கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு

Page 1


Page 2

பெண்நிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும்
ஒரு சமூகவியல் நோக்கு
செல்வி திருச்சந்திரன
ACC.
No 1864 CLASS ..
|3 이
DATE
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்

Page 3
First Edition June 1998
Title : The Dilema of Theories :
A Feminist Perspective
Subject : Women's Movements:
'Women's Studies
Author : Selvy Thiruchandram
No of page ":... ."
Price : 100/-

பொருளடக்கம்
முன்னுரை
பெண்நிலைவாதக் கோட்பாடுகள்
கற்பனாவாத சோஷலிஸமும் பெண்ணிலைவாதத்தின் கற்பனாவாதங்களும் 28
முற்போக்குவாத, தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரண்பாடுகளும் 48
தேசிய வாத, ஏகாதிபத்திய வாதங்களின் பெண்நிலைவாத
முரண்பாடுகள் 78

Page 4

முன்னுரை
இச் சிறு நூலில் ஆங்கிலத்தில் என்னால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட சில கட்டுரைகளும் ஆய்வுகளும் அடங்கி உள்ளன. ஆங்காங்கே மொழி பெயர்ப்பின் சாயல் தெரிகிறது. மேற்கத்திய, இந்திய நாட்டு நடைமுறை முரண்பாடுகளும் கோட்பாட்டு வரைவிலக்கணங்களும் எடுத்தாளப்பட்டுள்ளமை, இந்நூல் எம்மவருக்கு உதவக்கூடியதா என்ற கேள்வியை எழுப்பும். ஈழத்துப் பெண்கள் பிரச்சனைகளை சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு கட்டாய தேவை இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. சில விடயங்களை ஏற்கனவே ஆய்வு செய்துள்ளேன். (தமிழ் வரலாற்று படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு) இரண்டாம் பகுதி.
மலையகத்து பெண்களைப் பற்றிய ஆய்வு ஒன்று தற்பொழுது எமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு பெண்களைப் பற்றிய ஆய்வு அரசியல் கெடுபிடி, ஆய்வு செய்யக்கூடிய சமூக நிலையில் பாதிப்பு போன்ற காரணங்களால் தற்காலிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை, அம்பாறை ஆகிய இரு இடங்களிலும் தோன்றி உள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பற்றிய ஆய்வு முடிவுற்ற நிலையில் உள்ளது. ஆனாலும் மலையக ஆய்வை விடுத்து ஏனையவை ஆங்கில மொழியிலேயே செய்யப்பட்டுள்ளன. அரசுக்கும் ஏனைய ஆய்வாளர்களுக்கும் பெண்கள் விடயத்தில் அக்கற்ை உள்ள, அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களுக்கு உதவும் பொருட்டும் ஆங்கிலத்திலேயே இவ்வாய்வுகள் செய்யப்படுகின்றன.
மொழிபெயர்ப்பதை ஒரு அத்தியாவசிய தேவையாகவே நாம் கருதுகிறோம். இதனால் காலஞ் சென்றே இது தமிழ்மக்களை

Page 5

பெண் நிலை வாதக்கோட்பாடுகள்
கருத்தியல்கள், கருதுகோள்கள் பற்றிய அகராதியின் விளக்கங்கள் பூரண கருத்து வெளிப்பாட்டைக் கொண்டன அல்ல. சில அடிப்படைக் குறைபாடுகள் உடையனவாக இருக்கும். சில அகராதி - விளக்கங்கள் காலக்கிரமத்தில் பெறப்படும் எடுகோள்கள், கருத்துக்கள், உள்ளோட்டங்கள் பலவற்றை அவ்விளக்கங்களில் அடக்குவதில்லை. அவை ஒதுக்கப்பட்டு விடுகின்றன. கருத்தியல்கள் சில இடவெல்லைக் குட்பட்டதாகவும் சில விசேட சரித்திரப் பின்னணிப் பரிமாண ங்களும் உடையனவாயும் உள்ளன. 18ம் நூற்றாண்டின் பிற் பகுதியில் ஏற்பட்ட பெண்ணிலைவாதக் கருத்தியல் இன்றைய சமகால பெண்ணிலைவாதக் கருத்தியல் முழுவதையும் உள்ளடக்கக் கூடியதாகக் கருதப்படுமானால் அது நிச்சயமாக ஒரு பெருந்தவறே. இன்றைய பெண்ணிலைவாதம் என்பது "அரசியல் அல்லது பொருளியல் ரீதியாக ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் அல்லது கோரி நிற்கும்", sg) 55 UT IT fuî Gü) 3 n.plai Lui Lq(5 jiggio (The American Heritage Dictionary

Page 6
of the English Language) (5 Gd5 IT LLJ (TGB) LDL (6 Daia GT63TUg தெளிவு.
பெண்ணுரிமைவாதத்தின் பல்வகைப்பட்ட சமூக பொருளாதார உந்தல்களால் ஏற்பட்ட ஒரு பூரண வளர்ச்சி நிலையே இன்று பெண்ணிலைவாதம் என்று கணிக்கப் படுகிறது. இந்த பூரண வளர்ச்சி நிலையே, இதை மேற்கின் அரை வேக் காட்டுத்தண்மான கோட்பாடு என நிராகரிக்க வைத்துள்ளது. பல்வேறு சிந்தனைப் பீடங்களின் பன்முகப்பட்ட கொள்கைகள், பகுப்பாய்வுகள் பெண்ணிலைவாதம் பற்றிய ஒரு குறுகிய பார்வைக்கு வழிகோலியுள்ளது. அது கீழைத்தேச நாடுகளில் பூரணமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது கீழைத்தேச பாரம்பரியத்துக்கும் ஆசிய வாழ்க்கை நெறிக்கும் பொருந்தாது என நோக்கப்படுகின்றது.
பெண் ணிலைவாதம் என்பது ஒரு மேற்கத்தேயக் கருத்தாக கிழக்கிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் சிலரால் ஏன் பார்க்கப்பட்டது என்பதை அறிவதற்கு முதலில் நான் பெண்ணிலைவாதம் பற்றிய பல்வேறு சிந்தனைக் கோவைகளைச் சுருக்கமாக விபரித்தல் நல்ல பயனைத் தரும். இதன் இரண்டாவது பகுதி, பெண்ணிலை வாதம் ஒரு அந்நியக் கோட்பாடல்ல என்பதை எடுத்து விளக்கும். அதுஅநேகமாக கீழைத்தேயங்களின் சிந்தனைக்குரிய ஒன்றாகவே இருந்துள்ளது. பெண்ணிலைவாதம் பலவிதமான தோற்றங்களில் பவ்வேறு காலப்பின்னணியில் சீனா, யப்பான், எகிப்து, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தே வந்துள்ளது. ஆனால் அவை போதுமான அளவில் ஆவணப்படுத்தப்படவில்லை.
சமகாலப் பெண்ணிலைவாதக் கொள்கைகளைப் பற்றிய தாற்பரியங்களை பகுப்புரீதியாக வகுப்பது பிரச்சினைக்குரிய

விடயமாகும். பெண்களுக்கு ஏற்படும் சுரண்டல் வகைகளுக்கும் உரிமை மறுப்புகளுக்கும் (Expoitation) அவர்களது அடக்கு முறைகளுக்கும் (oppression), கீழ் நிலைகளுக்கும், காரணங்களை இனங்காணும் வழிமுறைகளில் கூட பெண்நிலைவாதி களுக்கிடையில் விவாதமுண்டு. அபிப்பிராய பேதங்களுண்டு. பெண்களது உடல் உறுப்புகளே அடிப்படையில் அவர்களது இழிநிலைக்குக் காரணம். அதாவது பெண்களது பால்மையே பெண்களுக்கு எதிரி என்போர் சிலர் (Bio logica). தமிழ் நாட்டில் தோன்றிய பெரியாரது (ஈ.வே.இராமசாமி) கருத்துகள் கூட இதுவே. பால் நிலைப்பாட்டு கற்பிதங்கள் அதாவது பால்மையை அடிப்படையாகக் கொண்டு பெண்ணுக்கும் ஆணுக்கும் சமூக வரையறைகளால் ஏற்படுத்தப் பட்ட பிரிவினைகளும் பாகுபாடுகளுமே காரணம் என்போர் சிலர். பொருளாதாரக் காரணிகளே பெண்களை அடிமைப் படுத்துகின்றன என்போரும் உளர். இவற்றை விளங்கிக் கொண்ட முறைமையிலும் பரிகாரம் தேடும் வழிமுறைகளிலும் என்ன விதமாக அவற்றை அகற்றலாம் என எடுக்கப்படும் முயற்சிகளிலும் கூட பேதங்கள் இப்பெண்ணிலை வாதிகளிடம் இருப்பதை நாம் அவதானிக்கலாம். −
முற்போக்குப் பெண்ணிலைவாதம் (Liberal Feminism) (1)
சமகாலப் பெண்ணிலைவாதச் சிந்தனைகள் முற்போக்கு 6) Ing5id, (Liberalism) LDst fråsefu6) 17 g5 Lb, (Classical Marxism) சோசலிசவாதம் என்னும் பிரிவுகளுக்குள் அடங்குவனவாக இருப்பது நோக்கத்தக்கது. 1791ல் பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்கப்படவேண்டும் என்பது பற்றிய பெண்கள் பிரச்சினை மேரிவோல்ஸ் ரொன்கிறாவ் (Mary WolsStonecraft) என்பவரால் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரஞ்சுப்புரட்சிக் காலத்தில் நிலவிய முற்போக்கு கருத்தியலின் நீட்சியே இதுவாகும். இது பின்னர் பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி, வேலைவாய்ப்பு

Page 7
போன்றவற்றையும் உள்ளடக்கிற்று. இந்த முற்போக்கு வாதக்கொள்கை பின்னர் பெற்றி ஃறைடன் (Betty Frieden) என்பவரால் (1963) மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் தேசிய பெண்கள் அம்ைப்பும் (The National Organisation of Women in America) இங்கிலாந்தின் சமவாய்ப்பு ஆணைக்குழு G5 (TL66,667 (Equal Opportunities Commision in England) -9, fug06) suld இச்சிந்தனைக்குத் தம்மை அர்ப்பணித்துள்ளன. இது அடிப்படையில் பூர்வு"வாக்களின் (முதலாளித்துவ) கருத்திய லாகவும், பால்ரீதியாக நிலவும் பாரபட்சங்களை நீக்கி, பெண்கள் சுதந்திரச் சந்தையில் (Free Market) போட்டி போட வழிவகுப்பதாகவும் அமைந்தது. கர்ப்பத் தடைக்கான J5LGB) üLu TLq65T 63) LD (Free access to Birth Control), (FF Givgib D6öT 1920) பிரசவவிடுமுறை, (பெற்றி ஃறைடன் 1963) கூட்டுப் பிள்ளை பராமரிப்பு (றொட்மன் 1915) தேசிய பெண்கள் egy 60ldüL-(The National Organisation of Women) Glu T6öt p6OT இப்பெண்நிலை வாதிகளின் கோரிக்கைகளாகும்.
மார்க்சீய பெண்ணிலைவாதம்
மேற்கூறப்பட்ட உரிமை பரப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவை நியாயமானவை என்றும், மார்க்சீய பெண்ணிலைவாதிகள் கூறிய போதும், பால் ரீதியான பிரிவுக்கும், அங்கு நிலவும் சமத்துவமின்மைக்கும் காரணம் இவை முதலாளித்துவ உற்பத்திப் போக்கோடு தொடர்பு கொண்டிருப்பதே என்பதை அவர்கள் அழுத்த விரும்புகின்றனர் (Griffiths and Sagara 1975). மேலும் அவர்கள் மேற்கண்ட உரிமை வழங்கல் மாத்திரம் பெண் விடுதலைக்கு உத்தரவாதமாகாது என்றும் கூறுவர். உத்தியோகம் பார்த்தலில் மட்டும் சமவுரிமை என்பது உத்தியோகத்தையோ சம ஈடுபாட்டையோ தரப்போவதில்லை. முற்போக்குக் கோரிக்கைகள் நல்லவை. ஆனால் போதுமானவையல்ல

அவற்றால் பூரண சமத்துவத்தை அடைய முடியாது. மார்க்சீய வாதிகள் பெண்ணிலைவாதம் பற்றி வைத்துள்ள விளக்கத்தினதும் மையக் கருத்து 'பூர்ஷ"வா குடும்பத்தில் (முதலாளித்துவக் குடும்பத்தில்) இருந்து ஆரம்பமாகிறது. அவர்களைப் பொறுத்தவரை பெண்களது ‘வரலாற்று ரீதியான தோல்வி என்பது உயிரியலின் பாற்பட்ட பிரச்சனையல்ல. மாறாக மேலதிக உற்பத்தியினால், சொத்துக்களும் பெண்களும் தனியுரிமை ஆக்கப்பட்டதின் விளைவே. மேலதிக உற்பத்தியினால் பெறப்பட்ட தனிச் சொத்தை தொடர்ந்து பேணவும், தந்தை வழியுரிமையை உறுதிப்படுத்தவுமே ஆண்கள் பெண்களை தம் உரிமையாக்க விரும்பினர். சமூக உற்பத்தியில் பெண்கள் புகுவதே அவர்களின் விடுதலைக்கு அவசியமாய் உள்ளது என்ற ஏங்கல்ஸின் வாதத்தை இவர்கள் ஏற்றுக்கொள்வர். மேற்படி இப்பெண்ணிலைவாதக் குழுக்கள், பெண்கள் பிரச்சினைக்குத் தீர்வாக வைக்கும் வாதம் என்னவெனில், குட்டிமுதலாளித்துவ (பூர்ஷாவா) ஸ்தாபனங்களான குடும்பம், தனிச்சொத்து என்பவற்றை அழித்து அவ்விடங்களில் பொது மய்யப்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும் என்பதே. இவர்கள் முக்கியமாக, தமது கருத்துக்களை (பழைய ) மார்க்சீய வாதிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதோடு, பால்ரீதியான சமத்துவமின்மைக்கும் மார்க்சீய அணுகு முறையையே கைக்கொள்ளுகின்றனர்.
going 6L605 Gosfo6) 6Irgub (Radical Feminism)
தீவிரவாத பெண்ணிலைவாதிகள் பெண்களின் கீழ்மை நிலைக்குரிய காரணம், உற்பத்தி முறையால் ஏற்படுவதில்லை. மாறாக, மறுஉற்பத்தி முறையில் அவர் வகிக்கும் பங்கினாலேயே அதாவது கர்ப்பந்தரிக்கும் கருவளமே பெண்களுக்கு முதல் எதிரி என்பது இவர்களது வாதம்,

Page 8
பிள்ளைப் பராமரிப்பில் செலவிடப்படும் நேரம், வீட்டுவேலைகளிலே அடங்கிக் கிடத்தல் போன்றவை இவற்றின் பாற்பட்டவையாகும். ஆகவே சீர்திருத்தமல்ல. புரட்சியே தேவைப்படுகிறது என்பத்ே அவர்கள் கருத்து. இந்தப் புரட்சியானது, பெண்களின் கர்ப்பப்பையை விட்டு குழந்தைகளை தொழில்நுட்ப ரீதியாக உற்பத்தியாக்கும் செயல்வரை நீளலாம். இப் பெண்ணிலைவாதிகள் தம் இயக்கத்தை புரட்சிகரமானது என்றும் தமது கருத்துக்கள் பொருள் முதல்வாத இயக்கவியல் மார்க்சீயத்திலிருந்து பெறப்படுகின்றன என்றும் கூறுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் பால்ரீதியாக சமூகத்தை பிரித்துப் பார்க்கும் மார்க்சீயப் பார்வையை நிராகரிக்கின்றனர். ஃபயர்ஸ்ரோன் (FireStone) என்பவரின் கருத்துப்படி மார்க்சீயம் என்பது ஆண்மேனிலை தன்மையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் ஆணுடைய உடற்பலம், ஆக்கிரமிப்பு, வணி செயலுக்குரிய ஆற்றல் என்பவை பெண்களை கீழ் மைப் படுத் துவதற்கும் அடக்குவதற்கும் உரிய சாதனங்களாகக் கொள்ளப்படுகின்றன (Red Stocking 1969 Millet 1984) என்றும் கருதுகின்றார். இங்கு பெண்கள் கர்ப்பப்பையை அகற்றிடவேண்டும். கர்ப்பந்தரிக்கக் கூடாது என்ற பெரியாரின் ( ஈ வே . ராமசாமி ) வாதத்தையும் நாம் தொடர்புபடுத்தலாம்.
பண்பாட்டு பெண்ணிலைவாதம்
பண்பாட்டு பெண்ணிலைவாதம் என்பது திரைவாத பெண்ணிலைவாதத்திற்குள் இருக்கும் ஒரு முரண்பட்ட கருத்துப் போக்காகும். இது பெண்களின் பண்பாட்டை போற்றும் ஒன்றாகும். பெண்களின் கீழ்நிலைக்குக்காரணம், உயிரியல் ரீதியான அமைவன்று, மாறாக உளவியல் ரீதியான அமைவே காரணமாகும் என்கின்றது. பண்பாட்டு

பெண் ணிலைவாதிகளின் கருத்துப் படி பெண் கள் மற்றவர்களுக்காக அனுதாபம் காட்டல், அன்பு, தியாகம் விட்டுக் கொடுத்தல், போட்டியின்மை, கூட்டுறவு, தாய்மை போன்ற பெண்களுக்கே உயிரியல் ரீதியாக அளிக்கப்பட்டுள்ள பண்புகளை உடையவர்கள் என்கிறது (Rox anne Dunbar 1970), இப் பண்புகள் தேவையானவையும் நல்ல சமூக உருவாக்கத்துக்கும் உகந்தவையுமாகும். தாய்மையையும் பெண்மைக்குரிய தன்மைகளையும் போற்றவேண்டுமென்பது இவர்களது கருத்து. தீவிர பெண்ணிலைவாதிகள் சில சமயங்களில் கூறுவது போல் பண்பாட்டு பெண்ணிலை வாதிகளும் ஆண்களை தமது பகைவர்களாகக் கருதுவர். ஆணாதிக்கத்தில் உள்ள தீவிர வெறுப்பின் வெளிப்பாடே இவ்வுணர்ச்சி.
சோஷலிஸ பெண்ணிலைவாதிகள்
பால்ரீதியான சமத்துவத்துவமின்மை சம்பந்தமாக முற்போக்குப் பெண்ணிலைவாதிகளும் மார்க்சீய பெண்ணிலை வாதிகளும் கொண்டுள்ள கருத்துக்கு எதிரான கருத்துடைய வர்களாக சோஷலிஸ் பெண்ணிலைவாதிகள் உள்ளனர். இவர்கள் சீர்திருத்த தீவிரவாதிகளுடன் ஒத்துப்போகின்றனர். வழமையான இடதுசாரிகள், பெண்கள் பிரச்சினையை இரண்டாம் பட்சமானதாக ஒதுக்கி தொழிலாளர் பிரச்சி னையை முதன்மைப் படுத்துவதனாலேயே இவர்கள் அவர்களை எதிர்க்கின்றனர் (Rowbotham 1979). இருந்த போதும் இவர்கள் மார்க்சீயத்தோடும் சமூகத்தில் காணப்படும் பால்ரீதியான பிரிவோடும் சமரசம் காணமுற்படுகின்றனர். (Eisenstein 1979, Kuhu and Wolfe 1978). 2 plug, g5 (up 60 pg, it 65t "வரலாற்று ரீதியாக, பெண்களின் தோல்விக்கு" காரணமென ஏங்கல்ஸின் வாதத்தின் போதாத்தன்மையை இவர்கள்

Page 9
சுட்டிக்காட்டியுள்ளனர். பாலியல் அடக்குமுறை முதலாளித்து வத்துக்கு முந்தியும், சோஷலிசத்திற்குப் பின்னரும் தனியுடமை அற்ற தொழிலாளர் வர்க்கத்திலும் தொடர்ந்து காணப் படுகின்றது. இவர்கள் உயிரியல் ரீதியான வரையறைகளை நிராகரிக்கும் அதே நேரத்தில் பெண்களின் சமத்துவ மின்மைக்கும் காரணமாக உயிரியல் ரீதியான சமூக அமைப்பு உள்ளதாக ஓரளவு ஒப்புக்கொள்கின்றனர். இதைவேறு வார்த்தைகளில் சொல்வதானால் சமூக அமைப்பின் உயிரியல் ரீதியான பாலியல் வேறுபாடு தந்தைவழி உரிமையை மீளச் செய்வதோடு சமூகத்தில் பாலியல் பாகுபாட்டையும் நிலவச் செய்கிறது (Janet Sayers, 1982), குடும்பவேலைக்குரிய சம்பளம் பெண்களுக்குக் கொடுக்கப்படவேண்டும் என்று இவ்வமைப்பில் உள்ள சிலரால் ஒரு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. இது பலவாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியதோடு ஆண்கள் பெண்ணிலைவாதிகள் ஆகிய இருசாராரையும் இதில் ஈடுபடுத்தியதோடு ‘குடும்ப வேலை என்பதன் வரைவிலக்கணங்கள் பற்றியும் முடிவற்ற வாதப் பிரதிவாதங்கள் தொடர வழிவகுத்தது.
இவை தான் இன்றைய பெண் ணிலைவாதத்தின் பன்முகப்பட்ட கோட்பாடுகளின் சுருக்கமாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்னும் சிறிய கருத்தியலில் இருந்து ஆரம்பித்து, இன்று இது பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இவை பெண்ணிலைவாதம் பற்றிய ஒரு சரியான விளக்கத்தை எமக்குத்தருகிறதா?
பெண்ணிலைவாதம் பற்றிய ஒரு விளக்கம்.
இன்றைய சமகாலப் பின்னணியில் பெண்ணிலைவாதம் பற்றி விளக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

"சமூகத்திலும் வேலைத்தலத்திலும் குடும்பத்திலும் பெண்கள் அடக்கப்படுவதும் சுரண்டப்படுவதும் பற்றி விழிப்பாய் இருப்பதோடு இதை மாற்றுவதற்கான முயற்சிகளைப் பெண்கள் பிரக்ஞைபூர்வமாக மேற்கொள்ள வேண்டும்" என்று பெண்ணிலைவாதம் கூறுவதோடு, "பெண்களுக்கு பலவழிகளிலும் பாரபட்சம் காட்டுவதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் சமத்துவத்துக்குமாகப் பாடுபடும் ஒரு இயக்கம் என்று நாம் அதைக்கூறலாம். பெண்கள் குடும்பத்தில் கீழ்மைப்பட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவதோடு இன்று நிலவும் பொருளாதார, அரசியல் அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டும்" ( Jayawardena 1986 3 ) என்றும் அது கூறுகின்றது.
1979 பாங்கொக்கில் பெண்ணிலைவாதக் கருத்தியல் பற்றி நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் வைத்து பெண்ணிலைவாதம் வரையறுக்கப்பட்டது. முதலாவது அடக்கு முறையிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவதென்பது வீட்டிலும் வெளியிலும் தமது வாழ்க்கையைத் தாமே தீர்மானிக்கும் தெரிவையும் அதிகாரத்தையும் பெறுவதாகும். பெண்ணிலைவாதத்தின் இரண்டாவது இலக்கு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் நீதியான சமூக, பொருளாதார அமைப்பைக் கொண்டு வருவதன் மூலம் பெண்களுக்கு இழைக்கப்படும் சகலவிதமான அடக்குமுறைகளையும் அவர்களது சமத்துவமின்மையையும் அகற்றுதல் பற்றியது. இக்கருத்தானது பெண்களை தேசிய விடுதலைப் போராட்டங்களிலும், தேசிய அபிவிருத்திக்கான திட்டமிடல்களிலும், தேசிய சர்வதேசிய ரீதியான மாற்றங்களின் மூலோபாயங்களிலும் பங்கெடுக்க வைத்தலை அழுத்துகிறது. என்னைப் பொறுத் தளவில் பெண் ணிலைவாதத்தின் இவ்விரண்டாவது இலக்கானது மிகவும் பரந்துபட்டதாய்

Page 10
இருப்பதால் யதார்த்த ரீதியான பெண்ணிலைவாதத்தின் வரம்புகளுக்குள் வராத ஒன்றாக உள்ளது.
ஒரு தேசிய போராட்டம் என்பது பெண்ன்னிலை வாதிகளின் செயற்பாடுடைய ஒன்றே. ஆனால் அதற்காக தேசியப் போராட்டங்களிலும் விடுதலை இயக்கங்களிலும் பங்கெடுக்கும் பெண்கள் எல்லோரும் பெண்ணிலைவாதிகள் என்று கூறிவிட முடியாது. இது பெண்களின் போராட்ட வல்லமையையும் புரட்சிஆற்றலையும் காட்டுமேயல்லாது, பெண்ணிலைவாதத்தின் அடிப்படையிலிருந்து எதையும் இது விளக்குவதாகாது. மேற்கத்தைய ஏகாதிபத்தியத்துக் கெதிரான மூன்றாம் உலக நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பெண் நிலைவாத உணர்விலிருந்து வேறுபட்டதாகவே இருந்தது என்பதை நாம் அறியலாம். தேசிய உணர்வுகளும் பெண்ணிலைவாதமும் பல சமயங்களில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகவுமிருக்கின்றன.
ஆனால் அதற்காக மூன்றாம் உலக நாடுகளின் தேசிய எழுச்சியோடுதான் பெண்ணிலைவாதத்தின் முதல் அலை எழுந்ததென்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஒரு முரண்பாட்டுக்குரிய ஒன்றே. தேசிய எழுச்சியோடு பெண் ணிலை உணர்வுகள் தேசியத் தலைவர்களால் எழுப்பப்பட்டன. அதேவேளை சுதேசியத்தின் பழமையும் கலாசாரமும் மேன்மைப்படுத்தப்பட்டதோடு பெண்களின் பாரம்பரிய விழுமியங்கள் விடுதலைப் போரட்டங்களில் நடுநாயகமாக விளங்க வேண்டும் என்று தேசியவாதிகள் வலியுறுத்தினர். இந்த முரண்பட்ட போக்கே ஏன் பெண்ணிலைவாதம் ஒரு மேற்கத்தைய கருத்தியலாக இழிவாகப் பார்க்கப்பட்டது என்பதை ஓரளவு விளக்கும்.
10

ஏன் இது மேற்குலகின் கருத்தியலாக கொள்ளப்படுகிறது?
பெண்ணிலைவாதம் மரபுவாதிகளாலும் மரபுரீதியான பெண்கள் அமைப்புக்களாலும் பொதுசனத் தொடர்பு சாதனங்களாலும் மனிதப் பெறுமதிகளும் கலாசார மேன்மையுமற்ற மேற்குலகச் சமூகத்தின் குறியீடாக நிற்கும் ஒரு கருத்தியல் எனக் கொள்ளப்பட்டது. இதற்குரிய காரணங்களை அறிவது கடினமான ஒன்றன்று. சமூக பொருளாதார, சமூக பண்பாட்டுக் காரணங்களாகவே அவை இருக்கும்.
குடும்பம் பற்றிய கருத்தியலும் விவாதமும்
குடும்பம் ஒரு மைய அலகாக இருந்து சமூகத்துக்கு எவ்வாறு தனது பங்களிப்பையும் கடமைகளையும் புரிகிறது என்பன பற்றி சமயங்களும் பழைய இலக்கியங்களும் சமகாலத் தொடர்புசாதனங்களும் மீண்டும் மீண்டும் பலவாறு வலியுறுத்தியுள்ளன. சனத்தொகையின் எண்பது வீத மக்கள், இன்னும் நிலமானியத்தின் எச்சங்களில் இருந்து மீளாத கிராமங்களில் வாழ்கின்றனர். பெண்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்குரிய காரணம் முதலாளித்துவ (பூர்வு சவா) குடும்பமுறை என்றும், இதனால் குடும்பம் என்பது இப்பின்னணியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் மார் க்சீய பெண் ணிலைவாதிகள் கூறினால் அது எதிர்ப்புக்குள்ளாகிறது. இதே நிலைதான் ஒரு சமூக ஸ்தாபனமாக்கப்பட்டுள்ள விவாகமுறைக்கும் ஏற்படுகிறது. பலதார மணமென்றும், சட்டரீதியான அனுமதியற்ற மணம் செய்வதும் பின்னர் . அப்பெண்களையும் பிள்ளைகளையும் கைவிட்டோடும் ஆண்கள் மத்தியில் ஒரு வனுக்கு ஒருத்தியென்ற ஒரு தார மணமே பெண்களின் பிரச்சினைக்கு தீர்வாகப் பார்க்கப்பட்டது. குடும்ப அமைப்பென்பதை பேணுவதற்காக
11

Page 11
ஆண் - பெண் விவாக உறவின் புனிதமும் ஒரு தர்மமாகப் போற்றப்பட்டது. இச்சமூகங்களில் பெண்களும் சரி ஆண்களும் சரி தமது கலியான உறவைச் சட்டரீதியாக விலக்கி விவாகரத்து செய்யும் அளவுக்கும் திரும்பவும் வேறு விவாகம் செய்து கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டபோதும் விவாகம் என்னும் ஸ்தாபனத்தை அழிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை. குடும்பம் என்பது "இதயமற்ற உலகில் ஒரு சொர்க்கம்" என்ற கருத்தும் அது தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதும் பல வாதப் பிரதி வாதங்களை தற்போது தோற்றுவித்துள்ளது.
மானிடத்துக்கான மனித கடப்பாடும், அதற்கு ஆற்றப்படவேண்டிய கடமைகள் பற்றிய பிரஸ்தாபமும், சமயங்கள் வாயிலாகவும், பழங்கால இலக்கியங்கள் ஊடாக தொடரப்பட்டு சமகால தொட்ர்பு சாதனங்கள் (நாவல், சிறுகதை, சினிமா, நாடகங்கள்) வழியாக வலியுறுத்தப் படுகின்றன. ஒவ்வொரு தொடர்ந்து வரும் சமூகமும் தமக்குரிய கருத்தியலினாலும் சமூக பெறுமதிகளாலும் ஆளப்படுவதால் அச்சமூகங்களை அடக்கி ஒடுக்குவோர் தமது அடக்குமுறையானது இயற்கையோடு ஒத்தது என நம்புகின்றனர். ஆகவே பெண்நிலைவாதம் குடும்பம் கொடுமைகளின் இருப்பிடம் என்று கூறினால் நாம் ஒரு புதுமையான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாய்
உள்ளோம்.
இத்தகைய நிலையிலிருந்து விடுபடுவதற்கு தாங்கள் அடக்கி ஒடுக்கப்படு கிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்பட் வேண்டும். தாம் பெண்ணாய் இருப்பதன் காரணத்தால் இத்தகைய கடமைகளுக்கும் கடப்பாடுகளுக்கும் அடிமைப்பட்டு அசமத்துவ முறைகளால் வருந்த வேண்டிய அவசியம் இல்லை என்ற உணர்வையும் அவர்கள் பெறவேண்டும்.
12

