கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு

Page 1
|-|
//
|-
//
和 、晒。
鳞。” |-
| | //
 
 

// |-| //
sae–
%
o.//|-||-
//W
// 그
| | |
|ww적 WW) * Ä
}sae! *s, *《

Page 2

மதப்பண்பாட்டின் கோலங்களையும்
கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு
பால்நிலை நோக்கு
தொகுப்பு
செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 3
நாற் பதிப்புத் தரவுகள்
நால் :- மதப்பண்பாட்டின் கோலங்களையும்
கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால் நிலை நோக்கு
தொகுப்பு :- செல்வி திருச்சந்திரன்
பதிப்புரிமை - பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
அளவு :- 1/8
அச்சுப் பதிப்பு - யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்,
48в, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13
வெளியீடு - பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
விலை :- RS. 300/-
அட்டைப்படம் :- பெண்ணின் குரல் சுவரொட்டியை எமது
தேவைக்கேற்ப வரைந்தவர்
சாந்தினி குணவர்தனா

(1)
(2)
(3)
(4)
(5)
(6)
பொருளடக்கம்
பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இஸ்லாமிய நோக்கு O1-46 -முர்ஷிதா மீராலெப்பை
பெரியபுராண வரலாற்றுநவிற்சிக்காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை 47-98
-வை, கா.சிவப்பிரகாசம்
பெண்களின் சமூக அந்தஸ்த்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் -
சில யாதகக் தரும் அளவுகோல்கள் 99-112
- விகித்தா இரங்கநாதன்
சமயச் சடங்குகளும் பெண்களும் மட்டக்களப்பின் வழிபாட்டுப்
பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட சில அவதானங்கள் 13-122 -சித்திரலேகா மெளனகுரு
சித்தர்பார்வையில் பெண்கள் 123-132
-செ.யோகராசா
"தமிழ் இலக்கியத்தில் பெளத்தமதத் துறவிகளாகப் பெண்கள்"
மாதவி, மணிமேகலை ஆகியோர் குறித்த சிறப்பு நோக்கு 133-148
-றுாபி வலன்ரீனா

Page 4

கருத்தியலும் பண்பாட்டுக் கோலங்களும் கட்டவிழ்க்கும் சமயக் கொள்கைகளும் கிரியைகளும்:
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் நடாத்தப்படும் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளில் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்டு நூல் உருவம் பெறுவது வழமையாக எம்மால் முன்னெடுக்கப்படும் செயல். எம்மால் ஜனவரிமாதம் 18ம் 19ம் திகதிகளில் பெண்களும் மதமும் என்ற தொனிப்பொருளை மையமாக வைத்து நடாத்தப்பட்ட கருத்தரங்கில் பல முக்கிய செய்திகள் அடங்கிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அதனை எழுதியோர் அக்கருத்தரங்கில் பங்குபற்றியோரால் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் சிலவற்றை உள்வாங்கி கட்டுரைகளைச் செம்மைப் படுத்தியுள்ளார்கள். இதுவும் நூலுருப்பெறுவதற்குத் தாமதமாகிய காரணங்களுள் ஒன்று. கிட்டத்தட்ட 50 பேர் பங்கு கொள்ளும் எங்கள் கருத்தரங்குகளில் இக்கருத்தரங்கில் பங்குபற்றியோர் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் அவர்களின் பங்களிப்பு, விவாதம், கருத்து மோதல், என்ற ரீதியில் மிகவும் காத்திரமானதாக இருந்தது. இந்நிகழ்ச்சியும் கூட எண்ணிக்கை முக்கியம் அல்ல எண்ணக்கருத்துக்களின் செறிவும் ஆழமுமே. முக்கியமானவை என்ற உண்மையை மேலும் நிறுவியதாகவே நாம் இணங்கண்டு கொண்டோம்.
இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளும் வாத, விவாதக் கருத்துக்களும் பல பேரை மிகவும் தாக்கியதாகவும் அறிந்தோம். சிலர் தடம்புரண்டு மனச்சிக்கலுக்குள்ளாகி விட்டார்கள். சமயம், மதம், கிரியைகள், பண்பாடு, என்பன எல்லாம் ஒரு உன்னதமாக உயரிய நிலையில் வைக்கப்பட்டு உணர்ச்சியனுபவங்களில் திளைத்த ஒரு நிலைப்பாடாக காலங்காலமாகத் தூய்மையான, கேள்வி கேட்கக் கூடாத, விவாதத்திற்குட்படாத ஒரு பொருளாக, வாழ்க்கை அனுபவமாக இருந்து வந்திருக்கிறது. கைலாசபதியின் கூற்றுப்படி அடி முடி தேட எத்தனிக்கப்படாத ஒரு விடயமாக அப்படி அப்படியே ஏற்றுக்கொண்ட முடிந்த முடிவாக இருந்தபடியால் ஆலயங்களின் போதனைகளும் அனுஷ்டானங்கள் சமய போதகர்களின் வாக்குமூலங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதும், அவற்றின் அசமத்துவ நிலைகளும் கொடுரங்களும் வெளிக் கொணரப்பட்டன. இது பலரைக் கலக்கி நிலைதளரப்பண்ணிவிட்டது. உன்னதங்கள் உடைக்கப்பட்டு விட்டனவே என்ற ஆதங்கம் பலரைத்தாக்கிவிட்டது. எமது கருத்தரங்கின் வெற்றியை உணர்த்துவதாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

Page 5
மனுதர்ம சாத்திரமும், ஐந்தாவது வேதமாகக் கொள்ளப்படும் மகாபாரதமும் எப்படி சாதிக் கட்டுப்பாட்டையும் பிராமண ஆதிக்கத்தையும் சத்திரிய மேலாண்மையையும் நியாயப்படுத்தி பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளையும் கொடூரங்களையும் சமயம் நீதி என்ற பெயரில் பேணி வந்தன என்பதற்கு நாம் தற்பொழுது ஆதாரங்களும் சான்றுகளும் முன்வைக்கத்தேவை இல்லை. பொதுவாக முற்போக்குவாதிகளும் பெண்நிலைவாதிகளும் ஏற்கனவே அதைச்செய்து விட்டார்கள். இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இஸ்லாமிய சமயம், பெளத்த சமயம், இந்துசமய புராணம், சித்தர் மட்டக்களப்பு, வழிபாட்டு பாரம்பரியங்கள், பெண்துறவிகள் போன்ற பலவிதகருப்பொருட்களை
அடிப்படையாகக் கொண்டவை.
மதங்களைப் பெண்கள் இருவகையாகக் கையாண்டார்கள். ஒன்று அதை அனுபவப்பொருளாகக் கொண்டு தேவாரங்கள் பாடி ஆடி பஜனை வைத்து ஏங்கி வேண்டி உணர்ச்சிநிலையில் ஒரு வகை. துன்பநிக்கியாகக் கொண்டனர். இரண்டாவதாக ஒரு குமுறலாக, பிரலாபமாக மற்றும் எதிர்க்குரலை எழுப்புவதாகத் தங்கள் உள்ளகக் குமுறல்களை வெளிப்படுத்தினார்கள். ஆண்டாள் கண்ணனை உடல் அனுபவக்காதலனாகக் கொண்டாள் என்றால், காரைக்கால் அம்மையார் அப்பனைத் தகப்பனாகக் கொண்டு உலகக்கொடூரங்களிலிருந்து விடுதலை தேடுபவளாகத் தன்னை ஆக்கிச் கொண்டாள். இங்கு மதங்களை இவர்கள் விடுதலைப் பொருளாக உபயோகித்தனர். சைவ சித்தாந்திகள் பலர் பெண்களது உடலையும், அவயங்களையும், பெண் இன்பத்தையும், மோகத்தையும் கண்டு மிரண்டு பயந்ததின் விளைவாக அந்தப் பெண்ணைப்பேயாக, மாயாப்பிசாசாக, மயக்கிகளாக, தாசிகளாகக்கொண்டு, பெண்ணை விலக்கி வைத்தார்கள். முக்தி நிலைக்குப் பெருங்கேடு பெண் ஏன்ற ஒரு ஐதிகத்தை வளர்த்தார்கள். இதற்கு முரண்பாடாகப் பெண்ணைத்தாயாகத், தாரமாகத், தெய்வத்திற்கு உயர்த்தி, இனத்துவ இருப்பிற்குள் அடங்கும் மொழி, பண்பாடு, நாடு போன்ற போன்றவற்றில் இருத்தி தாய்மொழி, தெய்வத்தாய்நாடு போன்ற அடைமொழிகளால் உயர்த்தியும் விட்டனர். ஆகவே பெண் என்ற சதையும், உடலும், உணர்வும் உள்ள ஜீவன் ஆண்களைப் பல வழிகளில் அலைக்கழித்து
முரண்பாட்டு நிலைக்குத் தள்ளி விட்டது.

பெண்ணும் மதமும் என்ற ரீதியில் நாம் சில விடயங்களை விளங்கிக் கொள்ள முயலும் பொழுது உலகளாவியரீதியில் நாம் சில பொதுமைகளை இனங்காணலாம். புரட்சிக் குரல்களும் சமயம் சார்ந்த பெண்களிடம் புரட்சிக் குரலும் ஆங்காங்கே ஒலித்தன. குடும்பம், உறவுநிலைகள், கணவன் என்பது போன்ற புனித சமூக இருப்புக்கள் சிலவற்றை விட்டு விலகி உடைத்தெறிந்த பெண்கள் மதவாதிகளாகியதும் கூட ஒரு விடுதலை வேண்டியே மேற்கூறிய புனிதங்களை விட்டு விலகும் ஒரு பெண்ணுக்கு மதம் ஒரு கவசமாகியது. மதம் என்ற பெயரில் அவர்கள் சமூக அங்கீகாரத்தைப் பெற்றனர். அப்படி ஒரு மதப்போர்வையை போடாவிட்டால் அவளைச் சமூகம் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கும். ஆண்டாள் உடல் இன்பம் வேண்டிக் கதறியது. ஆன்மீகத்திலும் ஆன்மாவும் பரம்பொருள் என்ற உவமைக்குள் அடக்கப்பட்டு ஆன்மாவும் பரம்பொருளும் இரண்டறக்கலக்கும்
நிலைக்கு ஒப்பிடப்பட்டு பக்தி இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
காரைக்கால் அம்மையார் தனது ஆளுமைக்குச்சற்றும் பொருத்தமில்லாத ணவனைவிட்டுப் பிரிந்தபொழுது சிவனையே சார்ந்து தன் உள்க்கிடக்கைக்கு மாற்று வழி தேடினாள். மீரா ராஜபோகம் அனுபவிக்கும் பொருந்தாக்
வனைவிட்டு கண்ணனைக் கணவனாக ஏற்றுக்கொண்டாள். 12ம்
ாண்டில் ஒல்லாந்தர் நாட்டில் Beguine என்ற ஒரு றோமன் கத்தோலிக்க
ஒட்டின்ார்கள். இவையெல்லாம் பெண்கள் கட்டுடைத்து வெளியேறினார்கள் புலப்படுத்துகிறது. ஆனாலும் ஒரு மதப் போர்வை இருந்ததினால் சமூக அங்கீகரம் இவர்களுக்குக் கிடைத்தது.
என்ப
இப்படிப்பட்ட ஆய்வுமுறைகளைத் தொடருவதற்கு நடந்து முடிந்த கருததரகும் இந்நூலும் ஒரு முதற்படியாக இருக்கும் என்பதே எமது எண்ணம்.
செல்விதிருச்சந்திரன் பெண்கள் ல்வி ஆய்வுநிறுவனம் 58,தர்மராவீதி, கொழும்பு 06.

Page 6

பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இஸ்லாமிய நோக்கு
முர்ஷிதா மீராலெப்பை
அறிமுகம்
சீமயம் என்றால் என்ன? சமயம் எதனைத் தோற்றுவிக்கின்றது? சமயம் என்பது நிலையானதா? அவ்வாறெனின், அதனை உறுதிப்படுத்துவது எது?
சமயம் அல்லது மார்க்கம் குறித்து சிந்திக்கும் போது இவ்வாறான கேள்விகள் மேலெழுவது தவிர்க்க முடியாததாகும். மார்க்கம் என்பது சடங்குகளை மாத்திரம் கொண்ட அமைப்பின்றி நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கும் ஒரு பெரும் ஸ்தாபனமாகும். எந்தச் சமயமும் அதன் வரலாற்றுப் படிமங்களினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பிக்கைக் கோட்பாடுகளினூடு அவற்றின் நிலைத்திருத்தலைக் கொண்டு செல்கின்றன. சமயங்களின் நிலையான தன்மையை சமூக வரலாற்று அமைப்பில் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
உலகில் எந்த நாட்டை அல்லது சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் வாழ்வின் எல்லாவித அம்சங்களையும் ஏதோவொரு விதத்தில் சமயம் ஆட்சி செய்கின்றது என்பது நிஜம். குறிப்பாக பெண்களின் உரிமைகள் "சமயம்" என்னும் கண்ணாடி கொண்டே பார்க் கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சமயமானது பலம் பொருந்திய கலாச்சார உந்துசக்தியாகவும் சமூக பிரக்ஞையை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகவும் கொள்ளப்படுகின்றது. இவற்றினூடே எமது சமூக அமைப்புக்குள் பெண்களின் உரிமைகளைத் தீர்மானிப்பதில் சமயம் உறுதியான பங்கை வகித்துவருகின்றது என்பது மிகவும் வெளிப்படையான ஒரு விடயமாகும்.
/ހ..........
இருந்தபோதிலும் தந்தைவழி மரபானது எல்லா சமய எல்லைகளையும் ஊடறுத்துச் செல்கின்ற ஒன்றாகக் காணப்பட்டுவருகின்ற இவ்வேளையில் ஆரம்பகாலந் தொட்டே பெண்கள் இரண்டாந்தரப் பிரஜையாக நடாத்தப்பட்டு

Page 7
வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் இவ்வேளையில் சமயம் என்ற எல்லைக்குள் இஸ்லாம் பெண்கள் குறித்து என்ன சொல்கின்றது என்பதை ஆராய்வோம்.
இஸ்லாம் ஓர் ஆத்மீக வழிகாட்டலுக்குரிய மார்க்கமாக மட்டுமல்லாது நடைமுறை வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற சட்டதிட்டங்களைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்ற ஒரு வாழ்க்கை முறையாகவும் அமைகின்றது. இஸ்லாமிய சட்டதிட்டங்களை இறைவன் அல்குர்ஆன் மூலமும், நபிகளாரின் வாழ்க்கை முறை மூலமும் மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளான்.
இறைவன் மனிதர்களுக்கு வழிகாட்டவே அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இதிலுள்ள விடயங்களை ஒளிவு மறைவற்ற விதத்தில், எல்லோரும் தெளிவாக அறிந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைத்து அருளியுள்ளான். ஒவ்வொருவரும் இதனை வாசித்து, ஆராய்ந்து, உண்மைகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவன் திருக்குர்ஆன் மூலம் கட்டளையிடுகிறான். இதன் மூலம் குர்ஆனிலுள்ள விடயங்களை ஆய்ந்தறிந்துகொள்ளும் உரிமையை இம்மண்ணில் பிறந்துள்ள மனிதர்கள் எல்லோருக்கும் இறைவன் உத்தர வாதமளித்துள்ளான்.
இஸ்லாம் மார்க்கமானது பெண்களின் உரிமைகள் பற்றி குர்ஆனிலும் ஷரியாவிலும் மிகத்தெளிவாக விளக்குகின்றது. புனித குர்ஆன் பெண்களை மிக நீதமாக நடாத்துவதோடு, மனித சரித்திரத்தில் முதன்முதலாக பெண்கள்"சட்ட உரித்துடையோர்” என்பதை உறுதியாக எடுத்துரைத்து விவாகம், விவாகரத்து, சொத்துக்கள், வாரிசுரிமை, சாட்சியம், சன்மானம் மற்றும் தண்டனை போன்றனவற்றில் அவர்களுக்குரிய பூரண உரிமைகளை வழங்கிக் கெளரவிக்கின்றது. எல்லாவித உரிமைகளும் மிக அழகாக விபரிக்கப் பட்டுள்ளதை நுணுக்கமாக ஆராய்ந்தால் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் சார்பாக குர்ஆன் வழங்கியுள்ள உரிமைகள் எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகின்றது. எவ்வாறான முறையில் திரிபடையப் பட்டுள்ளது என்று சிந்தித்துப் பார்ப்பது எமது கடமையுாகும்.
இஸ்லாமிய உலகில் இன்று சமத்துவத்திற்காகப் போராடுவது என்பது மேற்கத்தைய மயமாக்கப்பட்ட, குழம்பிப்போன ஆய்வாளர்களின் இறக்குமதி செய்யப்பட்ட கெட்ட நடவடிக்கை என்றே கருதப்படுகின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவின் பின் இஸ்லாமிய சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியதுடன் அது பெண்களின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். பண்பாட்டு நடைமுறைகள் மரபுசார்
2

சட்டங்களுடன் இணைந்து பெண்களை அடக்கியாள்வதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன. அவை தவிர்க்க முடியாதபடி "இஸ்லாமிய” என்ற லேபலையே கொண்டிருக்கின்றன. அவை இறைவனால் உருவாக்கப்பட்டவையாக, உருவகித்துக் காட்டப்படுகின்றன. இதனால் உண்மையான குர்ஆனிய ஆன்மீகத் தன்மையை பெண்கள் உணர்வுபூர்வமாக ஆராய்வது காலத்தின் தேவையாகும்.
இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு காணப்பட்டது என்று சற்று நோக்குவோமானால் “ஜாஹிலியா” என்றழைக்கப்படும் அக்காலத்தில் பெண்கள் எதுவித சுதந்திரத்தையும் உணரவில்லை. அது மட்டுமல்லாது அவர்கள் அடக்கி யொடுக்கப்பட்டே நடாத்தப்பட்டார்கள். அக்காலப் பெண்கள் ஆண்களின் உடைமையாகக் கருதப்பட்டனர். பெண் பிள்ளைகள் பிறந்தால் குழிதோண்டி உயிருடன் புதைக்கும் காட்டு மிராண்டித்தனமான வழக்கம் இருந்து வந்தது என்றால் பெண்கள் எவ்வளவு தூரம் இழிவாகக் கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எம்மால் ஊகிக்க முடியும். இச்செயற்பாட்டிற்கு இரண்டு விதமான உள்நோக்கங்கள் காணப்பட்டது. ஒன்று குடும்பத்தில் பெண் பிள்ளைகளை அதிகம் கொண்டிருப்பது பொருளாதார ரீதியில் சுமையாகக் கருதினர். மற்றய காரணம் என்னவென்றால் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு ஆகும். இவைகளாலேயே பெண் சிசுக் கொலை காணப்பட்டு வந்தது.
இருந்த போதிலும் இஸ்லாத்தின் வருகையுடன் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான மிருகத்தனமான செயல்களை வன்மையாகக் கண்டித்ததோடு பெண் சிசுக்களின் உயிர்களைக் கொலை செய்யாதிருப்போரும், அவர்களை அவமதிக்காது கெளரவப்படுத்துவோரும், தமது பெண் மக்களைப் புறக்கணித்து ஆண் மக்களுக்கு முன்னுரிமை வழங்காது தமது பிள்ளைகளிடையே நீதமாக நடந்துகொள்வோரும் சுவர்க்கம் செல்ல அல்லாஹ்வினால் அனுமதிக்கப்படுவர் என அறிவுரை பகர்ந்தார்கள். இவை பெண்களின் அந்தஸ்த்து குறித்து இஸ்லாம் வெளிப்படுத்தும் பாரிய முன்னேற்றத்தை சந்தேகத்துக்கிடமின்றிக் காண்பிக்கின்றன.
அக்காலத்தில் இடம்பெற்று வந்த மற்றுமொரு நடைமுறையானது அக்கால ஆண்கள் எத்தனை மனைவிமாரையும் வைத்திருக்கலாம் என்பதாகும். ஆண்களை எதுவித கட்டுப்பாடுமின்றி பல திருமணங்களைச் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் இஸ்லாத்தின் வருகையுடன் இந் நடைமுறை மாற்றமடைந்தது எனலாம். இஸ்லாம் திருமணம் செய்யக்கூடிய
3.

Page 8
எண்ணிக்கையை நான்காகக் குறைத்தபோதிலும், அம்மனைவிமாரிடையே நீதமாக நடந்துகொள்ளக் கூடிய வல்லமை இருந்தால் மட்டுமே பலதார மணம் செய்வதற்குரிய அனுமதியை வழங்கியது.
புனித திருக்குர்ஆன் பெண்களது கெளரவத்தையும் அவர்களது
உரிமைகளையும் பற்றி மேலும் மேலும் அழுத்தமாகக் கூறுகின்றது. ஆனால் இது தொடர்பில் பலவகையான வியாக்கியானங்கள் காணப்படுகின்ற இவ்வேளையில் ஹதீஸ்களுங் கூட சமூக வரலாற்றுப் படிமங்களுள் அமிழ்ந்து, திரிபடைந்த நிலையில் வெளிப்பட்டு, பெண்களை மேலும் அடக்குபவையாகவே அமைகின்றன. இன்றைய காலகட்டத்தில் பல பழைய சித்தார்ந்தங்கள் சிதைந்து போகின்ற நிலையையும், பல புதிய தாராள, நீதியான சமூகப் போக்குகள் வெளிப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
பெண்களுக்குச் சம அந்தஸ்த்தை வழங்குகின்ற குர்ஆனிய வாக்கியங்கள் சிலவற்றை நோக்குவோமானால் அதன் அடிப்படையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் சம அந்தஸ்த்தையே பெறுகின்றனர். அல்குர்ஆன் அத்தியாயம் 9 அத்தவ்பா வசனம் 71 குறிப்பிடுவதாவது,
“விசுவாசங் கொண்ட ஆண்களும், விசுவாசங்கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உற்ற காரியஸ்த் தர்களாக இருக்கின்றனர் அவர்கள் (பிறரை) நன்மையைக் கொண்டு ஏவுகிறார்கள். (மார்க்கத்தில் மறுக்கப்பட்ட) தீமையை விட்டும் விலகுகின்றார்கள், தொழுகையையும் நிறைவேற்று கின்றார்கள், ஸ்காத்யுைம் கொடுத்து வருகின்றார்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்பட்டு நடக்கின்றார்கள். இத்தகையோர் அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவான் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.” (977)
மேற்கூறிய வசனம் பால்நிலை சமத்துவத்திற்கு தெட்டத் தெளிவான ஒரு உதாரணமாகும். மேலும் 33ம் அத்தியாயத்தின் 35ம் வசனத்தைப் பார்ப்போமானால்
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான

பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமை யாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்ம ஸ்தானங்களைக்) காத்துக் கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களான ஆண்களும், அெல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூருபவர்களான பெண்களும் (ஆகிய) இவர்களுக்கு, அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்) கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான். (33 : 35)
இவ்வசனத்தைப் பொறுத்தவரையில் பெண்கள், ஆண்கள் போன்று எல்லாவித கெளரவத்தையும் பெறுவதைக் காணமுடிகின்றது. இருபாலாரும் அவரவர் நடத்தைக்கேற்ப வெகுமதியைப் பெற்றுக்கொள்வர். இதன்படி ஒருவரிலிருந்து மற்றவர் பாரபட்சம் காட்டப்படமாட்டார்கள். மேற்கூறிய வசனத்தின் மற்றுமொரு தனித்தன்மை என்னவென்றால் அது பெண்கள் உழைப்பதற்குரிய உரிமையை வழங்கி நிற்கின்றதாகும். குர்ஆனிய அடிப்படையில் பெண்களுக்கு, தொழில் செய்வதற்கான உரிமையை மட்டுமல்ல அவ்வுழைப்பு அவர்களுக்கே சொந்தமெனவும் அதிலிருந்து அவள் தானம் செய்வதற்கும் அவளுக்கு இடமளிக்கின்றது. அது மட்டுமல்லாது அவளது விருப்பமின்றி அவ்வுழைப்பு தந்தையினாலோ கணவனினாலோ பங்கிட்டுக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்துகின்றது.
குர்ஆனிய வசனங்கள் வெளிப்பட்ட காலங்களுடன் மேற்கூறிய விடயங்களை ஒப்பிட்டு நோக்குவோமானால் அவற்றை அற்பமானவையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் வருகைக்கு முந்திய காலங்களிலும், நபிகளாரினதும் கலீபாக்களினதும் காலங்களின் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரையிலும் பால்நிலைச் சமத்துவம் என்னும் எண்ணக்கருவைப் பற்றிய சிந்தனையே இருக்கவில்லை. ஆனால் வெளிப்படையாகக் கூறுவதானால் 7ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே குர்ஆன் பால்நிலைச் சமத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஏன் இன்னும் நாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தோமா? ஏனெனில் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட உரிமைகள் ஆண்களினால் ஒப்புக்கொள்ளப் படவில்லை என்பதாலாகும். பெண்களுக்கு ஆண்டவன் அருளிய உரிமைகளை அவர்களிடமிருந்து அகற்றுவதற்குப் பல்வேறு உபாயங்களை ஆண்கள்
5

Page 9
கண்டுபிடித்துள்ளனர். அது மட்டுமல்லாது இறைவன் பெண்களுக்கு மேலும் மேலும் சமவுரிமையைத் தாராளமாக அளித்துள்ளபோதும் ஆண் தனது மேலாண்மையைத் (Superiority)தக்கவைத்துக் கொள்வதிலேயே மும்மூரமாயுள்ளான், இதனை என்னவென்பது? சமயம் ஆண்டவனாலளிக்கப் பட்டதா? அல்லது ஆண்களால் வழங்கப்பட்டதா? இவ்வேளையில் குர்ஆன் வசனமொன்றை நோக்குவோம். ஸ9றா அல் பகறா வசனம் 228 குறிப்பிடுவதாவது
“பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன. பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகள் போல” (22.28)
இவ்வசனம் ஆண்களுக்குள்ள அதே உரிமை பெண்களுக்கும் உண்டு
எனத் திறம்படத் தெரிவுக்கும் அதேவேளை “பெண்களாகிய அவர்கள் மீது ஒரு
படித்தரமும் உண்டு’எனக் கூறுகின்றது. இப் 'படித்தரம்” என்ற சொல்
ஆண்களின்"தான்’என்ற அகங்காரத்தைத் திருப்திப் படுத்துவதற்காக
இறக்கப்பட்ட ஒன்று எனும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. அன்றைய
சமூகத்தில் நிலைத்திருந்த தந்தைவழி மரபு, ஆண் தலைமையின் எதார்த்தத்தை குர்ஆன் ஏற்றுக்கொள்ளாது ஆணுக்குச் சிறியதொரு படித்தரத்தையும் வெளிப்படுத்தாது விட்டிருந்தால் முஹம்மது (ஸல்) அவர்கள் மிகவும் கடினமான ஒரு நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் என பிரபல மார்க்க அறிஞரும்
முற்போக்கு எழுத்தாளருமான அஸ்கர் அலி என்ஜினியர் அவர்கள் தெரிவித்தாலுங்கூட, ஆணாதிக்க சிந்தனைகொண்ட பிற்போக்குவாத சமூகத்தில்
இஸ்லாமிய சமத்துவமெனும் அகில சமத்துவக் கொள்கையை அறிமுகம் செய்யும்
படிமுறைகளினூடான முயற்சியின் ஆரம்பப் படிநிலை யொன்றில் வழங்கப்பட்ட
ஒரு சலுகையாகவே இவ்வசனம் கருதப்பட வேண்டும்.
மேற்கூறிய வசனம் இறக்கப்பட்ட சந்தர்ப்பம் பற்றி ஸமக்ஷாரி, தபாரி (Zamakshar,Tabari) ஆகிய மிகப் பிரபல குர்ஆனிய வியாக்கியானர்கள் 656ft 3,5615m Gigi (The Rights of Women in Islam : Asgar Ali Engineer), ஒரு பெண் நபிகளிடத்தில் வந்து தான் எதுவித குற்றமும் செய்திருக்காத வேளையில் தனது கணவர் தன்னை அறைந்துவிட்டதாக முறைப்பாடு செய்து இதற்குத் தான் பதிலாக என்ன செய்ய வேண்டும் எனவும் வினவினர். பழிக்குப்பழி தீர்க்குமுகமாக கணவரைத் திருப்பி அறைந்துவிடுமாறு அப்பெண்ணிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மதீனாவைச் சேர்ந்த அப்பெண் மிகப் பெருமிதங் கொண்டு சென்றாலும் அந்நிகழ்வு ஆண்களிடத்தில் குழப்பத்தைத் தோற்றுவித்தது. அதனால் அவர்கள் பெருமானாரிடம் பின்வருமாறு
6

கேள்வி யெழுப்பினார்கள்: “அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கெதிராகப் பழிக்குப்பழிதீர்ப்பதற்கு பெண்களுக்கு அனுமதியளித்துள்ளீர்களே. அப்படியானால் எவ்வாறு எம்மால் எமது குடும்பத்தைக் கட்டுப்படுத்துவது” என்று கேட்டார்கள். அதற்குரிய அல்லாஹ்வின் கட்டளை வெளிப்படும் வரை நம்பியவர்கள் தாமதித்தார்கள். வேதவெளிப்பாடும் இறக்கப்பட்டது. அது சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தின் யதார்த்த நிலையைப் புறக்கணிக்கவில்லை. எனவே நபியவர்கள் அதனை மக்களுக்கு ஒதிக் காண்பித்தார்கள். அவ்வாக்கியமானது
“ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாவர். டிரனெனில் அவர்களில் சிலரைக்கான (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங் களிலிருந்து (பெண்களுக்காகச்) செலவு செய்வதாலுமாகும்." (4:34)
"Men are the protectors and maintainers of women, because Allah has given the one more (strength) than the other, and because they support them from their means"
(4 ... 34)
ஆணாதிக்கத்தோடு தொடர்புபடுத்திச் சிந்திப்போமானால் இவ்வசனம் பெண்ணியவாதிகளால் தர்க்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். இவ்வசனத்தை ஆரம்பகால மொழிபெயர்ப்பாளர்கள், ஆண் மேலாதிக்கத்திற்குரிய தெய்வீக அங்கீகாரம் எனக் கருத்து வெளியிட்டனர். வேறு சில பிற்போக்குவாத சிந்தனையுடையவர்கள் இவ்வசனத்தில் இடம்பெறுகின்ற அரபுச் சொல்லான "கவ்வாம்” என்பதை ஆண்கள் என்பவர்கள் பெண்களைப் பாதுகாக்கும் பொலிஸ் அதிகாரி போன்றோர் எனக் கருத்து வெளியிட்டனர். ஆனால் முற்போக்குவாதச் சிந்தனை யாளர்கள் இவ்வாக்கியத்தை வேறுவிதமாக விளங்கிக் கொள்கின்றனர்.
அவ்வசனத்தில் வரும் கவ்வாம் என்ற சொல் மிகவும் தாராளத் தன்மையுடன் விளக்கப்படுகின்றது. அதாவது இவ்வசனம் பெண்களின் மீது ஆண்களுக்குள்ள செல்வாக்கானது மேலாண்மையை அன்றி பெண்களைப் பராமரிப்பதற்குரிய (maintain) ஆண்களின் கடமையை வலியுறுத்துகின்றது. அதாவது ஆண்கள் பெண்களைப் பராமரிப்பவர்கள். ஏனெனில் அவர்கள் தங்களது செல்வத்தைப் பிரயோகித்து பெண்களுக்குரிய தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் அவர்களைப் பராமரிக்கின்றனர். கவ்வாம் என்ற சொல்லுக்கு பிரபல முற்போக்கு வியாக்கியாளரான முஹம்மது ஆசாத் அவர்கள் விளக்கம் தருகையில் அச்சொல் உடல் ரீதியான பராமரிப்புப் பற்றிய கருத்துப்பாடு,
7

Page 10
பாதுகாப்பு, மற்றும் ஒழுக்கக் கடமைகள் என்பவற்றைக் குறிப்பதாகத் தெரிவிக்கின்றார். எனவே இதன் அர்த்தம் பெண்களை ஆண்கள் நிர்வாகம் செய்வதாக ஒருபோதும் கருத முடியாது. (The Rights of Women in Islam: Asgar Ali Engineer) 6G60T Gofio UITLof L GT siTugb(5th figuéll என்பதற்கும் இடையில் நிறையவே வேறுபாடு உண்டு என்பதை நாம் அறிவோம்.
குர்ஆனிய அடிப்படையில் ஆண்களும் பெண்களும் இறைவனாலேயே படைக்கப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் மற்றவரிலும் உயர்ந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. தெளிவான விளக்கமின்மை காரணமாக இஸ்லாத்தில் ஆண் பெண்களுக்கிடையில் சமத்துவமில்லை என்று வாதிப்பவர்கள் உண்மையில் திருக்குர்ஆனிற்கு அநீதமே செய்கின்றனர் அல்லது அல்குர்ஆன் என்ன சொல்கின்றது என்று தெரியாமலுள்ளனர் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.
பெண்களிடமிருந்து அவர்களது கடமைகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க வேண்டும் என குர்ஆன் ஆணையிடுகின்றது. எல்லா சமூகங்களிலும் பெண்களிடமிருந்து அவர்கள் தாயாகவும், மகளாகவும், மனைவியாகவும் அவர்களுக்குரிய கடமைகளையே ஆண்கள், அதிகார தோரணையில் கேட்டு நிற்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் பெண் தனக்குள்ள அந்தஸ்த்தை இழக்க நேரிடுகின்றாள். இதே நிலமையை முஸ்லிம்களின் நடமுறையைப் பொறுத்த வரையிலும் வேரூன்றியுள்ளது. கடமைகள் பலவந்தமாகக் கோரப்படும் அதேவேளை குர்ஆன் வெளிப்படையாக வழங்கியுள்ள உரிமைகள் மறக்கப்பட்டு திசை திருப்பப்படுகின்றன, சந்தர்ப்பவாத முலாம் பூசப்பட்டு தமது வசதிக்கேற்ப வியாக்கியானம் செய்யப்படுகின்றன, பயமுறுத்தப்பட்டு பின்பற்ற வைக்கப்படுகின்றன.
பெண் கல்வியைப் பொறுத்த மட்டில் அநேக இஸ்லாமிய உலகக் கலாச்சாரங்களில் பெண்களை வீட்டிலிருத்துதல் என்பது பொதுவான ஒரு அம்சமாகவுள்ளது. இது அவர்களைக் கீழ்நிலைப்படுத்துவதற்குரிய கருவியாக அமைகின்ற அதேவேளை இஸ்லாத்தைத் தவறாகப் பயன்படுத்தி தந்தைவழி மரபு அமைப்புக்களை மீளவலியுறுத்தி வருகின்றது. இது பெண்களின் உடல், உரிமை, கலாச்சாரம் மீது கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கான கருவியாகவும் உள்ளது.
கல்வியை பெற்றுக்கொள்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் மிகவும் தீர்க்க தரிசனத்துடன் கருத்து வெளியிட்டிருந்தார்கள். ஏனெனில் அக்கால சமூகம் மிகவும் பிற்போக்குத் தனமாக வாழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெண்ணுக்குக் கல்வி கற்பதற்குரிய இடத்தை வழங்கவில்லை. எனவே கல்வியறிவைப்
8

பெற்றுக் கொள்வதற்கான ஒரு முஸ்லிமினது கடமை பற்றி நபியவர்கள் குறிப்பிடும்போது “கல்வியறிவைத் தேடிக்கொள்வதுமுஸ்லிம் ஆண்களினதும் முஸ்லிம் பெண்களினதும் கட்டாயக் கடமையாகும்" என விதந்துரைத்துள்ளார்கள்.
இக்கூற்றைச் சற்று ஆராய்ந்து பார்ப்போமானால் நபியவர்கள், கல்வியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் ஆண்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் தனித்தனியாகக் குறிப்பிட வேண்டிய எந்த விதமான அவசியமும் இருந்திருக்கா விட்டால் வெறுமனே "முஸ்லிம்களது" கடமையாகும் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். ஏனெனில் முஸ்லிம் ஆண் பெண் இருபாலாரும், முஸ்லிம்கள் என்ற சொல்லிற்குள் அடக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தனித்தனியாகக் கூறியிருக்காவிட்டால் தனக்குப் பின் வருகின்ற சமூகம் பெண்களுக்குக் கல்வியைப் பெறுவதற்குரிய வாய்ப்பை வழங்காது, அவர்களை ஒதுக்கி வைக்கும் என்பதை நபியவர்கள் அறிந்திருந்தார்கள். ஏனெனில் ஆணாதிக்க சமூகச் சூழலில் அவர்களின் மேலாண்மையின் நிமித்தம் கல்வி தமக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதாலும், பெண்கள் கல்வி பயின்றால் தம்மிலும் அறிவாளியாகிவிடுவார்கள் என்பதோடு தம்மில் தங்கியிருக்க மாட்டார்கள் என்ற பயத்தினாலும் “முஸ்லிம்கள்” என்று விழித்திருப்பது ஆண்களை மட்டுமே என அர்த்தப்படுத்தியிருப்பார்கள். இதனால் பெண்களது கல்வி கற்கும் உரிமை அச்சொல்லிற்குள் அமிழ்ந்து மறைந்துபோயிருக்கும். ஆதலாற்தான் ஆண் தலைமையின் உண்மை நிலை உணர்ந்த நபி (ஸல்) அவர்கள் கல்வியின் அவசியம் குறித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கூறியுள்ளார்கள் என மார்க்க அறிஞர்கள் கருத்து வெயியிடுகின்றார்கள்.
ஆனால் இன்று எம்மத்தியில் நடைபெறுவது என்ன? முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பெண்களை ஒதுக்கிவைத்தே வருகின்றது. முஸ்லிம் பெண்களுக்கு உயர்கல்வி வரை வழங்கி அவர்களை தம்மில் மட்டுமே தங்கி வாழக்கூடிய சுதந்திரத்தை வழங்குவதைவிட ஒரு மனைவி ஒரு குடும்பத்தலைவியாக ஆவதற்குத் தேவையான குணாம்சங்களை வளர்த்துக் கொள்வதையே எமது சமூகம் முக்கியமாகக் கருதுகின்றதைக் காணலாம்.
எனவே நாமனைவரும் முஸ்லிம்கள் என்றும் நபியவர்களைப் பின்பற்றுகிறவர்கள் என்றும் மார்தட்டிக் கொள்கின்றோம். ஆனால் அது பெண்கள் என்றுவரும் போது எல்லாமே புறக்கணிக்கப்பட்டு விடுகின்றது. பெண்களைத் தாழ்ந்தவர்களாகவும், இராண்டாந் தரப் பிரஜையாகவும் காண்பிப்பதற்காக ஹதீஸ்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உண்மையான நபியவர்களால் கூறப்பட்ட ஹதீஸ்களின் பின்னணிகள் மாற்றியமைக்கப்படுகின்றன. இதைவிட அனைத்து ஹதீஸ் மூலங்களிலும் காலவரிசையில் பிந்தியதான
9

Page 11
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் பேருரையில் பெருமனாரின் பெண்ணுரிமை பற்றிய அறிவுறுத்தல்கள் இவ்வாறான ஆணாதிக்க சிந்தனையாளர்களால் ஓரங்கட்டப்படுவதுடன் அதிலிருக்கும் மிக வலுவான இஸ்லாமிய சட்டமூலம் நடைமுறைப்படுத்தலிருந்தும் விலக்கி வைக்கப்படுகிறது.
அதில் கூறப்படுவதாவது மக்களே! உங்கள் பெண்கள் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்கும் உங்கள் மீது உரிமைகள் உள்ளது நினைவிற் கொள்ளுங்கள்!அல்லாஹ்வின் நம்பிக்கையின் பெயரிலும் அவனின் உத்தரவின் பெயரிலும் தான் அவர்களை நீங்கள் மனைவியர்களாக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அவர்கள் உங்கள் உரிமைகளைப் பேணி நடந்தால் அவர்களுக்கு அன்போடு உணவளிப்பதும் உங்கள் பொறுப்பாகும். உங்கள் பெண்களை நல்ல விதமாக நடத்துங்கள். மேலும் அவர்கள் மீது அன்புடன் இருங்கள். ஏனெனில் அவர்கள் உங்களைத் துணைவியர்களாகவும் உங்கள் ஆத்மார்த்தமான உதவியாளராகவும் இருக்கின்றார்கள். மேலும் நீங்கள் விரும்பாதவர்களை அவர்கள் நண்பர்களாக்கிக் கொள்ளக்கூடாது மேலும் கற்புநெறி தவறக்கூடாது என்பதும் உங்கள் உரிமையாகும்.” எனப் பெண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள்.
இன்று எம் மத்தியில் ஏராளமான ஹதீஸ்கள் உண்டு. அவற்றுள் சில பெண்களுக்குச் சாதகமாகவும் சில முற்றிலும் அவர்களுக்குப் பாதகமாகவும் அமைந்துள்ளன. பாதகமான ஹதீஸ் ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொண்டால், நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் விணணுலக யாத்திரை சென்றபோது அவர்களுக்கு சொர்க்கம், நரகம் என்பன காண்பிக்கப்பட்டன. அங்குநரகத்தில் பெண்களே அதிகம் காணப்பட்டதைத் தான் கண்ணுற்றதாகவும் அதற்கான காரணத்தைக் கேட்டபோது உலகில் அதிகம் கெட்டநடத்தைகளில் ஈடுபட்டவர்கள் பெண்களே என்று பதிலளிக்கப்பட்டதாகவும் நபியவர்கள் கூறியதாக பெண்களை இகழ்ந்து கூறப்படுகின்றது. இது இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான ஒன்றாகும். இவ்வாறான ஒரு ஹதீஸிற்கான எந்த ஆதாரங்களும் இதுவரையில் அறியப்படவில்லை என பிரபல மார்க்க அறிஞரான அஸ்கர் அலி அவர்கள் குறிப்பிடு கின்றார்கள்.
எனவேதான் சமூக எண்ணக்கருவினுள் குர்ஆனிய மற்றும் ஹதீஸ் என்பவற்றின் பின்னணி, உள்நோக்கம் என்பவை பற்றி ஆழ்ந்து அறிய வேண்டியது அவசியமாகும். அப்பின்னணிகள் குர்ஆனுடன் ஒன்றுபடும்போது ஏற்றுக்கொள்வது எம் மீது கட்டாயக் கடமையாகும். அவை முரண்பட்ட கருத்துக்களைத் தோற்றுவிக்குமாகயிருந்தால் விசேட கவனம் செலுத்துவது அவசியமாகும்.
O

தாரகைமாக விபச்சாரத்திற்குரிய தண்டனையாக கல்லெறிந்து கொல்லும்படியான nதீஸை எடுத்துக்கொண்டால் அது ஹதீஸில் உண்டு என்று சொல்வதால் வெறுமனே ஏற்றுக்கொள்ள முடியாது. அது பற்றிய ஆதாரம், தெளிவு என்பன ாம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் பல முஸ்லிம் நாடுகளில் விபச்சாரத்திற்குரிய தண்டனையாக அதிலீடுபட்ட பெண் கல்லெறிந்து கொல்லப்படுகின்றாள். இதே தண்டனை அதில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு வழங்கப்படுவதில்லை. ஏனெனில் அவை பெண்கள் மூலமே நிரூபிக்கப் படுகின்றது. ஆதலால் அவள் கல்லெறிந்து கொல்லப்பட அவன் சுதந்திரக் காற்றைச் சுவையாகச் சுவாசிக்கின்றான். பெண்களின் விடயங்களில் மாத்திரமன்றி ஏனைய விடயங்களிலும் முற்போக்கான மார்க்கமான இஸ்லாத்திற்கு இவ்வாறான செயற்பாடுகள் வன்முறையுடன் கூடிய கெட்ட பெயரைத் தோற்றுவிக்கின்றன.
மிகவும் தாராள போக்குடையதும் தெளிவானதுமான இஸ்லாம் மார்க்கம் அது நடைமுறைப்படுத்தப்படும் வழிமுறைகளால் உலகின் பிழையான கண்ணோட்டத்திற்கு உட்பட்டுள்ளது. இஸ்லாத்தில் பெண்களுக்கு எதுவித சுதந்திரமும் வழங்கப்படாது அடக்கப்பட்ட முறையிலேயே நடாத்தப்படுகின்றார்கள் ான்பது உலகின் பொதுவான அபிப்பிராயமாகும். கடந்த செப்டெம்பர் மாதம் 1ம் திகதியில் இடம்பெற்ற அமெரிக்கத் தாக்குதலின் பின்னர் இவ்வபிப்பிராயத்தை மேலும் உறுதிப்படுத்தும் முயற்சியில் மேற்குலகம் இறங்கியுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அது, தலிபானும் அதன் செயற்பாடுகளுமே உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு உதாரணம் என உறுதிப்படுத்த முனைந்துள்ளது. இது இஸ்லாம் பற்றிய மக்களது கவனத்தை மிகப் பிரமாண்ட மானளவு பெற்றுவருவது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே பால்நிலைச் சமத்துவத்தினூடே பெண் என்பதற்கான கெளரவம், பெண் கல்வி, திருமணம், பராமரிப்பு, சொத்துரிமை, வாரிசுரிமை, விவாகரத்து, 'தா, ஹிஜாப், சாட்சியம், அரசியல் தலைமைத்துவம் போன்றன தொடர்பாகப் பெண்கள் என்ற அமைப்பிற்குள் இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை ஆராய்வோம்.
01. பால்நிலைச் சமத்துவம்
உலகம் முழுவதிலும் காணப்படும் சமூகப் பால்நிலை வேறுபாடுகள் ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவை ஆண்களுக்குச் #ாதகமாக இருக்கின்ற வேளை பெண்களுக்கு எதிரானதாக அமைகின்றன. இதனால் பெண்கள் கஷ்டங்களுக்கும், இடர்பாடுகளுக்கும், பாரபட்சங்களுக்கும்

Page 12
உள்ளாகின்றனர். இப்பால்நிலை வேறுபாடுகள் பெண்களுக்கு மட்டும் தீங்கு விளைவிப்பதில்லை, அவை முழுக் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தீமையை உண்டாக்குகின்றது. ஆண்களுக்குக் கடினமான பாத்திரங்கள், இறுக்கமான குணாம்சங்கள், பொறுப்புக்கள் என்பன திணிக்கப்பட்டு அவர்களுங்கூட சமூகப் பால்நிலைகளுக்குப் பலியாகின்றனர்.
மனித குலத்தில் இரு இனங்களே உண்டு. ஒன்று ஆண்கள், மற்றயது பெண்கள். மனிதராகப் பிறக்கின்றவர் எவரும் சுய கெளரவத்துடனேயே பூமியில் அவதரிக்கின்றனர். எனவே இச் சுயகெளரவமானது ஆண்,பெண் இருபாலாருக்கும் தனித்தனியே சமனான முறையில் காணப்படுகின்றது என்பதை முதலாவதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆணையும் பெண்ணையும் ஆண்டவன் படைக்கின்றான். ஆனால் அவர்களை ஆண்மையாகவும், பெண்மையாகவும் அவன் படைக்கவில்லை. அவன் இனவிருத்திக்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு இனவிருத்தி உறுப்புக்களை அளித்திருக்கின்றான். எனவே ஆண், பெண் உடலமைப்புக்கள் இரு வேறுவித தொழிற்பாடுகள் மூலம் இனவிருத்தியை மேற்கொள்கின்றது. இத்தகைய உடற்கூற்றுவேறுபாடுகள் உயர்வு, தாழ்வை உறுதிப்படுத்துவதாக யாவும் அறிந்த இறைவன் எங்காவது கூறியுள்ளானா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சமத்துவமின்மையையும், அதிகாரப் படிநிலையையும் எம்மைப் படைத்த இறைவனால் உருவாக்கப்படவில்லை. மாறாக இவையனைத்தும் நாமெல்லோரும் சேர்ந்த சமுதாயத்தால் உருவாக்கப்பட்டவையே! பெண்கள் மானிட வர்க்கத்தின் சமபங்காளியாகவே இறைவன் கொள்கின்றான், இஸ்லாம் கொள்கிறது. ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மறுக்கின்றோம். இது அல் குர்ஆனுக்கும் அதனை உருவமைத்த இறைவனுக்கும் செய்யும் துரோகமாகும்.
ஆண் தலைமைத்துவம், ஆணாதிக்கம், தந்தை வழி மரபு என்பன வரலாற்று ரீதியில் அன்று தொட்டு இன்று வரை சமூகத்தை ஆட்கொள்ளும் கருவியாக இருந்துவருகின்றன. ஆனால் குர்ஆன் என்ன விதமான அந்தஸ்த்தைப் பெண்களுக்கு வழங்கியுள்ளது? அது ஆண்களை முதன்மைப்படுத்தி பெண்களை இரண்டாம் நிலைக்கு உள்ளாக்குகின்றதா? ஒருபோதும் இல்லை! அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அந்தஸ்த்தை வழங்குகின்றது.
உண்மையில் நாம் சமூக முன்னேற்றம் கருதிச் சிந்திப்பவர்களாகயிருந்தால்
சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் அவரவர் உரிமைகளை சமூக, பொருளாதார,
அரசியல் ரீதியில் அநீதியற்ற முறையில் அனுபவிக்கின்றார்களா என்பதை
உறுதிப்படுத்துதல் வேண்டும். அதாவது இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஆணும்
பெண்ணும் திருமணம் என்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கும் அதிலிருந்து விலகிக்
2

கொள்வதற்கும் சொத்துக்களைத் தனதாக்கிக் கொள்வதற்கும் தமது தொழிலையும் எதிர்கால வாழ்வையும் தீர்மானித்துக் கொள்வதற்கும் ஒருவரைப் போன்றே மற்றவருக்கும் எல்லாவித உரிமைகளும் உண்டு.
ஆண் பெண் இருபாலாரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்ததாக அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
'மனிதர்களே நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான் இன்னும் அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான் இன்னும் அல்லாஹ்வை அவனைக் கொண்டு தமக்குரிய உரிமைகளை) நீங்கள் ஒருவருக்கொருவர்) கேட்டுக் கொள்கிறீர்களே அத்தகையவனையும், மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களைத் ( துண்டித்து விடுவதை) யும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண் காணிப்பவனாக இருக்கின்றான்." (4 .. )
ஆண் பெண் உருவாக்கம் ஒரு உயிரிலிருந்து பிறப்பிக்கப்பட்டது என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவாகின்றது. ஆனால் காலங் காலமாக எம் மத்தியில் கூறப்பட்டு வருவது என்ன? ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதன்முதலில் படைக்கப்பட்டார்கள் என்பது உண்மை. ஆனால் அதன் பிற்பாடு அன்னாரது விலா எலும்பிலிருந்தே ஹவ்வா (அலை) படைக்கப்பட்டதாக வர்ணிக்கப்பட்டு, சிறுவயதிலிருந்தே நாம் மனனம் செய்விக்கப்பட்டு வந்துள்ளோம். அல்குர்ஆன் விலா எலும்பு பற்றியே உச்சரித்திருக்காத போதும், "ஒரு உயிரில்" என்ற சொல்லை வேறு விதமாகத் திரிபுபடுத்தியதுமில்லாமல், ஆதம் (அலை) யினது விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டதால் ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் (அலை) ன் ஒப்பிடும் போது அந்தஸ்த்தில் தாழ்ந்தவர்களாக அர்த்தப்படுத்தும் அதேவேளை அவர்களிலிருந்து உருவாகிய முழுப் பெண்கள் சமுதாயமுமே ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகச் சோடனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வர்ணனை அல்குர்ஆனில் எந்த இடத்திலாவது கூறப்பட்டுள்ளதா?
பெண்களுக்குள்ள உரிமைகள் பற்றிய எண்ணப்போக்கை மட்டும் குர்ஆன் உருவாக்கவில்லை. அதற்கும் மேலாக உரிமையைப் பொறுத்தவரையில் " .ாறுக்குப் பெண் நிகர் என எடுத்தியம்புகின்றது. அதேவேளை ஆண்கள், ர:1ளுக்குள்ள அதே உரிமைகள் பெண்களுக்கும் தங்கள் மேல் உண்டு என்பதை ாந்து தங்களுக்குள்ள உரிமைகளையும், அந்தஸ்த்தையும் நிலைநிறுத்துவதிலேயே மும்முரமாயுள்ளனர். அதேபோன்று பெண்கள் ஆண்களுக்குச் செய்யவேண்டிய
3.

