கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வியல் சமதர்மக் கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக் கோலங்கள்

Page 1
வாழ்வியல் சஞர்ம முரண்பட்டுநிற்
Uair Use(65
பெண்கள் கல்வி
 

கோட்பாடுகளுடன் கும் மேட்டுநிலை

Page 2

வாழ்வியல் சமதர்மகோEபாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டுநிலை பண்பாட்டுக்கோலங்கள்: ஒரு பெண்நிலை விசாரணை
தொகுப்பு செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 3
நூல்
தொகுப்பு
பதிப்புரிமை
அளவு
அச்சுப்பதிப்பு
வெளியீடு
விலை
அட்டைப்படம்
ISBN. No
நூற் பதிப்புத் தரவுகள்
வாழ்வியல் சமதர்ம கோட்பாடுகளுடன் முரண்பட்டு நிற்கும் மேட்டு நிலை பண்பாட்டுக் கோலங்கள் ஒரு பெண்நிலை விசாரணை
செல்வி திருச்சந்திரன்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
1/8
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட், 48 B, புளுமெண்டால் வீதி, கொழும்பு - 13.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
RS. 200.00
சாந்தினி குணவர்தன
955 - 92.61 - 30 - 4

பொருளடக்கம்
முன்னுரை
ஆண்,வபண் என்னும் பால் அடிப்படையில்
எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கண ரீதியாகவா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா? சமூகவியல் நோக்கில் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு - செல்வி உதயகலா ஐயாத்துரை -
பால்நிலை அடுக்கமைவு ஒரு மானிடவியல் நோக்கு - பகீரதி ஜிவேஸ்வரா -
பண்பாடு, குடும்பம், வயண்நிலைவாத முரண்பாடுகள் - ஜானகி சங்கரப்பிள்ளை -
இந்துப் பண்பாட்டில் வபண்களின் பரிணாம வளர்ச்சி - கலாநிதி சே. அனுசூயா -
செ.கணேசலிங்கனின் நாவல்களில் பெண்கள் - செ. யோகராசா -
வபண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்செயல்கள் இனங்காணலும் தீர்வுகாணலும் - வை. கா. சிவப்பிரகாசம் -
Oj1
O9
18
38
54
78

Page 4

முன்னுரை
வாழ்ந்த 7ேகாண்டிருக்கும் தலைமுறையினரின் மூளையில் இதற்கு முன் சிசத்தொழிந்துபோன தலை முறைகள் யாவினதுமான மரபு ஒரு சிகாடுங்கனவாய் கனத்துக்கொண்டிருக்கிறது. (7)
மரபு என்றால் என்ன?ஒருவரால் கீழ்ப்படிந்து நடக்கப்படும் உயர்தர அதிகாரத்துவம் எங்களுக்கு உதவக் கூடியவற்றைக் கூறுவதனால் நாம் இக்கட்ட ளைகளுக்கு
அடிபணிவதில்லை. அது கட்டளையிடுவதனாலேயே அடிப்பனரிகிறோம். (2)
பொதுவாக மனிதனது சிந்தனைகள், நூல்வடிவாகவோ தத்துவமாகவோ, சமயங்களாகவோ அரசியற்கோட்பாடுகளாகவோ வெளிப்படும்பொழுது ஒரு உந்து சக்தி பின்நின்று அவனை, அவளைத் தள்ளுகிறது. ஒரு பரிபூர்ண சுதந்திர விட்டுவிடுபட்ட நிலையில் கருத்துக்கள் தோன்றுவதில்லை. சுற்றாடல், சூழ்நிலைகள், சமூக நிலைகள், என்று இடங்களிலே மனிதன் நிற்கின்றான், உலவுகிறான், வாழ்கிறான். இவற்றின் தாக்கங்களை நாம் மறுப்பதற்கில்லை. சாதீய வர்க்க, பெண்நிலைத்தாழ்வு நிலைகள் ஒரு காலத்தில் மேட்டுக்குடி மக்களுக்கு, அதாவது உயர்ந்தோராகக் கருதப்பட்டோருக்குத் தேவையாக இருந்தன. அவை நிலைநிறுத்தப்படவேண்டிய ஒரு தீர்க்கதரிசன நோக்கும் தேவைப்பட்டது. நிகழ்கால நிலைகளை ஸ்திரப்படுத்த எதிர்காலத்தில் அவை நிலைத்து நிற்க அவற்றை நீதியாக கட்டளைகளாக அறிவார்ந்த மொழிகளாக ஆக்கிவிட்டார்கள். ஏன் எதற்காக என்று சோக்கரட்டீஸ் போன்று கேள்விகள் எழுப்பியோர் சிலர் அமுக்கப்பட்டுவிட்டனர். மந்தைக்கூட்டம் போன்ற பெரும்பான்மை மானிடர் . கூட்டம் ஒருவழியே தன் சிந்தனைப்போக்கை, வழிநடத்தப்பட்ட, மேலோங்கிய
சிந்தனைப்போக்கை அப்படியே கடைப்பிடித்தனர்.
(l) - Karl marx - Selected writings in Sociology and Social philosophy.
Penguin. 1982
(2) - Friedrich Nietzsche

Page 5
உணர்வுகளும் சிந்தனைகளும் மொழி, இனம், பண்பாடு, சமயம், போன்றவற்றை வழிநடத்தத் தொடங்கிய போது தர்க்கம் காரணகாரிய தொடர்புகள் போன்றன பின்னுக்குத் தள்ளப்பட்டன. வாழ்க்கை நெறிமுறை வாழ்வியல் கட்டாய நெறிகள் என்ற போர்வையில் ஒரு ஒழுங்கு நடவடிக்கையாக அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. ச்மூகத்தில் ஒழுங்கான வாழ்க்கைக்கு இவை தேவை என்ற ஒரு மனப்பான்மை தோற்றுவிக்கப்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. நாலுவர்ணச் சாதி அமைப்பு, சமூக ஒழுங்கிற்குத் தேவை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடுப்புத் தோய்க்க வண்ணான், சவரம் செய்ய அம்பட்டன், கள்ளிறக்க நளவன் என்ற வேலைப்பாகுபாட்டு சமூக அமைப்பு அவற்றின் பலாபலன்களைப் பெறும் மேல் வர்ணத்தாருக்கும் ஒய்வுநிலை அநுபவிக்கும் அறிவாளருக்கும் நல்ல ஒரு யுக்தியான அமைப்பாக இருந்தது. ஏற்றத் தாழ்வுகளை இவர்களும் இவர்களுக்கு கீழிருப்பவர்களும் சேர்ந்தே உண்டாக்கினார்கள். ஆண்மகன் பலசாலியாக, அறிவாளியாக, உண்பவனாக இருக்கக் குடும்பத்தில் அபலையாகப், பேதையாக, உணவு, சமைப்பவளாகப் பெண் இருக்க ஏவப்பட்டாள்.
குடும்பம் என்ற நிறுவனத்தின் தோற்றம் பின் ஒரு ஒழுங்கு நடவடிக்கையை தோற்றுவித்து விட்டது. புறவயமாக ஒரு தர்க்க ஒழுங்கையும் ஒரு நியதியையும் உருவாக்கியவை வரலாற்றில் நடந்த ஒரு சாபக்கேடு. இந்த ஒழுங்கைப் பல அறிவுசார் வல்லுநர்கள், தத்துவம், சமயம்சார் அறநெறிகள், வாழ்வியல் யதார்த்தங்கள், என்று பலமட்டங்களில் நிலைநிறுத்தத்தொடங்கினர். இதன் அதர்மங்களும் அசமத்துவங்களும் மறைக்கப்பட்டுவிட்டன. வாழ்வியல் தர்மங்களுக்கு இவை எதிரானவை என்று ஒரு சிலர் கூற முற்பட்ட எதிர்வாதங்கள், புலம்பல்கள், என்றும் கலகக்குரல் என்றும் வாழ்வியலை முரண்படுத்துகிறது என்றும் சமாதானம் பேசி, அவர்களை சமூகப் பிரஷ்டமும் செய்து விட்டார்கள். உழைக்கும் வர்க்கத்திடமிருந்து இலாபத்தை அபகரிக்கும் முதலாளிக்கூட்டங்களும், பெண் உழைப்பாளிகளின் உழைப்பால் பெறும் சலுகைகளை அநுபவிக்கும் ஆண்களும், வாழ்தல் தர்மம், பண்பாடு, கலாச்சாரம் குடும்ப மேம்பாடு, குழந்தைகள் நலம் என்று பல நிலைகளின் இந்த வேறுபாடுகளை நியாயப்படுத்தின. கால்மார்க்ஸ், புத்தர் போன்றோரின் வாதங்கள் போதனைகளாகவே பெரும்பாலும் நின்றுவிட்டன. பெண்நிலைவாதிகளின் கோட்பாட்டு வாதங்கள் சமூகத்தை பெரிதும்
- vi

கலக்கிவிட்டதால் அவற்றையும் எள்ளிநகையாடி,குடும்பம்குலைகிறது, பண்பாடு சிதைகிறது, தாய்மை சீரழிகிறது என்று பல எதிர்வாதங்களையும் நாம் இப்போது கேட்கக் கூடியதாயிருக்கிறது.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்ட கருத்தரங்கில் இப்படியான பண்பாட்டு முரண்பாடுகளை மையமாகக்கொண்டு சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். ஒரு சமூக மாற்றத்தை விளைவிக்கவேண்டும். ஆணும் பெண்ணும் சமரசமாக, சமத்துவநிலையில் சந்தோஷத்துடனும் புரிந்துணர்வுடனும் குடும்பத்தையும் ஏனைய சமூக அரசியல் நிறுவனங்களையும் வழிநடத்தவேண்டும். அப்படியாயின் ஒரு சுமூகமான வாழ்வை நாம் பெறலாம். ஆணைப் பெண்ணுக்கு எதிரியாகவோ, பெண்களே இந்த ஆண்கள் எல்லாம் வன்முறையாளர்கள் ஆகவே குடும்பத்தைவிட்டு வெளியேறுங்கள், விவாகரத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்ற வெற்றிக்கோஷங்கள் அல்ல பெண்ணிலைவாதம் சமூகவியல், மானிடவியல், தத்துவம், விஞ்ஞானம், போன்ற துறைகளில் அறிவார்ந்த நிலைகளில் ஊடுருவி அலசி ஆராய்ந்து எப்படி ஆண் நிலைச் சிந்தனைகள் உருவாகி உள்ளன. அவை எப்படி பெண்களை அலைக்கழிக்கிறது. வன்முறைக்குள்ளாக்குகிறது. எப்படி அவர்கள் சமத்துவ உரிமை இழந்து ஆளுமை குறைந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வரலாற்றுரீதியிலும் தற்காலச் சூழலிலும் எடுத்துரைக்கும் பெண்நிலைவாதம் பொருத்தமானது என்பது எமது அடிப்படை
வாதம.
பால்நிலை அடுக்குநிலைகள் மானிடவியல் நோக்கில் விளக்கும் ஒரு கட்டுரை பல விடயங்களை எமக்கு விளக்குகிறது. இந்துப்பண்பாடு என்று கூறப்படும் இரு இந்திய நிலைப்பாடு பெண்ணை. எப்படி ஒரு பரிணாமவளர்ச்சியில் பின்தள்ளிவிட்டது என்பதைக் கூறுகிறது. இன்னுமொரு கட்டுரை இவை இரண்டும் இறந்தகாலந்தொட்டு வருங்காலம் வரை தொடரும் தொடரக்கூடிய கூறுகளை இனங்காண்கிறது. குடும்ப வன்முறை கூடிக்கொண்டே போகும் ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது. இவற்றை இனங்காணவும், தீர்வுகளை நோக்கிச் சிந்திக்கவும் முயல்கிறார் ஒரு பெண்நிலைவாத ஆண். குடும்ப வன்முறைக்கு மனோதத்துவ ரீதியில் சில விளக்கங்களை முன் வைக்கலாம்.
vii

Page 6
ஒரு ஆண் கணவன் என்ற பாத்திரத்தில் ஆளுமை, அதிகாரம், ஆதிக்கம் போன்ற பல குணாம்சங்களை உடையவனாக சமூக சமய அங்கீகாரம் பெறுகிறான். மனைவியான பெண் அவனுக்கு கீழ்ப்படிந்து அவன் கட்டளைகளை ஏற்று நடக்கப் பணிக்கப்பட்டுள்ளான். அதிகாரத்திற்கு பழக்கப்பட்ட கணவன், மனைவியிடமிருந்து சம அந்தஸ்தில் விடுக்கப்படும் கேள்விகளையும் எதிர்வாசங்களையும் எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத் தயங்குகிறான். தன்னுடைய ஆதிக்கத்துக்கும் அதிகாரத்திற்கும் அவள் சவால் விடுவதாக ஒரு கற்பிதத்தை தன்னுள் உண்டாக்கி அதனால் அலைக்கழிக்கப்பட்டு ஆத்திரங்கொண்டு வாய்வன்முறையும் பின் உடல் ரீதியான வன்முறைகளையும் பிரயோகிக்கிறான். இதற்கு அடிப்படைக் காரணம் (Socialisatiom) என்ற ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமூகப்பழக்க வழக்கங்களைக் கேள்விகளின்றி அப்பட்டமாக ஏற்றுக்கொள்ளும் ஒரு வாழ்க்கைமுறைக்கு அவன் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டமையே. ஆணைப் போலவே பெண்ணும் பழக்கப்பட்டுவிட்டாலும் அநீதிக்கும் வன்முறைக்கும் அசமத்துவத்திற்கும் உள்ளாக்கப்படும் போது அவற்றை அனுபவரீதியாக உள்வாங்கிய பெண், அவற்றிற்கு எதிராக இயங்கத்தொடங்குவது சகஜமே. இங்கு தான் அந்த வித்தியாசமான முரண்பாட்டு அடிப்படைகள் தோன்றுகின்றன. இவற்றை ஆண்களைப் போல பெண்களும் உணர வேண்டும். குடும்பத்தில் நடக்கும் நாளாந்த விடயங்கள் பெண்ணை, மனைவியை சலிப்படையச் செய்கிறது. சோர்வுறச்செய்கிறது. கோபங்கொள்ள வைக்கிறது. இறுதியில் ஆத்திரங் கொள்ளவும் வைக்கிறது. இந்நிலையில் முரண்பாடுகள் வலுவுறுகின்றன.
வேலைகளும் பொறுப்புக்களும் பகிரப்படவேண்டும். பளு ஒரு பக்கம் சாயக்கூடாது. சட்டியும் பானையும் அடுப்பும் மாத்திரம் பெண்களது உடமைப்பொருளாகக் கூடாது. அல்லது பொழுதுபோக்குப் பொருள்களாக இருக்கக்கூடாது. வீட்டைக் கூட்டுவதும். துடைப்பதும் அவளது வேலையாக மட்டுமிருக்கக்கூடாது. இவ்ற்றை மாத்திரமே நிரந்தரமாக இவள் செய்யும்பொழுது அலுப்படைகிறாள். சலிப்புறுகிறாள். அந்த அலுப்பையும் சலிப்பையும் வெளியே சொல்ல அவஸ்தைப்படுகிறாள். மனச்சோர்வடைகிறாள் மனநோய்க்கும் உள்ளாகிறாள். இவை வெறும் வெற்று வசனங்கள் அல்ல. பெண்கள் பலர் கூறியலறிக்கொண்டே இருக்கும்மனக் குறைகள். ஆகவே எமது கருத்தரங்குகள் வெறும் ஆய்வுக்குவியல்களாக மட்டுமன்றி சமூகமாற்றங்களும் வழிவகுக்க வேண்டும் என்பதே எமது அவா.
செல்வி திருச்சந்திரன்
viii

ஆண், பெண் என்னும் பால் அடிப்படையில் எழுந்த தொழிற்பாகுபாடு உயிரியல் இலக்கண ரீதியாகவா அல்லது பண்பாட்டின் அடிப்படையிலானதா? சமூகவியல் நோக்கில் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு
- செல்வி உதயகலா ஐயாத்துரை - உதவி விரிவுரையாளர், (சமூகவியல் பிரிவு) சமூக விஞ்ஞானத்துறை, தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் என சில உடலியல், உயிரியல் அம்சங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான அம்சங்களே ‘பால்நிலை” என அழைக்கப்படுகிறது. இயற்கையால் உருவாக்கப்பட்ட உடற்கூற்று உருவ அமைப்பு வித்தியாசங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் சமூகத்திலும் நாட்டிலும் ஒரே மாதிரியானதாகவே உள்ளன. ஆகவே, உலகின் எப்பகுதியிலும் உயிரியல் ரீதியில் ஒரு ஆணானவன் ஒரே மாதிரியாகவே இருக்கிறான். பெண்களின் உடற்கூற்று அமைப்பும் இவ்வண்ணமே அமையும். ஆணையும், பெண்ணையும் இயற்கை படைக்கிறது. ஆனால் அதை ஆண்மையாகவும் பெண்மையாகவும் சமுதாயமே மாற்றியமைக்கிறது.
அகில உலக ரீதியாக பெரும்பாலான சமூகங்களிடையே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிலவுகின்ற தொழிற்பாகுபாடே பால் அடிப்படையில் 960) nig, Gigi Tjiburt (Sun (6 (Sexual division of labour) 6T60T அழைக்கப்படுகின்றது. அதாவது, பெரும்பாலான சமூகங்களுக்கிடையில் சில தொழில்கள் பெண்ணுக்கு உரியவை எனவும் ஆணுக்கு உரியவை எனவும் வகுக்கப்பட்டிருக்கின்றது. குழந்தையைப் பிறப்பித்தல், பராமரித்து வளர்த்தல், வீட்டுடன் தொடர்பான வேலைகள் போன்றவை பெண்ணுக்கு உரியனவாகவும் வீட்டுக்கு வெளியிலான வேலைகளும் வருவாயை ஈட்டுகின்ற வேறு தொழில்களும் ஆணுக்கு உரியனவாகவும் கருதப்படுகின்றன. கருத்தரிப்பதும் பிரசவிப்பதும் சிசுவுக்கு அத்தியாவசியமாகிய முதலுணவைதன் முலைப்பாலால் ஊட்டுவதும் பெண்ணின் சிறப்புப் பணிகள். இதனை ஆண் சாதிக்க முடியாது. இந்த சிறப்புத் தன்மை அளிக்கும் பிரத்தியேகமான பணியை அடிப்படையாக்கி “அந்த வேலையை நீ சிறப்புற செய்ய வேண்டும்” என்று பெண்ணை நிர்ப்பந்திக்க ஆண்மகன் தயங்கவில்லை. இவ்வாறு பால் அடிப்படையில்

Page 7
அமைந்த இந்த வேறுபாடே தொழிற்பாகுபாட்டிற்கு அனுகூலமாக அமைந்தது. இந்நிலையானது இன்று பெரும்பாலும் சகல நாடுகளிலும் சகல இன மக்களிடையேயும் சகல பண்பாடுகளிலும் தெளிவாக காணக்கூடியதாக உள்ளது. எனினும், சில விதிவிலக்குகள் இருப்பதையும் காணலாம். அத்துடன் இப்பாகுபாடு உறுதியான வடிவில் கருத்து நிலையிலும் (Ideology) செறிந்து காணப்படுகிறது.
உற்பத்தி திறன்மிக்க உழைப்பு என்பது ஆணுக்கு உரியதே. இதை இன்னும் சற்று விளக்கமாக கூறினால் உபரி உற்பத்தியை அல்லது மிகையை உருவாக்கக்கூடிய உழைப்பே உற்பத்தி திறனுடைய உழைப்பு எனக்கருதப்படுகிறது. 660)6OTL உழைப்புக்கள் உழைப்பாக கருதப்படுவதில்லை. பெண்ணினது வீடுசார்ந்த தொழில்களும், உழைப்பும், கடமைகள் அல்லது நடவடிக்கைகள் என்றே கருதப்படுகின்றன. உழைப்பு பற்றிய இக்கருத்தாக்கம் ஆண்களும், பெண்களும் தமக்கிடையே சில தொழில்களை பகிர்ந்து கொண்டுள்ளனர் என்று கூறுவது மாத்திரமல்லாது, இப்பாகுபாட்டிற்கு அடிப்படையாக காணப்படும் ஆண் பெண் அசமத்துவ உறவுநிலை, பெண்ணின் மீதான ஆணின் ஆதிக்கம், சுரண்டல் ஆகியவற்றை மறைத்தும் விடுகிறது. ஆணினது உழைப்பு அல்லது தொழில் உணர்வு பூர்வமான பகுத்தறிவுசார்ந்த, திட்டமிட்ட உற்பத்தி தன்மைவாய்ந்தது. இதுவே மனித உழைப்பாகும். பெண்ணினது. உழைப்பு அவளது உடலியற்கையுடன் தொடர்புடையது. ஆகவே, அது இயற்கையான நடவடிக்கை. அதில் எத்தகைய உற்பத்தி தன்மையும் இல்லை என்பது இக்கருத்தாக்கத்தின் மூலம் பெறப்படுவனவாகும் .
சமூகவியலைப் பொறுத்தவரை பால்நிலை நடி பங்குகள் பற்றிய (Gender roles) பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் தொழிற் பிறப்பிற்கான காரணம் (Division of Labour) உயிரியல் இலக்கண ரீதியானது (Biogrammar) என்றும், பண்பாட்டின் (Culture) அடிப்படையிலானது என்றும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன.
GoLusoTs) 60L5i, Gijitsit Gurdish) (Lionel Tiger and Robin Fox) 6T66TD இரு மானிடவியலாளர்கள் பெண்களின் பாலியல் பங்களிப்பிற்கும் தொழிற்பிரிப்புக்குமான காரணம் உயிரியல் (Biology) தான் என

வாதிடுகிறார்கள். இதனை அவர்கள் மானிட உயிரியல் இலக்கணம் (Biogrammar) என்பதோடு இந்த உயிரியல் இலக்கணம் தான் ஆண்-பெண் செயற்பாடுகளை தீர்மானிக்கிறது என்றும் கூறுகிறார்கள். இவர்களோடு ஜோர்ஜ் பீற்றர் மேடக் (George Peter Murdock), தல்கொட் பார்சன் (Talcott Parson), ஜோன் வவுள்வி (John Bowlby) போன்றோர் முக்கியமானவர்கள். “பண்பாடுதான் தொழிற்பாகுபாட்டைத் தீர்மானிக்கிறது என்போர் அறியாமையில் இருக்கின்றனர்.” என அவர்கள் வாதிடுகின்றனர்.
பெரும்பாலான சமூகவியலாளர்கள் மானிட நடத்தையை விளங்கிக் கொள்வதில் பண்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்கின்றனர். அதனூடாகத்தான் நியமங்கள், விழுமியங்கள் நடிபங்குகள் என்பவை நிர்ணயிக்கப்பட்டு சமூக ரீதியாக பரிமாற்றப்படுகிறது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் பால்நிலை நடிபங்கானது (Gender roles) ஒரு பண்பாட்டின் விளைவே அன்றி உயிரியலின் விளைவல்ல என வாதாடப்படுகின்றது. இவர்களுள் ஆன் ஒக்லி (Ann Oakley), புருனோ பெத்தல்ஹேம் (Bruno Bettelheim), 6J 60T6ňo6DL-6T (NGryg6io (Ernestine Friedl), GlasgÓ G. FÜ'60Trĩ (Sherry B.Ortner) போன்றோர் முக்கியமானவர்கள். ஆன் ஒக்லி பண்பாட்டு ரீதியான தொழிற்பகுப்பு சம்பந்தமாகவும் பேச, ஏனஸ்டைன் பிரேடில் பால் ரீதியான தொழிற்பகுப்பு பற்றியும் ஆணாதிக்கம் சம்பந்தமாகவும் பேசுகின்றார்.
பண்பாட்டுநிலைதான் பால்நிலை தொழிற்பகுப்பிற்கான காரணம் என கூறுபவர்கள் உயிரியல் இலக்கணம் ஒன்றுள்ளது என்பதை சிந்திக்க மறுக்கிறார்களென லயனல் டைகர், ரொபின் பொக்ஸ் ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இவர்கள் இருவரும் பெண்ணை ஆணுடன் ஒப்பிடும் போது பெண் அதிகளவான ஆணின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவளாக காணப்படுகிறாள். இத்தகையை தன்மைகள் ஆண், பெண் ஒமோன்களின் வித்தியாசத்தாலேயே ஏற்பட்டது. முன்னோர்களிடமிருந்து வேட்டையாடும் கடுமையான உளப்பாங்கு ஆண்களிடம் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதனால்தான் ஆண்கள் அதிகாரத்தைத்தமதாக்கிக் கொண்டனர். ஆண்கள் போராடுகிறார்கள், உடன்படிக்கை செய்கிறார்கள். இது அவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்கக் காரணமாயிற்று. பிள்ளை தாயுடன் தான் இருக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதி. தாயும் பிள்ளையும் ஒன்றாக இல்லாதவிடத்து பிள்ளை வெற்றிகரமாக வரமுடியாது என்பது இவர்களது கருத்தாகும். இந்த உயிரியல் இலக்கணம்தான் ஆண்,

Page 8
பெண்களுக்கான பாத்திரங்களை தீர்மானிக்கின்றன. உதாரணமாக: பெண்களுக்கு கற்பப்பை இருத்தல். எனவே, இவர்கள் பெண்ணிலை வாதிகளின் வாதத்தை உயிரியல் காரணிகளைக் கூறி மறுக்கின்றனர். வேட்டை யுகத்தில் இருந்த ஆண்-பெண் இலக்கணம் இப்போதும் தொடர்கிறது. இதனை அழிக்க அல்லது மாற்ற நினைப்பது இயற்கைக்கு எதிராக செல்வதாகும். இவர்களது கருத்தின்படி ஆண் உடல் வலிமையுள்ளவன், பெண் பிள்ளைபெறுபவள் என்பதாகும்.
ஜோர்ஜ் பீற்றர் மேடக் 224 சமூகங்களை ஆய்வுக்குட்படுத்தி (நவீன மற்றும் தற்கால உணவு சேகரிக்கும் சமூகமும் அடங்கும்). மரம் வெட்டுதல், வேட்டையாடுதல், சுரங்கத் தொழிலில் ஈடுபடுதல் போன்ற வேலைகளை ஆண்களே செய்கின்றனர். சமைத்தல், தண்ணிர் எடுத்தல், துணிதுவைத்தல், தைத்தல் போன்ற வேலைகள் பெண்களுக்குரியவை. ஆணுக்கு இருக்கும் பலம் தைரியமான வேலையைச் செய்ய இடம் கொடுக்கும். உயிரியல் ரீதியாக தொழிற்பாகுபாடு தீர்மானிக்கப்படுவது சரியானதுதான். நல்ல சமுதாயம் உருவாக பால்நிலை தொழிற்பகுப்பு அவசியம்' என்று கூறுகிறார். இவரது வாதத்தில் உயிரியலும் பிரயோகமும் ஒன்றாகிவிட்டமையை காணலாம்.
ரல்கொட் பார்சன் குடும்பத்தைபற்றி ஆராய்கிறார். சமூகமயமாக்கல், கட்டிளமைப்பருவத்தினரை நிலைப்படுத்தல் ஆகியவை குடும்பத்தின் கடமை. ஒரு நல்ல சமூகமயமாக்கல் செயற்பாட்டிற்கு சாதகமான குழு வேண்டும். இக்குழுதான் குடும்பம். எனவே தாய்தான் குடும்பத்தின் ஆரம்பம் என்கிறார். இதை நியாயப்படுத்த உயிரியலை முன்வைக்கிறார். ஒரு பிள்ளைக்கான உணர்வு பூர்வமான ஆதரவு, பாதுகாப்பு ஆகியவற்றை ஒரு தாயினால்தான் வழங்க முடியும். பெண், அன்பு, இரக்கம், மரியாதை ஆகியவற்றை தன் கணவனுக்கு கொடுக்கிறாள். ஒரு குடும்பம் சீராக இயங்க தொழிற்பகுப்பு இருக்க வேண்டுமென்கிறார்.
ஜோன் வவுள்வி உளவியல் ரீதியாக குழந்தைகள் பாதிப்பதைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது கருத்துப்படி, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்கள் ஆரம்பகால வயதில் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டவர்களாகும். அப்பிள்ளைகள் அனாதை இல்லங்களில் விடப்படுவதால் அவர்களுக்கு தாயின் அன்பு அரவணைப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு ஏனையவர்களோடு பாசத்தை பகிர்ந்து கொள்ளவோ,

கொடுக்கவோ முடியாதுள்ளது. இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் தம்மை முனைப்பாக ஈடுபடுத்திக்கொள்வார்கள். ஒரு குழந்தையின் சரியான மூளை வளர்ச்சிக்கு ஆதரவான, நெருக்கமான உறவு அவசியம். பரம்பரை ரீதியான உளவியல் வளர்ச்சிக்கு தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான உறவுகள் தேவை என்பதனை இவர் தனது விவாதங்கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.
ஆன் ஒக்லி ஒரு பிரித்தானிய சமூகவியலாளர். பெண் விடுதலை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர். இவர் மானுட பண்பாடானது சமூகத்திற்கு சமூகம் மாறுபடக்கூடியது. அதற்கேற்பவே மனித செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. மாறாக அவை கண்ணுக்கு புலப்படாத உயிரியல் வலுக்களால் இடம்பெறுவதில்லை என்று கூறுகிறார். பீற்றர் மேடக் ஆய்வுக்கு உட்படுத்திய 224 சமூகங்களை இவரும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இங்கு ஆண்கள் செய்யும் பலமான வேலைகளை பெண்களும் செய்கின்றனர். முப்பத்தாறு சமூகங்களில் நிலத்தை பண்படுத்துவதில் பெண்கள் ஈடுபடுகிறார்கள் முப்பத்தியெட்டு சமூகங்கள் சமையலில் இருபாலாரும் ஈடுபடுகின்றனர். ஹொங்கொங்கில் வாழ்பவர்களிடம் ஆண்கள், பெண்கள் செய்ய வேண்டிய வேலை என்ற பிரிவு இல்லை. அவுஸ்திரேலியாவிற்கு கீழே உள்ள தீவான தஸ்மானியாவில் உள்ள பெண்கள் ஆழ்கடலில் சுழியோடி ஈட்டியால் குத்தி மீன் பிடித்தல், தேவாங்குவேட்டையாடுதல் என்பவற்றைசெய்கின்றனர். சீனா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் பெண்கள் இராணுவ அணியில் உள்ளனர். இந்தியாவில் கட்டிட வேலை செய்யும் கூலித்தெழிலாளர்களில் பன்னிரண்டு வீதமானவர்கள் பெண்கள். இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆண்களுக்கான வேலைகள் பெண்களுக்கான வேலைகள் என பிரிக்க முடியாது என்கிறார். பிள்ளை தாயின் பிரசன்னம் இன்றியே கிபுட்ஸ் இல் (Kibbutz) வளர்கிறது. அலோர் (Ator) தீவில் தாய்மார் பிள்ளைகளுடன் அதிக காலத்தை செலவழிக்காது விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்கு பிள்ளைகள் சீர்கெட்டுப்போகவில்லை. தாய்க்கும் பிள்ளைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்கிறார். பெண்கள் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். ஒரே ஒரு வித்தியாசம் அவர்கள் குழந்தைகளை சுமக்கின்றனர். எனவே பால்நிலை தொழிற்பகுப்பு பண்பாட்டு ரீதியிலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனினும், உயிரியல் அம்சம் ஒருசில தொழிலுக்கு அனுமதிப்பதில்லை எனக் குறிப்பிடுகிறார்.