ஆனால் இங்கே பெண்ணிலைவாதம் ஒரு சிக்கலுக்கு முகங்கொடுக் வேண்டியுள்ளது. குடும்ப முறையால் ஏற்படும் இரண்டாம் பட்சமான அனுகூலங்களை புறந்தள்ளுவதால் போதுமான அளவோ அல்லது முற்றாகவோ அரச உதவி கிடைக் காத மூன்றாம் உலகில் உள்ள பெண் கள் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் உழைப்பில் ஈடுபட்டு சம்பளம் பெறாத பெண்களுக்கு குடும்பம் என்பது பொருளாதார, சமூக, ஒழுக்கரீதியான தேவைகளை வழங்குகிறது. ஒரு வித சலுகைகளும் இல்லாத இந்நிலையில் ஒரு கெட்ட கணவன் கூட மிகவும் உபயோகமானவன். பட்டினி கிடந்து சாவதா கீழ்மைப்பட்டு ஒடுக்கப்பட்டு இருப்பதா என்ற கேள்வி எழும்பும் போது பின்னதையே தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பல பெண்களுக்கும் இங்கு ஏற்படுகின்றது. நடைமுறைக்கு உகந்த மாற்றுச் சாதனங்களை முன்வைக்காமல் உடனடி மாற்றங்கள் பற்றிப்பேசுவது பெண்ணிலைவாதத்தை குருட்டு வழிக்குள் முடக்குவதாக முடியும். குடும்பத்தை தொலைக்கவேண்டும் என்ற கோஷம் மேலை நாட்டின் பண்பற்ற ஒரு கோஷமாக கணிக்கப்படுகிறது. குடும்பம் சீர்திருத்தப்படவேண்டும் சமத்துவம் அங்கு நிலவ வேண்டும் என்று கூறும் பொழுது பெண்நிலை வாதம் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
பாலியல் பிரிவினை, ஆண் வெறுப்பு போன்ற பெண்ணிலைவாதிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில தன்மைகள் கீழைத்தேய சமூகங்களில் சிக்கல் தரக்கூடியவை ஆகும். உறவுகளின் மிக நெருக்கமுடைய குடும்ப அமைப்பென்பதும் இரண்டு அல்லது மூன்று தலை முறைக்குரிய குடும்ப அங்கத்தவர்களிடையே நிலவும் உறவு என்பதும் இலகுவில் குலைக்கப்பட முடியாத உணர்வு நிலைப்பட்ட ஒன்றாகும். சகோதரி-சகோதரன், தந்தைமகள், தாய்-மகன் உறவு முறை என்பது பரஸ்பர உணர்வு
13

Page 12
மாற்றங்களைக் கொண்டது (Maria Mies 1980). தந்தை வழிக்குடும்பம் என்பது ஆண் ஆதிக்கம், ஆணி (பாதுகாப்பு) ஆதரவு என்னும் இரண்டு பக்கங்களை உடையது. இது அவ்வப்போது ஆண்களால் (தந்தை மார் , மகன் மார், சகோதரர்கள், பேரன்மார், மருமக்கள் ) தியாகம், காதல், அன்பு என்று பெரிய அளவுக்கு விரிவாக்கப்படுவதுண்டு. குடும்ப அங்கத்தவர்களிடையே உணர்வுரீதியான இணைப்பு என்பது ஆழமாக வேரூன்றப்பட்ட ஒன்றாகும். தொழிலாளரை சுரண்டுதல், ஒடுக்குதல் என்று நாம் பேசும்போது அது வெறும் பொருளாதார நிலையோடு சம்பந்தப்பட்டது. தொழிலாளர் அந்நியப்படுத்தப்பட்டமை காக்கப்படுவோர் என விவசாயி- நிழக்கிழார் ஆகியோரிடையே நிலவும் உறவு முறை பொருளாதார ரீதியில் விளக்கப்படலாம். ஆனால் உறவுகளின் நெருக்கத்தால் இணைக்கப்பட்ட குடும்ப அலகு வித்தியாச மானது மட்டுமல்ல. அதுவே இன்றைய கீழக்கத்தேய சமூகங்களின் அளவு கோலாகவும் உள்ளது. குடும்பத்தை தொலைக்க வேண்டும் என்ற பெண்நிலைவாத கோஷம் மேலைநாட்டு பண் பட்ட ஒரு கோஷமாகவும் கணிக்கப்படுகிறது. குடும்பம் சீர்திருத்தப்படவேண்டும், சமத்துவம் அங்கு நிலவ வேண்டும் என்று கூறும் பொழுது பெண்ணிலைவாதம் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளப்படலாம்.
சுதந்திரக் காதலும் பெண்களது தன்னினச் சேர்க்கையும்
மேற்குலகப் பெண்ணிலைவாதம் பாலியல் சுதந்திரத் துடனும் லெஸ்பியனிஸம் எனப்படும். தன்னினச் சேர்க்கை யோடும் சம்பந்தப்பட்டது. இத்தகைய போக்குகள் பண்படாத கலாச்சாரத்தின் ஆரோக்கிய மின்மையின் குறியீடுகள் என கீழைத்தேய சமூகங்களிடையே இழிவாகப் பார்க்கப்படுகிறது.
14

அனேக கீழைத்தேய சமூகங்களிடையே பால்ரீதியான கற்பொழுக்கம் போற்றப்படவேண்டிய பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒருவனுக்கு ஒரு த்தி என்னும் விவாக முறையே பண்பாகக் கொள்ளப்படுகிறது. ஆண்கள் புரியும் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் கருத்தியல் ரீதியில், சட்ட ரீதியிலும் அனுமதிக்கப்படமாட்டா. ஆனால் இவை சமூகமட்டத்தில் கண்டும் காணாமலும் விடப்படுகின்றன. ஆண்களுக்கொரு நீதி பெண்களுக்கொரு நீதியென ஒரு வித ஆண்களுக்குச் சார்பான அணுகுமுறை கீழைத்தேயத்தில் கடைப் பிடிக்கப்படுவது சில பெண்ணிலை வாதிகளால் எதிர்க்கப்படுகிறது. அதே வேளை பெண்கள் தமது ஒழுக்கத்தை பேணவேண்டும் என்பதை சில பெண்ணிலைவாதிகள் எதிர்க்காமலேயே, இதே ஒழுக்கம் ஆண்களுக்கும் உரியதாக இருக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
பெண்ணிலைவாதம் என்பது தெரிந்தோ தெரியாமலோ, மேற்கத்தேயப் பழக்க வழக்கங்களுடனும் நடையுடை பாவனைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இதுபற்றி விளக்க ஒரு சுவையான நிகழ்ச்சியொன்றை நான் கூறுவேன். “பெண்ணிலைவாதிகளுக்கு ஒரு பத்திரிகை ஏன் தேவைப் படுகிறது?" என்னும் கருத்தரங்கு 'பெண்ணின் குரல்' (Voice Of Women) பத்திரிகையால் ஒழுங்குபடுத்தப்பட்ட போது ஜேர்மனியின் பெண்ணிலைவாதப் பத்திரிகையான (Courage) லின் ஆசிரியரும் வந்திருந்தார். பிரதான தொடர்பு சாதனங்களின் நிருபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இது பற்றிய தகவல்கள் அவர்களால் எவ்வாறு உள்வாங்கப் பட்டிருந்தன என்பதை அறிவதும் அக்கருத்தரங்கின் நோக்கமாய் இருந்தது. கருத்தரங்கு உயிர்த்துவமுடைய தாகவும் சகல கருத்துக்களுக்கும் இடமளிப்பதாகவும் இருந்தது. பாலியல் பலாத்காரம், பெண்களின் ஓர் இனச் சேர்க்கை
15

Page 13
(Leshianism) போன்றவையெல்லாம் கருத்தரங்கில் விவாதி க்கப்பட்டன. அதுபற்றி அடுத்தநாள் ஞாயிறு வெளிவந்த தேசியப் பத்திரிகையின் பெண் ஆசிரியர் கருத்தரங்குக்குத் தலைமை தாங்கியவரை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். "காற்சட்டை அணிந்த சங்கிலித் தொடர்போல் புகைப்பிடிப்பவர்"
(Trouser clad, chain Smoking).
இக்கருத்தரங்கு பற்றிய பத்திரிகைச் செய்திகள் எதிர்பார்த்தது போலவே பெண்ணிலைவாதிகளைக் கண்டிப் பதாவே இருந்தது. பெண்களின் ஒரு பால் சேர்க்கை பற்றி ஒருவார்த்தைகூடகுறிப்பிடப்படவில்லை. பெண்களின் தன்னினச் சேர்க்கை கருத்துரீதியில் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஒன்று பேசப்படாதவிடயம். பத்திரிகைகளின் கவனத்தைக் கவர்ந்தவையெல்லாம் "புகைப்பிடித்தலும் காற்சட்டையுமே".
ஜேர்மனியப் பெண்மணி காற்சட்டை அணியாமல் சேலை கட்டியா வருவார்? இங்கு காற்சட்டையும் புகை பிடித்தலும் மேற்கத்திய நாட்டுகுறியீடாக கொள்ளப்பட்டு கொச்சைப்படுத்தப்பட்டன. இவைதான் பெண்ணிலை வாதத்தின் குறியீடுகள் என்று அவர் சொல்லாமல் சொல்லி
விட்டார்.
தாய்மை
தாய்மை பற்றிய கருத்தியல் உணர்வுநிலைப்பட்ட ஒரு அம்சமாகும். அனேக பெண்களுக்கு இது சொந்த அனுபவத்திற்குரிய ஒன்றாகும். பெண்ணிலைவாதம் என்பது, எல்லாவிதமான தாய்மை அன்பு, ஆதரவு, கவனிப்பு போன்றவற்றையெல்லாம் உதறிவிட்டு சில லெளகீக லாபங்களுக்கான (உத்தியோகம் பார்த்தல் போன்ற) இயக்கம் ஒன்றாகவே சில சமயங்களில் இனங்காணப்பட்டது. தாய்மை
16

என்பது ஒடுக்கு முறைக்குரியதாகப் பார்க்கப்பட வில்லை. அனேக பெண்கள் அதில் ஓர் சுவையான உணர்வு நிலை அனுபவத்தையே காண்கின்றனர். பிள்ளைப் பராமரிப்பு என்பது, ஒரு பரந்த குடும்பத்தில் குடும்ப அங்கத்தவர்கள் ஏனையவர்களாலும் பங்குபோடப்படுகிறது. உளவியல், உடல் ரீதியான பிள்ளையொன்றின் பராமரிப்புப் பொறுப்பு தாயாருக்குரியது. தாயாருக்குரிய இக்கடமைகளைக் கைவிட்டு தமது உரிமைகளுக்காக போராடி அதைப்பெறுவதில் அர்த்த மில்லை என்ற ஒரு கருத்தியல் ஒன்றை ஆழமாக, பரவலாக வேரோடியுள்ள சமூக அமைப்பில், ஃபயர்ஸ்ரன் கூறும் தொழில்நுட்பரீதியான இனவிருத்தி (பிள்ளைகளை உற்பத்தி செய்தல்) எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என ஒருவர் யூகித்துப் பார்க்கலாம்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் பெண்ணிலை வாதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் மரபுவாதிகளும், பொதுசனத் தொடர்பு சாதனங்களும், ஆண்களும் பெண்களும் பிள்ளைப் பராமரிப்பு, குடும்ப வேலை என்பவற்றின் பங்குபற்ற வேண்டும் என்று பெண்ணிலை வாதிகள் கூறுவது பற்றி எதுவும் பிரஸ்தாபிப்பதில்லை. எல்லாவிதமான தேசிய அளவிலான பெண்கள் மகாநாடுகளில் நடைபெறும் விவாதங்களில் பெண்கள் தாய்மையைப் பேண வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது, யாரும் அதை மறந்துவிடக்கூடாது என்பதுபோல் அடிக்கடி தாய்மாரினதும் பெண்களதும் வழிவழிவரும் கடமைகள் அழுத்தப்படுவதோடு மேற்கத்தைய பெண்ணிலைவாதம், எங்களது சமூகத்துக்கு அழிவெனவும் காட்டப்படுகிறது. ஆகவே இத்தகைய ஒரு கலாசார சூழலில் பெண்ணிலை வாதம் ஒரு மேற்கத்தைய இறக்குமதியாக நிராகரிக்கப்படுவதும், “எங்களது கலாசாரத்துக்கு பொருந்தாது” என ஒதுக்கப் படுவதும் ஆச்சரியமில்லை. இது வேண்டுமென்றே
17

Page 14
பெண்நிலைவாதிகளைத் தாக்குவதற்காக வைக்கப்படும்
வாதம்.
பெண்கள் கல்வி, உத்தியோகம், வெளிவிவகாரம் என்று வெளியே போகும் போது குழந்தைகளை தகப்பன்மார் கண்காணிக்க வேண்டும் என்பதும் பெண்ணிலைவாதிகளின் வேண்டுகோள். தாய்மையை நிராகரிக்காமல் அதை தகப்பனும் சேர்ந்து அனுபவித்து பங்கெடுக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகள் பற்றி ஒரு மெளனம் நிலவுகிறது விந்தையே,
அண்மைக்கால போக்குகள்
ஈரானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய அடிப்படை வாதம், பெண்களை ஒரங்கட்டியும் ஒதுக்கியும் வைத்திருப்பதன் மூலம் இதே பணியையே செய்து இக்கால போக்குகளோடு ஒத்துப்போகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது இடம் பெறும் சீதனம் சம்பந்தப்பட்ட கொலைகள் பழைய கலாச் சாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. ஆனால் முதலாளித்து வத்தால் ஏற்படுத்தப்பட்ட நுகர்வு வேட்கையும் உடனடி யாகவே பொருள் சேகரித்துவிட வேண்டும் என்ற அவாவும் பெண்களைச் சுரண்டுகின்றன.
இத்தகைய தடைகளையெல்லாம் உடைத்துக்கொண்டு கிழக்குத்தேய ஆண்களையும் பெண்களையும் பெண்ணிலை வாதத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வது என்பது ஒரு பகீரதப் பிரயத்தனமாகும். மேற்கத்தய சலாசாரங்களில் பெரும் பான்மையானவை மிக எளிதில் ஆண்களால் உள்வாங்கப் படுகின்றன. உடை, உணவு, விளையாட்டுக்கள் என்பவை எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் பெண்கள் மட்டும் தங்களது பழமையான சின்னங்களுடனும் நடை,
18

உடை, பாவனைகளுடனும் பவனி வரவேண்டும் என்று சமூகமும் ஆண்களும் எதிர்பார்க்கின்றனர்.
கலாசார ஏகாதிபத்தியம்
மேற்கத்தைய பெண்ணிலைவாதிகள் கீழைத்தேயப் பெண்களோடு ஐக்கியப்பட்டிருக்கவே விரும்புகின்றனர். ஆனால் அதேநேரத்தில் அவர்களுக்குரிய பிரச்சினைகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் உள்ளனர். கீழைத்தேய நிலைமைகளை அவர்கள் பின்தங்கிய, நாகரிக மற்ற, காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே கருதுகின்றனர். அனேகமாக எப்போதும் ஒரு மேற்கத்தைய பார்வையாள ருக்குரிய எதிரான மனப்போக்கும். கீழைத்தேய மக்களுக்குரிய நடைமுறைப்பழக்க வழக்கங்களுக்கு காரணமாயிருக்கும். சமூக பொருளாதார காரணிகளை பற்றிய விளக்கமின்மையுமே அவர்களிடம் இருக்கிறது. உதாரணமாக மேற்கத்தைய பெண்ணிலைவாதிகள், பெண்கள் இந்தியாவில் உடன்கட்டை ஏறுவதைக் காட்டுமிராண்டித்தனமானது என கண்டித்து ஒதுக்கியது அதன் சரித்திரப் பின்னணியை நோக்காமையாகும். இவர்கள் எல்லாரும் மேற்குலகில் இருந்த கற்பொழுக்க வரையறைகளையும் கற்பொழுக்கம் காப்பதற்கு என்று கட்டப்பட்ட பட்டியலையும் (Chasity Belt)அவை இடம்பெற்ற ஒரு காலத்தையும் மறந்தவர்களாய் உள்ளனர். பிரச்சனைகளை சரியான முறையில் அறிந்து கொள்வதற்கு எந்த நாட்டினதும் நிலைமைகளையும் சூழலையும் முழு அளவில் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய போக்கில்லாவிட்டால், கிழக்கு நாட்டவர்கள் பிற்போக்கானவர்கள், வெறுப்புக்குரியவர்கள் என்னும் மேற்கின் இனவாத மேலோங்கித்தனத்துக்கு இடமளிப்பதாகிவிடும். விஞ்ஞான ரீதியான அணுகுமுறை ஆய்வுகளில் இல்லாவிட்டால் அது ஆபத்தான தாகிவிடும். மூன்றாம் உலகநாட்டு பெண்கள் இவைபற்றி உணர்ச்சிவசப்படுபவர்கள்.
19

Page 15
அதனால்தான் கீழைத்தேய பெண்ணிலைவாதிகளின் கருத்தியல்களின் வரலாற்றுப் பின்னணி பற்றி விழிப்பாகவும் பிரக்ஞை உடையவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். 19ம் 20ம் நூற்றாண்டு ஐரோப்பிய் பெண்ணிலைவாதம் அனேகமாக சீர் திருத்தவாதத்தை நோக்கியதாகவே இருந்ததோடு இக்காலத்திய கீழைத்தேய பெண்ணிலைவாதத்தோடு அதிகம் வித்தியாசப்படாததாகவும் இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவற்றிடையே இருந்த இடைவெளி மேலும் விரிவாக்கப்பட்டது. அறுபதுகளில் மேற்கில் கிளம்பிய பெண்ணிலைவாதத்தின் புதிய அலை, புதிய புரட்சிகரக் கருத்துக்களைத் தோற்று வித்தது. இந்தவகையான பெண்ணிலைவாதம் கிழக்கில் தோன்றுவதற்குரிய ஒத்தவகை நிலைமைகள் இருக்கவில்லை. வேகமாக உருவாகிய தொழில்மயப்படுத்தல், அதிகரித்துவந்த தொழில்நுட்ப புதுவாக்கங்கள் கணவன் மனைவி பிள்ளைகள் என்று குறுக்கப்பட்ட (Nuclear Family) குடும்பம், மேற்கத்தைய தனிமனிதவாதம் போன்ற பலகாரணங்கள் பெண்களின் ஒடுக்கு முறைகளை அதிகரித்ததோடு அவர்களைத் தனிமைப்படுத்திற்று. இத்தன்மைகள் அமைப்பில் பல மாற்றங்களைக் கோரியது. ஆகவே பெண்ணிலைவாதம் என்பது இத்தகைய மாற்றங்களால் வருந்திய பெண்களின் வெளிக்காட்டலின் பிரதிபலிப்புமே ஆகும்.
இத்தன்மைக்கு மாறாக, கிழக்கின் பல நாடுகளில் விரிவுபட்ட குடும்ப அமைப்பு, கூட்டுவாழ்க்கை, கூட்டுப் பொறுப்பு ( பேரன்மார், உறவினர், திருமணவழி உறவினர் போன்ற குடும்ப அங்கத்தவர்களைப் பேணுவதற்கான கூட்டுப் பொறுப்பு) ஆகியவை பெரும்பான்மையோரிடம் காணப்படுகிறது. இத்தகைய வாழ்க்கை பெறுமதிகளும் தராதரங்களும் பாரம்பரிய குடும்ப அமைப்பை பெரிய அளவில் பாதிக்கவில்லை. அதனால் இத்தகைய நிலைமையானது பாரிய உடைவுக்கு காரணமாய்
20

இருக்கவில்லை, ஆனால் இந்நிலை எங்கும் எப்பொழுதும் ஒரு நிரந்தரநிலைமையாக இருக்காது. இருக்கவும் முடியாது.
ஆழமான வேரூன்றிய சமூகமயப்படுத்தப்பட்ட அம்சங்கள் மட்டும் இதை முற்றாக விளக்காது என்பதையே இது நிரூபிக்கிறது. புனித குடும்பம் என்னும் கருதுகோளும் அதனோடு தொடர்புடைய திருமணம்பற்றிய புனிதக் கருத்தியல்களான கன்னிமைத்தன்மையும், கற்பும் தாய்மையும் விக்ரோறியா ராணி காலத்தில் பலம்மிக்க கூறுகளாய் இருந்ததோடு தேவாலயத்திலும் அரசராலும் பெரிதாகப் போற்றப்பட்டன. தொடர்ந்து வந்த மாற்றங்கள் மேற்கில் இக்கட்டுப்பாடுகளை உடைக்கச் செய்தன. அதேவேகத்தில் அவை கீழைத்தேசங்களில் நடைபெறவில்லை. ஆனால் அதன்சாயல்களும் நடைமுறைகளும் கீழைத்தேய நகரப் பண்பாட்டில் ஏற்படத் தொடங்கி விட்டன.
ஆசியநாட்டுப் பெண்ணிலைவாதிகள் முன்வைக்கும் பிரச்சனைகள் அவர்தம் நாடுகளில் அவர்களுக்காக ஏற்பட்ட பலவித தொல்லைகளும் அசமத்துவமும் சம்பந்தப்பட்ட வையாகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே சம்பளம் வழங்கல், சீதனப் பிரச்சனை, பெண்களை கணவன்மார் அடித்தல், பெண்கள் வேலைபார்ப்பதற்கு எதிராக உள்ள பாரபட்ச சட்டங்கள், தேசவழமைச் சட்டங்கள், பெண்கள் கல்விக்குப் போதுமான அனுசரணைகள், உத்தியோகத்திற்கு சமவாய்ப்பளித்தல் , பொதுசனத் தொலைத் தொடர்பு சாதனங்களில் பெண்கள் சித்தரிக்கும் முறைபற்றி கேள்வி எழுப்புதல், பாலியல் பலாத்காரம் போன்றவைக்கு எதிரான நடவடிக்கை, மொட்டாக்கு முஸ்லீம் நாடுகளில்) போடுதலுக்கு எதிரான நடவடிக்கை, சுதந்திர வர்த்தக வலயங்களில் பெண்கள் பாரிய அளவில் சுரண்டப்படுதல் போன்றன இவற்றில் சிலவாகும். இவர்களின் இக்கோரிக்கைகள் இங்கு
2

Page 16
நிலவும் சமூக பொருளாதார நிலைமைகளின் குறியீடுகளாகவே
s9|| 6ö) LDu, L fD.
மூன்றாம் உலகின் பெண்ணிலைவாத வளர்ச்சி என்பது இதுவரை முன்வைக்கப்பட்ட கருத்துக்களால் பலப்படுத்தப்பட வேண்டியவையாகும். இந்நாடுகள் பற்றி நாம் கவனத்தில் எடுப்பது என்னவெனில் இவை ஆங்கில ஏகாதி பத்தியத்தின் குடியேற்ற நாடுகளாக இருந்திருக்க வேண்டும் அல்லது அத்தகைய அந்நிய ஆதிக்கத்தால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும் என்பவையே. உதாரணமாக எகிப்து, ஈரான், யப்பான் போன்ற நாடுகளைக் காட்டலாம். இந்நாடுகளில் பெண்ணிலைவாதத்தின் எழுச்சி என்பது குடியாட்சி, நிலமான்யம் என்பவைக்கு எதிராக மேற்கத்தைய முற்போக்குக் கருத்துக்களைப் பரப்பிய பரந்த இயக்கங்களோடு தொடர்புற்றிருந்தமையாகும். இதில் தனிமனிதனின் சுதந்திரம் என்னும் கோட்பாடும் முக்கியமானது. இந்நாடுகள் பலவற்றில் இப்பின்னணியில் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக இணைந்து செல்லும் இரண்டு சக்திகளை ஒருவர் காணலாம். ஒருபுறம் சமயபோதகர்களும் (Missionaries) ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும் கிழக்கத்தேய கலாசாரங்களில் இருந்த "மிரு கத் தனமான " “காட்டு மிராண் டித் தனமான" பிற்போக்கான பழக்கவழக்கங்களைக் கண்டபோதும் அம்மக்களுக்கு அவற்றிலிருந்து பிடிப்பை உணர்ந்து அவற்றில் அவர்கள் தலையிட்டு அவர்களைக் குழப்ப விரும்பவில்லை. ஏகாதிபத்திய ஆதிக்கம் இதனால் பாதிக்கப்படலாம் என அவர்கள் எண்ணினர். இதேநேரத்தில் மறுபுறம் உள்நாட்டு முதலாளிவர்க்கம் தம்மக்களின் குறைபாடுகளை உணர்ந்து அவர் களின் கலாசாரத் தில் ஊறிய கடந்த கால 'காட்டுமிராண்டித்தன” மான பழக்கவழக்கங்களைப் போக்க முன்வந்தனர். இந்தவகையான சீர்திருத்தங்களில் உடன்கட்டை ஏறுதல், சீனாவில் பாதங்களைச் சிறுக்க வைக்க இரும்பு
22

காலணிகளை அணிவித்தல் போன்றவை முக்கியமாக ஒழிக்கப்பட வேண்டியவையாயின. ஆகவே மூன்றாம் உலக நாடுகளில் பெண்ணிலைவாதம் என்பது முக்கியமாக ஒரு முதலாளித்துவ அம்சமாகவும் 19ம் நூற்றாண்டின் பிற்பட்ட 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால சரித்திர ஓட்டங்களால் இயக்கப்பட்ட ஒரு சில முற்போக்கு சீர்திருத்தங்களுக்குட்பட்ட, சமூகத்தில் படித்தவர்கள் என இயங்கிய ஆய்வறிவாளர்களால் ஆரம்பிதது வைக்கப்பட்ட ஒன்றாகும். இதற்கு ஏகாதிபத்தியம் ஆதரவு நல்கியது.
பெண்ணிலைவாத இயக்கம் ஒரு சமூக இயக்கம்
இந்தியாவில் பெண்ணிலைவாத இயக்கம் என்பது ஏனைய சமூக இயக்கங்களைப் போலவே மூன்று வெளிப்படையான அம்சங்களைக் கொண்டிருந்தது. கூட்டாக சேவையில் ஈடுபடுதல், அடிப்படைக் கருத்தியல், மாற்றத்து க்கான முனைப்பைக் கொண்டிருத்தல் போன்றவை என அவற்றை நாம் இனங்காணலாம். நான் இங்கு இந்தியாவில் பெண்கள் இயக்கம்பற்றி ஆழமாக அணுகப்போவதில்லை யாயினும், மேலே நான் குறிப்பிட்ட கட்டுமானத்திலிருந்து பெண்ணிலைவாதக் கொள்கைகள் எப்படி ஆரம்பிக்கப் பட்டன. எப்படி அவை வெளிக்காட்டப்பட்டன என்பதோடு திட்டவட்டமான சீர்திருத்த வேலைகளில் எப்படி ஈடுபட்டன என்பவற்றை விளங்கிக் கொள்ளலாம். மாற்றத்துக்கான முனைப்பு மேற்கத்தைய கல்வி மூலம் பெறப்பட்ட மேற்கத்தைய முற்போக்கு கொள்கையை அடிப்படையாகக் கொண்டன. ஆனால் இங்கும் பெண்களின் முன்னேற்றம் ஆரம்பத்தில் ஆண்களின் அக்கறையிலேயே தங்கியிருந்தது. மதங்களின் பெயராலேயே (இந்து மதம், இஸ்லாம்) அடக்குமுறைகளும் பிற்போக்கு பழக்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதன் தெளிவே பெண்ணிலைவாதக் கருத்தியலின் உருவாக்கத்துக்கு
23

Page 17
காரணமாய் உள்ளது. பெண்களின் நிலை மேற்படி மதங்களின் நடவடிக்கைகளோடேயே பிரிக்கமுடியாதபடி இணைக்கப் பட்டுள்ளன.
给
இயக்கம் அரசியல் மயப்படுதல்
ஆயினும் இரண்டு கேள்விகளுக்கு யதார்த்த பூர்வமான பதில் அளிக்கப்பட வேண்டும். இக்காலத்தில் பெண்ணிலை வாதத்திற்கு பின்னணியாய் இருந்த கருத்தியல் என்ன? இந்தியப் பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பற்றியமையை பெண்ணிலைவாதத்தின் ஒரு அங்கமாக கொள்ளலாமா? இக்காலத்தில் இந்தியப் பெண்ணிலைவாதம் சமூக மேம்பாட்டையும் பெண்ணிலை இயக்க அங்கத்த வர்களின் வாழ்க்கை முறையையும் மாற்றியமைக்கும் நோக்கங் கொண்டதாகவும் சீர்திருத்தவாத தன்மை யுடையதுமான முதலாளித்துவ அங்கமாகவே இருந்தது. இருக்கும் தந்தைவழி அமைப்புக்கு எதிரான ஒரு தீவிரமான சவாலாக அது இருக்கவில்லை. பாரம்பரியமாக இருந்துவரும் தாய், மனைவி பற்றிய பிம்பங்கள் தொடர்ந்து அழுத்தப்பட்டு பெண்கள் இந்திய மரபு வழிமுறை வரம்புகளுக்குள்ளே வாழவே பணிக்கப்பட்டனர். இருந்தபோதும் பெண்ணிலை வாதக் கருத்துக்களின் பங்களிப்பு இச்சந்தர்ப்பதில் குறைவாக மதிப்பிடுவதற்கில்லை. பெண்களிடம் மட்டும் கற்பை எதிர் பார்க்கும் போக்குக்கு எதிராகவும், விதவைகள் மறுமணம் செய்யவும், விவாக விலக்கு செய்யவும் குரல் கொடுத்தவற்றை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தப்பட்ட பெண்ணிலைவாதக் கருத்துக்கள் எனக் குறிப்பிடலாம். இவை பெருமளவில் ஆண்களாலும் பெண்களாலும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களாகும்.
இச்சந்தர்ப்பத்தில் மகாத்மாகாந்தி பெண்களை சுதந்திரப்
24

