கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலர் 1970.06

Page 1

வில் சதம் 5, "مي

Page 2
LD6) if
ஆசிரியருக்கு,
அன்பின் வ
முற்றிலும் தீயசக்தி மான, புனிதமான இல குலுங்குவதென்பது எத்து பது ஈழத்திலே இலக்கிய பித்து, அது பெற்றுத்தந்த அனைவருக்கும் தெரியவரு ரிகைகளும் நாடிதளர்ந்தத
இதிலிருந்து - நமது நமது எழுத்தாளனுக்கு - ளில் தன்னை அர்ப்பணித், தரங்கத்துக்கு உவப்பான நம்மவர்கள் ஆதரவு 8 தெரியும்.
இந்நிலையிலும் - இல சிய நோக்கத்துடனும் ம கையின் வளர்ச்சி நமது மனத்தைப் பொறுத்தது. வைத்தால் - நமது இலச் மாக்க எண்ணும் எந்தத் தீ என்று சொல்லவும் வேண்
g
6.

5டிதம் ! 妃一
*ஷனுபா மான்ஸில்" ஒட்டமாவடி 28一4一丑970。
ணக்கங்கள்.
திகள் புடைசூழ - பவித்திர க்கியமாக "மலர்’ பூத்துக் னை சிரமமான காரியமென் பப்பத்திரிகை என ஆரம் அனுபவங்களுக்குள்ளாகிய ம். இன்றுவரும் சில பத்தி ாகவே காணப்படுகின்றன.
இலக்கிய வளர்ச்சிக்கு - ஆக்கபூர்வமான காரியங்க துக் கொள்ளும் நமது அந் பத்திரிகைக்கு எந்த அளவு ாட்டுகின்ருர்கள் என்பது
க்கிய ஓர்மத்துடனும் இலட் லர்ந்த உங்களின் பத்திரி முதலாந்தர வாசகனின் அவன் மட்டும் மனம் கிய வளர்ச்சியை சூன்ய பசக்தியையும் எதிர்க்கலாம் டுமா?
ப்படிக்கு,
அன்பின், ஸ். எல். எம். ஹனிபா
l
هر
ހ

Page 3
நங்கையின் புன்னன்
பொன்னகை
நஜீமா கை பிரதான வி
* நாளும் பொழுதும் வளர்ந்
நாகரிகத்தை அனுசரித்து நவீன மோவ்ஸ்தரில் நகைச்
* ஒடர் நகைகளைக் உத்தரவாதத்துட
* நம்பிக்கையும் நாணயமும்
சேவை ஆற்றுகிருேரம்,
öfðázzibæ á
Main Street,
 

}SuL6óT GLITiguGtò தயாரிப்பவர்கள்
க மாளிகை is 56 (p260T
து கொண்டிருக்கும்
ான் தயாரிக்கிறுேம்,
; குறித்த காலத்தில் -ன் செய்து கொடுக்கிருேம்,
நிறைந்த
ம் செய்யுங்கள். fzyZZ2)
KALMUNA.

Page 4
அழகிற் சிறந்த தங்க நன T. S. N. S. P. si(gh
பரீ முருகன் 212, îJ கல்மு
* ஒடர் நகைகள் குறித்த கா
* இன்றே விஜயம் செய்து
தொலைபேசி A6: 301.
புகைப்படத் தொழிலில் 30 முன்னேடி
ராஜா ஸ
O விசேட நிகழ்ச்சிகளின் பு
கொடுக்கப்படும். O அமெச்சூர் புகைப்படங்
கொடுக்கப்படும். O பாஸ் போர்ட், ஐடென்டிக
கொடுக்கப்படும்.
ராஜா ள்
மெயின் வீதி,

கைகளுக்குத் தகுந்த இடம் ணுசலம் செட்டியார்
அன்ட் கோ 5 TGOT 6f 6, |æ|t.
லத்தில் த்துடன் செய்து கொடுக்கப்படும்.
உண்மையை அறியுங்கள்.
வருட சேவையாற்றியுள்ள, விஸ்தாபனம்.
ரூடியோ
கைப்படங்கள் உடனுக்குடன் செய்து
ள், சிறந்த முறையில் செய்து
ார்ட் படங்கள் தாமதமின்றிச் செய்து
0ரூடியோ
மட்டக்களப்பு.

Page 5
உங்கள் பாதங்களைச் சுகமா காலணிகளை நாங்
ஆசிரியர்கள் அலுவலர்கள் குழந்ை
பொருத்தமான, கவர்ச்சியான ஆடர் கொடுத்.
அழகான மோவ்பதை
இன்றே விஜய
ருேயல் வ 55, பிரதான வீதி
உரிமையாளர்- எம். எம். ஹி
எங்களிடம் யாழ்ப்பாணம் பீடி வகைகள், நல்லெண்ணெய்,
குறைந்த விலைய
நீ முருகன்
& 6)
எல்லோரும் விரும்பிப் ப ஜெயகுமார் பீடி எ
 

க அனைத்துக் கொள்கின்ற ல்கள் செய்கிருேம்
மாணவர்கள்
தகள் அனைவருக்கும்
ா, சொகுசான, காலணிகளை துச் செய்யவும் ாத் தெரிவு செய்யவும்.
ம் செய்யுங்கள். டி0 மார்ட்
, - மட்டக்களப்பு. னிபா.
l'H
திறம் சுருட்டு, புகையிலை,
சாய்ப்புச் சாமான் முதலியன பில் கிடைக்கும்.
6îl (ELT ffaith
D 260T.
விப்பது ஜெயகுமார் பீடி.
ங்களிடம் கிடைக்கும்.

Page 6
யாழ் இலக்கிய வட்டத்தின் இரண்டு புதிய நூல்கள்
1. கீரிமலையினிலே (கவிதை) (கவிஞர் வீ. கந்தவனம்.)
60%a) ტენ. 2.00
2. நாடகம் (நாடக நூல்)
(எ. ரி. பொன்னுத்துரை)
விலை ரூ. 1,50
கிடைக்குமிடம்:-
தனலட்சுமி புத்தகசாலை சுன்னகம்,
ஈழத்து நூல்களை வாங்கி
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளியுங்கள்.
கெரழும்பு வாசகர் பேரவையின பூத்த புத்தாண்டிலிருந்து
“தமிழ
(முத்திங்கள் இ * ஈழத்துப் பிரபல
விமர்சகர்கள் * அறிஞர்ச
மற் எழுதிய படைப்புக்களோ தனிப்பிரதி ஆண்டுச் சந்தா விபரங்களுக்கு :-
* தமீழ
101, வேக்கந்தை

வீரத்தமிழன் கயிலை வன்னியனின் வாழ்க்கை வரலாற்றைப்
பின்னணியாகக் கொண்ட வீரகாவியம்
கரவைக்கிழானின்
‘தணியாத தாகம்’
(வரலாற்று நாடகம்)
இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளிவந்துள்ளது. பிரதிக்குமுந்துங்கள்! விலை ரூபா 2/-
கிடைக்குமிடம்:
நாக. பத்மநாதன்
இசங்கன்குளம், அடம் பன்.
ரால்
வெளியிடப்படுகின்றது,
99 ? (sp. Ós í இலக்கிய இதழ்) படைப்பாளிகள்
ள்
p) tid L 16:noi டு வெளிவந்து விட்டது.
80 சதம்.
ரூபா 50 சதம்.
முது ”
தி, கொழும்பு- 2.

Page 7
உள்ளத் வாக்கினி
செடி 1
கதை
இறக்கம் எனக்கெ ஒரு தனி பாசம் ெ அதிர்ஷ்ட கவிதை ஜ் கவிதாஞ் கோபத்ை போதும். அழகின் வாழ்வரக் கூடல் .
கட்டுரை
மட்டக்கள் அல்லாம
சிறுகதை பிற
S , ரிங்காரம்
வணக்கம் ஈழத்து ர படிப்பிலக் ஒரு அஆ
கதைகள் யா கருத்துகளுக்கு அவ
尋考委易委で残美翌不。
 

தில் உண்மையொளி யுண்டாவின் லே ஒளியுண்டாகும்-பாரதியார்.
ಖ್ಖ9à, 1970 மலர் 4
மகரந்தம்
பக்கம்
0LLLLSLLLLLL0L0 L 0LL0LLLL0LLLLLLLLLLL0LLLL0LLLLL S வை. அஹ்மத் .”11 (5 . . . . . . . . . . ... யோ. பெனடிக்ட் பாலன் . 22 நெஞ்சம். 'கவிதா' . 28 நஞ்சில் ஊறும் . “JysäTLyuDGOf” ... 36 46 . எஸ். சிதம்பரப்பிள்னை ................................ فقا۔
சலி. ... 12 த ஊட்டாதே."அன்பு முகையதின்’ ... 15 τίτι τα முதல்வனுர் . 18 சோகம் .மாவை, தி. நித்தியானந்தன்.19 ...... LSLLLLLSLLLL0LLLLLLL LLLLLLLL0LLLLSLLLLLL திமிலைக்கண்ணன் . 27 LLLLLL LSLLSLLL0LLLLLLL00L0LL0L0LLLLLLLLLLLSLLLSLLLLLSLLLLLSLLLL LLLLLL எருவில் மூர்த்தி2.742
ாப்பு வழக்கு.அருள். செல்வநாயகம் . 16 ா இக்பால் .யூ. எல். தாவூத். 20
O dos e a as e a Ops e e o s e as மு. ஹ. சேகு இஸ்ஸதீன் . 43
LLLLSLLLLL LSLLLLLL0LLLL0LLLLLLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLL LLSLL LLSLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLLLLSL ... 6
spruera
. . . . . . . . . ... asso... . . . . . . . . . . . . . . onors } === 7 த்தினங்கள் . . 8 க்கியம். ... 9 Duaith............... ••••••••••••••••••••••••••• 14
ாவும் கற்பனை, கட்டுரை கவிதைகளில் உள்ள bறின் படைப்பாளிகளே உரிமையாளர்.
4 కి -ஆசிரியர்.
3ろ
YÍK уle
S2,

Page 8
Sy
எழுத்தாளரின் iG வாழ்க்கைவிபரம் ஆகிய .6
அழகான மலரைக் ஆவலாய் தேனையுல இன்பமாய் மணம் ஈழத்தின் கிழக்கு ட உன்னத மாக வந்து ஊனத்தைக் களைந்து . எழுத்தினை ஏற்றமாக ஏந்தியே எழில் நிறைந்து ஐம்புலன் மகிழவைத்து ஒப்பரும் பணிபுரிந்து ஓயாது சேவை செய்து ஒளடதமாகி நிற்க, அஃதே யென் ஆசைமலரே.
-புன்னகை வேந்தன், கல்முனை.
நான் பலநாட்களாக எதிர்பார்த்த 'ம வெளிவந்துள்ள சிறுகதைகளும், கட்டுரைகளு இலங்கையில் தோன்றிய பத்திரிகைகளில் "ம லும், வாடாமலராக விளங்கும் என்பதிலும்
"மலர்' இதழ்கள் கண்டேன், மகிழ் இலக்கியத்தேனை அள்ளி வழங்குகின்றது. கிழ வரும் "மலர்' இல்லமெலாம் எழுச்சியெனும் ஒத்துழைப்பும் உதவியும் என்றுமுண்டு.
மாதமொருமுறை மலரும் தங்கள் பேதமெதுவுமேயின்றி பெரியதோர் சாதனைை யிட்டு மனம் உவக்கிறேன்.
பெப்ரவரி 'மலர்' கண்டேன் உவ6 றிற்கு முதலிடம் கொடுக்கும் பத்திரிகைகள் ஓர் சஞ்சிகை வெளிவருவது ஆச்சரியம்தான்.
தங்கள் "மலர்' இதழினைக் கண்டேன் லில் தத்தளித்தேன். கருணை யோகன், வ. அ ஆழியான், மஹாகவி போன்ருேரின் படைப்
ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்குக் க கட்டிக் கொண்டிருக்கும் தென்னிந்தியச் சாக்க வகையில் உங்கள் "மலர்" மலர்ந்து மணம் வீசி தான் பாராட்டாமல் இருக்கமுடியும். வாழ்க

வெதுபோலவே அவர்களின் முகவரி தொழில், வும். -நா. தண்டாயுதபாணி, யாழ்ப்பாணம்.
அரிய இலக்கிய விடயங்களை ஆக்கி எமக்கு அளிக்கின்ருய் இனிய சிறுகதை கவிதைகள் ஈந்து எம்மைக் கவர்ந்திட்டாய் உனையே என்றும் எதிர்பார்த்து ஊண் உறக்கம் இழந்துவிட்டேன் என்றும் எம்மைக் கவர்ந்திடவே ஏந்திழையாள் நீ வரவேண்டும் ஐயமகற்றி அறிவூட்டி ஒற்றுமை தன்னை நிலைநாட்டி ஓங்கும் புகழைப் பெற்றிடுவாய் ஒளவையாகி அமைந்திடுவாய்
--செல்வி, உஷாதேவி, மட்டக்களப்பு.
லர் வெளியானதையிட்டு மகிழ்ந்தேன் "மலரி'ல் ம், கவிதைகளும், அருமையாக அமைந்துள்ளன. லர் முதன்மை ஸ்தானத்தைப் பெறும் என்பதி
சந்தேகமில்லை. -
- எஸ். பி. நந்தகுமார், கண்டி,
வு கொண்டேன். தமிழ் மணம் கமழும் "மலர்' pக்கே பரிதியோடு, ஒளிவெள்ளமேந்தி, பவனி தீபமேற்றி, தொண்டினை ஆற்றட்டும். எங்கள்
-எஸ். இராஜம்புஷ்பவனம், அடம்பன்.
மலரை நுகர்ந்து, மதுமயக்கம் கொண்டேன். யத் தாங்கள் இப் புத்தாண்டிலே துவக்கியதை வே. பரமராசா, சாவகச்சேரி.
கையுற்றேன். அரசியல், சினிமா, போன்றவற் மலிந்துள்ள இக்காலத்தில் "மலரை'ப் போன்ற --விஜயா, கொழும்பு - 2.
களிபேருவகை கொண்டேன். மகிழ்ச்சிக் கட
இராசரெத்தினம் செ. யோகநாதன், செங்கை
பு தித்திக்கும் தெள்ளுதமிழாய் இனிக்கிறது.
-நெல்லை. ஐ. நடேஷ், கரவெட்டி.
வாங்கும் விளைவிக்க வேண்டும் என்று கங்கணம் டைப் பத்திரிகைகளுக்குச் சவுக்கடி கொடுக்கும் பாரினில் பவனி வந்து கொண்டிருப்பதை யார் * மலர். வளர்க உங்கள் இலக்கிய சேவை.
--தேவியின்தாசன், அச்சுவேலி,

Page 9
:
米 /
来源
60
இரண்டு மாதங்களா வில்லை என்பதை அறிந்து சங்கள் பல.
ஆகா! பார்த்தீர்கள டது!’ எனத் தமது தீர்க் மகிழ்ந்த இதயங்கள் சில "ஐயோ! ஒருவருட ச்ச் அங்கலாய்த்த மனங்களுட
இவை அனைத்தையு களாக, நாம் தவித்த தவி வார்த்தைகளில் வர்ணிக்க
** மலர்" வெளிவருவ திற்கான காரணங்களை வேலை. அதனல் எவ்வித ஆனல் இனிமேல் அப்படி கொள்ள நடவடிக்கை எடு மட்டும் சொல்லிவைக்க
எக்காரணம் கொண் வந்த ஏனைய சஞ்சிகைக நின்றுவிடக் கூடாது என் கொள்ளும் பகீரத முயற் ஒத்துழைத்தால் ** மலர் பதை அழுத்தம் திருத்தம
GG○th・“リ警}二 。
ஏப்ரல் மாதத்திற்கெ ஜுன் மாதத்தில் வெளி திற்கு முன் சேர்ந்த சந்த மேலும் இருமாதங்களுக் அறிவிப்பைப் பிறிதொரு
--ܠ

as is st
க ** மலர் *1 வெளிவர
பதறித் துடித்த நெஞ்
ா? 'மலர்' நின்று விட் கதரிசனத்தையிட்டு அக
Fந்தா போச்சே!” என்று ம் உண்டு!
ம்விட இரண்டு மாதங் ப்பு இருக்கிறதே, அதை 5 (Մ)ւգ Ամո Ց].
பதில் ஏற்பட்ட தாமதத் இங்கு விபரிப்பது வீண் த பிரயோசனமுமில்லை. நேராதவாறு பார்த்துக் நித்துள்ளோம் என்பதை
விரும்புகிருேம்.
ாடும் ஈழத்தில் வெளி
ப் போல் 'மலர்' பதற்காக நாம் மேற் சிகள் பல. வாசகர்களும் ** நின்றுவிடாது என் ாகக் கூறிவைக்க விரும்பு
னத் தயாரித்த மலரே” ரிவருகிறது. இம்மாதத் ாதாரரின் சந்தாக்காலம் த நீடிக்கும். இதுபற்றிய
பக்கத்தில் காணலாம்.
- ஆசிரியர்.
ン ※ 米
米
米
米

Page 10
*ழத்து ரத்தினங்
விளக்கில் எண்ணெய் தீர்ந்துவிட்ட சற்று நின்றெரியும்.
இருளைப் பிதுக்கி எடுக்க முனைகின் ஒன்று பார்த்து நகைத்துக் கொண்டாலும், விழந்து 3 கம்பங்களின் காலடிகளில் நிழலுரு கின்றன.
அந்த வெயிலின் அகோரத்தில் அச்சு தைச் சகித்துக் கொள்ளமாட்டாத எழுத்தா கொண்டிருந்தது.
வீட்டைச் சூழ்ந்துவரும் இருளை விழு துக்களும் துலாம்பரமாகத் தெரிகின்றன. ஆ உருகி உருகித் தன் உருவத்தை அழித்துக்கெ வாதிக்குரிய இலட்சணம்.
ஈழத்து எழுத்தாளர் வெளியிடும்
ஈழத்து எழுத்தாளர்கள், தனிப்பட் களுக்கு "மலர்' சஞ்சிகையில் இலவச வாறு விளம்பரம் பெற விரும்பும் எழுத் ஒரு பிரதியுடன் விண்ணப்பிக்கவேண்டும். மட்டுமே இத்திட்டம் அமைவதாகும்.

b6
லும், திரியிலூறிய எண்ணெய்க்காகவாவது தீபம் (இ. நாகராஜன்:- எரிந்ததிரி') - சு. சதாசிவம், திருக்கேதீச்சுரம்
米 米
ற பட்டினத்து மின்சார விளக்குகள் ஒன்றை இயற்கையின் சக்தியுடன் போட்டிபோட வலு வக் கோடுகளை நான்கு திசைகளிலும் தீட்டு
(இ. நாகராஜன்:- வர்ணஜாலம்")
米 ck
சற்றுப்புறம் யாவுமே, நேர்மையற்ற விமர்சனத் ளனின் இதயத்தைப்போல வெந்து புழுங்கிக் (வ. அ. இராசரெத்தினம்:- "பிரிவுபசாரம்?)
- செ. நாகேந்திரன், மட்டக்களப்பு
米 来
}ங்கும் மெழுகுவர்த்தியின் ஒளியிலே சகல வஸ் ஞல் ஒளியைத் தந்த மெழுகுவர்த்தியின் கதி? ாள்கின்றது. இதுதான் உண்மையான இலட்சிய (யாழ்வாணன்:- "அமரத்துவம்") - மு. கணபதிப்பிள்ளை, குருக்கள் மடம்,
நூல்களுக்கு இலவச விளம்பரம் ※一
-ட முறையில் ஈழத்தில் வெளியிடும் நூல் மாக விளம்பரம் வெளியிடப்படும். இவ் தாளர்கள், தாங்கள் வெளியிடும் நூலின் 1-1-70 முதல் வெளிவரும் நூல்களுக்கு
-ஆசிரியர்.

Page 11
-V
உள்ளத்தில் உண்ை வாக்கினிலே ஒளி உ
செடி 1 ஏப்ரல் -
படிப்பிலக்கியமும்
ᎠᏍff ' ; சஞ்சிகைக்குச் சந்தா சேர்க்குமுக மாகச் சமீபத்தில் பலபாடசாலைகளுக்குச்சென்றிருந் தோம். அங்கு நமக்கு கிடைத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. அவற்றுள் சில அதிர்ச்சிதரக் கூடியவையாயுமிருந்தன.
நமது பாடசாலைகளில் உள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பலருக்கு இக்காலப்படைப்பிலக்கியம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. ‘இலக்கிய சஞ்சிகை, சிறுகதை, கவிதை, கட்டுரை: ஈழத்து எழுத்தாளர்கள்' என்று நாம் பேச்சு வாக்கில் குறிப் பிட்டபோது எதுவுமே புரியாதவர்கள்போல் அவர் கள் நம்மை விநோதமாகப் பார்த்தனர். நமது எழுத்தாளர்களைப்பற்றி அவர் களுக்கு எதுவும் தெரியவில்லை. செங்கை ஆழியான் செ. யோக நாதன், வ. அ. இராசரெத்தினம், மஹாகவி, "அண்ணல்" அ. ஸ. அப்துஸ்ஸமது முதலிய எழுத் தாளர்களைப்பற்றி அவர்கள் அறிந் தி ரு க் க வில்லை. நமது நாட்டில் வெளியாகும் இலக்கிய சஞ்சிகைகளைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்டது கூட இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டியிருக் கிறது நமது நாட்டில் வெளியாகும் “சிரித்திரன்’ "மல்லிகை "இளம்பிறை" முதலிய சஞ்சிகைகளைப் பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
விஷயம் இவ்வளவு டன் நின்றுவிடவில்லை. இந்த விஷயங்களைப்பற்றிப் பேசுவது ஏதோ கெளரவக்குறைவான காரியம் என்பதுபோல, முகத்தைச் சுளித்துக் கொண்டு "இதற்கெல்லாம் எங்களுக்கு ஏது நேரம்?" என்று அவர்கள் அலுத் துக்கொண்டனர்.
படித்தவர்கள்; இந்த நாட்டின் இலக்கியப் படைப்புகளைப்படித்து, விமர்சித்து, அபிப்பிராயம் சொல்ல வேண்டியவர்கள்; காசு கொடுத்து இந்த நாட்டு நூல்களையும், சஞ்சிகைகளையும் வாங்கி ஆதரித்து, இந்த நாட்டின் இலக்கிய வளர்ச்சிக்குத்

མང་ལ་སྡང་
X
R 前
மயொளி யுண்டாயின்
ண்டாகும்?? -பாரதியார்.
.. (ჭup 1970 DGo: 4 - 5 படைப்பிலக்கியமும்
துணைபுரிய வேண்டியவர்கள்; நமது எழுத்தாளர் களின் படைப்பாற்றல் குறித்துப் பெருமிதப்பட வேண்டியவர்கள்; பாவம் இப்படியொரு அறியா மையில் மூழ்கிக்கிடக்கிருர்களே என்பதை எண்ணும் பொழுது உண்மையிலேயே வேதனை ஏற்படத்தான் செய்கிறது. 4.
ஆனல் இதையிட்டு இன்னும் சிறிது ஆழ மாகச் சிந்தித்துப்பார்த்தால் இந்த அறியாமைக் குப்பின் ஒருநீண்ட சரித்திரம் இருப்பதுதெரியவரும்.
படித்தவர்கள் இக்கால இலக்கியப் படைப் பாளிகளை ஏளனக் கண்கொண்டு பார்ப்பதற்கும், அவர்தம் இலக்கிய முயற்சிகளில் அக்கரை கொள் ளாமலிருப்பதற்கும் காரணம், இக்காலக் கல்வி முறையில் ஒரளவு தங்கியிருக்கிறது எனலாம். இவர்களது அறியாமையின் ஆணிவேர் பலவருடத் தூக்கத்தின் ஆழத்தில் பதிந்து போயிருக்கிறது என்று கூறலாம். ஆம்.
இலக்கியம் என்ருல் கம்பராமாயணம், சிலப் பதிகாரம், திருக்குறள் - மிஞ்சிப்போனுல் அக நானூறு, புறநானூறு கலித்தொகை இவ்வளவும் தான் என்ற ஒரு தப்பபிப்பிராயத்தை , அந்தக் காலம் முதல் பாடசாலை களி ல் இலக்கியம் போதித்துவரும் பண்டிதர்களும், புலவர்களும், தெரிந்தோ தெரியாமலோ மக்கள் மனதில் பதித்து விட்டிருக்கின்றனர்.
இன்றைய சர்வ கலாசாலைகள், ஆசிரியகலாசாலை கள், கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல காலம்காலமாக இங்கு நடை பெற்றுவரும் தமிழ் விழாக்கள், இலக்கிய விழாக்கள் முதலியவற்றிலும் அரைத்த மாவை அரைப்பதுபோல், கம்பராமா யணம், சிலப்பதிகாரம் திருக்குறள், முதலியன கிளிப்பிள்ளைப்பாடமாக ஒப்புவிக்கப்பட்டுவந்திருக் கின்றன. கண்ணகி சிறந்தவளா மாதவி சிறந்த வளா? கும்பகர்ணன் சிறந்தவணு விபீடணன்

Page 12
O
சிறந்தவஞ என்பன போன்ற கற்பனைச்சமர்கள் இன்று நேற்றல்ல, பல வருடங்களாக, பலநூறு இலக்கிய மேடைகளில், பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில், பல லட்சம் தமிழர்கள் மத்தி யில், மாபெரும் இலக்கியப்பண்டிதர் முதல் சாதா ரண இலக்கிய மாணவன் வரை பல்லோராலும் நடாத்தப்பட்டு வந்திருக்கின்றன. - -
ஆக, தமிழர்களுடைய இலக்கியம், அந்தக் காலத்திலும் சரி, இனி எந்தக்காலத்திலும் சரி இவ்வளவுதான் என்ற ரீதியில் ஆசிரிய - மாணவ பாடம் நடைபெற்றுக்கொண்டு வந்திருக்கிறது; நடை பெற்றும் வருகிறது.
படிப்பிலக்கியத்தில்-அதாவது இலக்கியத்தைப் படிப்பதில் - இவ்வளவு கவனம் செலுத்திய தமிழர் கள், படைப்பிலக்கியத்தில் - அதாவது இலக்கியத் தைப் படைப்பதில் ஒரு சிறிதும் கவனம் செலுத் தாமல் போனது ஏன்? மேல் நாட்டில் பண்டைக் கால ஷேக்ஸ்பியரின் படைப்புகளை எப்படி இலக் கியமாக மதிக்கிருர்களோ அதே போல் இக்கால பேர்ள். எஸ். பக்கின் படைப்புகளையும் இலக்கிய மாக மதிக்கிருர்கள் மக்கள். அந்த நிலை தமிழர் கள் மத்தியில் ஏற்படாமல் போனது ஏன்?
ஒரே காரணம் - படித்தவர்கள் அங்கு படைப் பிலக்கியத்துக்கு, மதிப்புக் கொடுக்கிருர்கள். இலக்கியப்படைப்பாளிகளுக்கு மதிப்புக் கொடுக் கிருர்கள். இக்கால இலக்கிய முயற்சிகளுக்குப் பேராதரவு தருகிருரர்கள். அதனல் பெருந்தொகை யான இலக்கியப் படைப்புகள் உருவாகின்றன. அவற்றுள் பல இலக்கிய அந்தஸ்தைப் பெறு கின்றன.
ஒரு முணுமுணுப்புக் கேட்கிறது. 'இந்தக்காலத்தில் என்ன இலக்கியம் படைக் கிருரர்கள். வெறும் குப்பையைத்தான் எழுதிக் குவிக்கிருர்கள் - பொறுப்பற்ற ஒரு அபிப்பிராயம் இது.
* 'இதெல்லாம் படிக்க நேரமில்லை!" என்று சொல்பவர்கள் மேற்படி அபிப்பிராயம் தெரிவிக்க உரித்துடையவர்களாகமாட்டார்கள். இருப்பினும் மேற்படி கூற்றை ஏற்றுக்கொண்டு பதில் இறுப் GLumtub.
கம்பரும், ஷேக்ஸ்பியரும், தாகூரும், பாரதி யும் எழுதும்போது "இலக்கியம் படைக்கிருேம்' என்று சொல்லிக்கொண்டு எழுதவில்லை. பண்டைக் காலப் புலவர்கள் பாடும்போது "இலக்கியம் இது" என்று கூறிக்கொண்டு பாடவில்லை.
காலம் அதை நிர்ணயித்தது. பயிர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டியது நமது பொறுப்பு பயன்தரும் விருட்சங்களாக அவை நிலைபெறுவது காலத்தைப் பொறுத்தது.
இக்காலப் படைப்புகளை இலக்கியம் என்று புரிந்து கொள்ள முடியாமல் சில படித்தவர்கள் மயக்கம் அடைவதற்குக் காரணம் இக்கால இலக்
கியத்தின் உருவம்தான் என்று நினைக்கிருேம். இது

மிகவும் வேடிக்கையானது. பண்டைக்காலத்தில் இலக்கியத்தின் வடிவம் செய்யுள் உருப்பெற்றிருந் தது. ஆணுல் இக்கால இலக்கியத்தின் வடிவம் சிறுகதை, நாடகம், நாவல் உருவில் அமைந்திருக் கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இதைப் புரிந்துகொள்ள முடியாமல் இக் காலப் படைப்பிலக் -கியத்தை அலட்சியப் படுத்துவதை அறியாமை
என்று கூருமல் வேறு எப்படி அழைப்பது?
மெத்தப்படித்த மேதைகளுக்கு ஒரு விஷ யத்தை இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்பு கிருேம்.
ஒரு காலத்தில், தமிழ்ப் பெருங்குடி மக்கள், ஆங்கில நாகரிகத்தில் மூழ்கி, தமிழ் மொழியை யும், தமிழ்ப்பண்பையும் அழித்துக்கொண்டிருந் தார்கள். (கணிசமான அளவு இப்போதும் அழித் துக்கொண்டிருக்கிறர்கள்) அப்போ தெ ல் லாம் அவர்கள், தமிழ்பேசுவதை அகெளரவமானதாக வும் தமிழ் உடை அணிவதை அநாகரிகமானதாக வும் கற்பித்துக்கொண்டு பெருமைப்பட்டார்கள். கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இன்றைய படைப் பிலக்கியத்தைப் பழிக்கும் தமிழர்களும் இருக் கிருர்கள்.
கதைகள் படிக்க நேரமில்லை என்றும், கதை எழுதுபவர்களைத் தெரியாகென்றும் கூறுவதைப் பெருமையாகக் கருதுபவர்கள், நம் இனத்தின் இலக்கியத்தை அழித்துக்கொண்டிருக்கிருர்கள் என் பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்.
எனவே, படித்தவர்களாகிய உங்களைக் கேட் கிருேம். ஆசிரியர்களே, மாணவர்களே, அரசாங்க உத்தியோகத்தர்களே! இக்காலப் படைப்பிலக் கியத்தை, வளர்ப்பதும், வளப்படுத்துவதும் உங் கள் கைகளிலேயே தங்கியிருக்கிறது. உங்களைத் தவிர வேறு எவரும் இப்பணியை உரிமையுடன் செய்யமுடியாது. மாலைத் தினசரிகளைப் படித்து மகி ழும் மைனர்களோ, தேசியத் தினசரிகளின் பின் பக்கத்தைத்தேடும் செக்ஸ்பித்தர்களோ, கலைக் கதம்பம், கலை யமுதம் படிக்கும் காளைகளோ, நிச்சயமாக இலக்கியத்தை வளர்க்க முடியாது. நீங்கள்தான் - நீங்கள் மட்டும்தான் அதைச் செய்ய முடியும். எனவே -
ஈழத்து எழுத்தாளர்களுக்கு மதிப்பளியுங்கள்; ஈழத்து எழுத்தாளர் படைப்புகளைத் தேடிப்படி யுங்கள், ஈழத்து இலக்கிய சஞ்சிகைகளுக்கு ஆத ரவு தாருங்கள் இக்காலப் படைப்பிலக்கியத்தை ஊக்குங்கள்; பண்டைய இலக்கியப் படைப்புகளை யிட்டு நாம் பெ ரு மை ப் ப டு வ து போல், நம் காலத்து இலக்கியப் படைப்புகளையிட்டு நம் வருங் கால சத்ததியினர் பெருமைப்படுவதற்கு வாய்ப் பளியுங்கள்; பிறமொழிகளில் புதுப்புது இலக்கியங் கள் தோன்றுவதுபோல் நம் தமிழ்மொழியிலும் புதுப்புது இலக்கியங்கள் தோன்ற வழி வகுங்கள். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் இவற்றுக்கு அப்பாலும் நமது இலக்கியத்தின் எல்லை
விரிவடைய ஒத்துழையுங்கள்!
- ஆசிரியர்.