Page 9
உளவியலாளரான புரூனோ பெத்தல்ஹேம் மனநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவர். இவர் குழந்தைவளர்ப்பு பற்றிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். அந்தவகையில், இவர் கிபுட்ஸ் (Kibbutz) ஐ ஆய்வுக்குட்படுத்தி ஒரு குழந்தை சீராக வளர, வளர்க்கப்பட தாய் குழந்தை உறவுமுறை அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார். இப்பிள்ளைகளிடையே போட்டி மனப்பான்மை, மற்றவர்களைத் தாக்கும் உளப்பாங்கு இருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. மேலும் இப்பிள்ளைகள் கடும் உழைப்பாளிகளாகவும், பொறுப்புணர்ச்சி உள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர் என்கின்றார்.
“Women and Men - An anthropological view'' 6T6óT60th BIT656) ஏன்ஸ்டைன் பிரேடில் பால் ரீதியான தொழிற்பகுப்பிற்கும் ஆணாதிக்கத்திற்குமான சரியான விளக்கத்தை தரமுயல்கிறார். தையல்வேலை, சட்டிபானை செய்தல், பின்னல்வேலை என்பன ஒரு சில சமூகங்களில் ஆண்களுக்குரிய வேலையாகவும் காணப்படுகின்றன. இங்கு ஒரே வேலை செய்யப்படினும் அவ்வேலையை ஆண் செய்யும் போது உயர்வான கெளரவம் கிடைக்கிறது. பெண் செய்யும் போது குறைவான கெளரவம் கிடைக்கிறது. இந்நிலையை பிரேடில் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகக் கருதுகின்றார். ஆண்கள் பொருட்களை வீட்டிற்கு அப்பால் சமூகத்தினரிடையே பரிமாறுகின்றார்கள். இவ்வாறு பெறுமதியான பொருட்களை பரிமாறும்போது கூடவே உரிமையும் வருகிறது. இது ஆணாதிக்கமாக மாறுகிறது. வேட்டையாடி உணவு சேகரிக்கும் சமூகங்களில் ஆண் வேட்டையாடுகிறான். பெண் மரக்கறி உற்பத்திகள், விதைகள் காய்கள் போன்றவற்றை சேகரிக்கிறாள். இந்தப்பால்நிலை ரீதியான தொழிற்பகுப்பை விளக்குவதற்கு பிரேடில் உயிரியலுக்குப் போகிறார். பெண்களின் பிள்ளை வளர்த்தல், பராமரித்தல், சுமத்தல் போன்ற செயற்பாடுகள் ஆணின் வேட்டையாடுதலுக்கு இணையாகாது. காரணம் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி குழு அங்கத்தவர்களுக்கிடையே பரிமாறப்படுகிறது. இந்தப்பரிமாற்றமே ஆண்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கான மூலமாக குறிப்பிடுகின்றார். அத்தோடு இறைச்சியை பெறுபவர்கள் அடி பணிபவர்களாக மாறுகின்றனர்.
நிலத்தைப் பண்படுத்துவது, பராமரிப்பது, ஏனைய குழுக்களுடன் பொருட்களை பரிமாறுவது போன்ற வேலைகள் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டதற்கான காரணம், அவ்வேலைகளில் அதிக அபாயம்

இருந்தமையே. ஏனெனில், பெண்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். சனத்தொகையின் மனித இருப்பிற்கு பெண்களே வேண்டும். ஆண் குறைவானபோதும் சனத்தொகை அதிகரிக்கும். ஆனால் பெண்கள் குறைந்தால் சனத்தொகை அதிகரிப்பு குறையும். ஒரு ஆண் பல பெண்களைக் கர்பமாக்க முடியும். ஆனால் பல ஆண்கள் இருந்தாலும் ஒரு பெண் இருந்தால் அவள்தான் கர்பமாக முடியும். இவ்வாறான பெண் பற்றிய அபாய உணர்வுதான் கடினமான வேலைகள் ஆண்களுக்கு ஒப்படைக்க காரணம் எனக் கூறுகிறார்.
செறி பி. ஒட்னர் என்பவரின் கருத்தும் பிரேடிலின் கருத்தை நியாயப்படுத்துவதாகவே அமைகிறது. இவர் இயற்கை, பண்பாடு என்ற இரு பதங்களை தனது வாதத்தினை நியாயப்படுத்த எடுத்துகொள்கிறார். பண்பாடானது இயற்கையை கட்டுப்படுத்துகிறது. பண்பாடு மூலமாக பல்வேறு கைங்கரியங்களை, அபிவிருத்திகளை மனிதன் இயற்கையில் செய்துள்ளான். பெண்கள் இயற்கையாகவே அடங்குகின்றனர். கர்பம் தரித்தல், பிள்ளையைச் சுமத்தல், பெற்று வளர்த்தல், பாலூட்டல் என்பவை இயற்கையுடன் தொடர்பானவை. இயற்கையை பண்பாடு கட்டுப்படுத்தும்போது இயற்கைக்குள் பெண்ணும் அடங்குவதால் ஆணினால் அவள் கட்டுப்படுத்தப்படுகிறாள் எனக் குறிப்பிடுகிறார்.
இறுதியாக உயிரியல் இலக்கணமா, பண்பாடா பால்நிலையைத் தீர்மானிப்பது என்ற நிலைப்பாட்டிற்கு உயிரியல் இலக்கணம் தவிர்க்க முடியாத ஒரிரு செயற்பாடுகளை பால்நிலை அடிப்படையில் தீர்மானிக்கவைக்கிறது. உதாரணமாக ஒரு ஆனால் கருத்தரித்து குழந்தையைப் பெற்று எடுக்க முடியாது. இது உயிரியல் இலக்கணத்தின் நிலைப்பாடு. மேலும் உயிரியல் இலக்கணம்தான் பெண்ணுக்கு குறிக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களையும் அவள் ஆணுக்கு பணிந்து போவது என்பதையும் தீர்மானிக்கிறது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் பண்பாட்டிற்கு பண்பாடு இச் செயற்பாடு வேறுபடுவதை நாம் காணலாம். எனவே பண்பாடு, உயிரியல் இலக்கணம் சில செயற்பாடுகளை தீர்மானித்தாலும் பால்நிலைதொழிற்பகுப்பினைத் தீர்மானிப்பது பெரும்பாலும் பண்பாடாகவே காணப்படுகிறது. எனினும், வளர்ச்சி அடைந்து வரும் ஒருசில நாடுகளிடையே தமது இனத்திற்கான விடுதலைக்காகக் போராடுகிறவர்களில் பெண்போராளிகள் மிகத் தீவிரமாக ஈடுபட்டு அந்நாட்டு பாதுகாப்பு படையினரையே கதிகலங்கச் செய்து வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. இது உயிரியல் இலக்கணமா? அல்லது பண்பாடா? இதற்கான விடையை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.

Page 10
உசாத்துணை நூல்கள்
Haralambos.M with Heald. R. “Sociology: Themes and Perspective' Oxford University.
Dian Ken Dall - 1999/2000, (Third Edition), “Sociology in our Times”, Baylor University, Wadsworth Thomson Learning,
செல்வி திருச்சந்திரன் - 1993, “பெண்அடிமையின் பரிமாணங்களும் பெண்ணுரிமையின் விளக்கமும்”பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு வெளியீடு 24. சித்திரலேகா. மெள - 1993, “பெண்ணிலை சிந்தனைகள்' பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு.
“நான் ஒரு பெண்” (பெண்கள் தொடர்பான சரிநிகர் கட்டுரைகளின் தொகுப்பு - 1990 - 1996), பாரதி வெளியீட்டகம்.

பால்நிலை அடுக்கமைவு ஒரு மானிடவியல் நோக்கு
- பகீரதி ஜீவேஸ்வரா -
இக்கட்டுரை பால்நிலைக் கருத்து நிலையை, (Genderldeology) அது சார்ந்த செயற்பாடுகளுக்கான மூலவிதைகளை மானிடவியலின் வரலாற்றுப் புறத்தளப் பரப்புகளில் அடையாளம் காண விளைகிறது. இன்னொரு வழியில், மானிட வரலாற்றில் பால்நிலைப் பாத்திரச் செயற்பாடுகள், பணிகள் மீது, இன்றைய பெண்ணிய ஒளி பாய்ச்சப்படுகிறது. பழைய தளத்தில் புதியதின் தேடல்.
மனிதனை கற்கின்ற பல்வேறு துறைகளில் மானிடவியல் மனிதனைக் கற்பதற்கென்று விஷேடமாக முழுதளாவிய (Holistic) நிலையில் அமைந்த ஒரு துறை. இங்கு மனிதன் நான்கு தளங்களில் நின்று நோக்கப்படுகிறான். அதாவது அவனது முன்னைய பரம்பரையினூடாக அவன் அறியப்படுதல், நிகழ்தள மனிதர்களின் உள்ளடக்கத்தில் அறியப்படுதல், உயிரியல் பிராணியாகப் பார்க்கப்படுதல், பண்பாட்டின் உறுப்பினனாகப் பார்க்கப்படுதல் என்பனவாகும். எனவே மனிதர்களைப் பற்றிய ஒரு யதார்த்தமான (Realistic) பரிமாணம் மனிதர்களையே விஷேடமாகக் கற்று நிபுணத்துவம் பெற்ற மானிடவியலாளர்களுக்கு இருக்கும் என்பதில் முரணெதுவும் இருக்கப்படமுடியாதென்றே இக்கட்டுரை எடுகோளிடுகிறது.
மானிடவியலாளர்கள் உயிரியல், சமூகவியல், பண்பாடு பற்றியெல்லாம் கற்பதனால் மனித நடத்தைகளைத் தீர்மானிக்கின்ற பரம்பரை, சூழல் பற்றிக் கருத்துத் தெரிவிக்கின்ற தனித்துவமான நிலையைக் கொண்டுள்ளனர். மனித மனப்பாங்கு, விழுமியம், நடத்தை என்பனவெல்லாம் எளிதில் இனங்காண முடியாத பரம்பரையலகுகளின் செல்வாக்குட்பட்டிருப்பதோடு,

Page 11
பண்பாட்டுமயமாக்கலினுாடாக நாம் பெற்ற அனுபவங்களினூடாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதுடன் மானிடவியலாளர்கள் உடன்பட்டுக் கொள்கின்றனர்.
மனித நடத்தை மீதான பரம்பரை, சூழல் செல்வாக்குப்பற்றிய விவாதம் இன்று விஞ்ஞான, பொதுப்பரப்புக்களில் எடுத்துரைக்கப்படுகிறது. இங்கு சூழலியலாளர்களின் அடிப்படை நம்பிக்கை, மனிதனின் பரிணாம வெற்றி என்பது. நெகிழ்வுத்தன்மையில், வேறுபட்ட வழிகளில் தன்னை இயைபுபடுத்தும் திறனில் தங்கியிருக்கிறது என்பதாகும். ஏனெனில் மனித இயைபாக்கம் (Human Adaptation) என்பது, வலுவான பண்பாட்டுக் கற்றலிலேயே தங்கியுள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
இப்பரம்பரை, சூழல் பற்றிய விவாதம் மனிதனின் பால் (Sex), பால்நிலைப் பாத்திரங்கள் (Gender Roles), பாலியல் (Sexuality) சார்ந்த கலந்துரையாடல்களின் போதும் மேற்கிளம்பியது.
ஆணும், பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபாடுடையவர்கள். பெண் இரண்டு (2) X வகை நிறமூர்த்தங்களைக் கொண்டவள் என்றும், ஆண் X வகை நிறமூர்த்தத்தையும் Y வகை நிறமூர்த்தத்தையும் கொண்டவன் என்றும் உயிரியல் நிரூபித்துள்ளது. இதிலிருந்து தாய் (பெண்) எப்போதும் X வகை நிறமூர்த்தத்தையே வழங்குபவளாகவும், தந்தை (ஆண்) மட்டுமே அவர் அறியாத வகையில் கூட, பிறக்கப்போகும் குழந்தையின் பாலைத் (Sex) தீர்மானிப்பதற்கான Y நிறமூர்த்தத்தைக் கொண்டிருப்பதாகவும் உயிரியல் கட்டமைத்துள்ளது. இந் நிறமூர்த்தங்களின் வேறுபாடு சுரப்பிகள், உடலியல் வேறுபாடுகளிலும் வெளிப்படுகிறது. ஆணும், பெண்ணும் முதனிலை வேறுபாடுகளான இன உறுப்புக்கள், மறு உற்பத்தி உறுப்புக்களில் வேறுபடுவதுடன், இரண்டாம்நிலை பாலியல் இயல்புகளான மார்பகம், குரல், உரோம வளர்ச்சி என்பதிலும், சராசரி நிறை, உயரம், பலம் என்பவற்றிலும் வேறுபடுகின்றனர். ஆனால், இப்பரம்பரை, உடலியல் வேறுபாடுகள் எவ்வளவு தூரம் போகும்? வேறுபட்ட பண்பாடுகளில் ஆண்களும், பெண்களும் செயற்படுகின்ற, நடாத்தப்படுகின்ற செயன்முறைகளால் அவர்கள் என்ன தாக்கத்தைப் பெறுகின்றனர்? இவை விடை காணப்பட வேண்டியவையே.
மானிடவியலாளர்கள் செய்து கொண்ட பல பண்பாட்டிடை ஆய்வுகள் பால் (Sex) களுக்கு இடையேயான பல மனப்பாங்கு, நடத்தை சார்
O

வேறுபாடுகள் உயிரியலைக் காட்டிலும், பண்பாட்டினால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாகவே காட்டுகின்றது. எனவே பால் வேறுபாடு (ஆண் X பெண்) என்பது உயிரியல் சார்ந்ததென்றும், பால்நிலை வேறுபாடு (ஆணியல்பு X பெண்ணியல்பு) என்பது, பண்பாட்டால் உருவாக்கப்படுவது என்றும் கூறப்படுகிறது. (Rosaldo, 1980).
Margret Mead Papua New Guinea 636) epsi g60T LD556floo)LGu (Arapesh, Mundugumor, Tehambuli) unt Gb 8606uj urtës Jij856f6ëT வேறுபாடுகளை மையமாகக் கொண்டு செய்த ஆய்வின் முடிவுகள் மூன்று உண்மைகளை வெளிப்படுத்தி நின்றன.
1) பால்நிலைப்பாத்திரச் செயற்பாடுகளுக்கும், பாலுக்குமிடையே சிறிதளவு
உறவு உண்டு. S.
2) ஆனால் பால்களுக்கிடையே உலகளாவிய ஆளுமை வேறுபாடுகள்
இல்லை
3) பால்களுக்கிடையே உணர்ச்சியியல்பு/மனப்போக்கு வேறுபாடுகளை
உருவாக்குவதற்கு சமூகங்கள் தளங்களாக விளங்குகின்றன.
இக் கட்டுரையை மேலும் சரியாக விளங்குவதற்கு மூன்று கருத்து நிலைகள் பற்றிய தெளிவு வேண்டப்படுகிறது.
* பால்நிலைப் பாத்திரங்கள் - ஒவ்வொரு பண்பாட்டிலும் ஆண் (Gender Roles) பெண்ணுக்கென ஒதுக்க ப்பட்ட
செயற்பாடுகளும், பணிகளுமாகும். *
* பால்நிலை ஒருபடிவார்ப்பு - ஆண் - பெண் இயல்புகளைப் பற்றி, மிக (Gender Streotype) எளிமைப்படுத்தப்பட்டு, ஆனால் வலிமையாகக்
கொண்டுள்ள எண்ணங்கள். *
* பால்நிலை அடுக்கமைவு - சமூகப்படி நிலையில் வேறுபட்ட நிலைகளைப் (Gender Stratification) பிரதிபலிக்கும் ஆண் பெண்ணுக்கிடையேயான வெகுமதிகளின் (தனியாள் சுதந்திரம், கெளரவம், அதிகாரம்) சமமற்ற பகிர்வு என்பவற்றைக் குறித்து நிற்கிறது. (Light,
Keller, Colhoun 1994).
11

Page 12
இக்கருத்து நிலைகளின் உள்வாங்கலுடன், மானிடத்தின் ஆரம்பத்தளங்களைத் தரிசிக்கின்றபோது, ஆரம்பகால சமூகங்களை அதன் சமூக, அரசியல், பொருளாதார இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு Elemen Service என்ற மானிடவியலாளர் நான்கு வகைகளில் அடையாளம் காண்பது இக்கட்டுரையின் ஆய்வுப்புலமாகின்றது.
சமூக-அரசியல் நிலை பொருளாதார நிலை
(1) Bands (குலக்குழு) -த-Foragers (நாடோடிகள்)
(2) Tribes (பழங்குடி) -த-Horticulture (தோட்ட வேளாண்மை)
Pastoralism (கால்நடை வேளாண்மை)
(3) Chiefdom (தலைமையுரிமை)-> Agriculture (விவசாயம்)
(4) State (9.jö) -- Industrialism (605505|Thai)
இந்நான்கு பொருளாதார நிலைக்கட்டங்களிலும் பால்நிலைப் பாத்திரங்களின் செயற்பாடுகள், பணிகளுக்கூடாக பால்நிலை அடுக்கமைவை இனங்காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும். பண்பாட்டிடை ஆய்வுகள் நிகழ்த்திய மானிடவியலாளர்கள் பலர் (Morgan 1989, Peggy Sanday 1974) பால்நிலை அடுக்கமைவைத் தீர்மானிப்பதில் நான்கு காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாக தமது அவதானங்களின் அடிப்படையில் கூறுகின்றனர். அவை, சூழல், பொருளாதாரம், இயைபாகும் தந்திரோபாயம், சமூக சிக்கல் நிலை என்பனவாகும்.
நாடோடி வாழ்க்கையில் பால் நிலை அம்சங்கள்
எமது மூதாதையர் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாடோடிகள் வாழ்க்கை வாழ்ந்ததாக மானிடவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அன்று பால்நிலை அடுக்கமைவு என்பது ஆண், பெண் உணவுக்குப் பங்களிக்கும் அளவில் இருந்தும் கணித்துக் கொள்ளப்பட்டது. அனைத்துப்பண்பாடுகளிலும் இருப்பது போன்று தொழிற்பகுப்பு என்பது, அன்றும் பால்நிலையுடன் தொடர்புபட்டிருந்தது. ஆண்கள் பெரும்பாலும் வேட்டையாடுபவர்களாகவும், மீன்பிடிப்பவர்களாகவும் செயற்பட, பெண்கள் உணவு சேகரிக்கும் பணியிலேயே ஈடுபட்டனர். அத்துடன் அன்று வீடு வெளி சார்ந்த வேறுபாடுகள் துல்லியமாக
12

இனங்காணப்படவில்லை. இதனால் பால்நிலைப் பாத்திரங்கள் என்பன ஒன்றிலொன்று தங்கியிருந்தன. பெண் உணவு சேகரிக்கும் போது. மிருகம் ஒன்றைக் கண்டால், அச் செய்தியை ஆணுக்குத் தெரிவித்தாள். ஆண்களும், பெண்களும், குறிப்பிட்டளவு நேரம் தமது உணவு சேகரிப்புத் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஒருவரது பணியை இன்னொருவர் செய்வது தவறாகக் கொள்ளப்படவில்லை. ஆண்களும் உணவு, நீர், விறகு சேகரித்தனர். வளங்களும் போதுமாக இருந்தன. அதனால் போட்டி இருக்கவில்லை. வலுச்சண்டைக்குப் போகும் தன்மையும் காணப்படவில்லை. உறவு முறையும் இருவழியிலும் (தாய்வழி தந்தைவழி) பேணப்பட்டது. இதனால் இக்கால கட்டத்தில் பால்நிலைச் சமத்துவம் ஒரளவு நிலவியதாக (ஒப்பீட்டளவில்) கருதப்படுகிறது. இருப்பினும் வேட்டையாடல், மீன்பிடித்தல் ஆகிய ஆணினுடைய பணிகள், ஆணின் நகர்வுப் போக்கை அதிகப்படுத்தியதாகவும், (Greater male mobility), LD65 Cuibald, 85IT Goril 8,6ir, urg)TGh Lu 600f, குழந்தைக்காகவும் காலங்கள் என்பன பெண்ணினுடைய நகர்வை, அவளது உணவு சேகரித்தலை மட்டுப்படுத்தியதாகவும் பார்க்கப்படுகிறது. இது இன்றைய பெண்ணியவாதிகளுக்கு மூலவித்துக்கள் போன்றன!
தோட்ட வேளாண்மையில் பால்நிலை
இங்கு Martin& Voohies (1975) இருவரும் 515 தோட்ட வேளாண்மை சமூக மாதிரிகளை எடுத்து, அவற்றில் மரபுவழி உரிமை, திருமணத்திற்கு பின்னான வதிவிடம், பயிர் செய்தலில் இருந்து பெறப்படும் உணவு வீதம் என்பவற்றில் கவனம் செலுத்தினர்.
அவதானங்களினடியான முடிவுகள், இச்சமூகங்களில் பெண்கள் மிக முக்கிய உற்பத்தியாளர்களாக இருந்ததைக் காட்டியது. 50% மேலான சமூகங்களில் பெண்கள் அதிக தோட்ட வேளாண்மை செய்துள்ளனர். 17% மட்டுமே ஆண்கள் அதிகமாக வேலை செய்துள்ளனர். தாய்வழி மரபு வழியிலேயே இங்கு உறவு பேணப்பட்டது. மரபுவழி உறவும், திருமணத்திற்கு பின்னான வதிவிடமும் பால்நிலை அந்தஸ்து வேறுபாட்டுடன் தொடர்புடையவை என்று இருவரும் கண்டனர். இச் சமூகங்களில் தாய்வழி மரபுமுறையும், திருமணத்திற்குப் பின் மனைவியின் உறவினருடன் தங்குகின்ற வழமையும் இங்கு பெண்ணின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டியள்ளது. ஏனெனில், இங்கு தாய்வழி மரபுமுறை அங்கத்துவமும்,
13

Page 13
தீர்மானம் எடுக்கும் நிலைகளும், நில ஒதுக்கீடும், ஒட்டுமொத்த சமூக அடையாளமும் பெண் தொடர்புகளினுாடாகவே சென்றுள்ளதை அறிய
பால்நிலை பாத்திரம் தோட்ட 6)hald-Tuto
வேளாண்மை
பெண்கள் முதனிலை பயிர் வளர்ப்போர்
50% 15%
ஆண்கள் முதனிலை பயிர் வளர்ப்போர்
17% 81%
முடிகிறது. தாய்வழிமரபு மூதாதையர்களின் தோட்ட வேளாண்மை நிலங்களை பெண்ணுக்கே தனியுரிமையாக்கியது. திருமணத்தின் பின் மனைவியின் வீட்டில் வாழுதல், பெண் உறவுகளுடன் ஒரு வலிமையான உறவுவலையை உருவாக்கியது. இதனால் முழுச்சமூகக் கட்டமைப்பினதும் அடிப்படையாகப் பெண் இருந்தாள், வெளியதிகாரம் ஆணுடன் தொடர்புபட்டிருந்தாலும், அதிகசக்தியும், தீர்மானம் மேற்கொள்ளலும் வயது முதிர்ந்த பெண்களையே சார்ந்திருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.
கால்நடை வளர்ப்பில் பால்நிலை
உணவில் 50% ற்கு மேற்பட்ட பகுதியை பாற்பண்ணை உற்பத்திகளும், இறைச்சியும் வழங்குமானால், அவர்கள் கால்நடை வளர்ப்போர் என பொருளாதார நிலையில் மானிடவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டனர். இங்கு மந்தை மேய்த்தலும், உழுதலும் ஆண்களின் பணிகளாகவும், பயிர்வளர்த்தல், வீட்டுப்பணி, விறகு, நீர் பெறுதல் என்பன பெண்களின் பணிகளாகவும் இருந்திருக்கின்றன. ஆண்களே இங்கு அனைத்துச் சொத்துக்களையும் கட்டுப்படுத்தினர். பெண்கள் நிலத்திற்கோ, கால்நடைக்கோ உரிமையுடையவர்களாக இருக்கப்படவில்லை. ஆண்களே அனைத்துத் திருமணங்களையும் ஒழுங்கு செய்தனர். ஆண் தனது சகோதரனுக்குரிய மனைவி வேறு பழங்குடியிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினான். இதனால் பெண் தனது உறவுகள், நட்புகளில் இருந்து விலக்கப்பட்டாள். பெண்களின் பாலியல் நடத்தைகூட இங்கு அவதானத்திற்குட்பட்டதாக கூறப்படுகிறது. உற்பத்தியின் முக்கிய பாத்திரத்தில் இருந்து பெண் தவிர்க்கப்பட்டாள். இதனால் இங்கு பெண்
14

தாழ்ந்த கெளரவத்துடனும், இரண்டாம் நிலையிலும் நடாத்தப்பட, ஆண் முழு அதிகாரம், வலிமை பெற்றவனாகக் காணப்படுகிறான்.
விவசாய சமூகத்தில் பால்நிலை
தோட்ட வேளாண்மை, விவசாயமாக மாறியபோது, பெண்கள் பயிர்வளர்த்தல் என்ற முதனிலைப் பாத்திரத்தை இழந்தனர். சில விவசாயநுட்பங்கள், குறிப்பாக உழுதல் ஆணுக்குப் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. ஏனெனில் அவர்களிடமே அப்பணிக்கேற்ற அதிக பலமும், பருமனும் இருந்ததாக நம்பப்பட்டது. உழுவதால் பெண்களின் பணியான களைபிடுங்குதல் என்பது நீக்கப்பட்டது. பண்பாட்டிடை ஆய்வுகள் உற்பத்திப் பாத்திரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் காட்டியது.
விவசாயத்துடனேயே பெண்கள் முதன் முதலாக மனித வரலாற்றில், உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டிருப்பதாக மானிடவியலாளர் பார்க்கின்றனர். பெண்ணினுடைய வீட்டுப்பணி தரம் குறைந்ததாகவும், ஆணினுடைய வீட்டிற்கு வெளியேயான பணி பெறுமதியானதாகவும் இருந்த நம்பிக்கைகள் முரண்படத் தொடங்கின. உறவு முறையில் ஏற்பட்ட மாற்றங்களும், திருமணத்திற்குப் பின்னான வதிவிட வடிவங்களும் பெண்ணை ஒரப்படுத்தின. மரபுவழிமுறையும், பல மனைவி மண முறையும் வீழ்ச்சி கண்டது. தனிக்குடும்ப அமைப்பு பொதுவானதாக மாறியது. தனது கணவனுடனும் பிள்ளைகளுடனும் வாழ்தல் என்பது, பெண்ணை தனது உறவுப் பெண்கள், சக மனைவிகளில் இருந்து தனிமைப்படுத்தியது. இங்கும் பெண்ணின் பாலியல் நடத்தை என்பது, மிகக் கவனமாக அவதானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆண்கள் இலகுவில் விவாகரத்துச் செய்து கொள்ளவும், திருமணத்திற்கு அப்பாலான பாலியல் உறவை வைத்துக் கொள்ளவும் முடிந்தது. விவசாயத்தில் வந்து புகுந்த புதிய கருவிகளும், நுட்பங்களும் பெண்களின் பணிகளான களைபிடுங்குதல், அறுவடை, பயிரிடுதல் ஆகியவற்றில் அவர்களின் பணிகளைக் குறைத்தது. இதனால் இங்கு பெண் அடுக்கமைவில் தாழ்ந்தே கணிக்கப்பட்டாள்.
கைத்தொழில் சமூகத்தில் பால்நிலை
இங்கு வீடு-வெளிசார்ந்த வேறுபாடு மிகத் தெளிவாக, முழுதாக விருத்தி பெற்றது. பால்நிலைத் தொழில் தொடர்பான மனப்பாங்குகள், சமூக வகுப்பு, வாழும் பிராந்தியம் என்பவற்றுடன் வேறுபட்டது. ஆரம்பகால கைத்தொழில் ஐரோப்பாவில் ஆண்கள், பெண்கள்,
15

Page 14
குழந்தைகள் அனைவரும் தொழிற்சாலைகளில் ஊதியத்திற்குச் சென்றனர். இயந்திரக் கருவிகளும், அதிகளவு உற்பத்தியும் பெண் உழைப்பின் தேவையைக் குறைத்தது. இவற்றுக்குப் பெண்கள் உயிரியல் ரீதியாகப் பொருத்தமற்றவர்கள் என்ற கருத்துநிலை அன்று நிலவியது.
உலகப்போர் நிகழ்ந்த காலங்களில் போருக்கு ஆண்கள் போதாததாக இருந்தமையால், வீட்டிற்கு வெளியிலான பெண்ணினுடைய பணி அவளின் நாட்டுப் பற்றுக் கடமையாகக் கருதப்பட்டது. பெண்கள் கடின உடல் உழைப்பிற்குப் பொருத்தமற்றவர்கள் என்ற பழைய கருத்துநிலை, முதலாம் உலகப்போர் காலங்களில் மங்கியது. பணவீக்கமும் நுகர்வுப் பண்பாடும் பெண் உழைப்பை வேண்டிநின்றது. இரண்டாம் உலகப் போரிலிருந்து, நிரந்தர பெண் தொழில் என்பது கைத்தொழில் விரிவைக் காட்டியது. அமெரிக்கப்பண்பாட்டில் அன்று பாரம்பரியமாக எழுதுவினைஞர், ஆசிரியர், தாதி என்ற பணிகள் பெண்களுக்குரியவையாகக் கருதப்பட்டன. வேகமான சனத்தொகை வளர்ச்சியும், 2ம் உலகப்போரின் பின்னான வர்த்தக விரிவுபடுத்தலும் இப்பணிகளை நிரப்புவதற்கான பெண்களின் கோரிக்கைகளை உயர்த்தின. இதனால் ஆண் - பெண்ணுக்கு இடையேயான வருமான இடைவெளி குறைந்தது. இன்று பல தொழில்கள் அதிக உடல் உழைப்பை நாடி நிற்பதில்லை மூளை உழைப்பையே அவாவி நிற்பதையும் நாம் காணமுடிகிறது.
இவற்றில் இருந்து மானிட வரலாற்றினூடே, பண்பாடுகளினூடாக பால்நிலைப் பாத்திரங்களும், அடுக்கமைவும் காலத்திற்குக் காலம் பரந்தளவில் வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. நாடோடிகளிடையேயும்,தாய்வழிமரபினர், பயிர் வளர்ப்போரிடையேயும் குறைந்தளவிலேயே பால்நிலை அடுக்கமைவு இருந்திருக்கிறது. வளங்களுக்கான போட்டி, போருக்கு வழிநடத்தியதுடன், உற்பத்தியையும் நெருக்கப்படுத்தியது. இவை தந்தைவழி மரபையும், திருமணத்தின் பின் கணவன் வீட்டில் வாழவும் பக்கத் துணையாகியது. விவசாயச் சமூகத்திலும், கால்நடை வளர்ப்போர் சமூகத்திலும் பெண்கள் உற்பத்திப் பாத்திரங்களில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றனர். கைத்தொழில் சமூகத்தில் பால்நிலை தொடர்பான மனப்பாங்கு என்பது, பெண்ணின் வீட்டிற்கு வெளியேயான தொழில் புரிதலுடன் மாறுகிறது.
எனவே இப்பரந்த பின்புலத்தில் பால்நிலை என்பது. சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் காரணிகளுடன் நெகிழ்ந்து செல்லும்
16

