கால்களுக்கு மரப்பு தந்து போக, காத்திருந்த அக்காலம் வந்தது நான் என்னுள் கசிந்து போனேன்.
உனது இள நல்லதரம் உதிர்த்துவிடும் மெய்க்க உவமை கேட்க, உதிரத்தை ஓடாது நிறுத்திவிட்டும் உன்னுெலி6 காத்தி ருந்தேன்.
எனக்கென்ன பைத்தியமா?? என்றதனைக் கேட்ட என்ன சொல்வேன், என்பட்டை உறைந்திற்று என்வயிறும் எரிந்தி இருந்தும் சொன்னேன் :
உன்மத்தம் கடவுளுக்கும் உண்டென்ருர் இவர் உள்ள அன்பை, உனக்கெந்தன் காதலுமஷ் வுண்மையினை விளக் நன்று ! நன்று!"
வடுவெடுத்த மேலதர மேனியளே!"வாய்க்கு ரு வசையில் இல்லை. வாழ்வதொரு நாழிகைதான் அதற்குள்என் கா, அறியா விட்டால், மடுவெடுத்து உள்ளாக என அடைப்பர் அங்கு மலட்டுக் காதை மண்ணில் வைத்து உற்றுக்கேள் அதுபாடும் அ காதல் கீதம். எடுப்பொன்றைப் பெரிதாக எண்ணியென இவ் இகழ்ந்தாய் நீயும், என் நெஞ்சில் வாழ்ந்திடுமுன் 'இளநினைவு? எ. இறந்து போகா.

வான் போல்
மிரங்க
婚 கள்
ளாய்க்
ாதல்
யைக்
ற்று
பேரில்
கிற்ரு
சி
தலை நீ
வந்துன்
ழியாஎன்
வுலகில்
ன்றைக்கும்
அத்தான்! நீங்கள் என்னுடை Lu on rii. நீங்கள் என்னுடையவர் அத்தான்! நீங்கள் என்றென்றும் என்னுடையவர்.
அத்தான்! நாம் மாருத அன்பி ஞல் கட்டுண்டுவிட்டோம் அதைப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்த ஆண்டவனுக்கு, உடனே விமான ரூபமெடுத்துவந்து உங்களை எரித்து விட்டாரே அத்தான்! உங் களை எரித்து விட்டாரே!
அத்தான் ! இந் தி யா வில் இரு ந்து திரும்பி வந்தபொழுது எனக்கு என்ன கொண்டுவந்தீர்கள் அத்தான் ! உங்கள் சொற்படி நான் வெள்ளிநிலாவை உங்களிடம் தூது விட்டிருந்தேனே. அது உங்களிடம வந்து என்ன அத்தான் சொன்னது?
அத்தான்! எனக்கு இந்த உல கமே பிடிக்கவில்லை.இங்கிருப்பவர்க ளெல்லாம் சுத்த மோசக்காரர்கள். என்னைச் சீக்கிரம் உ ங் க ளி ட ம் அ ழை த் துக் கொள்ளுங்கள் அத்
5 Tairl
நான் மெதுவாக எழுந்துசெல் கின்றேன். மணம் வீசும் மல்லிகை மலர்களைப்பறித்து அழகான மாலை தொடுக்கின்றேன். அதை என் ஆசை அ த் தா னி ன் திருவுருவப் படத்திற்குச் சூடி வணங்குகிறேன். ஆம்! அவர்தான் என் க ன வ ர். அவர்தான் என் கண்கண்ட தெய் வம்! அவர்தான் என் சகலமும்! அவர் என்னைப்பார்த்துச் சிரிக்கின் ருரர். அன்பு கனி ந் த ஆனந்தப் புன்னகையுதிர்க்கிறர் இது ஒன்றே போதும் எனக்கு. எஞ்சிய நாட் களை அவர் நினைவுடனே கடத்து வதற்கு.
வள்ளுவர் வழியில்.
அறன் வலியுறுத்தல்.
மனிதர்க்குச் சிறப்பும் செல்வ மும் ஆக்கமும் தரவல்லது அறம். அது தன் மனதறிய தூய்மை யின் வழிநின்று வாழும்போது எய்தப்பெறுவது. ஏனைய வீண் ஆரவாரமே யாம்.
-நாக. பத்.

Page 35
கிழவன் ஓடிக்கொண்டிருக்கி
9k
திருகோணமலை- என்ன ஈன்றெடுத்த தாய கம். எங்கேயோ இருந்த வெள்ளையர்களைக் கூட தன் இயற்கை எழிலால், ஈர்த்தெடுத்து இலங் கைத் திருநாட்டிற்கு வரச்செய்த எனது தாய். வந்தவரை வரவழைத்து வாழவைக்கும் எனது அன்னை, நேற்று இரவுவரை அழகோடுதான் இருந் தாள். ஊ. ஊ. ஊ. என்ற பேயிரைச் சலோடு அந்தப் பாழாய்ப்போன சூருவளி நேற்று இரவு வரும் வரை - தன் அருமை குன்ரு மல்தான் இருந்தாள். இன்று ஐயோ, எப்படிச் சொல்வேன். எல்லா அழகும் இழந்து நிற்கிருளே. எங்கோ போய்க் கொண்டிருந்த அந்தச் சூருவளி இங்கு வந்து சங்கம மாகிவிட்டதே. கோபுரத்தை இழந்த கோயில் களும், கூரைகளை, இழந்த மனைகளும், நிழல் தரும் மரங்களை இழந்த வீதிகளும், உடைமைகளை இழந்த என் போன்ற மனிதப் பிறவிகளும் அப்பப்பா, காணவே என் கண்கள் கூசுகின்றனவே. என் தாய்த் திருநாட்டிற்கு இந்நிலை ஏன் தான் வந்ததோ?
மற்றைய நகரங்களோடு தொடர்பு இல்லை. செய்திப் பத்திரிகைகள் இல்லை. வீதிகளிலே , வீடு களிலே மின்சார விளக்கொளியில்லை. குழுவளியால் தூக்கிச் செல்லப்பட்ட உடைமைகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை இப்படி எங்கு பார்த்தாலும் இல்லை, இல்லை என்ற ஒரே ஒரு வார்த்தை வெகு உக்கிர மாக ஆட்சி செய்து கொண்டிருந்தது.
நாள் விடிந்தும் முகங்கள் விடியாத மனிதக் கூட்டம் பறந்து சென்ற தமது உடைகளைத் தேடிய வண்ணம் நகர் எங்கும் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
வழிநெடுக, அவலக் காட்சிகளைக் கண்டும், கேட்டும் வந்து கொண்டிருந்தேன். துரத்திலே பொலீஸ் ஜீப்பொன்று கண்ணுக்குத் தெரிந்தது. அதன் மேலே பொருத்தப்பட்டிருந்த ஒலிபரப்பி ஒன்று இரைந்து கொண்டிருந்தது.
'பொலிஸ் அறிவிப்பு - பொலீஸ் அறிவிப்புஊரடங்குச் சட்டம், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிவரை அமுலில் லிருக்கும். நிகரத்தின் எல்லா இடங்களிலும் மிகத் தீவீரமான முறையில் திருட் டுக்கள் நடப்பதால் பொதுமக்களின் உடமைகள் பாதுகாப்புக் கருதி இந்த ஊரடங்குச் சட்டம் அமு லுக்கு வந்துள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் எவ

33
150it JiffTip60)fuIJsh.
ராவது வீதிகளிலோ அல்லது வேறு பொது இடங் களிலோ நின்ருல் கைது செய்யப்படுவார்கள். இச் சட்டத்தைப் பலாத்காரமான முறையில் மீறுபவர் கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் கூடச் செய்யப் படலாம். நோ யா விரி க ளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதிச்சீட்டு வேண்டுவோர் - பொலீஸ் அதிபருக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தகுதி யானவையெனக் கண்டால் அனுமதிக்சிட்டு வழங் கப்படும். பொது மக்களே திருடர்களிடம் ஜாக் கிரதையாக இருங்கள். பொலீஸ் என்ருல் இயல் • பாகவே பயம் கொண்ட மனிதர் சிலர் ஜீப்பின் வழியை மறைத்திருந்த குப்பைகளை அ ப் புற ப் படுத்தினர். மெதுவாக ஊர்ந்துகொண்டு செய்தியை ஒலிபரப்பிக்கொண்டிருந்த அந்த ஜீப் வண்டி அடுத்த சந்தியில் திரும்பி என் பார்வையை விட்டு விறைந்தது.
கொலை, கொள்ளை . ஏன்தான் இந்த மனித நெஞ்சங்கள் இம்மாதிரியான துர்ப்பாக்கிய நிலை யை பயன்படுத்தப் பார்க்கின்றனவே தெரியவில்லை.
என் வீட்டைப்பற்றிய சிந்தனை சிறிதாக எழு கிறது. அடிநெஞ்சத்திலிருந்து உஷ்ணப் பெருமூச் சொன்று வெளிப்படுகின்றது.
வீட்டிற்குப் போகவேண்டும். அங்கு மங்கை
என்ன நிலையில் இருக்கிருளோ.
இந்தச் சமயத்தில்தான அவள் பூரண கர்ப் பிணியாயிருக்கவேண்டும்.
எங்கள் மனைகள் இருக்கும் பகுதிக்குள் வந்து விட்டேன். மனைகள் எங்கே அங்கு? வெறும் சீமெண் டுத் தரைகள்தான் இருந்தன. வீடு எது, வீதி எது என்று ஒன்றுமே தெரியாத நிலையில் எல்லாம் தரைமட்டமாக இருந்தது. வழி நெடுக பறந்து வந்தத கரங்களும், பிய்த்தெறியப்பட்ட மரங்களின் கிளைகளும் இறைந்து கா ண ப் பட் டு பூமியை மறைத்துக் கொண்டிருந்தன. மனையாளின் பொலி வான நிறைமாத உருவத்தை மனதிலே உருவகப் படுத்தி, எல்லாம் இழந்த இந் நிலையிலும் எனக்கு என் மங்கை இருக்கிருள் என்ற பூரிப்பை ஏற்படுத்

Page 36
34
திக்கொள்ள முயன்றேன். மங்கை. மங்கை. என் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அவள் பெயரை அழைத்துக்கொண்டே வளவிற்குள் காலடி வைத் தவன் திடுக்கிட்டு நின்றேன்.
"ஐயா, நான் எடுக்கேல்லை. என்னை ஒண்டும் செய்யாதீங்க, நான் பிள்ளை குட்டிகாரன்ய்யா, ஐயா."
எங்கள் தெருக்கோடியில் குடியிருக்கும் LDCu5 தப்புக் கிழவரின் ஒலமல்லவா அது. .
என்ன அங்கே ஒரே கூட்டமாயிருக்கு . . சந்தியில்.
வளவிற்குள் வேகத்துடன் முன்னேறிய என் கால்கள் அதே வேகத்துடன் பின்னேறின.
சந்தியில் - சனக்கூட்டம் ஒரு பொலீஸ் ஜீப் பைச் சுற்றி வளைத்துக்கொண்டு வேடிக்கை பார்த் துக்கொண்டு நின்றது. முண்டிக்கொண்டு நின்ற வர்களை கைகளால் தள்ளிக்கொண்டே என்னவோ ஏதோ என்ற உணர்வு உந்தித் தள்ள ஜீப்பருகே ஆவலுடன் சென்றடைந்தேன். அழுக்கினுல் தன் சொந்த நிறத்தை இழந்து பழுப்பு நிறத்தைச் சொந்தமாக்கிக்கொண்டிருந்த மருதப்புக் கிழவ ரின் வேட்டியிலே கைவைத்து இழுத்தபடி இருந் தார் இன்ஸ்பெக்டர். இருந்தார் என்று சொல் வதிலும் பார்க்க இருந்தான் என்று சொல்வது தான் பொருத்தம் போலிருந்தது அவனுக்கு.
இந்த இன்ஸ்பெக்டருக்கு முகமே சரியில்லையே, என்னத்திற்காக மருதப்புக் கிழவரை இப்படிச் சித்தரவதை செய்துகொண்டிருக்கிருன். ** டேய், உன்னை சும்மா கேட்டால் சொல்ல மாட்டாய். ஏறுடா ஜீப்பில."
“ஐயா, நான் பிள்ளைகுட்டிக்காரனய்யா. இந்த மாதிரி களவிற்கெல்லாம் போகமாட்டேனய்யா. என்னை விட்டுறுங்கய்யா."
*"டேய், ஏறுடா என்டுறன்.” ஜீப்பிலிருந்த படியே கிழவரின் வேட்டியைப் பிடித்து இழுக்கி முன் துண்டு அவன் கையோடு வந்துவிட்டது. மானத்தைக் காத்துக்கொண்டிருந்த ஒரே ஒரு துண்டல்லவா. மருதப்புக் கிழவன் துண்டை இன்ஸ் பெக்டரின் கையிலிருந்து பறித்து அவசரமாகக் கட்டிக்கெள் கிருன் சுற்றி நின்றவர்கள் அதையும் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்கிருர்கள். திடீரென நிலத்தில் வீழ்ந்து அழுகிருன் மரு தப்புக் கிழவன்.
"ஐயோ இதைக் கேட்க யாருமே இல்லையா. ஆரோ எடுத்த அந்தச் சங்கிலிக்கு என்னைப் போட் டுக் கொல்லுருங்களே. ' கிழவன் புலம்பிக்கொண் டிருந்தான்.
சா . . நேற்றடித்த புயலில் உடைமைகளை இழந்த கிழவன் இ ன் ற டி க் கிற புயலில் மா ன த் தை இழந்து கதறிக்கொண்டிருக் கிருனே, அதுவும் முச்சந்தியில். அப்படி என்