போராட்டத்தில் பங்கெடுக்குமாறு விடுத்த அழைப்பு எதிர்பார்த்த பலனைத் தந்தது. பெண்களுடைய தர்மம் (கடமை) என்பது, இதனால் மரபுரீதியாக இருந்துவந்த ஆடை நெய்தல், நெசவு நெய்தல் என்னும் தளங்களை விட்டு விடுதலைப் போராட்டத்திற்கு விரிந்தது. பெண்களை இத்தகைய விஷயங்களுக்கு அணிதிரட்டுவதானது அதன் அடுத்த பட்சத்தைக் காட்டுவதாய் அமைந்தது. அதாவது பெண்கள் தமது வீட்டுவேலைகளை விட்டு, ஏகாதிபத்தியத்துக்கு எதிராகத் திரண்டு எழுந்து வீதிகளில் ஊர்வலம் சென்றமை, உண்ணாவிரதம் இருந்தமை, போராட்டத்தில் ஈடுபட்டமை எல்லாம் அவர்களிடம் உள்ளோடியிருந்த புரட்சிகரச் சக்திகளை வெளிக்காட்டுவதாய் இருந்தது.
ஆனால் ஒன்று இவ்விடத்தில் அழுத்தப்பட வேண்டும். அதாவது சுதந்திரப் போராட்ட இயக்கமும் சரி அக்காலத்து பெண்கள் இயக்கமும் சரி எத்தகைய முற்போக்கான கருத்துக்களைக் கொண்டவையாய் இருந்தபோதும் அவையனைத்தும் பாரம்பரிய சமூக அமைப்பை பேணுபவை” யாகவே செயற்பட்டன. மேலும் பெண்ணிலை வாதத்தின் முதல் அலை இந்தியாவில் எழுந்தபோது தேசியவாதத்திற்கும்' பெண்ணிலைவாதத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இது மூன்றாம் அத்தியாயத்தில் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
25

Page 18
முடிவுரை : பெண்ணிலைவாதத்தின் அரசியல் வரைவிலக்கணம்
பெண்ணிலைவாதம் மேன்லத்தேயத்துக்குரியது அன்று. பலதோற்றங்களைக் கொண்ட ஒரு தொடர் அடக்குமுறைக்கு எதிராக சமத்துவத்தைக் கோரும் ஒரு கொள்கையையும் அதற்குரிய நடைமுறைத் திட்டங்களையும் கொண்டதாகும். பொருளாதார ரீதியாக உயிர்வாழ்தல், உடல் பாதுகாப்பு, இனவிருத்தி, பாலியல் ரீதியாக சுய தீர்மானம் எடுத்தல் போன்ற எல்லாவித செயல்துறைகளிலும் சமத்துவம் என்பவையே பெண்ணிலை வாதம் கோரி நிற்பவையாகும். ஆனால் நாட்டுக்கு நாடு உள்ள புவியியல், கலாசார வேறுபாடுகளால் அவை பலவித தோற்றங்களைக் கொண்டுள்ளன. அதனால் அவற்றின் வெளிக்காட்டு முறைகளும் பன்முகம் கொண்டவையாய் உள்ளன. இவற்றை வெளிக்காட்டியவர்கள் தமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களுக்கேற்ப கோபம் கொண்டவர்களாகவும் மிக மிகக் கோபம் கொண் டவர்களாகவும் சிலர் மிதவாதப்போக்கினராகவும் மிகச்சிலர் காரணங்களைப் பகுத்தறிய விழைபவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இதன் கருத்தியலானது, மேற்கு கிழக்கு என்று இல்லாமல் எல்லா நாடுகளிலும் உள்ள சமூக-பொருளாதார, சமூக அரசியல் அமைப்புகளுக்குள் மரபுரீதியாக இயங்கிவரும் பல்விதப்பட்ட கட்டுமானங்களுக்கும் பெறுமதிகளுக்கும் வழமைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் எதிரானதாகச் செயல்பட்டு அடக்கு முறைகளையும் கொடுமைகளையும் இனங்கண்டு அவற்றைக் களைந்தெறிய முனைகிறது.
26

பிற்குறிப்பு
Liberalism - Liberal என்ற ஆங்கிலப் பதங்கள் முற்போக்கு என்றே இங்கு மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
27

Page 19
கற்பனாவாத சோஷலிஸமும் (UTOPIAN) பெண்ணிலைவாதத்தின்
கற்பனாவாதங்களும் (UTOPIAS)
தீவிர பெண்ணிலைவாதம் (Radical Feminism) பெண்களின் எதிர்காலம் பற்றி ஒரு கற்பனாவாதப் பார்வையையே கொண்டுள்ளது. சீர்திருத்தப் பெண்ணிலைவாதம் கற்பனா வாதத்துக்குரியதா இல்லையா என்பதை அறியவும் 19ம் நூற்றாண்டின் ஆரம்பகால சோஷவிஸவாதிகள் ஏன் கற்பனாவாதிகள் என அழைக்கப்பட்டனர் என்பதை அறியவும் கற்பனாவாதக் (Utopian) கருத்தியலோடு சம்பந்தப்பட்டிருந்த கருதுகோள்கள் அதன் உள்ளோட்டங்கள் பற்றி ஒருவர் அறியவேண்டும். கற்பனாவாதம் எனக்கு மூன்று அர்த்தங்கள் உடையதாகத் தெரிகிறது. முதலாவது கற்பனாவாதம் என்பது பரிபூரணத்துவத்தை முன்வைக்கும் ஒரு நிலையாகப்படுகிறது. இரண்டாவது, அதுவே நாம் அடைய வேண்டிய இலட்சிய இலக்காகவும் உள்ளது. மூன்றாவது, இத்தகைய காட்சி பூர்வமான பூரண த் துவம் என்பது நடைமுறைக் கொள்கைக்கோ சிந்தனைக்கோ உட்படாத வெறும் கற்பனை உலகில் வாழ்வதாகவே கொள்ள வேண்டும். முதன்முதலாக 1516ல் சேர் தோமஸ் மூர் (Sir Thomas Moore) கற்பனை உலகு

(Utopia) பற்றிக் கனவு கண்டார். இவர் கற்பனை பண்ணிய உலகு, சமூக, அரசியல், ஒழுக்கவியல் ரீதியான பரிபூரணத்துவம் பெற்ற ஒரு தீவாகும். கற்பனை உலகைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையான யுடோப்பிய" (Utopia) நல்ல இடம் அல்லது எங்கும் 'இல்லாத இடம் என்பதையே குறிக்கிறது.
மேலும் இந்த கற்பனை உலகுகள் பற்றி நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியவை உள்ளன. அதாவது இக்கற்பனை உலகுகள் எமது பரிபூரணத்துவம் பெற்ற இலட்சியபூர்வமான உலகை அடைய உதவுகின்றனவா அல்லது பரிபூரணத்துவம் என்ற கருத்தையே சிதறடித்த இவையெல்லாம் நடைமுறைக்குதவாத கற்பனைகள் என்று இவற்றைத்தூக்கி எறிய வைக்கின்றனவா? ஒருவன் அவாவி அடைய முனையும் இலட்சிய வாழ்க்கையின் உயர்வின் அதிகரிப்புக்கேற்ப ஒருவன் அதை அடைவதும் அடைய முடியாமையும் செயல்படுகிறது.
மார்க்சீய சோஷலிஸவாதிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து அவர்களது சமூக மாற்றத்துக்கான விஞ்ஞான ரீதியான கருத்தியலையும், பகுப்புமுறைகளையும், மூலோபாயங்களையும் கணக்கிலெடுத்தபோது 19ம் நூற்றாண்டின் ஆரம்பகால சோஷலிஸவாதிகள் கற்பனாவாதிகள் என்றே அழைக்கப் பட்டனர். பெண்கள் பிரச்சினை சம்பந்தமாக கற்பனாவாத சோஷலிஸம் பற்றி ஓர் ஆய்வை மேற்கொள்வது உபயோகமானது. ஆகவே பெண்கள் பிரச்சினை சம்பந்தமாக தீவிர பெண்ணிலைவாதத்தின் முக்கிய அம்சங்களை ஆய்வுக்கெடுத்து அவற்றை கற்பனாவாத சோஷலிஸ் கொள்கைகளோடு ஒப்பிடலாம் என நான் எண்ணுகிறேன். என்னுடைய அணுகுமுறையானது, சீர் திருத்த வாத பெண்ணிலைவாதத்தை சமூக இயக்கத்தோடு ஒப்பிட்டு
29

Page 20
ஆய்வு செய்து அதனுடைய மூலோபாயங்கள் எவ்வளவுதூரம் பெண் விடுதலைக்கான நடைமுறைச் சாத்தியங்கள் அற்று கீழ்வீழ்கின்றன என்பதைக் காட்டுவதாகும்.
ஆனால் இதற்காக பெண்கள் அடக்குமுறை பற்றிய விஞ்ஞான சோஷலிஸவாதத்தின் ஆய்வுகள் பிழையற்றவை என்று கூறிவிட முடியாது. பொருளாதாரக் கோணத்திலிருந்து மட்டும் பெண்கள் பிரச்சினையைப் பார்ப்பது ஓரளவுக்குத்தான் சரியாகும். மார்க்சினதும் ஏங்கல்சினதும் சகலவற்றையும் பொருளாதாரத்துக்குள் அடக்கும் கருத்தியலைக் கடந்தவர் களாய் தீவிர பெண்ணிலைவாதிகள் இருந்ததோடு பெண்கள் சமூக உற்பத்திக்குள் புகுவதால்மட்டும் அவர்களைத் தந்தை வழிவரும் சமூக அமைப்புக்களிலிருந்து அதனோடு சம்பந்தம் உடைய ஸ் தாபனங் களிலிருந்தும் விடுவித்து விட முடியாதென்பதை நிரூபித்தனர்.
பெண்களும் கற்பனாவாத சோஷலிஸமும்
19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் பல்வகை சுரண்டல் முறைகளை ஐரோப்பாவில் காணக்கூடியதாய் இருந்தது. பலரை ஒரு சிலர் அடக்கியொடுக்கிச் சுரண்டியதன் வெளிக்காட்டல்களாகவே அங்கு இடம் பெற்ற அமைதியின்மை, கிளர்ச்சிகள், புரட்சிகள் எல்லாம் அமைந்தன. சுரண்டுகின்ற ஸ்தாபனங்கள் சிறுதொகையினரான் பெண்களையும் ஆண்களையும் புதிய ஒரு வாழ்க்கை முறைக்கு வழிநடத்தின. அங்கு அன்பு, அறிவு, நீதி போன்றவை சமூக-பொருளாதார, சமூக-அரசியல் தீமைகளுக்கு எதிராகப் போராடி இறுதியில் வெற்றி பெறும் என்றும், வர்க்கபேதமற்ற சமுதாயத்தில் மக்களுடைய தேவைகள் சரிவர நிறைவேற்றப்படாமல் மக்களுடைய சுயநலம், சுவாஞ்சை என்பவைக்கு எதிராக அறிவும் நீதியும் இறுதியில் செயற்பட்டு வெற்றிபெறும்
30

என்றும் இது இறுதியாக உள்ளவர் இல்லாதவர் என்ற பேதத்தை அகற்றி இருப்பதை தமக்குள்ளே பங்கிட்டு மிக ஆனந்தமாக வாழும் மக்களைக் கொண்ட ஒரு சமத்துவ சமுதாயத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது. 9 55055g/556it (Ernest Block) பிரஞ்சுப் புரட்சியின் போது முன்வைக்கப்பட்ட சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்னும் கருத்தியல்களின் இன்னொரு விரிவுபோல் மேலெழத்தொடங்கின. இது அறிவு யுகத்தின் (age of enlighenment) குறியீடாகவும் கொள்ள வேண்டும்.
கற்பனாவாத சோஷலிஸம் எனச் சொல்லப்பட்ட முழுக்கருத்தியலின் ஓர் முக்கிய அம்சமாகவே பெண்கள் பிரச்சினை அமைந்திருந்தது. றொபர்ட் ஓவன் (Robert Owen 1777-1858) SF Tir gib6iv) 3gguggi5uuii (Charles Fourier 1771-1837) செயின்ற் சைமோன் (SaintSimon) போன்றவர்களே, முன்னைய கற்பனாவாதிகளாகவும் சூசன் வியோல்குன் (Suzanne Violqin 1830 1848), டெசிறி வேறெற் (Distree Veret), ஃபுளோறா ரிறிஸ்ரான் (Flora Tristan), ஆகியோர் அவர்களுக்குப் பின் வந்த ஆரம்ப கால கற்பனாவாத சோஷலிஸவாதிகளாவர். றொபேர்ட் ஓவன் என்பவரின் கருத்து தனிச்சொத்து, ஒரு தார மணம், தனிப்பட்ட குடும்பம் என்பவை ஒழிக்கப்பட்டு, எல்லாரும் வேலையில் ஈடுபட்டு, எல்லாருக்கும் கல்வி புகட்டப்பட்டு, எல்லாருக்கும் வருவாயைச் சமமாகப் பங்கிடப்பட்டு, ஒரு சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே. இவற்றின் முக்கிய அம்சம் என்னவெனில் இவை புரட்சிகரமாக இருந்ததோடு பெண்கள் விடுதலையோடு நேரடித் தொடர்புடையவையாய் இருந்ததே.
Ljĝ7uu 6?(upš45 gd Gay@g5 6T 6örggpj ūD 5/Taib (The book of the new
moral world) இன்று நடைமுறையிலுள்ள திருமண முறையின் போலித்தன்மைகளைக் காட்டுவதோடு இதில் சொத்தே
31

Page 21
முக்கிய தீர்வுக்குரிய காரணியாக இயங்குவதால், இதன் இறுதிப் பெறுபேறு மீண்டும் பெண்களை அடிமைப் படுத்துவதாகவே முடிகிறது என்பதையும் கூறுகிறது. இவரின் (றொபர்ட் ஓவன்) கருத்துப்படி பிள்ளைப் பராமரிப்பு முழுச் சமூகத்தின் பொறுப்பிலும் விடப்பட வேண்டும். அத்தோடு இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் வலியுறுத்துகிறாள். மேலும் தனது விவாகம் பற்றிய விரிவுரைகளில், சுயநலத்திலும், தனிச்சொத்திலும் ஊறியுள்ள மத்திய தரக் தனிக்குடும்பங்களையும் அவர் தாக்கத் தவறவில்லை. அவரது "புதிய ஒழுங்கில்" குடும்பம் என்பது நீக்கப்பட்டு அதன் இடத்தில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என்பவர் ஒன்றுகலந்து பழகும் ஒரு விஞ்ஞான ரீதியான பார்வை முன்வைக்கப்பட்டது. பிள்ளைகள் சகலரும் குழந்தைகள் பராமரிக்கப்படும் இடங்களில் விடப்பட்டனர். ஒவன் அவர்கள் சுதந்திரமான காதல் பற்றி எதுவும் கூறாவிட்டாலும் இரு தரப்பினரும் விவாகரத்து செய்வதற்கான உரிமை அவரால் வலியுறுத்தப்பட்டதோடு, பிள்ளைகள் சகலரும் சமூகத்தால் பராமரிக்கப்படவேண்டும் என்றும் கூறினார்.
சார்ள்ஸ் ஃபூறர் (Charles Furier) முன்வைத்த கற்பனாவாத சோஷலிஸக் கருத்துக்கள் “பெண்கள் பிரச்சினை" யைப் பொறுத்தவரை இன்னும் ஒரு படி மேலே சென்றது. அவர் பெண்கள் பிரச்சினைகளை மிகுந்த பகுப்பாய்வுக் கண்ணோடு பட்டவர்த்தனமாக காட்டினார். தந்தைவழி அமைப்புள் ஒரு தாரமணத்தினால் பெண்கள் அடிமையாக்கப்பட்டுள்ளனர். என்றும் இதனால் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என இரட்டை ஒழுக்க முறைக்குள் பெண்கள் அடக்கி யொடுக்கப்படுவது பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். காதலை மன உணர்வு சம்பந்தப்பட்ட காதல் என்றும், உடலோடு
32

சம்பந்தப்பட்ட காதல் என்றும் இரு வகையாகப் பாகுபடுத்து வதைக் கடுமையாகக் கண்டிக்கும் இவர், இதனால் பெண்கள் தம் உடல் ரீதியான காதலை அடக்கி அமுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது அசிங்கமானதும் பாவ காரியமானதும் என்றும் குறிப்பிடுகிறார். அத்தோடு இந்த அமைப் புள் திருமணத் தின் போது சொத்துக்கள் சம்பந்தப்படுவதும் குறிப்பிடப்படுவது அவசியம். ஏனெனில் ஷசலாமித் ஃபயர் ஸ்ரன் (Shulamith Firestone , 1974), என்பவரின் "கற்பனாவாத இலட்சியப்போக்கோடு" (Romantic idealization) இதன் சில கருத்துக்கள் ஒத்து போகின்றன. பெண்களின் பாலியல் ரீதியான நடத்தைக்கு தீவிர பெண்ணிலைவாதிகள் கொடுத்த அழுத்தத்தை அதே கண்கொண்டே கற்பனாவாத சோஷலிஸவாதிகளும் பார்த்தனர்.
பெண்கள் தந்தைமாரால் விற்பனை பொருட்களாகவும் சிறுபிள்ளைகள் போல கணவன்மாருக்கு விற்கப்படும் நிலையானது உண்மையாகவே பெண்ணுக்கு ஒரு இரண்டாம் பட்சமான நிலையையே கொடுத்துள்ளது என்பதே சரியான பார்வையாகும்.
மூன்றாவதாக, ஃபூறியர் (Fourier) தான் முதன்முதலாக பெண்கள் என்பவர்களுக்கு 'குடும்பப் பெண்' என்று வழங்கப்பட்ட ஒரு மாயவலையையும் அதற்குள் அவர்கள் வசதியாக தள்ளப்படுவதையும் கண்டார். அவர் கூற்றுப்படி முதலாளித்துவ நாகரிகம் "குடும்பப் பெண்" ஆவதையே பெண்களின் ஒரே லட்சிமாகக் கொள்ள வைத்து அவளைக் கீழ்மைப்படுத்திற்று. இந்தப் போக்கானது குடும்பப் பெண்" என்னும் பதத்தை ஒரு லட்சியப் போக்காகக் காட்டி பெண்ணைத் திட்டமிட்ட அடிமைத்தனத்துக்குள்ளும், இரண்டாந்தர நிலைமைக்குள்ளும் வீழ்த்திற்று என்றார் அவர். அவரால் விரும்பப்பட்ட கற்பனாவாத அரங்கில்
33

Page 22
பெண்கள் குடும்பப் பொறுப்பு பிள்ளைப் பராமரிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்று பாலியல் ஏனைய உணர்ச்சிகள் போன்றவற்றில் சுதந்திரம் பெற்று வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எண்ணம்
கைகூடவில்லை.
அடுத்து வருபவர்கள் செயின்ற் சைமோனியர்கள் எனப்படுபவர்கள். இவர்கள் செயின்ற் சிமோனைப் (Saint Simon) பின்பற்றுபவர்கள். இவர்கள் பெண்கள் அரசியல், சமூக ரீதியாக விடுதலை பெற வேண்டும் என்னும் கொள்கையை முன்வைத்தவர்கள். இவர்கள் காதலையோ ஒரு தார மணத்தையோ எதிர்க்கவில்லை. மாறாக இருக்கும் அமைப்புக்குள்ளேயே பெண்கள் நிலையை ஆண்களுக்குச் சமதையாக உயர்த்த வேண்டும் என்று கூறினர். பணத்தோடும் முதுசத்தோடும் சம்பந்தப்பட்ட முதலாளித்துவ விவாக முறையை அவர்கள் எதிர்த்தனர். இந்த விவாக முறையை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரம்" என்று அவர்கள் கூறத்தயங்கவில்லை. மேலும் புதிய சமூக அமைப்பில் பெண்கள் விடுதலை என்பதே முதன்மைக்குரியதாகும் எனக் கூறினர். இவர்கள் பற்றி மரியா மீஸ் (Maria Mies) என்பவர் கூறுகையில் பிரான்ஸ் நாட்டில் உண்மையான முதல் பெண்ணிலைவாத இயக்கம் என்பது செயின்ற் சிமோனியர் களாலேயே தொடக்கி வைக்கப்பட்டது எனலாம் எனக் கூறுகிறார். சிமோனால் பிரச்சாரப்படுத்தப்பட்ட இக்கருத்தியல் முக்கியமானது, ஏனெனில் இது அராஜக வாதத்தையோ கட்டற்ற காதலையோ உடல் உணர்வுகளையோ மையப்படுத்தும் வாழ்க்கையையோ போதிக்க முன்வரவில்லை.
சென்ற் சிமோனின் கொள்கைகளைப் பின்பற்றுவோர்
பெண்கள் மத்தியில் அனேகர் இருந்தனர். தீவிரவாதத்தின் பார்வையில் சென்ற் சிமோனின் பெண் விடுதலைக் கோட்பாடு
34

முக்கியமாகக் கருதப்பட்டது. இது காலவரை ஆரம்ப சோஷலிஸவாதத்தின் ஓர் அங்கமாக பெண்கள் பிரச்சனைபற்றி ஆண்களே கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால் இப்பொழுதோ முதன்முதலாகப் பெண்கள் இயக்கத்தில் குதித்தனர். இதனால் இந்த இயக்கத்தில் ஏற்பட்ட முக்கிய அம்சங்கள் இரண்டு. முதலாவது, வழமையான பத்திரிகை களில் இருந்து மாறுபட்ட பெண்ணிலைவாதத்து க்கான ஒரு பத்திரிகை ஆரம்பிக்கபபட்டது. அடுத்தது சுயமாக இயங்கும் பெண்கள் அமைப்புக்கான முயற்ச்சிகள் எடுத்தமை. சுசேன் (Suzanne) “சுதந்திரப்பெண்" எனும் பத்திரிகையில் வேலைசெய்து பின்னர் அதன் ஆசிரியராக மாறி பத்திரிகையின் பெயரையும் The Tribune of Women என மாற்றினார். பெண்கள் தீர்வெடுக்கும் விஷயங்களில் ஈடுபடக்கூடாது என்று Enfantin என்பவர் பிரகடனப்படுத்திய பின்னர், தமக்கென சுயமாக அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதைப் இப்பெண்கள் உணர்ந்தனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகையான( புதிய பெண்கள்) என்பதோடு இந்தப்புதிய அமைப்பு உருவானது. இதைத்தொடர்ந்து பெண்கள் கல்விக்கான அமைப்புக்கள் ஆரம்பிக் கப்பட்டன. இவ்வமைப்புக்கள் பெண் களை ஒன்று கூட்டவும் செயல்படுத்தவும் செய்தன. பெண்ணிலைவாதி களாலும் சோஷலிஸவாதிகளாலும் மேற்கொண்ட வாதப் பிரதி வாதங்களின் மையமாக இருந்ததில் இருந்து இவற்றின் முக்கியத்துவத்தைக் கண்டு கொள்ளலாம்.
சுஸேன் (Suzanne) என்பவர் பெண் விடுதலையைப் பெண்களே கொண்டு வரவேண்டும் என்று அழுத்தியதால் பெண் விடுதலைக்கான ஆண்களின் திட்டங்கள், செயற்பாடுகள் போன்றவற்றை அறவே ஒதுக்கினார். அவர் "எங்களுடைய சந்தோசத்தின் பாதுகாவலராக நீங்கள் இருக்கத் தேவை யில்லை" என்றும் எங்கள் அக்கறைக்குரிய எவற்றையும் நீங்கள் தொடுவதை நாங்கள் மறுக்கின்றோம் என்றும்
35

Page 23
ஆண்களுக்கு கூறியது (Mies 1981) தீவிர பெண்ணிலை
வாதிகளின் பிரிவினைப்போக்கோடு, மிகத் தெளிவாக
ஒத்துப்போவதைக் காணலாம். அவர்மேலும் ஆண்கள்
ஒழுங்கற்றவர் என்று குற்றஞ்சாட்டி சட்டங்கள் எல்லாம்
"உங்களுடையவை" என்றும் நீதி என்பது "ஆண்களின் நீதி" என்றும் கூறி ஆண்கள் பெண் விடுதலைக்காக அக்கறை
கொள்வது என்பது, ஓநாய் ஆட்டுக்காகப் பரிதாபப்படுவதையே
ஒத்ததாகும் என்னும் போது, தீவிர பெண்ணிலைவாதிகளிடம்
இருப்பதாகக் கருதப்பட்ட ஆணி வெறுப்பு இவர்களிட
மிருப்பது தெரியவரும்.
டிசிறி வேறெற் (Disiree Veret) என்பவர் கட்டற்ற காதல் கொள்கையின் தீவிர ஆதரவாளர். அவர் இதற்கான சுயமாக இயக்கத்தையும் அமைப்பையும் உருவாக்கினார். டிசிறி வேறேற்றும் ஃபுளோறா ரிறிஸ்ரானும் (Flora Tristan) (1803-1844) சென்ற் சிமோனிஸ் வாதத்தோடு ஆரம்பத்தில் உடன் பட்டிருந்தாலும் பின்னர் தொழிலாளரின் வாழ்க்கையைச் சீர்ரமைப்பது சம்பந்தமாக அதிக அக்கறை காட்டினார்கள். மேலும் தொழிலாளரே தமது பரிதாப நிலைமைகள் பற்றி எழுத வேண்டும் என்று கூறி அவற்றுக்கான செயற்பாடுகளில் இவ்விரு வரும் அதிக அக்கறை காட்டினர்.
கற்பனாவாத விஞ்ஞான பூர்வ கோட்பாடுகள்
விஞ்ஞான பூர்வ சோஷலிஸவாதிகள், ஆரம்பகால கற்பனாவாத சோஷலிஸவாதிகளின் கொள்கைகளை நடைமுறைக்கொவ்வாத கற்பனை உலகுக்கு உரியதென கூறியபோதும் தாம் அவர்களுக்கு கடப்பாடு உடையவர்கள் என்பதை ஆணித்தரமாக முன் வைத்தனர்.
36

"இன்றுள்ள ஜேர்மனிய விஞ்ஞான சோஷலிசக் கொள்கைகள் சென்ற் ஏங்கல்ஸ் சிமோன், ஃபூயூறர். ஒவன் போன்றோரின் தோள்களின் அத் திவாரத்திலேயே கட்டியெழுப்பப்பட்டு ள்ளன. இம்மூவரின் கோட்பாடுகளில் இருந்த சில கற்பனாவாதங்க ளைப் புறந்தள்ளி விட்டுப் பார்ப்போமானால், இவர்கள் எக்காலத்துக்கும் உரிய மேதைகள் என்பதையும் இவர்கள் தமது கூர்மையான மேதாவிகளாக எதிர்காலத்தில் வரப்போகிறவற்றைச் துல்லியமாக அறிந்திரு ந்தனர் என்றும் அவற்றின் போக்குகளையே இன்று நாம் விஞ்ஞான ரீதியாக நடைமுறைப் படுத்துகிறோம் என்றும் கூறினர்".
(ஏங்கல்ஸ் 1959)
மேலும் இதே மேதமையோடேயே அவர்கள் பெண்கள் பிரச்சினையையும் அலசியிருந்தனர் என்பதையும் கூற வேண்டும். அவர்கள் தனிச்சொத்து, முதலாளித்துவக் குடும்பம், ஒழுக்கத்தில் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி எனக்கடைப் பிடிக்கப்பட்ட நீதித்துவ முரண்பாடுகள், பெண்களை சிறியோர் போலாகவும் குடும்பத்தோடு இணைந்த பண்டமாகபார்த்தமை போன்ற சகல முக்கிய விஷயங்களையும் அவர்கள் நுணுக்கமாக அலசி ஆராய்ந்தனர். மேலும் அவர்கள் ஆண்களோடு பெண்களையும் சரிசமமாக நடத்தும் ஏற்பாட்டிலேயே ஒரு சமூகம் எவ்வளவு முற்போக்காக வளர்ந்துள்ளது என்பதைத் தீர்மானிக்கலாம். என்றும் தைரியமாகப் பிரகடனப்படுத்தினர்.
என்னைப் பொறுத்தவரை யுடேராப்பியன் சோஷலிச வாதிகள் அவர்களைப் பற்றி வழமையாகச் சொல்லப்படுவது
37

Page 24
போல முற்றுமுழுதான கற்பனாவாதிகள் அல்ல. பெண்கள் பிரச்சனைபற்றி அவர்கள் முன்வைத்த கொள்கைககள் வெறும் கற்பனைகள் அல்ல. அவர்களின் கொள்கைகள் அவர்கள் வாழ்ந்தகால வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண் டவை எனலாம் தர்க்க விவாத அறிவை அடிப்படையாகக் கொண்ட அறிவுக்களமும் (Kingdom of Reoson) நீதியும் பல் வேறு காரணங்களால் அடைய முடியாதவையாய் இருந்தனவே ஒழிய அவர்களது கருத்தியல் தன்னளவில் கற்பனாவாதமானதல்ல.
புதிய முறையில் அமைந்த புதிய பூரணமான சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் இத்தகைய அமைப்பு பிரச்சாரத்தினாலன்றி அவ்வப்போது சாத்தியப்படும் மாதிரி பரிசோத னைகளால் சமூகத்தில் நடைமுறைப்படுத்தப் படவேண்டும் என்று உட்டோபிய சோஷலிஸ் வாதிகள் கூறினர். ஆனால் வலியுறுத்தப்பட்ட இச்சமூக அமைப்பு வெறும் கற்பனாவாத மாகவே தோற்றும் போனது. எவ்வளவுக் கெவ்வளவு அது திட்டமிடப்பட்டு முறைப்படி செயல்படுத்த முயற்சி எடுக்கப்பட்டதோ அவ்வளவு க் கெவ்வளவு அது வெறும் கற்பனையாக நழுவிப் போயிற்று.
(aj në 5aiogin), (Engles) 1959. 114).
ஏங்கல்சின் இந்த முடிவான தீர்ப்பு பெண் விடுதலை நோக்கிலிருந்து மீள் பார்வை செய்யப்பட வேண்டும். உற்பத் திமுறை, வர்க்கப் போராட்டம், தொழிலாளர் சர்வாதிகாரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே பொதுவான சமூகஅமைப்பு உருவாக்கப்பட வேண்டும்
38