தன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்துடன் இடம், நேரம் என்பவற்றுடனான பால்நிலை வேறுபாடு என்பது, தொடர்ச்சியாக மாறும் என்பதையும் இக் கட்டுரை உணர்த்தி நிற்கிறது. இங்கு மானிடவியலாளர்களின் பணி யாதெனில் மனிதனுடன் தொடர்புபட்ட கருத்துநிலை, நடத்தைசார் அனைத்து முரண்பாடுகளிலிலும் இருந்து விடுபடுவதற்கான மூல உண்மைகளைப் பகுப்பாய்ந்து, அடிப்படை மனித நேயத்தை ஒவ்வொரு மனித மனங்களிலும் கருத்தூன்றுகின்றமையே என்று இக்கட்டுரையாளர் கருதுகின்றார்.
உசாத்துணைகள்
o Kottak, C.P. 1997 Anthropology - The McGraw Hill Compa
v nies Inc U. S. A,
• Beauvoir, S.D. 1993 The Second Sex, The millennium Library, s Crapo, R. H. 1987 Cultural Anthropology, The Dushkin
Publishing Group Inc U.S.A,
Hariland, A.W. 1974 Anthropology, Holt Rinheart & Winston
Inc.,
சு பக்தவச்சலபாரதி. சீ. 1990 பண்பாட்டு மானிடவியல் மொழியியல் பண்பாட்டு
ஆராய்ச்சி நிறுவனம்,
17

Page 15
பண்பாடு, குரும்பம், பெண்நிலைவாத முரண்பாடுகள்
- ஜானகி சங்கரப்பிள்ளை -
மெது பண்பாட்டுத் தளம் காலம் காலமாக பெண்களை கீழ்நிலைக்குத் தள்ளி வருகின்றது. பண்பாட்டு மரபு இவ்வாறான தனது நிலையை, உள்ளார்ந்த முரண்பாடுகளை மூடி மறைத்து செயல்பட்டு வருவதன் பின்னணி ஆணாதிக்கமாகும். பண்பாட்டின் உள்ளுறை முரண்கள் மறைப்பிற்குரிய திரைகளாக சமூகத் தளத்தில் விழுந்துள்ளன. ஆணாதிக்கத்தின் உச்சரீதியான வளர்ச்சி பண்பாட்டுச் சூழலில் வளர்ச்சி கண்டுள்ளது. அதனை சாத்தியப்படுத்துகின்ற கருவிகளாக மக்கள் தொடர்புசாதனங்கள், சமயங்கள், சட்டங்கள், அரசியல், பொருளாதாரம், என்பவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கருவிகள் மூலம் மீளவும் மீளவும் இருக்கின்ற நிலைமைகள் வடிவமைக்கப்படுகின்றன. பெண்கள் தமது நிலையை உணர்ந்து புரட்சிகரமான, பால்நிலைப் பிரஞ்ஞையை அடைந்து கொள்ளும் நிலையினை அடைவதில் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. அவர்களின் செறிவான, சிக்கலான, தனித்துவம் வாய்ந்த விடுதலைக் கருத்துக்களைக் கொண்டு வாழ்வதற்கு ஆணாதிக்கம் மிகுந்த புறவுலகின் தடைகள் மிகப்பெரிய சவால்களாகவே விளங்குகின்றன. பெண்களின் நிலையை மாற்றியமைத்து தமக்கேயுரிய விதங்களில் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட சமூகத்தை மறுபடைப்புச் செய்து அதன் கோட்பாடுகளை ஜனரஞ்சகப்படுத்தும் முயற்சிகளில் பெண்நிலைவாதம் முக்கிய இடம் வகிக்கின்றது.
பெண்நிலை வாதம் என்பது பெண்களுக்கு எதிரான அனைத்துஆதிக்க, அதிகாரங்களையும், அவர்களுக்கு அறிவினை ஏற்படுத்துவதில் தடையாக இருக்கின்ற அனைத்துச் சக்திகளையும் கேள்விக்குள்ளாக்கி வரும் அமைப்புக்களையும், அது சார்ந்த கோட்பாடுகளையும் குறிக்கும் எனச் சுருக்கமாகக் கூறலாம்.
18

பண்பாட்டுச் சூழலின் ஆண் ஆதிக்கக் கருத்துக்களை மீளவும், மீளவும் உற்பத்தி செய்து வெளியிடுகின்ற சமூகத்தின் அடிப்படையான சிறிய, ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டமைக்கப்பட்ட நிறுவனமாகக் குடும்பம் திகழ்கின்றது. இத்தன்மையானது பெண்நிலைவாதிகளால் உணரப்பட்டு விமர்சிக்கப்படுகின்றது.
மேற்கத்தேயே சூழலில் இன்று குடும்பம் மீது கொண்டுள்ள நம்பிக்கை தளர்ச்சியடைந்து வருகின்றது. சமுதாய உற்பத்திக்குக் காரணமான பெண்கள் மேலானவர்கள். குடும்ப அமைப்பு ஆண்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறதே தவிர பெண்ணுக்கு அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தவில்லை. எனவே குடும்பம் என்பதனை உடைத்துவிட்டுப் பெண்கள் வெளிவரவேண்டும் என்ற கருத்துக்கள் மேற்கத்தேய பண்பாட்டுச் சூழலுக்கு ஒத்துவரக்கூடியதாயினும் கீழைத்தேய எமது சமூகங்களில் இவ்வாறான கோசங்கள் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன.
மேலை நாடுகளில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழவிரும்பும் ஜோடிகள், குடும்பப் பொறுப்பை ஏற்க விரும்பாதவர்கள், தனித்து வாழ விரும்புகின்றவர்கள், ஓர் இனச் சேர்க்கையை விரும்புகின்றவர்கள் என்போர் அதிகரித்து வருகின்ற நிலையில் பாரம்பரியமாக இருந்து வருகின்ற குடும்பத்திற்கு உரிய வரையறைகளில் தளர்வுகள் ஏற்படத்தொடங்கியுள்ளது. மேலும் குடும்பங்களில் ஏற்படுகின்ற பொருளாதாரப் பற்றாகுறைகள், மதுவுக்கும், போதைவஸ்துக்களுக்கும் அடிமையாகி வாழும் பெற்றோர்கள் அல்லது குழந்தைகள், நம்பிக்கையற்ற திருமணங்கள், மனவெழுச்சியுடன் கூடிய காதல், சுயநல வாதம், தனிநபர் வாதம், மனிதநேயமற்ற செயற்பாடுகள், என்பவை சமூகங்களில், அதிகரித்து வருகின்றன, இவ்வாறான காரணங்களும் மேற்கு நாடுகளில் குடும்பம் பண்பாடு என்பன மீதான நம்பிக்கைகளை சீர்குலைத்து வருகின்றது.
சமூகத்தின் எல்லாக் கூறுகளிலும் பரவி நிற்கின்ற கலாச்சாரக் கூறுகள், பழமைவாதப் போக்குகள், மரபுவாதங்கள் என்பன எமது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் பெண்நிலைவாதக் கருத்துக்களுடன் முரண்படுகின்றன. பெண்நிலைவாதம் என்பது. அமெரிக்காவில் தோன்றி பின் ஐரோப்பிய நாடுகளில் பரவி இன்று உலகளாவிய நிலையை அடைந்ததாகும். மேற்கத்தேய மரபில் தோன்றிய பெண்நிலைவாதம், சூழல், காலம் என்பவற்றை
19

Page 16
அனுசரித்தவாறு காணப்படுகின்றது. அவர்களின் விடுதலைக்கருத்துக்கள் அவர்களின் சூழலை அல்லது சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே மேற்கத்தையப் பெண்கள் எதிர்நோக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சவால்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்றவை மாதிரியான விடயங்கள் எமது பண்பாட்டு சூழலில் வாழும் பெண்கள் எதிர்நோக்குபவற்றில் இருந்து வேறுபாடானவையாகும்.
எனவே உலகளாவிய வகையில் எல்லாப் பெண்களுக்கும் (அனைத்து சாதி, மத, இன) உரிய பொருத்தமான கோட்பாடுகள் சமூகமாற்றங்கள் என்பவற்றை ஏற்படுத்த முடியாதுள்ளது.
முதலில் எமது சமூகத்தில் குடும்பம் ஏற்படுத்தும் முரண்பாடுகளை விரிவாக நோக்குவோம் :- எமது சமூகம் ஆணாதிக்கச் சமூகமாகும். ஆணாதிக்கச் சமூகம் என்பது பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவர்களைக் கட்டுப்படுத்துவதும் ஆகிய நிலைமைகளைக் கொண்ட ஒர் சமூக முறைமை எனச் சுருக்கமாகக் கூறலாம். இச்சமூகத்தில் உள்ளுறைந்துள்ள ஆண் ஆதிக்க உணர்வுகள் வெளிபாடு காணும் தளம் சமூகத்தில் உள்ள ஆண், பெண் உறவுகளில் ஆகும். மரபான சித்தாந்த, கலாச்சார மாயைகள் மூலம் அவை மேலும் மேலும் நிலைநிறுத்தப்படுகின்றன. அவை காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டவை எல்லாம் சமூகவிழுமியங்களாகவும், பெறுமதிகளாகவும் கருதப்பட்டு எந்தவிதமான பகுத்தறிவான கேள்விகளும் இன்றி போலியான பிரக்ஞைகளுடன் விடாப்பிடியாகப் பேணுகின்ற நிலைமைகளையே வெளிப்பாடுகளாகக் கொண்டுள்ளன. இதுவே எமது சமூக மக்களின் அன்றாட வாழ்வாகின்றது என்பது கண்கூடு.
ஆணாதிக்கச் சமூகம் ஒன்றைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம். “பெண்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கு வாய்ப்பான முறையில் ஆண்கள் தமக்கிடையே அதிகாரப்படி நிலைத்தன்மையுள்ளதும். பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதும் ஒருமைப்பாடு உள்ளதுமாக அமைத்துக்கொண்ட, பெளதீக அடிப்படை கொண்ட சமூக உறவுகளின் தொகுப்பு எனலாம். ”எனவே ஆணாதிக்கச் சமூகம் ஒன்றில் அதனுடைய கருத்தியல் அடித்தளத்தின் வெளியீட்டு முகவராகப் பணியாற்றுவது குடும்பம்’ என்ற நிறுவனமாகும். ஒரு தனிநபருக்கான குணாதிசயங்கள், நடத்தைகள், இயல்புகள், ஆளுமைப்
20.

பண்புகள், ஆதிக்க உணர்வுகள் தனித்தன்மைகள் என்பவற்றுக்கான ஆதாரத்தை வழங்குகின்ற அதே வேளை ஒரு ஆணாதிக்க சமூகம் ஒன்றின் அதிகாரத்துவ நிலைப்பாடுகளையும், நடத்தை முறைகளையும் தனிநபர்களுக்கு ஊட்டி ஒரு சமுதாய அமைப்பு இயங்குவதற்கு இன்றியமையாதது அதிகாரத்துவ நிலைப்பாடுகளே என்ற மாயைகளை ஊட்டுவதும் குடும்பமாகத்தான் இருக்கிறது.
குடும்பம் என்பதனை வரையறை செய்வதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. எனினும் குடும்பம் பற்றிய சமூகவிஞ்ஞானக் கருத்துக்களில் இரண்டு வேறுவிதமான கருத்துக்களை நாம் அவதானிக்கலாம்.
அவையாவன :-
1) குடும்பம் என்பது இயற்கையாக ஏற்பட்ட நிலையான அமைப்பு ஆகும். இதன்படி குடும்பத்தின் தலையாய பணி இன மறு உற்பத்தியும், குழந்தை வளர்ப்புமாகும்.
2) சமூக அமைப்புக்கும், சமூக மாற்றத்துக்கும் ஏற்றவாறு குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே குடும்பத்துக்கென நிலையான பாத்திரப் பங்களிப்பு இல்லை. என்பவையாகும்.
சமூகத்தில் குடும்பம் ஆற்றுகின்ற செயற்பாடுகளாகப் பலவற்றைக் குறிப்பிடலாம். அவற்றுள் சந்ததி மறு உற்பத்தி, குழந்தை வளர்ப்பு, சமுதாயவமாக்கம், கல்வி வழங்கல், சொத்து சேகரித்தல், அவற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லுதல், அன்பையும் பாதுகாப்பையும் வழங்கல், வயதானவர்களையும், நோயாளர்களையும் பராமரித்தல், என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இவை தவிரக் குடும்பம் ஆற்றும் இன்னொரு பக்கச் செயற்பாடுகளையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதனிநபர் அந்தஸ்துகளை அல்லது மதிப்புக்களை அளித்தல், மரபான பால்சார்ந்த வேலைபபகுப்பினைப்பாதுகாத்தல், ஆண்பால், பாத்திரங்களுக்கிடையிலான, அதிகார உறவுகளை வலுவடையச் செய்தல் என்பவற்றின் மூலம் குடும்பத்திற்குள்ளேயும், வெளியேயும், முரண்பாடுகளை அதிகரிக்கின்ற நிலைமைகளை நிலைநிறுத்துகின்றது. இவற்றினால் அதிகமாகப்பாதிக்கப்படுபவர்களாகவும், இருப்பவர்கள் பெண்கள் என்ற பொருள் வகுப்பினரேயாவர்.
21

Page 17
குடும்பம் என்பது சமூகத்திற்கான இனமறு உற்பத்தி செய்யும் முக்கிய நிறுவனம் என்பது ஒரு புறம் இருக்க கணவன் என்ற சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மையடிப்படையில் மனைவி விரும்பாதபோதும் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தல், இணக்கம் அற்றபொழுது வன்முறையை பிரயோகித்தல், அல்லது குடும்பத்துக்கு வெளியே தவறான பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துவதன் மூலம் மனைவியை உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகச் செய்தல் என்பனவற்றினால் பெண்கள் தமது வம்ச விருட்சத்தைக் கட்டுபடுத்த முடியாதவர்களாகவும், தொடர்ச்சியான பிரசவங்களினால் தமது உடல் நலத்தினைப் பாதுகாக்க முடியாதவர்களாகவும் உள்ளனர். விஞ்ஞான வளர்ச்சிகண்ட யுகத்தில், எத்தனையோ கருத்தடை சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ள நேரத்தில் இவ்வாறான கருத்துக்கள் அர்த்தமற்றவை எனச்சிலரால் நோக்கப்படலாம். மூன்றாம் உலக நாடுகளில் ஒரளவு கல்வியறிவுடைய நகர்ப்புறப் பெண்களைத் தவிர வறுமையில் வாடுகின்ற, கல்வியறிவற்ற பெரும்பான்மையான பெண்களுக்கு கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தல் என்பது சாத்தியமானதோ, இலகுவானதோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையகத்தினுள் பால்நிலை பற்றிய ஆய்வொன்றிற்கு ஆய்வுதவியாளராகச் சென்றிருந்த பொழுது தோட்டப் பெண்கள் சிலர் தாம் கருத்தடை ஊசிகள் போடுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், கருத்தடைக்கான ஊசி மருந்தெனத் தம்மிடம் கூறாமல் மறைத்து ஊசிமருந்தை ஏற்றுவதாகவும் குற்றம் சாட்டியதுடன் அவை தமது இயல்பான உடல் இயக்கங்களில் தாக்கம் செலுத்துவதாகவும், உடல் உபாதைகளைக் கொண்டு வருவனவாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறான கருத்தடைச் சாதனங்கள் பாதுகாப்பானவை, அபாயமற்றவை என மருத்துவர்களினால் சிபாரிசுகள் செயற்படுகின்ற வேளையில் பெண்களினதும், மருத்துவர்களினதும் முரண்பட்ட கருத்துக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டும்.
எனவே குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் தனிநபர்களுக்குரிய மதிப்புக்கள் குடும்பத்தினுள் காப்பாற்றப்படாமல் ஒருவர் உரிமை இன்னொருவரால் மீறப்படுவதாகவே காணப்படுகின்றது. அதாவது கணவனால் மனைவியின் உரிமை மீறப்பட்டு ஜனநாயக மறுப்பு நிலையை ஏற்படுத்துகின்ற ஒரு தளமாகக் குடும்பம் காணப்பட்டு வருகின்றது.
அவ்வாறே பொருளாதார அடித்தளத்துக்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் குழந்தைகளைப் பெறுதலிலும்
22

இலாபகரமான, வருமானம் ஈட்டித்தருகின்ற, செலவுகளைக் குறைக்கின்ற குழந்தைகளை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றது. இந்த வகையில் பெண்குழந்தைகள் உணவு, உடை, கல்வி என்பவற்றுக்கான செலவுகளுடன் திருமணம், சீதனம் என்பவற்றின் மூலம் மிக அதிகமான செலவுகளை ஏற்படுத்துகின்றனர். என்றும் ஆண்குழந்தைகள் இதற்கு எதிர்மாறான நிலைப்பாடுகளை உள்ளடக்குகின்றனர். என்றும் கருதப்பட்டு ஆண்குழந்தைகளை அதிகமாக விரும்பும் சமூக நிலைப்பாடுகளை குடும்பமே உருவாக்கி சமூகத்திற்கு அளிக்கின்றது. ஆண்முதன்மை சமூகம் ஒன்றின் ஆதிக்கக் கருத்துக்கள் குடும்பத்தின் மூலம் சாஸ்வதமானதாக்கப்படுகின்றன. எனவே செலவுகளை ஏற்படுத்துகின்ற கணக்கீடுகளின் அடிப்படையில் அதிகமான பெண்பிள்ளைகள் பெறுவது குடும்ப சமூக விருப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட காரணத்தினால் பெண்கள் உளவியல் தாக்கங்களுக்கும் உட்படுகின்றனர். ஆண் பிள்ளைகள் வயது வந்தவுடன் வருமானம் ஈட்டுபவர்களாகவும் திருமணம், சீதனம் என்பவற்றின் மூலம் இலாபம் சம்பாதிப்பவர்களாகவும் கருதப்படுவதால் ஆண்களின் அந்தஸ்து குடும்பத்திலும் சமூகத்திலும் அதிகரிக்கின்றது. நாள் முழுவதும் வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் ஈடுபட்டு உழைத்துச் சலிக்கின்ற பெண்கள் குடும்பம் ஒன்றின் முதன்மைப்பாத்திரம் என்ற நிலையில் இருந்து மறுதலிக்கப்பட்டு பாரம் அல்லது சுமை என்ற பார்வையில் நடத்தப்படுவது சமூக எதிர்பார்ப்புகளை குடும்பம் எவ்வித தயக்கமும் இன்றி நிறைவேற்றி விடுகின்ற நிலையினைக் காட்டுகின்றது. இவற்றின் அடிப்படையில் சிலவிடயங்களில் பெண்குழந்தைகளைக் கொல்லுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. ஆனால் சட்டங்கள் குழந்தைகளைக் கொன்றதாய்மாருக்கே தண்டனைகளை வழங்கித் தண்டிக்கின்றன. பெண்கள் தாம்பெற்ற குழந்தைகளையே கொல்கின்ற அளவுக்கு குடும்பமும் சமூகமும் கட்டாயப்படுத்துவது என்பது கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றது. குடும்ப, சமூக நிர்பந்தங்கள் தாய்மையைமறக்கச் செய்வதற்கான காரணம் என்பதே முக்கிய நிலைப்பாடாகும். எனவே குடும்பத்திலும் சமூகத்திலும் உயர்நிலையில் இருந்துகொண்டு தலைமையை விரும்புகின்ற, பெண்களை நசுக்குகின்ற, ஆதிக்கங்களை வெளிப்படுத்திவரும் ஆண்களே குற்றத்துக்கான முழுப்பொறுப்பாளிகள், தவிர குழந்தையைக் கொன்ற தாய்மையை மறந்த பெண்ணல்ல என்பதை யாவரும் உணர வேண்டும்.
வரலாற்று ரீதியாக நோக்கின் குடும்பத்தில் பொருளாதார ரீதியான முதன்மைப் பாத்திரம் தந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான சமூக
23

Page 18
மேலடுக்குகள் அவை தோற்றுவிக்கப்பட்ட காலச்சூழல், மற்றும் சமூக அரசியல் பொருளாதாரக் காரணிகள் பெளதீக நியாயங்கள் என்பன மறைந்த பின்னரும் கூடத் தொடர்ந்தே வருகின்றன. பொருளாதார முக்கிய பங்களிப்பு பெண்களால் வழங்கப்பட்டாலும் அவை ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாமல் பால்நிலை அந்தஸ்துக்களில் தொடர்ச்சியான அசமத்துவத்தினை ஏற்படுத்துகின்ற, பெண்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும், ஆண்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற சமூக எதிர்பார்க்கையை மேலும் மேலும் உற்பத்தி செய்து நிலைநிறுத்தும் ஊடகமாகவே நாம் குடும்பத்தை நோக்கலாம்.
எமது சமூகத்தில் பெண் என்பவள் வீட்டைப்பராமரிக்கவும், சன்மக்கவும் தெரிந்தவளாகவும், தாய்மை உணர்வு மிக்கவளாவும், மென்மையானவளாகவும், ஆண்களுக்கு அடங்கி போபவளாகவும், அடக்கம் மிகுந்தவளாகவும் இருக்க வேண்டுமென்பது ஆண் தலைமைத்துவ அடக்குமுறைக் கருத்தியல்களைப் பின்னணியாகக் கொண்ட ஒரு சமூக எதிர்பார்க்கையாகும். இவ்வாறான சமூக எதிர்பார்க்கையுடைய எமது சமூகத்தில் பெண்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளானாலும் சரி அல்லது வேறு நிறுவனங்களில், திணைக்களங்களில் வேலை செய்பவர்களானாலும் சரி, எவ்வகையான பதவிகளில் இருந்தாலும் சரி அவர்கள் வீட்டு வேலை செய்த பின்னரே அலுவலக வேலைக்குச் செல்ல வேண்டியவர்களாகின்றனர். பல்கலைக்கழக பட்டதாரியாகி ஆசிரியராகக் கடமையாற்றும் தேவி என்ற பெண்ணின் நாட்களுக்கான நேர அட்டவணை பின்வருமாறு காணப்படுகின்றது.
4.00 - நித்திரை விட்டு எழுதல், முகம் கழுவி காலைக்கடன் முடித்தல். 4.30 - சமையலறையைக் கூட்டிக் காலை, மதிய உணவு தயாரித்தல். 6.00 - கணவனுக்காகவும், தனக்காகவும் காலைத் தேனிர் தயாரித்தல். 6.30 - குழந்தையின் உடைகளைக் கழுவுதல்
6.45 - குளித்தல்
7.15 - கணவனுக்கு சாப்பாடு எடுத்து மேசையில் வைத்தல் 7.30 - வேலைக்குத் தயாராதல் 7.45 - வேலைக்குச் செல்லுதல் 3.00 - வீட்டுக்குத் திரும்புதல் 3.30 - தனது, கணவனின் உடைகளைக் கழுவல் 4.00 - கணவன் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவல்
24

4.30 - குழந்தையின் பால் கரைத்தல் பின் குழந்தைக்கு ஊட்டல்,
5.00 - குழந்தைக்கான உணவு தயாரித்தல். 6.00 - வீட்டைக் கூட்டி வெளிச்சம் பரவச் செய்தல் 6.30 - குழந்தைக்கு உணவூட்டல் 7.15 - கணவனுக்கும் தனக்கும் இரவு உணவு தயாரித்தல் 8.15 - கணவனுக்கு சாப்பாடு மேசையில் எடுத்து வைத்தல் 8.30 - இரவு உணவினைக் கணவனுடன் சேர்ந்து உண்ணல், 9.00 - பாத்திரங்களைக் கழுவி சமயலறையைச் சுத்தம் செய்தல் 9.45 - படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் பற்களைச் சுத்தம் செய்தல்
10.00
படுக்கைக்குச் செல்லுதல் / நித்திரைக்குச் செல்லுதல்
இந்த நேர அட்டவணையானது எமது சமூகத்தில் ஆசிரியராகக் கடமையாற்றும் ஒரு பெண்ணின் அன்றாட வேலைகளை வெளிப்படுத்துவதாகும். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் அவளது கணவன் எது வித வேலையும் அற்றவனாவான். குடும்பத்திற்குரிய முழுமையான பொருளாதாரப் பங்களிப்பு பெண்ணினாலேயே வழங்கப்படுகின்றது. வீட்டுவேலையும் அலுவலக வேலையும் தனக்குத் தொடர்ச்சியாக இருப்பதனால் தனது முதுமானிப்பட்டத்திற்கான கல்வியைத் தொடர முடியாதுள்ளது எனவும் அப்பெண்ணினால் தெரிவிக்கப்பட்டது.
எனவே இவ்விடத்தில் எமக்குப் புலனாவது யாதெனில் குடும்பம் என்பது ஆணாதிக்கத்தின் கருத்தியல்களின் அடிப்படையில் செயற்பட்டுப் பெண்களின் முன்னேற்றத்திற்கும் தடையாகவே இருக்கின்றது. பெண்கள் வெளியில் சென்று கல்வி கற்றபொழுதும், வேலைபார்த்த பொழுதும் இவ்வாறான நிலைகளிலேயே வாழ்ந்தும், அவற்றையே குழந்தைகளுக்கும் பயிற்றுவிப்பராகின்றனர். அதனால் மாறிவருகின்ற சூழலுக்கு ஏற்ப மாற்றமடையாத சமூகக் கருத்தியல்களினால் பெண்கள் தமது சுயத்தினைக் காப்பாற்ற முடியாதவர்களாகவும் முன்னேற முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். பெண்களின் சமூக அனுபவம், கனவுகள், கற்பனைகள், வாழ்வதற்கு விரும்புகின்ற முறைமைகள் எல்லாவற்றிலும் அதிகாரத்துவமும், அடிப்பணிந்து போதலும் ஆகிய நிலைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் சமூகத்தின் எல்லாக் கூறுகளிலும் பரவி நிற்கும் கலாச்சாரக் கோட்பாடுகளில் வெளிப்படுகின்ற கருத்தியல்கள், அவற்றில் செயற்படுகின்ற ஆதிக்க உணர்வுகள், அதிகாரப் போக்குகள் என்பன ஆண்,
25

Page 19
பெண்களுக்கிடையேயான அந்தஸ்து வேறுபாடுகள் இயற்கையானவை, வழக்கில் இருப்பவை, வலிமையானவை சக்திமிக்கவை என்ற சிந்தனைகள் ஏற்படுத்துகின்றன. இதனாலேயே பெண்கள் கலாச்சாரங்களைப் பேணிக்காத்து அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைக் கையளிப்பவர்கள் என்றும் அவர்களே கலாச்சாரக் குறியீடுகளாக இருக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கின்ற நிலைப்பாடுகளும் காணப்படுகின்றன. இவ்வாறான சமூக மரபு உருத்திரட்சி பெறுகின்ற தளமே குடும்பமாகும்.
பெண்கள் குடும்பத்தில் நாள் முழுவதும் செய்யும் வேலைகளுக்கு கூலிகள் வழங்கப்படுவதில்லை. அவ்வாறே இனமறு உற்பத்திச் செயற்பாட்டிற்கும் கூலிகள் வழங்கப்படுவதில்லை. மாறிவருகின்ற சமூகத்திற்கும், காலச்சூழலுக்கு ஏற்பவும் குடும்பத்தளத்திலும், சமூகத்திலும் உள்ள அதிகாரத்தை உடைத்தெறியும் பெண்களைக் குடும்பம் உற்பத்திசெய்வதில்லை. குடும்பத் தளத்தில் தாய், மனைவி, மகள் என்ற பாத்திரங்களில் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்பாத்திரங்களையே மீளவும் மீளவும் உற்பத்தி செய்கின்றன. அந்தஸ்து வேறுபாடுகளில் ஆண், பெண் என்ற கருத்துருவங்களுக்கு முக்கியம் கொடுப்பதன் மூலம் பெண்களைப் பாலிய அடையாளங்களுடன் குடும்பம் கட்டமைத்து விடுகின்றது. இவற்றின் மூலம் குடும்பத்திற்கு வெளியேயும் தொழில் தளங்களில் ஆணின் அதிகாரத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் பெண்கள் உள்ளாக்கப்படக் காரணங்கள் ஆகின்றன.
குடும்பம் என்னும் தளத்தில் பெண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட கலாச்சாரச், சமூக, சட்டதிட்டங்கள் பலமாகவே பெண்களை, அவர்களின் இயக்கங்களை, முன்னேற்றங்களை தடைசெய்வதற்கு துணைபோகின்றன. பெண்களின் இருப்புக்களையும், அவர்களுக்கே உரிய இயல்பான சுதந்திரமான உணர்வுகளையும் கட்டுப்படுத்தியும், சுரண்டியும் பால்நிலை சார்ந்த அதிகார உறவுகள் அபிவிருத்தியடைவதற்குரிய முக்கிய மையம் குடும்பம் ஆகும். தமிழ் சமுதாயக் கருத்தியல்கள் ஆண் முதன்மைக் கருத்துக்களைக் கொண்டமைந்துள்ளமை கண்கூடு. இக்கருத்துக்களில் அதிகம் பிரபல்லியமானது பெண்களது கற்பு நிலையாகும். பெண்கள் கற்புடன் வாழ வேண்டும் எனக் குடும்பமும் சமூகமும் கட்டாயப்படுத்தி வலுப்பெற்ற கருத்தியலை உருவாக்குகின்றன. இவை பெண்களின் மனங்களில் ஆழ வேரூன்றி அவர்களின் விருப்பார்வத்திற்குரிய நடத்தையாக்கும்,
26