Page 13
கடமைகள் போலவே ஆண்களால் பெண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் ஏராளம் உண்டு. எனவே ஆண்கள் தாம் செய்யவேண்டிய கடமைகளைப் புறக்கணித்து பெண்கள் தமக்குச் செய்யவேண்டிய கடமைகள் பற்றி பலாத்காரம் செய்யவேண்டியது எந்த விதத்தில் நியாயம்?
இவற்றிலிருந்து இஸ்லாம் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆண், பெண் இரு பாலாரையும் பாரபட்சமற்ற முறையில் சம அந்தஸ்த்து வழங்கிக் கெளரவிப்பது தெட்டத்தெளிவாகின்றது. எனவே நாம் விரும்பினால் பால்நிலை, சாதி, வகுப்பு இனம் என்பவற்றைக் கொண்டு சமூகத்தால் தீர்மானிக்கப்பட்டு திணிக்கப்படும் பாத்திரங்கள், பொறுப்புக்கள், குணாம்சங்கள், நடத்தைகள் என்பவற்றைக் கைவிட்டு ஒவ்வொருவரும் சுதந்திரமாகத் தாம் விரும்பும் பாத்திரத்தைத் தெரிவு செய்யவும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும் ஒரு சுதந்திர சமூகத்தை உருவாக்கவும் முடியும்.
02. திருமணம்
பெண்களின் அந்தஸ்த்தைக் கணிப்பிடுவதில் திருமணம் என்பது முக்கிய காரணியாகக் கருதப்படுகின்றது. பல சமூகங்களில் பெண்கள் தாமாகவே திருமணத்தில் இணைந்து கொள்வதற்குரிய அனுமதியை வழங்கவில்லை. ஆரம்ப காலந்தொட்டே பெண்கள் தமது துணையைத் தாமே தெரிவு செய்யக்கூடியளவு திறமையைக் கொண்டிருக்க வில்லை என்றே பொதுவான கண்ணோட்டம் இருந்து வருகின்றது. அதாவது அவளது உளஅறிவு ஆண்களிலும் பார்க்க குறைவானது என்பதால் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களாலேயே அதாவது தந்தையால் அல்லது சகோதரனால் அல்லது வேறு ஆண் உறவினர்களால் பெண்களுக்குரிய வாழ்க்கைத் துணை தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் அதிமேன்மைக்குரிய குர்ஆன் ஆண்களைப் போன்றே பெண்களும் புத்தி சாதுரியத்தினாலும் மனோபாவத்தினாலும் சமமானவர்கள் என்று கூறுகின்றது.
குர்ஆனின் 33ம் அத்தியாயமான அல் அஹ்ஸாப் இன் 35ம் வசனம் குறிப்பிடுவதாவது:
நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும் (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும் வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமை யாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வைப்) பயந்து நடக்கும்
4

ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செப்பவர்களான பெண்களும் நோன்பு நோற்பவர்களான ஆண்களும் நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்துக்கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூருபவர்களான பெண்களும் (ஆகிய) இவர்களுக்கு, அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்) கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான்." (3335)
ஒழுக்கவியல் பொறுப்புக்களைப் பொறுத்தவரையிலும் அதற்கான வெகு மதிகள் மற்றும் தண்டனைகளை எடுத்துக் கொண்டாலும் குர்ஆன் ஆண் பெண் இருபாலாரையும் சமமாகக் கொள்கின்றது. இதுபோலவே திருமணம் குறித்தும் பெண்களுக்குச் சமனான அந்தஸ்த்தை குர்ஆன் வழங்குகின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்தமட்டில் திருமணம் என்பது ஆண் பெண் இரு பாலாருக்கிடையில் ஏற்படுகின்ற ஒப்பந்தம் என்றே கொள்ளப்படுகின்றது. ாணவே ஏனைய ஒப்பந்தங்களைப் போலவே ஒருவரால் முன்வைக்கப் படும் முன்மொழிவுகள் மற்றவரால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். திருமணம் செய்து கொள்வதற்கான விருப்பத்தை எவ்வாறு ஆண் வெளிப்படுத்து கின்றானோ அவ்வாறே பெண்ணினாலும் வெளிப்படுத்த முடியும். இவ்விடயத்தில் ஆண் எவ்வித மேலாண்மையையும் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. குர்ஆனைப் பொறுத்தவரையில் திருமணத்திற்கான தனது விருப்பத்தை நேரடியாகவே தெரிவிக்கலாம். அதேவேளை பெண்ணினது விருப்பமின்றி திருமண ஒப்பந்தமானது நிறைவுபெறாது. பெண்களைக் கல்வி கற்க அனுமதிக்காது, தமது வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கும் ம.ரிமையை அவர்களுக்கு வழங்காது, வீட்டினுள்ளே வைத்துப் பாதுகாத்துவந்த அன்றைய எமது சமூகம் தந்தை அல்லது பாதுகாவலரினால் நீர்மானித்த ஆணுக்கு அவளைத் திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. காரணம் உலக அனுபவமில்லாத அவளினால் புத்திசாலித்தனமாகத் தனது துணையைத் தெரிவுசெய்து கொள்ள முடியாது ான்ற எண்ணத்தினாலேயே ஆகும்.
குர்ஆனிய வியாக்கியானர்கள் சிலரின் ஒருதலைப் பட்சமான கருத்துக்களின் பிரகாரம், பெண்ணினது விருப்பத்தின் வெளிப்பாடு மெளனமாகயிருந்தால் அது அவளது சம்மதத்தையே தெரிவுக்கும் என்றும்
S

Page 14
ஏனெனில் இயற்கையாக அவளுக்குள்ள வெட்கத்தின் காரணமாகவே மெளனம் சாதிக்கின்றாள் என்று கூறும் அதேவேளை அவள் புன்னகை செய்தாளானால் அத்திருமணம் குறித்த அவளது சந்தோசத்தையே அது குறிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அதேவேளை அப்பெண் கண்ணிர் சிந்தினாற்கூட அதுவும் அவளது சம்மதத்தையே குறிப்பதாகவும் ஏனெனில் அவள் தனது பெற்றோரை விட்டுப் பிரிந்து செல்வதை எண்ணித்தான் கண்ணிர் சிந்த நேரிடுகிறது என்றும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. இது எவ்வளவு வேடிக்கை ! பெண்களினது வாழ்க்கையைத்தான் ஆண்கள் தீர்மானிக்கின்றார்கள் என்றிருந்தால் அவர்களது உணர்வுகளையும் அல்லவா தீர்மானிக்கின்றனர்.
ஆனால் குர்ஆன் குறிப்பிடும் பெண்ணினது சம்மதம் என்பது மிகத் தீர்மானமான, தெளிவான சம்மதமாகும். மெளனத்தை வெறுமனே அவளது சம்மதமாகக் கருத முடியாது. இக்காலப் பெண்கள் ஆண்களுடன் இணைந்து கல்வி கற்கின்றனர், தொழில் பார்க்கின்றனர், வெளியுலகில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். எனவே இவர்கள் எவ்வளவுதான் வெட்கம் காரணமாயிருப்பினும் தமது திருமண விடயத்தில் விருப்பத்தையோ அல்லது அதிருப்தியையோ கூறுவதற்குத் தயங்கமாட்டார்கள். எனவே அடுத்தவரின் தலையீடின்றி தனது சம்மதத்தைத் தானே தெரிவிக்கப் பெண்களால் முடியும். அவளது நலன் கருதி அக்கறைக்குரியவர்கள் கவனம் செலுத்துவதில் எந்த ஆட்சேபனையையும் தெரிவிக்கத் தேவையில்லை. ஆனால் யாராலும் அவளை அடக்கியாள முடியாது. திருமணம் என்பது ஒப்பந்தம் எனில் ஆணைப்போன்று பெண்ணும் சமபங்காளியாகக் கருதப்பட வேண்டும்.
இஸ்லாத்தின் தாராளப்போக்கு திருமண விடயத்தில் பெண்களுக்கான அதன் கரிசனை சம்மதத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. விவாகத்தின் போது மணமகளினால் மணமகனுக்கு நிபந்தனைகளை இடவும் இஸ்லாம் இடமளித்துள்ளது. இஸ்லாமிய வரையறைக்குள் பெண் தனக்குக் கணவனாக வரயிருப்பவன் தனது அனுமதியின்றி பலதார மணத்தில் ஈடுபட முடியாது எனவும், தான் துன்புறுத்தப்படின் மண விடுதலையைப் பெறமுடியும் என்றும் திருமணத்தின் போதே பல நிபந்தனைகளை இடலாம் என இஸ்லாம் பெண்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அது மட்டுமல்லாது தனது மஹர்த்தொகையைக்கூட தானே தீர்மானிக்கலாம் என்பது இஸ்லாம் வழங்கியுள்ள மற்றுமொரு அனுமதியாகும்.
ஆனால் நடைமுறையில் என்ன இடம்பெறுகின்றது? குறைந்தது இலங்கை முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டப்படி இலங்கைப் பெண்களுக்கு திருமணப் பதிவில் கையொப்பமிட்டுத்தமது விருப்பத்தைத் தெரிவிக்கவாவது அனுமதிவழங்கப் பட்டுள்ளதா? யார் இச்சட்டங்களை உருவாக்கியவர்கள்? ஆண்டவனா அல்லது
6

ஆண்களா? பெண்களுக்கு மஹர் என்னும் அன்பளிப்பை வழங்கும்படி அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ஆண்களோ அதற்குப் பதிலாக பெண்களிடமிருந்து சீதனத்தை அறவிடுகின்றனர். இதுதான் இஸ்லாமியப் பின்பற்றுதலா?
சீதனம் என்பது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணான ஒன்றாகும். அது அந்நிய கலாச்சாரங்களிலிருந்து முஸ்லிம்களிடையே வழக்கப்படுத்திக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் பெண்களால் ஆண்களுக்கு எந்தவித சொத்துக்களும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு அவள் சொத்துக்களுக்கு உரிமையாளியாக இருந்தாலுங்கூட அவற்றை முழுவதும் அவளே அனுபவிக்கமுடியும்.
மஹர் என்பது திருமணத்தின் போது மணமகனினால் மணமகளுக்கு வழங்கப்படும் அன்பளிப்பாகும். அன்பளிப்பு என்பது அன்பின் வெளிப்பாடாக வழங்கப்படும் ஒன்றாகவே கருதப்படுகின்றது. எனவே மஹர் என்பது உண்மையினதும், நேர்மையினதும், நல்லொழுக்கத்தினதும் வெளிப்பாடாக வழங்கப்படுவதே தவிர ஒருவருடைய சமூக, பொருளாதார தரத்தைத் தம்பட்டம் அடிப்பதற்காக வழங்கப்படும் ஒன்றல்ல. அதாவது மனைவி மீது கணவனின் முற்றுமுழுதான அன்பின் வெளிப்பாடாகும்.
குர்ஆன் மஹர் பற்றி கூறும்போது நீங்கள் திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை திருமண நன்கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை, அவர்கள் தங்கள்) மனமார உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.” (4 : 4)
எனவே மஹர் என்பது பூரணமாக மனைவியினால் உரிமை கொள்ளப்படக் கூடிய ஒன்றாகக் கருதப்படுவது இவ்வசனம் மூலம் தெளிவாகின்றது. இதே வேளை மஹர்த் தொகையை இவ்வளவுதான் எனத் தீர்மானிக்கும் உரிமை Iமனைவிக்குள்ளதால் அவள் தனது கணவனது தகுதிக்கேற்ப அதனைத் தீர்மானிக்கலாம். அது பணமாகவோ அல்லது பொருளாகவோ அமையலாம். அதே வேளை அத்தொகை எவ்வளவாகவும் இருக்கலாம். ஆனால் அந்தந்தக் காலத்திற்கேற்ப நியாயமான தொகையாக இருக்க வேண்டும். இது சம்பந்தமாக அல்குர்ஆன் கூறுவதாவது,
"மேலும் ஒரு மனைவி (யைநீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)கொள்ள நீங்கள் நாடினால் நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள்
7

Page 15
ஒரு (பொற்) குவியலைக் கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்) அபாண்ட மாகவும், பகிரங்கமாகவும் அவளுக்கு நீங்கள் கொடுத்ததை நீங்கள் (திருப்பி) எடுக்கிறீர்களா?”
குர்ஆன் பெண்களின் விடயத்தில் நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குவதிலும் அதனைப் பாதுகாப்பதிலும் மிகக்கூடிய கவனம் செலுத்துகின்றது என்பது தெளிவாகின்றது. ஆனால் இன்று 101 ரூபாயையோ 1001 ரூபாயையோ மஹர்த் தொகையாக வழங்கிவிட்டு பெண்களிடமிருந்து இலட்சக் கணக்கில் சீதனத்தைப் பெற்றுத் திருமணம் என்ற வியாபாரத்தில் பாரிய இலாபத்தையீட்டிக் கொள்ளும் ஆண்கள் ஒரு கல்லில் இரு மாங்காய் பறிக்கின்றனர். அதாவது இன்றைய ஆண்கள், தாம் இஸ்லாமியவாதிகளென்றும், இஸ்லாம் கூறியதற்கிணங்க மஹர் கொடுத்த திருமணம் செய்துள்ளதாகச் சமூகத்திற்குக் காட்டிக்கொண்டு பெண் களிடமிருந்து பெற்ற சீதனத்தின் மூலம் இலட்சாதிபதிகளாகின்றனர்.
வாரிசுரிமை (inheritance) யைப் பொறுத்தவரையில் பெண்கள் தொடர்பாக ஆண்களுடன் ஒப்பிடும்போது இஸ்லாம் நீதமாக இல்லை என்ற கருத்து கூறப்படுகின்றது. ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் இக்கூற்று எவ்வளவு தூரம் மடைமை என்பது தெளிவாகும். உண்மையில் இஸ்லாம் பெண்கள் விடயத்தில் இரட்டிப்பாகக் கவனம் செலுத்துகின்றது. திரு அஸ்கர் அலி என்ஜினியர் அவர்கள் கூறும் உதாரணத்தை எடுத்துக்கொண்டால் ஒரு தந்தையுடைய சொத்தின் பெறுமதி 100 ரூபாயாக இருந்தால் மகன் 50 ரூபாயையும் மகள் 25 ரூபாயையும் பெறுவர். மகன் திருமணம் செய்யும்போது மஹர்த் தொகையாக அவனிடமுள்ளதில் 25 ரூபாயை வழங்க முடியும். இதனால் அவனிடம் எஞ்சியிருக்கும் தொகை 25 ரூபாயாகும். அதேவேளை மகளிடமிருக்கும் 25 ரூபாயுடன் அவள் திருமணம் செய்யும் போது அவளது கணவனிடமிருந்து மஹர்த் தொகையாக 25 ரூபாய் கிடைக்கு மாயிருந்தால் மொத்தமாக அப்பெண்ணிடமிருக்கும் தொகை 50 ரூபாயாகும். எனவே அவளது சொத்தை அவளது சகோதரனினதுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அப்பெண்ணினதே உயர்வாகக் காணப்படும். உண்மையில் இதுதான் இஸ்லாம் கூறும் வழிமுறை. ஆனால் நடைமுறை அவ்வாறில்லை. அதனாற்தான் இஸ்லாம் பெண்களைப் பாரபட்சமாக நடத்துகின்றது எனக் கூறப்படுகின்றது.
திருமணத்தின் பின் மனைவியைப் பராமரிக்கும் முழுப்பொறுப்பையும் இஸ்லாம் கணவனிடமே ஒப்படைக்கின்றது. மனைவி எவ்வளவு சொத்துக்களுக்கு உரிமையாளியாக இருப்பினும் கணவன் தனது உழைப்பிற்கேற்ப மனைவியையும்
8

குழந்தைகளையும் பராமரிப்பது கடமை என அல்குர்ஆன் கூறுகின்றது. ஆனால் இன்று எமது சமூகத்தில் சாதரணமாகக் காணப்படும் நிலை என்னவென்றால் தமது குழைந்தைகளைத் தம்மால் பராமரிக்க (plg. llum gl என்பதை எடுத்துக்காட்டுமுகமாக நீதிமன்றத்திற்கு வழக்கு என்று சென்றுவிட்டால் எவ்வளவு குறைவான தொகையை வழங்க முடியுமோ அவ்வளவு குறைவாகவே தம்மால் செலுத்தமுடியும் என்பதை நிரூபிப்பதிலேயே இன்றைய ஆண்கள் மும்முரமாயிருக்கின்றனர். இங்குள்ள கவலைக்குரிய விடயம் யாதெனில் ஒரு தகப்பன் சட்டப்பிடிபாட்டிலிருந்து தப்பிக்கொள்ள முனைகிறாரே தவிர தனது குழந்தையின் நிலை, எதிர்காலம், சமுதாயக் கடமை போன்றவை பற்றி சிறிதளவேனும் கவனத்திற் கொள்வதில்லை.
03. பலதார மணம்
இஸ்லாமியச் சட்டப்படி முஸ்லிம் ஆண்களால் நான்கு மனைவிமார் வரை வைத்திருக்க முடியும். அவர்கள் முதல் மனைவியுடன் வாழ்ந்துகொண்டு அவளின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியமின்றியே இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணங்களைச் செய்கின்றனர். காரணம் இஸ்லாம் அவர்களுக்கு பலதார மணம் செய்வதற்குரிய அனுமதியை வழங்கியுள்ளது என்கின்றனர். இது குர்ஆனிற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். இதுபற்றி அல்குர்ஆன் கூறுவதாவது
"அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும் மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து ம்ெ.ாள்ளுங்கள் அவர்களுக்கிடையில், நீங்கள் நிதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப் பெண்ணில் உள்ள)தை (க் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதி செய்யாம விருப்பதற்கு இதுவே சுலபமான வழியாகும்.)" (4 3)
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிமாரை வைத்திருப்பதற்கு குர்ஆன் அநாதைகளையும், ஆதரவற்ற பெண்களையும் கருத்திற்கொண்டே முதலாவதாக அறுதி வழங்குகின்றது. உஹது யுத்தத்தின் போது ஏராளமான ஆண்கள் இறந்ததன் காரணமாக அவர்களது மனைவிமார்கள் விதவைகளாக்கப்பட்டனர். இதனால்
9

Page 16
இவ்வதிக எண்ணிக்கையான பெண்கள் அனைவரும் திக்கற்றவர்களாகின்றனர். இவ்வேளையிலேயே மேற்படி குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது. அக்காலத்தில் அழகானதும் இளைமையானதுமான பெண்களை நாடிச்சென்றே அநேகம் ஆண்கள் திருமணம் செய்பவர்களாயிருக்க விதவைகள் ஆதரவற்ற நிலைக்குள்ளாயினர்.
எனவே பலதார மணத்திற்கான அனுமதி தவறாகப் பிரயோகிக்கப் படாமலிருக்க குர்ஆன் மேலதிகமாக நிபந்தனைகளையும் இடுகின்றது. அதாவது "அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்” எனக் கூறுகின்றது. இந்நிபந்தனை மிகத்தெளிவான விளக்கத்தை எமக்களிக்கின்றது. பலதாரமணம் என்பது சமூகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காகவும், ஆதரவற்ற பெண்களைக் காப்பாற்றுவதற்காகவும், சமூக பிரக்ஞையுடன் செயற்படுவதற்காகவும் வழங்கப்பட்ட அனுமதியே தவிர தமது கய இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட லைஸன்ஸ் அல்ல.
நான்கு மனைவிமார்களுக்கிடையே நீதமாக நடக்க விரும்பினாலும் அவர்களை சமனாக நடாத்துவது என்பது சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கும் என மற்றொரு குர்ஆன் வாக்கியம் கூறுகின்றது. அது எடுத் தியம்புவதாவது,
'இன்னும், நீங்கள் (உங்கள்) மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீதமாக நடக்க நீங்கள் சக்தி பெறவே மாட்டீர்கள். ஆனால், ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப் பட்டவளைப் போல் விட்டுவிடாதீர்கள் இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்துகொண்டு, (அல்லாஹ்வையும்) பயந்து கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்களை) மன்னிப்பவனாக மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.” (4 29)
சம நீதியாக நடாத்துவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம் என்பதை அல்லாஹ் கூறியுள்ளான் என்பது இதன் மூலம் தெரிகின்றதல்லவா? இது அநீதம் இழைப்பதற்குரிய மிகத் தெளிவான இறை எச்சரிக்கையாகும். எவ்வளவு செல்வம் இருப்பினும் இக்காலத்தில் ஒரு மனைவியையும் ஒரு குடும்பத்தையுமே சமாளிக்க முடியாமல் திண்டாடும்போது எவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்து அவர்களுக்கிடையே நீதியைப் பேண முடியும்?
மேலே குறிப்பிட்ட குர்ஆனிய அத்தியாயம் 4 வசனம் 3 இன் முதற் பகுதியாகிய "அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள்
20

அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறப்பட்டிருப்பது தமக்குச் சாதகமாக அமைவதால் அதனை இஸ்லாமிய ஏற்பாடு என்பதாற்தான் பின்பற்றுவதாகக் கூறும் இக்கால ஆண்கள் அவ்வசனத்தின் பிற்பகுதியைப் பின்பற்றுவது கடினம் என்பதால் இதனைப் புறக்கணிக்கின்றனர். எனவே அவர்களுக்கு இசைவாக மார்க்கத்தைப் பயன்படுத்துவதா அல்லது மார்க்கத்திற்கு இசைவாக அவர்கள் நடந்துகொள்வதா?
குர்ஆனைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அக்கால சமூக நிலமைகளைப் பொறுத்தே அதன் உட்கருத்து அமைந்துள்ளன. மேற்கூறிய வசனம்பலதார மணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை கண்டிப்பான நிபந்தனையையும் விதித்துள்ளது. ஆனால் நடைமுறையில் மார்க்கத்தில் அனுமதித்துள்ளது என்று சொல்லிக்கொண்டு பின்பற்றுகின்றனரே தவிர நிபந்தனையை மறந்துவிடுகின்றனர்.
04. விவாகரத்து
திருமணம் செய்கின்ற நாம் அன்பையும், சந்தோசத்தையும், மனநிறைவையும் மட்டுமே எதிர்பார்த்து வாழ்க்கை முழுவதற்குமான அர்ப்பணம் என்ற நம்பிக்கையில் திருமணத்தில் ஈடுபடுகின்றோம். ஆனால் சில வேளைகளில் ஏமாந்து போகின்ற நிலமையும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கை பிரச்சினைகள் நிறைந்ததாகவும், முரண்பாடுகளுடனும், புரிந்துணர்வற்ற நிலையிலும் காணப்பட்டு, கண்டிப்புக்கள், வரையறைகள், வன்முறைகள், துஷ்பிரயோகங்கள், ஆதிக்கங்கள் போன்றவற்றின் செல்வாக்கினூடே துரதிஷ்டவசமாக விவாகரத்தில் முடிவடைகின்றது.
அந்த வகையில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதும் ஆனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உட்படாததுமான ஒரு விடயமே விவாகரத்து ஆகும். ஆனால் கணவனும் மனைவியும் ஒன்றுபட்டு வாழ முடியாத, ஒருமித்து செயற்படக்கூடிய சாத்தியப்பாடு அற்ற சூழ்நிலையில் பிரிந்து செல்லுதல் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இஸ்லாம் அடையாளம் கண்டுள்ளதாற்தான் விவாகரத்திற்கு அனுமதியளித்துள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளல் வேண்டும். இருந்த போதிலும் அவர்களுக்கிடையில் பலமுறை சமாதானப்படுத்தல் இடம் பெற்றுங்கூட அவர்களால் இணைந்து வாழ முடியாமற்போகும் பட்சத்திலேயே விவாகரத்தைப் பெறும்படி அல்குர்ஆன் கூறுகின்றது. அது விபரிப்பதாவது,
2.

Page 17
இன்னும், கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்த்தரையும் அவள் (த் திம்பத்தாரில் ஒரு மத்தியஸ்த்தரையும் நீங்கள் ஏற்படுத்தி) அனுப்புங்கள் அவ்விருவரும் இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டுபண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான் நிச்சயமாக அல்லாஹ், (யாவையும் தெரிந்தவனாக, நன்கு உணர்கிறவனாக இருக்கின்றான்."
(f g 列 சமாதானப்படுத்துதல் என்பது எவ்வளவு தூரம் முக்கியமான விடயம் என்பது இவ்வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளமுடியும்.
விவாகரத்து சம்பந்தமான குர்ஆனிய விளக்கம் யாதெனில், "மீட்டுக்கொள்ள உரிமைபெற்ற தலாக் இரு தடைவைகளாகும் பின்னர் முறைப்படி தடுத்து வைத்துக்கொள்ளலாம். அல்லது மூன்றாவது முறையாக தலாக் கூறி நன்முறையில் விட்டுவிடலாம். இன்னும் நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த மஹர், உடை மற்றும் ஏனைய பொருட்கள் முதலியவற்றிலிருந்து யாதொன்றையும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்த முடியாதென்று அவர்கள் இருவருமே பயந்தாலே தவிர ஆகவே அவர்கள் இருவரும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்த மாட்டார்கள் எனத் தீர்ப்பு வழங்குவோராகிய நீங்கள் பயந்தால் அவள் எதை தன்னைத் திருமண பந்தத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு ஈடாகக் கொடுக்கின்றாளோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். ஆதலால் நீங்கள் இவற்றை மீறாதீர்கள் மேலும் எவர் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகிறாரோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (2 : 229)
விவாகரத்து இரு தடவைகளே வழங்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. அத்தோடு அது மீண்டும் சேர்ந்துகொள்ளக் கூடியவாறான முறையாகும். இங்கு கூறப்படும் "இரண்டு தடவை” என் கூறப்பட்டுள்ளது என்ற பின்னணியைப் பற்றி ஆராய்வோமானால் இஸ்லாத்திற்கு முந்திய காலத்தில் அரேபிய ஆண்கள் தமது மனைவியை விவாகரத்து செய்வதும் பின்பு மீண்டும் இணைந்து கொள்வதும் என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதன்மூலம் ஆயிரந் தடவைகள் விவாகரத்துச் செய்வதும் மனைவியைத் திரும்பப்பெறுவதுமாக அதன் விளையாட்டு போன்று நடாத்தி வந்தனர்.
இதனை இஸ்லாம் ஏற்கவில்லை. ஏனெனில் முற்றாக ஆண்களின் ஆதிக்கத்திற்குள் பெண்கள் அடக்கப்பட்டிருந்தனர். அதாவது தமக்குத் தேவையான போது சேர்த்துக் கொள்வதும் தேவையில்லையாயின் புறக்கணித்து
22

விடுவதுமான வழக்கம் பெண்களை அவமதிக்கும் செயலாக இஸ்லாம் கருதியதாற்தான் இருமுறை விவாகரத்துக் கூறப்படலாம் என்றும் மூன்றாம் முறை கூறப்படுவதாக இருந்தால் அது திரும்பிப் பெறமுடியாத நிலையான விவாகரத்தாகும் எனவும் அல்குர்ஆன் கூறுகின்றது. அதாவது மூன்றாம் முறையும் விவாகரத்துக் கூறப்பட்டு மீண்டும் மனைவியுடன் இணைந்து கொள்வதாக இருந்தால் அவள் வேறொருவரைத் திருமணம் செய்து அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றபின்னரே முதற் கணவருடன் இணைந்து கொள்ளலாம். விவாகரத்தின் தவறான பிரயோகத்தைத் தடுப்பதற்காகவே இதுபோன்ற சிக்கலாக நடைமுறை அல்லாஹ்வினால் அருளப்பட்டுள்ளது.
ஆனால் இன்று இவ்வாறான முத்தலா நடைமுறையினால் ஏராளமான பெண்கள் துன்பத்திற்குள்ளாகின்றனர். ஆண்கள் தமது மனைவியுடன் ஏதாவது பிணக்குகள் ஏற்பட்டுவிட்டால் காதியிடம் சென்று மூன்றுமுறை "தலாக" ஐ பரஸ்தாபித்துவிட்டு விவாகரத்தைப் பெறுவதோடு வேறொரு திருமணத்தையும் செய்து கொள்கின்றனர். தன்னை விவாகரத்து செய்த விடயம் சில வேளைகளில் மனைவிக்கே தெரியாமலிருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அதேவேளை சமாதானப்படுத்தல் என்ற ஒரு விடயம் புறக்கணிக்கப்பட்டு தனது சுயநலம் மட்டும் கருத்திற் கொள்ளப்படுகின்றது.
அதேவேளை குர்ஆன் இன்னுமொன்றையும் கூறி நிற்கின்றது. அத்தியாயம் 4 வசனம் 35 கூறுவதாவது
'இன்னும், (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்த்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்த்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள் அவ்விருவரும் இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டுபண்ண நாடினால், அல்லாஹ் இவ்விரு வரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக, நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.”
இவ்வசனம் பெண்களைக் கருத்திற்கொண்டதால் ஆணுக்கு வழங்கிய அதே உரிமையை பெண்ணுக்கும் வழங்கியுள்ளது என்பதை அவதானிக்கலாம். கனவனுடன் தொடர்ந்து வாழமுடியாத நிலை ஏற்படும்போது அவளால் அக்கணவனை விவாகரத்து செய்ய முடியும். அது கணவனது “புறுமதியின்றியே பெறமுடியும். ஆனால் அவ்வாறு அவள் கணவனை ப்லாகாத்து செய்வதானால் அவனது அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும்
2s

Page 18
என வற்புறுத்தும் இன்றைய சமூகம் மீண்டும் பெண்களை ஆண்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட வைக்கின்றது. இது எவ்வளவு அநியாயமான விடயம்? குர்ஆன் கூறுவதற்கு முற்றிலும் முரணான செயன்முறையை குர்ஆனிய நடைமுறை என்று கூறுவது எவ்வளவு அக்கிரமம்.
திருமணத்தை ஒப்பந்தம் எனக் கொள்ளும் இஸ்லாம் அதில் ஈடுபடும் இரு பகுதியினரில் யாராவதொருவர் ஒப்பந்தத்திலிருந்து விடுதலைபெற வேண்டுமாயின் அதற்கான அனுமதியை இருவருக்குமே பாரபட்சமின்றி வழங்கியுள்ளது. அந்த வகையில் ஆண்களுக்கு வழங்கியுள்ளது போன்று பெண்களாலும் திருமண விடுதலையைத் தாமாகவே கணவனின் அனுமதியின்றிப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறுகின்றது. இவ்வாறான விவாகரத்து முறை "குலா" முறையான விவாகரத்து என அழைக்கப்படுகின்றது.
குர்ஆன் அதன் அத்தியாயம் 2 அன்னிஸாவின் 229 ஆம் வசனத்தில் கூறுவதாவது,
"அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்த மாட்டார்கள் என (தீர்ப்பு வழங்குவோராகிய) நீங்கள் பயந்தால் அவள் எதை (தன்னைத் திருமண பந்தத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு) FFt_/7ớ, đo கொடுக்கின்றாளோ அதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை." (2 229)
எனவே பெண்கள் குலா முறையான விவாகரத்தை பெறநேரிடின் அதற்குரிய அனுமதியை குர்ஆன் இவ்வசனம் மூலம் வழங்கியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். எனவே அல்லாஹ்வின் உத்தரவான மேற்கூறிய வசனத்தையும் மீறி எவராலும் இதனைத் தடுக்கமுடியாது. அதேவேளை கணவனிடமிருந்துவிடுதலை பெறும் வேளையில் அவனுக்குரிய நஷ்டயீட்டை வழங்கி அவளிடமிருந்து பிரிந்து செல்லலாம் என இவ்வசனம் கூறுகின்றது. இருப்பினும் குலா முறையான விவாகரத்து பெண்களால் கோரப்படுவதால் எவ்வாறு அவர்கள் ஆண்களுக்கு நஷ்டயீடு வழங்கவேண்டும் என்று ஆர்அன் கட்டளையிடுகின்றதோ அதேபோன்றே ஆண்களல் மேற்கொள்ளப்படும் மண விடுதலையின் போதும் பெண்களுக்கு நஷ்டயீடு வழங்கப்படுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவே ஆண்,பெண்களுக்கிடையே குர்ஆன் கடைப்பிடிக்கும் நீதத்தை அறிய முடிகின்றதல்லவா?
வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இஸ்லாம் ஆண் பெண்
சமத்துவம் குறித்து நீதமாக நடந்துகொள்கின்றது என்பது குர்ஆனின் ஆண் பெண் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வசனமும் சான்று பகர்கின்றது.
24

விவாகரத்தைப் பொறுத்தமட்டில் கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டால் அவளது நிர்க்கதி நிலையை உணர்ந்து இஸ்லாம் அவளுக்கு நன்மாராயங் கூறுகின்றது. அவள் பராமரிப்பையும் நஷ்டயீட்டையும் பெறுவதற்கு தகுதியுடையவள் எனக்கூறி அவர்களுக்குரியவற்றை ஆண்கள் வழங்கவேண்டும் எனவும் கட்டளையிடுகின்றது.
கணவனானவர் மனைவியுடன் வாழும்போது மட்டுமல்ல அவளைப் பிரிந்திருக்கும் நிலையிற்கூட அவளுக்கான பராமரிப்பைச் செலுத்த வேண்டியது கடமையாகும் என குர்ஆன் கூறுகின்றது. இது மூன்று விதமான சந்தர்ப் பங்களில் வழங்கப்பட வேண்டும். 1. விவாகரத்துப் பெற முன்னர் கணவன் மனைவியைப் பிரிந்து வாழும்
காலப் பகுதியில் வழங்கவேண்டிய பராமரிப்பு. . விவாகரத்துப் பெற்ற நிலையில் இத்தாக் காலப் பகுதிக்கான பராமரிப்பு. 3. விவாகரத்துப்பெற்ற கணவன் மனைவிக்கு வழங்கவேண்டிய நஷ்டயீட்டுத்
தொகை.
முதலாவது சந்தர்ப்பத்தில் விவாகரத்துப் பெறமுன்னர் கணவனினால் கைவிடப்பட்ட நிலையில் மனைவி பிரிந்து வாழ்பவராகயிருந்தால் அவரைப் பாரமரிப்பது கணவனது கடமையாகும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. மனைவியை விட்டுவிட்டுச் செல்லும்போதோ அதன் பிற்பாடோ மனைவியின் நிலை பற்றி, அவளது அன்றாட வாழ்க்கை பற்றி அக்கணவரானவர் சிந்திக்கத் தவறி விடுகின்றார். பிரிந்து சென்றுவிட்டால் தனது மனைவியையும் குடும்பத்தையும் பாரமரிப்பது தனது கடமையில்லை என அவர் எண்ணுகின்றார். இவ்வாறான ஆண்களின் பொடுபோக்குத்தனத்தினால் கைவிடப்பட்ட பெண்களே பெரிதும் பாதிப்புக் குள்ளாகின்றனர்.
இரண்டாவது நிலைமையானது விவாகரத்துப் பெற்ற நிலையில் இத்தாவை அனுஷ்டிப் பதாகயிருந்தால் (இத்தா பற்றி பின்பு ஆராய்வோம்.) அக்காலம் முடிவடையும் வரையும் மனைவிக்குப் பராமரிப்பு வழங்குவது கணவரது கடமையாகும். மூன்றாவது சந்தர்ப்பமானது விவாகரத்துப் பெற்றபின் அப்பெண்ணுக்கு கணவனிடமிருந்து நஷ்டயீட்டுத் தொகை கிடைத்தாக வேண்டும். வலிகாகரத்தின் பின்பு பெண்கள் தனித்துவிடப்படுவது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளனர். இது சம்பந்தமாக குர்ஆன் பெண்களின் தகுந்த கவனம் செலுத்துகின்ற படியாற்தான் அப்பெண்ணினது *ாழ்க்கையில் கணவனால் ஏற்படுத்தப்பட்ட நஷ்டத்திற்கு ஈடாக விவாகரத்தின்
25

Page 19
போது நஷ்டயீடு வழங்கும்படி அது கட்டளையிடுகின்றது. அது பற்றி குர்ஆன் கூறுவதாவது,
"மேலும் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு தங்கள் இத்தா"க் காலங்களில்) முறைப்படி (கணவனுடைய சொத்திலிருந்தே உணவு, உடை போன்றவைக்காக) செலவினம் (பெற பாத்தியம்) உண்டு (அவ்வாறு அவர்களுக்குச் செலவினம் கொடுப்பது) பக்தியுடையோர் மீது கடமையாகும்." (2 : 241)
எனவேதான் விவாகரத்தின் பின் அப்பெண்ணை வெறுமனே தூக்கியெறிந்துவிட முடியாது என்பதால் குர்ஆன் மேற்கண்டவாறு கூறுகின்றது. இந்நடைமுறை சில நாடுகளில் முற்போக்கான சட்டங்கள் மூலம் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால் அதுவும்கூட 20 ம் நூற்றாண்டின் பிந்திய பகுதியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னமே பெண்களின் அந்தஸ்த்து குறித்து அக்கறைப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது.
05. இத்தா
“இத்தா” இன்றைய உலகின் மிகப் பெரும் கேள்விக்குறி முஸ்லிம் உலகில் மட்டுல்லாது, அனைத்து சமூகங்களாலும் இத்தா என்பது, இஸ்லாத்தில் பெண்களின் நிலையைக் குறைத்துக் கொச்சைப்படுத்தவதாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. பிற்போக்குவாதக் கொள்கைகளினூடே வெளிவருகின்ற இவ்வாறான அர்த்தப்படுத்தல்கள் மக்களால் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்படல் என்பது இக்காலத்தின் துரதிஷ்டமேயாகும்.
கணவரை இழந்த அல்லது பிரிந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மறுமணம் செய்வதிலிருந்து விலகியிருத்தலே இத்தா எனப்படும். இத்தா இரண்டு விதமான சந்தர்ப்பங்களில் அனுஷ்டிக்கப்படுகின்றது. முதலாவது கணவன் மரணித்துவிட்டால் அதற்காக 4 மாதங்களும் 10 நாட்களும்; இரண்டாவது தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றிருந்தால் அதற்காக 3 மாதங்களும் இத்தா கடமையை நிறைவேற்றுவது ஒரு பெண்ணின் கடமையாகும்.
இறைவனால் படைக்கப்பட்ட சிசு அப்பெண்ணின் கர்ப்பத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தலே இத்தா அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கமாகும். அவ்வாறே கணவரை இழந்த அல்லது பிரிந்த பின் அப்பெண் வேறொரு திருமணம் செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கின்ற வேளையில் அவள் கர்ப்பம் தரிப்பாளேயானால் அக்குழந்தை அப்பெண்ணின் இழந்த அல்லது பிரிந்த கணவரின் மூலம் உருவாகியதே என்பதை பரிபூரணமாக அறிந்து கொள்ளமுடியும்.
26

ஆனால் கணவரின் இழப்பின் பின்பு இத்தா அனுஷ்டித்தல் என்பது வெள்ளை ஆடை அணிந்து அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு வீட்டின் ஓர் மூலையில் சூரிய ஒளியே படாத நிலையில், பல திரைகள் இடப்பட்ட இருண்ட அறையொன்றினுள் இருப்பதுதான் இக்கால நடைமுறையாகவுள்ளது. சில வேளைகளில் கர்ப்பிணிப் பெண்களையும் பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை. ஏனெனில் அக்கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் அக்குழந்தை இத்தாவிலிருக்கும் இப்பெண்ணைப் பார்த்துவிடக்கூடும். இதனால் இத்தா முறிந்துவிடும் என்றெல்லாம் எமது சமூகம் அறிவீனமான பல கொள்கைகளை வகுத்து வைத்துள்ளது. எனவே இச்செயற்பாடுகள் முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணாகவுள்ள அதேவேளை இவையனைத்தும் வேற்றுக் கலாச்சாரங்களின் செல்வாக்கின் நிமித்தம் முஸ்லிம்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறைகளாகும்.
ஒரு ஆண் இத்தாவிலிருக்கும் ஒரு விதவைப் பெண்ணை மணமுடிக்க விரும்பினால் அவ்விருப்பத்தை மனதில் மறைத்து வைத்திருப்பதிலோ,கண்ணிமமான முறையில் தெரிவிப்பதிலோ எவ்வித குற்றமுமில்லை எனவும் அவ்வாறு விருப்பம் இருப்பின் மறைமுகமான முறையில் அப்பெண்ணிடம் தெரியப்படுத்துவதே நல்லது ஏனெனில் மரணித்த கணவருக்காக இத்தா அனுஷ்டித்து வரும் வேளையில் இந்நிகழ்வு அப்பெண்ணினால் விரும்பப்படாமல் அல்லது வரவேற்கப்படாமலும் விடலாம். என இத்தா பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனிலே சூறா அல்பகறாவில் வசனம் 235 யினூடாக விளக்கியுள்ளான்.
எனவே கணவரைப்பிரிந்த பெண்ணிற்கு இத்தாவுடைய கடமை முடிந்த பிற்பாடு மறுமணம் செய்ய இஸ்லாம் எல்லாவித உரிமையும் வழங்கியுள்ளது என்பது மேற்கூறிய வசனங்களின் மூலம் தெளிவாகின்றது. ஆனால் கணவர் மரணித்ததும் பெண்களால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாது, தமது உத்தியோகங்களைப் பார்க்க முடியாது என்று புனித திருமறையான அல்குர்ஆன் எந்த இடத்திலுமே கட்டளையிடவில்லை. தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தொழில் பார்ப்பவர்கள். எனவே அவர்களால் 4 மாதங்களுக்கும் மேலாக அலுவலகங்களில் விடுமுறை எடுக்க முடியாது. அவ்வாறெனின் வேலையை இழக்க நேரிடலாம். கணவரை இழந்த நிலையில், வேலையையும் இழக்க நேரிடுமாயின் அவளதும், அவளது குடும்பத்தினதும் பிழைப்பிற்கு யாது நிகழும்? இவ்வாறு இஸ்லாம் ஒருபோதும் சிக்கல் நிலையை மனிதர்களுக்கு தோற்றுவிப்பதில்லை என மார்க்க அறிஞர்கள் விவாதிக்கின்றனர்.
உண்மையில் இத்தாவுடைய முற்று முழுதான நோக்கம், அப்பெண் கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்துகொள்வதற்காகவேதான். எனவே தொழிநுட்பத் திறனும், மருத்துவ வளர்ச்சியும் நிறைந்துள்ள இன்றைய உலகில் ஒரு பெண்
27

Page 20
தாய்மையடைந்துள்ளாரா என்பதை ஒரிரு நாட்களிலேயே அறிந்துகொள்ளக்கூடிய மருத்துவ வசதிகள் எமது வாசல் வரை வந்துள்ளன. இவ்வாறான சூழ்நிலைகளில் அப்பெண் வீட்டைவிட்டு வெளியே சென்று தனது காரியங்களைத் தொடர வேண்டுமாக இருந்தால் அதற்கு இத்தா ஒரு தடையாக இருக்காது. ஆனால் இவற்றிற்கு மேலாக அப்பெண் இத்தாக் காலத்தில் கர்ப்பமுற்றிருப்பாரேயானால், அக்குழந்தை பிறக்கும் வரை இத்தா அனுஷ்டிக்க வேண்டும். ஏனெனில் உண்மையில் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போது வேறொருவரைத் திருமணம் செய்வது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஒரு விடயம். ஆனால் தனது பராமரிப்பை உறுதிப்படுத்துமுகமாக, தனது தேவையின் நிமித்தம் வெளியே செல்வதற்கு அப்பெண்ணிற்கு எல்லாவித உரிமையும் இஸ்லாத்தில் உண்டு.
தன்னுடன் வாழ்ந்த கணவருக்காக அவரது இழப்பின் காரணமாக துக்கம் அனுஷ்டிப்பது கூட இத்தாவுடைய கடமையெனவும், எனவே அப்பெண் இத்தாவுடைய காலம் முழுவதும் வீட்டின் தனிமையில் மனதை வேறு கவனங்களில் செலுத்தாது சோகத்துடன் இருக்கவேண்டும் எனவும் சிலர் ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர்.
ஒரு பெண் தனது கணவருடன் எவ்வாறான தாம்பத்திய உறவில் கலந்துகொண்டாள் என்பது அக்கணவன், மனைவி இருவருக்கும், அதற்கும் மேலாக இறைவன் ஒருவனுக்கும் மட்டுமே தெளிவான ஒரு விடயமாகும். உண்மையில் அப்பெண் தனது கணவருடன் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடாத்திக் கொண்டிருந் தாளாயின், கணவரது இழப்பு நிச்சயமாக அவளுக்கு துக்கத்தையும் சோகத்தையுமே தரக்கூடும். எனவே அவ்வேளையில் அப் பெண் சோகத்தைச் சுமந்திருப்பது இயற்கை. அதனை யாரும் அப்பெண்ணிற்குத் திணிக்க வேண்டியதில்லை. மாறாக, அக்கணவருடன் வாழ்ந்த காலம் முழுவதுமே அவரின் மூலம் துன்பத்தையே அனுபவித்து விரக்தியுடன், அந்த மனிதரைவிட்டும் பிரிய வழிதெரியாமல் வாழ்ந்திருப்பாளேயானால் கணவரின் இழப்பு அவளுக்கு மேலும் துக்கத்தையே தரக்கூடும் என்று எவ்வாறு எம்மால் அனுமானிக்க முடியும். துன்பங்களிலிருந்து தன்னால் விடுபட முடியாமலிருந்த வேளையில் கணவரின் மரணம் இறைவனால் இயற்கையாக வழங்கப்பட்ட விடுதலையாகவும் அப் பெண் உணரக்கூடும். இதேபோன்று ஒரு விவாகரத்துப் பெற்ற பெண்ணை எடுத்துக்கொண்டால், கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக வாழமுடியாது என்றுதான் விவாகரத்தே பெற நேரிடுகிறது, அவ்விவாகரத்து அவளுக்கு விடுதலையைத் தருவதேயன்றி அது எவ்வாறு அப்பெண்ணுக்கு மேலும் துக்கத்தைக் கொடுக்கும்? எனவே துன்பத்திற்குரிய மூலகாரணியின் இழப்பு அதிலிருந்து விடுதலையை தவிர அதற்காக மேலும்
28

துன்பத்தில் துவழ்வது மனித இயல்பு அல்ல. ஆதலால் இஸ்லாத்தில் வரையறுக்கப்பட்டிராத விடயங்களின் மூலம் சஞ்சலப்பட்டு இறைவனின் கட்டளைக்காக இத்தா இருப்பதை விட்டும், சுற்றியுள்ள சமூகத்தின் அநாவசியப் பேச்சுக்களுக்காகத் தனது கடமைகளைச் செய்வதிலிருந்தும் தவிர்ந்திருப்பது முன்னேற்றமான இஸ்லாமிய வழிமுறையாகக் கொள்ளமுடியாது.
ஆனால் இத்தாக் காலத்தில் பெண்கள் மறுமண்த்தைப் பற்றிச் சிந்திப்பதுவோ, அந்நிய ஆடவர்களுடன் அவசியமின்றி உறவை வளர்ப்பதுவோ, பாலியல் ரீதியான விடயங்கள் பற்றிச் சிந்தனைகளை ஏற்படுத்திக்கொள்வதுவோ கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ள விடயங்களாகும். எனவே இத்தாவை அனுஷ்டிக்கும்படி அல்குர்ஆன் ஆணையிடுகின்றது என்பதுவும், அது அக்கால இடைவெளிக்குள் மறுமணம் செய்வதிலிருந்து விலகியிருத்தலைத்தான் குறிப்பிடுகின்றது என்பதுவும் மிகத்தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமாகும். ஆனால் இத்தாவை இவ்வாறான முறையிற்தான் அனுஷ்டிப்பது என்பது அப்பெண்ணின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. எனவே யாருமே தமது விருப்பு வெறுப்புக்களை அப்பெண்ணின் மீது திணிக்க முடியாது. அவர் இத்தாவை அனுஷ்டிக்கின்றாரா இல்லையா என்பது பற்றிக் கண்காணிப்பதற்கு இறைவன் ஒருவனே போதுமானவன். எனவே அவளது நடவடிக்கைகளுக்குரிய நன்மைகளையும் தண்டனைகளையும் வழங்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு. ஆதலால் தனிமனித வாழ்வை அது எவ்வாறிருப்பினும் விமர்சிப்பதற்கோ அல்லது தண்டனைகளை வழங்குவதற்கோ அடுத்தவர்களுக்கு உரிமையேதும் கிடையாது.
எனவே அல்குர்ஆனில் இத்தா அனுஷ்டானம் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று கூறப்பட்டிருக்காத நிலையில் எமது முஸ்லிம் சமூகம் தமது அறிவுக்குத் தக்கவாறு வரையறைகளை வகுத்துக் கொண்டு இஸ்லாத்திற்கு முரணான ரீதியில் மூடக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வருந்தத்தக்க விடயமாகும். சில சமயங்களில் இத்தா பற்றிய இஸ்லாமிய நடைமுறை சரியாக மக்களை அடையாமலிருப்பதும், சில வேளைகளில் காலங்காலமாகப் பின்பற்றி வந்த கடப்பாடுகளிலிருந்து தம்மை விடுவிக்க விரும்பாததன் காரணமாகவுமே இவ்வாறான அடிப்படைவாதக் கருத்துக்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. இருப்பினும் எக்காலத்திற்கும், எம்மாற்றத்திற்கும் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்களாகிய நாம் முற்போக்கான மாற்றுக் கருத்துக்களை சமயோசித சிந்தனைகளினூடே ஆதரிக்க முயற்சிப்பது சமூக முன்னேற்றத்திற்கு ஆரோக்கியம் தரத்தக்கதாகும்.
29

Page 21
06. ஹிஜாப்
ஆரம்ப காலந்தொட்டே பெண்கள் பாலியற் பொருளாக மட்டுமே நடாத்தப்பட்டு வந்துள்ளனர். எனவே அவளது கவர்ச்சியை வெளியே காண்பித்தல் என்பது பல சமூகப் பிறள்வுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் உரிய விடயமாகும். இதனாற்தான் குர்ஆன் பெண்களை கண்ணியமான முறையில் உடையணியும்படி கூறுகின்றது. இவ்வசனம் பெண்களின் சொந்தப் பாதுகாப்புக் கருதியே கூறப்பட்டுள்ளது.
இது தவிர பெண்கள் தமது முகங்களை மூடிக்கொள்ளும்படியான எந்த இறை வெளிப்பாடுகளும் குர்ஆனில் இல்லை என மார்க்க அறிஞர்கள் விவாதிக்கின்றனர். ஆனால் திரையிடலுடன் தொடர்பாக சில வசனங்கள் திருமறையில் காணப்படுகின்றன. அவை மனிதர்களால் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டு அவை பெண்களை மேலும் அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என அஸ்கர் அலி என்ஞனியர் அவர்கள் விளக்குகின்றார்.
பெண்கள் ஹிஜாபை அணியும்படி வற்புறுத்துவதற்காகப் பயன்படும் குர்ஆனிய வசனமானது,
"மேலும் நபியே) விசுவாசமான பெண்களுக்கு நீர் கூறுவீராக : 'தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்த் தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும் அதிணின்றும் வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம் மேல்ச்சட்டைகளின் மீது போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் தம் அலங்காரத்தைத் தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவர்களின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் தமது சகோதரர்கள், அல்லது தம் கணவர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறு பராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம். அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, நீங்கள் தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம் விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள்.” (24 ; 3፱)
30

இவ்வசனத்தை நியாய சிந்தையுடன் நோக்குவோமானால் பெண்கள் தமது கவர்ச்சியை வெளியே காண்பிக்காதிருப்பற்கும் தமது வசீகரத்தினால் அந்நிய ஆண்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவுமே மேற்படி வசனம் பெண்களுக்கு அவர்களது உடற்கவர்ச்சியை மறைத்துக் கொள்ளும்படி ஆணையிடுகின்றது. உண்மையில் பெண்கள் தமது உடற் கவர்ச்சியை வெளிக்காண்பிப்பார்களாயின் ஆண்களின் பார்வையில் இச்சையும் காமத்தையும் தோற்றுவித்து தமது கெளரவத்தை இழப்பதோடு அவர்கள் அடைவது எதுவுமேயில்லை.
ஆனால் பெண்களின் சொந்தப் பாதுகாப்புக் கருதியே இஸ்லாம் கண்ணியமான முறையில் உடையணியும்படி கூறுகின்றது என்று குறிப்பிடுவதாயின், பாதுகாப்பு யாரிடமிருந்து பெறுவது, ஆண்களிடமிருந்தா, அவ்வாறாயின் ஆண்கள் பயங்கரவாதிகளா அல்லது ஆண்களை மையமாக வைத்துத்தான் பெண்கள் ஆடையணிதல் வேண்டுமா என்ற கேள்விகளெல்லாம் கேட்கப்படுவதுண்டு.
இருப்பினும் இவ்விடயம் குறித்த யதார்த்தத்தை நோக்குவோமாயின், ஆரம்ப காலம் முதற் கொண்டு இன்று வரை பெண்கள் பாலியல் வல்லுறவுகளினாலும் பல்வேறு தொந்தரவுகளினாலும் பாதிக்கப்பட்டே வருகின்றனர். எந்தவேளையில் தாம் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவோமோ என்ற பயம் பெண்களின் மனதில் இருந்து வருகின்றது என்பது உண்மை. அவற்றிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பெண்கள் பலமிக்கவர்களாகத் தம்மை மாற்றிக் கொண்டு வருவது ஒருபுறமிருக்க, ஆண்களின் இவ்வக்கிர குணத்தை மாற்ற முடியாமலுள்ளது என்பது நிஜமான ஒரு விடயம். இதனாலேயே பெண்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் பல உபாயங்களைக் கையாள்கின்றனர்.
இவ்வாறான யதார்த்தத்தை உணர்ந்தே குர்ஆன் பெண்களைக் கெளரவமான முறையில் உடையணியும்படி ஆணையிடுகின்றது. ஆனால் காலப்போக்கில் ஒரு பண்பட்ட சமூக அமைப்பு தோன்றுமானால் பெண்களின் உடை என்பது அவர்களின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகக் கருதப்பட வேண்டிய தேவையிருக்காது.
மற்றும் இரண்டு குர்ஆன் வசனங்கள் பற்றி இவ்விடத்தில் நோக்குவது சிறந்தது. அவை நபியுடைய மனைவியரே என்று ஆரம்பித்துச் செல்கின்றன,
3.

