நூலகம் திட்டம் (நூலக எண்: 1023)

 
 

மின்னூலாக்கம்: தமிழரங்கம்

 
  மின்னூல் மெய்ப்பு: பார்க்கப்படவில்லை  
     
  கவனிக்க: நூலகம் திட்ட மின்னூல்களைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/ பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.  
     
  தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல  
 

பி. றயாகரன்

 

தேசியம் எப்போதும், எங்கும் முதலாளித்துவக் கோரிக்கையே ஒழிய, பாட்டாளிவர்க்க கோரிக்கையல்ல.






பி.றயாகரன்






கீழைக்காற்று வெளியீட்டகம்
10, ஔலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை 600 002



முன்னுரை





அண்மைக்காலமாக மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் தீவிரமடைந்துள்ளது. சோவியத்திலும், சீனாவிலும் அப்பட்டமான முதலாளித்துவ முன்னெடுப்புகள் தொடங்கியதுடன் மார்க்சியம் மீது முன்பைவிட அதிகமாக சேறு வீசப்படுகின்றது. இன்று ஈழப் போராட்டம் இராணுவ வாதத்திற்குள் சிக்கி உள்ள நிலையில், குறைந்த பட்ச ஜனநாயக இயக்கத்தைக் கூட விட்டு வைக்காத இன்றைய நிலையில், கடந்த கால சமூக அக்கறைக்குரியவர்கள் உதிரியாகவும், சிறு குழுக்களாகவும் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தனர். பெயர்கின்றனர். இந்தப் புலப் பெயர்வின் நீடித்த சமூக அக்கறை, அவர்களின் பொருளாதார வசதியுடன் சிதையத் தொடங்கியது. முன்னைய சமூக அக்கறைக் குரியவர்கள் பலர் இளம் வயது இளைஞர்களாக இருந்ததுடன், உழைப்பில் ஈடுபடாது கவர்ச்சிகரமான இராணுவ செயற் தளத்தில் புகுந்தவர்கள், முதன் முதல் பணத்தை தமதாகக் கண்டது முதல் அவர்கள் சமூக அடிப்படையுடன் தமது நிலைக்கு ஏற்ப ஒரு புதிய கோட்பாட்டுத் தளத்தைத் தேடத் தொடங்கினர், தொடங்கி உள்ளனர்.


இதே நேரம் இந்தியாவில் உள்ள புரட்சிகரப் பிரிவுகளுடன் நெருங்கிய பல முன்னைய தொடர்புகளை முன்பு பேணியவர்கள், தமது சமூக அடிப்படை மாற்றத்துடன் புதிய கோட்பாட்டுத் தளத்தை தேடி அலைந்தனர்.


இந்தியாவில் எழுந்து வரும் சமூக நெருக்கடிகளும் அதனால் எழும் போராட்டங்கள் அடிப்படை மார்க்சிய வரையறைக்குள் எழுவது தவிர்க்க முடியாத போக்காக இருந்தது. இந்தியாவில் ஏகாதிபத்தியமும் உள்ளுர் ஆளும் தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுகளும் மார்க்சியத்திற்கு எதிரான பல வண்ண வகை கோட்பாடுகள், மனித உரிமை அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள் ...... என பலவகைச் செயல் தளத்தை உருவாக்கி வறுமையில் வாழும் மக்களுக்குள்ளும், போராடும் மக்களுக்குள்ளும் அனுப்பி வைத்தன, வைக்கின்றன. இதில் கோட்பாட்டுத் தளத்தில் தன்னார்வக் குழுக்கள் மற்றம் மார்க்சியத்தின் பெயரில் பல வண்ண வகைக் கோட்டுபாடுகளை முன் தள்ளினர், தள்ளுகின்றனர். இதன் மூலம் முன்னணி சமூகப் புரட்சியாளர்களை வென்றெடுத்து சீர் அழித்தல், அல்லது குறைந்த பட்சம் மார்க்சியம் மீது ஐயசந்தேகத்தை எழுப்புவது, வர்க்கப் போராட்டத்திற்கு பதில் வேறு போராட்ட வடிவத்தை முன் தள்ளுவது என பல வகைக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர்.


இந்த வகையில் மார்க்சியத்திற்கு பதிலீடாக வர்க்கமற்ற போராட்ட அமைப்புகள், தனக்குள் சாதியடிப்படையைத் தக்கவைத்துக்கொண்ட தலித்திய அமைப்புகள், வர்க்கம் கடந்த பெண்ணிய அமைப்புகள், வர்க்க முரண்பாடு பிரதான முரண்பாடாக இருக்க முன் தள்ளும் தேச விடுதலை அமைப்புகள் எனப் பலவகை உருவாக்கி வௌ;வேறு கோட்பாட்டு அடிப்படையை மார்க்சியத்துக்கு புறம்பாக முன்வைக்கப்படுகின்றது, முன்வைக்க முயல்கின்றனர்.


இன்று இந்தியாவில் இப்படிப் பல மொழியில் பலர் உள்ள நிலையில், தமிழில் ரவிக்குமார் -அந்தோனிசாமி மார்க்சை குருவாகக் கொண்ட நிறப்பிரிகை குழு, எஸ், வி இராஜதுரையைக் கொண்ட குழு எனப் பலவாக பல உள்ளது. இதில் அ.மார்க்ஸ் - ரவிக்குமார் போன்றவர்கள் மிகத் தீவிரமாக மார்க்சியத்துக்கு எதிரான கோட்பாட்டுத் தளத்தை உருவாக்குவதில் இயங்குகின்றனர். ஒரு புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்துக்கு இருக்கக் கூடிய மக்கள் ஆதரவுடன் கூடிய ஒரு அமைப்பு வடிவங்கள் இந்தியாவில் உள்ளன. அவர்களால் ஒரு பெரிய நிதியைச் செலவழித்து தமது அரசியல் கருத்து தளத்தை விரிவு படுத்த முடியாத புரட்சிகர நிலை உள்ள போது, அ. மார்க்ஸ் போன்றோர் மிகப் பெரிய நிதி ஆதரவுடன் தொடர் வெளியீடுகளை தனிநபர்களாக வெளியிடும் மர்மத்தை காலம் தான் அம்பலப்படுத்தும்.


இவர்களின் ஐரோப்பிய பயணங்கள், ஏகாதிபத்திய கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரங்கள் என்பன உடனுக்குடன் இவர்களிடம் கிடைப்பதும், அதை அடிப்படையாகக் கொண்டு தமிழ் வெளியீடுகளை வெளியிடும் செயலின் மர்மமும், அதன் நிதிப்பலமும் மர்மமாகவே உள்ளன.


இங்கு (பிரான்ஸ்) கம்யூனியச எதிர்ப்பு கோட்பாடு தொலைக்காட்சியில் காட்டப்படவுடன் அல்லது வெளிவந்தவுடன், அதை சிறிது காலத்தில் அ.மார்க்ஸ் சார்ந்த கும்பல் தமிழில் எழுத்து வடிவம் கொடுக்கின்றனர். எதிர்காலத்தில் சர்வதேசமயமாகி உள்ள தொலைக்காட்சியில் இவர்கள் தோன்றி தமிழில் மார்க்சிய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்ய நீண்ட காலம் செல்லாது என்பதை நாம் முன்கூட்டியே கூறிவைக்க விரும்புகின்றோம்.


ஈழத்து முன்னாள் முன்னணி சமூக அக்கறைக்குரியவர்கள், தமது சமூக அடிப்படையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, தேடிய கோட்பாட்டு அடிப்படையை அ.மார்க்ஸ்சும் அவரது கும்பலும் இவர்களுக்கு வழங்கினர். இவர்கள் அ.மார்க்ஸ்-ரவிக்குமாரின் கோட்பாட்டை பல தளத்தில் முன்னெடுத்து ~மனிதம்|, உயிர்ப்பு, ~சரிநிகர்| என பல தளத்தில் தமது சிலந்தி வலை விரித்து செயற்படத் தொடங்கி உள்ளனர்.


இதைவிட ஜெர்மனி, நோர்வே போன்ற நாடுகளில் தமது தன்னார்வக் குழுக்குள் பலரை இணைத்து பெரும் நிதித் தளத்துடன் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் அனுப்பி எடுக்கின்றனர். ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பில் ஈடுபட்ட பலர் இந்த சிலந்தி வலையில் சிக்கி உள்ளதுடன், மேலும் பலர் இதில் சிக்கிவிடும் நிலையில் உள்ளனர். மறுபுறம் மார்க்சியத்திற்கு எதிரான கோடு;பாட்டுத் தளத்தை ஏதோ ஒரு வகையில் பெறுகின்றனர். இன்னுமொரு பிரிவினர் ரொக்சியக் கோட்பாடுகளுக்குள் சென்று வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, தீவிரமாக வர்க்கப் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இலங்கையில் கொழும்பு தப்பி வந்த பலர் இன்று ஏகாதிபத்திய நிதித்தளத்துக்குள் விழுந்து தாளம் போடத்தொடங்கியுள்ளனர். இன்று மார்க்சிய விரோத மற்றும் மார்க்சியத்தை திரித்தும், புதிய கோடுபாடுகளை முன்தள்ளுவதை எதிர்த்தும் இந்த சிறிய பிரசுரத்தை எழுதுகின்றோம்.


இது அவர்கள் முன்வைக்கும் சில எல்லா வண்ண மார்க்சிய விரோதக் கோட்பாட்டையும் எடுத்து கேள்விக்கு உள்ளாக்கின்றது. குறிப்பாக குரு அ. மார்க்ஸின் கோட்பாட்டையும், மற்றவர்களின் கோட்;பாட்டுத் திரிபுகளையும், கேள்விக்கு உள்ளாக்கி அம்பலமாக்கும் வகையில் இச்சிறு பிரசுரம் முயல்கிறது.


முதலில் அந்தோனிசாமி மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட நிறப்பிரிகை குழு சார்பாக வெளியிட்ட "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகத்தில் உள்ள மார்க்சிய விரோதக் கோட்பாட்டை இப்பிரசுரம் கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்துகின்றது.





நாம் 'தேசியம் ஒரு கற்பிதம் ' என்ற புத்தக விமர்சனத்துக்குள் செல்ல முன், தேசியம் தொடர்பாக தத்துவார்த்த ரீதியில் ஆராய்வோம்.





பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப்போராட்டத்தை நடத்த, முன்னெடுக்க, சமூகத்தில் உள்ள எல்லாப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கின்றது . ஒரு பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் தலையிடுகிறது என்றால், அது வர்க்கப் புரட்சிக்காக மட்டு;மே தான் என்பதை ஒரு நிமிடம் கூட மறந்துவிடக் கூடாது. இதை நாம் மறந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் தன்னெழுச்சியின் பின், சுரண்டும் வர்க்க கனவுகளின் பின் இழுபட்டு, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்போம்.


இந்த வகையில் தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் கவனத்தில் எடுக்கின்றது எனின், அது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகவே ஒழிய, வேறு எந்தக் காரணத்துக்காகவும் அல்ல.


இது தொடர்பாக லெனின் ' எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது. '


- லெனின்-


தே.இ.சு.க (பக்-33-)


உலகளவில் எழுப்பப்படும் தேசிய இனக் கோரிக்கைகள், போராட்டங்கள் , பிரஞ்சு முதலாளித்துவ புரட்சிக்கு முன்னிருந்து இன்று வரை தொடரும் ஒரு பிரச்சனையாக உள்ளது . இது உலகளவில் கம்யூனிச சமூகம் உருவாகும் வரை நீடிக்கப் போகும் பிரச்சனையாகவும் உள்ளது.





நாம் பாட்டாளி வர்க்க போராட்ட சகாப்தத்தில் வாழும் ஒரு புரட்சிகர சமூகத்தில் உள்ளவர்கள் என்ற வகையில், இப் பிரச்சனை மீது தலையிடவும், போராடவும் கற்றுக்கொள்வது அவசியமானதாக உள்ளது.





தேசியக்கோரிக்கை என்பது, திட்டவட்டமாக பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரானது என்பதை ஆழமாக கவனத்தில் கொண்டு , தேசியக் கோரிக்கையின் பின் எழும்பும் , ஜனநாயகக் கோரிக்கைகளை ஆதரித்தும், அதற்காக போராடியும், தேசியக் கோரிக்கையை தகர்த்து எறிய வேண்டும். இதை லெனின் வார்த்தையில் பார்ப்போம்.





' பூர்ஷ்வா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின் ) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை. '


-லெனின்-


-21, தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-





தேசிய இனப்பிரச்சனையில் எழும் எல்லா ஜனநாயக கோரிக்கையை ஆதரிப்பதும், போராடுவதும் பாட்டாளிகளின் கடமையாகும். அதே நேரம் அனைத்து தனிச்சலுகைக் கோரிக்கையையும் எதிர்த்துப் போராட வேண்டும்.





தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக வெளிவரும் எல்லா கோரிக்கையையும் மிக நுணுக்கமாக அணுகுவதும், அதன் பின் மறைந்துள்ள சுரண்டும் வர்க்க நலன்களை இனம் கண்டு கொள்வதும் அவசியமாகும் .





இன்று மார்க்சியம் பேசியபடியும், பல்வேறு கோட்பாட்டுத்தளத்திலும் முன்வைக்கப்படும் தேசியக்கோரிக்கையை பாட்டாளிவர்க்கம் அணுகும்போது பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கையல்லாத எல்லாக் கோரிக்கையையும் நிராகரிக்கவேண்டும். எதிர்த்துப் போராடவேண்டும்.


மார்க்சியம் இதை நுணுக்கமாக ஆராய்ந்து வழங்கிய ஒரு கோட்பாடு தான் சுயநிர்ணயக் கோட்பாடாகும். யார் சுயநிர்ணயக் கோட்பாட்டை தேசிய இனப்பிரச்சனையில் கையாளத் தவறுகின்றனரோ, அவர்கள் உண்மையில் முதலாளித்துவ தேசியத்தைத்தான் பிரதிபலிக்கின்றனர் என்பதை வேறு எந்த விளக்கமும் இன்றிப் புரிந்து கொள்ளமுடியும்.





சுயநிர்ணயக் கோட்பாடு மீது இன்று பல்வேறு விளக்கங்களை வழங்குவதில் , முதலாளித்துவ தேசியவாதிகள் , திரிபுவாதிகள் , ஏகாதிபத்திய கோட்பாட்டாளர்கள் வேறுபாடு இன்றி முனைப்பாய் உள்ளனர்.





தேசிய இனப்பிரச்சனை மீதான சுயநிர்ணயக் கோரிக்கை என்பது , ஒடுக்கும் இனத்தின் உரிமை தொடர்பான , அவர்களுக்கே உரித்தான பிரச்சனைக்கான தீர்வாகும்.





சுயநிர்ணயம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரிந்து வாழ்வதா ? சேர்ந்து வாழ்வதா ? என்ற தேர்வை செய்து கொள்ளும் உரிமையை வழங்கும் , அதி கூடிய ஜனநாயக உரிமையாகும் . இதைத் தாண்டிய ஒரு தீர்வை யாரும் வழங்க முடியாது.





சுயநிர்ணயத்தை பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு மட்டும் உரித்தானது. இதன் மீது விளக்கம் சொல்ல , கட்டுப்படுத்த ஒடுக்கும் தேசிய இனத்துக்கு எந்த உரிமையும் கிடையாது.





சுயநிர்ணயக் கோட்பாடு மீதான திரிபு பின்வரும் வகையில் பொதுவாக உள்ளது.


1. பிரிந்து போவதை மறுத்தல்


2. ஐக்கியமாக மட்டும் இருத்தல்.


3. சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவது மட்டும் தான்


4. ஐக்கியமாகப் போவதை மறுத்தல்


5. சுயநிர்ணயம் என்பது எதுவுமற்றது.


பொதுவாக இந்த ஐந்து வகைக்குள் கருத்துக் கூறியபடி தான் , தேசிய போராட்டமும் தேசிய ஒடுக்குமுறையும் கட்டியமைக்கப்படுகின்றன.





சுயநிர்ணயம் என்றால் என்ன ? ஒரு தேசிய இனம் தனியரசாகப் பிரிந்து போவதற்கான ஜனநாயகக் கோரிக்கையை கொண்டது தான். இன்னுமொரு இனத்துடன் ஒன்றாக வாழ்வது , வாழமுடியாத தெரிவை வழங்கும் ஒரு ஜனநாயகக் கோரிக்கைதான். இதைத் தாண்டியது அல்ல சுயநிர்ணயக் கோட்பாடு. இதை லெனினை விட வேறு யாரும் விளக்கமாக விளக்கி விடவில்லை. லெனின் என்ன சொல்கிறார் எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.





இது தொடர்பாக லெனின் ' எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எல்லாவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை. தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சனை , அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சனை, முழுஅளவுக்குச் சுதந்திரமான ஜனநாயக வழியில் தீர்க்கப்படுதல் , எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைக்கு ஊறு செய்வதாகவோ ............. ' இருக்க முடியாது என்கின்றார்.





-லெனின்-


தே.வி.ப.கு. (ப-14)


'எல்லாத்தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக்கொள்வது , பிரிந்துபோகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேச உரிமைகளையும் எல்லாத் தனித்துவப்போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப்பார்ப்பது ' மட்டும் தான் பாட்டாளிகளின் சர்வதேசக் கண்ணோட்டமாகும்.


-லெனின்-


தே.இ.சு.உ.(ப-35)





' நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமை பற்றிய கோஷத்தை முன்வைத்து ஆதரித்து பேசத் தவறினால் நாம் பூர்சுவாக்களின் நோக்கத்துக்கே உதவுவோம் என்பது மட்டுமல்ல , ஒடுக்கின்ற தேசிய இனத்தின் நிலப் பிரபுகளின் , அதன் வரம்பிலா ஆட்சியின் நோக்கத்துக்கே கூட உதவுவோம் ' என லெனின் ஒடுக்கும் இனப்பாட்டாளியின் கடமையை தெளிவாக்குகின்றார்.


-லெனின்-


தே.இ.சு.உ (ப -34)





லெனின் மேலும் ' ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும் . ' என்கின்றார். (அடிக்கோடு லெனின் )


-லெனின்-


தே.வி.பா.ச -(ப.245)


மேலும் லெனின் ' சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம் ' என்பதை வலியுறுத்த வேண்டும் . ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல் , ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின்.


-லெனின்-


தே.வி.பா.ச(-ப 246)





சுயநிர்ணயக் கோட்பாடு என்ன நிலையில் என்ன தளத்தில், எந்த வர்க்க கண்ணோட்டத்தில் . இயங்குகிறது என்பதை, லெனின் மேற்கோள்கள் தெளிவாக்குகின்றன.





தமிழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தில், இன்று ஏற்பட்டுள்ள மார்க்சிய கலைப்பு வாதத்தில் சுயநிர்ணய உரிமை என்பது பந்தாடப்படுகின்றது. ஒரு புறம் ஐக்கிய இலங்கை என்றும் , மறுபுறம் தமிழ் ஈழம் என்ற ஒரு நிலைக்குள் அணிகள் அணிவகுக்கின்றன. இன்னுமொரு புறம் பெரும்பான்மையினப்பிரிவு பிரிவினைக் கோரிக்கையை மறுக்கின்றது. இன்னுமொரு மார்க்சிய திரிபுக்கு உட்பட்ட பல்வேறு கோட்பாட்டைப் பெற்று தேசியத்தைக் கற்பிதமாகப் பார்த்து ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்கின்றது.





சுயநிர்ணயக் கோட்பாடு மார்க்சிய கலைப்புவாதத்துடன் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக செயல் தளம் இடப்படுகின்றது.





இந்தியாவில் இன்று தமிழ் நாட்டு தனிநாட்டுக்கோரிக்கை முன்வைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக செயல்தளம் இடப்படுகின்றது. இதற்கு லெனினைத் திரித்தும் மறுபுறம் மார்க்சிய திரிபுவாதம் ஊடாகவும் அடிக்கல் இடப்படுகின்றது.





ஒடுக்கப்பட்ட பாட்டாளி ஏன் ஐக்கியப்பட முடியாது என்ற கேள்விக்கு பதிலளிக்காது , நகரும் இந்தப் புதிய பிரிவுகள் இயல்பில் ஏகாதிபத்தியத்துக்கு மறைமுகமாக சேவகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.





உலகளவில் மக்கள் தமக்கு இடையில் உள்ள இடைவெளிகளைக் கடந்து செல்லும் முயற்சிக்கு போராடுவது , பாட்டாளிகளின் இன்றைய சர்வதேசிய கடமையாகும்.





இன்று உலகமயமாதல் இரண்டு போக்குகளில் நடக்கின்றது.


1. ஒடுக்கப்படும் மக்கள் கீழிருந்து தமக்குள் வன்முறையின்றி ஐக்கியப்படும் போக்கு மிகவேகம் பெறுகின்றது.


2. சுரண்டும் பிரிவுகள் தமக்குள் மேலிருந்து ஐக்கியப்படும் போக்கின் ஊடாக சுரண்ட மிக வேகமாக முனைப்புப் பெற்றுள்ளனர்.


இந்த இரு போக்கும் உலக இடைவெளியை கடக்கும் வழியில் தொழிற்படுகின்றது. ஆனால் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்ட முடியாத நேர் எதிர் பண்பை அனைத்துத் துறையிலும் கொண்டு உள்ளது.





சர்வ தேசியக் கண்ணோட்டத்துடன் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்காக எந்தவிதமான விட்டுக் கொடுப்பும் இன்றி போராட வேண்டும். அதே நேரம் மக்களை சூறையாட ஒன்றிணைந்த உலக மயமாதல் சுரண்டலை எதிர்த்து ஈவு இரக்கமின்றிப் போராட வேண்டும்.





உலகு இன்று இரண்டு பாதைகளுக்குள் மட்டும் நகர்கின்றது. இதற்கு வெளியில் ஒரு பாதை உண்டெனக் கூறுவது, உண்மையில் சுரண்டல் பிரிவை மறைக்கத்தான். இதன் மூலம் சுரண்டலைத் தீவிரமாக்கத்தான் . இந்த வகையில் தான் தேசியக் கோரிக்கையும் உள்ளது.


ஒரு ஒடுக்கும் இனத்தின் ஜனநாயகக் கோரிக்கையை முன்னெடுப்பதற்கு பதில், முன்வைக்கும் தேசியக் கோரிக்கை அடிப்படையில் தனிச்சலுகையைக் கோருவதுடன், சுரண்டலை நீடிக்க வைப்பதுமாகும். ஐனநாயகக் கோரிக்கையை சரியாக முன்னெடுக்கும் எந்தப் பிரிவும், அதை சுயநிர்ணய அடிப்படையில் சர்வதேசிய கண்ணோட்டத்துக்குள் தான் எடுக்க முடியும் என்ற ஆழமான உண்மையை புரிந்து கொள்வது எம்முன் உள்ள கடமையாகும்.





இனி நாம் அந்தோனிசாமி மார்க்சின் " தேசியம் ஒரு கற்பிதம் " என்ற மார்க்சிய விரோத, தேசிய விரோத ஏகாதிபத்திய கண்ணோட்டத்தை அவரின் புத்தக விமர்சனத்தின் ஊடாக பார்ப்போம்.


----------------------------------------------


"தேசியம் ஒரு கற்பிதம் " (கவனிக்க - மாயை என்று நாம் சொல்லவில்லை. கற்பிதம் என்றுதான் சொல்கிறோம்) தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிகுகிறதே யொழிய, எற்கனவே ~இயற்கையாகவே| உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை." என்ற மார்க்சிய விரோத, தேசிய விடுதலைக்கு எதிரான கருத்து முதல் வாதக் கோட்பாட்டை பார்ப்போம். "கற்பிதம் மாயை இல்லை" என்று கூறியபடி "கற்பிதம் என்று தான் கூறுகின்றோம்" எனக் கூறுவதில் என்ன விளக்கம் தான் மிஞ்சியுள்ளது? 'கற்பிதம்" என்றால் என்ன என்று அவர்களால் விளங்க முடியவில்லை. "தேசியம் ஒரு கற்பிதம்" என்பதை பென் ஆண்டர்சன் முன் வைத்த கோட்பாட்டை தமிழிற்கு கொண்டு வந்த இந்த மார்க்சிய விரோதி அ.மார்க்ஸ், "கற்பிதத்தை மாயை என்று சொல்லவில்லை" எனக் கூறி "கற்பிதம்" என்று கூறுவதாகக் கூறும் இவர்களின் கற்பிதம் மீதான விளக்கம் இதைத் தாண்டி செல்ல முடியாத கோட்பாட்டு முடக்கத்துக்குள் சிக்கி விடுகின்றது என்பதை ஏற்க வேண்டும்.


நாம் கற்பிதம் என்பதற்கு தமிழ் அகராதியில் என்ன விளக்கம் கொடுத்துள்ளது எனப் பார்ப்போம். ந.சி.கந்தையா எழுதிய செந்தமிழ் அகராதியில் கற்பிதம் என்பது பொய் என குறிப்பிட்டுள்ளது.


அ.மார்க்ஸின் "மாயை அல்ல" எனின், பொய் என எடுக்க வேண்டும். தேசியம் ஒரு பொய் அல்ல மாயை இதைவிட வேறு அர்த்தம் கிடையாது. வேறு அர்த்தம் உண்டு எனின் அ.மார்க்ஸ் தனது திரிபுக்கு எற்ப எற்ற ஒரு தமிழ் அகராதி தானே எழுத வேண்டும். பின்னரே இந்தப்புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும். இதே முன்னுரையில் "தேசியம் ஒரு கற்பிதம்" என்பதை எஸ்.வி.ராஜதுரை "இந்து, இந்தி-இந்தியா" வில் ஏற்றுள்ளதாக நிறப்பிரிகைக் குழு கூறுகின்றது. எஸ்.வி.ராஜதுரை என்ற மார்க்சிய விரோதி என்ன ~இந்து இந்தி இந்தியா|வில் கூறுகின்றார் என கொஞ்சம் பார்ப்போம்.


"........ பெனடிக் அன்டர்ஸனின் மொழியில் சொல்வதென்றால் ஒரு வகையான ~கற்பிதங்கள்| தான் தேசம் அல்லது தேச அரசு என கற்பிதம் செய்யது கொள்ளப்பட்ட ஒரு சமூகம் என்று அவர் கூறுகையில், அவ்வாறு செய்யப்படும் ~கற்பிதம்| இவ்வுலகிற்கும், இவ்வுலகில் உள்ள மெய்நிலைகளுக்கும் தொடர்பற்ற ஒரு விசித்திரக் கற்பனை என்று கொள்வதில்லை. அது மெய் நிலைகளை ஆதாரமாகக் கொண்டும் புற நிலைக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் அவற்றினூடாகவும் செய்து கொள்ளப்படும் ~கற்பிதம்| என்று தான் கூறினார். ஆனால் மொழி, பண்பாடு, மரபாக வளர்ந்து வரும் நிலப்பரப்பு பற்றிய உணர்வு போன்ற கூறுகளுக்கு உள்ள வலிமையை அவர் ஆழமாகப் புரிந்து கொள்வில்லை." என எஸ்.வி ராசதுரை என்ற மார்சிய விரோதி கூறுகின்றார்.


எஸ்.வி.ராஜதுரை கூறுகின்றார் மொழி, பண்பாடு, மரபான நிலப்பரப்பை பெனடிக் அன்டர்சன் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் அது இயல்பில் ~கற்பிதம்| என்ற கோட்பாடே தவறானதாக மாறிவிடுகின்றது. பின் எப்படி எஸ்.வி ராஜதுரை கற்பிதத்தை இப்படித்தான் கூறுகின்றார் என விளக்க முடியும். "....... ~கற்பிதம்| இவ்வுலகிற்கும் இவ்வுலகில் உள்ள மெய் நிலைகளுக்கும் தொடர்பற்ற ஒரு அதாவது விசித்திர கற்பனை என்று கொள்வதில்லை." என்ற எஸ்.வி.ராஜதுரை எப்படி "மொழி, பண்பாடு, மரபாக வளர்ந்து வரும் நிலப்பரப்பு பற்றிய உணர்வு போன்ற கூறுகளுக்கு உள்ள வலிமையை அவர் (அவர் என்பது பெனடிக் அன்டர்சன்) ஆழமாகப் புரிந்து கொள்வில்லை. " எனக் கூறிய படி சொல்ல முடியும் என யாரும் அவரிடம் கேட்டுவிடக் கூடாது. ஏன்எனின் அது அவருக்கே தெரியாது. ஏன் எனின் மார்க்சியத்தை மறுத்துரைக்க யார்யார் மார்க்சியத்துக்கு எதிராக என்ன கூறுகிறார்களோ அதை எல்லாம் நியாயப்படுத்த நாம் எப்படி வேண்டுமானாலும் முரண்பாட்டுடன் விளக்கம் கொடுப்போம், வாசிப்பவன் குழம்ப வேண்டும். ஆனால் தெளிவு வரக் கூடாது. அதற்கு மாற்றி மாற்றி வித்தை காட்டுவோம் என்பது தான் இந்த மார்க்சிய விரோதிகளின் சித்தாந்தம். இது எப்படி அ.மார்க்ஸின் ~தேசியம் ஒரு கற்பிதத்துக்கு| பலம் சேர்க்கும். எல்லாம் மார்க்சியத்தை மறுதலிக்கும் கோட்பாடு மட்டுமின்றி, தேசியத்தையும் மறுதலிக்கும் அடிப்படையுமாகும்.


இனி நாம் ~கற்பிதம்| என்ற கோட்பாட்டின் பின் உள்ள வர்க்கக் கண்ணோட்டத்தை ஆராய்வோம். ~தேசியம் ஒரு கற்பிதம்| என்று கூறும் ஒரு கோட்பாடு பொருள் முதல் வாதப் பார்வையை மறுத்து கருத்து முதல வாதப் பாதையை முன் தள்ளுவதாக உள்ளது.


அதாவது ~தேசியம் ஒரு கற்பிதம்| எனின் இருக்கும் எல்லாத் தேசியத்தின் பின் ஒரு தேசம் உள்ளது. தேசியத்தின் பின் உள்ள தேசம் என்ற பொருள் மறுதலிக்கப்படுகின்றது. தேசம் முற்போக்காகவோ, பிற்போக்காகவோ இருந்தாலும் அங்கு தேசம் என்று ஒரு வரையறை உண்டு. தேசம் ஒடுக்கும் தேசமாக இருந்தாலும், ஒடுக்கப்படும் தேசமாக இருந்தாலும் அங்கு தேசம் என்ற வரையறை உண்டு. ஏகாதிபத்தியமாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் ஒரு தேசமாக இருந்தாலும் அங்கு தேசம் என்ற ஒரு வரையறை உண்டு. அது நிலத்தொடர், மொழி, பண்பாடு, ஒரு பொருளாதாரம் என்ற அடிப்படை வரையறை உள்ளவரை தேசியம் ஒரு கற்பிதம் என்பது பொருளை மறுக்கும் (இந்த நான்கையும்) கருத்து முதல்வாதமாகும.;.


இந்த தேச வரையறை மாயையோ, பொய்யோ (கற்பிதமோ) , கற்பனையோ அல்ல. மாறாக இது தேசம் செறிந்த பொருளாதாரமாக உள்ளது. இது வெறும் மனிதர்களின் சிந்தனை அல்ல. மாறாக மனிதனின் வாழ்வு நிலையுடன் கூடிய அடிப்படை வர்க்க நோக்கம் கொண்ட, பொருள் செறிந்த அடிப்படை நோக்குடன் செயல்படுகின்றது.


நாம் முன்பு எடுத்துக் காட்டிய நிறப்பிரிகையின் மேற்கோளில் "தேசியப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகிறதே ஒழிய எற்கனவே ~இயற்கையாக| உருப்பெற்ற தேசம் தேசியப் போராட்டத்தை உருவாக்குவதில்லை" என வாதிடும் அ.மார்க்ஸ் போன்றோர் கருத்தை முதன்மையாக ஏன் முன் தள்ளுகின்றார்.


முதலில் ~இயற்கையானது அல்ல| எனக் கூறி தமது கருத்து முதல் வாதத்தை மறைக்க முனைகின்றார். அதாவது தேசம் என்ற பொருள் இன்றி தேசிய விடுதலைப் போர் நடக்க முடியும் என்கின்றார். இயற்கையானது அல்ல மாறாக செயற்கை ஆனது என்கின்றார். தேசம் என்பது செயற்கை ஆனது என்கின்றார். இதை ஆழமாகப் பார்க்காது மேலோட்டமாகப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றும். அதாவது சுரண்டும் பிரிவு உருவாக்கியதாக பொதுவில் கொள்ள முடியும்.


ஆனால் இது செயற்கையோ அல்லது இயற்கையோ தனியாகவோ இல்லை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்து போய் உள்ளது. உலகில் இன்று உள்ள செயல்கள், பொருட்கள் என அனைத்தும் இயற்;கையும், செயற்;கையும் இணைந்து எப்படி உள்ளதோ அதுபோல் தான் தேசமும்.


மக்கள் கூட்டம் இயற்கையின் மீதான, தனது உயிர் வாழ்தலுக்கான பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாறுதலே தேசமாக உருவாகின்றது. இது தன்னகத்தே இரண்டு பிரிவு மக்கள் கூட்டத்தை கொண்டு உள்ளதுடன் அதற்கிடையிலான முரண்பாட்டின் நிகழ்வுகளாக தேசம் ஒரு பொருளாதார வடிவமாக மக்களால் (இரண்டு பிரிவுகளாலும்) உருவாக்கப்பட்டது. ஆகவே தேசம் வெறுமனே இயற்கையோ வெறுமனே செயற்கையோ அல்ல. மாறாக மனிதனின் வாழ்தலுக்கான இயங்கியலுடன் இயற்கை, செயற்கையின் மிதான மனித செயற்பாட்டின் தொகுப்பே தேசமாகும்.


இனி தேசிய விடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகிறது என்கிறார். அதாவது வர்க்கப் போராட்டம் தான் தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்கிறது என்கிறார். மொழிப் போராட்டம் தான் மொழியை உருவாக்கிறது என்கிறார். சொத்துடமையை வைத்திருக்கும் போராட்டம் தான் தனியார் சொத்தை உருவாக்கியது என்கின்றார். பெண் விடுதலைப் போராட்டம் தான் பெண்ணை உருவாக்குகிறது என்கின்றார். அடிமைக்கு எதிரான போராட்டம் தான் அடிமையை உருவாக்குகிறது என்கின்றார். சாதிப் போராட்டம் தான் சாதியை உருவாக்கிறது என்கின்றார். தேசிய விடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்கிறது என்கின்றார்.


இந்த கருத்து முதல்வாதக் கோட்பாடுதான் கார்ல் மார்க்ஸால் அடிப்படையில் மறுதலிக்கப்பட்டு பொருளை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை உலகுக்கு வழங்கினார். அதாவது பொருள் இன்றி சிந்தனையோ, போராட்டமே, ....... எதுவுமே இருக்க முடியாது. எல்லாவற்றிலும் பொருள் அடிப்படையானது. அதன்பின் தான் சிந்தனை.


ஆனால் அ.மார்க்ஸ் -ரவிக்குமார் உட்பட இந்த கருத்து முதல் வாதிகள் சிந்தனையை முதல் வைத்து அதில் பொருளைத் தேடுகின்றனர். பின் தாம் மார்க்சிய வாதிகள் எனக் கூறிக் கொள்ளவும் விரும்புகின்றனர். அதுவும் மார்க்சின் பெயரினால் கார்ல் மார்க்சின் பெயரிலும், மார்க்சிய சிந்தனையின் பெயரிலும்.


தேசம் ஒன்று உள்ளபோது தான் தேசிய விடுதலைப் போராட்டம் நடக்க முடியும். இந்த தேச விடுதலைப் போர் ஒடுக்கப்படும் தேசத்தை முன்னோக்கி தள்ளுவதன் மூலம், ஒரு தனியான சுயமான அரசாக மாற முனைகிறது.


எல்லாத் தேசமும் தத்தமது தேச விடுதலைப் போருக்கு ஊடாக தமக்கான அரசு ஒன்றை உருவாக்கியுள்ளன, உருவாக்க முனைகின்றது. ஆகவே இங்கு தேச விடுதலைப் போர் என்பது தன்னை மேலும் பலப்படுத்தும்படி அரசை உருவாக்கும் அல்லது பாதுகாக்கும் முயற்சியின் விளைவே ஒழிய வேறெந்த வடிவமும் கிடையாது. தேசவிடுதலைப் போர் என்பது அரசை உருவாக்கும் போராகும்.


ஒரு தேசம் என்பது தேச விடுதலைப் போருக்கு ஊடாக ஒரு அரசை உருவாக்க அல்லது பாதுகாக்க முனையும் போக்கை மக்களின் ~கற்பிதம்| என்று கூறுபவன் அடிப்படையில் தேச விடுதலையை மறுக்கும் நோக்கோடு அதன் பொருள் செறிந்த பார்வையை மறுதலிக்கின்றான். இதன் மூலம் ஏகாதிபத்திய நோக்கை நிறைவு செய்கின்றான்.


இலங்கையை எடுத்தால் சிங்களப் பெருந்தேசியம் ஒடுக்கும் அரசாகவும், தமிழ் தேசியம் ஒடுக்கப்படும் தேசியமாகவும் தனக்கான தேசத்தில் நின்று தேசிய விடுதலைப் போர் ஊடாக அரசைக் கோரியும் நடக்கும் போராட்டத்தில் இரண்டு பக்கத் தேசியமும் கற்பிதங்கள் அல்ல. சிங்கள தேசிய மக்களும், தமிழ் தேசிய மக்களும் தமக்கிடையில் வளங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அல்லது பிரித்துக் கொள்ளவும் செய்யும் போர் தான் இங்கு தேசியமாக உள்ளது. சிங்கள இனவாத அரசாக இருந்தபடி தமிழ் சிங்கள மக்களை ஒட்டு மொத்தமாக சுரண்ட முயலும் போது, தமிழ் பிரிவு தனக்கான கோரிக்கையினை கோரத் தொடங்கிய போது தேசவிடுதலையும் ஆரம்பமாகின்றது.


மக்கள் சுரண்டப்படும் நிலையில் தனக்கான பங்கை கோரும் போர் எப்போதும் சுரண்டல் வர்க்கத்திடமே எழுகின்றது இதனால் தான் தேசியம் என்பது முதலாளித்துவக் கோரிக்கை என்கின்றோம்.


வௌ;வேறு இனப்பிரிவுகளின் ஆதிக்கச் சுரண்டல் பிரிவுகள் மோதும் போது, யுத்தமும் அதன் போக்கும் ஒட்டு மொத்த சமூகம் முன் திணிக்கப்படும் போது யுத்தம் பரந்து பட்ட மக்கள் முன் நகர்த்தப்படுகிறது. இப்போதும் கூட இந்தத் தேசியம் முதலாளித்துவக் கூறாகவே இருக்கின்றது.


இந்தத் தேசிய யுத்தம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் எப்போது மாறுகின்றது எனப் பார்ப்போம்.


ஒன்றுக்கு மேற்பட்ட இந்தத் தேசியத்துக்குள் சுரண்டல் உள்ளதால் இரண்டு பக்கத்திலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களும் இருக்கின்றனர். இவர்களைச் சுரண்டுவதில் எந்தத் தேசியம் என்பது தொடர்பான முரண்பாடு பொதுவில் இருப்பதில்லை.





எங்கெல்சு இது தொடர்பாக 'அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒரேவிதமான நலன்களையும், ஒரேவிதமான எதிரியையும் கொண்டுள்ளனர். மேலும் ஒரேவிதமான போராட்டத்தையே அவர்கள் நடத்த வேண்டியுள்ளது" என்றார்.


ஆனால் இந்த ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் போட்டி எழும் போது தனது இனத்திடம் தான் மட்டும் சுரண்டும் ஆதிக்கத்தைக் கோரத் தொடங்குகின்றது. இந்த இரண்டுக்கு மேற்பட்ட சுரண்டல் பிரிவுக்குள் எப்போது முரண்பாடு ஏற்படுகின்றது ?. உள்நாட்டுச் சந்தையை அந்நிய நாடு கட்டுப்படுத்தும் போது, கைப்பற்றும் போது, அதை எதிர்த்துப் போராட சுரண்டும் வர்க்கம் தயாரற்ற நிலையில் சமரசம் செய்து கொள்ளும் போது, உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்திற்குள் சந்தைப் போட்டி அதிகரிக்கின்றது. பல் தேசிய நாட்டில் வௌ;வேறு இன மக்கள் கூட்டத்தின் சுரண்டல் பிரிவுக்குள் மோதல் தொடர்கிறது.


இன மோதலாக மாற்றப்பட்ட சந்தையை கைப்பற்றிக் கொள்ளும், அதிகாரம் கொண்ட இனப்பிரிவு தவிர்க்க முடியாது. ஏகாதிபத்திய சுரண்டல் உள்ளவரை அதனுடன் சமரசம் செய்து கொள்ளவும், மூடி மறைக்கவும் இனவாதத்திற்கு மேலும் மேலும் எண்ணை வார்த்து தீ வைக்கின்றனர்.


பாட்டாளி வர்க்கத் தலைமை சுரண்டலுக்கு எதிரான போரை எப்போதும் ஐக்கியத்துடன் கோருகின்றது. அது எந்தத் தேசிய சுரண்டும் பிரிவு என இனம் பிரிப்பது இல்லை. இந்தக் கோரிக்கையை சரியாக முன்னெடுத்து, இனப்பிரிவைத் தாண்டி ஐக்கியப்பட்ட சுரண்டலுக்கு எதிரான போர் உருவாகின், அங்கு ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் இனப்பிளவை இனத்திற்கிடையில் ஏற்படுத்த முடியாது போய்விடுகின்றது.


மாறாக சுரண்டும் பிரிவு வர்க்க ஐக்கியத்தைக் குலைத்து இன முரண்பாட்டை ஏற்படுத்தின், வர்க்க சக்திகளின் ஐக்கியப்பட்ட போராட்டம் பலவீனமடைகின்றது. இந்நிலையில் இன முரண்பாடு யுத்தமாக, மொத்த இன மக்களுக்கு இடையில் நகர்த்தப்படுகின்றது. இந்நிலையில் சுரண்டப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் அத்தேசியப் போராட்டத்தை தனது தலைமையின் கீழ் சர்வதேசிய அடிப்படையில் சுயநிர்ணயநோக்கில் முன்னெடுப்பதன் மூலம், எதிர்த்தரப்பு பாட்டாளிகளை ஐக்கியப் பட்ட கோரிக்கையின் ஊடாக அணிதிரட்ட முனைகின்றது. ஒடுக்கும் இனப்பாட்டாளிகள் பிரிவினைக்கு ஆதரவான பிரச்சாரத்தின் ஊடாக ஒடுக்கும் இனத்தை ஐக்கியப்படுத்த முனைகின்றனர்.


எனவே தேசியப் போராட்டம் என்பது திட்ட வட்டமாக வர்க்கம் சார்ந்துள்ளது. இது வெறும் "கற்பிதங்கள்" அல்ல. மாறாக தனது வாழ்வியலுக்கும், தனது வர்க்கத்திற்;குமான போராட்டமே ஒழிய தேசியம் கற்பிதங்கள் அல்ல. அது போல் பாட்டாளி வர்க்க கோரிக்கையும் அல்ல.


நாம் யுத்தங்களில் உள்ள வௌ;வேறு தேசியக் கோரிக்கைகைப் பற்றிப் பார்ப்போம்.


1. பல்தேசிய இன நாடுகளுக்குள் அரசு இன்றி இருக்கும் ஒரு தேசம் தனது அரசைக் கோரி நடக்கும் தேச விடுதலைப் போராட்டம்.


2. ஏகாதிபத்தியம் மற்றும் மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் போது நடக்கும் சொந்த தேசத்தைப் பாதுகாக்கும் யுத்தம்.


3. ஏகாதிபத்திய, மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.


4. ஒரு பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கொண்ட ஒரு நாட்டில் இன்னும் ஒரு ஆக்கிரமிப்பு நாட்டுக்கும் இடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியமும்.


5. ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள் நாட்டு யுத்தமும் அதன் தேசியமும.;


பொதுவாக இன்றைய யுத்தங்களை இந்த ஐந்துக்குள் உள்ளடக்க முடியும். இவ்வெல்லா யுத்தங்களிலும் வர்க்க நோக்கங்கள் தெளிவாக உள்ளதுடன், தேசியக் கோரிக்கையையும் வர்க்க நோக்கில் முன்வைக்கப்படுகிறது.


எனவே தேசியப் போராட்டம் வர்க்கத்தைக் கடந்து உள்ளதாகவோ, தேசியம் வெறும் கற்பிதம் என்பதோ அடிப்படையில் சுரண்டும் வர்க்கத்தை மூடிமறைக்கும் தௌ;ளத்தெளிவான குறிக்கோளின் வெளிப்படையாகும்.


நாம் இனி யுத்தங்களின் வர்க்க அடிப்படையை அதன் தேசியக் கோரிக்கைகளை தனித்தனியாக ஆராய்வோம்.


Œ ஒரு பல்தேசிய நாட்டுக்குள் நடக்கும் தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலைப் போராட்டம் என்பன ஏன், எதற்காக தோற்றம் பெறுகின்றன எனப்பார்ப்போம்.


இன்று பல்தேசிய இன நாட்டு தேசிய இன முரண்பாடு, தேசிய விடுதலை யுத்தம் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டும் பண்புகளில் இருந்தே எழுகின்றது. மாறாகப் பாட்டாளி வர்க்கம் இதைக் கோருவதில்லை. ஏன் எனின் நாடு பிரிப்பதால் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான அனுகூலத்தையும் பெற்று விடுவதில்லை. அதாவது சுரண்டும் வர்க்கத்திற்கு இடையில் நடைபெறும் இழுபறியான போராட்டத்தையே மொத்த மக்கள் முன் தேசிய விடுதலைப் போராக நகர்த்துகின்றனர்.


இன்று உலகம் உலகமயமாதலில் வேகம் பெறுகின்றது. இது உலகில் உள்ள தேசிய செல்வத்தை இல்லாது ஒழிக்கின்றது அல்லது கைப்பற்றுகின்றது. பன்னாட்டு தேசம் கடந்த நிறுவனங்கள் உலகை ஒரே குடைக்குள் கொண்டு வரும் வகையில் பொருளாதாரச் சுரண்டலை தீவிரமாக்கியுள்ளது.


இந்நிலையில் தேசிய சொத்தின் வாரிசுகளான தேசிய முதலாளிகளின் சொத்துரிமை உலகளவில் மறுக்கப்படுகின்றது. குறைக்கப்படுகின்றது. இந்நிலையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட வேண்டிய இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது.