மனோபாவமாகவும், அவற்றைவிட்டு விலகாத, செயற்படாத அளவில் வாழவும் தலைப்படுகின்ற அடிமைக் கருத்துருவமாக வாழத் தூண்டுகிறது. எனவே குடும்பத்தினுள் பெண்ணின் சார்ந்து வாழுகின்ற நிலைமையையும் இரண்டாம் பட்சநிலையையும் உருவாக்கிபால்நிலைச் சார்பினை ஏற்படுத்துகின்றது. இதன் அடிப்படையில் கணவனை இழந்த பெண்கள் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்ற நியதிகளை ஏற்படுத்திப் புறம் தள்ளுகின்ற நிலைமைகளையும் நாம் காணலாம். இன்றைய கல்வி கற்ற முற்போக்குச் சிந்தனையுள்ள சில பெண்கள் இவற்றை எதிர்த்து வந்தாலும் சமூகத்தின் ஒற்று மொத்த குடும்பங்களின் ஒருமித்த கருத்தாக அவை நோக்க முடியாதவை. குடும்பச் சூழலில் இருக்கும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற ஆண்மேலாதிக்கம் என்பது கேள்வி கேட்கப்பட வேண்டிய, பாலின சமத்துவ அறிவுகளை பெற்றுக்கொள்வதற்குத் தடையாக இருக்கின்ற ஆதிக்க சக்தியாகும். இச்சக்திகளுக்குத் துணைபோகின்ற குடும்பத்தளமும் விமர்சனத்துக்குரியதே. மனிதாபிமானத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் மறந்து செயற்படுகின்ற குடும்ப நிறுவனம் தட்டிக்கேட்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு குடும்பச் சூழலிலும் பால்நிலை வேறுபாடுகள் அதன் கட்டமைப்பின் அடியில் இருந்து செயற்படுகின்றன. அதனால் அவை இருக்கின்றன என்பதே தெரியாமல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக தமிழ் சமூகத்தில் திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக்கப்படுகின்றது. திருமணத்தின் பொழுது ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் சம்பிரதாயம் இடம்பெறுகின்றது. அத்தாலியானது கணவன் உயிருடன் இருக்கும் வரை அப்பெண் அணிய வேண்டும் என்ற கருத்துக் காணப்படுகின்றது. அதேவேளை அப்பெண் தான் திருமணமானவள் என்று ஏனையோருக்கு அடையாளம்காட்டும் ஒரு குறியீடாகவும் காணப்படுகின்றது. ஆண் பெண்ணுக்குத் தாலி அணிவிப்பதன் மூலம் பெண்ணைத் தனது சொத்தாக்குகின்றான். ஆனால் பெண் தனது கணவனைத் தனதுடைமையாக்கும் மரபுக்கு எதுவித சம்பிரதாயங்களும் தமிழ் கலாச்சாரத்தில் இல்லை. இன்று வழங்கிவரும் மோதிரம் மாற்றுதல் நடைமுறையானது மேற்கத்தேய மரபில் இருந்து வந்தது. எனவே இவ்வாறான நிலைமைகள் ஆண்கள் பெண்களைத் தமது சொத்தாக, ஏனைய (வீடு,நிலம், இயந்திரம்) அசையும், அசையாச் சொத்துக்களைப் போல எண்ணத் தூண்டி விடுவதுடன் பெண்களின் இயல்பான பாலியலைக் கட்டுப்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. ஆணின் அதிகாரத்துக்கும், பாலியலுக்கும் வரையறைகள் சம்பிரதாயங்கள் மூலம் வெளிப்படுத்தாத நிலைமை
27

Page 20
பெண்ணை குடும்பத் தளத்தினுள் இரண்டாம் நிலையை ஏற்படுத்தி அவளின் இயல்புகளை அடக்கி ஒடுக்கி குறுக்கி விடுவதற்குச் சமனாகும். இவ்வாறான பாரபட்சங்கள் அனைத்தும் பண்பாடு அல்லது கலாசாரம் என்னும் போலியான மாயைகளுக்குள் உள்ளடக்கி கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வலியுறுத்தப்படுகின்றன.
எமது சமூகத்தில் பல்கலைக்கழகத்தில் உயர்கல்விகற்கும். அல்லது கல்வி கற்ற பெண்களும் கூட தாலி, குங்குமப்பொட்டு அணிதல் என்பவை தான் பெண்களுக்கு அழகைத் தருவதும் இலட்சிய வாழ்வுமாவதுமாகும் என எண்ணுகின்றனர். அவற்றை அணிவதனால் பெண்கள் இன்னும் அழகாகின்றனர். என்ற மனப்பாங்கில் வாழ்வது பெண் என்பவள் அழகாகவும் கவர்ச்சியாகவும், இளமையாகவும் இருந்து கணவனின் ஆசைக்கும் அன்புக்கும் உட்படவேண்டும் என்ற ஆண்மையக் கருத்தியல்களின் பின்னணியாகும். பெண்கள் தாம் அழகாக இருக்கின்றனர் என்று மகிழ்ச்சியடைகின்றனர் என்றால் அவர்கள் ஆண்களைக் கவருவதற்குரிய தகுதியினைப் பெற்றுள்ளனர் என்பது கருத்தாகின்றது. இது பெண்களின் தகுநிலையானது ஆண்களின் போகப்பொருட்கள் என்றளவில் வெளிப்பாடு காண்கின்றது. ஆண் என்பவன் தமது பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பெண்களைக் கவரவேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியங்கள் இல்லை-என்பது அவர்கள் தாம் ஆணாகப் பிறந்த பிறப்புரிமையும், அது வழங்கிய ஆதிக்கத் தன்மையும் வலுக்கட்டாயமாக உறவு கொள்ளும் போக்குகளும் சுலபமாக அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலைகளை ஏற்படுத்திவிடுகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது.
பால்நிலை விழிப்பு நிலை என்பது எமது சமூகத்தில் காணப்படும் கல்விகற்ற கல்வியறிவு குறைந்த, நகர, கிராமப் பெண்களுக்கு என்று எல்லோருக்கும் அவசியமானதாகும். குடும்பத்தில், சமூகத்தில் காணப்படுகின்ற பால், பால்நிலைப் பாத்திரங்களுக்கிடையிலான வேறுபாடுகள் ஆண் ஆதிக்க சமூகக் கருத்துக்களின் அடிப்படையில் வரலாற்று ரீதியாகவும் சமூக ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தீர்மானிக்கப்பட்டு உருவம் கொடுக்கப்பட்டவை என்பதைப் பெண்கள் புரிந்து கொள்வதும், அவை மாற்றப்படக்கூடியவை என்பதை விளங்கிக் கொள்வதும் அவசியமானதாகும்.
28

சமூகக் கருத்தியல்கள் அனைத்தும் ஒரு இலக்கு நோக்கிய ஆண் ஆதிக்கத்தின் இயக்கமாகச் செயற்பட்டு வருகின்றதுடன் பெண்களின் நலன்கள், ஆண்களின் நலன்களைப் பேணுவதிலும் அநுசரித்துப்போவதிலும் தான் நிறைவு பெறும் என்ற அடிப்படையில் காணப்படுகின்றன. “குடும்பம்” என்ற நிறுவனம் சமூகத்தின் மிகச் சிறிய நிறுவனமாகக் கருதப்படுவதால் அதன் கூறுகள் அனைத்தும் வரம்பற்ற ஆணாதிக்கச் செயல்களையே சாத்தியப்படுத்தி வருகின்றது. அதனுடைய சித்தாத்தங்கள் அனைத்தும் பெண்களின் அகத்தினை நிராகரித்துச் செயல்படவே விரும்புகின்றன. குறிப்பிட்ட பொருள் வகுப்பினரின் நன்மைகளைப் பொது நன்மைகளாகக் காட்ட முயல்கின்றது. அதாவது ஆண்கள் என்ற வகுப்பினரின் நன்மைகள் பொது நன்மைகளாக வடிவமைக்கப்பட்டு முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. அவர்களின் நன்மைகளுக்காகப் பெண்கள் தமது ஆசைகளையும், அபிலாசைகளையும் துறக்க வேண்டும் என்று நியாயங்கள் கற்பிக்கப்படுகின்றன. எனவே ஆணாதிக்கச்சமூகமும் அதன் சித்தாத்தங்கள், பெரும் கோட்பாடுகள், கருத்தியல்கள் என்பனவும் சமூகத்தை ஒழுங்கமைப்புச் செய்கின்ற போர்வைக்குள்ளும், இயங்கச் செய்கின்ற போர்வைக்குள்ளும் ஒரு ஆதிக்கம் கொண்டபாசிசச் சக்தியாக உருவெடுத்து வளர்ந்து வந்துள்ளது. இன்னும் மேலும் மேலும் வளர்கிறது.
அடுத்து குடும்பத்தினுள் ஆண்களால் பெண்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பெண்கள் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். பட்டினிக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவற்றுக்கு மேலாகப் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.இவ்வாறான துன்புறுத்தல்கள் தனிப்பட்ட வாழ்வுடனும் குடும்ப வாழ்வுடனும் தொடர்புபடுத்தப்பட்டு இவ்விடயங்கள் பாதிக்கப்பட்டவர்களால் மறைக்கப்படவேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குடும்ப அங்கத்தவர்கள் உற்றார் உறவினர்கள் எல்லோருக்கும் கெளரவக் குறைவு ஏற்படும் என்றும் குடும்பம் வலியுறுத்துகின்றது. இதனால் பெண்கள் தமக்கேற்பட்ட பாதிப்புக்களுக்கான நிவாரணங்களைத் தேடிக்கொள்ளவோ நீதிமன்றம் செல்லவோ பின்நிற்கின்ற நிலையை ஏற்படுத்துகின்றது.
எனவே குடும்பம் என்பது ஆணாதிக்க ஒடுக்குமுறைக் களம் ஆகும். பெண்கள் பற்றிய நலன் நாடுவோரும், பால்நிலை வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு செயற்படுபவர்களும், பெண்நிலைவாதிகளும் சமூகத்தில்
29.

Page 21
ஏனையோர்களால் தம்மில் இருந்து வேறானவர்கள் எனக் கருதப்படுகின்றனர். கேலிக்குள்ளாக்கப் படுகின்றனர். அவர்களைப் பிறத்தியார் என எண்ணும் போக்கானது அவர்களின் தனித்தன்மையை மறுப்பதற்கும், அவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கும், அதனை ஏதோ ஒரு வகையில் விரும்புவதற்கும் சமமாகும். பெண்களது அகவாழ்வு ஒவ்வொரு குடும்பத்தினுள்ளும் குறுகிபோய் சிந்தனையும் செயலாற்றலும் ஜீவனற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது என்று குரல் எழுப்பினால் அவர்கள் பண்பாட்டுக்கும், மரபுகளுக்கும் எதிரிகள் எனக் கற்பிதம் சூட்டப்படுகின்றது. பெண்ணுரிமை மற்றும் பெண் நலன் நாடும் பெண்நிலைச் சிந்தனைகளும், செயற்பாடுகளும், இயக்கங்களும், ஆண்களுக்கு எதிரானவை என்று புனைந்துரைக்கப்படுகின்றன. V
குடும்பத்தினுள் அதன் போலியான, அறவே சமத்துவமற்ற மாயைகளுக்குள், தவறான புனைவுகளுக்குள் பெண்களின் பால்நிலை சமத்துவம் என்பது மூழ்கடிக்கப்பட்டுள்ளது. குடும்பம், அது சாத்தியப்படுகின்ற போலியான இன்பங்கள் என்பனவற்றையே பெண்கள் விரும்புகின்ற நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமூக யதார்த்தத்தில் ஏற்படுகின்ற ஏமாற்றங்களையும், வேதனைகளையும், வன்முறைகளையும், சகித்துக் கொள்ளுமாறும், குடும்பம் பெண்களை நிர்ப்பந்திக்கின்றது. ஆண் ஆதிகாரத்துவ சமூகம் ஒன்றில் பெண்கள் தமது தாழ் அந்தஸ்தினை உணரமுடியாத வகையில் பண்பாட்டுத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினுள் பெண்களின் நிஜவாழ்க்கை உயிரோட்டம் இன்றி இறுகிப்போயுள்ளது. இவ்வாறானதொரு தொடர்ச்சித் தன்மையில் தனது அன்றாட இயக்கத்தைச் சிறிதும் மாற்ற விரும்பாது ஆண் ஆதிக்கத்தின் உச்சப்போக்குகளை உள்ளடக்கிப் பண்பாடும். குடும்பமும் செயற்பட்டு வருகின்றன. தமது பிரச்சினைகளைப் பெண்கள் பேசிப்பகிர்ந்து கொள்வதற்கென்ற தனியான பரிமாற்றத் தளங்கள் குடும்பத்திற்கு வெளியே நிராகரிக்கப்படுகின்றன.
குடும்பம் சார்ந்த வன்முறைகளைப் பெண்கள் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சமூக நியதியாகக் காணப்படுகின்றது. குடும்ப விடயத்தை வெளியிடக் கூடாது. என்றே பெண்களும் நம்பிவருகின்றனர். ஆண்களுக்குத் தம் மனைவியரை அடித்துத் துன்புறுத்தவும், அவர்கள் விரும்பாவிட்டாலும் பலாத்காரமாக அனுபவிக்கவும் உரிமை காணப்படுகின்றது. என மதம், சட்டம் சமூகம் எல்லாம் அனுமதிப்பது
30.

பெண்களுக்கு மீட்சியற்ற நிலையையே காட்டுகின்றது. எனவே பெண்கள் மீதான வன்முறையை ஒரு சமூக நோயாகவே கருதவேண்டும்.
எனவே ஆணாதிக்க கருத்துக்களின் உருத்திரட்சி குடும்பத்தில் வெளிப்பாடு காண்பது காலம் காலமாக உணரப்பட்டாலும் அவற்றை வெளியுலகிற்கு கொண்டு வருவதில் பெண்நிலைவாத இயக்கங்களும், கோட்பாடுகளும். முழுப்பங்கை வகிக்கின்றன. பெண்ணியம் என்பதனை நாம் பெண்கள் மீதான வரலாறுகள் மற்றும் சமயங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், குடும்பம் என்பனவற்றில் காணப்படும் பெண் ஒடுக்கு முறைகளைக் களைவதன் நோக்கில் அக நிலை உண்மைகளை ஆராய்வது என்று சுருக்கமாக வரையறுக்கலாம். மேலும் ஒடுக்கு முறைக்குரிய பரிணாமங்களையும், அவற்றுக்கான தீர்வுகளையும், அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து வருவதாகும்.
மேற்கூறப்பட்ட ஒடுக்குமுறைகள், வன்முறைகள், எல்லாம், பெண்களுக்கு முதலில் குடும்பத்திலும், பின்னர் சமூகத்திலும் ஏற்படுத்தப்படுகின்றன. இந்நிலைமையானது, குடும்பம் பொருளாதார, சமூகப் பாதுகாப்புகளையும் உளவியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றது என்பதற்கு அப்பால் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துத் தன்மை வெகு காலத்தில் இல்லை.
மேற்கத்தேய பெண்நிலை வாதங்களில் 1960களில் தோன்றிய பெண்நிலைவாதமாக தீவிரப் பெண்ணிலை வாதத்தைக் கருதலாம். சமுதாயத்தின் இன மறு உற்பத்தி, மறு உற்பத்தி என்பவற்றுக்கான திருமணம், இதன் மூலம் அமைகின்ற ஆண் மேலாதிக்க அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட குடும்பம், பெண்கள் தாயாகும் நிலை என்பனவே பெண்ணடிமைத்தனத்தின் மூலகங்கள் என்று கூறும் இவர்கள் ஆண் பெண் பாலியல் உறவுகளை வெறுத்தனர். இது ஒரு வகையில் ஆண் ஆதிக்கத்திற்கு உரிய மரபுகளை வலுவிழக்கச் செய்கின்ற பாலியல் புரட்சி என்கின்றனர்.
எமது கலாசாரத்தில், அதுவழி உருவாக்கப்பட்ட குடும்பங்களில் பெண்களின் பாலியல் உணர்வுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட கணவனுடன் மட்டுமே தமது பாலியல் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் அவை
31

Page 22
தவிர்க்கப்பட வேண்டும் என்று மந்திரித்துள்ள நிலையில் அவ்வாறான உணர்வுகள், செயற்பாடுகள், எல்லாம் அருவருக்கத்தக்கன என பெண்கள் வாழ்கின்றனர். பெண்கள் திருமணமானாலும் பாலியல் விடயங்களை உணர்ந்து கொள்ளும் முன்னர் தாயாகி விடுகின்றனர். பெண்கள் தாயாதல் தான் தமது பிறப்புக்குரிய பெரும் பேறு என்று நினைத்து வருகின்றனர். ஆண்களின் அதீத பாலியல் வேட்கைகளுக்கு தம்மைச் சமர்பிப்பதன் மூலம் தமது உணர்வுகளை தியாகம் செய்பவர்களாக வாழ்கின்றனர். இவ்விடத்தில் “வாழ்க்கையின் இலட்சியமோ பொருளோ எதுவும் தெரியாத இருட்டில்தான் சில சின்னங்களையும் படிமங்களையும் குறிப்பாக்கிக் கொண்டு படித்த பெண்களும், பொருளாதார சுயசார்புத் தகுதி பெற்ற பெண்களும் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்” என்ற ராஜம் கிருஷ்ணனின் கூற்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது.
குடும்பக் கட்டமைப்பு ஆண் அதிகாரம், மேலாதிக்கம் என்பவற்றைக் கொண்டு காணப்படுவதால், குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், பெண்களுக்குரிய நிலை இரண்டாம் பட்ச நிலை என்ற அதிகாரம் படிநிலைத் தன்மையும் மலிந்து போகின்றன. இதனால் பெண் எப்பொழுதும் வெறும் பாலியல் கருவியாக்கப்படல், குடும்ப உழைப்பை மேற்கொள்ளல், இன மறு உற்பத்தியை மேற்கொள்ளல் என்ற அளவிலேயே நோக்கப்பட்டு இவற்றுக்கு அப்பால் பட்ட உலகம் மறுக்கப்படுகின்றது. குடும்பம் பெண்களைச் சுரண்டுகின்ற தளம் என்றாலும் கூட பெண்கள் வாழும் இடம், சமூகம், பொருளாதாரப் பாதுகாப்பும் கொடுக்கும் இடம் என்பது இன்றைய ஆயுதக் கலாச்சாரத்தில் சர்வசாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பாலியல் வன்முறைகள் மூலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனினும் பொருளாதாரம், சமூகப் பாதுகாப்பை, உளவியல் தேவைகளை (அன்பு, பாசம், பரிவு, உட்பட) நிறைவேற்றுகின்ற நிலையம் என்ற வகையில் அதனை அவ்வாறே பாதுகாக்க வேண்டும் என்பது தவறானதாகும். அதனால் குடும்ப அமைப்பைத் தகர்த்துக்கொண்டு வெளிவரல் வேண்டும் என்பது பொருத்தமற்றது. பெண்கள் காதல், அன்பு, பாசம், பரிவு என்பவற்றில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு அவற்றுக்காக ஏங்கத் தொடங்கி விடுவார்கள் என்பதும், விருத்தி நிலையை அடைந்து விடுவார்கள் என்பதும் குடும்பத்தைத் தகர்த்தல் என்பதில் ஆபத்துத் தன்மைகளாகவே இருந்து வருகின்றன.
இருபால் பாலியல் உறவுகளை வெறுப்பதும் அதற்கு மாற்றீடான ஓரினச் சேர்க்கையும் என்ற தீவிரவாதப் பெண்நிலைக் கருத்துக்கள் பொருத்தமற்றவை. ஓரினச்சேர்க்கை என்பது ஒரே நேரத்தில் ஒருவரை ஆணாகவும், பெண்ணாகவும்
32

உணர முடியும் என்பதைச் சாத்தியப்படுத்துவதாகும். ஆனால் பிரத்தியேகமான உடலமைப்பைக் கொண்ட பெண்கள் தம்மை இயற்கை சார்ந்து அவ்வாறு எண்ண முடியாதவர்களாதலால் யதார்த்தத்தில் இருந்து விலகிச் சென்று போலியான மாயைகளுக்குள் விழுந்தவர்களாகவும் இருப்பர்.
பெண்களுக்கு அவர்களின் நிலையை மாற்றுவதற்கு கல்வியறிவும், பொருளாதாரச் சுயசார்பும் அவசியம் என்பதை பெண்நிலைவாதக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய எமது சமூகத்தில் உயர்கல்வி கற்ற, நிர்வாகத் துறைகளில் உயர் பதவி வகிக்கும் பெரும்பாலான பெண்கள் கலாச்சாரம் வலியுறுத்துகின்ற குடும்பப்பெண்களாகவே வாழ்ந்துவருகின்றனர். பெண்மையின் குணங்கள் என்று கலாசாரம் வலியுறுத்தும் பிம்பங்களாகவே வாழ்கின்றனர். பாலின விழிப்பு, பாலின சமத்துவம் என்ற கோட்பாடுகள் சமூகத்தில் ஒரு சாராரையே சென்றடைகின்றது. இவ்விடத்தில் எனக்கு நான் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்த பொழுது ஆசிரியர் ஒருவரால் நகைச்சுவையாகக் கூறப்பட்ட ஒர் உண்மைச் சம்பவம் ஞாபகத்திற்கு வருகின்றது.
இரண்டு பொறியியலாளர்களுக்குத் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதியினர் தனி வீடொன்றில் வாழ்வதற்குச் சென்றனர். அங்கு சமையலில் இருந்து அனைத்து வேலைகளிலும் தனக்கு தனது கணவன் உதவி செய்ய வேண்டும் எனப் பெண் எதிர்பார்த்தாள். ஆனால் கணவன் அவ்வாறு உதவ முன்வரவில்லை. எனவே அவள் நீங்களும் பொறியியலாளர் தான் நானும் பொறியியலாளர் தான். நீங்கள் பார்க்கும் உத்தியோகமும், சம்பளமும் எனக்கும் உண்டு. ஏன் உங்கள் உடைகளை நான் கழுவ வேண்டும்? என எதிர்த்தாள். அவ்வாறே சமையலிலும் நான் சோறு சமைத்தால் நீங்கள் கறியைத் தயார் செய்யுங்கள் என்றாள். விளைவு இரண்டு மூன்று நாட்களில் இருவருக்கும் விவாகரத்தானது. பெண்கள் படித்திருந்தாலும் இவ்வாறான நிலைகள் வருகின்றன. குடும்பங்கள் குலைகின்றன என அந்த ஆண் ஆசிரியர் தனது கருத்தினைத் தெரிவித்தார்.
எனவே குடும்பம் ஒன்றில் ஆண் தான் ஆணாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டான். இது அவனுடைய பிறப்புரிமையாகக் கருதப்படுகின்றது. பெண்கள் அதனை வலியுறுத்தி வந்தால் குடும்பம் சீரழிகின்றது. நிலை குலைகின்றது - என்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகள் பெண்கள் மீது ஏற்படுத்தப்படுகின்றது. அதற்குப் பெண்கள் கவ்வி கற்பது காரணமாக்கப்படுகின்றது.
33

Page 23
பெண்கள் இடையே வளர்ந்துவருகின்ற தனித்துவப் போக்கை ஒட்டிய குடும்பச் சண்டைகள், சச்சரவுகள் கணவன் மனைவியரிடையே பிரதானமாக எழுகின்றன என்ற வாதம் பெண்நிலைவாதிகளினால் நிராகரிக்கப்படுகின்றது. குடும்பவாழ்வில் பெண்கள் தமக்குக் கொடுக்கப்படும் இரண்டாம் தர அந்தஸ்தினை விரும்பவில்லை என்பதற்காக அவர்களைப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பாக்கி விடுவது ஒரு தலைச் சார்பான தீர்ப்பாகின்றது என்பது அவர்களது கருத்தாகும். ஆனால் எமது கலாச்சாரத்தில், சமூகத்தில் பெண்ணையே காரணகர்த்தாவாக்கி விடுகின்ற நிலையே காணப்படுகின்றது.
தீவிரவாத, சோசலிச பெண்ணியல் கருத்துக்கள் குடும்பத்தைத் தகர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். குடும்பம் என்பது குழந்தைகளையும், நோயாளர்களையும், அங்கவீனர்களையும் ஆதரிக்கும் இடமாகும். குழந்தைகளின் தேவைகள் சுயநலமற்ற பராமரிப்பினால் பூரணம் அடையும் சாத்தியம் குடும்பத்தில்தான் சாத்தியமாகின்றது. இன்றைய எமது சமூகத்தில் பெண்கள் பொருளாதார நலம் நாடி மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுவிட்டால் குடும்பத்தில் குழந்தைகள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பது அன்றாட பத்திரிகைச் செய்திகளில் இருந்து தெளிவாகின்றது. முக்கியமாக பெண் குழந்தைகள் குடும்பத்தில் உள்ள ஆண்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர். எனவே ஆண்கள் சிலர் குழந்தை வளர்ப்பில், அவர்களுடைய பாதுகாப்பில் இணைத்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர். இதற்காகப் பெண்கள் குழந்தை பெறுவதை முற்றாக வெறுக்கவும் முடியாது. எனவே இன மறுஉற்பத்தி செய்து, பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றி ஆரோக்கிய, ஆளுமை நிறைந்த பிரஜைகளை சமூகத்திற்கு தயார் செய்வதில் பெண்ணின் பங்கு உயர்ந்ததாகும். எனவே சமூக விழுமியங்கள் ஆண்களுக்கு முதன்மை கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது.
இவ்வாறு இனமறு உற்பத்தி செய்யக்கூடிய உடலமைப்பைக் கொண்ட காரணத்தை முதன்மைப்படுத்தி ஆண்கள் பெண்களை ஒடுக்கி வருகின்றனர். குழந்தைகள் தந்தை பெயர் தெரியாமல் பிறப்பது சமூக அங்கீகாரத்தை பெற்றிருக்கவில்லை. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தனித்துப் போராட வேண்டியிருக்கின்றனர். எமது சமூகங்களில் காணப்படுகின்ற சட்ட அமைப்பு கல்வித்திட்டம் என்பன சமூகத்தில் பெண்களின் நிலைகளில் பாரிய எந்தவித
34

மாற்றங்களை ஏற்படுத்தாதவையாகும். பெண்நிலை வாதக் கருத்துக்களுடன் முரண்படுகின்ற எமது சமூகக் கோப்புகள் பண்பாடுகள், கலாசார விழுமியங்கள் என்பவற்றில் பெண்களின் நலன்களை, அவர்களின் அந்தஸ்துக்களை, உரிமைகளை நிலைநாட்டுவதற்குப் பின்வரும் வழிமுறைகள் கையாளப்படலாம்:-
1 ஆண்,பெண் சமத்துவக் கருத்துக்கள், பால்நிலைக் கற்கைகள் பாடசாலை மட்டங்களில் இருந்து பிள்ளைகளுக்கு ஊட்டி வருதல். பால்நிலை வேறுபாடுகளை ஏற்படுத்தும் எல்லா வகையான கல்வித்திட்டங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துதல் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் பால்நிலைக்கற்கைகள், மகளிரியல், பெண்கள் கல்வி என்பவற்றுக்கு முக்கியம் கொடுத்துக் கற்பித்தல்,
2. பெண்கள் தமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை எழுத்து வடிவத்துக்குக் கொண்டு வரத்தயங்குகின்றனர். மொழிப்புலமை சார்ந்த எழுத்துலகம் என்பது எப்பொழுதும் சரித்திரம் சார்ந்து பெண்களுக்கு எட்டாத நிலைகள் தவிர்க்கப்பட வேண்டும். பொதுத்தளங்களின் விரிவாக்கமாகச் செயற்பட்டுவரும் பத்திரிகைகள் பெண்களுக்கென்று ஒரு பக்கத்தை ஒதுக்கி சமையல் குறிப்புக்களைக் கொடுத்து வீட்டுக்குரியவளாக்குவதும், அழகுக் குறிப்புகளைக் கொடுத்து கவர்ச்சி, போகம் என்பவற்றுக்குரியவளாக்குவதும் தவிர்க்கப்பட வேண்டும். பெண்கள் தமது விடுதலை சார்ந்த ஒரு இலட்சியம் உலகத்தினுள் பிரவேசிப்பதற்கு எழுத்து மொழியை முழுமைக்கும் வசப்படுத்த வேண்டும். அதில் பெண்கள் யார் என்பது அவர்கள் யாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் உணரப்பட வேண்டும். பண்பாடுகள், கலாச்சாரங்கள், என்பன பெண்களின் அபிலாசைகளையும், கனவுகளையும் புறம் தள்ளிவிடாத ஒன்றாக மாறவேண்டிய அவசியம் உணர்த்தப்படவேண்டும். பெண்களின் சமூகப் பெறுமானங்கள் உயர்த்தப்பட வேண்டிய நியாயங்கள் கூறப்படவேண்டும்.
3. குடும்ப அங்கத்துவ உறவுகள் சமத்துவ நிலையை அடைவதற்கான முயற்சிகள் சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். (அநேகமான சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கும் நடைமுறைக்கும் உள்ள அதிகமான இடைவெளிகளே பேணப்படுகின்றன.)
35

Page 24
குழந்தைகள் பராமரிப்புக்கான அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுப் பெண்கள் குழந்தை வளர்ப்பில் அதிக நேரத்தைச் செலவிட்டுத் தமது முன்னேற்றங்களைத் தவிர்க்கும் நிலைகள் தவிர்க்கப்படவேண்டும். குழந்தை வளர்ப்பில் ஆண்களும் சமபங்கு எடுப்பது சட்டரீதியாக கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
உயர்கல்விஸ்தாபனங்களில் வேலை செய்யும் பெண்கள் அனைவரும் தமது வேறுபாடுகளைக் களைந்து பெண்கள் உரிமைகளுக்காகவும், அந்தஸ்துகளுக்காகவும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். பெண்களின் கூட்டு முயற்சிகள் ஊக்கப்படுத்தப்படவேண்டும்.
பாடசாலைகளில் பாடங்களில், கற்பித்தல் முறைகளில், பாடத்திட்டங்களில் எந்தவகையிலும் சமுதாய சமத்துவம் இல்லாத எந்த அம்சமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடைநிலை, உயர்நிலைப்பாடசாலைகளில் எல்லாம் ஆண்பிள்ளைகளுக்கு மனைப்பொருளியல், அல்லது மனையியல், சமையல், குழந்தை வளர்ப்புப்பாடங்கள் கட்டாயமாகப் போதிக்கப்படவேண்டும்.
தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி போன்ற தொடர்பு சாதனங்களில் பெண்களை வீட்டுக்கு மட்டும் உரியவர்களாக தியாகச்சுடர்களாக வர்ணிப்பதும், காட்டப்படுவதும் தவிர்க்கப்பட்டு, பெண்ணின் கல்வியும், சுயசார்புத் தன்மைகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
சீதனத்துக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும்.
குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான சமத்துவ உறவுகளை அரசியல், சட்டரீதியாக வலியுறுத்துதல். சமத்துவ, அதிகாரமற்ற உறவுநிலைகளைப் பேணுவதற்கான பயிற்சிகளையும், கருத்தரங்குகளையும் கிராமம் தோறும் நடாத்துதல், வயது வந்த ஆண் பெண்கள் அனைவரினதும் பங்கு பற்றல்களை உறுதி செய்தல். பெண்களுக்கிடையேயான பால் நிலை விழிப்புணர்வினை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்களையும் பயிற்சிகளையும் நடாத்துதல்.
36

உசாத்துணை நூல்கள் நான் ஒரு பெண். பெண்கள் தொடர்பான சரிநிகர் கட்டுரைகளின் தொகுப்பு (1980 - 1996), 1997, பாரதி வெளியீட்டகம்,
பெண்கள் ஆராய்ச்சிநிலையம்,1995, மாற்றங்களின் முகப்புகள் இலங்கையில் பெண்கள் 1986 - 1995, கொழும்பு
எல்ஸ் ஸ்யோன்ஸ்பெர்க் 1989, இன்னுமொரு ஜாதி? இலங்கைத் தமிழ் பெண்கள், பெண்கள் ஆய்வுவட்டம், யாழ்ப்பாணம்.
பெண்களுக்கான ஆராய்ச்சிநிலையம் இலங்கை, 1985, பெண்களுக்கான ஐக்கிய நாடுகள் தசாப்தம்: இலங்கையிலுள்ள பெண்களின் முன்னேற்றமும் சாதனைகளும்,கொழும்பு-07
பெண்கள் கல்விஆய்வுநிறுவனம் 2000,சமூகக்கோட்பாட்டுத்தளத்தில்பால்நிலை,கொழும்பு Dr.இரா. பிரேமா, 1998, பெண்ணியம் - அணுகுமுறைகள் தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
ராஜம் கிருஷ்ணன், 2000, பெண்விடுதலை, தாகம், தி - நகர் சென்னை.
ராஜம் கிருஷ்ணன், 2000, காலந்தோறும் பெண்மை, தாகம், தி - நகர் சென்னை.
மைதிலி சிவராமன், 2000, பெண்ணுரிமை சில பார்வைகள் தமிழ்ப் புத்தகாலயம், தி - நகர் சென்னை
37.