Page 13
உருவகக் கதை,
ன்னம்பிக்கையுடன் இயங்கும் மனிதன்; உயிரோட்டத்தின் வெற்றிக்களிப்பில் இரா ணுவப் பீடுநடைபோடும் எருதுகள் பொறிமுறை களின் கணிதக் கட்டுப்பாட்டுக்குள் இ யங் கும் வண்டி. எல்லாமா கச்சேர்ந்து அசையும் உழைப்பு.
எருதுகளை மனிதன் முடுக்கிவிட, வண்டி தாளுக உருழுகிறது. மனிதனுள் தானின்றி எதுவும் இயங்காது என்ற மங்கிய மன அசைவு. அவன் கத்துகிருன்; தொண்டையில் நீரில்லை. நா வரண்டுவிட்டது. அவனுக்கு வேகம் போ தாது. கை துவரந்தடியை வீசி ஆஞ்ஞாபிக் கின்றது. "சுள்ளென்ற வேதனை, எருதுகள் பொருமுகின்றன. Y
** மனிதன் அறிவு என்ற ஒன்ருல் ஏதோ சாதிப் பதாகச் சொல்கிருர்கள்; பகுத்துணர்வதாகச் சொல்கிறர்கள். அப்படி ஒன்றுமில்லை. நாங் களும் பகுத்துணரத்தான் உணர்கிருேம். அவ னும் எங்களைப்போன்ற பெரிய ஒரு மிருகம். இரண்டு கால்களால் நடக்கவும், கைகளால் வேலை செய்யவும், வாயால் பேசவும் பழகிக் கொண்ட மிருகம். yo
வண்டிக்காரன் மனிதன். அவனுக்குப் போக வேண்டிய தூரம் வெகு தொலைவில் இருப்பதான மயக்கம். பொழுது மேற்கு வாயிடை விழுமுன் இருப்பிடம் சேரவேண்டுமென்ற அவசரம் வேறு.
**த்தா! ந்தச் சனியன்களோட கத்திக்கத்தி
த
சீவன் போகுது. நேரம்போவது இந்த இழவு களுக்கு விளங்குதில்லையே!' அவன் தனக்குள்
1962ம் ஆண்டுமுதல் எழுதிவருகிருர் வை. அஹ்ம திய அகில இலங்கைரீதியான சிறுகதைப்போட்டுயில் "முக் பரிசுபெற்றுப் பரபரப்பூட்டியது. 'வாஞெலி மஞ்சரி” கி லென்ன" என்ற சிறுகதை தெரிவு செய்யப்பட்டுள்ளது. " பமே என்ருலும், அனுபவமும் ஆற்றலும் கூடும்போது என் களை உருவாக்கமுடியும்’ என்றுகூறும் இந்த இளைஞரின் கூற் ஒரு முன்மாதிரியாகும் - ஆசிரியர்.
 

த். *காடு" என்ற இவரது சிறுகதை றுகதைப் போட்டியில் "ஓ! அதனு "இதுவரை நான் எழுதியது சொற் னலும் சிறந்த இலக்கியப் படைப்பு ]று ஏனையஇளம் எழுத்தாளர்களுக்கு
11
மு னு மு னு திதி கொள்ள, உள்ளத் தின் வேகம் கைகளைச் சொ டு க் க, இரண் டினதும் * மூட்டான் முட்களை அழுத்தி விடுகிறன்.
நான் மட்டும் இல்லை என்ருல் இந்த மாடுகள் நட்க்காது.” மனித சிந்தனை சுய வெளியில் பரவி,மறை கிறது.
பாதையின் ஏற் றத்தைக் காண்கை யில், முயற்சிக்கூக்குரல் அவனுடைய கண்டத்தி லிருந்து பீறிட், வண்டி துரிதமாகக் கீழ்நோக்கி விரைகின்றது. வண்டியின்”உயிரற்ற ஒத்துழைப் போடு, சுமையின் அழுத்தம்; வலிமை கூட்டி விடுதி கள் இழுக்கின்றன. ஏற்றம் ஓடிழறையூ. வந்து, இறக்கம் என்று பாதை கீழாகச் சரிகின்றது. அவன் நிதானிக்கின்றன், இறக்கம்! வேகத்தைக் கூட்டும் ஆவல் தூண்டப்படுகின்றது. எருதுகளின் களைப்போ, பாரவண்டியின் அழுத்தமோ பற்றிச் சிந்திக்கவியலா அவசரம். மூக்கினங்கயிறு தன்னி டத்தில் இருக்கும்போது எதுவும் நடக்காது என்ற எண்ணம்.
வண்டி இறக்கத்தில் இறங்குகின்றது. இது త్తాడిగా உற்சாகப்படுத்தும் குரல் அவனிடத்தில் ஓங்கு கின்றது. வண்டியின் பாரம் முன்னே ஊன்றுகின் றது. சமநிலை பாதிக்கப்படுகின்றது. சடார்"ரென்ற பெருத்த ஒசை. மனிதனின் கட்டுப்பாட்டை மீறி அங்கே ஏதோ நிகழ, வண்டி குடைசாய்கின்றது. எருதுகளும் மனிதனும் தடுமாற. கட்டுக்கடங் காத நிலை.
கீழே விழுந்த மனிதன் மேலே பார்க்கிருன்; வேதனையோடு முனகுகிருன் . அங்கே turrCurt தன்னைப்பார்த்து முறுவலிப்பதான பிரமை . அவன் வேதனையோடு தலை குனிகின்றன்.
ES
1965ம் ஆண்டு "தினபதி நடாத்
வை, அஹ்மத்

Page 14
12
மலரே நீ மலர்க!
一*— 以
மலரும் மலரே நீ வருக - புது
மணமொடு மகிழ்வையும் நீ தருக கவரும் காதலும் சினிமாவும் - எனும்
கசடுகள் நீங்கினை நீ வருக உலருந் தமிழ் மண் அதனிடையே ஒரு ஒளிமுகை யாயினை நீ வருக பலரும் களிகொள நீ வருக - நம் பைந்தமிழ் மலரே நீ மலர்க.
சோதனைப் புயல்பல வந்திடினும் - உன்
சுந்தர முகமலர் கோளுதே நீ தழல் மலரென நின்றிடுவாய் - எம்
நெஞ்சினில் மணத்தினை ஈந்திடுவாய் பூதனிப் பூஇது என்றிடவே - இங்கு புதுவளங் காட்டிட நீ வருவாய் போதினிற் கலைமக ரந்தந்தான் - நனி
பொலிந்திட மலரே நீ மலர் வாய்.
--சொக்கன்.
も。
|SSSSM
- வாழும்
தமிழ் வாழும் ஈழத்தில் தர தலையான தமிழேடு இல் சுமையான துன்ப மெமை 6 சுவையான ஒரு செய்தி இமையாத சிந்தனைகள் முய இரண்டினையும் துணைக்ெ உமை நீங்கள் தந்திட்டீர்
உவக்கின்ருேம் மலருக்ே
AFIDH ASHAFIDHh H
ஈழ மலர்த்தோட்டத்தில் வ இனிய மலர் வாசகவன் சூழுமலர் தேன் கவிதை க3 சுகிர்த மலர் இரண்டித நாளு மலர்ந் தன் றன்றே வ நாண் மலர்கள் போலன் வாழுமலர் மிகப் பொலிவு
வாழுமது தமிழ் வாழும்
;

86,65 göT
தவமகள் மலர்வந்தாள் !
முத்தமிழ் மணமது ஏந்திய மலரெனும் மோகனப் பெண்வந்தாள் - நான் சித்தமும் உருகித் தினந்தொறு மகிழச் செந்தமிழ்ப் பெண்வந்தாள்.
உதயத் தெழுந்ததும் ஓர்ந்திட நாளும் உஷையாய் மலர்வந்தாள் - என் இதயத் தெழுந்தழும் எண்ணத்தை நாளும் எழுதக் கவியீந்தாள்.
விழலெனும் வாழ்க்கை வாழா வண்ணம் விழுமிய கருத்தளித்தாள் - நான் வளமான வாழ்க்கை வாழும்வண்ணம்
வழியினைத் தேர்ந்தளித்தாள்.
தூயவர் போற்றும் தமிழ் மலராகச் சுந்தரி மலர்வந்தாள் - என் தா யெனும் படியாய் சரிவழிகாட்டும் தவமகள் மலர்வந்தாள்,
செல்வி தெய்வா திவாகரன்?
--سس- ][06l]] | த்தில் மிக்க லை என்ற பாட்டும் நாளில்
மலரின் தோற்றம் ற்சி வேகம் காண்டு இவ் வேள்விக்கே ாங்கள் உள்ளம் க உள்ளம் தந்தோம். ாசம் கூட்டும்
டுக் கூட்டங்கள் தகள் சிந்தும் ழ்கள் பெற்ருேம் ஆகா! ாடிப் போகும்
றி நீங்கள் தந்த சுவையும கூட
காலம் எல்லாம்.
--நா. சுப்பிரமணிய ஐயர்.
4.

Page 15
ஞ்சலி
D6Dsb5 LOGGJ
மலரே மலரே மலர்ந்தாயே - நீ! மட்டுமா நகரில் மலர்ந்தாயே உலவும் புதுமை நிறைந்தாயே - இவ் வுலகப் புகழைப் பெறுவாயே! செந்தமிழ் சிந்தும் தேன் மலரே - என் சிந்தை கவர்ந்த மென்மலரே உந்தன் வரவால் உவக்கின்றேன் - உன் ஒளியால் ஈழம் பொலிவுறுமே!! மலர்ந்த மலரில் மதுவிருக்கும் - அம் மயக்கும் எழிலில் தீதிருக்கும் அலர்ந்த உனது இதழ்களிலோ - நல் அறிவுத் தேனே மிகுந்திருக்கும் வளரும் பேணு தூக்கிகளை - நீ! வாரி அணைத்து மகிழ்கின்ருய் களமாய்ச் சூழ்ந்த அறிஞருளே - எமைக்
கட்டிக் காப்பாய்! தேன் மலரே!!
எஸ். ஹபீப்பு முகம்மது,
qilh
IIIIIIII $]]|
S122
ED
:
தீ தீ
گی
山6UT”ö 6L
தினையின் மாவொடு ெ கலந்த பைந்தமிழ் கவி
புனைந்திடும் வேட்கை
கவிதை யாத்திடக் க( நினைவெனும் துணையெ கனவெனும் சாலையில்
பவனி - செல், வேளைய கண்டேன் நின்றேன் 4
மங்கை நீ யாரென ம அங்கவள் ஊரதை அட ஐயனே அதுவா 'நடு திங்களில் ஒரு முறை
தீந்தமிழ்க் கவிதை; க இங்கிதமான கட்டுரை பொங்குவேன் என்ருள்
 
 

13
மணங்கமழ்க மலரே!
கருவாகிக் உருவாகி கமழ்ந்து நின்ருள் திருவாகி உருவாகித் திகழ்ந்து நின்ருள் பெரிதாக இனிதாகப் பிறர் வியக்க பெருமை தரும் மலரென்ற பெயரைக்
கொண்டாள்? அங்கமெலாம் தேன்சுரந்து அமுதமாக நங்கையவள் மலரிடத்து கொண்டேன்
m காதல் இங்கு சுவை அறிந்திட்ட ஈழத்தோர்கள் ஈங்கு "மலர் நுகர்ந்திடுவர் எப்போதுமே.
தென்றலென மலர்ந்திட்ட மலர் இதழை தேடிவரும் மக்களவர் பலபேராக நன்கு மலர் தேனிதழை சுவைக்கவேதான் நானிலத்தில் புதுவிருந்து அளிப்பார்
Go D. உருண்டுசெல்லும் நாட்களிலே உறுதியோடு புரண்டுவரும் மாதஇதழ் மலரதுவும் . திரண்டசுமை இலக்கியமாய்திகழ்ந்து நன்கு தீர்க்காயுசாய் மனம் கமழ்ந்து வாழ்க!
--கேயன் ராஜ், ஆல்கரனேயா,
22 SR
S
ன்னி வாழ்க !
தவிட்டாச் செந்தேன் தைப் பாகு
பொங்கி எழுந்ததால் நப்பொருள் தேடி ாடு நிம்மதிக் குழந்தையும்
கற்பனை பூர்தியில் பில் பாதையில் ஓர் பெண் கதை கேட்டிட்டேன்.
லரென மொழிந்தாள் டியேன் கேட்டேன் நிலை" என்ருள் வருவேன், தேன் கமழ் தையொடு நாடகம்
இவையெலாம் 1. புதுமைப் பெண்ணே!
--செ. கந்தசாமி, !

Page 16
14
ஒரு அனுபவம்
வில்லனுக்கு ஒரு வில்லன்
நானும் எனது மகளும் இரண்டு வயது மகன் ராஜனும் "அடிமைப்பெண்’ படம் பார்ப்பதற் காகச் சென்றிருந்தோம். ஒரே கூட்டம் ஆரவாரம் பேரிரைச்சல்; எங்களுக்குமுன் ரிப் ரொ ப் பா க ஆடை அணிந்த இரண்டு வாலிபர்கள் உட்கார்ந் திருந்தார்கள். அவர்களுடைய பார்வை எனக்குப் பிடிக்கவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டிருந்தேன். எனது சின்ன மகன் ராஜன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் எம். ஜி. ஆர். அசோகனது ஆட்களோடு சண்டைபோடும் சண் டைக்காட்சி வந்தது. கேட்கவேண்டுமா? அடியும் உதையும் குத்தும் ஏக அமர்க்களப்பட்டது. இந்த நேரத்தில் என் மடியில் இருந்த என் மகன் ராஜன் எழும்பிநின்று முன்னல் இருந்த ரிப்ரொப் ஆசாமி களை "சண்டே” “சண்டே” என்று சொல்லி அவர் கள் தலைமயிரையும் சேட்டையும் பிடித்து இழுத்து சண்டைபோடத் தொடங்கிவிட்டான். எனக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. சி ரி ப்பை அடக்கிக்கொண்டு 'ராஜா போதும்டா சண்டை" என்றேன். பலன் இல்லை. பட த் தி லே சண்டை முடியுமட்டும் என்மகன் அவர்களோடு சண்டை போட்டான். அதன்பின் முன்னலிருந்த ரிப்ரொப் ஆசாமிகள் எங்கள் பக்கம் திரும்பவே இல்லை. குனிந்ததலை நிமிரா ம ல் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த அனுபவத்தை நான் மறக்கவேமுடியாது.
திருமதி. எஸ். பேரின்பராசா,
வந்தாறுமூலை, செங்கலடி.
一洛一
தமிழ்ச்சுவை
சமீபத்தில் அடம்பன் திறந்த வெளி அரங்கில் அடம்பன் பெரியோரால் எடுக்கப்பட்ட வள்ளுவர் விழாவிற்குச் சென்றிருந்தேன். பேச்சாளர் ஒருவர் திருக்குறள் "அ" வெனும் எழுத்தில் தொடங்கின்" என்ற இறுதிக் குறளில் முடிவடைகிறது. அகரம் தமிழெழுத்துக்களின் முதலெழுத்து: “ன் இறுதி யெழுத்து' என்று தன் சொற்பொழிவின் போது குறிப்பிட்டார்.
அடுத்ததாக எழுந்த வித்வான் நீ. மே. யோ. வேதநாயகம் B. A. அவர்கள் தமது சொற்பொழி வின் போது:-
“திருவள்ளுவருக்கு விழாவெடுக்கும் இவ்வூரும் ஒரு விதத்தில் குறளோடு தொடர்புடையதுதான். அகரத்தில் தொடங்கி 'ன்' என முடிவடைந்த திருக் குறள் போலவே "அ"தொடங்கின்" என முடிவடை யும் இவ்வூர் அடம்பன் என்று கூறியதும் கரகோ ஷம் வானேன்ட்டியது. ஆங்கு குழுமியிருந்த பல்

லாயிரக்கணக்கான பெருமக்கள் ஆரவாரித்து மகிழ் வைத் தெரிவித்தனர். தமிழறிஞரின் கருத்தாழம் தமிழோடு சேர்ந்து ஒளிவீசுகையில் மகிழா தார் யார்? இன்பமான ஒரு அனுபவம் இதுவல்லவா?
இராஜம், அடம்பன்"
-ܗܳܐ
AS
- உதவி நான் அந்த பஸ்வண்டியில் பிரவேசித்தபோது பல ஆசனங்கள் காலியாகவிருந்தன. சில ஆசனங்கள் பாதி காலியாகவும் இருந்தன. நான், பாதி காவி யாகவிருந்த ஒர் ஆசனத்தில் வேருேர் ஆடவருடன் பகிர்ந்து அமர்ந்துகொண்டேன்.
பாதி காலியாகவுள்ள ஓர் ஆசனத்தில் தனி யாக ஓர் பெண் அமர்ந்திருந்தாள். கழுத்தில் மின் னிய மாங்கல்யம் அவள் மணமானவள் எனக் கூறி யது; "பாவம் தனிமையில் பிரயாணஞ் செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதாக்கும் என மனதில் பச்சாதாபப்பட்டுக்கொண்டேன்.
பக்கவாட்டிலிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த ஆசாமி ஒருவன் அடிக்கடி அம்மாதை ஒரக்கண் ணுல் நோட்டம் விடுவதை நான் கவனியாதது போல் கவனித்துக்கொண்டேன். பஸ் வண்டி அடுத்த தரிப்பில் நின்றதும் அதில் ஏறிய வாலிபன் ஒருவன் காலியான வேறு பல ஆசனங்கள் இருந் தும், பாதி காலியாயிருந்த அப்பெண்ணிருந்த ஆச னத்தில் பண்பில்லாமல் அமர்ந்து கொண்டான்.
ஏற்கனவே அப்பெண்மீது கண்வைத்துக் கொண் டிருந்தவனின் பார்வை "ச்சே எனக்குக் கிடைத் திருக்கக்கூடிய ஓர் சந்தர்ப்பம் அந்த வாலிபனுக் குக் கிடைத்துவிட்டதே' எனப் பொருமை கொள் வது போலிருந்தது.
வேருேர் தரிப்பில் பஸ்வண்டி நின்றதும், அப் பெண்ணுடன் அமர்ந்திருந்த வாலிபன் இறங்கிப் போய்விட்டான். அதை எதிர்பார்த்துக் கொண் டிருந்தவன்போலிருந்த மற்ற ஆசாமி எழுந்து அப் பெண்ணின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
எனது மனம் குமுறியது! "இந்தச் சுதந்திர நாட்டிலே ஒரு மணமான பெண் சுதந்திரமாக பஸ் ளில் பிரயாணஞ் செய்ய முடிவதில்லை" என்று பிர யாணிகளுக்குக் கேட்கக்கூடியவாறு கூறிவிட்டேன். *நீர் உம்முடைய அலுவலைப் பாரும்' என்ருன் அவன். ஆத்திரமடைந்த நான் கையால் பதிலிறுத் தேன். இருவரும் கைகளால் பேசிக்கொண்டோம். அந்தப் பெண் தனக்கு அருகில் சென்றிருந்த ஆணின் கைகளைப் பிடித்தவாறு 'இது என்னங்கோ மரி யாதை' என்று கெஞ்சினுள்!
அதன் பிறகுதான் யாவருக்கும் விஷயம் புரிய வைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் கணவன் மனைவி. விட்டிலிருந்து புறப்படும்போது எற்பட்ட அற்ப கருத்து வேறுபாடு காரணமாக, பஸ்வண்டி யில் வெவ்வேறு ஆசனத்தில் அமர்ந்துவிட்டார்கள். அவ்வளவுதான்!
பி. தேவேந்திரன், 34, ஈஸ்வரி வீதி, கொழும்பு-6. (ஈழத்துநூல் அன்பளிப்புப்பெறும் துணுக்கு-ஆசிரியர்.)

Page 17
பிழையே! மழையே! பெய்யாதே! மறந்த உணர்வை மீட்டாதே! நிலவே! நிலவே! எறியாதே! நெஞ்சில் அவளைத் தீட்டாதே!
காற்றே! காற்றே! வீசாதே! காதல் உணர்வைப் பேசாதே! வெயிலே! வெயிலே! காயாதே! வெந்த நெஞ்சில் தாவாதே!
கடலே! கடலே! இரையாதே! கதையை இன்னும் உரையாதே! அலையே! அலையே! பொங்காதே! ஆசை அலையை எழுப்பாதே!
S
 
 

குயிலே! குயிலே! கூவாதே! குரலால் நெஞ்சைக் கீருதே! மயிலே மயிலே! ஆடாதே! மறந்த நினைவைச் சூடாதே!
மலரே மலரே! விரியாதே!
மனதில் முகத்தைப பதியாதே. முகிலே முகிலே! கறுக்காதே! முடியை எனக்குக் காட்டாதே!
தளிரே! தளிர்ே ஆடர்தே! தையல் அசைவைக் காட்டர்தே! குளிரே குளிர்ே வாட்டாதே! கோபத் தைநீ ஊட்டர்தே!
PPPPPPRRS

Page 18
16,
மட்டக்களப்பு
()
696656OL இலக்கணம்
செ ல்லின் வடிவம் மாற்றம் பெறப்பெற
அதன் இலக்கணமும் மாற்றம் பெறு
கிறது. அதற்கு இயைய அதன் பொருளும் மாறு படுகிறது. ஆகவே காலத்துக்குக்காலம் சொல்லின் வடிவத்தையும், அதன் இலக்கணத்தையும், பொரு ளையும் தொகுத்துவைக்க வேண்டும். மேல்நாட்டு மொழிகளைப் பொறுத்து இத்தகைய தொகுப்பு வேலை கால த் துக்கு க் காலம் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றது. ஆங்கில மொழியைப் பொறுத்து இத்தொகுப்புவேலை ஒழுங்காகவே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஆல்ை உலகத்தின் மூத்த முதல் மொழியான தமிழைப்பொறுத்தோ இவ்வாறன தொகுப்புவேலை இன்னும் கேள்விக் குறியாகவே இருந்து கொண்டிருக்கிறது.
தமிழில் எழுந்துள்ள கல்வெட்டுகளை நோக்கி ஞல், அவைகளில் காலத்துக்கேற்றவாறு மொழி வளம் மாறுபட்டிருக்கக் காணமுடிகிறது. காரணம், கல்வெட்டுகள் எந்ஜதந்தக் காலத்தில் பொறிக்கப் பட்டனவோ, அந்திந்தக் காலத்துத் தமிழ்வளம் கல்வெட்டுகளில் ஆட்சி செலுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சங்ககாலத்து வழக்கு மொழியினைச் சங்க காலத்து இலக்கியங்களில் அவ்வளவாகக் காணக் கூடியதாக இல்லை. ஆனல் சங்கம் மருவிய காலத் தில் எழுந்த கலித்தொகையில், இடையிடையே வழக்குநடை இடம்பெற்றிருப்பதைக் காணமுடி கிறது. இன்று நாம் கலித்தொகையைப்படிக்கும் பொழுது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வழக்குநடையினைக் காணுந் தோறும் உள்ளம் மகிழ்வடைகிறது.
தொல்காப்பியனுர் வாழ்ந்த காலத்தில் சேரி மொழியென வழக்குநடை வழங்கப்பெற்றிருக் கிறது. உரையாசிரியர் சேரி மொழியினைப் பாடி
를 의i·

மா ற் ற ங் கள் எனக் குறிப்பிட்டிருக்கிருர், நாம் இதனை வசனிக்கும் ரீதி எனக் கொள்ளலாம். சேரி மொழி இடவேறு பாட்டினலும், குழு வேறுபாட் டினலும் வேறுபடும். தொல்காப்பியர், சேரி மொழியை,
'சேரி மொழியான் செவ்விதிற்கிளந் தோதல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப் புலனுணர்ந்தோரே' என்று சூத்திரம் செய்துள்ளார். இச்சூத்திரத் தினுக்கு உரை ஆசிரியர்,
சேரி மொழியென்பது பாடிமாற்றங்கள். அவற் ருனே செவ்விதாகக்கூறி ஆராய்ந்து காணு மைப் பொருட்டொடரானே கொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர் என்றவாறு. அவை விளக்கத் தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வேண்டுறைச் செய்யுள் போல்வனவென்பது கண்டுகொள்க** என்று உரை எழுதியுள்ளார்.
கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட் டினைச் செந்துரைவகையென்பார்கள் சேரிமொழிச் செய்யுளினை வெண்டுறை வகையென்பார்கள். இத னைச் செந்தமிழ் கொடுந்தமிழ் என சிறப்பாகவே சொல்லிவிடலாம்.
மட்டக்களப்பு வழக்குநடை இலக்கணம் வகுத் துக் காண்பதற்கு முன்னர், மட்டக்களப்பு வழக்கு நடையிலே கா’ அசைச் சொல் முக்கியமாக இடம் பெறுகிறது. சங்க காலத்திலே வழக்கில் இருந்த கா அசை இன்றும் மட்டக்களப்பு வழக்கு நடையில் இருந்து கொண்டிருக்கிறதென்பதை நோக்குங்கால், நம்மவர் அனைவரும் பெருமை கொள்ளலாம். ஆமாம் பெருமைக்கும் புகழுக்கும் உரித்தான காவின் இலக்கண அமைதிகாண்போம்.
it, g5 it பிற பிறக்கு அரோபோமாது என வருசம் ஆயேழி சொல்லும் அசை நிலைக்கிழவி என்பது தொல் காப்பியச் சூத்திரம் r
தொல்காப்பியரது காலத்திலே ஏழு சொற் களே அசைநிலைக் கிழவியாக இருந்தன. நன்னூல்
GBTLS).

Page 19
ஆசிரியர் பவணந்தியருடைய காலத்திலே அசை நிலைக் கிழவி இருபது சொற்களாக வளர்ந்து விட்
-6.
யா கா பிற பிறக்கரோ போமாதிகுஞ்
சின் குரையோரும் போலு மிருந்திட்
டன்றந் தாந்தான் கின்றுநின் றசைமொழி என்பது நன்னூல் சூத்திரம்
" தொல் காப்பியரது காலத்திலும், பவணந்தி 'விேடய காலத்திலும் கா அசைச் சொல்லாக இருந்ததென்பது தெளிவாகிறது. சங்ககாலம் முதல் வழக்கில் இருந்து வந்த கா அசைச்சொல் தமிழ் கூறும் நல்லுலகில் இன்று வழக்கொழிந்து விட் டது. ஆனல் மட்டக்களப்புத் தமிழகத்தில் மட் ந்ெதான் வழக்கில் இருப்பது பழமைக்கு ஓர் எடுத் துக் காட்டாகிறது.
*"வழக்கு நடையினைப் பெண்கள்தான் அதிக மாகக் கையாள்வார்கள். இதனல் ஆண்கள் கை யாள்வதில்லை யென்பது பொருளல்ல இதனைக் கவி ஞன் ஒருவன் ‘ஆடவர் தோளிலுங்கா அரிவை யர் நாவிலுங்கா' என்று அழகாகக் கூறியுள் வரை,
ஆண்கள் பாற்குடங்கள், தயிர் முட்டிகள் என் பவற்றை உறியில் வைத்து காத்தடியின் இரு முனை களிலும் வைத்துக்கட்டித் தோளில் எடுத்துக் கொண்டு செல்வார்கள். பெண்கள் வார்த்தை யாடும் பொழுது, எலக்கா, ஏங்கா, என்ன கா, வாகா, இரிகா, போகா, போயிற்றுவாகா இவ் வாரு கக் காவை அசைத்துப் பேசுவார்கள். மட் டக்களப்புக் கிராமியக் கவிதைகளிலும் இத்தகைய கா: இடம் பெறுவதைக் காணலாம்.
புள்ளலெக்கா புள்ள லெக்கா
உன்ரபுருசனெங்க போனதுகா கல்லூாட்டுத் திண்ணையில
கதபழகப் போனதுகா. ஓர் கவிதையிலே எத்தனையோ கா அசை இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.
இனி மட்டக்களப்பு வழக்கு நடை இலக் கணத்தை நோக்குவோம். வழக்குமொழி எழுத்
துத் தொகையிலும், மாத்திரையிலும் சுருங்கி நடக்கும்.
தேவை இல்லை - தேவல்ல வாருங்கள் ா வாங்க கேட்கிருர் - கேக்கார்
செந்தமிழ் டகரம் கொடுந்தமிழிலே றகரமாதலும், செந்தமிழ் நகரம் கொடுந்தமிழிலே தகரம் மகரம் ஆதலும், செந்தமிழ் தகரம் கொடுந்தமிழிலே சக ரம் ஆதலும் மட்டக்களப்பு வழக்கு நடைக்கு இலக்கணமாகும். இதற்கு உதாரணமாக

17
போய்விட்டது = போயிற்றுது
s = போயித்து
- போச்சு என ஆகும். இன்னும், வெற்றிலை = வெத்திலை
விற்று == வித்து வைத்த == வைச்ச
எனவும் வழக்கு நடையாகிறது,
உயிர்ப்பின்னே இடையின வொற்றின்பின்னே 5. ருகிற உயிரேறிய ககரம் வ ழ க் கு நடையில் கெடும். கெட்டபின் முன்னின்ற உயிர் நீளுதலு முண்டு
அலைகிருய் - அலைருய் மெல்லொற்றின் பின்வரும் சகரம் வடமொழி வருக்கத்து மூன்றும் எழுத்தின் ஒசைபெறும்
என்கிறர்கள் - என்கிருங்க போய்விடுங்கள் - போங்க
வருமொழி வல்லொற்றுக்கு இனமாக ஈற்றில் நின்ற மெல்லொற்றுத்திரியும்
பெண்பிள்ளை == GounTub 16mr ழகரம் ளகரமாதலும் வழக்காகும்
வாழைப்பழம் = வாளப்பளம்
குற்றியலுகரம் வல்லொற்றுார்ந்து மொழியீற்றில் வருவது செந்தமிழ்இலக்கணவிதி. கொடுந்தமிழிலே குற்றிய லுகரம் மெல்லொற்று இடையொற்று ஊர்ந்து ஈற்றில் வருதலும், வல்லொற்றுார்ந்து இடையில் வருதலும் உண்டு.
வியாபாரிகளே!
ஈழத்திலே, மிகச் சிறப்பான முறையில் வெளிவரும் சஞ்சிகை ** மலர்." நிறைந்த விளம்பரப் பல னைப் பெற, நாடெங்கும் விநியோக மாகும் 'மலர்' சஞ்சிகையில் விளம் பரம் செய்யுங்கள். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உங்கள் பங்கைச் செய் யுங்கள்.