ஆனால் தேசிய முதலாளித்துவ வர்க்கம் , இந்த ஏகாதிபத்திய யுகத்தில் இனியும் ஒரு வர்க்கமாக நீடிக்க முடியாது என்ற உலக மயமாக்கலின் விளைவு, அவர்களால் போராட முடியாத சரணடைவுப் பாதைக்கு இட்டுச் சென்று, ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் தரகாக மாறி பாசிசமாக வளர்ச்சி பெறுகின்றது. இந்நிலையில் சொந்த தேசிய இழப்பீட்டை தரகு மூலம் தற்காலிகமாக சமாளிக்க முனையும் தேசிய முதலாளித்துவப் பிரிவு, தனது உற்பத்தி முறையை தரகு முதலாளித்துவமாக மாற்றி விடுகின்றது, மாற்றுகிறது.


இன்றைய உலக மயமாதல் தரகு முதலாளித்துவப் பிரிவைக் கூட இனித் Nவையில்லை என்றளவிற்கு, தனது வலையை விரிக்கின்றது. தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நேரடியாகவே கொள்ளையடிப்பதன் மூலம் தரகுமுதலாளித்துவப் பிரிவுக்கு வீசி எறியும் எலும்புகளை தடுக்க முனைகின்றது. உலக மயமாதல் மேலும் மேலும் தீவிரமாக, மக்கள் தன்னிச்சையாகவும், திட்டமிட்டும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடத் தொடங்குகின்றனர்.


இதைத் தடுத்து நிறுத்த ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவப் பிரிவும் பாட்டாளி வர்க்கத்தை பிளவு படுத்த முனைகின்றன. இதனைச் செய்ய ஒரு தேசிய இனத்தை முன்னுக்குத் தள்ளி, மறு தேசிய இனத்தை கீழே தள்ளி, இனத்துக்கு இடையிலான மோதலைத் தொடங்குகின்றன. இதைச் செய்வதில் இரண்டு இன தரகு முதலாளித்துவமும் தீவிரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில் தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் தேசிய முதலாளித்துவப் பிரிவு விழித்துக் கொள்ளுகின்றது. அத்துடன் அதற்கு தெம்பைக் கொடுப்பதுடன், தனக்கான பங்கை தக்க வைக்கவும், அதே நேரம் பிளவை மேலும் மேலும் ஊக்குவிக்கின்றது. அதாவது தேசிய முதலாளித்துவ ஒரு பிரிவு ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவதற்கு பதில் தேசிய இன முரண்பாட்டை பிளவு படுத்தி தீ வைக்க எண்ணெய் வார்க்கிறது.


இந்நிலையில் பாட்டாளி வர்க்கம் பல்தேசிய பாட்டாளிகளின் தலைமையில் ஏகாதிபத்தியத்திற்கு, தரகு முதலாளித்துவ பிரிவிற்கும் எதிராகப் போராட, வர்க்கப் போரை பிரகடனம் செய்கின்றனர். பல்தேசிய ஒன்று பட்ட தேசியத்தை அடிப்படையாக கொண்டு ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போராக, சாராம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்க எதிரான சர்வதேசியப் போராகவும் அமைகிறது.


இந்த வர்க்கப் போர் தேசிய இனங்களின் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்திய போராக இருக்கும். இந்நிலையில் முதலாளித்துவப் பிரிவு, தனது சொந்தப் பங்கை தக்க வைக்க, பெற, பாட்டாளிகளைப் பயன்படுத்த முனைகின்றது. இங்கு தேசிய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவு, பாட்டாளி வர்க்கம் சார்ந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஒரு முற்போக்குப் பாத்திரத்தை வகிக்க முனைகிறது.


ஒரு பல்தேசிய இனத்தின் ஒன்று பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பை வர்க்க மற்றும் தேசியப் போராக மாற்றும் ஒரே ஒரு பாதை பாட்டாளி வர்க்கத்திடம் மட்டுமே இன்று உள்ளது. இதற்கு அப்பாற்பட்ட எந்த முதலாளித்துவப் பாதையும் இறுதியில் பாசிசமாக மாறி ஏகாதிபத்தியத்திடம் சரணடையும்.


பாட்டாளி வர்க்கம் ஒன்று பட்ட தேசிய இனத் தலைமையை பெறத் தவறும் பட்சத்தில் தேசிய இன முரண்பாடு தனித் தேசிய விடுதலைப் போராக மாற்றம் பெற்று விடுகின்றது. ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி அரசுகளும் திட்டமிட்ட இனப்பிளவை ஏற்படுத்த, அதைத் தேசிய முதலாளித்துவப் பிரிவு எண்ணை ஊற்றி வளர்த்தெடுக்கும் போது அது தனித் தேசிய விடுதலைக்கான ஒரு யுத்தமாக ஏற்படுத்தி விடுகின்றது.


இந்தத் தேசிய விடுதலைப் போர் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள் மீதும் திணிக்கப்பட்ட நிலையில், அத்;தேசிய விடுதலைப் போரை ஒரு நிமிடம் கூடத் தாமதிக்காது பாட்டாளிகள் தமது கையில் சர்வதேசிய நிலையில் நின்று எடுக்க வேண்டும். .


முதலாளித்துவ சுரண்டும் பிரிவு தமது நலன்களைப் பாதுகாக்க திட்டமிட்டு உருவாக்கும் இன முரண்பாடு ஒரு தேசிய விடுதலைப் போராக மாறும், மாறிய காலத்தில், அப்போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் தனது கையில் சர்வதேசிய நிலையில் நின்று எடுப்பதன் மூலம், அப்போராட்டத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதாக உள்ளுர் சுரண்டும் தரகு முதலாளிக்கு, நிலப்பிரபுக்கு எதிராக மாற்றுவதன் மூலம,; சொந்தப் பாட்டாளிகளையும் அணி திரட்டியபடி எதிர்தரப்பு பாட்டாளிகளை ஐக்கியப்படக் கோரவும் போராடுவதன் மூலம் ஒரு சர்வதேச பாட்டாளி வர்க்க கடமையை நிறைவு செய்ய முடியும்.


இலங்கையில் உள்ள இன்றைய நிலை இதுவாகும். மாறாக இந்தியாவில் தமிழ் நாடு போன்ற பிரதேசங்களில் இதற்கு எதிரான நிலையாகும். அதாவது தமிழ் நாட்டு தேசிய இன முரண்பாடு எகாதிபத்தியத்தாலும், தரகு முதலாளித்துவப் பிரிவாலும் ஏற்படுத்தப்படுகின்றது. இதை தமிpழ் முதலாளித்துவப் பிரிவு ஊக்குவித்து தேசிய விடுதலைக்கான யுத்தத்தை நடத்தக் கோரி நிற்கின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் சொந்த சுரண்டும் வர்க்கத்தையும், அன்னிய சுரண்டும் வர்க்கத்தையும் சரியாக இனங்கண்டு இருப்பதால், தேசிய இன முரண்பாட்டுக்குப் பதில் வர்க்க முரண்பாடு முதன்மையானதாக உள்ளதை இனம் காண்கிறது. தேசிய இனமுரண்பாட்டை சர்வதேசிய நிலையில் நின்று சுயநிர்ணய அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் போராடுகின்றது.


ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கல்தான் சொந்தத் தேசியத்தை சூறையாடுகின்றது என்பதை எவ்வளவு புரிந்து கொள்கின்றனரோ, அந்தளவுக்கு அவ் மக்கள் தேசிய இன முரண்பாட்டில் சிக்காது, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்று பட்ட வர்க்க தேசியப் போரை அறை கூவுவது நிகழ்கின்றது.


இந்தியாவில் அ. மார்க்ஸ் போன்றோரும் வேறு உதிரிக் குழுக்களும் தமிழ் நாடு பிரிவதற்கான ஒரு தேசிய விடுதலைப் போரை முன்னெடுப்பதுதான் இன்றுள்ள உடனடிக் கடமையாகக் காட்ட முனைகின்றனர்.


உண்மையில் இவர்கள் என்னதான் பாட்டாளி வர்க்கம் பற்றி திரிபை மூடிமறைக்க பேசினாலும் இந்தியாவில் உள்ள சுரண்டப்படும் மக்களின் வர்க்க ஐக்கியத்தை காண மறுக்கும் போது, அது இயல்பில் தேசிய முதலாளித்துவமாக சீரழிகின்றது.


ஏன் இந்தியப் பாட்டாளி வர்க்கம் ஐக்கியப் பட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியாது, என்பது பற்றி இவர்கள் விளக்கவில்லை. ஆனால் தேசிய இன முரண்பாடு உண்டு எனக் கூறுவதற்கு அப்பால் இவர்கள், அதைப்பற்றி ஆய்வு செய்யும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை இழக்கின்றனர்.


சோவியத் புரட்சிக்கு முன் ருஷ்சியாவில் தேசிய இன முரண்பாடு இருந்தது என்பதும், இந்தியாவில் அது இருக்கின்றது என்பதும் பொதுப்படையானது. அப்படி இருக்க இந்தியத் தேசிய இன முரண்பாட்டிற்கு தனி நாடு கோரும் போராட்டம் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக, ஏகாதிபத்தியக் கனவை நனவாக்குவதாகும். .


இன முரண்பாட்டின் பண்பியல் மாற்றம் ஏற்படும் போது மட்டுமே பிரிவினைக்கோரிக்கை முன்வருகின்றது.


ஈழத்து நிலமைக்குள்ள பண்பியல் மாற்றம் என்பது தமிழ் நாட்டுக்குக் கிடையாது. ஆகவே தேசிய இன முரண்பாடு பல் தேசிய நாடுகளில் ஒரு தேசிய விடுதலை போராக பண்பியலில் மாற்றம் அடைவது எப்போது என்றால் பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கக் கடமையைக் கைவிட்டு கைகட்டி நிற்கின்ற ஒரே ஒரு நிலையில் மட்டுமே ஆகும்.


பாட்டாளி வர்க்கம் தனது சர்வதேசக் கடமையை சரியாக முன்னெடுக்கும் எச்சந்தர்ப்பத்திலும் தேசிய இன முரண்பாடு தேசிய இன விடுதலைப் போராக ஒருக்காலும் மாறிவிடமாட்டாது.


அப்படி யுத்தம் கட்டாயப்படுத்தி திணிக்கப்படின், பாட்டாளி வர்க்கம் அதை முறியடித்து தனது அரசை நிறுவிக் கொள்ள சர்வதசிய அடிப்படையில் தேசியப்போர் ஊடான பாதை திறப்பதாகவே அமையும்.


உலகில் இன்று உள்ள பல்தேசிய நாடுகளில் உள்ள எல்லாத் தேசிய இன முரண்பாடும், தேசிய விடுதலை யுத்தங்களிலும், பாட்டாளி வர்க்கம் என்ன நிலையில் உள்ளது என்பதையும் பொறுத்தே, யுத்த தந்திரம் பிரதிபலிக்கின்றது. இந்த தேசிய இன முரண்பாடு சுரண்டும் பிரிவுகள் தமது சொந்த நலனுக்காக மக்கள் முன் இன முரண்பாட்டையும் விடுதலைப் போராட்டத்தையும் திணிக்கின்றன. இதை வெறும் "கற்பிதங்கள்" எனக் கூறுபவன் ஒரு மாங்காய் மடையன் மட்டுமன்றி, ஏகாதிபத்தியங்களின் கனவுகளை நிறைவு செய்ய, மக்கள் அடிப்படை உண்மையைப் புரிய விடாது தடுக்கும் ஒரு செய்முறை கோட்பாட்டை முன்நிறுத்துவதாகும்.


உலகில் உள்ள பல்தேசிய நாடுகளில் எல்லாத் தேசிய இன முரண்பாட்டையும், தேசிய விடுதலை யுத்தங்களும் இதற்கு வெளியில் மனிதனின் சிந்தனையில் உதித்த "கற்பிதங்கள்" உருவானதாக, ஒரு சமூக ஆய்வைத் தன்னும் காட்ட முடியாது, நிறுவ முடியாது.


எனவே பல்தேசிய இன நாடுகளின் தேசிய நெருக்கடியை காரண காரியத்துடன் எல்லாப் பக்கத்தையும் எடுத்து ஆராய்வது அவசியம். நுனிக் கொப்பில் நின்று தொங்கிய படி அடிமரம் பற்றி ஆருடம் கூறமுனையும் அ. மார்க்ஸ் போன்றோரின் கோட்பாட்டை விட்டு விட்டு கீழே இறங்கி வருவதா? அல்லது நுனியில் இருந்து தொப்பென்று விழுந்து அழிந்து போவதா? என்பது தான் உங்கள் முன் உள்ள ஒரே ஒரு பாதையாகும்.


 ஏகாதிபத்தியமும் மற்றைய நாடுகளும் முன்றாம் உலக நாட்டை ஆக்கிரமிக்கும் போது எழும் தேச விடுதலைப் போரைப் பார்ப்போம்.


ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நாடு தனது தேசம் கடந்த சுரண்டலை நடத்தவும், அதே நேரம் தனது செல்வாக்கு மணடலங்களை (தனது சுரண்டலைப் பாதுகாக்க) நிறுவவும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுகின்றன


ஏகாதிபத்தியமில்லாத ஆக்கிரமிப்பு நாட்டின் பின், ஏகாதிபத்திய மறைமுகத் தலையீடும் இன்றி இவ் ஆக்கிரமிப்புக்கள் இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் சாத்தியமில்லை. இன்றைய நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாடு அந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட முனைகிறது. காலனி அரைக்காலனி அல்லது நவகாலனித்துவ நோக்கத்தை கொண்ட ஆக்கரமிப்பு நாட்டின் சுரண்டும் வர்க்க கதவுகளை உடைத்தெறியப் போராடுவது அவசியமாகிறது.


இந்நிலையில் மூன்றாம் உலக நாடுகளில் தேசிய முதலாளித்துவப் பிரிவு தனது சுரண்டலைப் பாதுகாக்க முனைந்து போராட முனைகிறது. இப்பிரிவு சொந்தப்பலத்தில் நிற்கும் தகுதியை ஏகாதிபத்திய சகாப்தத்தில் இழந்து விடுவதால், அவர்கள் இயல்பில் ஆக்கிரமிப்பாளனிடம் சரணடைந்து சேவை செய்வதன் மூலம், தனது நலனைக் குறைந்த பட்சம் பாதுகாக்க தீவிரமாக முனைகிறது.


மறுபுறம் ஆக்கிரமிப்புக்கு எதிராக பரந்து பட்ட மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க தேசியவிடுதலைப் போரை பிரகடனம் செய்கின்றன. இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் கொண்டிருப்பதால், ஆக்கிரமிப்பாளனுக்கு எதிரான போராட்டம் உள்ளுர் தரகுப் பிரிவை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நடத்தப்படுவதால் அத்தேச விடுதலைப் போர் வர்க்கப் போராக இயல்பில் கொண்டுள்ளது. இது சர்வதேச அடிப்படையைக் கொண்டதுமாகும்.


இவ்வர்க்கப் போரோ, தேசிய விடுதலைப் போரோ ஒன்றில் இருந்து ஒன்று விலகிவிடுவதில்லை. தேச விடுதலைப் போரும், வர்க்கப் போரும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக, தனது எதிரியை ஏகாதிபத்தியமாகவும், அதற்கு சேவை செய்யும் தரகுப்பிரிவையும், நிலப்பிரபுத்துவத்தையும் ஒன்றாக இனங்காண்கிறது. இது அடிப்படையில் புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளதுடன், அது உள்ளடக்கத்தில் வர்க்கப் போராட்டத்தையும், தேசிய விடுதலைப் போரையும் உள்ளடக்கி, சர்வதேசிய கண்ணோட்டத்தில் வேறு பிரிக்க முடியாத வகையில் உள்ளது.


தேசிய முதலாளித்துவப் பிரிவு தவிர்க்க முடியாது இதனுடன் இணைந்தோ அல்லது கூட்டு அமைத்தோ போராட நிர்ப்பந்திப்பதன் மூலம் இத் தேச விடுதலைப் போர் தெளிவான வர்க்கப்போராகவும் எதிரியை சரியாக அடையாளம் காண்கின்றது.


Ž ஏகாதிபத்தியம் , மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் நடக்கும் யுத்தங்களும் அதன் தேசியம் என்பது, பரஸ்பர சந்தையை மையமாக வைத்து இரண்டு சுரண்டும் வர்க்கமும் யுத்தத்தை முன் தள்ளுகின்றன. இந்த முதலாளித்துவ நாடுகள் உலகை தமது காலனியாகவோ, நவகாலனியாகவோ அரைக்காலனியாகவோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வைத்துள்ளன. இந்த நாடுகளின் சுரண்டல் பிரிவுகள் இக்காலனித்துவத்தில் நடத்தும் சுரண்டலுக்கும், ஈவிரக்கமற்ற சூறையாடும் நிலைக்கும் நெருக்கடி இல்லாதவரை இவர்களுக்கு இடையில் யுத்தம் ஒருக்காலும் ஏற்படாது. இவர்கள் தமது சந்தையின் தளத்தை எப்போது இழக்கத்தொடங்குகின்றனரோ அப்போது சுரண்டல் பிரிவுக்கு இடையில் மோதல் தொடங்குகின்றது. இம் மோதலின் உச்சத்தில் யுத்தங்களை தமது நாட்டுக்கு இடையில் அல்லது வௌ;வேறு நாடுகளின் கூலிப்படைகள் மூலம் அல்லது கைக் கூலிப்படைகள் மூலம் யுத்தத்தை நடத்தினர். நடத்துகின்றனர்.


இங்கு தேசியம் அடிப்படையில் பிரகடனம் செய்வதன் நோக்கம் தமது சுரண்டலை மறைப்பதற்காகவும், யுத்தங்கள் மூலம் மீள சந்தையைப் பகிர்ந்து கொள்ளுவதற்குமேயாகும்.


இத்தேசியம் எப்போதும் திட்டவட்டமாக பிற்போக்கானது. இவ்யுத்தத்தில் ஈடுபடும் இரு முதலாளித்துவ நாடுகளின் சுரண்டல் பிரிவும் எழுப்பும் தேசியத்தை எதிர்த்து பாட்டாளிகள் தமது வர்க்கப் போரை சொந்த நாட்டுக்குள் பிரகடனம் செய்ய வேண்டும்.


ஆக்கிரமிப்பு என்பது பரஸ்பரம் சந்தைக்கானதாக உள்ளதால், இவ்யுத்தத்தை நடத்தும் இரு பிரிவு சுரண்டல் ஆதிக்க வாதிகளும் முழுக்க முழுக்க ஈடுபடுவதால், பாட்டாளி வர்க்கம் அதை எதிர்த்து வர்க்கப் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும்.


சொந்த நாட்டில் பாட்டாளி வர்க்கம் வர்க்கப்போரை பிரகடனம் செய்தபடி, மற்றைய நாட்டுப் பாட்டாளியைக் கொல்லாதே எனக் கோரியும், யுத்தத்தை நிறுத்தக் கோரியும் முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளிகள் பரஸ்பரம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.


முதலாளித்துவ நாட்டுக்கு இடையேயான யுத்தத்திற்கும், மூன்றாம் உலக நாட்டு மீதான ஆக்கிரமிப்புக்கும் எதிரான யுத்தத்தில் பாட்டாளிகளின் கடமை மிகத்திட்ட வட்டமாக வேறு பட்டவை. முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவப் பிரிவே யுத்தத்தை நடத்துவதால் சொந்த நாட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த கோருகிறது பாட்டாளி வர்க்கம். மூன்றாம் உலகநாடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் பாட்டாளி வர்க்கம் சர்வதேசியக் கண்ணோட்டத்தில் தேசியப் போரைக் கோர வேண்டும் அது சராம்சத்தில் வர்க்கப் போராகவே இருக்கும்.. இங்கு முதலாளித்துவ நாட்டுப் பாட்டாளி வர்க்கம் முன்றாம் உலகத் தேசியப் போரை ஆதரித்தும், சொந்த நாட்டு சுரண்டும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்தும் போராட வேண்டும்.


ஒரு பாட்டாளி வர்க்க நாட்டை எதிர்த்து நடத்தும் ஆக்கிரமிப்புப் போரைப் பார்ப்போம். இங்கு பாட்டாளி வர்க்கம் அரசு உள்ளதால் சுரண்டல் என்பதை ஒழித்துக் கட்டும் ஆட்சியாக நீடிக்கும் வரை, உலகைப் பங்கிட்டு கொள்ளும் யுத்தமோ, மற்றைய நாட்டைச் சுரண்டுவதோ தேவையற்றதாகி விடுகிறது.


இதனால் பாட்டாளி வர்க்க அரசு உள்ள நாடுகள் யுத்தத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுக்கும் அதே நேரம், யுத்தத்தை நடத்தும் பிரிவுகளின் சுரண்டும் கனவுகளை அம்பலப் படுத்துகின்றது. ஏன்எனின் அனைத்தும் யுத்தங்களின் பின்னும் ஒரு வர்க்க நலன் உண்டு.


இந்த பாட்டாளி வர்க்க அரசை இல்லாது ஒழிப்பதன் மூலம் அந்த அரசின் கீழ் உள்ள மக்களை சுரண்ட விரும்பும் பிரிவு, யுத்தத்தைப் பிரகடனம் செய்கிறது. இந்த யுத்தம் அடிப்படையில் சுரண்டல் பிரிவுகளின் கொள்ளை அடிப்புக்கான கனவுகளே.


இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆக்கிரமிப்பு நாட்டுப் பாட்டாளிகள் போராடுவது மட்டுமன்றி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நாட்டு பாட்டாளிகளுடன் ஐக்கியப்பட்ட அறைகூவலையும், சொந்த நாட்டு சுரண்டல் பிரிவுக்கு எதிரான பாட்டாளி வர்க்க நாடுகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். அத்துடன் தனது நாட்டில் வர்க்கப் போரை நடத்த வேண்டும்.


இங்கு பாட்டாளி வர்க்க நாடு தனது சொந்த நாட்டு வர்க்கப் போரை பாதுகாக்க சொந்த தேசியப் போரைக் கோருகிறது. இது சர்வதேசிய எல்லையைத் தாண்டியது அல்ல.


மார்க்சிய விரோதிகளும், மார்க்சிய திரிபு வாதிகளும் அடிக்கடி 2ம் உலக யுத்தத்தின் போது சோவியத் பாசிசத்தை எதிர்த்ததை விடுத்து முன்னாள் மன்னர்கள், பழம் பெரிய போராட்ட வீரர்களின் பெயராலும், பாட்டாளி வர்க்க தலைவர்களின் பெயராலும் சோவியத்தைப் பாதுகாக்க தேசிய போருக்கு அறை கூவல் இட்டதை சுட்டிக்காட்டி, தேசியம் வர்க்கத்தைக் கடந்து, எங்கோ இருந்து வெளிவருவதாகவும், தேசியம் என்றென்றும் மனதில் குடிகொண்டுள்ளதாக, என பல விதமாக, கற்பனையில் உதிப்பதை எல்லாம் கூறிவருகின்றனர்.


சோவியத் பாசிசத்துக்கு எதிராக விடுத்த அறைகூவல் என்பது வர்க்கத்தைக் கடந்த தேசிய மல்ல. மாறாக சோவியத்துக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த வர்க்க மோதலை தற்காலிகமாக மட்டுப்படுத்தி பாசிசத்துக்கு எதிரான பரந்து பட்ட மக்களின் ஐக்கியத்தை கட்சியின் தலைமையில் கோரியது.


சோவியத்தின் சோசலிச காலகட்டம் நீடித்த எல்லாக் காலமும் , சோவியத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. பாட்டாளி வர்க்கம் அல்லாத பிரிவை பாசிசத்துக்கு எதிராக அணி திரட்டுவதற்கு அதன் பிரதி நிதிகளின் பெயரால் அறைகூவலிடுவது அவசியமாகின்றது மட்டும் இன்றி சரியானதுமாகும்.


இது யுத்த அறை கூவல் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலும் கட்சி வர்க்கப் போரை தணித்து பிரதான போராட்டமான பாசிசத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்தது.


எஸ்.வி.இராஜதுரையின் "ரஸ்சியப் புரட்சியின் இலக்கியச் சாட்சியம்" என்ற புத்தகத்தில் எஸ்.வி.இன் மார்க்சிய எதிர்ப்பை மீறியும், இலக்கியத்தில் பாசிசத்துக்கு எதிரான ஐக்கிய முன்னணியை பாட்டாளி அல்லாத எழுத்தாளர்களுடன் கொண்டு இருந்ததை வெளிக் கொண்டு வருவதை நாம் தெளிவாகக் காணமுடியும்.


சோவியத் அறைகூவல் பாட்டாளி வர்க்கத்தை பாதுகாக்க, ஒரு ஐக்கிய முன்னணியை பாசிசத்துக்கு எதிராக கோரிய அடிப்படையில் இருந்து தான் கோரியதே ஒழிய, மாறாக இதை மறுப்பவர்கள் ஒழிந்திருந்த வர்க்கத்தை கடந்த தேசியம் என காட்ட முனையும் மார்க்கிய விரோதிகளின் நோக்கம் தேசிய முதலாளித்துவத்தை நியாயப்படுத்தவதேயாகும்.





இனி 2ம் உலக யுத்தத்தின் போது மாறுகின்ற தேசிய வடிவங்களைப் பார்ப்போம். நாசிப்படை பல்வேறு நாடுகளைக் கைப்பற்றிய போது, அதை சோவியத் எதிர்த்ததுடன், போராடுபவர்களுக்கு ஆதரவும் வழங்கியது. அதே நேரம் சர்வதேச அளவில் பாசிசத்துக்கு எதிராக பகிரங்கமாக ஐக்கிய முன்னணியைக் கோரியது.


இதை பல்வேறு முதலாளித்துவ நாடுகள் நிராகரித்து எதிர்த்த போது, அந்த நாட்டு பாட்டாளிகளின் கடமை முதலாளிகளின் சுரண்டல், மற்றும் கம்யூனிச எதிர்ப்பை அம்பலப்படுத்தி சொந்தப்பாட்டாளி வர்க்க தலைமையில் பாசிசத்தை எதிர்த்தும், அதற்கு ஆதரவான பிரிவை எதிர்த்தும் போராடுவதன் மூலம் தனது தலைமையை பாசிசத்துக்கு எதிராக நிறுவுவதுமே அன்றைய சர்வதேசப் பணியாக இருந்தது.


பின்னர் சோவியத்துடன் இந்த நாடுகள் பாசிசத்துக்கு எதிராக, சொந்த பாட்டாளி வர்க்க நிர்ப்பந்தத்தால் ஐக்கிய முன்னணிக்கு வந்த போது, இந்தப் பாட்டாளி வர்க்கம் பாசிசத்துக்கு எதிராக, சொந்த முதலாளித்துவப் பிரிவுடன் வரையறுக்கப்பட்ட அளவில் ஐக்கியத்தைக் கொள்ள வேண்டி இருந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பல நாடுகளில் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் பாசிசத்துக்கு எதிராகப் போராடியது.


எனவே தேசியத்தை உயர்த்துவது உயர்த்தாதது என்பது பாட்டாளி வர்க்கம் என்ன நிலையில், என்ன பாத்திரத்தை கொண்டுள்ளது என்பதுடன் தொடர்புடையதாக உள்ளது. தேசியம் என்பது வர்க்கத்துக்கு வெளியில் ஒருக்காலும் உதிக்க முடியாது. அப்படி உள்ளது என்பவர்கள் உண்மையில் பொருளை முழுமையாக ஆராயாது ஏதோ ஒன்றைப் பிடித்து தொங்கி தமது மார்க்சிய விரோத நிலைக்கு பொருள் தேடுவதாகும்.


ஒரு நாட்டுக்குள் நடக்கும் உள்நாட்டு யுத்தம் அதன் தேசியம் என்ன நிலையில் உள்ளது எனப் பார்ப்போம். இவை இரண்டு தளத்தில் நடக்கின்றது.


1) வர்க்க யுத்தம்


2) ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையில் நடைபெறும் யுத்தம்


வர்க்க யுத்தம் என்பது தவிர்க்க முடியாது சாராம்சத்தில் தேசிய யுத்தமாக உள்ளது. அதாவது ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவை எதிர்த்தும் நடக்கும் இவ்யுத்தம் சொந்த தேசியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சுரண்டலை எதிர்த்தும் நடத்தும் இவ்யுத்தம் ஒரு வர்க்க யுத்தமாக இருந்தாலும், சாரம்சத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு தேசியமாக உள்ளது. இது சர்வதேசிய நிலைக்குள் நின்று நடப்பதுமாகும். இவ்யுத்தம் நிட்சயமாக பாட்டாளி வர்க்க தலைமையில் மட்டும் நடக்க கூடியது. இவ்யுத்தத்தில் பல்வேறு பிரிவை தனது தலைமையில் அணிதிரட்டும் பாட்டாளி வர்க்கம், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக தேசியப் பொருளாதாரத்தை பாதுகாக்கக் கோருகிறது. இதற்கு தேசிய முதலாளித்துவப் பிரிவு சுரண்டவும், அதை எதிர்க்கும் முரண்பாடான குணாம்சத்தை இந்த தேசியப் போரின் ஐக்கிய முன்னணி தன்னகத்தே கொண்டுள்ளது.


ஏகாதிபத்திய சார்புக் குழுக்களுக்கிடையே நடக்கும் மோதலும், அதன் ஆட்சி மாற்றங்களும் அடிப்படையில் அம்பலப்பட்ட பிரிவை அகற்றுவது அல்லது ஏகாதிபத்திய சுரண்டல் மண்டலங்களை கைப்பற்றுவது என்றளவில் உள்ளது.


பாட்டாளிகள் இரு பிரிவையும் எதிர்த்து, இதில் எழும் தேசியத்தின் பொய்மையை அம்பலப் படுத்தியும் போராட வேண்டும். மாறாக உண்மையான வர்க்கப் போரை, சாராம்சத்தில் தேசியப் போரை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் ஆளும் அதிகார வர்க்கப் பிரிவுகளை எதிர்த்துக் கோர வேண்டும்.


ஆகவே தேசியம் என்றும் வர்க்கம் சார்ந்தது. தேசியம் என்பது குறைந்த பட்ச பொருளாதார அலகைப் பாதுகாத்தல் என்பதை தாண்டியது அல்ல. இந்தப் பொருளாதார அலகு நிலத் தொடர், கலாச்சராம், மொழி எனப் பல்வேறு துறைகள் மீது தனது ஆதிக்கத்தை பிரதி பலிக்கின்றது.


இனிநாம் நிறப்பிரிகையினர் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற கோட்பாட்டை ஏன் உயர்த்துகின்றனர் எனப் பார்ப்போம்.


இன்று உலகம் உலக மயமாதலில் வேகம் பெற்றுள்ளது. ஒரு சில பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் உலகச் செல்வம் குவியத் தொடங்கி உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் 1985 இல் 90 சதவிகித உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி இருந்தன. 3500 இந்திய கோடிக்கு மேல் ஆண்டு வருமானத்தைக் கொண்டுள்ள 400 தேசம் கடந்த தொழிற்கழகங்கள் இருந்தன. இவை உலகில் மூன்றில் ஒரு உற்பத்தியைக் கட்டுப்படுத்தின. வெளிநாட்டு வர்த்தகத்தில் பாதியையும், தொழில் நுட்பம், கனரக உற்பத்தியில் 80 சதவிகிதத்தையும் கட்டுப்படுத்தின. இன்று 12 வருடங்களின் பின் மேலும் இது இருக்கும் தேசிய எல்லைகளை அழித்தொழிக்கின்றது. அதாவது இனி தேசிய முதலாளிகள் என்ற பிரிவு தேவை இல்லை என்ற நிலைக்குள் உலக ஒழுங்கு உள்ளது.


உதாரணமாக பிரான்ஸை எடுப்போம். கடந்த 20 வருடங்களுக்கு முன் இங்கு தேசியச் nhசத்துரிமையை வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை முன்பை விட இன்று மிகக் குறைவானது மட்டுமன்றி, அது மேலும் கேள்விக்குள்ளாகி உள்ளது. அதற்கு எதிரான போராட்டம் நாள் தோறும் நடக்கிறது.


உதாரணமாக சிறு வியாபார நிறுவனங்கள் மிக வேகமாக அருகி வருகின்றது. மிகப் பெரிய கடைகள் சிறுகடைகளை விழுங்குகின்றது. பாரிசில் குறிப்பிட்ட எல்லைக்கு இக்கடைகள் போட முடியாத சட்டம் உள்ளதால் இக்கடைகளை ஒரளவு பாதுகாக்கின்றது. ஆனால் பரிஸின் எல்லை தோறும் இக்கடைகள் முளைப்பதால் சிறுகடைகள் வேகமாக மூடத்தொடங்கி விட்டன.


சாதாரண சொத்துரிமை என்பது இனியும் சிறியளவில் இருக்க முடியாது போய் உள்ளது. அது நிலம் வீடு என்பவற்றுக்கும் பொருந்தும். மொத்த மக்களுக்கிடையில் சொத்துரிமை இல்லை என்ற நிலைக்கு சென்றுள்ளது. இங்கு உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கிடையில் வேறுபாடு உண்டே ஒழிய சொத்திலோ வாழ்க்கைத் தரத்தில் அல்ல. (இவை தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய ஒரு வெளியீடான ~ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் உலகம்| என்ற வெளியீட்டின் மூலம் விரைவில் நாம் கொண்டு வரவுள்ளோம்)


ஆகவே மேற்கு நாடுகளில் மெதுவாக இயல்பான வாழ்க்கைப் போராட்டத்துடன் நடக்கும் இந்த மாற்றம், மூன்றாம் உலக நாடுகளில் திணிக்கப்பட்டு வீங்கிய வடிவில் நடக்கின்றது.


உலக மயமாதல் தனிநபர் சொத்துரிமையை ஒரு சிலருக்கு கைமாற்றுகின்றது. உலகில் உள்ள பரந்து பட்ட மக்களுக்கு தனிச் சொத்துரிமையைக் கூட மறுத்து, எதுவுமில்லாத மனிதர்களாக மாற்றிவிட முயற்சிக்கின்றது. இது தேசிய எல்லையைக் கடந்து உற்பத்திக் கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், ஒவ்வொரு நாட்டு அரசும் உலக மயமாதலின் அங்கமாக மாறிவிடுகின்றது. ஒரு நாட்டில் இனியும் தேசிய முதலாளிகள் இருக்க முடியாது. இந்நிலையில் இயல்பாக ஒவ்வோரு நாட்டு தேசிய முதலாளிகளும், தான் தனது எல்லைக்குள் சுரண்டும் உரிமைக்காக தேசியப் போராட்டத்தைக் கோருகின்றனர். அதே நேரம் உலக மயமாதல் மூலம் தேசிய சொத்து பலாத்காரமாக பறிமுதல் செய்யப்படும் போது, பல்தேசிய நாட்டுக்குள் உள்ள முரண்பாடு, தனித்து தேசியத்தை கோருதல் அதிகரிக்கின்றது. இதை முதலாளித்துவப் பரிவு முன்னெடுப்பதும், அறை கூவுவதும் எங்கும் நடக்கின்றது.


இந்நிலையில் உலகில் உள்ள அரசுகள் இந்த உலக மயமாதலின் அங்கமாக மாறி ஒரே இயந்திரமாக அதற்கு சேவை செய்யும் நிலையின் ஊடாக, தனக்காக அற்ப தொகை கோருகின்றது. இந்த உலக மயமாதல் என்ற இயந்திரத்தின் பகுதிகள் மீதான, மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்த உள்நாட்டு மக்களுக்குள் பிளவுகளை விதைக்கின்றன. . அதேநேரம் ஒவ்வோரு முதலாளித்துவப் பிரிவும் தாம் இழக்கும் பங்குகளை மீளக் கோரி போராட முற்படுகின்றன. இதை அடக்க உலக மயமாதலின் மையம் தனது அரசு கூலிகள் மூலம் வன்முறையையும் பாசிசத்தையும் பிரயோகிக்கின்றது. இதனால் ஒரு பிரிவு


சரணடைந்து விடுகின்றது. மற்றப்பிரிவு முதலாளிகளின் தலைமையில் போராட முற்பட்டு பாசிசமாக மாறிவிடுகின்றது. இது அரசு உள்ள நாடுகளிலும், பல்தேசிய நாடுகளிலும் ஒரு பொதுப் பண்பாக உள்ளது.


இன்று உலக மயமாதலின் போக்கில் பன்நாட்டு நிறுவனங்களும், உள்ளுர் போட்டி தேசிய முதலாளிகளுக்குள் சிக்கிக் கொள்ளும் மக்கள் தமது அற்ப வருமானத்தை இழத்தல், அதிகரித்துச் செல்கின்றது. ஆகவே உலக மயமாக்கலுக்கு எதிரான மக்கள் எழுச்சி என்பது, பரந்து பட்ட மக்களின் எழுச்சியாக தொடங்குகின்றது.


இது தனது எல்லைக்குள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வர்க்கப் போரை உள்ளடக்கிய தேசியமாகவும், சாராம்சத்தில் சர்வதேசியமாகி உலகளவில் பரந்து பட்ட வர்க்கப்போராக அறைகூவல் விடுகின்றது. ஆகவே இன்று உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் ஊடேயான தேசியப் போராக எழும் அதேநேரம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராக உலகமயமாக்கலுக்கு எதிராக மாற்றம் பெறுகின்றது. எனவே இன்று உலகப்புரட்சியின் சகாப்தம் என்பது வர்க்க போராட்டமாக சாராம்சத்தில் சர்வதேசியப்போராக, சர்வதேசப் புரட்சியின் நிலைமைக்குள் உலகம் நகர்கின்றது. இதை பாட்டாளிகள் மட்டுமே தலைமை தாங்க முடியும். இது மூன்றாம் உலகமாக இருந்தாலும் முதலாம் உலகநாடாக இருந்தாலும் இது ஒரு பொது அடிப்படையாக இன்றைய உலக மயமாதல் நகர்கின்றது.


இதைப்பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க தவறும் அனைத்து நாடுகளிலும் உருவாகும் தேசியம் பாசிசமாக மாறும். இது ஒரு பொதுப்பண்பு. இந்த இரண்டு வழியிலுமே உலகம் அனைத்து யுத்தங்களையும், முரண்பாடுகளையும் சந்திக்கின்றன.


இன்று எழும் இந்த வர்க்கப் போரின் ஊடே உள்ள தேசியப் போக்கை "கற்பிதம்" என பிரகடனம் செய்வோரின் நோக்கம் அடிப்படையில் உலகமயமாதலை நியாயப்படுத்தும் கோட்பாடாகும். உலகமயமாதல் தேசியப் பொருளாதாரத்தை மறுக்கின்றது. இதற்கு எதிரான போரை வெறும் கற்பிதம் எனக் கூறுவதும், ஏகாதிபத்தியம் இனி தேசியம் என்பது இல்லை எனக் கூறுவதும் ஒன்றே. ஆனால் கூறும் விதம் மட்டும் மாறுபட்டுள்ளது.


இன்று ஒவ்வொரு நாளும் தனது தேசியம் என்ற பொருளின் மீது நின்று ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொடுக்கும் சர்வ தேசிய போரை ~கற்பிதம்| எனக் கூறுபவன் அடிப்படையில் ஏகாதிபத்திய உலக மயமாதலின் கோட்பாட்டுடனேயே ஒழிய வேறு ஒன்றல்ல.


~தேசியம் ஒரு கற்பிதம்| என்பது ஏகாதிபத்தியத்தின் நனவு கொண்ட கனவுகள். ஆனால் ஒவ்வொரு தேசத்தினதும், நாட்டினதும் நனவு கொண்ட பொருள் கொண்ட போராட்டமே வர்க்க அடிப்படை கொண்ட சர்வதேசியப் போராக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. ~தேசியம் ஒரு கற்பிதம்| என்பதை நீண்ட காலத்தைக் கொண்டே பார்ப்போமாயின், அப்போது மட்டுமே அது கற்பிதமாக பொருள் அற்று உள்ளது. ஆனால் இன்று யதார்த்தத்தில் ~தேசியம் ஒரு கற்பிதம்| என கூறுவது ஒரு கருத்து முதல்வாதமாகும்.


காலத்தைக் கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றையும் கற்பிதமாகக் கூறமுடியும். ஒரு குறித்த மனிதனின் உயிர் கூட அவன் பிறக்கமுன், இறந்தபின் கற்பிதமானதுதான். ஏன் சிறு குறுநில மன்னர் ஆட்சி முதல் சம்ராஜியங்கள் இருந்த காலத்தில் இன்றைய தேசம் ஒரு கற்பிதம் தான் .அதேபோல் ஒரு கம்யூனிச தேசம் உருவானபின் இன்றைய தேசம் கூட கற்பிதமானது தான். ஆனால் இன்று உள்ள தேசம் கற்பிதமானதல்ல.


இன்று தேசம் என்பது தனக்கான பொருளைக் கொண்டு உள்ளது. அது உள்ள வரை, அப்பொருளை கற்பிதம் என பிரகடனம் செய்பவன் அடிப்படைப் பொருளை மறுப்பதாகும்.


நிலப்பிரபுத்துவத்தின் ஆரம்பத்தில் ஒரு பாட்டாளி எப்படி கற்பிதமானதோ அதேபோல் ஒரு கம்யூனிச சமூகத்தில் ஒரு பாட்டாளி கற்பிதமானதே. ஆனால் இன்று ஒரு பாட்டாளி கற்பிதமானது எனக் கூறுவது ஆயின் ஒரு பாட்டாளி என்ற பொருளை மறுப்பதாகும். இது அடிப்படையில் ஏகாதிபத்தியக் கோட்பாடாகும்.


உலகில் உள்ள அனைத்துப் பொருளும், ஏன் இந்த பூமியும், இந்த சூரிய மண்டலங்களும், 200 கோடி சூரிய குடும்பங்களும் கூட ஒரு காலத்தில் இருக்கவில்லை. அதேபோல் எதிர்காலத்தில் இருக்க முடியாது போய்விட்டாலும். இங்கு இருகாலத்திலும் அனைத்துமே கற்பிதமானது. ஒரு மனிதன் தோற்றத்துக்கு முந்திய மனிதன் கற்பிதமானது. அதேபோல் இந்த பூமி அழியும் போது மனிதன் கூட இந்த பூமியில் கற்பிதமானது தான். ஏன் இன்றைய இலங்கை, இந்தியா உலகப்படத்தில் இருக்கும் இடம் கூட காலத்தால் கற்பிதமானது தான். இந்தியா ஆபிரிக்காவில் இருந்து பிரிந்த பகுதி தான். ஏன் இமய மலை கூட கற்பிதமானது தான். ஏன் எனின் இந்திய நிலத்தொடர் ஆசியாவுடன் மோதித்தான் இமயமலை உருவானது. ஏன் எல்லாக்கண்டமும் காலத்தால் கற்பிதமானது. ஏனெனில் அவை முன்பு ஒரே நிலத்தொடராகத்தான் இருந்தன. காலத்தால் கற்பிதமானவை, யதார்த்தத்தில் கற்பிதமானது எனக் கூறுவது கருத்து முதல் வாதமாகும்.


ஆகவே இன்று மனிதனோ, தேசமோ, பூமியோ, சூரிய குடும்பமோ, 200 கோடி சூரிய குடும்பங்களோ கற்பிதமானதல்ல. மாறாக அது பொருளாக உள்ளது.


மனிதன் வசிக்கும் வீடு இல்லாத காலத்தில் அது கற்பிதமானதுதான். ஆனால் உள்ள காலம் கற்பிதமானதல்ல. மாறாக வீடு ஒரு பொருளாக உள்ளது.


உலகில் சில பொருட்கள் காலத்தால்; உருவாகின்றன. காலத்தால் அழிகின்றன. ஒருகாலத்தில் மனிதனை கூட்டம் கூட்டமாகக் கொன்ற கொள்ளை நோய்கள் இல்லாத காலம் கற்பிதமாக இருக்கலாம். ஆனால் நோய் உள்ள காலம் கற்பிதமானது அல்ல.


உலகில் ஒரு பொருள் உள்ள காலத்தை அதைக் கற்பிதம் எனக் கூறுவதாயின் அவன் அப்பொருளின் இருப்பை மறுக்கிறான் மாறாக கருத்தை அடிப்படையாகக் கொண்டு பொருளின் இருப்புகளுக்கு மாறான சிந்தனை புகுத்தி அதன் மூலம் பொருளின் ஆய்வை மறுக்கின்றான். எனவே கற்பிதம் என்பது பொருள் இல்லாத வரை மட்டுமானதே. மாறாக பொருள் உள்ளவரை அது கற்பிதம் அல்ல. மாறாக அது பொருளாகவே, அதுவாகவே உள்ளது. அதை நாம் சரியாக ஆய்வுக்கு உட்படுத்தி அதை செயல் தளத்தே இனங்காண வேண்டும்.


அடுத்து நிறப்பிரிகையின் முன்னுரையில் இன்னுமொரு தேசிய மறுப்பு, வர்க்க மறுப்பு வரையறையைப் பார்ப்போம்.


"பொதுவான மொழி, தேச எல்லை, பொருளாதார வாழ்வு, உளவியல் உருவாக்கம் ஆகிய நான்கையும் தேசமாக உருப்பெறுவதற்கான இறுக்கமான நிபந்தனைகளாக முன்வைக்கும் ஸ்ராலினிய வரையறையை நாம் மறுத்தோம். இன ஒடுக்கு முறையும், அதற்கு எதிரான போராட்டங்களும் இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது இவற்றிற்கு அப்பாற்பட்ட எதேனும் ஒன்றையோ (எ.கு மதம்) குவிமையமாகக் கொள்ளலாம். ....... ஸ்ராலினிய வரையறை அன்றைய போல்செவிக் அரசியலுக்கு எற்ப உருவாக்கப்பட்டது." என ~தேசியம் ஒரு கற்பிதம்| என்ற நூலில் தேசியத்துக்கு எதிராகக் குறிப்பிடுகின்றனர்.


ஸ்ராலினின் தேசம் தொடர்பான வரையறை என்பது இன்றைய உலக நிலமை உட்பட அன்றைய நிலைக்கும் தெளிவாக சரியானது. . ஸ்ராலினின் வரையறையை மறுப்பவன் உண்மையில் தேசிய இனத்துக்கு எதிராக ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக உள்ளதை மறைக்க, பரந்தளவு தேசிய ஜனநாயகவாதியாக முகமூடி போட வேண்டி உள்ளது.