Page 22
"நபியுடைய மனைவியரே நீங்கள் இதா) பெண்களில் எந்தவொருவரைப் போன்றவர்களுமல்லர் நீங்கள் (அல்லாஹ்வுக்கு) பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால், எவனுடைய இதயத்தில் (t1/761) நோய் இருக்கின்றதோ அத்தகையவன் (தவறான விருப்பங்களில்) ஆசை கொள்வான் மேலும் நீங்கள் (நேர்மையான) பேச்சையே பேசிவிடுங்கள்.” (33.32)
'இன்னும், (நபியுடைய மனைவியரே) நீங்கள் உங்கள்) வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் (பெண்கள் மறைக்க வேண்டியதை மறைக்காது) வெளிப் படுத்தியதைப் போன்று வெளிப்படுத்தித் திரியாதீர்கள். மேலும், தொழுகையை நிறைவேற்றுங்கள் ஸகாத்தையும் கொடுத்து வாருங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் (நபியுடைய) வீட்டினரே அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் (சகல) அசுத்தத்தைப் போக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவதையும்தான் (33. 33)
இவ்வசனங்கள் பெண்களைக் கட்டுப்படுத்துவதற்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் உண்மை அவ்வாறு அல்ல. இக்குறிப்பிட்ட வசனங்கள் நபியவர்களின் மனைவிமார்களுக்காகவே விசேடமாக இறக்கப்பட்டன என மார்க்க அறிஞரான உஸ்மானி கூறுகின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் நபியவர்களின் மனைவிமார் ஏனைய பெண்களை விட மேன்மை மிக்கவர்கள் என்பதால் சில குறிப்பிட்ட கட்டுபாடுகளுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. மேற்கூறிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் அவர்கள் விசுவாசிகளுக்கு முன்மாதிரியானவர்கள் என்பதனாற்தான். அவர்கள் நம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் போன்றோராவர். எனவேதான் அவர்கள் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்கின்ற மனிதர்களிலிருந்தும் விலகியிருந்து தமது கெளரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அம்மனிதர்கள் அவ்வாறு நடந்துகொள்வதற்கு இடமளிக்காமல் இருப்பதற்காகவுமே முக்கியமாக நபியவர்களின் மனைவிமாருக்கு இறக்கப்பட்டதாக திரு. உஸ்மானி அவர்கள் விவாதிக்கின்றார். (The Rights of Women in Islam : Asgar Ali Engineer).
மேலும் ஒரு குர்ஆனிய வசனம் கூறுவதாவது "நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக : "அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தானங்களையும்
32

பேணிக் காத்துக் கொள்ளவும்” அது அவர்களுக்கு மிகப் பரிசுத்த மானதாகும் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.”
இவ்வசனம் ஆண்களையும் பெண்களையும் தங்களது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி பணிக்கின்றது. ஒழுக்கம் என்பது உண்மையில் ஆண், பெண் இருபாலாருக்குமே இருக்கவேண்டியது என்பதாற்தான் அவ்விருவருக்கும் இவ்வசனம் கட்டளையிடுகின்றது. ஆனால் இன்று பெண்களைப் பர்தாவினுள் மூடிவைத்துக் கொண்டு அவர்கள் குறித்த எல்லாவித சுதந்திரங்களையும் ஆண்கள் அனுபவிக்கின்றனர். அவர்கள், பெண்கள் தம்மைப் பார்ப்பது பாவச்செயலெனக் கூறிக்கொண்டு தமது பார்வைகளால் பெண்களைத் துகிலுரிகின்றமை என்ன நியாயம்? இது முற்றிலும் குர்ஆனிற்கு முரணான செயலாகும். பெண்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும் அதே வேளை ஆண்களும் அவர்களது பார்வைகளை தாழ்த்திக்கொண்டு, பெண்களுடன் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பதையே குர்ஆன் எதிர்பார்க்கின்றது.
எனவே பெண்கள் தமது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இவையெல்லாம் ஆண்களின் அதிகார படித்தரத்தினால் தோற்றுவிக்கப்பட்டவையே. வற்புறுத்தலின் பேரில் பெண்களை முழுவதுமாக மூடி வீட்டின் நான்கு சுவர்களுக்கும் மத்தியில் மட்டும் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தைப் பிரயோகமே ஹிஜாப் என்பதாகும்.
இவை தவிர ஹதீஸ்களில் கூறப்பட்டதாக அறிவிக்கப்படுவதாவது, ஒரு நாள் பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகள் பீவி பாத்திமா அவர்களுடன் உட்காந்திருந்த வேளையில் கண் பார்வையற்ற மனிதர் ஒருவர் நபியை நாடி வந்ததும் பாத்திமா அவர்கள் அவ்விடத்திலிருந்தும் எழுந்து உள்ளே சென்றுவிட்டார்கள். இதனைக் கண்ணுற்ற நபியவர்கள் அம்மனிதரால் பார்க்கமுடியாத போதும் ஏன் எழுந்து செல்கின்றீர்கள் என்று கேட்டதற்கு அவரால் பார்க்க முடியாவிட்டாலும் என்னால் பார்க்க முடிகிறதே என பாத்திமா நாயகி அவர்கள் பதிலளித்ததாக ஒரு ஹதீஸ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனை உற்பத்தி செய்தவர்களின் கருத்துப்படி அல்லாஹ்வின் திருத்தூதரை விட அவர்களது மகள் விடயங்களை அதிகமாக அறிந்திருந்தார்கள் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது. ஆனால் கண்களுக்கு மட்டும் துளையிட்டு அணியவைக்கப்படும் பர்தாவை அணியும் பெண்கள் கூட அத்துளைகளினால் அடுத்தவரைப் பார்க்க முடியும் என்பதை இது போன்ற தான்தோன்றித் தனமாக ஹதீஸ்களை உற்பத்தி செய்பவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
33

Page 23
இதே வேளை பெண்கள் தமது கவர்ச்சியை வெளிப்படுத்தாதவாறு உடலைக் கண்ணியமான முறையில் மூடிக்கொள்வது இவ்வாறுதான் என்பது அவரவர் சுயவிருப்பம் என்றே கொள்ளப்பட வேண்டும். அதை விடுத்தும் கால் நுனியிலிருந்து மணிக்கட்டு உட்பட தலைவரை கண்களுக்கு மட்டும் துளைகள் இட்டு போர்த்திக் கொள்ளத்தான் வேண்டும் என்று அவர்களை வற்புறுத்துவதும் அவர்கள்மேல் ஆதிக்கத்தைச் செலுத்துவதும் இஸ்லாமிய வழிமுறையன்று.
மார்க்க வழிமுறைகளை ஒருவர் தாமாக உணர்ந்து பின்பற்ற வேண்டுமே தவிர யாராலும் திணிக்க முடியாது. கெளரவமான முறையில் உடையணிவது அவரவர் செளகரியத்தைப் பொறுத்ததே. பெண்கள் தலையைழுடி முக்காடிட்டுக்கொள்வதுதான் தமக்குச் செளகரிகத்தையும் கூடுதலான சுதந்திரத்தையும் தருவதாக உணர்ந்து அவ்வாறு அவர்கள் உடையணிவார்களேயானால், அவர்களைப் பிற்போக்குவாதிகள் என்றும் இஸ்லாம் பற்றிய அறிவு போதாது என்றும் கூறி அவர்களது முக்காடுகளை களையுமாறு வலுக் கட்டாயமாகப் பணித்தால் அதுவும் கூட ஒருவகையான வன்முறையே அன்றி அச்செயலில் ஈடுபடுபவர்களுக்கும் ஹிஜாபைத் திணிப்பவர்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.
ஆதலால் ஹிஜாப் அல்லது மறைத்துக் கொள்ளல் என்பதை அடக்குமுறைக்குரிய ஆயுதமாகப் பாவிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய அதே வேளை அது ஒரு பெண்ணினது விருப்புத் தேர்வாக அமையுமானால் திட்டவட்டமாக அது கண்ணியப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.
07. Fmr ”guiu o
சாட்சியம் பற்றிய சர்ச்சை முஸ்லிம் பெண்கள் மத்தியில் முக்கியத் துவத்தைப் பெறுகின்றது. ஏனெனில் இதனை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அநேக தீர்மானங்களை எடுத்துவருகின்றனர். அத்தீர்மானங்களால் முஸ்லிம் பெண்களின் அடிப்படை மனித உரிமைகள் யாவும் மீறப்பட்டு அவர்களை இரண்டாந்தரப் பிரஜையாக்கப்பட்டதும் அல்லாமல் ஆண்களின் நிலையான கொடுமைக்கும் ஆளாகியுள்ளனர்.
சாட்சியம் பற்றி குர்ஆனில் 09 விசேட வாக்கியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒரேயொரு வாக்கியத்திற்தான் சாட்சியம் அளிப்பதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள தகமையின் அளவு குறிப்பிட்டுள்ளது. ஒரு வாக்கியத்தில் ஆணைச் சாட்சியாகவும் மற்றொரு வாக்கியத்தில் பெண்ணை ாட்சியாகவும் குறிப்பிட்டுள்ளது. ஏனைய 06 வாக்கியங்களும் ஆண்களையும் பண்களையும் சாட்சிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. குர்ஆனிய விரிவுரையில்,
34

ஒரு விடயத்தைப் பற்றி இறுதி விளக்கத்தை அளிப்பதற்கு முன்பு அவ்விடயத்தைப் பற்றி குர்ஆனில் உள்ள சகல வாக்கியங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாமிய சட்ட வியாக்கியானங்களுக்கான அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் சாட்சியம் பற்றிய விடயத்தில் மாத்திரம் அனேக சட்டவல்லுனர்கள். விதிவிலக்காகச் செயற்பட்டு குறித்த வாக்கியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து இஸ்லாமிய சாட்சியச் சட்டத்தை வடிவமைத்துள்ளார்கள் எனப் பாகிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் கமறுதீன் கான் தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறான சர்ச்சையை ஏற்படுத்தும் வாக்கியத்தில் இறைவன் என்ன கூறுகின்றான் என்று பார்ப்போம்,
"ஓ விசுவாசிகளே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்துவதென கடனுக்கு மேல் கடன் பெற்றிருப்பின் அதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் இரு சாட்சிகளை அழைத்து, அவ்விருவரும் ஆண்கள் அல்லவெனின் ஒரு ஆணையும் நீர் அங்கீகரிக்கும் இரு பெண்களையும் அழைத்து சாட்சிகளாக ஏற்றுக்கொள்ளவும். ஏனெனில் இவ்விரு பெண்களில் ஒருவர் தவறு இழைப்பின் மற்றவர் ஞாபகப்படுத்துவார்."
இவ்வாக்கியத்தின் அடிப்படையில் சிலர் பின்வருவனவற்றை ஊகித்துள்ளனர். அவையாவன
1. சாட்சியம் கூறும் விடயத்தைப் பொறுத்த மட்டில் ஒரு பெண் அரை மனிதனுக்குச் சமன். så 2. பிரசவம், ஒரு பெண்ணின் அங்கக் குறைபாடு போன்ற விசேட சந்தர்ப்பங்கள் தவிர ஒரு பெண் தனித்து சாட்சியம் கூற முடியாது. 3. குர்ஆனினால் தண்டனை தீர்மானிக்கப்பட்டுள்ள பழிக்குப்பழி வாங்கும் வழக்குகளிலும் வேறு குற்றவியல் வழக்குகளிலும் ஒரு பெண்ணைச் சாட்சியாகக் கருத முடியாது. 4. சில சிவில் வழக்குகளிலும் நீதியோடு சம்பந்தப்பட்ட வழக்குகளிலும்
மாத்திரம் ஒரு ஆணுடன் இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்கலாம். 5. ஒரு பெண் பரிபூரண சாட்சியாக இருக்க முடியாது என்ற காரணத்தினால்
அவள் ஒரு நீதிபதியாக இருக்க முடியாது. 6. ஒரு பெண்ணிற்குச் செலுத்தப்பட வேண்டிய பணயப்பணம் ஒரு
ஆணுக்குச் செலுத்தப்பட வேண்டிய பணத்தின் அரைப் பங்காகும்.
35

Page 24
7. ஒரு பெண் தனக்குத் தானே பாதுகாவலனாக (வாலி) இருக்க முடியாது என்றமையால் தான் நினைத்தவாறு மணம் செய்யமுடியாத நிலை எனினும் அப்பெண்ணின் மகன் அவளின் பாதுகாவலன் (வாலி) என்ற வகையில் மணம் முடித்து வைக்கலாம் என்ற நிலை.
மேலே குறிப்பிட்டுள்ள ஊகங்கள் யாவும் அதிகாரபூர்வமற்றவை மாத்திரமின்றி பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடனும் அவர்களுக்கு வன்மம் ஏற்படுத்துவதை அடிப்படையாகவும் கொண்டன. அனேக மார்க்க அறிஞர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் சிபாரிசுகளேயன்றி நிர்ப்பந்தங்கள் அல்ல எனக் கூறியுள்ளார்கள். எனவே சட்ட அறிஞர்களின் வாதங்கள் முழுமையாகச் சிதறடிக்கப்படுகின்றன. அனேக சட்ட அறிஞர்கள் இவ்வாறு தீர்மானித்தற்கான காரணம், அக்காலத்துப் பெண்கள் வியாபாரத்தில் அதிக பங்களிப்பு செய்யாததினால் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய போதியளவு விளக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை என வாதிடுகின்றனர். இதிலிருந்து அப்பொழுது நிலவிய சமூக நிலையை அடிப்படையாக வைத்தே இவ்விதி நிர்ணயிக்கப்பட்டது என்பதையும் சமூக நிலை காலத்திற்குக் காலம் மாற்றம் அடைவதனால் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்விதிகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் விளங்கக்கூடியதாக உள்ளது. (இஸ்லாத்தில் மகளிர் நிலை : கமறுதீன் கான்)
மேலே குறிப்பிட்ட குர்ஆனிய வசனத்தில் காணப்படும் “இவ்விரு பெண்களில் ஒருவர் தவறு இழைப்பின் மற்றவர் ஞாபகப்படுத்துவார்” என்பதன் அர்த்தம் அக்காலப் பெண்களுக்கு நிதி விடயங்களில் போதிய அனுபவமின்மையால் அவற்றை மறந்துவிடும் வாய்ப்பு இருந்தது. எனவேதான் ஒரு ஆணின் சாட்சியத்திற்குப் பதிலாக இரு பெண்களின் சாட்சியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சமயம் ஒரு பெண் மறந்தால் மற்றவர் ஞாபகப்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் இருவருமே மறந்துவிடக்கூடிய வாய்ப்பு அரிது. இவ்வாக்கியத்தை உற்றுநோக்குவோமானால் உபயோகப்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இழிவுபடுத்துவதாக இல்லையெனப் பேராசிரியர் கமறுதீன் கான் அவர்கள் கூறுகின்றார். மேலும் அவர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி பெண்களின் இயற்கையான தன்மையாகவும் கூறப்படவுமில்லை. மேலும் குறித்த விதி வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே வரையறுக்கப்பட்டுள்ளதேயன்றி சட்ட வல்லுனர்கள் குறிப்பிட்டது போல் வாழ்க்கையின் சகல பிரச்சினை களுக்கும் ஒவ்வாது. வரலாற்றின்படி வர்த்தக நிபந்தனைகளும் வழமைகளும் தொடர்ச்சியாக மாற்றம் அடைவதைக் காணக்கூடியதாக இருக்கின்றமையால்,
36

குறித்த விதி விசேடமாகச் சந்தர்ப்பத்துடன் தொடர்புடைய தன்மையுடையது என்பது வெளிப்படையானதாகும்.
பெண்கள் முன்னிலையில் ஒரு கொலையோ கற்பழிப்போ நடந்தால் அப்பெண்ணின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் சில கருத்துக்கள் கூறப்படுகின்றன. அதன்படி அப்படிப்பட்ட ஒரு குற்றம் அச்சந்தர்ப் பத்தில் நடைபெறவில்லை என்றே கருதப்படும். இதைவிட முட்டாள்த் தனமானதும் ஏழனத்துக்குரியதுமான வாதங்கள் ஏதும் இருக்கக்கூடுமா? இறைவனின் உரிமைகளோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பெண்கள் சாட்சியம் அளிக்க முடியாதென்றும் சட்டவல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது குர்ஆனில் தண்டனை நிர்ணயிக்கப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமான விவகாரங்களாகும். எனினும் இறைவன் தன்னுடைய உரிமைகளைப் பாதுகாக்கும்படி குர்ஆனில் எங்கு குறிப்பிட்டுள்ளான்? அவ்வாறெனின் இறைவனின் உரிமைகளைப் பாதுகாக்கப் பெண்களைவிட ஆண்கள் எந்த வகையில் தகைமையுள்ளவர்களாவார்கள்? அப்படியானதொரு கருத்தைக் கூறுவது இறை நிந்தனையல்லவா? என பேராசிரியர் கமறுதீன் கான் அவர்கள் கேள்வியெழுப்புகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணினது சாட்சியத்தை மட்டும் கருத்திற் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். அச்சம்பவத்தை நோக்குவோமானால், ஒருமுறை பெண்ணொருவர் காலைத் தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத நபரொருவரினால் பாலியற் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானார். குற்றத்தைச் செய்துவிட்டு தப்பியோட முற்பட்ட அம்மனிதனை அப்பெண் எழுப்பிய கூக்குரலினால் அவ்வழியாற் சென்ற வேறொருவர் மடக்கிப்பிடித்தார். அதன்பின் அவர்கள் பெருமானார் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதும் அக்குற்றவாளி தன்னைப் பிடித்த மனிதரே உண்மையில் குற்றம் செய்தவன் என்றும், தான் அவரைத் துரத்திப் பிடித்ததாகவும் சம்பவத்தை மாற்றிக் கூறினான், இருந்தபோதுங்கூட நாயகம் அவர்கள் அதனை ஏற்க மறுத்து பாதிக்கப்பட்ட பெண்ணே உண்மையை அறிந்திருந்தவர் என்பதால் அவரது சாட்சியத்தையே ஏற்றுக்கொண்டார்கள்.
எனவே, குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திலிருந்த பெண்கள் தற்காலத்துப் பெண்கள் அல்ல. இன்று வாழ்க்கையில் சகல துறைகளிலும் பெண்கள் ஆண்களுடன் போட்டியிடுகின்றார்கள். கோடிக்கணக்கில் மிகவும் ஆற்றலுள்ள கல்வி கற்ற பெண்கள் எல்லாத் துறைகளிலும் தொழில் பார்த்து வருகின்றார்கள். அறிவிலும் ஒழுக்கத்திலும் ஏனைய பல துறைகளிலும்
37

Page 25
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என எடுத்துக் காட்டியுள்ளார்கள். சிலவேளைகளில் மனிதத்துவ அம்சங்களில் அவர்கள் ஆண்களைவிட உன்னதமானவர்களாக இருக்கக்கூடும். எனவே பெண்கள் இயற்கையாகவே ஞாபகமறதித் தன்மை கொண்டவர்கள் என்ற கூற்றோ அவர்களுள் இருவர் ஒரு ஆணுக்குச் சமம் என்னும் கருத்தோ தற்காலத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.
ஏற்கனவே கூறியது போன்று குர்ஆனிலுள்ள ஒரு விடயத்தைப்பற்றி வியாக்கியானம் செய்வதாகயிருந்தால் அது சம்பந்தப்பட்ட எல்லா வாக்கியங்களையும் ஆராய்ந்து சரியான பொருளை விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே சாட்சியம் பற்றிய குறித்த வாக்கியமானது (2:228)
அவ்விடயம் பற்றி ஆரம்பத்தில் இறக்கப்பட்ட வாக்கியமாகும். வெகுகாலத்திற்குப் பின்னர் அதே விடயத்தைப் பற்றி இறக்கப்பட்ட 08 வாக்கியங்கள் குர்ஆனில் உள்ளன. அவற்றுள் விவாகரத்து கற்பின்மை பற்றிய குற்றச்சாட்டு போன்ற மிகவும் முக்கியமான விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. அவற்றிலெல்லாம் வெறுமனே சாட்சியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே அன்றி ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியம் பற்றிச் சிந்திக்கும்போது சாட்சியம் அளிக்கும் தகைமை பற்றிப் பார்க்க வேண்டுமே தவிர வாக்கியத்தில் குறிப்பிடப்படும் எண்ணிக்கையை அந்தஸ்துடன் ஒப்பிட்டு அதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய தேவையில்லை.
08. அரசியல் தலைமைத்துவம்
பெண்களின் அரசியல் உரிமைகள் பற்றிய விவாதம், அடிப்படையில் சில குர்ஆன் வசனங்களையும், ஒரு ஹதீஸையும் சுற்றியே சுழல்கிறது. இவ்வுரிமைகளுள் மையமாக அமைவது அவர்களின் தலைமைத்துவ உரிமையாகும். இதனுடன் அவர்களின் சுயவெளிப்பாட்டு உரிமை, சட்டத்தின் முன் நீதியாகவும், சமத்துவமாகவும் நடத்தப்படுவதற்கான உரிமை என்பனவும் அடங்கும்.
இன்று எம்மவர் மத்தியில் முஸ்லிம் பெண்களின் தலைமைத்துவம் என்பது இந்த அளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது என்றால், இந்த அளவு உணர்ச்சி வேகத்தை, இந்த அளவு கோபத்தை, இந்த அளவு கருத்து வேற்றுமைகளைக் கிளறிவிட்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன? இன்று முஸ்லிம் சமூகங்களில் பிரச்சினையின் போராட்ட மையமாக இருப்பது உண்மையில் அரசியல் வாதிகளின் பால் அல்ல, பதிலாக அவர்களின் அதிகாரத்தின் தன்மையேயாகும் என்பதையே இது காட்டுகின்றது.
38

ஷரியா சட்டத்தின் கீழும், குர்ஆனிய சட்டங்களுக்குக் கீழும் ஆண்களுக்கு இருக்கும் அதே கடப்பாடுகள் பெண்களுக்கும் உண்டு. எனவே ஆண்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் பெண்களுக்கும் உரித்தாகும். எனினும், பெண்களின் அரசியற் தலைமைத்துவம் என்பது இதற்கு முரணாகவே இருக்கின்றது. ஏனெனில் அது அவர்களின் அந்தஸ்த்தையும், கெளரவத்தையும், அடிப்படை உரிமையையும் குறைக்கின்றது. எனவே குர்ஆனினால் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப் பட்டிருக்கின்ற சமத்துவத்தோடு ஒட்டிய பொதுக் கோட்பாட்டிற்கு அமைய அவ்விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பெண் தனது இயற்கையான தன்மைகளிலும், ஒழுக்கக் கட்டுப்பாட்டுத் தன்மையிலும், கல்வி அறிவு பெற்றுக்கொள்ளும் தன்மையிலும் ஆணைவிட தரத்தில் குறைந்தவள் எனவும், அக்காரணத்தினால் அவளின் உரிமைகள் வரையறுக்கப்பட வேண்டும் எனவும் வாதிடுவது மடைமையாகும். இவ்வாதத்திற்கு குர்ஆனில் எந்தவித ஆதாரமும் இல்லை. அத்துடன் மனிதாபிமான ரீதியில் நியாயப்படுத்தவும் முடியாது. இது பெண்களை அவமதிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை மறுப்பதற்கும், மடைமை வாய்ந்த சுயநலம் மிக்க மனிதர்களினால் உருவாக்கப்பட்ட ஒரு கூற்றாகும்.
பதினான்கு நூற்றாண்டுகளாக இவ்வாறான சமத்துவமின்மையை முஸ்லிம் சமுதாயமும் பின்பற்றி வந்ததென வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். பல்லாண்டு காலமாக ஒரு பிழை செய்யப்பட்டு வந்துள்ளது என்பதால் அது சரியாகிவிடாது. முஸ்லிம் சமுதாயத்தில் அடிமைகளை வைத்திருப்பதும், வைப்பாட்டிகளை வைத்திருப்பதும் பதின்மூன்று நூற்றாண்டுகளாக வழமையில் இருந்ததன் பின்னர், உலக மக்களின் மனச்சாட்சி அதற்கு எதிராகத் திரண்டு எழுந்தபோது அந்த வழமை கைவிடப்பட்டது. இவை தீவிர விளக்கமளிப்பவர்களின் கருத்துப்படி குர்ஆனினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
அரசியற் தலமைத்துவத்திலிருந்து பெண்களைத் தடுக்கும் ஹதீஸ் என்ன சொல்கின்றது என்றால்,
“பெண்களிடம் தங்கள் பொறுப்புக்களை ஒப்படைக்கும் ஒரு சமூகத்தினர் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்”
அறிவித்தவர் : அபூபக்றா.
இந்த ஹதீஸின் பின்னணியைச் சற்று நோக்குவோமானால், ஹஸறத் அலி (றலி) அவர்களுக்கும் பீபி ஆயிஷா (றலி) அவர்களுக்கும் இடையே
39

Page 26
நடைபெற்ற ஒட்டகை யுத்தத்தின்போது அநேக நபித் தோழர்கள் அதில் பங்குபற்றாது தவிர்த்துக் கொண்டார்கள். அது ஒரு உள்நாட்டு யுத்தம் என்ற வகையில் அது சமூகத்தைப் பிளவுபடுத்தி ஒருவருக்கொருவர் எதிரியாக மாறிவிடக்கூடும் என்பதே அதற்குக் காரணமாகும். அவர்கள் கொள்கை அடிப்படையில் அதாவது, சமூகத்தின் மத்தியில் உள்ளக முரண்பாட்டைத் தோற்றுவிக்கக்கூடிய மோதலில் பங்குபற்றுவது நபி (ஸல்) அவர்களின் போதனைக்கு எதிரானது என்ற வகையில் யுத்தத்தில் பங்குபற்றாது விலகியிருந்த போது அபூபக்றா மட்டுமே “எதிராளிகளில் ஒருவரின் பால் காரணமாகவேதான் அந்த யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை என பீபி ஆயிஷா (றலி) அவர்களின் தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்தார் என அரபுலக முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான பாத்திமா மெர்னிஸி குறிப்பிடுகின்றார்.
கெய்ரோ அல் - அஷ்ஹர் பல்கலைக்கழகப் புலமையாளரான ஷெய்க் முஹம்மது அல் கஸ்ஸாலியினால் எழுதப்பட்ட "அஸ்ஸுன்னா அன் நபவிய்யா" என்ற புத்தகத்தில் அரச தலைமைத்துவம் வகிப்பதிலிருந்து பெண்களைத் தடுக்கும் பிரசித்திபெற்ற ஹதீஸை பாரதூரமான முறையில் நிராகரித்து தன்னாதிக்கத்துக்கான பெண்களின் உரிமையை குர்ஆனிலேயே வேரூன்றச் செய்ததன் மூலம் முஸ்லிம் பெண்களினால் அரசியற் தலமைத்துவத்தை ஏற்க முடியும் என ஆணித்தரமாகக் கூறுகின்றார்.
பெண்களின் தலமைத்துவத்தோடு சம்பந்தப்பட்ட குர்ஆனிய வசனம் என்று கூறுகின்றது என்று பார்ப்போம்.
'அங்கு அவர்களை ஆட்சி செய்கின்ற ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (அரசுக்குத் தேவையான) எல்லாப் பொருள்களும் கொடுக்கப் பட்டிருக்கின்றாள். ஒரு மகத்தான சிம்மாசனமும் அவளுக்கு இருக்கிறது.”
இவ்வாக்கியம் சுலைமான் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான வரலாற்றையும், அவரது பெருமைகளையும், ஆற்றல்களையும், பலமும் ஞானமும் பெற்ற ஸபா நாட்டு அரசியுடன் அவருக்கேற்பட்ட மோதல் தொடர்பினையும் விபரிக்கும் சந்தர்ப்பத்திலேயே இடம்பெற்றுள்ளது. மக்காவில் குழுமிய மக்களுக்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "எறும்பு” என்ற தலைப்புடைய அந்த அத்தியாயத்தை ஒதிக் காண்பித்தார்கள் என கஸ்ஸாலி கூறுகின்றார். உண்மையில் இதன் பின்னணி யாதெனில் அச்சந்தர்ப்பத்தில் பாரசீக மக்கள் (ஈரானியர்கள்) குஸ்றோ (CuSroe) என்ற அரசனின் மகளை தமது அரசியாக ஆட்சிக்குக் கொண்டு வந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் மேற்படி பெண்களைக் காரணங்காட்டியே இக்குறிப்பிட்ட ஹதீஸைக் கூறியிருந்தார்கள்.
40

அவர்கள் குறிப்பிட்டது முழுப்பெண்கள் சமுதாயத்தையும் அன்றி பாரசீக அரசியையேயாகும். அவ்வாறு நபியவர்கள், அரசாள தகுதியற்றவர்களாக முழுப்பெண்கள் சமுதாயத்தையும் கருதியிருந்தார்களேயானால் ஸபா நாட்டு அரசியைப் பற்றி புகழ்ந்து கூறியிருக்க மாட்டார்கள்.
இதில் அவர்களுக்கு ஸபா நாட்டு அரசியின் கதையை, தன் ஞானத்தின் மூலம் அவள் எப்படித் தன் மக்களை வெற்றியையும், வளமான வாழ்வையும் அடையும் வகையில் சரியான நம்பிக்கையின் பால், நேரான வழியின் பால் திருப்பினாள் என்பதைப் பற்றி அவர்கள் கூறினார்கள்.
ஆகவே இத்தெய்வீக வெளிப்பாட்டின் தர்க்கத்திற்கு எதிரான ஒரு ஹதீஸை சரியென்று கொள்வது சாத்தியமல்ல என கஸ்ஸாலி வாதிக்கின்றார். பலரினால் பரிமாற்றப்பட்டுக் கிடைக்கப்பட்ட முரண்பட்ட ஹதீஸையும் விட குர்ஆன், தெய்வீக வார்த்தை என்ற ரீதியில் உயர் தகைமையுடையது என்று கூறும் அவர், இரண்டுக்குமிடையில் (குர்ஆன், ஹதீஸ்) ஏதாவது முரண்பாடு தோன்றும் பட்சத்தில் தெய்வீக வார்த்தைகளுக்கு முதன்மை கொடுத்து அது தீர்க்கப்பட வேண்டும் என்பது அவரது வாதமாகும். இப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஆட்சிபுரிவதற்குரிய பெண்ணின் உரிமைக்கு எதிராக வாதிக்கும் எந்தவொரு ஹதீஸும் ஸபா நாட்டு அரசியின் ஞானம் பற்றி விபரிக்கும் குர்ஆன் வசனத்தின் மூலம் வழக்கு அற்றதாக ஆக்கப்படுகின்றது என்பது கஸ்ஸாலியின் கருத்து என பாத்திமா மெர்ணிசி குறிப்பிடுகின்றார்.
ஸபா நாட்டு அரசி பற்றிய குர்ஆனிய வசனங்களை எடுத்துக் கொண்டால், சுலைமான் நபி (ஸல்) அவர்கள், ஸபா நாட்டு அரசியை மக்கள் மத்தியில் அவளுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களை இஸ்லாத்தைத் தழுளம் படி கேட்டபோது, அவள் அக்கோரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்து, இறுமாப்பும் திமிரும் காட்டியிருக்க முடியும். ஆனால் அவள் அவ்வாறு செய்யவில்லை. சுலைமான் நபி (ஸல்) அவர்களுடைய கோரிக்கையை அரச சபையிலே வெளியிட்டு அரச பிரதானிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தாள். சுலைமான் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் படி அவர்கள் வழங்கிய ஆலோசனையை தனது புத்தி சாதுரியத்தினால், தனது அரசியல் ஞானத்தினால் மறுத்துரைத்து சுலைமான் நபி (ஸல்) அவர்களின் கோரிக்கைக்கு இணங்கிக்கொண்டதன் மூலம் தனது மக்களை நேர்வழிப்படுத்தினாள். அவ்வாறு அக்கோரிக்கைக்கு இணங்காமல் போர் தொடுத்திருப்பின் அதிவல்லமை படைத்த சுலைமான் நபி (ஸல்)
4.

Page 27
அவர்களுடைய படைகள் மூலம் தமது படைகள் அழிக்கப்பட்டுவிடும் என்றும், அதனால் தனது மக்கள் அழிந்துவிடுவார்கள் எனவும் அவள் அஞ்சியதன் காரணமாகவே அவ்வாறு செயற்பட்டாள்.
இச்சந்தர்ப்பத்தில் இந்த அரசியின் செயற்பாடுகளைக் கூர்ந்து அவதானிப்போமானால் அவளது ஆழுமையின், அறிவின், சமூக நோக்கின், மனித நேயத்தின், இறைபக்தியின் வெளிப்பாடு தெரியும். அதாவது, அரச சபையில் வீற்றிருந்த பிரதானிகள் அனைவரது வேண்டுகோளையும் அது புத்திசாலித்தனமற்றதென தான் ஒருத்தியால் உறுதிப்படுத்தியதன் மூலம் தனது முடிவைப் பிரயோகப்படுத்துகின்றாள். இங்கு அரச சபையையே எவ்வாறு கூட்டி ஆழ முடியும் என்ற அவளது ஆளுமையும், இவ்வாறு செயற்பட்டால் இந்த விதமான பின்விளைவுதான் வரும் என்ற புத்திக் கூர்மையும் தெளிவாகின்றது. அத்தோடு இத்தீர்மானத்தைத் தனது சமூகத்தின் நலனுக்காகவே செய்ய முனைகின்றாள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அல்லnஹத்தஅபூலா மீது ஏற்பட்ட இறை நம்பிக்கையை மேலும் துல்லியமாக இவை எடுத்துக் காட்டுகின்றன.
எனவே ஒரு பெண்ணுக்கு, இத்தனை குணாம்சங்களும் நிறைந்து காணப்படும் போது ஏன் அவளால் ஒரு சமூகத்திற்குத் தலமை தாங்கி, அச்சமூகத்தை நேர்வழிப்படுத்த முடியாது? இதனைக் குர்ஆன் எந்த இடத்திலாவது மறுதலித்துள்ளதா? மனிதர்கள் யாவரையும் இறைவன் சமமாகப் படைக்கவில்லை. “உங்களில் ஏற்றத்தாழ்வுகளை வைத்தே படைத்திருப்பதாக” அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே, எல்லா ஆண்களும் புத்திசாலிகளாகவோ, அரசியல் ஞானம் நிறைந்தவர்களாகவோ இல்லை. அதே போன்று எல்லாப் பெண்களும் புத்திசாதுரியமான, நியாய சிந்தையுடையவர்கள் என்று வாதிப்பது அபத்தமானதாகும். எனவே தலைவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகள் ஆண்களில் காணப்பட்டு அவர்கள் தலைவர்களாக சமூகத்தால் தெரிவு செய்யப்படும் போது, அதே பண்புகளைக் கொண்ட பெண்களால் ஏன் தலைவர்களாக முடியாது? எனவே, இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்து மனித குலத்திற்குக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கான பெண்களின் உரிமையைத் தணிக்கை செய்வது கேலிக்குரிய ஒன்றாகவே அமைகின்றது. பெண்களின் மானுட சிறப்புரிமைகளை மறுத்து, அவர்களை முடமாக்க முனைபவர்கள் யாராக இருந்தாலும் உண்மையில் அவர்கள் ஒரு படுபாதகச் செயலையே புரிகின்றனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
42

பெண்களுக்கு எப்பொழுதும் அதியுயர் பதவிகளையும், அரசியற் தலைமைத்துவத்தினையும் வழங்கவே வேண்டும் என்று விவாதித்து, அதனை நியாயப்படுத்துவது அல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாக, இஸ்லாத்திற்கும், குர்ஆனிற்கும் முரணாக பெண்களின் ஆழுமைகளில், அவர்களின் உரிமைகளில் குறைகூறி, எடைபோடும் குறுகிய நோக்கம் கொண்ட சக்திகள் மார்க்கத்திற்கு எதிராகச் செயற்பட முனையும் போது தட்டிக்கேட்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்பதையும், அவற்றை அடிமட்ட மக்களும் அறிந்திருக்க வேண்டும் என்பதனையும் இக்கட்டுரை வலியுறுத்த விரும்புகின்றது.
ஒரு ஆண் அரசியற் தலைவரினால் தகுந்த முறையில் அரசாள முடியாவிட்டால் அவர் மக்களால் ஒதுக்கப்படுகின்றார். இது சகஜமான ஒரு நடைமுறையாகும், இதில் எவரும் அதிசயம் காண்பதில்லை. ஆனால், இதே போன்று ஒரு பெண் அரசியற் தலைவரினால் முறையான அரசியல் சாணக்கியத்துடன் அரசியல் செய்ய முடியாவிட்டால் அவராலும் தொடர்ந்து அரச களத்தில் நிலைக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அவர் ஒரு பெண் என்றபடியாற்தான் அவரால் அரசாள முடியாமற் போய்விட்டதாக ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் இக்கருத்து லியுறுத்தப் பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு சுயமாகச் சிந்திக்கக்கூடிய ந்தவொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எத்தனையோ ஆண் தலைவர்களால் பல சமுதாயங்கள் வழிதவறிச் சென்றது உண்மை. அதே போன்று எத்தனையோ பெண் தலைவர்களின் பிழையான வழிநடத்தல்களினால் அவர்கள் தமது ஆட்சியைத் தக்க வைக்க முடியாமற்போன சரித்திரங்களும் உண்டு. ஒரு சில பெண்களால் அரசியல் தலைமைத்துவத்தைச் சரிவர நடாத்த முடியாது என்பதற்காக முழுப்பெண்கள் சமுதாயத்தையுமே குற்றங்கூறி அவர்களின் அரசியல் உரிமையைத் தட்டிப்பறிப்பது முற்றிலும் தவறான செயலாகும். இதற்கு இஸ்லாத்தையும், ஹதீஸையும் சாட்சியாகக் காட்டுவதும், இல்லாததை இருப்பதாகப் புனைவதும் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். அதேவேளை பரந்த அறிவும், கூர்மையான அரசியல் ஞானமும் நிறைந்த பெண்களின் அரசியற் தலைமைத்துவ உரிமையை மறுப்பது இறைவனின் பார்வையில் மிகவும் பாவ
காரியமாகவே கொள்ளப்பட வேண்டும்.
43

Page 28
முடிவுரை
மார்க்க அறிஞர்கள் அல்குர்ஆன் வசனங்களை இரு விடயங்களின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளனர். முதலாவது, அவ்வசனங்கள் என்றென்றைக்கும் மாற்ற முடியாத ஆத்மீக வாழ்க்கையுடன் தொடர்புடைய வரையறைகள், சட்டதிட்டங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டமைந் துள்ளன. இவ்வசனங்களுடன் காரணங் கூறும் வாக்கியங்கள் எதுவும் காணப்படுவதில்லை. அது இறைவனின் கட்டளை. அதற்குக் காரணங்கூற வேண்டிய அவசியம் எதுவும் அவனுக்கில்லை. மற்றயது சமூக வாழ்க்கையுடன் தொடர்பான சட்டவரையறைகளைக் கொண்டமைந்துள்ளன. இவற்றிற்குப் பின்னணி, சந்தர்ப்பம் காரணங்கள் நிபந்தனைகள் ஆகியவற்றை விளக்க மேலும் வசனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். எனவே வியாக்கியானம் செய்வோர் இவை பற்றிக் கவனத்திற்கொள்ள வேண்டியது அவசியமாகும். இது தொடர்பான விதிகள் சமூகச் சூழ்நிலைகளிலும், பொதுமக்களின் நலனிலும், பழக்க வழக்கங்களிலும் தங்கியிருப்பதால் அவற்றில் மாற்றங்கள் ஏற்படும்போது அவ்விதிகளிலும் மாற்றங்கள் ஏற்படுவது உண்மையே.
விதிகளில் மாற்றம் செய்வது என்பது குர்ஆனிலுள்ள விடயங்களில் மாற்றம் செய்வதென அர்த்தம் அல்ல. ஏனெனில் புனித நூலிலுள்ள விடயங்களை, ஏதாவது நிபந்தனைகளின் கீழ் ஒப்பிடுவது எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாததாகும். விதிகளில் மாற்றம் செய்வது என்பது புனித நூல்களில் உள்ள விடயங்களுக்குக் கொடுக்கப்படும் பல்வேறு விளக்கங்களில் செய்யப்படும் மாற்றமேயாகும். அவ்வாறு மாற்றம் செய்வது பழக்க வழக்கங்களின் மாற்றங்களினாலோ அல்லது காரணங்களின் மாற்றத்தினாலோ அவசியமாகின்றது. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் சகல வாதங்களும் கூற்றுக்களும் தரமான ஆதாரங்களையும், பழமை வாய்ந்த வழமைகளையும், இஸ்லாமிய ஷரியாவை நன்கு கற்றறிந்த கல்விமான்களின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இக்கருத்துக்கள் யாவற்றினதும் சாராம்சம் உலகாயுத விடயங்களுடன் தொடர்பான பிரச்சினைகள் நியாயமான காரணங்களையும் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டவையாகும். அவையாவும் மக்களின் சந்தோஷத்தை முழுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் பழக்கவழக்கங்களினதும் நடைமுறை களினதும் தேவைகளை பூர்த்தி செய்வனவுமாகும். மனிதர்களின் இருப்புக்கும் இல்லாமைக்கும் ஏற்ப உலகாயுத விடயங்களும் எப்பொழுதும் மாற்றமடைந்து செல்கின்றன. பொது மக்களின் தேவைக்கேற்றவாறு இவை காலத்துடன் மாறுகின்றன.
44

எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், பாரம்பரியங்கள், மற்றும் விதிகள் ஒழுங்குகள் என்பவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைத் தொடருவதை விடவும் சம்பிரதாயங்களும் மரபுகளும் நன்மையளிக்கக் கூடியவை என எண்ணிக்கொண்டு அதன்பால் செல்வதை விடுத்தும், புத்திசாலித் தனத்துடனும் விழிப்புணர்வுடனும் இஸ்லாமிய சட்டங்களை குர்ஆனுடன் ஒப்பிட்டு முற்போக்காகச் சிந்திக்க முயல்வது அவசியமாகும். ஆனால் இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இஸ்லாம் என்ற மார்க்கமும் இஸ்லாமியக் கலாச்சாரமும் ஒன்றே என்ற பிழையான கருத்தைவிட்டும் விலகி சமயத்திற்கும் கலாச்சாரத்திற்குமுள்ள வேறுபாட்டை அறிவதுடன் கலாச்சாரம் எவ்வளவு தூரம் மனிதர்களால் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது என்பதை ஆராய்தல் வேண்டும்.
இதேவேளை முன்னெப்போதையும் விட இன்று குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு ஆகியவற்றில் புலமை பெறுவதன் மூலம் இஸ்லாம் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகியுள்ளது. அத்தோடு இன்று பெண்களின் உரிமைகளை அவர்களிடம் இருந்து பறிப்பதற்காகப் பழைமைவாத அதிகாரத்துவத்தினால் இஸ்லாம் பிழையாக பயன்படுத்தப்படுவது எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய சூழ்நிலைகளில் பெண்கள் தமது இஸ்லாமியப் பாரம்பரியத்தை அறியாதிருப்பது அவர்களுக்குப் பேரிழப்பாகவே அமையும்.
எனவே இஸ்லாத்தைப் பொறுத்த வரையிலும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் பெண்களுக்குச் சமத்துவமும் விடுதலையும் என்றோ கிடைத்துவிட்டன. அவை எழுதப்பட்டும் உள்ளன. எழுத்துருவில் விடுதலையடைந்துவிட்டால் மட்டும் போதாது. எண்ணத்தில் தளர்வு வேண்டும், ஆதிக்கத்தை விட்டும் அதிகாரப் பகிர்வு வேண்டும். அடுத்தவள் உரிமையை மதிப்பதாகயிருந்தால் அவள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதுவரையில்
"ஒடுக்கப்படும் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்”
45

Page 29
உசாத்துணை நூல்கள்
Engineer Asghar Ali (1992), The Rights of Women in Islam,
Sterling Publishers Private Limited, New Delhi
உகான் கமறுதீன் (1996), இஸ்லாத்தில் மகளிர் நிலை,
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, கொழும்பு
Engineer Asghar Ali(1999), Equity, Social Justice and Muslim Women,
Muslim Women's Research and Action Forum, Colombo.
Mernissi Fatima (1991) Can We Women Head a Muslim State,
SIMORGH, Pakistan.
46

பெரிய புராண வரலாற்று நவிற் சிக் காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை
வை . கா . சிவப்பிரகாசம்
சிமூகவியலாளர் எமில் டர்க்கீம் (Emile Durkheim) சமய வாழ்வு பற்றிய சிந்தனைகளைத் தொகுத்துக் கூறும்போது சமயம் என்னும் எண்ணக்கருவிற்குப் பின்வரும் வரைவிலக்கணத்தைத் தந்துள்ளார்.
"Religion is a set of beliefs and practices relative to sacred things." (The Elementary forms of religious life - 1915) ("சமயம் என்பது புனித விடயங்கள் தொடர்பான நம்பிக்கைகள்,
அனுட்டானங்கள் என்பவற்றின் ஒரு வரிசை/ தொடையாகும்)
இந்து மதம் என்பது ஒரு பாரிய பல்கோணி என்றார் சேர் மோனியர் வில்லியம்ஸ் (Sir Momer Williams) அவரின் கருத்து விளக்கத்தைக் குறிக்கும்
பின்வரும் உருவம் டர்க்கீமின் சிந்தனை விளக்கத்திற்கும் பொருந்தும்.
கோட்டுரு
i
cర
இக்கோட்டுரு இந்திய சமய ஒழுங்கமைப்புப் பற்றிய மேலைநாட்டார் கருத்துக்களைக் கட்புல வடிவிற் பொறித்துக் காட்டுகிறது.
47

Page 30
சமயம் பற்றிய இந்தியச் சிந்தனையாளர்களின் கருத்துக்கள்
மேலைநாட்டாரின் கருத்துக்களோடு முழுமையாக இணங்கி அமைவதில்லை.
உதாரணமாக, மகாத்மா காந்தி இந்துசமயம்பற்றிக் கூறிய விளக்கத்தை நோக்குவோம்.
'Hinduism is a living organism liable to growth and decay, and subject to the law of nature, one and indivisible at the root it has grown into a vast tree with innumerable branches."
(இந்து சமயம் என்பது வளர்ச்சியும் சிதைவும் நிகழக்கூடிய, இயற்கை விதியின் ஆட்சிக்கு உட்படக் கூடிய, ஒரு வாழும் உயிரியாகும். அது பிரிக்கமுடியாத, ஒரு தனியுறுப்பான வேரையும் எண்ணற்ற கிளைகளையும் கொண்டு, விரிந்து பரந்து வளர்ந்த மரம் எனத்தக்கது).
மகாத்மா காந்தியின் உருவக விளக்கம் இந்தியச் சமய ஒழுங்கமைப்பில் அழியத்தகாத கூறுகளும் அழியதக்க கூறுகளும் கலந்து காணப்படுகின்றன என்னும் பொதுவுண்மையைப் புலப்படுத்துகின்றது. அவற்றில் அழியத் தகாத கூறுகள் என்னும் பிரிவில் அன்பு, இரக்கம், நேர்மை, நன்மை போன்ற விழுமியங்கள் அடங்கும். இவ்விழுமியங்கள் தொடர்பாக எப்பொதேல்லாம் பாதகப் பாதிப்பு நிகழ்கின்றதோ அப்போதெல்லாம் வாழும் உயிரியான சமயத்தின் நிலைபேறு அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிடும். இரண்டாம் பிரிவான அழியத் தக்க கூறுகள் என்னும் தொகுதியில் இடம் பெறும் சடங்குகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், ஆசாரங்கள் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன ஆகும். இவை காலந்தோறும், நாடு தோறும், சமூகந்தோறும், சமூகப் பிரிவு தோறும் வேறுபடுவன. ஒரு காலத்தில்,ஒரு நாட்டில், ஒரு சமூகத்தில், ஒரு சமூகப்பிரிவில் பொருத்தமானதென ஏற்கப்பட்ட ஒரு வழக்கம் வேறொரு காலத்திலோ, நாட்டிலோ, சமூகத்திலோ, சமூகப்பிரிவிலோ ஏற்படாமல் பொதுவிளக்கத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்படலாம் அல்லது சட்டபூர்வமாக தடைசெய்யப்படலாம். உதாரணமாக உடன்கட்டை ஏறுதல் அல்லது விதவையை எரித்தல் என்ற வழக்கத்தைப் பரிசீலனைக்குத் எடுத்துக் கொள்ளுவோம்.
வடபாரதத்தில் ஒரு விதவையைக் கணவனின் சடலத்தோடு பிணைத்து ஈமத்தீயிற் கொளுத்தும் வழக்கம் நெடுங்காலம் நிலவியது. சல்டியர்கள் (CHALDEANS), கெல்ட் மக்கள் பிரிவினர் (KELTS), கோல் இனத்தினர் (GAULS), கொத் மக்கள் குழுவினர் (GOTHS)ஆகியோர் கடைப்பிடித்த இவ்வழக்கம் முதலில் வடபாரதத்தினுள் புகுந்து பல பகுதிகளிலும் பரவியது.
48

பின்னர் அது ஸ்மிருதி காலத்தில் ஓங்கிவளர்ந்து பல நூற்றாண்டு காலம் நீடித்தது. இறுதியில் அது LORDBENTICKSEDICT பென்டிக்ஸ் எடிக்ட் பிரபுவின் ஆணை (1829) மூலம் தடை செய்யப்பட்டது. இக் கொடூர வழக்கம் சமயத்தின் அங்கீகாரம் பெற்றமை பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றிற் கூறப்பட்ட பின்வரும் கருத்தின் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
"Those who do not bind her (The Widow) and throw
her into the fire and kill her would get the sin of
prostituting their own wives" (Thomas, 1964). (அவளை (விதவையை)ப் பிணைத்து விட்டு, தீயினுள் வீசிக்கொல்லாதவர்கள் தமது சொந்த மனைவியரை விலைமாதராக்கும் பாவப்பயனை அடைவர்)
வடபாரதத்தில் சதி (SAT) எனப்பெயரிடப்பட்ட இந்த வழக்கத்தில் ஒரு பெண் திருமணத்தின் பின்,
1. கணவனின் தனிச்சொத்து ஆவாள். 2. கணவன் இறந்ததும் மறுமணம் செய்யும் உரிமையற்றவள். 3. விதவையானாற் பொதுச்சொத்தாகும் தீயொழுக்கத்தில் ஈடுபடும் சாத்தியம்
தடுக்கப்பட வேண்டும். 4. முற்குறிப்பிட்ட பொதுச்சொத்தாகும் நிலையைத் தடுக்கத் தீயிலிட்டுக்
கொல்லப்பட வேண்டும். 5. விதவையானால் அவளை இல்லறத்தினர் தீ மூட்டிக் கொல்லுதல் ஒரு
புண்ணியச் செயல். என்னும் அக்காலக் கருத்துக்கள் அடங்கியுள்ளன.
ஆயின் தென் பாரதத்தில் உடன் கட்டையேறல் என்னும் வழக்கம் வடபாரத நடைமுறையின் வேறுபட்ட வழிகளில் பின்பற்றப்பட்டது. பரத்தெமை சகித்துக் கொள்ளப்பட்ட சங்க காலத்தில் (கி. மு. 500 - கி. பி. 300) ஒரு பெண் திருமணத்தின் பின், விதவையானால், 1. மறுமணம் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கவில்லை. 2. உடன்கட்டையேறலுக்குப் பதிலாகக் கைம்மை நோன்பைத் தெரிவு செய்யும்
உரிமையைப் பெற்றிருந்தாள். 3. அரசமாதேவி என்ற வகையில் அவளுக்குள்ள பொறுப்புக்களைக் கருத்தில் கொண்டு சான்றோர் அவ்வழக்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யும் உரிமையைப் பெற்றிருந்தனர். 4. முற்குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் மதிப்பிழப்பு நிலையைத் தவிர்ப்பதற்காகத்
தானாகவே உடன்கட்டை ஏறும் விருப்புரிமையைப் பெற்றிருந்தாள்.
49

Page 31
“பல்சான்றிரே பல்சான்றீரே.” எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் மேலே கூறிய கருத்துக் கூறுகளுக்குச் சான்றாகும். ஆனால், சங்க காலப் பாண்டிமாதேவியின் கொள்கைக்கும் மனப்பான்மைக்கும் முரணான வகையிற் பிற்காலச் சோழர் காலத்தில் வாழ்ந்த சோழமாதேவியர் சிலரின் அணுகுமுறை காணப்பட்டது. இதற்குச் சான்றாகக் கண்டராதித்த சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி (கி. பி. 949 - 1014) விதவையானதும் சோழப் பேரரசின் எழுச்சிக்குத் தன்னை அர்ப்பணிப்பதற்காகவும் சைவப்பணி புரிவதற்காகவும் உடன் கட்டை ஏறுதலைத் தவிர்த்தமையைக் குறிப்பிடலாம்.
முற்கால இந்திய விதவைகளின் நிலமைகள் பற்றிய இச்சுருக்க விமர்சனம் பெண்களின் சமூக மதிப்பு நிலையைக் கட்டுப்படுத்துவதிலும் வழிப்படுத்துவதிலும் சமயங்கள் செலுத்திய செல்வாக்கின் ஒரு சிறு பகுதியையே அம்பலப் படுத்தியுள்ளது. அத்தகைய சமயச் செல்வாக்கின் பரிமாணங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளத் துணைபுரியும் கருவிகளிலே சமய இலக்கியங்கள் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கவையாகும்.
சைவத்திற் பெண்கள் - தகவல் மூலமாகப் பெரிய புராணம்
அறுவகை அகச் சமயங்களில் அடங்கும் இரு பெருஞ் சமயங்களில் ஒன்று சைவம். அதனைப் பின்பற்றிய பெண்களின் சமூக மதிப்பு நிலையை விளங்கிக் கொள்ள உதவும் முக்கிய சைவப் பனுவல்களில் ஒன்று பெரிய புராணம் / திருத்தொண்டர் புராணம் ஆகும். அதன் ஆசிரியர் இராம தேவர் என்னும் இயற்பெயரையும், அருண்மொழித்தேவர், சேக்கிழார் என்னும் சிறப்புப் பெயர்களையும் பெற்ற இலட்சியவாதி; குலோத்துங்கன் 11 (கி. பி. 1133-1150) இன் முதலமைச்சர். அவர் 63 தனியடியார்கள், 9 தொகை யடியார்கள் ஆகியோரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் ஏறத்தாழ 4250 பாடல்களில் நவின்றுள்ளார். இவ்விருவகை அடியார்களில் தனியடியார்கள் என்ற வகையைச் சேர்ந்த காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகியவர்களின் வரலாறுகள் சுமார் 80 பாடல்களிற் கூறப்பட்டுள்ளன. திலகவதியார், சங்கிலியார் முதலிய ஏனைய பெண்கள் பற்றிய வாழ்க்கைத் தகவல்கள் ஏனைய பாடல்களில் இலைமறைகாயென ஆங்காங்கு காணப்படுகின்றன. அவர்கள் குறிக்கோள், கொள்கை, தொழில், சமூக வகுப்பு, பொருளாதாரநிலை என்பவற்றில் வேறுபட்டவர்கள். அவர்களின் வாழ்க்கைக் கால வரையறைகள் கி. பி. 500 - 900 என்னும் வரலாற்றுக் கால வீச்சினுள்
50

அடங்கும். இலட்சியவாதியான சேக்கிழார் அனைத்து அடியார்களையும் இலட்சிய மாந்தர்களாகவே படைத்துள்ள மையால் சைவத்திற் பெண்ணிலை பற்றிய தகவல் மூலமாகப் பெரியபுராணத்தைப் பரிசீலிப்பதில் மிகவும் விழிப்பாகக் கருத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.
சைவத்திற் பெண்கள் - பெரிய புராண மூலங்கள்
பெரியபுராணத் தகவல்களுக்கும், அப்பனுவலின் மூலமான திருத்தொண்டர் திருவந்தாதியின் தகவல்களுக்கும் இடையே சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவ்வாறே ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் இயற்றப்பட்ட சிவபக்தசரிதமு, பசவபுராணம், வாசனாஸ், ரகளேகவிதை என்னும் நூல்கள் திருத்தொண்டர் சிலர் பற்றிக் கூறும் தகவல்களுக்கும், பெரிய புராணத்தகவல்களுக்கும் இடையே சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. மேலும் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சிவாலயச் சுவர்ச் சித்திரங்கள், தாராசுரம் (இராஜராஜேஸ்வரம்) சிவாலயத்திலுள்ள பெரிய புராணச் சிற்பங்கள் வடகனரா பனவாசிக் கோயிலில் வீரசைவர் சமணர் போராட்டம் தொடர்பாகச் செதுக்கப்பட்ட படைப்புச் சிற்பங்கள் என்பன சேக்கிழாரின் தகவல்கள் சிலவற்றோடு மாறுபடுகின்றன. தமிழகக் கடலெல்லைக்கு அப்பால் கம்போடியாவிலே நாம் பென் (PHENONPEN) அருங் காட்சியகத்தில் பேணப்பட்டுள்ள காரைக்காலம்மையாரின் பேய் வடிவங்கள், நடராஜ வடிவங்கள் என்பன புலப்படுத்தும் தகவல்கள் பெரிய புராணங் கூறும் காரைக்காலம்மையாரின் வரலாற்றுத் தகவல்களோடு மாறுபடுகின்றன. அத்தகைய வேறுபாடுகளிலே பெண்ணிலை தொடர்பான ஒன்றை மட்டும் சுருக்கமாக நோக்குவோம். சங்கிலியார் தம் பெற்றார் நிச்சயித்த ஆடவனைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு திருவொற்றியூரில் உள்ள கன்னிமாடத்தில் வசித்ததாகச் சேக்கிழார் விபரித்துள்ளார். ஆனால் சங்கிலியாரை மணமுடிக்க விரும்பியவன் இறந்துவிட்டமையால் அவர் அக்கன்னி மாடத்தில் வசித்ததாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறும் தகவல் சிந்தனையைத் தூண்டுகின்றது. இவ்வேறுபாட்டின் காரணம் திலகவதியார் வரலாற்றை நம்பியாண்டார் நம்பி நினைவிற் கொண்டமையே என்பர் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தர். ஆய்வுத் தொடர்புடைய இத்தகைய தகவல் வேறுபாடுகள் பின்னர் பொருத்தமான சந்தர்ப்பங்களில் விமர்சனம்
செய்யப்படும்.?
5