** மலர்' வாசகர்களை மகிழ்வூட்ட விரைவில் ஆரம்பமாகிறது
“கன்னத்தில் நீ அறைந்தால்'
(முத்தமிழ் ஓவியம்).
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று அம்சங்களும் நிறைந்த முக்கனிச் சுவைதரும் அரிய கற்பனைச் சித்திரத் தொடர்
ஈழத்தின் பிரபல கவிஞர்
"திமிலைத்துமிலன்”
எழுதுகிருர்
னதான் செய்துவிட்டான் என்று இவன் குதித் துக் கொண்டிருக்கிருன். கேட்டுவிடு வோம்
நியாயத்தைக் கேட்க எனக்கென்ன பயம்.
"சேர், எக்ஸ்கியூஸ் மீ, இவர் என்ன தவறு செய்தார் என்று சொல்ல முடியுமா? இவரை எனக்கு கன காலமாகத்தெரியும். ஒரு பிழையாள வழிக்கும் போகிறவரல்ல.' வார்த்தைகளை மரி யாதை கலந்து எண்ணி எண்ணி வெளியிட்டேன்
இன்ஸ்பெக்டரின் கையிலிருந்த பொலீஸ் பிரம் பால் ஒரு அடி என் கன்னத்தில் வீழ்ந்தது பல ருக்கு மத்தியில் என் வேட்டியை யாரோ உரிந்து விட்ட நிலை எனக்கு. என்ருலும் அடக்கிக்கொண் டேன். ஆனல் இந்த வாய். என் வாயை என்னுல் அடக்கவே முடியவில்லை.
'நீர் மக்களுக்கு சேவகஞ் செய்யவேண்டிய வர். ஆனல் சேதம் விளைவித்துக்கொண்டிருக்கிறீர் அப்படியே இந்தக் கிழவர், ஏதும் தவறு செய் திருந்தாலும் அவரை அடிப்பதற்கோ அல்லது அரையில் கட்டியிருகும் துண்டை அவிழ்ப்பதற்கோ உமக்கு உரிமையில்லை, திருடர்கள்தான் இம்மா

Page 37
திரிச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன் படுத் தப்பார்க்கிருர் கள் என்ருல் - நீரும் அவர்களுக்குச் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்கப் பார்க்கிறீரே."
எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஆத்திரமாகப் பேசித் தீர்த்தேன். ஆங்கில மொழிக்குத்தான் என்ன கவர்ச்சியோ. ஜீப் ஸ்ராட் செய்யப்பட்டது. மருதப்புக்கிழவர் மரியாதையாக ஏற்றப்பட்டார். ஜீப்பின் உள்ளிருந்த மருதப்புக் கிழவரின் முகத்தில் நன்றியுணர்ச்சி இழையோடியது.
"இன்னும் ஒரு கிழமைக்குள் நீ இருக்கிற இடம் தெரியாமல் செய்து விடுகிறேன். கவன மாக இருந்து கொள். பிளடி பூல்" இன்ஸ்பெக் டர் உறுமிஞர், கோபத்தினுல் அவனுடைய கண் கள் சிவந்திருந்தன. இன்ஸ்பெக்டருக்கு நானும் சளைத்திருக்கவில்லை என்பதுபோல Tப்பும் இரு முறைகள் உறுமிக்கொண்டே ஒடத்தொடங்கியது. இவ்வளவு நிகழ்ச்சிகளையும் இன்னும் அந்த மணி தர்கள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு நின் றர்கள். என்ன மணிசர்ளோ . . . என்ன இதயங் களோ . .
அட, எனக்குமட்டும் கோபம் வரக்கூடாதா. இவர் பெரிய கொம்போ, என் ஆத்திரப் பட்ட நெஞ்சத்திற்கு நான் பேசியதெல்லாம் நூற்றுக்கு நூறு சரியென்றே பட்டது. ஆனல்
விளைவு எப்படியோ , என்ன விளைவு . அப் படி என்ன செய்துவிட முடியும் அவனல். இல்லை, இல்லை எதற்கும் நாமும் சிறிது
கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
என் தெரு வாசிகளுக்கு இதுவரை மருதப்புக் கிழவனும், இனஸ்பெக்டருந்தான் வே டி க் கை ப் பொருளாகவிருந்தனர். இப்பொழுது நான் வேடிக் கைப் பொருளாகிக் கொண்டிருந்தேன்.
அதிசயத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டு நின் ருர்களே, நியாயத்திற்கும் அ நி யா ய த் திற்கும் ஒரேமாதிரியான அதிசயப்பார்வை தான இவர்களிடம் இருக்கிறது. இதற்குள் என் மனைவிக்கு இந்த நிகழ்ச்சி எட்டியிருக்கும். நெருப்பெடுக்கப் போகிருள். வாயும் வயிறுமாயிருக்கும் இந்த வேளை யில் ஊர்வம்பை வாரிக்கொண்டு வந்து நிற் கிறீர்களே என்று துன்ப மா க க் கேட்கப் போகிருளே. உண்மைதான். எனக்கேன் இந்த சம்பளமில்லா உத்தியோகம், எத்தனையோ பேர் சுற்றி நின்று வேடிக்கை பார்த் து க் கொண்டு நிற்கிருர்களே, அவர்களைப்போல் நானும் நின்று பார்த்துவிட்டு வந்திருக்கலா
6)
எவ்வளவுதான் என் உள்ளுணர்வு என்னை உறுத்தி வருத்தினலும், நான் குற்றமற்றவன் என்ற நினைப்பு என் நெஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்தது. அந்த நினைப்பு தந்த தெம்பிலே மங்கை ஏசுவாளே என்ற பயத்தையும் மறந்து வீட்டை நோக்கி நடந்தேன்,

35
எதிரே என் வீட்டிலிருந்து - யாது " -
_ பக்கத்து ਨੂੰ சின்னச்சிக் கிழவி யல்லவா வந்துகொண்டிருக்கிருள் மங்கை யிடம் செய்தியைச் சொல்லிவிட்டுப் போகிருள். இவளைவிட அந்நிகழ்க்சியை மிக அலங்கார மாகச்ச் சொல்லுவதற்கு வேறு யாரால் முடியும். ‘எங்கயணை ஆச்சி இங்காலப் பக்கம்?" சும் மா, கேட்டு வைக்கிறேன். "சும்மா, உன்ர isir ளையைப்பாத்திட்டு வாரன் .” நின்றுகூடப் பதில் சொல்லப் பிடிக்காமல் கடகட வென்று போய் விட்டாள் அந்தக் குடுகுடு கிழவி.
என்னுடைய மங்கைதானே . பேசமாட்டாள் என்ற நம்பிக்கை துளிர்விட வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தேன். 'மங்கை அங்க என்னண செய்யிருய்?" போலியாகப் பிறந்நது என் கேள்வி.
* வாங்க நேரமாச்சு, ஏன் இவ்வளவு நேரம்? இந்தாங்கோ கை அலம்புங்கோ . சாப்பிட்டுட்டு பேந்து கதைப்பம்."
‘பேந்து கணிதப்பம்" என்று அவள் சொன்ன தில் எவ்வளவு உட்பொருள் பொதிந்திருக்கிறதோ, வழக்கமாக நன் ரு க ச் சாப்பிடுபவன் சாப்பிட
முடியாமல்தவித் தேன்.
ஏன் சாப்பிடமுடியவில்லை. என் நெஞ்சம் பயப் படுகிறதோ ... 'அந்த இன்ஸ்பெக்டர் சொன் னதைச் செய்துவிடுவான்; என்னுடைய மங்கை கர்ப்பிணியாயிருக்கும் இந்த வேளையில் அவனி டம் போய்க் கொழுவி விட்டேன். தருணம் பார்த்திருந்து தொலைத்துவிடுவான். சீ.சீ. எவ்வளவு வீரமாக எல்லோருக்கும் மத்தியில் வைத்து அவனை வைதுவிட்டு இப்பொழுது பயத்தினல் யோசிக்கிறேன். என்ன செய்து விடுவான் என்று நாமும் ஒரு கை பாத்திடுவன்.
போலியாக எனக்குள்ளேயே சமாதானமிட் டுக்கொள்கிறேன். காகம் கொத்துவதுபோல சாப் பிட்டுவிட்டு கைகளை அலம்பிக்கொண்டேன்.
"அத்தான் நேற்றடிச்ச குழுவளியால எல்லா ரிட வீட்டிலேயும் கஷ்டம். இதில, தங்கட கஷ் டத்தை விட்டுட்டு எங்களுக்கு ஒருவரும் உதவிக்கு வரமாட்டாங்க. பொலீசோடு சண்டை க் கு ப் போற அளவுக்கு எங்களிடம் என்ன இருக்கு . ஆ
அத்தான் என்ன பேசாம இருக்கிறீங்க . நீங்க செய்தது சரிதான். ஆன உங்க டை தியா கத்தை ஆர் மதிக் கப் போருங்க. சின்னச்சிக் கிழவி பேசீற்றுப்போரு . ஒரு போலீசுக்கு நீங்க கைநீட்டிக் கதைச்சுப் போட்டீங்களெண்டு. கிழவி சொல்லுது . உங்கட கோபத்தில தங்களுக்கும் கரச்சல் தரப்போருன் எண்டு எல்லாரும் பயப்பிடு கினமாம் . என்னத்தான் சொல்லுங்கோவன்.”
கணவனையும் குறைத்துப் பேசமாட்டாள். விச யத்தையும் சொல்லாம விடமாட்டாள். என்

Page 38
36
மனைவி என்னைக் கோபிக்கிருளா . . இல்லை. கண்டிக்கிருளா . இல்லை - பின் . அன்பு தான் செலுத்துகிருள். எங்கேயோ பிறந்து வளர்ந்து என்னை மணமுடித்த இந்த ஒரு வருடத்துக்குள்தான் எத்தனை கரிசனை, எத்தனை தவிப்பு . . இவளைக் கரு தி யா வது நான் அவணுேடு சண்டை போடாமல் விட்டிருக் களாம். இருந்தாலும் அவன் செய்தது மட்டும் சரியோ, எவ்வளவு மூர்க்கத்தனமாக அந்தக் கிழவனின் அரையில் இருந்த துண்டைப் பிடித் திழுத்து அந்த வயது போன ஜீவனின் மானத் தைக் குறைத்து விட்டான். நான் மானஸ்தன். இதை யெல்லாம் பார்த் துக் கொண்டிருக்க மாட்டேன். எது எப்படியோ. நான் செய்தது சரி, இதனுல் என்ன விளை வென்ருலும் விளை யட்டும். என்னுள்ளே அப்பப்போ தழைத்துத் துளிர் விட்ட வீர உணர்ச்சிகள் - மனையாளின் முகத்தை நேராக நோக்குங்கால் - அடங்கி ஒடுங்கிப் படுத்து உறங்கின.
சா நான் தனியணுய் இருந்து கொண்டல் லவா, இந்த வீர விளையாட்டுக்கெல்லாம் போயி ருக்க வேண்டும்.
"அது சரி, மங்கை ஏதும் குத் துளைவு இருக்கா? அப்படி ஏதும் இருந்தா நாளைக்கு காலமை பாஸ் ஒண்டு கைகாவலா எடுத்து வைச்சுக்கொள்ளோ இணும். பேந்து ராயிருட்டீல வயிற்றுக்குத்து வந்திற் றெண்டா சரச்சல், என்ன", மங்கையிடம் கேட் டேன் நான். -
“மலர்’ வாசகர்களுக்கு மற்றுமோர் சுவையான தொடர் அம்சம்
‘விருத்தாந்த சித்திரம்'
நகைச்சுவையும், நளினமும் கலந்து, நம்முடன் அன்ருடம் உறவாடும் பாத்திரங்களை அழகாகப் படம்பிடித்துக்காட்டுவது.
எழுதுபவர்: 'அம்மச்சி ஆறுமுகம்’
உங்கள் 'மலர்' பிரதிகளை
இப்பொழுதே f பதிவு செய்துகொள்ளுங்கள்.