இவர்கள் குறைந்த பட்சம் தேசியம் என்றால் என்ன என்ற அரிச்சுவடியை கூட மறுக்கின்றனர். பின் மறுத்தபடி ~தேசவிடுதலைப் போர் தான் தேசத்தை உருவாக்குகின்றது| என்பது பொருளை மறுத்து கருத்து முதல்வாதக் கோட்பாட்டை கெல்னரின் முன்தள்ள அதை அ.மார்க்ஸ் மீள முன் தள்ளுகின்றார். தேசம் தான் தேசியப் போராட்டத்தை உருவாக்குகின்றது. ஏனெனில் பொருள் இன்றி எதுவும் தோன்றாது.





நிலத்தொடர்





இனி நாம் இதையும் ஸ்ராலினின் வரையறையையும் பார்ப்போம். ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். நிலப்பரப்பு இல்லாத ஒரு தேசத்தை காட்டவே முடியாது. நிலப்பரப்பு இல்லாத தேசிய விடுதலையையும் காட்ட முடியாது. அ..மார்க்ஸ் அவரின் சீடர்கள் முன்னைய ரஷ்சியாவில் யூதர் உடைய தேசியசுயநிர்ணயத்தை மறுத்ததாக அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்.


யூதர்கள் பற்றி கார்ல் காவுத்தஷ்சியும், ஒட்டோh பௌவரும் " நாகரீக உலகில் உள்ள யூதர்கள் ஒரு தேசிய இனமாக இருக்கவில்லை " என்று கூறியதை லெனின் ஏற்றுக் கொண்டு மேலும் அவர்களை லெனின் " அவர்கள் இன்னமும் ஒரு சாதியாகவே இருந்து வருகிறார்கள். " எனக் குறிப்பிட்டார். (அடிக்கோடு லெனின்.) - தே.பி.ப.கு-பக்-25)


ரஷ்சிய யூதர்களோ, மற்றைய மேற்கு நாடுகளில் உள்ள யூதர்களோ ஒரு தேசிய இனம் அல்ல. ஏன் எனில் அவர்களுக்கு தேசமாக அடையாளப்படுத்த இந்த நாடுகளில் ஒரு நிலப்பரப்பு கிடையாது. ஒரு நிலப்பரப்பு இல்லாத போது எப்படி ஒரு தேசம் இருக்க முடியும். இந்தியாவில் பரந்து வாழும் முஸ்லீம் மக்கள் (செறிவாக ஒரு நிலத் தொடரில் வாழ்பவர்களை விடுத்து உதாரணமாக காஸ்மீர் போன்றவை) ஒரு தேசிய இனம் அல்ல. ஏன்எனில் இவர்களுக்கு என்று ஒரு நிலத்தொடர் கிடையாது. அவர்களின் பிரச்சனை மதச் சிறுபான்மையினர் என்ற எல்லைக்குள் நின்று மதப்பெரும்பான்மைக்கு எதிரான போராட்டமாகவே இருக்கும். இது ஒரு தேசிய இனப்பிரச்சனை அல்ல. மதப்பிரச்சனையாக உள்ளது.


பெரும் பான்மை இந்து மதப்பிரிவு பல்வேறு மொழியை கடந்து, பல்வேறு பண்பாட்டைக் கடந்து, பல்வேறு பொருளாதார நிலையைக் கடந்து, பல்வேறு எல்லையைக் கடந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும், பெரும்பான்மை இந்து மத வெறி, சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது வன்முறையைக் கையாள்கின்றது. இதற்கு எதிரான போர் என்பது சொந்த சொந்த மத உரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கைக்கும், மதத்திற்கு எதிரான போரிலும் தான் மையப்படுகிறதே ஒழிய இது தேசிய விடுதலைப் போராட்டமல்ல. இதை மறுப்பின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை மறைமுகமாக இந்து ஆதிக்க நிலையில் நின்று நியாயப்படுத்துவதாகும்.


ஆனால் இந்துப் பெரும்பான்மை இந்து வெறித் தாக்குதல் அடிப்படையில் உலக மயமாதலை மறைக்கவும், முஸ்லீம் சுரண்டும் பிரிவின் சொத்துரிமையைக் கைப்பற்றவும் என்ற வரையறைக்குள் தான் எழுகின்றது. இந்துப் பெரும்பான்மை மதவெறி ஏன் முஸ்லீம் மதச் சிறுபான்மை மீது தாக்குதல் நடத்துகின்றன என்பதையும், பெரும் சொத்துடமை வர்க்கமே இதை ஏன் நடத்துகின்றது என்பதை எஸ்.வி. இராஜதுரையின் "இந்து இந்தி இந்தியா" என்ற நூலில் ஒரளவு மார்க்சிய எதிர்ப்பை மீறி வெளிவந்துள்ளது அவதானிக்கத்தக்தது. இந்திய-பாக்கிஸ்தான் உடைவு அதற்கிடையில் சந்தைப் பகிர்வு எப்படி நடத்தப்பட்டது என பல தரவுகளை நாம் இந்நூலில் காண முடியும். இதைவிடுத்து முஸ்லீம் மக்களின் பிரிவினை தேச விடுதலைப் போராட்டமல்ல. இந்து மத வன்முறை என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உலக மயமாதலுக்கு எதிரான சர்வ தேசியமாக எழுவதற்குப்பதில் பாசிச மத தேசியமாக வெளிப்படுகின்றது. ஆகவே முஸ்லீம் மக்கள் சர்வ தேசியத்தைக் கோரும் ஒரே ஒரு பாதையில், மத உரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கை உள்ளடக்கிய மதத்துக்கு எதிரான போரை கோர வேண்டும்.


இதைவிடுத்து இது முஸ்லீம் தேசியக் கோரிக்கை எனக் கோரின் முஸ்லீம் மக்களை ஒடுக்கும் இந்து மத இந்திய தேசியத்துக்கு சேவை செய்வதாகும். ஏன் எனின் முஸ்லீம் இந்திய தேசியம் என்ற ஒன்று கிடையாது. ஏன்எனின் அது ஒரு அரசை இந்திய அளவில் அமைக்க முடியாது.


இலங்கையின் முஸ்லீம் மக்களின் பிரச்சனை இதில் இருந்து தெளிவாக வேறுபட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பகுதியில் வாழும் முஸ்லீம் மக்கள் இந்தியாவின் நிலையில் உள்ளது போல் மதச்சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால் அவர்கள் செறிந்து வாழும் ஒரு நிலத் தொடரைக் கொண்டு உள்ள பகுதிகளில் உள்ள முஸ்லீம் மக்கள் காஸ்மீருக்கு ஒப்பான வகையில் சில பண்பில் வேறுபட்டுக் கொண்ட சிறுபான்மை தேசிய இனத்தவர்.


முஸலீம் என்ற அடையாளக் குறிப்பு பெரும்பான்மை பிரிவால் பெயரளவில் அடையாளப்படுத்தப் பட்டதே ஒழிய அது இனமல்ல என மறுக்க எடுக்கும் ஒரு எடுகோள் அல்ல. மலையக மக்கள் என அவர்களை மலையில் வாழ்வதால் அடையாளப்படுத்தியது போன்று, முஸ்லீம் மக்கள் என மதத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இனப்பிரிவுகளே. இவர்கள் வளரும் தேசிய இனமாக நாம் கண்டு கொள்ள வேண்டும்.


அதைவிடுத்து மதச்சிறுபான்மை எனவோ, மதத்துக்கு வக்காலத்து வாங்குவதோ என மறுதலிக்கும் எக்கோட்பாடும் ஆதிக்கவாதிகளின் கூற்றை கேள்விக்கு உள்ளாக்காத வரையறையே. இலங்கையில் வாழும் பெரும்பகுதி முஸ்லீம் மக்கள் தமக்கான ஒரு நிலத் தொடரை கொண்டு வாழும் ஒரு பிரிவாக நாம் அடையாளப்படுத்துவது ஒரு முக்கியமான விடையமாகும்.


உலகளவில் உள்ள யூத எதிர்ப்பு வாதம் அடிப்படையில் யூதர்களின் ஆதிக்கத்துக்கு எதிரானதாக உள்ளது. இந்தியாவில் பார்ப்பனர்கள் எல்லாத்துறையிலும் ஆதிக்கத்தை எப்படிக் கொண்டுள்ளனரோ, அதேபோன்று யூதர்கள் மேற்கு நாடுகளில் ஆதிக்கத்தை கொண்டு இருந்தனர், இருக்கின்றனர்.


இதற்கு எதிரான போராட்டம் திசைதிருப்பப்பட்டு பாசிசத் தேசியமாக மாறிய போது ஒட்டு மொத்த யூதர்களை கொன்று விடுதல் தொடங்குகின்றது. பாட்டாளி வர்க்கப் போராட்டம் எனின் ஆதிக்கத்தை தகர்த்து பரந்து பட்ட மக்களிடம் ஆதிக்கத்தைக் கொடுத்தல் என்றளவில் இருக்கும். பார்ப்பனியத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போர் அவர்களின் ஆதிக்கத்தை தகர்த்தல் என்ற அடிப்படையைக் கொண்டு உள்ளது. மாறாக இதை பாட்டாளி அல்லாத பிரிவு எடுப்பின் அது பாசிசமாக பார்ப்பனியப் பிரிவைக் கொன்றொழிப்பதில் (நாசிகளைப் போல்) முடியும்.


அடுத்து யூதர்களைப் போல் பார்ப்பனியமும் இந்தியாவில் ஒரு தேசியத்தைக் கோரின் (நாம் இங்கு சாதியைக் குறிப்பிடவில்லை மாறாக பொருளாதார ஆதிக்கத்தைறே குறிப்பிடுகின்றோம்) அ.மார்க்ஸ் உள்ளிட்ட குழு முண்டியடித்து அங்கீகரித்து அதை தேசியப் பிரகடனம் செய்யத் தயங்க மாட்டார்கள். அவர்களுக்கு என நிலத் தொடர் எதுவும் கிடையாது. ஆனால் தனித்துவமான பண்பாடு, மொழி, மதம், ........ என்பன உள்ளன. இது போல் யூதர்களுக்கு இருந்தது. ஒப்பீட்டளவில் இவர்கள் தனித்துவத்தைக் கோரின் அது மதத்தின் ஊடாக தமது பொருளாதார ஆதிக்கத்தை தக்க வைக்கவே ஒழிய வேறு ஒன்று மல்ல.


ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு நிலத்தொடர் அவசியம். நிலத்தொடர் இல்லாத அரசு இருக்கவே முடியாது. அப்படி இருப்பதாகக் கூறுவது கற்பனையான கருத்து முதல்வாதம் மட்டுமின்றி கற்பிதமானது. உண்மையான தேசங்களின் தேசியப் போராட்டத்தை, அதன் அடிப்படை குணாம்சத்தைக் குலைத்து சிதைத்து, அலைந்து போகும் கோட்பாட்டைக் கொடுத்து, அத்தேசியப் போராட்டத்தை அடிப்படையிலேயே அழித்து விடுவதாகும்.





பொதுவான மொழி





அடுத்து ஸ்ராலினின் வரையறையான பொதுவான மொழி என்ற விடையத்தைப் பார்ப்போம். ஒரு மொழி இன்றி ஒரு தேசம் இருக்க முடியுமா? அப்படி ஒரு தேசத்தையும் காட்ட முடியுமா? ஒரு தேசம் இருக்க வேண்டின் நிச்சயம் ஒரு மொழி இருக்க வேண்டும். மொழி தேவையில்லை என கோரின் ஒரு தேசிய இனப் போராட்டத்தை மறுப்பதேயாகும்.


ஸ்ராலினின் வரையறை ஆகக் குறைந்ததைக் கோருகின்றதே ஒழிய அதற்கு மேற்பட்டதை மறுதலிக்கவில்லை. பல்தேசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழி உள்ளதுடன், அது தேசியப்போரை முன்னெடுப்பதைக் காண்கிறோம். சீனா, வியடநாம், சோவியத் என நீண்ட பல நாடுகள் உதாரணமாக உள்ளதல்லவா. ஸ்டாலின் இதை மறுதலிக்கவில்லையல்லவா அப்படியிருக்க ஸ்டாலின் பெயரால் ஒரு திரிபு தேவை தானா அ.மார்க்ஸ் ரவிக்குமார் கும்பலுக்கு. ஆனால் அ.மார்க்ஸ், எஸ்.வி. இராஜதுரை, மற்றம் அவர்களின் சீடர்கள் எப்போதும் ஆகக் குறைந்ததை விடுத்து, கூடுதல் விடையத்தையே கூறுவதாக எடுத்து வைத்து தமது மார்க்சிய எதிர்ப்பை பிரகடனம் செய்கின்றனர். ஆனால் ஒரு தேசிய இனம் இருக்க வேண்டின் ஆகக் குறைந்த அடிப்படை இருக்க வேண்டும் என்ற ஸ்ராலினின் நாலு வரையறையையும் கோருவது, எப்போதும் தேசிய இனம் மீதான ஒரு சரியான அடிப்படையாகும்.


ஒரு பொது மொழி இல்லாத தேசியம் இருக்கும் எனக் கூறுவது கற்பனையானது. ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் மக்கள் ஒரு பொதுவான தேசியத்தைக் கோரின் அதை ஸ்ராலினின் வரையறை என்றும் மறுத்தது இல்லை. வியட்னாம் புரட்சி, சீனப்புரட்சி என்பன ஒள்றுக்கு மேற்பட்ட மொழியை உள்ளடக்கிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, உள்ளுர் தரகு,நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான வர்க்க தேசியப் புரட்சியே.


அ.மார்க்ஸின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற நூலில் "பதினோரு தனித்தனி இனக் குழுக்கள் இணைந்து உருவாக்கி உள்ள பொது மொழி எனச் சொல்வதற்கு ஒன்றுமில்லாத நாகர்களை ஒரு தேசிய இனம் இல்லை என மறுப்பவர்களாகவும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் நியாயமற்றது எனச் சொல்பவர்களாகவும் ஆவோம்." என ஸ்ராலினின் வரையறையான பொது மொழியை மறுக்க எடுத்துக் காட்டுகின்றனர். இதே போல் ~இந்து இந்தி இந்தியா| எஸ்.வி.இராஜதுரை குறிப்பிடுகின்றார்.


இவர்கள் உண்மையில் ஸ்ராலினின் வரையறையைப் புரிந்து கொள்ள அடாப்பிடியாக மறுத்து திரிக்கின்றனரே ஒழிய ஸ்ராலினின் கோட்;பாடு இதற்கு எதிரானது இல்லை.


ஸ்ராலினின் வரையறை ஒரு தேசம் உருவாக வேண்டின் ஆகக் குறைந்த அடிப்படையைக் கோருவதாகும். இந்த நான்குக்கு மேற்பட்ட எந்த கூறும் சரி, தேசத்தின் மீது செயல்படுவதை மறுப்பதில்லையே. வியட்நாம் புரட்சி, சீனப்புரட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தேசியத்துடன் நடத்திய போது, இந்த நான்கு எல்லையை அடிப்படையாகக் கொண்ட மேலாதிக்கத்தை உள்ளடக்கி நடத்தின. அதற்கு குறைவான அதாவது அந்த நான்கு வரையறைக்கு குறைவான ஒரு நாடு, தேச விடுதலைப் போராட்டம் உலகில் நடக்க முடியாது. அப்படி நடக்க முடியும் எனக் கருதுவது கருத்து முதல்வாதமாகும்.


நாகர் தேசிய இனம் ஒரு நிலப்பரப்பில், ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டில், ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதார வாழ்வில் உருவான போதும் இப்போராட்டம் ஆகக் குறைந்த நிபந்தனை கொண்டிருந்தது. இது தான் ஸ்ராலினின் வரையறை.


உதாரணமாக ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டின், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி, வர்க்கப் போர் , ..... என்பன இருக்க வேண்டும் என அடிப்படையைக் கோரின் அது சாதிப் போராட்டத்தை விட்டுவிட்டதாக கூறமுடியாது அல்லவா. அதுபோல் சாதிப்போராட்டம், பெண்விடுதலைப் போராட்டம், தேசிய விடுதலைப் போராட்டம் வர்க்கப்போராட்டமாகி விடுமா என்ன ?. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வாரு நிபந்தனை உண்டல்லவா?


ஒரு பொருளுக்கு அது அதுவாக இருக்க வேண்டின் குறைந்த பட்ச நிபந்தனை அவசியம். மேலதிகம் அப்பொருள் ஏன் அடிப்படையில் மாறுவதில்லை. ஆனால் ஆகக் குறைந்தது அவசியம். அதுபோல் ஒரு தேசியம் தேசமாக மாற ஆகக் குறைந்த அடிப்படை தேவை. இதை மறுப்பது அல்லது இல்லை என்பது கருத்து முதல்லாத முதலாளித்துவ வாதமாகும். அத்துடன் தேசத்தை மறுப்பதுமாகும்.


ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு உணவு, நீர், காற்று என்பன அவசியம். அதை மறுப்பது கருத்து முதல்வாதம். இதைமீறி உடை, தங்குமிடவசதி, ..... இருப்பின் அடிப்படை இல்லாது போய்விடுமா திரிபுவாத மார்க்கிய வாத விரோதிகளே.


நாகர்களின் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்காவிடின் அத்தேசியம் கூட சிதைந்து பாசிசமாக மாறுவது தவிர்க்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் எனில் மொழிக்கு இடையில், கலாச்சாரத்துக்கு இடையில், நிலப்பரப்புக்கு இடையில், பொருளாதாரத்திற்கு இடையில், உள்ள சுரண்டும் வர்க்க முரண்பாடு பாசிசத்தின் முன்நிபந்தனையாகும். எதிர்தரப்பை பாட்டாளி வர்க்கம் மட்டும் அங்கீகரித்தபடி, சுரண்டப்படும் வர்க்க முரண்பாட்டை இனம் காட்டி அதற்குப் பதில், என்ற அடித்தளத்தில் ஒரு முற்போக்கு தேசியத்தை சர்வதேசிய அடிப்படையில் முன்னெடுக்க முடியும்.





பொதுப்பண்பாடு





இனி நாம் ஸ்ராலினின் வரையறையான பொதுப்பண்பாட்டை எடுப்போம். ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு குறித்த மக்கள் கூட்டம் ஒரு குறித்த பண்பாட்டை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும். பல்வேறு பண்பாட்டை உடைய உதிரிகள் ஒருக்காலும் ஒரு தேசிய இனமாக மாறிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டை உடைய வௌ;வேறு மக்கள் கூட்டம் ஒரு பல்தேசிய இனமாகவோ அல்லது ஒரு தேசிய இனத்துடன் சேர்ந்தோ இருக்க முடியும். எந்தப் பண்பாடும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஆகவே ஒரு கூட்டம் மக்களைக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு பண்பாடு இருக்க வேண்டும்.


பண்பாடு தேவையில்லை எனக் கூறுபவன் அதாவது அடிப்படை வரையறையாக பண்பாடு தேவையில்லை எனக் கூறுபவன் உண்மையில் வெற்றிடக் கலாச்சார கற்பனையை பிரதிபடுத்துவதுடன், அடிப்படையில் பண்பாட்டை உடைய தேசிய இனத்தின் தேசிய அடையாளத்தை மறுப்பவனாக உள்ளான்.





பொதுவான பொருளாதாரம்





இனி நாம் ஸ்ராலின் வரையறுத்த பொதுவான பொருளாதாரம் என்பதைப் பார்ப்போம். ஒரு பொருளாதாரம் இன்றி தேசம் உருவாக முடியும் எனக் கூறுவது அடிப்படையில் கற்பனாவாதக் கருத்து முதல் வாதமாகும்.


ஒரு மனிதன் வாழ வேண்டும் என்றால் கூட அவனுக்கு பொருளாதார அடிப்படை அவசியம். இதை யார் இல்லையென்கின்றனர் எனின் சுரண்டும் வர்க்கமே. அது தான் மக்களைப் பட்டினியிட்டுக் கொல்கின்றனர். இதே வழியில் அ. மார்க்ஸ் தேசத்துக்கு பொருளாதாரம் தேவையில்லையெனக் கூறி ஏகாதிபத்தியத்துக்கு வாலையாட்டுகின்றார். ஒரு தேசிய இனம் தான் தனித்து ஒரு அரசாக இருக்க வேண்டுமெனின் கூட ஒரு பொருளாதார வாழ்வு அவசியம்.


இன்று உலகளவில் உலகமயமாதல் தேச எல்லைக்குள்ளான பொருளாதார அடிப்படையை மறுதலிக்கின்றது. இந்த உலகமயமாதல் தேசம் என்ற வரையறைக்கு தேவையான பொருளாதார அடிப்படையை சிதைப்பதன் மூலம் அத்தேசிய இருப்பை மறுக்கின்றது. இது பல்தேசிய அரசுக்குள் மேலும் மேலும் பொருளாதார சிதைவை சந்திக்கின்றது.


இன்று மார்க்சிய விரோதிகள் ஒரு தேசிய இனத்துக்கு பொருளாதார அடிப்படை தேவை இல்லை என்பது, உலகமயமாதலைக் கோரும் பன்னாட்டு நிறுவனத்தே உள்ளடக்கிய ஏகாதிபத்தியம் கோரும் அடிப்படையும் இயல்பாக இணைவது மூலம், அவர்கள் அரசியல் அடிப்படை என்ன என நாம் கூறத் தேவை இல்லை.


ஒரு தேசத்தின் பொருளாதார அடிப்படையைச் சிதைப்பதால் தான் உலகமயமாதல் தனது ஆதிக்கத்தை தொடங்குகின்றது. ஒரு நாட்டை சரணடையச் செய்ய நடத்தும் பொருளாதார முற்றுகை, சொந்தத் தேசியத்தை இழந்ததில் இருந்து சாத்தியமாகின்றது.


தேசியத்துக்கு ஒரு பொருளாதார அடிப்படை தேவை இல்லை. எனக் கூறும் அ.மார்க்ஸ், எஸ்.வி.இராஜதுரை போன்றோரும் அவர்களின் சீடர்களின் நோக்கமும், ஏகாதிபத்தியம் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் மூலம், தேசங் கடந்த நிறுவனங்கள் மூலம் எப்படி தேசியத்துக்கு ஒரு பொருளாதாரத் தேவை இல்லை என நடைமுறையில் மறுத்து தேசத்தை சிதைக்கின்றனரோ அதையே கோட்பாட்டளவில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக மார்க்சிய விரோதக் குழுக்கள் செய்கின்றன. இவர்களை ஏகாதிபத்தியத்தின் கைக் கூலிகள் என ஏன் நாம் அழைக்க முடியாது.


நாம் ஸ்ராலினின் வரையறையான நிலத்தொடர், பொதுப்பாண்பாடு, ஒருமொழி, பொதுவான பொருளாதாரம் என்பது ஒரு தேசம் தேசமாக இருக்க வேண்டின் மிக அடிப்படையாக தேவையானவை இதில் ஏதாவது ஒன்று இல்லாத தேசம் ஒன்றைக் கூடக் உலகில் காட்ட முடியாது, உருவாக்க முடியாது.


இதில் ஏதும் இல்லாத அல்லது வளரும் வர்க்க நிலையில் இருப்பின் அவை வளர்த்தெடுக்கும் வகையில் நாம் போராட வேண்டுமே ஒழிய அவைகளை தேசமாக வரையறுத்துக் கொள்வது என்பது உண்மையில் அதை அவர்களுக்கு மறுப்பது ஆகும். ஏனெனில் எது இல்லையோ அதை வளர்த்தெடுப்பதற்குப் பதில், பிரச்சனையை திசைதிருப்பி அவர்களின் அடிப்படைப்பிரச்சனையை இல்லாது ஒழிப்பதாகும்.


ஸ்ராலின் வரையறை ஆகக் குறைந்த வரையறையே ஒழிய கூடுதல் வரையறை அல்ல. ஆனால் மார்க்சியத்தின் பேரில் உள்ள எதிரிகள், திரிபு வாதிகள் ஸ்ராலினின் வரையறையை ஆகக் கூடிய வரையறையாகத் திரித்துக் காட்டுவதன் மூலம் பிரச்சனையைத் திசைதிருப்பி தமது மார்க்சிய விரோத, பாட்டாளி வர்க்க வெறுப்பை இனங்காட்டுவது என்பது, அவர்கள் அடிப்படை விடுதலையை சிதைக்க முனைகின்றனர் என்பதாகும்.


ஸ்ராலினின் வரையறைக்கு கூடுதலாக இவர்கள் காட்டும் காட்டாத மதம், நிறம்,சாதி, என எவையாக இருப்பினும். இவை ஒரு தேசிய இனம் இருக்க அடிப்படையானவை அல்ல. இவை ஸ்ராலினின் வரையறை மேல் செயல்படும் அங்கமாக இருக்குமே ஒழிய நிபந்தனை அல்ல.


ஸ்ராலினின் வரையறையைக் கொண்டிராத ஒரு தேசம் எப்படி இருக்க முடியாதோ, அதேபோல் மேலதிக நிபந்தனை ஒரு தேசத்துக்கு அடிப்படையான விடையமல்ல.


மதம், நிறம் மட்டும் கொண்டு ஸ்ராலின் வரையறையில் எதாவது ஒன்று இன்றி தேசம் உருவாக முடியும் என்ற அ.மார்க்ஸ், எஸ்.வி.இராஜதுரை, உயிர்ப்பு, மனிதம், சரிநிகர், வேறு சிலரின் வாதங்கள் அடிப்படையில் உண்மையான ஒரு தேசம் உருவாகக் கூடாது என்ற அடிப்படையில் எழுவதாகும். இது ஏகாதிபத்தியத்தியத்தின் இன்றைய சர்வதேச கனவுமாகும்.


ஒரு நிலத் தொடர் இல்லாத யூதர்க்கு மதம் என்ற அடிப்படையை நாலாவது வரையறை கொண்டு, சோவியத் எப்படி எங்கே நிலத் தொடரை சோவியத் யூனியனுக்குள் ஒதுக்க முடியும் என இந்த திரிபு மார்க்சிய வாதிகள் காட்ட முடியுமா?


புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் பொதுப்பண்பாடு, வரையறுக்கப்பட்ட உள் சுற்று சந்தை, பொது மதம், பொது நிறம், பொது மொழி என பலவற்றைக் கொண்ட இன, நிற எதிர்ப்பை சந்திக்கும் இவர்களை அந்தந்த நாடுகளில் ஒரு தமிழ் தேசிய இனமாக வரையறுக்க முடியும். என்பதே இந்த மார்க்சிய திரிபுவாதிகளின் கோட்பாட்டு அடிப்படையாகும். .


உண்மையில் இந்த மார்க்சிய திரிபுவாதிகள் ஸ்ராலினின் வரையறை தவறானது என வாதிடுவது என்பது ஒரு தேசிய இனத்தின் அடிப்படை போராட்டத்தை மறுப்பதாகும். அது தான் தேசியத்தை கற்பிதம் என வேறு கூறுகின்றனர். இன்று உலகமயமாதல் உலகில் தேசமாக உருவாகி உள்ள, மற்றும் தேசியத்தை கொண்ட நாடுகளினதும் பொருளாதாரம், பொதுப்பண்பாட்டை, நிலத் தொடரை ஒரு மொழியை என நான்கு அடிப்படையையும் தகர்க்கின்றது.


இதற்குப் பதிலாக ஏகாதிபத்திய பண்பாடு, பன்னாட்டுப் பொருளாதாரம், ஏகாதிபத்திய மொழிகள், நிலத் தொடர் கடந்த நிலை என தமக்கு சாதகமானவற்றை மட்டும் முன்வைக்கின்றனர்.


இதன் மூலம் தேசியத் தன்மையை சிதைத்து உலகமயமாதலை நடத்துவதன் மூலம், தமது சுரண்டலை உச்ச நிலைக்கு கொண்ட செல்ல முனைகின்றனர்.


இதற்கு எதிராக எல்லா நாடுகளிலும் தேசியத் தன்மையை பாதுகாக்கும் போராட்டம் எழுகின்றது. இது தேசிய எல்லைக்குள் தமது சுரண்டலைக் கோரும் ஒரு பிரிவு கடுமையாக எதிர்க்க முனைகின்றது. அதேநேரம் அதன் சுரண்டல் போக்கும், அதன் ஜனநாயக இன்மையும் அதன் தலைமையை பாசிசமாகவோ அல்லது சரணடைவதற்குள் இட்டுச் செல்கின்றது.


இதேநேரம் பாட்டாளி வர்க்கம் உலகமயமாதலின் பன்னாட்டு சுரண்டலை எதிர்த்து உலகளவில் அழைப்புவிடுவது மட்டுமின்றி, உள்நாட்டு தரகுப்பிரவை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து போராடும் நிலை என்பது அடிப்படையில் தனது தேசிய ஜனநாயக உரிமையாகும். அதேநேரம் சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கும் அறைகூவல் விடுக்கின்றது.


அதாவது சோவியத் புரட்சியின் போது சோவியத்தில் இருந்து பல்வேறு தேசிய இனத்தின் சுயநிர்ணயத்துக்காக போராடிய அதேநேரம், சோவியத்தில் வர்க்கப் புரட்சியை நடத்தியது போன்று, இன்று உலகளவில் உலக மயமாதலை எதிர்த்து தேசத்தின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்கும் போரும், சர்வதேச பாட்டாளி வர்க்கப் போரும் அரங்கில் உள்ளது.


உருவாகி உள்ள தேசத்தை பாதுகாக்கும் போர் சுயநிர்ணயத்துக்காக போராடும் ஒரு புதிய தேசத்தில் இருந்து பண்பியல் ரீதியில் வேறுபட்டது. ஏனெனில் அங்கு ஒரு அரசு உள்ளது. இந்த அரசை சொந்த மக்களினதாக மாற்றக் கோரிய தேசியப்போரை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கும் அதேநேரம் பாட்டாளி வர்க்க சர்வதேசப் போரை தொடுக்கின்றனர். சுயநிர்ணயத்துக்காக போராடும் நாட்டின் ஐனநாயகக்கோரிக்கைக்காக போராடும் அதே நேரம், சர்வதேசியப் போரையும் நடத்தவேண்டியுள்ளது.


இன்றைய உலகமயமாதலை எதிர்க்கும் நாடுகளிலும், இன முரண்பாடு ஆயுதப் போராட்டமாக உள்ள நாடுகளிலும் புரட்சியின் வடிவம் சர்வ தேசியமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தரகு நிலப்பிரபுத்துவப் பிரிவுக்கு அல்லது முதலாளித்துவப் பிரிவுக்கு எதிராக உள்ளது.


நாம் இதன் தொடர்ச்சியில் நிறப்பிரிகை குழு குறிப்பிடும் அடுத்த மார்க்சிய விரோத கூற்றைப் பார்ப்போம்.


"தேசியத்தை பிள்ளைப்பிராய முதலாளியம், பொதுச்சந்தை ஆகியவற்றோடு இணைத்துப் பேசும் செவ்வியல் மார்க்ஸிய அணுகல் முறையின் பொருத்தமின்மையை வலியுறுத்தினோம். மார்க்சிடம் மறையாதிருந்த n:கலியத் தாக்கம், பொருளாதார வாதம் ஆகிவற்றின் வெளிப்பாடே இது எனச் சுட்டிக் காட்டினோம்." என்று மார்க்சை கொச்சைப்படுத்தியபடி ஏகாதிபத்திய வடிவங்களை எப்படி முன்வைக்கின்றனர் எனப்பார்ப்போம்.


முதலாளித்துவ, பொதுச் சந்தை இல்லாத தேசியம் உண்டு என்ற அ.மார்க்சின் வாதம் எதையும் விளங்கப் படுத்த முடியாது மார்க்சுக்கு n:கலின் பட்டம் சூட்டி திசை திருப்பமட்டுமே முடியும்.


ஏகாதிபத்தியமும், உலக மயமாதலும் ஒரு தேசியத்தின் குறைந்த பட்சம் எதைப் பறித்து எழுகின்றது. தேசிய முதலாளித்துவத்தை, அதன் பொதுச் சந்தையைத்தான் என்பது அரிவரி படிக்கும் அரிவரி அரசியல் வாதியும், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடியதே.


இலங்கை இந்தியாவை எடுப்பின் அல்லது அதற்குள் உள்ள தேசிய இனத்தை எடுப்பினும், அதன் பொதுச் சந்தை , முதலாளித்துவ உற்பத்தி என்பன பறி போய் கொண்டிருப்பதை நாம் நாள் தேறும் நடைமுறையாகக் காண்கின்றோம். அதை பறித்தபடி மேல்கட்டுமானமும் பறிபோகின்றது.


இப்படி இருக்க, தேசியம் இது இல்லை எனக் கூறும் எஸ், வி ராஜதுரை, அ.மார்க்ஸ், அவர்களின் சீடர்கள் உண்மையில், ஏகாதிபத்தியம் எதை மறுத்து அழிக்க முனைகின்றதோ, அதையே மார்க்சியத்தின் பெயரால் இல்லை என்பது, அடிப்படையில் ஏகாதிபத்திய, உலக மயமாதலின் குரல்களே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


அடுத்து நிறப்பிரிகை என்ற மார்க்சிய விரோதிகள் குழு கூறும் கூற்றைப் பார்ப்போம்.


"ஈழத்தமிழர்களின் மீதான ஒடுக்கு முறை என்பது சிங்களப் பேரினவாதம் என்கின்ற கட்டமைப்பின்- கற்பிதத்தின் விளைபொருள் இதற்கு எதிரான ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் தவிர்க்க இயலாதது. ....... பாசிசத்தில் போய் முடியக் கூடியது என்கின்ற கரிசனம் இருக்குமாயின் அதற்குரிய வகையில் நாம் தேசியத்தை கற்பிதம் செய்ய வேண்டும். ........ தேசியப் போராட்டங்கள் மூலமாகத்தான் தேசங்கள் கட்டப்படுகின்றன." என்று கூறுவதன் மூலம் இலங்கை தமிழ் இனம் ஒரு தேசமாக இருப்பதை அடிப்படையில் மறுக்கின்றனர்.


அதாவது ஸ்ராலினின் வரையறையை மறுத்த நிறப்பிரிகைக் குழு இலங்கையில் தமிழ் தேசம் ஒன்று இருப்பதை மறுத்து விடுகின்றனர். தமிழ் தேசம் என்பது பொது மொழியில், பாண்பாட்டில், நிலத்தொடரில், பொருளாதாரச் சந்தை என்பனவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு தேசமாக இருந்தால் தான், அதைக்கைப்பற்ற சிங்கள அரசும், ஏகாதிபத்தியமும் அதை மறுதலிப்பதின் விளைவுதான் தேசவிடுதலைப் போராட்டம். இங்கு தேச விடுதலைப் போராட்டம் தேசத்தை அடையாளப்படுத்த நடத்தவிpல்லை. மாறாக தமிழ் தேசம் தான் தனக்கு மீதான ஒடுக்கு முறைக்கு எதிராக தேசிய விடுதலைப் போரை நடத்தி அதற்கூடாக. தனக்கான அரசைக் கோருகின்றது.


இலங்கையில் தமிழ் தேசம் ஒன்றை நாம் கற்பிதம் செய்ய வேண்டும் என அ.மார்க்ஸ் கூறுவது தமிழ் தேசம் என்ற ஒன்றை சிங்கள இனவாத நிலையில் நின்று மறுப்பதாகும். ஏன் எனின் புதிதாக ஒன்றை கற்பிதம் செய்வதாக காட்டுவதன் மூலம,; சிங்கள இனவாதம் மற்றும் ஏகாதிபத்திய பிரச்சாரத்தை கோட்பாட்டு அளவில் நிறுவ நிறப்பிரிகைக் கும்பல் முனைகிறது. சிங்கள இனவாதிகள் தமிழ் தேசம் என்பது கற்பிதம் என மீள மீளக் கூறுவதும் அ.மார்க்ஸ் கூறுவதும் அடிப்படையில் ஒன்றே ஒழிய வேறில்லை.


அதேபோல் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, வெறும் கற்பிதமாக காட்டுவதன் மூலம், சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ் மக்களின் தேசிய முதலாளிய பண்பையும், தமிழ் பிரிவுச் சந்தையையும் சூறையாடும் பக்கத்தை மறுத்து, எதோ கற்பிதமாக கட்டப்பட்டு விட்டதாக கூறி ஏகாதிபத்திய மற்றும் சிங்கள முதலாளித்துவ சந்தை சூறையாடலை மறுப்பதாகும். அதேபோல் இதன் பின் உள்ள ஏகாதிபத்திய நலனை, ஏகாதிபத்திய சூறையாடலையும் அதனால் எழும் சிங்கள இனஒடுக்கு முறையையும் மூடிமறைத்து ஏதோ சிங்களவர் தற்செயலாக தமிழர் பற்றி கற்பிதம் செய்து விட்டனர் என கரடிவிடுவதாகும்.


எனவே தமிழ் தேசம் என்ற ஒன்று இலங்கையில் உண்டு. அதுதான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்றது. அது தான் தனக்கான அரசைத்தான் புதிதாகக் கோருகின்றது. இதைவிடுத்து தமிழ் மக்கள் போராட்டத்தை கற்பிதம் செய்து (வெற்றிடத்தில்) போராடவில்லை. அதுபோல் சிங்களப் பேரினவாதம் கற்பிதம் செய்தல்ல. மாறாக ஏகாதிபத்திய பொருளாதார அடிப்படை மீதான போராட்டமே இனமோதலாக மாற்றம் அடைந்தது.


அடுத்து பாசிசம் என்பதை எதிர்ப்பதற்கு, தமிழ் மக்கள் பாசிசம் பற்றி ~கற்பிதம்| செய்து எதிர்ப்பது அல்ல. மாறாக வர்க்க அடிப்படையில் பிரச்சiனையை அணுகுவதும், அதேநேரம் முதலாளித்துவத் தேசியம் பாசிசமாகவே தவிர்க்க முடியாது இருக்கும் என்ற வரலாற்றுப் பாடத்தை, ஏகாதிபத்திய சகாப்தத்தில், உலக மயமாதலில் நாம் தெளிவாகக் கண்டு கொள்ளும், உலக வர்க்க ஆய்வுதான் எம்முன் தேவை. அதைவிடுத்து ~கற்பிதம்| என கரடி விடுவது, உண்மையில் மக்களை மந்தைகளாக்குவதே ஒழிய வேறு ஒன்றுமல்ல.


இந்தியாவில் நிறப்பிரிகைக் கும்பல் "தமிழகத்தில் தேசிய இயக்கங்கள் எழுச்சிபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்கின்ற வாதத்தில் இவர்கள் கூறும் " தேசிய விடுதலைப் போர்தான் தேசத்தை உருவாக்குகின்றது " என்பது தமிழ் நாடு என்ற ஒரு தேசம் இருப்பதை மறுக்கின்றது. மாறாக தமிழ் நாடுதான் தேசிய விடுதலையைக் கோருகின்றது.


இனி தமிழ் நாடு தேசிய இன முரண்பாட்டை பிரதான முரண்பாடான இந்தியாவில் கொண்டிருக்கின்றதா? எனின் இல்லை.


ஏன் எனின் இந்தியாவில் காஸ்மீர், நாகா, ....... தேசிய இனமுரண்பாடு கூர்மை அடைந்தது போல் தமிழ் நாட்டு தேசிய இன முரண்பாடு இருக்கவில்லை. மாறாக தேசிய இனமுரண்பாடு இரண்டாவதாகவே உள்ளது. வர்க்கப் போராட்டம் முதன்மையானதாகவும் அதற்குப்பின் தேசிய, சாதிப் போராட்ங்கள் உள்ளன. ஏனெனில் பாட்டாளிவர்க்கம் முனைப்பான போராட்டத்தில் ஈடுபடுகின்றது.


இதை மறுதலித்தபடி நிறப்பிரிகைக் குழு "தலித்விடுதலை, பெண்விடுதலை, இன்றி தமிழ் தேசிய விடுதலை பேசுவதில் பொருள் இல்லை" என்கின்றனர். அதாவது இவை வர்க்கப் போராட்டத்திற்கு புறம்பாக, தனியாக அல்லது தமிழ் தேசியத்தின் அங்கமாக காட்டுவதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை அடிப்படையில் மறுதலிக்கின்றனர்.


வர்க்கப் போராட்டம் என்பது தனித்துவமான ஒரே ஒரு இயக்கமல்ல. வர்க்கப் போராட்டம் என்பது சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், எல்லா போராட்டத்திலும் நடக்கும் ஒரு கூட்டுப் போராட்டமேயாகும்.


இதை லெனின் " சோஷலிசப்புரட்சி என்பது ஒரே தனிச்செயல் அல்ல, ஒரு களத்திலான ஒரே ஒரு போரும் அல்ல. கூர்மையான வர்க்கச்சச்சரவுகள் கொண்ட ஒரு சகாப்தம் அது. எல்லா முனைகளிலும், அதாவது பொருளாதார, அரசியல் பிரச்சனைகள் அனைத்திலும் தொடர்ச்சியான நீண்ட போராட்டங்கள் நடக்கும் சகாப்தம் அது. " என்றார்.


-லெனின்-


-தே-பி.பா.ச-பக்-181


அப்படி அல்லாத எதுவும் வர்க்கப் போராட்டமல்ல. மார்க்சியம் வர்க்கப் போராட்ட அடிப்படை என்பது எல்லாத் துறைகளிலும் புரட்டிப் போடுவதாகும். இப்படி இருக்க இந்த மார்க்சிய விரோதக் கும்பல் மார்க்சியம், தேசியம், பெண்ணியம், சாதிப் போராட்டம் பற்றி சோவியத் முதல் இன்று வரை மார்க்சியம் கவலைப்படவில்லை. அல்லது பற்றாக் குறை உள்ளது எனக் கூறி, ஏகாதிபத்தியக் கோட்பாட்டை புகுத்தும் கயமையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.


சோவியத் சரி, சீனா சரி நடந்த அனைத்து வர்க்கப் போராட்டங்களிலும், இவைகளை கவனத்தில் எடுக்காது ஒருக்காலும் வெற்றி பெற்றிருக்க முடியாது. அத்துடன் இவைகளுக்குள் இருந்த முரண்பாடு சோசலிச கட்டம் முழுக்க நீடிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் திரிபுவாத மார்க்சிய விரோதக் கும்பல் எப்போது, புரட்சியின் பின் இருந்து என்று ஆதாரமான ஒன்றைக் காட்ட முற்படுகின்றனர். இவர்கள் அரசைக் கைப்பற்றியவுடன் எல்லாம் முடிந்துவிடும் என்ற இயங்கா நிலையியல் கோட்பாட்டை முன்தள்ளி, பின்னர் முதலாளித்துவக் கூறுகளும், அதன் தொடர்ச்சியில் நீடிக்கும் சோசலிச சமுதாயத்தை சுட்டிக்காட்டி மார்க்சியத்தை சொச்சைப் படுத்தி மறுக்க முனையும் விளைவுதான் இந்த வாதங்கள். .





இந்த மர்க்சிய விரோத நிறப்பிரிகை வாதிடும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். "..... நாம் ஒரு புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்தாக வேண்டி இருக்கிறது. அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவங்களையும், தலைமை வழிபாடல்லாத இயக்கச் செயல் பாடுகளையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது." என்று புலம்பும் தமிழ் தேசிய விரோத ஏகாதிபத்திய சார்பு நிலையைப் பார்ப்போம்.


புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்ய வேண்டும் என்பதன் மூலம் தமிழ் மரபு ஒன்று உள்ளதை மறுக்கின்றனர். ~புதிய| என்ற சொற்பதம் ஒரு மயக்கத்தைக் கொடுத்து விடுவதன் மூலம் ஏதோ சரியானதைத் தேடிப் புறப்படுவதாக சினிமா காட்டுவதன் மூலம், அடிப்படை தமிழ் இயங்கியல் மரபை மறுப்பதில் ஈடுபடுகின்றனர். அதாவது இது இனத்தின் இயங்கியல் வரலாற்றுத் தொடர்ச்சியை மறுத்து, ~புதியமரபு| என்பதன் ஊடாக அடிப்படையில் தமிழ் மரபே இல்லை என்று மறைமுகமாகக் கூறி, தமிழ் இனத்துக்கு அதன் தேசியத் தன்மைக்கு எதிராகச் செயல்படுவதாகும்.


அடுத்து அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம் என்பது, இங்கு அதிகாரம் என்பதை இருக்கும் உற்பத்தி மீதான வர்க்கப் போராட்டத்தை ஒட்டி அமையும் வடிவத்தின் முதலாளித்துவ ஜனநாயகமற்ற தன்மைகளைக் குறித்து இந்த மார்க்சிய விரோதிகள் கூறவில்லை. மாறாக இதில் சொல்விளையாட்டை காட்டியபடி பாட்டாளி வர்க்க தலைமை பற்றித்தான் கூறுகின்றனர். அதாவது முதலாளித்துவத்தைத் தகர்த்து அதில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துவத்தை கைப்பற்றுவதையே ~அதிகாரம்| எனக் கூறி மறுப்பதன் மூலம் உண்மையில் இருக்கும் ஏகாதிபத்திய ஆட்சி முறைகளை தக்க வைக்க முனைகின்றனர்.


அதிகாரம் என்பது இரண்டு வர்க்கத்திற்கு இடையானது, அராஜகத்தை ஏற்கும் அராஜக வாதிகள், அதிகாரத்தை மறுத்தல் என்ற பெயரால் உள்ள ஏகாதிபத்திய சார்பு மார்க்சிய விரோதிகள் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உண்மையில் மறுக்கின்றனர்.


பாட்டாளி வர்க்க சர்வாதிகார புரட்சிகர அதிகார மாற்றத்தை மறுக்கும் நிறப்பிரிகை, உண்மையில் மக்கள் மீதிருக்கும் வர்க்க சர்வாதிகார ஒழுங்குகள் இனியும் ஆள முடியாத போது, கட்டவிழ்த்து விடும் பாசிச சதிராட்ட வன்முறைத் தாக்குதலை கண்டு மக்கள் மிரள்வதை, தமக்கு சாதகமாக சாதாரண மக்கள் நிலையில் நின்று சுட்டிக் காட்டி, அதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொச்சைப்படுத்தப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருக்க சபதம் செய்கின்றனர்.


ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசவிடுதலைப் போரில் சரி பாட்டாளி வர்க்க போரில் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சிக்காக சர்வதேசிய வாதியாக நின்று போராடும் அதேநேரம், பாட்டாளி வர்க்க முன்னேறிய அனுபவம் வாய்ந்த தலைவர்களை பாட்டாளி வர்க்கம் தேடிக் கொள்கிறது.