Page 32
சமூக மதிப்பு நிலையின் வரைவிலக்கணம்
சைவத்திற் பெண்களின் மதிப்புநிலை என்னும் கருப்பொருளைப் பெரிய புராணத் தகவல்களின் அடிப்படையில் ஆராய்ந்து விமர்சிப்பதன் முன்னர் அந்தஸ்து அல்லது மதிப்புநிலை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளல் அவசியம். ஒருவருக்கு உரியவை என வகுக்கப்பட்ட உரிமைகள் கடப்பாடுகள் என்னும் தீர்மானக் காரணிகளின் மூலம் சமூகக் கட்டமைப்பில் தனியாள் ஒருவர் அடையும் நிலையே அந்தஸ்து என்பது° லின்டனின் (LINTON) வரையறை ஆகும். சைவப் பெண்களைப் பொறுத்தவரையில் இவ்வரையறையில் குறிப்பிடப்படும் கடப்பாடுகள் அல்லது தவிர்க்க முடியாக் கடமைகள் பல்வேறு காலங்களில், பல்வேறு வடிவங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளோ, சிறப்புரிமைகளோ எப்போதும் வழங்கப்பட்டுள்ளன என உறுதியாகக் கூறமுடியாது. அவர்கள் அடிமைகளாகவும் அசையும் சொத்துக்களாகவும் கணிக்கப்படும் நிலையே நெடுங்காலம் காணப்பட்டது. இன்று பெண்களின் விழிப்புணர்வு காரணமாக அவர்களின் உரிமைகளுக்குச் சட்டபூர்வ உத்தரவாதங்களும் அரசியல் யாப்பு வழங்கும் உத்தரவாதங்களும் காப்பரணாக விளங்குகின்றன. ஆயின் மனுநீதி, சைவநீதி என்பன பற்றிச் சமய நூல்கள் கூறும் கருத்துக்களில் ஆண்களின் உரிமைகள் பேணப்பட்டது போலப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை. எனினும் வன் செயலாளரின் கொடூரத்திற்கும் பிற செயல்களுக்கும் இலக்காகும் சந்தர்பங்களில் முற்காலச் சைவப் பெண்மணிகள் சிலர் தமது கருத்துச் சுதந்திரத்தையும் எதிர்புணர்வையும் வெளிப்படுத்திய தீரத்தைப் பெரியபுராணத் தகவல்கள் சில உறுதிப்படுத்துகின்றன. பெண்ணிலை வாதச் சிந்தனைகளின் ஊற்றுக்கண்களாக அவர்கள் கருதத்தக்கவர்கள் என்பது தெளிவு.
பெண்களின் மதிப்பு நிலை - ஆய்வடிப்படை
ஒரு பெண்ணுக்கு உரியவை எனத் தீர்மானிக்கப்படும் உரிமைகள் கட்டுப்பாடுகள் என்பவற்றோடு தொடர்புடைய பாத்திரங்கள் (ROLES}(1) மனைவி (2) தாய் (3) தொழில்புரிபெண் என்னும் நிலைகள் ஆகும். இவை இன்றைய பெண்களின் மதிப்புநிலை பற்றிய ஆய்வுக்குப் பொருத்தமானவை. ஆனால் அவற்றை முற்காலப் பெண்களின் மதிப்புநிலை தொடர்பான ஆய்வடிப் படையாகக் கொள்வதில் சில இடர் பாடுகள் உள்ளன. தொழில்புரி பெண் என்னும் போது ஒரு பணியை / வேலையை வாழ்க்கைத் தொழிலாக விரும்பி ஏற்று அதற்குத் தன்னை அர்ப்பணிக்கும் பெண் என்ற கருத்து உள்ளார்ந்து காணப்படுகின்றது. சோழமாதேவி ஆகிய கண்டராதித்தன் மனைவி (செம்பியன்
52

மாதேவி), இராணி மங்கம்மாள் போன்ற சிலரைப் பொறுத்தவரையில் முற்குறிப்பிட்ட "உள்ளார்ந்த கருத்து’ ஓரளவுக்குப் பொருந்தலாம். மேலும் உழைக்கும் பெண் அல்லது தொழில்புரியும் பெண் என்றும் நவீன பாத்திர பகுதியில் அடங்காமல் 'கன்னி நிலை வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட பெண்களும் பழைய காலத்தில் வசித்துள்ளனர்.
எனவே சைவப் பெண்களின் மதிப்பு நிலை தொடர்பான ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் பொருத்தமான வேறு அடிப்படையைத் தெரிதல் அவசியமாகும். பெரிய புராண மகளிர் வரலாற்றிலே (அ) கன்னி நிலை, (ஆ) மனைவி நிலை, (இ)அன்னை நிலை; (ஈ) விதவை நிலை என்னும் வாழ்க்கை நிலைகள் தொடர்பான தகவல்கள் ஆங்காங்கு விரவியுள்ளன. ஆகவே சைவப் பெண்களின் மதிப்பு நிலை பற்றிய ஆய்வின் அடிப்படையாகக் குறிப்பிட்ட வாழ்க்கை நிலைகள் நான்கையும் ஏற்றுக் கொள்ளுதல் விமர்சன மதிப்பீட்டுக்குத் துணைபுரியும்.
(அ) பெரிய புராணக் கன்னியர்
சடங்கவி சிவாச்சாரியார் மகள் (கி. பி. 8, 9ஆம் நூற்றாண்டு)
பெரிய புராணக் கன்னியர் என்ற பிரிவினரில் முதலில் நமது மனக்கண்முன் தோன்றுபவர் வேதாங்கக் கல்வியிற் சிறந்து விளங்கிய பிராமணரான சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் ஆவார். இப்போது இயற்பெயர் தெரியாத இக்கன்னி சுந்தரரைத் திருமணம் புரிய நிச்சயதார்த்தம் செய்யப்பட்டவர். அக்கால வழக்கத்திற்கு இணங்க அவர்களின் மணச்சடங்கு
நிறைவேற வேண்டிய சந்தர்ப்பத்திற் கிழப்பிராமணர் வடிவத்தில் வந்த சிவபிரான் அங்கே ஒரு குழப்பத்தை உருவாக்கிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டார் என்பதைப் பலர் அறிவர். ஆயின் அக் குழப்பத்துக்கிரையான அப்பேதையின் கதி என்ன என்பதை எவரும் நுணுக்கமாகப் பரிசீலித்ததாகத் தெரியவில்லை. 'சடங்கவி பேதை'சிவ சிந்தனையோடு கன்னியாகவே வாழ்ந்து உயிர்நீத்தார் என்ற தகவல் மட்டும் பெரிய புராணம் மூலம் கிடைத்துள்ளது. (அவளின் எதிர்காலம் பற்றிச் சுந்தரர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.) புகழ் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கன்னிக்கும் புகழ்மிக்க மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடவனுக்கும் உறவுப் பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு மணச் சடங்கு நிறைவேறாத அவலநிலை தோன்றினால் ஆணுக்கு வேறு பெண்ணைத் திருமணம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனால் அக்கன்னிக்கு வேறு ஆடவனைத் திருமணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தல் அரிது. இத்தகைய வாய்ப்புக் குறைவு காரணமாக மனமுறிவு அல்லது விரக்தி அடைந்த பெண் எந்த
53

Page 33
ஆடவனின் பந்தமும் வேண்டாம் என்ற மனத்திட்பத்தோடு தன் வாழ்க்கையைக் கழிக்கத் தீர்மானிக்கலாம். சடங்கவிபேதை செய்த தீர்மானத்தின் உண்மைக் காரணம் உறுதியாகத் தெரியவில்லை.
A.
பூம்பாவை (பூப்போன்ற அழகிய பெண்) - கி. பி. 7ஆம் நூற்றாண்டு
பூம்பாவை திருமயிலையில் வாழ்ந்த சிவநேசர் என்னும் வணிக குலச் சிவனடியாரின் பெண். அப்பெண் கன்னி நிலையில் இறந்ததும் அவளின் ஈமச்சடங்கு முடிந்ததும் பூத உடலின் எச்சங்களான எலும்பையும் சாம்பலையும் சிவநேசர் ஒரு தாழியில் திரட்டி வைத்திருந்தார் சம்பந்தர் தொண்டைநாட்டுத் தல யாத்திரையை மேற்கொண்டு மயிலாப்பூர் சென்ற போது “மட்டிட்ட புன்னை” என்னும் பதிகத்தைப் பாடிப் பூம்பாவை மீண்டும் பெண் வடிவம் பெற்றுத் துணைபுரிந்தார் இதனை அடுத்து சிவநேசர் பூம்பாவையை ஏற்று வாழ்வழிக்கும்படி சம்பந்தரை வேண்டியதும் அவர் அக்கன்னியை மகளாகக் கருத்திற் கொண்டு திருமண வேண்டுகோளை ஏற்க மறுத்தார். இவை பூம்பாவை பற்றிய பெரிய புராணத் தகவல்கள் ஆகும்.
இத்தகவல்களைப் பரிசீலித்தால் சில கருத்துக்கள் அல்லது சிந்தனைகள் பற்றிய தெளிவு பிறக்கும். ஒரு பெண் கன்னியாகவே இறந்தால் அவளின் ஈமச்சடங்குகளைத் தொடங்குவதன் முன்னர் கன்னித்தன்மையை நீக்க யாராவது ஒருவன் உயிர் நீத்த கன்னியின் பிணத்தைத் தழுவியதும் அச்சடங்குக் கிரியைகளை நிறைவேற்றும் வழக்கம் திருவள்ளுவர் காலத்தில் இருந்தது.
"பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇ யற்று’ திருக்குறள் - 913
என்னும் குறளில் 'இருட்டறையில் ஏதில் பிணம் தழுவுதல்” பற்றி வள்ளுவர் கூறிய கருத்து அவர் காலச் சமூகம் ஒன்றில் அபூர்வமாகப் பின்பற்றப்பட்ட வழக்கத்தைக் குறிப்பதாக ஒருசார் ஆய்வாளர் விமர்சனம் செய்துள்ளார்."
திருவள்ளுவர் காலத்தில் வழங்கிய இவ்வழக்கம் 'புத்' என்னும் நரகத்திற்குக் கன்னிப் பெண் செல்லுதலைத் தடுக்கத் தோன்றியதாக விளக்கலாம். புத்திரன் இல்லாதவள் புத் என்ற நரகத்தில் அழுந்துவாள் என்னும் சமய நம்பிக்கையே அவ்வழக்கத்தின் அடித்தளம் எனலாம்.
54

வள்ளுவர் கால நம்பிக்கையும் வழக்கமும் சம்பந்தர் காலத்தில் இருந்தனவா, மறைந்தனவா என்பது இப்போது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் பூம்பாவை நரகத்திற்குப் பதிலாக நற்கதி அடைந்தாள் என்பது பெரியபுராண வரலாற்று நவிற்சி மூலம் தெளிவாகின்றது.
அடுத்து வணிகரான சிவநேசர் பூம்பாவையை ஏற்குமாறு பிராமணரான சம்பந்தரை வேண்டிக் கொண்டது ஏன்? என்ற வினாவுக்கு விடை காண முயல்வோம். சம்பந்தர் வைதிகக்கட்டுப்பாடுகளை அனுசரித்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆயினும் அவர் காலத்தின் தேவை கருதி சில கட்டுப்பாடுகளைப் புறக்கணிக்கும் துணிவும் சிந்தனைக் கூர்மையும் உள்ளவர்; வேளாளரான நாவுக்கரசரைத் தந்தை போன்றவர் என மதிக்கும் பண்பும் பணிந்து பரவும் பக்குவமும் வாய்ந்தவர். பாணர் வகுப்பைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிராமணர் வீட்டில் வரவேற்பும் மரியாதையும் பெற உதவியவர்; அப்பாணர் மனைவியான மதங்கசூளாமணி தமது யாத்திரைக் குழுவில் நிரந்தர இடம் பெறும் ஒரேயொரு பெண்மணி என்ற பெருமையை அளித்தவர். இத்தகைய சிறப்புக்கள் மிக்க சம்பந்தர் கலப்புத் திருமணத்துக்கு இணங்குவார் எனச் சிவநேசர் கருதியதில் வியப்பில்லை. ஆயின் அக்காலச் சம்பிரதாய விரோதமாக அவர் தமது வேண்டுகோளை நேரில் சம்பந்தரிடம் விடுத்ததே தவறு. சம்பந்தர் மண்ணுலக இல்வாழ்வில் நாட்டம் இல்லாதவர். பெற்றோரைப் புறக்கணிக்க விரும்பாதவர். எனவே அவர் சிவநேசரின் அபிமானத்தை மதித்தல், பூம்பாவையின் மனவருத்தத்தைத் தவிர்த்தல் என்னும் சிந்தனைக் கூறுகளை இணைக்கும் சாதுரியம் வெளிப்பட பூம்பாவை தம் மகள் போன்றவள் எனக் கூறி இருவர் மனங்களையும் குளிர்வித்தார். எனவே எத்தனையோ பெண்களின் மதிப்புக்கு எத்தகைய இடரும் இழைக்காத சம்பந்தர் தமிழகத்திலும் கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிறமொழி வழங்கும் நிலப்பகுதிகளிலும் உயர் கணிப்புப் பெற்றமை வியப்பைத் தரவில்லை.
சிங்கடியும் வனப்பகையும் (கி. பி. 8, 9 ஆம் நூற்றாண்டு)
சிங்கடி, வனப்பகை என்பவர்கள் வேளாளரும் படைத் தலைவரும் ஆகிய கோட்புலியாரின் பெண் பிள்ளைகள். அவர்கள் இரட்டைப் பிள்ளைகளாக ஓரிரண்டு அகவை வேறுபாடு உள்ளவர்களா என்பது இப்போது தெரியவில்லை. கோட்புலியார் சுந்தரரை நாட்டியத்தான் குடியிலுள்ள தமது இல்லத்திற்கு அழைத்து விருந்துபசாரம் செய்தபின் சிங்கடி, வனப்பகை ஆகிய இருவரையும் ஏற்று வாழ்வளிக்குமாறு வேண்டினார். கோட்புலியாரின் வேண்கோளை ஏற்க விரும்பாத சுந்தரர் அவர்களைத் தமது பிள்ளைகளாகக் கருதுவதாகக் கூறினார். அதன்
55

Page 34
காரணமாகச் சுந்தரர் சிங்கடியப்பன், வனப்பகையப்பன் என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றார். இவை பெரிய புராணத் தகவல்கள் ஆகும். இத்தகவல்கள் நுணுக்கமாகப் பரிசீலிக்கத்தக்கன ஆகும். முதலில் கோட்புலியாரின் வேண்டுகோளைப் பரிசீலிப்போம். கோட்புலியாரின் வேண்டுகோளின் அடிப்படை அவர் சுந்தரர் பற்றி அறிந்த தகவல்களின் விளைவாக ஏற்பட்ட மனப்பாங்கு ஆகும். சுந்தரர் பிராமணரில் ஒரு வகையினரான ஆதிசைவர் குடும்பத்திற் பிறந்தவர். ஆயினும் அவர் ஆதிசைவர் பாரம்பரியத்தைப் பின்பற்றாத அரச குடும்ப பாரம்பரியத்தில் வாழ்ந்தவர். கிழப் பிராமணரின் தடைக் குழப்பத்திற்கு இரையாகிப் பெற்றோருக்கும் சடங்கவி பேதைக்கும் பாதிப்பு ஏற்படுத்தியவர். மேலும் பெற்றோரின் ஆதரவில்லாத நிலையில் மணச்சடங்கு நிகழாத புதுவழியில் தானாகவே பரவையாரை மனைவியாக ஏற்றவர். கலப்புத் திருமணம் புரிந்தவர். பலரும் அறிந்த இத்தகவல்களைக் கோட்புலியாரும் அறிந்திருப்பார். எனவே உருத்திர கணிகை என்ற பரத்தை ஒருத்தியை அதாவது பரவையாரை ஏற்கத் தயங்காதவர். தமது புதல்வியரையும் இரண்டாம் மூன்றாம் மனைவியராக ஏற்கத் தயங்கமாட்டார் என்னும் மனப்பாங்கு கோட்புலியாரிடம் உருவாகியிருக்கலாம். மேலும் அரசியற் காரணங்களுக்காக இரு மனைவிகளையோ மூன்று மனைவிகளையோ வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் அரச பாரம்பரியத்தில் வளர்ந்த சுந்தரர் மூன்று பெண்களோடு குடும்ப வாழ்வு நடத்த எதிர்ப்பு இருக்காது எனக் கோட்புலியார் நம்பிக்கை கொண்டிருக்கலாம். எனவே கோட்புலியாரின் கணிப்பு யதார்த்த நோக்கில் நிகழ்ந்தது என ஊகிக்கலாம்.
சுந்தரரைப் பொறுத்தவரையில் முதலாவது மணமங்கலம் தடை செய்யப்பட்டது போல மீண்டும் ஒரு குழப்பத்தடை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் உறைந்திருக்கலாம். எனவே பூம்பாவைக்கு உயிர் வாழ்வு அளித்த சம்பந்தர் அவளைத் தம் மகள் என்று கூறிய பாவனைக்கு வழங்கும் கணிப்புக்கு நிகராகச் சுந்தரர் சிங்கடி வனப்பகை ஆகியோரைப் புதல்வியர் என்று கூறிய பானைக்கு மனநிறைவோடு கணிப்பு வழங்க இயலாது. மேலும் சிங்கடி, வனப்பகை ஆகியோரைப் புதல்வியர் என்று கூறிய பாவனைக்கு மன நிறைவோடு கணிப்பு வழங்க இயலாது. மேலும் சிங்கடி, வனப்பகை ஆகியோரின் உள்ளக்கிடைக்கையும் பரிசீலித்தற்கு உரியது.
பலதாரமணம் என்னும் வழக்கம் எப்போதும் பெண்களுக்குப் பல பிரச்சினைகளையே ஏற்படுத்தியுள்ளது. அரச குடும்பப் பெண்களைப் பொறுத்தவரையில் பட்டத்து ராணியார், ஆட்சிப் பொறுப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற போட்டிகள், பொறாமை, பூசல், போர் என்னும் பாதக விளைவுகளை
56

ஏற்படுத்தியமை இராமாயணம், மகாபாரதகாலம் தொடக்கம் நிகழ்ந்த வரலாற்றுண்மையாகும். ஏனைய குடும்பப் பெண்கள் பலதார மணம் என்னும் வழக்கத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதில்லை. விதிவிலக்காகக் கூறக் கூடிய உதாரணங்களில் சுந்தரர் ஒருவர் ஆவார். உருத்திர கணிகை என்ற பரத்தையாகிய பரவையாரோடு ஒரே வீட்டிலோ மூவரும், தனித்தனி வீடுகளிலோ வாழச் சிங்கடியும் வனப்பகையும் விரும்பியிருப்பர் அல்லது சம்மதம் தெரிவித்திருப்பர் என்பது பொருத்தமற்ற வாதமாகும். மேலும் சுந்தரர் பரவையாரை அடியோடு மறந்துவிட்டு சிங்கடி, வனப்பகை ஆகிய இருவரையும் ஏற்றுவாழச் சத்தியம் செய்தாலும் உடன் பிறப்புக்களான இருவரிடமும் சந்தேகம் புகுந்து புகைச்சலையும் பகைப்பையும் வளர்த்திருக்கும். அக்காவும் தங்கையும் ஒருவனையே திருமணம் செய்யும் நிலமை மூத்தவளின் இறப்பின் பின்னரே நிகழுதல் வழக்கம் (Lewirate, Marriage) சிங்கடி, வனப்பகை ஆகியோரைப் பொறுத்த வரையில் மூத்தாள் மறைவை அடுத்து இளையாளை மணம்புரிதல்’ என்ற அளவுகோல் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் துணைபுரியாது. எனவே கோட்புலியார் தம் புதல்வியர்களின் உள்ளக்கிடக்கைகளைக் கவனத்திற் கொள்ளாமல் ஒருதலைப்பட்சத் தீர்மானத்தின் அடிப்படையில் தமது விருப்பத்தை வேண்டுகோளாகச் சமர்ப்பித்தார் எனக் கணித்தல் தகுதியாகும்.
மேலும் சுந்தரர் சிங்கடி, வனப்பகை ஆகியோர் தம்புதல்வியர் போன்றவர்கள் எனச் சாமர்த்தியமாகக் கூறிய விடை கோட்புலியாருக்கு மனக் குளிர்ச்சிக்குப் பதிலாக ஏமாற்றத்தையும் சிங்கடி, வனப்பகை ஆகியோருக்கு உவகைக்குப் பதிலாக ஆறுதலையும் அளித்திருக்கும் எனக்கருதலே பொருத்தமாகும்.
கமலினியும் அநிந்திதையும்
ஆரூரர் ஆகிய சுந்தரர் திருக்கயிலையிலே முற்பிறப்பில் ஆலாலசுந்தரர் என்னும் பெயரில் சிவபிரானின் ஓர் அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர். அப்போது அவர் உமையம்மையின் சேடியரான கமலினி, அநிந்திதை என்னும் கன்னியர் இருவர் கயிலை நந்தவனத்தில் பூக்கொய்யச் சென்ற வேளையில் அவர்கள் மீது கண்டதும் காதல்' கொண்டார். அவர்களும் ஆலாலசுந்தரர்பால் மையல் கொண்டனர். அவர்களின் நிலைகளை அறிந்து கொண்ட சிவபிரான் மண்ணுலகில் பிறந்து இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் கயிலை வருமாறு கூறினார். அச்சந்தர்ப்பத்திற் கலக்கமுற்ற ஆலாலசுந்தரருக்குச் சிவபிரான் தமது அணுக்கத் தொண்டர் மண்ணுலகில் வாழும் காலத்தில் அருளுதவி புரிவதாகக்
57

Page 35
கூறினார். இவை கமலினி, அநிந்திதை ஆகியவர்களுக்கும் ஆலாலசுந்தரருக்கும் இடையே கயிலையிற் காதல் பிறந்த கதை பற்றிய சுருக்கமான வரலாற்று நவிற்சியாகும். இவ்வரலாற்று நவிற்சி பெண்கள் நிலை பற்றி உணர்த்தும் கருத்துக் சுடறுகளை இனி விமர்சிப்போம்.
ஒரே இடத்தில் பணி புரியும் ஒரு பிரமச்சாரியும் ஒரு கன்னியும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்வது எந்த நாட்டிலும், எந்தச் சமூகத்திலும், எந்தக் காலத்திலும் நிகழ்ந்த, நிகழ்கின்ற, நிகழக்கூடிய ஒர் உணர்வு வெளிப்பாடாகும். இத்தகைய உணர்வு வெளிப்பாடு தடைகள் இல்லாமல் திருமணமாக முடிதல் அபூர்வம். பல சந்தர்பங்களில் தடைகள் காரணமாகத் திருமணம் நிறைவேறாமற் போக, அவர்களில் ஒருவரோ, இருவருமோ பாதக விளைவுகளை அனுபவிப்பது இன்றுமுள்ள வழக்கம் அல்லது யதார்த்தம்,
ஆலாலசுந்தரரைப் பொறுத்தவரையில் அவர் கண்டதும் கொண்ட காதலில் ஒரு பிரச்சினை அல்லது சிக்கல் உள்ளது. அவர் கமலினி, அநிந்திதை ஆகிய இருவரையுமே காதலித்தார். அவர்களும் அவரைக் காதலித்தனர். ஆனால் இக்காதல் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திடீரெனப் பிறந்த தென்றோ கமலினி மீது ஆலாலசுந்தரர் கொண்ட காதலை அநிந்திதை அறிந்திருந்தாள் என்றோ, அநிந்தைதி மீது ஆலாலசுந்தரர் பூண்ட காதலைக் கமலினி அறிந்திருந்தாள் என்றோ துல்லியமாக முடிவு செய்யப் பெரியபுராணம் உதவவில்லை. ஓர் இடத்தில் பணிபுரிகின்ற இளைஞர் அங்கே பணிபுரிகின்ற கன்னியர் இருவர் மீது வெறுங் கவர்ச்சி காரணமாகக் கொண்ட மையல் அம்பலமாகிவிட்டால் அக்கன்னியரில் ஒருத்தியோ இருவரும் இணைந்தோ தம்மீது மையல் கொண்ட இளைஞனுக்கு "ஒரு பாடம் படிப்பித்திருப்பர்” அல்லது “அதிர்ச்சி வைத்தியம் அளித்திருப்பர்.” எனவே ஆலாலசுந்தரரின் கலக்கத்திற்கு இவ்விளைவு பற்றிய அச்சம் காரணமாகலாம். புகழ்மிக்க பணியகம் ஒன்றில் செளகரியமாக வேலை செய்யும் ஓர் இளைஞன் அல்லது பிரமச்சாரி ஒரு கன்னி இரு கன்னியர் மீது கொண்ட வெறுங் கவர்ச்சி காரணமாக வேலைநீக்கம் அல்லது இடைநிறுத்தம் என்னும் விளைவுக்கு இலக்கானால் மீண்டும் அத்தகைய வேலை கிடைக்குமா என்னும் தொழிற் கவலையினால் கலக்கம் அடைதல் மற்றொரு யதார்த்தம். சுந்தரரைப் பொறுத்த வரையிற் சிவபிரான் வழங்கிய மண்ணுலக வாழ்வு என்னும் தண்டனை ஒரு நிரந்தர வேலை நீக்கம் என்றோ இடைநிறுத்தம் என்றோ தீர்மானமாகத் தெரியவில்லை. இது அவரின் கலக்கத்தின் மற்றொரு காரணம். எனவே மண்ணுலகிற் பிறந்து இன்பத்தை அனுபவித்துவிட்டு மீண்டும் கயிலை வருமாறு சிவபிரான் கூறியது சுந்தரரைப் பொறுத்த வரையில் ஆறுதலையே
58

அளித்தது. ஆனால் சிவபிரானின் நோக்கில் பொருள் விளக்கம் கூறுவதாயின், "இரு கன்னிகள் மீது மையல் கொண்ட ஆலாலசுந்தரரும் அவரின் கவர்ச்சிக்கு இடமளித்த கமலினியும் அநிந்திதையும் பட்டுத் திருந்தட்டும்’ என்ற எண்ணமே உட்கிடை எனலாம். சுருங்கக் கூறின் கமலினி, அநிந்திதை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நவிற்சி புலப்படுத்தும் உண்மை.
"கவர்ச்சிமையல் கொள்ளும் ஆடவனின் காமத்திற்கு இலக்காகும் பெண்கள் தமது மதிப்பைக் காக்க அத்தகைய ஆடவனின் உணர்வு வெளிப்பாட்டின் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுதல் பொருத்தமாகும்.
சேக்கிழார் நவிலும் சங்கிலியார்
கயிலை வாழ்வில் அநிந்திதை (பழிப்பு நிந்தனையற்றவள் அல்லது அப்பழுக்கு இல்லாதவள்) என்னும் பெயர் பெற்ற சேடிப்பெண் மண்ணுலகில் தொண்டை நாட்டு வேளாளரின் மகளாகப் பிறந்தார். மண்ணுல வாழ்வில் அவரின் பெயர் சங்கிலியார் (சங்கிலி என்னும் ஆபரணம் போன்ற வனப்புள்ள பெண்) என வழங்கியதும் சங்கிலியார் மணப்பருவம் அடைந்ததும் அவரின் வனப்பை அறிந்த ஆடவன் ஒருவன் அவரை மணமுடிக்க விரும்பி மூத்தவர்கள் சிலரை மணத்துதராக அனுப்பினான். சங்கிலியாரின் பெற்றோர் அத்துாதரின் திருமணமுயற்சிக்கு தமது சம்மதத்தைத் தெரிவித்துவிட்டுத் தமது மகளின் கருத்தை வினாவினர். அச்சந்தர்ப்பத்தில் சங்கிலியார் தமது கொள்கை, கருத்துச் சுதந்திரம், தீர்மானஞ் செய்யும் உரிமை என்பவற்றை நிலைநாட்டும் வகையில்,
"என்று தம்மை யீன்றெடுத்தார் வினவ மறைவிட்டு இயம்புவார் இன்றென் திறத்துநீர் மொழிந்தது என்பரிசுக்கு இசையாது வென்றி விடையார் அருள்செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான் இனிமேல் சென்று திருவொற்றி பூரணைந்து சிவனார் அருளிற் செல்வன் என” விடை கூறினார்.
சங்கிலியார் கூறிய விடையில் அடங்கியுள்ள “என் பரிசுக்கு இசையாது” என்ற சொற்றொடர் பிரயோகமும் "வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் யான்" என்ற தீர்மானக் கூற்றும் விமர்சிக்கத்தக்கன.
59

Page 36
ஒரு பெண் தனது கணவனாக எத்தகைய ஆண்மகன் அமைய வேண்டும் எனச் சில கருத்துக்களைக் கொண்டிருத்தல் இயல்பு ஆகும். பெண்ணின் பெற்றோர் தமது மகளுக்கு எத்தகைய ஆடவன் கணவனாக இருக்க வேண்டும் எனச் சில கருத்துக்களைக் கொண்டிருப்பர். இவ்விரு சாரார் கருத்தும் இணங்கினால் தீர்மானஞ் செய்தலில் பிரச்சினை தோன்றாது. ஆனால் இரு சாரார் எதிர்பார்ப்புக்களும் முரண்பட்டால் தீர்மானம் செய்பவர் யார் என்ற வினாவுக்கு விடைகாண்பதிற் பிரச்சினை இருந்தே தீரும்.
சங்கிலியாரின் பெற்றோரைப் பொறுத்தவரையில் தமது மகளை மணமுடிக்க விரும்பியவனின் குலம், குடும்ப கெளரவம், பொருளாதார நிலை என்பன ஏற்புடையனவாக இருந்தன. ஆனால் அவன் தமது மகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்புடையவனா என்ற எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாற் சங்கிலியாரைப் பொறுத்தவரையில் தமது எதிர்காலக் கணவன் சிவபக்தி உள்ளவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்னுரிமை பெற்றது. எனவே சிவபக்தி என்ற நியமத்தைப் பூர்த்தி செய்யாத இளைஞனை அவரால் ஏற்க இயலவில்லை எனவே அவர் "என் திறத்து நீர் மொழிந்தது இது என் பரிசுக்கு இசையாது” என்று மறுப்புரை கூறினார். தமது கருத்துச் சுதந்திரம், தீர்மானம் செய்யும் உரிமை என்பவற்றைத் துணிவோடு கூறிய சங்கிலியாரின் கொள்கைக் கூற்றை அடுத்து நோக்குவோம். “சிவபக்தர் ஒருவரே என் கணவராக இருக்க வேண்டும். அத்தகையவரோடு உரிமை வாழ்வு நடத்துவதே என் இலட்சியம் “என்பது சங்கிலியாரின் கொள்கைப் பிரகடனம். இப்பிரகடனத்தில் அவர் தமது எதிர்காலக் கணவரின் தகுதி, மனைவியென்னும் உரிமையோடு இல்வாழ்வு அல்லது குடும்ப வாழ்வுநடத்தும் சிறப்பு ஆகிய இரு கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார். முதலாவது கருத்து அவரின் எதிர்பார்ப்பு மட்டும் அல்லாமல் அவர் வாழ்ந்த காலத்தின் பின்னரும் அவரைப் போன்ற பெண்களின் எதிர்பார்ப்பாகவும் விளங்கியது. வரகுணன் 11 (கி.பி. 862-880) காலத்தில் வாழ்ந்த மாணிக்கவாசகர் திருவாசகத்தின் பிரிவான திருவெம்பாவையில்,
"எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க” எனத் தமது காலச் சைவக் கன்னியரின் எதிர்பார்ப்பை அழுத்தமாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது கருத்தை இப்போது பரிசீலிப்போம். சங்கிலியார் வாழ்ந்த காலத்தில் பரத்தையரில் உருத்திர கணிகையர் என்ற பிரிவினரும் விலைமாதர், பொருட்பெண்டிர் போன்ற பிரிவினரும் சைவசமூகத்தில்
60

வாழ்ந்தனர். மேலும் அரசகுடும்பங்களிற் பலதார மண வழக்கமும் நிலவியது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தாம் இரண்டாம் மனைவியாகவோ வைப்பாட்டியாகவோ வாழவிரும்பாமையை மனைவி என்னும் உரிமை வாழ்வு மீதுள்ள விருப்பைக் குறிப்புப் பொருளாக உணர்த்தும் "ஒருவர்க்கு உரியேன் யான்” என்னும் தொடர்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்து இக்குறிப்புப் பொருள் எவ்வாறு அவரின் வாழ்க்கைச் சம்பவங்களில் விளக்கம் பெற்றது என நோக்குவோம்.
சுந்தரர் தொண்டை நாட்டு யாத்திரையை மேற்கொண்டு திருவொற்றியூர்த் தலத்தை அடைந்தார். அங்கு சங்கிலியாரின் வனப்பில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். பெற்றார், உற்றார் ஆகியோரின் ஆதரவில்லாமல் கன்னி மடத்தில் வசித்த சங்கிலியாரை அடையச் சுந்தரர் ஒற்றியூர் ஈசனை வேண்டினார். அவ்வேண்டுகோளைச் சேக்கிழார்,
'இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடை அவிழ்த்த திங்கள்வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்”என விவரித்துள்ளார். சிவபிரான் சங்கிலியாரின் கனவில் சுந்தரரின் அதீத விருப்பத்தைத் தெரிவித்ததும் சங்கிலியார் தற்பாதுகாப்பை முன்னிட்டு சுந்தரர் தம்மோடு பிரிவின்றி வாழவேண்டும் என்னும் சத்திய வாக்குறுதியைப் பெற்றுத் தருமாறு வேண்டினோர். சங்கிலியாருக்கு இறை சந்நிதானத்தில் வாக்குறுதி வழங்க இணங்கிய சுந்தரர் தாம் சத்தியம் செய்யும் போது இறைவன் சந்நிதானத்திலிருந்து நீங்கி ஆலய மகிழ மரத்தின் அடியில் அமரவேண்டும் என்றார். சுந்தரரின் வேண்டுகோளை மறுக்காத சிவபிரான் அதனை அப்படியே சங்கிலியாருக்குத் தெரிவித்தார். தமது சூழ்ச்சியைச் சங்கிலியார் அறிந்துகொண்டார் என்பதைத் தெரிந்து கொள்ளாத சுந்தரர் பின் சங்கிலியார் மீது பெருகிய கவர்ச்சியின் உந்துதலால் மகிழமரத்தடியில் உள்ள திருவுருவத்தின் முன் சங்கிலியாருக்கு சத்தியம் செய்து வாக்குறுதி அளிக்க நேரிட்டது. இதன்பின் சுந்தரர் தமது வாக்குறுதியைக் கைவிட்டுவிட்டு ஒற்றியூரின் நீங்கியதும் அவர் இரு கண் பார்வையை முற்றாய் இழந்ததும் மீண்டும் பார்வைத்திறனைப் பெற்றதும் பெரிய புராண வரலாற்று நவிற்சியைப் பயின்றவர்கள் அறிவர். சுந்தரர் சங்கிலியாருக்குச் சத்திய வாக்குறுதி அளித்த செயலுக்கும் வாக்குறுதியை மீறித் திருவொற்றியூரை விட்டுப்புறப்பட்ட செயலுக்கும் இடையில் மற்றொரு செயல் நிகழ்ந்தது. சுந்தரர் சங்கிலியார் மீது பூண்ட கட்டுமீறிய கவர்ச்சியின் விளைவாக அவரோடு உடலுறவு கொண்டார். பரவையார் உள்ளிட்ட ஏனைய பெண்களின் மனையற வாழ்வின்
6

Page 37
தொடக்கத்தில் ஆண்-பெண் உடலுறவு பற்றி சிற்றின்ப உணர்வுபூர்வமாகப்பாடாத சேக்கிழார் சுந்தரர் சங்கிலியாரோடு கொண்ட உடலுறவுபற்றி உணர்ச்சிமயமாகப் பாடியுள்ளார்.
இனி இவ் வரலாற்று நவிற்சியில் அடங்கியுள்ள தகவல்களை விமர்சனம் செய்வோம்.
1. முதலாவதாக, சங்கிலியார் மீது சுந்தரர் கொண்டது உடலுறவு வேட்கையைத்
தணிக்க எழுந்த காமமே தவிர உண்மைக் காதல் அல்ல.
2. இரண்டாவதாக இறைவனை ஒரு தூதராகப் பயன்படுத்தியது உறவினரின் தொடர்பைத் துண்டித்து வாழ்ந்த சங்கிலியாரை அடையத் தனக்குள்தானே வகுத்த சூழ்ச்சிக்கு உதவக் கூடியவர் இறைவனே என்ற தீர்மானத்தின் விளைவேயாகும்.
3. மூன்றாவதாக, சுந்தரர் ஒற்றியூர் ஈசனைத்தமது சத்தியவாக்குறுதி வேளையில் மகிழமரத்தடியில் உறையுமாறு வேண்டியதன் உட்கருத்து சங்கிலியாரை ஏமாற்றிவிட்டு கைவிடவேண்டும் என்ற அயோக்கியத்தனத்திற்கு இறைவன் உதவுவார் என்ற நம்பிக்கையே ஆகும்.
சங்கிலியாரைப் பொறுத்தவரையில் சுந்தரர் ஒரு பெண்ணை முதலிற் கைவிட்டவராகவும் பின்னர் பரத்தையோடு வாழ்பவராகவும் இருத்தலின் அவரின் நம்பகத்தரம் (RELIABILITY) சங்கிலியாருக்கு நம்பிக்கை இருக்கவிலை. மேலும் உற்றார் உறவினரின் துணையைத் துண்டித்த ஒரு பெண் காமஇச்சை கொண்ட போலிப்பக்தனின் உடற்பசி தீர்ந்ததும் அவனால் நிரந்தரமாகக் கைவிடப்படுவாள் என்ற கசப்பான உண்மையை அனுபவத்தின் மூலம் அறிந்துகொண்டாள். சிவபிரானைப் பொறுத்தவரையில் வைரத்தை வைரத்தால் அறுப்பது போல சுந்தரரின் அறிவுக் கூர்மையைத் தமது சமயோசித அருட் கூர்மையால் மழுங்கடித்தமையும், இருபெண்களைக் காதலித்து குடும்ப வாழ்வு நடத்த விரும்புவன் இருவரையுமே திருப்திப்படுத்த இயலாது துன்பத்தில் மூழ்குவான் என்பதை உணர்த்தியமையும் விதந்து கூறத்தக்கன ஆகும். சுருங்கக்கூறின் ஆணினத்தின் ஏமாற்றுவித்தையிலிருந்து தப்பி பிழைத்து வாழப் பெண்ணினத்தின் விழிப்புணர்வுக் கூர்மையே அப் பெண்ணினத்தின் கண்ணியத்துக்கு அவசியமாகும்.
62

மானக்கஞ்சாறர் மகள்
மானக்கஞ்சாறர் ஒரு சேனாதிபதி, கஞ்சாறு என்னும் சிற்றாறு வளமூட்டும் ஊரைச் சேர்ந்தவர். அவரின் மகளுக்கு மணமங்கலம் நிகழும் தினத்திற்கு முந்தைய தினம் மானக்கஞ்சாறர் வீட்டிற்கு வடநாட்டு “மாவிரதி” ஒருவர் சென்றார். அப்பெண்ணின் கூந்தல் நீளத்தைக் கண்ட மாவிரதி தமது "பஞ்சவடி'க்கு அப்பெண்ணின் கூந்தலை அரிந்து தருமாறு மானக்கஞ்சாறரைக் கேட்டுக் கொண்டார். மகளின் கூந்தலை அறுத்து மாவிரதிக்கு வழங்கக் கஞ்சாறர் தயங்கவில்லை. மறுநாள் மறுநாள் மணவினை நிகழ்ந்தது; அப்பெண்ணை மணமகன் ஏற்றுக்கொண்டான். கஞ்சாறளின் செயல் உற்றார், உறவினர், மணப் பெண் ஆகியோரிடம் எத்தகைய பாதகவிளைவையும் ஏற்படுத்தவில்லை என்ற கருத்து சேக்கிழாரின் நவிற்சியில் இழையோடுகின்றது. ஆயின் மானம் / பெருமைமிக்க கஞ்சாறரின் ஒரு தலைப் பட்சச் செயற்பாடு ஒரு பெண்ணைச் சிறுமைப்படுத்தி அவளின் சொந்த உரிமை (Personal Liberty) தொடர்பாக இழைக்கப்பட்ட அத்துமீறல் அல்லது கொடுமை என்றே விமர்சிக்கப் படவேண்டும். இத்தகைய கொடுமையை வீட்டு மட்டத்தில் இழைத்த பெரிபுராண ஆடவர்கள் படைத்துறைப் பணிபுரிந்தவர்கள் என்ற உண்மை இனிமேல் கூறப்படும் விமர்சனக் குறிப்புக்களிலும் அம்பலமாகும்.
ஆ) பெரியபுராணம் நவிலும் மனைவியர்
பெரியபுராணம் நவிலும் தொண்டர் வரலாற்றில் மனைவி என்னும் பாத்திரத்தை வகித்த சைவப் பெண்கள் மிகப்பலர். அவர்களிற் பலரின் இயற் பெயர்கள் தெரியவில்லை. ஆயினும் சைவசமூகத்தில் அவர்கள் பெற்ற மதிப்புநிலை தொடர்பான ஆய்வுக்கு அக்குறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர்களை ஆண் கொடுமைக்கு ஆளாகாதவர்கள், ஆண் கொடுமைக்கு இரையானவர்கள் என்ற இரு பெரும் பிரிவுகளில் வகுத்தமைக்கலாம்.
ஆண் கொடுமைக்கு ஆளாகாதவர்கள் (ஆ. ஆ)
ஆ. ஆ. என்னும் பிரிவினரில் இப்போது வாழ்க்கை வரலாற்றுத் தகவல்கள் கிடைக்காதவர்கள், அத்தகைய தகவல்கள் சிலவற்றை அறியக் கூடியவர்கள் ஆகிய இரு சாரார் உள்ளனர். முன்னையவர்களிலே சிவபாதவிருதயரின் மனைவி பகவதி, சடையனாரின் மனைவி இசைஞானி, புகழனாரின் மனைவி மாதினி, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மனைவி மதங்கசூளாமணி, சம்பந்தரின் மனைவி (சொக்கி) என்போர் குறிப்பிடத் தக்கவர்கள். பிள்ளையவர்களில் இளையான்குடி மாறனாரின் மனைவி, குங்கிலியக்கலயரின் மனைவி, அப்பூதியடிகளின் மனைவி, அமர்நீதியாரின்
63

Page 38
மனைவி ஆகியவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். ஆ. ஆ என்னும் பிரிவைச் சேர்ந்த இரு சாராரும் தமது கடப்பாடுகளைப் பாரம்பரியம் பேணும் முறையிற் செய்து முத்தி அடைந்தவர்கள்.
இவர்கள் யாவரும் முத்தியடைந்தனர் என்று கூறும் கருத்து பொருளாழம் உள்ள சிந்தனைக்கூறு ஆகும். இதனைப் புரிந்து கொள்ளப் பெண்களின் நிலைபற்றிச் சமண சமயப் பிரிவுகள் பின் பற்றிய கொள்கையைக் குறிப்பிடுதல் முக்கியமாகும். சமணரில் திகம்பரர், சுவேதாம்பரர், ஆசீவகர் போன்ற பிரிவினர் உள்ளனர். இப்பிரிவுகளில் மகாவீரரின் தலைமையை ஏற்றுக் கொண்ட திகம்பரரின் செல்வாக்கு தமிழகத்தில் கி. மு. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் பரவியது. பெண்கள் ஆண்களிலும் தாழ்ந்தவர்கள், அவர்கள் முத்தி பெறும் தகுதியற்றவர்கள் என்ற கொள்கையைத் திகம்பரசமணர்கள் / ஜைனர்கள் விட்டுக் கொடுப்பில்லாமல் வலியுறுத்தினார்கள். மகாவீரருக்குப்பதில் பார்சுவநாதரை ஏற்றுக்கொண்டவர்கள் சுவேதாம்பரர். அவர்கள் பெண்கள் ஆண்களை விடத்தாழ்ந்தவர்கள் என்ற சிந்தனையை ஏற்றுக்கொண்டு முத்தி பெறும் தகுதி பெண்களுக்கு உண்டு என வாதிட்டு திகம்பரருக்கு எதிராகச் செயற்பட்டார்கள். சுவேதாம்பரரில் ஒரு பகுதியினரும் நாராயண வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்களும் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர்களுமான ஆசீவகர்கள் பெண்கள் முத்தி பெறும் தகமை உள்ளவர்கள் என வாதிடுவதோடு நின்று விடாமல் அவர்கள் தெய்வ நிலை அல்லது முத்தி&டைந்த சம்பவக் கதையைக் காவியமாக்கினர் (உதாரணம் கண்ணகியின் முத்தி) திகம்பரரின் செல்வாக்கு வேரூன்றிய தமிழகத்தில் அச் செல்வாக்கின் ஆணிவேராகிய பெண் முத்தி மறுப்புக் கொள்கையை அறுத்துவிடும் நோக்கில் சைவ நெறியினர் பெண்களின் முத்தியை வரலாற்று நவிற்சிச் சந்தர்ப்பங்களில் விதந்து கூறத் தவறவில்லை. இக்கருத்தழுத்தமே பகவதி, இசைஞானி போன்றவர் முத்தியடைந்தனர் எனச் சேக்கிழார் தரும் தகவற் குறிப்பின் உட்கிடை ஆகும்.
அடுத்து குங்கிலியக்கலயரின் மனைவி, அமர்நீதியின் மனைவி ஆகியோர் செயல்கள் தொடர்பான விமர்சனக் குறிப்புக்களைக் கூறுதல் பொருத்தம் எனக் கருதுகிறேன். குங்கிலியக்கலயரின் மனைவி குடும்ப முட்டுப்பாடு கணவரின் இலட்சியத் தொண்டுக்குத் தடையாதலாகாது என்ற மனப்பாங்கின் அடிப்படையில் தமது தாலியைக் கணவருக்கு வழங்கினார். இச்செயல் அவரின் கடமையுணர்வின் வெளிப்பாடு என மதிப்பிடத்தக்கது. சிவனடியார் ஒப்படைத்த கோவணம் மாயமாய் மறைந்து போனதும் அதனைக்
64

குடும்பத்திலுள்ள எவரும் திருடவில்லை என்னும் உண்மையை நிரூபிக்க அமர்நீதி, அவரின் மனைவி, மகன் ஆகிய மூவரும் தராசில் ஏறிய செயல் சிபிச் சக்கரவர்த்தியின் செயலை நினைவூட்டுகின்றது. சிபிச் சக்கரவர்த்தியின் செயல் இரக்கம் என்ற விழுமியத்தின் வெளிப்பாடாயுள்ளது. ஆனால் அமர்நீதி குடும்பத்தின் செயல் நேர்மையின் வெளிப்பாடாயுள்ளது. இம்மூவரில் அமர்நீதியார் மனைவியின் பங்கு நேர்மை, கணவர் கெளரவம் பேணல், மகனின் நலம் பேணல், ஆளுமை விருத்தி என்னும் விழுமியங்களின் வெளிப்பாடாக விமர்சிக்கத்தக்கது.
மங்கையர்க்கரசி மானி (கி. பி. ஏழாம் நூற்றாண்டு)
மங்கையர்க்கரசி சோழ மன்னன் ஒருவனின் மகள். மானி (மதிப்பு மிக்கவள்) என்பது அவரின் இயற்பெயர். சைவநெறியைப் பேணிய குடும்பத்திற் பிறந்த அப்பெண்மணி அரசியற் காரணங்களுக்காகச் சமணச்சார்புள்ள மாறவர்மன் அரிகேசரி நெடுமாறன் (கி. பி. 640 - 680) என்னும் கூன்பாண்டியனை மணமுடித்தார். ஒருவரின் வழிபாட்டுரிமையை மற்றவர் மதித்து வாழ்ந்தமையால் மங்கையர்க்கரசியார் சைவநெறியைக் கடைப்பிடிப்பதில் பிரச்சினை இருக்கவில்லை. சம்பந்தரின் சைவப்பணிகளை அறிந்து கொண்ட மங்கையர்க்கரசியார் ஞானக்குழந்தையை சம்பந்தரை மதுரைக்கு அழைக்கும் விடயத்தில் தமது தனிநபர் சுதந்திரத்தை நிலைநாட்டினார். மேலும் அவர் அவ்வழைப்பை அடுத்து நிகழ்ந்த சமணர் - சம்பந்தர் போட்டிகளின் முடிபயன்களாகப் பாண்டி நாட்டில் சைவநெறிக்கு மறுவாழ்வளிக்கும் சமூகக் கடப்பாடு, நெடுமாறனின் சிந்தனைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் கடமை என்பவற்றை நிறைவேற்றினார். இவை அவரின் புகழைப் பாண்டி நாட்டில் மட்டும் அல்லாமல் பிற மண்டலங்களிலும் பரப்பின. மரியாதைக்குரியவர் (மானி), பாண்டியன் நெடுமாறனின் பட்டத்துராணி (பாண்டிமாதேவி) என்ற இருபடிகளையும் தாண்டிய வளவர்கோன் பாவை இறுதியில் பெண்ணினத்துக்கே நாயகி (மங்கையர்க்கரசி) என்னும் உன்னத நிலையை தமிழகத்தில் அடைந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. மேலும் வடமொழி, கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் பெரியபுராண வரலாறுகள் மொழி பெயர்க்கப்பட்டமையால் அவரின் புகழ் பாரதத்தின் பிறபகுதிகளிலும் பரவியது. தமிழகத்தில் அவரின் உன்னதநிலை மங்கையர்க்கரசி என்னும் பொருள் நிறைந்த தமிழ்ப் பெயரின் உட்கிடையாக விளங்குவது போல் 'மகிளகு வநாயகி" என்னும் வடமொழிச் சொற்பிரயோகத்திலும் (அகஸ்தியர் பத்தி விலாசம்) அவரின் உன்னத நிலை குறிப்புப் பொருளாக அமைந்துள்ளது.
65

Page 39
ஆண் கொடுமைக்கு இரையானவர்கள் (ஆ இ)
பெரிய புராணம் நவிலும் மனைவியரில் ஆ இ என்னும் பிரிவில் உள்ளவர்கள் அனைவருமே கணவர்களின் கொடுமைகளுக்கு இரையாகி மனித உரிமைகளை இழந்தவுர்கள். அவர்களில் (i) மரபேற்குநர் (ii) எதிர்க்குநர் (ii) அபலைகள் ஆகிய வகையினர் காணப்படுகின்றனர். இவ்வகையினரின் அவலநிலை வேறுபாடுகளைத் தனித்தனியே நோக்குவோம்.
(i) மரபேற்குநர்
கலியனார் மனைவி (கலியன் - வறியவன்)
கலியனார் அல்லது கலிநீதியார் என்பவர் சேவை மனப்பான்மை உள்ள ஒரு வறிய பக்தர். அவரின் மனைவி தன் கணவனின் சமயத் தொண்டுக்குத் தேவையான நிதியைத் திரட்டத் தன்னை எவருக்காயினும் அடிமையாக விற்க இணங்கினார். ஒருவர் தம் மனைவியைப் பணயமாகவோ விற்றுவிடவோ உரிமை பெற்றிருந்தார் என்பதை மகாபாரதத்தில் சூதாடும் சந்தர்ப்பத்தில் தருமர் பாஞ்சாலியைப் பந்தயப் பொருளாக வைத்த செயல் மூலம் அறிகிறோம். மகாபாரத காலத்தில் சரியான செயல் என ஏற்கப்பட்ட மரபு வழக்கம் கலியர் சுந்தரர் காலம் வரை நீடித்தது. எனவே கலியனார் மனைவி கணவரின் கொடுஞ்செயலை எதிர்ப்பின்றி ஏற்க நேரிட்டது. பல்லவர் காலப் பெண்கள் பழைய மரபைப் பணிவோடு ஏற்ற மென்போக்கிற்கு மாறாகப் பாரதி படைத்த பாஞ்சாலி எதிர்க்கும் போக்கை வெளிப்படுத்திய திறன் நினைவுகூரத்தக்கது.
கலியர் மனைவியை விற்க மனமகிழ்ந்து கொண்டு சென்றதாகக் கூறும் சேக்கிழார் அப்பெண்ணை எவரும் விலைக்கு வாங்காதபோது கலியர், 'தனம் அளப்பார்தமை எங்கும் கிடையாமல் தளர்வெய்தியதாகக்” கூறியுள்ளார். கலியரின் மனைவியை விலைக்கு வாங்க எவரும் முன்வராததன் காரணம் யாது என்பதைப் பரிசீலிப்போம். பெண்ணை விலைப் பொருளாக்கும் வழக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தல். சமூக வகுப்பு வேறுபாடு, கலியரின் மனைவி மீதுள்ள வெறுப்பு என்பவற்றில் ஒன்றுமட்டும் அல்லது மூன்றும் காரணம் என்று கருதலாம். சுந்தரரைத்தமது அடிமை என்று கிழப்பிராமணர் கூறியதும் பிராமணருக்குப் பிராமணர் அடிமையாவதில்லை என்று அப்போது மணமங்கலம் காணவந்த மக்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர். எனவே அத்தகைய எதிர்ப்புணர்வை ஒத்துழையாமை மூலம் வணிகவகுப்பினர் ஒருங்கே காட்டினார்கள் என்று விமர்சனம் செய்யலாம்.
66

(i) எதிர்க்குநர்
திருநீலகண்டர் மனைவி
திருநீலகண்டர் ஒரு குயவர். சிவபக்தியிற் சிறந்தவர். ஆயினும்
சிற்றின்பத்தில் நாட்டமுள்ளவர். அவர் ஒரு முறை பரத்தையொருத்தியோடு சிற்றின்ப வேட்கையைத் தீர்த்துக் கொண்டதும் தமது இல்லத்திற்கு திரும்பினார். அவரின் நடத்தைப் பிறழ்வைப் பெண்ணினத்திற்கும் தமக்கும் செய்த குற்றமாகக் கருதிய அவரின் மனைவி தணியாத சீற்றத்துடன் “எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்” என ஆணையிட்டார். பரத்தையர் ஒழுக்கக்கேடு சகித்துக் கொள்ளப்பட்ட காலத்தில் வாழ்ந்த நீலகண்டர் மனைவி பிரகடனம் செய்த சத்தியம் பெரியபுராணம் நவிலும் பெண்களில் அவருக்கு ஒரு தனிச்சிறப்பை அளித்துள்ளது. பின்வருவன அதன் காரணங்களாகும் : (அ) சொந்தக் கண்ணியத்திற்குப் போராடும் உரிமை ஒவ்வொரு
பெண்ணுக்கும் உண்டு. (ஆ) ஒரு பெண் தனக்காக மட்டுமல்லாமல் பெண் குலத்துக்காகப் போராடும்
பொறுப்பு / கடப்பாடு உள்ளவள். (இ) சமூகத்திற் புரையோடிவிட்ட சீரழிவை ஒழிக்கும் பணியில் பெண்களுக்கு
முக்கிய பங்கு உள்ளது.
நீலகண்டர் காலத்தில் ஒருவன்/ஒருத்தி தன்னை ஏற்ற தனிநபருக்கு விசுவாசமாக வாழவேண்டும் என்ற கருத்தின் தனி முக்கியத்துவம் உணரப்பட்டதாக நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆயின் நீலகண்டர் மனைவியின் கருத்து எயிட்ஸ்(AIDS) நோயின் பாதிப்பு உணரப்பட்ட இந்த நவீன யுகத்தில் தனி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று கூறலாம்.
கலிக்கம்பர் மனைவி
கலிக்கம்பர் ஒரு வணிகர், சிவபக்தர். அவரின் வணிகத்தொழிலில் பணியாளாக இருந்த ஒருவன் பின்னர் சிவனடியாராக மாறினான். அச்சிவனடியார் அடியார் குழுவோடு கலிக்கம்பர் வீட்டுக்கு வந்த போது சைவசமய சம்பிரதாயத்திற்கு இணங்கக் கலிக்காமரின் மனைவி அடியார் கால்களை வீட்டு வாசலில் நீர் வாத்துக் கழுவநேரிட்டது இச்சம்பிரதாயம் லிங்காயதர் அல்லது வீரசைவர்களிடம் வழங்கிவருதல் குறிப்பிடத்தக்கது. இச்சம்பிரதாயத்தைச் சீராகக்கடைப்பிடித்த கலிகம்பரின் மனைவி இடையில் நிமிர்ந்த போது தங்கள் முன்னாள் பணியாளை இனங்கண்டதும் பாதோதக் சம்பிரதாயத்தைத் தொடராது கூச்சத்தோடு நின்றார். அவரின் மனநிலையைக்கண்டு சீற்றம் அடைந்த கலிக்கம்பர் மனைவியின் "கை, தறித்து கரகநீரெடுத்துத்தானே அவர்தாள் விளக்கினார்” எனச்சேக்கிழார் பாடியுள்ளார்.
67