Page 20
18
ஐயர் = ஐயரு a In'tf = ато, நெல் - நெல்லு கள் - கள்ளு பெண் = பெண்ணு
என மட்டக்களப்பு வழக்கு நடையாகிறது.
மொழிமுதல் வகரம் உகரமாதலுண்டு.
வீடு = am G. இகரம் எகரமாக திரிதலுண்டு.
நிறைய = நெறைய ஐ. எய் ஆதலும் வழக்கிலுண்டு
வைகிருர் - வெய்கிருர்
எகரம் ஒகரமாதல் வழக்காகிறது
பெண்பிள்ளை - பொம்பிள
மட்டக்களப்பு வழக்குமொழி இலக்கணமாக ஒரு சில சொற்களை இதுவரை நோக்கினுேம், இச் சொற்களிள் வழக்கு நடை மட்டக்களப்புத் தமி ழகத்தில்தான் இவ்வாறு வழக்காகிறது. ஆனல் யாழ்ப்பாணத்திலோ இவை முற்றிலும் மாறு பட்டதாகிறது.
தொல்காப்பியர் கூறியதுபோல், பின்னர் வந்த பவணந்தியார் கூறியதுபோல், அசைச் சொற்களில் எத்தனையோ இன்று வழக்கொழிந்து விட்டன. அந்த வகையிலே நோக்கினுல் இருபதாம் நூற் முண்டின் வழக்கு நடை இருபத்தைந்தாம் நூற் முண்டில் நிச்சயமாக வேறுபடும். ஆகவே சொல் லின் வடிவம் மாற்றம் பெறும் கால எல்லையிலே அவைகளைத் தொகுத்தல் தமிழ் அறிஞர்களது கட
சங்ககாலத்திலே புலவர்கள் காலத்துக்குக்காலம் கூடித்தமிழை அழகுபடுத்தினர்கள். தமிழை இனிக்கும் தன்மையுடையதாக்கினர்கள். இனிக்கும் தன்மையற்ற சொற்களை அகற்றி, இனிக்கும் தன் மையுள்ள சொற்களை ஆக்கி அவற்றினுக்கு இலக் கணமும் கண்டார்கள்.
முதல், இடை, கடையென்ற முச்சங்கங்கள் ஒழிந்த பின்னர் தமிழை அழகுபடுத்த வென்று நல்ல சங்கங்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தோன்ற வேயில்லை. இருந்தாலும் இருபதாம் நூற்ருண்டில் உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் ஒன்றினை நிறுவ தமிழக அரசு முன்வந்திருக்கிறது. இந்தக்கழக மாதல் தமிழை இனிக்கும் தன்மையுடையதாக்க ஆராயுமென்று நம்புவோமாக.
மட்டக்களப்பு வழக்கு நடை இலக்கணத் தினுக்கு உதாரணங்கள் சிலவற்றைத்தான் இது வரை கூறினேன். இதனை விரித்துச் சென்ருல் ஏராள மான சொற் கூட்டங்களைக் காணலாம். ஆகவே மட்டக்களப்பு வழக்கு நடை இலக்கணத்தை ஆக்க, மட்டக்களப்பு அறிஞர்கள் முன்வரவேண் டும்.

போதும்!
காதல் கடுகளவும்
கன்னி உனக்குண்டேல்
ஏதடியோ இந்த நிலை
எந்தனுக்கு?--காதுவரை
நீண்ட நினது விழி
நீர்மையினல் யானுறுதல்
"தூண்டிற் படுமீன் துயர்!"
அஞ்சுகமே உந்தன்
அழகுமொழி கேட்கவென நெஞ்சம் அழியும்
நெடுநாளாய்-கொஞ்சமெனுங் கூசாமல் என்மேற்
குறிபார்த்து வாள்விழியை வீசுவது போதும் விடு!
கன்னக் குழிவினைநீ
காட்டாதே, என்மனத்து
எண்ணத்தை வீணய்
எழுப்பாதே - புன்முறுவல்
செய்யும் இதழ் காட்டிச்
செல்லாதே கண்ணம்பு,
எய்யாதே என்மேல் இனி !
- முதல்வனுர்,

Page 21
அழகியாம்; அகிலங் காணு
அற்புதக் கன்னி நானும் விழிகளின் வீச்சாற் கோடி
வித்தைகள் காட்டு வேணும்; ஒளிமுகம் மதியாம்; என்றன்
ஒடியிடை கொடியாம்; போதை விளையுதாம் என்னுல்; நானேர்
விண்ணுல கத்துப் பெண்ணும்! என்ருெரு கோடி வார்த்தை
இயம்பிடு மிந்தக் கூட்டம் என்னிடத் தினிலோர் உள்ளம் இருப்பதை உணர வில்லை! மென்னுடல் அழகிற் சொக்கி
மெச்சிடும் மாந்தர்க் கென்ற எண்ணமீ தினிலே யுள்ள
எழுச்சிகள் புரிய வில்லை! காண்பவ ரெல்லாம் என்னைக்
கண்களால் விழுங்கு கின்ருர் மூண்டிடும் வெறியோ டென்னை
மோதிடும் விழிகள் கோடி ஆண்டவன் படைப்பிற் காட்சிப்
பொருளெனப் பிறந்தேனே நான்? காண்பவர் மயங்கும் மேனிக்
கவர்ச்சியே என்றன் துன்பம்
காதலாம் என்மே லென்றே
கடிதமும் பலபேர் போட்டா பாதையில் நின்று, பார்த்துப்
பல்லிளித் தார்கள்; உள்ளப் போதை தாங் காது முன்னும்
பின்னுமாய்த் திரிவுற் ருர்கள் வேதனை யன்றி நெஞ்சில்
வேறெதை இவர்கள் தந்தா
திருமணம் பேசி வந்து
தினந்தினம் தரகர் தொல்லை! பருவமும் அழகும் நல்கும்
துயரினுக் கெல்லை இல்லை! ஒருவரும் உணரார் என்றன்
உளத்திலே இலட்சியத் தீ எரிவதை உலகே, நானேர்
*அழகிய பிணமாய் வாழேன்!!
- மாவை. தி. நீத்தியா
இளங்கவிஞர் மாவை நித்தியானந்தனின் கவிதைக வானெலியிலும் கவியரங்குகள் பலவற்றிலும் இடம் பெற்று கழகத்தை உருவாக்க உதவியதோடு அதன் முதலாவது பெ அதன் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது கட் கல்லூரியில் பொறியியல் மாணவனகப் பயிற்சி பெறுகிருர்,

Iந்தன்.
ஈழத்துப் பத்திரிகைகளிலும், ள்ளன. யாழ். இலக்கிய நண்பர் துச் செயலாளராகவும் பின்னர்
ப்ெபெத்தை தொழில் நுட்பக்
-ஆசிரியர்.
19

Page 22
20
நினைவு தினக் கட்டுரை: கவிஞர் அல்லாமா இக்பால்
யூ. எல். தாவூத் பி.ஏ.
பரத நாடு ஈன்றெடுத்த தலைசிறந்த மகா கவிகளுள் ஒருவராகிய அல்லாமா முஹம்மது இக் பால் உலகம் கண்ட கவிஞரேறுகளுள் ஒருவராக மதிக்கப்படுகிருர், மற்றவர்கள் செல்லும் பாதை யிற் செல்லாது புதுப்பாதையிற் செல்பவனே-ஆற் றின் போக்கோடு தானும் ஒரு நீர்த்துளியாகச் சேர்ந்து ஓடாது ஆற்றின் போக்கையே வேறு திசையில் திருப்பி விடுபவனே-மகா கவியாக மதிக் கப்படுகிருன். இயற்கை எழிலையும், செயற்கை இன் பத்தையும் வர்ணித்து மன நிறைவு காண்பவன் சிறந்த கவிஞன் அல்லன். அதுபோல மக்களின் தீய உணர்வுகளுக்குத் தீனி போடும் கவிதைகளைப் பாடு பவனும் கவிஞன் அல்லன் 'உள்ளத்தில் உண்மை யொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்? என்பதற்கியைய வாழ்ந்து தனக்கு விருப்பமான ஒன்றைக் கவிதையாக்கி இன்பம் காண்பவன். கவி தையை மனித சமுகத்தை உயர்த்தும் ஏணியாகப் பயன்படுத்துபவன்உைண்மைக் கவிஞணுவான். இந்த இலக்கணத்திற்கு விளக்கமாக வாழ்ந்து மகா கவி யாக ஒளிர்ந்தவரே அல்லாமா இக்பால்.
l. 660. 595
இலங்கை முஸ்லிம் எ யுள்ள ஜனுப். யூ. எல். தாவூ: பாடு கொண்டவர். இஸ்லாமி ஒலிபரப்பாகியுள்ளன. "முஸ்லி மொழி பெயர்ப்பு நூலையும் இ

உர்து இலக்கியத்தின் ஒப்பற்ற மணிச்சுடராக மிளிரும் இக்பால் கற்பனைச் செறிவும் கருத்து நிறைவும் மிக்க கவிதைக் களஞ்சியமாக மதிக்கப் படுகிருர்.
இக்பால், இதய பீடத்தில் குமிழியிடும் இனிய உணர்ச்சிகளையும், புதுப்புதுக் கருத்துக்களையும் மனித வாழ்வின் வளப்பத்திற்கு ஏற்ற மாண்புறு இலட்சியங்களையும் கவிதையாக வடித்தெடுத்தவர். இக்பாலின் இலட்சியச் சிருஷ்டிகள் இலக்கண வரப் பிற்குட்பட்ட வெறும் எலும்புக் கூடுகளாக அல் லாமல் உயிருள்ளனவாக அவரது உள்ளத் துடிப் புகளைத் தாங்கியுள்ள வாகனங்களாக ஒளிர்கின் றன.
இக்பாலின் சிருஷ்டிகள் கால வெள்ளத்தால்
அடித்துச் செல்லப்படாது என்றும் வாழும் சிரஞ்
சீவித்தன்மை வாய்ந்தனவாக மிளிர்கின்றன. இத ஞலேதான் இக்பாலின் நினைவு 'பொய்யாய், பழங் கதையாய், கனவாய் மெல்ல மறையாது கலை யுலகில் நீக்கமற நிலைத்து நிற்கின்றது.
அல்லாமா இக்பால் ஆயிரக்கணக்கான கவிதை களை இயற்றினர். அன்பு, காதல், கோபம், சோகம், பயம், வீரம் முதலிய மனித உணர்வுகளைப் பாடி ஞர். இன்றைய முஸ்லிம்கள், தற்காலப் பெண் கள், கல்விமுறை, அரசியல், மதம், ஆத்மா முத லியன பற்றியும் கவிதைகள் எழுதினர். ஒரு காலத்தில் வாகை பெற்று விளங்கிய முஸ்லிம் சமுதாயம் இன்று வீழ்ச்சிக் குழியில் வீழ்ந்து கிடக் கும் அவல நிலையைச் சித்தரித்தார். இக்பால் சிறிய கவிதைகளை எழுதினர். நீண்ட பாடல்களை ஆக் கினர். அழியாத்தன்மை பெற்ற அமர காவியமும் படைத்தார். உலோகாயதத்தைப் பாடினர். ஆத் மீக வாழ்க்கையை ஆராய்ந்தார். சமுதாய நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று கர்ஜித் தார். பொருளாதாரம், அந்தஸ்து என்பன சிருஷ் டித்துள்ள எல்லைக் கோடுகளால் மக்களின் ஒரு சாரார் வாழ்க்கையிற் பின்தள்ளப்பட்டு கவலை யுறும் துயரக்காட்சியைச் சித்திரித்தார். இக்பால் வெறும் நீதி போதகராக விளங்காது ஒர் இலட்சிய வாழ்க்கைப் போக்கை உருவாக்குவதற்கு முயன் ருர், சமுகத்தின் புரையோடிப் புண்செய்யும் குறை களை எடுத்துக் காட்டி வாழும் முறைமைகளை எடுத் தோதினர்.
ஆரம்பகாலத்தில் பல்வேறு பொருள்களைக் கரு வாகக் கொண்டு கவிதை புனைந்த இக்பால் தனது வாழ்க்கையின் கடைசிப் பகுதியில் முஸ்லிம்களை மையமாக வைத்தே கவிதைகளை யாத்தார்.
ழத்தாளர் சங்கத்தின் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றி
5.
கவிதை இலக்கியம் இஸ்லாம் ஆகிய துறைகளில் மிகவும் ஈடு இலக்கியம் பற்றிய இவரது பேச்சுகள் பல வானெலியில்
ம் கதைமலர்' என்னும் தொகுப்புநூலையும் "மாநபி** என்னும் வர் வெளியிட்டுள்ளார். - ஆசிரியர்.

Page 23
மத்திய காலத்தில் அவனி எங்கும் பீடுநடை போட்ட முஸ்லிம் சமுதாயம் தாழ்மையுற்றுக் கிடப்பதற்கும், இஸ்லாமிய சாம்ராச்சியங்கள் சரிந்து வீழ்ந்தமைக்கும் உரிய காரணங்களை இஸ் லாமிய வரலாற்றிலிருந்தே எடுத்துக் காட்டினர். கிரேக்க தத்துவங்கள் இஸ்லாத்துடன் பிணைந்த போது முஸ்லிம்களைப் பலவீனர்களாக்கிய கிரேக்க அறிஞர்களின் கருத்துக்களை முஸ்லிம் கவிஞர்கள் தங்கள் கவிதைகளிற் குழைத்து மக்களிடையே பரப்பியதே இஸ்லாமிய தத்துவமும் கருத்துக்களும் மாறுபடக் காரணம் என்பதைத் தெளிவுற விளக் கினர். அத்துடன் இற்றைநாள் இஸ்லாமிய சமு தாயம் தனது மார்க்க நெறிகளிளிலிருந்து பிறழ்ந்து லோகாயத வாழ்க்கையில் அளவு கடந்து நம் பிக்கை வைத்ததும் முஸ்லிம்களுடைய சீரழிவுக்கு ஒருகாரணம் என்ற கருத்தும் அவரது கவிதைகளில் இழையோடுகிறது.
இக்பால் இஸ்லாமிய நாகரிகச் சிறப்பை உல கிற்கு எடுத்துரைத்தார். முஸ்லிம்களது வரலாற் றுச் சிறப்பியல்புகளையும், உலக சரித்திரத்தில் முஸ் லிம்கள் ஈட்டிய வெற்றிகளையும், சாதனைகளையும் பற்றி எழுதினர். ஒரு காலக் கட்டத்தில் வாழ்க் கையின் சிகரத்தில் - புகழேணியின் உச்சத்தில் - வாழ்ந்து வான்கபெற்று விளங்கிய முஸ்லிம்களின் பெருமையினைப் பறைசாற்றினர். அந்தலுஸ் என்று அழைக்கப்பட்ட ஸ்பெயின் நாடு முதல் பல்வேறு தேசங்களை முஸ்லிம்கள் கட்டியாண்ட கதையை எடுத்துக் காட்டினர். இறை நெறியைப் பரப்பு வதற்காக உயிரைத் திரணமென நினைத்து மலை களையும், மாநதிகளையும், கடலையும், காடுகளையும் கடந்து தொண்டு புரிந்த முஸ்லிம்கள் கட்டியாண்ட இஸ்லாமிய சாம்ராச்சியங்கள் காலவரையில் வீழ்ச்சி யடைந்து முஸ்லிம் சமுதாயம் சீரழிந்த சோகக் கதையைப் படம்பிடித்துக் காட்டினர்.
இவ்வாறு இக்பால் முஸ்லிம்களை மையமாக வைத்துக் கவிதை எழுதியதையிட்டு முஸ்லிமல்லா தார் அவரைக் குறைகூற முடியாது.
ஒரு கலைஞன் தனது சமுதாய நிலையினல் பாதிக் கப்படுகிருர். அவன் தனது சூழலையும் தான் பிணைந் துள்ள சமுதாயத்தையும் மறந்து அல்லது புறக் கணித்து விட்டு இலக்கியச் சிருஷ்டிகள் ஆக்க முயல
Lon 6ör.
இவ்விடத்தில் சர்தேஜ் பஹதூர்ஸ்ப்ரூ என் பார் இக்பாலைப்பற்றிக் கூறும் கருத்தை நோக்கு தல் சாலப்பொருத்தமாகும். அவர் கருத்து இது.
"அல்லாமா இக்பால் இஸ்லாமியதத்துவ ஞானத்தையும் இஸ்லாமிய கலைப்பண்பையும் முஸ் லிம்களது தீரவீரச் செயல்களையும் பற்றி எழுதி யிருக்கிருர் என்பது உண்மையே. ஆனல் மில்டனை கிறிஸ்தவ கவிஞன் என்று உரிமை கொண்டாடி அவர் கவிதைகளைக் கட்டுப்படுத்த முடியாது. அது

2t
போல் காளிதாசனை இந்து சமயக் கவிஞன் என்று கூறி அவர் சிறப்புக்கு "எல்லைபோட யாரும் முன் வரவில்லை. ஏனைய மதத்தினரும் இதே காரணத் திற்காக இக்கவிஞர்களின் பெருமைகளைக் குறைத் துக் கூறியதுமில்ல்ை. அல்லாமா இக்பால் முஸ்லிம் வரலாற்று வெற்றிகளையும் முஸ்லிம்களது கலா சாரச் சாதனைகளையும் பற்றிப் பாடினர். அதற். காக முஸ்லிம் அல்லாதார் அவரைக் குறைவாக மதிப்பிடமுடியாது.'
இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மையமாக வைத்துக் கவிதைபாடிய இக்பால் மாற்று மதங் களிடத்தில் வெறிகொண்டு மக்களை மயக்கி மாச் சரியங்களை வளர்க்கவில்லை. மதங்களிடையே சமா தானம் நிலவ வேண்டுமென்பதே அவரின் எழுத் தாகவும், எண்ணமாகவும் இருந்தது. பல்வேறு இனத்தவர்களும் ஒன்றுபட்டு வாழ்வதே உயர் வுக்கு வழிஎன்று கருதினர்.
'மதங்கள் ஒருவரோ டொருவர் குரோதங் கொள்ளச் சொல்ல வில்லை' என்பது அவர் கருத்து.
இக்பால் இந்திய மக்களின் ஒற்றுமையைக் குறித்தும் பாரத நாட்டின் ஒருமைப்பாடு பற்றி யும் பாடல்களை எழுதினர்.
**இந்துஸ்தான் நமது தாயகம், உலகம் யாவி னும் எமது இந்துஸ்தான் சிறந்தது. இந்துஸ்தான் மலர்வனம். நாம் அதன் புல்புல்கள். ' என்றும் தாயகத்தின் சிறப்பையும், தேசிய ஒற்றுமையை யும் பாடினர்.
இக்பால் ஆத்ம திருப்திக்காக கவிதை பாடிய வரல்லர். அவர் மக்கள் மேல் அக்கறை கொண் டவர். மனித சமுதாயத்தைப் பாடியவர்.
வறுமையுடைய சமுதாயத்தைக் கண்டு ஆத் திரங் கொண்ட வள்ளுவர் இறைவனையே சபித் தார்.
**இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.""
புரட்சிக் கவி பாரதியோ:
'தனி யொருவனுக் குணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்.' என்று போர் முரசம் எழுப்பினர்.
அல்லாமா இக்பால், "உழவனது உணவுக்கு உதவாத கழனி எங்கிருந்தாலும் அதில் ஒரு தானிய மணிகூட எஞ்சியிருக்கா வண்ணம் நெருப்பிட்டுக் கொளுத்துங்கள்,' என்று முழங்குகினர்.
இத்தகைய கருத்துச் செறிவுமிக்க இக்பாலின் கவிதைகள் உழுத்துப்போன சமுதாயத்திற்கு ஒரு விழிப் போசையாக ஒளிர்கின்றன.

Page 24
g) யர்ந்து வளர்ந்த பனை மரங்கள் நிறைந் - திருக்கும் அந்தப் பெரிய காணியில், தென்னைஒலையால் கட்டிய சிறு குடிசைக்கு முன்னல் பிரேமா யோசித்துக்கொண்டு நிற்கிருள்.
சரிந்து விழும் மாலைச் சூரிய கதிர்கள் பனை மரங்களில் பட்டு நிலத்தில் கீறுகளாக விழுந்து கொண்டிருந்தன.
அவள் 'டவுணுக்குப் போவதற்கு தாயிடம் பணம் கேட்டாள். தாய் முத்தம்மா தன்னிடம் பணம் இல்லாததால், அடுத்த வீட்டில் கடன் கேட்கச் சென்றுவிட்டாள்.
பிரேமா கைலேஞ்சியுடன் கைக்குள் மடித்து வைத்திருந்த கடிதத்துண்டை பின்னரும் படித்துப் பார்த்தாள்.
"அன்பே நான் நாளை சுப்பிரமணியம் பார்க் கில் உன்னை எதிர்பார்த்துக்கொண்டு நிற்பேன். என்னைக் கட்டாயமாக வந்து சந்திக்கவும். என்னை எமாற்றி விடாதே. - அன்பன் கந்தசாமி என்று அவளுடைய காதலன் அவளுக்கு அவசரக் கடித மொன்று எழுதியிருந்தான். கடிதத்தை மார்புச் சட்டைக்குள் புதைத்துக்கொண்டு, குடிசைக்குள் புகுந்து கண்ணுடியில் தன் முகத்தை மீண்டும்
பார்த்துக்கொண்டாள்.
அவள் அழகாகத்தான் இருக்கிருள். நடு வகிடு இட்டு முடியை வாரி, ஒற்றைப் பின்னல் பின்னி முதுகில் தூங்க விட்டு நெற்றியில் குங் கு ம ப் பொட்டும் வைத்திருந்தாள். அவளின் வயதுக்கு மீறிய இளமையும், வாளிப்பும் அவள் மேனியில்
1960ம் ஆண்டு முதல் எழுதிவரும் யோ, பென மேற்பட்ட சிறுகதைகனை எழுதியுள்ளார். மூன்று அகில இ முதலாம் இரண்டாம் பரிசுகளைப் பெற்றுள்ளார். "குட்டி" கள் நூலுருவில் வெளிவந்துள்ளன. "குட்டிக்கதைகள்’ ெ விருக்கிறது. - ஆசிரியர்.
 

、、
സ്ഥിശ്രിg് ഗീര്
இருந்தன. தான் அணிந்திருந்த சாரியை குனிந்த பார்த்து சரி செய்துகொண்டு வெளியில் வந்தான்.
அப்போது முத்தம்மா அங்கு வந்தாள்.
"இந்தா பிள்ளை, இருபது சதந்தான் இருக்கு!” "இருபது சதந்தானே கேட்டேன்!”
இந்த மாலை வேளையில், தனியாகப் புறப்பட் டுச் செல்வதை விரும்பாத முத்தம்மா, ப யமும் ஏக்கமும் கலந்த கண்களால் மகளை ஏறிட்டுப் பார்த்து தாய்மைக்குரிய பொறுப்புணர்வுடன்,
"பிள்ளை நீ இந்த நேரத்தில் தனியாக அடிக் கடி வெளியில் போவதை நான் விரும்பவில்லை. உனக்கு எத்தனை முறைதான் சொல்றது?’ என்று கடிந்துகொண்டாள். தாய் என்ன காரணத்திற்காக அப்படிச் சொல்கிருள் என்பதையுணர்ந்த பிரேமா தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "நான் என்னம்மா தவறு செய்து விட்டேன்?' என்று கேட்டாள்.
'தவறு செய்யாமல் இருப்பது முக்கியமில்லை மகளே! நாலு பேர் சொல்றதைத்தான் பார்க்க வேணும். நாங்கள் ஏழைகள், இந்த உலகத்தில் எங்களுக்கு எண்டு சொல்லிக்கொள்ள என்ன இருக்கு. ஒழுக்கந்தான் பெரிசு. நாங்கள் சிறு
6G . 已 an
s -旨 டக்ற் பாலன் இதுவரை ஐம்பதுக்கு So பங்கைச் சிறுகதைப் போட்டிகளில், Se "சொந்தக்காரன்" ஆகிய நாவல் C தாகுதி ஒன்று விரைவில் வெளிவர

Page 25
குற்றஞ் செய்தால் போதும். உலகம் அதைப் பெரிசாகத்தான் காட்டும். நீழுன்பு நடந்து கொண்டதைப் பற்றி ஊர் என்ன சொல்லுது எண்டு உனக்குத் தெரியாதா?”
பிரேமா தாயின் முகத்தை நோக்கினுள்.
" நான் முன்பு என்னம்மா தவறு செய்து விட் டேன்? இரண்டுபேரை விரும்பினேன் அவர்களோடு கதைத்துப் பேசினேன். ஆனல் அவர்களுக்கு என்னை மனைவியாக்கும் எண்ண மேயிருக்கவில்லை. ஆனல் என்னைக் கெடுத்திட் டுப் போகப் பார்த்தாங்க. நான் அதற்கு இரையாகல்லே. அதனுலே விட்டுட்டு போயிட் டாங்க. அதற்கு நான குற்றவாளி? ஒரு பெண் ஒரு ஆணை விரும்புவது குற்றமா?’ என்று சிறிது கோபத்தோடு சொன்னவள் தூரத்தில் நிற்கும் ஒரு தனிப் பனையை வெறித்துப் பார்த் தவாறு ‘நான் நாளுகத்தான் இருக்கிறன். ஊரைப்பற்றி எனக்கு கவலையில்லை?” என்று நிதானமாகச் சொன்னுள்.
“ஊர் சொல்லுவதெல்லாம் உன் காதில் விழு வதில்லை. எ ன் ரை காதில்தான் வி ழு குது.
என்ரை நெஞ்சை த் தா ன் அரிச்சிக்கிட்டி ருக்கு!’
தாயின் வார்த்தைகளும், அவற்றுள்ளே உள்ள அவளின் கவலைகளும் பிரேமாவின் நெஞ்சை மெது வாகச் சுட்டுக்கொண்டது. என்னைப் பெத்தவளே என்னைப் புரிஞ்சுகொள்ள முடியாமல் இருக்கிருளே என்று யோசித்து சிறிது பொழுது மெளனமாக நின்றவள் பின்பு சொன்னுள்.
"பிழை சேய்தால்தான் ஊர் உலகத்திற்கும் பயப்படவேணும். நாம் ஏன் பயப்படவேணும்? நான் என்னைப்பற்றித்தான் கவலைப்படுகிறேன். சரியாக நடந்துகொண்டு ஊர் உலகத்திற்குப் பயந்தா இந்தக் குடிசையில்தானம்மா குறுகிச் சாகணும், நீங்க கவலைப்படாதீங்க!” பிரேமா சிரித்தாள். முத்தம்மா மகளின் தைரி யத்தை உள்ளூரப்புகழ்ந்து, அவள் சொன்னதை ஏற் றுக்கொண்டாலும், அவள் நிஜவாழ்க்கையையும் நிஜமனிதர்களையும் நன்கு உணர்வாள்.
'நீ படிச்சனி. உனக்கு நான் பதில் சொல்ல முடியாது. என்ருலும் நீ சின்னப்பிள்ளை உனக்கு உலகத்தைப்பற்றித் தெரியாது. “நான் சின்னப்பிள்ளையா? இருபத்தியொன்பது வயசு முடிகிறது?" அப்படிக் கூறியதும் பிரேமாவுக்கு தாயிடம் “நீ இவ்வளவு காலமும் எனக்கொரு கலியாணம் செய்து வைக்க வில்லையே!” என்று குத்திக்காட்டு வது போல உணர்வு தட்டிற்று. உடனே அனு தாபத்தோடு தாயின் முகத்தை ஏறிட்டுப் பார்த் தாள்.
“எனக்கு நாலு வயசு நடக்கும்போது தகப்பன் இறந்துவிட அனு தர வாக்கப்பட்ட நீ என்னை

23
வளர்த்து, படிக்கவைத்து, இவ்வளவு காலமும், சாப்பாடும்போடுகிருயே உன்னிடம் வேறு என் னத்தை நான் எதிர்பார்க்கமுடியும்.?’ தாயின் நினைவில் நெஞ்சு கனக்க, கண்கள் கலங்கத் தொடங்கின. உடனே அவள் அந்நிலையில் இருந்து தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.
பேசாமல் நின்ற மகளையே பார்த்துக் கொண்டு நின்ற முத்தம்மா,
'நீ ஒரு குமர்ப்பிள்க்ள. தனியாக இந்த நேரத் தில் வெளியில் போவதை விரும்பவில்லை. இந்தப் போக்கை நிறுத்திவிடு? இதற்கு மேல் உனக்குச் சொல்ல முடியாது' என்று கடு கடுப்பாகச் சொன்னுள். பிரேமா தாயை நன்முகப் பார்த்தாள். தாயும் அவளைப் பார்த்துக்கொண்டு
"என்னடி அப்படிப்பார்க்கிருய்?”
“எனக்குத் திருமணம் செய்து வைக்க உன்னல் முடியாது. உன்னல் முடிந்தளவு முயற்சித்துப் பார்த்துவிட்டாய். இனியும் செய்து வைப்பாய் என்று நம்பிக்கையோடு இருக்க, மாப்பிள்ளை வீட்டார்கேட்கும் நிலமோ, வீடோ, பணமோ, நகையோ, எதுவும் உன்னிடமில்லை. உலகத் திற்குப் பயந்து வீட்டுக்குள் பதுங்கிக்கிடந் தால் யாரும் வலியவந்து திருமணம் செய்யக் கூடிய மனிதர்களை இச் சமுதாயம் படைத்து விடும் என்ற நம்பிக்கையுமில்லை. நான் வாழ வேணும் அது எனது ஆசை. நான் என்ன செய்வேன். எனக்கொரு கணவனைத் தேடுகிறே னம்மா! அது தவரு?" என்று தாயிடம் கேட்க நினைத்த அவள், அது தாயின் ம ன த் தை மேலும் புண்படுத்தும் என்று உணர்ந்து,
** அம்மா! நீங்கள் நினைத்தது போல் எதுவும் நடக்காது" என்று கூறிவிட்டு கையில் ஒரு லேஞ் சுடன் பழம் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
குடிசையின் முன் வாசலில் உட்கார்ந்த முத் தம்மா,
‘ஏழு மணிக்கு முதல் வரவேணும்' என்று கண்டிப்பான குரலில் சொன்னதை காதில் வாங் கிய பிரேமா திரும்பி நின்று "நீ பயப்படாதே" என்று சொல்லிவிட்டு விரைவாக நடந்தாள்.
அவள் வீட்டிலிருந்து ஒரு ஒடுங்கிய லேனைக் கடந்து, மெயின் வீதியில் ஐம்பது யார் நடந்து சென்று தான் யாழ்ப்பாண ரவுண்ட் பஸ் பிடிக்க வேணும், கச்சேரியைச் சுற்றியுள்ள அந்தப் பகுதி யில் உள்ள எல்லோருக்கும் அவளைத் தெரியும். அவள் யாருக்கும் எந்த இடத்திலும், எந்தநேரத் திலும் பயப்பட மாட்டா ள் என்று அவர்கள் அறிந்து வைத்திருந்தாலும் “அவள் ஒரு நடத்தை கெட்டவள், ஒரு ஆட்டக்காரி, என்ற அபிப்பிரா யத்தையும் கொண்டிருந்தார்கள்.