வர்க்கத்தின் தலைவர்கள் அந்த வர்க்கப் போராட்டத்தில் புடம் போடப்பட்டு உருவாக்கப்படுவதும், அந்த வர்க்கம் தனது தலைமையை எந்தளவு நேசிக்கின்றதோ அந்தளவுக்கு அந்தத் தலைமை முக்கியத்துவமானதும், பாதுகாக்கப்பட வேண்டியதுமாகும். உண்மையில் மக்கள் தமது வர்க்கத் தலைமையை நேசிப்பதைத் தான் இந்த மார்க்சிய விரோத நிறப்பிரிகை ~தலைமை வழிபாடு| என முத்திரை குத்தி அதற்கு சேறடிக்க முனைகின்றனர்.


வர்க்கத்தினதும், மக்களினதும் தலைமை எப்போது அவர்களை உள்ளடக்கி நடைமுறை, கோட்பாட்டுப் போராட்டத்துக்குள் இறக்கி அதில் போராடத் தவறுகின்றதோ, அப்போது தான் தலைமை வழிபாடு நேர்கின்றது. எனவே ஒரு வர்க்கம் தனது சொந்தப் போராட்டத்தின் ஊடாக தனது தலைமையைத் தேர்ந்து எடுக்கிறது, அத்துடன் ஆழமாகத் தலைமையைப் பாதுகாத்தும் நேசிக்கின்றது.


வர்க்கத் தலைமை உருவாவதும், வர்க்கம் தனது தலைமையை நேசிப்பதும் அவசியமான அடிப்படையானது. இந்த வகையில் மார்க்ஸ் முதல் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நேசத்துக்கு உரியவர்களே ஒழிய உங்களைப் போன்ற மார்க்சிய விரோதிகளுக்கு அல்ல. நீங்கள் அது தான் தலைமை வழிபாடு எனப் புலம்பும் உங்கள் பின் உள்ளது உண்மையில் முதலாளித்துவ கண்ணோட்டம் கொண்ட சிந்தனை தான்.


ஒரு பாட்டாளி வர்க்கமல்லாத கட்சிகள் கூட தனது தலைமையை வர்க்கக் கண்ணோட்டத்துக்கு இசைவாகக் கொண்டுள்ளன. தலைமை என்பது வர்க்க சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அடிப்படை விடையமாக உள்ளது. அந்தத் தலைமை என்பது வர்க்கத்தின் பிரதி நிதிதானே ஒழிய வெளியில் அல்ல. அந்தோனிசாமி மார்க்ஸை உள்ளடக்கிய நிறப்பிரிகை கோட்பாடு தலைமை, பாட்டாளி வர்க்கத்தினது அல்ல. மாறாக பாட்டாளி அல்லாத வர்க்கத்தின் கோட்பாட்டுத் தலைமையாகவே உள்ளது.


எனவே அதிகாரம், தலைமை என்று வர்க்க சமுதாயத்தில் கூறி மறுப்பதன் மூலம் அடிப்படையில் இருக்கும் ஏகாதிபத்திய அதிகாரத் தலைமையை மறைமுகமாக தக்க வைத்து பாதுகாக்க முனைவது ஆகும். மாற்றுத் தலைமையை , அதிகாரத்தை முன்வைக்காத அமைப்பு என்பன நிறப்பிரிகையின் அரசியல், ஏகாதிபத்தியம் கொண்டுள்ள ஜனநாயக அரசியலே ஒழிய வேறு ஒன்று மல்ல.


அடுத்து அந்தோனிசாமி மார்க்ஸ் தொடர்ந்தும் கூறுவதைப் பார்ப்போம். "சேகுவராவின் பாணியில் கட்டமைக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க புரட்சிகர இயக்கங்கள் அனைத்தும் பின்னாளில் சோசலிச உணர்வுகள் மறைக்கப்படும் அளவிற்கு தேசிய இன உணர்வுச் சொல்லாடல்களைக் கொண்டிருந்தன" என்று தனது தேசிய சார்புப் பார்வைக்கு ஆதாரம் தேடுகிறார்.


மார்க்சியத்தை சேறடிக்கப் புறப்பட்டு விட்டால் மார்க்சியத்தின் உயிர் ஓட்டமுள்ள அதன் உள்ளடக்கத்தைக் காண முடியாது போனதன் விளைவு தான் இந்த அ.மார்க்சின் புலம்பல். தென் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகள், இரண்டாம் உலக நாடுகள் கூட தனது வர்க்கப்போரில் தேசிய உள்ளாக்கத்தை அடிப்படையில் சர்வதேசிய நிலையில் கொண்டு இருக்கின்றன. வர்க்கப்போர் தனித்துவமாக உள்நாட்டு எதிரிக்கு மட்டும் நடத்துப்படுவதில்லை மாறாக எல்லா வர்க்கப் போரும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளன. இது சாராம்சத்தில் தேசிய விடுதலைப் போராக உள்ளது. ஏன் எனின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்துப்போரும் தேசிய விடுதலைப் போர் மட்டுமின்றி வர்க்கப்போருமாகும். இது சர்வதேசிய நிலையில் நின்று அணுகப்படுகின்றது. வேறுவழியில் இது சாத்தியம் இல்லை.


ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத ஒரு தேசிய விடுதலைப் போர் நடக்குமாயின் அது தேசியத் தன்மையை இழந்து படிப்படியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து விடுகின்றது.


எனவே இன்று மார்க்சியம் அதன் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனை வழியில் எங்கு எல்லாம், யார் எல்லாம் முன்னெடுக்கின்றார்களோ, அங்கு எல்லாம் அது வர்க்கப்போராகவும் சாரம்சத்தில் தேசியப் போராகவும் இது பொதுவில் சர்வதேசிய வர்க்கப் போராகவும் இருக்கின்றது. இதற்கு வெளியில் ஒரு வர்க்கப் போரோ, தேசியப் போரோ மார்க்சியத்தைச் சொல்லி முன்னெடுக்க முடியாது.


முதலாம் உலகநாடுகளில் மட்டும் வர்க்கப்போர் தேசியம் இன்றி இருக்கமுடியும். ஆனால் இன்று தீவிரமாகும் தேசங்கடந்த பன்னாட்டு சூறையாடல் அங்கு கூட வரையறுக்கப்பட்ட தேசியத்தை பாதுகாக்கக் கோருகின்றது. இது சரியாக அடையாளப்படுத்தப்பட்டும், சொந்தத் தேசம் கடந்த சூறையாடலை எதிர்த்து வர்க்கப்போரை முன்னெடுக்கத் தவறின், அது பாசிசத் தேசியமாக ஆக்கிரமிப்புத் தேசியமாக வளரும். உதாரணமாக ஏகாதிபத்தியத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தை மூடி மூன்றாம் உலக மலிவுச் சுரண்டலுக்கு நகர்த்தும் போக்கில், மற்றும் விவசாய உற்பத்தியை நிறுத்தி மலிவாக மூன்றாம் உலக சந்தையில் வாங்கக் கோரும் உலக மயமாதல், டங்கல் ஒப்பந்தத்தையும் எதிர்த்து முதலாம் உலக நாட்டுச் தேசிய முதலாளிகள் தேசியத்தை உயர்த்துவதும், பிரிவினையைக் கோருவதும் ஏகாதிபத்தியத்தில் காணப்படும் பொதுப்பண்பு. இது சரியாக அடையாளப்படுத்தப்படுவதில் மட்டும் ஏகாதிபத்தியம் முதல் உலக நாடுகளின் வர்க்கத் தேசியம் அடங்கி உள்ளது. இங்கு தேசியம் முன்பே முடிபுக்கு வந்துவிட்டதால், எழும் தேசியப்போர் பாசிசமாக, உலகைப் பங்கிடுவதில் தான் மையமிடுகின்றது. இன்னுமொரு புறத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளுர் மிகப்பெரிய நிறுவனங்களின் சிறிய தேசிய முதலாளித்துவ உற்பத்தியை அழிக்கிறபோது எழும் போராட்டம், தேசிய தற்காப்பு போராட்டமாக உள்ளது.


உலகமயமாதல் தேசங் கடந்த உற்பத்தியைக் கோருகின்றது. இது மலிவு கூலி, இலகுவாக மலிவாக மூலதனத்தைத் திரட்டக் கூடிய இடம், போராட்டத்தை இலகுவாக நசுக்கக் கூடிய இடம், இயற்கைப் பாதுகாப்பை மீற வசதியான இடம் என பலவற்றைக் கொண்டு, முதலாம் உலக நாடுகளின் உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகர்த்த நிர்ப்பந்திக்கின்றன. இது முதலாம் உலக நாடுகளில் இருந்து தனது உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளுக்கு நகர்த்துகின்றன. இதன் மூலம் முதலாம் உலக நாடுகளில் வேலை இன்மை அதிகரிக்க வைக்கும் அதேநேரம், மூன்றாம் உல நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மலிவுப்பொருட்களை முதலாம் உலக நாடுகளில் விற்பதன் மூலம் தேசிய உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நெருக்கடி முதலாம் உலக நாடுகளில் ஏற்படுகின்றன. அதே நேரம் மூன்றாம் உலக நாடுகளில் இது ஏற்படுகின்றது.


உலகச் சந்தையை பல ஏகாதிபத்தியங்கள் சூறையாடும் அதேநேரம் தேசம் கடந்த உற்பத்தி முறை அதை மேலும் சிதைக்கின்றது.


முதலாம் உலக சிறுதேசிய முதலாளிகள் தமது சந்தையைத் தக்க வைக்க போராடுவது நாளாந்த விளைவாகியுள்ளது. இது தேசியத்தை முன்வைக்கின்றது. சூறையாடலுக்கு எதிராக போராட்டத்தினை சர்வதேசிய வாதிகள் ஆதரிப்பதுடன், அதை முன்வைத்துப் போராடுவது யதார்த்தமாகி உள்ளது. ஏனெனில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கையாக இவை உள்ளது. சுரண்டலுக்கு ஆதரவு இல்லை எனினும் வர்க்கப் போராட்டத் திசையில் இந்த ஜனநாயகக் கோரிக்கை முன்வைத்துப் போரிடுவது அவசியமாக முதலாம் உலக நாடுகளில் உள்ளது.





கடந்த தேர்தலில் பிரான்சில் சமூக ஐனநாயகக் கட்சியும் (சோஷலிசக் கட்சி ) , சீரழிந்த கம்யூனிசக் கட்சி என்பன சிறு முதலாளிகளைப் பாதுகாக்க உறுதியளித்தன. இதை எதிர்த்த வலது சாரிகள் திறந்த சந்தைக் கொள்கையை முன்வைத்து எதிர்த்துப் பிரச்சாரம்; செய்தனர். உலகமயமாதலைக் கோரியது மட்டுமன்றி, மற்றவர்கள் முன்வைப்பது அரச பொருளாதாரம் என பிரச்சாரம் செய்தனர். இது தான் அந்த தேர்தலில் முக்கிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தது கவனிக்கத்தக்கது.


அடுத்து சேகுவராவின் கோட்பாடு மார்க்சியம் அல்ல. ஒரு முதலாளித்துவ தேசியத்துக்குப் பதில் பாட்டாளி வர்க்க தேசியமல்லாத ஒரு கலவையின் தொகுப்பே. அதனால் தான் எல்லா தென் அமெரிக்க வர்க்க மற்றும் தேசிய போர்களும் தொடர்ச்சியாக கைவிடப்பட்டும், காட்டிக் கொடுக்கவும் படுகின்றது.


உலகில் வீறு கொண்ட புரட்சி கொந்தளிப்பு கொண்ட ஒரு விளைநிலமாக மீள மீள தென் அமெரிக்கா இருந்த போதும் அங்கு தான் மிக மோசமானதும், அடிக்கடி துரோக வரலாறும் அரங்கேறுகின்றது. இது சேகுவோராவின் மார்க்சியமல்லாத, பாட்டாளி வர்க்க தலைமை அல்லாத கோட்பாட்டின் தோல்வியின் விளைவுதான்.


உலகில் ஒரு பலம் பொருந்திய ஒரு பாட்டாளி வர்க்க அரசு இருப்பின், இப்போராட்டத்தை விமர்சித்தபடி ஆதரிப்பதன் மூலம் சிலவேளைகளில் அவர்களை சரியாக வழிநடத்த முயலலாம். இல்லாத போது அவை மீள மீள காட்டிக் கொடுக்கப்படும்.


சேகுவோரா உயிருடன் இருந்திருப்பின், சிலவேளை மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனைளை ஏற்றுக் கொள்ளும் இயங்கியல் அவரிடம் இருந்தது. ஏன் சோவியத் சீனா முரண்பாட்டில் சீனாப் பாட்டாளி வர்க்க நிலையைத்தான் தனிப்பட்ட சேகுவரா ஏற்றுக்கொண்டார். ஏன் எனின் அவர் ஒரு போராட்ட வீரராக, கோட்பாட்டுத் தலைவராக மக்களுடன் இணைந்து செல்ல முனைந்தார்.


அதனால் தான் சேகுவராவை அமெரிக்கா கொல்ல தீவிரமாக முயன்று கொன்று போட்டனர். ஏன் எனில் சேகுவோரா உயிருடன் இருந்தால் உயிர் ஓட்டமுள்ள மார்க்சிய, லெனினிய, மாவோயிச சிந்தனையை தனது சொந்தக் கோட்பாட்டுத் தோல்வியில் இருந்து ஏற்றிருப்பார்.


மார்க்சியமான மாக்சிய, லெனினிய, மாவோவிச சிந்தனையாக இன்று இல்லாத சேகுவோராவின் கோட்பாட்டை இன்று உயர்த்துவதில் பலர் அதிக அக்கறை எடுக்கின்றனர். ஏகாதிபத்தியம் முதல், திரிபு வாதிகள், மார்க்சிய விரோதிகள் ஈறாக சேகுவோராவை முன்னிறுத்துவதன் மூலம், போராட்டத்தை சேகுவோரா வழியில் முன்னெடுத்து அதை இடைநடுவில் சீரழித்துவிட முடியும் என்ற கடந்தகால நீண்ட அனுபவத்துடன் சேகுவோராவை இன்று பெயரளவில் விளம்பரம் செய்கின்றனர். ஆகவே மார்க்சிய விரோத திரிபுவாதிகள் மார்க்சியத்தின் முக்கிய கோட்பாடுகளாக சேகுவராவை முன்னிலைப்படுத்துவது அதிகரித்துள்ளது.


அடுத்து மாக்சிய, லெனினிய, மாவோவிச சிந்தனையை எப்படியும் யாருக்கும் பயன் படுத்த முடியும் என்ற கோணத்தில், அ.மார்க்ஸ் எப்படி மார்க்சிய விரோத கோணத்தில் எதை முன்வைக்கிறார் எனப் பார்ப்போம்.


"இன்றைய தேசிய இன எழுச்சிகளை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டக்களாகக் கண்டு ஆதரிப்போரும் பிரிவினை வாதமாகக் கண்டு ஒதுக்கு வோரும் மார்க்சியச் சிந்தனைத் திரட்டுகளிலிருந்தே மேற்கோள்களைக் காட்டுவதில் இருந்து ஒன்று தெளிவாகிறது. வேறுபட்ட பல்வேறு சூழல்களிலும், விவாதங்களிலும் சொல்லப்பட்ட கருத்துகளை வாய்பாடுகளை தூக்கிப் பிடிப்பதைக் காட்டிலும் .......... பேராசான்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்த நாளில் ~தேசம்| என்பதற்கு எந்த வரையறையையும் வழங்கும் முயற்சியில் இறங்கவில்லை. மேலும் பொது மொழி, பாரம்பரியங்கள், புவியியல் மற்றும் வரலாற்று ஒற்றுமை ஆகியவற்றைத் தேசத்தின் அவசியமான பண்புகளாக அவர்கள் எங்கும் குறிப்பிடவுமில்லை. ......... மார்க்ஸ்- ஏங்கல்ஸ் செக்குகள் மற்றும் தென் ஸ்லாவியர்களின் தேசிய இயக்கங்களை எதிர்த்ததை ஸ்ராலினும் மற்றவர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவது வழக்கம். .......... போலாந்து மற்றம் அங்கேரி மக்களைப் ~புரட்சிகர மக்கள்| எனவும் செக்குகளையும், தென் ஸ்லாவியர்களையும் ~பிற்போக்கான மக்கள்| எனவும் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் குறிப்பிடுவதற்கு பின்னணியாக வேறொரு பார்வை அவர்களிடம் இருந்ததை சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும். n:கலை தலைகீழாக மாற்றிப் போட்டு அதிலிருந்து விடுபட்டு வந்தவர் தான் மார்க்ஸ் எனினும் n:கலின் கூறுகள் அவரிடம் தொடக்க காலத்தில் முற்றிலும் விலகாமல் இருந்ததை இன்று அல்தூஸர் போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ........ மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஜெர்மனி, போலாந்து, அங்கேரி, இத்தாலி போன்றவை மாபெரும் வரலாற்று நாடுகள்| எனவும் தென் ஸ்லாவியர், செக்குகள், ஸ்லோவாக்குகள், செர்பியர்கள், குரோட்கள் ஆகியோரை வரலாற்றவர்கள் எனவும் வகைப்படுத்தினார். இத்தகைய வகைப்படுத்தலுக்கு முதலாளிய வளர்ச்சியை ஒரு அளவு கோலாகவும் அவர்கள் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் ஃப்ளாண்டர்ஸ், லேர்ரேன், அச்சேல் ஆகியவற்றை பிரான்ஸ் கைப்பற்றியதையும் ஷ்வெஸ்விக்கைச் nஐர்மனி கைப்பற்றியதையும் காட்டு மிராண்டித் தனத்துக்கு எதிரான ~நாகரிகத்தின் உரிமை| உன மார்க்ஸ் கூறினார். இவ்வாறு தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது, தேசங்களை அடிமைப்படுத்துவதற்கான ~நாகரீகத்தின்| உரிமையாகத் தலைகீழானது. இது பிற்காலத்தில் தேசிய இனப் பிரச்சனை குறித்த மார்க்சிய கருத்தாக்கம் உருவாதலில், குறிப்பாக தேசிய இன உணர்வை முதலாளித்துவத்தடன் இணைத்துப்பார்க்கும் கருத்துருவாக்கத்தில் மிகுந்த செல்வாக்கு வகித்ததை நாம் மறந்து விடக் கூடாது. இந்த நோக்கிலேயே 1845-1847 இல் அமெரிக்கா மெக்சிக்கோவை ஆக்கிரமித்ததையும், பிரான்ஸ் அல்ஜீரியாவை விழுங்கியதை ஏங்கல்ஸ் ஆதரித்ததையும் நாம் பார்க்க வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை வீரனாகிய சைமன் பொலிவரைப் பற்றிய ~அதிகார வெறியன்| என்கின்ற கருத்துப்பட மார்க்சின் விமர்சனம் உண்மையான போதும் அதன் பின்னணி இதுதான்." என அந்தோனிசாமி மார்க்ஸ் தனது கட்டுரையில் முன்வைத்து மார்க்சியத்தை திரித்து எதிர்க்கின்றார்.


தேசம், தேசிய விடுதலைப் போர் என்பவற்றுக்கு என்று ஒரு வரையறையை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கொடுக்கவில்லை எனவே ஸ்ராலினின் வரையறை தேவையில்லை எனவும், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆக்கிரமிப்புக்கு துணையாக நின்றதாகவும் அவர்கள் ஆக்கிரமிப்பு சக்திகள் அல்லது மார்க்சியத்தில் குறை உண்டு என பலவாகக்காட்ட, இவைகளை அ.மார்க்ஸ் அவரின் நிறப்பிரிகை எடுத்து முன்வைத்துள்ளது.


மார்க்ஸ்-எங்கல்ஸ் ஒரு வரைவிலக்கணத்தை வைக்கவில்லை என்ற அ.மார்க்ஸ் கும்பலின் பித்தலாட்டத்தை கொஞ்சம் ஆராய்வோம்.





" அ. முதலாளித்துவ தோற்றம் மற்றும் அது உறுதிபடுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட, சமூக வளர்ச்சியின் விதிகளை உள்ளடக்கிய தேசிய வடிவத்தின் தோற்றம், தேசிய இன சமுதாயங்களின் சரித்திர பூர்வமான தற்காலிகத்தன்மையை வலியுறுத்துவது.





ஆ. தேசங்களின் உருவாக்கத்திலும் முன்னேற்றத்திலும், தேசிய உறவுகளின் வளர்ச்சியிலும், பொருளாதாரக் காரணிகள் குறிப்பாக பொதுவான பொருளாதார, வாழ்க்கையின் தீர்மானகரமான பாத்திரம்.


இ. தேசிய மற்றும் சர்வதேசிய இயக்கங்களின் வளர்ச்சியின் மீது வர்க்க காரணிகளின் வலிமையான அழுத்தம், தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தினதும், முதலாளித்துவ தேசியவாதத்தினதும்; செல்வாக்கு.


ஈ. ஒரு பொதுவான மொழியும், பொதுவான பிரதேச அமைப்பும் தேசங்கள் உருவாதலின் முக்கியத்துவம் .


உ. தேசங்களின் வளர்ச்சி, தேசிய கலாச்சாரம் சம்பந்தப்பட்டவரை அவற்றுக்கிடையேயான பரஸ்பர உறவுகள், தேசிய மனோபாவம், தன்மை ஆகியவற்றின் வலிமையான செல்வாக்கு பகைமை சமுதாயங்களில் சமுதாய முரண்பாடாக (வர்க்க) அவை திகழ்கின்றன."


-மார்க்ஸ் - எங்கல்ஸ் -


- லெனினியமும் தேசிய இனப்பிரச்சனையும் -( பக் 20)


அ. மார்க்சின் பொய்யுரைகளை மார்க்ஸ் - எங்கல்ஸ் மறுத்துரைக்கும் மேற்கூறிய மேற்கோள்கள் உண்மையில், தேசங்கள் என்ற ஸ்டாலின் வரையறையை உருவாக்க அடிப்படையாக இருந்ததுடன், மார்க்ஸ் - எங்கல்ஸின் ஆய்வுகளின் தொடர்ச்சி தான் ஸ்டாலின் வரையறையை உருவாக்க அடிப்படையாக இருந்ததுடன், மார்க்ஸ் - எங்கல்ஸின் ஆய்வுகளின் தொடர்ச்சி தான் ஸ்டாலின் வரையறை என்பதை நிறுவுகின்றது.





ஸ்டாலின் வரையறையை லெனின் குறிப்பிடுவதைப் பார்ப்போம்.





" சமீப காலத்தில் மார்க்சியத் தத்துவார்த்த இலக்கியத்தில் ஆராயப்பட்டுள்ள (ஸ்டாலின் கட்டுரை இங்கு பிரதான இடத்தைப் பெற்றுள்ளது ) ஆகவே இக்கட்டுரையில் முழுக்க முழுக்க கட்சிக் கண்ணோட்டத்திலிருந்து இப்பிரச்சனையை எடுத்துக் கூறுவோரும் ---


-லெனின்-


தே.இ.பி.பா.வ.ச. - பக்-7-





ஸ்டாலின் வரையறை மார்க்ஸ்- எங்கல்ஸ் வழியில் வந்ததை லெனின் ஏற்றுக் கொண்டு அதைப்பாராட்டியது தான் உண்மை. ஆனால் அ.மார்க்ஸ் கும்பல் அதைத் திரித்துப் புரட்டிப் போடுவது உண்மையில் ஏகாதிபத்திய உலகமயமாதலை ஊக்குவிக்க, தேசங்களின் உண்மையான வரையறைகளை மறுப்பதன் மூலம் போராட்டங்களை சிதைக்க முனைகின்றனர்.


மார்க்ஸ் சரி, ஏங்கல்ஸ் சரி எடுக்கும் வௌ;வேறு விடையம் தொடர்பாக தௌ;ளத் தெளிவான ஆயு;வுகளை நடத்தியவர்கள் அது எப்படி ஏன் ஏதற்காக எனப் பலவாக ஆராய்ந்து முடிவுகளை முன்வைத்தார்கள். அவர்களின் அடிப்படை முடிவுகளை பொதுவானவையாக குறித்து விடையத்தின் அடிப்படை விடயமாகவும் இருந்தன. அது இன்று மிகச் சரியானதாகவும், அடிப்படையானவையாகவும் உள்ளன.


மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இருந்த காலத்தில் தேசம், தேசியம் ஒரு பிரச்சனையாக பெரிதாக இருக்காததாலும், அப்போது தான் பல நாடுகளில் தேசம் உருவாகி வந்ததாலும், அவர்கள் தேசத்தை ஒரு தனியான ஆய்வாக செய்தது இல்லை. செய்யாததால் அவர்கள் அதை நிராகரித்ததுமில்லை. சில பிரச்சனைகள் மீது மட்டும் தான் அவர்கள் அந்நிலையை ஒட்டி கருத்துக் கூறி உள்ளனர். எனவே மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஒரு வரையறையைக் கொடுக்க வில்லை என்பது பொய். ஏன் எனின் அவர்கள் அதை ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து ஆய்வு செய்யவில்லை. அவர்களீன் முழு வாழ்வையும் மார்க்சியத்தை கோட்பாடாக முன்வைப்பதிலும், அதன் சரியான சமூக விஞ்ஞானத் தன்மையை நிறுவுவதுமே பணியாக இருந்தது.


லெனின் காலம் தான் புரட்சி எப்படி நடத்துவது என்ற கேள்விக்கும், அரசு, மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை புரட்சியில் அதன் பங்கு தொடர்பான ஆய்வு தேவையானதாக இருந்தது. இந்த வகையில் தான் லெனின்-ஸ்ராலின் பங்களிப்பு வருகின்றது. ஆகவே மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கொடுக்கவில்லை எனக் கூறுவது அவர்கள் முன் ஆய்வுக்கு வராததையே வந்ததாகக் காட்டி கரடி விட்டு சேறடித்து லெனின்-ஸ்ராலினின் ஆய்வை மறுப்பதாகும்.


ஸ்ராலின் முன்வைத்த நான்கு அடிப்படை உள்ளடக்கம் ஒரு தேசம் உருவாக வேண்டின் இவை கட்டாயம் இருக்க வேண்டும், ஸ்ராலின் விரும்பினாலும், லெனின் விரும்பினாலும், அந்தோனிசாமி மார்க்ஸ் விரும்பினாலும் இந்த நாலில் ஒன்று இன்றி ஒருக்காலும் ஒரு தேசத்தை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க வேண்டும் எனின் திட்ட மிட்ட குடியேற்றம், இன்னொரு தேசியத்தை அழித்து உருவாக்க முடியம். அதற்கு உலகில் சிறந்த உதாரணமாக இருப்பது இஸ்ரேல் என்ற நாடு . அது இன்னமும் ஒரு ஆக்கிரமிப்பு தேசமாக உள்ளது.


இதை ஸ்டாலின் கூறும் போது


" ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, பிரதேசம் , பொருளாதாரவாழ்வு மற்றும் பொதுக்கலாச்சாரத்தில் வெளிப்படும் பொதுவான மனவியல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும். எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் போலவே தேசமும் மாற்றல் விதிக்குட்படுவது என்பது சொல்லாமலே விளங்கக்கூடிய ஒன்றாகும். அது அதற்கேயுரிய வரலாற்றையும் தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருக்கும். மேலே கூறப்பட்ட அம்சங்களில் எதையும் தனியாக எடுத்துக்கொண்டு ஒரு தேசத்தை விளக்க முடியாது. மேலும் மேலே சொன்னவற்றில் ஒரு அம்சம் குறைந்தாலும் தேசம் என்பது தேசமாக இருக்க முடியாது. ' - மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் -


-ஸ்டாலின்-





எனவே ஒரு தேசத்தின் அடிப்படை உள்ளடக்கம் இன்றி ஒன்று உருவாகும் என அறுதியிட்டு வாதிட முனையும் நிறப்பிரிகை உண்மையில் தேசத்தினதும், ஒரு வளரும் இனத்தினதும், உதிரி மக்கள் கூட்டத்தினதும் அடிப்படை உரிமைகளை மறுத்து ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கு சேவை செய்ய முனைவதாகும்.


அடுத்து மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சில நாடுகளை தேசமாகப் பார்க்காது, காட்டு மிராண்டித் தனமாகப் பார்த்தது, நாகரீகத்தின் உரிமை என எல்லோரும் காட்டும் ஆய்வின் முழுமையான சாரம்சத்தை திட்டமிட்டு அ.மார்க்ஸ் மறைத்தபோதும் அவர்களின் ஆய்வுகள் வெற்றிடத்தில் இருந்து எழுந்தது அல்ல.


தேசங்கள் உருவானதும், உருவாகிக் கொண்டு இருந்த காலத்திலும் அதற்கு முன்னும் ஆக்கிரமிப்பு என்ற சொல்லை பொதுவானதாக பயன்படுத்துவது ஏற்புடையனதாகவும் இருப்பது இல்லை. குறு நில அரசுகள் முதல் மாபெரும் அரசுகள் ஈறாக அடிக்கடி மாறிய ஆட்சி அமைப்புகளில் மக்களும், தோற்றவர்களும், சொந்தத்திலும் அநேகமாக மற்றைய படையுடன் இணைந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவது வரலாறாக நின்று கிடக்கின்றது.


ஒரு அரசு கொடுங் கோலாட்சி கட்டவிழ்த்து விடும் போது மக்கள் மற்றைய அரசுடன் இணைந்தும், தனித்தும், சிலவேளை மற்றைய அரசுகள் மக்கள் துணையுடன் நேரடியாக தலையிட்ட போது மக்கள் அவர்களை வரவேற்றனர். அவர்களை ஆக்கிரமிப்பாளனாகப் பார்க்கவில்லை மீட்பாளராகவே கண்டனர்.


இது தேசம் உருவாகும் காலகட்டத்தில் கூட அப்படித் தான் இருந்தன. அது மட்டும் தான் அந்த மக்களின் மீட்சிக்கான பாதையாக இருந்தன.


மக்கள் மீது காட்டு மிராண்டித் தனமாக ஒடுக்குமுறையை மதத்தின் பெயராலும், பல்வேறு வகையாகவும் கட்விழ்த்து விட்ட காலத்தில் மக்கள் ஆதரவுடன் அந்நிய ஆட்சிகள் தலையிட்டு மீட்ட வரலாறு இன்று நிறையவே உள்ளன. ஆனால் அனைத்தும் இருக்கும் உற்பத்தி முறையை மீறி அல்ல. அதை அடிப்படையாகக் கொண்டு நடந்தன. உற்பத்தி முறையின் பண்பியல் மாற்றங்கள் மட்டுமே காலத்துக்கு காலம் நடந்தன.


தேசம் உருவான போது அயல் நாடுகளில் நிலப்பிரபுத்துவ காட்டு மிராண்டித் தனங்கள் உள்ள அரசுகள் இருந்தபோது மக்களை மீட்க தேசமல்லாத நாடுகள் மீது படையெடுப்பு அம்மக்களால் ஆக்கிரமிப்பாக பார்க்கப்படுவதில்லை. மாறாக மீட்பாகவே பார்க்கின்றனர்.


ஏன் இன்றுஒரு பாட்டாளி வர்க்க அரசின் முற்போக்கான பாத்திரம் உள்ள நிலையில் தற்காப்பு நிலையில் நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவ சுரண்டல் உள்ள நாடுகள் மீதான படையெடுப்பு, நிலைமை ஒட்டி அது இன்றும் ஆக்கிரமிப்பாக இருப்பது இல்லை. 2ம் உலக யுத்தத்திற்கு முன் சோவியத் படை போலந்து, மற்றும் லித்துவேனியா போன்ற நாடுகளைக் கைப்பற்றியது ஆக்கிரமிப்பு அல்ல. முன்னேறிக் கைப்பற்றியது (கோரியும், வெளியிலும்) சரி என்பதை மார்க்சிய லெனினிய மாவோயிசம் காட்டுகின்றது.


தென் கொரியா-வடகொரியா யுத்தத்தின் போது சீனப் படைகள் உட் புகுந்ததும், பல நாடுகளுக்கு உதவியதும் ஆக்கிரமிப்பு அல்ல. 2ம் உலக யுத்தத்தில் ஸ்பானியாவில் சோவியத் படையும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் படையும் புகுந்த போது அது ஆக்கரமிப்பு அல்ல. எனவே ஸ்தூலமான நிலையில், ஸ்தூலமான ஆய்வில் இருந்து தான் இதை ஆராய வேண்டுமே ஒழிய, இன்று அமெரிக்கா, மேற்கு நாட்டு மற்றும் முதலாளித்துவ மீட்பின் பின் ருசியா ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் ஒப்பீட்டுடன் இதை படம் பிடித்து காட்டுவது மார்க்சிய லெனினிய மாவேயிச சிந்தனை மீது சேறு அடிக்கவே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இவர்கள் மார்க்ஸ் இந்திய சமூகம் காட்டு மிராண்டிச் சமூகம் எனக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் சாதாரண நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித் தனமான மனநிலையை தட்டி விடுவதன் மூலம் மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனைக்கு எதிராக அணிகளை அணிதிரட்ட கனவு காண்கின்றனர். மார்க்ஸ் ஏன் காட்டு மிராண்டிச் சமூகம் எனக் குறிப்பிட்டார். என இவர்கள் சொல்வதும் இல்லை சொல்ல விரும்பவும் இல்லை. சொன்னால் பார்ப்பனர்களின் மந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தினால் அது எப்படி கிழிந்து போகுமோ அதே போல் அந்தோனிசாமி மார்க்சின் நோக்கம் கிழிந்து போகும்.


நான் திடமாகக் கூறுகிறேன் இந்தியா சமூகம் ஒரு காட்டு மிராண்டிச் சமூகம் தான். காட்டு மிராண்டித் தனத்தை மார்க்சுக்குப் பிந்திய 100 வருடத்தில் இன்னமும் கொண்டுள்ள இச் சமூக நடவடிக்கை காட்டு மிராண்டித் தனம் இல்லை எனக் கூறி நாகரீகச் சமூகம் என கூறும் துணிவு தான் இருக்கா அ.மார்க்சுக்கு?


மார்க்சின் காலத்தில் மக்கள் மந்தைகள் போல் தனக்குள் தான் மூழ்கிக்கிடந்ததும் கணவன் இறந்தால் மனைவியை உடன் கட்டை ஏற்றிக் கொழுத்துவதும், சிறுமியிலேயே திருமணத்தை செய்வதும், சிறுமியிலேயே பிள்ளை பிறக்க வைக்கவும், சிறுமியிலேயே ஆயுளை முடித்து வைக்கவும், கணவன் இறந்தால் மறு திருமணத்தை மறுக்கவும், சமுதாயத்தை சாதியாகப் பிரித்து தொட்டாலே மரண தண்டனை வழங்குவதும் இது போல் பல்வேறு கூறுகளைக் கொண்ட சமூகத்தை அ.மார்க்சும் அவரது சீடர்களும் நாகரீக சமூகம் எனப் பிரகடனம் செய்கின்றனர். அதாவது இது நாகரீக சமூகம் எனின் மார்க்சை எதிர்த்து இதைப் பாதுகாக்க முன்வைப்பதாகும்.


ஆனால் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் இதை சரியாக அடையாளப் படுத்தியதன் மூலம் இதை எதிர்த்துப் போராடினர். இதை சகிக்க முடியாத அந்தோனிசாமி மார்க்சும், அவரது சீடர்களும் ஐயோ மார்க்ஸ் இப்படிக் கூறியவர் நீங்கள் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனையை ஏற்றுக் கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி, வைக்கும் ஒப்பாரித்த தனத்தின், பார்ப்பனத்தின் ஒரு வடிவமே இவை. இது போன்று மார்க்ஸ் எதை என்ன சொன்னார் என்பதை மூடி மறைத்து மார்க்சையே திரித்து காட்டுவது அந்தோனிசாமி மார்க்சின் மார்க்சிய விரோத நிலைக்கு அவசியமாக உள்ளது.


தேசிய இனங்கள் பற்றி மார்க்ஸ் - எங்கல்ஸ் என்ன நினைத்தனர் என்பதை லெனின், மார்க்ஸ் - எங்கல்;ஸ் மேற்கோள்களுடன் கூறுவதைப் பார்ப்போம்.


" ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சோஷலிஸ்ட் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தைப்பற்றி எத்தகைய கொள்கையை உடையவராய் இருக்கிறார் என்பது பற்றி மார்க்ஸ் அவரைக் கேள்வி கேட்கின்றார். -- நசுக்கப்படும் தேசிய இனங்களின் விஷயத்தில் தாம் ஆற்ற வேண்டிய சோஷலிசக் கடமைககளை உணர்ந்து கொள்ள அவர்கள் தவறியது ஆதிக்கம் வகிக்கும் தேசிய இனத்தின் பூர்ஷ்வாக்களிடமிருந்து அவர்களது தப்பெண்ணங்களைப் பெற்று அப்படியே எதிரொலிப்பது .


-- தேசியப் பிரச்சனை பற்றி மார்க்ஸ் எங்கல்ஸின் கொள்கை பொதுவாக முழுக்க முழுக்க விமர்சனக் கண்ணோட்டமானது என்பதையும், வரலாற்று பூர்வமாக வரையறை செய்யப்பட்ட அதன் முக்கியத்தை அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். --


1851 மே 23 ந் திகதி எங்கல்ஸ் மார்க்சுக்கு எழுதினார். வரலாற்றில் போலிஷ்காரர்கள் ஆற்றிய பங்கு துணிவுடன் கூடிய முட்டாள்தனம். ருஷ்யாவுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் கூட போலந்தானது வெற்றிகரமாக முற்போக்கைப்பிரதிபலித்து அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதையாவது ஒன்றைச் செய்தது என்பதை நிரூபிக்க ஒரு உதாரணத்தைக் கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியவில்லை. ' --- பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ருஷ்யாவானது தூங்கிக் கொண்டும் போலந்தானது கொந்தளித்துக் கொண்டும் இருந்த சமயத்தில் போலிஷ் இயக்கத்தை ஆழ்ந்த பதில் பரிவுடன் அணுக எங்கல்சையும் மார்க்சையும் எந்த விதத்திலும் தடை செய்யவில்லை.





1864 இல் இண்டர்நேஷனனின் அறிக்கையை வரைந்து கொண்டிருந்த போது மார்கஸ் எங்கல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தாம் மாஐpனியின் தேசியவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென்று கூறி, மேலும் எழுதியதாவது " அறிக்கையில் சர்வதேசியத்தைப் பற்றி பேசப்படுவதால் நான் நாடுகளைப்பற்றிப் பேசினேன். சிறு தேசிய இனங்களைப்பற்றியல்ல. ருஷ்யாவைத் தாக்கிப் பேசினேன், முக்கியத்துவம் குறைந்த அரசுகளையல்ல.





1886 இல் புரூதோன்வாதிகளின் கும்பலைப்பற்றி மார்க்ஸ் எங்கல்ஸ்சுக்கு எழுதினார். அக்கும்பல் சிறு தேசிய இனங்கள் அபத்தமானவை என்று கூறுகிறது. ...... பிரான்சில் அப்பெரிய மனிதர்கள் வறுமையையும் அறியாமையையும் அகற்றும்வரை ஐரோப்பா முழுவதும் வெறுமனே குந்தி உட்கார்ந்து கொண்டிருக்கமுடியும். உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டும். ..... இவர்கள் விசித்திரமானவர்கள் தான். ....... 1866 இல் ஐன 20 இல் மார்க்ஸ் " சிறு தேசிய இனங்களை மறுப்பதன் மூலம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பிரஞ்சு தேசிய இனத்தினால் அவை விழுங்கி ஐPரணிக்கப்பட்டு விட்டதாக தம்வசமின்றியே அவர் அறிந்து கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது என்றும் நான் கூறினேன். " மார்க்சின் இந்த விமர்சனக் குறிப்புகளிலிருந்து தோன்றும் முடிபு தெளிவானது. தேசியப் பிரச்சனையை வெற்று வழிபாட்டுப் பொருள் ஆக்குவது தொழிலாளி வர்க்கத்துக்கு மிக மிக அரிதாகவே இயலும் . .... அயர்லாந்தின் பூர்ஷ்வா விடுதலை இயக்கமானது வலு பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்தது. மார்க்ஸ் தனது கருத்தினை மறுபரிசீலனை செய்து திருத்தினார்.


தே.இ.சு.உ. - லெனின்-





மார்க்சின் மரணம் வரை, அதற்கு மேலும் 1890 வரையிலும் கூட ஐhரிஸமானது பிரான்சுக்கூடாக கூடிக்கொண்டு ஏகாதிபத்திய தன்மையற்ற, தேசிய இனரீதியில் சுயேச்சையான nஐர்மனிக்கெதிராக ஒரு பிற்போக்கு யுத்தத்தை நடத்தும் அபாயம் இருந்த பொழுது, ஐhரிசத்துக்கெதிராக போராட வேண்டிய முதற்பணி என்று கருதினார் எங்கல்ஸ். இந்தக்காரணத்துக்காகத்தான் இந்தக் காரணத்துக்காக மட்டுமே தான் செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள் ஆகியோரின் தேசிய இன இயக்கங்களை மார்க்சும் எங்கெல்சும் எதிர்த்தார்கள். மார்க்சியத்தை கழித்து ஒதுக்கி விடுவதற்காக இன்றி உண்மையில் மார்க்சியத்தில் உளமார அக்கறை காட்டும் எவரும் ( அ. மார்க்ஸ் கும்பல் போன்றவைக்கு அல்ல) மார்க்சும் எங்கல்சும் 1848 இலும் 1849 இலும் எழுதியதைப் பார்ப்பாரேயானால், ஐரோப்பாவில் 'ருசியாவின் புறக்கால நிலைகளாக ' பணியாற்றிய பிற்போக்கான முழு தேசிய இனங்களையும் nஐர்மனியர்கள், போலந்துக்காரர்கள், மத்யாக்கள் போன்ற " புரட்சிகரமான தேசிய இனங்களையும் " தெட்டத் தெளிவாக, திட்டவட்டமாக அவர்கள் வேறுபடுத்தினார்கள் என்பது நன்கு புரியும். இது மெய்விவகாரம் மறுக்க முடியாத உண்மையாக இது அப்பொழுது சுட்டிக்காட்டப்பட்டது. 1948 இல் புரட்சிகரமான தேசிய இனங்கள் சுதந்திரத்துக்காக போராடின. அச்சுதந்திரத்தின் பிரதான எதிரி ஐhரிஸம் ஆனால் செக் மக்கள், முதலியவர்களோ உண்மையிலேயே பிற்போக்குத் தேசிய இனங்கள் அல்லது ஐhரிசத்தின் புறக்காவல் நிலைகளிலிருந்தனர்.





மார்க்சிசத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்றால் மேற்கூறிய ஸ்தூல உதாரணத்தை நாம் ஸ்தூலமான முறையில் ஆராய வேண்டும் . நாம் அப்பொழுது பெறும் படிப்பினை என்ன ?


இதுதான் (1) ஐரோப்பாவில் பெரிய மிகப்பெரிய தேசிய இனங்கள் சிலவற்றின் விடுதலையின் நலன்கள் சிறிய தேசிய இனங்களின் விடுதலைக்கான இயக்கங்களின் நலன்களை விட மேலானவை.


(2) ஒரு ஐனநாயகக் கோரிக்கையை தனியாக எடுத்து பரிசீலனை செய்யக் கூடாது. ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் - இன்று உலகக் கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும்.


...... சிறு தேசிய இனங்கள் சோஷலிசப் புரட்சியைத் தொடங்கி 1848 இல் ஐரோப்பாவில் பூர்சுவா ஐனநாயகப்புரடசி தொடங்கியதைப் போல் , பூர்ஷ்வாக்களின் பிற்போக்கு வாதத்தின் பிரதான அரண்களாக மற்ற தேசிய இனங்கள் விளங்குமேயானால் - அப்போது பிந்திய தேசிய இனங்களுக்கு எதிராக புரட்சிப்போர் புரிவதை நாமும் ஆதரிக்கவேண்டும். அவற்றை நசுக்கி எத்தகைய சிறு தேசிய இன இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் சரியே , அவற்றின் புறக்காவல் நிலைகளையெல்லாம் அழிப்பதை ஆதரிக்க வேண்டும்.





தே.இ.பி.பா.வ.சர்வதேசியவாதம் -லெனின்-


லெனினின் நீண்ட மேற்கோள்களை நாம் முன்வைக்குமளவுக்கு இப்பிரச்சனை மீது அ.மார்க்ஸ் கும்பல் அதிகளவுக்கு மார்க்சியம் மீது சேறடித்துள்ளது. தேசிய இனங்களின் பிரச்சனை மீதான வாதங்கள், நியாயங்கள் எப்போதும் மொத்த மக்கள் நலன் தொடர்பான நிலையில் நின்று ஆராய வேண்டும். இதன் ஸ்தூலமான நிலைமையில் உள்நாட்டிலும் உலகிலும் உள்ள பொது நிலவரத்திலும் நின்ற ஆராய வேண்டும்.


ஏனெனில் எந்தப் பிரச்சனையும் அது தேசியப் பிரச்சனையாக இருந்தாலும் அது தனித்து இயங்குவது இல்லை அது உலகின் பல பிரச்சனைகளுடன் தொடர்புபட்டுத்தான் இயங்குகின்றது. எனவே எழும் தேசியத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும்படி பூர்ஷ்வா வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தைப் பலவீனப்படுத்த ஏகாதிபத்தியமும் கோரும். இதை ஒட்டி லெனின்





" முதலாளித்துவம் போன்றே ஏகாதிபத்தியமும் எங்களது ஐPவமரண எதிரியாகும். நிலப்பிரபுத்துவத்திலும் பார்க்க முதலாளித்துவம் முற்போக்கானது. ஏகாதிபத்தியம் ஏகபோகத்திற்கு முந்தைய முதலாளித்துவத்திலும் பார்க்க முற்போக்கானது என்பதை எந்த மார்க்சியவாதியும் மறுக்கமாட்டார்கள். ஆதலால் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான எல்லாப் போராட்டத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பிற்போக்கு வர்க்கங்கள் போராடினால் நாங்கள் அதை ஆதரிப்பதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிரான பிற்போக்கு வர்க்கங்களின் கிளர்ச்சி எழுச்சிகளை நாங்கள் ஆதரிப்பதில்லை. '





- போல்ஷிவிக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு- லெனின்





நாம் எப்போதும் எங்கும் எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க மறுக்கின்றோம்.


இந்த வகையில் தான் புலிகளின் தேசிய விடுதலைப் போரை எதிர்க்கின்றோம். அதே நேரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி, தமிழ்மக்கள் மீதான அனைத்து அடக்குமுறையையும் எதிர்க்கின்றோம். அதே நேரம் புலிகளை அழிக்கவெனக் கைக்கொள்ளும் எல்லா பிற்போக்கு ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றோம். புலிகள் ஒரு முற்போக்கான ஒரு முதலாளித்துவ தேசியத்தைக் கூட முன்னெடுக்காது, பிற்போக்கான நிலப்பிரபுத்துவ தேசியத்தைக் கோருவதை எதிர்த்து , முற்போக்கான தேசியத்தை உயர்த்தக்கோரும் நாம் புலிகளின் தேசியத்தை எதிர்ப்பது சரியான அடிப்படையாகும். அதேநேரம் பாட்டாளி வர்க்கம் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அதாவது அது ஒரு அரசாக இருக்கும் கோரிக்கை தனியான விசேஷ சலுகை கோராத வகையில் கோரும் உரிமை முன்வைத்துப் போராட முனைகின்றது.