Page 25
இந்துப் பண்பாட்டில் பெண்களின் பரிணாம வளர்ச்சி
கலாநிதி சே. அனுசூயா -
சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்
பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அங்கம். அவள் இல்லையேல் வீடும், நாடும் இயங்க முடியாதிருக்கும். அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகின்றாள். வரலாற்றிற்கு முற்பட்ட காலங்களிலும் சங்க காலங்களிலும் அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் என்பனவற்றைப் பல்வேறு நூல்கள் வாயிலாக அறிகின்றோம். பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின் வளர்ச்சிக் காலத்தில் பெண்ணின் சமூக அந்தஸ்தையும், அவளிற்கு மறைமுகமாக அழுத்தங்களையும் ஏற்படுத்திய தன்மைகளையும் பலர் ஆய்வு செய்துள்ளனர். எனது கருத்துப்படி பல்வேறு அழுத்தங்கள், வெவ்வேறு வழிகளில் அவளிற்குக் கொடுக்கப்பட்டாலும், அவள் தனது திறமையையும், ஆற்றலையும் வெளிப்படுத்தி சமூகத்தில் சிறந்த நிலைக்கு வந்துள்ளாள் என்பதேயாகும்.
பெண்ணின் சமூக அந்தஸ்து, வேத காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்து சிறந்து விளங்கியிருந்தது. அவள் சமூகத்தில் பல்வேறு வகையான பங்களிப்புகளைச் செய்துள்ளாள் என்பதைப் பல்வேறு நூல்கள் பறைசாற்றுகின்றன. அவளின் அந்தஸ்தும், தரமும் உயர்ந்ததாகக் காணப்பட்டது. இதன் மூலம் அக் காலகட்டம் ஒரு “பொற்காலம்” எனக் கூறப்படுகின்றது. புராதனக் காலத்தில் பெண்ணின் நிலை இவ்வாறாக இருந்ததற்குப் பல ஆதாரங்களும் இருந்தன. சில பெண்ணிய எழுத்தாளர்கள், பழைய, தந்தைவழி சமூகம் சார்ந்த புராண சமுதாய வாழ்க்கையைப் புறந்தள்ளி, புதிய சம அந்தஸ்துள்ள சமுதாயத்தை உருவாக்க முற்பட்டார்கள். இவ்வகையான கோட்பாடுகள் மூலம் பெண்களைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் சமுதாயத்தில் பெண்களின் தன்மைகளையும் அவர்களால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
38

பெண்கள் ஒப்பற்ற உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்தார்கள் என்பதற்கும் சில பெண்ணிய எழுத்தாளர்களின் கருத்துப்படி இப் “பொற்காலம்” தாய்வழிச் சமூகத்திற்கு ஒப்பானது என்று கூறிவிட்டாலும், சமூகக் கட்டமைப்பில் பெண்களின் அதிகாரம் அல்லது சக்தி சமயத்தில் மீள வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இக்குடும்பங்களில் பெண்களிற்கு அதிக சுதந்திரம் காணப்பட்டது.
சமய அடிப்படையில் பெண் தெய்வ வழிபாடு இருந்ததென்பதற்கு பல ஆதாரங்கள் காணப்பட்டன. பெண்ணை உயர் தெய்வமாக வழிபடுவதற்கு வேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் வேதகாலத்தில் காணப்படவில்லை. இது இந்திய வரலாற்றில் ஆரியர்களுக்குப் பிற்பட்ட தன்மையைத்தான் எடுத்துரைக்கின்றது. அவர்கள் ஆரியர்களுக்கு முற்பட்ட இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள். மொகஞ்சதாரோ, ஹரப்பா, நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் தெய்வ வடிவங்களின் அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் மூலம் சமயத் துறையில் பெண்கள் முக்கிய இடம்: வகித்ததை நன்கு அறியக் கூடியதாக இருக்கின்றது. மேலும் இந் நாகரீகத்திற்குடையவர்கள் முக்கியமாக விவசாயிகள் எனக் கூறப்பட்டுள்ளது. பூமியின் விளைச்சலின் தன்மையை அதிக சக்தி வாய்ந்த பெண் கடவுளின் தன்மைக்கு ஒப்பிட்டுக் குறிப்பிடுகின்றனர். வேறு வடிவத்திலும் பெண் தெய்வத்தை வழிபடுவது தாய்வழி சார்ந்ததாக கூற முடியாது. ஆனால் அது தாய்வழிக் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில் பெண்கள் வாழ்க்கையைக் கொடுப்பவர்கள். அவளே ஊக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகின்றாள். இது கலாச்சாரத்தில் பெண்களின் சக்தியை உறுதிப்படுத்துகின்றது.
குடும்ப அமைப்பு பெண்களிற்கு அதிக சக்தியைக் கொடுக்கின்றது. அது பெண்வழிவந்த தன்மையைக் காட்டுகின்றது. ஆனால் ஒரு சமூகத்தில் தனிமனிதனிற்கிடையில் தொடர்பை ஏற்படுத்துவது அல்லது தொடர்பைத் தீர்மானிப்பது ஒருவருடைய தாயேயாகும். எனினும் எமது வரலாற்று ஆய்வுகளின் மூலம் நாம் அறியக்கிடப்பது ஆரியர்களினுடைய படையெடுப்புத்தான் தந்தை வழிக்குடும்ப அமைப்பை உள்நாட்டு மக்களிற்கு அறிமுகப்படுத்தியது என்பதாகும். ஆகையால் இந்தியாவின் மறுபகுதிகளில் உள்ள சமூக அமைப்பை அடையாளம் காண்பதன் மூலம் ஆரியர் தாக்கம் எவ்வாறு ஏற்பட்டதென்பதையும், அது எவ்வாறு அங்கு காணப்பட்ட பெண்கள் உரிமையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் அறியக் கூடியதாயும்
39

Page 26
இருக்கின்றது. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரளாவில் தாய்வழிச் சமூகத்தின் தாக்கத்தை அதிக அளவு காணமுடியும் இது ஆரம்ப காலத்தில் தாய்வழிச் சமூகம் அதிக ஆதிக்கம் உள்ளதாகக் காணப்பட்டிருக்கும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது. இத் தாய்வழிச் சமூகத்தின் தாக்கத்தை அதிக அளவுகாணமுடியும். இது ஆரம்ப காலத்தில், தாய்வழிச் சமூக அமைப்பில் தந்தைவழிச் சமூக அமைப்பிற்குள் அடங்காத உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றார்கள். பரம்பரைச் சொத்து, சொத்துரிமை, திருமணத் தங்குமிடம் அத்துடன் குழுக்களாக காணப்பட்டதுடன் தாய்வழிச் சமூகத்தின் பெண்கள் பொருளாதார சுதந்திரமுள்ளவர்களாகக் காணப்பட்டனர். மேலும் கூறுகையில் பெண் சமூகத்தில் அதிக அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கவில்லையாயினும், சில அதிகாரங்களைக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் அவர்களிற்குச் சமூக அந்தஸ்து கிடைத்தது. தாய்வழிச் சமூகத்தைப்பற்றி வெவ்வேறு நூல்களை ஆராய்ந்தால் இச் சமூக அமைப்பு தனித்தன்மையாக இந்திய உபகண்டத்தில் உள்ள இந்துக்களிடம் மாத்திரம் இருக்கவில்லை. ஆனால் மற்றைய ஆரம்பகாலச் சமூகங்களிலும் காணப்பட்டன.
இக்கால வரலாற்று எழுத்துக்காலம் றிக் வேதகாலத்தைச் சேர்ந்தன. இவை பொதுவாக ஆரிய கலாச்சாரத் தன்மையுடைய பெரிய பாரம்பரியத் தன்மையுடைய வேத நூல்களை உள்ளடக்கியிருந்தது. பின்னைய நூற்றாண்டுகளில் அதிக இந்துச் சமூகங்களில் அப்பண்பாடே தொடர்ந்து வர ஆரம்பித்தது. இந்துக்களின் பாரம்பரியம் பிராமண சமஸ்கிருதமயமாக்கப்பட்டு விரிவடைந்து வளர்ச்சியடையும் போது, வேறு நூல்கள் உருவாகின. அக்காலப் பெண்களின் நிலையை உணர்வதற்காகவே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. முக்கியமாக இங்கு நோக்கத்தக்கது யாதெனில், புராதன இந்துக் கலாச்சாரத்தில் சமயமும் கலாச்சாரமும் பின்னிப் பிணைந்துள்ள தன்மையேயாகும். ஆதலால், சமய நூல்கள் அக்காலச் சமூகக் கட்டமைப்பை ஆராய்வதற்கும், வாழ்க்கையின் பண்பு நெறிகளை நிறுவுவதற்குமாகிய இரு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன -
சமய, சமய சார்பற்ற தன்மைகள் இங்கு ஆய்விற்குக் கொள்ளப்படுவது இன்னோர் முக்கிய அம்சமாகும். இங்கு பெண்களின்பால் சமூகத்தின் நோக்கமும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பங்குகளையும் எடுத்துக் கூறக்கூடியதாய் உள்ளது.
40

இவ்வாய்விற்குரிய காலகட்டம் மிகவும் நீண்டதாயிருப்பதால் இலகுவாக்குவதற்கு பின்வரும் நான்கு காலகட்டங்களாக அவற்றைப் பிரித்தறியலாம்.
இருக்கு வேதகாலம் - கி.மு. 2500 - கி.மு. 1500 வரை வேதம், பிரமாணம், உபநிடதகாலம் - கி.மு. 1500 - கி.மு. 500 சூத்திரங்கள், புராணங்கள் - கி.மு. 500 - கி.பி. 500 பின்னைய சிம்ரீதிகள், வர்ணனையாளர்கள் - கி.பி. 500 - கி.பி. 1800
எழுத்தாளர்கள்
:
முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன்பிருந்த சமூகக் கட்டமைப்பில் பெண்களிற்கு சில உரிமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர் ஆரியர் வருகைக்கு முன்பிருந்த பெண்களின் சமூக அந்தஸ்தில் பாரிய மாற்றங்கள் எழ ஆரம்பித்தன.
ஆரியர்கள், ஆண்கடவுள்கள், தந்தை வழிக் கூட்டுக்குடும்பம், மூன்று வகையான சமூகக் கட்டமைப்பு (ஷத்திரியர்கள், பிராமணர்கள், வைஸ்ஸிரியர்கள்) என்பவற்றைக் கொண்டுவந்தாலும் ஆனால் உடல்ரீதியான கட்டுப்பாட்டை அப்பிரதேச உள்நாட்டு மக்களில் ஏற்படுத்தினர். அத்துடன் தமது சமூக முறைகளையும் திணித்தார்கள். ரிக் வேதங்களில் பெண்களைப் பற்றிய விபரங்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. இக்காலகட்டத்தில் பெண்கள் மேல் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததினால் அச் சூழ்நிலை இருந்தது எனச் சாத்தியமான விமர்சனங்கள் காணப்பட்டன. Alterkar ன் கருத்துப்படி இக்காலகட்டத்தைப்பற்றி வலியுறுத்தும்போது: “வேத காலத்தில் முற்றுமுழுதாகப் பெண்களின் நிலை மிகவும் திருப்திகரமாகக் காணப்பட்டது” என்கிறார். குறிப்பாகச் சமயத் தன்மை வாய்ந்த விடயங்களில் பெண்கள் ஆண்களிற்குச் சமமாக இருந்திருக்கின்றார்கள். சில சடங்குகளைச் சுதந்திரமாகவும் செய்திருக்கின்றார்கள். இதன் மூலம், பெண்களின் கல்வியைப் பொறுத்தவரையில் சிறிய பால்நிலை வேறுபாடுதான் காட்டப்பட்டிருந்ததை அறியலாம். ஆண்களைப்போலவே பெண்களும் கல்வி கற்றார்கள். பிரமச்சாரிய நிலையை அவர்கள் அடையவேண்டும். ஆண்களிற்கும் பெண்களிற்கும் திருமணம் ஒரு சமயச் சடங்காகக் காணப்பட்டது.
41

Page 27
குடும்ப அமைப்பில் கணவனும், மனைவியும் சம பங்காளிகளாக இருந்தபோதும், ரிக் வேத திருமணச் சடங்கில் தந்தைவழித் தன்மையின் பாதிப்பினால் திருமணம் முடித்தபின் பெண் தனது கணவனின் வீட்டிற்கே செல்லவேண்டும். இம்மாதிரியான சடங்கு முறை ஆரியரிற்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை. தந்தைவழித் தன்மையில் அடுத்த கட்டமாக பெண்கள் உடைமைகளையும், சொத்துக்களையும் அடையவோ, வைத்திருக்கவோ முடியாது. சட்டோபாத்தியாவின் கருத்தை ஆராயும் போது, ஆரம்ப ஆரியர்களின் பொருளாதார வாழ்க்கை அதிக இடையர் (Pastoral) நிலங்களைக் கொண்டதாகக் காணப்பட்டது. இந்த நிலங்களை அடிப்படையாகக் கொண்ட தன்மை பொருளாதார கோட்பாட்டை முன்நிறுத்தி வெற்றிகண்ட ஒன்றாகும். இவ் அதிகாரத்தன்மை ஆண்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் சமூகத்தில் குடும்பங்களும் வகுப்புக்களும் ஆரியர்கள் சனத்தொகையில் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பளித்தது. ஆகவே ரிக் வேதகாலத்தின் இறுதிப் பகுதியில், முன்பு பெண்களிடம் இருந்த சுதந்திரமும், அதிகாரமும் அழிய ஆரம்பித்தது.
இரண்டாம் காலகட்டம்பின்னயசம் கிதாஸ் காலமாகும். இது பிராமணம், உயநிடதம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிமு.1500 - கி.மு. 500 காலகட்டத்தைக் கொண்டது. இது பின்னை சம் கிதாஸ் காலமாகும். இங்கு நாலாவது வேதகால நூலான அதர்வ வேதம் நூலாகக் காணப்பட்டது. இந்நூலானது ஆண்களின் நாளாந்த உலோகயத தன்மைகளின் வழிகாட்டலாகும். பிராமணர்கள் சடங்குகளில் மந்திரங்களைச் சொல்பவர்களாகக் காணப்பட்டார்கள். உபநிடதங்கள் நான்கு வேதங்களுடன் தொடர்புடைய மோட்சத்துடன் (Metaphysical) தொடர்புடையது. அத்துடன் உபநிடதங்களின் அறிவு அறியாமையைப் போக்குகின்றது என்ற நம்பிக்கையைக் கொண்டது. இந்நூல்களின் அடிப்படையில், இது ஆரிய மக்களின் சமயக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, இக்கால கட்டப் பெண்களின் நிலையில் ஒரு பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஆண்மக்களைப் பெற்றெடுக்கும் சக்தி பெண்களிற்கு இருப்பதால் சமூகத்திற்கு பெறுமதி உடையவர்களாகக் கருதப்பட்டாள். இறப்பிற்குப்பின் மறுவாழ்வு என்ற நம்பிக்கையை அதர்வ வேதம் வலியுறுத்துவதுடன், மோட்சம், நரகம் என்ற தெளிவான எண்ணங்களையும் கொண்டிருந்தது. தந்தைவழி ஆரியசமூகத்தின் தாக்கமான மகன்கள் மாத்திரம் இறந்தவர்களிற்கான பிதிர்க் கடன்களைச் செய்யக்கூடியவனவாகக் காணப்படுகின்றனர். மேலும் மகன் அக்குலத்தின் தலைவனாகவும், சொத்துகளிற்கு வாரிசாகவும் பெற்றோர்களின் வாழ்நாள் கடமைகளை முடிப்பவன் போன்ற செயற்பாடுகளினால் பெறுமதி வாய்ந்த உடலியல் ரீதியானதும் பாலியல்
42

ரீதியான அனேக வேறுபாடு காணப்பட்டாலும் பெண்களின் கருத்தரிக்கும் சக்தியில்லையேல் இவை ஒன்றும் சாத்தியமாகாது. ஆகையால் தந்தைவழிச் சமூகத்தின் பெறுமதிகள் வேரூன்றி இருந்தபடியால் பெண்களின் ஆக்கச் சக்திகளையும், அதிகாரங்களையும் இல்லாமற் செய்வதற்காக பெண்களின் பாலியற் தன்மைகளைக் கட்டுப்படுத்தினர். இது தொடர்பான வளர்ச்சிக்கு சமய, சமூகத்தன்மை காரணமாக இருந்தன. இவ்வளர்ச்சியின் விளைவுகள், அடுத்த காலகட்டத்தில் காணப்பட்ட நூல்களில் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பொதுவாக வேதகாலத்தின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதென்பதை அறியமுடியும்
அடுத்த வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் பெண்கள் தொடர்பான வெளிப்பாடுகள் வளர ஆரம்பித்தன. பெண்கள் தூய்மைத் தன்மை குறைந்தவர்கள் என்ற பொதுவான எண்ணம் காணப்பட்டது. பெண்களின் அந்தஸ்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. ஆனால் அவள் கல்வியறிவு பெற்றவளாயிருந்தாள். அத்துடன் ஆண்களைப் போல் சமய சலுகைகளைக் கொண்டிருந்தனர். திருமணப் பேச்சில் தனது விருப்பு வெறுப்புக்களை தெரிவிக்கக் கூடியதாக இருந்தது. வீட்டில் மரியாதைக்குரிய இடம் கிடைத்தது. குடும்பம், சமூகம் என்பவற்றில் அவள் சுதந்திரமாக நடமாட முடிந்தது. பொது நிகழ்ச்சிகளில் அறிவு சார்ந்த பங்களிப்புகளைச் செய்தாள். அவள் தொழில் பார்க்கும் திறமை உடையவளாக இருந்தாள். இந்நூல்களின் மூலம் அறியவருவது யாதெனில், ஆண்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு பெண்கள் மேல் இருந்த மதிப்புக் குறைய ஆரம்பித்தது.
புராணக் கதைகளும் ஆரம்ப ஸம்ரிதிகளும் இக்காலகட்டத்தில் இருந்தது. இது இந்து இலக்கியங்களில் வேத காலத்திற்குப் பிற்பட்ட தன்மையாகும். இங்கு பெண்ணின் சிறப்புக்குன்றிய தன்மையும், நிறுவனமயமாக்கப்படலும் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பகால வேத நூலான சுருதிகள், தெய்வத்திலிருந்து உருவானதென்ற நம்பிக்கையிருந்தது. ஆனால் வேதகாலத்திற்குப் பிற்பட்ட சிம்ரிதிகள் மக்களினால் எழுதப்பட்டது என்ற நம்பிக்கை இருந்தது. மக்களின் வழிகாட்டலிற்காக எழுதப்பட்ட இந்நூலில் வெவ்வேறு வகையான திருமண முறைகளும், சடங்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்திருமணச் சடங்கு ஒரு புனிதத் தன்மை என்ற கருத்தில் இருந்து இத்திருமண முறையில் கணவனிற்கு மனைவி பக்தியாய் இருத்தல் என்பது பெண்ணைப்பற்றிய
- 43.

Page 28
கருத்துக்கள் மாறியிருப்பதைக் காட்டுகின்றது. அவ் எண்ணங்கள் நிறுவனமயமாக்கப்பட்டவுடன் பெண் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்க முடியாமல் கணவனிற்கு ஒரு சார்புப் பொருளாக மாத்திரம் இருக்கின்றான். மேலும் சமயக் கல்வித்துறையில் பெண்களுக்கு முன்பிருந்த உரிமைகளிற்குப் பங்கம் ஏற்பட்டதும் இங்கு அவதானிக்கப்பட்டது. இங்கு ஆரிய ஆண்கள், ஆரியரல்லாத பெண்களைத் திருமணம் செய்யும் தன்மையும் அதிகரித்துக் காணப்பட்டது. சூத்திரப் பெண்கள் சமயச் சடங்குகள் செய்வதில் இருந்து தவிர்க்கப்பட்டதால், பெண்கள் எல்லோரும் வேதங்கள் கற்பதில் இருந்து தவிர்க்கப்பட்டார்கள். மேலும் வேத இலக்கியங்கள் விரிவடைந்து அது கற்பதற்கு நீண்ட காலம் எடுத்தபடியால் பெண்கள் அதில் ஈடுபட முடியாது என்றும், மனைவியின் ஸ்தானத்தில் இருந்து கடமைகளைச் செய்ய இயலாது என்றும் நினைத்தனர். அங்கு அப்போது குழந்தைத் திருமணம் பிரபல்யம் அடையாதிருந்தது. பெண் திருமணம் முடிக்காது வேதங்களைத் தொடர்ந்து படிப்பது சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகக் காணப்பட்டது. திருமணத்தின் மூலம்தான் பெண்களின் கடமைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போதுதான் பெண்களின் திருமண வயதைக் குறைக்கும் தன்மை உருவாகி அதன் விளைவாக உபநயனங்களையும், கல்வியையும் கற்பதற்கு தடைசெய்யப்பட்டாள். பெண்கள் கல்வி கற்றால்தான் திருமணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற முன்பிருந்த நிலை முற்றாக மாற்றியமைக்கப்பட்டது.
இராமாயணமும், மகாபாரதமும் எவ்வாறு ஒரு சிறந்த இந்துப்பெண்கள் இருக்க வேண்டும் என்பதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அது ஒரு குறிப்பிட்ட இந்திய பழைய குழுக்களிற்குடையதாக இருந்தாலும் அதன் கவிதைகள் எல்லோரிற்குமாகவே சொல்லப்பட்டுள்ளது. அநேக இலக்கியங்களில் பெண்களைப்பற்றிய முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களே தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் சமூகத்தில் பெண்களின் தரத்தையும் சிறப்பையும் நன்கு பிரதிபலிக்க முடியாமல் இருக்கின்றது. இவ் எல்லாக்குழப்பங்களுக்குமிடையில் ஒரு முக்கியமான காரணி என்னவென்றால் ஒரு பெண் உயர்வுபடுத்தியோ (Idealized) அல்லது குறைவாகவோ, கணிக்கப்பட்டாலும் அவளின் வாழ்க்கை ஆணுடன் பிரிக்கமுடியாதவாறு தொடர்புடையதாயுள்ளது. இக்காலத்தில் பெண் ஆணிற்கு மிகவும் சார்புடையவள் (Appendage) என்ற தன்மை மேலும் அதிகரித்து, அவள் ஒரு மகளாக, மனைவியாக, தாயாக அல்லது விதவையாக கணிக்கப்பட்டுள்ளாள்.
-44

இந்து சமயத்தில் பெண் தனது கணவனைக் கடவுளாக வழிபடும் போது பதிவிரதை என்ற உயர் தன்மையைப் பெற்றுள்ளாள். இதன்படி சீதை இந்து மதத்தில் 905 யதார்த்தப் பெண்ணாகக் கருதப்படுகின்றாள். ஒரு திருமணத்தின் போது சீதையைப்போல் வாழ வேண்டும் என வாழ்த்துகின்றனர். இப் புராணத்தில் சீதை ஒரு மென்மையான, அன்பு நிறைந்த, கற்பனையுடைய, சுயநலமற்ற, பக்தியுடைய, ஆன்ம சுத்தியும், உடற்தூய்மையும் 9-60LL, காத்திரமான கதாநாயகியாகச் சித்தரிக்கப்டுகின்றாள். பலனை எதிர்பாராத பெருமைக்குரியவளாகின்றாள். இக் காலத்தில் பெண் ஒரு சிறந்த மனைவியாக மட்டும் கருதப்படுகின்றாள். ஒரு பெண் ஆணின் தாய் என்று சொல்லப்படும்போது சமூகத்தில் அவளிற்கு ஒரு விசேட அந்தஸ்துக் கிடைக்கின்றது. மகாபாரதக் கருத்தின்படி எல்லாத் தன்மைகளிலும் மிகவும் சிறந்தது யாதெனில் உயர்வானவர்களுக்குக் கீழ்ப்படிதல். அவ்வுயர்வானவர்களில் தாய்தான் மிகவும் சிறந்தவள்.
இக்காலகட்டத்தில் விதவைப் பெண்களின் நிலை, பின்னைய காலத்தைவிட மிகவும் மோசமில்லை. அங்கு Sakti என்ற அமைப்பு நிறுவனமாக்கப்பட்டுக் காணப்பட்டது. இங்கு பலதாரத் திருமணங்கள் காணப்பட்டன. குறிப்பாகச் சகோதரர்களைத் திருமணம் முடிக்கும் தன்மை காணப்பட்டது (Polyandry). ஒரு பெண் கணவனை இழந்தால் அவள் இறந்த கணவனின் சகோதரர்களின் சொத்தாக மாறுகின்றாள். இங்குள்ள வழக்கில் ஒரு தார மணம் பெண்ணிற்குக் காணப்படவில்லை. அத்துடன் விதவை மறுமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உயர்சாதி ஆண்கள் குறைந்த சாதிப் பெண்களைத் திருமணம் செய்ய முடியும். ஆனால் உயர் சாதிப் பெண்கள் குறைந்த சாதி ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பெண் வழிச்சமூகத்தில் காணப்பட்ட பெண்ணின் சுதந்திரமும் தன் நம்பிக்கையும் தந்தை வழிச் சமூகத்தினால் சிதைவுறச் செய்யப்பட்டது. சமூகத்தில் பெண்ணினது நிலையை சிதைவுறச் செய்யும் தன்மை காணப்பட்டது.
இக்காலத்தில் அவளின் சொத்துரிமைத் தன்மைதான் அவளிற்கு ஆதாரமாகக் காணப்பட்டது. இது மீண்டும் திருமணம் என்ற நிறுவன அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டது. இங்கு ஹிதன் அல்லது சீர்தனம் திருமணத்தின் போது பெண்களால் கொண்டுவரப்படுவது, அவளது சொத்தாக நிலைத்திருக்கின்றது. சீர்தனத்தைப் பற்றித் தெளிவாக ஒன்றும்
45

Page 29
குறிப்பிடப்படவில்லை. அது எப்போதும் அசையும் சொத்தாகவே கணிக்கப்பட்டது. இங்கு தகப்பனுடைய அல்லது கணவனின் அசையும் சொத்தைப் பெறுவதற்குப் பெண் போதுமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்பதாகும். இவ்வாறு புதிதாக கொண்டுவரப்பட்ட சொத்துரிமையிலும், பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் கிட்டவில்லை.
இக் காலகட்டத்தில் விளக்கவுரையாளர்களும், உரைநடை எழுத்தாளர்கள் காலமுமாகும். இக்காலத்தில் ஆரம்பகால கலாச்சாரப்பாரம்பரிய தன்மைகளிற்கு ஏற்ப இந்துச் சட்டங்களை இயற்றுவதற்கு அடித்தளமிடப்பட்டது அது அதற்குப் பிற்பட்ட சமூக வாழ்க்கைக்குவித்திட்டது. இச்சட்டநூல்கள்,தர்மசாஸ்திரங்கள் என்பன வேதங்களை அடிப்படையாகக் கொண்டன. இவை வாழ்க்கை நெறிகளுடனும், நேர்மைத் தன்மைகளுடனும் (Righteousness). தனிமனித சுகாதாரத்துடனும், சாந்தமான பழக்க வழக்க நடவடிக்கைகளுடனும், நன்நடத்தையுடனும், அரசின் நீதியான நிர்வாகத்துடனும், ஆன்மஈடேற்றத்தைக் காணுதலும், வீட்டுச் சடங்குகளினதும், புனித நிலைகளினதும் தன்மையையும் கொண்டிருந்தன. இங்கு மனுவினுடையதும், யஸனவலக்கயாவின் சட்டங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள சமூகக் கட்டமைப்பில் பெண்கள் உயர் சாதி மக்களிற்குப் பணிபுரியும், சூத்திரர்களுடன் ஒப்பிடப்பட்டார்கள்.
இச் சட்டங்களை இயற்றியவர்களும் தொடர்ந்து பெண்களைப் பற்றிய பல்வேறு கருத்து முரண்பாடுகளைத் தெரிவித்தார்கள். பெண் ஆணுக்குச் சார்பானவள் என்ற கருத்தே தெரிவிக்கப்பட்டது. மனுவின் கருத்துப்படி பெண் பிள்ளைப் பருவத்தில் தகப்பனாரினாலும், இளமையில் அவள் கணவனினாலும், முதுமைக் காலத்தில் அவள் மகன்மாரினாலும் பாதுகாக்கப்படுகின்றாள் என்றும் கூறினார். இதனால் அவள் சுதந்திரமாக நடமாட முடியாதவளாகவும் காணப்பட்டாள். அதன்படி அக்காலத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கொண்டவளாகக் காணப்படவில்லை. சமுதாயத்தில் பெண்கள் சார்பு நிலையில் இருப்பதற்காகவே மனு பல முன்னோடிக் கருத்துக்களை தெரிவித்தார்.
இக்காலகட்டப் பெண்களால்தான் பதிவிரதயம் என்ற கோட்பாடு பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு ஜதார்த்தப் பெண் கணவனைக் கடவுள் மாதிரி வழிபட்டு பின்பு, அவனிற்குப் பக்தியுடையவளாக மாறினாள். இக்கருத்தின் அடிப்படையிலே குழந்தைத் திருமணமும் நடைபெற்றது. இதன் மூலம் அவள், கல்வியறிவு, சமய அறிவு பெரும் சாத்தியங்கள் இல்லாமற் செய்யப்பட்டன. கல்வியறிவு இல்லாத பெண் அடிமைத்தன்மையான
46.