என்பதே ஏங்கல்சின் பார்வையாகும். ஆனால் பெண் விடுதலையைப் பொறுத்தவரை மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோரால் பிரசாரப்படுத்தப்பட்ட விஞ்ஞான சோஷலிசம் கூட போதாத்தன்மையுடையதாகவே இருந்தது. சமூக உற்பத்தித் தொழிலில் பெண்கள் பங்கெடுத்துங்கூட அவர்கள் நிலை விமோசனம் பெறவில்லை. தொழிலாளர் சர்வாதிகாரம் ஏற்பட்டு நாட்டை ஆளும் காலமும், அரசு மறைந்து Guit Gugiyid (Withering away of the State) at 60fp LDT it did ud கோட்பாடுகள் இன்னும் சோஷலிஸ் நாடுகளில் நிகழ்ந்து விடவில்லை. அதற்காக தொடர்ந்து போராடுவதே முக்கியமானதாகும் என்பதும் மறுப்பதற்கில்லை.
இப்பின்னணியில் குடும்பத்திற்கும், சமயக் கோட்பாடு களுக்கும், தனிச்சொத்துக்கும் இரையாகி அமுக்கப்பட்டு க்கிடந்த பெண்களை விடுவிக்க வேண்டும் என்பதை கற்பனாவாத சோஷலிஸவாதிகள் உணர்ந்தனர். இதனால் அவர்கள் பெண்களுக்கென சுயமான இயங்கும் அமைப்புகளை அமைத்து அவர்களுக்கான பத்திரிகைகளை வெளியிட்டு "ஆண்கள் எவ்விதத்திலும் பெண்கள் விடுதலைக்காக போராடப் போவதில்லை" என்பதைப் பறைசாற்ற வைத்தனர். இவை பெண்நிலைவாத வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டம். வரலாற்றில் பெண்நிலைவாதம் தளம் பதித்த ஒரு முக்கிய கேந்தர ஸ்தானம் உடோப்பிய சோஷலிஸ் வாதிகளினால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கற்பனாவாத சோஷலிஸ் வாதிகளின் முக்கிய குறைபாடு இதுபற்றிய பிரக்ஞைபூர்வமான விழிப்புணர்வும் ஏங்கல்ஸால் வற்புறுத்தப்பட்ட பிரச்சாரமும் இல்லாதிருந்ததே. .
இரண்டாவதாக கற்பனவாத சோஷலிஸத்தின் அடுத்த
குறைபாடு நடைமுறைப்படுத்தலுக்கு அதன்கோட்பாடு ஒவ்வாதிருப்பதே. கற்பனாவாத சோஷலிஸவாதிகள்
39

Page 25
பூரணமான உண்மை, அறிவு, நீதி போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தமது கோட்பாட்டை நிறுவினர், ஆனால் மனித சமூகமோ குறைபாடு, நேர்மையின்மை, பொறாமை போன்றவற்றால் பீடிக்கப் பட்டிருந்தது. ஆண்களும் பெண்களும் இயல்பாகவே போட்டிபோடும் சுபாவம் உடையவர்களே. ஆகவே போட்டியற்ற மனிதக் குறைபாடுகள் முற்றும் நீங்கிய(Robert owen) GpIT Lufi LPG) u Gör (Charles Fourier) FITŤ67 Giv 33 yuypóluu fi, சென்ற் சைமோன் (Saint Simon) போன்றவர்கள் அவாவிய சமூக அமைப் பென்பது சாத்தியமற்றதே. மாக்ஸிசம் முன்வைக்கும் இறுதி நிலையான அரசு மறைந்து ஒழிந்து G 1 fTg56ù 66p 6) fig5D 9.L. (Withering away of the State) கற்பனாவாதத் தன்மை கொண்டதே. இது நடைபெறுமா? எப்போது ? இதை நாம் இனிமேல்தான் காணவேண்டும். இந்நிலை எவ்வளவுக்கு தள்ளிப் போகிறதோ அவ்வளவுக்கு அது கற்பனாவாதமாகவே இருக்கிறது.
தீவிரவாத பெண்ணிலைவாதத்தின் கற்பனாவாதம்
இதுதான் தீவீர பெண்ணிலைவாதம் என அறுதியிட்டு வரைவிலக்கணம் கூறுவது தேவையற்ற ஒரு முயற்சி. தீவிர பெண்ணிலைவாதம் பற்றி பலவித கருத்துக்கள உண்டு. எல்லாவற்றையும் பெண்களது பால்மைக்குள் குறுக்கும் வாதத்திலிருந்து, பிரெஞ்சு நாட்டு அமைப்பியல்வாதம் வரை அதுநீளும். அத்தோடு எல்லாவற்றையும் பொருளா தாரத்துக்குள் குறுக்கும் ஒரு போக்கையும் இவர்கள் நிராகரிப்பதோடு "பெண்ணிலைவாதப் புரட்சி" ஒன்றையும் எதிர்பார்க்கின்றனர். பெண்ணிலைவாதத்தின் முக்கிய தீவிரவாதியாகப் கணிக்கப்படுபவர்கள் ஷ"லா மித் 33 Luuu fit Gino G UT IT Gðir (Shulamith Firestone) G sjö ólaufb (Kate Millet) ஆகியோரே.
40

ஏங்கல்ஸின் சகலவற்றையும் பொருளாதாரத்துக்குள் திணிக்கும் கொள்கையை இவர்கள் நிராகரித்தபோதும் தந்தை வழிமுறை, குடும்பம், விவாகம் போன்றவற்றைப் பற்றிய அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அவை எப்படி பெண் களை அடக்கி ஒடுக்குகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் பாலியல் ரீதியான பெண்கள் விடுதலை பெறும், புரட்சியையும் அதன் வழிவரும் சமூக மாற்றத்தையும் அவர்கள் கோருகின்றனர். ஃபயர்ஸ்ரரோனின் (FireStone) முக்கிய கருத்தாக இருப்பது, சிறிய தனிக் குடும்பத்திற்கு பதில் ஒன்றாக வாழும். பெரிய அளவிலான கூட்டுக்குடும்ப முறையே. இதனால் பெண்கள் ஒருவரில் தங்கியிருப்பதை விடுவிப்ப தோடு அனாவசியச் செலவு பொருள் வீணாக்கல் என்பவையும் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் அவர் கருத்துக்களில் பிரச்சினையை ஏற்படுத்துவது தொழில் நுட்பரீதியாக கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தைகளை உற்பத்தி செய்வதென்னும் கோட்பாடாகும். பெண்ணுக்குச் சாபக்கேடாக இருப்பது அவளது உயிரியல் உடல் அமைப்பு முறையும் அதனால் அவள் அனுபவிக்கும் மாதவிடாய், மாதவிலக்கு, கர்ப்பம், பிள்ளைப்பேறு, குழந்தைப் பராமரிப்பு இன்னும் அது சம்பந்தப்பட்ட பொறுப்புக்களாகும். ஆகவே இவை அவளைக் கீழ்நிலைபடுத்தி ஆண்களுக்கு அடிமைப் படுத்துகின்றன. ஆகவே அவளை இந்தக் குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிலில் இருந்து விடுவிப்பதே பிரதானமாகும். இதற்கு ஃபயஸ்ரோனின் கூற்றுப்படி தொழில் நுட்பரீதியாகக் கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தைகளை உற்பத்தி செய்வதே அவசியமாகும்.
தொழில்நுட்பத் தீர்வு
ஆகவே ஃபயர்ஸ்ரோனின் கருத்துப்படி "பாலியல் ரீதியான வர்க்கவேறுபாட்டை" " ஒழிக்கவும் அதன்மூலம்
41

Page 26
பெண்கள் தங்கள் உடல், தங்கள் உடல் வளம், பிள்ளைப்பேறு என்பவற்றின் கட்டுப்பாட்டை தங்கள் கையிலேயே எடுக்கவும் தமக்குத்தாமே பாதுகாவலராக இருக்கக்கூடிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தலாம், அதை பெண்களே மேற்கொள்ள வேண்டும். என்று வாதாடுகிறார். இப்புரட்சியால் குழந்தை உற்பத்தியின் காரணிகளைத் தங்கள் கையிலே எடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். இதன்மூலம் பாரம்பரிய மாகவரும் தந்தைவழி பேணும் கொடுமைமிக்க விவாகம், குடும்பம் என்பவை அற்றுப்போகும். இதற்கு முக்கியமான சாதனமாக இருப்பது தொழில்நுட்ப குழந்தை உற்பத்தி முறையே. இது சாத்தியப்படும் பட்சத்தில் மனிதரிடையே உள்ள ஆண்பெண் வேறுபாடு இன்னும் ஏனைய வித்தியா சங்கள் என்பவை அர்த்தமற்றவை ஆகிவிடும். இவற்றை நியாயப்படுத்தும். "இயற்கையான சமுக இயல்புகள்" கலாசார நியாயப்படுத்தல் என்பவையும் அர்த்தமற்றவையாகிவிடும்.
இதைக் கற்பனாவாதம் எனச் சொல்லலாமா? அப்படி யெனில் எந்த வகையில்? தொழில்நுட்ப குழந்தைகள் உற்பத்தி என்பது விஞ்ஞான ரீதியானது. ஆகவே பெண்கள் விடுதலைக்கு இது ஒரு முதற்தேவையான ஒன்றாக அல்லது அதுவே முழுமையான புரட்சிக்குப் போதுமான ஒன்றா என்பது ஆய்வுக்குரிய விஷயமாகும். மேலும் பாலியல் அவையவங்களில் குறைபாடு இல்லாத பெண்கள் தாய்மைப் பேற்றை தொழில் நுட்ப ரீதியில் விரும்புவதைப் பொறுத்துள்ளது இதன் வெற்றி தோல்வி.
AO மேலும் இவற்றைச் சாத்தியப்பட வைக்கும். வழி முறைகளாக அவர் காட்டும் "கூட்டு வாழ்க்கை" முறை கொள்கைரீதியாக ஏற்புடையதாக இருந்தாலும் நடைமுறை ரீதியாக வெற்றியளிக்கக்கூடியதா என்பதைப் பார்ப்பதற்கு இப்படிப்பட்ட "கூட்டுவாழ்க்கை முறை" யை சமூகத்தில்
42

நடைமுறைப்படுத்தி ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும். இத்தகைய பரீட்சார்த்த முறைகளில் முயன்றுபார்த்த (உடோப்பிய) கற்பனாவாத சோஷலிஸ்ற்றுக்கள் தோல்வி கண்டுள்ளனர். இதனாலேயே இக்கொள்கையும் கற்பனாவாதம் (உடோப்பிய) என்ற நிலைக்குள் விழுகிறது. மார்க்சீய வாதிகள் பெண்கள் தமது விடுதலையைத் இப்படித் தனித்து பார்ப்பதை கற்பனாவாதத்துக்குரியது எனக் கருதுகின்றனர். உண்மையில் தொழிலாளர் புரட்சியே பெண்கள் விடுதலையையும் கொண்டு வரும் என்பதே அவர்கள் நம்பிக்கையாகும்.
அர்த்தநாரீஸ் оІЛ அம்சம் (Androgyny)
தீவிர பெண்ணியல்வாதிகளில் சிலர் ஆண்-பெண் இருபாலாரிடையே உள்ள இரட்டைத்தன்மையான அர்த்த நாரீஸ்வர அம்சத்தை ஆணி மேலாதிக்கத்தை ஒழிப்பதற்குரிய கருவியாககாண்கிறார்கள். ஒரு சமூக அமைப்புக்கு ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து இயங்குவதே அவசியம் என்னும் மரபுரீதிக் கருத்து ஆணை ஆணாகவும் பெண்ணைப் பெண்ணாகவும் கண்டு இவ்விருபாலாரும் தத்தமது தன்மைகளை பரஸ்பரம் பங்கிட்டுக் கொள்வதன் மூலமே தமது பூரணமின்மையைப் முழுமைப்படுத்தலாம் என்கிறது. இதுவே சமூக வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானது எனக்கருதப்பட்டது (Complmentary). இத்தகைய பரஸ்பரம் பங்கிட்டுக் கொள்வதன் மூலமே தமது பூரணமின்மையை முழுமைப்படுத்தலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இத்தகைய பரஸ்பர பங்களிப்பை 'அர்த்தநாரீஸ்வரக் கொள்கை நிராகரிக்கின்றது. ஒரு பெண்ணிடமே ஆண் தன்மையும் பெண் தன்மையும் உண்டென்றும் அவள் முழுமையானவள் என்றும் கூறுகிறது. ஆனால் இக்கொள்கையானது பெண்களை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பை எப்படி மாற்ற உதவப்போகிறது என்பதே
43

Page 27
கேள்வி. ஆண்தன்மையையும் பெண் தன்மையையும் ஒரு பெண் கொண்டிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி ஆண்-பெண் என்னும் பால் ரீதியான வித்தியாசங்களைக் கடக்க உதவும் நடைமுறிைவழியே முக்கிய மாகும். அத்தோடு என்னைப் பொறுத்தவரை பெண் என்பவள் பெண்ணாக இருக்கும் நிலையிலேயே விடுதலையாக இருக்க வேண்டும். அவள் தன்னுடைய பெண் தன்மையைப் பேணியவாறும் அவளுக்குரிய சகல கெளரவங்களோடும் உரிமைகளோடும் இருக்க வேண்டும். பெண்ணை அடிமையாய் கீழ்ப்பட்டளாய்ச் செய்யும் சமூக அமைப்பையே நாம் உடைக்க வேண்டும். இதற்கு அர்த்தநாரீஸவரக் கோட்பாடு உதவாது.
தாய்வழி முறைமை
தீவிர பெண்ணிலைவாதிகளிடம் தற்போதுள்ள தந்தைவழி சமூக அமைப்புக்கு எதிராக தாய்வழி முறைமையைப் பேணும் ஒரு போக்கும் காணப்படுகிறது. ஆதிப் பொதுவுடமை காலத்த்திலும் (Engles) சிந்துவெளி நாகரிகத்தின் போது இருந்ததாக சரித்திர ஆசிரியர்களால் Gd it a Gul Lu L. L (Debiprasad Chattopadhayaya) g5 Tui () ழி முறைமையை இவர்கள் வேண்டி நிற்கின்றனர். சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் முழு உற்பத்திமுறையினையும் தம் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதற்குரிய மூலாதாரம் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் குழந்தைப் பேற்றுக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்கும் உரியவர் களாகவும் இருந்ததால் அவர்கள் அன்று சக்திமிக்கவர்களாகக் கணிக்கப் பட்டிருக்கலாம்.
ஆனால் இரண்டாயிரம் வருடங்களாக நடைமுறை
யிலிருந்து வரும் தந்தைவழிமுறையையும் இங்கு வியாபித்துள்ள அதன் சமூகக் கட்டமைப்புக்களையும் இதன் மூலம்
44,

மாற்றுவதென்பது வெறும் கற்பனா வாதமே. கூட்டுக் , குடும்பமுறை கட்டற்ற காதல், கட்டற்ற பால் ஒழுக்கம், ஒரு பால் சேர்க்கைக்கான உரிமை, மென்தொழில்நுட்பம், காலக்கணிப்பீட்டு முறையில் மாற்றம் போன்றவை தாய்வழி
முறைமைக்குரிய தேவைகளாகக் கொள்ளப்பட்டன.
ஆனால் தாய்வழிமுறைமை முன்னிருந்ததாக நினைத்து அவைபற்றிய எண்ணி மகிழ்தல் என்பது வேறு. ஆனால் இவை இன்று பெண்களின் நிலையை மாற்றியமைக்க எவ்வாறு உதவப்போகின்றன என்பதே முக்கிய கேள்வியாகும் அப்படிப்பார்க்கையில் இது Lua முரண்பாடுகளுக்கு உரியதா கவும் நடைமுறை சாத்தியப்பாடுகள் அற்றதாகவும் காணப்படும் வெற்றுக்கற்பனையே.
ஆனால் இவைபோக, ஏனைய பெண்ணிலைவாத ஆய்வுகள் யதார்த்த பூர்வமானவையாகும். இன்றைய தந்தைவழி சமூக அமைப்பு முறை எவ்வாறு பெண்களை அடக்கி ஒடுக்கி கீழ்மைப்படுத்தியுள்ளது. எப்படி அதன் பொருளாதார, சமூக தத்துவார்த்த, உயிரியல் ரீதியான வியாபிப்பு இதற்கு துணை போகின்றது என்பதை கேற்மிலற் போன்றவர்களால் மிக அழகாக ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இங்கு கற்பனை கிடையாது. பெண்ணைச் சுற்றி போடப் பட்டுள்ள அரை உண்மைகளையும் புராணக்கதை மாயங்க ளையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். குழந்தை உற்பத்தி, பொருள் உற்பத்தி, உழைப்பு ஊதியம், குடும்ப உழைப்புக்கான ஊதியம், குடும்பம், தனிப்பட்ட, பொதுப்பட்ட பொருளாதாரம் என்று முழுமையாக ஆய்வு மேற்கொள்வதன் மூலமே பெண்கள் பிரச்சனையைப் புரிந்துகொள்ளலாம்.
45

Page 28
சமூக அமைப்புக்கள
ஒரு சமூக அமைப்பு ரீதியான தீவிர பெண்ணிலை வாதத்தையும் கற்பனாவாத சோஷலிஸத்தையும் ஆய்வு செய்து ஏன் கற்பனாவாத சோஷலிஸம் தோற்றுப்போயிற்று என்பதையும் இதே நிலைதான் தீவிர பெண்ணிலை வாதத்துக்கும் ஏற்படுமா என்பதையும் பார்ப்பதே எமது இறுதியான நோக்கமாகும்.
கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் கருத்துக்கள் எப்போதும் நடைமுறையிலுள்ள மாற்றமற்ற போக்குக்கு எதிரானதாகவே அமையும். முதலாவதாக இவர்களது சீர்திருத்தங்கள் அவர்களது காலத்துக்கு மிஞ்சியவையாகவே நின்றன. காலங்காலமாக நடைமுறையிலிருந்து வந்த விவாக அமைப்பு முறைகளும் அது சம்பந்தப்பட்டுவந்த பல்வித ஒழுக்கக் கோட்பாடுகளும் சாதாரண மக்கள் மத்தியில் புனிதமானவையாகவே கொள்ளப்பட்டன. அவற்றின் போலித்தனங்கள் போதாத்தன்மைகள் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கங்களை மிகச் சிலரே விளங்கிக் கொண்டனர். இவற்றுக்கெதிராக கட்டவிழ்த்து விடக் கூடிய ஒரு திட்ட மிட்ட செய்முறை இவர்களிடம் இருக்கவில்லை. மேலும் நடைமுறையிலிருந்து திருமணம் சடங்குகள் யாவும் சமயக்கலாசார ஒழுக்கங்களோடு சம்பந்தப்பட்டவையாய் இருந்ததால் அவற்றுக்கெதிராக என்ன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை அபச்சாரமாக கொள்ளப் பட்டன. ஆகவே மக்கள் மத்தியில் இவற்றுக்கெதிரான பிரச்சாரங்களைப் பிரக்ஞைபூர்வமாகக் கட்டியெழுப்பு வதற்குரிய சாதனங்கள் ஆரம்பகால சோஷலிச வாதிகளிடம் இருக்கவில்லை.
இவ்வாறே பெண்ணிலைவாதக் கோட்பாடுகளையும்
46

ஒரு சமூக அமைப்பின் பார்வையோடு வைத்துப் பார்க்கலாமா என்பதே கேள்வி. ஆனால் பெண்கள் அமைப்பு ஏனைய அமைப்புகள் போல் முதன்மை பெறாமைக்கும் மேல் எழாமைக்கும் உள்ள காரணம் பற்றி நாம் அறிய வேண்டும். ஏனைய இயக்கங்களான சூழல்பாதுகாப்பு, மனித உரிமைகள், தேசிய விடுதலை போன்றவற்றுக்காகப் போராடும் இயக்கங்கள் போன்றவை இலகுவில் பிரபலமாகி மக்கள் முன் செயல்படத் தொடங்கிவிடுகின்றன. அவற்றுக் கெதிரான எதிரிகளை இலகுவில் இனங்கண்டு ஒதுக்கக்கூடிய நிலை உள்ளது. ஆனால் பெண்கள் அமைப்பை பொறுத்தவரை இதற்கு ஆண்கள் மட்டும் எதிரிகளல்ல, நாடு, மதம், முதலாளித்துவ சமூக அமைப்பு அனைத்துமே எதிராக உள்ளன. இந்தநிலையில் தாய் வழிமுறைமை 'அர்த்த நாரீஸ்வரத் தன்மை தொழில்நுட்ப குழந்தைப் பேறு என்பவற்றைப் பேசுவதால் மட்டும் சகலரையும் பெண்ணி லைவாதத்துக்கு ஈர்த்துவிட முடியுமா? தொழிற்சாலையில் பண்ணைகளில் சதா அல்லற்படும் பெண்கள் மத்தியில் இக்கோட்பாடுகளை பேசினால் அவர்களால் இதை விளங்கிக் கொள்ள முடியுமா? ஆகவே இது வெறும் வெற்றுக் கோட்பாடாகவே கருதப்படும். நடைமுறைச் சாத்தியங்களை முன்வைக்கும் கோட்பாடுகளே நமக்குத் தேவை .
47

Page 29
முற்போக்குவாத, தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரண்பாடுகளும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியையும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியையும் இந்தியாவின் நவீன யுகத்தின் ஆரம்பம் எனக் கொள்ளலாம். இக்காலப் பகுதியில் சமூக அரசியல் மாற்றங்கள் துரித கதியில் இடம் பெற்றன. இந்த அபிவிருத்தி ஒருங்கிணைவுகள் ஆண் பெண் உறவில் பல வேறுபட்ட கருத்தியல் தாக்கங்களை ஏற்படுத்தின. இந்த ஒருங்கிணைவுகள் சமூக அரசியல் நோக்குகளில் தளரீதியில் பல முரண்பாடுகள் தோன்றுவதற்கு இடமளித்ததோடு பின்னர் இருபதாம் நூற்றாண்டிலும் இந்தியர்களை மாறுபட்ட கருத்து நிலைகளுக்கு இட்டுச் சென்றன. பிரித்தானியரின் முற்போக்குக் கோட்பாடு சமூக, சமய நடைமுறைகளில் பல சீர்திருத்தங்களுக்கு இடமளித்தது. இவை சுதேசிய ஆய்வறிவாளர்களால் வரவேற்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேயரால் ஏகாதிபத்தியரீதியில் முன்வைக்கப் பட்ட வாதங்கள் இந்திய கலாசாரத்தை பிற்போக்குத் தன்மை உடையதாகக்காட்டிற்று. இப்போக்கை சுதேச மக்கள் வெறுத்தனர். மேலும் சுதேசிகளை நாகரீகமுடையவர்களாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று

பிரித்தானியர் தமக்குத் தாமே ஒரு நிபநதனையிட்டுச் செயற்படத் தொடங்கியதையும் சுதேசிகள் வெறுத்தனர். இத்தகைய முரண்பாடுகளுக்கு மத்தியிலும் சில சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. உடன் கட்டை ஏறுதல் 1829 லும் பெண் சிசுக்களைக் கொல்லுதல் 1870 லும் சட்டரீதியாக தடை செய்யப்பட்டது. விதவைகள் மறுமணம் புரிதலை தடுத்த சட்டங்கள் 1856 ல் ரத்துச் செய்யப்பட்டன. அத்தோடு 1929 ல் பால்ய விவாகங்களைத் தடுக்கும் சட்டமும் கொண்டுவரப்பட்டது. பெண்களைப் பொறுத்த ளவில் வெளிப்படையான ஒடுக்கு முறைகளெனத் தெரிந்த சில சமூக சமயப் பழக்கவழக்கங்களை சட்ட ரீதியாக ரத்துச் செய்ய முன் வந்தமை இக் கால கட்டத்தின் தேவையாக இருந்தது
முக்கியமான இரண்டாவது அம்சமாக கிறிஸ்தவப் பாதிரி0ாருடைய (Missionary) செயற்பாடுகளை நாம் கூறலாம். அரசியல் ரீதியாக மக்கள் முற்போக்குக் கொள்கையை ஏற்றுக்கொண்டதும், சமயரீதியாக சிலர் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டதும் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் என நாம் கொள்ளலாம். மூன்றாவது முக்கிய அம்சமாக இருப்பது இந்தியாவின் ஆய்வறிவாளர்களின் புதிய சீர்திருத்தச் சிந்தனை மாற்றமும் விழிப்புமாகும். இந்நோக்கு ஆங்கில மொழியினுடாக வந்த சர்வதேசப் பார்வைப் பரப்பினால் பெறப்பட்ட ஒன்றாகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கருத்துக்கள் ஆங்கில மொழியோடு வந்தவை. சுருக்கமாகச் சொல்வதானால் இவை பிரஞ்சுப் புரட்சி, ரஷ்சியப் புரட்சி வழிவந்த கோட்பாடுகளாகும். தமிழ்க் கவிஞரான சுப்பிரமணிய பாரதியார், தனது புதிய ரஷ்சியாவும் ஸாரின் வீழ்ச்சியும் என்ற கவிதையில் ரஷ்சியப் புரட்சியை வரவேற்பதும் தென்னாபிரிக்கப் பெண்கள் விடுதலை பற்றிப் பாடுவதும் இப்போக்கிற்கு நல்ல உதாரணங்களாகும் (பாரதியார் : 1981
49

Page 30
: 311-312, பாரதியார் 1986-88), பெண்கள் விடுதலைக்கான கோட்பாடுகளின் தொடர்புகளை இப்போக்குகளினூடாகத் தான் நாம் காண வேண்டும்.
பெண்கள் உரிமைகளைப் பொறுத்த விஷயத்தில் அரசியல்யாப்பு, சட்டவாக்கரீதியான மாற்றங்களுக்குத் தங்கள் ஆதரவை வழங்கிய ஆய்வறிவாளர்களில் சிலர், பெண்கள் பிரச்சினை சம்பந்தமாகவும் எழுதினர். எமது ஆய்வின் இப்பகுதி, அவர்களின் இப்பங்களிப்புகளைப் பரிசீலிப்பதோடு அதன் பெறுபேறாய் இக்காலத்தில் ஏற்பட்ட சிந்தனை எழுச்சியையும் பார்ப்பதாய் அமையும். அத்தோடு இவ்வாய்வு பெண்கள் சம்பந்தமாக ஒரு முரண்பாடற்ற முடிவுக்கு வர முடியாமல் போன அவர்களது கருத்துப் பரிமாற்றங்க ளையும், பார்வைகளையும் சுட்டிக் காட்டுவதாகவும் அமையும். இந்தக் கருத்து முரண்பாடுகள் திரைப்படம், இலக்கியம் போன்றவற்றில் பெண்கள் பற்றிய பிரத்தியேகமான படிம உருவாக்கங்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தன. இப்பின்னணியிலேயே பெண்கள் பற்றிய சமூக யதார்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்தியாவின் தமிழ்ப் பகுதிகளில் பெண்ணிலைவாதம் பற்றிய எழுத்துக்களுக்கு ஆண்களே முன்னோடிகளாய் இருந்தனர் என்பது புதுமையானதே. சுப்பிரமணிய பாரதியாரோடு ஆரம்பித்த இப்போக்கு தொடர்ந்து சிறு துண்டுப் பிரசுரங்களாகவும், கட்டுரைகளாகவும் சொற்பொழிவுகளாகவும் வெளிவந்தன. இக் கருத்துக்கள் பெரும் புரட்சிக்குரியவையாக அக்காலத்தில் கருதப்பட்டன. அவை பொதுமக்கள் வாசிப்பதற்கேற்ற விதத்தில் நூலுருப் பெறாமல் நீண்ட காலம் கிடந்தன. இவைகள் பின்னர் சேகரிக்கப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டன. அவை முழுவதையும் உள்ளடக்கி வெளிவந்த அண்மைக்கால வெளியீடுகளில் இருந்து எனது தரவுகளை நான் பெற்றுள்ளேன்.