'லேசா, குத்து இருக்கிற மா தி ரித் தா ன் இருக்கு. இப்ப கொஞ்சம் நிம்மதியாப் படுங் நாளைக்குப் போய் வாங்க லாம்.' மெதுவாகச் சொன்னுள் மங்கை.
எப்படியோ பதில் சொல்லிவிடுவாள். தன்னைப் பற்றியே இவளுக்கு எண்ணமில்லை. எண்ண மெல்லாம் என்னைப் பற்றித்தான். காலையில் எழுந்த உடன் முதல் வேலையாக பாஸ் வாங்கி வந்திர வேணும். வழக்கம்போல சோம்பலாக விட்டுவிடக் கூடாது.
மங்கை துப்புரவாக்கி வைத்த கட்டிலில் உடல் எறிந்து கொள்கிறேன். மேலே கூரையில்லை நட் சத்திரங்கள் ஒளிப் பற்களைக் காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்துத்தான் சிரிக் கின்றனவோ. சரி, நித்திரை கொள்ளுவம்.
** மங்கை அந்த விளக்கை அணைச்சுப்போட்டு கவனமாப் படம்மா.’
அப்பா, என்ன அலுப்பு . முருகா, ஆ. ஆ. ஆ கொட்டாவி முன்னே வர, கட் செருகல் பின்னே வர இவ்வுலக நினைவை மறந்தேன்.
கலை 7 மணி மங்கை போட்டுத்தந்த முட்டைக் கோப்பியின் தெம்போடு பொலீஸ் ஸ்டேஷன் வாச லில் நிற்கிறேன்.
இங்கு ஏன் இவ்வளவு கூட்டமாயிருக்கு. கூட்ட மில்லாமல் வேறு எப்படி இருக்கும், ஊரடங் குச் சட்டம் தீவிரமாக அமுலில் இருந்துமே கொள்ளைகளுக்கு குறைவில்லையே அதுதான் வழியில் வரும்போது பேசிக்கொண்டார்களே, ஏழு, எட்டுப்பேர் பிடி பட்டிருக்கிருர்கள் என்று. ஆ அதோ பாஸ் வாங்குவதற்காக வும் ஒரு கூட்டம் நிற்கிறது. அந்த இடத்தை நோக்கி நடந்து எல்லோருச் கும் பின்னுக்கு ஒண்டிக் கொள்கிறேன். அறைக்குள் ஒவ்வொருவராக சென்று கொண்டிருந்தனர்.
போயும் போயும் பொலீஸ் ஸ்டேசனுக்கே வரவேண்டியிருக்கு அவன் அந்த இன்ஸ்பெக் டர் நிண்டான் எண்டால் ஏதும் கரச்சலில மாட்டி விட்டுறுவான். எதுக்கும் நாம ஏன் அவன்ர கண்ணில படுவான். ** மற்ருள் இந்தா ஆரப்பா அது. மற் ருள் வா’, கத்தினுன் ஒரு பொலீஸ், என்னையா, அட அதற்குள் எனக்கு முன் நின்ற வர்களெல்லாம் பாஸ் வாங்கிச் சென்று விட் டார்களா. மணியைப் பார்த்துக்கொள்கிறேன். எட்டு ஐம்பது. முதுகுப் பக்கம் சேட் ஈரமாக இருக்கிறதே. பயத்தினுல் வியர்க்கின்றதோ. சா. சா. பெனியன் போடாமல் வந்து விட் டேன் அதுதான் வியர்க்கின்றது. எல்லாவற் றிற்கும் ஒரு நொண்டிச் சாக்கு சொல்லிக் கொள்கிறேனே.

Page 39
அறைக்குள் நுழைந்தேன். ** உன்ர பேரென்ன? என்னத்துக்கு உனக்கு பாஸ் வேணும்? நீ பெரிய சண்டியன் என்ன?’ பற்றன் தடியால் என் வயிற் றில் ஒரு குத்து விழுந்தது. "ஐயோ, அம்மா. என்னையறியாமல் என்னிலிருந்து முனகல் வெளிப் Ull-gil.
'இவனை ஒரு மணித்தியாலத்துக்கு உள்ளுக்கை தள்ளு. இவனுக்கு இண்டைக்கு ஒரு பாடம் படிப் பிக்க வேணும்.’’ எனது உடல் முழுவதும் திடுக் கிட்டது.
**ஒரு காரணமுமில்லாமல் நீர் என்னை உள்ளே தள்ளேலாது, நான் இதைப்பற்றி ஏ. எஸ். பீற் றைச் சொல்லப்போறன் .' சொல்லிக்கொண்டே ஏ. எஸ். பீ. இருந்த அறையை நோக்கினேன்.
பயமில்லாதவன், எ த ற் கு ம் துணிந்தவன் என்றெல்லாம் வெளியே போ லியா க க் காட் டிக்கொண்டாலும் - உள்ளூர எனது மணம் படக் கென்று அடித்துக் கொண்டது. ”
இவன் அவனை வெண்டவனுயிருப்பானே.
ஒடிய ஒட்டத்தில் காலில் அணிந்திருந்த "பம்" குஸ் காலை விட்டு நழுவி என்னை விழுத்தப்பார்த் தது.
அவன்தான் எனக்கு எதிரியாயிருக்கிருன் என் ருல் நான் அணிந்திருக்கும் காலணிகளுமா எனக்கு இந்த நேரத்தில் எதிரியாயிருக்க வேண் டும். இயல்பாகவே பொலீஸ் ஸ்டேஷன் சூழல் என் மனதிற்கு இதமாக இருப்பதில்லை. அது போதாது என்று இன்று நானகவே வலிந்து வந்து துன்பத்தில் மாட்டியிருக்கிறேன் சீ . . நான் இங்கு வந்திருக்கவே கூடாது. பாஸ் இல்லாட்டி என்ன . என் மங்கை குழந்தை பெற்றுவிடவே முடியாதா?
பின்னல் அந்தச் சண்டாளன் துரத்தி வருவது போன்ற பிரமை - கதவை அ வ ச ர மா கத் திறந்து ஏ. எஸ்பீயின் கோபத்தையும் சம் பாதிக்கவேண்டி வந்து விடுமே என்ற பயம் - என்னை கதவை மென்மையாகத் திறந்து உள்ளேபோகச் செய்தது.
* 'வட் புருேட் யூ கியர்?". வேறு யாரிடமோ கேட்கிருர் என்று திரும்பிப் பார்க்கிறேன் நான். அங்கு எவருமில்லை. என்னைத்தான் கேட்டாரா . பொதுவாகக் கிட்டே நெருங்கி என் தேவையை பயத்துடன் விளக்கினேன். நான் அவரிடம் எதிர் பார்த்ததுபோல் எந்தவிதமான கோபக்குறியையும் காணவில்லை.
உண்மையில் அருமையான மனிதர் போல இருக்கிறது. எப்படியாவது எனக்கு பாஸ் எடுத்துத் தந்துவிடுவார்.

37
அறையின் கதவை யாரோ தி ற க் கும் ஒசை கேட்டது.
சினிமாப்படங்களில் வில்லணுக வரவேண்டியவ னுக்குரிய குணுதிசயங்கள் கொண்ட இவனையெல் லாம் - மக்களைப் பாதுகாக்கும் சேவையில் சேர்த்திருக்கிறர்களே இவன் ஏன் இங்கு வரு கிருன். ஏதோ வத்தி வைக்கப் போகிறன் போலும் எண்டாலும் ஏ. எஸ். பீ நல்லவர் எப்படியாவது பாஸ் தந்திருவார். வந்தவன் உத்தியோகதோரணையில் கிட்டே நெரு ங்கி ஏதோ அவரிடம் கதைத்து விட்டு வருகிறனே.
ஒரு பக்கமாக ஒதுங்கி அவன் செல்வதற்கு வழிவிட்டுக் கொடுக்கிறேன்.
"மிஸ்டர், ஐ ஆம் சாரி. நாளைக்கு வாரும், பாஸ் தரலாம். 3 நாளைக்கு முதல் அப்ளை பண்ணி யிருக்க வேணும். இருந்தாலும் நாளைக்கு வாரும் தரலாம்.
நன்றி தெரிவித்துவிட்டு அறைக்கு வெளியே வருகிறேன்
இது இவனுடைய இடம். இவன் எதுவும் செய் வான் பாழாய்ப்போனவன் இருப்பான் என்று. தெரிந்திருந்தும் வந்தேனே, என் புத்தியை என்னத்தால் அடிக்கிறது.
நாய்க் கூட்டத்திற்கு மத்தியில் அகப்பட்டு கூனிக் குறுகி வரும் பூனையென அடிமேல் அடியெ டுத்து நடந்து ஒருவாறு பொலீஸ் ஸ்டேஷனை விட்டு நகர்ந்தேன் அணிந்திருந்த சே ட் முழு வது ம் தொப்பலாகப் போயிருந்தது. வெளியே அடித்துக் கொண்டிருந்த விகார வெய்யில் ஈரமாயிருந்த எனது சேட் டைக் காயவைத்துக்கொண்டிருந்தது
கால் சென்ற வழியெல்லாம் நான் கண்ட காட்சிகள், குரு வளியால் ஏற்பட்ட துன்பம் இன் னும் ஒய வி ல் லை என்பதைக் காட்டியது. வீடு நெருங் நெருங்க, என் மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது.
இது என்ன . . பொலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும்போதுதான் பயத்தினல் அ டி த் து க் கொண்டது, இப்பொழுது ஏன் அடிக்கவேண் டும்? அங்கு அவன் இருக்கிருன் , அதனுல் அடித்துக்கொண்டது. ஆனல் வீட்டில் யார் இருக்கிருரர்கள், என் மங்கையைத் தவிர. நான் பாஸ் வாங்கவில்லை. அது தா ன் பயப்படுகி றேன். பாஸ் வாங்காததால் என் மங்கை எவ் வளவு துக்கப்படுவாள். ஆனல் எ ன க் குத் தெரியும், அவள் வெளியில் சொல்லமாட்டாள் மங்கைக்கு வரப்போகிற வயிற்றுக் குத்து பக லில் வரக்கூடாதா. பகலில்தான் வரவேண்டும். பகலில் என்ருல் பாசும் தேவையில்லை. ஒரு மண்ணுங்கட்யும் தேவையில்லை.