Page 26
24
அவள் போக ஆயத்தமாக நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்டாள். அவள் பஸ்ஸில் உள்ளவர்களைக் கவனியாது தன் காதலனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.
கந்தசாமியை அவள் நான்கு மாதங்களுக்கு முன்பு, கால்விரலில் ஏற்பட்ட காயத் துக்கு , மருந்துகட்ட அடிக்கடி பெரியாஸ்பத்திரிக்கு போ கும்போது சந்தித்தாள். ** ரவுண்' பஸ்ஸ்டாண் டில் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது அவன் மானிப்பாய் பஸ்ஸிலிருந்து இறங்கி ரவுண்கவுண் சிலை நோக்கிப் போவான். "கந்தசாமி அவளைக் கடந்து செல்லும்யோது அடிக்கடி பார்த்த பார் வையும் அவனுடைய கம்பீரமான தோற்றமும் எங்கோ உத்தியோகம் பார்க்கிருன் என்ற எண்ண மும்தான் அவன்மேல் பிரேமாவுக்கு ஒரு ஆசை யைத் தூண்டிற்று. அதன்பின்பு, அவன் அவளு டன் தானுக வந்து பேசியபோது பேசி, முகவரி அறிந்து கடிதத்தொடர்பு கொண்டு பார்க்கிலும், டஸ்ஸ்டாண்டிலும், கடற்கரையிலும் சந்தித்துப் பேசி தொடர்பு நீடித்துக்கொண்டது. இப்பொழுது அவனுக்கு வேலை மானிப்பாய் பட்டினசபையில் - அதனல் அடிக்கடி சந்திப்பதில்லை. தன்னைப்புரிந்து காள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு ஏற்பட்டிருக் கும் என்ற நினைப்பில் தன் முந்திய இரு காதல் விஷயங்களைப்பற்றி விரிவாக ஒரு கிழமைக்குமுன் அவனுக்குஎழுதியிருந்தாள். அதற்குப் பதில்கடிதம் தான் உடனே தவருமல் பார்க்கில் சந்திக்கும்படி வந்திருக்கிறது. அந்தப் பழைய விஷயங்களைப்பற்றி தன்னுடன் பேசுவதற்குத்தான் அ  ைழ க் கிரு ணு ? என்று எண்ணியதும் அவளுக்குள்ளே பயமும் ஏக்க மும் கூடிக்கொண்டது. தன்னையும் தன் நிலைமை யையும் சரியாகப் புரிந்து கொண்டிருப்பான? என்று யோசித்தபோது, தனக்குச் சாதகமாக முடிவு கொள்ள அவளுக்குத் தைரியம் வரவில்லைெ தன்னைத் தவருகப் புரிந்துகொண்டு இவனும் என்ன விட்டுப் போய் விடுவான? என்ற உணர்வு தட்டி யதும், மனம்ஏங்கி கண்கள் உள்ளாகக் கலங்கத் தொடங்கின. ஆனல் அவள் கண்ணீரை வெளிவர விடவில்லை; -
Mariassad b
-vamaal - **இந்தச் சமுதாயத்தில் : மனித ஆசைகளுக்கு மாருனவைதான் அதிகம் நடக்கிறது" என்று தன்னைத்தைரியப்படுத்திகொண்டவள். பஸ் ரவுன் ஹோலுக்கு முன்னல் நின்றதும் இறங்கி முன்னல் உள்ள சுப்பிரமணியம் பார்க்கை நோக்கி நடந் தாள்.
கந்தசாமி "பார்க்கின் முன்னல் மிக வசீகர மாக, அவளை எதிர்பார்த்துக்கொண்டு நின்றன்.
அவன் பிரேமாவை ஆரம்பத்தில் விரும்பிய போது அவளை மனைவியாக்கிக்கொள்ளும் எண்ணம் இருந்ததுதான். ஆனல் அவளது குடும்ப நிலையை அவளிடமிருந்து அறிந்துகொண்ட பிறகு, தன் னுடைய குடும்ப கெளரவம், சொத்து, சீதனத் துடன் தன் சாதியில் பெண் இவற்றை எண்ணித் தன் ஆரம்ப எண்ணத்தைப் படிப்படியாக மாற்றிக் கொண்டு வீட்டார் திருமணம் செய்து லைக்கும்

வரைதன் மானசீக ஆசைகளை இவளோடு தீர்த் துக்கொள்ளலாம் என்று முடிவு கட்டி விட்டான். அவனுக்காக நல்ல இடத்தில் பெண் தேடுவதற்கும் வீட்டாருக்கும் சம் மத ம் கொடுத்துவிட்டான். அவளுடைய கடைசிக் கடிதத்தில் அவள் தன்னு டைய முன்பிருந்த இரு காதலர்களைப்பற்றி எழு திய பின், அவளிடம் அவன் வைத்திருந்த நல்ல எண்ணம் போய், "ஓ! இவள் என்மனைவியாவதற்குத் தகுதியற்றவள் நல்ல காலம் தப்பிக்க்ொண்டேன்' என்று திருப்தியடைந்த அதே நேரத்தில் விரை வில் தன் பசியைத் தீர்த்துக்கொண்டு, அவளின் தொடர்பை அறுத்துவிட வேண்டுமென்று விரும்பி ஞன். இன்று எப்படியாவது ஹோட்டலுக்கு பிரே மாவைக் கூட்டிச்சென்று, அறை எடுத்து இரவு பன்னிரண்டு மணி வரை தங்குவதாகத்தான் அவன் 'ஐடியா' இருக்கிறது.
பிரேமாவைக் கண்டதும் அவள் மேல் தான் உயிராக இருப்பதாக உணர்வுகளைக் காட் டி க் கொண்டான். வாசலில் நின்ற அவன் அவளைப் "பார்க்கின்" உள்ளே அழைத்துச்சென்று ஒதுக்குப் புறமான ஒரு "சீட்டில் அவளை உட்கார வைத்துத் தானும் நெருக்கமாக உட்கார்ந்தான்.
இருட்டிக்கொண்டு வரும் நேரம். இன்னும் பார்க்கில் மின்சாரம் போடப்படவில்லை.
“பிரேமா உன்னை ஒரு கிழமையாகப் பார்க் காதது ஏதோ வெறிபிடித்த மாதிரியாகஇருக்கு” பிரேமாவின் கை விரல்களை, த்ன் கைகளுக்குள் எடுத்து வைத்து மெதுவாகத் தடவிக்கொண்டிருந்
sw
N

Page 27
தான். அவள் அந்த உணர்வுகள் இன்றி, தன் பழயை விஷயங்கனைப்பற்றித்தான் கேட்கப் போகி முன் என்ற பயத்தில் நிமிர்ந்து அவனுடைய முகத் தைப்பார்த்துப் புன்னகைத்தாள்.
இன்றைக்கு நான் உன்னை ஏன் அழைத்தேன் தெரியுமா”
“தெரியாது”
حمير
“உன்னேடு தனியாக நீண்டநேரம் பேசவேண்டு மென்று ஆசைய்ாயிருக்கு”
“இப்போ தனியாகத்தானே இருக்கிருேம்?” “இந்தப் "பப்ளிக்கான இடத்தில் எத்தனை பேருக்குப் பயப்படவேண்டியிருக்கு”
“அதற்காக? “நாங்கள் இன்றைக்கு ஹோட்டலில் “றுாம்" எடுத்து தனியாக இருந்து பேசுவோம்”
அவள் நெஞ்சுக்குள் "திக்" என்றது. அவள் பேசவில்லை. அவன் அப்படிக் கூறும்போது ஹோட்டலில் “றுரம்’ எடுப்பதின் உணர்வுகளை அவள் உணரும் படியாகவே கூறினன். அவள் மெளனம்ாக நிலத் தை நோக்கியிருந்தபோது, அவளின் உயர்ந்த மார்பகங்களையும், ஈரம்கசியும் உதடுகளையும், நளினமான கண்களையும் வாளிப் பான மேனியையும் பார்த்துப்பார்த்து, அவனுக் குள்ளே சதைவெறி கிளர்ந்து கொண்டிருந்தது. அவள் விரல்களை இறுக்கிக்கொண்டான்.
“ஏன் மெளனம்? நீ என்ன விரும்பவில்லையா?” “விரும்பாமல்-?” “என்னை நேசிக்கவில்லையா?” “நேசிக்கிறேன்!” “நானும் உன்னை நேசிக்கிறேன். என் உயிருக் குயிராக நேசிக்கிறேன். பிறகு ஏன் பயம்’
“பயம் பெண்ணுக இருப்பதால்?” அவள் அர்த்தத்தோடு கூறினுள்.
“என் ஆசை தீர்ந்ததும் உன்னை ஏமாற்றி விடு வேன் என்று எண்ணுகிருயா?”
“ஏமாற்றி விட்டால்? என்றுதான் கிறேன். அதுதான் உலகத்தில் அதிகம் நடக்கிறது!”
'நீ என்னை நம்பவில்லை இல்லையா?”
“நம்புவதில்தான் என்வாழ்க்கையே இருக்கு. அதனுல்தான் யோசிக்கிறேன்’
“என்ன சொல்கிருய்?”
“ஏமாற்றுபவர்களும், நல்லவர்களும் ஒருமாதி ரியே பேசுகிருர்கள்!”
“இதில் நீ என்னை யாரென்று நினைக்கிருய்?” “அதுதான் தீர்மானிக்கமுடியாமல் இருக்கு”

25
“நீ ஏன் என்னை நல்லவன் என்று நினைக்கிருய் இல்லை?”
நல்லவன் என்று நான் நினைத்தால் மட்டும் போதுமா? நம்பிக்கை யார் அதற்கு உத்தரவாதம்"
*நானே, என்னை நம்பு!" "அப்ப ஒன்று செய்வோம்! நாளை இருவரும் றெஜிஸ்டர் பண்ணிக்கொண்டு நீங்கள் நினைப்பது போல் செய்வோம். அதன்பிறகு உங்கள் எண்ணப் படி நடக்க நான் தயார்!’, அவளின் நீதியான கேள்வி அவனுக்கு உள்ளூரப் பயத்தைக் கொடுத்தது:
'நீ அவசரப்படுகிருய் பிரேமா! எனக்குக்குடும் பம், பெற்ருர் உறவினர் ஒருவரும்இல்லையா? அவர் களை இணங்க வைக்க காலம் வேண்டும்!"
"அதுவரை நீங்களும் அவசரப்படாதீர்கள்." "நீ என்னை நம்பவில்லை. என்னை உணர்ச்சியற்ற மரம் என்ரு எண்ணுகிருய்?'
‘என்னை ஒரு விளையாட்டுப்பொருளாக நீங் கள் கருதுகிறீர்களா? நீங்கள் சற்று முன்பு கூறிய வார்த்தைகளை என்ணுேடு உடலுறவு வைத்துக் கொண்ட பின்னும் கூறினல்?" அவன் மெளனமாக இருந்தான்.
'இப்படித்தான் முன்பும் என்னை நேசிப்பதா கக்கூறிய் இருவரும் அழைத்தார்கள். திரு மணம் செய்து கொள்வோம் என்று கூறிய போது உங்களைப்போலத் தான் குடும்பத்தைக் காட்டினர்கள்! நான் எதற்கும் ஏமாருததினுல் என்ன்ைவிட்டுப்போய் குடும்பத்தார் சொன் னதுபோல் திருமணம் செய்து நல்லவர்களாக வாழ்கிருர்கள். அவர்களை நம்பியிருந்தால்-?’’ அவளுக்கு அவனுல் என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. அவன் தன் விஷயத்தில் நோக்கமா யிருந்தான்.
“என்னை நம்பு பிரேமா நான் உன்னை உயிருக் குயிராக நேசிக்கிறேன்!”
"நான் ஏமாற்றப்பட்டால், எனக்காகச்சாட்சி சொல்லும் சக்திகூட உங்கள் வார்த்தைகளுக்கு இல்லை. அவை காற்றேடு கலந்து விடும்!" அவன் அவளை ஆசுவாசப்படுத்த அவளின் தோள்களில் கைகளைப்போட்டு ஆசையாகத் தடவிக் கொண் டான். பிரேமாவோ, அவன் நடவடிக்கைகள், வார்த்தைகளுக்குப்பின்னல் அவனை இயக்கவைக் கும் கருத்தைப் புரிந்து கொண்டிருந்தாள். அவள் எதிர் உணர்வுகள் எதுவுமின்றியிருந்தாள்.
"இவ்வளவு காலத்தில் என்னை உனக்குப்புரிய வில்லையா பிரேமா"
அவள் மெளனம்.
“鹰 இன்  ைறக் கு என்னேடு வரத் தா ன் வேணும்!"

Page 28
26
"அதுதான்முடியாது! "
**@ຄໍາທີ່ນ நீ வரத்தான்வேணும். இல்லா விட் டால் என்னை உயிரோடு காணமாட்ட்ாய்!"
'முடியவேமுடியாது. கோழைகளை நான் நம் புவதில்லை ??
அவள் நிதானத்துடன் இருந்தாள். அவனுக்கு ஏமாற்றமும், கோபமும் ஒன்ருகவே எழுந்தன.
"என்னைஎன்னடி கோழைஎன்ரு சொல்கிருய்?
"இப்பொழுது உங்களைப் புரிகிறது?"
‘என்ன உனக்குப் புரிகிறது?"
'எனது ஒரு நாள் உறவு இல்லா விட்டால் சாகத்தயார். ஆனல் என்னைத்திருமணம் செய்யத் தயாரில்லை ? .
அவனுக்கு கோபம் கோபமாகவந்தது. அவ ளைப்பார்க்க அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
"உன்னை எனக்குத் தெரியுமடி!"
‘என்ன தெரியும்?"
'உன்னுடையமுந்திய காதலர்களோடு சோரம் போயிட்டு எனக்குப் பத்திணியாக நடிக் கிருய் இல்லையா?* -.
இவனுக்கு என்ன சொல்வதென்று மெளன மாகஇருந்தாள்.
'எனக்குச் சொன்னது இரண்டுபேர். இன்னும் எத்தனை பேரோ? எனக்குப் பத்தினி வேஷம் போட்டு என்னைமணக்கலாம் என்று பார்த்தாயா?”
எனது தூய்மைக்காக வாதாட முடியாது தான்!"
"ஒபெரிய கண்ணகி! நான் அவளைத் திரு மணம் செய்யவேணுமாம். உனக்கென்னடி தகுதி
யிருக்கு ஏன் மனைவியாக வரநாயே! நீ ஒரு சொல் லப்பட்டவேசை!”*
அவனுக்கு ஏமாற்றமும் விரக்தியும் ஆவேசத் தைக் கிளப்பிவிட்டன.
பிரேமா அமைதியா கப்பார்த்துக் கொண்டிருந் தாள்.
“வார்த்தைகளுக்கு அர்த்தமுண்டு”
“நீ வேசைதான். என்னுடன் ந டி க் கி ரு ய் . உன்னைப்போன்ற பெண்களால்தான் தமிழ்ச் சமு தாயமே கெட்டுப்போகுது!”
“நீ சொன்னல் இச் சமுதாயம் ஏற்கத்தான் செய்யும். இந்தச்சமுதாயம் உன்பக்கந்தான்!”
“அதிகம் பேசாதே நாயே’ கந்தசாமி அவளைத் தின்னப்போவதுபோல் பார்த் தான். அவள் சொன்னள்.
“ஆட் டி க்கு ட் டி தப்பிவிட்டால் ஓநாய்க்கு கோபம் வரத்தான் செய்யும்! ஆட்டுக்குட்டியைத் திட்டத்தான் செய்யும்!” -
‘என்னடி சொல்கிருய் வேசை!” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அடித்தான். பேசாது கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்த அவள் கண் கள் கலங்கிப் போயின.

*"உனக்கு நான் திருப்பி அடிக்க முடியா தென்ரு நினைக்கிருப்? நான் உனக்கு அடிக்க மாட் டேன் நீ ஒரு கோழை!"
"நீ ஒரு வேசை தானே! அப்படிச் செய்வாய்!" "நான் உன்னுேடு வேசையாட வராததினுல் நான் ஒரு வேசையில்லையா?"
அவன் எழுந்து நின்றன். பார்க்கில் மின்சார வெளிச்சம் போட்டு விட்டார்கள். பலர் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். வானெலி பாடிக் கொண்டிருந்தது.
கந்தசாமி சுற்றிவரப் பார்த்தான்.
"சீ உன்னேடு நின்று பேசுவதே அவமானம்! நீ ஒரு சோத்துக்கு வழியில்லாத நாய்! நீ வேசை யாடத்தான் தகுதியானவள். உன்னை எந்த நாயும் வந்து கல்யாணம் செய்யாது!"
அவன் திரும்பிப் பார்க்காது விரைவாக நடந்து கொண்டிருந்தான். பிரேமா எழுந்து நின்று அவளை விட்டுப் போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்முள்.
அவன் அவளை வேசை என்று சொல்லிவிட்டுங் போகிருள்.
அவன் என்ன? இந்த சமுதாயமே அவளை அந்த அளவுக்குத்தான் கணிக்கிறது.
ஆணுல் பிரேமா இந்தச் சமுதாயத்துக்குப் பயப் படவில்லை.
ஆழ்ந்துபோன சிந்தனையால் அவளுடைய கண் களில் அவளுடைய அறிவை மீறிக் கண்ணிர் நிறைந்து கொண்டிருந்தது. அப்போது தன்னை எதிர்பார்த்திருக்கும் தாயின் நினைவும் வந்தது.
“அம்மா! நீ என்னை எப்படி நினைத்தாலும் சரி. நான் வாழ ஆசைப்படுகிறேன். அதற்காக எனக்கொரு கணவனைத் தேடுகிறேன்.” தனக்குள்ளாக முனகிய பிரேமா, கண்ணிரைத் துடைத்து எறிந்து விட்டு, தலைநிமிர்த்தி நடந்து கொண்டிருந்தாள்.
"மலர்” சந்தா விபரம் ஒருவருடம் ரூ. 6-00. தனிப்பிரதி சதம் -/50.
விளம்பர விகிதம் பின்புற அட்டை - eib. 200/- உட்புற அட்டை ma eij. 150/- முழுப் பக்கம் ரூ. 125/-
விபரங்களுக்கு s
'uos'
21, மத்திய வீதி, மட்டக்களப்பு.

Page 29
முருகு தவழ்ந்து இளநகை பொங்க
முன்னிற்கும் பருவமி தின்பக் கணிதரு மன்புப்
1p LDT.gif திருமக ளைத்தான் மருவுவ தென்று;
திடங்கொண்டு அருகி லணந்து கரமினி தென்று
அதைத் தொட்டேன்;
திருதிரு வென்று அவள்விழி வண்டு
’ திசை மாறிக்
கருவ மிகுந்து கனல்விழி ரெண்டும்
கய லாகிப்
பொருபொருவென்று விழிமழை கொண்டு
பொறை மீறி,
அருகி லிருந்து அகலவே சென்று;
அழ லானுள்.
ஆர்வ மிழந்து ஆசை மறந்தாய்;
அடி ஏடி?
பார்வை யெனும் தீக் கணைதொடுக் கின்ருய்
பயம் மேவிக்
கார்குழ லென்னக் கருகியென் னுள்ளக்
s கடல் பொங்க;
நேரெதிர் நின்றுநெடுந்தொலை சென்றேன்
நெருப் பானுய்?
உருகுதென் உள்ளம் உருகுதென் ஆவி
உடல் எல்லாம்
கருகு தென் இளமைக் காதல் இதென்ன;
கன வாமோ?
பெருகுதென்ஆசை பேய் வெறியாகிப்
பின மாகிச்
சருகெனலாமோ தருமமீதாமோ?
தவ மீதோ?
NPR
IPHINI" }
 

27 گھر
----
o
o
Arras
அன்பே அறிவே! அழகுத் திருவே
S9/L- 6) fTLஇன்பங் காண்போம் இருவரு மொன்றி
இனிமேல் நீ; துன்பம் தராதே; சுகம் தர வா! வா! இத்துய ரோங்கில்; என்மெய் யினிலே உயிர் நிலையாதே!
என் செய்வேன்?
என்னக் கனிந்தாள்; இதயங் கவர்ந்தாள்
எதிர் வந்தாள்; சின்னக் குறும்புச் சிறுவிழி காட்டிச்
சிரித் தாளே! என்னே! அழகின் சிரிப்பிது? என்று;
என யந்தப் பொன்னுக் களித்தேன்; உயிரென நெஞ்சிற்
புதைந் தாளே!
என்னிற் கலந்தாள்; இன்பமி தென்ருள்:
யென்ன! முன்னே தோன்றும் காட்சி களாகி;
முன் னின்று; இன்னும் இன்னும் சிரிக்கின் ருள் என்
இதயத்தின், வன்னக் கவிதைச் செல்வம் அவளென்
வாழ் வரசி !
2.522

Page 30
28
ஒடு தனி நெஞ்சம்
-கவிதா
யாரோ " போண் மெல்டிங் லோங்ஸ்' என்று கூறியிருக் கிரு + கள் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். "வேனில் வேள் மலர்க் கணைக்கும்’ என்று அந்த மது ர மா ன குரல் பாடத் தொடங்குகையில் அது என் அனுபவ மாகிக் கொண்டிருந்தது. 'ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் என்று அந்தக் குரல் குழைகையில் என் ஊனும் உருக நான் உணர்ச்சிவசப் பட்டுக் கவிழ்ந்துபடுத்துத் தலை யணையை இறுகப்பிடித்துக் கொண்டேன்.
எங்கிருந்து வருகிறது அந்தக்குரல்? அந்தக் சன்னமான பெண்குரலில் ஏன் இத்தஐன ே இந்தச் சோகமயமான இசையின் ஊடாக அவள் இறைவனிடம் எதைக் கோ ரித் தான் இப்படி உருகுகிருளோ! எனக்குள் நானே இந்தக் கேள்வி க%ளக் கேட்டுக்கொண்டேன். பதில் தரப்பக்கத்தில் யாரும் இல்லை! s
e அந்தக் குரலைக் கேட் கும் அனுபவம் எனக்கு என்னுடையசிறுவயதை நினைவூட்டுகிறது. என்னை யும் தம்பிகளையும் சுற்றி 20 t és T. Ur 60) 6y த் துத் தேவாரத் திருவாசகப் பாடல்களைச் சொல்லித் தருவார் அப்பா. என் னுடைய பத்தாவது வய தில் அப்பா செத்துப் போக, அந்த வாழ்க்கை யும் மாறிப்போயிற்று.
 

மங்கலாக என்னுள் எழுந்த இந்த நினைவுகள் அந்த அதிகாலைப்போது, உருக்கமானகிதம் எல் லாமாகச் சேர நான் மயங்கிப்போய் உறைந்து கிடந்தேன்.
முதல் நாள் மாலை இந்த வீட்டின் ஒரு அறைக்கு நான் குடிவந்தபோது இப்படி ஒரு தெய்வீக அனு பவத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏனெ னில் வீட்டுத் தலைவி என்று எனக்கு அறிமுக மான ஒரு பருமனுன அம்மையாரின் குரல் டிரங் குப் பெட்டியைத் தரையில் வைத்து இழுப்பது போல இருந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இரண் டுபேர் - சிறுவர்கள். வேறு குடித்தனங்கள் வைத் திருப்பார்களோ என்று எண்ணவும் இடமில்லை. எனக்குக்கூட "இல்லை" என்று சொல்லமுடியாமல் தான் இடம் தந்திருக்கிருர்கள். அ ப் பா வின் தூரத்து உறவுக்காரர் திரு சாம்பசிவம். இத்தனை சுதந்திரமாக இங்கே பாடுவது நிச்சயம் அவருக்கு உறவுக்காரியாகத்தான் இருக்கவேண்டும். யார்? என்ன உறவு?
அரை மணித்தியாலம்வரை போங்கிப் பிரவ கித்த இசைவெள்ளம் வடிந்துவிட்டது. வேறெங் குமல்ல; என் இதயத்துக்குள்ளேதான். அதனல், இந்தக் காலை வேளையில் என் மனம் தெளிவாக அமைதியாக இருக்கிறது. என்னுல் ஒழுங்காகச் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது. இங்கே நல மாக வந்து சேர்ந்திருப்பதைப்பற்றியும் உத்தி யோகம் மனதுக்குப் பிடித்திருக்கிறதா என்பதைப் பற்றியும் அம்மாவுக்கு எழுத வேண்டும் என்பது நினைவுக்கு வந்தது. என்னைச் சுற்றி என் அறை ஒரே அலங்கோலமாய் இருப்பது கருத்தில் உறைக் கிறது. பரபரவென்று எல்லாப் பொருட்களையும் ஒழுங்காக அடுக்கி வைத்தேன். ஒரு நாளுமில் லாதபடி அம்மாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழு திக் கவரில் வைத்து ஒட்டினேன். புதிய வேலையில் தெரிந்த சிக்கல்கள் எல்லாம் இன்று துரசாகத் தெரிகின்றன. அந் த க் கான த் துக் கு இத்தனை வலுவா? என்னுல் நம்ப முடிகிறது. ஏனென்றல் இசைக்கு என்னை மயக்கி ஆளும் சக்தி எப்போ துமே இருந்து வந்திருக்கிறது. எல்விஸ் பிரெஸ்லி யும் ஜிம் ரீங்ஸும் தோற்க, இன்று இவள் வென் றிருக்கிருள்.
கைகளைத் தலைக்கடியில் கொடுத்து மல்லாந்து படுத்தவாறே யோசித்துக்கொண்டிருந்தேன் நான். தினமும் அதிகாலையில் என்னைத் துயில் எழுப்பும் கானம் தேவ கானமா? மானிடருடையதானுல் கண்ணிலே தென்படாமல் அந்த வீட்டில் அப்படி அடைந்துகொண்டு வாழும்படியான துர்ப்பாக்கியம் என்ன நேர்ந்துவிட்டது அந்தக்குரலுக்குரியவளுக்கு? திரு சாம்பசிவத்தின் திரண்ட செல்வத்தால் ஈடு கொடுத்துச் சரிக்கட்டமுடியாத என்ன துன்பம் அந்தத் தனிமனத்தின் மூலையில்உறைந்துகிடக்கும்?

Page 31
நான் இவை ஒன்றையும் அவரிடம் வாய் விட்டுக் கேட்கவில்லே. இவை எனக்கு அநாவசியம் என்று அவர் நினைக்கலாம். ஆஞல், என்னை அறி காமலே என்னுள் புகுந்து நல்லனவும் தீயனவும் காட்டுகின்ற அந்தக் குரலுக்குரியவரைப் பற்றி அறிந்துகொள்ளத் துடிப்பது அநாவசியமானதாக எனக்குப்படவில்லை. எல்லாவற்றிலும் மேலாக அந்
என் இதயத்தைப் பிழிவதை என்னல் அலட்சியம் செய்துவிட முடியவில் லை. யாரிடம் போய்க் கேட்பது?
கதவு மெதுவாகத் தள்ளப்பட்டது. தயங்கித் தயங்கி ஒரு பிஞ்சுப்பாதம் என் அறைக்குள் அடி யெடுத்து வைத்தது. "வாம்மா மஞ்சு, என்ன வேண்டும்?" ஒன்று நான் உற்சாகப் படுத்தியதும் அவள் அறைக்குள்ளே வந்தாள் - சாம்பசிவத்தின் சின்ன மகள்!
'மாமா இது ஒடஞ்சு போச்சு. ஒட்டிக் குடுக் கிறீங்களா?" என்று, ஒரு சின்ன ஒட்டச் சிவிங் கியின் தலையை வேரு கவும் உடம்பை வேருகவும் என்னிடம் ஒப்படைத்தாள் அவள். ஒரு சிறிய பென் சி ல் சீவும் கட்ட ர். எ ன் னி ட ம் வந்தால் காரியம் சாத்தியமாகும் என்று நம்பி வந்திருக்கின்ற அந்தக் குழந்தை உள்ளத்தை ஏமாற்றி வெளியே அனுப்பிவிட எனக்கு மனம் வரவில்லை. டிராயரைத் திறந்து 'யூஹ" டியூப்பை எடுத்தபோது பளிச்சென ஒரு எண்ணம். இவளி டம் கேட்கலாமே.
ஒட்டிக்கொடுக்கையில் "தாங்ஸ் மாமா' என்று ஒட இருந்தவளைப் பிடித்துவைத்து அந்தக் கேள் வியைக் கேட்டேன். அவசரத்தில் அவள் கூறிவிட்டு ஒடியதிலிருந்து நான் தெரிந்து கொண்டது, அவள் சாம்பசிவத்தின் விதவைச் சகோதரி என்பதுதான்.
தினமும் அதிகாலையில் என்னைத் துயிலெழுப்பி, அந்த நாளைய போ ரா ட்ட த் துக் கு வேண்டிய தைரியத்தையும் சாந்தியையும் என்னுள் நிறைத்து அன்னையாய் வழிகாட்டியாய் என்னை இயக் கி க் கொண்டிருந்த அந்தத் வெய்வீகக் குரலுக்குரியவள் ஒரு விதவை. ஊன் எலாம் நின்று ருகப் புகுந் தா ண் டான் இ ன் று போ ய் வா னு ளா ன் என்று உருகுவதன் அர்த்தம் எனக்கு இப்போது தான் முழுமையாகத் தெரிகிறது. எங்கேயோ பாய்ந்திருக்கவேண்டிய இத் த னை உணர்ச்சிமய மான ப்ரேமை, அது பறிக்கப்பட்ட துயரத்தில், இத்தனை வேகமாக ஆண்டவனிடம் பிரவகிக் கிறதோ?
எப்படி இருந்தாலும் எனக்கு அந்த அம்மை யாரிடம் மிகுந்த பக்தி ஏற்பட்டுவிட்டது. ஏதா வது ஒரு நல்ல நாளில் அந்த அம்மையாரின் கால்களில் வீழ்த்து வணங்கி ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒவ்வொரு நாளும் அவள் பாடுகின்ற திருப் பள்ளி எழுச்சியுடன் எனக்குக் காலை விடிகிறது: அந்த ஒவ்வொரு காலையிலும் அவள் பால் என்

29
இரக்கம் மலேயாகத்தான் குவிகிறது - அத்தனை உருக்கமாக அவள் பிரார்த்திக்கிருள். இந்த நக ரின் வேகத்துக்கும் நா க ரித்து க்கும் அடிமைப் பட்டுப் போய்விடாது என்னை மனிதனுக வாழ வைத்துக்கொண்டிருந்த அவளிடம் நன்றி யும் கூட நாளுக்கு நாள் வளரத்தான் செய்தது. அம் மாவுக்கு எழுதும் கடிதங்களில் எல்லாம் அந்தச் செயலைப்பற்றி நான் குறிப்பிடாமல் இருந்ததில்லை. அம்மா எழுதியிருந்ததுபோல அப்பாவின் ஆசீர் வாதம்தான் இப்படிக் கண்ணுக்குப் புலனுகாத கீதமாக என்னைச் சூழ்ந்து காப்பாற்றுகிறதோ! இளம் வயதும் கைநிறையச் சம்பளம் தரும் உத்தி யோகமுமாக நான் இங்கே வந்தபோது போகாத பொழுதைக் கழிக்க எத்தனையோ வழிகள் என் மனதில் இருந்தன. ஆனல் தாய்மையான அந்தக் குரலின் சக்திக்குக் கட்டுப்பட்டு, சிகரெட் குடிக் கிற ஒரே ஒரு தெட்ட பழ க்க மும் என்னை விட்டுத் தயங்கித் தயங்கிப் பிரிந்து போயிற்று. இங்கிருந்து புறப்படுகின்ற காலை வேளைகளில் மனம் நிறைய அ மை தி யை எடுத்துச்சென்று நா ளா ந் த ப் போராட்டங்களுக்கு விலை யாக க் கொடுத்துவிட்டு வருகிறேன். ஆனலும்கூட எதை யும் இழந்த உணர்வு தெரிவதில்லை. நான் கடவு ளுக்கு நன்றி செலுத்துகிறேன். ம ன நி ைற வு என்பது இலேசில் கிடைக்கக்கூடியதா என்ன?
炒
米 本 事
குழந்தை மஞ்சுளா எனக்குத் தோழி - தான் அவளுக்குத் தோழன். இரண்டுபேருக்குமிடையில் அபூர்வமான ஒரு பிணைப்பு இருந்தது. கசியக் கசிய உள்ளங்கையில் தின்பண்டம் எதையாவது பொத்தி எடுத்துவந்து அவள் நீட்டும்பொழுது மறுப்பதற்கு எனக்கு மனம் வருவதில்லை. இதுவும்கூட என்னி டம் ஒரு மாறுதல்தான். நான் ஒவ்வொரு சின்ன இதயத்தையும் கூட மதிப்பதற்குக் கற்றுவைத் திருக்கிறேன் - ஜூடோ பழக வேண்டாம் என்று அன்னை வேண்டி வேண்டிக் கெஞ்கியபோது விட் டுக்கொடுக்காத நான், என்னுடைய கிரிக்கெட் *பட்டைத் தொடவேண்டாம் என்று தம்பியைக் குட்டி அழவிடுகிறநான் இப்படி மா றிப்போ ப் இருக்கிறேன் - இது அல்லது இந்த வீட்டில் ஒவ் ெேவாருவருடையதுமான செயல்களும் மனமும் எனக்குப் புரிகிற விதத்தில் நானும் மாறிக் கொண்டிருக்கிறேன் என்ற பிரமையா?
பிரமையாக எப்படி இருக்கமுடியும்? அன்று நான் விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றிய நூலொன்று வாங்கி வந்தேன். அதை ஷெல்பில் வைக்கப் போனபோது என்னுடைய பழைய மனம் என்னைப்பார்த்துச் சிரித்தது. அகாதா கிறிஸ்டி யையும் ஏர்ல் ஸ்டான்லி கார்டனரையும், படிந்தி ருந்த தூசியைத் தட்டிவிட்டு ஜன்னலில் எடுத்து வைத்தேன். கூடவே பொப்புல மம்பேவரிட்ஸ் பாட்டுப் புத்தகங்களில் சிலவற்றையும் தூக்கிவைத் தேன். பழைய புத்தகங்கள் வாங்குபவர்களிடம் கொடுத்துவிடலாம். சதா சீட்டியும் பாட்டுமாக அமர்க்களப்படுகிற எனது உதடுகள் எப்படித்தான்