Page 40
கலிகம்பரின் செயல் மனைவியின் சம்பிரதாய மீறலுக்கு வழங்கிய அம்புகடந்த தண்டனை அல்லது கொடுமையாகும். அறிவுரை கூறித்திருத்தும் tp:ற்சிக்குப் பதிலாக இத்தகைய மிகைத்தண்டனையை வழங்கல் எவரும் எக்காலத்திலும் ஏற்கமுடியாத ஒரு வெறிச்செயலாகும்.
கழற்சிங்கர் மனைவி (கி. பி. 9 ஆம் நூற்றாண்டு)
கழற்சிங்கர் காடவர்கோன் எனப்படுபவன் ஒரு பல்லவ மன்னர், கழற் பெருஞ்சிங்கன்’ என்று சேக்கிழார் குறிப்பிடும் இம்மன்னன் நந்திக்கலம்பகத்தின் நாயகன். நந்திவர்மன் III (கி. பி. 824 - 849) ஆவான். இவன் மனைவி இராஷ்டிர கூட அரச குடும்பப் பெண், ஜைன சமயச் சார்பினள், சங்கா என்பது அவள் பெயர். பெரியபுராணம் பெயரிட்டுக் கூறாத கழற்சிங்கர் மனைவி சங்காவே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ஊகம். VM
கழற்சிங்கர் மனைவி சிவாலயம் ஒன்றில் பூசைக்கு வைத்த மலர் ஒன்றை மோந்து / மணந்து பார்த்து அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டார். இதனை ஒரு பெருங்குற்றமாகக் கருதிய செருத்துணையார் (போர்க் காலத்தில் அரசர்க்காகப் போரிடும் துணைப்படை வீரர்) அவளின் மூக்கை அரிந்து விட்டார். அவள் கழற்சிங்கரிடம் அத்தண்டனை பற்றி முறையிட்டாள். அத்தண்டனையின் காரணத்தை உசாவியறிந்து கொண்ட கழற்சிங்கன் அத்தண்டனை போதாது என்று கூறி அம்மலரை மோந்து பார்க்க எடுத்த கையைத் துண்டிக்கும் இரண்டாம் தண்டனையை வழங்கினான்.
அறியாமை காரணமாக நிகழ்ந்த தவறை மன்னித்தல் அல்லது அறிவுரை கூறி எச்சரித்தல் எவரும் ஏற்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நடவடிக்கை அல்லது துவங்கல் ஆகும். கோதை பரம்பொருளுக்காகத் தொடுத்த மாலையை பக்திமிகுதியால் சம்பிரதாய அறிவு குன்றிச்சூடிக்கொடுத்த மாலை, பெரியாழ்வார் அவளைக் கண்டிக்கத் தூண்டியது. கோதையின் செயல் கண்டனத்திற்கு உரியதல்ல, மன்னித்தற்குரியது என்பதைப் பரந்தாமனே உணர்த்தினார். அத்தகைய மன்னிப்பு மனப்பாங்கு இல்லாத கழற்சிங்கன் தன்மனைவிக்கு ஆறுதல் கூறியும் அறிவுரை கூறியும் திருத்தமுயன்றிருக்கலாம். அதற்கு பதிலாக அவளை இரட்டைத் தண்டனைக்கு இலக்கு ஆக்கிய செயல் சமயவெறியின் அடிப்படையில் கழற்சிங்கன் இழைத்த மன்னிக்க முடியாத கொடுமையேயாகும். கழற்சிங்கனின் அணுகுமுறையை ஒட்டி அச்சம்பிரதாய மீறலை நோக்கினால் மலரைப் பார்த்த கண்களைக்கவ்வி எறிதல், அம்மலரைக் காண நடந்துவர உதவிய கால்களைத் துண்டித்தல் எனக் கொடுமைகள் பல மேலும் நிகழ்ந்து விடச் சமயவெறி உந்தி
68

விடலாம் என்ற அச்சம் ஏற்படும். ஜைனனாக வாழ்ந்த நெடுமாறன் மங்கையர்க்கரசியாரின் வழிபாட்டுரிமையிலோ சம்பிரதாயங் களிலோ தலையிடவில்லை. ஆனால் கழற்சிங்கனின் வெறிச்செயல் பெண்பாலாருக்கு இழைத்த கொடுமை மட்டுமன்றிதான் போற்றிய சைவநெறிக்கே இழுக்கை ஏற்படுத்திய செயலும் ஆகும். இயற்பகையார் மனைவி
இயற்பகையார் ஒரு கிறுக்கர்; புகார்வணிகர் உலகியலுக்கு முரணான விசித்திர நடத்தை உள்ளவர். எனவே அவரை “உலகியற் பகையார்” என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். அக்கிறுக்களின் மனைவியைத் தமக்கெனத் தருமாறு சிவனடியார் ஒருவர் வேண்டியதும் சிவனடியாரோடு வாழச் செல்லுமாறு இயற்பகையார் கூறினார். சிவனடியாரோடு செல்லும் நிர்ப்பந்தம் இயற்பகையின் மனைவிக்கு ஏற்பட்டது. அதற்குமுன் அப்பெண் இயற்பகையின் பிறழ்நடத்தை காரணமாக முதலிற் கலக்கம் அடைந்தார். அடுத்து கணவனின் கிறுக்கை, விசித்திர நடத்தையை மாற்றமுடியாது என உணர்ந்து தமது பிரச்சினையைத்தாமே தீர்க்க வேண்டும் என்னும் மனத்தெளிவு பெற்றார். அவரின் சொல்சாராத் துலங்கல்கள் இரண்டையும் சுட்டிக்காட்டும் வகையில் சேக்கிழார்
மதுமலர்க் குழன் மனைவியார் கலங்கி
மனந்தெளிந்த பின் மற்றிது மொழிவார்”
(இயற்பகை புராணம், பா - 8)
எனப் பாடியுள்ளார்.
மனத்தெளிவு " பெற்ற இயற்பகையின் மனைவி கணவரின் அருவருக்கத்தக்க தீர்மானத்தை எதிர்த்து தமது கருத்தை அவருக்கு எடுத்துக் கூறும் கருத்துச்சுதந்திரத்தை நுட்பமாகப் புலப்படுத்தினார். அவரின் சொல்சார் துலங்கலைச் சேக்கிழார், •
இன்றுநீர் எனக்கு அருள்செய்தது இதுவேல் என்னுயிர்க்கு ஒரு நாதர் நீர் உரைத்தது ஒன்றை நான் செய்யும் அத்தனையல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்' (மேலது பா - 9)
என்னும் பாடலில் விவரித்துள்ளார். அத்தகைய நிலமையில் தமது வெறுப்பையும் இயலாமையையும் வெளிப்படுத்தினார். பேசாமடந்தையாக
மெளனத்தைக் கடைப்பிடிக்காமல் ‘உரிமை வேறு உளதோ” என்று
69

Page 41
மென்மையான தொனியில் தமது கருத்துக்கூறும் உரிமையை நிரூபித்தார்; கணவரைப் பணிந்து வணங்கினார். மனைவியின் “உரிமை வேறு உளதோ எனக்கு" என்ற துலங்கலில் உள்ளார்ந்து காணப்பட்ட கருத்து வேற்றுமையைப்புரிந்து கொண்ட இயற்பகை அவரைத் தாழ்ந்து வணங்கினார். மனைவி கணவனை வணங்கல் உலகியல் வழக்கம். ஆனால் கணவன் மனைவியைப் பணிந்து வணங்கல், உலகியல் வழக்கிற்கு மாறான செயல் இயற்பகைக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த வணிகனான பரமதத்தன் குற்றவுணர்வும் தாழ்வு மனப்பாங்கும் புலப்படத் தன் மனைவி புனிதவதியைப் பணிந்து வணங்கியமை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத் தக்கது. பரமதத்தனின் வழக்க விரோதச் செயலின் காரணத்தை உற்றார் உறவினர் உசாவியபோது புனிதவதியைத் தெய்வமாக மதிக்கும் மனப்பாங்கை பரமதத்தன் எடுத்துரைத்தான். ஆனால் இயற்பகை உலகியல் வழக்க விரோதமாகத் தன் மனைவியை எதிர் வணங்கிய செயலைக் காணவோ காரணங் கேட்கவோ அப்போது உற்றார் உறவினர் அங்கு இருக்கவில்லை. இந் நிலையில் இயற்பகையின் மனைவி “மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள்’ என்று சேக்கிழார் பாடியுள்ள நுட்பம் சிந்திக்கத்தக்கது. முன்னர் அவளை விபரித்து “இன்று உன்னை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்” என்று கூறிய இயற்பகையின் துணிச்சலையும் இப்போது தன்னைப் பணிந்து வணங்கிய கணவனின் உலகியல் விரோதச் செயலையும் தனக்குள் நினைத்துப்பார்த்த அப்பெண்திகைப்புற்றுநின்றமை வியப்பைத் தரவில்லை.
இயற்பகையின் மனைவி மனக்கலக்கம், மனத்தெளிவு, உரிமையுணர்வு, ஆற்றாமை, இயலாமை, பணிவு, திகைப்பு என்னும் உணர்வு வேறுபாடுகளை ஒரு சங்கிலித் தொடராக வெளிப்படுத்திய பின்னர் இறுதியில் தற்காப்புணர்வு மீதுர மாதவனைப் பின்தொடர்ந்தாள். இயற்பகையின் சமூகவிரோதச் செயலை அறிந்த வணிக வகுப்பு உறவினர் அவளை மீட்கும் நோக்கத்துடன் விரைந்து சென்று அம் மாதவனைச் சூழ்ந்து கொண்டனர். ஆயின் இயற்பகை கிறுக்குத்தனம் மேலோங்க உறவினர்களின் எதிர்ப்பை முறியடித்தார். இயற்பகையின் பைத்தியச் செயலைச் சேக்கிழார்,
இனையது ஒன்று யாரே செய்தார் இயற்பகை பித்தனானால் புனையிழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று துணைபெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வாள்.
(மேலது பா- 13 அடிகள் 2,3,4) எனவிவரித்துள்ளார்.
70

இயற்பகை தன் மனைவிக்கு இழைத்த கொடுமையை பேரறிஞர் வையாபுரிப்பிள்ளை அருவருக்கத்தக்க செயல் என்றார். அதனை நியாயப்படுத்தப் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் (பெரிய புராணம் - ஓர் ஆய்வு 1987) ஒரு போலி முயற்சியையே மேற்கொண்டுள்ளார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் இயற்பகையின் கிறுக்குச் செயலை நியாயப்படுத்தும் நீண்ட வாதத்தில் கூறும் கருத்துக்கள் சேக்கிழார் பாடற் கருத்துக்களோடு முரண்படுகின்றன. அவற்றை இப்போது பரிசீலிப்போம்.
"அந்தத் தனிப்பட்டவன், தான் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்கட்கு உட்பட்டே அவன் வாழவேண்டியுள்ளது. எத்துணையோ சமுதாயங்களில் வந்த விருந்தினனுக்குத் தன் மனைவியை அந்த ஒரு நாளைக்குத் தருவது உபசரிப்பு முறை என்ற மரபு இன்றளவும் உள்ளது. பல கணவரை ஏற்கும் (Polyandry) மரபும் பல சமுதாயங்களில் உள்ளது. விவாகரத்து என்ற பெயரில் ஒரு விநாடியில் மனைவியை உதறிவிடும் சமுதாய மரபுகள் இன்று உண்டு.” பெரியபுராணம் - ஓர் ஆய்வு, பக்கம் 531
“எனவே இயற்பகை வரலாற்றை நோக்குகையில் இந்தத் தமிழ்ச் சமுதாய அடிப்படை மரபுகளை வைத்துத்தான் இனங்கண்டு கொள்ள வேண்டும். இயற்பகை மனைவியை விதி மணக்குல மடந்தை' என்று விளிப்பதால் இந்தச் சமுதாய மரபும் அறிவிக்கப்படுகிறது.” மேலது பக்கம் 532,
“சமுதாயமும் சுற்றமும் இந்தச் செயலால் நேரிடையாகப் பாதிக்கப் படாவிடினும், நாடுறு பழிக்கும் ஒன்னார் நகைப்பிற்கும் மட்டுமே அஞ்சுகின்றனர். இவை இரண்டும் பற்றியும் கவலைப்படாமையால்தான் இயற்பகையார் என்ற பெயர் அவருக்கு வந்தது"
இயற்பகை தமது வீட்டுக்கு வந்த மாதவனுக்கு மனைவியை ஒரு நாள் உபசரிப்பு மரபுக்கு இணங்கக் கொடுத்தாகக் கருதஇடமில்லை. ஏனெனில் அக்கிறுக்கன் மாதவனோடு சென்று வாழும் நோக்கத்தோடு மனைவியைக் கொடுத்ததாகவே கதைப்பின்னல் அமைந்துள்ளது. அம்மாதவனோடு வாழவேண்டிய காலத்தை வரையறுக்காமல் தன் மனைவியை இயற்பகை வழங்கியதாகக் கருத இடமுண்டு. இந்த ஊகம் தமிழ்நாட்டில் ஒரு பெண் கணவர் பலரை ஏற்றல் என்ற வழக்கம் இயற்பகையின் காலத்தில் பின்பற்றப்பட்டது என்னும் அடிப்படையில் விவாதிக்கப்படலாம். மகாபாரத காலத்தில் ஒரே குடும்பத்தில் / குலத்தில் பலதாரமணம், கணவர் பலரை ஏற்றல் என்னும் வழக்கங்கள் கடைப்பட்டமையை திரெளபதை பஞ்சபாண்டவர் குடும்ப வாழ்வு,
7

Page 42
அருச்சுனன், வீமன் ஆகியோரின் குடும்பவாழ்வு என்பன மூலம் அறிகிறோம். தமிழ் நாட்டில் பல தாரமணம் சங்ககாலம் தொடக்கம் வழங்கி வந்தது ஆயினும் ஒரு தமிழ் பெண் கணவர் பலரோடு வாழும் சமூக வழக்கம் இயற்பகை காலத்தில் நிலவியது என்று அழுத்தமாக கூற இப்போது இயலவில்லை. வடபாரதத்திற் பாஞ்சாலத்தில் அனுசரிக்கப்பட்ட இவ்வழக்கத்தைச் சில குடும்பத்தினர் தமிழ் நாட்டிற் பின்பற்றினர் எனக் கூறலாம். பன்னாட்டு வணிக மையமாக அமைந்த புகாரில் வணிகத்தொழில் புரிந்த இயற்பகை அவ்வடபாரத வழக்கத்தைப் பின்பற்றியிருக்கலாம். ஆயின் பெண்ணிலை நோக்கிற் பரிசீலிக்கும் போது இயற்பகையின் செயல் வடபாரத வழக்கச் செல்வாக்கைக் காட்டுவதாக ஏற்றுக்கொண்டாலும் கலக்கம், திகைப்பு என்னும் உணர்வுகளைப் புலப்படுத்திய மனைவியால் அவ்வழக்கம் ஏற்கப்படவில்லை என்று கூறவேண்டும். இயற்பகை தன் மனைவியை நிரந்தரமாக உதறிவிட மாதவனுக்கு வழங்கியதாகக் கூறலாம். வேறு ஒருத்தியை மணமுடிக்கும் கபட நோக்கம் இயற்பகையின் உள்ளத்தில் இருந்ததாக ஒரு கற்பனை வாதத்தைக் கூட ஒருவர் கூறலாம். பிற்குறிப்பிட்ட எண்ணங்கள் இயற்பகையிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன அவரின் கிறுக்குச் செயலைச் சமூகமோ இயற்பகையின் கொடுமைக்கு இலக்கான மனைவியின் உறவினரோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே ஏற்கவேண்டிய உண்மையாகும். இதனை நாம்
"ஏட, நீஎன் செய்தாயால் இத்திறம் இயம்புகின்றாய்; நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நானாய் இன்று பாடலம் உரைப்பது உன்தன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ கூடவே மழவதன்றிக் கொடுக்கயாம் ஒட்டோம்’
(இயற்பகை புராணம் - பா , 18) என்னும் பாட்டுமூலம் அறிகிறோம்.
நாடுறு பழி' என்ற பிரயோகம் சமூகம் மட்டும் அல்ல சமூகங்களின் கூட்டு ஆகிய நாடும் இயற்பகையின் கெளரவக் குறைவான செயல் அல்லது தேசத்திற்கே ஒவ்வாத செயல் எம் கருத்துப் பொதுமையைச் சுட்டுகின்றது. ஒன்னார் நகை என்ற பிரயோகம் இயற்பகையின் விரோதிகள் அவரை எள்ளிநகையாடுவர் என்னும் சிறப்புக் கருத்தைக் குறிக்கின்றது. அக்கருத்துக்கள் இயற்பகையின் கிறுக்குச் செயல் சுற்றம், சமூகம், நாடு என்னும் மூன்று அலகுகளுக்கும் பிழையான முன்மாதிரியாகிச் சீரழிவைத் தந்துவிடும் என்ற பொறுப்புணர்ச்சியைப் புலப்படுத்துகின்றது. எனவே சமுதாயமும் சுற்றமும் இந்தச் செயலால் நேரிடையாகப் பாதிக்கப்படாவிடினும் என்று பேராசிரியர் அ. ச. ஞா. இன் வாதக்கூற்று போலியான முயற்சி, எனவே பொருத்தம் ஆகும்.
72

பரமதத்தன் மனைவி - புனிதவதி (கி. பி. ஆறாம் நூற்றாண்டு)
புனிதவதி (தூய்மையின் உருவம், தூயவள்) தமிழ் நாட்டிலுள்ள காரைக்கால் என்னும் கீழைக்கரைப் பட்டினத்தில் வணிகக் குடும்பத்திற் பிறந்த பெண். அவள் தந்தை குபேரன் எனக் கணிக்கத்தக்க பெருஞ்செல்வன். தனதத்தன்' என்பது அவன் பெயர். புனிதவதி தனதத்தன் என்னும் பெயர்களின் இறுதிப் பகுதிகள் வடபாரதப் பெயர் வழக்குகளின் செல்வாக்கைப் புலப்படுத்துகின்றன. உள்நாட்டு தரை மார்க்க வணிகத்தொடர்புகள் கடற்கரையோர நீர்மார்க்க வணிகத் தொடர்புகள், கடல்கடந்த பன்னாட்டு நீர் மார்க்க வணிகத் தொடர்புகள் ஆகிய வணிகத் தொழில் வகைகளின் கேந்திரமாகக் காரைக்கால் சிறந்து விளங்கியது. எனவே வடபாரத- தென்பாரத சமய, சமூக, பொருளாதார, கலாசார, அரசியல், தொடர்புறவுகளின் செல்வாக்குக் கூறுகள் காரணமாகப் புனிதவதி, தனதத்தன் போன்ற பெயர் சூட்டும் வழக்கம் சங்ககால பெயர் இடும் வழக்கத்தின் வேறுபட்டவகையில் வணிக குலத்தில் பின்பற்றப்பட்டதெனக் கூறலாம். வடபாரத மரபிற்கு இணங்கப் புனிதவதி என்னும் இயற்பெயர் பெற்ற வணிக குலப் பெண் ஒரு சிறந்த கவிஞர். பெரிய புராணம் நவிலும் அடியார்களில் பக்திப் பாடல்கள் பாடிய ஒரேயொரு பெண். அவர் விருத்தம் என்னும் பாவினத்தையும் பதிகம் என்னும் இலக்கிய வடிவத்தையும் கம்பருக்கும் மூவர் முதலிகளுக்கும் முன்னர் தமிழிலக்கியத்துறையில் அறிமுகம் செய்த வழிகோலி ஆவார். அவரின் இலக்கியத்துறைச் சாதனைகளின் அடித்தளம் அவர் பெற்ற கல்விப் பயிற்சியாகும். முறைசார் கல்வி பெறும் உரிமை பெண்களுக்கும் சாதாரண மக்களுக்கும் மறுக்கப்பட்ட முற்காலப் பல்லவர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த புனிதவதி அக்காலச் செல்வக் குடும்பத்திற் பிறந்தமையால் முறைசாராக் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றார். சமயத் துறையில் ஜைன, பெளத்தச் செல்வாக்குகளும் ஆட்சித்துறையில் பிறமொழிச் செல்வாக்குகளும் நிலவிய காலப் பகுதியிற் சைவநெறிச் சார்பான தமிழ்ப்பாடல்களைப் புனிதவதி பாடியமை சமயத்துறைச் சாதனையே ஆகும்.
இத்தகைய சாதனையாளரின் குடும்ப வாழ்வு பற்றி இப்போது பரிசீலிப்போம். புனிதவதி அக்கால வழக்கத்திற்கு இணங்கப் பரமதத்தன் என்னும் வணிககுலத் தவனைப் பெற்றோரின் ஒழுங்கிற்கும் விருப்பத்திற்கும் இணங்கத் திருமணம் செய்தார். புனிதவதியின் பெற்றோர் மணமங்கலத்தின் முன்னர் தமது மகளின் கருத்தை அறிந்து கொள்ள முயன்றதாகத் தகவல் இல்லை. சங்கிலியாரின் பெற்றோர் தமது மகளின் கருத்தை உசாவியபோது அப்பெண் தன் எதிர்பார்ப்பையும் தனிநபர் சுதந்திரத்தையும் எடுத்துக்கூறியதாகச்
73

Page 43
சேக்கிழார் விவரித்துள்ளார். கல்வியறிவுள்ளவர் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாத சங்கிலியார் துணிவு மிக்கவராக வாழ்ந்தார் என்றால் கல்விப் பயிற்சியுள்ள புனிதவதியாருக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைத்திருப்பின் அவர் தமது எதிர்பார்ப்பை ஆணித்தரமாகக் கூறியிருப்பார் என்பதில் ஐயமில்லை.
எனவே பெற்றோரின் ஒருதலைப்பட்ச முடிவின் விளைவாக சமயச் சார்பும் பக்தி மனப்பாங்கும் வேரூன்றிய புனிதவதிக்கும் வணிகக் கணக்கீடும் உணவுச்சுவை நாட்டமும் பேணும் பரமதத்தனுக்கும் மனப்பொருத்தம் அமைந்திருக்கும் என்று கூறஇயலாது. அவர்களிடையே காணப்பட்ட இம்மனவேறுபாடு ஒரு சம்பவத்தின்மூலம் அம்பலமாயிற்று. பரமதத்தன் தனக்குக்கிடைத்த இரு மாங்கனிகளை நண்பகலுணவோடு சுவைக்க வீட்டுக்கு அனுப்பினான். கணவன் வரவின்முன் வீட்டுக்கு வந்த சிவனடியாருக்கு விருந்துபசாரம் செய்த புனிதவதி மாங்கனிகளில் ஒன்றை உணவோடு சாப்பிட அச்சிவனடியாருக்கு வழங்கினாள்.
பரமதத்தன் நண்பகலுணவுக்காக வீட்டுக்கு வந்து உணவருந்தும் போது மாங்கனி ஒன்று குறைந்ததை அறிய நேரிட்டது. இதனையடுத்து நிகழ்ந்த சம்பவக்கூறுகள் பரமதத்தனிடம் தாழ்வுமனச்சிக்லை உருவாக்கின. பின் பரமதத்தன் தனது உட்கிடையை / இரகசியத் தீர்மானத்தை அமுலாக்கத் துணிந்து நீர் மார்க்க வணிகத்தின் நிமித்தம் புனிதவதியைப் பிரிந்து சென்றான். தென்கரைப்பட்டினம் ஒன்றில் இரண்டாவது திருமணம் செய்தான். அதன் பயனாகப் பிறந்த பெண் குழந்தைக்குப் புனிதவதி என்ற பெயரைச் சூட்டினான். பரமதத்தனின் இரகசியக் குடும்ப வாழ்வை அறிந்து கொண்ட சுற்றத்தினர் பரமதத்தனின் குடும்பத்தைப் புனிதவதியின் முன்னிலையில் நிறுத்தினர். பரமதத்தன் தனது முதல் மனைவி புனிதவதியின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அதன் காரணத்தைக் கூறும்போது முதல் மனைவி புனிதவதி ஒரு தெய்வம் என்றான்.
மனப்பொருத்தம் இல்லாத கணவனோடு வாழமுடியாது எனத்
தீர்மானித்த புனிதவதி பரமதத்தனைப் பிரிந்து சமயத் துறைக்குத் தன்னை
முழுமையாக அர்ப்பணித்தாள். இப்போது திருவாலங்காடு எனப் புகழ்ச்
சிறப்பு பெற்றுள்ளதும் அவர் காலத்தில் பொது மக்களுக்கு அச்சம்
ஊட்டியதும் ஆகிய வனப் பிரதேசத்தில் உறவினர் தொடர்பைத் துண்டித்து
இறுதிக் காலம் வரை தனிமையில் வாழ்ந்தார். அவ் வனப் பிரதேசத்தில்
74

அமைக்கப்பட்ட ஊர்த்துவ நடனசிவன் உருவத்தின் கீழ் 'கீதம் பாடும்
அம்மை” யாக அவர் தமது இறுதிக்கால வாழ்வைக் கழித்தார் என்பது
சேக்கிழார் கூறும் நவிற்சி முடிவு.
இனி புனிதவதியின் குடும்ப வாழ்க்கைத் தகவல்கள் சிலவற்றை
விமர்சிப்போம்.
புனிதவதி கடமை உணர்ச்சி மிக்கவர்.
இரக்க உணர்வுள்ளவர்.
பொறுமையிற் சிறந்தவர்.
மன்னிக்கும் இயல்பினர்.
தன்னம்பிக்கை உள்ளவர்.
அர்ப்பணிப்பு மனப்பாங்கு அமைந்தவர்.
கலையுள்ளம் படைத்தவர்.
எவருக்கும் தீமையோ சிரமமோ விளக்க விரும்பாதவர்.
தூய்மையின் உறைவிடம்.
0.
பெண்குல மாணிக்கம்.
புனிதவதியின் கடமையுணர்ச்சி வயோதிபச் சிவனடியாரை உபசரித்த முறையிலும் கணவனுக்கு உணவு பரிமாறிய பாங்கிலும் வெளிப்பட்டன. அவரின் இரக்க உணர்வு வீட்டுக்கு வந்த முதியவருக்கு அளித்த மரியாதையில் புலப்பட்டது. அவரின் பொறுமை பரமதத்தனின் நெடுங்காலப் பிரிவைச் சகித்துக் கொண்ட பாங்கில் அடங்கியுள்ளது. அவரின் மன்னிக்கும் இயல்பு கணவனைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ விரும்பாத போக்கில் வெளிப்பட்டது. அவரின் தன்னம்பிக்கை வனவாழ்வை மேற்கொண்ட செயலில் உள்ளார்ந்து காணப்பட்டது. அவரின் அர்ப்பணிப்பு மனப்பாங்கு சகல பந்தங்களையும் துறந்து கீதம் பாடும் பணிக்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்த செயலில் வெளிப்பட்டது. குடும்ப வாழ்வில் அம்பலமாகாத அவரின் கலையுள்ளம் வன வாழ்வுக் கால இசைப் பணியில் அம்பலமாகியது. அவரின் பெருந்தன்மை பரமதத்தனுக்கு எதிராக வழக்குத் தொடுக்க விரும்பாமை, பெற்றோருக்குப் பாரமாக வாழ விரும்பாமை என்பனவற்றின் மூலம் வெளிப்பட்டது. அழுக்காறு (பொறாமை), அவா (ஆசை மிகுதி), வெகுளி (கோபம்), இன்னாச் சொல் (பிறர் மனத்தைப் புண்படுத்தும் வன் சொல்) என்னும் மன அழுக்குகள் இல்லாமை அவர் தூய்மையின் உறைவிடம் என்பதை நிரூபித்தது. அவரின் வாழ்க்கை முறைகள் அவர் ஒர் இலட்சியப் பெண் அல்லது பெண் குல மாணிக்கம் என்ற நிலையை அடையத் துணை புரிந்தன. இப்போது ஒருவினா பலரின் உள்ளங்களில் உதிக்கும் இப்படி ஒரு பெண் இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா? இவ்வினாவின் முற்பகுதிக்கு
75

Page 44
விடையாக "இருக்கமுடியும்” என்ற கருத்தைப் புனிதவதி நிரூபித்துவிட்டார். அதன் விளைவாகத் தென்னாசியாவில் அவர் ஒரு தெய்வம் என்ற கணிப்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வினாவின் பிற்பகுதிக்கு விடையாக "இருபத்தோராம் நூற்றாண்டில் அப்படி இருக்க முடியாது; இருக்கவும் கூடாது” என்ற கருத்தையே முடிவாகக் கூறவேண்டும்.
இத்தகைய கருத்தை முடிபாகக் கூற ஆண்பாலாரின் எண்ணங்கள், செயல்கள், நடைமுறைகள் பலவற்றை உதாரணங்கள் மூலம் விரிவாக விளக்கலாம். சுருங்கக்கூறின் போலித்தனங்கள் நிறைந்தவர்களின் வஞ்சகச் செயல்களின் விளைவுகளிலிருந்து தம்மைக் காக்கும் தேவை இப்போது பெண்களுக்கு அதிகரித்துவிட்டது.
இறுதி விமர்சனக் குறிப்பாக ஒரு கருத்தை இப்போது தெளிவு படுத்தல் பொருத்தமெனக் கருதுகிறேன்.
列 சம்பந்தர் இறைசக்தி பார்வதியின் தெய்வீக அன்பைப் பெறும் பெரும் பாக்கியசாலியாக விளங்கியது போலப் புனிதவதி பரம்பொருள் சிவபிரானின் கருணைப் பெருக்கிற்கு ஆளாகும் நற்பேறு வாய்க்கப்பெற்றார். திருக்கயிலையை நெருங்கியதும் எதிரே வருபவர் யார் என்ற உமாதேவியின் வினாவிற்கு விடையாக 'இவள் நம்மைப் பேணும் அம்மை காண்” எனச்சிவபிரான் கூறியதைச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றின் உட்பொருள் பெண்ணினத்தை இழிவுபடுத்திய ஜைனச் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த யுகத்தில் வாழ்ந்த புனிதவதி பெண்களுக்கும் முத்தி பெறும் தகுதியுண்டு என்னும் எதிர்வாதத்தைப் போற்றிச் சைவ நெறியைப் பேணும் மதிப்புமிக்க பெண்ணே புனிதவதி எனச் சிவபிரான் பாராட்டினார் என்று கூறலாம். நம்மை’ என்பது மேல்மட்டத்தில் சிவசக்தியையும் ஆழ்மட்டத்தில் சைவநெறியையும் குறிக்கும் 'அம்மை’ என்ற சொற்பிரயோகம் 'மதிப்பிற்குரிய முதியவள்" என்ற பொருளை உணர்த்தும் கன்னடத்தில் இத்தகைய வீரசைவ மூதாட்டியை 'அவ்வை' என்று கூறும் சமய சார்பான பெயர் வழக்குள்ளது. அவ்வழக்கு 'அம்மை என்னும் தமிழ்ப்பெயர் வழக்கோடு ஒப்பிடத்தக்கது.
பெரியபுராண அன்னையர்
ஒரு பெண்ணின் வாழ்வில் மனைவி என்னும் பாத்திரமும், நிலையும் தாய்
என்னும் பாத்திரமும், நிலையும் நெருங்கிய தொடர்புடையவை. சில
சந்தர்ப்பங்களிற் பிள்ளைகளே இல்லாமல் மனைவியாக மட்டும் வாழும் நிலை
76

பெண்களுக்கு ஏற்படலாம். இந்நிலை பெண்களுக்குப் பிரச்சினைகள் பலவற்றை உருவாக்கலாம். கணவன், பிள்ளை(கள்) என்பவர்களோடு வாழும் நிலையில் பெண்கள் மனைவிக்குரிய பொறுப்புக்களையும், தாய்க்குரிய பொறுப்புக்களையும், பிற பொறுப்புக்களையும் முழுமையாக நிறைவேற்ற இயலாத சிக்கல்களைத் தீர்க்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படுதல் கூடும். இவற்றைப் பெரியபுராண உதாரணங்கள் மூலம் விளக்கலாம். சுருக்கம் கருதி ஒரு குறிப்பை மட்டும் இச்சந்தர்ப்பத்திற் கூற விரும்புகிறேன். புனிதவதி பிள்ளையே இல்லாமல் மனைவியாக மட்டும் வாழ்ந்து தனது கணவன் பரமதத்தனைப் பறிகொடுத்தார். புனிதவதி பரமதத்தனை மற்றொரு பெண்ணுக்கு விட்டுக் கொடுத்தபின் வனவாழ்வை ஏற்றுக்கொண்டமைக்கு பிள்ளை இல்லாமையும் காரணமாகலாம். ஏனைய பெண்கள் கணவனோடு மனைவியாக வாழும்போது பிள்ளை உள்ளநிலையும் பிள்ளை இல்லாத நிலையும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் அமைந்த விதம் பற்றிய விரிவான தகவல்கள் பெரியபுராணத்தில் இல்லை. இனி பெரியபுராண அன்னையர் நிலைமைகள் பற்றி ஆராய்வோம்.
கமலவதி (கி. பி. 5 ஆம் நூற்றாண்டு)
சோழன் சுபதேவனின் மனைவி கமலவதி. கோச்செங்கண்ணான் அவளின் புதல்வன். அவள் தாய்மைநிலை அடைந்ததும் ஒரு சுபமுகூர்த்தத்திலே, கருவில் வளரும்பிள்ளை பிறந்தால் அப்பிள்ளை எதிர்காலத்திற் சாதனையாளனாகப் புகழ்பெறுவான் என யாரோ ஒரு கணியன் / சோதிடன் எதிர்வு கூறினான். இந்த எதிர்வு கூறல் கமலவதி ஒரு சோதனைக்கு முகங்கொடுக்கும் பிரச்சினையை உருவாக்கியது. பிரசவம் நல்லோரையில் நிகழவேண்டும் என்பதற்காக அதனைச் செயற்கையாகக் தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனவே அவள் தலைகீழாகத் தொங்கவிடப்படும் கடுஞ்சோதனையை ஏற்க நேரிட்டது. நல்லோரையிற் பிள்ளை பிறந்தும் தாயின் இரத்த நாளங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் காரணமாக அப்பிள்ளையின் கண்கள் சிவந்தன. அந்நிலையில் கமலவதி 'என் செங்கண்ணா என்று கூறிவிட்டு உயிர் நீத்தாள் (டாக்டர் பத்மினி கபாலி - மூர்த்தி மகப்பேற்று மருத்துவ நிபுணர், 2001). மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஒளிப்படத் துணையோடு தந்த இந்த விளக்கம் தாய் என்ற நிலையில் ஒரு பெண் செய்த தியாகத்தின் சிறப்பைத் தெளிவு படுத்துகின்றது. எனினும் அவள் தலைகீழாகத் தொடங்கவிடப்படும் நடைமுறை விரும்பத்தக்கது என்றோ ஏற்புடையது என்றோ கூறமுடியாது.
இசைஞானியார் (கி. பி. 8- 9 ஆம் நூற்றாண்டு)
இசைஞானியார் சடையனாரின் மனைவி. நம்பியாரூரரின் அன்னை. அப்பிராமணப் பெண் தன் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை நிறைவேற்ற
77

Page 45
வில்லை. நரசிங்கமுனையர் என்ற சிற்றரசரின் வேண்டுகோளை ஏற்று நம்பியாரூரரை வளர்க்கும் பொறுப்பை அச்சிற்றரசருக்கு வழங்கினார். வறுமை, பிள்ளைகளின் தொகை,மிகுதி, கணவனின் நிர்ப்பந்தம் போன்ற காரணங்களில் ஒன்றோ பலவோ அவரின் செயலுக்குக் காரணமாகலாம். அவரின் செயலின் காரணம் எதுவாக இருந்தாலும் அந்நியன் ஒருவனுக்குத் தன் பிள்ளையை வழங்கிய செயல் நம்பியாரூரனின் ஆளுமை விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியது என்ற உண்மை சுந்தரர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் மூலம் புலப்படுகின்றது.
திருவெண்காட்டு நங்கை (கி. பி. 7 ஆம் நூற்றாண்டு)
திருவெண்காட்டு நங்கை பல்லவச்சேனாபதி பரஞ்சோதியின் சிறுத்தொண்டரின் மனைவி. அப்பெண்ணின் இயற்பெயர் தெரியவில்லை. அக்தம்பதிகளின் ஒரே பிள்ளை சீராளன்,சீராளதேவன். அவர்கள் திருச்செங்காட்டங்குடியில் வாழும்போது பைரவ அடியாரின் வேண்டுகோளை ஏற்று பிoi ளைக் கறியோடு அந்த விரதிக்கு விருந்தளிக்கச் சீராளனைக் கூட்டாக வெட்டிக் கொன்றனர். காபாலிகம், காளாமுகம், பைரவம் போன்ற கொடுஞ் சமயப் பிரிவுகள் நரபலி, நரமாமிச உணவு, போதைக் குடிப்பழக்கம் என்பவற்றை வளர்த்தன. இத்தகைய கொடுஞ் சமய வழக்கங்கள் திருவெண்காட்டு நங்கையின் செயலுக்குக் காரணம் என விளக்கலாம். ஆயின் அக்காரண விளக்கம் பிள்ளையை வளர்க்கும் பொறுப்பைப் பலி கொடுத்தமை, பிள்ளையின் உரிமைகளை மீறியமை ஆகிய குற்றங்களைத் திருவெண்காட்டு நங்கையும் பரஞ்சோதியும் இணைந்து செய்த கொடுரம் மன்னிக்க முடியாததாகும்.
கோட்புலியின் வெறிக்கு இரையான தாயும் சிசுவும் (கி. பி. 8 ஆம் நூற்றாண்டு)
கோட்புலி (சிறுத்தை போன்ற மூர்க்கன்) ஒரு வேளாளர்; போர்க் காலங்களில் வேந்தர்க்காகப் பணிபுரியும் துணைப்படை வீரர். ஒருமுறை போர்ப்பணி புரியச் செல்லுமுன் தமது உறவினர்களை அழைத்து "அமுதபடி” என அதாவது இறைவனுக்காகச் சேமித்த நெற் களஞ்சியத்தை யாரும் பயன்படுத்தலாகாது என்று எச்சரித்து விட்டுப் புறப்பட்டார். அப்போது 'இறைவன்மேல் ஆணை’ என்ற தடைப்பிரயோகத்தைக் குறிக்கும் 'திருவிரையாக்கலி" என்னும் தொடரைக் கூறியதைச் சேக்கிழார் பின்வருமாறு பாடியுள்ளார்.
தந்தமர்கள் ஆயினார் தமக்கெல்லாம் தனித்தனியே எந்தையார்க்கு அமுடிபடிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
78.

சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையாக்கலி என்று வந்தனையால் உரைத்தகன்றார் மன்னவன் மாற்றார்முனைமேல்”
UT - 6.
அவர் புறப்பட்ட பின் திருநாட்டியத்தான்குடி என்ற அவ்வூரிற் பஞ்சம் ஏற்பட்டது. அதனைத் தாங்கும் எல்லை கடந்ததும் யாவரும் நெற்கூடுகளைப் பிரித்து பஞ்சப் பசிக் கொடுமையைத் தீர்த்தனர். நெற் களஞ்சியத்தைப் பின்னர் நிரம்பத் தீர்மானித்தனர். போர்ப்பணி முடிந்து ஊர் திரும்பியதும் கோட்புலி சுற்றத்தாரின் செயலை அறிந்து கொண்டார்.
அவர் பைந்துகிலும் நிதியும் வழங்கும் வைபவத்திற்கு வருமாறு தமர் சிலர் மூலம் சுற்றத்தார்க்கு அழைப்பு விடுத்தார். கோட்புலியின் உள்நோக்கத்தை அறியாத சுற்றத்தார் அவரின் "சுடர்மணி மாளிகை" யை அடைந்ததும் ஒருவரும் தப்பிச்செல்லாத நிலையை உருவாக்கி அனைவரையும் வாளால் வெட்டிக் கொன்றார். அவர் வெட்டிக் கொன்ற சுற்றத்தாரில் ஒரு தாயும் கைக்குழந்தையும் அடங்கினர். முதலில் அங்குள்ளார் தடுக்கவும் அடங்காத கோட்புலி கோபவெறியோடு அப்பெண்ணை வெட்டிச் சாய்த்தார். அடுத்து அத்தாய் பெற்ற சிசுவை அவர் கொல்லக் கைப்பற்றியதும் சுற்றத்தார் சிலர் அஞ்சி நடுநடுங்கி ஒரு பாவமும் செய்யாத அச்சிசுவைக் கொல்ல வேண்டாம் எனக் கெஞ்சினர். அப்போது கோட்புலி திருட்டுக்குற்றம் புரிந்த தாயின் முலைப்பாலைக் குடிக்கும் சிசுவும் குற்றவாளி என்று பதில் இறுத்தார். அடுத்து அவர் அச்சிசுவை மேலே வீசினார். கீழே விழத்தொடங்கிய சிசுவை ஒரே வாள்வீச்சில் இரு துண்டுகளாக வெட்டினார். வீழ்ந்து வரும் இரு துண்டுகளையும் கைகளில் ஏந்தினார். கோட்புலியின் கொடுர வாள்வீச்சின் நிலைகளைச் சேக்கிழார்,
fe
இந் நெல்லுண் டாள்முலைப்பால் உண்டதென எடுத்தெறிந்து
மின்னல்ல வடிவாளால் இருதுணிவாய் விழ ஏற்றார்” (பா-10) கோட்புலியின் விதண்டாவாதச் சொல்லும் சிசுக்கொலையின் துணுக்கமும் கொடுமையின் சிகரமாகும்.
இப்போது கோட்புலியின் கொடுமையைத் தீர்க்கமாகப் பரிசீலித்து விமர்சிப்போம். கோட்புலி (1) மனிதாபிமானம் அல்லது மானிட நேயம் இல்லாதவர். (2) பிறரின் கருத்துச் சுதந்திரத்தை மதியாதவர். (3) தாயின் குழந்தை வளர்ப்புக் கடப்பாட்டை மதியாதவர்.
79

Page 46
(4) குழைந்தையின் வாழ்வுரிமையைப் பறித்தவர்.
(5) ஒரு சிசு செய்யாத குற்றத்தைச் செய்ததாகக்கூறி நீதி முறைமையை அத்து
மீறிய குற்றவாளி.
இவை அவர் கொடுமையின் சிகரம் என்று கூறப்போதுமான கருத்துக்களாகும்.
கோட்புலி சுற்றத்தாரை மன்னித்திருப்பின் மதிக்கத்தக்க மனிதர் என்ற சிறப்பைப் பெற்றிருப்பார். அதற்கும் ஒரு படிமேலே சென்று உறவினர்களை அழைத்தும் பைந்துகிலும் நிதியும் வழங்கியிருப்பின் அவரின் மதிப்பு மேலும் உயர்ந்திருக்கும். தமக்கு முன் வாழ்ந்த சம்பந்தரும் - அப்பரும் திருவீழிமிழலை மக்களின் பஞ்சக் கொடுமை தீரும் வரையில் தலயாத்திரையை இடைநிறுத்திப் படிக் காசு பெற்று சமுதாயப் பணிபுரிந்தது போலத் தாமும் பணிபுரிய முடியவில்லையே என்று சொல்லிவிட்டு கோட்புலி துகிலும் நிதியும் வழங்கியிருப்பின் அவரின் மதிப்பு இன்னுமொருபடி உயர்ந்திருக்கும். சம்பந்தர் சீர்காழிக் குளக்கரையில் அழுதபோது பாலூட்டிய உமையம்மையின் தாயுள்ளத்தை நினைவு கூர்ந்து கோட்புலி கைக்குழந்தையோடு வந்த தாய்க்கு அதிக தானம் வழங்கியிருப்பின் அவர் பெண் குலம் மதிக்கும் பெருமையைப்பெற்று மேலும் உயர்ந்திருப்பார். சிவபிரான் தாய்ப் பன்றியை இழந்த அநாதைப் பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டும் தாய்ப் பன்றி வடிவம் தாங்கினார். என்பதை நினைவு கூர்ந்து கோட்புலி பசிக் கொடுமை தீர்த்தலே பரமனுக்கு ஆனந்தம் அளிக்கும் பரமாநந்தப் பணி என்னும் தெளிவு பெற்று சுற்றத்தாரோடு மற்றவர்களையும் ஒருங்கே கூட்டி சமூகப்பணி புரிந்திருப்பின் அவர் மனித நேயம் மிக்க பெருந்தகை என்ற உன்னத நிலையை அடைந்திருப்பார். சைவப்பனுவல்கள் கூறும், முற்குறிப்பிட்ட சம்பவங்களில் உள்ளார்ந்து காணப்படும் அளவுகோல்களில் அல்லது நியமங்களில் எதனையும் அடையத் தவறிய கோட்புலியைக் கொடுமையின் சிகரம் எனக் கூறல் பொருத்தமேயாகும்.
கோட்புலியின் கொடூரத்தைப் பரிசீலித்து விமர்சிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. பஞ்சாப் மாகாணத்தில் ஜாலியன் வாலா பாக் என்னும் இடத்தில் தேசியத் தலைவர்களின் உரைகளைக் கேட்கத் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் எவரும் தப்பிச் செல்லலாகாது என்ற தீர்மானத்தோடு படைத்தளபதி டயர் (General Tyre) என்பவன் படுகொலை புரிந்தான் என்பது இந்திய சுதந்திரப் போராட்டக் காலச் சம்பவம் டயர் என்பவன் தன் மேலதிகாரிகளின் கட்டளைக்கு இணங்க மக்கள் கூட்டத்தைக் கொன்றொழித்தான். ஆனால் கோட்புலி அரசகட்டளைக்கு
80

இணங்கவோ சுதந்திர வேட்கைக்காகவோ சுற்றத்தாரைக் கொன்றொழிக்கவில்லை. பசிக் கொடுமையைத் தீர்த்தமைக்காகவே படுகொலை புரிந்தார். எனவே கோட்புலி டயரினும் கொடிய மூர்க்கர்; அடிப்படை மனித உரிமைகளை அத்துமீறிய மனித மிருகம் என்று முடிவாகக் கூறுவதில் தவறில்லை.
பெரியபுராண விதவைகள்
திருமண வாழ்வை மேற்கொள்ளும் பெண்கள் கணவன் இறந்தும் உடன் கட்டையேறும் வழக்கம் வடபாரதத்திலும் தென்பாரதத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட முறைகளின் வேறுபாடுகள் பற்றிய சுருக்கமான விமர்சனம் இவ்வாய்வுரையின் அறிமுகத்தில் தரப்பட்டுள்ளது. அவ்வேறுபாடுகள் பெரியபுராண விதவைகளின் வாழ்க்கை வரலாற்றில் எவ்வாறு புலப்படுகின்றன என்பதை இனிப் பரிசீலிப்போம்.
ஒருபெண் விதவையானால் உடன்கட்டையேறலின் மாற்று வழக்கங்களாக (1) கைம்மை நோன்பு வாழ்வு (2) மறுமணம் செய்தல் (3) இறந்த கணவனை உயிர்ப்பித்தல் என்பன அனுசரிக்கப்பட்டன." இவை தவிரக் கணவன் இறந்து விட்டானா; உயிரோடு வாழ்கிறானா என்பதை அறிந்து கொள்ள முடியாத நிலையும் பெண்களுக்கு ஏற்பட்டதுண்டு. இத்தகைய விதவை நிலை நுட்பங்கள் பற்றிப் பெரியபுராணப் பெண்கள் தொடர்பான தகவல்கள் உணர்த்தும் உண்மைகளை இனிபரிசீலிப்போம்.
மாதினி (கி. பி. 7 ஆம் நூற்றாண்டு)
மாதினி (இனிய சுபாவமுள்ளவன்) புகழனார் என்னும் செல்வ வேளாளரின் மனைவி, மருள்நீக்கியார், திலகவதியார் என்னும் இரு பிள்ளைகளின் தாய். கலிப்பகை என்னும் இளைஞருக்கும் திலகவதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்ததும் மணவினை நிறைவேறுவதற்கு முன் கலிப்பகை தமது கால மன்னன் ஆணைக்கு இணங்கப் போர்புரியச் சென்று வீர சொர்க்கம் அடைந்தார். ஏறத்தாழ அதே ஆண்டில் புகழனார் நோய் காரணமாக இறந்தார். இந்நிலையில் மாதினியார் “உடன் உயிர்நீர்த்தார்.”
சேக்கிழார் மாதினியார் உடன் உயிர் நீத்த செயலை “கற்புநெறி வழுவாமற் கணவனாருடன் சென்றார்"திருநாவுக்கரசர் புராணம்பாட்டு 28 எனக் குறிப்பிட்டுள்ளார். கணவனாருடன் சென்றார்’ என்ற தொடர் சதி (SAT) அல்லது உடன்கட்டை ஏறல் ஆகிய வழக்கத்தைக் குறிப்பதாக டாக்டர் மா. இராச மாணிக்கனார் விமர்சித்துள்ளார். ஆயின் பெரிய புராண உரையாசிரியர்களான
8

Page 47
ப. இராமநாதபிள்ளை, இராமசாமிப்புலவர், கழகப்புலவர்கள் முற்கூறிய விமர்சனக் கருத்து தவறானதென மறைமுகமாகச் சாடியுள்ளனர். அவ்வுரையாசிரியர்களின் விளக்கம் பின்வருமாறு காணப்படுகின்றது:
"புகழனார் பிணியுழந்து விண்ணுலகிற் சென்றடைந்தார் மாதினியாரும் உடனுயிர் நீந்தார். உடனுயிர் நீத்தல் என்பது ஏக்கத்தால் உயிர் தாமாகவே நீங்குதல். இவ்வுண்மை யறியும் இயல்பிலாதார் உடன்கட்டை ஏறினர் என்பர். அவ்வாறு சேக்கிழார் பெருமான் கூறியருளவில்லை. தந்தையார்க்கும் தாயாருக்கும் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்தனர். ' பக்கம் 244
கழகப்புலவர்கள் கூறிய விளக்கம் ஏற்கத்தக்கது. அதற்குப் பின்வரும் விமர்சனக் குறிப்புக்கள் துணைபுரியும்.
(1) உடன்கட்டையேறல் என்பது ஒரு சடங்கு. அதனை அமுல்செய்வதாயின் மனைவி உயிரோடு இருக்கும் கடைசித் தருணத்தில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். திலகவதியும் ஏயர்கோன் கலிக்காமர் மனைவியும் அச்சடங்கு தொடர்பான முன்னேற்பாடுகள் செய்ததாகக் கூறும் சேக்கிழார் மாதினி உயிரோடு வாழும் கடைசிக் கட்டத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறவில்லை “கணவனாருடன் சென்றார்” என்று மட்டும்
கூறியுள்ளார்.
(2) "கணவனாருடன் சென்றார்” என்ற தொடரில் உள்ள 'உடன்' ஆகிய மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபிற்குப் பதிலாக 'ஓடு ஆகிய உருபைச் சேர்த்துக் கொண்டால் 'கணவனாரோடு சென்றார்” என்னும் மாற்றுத் தொடர் தோன்றும். இத்தொடர் வடிவம் உடன் கட்டையேறல்’ என்னும் சிந்தனைக் கூற்றை வெளிப்படுத்தவில்லை. மேலும் ஒடு/உடன் என்ற உருபு உடனிகழ்ச்சிப் பொருளை உணர்த்தும் என்னும் இலக்கணச் சிந்தனையை நினைவுகூர்ந்தால், புகழனாரின் உயிர் உட நிலை விட்டுச் செல்லல், மாதினியின் உயிர் உடலைப் பிரிந்து செல்லல் என்பன சமநேர நிகழ்வுகள் என்ற விளக்கத்தெளிவு கிடைக்கும். அடுத்து இவ்வாறு மாதினியின் உயிர்பிரிந்ததன் காரணம் என்ன என்பது சிந்திக்கதக்கது. ஏக்கம் நீண்டகாலம் இருக்கக் கூடியது. அதிர்ச்சி தந்த திடீர்மரணம். மார்படைப்பினால் நேரிட்ட திடீர் மரணம் என்னும் காரணவிளக்கம் பொருத்தமாயிருக்கும். தொகுத்துக் கூறின் மாதினி உடன்கட்டை ஏறவில்லை என்பதே ஏற்கத்தக்க முடிபாகும்.
82

திலகவதி (கி. பி. 7 ஆம் நூற்றாண்டு)
திலகவதி புகழனார் - மாதினியார் தம்பதிகளின் செல்வமகள். கணவனாக நிச்சயிக்கப்பட்ட கலிப்பகை வீரமரணம் அடைந்ததும் அப்பெண் தன்னை ஒரு விதவையாகக் கருதினார். உடன் கட்டையேறும் சடங்கு தொடர்பான முன்னேற்பாடுகளைச் செய்தார். அப்போது அவரின் தம்பி மருள்நீக்கியார் பெற்றோர் இருவரையும் இழந்ததோடு தமக்கையையும் இழக்க நேரிட்டால் அநாதையாகும் தமது அவல நிலையை விளக்கி உடன்கட்டையேறும் தீர்மானத்தைக் கைவிடுமாறு வேண்டினார். திலகவதி தன்தம்பியை வளர்க்கும் பொறுப்பை ஏற்று கைம்மை நோன்பு வாழ்வை மேற்கொண்டார். திலகவதியின் பொறுப்புணர்ச்சி மருள்நீக்கியாரது வாழ்வின் இடையில் நிகழ்ந்த திகம்பர சமணச் சார்பை விலக்கிச் சைவநெறியில் முன்னேறத் துணைபுரியும் வகையில் அமைந்தது. ஒவ்வொரு ஆணின் வளர்ச்சியிலும் சாதனைகளிலும் ஒரு பெண் பக்கத்துணையாக இருப்பாள் என்ற கருத்து பலராலும் அழுத்திக் கூறப்படுகின்றது. மருள்நீக்கியார் வாகீசர், அப்பர் என்னும் பெயர்களை நிலை நாட்டிச் சாதனைகள் புரியப் பக்கபலமாக விளங்கியவர் திலகவதி என்பதிற் கருத்துவேறுபாட்டுக்கு இடமேயில்லை. திலகவதியின் கைம்மை வாழ்வுப் பணிகள் தொடர்பாகப் பின்வரும் விமர்சனக் கருத்துக்கள் வரிசைப் படுத்தப்படுகின்றன: 1. திலகவதி தொண்டுவாழ்வின் முன்மாதிரி அவரின் சமயத்தொண்டுகள் வாகீசரின் சரியை மார்க்கப் பணிகளுக்கு முன்மாதிரியாகவும் உந்துசக்தியாகவும் விளங்கின. 2. திலகவதி செல்வக் குடும்பத்திற் பிறந்தாலும் குடும்பச் சொத்தை தமது வாழ்வுக்குப் பயன்படுத்தவில்லை. தமது சொந்தப் பணிகளான மாலை கட்டுதல், அலகிடல் போன்றன மூலம் கிடைத்த வாழ்க்கை வசதிகளைப் பெற்று எளிய வாழ்வு வாழ்ந்தார். 3. திலகவதி பல்லவர் ஆள்புலத்திற் சைவ மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மங்கையர்க்கரசி /மானி பாண்டியர் ஆள்புலத்தில் சைவ மறுமலர்ச்சிக்குப் புரிந்த சேவையினும் ஒரு படி உயர்ந்தது. குலச்சிறையின் ஆதரவு, பாண்டிமாதேவி என்னும் பதவி நிலைச் செல்வாக்கு, சோழர்குலப் பாரம்பரியம், சம்பந்தரின் துணை என்னும் சாதகமான காரணிகள் மானியின் சைவ மறுமலர்ச்சி முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன. ஆயின் ஒரு விதவைக்குரிய கட்டுப்பாடுகள் நிறைந்த கன்னிமட வாழ்வை ஏற்று பாதகமான காரணிகளின் விளைவுகளைப் பொருட்படுத்தாது தம்பி மூலம் சைவசமய மறுமலர்ச்சியை நனவாக்கிய திலகவதியின் அடக்கமான பணி மானியின் பணியைவிட மேலானது என்பதில் ஐயமில்லை. 4. மானியின் வரலாற்றை நவில ஒரு தனிப்பிரிவையே ஒதுக்கிய சேக்கிழார் திலகவதியின் வரலாற்றைத் தனிப்பிரிவில் விவரிக்கத் தவறிவிட்டார். மேலும்
83

Page 48
திருநாவுக்கரசர் வரலாற்றுப் பிரிவிலும் திலகவதியின் பிற்கால வாழ்வு
பற்றியோ இறுதிக் கால வாழ்க்கைக் கூறுகள் பற்றியோ சேக்கிழார்
விவரிக்கவில்லை. 5. ஆயினும் வடமொழி மூலங்கள் சில, திலகவதி பற்றிப் பின்வரும்
தகவல்களைத் தந்துள்ளன:
(அ) திலகவதி தமது தம்பி தருமசேனர்’ என்ற பெயரில் திகம்பர ஜைனப் பிரிவின் சேனகணப் பதவி நிலை வகித்த போது மீண்டும் அவர் சைவநெறியில் வாழவேண்டும் என்ற விண்ணப்பத்தைச் சிவபிரானிடம் உரைத்த போது வடமொழிமந்திரம் ஒன்றை உச்சாடனம் செய்தார். அம் மந்திரம் பின்வரும் ஒலி வடிவில் தரப்படுகின்றது. "நமசிவாய த்ரிதசார்திஹாய, நமசிவாய த்ரிபுராந்தகாய, நமசிவாய த்ரிலோசனாய, நமசிவாய ப்ரணதார்தி ஹந்த்ரே."
(திரிதசார்த்திகரரான சிவனுக்கு வணக்கம் முப்புரங்களை அழித்தவரான சிவனுக்கு வணக்கம் முக்கண்ணரான சிவனுக்கு வணக்கம், பிராணதார்த்தி ஹந்தரரான சிவனுக்கு வணக்கம்)
(ஆ) அப்பர் தமது இறுதிக்கால வாழ்வுக் கட்டத்தில் திருப்புகலூரில் தங்கியபோது திலகவதி மண்ணுலக உடல் வாழ்வை நீத்தார். அத்துயரச் செய்தியைக் கேள்வியுற்று அப்பர் வருந்தியபோது சிவபிரான் பிராமணக் கோலத்திற் சென்று ஆறுதல் கூறினார். இத்தகவல்கள் இரண்டும் தொடர்பாகக் கூறப்படும் பின்வரும் விமர்சனக் குறிப்புக்கள் திலகவதியின் மதிப்புநிலையைத் தெளிவுபடுத்தும்.
விமர்சனக் குறிப்பு-1 திலகவதி முறைசாராக் கல்வி மூலம் வடமொழி மந்திர உச்சாடனத் தேர்ச்சி பெற்றிருந்தார். கன்னிமடப் பெண் என்ற நிலையில் தம்பியின் வாழ்வை நெறிப்படுத்தும் பொறுப்புணர்ச்சியை அல்லது கடப்பாட்டை நிறைவேற்ற இறை நம்பிக்கை உதவியது.
விமர்சனக் குறிப்பு - 2 திலகவதியின் தொண்டுக்குக் கிடைத்த மதிப்பு இறுதிக்காலம் வரை நீடித்தது. அவர் தன்னம்பிக்கையோடு இறுதிவரை தனிவாழ்வு நடத்திய தீரம் சைவ
84

சமூகத்தின் உயர் மட்டத்தினரின் கணிப்பைப் பெற்றது. புகழ் நாட்டம் இல்லாமல் தொண்டு புரிந்த திலகவதி (மங்கலப் பெண்) பெண்ணினத்தின் துருவநட்சத்திரம்.
ஏயர்கோன் கலிக்காமர் மனைவி (கி. பி. 8/9 ஆம் நூற்றாண்டு)
சுந்தரர் சங்கிலியாருக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டு பரவையாரோடு வாழவந்தபோது பரவையாரின் கடுஞ் சீற்றத்துக்கு ஆளானார். அச்சந்தர்ப்பத்திற் சுந்தரர் சிவபிரானைத் தூதராகப் பரவையாரிடம் அனுப்பியது கெளரவச் செயல் எனக் கருதிய கலிக்காமர் தமது இல்லத்திற்கு வரும் சுந்தரரைச் சந்திக்க விரும்பாமல் தற்கொலை செய்தார். இதனையடுத்து கலிக்காமரின் மனைவி உடன்கட்டை ஏறுதலுக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்தார். அந்த ஏற்பாடுகளுக்கு இணங்க அவர் உடன் கட்டையேறலை நிறைவேற்றுவதன் முன் சுந்தரர் அவரின் இல்லத்திற்குச் சென்றார். உடன்கட்டையேறல் தாமதமாயிற்று அடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் பயனாக கலிக்காமர் உயிர்த்தெழுந்தமையால் 'உடன் கட்டையேறல் கைவிடப்பட்டது.
இச்சம்பவநவிற்சி கலிக்காமரின் மனைவி சமய, சமூக வழக்கத்தின் தாக்கத்தினால் சிந்தனைச் சுதந்திரம் இழந்தவர் என்ற உண்மையை உணர்த்துகின்றது.
நம்பியாண்டார் நம்பி நவின்ற சங்கிலியார்
சங்கிலியார் வாழ்வு பற்றிச் சேக்கிழார் கூறும்போது பெற்றோர் தெரிவு செய்த ஆடவனைத் திருமணம் செய்ய மறுத்துப் பிரிந்து சென்றமையே திருவொற்றியூர்க் கன்னி மடத்தில் வசித்ததன் காரணம் என நவின்றுள்ளார். ஆனால் சேக்கிழாரின் பெரியபுராண மூலங்களில் ஒன்றான திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றிய நம்பியாண்டார் நம்பி (இராஜராஜன் 1 காலம் கி.பி. 985-1014) கணவன் இறந்ததன் காரணமாக அவர் அக்கன்னிமடத்தில் விதவையாக வாழ்ந்ததாகவும் திருவொற்றியூர் சென்றபோது சுந்தரர் ஊரார் நகைக்கும் வண்ணம் விதவை சங்கிலியை மணம் புரிந்ததாகவும் பாடியுள்ளார்.
"தகுமகள் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலினால் ஒற்றியூர் உறையுண்ணியன்தன் மிகுமலர்ப் பாதம் பணிந்து அருளால்இவ் வியனுலகம் நகும்வழக்கே நன்மை யாப்புணர்ந் தான் நாவலூர் அரசே”
LVIT - 69.