Page 40
38
** மலர்' " வாசகர்களுக்கு மகிழ்ச்சிதரும் ஒரு நற்செய்தி.
கைத்தொழில் கட்டுரைகள்
* முகப்பவுடர், சோப், பற்பசை, வாசனைத் தைலம். முதலிய பல்வேறு பொருட்களின் உற் பத்தி ரகசியமும், * அவற்றில் உபயோகப்படுத்தும் மூலப்பொருள்கள் பற்றிய முழு விபரமும் * குறைந்த செலவில் இவற்றைத் த யாரிக்க க் கூடிய வழிவகை களும * இவை சம்பந்தமாக எழும் சந் தேகங்களுக்குத் தெ ஸ்ரீ வான பதில்களும் விஷயம் தெரிந்த அனுபவஸ்தர் ஒருவரால் தொடர் கட்டுரையாக எழுதப்படுகிறது. ஓய்வு நேரத்தை உபயோகமாகக் கழிக்கவிரும்பும் "மலர்" வாசகர்களுக்கு ஒரு அரிய பரிசு. உங்கள் 'மலர்' பிரதிகளை இப்போதே நிச்சயப்படுத்திக்கொள்ளுங்க. ள்
வீட்டையடைந்தேன். வந்ததும் வராததுமாக ஆரம்பித்துவிட்டாள் அவள். ' காலமை சாப்பி டாமல் போய் இவ்வளவு நேரமும் என்ன செய்த னிங்கள், கெதீல முகங்காலைக் கழுவீற்று வாங்கோ சாப்பிட . . உடம்பிலே ஒரு கவனமும் இல்லை இவருக்கு."
என் மனைவியா இவள்.? இல்லை என் தாய். என் அம்மா என்னை இப்படித்தானே ஊட்டி வளர்த்தாள். பாசைப் பற்றி அவளும் கேட்க விலலை. நானும் சொல்லவில்லை. பாஸ் வாங்கி வந்திருந்தால் நான் என்னைப்பற்றி நின்ரு க பீற்றிக்கொண்டிருப்பேன். பீற்றிக்கொள்ளாம லிருந்ததிலிருந்தே நான் பாஸ் எடுத்துவர வில்லை என்பதைப் புரிந்துகொண்டிருப்பாள்.

மங்கை இப்ப எப்படியம்மா இருக்கு?’ தாயிடம் மகன் கேட்கும் தோரணையில் இருந்தது என் கேள்வி.
**இடப்பக்க நாரீலதான் கொஞ்சம் உளைவா யிருக்கு. கடுமையா ஒண்டும் இல்லை." பதிலைச் சொல்லிவிட்டு தள் கதையை வேறு முனைக்குத் திருப்புகிருள்.
*அத்தான், அந்தக் கிணற்றடித் தென்னை வீட் டோட சாஞ்சு கொண்டிருக்கு. எனக்குப் பய மாயிருக்கு. இ ன் ஞெ ரு காத்தடிச்சா வீட் டோட சாஞ்சிடும். கதிராமனிட்டச் சொல்வி அதைத் தறிச்சு விட்டுடுங்கோ."
இப்பவெல்லாம் கதிராமனுக்கு ஒய்வே கிடைப் பதில்லை. நான் போய்க் கேட்டதும் வந்து விட் டான். என்னிடம் மிகுந்த மரியாதை அவனுக்கு, சாய்ந்திருந்த தென்னையிலே இலேசாக ஏறி உச் சியிலே தோடாக் கயிற்றினல் சுருகுதளம் போட்டு விட்டு கயிற்றின் மறுபக்க நுனின்ய என் னி டம் எறிந்தான்.
'ஐயா நடுவிலே தறிச்சுப்போட்டு, இழுங்கோ எண்டு சொல்லுவன்-அப்ப தெற்குப் பக்கமா நிண்டு இழுக்கோணும், என்னய்யா."
மரத்தின் மேலிருந்து ஆணை பிறப்பித்து விட்டு தறிக்கத் தொடங்கிவிட்டான். எவ்வளவு உயரத் திலிருந்து தறித்துக்கொண்டிருக்கிருன். இருந்தா லும் என் கண்கள் அவ னில் ல யி க் க வில் .ை “இழுங்கோ’ என்று பலமாகச் சத்தமிட்டான் கதிராமன். எங் கே யோ கவனமாயிருந்தவன் உடனே கயிறை இழுத்தேன்.
"ஐயோ மரம் என்னை நோக்கி வந்துகொண் டிருக்கிறதே. கயிறை விட்டு விட்டு கி ண ற் று க் கட்டிற்குப் பாய்ந்தேன். ' கால் போச்சு, கால் போச்சு.". இரண்டொரு சிராய்ப்புகளைத் தவிர வெளியே எந்தவிதமான இரத்தக் காயங்களுமில்லை.
ஆனல் உள்ளே எலும்பு உடைந்துதான் போயி ருக்கவேண்டும். நிறைமாதக் கர்ப்பிணி மங்கை, அந்த நிலையிலும் ஓடோடி வந்தாள்.
எனது துன்பம் என்னேடு முடி ந் து விட க் கூடாதா. அவளையுமா வாட்டி வதைக்கவேண்டும். பேசுவதற்கு நா எழவேயில்லை. இரண்டு கைகளா லும் கன்னங்களில் வழி ந் தோ டி ய கண்ணிரை துடைத்து விட்டுக் கொள்கிறேன். 'அழாதை யம்மா, அழாதையம்மா, எல்லாம் சரியாப்போய் விடும். எனக்கொண்டும் வராது ” எனக்குள் சஞ் சலப்பட்டுக் கொண்டாலும் அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே வீட்டுக்குள் சென்றேன்.
மங்கையைப்பற்றிய எண்ணங்கள் என்மனதைச் சுற்றிப் படரப் படர காலின் வேதனையை முற் ருக மறந்தேன்.
எனக்கு இந்தக் கால் தானு முக்கியம்.

Page 41
சுற்றுப் புறம் இருளாகிவிட்டது. ஒரு ஜீப் வண்டி எங்கள் தெருவால் போய்க்கொண்டிருக் கும் சத்தம் கேட்டது. வீதியில் ஒருவருடைய நட மாட்டமும் இல்லை என்பது மனதிற்குப் புரிகிறது. மங்கை கோப்பி தருகிருள். மங்கையின் வயிற்று நோவைப்பற்றி எவ்வளவோ கேட்க வேண்டும் என்று நினைத்தபடியே சாய்மனக் கதிரைக்குள் என் உடம்பை சாவதானமாக நுழைத்து செளகரிய மாக்கிக்கொண்டேன். நித்திரைதான் வந்தது.
66
அத்தான், சரியா குத்துது அத்தான், எழும்
புங்கோ அம்மா. அம்மா..!’ திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.
எது நடக்கக் கூடாது என்று பயந்திருந்தேனே அது நடந்து விட்டது. 'மங்கை சேலையை உடுத் துக்கொண்டு இப்படி இந்தக் கதிரைல மெதுவா இரம்மா, இந்தா ஓடி வாறன்."
"அத்தான். எங்க போறிங்க, எங்க, எங்க போநீங்க . அம்மா . அம்மா . ஆ!”
நிலத்திலே படுத்துக் கிடந்த கிடுகு வேலியில் கட்டப்பட்டிருந்த வரிச்சுத் தடியை இழுத்து அறுத் தேன். உக்கியிருந்த பாகத்தை உடைத்தெறிந்து மிகுதியை ஊன்று கோலாக்கிக்கொண்டு தெருவில் பீதியுற்ற மனத்துடன் இறங்கினேன்.
சந்திக்கடை கிருஷ்னன் வீட்டிலதான் இருப் பான். மறுப்புச் சொல்லாம கட்டாயம் காரை விடுவான். தாயும் பிள்ளையும் பிரிஞ்சு பாரம் இறங் கிற வேளையல்லவா. தற்செயலா வரமாட்டன் என்டு சொன்னுலும் நான் விடமாட்டன்.
முன்னுக்கும் பின்னுக்கும் ஜீப் வண்டி வருவது போன்ற பிரமை, தெத்தித் தெத்திப் பாய்ந்து சந்திக் கடை கிருஷ்ணனுடைய கடை வாசலை யடைந்தேன், சத்தம் போட்டு கூப்பிடவும் பய மாயிருந்தது. என் மங்கை படும் வேதனை "பயப் படாம கூப்பிடுரு' என்று என் இதயத்தை அறைந்து அறைந்து கூவியது. தகரக் க த வில் பலமாகத் தட்டினேன்.
**ஆரது’’.
**அது நான் தான். கதவைத் திறவன் சொல்லுறன்.'"
பொலீஸ்காரர்கள் வந்து பூந்துவிடுவார்களோ என்ற பயம் அவனுசு கு. s
'என்னடாப்பா, இந்த நேரத்தில . ஆ . வெளியில நிக்காதை, உள்ளுக்கை வா ஜீப் வந்து தெண்டால் பிறகு கரைச்சல்.’
பரிதாபம் கலந்து சொன்னேன். நான் சஞ்ச லத்துடன் கூறிக்கொண்டிருந்தபொழுது அதைக் கேட்டு இடையிடையே அனுதாப வார்த்தைகளை என் எதிரே அவர்கள் எறிந்த விதம்-என் அந்தர நிலையை அதிகப் படுத்தியது.
உதவி செய்யமாட்டானே . . கடவுளே . அவனும் பயப்படுவது இயல்புதான். இருந்தாலும்

39
ஒரே அயலவன் இந்தநேரத்தில உதவாம லா போயிருவான்.
"இஞ்சர், என்னைக் குறை விளங்காதை, பாஸ் இல்லாம நீ வந்திருக்கிருய். நேற்றும் இப்படித் தான் ஆரையோ அந்த இன்ஸ்பெக்டர் பிடிச்ச வணும்.
வார்த்தைகளால் இவ்வளவு நேரமும் கெஞ்சி யவன் இப்பொழுது முகத்தால் கெஞ்சிப்பார்த் தேன். அவன் மசிவதாகத் தெரியவில்லை.
"அப்ப நீ வரமாட்டாய்". ஏமாற்றத்தின் முடிவு ஆத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
'நீங்களெல்லாம் ஏ ண் டா மணிசனெண்டு இருக்கிறீங்க, சீ.டேய், உங்களுக்கும் ஒண்டு வரா மலா போயிரும், அந்த நேரத்தில நானும் பார்த் துக் கொள்றேன்டா." என் மனசாட்சிக்கே விரோ தமாக வந்த இந்த ஆத்திரம் என்னைக் கண்டதையும் பேச வைத்தது.
சுற்றி நின்ற கிருஷ்ணன் வீட்டினர் இவன் உடனே போகமாட்டான என்பதுபோல் என்னைப் பார்த்தனர். எவரையும் நேர் எதிரே நோக்க முடியவில்லை. கண்கூசியது. கூசிய கண்களிலே கண் ணிரும் அரும்பிற்று.
"பொலீசும், மண்ணுங்கட்டியும்." 爱
ஏமாற்றத்தின் கோரத்தைக் காட்ட கைப் பிரம்பு படலைத் தகரத்தை அறைந்தது. கால்கள் வெளியே விரைந்தன.
இதய மலரிலே குத்திக்கொண்டிருந்த முள் நன்ருக உள்ளிறங்கி மேலும் வலியைக் கூட்டிக் கூட்டிக்கொண்டிருந்தது.
ஒருவருக்குமே உள்ளமில்லை. உள்ளம் இருந்தி ருந்தால் இந்த ஆபத்து நேரத்தில் வராமல் இருப் பார்களா. அன்று அந்த மருதப்புக் கி ழ வ னின் மானம் நடுத்தெருவிலே விலை போய்க்கொண்டி ருந்தபோது நான் சென்று தடுத்தேனே. எனக் கிருக்கும் உணர்வு இங்குள்ள எவருக்காவது இருக் கிறதா.
ஒருவருமே தே வை யில் லை. நானே இந்த நொண்டிக் காலுடன் தூக்கிச் செல்லவேண்டியது தான்.
வரிச்சுத் தடி கிறீச்சிட்டது. மூன்று கால்க ளுடன் இடறி இடறி நடந்து ஆவேசத்துடன் வீட்டை அடைந்தேன். நான் எதி பார்க்கவேயில்லை. பக்கத்து வீட்டு தெய்வநாயகி அக்கா மங்கையின் பக் கத்திலிருந்து அவளின் பரிதாபத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
* 'தம்பி, ஆசுபத்திரிக்குக் கொண்டுபோறது இனிச் சரிவராது. கிறீன் ருேட்டில சிங்கள மருத் துஷச்சி ஒருத்தி இருக்கிருள். அவளைக் கூட்டிக் கொண்டுவா, வீட்டில பெறுவு பாத்திருவம்.” என் துன்பத்தைத் தன் துன்பமாக உணர்ந்த ஒரே ஒரு ஜீவன் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனல் என்