தொழில்களையே செய்தாள். அத்துடன் சமுதாயம் பெண்களிற்குச் செய்யும் அநீதிகளையும் தாங்கிக்கொண்டிருந்தார்கள். விசுவாசம், கீழ்ப்படிதல், கற்பு போன்ற கருத்துக்கள் Sati என்ற உடன்கட்டையேறுதலுக்குத் துணை புரிந்தன. இது பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. விதவை மறுமணம் இக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்கு உண்மையான மனைவி கணவன் இறந்தபின்பும் அல்லது விசுவாசமற்ற கணவனிற்கு விசுவாசமுடையவளாகக் காணப்படவேண்டும். மறுமணம் என்பது, கற்பை இழப்பதாகும். கற்பை இழப்பது சக்தியை இழப்பதற்குச் சமன் என்றார்கள். அது சமூக வலுவாகவும், சமய இழப்பாகவும் கருதப்பட்டது. சமயமும் சமூகமும் ஒரு விதவை தனது கணவனின் சிதையில் விழுந்து உடன் கட்டையேறுவதை விரும்பவில்லை. விருப்பத்துடன் உடன் கட்டையேறுவது சமூகத்தினால் விரும்பப்படாத ஒன்றாகவும் காணப்பட்டது.
இப் பாரம்பரிய இலக்கியங்களில் எல்லாம் இந்து சமூகத்தில் பெண்ணின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தன. அது அவர்கள் ஆரியர் ' வருகைக்கு முன்பிருந்த உயர் தகுதியிலிருந்து கீழ் நிலைக்குக் கொண்டு சென்றது. ஆகையால், பெரிய பாரம்பரிய இலக்கியங்கள் அச் சமூகத்தின் மேல் தந்தைவழிச் சமுதாயம் காட்டிய தன்மைகளை அது பிரதிபலித்தது. அது சமூகத்தில் பெண்களின் சார்புத் தன்மைகளை மேலும் வலியுறுத்தியது. இக்கால அநேக இலக்கியங்களில் குறிப்பாக சட்டங்கள் நுண்கலைகள் என்பன குறிப்பாக உயர் வகுப்பினரிற்கே சொந்தமானது. இந்து சமூகப் பெண்களின் நிலையை முற்றாக அறிந்து கொள்ள வேண்டுமாயின் சாதி குறைந்த சூத்திரப் பெண்களின் இலக்கியங்களை அறிந்து கொள்வது அவசியம்.
முன்கூறப்பட்ட கருத்துக்கள் இந்து சமயத்தின் பாரியபாரம்பரியத்தையும், பெண்களின் சமூக அந்தஸ்தையும் அடையாளம் காண்பதாகவும் அமைந்தது. எனினும் இறுதி பகுப்பாய்வில் பெண்மை பேணப்பட்டாலும், உண்மையில் அவர்களின் சமூகம், சமய அந்தஸ்து வெகு விரைவாகக் குறைந்து சென்று அவர்களின் வாழ்வின் முக்கிய தன்மைகளில் கட்டுப்பாடு இருக்கவில்லை. இருந்தும்,இச்சந்தர்ப்பத்தில் நேரடியான கடந்த காலத்தன்மைகளை நோக்குவது சிறந்ததாகும். இங்கு சட்டத்துடன் கூடிய உரிமைகளையும், அதிகாரங்களையும், சமூகத்தில் சமமாகப் பெற்றிருந்தார்கள். இது சமஸ்கிருத மயமாக்கலினால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டதாகச் சொல்லமுடியாது. இதை மேலும் முழுமையாக
47

Page 30
ஆராய வேண்டுமானால், சிறு பாரம்பரியத்திற்கான நூல்கள் ஆராயப்பட வேண்டும். இது குறிப்பாக பிராமணர் அல்லாத அல்லது வேதகாலமற்றமக்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கூறுகின்றது. இது பெரிய பாரம்பரியத்தின் வளர்ச்சியின் சமகால்த் தன்மையைக் கொண்டது. கோட்பாட்டின்படி, சிறிய பாரம்பரியத்தின் கலாச்சாரம் எல்லாப் பெண்களுடனுமான சர்வதேசத் தன்மையை கொண்டிருக்கவில்லை. ஆனால்பெரிய பாரம்பரியத்தின்'இலக்கிய நூல்கள் தெளிவாகப் பெண்களைக் குறைத்து மதிப்பிட்டது. சிறிய - பாரம்பரியத்தினுள் இருந்த தந்திர மற்றும், பக்தி இயக்கங்கள், தாய்வழி சார்ந்ததாகவும், தந்தைவழி பிராமணியத்தை எதிர்த்ததாகவும், விடில் மற்றும், ஜோசி என்பவர்கள், தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சமயத்தினதும், பண்புகளினதும் கலைக்கழஞ்சியத்தில், “தன்திர” பயன்பாடுகள், மிகவும் புராதன காலத்தில் பழக்கத்தில் இருந்தன. அத்துடன் அதை நாகரீகமடையாத மக்களிடையே காணப்பட்ட எண்ணமாகும். இவர்கள் ஆரியர்களுடைய தாக்கத்திற்கு ஆட்படாதவர்களாக இருந்தார்கள். தந்திரக் கோட்பாடுகளின் முக்கிய எண்ணக்கருவாக பெண்மைக்கோட்பாடுகளே (சக்தி) முன்வைக்கப்பட்டன. இது தன்மைகள் ஆண்கோட்பாடுடைய முழுமுதற் கடவுளாகிய சிவனை இயக்குவதற்கு அடிப்படைத் தன்மைகளாக அமைந்தன. இத்தந்திரக் கோட்பாடுகள் ஆண்,பெண்பாலுறவின் அடிப்படைத்தன்மைகளை மையமாகக் கொண்டன. இதிலிருந்து நாம் முடிவிற்கு வருவது யாதெனில் சமய இயக்கங்கள் பெண்மைக் கோட்பாடுகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து, பெண்ணின் சக்தியின் அடிப்படைத் தன்மைகளிலேயே, பாலுறவுகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தின.
தந்திரஇயக்கத்தில் காணப்பட்ட பெண்களின் சுதந்திரநிலை, பெரிய - பாரம்பரியத்தில் காணப்பட்ட பாரிய சமயக் கொள்கை உடையவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆகையால் அநேக நூல்கள், அப்பாரம்பரியத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்றையவர்களிற்கு மறைவாகவே வைக்கப்பட்டன. ஆகையால் இவைகள் பொதுவான நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் குறைவாகவே வெளிப்படுத்தின. எனவே அவை பாரிய எதிர்ப்பை பெரிய - பாரம்பரியத்தில் உள்ளவர்கள் காட்டினார்கள். மனைவிமேல் கணவனிற்கு இருக்கும் கடமைகள், உடன் கட்டையேறுதல் மற்றும் சீர்தன முறைகளை எதிர்த்தல் பெண்ணின் கற்பழிப்பிற்கு மரண தண்டனை விதித்தல், போன்றன பெண்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக சமத்துவத்தைக் காட்டிநின்றன.
48

இத்தந்திரக் கோட்பாடுகளின் தாக்கங்கள் எல்லாம் புராணங்களில் காணப்படுகின்றன. இங்கு கூறப்பட்ட உப கதைகள் எல்லாம் அறிவு சார்பான அல்லது சமய சார்பான வளர்ச்சி அற்ற, அடிப்படையில் சமய மற்றும் பண்பாட்டு வளர்ச்சி போதாத மக்களிற்குப் போதிப்பதற்காக கூறப்பட்ட கதைகளாகும். இவைகள் அடிப்படையில் “பெரிய - பாரம்பரியத்தைச் சார்ந்தன என்றாலும், சிறிய - பாரம்பரியத்தில் இணைக்கப்பட்டதனால் பல்வேறு மாற்றங்களிற்கு உள்ளாகியது. இருந்தும், பெண்களைப்பற்றிக் கூறும் போது மாறுபட்ட கருத்துக்களையே கொண்டுள்ளன. புராணக் கதைகளில் பெண் தெய்வங்கள் தமது ஆண்பாலர்களை எதிர்ப்பதற்காகவே காட்டப்பட்டுள்ளது. ஆகவே பெண்களிற்குத் தந்திரக் கதைகளின் முக்கியத்துவத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. இது பக்திக்குரிய தாய் வழிபாட்டின் “மறுமலர்ச்சி” யின் விளைவாகும். இது பெண்வழிபாடு அல்லது சக்தி வழிபாட்டை ஏற்படுத்தியதாகும். இங்கு, மறுமலர்ச்சி என்ற சொல், பரிணாம வளர்ச்சி’ என்ற பாரம்பரியத்திற்கு எதிராகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பெண் தெய்வ வழிபாட்டின் அடிப்படைத் தூண்டுதலானது ஆரியரல்லாத அல்லது சமஸ்கிருதத் தன்மையற்ற தோற்றுவாயைக் கொண்டிருந்தன என்பது பல ஆய்வாளர்களினால் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டதாகும். ஆகவே இப் பாரம்பரியத்தின் ஆரம்பம். ஆரியர்காலத்திற்கு முற்பட்ட “பொற்காலம்” என ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகையால் இது புராதன பாரம்பரியத்தின் மீட்பு எனக் கொள்ளப்பட்டது.
சக்தி பாரம்பரியம் அல்லது தெய்வத் தன்மை வாய்ந்த தாய், உலகத்தின் உயர் அதிகாரமுடையவளாகின்றாள். ஆண், பெண், தத்துவங்களை நோக்குமிடத்து, உலகத்தின் இறுதி உள்ளார்ந்தத் தன்மை பெண்மையேயாகும். இக்கருத்து பெண்ணின் இயற்கையான, ஆக்கபூர்வமான தொழிற்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். ஆகவே இப்பாரம்பரியத்தில் பெண்மை உயர்வாக மதிக்கப்படுகின்றது. இலக்கியங்களின் பெண்மையின் சக்தி, பல்வேறு பெண் தெய்வங்களின் மூலமாக உருவகஞ் செய்யப்பட்டுள்ளது. சக்தியாகப் பெண்ணை உருவகப் படுத்தும் போது, பெண், தனது அடிப்படைத் தகைமைகளை இனங்கண்டு கொள்ளமுடியும். வேதகால சமூகத்தில் இத்தன்மைகளைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் சிறிய - பாரம்பரிய காலத்தில் இவைகள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டன.
49

Page 31
சிறிய-பாரம்பரியகாலத்தில் பக்தி இயக்கம் ஆதிக்கம் செலுத்தியது. (500-A.D). பக்தி என்றால், வழிபாடு. இது, இறைவனிற்கும் - தனி மனிதர்களிற்கும் இடையே காணப்பட்ட நேரடி வழிபாட்டு முறை. இங்கு பிராமணர்களின் தலையீடோ அல்லது சடங்கு முறைகளோ நடைமுறையில் இருக்கவில்லை.
இவ் இயக்கம் ஏற்கனவே நிலைநாட்டப்பட்ட சாதி, பாலியல், சமூகத் தடைகளைத்தாண்டிய ஜனநாயக இயக்கமாகக் காணப்பட்டது. எல்லா பக்தர்களும் சமம். தனிமனிதன் பெண் / ஆண் பழமைவாய்ந்த பெரிய - பாரம்பரியத்தினால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி கடவுளுடனான தடையற்ற தனிப்பட்ட தெய்வீக உறவை வைத்திருக்க முடியும். தெரிவு செய்யும் சுதந்திரம் இவ் இயக்கத்தில் காணப்பட்டபடியால் இது பெண்களைக் கவர்ந்தது. குறிப்பாக இக் காலகட்டத்தில் பக்தி பாடல்களும், கவிதைகளும் தாய்மொழியில் இயற்றப்பட்டன. ஆகையால் அநேக பொதுமக்கள் சமஸ்கிருதக் கல்வி முறையிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்களும், உயர் சாதிப் பெண்களும் கற்ககூடியதாக இருந்தது. ஆகையால் பக்தி இலக்கிய வரலாறு பல்வேறு பெண்களிற்கு மாற்று வழியைக் காட்டி அவர்களிற்கு ஆறுதலாக இருந்தது. சில பெண்களும், புனிதத் தன்மையடைந்தன. இக்கருத்துக்கள் மேலும், இராதா, கிருஷ்ணா, வடிவங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
ஆகையால், சிறிய - பாரம்பரியத்தில் காணப்பட்ட, சுதந்திர மற்றும் பக்தி இயக்கங்கள் சமூகத்தில் ஆண் கட்டுப்பாட்டை எதிர்த்து, பெண்கள் தொடர்ந்து அதிகாரத்தை வைத்திருப்பவர்களாகவே காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பெரிய - பாரம்பரியத்தால் பெண்களிற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் இந்து சமூகத்தில் பெண் என்பவள் சக்தி வாய்ந்தவளாகவும், கடினமானவளாகவும் என்ற நிலைப்பாட்டை இந்துச் சமூகத்தில் பெண்நிலை நிறுத்தி வந்துள்ளாள்.
உருவங்கள் (Images) இந்துச் சமூகத்தில் பெண்களை ஆட்சி செய்தது. இது ஒரு பொதுவான தன்மையாக அடையாளம் காணப்பட்டது. இவ் உருவங்கள் மாதிரியைக் கொடுத்தன. இம் மாதிரிகள் மூலம், பெண்கள் தம்மை உணர்ந்தனர். அத்துடன் சமூகமும் பெண்ணை உணர்ந்தது. இதன் விளைவாக பெண், மனைவி என்ற இரண்டாந்தரப் பிரஜையானவள் என்ற சர்ச்சை கிளம்பியது. இதனாலேயே இக் கருத்தை விளங்குவதற்கு
50.

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில், ஆதிக்கம் செலுத்திய ஆண்வழிச் சமூகச் சக்திகள், பெண்ணின் சக்தியின் அடிப்படைக் கோட்பாடுகளை அழிக்க முற்பட்டன. ஆனால் பெண்ணிய அடிப்படைக் கோட்பாடுகளை அழிக்க முடியாதவாறு, பெண் தன்னை மீண்டும் அதி சக்திவாய்ந்த சமய உருவமாக மீள நிறுத்திக் கொண்டாள். ஆகையால் இந்து சமயத்தின் சிக்கல் வாய்ந்த சம சமூகத் தன்மை, அதன் பல்வேறு வகைப்பட்ட நம்பிக்கைகள், வாழ்க்கை நெறிகள், வழிபாட்டு முறைகள் என்பன கருத்து வேறுபாடுகளை உடைய வெவ்வேறு பெண் தெய்வ உருவ வழிபாட்டிற்கு வழிவகுத்தது.
இதன்மூலம், “பொற்காலக்” கோட்பாடு வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திற்குப் பொருந்தும். பெண், இங்கு சமூகத்தின் சகல ஆக்க நடவடிக்கைகளிற்குப் பொறுப்பாயிருந்தாள். சமூக உய்விற்கும் பொறுப்பாயிருந்தாள். இந் நம்பிக்கை பெண் தெய்வ உருவ வழிபாட்டிற்கு வழிவகுத்தது. இச்சமய உருவங்கள், சமூகத்தில் பெண்ணின் சகல தொழிற்பாடுகளையும் மீள வலியுறுத்தின. இதன் மூலம் பெண்ணின் சக்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெண்ணின் பங்களிப்பு மிகவும் உயர்பெறுமதி வாய்ந்ததாகவும் காணப்பட்டது. அது சமூக உய்விற்கு அவசியமாக இருந்தது. இங்கு அதிகாரம், ஆதிக்கம் செலுத்துவதுடன் ஒப்பிடப்படவில்லை. ஆனால் அப்பெண்ணின் சக்தி ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படாமல், வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகக் கொள்ளப்பட்டது. ஆகையால் அங்கு முரண்பாடுகள் காணப்படவில்லை. பெண்ணின் இயற்கைத் தன்மை. வாழ்க்கையின் ஆதாரம் எனக் கணிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, சமூகத்தில் உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டது. பெண்ணின் இச் சக்தி ஒரு மாற்றீடு செய்யக்கூடியதாக மாறியது. ஆகையால், “பதிவிரதை” என்ற வடிவம், அல்லது ஒரு சிறந்த பெண் என்ற தன்மை நூல்களில் கூறப்பட்டது. கீழ்ப்படிதல், பண்பான கடமைகள், பணிவிடை செய்தல் என்பன பின்பு இந்துச் சட்டங்களில் குறிப்பிடப்பட்டு, பின்பு பெண் குறைந்த நிலைக்கு நிறுவமையப்படுத்தப்பட்டார். மேலும் பெண்ணிற்கு எவ் அதிகாரமும் கொடுக்கப்பட்டாலும், ஆணின் உறவு முறை மூலம்தான் கொடுக்கப்பட்டது. தந்தை மூலம் - கணவன் மூலம் - அல்லது மகன் மூலம்
பெண்களின் அதிகாரத்தில் கட்டுப்பாடுகள் விதித்தல். சமூக அந்தஸ்தில் பெண்களைக் கீழ்நிலைக்குக் கொணர்தல் என்பன படிப்படியாக
51

Page 32
நிகழ்ந்தன. அவர்களிற்குச் சமயக் கல்விமுறைகள் மறுக்கப்படுவதன் மூலம் அவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடைவிதிக்கப்பட்டது. திருமணங்கள் நிறுவனமயமாக்கப்படுதல், மனைவி, தாய் என்ற பதவிகளின் மூலம் குடும்பத்திற்கு தன்னல்மற்ற சேவைகள் என்பவற்றால் மேலும் அவளது சமூக அந்தஸ்து மட்டுப்படுத்தப்பட்டது. ஆகையால் பெரிய - பாரம்பரியத்தைக் கொண்ட பழைமைவாத இந்து சமூகம், பெண் சக்தியற்றவள், கீழ்நிலையுடையவள் போன்ற தன்மைகளிற்கு இட்டுச் சென்றது.
ஆரியர்களின் தந்தை வழிச்சமூகம் ஆரியர்களிற்கு முற்பட்ட சமூகத்தில் காணப்பட்ட வலிமை வாய்ந்த அதிகாரமுடைய பெண்களை அழிப்பதில் வெற்றி கண்டார்கள். ஆரியர்களின் செல்வாக்கினால் இந்து சமூகத்தால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் பின்பு உண்மையான பெண்ணின் சக்தி மீட்டெடுக்கப்பட்டு மேலும் பலமுள்ளதாக்கப்பட்டது. அதன் பரிணாம வளர்ச்சியே இன்று காணப்படும் நவீன பெண் சமூகம். இன்றைய சமூகத்தில் பெண் தன்னை தக்க நிலைநிறுத்த பல்வேறு அனுபவங்களைப் பெற்று வெற்றி கண்டுள்ளாள்.
52

References
Shakunthala Jaganathan 1984 Hindusim : An Introduction (Bombay: Vakils Feffer and Simons)
D. S. Sharma 1953. "The nature and History of Hinduism' in Kenneth. W. Morgan (ed), The Religion of the Hindus. (New York: The Ronald Press Company).
Joanna Liddle and Rama Joshi. 1986 Daughters of Independence: Gender, Caste and Class in India. (London - Zed Books)
N. N. Bhattacharga 1971 Indian Mother Goddess (Indian studies past and present Calcutta)
D. D. Kosambi, 1956 An Indroduction to the study of Indian History. (Bombay - Popular Barks Depot)
Shakuntala Rao Shastri 1959, Women in the Sacred Laws. (Bombay: Bharatiya Vidya Bhavan.)
Towards Equality. 1974 Report of the Commitee on the Status of the Women in India. Ministry of Education and Social Welfare. (Government of India. New Delhi)
Rajam Krishnan 1994: Women Through the Ages (Tamil) (New Delhi, National Book Trust India)
53.

Page 33
செ. கணேசலிங்கனின் நாவல்களில் பெண்கள்
- செ. யோகராசா -
இன்றைய காலச் சமூகத்தை ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் நவீன இலக்கிய வடிவங்களுள் நாவல்தலைசிறந்தது. ஏனெனில், நாவலின் வடிவஞ் சார்ந்த இயல்புகள் நாவலாசிரியர் சமூகத்தை முழுமையாகவும் யதார்த்த நோக்கிலும் அணுகுவதற்கு வழிவகுத்துள்ளன. இத்தகைய நாவலாசிரியர்களுள் மார்க்ஸிய நோக்குடைய நாவலாசிரியர்கள் முக்கிய கவனத்திற்குரியவர்கள். ஏனெனில், இவர்கள் விமர்சன யதார்த்த நோக்கிலோ, சோஷலிச யதார்த்த நோக்கிலோ சமூகத்தைப் பார்ப்பவர்கள். இவ்விதத்தில், மார்க்ஸிய நோக்குடைய நாவலாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவரான செ. கணேசலிங்களின் நாவல்கள், குறிப்பாக பெண்ணிலைவாத நோக்கில் அவரால் எழுதப்பட்ட நாவல்கள் இங்கு பொருத்தம் கருதி ஆய்வுக்குட்படுகின்றன.
மேற்கூறியவாறு ஆய்வுக்குட்ப்டுகின்ற நாவல்கள் பின்வருவன : (அ) இலங்கையைக் களமாகக் கொண்டவை:
சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை வன்முறை வடுக்கள் செல்வி தாய்வீடு ஒரு பெண்ணின் கதை
(ஆ) தமிழ் நாட்டினைக் களமாகக் கொண்டவை:
இரண்டாவது சாதி குடும்பச் சிறையில் உலகச் சந்தையில் ஒரு பெண் கவர்ச்சிக் கலையின் மறுபக்கம்
54

பாரிய மாற்றங்களுக்குள்ளாகியுள்ள இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலில் பெண்களின் நிலை, அவர்களது பண்பாடு சார்ந்த விழுமியங்கள், அடைந்துள்ள மாற்றம்/ மாற்றமின்மை, அவற்றிற்கான காரணங்கள், தீர்வுகள் என்பன மேற்கூறிய நாவல்களில் பெண் பாத்திரங்கள் ஊடாக எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதனை அவதானிக்கும் முயற்சியே இங்கு இடம் பெறுகின்றது.
ஒரு நாவலில் கதை (Story), கதைப்பின்னல் (Plot), பாத்திரங்கள் (Characters), உரையாடல் (Dialogue), முதலியன முக்கிய கூறுகளாகின்றன. நாவலாசிரியரின் ஆற்றல், ஆளுமை, அனுபவ வட்டம் என்பவற்றிற்கேற்ப இவற்றில் ஒன்றோ ஒன்றிற்கு மேற்பட்டனவோ நாவல்களில் சிறப்பிடம் பெறுகின்றன. இவ்விதத்தில் செ. கணேசலிங்கனின் நாவல்களில் ஏனைய கூறுகளை விட பாத்திரங்களும் உரையாடல்களுமே முதன்மை இடம் பெற்றிருப்பதனை இவ்வேளை நினைவு கூர்வது பொருத்தமானது. ஒருவிதத்தில் இது காரணமாக எமது ஆய்வுத் தடமும் இலகுவாகிவிடுகின்றது
எனலாம்.
சூரியன் கிழக்கில் உதிப்பதில் என்ற நாவலில் தலைப்புப் பற்றி கவனிப்பது அவசியமாகின்றது. ஏனெனில் இத்தலைப்பு ஆண்களால் கட்டமைக்கப்பட்ட, பெண்கள் பற்றிய கருத்து நிலைகள் பொய்யானவை என்பதனை உணர்த்தும் குறியீடாகவுள்ளமை கவனத்திற்குரியது. இவ்வாறான பொய்மைகள், சித்ரா, உமா, மீனாட்சி ஆகிய பாத்திரங்களூடாக - பாத்திரங்களின் வாழ்க்கை முறையூடாக - வெவ்வேறு தளங்களில் விளக்கம் பெறுகின்றன.
சித்ரா, மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவள். பெற்றோரின் பொருளாதார நிலை, நாட்டின் அரசியல் நிலை (இனக்கலவரச் சூழல்) என்பன (அத்துடன் தனது காதல் தோல்வியும்) காரணமாக டுபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றவள். லிவிலே இலங்கைக்கு வந்து பின்னர் மறுபடி செல்கிறாள்.
தொழிலினால் ஏற்பட்ட பொருளாதார உயர்வு அவளைப் பெருமையடையச் செய்கின்றது:
"இதெல்லாம் என்னுழைப்பில் வாங்கியவை. இது அம்மாவின் பழைய சீதன வீடு. நானே என் பணத்தில் திருத்திக் கட்டினேன்.”
55

Page 34
பொருளாதார உயர்வும், அதனால் ஏற்பட்ட சுதந்திர நிலையும் தனது எதிர்காலம் பற்றிய உறுதியான - தெளிவான - முடிவிற்கு அவளை வழிப்படுத்தின. இவ்விதத்தில் பின்வரும் உரையாடற் பகுதிகள் கவனத்திற்குரியன
“கலியாணம் என்றாவது ஒரு மாப்பிள்ளையை உன்னால் பிடிக்க
முடியேல்லைத்தானே” - யோகநாதன் (சகோதரன்) ஏன்? - ஒரு மாப்பிள்ளை நான் நினைச்சால் நூறு மாப்பிள்ளையையும் என்னால் பிடிக்க முடியும்”. நீ கல்யாணம் செய்து ஒரு பேரப்பிள்ளையை பெத்துத் தருவாய் என்று அம்மா கனவு கண்டு கொண்டிருக்கிறா"
ee
கலியாணத்திற்கும் பிள்ளை பெறுவதற்கும் என்ன தொடர்பு? எனக்கு
பிள்ளை வேணுமென்றால் தெருவில் போகிற எந்த வாலிபனோ
கிழவனோகூடத் தயாராக இருப்பாங்க. நான் விரும்பினவனைக் கூப்பிட்டே என்னைச் சினைப்படுத்த முடியும். அது என் பிள்ளையாகவும்
இருக்கும். என் கருவில் சுமந்து, இரத்தத்தைச் சிந்திப்பெற்று,
இரத்தத்தைப் பாலாக்கிக் கொடுத்து வளர்க்கும் பிள்ளையை
மற்றொருவன் உரிமைபேச விட மாட்டேன்"
லிவிலே வந்தவேளையில் தனது தோழி உமா, தான் விரும்பியிருந்த பாலன் ஆகியோரைச் சந்திக்கின்றாள்; பல்வேறு விடயங்கள் பற்றியும் உரையாடுகின்றாள்.
உமாவும் மத்திய தரவர்க்கத்தினள். தான் காதலித்தவனை (பாலன்) விட்டுவிட்டு இன்னொருவனை (ஜெயிலர் ; பெயர் குறிப்பிடப்படவில்லை) திருமணம் செய்தவள். ஆணாதிக்கக் கொடுமைகளை தனது குடும்ப வாழ்க்கையினூடாக நன்கு உணர்பவள். குடும்ப வாழ்வின் ஆரம்ப நாட்களே அதனை அவளுக்கு நன்கு உணர்த்தியிருந்தன, “மோகமுள் உறுத்தும் கலியாணம் கட்டிய காலத்தில்தான் பேணிவந்த கற்புநிலையை உணர்த்துவதாக கணவனிடம் அந்நியோன்னியமாக உமா கூறியிருந்தாள். உங்களுக்காகவே என் கற்பு நிலைமையை பெரிசாகிய பிறகும் பதின் நாலு ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்தேன் என்ற அடிமனதின் கூற்றை கூறியதற்கு அவள் எதிர்பார்க்காத பதில் செருப்படிபோல் வந்தது. யார் உன்னைக் காப்பாற்றச் சொன்னது?” எந்தப் பெண்ணும் மறக்க முடியாத, மன்னிக்க முடியாத கூற்று”
56.