எல்லாத் தேசியத்தையும் ஆதரிக்கக் கோருவது என்பது பிற்போக்கான சுரண்டல் ஏகாதிபத்திய நலன்களை ஆதரிக்க கோருவது தான் . இந்தியாவில் பாரதி ஐனதாவின் இந்து தேசியக் கோரிக்கையை நாம் எதிர்க்கின்றோம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதைத்தான் அன்று மார்க்ஸ்- எங்கல்ஸ் குறிப்பான நிலைமையில் கைக்கொண்டனர் என்பதை நாம் இனி சொல்லித் தெரியவேண்டியதில்லை. விரும்பின் அ.மார்க்ஸ் கும்பல் பாரதி ஐனதாவின் இந்து தேசியத்தை ஆதரிக்கட்டும். ஏனெனில் அது அந்தக் கும்பலின் ஒத்த நலன்களைப் பிரதிபலிக்கின்றதல்லவா ?





அடுத்து அந்தோனிசாமி மார்க்ஸ் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம். "ரஸ்சியா மாற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் ரோசாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முக்கியம் பெற்றுள்ள போதிலும், சுயநிர்ணய உரிமை என்ற மார்க்சிய கோட்பாட்டை மறுத்தவர்......" எனச் சுட்டிக் காட்டி தனது மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனை எதிர்ப்பை ஏதோ சரியாக ரோசாவை விமர்சிப்பது போல் காட்டி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.


அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை அற்றது என்ற நிறப்பிரிகை கும்பலின் நிலையை ரோசா ஆதரிப்பார் என நம்புவதாகத்தான் இவர்கள் ரோசாவை எடுத்து பின் அதில் விமர்சனம் காண்கின்றனர்.


அதாவது மக்கள் போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான். வர்க்கப் போராட்;டம் என்பது இன்னுமொரு வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் தான். அது ஆட்சியில் உள்ள வர்க்கத்தை எதிர்த்த போராட்டம் தான். இப்போராட்டங்களைக் கையாளும் ஆளும் வர்க்கம் அதை அமைதியாகத் தனித்து பல்வேறு சலுகைகள் வழங்குவதிலும் இவ்வர்க்கங்களுக்கிடையில் சமச்சீரைக் கண்டறிய பலவாக முனைகிறது. இவை அப்போராட்டத்தை தனிக்க வைக்கின்றது. இல்லாத போது மீளவும் வெடிக்கின்றது. அதாவது வடிவத்தில் ஆட்சி முறைகளை அடிக்கடி மாற்றுகின்றது. உள்ளடக்கத்தில் அல்ல.


வர்க்கங்களுக்கு இடையில் அணிதிரளும் இரண்டு வர்க்க ஐக்கியம் மற்றும் போராட்டம் இருக்கும் ஒழுங்குகள் சாத்தியமான ஒரு ஒழுங்கை நிறுவ முடியாத போது மறு வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. எனவே ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்க முடியாது, . ஒரு வர்க்கம் ஆட்சியாக உள்ளது. இப்படி உலகில் பல ஆயிரம் முறை நிகழ்ந்து அனைத்து ஆட்சியும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகவே உள்ள போது, அவை பல்வேறு முழக்கங்களாலும், பல்வேறு வடிவங்கள் மூலம் மீட்டு இருக்கும் உற்பத்தி முறையையே சிறு மாற்றங்களுடன் நீடிக்கின்றனர்.


அதாவது இங்கு அடிப்படை ஆளும் வர்க்கம் சுரண்டல் ஆட்சி மட்டும் உலகம் எங்கும் தொடர்ச்சியாக பல ஆயிரம் புரட்சிகள், மாற்றத்தின் பின் இன்னும் நீடிக்கின்றது. என்ன தான் இந்த அடிப்படை மாறாத வரை எல்லா ஆட்சி மாற்றங்களும், எல்லாப் புரட்சியும் ஒரு வர்க்கம் இன்னோரு வர்க்கத்தை அடக்கும் சுரண்டல் ஆட்சியாகவே உள்ளது, நீடிக்கின்றது. அரசு உருவான பின் ஒரு ஆட்சியைத் தன்னும் சுரண்டல் எல்லைக்கு அப்பால் காட்ட முடியாது அ.மார்க்ஸ் அவர்களே.


இந்நிலையில் தான் ஆயிரம் ஆயிரம் புரட்சி, மற்றும் புதிய அரசுகளின் அனுபவத்தை தொகுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கம், அடிப்படை உற்பத்தி முறை மாறாத வரை சுரண்டலும் ஒரு வர்க்க சர்வாதிகாரமும் இருக்கும் என்பதைக் கண்டு கொண்டனர்.


எனவே தான் இருக்கும் உற்பத்தி மீதான வர்க்கச் சுரண்டல் சர்வாதிகாரத்துக்குப் பதிலாக, சுரண்டலை எதிர்க்கின்ற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, இருக்கும் சுரண்டல் அரசைத் தூக்கி எறிவதன் மூலம் நிறுவ வேண்டும், என்ற சமூக விஞ்ஞான உண்மையைக் கொண்டுதான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை முன்வைத்தனர்.


அதாவது சுரண்டும் வர்க்கம் வெறும் நபர்களோ அல்லது அதன் வர்க்கத்தின் கருவிகளோ அல்ல. அது அந்த சமூகம் முழுக்க ஊறிப்போன, அதே நேரம் ஒழுங்கு அமைக்கப்பட்ட வடிவில் எங்கும், எதிலும் காணப்படுவதால் அதை முற்றாகத் தூக்கி தலைகீழாகப் புரட்டி போடுவது மட்டும் இன்றி அதற்கு எதிரான போரை நடத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உடனடியாக மட்டுமல்ல, தொடர வேண்டியதை பாட்டாளி வர்க்கம் கண்டு கொண்டது.


புரட்சி நடந்த அடுத்த கணம், அதாவது அரசைக் கைப்பற்றிய அடுத்த கணமே எல்லாம் மாறிவிடும், மாறிவிட்டது எனவே இனிப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை இல்லை என்ற இயங்கியல் மறுப்புக் கோட்பாட்டை பிடிப்பதன் மூலம,; மீளவும் முதலாளித்துவ மீட்சியை மறைமுகமாக அப்பட்டமாகக் கோருகின்றனர்.


ஒரு வர்க்கம் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை சுரண்டல் பிரிவுக்கு எதிராக முன்னெடுப்பது, அதை அமுல்படுத்துவதும் அவசியமானதாக உள்ளது. இது வன்முறை சார்ந்தும், வன்முறை சாராதும் நீடிக்கின்றது. சுரண்டல் பிரிவு எப்போது அச்சமூகத்திற்குள்ளும் வெளியிலும் உலகளவில் இல்லாமல் போகின்றதோ அப்போது வர்க்க மாற்ற ஆட்சி தேவை அற்றதுடன் அரசு தேவையற்றதாகிவிடுகின்றது.


சுரண்டும் வர்க்கம் உள்ள வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகார அடிப்படையானது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிரான தாக்குதலை பாட்டாளி வர்க்கத் தலைமையில் தொடுக்கப்படுகின்றது. இதைத்தான் மனித உரிமை மீறல் என வேறு கூச்சல் எழுப்புகின்றனர். மார்க்சிய வேடமிட்ட சில விரோதிகள்.


இன்னும் ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டும் உரிமை தான் மனித உரிமை மீறலே ஒழிய அதற்கு எதிரான தாக்குதல் மனித உரிமை மீறல் அல்ல.


இன்றைய உலக ஒழுங்கு ஒருமனிதனை இன்னும் ஒருவன் சுரண்டும் உரிமையைத்தான் மனித உரிமை எனப் பிரகடனம் செய்கின்றன. இதைத்தான் அ.மார்க்ஸ் முதல் சேரன் ஈறாக சுரண்டும் உரிமைதான் மனித உரிமை என்கின்றனர்.


அடிமைச் சமூகம் அடிமையை வைத்திருக்கலாம், அதை அசையா சொத்தாகக் கொண்டிருக்கவும், கொல்லவும் இருந்த உரிமைதான் அன்றைய மனித உரிமையாகும். அதுதான் சட்ட அமைப்பாகும். இதை எதிர்த்துப் போராடி அடிமை உடமை சமூகத்தை தகர்த்த போது அடிமையை வைத்திருப்பது குற்றமாக இருந்தது. அடிமையை வைத்திருக்க மீண்டும் மீண்டும் விரும்பிய சமூகத்தின் மீது வன்முறை பாய்ந்த போது, அது மனித உரிமை மீறலாக அடிமை உடமையாளர்கள் கருதினர்.


இது போல் வரலாற்றில் ஒரு முன்னோக்கிப் பாச்சல் நடக்கும் போது பிற்போக்கைப் பாதுகாக்க மனித உரிமை மீறல,; எனவும் அதை மீட்க பல போராட்டத்தை பழைய சமூக ஒழுங்குள்ளும் வெளியிலும் நடத்தினர். இதற்கு எதிராக அந்த அரசு வன்முறையைக் கையாண்டது. ஆனால் எல்லா மாற்றமும் இருக்கும் உற்பத்தி முறையைப் பாதுகாத்தபடி இருந்ததால், பெரியளவிற்கு இவை எதிர்ப்புக்குள்ளாகவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும் உற்பத்தி முறையை மறுப்பதாலும் மறுத்ததாலும் இதை எதிர்த்துப் பாதுகாக்க தனிமனித உரிமையின் பெயரால் மனித உரிமை மீறல் எனக் கூச்சல் எழுப்புகின்றனர். மனித உரிமை மீறல் என்பது இரண்டு மனிதர்களுக்கும் இடையில் ஒப்பீடானவையே. இது வர்க்க சமுதாயத்தில் மட்டும் இருக்க கூடியவை. சுரண்டல் மற்றும் உற்பத்தி முறையை மாற்றும் மார்க்சிய வர்க்கப் போராட்டத்தை சிறுமைப் படுத்த சிதைக்க முன்வைப்பதே மனித உரிமை மீறல் பற்றிய மார்க்சிய எதிர்ப்பு மனித உரிமை மீறல் பற்றிய ஒப்பாரியாகும். சுரண்ட நினைப்பவன் மீது வன்;முறையைக் கையாளும் போது தான் இவர்கள் மனித உரிமை பற்றி ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் சுரண்டும் போது அது மனித உரிமை மீறலாக மனித உரிமை வாதிகளுக்கு தெரிவது இல்லை.


ஒரு சமூகம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டின் முன்னைய ஆளும் வர்க்கத்தின் மீது சர்வாதிகார வன்முறையைக் கையாள்கின்றது. இது வெறும் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்ல. உலக வரலாறே அப்படிதான் இருக்கின்றது. ஆனால் பாட்;டாளி வர்க்கம் அல்லாத மற்றைய ஆட்சிகளில் சீர் திருத்தம் மூலம், அல்லது பாச்சல் மூலம் சுரண்டலை மட்டும் பாதுகாத்தபடி உற்பத்தி முறையை புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அது எப்போது எல்லா நேரத்திலும் ஒரு சர்வாதிகார வடிவத்தின் மூலமே ஒழிய வெளியில் அல்ல.


பாட்டாளி வர்க்கம் மட்டுமே சுரண்டல் அற்ற ஒரு வர்க்க சர்வாதிகாரத்தை சுரண்டுவோர் மீது நிறுத்துவதன் மூலம் சுரண்டலை ஒழிக்க முனைகிறது. இதைப் பாதுகாக்க தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையாக உள்ளது.


இன்று சோவியத் ரஸ்சிய, கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்தது? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் விளைவா இவை? இல்லையே. வரலாற்றை, மக்களை ஏமாற்ற விரும்புபவர்கள் மட்டும் தான் விஞ்ஞான பூர்வமான முடிவுகளுக்குப் பதில் தமது கோட்பாடுகளுக்கு இசைவாக பொய்யை இட்டுக் கட்ட முனைகின்றனர்.


சோவியத், கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினுக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டதன் மூலம் தான,; இன்று இந்நிலை தோன்றியது. இதை அன்று மார்க்சிய, லெனினிய சிந்தனையை ஏற்ற உலகப் புரட்சிக் குழுக்கள் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டிய நடைமுறை நீண்டு கிடக்கிறது. ஆனால் அ.மார்க்சின் கும்பலின் கண்ணுக்கு இவை தெரிவதில்லை. ஏன்? சீனாவில் டெங் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டதை அன்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டினார். நாளை சீனாவும் இன்றைய ரஸ்சியா நிலமைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது.


எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லாத மார்க்சிய, லெனினிய, மாவோயிச வழியில் கொண்டு இராத, ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்தை சுட்டிக் காட்டி அதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அ.மார்க்ஸ் குறிப்பிடின் அதன் பின் உள்ள கபடம் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை சேறடிப்பது தான். அதற்கு எப்படியும் எதையும் முத்திரை குத்துவது தான். இல்லை இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் என விஞ்ஞான பூர்வமாக ஆய்வை நிராகரித்து சத்தியம் செய்யத்தான் முடியும்.


சிவப்புக் கொடியை ஆட்டி ஆட்சிக்கு வந்த இன்றைய போலந்துக் ஆட்சியைக் கூட, இந்த அ.மார்க்ஸ் கும்பல் நாளை கமியூனிச ஆட்சி எனக் கூறி மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு சேறடிக்க ஒருக்காலும் தயங்க மாட்டார்கள.; என்ன எனின் அவர்களின் எல்லாக் கோட்பாடுகளும் அப்படித்தான் இருந்தன இருக்கின்றன.


எனவே ரஸ்சிய, கிழக்கு ஐரோப்பா நிலைமை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு பதில் முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியில் முதலாளித்துவத்தின் விளைவுகளே. இதை ஒவ்வொரு கால கட்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனை வாதிகளும், குழுக்களும் அமைப்புகளும் தமது சொந்தப் புரட்சிகர போராட்டத்தின் ஊடாக சொன்னார்கள் சொல்லி வருகின்றனர். இதைக் கொஞ்சம் எடுத்துப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும் அ.மார்க்சின் நோக்கம் என்ன என்பது.


இந்த இடத்தில் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார் "......... தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்ஸ்-ஏங்கல்ஸ்சின் N:கலியத் தாக்கமிக்க கருத்துக்கள் ரோசாவின் மீது அதிக செல்வாக்கு வகித்தன." எப்படி மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தத்துவத்தினை எப்படி N:கலித்து முத்திரை குத்துவது பின் ரோசாவின் தவறான கோட்பாட்டை அதன் தொடர்ச்சியாக நிறுத்தி மார்க்ஸ், ஏங்கல்ஸ் வரிசையில் ரோசாவை கொண்டு வருவதன் மூலம், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு சேறடிக்க, இந்த அ.மார்க்சும் அவரது சீடர்களும் எங்கெங்கும் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு யார் யார் எதிராக இருந்தனரோ, அவர்களை மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக் கோட்பாட்டாளர்களுடன் தொடர்பு படுத்தி, பின் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கே சேறடிப்பது தான் இவர்கள் நோக்கம்.


கம்மியூனிசக் கட்சியின் பெயராலும், சிவப்புக் கொடியின் பெயராலும், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையாளர்களின் பெயராலும் முதலாளித்துவப் பிரிவுகள் எப்படிப் பிழைப்பை நடத்துகின்றனரோ, அதற்கு மேலாக அ.மார்க்ஸ் அவர் சீடர்கள் மார்க்சிய கோட்பாட்டை பகுதியாக, முழுமையாக ஏற்பதாக பாசாங்கு செய்தும், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு எதிரானவர்கள் உடன் ஒன்று படுத்தியும் தனது பாட்டாளி வர்க்க எதிர்ப்பு கோட்பாட்டை முன்னிறுத்தினர்.


அ.மார்க்ஸ் பின் நவீனத்துவ நூலில் மார்க்சியம் மொத்த தத்துவம் என கூறி, சிறு தத்துவம் வேண்டும் எனக் கூறி மார்க்சியம் தேவையற்ற காலாவதியானது என்கின்றார். ஆனால் இந்த நூலில் மார்க்ஸ்


எங்கல்ஸ் வரிசையில் ரோசாவை இணைத்து கெகலியத்தின் ஊடாக இணைக்கும் கபடம் மார்சியம் மீது சேறு வீசுவதற்கேயாகும். இவர்கள் இப்படி செய்தபடி எப்படி விளக்குகின்றார்கள் எனப் பார்ப்போம். "மொத்தத்தில் மார்க்ஸ்-ஏங்கல்சிடம் இருந்து தேசிய இனப்பிரச்னை குறித்த முரண்பட்ட பார்வைகள் ரோசாவிடம் வெளிப்பட்டது எனலாம்." என அ.மார்க்ஸ் குறிப்பிட்டு ரோசாவின் தவறு மார்க்ஸ்-ஏங்கல்சுக்கு இருந்தது போல, ; இருந்தது தான் ஆனால் மற்றவை மிகச் சரியாக இருந்தவை என சத்தியம் செய்து, ரோசாவின் பெயரால் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு மார்க்ஸ் ஏங்கல்ஸ் வேட்டு வைக்க பிரயத்தனம் செய்கின்றனர்.


குறிப்பிட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்று முழுதாகத் தவறானவை, அது அதிகாரத்தின் மையம், தலைமை வழிபாட்டின் குவியம் இதை எல்லாம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போல் ரோசா சரியாக சொல்லி உள்ளார். என ஒரு சினிமாக் காட்டி மார்க்ஸ், ஏங்கல்ஸ் கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக மாற்றி விடுகின்றனர். அத்துடன் தேசம் தொடர்பான ஆய்வை, ஆய்வில் இறங்காத மார்க்ஸ், ஏங்கல்ஸ் நிலையைக் கீழ் இறக்கி ரோசாவுடன் முன்வைத்து சேறடிக்கின்றனர்.


மார்க்ஸ், ஏங்கல்ஸ் வழியில் ரோசாவும் ஒரு மார்க்சிய வாதி தேசிய இனப்பிரச்சனையில் மட்டும் தவறு இழைத்தனர். என்ற ஒரு பார்வையை வாசகர்க்கு ஏற்படுவதன் மூலம், ரோசாவின் மார்க்சிய, லெனினிய எதிர் பார்வையை மார்க்சியத்தின் பெயரால், மார்க்ஸ், ஏங்கல்சின் பெயரால் பின்பக்கத்துக் கதவால் உட்புக முனைத்ததன் விளைவு தான் ~தேசியம் கற்பிதம்| என்று புத்தகத்தின் முழுமையான நோக்கம் இது போல் புத்தகம் மீள மீள பல முறை பலரின் பெயரால் வெளிவரும்.


இதை மேலும் வளம் படுத்த "....... சரியான முழக்கமாகிய சுயநிர்ணய உரிமை என்பதை முன் வைப்பதில் லெனினை ரோசாவால் எட்ட முடியவில்லை. ......." என்று கூறுவதன் மூலம் ரோசா மற்ற வகையில் லெனினுடன் சமமாக சரியாக மார்க்சியத்தை பின்பற்றினார் என்கின்றார் அ.மார்க்ஸ். அது ஒரு புறமிருக்க, முன்பு அந்தோனிசாமி மார்க்ஸ் கூறுகிறார் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஒரு வரையறையை முன்வைக்க இல்லை என்று கூறி, பின் லெனின் தான் முதல் முதல் தேசிய சுயநிர்ணயத்தை முன்வைத்தவர் என்கின்றார். லெனின் காலத்து விடையத்தை எப்படி மார்க்ஸ்-ஏங்கல்ஸ் அதை முன்னெடுத்து இருக்க முடியும் என அ.மார்க்சை யாரும் கேட்;க மாட்டார் என நினைத்து , சுற்று மாற்றுக் கருத்துவிவாதம் நடத்தியதின் விளைவே இப்படி முன்வைத்துள்ளார்.


அடுத்து அ.மார்க்ஸ் "அறிஞர் ஈ.எஸ்.கார் லெனினினது தேசிய இனப்பிரச்சனை பற்றிய கொள்கை சற்றே தெளிவற்றது தான் எனக் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்கு உரியது" எனக் கூறும் இந்த மார்க்சிய விரோதி அதை எப்படித் தெளிவற்றது என விளக்க முடியவில்லை. யார் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே இந்த கார் அறிஞர். பெயர்கள், பெயரால் கூட கட்டுரையில் விளையாட்டு தொடர் சரியில் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு எதிராக வளம் சேர்க்கும் வித்தையில் கைதேர்ந்துள்ளார் அ.மார்க்ஸ் என்ற அறிவுக் குஞ்சு.


அடுத்து அ.மார்க்ஸ் குறிப்பிடுவதைப் பார்ப்போம். "எனினும் 1915 வரை தேசங்களின் தோற்றம் பற்றிய லெனினது சிந்தனையில் தொடக்க கால முதலாளிய எழுச்சியோடு தேசியத்தை இயந்திர கதியில் இணைத்தும் பார்க்கின்ற போக்கு வெளிப்படுகின்றது." என லெனினுக்கே மார்க்ஸ் ஏங்கல்ஸ்சின் n:கலியத் தாக்கம் இருந்ததாக வார்த்தையால் பிரிவது காட்டுகின்றார். . அதாவது லெனினின் தேசிய இனக் கோட்பாட்டையும், ஸ்ராலினின் தேசிய இனக் கோட்பாடு பொதுத் தன்மையை சிதைக்க லெனினை இரண்டாகப் பிரித்துப் பார்க்கக் கோருவதன் மூலம் மாக்சியத்தையும் லெனினியத்தையும் இரண்டாக்கி அதன் உள்ளடக்கத்தைச் சிதைக்க, சந்தேகத்தை விதைக்க செய்த முயற்சியின் விளைவே இவை.


இது மட்டுமல்ல மார்க்ஸ்-ஏங்கல்சுக்கு N:கலியத் தாக்கம் இருந்ததாக அ.மார்க்ஸ் சொல்வது ஸ்ராலின் தேசியத்துக்கு உண்டு என்கின்றார். அதாவது மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையின் ஒரு பகுதி n:கலின் தாக்கம் கொண்டது என்பதன் ஊடாக அதன் உயிர் உள்ளடக்கத்தை கேள்விக்கு உட்படுத்தி மாக்சிய, லெனினிய, மாவோ சிந்தனையின் புரட்சிகர வரலாற்று ஓட்டத்தை சிதைத்துவிட செய்யும் முயற்சியின் விளைவு தான் இது. முன்பு ரோசாவை உயர்த்த லெனினைப் போற்றி பின் n:கலை அழைக்கும் மோசடி தான் இந்த அ.மார்க்சின் சதித்தனமான சேறடிப்பாக உள்ளது.


லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு எடுத்த எடுப்பில் மிக புரிந்து கொள்ள இலகுவானது ஒரு குடும்பத்தில் எப்படி விவாகரத்துப்பற்றிய சுயநிர்ணய கோட்பாடு உள்ளதோ அதே அளவுக்கு தேசிய சுயநிர்ணயக் கோட்பாடு இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியது.


தேசிய சுயநிர்ணயக் கோட்பாடு தெளிவற்றது எனக் கூறுபவன் உண்மையில் இப்படிக் கூறியபடி மக்களை ஏமாற்றி தமது சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க செய்யும் முயற்சியின் வெளிப்பாடு தான்.


தேசியம் ஒரு முதலாளித்துவக் கோரிக்கை என்ற அடிப்படை உண்மையை மறுத்த அந்தோனிசாமி மார்க்ஸ் ஒரு இடத்தில் தானும் விஞ்ஞான பூர்வமாக அதை நிறுவி அதை வெளியில் காட்ட முடியாது போய் உள்ளார். ஆனால் வார்த்தைகளால், விஞ்ஞான ரீதியில் விவாதிக்க முடியாததை மீள மீள கூறுவதன் மூலம் மட்டுமே, மீள மீள இதை ஒப்பிக்க முடிந்துள்ளது. ஒரு பைபிளாகத்தான் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகம் உள்ளது.


அதாவது சமய வாதிகள் கடவுள் உண்டு எங்கே என்றால் எங்கும் உண்டு என்பது போல் அதை விளக்க முடியாது, உண்டு, அது அற்புதம் இது அற்புதம் எனக் கூறிப் பிழைப்பது போல் தான் அ.மார்க்ஸ் தேசியம் முதலாளித்துவம் இல்லை எப்படி என்றால் இல்லை முதலாளித்துவம் இல்லை என வார்த்தை விளையாட்டை விளையாடுகின்றாரே ஒழிய, விஞ்ஞான பூர்வமாக ஒன்றையும் விளக்க முடிவது இல்லை.


இனி அ. மார்க்ஸ் தொடரும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். "ஆக தேசிய இயக்கம் என்பது வளர்ந்து வரும் முதலாளியக் காலகட்டத்துக்கு மட்டுமே உரியது என்கின்ற கருத்தில் இருந்து மார்க்சியத்தை விடுதலை செய்தார் லெனின். இக்கால கட்த்தில் இருந்து அதாவது முதலாம் உலகப் போருக்கு பின்பு ( 1915-16) லெனின் காலனிய விடுதலைப் போராட்டக்களைச் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களாகவே பார்க்கத் தொடங்கினார். தேசியம் என்பது வெறும் முதலாளித்துவ நிகழ்வு அல்ல. காலனிய அரைக் காலனிய நாடுகளின் தேசியப் போராட்டங்கள் என்பன தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தோன்றிவரும் முதலாளிகள் ஆகியோரால் நடத்தப் படலாம். ...... ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் காலனிய நாடுகளின் விடுதலையை ஆதரித்து கருத்துரைத்துள்ள லெனின், இவற்றில் எங்கும் ஸ்ராலினின் தேசியம் பற்றிய வரையறையை கைக்கொள்ளாததும் கவனிக்கத் தக்கது." என்று மிக நுணுக்கமாக லெனினைத் திரித்து லெனினின் பெயரால் லெனினுக்கு எதிராகவே கதை சொல்லும் இந்த அ.மார்க்ஸ் என்ற ஏகாதிபத்திய கோட்பாளரின் அடிப்படையை அவரின் மேற்கோளில் இருந்து ஆராய்வோம்.


லெனின் தேசியத்தை முதலாளித்துவத்துக்கு உரியது மட்டும் என்பதில் இருந்து விடுவித்தார். என அ.மார்க்ஸ் லெனினின் பெயரால் கூறும் போது, ஏதோ லெனின் மார்க்ஸ்-ஏங்கல்சில் தவறுகளில் இருந்து விடுவித்து பாதுகாத்ததாக பிரகடனம் செய்கின்றனர். மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தேசியத்தை முதலாளித்துவத்தின் கூறு எனக் கூறியதை லெனின் மறுத்தார் என வேறு விளக்கம் கொடுக்கின்றனர். அதுதான் லெனின் பெயரால் "தேசியம் வெறும் முதலாளித்துவ நிகழ்வு அல்ல" எனக் கூறுவது லெனினையே மறுத்துத் திரிப்பதாகும்.


லெனின் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம் .





"தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் | பொது வழக்கும் ஆகும் | "


தே.இ.சு.உ.-லெனின்-


உண்மையில் தேசியம் என்பது முதலாளித்துவத்தின் கோரிக்கையே ஒழிய பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அல்ல. உலகில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் நடைபெற்ற ஆயிரம் ஆயிரம் தேசிய விடுதலைப் போராட்டங்களை பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கவில்லை. மாறாக தேசிய முதலாளித்துவப் பிரிவுகளால் தான் கோரப்பட்டன. இங்கு சர்வதேசிய வாதிகள் இந்த ஜனநாயகக் கோரிக்கையை அங்கீகரித்து ஆதரித்த அதேநேரம், அதை விமர்சித்து சர்வதேசியக் கண்ணோட்டத்திலும் முன்னெடுக்கின்றனர்.


தேசியம் ஏன் முதலாளித்துவ பிரிவுகளின் கோரிக்கையாக உள்ளது. நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் போதும், அரைக் காலனி அரை நிலப்பிரபுத்துவத்தில் அல்லது நலகாலனியில் இருந்து முதலாளித்துவத்தை கோரிய போதும், தரகு முதலாளிக்கு எதிராக தேசிய முதலாளித்துவத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் தான் தேசியம் மையப்படுகின்றது.


ஒரு முதலாளிப்பிரிவு தேசியத்தைக் கோரும் போது அதனுடன் கூடிய பல விடையங்கள் அதை ஒட்டி செயல்படுகின்றன, என்பதை மார்க்சிய வாதிகள் மறுப்பதில்லை. பொதுவில் அவைகளே இதன் மீதான உயிர் மூச்சாக இருக்கின்றது. காலனி, அரைக்காலனி, நவகாலனி நாடுகளில் கூட தேசிய முதலாளிகள் தமது சொந்தப் பொருளாதாரத்தை மையமாக வைத்தே தேசியத்தைக் கோருகின்றனர். ஆனால் பாட்டாளிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளுர் தரகுப் பிரிவுக்கு எதிராக ஒரு வர்க்கப் போராட்டத்தை சர்வதேசியக் கண்ணோட்டத்தில் ஒரு நாட்டுக்குள்ளும் கோருகின்றனர். இது முதலாளித்துவ தேசியத்தை பகுதியளவில் உள்ளடக்குவதால் தான் இது புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. புதிய ஜனநாயகப் புரட்சி என்பது வர்க்கம் மற்றும், முதலாளித்துவ தேசியப் புரட்சியை சாரம்சத்தில் உள்ளடக்கி உள்ளது. அதாவது வர்க்க சக்திகள் தேசிய முதலாளித்துவத்துடன் இணைந்து ஒன்றிணைந்த புரட்சியை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் முன்னெடுக்கின்றனர். இது முதலாளித்துவ தேசியப் பொருளாதாரத்தை கோரும் அதே நேரம் வர்க்கப் போரை உள்ளடக்கி உள்ளது. இது சாரம்சத்தில் சர்வதேசியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டமாகும்.


காலனிகளைக் கைப்பற்றிய போது அந்தக் காலனித்துவக் காலத்தில் காலனிகள் ஒரே தேசமாக பெரும்பாலும் இருந்தது இல்லை. இந்த நாடுகளைக் கைப்பற்றிய நாடுகள் தமக்கு சார்பான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாலும், உள்ளுர் பிரிவுகளின் வளர்ச்சியாலும் புதிய முதலாளித்துவப் பிரிவுகள் எழுச்சி பெற முயன்றன. இதனால் தம்மை தேசியமாக இனங்கண்டு கொள்ளுதல் உள்ளுர் சந்தையைக் கைப்பற்றவும் நடந்த முரண்பாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் விளைவிலும் தேசியக் கோரிக்கை விழிப்புணர்ச்சிக்கு வந்தன. இங்கு தேசியக் கோரிக்கை என்பது தேசிய முதலாளிகளின் அடிப்படை நலன்களில் இருந்து தான் எழுச்சி பெற்றன.


தேசிய முதலாளித்துவப் பிரிவுகள் அடிமட்ட உழைக்கும் பிரிவுகள் முன,; தனது சுரண்டல் மூலம் கூடுதல் லாபம் பெற முடியும் என்ற வாக்குறுதிகளில் தான், அவர்கள் தேசிய முதலாளித்துவ சிந்தனையின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அது பாட்டாளி வர்க்கத் தலைமையில் அல்ல.


1917 சோவியத் புரட்சியின் பின் காலனி நாடுகளில் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் உருவாகிய போது, தேசியமாக உருவாகி வந்த தேசியத்தின் சுதந்திரத்திற்கான சுயநிர்ணயக் கோரிக்கையை கட்சி தனதாக்கியது. ஒரு பல்தேசிய நாட்டுக்குள் இருக்கும் ஒரு தேசம் தேசியமாக வளர்ந்து தன்னை அடையாளப்படுத்தி, தனது சந்தையை தனக்கு மட்டும் சுரண்டக் கோரும் தேசிய முதலாளித்துவக் கோரிக்கையான தேசியம் போன்றது தான். ஏகாதிபத்தியத்தில் காலனிகள் இருந்தன.


இக்காலனிகள் தம்மை தேசியமாக அடையாளப்படுத்தியதன் விளைவும், தேசிய முதலாளிகள் தமது நலன்களில் நின்று தமக்கான சுரண்டும் நாட்டைக் கோரினர். ஆனால் பாட்டாளிகள் விழிப்புற்ற போது தேசிய முதலாளிகளில் இருந்து வேறுபட்டு சுயநிர்ணயத்துக்கான கோரிக்கையின் அடிப்படையில் போராடினர். உலகப் புரட்சி சாத்தியமாகாவிட்டால் சொந்த நாட்டு வர்க்க தேசியப் புரட்சியை முன்னெடுக்கவும் பாதுகாக்கவும் கோரும் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை சர்வதேசியக் கண்ணோட்டத்தில் முன்னெடுத்தது.


இன்று இலங்கையில் இலங்கைப் புரட்சி என்பது பின் தள்ளப்பட்டு உள்ள நிலையில் தமிழீழ மக்கள் தமது சொந்தப் புரட்சியை முன்னெடுப்பது அவசியமாகின்றது. நோர்வே சுவீடனில் இருந்து பிரிந்த போது என்ன நிலையோ அதே நிலைதான் காலனி நாடுகளில் பொதுவாக இருந்தது.


இரண்டாவது ஒரு தேசமாக ஒரு தேசம் தன்னை அடையாளப்படுத்திய நிலையில் நடக்கும் ஒரு ஆக்கிரமிப்பில் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரை பாட்டாளி வர்க்கம் கோருகின்றனர். இது அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவ நாடுகளுக்கும் நவகாலனி நாடுகளில் பெரும்பாலும் சாராம்சத்தில் வர்க்கப் போராகவும் அதே நேரம் தேசியப் போராகவும் உள்ளது. இந்த தேசிய உள்ளடக்கம் பாட்டாளிகளின் தலைமையில் முன்னெடுத்தாலும் தேசிய முதலாளித்துவத்தையும் உள்ளடக்கியதே.


இது சாரம்சத்தில் புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. இந்த புதிய ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம் வர்க்கப் போரையும் தேசிய முதலாளிப் பிரிவையும் ஒன்றிணைக்கின்றது. இந் நாட்டில் நடக்கும் தேசியப் போர் சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது. முதலாம் உலக நாடுகளில் தேசியப் போர் இருக்க முடியாது. இருக்க முடியும் எனின் அது உலக நாடுகளைப் பங்கிடும் போராகவே இருக்கும்.


சர்வதேச வர்க்கப் போர் என்பது ஒவ்வொரு நாட்டின் வர்க்க மற்றும் தேசியப் போரின் ஒட்டுமொத்த வடிவமே. ஒவ்வோரு நாட்டில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பிரதான எதிரிக்கு எதிராக உள்நாட்டிலும், ஏகாதிபத்துpயத்துக்கு எதிராக நடக்கும் போது அது ஒரு தேசியமாக உள்ளதுடன் அது சர்வதேசியப் போராகவும் உள்ளது. இது தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்த போராக உள்ளது.


பல்தேசிய நாடுகளிலும் உள் நாட்டுத் தேசியப் போரிலும் இவைகளை சாராம்சத்தில் உள்ளடக்கமாகக் கொண்டது. அதேநேரம் இவை புதிய ஜனநாயகப் புரட்சியாக உள்ளது.


எனவே தேசியப் போர் அனைத்தும் தேசிய முதலாளித்துவப் போராக உள்ளது. இங்கு பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் காலனி மற்றும் அரைக் காலனி மற்றும் நவகாலனி நாடுகளில் புதிய ஜனநாயகப் புரட்சி வடிவத்தின் ஊடாக தேசிய முதலாளித்துவத்தை அங்கீகரித்து அதற்கு தலைமை கொடுப்பதன் மூலம் அதைச் சர்வதேசிய போராக வழிநடத்த முனைகிறது.


ஒரு நாடு தனக்காக ஒரு அரசைக் கொண்டுள்ள போது அங்கு ஒருக்காலும் பாட்டாளிகள் சுயநிர்ணயத்தைக் (தேசியத்தைக்) கோரும் அடிப்படை எழுவதில்லை. ஏன் எனின் அங்கு வர்க்கப் போர்தான் நடத்தப்படுகின்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போது சர்வதேசிய போராக இருக்கின்றது. இங்கு தேசியத்தை முன்வைப்பின் அங்கு முதலாளிததுவப் பிரிவே முன்வைக்கின்றது. இங்கு இந்த ஜனநாயகக் கோரிக்கையை ஆதரித்து, அங்கீகரித்து பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கின்றனர். அதாவது பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கோரி அதை அங்கீகரித்துப் போராடுவது வேறு ஆனால் வாக்களிப்பில் பங்கு கொள்ளாமல் விடுவது வேறு. இது தான் தேசியத்திலும், ஏகாதிபத்தியத்திற்குள் எப்படி உலகம் உள்ளதோ அது போல்தான் ஒரு பல்தேசிய நாட்டுக்குள்ளும் ஒவ்வோரு தேசியமும் உள்ளன. ஒரே ஒரு வேறுபாடு ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள நாட்டு அரசுகள் போல் அரசு வடிவம் மட்டும் இருப்பதில்லை. இதைக் கோரி சுயநிர்ணயக் கோட்பாட்டில் பாட்டாளி வர்க்கம் போராடுகின்றது. ஏகாதிபத்தியத்திற்குள் உள்ள நாட்டு அரசுகள் போல் அரசைக் கோரிப் போராடுவது பாட்டாளிகளின் கோரிக்கை அல்ல. அது தேசிய முதலாளிகளினதும் அதன் தோல்வியில் தரகு முதலாளிகளுக்கு எதிரான கோரிக்கையாக உள்ளது.


ஆனால் பாட்டாளிகள் சர்வதேச உலக நோக்கில் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தான் அரசைக் கோருகின்றனர். இது சர்வதேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டது. தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு உற்பத்தி முறையில் கொண்டது. அதன் மீது கட்டமைக்கப்பட்ட அரசு வடிவம் வேறுபாடு கொண்டது. எந்த உற்பத்தி எந்த அரசு என்பதில் தேசியக் கோரிக்கைக்கும், சர்வதேசியத்தின் கோரிக்கைக்கும் இடையில் தெளிவாக வேறுபாடு உண்டு. இதன் அடிப்படையில் தான் தேசிய முதலாளித்துவக் கோரிக்கை என்பதை நாம் தெளிவாக்க முடியும்.


இனி ரஷ்சியப் புரட்சிக்குப் பின் சர்வதேசிய புரட்சி நடக்க முடியாது போன நிலையில் ருசியப் புரட்சி கூட மற்றைய நாட்டு அரசுகளுடன் சாராம்சத்தில் முதலாளித்துவக் கூறுகளை சர்வதேசிய ரீதியில் கொண்டு இருந்தது. ஏகாதிபத்தியத்துடன் நடக்கும் வர்த்தகங்கள் மற்றும் அனைத்துப் போரும் பாட்டாளி வர்க்க நிலையில் அல்ல முதலாளித்து சந்தைப் பொருளாதார அடிப்படையிலானதாகவே இருந்தது. இது உலகளவில் சோவியத்தை ஒரு முதலாளித்துவப் புள்ளியாக்கி இருந்தது. தனது தேசியத்தைப் பாதுகாக்கக் கோரியது.


சோவித்தின் உள் வர்க்கப் புரட்சியும் சர்வதேசிய அரசுகளுடன் ஒரு முதலாளித்துவ உறவும் நீடித்த தேசியப் புரட்சியாக இருந்த அதே நேரம் சர்வதேச ரீதியாக வர்க்கப் புரட்சியை நடத்தக் கோரியது.


சோவியத்தில் இரண்டு கூறுகள் உள்ளடக்கமாக இருந்த அதே நேரம் இது வர்க்கப் புரட்சியாகவும், தேசியப் புரட்சியாகவும் இருந்தன. இது தேசியப் புரட்சியாகவும் சர்வதேசியப் புரட்சியாகவும் இருந்தது.


இது மட்டும் தான் அன்றைய சர்வதேச யுத்த தந்திரமாக இருந்தது. இந்நிலையில் உள்ளுர் வர்க்கப் போராட்டம் முதலாளி வர்க்கத்தால் தோற்கடிக்கப்பட்டபோது, சர்வதேச முதலாளித்துவ உறவு அதை வேகப்படுத்தியது. அதாவது சோவியத் உள்வர்க்கப் புரட்சியும் சர்வதேசிய வர்க்கப் புரட்சியை உலகில் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச நிலையில் ஒருக்காலும் உள்ளுர் முதலாளித்துவ மீட்சி சாத்தியமில்லை ஏனெனில் உலகளாவிய வர்க்கப் புரட்சி அதை நசுக்கி விடும். சோவியத்தில் முதலாளித்தவ மீட்சி மிக வேகமாக வெற்றி பெற வர்க்கப் புரட்சி உலகில் வெற்றிபெற்று இல்லாதது ஒரு காரணம். சோவியத்தின் தேசியம் கூட முதலாளித்துவத்தின் வடிவமே ஒழிய பாட்டாளி வர்க்கத்தின் உடையது அல்ல. சோவியத்தினுள் வர்க்கப் போராட்டம், சர்வதேச ரீதியில் தேசிய முதலாளித்துவம் என்ற நிலையில் நீடித்தன. உலகளவில் வர்க்கப்புரட்சியைக் கோரியபடி சோவியத்தைப் பாதுகாக்க தேசியத்தை பாட்டாளிகள் கோரினாலும் அங்கு முதலாளித்துவக் கூறு உள்ளடக்கத்தில் உள்ளது. அது எப்போது சரியானது எனில,; சர்வதேச ரீதியாக அது எந்நிலையில் எப்படி உள்ளது என்பதைப் பொறுத்ததே.


அடுத்து லெனின், ஸ்ராலினின் வரையறையை ஒருக்காலும் ஏற்கவில்லை என்ற கண்டு பிடிப்பு நகைப்புக்கு உரியது. ஸ்ராலினின் தேசிய இனக் கொள்கையை லெனின் தான் மிகச் சிறந்த ஆய்வு எனப் பாராட்டினார். ஸ்ராலினின் ஆய்வுகள் மாபெரும் மேதைக்கு உரியவை என கூறியவர் லெனினே ஒழிய அ.மார்க்ஸ் அல்ல.


லெனினும்- ஸ்ராலினும் பக்கம் பக்கமாக இயங்கியபோது ஒன்றின் தொடர்ச்சி ஒன்றாகவே லெனின்-ஸ்ராலின் இயங்கியவர்கள். லெனின் ஸ்ராலினின் வரையறையை மறுத்தோ, மீறியோ கருத்துக் கூறவில்லை. ஸ்ராலினின் வரையறை அடிப்படையில் நின்று தான் தேசிய இனக் கோரிக்கை பற்றிக் கருத்துக் கூறியவர்.


ஸ்ராலினின் வரையறையை லெனின் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை என லெனினைக் கூட பொய்யாக்கிய அ.மார்க்ஸ் எப்படி மார்க்சியத்துக்கு எதிராக விபச்சாரம் செய்ய தன்னை போல் அழைப்பதற்கு எதிராக லெனின் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம்.


"விற்பனை கண்ட உற்பத்தியின் முழு வெற்றிக்கு உள்நாட்டு மார்க்கட்டை பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம் ஒரே மொழி பேசும் மக்களைக் கொண்ட, அரசாங்க ரீதியில் ஐக்கியப் படுத்தப்பட்ட நிலப்பிரபுக்கள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடித்தளம் இருக்கிறது (அடிக்கோடு நாம்)"


(லெனின்-- தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பக்கம் 9)


லெனின் தெளிவாக ஸ்ராலினின் நான்கு வரையறையை ஏற்பதுடன், ஸ்ராலின்-லெனின் ஒரு பொதுவழிiயைக் கொண்டு இருந்ததையும் அ.மார்க்சின் மார்க்சியத் திரிபை லெனின் புத்தகமே அம்பலப்படுத்துவதில் இருந்து அ.மார்க்சின் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.


ஏன் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே உங்களால் காட்ட முடியுமா இந்த நான்கில் ஒன்று கூட இல்லாத தேசியத்தை? அதாவது மார்க்சியத்தை மறுத்து திரிக்க என இருக்கும் உங்களாலேயே உங்கள் திரிபு அகராதியில் காட்ட முடியாத நிலையில் மார்க்சியத்தை விஞ்ஞான பூர்வமாக பார்த்த, லெனின் எப்படி ஐயா காட்டுவார். கொஞ்சங் கூட அறிவின்றி லெனினுக்கு முத்திரை குத்தி, திரித்துக் கயிறு விடுவதை கொஞ்சம் நிறுத்துங்கள்.


அடுத்து கயிறு திரிப்பைப் பார்ப்போம்.


"மையப்படுத்துப்பட்ட உருக்குப் போன்ற பொதுவுடமைக் கட்சி ஒன்றின் தேவையோடு முரண்படுகின்ற பண்ட்கட்சி போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டிய சூழலில் பாட்டாளி வர்க்கக் புரட்சி ஒன்று வெற்றி பெற கூடிய நிலையில் அதனை இந்தப் "பிரிவினைக்" கோரிக்கை அழித்துவிடக் கூடாதே என்ற கவலையோடு இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. இதனை ஸ்தூலமான வரலாற்றுச் சூழலில் இருந்து பிரித்து என்றென்றைக்குமான கோட்பாட்டு மேற்கோள்களாக சுருக்குவது ஆபத்தானது. தேசிய இனப்பிரச்சனை குறித்த லெனினின் கருத்துக்கள் ரொம்பவும் நடைமுறை சார்ந்தது என்ற குற்றச் சாட்டு வைக்கப்படுவதுண்டு, கூர்ந்து கவனித்துப் பார்த்தால் நடைமுறை சார்ந்தது என்பதைக் காட்டிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தேசிய இனப் பிரச்சனையில் லெனின், வர்க்கப் பரட்சியின் நல்ல நோக்கிலேயே அணுகியுள்ளார்." என லெனினை அப்படியும் இப்படியும் கூறி லெனினையே இரண்டாகப் பார்க்கக் கோருகின்றார் அ.மார்க்ஸ்.


ஒருக்கால் நடைமுறை வாதி என்றும் அடுத்து வர்க்கப் புரட்சி நலன் வாதி எனக் கூறுவதன் மூலம் வாசகர்களை உலுப்பி எடுத்து வாசகர்களை குழப்பும் போது அதற்குள் தனது திரிபை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட முனைகின்றார் அ.மார்க்ஸ்.