Page 32
>VU
அவற்றை மறந்துவிட்டனவோ. ம னி த ன் கு! நிலைக்கேற்ப மாறுகிருன், அல்லது மாற்றப்படுகி முன் என்பது உண்மையா? உண்யைானல் இன்று இருக்கிற நான், இனி வரப்போகிற ஏதோ ஒரு சூழ்நிலையில் மாறிவிடுவேனு? இப்ப டி யே மாற மாறிக் கொண்டிருந்தால் உண்மையான நான் என்பது யார்? சிலவேளை, மனதில் அதிகபாதிட பையும் பிடிப்பையும் ஏற்படுத்துகின்ற ஒருவிதக் சூழலுக்கு ஒரு மனதை உருவாக்குகின்ற சந்தர்ட் பம் அதிகம் கிடைக்கிறதோ?
எனக்குச் சிரிக்கவேண்டும் என்று தோன்றியது. தான் ஏன் இப்படித் தத்துவ விசாரணையில் இறங்க வேண்டும்? அச்வைதம் துவைதம் என்றெல்லாம் திரு சாம்பசிவம் அடிக்கடி என்னிடம் கதைக் கிருர்; ஆத்மீகத்தைப்பற்றி அவரிடம் நிறைய விசாரம் இருக்கிறது. அவரிடம் இருந்து என்னி டம் தொற்றிக்கொண்ட விசாரமோ இது? இந்த இடத்தில், அவர் ஒருநாள் எ ன் னி ட் ம் பேசிக் கொண்டிருந்தபோது சொன் ன தை நினைத்துப் பார்க்கிறேன்.
'தம்பீ.இன்றைக்கு உலகம் போகிற வேகத் திலும் பரபரப்பிலும் உள்ளம் என்ற ஒன்ருே ஆத்மா என்ற ஒன்ருே இருக்கிறது என்பதைப் பற்றி அதிகமானேருக்குப் பிரக்ஞையே இல்லை. கல்வி அதுகூட போகிற போக்கில் டாக்டர்கள் என்ஜீனியர்கள் என்று புதிய காட்டுமிராண்டிகளைத் தான் உருவாக்குகிறது என்று ஏதோ ஒரு அற நெறிக் கல்வி பற்றிய நூலில் வாசித்திருக்கிறேன். இதில் உண்மை இல்லாமல் போய்விடவில்லை. முன் பெல்லாம் கல்விதான் ஆத்மீகத்தை வளர்த்தது. அந்தக்காலத்தில் கல்வியாளர்களை எல்லாம் "சான் ருேர்கள்' என்றும் குறிப்பிடுவாாகள். இன்றைக்கு "எஜுகேடட் என்று குறிப்பிடுடப்படுபவர்களில் எத்தனைபேர் சான்றேர்களாக இருக்கிருர்கள்? பொதுவாகப் பார்த்தால், அடுத்தவனும் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் பரவலாக அழிந் துபோய், தான் மட்டும்; தனக்காக எல்லாம் என்று நினைக்கிறதைச் செயல் படுத்தத்தான் இன் றைய கல்வி அதிகமாக உதவுகிறது."
இப்படி அவர் சொன்னபோது அவருடைய சிவந்த உப்பலான முகம் மேலும் சிவந்து உப்ப லாகக் காணப்பட்டது. உணர்ச்சிவசப்பட்டிருந் தார்.
* இன்றையக் கல்வியைப் பற்றி உங்களுக்குத் திருப்தி இல்லை என்று தெரிகிறதே. சந்திர மண்ட லத்துக்கே போய் வந்துவிட்டானே ம னி த ன். கல்வி வளர்ச்சி இல்லையா இது?’ என்று நான் கேட்டுவைத்தேன்.
“ஓ! நீங்கள் சொல்லுவது அறிவு வளர்ச்சி. நான் சொல்வது ஆத்ம வளர்ச்சி. இரண்டும் கல் வியால்ஏற்படவேண்டியதுதான்-அறிவுவளர்ச்சியில் சந்திர மண்டலத்தைத் தொட்டு உயர்ந்து நிற் கிற நூற்ருண்டில் ஆத்மவளர்ச்சியைப் பொறுத்த மட்டில் அநேகமாக ஒவ்வொரு மனிதனும் அன தையாக நிற்கிருன், அறிவின் வளர்ச்சியால் பூமி

யைத் தோண்டிப் புதையல் எடுத்துச் செல்வந் தணுகிற ம னி தன் ஆத்மவளர்ச்சியில்லாததால் பரஸ்பர அன்பும் நம்பிக்கையும் குறைந்துபோய் ஏழையாகி நிற்கிருன். மனைவியைத் தவிக்கவிடுகிற கண வ ன், கணவனைத் தவிக்கவிடுகிற மனைவி, இளம் பிள்ளைகளைத் தவிக்கவிடுகிற பெற்ருேர், முதிய பெற்ருே ரைத் தவிக்கவிடுகிற பிள்ளைகள் இப்படிக் குடும்பம் தோறும் காணுகிற காட்சிகள் எல்லாம் மனித மனத்தின் பரிணும வளர்ச்சிக்குச் சாட்சியங்களாகவா இருக்கின்றன? இந்த நிலை நீடித்தால் "கணிபால்ஸ் மாதிரி மனிதனை மணி தனே இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் நாள் விரைவிலேயே வந்துவிடுமே. அறிவின் வளர்ச்சியி ஆலு ம் உடம்பின் வளர்ச்சியிலும் மு ன் னே றி க் கொண்டே போகின்ற மனிதவர்க்கம், ஆத் ம வளர்ச்சியில் பின் வாங்கிக் கொண்டே போகிறதேஇதுதான் என்னுடைய வருத்தம்" என்ருர்,
அவர் இப்படி எல்லாம் பேசுவது எனக்குப் புதிதல்ல. ராமகிருஷ்ணமிஷனுடன் இவர் அதிகம் தொடர்புகொண்டவர். ராமகிருஷ்ணர், ஆதி சங் கரர் என்று நான் கேள்விப்பட்டுப் பரிச்சயமில் லாத பலரைப்பற்றியே இவர் எ ப் பொழுது ம் பேசுபவர். அதனுல் அவர் நோக்குகிற கோணம் எனக்கு விளங்குகிறது. நானும் சிறிது சிறிதாக அந்தக் கோணத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கி றேன் என்ற உணர்வு ஏற்படுகிறதே - இதுதான் எனகுப் புதிது.
“Luntri......’”
என் சிந்தனை திடும்மென்று கலைந்தது. திரும்பிப் பார்த்தால் எனக்கு இதயமே உறைந்துவிட்டது. மஞ்சு எப்போது இங்கு வந்தாள்? எப்போது அந்த உயரமான ஸ்டூலில் ஏறினுள்? ஸ்டூல் கவிழ்ந்து குழந்தை விழுந்துவிட்டாள் - பிரக்ஞை த ப் பி ப் போயிற்று - பேச்சுமூச்சில்லை.
என் மனதில் ஏற்பட்ட பதைப்பில் சட்டென அவளை வாரித் துக்கிக்கொண்டு ஓடினேன். மிஸ் டர் சாம்பசிவம் என்று இரை ந் தே ன், ப தி ல் இல்லை - குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு எல் லோரும் வெளியே போயிருக்கமாட்டார்களே!
எனக்கு இப்போது, இதுவரை என் கண்ணி லேயே பட்டிராத அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. எந்த மூலையில் தன்னை மறந்து உட்கார்ந் திருக்கிருளோ, நிச்சயம் இங்கேதான் இப்பாள்.
ஏதோ ஒரு தீர்மானத்தில் தினம் தினம் அந் தக் குரலைக் கேட்டுப் பழகிய திக்கில் நடந்தேன். தோளில் குழந்தை - மனதில் பதட்டம். கதவு திறந்துதான் இருந்தது. 'அம்மா . . " எ ன் று தொடங்கியவன் ஆச்சரியப்பட்டுப் போனே ன், குழந்தையை நழுவவிடாதது ஆச்சரியம்தான்.
சுமார் இருபது அல்லது இருபத்திரண்டு வயது மதிக்கக்கூடிய, வெள்ளைச் சேலை அணிந்திருந்த அந்தத் தபஸ்வினி, ஏற்கனவே கண்ணில் வாழ்ந்த சோகத்துடனும், புதிதாகக் குடியேறிய அதிர்ச்சி யுடனும் எழுந்து நின்று என்னைப் பார்த்தாள். அந்தக் காட்சி, குளத்தின் நடுவே அல்லி மலர் ஒன்று பூத்துத் தலையை நீட்டுவதுபோல இருந்தது"

Page 33
'ஐயோ, மஞ்சுவுக்கு என்ன?’ என்று அவள் அலறிய பிறகு நான் சுய உணர்வு பெற்றேன். பிறகு மஞ்சுளாவுக்கு சிகிச்சை அளித்ததும், இன்று இவள் ஓடோடித் திரிகிருள் என்பதும் இங்கே விரி வாக விபரிக்கத் தேவையில்லாதவை. என் மனதில் அன்றைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி இருக்கிறதே - அதுதான் இங்கே பிரதானம்.
'அம் மை யா ரா வது மண்ணுங்கட்டியாவது. சாம்பசிவத்தின் மூத்தசகோதரியாக இருப்பாள் என்று எண்ணியிருந்தேன் - இவள் இளைய சகோ தரி. இந்தப் பச்சைப் பாலகியிடம் இருந்து அவள் கணவனைக் கவர்ந்துகொண்ட காலனைப் பார்த்தால் ஒரு உதைவிடலாம் என்று தோன்றிற்று. நளின மான உணர்ச்சிகளுடைய செளந்தர் யவதியான அவள், வாழ்வதற்குத் துடிக்கிற வயதில், வாழமுடி யாமல், உருகி உருகிச் செத்துக்கொண்டிருக்கிருள்.
திரு சாம்பசிவத்தின் மேல் இருந்தாற் போலி ருந்து எனக்கு ஆத்திரம் ஆத் திர மா க வந்தது. மணிக்கணக்கில் உட்கார்ந்து தத்துவம் பே ச த் தெரிந்திருக்கிற அவருக்கு, மலைபோலச் செல்வம் சேர்த்துக் குவித்து வைக்கத் தெரிந்த அவருக்கு இந்தச் சகோதரி படுகிற துன்பம் தெரியவில்லையா? தெரிந்தும் வேண்டுமென்றே அந்த வீட்டின் ஒரு மூலைக்குள் அவளை அடைத்துவைத்து ஆத்மீகத் துக்குப்பலம் சேர்க்கிருரா? நான் அவரிடம் கண்ட பக்தி, நியமம், தொண்டுமனம் இவை எல்லாம் பொய்யாக உணர்ந்தேன்.
 

31
இவ்வளவு சிறிய வயதில் அவள் தனக்குத் தானகப்பட்டு அனுபவிக்கிற துன்பம் அவர் இத யத்தில் கொஞ்சமாவது வைத்திருந்தால் இதற்குப் பரிகாரம் தேட முயற்சிக்கமாட்டாரா? முயற் சிப்பதாகத் தெரியவில்லையே-எனக்கு அவருடைய மனிதத் தன்மையைப்பற்றியே சந்தேகமாய் இருந் தது. குழந்தை மஞ்சு விழுந்த அன்று, அவரும் மனைவியுமாக சினிமாவுக்கல்லவாபோயிருந்தார்கள். எப்படி முடிந்தது அவளுடைய அண்ணனுக்கு? அவளுக்கு யாரோவான நான் இந்தச் சில நாட்க ளில் அவளைத் தவிர, அவள் படுகின்ற துன்பத் தைத் தவிர வேறு நினைப்பின்றி தவிக்கிறேன். தன் னுடைய சோகம் கலந்த அமிருத கானத்தால் ஏற்கெனவே அவள் என்னுள் நிரப்பி விட்டிருந்த இரக்கம் இப்போது பன்மடங்காகி எனக்கு அவளைத் தவிர வேறு நினைப்புகளே இல்லாமல் செய்துவிட் டிருந்தது. மல்லிகைப் பூவும் சாம்பிராணியும், சந் தனமுமாக மணந்துகொண்டிருந்த அந்த அறையின் நடுவே, உடலில் வெள்ளைப் புடவையும் கண்ணில் சோகமுமாக "வாழ்க்கையின் மணத்தை எல்லாம் நான் இழந்துவிட்டேன்’ என்பதுபோல அவள் எழுந்து நின்ற அந்தக் கணம் என்னுள் நிரந்தர ஞாபகமாகிவிட்டது. ஆளைத் தெரியாமல் அடிமை யாக்கிக்கொண்ட கீதம், ஆளைத் தெரிந்தபின் அம் பாகித்தைக்கிறது. ‘புக்கு நிற்பதென்று கொல்லோ என் பொல்லாமணியைப் புணர்ந்தே' எ ன் று அவள் பாடும்போது - அந்தத் தவிக்கவிடப்பட்ட தனிமனதின் துயரம் என் மனதை முழுவேகத் துடனும் தாக்குவதால் ஒரு நாளும் அழுதநியாத நான், அழுவதே ஆண்பிள்ளைக்கு அவமானம் என்று நினைக்கின்ற நான், மெளனமாக தலையணையில் முகம் புதைத்து அழுகிறேன்.
நான் கஷ்டம் தெரியாமல், கவலைகள் அறியா மல் வளர்ந்து விட்டவன். பாடசாலை நாட்களி லும், கலாசாலை நாட்களிலும் பெண்களைக் கேலி செய்து அழவைப்பதில் பேர் பெற்றவன். இன்று இளைஞனுகி, உத்தியோகமும் பெற்றுப் பலகாலம் சென்று விட்டது. இதுவரை என் மனதில் மென் மையான எந்த உணர்வுகளையும், எந்தப் பெண் ணுமே எழுப்பியதில்லை. இவளோ, தானே மெளன மாகத் துடிக்கிற துடிப்பால் என் இதயத்தின் இர க் க த்தை எல்லாம் குவித்துக்கொண்டாள். இரக்கத்தைவிடவும் மென்மையான உணர்வு எது வும் இருக்க முடியுமா? அன்பென்ற அடிப்படை அல்லாமல் இத்தகைய பேரிரக்கம் என் மனதில் தோன்றுவதற்குக் காரணம்தான் என்ன? கேள்வி களுக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை!
கடற்கரையில், பூங்காக்களில், தெருவீதிகளில், தியேட்டர்களில் கணவன்மாரோடு உல்லாசமாக உலாவுகின்ற பெண்களைப் பார்க்கும்போதெல்லாம், அவள்தான் என் ஞாபக த் துக் கு வருகிருள் - கோவில்களுக்கு முன்ஞல் பூக்கடைகளில் சரம் சர மாய்த் தொங்குகிற மலர் களை ப் பார்க்கும் போதும், போத்தல்களில் அடைத்து வைத்திருக்கிற குங்குமத்தின் வகைகளைப் பார்க்கும்போதும் என் ஞாபகத்துக்கு அவள் வந்து கொண்டிருந்தாள்.

Page 34
32
என்னை அறியாமலே என் நினைவுகளில் அவளுக்கு இந்த முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. புற உலகில் இதுநாள்வரை எனக்கு இருந்துவந்த கவர்ச்சிகள் எல்லாம் அற்றுப்போய் - என் நினை வுகளில் ஒரே ஒரு கவர்ச்சியாய் அவள் மட்டுமே தெரிகிருள்.
இது - இதற்குப் பெயர் - இதற்குப் பெயர் தான். வேண்டாம் என்னுள்ளே அவளுக்காக எழுகின்ற இந்த உணர்வுகளுக்கு எனக்குத் தெரி கின்ற அந்தப் பெயரைச் சூட்டிவிட்டு வெளியுல கத்தின் முன்னல் வாயைத் திறந்து கூற எனக்குத் தைரியம் வேண்டாமா? சாம்பசிவம் கழுத்தை நெரித்துப் போட்டுவிடமாட்டாரா? அம்மாதான் சும்மா இருப்பாளா? அவள் ஓ! அவள். அவளுள் ளும் ஒரு இதயம் இருப்பதை மறந்துவிடலாமா நான்? பாரதியார் பாடியதுபோல ‘கைக்கும் வேம்பு கசந்திடு செய்யாபல்-காட்சியற்ற கவினுறு நீர் விழி” என்ற வகையாகப் போய்விட்டால் - அது எத்தகைய பெருந்துயர்!
“தம்பீ,-இந்தப் படத்தில் இருக்கிற பெண்ணை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று எழுது' என்று அம்மாவிடம் இருந்து க டி த ம் வந்திருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கிற பெண் அழகாய் இருக் கிருளா என்று நான் எழுதவேண்டியது; மிகுதியை அம்மா பார்த்துக்கொள்ளுவாள்.
என் மனதில் நிழலாக ஒரு உருவம் எழுகிறது அவள் பதுமையாய் மெல்ல அசைந்து நடக்கும் அழகுபார்த்து அவள் கால்விரலுக்கு மெட்டியணி வித்து அழகுபார்க்க விரும்பியவன்நான். மெளன மாய்த் தன் இழப்புகளைத் தாங்கி நிற்கும் அவள் இதயத்தின் அழகுபார்த்து அதற்கு முழு மகிழ்ச்சி யையும் மீட்டுக்கொடுத்து அழகுபார்க்க விரும்பிய வன் நான். படத்திலிருக்கிற இந்தப் பெண்ணின் அழகுபார்த்து எழுதவேண்டுமாம். 'இல்லையம்மா என்னல் முடியாது. என் வாழ்வில் மங்களகரமான நிகழ்ச்சி ஒன்று நடைபெறத்தான் வேண்டுமென் ருல் என் மனம் நிறைந்த மங்களகரமான பெண் ஞக எழுபவள் தன் வாழ்வின் மங்கலங்களை எல் லாம் இழந்த இவள்தான். இவளைத் தவிர வேறு எந்தப் பெண்ணினுடைய அழகும் என்னைக் கவர (ւpւգԱյո Ֆ]. **
என் நினைவுகள் சாம்ப சிவத்தைப் பற்றிப் படர்ந்தன. அவளைச் சிறை வைத்திருக்கிறமாதிரி அல்லவா அவர் வைத்திருக்கிருர்? ஆத்மீகம் ஆத் மீகம் என்று கூறிக்கொண்டு இப்படி ஒரு தனி மனத்தின் ஏக்கங்களுக்கும் அபிலாஷைகளுக்கும் சாகும்வரை தீர்ப்புக் கொடுக்காமல் தர்மத்தைப் பற்றியும் அறத்தைப்பற்றியும் பேசுகிருரே, இது ஏற்றுக்கொள்ளத் தக்கதாகப்படவில்லை எனக்கு, செத்துப்போனவனை உயிருள்ள ஒருவனுக நினைத்து பிரமையில் உணர்ச்சிகளைக் கொன்று கொண்டு வாழ் என்பது எந்தவித தர்மமாகவும் எனக்குத் தெரியவில்லை. ஒருநாள் சாம்பசிவத்திடமே இது பற்றிக் கேட்டுவிட்டேன். அவர் சொன்ன பதில் எனக்குத் திகைப்பைக் கொடுத்தது.

'நீங்கள் ஒரு தனி மனத்தின் பலவீனத்தைக் காட்டி வாதிடுகிறீர்கள் ஆனல் அவளும் கூட ஒரு தனிமனத்தின் உறுதியைக் காரணம் காட் டித் தான் தன்னை மற்ருெரு விவாகத்திலிருந்து விலக்கிக் கொள்கிருள். அவள் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு கிடையாது.”*
அவர் உண்மைதான் பேசுகிருரா என்று நான் சந்தேகப்பட்டேன். ஏனெனில் தானகவே தெரிந்து எடுத்துக்கொண்ட வாழ்க்கை அவளுக்கு அத்தனை துன்பத்தைக் கொடுக்குமா என்ன? எப்படியிருந் தாலும் அவர் அதை என்னிடம் சொன்னர் என் பதில் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது. சீக்கிரமே அவர் சொற்களை அவரிடம் திரும்பிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வரலாம் அல்லவா..?
கொஞ்ச நாட்களாகவே என் ம்னதில் அமைதி இல்லை. அம்மாவிடமிருந்து நான்கு கடிதங்கள் வந்துவிட்டன. ஒன்றுக்கும் பதில் போடவில்லை இனி நான் செய்யவேண்டியது என்ன என்பது பற்றி ஒரு முடிவுக்கும் என்னல் வரமுடியவில்லை. ஆனல் விரைவிலேயே நான் ஒரு முடிவுக்கு வந்து விடவேண்டும் என்பது தெரிகிறது. மனதில் குழப் பங்கள் ஆழ, குழம்பியவனுகவே குமாரவேலுக்கு முன்னுல் போய் நின்றேன்.

Page 35
குமாரவேல் எ ன் னு டை ய நல்ல நண்பன், வேடிக்கையாகப் பேசுவான். ஆனலும் தெளிவான சிந்தனையுடையவன். என் குழப்பத்தில் ஒரு சிறு அளவையாவது தீர்த்துவைப்பான் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது அவன் "என்னடா” என்று கேட்டபோது நான் சுற்றி வளைக்கவில்லை. நேரடி யாகவே கேட்டேன்.
'விதவா விவாகத்தைப் பற்றி நீ எ ன் ன நினைக்கிருய்?’
**பாரதிதாசனை எனக்கு நிறையப் பிடிக்கும்' என்று கையில்வைத்திருந்த சிகரெட்டின் சாம்ப லைத் தட்டினன் அவன்.
எனக்கு ஆத்திரம் வந்தது.
**எப்போதுமே தங்களைத் தீண்டாத துன்பம் மனிதருக்கு வேடிக்கையாகத்தான் இரு க் கும் போலிருக்கிறது.”
*டேய் இலக்கிய ஞான சூனியம், பாரதிதாசன் கவிதைகளைக்கையாலே தொட்டதுசுட இல்லையா நீ? பாரதிதாசன் விதவா விவாகத்தைப் பற்றிக் கூறி யிருப்ப தை ப் படித்தால் நீ அப்படியே நெகிழ்ந்து விடுவாய். நீ மட்டுமென்ன. நானும் தான். ஆனல் அதற்காக அவர் கருத்தை முற்ருக ஆதரிக்கிறேன் என்றும் சொல்ல முடியாது. நான் விதவா விவாகத்தை ஆதரிக்கிறேன் ஆதரிக்க வில்லை; இரண்டும்தான். இந்த விஷயம் தனிமனங் கள் சம்பந்தப்பட்டது. மாடு ஆடுகளைப்போல ஒரேவிதமாக எண்ணிக்கொண்டு சட்டங்கள் வகுப் பது மனித மனங்களுக்குப் பொருந்திவராத விஷ யம் என்பது என்னுடைய கருத்து. ஒரு பெண் செத்துப்போனவனையே நினைத்துக்கொண்டு தன் வாழ்க்கையைக் கருக்கி முடிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் விவாகம் செய்ய விரும்புகிறவர்கள் தாராளமாக செய்து கொள்ளலாம். ஆணுல் எங்கேயாவது சிலமனங்கள் மறுபடி திருமணத்தை நினைக்காமல் வாழ்ந்தால் அவற்றைத் தேடிப்பித்து வணங்க நான் தயாராய் இருக்கிறேன். அவர்களுக்கு வைதவ்யம் என்பது தண்டனை அல்ல; தவம் உடம்பைப்பற்றி மட்டு மல்ல; உள்ளத்தைப்பற்றிய வாழ்க்கையும் ஒன்று உண்டு என்று நிரூபிக்கிற அறம், அது இரக்கத் துக்குரியதல்ல ஆராதனைக்குரியது.”
'உள்ளத்தைப்பற்றிய வாழ் க் கை" என்று அவன் சொன்னபோது சாம்பசிவத்தின் நினைவ வந்தது. அவரும்கூட இதைத்தானே சொல்லிக் கொண்டு, தன் தங்கையிடம் அதை எதிர்ப்பார்க் θαγή ο
**ஆளுல் குமாரவேல், உன்னுடைய கொள் கைகளுக்காக இன்னுெரு பெண்ணை அடைத்து வைத்து வருத்தமாட்டாயே நீ’ என்று நான் கேட்டேன்.
நிச்சயமாய் இல்லை’ என்ற அவன் என்னை கூர்ந்து பார்த்து "உனக்கேன் திடீரென்று இந்: ஆராய்ச்சி? என்று கேட்டான்.

33
சிமயம் வரும்போது சொல்கிறேன் என்று எழுந்து வந்துவிட்டேன் நான்.
米 *k 米
சிம்பசிவத்தின் மனைவி மகப்பேற்றுக் காக மருத்துவ மனைசென்றிருந்தாள். இரண்டு நாட்க ளாக வீட்டு வேலைகள் எல்லாம் சாம்பசிவத்தின் தங்கைதான் செய்கிருள். தனக்காக இரக்கப்படு கிற எனக்காகவும் சேர்த்து அவள் சில வேலைகளைச் செய்ய நேர்ந்தது - ஏனென்ருல் நான் அங்குதான் சாப்பாட்டைபும் வைத்துக் கொண்டிருந்தேன். அவள் எனக்காகவும் சேர்த்துச் சிரமப் படுகிருள் என்பது எனக்கு என்னவோ போல் இருந்தது. ஆனல் அதற்கு மாற்று எதுவும் புலப்படவில்லை. மாற்று இருந்தும் அதில் நான் அக்கறை செலுத்த
ல்லையோ என்றும் தெரியவில்லை. இத்தனைநாள் தயங்கித் தயங்கி நடமாடிய அவள், இப்போது தாராளமாக நடமாடுகிருள். அவளுடைய தரி சனம் என் குழப்பங்கள் எல்லாவற்றையும் நீக்கிஎன்னுள் தைரியத்தை வளர்க்கிறது. அதை நான் இழந்துவிட விரும்பவில்லை இப்படியே நாட்கள் சில சென்றன.
ஒருநாள் நானும் சாம்பசிவமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவேளை, அவளை நான் தற்செயலாகக் காணநேர்ந்தது - திடுக்கிட்டு விட்டேன் நான். சோகப் பதுமையாய்த்தான் அவளைக்கண்டு பழக்கம் என்ருலும் கண்ணில் நீருடன் அல்ல. எதற்காக வோ கண்ணும் முகமும் சிவக்க அவள் அழுதிருக் கிருள். எனக்கு ஒன்றுமே ஒடவில்லை - சாம்ப சிவத்தின் முகத்தைப் பார்த்தேன்.
'மூன்று வருடங்களுக்கு முன்னல், இதே நாளில்தான் அவள் கணவர் விபத்தில் சிக்கினர் - மறுநாளே இறந்துபோய்விட்டார்' என்று அவர் கையை உதறிக்கொண்டு எழுந்துவிட்டார். நானும் எழுந்து கொண்டேன்.
சாம்பசிவத்தின் உணர்ச்சியை வெறும் பாசாங்கு என்று சொல்லவரவில்லைநாள் - "அவர் நினைத்து முயன்றிருந்தால் - இன்னெரு புது வாழ் வில் - இந்த நாளின் முக்கியத்துவத்தையே மறந்து சிரித்திருக்கச் செய்திருக்கலாமே அவளை’ என்று மட்டும் எண்ணிக்கொண்டேன்,
அன்று இரவெல்லாம் அவள் படுக்கையில் படுத்திருந்து அழுது கொண்டிருப்பாளோ என்பது போன்ற நினைவுகளால் நான் நிம்மதியில்லாமல் தவித்தேன். விடிகாலையிலும் நான் துாக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தபோது அவளுடைய மதுர மான குரல் என்னை உருக்கி அலைக்கழிக்க எழுந் தது. கொஞ்சநேரம்தான் அது இசையாக இருந் தது. அப்புறம் அது விம்மல்களாகக் குலைந்து கொண் டிருந்தது. அந்த விம்மல்கள் என் இதயத்தைப் பிளந்தன. என்னையறியாமலே எழுந்து அந்தப் பூஜையறை வாசலுக்குச் சென்றுவிட்டேன் நான். அவள் கிறிஸ்தவர்கள் வணங்குவதுபோல முழந் தாளிட்டு அமர்ந்து கைகளைக் கூப்பியிருந்தாள்.