இன்னொரு தடவை, (சில காலம் கணவனைப் பிரிந்த தாபம் காரணமாக உந்தப்பட்ட) உமா தனது தாபத்தை படுக்கச் செல்லும் வேளை கணவனிடம் மறைமுகமாகத் தெரிவித்தாள் :
“என்னடி, என்னோடு வேசையாடப் பார்க்கிறாயா?” . அதன் பின் பாலுறவில் அவனது தாபத்தைத் தணிக்கும் யந்திரமாகவே அவள் வாழ நேரிடுகிறது.
மேற்கூறிய பல்வேறு சம்பவங்கள் காரணமாக கணவனின் அகால மரணமும் அவளுக்கு பேரவலத்தை ஏற்படுத்தவில்லை; “ஜெயிலரின் பாசிச ஆட்சியிலிருந்து ஓரளவு விடுதலை பெற்ற உணர்வு’ ஏற்பட்டது. அதுமட்டுமன்றி எவருக்கும் பயப்படாத - அடக்கு முறைகளுக்குப் பணியாத - இயல்பையும் உருவாக்கியது. சித்ராவினதும் பாலனதும் ஆலோசனைகள் அவளுக்குத் துணிவளிக்கின்றன. நகைகளும் கிராமத்து வீடுவளவும் பென்ஷனும் அவளது எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையோடு அணுகச் செய்கின்றன!
மீனாட்சி, தொழிலாளர் வர்க்கம் சார்ந்தவள். கணவன் ஜெயிலுக்குப் போய்விட்ட நிலையில் (ஜெயிலரின் மனைவியான உமாவின் உதவியினால்) சித்ரா வீட்டில் வேலைக்காரியானவள், தொழிலாளர் வர்க்கத்தினர் நேர்மையும் துணிவு முடையவர்கள் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குமிவள் வாழ்க்கைநிலையும் காலமும் சூழலும் தந்த அனுபவங்களிலிருந்து பல பாடங்கள் கற்கின்றாள். குறிப்பாக, பெண்களின் பலங்களையும் ஆண்களின் பலவீனங்களையும் நடைமுறை யதார்த்தங்களையும் நன்குணர்ந்து கொள்கின்றாள். இவளுக்கும் சித்ராவிற்குமிடையிலான உரையாடல்கள் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கவை.
“உங்களுக்கும் சொல்லி வைக்க வேணுமம்மா. ஜெயிலர் அய்யாவுக்கு
என்னிலை ஒரு கண், அதனாலேதான்.”
“எப்படி நீ சொல்லுவாய்?"
"உன் புருஷன் விஷயமாக வீட்டிலே வந்து பார் என்று ஒருநாள் ஜெயிலர் அய்யா சொன்னார். நான் போனபோது வீட்டிலே ஒருவருமில்லை. அறைக்குள் கூட்டிச் சென்றார்.” “நீ சத்தம் போடேல்லையா?”
57

Page 35
"சினிமாவிலைதான் சத்தம் போடலாமம்மா. என் புருஷன் ஜெயிலிலை அவர் ஜெயிலர். உள்ளே வா என்று நயமாகக் கூறி மார்பிலே பிடித்தாரம்மா. உடனே அதிர்ச்சியிருந்தது. ஆனா நாங்கள் உணர்ச்சியில்லாத மனுஷரா? பிறகு அடிமையாகி விடுகிறோம்.”
உனக்கு வாயிலை வயிற்றிலை ஏதாவது வந்துவிட்டால்?
அந்த விஷயத்திலை அவர் கவனமாயிருக்கிறார். மானம் மட்டுமில்லையம்மா ஆராவது குழந்தையைப் பெத்து சொத்திலை பங்கு கேட்டுடுவாங்களோ என்றும் வசதியான குடும்பத்து ஆம்பிளைங்க பயப்படுவாங்க. அதுபோக பெண்டாட்டிமாரும் புருஷன் ஊரில் மேஞ்சாலும் சரி, சின்ன வீடு வைச்சிருந்தாலும் சரி வேறு குழந்தை பெத்து விடப்படாது என்றுதான் பார்ப்பாங்க. தங்க சொத்தையும் பாதுகாப்பையுந்தான் எல்லாப் பெண்களும் அதிகமாய்ப் பார்ப்பாங்க”
a உன் புருஷன் ஜெயிலர் விஷயத்தை அறிந்தால் . பெரிய ஆபத்தாகிவிடுமே”
&R
“அவர் போய் கொலை செய்து போடுவார். பிறகு காலம் பூராவும் சிறையிலேயே வாழுவார். அதல்லம்மா. அவருக்கு எப்படித் தெரியப்போகிறது? ஜெயிலர் சொல்லப் போகிறாரா அல்லது நான் சொல்லி 'கொலை செய்துவிட்டு வா’ என்று கத்தி கொடுக்கப் போகிறேனா? அதுபோல் மனைவி தவறாக நடந்தாள் என்ற செய்தி ஊரெல்லாம் தெரிந்தாலும் கடைசியாகத்தான் புருஷன் காதில் விழும். அவளைப் புருஷன் கேட்க நேர்ந்தாலும் அவள் மறுத்துவிட்டு மேலும் கூடிய ஆசை காட்டி மயக்கிவிடலாம். சில வேளை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றுமில்லாமல் சந்தேகப்பட்டு அல்லது நீ அவனோடு சிரிச்சுக் கதைச்சாய்' என்று பொய் குற்றம் காட்டி அடிக்கிற புருஷனில்லையா?”
"நீ எல்லா ஆண்களையும் பொதுமைப்படுத்திப் பேசுகிறாய்”
“எல்லாம் வெளியே தெரிந்துவிடப்படாது என்ற பயந்தானம்மா மனுஷரை கட்டி வைத்திருக்குது. சந்தர்ப்பம் கிடைக்காததால்தான் மானம் ரோசமெல்லாம். எப்படியிருந்தாலும் ஆண்களுக்குத் தான் இந்த உலகமெல்லாம். சட்டம் நீதி நியாயமெல்லாம் அவங்கதான்
58

வைக்கிறாங்க. இந்தச் சிறைக்குள்ளேயிருந்து பெண்ணும் வாழவேணுமெண்டால் துணிச்சல் வேணுமம்மா. இல்லாவிட்டால் அடிமையாயிருந்து ஆடு, மாடுபோல பிள்ளை பெத்திட்டுச் சாக வேண்டியதுதான்.
--- துணிச்சலாகத் தலையெடுக்க பெண்களிடம் என்னதான் இருக்கு”
“அங்கேதானம்மா நீங்க பிழைவிடுறீங்க. உங்களைப் போல பெண்ணிடம் எல்லாமிருக்கு. துணிச்சலான பெண்ணும் தலை நிமிர்ந்து வாழலாமம்மா. உங்களுக்குப் பின்னால் பையன்கள் சுத்தாமலாவிட்டிருப்பாங்க. அந்தப் பெரிய குடும்பத்து ஜெயிலர் நல்ல குடும்பத்து மனைவியிருக்க என்னைக் கூப்பிட்டான். அதுதானம்மா பெண்களிடமுள்ள பெருமை.
மேலே இறுதியில் மறைமுகமாகக் கூறப்படுகின்ற விடயம் இன்னோரிடத்தில் வேறிரு சம்பவங்களூடாகக் கூறப்படுவதனைப் பின்வரும் பகுதி காட்டுகின்றது:
“ஒரு விடுமுறை நாளன்று அந்தப் பெண் பதினைந்தோ பதினாறு பேரைத் தாக்குப் பிடித்தாளாம். அங்கு வந்த வாடிக்கைக்காரரை அந்த முதலாளி விட்டுவிட விரும்பேல்லையாம். அந்தப் பெண்ணும் பணத்திற்காக முடியாது என விரட்டிவிட விரும்பேல்லையாம். பிறகுதான் இவரிடம் அந்தப் பெண் சொல்லி அழுதாளாம்.
“நம்பவே கஷ்டமாயிருக்கிறது.
"அது பொய்யில்லை-உண்மையம்மா. கலவரத்தின்போதுநான் தப்பிக் கொண்டேனம்மா. அடுத்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணுடன் ஐஞ்சு ஆமிக் காரங்கள் மாறி மாறிப் படுத்தாங்களாம். அந்தப் பெண் பிறகு என்னிடம் மட்டும் சொன்னாள். நான் அவங்களைச் சமாளித்து தப்பிவிட்டேன் அல்லது சுட்டிருப்பாங்கள்’ என்று”
“ஓட்டலில் உடலை வித்த அந்தப் பெண்ணையும் ஆமிக்காரர் ஆசை தீர்த்த அடுத்த வீட்டுப் பெண்ணையும் என்னால் என்றும் மறக்க முடியவில்லையம்மா. அடிக்கடி நான் நினைக்கிறேன். ஆண்களின் விபசார

Page 36
விடுதிக்கும் பெண்கள் போவதானால் எத்தனை பேரைத் தாக்குப் பிடிப்பார்களென்று - அப்பதான் அவங்க வீரம் தெரியும்"
மீனாட்சி சொல்லி விட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் தான் பெண்களின் உயர்வுக்கும் விடையிருந்ததைச் சித்திராவால் உணர முடிந்தது. பாலுறவிலும் பெண்தான் பலசாலி என்பதை அவள் தன் சிரிப்பின் மூலம் சொன்னாள். அவள் புத்தகத்தில் கற்கவில்லை. அனுபவத்தின் மூலம் பெண்ணின் திறமையையும் உயர்வையும் அவள் அறிவாள். அந்த உணர்வு நிலையே மீனாட்சியையும் தலை நிமிர்ந்து பேசச் செய்கிறது. நிமிர்ந்து நடக்கச் செய்கிறது என்பதை சித்திராவாலும் உணர முடிந்தது.
இந்த மகத்தான உண்மையையும் ஆணாதிக்க உலகு மறைத்து வீரம் பேசுகிறது. பத்மாசுரன் கதையைப் பிரசங்கியார் பிதற்றும் போதும் தேவர்களை, சிவனை மிஞ்சிய அசுரன் அழிக்கப்பட்டதையே பெரிதுபடுத்துகிறார். பெண்ணினத்தின் ஆற்றலை, ஆணினத்தின் அற்ப வெறியை அடக்கும் திறனை அவர்கள் விரித்து விளக்குவதில்லை.
ஆணாதிக்க உலகில் யதார்த்த உண்மைகளெல்லாம் மறைக்கப்படுகின்றன.
வன்முறைஎன்பது இந்நாவலில் விரிந்த பொருளில் - அரசியல், மதம், பெண்கள் வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகின்றது; இனக் கலவரச் சூழலில் காரணமின்றிக் கைதாகிச் சிறையிலிருக்கும் சந்திரகுமாரின் நினைவூடாகவும், சிறையிலிருந்து வெளியேறிய பின் நடைமுறை வாழ்க்கையூடாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது. எவ்வாறாயினும் நாவல் கையாளும் பல்விடயங்களுள் ஒன்றாகவே பெண்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இடம்பெறுகின்றன. இவ்வழி சந்திரகுமாரின் பால்ய வாழ்க்கையில் குறுக்கிட்ட மலரக்கா, சுவர்ணா, மாலா ஆகியோரும் நீண்டகாலப் பழக்கம் கொண்டிருந்த நிர்மலாவும் கவனிப்பிற்குரியவர்கள்.
மேற்கூறியவர்களுள் மலரக்கா, சுவர்ணா, மாலா ஆகிய மூவரதும் இயல்புகள் பெருமளவு வேறுபட்டனவல்ல. இவர்கள் மூவருமே சந்திரகுமாரைவிட வயது கூடியவர்கள். இவர்களுள் முதல் இருவரும் சந்திரகுமாரிடம் தமது பாலியலுணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். மலரக்காவுடனான உறவு சந்திரகுமார் பாலுறவு பற்றி எதுவுமறியாத
60

காலத்தில் நிகழ்கிறது. சுவர்ணா, சந்திரகுமாருக்கு, பாலுறவு தொடர்பான நூல்களை அறிமுகப்படுத்துகிறாள். மாலாவுடன் உறவு ஏற்பட்டபோது, சந்திரகுமார் பாலுறவு பற்றி யாவுமறிந்தவனாக இருக்கின்றான். இவ்வாறான பெண் பாத்திரங்களூடாக, நாவலாசிரியர் பால்யகால காதலுணர்வு - காதலுறவு (பாலுறவு) இயல்பான உந்தல் (இயல்பான உணர்வு) என்பதனையும் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் அதனை வெளிப்படுத்துவதில் தவறில்லை என்பதனையும் கூற முற்படுகின்றார்; இதனையே களவுக்காதல்’ எனப் பண்டைய இலக்கியங்கள் புனிதப்படுத்தின என்றும் கருதுகின்றார் (பக்.72-73)
நிர்மலா பட்டதாரி. சந்திரகுமாரின் மருமகள். தனித்து வாழக் கூடிய துணிச்சல்காரி. எனினும், பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையா ளராகவிருந்த செல்வநாயகத்தைத் திருமணம் செய்ய விரும்புகிறாள். (சமூக அந்தஸ்து, பாதுகாப்பு வீட்டாரைத் திருப்திப்படுத்தல் என்பனவற்றை அதற்குக் காரணமாக்குகிறாள்); சந்திரகுமாரிடம் உதவிகோருகிறாள்தனது திருமணத்தைத் தானே முடிவுசெய்ய விரும்புவதாகவும்,செல்வநாயகம் சீதனம்கேட்பின்திருமணப் பேச்சை விடும்படியும் கூறுகிறாள். (பட்டப் படிப்பும், சந்திரகுமாரின் உறவும் அவளிடம் துணிச்சலை ஏற்படுத்தியிருந்தன). எதிர்பார்த்தவாறே திருமணம் குழம்புகிறது. பின்னர் அவள்தான் வேலை செய்யும் தொழில் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சிவபாலனைத் திருமணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. (சிவபாலன், தோல்வியடைந்த தனது திருமண வாழ்வைக்கூறி இவளுடன் பழகி திருமணத்திற்கு இவளது சம்மதத்தைப் பெற்றவன்.) எனினும் சிவபாலனின் வன்முறைச் செயல்கள் காரணமாக, அவனை விவாகரத்துச் செய்துவிட்டு, தனது கர்ப்பத்தையும் கலைத்துக் கொள்கிறாள்; சந்திரகுமாரின் உதவியுடன் லண்டன் சென்று உயர்படிப்புப்படிக்கின்றாள். புதுமைப்பெண்ணாக ஐந்துவருடத்தின்பின் இலங்கை வருகின்றாள். "இயற்கையில்கருவளகாலம் முடியும்வரைமாதந்தோறும் இரத்தம் சிந்துவது மட்டுமல்ல பிள்ளைப்பேற்றின் போதும் இரத்த வன்முறைக்கு உட்பட நேரிடுகிறது" (ப. 170) இதனால், தனது 'வூமை ஸ்ரெலறைஸ் செய்து விட்டுவருகின்றாள். தாய்மையை பூரணத்துவமாக்கும் அனுபவத்தை விட்டு விட்டாய் என்று சந்திரகுமார் கூறும்போது அவள் கூறும்பதில் இது:
“. அப்படி ஒரு குழந்தை பெற்று வளர்க்க நான் விரும்பியிருந்தால் அத்தகைய வன்முறையாளர்களிடமிருந்தல்ல, உங்களிடமிருந்தே நான் பெற்றிருப்பேன்.
61

Page 37
நான் உன்மேல் காட்டிய அன்பையும் பாசத்தையும் நீ அளவுக்கு மீறி உயர்த்துகிறாய்”
“அப்படியல்ல, என்னிடமிருந்த படைப்பாற்றலை நான் நன்கு அறிந்தேன். நீங்கள் கூட ஒரு குழந்தை வேண்டுமென்று கேட்டிருந்தால் நான் பெற்றுத் தந்திருப்பேன். இப்போது சமூகத்திற்கு வேண்டியதில்லை. எனக்கும் வேண்டியதில்லை. ஆகவே என்னை மலடாக்கி இயற்கை தந்த வன்முறைகளிலிருந்து விடுதலை பெற்று விட்டேன்" (ப. 171)
பெற்றோரைக்காண கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபின்னர் இவ்வாறு கூறுவதும் குறிப்பிடத்தக்கது:
“அப்பாவிற்கு குடலிலே கான்ஸர். இனிக் கஷ்டமே. இன்றும் அம்மா அடிமையாக அவருக்கே உழைத்துக் கொண்டிருக்கிறார். அப்பா அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரது மரணத்தின் பின்னரே அம்மாவிற்கு ஒரளவு விடுதலை கிடைக்கும். பெரும்பாலான எங்கள் நாட்டுப் பெண்கள் விதவையான பின்னரே ஒரளவு சுதந்திரம் பெறுகிறார்கள். (ப. 175)
யாழ்ப்பாண மக்களின் இடப்பெயர்வு (1995)ச் சூழலைக் களமாகக் கொண்ட இந்நாவலிலும் முற்கூறிய நாவல் போன்று வன்முறை பரந்த பொருளில் இடம் பெறுகின்றது; இராம்சியின் கருத்துக்கள் பெருமளவிலே கையாளப்படுகின்றன. வன்மை (Force), இணக்கம் (Consent), வன்முறை (Violence) அதிகாரத்துவம் (Authority)/மேலாதிக்கம் (Hegemony) முதலான அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்டு, சமகால அரசியல் நெருக்கடியும் பெண்களின் வாழ்க்கை நிலையும் அணுகப்படுகின்றன.
இடம்பெயர்ந்துள்ள சூழலில் சந்திக்கும் தோழிகளான செல்வி கற்பகம் ஆகியோர் முக்கியமான பெண்பாத்திரங்களாகின்றனர். இவர்களிருவரதும் குடும்ப வாழ்க்கை அனுபவப் பகிர்வுகளூடாக- உரையாடல்களூடாக - மேற்கூறிய அம்சங்களிடனடிப்படையில் பொதுவாக பெண்களது வாழ்க்கையின் சில கூறுகள் அலசப்படுகின்றன.
கற்பகம் எதிர்ப்பின்றி தனது திருமணத்திற்குடன்பட்டவளாகவும், செல்வி எதிர்ப்பைக்காட்டி உடன்பட்டவளாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளனர்.
62

இதனால், செல்வி, குடும்பவாழ்வில் கணவனிடமிருந்து சில சலுகைகளைப் பெற முடிகின்றமை குறிப்பிடத்தக்கது. தவிர தனது குடும்ப விஷயங்களை மைக்குரோ லெவலில் பார்ப்பவளாகவும் செல்வி சிருஷ்டிக்கப்பட்டுள்ளாள்.
பிற்பட்டகால (2000/01) இலங்கைப் போர்ச்சூழல் பின்புலத்தில் செல்கின்ற இந்நாவலில் இடம்பெறும் முக்கிய பெண் பாத்திரங்களான ஆனந்தி, மலர்விழி ஆகிய இருவரதும் வாழ்க்கைச் சூழல் வித்தியாசமானது. அதாவது இவர்களிருவரும் எண்பதுகளின் இனக் கலவரச்சூழலில், புலம்பெயர்ந்து, புகலிடத்தில் குடும்பவாழ்க்கையை மேற்கொண்டு, (முறையே, ஜெர்மனி, கனடா) தாயாரின் மரணம் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்கள். எனவே, இத்தகைய பின்புலத்தில், பெண்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஆண்களைத் திருமணம் செய்ய நேரிட்ட சூழல் புகலிட வாழ்க்கைச் சூழல், என்பனவும் அத்தகைய நிலைமைகளில் பெண்கள் எதிர்கொள்கின்ற சில பிரச்சினைகளும் வாழ்க்கையில் ஏற்படும் பண்பாட்டு மாற்றங்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.
எனினும், புகலிடத்தில் வாழ்கின்ற குடும்ப ஆண்களது வாழ்க்கையில் பாதிப்பு குறைவாகவுள்ளது. ஏனெனில், “யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட மண்டை அதற்குள் இருப்பதை அத்தனை விரைவில் மறந்து விட முடியாதது” (ப. 50) என்று குறிப்பிடப்படுவது எமது சிந்தனைக்குரியதாகிறது.
தமிழ்நாட்டுச் சூழலைக் களமாகக் கொண்ட இந்நாவலில் பெண்விடுதலைக்குத் தடைக்கல்லாகவிருக்கும் ஆபாசம், பாலியல் தொல்லைகள், பாலியல் வன்முறை ஆகிய மூன்றுவிடயங்கள் அழுத்தம் பெற்றுள்ளன. முதலாவது விடயம், பெருமளவில் பாத்திரங்களின் உரையாடல்களூடாக வெளிப்பட, ஏனையவை உரையாடல்களாக மட்டுமன்றி, (பாத்திரங்களின்) நடைமுறை வாழ்வுடன் தொடர்புபட்ட சம்பவங்களூடாகவும் இடம்பெற்றுள்ளன. இந்நாவலில் வரும் இந்திரா பவானி ஆகிய இருபாத்திரங்கள் கவனத்திற்குரியவை. ^.
இந்நாவலில் இடம்பெறுகின்ற இந்திரா மட்டுமே - ஆய்வுக்கெடுக்கப்பட்ட நாவல்களுள் உயர்வர்க்கம் சார்ந்தவளாகின்றாள். தொழிற்சாலை மனேஜரான சிவராமனை மணம் முடித்த இந்திராவிற்கு தனது கல்லூரித் தோழியான பவானியின் உதவியினால் சந்திரன் என்ற
63.

Page 38
இளைஞனுடன் நட்பு ஏற்படுகிறது. பெண்விடுதலை நாட்டமுடைய இந்திரா அது தொடர்பான பல விடயங்களை சந்திப்புகளின்போது சந்திரனுக்கு எடுத்துரைக்கின்றாள். நட்பு நெருக்கமாக மாறிய நிலையில் தோழியான பவானியின் சந்தேகத்திற்குள்ளாகின்றாள். இவ்வழி நிரந்தர அவலமாகிப்போன தனது குடும்பவாழ்வின் மூடிய பக்கங்களைத் திறந்து வைக்கின்றாள். இவற்றுனூடே உயர்வர்க்க ஆண்களின் ஆணாதிக்க மனோபாவங்கள் - செயற்பாடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
பொம்மை மனைவியாக வாழுகின்ற அவளது குடும்பவாழ்வின் சிதைவின் ஆரம்பம் சிவராமனது நடத்தையோடு தொடர்புபட்டது. தொழிற்சாலை நிர்வாகச் செயலாளராகவுள்ள இந்திராவிற்கு உதவி மனேஜரைத்தட்டிக் கேட்கமுடியாத நிலை காணப்படுகிறது. சிவராமன் அவனுக்குக் கொடுத்த இடமே அதற்குக் காரணமாகிறது. அதற்கு சிவராமனது பலவீனம் வழி சமைக்கிறது.
அடிக்கடி பிந்திவருகின்ற இரு பெண்களை இந்திரா கண்டித்து சிவராமனிடம் முறையீடு செய்ய முற்பட்டபோது அவர்களுள் ஒருத்தி சொல்கிறாள்.
“என்னசார் இராத்திரி இரண்டுபேருக்கும் ஒட்டல் ரூமில் ஏதோ எல்லாம் சொல்லி விட்டு இப்போது பெண்டாட்டியைக் கண்டதும் பயந்துபோய் ஏதோகதை விடுறிங்க என்றாள். என் மற்றக் கன்னத்திலும் அடித்தது போலிருந்தது அவர் ஒரு கணத்தில் புழுவாகிவிட்டார். என்ன கொடுமை இது. அதன் பின்னர் அடுத்த நாள் நீ பாக்டரிக்குப் போகேல்லையா? அன்று விட்டேன். அவ்வளவுதான் அன்றே என் தாலியையும் மெட்டியையும் கழட்டி விட்டேன்’(பக் 164-165)
“நானே ஆச்சரியப்படுகிறேன். எப்படி உங்களால் ஒரே வீட்டில் வாழ
முடிகிறதென்றே தெரியவில்லை?
அவருக்கு வேண்டியது சமூக அந்தஸ்து. என் முன்னே புழுவாகச்
சிறுத்த போதும் வெளியே தனக்குப் பிடித்த மனைவி. அழகு, ஆடம்பரமான பாஷனான மனைவி இருப்பதாகக் காட்டிக் கொள்ள
64.

வேண்டும். அதற்காகவே இப்போதும் அழைக்கிறார். அதற்காகவே அவர் என்னைத் திருமணம் செய்தார் என்பதை நான் ஆரம்பகாலத்திலேயே தெரிஞ்சுக்கிட்டேன்.’ (பக் 166-167)
இந்திரா முன்னர் கூறியது போல் பொம்மை மனைவியாக வாழ்பவள்; சந்திரனின் நெருக்கமான உறவு அவதூறுகளையும் ஏற்படுத்துகிறது. என்ன முடிவு எடுப்பது. என்ன நிலை என்ன முடிவாவது எடுக்க வேண்டிய நிலை - உருவாகிறது. இவ்விடத்தில் பொருத்தம் கருதிப்போலும் இப்ஸனின் பொம்மை வீடு நாடகம் பற்றியதொரு உரையாடல் வருகிறது. அது எமது கவனத்திற்குரியது.
“வாழ்வில் ஒரு பிடிப்பில்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் இப்ஸனின்
நோராவைப்பற்றி ஒரு விமர்சனம் படித்தேன். யாதார்த்தமாக இருந்தது.
அதை நினைத்த போதே சிரிப்பு வந்தது.”
“என்ன புது விமர்சனம்? சொன்னால் நானும் சிரிக்கலாம்.”
“வாழ்க்கையில் பிடிப்போ குறிக்கோளோ பணபலமோ இல்லாது வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணான நோராவுக்கு இரண்டு வழி உள்ளது. ஒன்று விபசார விடுதி. இரண்டாவது தோல்வியடைந்து வீட்டுக்குத் திரும்புவது”
நல்ல விமர்சனமே. இப்ஸன் புதுமைப்பெண்களைப் படைத்தார் என்று பாராட்டுபவர்களுக்கு இது நல்ல அடிதான். (பக் - 190)
இந்திரா எடுத்த முடிவு இதுதான். “நான் இன்றே பாக்டரிக்கு போகிறேன்.”இந்திராவின் குரலில் புத்துணர்ச்சி ஒலித்தது. முகத்தில் பூரண மலர்ச்சி பரிமளித்தது. (ப. 191)
மத்தியதரவர்க்கத்தினளான பவானி இந்திராவுடன் படித்தகாலத்திலே ஆரம்பத்தில் பெண் விடுதலை நோக்கிய செயற்பாடுகளில் தயக்கம் காட்டுகிறாள். பின்னர் ஒரளவு துணிவுபெற்று இயங்குகிறாள். எனினும், குடும்ப வாழ்வில் நுழைந்த பின்னர் அந்நிலையைவிட பின்னுக்கே செல்கின்றாள். பின்வரும் சித்தரிப்பே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகிறது. “குழந்தையை பார்த்துக் கொள்ளும்படி செல்வியிடம் கூறி விட்டுச் சமையல் வேலையில்
65

Page 39
ஈடுபட்டாள். தாயாகிய தன் உணவிலும் பார்க்க கணவருக்குப் பிடித்த காய், கூட்டுத் தயாரிப்பதிலேயே கவனமெடுத்தாள். சாதம் கூட அவருக்கு விரும்பிய பதத்திற்கே வடிக்க வேண்டும். சாப்பிடும் வேளை சூடாயிருக்க வேண்டும். நேரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே சமையலைக் கவனிக்க வேண்டும். கொஞ்சம் ருசி குறைந்தாலும் சாப்பாட்டு மேஜையே அவளைக் கொத்திக் கொதறும் ரணகளமாய் மாறிவிடும். மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்கிறதா என அடிக்கடி செவிகளைக் கூர்மைப்படுத்திக் கொள்வாள். பிரேக் போடும் சத்தத்துடன் மேசையில் யாவும் தயாராக வைத்தாள். சாப்பாட்டுடன் அரைமணி நேர அட்டகாசம். அவள் நெற்றி வியர்வை சிந்தச் செய்த முயற்சியை ஒரு கணத்தில் துணுக்குத் துணுக்காக உடைத்து நொறுக்கி விடுவான். “இந்தச் சாப்பாட்டிற்காக பெட்ரோலையும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டியதில்லை. காண்டினில் ஏதாவது கடித்து விட்டு வேலை செய்திருக்கலாம்.”அடிக்கடி கூறும் குரல் அன்றும் கேட்டது. தற்போது பவானி பொருட்படுத்துவதே இல்லை. எஜமானின் வழக்கமான் குரல். அடிமைகள் வாய்காட்டி வெல்ல முடியாது. வீண் வம்பு, வன்முறை அவர்கள் பக்கம்.” (ப. 53)
பெண் விடுதலை நோக்கிய பயணம் (i) பொருளாதாரச் சுதந்திரம் (i) அரசியல் சுதந்திரம் (ii) சட்டம் சார்ந்த சமத்துவம் ஆகிய மூன்று துறைகளில் நடைபெறுகிறது என்று கருதும் ஆசிரியர் “இவற்றிற்கும் மேலாக ஆணாதிக்கத்திலிருந்து விடுபடும் கலாச்சாரப் புரட்சி ஒன்றும் நடைபெற வேண்டும்” என்பதனை மேற்கூறிய நாவலூடாக வெளிப்படுத்துகின்றார்.
நாவலாசிரியரின் வார்த்தையில் இன்னும் சற்று விரிவாக இது பற்றிச் சிந்திப்பது பொருத்தமானது:
“இது ஒரு பெண்” என பிறந்ததும் பாலுறுப்பை வைத்து இரண்டாவது சாதியாக தனிப்பெயர், தனி உடை, தனிமுடி, நகைகளுடன் தமக்காக இல்லாமல் எவருக்காகவோ அழகு சாதனங்களுடன் தன் உடலைத் தயாரிக்கும் நிலையிலிருந்து பெண்ணினம் விடுபட முடியாத நிலை இன்றும் நீடிக்கிறது.
உடற் கட்டமைப்பும் அழகும் இயற்கை தந்த சொத்து, விழிப்புணர்வு மானிடத்தின் தனிச் சிறப்பு:மிருக இனத்திற்கு இல்லாதது. இவற்றிற்கு மேலாக அழகு என்ற ஒரு பொய்மையை ஆணாதிக்கம் பெண்ணினத்தின் மேல் சிருட்டித்து. தனி இனமாகக் காட்டி வருகிறது.”

ஆக, மேற்கூறிய கூற்றுக்கமைவாக, இந்நாவலில் வருகின்ற சிவகாமி விளங்குகிறாள். தோழி கல்யாணியின் நட்பினால், பெண்ணின நிலை பற்றிய ஆணாதிக்க அடக்குமுறைபற்றிய-தெளிவு ஏற்பட்டிருந்தாலும் ரவியின் அழகு வலையில் விழுந்து அவனைக் காதலிக்கின்றாள். அவனது வற்புறுத்தல்களால் “அழகுசாதனங்களுடன் தன் உடலைத் தயாரிக்கும் நிலை’க்குட்படுகின்றாள். ரவியுடன் உடலுறவு கொள்ளும் நிலையும் உருவாகிறது. எனினும் நாளேட்டத்தில் ரவியின் சுயரூபம் தெளிவாகிறது.காரசாரமான உரையாடல்கள், சம்பவங்கள் அடிக்கடி உருவாகின்றன. அதன் உச்சம் இவ்வாறு முடிவுறுகிறது.
“என்ன சிவா இந்த மாறுதல் எல்லாம். சுரிதாரைக் கேட்கிறீர்களா? இது எனக்குப் பிடித்திருக்கிறது. வசதியிருக்கிறது.” நளினப் பதிலை ரவி புரியாமலில்லை. இத்தனை பழகிய பிறகும் விட்டுவிடு ஒடுகிறாய்? அதிலென்ன, பழகியதாலேயே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொண்டோம். சாதாரண பழக்கமா? கணவன் மனைவிபோல் பழகிவிட்டு.”
“நல்லவேளை. தாலி கட்டி விட்டிருந்தால்தான் கோர்ட்டுக்குப் போய்
டைவேர்ஸ் எடுக்க வேண்டி வந்திருக்கும்”
“நீ ஒரு பெண் என்பதை மறந்து பேசுகிறாய்” “பெண் என்றால் வெறும் அடிமை என்று நினைக்காதீங்க. நீங்க ஒரு ஆண் என்பதனையும் தெரிந்தே பேசுகிறேன்.”
“நல்லவேளை, உன் வாய்க்கொழுப்பையும் தெரிந்துகொண்டேன். நானும்
தப்பினேன். நான் எதையும் இழந்து விடவில்லை.”
“நானும் உங்களைப்போலவேஎதையும் இழந்துவிட்டதாக எண்ணவில்லை
நீங்க சீர் சீதனத்தோடு அழகான பொம்மை ஒன்றைக் கட்டலாம்”
g?”
“அது எனக்குத் தெரியும். நீங்க கவலைப்பட வேண்டியதில்லை.”
“அப்படியா?”
தன் தோல்வியை மறைக்க நளினமாக சிரித்தாள். மேலும் எதுவும் பேசாமல் சிவகாமி தெருவில் இறங்கி நடந்தாள்.”(பக்145-146)
தோழியான கல்யாணியே சிவகாமியின் மேற்கூறிய துணிகரமான பதில்துணிகரமான முடிவு என்பவற்றிற்கு மறைமுகக் காரணியானவள். சிவகாமி “விடுதலை’பெற்றபின்னர் கல்யாணியுடன் சேர்ந்து பெண் விடுதலை இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுகிறாள்.
67

Page 40
எனினும் தனது பாங்கிக் கிளையில் உதவி மனேஜராக இருந்த கண்ணப்பனிடம் மதிப்புக் கொண்டு (அவரது நாட்டம் காரணமாகவும், தனது சமூக அந்தஸ்து பாதுகாப்பு காரணமாகவும்) வேதம் ஓதி தாலி கட்ட திருமணம் செய்து கொள்கிறாள். (7கண்ணப்பன் முதல் மனைவியைப் பறி கொடுத்தவர்; வயது வித்தியாசமுடையவர்) தோழிகலியாணியும் சிவகாமியின் திருமண முயற்சிக்கு ஆதரவாக விளங்கினாள்.
திருமணத்திற்கு முன் தோழியர் இருவருக்குமிடையில் பரஸ்பரம் நடைபெற்ற முக்கியமான உரையாடலின் ஒரு பகுதி இங்கு கவனத்திற்குரியது. அது இதுதான்.
“முன்னர் ஒரு சிறையில் அகப்பட இருந்தபோது விட்டு ஓடி
வந்தாயே. அதை மறந்து விடாதே. ”
“என்னையும் அவருக்கு நான் இரண்டாந்தாரம் என்று
சொல்லுகிறாய் போலிருக்கிறது”
“அது உன் மனதிற்குமட்டும் தெரிந்தது. அதை நீ ஏன் வெளியே
சொல்ல வேண்டும்?”
“ரவி ஏதாவது சொல்லி விட்டால்.”
“அப்படி எதுவும் நடைபெறாது. பாலின்பம் பற்றி எவரும் இங்கு வெளியே பேசுவதில்லை’அது நமது பண்பாட்டில் ஓர் அம்சம். அவன் சொல்ல முயன்றால் அது அவனுக்கே இழுக்காகும். எவரும் நம்ப மாட்டார்கள். ஒரு தலைக்காதலில் தோன்ற வெறுப்பு என்று விட்டு விடுவர் கண்ணப்பனின் அந்தஸ்துப் பற்றியும் அவன் அறிவான்” (பக் 173 - 174)
“பெண்ணினத்தை உயிரியல், உளவியல், சமூகவியல் முறையாக நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்”(ப.5)
என்று கருதும் நாவலாசிரியர், உளவியல் ரீதியாக அணுக முற்படுவதன் வெளிப்பாடே மேற்குறிப்பிட்ட நாவலாகிறது. இந்நோக்கினைத் திறம்பட செயற்படுத்த முனைந்ததனாற் போலும், நாவலாசிரியர் இந்நாவலின் வெளிப்பாட்டு முறையினை வித்தியாசமானதாக உருவாக்கியுள்ளார். அதாவது, பாத்திரங்களின் கூற்றாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளமை பொருத்தமானது. பாராட்டிற்குரியதுங் கூட.
68

உமா, திலகா ஆகியோர் இதிலிடம் பெறும் முக்கியமான பெண்பாத்திரங்களாகின்றனர். ፳
உமா, சிறு பராயத்திலிருந்து ஆண்கள் மீது அச்சம் கொண்டவள்; திருமணப் பயம் கொண்டவள். குடும்ப வாழ்வில் ஈடுபட்ட பின்பும், கணவனது செயற்பாடுகளினால் வதைபடுபவள். இறுதியில், தனது ஒரு குழந்தையோடு, கணவனை விட்டு விலகி கிராமத்துப் பெற்றோரிடம் செல்கிறாள்.
திலகா திருமணத்தின் பின் கணவனைப் பிரிந்து வாழ்ந்தவள்; குழந்தையையும் கணவனிடமே விட்டுவிட்டு தாயிடம் சென்று சுதந்திரமாக
மேற்கூறிய இருவரது செயற்பாடுகளும் உளவியல் ரீதியில் அணுகப்படுகின்றமை இந்நாவலின் சிறப்பம்சமாகிறது.
“சினிமா என்ற கவர்ச்சிக்கலையின் மறுபக்கத்தில் திரை மறைவில் நடைபெறும் 'நாடகங்களை ஒரளவு சுட்டிக் காட்டுவதும்” “சினிமாத் தொழிலின் பல்வேறு கூறுகளையும் தொட்டுக் காட்டுவதும் இந் நாவலின் நோக்கங்களாகின்றன. இவ்விதத்தில், சுலோஜனா என்ற பாத்திரம் முதன்மை பெறுகிறது.”
அப்பாவியான சுலோஜனா, இன்னொரு அப்பாவித்தோழியான மல்லிகாவின் முயற்சியினால் சினிமா உலகிற்குள் நுழைந்தவள். நுழைந்த பின்பே 'கனவுத் தொழிற்சாலையான அந்த சொர்க்க புரி” என்று கருதுகின்ற அந்த உலகின் நரகநிலை அவளுக்கு மெல்ல மெல்ல புலப்படுகின்றது. அதற்குள் காலங்கடந்து விடுகின்றது! அதுபற்றி நாவலின் முடிவில் அப்பாவி மல்லிகாவிற்கு அவள் தெரியப்படுத்தும் பாங்கு நாவலின் முத்தாய்ப்பாக அமைந்து விடுகின்றது.
“அன்று முதன் முதலாய் சினிமா ஒப்பந்தத்தை முடிக்க ஒட்டலுக்குச்
சென்றது நினைவிருக்கா’ “ஆமாடி, நீ அகிரிமெண்டில் கையெழுத்து வாங்கி அட்வான்ஸ்
தந்தார்களே” “அப்போது என்ன உடையோடு போனேன் நினைவிருக்கா?” “என்னுடைய சுரிதாரெடி இப்போது உன் பீரோவைப் பார்த்தேனே.
69.