பெண்ணிலைவாதக் கோரிக்கைகளும் அவற்றின் முரண்பாடுகளும்
சுப்பிரமணிய பாரதியார் (1882-1921) பெண்களது உரிமையற்ற நிலையைப் பற்றி சிந்தித்தார். அவரது பரந்துபட்ட எழுத்துக்களிலும், கவிதைகளிலும், கட்டுரை களிலும் பெண்ணுரிமை வலியுறுத்தப்பட்டது. சமூக பொரு ளாதார விஷயங்களில் சமவுரிமை, விவாகரத்துச் செய்வதற்குரிய சுதந்திரம், தமது கணவனைத் தேர்ந்தெடுப் பதற்கான உரிமை போன்றவை பாரதியாரின் எழுத்துக்களில் வலியுறுத்தப்பட்டன (பாரதியார். 1981 - 241). ருது அடைவதற்கு முன்னர் நிகழ்த்தப்படும் விவாகங்களை பெரிதும் கண்டித்த பாரதியார், அவர்கள் மறுவிவாகம் செய்வதற்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குரல்கொடுத்தார். இந்தியப் பெண்களை அவர் தென்னாபிரிக்க கறுப்பின மக்களோடு ஒப்பிடுகிறார். தனிமைப்படுத்தப்பட்டும் ஒதுக்கப்பட்டும் அடிமைகளாக வாழும் கறுப்பின மக்களைப் போலவே இந்தியப் பெண்கள் உள்ளனர் என்றார். "ஆனால் இங்குள்ள ஒரு வித்தியாசம் என்னவெனில் தென்னா பிரிக்காவில் எதிரியாக உள்ளவர்கள் அந்நியர்கள். ஆனால் இங்கே எதிரிகளாய் இருப்பவர் நமது சகோதரர்கள், தந்தைமார், ம/7மன்மார், தாத்த/7ம/7ர், கணவன்மார், காதலர்கள் ஆகியோரே. இது எமக்கு ஒரு தர்ம சங்கடமான நிலை" பாரதியார் போராட்டத்தை குடும்ப வட்டத்துக்குள்ளேயே, வீட்டுக்குள்ளேயே தொடங்கும் படியும் பெண் களைத் தூண்டுகிறார். அதை பின்வருமாறு எழுதுகிறார்.
இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள்,
அடிமைகளாய் இருப்பதற்கு உடன்படா தீர்கள். ஆண்களுக்குச் சொல்லுங்கள்,
51

Page 31
நாங்கள் உங்களோடு வாழ மறுக்கிறோம் என்று. எல்லாவிதத்திலும் நான் உனக்குச் சமமானவள் என சத்தமிட்டுச் சொல்லுங்கள். நீ என்னுடைய சம்த்துவத்தை அங்கீகரித்தால் நான் உன்னோடு வாழ்வேன். இல்லை யென்றால் நான் சமைக்கமாட்டேன். இவ் வீடு எனக்குமுரியது. ஆகையால் நான் வீட்டிலிருந்து வெளியேறமாட்டேன்
( μπ πέθιμ πή. 1981 , 251, 259).
நீண்ட கால வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கற்பொழுக்கத்தை பாரதியார் பரந்தளவில் கேள்விக் குள்ளாக்கினார். இதில் பொதிந்துள்ள இரட்டைத் தன்மைக்குரிய ஒழுக்கக் கோட்பாடுகளை அவர் பின்வருமாறு ஒப்பிடுகிறார். ஆண்களின் ஆணவத்தை பிரித்தானியரின் ஏகாதிபத்தி யத்தோடு ஒப்பிடுமிவர் எப்படிப் பிரித்தானியர் இந்தியர்களை அடிமைப்படுத்திக் கொண்டு தமக்கு விசுவாசிகளாக இருக்கும்படி கேட்கிறார்களோ அவ்வாறே ஆண்களும் பெண்களை சிறைவைத்துக் கொண்டு தமக்கு விசுவாசமாக இருக்கும்படி கேட்கிறார்கள். பெண்களை அடக்கி வைத்துக் கொண்டே தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் படி கட்டாயப்படுத்தும் ஆண்களின் அறியாமையை அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் உபயோகிக்கும் மொழிநடை இந்நோக்கில் அவர் தெளிவு பெற்றவர் என்பதையும் அவர் இந்த இலட்சியத்திற்கு தன்னை அர்ப்பணித்தவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. தான் எடுத்துக் கொண்ட செய்தியை விளக்குவதற்கு அவர் எடுத்தாளும் தர்க்கமுறை அவரது மொழிநடையின் பொது அம்சமாகும். கற்பொழுக்கம் என்பது மட்டுமன்றி அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களையும் ஒழுக்கமுள்ள பெண்ணின்
་52

விசேட குணாம்சங்களாக தமிழர் மரபு கொண்டாடுகிறது. இக் கருதுகோள்களைப் பாரதியார் தகர்த்தெறிவதோடு அவற்றுக்குத் தம்மை அர்ப்பணிக்கும் பெண்ணை நாய்க்குச் சமமானவர் களாகக் கருதுகிறார் . பெண் ணுக்குரிய உண்மையான நல்லொழுக்கம் என்பது அவள் பெறும் அறிவும் சுதந்திரமும் என்பதே அவரது எண்ணமாகும்.
சுப்பிரமணிய பாரதியாரின் தேசிய நோக்குக்காக அவர் போற்றப்படுகிறார், அதற்காகவே அவர் பிரித்தானி யரால் கைது செய்யப்பட்டார். அவர் எழுதிய புரட்சிகரக் கருத்துகளுக்காகக் குற்றஞ் சுமத்தப்பட்ட போதும், தான் கொண்ட கருத்துக்களில் இருந்து பின்வாங்கி, இந்திய மரபுகளையும் பழக்க வழக்கங்களையயும், பாரம்பரியத்தையும் பேணுபவராகக்காட்ட அவர் எத்தனிக்கவில்லை. இந்தியப் பெண்களின் உரிமை விஷயத்தில் பல இந்திய தேசிய வாதிகளிடையே காணப்பட்ட இரண்டகநிலையும் முரண் பாடுகளும் பாரதியாரின் கருத்துக்களில் காணப்படவில்லை என்பது கண்கூடு.
திராவிட இயக்கத்தின் பெண்ணிலைவாதக் கருத்தியல்.
ஈ.வே. இராமசாமி அவர்களின் பெண் விடுதலை வாதம் ஒரு பூரண விடுதலைக் கருத்தியலின் அம்சமாகவே கருதப்பட வேண்டும். 'பெரியார்’ எனச் சகலராலும் அழைக்கப்படும் ஈ. வே. இராமசாமி அவர்களின் பெண்ணிலைவாதக் கருத்தியல் விரிவானதும் ஆழமானதுமாக இருப்பதை நாம் காணலாம். பெரியாரால் உருவ உள்ளடக்கம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட திராவிட இயக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் கொண்டிருந்த சமூக, வர்க்கப் பிரச்சினை சம்பந்தமான சமரசக் கொள்கைக்கு பதிலளித்ததாகவே அமைந்தது.
53

Page 32
இங்கு குறிப்பிடப்பட்ட சமூகப் பிரச்சனைகள் பெண்கள் விடுதலையையும் உள்ளடக்குவதாகும். சமூக வரலாற்றா சிரியர்கள் பெரியாரை எப்பொழுதும் பகுத்தறிவு வாதியாகவும். தேசியவாதியாகவும், "பிராமண எதிர்ப்பாளராகவும். நாஸ்திகராகவுமே கண்டுள்ளனர். ஆனால் பெண்ணிலை வாதியாகப் பெரியாரைக் கண்டோர் மிகச் சிலரே. பெரியாருடைய பார்வை சீர்திருத்தத்தன்மை வாய்ந்தது. அவருடைய பெண்ணிலைவாதப் பார்வை பகுத்தறிவு, நாஸ்தீகம் என்பவற்றின் மூலம் வெளிவரும், காலத்துக் கொவ்வாத சமூகப் பழக்க வழக்கங்கள், சமய சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் என்பன அவரது தாக்குதலுக்கு இலக்காகின. இது அவரைப் பொறுத்தவரை தமிழ்க்கலாசாரம் "ஆரிய மய" மாக்கப்பட்டு விட்டதை எதிர்க்கும் ஒரு அம்சமாகவே அமைந்தது. இத்தகைய அவரது போக்கு பெண் சிசுக்கொலை, விதவைகள் விவாகத்தடை, விதவைகளை ஒதுக்கி வைத்தல், பால்ய விவாகம் போன்ற சில ஸ்தாபன மயமாக்கப்பட்ட சம்பிரதாயங்களால் நசுக்கப்படுவதை இனங் கண்டது. இவற்றை அவர் மேலசாதி எனப்படும் பிராமண ரோடும் அவர்களது பழக்கவழக்கங்களுடனும் தொடர்பு படுத்தினார். சாதித்தூய்மை என்னும் கருத்தோடு இச்சம்பிர தாயங்கள் பிராமணர்களாலேயே தூக்கிப்பிடிக்கப்பட்டதை வெகு சாதுரியமாக பெரியார் விளங்கிக் கொண்டார்.
பிராமணரின் சமூக - பொருளாதார, சமூக சமய ரீதியான உயர் நிலையையும் அவர்கள் ஏனைய மக்கள் மேல் செலுத்திவந்த ஆதிக்கத்தின் தன்மையின் அடிப்படையிலும் இருந்தே பெரியாரின் மிகத் தீவிரமான பிராமண எதிர்ப்பை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். தமது வழமையான சமயப் பங்களிப்பு வேலைகளில் இருந்து விலகி பிராமணர்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவும், உயர் அரச நிர்வாகிகளாகவும் சகல உலக விவகாரங்களுக்குரிய பெரும்
54

வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். எந்த இயக்கமாவது சமுக சமத்துவத்துக்காகவும் சாதீய மேலாண்மைக்கு எதிராகவும் போராட முற்பட்டால் அது பிராமண மேலாதிக்கத்துக்கும் எதிரானதாகவே கட்டாயமாக அமையும் (ராம் 1979 : 379), ஆரிய கலாச்சாரத்தை உள் வாங்கியதற்கும் அர்த்தமற்ற ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்ட புராண ரீதியான இந்து சமயத்தின் வேதங்கள், மனுதர்மசாத்திரம், மகாபாரதம், இராமாயணம் போன்றன தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கும், பெரியார் பிராமணர்களையே பொறுப்பாளிகளாக்கினார். (பெரியார் 1974: 6 : 48; 1987 ; 4 - 10 : 1959 11 11) அவர் இந் நூல்களை அறிவற்ற மூடநம்பிக்கைக்குரிய பழமைவாதங்கள் நிறைந்தவை எனக் கண்டித்தார். புராண இதிகாசங்களை உண்மையென நம்பி அதில் வரும் பாத்திரங்களின் தன்மைகளைக் கடைப்பிடித்து ஒழுகும் போக்கையும் அதன் அறிவுசாராத் தன்மையையும், அதையே தங்கள் சிந்தனை முறையாக ஏற்றுக்கொள்வதையும் கேள்விக்குள்ளாக்குவதே பெரியாரின் அடிப்படை நோக்காக இருந்தது. இந்நிலையில் அவரது பெண்நிலைவாதப் பார்வையும் ஒரு பாரிய குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதின் ஒரு அம்சமாகவே இருந்தது. அவரது அனேக பிரசுரங்களில் பெண்களது நிலை, பெண்களுக்குச் சமயம், கலாச்சாரம் பெண்களுக்கு இழைக்கப்படும் மனிதத் தன்மையற்ற தீங்குகள் எல்லாம் பண்பாடு என்ற போர்வையில் இனங்காணப்பட்டுள்ளது.
"குடும்பத்திட்டம்", "பெண் ஏன் அடிமையானாள்" என்னும் இரண்டு வெவ்வேறான பிரசுரங்களும் பெரியாரின் பெண்கள் பற்றிய அறிவார்ந்த போக்கை தெளிவாகக் காட்டுகின்றன. திட்டமிடப்படாத குடும்ப வாழ்க்கையாலும், தொடர்ந்து வரும் குழந்தைப் பேற்றினாலும் பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவதை மிகவும் வன்மையாகக்
55

Page 33
கண்டிக்கிறார். இவை எப்படிப் பெண்ணின் உடல் நலத்தைப் பாதிக்கிறது என்றும் குழந்தைப் பேறானது எப்படி அவர்களை வேறு தொழில் புரியவிடாமல் தடுக்கிறது என்றும் அவர் காட்டுகிறார். பெண் ஒடுக்குமுறை பொதுவாக அவள் தாயாக வகிக்கும் பாத்திரத்திலிருந்தே ஆரம்பமாகிறது என்பதே பெரியாரின் கருத்தாகும் ( பெரியார். 1980 - 9-19).
பெண்களது கீழ்நிலை பற்றிய பொதுவான அம்சங்கள் மிகச் சிலராலேயே அறுதியிட்டுத் திட்டவட்டமாகக் கூறப்பட் டுள்ளன. பெண்கள் பற்றிய சமகாலப் பிரச்சினையிலும் சரி, வரலாற்று ரீதியாக அவர்கள் எவ்வாறு கீழ்நிலைக் குள்ளாக்கப்பட்டார்கள் என்பது பற்றி அவர் தெளிவுபடுத்தும் போதும் சரி, அவரிடம் எந்த வித மயக்கமும் முரண்பாட்டு நிலையும் இல்லாதது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். பெரியார் கூற வரும் செய்திகளில் உள்ள மிகத் தீவிரமான, அறிவார்ந்ததன்மையே அவற்றின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அறிவுறுத்துபவையாகும். தமிழர் கொண்டேத்தும் ‘கற்பு' என்னும் கருதுகோளை தனது பகுத்தறிவுப் பார்வை மூலம் விளக்குகிறார். அது எவ்வாறு (மனைவிக்கு) பெண்ணுக்குரிய ஒன்றாகமட்டும் ஆக்கப்பட்டு அதிலிருந்து எவ்வாறு ஆண்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர் என்பதைக் கூறும்போது அங்கு தர்க்க வாதமே மேலோங்கி உள்ளது. கற்பென்னும் கருதுகோளின் அறிவுக்குப் புறம்பான தன்மையை மிக விரிவாகப் பார்க்கும் அவர் இது பற்றி தமிழிலும் (திருக்குறள்) சமஸ்கிருதத்திலும் (மனுதர்ம சாஸ்திரம்) விரிவாக எழுதியவர்களைத் தாக்குகிறார். திருக்குறளில் உள்ள வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தை உதாரணமாக எடுக்கும் அவர் அதில் கற்பு என்பதற்குரிய வரைவிலக் கணத்தையும் மனைவியின் “தொழுதெழும்" மேலாண்மைப் பண்பையும், அத்தகைய பெண் மழையைக் கூட "பெய்யென "ப் பெய் விக்கக் கூடியவள் எனக்
56

கூறப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார். இதற்குச் சமமாக சமஸ்கிருதத்தில் உள்ள "பதிவிரதா" தர்மத்தையும் காட்டுகிறார். இதன்படி உண்மையில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவு ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே இருக்கும் உறவைப் போன்றது என்றும் அத்தகைய உறவே (ஆண்டான் அடிமை) கணவனுக்கும் மனைவிக்குமிடையே எதிர்பார்க்கப்படுகிறது எனவும் கூறுகிறார். எங்களுடைய மொழிகளில் ஆண்கள் கற்பைப் பேணுவதற்கான சொற்கள் இல்லாமையே ஆணாதிக்க வழிவந்த எமது அமைப்பைக் காட்டுவதாக உள்ளதென அவர் கூறுகிறார். இத்தகைய அசமந்த போக்கு, பெண்களைப் போகப் பொருளாகப் பாவிக்கவும் அடிமைப்படுத்தவும் செய்கிறது என்கிறார். ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே சமத்துவம் நிலவாத நிலையினாலேயே கற்பு, இருபாலாருக்கும் உரியதாகப் பார் க் கப்படாமல் பெண் களுக்குரியதாக மட்டும் கொள்ளப்பட்டு, ஆண்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு காரணம் என்கிறார். இது ஆண்களுக்கு அனுசரணையாகவே செய்யப்பட்டுள்ளது என்று கூறும் பெரியார், மனுதர்ம சாஸ்திரத்திலும் திருக்குறளிலும் கூறப்பட்ட இத்தகைய கருத்துக்களை ஒரு பெண் எழுதுவாரா என்ற கேள்வியுடன் இப்பகுதியை முடிக்கிறார். இதில் பெரியார் இன்றுள்ள பெண்ணிலைவாதக் கருத்துக்களைப் பிரதிபலிப்பதோடு எப்படி ஆண்கள் இலக்கிய ஆக்கங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான கொள்கைகளையும் கருத்துக்களையும் நிலை நாட்டியுள்ளார்கள் என்றும் கூறுகிறார். இதை எப்படி ஆண்களால் செய்யக்கூடியதாய் உள்ளது என்பதற்கு அவர், ஆண்கள் கையிலேயே பொருளாதார ஆதிக்கம் நிலவுகிறது என்றும் அவர்கள் பணவரவு தரும் தொழிலில் ஈடுபடுபவர் களாகவும் உடல்வலு உள்ளவராய் இருப்பதும் காரணம் என்கிறார். இவர்கள் ஒரு விதத்தில் "மூர்க்கர்களாகவே" இருக்கின்றனர் என்றும் இவர்களது உடல் சக்தியும்
57

Page 34
பொருளாதார ஆதிக்கமும் சேர்ந்து இவர்களை கற்பொழுக்கத் திற்குக் கட்டுப்படாமல் செய்வதோடு தங்களுக்குச் சார்பான சட்டங்களை வகுக்கவும் இடமளித்துள்ளது என்றும் கூறுகிறார்.
தலைக்கு முக்கா டிட்டு (பர் தா) தலையையும் முகத்தையும் பெண் கள் மறைப்பது சம்பந்தமாகவும் பொதுவாக பெண்கள் புறக்கணிக்கப்படுதல், பெண்களுக்கு ஒரு தார மணம், ஆண்களுக்கு பலதார மணம் போன்றவை பற்றியும் பெரியார் விவாதிக்கும் போது இவற்றுக்கெல்லாம் சட்டமும் சமயமும்தான் காரணங்கள் என்று மட்டும் கூறிவிடமுடியாது என்று அறுதியிட்டுக்கூறுகிறார். தமிழ்ச் சமூகத்தில் வாழும் பெண்கள் இத்தகைய வாழ்க்கை முறையை அங்கீகரிப்பதும், ஏற்றுக்கொள்வதும் அதை நியாயப் படுத்துவதுமே இப்போக்குகளைப் பலப்படுத்து பவையாகவும் நெறிப்படுத்துபவையாகவும் உள்ளன. இத்தகைய போக்கில் உள்ளோடும் உளவியலை தாழ்த்தப்பட்ட மக்களோடு ஒப்பிடுவதன் மூலம் அவர் விளக்குகிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தாம் உயர்சாதியினருக்கு அடிமைப்பட்டவர்கள் என்றும், சரிசமமாக நடத்தப்படுவதற்கு அரு கதைய ற்றவர்களென்றும் நம்புகிறார்களோ, அவ்வாறே பெண்களும் தாம் ஆண்களுக்கு உரியவர்களென்றும், அவர்களின் ஆதிக்கத்துக்குக் கீழ்ப்பட்டவர்களென்றும் நம்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் சமூக ரீதியாக வரும் சம்பிரதாயங்களைக் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொண்டு அத்தகைய ஒரு மனநிலைக் குள்ளாக்கப்பட்டுள்ளமையாகும். பெண்களை விழிப்படையச் செய்யும் இன்றைய பெண்ண லைவாத வழிமுறைகளையும் கருதுகோள்களையும் வெளிப் படுத்துவனவாக அவரது கருத்துக்கள் அமைகின்றன. கற்பு என்ற ஒன்றிற்காக கணவன்மாரின் மிருகத்தனமான நடத்தையைப் பெண்கள் சகித்துக்கொள்ளக் கூடாது. தம்மில் அன்பில்லாத கணவன் மாரோடு பெண்கள் தொடர்ந்தும்
58

வாழக் கூடாது. இத்தகைய சமூக அடக்குமுறை அழித்தெ7ழிக்கப்பட வேணர்டியது என்று கூறி பெரியார் இப்பகுதியை நிறைவு செய்கிறார் (பெரியார். 1987 : 14-15).
சக்திமிக்க ஒரு கூட்டத்த7ர7ல் சக்தியற்ற ஒரு கூட்டத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் ஒழிக்கப் படும்வரை உண்மையான விடுதலை, அன்பு, கற்பு என்பவை இருக்கப் போவதில்லை (பெரியார், 1987 : 16).
சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அமைக்கப் பட்டதாகச் சொல்லப்படும் சமூக வழக்கங்களும் விலக்குகளும் போலியானவையாகவும் முரண்பாடுடையனவாகவும் இருப்ப தோடு ஒரு பாலாரையே பாதிப்பதாகவும் உள்ளன. பெரியார் சமூக முரண்பாடுகளில் ஒன்றை விளக்குகிறார். காதல் என்பது தெய்வீகமானது என்றும், இரு மனங்களின் ஒருங்கிணைவு என்றும், தமிழ் இலக்கியத்தில் போற்றப்படும் அதே நேரத்தில், உண்மையான வாழ்க்கையில் ஆணும் பெண்ணும், குழந்தைகள் பெறுவதற்காகவும், உடல் உணர்வுகளைத் தணிப்பதற்காகவுமே பேசிமுடிக்கும் கலியாணம் மூலம் ஒன்று சேர்க்கப்படுகிறார்கள். பெண்களைப் பொறுத்த வரை இது வீட்டுக்குப் பணிபுரிவதற்காகவும் என்றாகிறது.
பொருந்தா வாழ்க்கையில், சந்தோசம் பொருந்தாத திருமணத்திலிருந்து விடுபடுதல் சம்பந்தமாக பெரியார் குறிப்பிடுகையில், தமிழ் நாட்டில் உள்ள விவாக முறை மிகவும் குரூரமான அடக்குமுறை என்கிறார். உண்மையில் பெண்களை ஆண்களுக்கு அடிமையாக்குவதற்கே விவாகச் சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால் இது தெய்வீகமானது எனப் போற்றப்படுவதன் மூலம் பெண் ஏமாற்றப்படுகிறாள் ( பெரியார், 1987 : 38- 41).
y
59

Page 35
பெண்களுக்கான சொத்துரிமை. வேண்டாத கருவை அகற்றும் உரிமை பற்றியும் பெரியார் கவனத்திற்கெடுத்துக் கொண்டார் (பெரியார், 1987 : 62). பெண்களின் பால்ய திருமணத்திற் கெதிராக பிரித் தானிய அரசு க்கு சமர்ப்பிக்கப்பட்ட சாரதா சட்டம் உயர்குழாம் தேசிய வாதிகளால் எதிர்க்கப்பட்டது. இவர்களைப் பெரியார் சந்தர்ப்பவாதிகள் எனச் சாடினார் (பெரியார், 1987 : 72).
பெரியாரின் பெண்ணிலைவாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமகாலத்து தீவிரவாத பெண்ணிலைவாதியான ஃபயர் ஸ் ரோன் (Firestone, 1970) G u n Go Gp T m Gor கருத்துக்களோடு ஒத்துப்போவதாய் உள்ளது. அதாவது பெண்களின் கீழ்நிலைக்குக் காரணமாய் இருக்கும் முக்கிய காரணி, அவர்கள் கருத்தரிக்கும் உடலமைப்பைக் கொண்டிருப்பது என்பது அவரது கருத்து. ஆகவே அவர்கள் இத்தகைய பிரச்சினை உருவாக்கத்துக்குக் காரணமாக இருக்கும் கருப்பையை இல்லாமல் செய்ய வேண்டுமென அவர் ஒரு வாதத்தை முன் வைத்தார். இதனை ஒரு மடத்தனமான கூற்றாகப் பலர் கருதக்கூடுமாயினும், பெண்கள் உண்மையான விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை அகற்றி விடுவதை விட வேறு வழி இருப்பதாய் எனக்குப் படவில்லை என்று ஆணித்தரமாகக் கூறும் பெரியார் கூற்றும் சர்ச்சைக்குரியதுதான். மேலும் இப்படிப் பெண்கள் தங்களது கருத்தரிக்கும் முறைக்கு எதிராக இயங்குவார் களேயானால் மனித சமுதாயம் அழிந்துபோகுமே என எதிர்க்கேள்வி தொடுப்போரிடம் பெரியார் கேட்கும் கேள்வி இது தான். "இப்படி மனித சமுகம் அழிந்தால் அது எப்படி பெண்களைப் பாதிக்கப்போகிறது?” (பெரியார். 1987 : 82 ).
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய
60

வேண்டும் என்பதற்காகவும் அவர்களை அடிமைப்படுத்தும் சமஸ்கிருத திருமணச் சடங்குவகைகளை அகற்ற வேண்டும் என்பதற்காகவும் பெரியார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது யாவரும் அறிந்ததே. பெண்ணிலைவாதம் பற்றி பெரியார் ஓர் விரிவான கொள்கையை வைத்திருந்தார். அது இன்றைய பெண்ணிலைவாதக் கருத்துக்களை உள்ளடக்கிய தோடு, தமிழ்க்கலாச்சாரம் வழிவந்த முக்கிய பண்பாட்டுக் கோலங்களுக்கு சவால் விடுவதாகவும் உள்ளது. அவர் சுயமாக இயங்கும் பெண்கள் குழுக்களாக இயங்க வேண்டுமென வாதாடியதோடு, தீவிர செயற்பாட்டுக் குரிய திட்டங்களையும் முன்வைத்தார். அவை பெண்ணிலை வாதம் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணக் கருத்துக்கள் ஒரு பூரண கோட்பாட்டுருவத்தைக் கொண்டிருந்ததை விளக்குபவையாக உள்ளன. '
பெண்மையின் மேன்மையும் புனிதமும்
வி. கல்யணசுந்தரம் அவர்கள் பெண்கள் பிரச்சினை சம்பந்தமாக ஓரளவு வித்தியாசமான அணுகுமுறை ஒன்றைக் கொண்டிருந்தார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு கருத்து ரீதியாக பெண்கள் பற்றியும் தொழிலாளர் பற்றியும் அவர் பல கொள்கைகளையும் வாதங்களையும் பிரபலப்படுதினார். அரசியல்வாதியாக இருந்த அவர் இவ்விரு விஷயங்களையும் அரசியல் மயப்படுத்தினார். அவரது கொள்கை பாரதியாார், பெரியார் போன்றோர் கொள்கைகளிலிருந்து கருத்து ரீதியாக வேறுபட்டதாகும் . கல்யாணசுந் தரம் அவர் களது எழுத்துக்களில் காணப்படும் பிரதான போக்குகளை நாம் இனம் காண வேண்டும். பின்னர் அவை கருத்து ரீதியாகப் பகுக்கப்பட்டு இன்றைய பெண்ணிலைவாதக் கருத்தியலோடு எப்படி வேறுபடுகிறது அல்லது ஒத்துப்போகிறது என நாம்
61

Page 36
ஒரு பரிசீலனையைச் செய்யலாம்.
பெண்கள் விடுதலை சம்பந்தமாக முக்கிய விடயங்களில் அடித்தளத்தில் அவர் முன்னவர்களோடு ஒத்துப்போனாலும் அவரது பொதுவான அணுகுமுறை வித்தியாசமானது. அவர் பெண்களை வேறு விதமான பார்வைக்குட்படுத்தினார். பெண்களிடம் காணப்பட்ட சில பண்புகளைத் தெரிந்தெடுத்து, அவை பெண்களுக்கே உரியவையாகவும், மகத்தான மேன்மைக் குணங்களாகவும் போற்றப்பட வேண்டும் என்றும் அவர் கருதினார். ஆண்களும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். பொறுமை, தியாக மனப்பான்மை, அமைதியான இயல்பு, அடக்கம், தாய்மை, பராமரிப்பு, அமைதியான பழக்கவழக்கங்கள், மென்மையான வார்த்தையாடல் போன்ற “பெண்மைக் குணங்கள்” பண்பட்ட மனதின் வெளிக்காட்டலாகும் என்பது அவரது வாதம். இவை பலவீனத்தின் வெளிக்காட்டல் அல்ல, பேராற்றலின் வெளிக் காட்டலாகும். இவை தெய்வீகத் தன்மை பொருந்தியவை என்பது அவரது கருத்து. (கல்யாணசுந்தரம் 1953 4 : 25 ). இதை அவர் “பெண்ணின் பெருமை” என அழைக்கிறார். கூடவே இதன் தலைப்பிலேயே ஒரு நூலும் எழுதியுள்ளார். பெண்கள் பணிவுடன் இருப்பதற்குரிய காரணம், அவர்களுக்கு வாய்க்கப் பெற்ற அனுபவ முதிர்ச்சியாலும் மற்றவர் திறமைகளையும் உணர்வுகளையும் மதிப்பதாலுமேயன்றி, பயத்தினாலோ பலவீனத்தினாலோ அல்ல, அவர்களது அமைதியான பழக்க வழக்கங்கள், அவர்கள் பிறரை மதிப்பதாலேயே ஏற்படுகிறது (கல்யாணசுந்தரம் 1971, 121; 122). பெண்களே பண்பாட்டின் ஊற்றுக்கண்ணாய் உள்ளனர். அநேக கவிஞர்களும், இசைக் கலைஞர்களும், ஓவியர்களும் இத்தகைய பெண்மைக்குரிய தன் மையைக் கொண்டுள்ளதால் தான் அவர் கள் கலைஞர்களாகப் பரிணமிக்கின்றனர் என்று கூறும் அவரும்
62

மிகச் சாதுவான ஒரு ஆண் மகனே! ஆண்கள் அசுர குணங்களை உடையவர், அவர்கள் பெண் களின் தெய்வீகத்தன்மையை தாங்களும் எடுத்துக் கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்தை அவர் முன்வைத்தார்.
இவரது இக் கருத்து சம காலப் பெண்நிலை வாதத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. அது ஆண்களது ஆண்மைத்துவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு வன்முறை, பலம், அகங்காரம் என்பவற்றுக்கு எதிராக பெண்மையைப் போற்றுதலை வலியுறுத்துகிற ஒரு கருத்தாகும் தற்கால Cultural Feminism 67 6ör gpj - 9j60) pĝ. 55 Ŭ Lu Guib Go) Lu 60øi [5760) Gay வாதத்தின் முக்கிய கருதுகோளும் இதுவே ஆகும்.
பால்யவிவாகம், உடன்கட்டை ஏறல், விதவை மறுமணத்தடை போன்ற அடக்குமுறை ஸ்தாபனங்கள் பற்றிய நிலைப்பாட்டில் அவரும் பாரதியார், பெரியார் போன்றோரது கொள்கையையே பின்பற்றுகிறார். தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவதற்கும் தேவதாசிகளை ஆண்கள் மணந்து மனைவி என்ற ஸ்தானத்தைக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் செயலிலும் ஈடுபட்டார். தேவதாசிகளின் சமூகநிலைக்கு முழுப்பொறுப்பை ஆண்களே ஏற்க வேண்டும் என அவர் கண்டிக்கிறார். தேவதாசி முறையை கொலைச் செயலோடு அவர் சமப்படுத்து கிறார். விலைமாதர் குலத்தை ஏற்படுத்தியமையைக் கண்டிப்பதோடு அவர்களைச் சுரண்டி வாழ்ந்த பிராமணப் பூசகர்களையும் சாடுகிறார் (கல்யாணசுந்தரம், 1937 : 45). தேவதாசிகள் பிரச்சினையில் அவரது ஈடுபாடு வேறு பல விடயங்களையும் முற்கொண்டு வந்தது. இவ்விஷயத்தில் மகாத்மா காந்தியிலிருந்து அவர் வேறுபடுகிறார். தேவதாசிகள் கலியாணம் செய்து கொள்வதை காந்தி ஆதரிக்கவில்லை.
63