பணட்கட்சியின் கோரிக்கையை லெனின் ஏன் எதிர்த்தார் என அ.மார்க்ஸ் கண்டு பிடித்து திரித்து கூறுகின்றார். "பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று வெற்றி பெற கூடிய நிலையில்" தான் என்பது மிக மோசமானன மாபெரும் பொய்யும் திரிபுமாகும்.


பாட்டாளி வர்க்கப் புரட்சி ஒன்று நடக்க முடியாத நாடுகளில் பணட்கட்சியின் கோரிக்கை ஏற்கப்படலாம். அதாவது புரட்சி நடக்கும் என ஊகித்தால் மட்டும் தான் எதிர்க்க வேண்டும். அ.மார்க்ஸ் ஐயா அவர்களே ஏன் ஐயா உங்கள் கோட்பாடு இப்படி நழுவுகிறதே. இனி நாம் புரட்சி நடக்குமா என அதிஷ்டம் பார்த்துத் தான் நாம் கட்சிக் கொள்கைகளை வகுக்க வேண்டும். என்கின்றார் அ.மார்க்ஸ். அடுத்து புரட்சி நடக்காது எனின் நீ ஏன் சும்மாய் போராடுகின்றாய் என்று கேட்டு விடுவார் அ.மார்க்ஸ் ஐயா. வர்க்க சமரசம் தான் நன்மையானது என்கின்றார். அதாவது பின் நவீனத்துவ வழியில் சிறு போராட்டங்கள் ஊடாக சமரசம் காணக் கோருகின்றார்கள்.





மார்க்ஸ் இதைச் சொல்லும் போது இந்தியா புரட்சி சாத்தியம் இல்லை கணிப்பில்; நின்றபடிதான் இதை முன்வைக்கின்றார். ஆகவே அ.மார்க்ஸ் இன் புரட்சி பற்றிய வாய் சவடால் எல்லாம் போலியானவை, ஏமாற்றம், மோசடித்தனமானவை என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றார். பதிலாக ஏகாதிபத்திய வர்க்கக் கோட்பாட்டை முன்வைப்பதை ஏற்கின்றார்.


ஒரு கட்சியின் தேவையை ஏற்காதவர்களுக்கு புரட்சி நடக்க முடியாத நாடு என முன்கூட்டியே அதிஸ்டம் பார்த்து கட்சிக்குள் கட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்கின்றார். தாம் உள்ளிருந்து புரட்சி நடக்க விடாது அரித்துத் தின்ன உரிமை வேண்டும் என்பதை ஏகாதிபத்திய ரொக்சிய அடிவருடித் தனத்தின் தொடர்ச்சிதான் இவை. கட்சிக்குள் ஏகாதிபத்தியங்கள் தமது உளவாளிகளை அனுப்புவது போல், திரிபு வாதிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கு அதே வேலையைச் செய்ய கட்சி இடம் விடவேண்டும் எனக் கோட்பாட்டு வடிவில் கோருகின்றார். இது நடந்து விட்டால் புரட்சியும் மண்ணாங் கட்டியும் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றார் அ.மார்க்ஸ். ஏனெனின் புரட்சி நடக்கக் கூடிய நாடு இல்லை அல்லவா நாங்கள் உள்ள கட்சி என்கின்றார்.


லெனினின் தேசிய இனப் பிரச்சனை நடைமுறை சார்ந்தது என்கின்றார். அதாவது ஒரு போதும் கோட்பாடே அல்ல என்கின்றார். இது ரஷ்சியாவிற்கு மட்டும் பொருந்தும் என்கின்றார்.


இதைவிட மோசமான தேசிய எதிர்ப்பாளரை நாம் பச்சை இனவாதியிடம் கூட காண முடியாது. லெனின் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை நிராகரித்தால் உலகில் தேசங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை நிராகரித்ததற்கு சமமாகும். இதைவிட இன, நிறவாதிகள் அ.மார்க்சைவிட ஒரளவு சலுகை வழங்கும் அளவுக்கு உள்ளனர். அ.மார்க்சின் தேசிய தாராளவாதக் கூப்பாடுகள் உண்மையில் தேசத்தின் சுயநிர்ணயத்தை மறுத்த உலக மயமாதலைப் பாதுகாக்கும் கோட்பாட்டின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே.





அதனால் தான் அ. மார்க்ஸ் "....... ஸ்மல், ஸ்டாகி போன்ற லெனின் எதிர்ப்பாளர்கள் அவரது சுயநிர்ணய உரிமை முழக்கத்தை ~ரஷ்சியர் அல்லாத தேசங்களை ஏமாற்றி விரைவாக அவர்களது தேச உணர்வை அழிப்பதற்கான ரொம்பவும் தந்திரமான பிரச்சாரம்| என வசைபாடியுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கது." எனக் கூறுவதன் மூலம் ஸ்மல் ஸ்டாகியுடன் சேர்ந்து தானும் வசைபாடியுள்ளார். ஏன் எனின் அவர் வசைபாடினார் எனக் கூறிக் கொண்டு இது ~கவனிக்கத்தக்கது| எனக் கூறும் போது அ.மார்க்ஸ் சேர்ந்தே வசைபாடுகின்றார்.


இப்படி கூறி சொல்லும் நரித்தனம் கைதேர்ந்த மோசடி பிழைப்புவாத அரசியல் வாதிகள் இடம் தான் உள்ளது. தேசத்துக்கு இடையில் உள்ள பிளவை ஜனநாயக பூர்வமாக காட்ட முனைவதை யார் எதிர்க்கின்றாரோ அவர்கள் முதலாளித்துவத்தினது அருவருடிகளே. இது தான் ~வெள்ளைத் திமிர்| என்ற நூலில் அ.மார்க்ஸ் ~ஒவ்வொரு ஐரோப்பியனும் இனவாதி| என முத்திரை குத்தி பிளவைக் கோருகின்றார். ஐக்கியப் பட்ட போராட்டத்துக்கு அழைப்பதற்குப் பதில், அந்த நாட்டில் வாழும் மற்ற நாட்டவர்களை ஐரோப்பியருடன் இணைய வேண்டாம் என்கின்றார். தலித் மக்கள் எனப் பிளந்து, அவர்களை மற்றப்பிரிவுகளுடன் இணைந்து போராட வேண்டாம் என்கின்றார். இதை மெருகூட்டி பின் நவீனத்துவத்தை முன் தள்ளுகின்றார்.


தேசங்களுக்கு இடையிலும் மக்களுக்கு இடையிலும் உள்ள பிளவை ஜனநாயக பூர்வமாக, விருப்ப பூர்வமாக கடக்கக் கோரும் எல்லா நடைமுறை மற்றும் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் சர்வதேசியத்துக்கு எதிரானவர்கள். மாறாக தேசியம் என்ற பெயரில் உலக மயமாதலில் சரணடைகின்றனர்.


தம்மை உலகளவில் பாட்டாளிகளாக அடையாளப்படுத்தி ஐக்கியப்படுவதை எதிர்த்து ~கவனிக்கத்தக்கது| என அ.மார்க்ஸ் அடையாளப் படுத்திக் கூறும்போது, எவ்வளவு வக்கிரமாக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிராக இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.


அடுத்து அ.மார்க்சின் தேசியம் பற்றிய ஆய்வைப் பார்ப்போம். "....... ஒரு குறிப்பிட்ட நில எல்லை இல்லாமலேயே பண்பாட்டுச் சுயாட்சி உரிமையை கோரிய ~பண்ட்| களை ~நீங்கள் ஒரு தேசியம் இல்லை| என ஒதுக்குவதும் தேசம் என்பது தொடக்க கால முதலாளியமே என வற்புறுத்துவதன் மூலம் சோசலிச ரஷ்சியாவில் தேசிய இனக் கோரிக்கைக்கு உரிமை இல்லை என மறுப்பதும் போல்சுவிக்குகளுக்கு சாத்தியமாயிற்று." என அ.மார்க்ஸ் தாராள வாதத் தேசியம் எப்படி உண்மையில் உள்ள தேசியத்தை மறுக்கின்றது எனப் பார்ப்போம்.


~பண்ட்|களுக்கு ஒரு நிலத் தொடர் இல்லாமல் எப்படி ஒரு தேசமாக இருக்க முடியும் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே? நிலத் தொடர் இல்லாமல் எப்படி சுய நிர்ணயம் என்ற கோட்பாடு பொருந்தும் ஐயா? நிலத் தொடர் இல்லாத தமிழ் நாட்டு முஸ்லீம்கள், தமிழ் நாட்டு கன்னடர், கொழும்புத் தமிழர், கொழும்பு முஸ்லீம் எப்படி ஒரு தேசியத்தைக் கோரி தேசமாக இருக்க முடியம்? விளக்குங்கள் ஐயா? வார்த்தைகள் வேண்டாம் ஏழைகளைப் பார்த்து மனிதாபிமானமாகப் பேசிப் பேசி அவனுக்காக போராடாத மனிதன் போல், தேசியத் தாராளவாதம் பேசுவதில் என்ன அர்த்தம் தான் உண்டு. எல்லாம் பிழைப்புக்கான தொழில் ரீதியான மோசடியே.


உண்மையில் நிலத் தொடர் இல்லாத மக்கள் பிரிவை நீங்கள் தேசம் என்று கூறுவதன் மூலம், உண்மையில் அவனின் சரியான அடையாளப் படுத்துப்பட்ட போராட்டத்துக்குப் பதில், கண்ணை மூடி மோதி அழி எனக் கோருவதன் மூலம் தேசியத்துக்கு எதிராக உள்ளனர். அத்துடன் அந்த மக்களுக்கு எதிராக உள்ளனர்.


உலகளவில் ஒரு நாடு பலாத்காரமாக உருவாக்கப்பட முன் யூதர்களுக்க எதிரான ஒடுக்கு முறை இருந்த நிலையில் அவன் ஒரு தேசியத்தைக் கோரின் அவனின் பிரச்சனை எப்படி தீர்க்கப்படும். தேசிய இனமே இல்லாத இந்த சிதறி வாழ்ந்த யூதர்களுக்கு தீர்வு வாழும் நாட்டில் அந்த மக்களுடன் சேர்ந்து போராடுவதே ஒழிய, வெளியில் அல்ல. ஒரு தேசிய இனம் என தன்னை அடையாளப் படுத்தின், அது ஒரு தேசமாக இருக்க வேண்டும். அதாவது நிலத் தொடர், பண்பாடு, பொருளாதாரச் சந்தை, கலாச்சாரம் என இவைகளைக் கொண்ட ஒரு தேசம் இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு அரசாக இருக்கத் தேவையில்லை. இனங்களுக்குள் உள்ள பல்வேறு கூறுகளின் செயல்பாட்டில் தான் அரசின்தேவை தேவை இன்மை கருக் கொள்கின்றது.


அடுத்து சோவியத்தில் தேசிய சுயநிர்ணயம் மறுக்கப்பட்டது என்கின்றார். அதுவும் முதலாளித்துவம் எனக் கூறி அதனடிப்படையில் என்கின்றார். ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார நாட்டில் சுரண்டலுக்கு எதிரான போர் தொடுக்கப்படுகின்றது. இது மதம், இனம், நிறம், மொழி, பண்பாடு, கலாச்சாரம், சாதி, பொருளாதாரம், நிலத்தொடர் கடந்து நடத்தப்படுகின்றது. இந்நிலையில் முதலாளித்துவ மீட்சி இவைகள் ஊடாக வெளிப்படுத்த முனைகிறது. இங்கு ஒவ்வொரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமை அதற்குள் புதிதாய் வேறு ஒன்றால் மாற்றீடு செய்யப்படுகிறது.


ஒரு பாட்டாளி வர்க்க அரசில் சுரண்டல் ஒழிக்கப்பட்டபின், ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இரு பாட்டாளி இனங்களுக்கிடையில் எப்படி அ.மார்க்ஸ் ஐயா முரண்பாடு எழும்? கூறுங்கள் உங்களுடைய கோட்பாட்டில்.


ஏதாவது ஒன்று ஒடுக்கப்படுமாயின் அல்லது பாதிக்கப்படுமாயின் (சுரண்டல் அல்லாத கூறுகளில்) அந்த பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவமாகவே இருக்கும். அங்கு பாட்டாளி வர்க்க ஆட்சி என்பது அல்ல முதலாளித்துவ ஆட்சியாகவே இருக்கும். ஆனால் பெயரில் கட்சி, கொடி, ஆட்சி பாட்டாளிவர்க்கத்தின் பெயரில் இருக்கும்.


பாட்டாளி வர்க்க அரசில் ஒரு கோரிக்கை மனிதப்பிளவை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படின் நிச்சயமாக சுரண்டலை அடிப்படையாகக் கொண்டே எழுப்பப்படும். இது ஒரு முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டே இருக்கும். இதற்கு நாம் வெளிச்சம் பிடித்துக் காட்டத் தேவையில்லை.


அ.மார்க்ஸ் மேலும் தனது மார்க்சிய விரோத தாராள வாதக் கொள்கைக்கு "1904 இல் எழுதிய கட்டுரை ஒன்றில் ஸ்ராலின் ~உயர் பண்பாட்டு பொது நீரோட்டத்தில் பிற்பட்ட தேசங்களையும் மக்களையும் இழுக்கும் போதே காகேசியர்களின் தேசிய இனப் பிரச்சனை தீரும்| எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தில் வெளிப்படும் N:கலியத் தாக்கம் கவனத்துக்குரியது." என ஸ்ராலினை இரண்டாக்கும் அ.மார்க்சின் கருத்து ஏகாதிபத்தியக் கருத்தின் தாக்கத்தைக் கொண்டது மட்டுமின்றி சேறடிப்புமாகும். . மார்க்ஸ்;, எங்கல்ஸ் , லெனின் ஸ்டாலின் என அனைத்துப் பேருக்கும் பாதி n:கலியம் என வேறு மகுடம் இடுகின்றார்.


ஒரு உயரிய பண்பாட்டு, ஒரு உயரிய மனித விழுமியங்கள் ஒரு பிற்போக்கான பண்பாட்டை மனித விழுமியங்களை சிதைக்கின்றது. உயரிய பண்பாடும் பிற்போக்கான பண்பாட்டு உற்பத்தி முறையில் ஏற்படும் ஒவ்வொரு சிறு மாற்றத்திலும் பிரதிபலிக்கின்றது, ஐயா அ.மார்க்ஸ் அவர்களே. இதை மறுப்பவன் இதை பாதுகாக்க முனைவதன் தொடர்ச்சியே. ஏகாதிபத்தியமும் அதன் கைக் கூலிகளும் தான் உயரிய பண்பாட்டை மறுத்து பிளவை ஏற்படுத்தியும் தக்க வைக்கவும் முண்டு கொடுக்கின்றனர்.


சுரண்டல் அற்ற உயர்ந்த மனித மேம்பாடு மற்ற இனங்களை அதை நோக்கி இழுக்கின்றது. ரஷ்சியப் புரட்சி, 2ம் உலகயுத்தம், சீனப்புரட்சி, கலாச்சாரப் புரட்சி என்பன உலகப் புரட்சியின் ஒரு மயிர்க் கல்லாக உலமக்களின் விடுதலைக்கான நட்சத்திரங்களாக இருந்தன.


அடிமை உடமை சமுதாயத்தை ஒழித்த போது மற்றைய நாடு அந்தப் பண்பாட்டை தனதாக்கி அடிமை ஒழிப்பைக் கோரியது. நீ கறுப்பன் நான் வெள்ளை என்ற நிறவாதத்திற்கு எதிரான உயரிய பண்பாடு உலகில் இன்று எல்லா மக்களை அதற்குள் இழுக்கும் ஒரு பண்பாடாக உள்ளது. மதத்தைக் கடந்து, நிறத்தைக் கடந்து, ஆணைக் கடந்து, சாதியைக் கடந்து, எல்லையைக் கடந்து, இனத்தைக் கடந்து, மக்கள் ஒன்று இணைய விரும்பும் உயரிய பண்பாடு முற்போக்கானது. அது உலகில் நடந்தேயாகும். நாம் உலகளவில் எல்லாவற்றையும், எல்லா வேறுபாட்டையும் கடந்த ஒரு பண்பாட்டை வந்தடைவோம். இதை N:கலியத்தினது என முத்திரை குத்தி அ.மார்க்ஸ் எல்லாவற்றையும் கடந்த உயரிய பண்பாட்டை பின் நவீனத்துவ சாக்கடையால் நிராகரிக்கின்றார்.


அதன் மூலம் நிறவாதத்தைப் பேண, மதவாதத்தைப் பேண, இனவாதத்தைப் பேண, ஆணாதிக்க வாதத்தைப் பேண, சாதியைப் பேண விரும்பும் கோட்பாட்டின் உயரிய பண்பாட்டு எதிர்ப்பு அ.மார்க்சிடம் மையப்படுகின்றது.


இந்த உயரிய பண்பாட்டு எதிர்ப்பு இன்றைய உலக பிற்போக்கு யதார்த்தத்தின் பிரதிபிம்பத் தோற்றமாக உள்ளது. இதை பாதுகாக்க விரும்பும் அ.மார்க்சின் கோட்பாடு ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப் பட்டவையே. அ.மார்க்சின் சிந்தனை ஏகாதிபத்தியத்தின் தாக்கத்தைக் கொண்டதே ஒழிய உலக முன்னேற்றத்துக்குரியதுமல்ல மார்க்சியமுமல்ல.


அடுத்து உலக மயமாதல் என்ற ஏகாதிபத்தியத்தின் கோரிக்கையும், பாட்டாளி வர்க்க சர்வதேசிய கோரிக்கையும் நேர் எதிரானவை என்பதை நாம் மிகக் கவனமாக குறித்துக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்கம் சர்வதேசிய வாதியாவதை திட்ட வட்டமாக ஏகாதிபத்தியம் எதிர்க்கிறது ஆனால் பொருளாதாரம் உலக மயமாதலை திட்டவட்டமாக ஏகாதிபத்தியம் அமுல்படுத்துகின்றது.


இதன் அடிப்படை வேறுபாடு உலக மயமாதல், சுரண்டலை மேலும் மேலும் கோருகின்றது. சர்வதேசிய வாதம் சுரண்டலை ஒழிக்கக் கோருகின்றது. சமுதாயத்தில் பிளவுகள் உயர் பண்பாட்டால் கடக்காமல் நீடிக்கும் வரை சுரண்டல் நீடிக்கும். இது அனைத்துத் துறையிலும் பொருந்தும். பிளவுகளைக் கடந்த ஒரு பொது உயர்பண்பாடுதான் மனித குலத்தின் ஐக்கியத்தை அமுல்படுத்தும்.


பல்வேறு சாதிகளுக்கு இடையில் உள்ள வேறுபட்ட பண்பாடு ஒரு உயர் பண்பாட்டில் கடக்கப்படும். போது தான் சாதி ஒழியும். இந்த உயர் பண்பாடு உற்பத்தி முறை மாற்றத்தில் தான் சாத்தியம். உயர் பண்பாடு அதைச் செய்யாது எனக் கூறின,; உண்மையில் சமுதாயப் பிளவுகளில் ஆதாயம் தேடும் பிழைப்பு வாத மற்றும் சுரண்டிப் பிழைக்கும் பிரிவுகள் தான் இப்படிச் சொல்கின்றன. அ.மார்க்ஸ் என்ன விதிவிலக்கா? அதன் கோட்பாட்டைப் பாதுகாக்கும் இன்றைய மார்க்சிய எதிர் புரட்சிக் கதாநாயகர்கள் தான் இவர்களும் இவருடன் கூடிய அடிவருடிகளும் சீடர்களும் தான்.


அடுத்து அ.மார்க்ஸ் எடுத்து வைக்கும் அடியைப் பார்ப்போம். "வளர்ச்சியின் பிரச்சனையாக தேசியத்தை அணுகும் சிந்தனைகள் டாம் நாயர்கன், எக்னஸ்ட் கெல்னர் ஆகியோரின் கோட்பாடுகளை இதற்குள் அடக்க முயலலாம். தேசிய இனப் பிரச்சனை குறித்த மரபு வழிப்பட்ட மார்க்சிய அணுகல் முறையை மாபெரும் வரலாற்றுத் தோல்வி என ஒதுக்கும் நாயர்கங்களின், தேசிய அரசு தேசியம் போன்ற கருத்துக்கள் எல்லாம் விடுதலை என்ற கருத்தைப் போலவே கடந்த இரு நூற்றாண்டுகளாக பிரான்சு மற்றும் ஆங்கிலேயச் சமூகங்களில் இருந்து உலகின் பல பாகங்களுக்குப் பரவி வருவதாகப் பார்ப்பர். ~அய்ரோப்பிய மையவிலகல் கொள்கை|யின் ஒரங்கமாய் இதனை ஒதுக்குவர். ப்ளாட் நவீனத்துவ, மற்றும் உலக முதலாளித்துவத்தின் விளைவான சமச்சீரற்ற வளர்ச்சித் தர்க்க விரோதமான ஒரு கண்ணோட்டத்தைப் பின் தங்கிய பகுதி மக்கட் சமூகங்களின் மத்தியில் ஏற்படுத்துகின்றது. நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள், பொறாமை, ஆத்திரம், வெறுப்பு ஆகியவற்றை அம் மக்களின் உளவியலில் ஏற்படுகின்றது. இது பின் தங்கிய தேசங்களில் தேசியக் கருத்தியலாகவும், தேசிய இயக்கங்களாவும் வெளிப்படுகின்றது. பின் தங்கிய பகுதியில் உள்ள மேல் தட்டினரே இத்தகைய உணர்வுக்கு முதன் முதலில் ஆளாவதேடு அவர்களே தேசிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பன நாய்ர்ரின் கருத்துகள் எனலாம். சமச்சீரற்ற வளர்ச்சி தேசிய உணர்வுக்கு காரணமாகும் என்பது சரிதான்." என அ.மார்க்ஸ் சரிபோடும் இப்பகுதி ஏகாதிபத்தியத் தேவையை எப்படிச் சரிபோடுகிறது எனப் பார்ப்போம்.


ஒரு தேசிய இனப் பிரச்சனை சமச்சீரற்ற வளர்ச்சியின் விளைவு என அ.மார்க்ஸ் கூறும் போது அது பொருளாதார வாழ்வு தொடர்பான பிரச்சனையாக மாறிவிடுகின்றது. அது சரி சமச்சீரற்ற பிரச்சனை தான் தேசிய இனப் பிரச்சனை என காட்டுவதன் மூலம், உண்மையில் தேசிய இனப் பிரச்சனையின் அடிப்படைக் கூறுகளை மறுக்கின்றனர். அதாவது ஏழை பணக்காரனைப் பார்த்து எரிச்சல் பொறாமை ஆத்திரம் , வெறுப்பு ஏற்படுத்தும் பிரச்சனை தான் ஏழை பணக்காரன் மோதல் என்கின்றனர். எவ்வளவு மோசடியானது இவை. பணக்காரன் ஏழையைச் சுரண்டுவது தான் பிரச்சனையே ஒழிய பொறாமை , ஆத்திரம் போன்ற முதலாளித்துவ மனித அற்பத்தனங்கள் அல்ல அ.மார்க்ஸ் அவர்களே.


ஒரு தேசிய இனம் தனது தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்திய சகாப்தத்தில் முன்னெடுக்கின்றது எனின், அங்கு ஒரு ஒடுக்கு முறை உள்ளது. அதாவது அத்தேசிய இனம் தான் சுயமாக முன்னேற முடியாத ஒரு தடையைச் சந்திக்கின்றது. அது பல்வேறு துறைகளில் மையமிட்டாலும், அவைகளின் குவிய மையம் தனது பொருளாதார அடிப்படையை பாதுகாப்பதில் அல்லது கோருவதில் உள்ளது. மேல் கட்டுமானத்தில் காணப்படும் பல்வேறு பிரிவுகளில் ஒன்று சேர்ந்த வெளிப்பாடாக, அதன் அடிக்கட்டுமான பொருளாதாரத்தில் சார்ந்துள்ளது. அதை அரசில் கோட்பாட்டின் மூலம,; அடிக்கட்டுமானத்தை பாதுகாப்பதன் மூலம் அல்லது மாற்றக் கோருவதன் மூலம் மேல் கட்டுமானத்தின் அனைத்துத் துறைகளையும் வளர்த்து எடுக்கின்றன. அல்லது மாற்றுகின்றது.


எனவே தேசியம் என்பது சமச்சீரற்ற வளர்ச்சியில் எழுவதில்லை. தேசியம் என்பது இன்னும் ஒரு பிரிவில் சுரண்டலுக்கு உள்ளாக்குவதாலும், முன்னேற்றத்துக்கு தடைபோடுவதிலும் தான் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசியம் எழுகின்றது. இவை இல்லாது இருப்பின் தேசியம் இருக்காது. உற்பத்தி முறை மீதான அரசு வடிவமும் அதன் வர்க்கப் போராட்டமும் தான் தேசிய ஆட்சியைக் கோருகின்றதே ஒழிய வேறல்ல.


மக்களின் நிறைவேற்றப்படாத எதிர்பார்ப்புகள் பொறாமை ஆத்திரம், வெறுப்புகளில் இருந்தே தேசியக் கோரிக்கை எழுகின்றது என்பது அடிப்படை பிரச்சனையில் அடிப்படையான பிரச்சனையை திசை திருப்புவதாகும். பின் தங்கியபகுதிகளில் மேல்பிரிவுகளில் இது மையமிடுகின்றது என்கின்ற போது, அந்தப் பகுதியின் சுரண்டும் நலன்களைப் பறிக்கப்படுவதில் இருந்து தான் தேசியக் கோரிக்கை எழுகின்றது. கீழ் பகுதியில் இவை மையமிடுவதில்லை. அதாவது மேல் பகுதி தனது சுரண்டும் அதிகாரத்தை இழக்கும் போது, தனது சுரண்டும் தகமையைக் குறைந்தது, பாதுகாக்க தேசியத்துக்குள் தக்க வைக்க எழுப்பும் கோசத்தில் தேசியம் எழுகின்றது. பறிக்கப்பட்ட, பறிக்கப்படும் சுரண்டும் நலன்களின் பாதிப்பினால் தான் பொறாமை, ஆத்திரம், வெறுப்புகளை மேல்மட்ட முதலாளித்துவப் பிரிவுகளில் ஏற்பட்டு தேசியத்தை உயர்த்துகின்றனர். இது மட்டும் தான் தனது சுரண்டும் கனவைத் தக்க வைக்க முடியும் எனவும் நம்புகின்றனர். இதை விட வேறு வழி முதலாளித்துவப் பிரிவுக்குக் கிடையாது.


அடுத்து மரபு வழிப்பட்ட மார்க்சிய தேசிய அணுகு முறை தோல்வி பெற்ற விட்டது எனக் காட்டும் வித்தையினுடாக, மார்க்சிய-லெனினிய-மாவோ வழிப்பட்ட சிந்தனை காலாவதியாகிவிட்டது என்கின்றார். மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வழிப்பட்ட தேசிய இனப் பிரச்சனை அணுகும் முறையை நிராகரிப்பதன் மூலம் ஏகாதிபத்துpய வழிப்பட்டு வழிகாட்டலை முன்வைக்கின்றனர். அது தான் இவர்கள் தேசிய அரசு தேசியம் என்பன ஐரோப்பிய கருத்துக்கள் இது ஒதுக்கப்பட வேண்டும். இது நவீனத்துவத்தின் விளைவு எனக் கூறுவதன் மூலம் தேசிய, தேசிய அரசு எனக் கூறி போராட வேண்டும் என்கின்றார் அ.மார்க்ஸ். அதாவது இன்று ஏகாதிபத்தியம் கோரும் உலக மயமாதலின் தேசிய உற்பத்தியை, மற்றும் தேசிய அரசையும், தேசங்களின் எல்லையைக் கடந்து அழிக்கின்றது. அதாவது தேசம், தேசிய அரசு எனக் கோராத நிலையை, ஐரோப்பிய மார்க்சிய வாதமாகக் காட்டி விடுவதன் மூலம், அதை முன்னெடுக்காத வரை ஏகாதிபத்திய உலகமயமாதல் எதிர்ப்பின்றி வேகம் பெறும் என்றும் கனவு காண்கின்றனர். அதாவது ஐரோப்பிய நோக்கத்தை நிறைவு செய்ய தரகு முதலாளிய அரசு போல் மக்கள் மாற வேண்டும் என்கின்றார். அதைத்தான் அ.மார்க்ஸ் கோருகின்றார்.


அதில் இருந்து தான் பின் நவீனத்துவத்தை முன் தள்ளுகின்றார். அதாவது தேசியம், தேசிய அரசு எல்லாம் ஐரோப்பிய வாதம், நீ உனக்குள் உள்ள சிறு முரண்பாட்டை மட்டும் எடு போராடு ஐக்கியப்படாதே என்கின்றார். அதாவது தன்னார்வக் குழுக்களின் வழியில் முழுமையில் அல்ல பகுதிக்குள் நீ தேடி. உலகளாவிய ரீதியில் அல்ல நாட்டு ரீதியில், பின் அதற்குள்ளும் நீ தேடு பின் அதற்குள்ளும் தனியாக முழுமையில் அல்ல பகுதி நிலையில், என பின் நவீனத்துவத்தை முன்வைக்கின்றார்.


நவீனத்துவம், பின் நவீனத்துவம் என இரண்டும் ஏகாதிபத்தியத்தின் உலக மயமாக்கலை பாதுகாக்கும் ஒன்றில் இருந்து ஒன்றான வௌ;வேறு வடிவக் கோட்பாடுகளே. இதை முன்வைத்து தேசம், தேசியம், தேசிய உற்பத்தி முறை என்பதன் ஊடான உற்பத்தி முறையின் இயங்கியலை மறுத்து ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்கு கின்றனர்.


தேசம், தேசிய அரசு, மார்க்சியம் சோசலிய அரசு, கம்யூனிசம் என அனைத்தும் தனிமனிதர்களினதோ ஐரோப்பிய கொள்கையோ அல்ல அதாவது உற்பத்தி மீது நடக்கும் வர்க்கப் போராட்டத்தில் வௌ;வேறு வடிவங்கள் கோட்பாடுகளே. சமூகப் பொருளாதார விளைவில் ஏற்பட்ட கோட்பாடே. சமூகத்தின் வளர்ச்சியில் பொருளாதார முன்னேற்றத்தின் விளைபொருளே இவை. இவை தவிர்க்க முடியாமல் உற்பத்தி மீது அதன் மீதான வர்க்கப் போராட்டத்தின் மீதும் எழுகின்றன.


தமிழ் ஈழப் போராட்டம் எழுகின்றது எனின் ஐரோப்பியன் சொல்லித் தந்தல்ல. மாறாக தமிழீழப் பகுதி ஒரு தேசமாக உள்ள நிலையில் அதாவது தமிழ் ஈழ உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தின் மீதான அரசைக் கோரி சிங்கள இனவாத ஒடுக்கு முறை, மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்கு முறையின் விளைவே ஒழிய, வெறும் பொறாமை, ஆத்திரம், கோபம், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு அல்ல. அப்படிக் கூறும் அ.மார்க்ஸ் உள்ளிட்டவர்கள், தமிழீழப் போராட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கொச்சைப் படுத்துகின்றனர்.


இவர்கள் எப்படி தேசிய இனப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி அதற்கு எதிராக இருந்தபடி ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலின் காவடியாக உள்ளனர் என்பதை, நாம் இனிக் கூறத் தேவையில்லை. அவர்களின் சுற்றிவளைத்த எல்லா வாதமும் இதைத்தான் காட்டுகின்றது.


இதை அ.மார்க்ஸ் மேலும் "மார்க்ஸ் ஏங்கல்சிடமே அய்ரோப்பிய மையவிரவல் கொள்கையின் கூறுகள் இருந்ததை இங்கு நினைவூட்டிக் கொள்வது பொருந்தும்." எனக் கூறி மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனைக்கு எதிராக தங்கள் ஏகாதிபத்திய சார்புக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆய்வுரைகள் மார்க்சியத்தின் உயிரோட்டமுள்ள ஆய்வுகள் ஐரோப்பாவில் இருந்து கண்டு பிடித்தவை அல்ல. மாறாக சமூகப் பொருளாதார ஆய்வுகளில், முதலாளித்துவப் புரட்சியின் வெற்றி தோல்விகளை ஆய்வுக்குள்ளாக்கியும், எழுந்து வந்த சமூகப் பொருளாதாரப் போராட்டத்தில் மேல் கட்டு மானத்தின் அனைத்துப் பகுதியையும், அதன் செயல்தளமான அடிக் கட்டுமானத்தின் மேல் நின்று தான் மார்க்சியம் உருவானது. மார்க்சியம் என்பது முதலாளித்துவத்தின் விளைவே ஒழிய மார்க்சின் கற்பனை அல்ல. அதாவது மார்க்சியம் முதலாளித்துவ உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய கோட்பாடே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இருக்கும் பொருளாதார அமைப்பைப் பாதுகாக்க முனையும் அ.மார்க்சும் அவரது சீடர்களும் மார்க்ஸ் ஏங்கல்ஸ் தத்துவத்தை ஐரோப்பிய மையவிரவல் கொள்கை என முத்திரை குத்தி காட்டிவிடுவதன் மூலம் உண்மையில் ஏகாதிபத்திய உலகமயமாதலை விசுவாசமாக எந்த வெட்க மானமும் இன்றி பாதுகாக்கின்றனர். அதாவது இன்று உலக மயமாதலை எதிர்த்த ஒரே ஒரு போராட்டமான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ்-ஏங்கல்சை நிராகரிப்பதன் மூலம் அ.மார்க்ஸ் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்கின்றார். அ.மார்க்ஸ், மார்க்ஸ்-ஏங்கல்ஸை ஐரோப்பிய மையவிரவல் கொள்கை எனக் காட்டி நிராகரிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து முன் தள்ளும் பின்நவீனத்துவ கோட்பாடுபடி, தன்னார்வக் குழுக்கள் வழியில் சீரழிய பகுதிப் போராட்டத்தை எதிர் மறையில் முன்னெடுத்து மொத்த மக்களுக்கு எதிராக நடத்துக் கோருகின்றனர்.


அதாவது அ.மார்க்சின் நோக்கம் வர்க்கப் போராட்டத்தை திசை திருப்பி உலக மயமாதலைப் பாதுகாக்க மார்க்ஸ்-ஏங்கல்ஸை ஐரோப்பிய மையவிரவல் கொள்கையாளர்கள் என முத்திரை குத்தி சேறடிக்கின்றனர். இதற்காக மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்களை ஏற்றவர்கள் என்றும், N:கலியத்தின் தொடர்ச்சி என்றும் பலவாக வசைபாடுகின்றனர்.


அடுத்து அ.மார்க்ஸ் வர்க்கப் போராட்டத்தை எப்படி சிதைக்க முனைகின்றார் எனப் பார்ப்போம். "செவ்வியல் மார்க்சிய தேசியப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக அணுகுகின்றது. என்றும் ~சமூக வளர்ச்சிப் போக்கில் உருவாகும் வர்க்கப் பிரச்சனைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்ததே தேசியப் பிரச்சனை| என மார்க்சிய-லெனினிய கல்வி நிறுவனம் வலியுறுத்தும் போது தேசியப் பிரச்சனையின் ஒப்பிட்டளவிலான சுயேச்சைத் தன்மை முற்றாக மாறுபட்ட ஒரு வகை வறட்டு வர்க்க வாதத்திற்கே இட்டுச் செல்லும் ஆபத்து குறிப்பிடத் தக்கது. இத்தகைய போக்கிற்கு நேரெதிராக எல்லா விதமான வர்க்கப் பகுப்பாய்விற்கும் அப்பாற்பட்ட சுயேச்சைச் சக்தியாகத் தேசியத்தைப் பார்க்கிற சிந்தனைப் போக்குகளும் சமீபகாலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள. ஆட்டோபாயர், கார்ல்ரென்னர் போன்றோரின் சிந்தனைகளில் இக்கருத்து செல்வாக்கு வகுத்ததை முன்பே குறிப்பிட்டோம். புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் நீகோஸ்பவுலன்ட்சாஸ், வர்க்க நடைமுறைகளிலிருந்து சுதந்திரமாய் வரலாற்றில் செயற்படுகிற சுயேட்சையான சக்தியாக தேசித்தைப் பார்க்கிறார்." என அ..மார்க்ஸ் முன்வைத்து ~புகழ் பெற்ற மார்க்சிய அறிஞர் நிகோஸ்பவுலண்ட்சாஸ்| என்று கூறுவதன் மூலம் மார்க்சியத்தின் பேரில் முதலாளித்துவ தேசியத்தை மூடி மறைக்க மார்க்சிய அறிஞராக சினிமா காட்டி வக்காலத்து வாங்கியுள்ளார்.


தேசியம் சுயேட்சையாக இருக்க முடியும் என்கிறார். வர்க்கத்தைக் கடந்த சுயேட்சையாக தேசியம் இருக்க முடியும் என்கிறார். மார்க்சியம் தேசியத்தை வர்க்கமாகக் கருதுவது வறட்டு வாதம் என்கிறார். அ.மார்க்ஸ். நல்லது. அ.மார்க்ஸ் ஐயா அவர்களே நாம் கொஞ்சம் ஈழப்போராட்டத்தைப் பார்ப்போம்.


தமிழீழப் போராட்டம் சுயேட்சையாக வெளிப்பட்டதா? சுயேட்சை எதில் இருந்து ஐயா வெளிவந்தது? உமது மூக்கில் இருந்தா ?


தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பதில் 1977 தேர்தலில் கூட்டணி தான் பகிரங்கமாக முன் வைத்து பிரச்சாரம் செய்தது. அதாவது கூட்டணிக்கும் அதை அங்கீகரித்த மக்களுக்கும் வர்க்கம் கிடையாதா? எனின் Nடுகுவு முதல் டுவுவுநு ஈறாக 32 இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன் வைத்த போது இவ்வியக்கத்திற்கு வர்க்கம் கிடையாதா?


இதற்கு வெளியில் வர்க்கமற்ற ஒரு போராட்டம், எப்படி எந்த வேலைத் திட்டத்தில் உருவாயிருக்க முடியும் அ.மார்க்ஸ் அவர்களே. கொஞ்சம் விளக்குங்கள் முடிந்தால்?. முடியுமா ? முடியாதே.


தேசியம் சுயேச்சையாக எழுவதில்லை. ஏன் பிரஞ்சுப் புரட்சிக்கு முன் இந்த பல லட்சம் ஆண்டு மனித வரலாற்றின் ஏன் தேசியம் தோன்றவில்லை. சுயேட்சை எனில் தோன்றி இருக்கும் அல்லவா? சமூகத்தில் ஏற்பட்ட உற்பத்தி மீதான பொருளாதார மாற்றங்கள் உடன் தான் தேசியம் அரங்குக்கு வந்தது. இந்தத் தேசியம் எந்தப் பொருளாதார அமைப்பு மீது உருவானதோ,அந்த பொருளாதார அமைப்பின் கோரிக்கையாகவே எழும்.


தேசியம் ஒரு பொருளாதார அடுக்கின் விளைவே ஒழிய மனிதனின் கற்பனை அல்ல. கற்பனையில் உதிர்த்த சுயேட்சையும் அல்ல. மாறாக உற்பத்தி முறை மீதான பொருளாதார அடுக்கின் விளைவாக அது வர்க்க அடிப்படை கொண்டுள்ளது.


இந்தத் தேசியப் போராட்டம் எப்படி பண்பால் மாறுபடுகின்றது என்பதைப் பொறுத்தே பல்வேறு வர்க்கங்களும் தமது வர்க்கக் கண்ணோட்டத்துடன் அதில் ஈடுபடுகின்றன. அங்கு இவை ஒரு ஐக்கிய முன்னணியையும், சிலவேளை பிளவுபட்டும் போரிடுகின்றனவே ஒழிய வர்க்கம் இன்றி சுயேட்சையாக அல்ல. போராட்டத்தின்; பொதுப் போக்கில் வர்க்க சக்திகளின் பங்கு மற்றும் வர்க்க அடிப்படையைப் பொறுத்து ஒரு வர்க்க மேலாண்மை நிச்சயமாக பெற்றிருக்கும் அ.மார்க்ஸ் ஐயா அவர்களே. இங்கு சுயேட்சைக்கு மந்திரம் தந்திரம் என எதுவும் சாத்தியமில்லை.


ஒரு தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு வர்க்கத்தின் செயல்பாட்டில் எழும் போது மேல் கட்டுமானத்தில் பாரிய மாற்றங்கள் நடக்கின்றன. சிலவேளை இருப்பதை தக்கவைத்தல் அல்லது மேலும் வளர்த்து மையப்படுகின்றது. ஆகவே எப்போதும் அரசியலில் தான் பிரச்சனை மையம் கொள்கிறது. அது மற்றவற்றுடன் தொடர்புடையது. இறுதியாக அடிக்கட்டுமானத்தில் சிறு சிறு மாற்றங்களுடன் பேணுகின்றது, அல்லது தலைகீழாகின்றது. இவை எதிலும் தலையிடாது சுயேட்சையாக இருப்பது என்பதன் மூலம், இந்தப் பிரச்சனை மீதான ஏகாதிபத்திய தலையீட்டை சுயேட்சையின் பேரில் மறுத்துப் பாதுகாக்கும் ஒரு விளையாட்டின் தொடர்ச்சிதான் ~சுயேட்சை| என்ற வாதம்.


உலகில் எந்த ஒரு மனிதனும் சுயேட்;சையாக இருக்க முடியாத சமூக அமைப்பாக இன்று உலகம் உள்ளது. உலகில் உள்ள எல்லா மனிதன் மீதும், ஏன் அ.மார்க்ஸ் மீதும் கூட சட்ட ஒழுங்குக்கு உட்பட்ட கருத்து முன்வைக்க முடிகின்றது. இந்த சட்ட ஒழுங்கு என்பது கீழிருந்து மேலாக, ஒவ்வொரு மனிதனில் இருந்து உலகம் முழுக்க ஒழுங்கு படுத்துப்பட்டு கட்டுப் படுத்துப்பட்டு உள்ளது.


இருக்கும் சட்ட கட்டமைப்பை மீறி யாரும் செயற்படவோ, கருத்துக் கூறவோ முடியாது. அப்படி மீறுகின்ற போது சட்டமும் பாய்கின்றது. இச்சட்ட அமைப்பு இருக்கும் உற்பத்தி முறை மீது அரசு வடிவம் மீதான வர்க்கப் போராட்டத்தை ஒட்டி ஆட்சி வடிவம் கட்டமைக்கப் படுவதின் ஊடாக சட்ட அமைப்பு உருவாகின்றது.


இந்த சட்டத்தை மக்கள் ஏற்காத நிலை ஏற்படும் போது அந்த உற்பத்தி முறையைப் பேணியபடி வர்க்கப் போராட்டத்தின கடுமையில் புதிய சட்ட அமைப்புகள், புதிய அரச வடிவங்கள் திணிக்கப்படுகின்றன.


இன்று மனிதர்கள் எப்போதும் சட்டத்திற்கு உட்பட்ட வர்க்க சமுதாயத்திலும் தான் இருக்க முடியும், சுயேட்சை என்பது கற்பனை விபச்சாரமாகும்.


பாட்டாளி வர்க்கக் கருத்தை முன்வைப்பவர்கள் கூட சுயேட்சையாக இருப்தில்லை இந்த சமூக எல்லைக்குள் உள் வர்க்கப் போராட்டத்தில் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றார்களே ஒழிய வெளியில் அல்ல.


ஒருவன் தான் சுயேட்சையாக இருக்கின்றான் எனக் கூறினான் எனின், அது முதலாளித்துவ ஜனநாயகத்தில் சுரண்டும் ஜனநாயகத்தை தானே ஒழிய வெளியில் இல்லை. அ.மார்க்ஸ அவர்களே.


அடுத்து "இலத்தின் அமெரிக்காவின் தேசிய உருவாக்கங்கள் என்பன சந்தை உருவாக்கத்தால் கட்டமைக்கப்படவில்லை. ஸ்தூலமான அரசியற் களத்தில் அது கட்டமைக்கப் பட்டது." என்றார் டெர்ராரிவர்ஸ் என அ.மார்க்ஸ் அதை மீள முன்மொழிகின்றார்.


அதாவது சந்தை இன்றி தேசம் உருவானது என்றால் உற்பத்தி முறையின் வர்க்கப் போராட்டமும் இன்றியும் அரசு உருவாகி உள்ளது என்கின்றார். இது 20ம் நூற்றாண்டின் அ.மார்க்சின் அரிய கண்டு பிடிப்பு. அதாவது அ.மார்க்ஸ் வாதிடும் ~ஸ்ராலினின் வரையறை தவறு| என்ற வாதத்தை இது கொண்டுள்ளது. சந்தை மையமிடாத லத்தீன் அமெரிக்கா தேசிய அரசுகள் ஏன் 17ம் நூற்றாண்றிற்கு முன் தோன்றவில்லை. அத்துடன் லத்தீன் அமெரிக்காவில் அரசு இருக்கவில்லையா? வர்க்க சுரண்டல் இருக்கவில்லையா ?


அரசியல் என்பது சுயேட்சையானது அல்ல. பொருளாதாரத்தின் ஒன்று செறிந்து ஆளும் கருவியே அரசியல். இந்த அரசியல் மேல்கட்டுமானதுத்துடன் பல்வேறு துறையுடன் ஒன்று சேர்ந்து செயலாற்றுகின்றது. தேசிய அரசியல் என்பது தேசிய சந்தை உருவாக்கத்துடன் தான் தோன்றியது. தேசிய சந்தை இன்றி தேசிய அரசியல் இருக்க முடியாது. உற்பத்தி முறை இன்றி அதன் மீதான வர்க்கப் போராட்டம் இன்றி தேசிய அரசியல் இருக்க முடியாது. அப்படி இருக்கிறது எனின் தேசியத்தை சூறையாடும் ஏகாதிபத்தியத்தின் பொம்மை அரசுகளே. இங்கு வர்க்கப் போராட்டம் உண்டு. எனவே சுயேட்சையான தேசிய அரசோ, சுயேட்சையான தேசியமோ. சொந்த சந்தை இன்றி ஒருக்காலும் உருவாக முடியாது. முடியும் எனின் அது ஏமாற்றம் கபடம் நிறைந்த அ.மார்க்சின் சொற்கபடங்களே.