Page 42
ܘ4ܲ
மனம் அதற்கு ஒப்பவில்லை. வீட்டிலே பார்க்கிற பிள்ளைப் பெறுவுகள் திருப்தி தரும் வகையில் ஒப் பேறுவதில்லை என்ற ஒரு கருத்து என் உள்ளத்தில் ஊறிப்போயிருந்தது
‘அத்தான் வர வர வலி கூடுது. , என்னை ஸ்ப் பிடியெண்டாலும் கொண்டுபோங்கோ, ஐயோ .. அம்மா , '
என் ஆற்றமையை எண்ணி எண்ணி அழுது கொண்டிருந்த என் நெஞ்சத்திற்கு மங்கை அழுவ தைப் பார்க்க சக்தியிருக்கவில்லை. திடீரென்று பாய்ந்து சென்று என்மங்கையை இரு கைகளாலும்
 

தூக்கிக்கொண்டேன். என் கால்களுக்கு எங்கிருந் துதான் இவ்வளவு சக்திவந்ததோ.
உயிரே போகப்போகுதாம், இனி சாண் போன என்ன முழம் போன என்ன உதவிக்கு ஒருவரு மில்லை என்ற ஒரு நிலை கால் வலியை மறக்கச் செய்தது, நிறைமாதக் கர்ப்பிணியைத் தூக்கிக் கொண்டு விடுவிடுவென்று "ருேட்டில் நடந்தேன் கிருஷ்ணன் கடைச்சந்திக்கு வந்துவிட்டேன். அலனு டைய வீட்டுச் சுவருக்கு மேலால் இரண்டொரு தலைகள் எட்டிப்பார்த்தன.
எட்டியா பார்க்கிறீர்கள், எட்டியா பார்க்கி நீர்கள், உள்ளமில்லா ஜென்மங்களே.
எ ன க் கு ஸ் நொந்து கொண்டேன் அவர்களை. கால்கள் தள்ளாடின. வலி கூடிக்கொண்டிருந்தது மங் கையின் முகத்திலே தோன் றிய மாற்றங்களும், வியர் வை முத்துக்களும், அவ ளுக்கு வலிகூடத்தான் என் பதைதெட்டத்தெளிவாகக் காட்டிக் கொண்டிருந்தது. வலி கூட க்கூட உணர்ச்சி வேகத்தினுல் ஏ ந் பட் ட சக்தி குறைந்து கால்கள் தள்ளாடின.
ஐயோ . . முருகா , என் மங்கையை ஏன் இப்படிச் சித்ரவதை செய்கிருய் , இன் னும் முக்கால் மைல் இருக்கிறதே, எப்படிக் கொண்டுபோய்ச்சேர்ப் பேன். முரு கா . . முருகா ...,
**ஆரது ருே ட் டி ல, ஊரடங்குச்சட்ட நேரத்தில பேயன்மாதிரி ஆரப்பா அது பொலீஸ் ஜீப் வந் தாத்தான் தெரியும்.' தன் வீட்டுக் கதவோடு நின்று யாரோ ஒரு வயதுபோன கிழவன் மெதுவாகக் கத்தி ஞன்.
இ வ னு க் கு என்னத் தைச் சொல் லு ற து. சொன்னப்போலவந்து உ த வி செய்யப்போ ருகு).
பதிலேதும் சொல்லா மல் கிழவனைக் க ட ந் து கொண்டிருந்தேன்.

Page 43
ஆரது, அட... மருதப்புக்கிழவன. இவரை பொலீஸ் விட்டுட்டுதா. கையில் பெரிய சுமை இருந்தாலும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளத் தவற வில் "என்ன தம்பி, இதென்ன . கடவுளே, வயித்து நோ இந்த நேரத்திலயா - உனக்கும் காலில ஏதோ எண்டு சொன்னங்களே, எப்படி கொண்டு போகப் போருய்' என்னல் பதில் சொல்ல முடியவில்லை. கணநேர மயான அமை நில வியது.
'தம்பி, நீ ஒண்டுக்கும் யோசிக்காதை, இஞ்ச கொண்டா பிள்ளையை. நான் கொண்டு போய் பிள்ளையை பத்திரமாய் ஆஸ்பத்திரில சேக்கிறன். நீ போய் என்ர மூத்தவனிட்ட விசயத்தைச் சொல்லி ஆஸ்பத்திரிக்கு வரச் சொல்லிப் போட்டு கொஞ்சம் ஆறுதலாயிரு. "'
நான் தயங்கினேன். ஆனல் மருதப்புக் கிழ வன் மங்கையைக் கைகளில் ஏந்திக் கொண்டான். **இஞ்சர், தங்கம், தம்பிக்குக் கொஞ்கம் சூடா ஒரு கடும் கோப்பி போட்டுக்குடு. நான் பிள்ளை யை ஆஸ்பத்திரில கொண்டு போய்ச் சேத்தீட்டு நல்லசேதியோட வாறன்.'
* டேய் தம்பி, மூத்தவா, நான் முன்னல போறன். கெதீல வா ... ' தன் மனைவிக்கும் மூத்த மகனுக்கும் ஆணையைப் பிறப்பித்துவிட்டு அவதி அவதியாக ஒடிக் கொண்டிருந்தான் அந்த ஏழு பிள்ளைக் குட்டிக்காரன் - மருதப்புக் கிழவன்.
நாடெங் கும் 'மலர்' விற்பனையாளர்கள் தேவை
* முற்பணம் கட்டவேண்டிய அவ
சியம் இல்லை. * பிரதிமாதமும் பத்துப் பிரதிக
ளுக்குக் குறை யா ம ல் பெற வேண்டும். விற்பனையாகாத பிரதிகனை த் திரும்பப் பெற்றுக்கொள்ள முடி List gil. முந்தியமாதப் பிரதிகளுக்குரிய பணம் அனுப்பாதவர்களுக்கு அடுத்தமாதம் 'மலர்' அனுப் பப்படமாட்டாது. விற்பனையாளர்களுக்கு 20% கழிவு உண்டு. எங்கள் செலவில் பிரதிகளை அனுப்பிவைப்போம். * தனிப்பிரதி -/50 சதத்துக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.
விற்பனையாளர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: நிர்வாகி மலர்? 21, மத்திய வீதி, மட்டக்களப்பு.
女

41
உலகம் ஓங்கிடுமே!
யூ. எல். தாவூத்.
நெஞ்சம் குளிர்ந்திடும் நீசம் அழிந்திடும்
நீதி நிலைத்து விட்டால் - தீய வஞ்சம் மறைந்திடும் வன்மங் குறைந்திடும்
வாய்மை வரித்து விட்டால் - மெய்ப் பஞ்சப் புலனுடைய பாவம் ஒழிந்திடும்
பண்பு வளர்ந்து விட்டால் - இறை தஞ்சம் எனப்புகுந் தாங்கு பணிசெய்கையில்
தரணி மர்ந்திடுமே !
சாதிநிற மெனும் பேதம் அகன்றிடும்
சமத்துவம் முகிழ்த்து விட்டால் - நற் போதம் பரந்திடும் புன்மை கருகிவிடும்
போலிகள் மாய்ந்து விட்டால் - காணும் தீது முடிந்திடும் சீர்மை மிகுந்திடும்
சிந்தை தெளிந்து விட்டால் - வல்ல ஆதி இறைவனின் அன்பருள் ஆய்ந்திடில்
அகிலம் சிறந்திடுமே !
உழைக்கு மினத்தினர் ஒங்கிடு வாரிங்கே
உலுத்தர் ஒழிந்து விட்டால் - பிறர் நலத்தைக் கரந்திடும் நஞ்சர் மறைகுவர்
நல்லறம் தோன்றி விட்டல் - அருள் தழைத்து இருநிலம் சாந்தி அடைந்திடும்
சமரசம் வென்று விட்டால் - என்றும் உளத்தில் இறைவனின் உணர்வு குவிந்திடில்
உலகமே ஓங்கிடுமே !
-4-

Page 44
42
என்றுமே வ
இன்றைக்குமாலை இனிதாய் இருக்கிறது. கொன்று விடல் போற் கொடியமழை பொழிந்து நின்ற முகில்கள் கலைந்து, நெடுந்தொலைவு சென்று மறையச் சிரித்த வெயிலின் கீழ்ப் புத்தாண்டைக் கண்டு மகிழ்ந்து புளகித்தோம். அற்புதமான பொருட்காட்சி ஒன்றமைக்கத் திட்டங்கள் இட்டுச் செயலாற்றி நிற்கின்ருேம்
பள்ளங்கள் மூடிப் பழைய திடல்களையும் கொள்ளும் நிலையிற் கொடுக்கை வளைத்து வந்த வெள்ளம் வடிந்த படியால், மிடுக்கோடு எம் உள்ளம் குளிர்ந்து இன்று ஒருங்கு திரண்டோம்நாம்
பாடற்கலையும் பரதக்கலையும் இதோ ஏடுதொடக்கும் விழாவில் இருக்கும் என நீாடி வந்துள்ளோம். நமது கலைகளினை தேடி வளர்க்கும் திறமும், நிலமுழுதும் சாடும் துயரைத் தவிர்க்கும் வலுவும் உள்ளார் எங்கள் தலைவர்; இவர்க்கெம் வணக்கங்கள். முன்பு நிறைந்து முறுவல் முகம்காட்டும் உங்களுக்கும் அன்பு வணக்கம் உரித்தாக!
பல்கிவளர்ந்து பருத்துக்கிளைத்தபடி செல்கின்ற நீண்ட சிறப்புத் தொடர்கதைகள் கல்கிகளிலே படித்துக் களித்தவர் நாம் சற்றும் நமது தரையில் தரியாது, கற்பனைகள் கொண்டு ககனத்தைச் சுற்றுகிற நுட்பம் அறிந்த விகடன்கள், நூதனங்கள் கூறிக் கிளுகிளுப்புக் கூட்டும் குமுதங்கள், ஆறக்கிடக்கும் பொழுது முழுவதுமே கற்று மிகவும் களைத்துக் கிடப்பவர்நாம்.
பற்ரு உடைகள் அணிந்த படப் பெண்கள் முற்ருய் நிறைந்த இதழ்கள், முகம் கொடுத்துப் பார்க்க இயலாத பாங்கின் அமைந்தாலும், ஆர்ப்பாட்டம் இன்றி அவைகளை நம்கூடத்தில் வைத்துப் பெருமை அடையும் வகையினர் நாம்
(“மலர்' வெளியீ “மஹாகவி” ஆற்றிய கt

ழ்க இனிது!
உப்புக் கடல்கள் கடந்து, நம் தூருக்கு அப்பால் இருந்தே அயலார் அனுப்புவதை, *ஆகா, உயர்வு" என்று போற்றுவதோடல்லாமல், சாகாக்கலைகள் தருவோர் அருகிருந்தால், 'ஒகோ, இவரா?” என உரைத்தல் நம் போக்கு சத்து நிறைந்த கவிதை சமைப்பவர்கள், வித்தை பலவாய் விளைக்கும் புதுக்கதைஞர் எங்கள் நிலத்தில் இருந்து குரல்கொடுத்தால், அங்கே அறத்தின் பெயரால், ஓர் ஆவேசம்! மங்கையர் கூட மறப்போர் தொடுத்திடுவார்.
இந்த நிலைமை இனிமேல் அகலும் என, வந்து நிறைந்த பெருமக்கள் கூட்டத்தால் சந்தேகம் இன்றிச் சரியாய்த் தெரிகிறது. நன்று நிகழ நடக்கும் புதியயுகம் ஒன்று கிழக்கில் உதிக்கத் தொடங்குவதைப் பக்கத்திலிருந்து பலவாறும் வாழ்த்துதற்காய் திக்குகள் நின்று திரண்டோம்; திருமலர் ஒன்று எங்களவர்கள் எடுத்துத்தரப்பெற்ருேம் , பொங்கல் மாதந்தோர். புதியபரிசாக
பாடுகள் பட்டுப் படைத்தமலர்! அதனை வாடவிடாமல் வலியப்பணம் கொடுத்து வாங்கித், தொடர்ந்து படித்து வருவோம் நாம். ஓங்கி வளர்க இதனுல் எமது புகழ்!
பள்ளங்கள் மூடிப் பழைய திடல்களையும் கொள்ளும் நிலையிற் கொடுக்கை வளைத்து வந்த வெள்ளம் வடிந்த விதமாய், வெளிநாட்டு நொள்ளைச் சரக்கு நொடிந்து விடுமாக! கொன்று விடல் போற் கொடிய மழை பொழிந்து நின்ற முகில்கள் கலைந்து, நெடுந்தொலைவு சென்று மறையச், சிரித்த வெயில்போல, எங்கள் இளைஞர் பணிகள் பயன் ஈக! நன்ரு ய் அலர்ந்து நமது புதிய மலர் என்றுமே வாழ்க இனிது!
ட்டு விழாவில் கவிஞர் விதை உரை]