Page 49
சேக்கிழார் - நம்பி தகவல் வேறுபாட்டை விமர்சிக்கும் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தர் கூறுவன:
'நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரர் சொல்லாத, சேக்கிழாரும் ஏற்றுக்கொள்ளாத பல செய்திகள் உள்ளன. உதாரணமாக இரண்டை மட்டும் காணலாம்." (பெரியபுராணம் - ஓர் ஆய்வு, ப. 105)
"அடுத்து 69 ஆம் பாடலில் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் கூறுகிறார் நம்பி சங்கிலியாரை மணம் பேசி வந்தவன் இறந்துவிட்டானாகவின் அவர் கன்னிமாடத்திருந்தார். திலகவதியார் வரலாற்றை நினைவிற் கொண்ட நம்பிகள் மனம்பேசியவன் இறந்து விட்டமையின் சங்கிலியாரை மங்கலதாண் இழந்தவர் என்று Lin (6)6.psi." Z laš – 105.
'இவ்விரண்டு செய்திகளும் அன்று நாட்டார் நாவில் இடம்பெற்றவை என நம்பியாண்டார் நம்பி அவற்றைத்
தம்பாடலில் கூறினார். ஆனால் சேக்கிழார் இவற்றை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே இச் செய்திகளைப் LITLIrloai) afll (6)a»î7 L/r/i” மேலது. பக் 105
பேராசிரியர் அ. ச. ஞா. இன் கருத்துக்களை இப்போது விமர்சிப்போம். சங்கிலியின் கன்னிமட வாழ்வுக் காலத்தில் நிகழ்ந்த திருமணம் பற்றிச் சுந்தரர் சொல்லவில்லையே என்ற கருத்தை நோக்குவோம். ஊரார் நகைக்கும் வண்ணம் ஒரு பரத்தையை அல்லது ஒரு விதவையை மணம் செய்ததும் அதனால் விளையும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் ஒருவன் அவளைப் புறக்கணித்துவிட்டு/பிரிந்து செல்லல் நிகழக்கூடிய சம்பவமேயாகும். உதாரணமாகக் கோவலன் மாதவியை இரண்டாம் தாரமாக ஏற்று, அவளோடு வாழ்ந்து மணிமேகலை என்னும் பெண்ணுக்குத் தந்தையானான். பின்னர் மாதவியின் விசுவாசத்தில் சந்தேகம் கொண்டு அவளைப் பிரிந்து தன் முதல் மனைவி கண்ணகியிடம் சென்றான். வறுமை, அவமானம் என்பன காரணமாகக் கண்ணகியோடு மதுரை சென்றான். சுந்தரரின் நிலையும் ஏறத்தாழ இது போன்றதுதான். சங்கலி மீது உண்டான கவர்ச்சிமயக்கத்தினால் இரண்டாம் தாரமாக அவளை ஏற்று "மோகவாழ்வு அல்லது ‘ஆசைவாழ்வு' நடத்திய சுந்தரர் வறுமை, ஊரார் ஏச்சின் அவமானம் என்ப வற்றைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையற்று அவளைப் பிரிந்து பரவையாரிடம் செல்லுதல் நம்பத்தக்க தகவலேயாகும். ஆயின், சுயகெளரவக் குறைவு தரும் இச்செய்தியைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையிற் சொல்லாதது புரிந்துகொள்ளத்தக்க தகவல் இருட்டடிப் பேயாகும்.

சேக்கிழார் சுந்தரரின் இரண்டாந்தாரம் பற்றி நம்பி கூறிய தகவலைத் திருத்தொண்டர் திருவந்தாதிமூலம் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அத்தகவலின் வலராற்றுண்மையைச் சேக்கிழார் அறிந்திருப்பினும் தமது சமயக்குறிக்கோள்களுக்கு விதவையின் மறுமணம் ஏற்புடையதாகாது என்று தீர்மானித்து வேறுபட்ட முறையில் கதை நவிற்சியைப் பாடியிருக்கலாம்.
அடுத்து நமது உள்ளத்தைக் குடையும் வினா ஒன்றைப் பரிசீலிப்போம் நம்பி சங்கிலியார் சுந்தரர் திருமணம் விதவையின் மறுமணம் எனக் கூறியது ஏன்? இதன் முக்கியத்துவம் என்ன?
நாட்டார் வழக்கில் சங்கிலியார் விதவை என்ற தகவல் காணப்பட்டமையால் நம்பி தமது அந்தாதியில் அதனைக் குறிப்பிட்டுள்ளார் என்ற விளக்கம் ஏற்கத் தக்கது அடுத்து அதன் முக்கியத்துவம், அம்முக்கியத்துவத்தை நம்பி அறிந்திருக்கக் கூடியவிதம் என்பவற்றை நுணுக்கமாக விமர்சிப்போம்.
பெண்னகளின் அந்தஸ்த்து / மதிப்பு நிலை பற்றி வரலாற்று நோக்கில் ஆராய்ந்த பேராசிரியர் என். எல். குப்தா வேத காலத்தில் விதவையர் மறுமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டதே தவிர விதவையர் தகனம் ஏற்கப்படவும் இல்லை. விதந்து கூறப்படவும் இல்லை என்று கூறியுள்ளார். இருக்கு வேதத்தில் விதிக்கப்பட்ட அறிவுறுத்தலின் பாடபேதமே விதவையர் மறுமணம் புறக்கணிக்கப்பட்டதன் காரணம் என்று வாதமிடும் குப்தா அவர்கள் திருத்தமான பாடவடிவம் பற்றிய தெளிவையும் வழங்கியுள்ளார். வடமொழிப்புலமை உள்ளோர் புரிந்துகொள்ளக் கூடிய முறையில் குப்தா தரும் விளக்கத்தெளிவு காணப்படுகின்றது. அதற்கு நிகராகக் கூறக்கூடிய தமிழ்ப் பாட வடிவத்திருத்தம் சார்பான சிந்தனையை இப்போது கூறுதல் பொருத்தமாகும். "ஈன்றுபுறந்தருதல்” என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் வரும்.
'நன்னடைநல்கல் வேந்தற்குக் கடனே' என்ற அடியின் திருத்தமான வடிவம் 'தண்டனை நல்கல் வேந்தற்குக் கடனே" என்று பேரறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை கூறி அது தொடர்பாகத் தரும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. மேலும் 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்" என்ற உலகநீதிக் கூற்றை ஒருவர் 'ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டு)ம்" என ஒரெழுத்து மாற்றத்தோடு எழுதவோ சொல்லவோ நேரிட்டால் ஏற்படும் கருத்து முரண்பாட்டைத் தீர்க்கத்திருத்தமான பாடவடிவம் அவசியம் அல்லவா! திருத்தமான பாடவடிவம், திருத்தமில்லாப் பாடவடிவம் என்பன தமிழிலக்கியத்துறையில்
87

Page 50
எத்தகைய கருத்துப் பிறழ்ச்சியை விளக்கமுடியுமோ அத்தகைய கருத்துப்பிறழ்ச்சியைத்தான் வடமொழியிலக்கியத்துறையில் உள்ள பாடவேறுபாடுகள் விளக்கியுள்ளன. எனவே பேராசிரியர் என். எல். குப்தா தரும் விதவையர் மறுமணக் கொள்கை வாதம் ஏற்கத்தக்கதேயாகும்.
நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் வாழ்ந்த அந்தணர். அவர் செல்லரித்த ஏடுகள் தவிர எஞ்சிய திருப்பதிக ஏடுகளைத் திருத்தமாகப் புதிய ஏட்டுச்சுவடிகளில் எழுதித் தொகுக்கும் இலக்கியப் பணியில் ஈடுபட்ட தமிழ் வியாசர். அத்தகைய நம்பி வேதக்கல்வியில் பயிற்சி பெற்ற காலத்தில் குப்தா கூறும் திருத்தமான பாடவடிவம் கொண்ட இருக்கு வேத பாகங்களைக் கற்று விதவையர் மறுமணக் கொள்கையைப் புரிந்திருத்தல் சாத்தியமேயாகும். எனவே இத்தகைய மனப்போக்கு அமைந்த நம்பி சுந்தரர் - விதவை சங்கிலியார் திருமணம் உண்மை நிகழ்ச்சி எனக் கருதித் தமது அந்தாதியில் அத்தகவலைச் சேர்ந்திருக்கலாம்.
அக்கொள்கையின் அடிப்படையில் நோக்கும் போது பெரியபுரானப் பெண்களில், மறுமணம் செய்யும் பெண்ணுரிமையைச் செயலிற் காட்டிய ஒரேயொரு பெண் சங்கிலியார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
வைப்பூர் தாமனின் ஏழாம்பெண் (கி. பி. 7ஆம் நூற்றாண்டு)
வைப்பூரில் வாழ்ந்த வணிகன் தாமன் ஒரு பேராசைக்காரன். அவனுக்கு ஏழு பெண்கள் இருந்தனர். அவன் தனது உறவினனான ஏழை மருமகனுக்கு ஏழு பெண்களில் எவரையும் மணஞ்செய்து கொடுக்க விருப்பமில்லை. காரணம் பெண்ணுக்கு ஈடாகப் பரிசம் கொடுக்க அவனிடம் பெருநிதி இருக்கவில்லை. இவ்வுண்மை நிலையை அறிந்த தாமன் அடுத்த மகளை’ மண முடித்துத் தருவதாகப் பொய் வாக்குறுதி வழங்கி அதிக நிதி தந்த பிற ஆடவருக்கு ஆறு பெண்களைத் திருமணம் செய்து கொடுத்தான். தாமனின் பேராசை, ஏமாற்றுப் போக்கு என்பவற்றை வெறுத்த ஏழாம் மகள் தந்தைக்குச் சொல்லாமல் தன் மைத்துனனோடு ஊரைவிட்டே ஓடிவிட்டான். இது சங்ககால அகத்தினை மரபில் கூறப்படும் உடன் போக்கு' என்ற வழக்கத்தைச் சார்ந்த செயல்.
தாமனின் ஏழாம் மகளும் அவள் கணவனும் நிரந்தர வாழ்விடம் ஒன்றை நாடிச் செல்லும் வழியில் திருமருகலில்" அவள் கணவன் பாம்பு தீண்டி இறந்து விட்டான். அவள் விதவையானதும் கணவனோடு உடன் கட்டையேறுவதற்குப் பதிலாகச் சம்பந்தரின் அருந்துணையைப் பெற்று மாண்டவனை மீண்டெழச் செய்யமுடியும் என உறுதி பூண்டாள். சம்பந்தர் மீது அவள் பூண்ட நம்பிக்கையுறுதி
88

வீண்போகவில்லை. இறந்த வணிக இளைஞன் உயிர்த்தெழுந்தான். இருவரும் சம்பந்தர் மீது நன்றி பாராட்டினர். முற்கூறிய தாமன் மகளின் வரலாற்றுச் சம்பவம் பெண்ணிலை பற்றிப் புலப்படுத்தும் கருத்துக்களைப் பரிசீலிப்போம். தாமனின் ஏழாவது மகள் ஒரு பெண். (அ) தனக்குப் பிடித்த ஆடவனைக் கணவனாகத் தெரிவு செய்யும் உரிமை; (ஆ) பெற்றோரின் இணக்கங்கிடைக்காவிடின் "உடன் போக்கு என்னும் மரபு
முறையைப் பின்பற்றும் உரிமை; (இ) சிந்தனைச் சுதந்திரம் கருத்துச்சுதந்திரம்
என்பவற்றைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்துக்களைத் தன் செயல்மூலம் புலப்படுத்தியிருக்கிறாள்.
மேலும் இக்காலத்திற் சீதனம் கோரும் வழக்கம் பெண்களின் வாழ்க்கையைப் பாழாக்குவது போலத் தாமன் வாழ்ந்த காலத்தில் பரிசம் கோரும் வழக்கம் ஆண்,பெண் ஆகிய இருபாலாரின் வாழ்க்கையைப் பாழாக்கியிருக்கிறது. சுருங்கக் கூறின் பெண் வணிகப் பண்டம் என்ற எண்ணம் எந்த வடிவத்திற் செயற்பட்டாலும் அது குடும்பம், சமுதாயம், நாடு ஆகிய அலகுகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். பெண் வணிகப் பண்டம் என்ற கருத்துக்கு எதிராகப் பெரியபுராண நவிற்சிக் காலத்தில் புரட்சி செய்த ஒரேயொரு பெண் தாமனின் ஏழாம் மகள் என்பது அழுத்தமாகக் குறிப்பிடத்தக்கது.
இடையன் மூலன் மனைவி (கி. பி. 5 ஆம் நூற்றாண்டு)
மூலன் என்பவன் ஓர் இடையன். ஆநிரை மேய்க்கும் தொழிலைச் சீராக்கச் செய்து வந்த மூலன் ஒரு நாள் இறந்துவிட்டான். அதனால் பொறுப்பாகப் பசுக் கூட்டத்தைக் காலை தொடக்கம் மாலை வரை கவனித்து ஆவன செய்யும் தகுதி மிக்கவன் இல்லாது பசுக்கூட்டம் தவித்தது. இந் நிலையில் வடநாட்டிலிருந்து தற்செயலாக அங்கு வந்த சுந்தரநாதர் "கூடுவிட்டுகூடுடபுகும்' சக்தியை வெளிப்படுத்தி மூலன் சடலத்தினுள் புகுந்தார். இச்சக்தி சித்தர் வழக்கில் 'பரகாயப் பிரவேசம்' எனப்படும். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்த சுந்தரநாதரின் மேய்ப்புக் கடமை பசுக்கூட்டத்திற்கு மகிழ்ச்சியழித்தது. ஆயின் அதனையடுத்துப் புதிய பிரச்சினை ஒன்று அவரை எதிர்கொண்டது.
இடையன் மூலனின் மனைவி தான் ஒரு விதவை என்ற உண்மை தெரியாமல் மூலன் காயத்திற் புகுந்த சுந்தரநாதரை இடையன் மூலன் என்று
தவறாகக் கருதினாள். அவள் கிட்ட வந்ததும் சுந்தரநாதர் உண்மையை
89

Page 51
வெளிப்படுத்தவும் இல்லை. மூலன் மனைவியோடு வாழவும் இல்லை. மூலன் வசிப்பிடத்தை விட்டு நீங்கித் தனிவாழ்வை மேற்கொண்டார்". இந்நிலமையை அடுத்து மூலன் மனைவியின் வாழ்வு எவ்வாறு கழிந்தது என்பது பற்றிய தகவல்கள் இல்லை."
மூலன் மனைவியின் வாழ்வு பெண்ணிலை பற்றி உணர்த்துவனவற்றைச் சுருக்கமாக நோக்குவோம். (1) சமூக வாழ்வின் அடிமட்டத்திலுள்ள பெண்களின் நிலையைப் பாதுகாக்க ஒர்
அமைப்பு வேண்டும். (2) மேல்மட்டப் பெண்கள் விதவையானால் அவர்களை ஏற்று ஆதரிக்க 'கன்னிமடங்கள்' நிறுவப்பட்டதுபோல அடிமட்ட விதவைகளுக்கும் அத்தகைய அமைப்புக்களை உருவாக்கல் அவர்கள் வாழும் சமூகத்தின் கடமையாகும். (3) அத்தகைய அமைப்புக்கள் 'ஆதுலர் சாலைகள்' என்ற பெயரில் பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்திற் செயற்பட்டது போல முற்காலப் பல்லவர் ஆட்சிக் காலத்திற் சைவ சமூகத்தில் இருக்கவில்லை. இதன் விளைவாக மூலன் மனைவி போன்றவர்கள் அனுபவித்த அல்லல்கள் வரலாற்றிருளில் மறைந்து விட்டன.
முடிவுரை
பொதுவாக நோக்கும்போது பெரியபுராண நவிற்சிக் காலத்தில் வாழ்ந்த பெண்கள் கொள்கை, நம்பிக்கை, சாதி, வர்க்கம், மனநிலைசார் அந்தஸ்து, ஒழுக்க நிலை என்பவற்றில் வேறுபட்டவர்களாகக் காணப்பட்டாலும் அவர்கள் தந்தை, கணவன், சமய வெறியர்கள் ஆகிய ஆடவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கிறார்கள்; கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்; சுரண்டப் பட்டிருக்கிறார்கள்.
மனித உரிமைகளுக்காக எதிர்ப்புக் காட்டிய பெண்கள் சங்கிலியார், தாமனின் ஏழாம் மகள், இயற்பகையார் மனைவி போன்ற சிலர் இருந்திருக்கிறார்கள்.
எதிர்காலத்திற் கிடைக்கக் கூடிய புதிய தகவல்களை ஆதாரமாகக்
கொண்டு பல்துறை இணைப்பு முறையில் ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல உண்மைகள் அம்பலமாகும்.
90

பின்னுரை
முதலில் 2001 இல் சில கட்டுபாடுகளுக்கு இணங்க இந்த ஆய்வு ஆங்கில மூலத்தில் மொரீசியஸில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்போது கிடைத்த சமயச் சார்பான வரவேற்பு அதனைத் தொடரத்துாண்டியது. கலாநிதி செல்வி திருச்சந்திரன் அவர்கள் வழங்கிய வரவேற்பும் வாய்ப்பும் 50 பக்க அளவில் ஆழமாகவும் அகலமாகவும் ஆய்வை விரிவுபடுத்த உந்துசக்தி ஆயின. அவர் ஏற்பாடு செய்த ஆய்வரங்கிலே தலைமைப் பொறுப்பேற்றும், கருத்துப் பரிமாற்றம் செய்தும், ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெண்கள், ஆண்கள் ஆகிய இரு பாலாரும் அடங்கிய பல்துறைப் புலமை மிக்க பங்குபற்றுநர்கள் இவ்வாய்வுரையை மேலும் விரிவுபடுத்தும் ஊக்கத்திற்கு உரமூட்டினர்.
மெய்ப்பொருள் நாயனார் மனைவி, அரிவாட்டாயனார் மனைவி, சண்டேசுவரரின் தாய் பவித்திரை, கண்ணப்பரின் தாய், தந்தை, கொல்லிமழவன் மகள், தேவராட்டி, சந்தனத்தாதி உள்ளிட்டோரின் நிலைகளையும் ஆராய்ந்து இந்த ஆய்வுத் தொண்டர் முயற்சியை மனநிறைவுதரும் தனி நூலாக்க வேண்டும் என்பதே இவ்வாய்வாளனின் ஆசை அது நிறைவேற மேலும் சிறிது காலம் தேவைப்படும்.
“பெண்களும் மதமும்” என்னும் கருப்பொருளில் நிகழ்ந்த ஆய்வரங்கில் "பெரியபுராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவநெறியில் பெண்களின் நிலை" என்னும் தலைப்பில் சுமார் அரை மணி நேரச் சித்திரப்படங்களின் துணையோடு சமர்பித்த கருத்துத்தொகுப்பின் மீளமைப்பான இந்த எழுத்துருவ ஆய்வுரையை 'உலக மகளிர் தின நினைவுகளின் அடையாளமாகப் பெண்ணின மேம்பாட்டுச் சிந்தனை யாளர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.
"மெய்ப் பொருள் காண்பது அறிவு'
வை. கா. சிவப்பிரகாசம் 21. 04, 2002

Page 52
பிற் குறிப்புக்கள்
(i)
(2)
(3)
(4)
(5)
வட பாரதத்தில் விதவை தகனம் / சதி (Widow - Burning) பாலிய விவாகம்(Chill-Marriage)விதவை/விதுரம் (தபுதாரன்)மைத்துனன்/ மைத்துணிமணம் (Lewirate Marriage) பற்றிய தகவல்களை அறிய 655 (S6) Tri N. L. Gupta gait Encyclopaedic Survey of Oriental Thought, Vol. I- Chapter "Status of Women Folk" u535iis, it 100 - 139 ஐப் படிக்கலாம்.
பெரிய புராண மூலங்கள் பற்றிய தகவல்கள், தொடர்புடைய விமர்சனங்கள் என்பன குறித்தும் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தனின் அணுகுமுறை, கருத்துக்களை விரிவாய் அறிந்து கொள்ளும் விருப்புடையோர் பெரிய புராணம் - ஓர் ஆய்வு : இரண்டாம் பகுதி, அத்தியாயம் 17 - பெரியபுராண மூலங்கள், பக்கங்கள் 431 - 449 ஐ வாசிக்கலாம்.
லின்டனின் வரைவிலக்கணம், அது தொடர்பான விமர்சனம் என்பவற்றை 9psigil Gl), Tsir 6T N. L. Gupta 656ir Encyclopaedic Survey of Oriental Thought, Vol. I- Chapter "Status of Women Folk"
பக்கங்கள்100-139 ஐ பார்க்கலாம்.
ஏதில் பிணம் தழுவல் தொடர்பான ஆய்வுத் தகவல்களைத் தேடுவோர் மு. இராகவையங்கார் எழுதிய கட்டுரைகள் அடங்கிய “ஆராய்ச்சித் தொகுதி” என்னும் அரிய நூலைப் படிக்கலாம்.
பெண்முத்தி மறுப்பு தொடர்பான திகம்பர ஜைனவாதங்களைச் சுருக்கமாகப் படிக்க விரும்புவோர் "Nirmala Kulkarni" எழுதிய "Is There Salvation for Women?'" 6T6T60th 5 (S60)ij ghough Jainalogic and Epistemology - V. EJha(ED) ST6örg) g|T500Ü பயன்படுத்தலாம். பெண் முத்தி மறுப்பு தொடர்பான திகம்பர ஜைன விவாதங்களை அவற்றின் மூல நூல்களை (Primary Sources) ஆதாரமாகக் கொண்டு விரிவாகவும் ஆழமாகவும் புலமைநோக்கிலும் படிக்க விரும்புவோர் பேராசிரியர் பத்மநாப். எச். எஸ். ஜைனி Padmanabh H. S. Jaina 6hsir Collected Papers on Jaina Studies என்ற நூலை முழுமையான உசாத்துணையாகக் கொள்ளலாம்.
92

(6)
(7)
(8)
(9)
(10)
(11)
பெண் முத்தி ஆதரவு தொடர்பான ஆசீவகர் கருத்துக்களைப்புரிந்து கொள்ள விரும்புவோர் பேராசிரியர் ஏ. சக்கரவர்த்தி எழுதிய "NÍLAKĒSI' என்னும் ஆங்கில நூல் அதன் தமிழ்மொழிப் பெயர்ப்பான நீலகேசி - உரைநடை நூல் :GT. 9for iris,g|60)T) Lë, Gràig;6ir 1-27, 38 - 42 A. L. BASHAM 6T(9;$luil "The History and Doctrine of the AJIVIKAS" (Tsargo Sirsi gyóu) peop)
படிக்கலாம்.
இயற்பகையாரின் பெண்ணுரிமை மீறலை நியாயப்படுத்தப் பேராசிரியர் அ. ச. ஞா. கூறும் வாதங்களை மேலும் பரிசீலித்து விமர்சனம் செய்ய விரும்புவோர் பெரிய புராணம் - ஓர் ஆய்வு பக்கங்கள். 244, 264, 296301, 491, 529-532, 584, 701, 728-729 ஐ வாசிக்கலாம்.
Luftfrij, 5- g66) Tij6) T6Trfsir "The Status of Women in Saivism as Depicted in Periyapuranam" 6Ti"LT6...g. p 608, 6055). Los E.T. y i. சமர்ப்பித்த ஆய்வுரை, மோரீசியஸ் பல்கலைக்கழகம், மோக்கா, மோரீசியஸ், 7, 8, 9 செப்டெம்பர், 2001.
குறிப்பிட்ட முடிவான கருத்து சார்பான நவீன சிந்தனைகளை மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் எழுதிய “தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு” என்னும் நூலின் பக்கங்கள் 37 - 62 ஐப் படிக்கலாம்.
அரச குடும்பப் பெண்கள் அந்நியர் அத்துமீறலைத் தவிர்க்கத் தீ மூழ்கல் என்ற வழக்கத்தைப் பின்பற்றியமை இரஜபுதன இடைக்கால வரலாற்று நிகழ்வுகள் மூலம் புலப்படுகின்றது. “பல்சான்றீரே பல்சான்றீரே.” என்ற புறப் பாட்டைப் பாடிய பாண்டிமாதேவியின் மரணத்திற்கு இவ்வழக்கம் காரணமோ என்பது ஆராய்தற்குரியது. மேலும் தமது ஒழுக்கத் தூய்மையை நிலைநாட்ட அரச மகளிர் தீப்புகல் என்ற வழக்கம் அபூர்வமாகப்பின் பற்றப்பட்டமைக்குச் சீதையின் வாழ்க்கைச் சம்பவம் சான்றாகும்.
மா. சிவகுருநாதபிள்ளை “நாயன்மார் வரலாற்றில் பல்வகைச் செய்திகள்’ என்ற நூலில் தரும் இம்மந்திரத்தின் ஒலி வடிவம் மேலும் பரிசீலிக்கப் பட்டு திருத்தமான வடமொழி ஒலி வடிவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
93

Page 53
(12)
(13)
(14)
திருமருகல் வாழைத்தோட்டங்கள் உள்ள ஊர்- 'மருகல்’ என்பது ஒரு வாழையினம் - வாழையில் மறைந்திருக்கும் பாம்பு தீண்டி ஒருவர் இறக்க நேரிடலாம் என்பதற்கு அப்பூதியடிகளின் மகன் 'திருநாவுக்கரசு’ இறந்தமை சான்றாகும்.
விதவைகளை பாலியல் சுரண்டலுக்கு இரையாக்கும் ஆணினம் பற்றிய தகவல்கள் மலிந்த காலப்பகுதிகள், சமூகநிலமைகள் பற்றிப் பலரும் அறிவர். ஆயின் சித்தர் சுந்தரநாதர் புறநடையான அபூர்வ மனிதர்.
புனிதவதி - பரமதத்தனைப் பிரிந்து வாழ்ந்த சில வருட காலப் பகுதியில் அவளுடைய சுற்றத்தினர் பரமதத்தன் இறந்து விட்டானா உயிரோடு வாழ்கிறானா என அறியாது கலங்கிய புனிதவதிக்கு உதவும் நோக்கில் பரமதத்தனைத் தேடியிருக்கலாம், உண்மையை அறிந்திருக்கலாம். அத்தகைய உதவி வாய்ப்பு மூலன் மனைவிக்குக் கிடைத்ததா இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
S)

உசாத்துணைகள்
1. இராசமாணிக்கனார், மா.
2. -------------
3. இராமநாதபிள்ளை .ப. (பதி)
4. சக்கரவர்த்தி. ஏ. தமிழ்-அப்பாத்துரை.கா.
5. சரோஜா பிரபாகர், முனைவர்.
6. சாமிநாதையர்,உ.வே. (பதி)
7. சிவகுருநாதபிள்ளை, மா
8. சுப்பிரமணியம். நா. கலாநிதி
9. செல்வி திருச்சந்திரன், கலாநிதி
{0. சோமசுந்தரனார், T (பதி)
1958 (முதற் பதிப்பு), சைவசமய வளர்ச்சி, ஒளவை நூலகம், சென்னை.
3ஆம் பதிப்பு, பெரியபுராண ஆராய்ச்சி, பாரிநிலையம், சென்னை.
1974, பெரியபுராணம், கழகம், சென்னை.
1955(முதற்பதிப்பு),நீலகேசி-உரைநடை நூல் பாரிநிலையம், சென்னை.
1995, 'சங்ககால மகளிர் நிலை” - உலகத் தமிழ் மாநாட்டு மலர், தஞ்சாவூர் (கட்டுரை)
1956, புறநானூறு- மூலமும் உரையும், தியாகராச விலாசம், சென்னை. 1999 நாயன்மார் வரலாற்றில் பல்வகைச் செய்திகள், திருவரசு புத்தக நிலையம், சென்னை.
1996 (2ஆம் பதிப்பு), இந்தியச் சிந்தனை மரபு சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
1997 முதற் பதிப்பு, தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் 65]) ډرا பெண்ணிலை நோக்கு, குமரன் பதிப்பகம், கொழும்பு 8. சென்னை.
நீலகேசி - மூலமும் உரையும், கழகம், சென்னை.
95

Page 54
11. ஞானசம்பந்தன், அ. ச. பேராசிரியர்,
1987 முதற் பதிப்பு, பெரியபுராணம் - ஓர் ஆய்வு, தமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவ மையம், காஞ்சிபுரம்
12. பத்மினி கபாலி மூர்த்தி மகப்பேற்று வைத்திய கலாநிதி
2001 சைவத்திற் பெண்கள் நிலை - ஒளிப்பட விளக்கவுரை,8ஆவது உலகச் 6Ú) SF6).j மாநாடு மொரீசியல் பல்கலைக்கழகம், மோகா, மொரீசியஸ்.
13. மகாலிங்கம், நா டாக்டர், (பொறுப்பாசிரியர்)
1991 (2ஆம் பதிப்பு), சித்திர பெரிய புராணம் - ஒவியம் எஸ்.ராஜம். இராமலிங்கர் பணிமன்றம், சென்னை.
14. மாணிக்கம், வ. சு. ப (பதி) 1958, இரட்டைக் காப்பியங்கள்,
செல்வி பதிப்பகம், காரைக்குடி.
15. ராஜம் கிருஷ்ணன் 1991, காலந்தோறும் பெண், தாகம்,
s சென்னை.

. BACHAM, A. L.
. BHARGAVA, P. L
. DURKHEIM, E.
GAVIN FLOOD
... GUPTA, N.L.
... GUPTA, S.S.
REFERENCES
1951
1982
1964
998
1998
1998
THE HISTORY AND DOCTRINE OF THE AJ
VIKAS, LONDON.
FUNDAMENTALS OF HINDUSEM-A RATIONAL
APPROACH, MUNSHIRAM MANOHARLAL
PUBLISHERS / NEW DELHI.
THE ELEMENTARY FORMS OF RELIGIOUS, LIFE, ALLEN UNWIN, LONDON.
AN INTRODUCTION TO HINDUSM, CAM
BRIDGE UNIVERSITY PRESS, CAMBRIDGE,
DELHI.
ENCYCLOPAEDIC SURVEY OF ORIENTAL
THOUGHT. VOL I, II, & III ANMOL PUBLICATIONS, NEW DELHI.
TIME HONOURED HINDU PRACTICES, SUNIL PRINTERS, NEW DELHI.
, MADELEINE BIARDEAU TRANS, RICHARD NICE
1994
. MACHWE PRABHAKAR
1979
MARGARET STUTLEY
1985
HINDUISM - THE ANTROPOLOGY OF CTVLIZATION, OXFORD UNIVERSITY PRESS, DELHI, OXFORD, NEW YORK,
INDUISMI ITS CONTRIBUTION TO)
SCIENCE AND CIVILIZATION VIKAS
PUBLISHING HOUSE, NEW EDELHI.
HINDUISM THE ETERANAL LAW, THE
AQUARÍAN PRESS, NORTHAM PTONSHIRE.
97

Page 55
| 10. NARANG GOKUL CHAND, SIR.
1999,
1 1. NIRMALA KULKARNI,
1997
12. PADMANA BH H. S. JAINI,
2000
13. SIVAPRAKASAM, V. K.
2001
REAL HINDUISM,NEWBOOKSOCIETY OF INDIA, NEW DELHI.
“S TERE SALVATION FORVVOMEN? IN JAINA LOGIC EPISTEMOLOGY, ED . JHA V. L. SRI SATGURU PUBLICATIONS, DELHI.
[IST. EDITION COLLECTED PAPERS ON JAINA STUDIES, MOTILAL BANARSIDASS PUBLISHERS, NEW DELHI.
“THE STATUS OF WOMEN N SAVSM AS DEPICTED INPERYAPURANAM’ RESEARCH PAPER PRESENTED AT THE 8TH WORLD SAH VA CONFERENCE 7-9, SEPT. 2001 HELD AT THE UNIVERSITY OF MAURITIUS, MOKA, MAURITIUS.
98

பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் - சில யாதகக் கதைகள் தரும் அளவுகோல்கள்
விகித்தா இரங்கநாதன்
நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள எடுத்துக் கொண்ட விடயம், பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் - தெரிவு செய்யப்பட்ட சில யாதகக் கதைகள் பற்றிய ஆய்வு - நான் ஏன் இந்தத் தலைப்பை எடுத்து ஆராய விரும்பினேன் என்றால், இதற்கு முன்னர் பலரும் பெளத்த சமயமும் பெண்களும் என்ற தலைப்பில் கட்டுரைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டாலும் இத் தலைப்பினைத் தமிழில் ஆராய்ந்தவர்கள் சிலரே. இத் தலைப்பை ஆராயும் போது பெளத்த
என்பதை நாம் அறியலாம்.
முதலில் நாம் யாதகக் கதைகள் என்றால் என்ன என்பதைச் சற்று நோக்குவோமாக, யாதகக் கதைகள் ஆனது கெளதம புத்தரினால் மக்களுக்குக் கூறப்பட்ட சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட கதைகள் என்று கூறப்பட்டது. ஆனால் இது மானிடவியலாளர்களால் இது நிரூபிக்கப்படவில்லை. யாதகக் கதைகளின் மொத்த எண்ணிக்கை ஐந்நூற்று ஐம்பதாகும். ஆனால் இப்பொழுது உள்ள யாதகக் கதைகளின் எண்ணிக்கை ஐந்நூற்று நாற்பத்தேழு ஆகும். ஆனால் நான் இப்பொழுது ஆராயப் போகும் விடயம் தெரிவு செய்யப்பட்ட சில யாதகக் கதைகளின் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சமூக அந்தஸ்து சமூக மேம்பாட்டிற்குப் பெண்களின் பங்களிப்பு குடும்ப அபிவிருத்தி, குடும்ப அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு என்ற பாத்திரங்களை மையமாகக் கொண்டு ஆராயும் போது நவீன சமூகத்தில் காணப்படும் பெண்கள் தொடர்பான இம்சைகள், அச்சுறுத்தல்கள், அநீதிகள், சட்டங்கள், சமூக எதிர்பார்ப்பு போன்றன 2300 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் காணாத அல்லது மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத ஆண்கள் தலைமை தாங்கும் சமூகக் கடடமைப்புக் காணப்பட்டதனை அறியக் கூடியதாக உள்ளது. r
99

Page 56
பெளத்த சமயம் தோன்றிய காலத்தில் பெண் நிலை :
பெளத்த சமயம் தோற்றம் பெற்ற நாட்களில் இருந்து சாதி வேறுபாடு இன்றி எல்லாச் சமூகத்தைச் சேர்ந்த மக்களும் கௌதம புத்தர் தழுவிய பெளத்த சமயத்தில் இணைந்து கொண்டார்கள். பிற சமயங்கள் ஆகிய இந்து சமயத்திலும், சமண சமயத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்களுக்கும் பிற்பட்ட நிலையே காணப்பட்டது. இவ்வாறு இருந்த காலத்தில் மக்கள் பல சோதனைகளுக்கும் சங்கடங்களுக்கும் தள்ளப்பட்டார்கள். இக்கால
கட்டத்தில் உருவாகிய சமயமே பெளத்த சமயம் ஆகும்.
இச் சமயத்தை மக்கள் தழுவுவதற்குப் பல காரணங்கள் காணப்பட்டன.
* ஏனைய மதங்களில் மக்கள் இடையே காணப்பட்ட குலக்கட்டமைப்பு
பெளத்த மதத்தில் பேணப்படவில்லை.
* பெளத்த மதத்தை பரப்புவதில் ஈடுபட்ட ஆண்களுக்கு நிகராகப் பெண்களும்
ஈடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது.
* அன்று சமூகத்தில் நிலவிய தனிமனிதர்களுக்கு இடையிலான போட்டி, குழுக்களுக்கு இடையிலான போட்டி, தனிமனிதர் குழுக்களுக்கும் இடையிலான போட்டி காரணமாக ஏற்பட்ட பகைமை, உயிர்இழப்பு என்பவற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம்
பொதுமக்களால் உணரப்பட்டமை.
* உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடு இல்லாமல் இரு தரப்பினரும் பெளத்த சமயத்
தலைவர்கள் (பிக்குகள்) ஆகும். சந்தர்ப்பம் கிடைத்தது.
ஏனைய சமயங்களில் இருந்த கட்டுப்பாடு
எனவே பெளத்த சமயம் மக்களிடையே பிரபல்லியம் அடைந்து வந்தது. பெளத்த சமயம் பரவிய காலத்தில் பெண்கள் சமயத் தலைவர்கள் (பிக்குணி) ஆக முடியாது. முதல் முதலில் கெளதம புத்தரின் சிற்றன்னையான பிரஜாபதியே ஆனந்த தேரோவிடம் பெண்களும் பிக்குணியாவதற்கு இடமளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் பிரஜாபதியின் ஆலோசனைகளுக்கு கெளதம புத்தர்
00

முதலில் இணங்க மறுத்தார். ஏனெனில் அக்காலத்தில் பாரதம் முழுவதும் ஆண்களே வம்சத் தலைவர்களாகக் காணப்பட்டதினால் பெண்கள் பிக்குணியானால் பிரச்சனைகள் உருவாகலாம் என்ற காரணத்தினால் அவர் இதற்கு இணங்க மறுத்தார் எனினும் ஆனந்ததேரோவிற்கும் கெளதம புத்தருக்கும் இடையில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னர் கெளதம புத்தர் இதற்கு இணங்கினார். இதுவே பெண்ணியத்தின் முதலாவது சம்பாஷணை எனக் கூறப்படுகிறது. இம்முயற்சியானது பின்வரும் காரணங்களுக்காகப் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதலாவது காரணம் பெண்களும் ஆண்களைப் போன்று துறவிக் கோலம் பூணலாம். அதாவது பிக்குணியாகலாம். இன்னொரு காரணம் பொதுவாக அக்காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்கள் எனக் கருதினார்கள். ஆனால் கெளதம புத்தர் பெண்களும் பிக்குணியாகலாம் என்று கூறிய பின்னர் பெண் சமுதாயத்திற்கு ஏற்பட்ட களங்கம் வெகுவாகக் குறைந்தது. ஆண்களே வம்சத் தலைவராகக் கருதப்பட்டமையால் பெண்களுக்கு வெற்றி எனக்
கூறமுடியாது. இதனை பின்வரும் உதாரணம் மூலம் அறியலாம்.
கெளதம புத்தர் பெண்கள் பிக்குணியாக அனுமதித்தாலும் எட்டு நிபந்தனைகளை விதித்தார். அதில் ஒரு நிபந்தனை வயது முதிர்ந்த பிக்குணியானாலும் இளவயது பிக்குணியானாலும் கட்டாயமாக பிக்குகளுக்கு மரியாதையைக் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த நிபந்தனைக்குப் பிரஜாபதி இணங்கவில்லை. அவர் கெளதம புத்தரிடம் சென்று மற்ற நிபந்தனைகளுக்கும் தாங்கள் கட்டுப்படுவதாகவும் இந்த நிபந்தனையை மட்டும் நீக்குமாறு கூறினார். ஆனால் கெளதம புத்தரோ இதற்கு இணங்கவில்லை.
கெளதம புத்தரின் மறைவிற்குப் பின்னர் மகாசங்க பிக்குகள் எல்லோரும் இணைந்து ஆனந்த தேரோவைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கினார்கள். காரணம் ஆனந்த தேரோவே பெண்களும் பிக்குணியாகலாம் என்று கௌதம புத்தரிடம் கூறியதால் இன்னொரு காரணம் கெளதம புத்தரின் இறுதி மரியாதையில் பெண்களுக்கு இடம் அளித்தமையாலும் இவர் கடுமையான விமர்சனத்திற்கும்
கோபத்திற்கும் உள்ளானார்.
இவ்விரு சந்தர்ப்பங்களில் இருந்து நமக்கு என்ன புலப்படுகின்றது என்றால் பெளத்த சமயத்திலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே காணப்பட்டனர். பெண்கள் துறவிக் கோலம் பூண்டாலும் இவர்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருந்தது என்பதற்கு தேரி கவிதைகள் சிறந்த உதாரணம் :
O

Page 57
உதாரணமாகத் தேரிசுமங்கல மாத்தா தேரி கவிதை.
இதன் பொருள் அவள் துறவிக்கோலத்தின் பின்னர் கணவனுக்குகணவனின் நிழலில் இருந்து அடுப்படியில் இருந்து, குடும்பத்தவர்களிடம் இருந்து பிரிந்து இப்பொழுது சந்தோஷமாகவும், திருப்தியாகவும் சுதந்திரமாகவும் ஒரு மரநிழலின் கீழ் இருந்து தியானம் செய்து கொண்டு நிம்மதியாக இன்பமாக வாழ்கின்றார்.
ஆனாலும் ஆண்களே வம்சத் தலைவர்களாக இருக்கும் முறையே பாரதத்தில் பின்பற்றப்பட்டதினால் கெளதம புத்தருக்கு இம்முறையை மாற்ற முடியவில்லை ஆகவே கௌதம புத்தரும் இந்த வழிமுறையினை பெளத்த சமயத்திலும் கடைப்பிடித்தார். ஆனாலும் பெளத்த சமயத்தில் பெண்களுக்கு
ஒரளவு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அடுத்ததாக யாதகக் கதைகளும் பெண் அந்தஸ்தும்
இதற்காக நான் எடுத்துக் கொண்ட கதைகள்
* அந்தபூதக யாதகக் கதை
* சம்பூல யாதகக் கதை
நான் முதலில் எடுத்துக் கொள்ளும் கதை அந்த பூதக யாதகக் கதை
இந்தியாவில் வரநாசி என்னும் நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். மன்னருக்கும் அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பிரதான அமைச்சருக்குச் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே இருவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னர் எப்பொழுதும் தாயக்கட்டையை உருட்டுவதற்கு முன்னர் ஒரு செய்யுளை உச்சரிப்பது வழக்கம் இச் செய்யுளானது
'சப்பே நதி வங்க கதா சப்பே கட்டமையா வனா சப்பத்தியோ கரே பாபங் லாபமானா நிவர்த்தகே’ இதன் விளக்கம் :
ஆறுகள் எப்பொழுதும் வளைந்துதான் ஒடும். அதேபோன்று மரம், செ, கொடிகள் இல்லாத காடுகளே இல்லை. அதே போன்றுதான் பெண்களும் ஒரு சிறு துl கிடைத்தாலும் தீய வழியில் சென்று விடுவார்கள். இதுவே இச் செய்யுளின் பொருள்
O2

இச் செய்யுளைப் பாடித் தாயக் கட்டைகளை உருட்டும்போது வெற்றி அவரையே சேரும். பிரதான அமைச்சரோ தோல்வியைத் தழுவினார். மன்னரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று நினைத்த பிரதான அமைச்சர் மன்னர் கூறும் செய்யுளுக்கு எதிர் செய்யுள் ஒன்றைக் கண்டுபிடித்தார். எனவே அவர் ஒரு பெண் குழந்தையை அதன் பெற்றோரிடம் இருந்து தத்தெடுத்தார். யார் கண்களிலும் படாதவாறு வளர்த்தார். அன்று முதல் பிரதான அமைச்சர் வெற்றி பெற்றார். காலப் போக்கில் குழந்தை பருவ வயதை அடைந்ததும் பிரதான அமைச்சரே அப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவளோ பிரதான அமைச்சரைத் தவிர வேறு ஒரு ஆணின் கண்களிலும் படாதவாறு பாதுகாக்கப்பட்டாள். இதனால் மன்னர் தோற்றுக் கொண்டே வந்தார். இதன் காரணத்தை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணி அதில் வெற்றியையும் அடைந்தார். இப் பெண்ணுக்குத் தினமும் பூக்காரி ஒருத்திபூக்களைக் கொண்டுசெல்லுவது வழக்கம். இதனை அறிந்த அரசர் ஒரு இளம் வாலிபன் ஒருவனையும் தமது திட்டத்திற்கு இணைத்துக் கொண்டார். பூக்காரியின் மகன் நீண்ட நாட்களுக்கு முன் காணாமல் போகவே இந்த வாலிபன் அச்சந்தர்ப்பத்தினைத் தனது காரியம் நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றான். மன்னர் திட்டமிட்டபடி வாலிபனும் அமைச்சரின் மனைவியைக் காதலிக்கின்றான். அன்றில் இருந்து மீண்டும் அமைச்சர் தோல்வியைத் தழுவினார்.
தனது மனைவி மீது சந்தேகம் கொள்ளுகின்றார். எனவே அவளிடம் சென்று சுத்தமான பெண் என்றால் தீக்குளித்துக் காட்டுமாறு கூறுகின்றார். இதில் இருந்து எப்படியாவது இந்தப் பெண் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் எனக் கருதி வாலிபனும் அமைச்சரின் மனைவியும் திட்டம் இடுகின்றனர். தீக்குளிக்கும் நாளும் வரவே இவள் எல்லோரையும் வணங்கி விட்டு தீக்குளிக்கப் போகும் போது திட்டம் இட்டபடி வாலிபன் அவளை காப்பாற்றுகின்றார். ஆனால் அப்பெண் இந்த வாலிபனைத் தெரியாது போன்று நடிக்கின்றாள். அமைச்சரும் இதை நம்பி விடுகின்றார்.
இக்கதையில் பெண்களின் நிலை
பெண்ணானவள் இலகுவில் தப்பான வழியில் சென்று விடுவாள் என்பதை நாம் மன்னர் கூறும் செய்யுளில் இருந்து அறியக் கூடியதா
உள்ளது.
03

Page 58
பெண்ணானவள் ஆண்களுக்கு அடங்கிப் போக வேண்டிய நிலை. இக்கதையின் படி அமைச்சர் அப்பெண் சிறுவயதில் இருந்து திருமணத்திற்குப் பின்னரும் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறார். இங்கு ஆண்களுக்கு அடங்கிப் போவதினால் பெண் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. அதாவது யாதகக் கதைகளிலும் பெண்களை ஆண்கள் தமது அடிமைகளாகவே கருதினார்கள்.
காணப்பட்டது.
பெண்களை இள வயதில் திருமண பந்தத்தில் இணைத்தல். இக்கதையிலும் நாம் இவ்வகையான சந்தர்ப்பத்தைக் காணக்கூடியதாக உள்ளது. வயது முதிர்ந்த அமைச்சர் இளவயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.
ஆண்களின் சுயநலத்திற்காகப் பெண்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தினார்கள். மன்னரும் அமைச்சரும் தனது சொந்த சுயநலத்திற்காகப் பெண்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தினார்கள்.
பெண்கள் இலகுவில் ஏமாற்றப்பட்டார்கள். இக்கதையில் பூக்காரியை அந்த வாலிபன் தனது காரியம் நிறைவேறப் பொய் கூறுகின்றான். அப்பொய்க்குப் பூக்காரியும் ஏமாறுகின்றாள்.
இவ்வாறு பெண்களின் அந்தஸ்து தரக்குறைவாக இருக்க நாம் அடுத்த கதைக்குச் செல்வோம்.
சூல்ல தனுத்திர யாதகக் கதை :
மனமே" என்பவன் வில்வித்தையில் சிறந்து விளங்கினான். இவன் வில்வித்தையில் சிறந்து விளங்குகின்றான் என்று அறிந்த குரு அவனுக்கு “தனுத்திர” என்னும் பட்டம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் தனது புதல்வியையும் பரிசாக வழங்கினார். இவனின் வில்வித்தை பயிற்சி முடிந்த பின்னர் மீண்டும் அவனுடைய நாட்டிற்கே சென்றான். செல்லும் வழியில் ஒர் அடர்ந்த காடு, காட்டின் வழியே செல்லுகையில் வேடர்கள் இவர்களை வழிமறித்து வேடர்களின் தலைவன் சண்டையிடத் தொடங்கினான். மனமே தன்னிடம் இருந்த ஈட்டியைத் தனது மனைவியிடம் கொடுத்து விட்டுச் சண்டையிடத் தொடங்கினான். மனமேயின் மனைவி வேடனின் தோற்றத்தையும், பலத்தையும் கண்டு அவள் வேடன் மீது காதல் கொண்டாள். சண்டை முற்றிக் கொண்டே செல்ல மனமே
04