Page 36
34
நான் வாயில் நிலையிலேயே சாந்து நின்றவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்ததாலும் வாயில் பக் கம் முதுகைக் காட்டியவாறு இருந்ததாலும் என் னைக் கவனிக்க நேரவில்லை.
"தேன் பழச் சோலை பயிலும் சிறு குயிலே" என்று விம் ம ல் களுக்கி டையே அவள் பாடத் தொடங்கியபோது நான் சும் மா தா ன் நின்று கொண்டிருந்தேன். 'ஊன் பழித்தென் உளம் புகுந்து உணர்வது ஆய ஒருத்தன்' என்ற அடி வருகையில் நான் உணர்ச்சி வசப்பட்டு கதவு நிலை யில் கையால் அடித்து விட்டேன். அவள் திடுக் குற்றுத் திரும்பிப் பார்த்தான்.
அவள் பேசத் தொடங்குமுன்னரே அவசரமாய் நானே பேசத் தொடங்கினேன். 'நீங்கள். . . தயவு செய்து, அழுவதை நிறுத்துங்கள். உங்கள் துன்பம் எழுவானலும் தீர்த்துவைக்க நான் தயா ராய் இருக்கிறேன்??
என் மனதின் பலத்தையோ பலவீனத்தையோ இந்தச் சில வார்த்தைகளில் கொட்டிவிட்டபிறகு நான் அற்பணுகிப் போய்விட்டேனே என்ற நினைவு என்னைத் துன்புறுத்தலாயிற்று. ஏனெனில் அவள் எதுவும் பேசவில்லை. ஏதோ ஒரு மோகனமான ஸ்வர்க்கத்திலிருந்து பலவந்தமாக இழுத்து வரப் பட்டவளைப்போல நின்று கொண்டு என்னைப் பார்த் தாள்.
இரண்டு அல்லது மூன்று நீண்ட வினுடிகளுக் குப் பிறகு "அழுகை என்பது இரண்டு மாறுபட்ட உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் இருக்கையில். g என்று வாய் திறந்தாள் அவள்.
நான் அவளை முடிக்க விடவில்லை. “பேரின்பம் பெருந் துன்பம் இரண்டுக்கும் உரிய உணர்ச்சி வெளிப்பாடு அழுகையாக இருக்கலாம். ஆனல் ஒருவர் இருக்கிற நிலையில் இருந்து அவரை உலுக் குவது என்ன உணர்ச்சி என்று புரிந்து கொள்ள முடியாதா?? என்று நான் கேட்டேன்.
அவள் திரும்பி அறைக்குள்ளிருந்த நடராஜர் சிலையைப் பார்த்தாள். இதற்கு நீண்ட பதில் சொல்ல வேண்டும் என்பதுபோல "நான் பிரார்த் தனையை முடித்துக் கொண்டு வந்து உங்களுக்குப் பதில் சொல்கிறேனே" என்று சொன்னுள்.
நான் அறைக்குத் திரும்பினேன். விரைவில் உடுப்பு மாற்றி வெளியே எங்காவது ஓடிவிடலாம் என்று நினைத்தேன். நான் துடித்துத் தவிக்கிறேன் அவளுக்காக. அவள் சாவதானமாக வந்து என்னு டன் கதைக்கிருளாம். இதன் கருத்து நான் எவ் வளவு தலைபோகிற பிரச்சினையாக இதைக் கருது கிறேனே அந்த அளவுக்கு அவள் நினைக்கவில்லை என்பது அல்லவா?
அவமானப்பட்டுவிட்டதுன்பம் என்னைச் சித் திரவதை செய்தது!
நான் ஏன் பிறர் விஷயத்தில் தலையிட்டு அவ மானப்பட வேண்டும் என்று ஒரு கணம் நினைத்

தேன். இந்த நினைவு வந்ததும் எனக்கு ஒரு பெரிய உண்மை புரிந்தது. நான் அவளுக்காக இரக்கப்படப் போய் அவள் எனக்காக இரக்கப்படுகிற நிலைக்கு வந்திருக்கிறேன்! "பிறர்? என்று ஒரு கணத்திலும் குறைந்த நேரத்தில் என்னல் நினைத்துவிட முடிந் ததுபோல பிறரில் ஒருத்தியாக நினைத்து அவளை ஒதுக்கிவிட, யுகமானலும் என்னுல் முடியுமா?
*பெண்ணே - உனக்கு என் மனதில் கிடைத் திருக்கிற உன்னத ஸ்தானத்தைப்பற்றி நீ அறிய மாட்டாய். உன்பாட்டால் நீ என்னுள் எழுதிய ஒவியத்தை உன் சொற்களால் அழிப்பதற்காக இன்று எழுந்து நிற்கிருய், நீ வரைந்திருக்கிற அந்த அழகான ஒவியத்தை என் இதயச் சதை யைப் பிருண்டாமல் உன்னல் அழித்துவிட முடி யாது. ஆனலும் எனக்கு நிச்சயமாய்த் தெரிகிறது. நீ அழிக்கத்தான் புறப்பட்டிருக்கிருய். நான் உன் னைச் சந்திப்பதா? என்னல் எப்படி முடியும்???
நான் அவளைச் சந்திக்க விரும்பவில்லை.
கால்போனபடியெல்லாம் சுற்றினேன். தெரிந் தவர்கள் யாரையாவது காணுமலா போயிருப் பேன். யாரையும் பார்த்துச் சிரித்த ஞாபகம் இல்லை - என்ன எண் ணிக் கொண்டார்களோ : குமாரவேலைச் சந்தித்த ஞாபகம் மட்டும் இருக் கிறது. கண்ணும் மனமும் கலங்கிப்போய் அத்தனை மோசமான நிலையில் என்னை அவன் அதற்கு முன் ஒரு நாளும் சந்தித்திருக்கமாட்டான். "என்ன? என்று கேட்கக்கூடத் தோன்ரு மல் என்னை அவன் அணைத்துக் கொண்டதிலிந்தது அது தெரிந்தது.
"1 சாம்பசிவத்தின் சகோதரி.?? என்று நான் பேசத்தொடங்கியபோது என் மனதின் துயரம் அத்தனையையும் கொட்டிவிடவேண்டும் எ ன் று தான் நினைத்தேன். ஆனல் என் வாழ்வில் முதன் முதலாக நான் ச ந் தி த் து வ ந் தி ரு க் கி ற தோல்வி என்னை அந்த இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசவிடவில்லை. என் பேசாத பேச்சு நண்ப னுக்கு நன்ருக விளங்கியிருக்கவேண்டும். 'தியாகு" என்று என்னைத் திடுக்கிட்டாற்போல உலுப் பினுன். 'உன்னை அவள் பார்த்தாளா? உன்னுடன் அவள் பேசினளா?” என்று அ வ ச ர ப் பட் டு க் கேட்டான்.
அந்தக் கேள்வியில் அவள் என்னைப் பார்த் திருக்கமாட்டாள் பேசியிருக்கமாட்டாள் எ ன் ற நம்பிக்கை தொனித்ததை உணர்ந்தேன் ‘இது என்னுள் நாணுக எழுதிக்கொண்ட உணர்ச்சிக் கோலம்’ என்று நினைத்தேன். இப்படி இத்தனை தீர்க்கமாய் நிச்சயம் செய்ய இங்கு முடிந்தது.
அன்று நான் இல்லத்தில் அவளைப் பார்த்த தில் இருந்து நான் நிலை குலையத் தொடங்கி இன்று காலை அவளுடன் பேசியதிலிருந்து ஒரேயடியாகக் குலைந்துபோய் அவனுக்கு முன்னுல் வந்து நிற்கி றேன் என்று அவனிடம் கூறவா. நான் பேச வில்லை.
சாம்பசிவத்தையும் அவர் சகோதரியையும் பற்றி நான் நன்கு அறிவேன். த ங் கை க் கு

Page 37
நேர்ந்த துன்பத்தில் கலங்கிப்போன பிறகுதான் அவர் அத்தனை ஆத்திகரானர். முன்பெல்லாம் அவர்கூடத்தான் ஒன்றும் இதுபற்றி கவலைப்படுவ தில்லை. மறுபடியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவளைக் கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சினர். இப்பவேணடாம்; உன் மனம் நன் ருகத் தேறியபிறகு என்று வேண்டினர். அவள் எப்பவுமே இல்லை என்று கூறிவிட்டாளாம் ‘அண்ணு நான் துணையிழந்து தவிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். என்னுள்ளே வாழ்கின்ற துணையைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள். என்னுடைய சோகத்தில் அவர் நிரந்தரமாக வாழுகிருர் என்றே அவரைச் சந்திப்பதற்காகத்தான் நான் தினமும் அழ விரும் பு கிறேன் என்ருே நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள். பரவாயில்லை - ஒருநாள் என்ருலும் உண்மை யான அன்பைத் தந்ததற்காக பெற்றுக்கொண் டவள் நன்றி செலுத்துகிருள் என் ருவது புரி ந் து கொள்ளுங்கள் அண்ணு - அது போதும்.’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட் டாள்-அதற்காக சாம்பசிவம் வருந்திய வருத்தம் எனக்குத் தெரியும். பிறகுதான் அவர் மிஷனுடன் தொடர்பு வைத்தார் - கொஞ்சம் கொஞ்சமாய் ஆறியும் விட்டார்."
அவர் சொன்ன தெல்லாம் எனக்குப் புதிதாய் இருந்தது. மனிதர்கள்தான் எத்தனை புதிராய் இருக் கிருரர்கள். நீண்ட நாட்களாக என் மனதில் இடை விடாமல் நிறைந்து கொண்டிருந்த இந்த இரண்டு பேரைப் பற்றியுமே என் கணிப்புப் பிழையாகப் போய்விட்டது திரு. சாம்பசிவம் ஆத்மீகத்துக்குப் பலம் சேர்ப்பதற்காகத் தங்கையை வருத்தவில்லை. தங்கை வருந்துவதால் ஆ த் மீ க ரா ய் மாறிப் போனர்! அவளும் கூட, துன்பத்தைத் தாங்க முடி யாமல் அழவில்லை அழவேண்டும் என்பதற்காக துன்பத்தை விரும்பி ஏற்கிருள். திருவாசகத்தில் தோய்ந்தவள் அல்லவா. 'அழுதால் உன்னைப் பெற லாமே" என்ற வழி போலும்!
குமாரவேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருக் கிருன். எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரி வித்தாயிற்று மிச்சம் எல்லாம் எனக்கு ஆறுதல் என்ற பெயரில் உபதேசம்தான்!
**கும்பலுக்குப் பிரதிநிதித்துவம் வகிப்பது பெரிதில்லையடா. கும்பலுக்கிடையே தனித்துவம் வகிப்பதுதான் பெரிது. தனி மனங்களில் நிலைக் கிற உயர்ந்த நோக்கங்களும் உறுதிப்பாடுகளும் தான் மனிதனை மற்றச் சராசரி மனிதர்களிட மிருந்து உயர்த்தித் தெய்வமாக்குகிறது. விவே கானந்தரையோ,காந்தியடிகளையோ எண்ணிப்பார். அவர்கள் செத்துப்போன பிறகும் வாழ்ந்து கொண் டிருப்பது அவர்களுடைய தனித்துவம் அல்லவா? அவர்கள் எல்லாம் பெரிய பெரிய மின் விளக்கு களைப் போலப் பிரகாசிக்கிருர்கள் என்ருல் ஆங் காங்கே இருண்ட மூலைகளில் மண் அகல்களாக சாம்பசிவத்தின் சகோதரியைப் போன்றவர்களும் தேவைதானே. தனி மனங்களில் இப்படி அபூர்வ மாக நிலைக்கிற உறுதிகளும் கொள்கைகளும் இல்லை என்ருல் இந்த நூற்ருண்டில் மனிதனுக்குள்ளே

35
மனம் இருக்கிறதா என்று இரு ட் டி ல் துழாா9 வேண்டி நேரிட்டு விடும். நீ அவளுக்காக இரக்கப் பட்டால், நான் உனக்காக இரக்கப்படுகிறேன்.
米 米 米
நீண்ட நாட்களுக்குப் பிறகு அம்மாவின் நான்கு கடிதங்களுக்கும் சேர்த்துப் பதில் எழுதினேன்.
**. எந்தப் பெண்ணுலுமே என் மனதைக் கவர முடியவில்லையம்மா, என் மனதைக் கவர்ந்து நிற்கிற ஒரே ஒரு விஷயம் மிஷன்தான். உங்கள் மகனும் விவேகானந்தரைப்போல வெளிநாடுகளில் எல்லாம் இந்து தர்மத்தையும் ஆத்மீகத்தையும் பரப்ப வேண்டுமென ஆசைப்படுகிருன். அவர்கள் எல்லாம் பெரிய பெரிய மின் விளக்குகளாகப் பிர காசிக்கிருர்கள் என்ருல் உங்கள் மகன் ஒரு மண் அகலாகவாவது பிரகாசிக்க விரும்புகிருன், உங்கள் ஆசிகளை எனக்கு வழங்கவேண்டும் அம்மா . . s
நாளைக்காலை என்னுடைய முடிவை, அவளிட மும் தெரிவித்து இந்த வீட்டைவிட்டுப் போய் விடப் போகிறேன். இந்தவிட்டில் இன்னும் ஒரே ஒரு காலை. நாளைக் காலையிலும் அந்தக் கானம் என்னைத் துயிலெழுப்புமா? எழுப்பினுலும் என்ன உருக்கி அலைக்கழிக்காது. நான் சலனங்களைக் கடந்துவிட்டேன்.
என் இதயத்தின் சுவர்கள் ஒவியத்துடன் கிழிக்கப்பட்டு இரத்தம் கசிகிறதுதான். இரத்தம் எனக்குப் போர்க்களங்களை நினைவூட் டவில்லை. இயேசுநாதரை நினைவூட்டுகிறது. யேசுநாதர் இரத்தம் சிந்தினர் - பாவிகளுக்காக - அது தியா கம், நான் செய்யப்போவது தியாகம் அல்ல; என் னுள் ஏற்பட்ட மனமுறிவைச் சீராக்குகின்ற ஒரு வகை "அட்ஜஸ்ட்மென்ட் மெக்கானிசம்?? தான் என்பது தெரிகிறது. என்ருலும் என்ன, என்னு டைய முடிவு, ஒரு தனி மனத்தின் உயர்வு நோக்கத்திலும் உறுதிப் பாட்டிலும்தானே நிலைக் கப் போகிறது.
t
இப்படியும் ஒரு இலக்கிய நெஞ்சம் !
areer இந்த இதழ் தலையங்கத்தில் ஈ ழ த் து இலக்கிய முயற்சிகளையிட்டு அக்கரை கொள் ளாத படித்த மனிதர்களைப்பற்றிக் குறிப் பிட்டுள்ளோம். வெதும்பிய எமது உள்ளத் துக்கு ஆறுதல் தரும் வகையில் மலையகத்தி லிருந்து (மட்டக்களப்பிலிருந்தோ, யாழ்ப் பாணத்திலிருந்தோ அல்ல) ஒரு ஆசிரியை தன் மாதச்சம்பளத்தில் ஒரு சிறு பகுதியை மாதா மாதம் 'மலர்' இலக்கிய ஏட்டின் வளர்ச்சிக்கென அனுப்பிவருகிருர். நெஞ்சம் நெகிழ, கண்கள் பணிக்க, பெயர் குறிப்பிட விரும்பாத அந்தச் சோதரியின் இலக்கிய நெஞ்சத்தை மானசீகமாக வாழ்த்துகிருேம். - ஆசிரியர்

Page 38
36
கைவண்டி, நிலையத்தை அடை
வதற்கு முன்பே கதவோரங் களில் கூட்டமாகவந்து நின்றுகொண் டனர் பிரயா னிகள். பெட்டிகள், பிரயாணப் பைகள், மற்றும் மூட்டை முடிச்சுகளை தூக்குவதற்கு வாகாக ஆயத்தப்படுத்தி வைத்துக்கொண்டு வெளியே பாயத் தயாராக இருந்
தார்கள்.
புகைவண்டி வந்து நின்றதுதான் தாமதம், அத்தனை பிரயாணிகளும் திமுதிமுவென்று வெளியே பாய்ந்து, ஓட்டமும் நடையுமாக மேடையைக் கடந்தனர். பிரயாணிகள் வெளியே றும் வாசலில் ஒரே தலைமயம். நெருக் கியடித்துக்கொண்டு வந்த பிரயாணி களை ஒவ்வொருவராக வெளியேற்று வதில் டிக்கட் கலெக்டர் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.
இத் த னை அமளிதுமளிகளையும் வே டி க் கை பார்த்துக்கொண்டிருந் தான் சோமலிங்கம். அவன் இன்னும் புகைவண்டியைவிட்டு இறங்கவே
"இப்படியும் ஒரு பிரகிருதியா?" என்ற பாவத்தில் அவனை வியப்புடன் பார்த்துக்கெ"ண்டு சென்றனர், ஸ்டே ஷனைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரு வர் மட்டக்களப்பு ஸ்டேசனில், காலை வண்டியில் இப்படி ஒரு புதுமிையை இதற்கு முதல் அவர்கள் கண்டதே யில்லை காரணம் அந்த லைனில் மட் டக்களப்புத் தான் கடைசி ஸ்டேஷன். ஸ்டேஷனுக்கு வெளியே நிற்கும் பஸ் களில் இடம்பிடிக்க வேண்டுமானல், முண்டியடித்துக்கொண்டு மு ன் னே ஓடினுல்தான் முடியும். பிந் தி ஞ ல், வாடகைக் கார் பிடிக்கவேண்டும். அல்லது நடையில்தான் செல்லவேண் டும்.
சோமலிங்கத்துக்கு இந்த விபரங் கள் தெரியாமலில்லே. இருந்தும் அவன் வண்டியில் இவ்வளவு அமைதியாக உட்காந்திருப் பதற்குக் காரணம் என்ன?
பத்து நிமிடங்களுக்கு ப் பின், ஸ்டேஷனில் அமளிதுமளி ஓய்ந்து, பிரயாணிகள் வெளியேறும் வாசல் காலியாகியது. இப்போதுதான் சோமலிங் கம் வண்டியை விட்டு இறங்கினன். எவ்வித பர பரப்புமில்லாமல், மிகவும் நிதானமாகவே இறங்கி வண்டியின் கதவை ச் சாத் தி விட்டு , இன்னும், நிதானமாகவே வாசலை நோக்கி நடந் தா ன் , அவன் கையில், ஏனைய பிரயாணிகளைப் போல் தாலைந்து மூட்டை முடிச்சுகள் இருக்கவில்லை.
 
 

ஒரே ஒரு பை - அழகான, நாகரீகமானதோல் பை - மட்டுமே இகந்தது. பிரயாணிகளுக்கே அழ கைத் தரும் பை அது.
எதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் போல் ஸ்டேஷன் வாசலை நோக்கி நடந்த சோமலிங்கம் டிக்கட் கலெக்டரைத் தாண்டி, ஸ்டேஷனுக்கு வெளியே வந்ததும் மேலே செல்ல இஷ்டமில்லா தவன் போல் தயங்கி நின்றன்.
வீட்டிலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட அதே தயக்கம் - புறப்படலாம் என்ற யோசனை வந்தபோதும், பிரயாணத்தினத்தன்றும், பிரயாண

Page 39
நேரம் வந்தபோதும், ஸ்டேஷனுக்கு வருவதற்காக டாக்சியில் ஏறியபோதும், ரெயிலில் ஏறி இருந்த போதும் ஏற்பட்ட அதே தயக்கம் - இப்போது அவனைப் பின் தொடர்ந்தது.
"அங்கே போகலாமா கூடாதா? கூடப்பிறந்த தங்கைதான். இருந்தாலும், அவள் செய்துவிட்டுப் போன காரியத்துக்கு அவள் முகத் தி லே கூட விழிக்க முடியாதே. அப்படியிருக்க அவள் வீடு தேடிச் கென்று அவளைச் சந்திப்பது. சேச்சே . இந்த மனம் ஏன் இப்படி அலைக்கழிக்கிறது.? இவ் வளவு தூரம் வந்துவிட்டு இனிமேல் திரும்பிப் போவதென்ருல். .? போய்த்தான் பார்க்கலாமே ஒரு தடவை. ஒரே ஒரு தடவை முதலும் கடைசி யுமாக இந்தத் தடவை மட்டும். 2
வாடகைக்கார்கள் நின்ற பக்கம் செல்வதும் பின் திரும்புவதுமாக சில விநாடிகளைப் போக்கிய பின், இறுதியாக ஒரு வாடகைக்காரில் ஏறி உட்கார்ந்தான், சோமலிங்கம், “முதலியார் தெரு’ என்று யந்திரம் போல் கூறியது அவன் வாய்.
தங்கையின் வீட்டை நெருங்க நெருங்க, நிலை கொள்ளாமல் தவித்தது.அவன்மனம், "இந்தக்கார் ஓடாமல் நின்றுவிடாதா? அல்லது இப்படியே பின் பக்கமாக ஒடக்கூடாதா?’ என்றெல்லாம் அவன் மனம் எண்ணியது.
என்னவெல்லாமோ அவன் மனம் எண்ணிக் கொண்டிருந்தாலும், கார்மட்டும் ஐந்து நிமிட நேரத்தில் அவன் தங்கையின் வீட்டை அடைந்தே விட்டது.
காரை விட்டிறங்கி, காரை அனுப்பிவிட்ட பின்னும் அங்கேயே நின்றன் சோம லிங் கம் . நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. போவோர் வரு வோரெல்லாம் அவனை உற்று உற்றுப் பார்க்கத் தொடங்கினர். இனியும் அப்படி அங்கே நின்று கொண்டிருந்தால், திருடன் பட்டம் கிடைத்தா லும் கிடைக்கும்போலிருந்தது. எனவே உள்ளே செல்ல ஆரம்பித்தான்.
*
இரும்புபோல் கனத்த கால்களை ஒவ்வொன்ற
கத் தூக்கி வைத்து அவன் நடந்த போது.
** என்னடி, என்னடி மாய்மாலம் பண்ணுகிரு? உன் அண்ணன் பெரிய தர்மப் பிரபு. அவனிடம் போய் நான் யாசகம் கேட்க வேண்டுமென்கிருயா? அவ்வளவுக்கு ரோசம் கெட்டவனில்லடி இந்த அருளம்பலம். பட்டினியாகக்கிடந்து செத்தாலும் அந்தப் பக்கமே காலடி எடுத்து வைக்கமாட்டேன் நான்"
"இந்த வாய்மட்டும்தான் உங்களுக்கிருக்கிறது சும்மா வாய் வீரம் பேசுவதில் என்ன பிரயோ சனம். காரியம் ஆகவேண்டுமென்ருல் கழுதையின் காலைக்கூடப் பிடிக்க வேண்டியதுதான்!"
** ஒகோ பெரிய ஒளவைப்பாட்டி. எனக்குப் புத்தி சொல்லித் தருகிருயா?"

37
"நான் ஒன்றும் உங்களுக்குப் புத்தி சொல்லித் தரவில்லை. சும்மா கொதி கொதியென்று கொதிக் காமல் கொஞ்சம் நிதானமாக நிலை மை  ைய யோசித்துப் பாருங்கள் என்றுதான் சொல்கிறேன். பிரசவம் இன்றைக்கோ, நாளைக்கோ என்றிருக் கிறது. இந்த நிலையில் கையில் ஒரு தம்பிடிகூட இல்லாமல் இருக்கலாமா? நாளைக்கு ஏதாவது அவசரத்துக்குப் பணம் தேவைப்பட்டால் யாரிடம் போய் கையை நீட்டுவது? யார் நமக்குத் திடீ ரென்று நூறு, இருநூறு என்று கடன் தருவார் கள்? 'தலைப் பிரசவம்' இது. எதற்கும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டுமல்லவா?’’
"அதுதான் நிலைமையை விளக்கி நீ வீட்டுக் குக் கடிதம் அனுப்பி விட்டாயே, ஏதாவது பலன் கிடைத்ததா?”
"நூறு கடிதம் எழுதினலும் நேரில் போய் சந்திப்பதுபோலாகுமா? அண்ணுவும் அம்மாவும் நம்மேல் கோபமாக இருக்கிறர்கள் என்பது தெரி யும் தானே. அதனல் கடிதத்துக்கே பதில் போடா மல் மெளனம் சாதிக்கிருர்கள். ஆனல் நேரில் போனல் அப்படி இருக்கமுடியுமா?”
"அவ்வளவு நம்பிக்கை உனக்கிருந்தால் நீயே அவர்களிடம் நேரில் போகலாமே?” h
*வேறு பெண்களாயிருந்தால் அப்படித்தரன் செய்திருப்பார்கள். ஆனல் என்மனம் உங்களுக்குத் தெரியாதா? சாவதானலும் உங்கள் காலடியில் கிடப்பேனே தவிர, உங்களை உதாசீனம் செய்த அந்த வீட்டில் காலடி எடுத்துவைக்கவே மாட் டேன்.""
'ஒகோ, நீ காலடி எடுத்துவைக்க மாட்டாய். நான்தான் காலடி எடுத்துவைக்க வேண்டுமாக்கும். என்ன? எப்படியும் என்னை அவமானப்படுத்தித் தீர வேண்டுமென்பதே உன் எண்ணம். அதுதானே?"
'ஐயோ இப்படி எல்லாவற்றுக்குமே தப் பர்த்தம் கொண்டால் எப்படி..?”
**பின்னே என்னடி? வேறு என்ன அர்த்தம்?"
'உஹகும்! உங்களோடு பேச என்னுல் முடி யாது. சொத்து, சுகம், உற்ருர், உறவினர் எல் லாம் உதறிவிட்டு உங்கள் அன்பு ஒன்றையே பெரி தாக மதித்து உங்கள் பின்னல் ஓடிவந்த எனக்கு இந்த நெருக்கடியான வேளையில் நீங்கள் காட்டும் அன்பு இதுதானு? இந்தக் கொடூரமான வார்த்தை கள்தானு? இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தால்!”
**தெரிந்திருந்தால்?"
'இப்படிப் பட்டினி கிடந்து சாவதை விட ஒரு துளி விஷத்தைக் குடித்து இறந்திருப்பேன்."
'ஏன் இப்போதுகூட அப்படிச் செய்யலாமே. நான் அன்னக் காவடி என்பது தெரிந்திருந்தும் என் னேடு வரத் துணிந்த போது இதை நீ யோசித் திருக்க வேண்டும். ஏன்? 'ஒரு சாதாரண கிளார்க் கால் உன்னை கண்கலங்காமல் வைத்துக் காப்பாற்ற

Page 40
38
முடியாது' என் TN என் முகத்துக்கு நேரேயே உன் அண்ணன் சொன்னனே. அப்போது நீ என்ன சொன் ஞய் என்பது ஞாபகம் இல்லையா? அவருடன் குடி சையிலே கஞ்சியோ கூழோ குடித்து வாழ்க்கை நடத்த வேண்டி நேர்ந்தாலும் அதுவே எனக்குச் சொர்க்கம், என்று அப்போது கூறினயே இப் போது அதெல்லாம் மறந்துபோய் விட்டதா?”
'மறக்கவில்லை. ஆனல் பணத்தை நாம் எவ் வளவு அற்பமாக மதித்தாலும், நடைமுறை வாழ்க் கையில் அதற்கு அவசியம் ஏற்படத்தானே செய் கிறது?
'அந்த அவசியத்தை உன் பெற்றேர் உணர வில்லையே. ஒரே தங்கைக்கு, கூடப் பிறந்ற ஒரே தங்கைக்கு, ஒரு தம்பிடியாவது கொடுத்தனுப்பு வோம் என்று உன் அண்ணனவது எண்ணினன? அவ்வளவு இரக்கமற்ற கல் நெஞ்சர்களிடம் என் னைத் தூது போகச் சொல்கிருயே?’’
‘‘அவர்கள் ஒன்றும் அப்படிப்பட்டவர்களல்ல. ஆயிரக் கணக்கில் சீதனம் கொடுத்துத்தான் எனக் குத் திருமணம் செய்யத் தீர்மானித்திருந்தார்கள். நான்தான் உங்கள் பேச்சைக்கேட்டு அ ை, யெல் லாம் உதறித் தள்ளிவிட்டு வந்து விட்டேனே?”
'திரும்பவும் அதே பல்லவியா? உன் வீட்ட வர்களுடைய பணப் பெருமையை அடிக்கடி இப் படி நீ சொல்லிக்காட்டுவதென்ரு ல், இந்த வீட் டில் உனக்கு இடமில்லை. இந்த நிமிஷமே நீ உன் பிறந்த வீட்டுக்குப் போய் விடலாம்:'
'சீ! நீங்களும் ஒரு மனுஷன? இந்த நிலை யில் என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறீர் களே இப்படி ஒரு கையரிலா காதவரைக் கல்யா ணம் செய்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்: ' w
** யாரடி கையாலாகாதவன், யார் கையாலா காதவன்? இப்படி இன்னுமொருதடவை சொல் வாயா? சொல்லு! சொல்லு!! சொல்லு!!!
"ஐயோ வேண்டாமே! வேண்டாமே இனிமேல்! நான் அப்படி சொல்லவே மாட்டேன். ஐயோ நிறுத்துங்கள் என்னுல் தாங்கமுடியவில்லை. நிறுத் துங்கள்! ஐயோ நிறுத்துங்கள்!"
அதற்கு மேல் சோமலிங்கத்தால் பொறுக்க முடியவில்லை,
நிறைமாத கர்ப்பிணியை இப்படி மிருகத்தன மாகத் தாக்குபவனை அப்படியே கீறிக் கிழித்து விடத் துடித்தது அவன் உள்ளம். ஒரே பாய்ச் சலில் வீட்டின் ஜன்னலைத் தாவிப் பிடித்து உள்ளே எ ட் டி ப் பார் த் தா ன். அங்கே அவன் கண்ட காட்சி..?
அருளம்பலம் தன் தலையையே சுவரில் மோதிக் கொண்டிருந்தான். அவனைத் தடுத்துக் கொண் டிருந்தாள் அவன் தங்கை தனலெட்சுமி
z 6ir 36r GT GTom Gau 6šr Tor 6T6š7 சோமலிங்கம் யோசித்து முடிவு செய்வதற்குள்

தனலட்சுமி அருளம் பலத்தின் கால்களில் விழுந் தாள். அவனும் தலையை மோதிக் கொள்வதை நிறுத்தினன்.
சோமலிங்கத்தின் நிலை மிகவும் தர்மசங்கட மாகிவிட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளே செல்வது மிக வும் அநாகரிகமான செயல்.
சற்றுமுன் தடந்த சண்டையை அறியாதவன் போல் நடிப்பதும் அவனல் முடியாத காரியம். சிலவேளை வார்த்தைகள் தடித்து அருளம்பலத் துடன் அவன் மோதவேண்டி வந்தாலும் வரும்.
வந்த சுவடு தெரியாமல் திரும்பினன் சோம லிங்கம்: அவன் உள்ளம் எரிமலையாய்க் கொதித்தது.
மட்டுநகரில் சோமலிங்கத்துக்குத் தெரிந்த எத் தனையோ நண்பர்கள் இருந்தார்கள் . ஆனலும் அன்று அவன் நண்பர்கள் யாருடைய வீட்டுக்கும் போக விரும்பவில்லை. வா டி வீ ட் டை நோக்கி அவன் கால்கள் நடந்தன.
தன லெட்சுமி சிறுகுழந்தையாக இருந்தபோது அவர்கள் எல்லோரும் குடும்பத்துடன் மட்டு நகருக்கு வந்திருந்தார்கள். ஒருநாள் மாலை நேரம் இதே பாதையால்தான் அவர்கள் உலாத்தலுக்குச் சென்ருர்கள். அப்போது மழை க் காலம் . தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் மழை பெய்து அன்று ஓய்ந்திருந்தது. அதனுல் சுற்றுப்புறமெங் கும் பளிச்சென்ற ஒரு புதுமை. குளுகுளுவென்ற ஒரு சூழ் நிலையில் புசுபசுவென்ற மெல்லியகாற்று. பெரிய நிழல் வாகை மரமும் சவுக்குமரங்களும் வரிசையாக வளர்ந்து நின்ற அப்பாதையில் இரு மருங்கிலும் திறந்த வெளியில் நீர் நிறைந்து. கட. வின் நடுவே செல்லும் பாதைபோல் காட்சியளித்
35 ġ5 '
வயது வந்தவர்களையே மெய்மறக்கச் செய்யும் இக்காட்சி, சிறு குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்ததில் ஆச்சரியம் என்ன?
இயற்கையிலேயே துருதுருப்பான தனலெட் சுமி ஆங்காங்கே நின்று நீரில் கல்லை எடுத்து எறி வதும், இலையைக் பொறுக்கிப் போடுவதுமாக விக்ளயாடிக் கொண்டிருந்தாள். தந்தை எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவள் அப்படிச் செய்யவே கோபத்தில் அவளை அதட்டிக் கையைப் பிடித்து இழுத்துவந்தார் தந்தை. அதைப் பொறுக்கமாட் டாமல் ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள் குழந்தை. தாயார், தந்தை, கூட வந்தஉறவினர் யார் தேற்றியும் அவள் அழுகை நிற்கவில்லை. சோமலிங்கம் அவளை அணைத்துக் கொண்டபின்பே அவள் அழுகை நின்றது.
அன்று மட்டுமல்ல என்றும் அவள் அழுகையை நிறுத்துபவன் சோமலிங்கம்தான்.
தனலட்சுமி வளர்ந்து பெரியவளாகி, கல்லூரி சென்று, கடைசியில் அருளம்பலத்தைக் கைப் பிடிக்கும்வரை வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்

Page 41
திலும் சோமலிங்கமே அவனுக்கு உற்றதுணையாக உயிருக்குயிரான அன்பு ஊற்ருக இருந்து வந்திருக் கிருன்.
ஒரே தங்கை என்ற காரணத்தாலோ என்ன வோ சோமலிங்கம் அவள்மேல் உயிரையே வைத் திருந்தான். பதினெட்டு வயதுக்குமரியான பின் னும் அவள் ஒரு சிணுக்கம் போட்டுவிட்டால் அவன் நிலை குலைந்து விடுவான். அவள் முகம் வாடினல் அவன் துடித்துப் போய் விடுவான். அவள் கண் கலங்கிஞல் அவன் அழுதே விடுவான்.
ஆனல் இன்று..? தனலட்சுமி இரத்தக் கண்ணிர் வடிக்கிருள். ஆனலும் சோமலிங்கம் அவளைத் தேற்ற முடிய வில்லை.
சோமலிங்கத்தின் கண்கள் குளமாகிக் கட்டை உடைக்கத் தயாராக நின்றன. கைக்குட்டையினல்
முகத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தான் அவன்.
பெண்களுக்கு ஏன் இப்படி ஒரு விசித்திர மனத்தை இறைவன் படைத்தான்.
சிறு வயதுமுதல் அன்பைக் கொட்டி உயிருக் குயிராகப் பேணி வளர்த்தாலும், பருவமடைந் ததும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, அத்தனை பேருடைய பாசத்தையும் வெறுத்து வாழ்க்கை வசதிகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு முன்பின் தெரியாத ஒரு அந்நியனின் அன்பே ப்ெரிதென்று அவன் பின்னல் போய்விடுகிருர்களே! இது என்ன நீதி? இப்படி ஒரு இயற்கை நியதியா? இதை இயற்கை நியதி என்பதைவிட இயற்கை அநீதி என்றுதான் கூறவேண்டும்.
வாடிவீட்டை அடைந்த சோமலிங்கம் லெதர் கேசை மேசையில் போட்டுவிட்டு, தொப்பென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான்.
தனலட்சுமிக்கு வாழ்க்கையிலே எவ்வித குறை யும் இருக்கவில்லை. திருகோணமலையிலேயே ஒரளவு வளமான வாழ்க்கையுடையது அவர்கள் குடும்பம். செல்வச் செழிப்பிலே வளர்ந்த தனலட்சுமி பருவ மடைந்ததும், அவள் திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று தந்தை ஒருபுறம், அண்ணன் ஒருபுறம் முனைந்து நின்றர்கள். குறைந்த பட்சம் ஒரு டாக்டரை யாவது அவளுக்குக் கணவனுக்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணம், அந் முயற்சியில் அவர்கள் தீவிரமாக இறங்கியிருந்த போது, ஒரு கிளாக்கரைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்தாள் தனலட்சுமி.
திருகோணமலையில் புயல் அடித்தபோது, புயல் நிவாரணவேலையில் கல்லூரி மாணவிகளும், சில நாட்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் அவளுக்கு அருளம்பலத்துடன் பழக்கம் ஏற்பட்ட தாம். மற்றவர்களைப் போல் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காக, குறுக்கும் நெடுக்கும் டிைத் திரியாமல் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட

39
வர்களுக்குத் தொண்டு செய்தது அவன்தானும் . மற்றவர்களெல்லாம் மாணவி களைப் பார்த் துப் பார்த்துப் பல்லை இளித்துக் கொண்டு நிற்க இவன் மட்டும் மாணவிகளை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் தன் வேலையில் ஈடுபட்டிருந்தானும், தன்னுடைய ஏழைத் தாயாரும், சகோதரர்களும் வீட்டிலே வறுமையில் வாட தன்னுடைய ஒரு மாதச் சம் பளத்தையும் புயல் நிவாரண நிதிக்கு அப்படியே கொடுத்து விட்டானம்,
மக்குப் பெண். அப்படிப்பட்டவன் நமது குடும்பத்துடன் ஒட்டுவான என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. அவனிடம் மனதைப் பறிகொடுத்து விட்டு வந்து நிற்கிருள். கதைகளையும் நாவல் களையும் படிப்பதனல்வரும் வினை இது. ஏழைகள் தியாகிகள் என்றும், சேவை செய்பவர்கள் லட் சியவாதிகள் என்றும் கதைகளில் எழுதிவிடுகின்ற னர். இப்படியான கதைகளைப் படிக்கிறவர்களுக் கும் ஒரு போலிலட்சிய வெறி வந்துவிடுகிறது. விவரம் தெரியாத தனலட்சுமிக்கு இது தெரிய வில்லை அவளுக்கு இதைத் தெரியவைக்கவும் முடியவில்லை.
“அவனைத் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எவ்வித சுகத்தையும் காணமுடியாது. உன்னைக் கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளக் கூடிய தகுதி அவனுக்கு இல்லை’ என்று கரடி யாகக் கத்தினேன் அன்று. என் வார்த்தைகள் இம்மியும் அவள் கருத்தில் தைக்கவில்லை. இன்று நான் சொன்னது அப்படியே நடந்துவிட்டது. என் வார்த்தைகளை அலட்சியப்படுத்தியதற்கு இப் போது அனுபவிக்கிழுள் அனுபவிக்கட்டும் நன்ரு க அனுபவிக்கட்டும்.’
** மணந்தால் அவரைத்தான் மணப்பேன். இல் லாவிட்டால் உயிரை விடுவேன்' என்று அப்பா விடமே அவள் கூறியபோது எல்லோரும் அதிர்ச்சி யடைந்து விட்டார்கள். ஆத்திரம் தலைக்கேறிவிட்ட அப்பா, 'அப்படியானுல் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. அவ னு டனே யே போய் இரு." என்று கூறியதை அப்படியே செயலில் காட்டி விட்டாளே.!!
கோணேஸ்வரர் ஆலயத்தில் அணு  ைத க ள் போல் தாலி கட்டிக்கொண்டதும், பின்பு தனிக் குடித்தனம் வைத்து மட்டக்களப்புக்கு மாறுதல் எடுத்துக்கொண்டு வந்ததும், திருகோணமலையில் தலைக் காட்டமுடியாமல் குடும்பத்தார் அனைவரும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்ததும் இலகு வில் மறக்கக்கூடியவைகளா?
கலியாணம் முடிந்த ஒரு வருடத்துக் குள் காதல் கசந்து விட்டது. கண்ணிரைச் சிந்துகிருள். கெளரவம், வைராக்கியம் எல்லாம் போய் இப்போ பணம் கேட்டு கடிதம் அனுப்புகிருள்.
இவ்வளவு நாளும் தாய்தந்தையரைப்பற்றிய கரிசனை ஏற்படவில்லை. கஷ்டம் வந்தவுடன்தான் கண் திறக்கிறது. கடிதமும் வருகிறது.

Page 42
40
அம்மா ஒரு பைத்தியம். கடிதத்தைக் கண்ட தும் கண் கலங்கிவிட்டாள். கத்தை கத்தையாகப் பணத்தையும் கொடுத்து அப்பாவுக்குத் தெரி யாமல் என்னைப்போய்ப்பார்த்துவரும்படி அனுப்பி விட்டாள். அம்மாவுக்காக இல்லாவிட்டால் இந் தப்பக்கம் திரும்பியும் பார்ப்பேஞ. அம்மாவுக் காகத்தான். ஆமாம் எனக்காக இல்லை. இல்லவே இல்லை. * -
சோமலிங்கம் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு குலுங்கினன். “ரெஸ்ட் ஹ்வுஸ் போய்" வந்து அறை தயாராகிவிட்டதாகக் கூறியபோது தான் அவன் குலுங்கல் நின்றது.
குளித்துவிட்டுச் சாப்பிட்டு முடித்ததும், பிர ' ஆலுப்பிலும், மனஉளைச்சலிலும், தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது. அப்படியே தூங்கிவிட்ட்ான் சோமலிங்கம்.
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது மணி ஒன்று ஆகியிருந்தது. மத்தியானச்"சாப்பாட்டை முடித்துக் கொண்டு அப்பாடா? என்று வாடி வீட் டின் பின்புற ஹாலில் வந்து அமர்ந்தான் சோம லிங்கம், அப்போது அவன் உடலும், மனமும் இலேசாயிருந்தது.அருகில் உள்ள ஏரியில் தவழ்ந்து எந்நேரமும் சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக் கும் இளங்காற்று உடலுக்கும் மனதுக்கும் மிகவும் இதமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவன் மனக்கொதிப்பு அடங்கி நிதானமாகச் சிந்தனை செய்யக்கூடியதாக இருந்தது.
சிறு வயதில் தன் தோளிலும் மார்பிலும் தவழ்ந்து விளையாடிய தனலட்சுமி இன்று ஏழ்மை யிலும் வறுமையிலும் உழல்கிருள். இந்த நிலையில் அவளத் தனியாக விட்டுச் செல்வது இப்போது மட்டுமல்ல இனி என்றுமே மனத்தை ரம்பமாக அறுத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது. அந் தச் சித்திரவதையிலிருந்து விடு படுவதற்காக வாவது அவளைப் போய்ப் பார்க்கத்தான் வேண் டும். t
தவறு என்னவோ நடந்துவிட்டது. அதற்காக அவள் இவ்வளவு காலமும் அனுபவித்ததே போது மான தண்டனை.
பார்க்கப் போனல் அதைத் தவறு என்றுகூடச் சொல்லமுடியாது. T எவ்வளவுதான் பணத்தைக் கொட்டினலும், ஒரு பெண்ணுக்கு, மனதுக்கேற்ற கணவனுடன் வாழ்க்கை நடத்துவதற்கு ஈடான இன்பம் கிடைக்க முடியுமா? மனத்தில் ஒருவரை வரித்துவிட்ட பின் ஒரு டாக்டரோ, அல்லது எஞ் சினியரோ, அல்லது தொழிலதிபரோ எப்படி அவள் மனத்தை நிறைக்க முடியும்? வற்புறுத்தலுக்குப் பயந்து அப்படி அவள் வாழ்க்கைப்பட்டாலும், அது ஒரு போலி வாழ்க்கையாக இருக்குமேயன்றி, உளம் நிறைந்த உண்மை வாழ்க்கையாக இருக்க முடியாது. அந்தஸ்து என்ற கோணத்திலிருந்து பார்க்கும்போது அவள் செய்கை தவழுகத் தெரி கிறது. அதை நீக்கிவிட்டுப்பார்த்தால் நமது செய் கையே தவருகத் தெரியும். போலி அந்தஸ்து என்ற

போர்வையை நீக்கிவிட்டுச் சிந்தனை செய்திருத தால் அவள் மனதுக்குப் பிடித்த கணவனேயே அவ ளுக்குத் திருமணம் செய்வித்து, அவளை இன்ட வெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கலாம். இப்போது அவள் துன்ப வெள்ளத்தில் நீந்துகிருள், என்ருல் நாமே அதற்குக் காரணமாகவும் இருக்கலாம் .
சோமலிங்கம் சட் டென்று கடிகாரத்தைப் பார்த்தான் மணி இரண்டரை.
இந்த நேரத்தில் அருளம்பலம் வீட்டிலிருக்க மாட்டான். அவன் இல்லாத நேரத்தில்தான் தங் கையுடன் மனம் விட்டுப் பேசமுடியும். தங்கையின் உள்ளக் குமுறல்களையும் அறியமுடியும். ஏதும் உதவி செய்வதென்ருலும் அவனுக்குத் தெரியா மலே செய்துவிடலாம்.
உடனே சட்டையை மாட்டிக் கொண்டு புறப் பட்டான் சோமலிங்கம்.
அன்று இரண்டாவது தடவையாக சோமலிங் கம் தங்கையின் வீட்டில் காலடி எடுத்து வைத்த போது மீண்டும் அதே தயக்கம் அவனை அலைக் கழித்தது.
தயங்கித் தயங்கி அவன் உள்ளே நடந்த போது வீட்டுக்குள்ளிருந்து மெதுவான பேச்சுக் குரல் கேட்டது.
'இதுக்குத்தானு இவ்வளவு அவசரமாக வீட் டுக்கு ஓடி வந்தீர்கள்?"
** என்மனம் கேட்கவில்லை, தனம். காலையில் நான் உன்னிடம் கடுமையாகப் பேசிய வார்த்தை கள் என் மனதைக் குடைந்து கொண்டேயிருந்தது கந்தோரில் ஒரு வேலையுமே செய்ய முடியவில்லை. ஒடிவந்து உன்னைப் பார்த்தால்தான் மனம் நிம் மதியடையும் போலிருந்தது. அதனல் அரை நாள் லீவு போட்டுவிட்டு வந்தேன்.
**தெரிந்த விஷயம்தானே. ஆத்திரப்பட்டு எதையாவது பேசுவது, பிறகு அதையே நினைத்து நினைத்து வருத்தப்படுவது. கோபம் வரும்போது அதை நினைத்துப் பார்த்தால், இந்தச் சண்rை சச்சரவு எதுவுவே ஏற்படாதே"
" என்ன செய்வது தனம், அந்த நேரத்தில் மண்டையில் அது படுவதேயில்லையே! அது சரி காலையில் என்மேல் கோபந் தானே உனக்கு? உண்மையைச் சொல்!"
**கோபமா? ஹ"ம்! இப்படி ஏதாவது இடி இடித்தால் அதைத் தொடர்ந்து அன்பு மழை பொழியும் என்பது எனக்குத் தெரியாதா என்ன? நெஞ்சில் அடைத்திருக்கும் பாசத்தை அடிக்கடி வெளிப்படுத்தும் ஊற்றுக்கள் இந்தச் சண்டை தானே?"

Page 43
'அடி கள்ளி! இந்த ரகசியத்தை நன்ருகத் தெரிந்து வைத்துக்கொடிருக்கிருய் நீ என்ன?"
“இது கூடத் தெரியாவிட்டால் நம் வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கமுடியுமா? இந்த அன்புமழை ஒன்றுதானே வறுமை வரட்சியிலும் தமது வாழ்வை இவ்வளவு பசுமையாகத் தழைக்க வைத்திருக்கிறது.”
"உண்மைதான் தனம். என்னுல் உனக்கு ஒரு சுகமுமில்லை. நான் உன் வாழ்க்கையில் குறுக்கிட் டிருக்காவிட்டால் உன் வாழ்க்கை எவ்வளவோ சிறப்பாக அமைந்திருக்கும்.”
* சீச்சீ! இதெல்லாம் என்ன பேச்சு? என் மனம் உங்களுக்குத் தெரியாதா? பனிச் சிதறிலில் இன்பம் காணும் மலர் பருவமழையை எதிர்பார்ப் பதில்லையே. உண்மையில் மனம் நிறைந்த வாழ்க் கையை நான் இப்போது அனுபவிக்கிறேன். இனி எத்தனை ஜன்மம் எடுத்தாலும் இப் படி யா ன வாழ்க்கையே எனக்குக் கிடைக்க வேண்டுமென்று என் மனம் விரும்புகிறது.”
'அடி, என் செல்லக்குட்டி! என் அன்புக் குட்டி! என் தங்கக்குட்டி ப்ச்!.ப்ச்!. .ப்ச்!. ப்ச்!.."
சோமலிங்கம் மிகவும் தர்மசங்கடத்துடன் குறுகினன்.
ஒரு ஐந்து நிமிட நேரம் பொறுத்து, இனி உள்ளே போகலாம் என்ற எண்ணத்துடன், மெல்ல ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான், சோம லிங்கம். அவன் முகத்தில் அசடு வழிந்தது.
உள்ளே, தனலெட்சுமியை மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்த வண்ணம், அவள் உச்சியில் பதித்த இதழ்களை இன்னமும் எடுக்காமல் மூடிய கண்களுடன் அப்படியே நின்றிருந்தான் அருளம் பலம்.
சோமலிங்கம் கற்பனையில்கூட உருவாக்க முடி யாத ஒரு காட்சி அது.
இத்தனை ஏழ்மையின் மத்தியிலும் இப்படி ஒரு வாழ்க்கையா? "சொர்க்கம் என்று ஒன்று இருந் தால் அது இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியது அவன் மனம்.
தனலட்சுமி வாழ்க்கையில் தோல்வியடைய வில்லை. உண்மையில் தோல்வியடைந்தது நாம் தான். வாழ்க்கை என்ருல் என்ன என்பதைச் சரி யாகப் புரிந்து கொண்டிருக்கிருள் தனலட்சுமி இறைவன் அவளைக் காப்பாற்றி விட்டான்.
தெய்வத்தின் சந்நிதியிலே, உண்மை உணர்ந்த § நான்திகன் நிற்பதுபோல் கூனிக்குறுகி நின்ருள் சாமவிங்கம். கத்தை கத்தையாகப் பணம் நிரபு பிய அழகிய லெதர் கேஸ் அவன் கைகளிலிருந்து தழுவி அவன் காலடியில் விழுந்தது.
(யாவும் கற்பனை)

41
ஈழத்தின் முன்னனிக் ಕ್ವಮ್ಪಿಗೆ
*தீeலைத்துமீல
- எழுதும் -
முத்தமிழ் ஓவியம்
விரைவில் உங்கள்
* மலர் ” சஞ்சிகையில் ஆரம்பமாகிறது.
9. p இப்பொழுதே உங்கள் ** மலர் ”*
- பிரதிகளை -
நிச்சயப்படுத்திக்கெள்ளுங்கள்.

Page 44
42
கூடல்
----
தேடாதே! என்னை; தெரியாது
பாடாதே! ஒப்பாரிப் பாட்டெை கேளாது! நெஞ்சைக் கிளறிப் ட ஆழாதே! இப்போ ததனுற் பய ஆடி முடிக்க அணிந்தவுடற் சட ஒடித் தழுவி உருகாதே! ஊத்ை தொட்டுச் சலவை செய்து தூய் கட்டிச் சுமந்து களைக்காதே! க குப்பை உலகிற் குவிந்த அழுக்கு உப்பிக் கணக்க உறுவாயில் ஐந்த நிரப்பிக் களைத்திந் நிலையை அணி சரக்கை எடுத்துச் சலவை செய ஆருங் கிடையார் அதனல், அணி கோர நெருப்பிற் கொளுத்தி விடு மண்ணுட் புதைத்து மறைத்துவ பண்ணும் வழியிற் பழகிப் பிரிவு என்றன் இழப்பதனுல் ஏங்கித் : உன்றன் உளத்துக் குணர்த்தி இ செல்லும் வழியிற் சிறப்பை எதி பொல்லா மனதைப் புறக்கணித்
ஏது வரினும் இடராகா! ஓரிர6
போது மனக்குறளி போக்கை நேர்ந்த இனிய நிகழ்ச்சித் துணி தேர்ந்து மதித்த திருப்தியுடன்
நீண்ட பயண நிகழ்வு முடிவடை மீண்டும் உனைக்காணும் மெய்ப்பு உன்கூடும் என்கூடும் ஒன்றத் த முன்கூடும் இன்பம் முதன்மை 6 அந்த மயக்கம் அணுவளவும் வ பந்த முணராத பக்குவத்துள் எ நீயாக நானுக நீயேதான் நான போயாகி நிற்போம் பொலிந்து

செல்லுமிடம் தயும்; என் செவிக்குக் பழம் நினைவுள் பனில்லை.
ட்டையினை
தயது! மைப் படுத்த வெனக் ாலமெல்லாம்
நகளை
தால்
Sl-ig5
வல்லோர்
தை எடுத்துக் !ெ இல்லையேல், பிடு! யாம் பயணம்
1தை துடிக்குமெனின்
ளைப்பாற்று! Griunt rfjCg5b துப் போவதனல் ண்டு
இடக்கியதால் களைத் செல்கின்றேன்!
- பாடு தோன்றினதுள் ழுவுவதன் எனக்கணித்த ாழாது;
ால்லாமே
கப்
-எருவில் மூர்த்தி

Page 45
சிறு கதை ஓர் அறிமுகம்
- எம். எச். சேஹஸ் இஸ்ஸதீன்
சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி ஆதியனவற்றின் நிர்வாண இதிகாசங்களைக் கணிப் பீட்டு அட்டவணையின் ஆதார மூலத்துடன் பரிசீ லிப்பது இக்கட்டுரையின் நோக்கு அல்ல. ஆனல் அதனைத்தாண்டிய ஒர் உள்நிலைக்கு ஏறி பிரச்னைக் குரிய மனிதமன ரசங்களை அண்டி அங்கும் வெளி யும் நிகழும் அந்தரங்கச் சிக்கு முடிச்சுகளை முடிந் தமட்டில் தொய்வித்து அவிழ்ப்பது என்ற சங்கல் பத்துடன் வரையப்பட்ட ஒரு படிப்பு வியாசம் இது எனக் கொள்ளல் மெத்த சிலாக்கியமானது.1
பனித ம ன ம் அன்ருடம் அநுபவங்களைக் குறுக்கறுக்கிறது. சில அநுபவங்கள் - சாதாரண மானவை - மனத்திரையில் நிலைநிற்கத்தவறுவதும் சாதாரணமானதே. சில - ரசமானவை - சில்லறை வெளிப்பாட்டில் திருப்திபெற்று அடங்கிவிடுகின் றன. எஞ்சியவைதான் பிரச்னையின் பொருளாகி முடிவு வேண்டித் தொக்கி நிற்கின்றன; பீறிட்டு வெளிக்கிட்டுச் செலவாகிவிட பொருத்தமான வழிச் சமயத்தைக் காத்திருக்கின்றன. இந்த அநுபவங் கள் - மனித மனத்தை அகலமாய்ப் பரவசிக்கச் செய்திருந்தவையாயினும், ஆழமாய் வியாகுலிக்க வைத்தவையாயினும் - தனிப்பட்ட ஒவ்ருவனுக் கும் பிறப்பில் இயல்பாகிவிட்ட கலைத்திறனின் - என்று கொள்வோம் - ஏதோ ஒரு வழியால் ஒடவே காத்திருப்பதாய்த் தங்கி விடுகின்றன. சைத்திரிகன் ஒவியத்தையும், புலவன் கவிதையை யும், எழுத்தாளன் கதையையும் இப்படியே மற்ற வர்கள் தமக்குக் கைவந்த கலையையும் தம் கருத்து வெளிப்பாட்டு ஊடகமாய் கொள்கின்றனர்.
”எனவேfஅழுந்திய அனுபவங்கள் நுணுக் கமாய் உணர்வுகளை மீட்டிவிட அவை மன த்தைவிட்டு பீ றி ட் டு க் கிளம்புகையில் ஏற்படும் நெரிசலின்
galesez::: -
புதுமை" இலக்கிய ரதாயத்தைப் பொருட்படுத் சிறு கதைகள், கட்டுரைகள் தைவிட தன் மனத்தைத்
** : :
 

43
வழிச்சல்தான் "கலை" எனவும் உணர்வுரூபமான கலையின் சடப் பிரசன்னம்தான் 'சிருஷ்டிப்பு" என வும் கொள்ளுவது ஒரு நிறைந்த சமாதானமே. சிறுகதையை, கதையில் சிறுத்துவிட்டதற்காய் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது என்று அதனையும் நாவலையும் தோற்ற ஒப்பீட்டைக்கொண்டு அள விடுதலிலும் பார்க்க, அது தன்னகத்தே சாராம் சித்திருக்கும் கனதியையும் அதன் நீளப் பரிமா ணத்தையும் சிந்தைக்கெடுத்தலில் கொ டு க் கப் பட்ட பெயராய்க் கொள்ளுதலே முறையானது.) எந்த ஒரு தார்மீகத்தோடும் சிருஷ்டிக்கும் கலை ஞனின் மனப்பதட்டம், அவசத்தின் காரணமாக ஒழுங்கற்று சிதறிக் கிடப்பனவாய்த் தோன்றும் தாரகைகள் லட்சணத்தில், செல்லம் விளையாடும் குட்டி ஆட்டின் பாய்ச்சல் ஒழுங்கில் பூரணமற்ற ஆணுல் முற்றுப்பெற்ற ஒரு படைப்பாகக் கற் பித்துக் கொள்ளுதலும் அதுபோன்றதே. இதுவே ஒரு சிறுகதையின் (சகல சாமுத்ரிகாலட்சணங்க ளோடும் கூடியதன்) பிறப்பு ரகசியம்,
உள்மனதின் குலத்தில் சேமிக்கப்பட்வையாய் உறங்கும் உறுத்தும் உணர்வுகள்மேல் மனத்துர டாய் கருநிலைதிரிந்து ஊடகத்துக்கு மேற்கொள் ளும் வழிப்பிரயாணத்தில் பெறும் எலும்பும் சதை யும் சிறுகதையின் ஸ்திர மேம்பாட்டையும், விகி தாசார அழகையும் கற்பித்துவிடுகின்றன. இது வாறு கதை கறுப்பும் வெள்ளையுமாய் ஆகிவிடு கிறது.
இப்படி எழுதப்படும் கதைகள் ஏன் எழுதப் படுகின்றன என்ற கேள்வி அவசியமான ஒன்றே. எத்தனையோ எழுத்தாளர்களிடம் இந்த "நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்’ என்ற சஞதனக் கேள்வி இன்னும் கேட்கப்பட்டு வருவதும், அவர்களும் அதற்கு முன்னுள்ள எழுத்தாளர்கள் சொல்லாத ஒன்றிரண்டு காரணங்களையாவது சொல்லிவிட வேண்டுமென்ற தனித்வ-எழுத்தாள-த் துடிப்பில் "இதற்காகத்தான், இதற்காகவும்தான்" என்று சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டு அசம்பாவிதமாக அசட்டுக் காரணங்களை பிலாக் கணித்து விடுவதும் பற்றி எதைக்குறிப்பிடுவது என்று குத்துமதிப்பாக அர்த்தமாகவில்லை. அந்தக் கேள்விக்கு விடைய ளிப்பவனுதலில் ஒருவன் எழுத்தாள ஸ்தானத்தை அடைந்துவிட்டதாய் தன்னை எண்ணிக்கொள்ள, தான் திருப்தியுற அநுமதிக்கலாம் போலத் தோன் றுகிறது.
. மனிதனுக்கு, விசேடமாக எழுத்தாள ஜீவ அணுக்கள் மனத்துள் ஒடிக்கொண்டிருப்பவனுக்கு, தனக்கென்று ஒரு பெருமையை நிலைநாட்ட வேண் டுமென்ற, தன்னைச் சுற்றி பிறரின் கவனம் ஈர்க்
நோக்குக் கொண்ட இளைஞர் மு. ஹ. சேஹ" இஸ்ஸதீன் சம்பி தாத துணிச்சல் காரர். "வேதாந்தி’ என்ற புனைபெயரில் பல எழுதியுள்ளார். தான் எழுதுவது பிரசுரமாக வேண்டுமென்ப ருப்தி செய்யவேண்டும் என்பதில் அக்கரை கொண்டவர் இவர்,
- ஆசிரியர்.
德

Page 46
44
கப் பட்டிருக்கவேண்டுமென்ற ஸ்தாபிக்கப்பட்ட உண்மையிலுள்ள நாட்டம், அறியும்போதும் அறி யாதபோதும் ஜீவனுக்கு சுவாசம் நடந்துகொண் டிருக்கிறது என்ற பச்சை உண்மையிலுள்ளதைப் போலுள்ள ஒன்று ‘மதன உணர்வுகளுக்கு முதன் மையிடம் வழங்கிய "சிக்மண்ட் பிராய்ட்' டின் ம க த் துவ மிக் க கித்தாந்தங்களைப் போலவே "அட்லரின் 'சிக்கல்" கொள்கைகளும் அடுத்த சாராரிடம் முதன்மைப் பீடத்தை ஈர்ந்துள்ளன. எழுத்தாளனை இலக்கியம் படைக்க உள்ளரங்கமாக நின்று இயக்குவது இந்தச் சிக்கலின் திருப்திகா ணுச் சுயமே.
எழுதும் வித்துடையவனுக்கு மனக் கூர்மை மிக அதிகம் தான். (துரதிர்ஷ்டவசமாக - இலக்கிய உலகுக்கு-இன்று அதிர்ஷ்டத்தில் எழுத்தாளர்க ளாய் பெயர் பெற்றுவிட்டவர்கள் இந்த மனக் கூர்மை விஷயத்தில் விதிவிலக்கு எனக்கொள்க) அறிவதன் கூர்மை உணர்வுகளின் மேன்மையைச் சாடிக் கூட்டுவதில் முடிந்துவிடுகிறது. உணர்வு வாதியான சமர்த்து எழுத்தாளன் வாழ்வின் ஒரு அரும் மிதப்பையும், மூழ்கலையும் ஆழமாய், நாலு வழியிலும் புரிந்து கொள்கிருன். அவன் அவற் றைத் தன் திருப்தி என்னும் நாலுபேர் பொரு ளாக - உயர்வாகவோ, எதிராகவோ - தன்னைப் பேசச் செய்வதற்குப் படைக்கும் முயற்சியாக்கி விடுகிமுன்.
சிறுகதைகள் எழுதப்படுதற்கு இந்தச் "சிக்கல்" தான் முழு முதற்காரணி என்பது என் துணிபு. இ னி எழு த த் தூண்டுவதற்கு ஊக்கிகளாகத் தொழிற்படும் நிலைகள் பல. எழுத்தாளனும் யாரி னது, எதனதோ நீண்டகாலத் தயா ரி ப் பு : படைப்பு. மனித இயல்பு காரணமாகிவிட அவன் தன் கர்த்தாவின் தொழிலைத் தானும் பிரதிபலிக் கிருன் தன்னகத்தே உள்ள விடிவு தேடும் அரூ பக் கருக்களை இலட்சிய உருவில் பார்க்க வேண் டுமென்ற தணியாத ஆவல் வேக்காடு அவனுக்குப் பின்னின்று உந்த தனக்கு இஷ்டப்படி, தான் விரும்பிய திட்டத்தில், தனக்குப் பிடித்த தார்மீக வாழ்வை அளிக்கும் தன் கர்த்தாவைப் பின்பற்று கிருன். (ஒரு வேதம், உருவங்கள் வரைவதை இதே காரணத்திற்காகத் தடைசெய்வதாக பலர் சொல்ல நான் கேள்வி.) எதையெல்லாமோ செய்தும் கிடைக்காத அவாச்சியத் திருப்தி இதில் கிடைப்பதாய் தோன்றும் பிரமைக்காக, அந்தப் பிரமை "நீ எழுதப்பிறந்த ஒன்றே" என்று கடற் திரையாய் சத்திப்பதாய் தோன்றும் ஒரு பல மான விரு ப்ப நம்பிக்கைக்காக, த ன க் கு ஸ் நிறைந்துவிடும் இருதுருவ உணர்வுகளை வெளிப் படுத்தி நிரந்தரிக்க வைக்கும் விழைவுக்காக, இதன்மூலம் கிடைக்கும் அற்பப் புகழ்ச்சம்பாத்தி யமே அளவிலாது என்பதற்காக, தனக்குரிய ஒதுக் கிடம் , அணிகல, ஆயுதம் அனைத்தும் அதுதான் என்பதில் விழுந்துவிடும் நம்பிக்கைக்காக எழுதுகி ருன். சிலசமயம் தன் பிடிப்பு, வெறுப்புகளையும், கொள்கை, கருத்துக்களையும் சரிபார்த்துக்கொள் ளும் சாதனம் இதுவென்பதற்காயும் எழுதுகிறன் .