அடுத்து தேசத்தை எல்லா வர்க்கப் பிரிவுகளின் உருவாக்கம் எனக் காட்ட முனையும் அ.மார்க்ஸ்; எடுத்து வைக்கும் வாதத்தைப் பார்ப்போம். "நவீன தேசம் என்பது முதலாளிகளின் படைப்பு அல்ல எனக் கூறும் பவுலன்ட்காஸ் ~அது உண்மையில் நவீன சமூக வர்க்கங்களுக்கிடையேயான சக்திகளின் உறவின் வெளிப்பாடாகும்." என அ.மார்க்ஸ் எடுத்து முன்வைக்கிறார். அடுத்து இதை மேலும் அ.மார்க்ஸ் செழுமைப்படுத்த "தேசியத்தை இரட்டை நிகழ்வாகக் காண்பவர் ஆப்ஸ்பாம். முதலாளிய எழுச்சி காலனியச் சுரண்டல் போன்ற போன்ற சமூக மாற்றங்களை எதிர் கொள்ளும் வழிமுறையாக ஒன்று, நவீன மத்தியப்படுத்தப்பட்ட அரசின் குடிமை மதமாக இன்னொன்று." அதை மேலும் பலப்படுத்த அ.மார்க்ஸ் "தேசியத்தின் இரு பணிகளாக ஜான்ப்நய்பி குறிப்பிடுவது கிட்டத்தட்ட இத்துடன் பொருந்தும். அவை (1) அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மக்களை இறுக்கி இணைத்தல். (2) யாரை அது கட்டுப்படுத்துகிறதோ அந்த மக்களை நியாய பூர்வமாகத் தோற்றமளிக்க ஒரு குறிப்பிட்ட அரசுக்கு பயன்படல். தேசியம் என்பது அரசியல் ரீதியாய் நியாயப்படுத்திக் கொள்ளப்பயன்படும் கொள்கை எனக் கெல்னர் கூறுவதும், தங்களுக்குரிய அரசைக் கைப்பற்றவும் தக்க வைக்கவும் உருவாக்கப்படும் செயற்பாடுகள், கருத்தியல் மற்றும் இயக்கங்களைத் தேசியம் என்கின்றோம் எனப் பிட்டர்ஒர்ஸ்சி குறிப்பிடுவதுடன் இணைந்து பார்க்க வேண்டும்." என அ.மார்க்ஸ் தனது மார்க்சிய விரோதக் கோட்பாட்டை உயர்த்த அடுக்கடுக்காக முன்வைக்கின்றார்.


தேசம் தொடர்பான மேல் உள்ள கூற்றுகள் நகைப்புக்குரியது. தேசம் ஏன் எப்படி, எங்கே தோன்றியது என்ற வரலாற்று இயங்கியலை மறுக்கின்றது. ஒரு தேசம் தோன்ற தேவையான அடிப்படை பொருளாதார கட்டமைப்பை மறுக்கும் கோதாவில் தான் பல்வேறு மேல்கட்டுமானங்களை முன்தள்ளி மூடி மறைக்கின்றனர்.


அடிப்படை பொருளாதார அதாவது உற்பத்தி முறை இன்றி தேசம் உருவாக முடியும் என்று கூறுவதன் மூலம், தேசியத்துக்கு ஏகாதிபத்தியத்தால் ஆபத்து இல்லை என்கின்றனர். அதாவது இருக்கும் தேசங்கள் தமது சுயாதீனத்தை பொருளாதாரத்தில் இழந்தாலும,; அவை தேசமாக இருக்கும் என்கின்றார். அதாவது பல்வேறு வர்க்கங்கள் ஒன்றுபட்டிருக்க, வௌ;வேறு அரசியல் சூழலில் வாழ என பலவாக தேசிய அடிப்படைப் பொருளாதாரத்தில் இன்றி இருக்க முடியும் என்பதன் மூலம், ஏகாதிபத்திய உலக மயமாதல் தரகு முதலாளித்துவ அரசுகளை கூட தேசியமாக இருப்பதாகக் காணவேண்டும் என்கின்றார்.


ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத அதிகாரப் பங்கீட்டை வலியுறுத்துகின்றனர். பல்வேறு வர்க்கங்கள் தமக்குள் மோதி, அதில் தேசியமாக மாறி இருக்கக் கோருகின்றனர். அடிக்கடி மாறுகின்ற ஆட்சிகள் போலவும், கட்சிகளை மாற்றுவதன் மூலம் இந்த ஏகாதிபத்திய உலகமயமாதலை கேள்விக்கு உள்ளாக்காத சொந்த தேசியம் எனக் கோருவது, தேசிய முதலாளித்துவம் எனக் கூறுவதும், ஏகாதிபத்தியத்துக்கு ஆபத்தானது எனவே அதை மூடி மறையுங்கள். இல்லை எனச் சொல்லுங்கள். மாறாக முதலாளித்துவமல்லாத தேசியம் எனக் கோரின் அது ஏகாதிபத்துpயத்துக்கு எதிரானது அல்ல. ஏகாதிபத்தியத்துக்கு சார்பானது என்ற உண்மையை சரியாகக் கிரகித்த படிதான் அ.மார்க்ஸ் இதைக் கோருகின்றார். அதாவது தேசிய முதலாளித்துவக் கோரிக்கை கூட ஏகாதிபத்திய சகாப்தத்தில் முற்போக்கானது. அதுதான் அதை முதலாளித்துவம் இல்லை எனக் கூறுவதன் மூலம் அதன் போராட்டத்தைத் தடுக்க முடியும். அத்துடன் முதலாளித்துவமாக இனம் கண்ட வர்க்கப் போராட்டத்தை தடுக்க முடியும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய். இதன் மூலம் எகாதிபத்தியத்தின் எதிர்ப்பு சக்திகளான தேசிய முதலாளித்துவம் மற்றும் பாட்டாளி வர்க்க சக்திகளை இயங்க விடாத கோட்பாடு தேவைப்படுகின்றது, என அ.மார்க்ஸ் தமிழ் மக்களுக்கு முன்வைக்கின்றார்.


அதாவது தேசியம் முதலாளித்துவத்தின் விளைபொருள் அல்ல என்பதன் மூலம் தேசிய முதலாளிகளை முடக்குவதும், தேசியம் முதலாளித்துவத்தின் விளைபொருள் எனக் கண்டு வர்க்க சக்திகள் சர்வதேசியத்தை முன்னெடுப்பதைத் தடுப்பதன் மூலம், பிரதான எதிரியான ஏகாதிபத்தியத்தையும், தரகு முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளையும் இணங்காணாது இருக்கக் கோருகின்றார். இந்த விருப்பில் தான் அ.மார்க்ஸ் எல்வாவற்றையும் மறு வாசிப்பு, மறு ஆய்வு என்ற பெயரில் செய்யும் முயற்சியாகும்.


அடுத்து இவர் "ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்திய சுதந்திரப் போராட்டந் தான் இந்திய தேசியத்தை கற்பித்தது."என அ.மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். இந்தியச் சுதந்திரப் போராட்டம் எப்படி இந்திய தேசியத்தை உருவாக்க முடியும். அதாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்கின்ற போது இந்தியா என்பது முன்பே உருவாகிவிட்டது அல்லவா? இந்தியா என்ற ஒன்று தான் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தது. அதாவது இந்தியா என்ற தேசம் தான் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்தது.


அதாவது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு முன் இந்தியா என்ற தேசம் உருவாகி விடுகின்றது. அதாவது இந்தியா தேசம் தனக்கான பல மையச் சந்தையை, நிலத் தொடரை, பல மொழித்தளத்தை, பல கலாச்சாரத்தைக் கொண்டு அதில் ஒரு குறித்த அடையாளப்படுத்துதலின் ஊடாக பல் தேசிய விடுதலையை ஐக்கியமுன்னணியாக இந்தியா என்ற ஒழுங்கு அமைவுக்கு ஊடாகக் கோரியது. இங்கு பல்வேறு தேசிய இனங்கள் தத்தம் சுயநிர்ணயத்தை பெற்று, பல்தேசிய அரசாக இருப்பதற்குப் பதில் தேசிய இன ஒடுக்கு முறை ஊடாக இந்திய தேசியத்தைப் பெற்றதன் மூலம் தேசிய விடுதலைப் போர் இந்தியாவிற்குள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


இந்தியா பல்தேசியம் என்ற ஒன்று பல்வேறு தேசியங்களின் கூட்டாக முன்கூட்டியே உருவாகிவிடுகின்றது. இது தான் இந்திய தேசியத்தைக் கோரியது. இல்லாது ஆங்கிலேய காலனித்துவத்துக்கு முந்திய, பல பிராந்திய அரசுகளின் போராட்டத்துக்கு ஊடாக இந்தியா உருவாகவில்லை. மாறாக காலனித்துவ வாதிகளால் உருவாக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட பொருளாதார அலகு, ஆங்கிலப் பொது மொழி, ஒரு நிலத்தொடர், இந்து என்ற மதத்தின் ஊடாக ஒரு கலாச்சார அலகை முன்வைத்துத்தான் இந்தியா என்ற ஒரு நாடு அடையாளப்படுத்தப்பட்டது. இங்கு பல பிராந்தியங்கள் தனித்தனியாக இருந்தபோதும், சில பொது அடையாளங்கள் ஊடாக பல முரண்பாட்டுடன் தான் இந்தியா உருவானது.


காந்தியின் காங்கிரஸ் இதன் அடிப்படையில் மேலும் இந்தி, சமஸ்கிருதத்தை முன் தள்ளி தான், தமது தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்தனர். முஸ்லீம், இந்து மோதல் கூட இந்தியாவின் (மதக்) கலாச்சாரப் பிளவுடன, ; பொருளாதாரச் சந்தையை முஸ்லீம்களிடம் இந்துக்கள் பறிக்க முனைந்ததன் விளைவாக பாக்கிஸ்தான் என்ற ஒரு நாடு உருவானது. இன்னும் இந்தியாவிற்கு இந்தியா பொது அடையாளப்படுத்தல் என்பது பிற்போக்காக உள்ளதால் அது பிளவைக் கோருகின்றது. இந்தியா என்ற ஒரு தேசம் அடையாளப்படுத்தப்பட்ட பின் தான் இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றதே ஒழிய மறுதலையாக அல்ல. இந்தியா எனற் ஒரு நாட்டில் உற்பத்தி மீதான பொது அடையாளப் படுத்தல் அங்கு நடந்த வர்க்கப் போராட்டமும் தான் இந்திய அரசை உருவாக்குகின்றது. இதை மையமாக வைத்தே ஆங்கிலேயக் காலனியாதிக்க வாதிகள் ஆண்டனர். பல்வேறு ஆட்சிகளை ஒன்றுபடுத்தி ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த நிலையில், ஏற்பட்ட உற்பத்தி முறையின் மாற்றம் இந்திய தேசத்துக்கு அடிப்படையாகும்.


"ஆக தேசம் என்பது அரசியல் ரிதியாக வரையறுக்கப்படுவது. ......... தேசப் போராட்டத்தை வெறும் வர்க்கப் போராட்டமாக சுருக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் அது வர்க்க ஆய்வுகட்கு அப்பாற் பட்டது அல்ல." என அ.மார்க்ஸ் முரண்பட்டபடி ஒரு கேலிக்கூத்தை முன்வைக்கிறார்.


தேசம் அரசியல் ரீதியாக வரையறுக்கப்பட்டது என்பது எடுத்த எடுப்பில் சரியாக இருக்கும். ஆனால் அடிப்படையில் பார்த்தால் அது தவறு. தேசம் பொருளாதார ரீதியில் வரையறுக்கப் பட்டவை. அதாவது தேச உற்பத்தி மீதான வர்க்கப் போராட்டத்தில் வரையறுக்கப்பட்டது. ஒரு தேசத்தின் அரசியல் என்ன என்பதில் இருந்து தேசத்தை வரையறுத்துக் கொள்ள முடியாது. ஏன் எனில் இன்றைய உலக மயமாதலில் இருக்கும் அரசுகள் தேசமாக இருப்பது போல் இருக்கும். ஆனால் உள்ளடக்கத்தில் அது தேசமாக இருப்பதை அழிக்கிறது. அல்லது இருப்பதுமில்லை.


இருக்கும் அரசியலில் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் கொண்டுள்ள இன்றைய அரசுகள் தேசிய அரசுகள் அல்ல. அங்கு என்னவிதமான பொருளாதாரம் உள்ளது என்பது மட்டும் தான் அது உண்மையில் தேசமாக தேசியமாக உள்ளதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.


அரசியல் தான் எல்லாவற்றினதும் குவிய மையம் என்பது, போராட்டம் என்பது அரசியலை மையமாக வைத்துத்தான் என்பது அடிப்படையாவை. ஆனால் தேசத்தை வரையறுக்கும் போது அந்த அரசியலின் பின் என்ன பொருளாதாரம் உள்ளது என்பது முதன்மையாகின்றது. அடிப்படையை விட்டு மேல் உள்ளதைப் பார்ப்பதில்லை. அடிப்படையை முதலில் இனம் கண்ட பின் தான் மேலே உள்ளதை ஆராய வேண்டும். அரசியல் கற்பனையின் வெளிப்பாடு அல்ல.உற்பத்தி மீதானதே அரசியல்.


அத்திவாரத்தை விட்டு விட்டு மேலே எப்படி கட்டிடத்தை கட்டி விட முடியாதோ அதே போல் தேசியமும். அடுத்து தேசத்தை வர்க்கமாகவும் வரையறுக்க முடியாது, ஆனால் அது வர்க்க ஆய்வுக்கு அப்பாற் பட்டது அல்ல எனக் கூறும் அ.மார்க்சின் விளையாட்டுச் சொல்லாடல் என்பது கபடம் நிறைந்த ஏமாற்றாகும். அதாவது இதோ, அதோ எனக் குழப்புவதும் பின் ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டி செல்லும் மார்க்சிய விரோதப் போக்கின் கைதேர்ந்த மோசடித்தனம் தான் அ.மார்க்ஸ் அது இது என்ற வார்த்தை யாடல்கள்.


"........... வரலாற்றுச் சூழலுல், உலக அரசியலும், உலக முதலாளிய பொருளாதாரக் கட்டமைப்பும் முற்றிலும் வேறு பட்டுள்ள இன்றைய சூழலில் இத்தகைய (இத்தகைய என்பது மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை இது நாம்) அணுகு முறை உதவாது." என அ.மார்க்ஸ் அடிக்கிச் செல்கிறார்.


உலக அரசியல், உலக முதலாளித்துவம், வரலாற்றுச் சூழல், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வரையறுப்புக்கு எந்த விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொடரான மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை ஆய்வு முறைகள் இன்றைய உலக நிலையை மிகச் சரியாக மிக ஆழமாக விளங்குகின்றன. தேசியம், பெண்ணியம், வர்க்கப் போர் என அனைத்தும் எந்த விதத்திலும் அதன் பொதுத் தன்மையில் இருந்து விலகி விடவில்லை.


மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை பொதுவான வர்க்கப் போரின் ஆய்வுரைகள், இன்றைய உலக மாற்றங்களால், எதுவும் மாறி விடவில்லை. மறுபுறம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை மீதான பொது அடிப்படை மீதான குறிப்பான நிலமைகள் மட்டும் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையில் மாறுபடுகின்றன. இந்த மாறுதல் கடந்த வர்க்கப்போராட்ட வரலாறு எங்கும் நீடித்து நிற்கின்றன. ஆனால் அ.மார்க்சுக்கு மட்டும் இவை கண்ணுக்கு மின்னுகின்றன. நல்ல ஒரு கண்ணாடி வாங்கிப் போட்டால் சிலவேளை நல்ல பார்வை வரும் அ.மார்க்ஸ் அவர்களே.


இன்று உள்ள ஏகாதிபத்திய உலகம், ; மார்க்சிய-லெனினிய-மாவோ கால உலகில,; என்ன அடிப்படை மாற்றத்தை சுரண்டுவதில் கொண்டு வந்துள்ளது. சுரண்டும் முறையில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய, சுரண்டும் வர்க்க முரண்பாடு பொதுவானதாகவே உள்ளது. நீடிக்கின்றது.


உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் அரசு வடிவங்களை மாற்றி உள்ளன. அதில் நடந்த வர்க்கப் போராட்டங்கள் ஆட்சி அமைப்பை முறையைத் தீர்மானித்தன. ஆனால் இவை ஏகாதிபத்திய சுரண்டல் உலகில் சுரண்டுவதும், வர்க்க முரண்பாடும் நீடிக்கின்றன. சுரண்டல் சுரண்டுவதாகவே நீடிக்கின்றது. இது நீடிக்கின்ற வரை எப்படி புதிய நிலமைகள் வந்துள்ளன அ.மார்க்ஸ் அவர்களே.


சுரண்டுவதற்கு இசைவான உற்பத்தி முறைகள் அரசு வடிவங்கள் ஆட்சி முறைகளை வர்க்கப் போராட்டத்தின் மீது கட்டி அமைத்து மாறி வந்த ஏகாதிபத்திய யுகம், எந்த விதத்திலும் அடிப்படையில் சுரண்டும் வடிவம் மட்டும் மாறவில்லை. இது உள்ளவரை எப்படி புதிய நிலமை உள்ளது எனக் கூற முடியும்.


குருடாகிப் போன அ.மார்க்சின் மேற்கூறியதை மேலும் வளர்த்து எடுப்பதைப் பார்ப்போம். "நாம் நடைமுறைப் பிரச்சனையை மேற்கு ஐரோப்பா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேசிய இனப் பிரச்சனையினுடனோ, இல்லையெனில்; காலத்திய கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைப் போல வளர்ந்து வரும் முதலாளியக் காலகட்டத்தின் தேசியத்துடனோ இல்லை ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை கோரும் காலனியப் பிரச்சனையோடோ ஒப்பிட முடியாது. ........ (1) இங்கேயுள்ள எந்தத் தேசிய இனப்பிரச்சனையும் வளர்ந்து வரும் முற்போக்கான முதலாளிய வர்க்கத்தால் கட்டமைக்கப்படுவதாகக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து வரும் இன்றைய முதலாளியம், எந்த வகையிலும் தொடக்ககால முதலாளியத்தைப் போல் எந்த ஒரு அம்சத்திலும் முற்போக்காக இல்லை. (2) ரசியாவில் ரசிய தேசிய இனம் ஒடுக்கும் தேசிய இனமாகவும் மற்றையவை ஒடுக்கப்படும் இனமாகவும் இருந்தது போல் இங்கே எந்தத் தேசிய இனத்தையும் ஒடுக்கும் தேசிய இனமாகச் சுட்டிக்காட்ட முடியாது. மூலதனம், தொழில் நுட்பம், சந்தை ஆகிய மூன்றிலும் ஏகாதிபத்தியங்களைச் சார்ந்து நிற்கும் இந்தியப் பெரு முதலாளிகள் எந்த ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்துக்குள்ளும் தங்கள் செயற்பாட்டை முடக்கிக் கொள்ளவில்லை. ........... ஒரு காலனிய, அரைக்காலனிய அரசமைவில் மாவோ போன்றவர்கள் வரையறுத்த தேசிய முதலாளிகள் என்ற கருத்தாக்கத்தை பல்தேசிய இன அரசாகிய இந்தியாவில் தேசிய இன முரண்பாடுகளை விளங்கி கொள்ளப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. .......... பொது மொழி என்ற ஒன்று இல்லை யாகையால் அகில இந்திய தேசியம் என ஒன்று கிடையாது, ......." என அ.மார்க்ஸ் தனது மார்க்சிய விரோத நிலையில் ஏகாதிபத்தியத்துக்காக எப்படி வாதிட முனைகின்றார் என கொஞ்சம் பார்ப்போம்.


தேசிய இனப் பிரச்சனை வளர்ந்து வரும் முதலாளித்துவத்துடன் பார்க்க முடியாது என அ.மார்க்ஸ் பிரகடனம் செய்வதன் மூலம் ஏகாதிபத்திய உலக மயமாதலை ஏற்கக் கோருகின்றார். அதாவது உலகமயமாதல் தேசியச் சொத்துரிமையை, உற்பத்தியை மறுதலித்து விடுகின்றது. இந்தியா சரி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தேசிய முதலாளிகள் மட்டும் இன்றி தனிநபர் சொத்துரிமையை கூட உலகமயமாதல் மறுக்கத் தொடங்கி விட்டது. எப்படிச் செல்வம் சில நாடுகளை நோக்கியும், பின் சிலரிடமும் குவிகின்றது என்பதற்கு புள்ளிவிபர ரீதியாக சில ஆதாரங்களை நாம் இன்று காட்ட முடியும். அந்தளவுக்கு தேசிய முதலாளித்துவத்தின் மீது நடத்தப்படும் சுரண்டல், சூறையாடலை எதிர்த்து உருவான நாடுகளிலும், புதிதாக உருவாகும் நாடுகளிலும் ஆட்சி இல்லாத தேசிய முதலாளித்துவப் பிரிவு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தொடர்ந்து போராட முனைகின்றன. சாதாரண தேர்தல்களில் கூட ஏகாதிபத்திய சார்பு எதிர்கட்சி முதல் அனைத்து எதிர்கட்சிகளிலும் அனேகமாக எல்லாம் உலக மயமாக்கலுக்கு எதிராக பேசும் அளவுக்கு இப்பிரச்சனை இன்று உள்ளது. அதாவது தேசிய முதலாளித்துவப் பிரிவுகள், தனது இழந்து செல்லம் உரிமையை மீளப் பெற தேசிய சந்தையை தக்க வைக்க பல விதமாகப் போராடுகின்றன, போராட முயல்கின்றனர்.


இதை அ.மார்க்ஸ் மறுக்கும் போது ரொக்சியத்தின் கோட்பாட்டை இரவல் வாங்கி மார்க்சிய எதிர்ப்புக்கு பயன் படுத்துவது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.


அடுத்து சீனாப் புரட்சியில் மாவோ பயன்படுத்திய தேசிய முதலாளித்துவ அடையாளப் படுத்தல் இந்தியாவுக்கு பொருந்தாது என அ.மார்க்ஸ் கூறுகின்றார். ஏன் எனில் இந்தியா பல்தேசிய நாடு என்கின்றார். அது சரி சீனா ஒரு பல்தேசிய நாடு என்பதை மூடி மறைத்தபடி முன்வைக்கும் கருத்து, எப்படி மாவோவை மறுப்பது என்பதில் தான் தொடங்குகின்றது. சீனா இந்தியாவுக்கு இடையில் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உள்ளதே ஒழிய இரண்டு நாடு பல தேசிய இனங்களைக் கொண்ட பல்தேசிய நாடே.


சீனா நிலமை இந்தியாவுக்கு பொருந்தாது என்பதன் ஊடாக பொதுவில் சமூகத்தில் தேசிய முதலாளிகள் இல்லை என்பதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சி வடிவம் சாத்தியமில்லை என்கின்றார். வர்க்கப் புரட்சியைத் தடுக்க நினைக்கும் அ.மார்க்ஸ் செய்யச் செல்லுவதெல்லாம் மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையின் அடிப்படைக் கோட்பாடுகளை மறுதலித்து, மேலெழுந்த வாரியாக சிலவற்றை ஏற்பதாகக் காட்டி புரட்சிகரச் சக்திகளை ஏமாற்றுவதே.


இந்தியாவில் தேசிய முதலாளிகள் இருக்க முடியாதா? இதற்கு அ.மார்க்ஸ் தேசிய முதலாளிகள் ஏகாhதிபத்தியத்தைச் சார்ந்து வளருவதால் அவர்கள் இல்லை முற்போக்காக இருக்க முடியாது என்கின்றார். ஏகாதிபத்தியம் தேசிய முதலாளித்துவம் தொடர்பான அடிப்டை வரையறையைக் கண்டு கொள்ள மறுக்கும் அ.மார்க்ஸின் வரையறை போட்ட பின் நவீனத்துவ குருட்டுக் கண்ணாடியால் ஏற்பட்டதே.


ஏகாதிபத்தியம் என்பது உண்மையில், அது மற்ற நாடுகளை அனைத்துத் துறையிலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதாகும். தனது சந்தையை மற்றைய நாடுகளில் விரிவுபடுத்தும் அதே நேரம் மற்றைய நாட்டுச் சந்தையை கட்டுப்படுத்துவதுடன், கைப்பற்றுகின்றது. அதாவது தேசங்களின் தனித்துவத்தை சுயாதிபத்தியத்தை எல்லாத் துறையிலும் அழித்து ஒழிக்கின்றது.


தேசிய முதலாளித்துவம் என்பது உண்மையில் தனக்கான சந்தையைக் கொண்டு இருந்திருக்கிறது. அதாவது இருக்கும் சந்தையைக் கைப்பற்ற பாதுகாக்க, மீட்க எல்லாத்துறையிலும் எதிர்த்துப் போராடுகின்றது.


ஏகாதிபத்தியம்-தேசிய முதலாளித்துவம் ஒன்றுக்கு ஒன்று எதிரான போது எப்படி ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த முன்றாம் உலக நாடுகளில் எப்படி தேசிய முதலாளித்துவம் வளர முடியும் அ.மார்க்ஸ் ஐயா அவர்களே. கொஞ்சம் விளக்குங்களே. தேசிய முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் (ஏகாதிபத்துpய நாடுகளில் ஒன்றாகவும் வேறோன்றாகவும் இது உள்ள அதே நேரம் இது இன்று அழிக்கப்படுகின்றது) ஒன்று என்கின்ற ரொட்சிய வாதமும், அ.மார்க்சின் வாதமும் அதன் அடிப்படை பொருளாதார நலனைப் பற்றி ஆய்வு செய்வது கிடையாது.


ஏகாதிபத்தியத்துpன் தயவில் வாழ்வது தரகு முதலாளித்துவப் பிரிவே. இதை மாவோ அன்று தெளிவாக வரையறுத்தே தேசிய முதலாளித்துவ சக்திகளைப் பிரித்தார். இன்று உலகில் எல்லா முன்றாம் உலக நாடுகளிலும் தரகு முதலாளித்துவப் பிரிவும் தேசிய முதலாளித்துவப் பிரிவும் உள்ளனன. பூர்சுவா வர்க்கம் உள்ள வரை தேசிய முதலாளித்துவம் அதன் ஊற்றுக் கண்ணாக உள்ளது.


தேசிய முதலாளித்துவப் பிரிவு தனது போராட்டத்தில் தொடர்ந்து போராடும். உறுதி இன்மையால் அடிக்கடி சரணடைகின்றது. ஒரு பகுதி தோற்று ஒன்றும் இல்லாத பிரிவாக மாறுகின்றது. இன்னும் ஒரு பிரிவு தரகுப்பிரிவாக ஏகாதிபத்தியத்துடன் சரணடைகின்றது. பாட்டாளி வர்க்கம் போராடின் அதனுடன் இணைந்து முன்னேறுகின்றது.


தேசிய முதலாளித்துவம் மாறுகின்ற நிலமையுடன் தனது பாத்திரத்தை ஆற்ற முனைகின்றது. ஆனால் அது அப்போது தனது சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க, தனது தனித்துவ சுரண்டலைக் கோரி மெதுவாக மேலே எழுகின்றது. இது தனது தனித்துவமான சுரண்டலைப் பேண, தனித்துவமான தேசியத்தை முன் தள்ளுகின்றது. கட்டுரையில் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் தயவில் வாழ்வதாக பின் பெருமுதலாளித்துவம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிரியை இனங்காண விடாது தடுக்கும் வகையில் தரகு முதலாளிகளை மூடி மறைத்து ஏகாதிபத்திய தயவில் உள்ள தேசிய முதலாளிகள் பெரு முதலாளிகள் என பலவகைக் கதை அளக்கப்படுகின்றது.


அடுத்து சுரண்டலை எல்லாத் தேசிய இனத்துக்கும் தரகுமுதலாளிகளாக நடத்தும் போது அவர்கள் எப்படி தேசிய வாதியாக இருக்க முடியும் என அ.மார்க்ஸ் கேள்வி எழுப்புகின்றார். முதலில் தரகு முதலாளிகளை தேசிய முதலாளிகளாக்கி விட்டு பின் எல்லா இனத் தரகுகளும் சுரண்டுவதாகக் கூறுவதன் மூலம் இந்தியாவில் தேசிய முதலாளிகள் தான் சுரண்டுகின்றனர் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத் தயவில் என்கின்றார். அதாவது ஏகாதிபத்தியத்தின் சுரண்டலின் தயவில் தேசிய முதலாளிகள் சுரண்டுவதாக கூறுவது ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போரை மட்டுப்படுத்தவே. அத்துடன் ஏகாதிபத்தியம் சுரண்டவில்லை என சாதிக்கவும் முனைகிறது.


தரகு முதலாளிகள் தான் தேசிய எல்லையைக் கடந்து சுரண்டக் கூடியவர்கள,; அதனால் தான் அவர்கள் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தேசிய முதலாளிகளுக்கு தனது சந்தையை மட்டும் சுரண்டும் தகமை உடையவர்கள். அதனால் தான் அவர்கள் தேசிய முதலாளிகளாக உள்ளனர். தரகு முதலாளிகள் தான் தேசிய முதலாளிகள் மீது ஏறி நின்று சுரண்டும் தகமை உடையவர்கள்.


இந்தியாவில் குளிர்பான உற்பத்தியில் இருந்த தேசிய முதலாளிகளின் ஆதிக்கம் எப்படி தரகு முதலாளிகளால் இன்று கைப்பற்றப் பட்டுவிட்டது என திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படி ஒவ்வொரு தேசிய உற்பத்தியும் இன்று காணாமல் போய் அதில் பிரதியிடப்படும் தரகு முதலாளித்துவ, தேசம் கடந்த உற்பத்தியை நாம் கொஞ்சம் இனம் காட்டுவோம் எனின் அ.மார்க்சின் புலுடா அரசியல் போக்கிடமின்றி அழுகி நாறிவிடுவதைக் காண முடியும் .


பொது மொழி ஒன்று இல்லை ஆகையால் இந்தியா தேசியம் கிடையாது என்கின்ற அ.மார்க்சின் கண்டு பிடிப்பு நகைப்புக்குரியது. சோவியத்தில் பொது மொழி இன்றி சோவியத் தேசமாக எப்படி இருந்தது. சீனாவில் ஒரு பொது மொழி இன்றி ஒரு தேசியம் எப்படி உருவானது. ஸ்ராலினின் வரையறை என்பது ஆகக் குறைந்ததே ஒழிய அதி கூடியது அல்ல. பல தேசிய இனம் ஒன்று சேர்ந்து போராட முடியும். ஒரு ஐக்கிய முன்னணி போல் போராட முடியும். பொதுவாக அடையளப்படுத்தப்படும் அடிப்படை உடன் பாட்டில் ஸ்ராலினின் வரையறை கொண்ட பல தேசிய இனங்கள் போராட முடியும்.


இந்தியாவில் இந்து என்கின்ற மதக் கலாச்சாரத்தின் ஊடாக, ஆங்கிலம் என்ற பொது மொழியின் ஊடாக அதே நேரம் பல்தேசியக் கூட்டாக ஒரு நிலத் தொடர் ஊடாக, ஒரு பொதுச் சந்தை ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இந்தியாதான் இந்தியா பல்தேசியமாக இருந்து இருக்கின்றது. ஆனால் சர்வதேசியப் போராட்டத்துக்கு இவை கட்டாயமல்ல. பல் தேசிய இனம் ஒரு பொது எதிரியை எதிர்த்துப் போராட முடியும். இதைப் புரட்சிகரப் பிரிவுகள், முற்போக்குகள் அடையாளப் படுத்துதலின் ஊடாக பிரதியிட்டு இந்திய வர்க்கப் புரட்சிக்காக சர்வதேசிய நிலையில் நின்று போராட முடியும்.


அதாவது இந்தியாவில் ஒரு தேசிய இனம் ஒடுக்கம் தேசிய இனமாக ருசியாவைப் போல் இல்லை என்கின்றார் அ.மார்க்ஸ். அ.மார்க்சின் நூலில் குறித்துள்ள அவரின் கூட்டாளியாக எஸ்.வி.ராஜதுரை எழுதிய ~இந்து இந்தி இந்தியா| நூலில் எப்படி இந்தி சமஸ்கிருத மொழி ஊடாக ஒடுக்கு முறையை மற்றைய தேசிய இனத்தின் மீது கட்டுவிழ்த்து விட்டுள்ளனர் என்பதை என்பதை தெளிவாக புள்ளிவிபரத்துடன் கொண்டு வந்துள்ளார். எந்தத் தேசியமும் எந்தத் தேசியத்தையும் ஒடுக்க வில்லை என்றால் ஏன் அ.மார்க்ஸ் ஐயா தமிழ் நாடு தனியாகப் போக வேண்டும் எனப் பிரகடனம் செய்கின்றீர். சுரண்டவே இல்லை மற்றைய தேசிய இனங்களால் எனின் எப்படி யாருக்கு எதிராகத் தேசிய இனப் போராட்டம். தமிழ் நாட்டில் நடந்த தேசிய இனப் போராட்டக் குரல்கள் எல்லாம் யாருக்கு எதிராக? அ.மார்க்ஸ் கண்ணை மூடி பால் குடித்தால் பலருக்கு தெரியாது என நினைத்தோ என்னவோ தேசிய இன முரண்பாடு இல்லை என்கின்றார். எதிரியே இல்லை என்கின்றார். இப்படிச் சொல்லுவதன் மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்துக்கும் ஆங்கிலத்துக்கும் தாரை வார்க்கின்றனர். தமிழ் மொழியை. நடந்து வருவதைக் கண்டு கொள்ள வேண்டாம் என்கின்றார். அது எல்லாம் ~கற்பிதம்| என்கின்றார். மொழி அழிப்பு, கலாச்சார அழிப்பு எல்லாம் சும்மா கற்பிதம் என்கின்றார். அப்படி எதுவும் கிடையாது என்கின்றார்.


எதிரியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இனங் கண்டு விடாது தடுக்கும் கைக் கூலித் தனத்தின், துரோகத் தனத்தில் எழுந்ததே அ.மார்க்ஸின் தொகுப்புக்கள் மற்றும் வசனச் சொற்றாடல்கள்.


அடுத்து அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம். "குறிப்பாக ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தும் கூட இன்று பஞ்சாபிகள், காஷ்மீரிகள் மத அடிப்படையில் இரு தேசிய இனங்களாகப் பிரிந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.


அதே சமயத்தில் ஒரே மதத்தினராக இருந்தும் கூட மேற்கு பாக்கிஸ்தானியரும், கிழக்கு வங்காளத்தினரும் ஒரே தேசிய இனமாக உருப்பெற இயலாமற் போனமையையும் ஒத்திணைத்துப் பார்க்கும் போது தான் ~தேசம் என்பது கற்பிதம் செய்யப்பட்ட சமூகம்| ஒரே தேசத்தின் பாரம்பரியம், வரலாறு என்பவை திட்டுமிட்டு உருவாக்கப்பட்டவை தேசிய இனப் போராட்டங்கள் தான் தேசங்களை உருவாக்குகின்றனவே ஒழிய தேசங்கள் தேசிய உணர்வுப் போராட்டங்களை உருவாக்குவதில்லை." என அ.மார்க்ஸ் வாதிடும் போது வெளிப்படும் கருத்து முதல்வாத மார்க்சிய வெறுப்பைப் பார்ப்போம்.


பாரம்பரியங்கள், வரலாறு என்பன திட்டமிட்டு உருவாக்கப்பட்டது எனக் கூறுகின்றார் அ.மார்க்ஸ். அதாவது யார் திட்டமிட்டனர். பதில் இல்லை. பாரம்பரியங்கள், வரலாறுகள் யாரும் திட்டமிட்டு உருவாவதில்லை. மாறாக மக்களின் பொருளாதார வாழ்வுடன் நடக்கும் போராட்டத்தில் தான் பாரம்பரியங்கள், வரலாறுகள் உருவாகின்றன. யார் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ தாம் விரும்பியபடி ஒரு பாரம்பரியத்தையோ, வரலாற்றையோ கற்பிதம் செய்து விட முடியாது. மொத்த சமூகமுமே அதில் பங்கு கொள்கின்றன. அ.மார்க்ஸ் அப்படிக் கூறுவது என்பது ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடு, வறுமை, சிறுவர் உழைப்பு, ஆணாதிக்கம், பாட்டாளி வர்க்கம் என்பன பாரம்பரியமாக வரலாறாக யாரோ திட்டமிட்டு உருவாக்கியது என்கின்றார்.


இல்லை யாரும் விரும்பினாலும் மக்களுக்கு புறம்பாக திட்டமிட்டு உருவாக்கிவிட முடியாது. இருக்கும் பொருளாதார அமைப்பு மீது கட்டமைக்கப்பட்ட அரசும், அதன் மீது இயங்கும் பல்வேறு சமூக இயக்கத்தின் தொடர்ச்சியில் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஒரு இயங்கியலாக அதாவது வரலாற்று இயங்கியலாக உள்ளது. அது இருக்கும் உற்பத்தி முறை மீது அரசு வடிவமும், வர்க்கப் போராட்டத்தின் மீதான ஆட்சி முறையும் நிட்சயமாகவே வரலாற்றில் தான், பாரம்பரியம் வரலாறு தோன்றுகின்றன. இதற்கு வெளியில் அல்ல அ.மார்க்ஸ் அவர்களே.


யாரும் எப்படியும் திட்டமிட்டு உருவாக்க முடியும் எனின், இயங்கியலை மறுத்து கருத்து முதல்வாதத்தை முன்வைப்பதாகும். வரலாற்றில் பாரம்பரியத்தில் தனி நபர்கள், கட்சிகள், வர்க்கங்களின் பங்குபற்றல்கள் என்பன தனித்துவமாகவும் சிறப்பாகவும் தனது பங்கை வழங்க முடியும். ஆனால் அது இருக்கும் பொருளாதார அமைப்பின் மீது, அதாவது உற்பத்தி முறை மீது மட்டுமே செயல்படுகின்றன. பொருளாதார அமைப்பை மீறி யாரும் திட்டுமிட்டு வரலாற்றை, மாற்றிவிடவுமில்லை, மாற்றிவிடப் போவதும் இல்லை.


ஒரு தேசம் வரலாற்று ரீதியானவை என்கின்ற போது அது திட்டுமிட்டு உருவானவை அல்ல. மாறாக அது பொருளாதார அமைப்பு மீது கட்டப்பட்வை. அதுபோல் ஏகாதிபத்தியம் ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மீது கட்டப்பட்டவை தான்.


பஞ்சாப், காஷ்மீர், பாக்கிஸ்தான், கிழக்கு வங்காளம் என்பன தனியான தேசமாக இருப்பதால் தான் அவை தனியாகப் போராடியதும், தனிநாடக இருக்கவும், நீடிக்கவும் கோருகின்றன. யாரும் இந்த நாட்டின் பாரம்பரிய வரலாறு மீது திட்டமிட்டு தேசத்தைக் கோரவில்லை. மாறாக இவை தேசமாக இருப்பதால் ஒரு குறித்த மக்கள் கூட்டத்தின் வாழ்வில் தனதாக அடையாளப்படுத்தி தேசிய உற்பத்தி முறை மீது, தேசியத்தை அடையாளப்படுத்தி மக்கள் போராடுகின்றனர். இங்கு மக்கள் என்கின்ற போது மக்களின் இயல்பான பூர்சுவா சிந்தனையைத் தான் குறிப்பிடுகின்றேன்.


ஏதோ, யாரோ அடையாளப் படுத்தி விடுவதை யாரும் தூக்கிப் பிடிப்பதில்லை. மாறாக அது அதுவாகவே உள்ளது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை மார்க்ஸ் அடையாளப்படுத்தவில்லை மாறாக பாட்டாளி வர்க்கம் தான் ஒரு வர்க்கமாக, தான் போராடும் தகமை கொண்ட போராட்ட வரலாற்றை தாமாகவே உற்பத்தி முறை மீது வர்க்கப் போராட்டத்தின் ஊடே கொண்டு இருந்தனர். அது வரலாற்று பாரம்பரியத்தை தாமாகவே இருக்கும் பொருளாதாரக் கட்டமைப்பின் ஊடாக இனங்கண்டு போராடினர், போராடுகின்றனர். மார்க்ஸ் அதை ஒழுங்கு படுத்தி தொகுத்துக் கொடுத்ததற்கு, நிறுவியதற்கு அப்பால் மார்க்ஸ் வேறு எதையும் அதற்கு மேல் செய்யவில்லை.


இப்போது தான் தேசியம், தேச மக்கள் தமது தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த போது தான் தேச விடுதலை கோட்பாடுகளை வகுக்கும் தேவை எழுந்தது. யாரும் திட்டமிட்ட தேசிய விடுதலைக் கோட்பாட்டை உருவாக்கி , தேச விடுதலைப் போராட்டத்தை உருவாக்கி தேசத்தை அடையாளப்படுத்தவில்லை. தேசம் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை உருவாக்கியது. உற்பத்திமுறை தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தின. அது தான் தேசியவிடுதலை கோட்பாடுகளைக் கோரியது.


அ.மார்க்ஸ் வகுக்கும் ~தேசிய கற்பிதம்| என்ற கோட்பாடு முன்பே, தேசமும் அதை ஒட்டிய தேசிய விடுதலைப் போராட்டங்களும் இருந்தன. யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. ஒரு சமூகம் தான் முன்னேற எது தடையோ அதைத் தகர்த்த பாச்சல் தான் வர்க்கப் போராட்டங்கள். எனவே சமூகம் முன்கூட்டியே உருவாகி விடுகின்றது. தேசத்தை யாரும் ~கற்பிதம்| செய்ய முடியாது. மாறாக மக்கள் தமது சொந்தப் போராட்டத்தின் ஊடாக இருக்கும் உற்பத்தி முறை மீதான தேசத்தின் மீது தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்றனர். மாறாக அ.மார்க்சின் கற்பனையில் உதிக்கும் கற்பிதங்கள் என்ற தேச விடுதலைப் போர் தேசத்தை உருவாக்குவதில்லை. அப்படிக் கூறுபவன் உண்மையில் இருக்கும் தேசத்தை மறுக்கிறான்.


இந்த திட்டமிட்ட என்ற கருத்தை அ.மார்க்ஸ் இன்னும் ஒரு இடத்தில் "இந்தக் கருத்தின் இன்னொரு வெளிப்பாடு சோசலிசக் கட்த்தில் தேசிய உணர்வு இருக்காது என்பதும், தேசியப் போராட்டங்கள் நியாயமற்றவை, ஒடுக்கப்பட வேண்டியவை என்கின்ற வாதமாகும். இது எத்தனை தூரம் பொய்யானது தவறானது என்பதற்கு இன்றைய ரஷ்சியா மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளின் வரலாறு நமக்கு சான்று பகர்கிறது. இதை எல்லாம் சொல்வதால் தேசிய இன உணர்வு உருவாக்கத்தில் மொழி, நில எல்லை, வரலாறு, பண்பாடு ஆகிவற்றிற்கும் பங்கே இல்லை என்பதல்ல. திட்டமிட்டு உருவாக்கப்படும் தேசிய உணர்வு என்பது இவற்றின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட முடியும்" என அ.மார்க்ஸ் கூறுகின்றார். அதாவது தேசிய உணர்வு திட்மிட்டு உருவாக்கப்பட்டவை படுபவை என்கிறார்


எந்த ஒரு உற்பத்தி முறை மீதான பொருளும் போராட்டம், அது எதில் இருந்து உருவாகின்றதோ அதில் மையமிடுகின்றது. தேசியம் என்பது அங்குள்ள தேசியப் பொருளாதாரத்தின் மீதும் அதாவது உற்பத்தி முறை மீதும், சுரண்டும் அடிப்படை மீதும் கட்டி அமைக்கப்படுகின்றது. பாட்டாளி வர்க்கப் போராட்டும் முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பின் மீது (உற்பத்தி முறைமீது) உருவான பாட்டாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்படுகின்றன.


தேசியம், பாட்டாளி வர்க்க உணர்வு என்பன யாரும் திட்டமிட்டு உருவாக்க முடியாது. அங்குள்ள சமூகப் பொருளாதார நிலமைகள் தான் அதை உருவாக்குகின்றன. அந்த உணர்வுகளைத் தட்டி எழுப்புகின்றன. உற்பத்தி முறை மீதான அரசு வடிவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டம் தான் திட்டமிட்ட கோட்பாட்டை முன்வைத்து திட்டுமிட்ட போராட்டத்தை, திட்டமிட்ட உணர்வை தட்டி எழுப்பி முன்னெடுக்க முடியும். முதலில் பொருள் அதாவது உற்பத்தி முறை அடையாளப்படுத்தப் படுகின்றது. அதாவது பொருள் இன்றி திட்டமோ, கருத்தோ உருவாக முடியாது. முதலில் பொருள் பொருளாக பரிணமிக்கின்றது. இது சமூகத்தில் இருக்கும் சமூகப் பொருளாதார, வர்க்க முரண்பாடுகளுடன் அரங்கேறுகின்றது. அதன்பின்தான் போராட்டம் எழுகின்றது.


ஒரு முதலாளித்துவ அரசில் இப்படியான ஆட்சி முறை என யாரும் முன்கூட்டி திட்டம் போட்டு விட முடியாது. மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறை தான் அரசு வடிவ முறையைத் தீர்மானிக்கின்றது. அந்த உற்பத்தியில் ஏற்படும் வர்க்க முரண்பாடுதான் ஆட்சி முறையைத் தீர்மானிக்கின்றது.


இதுதான் சோசலிசத்;துக்கும், எனவே முன்கூட்டி திட்டமிட்டு பொருள் இன்றி பொருளே உருவாக முடியாது. தேசம் இன்றி யாரும் முன்கூட்டி தேசியத்தை உருவாக்க முடியாது. இப்படிச் சொல்பவன் கருத்து முதல் வாதியாவான்.


தேசம் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தின. தேசிய தேசிய விடுதலைப் போராட்டம் தேசத்தை உருவாக்குவது இல்லை. மாறாக அரசைத்தான் உருவாக்குகின்றன. பொருள் இன்றி இயக்கம் இருக்க முடியாது. இங்கு தேசம், ஒரு அரசு முன்கூட்டியே இருக்கவேண்டும் என்பது அல்ல. ஆனால் தேசமாகக் கூடிய நிலையை முன்கூட்டியே அடைந்து விடுகின்றது.


ஒரு மேசையை எடுத்தால் மேசைதான் மேசை உற்பத்திக்கான செயலை நகர்த்துகின்றது. செயல் மேசையாகி விடாது. முதல் பொருள் யதார்த்தத்தில் மனிதனில் பதியும் போது தான் செயல் அதிலிருந்து பிறக்கின்றது. ஒரு சோசலிச நாடாக இருக்க முடியும் என்ற உற்பத்தி முறை மீதான அரசும் அதன் மீதான வர்க்கப் போராட்மும் தான் சோசலிச போராட்டத்தை நடத்துகின்றன.