Page 45
விரக்தி மனப்பான்மையைப் பூண்டோடு அளிக்கும் துணிவுள்ள எழுத்தாளரே மலைநாட்டுக்குத் தேவை!
-நெ. பி. பழனிவேல்.
தமிழகத்தில் இன்று எழுத்தாளர்கள் பெருகி வருகின்றனர். புத்தகங்கள் எழுதுவதும் வெளி யிடுவதும் வருவாய் மிகுந்த ஒரு தொழிலாகி விட் டது. எழுத்தாளர் மன்றங்களும் அமைப்புகளும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. மாநாடுகள் நடத் தியும் மலர்கள் வெளியிட்டும் மக்களிடையே தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரசினரை தம் எழுத்து வலிமையால் வற்புறுத்தி உரிமைகள் பல பெற்றுள்ளனர். ஆனல் ஈழத்தில், குறிப்பாக தமிழர்களில், இலட்சியக் கொள்கை யுடைய ஒரு கில எழுத்தாளர்களைத் தவிர ஏனை யோர்கள் தமிழினதும், தமிழரினதும் நலத்தைப் பேணு தலைத்தலையாய கடனுகக் கொண்டுள்ள னரா? அல்லது வயிற்றுப்பிழைப்புக்காகத்தான் எழுதுகின்றனரா வென்று எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
உரையாடுவது போல் எழுதுதலே சிறந்த நடை அதற்கு இலக்கணம் ஏன்? என்று கூறு வோரும் இந்கு உள்ளனர். இவ்வாறு எழுதிவிட் டுத் தம்மைத்தாமே தமிழ் உவெல்ஸ், கார்க்கி, தாகூர், என்று தமக்குத்தாமே பெருமை கொள் வோரும்உளர். மறுமலர்ச்சி எழுத்தாளர் என்று கூறிக்கொள்வோரில் பலர் எழுத்துத்துறையை தம் வாழ்நாள் குறிக்கோனாகக் கொண்டு விரும்பி ஏற்றுக் கொண்டவர் அல்லர் , என் இருபதாண்டுப் பொது வாழ்வில் கண்ட பல எழுத்தாளர் "பஞ்சத்து ஆண்டி' போன்று வந்தவர்கள். பிறதுறைகளிலே துழைவதற்குத் தகுதியற்ருேரும், பிறதுறைகளிலே சென்று தோல்விகண்டோரும் இதழ்களிலே தம் பெயர் வந்தால் போதுமென்று நினைப்போரும், தமிழ்மொழிப்பற்றின்றி, தமிழ்வளர்க்கும் கருத் தின்றிப் "புதியது புனையும் விருப்பம் கொள்ளா மல், ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தம்உளம் சென்றவாறே, தாம் அறிந்த, தெரிந்த குடும்ப நிகழ்ச்சிகளையோ எழுதிய கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று இதழ்களுக்கு அனுப்புகின்றனர். நம்நாட்டுத் தமிழ் இதழ்களில் பெரும்பாலானவைகள் இவைகளை இலவசமாகப் பெற்று வெளியிடும் நிலையிலுள்ளன. ஆகவே பக் கங்களை நிரப்புவதற்காக மையால் கிறுக்கப்படு கின்றவற்றை எல்லாம் வெளியிடும் இதழ்களுமுள.

43
அன்றியும் தம் நெருங்கிய உறவினரும், தம்சாதி யும், மதமும், பிராந்தியமும், பதவியும், பணமும் வேறு இத்துறையில் ஆட்சிபுரிகின்றன. தன் விரக் தியைப் போக்கிக்கொண்ட துணிபுடனும் தூய்மை யுடனும் தன் உள்ளத்திலே எழும் கருத்துக்களை அச்சமின்றி எழுதும் உண்மைஎழுத்தாளனே இன்று மலை நாட்டிற்குத்தேவை.
கதையாயினும், கவிதை, கட்டுரையாயினும் அதற்குரிய இலக்கணங்களுடனும் தமிழில் உயர்ந்த கொள்கைகளை விளக்கக் கூடியனவாயும் படிப் போருக்கு போரடிக்காது பல வகையிலும் இன்பம் பயந்து அவரை உயர்த்தக்கூடியனவாயும் இருத் தல் வேண்டும். இவ்வாறுஎழுதும் எழுத்தாளனுக்கு கருவியாக இருப்பது மொழியே 'தமிழ் எழுத் தாளனுக்கு கருவி தமிழே!'
எழுத்தாளன் யாராகவிருந்தாலும், எங்கிருந் தாலும் அவனுக்கு சிறந்த இலட்சியமும் கொள் கையுமிருக்க வேண்டும். அவன் எழுத்தோவியங் கள் மக்களிடையே எழுச்சியையும். விழிப்புணர்ச் சியையும் உண்டு பண்ண வேண்டும். இலட்சிய மில்லாத எழுத்தாளனைவிட வட்டிக்கடை கணக்கப் பிள்ளையே சிறந்த எழுத்தாளனவான். தினமும் காலையிலிருந்து மாலைவரை இருபது முப்பது கடி தங்கள் எழுதித்தள்ளும் அந்தக் கணக்கப்பிள்ளை யையும் எழுத்தாளர் வரிசையில் சேர்க்கும் நிலை தான் நமக்கு எற்படும்.
காடழித்து காசுச் சோலையாம் தேயிலைறப்பர் தோட்டங்களை மலைக்கும் மண்வெடிப்புக்கும், மா மழைக்கும் மண்டை வெடிக்கும் வெயிலுக்கும் கரடிக்கும், புலிக்கும், காட்டுயானைக்கும், சிங்கத் திற்கும், சிறுத்தைக்கும், பாம்புக்கும் தேளுக்கும் ஈடுகொடுத்து, மாடாக உழைத்து மனித உரு தேய்ந்து எவராலும் ஏற்றம் பெருமல் அனைவரா லும் ஏமாற்றி அல்லல் படுத்தப்பட்டு அரை நிர் வாணப்பக்கிரியாய் ஒட்டி உலர்ந்த வயிற்றினராய் வாழ வகையற்று, வாழ வழியற்று, வாழும் வழி அடைக்கப்பட்டு வதையை வாழ்வாகக்கொண்டு, சுரண்டர்களின் சோரம், எத்தர்களின் ஏமாற்றுக் கோலம், சுயநலக்கும் பலின் கூப்பாடு இவைகளின் கூட்டு முன்னணியில் மொத்தமாகச் சிக்சிக்சீரழியும் மலைநாட்டுத் தொழிலாளரான நமது மக்களின் நிலை உயர வாடும்வகை போக்கத் தூண்டும் தன் மானமுள்ள சூடு, சொறணையுள்ள எழுத்தாளர் கள் பலர் மலையகத்தில் தோன்ற வேண்டும். வழி காட்டும் இலக்கியங்கள் பல படைக்க வேண்டும். அவை மலையக இலக்கியத் தேக்கத்தைப் போக்க வேண்டும். இப்படியான அருமையான படைப்புக்கு மக்கள் பேராதரவு நல்கவேண்டும். தனியார்களின் தோல்வியைப்போக்க மலையகத்தில் விரிவான ஒரு கூட்டுப்பதிப்பகத்தை ஏற்படுத்த இளைஞர்கள்
முன்வரவேண்டும்.
y

Page 46
பீங்காரம்
மலர்த்தேன் புதுத்தேன் சுை எதுதேன் என நான் உ தமிழ்த்தேன் உயிர்த்தேன் வ வளர்வேன் அதனுல் உய
வெளிநாட்டு - குறிப்பாக தென்னிந்தியப் திய வன்மையை உடைத்தெறிந்து அப்பத்திரிகை ஈழத்தமிழகத்திலும் ஒரு பத்திரிகை வெளிவரவேை கும் எம்போன்றவர்களுக்கு உங்கள் முயற்சி நனவ
"மலர் கண்டேன். எளிமையான அழகை தேன். எளிமையான அழகுடனும், மென்மையான வாழ்த்துக்கள்.
"ஈழத்து எழுத்தின் தனித்துவத்தைப் பே களின் படைப்புகளுக்கு விரிவான களம் அமைத்து உண்மை, நேர்மை, நடுநிலை என்ற தாரக மந்திர கையாக மலர்ந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க
மலரொன்று கண்டேனந்த ம குலவிடக்கண்டேன் நல்ல குை பலகலை நெறியிற்சென்று பய குலமகள் போல வாழ்ந்து கு
பல காலக் கனவொன் கருவாகி, படர்ந்து பூ மலர்கண்டு, மகரந்த
பொருள் கண்டு, மகிழ் நலமெங்கள் வழிவாழ் கதைவீழ்க, நாருந் த உலராது நிலைநின்று 2 இதழ் தந்து உயர்க நீ
மலரின் இரண்டாவது இதழைக் கண்டவுட பல ஈழத்து ஏடுகளைப் போலல்ல இது என்று நிை யும் உயர்ந்த குறிக்கோளையும் கொண்டு இலக்கிய வாக முடியும் என்பதற்கு "மலர்” ஒர் எடுத்துக்
பத்திரிகைகளின் விற்பனைக்கும் வளர்ச்சிக் என்று நம்நாட்டில் நிலவிவரும் தப்பபிப்பிராயத் நம்பிக்கை, அதனை வாசித்தபின் எல்லோர் மனதி
- as
'அண்ணல் திமிலைத்துமிலன்' 'எருவில் மூ யும் இயற்கையையும் பாடுவதிலும் பார்க்க சற்று பண்ணக் கூடிய கருப்பொருட்களை வைத்துக் கவி கள் என்ன எழுதவேண்டும் என்று சொல்வது உ லாக் கவிதைகளும் ஒரே பாணியில் இல்லாமல் ப பயன் மிக்கதாய் ஆக்கலாம். ஆக்குவீர்கள் என
நாங்கள் எதிர்பார்த்த அளவு இன்னும் ! இது வெகுகால எண்ணத்தின் மலர்ச்சி என்பது மேலும் வளரட்டும்.