சிறுகதை த மி ழு க்கு இறக்குமதிக்கப்பட்ட சரக்கு என்று மீண்டு உறுதிப்படுத்திக்கொள்வதில் நமக்கு எந்த லாபமுமில்லை. சிறுகதையின் கர்ப் பக்கிருகத்தில் நின்றே நம் ஆ ரா ய் ச் சி க ளை த் தொடங்குவதாயிருப்பினும் நமக்கு எழும் கேள்வி கள் அநேகம். இன்றுள்ள சிறுகதை விமர்சகர்கள் பிரலாபித்துக்கொள்ளும் வரைவிலக்கணம் என்ற ஒன்று சிறுகதைக்கு எப்போது ஏற்பட்டது; யார் அதனை இயற்றும் அதிகாரத்தைப் பெற்றர்கள்; அல்லது அதுவும் சிறுகதையைப்போலவே இறக்கு மதிக்கப்பட்டதா? என்பதெல்லாம் ஆணித்தரக் கேள்விகள்தான். இவைகளுக்கு விடைபகர்வதில் இன்று எந்த உபயோகமும் கிடையாது. ஏனெ னில் அநுமதிக்கு வந்து தோன்றி வளர்ந்துவிட் டவையாய் அவைகளில் அதிகமான சட்டவரம்பு கள் சரிகாணப்பட்டவையாய் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டன. ஆயினும், சரிகாணப்பட்டவற்றிலும் நமக்கு அதிருப்தியளிப்பன அநேகம். அவை சொல் லப்படுவதும் கடனுகி விடுகின்றது.
மொழிகளுக்குப் பின்னர் அவற்றிற்கான இலக் கணம் வரையறுக் கப்பட்டு நிலைத்துவிடுவதைப் போல சிறுகதை இலக்கியத்துக்கும் அதற்குப் பின் னரே இலக்கணங்களும் எல்லைகளும் ஸ்தாபிக்கப் பட்டன. பிரச்னை என்னவென்றல், மொழியின் கா வ ல ர் களெ ல் று தம்பட்டமடித்துக்கொண்டு மொழியின் வளர்ச்சியை பீத்தல் பெருமைகட் காய் தடுத்துக்கொண்டிருக்கும் 'இலக்கணுதிகளைப் போல சிலர் அபாக்கியமாக சிறுகதைக்கும் ஏற் பட்டுவிட்டதே. இந்த "விமர்சன இலக்கணுதிகள்" சிறுகதையின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத் துக்கொண்டால் தேவலே, சந்தர்ப்பாசந்தர்ப்பங் களில், சிறுகதைக்கென்று இதுவரை அகாரமாய் இல்லாத புதுமையைக் கருவிலும், உத்தியிலும், உருவிலும், நடையிலும், மொழியிலும் புகுத்த முன்வரும்போது அதை எள்ளி நகையாடி ஆசார அனுஷ்டானங்களை, அதீத மத சித்தாந்தங்களை மரபு என்னும் அடைமொழிக்குள் அளவுகோல்க ளாக்கி நிஷ்டூரித்து விடுகின்றனர். புதுமையைப் புகுத்த நினைக்கும் பிரபல்ய எழுத்தாளன் ஒரு வாறு அநுமதிக்கப்பட்டோ, அவமதிக்கப்படாதோ தன் ஏற்கெனவேயுள்ள ஊடாட்டத்தில் தஞ்சம் தேடிக் கொள்கிருன் . புதுமையோடு எழுத்துலகில் பிரவேசிக்கும் புது எழுத்தாளன் நிலை பரிதாபகர மாய்ப் போய்விடுகிறது, அனுக்குக் கிடைக்கும் நிருற்சாகம் தான் மாட்டிக்கொண்ட சகதியை ஏக் கத்தோடு நினைக்கவைத்து அவனை "எழுத்துப் பிரஷ்டமே செய்து விடுகிறது. இதனுல் வீழ்படி வாவதெல்லாம் ஒ ன் று தான். மனிதனுக்குள்ள நாலு குணங்களைப்பற்றியும் ஏற்கெனவேயுள்ள நாலு வகையாகவும் ஏற்கெனவேயுள்ள வரை விலக்கணத்துக்குள்ளடங்க திருப்பிப் திருப்பி ரசம் கெட்டு சிறுகதை இலக்கியமாக இல்லாது “போர்" ஆக ஆகுமட்டும், அதனுல் சிறுகதை இலக்கியம் அழிந் தே போகுமட்டும் எழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான். புதுமையை ஏற்றுச் சேர்த்துக் கொள்ளும் மனப்பக்குவமும், சீரணவிரைவும் வராவிட்டால் பொதுவாக இ லக் கியத் தி ற்கு

Page 47
விடிவே இல்லை. சகலதையும் ரசிக்க மனிதர்கள் இருக்கிருர்கள் என்பது ஏனே அத்தியாவசியமான அநேக நேரங்களில் நம் மால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதனை பத்திரிகை ஆசிரியர்களும் சிறு க தை ப் பரிசீலனைக்குழுவும், போட்டிக்குழுவும் மனதில் கொள்ளவேண்டுமென் பது ஒரு திவ்ய வேண்டுகோள்.
“எது சிறுகதைக்குக் கருவாகக் கொள்ளப்பட வேண்டும்'? இந்தப் பாரிய கேள்விக்கு அமரர் புதுமைப்பித்தன் "சிலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்லப்பட வேண்டும் என்று ஒரு கட்சி இருப்பதாக நினைக்கிருர்கள்’ என்ற பொருள்பட்ட கூற்றைத்தான் ஞாபகப் படுத்த வேண்டியிருக் கிறது. எந்த ஒரு உணர்வையும் ஆழமாய் தட்டி விடும் அனுபவத்தையும் சொல்லலாம் என்றே படுகிறது. மனித வாழ்வை நிரப்பமாக்குகிற அந்த எதுவும் சிறுகதையில் சொல்லப்படலாம். வாழ்வின் பொது அரங்கிலிருந்து + வுக்கு - வுக்கும் மிகத் தூரமாய்த் தவறும் எதுவும் "0" இன் புதுக் கோலங்களும் சொல்லப்படலாம். ஒருவன் அநு பவம் அடுத்தவனதுபோல் இல்லை. எனவே ஒருவன் தனது அநுபவத்தை கலை யா க வடிப்பதற்கு யாரின் இடைஞ்சலுக்கும் கலங்கவேண்டாம். பிர சுரத்திற்கென்று த ன் கலை யி ன் சீற்றத்தைத் தணித்துக் கொள்ளவும் வேண்டாம். அவன், தன் கதையை, தன் கலையோடு தாராளமாகச் சொல் லட்டும்.
கலைத்தன்மை குறை வ ற் று இருக்கும்வரை எந்த ஒரு கருவைச் சுற்றி வரையப்பட்ட சிறு கதையும் சிறந்த இலக்கியமே. "இது ஏற்றுக் கொள்ளப் படுமா? என்ற ஐயம் விட்டு எழுதுப வர்கள் தம்படைப்பைச் சிருஷ்டிக்கவேண்டும்.
**
܊ ܗܶܙܟܬ: 6 ' DG) ஏப்ரல் - மே இதழ்கள்
வெளிவரவில்லே.
தவிர்க்க முடியாத காரணங்களால் 'மலர்' ஏப்ரல், மே இதழ்கள் வெளி வரவில்லை. இதனுல் ஏற்கனவே சந்தா தரராகியுள்ள 'மலர்' வாசகர்களின் சந்தாக்காலம் மேலும் இரண்டு மாதங் களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்

45
(48ம் பக்கத் தொடர்ச்சி)
(Minute hand) sit GOOTogia). 676irty of S. Gayoshi சத்தில் பார்த்தபடி மெலிந்த குரலில் சொன்னர், நண்பர் லீயோ,
விடுதியில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு எங் கள் கோலத்தைக்காட்ட விரும்பவில்லை நாங்கள்: அவர்கள் எங்களை பரிகசிப்பது மட்டு மல் லா து ஏளனமும் செய்வார்கள். ஆகவே முன்பக்கத்தில் இருந்த சேவயர் நடராஜா அவர்களின் திறந்த வளவில் நின்றுகொண்டு எங்கள் விடுதியைப்பார்த்த படி நின்ருேம். மணி எட்டு அடிப்பது கேட்டது. இது பக்கத்து வீட்டுக்கடிகாரத்தில். முன்விராந் தையில் இருந்த மாஸ்டர் அறைக்குள்ளே போய் விட்டார். எஞ்சி இருந்தவர் நண்பர் தருமலிங்கம் தான். புதினப் பத்திரிகையைப் பார்த்தபடி இருந் தாா அவா.
யாரும் பார்க்குமுன் போகவேண்டும் என்று விரும்பிய எங்களை இன்னும் சோதிப்பதாகவே இருந்தது அவர்நிலை. நான் ஒரு யோசனை சொன் னன். வேகமாய்ப்போய் மெயின்சுவிச்சை அமுக்கி விடுவேன். இருள் மயமாகும். அந்த நேரத்தில் லீயோ ஓடிவந்து விடவேண்டும்.
அப்படியே நான் செய்தேன்.
நண்பர் லீயோ ஓடிவந்து, ஒரு கதிரையில் மோதி, எப்படியோ அறைக்குள் புகுந்து விட் டார்,
நண்பர் தருமலிங்கமும், அறையில் இருந்த மாஸ்டரும் குசினியில் இருந்த ராமனும் "யாரது யாரது?" என்று அதட்டிக்குரல் கொடுத்துக்கொண் டிருந்த வேளையில் நான் மீண்டும் மெயின் சுவிச் சைப்போட்டுவிட்டேன். எங்கும் வெளிச்சம் வந்து விட்டது. “இது என்ன டொக்டர் வேடிக்கை? இருட்டில் லீயோவை விழுத்துவதற்கோ இந்த வேலை செய்தநீங்கள்?’ என்று நண்பர் தருமலிங்கம் கேட்டார். நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன் நல்லவேளை, எங்கள் கோலம் அம்பலமாகவில்லை, அந்தமட்டும் அதிர்ஷ்டம்தான்,
ஒரு வேளை இதுதான் பொன்னையா மாஸ்டர் குறிப்பிட்ட அதிர்ஷ்டமோ?
இல்லை, இல்லே குதிரைப்பந்தயத்துக்குப் புறப் படும் போது பொன்னையா மாஸ்டர் உருவத்தில் வந்து எனது நூறு ரூபாயைக் காப்பாற்றியதே அதுதான் அதிர்ஷ்டம் என்று நான் நினைக்கிறேன்.

Page 48
46
உண்மைச் சம்பவம்
'உண்மை, கற்பனையை ெ கிலப் பழமொழி, உண்டை பின்னப்பட்ட பல சுவா அதிகம் வெளிவருகின்ற கதை இது
அதிர்ஷ்டம் அழைக்கிறது!
66
மினுட்சிக்குவந்தது அதிஷ்டம்! 15, 000 ரூபாய் எவ்வளவு பணம்! அதுவும் ஒரு சாதாரண தோட்டிக் கூவியாளுக்கு!’ என்று சொல்லியபடியே பெருமூச்சுடன் அன்றைய தினசரிப்பத்திரிகையை நீட்டினர் என் நண்பர் லீயோ இம்மானுமேல்.
லீயோ இம்மானுவேலும் நானும் கொழும்பு பம்பலப்பிட்டியில் பெப்பின்லேனில் பொன்னையா மாஸ்டர் கிளப்பில் இருந்த காலம்!1950ம் ஆண்டு ஆவணி மாசம் முற்பகுதி என்று நினைக்கிறேன்.
நாங்கள் இருவரும் அரசாங்க சேவையில் விகிதர்களாக இருந்தோம். ஒரே அறையில்தான் எங்கள் படுக்கை. லியோ வேலைசெய்யும் காரி யாலயத்தில் எப்போதும் குதிரைப் பந்தயத்தைப் பற்றிய பேச்சாக இருக்கும் என்று என்னிடம் எப்போதும் சொல்லுவார். 50 சதம் அல்லது ஒரு ரூபாய்க்குமேல் தான் பந்தயம் பிடிப்பதில்லை என்றும், அது நல்ல பொழுது போக்கு என்றும் என்னேடு எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். அதுமட்டுமல்ல குதிரைப் பந்தயத்தைப் பற்றிய பத்திரங்களையும் அவர் கொண்டு வருவார். குதி ரைகளின் பெயரைச் சொல்லுவார் என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்பார். தொடு குறி (ாத்ச திரம் பார்ப்பது போல என்னைஏதாவது ஒரு குதிரையின் பெயரைச் சொல்லச் சொல்லுவார். நான் அப்படியே செய்வேன்.
உயர் அதிகாரிகள் இலக்கியத் துறையில் ஈடுபடுவது மு திலும், ஈழத்திலும் சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர். எழுத்தார் மையால் இத் துறையை விட்டு ஒதுங்கியிருக்கின்றனர். அவர் கல்விப் பணிமனையில் நிர்வாக உத்தியோகத்தரர்கக் கடமை அவர்கள் தமிழகத்திலிருந்தும், ஈழத்திலிருந்தும் வெளியாகும் யும் தொடர்ந்து வாசித்து வரும் இவர் ஈழத்து இலக்கிய வ
6.
 

பிட விநோதமானது என்பது ஒரு ஆங் மச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துப் ராவ்ஸ்யமான கதைகள் ஆங்கில இதழ்களில் 3. 'மலர்’ தரும் உண்மைச் சம்பவக்
எஸ். சிதம்பரப்பிள்ளை
தோல்விஏற்பட்டால் அவர் "ஒரு ரூபாய்தானே" என்று கவலைப்படமாட்டார்.
அன்று ' ரூ 15,000" என்று சொல்லி. இவர் விட்ட பெருமூச்சு என்னையும் சற்று சிந்திக்க வைத்தது. விபரம் கேட்டேன். குதிரைப் பந்தய மைதானத்தில் ஒரு ரிக்கட் சதம் 50 ஆக விற் கிருர்களாம். ஒவ்வொரு ஓட்டத்துக்கும் விற்பார் களாம். எத்தனை ரிக்கட் ஆனலும் வாங்கலாமாம். கு தி ரை வெ ன் ரு ல் உ டனே 安门”<秀 கொடுப்பார்களாம். அப்படியாக மீனுட்சி என்ற தோட்டி வேலைசெய்யும் ஒருத்திக்கு 50 சதம் வாங்கிய ரிக்கட் ஒன்றுக்கு ரூபாய் 15,000 கிடைத்திருக்கிறதாம். பேப்பரில் அவளுடைய படத்துடன் இருக்கிறது என்று அங்கலாய்த்தார். என்னையும் வாசிக்கச் சொன்னர், குதிரைப் பந் தயத்துக்காக பணம் போடுவது ஒரு சூதாட்டம் என்று ஒரு நாளும் அவர் ஒப்புக்கொள்வதுஇல்லை.
ஒரு நாள் காலை ஒரு பத்திரத்தைக் கொண்டுவ ந்து 'எந்தக் குதிரை வெல் லும் டொக்டர்' என்று என்னைக் கேட்டார் லியோ. *டொக்டர்’ என்பதுஎனக்கு  ைவ த் த பட்டப்பெயர்.
奖
த்
றைவு மிக அபூர்வமாக, தமிழகத்
வம் உள்ள பலர் ஓய்வு இல்லா
களில் ஒருவர் சிழக்குப் பிராந்திய
பாற்றும் திரு.எஸ், சிதம்பரப்பிள்ளை
முக்கிய சஞ்சிகைகள் அத்தனையை
ளர்ச்சியில் மிகவும் அக்கரை கொண்
- ஆசிரியர்.

Page 49
நான்வைத்தியருடைய மகன் ஆகையால் தடிமல் இருமல் போன்ற சிறுசிறு பிணிகளுக்கு டொக்டரை அழைக்குமுன் கைமருந்தைப் பாவியுங்கள் என்று நண்பர்களை வற்புறுத்துவேன். அதஞல் எனக்கு **டொக்டர்' என்ற நாமத்தைச் சூட்டிவிட்டார்
St.
லீயோ சொன்னபடி நான் ஒரு குதிரையின் பெயரைச் சொன்னேன். காசி ஒருரூபாய் கேட் டார். கொடுத்தேன். எனக்கு ரூ. 5/65 கொண்டு வந்து தந்தார். தானும் ஒரு ரூபாய் போட்டதாக வும் ரூ. 11/30 கிடைத்ததாகவும், எனக்கு பாதி யைத் தருவதாகவும் சொன்னர், முதல் தரத்தி லேயே அதிர்ஷ்ட தேவதை என்னை நாடிற்று. நாங்கள் இருவரும் அன்று முதல் இர ண்டு ரூபாய்க்கு மேற்படாமல் கிழமை தோறும், சில சமயம் நாள் தோறும், குதிரைப்பந்தயத்துக்காகச் செலவு செய்தோம். அவரே எனக்காக சகலதும் செய்து வருவார். நடுச்சாமத்திலும்கூட குதிரைப் பந்தயக்கதையாகவே ஏற்பட்டுவிட்டது. அடுத்த குதிரைப்பந்தய ஓட்டத்தில் நாங்கள் இருவரும் குதிரைப் பந்தய மைதானத்துக்குப் போய் 50 சத ரிக்கட்டுகள் ஒவ்வொரு ஓட்டத்திற்கும் வாங்க வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொண்டோம்.
**டொக்டர் கேட்டியளே! இன்றைக்கு சனிக் கிழமை தேசாதிபதியின் கிண்ணம் (Governer cup) வேளைக்கு வந்துவிடுங்கள்" என்று கூறி நண்பர் லீயோ, வழக்கப்படி என்னை ஞாபகப்படுத்தினர்.
'இன்று சம்பளநாள். இரவுக் கோச்சியில் வீட்டுக்குப்போக வேண்டும் என்று லீவு எடுத் திருக்கிறியள் ஒரு மணிக்கேவந்துவிடுங்கோ றேஸ் கோசுக்கு (Race course) போகவேண்டும்' என்று மீண்டும் சொன்னர். தோட்டி மீனுட்சியின் நினைவு எனது ஞாபகத்துக்கு வந்தது. “சரி 12 - 35 க்கே வந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன்.
*" கவர்ணஸ் கப்" என்ருல் கொழும்பு கல கலக்கும். பத்திரிகைப்புதினங்கள், விளம்பரங்கள் இத் தினத்தைப்பற்றியதாகவே இருக்கும். பணக் காரர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு வறிய வர்களுக்கு இது ஒரு சூதாட்டம். திண்டாட்டமும் thls
வீயோவும் நானும் எங்கள் விடுதியில்இருந்து ஒன்றரை மணிக்கே வெளிக்கிட்டுவிட்டோம். நான் வேட்டியும், வாலாமணியும் அணிந்துகொண்டேன் லீயோ ஒரு வெண்ணிற சேட்டும் கால் சட்டையும் அணிந்துகொண்டார். புறப்படும்போதே 'காசு கொஞ்சம் கூடுதலாக எடுங்கள் டொக்டர்' என்ருர். அவர் சொன்னதன் பேரில், எனது வலப் பக்கத்து பக்கட்டில் இருந்த மணிபர்சை தொட்டுப் பார்த்துக்கொண்டேன். இடதுபக்கத்து பக்கட்டி லும் ஒரு பத்துரூபா நோட்டை வேருக வைத்துக் கொண்டேன். அப்போது என் உள்ளுணர்வு பத்து ரூபாய்க்கு மேல் பந்தயம் பிடிக்கவேண்டாம் என்று வற்புறுத்திற்று. ஆகவேதான் அதை புறம்பாக

47
வைத்துக்கொண்டேன். மீண்டும் ஏதோ என்ன இழுத்துத் தடுப்பதுபோல் இருந்தது. நான் கவலைப்
படவில்லை.
வெளியே கேற்றினூடாக பொன்னையா மாஸ் டர் வந்துகொண்டிருந்தார். 'நல்ல முழு விசளம் டொக்டர்? மாஸ்டர் என் அருகில்வந்து “ஒருபத்து ரூபாய் தாருங்கள், ராமனை விறகுவாங்க அனுப் பப்போறன்’ என்ருர். லீயோ முன்னுக்குப் போய் விட்டார். எனக்கோ பக்கட்டில் இருந்த அதிர்ஷ் டம் தரும் பத்துரூபாய் நோட்டைக் கொடுக்க மனம் இல்லை. மணி பர்ஸ்சில் இருந்த ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, 'மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள். மறுபடிவந்து மிகுதியை எடுத்துக்கொள்ளுகிறேன்' என்றேன். என் அவசரத்தைக் கண்ட அவர், “சரி” என்று ஏற்றுக்கொண்டார். மிகுதியாக பர்ஸ்சில் இருந்த பணம் ஐந்து ரூபாய் நோட்டும் சில்லறை களும்தான். அப்பொழுது லீயோ சொன்னதை நினைத் துப் பார்த் தேன். ஆனலும் கூடுதலான பணத்திற்கு பந்தயம் பிடிக்க என்மனம் இடம் கொடுக்கவில்லை,
புல்லர்ஸ் வீதிச் (Bullere Road) சந்திக்கு வேக மாக நடந்தோம். றேஸ்கோஸ் போக பஸ் கட் டணம் சதம் /- 25. பஸ் நின்றது. நாங்கள் ஏறிக் கொண்டோம். நண்பர் இருவருக்கும் பணம் கொடுத்தார். பக்கத்தில் இருந்த இளம் பெண் என்னைச்சற்று கூச்சப்படுத்துவதுபோல் இருந்தது. ஒரு சிறு புன்முறுவல். பதிலுக்கு நானும் பல்ளைச் காட்டினேன். இறங்கும் இடம் வந்தது. இறங்கிக் கொண்டோம். புன்முறுவல் பூத்த இளம் பெண் து ஸ் விரி க் கொண்டு முன்னே போய்விட்டாள். எனக்கு ஒரு சிறு மயக்கம் வந்து தெளிந் த து . அவ்வளவுதான்.
குதிரைப்பந்தய மைதானத்தை வந்தடைந்து விட்டோம் உள்ளேபோக ஒரு ஆளுக்கு மிகக் குறைந்த கட்டணம் ஒரு ரூபாய். நானே இரு வருக்கும் ரிக்கட் எடுக்க விரும்பினேன். பக்கட்டில் கையைவிட்டு ‘மணிபர் ஸைத் தடவினேன். என்ன ஏமாற்றம், மணிபர்ஸ் அங்கே இல்லை. புன்முறுவல் பூத்த மங்கை துள்ளி அடித்துக்கொண்டு போனது ஏன் என்று யூகிப்பதற்கு அதிக நேரம் பிடிக்க வில்லை. 'என்ன டொக்டர் பார்க்கிறையள்! அவள் தாள் போய்விட்டாளே!" என்று கிண்டல் செய்த நண்பர் லீயோ எனது தயக்கத்துக்கு காரணம் தெரியாது உள்ளே செல்லும் அவசரத்தில் தானே இரண்டு ரூபாயைக் கொடுத்து இருவருக் கும் ரிக்கட்டை எடுத்துவிட்டார். உள்ளே சென்று விட்டோம்.
"என்ன வெட்கக் கேடு லீயோ, என்னுடைய 'மணி பர்ஸை"க்காணவில்லையே! ஒன்றும் ஒட வில்லையே! திரும்புவோமா?’ என்றேன் மெதுவாக, அவரே சற்றுப் பதறிப் போனுர், ஆஞலும் இழக்க நேரிட்டது. சொற்பம் தான் என்றும் ஒரு பத்து ரூபாய் நோட்டு அப்படியே இருக்கிறது என்று

Page 50
48
அறிந்ததும் "அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான். ஒரு ஐந்து ரூபாய்க்கு 50 சத ரிக்கட் வாங்குவம், மற்ற துக்கு “al on” பந்தயம் பிடிப்போம். நானும் அப்ப டியே செய்கிறேன்" என்ருர். பத்துரூபா நோட்டை அவரிடம் கொடுத்துவிட்டேன்.
என்னுடைய ஏமாற்றத்திலிருந்து நான் முற் ருக விடுபடவில்லை. மாஸ்டர் சொன்ன 'நல்ல முழிவிசளம்' ஒரு அளவு பலித்துவிட்டது. நூறு ரூபாய் காப்பாற்றப்பட்டது. ஆனலும், அன்று புகையிரதத்தில் போவதற்கும் திரும்புவதற்கும் எடுத்த புகையிரதச் சீட்டுப் பத்திரங்கள் இரண்டும் "பர்ஸ் ஸுடன் போய்விட்டன என்பதை நினைக்க பெரும் கவலையாக இருந்தது. 'துக்கம் சந்தோ ஷத்தையும் கொண்டுவரும். பந்தயத்தில் பெரும் பணம்வரப்போகிறது. கவலைப்படாதே!" என்று என் மனமே என்னைத் தேற்ற ஆரம்பித்துவிட்டது.
அந்த நாட்களில் கொழும்பில் "கியு" வரிசை யில் எவரும் நிற்பதில்லை. என்ன வாங்குவதான லும் எல்லோரும் ஒரே தடவையில் “நான் முந்தி நீ முந்தி” என்று ஒரு வரை ஒருவர் இடித்துக் கொண்டு முன் செல்வார்கள். இதனல் அனேகர் மிதிபட்டு, நசுக்குப்பட்டு துன்பப்படுவார்கள். 50 சத ரிக்கட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். லீயோ போனர். அனேகம் பேர் பின்னல் இடித் துத்கொண்டு போனர்கள். நண்பரைக்காணவில்லை. சற்று நேரத்துக்குப்பின் அவர் இருவர் தோள் களின்மேல் நிற்கக்கண்டேன். நான் சிரித்தே விட் GSL6ir.
எப்படி மேலே தூக்கப்பட்டார் என்றே தெரி யாது. ஒரு கணப்பொழுதில் மீண்டும் ஆளைக்காண வில்லை. கைகள் பல தெரிந்தன. எப்படியோ தள்ளுப் பட்டு ரிக்கட் கொடுக்கும் இடத்துக்குப் போய் விட்டார். எட்ட நின்ற என்னை ஒருதரம் பார்த்து வெற்றிப்புன்னகை புரிந்தார். பின் நண்பரை 5 நிமிஷம் வரை காணவில்லை. அனேகர் மேலும் மேலும் ரிக்கட் வாங்க குவிந்துகொண்டிருந்தார் கள். நான் சமீபமாய் போனேன். பின்னல் இருந்து பலர் வந்த வேகத்தில் தள்ளப்பட்டு விழுந்து விட்டேன். ஒருவர் என் கையில் தன் காலால் மிதித்துவிட்டார். வலி பொறுக்கமுடியவில்லை. எழுந் தேன். மீண்டும் தள்ளப்பட்டேன். வேட்டி உரிந்து விட்டது. கோடிவேட்டியானதால் கிழியவில்லை. ஒருவாறு எழுந்து அப்பால் நகர்ந்து அபாயத்தி லிருந்து விலகிவிட்டேன். அப்போதுதான் என்னு டைய செருப்பு ஒன்று அறுந்துவிட்டது. பாவிக்க முடியாது என்பதை உணர்ந்தேன்.
இச்சமயம் எனது நண்பர் "பிடியுங்கள்! பிடி யுங்கள்! ரிக்கட்டுளைப் பிடியுங்கள்' என்று குரல் கொடுத்தார். பார்த்தேன். என்ன பாவம். தனது இரண்டு கைகளையும் உயர்த்திக்கொண்டு, ஒவ் வொரு கையிலும் சிவப்புநிற ரிக்கட்டுகள் ஏத்தி யபடி, வியர்வை உடல் முழுதும் வழிய, சேட் டின் 'கொலர்" மட்டும் கழுத்தில் தொங்க, வெறும் மேலுடன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கின

படி, பரிதாபமான கோலத்துடன் காட்சியளித் தார் நண்பர் லியோ!
பலர் தன்னுடைய கைகளில் இருந்த ரிக்கட்டு களைப் பறிக்கமுயன்ருர்களாம். "நாணு பறிகொ டுப்பவன். அப்படியே கொண்டுவந்து சேர் த் து விட்டேன்" என்று பெருமைப்பட்டார், என் நண் பர் லியோ. அவர் கொண்டுவந்தது வியர்வை யால் கசங்குப்பட்டு சில பகுதிகள் கிழித்தெடுக் கப்பட்ட ரிக்கட்டுகள். நல்லவேளை. இலக்கங்கள் கிழிபடவில்லை.
எனது நன்பருடைய கோலத்தைப் பார்க்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சேட் முன்பக்கம் பின்பக்கம் எல்லாம் கிழிந்து ஒரு துண்டு மட்டுமே கழுத்தில் தொங்கிக்கொண்டிந்தது. கால் சட்டை கிழியவில்லை. ஆனல் அழுக்குத்தழும்புகள் நிறைந்து இருந்தது. அது மற்றவர்களுடைய கா ல் க லால் ஏற்பட்ட குறிகளாய் இருக்க லாம். அவருடைய சப்பாத்து ஒன்றுதான் இருந் நது. மற்றதைக் காணவில்லை. எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு அ வரை க் கண் டதும் பறந்து போயிற்று. எனது செருப்பு ஒன்று அந்தாலும் என்னுடனேயே இருந்தது. ஆனல் அவரோ சேட் டையும் கிழித்து ஒரு சப்பாத்தையும் இழந்து விட்டார். குதிரைப் பந்தயத்துக்குப் போகிறவர் கள் இப்படித்தான் இன்னல் படுவார்களோ என் னுடைய முதல் அனுபவம் இது.
அரை மணித்தியாலத்துக்குள் சகல ரிக்கட்டு களும் விற்பனையாகிவிட்டன. ஒலிபெருக்கிமூலம் வென்றவர்களுடைய எண்களை வாசித்தார்கள். அதிஷ்ட தேவதை மறைந்து விட்டாள். எங்களு டைய எண்கள் வாசிக்கப்படவில்லை. ஆனல் நாங் கள் ஏற்கனவே திட்டம் இட்டபடி மிகுதியாய் கையில் இருந்த முழுப்பணத்தையும் தேசாதிபதி யின் கிண்ணத்திற்காக (Governers Cup) ஓட்டத்தில் பணயம் வைத்தோம். நாங்கள் தேர்ந்தெடுத்த குதிரை பின்வாங்கிவிட்டது.
கடைசி ஒட்டம் வரை காத்திருந்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது. முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியேறினுேம், பம்பலப் பிட்டிக்கு நடையிலேயே சென்ருேம். வழியில் “கடலை கடலை” என்று பையன் கூறினன். வாங்கிச் சாப்பிட இருவருக்கும் ஆசைதான். ஒரு செம்புக் காசும் கையில் இல்லையே. முனிசிபல் பைப்பில் நீர் ஆகாரம் அருந்தினேம். இருட்டும் சமயம் ஆகிவிட்டது. அதற்குத்தான் காத்திருந்தோம். என்னுடைய வீட்டுக்குப் போகும் பயணம் தானு கவே நின்றுவிட்டது.
பெப்பின்லேன அடைந்தோம். நன்றக இருட்டி விட்டது. மின்வெளிச்சம் மின்னிக்கொண்டிருந்தது 1மணி என்ன?? என்று நண்பனைக் கேட்டேன். கையில்இருந்த கடிகாரத்தைப்பார்த்து "கண்ணுடி உடைந்துவிட்டது, டொக்டர் நிமிடமுள்ளையும்
(45ம் பக்கம் பார்க்கவும்)

Page 51
அனவரும் படிக்கவேண்டிய
0.
.
2.
3.
4.
5.
யாழ் இலக்கிய ெ
யாழ்ப்பாணக் கதைகள்
(சிறுகதைத் தொகுதி) சுருட்டுக் கைத்தொழில் நீ3 க்கரங்கள்
(காவியம்) ஈழத்துத்தமிழ் நூல் வழிகா
அமைதியின் இறகுகள்
(சிறுகதைத் தொகுதி) இ 2திப் பரிசு தாடகம்) , ஏன் இந்தப் பெருமூச்சு
(கவிதை)
வெண் சங்கு
(சிறு கதைகள்)
கிறீனின் அடிச்சுவடு
(கட்டுரை)
தேனுறு
(கவிதை)
தந்திக்கடல்
(நாவல்) ஆச்சி பயணம் போகின்ருள்
(நாவல்)
57 L-sh
(தாடகம்)
இரிமலையினிலே
(கவிதை
அமரத்துவம்
(சிறுகதைத் தொகுதி)
ஏக விற்ப தனலக்கு I
சு ன் 6

N
ப ஈழத்து இலக்கிய நூல்கள் பட்ட வெளியீடுகள்.
கே. வி. நடராஜன்.
க. குணராஜா.
ஐவர் பாடியது.
இரசிகமணி கனக செந்திநாதன்,
செம்பியன் செல்வன்.
ஏ. ரி. பொன்னுத்துரை.
வி. கந்தவனம்.
இரசிகமணி
கனக. செந்திநாதன்.
அம்பி.
காரை செ. சுந்தரம்பிள்ளை.
செங்கை ஆழியான்.
செங்கை ஆழியான்,
ஏ ரி, பொன்னுத்துரை.
வி. கந்தவனம்.
யாழ்வாணன்.
னையாளர்:
புத்தகசாலை
) is b.

Page 52

1970
மாதவிப் பொன்மயிலாள்
தோகைவிரித்தாள் - வன்ன மையிட்ட கண்மலர்ந்து
தாதுவிடுத்திாள்
கலைக்கெனத் தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு கன்னியின் 36) fill 63FI5 QJQT)
"الكم.
ஈழத்துப் பிரபல நாவலாசிரியர்
நவம் "
எழுதும் சுவைமிக்க தொடர்கதை
கலாபமயில்
விரைவில் உங்கள் "மலர்' சஞ்சிகையில் ஆரம்பமாகிறது.
இன்றே சந்தாதாரராகச் சேர்ந்து விடுங்கள்,
அச்சிட்டவர்: வண. சகோ, ஜோசப் பி. மதே 3, 8 1. கத்தோவிக்கி அச்சகம், இல, 18, மத்திய வீதி,
மட்டக்களப்பு. வேனியீடு:- "மலர்' இலக்கியக்குழு, 21 மந்திய விதி
மட்டக்கண்ப்பு. கேளரவ ஆசிரியர்: இரா. நாகலிங்கம், 21 மத்திய வீதி, மட்டக்களிப்பு.