தனது ஈட்டியை மனைவியிடம் கேட்க, அவளோ ஈட்டியை வேடுவன் கையில் கொடுக்கின்றாள். வேடுவன் மனமேவைக் கொன்று விடுகின்றான். வேடுவன் மனமேயின் மனைவியிடம் சென்று ஏன் ஈட்டியைத் தன்னிடம் கொடுத்தாய் என்று கேட்க அதற்கு அவள் கூறிய பதில், தன் கணவனைவிட வேடுவனைப் பிடித்த காரணத்தினால் உங்களுக்கு ஏதும் ஆபத்து வரும் என்ற பயத்தினால் உங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தினால் ஈட்டியை உங்கள் கையில் கொடுத்தேன். இதற்குக் கோபமுற்ற வேடுவன் இப்படிப்பட்ட பெண் தனக்கு வேண்டாம் என்று கூறிய வண்ணம் காட்டினுள் செல்லுகின்றான்.
இக்கதையில் பெண் அந்தஸ்து
அக்காலத்தில் பெண்களைப் பரிசுப் பொருட்களாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு எடுத்துக் காட்டு குரு தனது சிஷயன் ஆன மனமேவிற்கு தனது மகளை பரிசுப் பொருளாக வழங்குகின்றார். இவ் மாதிரியான சந்தர்ப்பங்களை நாம் புராண இதிகாசங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெண்கள் ஏனைய பரிசுப்
பொருட்களுக்குச் சமனாகக் கருதினார்கள்.
பெண்கள் தமக்குக் கிடைத்த பொருளை வைத்து இலகுவில் திருப்தி அடையமாட்டார்கள். அதாவது பெண்களின் கண்களுக்கு ஒன்றைவிட ஒன்றைச் சிறபபாக அவர்களின் கண்களுக்குத் தெரியும். (இக்கரைமாட்டுக்கு அக்கரை பச்சை)
பெண் எதையும் செய்யத் துணிந்தவள். மனமேயின் மனைவி தான் நினைத்தவரை அடையவும் கணவனைக் கொல்லவும் மறைமுகமாக உதவி புரிகின்றாள்.
மூன்றாவதாக ஆராயப் போகும் கதை சம்பூல யாதகக் கதை
பிரம்மதத்த என்னும் அரசருக்கு சோத்தி சேன என்னும் மகன் இருந்தான். அவன் தகப்பனுடைய ஆட்சியில் உபமன்னராக இருந்தான் சோத்திசேனவின் மனைவியின் பெயர் சம்பூலதேவி. சோத்திசேன சூலநோயால் பீடிக்கப்பட்டிருந்தான். இதனால் அவனுக்கு அரச வாழ்க்கையை வெறுத்து காட்டிற்குச் செல்லத் தயாரானான். கூடவே அவளின் மனைவியும் சென்றாள். இவள் கணவனை அரவணைப்புடன் கவனித்து வந்தாள். அவனின் தேவைகள்
O5

Page 59
சம்பூலதேவி உணவுக்குத் தேவையான பழங்களைச் சேகரிப்பதற்காகக் காட்டினுள் சென்றாள். அவள் செல்லும் வழியில் குளம் ஒன்றைக் கண்டாள். இவள் அக்குளத்தில் இறங்கி நீராடினாள். நீராடிவிட்டு மீண்டும் செல்லத் தயாராகும் வேளையில் அரக்க குலத்தைச் சேர்ந்த ஒருவன் இவளைப் பார்க்கின்றான். இவள் சம்பூலதேவியின் அருகே சென்று நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றான். உடனே சம்பூலதேவியும் அதற்குப் பதிலளிக்கின்றாள். அரக்கன் நீ ஏன் சூல நோயால் பாதிக்கப்பட்டவனுடன் இருக்கின்றாய்? நீ என்னுடன் வந்து விடு என்று அரக்கன் கூறுகின்றான். இந்த ஆலோசனைக்குச் சம்பூலதேவி மறுக்கவே உடனே அரக்கன் அவளை மிரட்டுகின்றான். உன்னைத் தூக்கிச் செல்லுவேன் அல்லது
செய். ஆனால் எனக்கு ஒரேயொரு கவலை நேரமாகிக் கொண்டே செல்வதால் தன்னுடைய கணவன் தன்னைத் தப்பாகக் கருதுவார் என்று. அரக்கனோ சம்பூலதேவியை விடுவது போல் தெரியவில்லை. சம்பூலதேவி சக்கர கடவுளை நினைத்து மன்றாடுகின்றாள். சக்கரக் கடவுள் இதனை அறிந்து அரக்கர் வேடம் பூண்டு அரக்கனை அவ்விடத்தில் இருந்து விரட்டுகின்றான். சக்கர கடவுள் சம்பூலதேவியைப் பார்த்து தனது கணவனையே கண்கண்ட தெய்வமாகக் கருதுவதினால் நீயொரு சிறந்த பதிவிரதை ஆவாய் என்று கூறி ஆசி வழங்குகின்றாள். பொழுதுசாயவே சோத்திசேன நினைக்கின்றான் தனது மனைவிக்கு வேறு யாருடனோ தொடர்பு காணப்படுகின்றது என எண்ணி மறைவிடம் நோக்கிச் செல்லுகின்றான். சம்பூலதேவி தான் இருக்கும் இடத்தை அடைந்து சோத்திசேனவைக் காணாமல் தேடுகின்றாள். அவனைக் காணவில்லை என்று மனம் உருகி அழுகின்றாள். சோத்திசேனவை எங்கிருந்தாலும் வரச் சொல்லிக் கூறுகின்றாள். நீண்ட நேரத்திற்குப் பின்னர் சோத்திசேன வெளியே வருகின்றான். சம்பூலதேவியைப் பார்த்து எவ்வளவு நேரமாக யாருடன் இருந்து விட்டு வருகின்றாய் என்று வினாவ, சம்பூலதேவி என்ன நடந்தது என்று விளக்கமாகக் கூறினாள். ஆனால் சோத்திசேன நடந்ததை நம்ப மறுக்கின்றான். உடனே சம்பூலதேவி ஒருகுடம் நிறை நீர் எடுத்துக் கொண்டு கடவுளிடம் மன்றாடுகின்றாள். பின்னர் அந்த நீரை அவன் மேல் ஊற்றியபோது சூலநோய் முற்றாக நீங்கியது. மீண்டும் தனது நாட்டை நோக்கித் திரும்பினார்கள். தந்தை மகனுக்குக் குணமானதை இராச்சியத்தை மகனிடம் ஒப்படைத்து விட்டு அந்நாட்டிலேயே தவக்கோலம் பூணுகின்றார். சோத்திசேனாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சம்பூலதேவி மட்டுமல்லாது பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த சம்பூலதேவி மனமுடைந்தாள். அதுமட்டுமல்லாது

கணவனை யோசித்து உடல் மெலிந்தாள். ஒருநாள் முனிவர் மாளிகையில் மதிய போசனத்திற்காக வந்திருந்தபோது சம்பூலதேவியைப் பார்த்து ஏன் மனமுடைந்து கவலையாக இருக்கின்றாய். உனக்கும் சோத்திசேனவிற்கும் என்ன பிரச்சனை? என்று வினாவ சம்பூலதேவியும் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறுகின்றாள். இதையறிந்த முனிவர் தனது மகனிடம் சென்று உன்னைப் பீடித்திருந்த தீராத சூல நோயை நீக்கியவள் சம்பூலதேவி அப்படிப்பட்டவளை நீ ஏன் வருத்துகின்றாய். அப்பொழுது சோத்திசேன தான் மனைவிக்குச் செய்த தவறை நினைத்து வருந்துகின்றான். அத்துடன் சம்பூலதேவியிடம் மன்னிப்பும் கேட்கின்றான். அவனின் ஆட்சிப் பொறுப்புக்களையும் சம்பூலதேவிக்கே வழங்குகின்றான்.
இக்கதையில் பெண்நிலை :
கணவனே கண் கண்ட தெய்வம் என்பதற்குச் சம்பூலதேவி ஒரு சிறந்த
சோத்திசேன சூல நோயால் வாடுகின்றதினால் அவன் காட்டிற்குச் செல்லத் தயாராகின்றான். கூடவே சம்பூலதேவியும் அவனுடன் காட்டிற்குச் செல்லுகின்றாள். அவள் நினைத்திருந்தால் சோத்திசேன உடன் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவளோ அப்படியில்லாமல் கணவனைத் தனியாக அனுப்பினால் காட்டில் கஷ்டப்படுவார் எனக் கருதித் தானும் உடன் செல்லுகின்றாள். இன்னொரு சந்தர்ப்பம் அரக்கன் அவளை வழிமறித்துத் தன்னுடன் வரச் சொல்லியபோது அவளோ மறுக்கின்றாள். அப்போதும் தனது கணவனையே நினைத்துக் கொண்டு இருக்கின்றாள்.
கணவனின் தேவைகளை முகம் சுழிக்காது வெறுத்து ஒதுக்காது அன்போடும் அரவணைப்புடனும், கணவனை ஒரு குழந்தையைப் போல கவனிக்கின்றாள். யாருடைய உதவியுமின்றித் தானே தனியாகக் காட்டிற்குள் சென்று சோத்தி சேனனுக்குத் தேவையான மருந்துகளையும் உணவுகளையும்
சேகரிக்கின்றாள்.
கடவுள் பக்தி நிறைந்தவள். இதற்கு எடுத்துக் காட்டு. அரக்கனிடம் சிக்கித் தவிக்கும் வேளையில் கடவுளை நினைத்து மன்றாடுகின்றாள். அவரும் அவளை அரக்கனிடம் இருந்து காப்பாற்றி அவன் முன் தோன்றி ஆசீர்வதிக்கின்றாள். தனக்கு எந்தச் சோதனை வந்தாலும் இறைவனை
O7

Page 60
நினைத்துப் பிரார்த்தனை செய்கின்றாள். சோத்திசேன அவளின் மீது சந்தேகம் கொண்ட போதும் கடவுளை நினைத்துக் கொள்ளுவதுடன் மட்டுமல்லாது அவள் சுத்தமானவள் என்றாள். தனது கணவனைப் பீடித்துள்ள சூல நோய் நீங்க வேண்டும் என்று இற்ைவனிடம் வேண்டிக் கொள்ளுகின்றாள். அதில் அவள் வெற்றியும் அடைகின்றாள்.
பெண்ணிற்குரிய பொறுமை என்னும் இலக்கணத்தைச் சம்பூலதேவி கடைப்பிடிக்கின்றாள். இதற்குப் பல்வேறு எடுத்துக் காட்டுக்கள் உள்ளன. சோத்திசேனவிற்கு சூலநோய் தாக்கிய போது வெறுத்து ஒதுக்காது கணவன் தேவைகளைப் பொறுமையாகப் பூர்த்தி செய்கின்றாள். மற்றொரு சந்தர்ப்பம் கணவன் தன்னைச் சந்தேகப்பட்ட போதும் அவள் பொறுமையுடன் கடவுளை மன்றாடுகின்றாள். இன்னொரு சந்தர்ப்பம் சோத்திசேன வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டுள்ளதை அறிந்தும் அவள் அதைப்பற்றி ஒருவரிடமும் கூறாது. பொறுமையைக் கடைப்பிடிக்கின்றாள். எவ்வளவு சோதனைகள் தன்னைச் சூழ்ந்து வந்த போதும் மனந்தளராது மன உறுதியுடன் அதனை எதிர் கொள்ளுகின்றாள்.
இம் மூன்று யாதகக் கதைகளிலும் பெண்களின் அந்தஸ்தை எதிர்மறை பாத்திரங்களாக அல்லது தரக்குறைவாகக் காட்டப்பட்டுள்ளதை நாம்
அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த மூன்று கதைகளிலும் நாம் பொதுவான ஒரு கருத்தைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது அந்தக் காலத்தில் காணப்பட்ட யாதகக் கதைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு அடங்கியே காணப்பட்டார்கள். இதனை
நாம் பல எடுத்துக் காட்டுக்களின் மூலம் அறிந்தோம்.
08

முடிவுரை
இவ்வளவு நேரமாக அக்காலத்தில் பெளத்த சமயத்தில் பெண்களின் அந்தஸ்து என்ன என்பதைச் சில யாதகக் கதைகளினூடாக ஆராய்ந்தேன். ானது முடிவுரையில் நான் எடுத்துக் கொள்ளப்போகும் விடயம், இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் பெளத்த சமயத்தில் சமூக அநதஸ்து என்ன என்பதைச் சுருக்கமாக ஆராய விரும்புகின்றேன்.
பெளத்த மதம் கி. மு. 247 ஆண்டுகளில் இலங்கையில் பரவியது. அநுராதபுரத்தை ஆண்ட தேவநம்பியதீசனின் காலத்தில் மகிந்த தேரோவால் பெளத்த சமயம் பரவியது. பெளத்த சமயம் இலங்கையில் பரவிய போது அதிகமான மக்கள் இச் சமயத்தில் இணைந்து கொண்டதுமல்லாமல் பிக்குகளாகவும் மாறினார்கள். சில காலம் கழிந்த பின்னர் இலங்கையில் பெண்களும் பிக்குணியாக வேண்டும் என்று கூறவே பெண்களை பிக்குணிகள் ஆக்குவதற்கு இந்தியாவில் இருந்து வருகை தந்த முதல் பெண்மணி சங்கதிமித்தை ஆவார். இவரே இலங்கையில் பிக்குணிகளுக்கான சாசனத்தை உருவாக்கியவர். அநுராதபுர இராச்சியம் முடிவுக்கு வரும்வரை பிக்குணி சாசனம் நன்றாக செயல்பட்டது. கடைசிக் கால கட்டங்களில் பிக்குணி சாசனம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. அவை :
1. நாட்டில் ஏற்பட்ட அரசியல்
பல கால கட்டங்களில் பஞ்சம் நிலவியமை 3. மன்னரிடம் உதவிகள் ஏதும் கிடைக்காமையால்
மகாயான பெளத்தம் - திருமணத்தில் ஈடுபடலாம். 4. நிக்காய பேதம்
தேரவாத பெளத்தம்-திருமணத்தில்ஈடுபடமுடியாது. இதுவே இலங்கையில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந் நான்கு காரணங்களாலும் பிக்குணி சாசனம் முற்றாக இலங்கையில் அழிவுற்றது. பிக்குணி சாசனம் அழிந்தமையால் பெண்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு இருக்கவில்லை. ஏனெனில் பிக்கு சாசனம் தொடர்ந்து செயற்பட்டது.
09

Page 61
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதாவது 1905ம் ஆண்டு பேந்தோட்டை சுதர்மா என்பவரினர் சில் மாதா என்ற பரம்பரையை இலங்கையில் மீண்டும் தொடக்கி வைத்தார். சில்மாதா என்பவர்கள் சாதாரண பெண்களுக்கும் பிக்குணிகளுக்கும் இன்டப்பட்டவர்கள். ஆனால் இவர்கள் மஞ்சள் வர்ண உடையே அணிந்தார்கள். 1905ம் ஆண்டிற்கும் 1998ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சில் மாதாக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இவர்களை யாரும் மதிக்கவில்லை. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வீடுவீடாகச் சென்றபோது இவர்களுக்கு உணவு கொடுக்கவில்லை. இவர்கள் தாங்களும் பிக்குணியாக வேண்டும் என்று வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் தாமாகவே பாஞ்சாலைகளை உருவாக்கியபோதும் பலர் இடையூறுகளை அளித்தனர். இவ்வாறு பிக்குணிகள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தார்கள். 1998ம் ஆண்டு பிக்குணிகள் கேட்டதுபோல பிக்குணிசாசனம் இவர்களுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது. ஆனால் அநுராதபுர இராச்சியத்தில் கிடைத்த மரியாதை இன்றுவரை கிடைக்கவில்லை. இதிலிருந்து நாம் என்ன அறிய முடிகின்றது என்றால் பெண் பிக்குணிகளுக்குப் பிக்குகளைப் போன்று சாசனம் கிடைத்தாலும் பிக்குணிகளின் அந்தஸ்து உயர்த்தப்படாமல் கீழ் மட்டத்திலே காணப்படுகின்றது.
பெளத்த சமயத்தில் சாதாரண பெண்களின் சமூக அந்தஸ்து.
பொதுவாக பெளத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்து கொண்டுதான் வருகின்றது. ஆனாலும் ஆண்களை விடப் பெண்களே பெளத்த சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். பெண்களே சிறு பிள்ளைகளுக்கும் பெளத்த சமயத்தைப் போதிக்கின்றார்கள். அப்படி இருந்தும் இன்றைய சமூக அந்தஸ்தில் பெண்கள் பல விதமான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றார்கள். இன்றை சூழலில் பெண்கள் பல சந்தர்ப்பங்களில் கற்பழிக்கப்படுகின்றார்கள், ஏமாற்றப்படுகின்றார்கள். பாலுணர்ச்சி வல்லுறவுகளுக்கு பலவந்தம் ஆக்கப்படுகின்றார்கள்.
வேலைக்குசெல்லும் பெண்களை எடுத்துக் கொண்டால் வேலைத்தலத்தில் மேலதிகாரியும் தொல்லையாக இருக்கும், வேலைவிட்டு வீடுகளுக்கு வந்தால் சமயல் பின்னர் குழந்தை இருக்குமாயின் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல். இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
O

பெளத்த பிக்குணிகளுக்கு மட்டுமல்லாது சாதாரண பெண்களுக்கும் ஆணாதிக்கத்திற்கு அடங்கி, செல்ல வேண்டிய நிலையே காணப்படுகின்றது. நான் எனது முன்னுரையில் கூறியது போல் பெண்கள் தொடர்பான இம்சைகள், அச்சுறுத்தல்கள் அநீதிகள் சட்டங்கள் மற்றும் சமூக எதிர்ப்புகள் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி காணப்பட்டதோ அதேபோன்று தான் இன்றும் ஆனால் மேலோட்டமாகப் பார்த்தால் அவர்கள் முன்னேறியது போன்று காணப்பட்டாலும் நாம் உன்னிப்பாக ஆராயும் போது பெளத்த சமயத்திலும் பெண்கள் அக்காலத்தைப் போன்று இக்காலத்திலும் சமூக அந்தஸ்து
குறைவானவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
1. Wickramasinghe. Martin (1964) Buddhism and Culture.
Tisara Prakasakayo Ltd., Sri Lanka.
2. L. P. N. Perera (1991) Buddhism and Human Rights/ Karunaratne
& Sons Ltd., Sri lanka. -
3. Witanachchi. Karalliaclae. Lalitha (1999) Customs and Rituals of
Sinhala Buddhists. Sridevi Printers. Sri Lanka.
4. Wickermeratne Ananda/ (1995). Buddhism and Ethnicity in Sri Lanka, A Historical Anaalysis, Internationl Centre for Ethnic
Studies/ Sri Lanka.
5. Batholomeusz. Tessa (1994) Women under the bo tree. Cambridge
University Press.
6. Buddhism and Society volume 24 no. 4
Desember 1985. Logos.
7. Vijasooriya/ Wimala. (1987). Jathaka Katha Sangraya,
M. D. Gunasena (Sinhala version) Sri Lanka.

Page 62
சமயச் சடங்குகளும் பெண்களும்: மட்டக்களப்பின் வழிபாட்டுப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்ட சில அவதானங்கள்
சித்திரலேகா மெளனகுரு
சிமயம் பற்றிய பெண்நிலை நோக்கிலான ஆய்வுகளும் வியாக்கி யானங்களும் இன்று அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் பெண்களது தாழ்த்தப்பட்ட நிலை பற்றியும் அதனை மாற்றுவது பற்றியதுமான அக்கறைகள் அதிகரித்ததன் விளைவாகவே பெண்களை வெவ்வேறு சமூக நிறுவனங்களுடன் சார்ந்து ஆராயும் போக்கு உருவாகியுள்ளது. இத்தகைய நிறுவனங்களில் ஒன்றாகிய சமயத்துக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்தோர், நிறுவனமயமாகிய, நிலைநிறுத்தப்பட்ட பிரதான சமயங்கள் பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலையை உறுதி செய்வனவாய் அமைந்துள்ளதை எடுத்துக் காட்டியுள்ளனர். சமயத்தின் கிரியைகள், சடங்குகள் என்பன பெண்களது ஒடுக்கும் குறியீடுகளாகப் பயன்படுவதும் இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்து சமயமும் இதற்கு விதிவிலக்கன்று. இந்து மதம் என்பது ஒரு பாரம்பரியத்தை மாத்திரம் கொண்டதல்ல; அது பல்வேறு பாரம்பரியங்களை உடையதாகும். பிரதேசம், வர்க்கம், சாதி என்பவைக்கு ஏற்ப இந்தப் பாரம்பரியங்கள் மாறுபட்டு அமைகின்றன. தத்துவங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றில் இந்த வேறுபாடுகள் பிரதிபலிக்கின்றன.
பெண்களைப் பொறுத்தவரையிலும் சடங்குகளில் அவர்கள் பங்கு பற்றும் முறைகளில் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஆகம மயப்படாத உள்ளூர் வழிபாட்டு முறைகளையும், புராதன வழிபாட்டு முறைகளின் அம்சங்களையும் உள்ளடக்கிய பாரம்பரியத்தில் பெண்களின் பங்குபற்றலுக்கும் செயற்பாட்டுக்கும் சிறிதளவாவது இடம் உள்ளது. ஆனால் சமயம் நிறுவனப்பட்டு, சமஸ்கிருத மயமாகி வளரும்போது பெண்களின் பங்குபற்றல் குறைந்து விடுகிறது. சமயம் பெண்களுக்கு அளிக்கிற வலு குறைந்து அவர்கள் வெறுமனே வழிபடுபவர் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
2

மட்டக்களப்பில் நிலவும் வழிபாட்டுப் பாரம்பரியங்களை அவதானிப்பதன் மூலம் மேற்கூறிய கருத்தை இக் கட்டுரையில் விளக்க முயல்கிறேன்.
மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
மட்டக்களப்பில் நிலவும் இந்து மத வழிபாட்டு மரபுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று ஆகம மயப்பட்ட மரபு; சாஸ்திர ரீதியாக அமைக்கப்பட்ட கோவில்களில் பிராமணப் பூசகர் நித்திய பூசை நிகழ்த்துகின்ற வழிபாட்டு முறைகளைக் கொண்ட சமய மரபு இதுவாகும். மட்டக்களப்பில் மாத்திரமன்றி ஏனைய பிரதேசங்களிலும் இது நிலவுகிறது. இது சமூகத்தின் அதிகாரப் படிநிலை அமைப்பில் மேல்நிலையிலுள்ள இந்துக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றதாகவும் அவர்கள் உரிமை கொள்ளும் சமய மரபாகவும் காணப்படுகிறது.
இரண்டாவது பாரம்பரியமானது பத்ததி அல்லது பத்தசி முறை எனப்படும் வழிபாட்டுமுறையைக் கொண்டது. இதனை உள்ளூர்ப் பாரம்பரிய வழிபாட்டு முறையெனவும் ஆகம மயப்படாதது எனவும் கூறலாம். பெரும்பாலும் மட்டக்களப்பின் கிராமங்களில் காணப்படும் கோயில்களும் வழிபாட்டு மரபுகளும் இந்த இரண்டாவது வகையைச் சார்ந்தவையாகும். இத்தகைய மரபே மட்டக்களப்பில் பிரபலமானதாகவும் காணப்படுகிறது. இவ்வகையான வழிபாடு
நடைபெறும் கோயில்களே முதலாவது வகையைவிட அதிகளவிலும் உள்ளன.
இத்தகைய கோயில்களில் நிலவும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் “சிறு தெய்வ வழிபாடு”, “சிறு தெய்வங்கள்’ என்ற தொடர்களால் குறிப்பிடும் வழக்கு இன்று வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக எமது ஆராய்ச்சி உலகத்தில் இத்தகைய வழக்குக் காணப்படுகிறது. இதே வேளை பிராமண / சமஸ்கிருத மயப்பட்ட சமய மரபுகள் “பெருந் தெய்வம்’, ‘பெருந் தெய்வ வழிபாடு’ எனக் குறிக்கப்படுகின்றன. இத்தகைய பெரு / சிறு ஆகிய அடை மொழிகள் இச் சமயமரபுகளிடையே தாரதம்மியம் கற்பிக்கின்றன; சமஸ்கிருத மயப்பட்ட சமயத்துக்கு அதிகாரரீதியான உயர் நிலையை அளித்து ஏனைய சமய மரபுகளை அதற்குக் கீழ்ப்பட்டதாகக் காட்டுகின்றன. இத்தகைய மொழிப் பிரயோகங்களுக்கும், இத்தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் நிகழும் சமூகத் தளத்திற்கும் இடையிலான தொடர்பு சிந்திக்கத்தக்கது.
3

Page 63
பத்ததி முறைமையைப் பேணும் கோயில்களில் வழிபாடு தினமும் நடைபெறுவதில்லை. இவற்றில் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட தினங்களில் வழிபாடு நடைபெறும். இது சடங்கு எனப்படும். பெரும்பாலும் வைகாசி மாதம் தொடக்கம் ஆவணி மாதம் வரை வெவ்வேறு தினங்களில் இவ் வழிபாடு நடைபெறும். வழிபாடு ஆரம்பிப்பதைக் கதவு திறத்தல் எனக் கூறுவர். உண்மையில் பூட்டப்பட்டிருக்கும் கோயில் கதவுகள் சடங்கிற்காகத் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று இறுதியில் பூட்டப்படும்.
இக் கோயில்கள் யாவுமே கல், மண், மரம் போன்றவற்றால் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடங்கள் அல்ல ; சில கோயில்கள் ஒரு குறிக்கப்பட்ட இடத்தில் சடங்குக் காலத்தில் பந்தலிட்டு வழிபடும் இடங்களாக மாத்திரம் அமைந்துள்ளன. இத்தகைய இரண்டாவது வகைப்பட்ட, சமஸ்கிருத மயப்படாத தெய்வ வழிபாட்டுப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டே பெண்களும் சடங்குகளும் பற்றிய எனது கட்டுரை அமைகிறது.
மட்டக்களப்பின் தெய்வங்கள்
மட்டக்களப்பில் வழிபடப்பெறும் தெய்வங்களுள் எண்ணிக்கையில் அதிகமானவை பெண் தெய்வங்களாகும். இவை அம்மன் கோயில்கள் எனப்படும். மட்டக்களப்பில் சிறு தெய்வ வழிபாடு - ஒர் அறிமுகம் எனும் நூலில் மகேஸ்வரலிங்கம், 201 பெண் தெய்வக் கோயில்களையும், 92 ஆண் தெய்வக் கோயில்களையும் அட்டவணைப்படுத்தியுள்ளார். இவரது அட்டவணைப்படி பெண் தெய்வக் கோயில்களின் நிரல் பின்வருமாறு அமைகிறது :
- 73
காளியம்மன் - 52
கண்ணகையம்மன் - 48
பத்தினியம்மன் - 09 கடல் நாச்சியம்மன் - 05 பேச்சியம்மன் - 06
திரெளபதையம்மன் --06 س நாச்சிமார் - O சுவாதியம்மன் - 01
இவ் விபரங்களின்படி ஆண் தெய்வக் கோயில்களை விடப் பெண் தெய்வக் கோயில்களே மட்டக்களப்பில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இது இப்பகுதி மக்கள் பெண் தெய்வங்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தைப் புலப்படுத்துகின்றது.
4

இத் தெய்வங்களுக்குரிய வழிபாடுகள் யாவற்றையும் சடங்கு என்ற பொதுச் சொல் குறிக்கும் என்பது மேலே கூறப்பட்டது. இவ்ை தெய்வங்களுக்கேற்ப வெவ்வேறுபட்டு அமையினும் சில பொதுவானவையாக உள்ளன. தெய்வமாடல், காவியம் பாடல், மடைவைத்தல், தீப் பாய்தல், பள்ளயம்
ஆகியவை பெரும்பாலான வழிபாட்டு முறைகளுக்குப் பொதுவானவையாகும்.
பெண்களின் பங்குபற்றல்;
பெண்கள் வழிபடுவோராக மாத்திரமல்லாது, சில சடங்குகளில் பங்குகொள்வோராகவும் உள்ளனர்: சில சடங்குகளின் போது குரவையிடுதல், சடங்குகட்கு வேண்டிய பண்டங்களைச் செய்வதற்கான அரிசி, மா ஆகியவற்றுக்கான நெல்லைக் குற்றுதல், தெய்வபாடுதல் கன்னிமார் சடங்கு ஆகியவற்றில் பெண்கள் பங்கு பற்றுகின்றனர்.
கண்ணகியம்மன் கோயில் திறந்து பூசையாகும்போது பெண்கள் குரவை இடம் பெறவேண்டும் என்பது நியதி. மேலும் இக்கோயில்களில் கலியாணக்கால் கொண்டு வரும்போதும் பெண்கள் குரவையிடுவர். கண்ணகியம்மன், மாரியம்மன் கோயில்களில் நெல்லுக் குற்றும் போதும், பொங்கலிடும் போதும், பால்பொங்கி வழியும் வேளையிலும் குரவையிடுதல் முக்கிய அம்சமாகும். குரவை என்பது பெண்கள் கூட்டமாகக் கூடிநின்று வாய் திறந்து நாக்கின் கீழ் சுட்டுவிரலை விட்டு அசைத்து எழுப்புகின்ற ஒரு வகை ஒலியாகும். சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்படும் வெவ்வேறு வகைக் குரவைகள் இங்கு
நினைவு கூரத்தக்கன.
நெல்லுக் குற்றுதல்:
பெண் தெய்வக் கோயில்களில் சடங்குகள் நடக்கும் போது படைக்கப்பட வேண்டிய உணவுப் பண்டங்களைச் செய்வதற்குரிய அரிசி, மா ஆகியவற்றைப் பெறுவதற்கு நெல்லுக் குற்றுதல் கோயில் வளவுக்குள்ளேயே இடம் பெறும். நிரந்தரமான கட்டிடத்தால் அமைந்த கோயிலன்றி பந்தலிட்டுச் செய்யும் வழிபாட்டிலும்
காவல் பண்ணிய எல்லைக்குள் இடம் பெறும். இதில் பெண்களே பங்கெடுப்பர்.
5

Page 64
கன்னிமார் சடங்கு
மாரியம்மன், பேய்ச்சியம்மன் கோயில்களில் இறுதிநாள் காலையில் கன்னிமார் சடங்கு நடைபெறும். பருவமடையாத ஏழு சிறுமிகளை (இவர்களே கன்னிமார் எனப்படுவர்) தேர்ந்தெடுத்து தலை முழுக்காட்டி, கண்ணுக்கு மை பூசி, புதிய ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். பின்னர் இவர்களை வெள்ளைச் சேலைப் பந்தலின் கீழ் வரிசையாக வயது முதிர்ந்த பெண்கள் கோயிற் பக்கம் அழைத்துச் செல்வர். கோயிலை வலம் வந்த பின்னர் கோயில் வாசலில் திரை மறைவுள் கன்னிமாரை இருக்க வைப்பர். அவர்களுக்கு முன்னர் முதல் நாள் ஆக்கிய சோறைத் தண்ணிர் விட்டு பழங்களுடன் படைப்பர். பொங்கல் படைப்பதும் உண்டு. இதுவே பள்ளயம் எனப்படும். கன்னிமார் இதனைச் சாப்பிட முன்னர் பெண்கள் இவர்களிடம் மடிப்பிச்சை எடுப்பர். தமக்கு முன் வைத்த படையலிலிருந்து கன்னிமார் அவர்களது மடியில் இடுவர். இது மடிப்பிச்சை எனப்படும். இதன் பின்னர் கன்னிமார் உண்ணுவர். இத்துடன் இச்சடங்கு முடிவுறும்.
தெய்வமாடுதல்:
பெரும்பாலான கிராமியக் கோயில்களில் தெய்வமாடுதல் என்பது ஒரு பொது வழக்காகும். தெய்வமாடுதல் என்பது ஒரு தெய்வத்தின் அருள் கொண்டு உருவேறி ஆடுதலாகும். மந்திர உச்சாடனமும் உடுக்கொலியும் உருவேற்றுதலுக்கான பின்னணியாக அமையும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் வேறு வேறான மந்திரங்களுண்டு. அது போல தெய்வத்தைக் கட்டுப்படுத்தவும் புறம்பான மந்திரம் உண்டு. குறிப்பிட்ட தெய்வத்திற்குரிய மந்திர உச்சாடனம் செய்து தெய்வத்தை வரவழைத்து மக்களுக்கு அதனைக் கொண்டு நல்வாக்குக் கூற வைத்துப் பூசாரியார் சடங்கினை நடத்துவார். தெய்வம் ஏறி ஆடுவோரைத் தெய்வக்காரர் என அழைப்பர். தெய்வமாடும்போது கூறும் அருள் வாக்கைக் கட்டு என்பர். ஆடுபவர் மஞ்சள் பூசி வேப்பிலையைக் கையில் பிடித்து சிலம்பு அணிந்து ஆடுவர். ஆட்ட லயத்திற்கு ஏற்ப உடுக்கு, தவில், சவணிக்கை என்பன அடிக்கப்படும். சிலம்பு, அம்மானைக்காய் குலுக்கப்படும். جم
தெய்வமாடுவோர் ஆண்களும் பெண்களுமாவர். ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முந்திய காலத்துடன் ஒப்பிடும்போது இன்று தெய்வமாடும் பெண்களின் தொகை குறைந்துள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள புன்னைச் சோலை காளியம்மன் கோயிலில் வருடாவருடம் நான்கு பெண்கள் தெய்வமாடுகின்றனர். நகருக்கு அருகிலுள்ள காளியம்மன், பேச்சியம்மன் கோயில்களிலும் ஒரிரு பெண்கள் இன்னும் ஆடுவதைக் காணலாம்.
6

இவ்வாறு தெய்வமாடுபவர் சடங்கு வேளைகளில் மிகவும் மதிப்புக்கும் வணக்கத்திற்கும் உரியவராகக் கருதப்படுவார். அவர்களிடம் வாக்கு கேட்பது மிக முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. கட்டுச் சொல்வது அல்லது வாக்குக் கேட்பது பெண்களாலும் செய்யப்படுகிறது.
"சிறு தெய்வ வழிபாட்டில் தெய்வமாடுதல் பொது வானதோர் வழக்காறு. இதற்கு மட்டக்களப்புச் சிறு தெய்வ வழிபாடு சிறந்ததொரு எடுத்துக் காட்டு. இங்கு சில கோயில்களில் ஆண்களும் பெண்களும் சுமார் நாற்பது ஐம்பது பேர் தெய்வமாடுவதை இன்றும் காணலாம். இவ்வாறு தெய்வமாடுபவர்கள்ைப் பொது மக்கள் பூசை வேளையில் தெய்வமெனக் கருதி ஆசார உபசாரங்கள் செய்வதையும், தெய்வமாடுபவர்கள் அருள்வாக்குக் கூறுவதைத் தெய்வவார்த்தையாக மதித்து அதற்குக் கீழ்ப்படிந்து நடப்பதையும் அவதானிக்க முடிகிறது."
தெய்வம் ஆடும் பெண்கள் வழக்கமான சேலை, ரவிக்கை அணிந்திருப்பர். மார்பில் சேலைக்கு மேலாக ஒரு துணியினால் மார்பகங்களை இறுக்கமாகக் கட்டி முதுகுப்புறமாக முடிந்திருப்பர். குளித்து நீறு, சந்தனம், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை உடலெங்கும் பூசி கையில் வேப்பிலையுடன் நிற்பர். தெய்வமாடும் பெண் திருமணமானவராகவோ கணவனை இழந்தவராகவோ இருக்கலாம். சாதாரண நடைமுறையில் கணவனை இழந்த பெண்களுக்கு விலக்கப்படும் மஞ்சள், குங்குமம் இவர்களுக்கு விலக்கப்படுவதில்லை. அவற்றைக் கையாளவும் அணியவும் அவர்களுக்குத் தடையில்லை.
தெய்வமாடுதலின்போது சாட்டை கொடுத்தல் என்ற நிகழ்வும் இடம் பெறும். தெய்வங்கள் உருவேறி ஆடும்போது சாட்டைக் கயிற்றால், ஆடுகின்ற தெய்வத்திற்குப் பலமாக அடிப்பர். தெய்வம் ஆய், ஊய் எனச் சத்தம் எழுப்பி மேலும் உக்கிரமாக ஆடும். சில சமயம் தெய்வமாடும் பெண்களும் இத்தகைய சாட்டை கொடுத்தலை விரும்பிக் கேட்பர். இவ்வாறு தெய்வம் ஆடுகிற வேளை கட்டுச் சொல்லுதல் என்ற நிகழ்வும் இடம் பெறும். கட்டுச் சொல்லுதல் என்பது தெய்வம் ஆடுபவர் அவ்விடத்தில் வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள் வாக்குச் சொல்வதாகும். தெய்வம் ஆடுபவர் விரும்பிய பக்தரைக் கூப்பிட்டு தண்ணீர்
7

Page 65
தெளித்து திருநீறு, குங்குமம் பூசி ஏதாவது கூறுவார். வேப்பம் இலை
வாழைப்பழம் போன்றவற்றைச் சில சமயங்களில் உண்ணவும் கொடுப்பார். இவ்வாறு தெய்வம் ஆடுபவர் கூறும் வார்த்தைகளும் கொடுக்கும் பொருள்களும் மிகவும் மதிப்புக்கு உரியனவாகும். கூறும் வார்த்தைகள் பலிக்கும் என்றே மக்கள்
நம்புகின்றனர்.
கோயில்களில் தெய்வம் ஆடுதல் போல தனிப்பட்டோரது வீடுகளிலும் அம்மன் வழிபாடு நடத்தித் தெய்வமாடலும் கட்டுச் சொல்லுதலும் இடம் பெறுவதுண்டு. பெண்களே இவ்வாறு தெய்வமாடுகின்றனர்; கட்டுச் சொல்கின்றனர். இவ்வாறு வீடுகளில் வழிபடுவது வீட்டுச் சடங்கு என்று கூறப்படும். மட்டக்களப்பு நகரிலேயே இத்தகைய சடங்குகளில் ஈடுபடும் ஒரிரு பெண்கள் உள்ளனர். இவர்களுள் பிரபலமானவர் கல்லடியம்மா என அழைக்கப்படுவர். காளி அம்மனை வணங்குபவர். அவர் கூறும் வாக்குப் பலிக்குமென்றும் நினைத்தது சொல்வாரெனவும் மக்கள் நம்புகின்றனர். கோயிற் சடங்குகளின் போதும் தெய்வமேறி ஆடும் இவர் தமது வீட்டிலும் தெய்வமாடுவார். குடும்பத்தில் ஏதும் இடைஞ்சல்கள் ஏற்படும் போதும் அம்மை நோய் போன்றவை வரும்போதும் வீட்டில் கும்பம் வைத்து மாரியம்மனைப் பூசிக்கும் வழக்கம் மட்டக்களப்பில் பொதுவாகக் காணப்படுகிறது. இந்தப் பூசனையின் போது அந்த வீட்டுப் பெண் ஒருவர் தெய்வமாடுதலும் உண்டு.
இவ்வாறு பெண்கள் பங்கு பற்றும் வழிபாட்டு முறைகள் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய சில வழக்கங்களை நினைவு படுத்துகின்றன.
பெண்கள் தெய்வமாடுதல், கட்டுச் சொல்லுதல் போன்றவை பண்டைய தமிழ்ச் சமூகத்தில் இடம் பெற்றிருப்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகருகின்றன. தெய்வமேறி ஆடுதல் சங்க இலக்கியத்தில் வெறியாட்டு எனப்பட்டது. தெய்வமேறிய பெண் “வெறியள்’ எனக் குறிப்பிடப்பட்டாள். பெண்கள் கட்டுச் சொல்வது பற்றிய குறிப்பும் சங்க இலக்கியங்களிற் காணப்படுகிறது. கட்டுவிச்சி என்ற வழக்கு உதாரணமாகும். தெய்வமேறிக் குறி சொல்லும் கட்டுவிச்சி பற்றி ஒரிரு குறிபுக்களும் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் ஐயை, சாலினி பற்றிய செய்திகளும் இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கன.
8

பூசாரியாரின் பெண் வேடப் புனைவு:
பெண் தெய்வக் கோயில்களில் பூசாரியார் பெண் போல சேலை கட்டிப் பொட்டிட்டு கைக்குச் சிலம்பணிந்து பூசை செய்யும் முறை வழக்கிலுள்ளது. தீப்பாயும் போதும் இத்தகைய வேடப் புனைவுடனையே பூசகர் ஏனைய தீப்பாயும்
பக்தர்களுக்குத் தலைமை தாங்கித் தீயில் நடப்பார்.
பெண் வேடமிட்டுப் பூசனை செய்தலும், தீயில் நடத்தலும், தெய்வமாடலும், காவியம் படித்தலும் பெண்கள் பூசகர்களாக இருந்த நிலையின் நினைவெச்சங்கள்
என்றே கூறுலாம்.
வேறு பல கலாசாரங்களிலும் ஆண்கள் மாந்திரிகராகவோ பூசகராகவோ கடமையாற்றும் போது பெண்ணுடையணிந்து பெண்களைப்போல நடந்து கொள்கின்றனர் என்பதை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. முன்னொரு காலத்தில் பெண்களே அச்செயல்களைச் செய்தமையை அது சுட்டிநிற்கும் என
ஆராய்ச்சியாளர் கருதுவர்.
மேலே காட்டியவாறு சமயச் சடங்குகளில் பெண்கள் பங்குபற்றுதல் அவர்களுக்கு ஒரு வலுவை அளிக்கிறது. தெய்வமாடும் நேரங்களிலும் கோயில் சடங்குகளை அண்டிய காலங்களிலும் அவர்கள் தற்காலிகமாகவாவது வலுவுடையவர்களாகவும் பலம், சக்தி உடையவர்களாகவும் கருதப்படுகின்றனர். குறிப்பாகத் தெய்வம் ஆடுதல் எனும் நிகழ்வின்போது அவர்கள் உயர் நிலை பெற்று விடுகிறார்கள். தமது கருத்துக்களையும் ஆசைகளையும் சற்றும் தயக்கமின்றி வெளிப்படையாகப் பொது இடத்தில் கூறுவதற்கு இது சந்தர்ப்பம் அளிக்கிறது. ஆனால் இந்தத் தற்காலிக வலு பெண்களுடைய வாழ்க்கையில் எத்தகைய அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் அவர்கள் அனுபவிக்கும் ஒடுக்கு முறைகளை நிரந்தரமாக அகற்றவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனினும் ஒடுக்கு முறை மிகுந்த தம் வாழ்க்கையில் ஒரு சில நாட்களாவது அவர்கள் அதிலிருந்து விடுபட்டு வலுவுடையவர்களாக உணர்கிறார்கள் என்பது இச் சடங்கு முறைகளை அவதானிக்கும் போது தெரியவருகிறது. எனினும், பெண்கள் சடங்குகளிற் பங்குபற்றல் குறிப்பாகத் தெய்வமாடுதல் இன்று மிகவும் குறைந்து வருகிறது. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம்.
9

Page 66
சமயத்தின் சமஸ்கிருதமயமாகல்:
சமஸ்கிருத மயமாகல் என்பது இந்து மதத்தினரிடையே உள்ள புறந்தள்ளப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தாம் சமூக அந்தஸ்தைப் பெறுவதற்காகச் சமூகத்தில் உயர்நிலையும் அதிகாரமும் பெற்றிருப்போரின் வழக்கங்கள், சடங்குகள், கருத்தியல் ஆகியவற்றைத் தழுவும் போக்காகும்.
மட்டக்களப்பிலும் இத்தகைய ஒரு போக்கினையே இன்று காணமுடிகிறது. நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உள்ள, படித்து உயர் பதவிகளைக் கொண்டோர் தமது புதிய சமூக அந்தஸ்தை மேலும் நிலைநிறுத்தவும் அடையாளப்படுத்தவும் கோயிலைத் தளமாகப் பயன்படுத்துகின்றனர். கோயில்களைப் பெரிதாக சாஸ்திர விதிப்படி கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது, வருடமொருமுறை சடங்கு என்ற நிலையிலிருந்து தினப் பூசையாகப் பிராமண்ப் பூசகர்களைக் கொண்டு பூசை செய்விப்பது போன்றவை இதில் அடங்கும். சுருங்கக் கூறின் உள்ளூர் வழிபாட்டு முறைகளை ஒதுக்கி ஆகம மயப்பட்ட முறைக்கு மாறுதல் எனலாம். இத்தகைய ஆகமமயப்பட்ட வழிபாட்டு முறைகளில் பெண்களுக்கு இடமில்லை. அவர்கள் வழிபடுபவர்களாக மாத்திரமே உள்ளனர். தெய்வமாடும் சடங்கோ, பத்ததி முறையில் இடம்பெறும் ஏனைய வழிபாடுகளோ இதில் இடம் பெறுவதில்லை. எனவே பெண்களின் பங்கு பற்றல் / வழிபாட்டினை நடத்தல் குறைந்து விடுகிறது. பத்ததி முறையில், உள்ளூர் வழிபாட்டுச் சடங்குகளில் பெண்களுக்குத் தற்காலிகமாகவாவது கிடைத்த வலு சமஸ்கிருதமயமாகிய வழிபாட்டு முறைகளிற் கிடைப்பதில்லை.
தந்தை வழி கலாசார விழுமியங்களின் நிலைபேறு:
தந்தை வழிக் கலாசார விழுமியங்கள் பெண்கள் பொதுத் தளத்திற் செயற்படுவதை அனுமதிப்பதில்லை. பெண்கள் செயற்பாடுகள், நடமாட்டம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி அவர்களை வீட்டுக்கு உரியவராகவும், "இல்லக்கிழத்தி” களாகவும் காட்டவே அவை முயல்கின்றன. இவ்வகையிலேயே பெண்களுக்குரிய நடத்தைக் கோலங்களையும் ஒழுக்கவியலையும் நிர்ணயிக்கின்றன. பெண்கள் தெய்வமாடுதல் விரும்பப்படாமல் தடுக்கப்படுவதற்கு இத்தகைய தந்தை வழிக் கலாசார விழுமியங்களின் நிலை பேறே காரணம் எனலாம். குறிப்பாக, தெய்வமாடும் பெண்ணின் இளைய உறவினர் தெய்வமாடுதல் அநாகரிக செயலென்று கூறித் தடுக்க
20

முனைகின்றனர். பெண்கள் பொது இடத்தில் சுதந்திரமாக ஆடுவது விரும்பத்தகாதது என்ற கருத்து இவர்களிடையே காணப்படுகிறது. இத்தகைய கருத்துக்களின் செல்வாக்கினால் பெண்கள் தெய்வமாடுதல் இன்று குறைந்து வருகிறது.
(UDI-66 J:
இந்த விபரங்களைத் தொகுத்து நோக்கும் போது சமஸ்கிருத மயப்படாத சமயப்பாரம்பரியங்களில் பெண்ணுக்கு இருக்கும் செயற்பாடு சார்ந்த பங்கு, சமயம் சமஸ்கிருதமயப்படும்போது குறைந்து அல்லது இல்லாமற் போவதைக் காணலாம். சமஸ்கிருதமயமாதலுடன் தந்தை வழிக் கருத்தியலும் கலாசார விழுமியங்களும் சேர்ந்து தொழிற்படுவதும் இந்நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. W
2

Page 67
சித்தர் பார்வையில் பெண்கள்
செ. யோகராசா
ஆய்வின் அவசியம்
ee
fத்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்துநிற்கவும்
வைதிக சமய நெறியினர் அவர்களைத் தள்ளிவைத்தனர்.
மிகச் சமீபகாலம்வரை சைவ சித்தாந்திகளை சித்தர்
メタ
நூல்களை விலக்கிவைத்திருந்தனர்.
-க. கைலாசபதி
தமிழ் மக்கள் சிலரின் சிந்தனைகள் புதுவழியில் செல்வதைச் சித்தர் பாடல்கள் உணர்த்துகின்றன.”
-ஆ. வேலுப்பிள்ளை-*
"சித்தர்கள்நாட்டுப்பாடல் யாப்புமுறையில் மக்கள் விரும்பும் ஒசையொழுங்கில் பாடல் இயற்றினார்கள்.”
-க. கைலாசபதி
தமிழர் சமய வரலாற்றிலும் தமிழர் சமூக வரலாற்றிலும் தமிழ் இலக்கிய
வரலாற்றிலும் சித்தர்கள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளமையை முறையே
மேற்கூறிய கூற்றுகள் புலப்படுத்துகின்றன. இவ்வாறு முக்கியம் பெற்றுள்ள
சித்தர்களின் பார்வையில் பெண்களுக்குரிய இடம் யாது என்பது பற்றி
அவதானிப்பது பயனுடையது.
தவிர, இச்சித்தர்கள் பெண்கள் மீது அளவற்ற வெறுப்புடைய
வர்களென்றும், தீராத காமப் பசியுடையவர்களாகப் பெண்களைச் சித்திரித்துக்
காட்டியுள்ளனரென்றும் எல்லோரும் இதே கொள்கைப் போக்குடையவரென்றும்
22

(சித்தர்களுள் ஒருவரான) பட்டினத்தார் இவர்கள் எல்லோரையும் மிஞ்சியவரென்றும் இன்று பெண்நிலைவாத ஆய்வாளரால் நோக்கப்படுகின்றனர். எனவே, இவ் விதத்திலும் இத்தகைய ஆய்விற்கான தேவைப்பாடுள்ளது.
2. சித்தர்கள் பற்றி:
இத்தகைய சித்தர்கள் எண்ணற்றவரென்றாலும் 18 சித்தர்களே முதன்மைப்படுத்தப்படுகின்றனர். இவர்களுள் திருமூலர் காலத்தால் முற்பட்டவராகக் கருதப்பட்டாலும், அவருக்கு முற்பட்டவர்களான திருவள்ளுவர், ஒளவையார் முதலியோரும் சித்தர் பட்டியலில் சேர்க்கப்படுவதுண்டு. மேலும், அகத்தியர், தன்வந்திரி, வான்மீகி முதலான வட நாட்டவரும், போகர், புலிப்பாணி முதலிய சீன நாட்டினரும்கூட இப்பட்டியலில் இடம்பெறுகின்றனர். எனினும் மொழிநடை கொண்டு நோக்கும்போது சித்தர்களுட் பெரும்பாலானோரை விஜயநகர காலத்தவராகக் கருதமுடிகின்றது. தமிழ்நாட்டுச் சித்தர் குழுவினருக்கு திருமூலரை முதல்வராக்கலாமென்பது தாயுமானவர் பாடல்களிலிருந்து தெரியவருகின்றது.
சிவவாக்கியர், பாம்பாட்டிச்சித்தர், இடைக்காட்டுச்சித்தர், அகப்பேய்ச்சித்தர், குதம்பைச்சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகுணிச்சித்தர், கொங்கணிச்சித்தர், வாலசுவாமி, காகபுகண்டர் முதலான 22 சித்தர்களின் பாடல்கள் இவ்வாய்விற்குப் பயன்பட்டுள்ளன.
3. சித்தர்களின் பெண் தெய்வ வழிபாடு:
சித்தர்கள் போற்றிய தெய்வங்களுள் பெண் தெய்வங்கள் அடங்கியுள்ளனர். இத்தகைய பெண்தெய்வங்கள் பற்றிய விவரங்கள் கருவூரரின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. வாலைப்பெண், சிவகாமி, ரூபி, கன்னி, சிறுபிள்ளை, பெண்ணரசு, தேவி, உத்தமியாள், வாலைச்சத்தி சிறுபிள்ளை, சிறுபெண், தாய், வல்லி, ஆத்தாள், உத்தமி, மனோன்மணி, முதலான பெயர்கள் இவரின் பாடல்களில் காணப்படுகின்றன:
6T-G : வாமியிவள் மர்மம் வைத்துப் பூசை பண்ண
மதியுணக்கு வேணுமடா அதிகமாக காமிவெகு சாமிசிவ காமிரூபி
கானரிது சிறுபிள்ளை கன்னிகன்னி ஆமிவளை யறிந்தவர்கள் சித்தர் சித்தர்
அறிந்தாலு மனமடக்க மறிய வேனும் நாமிவளைப் பூசைபண்ணி நினைத்தவாறு
நாட்டிலே சொல்லவென்றால் நகைப்பார் தாமே!
23

Page 68
இராமதேவர் பெண் தெய்வத்தை ஆத்தாள்’ என்றே குறிப்பிடுகின்றார். "ஆத்தாளைத் தியானித்தால் போதும் அவளே அனைத்தும் தருபவள் அவளைப் பூசிப்பதையே கடமையாகக் கொண்டால் போதும்” (பா:8) என்பதும் "தாயுடைய கிருபையாலே தவமாகும் மரபாகும் சுபமுண்டாகும் (பா. 10) என்பதும் தாயை நேசித்துவா” (பா. 10) என்பதும் அவர்தம் கருத்தாகும். இவ்வாறே பாம்பாட்டிச்சித்தர், வான்மீகிச்சித்தர் ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.
'வாசி என்ற பெயராலும் பெண் தெய்வத்தை சித்தர் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. ஏனெனில், சிவா (சிவன்) என்பதன் எதிர்ப்பதமாக 'வாசி என்பது கருதப்படுகிறது. (சிவா’ என்பதை இடம்மாறிப் படிப்பின் வாசி என்று அமைவதும் குறிப்பிடத்தக்கது) வாசியைவிட வேறு தெய்வமில்லை' என்றும் சித்தர் கருதுவர்.
மேற்கூறியவாறு பெண் தெய்வங்களை சித்தர்கள் வழிபட்டமை பண்டைய பாரம்பரியமொன்றின் தொடர்ச்சி என்றே கருதமுடிகின்றது. நாமறிந்தது போன்று நாகரிகச் சமூக உருவாக்கத்தின் ஆரம்ப காலங்களில் விவசாயத்தில் முதன்மை இடம்பெற்றிருந்தவர்கள் பெண்களே. இன்னொருவிதமாகக் கூறின் பெண்கள்
வளமைச்சடங்குடன் இணைத்துப் பார்க்கப்பட்டுள்ளனர்.
“மிகுதியான செழிப்புத்தரும் சக்திகளையும் இயற்கைக் கூறுகளையும் அக்கால மனிதன் பெண்ணின் சக்தியாகவே கருதினான். எனவே, அச்சக்தியைப் பெண்ணாகவே உருவகம் செய்தான். இவ்வாறே அச்சத்தை விளைவிக்கும் இனம் காணவியலாச் சக்திகளையும் பெண்ணின் அம்சமாகக் கண்டான்.”*
மேலும் பெண்களுக்கு மந்திர சக்தி இருந்ததென்றும் நம்பப்பட்டது. பெண்ணின் அமானுஷ்ய ஆற்றல்களுடன் மந்திரம் தொடர்புடையதென்று நம்பப்பட்டது. “வேறு பல கூட்டத்தினரிடையே ஆண்கள் மாந்திரீகக் கடமையாற்றும் போது பெண்கள்போல் உடையணிந்து கொண்டனர்” என்பதும் கவனத்திற்குரியது. இம்மாதிரியான பெண் தெய்வங்களே பின்னர் தாய்த் தெய்வமாக்கப்பட்டு வழிபாட்டிற்குரியனவாகின. சிந்துவெளி நாகரிகத்தில் முதன்மை இடம்பெற்று விளங்கியதும் தாய்த்தெய்வ வழிபாடே என்பர்.
24