வத்தேன், குடித்தேன்
ணர்ந்தேன் அதுதான்
ளர்ப்பேன் அதைநான்
பர்வேன், மகிழ்வேன்!
-நவாலியூர் நா. செல்லத்துரை, கண்டி,
பத்திரிகைகள் இந்நாட்டில் பிடித்திருக்கும் ஆதிபத் களுக்கு எதுவிதத்திலும் குறைவுபடாத தரத்தில் ண்டும் என்று பல காலமாகக் கனவுகண்டுகொண்டிருக் ாக அமைந்து விட்டது.
-யூ. எல். அலியார், சம்மாந்துறை
நுகர்ந்தேன். மென்மையான நறுமணத்தை உணர்ந் நறுமணத்துடனும் தொடர்ந்து வெளிவர எனது -சி. சிவஞானசுந்தரம், சுன்னுகம்.
ணவும், அதை வளப்படுத்தவும் ஈழத்து எழுத்தாளர் க் கொடுக்கவும், எண்ணம் கொண்டுள்ள 'மலர்' த்துடன், அரசியல் கலப்பில்லாத இலக்கிய சஞ்சி
முயற்சியாகும். இ. பாலசுந்தரம், பல்கலைக் கழகம், பேராதேனியா.
லரினிற்பல நிறங்கள்
ணந்தரு மணமுங்கண்டேன்
ன்பல பரப்பிநாளும்
நவலயம் புரக்க மன்னே.
-க. ஆறுமுகம், காரைதீவு.
று பலிதத்தில்
த்த
மணிதந்த
ச்சி கொண்டேன்
க, நடைபாதைக்
ண்டும்
.திராத
Gl. -பாண்டியூரன், கல்முனை.
-ன், வானவில்போல் ஜாலம் காட்டி, மறைந்துவிட்ட எக்கவே தோன்றுகிறது. மெய்மையையும், அறத்தை ப்பணி ஆற்றினுல்தான் இறவாத இலக்கியம் உரு காட்டு.
--பாலசரஸ்வதி கதிர்காமத்தம்பி, மட்டக்களப்பு.
தம் சினிமா செய்திகளைப் பிரசுரிப்பதுதான் சிறந்தது தைத் தங்கள் 'மலர்' மாற்றிவிட முடியும் என்ற லும் ஏற்படும் என்பது திண்ணம். ஸ்வி. சி. உஷாதேவி, கோட்டைமுனை மட்டக்களப்பு. >ர்த்தி 'அன்பு முகையதின் அனைவருமே பெண்ணை “பாராமன? - சமுதாயத்தில் தாக்கத்தை உண்டு தை எழுதக்கூடிய ஆற்றல் மிக்கவர்களே, கவிஞர் ங்கள் வேலை இல்லையாயினும் வரும் இதழ்களில் எல் ர்த்துக்கொள்ளுவதன் மூலம் “மலரை” இன்னும் rதிர்பார்க்கிறேன்.
கா. சிவபாலன், சட்டக்கல்லூரிவிடுதி, கொழும்பு. ருபடி கூடிய திருப்தியை தை "மலர்" அளித்தது.
விளங்கிற்று. மலரின் தூய்மையை வரவேற்கிருேம் -நாக. பத்மநாதன், இசங்கன்குளம், அடம்பன்.

Page 47
45
வர்ண மயக்கம்
sAV
வேர் தை இதழ் சிருஷ்டிகளில் வர்ண பேதம்" பரிசு பெறும் விமர்சனத்திற்குள்ளானமை பற்றி மகிழ்ச்சிகொள்கிறேன்.
ஜனுப் இஸ்ஸதீன் கருத்தழுத்தமான ஒரு விமர்சனத்தை, மிக அழகான முறையில் செய்தி ருந்தார். அவரது பார்வைகள் மிகக் கூர்மையான வையாகவும், அர்த்த சாயல் படிந்தனவாகவும் இருந்தன. தன் இரசிக உணர்வுகளையும் கருத்துக் களையும் நேரெதிராக நின்று பளிங்குபோல பிரத் தியட்சப்படுத்தியமையும், அதற்கு அவரது அழகிய சொல்வளம் அனுசரணையாயிருந்தமையும் பெரிதும் பாராட்டுக்குரியன.
எனினும் விமர்சகரின் பார்வையில் ஏற்பட்ட வர்ண மயக்கம் ஒன்றினைத் தெளிவு படுத் தும் பொறுப்பை அவரது கட்டுரையின் இறுதிப்பகுதி எனக்கு ஏற்படுத்திவிட்டது. கதையின் பாகங்க ளுக்கிடப்பட்ட வர்ண உப தலைப்புகள் அர்த்த விளக்கம் பெருமல் நிற்கின்றன என்பது அவரது கருத்து. முதற்பந்தியில் அதனை விமர்சித்து வியக் கும் அவருக்கு அடுத்த பந்தியில் அது மயக்கமாக நிற்கிறது ஏனே என்று நான் மயங்குகிறேன்.
மூவர்ணங்கள் நீலம், சிவப்பு, மஞ்சள் என்பன வாகும். இந்த வர்ணங்களே, ஏனைய எல்லா வர் ணங்களையும் உண்டாக்கும் இயல்பின. மனித குண இயல்புகளும், வர்ண பேதமுடையனவே. அன்றி யும், அன்பு - நீலம், அபாயம் - சிவப்பு. சபலம் - மஞ்சள், துக்கம் - கறுப்பு என்னும் வர்ணுர்த்தம் உடையனவாக விளங்குகின்றன. மூவர்ணங்கள் மூன்றும் என் கதையின் பிரதான கட்டங்களாக நின்று மற்றும் வர்ணங்களையும் தோற்றுவிப்பதை வாசகர்கள் உணரலாம்.
மெளலவியோடு சுபைதா, வாழ்ந்த காலம், அவள் இ ைய பு பெருத துக்ககரமானது. அது கருமை பெற்றிருக்கவேண்டும் என்பது விமர்சகர் கருத்து. அக்கட்டம் சுபைதாவின் விரக்தி நிறைந்த சபல மனே பிம்பங்களையும், மெளலவியின் தெளிவு அற்ற ஸ்திரமில்லாத நோக்கையும் காட்டுவதால் அதற்கு மஞ்சள் வர்ணமே மிக ஏற்றது.
புகையிரதத்தில் சுபைதாவைக் கண்ட தும் சின்னமரைக்காயரின் மன ஆழத்தில் மண்டிக்

. ஸ. அப்துஸ்ஸமது.
கிடந்த ஆசை.அலைகள், மேலெழுந்து காதலாகப் பரிணமிர்கின்றன. சுபைதா அதனை ஏற்பதன் மூலம் அக்கட்டம் நீல வண்ணம் பெறுகிறது.
எனினும் அவளது இச் செயற்கைக் காதலின் உள்ளே சின்னமரைக்காயரின் சொந்தச் சிக்கல்கள் அவளை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் 'எதையும் ஆதாயப்படுத்திக்கொள்ள" முனையும் அவளது மனப் பாங்கையும் சின்ன மரைக்காயரின் விபரீத காத வின் விளைவையும் சிவப்பு வர்ணத்தில் காட்டினேன் விரும்பத்தகாத விபரீதச் சூழ்நிலையில் அவள் நிற் பதை அவளது உள்ளுர்ணர்வுகள், நன்கு காட்டி நிற்கின்றன. w
நீலத்திற்குரிய காதலும், சபலத்திற்குரிய மஞ் சளும் இணைந்து கடைசிப்பகுதியில் சாந்தமான பச் சையைப் பிறப்பிக்கின்றன சுபைதா, தன் கண வனின் காதலை ஏற்றுக்கொண்டு, தன் மனச் சப லத்தை அவனறியாவண்ணம் "சிரிக்கும் சிரிப்பு" இந் தப் பச்சையைத் தோற்றுவிக்கிறது உண்மையில் இது அவளுக்குச் சாந்தி அளித்ததா? என்று விஞ வெழுப்பும்போது, தூரிகையும் கையுமாக நிற்கும் அவள், எந்த வர்ணத்தையும் ஆக்கி அனுபவித்துப் பழகியவள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
றபீக்கோடு அவள் வாழ்வு பசுமையாக இருந்த தென்றல், அதற்குப் பச்சை இட்டிருக்கவேண்டும் என்று இஸ்ஸதீன் கருதுகிருர். உண்மையில் இவ் வாழ்வைப்பற்றிய அவள் நினைவுகள் ஊதாவர்ணத் திற்குரியதே. றபீக்கை அவள் மிகவும் நேசித்தாள். ஆதாயத்திற்காக இன்னும் பலரின் உறவையும் போலியாகவோ, உண்மையாகவோ, விரும்பினுள். இதன் தன்மை அன்புக்குரிய நீலம், இதன் விளைவு அபாயத்திற்குரிய சிவப்பு. இந்த இரண்டையும் இனைத்தேன் ஊதா பிறந்தது.
இந்த ஊதா, மேலும் மேலும் அதன் நிறத்தை அழுத்தமாகப் பெறுகையில், அதன் ஜொலிப்புக் கான கலப்பு வர்ணங்களை இழந்து, இறுதியில் கருமை பெறுகிறது, இந்தக் கருமையின் உள்ளே பசுமை அதன் இணைப்பு நிற மின் றி அழிந்து மறைந்து நிற்பதை வர்ணம் கலப்பவர்கள் நன்கு புரிவர். றபீக்கை அவள் இழந்து நிற்கும் துக்க சம்பவம் அவள் வாழ்வில் படிந்த கருமையேயன்றி வேறென்ன? x

Page 48
66
DG' 9 p.35 GipT
IIIT IIT67.
부--
விழாக்கள் பல கண்ட யாழ்ப்பாணத் திறந்த வெளி அரங்கில் மிக அபூர்வமாக நடைபெறும் இலக்கிய விழாக்களில் ஒன்ருக அமைந்தது 'மலர்' இலக்கிய மாத ஏட் டின் அறிமுகவிழா. ‘இலக்கிய விழா' என்ற வகையில் அங்கு திரண்டிருந்த சனக்கூட் டம் எதிர்பார்த்த தைவிட அதிகமாகவே இருந்தது.
திரு. S. U. சோமசேகரன், மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத் தார்’ கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத் துரை அவர்களின் தமிழ் வாழ்த் துடன் ஆரம்பமான இவ்விழாவுக்கு, பிரபல நாட காசிரியர் 'சொக்கன்” தலைமை வகித்தார்.
* புறக்கவர்ச்சியை நோக் காது உள் கவர்ச்சி நோக்கி ஈழத்து வாசகர்கள் ஈழத் துச் சஞ்சிகைகளை ஆதரிக்க வேண்டும்’ என அவர் குறிப்பிட்டார்.
சிறப்புரை நிகழ்த்திய, செங்கை ஆழி யான், யாழ்வாணன் ஆகியோர் ஈழத்துஎழுத் தாளர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும்
"மலர்? அறிமுகவிழாவில் இசைவிருந்தளித்த
*அருணு" இசைக்குழுவினர்.
 

இன்னல்களையிட்டு வி ரி வா க எடுத் து ரை த் த ன ர் . அதைத் தொடர் ந்து 'மலர்' ஆசி ரி ய ரி ன் உ ரை
இடம்பெற்றது.
அறிமுக உரை
நிகழ்த்திய கவிஞர் . கந்த வனம்
*தினப் பத்திரிகை கள் இலக்கிய ம், அறிமுக விழாக்குழு வளர்க் க வில் லை அமைப்பாளர் என்ற கூ ற் றை ‘நல்லை அமிழ்தன்'. மறு த் து அவை களும் இலக்கிய வளர்ச்சியில் பங்குகொள் ளத்தான் செய்கின்றன’ என்ற கருத்தை வெளியிட்டார்.
அதன்பின் "மலர் பெப்ரவரி ஏட்டின் முதல் பிரதியை திரு. எஸ். கனகரெத் தினம் (J. P. U. M.) முடிக்குரிய வழக்கறி ஞர் வாங்கி விற்பனையை ஆரம்பித்துவைத் தார். அதற்குள் ர சி க ப் பெ ரு மக் கள் பொறுமையிழந்துவிட்டனர். உடனே கலை நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கவேண்டியதாயிற்று.
கலை நிகழ்ச்சிகள் உண்மையிலேயே களை கட்டத்தான் செய்தன.
ஈழநல்லூர் அருணு இசைக் குழுவினரின் இசைநிகழ்ச்சியும் குமார் தனபால் குழுவினரின் 'தம்பி கொழும்பிலை என்ற நகைச்சுவை நாடகமும் சபை யோரை வெகுவாகக் கவர்ந் தன. இந்நாடகம் 59வது தட வையாக இந்த மேடையில் இடம்பெற்றது என்பது குறிப் பிடத்தக்கது. ஈழநல்லூர் தமிழாலயா கலை நிறுவனத் தின் "வீரபாண்டிய கட்டப் பொம்மன்' என்னும் நாடக மும் இடம்பெற்றது. இந்நாட கத்தில் முழுக்கமுழுக்க சிறு வர்களே நடித்தனர்.
- 8 மணி**
சழநல்லூர்