உலகில் தேசம் உருவாகமுன் தேசிய விடுதலைப் போராட்டத்தை எடுத்து தேசத்தை யாரும் உருவாக்க முடியாது. அப்படி நடக்கவும் இல்லை. மாறாக முதலில் தேசம் (ஸ்ராலின் வரையறையில்) உருவாகின போது, உருவாகின்ற போது தேசிய விடுதலைப் போராட்டம் நடக்கின்றன. எனவே எப்போதும் பொருள் முதன்மையானது.


சோசலிச நாடுகளில் தேசிய உணர்வு இருக்காது என்பது அடிப்படையில் தவறானது. இது மார்க்சியத்தின் மீதான இயங்கியலை மறுப்பதாகும். கம்யூனிச சமூகத்தில் மட்டும் தான் தேசிய உணர்வு இருக்க முடியாது. எப்படி முதலாளித்துவத்திற்கு முன் தேசிய உணர்வு இல்லையோ அதுபோல் தேசிய உணர்வு கம்யூனிச சமூகத்தில் இருக்க முடியாது. முதலாளித்துவத்திற்கு முன் இருந்த உணர்வுக்குப் பதில் கம்யூனிச சமூகத்தில் மனிதர்களை மனிதர்களாக மற்றவனை பிளந்து பார்ப்பது இல்லை. எல்லா முரண்பாடுகளும் இடைவெளிகளும். உலகளவில் கடக்கப்பட வேண்டும்.


சோசலிச சமூகத்தில் எப்படி தேசிய உணர்வு உள்ளது எனப் பார்ப்போம். ஒன்று சோசலிச நாடு மீதான ஏகாதிபத்தியத்தின் ஒடுக்கு முறைக்கு எதிரான தேசிய உணர்வு இருக்கும். இந்தத் தேசியம் அவர்கள் மீது ஏகாதிபத்தியமாக திணிக்கின்றது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிரான இத் தேசியம் ஏகாதிபத்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக இருப்பது இல்லை. இங்கு சர்வதேசிய வாதியாக சோசலிச நாடு இருக்கின்றது. இங்கு ஒரு நிலையில் தேசியமாகவும் மறுநிலையில் சர்வதேசியமாகவும் காணப்படுகின்றது. இத்தேசியம் என்பது கூட முதலாளித்துவ அடிப்படையைக் கொண்டது. சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க, சூறையாடுதலுக்கு எதிராக சொந்த நாடும், உலக பாட்டாளிகளுக்குமாக என்ற வரையறையில் இது ஒரு தேசியமாக உள்ளது. சர்வதேச உற்பத்தி பங்கீடுகளில் சோசலிச நாடு தனது உற்பத்தி என்ற ஏகாதிபத்திய சூறையாடலுக்கு எதிரான நிலையில் ஒரு தேசிய முதலாளியாக உள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் தனக்குச் சாதகமாக ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுகின்றது. இது உழைக்கும் மக்களை எதிர்த்து அல்ல. அவர்களை சர்வதேசியமாக இனங்கண்டு அவர்களின் துணையுடன் சூறையாடுபவர்களை எதிர்த்து சர்வதேசியத்தில் போராடுகின்றது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளுடன் இரண்டு தேசிய முதலாளிகளுக்கு உள்ளது போன்று அல்லது உதவும் வகையில் போராட்டத்தைக் கைக் கொள்கின்றது. மூன்றாம் உலக நாடுகள் என்ன கொள்கையை சோசலிச நாடுகள் மீது கொண்டுள்ளது என்பதுடன், உள்நாட்டில் என்ன கொள்கை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கொண்டுள்ளது என்று பல விடையத்தைக் அடிப்படையாகக் கொண்டது.


அடுத்து ஒரு பல்தேசிய சோசலிச நாடுகளில் தேசிய இன முரண்பாடு என்பது வர்க்க முரண்பாடு நீடிக்கும் வரை நீடிக்கும், வர்க்கப் போராட்டத்தின் தளத்தில் தான் இதன் பலம் பலவீனம் தீர்மானிக்கப்படுகின்றது. பாட்டாளி வர்க்கம் எப்போது பலவீனப்படுகின்றதோ அப்போது தேசிய இன முரண்பாடு அரங்கிற்கு வரும்.


பாட்டாளி வர்க்கத்துக்கு பதில் முதலாளித்துவப் பிரிவு ஆட்சியில் அமர்ந்தால் அல்லது தேசிய இனங்களில் தேசிய முதலாளித்துவம் முன்நிலைக்கு வரின் தேசிய இன முரண்பாடு வெளிப்படும்.


ஒரு பாட்டாளி வர்க்க ஆட்சி உள்ளவரை மற்றைய நாட்டு இன முரண்பாடு முன்னணிக்கு வரும் வகையில,; தேசிய இன ஒடுக்கு முறையாக இருக்க முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படின் அது பாட்டாளி வர்க்க ஆட்சியாக இருக்க முடியாது. பாட்டாளி வர்க்க ஆட்சியில் உள் உள்ள முதலாளித்துவப் பிரிவுகளின் வெளிப்படுத்தும் வலது இடது சந்தர்ப்பவாத நிகழ்வுகள் ஏற்படின் கூட தேசிய இன முரண்பாடு ஏற்படும். இதைக் கட்சி திருத்திக் கொள்ளும் போது தேசிய இன முரண்பாடு பின் தள்ளப்படும். ஒரு பாட்டாளி வர்க்க ஆட்சியில் ஏற்படும் பாட்டாளி வர்க்க விலகல் மட்டுமே தேசிய இன முரண்பாட்டை அரசு ஏற்படுத்தும். மறுபுறம் தேசிய இனத்தில் உள்ள சுரண்டும் பிரிவுகள் மீள இழந்த அதிகாரத்தைக் கைப்பற்ற, மக்களிடம் சோசலிச சமூகத்தில் காணப்படும் பின் தங்கிய விட்டுப் போன பழைய எச்சங்கள் மீது நின்று தேசிய உணர்வை எழுப்ப முடியும்.


இங்கு வர்க்க அடிப்படையில் இனத்தைக் கண்டு கொண்டு உழைக்கும் மக்களின் ஐக்கியத்தை முன் வைப்பதன் மூலம், சுரண்டும் வர்க்க நலனை இனங் காட்டி போராடுவதன் மூலம் இதை ஒழித்துக் கட்டுவது, ஒரு வர்க்கப் போராட்ட அடிப்படையாகும். இன்னும் ஒரு புறத்தில் சோசலிச அரசு முதலாளித்துவ மீட்சி நடக்கும் போது ஒரு தேசிய இனம் சரியான பாட்டாளி வர்க்க நிலையை முன்வைத்துப் போராடும் போது தேசிய இன முரண்பாடு முன்நிலைக்கு வர முடியும். இது சர்வதேசிய நிலையில் நின்று போராடவும், முடியாத போது பிரிந்து செல்லவும் வாய்ப்பு உள்ளது. சோசலிச நாடுகளில் இந்த வகையில் தான் தேசிய இன முரண்பாடு வெடிக்கும்.


ரஷ்சிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அ.மார்க்ஸ் உதாரணம் காட்டுகின்றார். மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடான வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாத, அ.மார்க்ஸ் எப்படி ஒரு சோசலிச நாட்டை சோசலிச நாடு என்று எதைக் கொண்டு பகுத்தாய முடியும். 1950களின் இறுதியில் சோவியத்துகளிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிட்டபின் அது ஒரு சோசலிச நாடே இல்லை. அப்படி இருக்க அங்கு அரங்கேறிய தேசிய இன முரண்பாடு முதலாளித்துவ நாடுகளுக்கு இடையிலானதாகவே இருந்தன. நாளை இது சீனாவிலும் நடக்கும்.


ஏன் ஒரு சோசலிச நாட்டை எடுப்பான் இன்று உலகில் தேசிய இன முரண்பாட்டின் இருப்பிடமாக உள்ள ஒரு இலங்கையை ஆராய்வோம்.


இலங்கையில் இன்று ஒரு இடது சாரிக் கட்சி சரியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தமிழ், சிங்கள,முஸ்லீம், மலையக மக்கள் பற்றிய சரியான நிலைப்பாட்டை முன்வைத்திருப்பின், ஒருக்காலும் இன்று நடக்கும் தேசிய இன முரண்பாடு ஏற்பட்டிருக்காது. மாறாக வர்க்கப் போராட்டம் நடந்திருக்கும். இதற்கு யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தேவையில்லை. இனவாதச் சக்திகளின் சொந்த நலன்களைப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியச் சுரண்பலை மூடிமறைத்துப் பாதுகாக்கவும் தேவைப்பட்டதே இலங்கை இன முரண்பாடு.


இலங்கை இன்று தனது சொந்தத் தேசியத்தை இழந்து ஏகாதிபத்தியத்தின் நேரடிக் காலனியாதிக்கமாக மாறி வருகின்றது. எந்தப் பொருளின் விலையை அதிகரிப்பது, எதை வெட்டுவது என எல்லாம் ஏகாதிபத்தியம் தீர்மானிக்கின்றது. ஏன் வரவு செலவைக் கூட அவர்கள் தான் தீர்மானிக்கின்றனர். இதை மூடி மறைக்க இருந்த தேசிய முரண்பாட்டை முன்னெடுத்து தேசிய இன முரண்பாட்டு உண்மையில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருக்க முடியாத வகையில், இலங்கையில் உள்ள தரகு முதலாளித்துவக் கட்சிகள் திசை திருப்பி உள் முரண்பாட்டை மாற்றுகின்றன. தேசிய இன முரண்பாடு எழுவது கூட, வர்க்கப் போராட்டம் என்ன நிலையில் உள்ளது என்பதுடன் தொடர்புடையது. இருக்கும் சுரண்டல் அரசு இனி இருக்கும் நிலையில் ஆள முடியாது என்கின்ற நிலையில் தான் தேசிய இன முரண்பாட்டை முன் தள்ளுகின்றது. இருக்கும் சமூகப் பொருளாதார வர்க்கப் போராட்டத்தின் ஒரு விளைவாகத்தான் தேசியப் போராட்டம் எழுச்சி பெறுகின்றது. இருக்கும் தேசிய இனத்தின் சுரண்டலை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, எல்லையை என ஒரு தேசிய இனம் அனைத்தையும் கோரும் போது போராடுகின்றது. இது ஒரு குறுகிய வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளதால் ஒரு முதலாளித்துவ கோரிக்கையாக தேசியமாக உள்ளது. பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியாக அனைத்தையும் கடந்து ஐக்கியத்தைக் கோருகின்றனர். ஐரோப்பாவில் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழ்கின்றார்கள் எனின் அங்கு உள்ள தொளிலாளர்களின் ஆதரவில் தானே ஒழிய அங்கு உள்ள அரசுகளின் ஆதரவில் அல்ல. முதலாளிகள், சுரண்டுவோர்களின் நலன் குறுகிய எல்லையைக் கொண்டது. அது பண்பாட்டை மற்றவர்கள் மீது திணிக்கின்றது. தான் இழந்து போவதை அனுமதிப்பதில்லை. ஆனால் தொழிலாளர்கள் மற்றவர் பண்பாட்டை மதிக்கின்றனர். தவறுகளை விமர்சிக்கின்றனர். அதனுடாக ஒரு பொதுப்பண்பாட்டை அடையாளம் காண்கின்றனர்.


ஐரோப்பாவில் நடந்துவரும் மொழி, எல்லை, வரலாறு, பண்பாடுகளைக் கடந்த ஐக்கிய ஐரோப்பா இரண்டு வகையில் நடக்கின்றன. ஒன்று ஆதிக்கமுள்ள ஐரோப்பா சுரண்டல் பிரிவுகள் தமது நிலையில் நின்று மற்றவர்கள் மீது திணிக்கின்றன. இதை எதிர்த்து எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் போராடுகின்றனர். தமது தேசியத்தை இதன் மூலம் பாதுகாக்கக் கோருகின்றனர்.


மறுபுறம் ஐரோப்பிய தொழிலாளர்கள் சர்வதேசிய வாதியாக உள்ளனர். தமது எல்லையைக் கடந்து மற்றவர்களுடன் ஐக்கியத்தைக் கோருகின்றனர், போராடுகின்றனர்.


தேசியம் என்பதும், சர்வதேசியம் என்பதும் ஒன்றுக்கு ஒன்று எதிரானது. ஆனால் தேசியம் மீது அதை அழித்து விட முனையும் வன்முறை ஆக்கிரமிப்பை சர்வதேசியம் பொறுத்துக் கொள்வதில்லை. அவர்கள் தனியாகவும், சர்வதேசிய வாதியாக நின்று அதற்காகப் போராடுகின்றனர்.


வியாட்நாம் மீதான யுத்தத்தின் போது, அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தின் போது அங்கு கம்யூனிஸ்டுக்கள் தேசிய வாதியாகவும், அதே நேரம் சர்வதேசிய வாதியாகவும் உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து உலகளவில் போராடினர். அதே நேரம் உலகத் தொழிலாளர் வர்க்கம் அவர்களுக்காகப் போராடினர்.


தேசியம் பாட்டாளி வர்க்கத்தினது அடிப்படைக் கோரிக்கை அல்ல. சிலவேளைகளில் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள் மீது திணித்து போராட முன் தள்ளுகின்றனர். இது மற்றைய தேசிய இனத் தொழிலாளர்கள் மீது தேசியத்தை பிரயோகிப்பது அல்ல. மாறாக அங்கு சர்வதேசிய நிலையைக் கைக்கொள்ளுகின்றனர்.


இலங்கையில் புலிகள், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்கள் மீதும், ஒடுக்கப்பட்வர்கள் மீதும் அரசு அல்லாத பிரிவுகள் மீதும் நடத்தும் தாக்குதலை, ஒருக்காலும், புலியின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் இருப்பின் நடத்தாது. ஏன் எனில் தேசியம் என்பது பாட்டாளிகளின் கோரிக்கை அல்ல. அதனால் சக பாட்டாளிகளை நேசிக்கின்றது, ஐக்கியப்படுத்துகின்றது. ஆதரவைக் கோருகின்றது. மறுபுறம் புலிகளை முதலாளித்துவத் தேசியம ; தான் பாட்டாளிகளின் மீது தாக்குதலை நடத்துக் கோருகின்றது. ஏன் எனின் அதன் வர்க்கக் குணாம்சம் தான்.


புலிகள் இடத்தில் ஒரு பாட்டாளி வர்க்கம் இருப்பின் யுத்தம் இலங்கை அரசுக்கு எதிராக தமிழ் சிங்கள ஐக்கியத்தின் அடிப்படையில் கோரப்படும். ஏன்எனில் பாட்டாளிகளின் கோரிக்கை தேசியம் அல்ல. சர்வ தேசியமே. இங்கு சிங்களப் பாட்டாளியின் போராட்டம் தான் தமிழ் பாட்டாளியின் தேசியத்தை கைவிட வைத்து சர்வதேசியமாக போராட்டத்தை ஒன்று படுத்தும்.


இங்கு தமிழ் பாட்டாளிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் திணிக்கப்பட்டு இனவாதம் யுத்தத்தை எதிர்த்து போராட தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ் பாட்டாளிகள் சர்வதேசிய வாதியாக இருந்து சிங்களப் பாட்டாளிகளின் ஐக்கியத்தைக் கோரும். இங்கு தமிழ் பாட்டாளிகளின் தேசியத்தை முன்னெடுக்கும் போது முதலாளித்துவக் கோரிக்கையை தனது கையில் முன்னெடுத்து செல்வதன் மூலம் பாட்டாளிகளின் தலைமையில் முதலாளித்துவ தேசியத்தை உள்வாங்குகின்றது. இதன் மூலம் பாட்டாளியின் தலைமையை தேசிய முதலாளித்துவத்தின் மீது நிறுவி அதை சர்வதேசியப் போக்கில் நகர்த்துகின்றது. புலிகள் இடத்தில் இன்று தமிழ் பாட்டாளிகள் இருப்பின் அதுதான் நடக்கும். இதன் மூலம் தான் தமிழ், சிங்கள, முஸ்லீம், மலையக பாட்டாளிகள் இனவாதத்தில் இருந்து விடுவிக்கப் படுவதும், உண்மையான இலங்கைத் தேசியத்தைப் பாதுகாக்க போராட முடியும்.


இதை மறுதலிக்கும் சர்வதேசியமல்லாத இனவாதியான அ.மார்க்ஸ் தனது கருத்தில் "..... ஒரு அரை, நவ காலனியச் சூழலில் ஒரு பல்தேசிய இன நாட்டுக்குள் இன்று அகண்ட தேசியம் என்பது சாத்தியம் இல்லை." எனக் கூறி பெரு முதலாளிகள், அதிகார வர்க்கம், மதவாத சக்திகள், அகில இந்திய தேசியத்தால் மறுகின்றார். இருக்கும் நிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ, மற்றும் அதிகார வர்க்கங்கள் இந்தியத் தேசத்தை பாதுகாக்க முனைவது என்பது ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கவும், அNது நேரம் தனது பங்கை தக்க வைக்கவுமே ஒழிய வெளியில் அல்ல. இருக்கும் இந்திய தேசியம் என்பது சொந்த நலனைப் பாதுகாத்த படி ஏகாதிபத்திய நலனைப் பெறுவதுமே.


ஆனால் இன்று உலகமயமாதல் இந்திய தேசியத்தை பெயரளவில் வைத்தபடி தேசியத்தை அழிக்கின்றது. அரை, நவ காலனியச் சூழல் என்பது பல்தேசிய நாட்டின் ஒன்று பட்ட தேசிய நலனைப் பாதுகாக்க, ஆக்கிரமிப்புக்கு எதிரான, அரை, நவகாலனிக்கு எதிரான போராட்டத்தைக் கோருகின்றது. இது இந்தியாவில் சாத்தியமானது அங்கு உள்ள பல்தேசிய பாட்டாளி வர்க்கம் தம்மை தாம் சர்வதேசிய வாதிகளாக அடையாளப்படுத்தும் போது இந்திய தேசியம் சர்வதேசிய வழியில் முன்னுக்கு வர முடியும் வருகின்றது.


இதை மறுத்து தேசிய வாதமாக ஒவ்வொரு தேசிய இனம் போராடுவது எனின் அது ஏகாதிபத்திய நலனுக்கு சாதகமானது. இழந்து செல்லும் இந்தியாவும், அதன் தேசிய இனங்களின் தேசிய நலன்களை சூறையாடும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடாது உள்ள முரண்பாடு ஏகாதிபத்திய சூறையாடலை மூடி மறைக்கின்றது. சிலவேளை சொல்லலாம் தனித்தேசியஇனமாக ஏகாதிபத்தியத்துக்குனு எதிராக, போராட முடியும் என்று இது நகைப்புக்குரியது. ஏன் எனின் ஏகாதிபத்துpயத்துக்கு எதிரான உணர்வு சர்வதேசியமாகும். சர்வதேசியமான தனித்தனி தேசிய போராட்டம் ஏன் ஒன்று பட்டு முடியாது போய்விடுகின்றது.


இந்தியாவில் தனித் தனி தேசியம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாட்டாளிகள் போராடுவதா அல்லது ஒன்றிணைந்து போராடுவதா? ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தும். நிச்சயமாக ஒன்றிணைந்தே ஒழிய பிளவு பட்டல்ல. அடுத்து ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சொந்த சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராகவும் போராட வேண்டிய இந்திய தேசிய இனத்துக்கிடையில் என்ன தடை உண்டு? ஒவ்வொரு தேசிய இனத்தையும் பிளவு படுத்தி வைத்திருக்கும் கட்சிகள், சுரண்டும் பிரிவுகள், இந்திய ஆளும் வர்க்கங்கள் தானே ஒழிய மக்களுக்கிடையில் தேசியங்கள் மீது பகைமை காட்டும் ஒரு நிலையில் இந்திய சமூகம் இல்லை. நீ தமிழன், நீ ஆந்திரக் காரன் எனக் கூறி மக்கள் பார்க்கின்றார்களா இல்லை. மாறாக நாம் இந்தியன் என மக்கள் எனப் பார்க்கின்றனர்.


ஆளும் வர்க்கம் ஒரு இனத்தின் மீதான குறித்த ஒடுக்கு முறையின் போது தான், நான் யார் என்ற கேள்வி முன்வைக்கின்றான்.


பொதுப்பண்பாக தேசிய இன முரண்பாடு இல்லை. மாறாக ஒரு குறித்த ஒரு பண்பாகவே தேசிய இன முரண்பாடு உண்டு. அது பிரதான முரண்பாடாக இனங்களுக்கிடையில் தேசிய இன முரண்பாடாக இல்லை. மாறாக பகுதி முரண்பாடாக தேசிய இன முரண்பாடு இந்தியாவில் உண்டு. சில பிரதேசம் தவிர இது தான் பொதுத் தன்மை.


ஆளும் வர்க்கம் எந்தளவு இன முரண்பாட்டை தனது ஆட்சியின் ஊடாக முன் தள்ளுகின்றதோ அதை ஒட்டி தேசிய இன முரண்பாடு பாச்சல் அடைகின்றது. வர்க்க முரண்பாடு சமுதாயத்தில் எந்தளவு கூர்மை அடைகின்றதோ அந்தளவுக்கு இன முரண்பாட்டை பல்தேசிய நாட்டில் முன் தள்ளுகின்றன. பாட்டாளி வர்க்கம் எந்தளவுக்கு தம்மைத் தாம் சர்வதேசிய வாதியாக அடையாளப்படுத்துகின்றதோ, அந்தளவுக்கு தேசிய இன முரண்பாடு பின் தள்ளப்படுகின்றது.


தேசிய இன முரண்பாட்டை எந்தளவுக்கு பண்பியல் பாச்சலை எடுக்கின்றது என்பது, பாட்டாளி வர்க்கம் எந் நிலையில் உள்ளது என்பதுடன் தொடர்புடையதாகும். ஒடுக்கப்பட்ட தேசிய இனப் பாட்டாளிகள் ஆளும்; வர்க்கத்தால் முன் தள்ளப்படும் தேசிய இன ஒடுக்கு முறையை எதிர்த்து ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளிகள் உடன் ஐக்கியப்பட்டு போராடாத நிலை ஏற்படும் போது ஒடுக்கும் தேசிய இன பூர்சுவா வர்க்கக் கோரிக்கையை முன் வைத்து, சொந்த சுரண்டலை மறைக்க எதிர் தேசிய இனத்துக்கு எதிராக (அரசை மட்டும் இன்றி மொத்த மக்களையும் இனங்காட்டி) போராட்டமாக தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.


சோவியத் யூனியனில் தேசிய இன முரண்பாட்டை முன் தள்ளிய போதெல்லாம், அங்கிருந்த தேசிய இனப் பாட்டாளிகள் சர்வதேசிய வாதியாக அடையாளப் படுத்தி, தேசிய இன முரண்பாட்டை பின் தள்ள வைத்து ஆளும் வர்க்கத்தை அதன் கோட்பாட்டுத் தளத்தை நொருக்கினர்.


வியட்நாம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது வியட்நாம் பாட்டாளிகள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடி தமது நாட்டை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடிய அதே நேரம், வியட்நாம் பாட்டாளிகள் அமெரிக்க, பிரன்ஸ் ..... நாட்டுப் பாட்டாளிகளுடன் கைகோர்த்து அமெரிக்க நாட்டிலும் மற்றைய நாடுகளிலும் வியட்நாம் மக்களுக்கு சார்பாக போராட்டம் வெடித்தது.


சர்வதேசிய பார்வை மட்டும் தான் தேசியத்தை மீட்கும். தேசியம் ஒருக்காலும் சர்வதேசியமாகி விடாது. சர்வதேசியம் மட்டும் தான் தேசியத்தை ஜனநாயகக் கோரிக்கையைக் கண்டு போராடுகின்றது. தேசியம் எப்போதும் சர்வதேசியத்தை நட்பாகக் கருதாது எதிரியாகவும் பார்க்கிறது.


அதாவது சர்வதேசிய தொழிலாளர் போராட்டம் தான் தேசிய தோழிலாளர் போராட்டத்தை நடத்தும். ஒரு தேசிய தொழிலாளர் போராட்டம் ஒருக்காலும் சர்வதேசிய தொழிலாளர் போராட்டத்தை நடத்தாது.


தமிழ் நாடு தனக்கான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து தேசிய விடுதலையை எடுப்பின் அது முதலாளித்துவக் கோரிக்கையாகவே இருக்கும். இங்கு ஏகாதிபத்தியத்தை, தரகு முதலாளித்துவத்தை, ஆனால் வர்க்கத்தை எதிர்த்து போராட்டமாகக் கோரின், ஏன் அதை மாற்ற தேசிய இனத்துப் பாட்டாளி உடன் இணைந்து நடத்த முடியாது. நடத்த முடியாது எனக் கூறின் அதன் பின் மறைந்துள்ளது முதலாளித்துவ நலனே. அப்படி நடத்த முடியும் எனின் தனிநாட்டுக் கோரிக்கை என்பது தவறானதாகிவிடுகின்றது.


மறுபுறத்தில் ஆளும் வர்க்கம் ஒரு தேசிய இனத்தை அழித்தொழிக்கும் வகையில் தீவிர, அழித்தொழிப்பை தொடங்கிய நிலையில் கூட பல்தேசிய பாட்டாளி வர்க்கப் போராட்டமே ஒரே தீர்வு. ஒரே ஒரு நிலையில் மற்றைய தேசிய இனப் பாட்டாளிகள் தேசிய வாதத்துக்குப் பலியாகிப் போன நிலையில் மட்டும், தற்காப்புக் கருதி தனிநாட்டுக் கோரிக்கையை சுயநிர்ணயக் கோட்பாட்டில் நின்று முன்னெடுக்கும் அதே நேரம், தேசிய வாதத்துக்குப் பலியாகிப் போன மற்றைய இன பாட்டாளிகளை விழிப்புற வைக்கவும் போராடுகின்றது அதாவது இங்கு முதலாளித்துவ தேசியத்தை முறியடித்து அதனிடத்தில் பாட்டாளி வர்க்கத் தலைமையை பெறுவதன் மூலம் மீளவும் சர்வதேசிய நிலைக்கு நகர முடியும்.


சோவியத் புரட்சியின் போது, பின்னும் உலகு எங்கும் சர்வதேசிய வாதிகள் தேசியத்துக்குள் சீரழிந்து சிதைந்த போது சோவியத் பாட்டாளிகள் சோவியத் புரட்சியை மட்டும் நடத்தவும், அதேநேரம் அதை பாதுகாத்து போராடவும் செய்தனர். அவர்கள் சர்வதேசிய வாதியாக நின்ற படி தேசியத்தை பாதுகாக்க யுத்தத்தை நடத்தினர். அதேநேரம் தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேசியமாக மீளத் தட்டி எழுப்பினர். பாட்டாளி வர்க்கத் தலைமைகளை மீளக் கட்டி எழுப்பியதன் மூலம் சோவியத் மீது தாக்குதல் நடத்திய நாடுகள் மீது அந்த நாட்டுப் பாட்டாளிகளே போர் பிரகடனம் செய்தனர். இதன் மூலம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு சர்வதேசிய வாதியாக நின்று போராடினர். இது தான் ஒரு பல்தேசிய நாட்டின் நிலை இது அரக்காலனிய, நவகாலனிய என்பது அல்ல பிரச்சனை.


அரைக்காலணனிய, நவகாவனிய, முதலாளித்துவ நாடுகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு வௌ;வேறு பொருளாதார , அமைப்பு மீதான சுரண்டல் என்ற அச்சுக்கு மேல் உள்ள வௌ;வேறு பற்களும், வடிவங்களுமே ஒழிய வேறு ஒன்று அல்ல.


உலகளாவிய பாட்டளிவர்க்க யுத்ததந்திரம் பொது அடிப்படையை கொண்டவை. ஆனால் நாட்டுக்கு நாடு, பொருளாதாரத்துக்கு பொருளாதாரம், அரசு வடிவத்துக்கு வடிவம் குறிப்பாக வேறுபடுகின்றன. தேசியம், சர்வதேசியம் என்பன கையாளப்படும் வடிவம் பொதுவானவை. ஆனால் நாட்டுக்கு நாடு வேறுபடும் சிறப்பு இயல்புகள் தான் வேறுபாடான பாதையை முன்தள்ளுகின்றன.


அடுத்து அ.மார்க்ஸ் கூறுவதைப் பார்ப்போம் "லெனினுக்குப் பிந்திய காலங்களில் பாசிசமும் கூடத் தேசிய இன உணர்வைப் பயன்படுத்த முடியும். எனப் பார்ப்போம். எனவே தேசிய இன உணர்வு, சனநாயக உணர்வு போன்றவற்றை ஒரு குறிப்பிடப்பட்டவர்க்கத்தின் உணர்வாகப். பார்த்தால் பொருளில்லை என்பது புரிகிறது. ....... பாசிசம் தோன்றிய வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது அது ஏகபோக முதலாளியத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதல்ல என்பது தெரிகிறது. பல சந்தர்ப்பங்களில் ஏகபோக முதலாளியம் தொடக்கத்தில் பாசிசத்துடன் ஒத்துப் போகவில்லை என்பதையும் ஏகபோக முதலாளியம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள எல்லா நாடுகளிலும் பாசிச நாசிச வடிவங்களையே எடுத்ததில்லை. என்பதையும் லக்லால் , புவுலன்ட்சாஸ் போன்றோர் சுட்டிக் காட்டுவது குறிப்பிடத் தக்கது." என தேசியத்தை வர்க்கமற்றதாகக் காட்ட முனைகின்றார்.


லெனின் காலத்தின் பின் எனக் குறிப்பிடுவது லெனினின் பெயரால் லெனினின் தேசிய சுயநிர்ணய உணர்வுக் கோட்பாட்டை, அதன் அடிப்படையில் தேசியத்துக்கு உள்ள வர்க்க குணாம்சத்தை மறுதலிக்கவே ஒழிய வேறொன்றும் அல்ல. சோவித் புரட்சியின் பின் உலகளவில் தேசிய முதலாளிகள் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்த முற்போக்கு பாத்திரத்தை இழந்து போனது என்பது, ஏதோ வர்க்கமின்றி இழந்தது அல்ல. உலகளவில் பாட்டாளி வர்க்கம் தான் போராடவும், அதிகாரத்தைக் கைப்பற்றி ஆளமுடியும் என்பது நிறுவியதன் மூலம், உலகளவில் இரண்டு ஆளும் வர்க்கப் பிரிவுகள் தான் இருக்க முடியும் என்பதை இந்த ஏகாதிபத்துpய சகாப்பத்தில் காட்டி உள்ளது. ஒன்று ஏகாதிபத்தியமும், அதன் எடுபிடிகளும், மற்றது பாட்டாளி வர்க்கம் மட்டுமே.


தேசிய முதலாளித்துவத்தால் முன்னெடுக்க முனையும் தனது கனவு கொத்தளங்களை சுயாதீனமாக ஏகாதிபத்திய யுகத்தில் வைத்திருக்க முன்னெடுக்க முடியாத ஏகாதிபத்திய சகாப்தம், சோவியத் புரட்சியின் பின் தீர்க்கமாகியுள்ளது. அது அல்லது இது என்பதைத் தீர்மானிக்க தேசிய முதலாளிகளுக்கு சவால் விட்டது. சோவியத் புரட்சி இது அல்லது அது என்பதால் தேசிய முதலாளித்தவப் பிரிவின் தெரிவு தான் பாசிசமா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றது.


ஒரு சனநாயகப் போராட்டம் எனின் பாட்டாளிகளுடனும், பாசிசப் போராட்டம் எனின் தரகு முதலாளிகளுடனும் இணைவது தேசிய முதலாளிகள் முன் உள்ள ஒன்றாக உள்ளது.


உலகளவில் நடைபெறும் தேசிய இனப் போராட்டங்கள் இந்த இரண்டில் ஒன்றை தெரிய வேண்டிய ஒரு நிலைக்கு உள்ளாகின்றனர். ஈழம், பஞ்சாப், காஸ்மீர், செர்பியா ........ மற்றும் அனைத்துப் போராட்டமும் இதில் ஒன்றை உடனடியாகவோ அல்லது சிறிது காலத்திலேயோ வந்தடைவதன் மூலம் அதன் சனநாயகத் தன்மை அல்லது பாசிசத்தை வெளிப்படுத்துகின்றன.


பாசிசம் என்பது நிச்சயமாக தேசியத்தில் தான் உருவாக வேண்டும் என்றல்ல. பாசிசம் என்பது உற்பத்தி முறை மீதான அரசு வடிவமையும் அந்த உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தினைப் பொறுத்து ஆளும் வர்க்கம் தெரிவு செய்யும்; ஆட்சி முறையுமே ஒழிய வேறு ஒன்றும் அல்ல.


இருக்கும் உற்பத்தி முறை நடக்கும் வர்க்கப் போராட்டத்தை இனியும் இருக்கும் அமைப்பால் தடுக்க முடியாது போகின்ற போது பாசிசம், பின் நாசிசம் என முன்வைக்கும் ஆட்சி முறை பண்பியல் ரீதியில் வேறுபட்ட ஆளும் வர்க்கங்களின் வௌ;வேறு வடிவங்களே. இவை இருக்கும் உற்பத்தி முறையையும் அரசு வடிவத்தையும் மட்டும் மீறுவது இல்லை.


இந்த வடிவத்தின் தெரிவுக்கு தேசியம் கூட பயன்பட முடியுமே ஒழிய நிபந்தனை அல்ல. தேசியப் போராட்டம் ஆனால் வர்க்கக் கனவை நிறைவு செய்ய உற்பத்தி முறை மீதான அரசு வடிவைப் பாதுகாக்க வர்க்கப் போராட்டத்தின் மீது ஆளும் வர்க்கம் தேசிய இனத்தைப் பிளந்து ஆளும் ஆட்சி முறையே தேசியமாக உள்ளது. இது மக்களுக்கான சனநாயகப் போராட்டமாக அல்லது இல்லாது இருக்க தேசிய இனப் போராட்டம் வௌ;வேறு வடிவங்களைத் தெரிவு செய்கின்றன. ஆனால் அடிப்படை உள்ளடக்கம் மட்டும் எப்போதும் ஒன்றாகவே உள்ளது.


பாசிசத்தை முதலாம் உலக நாடுகளில் ஏகபோக முதலாளிகள் ஆதரிப்பது இல்லை என்ற அ.மார்க்சின் கண்டு பிடிப்பு ஏகாதிபத்திய சகாப்தத்தில் நகைப்புக்கு உரியது. பாசிசம் ஆளும் வர்க்கத்தை மீறி வர முடியும் என்பது கண்கட்டி வித்தையே. பாசிசம் இருக்கும் உற்பத்தி முறை மீதான அரசு வடிவமே. அதன் மீதான வர்க்கப் போராட்டத்தின் மீது ஆளும் வர்க்கம் தெரிவு செய்யும் ஆட்சி முறையே ஒழிய, அந்தரத்தில் இருந்து மிதப்பதில்லை. பாசிசத்தை சிலவேளை ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் ஏற்காமல் இருக்கலாம். அதாவது ஆளும் வர்க்கங்களுக்குள் உள்ள முரண்பாட்டினை வைத்து பாசிசத்துக்கும், தேசியத்துக்கும் வர்க்கமில்லை என காட்ட முனையும் அ.மார்க்ஸ் என்ன இந்தியாவில் நித்திரையா கொள்கிறார்.


ஆளும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகள் இருக்கும் உற்பத்தி முறை மீதான அரசு வடிவத்தையும் அதன் மீதான வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்து ஆட்சி முறையில் வௌ;வேறு வடிவங்களை, பிரேரணைகளை முரண்பட்டபடி முன்வைக்கின்றன. இந்தியாவில் இருக்கும் உற்பத்தி முறையை அதன் மீதான அரசு வடிவத்தை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை கட்டுப்படுத்தி காங்கிரஸ், பாரதீக ஜனதா போன்ற அனைத்துக் கட்சியும் முரண்பட்டபடி முன்வைக்கும் ஆட்சி முறையைக் கொண்டு, பாரதீக ஜனதா முன்வைக்கும் இந்து பாசிசத்தை தரகு முதலாளிகள் ஏற்கவில்லை எனக் கூறுவது அபத்தம் நிறைந்தது. பாசிசம், தேசியம் என்பன ஆளும் வர்க்க உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தை தடுக்க முன்வைக்கும் வடிவங்களே. இங்கு இவை ஆளும் வர்க்கத்தின் உற்பத்தி முறை மீதான வர்க்கப் போராட்டத்தின் மீது தனது வர்க்கக் கண்ணோட்டத்துடன் இதை கட்டி அமைக்கின்றன.


"நான்கு இறுக்கமான பண்புகளோடு வளர்ந்து வரும் முதலாளியக் கட்டத்தோடு தேசியத்தை இணைத்துப் பார்க்கும் ஸ்ராலினிய வரையறை இன்றைக்கும் பொருந்தாது. தேசிய முதலாளிகள், தமிழ் தேசிய முதலாளிகள் என்றெல்லாம் பெரும் முதலாளிகள் யாரையும் அடையாளம் காட்ட முடியாது." என நிறப்பிரிகை முன்வைக்கும் வாதம் இந்தியாவில் இவர்கள் உயிருடன் யதார்த்தமாக இருக்கின்றார்களா என்பதை கேள்விக்குள்ளாக்கி விடுகின்றது.


இந்தியா உலக மயமாதலுக்குள் முற்று முழுதாக சென்று சிறு உற்பத்திகளைக் கூட இழந்து விட்டதா? ஏகாதிபத்தியங்களால் இன்று பாரிய உலகமயமாதலைக் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள நிலையில், இன்னமும் தேசிய முதலாளிகள் உள்ளதுடன், அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்களை வன்முறையுடன் நடத்துகின்றனர்.


பின் தங்கிய இந்தியாவில் சிறு கைத்தொழில் மூலம் விரிவுபடுத்தப்பட்ட பெரிய உற்பத்திகள் வரை தேசிய உற்பத்தி நிறையவே நீண்டு உள்ளன. அதாவது அண்மையில் ஏகாதிபத்தியத்தால் சிறுவர் உழைப்பதை; தடைசெய்யக் கோரும் மகாநாடுகள் கூட இந்தியாவிலும், மற்றை நாடுகளிலும் உள்ளுர் தேசிய உற்பத்தி மீதான தடையைக் கொண்டதாகவும், அதன் மூலம் அதை விழுங்கி விடச் செய்யும் ஒருபக்க முயற்சியின் விளைவே இவைகள்.


அமெரிக்கா அடிக்கடி இந்திய உற்பத்திகளைத் தடைசெய்யப் போவதாக மிரட்டுவது இந்தித் தேசிய உற்பத்திகளையே. நாளாந்த வாழ்வில் சிறு உற்பத்துp முதல் பெரிய உற்பத்திவரை நீண்டு கிடக்கும் இந்தியாவில் தமிழ் முதலாளிகள் இல்லை என்பது நகைப்புக்குரியது. இந்தப் பிரிவு அழிக்கப்படுகின்றது விழுங்கப்படுகின்றது. சரணடைந்தவர்களும், தோற்றவர்களும், புதியவர்களும் அதைக்கொண்டு மீண்டும் மீண்டும் தமது சுரண்டல் கனவுடன் மேல ;வருவதும், தோற்றுப்போவதும் நிகழ்வாக உள்ளது.


இந்தியாவில் தேசிய முதலாளிகள் உள்ளனர். ஆனால் அதிகாரம் இல்லை. தரகு முதலாளிகளுடன் முரண்பட்டு படியும், தேசம் கடந்த கம்பனிகளுடன் முரண்பட்டபடியும் இந்தப்பிரிவு நலிவடைந்து போய் உள்ளது. இன்று நலிவடைந்த பிரிவை ஒழித்துக் கட்டும் முயற்சியில் தேசங்கடந்து பன்னாட்டு நிறுவனங்கள் வலைப்பின்னலை வீசி எறீந்துள்ளது. இந்த தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் கூட முரண்பாட்டை சந்திக்கின்றனர். அந்தளவுக்கு இது தனது கொடூரத்தை விரிக்கின்றது.


தேசிய முதலாளிகள் இல்லை அல்லது இருக்கின்றனர் என்றே எடுப்போம் அப்படியாயின் ஏன் ஸ்ராலினின் வரையறை தவறானது. தேசிய முதலாளிகள் இல்லை அல்லது இருக்கிறது எனின் அங்கு தரகு முதலாளிகளே இருக்க வேண்டும். அப்படி ஆயின் இந்த தரகு முதலாளிக்கு எதிராக தேசிய முதலாளிகள் தமது நலனுக்காக ஏன் போராட முடியாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கொண்டிருந்து சோவியத்திலும், சீனாவிலும் ஒழித்துக்கட்டப்பட்டு மூலதனத்தின் பின் கூட, முதலாளித்துவ வர்க்கம் மேல் எழுந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. வர்க்கப் போராட்டம் நிகழ்ச்சி நிரலில் இருந்து கூட பிரதான முரண்பாடாக இதுவாக இருக்கும் போது சொத்துரிமை மீதான ஜனநாயக நாட்டில் ஒரு தேசிய முதலாளிகள் உருவாக்கம் பல பலவாக எழுவதும் ஒரு இயங்கியல். சொத்துரிமை வைத்துக் கொள்ளவும், சுரண்டல் உள்ள உரிமை ஜனநாயகமாக சுதந்திரமாக உள்ள போது, உலக மயமாதலுக்கு எதிரான தேசிய வாதம் எழுவதும், அதை முன்னெடுக்க தேசிய முதலாளித்துவப் பிரிவு முன்வருவதும் யதார்த்தமாக உள்ளது.


தேசியம் ஒரு கற்பிதம் என்ற நூலின் கல்யானி "சனநாயகத்தைச் சுயேட்சையாகப் பார்க்கலாம் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு" என்கின்றார். சனநாயகம் என்பது என்ன மனித இடைவெளிகளின் மீது தான் சனநாயகம் செயற்படுகிறது. இரண்டு மனிதர்களுக்கு உள்ள இடைவெளிதான் சனநாயகம் மற்றும் அழகியல். ஒப்பீட்டின் படிமங்களே சனநாயகம். சுயேட்சையான சனநாயகம் என்பது ஒன்று இருக்கவே முடியாது. மனித இடைவெளி அகன்றால் சனநாயகம் இல்லாது போய்விடுகின்றது. வர்க்க சமுதாயத்தில் தான் யாருக்கு சனநாயகம் என்ற கேள்வி எழுகின்றது.


வீதியில் நடக்கும் ஒர் ஆர்ப்பாட்டத்தில், ஆர்ப்பாட்டத்தின் நியாயமான கோரிக்கையை எந்த சனநாயகம் ஏற்றுக் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்பது சிறந்தது.


ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின், ஒரு மனிதனின் சுதந்திரங்கள், செயற்பாடுகள் என அனைத்தையும் இருக்கும் சட்டம் தான் வகுக்கின்றது. சட்ட வரையறை மீறி சனநாயகம் இருப்பது இல்லை. சனநாயகம் என்பது உற்பத்தி முறையில் உருவாக்கப்படுகின்றது. இருக்கும் உற்பத்தி முறை மீது, அரசு வடிவத்தின் மீது நடக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்படும் ஆட்சி முறைக்கு இசைவானது தான் சட்டம். ஆகவே சட்டம் எப்போதும் ஒரு நிரந்தரமான வகைப்பட்டது அல்ல. மாறாக அவை மாறுகின்றன. சனநாயகம் என்பது மாறுகின்றது. ஆளும் ஆட்சி முறைக்கு ஏற்ப சட்டமும் மாறும் போது சனநாயகமும் மாறுகின்றது. சமுதாயத்தில் என்றும் சுயாட்சியான சனநாயகம் இருந்தது இல்லை, இருக்கப் போவதும் இல்லை. வர்க்கமற்ற சமுதாயத்தில் சனநாயகம் ஒழிந்து போகின்றது.


தொகுப்பாக- ~தேசியம் ஒரு கற்பிதம்| என்ற நூலில் நிறப்பரிகை, அ.மார்க்ஸின் கருத்துக்களை வெளியில் எடுத்து இந்த சிறு நூல் மூலம் விமர்சித்துள்ளேன். அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட நிறப்பிரிகைக்குழுவால் முன்தள்ளப்படும் நவீன திரிபுவாதம், மற்றும் மார்க்சிய விரோதப் போக்குகளை நான் இப்புத்தகம் மூலம் கேள்விக்குள்ளாக்க முனைகின்றேன். அ.மார்க்சை அடிப்படையாகக் கொண்ட உயிர்ப்பு, மனிதம், அன்மைக்காலமாக சரிநிகர், மற்றும் ஐரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள், மலர்களில் வெளியிடப்படும் அடிப்படை தேசியக் கருத்துகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கின்றது. அ.மார்க்சை தாண்டியது அல்ல இவர்களின் கோட்பாடு அ.மார்க்சை பின்பற்றி அதில் இருந்து கோட்பாட்டை முன்வைக்கும் இப்பிரிவுகள், தமது அன்னிய வாழ்நிலையுடன், எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள சூழ்நிலையில், மக்களுக்காகப் போராடுவதை விட்டு கலைந்து செல்ல முன்வைக்கும் கோட்பாடுகளே இவை.


எம்மண்ணிலும், புலம் பெயர்ந்த நாட்டிலும், இயக்கங்களால் சந்தித்த அனைத்து இழப்புக்கள், அழித்தொழிப்புகள், தோல்விகளை விட, நாம் இந்த மார்க்சிய விரோதத் திரிபுகளால் சந்தித்த சேதம் தான் தமிழ் ஈழப் போராட்டத்தினதும், இலங்கையின் வர்க்கப் போராட்டத்தினதும் மிகப் பெரிய இழப்பாகும்.


அ.மார்க்சை தலைமையாகக் கொண்ட இந்த திரிபு வாதிகளால் இந்தியாவைவிட அதிகம் இலங்கையில்தான் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று உளள் இலங்கை நிலையில் அ.மார்க்சையும், அவரின் சீடர்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த துரோகத் தனத்தின் செயற்பாடுகள் மட்டும் இன்றி, ஏகாதிபத்திய தலையீட்டுக்குத் தேவையான கோட்பாட்டு உருவாக்கத்தை முன்னணி சக்திகளுக்குள் முன் வைத்து அதன் மூலம் ஏகாதிபததியத்துக்கு சார்பாக பிரச்சாரம் செய்வது என்பது இலங்கை மக்களால் பொறுத்து கொள்ளக் கூடியது அல்ல. அதை எதிர்த்துப் போராடும் பணியில் தான் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

மின்னூல் வடிவம் : மு. மயூரன் (2007)
அண்மைய மாற்றம் : தி. கோபிநாத் (06.02.2008)