Page 37
அவர் தேவதாசிகளை பாலுறவையும் திருமண வாழ்க்கை யையும் துறந்து கதராடை நெய்வதில் ஈடுபடும்படியும் அதன் மூலம் பெறும் வருவாயில் சுதந்திர வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். கலியாணசுந்தரம் அவர்களின் அணுகுமுறை போற்றத்தக்கது. தேவதாசிகளை ஆண்கள் மனைவிமாராய் ஏற்கவேண்டும், ஏனைய பெண்கள் அனுபவிக்கும் சமூக அந்தஸ்து அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவர்களை மனைவிமாராய் ஏற்றுக் கொள்வ தற்கான வீரத்தையும் தெளிவையும் ஆண்கள் பெறவேண்டும் என அவர் வேண்டினார் (கலியாணசுந்தரம், 1982 : 600). தேவதாசிகள் தமது உபயோகமற்ற தொழிலை உதறிவிட்டு சன்னியாசிகளாக மாறவேண்டும் என்று காந்தி கூறியதை ஒப்பிடும் போது கலியாணசுந்தரமவர்களது கருத்துக்கள் தீவிரமானதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருக்கிறது என்றே கூற வேண்டும். விதவைகள் மறுமணம் பற்றிய கருத்திலும் அவர் காந்தியின் கருத்திலிருந்து மாறுபட்டவராகவே இருந்தார். காந்தி பாலுறவற்ற தன்னொறுப்பையே விதவைகளுக்குரியதாகக் கண்டார். விதவைகள் தாமே இசைந்து ஞான விழிப்புணர்ச்சியோடு விதவைத் தன்மையைப் பேணும் பாதையையே கைக்கொள்ள வேண்டும் என்றார் காந்தி. ஆனால் கல்யாணசுந்தரம் அவர்கள் சகல இளம் விதவைகளும் மறுமணம் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் குழந்தைகள் உடைய வர்கள் தம் விருப்பப்படி மறுமணம் செய்யாமலேயே இருக்கலாம் என்றும் கூறினார். ஆனால் இது பற்றிய முடிவை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும், அத்தகைய முடிவெடுப்பதற்குரிய உரிமை அவர்களுக்கு இருக்கவேண்டும் என்றும் கூறினார்.
முதலாளித்துவ அமைப்பின் கீழ் தொழிலாளர் நசுக்கப்படும்
நிலைக்கு பெண்களது நிலையை ஒப்பிட்டார் கலியாணசுந்தரம் (1935 : 60), பெண்கள் தமக்கு சேவை செய்வதற்கே
64

உண்டாக்கப்பட்டதாக ஆண்கள் நினைக்கின்றனர். இது ஒரு அசுரத்தனமான பார்வையாகும் (கலியாணசுந்தரம் 1936 : 61), சாதித்துவம் பெண்களை பல்வேறு சமூக நிலைகளுக்குள் தள்ளி விட்டதை சரியாகக் கண்டறிந்த அவர் பால்யத் திருமணம் , விதவைகள் ஒதுக் கப்பட்டமை போன்றவற்றுக்கும் சாதித் துவ கருத் தியலையே காரணமாக்கினார் (கலியாணசுந்தரம் 1919 : 183), சாதித்துவ தூய்மை பேணப்பட வேண்டும் என்ற காரணத்தினாலேயே உயர் குடிப் பார்ப்னியப் பெண்களுக்கு விதவை மறுமணம் மறுக்கப்பட்டது. பால்ய திருமணங்களும் இதனாலேயே நடத்தப்பட்டன. ஆண்களை ஆளும் மத்தியதர வர்க்கப் பூர் ஜுவாக்களுக்கும் (முதலாளிகளுக்கும்) பெண்களை ஏழைகளுக்கும் ஒப்பிடுகிறார். ஆண் குடும்பத்தின் தலைவனாக, அதற்குரிய வருவாய் அனைத்தையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருக்க அத்தகைய பொருளாதார ஆதிக்கம் தனக்கில்லாத பெண் அடிமை போல் வாழ நேர்கிறது என்கிறார் (கல்யாணசுந்தரம், 1935 : 78). மேற்காணும் அவரது ஒப்புமைகளும் விளக்கங்களும் அவரது சோஷலிஸ் (சமதர்ம) பார்வையை வெளிக்காட்டுவதோடு அதே சமகால சோஷலிஸ் பெண்ணி லைவாதப் பார்வையையும் காட்டி நிற்கிறது. பெண்களை போகப்பொருளாகவும் “பெண்மையை ஒரு மயக்கும் தீமை” யெனவும் கண்ட சமய குரவர்களையும் ஞானியரையும் கண்டித்ததோடு, பெண்கள் ஆத்மீக விடுதலைக்குத் தடையானவர்கள் என்று பெண்களை வெறுத்த வரையும் சாடினார் (கலியாணசுந்தரம், 1971 : 46) விடுதலைப் போராட்ட த்தின் போது பெண்கள் பங்கு கொண்டமை வட இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல் தமிழ்ப் பகுதிகளில் ஏற்படுத்தவில்லை. இதற்குரிய பொறுப்பு தமிழ் ஆண்களையே சாரும் என்றும், அதனால் பெண்களை அடக்கி ஒடுக்க வேண்டாம் என்றும் அவர்களையும் தேசத்திற்குத் தொண்டு செய்ய இடமளிக்கு மாறும் தமிழ் ஆண்களுக்கு வேண்டுகோள்
65

Page 38
விடுத்தார் (கல்யாணசுந்தரம், 1919 : 262).
விதவையரை ஒதுக்குதல், விலக்குதல், பால்ய விதவைகள், பெண் சிசுக்கொலை, கட்டாயத் திருமணம், விபச்சாரம், சீதனமுறை போன்றவை பற்றிக் குறிப்பிடுகையில் பொதுவான சீர்திருத்த இயக்கத்தின் பலனாக தோற்றுவிக்கப் பட்ட சடங்குகளில் தங்கியிருக்க வேண்டாம் என்று அவர் பெண்களுக்கு ஆலோசனை கூறினார் (கலியாணசுந்தரம், 193 - 77 - 42). அவை பூரணமான திருப்தியைத் தரப்போவதில்லை, பெண்களாகவே முன்வந்து தமக்கு விதிக்கப்பட்ட தளைகளை அறுக்கவேண்டும் என்று அவர் கூறினார். ஆனாலும் இவற்றை ஒரு நிபந்தனையின் பேரிலேயே அவர் இங்கு முன்வைக்கிறார், அதாவது பெண்கள் தமது எதிர்ப்பைத் தமது தேசத்தின் தர்மத்துக்கு (அழுத்தம் ஆசிரியருடையது) குந்தகம் ஏற்படுத்தாதவாறு செய்ய வேண்டும் என்றார் (கல்யாணசுந்தரம், 1919 : 198 : 199).
கலியாணசுந்தரம் அவர்களது கருத்தியலும், அவரது செயற்பாட்டுடன் கூடிய கொள்கைத் திட்டமும் முற்போக்கு இழையைக் கொண்டிருந்த போதும், அவர் ஒர் இருநிலைப் பட்ட தன்மைக் குட்பட்டிருந்ததென்றே கூறவேண்டும். பெண்களது பிரச்சினையைப் பின் தள்ளி இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பேணுவதை முன் வைக்கும் பண்பு ஒன்று அவரது போக்கில் ஆங்காங்கே காணப்படு வதைக் காணலாம். இவ்விஷயத்தில் அவர் பாரதியாரிட மிருந்தும் பெரியாரிட மிருந்தும் வேறுபடுகிறார். ஆனால் காந்தியோடு ஒத்துப் போகிறார். பெண்கள் பிரச்சினையை விட இந்திய தர்மத்திலேயே அக்கறை கொண்டிருந்தார் என்பது கண்கூடு. இன்னோர் சந்தர்ப்பத்தில் அவர் பெண்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார். முதலாவது
66

ரகத்தவர் மேல்நாட்டு சமூக விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முயல்பவர். அவர்கள் மரபு வழிவந்த பெண்களுக்குரிய குணங்களாகப் போற்றப்படும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவற்றைப் புறந்தள்ளுபவர். இவர்கள் ஆண்களு க்கும் பெண்களுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் பேணாதவர். ஆண்களைப்போல் எல்லாப் பொதுவிஷயங் களிலும் பங்குபற்றுபவர். இரண்டாவது ரகத்தவர் தமது பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுக்காது, மேல்நாட்டவரின் சிறப்பான பழக்கவழக்கங்கள் எனக் கருதியவற்றை மட்டும் தெரிந்தெடுத்து ஓம்புபவர். அவர்கள் சட்ட மன்றங்களுக்குத் தாம் செல்வதை விரும்பாதவர்கள். தாம் சரளமாக கையாளத் தெரியாத எந்த விஷயங்களிலும் தம்மை ஈடுபடுத்த விரும்பாதவர். அவர்கள் பொது வேலை களில் ஈடுபட்டுள்ள ஆண்களுக்கு உதவியாக இருப்பவர். மூன்றாவது ரகத்தவர், தமது பாரம்பரிய வாழ்க்கை முறையை முழுமையாகக் கடைப்பிடிப்பவர். இத்தகைய பெண்களையே ஆண்கள் தமது வேலைக்காரர் போல் நடத்துவர். இம் மூன்று ரகத்தவருள் கலியாணசுந்தரம் இரண்டாவது ரகத்தவரை சிறந்தவராகவும் இந்தியாவுக்கு மிகப் பொருத்தமானவராகவும் கொள்கிறார். இவர்கள் இந்தியாவின் கெளரவத்தைப் பேணுபவர் என்றும் கடவுளுக்கு ஒப்பானவர் என்றும் அவர் கூறுகிறார். முதலாவது ரகத்தவரை, அழிப்புக்குரியவராகச் சாடுகிறார். இவர்கள் தம்மை அழித்துக் கொள்வதோடு பிறரையும்அழிவுக்கு இட்டுச் செல்கின்றனர் என்கிறார் (கல்யாணசுந்தரம், 1919 : 208)
தேச தர்மத்தை தேச விடுதலைக்கான அக்காலக் கருத்தியல் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தியர் என்றாலே “நாகரிகமற்றவர்கள்” “பிற்போக் கானவர்கள்" அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டியவர்கள் என்ற பிரித்தானிய ஏகாதிபத்திய பார்வைக்கு எதிராக
67

Page 39
வைக்கப்பட்ட தேசியவாதக் கருத்தாகவே இதனை நாம் பார்க்கவேண்டும். பெண்கள் அதன் அடிப்படையில் அவர்களுக்காக வகுக்கப்பட்ட தேசிய பண்பாட்டை கடைப் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தேசதர்மக் கருத்தியலானது பெண்களுக் கெதிரான தாகவும் பெண்களை பாரம்பரியம், பண்பாடு என்னும் அளவுகோல்களுக்கிட்ையில் வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. இக்கருது கோளினால் பால்நிலை சமத்துவம் (Gender Equality) பலவீனப் படுத்தப்பட்டது. எம்முடையவை எல்லாம் மகத்தானவை, உன்னதமானவை, லட்சியமானவை என்ற தேசிய கருத்தியலுக்குட்பட்டு எமது பெண்களின் நடத்தையும்
குணாம்சங்களும் கூட மேலானவை; அவை எமது நாகரிகத்தின்
சாராம்சம் என்ற ரீதியில் வாதப்பிரதி வாதங்கள் எழுந்தது துர்ப்பாக்கியமே.
தேசிய பெண் பிம்பங்களும் பெண்களுக்கானவை யென்று வலியுறுத்தப்பட்ட தேசியக் கருத்தியலும்.
காலனித்துவ காலத்திலும், அதற்கு பின்வந்த காலத்திலும் பெண்களுக்கான விடுதலைக் கருத்தியல் ஆண்களால் முன்வைக்கப்பட்ட போது, பெண் பலவித முரண்பட்ட பால்நிலை சம்பந்தப்பட்ட கருத்தியல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியவளாய் இருந்தாள். இவற்றில், ஒன்றே தேசியவாத எல்லைகளுக்குட்பட்டதுமாகும். இந்தியப் பெண்களது குணங்களும் செய்கைகளும் இந்திய சமூக, சமய பாரம்பரியத்தின் வெளிப்பாடுகளும். இவை எமது நாகரிகத்தின் உன்னத வெளிப்பாடுகள், இந்திய தர்மத்தின் ஒட்டு மொத்தமான பிரக்ஞை: அவை மேலைத்தேய பண்பாட்டுக்கும் அதனை வெளிப்படுத்தும் பெண்களது பண்புக்கும் நேர் எதிரானவை. இந்திய எதிர்க்கருத்தியலானது, பெண்களையும் அவர்களது பெண்மைக்குரிய குணங்களையும்
68

மேற்குலக நாகரிகத்துக்கு எதிரான, ஆனால் தாழ்வாகக் கருதப்பட முடியாத கீழைத்தேச சமூக, சமய பாரம்பரியத்தின் மேன்மைக்குரிய கூட்டு வெளிப்பாடு எனக் கொள்கிறது. இதனோடு ஒப்பிடுகையில் மேற்கத்தைய நாகரிகம் என்பது உயிரற்ற அறிவுவாதமாகும் எனக் கருதப்பட்டது . இத்தகைய கருத்துடையோரில் காந்தியும் ஒருவராவர். காந்தி தனது தேசிய விடுதலைக் கோட்பாடான அகிம்சையோடு பெண் விடுதலையையும் சேர்த்துக் கொண்டார்.
அவரது மனைவியும் , தாயாரும் அவரோடு முரண்படும் சமயங்களில் அவர்களுக் கெதிராகப் பாவித்த அமைதியான அகிம்சை, ஒத்துழையாமை வழிகளின் தாக்கத்தின் வலுவை உணர்ந்தே காந்தி இத்தத்துவத்தைக் கடைப்பிடிக்க முற்பட்டார். பெண்மைக்குரிய குணங்களான கீழ்ப்படிதலிலும், சகிப்புத்தன்மையிலும் ஓர் உயர்ந்த ஒழுக்க நெறியைக் கண்ட அவர், ஆண்கள் தம்மிடமுள்ள ஆக்கிரமிப்புத் தன்மையையும், வன்முறையையும் கைவிட்டு தம்மை கற்புடையவராக (பெண்மை) மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இப் “பெண்மைப்படுத்தற் கொள்கை' (Feminization) (சிறீனிவாசன், 1987 : 22 26). தேசிய அடையாளமாகக் கொள்ளப்பட்டு விட்டது. அவர் காவியகால, புராணகால இந்தியப் பெண்களான சீதை, தமயந்தி போன்ற பெண்களைப் பாராட்டியதோடு அத்தகைய பெண்களையே எக்காலத்துக்கும் உரிய இந்தியப் பெண்களின் மாதிரிகளாகக் கொண்டார். அவர் அடிக்கடி கூறியது பெண்களின் பலம் அவர்களது தூய்மையிலும், கற்பிலுமே தங்கியுள்ளது என்பதே. அவருக்கு இவையிரண்டும் பிரிக்கமுடியாதவை. பெண் தனது கற்பை இழப்பாளேயாயின் அவள் தற்கொலை செய்து கொள்வதை விட உயர்ந்த பண்பு வேறில்லை என்றார் (காந்தி, 1958 : 338). மெளனம் அனுஷ்டித்து பொறுமை கடைப்பிடித்து நீண்டகாலத் துன்பம் அனுபவித்த சீதை காந்தியைப் பெரிதும் கவர்ந்தாள்.
69

Page 40
காந்தியால் போற்றப்பட்ட, எதிர்ப்பைக் காட்டாத, வாய்பேசாத சீதையே இந்தியப் பெண்மைக்குரியவளாகவும் சகலராலும் பின்பற்றப்படவேண்டியவளாகவும் கொள்ளப் பட்டது. பெண்மைக் கருத்தியலை தோற்றுவித்து அதை இது நியாயப்படுத்தியும் உள்ளது. காந்தி பெண்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடலாம் ஆனால் பாரம் பரியமாக இருந்து வந்த ஆண்,பெண் இருபாலாரது நடைமுறை விதிகளில் எதுவித மாற்றத்தையும் கொண்டுவரக் கூடாது என்பதில் மிகத்தீவிரமான ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார். (கிஷ்வர். 1986 : 56)
கலாச்சார தேசிய இருப்பும் பால் நிலைப்பாடும்.
இன மொழி ரீதியான தேசியத்தின் மைய நிலையாக விளங்கிய மதம், பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிகப் பிற்போக்கானதாகவே இருந்தது. தேசிய இயக்கங்களின் உள்ளே, கலாச்சார ரீதியான விழிப்புணர்ச்சி என்பது பெண்களைப் பொறுத்தவரை பிற்போக்கான பாதிப்புக் களையே ஏற்படுத்திற்று. மிகக் கொடூரமான பழக்க வழக்கங்களான உடன்கட்டை ஏறுதல், விதவைகள் மறுமணம் செய்து கொள்வதற் கெதிரான தடை போன்றவற்றை மாற்றுவதற்கு சாஸ்திரரீதியான அங்கீகாரம் பெறவேண்டிய நிலையிலேயே இந்திய தேசிய போராட்ட ஆய்வறிவாளர் சிலர் இருந்தனர் என்றால் இது உண்மையில் ஒரு புதுமை யான விஷயமே. சென்னையைச் சேர்ந்த வீராசலிங்கமும், வங்காளத்தைச் சேர்ந்த வித்தியா சாகரரும் தாம் சமயரீதியான அங்கீகாரம் பெறாத எந்த சீர் திருத்தங்களையும். கொண்டுவரப்போவதில்லை என பிரகடனப்படுத்தினர் (பனிக்கள் 1987:216) பெண்கள் விவாகத்திற்கான வயதெல்லையை கூட்டிய 1981 ம் ஆண்டு சட்டத்திற் கெதிராக கிளம்பிய எதிர்ப்பு இப் போக்கின் தன்மையை விளக்கும். இந்திய
70.

தேசியப் போரட்டத்தின் முன்னணி வீரரான திலகர், மகதத்தா என்ற சஞ்சிகையில் பின்வருமாறு எழுதினார் (ஏப்பிரல் 12 : 1981).
"நாங்கள் உணர்ச்சி ரீதியாக தாக்கப்பட்டுள்ளோம். எங்கள் தேசியத்தன்மை தாக்குதலுக்குள்ளாவதை நாம் பொறுக்கப் போவதில்லை. பெண்கள் விவாகத்திற்கான வயதெல்லையை கூட்டிய சட்டம், இந்திய நாட்டின் சிறப்புக்கு கறைபூசியதென்றே கருதவேண்டும். இது எங்களது துன்ப மயமான குறைபாடு. சட்டப்புத்தகத்தில் இருக்கும் இப்பகுதி எமது கீழ்த்தன்மைக்கு அளிக்கப்பட்ட ஒரு சான்றிதழாக இருக்கும்வரை நாம் அமைதி கொள்ளப் போவதில்லை".
இத்தகைய தேசியமும் இந்திய கலாசார ச் சின்னங்களைப் பேணுவதற்காக முன்வைக்கப்பட்ட வாதங் களும் கருத்தும் அன்றைய நிலையை வெளிக்காட்ட உதவும். திலகர் பெண்களது பால்யத் திருமணத்திற்கு எதிரான சட்டத்தை எதிர்த்ததன் காரணம் பிரித்தானியர் இந்தியக் கலாசாரத்தில் தலையிடுவதை விரும்பாததனாலேயே. பெண்களது அவலநிலை அர்த்தமற்ற ரீதியில் தேசியத்திற்காக கைவிடப்பட்டமை விந்தையே. சாதித்துவம், பெண்களுக் கெதிரான பாரபட்ச நிலைகள் போன்றவற்ன்ற தேசிய விடுதலைப் போராட்டக் கருத்தியல் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட போதும், தேசியவாதிகள் குடும்பத்தில் நிலவும் அசமத்துவ நிலையை அகற்றுதல் சம்பந்தமான சட்டங்களை மாற்றவோ நீக்கவோ தங்கள் ஒத்துழைப்பை நல்கவில்லை என்பது . வரலாற்றுண்மை. பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் ஆதரவு அளித்ததற்கும் வேறொரு காரணம் இருக்கவே செய்தது. பெண்களுக்கு வாக்குரிமை நல்குவது குடும்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்ததோடு, இந்திய மக்கள் ஆட்சிப்
7

Page 41
பொறுப்பை ஏற்பதற்கும் தங்களது தேசிய அபிலாசைகளை நிறைவேற்றவும் பெண் களது வாக்குரிமையும் உதவும் என்பதாலுமே அக்கோரிக்கையை ஆதரித்தனர். பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் "உரிமை, மறுவிவாகம் செய்யும் உரிமை சொத்துரிமை போன்ற இந்து சமயாசாரங்களைத் தகர்க்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் குடும்ப வட்டத்திலும் வீட்டிலும் பால் சமத்துவம் பேணப்பட வேண்டுமென்ற வாதத்தை அடிப்படையாக வைத்து சட்ட மாற்றம் செய்ய முற்பட்ட போதும் அங்கு அவர்களின் ஆதிக்க உரிமைகளுக்குப் பங்கம் வந்து விடும் என்ற பயத்தில் அச்சட்ட மாற்றத்திற்கு தேசிய வாதிகள் எதிர்ப்பையே தெரிவித்தனர். சமயாசாரங்கள் அங்கு துணைக்கழைக்கப் பட்டன.ஆனால் உத்தியோகம், கல்வி, வாக்களிக்கும் உரிமை போன்றவற்றில் ஒரு வித சமவுரிமையை முன்வைக்கும் கருத்துக்கு தேசியவாத ஆண்கள் ஆதரவு நல்கினர். ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் தேசியம், தேசப்பற்று போன்றவற்றிலிருந்து காரணங்களைக் காட்டினர். அவர்களின் கருத்துப்படி இத்தகைய சீர்திருத்தங்களுக்கு ஆதரவாய் இருந்தவர்கள் மேற்குலகக் கல்வியால் பாதிக்கப் பட்டவர்களே, ஆகவே மேற்குலக நாகரிகத்தால் கவரப்பட்ட வர்களை அவர்கள் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்கள் என்றும் தேசப்பற்று அற்றவர்கள் என்றும் கருதினார்கள்.
ஆனாலும் காலனித்துவ காலத்தில் தோன்றிய பெண் ணிலைவா த பிரக்ஞைதான் , பால் சமத் துவ உணர்வுநிலை உருவாக்கத்தின் ஆரம்பமாகவிருந்தது. இது பலவித சட்டமாற்றங்களுக்குக் காரணமாய் இருந்ததோடு பால் ரீதியான சமத்துவப் போக்கை நோக்கிய முறையான சட்ட உருவாக்கங்கள் பிற்காலத்தில் ஏற்படவும் வழிவகுத்தது.
ஆனால் இக்கால கட்டத்தின் முக்கியமான ஒரு
72

போக்கு கவனிக்கத்தக்கது. பெண்ணிலைவாத கருத்தாக்கங் களுக்கு ஆண்களும் தங்களது பங்களிப்பைச் செய்தனர். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழுவது நியாயமே. ஏன் பெண்கள் இக்காலகட்ட பெண்ணிலைவாத எழுச்சிக்கு பங்களிப்பு செய்யவில்லை? இக் கேள்விக்கு விடையை வரலாற்று ரீதியாக அணுகவேண்டும்.
玩。
எந்த வித விழிப்புணர்ச்சிகளுக்கும் காலம், இடம், என்பன முக்கிய பாத்திரங்களை வகிக்கும். பிரித்தானியர்கள் இந்தியாவை காட்டுமிராண்டித்தனமான, பிற்போக்கான நாடு என்ற ஒரு பார்வைக்குள் திணித்தனர். உடன் கட்டை ஏறுதல், சிசுக்கொலை போன்றவற்றை ஆதரிக்கும் பிற்போக்குத் தன்மையை இந்தியாவுடன் இரண்டறக் கலந்த ஒரு தன்மை எனக் கருதினர். இன்னொரு நாட்டின் சமூக பொருளாதார கட்டங்களிலிருந்து பிரித்து தனிமைப்படுத்தி அதற்குரிய காரணிகளை அலசி ஆராயாமல் பிற்போக்குப்பட்டம் சூட்டுவது சரியா என்ற ஒரு கேள்வியை நாம் எழுப்பியே தீர வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் கூட இத்தகைய பிற்போக்குத் தனங்கள் அநேகம் இருந்தன என்பது வரலாற்றுண்மை. ஆகவே இந்தியர்களை காட்டுமிராண்டிப் பார்வையுள் திணிப்பது கூட ஒரு ஏகாதிபத்தியத்தின் பேரினவாத செயலாகக் கருதப்பட வேண்டும். தாய்நாடாகிய இந்தியா பற்றிய ஏகாதிபத்தியர்களின் இத்தகைய பார்வை சுதேசிய ஆய்வறிவாளர்களை திடீரென விழிப்படையச் செய்தது. அவர்கள் மனச்சாட்சியையும் இது நெருடியதால் தமது கலாச்சாரத்தில் உள்ள அநீதியான போக்கை மீள் பார்வை செய்யத்தொடங்கினர். இதனால் இந்தியர்களே தங்களது குறைபாடுகளைக் களைந்தெறிய முன்வந்தனர்.
இதற்குரிய நடவடிக்கைகளை சுதேசிகள் மேற்கொள்ள ஆரம்பித்தபோது தமது அதிகாரத்திற்கும், ஆளுமைக்கும்,
73

Page 42
ஆதிக்கத்துக்கும் பாதிப்பேற்படாத வகையில் அவற்றிக்கு ஆதரவு தருவதில் ஆங்கிலேயர் பின்நிற்கவில்லை." குடியேற்ற நாடுகளை நாகரிகப்படுத்துவது எமது தலையாய கடமை" என்று பிரித்தானியர் அப்பாத்திரத்தை ஏற்றுக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் தேசிய வாதிகள் பெண்கள் பற்றிய பிரச்சினையில் சம்பந்தப்பட வேண்டியவர்களாயினர். இச்சந்தர்பத்தில் கூட பெண்கள் தமது பங்களிப்பைச் செய்யாதிருந்தமைக்குக் காரணம் என்ன? பெண்கள் இச்சந்தர்ப்பத்திலும், பெண் என்ற நிலையில் போதிய விழிப்புணர்வு இன்றியே தேசிய இயக்கத்தில் ஈடுபட்டனர்.
தேசியவாத இயக்க மட்டத்தில் பெண்கள் சேர்ந்தது உண்மையாயினும் தங்களது அடிமை நிலை பற்றிப்போதிய விழிப்புணர்ச்சி அவர்களுக்கு தோன்றாமலேயே இருந்தது. காந்தி கண்ட சீதை என்ற கருத்தின் உள்ளடக்கத்திலேயே பெண்கள் தங்களைத் தேடினர். மெளனம், அகிம்சை, இன்னல், எல்லாம் சீதையின் அனுபவங்கள். இவையே பெண்மை எனப் போற்றப்பட்டதை தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதேசியப் பெண்களும் ஏற்றுக் கொண்டனர். அந்தக் கருத்துக்களுடனேயே அவர்கள் சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டனர்.
74

பிற்குறிப்பு
6LI fuIIT if
1. ராமசாமி என்ற பெயர் நாளடைவில் மறைந்துபோக பெரியார் என்ற நாம கரணமே நிலைத்து நின்றது. இவர் பெண்களை இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் போராட்டங்களில் ஈடுபடத்தூண்டுகோலாக இருந்தார் என்று கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தபொழுது பெண்கள் கூட்டரங்கு ஒன்றே இவருக்குப் “பெரியார்” என்ற நாம கரணத்தைச் செய்தது என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி.
75

Page 43
gifyp ep6u Droby,óir (Primary Sources)
பாரதியார் கட்டுரைகள். வானதி பதிப்பகம் சென்னை.
1981
பாரதியார் கவிதைகள். திருமகள் நிலையம், சென்னை. 1986
1980 பெரியார் குடும்பத்திட்டம் பற்றி.
அறிவுக்கடல் அச்சம், சென்னை
1982 திரு. வி. க வாழ்க்கைக் குறிப்புகள் சைவ சித்தாந்த நூல் கழகம், சென்னை
தமிழ் உசாத்துணை நூல்கள்
கலியாணசுந்தரம் வி.க. 1919 தேசபக்தாமிர்தம், பிரிடிஷ் இந்திய அச்சகம், சென்னை.
1935, தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு. சாது அச்சகம், சென்னை.
1937. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, சாது அச்சகம், சென்னை.
1953. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை. புனித நிலையம், சென்னை.
76

பெரியார்.
1959 இராமயண உண்மை வாசிப்பு. திராவிடன் அச்சகம், சென்னை.
1971. சிந்தனையும் பகுத்தறிவும். அறிவுக்கடல் அச்சகம் சென்னை. 1987. மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி. அறிவுக்கடல் அச்சகம், சென்னை.
1987, பெண் ஏன் அடிமையானாள்? அறிவுக்கடல் அச்சகம் சென்னை.
77

Page 44
தேசிய வாத, ஏகாதிபத்திய வாதங்களின் பெண்நிலவாத முரண்பாடுகள்
பொதுவாக பெண்கள் ஒரே படிமத்தில் ஒரே தன்மைத்துடையவர்கள் என கருதப்பட்டனர். இந்த படிமத்திற் குள்ளேயே அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால் அவர்கள் பற்றிய மேலெழுந்த வாரியான பொதுமைப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு அவர்கள் எல்லோரும் ஒரே மட்டத்தில் ஒரே தன்மைத்தாக இருப்பவர்கள் என பிழையாக கணிக்கப்படுவது சகஜம். இது இனமையவாதக் கோணல்களுக்கும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களுக்கும் எம்மை இட்டுச் செல்கின்றது. இனமைய வாதம் இனவாதத்திலிருந்து மாறுபட்டது. பெண்களின் கீழ்ப்பட்ட நிலை ஒவ்வொரு வர்க்கத்துக்கும், சாதிக்கும், இனத்துக்கும், சமயத்துக்கும், தேசியத்துக்கும் ஏற்றமுறையில் மாறுபட்டுக்கிடக்கிறது என்பதை இனமையவாதம் (EthnoCentrism) காணத்தவறிற்று. இனமைய வாதத்திற்கு இன்னொரு காரணமும் காட்டலாம். பிரச்சினை களை ஆய்வாளர்கள் சமூக, பொருளாதார, அரசியல் என்று பரந்த பின்னணியில் வைத்து பார்க்காமல் தனிமைப்படுத்தி, ஒற்றையாகப் பார்க்கும் இயல்பு கொண்ட வர்களை இப்போக்கு இனமையவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது பெண்கள் எந்த இன, வர்க்க, மத, சாதிக் குரிய வர்களானாலும் · அவர் கள் ஒரே வித