Page 49
626) Fupó
DT ff)
2-سس
மட்டுநகர் தேசவளப் பொருட்காட்சியில், இறுதி நாள் சிறப்புநிகழ்ச்சியாக இடம்பெற்றது கவிஞர் "ம ஹாக வி’யின் ‘* கோடை ‘ என்ற மேடைப்பா நாடகம். மாரிகால மழையில் குள மாகிவிட்ட மைதானத்தின் திறந்த வெளி அரங்கில் இந் நா ட க ம் இடம்பெற்றிருந்தாலும் மக்கள் அதைக்கான வெள்ளம்போல் திரண்டிருக்கவே செய்தனர்.
கமலி ஒரு நாதஸ்வரமேதையைக் காதலிக் கிருள். ஆணுல் அவள் தாயோ அவளை ஒரு ஏமா ளிக்குக் கட்டிவைக்க முயல்கிருள். இறு தி யி ல் காதல் வெல்கிறது. வழக்கமான காதல் கதை தான். ஆனலும் கதையின் ஊடே இழையோடிய ஒரு உணர்ச்சிப் போராட்டமும், பாத்திரங்களின் உள்ளத்துடிப்புகளும். நாடகத்தை இ திவரை சு வை யு ட னு ம் விறுவிறுப்புடனும் கொண்டு சென்றன. w
பாத்திரப்படைப்பும், அதை ஏற்று நடித்த கலைஞர்களின் உணர்ச்சிமயமான நடிப்புமே இந் நாடகத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை செய் தன எனலாம். கலை ஒன்றையே தெய்வமாக மதிக்
*கோடை?? நாடகத்தில் ஒரு காட்
 

47
“hI60)L“
A
கும் நாதஸ்வரக்கலைஞனக நடித்த திரு. த. நமசி வாயம், அவர் காதலியாக, இளமைத்துடிப்பும் குழந்தைத்தனமும் பளிச்சிட நடித்த செல்வி சித் திரா ராம் ஈஸ்வரா, படபடத்துப் பொரி ந் து கொட்டும் தாயாக நடித்த செல்வி ஈஸ்வரநிதி இராஜரெத்தினம், அவர் கணவன் மாணிக்க நாயனக்காரராக நடித்த தி. சச்சிதானந்தன், சலவைத் தொழிலாளியாக நடித்த வி. சிங்கார வேலு, அசட்டு முருகப்புவாக நடித் த திரு. இறைமுதல்வன், சிறுவனுக நடித்த செல்வன் சேரன் உருத்திரமூர்த்தி எல்லோருமே தாம் ஏற் றுக்கொண்ட பா த் தி ரங் களி ன் தன்மையை உணர்ந்து நடித்தனர். நடிப்பைப் பொறுத்தவரை நடிகர்கள் எவருமே சோடை போகவில்லை,
முழுக்க முழுக்க பிரதேச மணம் வீசும் வகை யில் இந்நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. குடிசை யின் தோற்றம், கிடுகு வேலி, முருங்கை மரம் முற் றத் தி ல் உள்ள தண்ணிர் முட்டி, உண வருந்திவிட்டு தண்ணிர் முட்டியில் கைகழுவுதல் இப்படிப் பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். ஷேவ் எடுத்துக்கொண்டிருக்கும் சோமு, தன் காதலியைத் துரத்திக்கொண்டு உள்ளே ஒடுவதும் அவர் கள் திரும்பி வரும்போது காதலி யின் க ன் ன த் தி ல் சவர்க்கார நுரை ஒட் டியிருப்பதும் ந ல் ல
திரு. எஸ். பாக் கியராசாவின் ஒப்பனை யும், ஏ. ஜே. மங்கள ராசாவின் கா ட் சி அமைப்பும் நாடகத் தின் சிறப்புக்குப் பெரி தும் துணை செய்தன.
* நாடோடிகள் " குழுவினருக்கும், கவி ஞர் 'மஹாகவி'க்கும் இந் நா ட கம் ஒரு வெற்றியே.
.g. --மணி

Page 50
48
வீசும் ெ
രുങ്കത്ത
மட்டுநகரில் தேசவளப் பொருட்காட்சி
பெப்ரவரி மாதம் 3ம் திகதி முதல் 6ம் திகதி வரை மட்டுநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. தான்கு தினங்கள் மட்டக்களப்பு மு ற் ற வெளி மைதானம் கண்ணைப்பறிக்கும் மின்சார தீபாலங் காரத்துடன் கந்தர்வலோகமாகக் காட்சி அளித்தது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசவளப் பொருட் காட்சியைக்காண மக்கள் திரளாக வந்த னர். மழை அவர்களைத் தடைசெய்வில்லை. மைதா னத்தை நிரப்பியிருந்த சேற்றுநீர் அவர்களைத் திசை திருப்பமுடியவில்லை. நான்கு இரவுகளும் திறந்த வெளி அரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளுள் கவிஞர் 'மஹாகவி அவர்களின் * கோடை மேடைப்பா நாடகம், சரச்சந்திரா வின் "மனமே" சிங்கள இசை நாடகம், கல்கி பீடிக் கம்பெனியாரின் த ர மா ன கதம்பக் கலை நிகழ்ச்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
வெள்ள நிவாரணக்கலைவிழா
மட்டுநகரில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு நிதியுதவிக் கலை விழாவை மட்டுநகர் கிறீஸ்தவ இலக்கிய சங்கமும் மட்டக்களப்பு தமிழ் கலாமன்றமும், இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. Mrs, Malaprop, "The Statues in the Park, 56.6 ft (6) p.stuff -g,5u ஓரங்க நாடகங்களுடன், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. மினி உடை அணிந்த தமிழ்ப் பெண்கள், ஆங்கில இசைக்கு ஏற்ப, சிங்கள 'வயிலா’ப் பாட்டுக்கள் பாடிய ஒரு இசை நிகழ்ச் சியும் இக் கலை விழாவில் இடம் பெற்றிருந்தது, கலைத்தாயின் துரதிர்ஷ்டமே.
மகாவலி சகாப்தம்
மகாவலிகங்கையைத் திசைதிருப்பும் கன வு கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி நனவாகி யது. பிரதமர் திரு. டட்லி சேனநாயகா அவர் களால் அங்குரார்ப்பஒனம் செய்து வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கு நாடெங்கிலுமிருந்து ம ர தன் செய்திகள் வந்து சேர்ந்தன. இலங்கையைப்பொறுத் தவரை இது ஒரு முக்கிய சம்பவம். இத் தினத் திலிருந்து ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது

தன்றல்
என்பதையும் இச்சகாப்தம் ந ம து காலத்தில் ஆரம்பமாகிறது என்பதையும் பெருமிதத்துடன் நினைவுகூர்வோம். இதனுல் ஏற்படப்போகிற நன் மையில் நாமும் பங்குகொள்ள வேண்டும்.
'உதயம்" வெளியீட்டுவிழா
பிரபல ஈழத்து எழுத்தாளர் நீர்வை பொன் னையன் அவர் க ளி ஸ் "உ த ய ம்' (சிறுகதைத் தொகுதி) வெளியீட்டு விழா 21-2-70 சனிக் கிழமை, யாழ்ப்பாணம் கணக்கியல் க ல் லூ ரி மண்டபத்தில் நடைபெற்றது. திரு. எம். கார்த்தி கேசன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். திரு வாளர்கள், வீ. ஏ. கந்தசாமி, கே. டானியல் , செ. கணேசலிங்கன், எஸ். தருமராசா, இளங்கீரன், செ. யோகநாதன், வி. கனகரெத்தினம் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
'தாயகம்' வெளியீடு
மலையக எழுத்தாளர் திரு. சிக்கன்ராஜ் அவர் களின் 'தாயகம்' தொகுப்புநூல் வெளியீட்டு விழா திரு நெ. பி. பழனிவேல் அவர்களின் தலை மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழா வுக்கு ஏராளமான எழுத்தாளர்களும், இலக்கிய அ ன் பர் க ஞ ம் சமூகமளித்திருந்தனர். மலையக எழுத்தாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய பல அரிய கருத்துகளை திரு. நெ. பி. பழனிவேல் அவர்கள் தமது தலைமையுரையில் வெளியிட்டார்.
யாழ்ப்பயணத்தில் "* மலர்' அறிமுகவிழா
யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் "மலர்' அறிமுகவிழா வெகு கோலாகலமாகநடைபெற்றது. பிரபல எழுத்தாளர் திரு. சொக்லிங்கம் (சொக் கன்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், திருவா ளர்கள் எஸ். யூ. சோமசேகரன், கவிஞர் வீ. கந்தவனம், யாழ்வாணன், செங்கை ஆழியான் ஆகியோர் உரை நிகழ்த்தினர். கருத் துரைகளைத் தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்ச் சிகளில் ஈழநல்லூர் அருணு இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி, நல்லூர் நகைச்சுவை நாடக மன் றத்தினரின் "வீரபாண்டிய கட்டபொம்மன், சங்கி லியன் நாடகமன்றத்தினரின் 'தம்பி கொழும்பிலை" ஆகிய நிகழ்ச்சிகள்" இடம் பெற்றன.

Page 51
யாழ்ப்பாணம் திறம் சுருட்டுக
கல்கி பீடி, ராஜா பீடி,
மற்றும் சாய்ப்புச்
மொத்தமாகவும் சில்லறையாகவ
வினுயகர்
பவ்ஸ்
இல: 37. முனைத்
எங்கள் வாடிக்கையாளர்களின்
ஒருமுறை விஜயம் செய்து
V NAYAGA
(OPPOSITE No 37. Munai St
Proprietor: S.
சுத்தமான பாண், பிஸ்கட் முதலியவற்றைச் சிறந் மக  ை "மதிப்பைப்
ßIh
2ம். குறுக்குத் தெ ENJΟΥ
Your
W Fo-ohday Cal Tasty Pa
NEVw B
BATTI Propn-e- . . . . Y.

ள், புகையிலை, நல்லெண்ணெய், சேலம் ஆர். வி. ஜி. பீடிகள் சாமான்கள் பலவும் 1ம் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்
ஸ்டோர்ஸ்
தெரு, மட்டக்களப்பு.
திருப்தியே எங்கள் மூலதனம்
உண்மையை உணருங்கள்.
AR STORES
BUS STAND) eet, BATIICALOA.
RAJENIORAM
வகைகள், ஸ்பெஷல் கேக்ஸ் த முறையில் தயாரித்து
பெற்றுள்ள ஒரே பேக்கரி
பேக்கரி
கரு, மட்ளக்களப்பு.
Parties
ith , . kes, Beautiful Fancy Cakes and stries etc.;
AKERY
CALOA,
Phone: 408.

Page 52
0', ', 最 h 』書- ظهور ha
மாதவிப் பொன்மயிலாள் ே
மையிட்ட கண்மலர்த
AR 1970
கலக்கெனத் தன் ெ
ஒரு கன்னியின் இ
ஈழத்துப் பிரபல
நி இ) ('. gp,. l.ni are=lh“" எழு
சுவைமிக்க
ilk db 6ü)TT LI
f விை உங்கள் 'மலர்
ஆரம்ப
965 F G D J ffig, Tig5 ITTUTC)
Harriri
அச்சிட்டவர்= வா, சகோ, ஜோசப் பி. மறே. 3, 3. I. கத்தோ வெளியிட்டவர்- இ. நல்யோ "மலர்" இலக்கியச் கெளரவ ஆசிரியர்- இரா. நாங்னிங்கம், !

и н на на на на не
தோகைவிளித்தாள் - வண்ண
ந்து தாதுவிடுத்தாள்.
வாழ்வை அர்ப்பணித்த
6f 6f Tai QJG T )
ல நாவலாசிரியர்
ம்
தொடர்கதை
| LD uʻi si) lk
ரவில் " சஞ்சிகையில்
மாகிறது.
கச் சேர்ந்துவிடுங்கள்.
விக்க அச்சகம், இல, 18 மத்திய வீதி, மட்டக்களப்பு.
குழு 81 மத்தியளிதி, மட்டக்காப்பு.
, மத்தியவிதி, மட்டக்களப்பு.