4. சித்தர்களின் தாந்திரிகச் சடங்குகள்
மேற்கூறிய பெண் தெய்வ வழிபாட்டு முறையில் தாந்திரிகச் சடங்குகள் முதன்மை பெற்றிருந்ததாகக் கருதமுடிகின்றது. இத்தகைய தாந்திரிகச் சடங்குகள் மது, மாது, மச்சம், மைதுனம் ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருந்தன. சித்தர்கள் தெய்வங்களை கன்னி, வாலை முதலிய பெயர்களால் அழைப்பதும், சித்தர்கள் கஞ்சா', 'அபின் குடிப்பவர்களாகக் கருதுப்படுவதும் இங்கு நினைவுகூரத் தக்கவை. மேலும் பெண் தெய்வங்களைச் சக்கர வடிவில் பூசிப்பதும் முக்கியம் பெற்றிருந்தது.
தவிர சித்தர்கள் குண்டலினி சக்தியுடையவர்களாகவும் கருதப்பட்டனர். இவ்வாறு சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி ஒரிடத்தில் சேர்த்து குண்டலினி சக்தியைக் காட்டும் வல்லமையூடாகவே சித்து வேலைகள் செய்யும் ஆற்றல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது என்று கருதுப்படுகிறது.
இவ்விடத்தில் கொல்கணச் சித்தரின் பின்வரும் பாடல் கவனிக்கத்தக்கது:
முக்கோண வட்டக்கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசிப் பழக்கத்திலே அக்கோன வட்டச் சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலைப் பெண்ணே.”
உலகில் நிலைபெற்ற உயிர்கட்குத் தேவி மந்திரச் சக்கரத்தைத் தியானிப்பதைக் காட்டிலும் வேறு வழிவகை இல்லை என்று திருமூலரும் குறிப்பிடுவார்.
பெண் தெய்வ வழிபாடு வளர்ச்சி பெற்ற நிலையில் உலகின் உண்மைத் தன்மையைத் தாந்திரிகமுறை வலியுறுத்தியதெனலாம். இன்னொரு விதமாகக் கூறின் தாந்திரிகம் உலகின் செழிப்புத் தன்மையை மேலும் வலியுறுத்தியது எனலாம். வயல்களின் வளமையோடு பெண் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. உலகமே பெண் வடிவமாகக் கருதப்பட்டது.
இத்தகைய தாந்திரிக முறைமை வைதிக அமைப்பிலிருந்து பெருமளவு மாறுபட்டிருந்தது. “சூத்திரரும் பெண்களும் தாந்திரிகத்தில் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படவில்லை.” தாந்திரிகம் தொடர்பான சடங்குகளும் மந்திரங்களும் தாழ்த்தப்பட்டோர் எனக் கருதப்பட்ட சாதியினரிடமும் கிராமப்புற மக்களிடம் அதன் கலப்பற்ற வடிவத்தில் காணப்படுகின்றன; அம்மக்களின் வாழ்க்கை முறையோடு நெருங்கிய தொடர்புடையன.
i25

Page 69
"கனியைப் பெற்றுத் தரும் மண்ணும் குழந்த்ையைப் பெற்றுத் தரும் பெண்ணும் பொதுவானவை” என்ற நம்பிக்கை தாந்திரிகம் மக்களின் வாழ்க்கை
முறையோடு தொடர்புடையதாக இருப்பதை உணர்த்துகின்றது.
இவ்வாறு நோக்கும்போது தாந்திரிக சடங்கு முறைகளைப் பின்பற்றிய சித்தர் பெண் தெய்வ வழிபாட்டுமுறையை முதன்மைப்படுத்தியிருப்பதென்பதும் உலகியல் அனுபவங்களை மிகுதியாகப் பெற்றிருப்பரென்பதும் வியப்பிற்குரிய விடயங்களாகா.
5. சித்தர்களும் பெண்கள் தொடர்பான சடங்குகளும்
சம்பிரதாயங்களும்
வைதிக சமயங்களால் வெறுத்தும் அசுத்தமானதென்றும் கருதப்பட்ட பெண்களுடன் தொடர்புபட்ட பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் சித்தர்களால் ஏற்கப்பட்டுள்ளன. *
எடுத்துக்காட்டாக, பூப்படைதல், மாத விலக்கு ஏற்படும் காலங்களில் பெண்களை விலக்கி வைக்க வேண்டுமென்பது வைதீக மரபு. ஆயின் அத்தகைய நிகழ்வுகள் பெண்களின் வளமான வாழ்வின் தொடக்கமென்பதால் அவற்றை அவர்களை விலக்க வேண்டியதில்லை என்றும் பெண்கள் உலகியல் வாழ்க்கை சிறப்படைய உதவுபவர்கள் என்றும் சித்தர்கள் வாதிட்டுள்ளனர். வைதீகத்தில் தீட்டு என்று விலக்கப்பட்ட மாதவிலக்கு, எச்சில் முதலியவை வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையவை என்று சித்தர்கள் உணர்ந்துள்ளனர். இன்னொரு விதமாகக் கூறின், சித்தர்கள் பெண்களின் உலகியல் வாழ்வையும் மதிப்பையும்
உணர்ந்து இவ்வாறு செயற்பட்டனரென்று கூறலாம்.
இவ்விடத்தில் மாதவிலக்கு அல்லது தீட்டு பற்றிச் சிவவாக்கியர் கூறும் கருத்து குறிப்பிடத்தக்கது. அது பின்வருமாறு:
"மாதா மாதம் தூமைதான் மறந்துபோன் தூமைதான் மாதம் அற்று நின்றுலொ வளர்ந்து ரூபம் ஆனது? நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடா? வேதம் ஒதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?”
“மாதவிலக்கு நின்றதால் மனிதனாக உருவெடுத்த வேதியர் தாம் எவ்வாறு பிறந்தோம் என்பதை விஞ்ஞான அடிப்படையில் உணரவேண்டும்” என்பது மேற்கூறிய பாடலின் சாராம்சமாகும்.
26

மாறாக, வைதீகர்கள் மேற்கூறிய காலங்களில் பெண்களை வீட்டில் விலக்கி வைத்திருந்தனர். அவர்களுக்குத் தனி இடம், தனி உடை, தனிப்பாத்திரம் கொடுத்து ஒதுக்கி வைத்தனர். இவர்களுக்குத் தனியே கொடுக்கப்பட்ட பொருட்களைத் தொடுவதும் அவர்களைத் தொட்டால் தீட்டு என்று கருதி அவற்றை நன்கு கடைப்பிடித்தும் வந்தனர். அவ்வாறான வேளைகளில் பெண்கள் கோயிலுக்குச் செல்லக்கூடாது என்றும், பூ வைக்கக்கூடாது என்றும், கோயிலிலிருந்து பிறர்கொண்டு வரும் பிரசாதத்தை தொடக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதித்தனர். அவ்வேளைகளில் பெண்கள் பிறரால் தீண்டப்படாதவராகக் கருதுப்பட்டமையே அவற்றிற்கான
காரணமாகும்.
எனினும், தாந்திரீகத்திலும் அடிமட்ட மக்களிடமும் இவை அசுத்தமில்லாதவையாகக் கருதப்பட்டுள்ளன. இவற்றைச் சித்தர்கள் நன்குணர்ந்து பாடியுள்ளனர். (தற்காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள மேல் மருவத்துரர் ஆதிபராசக்திக் கோயிலில் மாதவிலக்கான பெண்கள் கோயிலுக்குள் சென்று வணங்க அனுமதிக்கப்படுவதாகவும் பூசாரியாக இருந்து பூசை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் அறியப்படுகின்றது).
தீட்டுப் பற்றி மட்டுமன்றி எச்சில் பற்றியும் சிவவாக்கியர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
எ-டு :
ஒதுகின்ற வேதம் எச்சில் உள்மந்திரங்கள் எச்சில் போதகங்க ளானளச்சில் பூத்லங்கள் ஏழும் எச்சில் மாதிருந்த விந்து எச்சில் மதியும் ஒளியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே.”
'எச்சில்' என்பது மனித உடலோடு - உலகியலோடு - தொடர்புடையது என்பது அவரது கருத்தாகின்றமை குறிப்பிடத்தக்கது. அவரது நோக்கில் (மேலுள்ள பாடல் கூறுவது போன்று) வேதம், மந்திரம், பூதலம், சூரியன், சந்திரன் யாவுமே எச்சிலே இவையனைத்தையும் ஏற்கும் வைதிகர் எச்சிலை மட்டும் அசுத்தம் என எவ்வாறு ஒதுக்க முடியும் என்று கூறி எச்சில் புனிதமானதென்று தெளிவுபடுத்தியுள்ளார். இத்தொடர்பில் திருமூலரின் பின்வரும் பாடலும் மனங் கொள்ளத்தக்கதே.
27

Page 70
ஆகுசம் இல்லை அருநிய மத்தருக்கு ஆகுசம் இல்லை அரனை அர்ச்சிப்பவாக்கு ஆகுசம் இல்லை அங்கி வளர்ப்பவருக்கு ஆகுசம் இல்லை அருமறை ஞானிக்கே."
சித்தர்களின் உடல் பற்றிய நோக்கும் இங்கு நினைவுகூரத் தக்கது. காயமே இது பொய்யடா’ என்று ஒரிரு சித்தர் பாடியிருப்பினும் உடல் மிக முக்கியமானது என்பதும் உடல் நலம் முக்கியமானதென்பதும் சித்தர் பலரது கருத்தாகும். உடம்பினை ஆண்டவனின் ஆலயமாகவும் சித்தர்கள் கருதியுள்ளனர். உடல் வேறு உயிர் வேறு என்று அவர்கள் கருதினாரல்லர்; உடலோடு வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தியடையலாமென்றும் அவர்கள் கருதியுள்ளனர்.
“இது துர்நாற்றம் வீசும் உடம்பு என்று நினையாதே. உப்பிட்ட பாத்திரம் உளுத்துக் கொட்டிவிடும் என்றும் நினைக்காதே. இவ்வுடம்பை நன்றாகப் பாதுகாக்க வேண்டும். இது ஊத்தைச் சடலம் அன்று. உப்பிட்ட பாத்திரமும் அன்று. உன் உடம்புக்குள்ளே இதை நீ நன்றாகப் பார்த்துக் கொள்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
6. பெண்களும் உலக சிருஷ்டியும்:
உடல் பற்றிய மேற்கூறிய கருத்துக்களின் தர்க்க ரீதியான வளர்ச்சியடிப்படையிலும் படைப்புக் கடவுள் ஒருவரை ஒப்புக்கொள்ளாத நிலையிலும் சித்தர்களிடம், ஆண், பெண் சேர்க்கையாலேயே உலகத்தில் முத்தொழிலும் நடைபெறுகின்றன; ஆணும் பெண்ணுமே உலகத்தைப் படைப்பவர்கள், உலகத்துக்கு மூல காரணம் சிவசக்தி; சிவம் என்பது ஆண், சக்தி என்பது பெண் ஆண் பெண் சேர்க்கையைக் காட்டவே சிவலிங்கம் தோன்றியது; மக்கள் தோற்றமுறையை உணர்த்தவே இலிங்க உருவம் தோன்றியது என்ற கருத்துக்கள் உரம் பெற்றுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
இன்னொரு விதமாகக் கூறின், மக்களின் தேற்று வாயிலாக இருப்பவள் பெண்’ என்பது சித்தர்கள் பலரது கொள்கையாகிறது. “பண்டைக் காலத்தில் பெண்களுக்குத்தான் எல்லா உரிமையும் இருந்தது. ஆண்கள் பெண்களுக்கு அடங்கித்தான் நடந்து வந்தனர். இதனைச் சக்தி மார்க்கம் என்றும் சாகேத்ய மார்க்கமென்றும் கூறுகின்றனர்” இக்கருத்தையே கொங்கணச்சித்தர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
28

"மாதாவாய் வந்து அமுதம் தந்தாள் மனை யாட்டியாய் வந்து சுகம் கொடுத்தாள் ஆதரவாகிய தங்கையானாள் நமக்கு ஆகக் கொழுந்தியும் மாமியானாள்.”
பெண்கள் அனைவரும் நமக்கு நலம்தரும் நிலையில் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சக்தியின் வடிவமே' என்று உறுதிப்படுத்துகின்றார், கொங்கணச் சித்தர். அத்துடன், “பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை அது பேணிப்பாரடி வாலைப்பெண்ணே (72)” என்கிறார்; “பெண்கள் தான் படைப்புச் சக்தி; பெண்கள் இல்லையேல் ஆண்கள் இல்லை; உலகப் படைப்பும்
இல்லை.” என்றும் குறிப்பிடுகின்றார்.
7. சித்தர்கள் பெண்களை வெறுத்தனரா?
ஆரம்பத்தில் குறிப்பிட்டவாறு சித்தர்கள் பெண்களை அதிகளவு வெறுத்துள்ளனர் என்று கூறுவது ஆய்வுலகப் பாரம்பரியமாகிவிட்டது. இவ்வாறு கருதுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது? இவ்விதத்தில் பின்வரும் விடயங்களைக் கவனத்திற் கொள்வது அவசியமாகின்றது.
(1) . மேலே இதுவரை கூறப்பட்ட விடயங்களை வைத்துப்பார்க்கும் போது சித்தர்கள் பெண்களை அதிகளவு வெறுத்துப் பாடுவதற்கான சூழல் அரிது:
(2). அவ்வாறு பாடியிருப்பினும் எண்ணிக்கையில் குறைந்த சித்தர்களே
அவ்வாறு பாடியுள்ளனர்.
(3). அவ்வாறெனில் அவர்கள் ஏன் அவ்வாறு பாடியுள்ளனர்? இதற்கான
விடைகளாகப் பின்வருவன அமைகின்றன.
(அ) பொதுமகளிரையே அவ்வாறு பாடியிருக்கவேண்டும். பின்வரும் பாடலின்
பொருளை ஊன்றிச் சிந்திக்க
"எத்தனை பேர் நட்டகுழி? எத்தனை பேர் தொட்டமுலை எத்தனை பேர் பற்றி இழுத்த இதழ்? நித்த நித்தம் பொய்யடா பேசும் புவியில்மட மாதகைவிட்டு
உய்யடா உய்யடா உய்.”
29

Page 71
(ஆ) பெரும்பாலான சித்தர்கள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலை பொதுமகளிர்கள்
(g)
(FF)
(9) )
முதன்மை பெற்றிருந்த சூழலாகும்.
அத்தகைய பொது மகளிரின் செயற்பாடுகள் பல, வெறுப்பை ஊட்டக் கூடியனவாக இருந்திருக்கலாம். (இவ்வாறான பொது மகளிரின் செயற்பாடுகள் பற்றி, ஏறத்தாழ இதே காலப்பகுதியில் எழுந்த வாய்மொழிக் காவியமான கண்ணகி வழக்குரை' விரிவாக எடுத்துரைக்கின்றது). நீண்ட ஆயுளையும் அவ்விதத்தில் திடமானதும் நலமானதுமான உடல் ஆரோக்கியத்தையும் அவாவிய சித்தர்கள் தொடர்ச்சியான ஆண், பெண் உறவு அதற்குத் தடையாக உள்ளதென்று கருதியிருக்கலாம். சித்தர்கள் சிலரிடம் முரண்பாடான கருத்து வெளிப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, பட்டினத்தார் உள்ளார். அளவுக்கதிகமாக பெண்கள் மீதான அவர்களது உடல் மீதான வெறுப்பை வெளிப்படுத்திய அவர் அளவுக்கு அதிகமான தாய்ப் பாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
றுதியாக, முற்குறிப்பிட்டதொரு பாடலை மீண்டும் இவ்விடத்தில் நினைவு
(UP (5 த
கூர்வது பொருத்தமானது:
"மாதாவாய் வந்து அமுதம் தந்தாள் L06067 யாட்டியாய் வந்து சுகம் கொடுத்தாள் ஆதரவாகிய தங்கையானாள்; நமக்கு ஆகக் கொழுந்தியும் மாமியானாள் , メタ
30

1. மூல நூல்கள் சித்தர்பாடல்கள், தொகுப்பாசிரியர்: சித்தாந்த இரத்தினம் புலவர் வரத கோவிந்தராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, மு. ப. ஆகஸ்ட் 1997 சித்தர் பாடல்கள் - பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் மணிவாசகர் பதிப்பகம், சென்னை, மறுபதிப்பு: ஆகஸ்ட் 1998. சித்தர் பாடல்கள், பதிப்பாசிரியர் அரு. ராமநாதன் பிரேமா பிரசுரம், 8ம் பதிப்பு, மார்ச் 1995.
2. துணை நூல்கள் கைலாசபதி, க. ஒப்பியல் இலக்கியம், பாரி நிலையம், சென்னை, மு. ப. மார்ச் 1969, ஆ. வேலுப்பிள்ளை, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் பதிப்பாளர் பெ. ராமகிருஷ்ணன், சென்னை, 1969 செல்வி . திருச்சந்திரன், தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு, குமரன் பதிப்பகம், சென்னை, மு. ப. யூன் 1997. கணேசன், பி. சி. சித்தர்கள் கண்ட தத்துவங்கள், ழரீ இந்து பப்ளிக்கேடின்ஸ், மு. ப. யூலை 1992. முத்தையா, கே. தமிழ் இலக்கியங்கள் கூறும் தத்துவப் போராட்டங்கள், அன்னம், சென்னை, மு. ப. டிசம்பர் 1991 ஒஷோ, தந்த்ரா அனுபவம், தொகுப்பு மா. யோசுசுதர, மா நிர்குண மொ.பெ. சுவாமி ஆனந்த பரமேஷ் பூனா, மு. ப. நவம்பர் 1995.
அடிக்குறிப்பு 1. கைலாசபதி, க. ஒப்பியல் இலக்கியம், பாரிநிலையம், சென்னை, மு.ப.
Lontišť 1969, U: 189. 2. வேலுப்பிள்ளை, ஆ, தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், பதிப்பாளர்
பெ. ராமகிருஷ்ணன் சென்னை 1969, ப. கைலாசபதி, க. மு. கு. நூ, ப - 192 4. செல்வி திருச்சந்திரன், தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு, குமரன் பதிப்பகம், சென்னை, மு.ப. யூன் 1997, பக். 5. Debi Prasad Chattopadhyaya, Lokayata & Peoples Publishing
House, New Delhi, 3" Edition 1973.p:
6. Debi Prasad Chattopadhyaya, Ib P: 230 7. Debi Prasad Chattopadhyaya, Ib, P: 249.
3.

Page 72
"தமிழ் இலக்கியத்தில் பெளத்தமதத் தறவிகளாகப் பெண்கள்”
மாதவி, மணிமேகலை ஆகியோர் குறித்த சிறப்பு நோக்கு.
றுாபி வலன்ரீனா
ந்ெதவொரு மதத்திலும் மதவழிபாட்டு நடைமுறைகளிலாயினும் தலைமைத்துவத்திலாயினும் சமத்துவ நோக்குடன் பெண்கள் அங்கீகரிக்கப் படுகின்ற போக்கினைக் காணமுடியாதுள்ளது.
மதக் கருத்துக்களை விளக்கும் நோக்குடன் இயற்றப்பட்ட மதச்சார்பான இலக்கியங்களிலும் மதரீதியிலான பெண்களின் பங்களிப்பு முதன்மைப்
படுத்தப்படாமையை அவதானிக்கலாம்.
இத்தகைய இலக்கியங்களிற் கூறப்படுகின்ற பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு முறைமை இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
இந்த அடிப்படையில், பெளத்தமதக் கோட்பாடுகளைக் கூறுவதனை மையமாகக் கொண்ட மணிமேகலைக் காப்பியத்தில், பெளத்தமதப் பெண் துறவிகளாக வரும் மாதவி, மணிமேகலை ஆகிய கதாபாத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு அக்காப்பியம் எழுந்த காலத்துச் சூழலில், பெளத்த மதத்தில் துறவற நிலையிற் பெண்கள் நோக்கப்பட்ட முறைமை குறித்த சில அவதானிப்புகளை வெளிக்கொணருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவியகாலம் எனக் குறிக்கப்பெறும் கி. பி. 3ம் நூற்றாண்டு தொடக்கம் 6ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியிலே மணிமேகலை இயற்றப்பட்டது. இதனை இயற்றிவர் சாத்தனார். இளங்கோவடி களால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சியாகக் காணப்படும் இம்மணிமேகலை, விழாவறை காதை முதல் பவத்திறம் அறுக எனப்பாவை நோற்ற
காதை வரையிலான முப்பது காதைகளை உடையது.
32

இக்காப்பியத்தில் வருகின்ற மாதவியும் அவளது மகளான மணிமேகலையுமே துறவற நிலையில் பெளத்த மதத்தில் பெண்கள் நோக்கப்பட்ட முறைமைக்கு அக்குறித்த காலத்தின் ஆதாரங்களாக எடுத்தாளப்பட்டுள்ளார்கள்.
மாதவி
கோவலனது இறப்பின் பின்னர் துயருற்ற மாதவி, மாதவப்பள்ளியைச் சென்றடைகின்றாள். அங்கு அறவண அடிகளிடம் தன் துன்பத்தினை எடுத்துரைக் கின்றாள். அறவண அடிகள் அவளை ஆறுதற்படுத்தியதுடன், உபதேசமும் செய்கின்றார். இதன் பயனாகத் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளுகின்றாள் மாதவி
“ஈங்கு இம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் மறவனம் நீத்த மாசறு கேள்வி அறவண அடிகள் அடிமிசை வீழ்ந்து மா பெருந்துன்பம் கொண்டு உளம் மயங்கி காதலன் உற்ற கடுந்துயர் கூற, பிறந்தோ உறுவது பெருகியதுன்பம் பிறவார் உறுவது பெரும் பேரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக என்று அருளி'
Ln60of7. 2, 59-67 என்னும் வரிகள் மூலம் அறவண அடிகளிடம் அவள் சென்றமை, அவரது உபதேசம் ஆகியனவற்றையும்,
“மாதவி துறவிக்கு”
լ0600fl. 2, 10 “ துறைபோகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது”
լոճ00հ. 2, 32-33
“போதியின் கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த மாதவி தன்துறவும் கேட்டாயோ தோழி? மணிமேகலை துறவும் கேட்டாயோ தோழி?
சிலம்பு வஞ்சி அடித்தோழி அரற்று என்னும் வரிகள் மூலம் மாதவி துறவறத்தை மேற்கொண்டமையையும் அறிய முடிகிறது.
33

Page 73
பூம்புகாரில் இடம்பெறும் இந்திரவிழாவில் குலவழக்கப்படி ஆடல், பாடல்
நிகழ்த்த மாதவியும் அவள் மகளும் வராமையால் கவலையுற்ற சித்திராபதி அவர்களை அழைத்து வர மாதவியின் தோழியாகிய வசந்தமாலையை அனுப்புகின்றாள். மாதவியிடம் வரும் வசந்தமாலை, தவத்தால் வாட்டமுற்ற மேனியளாக மாதவி இருந்தமையைக் கண்டு மனம் வருந்தியதாகச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.
'ஆடிய சாயல் ஆயிழை மடந்தை .
வாடிய மேனி கண்டு உளம் வருந்தி’மணி. 2; 14-15 என்னும் வரிகள் இதனையுணர்த்துகின்றன.
கணிகையர் குலப் பெண்ணாக அறிமுகப்படுத்தப்படும் மாதவி கோவலனது இழப்பால் கடுந்துயருற்றமையும், குலமரபைத் துறந்து துறவறத்தில் இணைந்தமையும் மகளையும் தவநெறிப்படுத்தியமையும் குலமரபிற் கொவ்வாதனவாகவும் நாணத்தக்கனவாகவும் அடையாளம் காணப்பட்டன. வேத்தியல், பொதுவியல் முதலாய பல்கலைகளிலும் நேர்த்திபெற்றமாதவிஅக்கலைகளைப் பிறருக்குப்பயன்படத்தக்கதாகப் பிறரின் இன்ப நுகர்விற்காக வழங்க வேண்டியவளேயன்றி, அவற்றை யாருக்கும் பயன்படாதவாறு செய்யும் துறவிற்குரியவளல்லள் என்றும் வலியுறுத்தப்பட்டது.
வசந்தமாலையின் கூற்றாக வரும் பின்வரும் வரிகள் இவற்றை உணர்த்துகின்றன.
'வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும் பாட்டும் துரக்கும் துணிவும் காலக் கணிதமும் கலைகளின் துணிவும் நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஒவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத்துf என்றே அலகில் மூதூர் அன்றவரல்லது பலர் தொகுபுரைக்கும் பண்பில் வாய்மொழி நயம் பாடில்லை நாணுடைத்து’ மணி. 2, 29 -36 என்பதே அவ்வரிகளாகும்.
சித்திராபதியும் கூட மாதவியினதும் மணிமேகலையினதும் துறவை வெறுப்பவளாகவும், கணிகையர் குல மரபை மிக இறுக்கமாகப் பேணுகின்ற அம்மரபின் பிரதிநிதியாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கின்றாள்.
34

"காதலன் வியக் கடுந்துயரெய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளியிரும் பொய்கை ஆடுநர் போல முளியொரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லோம் பலர்தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே? பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந்தாதுண்டு நயனில் காலை வறும் பூத்துறக்கும் வண்டு போல் குவம் வினையொழி காலைத் திருவின் செல்வி அனையேமாகி ஆடவர்த் துறப்போம் தாயதக் கோலம் தாங்கினம் என்பது யாவரும் நகூஉம் இயல்பினதன்றே” மணி. 18; 11-24 என்னும் அவளது கூற்று இதனை எடுத்தியம்புகிறது. கணிகையர் குல மரபிற்கு அக்காலத்தில் விதிக்கப்பட்டிருந்த சமூக வரையறைகளையும் இக்கூற்று எடுத்துக் காட்டியுள்ளது. அவை வருமாறு :
1. காதலனின் இழப்பிற்காக வருந்தக்கூடாது
2. அவனது இறப்பின் பின்னர் பத்தினிப் பெண்களைப் போல உடனுயிர்
நீக்கவோ, உடன் எரிபுகவோ தகுதியில்லை.
3. பலரது கைப்பொருளை உண்டு வாழ்பவர்கள்.
4. பாணன் இறந்தால் உடனிறக்கும் தன்மையில்லாத யாழ்'போன்றவர்கள்
5. பொருள் பெறுதலை மட்டுமே குறிக்கோளாயுடையவர்கள், தேனில்லாத பூவைத் துறக்கும் வண்டைப் போன்று பொருளில்லாதவரைத் துறக்க வேண்டியவர்கள்.
இத்துடன் இக்குல மரபினர் துறவுக் கோலம் பூண்டது நாணத்தக்கது என்றும் கூறப்பட்டது.
சித்திராபதி, இக்கருத்துக்களை யாருக்குக் கூறினாள் என நோக்குவது இதன் பின்னணியிலுள்ள சூட்சுமத்தைப் புரியவைக்கும் மாதவியோடு மணிமேகலையும் துறவுபூண்டதைக் கேள்வியுற்ற சித்திராபதி.
'கூத்தியல் மடந்தையர்க்கு இதனைக் கூறியதாக மணிமேகலையிற் குறிப்பிடப்படுகின்றது. மணி. 18; 6 மாதவியினதும் மணிமேகலையினதும் மீறலைப்
35

Page 74
பகிரங்கமாக வன்மையாகக் கண்டிப்பதனையும், அவர்களை யாரும் பின்பற்றக் கூடாது என்ற எச்சரிக்கை மறைமுகமாக விடுக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
எனவே துறவறத்தை மேற்கொண்டபோதும், தனதும் தனது மகளதும் துறவு நிலையைத் தொடர்ந்தும் பேணுவதில் பல இடர்பாடுகளையும், எதிர்ப்புகளையும் மாதவி சந்திக்க வேண்டியிருந்தமை புலனாகின்றது. தன் மகளை அருந்தவப்படுத்தியதன் மூலம் கொடியவளாக அவள் ஊரவரால் கணிக்கப்பட்டாள் என்பதை
"அணியமை தோற்றத்து அருந்தவப்படுத்திய தாயோ கொடியள்தகவிலள்” LD600fl. 3, 149 - 150 என்ற வரிகள் உணர்த்துகின்றன.
ஊரவரதும் தாயினதும் விருப்பத்திற்கு மாறாகத் தனது மகளை அவள் துறவியாக்குவதில் கருத்தாயிருந்தாள்.
“மணிமேகலை அருந்தவப்படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத்தித் தொழிற் படாஅள்”மணி. 2; 55-57 என அறுதியிட்டுக் கூறும் மாதவி தனது முடிவு குறித்து,
மைத்தடங்கண்ணார் தமக்கும் ஏற்பயந்த சித்திராபதிக்கும் செப்பு நீ” மணி. 2; 70-71
என்று தன் குலத்தவர்க்கும் தாய் சித்திராபதிக்கும் இதனை எடுத்துச் சொல்லுமாறும் வசந்தமாலையிடம் கூறுகிறாள்.
கணிகையர் துறவு நிலைக்குத் தகுதியற்றவர் என்பது அக்காலத்தில் மேலாதிக்கமும் சமூகச் செல்வாக்கும், மதச் செல்வாக்கும் பெற்றிருந்தோரினதும் கருத்தாகவும் இருந்திருக்கிறது. மாதவி துறவியான பின்னரும் அவளைத் துறவியாக மேற்குறித்த சமூகம் அங்கீகரிக்கவில்லை கணிகையாகவும் சித்திரா பதியின் மகளாகவுமே அவள் அடையாளப்படுத்தப்படுகின்றாள். இதற்கு சில ஆதாரங்களை மணிமேகலையில் இருந்து காட்ட முடியும்.
உதாரணமாக -
தனது மகன் கொலை செய்யப்பட்டமையைக் கேள்வியுறும் சோழ அரசன், மணிமேகலையைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்தபோது
"கணிகை மகளையுங் காவல் செய்க" மணி. 22, 214 என்றே கூறுகிறான்.
36

மாதவி கணிகை என்று அவனால் குறிப்பிடப்படுவதனை இதன் மூலம அறியலாம். அத்துடன் அரசவையிலிருந்த அருந்தவமாமுனிவர் ஒருவர் மாதவியைக் குறிப்பிடுகையில்
'சேயரி நெடுங்கண் சித்திராபதி மகள் மணி. 22 177
என்று குறிப்பிடுவதையும் அவதானிக்கலாம்.
இவ்வித சூழலில் சாத்தனார் அக்குலப் பெண்கள் இருவரைத் தமது காப்பியத்தில் துறவிகளாகச் சித்தரித்துள்ளார் எனவும் இதனால் சாத்தனார் புரட்சிப் பெண்களாக இவர்களைப் படைத்துள்ளாரெனவும், மேலெழுந்தவாரியாகச் சிலர் கூறக்கூடும். எனினும் மாதவியும் மணிமேகலையும், சுதமதியும் கூட முற்பிறப்பில் அரச வம்சத்தவர்களாக இருந்தார்கள் எனச் சாத்தனார் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார். மணி 7; 98-108, 9; 38-47, 12 15-19 ஆகிய பகுதிகளில் இதனைக் காணலாம் இதன் உள்நோக்கம் யாது? இதன் மூலம் அவர்களுக்கு உயர் அந்தஸ்து ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கிறது என்பதை அவர் குறிப்பிட விரும்புகிறாரா? இவை ஐயவினாக்கள் இவற்றின் மூலம் சாத்தனாரும் மேற்குறிப்பிட்டதோர் மனோநிலையையுடையவராகவே இருந்திருக்கலாமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இவை மாதவியின் துறவு குறித்து அவளது உறவினரும், ஊரவரும் ஆன்றோர் எனப்பட்டோரும் கொண்டிருந்த அபிப்பிராயங்களாக மணிமேகலையில் வெளிப்படுபவை.
இதற்கு அப்பால் பெளத்த மத நிறுவனத்தில் துறவு நிலையில் மாதவி எவ்வாறு அங்கீகரிப்பட்டாள்? அல்லது அங்கு எத்தகைய இடத்தினைப் பெற்றிருந்தாள்? என்பதை நோக்குவது முக்கியமானது.
சிலப்பதிகாரத்தைவிட மிக அதிகமான இடங்களில் மாதவி, மணிமேகலைப்யிற் குறிப்பிடப்படுகிறாள். பிரதான கதாபாத்திரத்திற்கும் ‘மணிமேகலை’ பிரதான கதைப் போக்கிற்கும் ‘மணிமேகலை துறவு உதவுபவளாக அவள் அமைகின்றாள்.
பெளத்தமதப் பிரசாரத்தில் மாதவியின் பங்களிப்பு “உபதேசம் கேட்டல்” என்ற நிலைப்பாட்டினுள்ளும், தானே பெண் துறவியாகி, மணிமேகலைக்கு வழிகாட்டிய தன்மையினுள்ளும் அடங்கிவிடுகின்ற தன்மையை அவதானிக்க முடிகிறது.
37

Page 75
மாதவி எவ்விடத்திலாயினும் அறவுபதேசம் செய்தமைக்கு மணிமேகலையிற் சான்றில்லை. மணிமேகலையிற் பிரதான பெளத்த மத உபதேசகராக வரும் அறவண அடிகளிடம் அவள் உபதேசம் கேட்கின்ற சந்தர்ப்பங்களே கூறப்பட்டிருக்கின்றன:
மணிமேகலை சிறைப்பிடிக்கப்பட்டபோது அவளைச் சிறைமீட்பதற்கு இராசமாதேவியிடம் செல்வதற்கு முதலில் அறவண அடியிடம் சென்று நிலைமையைக் கூறி அவரையும் அழைத்துக் கொண்டே அரண்மனைக்குச் செல்கிறாள்.
‘மணிமேகலை திறம் மாதவிகேட்டு
வளி எறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி
அறவணர் அழ வீழ்ந்து ஆங்கு - அவர் - தம்முடன்
மறவேல் மன்னவன் தேவி-தன்பால்வர 罗夕 மணி. 24; 83-88 என்ற அடிகள் மூலம் இதனையறியலாம்.
35bதவிரவும் பற்றைத்துறத்தல் - உலக பந்தபாசங்களை அறுத்தல் போன்ற துறவிற்குரிய பண்புகளைப் பெற்றிராதவளாகவே மாதவி சித்தரிக்கப்பட்டிருப்பதும் நோக்குதற்குரியது. மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவத்திற்குக் கொண்டு சென்றமையால் வருந்தியமை
'தன் மகள் வாராத்தனித் துயருழப்ப" மணி 7; 132
ஏழு நாட்களில் அவள் திரும்புவாள் என்ற மணிமேகலா தெய்வத்தின் வாக்கிற்கிணங்க அவள் வராமையால் கலங்கியமை
“எழுநாள் வந்ததென் மகள் வாராள் வழுவாயுண்டென மயங்குவோள். ` Losoft 11, 129 – 139
சோழ அரசன் சிறைப்பிடிக்கப்பட்டபோது கலங்கியமை ‘மணிமேகலை திறம் மாதவிகேட்டு துணிகயம் துகள் படத் துளங்கிய அதுபோல்
வளி எறிகொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி* மணி24; 83-86 ஆகியவை சான்றுகளாய் அமைகின்றன.
38

மாதவியின் துறவு பற்றிக் குறிப்பிடுகையில் “மாதவி கன்னிகையாயிருந்து வாழ்க்கைச் சோதனையில் அடிபட்டு குலத்தொழிலைவிட்டுத் துறவியானவள். அறிவின் துணைகொண்டவளல்லள். உணர்ச்சி தந்த உணர்வு பூர்வமாக மாறியவள்’ என. க. கைலாசபதி கூறுவார்."
எவ்வாறிருப்பினும் மாதவியின் துறவு பெளத்த மதத்தில் சிலாகித்துப் பேசப்படவில்லை என்பதை மணிமேகலை எடுத்துக் காட்டியுள்ளமையைக்
காணலாம்.
மணிமேகலை
மணிமேகலைக் காப்பியத்தின் பிரதான பாத்திரம் மணிமேகலையாவாள். ‘மணிமேகலை துறவே” இக்காப்பியத்தின் மையப்பொருள். மணிமேகலை துறவறத்தில் இணைந்தமை ஏற்கனவே அவளது பிறப்பிலேயே நிச்சயிக்கப்பட்ட தென்பதை, கோவலன் தன் குல தெய்வமாகிய மணிமேகலையின் பெயரைத் தனது மகளுக்கு இட்ட அந்த நாளின் இரவில் மாதவியின் கனவில் இத்தெய்வம் தோன்றி
“காமன் கையறக் கடுநவையறுக்கும்
மாபெருந்தவக்கொடி யீன்றனை மணி 7 36 - 37 என்றுரைத்ததாக சாத்தனார் கூறுவதிலிருந்து அறியலாம். தவிரவும் மணிமேகலையைத் துறவில் ஈடுபடுத்தியமையில் மாதவிக்குப் பெரும் பங்கு உண்டென்பதையும் அறிய முடிகின்றது.
“மாதவி மடந்தை நற்றாய் தனக்கு நற்றிறம் படர்கேன் மணிமேகலையை வான் துயருறுக்கும் கணிகையா கோலங் கானா தொழிகெனக்
கோதைத் தாமங் குழலொடுகளைந்து போதித்தானம் புரிந்து அறங் கொள்ளவும்” சிலம்பு 27; 103-108
“காமக் கடவுள் கையற்று ஏங்க அணிதிகழ் போதி அறவோன் - தன்முன் மணிமேகலையை மாதவி அளிப்பவும் ’ " சிலம்பு 15; 101 - 103 ‘அணியமை தோற்றத்து அருந்தவப்படுத்தியதாய்' மணி.3; 149
என்பன இதற்குச் சான்றுகள்.
39

Page 76
மாதவியின் துறவைப் போலவே மணிமேகலையின் துறவையும் வெறுக்கும் சித்திராபதி, மணிமேகலையைத் தன் வசம் ஈர்ப்பதிலும் குறிப்பாக உதயகுமரனிடம் அவளைச் சேர்ப்பிப்பதிலும் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறாள்.
மணிமேகலையைக் கையகப்படுத்தி அவள் ஏந்திய பிசஷா பாத்திரத்தினை கடிஞை ஏற்று உண்போராகிய பிறரது கைக்குள் கொடுத்து உதயகுமரனால் அவனது தேரில் அவளை ஏற்றிக் கொண்டு வராவிட்டால் குடிக்குற்றத்திற்குட்பட்டு குலத்தைத் துறந்தவளாகக் கருதப்படுவேன் எனச் சூளுரைத்து உதயகுமாரனிடம் செல்லும் சித்திராபதி, மணி 18, 25 - 37 மணிமேகலையின் துறவை இகழ்ந்துரைப்பதுடன் கணிகையர் குல மரபினரைத் தம்வயமாக்கி அடக்கியாளுதலே மன்னர் கடனென்றும் வலியுறுத்துகின்றாள்.
Lዐ6üõfi. 18; 103 – 111
பிறிதோர் சந்தர்ப்பத்தில் மணிமேகலைச் சிறை மீட்பதற்காக இராசமாதேவியிடம் செல்லும் சித்திராபதி,
பரந்துபடு மனைதொறும் பாத்திரமேந்தி அரங்கக் கூத்தி சென்று ஜயங்கொண்டதும் நகுதலஸ்லது நாடகக்கணிகையர் தகுதியென்னார் தன்மையன்மை” மணி 24; 21-24 என்றும்
நாடகக் கணிகை என் மனைத் தருக" மணி 24; 75 - 76 என்றும் குறிப்பிடுவதைக் காணலாம் உதயகுமாரன் கூட அவளை ‘பொருள் வினையாட்டி’ என்று ஓரிடத்தில் குறிப்பிடுகின்றான். மணி. 5; 86 - 88
ஆகவே, மாதவியினது துறவைப் போலவே அவளது குலத்தினரும், மற்றும் அரச குலத்தினரும் மணிமேகலையின் துறவையும் ஏற்றுக் கொள்ளாமை தெரியவருகிறது.
மேலும் உலக பந்த பாசங்களுள் அகப்பட்டு அதனால் வந்த பாதிப்பினால் பின்னர் துறவைத் தீவிரமாய் நாடிய ஒரு பெண்ணாகவே
மணிமேகலையும் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
40

எனினும் மாதவியை விட இவள் சற்று வேறுபடவள எனவும் புறநிலையில் வைத்து உலகத்தை நோக்கியவள் எனவும் அறிவு பூர்வமாக விடுதலை பெற்றவள்” எனவும் க. கைலாசபதி குறிப்பிடுகின்றார்."
வான் வழிச் சஞ்சாரம், நினைத்த உருவெடுத்தல் அமுதசுரபி மூலம் உணவளித்தல் பழம் பிறப்பு உணர்தல் முதலான அசாதாரண சக்தியுடையவளாக மணிமேகலை கூறப்பட்டாலும் சில வரையறைகளுக்குட்பட்ட மத பிரசாரகராகவே அவள் தோன்றுகிறாள். அறவண அடிகளை வணங்கி, அவரிடம் உபதேசம் கேட்கும் இவள் ஒருசில இடங்களில் மட்டும் உபதேசிப்பவளாகவுள்ளாள். உ-ம் தன்னை இடையறாது தொடர்ந்து வரும் உதயகுமரனுக்கு உபதேசித்தல்.
D600f 18 136 - 139,
20 40-69 ஆ. இராசமாதேவிக்கு உபதேசம் செய்தல் மணி 23 67749 இ.புண்ணியராசனுக்கு உபதேசம் செய்தல் மணி 25, 20 - 231
பெளத்த மத பிரசாரத்திற்கு மணிமேகலை பயன்படுத்தப்பட்டிருப்பினும் அவளது உபதேசத்திற்குத் தகுதி பெற்றோரெனக் கருதப்பட்டோரை நோக்கினால் அவளது தகுதி, தகுதியின்மை தெரியவரும்.
தனிமனித உபதேசமாக இவையுள்ளமையை முதலில் குறிப்பிடவேண்டும். இவர்களில் உதயகுமரன் அவள் மீதுள்ள அதீத காதலால் அவளது உபதேசத்தை உதாசீனம் செய்து விடுகின்றான்.
ஆங்கவளுரைத்த அரசிளங்குமாரனும் களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான்” மணி 20; 82-83
என்பதன் மூலம் இதனையறியலாம்.
இராசமாதேவி மனந்தெளிந்து மணிமேகலையைத் தொழுகின்றாள். மணி. 23; 140 - 144 புணணியராசன் அறவுபதேசத்தினை ஏற்றுக்கொள்வதோடு அதைக் கடைபபிடிப்பதாகவும் உறுதி கூறுகின்றான். மணி 25, 232 - 233
அறவண அடிகளைத் தரிசிக்கின்ற சந்தர்ப்பங்களில் அவரது உபதேசத்தைக் கேட்பவளாகவே அவள் உள்ளாள். காப்பியத்தின் கடைசி இரு காதைகளும் அவரது உபதேசத்தை முழுவதுமாகக் கொண்டவை.
组4地

Page 77
மணிமேகலை இக்காப்பியத்தின் பிரதான பாத்திரமாக இருப்பினும் ஆரம்பத்திலிருந்து இவள் பலரால் இயக்கப்படுகின்றவளாகவே காட்டப்பட்டிருக்கின்றாள். மணிமேகலா தெய்வம் தீவதிலகை மாதவி, அறவண அடிகள் ஆகியோர் அவர்களுட் குறிப்பிடத்தக்கவர்கள்.
மாதவியைப் போலவே பந்தபாசங்களுக்கு உட்பட்டவளாகவே அவளும்
சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
9) -LO reஅ. கோவலன் - கண்ணகி ஆகியோரது அவலம் குறித்து வசந்தமாலைக்கு மாதவி கூறக் கேட்டபோது
"காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை மாதர் செங்கண் வரிவனப் பழிந்துப் புலம்பு நீருருட்டி "மணி 379 என அவள் கண்ணிர் விட்டழுததாகக் கூறுகிறார் சாத்தனார்.
ஆ. மணிபல்லவத்தில் தனித்து விடப்பட்டபோது தனது தந்தையை நினைத்து அவள் அழுதமையை
தந்தையை உள்ளி எம்மிதிற் படுத்தும் வெவ்வினையுருப்பக் கோற்றொடி மாதரொடு வேற்றுநாடடைந்து வைவா ளுழந்த மணிப்பூனகலத்து ஐயாவோ என்று” மணி 8, 39 - 43 அழுததாகக் குறிப்பிடப்படுகின்றது.
இ. உதயகுமரனை அவள் உள்ளம் விரும்பியமையும் அவன் முற்பிறப்பில் அவளது இலக்குமி கணவனாக இராகுலன் இருந்தமையும் கூறப்படுகின்றது.
புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் இதுவோ அன்னாய் காமத்தியற்கை' மணி 5, 89-90
என்று சுதமதியிடம் மணிமேகலை கூறுவது உதயகுமரன் பால் அவளுக்கிருந்த ஈடுபாட்டைக் குறிக்கிறது.
42

பெளத்த தர்மத்தில்தான் உறுதி பெறும் முன்னர், பல்வேறு சமயங்களின திறங்களையும் அறிந்து கொள்ள அவள் முற்படுகிறாள். அவள் இளையவளாகவும், பெண்ணாகவும் இருப்பதனால், சமயக் கணக்கர் தத்தமது மதக்கருத்துக்களை
உரையார் என்றும் வேற்றுருக்கொள்ள வேண்டுமென்றும் கூறப்பட்டது."
இளையஸ் வளையோ ளென்றுனக்கு யாவரும் விளைபொருளுரையார் வேற்றுருக் கொள்க மணி26; 68-69 இதனால் மணிமேகலா தெய்வம் உபதேசித்த மந்திரத்தின் துணையுடன்
அவள் ஆணுருப்பெற்றுமாதவன் வடிவாய் மணி 26, 71அதாவது தவமுனிவனாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே பல்வேறு மதங்களின் உண்மைப்பொருளை உரியவர்களிடம் கேட்டறிவதற்குக் கூடப் பெண் - அவள் துறவியாயினும் கூட - தகுதியற்றவளாக அக்காலத்திற் கருதப்பட்டமை தெரியவருகின்றது. தவிரவும் உய்வடைதல் பற்றிக் கூற வந்த சாத்தனார், அவள் துறவியாயினும் கூடப் பெண் என்பதனால் இப்பிறவியில் உய்வில்லை என்பதை வலியுறுத்துகின்றார். காஞ்சியில் இறந்து பின் இனிவரும் பிறப்புக்களில் ஆண்மகனாய்ப் பிறந்து நிருவாணப்பேற்றை அடைவாளெனபதை,
"கச்சி முற்றத்து நின்னுயிர் கடைகொள
உத்தர மகதத்து உறுபிறப்பெல்லாம்
ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்” மணி 21; 174 - 176
என்னும் வரிகள் உணர்த்துகின்றன.
எனவே மாதவியும் மணிமேகலையும் துறவிகளாயினும் பற்றற்ற துறவுநிலைத் தகுதியைப் பெறாதவராயுள்ளவராகவும் பந்த பாசங்களுக்குட் பட்டவராகவும் உபபிரசாரகராகவும் நோக்கப்பட்டமையை அறியலாம்.
எனவே எவ்வாறு நோக்கினும் பெளத்தத் துறவில் துறவு நிலையிற் கூட பெண், ஆணைவிட மேன்மையும், ஞானமும, போதனைத் திறனும், முக்திப்பேறும்
பெற்றவளாகக் கருதப்படவில்லை என்பதையுணரலாம்.
பெளத்த சங்கத்தில் பெண்கள் துறவிகளாகச் சேர்ந்த ஆரம்பகால நிலைமை குறித்து யு.டு.பாசம் கூறும் கூற்றை இவ்விடத்திற் குறிப்பிடுவது
பெளத்தத் துறவியராகப் பெண்கள் நோக்கப்பட்ட முறைமைக்குச் சான்றாயமையும்.
43

Page 78
“பல்லாண்டுகளாகப் புத்தர் அறமுரைத்த செய்தியை விளக்கப் பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அவருடைய வளர்ப்புத்தாயும் அத்தையுமாகிய கிருசா கெளதமி என்பாள் பன்முறையும் பரிந்து வேண்டினமையால் தமக்கு நம்பிக்கையில்லாத போதும் பிக்குணிச் சங்கமொன்றை நிறுவுவதற்கு அவர் இணங்கினார்” என்றும்
“பெளத்த மதத்தின் தாராள விதிகளிலுமே தவப் பெண்ணொருத்திசமயத்துறையில் எவ்வளவு முன்னேறியவளாய் இருந்த போதும் அவள் சங்கத்திற புதியவராய்ச் சேர்ந்த ஆண்பாலாருள் ஆண்டில் மிக இளையோனாய் உள்ளோனுக்குமே எப்போதும் கழப்பட்டவளாகக் கருதப்பட்டாள்."
என்றும் அவர் கூறுகிறார்.
இவற்றுள் முதலாவது கூற்றில் பிக்குணிச் சங்கம், நிறுவப்பட்டபோது இருந்த தயக்க நிலைமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இச்செவிவழிச் செய்தி உண்மையாயினும் பொய்யாயினும் பிக்குணிச் சங்கம் உதயமாவதனை அக்குறித்த காலத்தில் பெரும்பாலானோர் விரும்பவில்லை என்னும் நிலைமை இருந்திருப்பதனைக் குறிப்பால் உணரவைக்கின்றது.
இரண்டாவது கூற்று பெளத்த மதத்தில் துறவற நிலையில் பெண்களின் நிலைமை எவ்வாறு கணிக்கப்பட்டது என்பதை எடுத்துக் காட்டுவது. எத்தகைய ஞானமும், விவேகமும், நோன்புச் சிறப்பும், தவவலிமையும் உடையவர்களாகவும் இருந்த போதிலும் ஆண் துறவிகளோடு ஒப்பிடப்பட முடியாதவர்களே அவர்கள் எனக் கணிக்கப்பட்டமை தெரியவருகிறது.
மதிப்பீடு
பரத்தமை கடிந்தொதுக்கப்பட்ட காலத்தில் எழுந்த,மணிமேகலைக் காப்பியத்தில் கணிகையர் குல மரபிலிருந்து பெண்கள் இருைேர விடுவித்து
சாத்தனார், துறவறத்தில் அவர்களை இணைத்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட
A 4

இல்வாழ்க்கை அககுலமரபினர்க்கு அக்காலத்தில் மறுக்கப்பட்டிருந்த சூழலில், இயல்பு வாழ்க்கையிலும் அவர்களை முன்னணிக்குக் கொண்டு வரமுடியாத அதேவேளை, மதநிலைமையிலும் கூட அவர்களை முதனிலைப்படுத்தச் சாத்தனாரால் முடியவில்லை என்பது காலத்தின் வழக்கிற்கு ஏற்பவே சாத்தனாரும் கருத்துகளை வலியுறுத்திக் காப்பியம் படைத்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டாயமைகின்றது. எனவே தொகுத்து நோக்குமிடத்து மணிமேகலைக் காப்பியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பெளத்தமதப் பெண் துறவிகளான மாதவியும் மணிமேகலையும் குறித்த அக்கால சமூகத்தில் துறவறநிலையில் பெண்கள் நோக்கப்பட்டுள்ள முறைமையைத் தெளிவுறுத்துவதைக் காணலாம்.
ஆண் துறவிகளோடு சமமான நிலைமையோ, மதப்பிரசாரத்தில் தலைமைத்துவமோ, ஆண் துறவிகளுக்கும் உபதேசம் செய்யும் அல்லது ஆசியுரைக்கும் அந்தஸ்தோ அவர்களுக்குத் திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருந்தது என்பதையும் பெண் துறவிகளுக்கும் உபதேசம் செய்து அவர்களை வழிநடத்தும் பொறுப்பு, ஆண் துறவிகளுக்கேயிருந்தது என்பதையும் உணர்த்தி நிற்பதை அறியக்கிடக்கின்றது.
இந்த நிலைமை இத்தனை நூற்றாண்டுகள் கடந்தபின்பும் மாற்றமுறாதிருப்பது அவதானிப்பிற்குரியது.
45

Page 79
epGu) (T6u)356T
1. இளங்கோவடிகள்
2. சீத்தலைச்சாத்தனார்
உசாத்துணை நூல்கள்
1. வேங்கடசாமி மயிலை சீனி
2. கைலாசபதி. க.
3. பசாம்.யுடு
அடிக்குறிப்புகள்
'சிலப்பதிகாரம் தொகுப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் தமிழ்ப் பல்கலைக்கழக வெயியீடு, 1955
‘மணிமேகலை’
உரையாசிரியர்
ந. மு. வேங்கடசாமி நாட்டார் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை கழகவெளியீடு, 1982
"பெளத்தமும் தமிழும் முதலாம் பதிப்பு: 1940, மீள்பதிப்பு 1950, கழக வெளியீடு “பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 3ம் பதிப்பு 1999 குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை.
வியத்தகு இந்தியா' 1954 தமிழாக்கம் செ. வேலாயுதபிள்ளை, மகேசுவரி பாலகிருட்டனன் அரச கரும மொழித் திணைக்கள வெளியீடு, இலங்கை.
1. மதுரைக் கூலவாணிகன் சாத்தன் சிலம்பு பதிகம் 88 -89
2. அடிக்கோடு எம்மாலிடப்பட்டது.
3. தாபதக்கோலம் - தவவேடம் - என்றது பிக்குணிக் கோலத்தை,
மணி 18, 52 - 54 உரையினைப் பார்க்க, பக் 243, சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை கழக வெளியீடு - 1994
4. பாணனால் பயன்படுத்தப்படும் யாழ் ஒரு குறித்த பாணனுக்கு மட்டுமே சொந்தமானதல்ல. வேறு பாணராலும் பயன்படுத்தக்கூடியது. அதுபோலவே இக்குலப் பெண்களும் ஒருவனுக்கு மட்டும் உரியவர்களல்ல என்பதையும்
உணர்த்துகிறார் ஆசிரியர்.
48

10.
1.
2.
13.
14.
15.
அசோதர நகர அரசனாகிய இரவிவர்மனின் புத்திரிகள் மூவர் தாரை, வீரை, இலக்குமி. இவர்களில் தாரை மாதவியாயும், இலக்குமி மணிமேகலையாயும் வீரை - மணிமேகலையின் தோழி சுதமதி பிறந்தார்கள் என்பார். மணி. 7; 98- 108, 9; 38 - 47, 12; 15 -19. என்பவற்றில் இவற்றைக் காணலாம்.
மணி 28, 253 - 240 மற்றும் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டகாதை பவத்திறமறுகெனப் பாவை தோற்ற காதை ஆகிய இறுதியிருகாதைகளிலும் இதனைக் காணலாம். சோழ அரசி உதயகுமரனின் தாய். உதயகுமரனின் இறப்பிற்கு மணிமேகலை காரணமாயிருந்தாள் எனக் கூறப்பட்டுச் சிறைப்பிடிக்கப்பட்டாள்.
துணிகயந்துகள்படத் துளங்கியதுபோல் - தெளிந்த நீரையுடைய குளம் புழுதி படிதலால் கலங்கிய தன்மை போல என்பது இதன் பொருள்.
வளி யெறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி - காற்றால் அலைக்கப்பட்ட பூங்கொம்பு போல வருந்தி உடல்நடுங்கி என்பது இதன் பொருளாகும்.
கைலாசபதி. க. 'பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்” 3ம் பதிப்பு 1999 குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, பக் 19.
கோவலனின் கனவாக இது சிலப்பதிகாரத்திற் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைலாசபதி. க. 'பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்” 3ம் பதிப்பு 1999 குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 119.
வஞ்சி நகரில் கண்ணகி கோயில் கண்ணகி தோன்றிக் கூறியதாகக் குறிப்பிடப்படுகிறது.
பாசம் யுடு 1954 'வியத்தகு இந்தியா” தமிழாக்கம் செ. வேலாயுதபிள்ளை மகேசுவரி பாலகிருட்டனன்.
அரசகரும மொழித் திணைக்கள வெளியீடு
பக். 248.
மேற்படி நூல்: பக். 362.
47

Page 80

-|W|//sae|-| s.sssssssssW)W// sae|W////s. //
s. //// s.! W
//
Noae,::= Nosae
#武/