வகைத்தன்மைக்குள் இடப்படுவதன் காரணம் அவர்கள் உலகரீதியாக, ஆண் களுக்குக் கீழ்ப்பட்டே தமது பங்களிப்பைச் செய்கின்றனர் என்பதே. பெண்கள் இப்படி சகல விதத்திலும் ஆண்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதன் நிலையை அறிய வேண்டுமானால் இவற்றுக்குக் காரணமாய் உள்ள சாதனங்களை ஒரு முழுமையான ஆய்வுக்குட்படுத்தவேண்டும். அப்போ பெண்கள் எவ்வாறு ஒவ்வொன்றிலுமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும். பிரித்தா னியர்கள் காலனித்துவ நாடுகளில் உள்ளவர்களை ஆசிய ஆபிரிக்க மக்களை இக்கண்ணோட்டத்திலேயே வைத்துப் பார்த்தனர். பெண்களை அந்நோக்குக்கு குறியீடாக இருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை. இதை இவ்வாறு மேலும் விளக்கிக்காட்ட முயற்சிக்கிறது.
தேசியப்பிரச்சினை
இக்கட்டுரையில் நான் பெண்கள் பிரச்சினையை தேசியப் பிரச்சினையோடு வைத்து ஆய்வு செய்யமுயன்று ள்ளேன். இச்சந்தர்ப்பத்தில் ஆட்சியாளார்களான ஏகாதிபத்திய வாதிகளதும் சகபிரஜைகளான தேசியவாதிகளினதும் கருத்துக்கள் முரண்பாடுகளைக் கொண்டிருந்தனர். இவற்றை நாம் விளங்குவதற்கு நாம் தேசியவாதம் பற்றி முதலில் அறிய வேண்டும். தேசியம் பற்றிய விரிவான கோட்பாடுகளை ஒருவரையறைக்குள் அடக்கி விட முடியாது. தேசியவாதத்தைப் புரிந்து கொள்வதற்கு நான்கு முக்கிய அடிப்படைகள் தேவை என ஒரு வாதம் உண்டு. அதாவது ஒரு இனத்துக்கென வரையறுக்கப்பட்ட நிலம் அதற்கென்ற பொருளாதார மையம், மொழி, அதற்கென்ற வரலாற்று ரீதியான பொது மனோநிலைகள் இதுவே ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசிய அந்தஸ்துக்குரியதாக்குபவையாகும். இனவாதம் என்பது Racisum ஆங்கிலப்பதத்திற்கு ஒப்ப "சாதிப்புத்தி " என்று கூறுவது
79

Page 45
போல இனங்களை வேறுபடுத்தி அவற்றுக்குரியவர்களை கீழ்நிலையில் வைத்து மதித்தல். "
தற்கால அரசியல் மொழி உருவாக்கத்தில் கல்ாச்சார இருப்பு (Cultural identity) என்றும், பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பு என்றும் (Traditional Homelands)கோட்பாட்டு ரீதியில் இதை விளங்கிக் கொள்ளலாம். இந்நான்கும் தர்க்கரீதியாக தேசிய இனம் ஒன்று உருவாவதற்கான அடிப்படைகள் இந்த நிலப்பரப்பில் இருப்பவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டாலோ அன்றி அரச வன்முறைக்கு இராணுவ ரீதியாக உட்படுத்தப்பட்டாலோ அவர்கள் எதிாப்புத் தெரிவிக்க முனைவர். இப்படிப்பட்ட ஒடுக்கு முறைகள் புரட்சியைத் தூண்டும் உணர்ச்சிகளுக்கு அடிகோலுகிறது. இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்து தங்கள் உரிமைகளுக்கு போராட எத்தனிப்பர்.
இங்கு பெனனிக்ட் அன்டசனால் (Benedit Anderson) எண்ணக்கருவில் உருவாகும் மக்கட் கூட்டம் என்ற நூலில் (Imagined Communties) கூறப்பட்ட கருத்தும் முக்கியமானவை அதைவிட முக்கியமான ஒரு விடயத்தையும் இங்கு கூறியே தீரவேண்டும். சமூகமக்கள் பல வகையான பகுப்புக்களில் அடங்குவர் அப்பகுப்புக்கு மையமாக அமையும் வரையறைகள் பல சாதி, சமயம், இனம், வர்க்கம், பால்நிலை என்ற ரீதியில் அமையும் அவற்றிற்கு ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் மரபு கோட்பாட்டு ரீதியில் உண்டு. மாக்ஸிச கோட்பாடு வர்க்கத்துக்கே முதன்மையான ஸ்தானத்தை அளிக்கிறது. தேசிய இன, சமய சாதீய பால்நிலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மக்கள் குழுக்கள் சமூகரீதியில் முக்கியத்துவமற்ற தற்காலிக இருப்புக் குழுக்கள். இவை மேல் வர்க்கத்தாரால் திட்டமிட்டு விதைக்கப்பட்ட 'பிரிவினைகள்' இவை காலப்போக்கில் மறைந்துவிட வர்க்கமே
80

மேலோங்கி வர்க்கப் போரே மானிடரின் விடிவை நிர்ணயிக்கும
என்பது அவர்களது வாதம்.
இன, மத, மொழிக் கூட்டு என்பவற்றுக்கு மேலான வையாக வர்க்கப்பார்வையை மார்க்சீயம் முன்வைக்கிறது. மொழி, மத, இன, ஆண்-பெண் என்னும் பால்வேறுபாடு எல்லாம் முதலாளித்து அமைப்பால் செயற்கையாக உள்நுழைக்கப்பட்டு பேணப்படும் இரண்டாந்தர அம்சமாகும் என்று மார்க்சீசம் கூறுகிறது. மேலும் செவ்வியல் மார்க்சீயம் ஓர் இனத்தின் மொழி கலாசார அடையாளங்கள் என்பவை வர்க்கப் போராட்ட முடிவில் ஒரு வர்க்கமற்ற சமூகம் ஏற்படும்போது இல்லா தொழிந்துவிடும் என்று கூறுகிறது.
கருத்தியலின் (Ideology) ஒரு அங்கமான கலாச்சாரமும் கலாச்சார இருப்புகளும் பொருளாதார அடித்தளத்தின் காரண காரிய வெளிப்பாட்டுத் தொடர்பே. பொருளாதார நிலை -அதாவது வர்க்க விமோசனம் ஏற்பட்ட கலாச்சார இருப்பு நிலைகள் அழிந்து போகும் என்கிறது மாக்ஸிச வாதம். இது பொருளாதாரத்துக்கு ஒரு அதிமுக்கிய ஸ்தானத்தை அளிக்கிறது ஆனாலும் தற்போதைய மாக்ஸிச வாதிகளால் தேசியமும் முக்கியமானது என அங்கீகரிக்கப்படும் ஒரு அங்கலாய்ப்பு நிலை தோன்றியிருக்கிறது. மார்க்ஸ் கூட ஜரிஷ் மக்களின் தேசிய உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து அதை ஆதரித்தவரே. ஆனாலும் தேசியத்தை இரண்டாம் பட்சமாக்கி ஆங்கிலேயே நாட்டு தொழிலாளரின் வர்க்கப் போராட்டத்தை நீங்களும் சேர்ந்து ஆதரியுங்கள் என அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை அவர் முன் வைத்தார்.
லெனின் ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்ச வளர்ச்சி எனக் கூறினார். ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட தேசியமக்களின் கலாசார இருப்புக்கள் பற்றி அதிகம்
x
81

Page 46
பேசவில்லை. ஆனால் மார்க்சீயம் தேசியவாதத்தை முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்கொரு முன்னேற்பாடாய் அமையும் ஒன்றாகவே கொள்கிறது.
ஆனால் இன்று வர்க்கப் பிரிவுக்குள்ளே நிலவும் சமயம், இனம், தேசியம் சம்பந்தமான பிளவுகள் ஏன் ஆண் பெண் என்று இருபாலாரிடையே நிலவும் பிளவுகள் மார்க்சீய எல்லைக்குள் அடக்கப்பட முடியாதவையாகும். இன்று பால்நிலை பிரிவினை வாதத்தை மட்டும் பேசமுடியாது. இன்று ஆண் ஆதிக்கத்தை ஏகாதிபதித்தியம், இனவாதம், பெரும்பான்மைவாதம் (இன, மொழி, சமய) என்பவற்றோடு சமமாகப் பார்க்க வேண்டும். சர்வதேசியம் (Internationalism) என்பது மார்க்ஸிஸ ரீதியிலும் பெண்நிலை வாதிகளுக்கும் ஒரு எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஆகவே இன்றைய தேசியம் என்பது இரண்டு பரிமாணங்களை உடையது. ஒன்று தம்மைச் சுரண்டி எல்லா வளங்களையும் சூறையாடிய ஏகாதிபத்தியிலிருந்து விடுதலை பெறுவது. ஆசியா ஆபிரிக்கா கண்டங்களில் இது ஒரு இராணுவ ஆதிக்க நிலைக்குட் பட்டிருந்த வன்முறையையும் கூட தழுவி இருந்த ஒரு தொடர்பாயிருந்தது.
இரண்டாவது, ஏகாதிபத்திய வாதிகள் விட்டுச் சென்ற குடியேற்றநாடுகளில் மொழி, இன கலாசாரங்களால் வேறுபட்ட சிறுபான்மைத்தேசிய இனங்கள் தலைதுாக்கி யமையேயாகும். ஏகாதிபத்தியவாதிகளால் செயற்கையாக ஒன்று கூட்டப்பட்ட ஆட்சிஅமைப்புக்குள் இருந்த பல்லினக் குழுக்கள் தமக்குரிய தேசிய சுயாதீனத்தைப் பேண முயன்றன. இவ்வேளை அவை அந்நாட்டுப் பெரும்பான்மை தேசிய இனத்தால் அடக்கப்பட்ட போது எதிர்ப்பும் போராட்டமும் கிளம்பின.
82

இவ்விடத்தில் இவ்விளைவுகளை மார்க்சீயபார்வையின் இரு நோக்குகளில் இருந்து பார்க்க வேண்டும். சுகந்திரம் கிடைத்த ஒரு குடியேற்ற நாட்டில் சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று நினைப்பதும் தனது தனித்துவமான கலாசார இருப்புக்களை பேண வேண்டும் என்று நினைப்பதும் பொருளாதார காரணங்களுக்காகவே என்பது சரியே. (அதாவது பெரும்பான்மையினரால் அதன் பொருளாதாரம், அந்தஸ்து, ஆற்றல் யாவும் சுரண்டப்படுவதே காரணம்) இங்கு இரண்டாவதே நமது பிரச்சனைக்குரிய விஷயமாகும். இவ் விஷயத்தில் நாம் மார் க் சீயம் காட்டும் வியாக்கியானங்களோடு முரண்படவே வேண்டியுள்ளது.
விடுதலை பெற்ற குடியேற்ற நாடுகளில் அங்குள்ள் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார சமூக நன்மைகள் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்படவில்லை. இனரீதியாக சமமற்ற முறையிலேயே பிரிக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மேல்வர்க்கம் பெரும் பான்மை இனத்தின் மேல்வர்க்கம் போல் எவ்வளவோ வசதிகளை அனுபவிக்கும் செளகரியம் பெற்றிருந்தபோதும் அது தனது சிறுபான்மை இனத்தின் மொழிகலாசாரங்களோடு தன்னை இணைத்துக்கொள்ளவே விரும்பியது. விடுதலை பெற்ற குடியேற்ற நாடுகளில் ஒரு பொதுவான அரசியல், கலாசாரம் என்பது இருக்கவில்லை. இந்நாடுகளில் முக்கிய அம்சமாக முதன்மை பெற்றது இன ரீதியான அம்சமே. (அதாவது மொழி, கலாசாரம், மதம் ஆகியவை) இதனால் இந்நாடுகளில் இன மொழிரீதியான போராட்டங்கள் தலையெடுக்க வர்க்க ரீதியான சிந்தனை பின்னடைந்தது. இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் சிறுபான்மை இனங்களின் இனமொழிfதியான போராட்ட ங்களில் அவர்களுக்குள்ளேயே சாதிரீயாக, பொருளாதார
83

Page 47
ரீதியாக, சமயரீதியாக, சமூகரீதியாக ஒடுக்கப் படடிருநத சுரண்டப்பட்டிருந்த மக்கள் சகலரும் தம்மை ஒடுக்கிய மேல் வர்க் கத்தோடு இணைந்து இப்போராட்டங்களில் பங்குகொண்டதே. மேலும் பெண்ணிலைவாதம் பற்றிய பிரச்சனை இங்கு பெரிய அளவில் நிலவாதபோதும் பெண்ணிலைவாதத்திற்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட பலரும் ஆண்களோடு சேர்ந்து இவற்றில் பங்கெடுத்தனர்.
இப்போராட்டங்கள் பற்றி மார்க்சீயவாதிகள் பின் வருமாறு கேள்வி எழுப்பலாம். மொழிசம்பந்தப்பட்ட அப்போராட்டங்கள் மொழியால் பயன்அடையும் மேல்வர்க்க த்துக்கே தேவையான ஒன்றாகும். இதனால் தொழிலாளர் பெறப்போவது ஒன்றுமில்லை. முதலாளித்துவமும் தொழிலாள வர்க்கமும் ஒரே மொழியைப் பேசினாலும் ஒரே கலாசாரத்துக் குரிவர்கள் என்று கூறமுடியாது. இவை போன்ற கருத்துக்கள் சரியானவையாக இருந்தபோதும் கலாசார ரீதியாக வெளிக் கொணரப்படும். தேசியவாதத்தின் தன்மைகளை மார்க்சீய வாதிகளும் நவீன மார்க்சீய வாதிகளும் உணரத் தவறியுள்ளனர் என்ற வாதத்தையும் நாம் அடிக்கடி கேட்கி றோம். ஒர் இனத்தின் அடையாளமாக, அவ்வினக் கூட்டத்தின் கூட்டு வாழ்வின் உந்து சக்தியாக, உயிர்ப்பாக இருக்கும் மொழி, மரபு, அதன் பழக்க வழக்கங்கள் அவர்கள் வாழும் நிலத்தின் சூழல் யாவுமே ஒர்சக்திமிக்க பிணைப்பாக ஒவ்வொரு இனத்தையும் அணைத்து அடையாளம் காண வைக்கிறது. இந்த இணைப்பில் அவ்வினம் கொள்ளும் திருப்தியும் வாழ்வும் பொருளாதார ரீதியான பார்வையில் மட்டும் விளக்கக் கூடியனவல்ல என்பது உறுதி.
அதேநேரம் இவ்வாதம் ஒர் இனவாதத்தையோ அல்லது
மேலான கீழான கலாசாரப் பாகுபாட்டையோ நான் முன் வைப்பதாகக் கருதக்கூடாது. ஆனால் ஒவ்வொரு கலாசாரமும்
84

தன்னளவில் தனித்தன்மையானதும் சமூக ஆரோக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கக் கூடியதுமாகும்.
இன்று தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு சமூக விடுதலைக்கான போராட்டத்தையும் தன்னுடைய முக்கிய அம்சமாகக் கொண்டுள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும். வர்க்கம் சாதி, பால்நிலை மட்டங்களில் தோன்றும் ஒடுக்குமுறைகளும் தேசிய விடுதலைப் போராட்டத்ததுடன் இணைந்து ஒரு பூரண விடுதலையை மக்களுக்குத் தர வேண்டும் என்பதே சோஷலிச பெண் நிலைவாதிகளின் கொள்கை, ஏக்கம், அபிலாஷை, மேலும் மார்க்சீயவாதிகள் சோஷலிஸப் புரட்சிக்கு தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு முன்னவசியம் என்று கூறுகின்ற நிலைக்கும் வந்துவிட்டனர்
இச்சந்தர்ப்பத்தில் பென்டிக்ற் அன்டேர்ஸன் (Benedet Anderson) என்பவரின் ஆய்வோடு எனது கட்டுரையின் இப்பகுதியை இணைத்து முடிக்கலாம் என எண்ணுகிறேன். -916) (D565) Lu guil 6, (Imagined Communities) (c. 67 (péd கொள்ளும் தேசிய இனத்தின் தனித்துவமிக்க கலாசாரம் என்பது மனோரதிய கற்பனாவாதமிக்கதாய் ஒரு புனிதமான மொழியில் வெளிப்பாடுகாண்கிறது என்பதாகும். இதற்கு இன்றைய தொலைத்தொடர்பு சாதனங்கள் ( Print Capitalism) உதவுகின்றன. 18ம் நூற்றாண்டில் வேர்கொண்ட பல்வித தேசிய எழுச்சிகளை இத்தகைய தொடர்பு சாதனங்களை ஆக்கிரமித்த ஆய்வறிவாளர் ஆற்றுப்படுத்தினர். இதனையே இவர் "எண்ணத்தில் உருவாகும் சமூகங்கள்" எனத் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார். இவர் காட்டும் தரவுகள் அறிவுபூர்வமாகவும் விஞ்ஞான தர்க்க ரீதிக்குரியதாக இருந்த போதும் இன்னும் பல விளக்கப்பட வேண்டியனவாய் உள்ளன. அப்படிப் பார்க்கப்போனால் தேசிய உணர்வு
85

Page 48
என்பதும் கற்பனை ரீதியானது எனப்புறந்தள்ளி விடக்கூடிய ஒன்றா? நிலக்கிழார் வர்க்கம், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர் க்கம், விவசாயி வர் க்கம் என்னும் வழமையான வர்க்கங்களுக்கு மாற்றாக இவர் கூறும் "துவித கூட்டணி" வர்க்கம் இன்று ஆசிய ஆபிரிக்க நாடுகளிடையே புதிய பரிமாணத்தை தேசியவாத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதும், அதனால் பழைய கோட்பாடுகள் இவற்றின் அடிப்படையில் மீள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதும் உண்மையே.
இதன் பின்னணியில் பெண்கள் எவ்வாறு அணுகப் பட்டனர் என்பதைப்பார்ப்பதே இவ்வாய்வின் நோக்கம் இது இரண்டு விதமான அணுகு முறைகளைக் கொண்டுள்ளது. முதலாவது குடியேற்றவாதத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராக தேசியவாதம் எழுச்சிகொண்டபோது பெண்களின் பங்களிப்பு எப்படி இருந்தது என்பது. இரண்டாவதாக, நாம் மனங்கொள்ள வேணி டியது என்னெவன்றால் தேசங்களுக்குள் இடம் பெற்ற தேசிய இனங்களின் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானதாக இருந்த போதும் அவர்களது நிலை இன்று வரை முரண்பாடு களுக்குரியதாகவே உள்ளது.
ஏகாதிபத்தியத்தோடு முரண்பட்டுநிற்கும் சீர்திருத்தவாதம்
இந்தியா, பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது அதன் பிற்போக்குத்தன்மை கலாசார ரீதியாகச் சுட்டிக் காட்டப்பட்டது. சாதி முறை, மத மூடநம்பிக்கைகள், உடன் கட்டை ஏறுதல் போன்ற பெண்களுக்கான சடங்குகள், முக்காடிட்டு (Purdah) பெண்களை ஒடுக்கிவைத்திருக்கும் முறைமை போன்றவை எல்லாம் " இந்தியாவின் பிற்போக்குத் தன்மைக்கு" எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்டன. இவை
86

இந்தியாவின் மதங்களுடன் பெருமளவில் இணைக்கப் பட்டதாக இருந்தது நோக்கற்பாலது. இதனால் இந்தியாவின் மனச்சாட்சி எழுச்சி பெற்றது. இந்தியாவின் ஆய்வறிவாளர் எனச் சொல்லப்பட்டோர், இந்து சமயத்தை புனருத்தாரனம் செய்து பழைய வேத மரபுக்கேற்ப அதை வியாக்கியானம் செய்து வேதகாலமே பெண்களின் பொற்காலம் என வர்ணித்தனர். ராம் மோகன்ரோய் நனாடே(Ram Mohan Roy, Ranade) போன்றோரால் இது ஒரு வாதமாக முன்வைக்கப் பட்டது. ஆனாலும் பெண் விடுதலை வாதம் இந்தியத் தேசியத்தின் ஒரு கோணமாக பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதும் உண்மையே. இந்தியத் தேசீய எழுச்சி இந்தியாவின் உள்ளுணர்ச்சிகளைத் தட்டி எழுப்பியது. தங்களது சாதீய, பெண்ணடிமைவாத குறைபாடுகள் தெட்டத்தெளிவான பிற்போக்குச் சக்திகள் என சில அறிவாளர்கள் உணரத் தொடங்கினர். இக்காலகட்டத்தில் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்களிடையே காணப்பட்ட சாதிப்பாகுபாடு, பெண் அடிமை, போன்ற குறைபாடுகள் வெளிக்கொணரப்பட்டன. பெண்கள் பெருமளவில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றினர். தமது கலாசாரமே தமது தாழ்வுக்குக் காரணமென பெண்கள் கூறினர். சுதந்திரப் போரட்டத்தில் பெண்களும் சேர்ந்து கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் விதவைகள் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறக் கட்டாயப்படுத்தப்பட்டமை போன்ற பெண்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகளை முன்வைத்து இந்தியா சுதந்திரத்துக்கு தகுதியற்றதாக இருப்பதாக ஆங்கிலேயர் கருதினர் என்றும் கருதப்பட்டது (Jonna Liddle, & Ram Joshi).
அதேநேரத்தில் ஆங்கிலேயர் உடன் கட்டை ஏறுதல், பால்ய விவாகம், விதவைகளுக்கு மறுமணம்புரிய மறுத்தமை
87

Page 49
போன்றவற்றுக்கெதிராகச் சட்டங்கள் கொண்டு வந்தபோதும் அவர்கள் உண்மையில் அதில் ஸ்திர - மற்ற போக்கையே கடைப்பிடித்தனர். அதனால்தான் மோகன்ராய் போன்ற வர்கள் உடன் கட்டை ஏறுதலுக் கெதிராகக்சட்டம் கொண்டு வர மறுத்த ஆங்கிலேய ஆளுனருக்கெதிராக (Privy Council) மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது எதைக்காட்டுகிறது? ஆங்கிலேயர் அன்றைய சீர் திருத்தக் கருத்துக்களால் கவரப்பட்டபோதும் இந்தியாவில் அம்மக்களின் நம்பிக்கைகள், சடங்குகளுக்கு எதிராகப் போகவிரும்பவில்லை. இதன்மூலம் அம்மக்களைப் பகைத்துக் கொண்டு தமது ஏகாதிபத்திய நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளவிரும்பவில்லை. இந்நிலையானது ஆங்கிலேயர் சீர்திருத்தவாதமா? ஏகாதிபத்தியமா? என்ற இரு நிலையில் தமது நலன் பேணும் ஏகாதிபத்தியத்தையே தெரிவு செய்தனர் என்பதைக் காட்டுகிறது. அதே போல தேசியவாதிகளும் பெண்களை வதைக்கும் மரபுகளையும் தங்கள் கலாசாரத்துக்குள் அடக்கி அவற்றை அகற்றுதல், தங்களது கலாசார உரிமைகளை அவமதித்தல் என்று நிலை நாட்ட முற்பட்டனர். இதனாலேயே (Privy Council)
வரை சென்றனர்.
GLDG), b 5 g, p76ór LD TGu T (Katharine May mjn nghyo) போன்றவர் தமது நூலான 'அன்னை இந்தியா' வில் இந்தியாவின் பிற்போக்குத்தன்மையை காரணம் காட்டி இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் வழங்கப்படக் கூடாது எனக் சொல்கிறார். இதுபற்றி நீயூஸ்ரேற்மனி, நேஷன் (New Statesman, Nation) போன்ற பத்திரிகைகள் விமர்சிக்கையில் இந்தியப் பெண்களின் நிலையானது ஆபிரிக்காவிலும் அவுஸ்திரே லியாவிலும் வாழ்ந்த காட்டுமிராண்டிப் பெண்களின் நிலையை விட மோசமாய் இருப்பதாய் கூறின. இக் கூற்று ஏகாபத்தி யத்தின் ஒரு தீவிரக்குரல் என்றே கணிக்கப்படவேண்டும்.
88

இந்தியாவிற்கு சுகந்திரம் மறுக்கப்பட்டமைக்கு இந்தியாவின் பிற்போக்குத் தன்மைகளைக் காரணம் காட்டியமை ஒரு பாரிய இனவாதத் தன்மையே ஆகும். ஐரோப்பாவின் வரலாற்றில், பெண்களை சூனியக்காரி (Burning of witches) என்று எரித்தமையையும், பெண்களது உள் உறுப்பில் "கற்புப்பட்டியல்" (Chastity Belt) என்று ஒன்றை அணிவித்து அவர்களைக் உடல்ரீதியான கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையும். அவர்களது பிற்போக்குத் தனம் தான் என்பதை மாயோ கத்தரீன் ஐரோப்பிய வரலாற்றிலிருந்து மறைத்து விட்டார். இப்படி ஒரு இனவாதக் கண்ணோட்டத்தில் தான் இந்தியா மட்டுமே பிற்போக்குக் கொள்கைகளை கொண்டிருந்தது என்று கூற முடியும்.
ஏகாதிபத்திய வாதிகளின் தந்தைவழிக் கொள்கைளால் பாதிக்கப்பட்ட குடியேற்ற நாட்டுப் பெண்கள்
இதே காலத்தில் மேற்குநாட்டார் (ஆங்கிலேயர்) குடியேற்ற நாடுகளில் கடைப்பிடித்த கொள்கைகளில் முரண்பாடுகள் சிலவும் காணப்பட்டன. அதாவது அவர்கள் அமுல்படுத்திய சட்டங்களை விட ஏற்கனவே குடியேற்ற நாடுகளில் பெண்கள் உரிமை சம்பந்தமாக நடைமுறையில் இருந்த சட்ட வழமைகள் மிக முற்போக்கானவையாக இருந்தன. இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணம் இலங்கையில் 18031833 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியரினால் றோமன் டச்சு சட்டம் விதிக்கப்பட்டமை யானது மிகவும் சமத்துவமான சட்ட அமைப்புக்களை கொண்ட மூன்று பிரதான விடயங்களின் மாற்றத்திற்கு வழிகோலியது என(ஒபயசேகர (1967) கூறியுள்ளார்.
1.திருமணத்தில் பொதுச் சொத்து என்ற கருத்து
அறிமுகப்படுத்தப்பட்டது. அது பெண்களுக்குரித்தான
89

Page 50
சொத்து என்ற வழக்கமான கருத்திற்கு புறம்பானதாக இருப்பதுடன், மனைவியின் சொத்தை கணவனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் வழிகோலியமை,
2. ஆணுக்கும் பெண்ணுக்கும் சொந்தமான பரம்பரைச்
சொத்து பற்றிய சட்டங்களை மாற்றியமை.
3. சிங்கள மக்களின் இலகுவான விவாகரத்துச்
சட்டங்களின் அடித்தளங்களை மாற்றப்பட்டதுடன் றோமன் டச்சுச்சட்டத்தின் தந்தை வழிச்சமுதாய அமைப்புக் கருத்தினையும் அறிமுகப்படுத்தியமை, அவர்களது சட்டம் விபச்சாரம், கைவிட்டு ஓடுதல் ஆகிய இரு சந்தர்ப்பங்களில் மட்டுமே விவாகரத்தை அனுமதித்தது.
இதே பண்பையே தமிழர்கள் தேசவழமைச்சட்டத்தின் மூலம் அனுபவித்த நன்மைகள் பறிக்கப்பட்டதின் மூலமாகவும் நாம் காணலாம்.
இவ்வாறே இந்தியாவில் கேரள நாட்டில் நாயர் குடும்பங்கள் மத்தியில் பெண்கள் மிகத்தாராளமான சுதந்திரப் போக்கை அனுபவித்தனர். மணமகனைத் தெரிவு செய்வதுகூட பெண்ணின் கையிலேயே விடப்பட்டிந்தது. தந்தையே குடும்பத்தின் தலைவன் என்ற நிலையே அங்கு இருக்கவில்லை. பெண்கள் சுயாதீனம் உடையவர்களாய் இயங்கினர். இத்தகைய ஒரு உரிமை கோரும் போக்கு ஆங்கிலேயரின் சட்ட திட்டங் களால் இல்லாமல் போயின.
பெண்கள் உடன் கட்டை ஏறுவது, விதவைகள் மறுமணம்
செய்வதை மறுப்பது போன்றவற்றையெல்லாம் கண்டித்த ஆங்கிலேயர் நாயர் குடும்பங்கள் பெண்களுக்கு வழங்கிய
90

குடும்பத்தலைமை, பாலியல் சுதந்திரம் கடைப் பிடிக்கப்பட்ட நல்ல சட்டங்களையும் புறந்தள்ளினர். அவர்களது ஆண் ஆதிக்க பார்வையில் இவ்ை "பிற்போக்கானவையாக" ஒதுக்கப்பட்டன. இதனால் பெண்கள் இயக்கங்கள் பிரித்தானி யரால் பறிக்கப்பட்ட தமது உரிமைகளுக்காகவும் இங்கு (கிழக்கு நாடுகளில்) போராட வேண்டியவர்களாய் உள்ளனர்.
தேசிய விடுதலைக் கோட்பாடும் பெண்களினி சமத்து வமின்மையும்.
தேசிய விடுதலைப் போராட்ட காலத்திலும் பெண்கள் பிரச்சினை ஒரு வகையான சந்தேக நோக்குக்குரிய தீர்க்கப் படாத முரண்பாடுகளைக் கொண்டதாகவே இருந்தது. சாதிப் பாகுபாடு, ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகள் பற்றி தேசியப் போராட்ட இயக்கங்கள் கவனமெடுத்த போதும் குடும்பச்சட்டங்கள் சம்பந்தமான மாற்றங்கள் பற்றி அவர்கள் விடாப்பிடியாக பழைய போக்கையே கைக்கொண்டனர். தனிப்பட்ட குடும்பத்தோடு சம்பந்தப்படாத பொதுவான விஷயங்களில் பெண்களுக்கு உரிமை வழங்குவதற்கு இவர்கள் மிகுந்த உற்சாகம் காட்டினர். உதாரணமாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் இவர்கள் முற்போக்காக இயங்கினர். காரணம் இது இவர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கு பெரிய அளவில் உதவும் என்பதால். ஆனால் அதே நேரத்தில் அகில இந்திய பெண்கள் மாநாடு, பெண்களின் விவாகரத்து சம்பந்தப்பட்ட இந்து மதச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கோரிய போது இவர்கள் அதற்கு ஆதரவு காட்ட வில்லை. எங்கெங்கு குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆண்களின் ஆதிக்கம் பாதிக்கப்பட்டதோ அங்கெல்லாம் இவர்கள் பெண்கள் உரிமைகளை வழங்கத் தயாராய் இருக்கவில்லை. மாறாக கல்வி, உத்தியோகம், வாக்குரிமை போன்ற பொது விஷயங்களில் அவர்களுடைய ஆதரவு
9

Page 51
அமோகமாய் இருந்தது. ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் பெண்கள் மாற்றம் கோரிய போது பெண்கள் மேற்கத்தைய ஏகாதிபத்தியச் செல்வாக்கால் பாதிக்கப்பட்டு தேசியப் பற்றில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று முன்னுக்குப்பின் முரணாய் வாதாடினர்.
ஒர்புறநடை
பெண்கள் பிரச்சினையில் தென்னிந்திய திராவிட இயக்கங்கள் ஏனைய இந்திய தேசிய இயக்கங்களின் போக்கிலிருந்து முற்றாக மாறுபட்டவையாய் ஒர் முன்மாதிரி யான போக்கைக் கடைப்பிடித்தன. இந்தியாவின் சுதந்திரத் திற்குப் பின்னர் எழுச்சிகொண்ட இவ்வியக்கம், காலங்காலமாக இருந்து வந்த சாதி அமைப்பு முறை மதமூடநம்பிக்கைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றுக் கெதிராகப் போராட முன்வந்ததோடு பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் போராடுவதில் தமது முக்கிய நேரத்தைச் செலவழித்தனர். பெண்களின் பால்யத்திருமணம், விதவை மறுமணத்துக்கெதிரான சட்டம், சீதனக் கொடுமை போன்றவற்றுக்கெதிராக இவை போராடின.
இவ்வியக்கங்கள் தமது போராட்டத்தை எழுத்தில் மட்டுமல்லாது செயலிலும் காட்டியதே அடுத்த முக்கிய அம்சமாகும். இவ்வியக்கங்களின் தலைவர்கள் மேடைகளில் இவற்றுக்கெதிராக முழங்கியதோடு ஊர் ஊராகச் சென்று தமது தலைமைகளில் பலவித சீர்திருத்த திருமணங்களையும் சாதிப் போராட்டங்களையும் நடத்திக் காட்டினர். மேலும் தமிழ்மக்களைப் பிடித்திருத்த இம்மூடப்பழக்க வழக்கங்கள் "ஆரிய மாயை' என்றும் பிராமணரால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஆரியமயப்படுத்தல் என்றும் வாதாடினர். சமஸ்கிருத மனுசாஸ்த்திரங்கள், ராமாயணம், மகாபாரதம்
92

போன்ற புராணங்கள் இன்னோரன்ன யாவும் ஆரிய மயப் படுத்தலின் வெளிப்பாடு என்றும் பெண்களின் அடிமை நிலைக்கு இவையும் ஒரு காரணம் என்றும் வாதாடினர். இவற்றின் பின்னணியை வைத்துக் கொண்டு பார்க்கும் போது ஒரு தேசத்தின் கலாசாரம் எப்பொழுது மீள்கட்ட மைப்புக்கும் புனருத்தாரணத்துக்கும் உள்படுத்தப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் பெண்களும் அங்கு ஆண்களிலிந்து ஒரு வித்தியாசமான பிம்பத்தோடு சமத்துவமான நிலையிலோ ஒடுக்கப்பட்ட நிலையிலோ பங்கெடுத்துக் கொள்கிள்றனர். புதுமறுமலர்ச்சிக்கான அளவு கோல்களாய் அவர்களே நிற்கின்றனர் என்பதும் உண்மை.
மதமும் பெண்களும்
மொழி இனரீதியான தேசிய எழுச்சிக்கு உந்துசக்தியாக இருந்த மதம் பெண்கள் விஷயத்தில் மிகுந்த பிற்போக்குத் தனத்தையே உருவாக்கிற்று. தேசிய எழுச்சியின் போது கலாசார ரீதியான அடையாளத்தைப் பேணுவது என்பது பெண்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்திற்று. 1891ல் பெண்களின் திருமண வயது சம்பந்தமான சட்டவாக்கம் (age ofconsent bill - 1891) பற்றிய பிரச்சினையின் போது இந்திய தேசியப் போராட்ட முன்னணித்தலைவர்களில் ஒருவரான திலகர் கூட அதற்கு எதிராகவே குரல் கொடுத்தார். (Yogendra Singh 1973-74) என்றால் நிலைமையைவிளங்கிக் கொள்ளலாம். ஆங்கிலேயர் இந்தியக் கலாசார மரபுகளில் தலையிடக் கூடாதென்பதே அவர்களின் வாதமாயிருந்தது. இக்காலத்தில் தான் வங்காளத்தில் 14% வீதமும் பம்பாயில் 10% வீதமும் சென்னையில் 4.5% வீதமும் என்று இந்துப் பெண்கள் பத்து வயதுக்குள் திருமணம் செய்யப்பட்டோ விதவைகளாக்கப் பட்டோ இருந்தனர்

Page 52
இவ்வாறே முஸ்லிம் பெண்களும் மதச்சட்டங்களைத் துணையாகக் கொண்டு அடங்கி ஒடுக்கப்பட்டிருந்தனர். கணவனால் கைவிடப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தனது கணவனிடம் ஜிவனாம்ச பனங்கோருவது இஸ்லாம் மதத்துக்கு விரோதமான அபச்சாரமாகக் கருதப்பட்டது. சாவோ)ாபானோ (Shao-Bano) என்னும் முஸ்லிம் பெண்மணிக்குச் சார்பாக ஜீவனாம்ச பணம் வழங்கும் தீர்ப்பை நீதிமன்றம் பிரகடனப் படுத்திய போது, இதற்கு முஸ்லீம் அடிப்படை வாதிகள்பலத்த எதிர்ப்பைக் காட்டினர். முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்கள் இறைவனால் உண்டாக்கப்பட்டவை என்றும் அவற்றை மனிதர் மாற்றமுடியாதென்றும் எதிர்ப்புகள் கிளம்பின. “இஸ்லாம் மதத்துக்கு ஆபத்து" என்று சுலோகங்கள் எழுப்பி பம்பாயில் ஊர்வலங்கள் நிகழ்த்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஷயங்களில் சட்ட மாற்றங்களைப் புகுத்துவது பல உணர்ச்சி கரமான எதிர்ப்புகளை விளைவித்தது.
ஆகவே பெண்களின் நிலை இந்தியா, இலங்கை போன்ற கிழக்கத்தேய நாடுகளில் பழையநிலையிலேயே தொடர்ந்தது. ஆண் பெண்கள் இருபாலரும் சமமானவர்களே என்று அரசியல் சட்டம் கூறியபோதும் மதங்களின் பேரில் காலங்காலமாக வந்த நம்பிக்கைகள் பெண்களை ஆண்களின் ஆதிக்கத்துக்குள் கட்டுப்படுத்தியே வைத்தன. மேலும் பெண்களுக்கென்று ஒரு பொதுவான எங்கும் சமமான சலுகைகள் உரிமைகள் உள்ளதுமான ஒரு சட்டவாக்கத்தை உருவாக்குவது சாத்தியப்படவில்லை. பெண்களுக்கு என்று பொதுவான (Uniform Code of law)சட்டவாக்கத்தை இந்தியப் G) 6579,6 GgistrfuG Tg5JD (Report ofThe Status of Women in 1975) அது நிறைவேற்றப்படவில்லை. காரணம் மதரீதியாக ஒவ்வொரு மதத்துக்கும் உரிய சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்கள், சடங்குகள், சட்டங்கள் இதற்குத்தடையாக இருக்கின்றபடியால் அது நிறைவேற்றப்படவில்லை இதனால் பெண்கள்
94

பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்படிப் பாதிக்கப்பட்ட பெண்கள் சம்பந்தமாக அபிப்பிராயங்கள் அறியப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லை. காரணம் ஆட்சியில் இருந்தவர்கள் நடைமுறையில் காணப்பட்ட போக்கை குழப்ப விரும்பவில்லை. ஆட்சியிலுள்ளோர் இவற்றில் தலையிட்டு மாற்றங்களை கொண்டு வருவதன் முலம் தீவிரவாத மதக்கோட்பாட்டாளர் களின் பகைமையையும் அதனால் அவர்கள் தமது அரசியல் அதிகாரங்களையும் இழக்க விரும்பவில்லை. அதனால் ஒருவரின்கலாசாரம் எத்தகைய பின்தங்கியதாகவோ பழைமை வாய்ந்ததாகவோ இருந்த போதும் அவை பேணப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது. ஏனெனில் அதுவே எமது தேசியத்துக்குரியது அதில் விளைவிக்கும் மாற்றங்கள் நமது தேசியத்தை அந்நியப்படுத்தி விடும் எனவும் கூறப்பட்டது. கலாசார உரிமை அவை எனவும் விவாதிக்கப்பட்டது.
தேசிய விடுதலைப் போராட்டமும் அதனால் பாதிக்கப்படும் பெண்களும்
நவீனத்துவம் எல்லாம் மேற்கத்தையமயப்படுத்தல் எனக்கூறப்பட்டு நிராகரிக்கப்படும் ஒரு போக்கு எழத் தொடங்கிற்று. மேற்கத்தைய கலாசாரத்துக்கு எதிராக ஒருவர் தனது கலாசார அம்சங்களைத்துரக்கிப் பிடிக்கும் நிலை ஏற்பட்டதால் எமது கலாசாரத்திற்கு காணப்பட்ட அடக்குமுறைச்சட்டங்களை அகற்றுவதற்குரிய வாய்ப் பில்லாமல் போயிற்று. இது பெண்களையே அதிகம் பாதித்தது. குடியேற்ற நாட்டுகளில் எஞ்சிநின்ற மேற்கத்தைய பழக்கவழக்கங்களுக்கு எதிராக பழைய கிழக்கத்தேயக் கலாசாரப் பண்புகள் வேதமரபுகள் மீட்டெடுக்கப்பட்டன. உடை, உணவு, பேச்சு, மொழியாவற்றிலும் மேற்கத்தையப்
95

Page 53
பண்புகள் கைவிடப்பட்டு பழைய கலாசார சமய மரபுகள் வரவேற்கப்பட்டன. முஸ்லிம் பெண்கள் தங்களை முஸ்லிம்ளாகளாகவும், இந்தியப் பெண்கள் தம்மை. இந்துப் பெண் களாகவும, இலங்கையில் சிங் களப் பெண் கள் பெளத்தகலாசாரத்தைக் காட்டும் சிங்களப் பெண்களாகவும் காட்டிக் கொள்ளும் நடையுடை பாவனைகள் மீட்டெடுக்கப் பட்டன. வேதகாலமே பெண்களின் பொற்காலம் எனக் குறிப்பிட்ட வேதமரபும் தமிழர்களிடையே சங்ககாலப் பெண்களை நினைவூட்டும் போக்கும் போற்றப்பட்டன.
இதேகாலத்தில் சில ஆசிய நாடுகளில் பெண்ணிலை வாதம் என்பது மேற்கத்தையக் கருத்தாகவும் கிழக்கத்தைய கலாசாரத்துக்கு ஒத்துவராததாகவும் கூறப்பட்டது. இத்தகைய ஒரு குறுகிய பார்வை பல தேசிய விடுதலைப் போராட்ட ங்களின் உள்ளூறிய அம்சமாகக் காணப்பட்டது. இலங்கையின் வட கிழக்கில் தமிழ்பேசும் இனத்தவரின் விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப் பத்தில்தான் ஆங்கிலத்தில் இவ்வாய்வு செய்யப்பட்டது(1988). தமிழ்பேசும் இந்துக்கள், கிறிஸ்தவர், கத்தோலிக்கர், முஸ்லீம்கள் ஆகிய சாலரும் ஒரு தமிழ்த் தேசியத்துக்காக ஐக்கியப் பட்டுள்ளனர். இப்போராட்டமானது சாதி, வர்க்கம், சமூக ஏற்றத்தாழ்வு போன்றவற்றின் அடிப்படை மாற்றத்தை இலக்காகக் கொண்டுள்ளது. இப்போராட்டத்தில் பெண்களின் பங்கும் கணிசமாக உள்ளதால் அது பற்றிய ஆய்வு இந்நூலுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. ஆனால் இதுபற்றிய தரவுகளின் பற்றாக்குறையும் இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களோடு தொடர்பு கொள்ள முடியாமையும் இம் முயற்சியை என்னை ஒத்திப் போடச் செய்துள்ளது.
இன்று இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் இலங்கை ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையில் நடைபெறும்
96

போராட்டம் பல அழிவுகளையும் அனர்த்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது. எல்லாவித பாரம்பரிய பழக்கங்கள் முறைமைகள் யாவும் தடம் புரண்டு போவதாகக் காணப்பட்டது. பெண்களின் போராட்ட முனைப்பும் பலவிதமரபு மீறல்களும் இடம் பெற்றன. இதைப்பார்த்த பழைமைவாதிகள் இவை சமூகத்துக்கு உகந்தவையல்ல என முணுமுணுத்தனர். இக்காலத்தில் "தமிழ் பெண்களுக்கோர் எச்சரிக்கை” என்ற தலைப்பில் நலன் விரும்பிகள் என்போரால் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. இது எப்படி வயது வந்த பெண்கள் உடையணிய வேண்டும் என்றும் அவர்கள் கணவன் மார்களோடு அன்றி, தனியாக சைக்கிள்களில் போகக் கூடாதென்றும், தனியிடங்களில் திரியக் கூடாதென்றும், அப்படிச் செய்தால் அவர்கள் நையப் படைக்கப்பட வேண்டும் என்றும், பாமரத்தனமாக பெண்களைக் கீழ்மைப்படுத்தும் ஒரு பழமொழியோடு அதை வெளியிட்டிருந்தது. பத்துக்கு மிஞ்சிய பத்தினி இல்லை என்ற பழமொழி முடிவுரையாக இருந்தது.
இந்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட "நலன் விரும்பிகள்" தேசியப் விடுதலைப் போராட்டத்தில் இருந்த பழமைவாதிகளா அல்லது அவற்றில் பங்குபற்றாத வெளியார்களா என்பது தெரியாது. ஆனாலும் இந்த "நலன் விரும்பிகள்” தமிழ்க் கலாசாரம் பேணப்படவேண்டுமானால் பெண்கள் தமது உடை, நடத்தை, ஒழுக்கம் போன்றவற்றில் கவனமாக இருக்கவேண்டும் என்று எச்சரித்தனர். ஆனால் இந்த நலன்விரும்பிகளுக்கு ஆண்கள் எந்தவித மேற்கத்தைய உடைகளை உடுத்தியபோதும், பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டபோதும் அவை பிரச்சினைக்குரியதாய் இருக்கவில்லை. மேலும் பெண்களின் ஒழுக்கக் கேட்டுக்கு ஆண்களும் பொறுப்பு என்பது இந்த நலன் விரும்பிகளுக்கு தெரியாமல் போனதே ஆச்சரியம். பத்துக்கு மிஞ்சிய பத்தினி
97

Page 54
இல்லை என்றால் அந்தப் பத்தினித் தன்மையைக் குலைத்த ஆணினம் எத்தனைவிதம்?
சொத்தாகக் கருதப்படும் பெண்கள்
இத்தனைக்கும் காரணமாய் இருப்பது பெண்கள் ஆண்களின் சொத்தாகக் கருதப்பட்டு வந்த மனோபாவத்தின் விளைவே. ஆண்களுக்கு பெண்கள் மனைவியாக மகளாக சகோதரிகளாக பார்க்கப்பட்டதன் ஒரு வடிவமே இது. யுத்தங்கள் நிலங்களையும் எல்லைகளையும் மீட்பதற்காக மட்டும் நடத்தப்படவில்லை. தமது பெண் களையும் கெளரவத்தையும் மீட்டெடுப்பதற்காகவும் நடைபெற்றன இதேமனோபாவந்தான் ஓர் இனத்தின் மேலான வெற்றியை காட்டும் நேரங்களில் அந்நாட்டுப் பெண்களின் கற்புச் சூறையாடப்படுதலுக்கும் காரணமாய் இருக்கிறது. இதுவே பழிவாங்கலின் உச்சக்கட்டமாகும். சமாதானத்துக்கான Gu GöT 56lfaj, s 9/60Of (Women for Peace in Sri Lanka) 3'gi, Lupgólás. கூறுகையில் இலங்கை ராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டதன் காரணம் அவர்களின் பிள்ளைகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற பழிவாங்கல் மனோபாவமே, இனக்கலவரத்தின் போதும் பெண்களே குறிவைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப் பட்டனர். பெண்கள் வன்முறைக்குட்படுத்தப்படுவது யுத்தத்தின் ஒர் பக்கவிளைவாகும். எதிர்த் தேசியத்தின் குறியீடாக பெண்களின் உடல்கள் கணிக்கப்படுவதே அதைச் சூறையாடும் மனோபாவத்தின் முதல் விளக்கம்
தேசப்பற்று மிக்க வீரப் புதல்வர்களின் தாய்மாராக பெண்கள்
வீரம் தோய்ந்த போர்ப்பாடல்கள் பழைய இனக்
98

கூட்டத்தினதோ ஆதிசமூத்தினதோ செயலாக மட்டும் இருக்கவில்லை, பழைய புராண இதிகாசங்களுக்குரியவையாக மட்டும் அவை நின்று விடவில்லை. இன்றும் அது செயற்பாடு டையதாகவே உள்ளது. தாய்மார் வீரம்மிக்க தேசப்பற்றுமிக்க புத்திரர்களை நாட்டைக்காப்பதற்கு உற்பத்தி செய்பவர்களாகப் போற்றப்படுகின்றனர். தாய்நாடும் தன்னை காக்கும் புத்திரர்களை தருவதாக மாறுகிறது. இலங்கையில் அத்தகைய போர்ப் பாடல்கள் (War Songs, றணகீ) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளன. இலங்கை ராணுவீரர்களை தங்கள்நாட்டை காக்கும் பணிக்கு ஆற்றுப்படுத்துவதாக அப்பாடல்கள் அமைந்துள்ளன. .
தாய்மையின் பேரிலும் தேசப்பற்றின் பேரிலும் போரினை மகத்துவப்படுத்தும் ராணுவ கலாசாரத்தை மேன்மைப் படுத்தும் விதத்தில் இவை அமைந்துள்ளன "நான் எனது இரத்தத்தை பாலாக்கித்தந்தேன்” என்று ஒரு தாய்கூறுவதாக வரும் ஒரு பாடலில் பால் இரத்தத்தோடு சமத்துவப் படுத்தப்படுகிறது.
புரட்சியின் நடைமுறையும் அதன் பெறுபேறும்
எனது ஆய்வின் இந்த இறுதிப் பகுதியில் விடுதலைப் போராட்டங்களில் பங்குகொண்ட பெண்கள் தமது அனுபவத்தில் கண்ட இன்னொரு முரண்பாடு இங்கு விபரிப்பதற்குத் தக்கது. போராட்ட காலங்களில் பெண்கள் தமது வீடுகளைவிட்டு வெளிவந்து போராடும் படி கேட்கப்படுவார்கள். மனைவியாக தாயாக குடும்பத்தை தாங்கிய பாத்திரத்தை எல்லாம் உதறிவிட்டு போராட்டத்தில் அவர்கள் கையிலே ஆயுதம் தாங்கி ஆண்களுக்கு சமதையாக போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் போராட்டமும்
99

Page 55
புரட்சியும் முடிந்ததும் அவர்கள் தமது பழைய வாழ்க்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதோடு மீண்டும் ஆண் ஆதிக்கத்தக் குட்டபட்ட சாரமற்ற வாழ்க்கையிலீடுபடுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு உபயோகிக்கப்படுகிறார்கள். ஒரு கருத்தியலை அடிப்படையாக வைத்து பெண்ணுரிமை வாதம் மேலோங்கியது என்று நாம் இந்நிகழ்வைக் கூறமுடியாது. இன்றைய நிலையில் பெண்கள் தமக்குரிய சுதந்திர அமைப்பின் வழியில் பெண்ணிலைவாத நோக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்சத்தில் எதிர்காலத்தில் புதிய நிலைமை உருவாகலாம்.
எப்பொழுதும் தாய்நாடு தேசியக் கண்ணோட்ட அழுத்தங்களோடு பெண்ணாக குறியீட்டு முறையில் குறிக்கப்படுவது வழக்கம். ஜெரூசலம் (பழைய ஏற்பாட்டின் படி) 'கன்னி' என அழைக்கப்பட்டது. டீகோல் பிரான்சு நாட்டை "இளவரசியாக" அழைத்தார். இந்தியாவை அன்னை இந்தியா என அழைத்தும் வந்தேமாதரம் எனவும் வணங்கினர், பூஜித்தனர். இது இந்திய தேசிய கீதத்தில் உச்சவெளிப்பாடு கண்டது எனலாம். ஒரு நாடு எதிரியால் சூறையாடப்படும் போது அந்நாடு" கற்பழிக்கப்பட்டதாகவே இலக்கிய நடையில் கூறுவதுண்டு அதேவேளை பிறகலாசாரங்களை ஒருநாடு உள்வாங்கும் போதும் சரி எதிரியோடு உறவாடும் போதும் சரி அது விபச்சாரத்துக்கு ஒப்பதாகவே வர்ணிக்கப் படுவதுண்டு. இது பெண்களே ஒரு கலாசாரத்தின் பொது காவலராகவும் அதன் குறியீடாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு கருத்தியலின் விளைவே. நாடும் ஒரு கற்புள்ள பெண்ணைப்போல் இருந்து தனது கலாசாரத்தை மாசுபடாது பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதன் தாற்பரியமே இது. இத்தனைக்கும் ஆண்கள் இதில் சம்பந்தப் படாதவர்களாய் வெளியே தான் நிற்கிறார்கள் காரணம்
OO

சொத்தாக, கற்பும் நல்லொழுக்கமும் பெண்களுக்கு மாத்திரமே எதிர்பார்க்கப்படுவதால் ஆண்கள் அதில் அடக்கப்படுவதில்லை.
101

Page 56
1. குறிப்புகள்
uGui G353 b (nation) Ggsafub (nationalism) at airp கோட்பாடுகளுக்கு, வரைவிலக்கணங்களும், விளக்கங்களும் தந்திருக்கிறாாகள். எனினும் ஸ்டாலினின் விளக்கம் ஒரு முழுமையான விளக்கமாக எனக்குப்படுகிறது. நான் இங்கு எடுத்தாண்ட இவ் விளக்கம் கீழ் கண்டவாறு Marxism and the National Colonial Question என்ற நூலில் எட்டாம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
("A nation is a historically evolved stable community of language territory, economic life and psychological make-up manifested in a community of culture " Stalian wrote in Marxism and the National Colonial Question (p
8).)
102

References
Amin, Samir. 1980 Class and Nations Historically in the Current Crises
Monthly Review Press, New York, London.
Anderson, B. 1983. Imagined Communities, London Verso.
Bachofen, J.J. 1861. Myth, Religion & Mother Right, London, Routledge
and Kegan Paul, 1967.
Chattopadhayaya, Debiprasad. 1959. Lokavat, Astudy in Ancient Indian
Materialism. Peoples Publishing House, Delhi.
Dunbar, R. 1970. "Female Liberation as the basis for social revolution" in Morgan (ed.), Sisterhood is Powerful, Vintage Bookshops, New York.
Eurgene, F. Irsdricks. 1969. Politics and Social Conflict in South India and Non Brahman Movement and Tamil Separatism - 1916 - 1929. Oxford University Press, Bombay.
Eastman. 1920. "Now we can begin the Liberation" in The New Feminism in 20th Century America. Reprinted in J. Sockem (ed.) Lexigton. Mass D.C.Heath.
Engles, Frederick. 1972. The Origine of Family Private Property and State.
New York, Pathfinders.
103

Page 57
Elsenstein, Z. 1979. Capitalist Patriarchy and the case for Socialist Femi
nism. New York, Monthly Review Press.
Fanon, F. 1967. The Wretched of the Earth. Penguin. Harmondsworth.
Firestone, S. 1974. The Dialectic of Sex. New York, Morrow.
Friedan, Batty. 1963. The Feminine Mystique. New York, W.W. Norton.
Griffiths and Sagara. 1975. "Sex Difference in Cognitive Abilities. A sterile Field of Inquiry?" in O.Hartnet, G. Boden and M.Fuller, eds. Sex Role Stereotyping. London, Tavistock.
Goonasekera, S. 1980. The legal Status of the Female in the Sri Lankan Law of Family Relation. M.D. Gunasena & Co. Ltd., Colombo, Sri Lanka.
Imerson, R. 1960. From Empire to Nation, Boston.
Jayawardena, K. 1986. Feminism and Nationalism in the Third World. Zed
Press, London.
Janet, Sayers. 1982. Biological Politics, Feminist and Anti-Feminist Per
spectives. Tavistock Publications, London/New York.
Joanna Liddle & Rama Joshi. 1986. Daughters of Independence, Gender,
Caste and Class in India. Zed Books Ltd. .
Kuhan Annetyte and Anne Marie Wolpe, eds. 1978. Feminism and Materi
alism. Routledge and Kegan Paul. London.
Lenin, V.I. 1969. Imperialism, the Highest Stage of Capitalism. New York
International.
Lanka Guardian. Volume 8 No. 18, January 15, 1986.
Marguerite, Rose Barnett. 1976. The Politics of Cultural Nationalism in
104

South India. Princeton University Press. Princeton, New Jersy, USA.
Mies, Maria. 1980. Indian Women and Patriarchy. New Delhi.
Millet, J. 1984. Woman: The Longest Revolution. Virago London.
Morgan, Lawis Henry. 1877. Ancient Society, Calcutta, K.P.Bogchi, 1982.
Obesekera, Gananath. 1967. Land Tenure in Village Ceylon Cambridge.
Cambridge University Press.
Patil, Sharad. 1982. Dasa Sudra Slavery: Studies in the origin of Indian Slavery and Feudalism and their Philosophied. Allied Publishers, New Delhi.
Rich, A. 1977. Of women born, Motherhood as experience and institution.
Virago, London.
Rowbotham, S. Lynne Segal and Hilary Wainwright. 1979. Beyond the fragments; feminism and the making of socialism. Merlin Press.
Rao, M.S.A. 1980. Social movements in India. Bombay.
Rodman, H. 1979. Reported by G. MacAdam in Feminist Apartment house
to Solve Baby Problem, New York Times. 24th Jan.
Ram, M. 1979. "Dravidian Movement in its Pre Independence phase" in Economic and Political Weekly Annual Number, February 1979.
Stalin. 1971. Marxism and the National and Colonial question. London,
Martha Lawrence, r.d. in selected works, Davis Col. Cardinal.
Seers, Dudley. 1983. The Political Economy of Nationalism. Oxford, Ox
ford University Press.
Smith, Anthony, 1983. State and Nation in the Third World. Brighton
Wheatshef.
105

Page 58
Suntheralingam, R. 1974. Politics and the Nationalist Awakening in South India - 1852 - 1891. The University of Arisona Press, Arizona, USA.
Wallstonecraft, Mary. 1974. A. Vindication of the Rights of Women of New York. Garland Publishing Co. New York. ..
Yogedrasingh. 1973. Modernisation of Indian Tradition, a Systematic Study
of Social changes. Thompson Press (India) Ltd.
106


Page 59
இந்தநூல், பெண்ணிலைச் சிந்தனை செய்வதோடு தமிழ்ச் சமூகநிலையில் அ வாழ்வியலை பல தள நிலைகளில் மறு
இன்று பெண்ணியச் சிந்தனை சமூகத் பெண்நிலை நின்று அனைத்தையும் அனைத்து மதிப்பீடுகளுக்கும, விழு ஒன்றை அவாவி நிற்கிறது. இந்த பயனளிக்கிது. மேலும் நடைமுறை நகர்த்தி ஊடாட வைக்கின்றது.
செல்வி திருச்சந்திரன் : இலங்கையின் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது க பேராதனைப் பல்கலைக்கழக்திலும், ச இல் உள்ள Wrieபல்கலைக்கழகத்திலும் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத் பணிபுரிகிறார். "நிவேதினி” என்னும் ஆசிரியருமாவார். பெண்ணடிமையின் விளக்கமும் , தமிழ் வரலாற்றுப் படிம (IBT55, Ideolgy, Cast. Class and Gc Women's Agency in Post Colonial Sri : A process of Deconstruction Titual
Printed at Spartar Graphics (Pvt) Ltd. 154 Wor

யை அறிவார்ந்த தளத்தில் அறிமுகம் அதனைப் பிரயோகித்து, தமிழர்களின் வாசிப்புச் செய்ய முற்படுகின்றது.
துக்கான மாற்றுச் சிந்தனையாகவும். கேள்விக்குள்ளாக்கி ஆண்சார்ந்த மியங்களுக்கும் எதிரான, மாற்றம் நூலும் இந்த நிலையில் எமக்கு சார்ந்த விவகாரங்களை நோக்கி
1 யாழ் மாவட்டத்தில் மானிப்பாயைப் லைமாணிப் பட்டத்தினை இலங்கைப் கலாநிதிப் பட்டத்தினை அம்ஸ்டாம் பெற்றார். தற்போது கொழும்பிலுள்ள தின் நிறைவேற்று இயக்குனராகப் பெண் நிலைவாத சஞ்சிகையின் பரிமானங்களும் பெண்ணுரிமையின் ங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை nder. The Politics of Genelet :inx! Lanka, The Spectrum of Femininily I இவரின் பிற நூல்களாகும்.
aaaLLL 0LLLS LLLLaMHH 0S SS00000L00