Page 41
எத்தனை வைத்திருக்கிறாய். எல்லாம் விலையானவை. நானே கனவிலும் நினைக்க முடியாதபடி” “இப்போது பார்த்துப்பெருமைப்படுகிறாய். அதெப்படி அந்தச் சுரிதாரைச்
சலவைக்குப் பேர்டும்போது என்னடி பார்த்தாய்?” “மென்சிஸ் இரத்தக்கறை.” “இல்லையெடி. அது என் கற்பைச் சினிமாவுக்காகத் தந்த
இரத்தக்கறையடி’ (பக். 212-213)
மேற்குறித்த நாவலில் நிலைப்பிரபுத்துவக் கூட்டுக் குடும்ப அமைப்பு முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி முறையில் எத்தகைய மாற்றத்தை அடைகின்றது. என்பது கோடிட்டுக் காட்டப்படுகின்றது. இவ்வழி பல பெண் பாத்திரங்கள் - சகுந்தலா, மைதிலி, சுமதி, குமுதினி, சுகன்யா - இந்நாவலில் இடம்பெறுவது தவிர்க்க இயலாததே.
சகுந்தலா, மூன்றாவது மாட்டுப்பெண்; அமெரிக்காவில் கம்பியூட்டர் எஞ்சினியராகவுள்ள மகாதேவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்; திருமணத்தின்பின் 3 வாரம் தங்கி வாழ்ந்துவிட்டு அமெரிக்கா சென்ற மகாதேவன் தனக்கு அனுப்பவுள்ள விசாவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவள்; பெண்விடுதலை பிரக்ஞை கொண்டமை தோழி மைதிலி தொடர்புகாரணமாக, தனது புகுந்த வீட்டார், தனது குடும்பவாழ்வு என்பனபற்றி தனக்குள் ஆழமாகச் சிந்திப்பவள்; இதனால் குறிப்பாக, கணவனது ஆணாதிக்கச் செயற்பாடுகள் பற்றியெல்லாம் தெளிவு பெற்றவளாகின்றாள்.
சுமதி, கிராமத்துப் பெண்ணாயினும் பெண் விடுதலைபற்றிய பிரக்ஞை மிக்கவள். இன்ரவியூவிற்காக நகரத்திற்கு வந்து உறவினரான சகுந்தலா வீட்டில் தங்குபவள் தங்கிய வேளைகளில் அக் கூட்டுக்குடும்பத்தின் தலைவிகளுள் மேலாதிக்கம் கொண்டவரான பாட்டிக்கு எதிராக முதன் முதலாக எதிர்ப்புக் குரல் எழுப்புபவள்.
குமுதினி, சுகன்யா இருவரும் தோழிகள்; தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று வாழ்பவர்கள். கம்பியூட்டர் படித்தமையால் உயர் வருமானம் தரும் தொழில் செய்பவர்கள்; லெஸ்பியன்கள் போன்று வாழ்பவர்கள் மகாதேவனின் நட்பினைப் பெற்றவர்கள். பெண்கள் நிலை பற்றி - பெண் சுதந்திரம் உரிமைகள் பற்றி மகாதேவனுடன் உரையாடுபவர்கள்;
70.

அவ்வழி அவனுக்கு அறிவூட்டமுனைபவர்கள். இந்நாவலில்உரையாடல்கள் மட்டும் அதிர்ச்சியூட்டுவனவாக அமையவில்லை. கிராமத்திலிருந்து குமுதினிக்கு தாயார் எழுதும் கடிதங்களும் அவ்வாறுள்ளன. ஒரு தடவை தாய் இவ்வாறு எழுதினாள்.
“அந்த நாட்டில் ஆண்களும் பெண்களும் சமமாகப் பழகுவார்களாம். உன்னால் ஒரு ஆண்மகனைப் பிடிக்க முடியவில்லையா, நீ கொஞ்சம் பழகி ருசிகாட்டு. நாய் போல பின்னே வருவார்கள். அவர்களில் எவனையாவது கலியாணம் கட்டிக் கொள்”(ப106)
சரியான பதில் கிடைக்காத நிலையில் தாய் ஒரு தடவை இவ்வாறு எழுதியிருந்தாள்.
“கறுத்தவரையோ வெள்ளையரோ நீ கட்டுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. நீ மலடி அல்ல என்பதைக் காட்ட ஒரு குழந்தையைப் பெற்றுவிடு. அங்கே குழந்தை வளர்ப்பது மிகக் கஷ்டமாம். நான் இங்கே அதிக வேலையில்லாமல் தானே இருக்கிறேன். குழந்தையை அனுப்பிவிடு நான் குழந்தையை வளர்த்துத் தருகிறேன்.” (ப.107) முற்குறித்தவாறான உரையாடல்கள் சம்பவங்களுள் அமெரிக்காவில் மகாதேவன் - குமுதினி - சுகன்யா ஆகியோருக்கிடையில் நடைபெறுபவை கவனத்திற்குரியவை. எடுத்துக் காட்டாக, ஒன்று பின்வருமாறு:
“மிஸ்டர் மகாதேவன், என்னைப்பார்க்கும்போது எத்தனை செக்ஸ்பீலிங் கிளுகிளுப்பு உங்களுக்கு ஏற்படுமோ அதே போலவே எனக்கு மட்டுமல்ல, எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் இது உண்மை. இதற்குப் புனிதமான காதல், கீதல் என்ற வார்த்தையெல்லாம் வேணாம். நீங்களும் என்னை விரும்பினால் வீ வில் ஹாவ் சம் செக்ஸ் இதுவும் ஒருவகை இன்பம் தானே.
ஒரு கண்டிசன் இன்ரகோஸ் வேண்டுமானால் உறை போட்டுக் கொள்ள வேண்டும். இதோ நீங்கள் எதிர்பார்த்திருந்தாலும் மறந்தாலும் என நானே ஒரு பாக்கெட் வாங்கி வந்தேன். வைத்துக் கொள்ளுங்கள். என்னையும் உங்களைப் போன்ற மனித உருவமாக பாருங்கள். செக்ஸ் இன்பமான, மென்மையான உணர்வு வன்முறை வேண்டாம்”(ப. 136)
71

Page 42
இன்னுமொன்று:
சுகன்யா, குமுதினி இருவரோடும் நெருங்கிப் பழகிய மகாதேவன் சகுந்தலா அமெரிக்கா வருகின்ற நிலையில், அவர்கள் இருவரும் தன்னை கைவிடுவதாக உணர்கின்றான். இவ்வேளை மூவருக்குமிடையில் நிகழும் உரையாடலின் ஒரு பகுதியையும் கவனிப்பது பொருத்தமானது.
“அன்று என் தோழியின் கலியாணத்திற்கு நியூயோர்க் நகருக்கு அழைத்துப் போனிர்களே, அவர்கள் இருவரும் காதலிப்பதாகக் கூறி பெற்றோரை விட்டு விட்டே திருமணம் செய்து கொண்டார்கள். உங்களுக்கும் தெரியும் தானே. நீங்களும் என்னைக் காதலிப்பதானால் குடும்பத்தாரை விட்டுவிட்டு இங்கேயே இருப்பதானால் நீங்கள் வேண்டினால் உங்களுடன் வந்து இருக்கத்தயாராயிருக்கிறேன். இனிமேல் சடங்கு முறை வைத்துப் பாலுறவுக்கு அனுமதி பெறும் போலித் தேவையும் இல்லையே அக்காவின் உறவும் அப்படியே இருக்கலாம்” -சுகன்யா,
குமுதினி உலக முடிவுதான் என்ன?” என்னுடையதும் அதே முடிவுதான். சுதந்திரமான பாலுறவுதான்வாழ்க்கைக்கு முக்கியமானதென்று எண்ணினால் தற்போது நடப்பது போலத் தொடரலாம். இருவருடனும் பாலுறவு கொள்ளத்தக்க வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தேன். இத்தகைய வாய்ப்பு அம்மா பேசும் திருமணத்தில் ஒருபோதும் கிடையாது. . அமெரிக்காவில் குடும்ப உறவுப் பெயரின்றி அவரவர் தமது பெயருடன் கூட்டாகவும் தனித்தனியாகவும் வாழ்பவர் ஏராளம். சுகன்யாவைப் பிடிக்காவிட்டால் அதே போலவே வாழ்ந்து பார்க்கத் தயாராயிருக்கிறேன். நான் விரும்பாத வேளை வெளியேறி விடுவேன். அந்தச் சுதந்திரம் வேண்டும்.”
“நான் பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறேன் போல் தெரிகிறது. என்ன
தீர்மானம் எடுப்பது என்று தெரியவில்லை.”
“இல்லை தேவன் உங்களுக்கு நான் வழிசொல்லித் தருகிறேனே.
உங்களால் அம்மாவை, குடும்பத்தை உடைத்துக் கொண்டு வர முடியாது.
72

as a நீங்கள் அம்மா சொல்லும் ஒரு குடும்ப அடிமையைக் கட்டிக் கொள்ளுங்கள். எங்களை மறந்து விடுங்கள். இங்கே எங்கள் உறவையும் தொடர்ந்து வீண் தொல்லைக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள். நடுத்தரவர்க்கத்துப்பெண்கள் உங்களையும் தங்கள் சொத்தாக எண்ணுவார்கள். மற்றவர் மனதால் பங்குபோடுவதையும் விரும்பாத சந்தேகப் பிராணியாயும் மாறலாம்.”
“உங்கள் இருவரதும் எதிர்காலத்தை நினைத்துத்தான்
கவலைப்படுகிறேன்.” a
“அப்படியல்ல. நாங்கள் உங்களுக்காகத்தான் கவலைப்படுகிறோம். நாங்கள் இருவரும் குடும்பம் என்ற சிறையில் அடைபடாமல் தனிச் சுதந்திரத்துடன் ஜனநாயக உரிமைகளுடன் இன்பமாக வாழ்கிறோம். நீங்கள் கவலைப்பட எதுவுமில்லை.” (பக் 181-183)
மேற்கூறிய தலைப்பை உன்னிப்பாக அவதானித்து சற்றுச் சிந்திப்பின் இந்நாவலின் பின்புலம் இன்றைய சந்தைப் பொருளாதாரம் என்பது புலப்படும். (பொருளாதாரம் சார்ந்த முதல் தமிழ் நாவல் இது என்பதிலும் தவறில்லை.)
இத்தகைய பின்புலத்தில் இன்றைய உலகச் சந்தையின் பிரதிநிதியாக இந்நாவலில் சிருஷ்டிக்கப்படுபவள் சுமதி. இவள் கம்பெனி ஒன்றில் பண்ட விற்பனையை ஊக்குவிக்கும் பொறுப்பாளராகக் கடமை புரிகின்றாள். இந்நாவலாசிரியரது நாவல்களிலும் சரி தமிழ் நாவல்களிலும் சரி வித்தியாசமான பாத்திர வார்ப்பாக சுமதி காணப்படுகிறாள். டிப்பாட்மென்ட் ஸ்டோர் நடத்தும் முரளிக்கும், வணிக நிர்வாகப் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற அவனது தம்பி சிவகுமாருக்கும் சந்தைப்படுத்தும் நவீன உத்திகளையும் நடைமுறைத் தந்திரங்களையும் கற்பிக்கின்ற சுமதி, தமிழ்ச் சூழல் பின்புலத்தில் ஒரு இலட்சியப் பாத்திர வார்ப்பு என்றும் முன் உதாரணமற்ற பாத்திரமென்றும் கூற வேண்டியுள்ளது.
உலகச் சந்தைப் பிரதிநிதியாக விளங்கும் சுமதியை எதிர்பாராதவிதமாகக் கலியாணச் சந்தைப் பிரதிநிதிகளும் (கூட வேலை செய்கின்ற - அவளை விரும்புகின்ற - ரவீந்திரனின் குடும்பம்) சந்திக்க நேரிடுகிறது. அவர்களிடமிருந்து நழுவிய சுமதியை பின்னர் ரவீந்திரனும் விடவில்லை. தனது விருப்பினை வெளிப்படுத்துகிறான். தனது
73.

Page 43
உள்ளக்கிடக்கையை - மறுப்பை - தெளிவாக அவனுக்குத் தெரிவிக்கிறாள் சுமதி. அவள் அவனிடம் தொடுத்த கணைகளுள் ஒன்று பின்வருமாறு:
&
உங்கள் அளவிற்கு எனது உழைப்பு இருப்பின் என் உழைப்பே போதுமே, நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும். வீட்டைப் பார்க்கலாம் என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? என்றும் நான் சொல்லலாம் தானே” (L.117)
இதுவரை கூறியவற்றை தொகுத்து நினைவு கூர்ந்தால் பின்வரும்
அம்சங்களை அவதானிக்கலாம்.
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
மேற்கூறிய நாவல்களில், போர்ச்சூழல், புகலிடச் சூழல், மத்திய கிழக்கு வேலைவாய்ப்புச் சூழல், (பெண்களது) கல்விவழிப் புலமைச்சூழல் (பெண்களது) உயர்தொழில்வாய்ப்புச் சூழல், சர்வதேசக் கம்பெனிகள் பெருகிய சூழல், முதலானவற்றின் பின்புலத்தில் குறிப்பாக பெண்களது வாழ்க்கை நிலை, பாரம்பரிய பண்பாடுசார் விழுமியங்கள், இயல்புகள், நடத்தைகள் மாற்றமுற்றமை பற்றி ஆழமாக அலசப்படுகின்றன.
அவற்றிற்கேற்ப பல்வேறு களங்கள், பலவகையான பாத்திரங்கள் இடம்பெறுகின்றன.
மாக்சிய கோட்பாட்டு அடிப்படையிலும் பெண்நிலை வாதச் சிந்தனை நோக்கிலும் அவை சித்திரிக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்நாவல்களில் பாத்திர சிருஷ்டிக்கே முதன்மை இடமளிக்கப்படுகின்றது.
இத்தகைய பெண்பாத்திர வார்ப்புகள் அவர்களது புலமை காரணமாக அல்லது அனுபவம் காரணமாக இரத்தமும் சதையும் கொண்டவர்களாக விளங்குகிறார்கள்.
மேற்கூறியவாறு பெண்பாத்திரங்கள் அமைந்துள்ளமையால் அவர்களது உரையாடல்களில் உயிர்த் துடிப்பும், யதார்த்தநிலையும் வெளிப்படுகின்றன. (விரிவஞ்சி உரையாடற் பகுதிகள்
வெகுகுறைவாகவே தரப்பட்டுள்ளன.)
74.

(vi) முக்கியமான பெண் பாத்திரங்களே கவனத்திற்குட்பட்டுள்ளனர். துணைப் பெண்பாத்திரங்கள் (விரிவஞ்சி) கவனத்திற்குட்படுத்தப்
படவில்லை.
(Vi)இத்தகைய முக்கியமான பெண் பாத்திரங்கள் வர்க்க நிலையில்
(ix)
(Χ)
(xi)
சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய முக்கியமான பெண்பாத்திரங்களை நாம்
அவதானித்தவற்றைஇவ்வாறு வகைப்படுத்தலாம்.
(அ) பெண்விடுதலைச் சிந்தனைபற்றிய பிரக்ஞையுடன் செயற்படுபவை;
தீர்க்கமான முடிவெடுப்பவை.
(ஆ)அத்தகைய பிரக்ஞையுடையவரது நட்பினால் செயற்படுபவை
தீர்க்கமான முடிவெடுப்பவை.
(இ) விலகிச் செல்லாமல் அடங்கி வாழநேரிட்டாலும் இயன்றளவு
எதிர்ப்புக்காட்டுபவை.
பெண்விடுதலைச் சிந்தனையில் நாட்டமுடைய மாக்சிய நோக்குடைய ஆண்பாத்திரங்கள் இந்நாவல்களில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் மேற்கூறிய 'அ' பிரிவினரோடு நட்புக் கொண்டிருப்பவர்கள் (எனினும், அவர்கள் பற்றிய குறிப்புகள் ஆய்வு நோக்கிற்கு அப்பாற்பட்டமையால் இடம்பெறவில்லை)
பெண்களது பிரச்சினைகட்கு தனிப்பட்ட தீர்வாக, விவாகரத்து, பிரிந்து செல்லல், தனித்துவாழல், தொழில்வாய்ப்பு, கல்வி வாய்ப்பு, கிராமத்திற்கு சென்று தனித்தோ, பெற்றோருடனோ வாழ்தல் என்பன இடம்பெறுகின்றன. கூட்டு நிலையில், அணிதிரண்டு போராடல் தொழிற்சங்கம் அமைத்தல் என்பன பற்றிப் பேசப்படுகின்றன
தமிழில் பெண்நிலைவாதச் சிந்தனை பரவி இன்று ஏறத்தாழ
இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன. எனினும், பிரக்ஞைபூர்வமாக, தமிழில் ஆண் நாவலாசிரியர்கள் எவரும் (பிரபஞ்சன் நீங்கலாக) இப்பொருள் பற்றிப் பேசவில்லை என்றே கூற வேண்டும்.
75.

Page 44
இவ்விதத்தில் செ.கணேசலிங்கனின் இந்நாவல்கள் மிகுந்த கவனிப்பிற்குரியனவாகின்றன. அதுமட்டுமன்றி மாக்சிய கோட்பாடு நிலை நின்றும் பெண்நிலைவாதச் சிந்தனை வழிநின்றும் இந்நூல்கள் எழுதப்பட்டுள்ளமையால் இவற்றின் முக்கியத்துவம் இரு மடங்காகிவிடுகின்றன.
ஆயினும், இந்நாவல்கள் சிலவற்றிலே உரையாடல்களே முதன்மை பெற்றுள்ளமையால் பரவலான வாசிப்பிற்குட்படுவது கடினமாகி விடுகிறது. அதுமட்டுமன்றி இதனால் நாவல்கள் சிலவற்றின் அழகியவம்சமும் குன்றிப் போய்விடுகின்றது. எனினும், இவற்றால் இந்நாவல்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. (இந்நாவல்களைத் தொடர்ச்சியாக ஒருசேர இவற்றை வாசிக்குமொருவரது சிந்தனையில் நிச்சயமாக ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுமென்பதற்கு இவ் ஆய்வாளரே சான்றாகின்றார். இது பற்றிக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட போது, பங்காளர்கள் சிலரும் இதனை ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது)
.76

நாவல்கள்
கணேசலிங்கன், செ, சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை,
பாரிநிலையம், சென்னை, மு.ப. நவம்பர் 1989,
SLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL வன்முறைவடுக்கள், மே. கு. 2ம் பதிப்பு, யூலை 1995.
. கவர்ச்சிக்கலையின் மறுபக்கம்.
வெளியீடு, குமரன் பப்ளிஷர்ஸ், சென்னை முய.டிசம்பர் 1997
SLSLLLLLSLLLLLLLLLLLLLLLLCLLLLLLL குடும்பச் சிறையில், மு. கு, ஆகஸ்ட் 1999.
இரண்டாவது சாதி, மு.கு, 2ம் பதிப்பு 1999.
நீ ஒரு பெண், மு.கு, மறுபதிப்பு 2002.
. உலகச் சந்தையில் ஒரு பெண், மு.கு புதிய பதிப்பு ஜுன் 2001
SLSLLLLLSLLLLLLLLLLLLLLSLLLLLSLLLLLLLLSLLLLLSLS தாய்வீடு, மு.கு. முதற் பதிப்பு நவம்பர் 2001 . செல்வி, மு.கு.முதற்பதிப்பு நவம்பர் 2001
SLLLL0LLLL0LLLLLLLLLLLLLSLSLSLLLLLLLLLLLLLLLLLSL ஒரு பெண்ணின் கதை மு.கு மீள் பதிப் 2002.
77

Page 45
பெண்களுக்கு இழைக்கப்படும்
ரும்ப வன்செயல்கள் இனங்கானலும் தீர்வுகாணலும் - வை. கா. சிவப்பிரகாசம் - வருகைக் கல்வியியலாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
சமூகத்திற் புலப்படும் தொடர்புறவுகளின் பண்புத்தரம் - அதாவது, வீடு, வேலைக்களம், வீதி ஆகிய இடங்களிற் காணப்படும் உறவுகளின் தரம் - தமது செளக்கியத்தின்மீது நம்ப முடியாத வகையிலே செல்வாக்குச் செலுத்துகின்றது. இறுக்கமான பிணைப்பு அல்லது ஒட்டுறவு உள்ள சமூகங்கள் செளக்கியத்திற் சிறந்த சமூகங்களாக விளங்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிக அளவில் உள்ளன. அத்தகைய சமூகங்களில் மக்கள் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, தமது எண்ணங்களைத் துணிந்து கூறும் நிலைமை என்பன காணப்படும். ஆனால், மக்கள் பரஸ்பர அச்சம், பரஸ்பர அவநம்பிக்கை, உணர்ச்சிகளை மறைத்தல் ஆகிய மனநிலைகளோடு வீதிகளிலே நடந்து செல்லும் நிலைமை உள்ள சமூகங்கள் மகிழ்ச்சி தருவன அல்ல, செளக்கியமானவையும் அல்ல” மாண்புமிகுதெஸ்ஸா ஜொவெல்.
("The quality of relationships in society - at home, at work and in the streets - is incredibly influential on our health. The quality of relationships incohesive societies where people trusteach other, respect each other and are able to say what they feel are more likely to be healthy societies. Societies where people the streets in fear of each other, Mutually Suspicious and closing off their Feelings are Neither happy nor healthy Places to be' Rt. hon. Tessajowell.
இங்கிலாந்திலே பொது மக்கள் செளக்கியத்துறை அமைச்சராகப் பணிபுரிந்த மாண்புமிகு தெஸ்ஸா ஜொவெல் எழுதிய முற்கூறிய உரைநடைப் பகுதியிலிருந்து இரு முக்கிய கருத்துக்கள் தெளிவாகின்றன. ஒன்று குடும்ப அங்கத்தவரிடையே காணப்படும் உறவுத்தரம் சமூகப் பிணைப்பின் ஆதாரமாக
78.

அமைதல். மற்றது மக்கள் வீதிகளில் அச்சம் இல்லாமல் நடந்து செல்லும் நிலையைச் சமூகப் பண்புத்தரத்தின் நியமமாக அல்லது அளவுகோலாக ஏற்றுக் கொள்ளல்.
தெஸ்ஸா ஜொவெல் விரிநோக்கிற் கூறிய கருத்துக்கள், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் ஆகிய முப்பிரிவினருக்கும் பொருந்தும் பொதுவான சிந்தனைகள் ஆகும். அவற்றில் இரண்டாவது கருத்து தொடர்பாகஅவருக்கு முன் வாழ்ந்த மகாத்மா காந்தி கூறிய சிறப்புச் சிந்தனை இச்சந்தர்ப்பத்திற்கு குறிப்பிடத்தக்கது.” ஒரு பெண் நடுச்சாமத்திலும் நடுக்கம் இல்லாமல் வீதிகளில் நடந்து செல்லும் சுதந்திரத்தை அநுபவிக்கும்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரம் அடைந்ததாகக் கருத முடியும்.” பெண்கள் அநுபவிக்க வேண்டிய சுதந்திரங்கள் இல்லாதவர்களாக வாழும் நிலைபற்றி அரைநூற்றாண்டுக்கு முன் மகாத்மா காந்தி கூறிய கருத்து 21ஆம் நூற்றாண்டிலும் பல நாடுகளிற் காணப்படுகின்றது. அவர்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்படும் வன்செயல்கள் குடும்ப மட்டத்திலே தொடங்கி விடுகின்றன. எனவே, பெண்களுக்குக் குடும்ப நிலையில் இழைக்கப்படும் வன்செயல்களை இனங்காணலும் தீர்வுகளை முன் வைத்தலும் இன்று அவசிய தேவை ஆகும். சிறப்பாக, வளர்முக நாடு ஆகிய இலங்கையில் பெண்கள் முகங்கொடுக்கும் வன்செயல்கள் பற்றிய விமர்சனச் சிந்தனைகளை முன்வைத்தல் ஒரு தேசிய தேவையாகும்.
இந்த ஆய்வுரையின் நோக்கங்கள் பின்வருவன ஆகும்.
1. குடும்ப வன்செயல் பற்றிய பொருத்தமான வரைவிலக்கணம் ஒன்றை
வகுத்தல். t
2. குடும்ப வன்செயலின் வகைகளை பகுத்தறிதல்
3. குடும்ப வன்செயலின் இயல்புக் கூறுகளைக் கிரகித்துக் கொள்ளல்.
4. குடும்ப வன்செயலின் விளைவுகள் பற்றிய ஆய்வாளர் கருத்துக்களை
மதிப்பிடல்.
5. குடும்ப வன்செயலை இனங்காணலின் முக்கிய கூறுகள் மீது
சிந்தனையை ஒரு முனைப்படுத்தல்.
6. குடும்ப வன்செயல் ஒழிப்புக்கு ஏற்ற சிந்தனைகளைச் சமர்ப்பித்தல்.
79.

Page 46
* குடும்ப வன்செயல் பற்றிய வரைவிலக்கணங்கள் 0 வரைவிலக்கணம் -1
இப்போதைய ஆண்துணைவர்கள் அல்லது முன்னைய துணைவர்கள் வீட்டிலே பெண்களுக்கு இழைக்கும் உளஞ்சார் உணர்ச்சிசார், பொருண்மியஞ்சார், உடல்சார், பால்நிலைசார் துஷ்பிரயோகமே குடும்ப வன்செயல் ஆகும்.
(ஸ்கொட்டிஷ் தேவைகள் அளவீட்டு நிகழ்ச்சித் திட்ட அறிக்கை 1997) “Domestic violence is psychological, Emotional and economic as well as physical and sexual abuse of women by male partners or ex-partners' (Scottish needs assessment programme report - 1997)
“ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்புறவுகளில் வரலாற்று ரீதியாகக் காணப்படும் சமமற்ற அதிகார சக்தியின் வெளிப்பாடே பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப
வன்செயலாகும். . அது ஆண்கள் பெண்களைத் தமக்குக் கீழ் நிலைப்படுத்தும் நோக்குடன் நிர்ப்பந்திக்கும் கடுமையான சமூக நுட்பங்களில் ஒன்று ஆகும்.”
(பெண்களுக்கெதிரான வன்செயல் ஒழிப்பு பற்றிய ஐ.நா. பிரகடனம் 1993)
"Domestic violence against women is a manifestation of historically unequal power relations between men and women...... and that violence against women is one of the crucial social mechanisms by which women are forced into a subordinate position to men'
Declaration on the elimination of violence against women passed by the U. N. General assembly - Vienna-Declaration - 1993)
முற்கூறிய வரையறைகளில் முதலாவது வரைவிலக்கணம் வளர்முக நாடாகிய இலங்கைக்கு முழுமையாகப் பொருந்தாது. குடும்ப வன்செயலின் இயல்புவகைகள் பற்றியஸ்கொட்டிஷ் அறிக்கை கூறும் கருத்து நமது நாட்டுக்கும் பொருந்தும். ஆயின் குடும்ப வன்செயல் புரிபவர் ஒரு பெண்ணின் முன்னைய துணைவர்கள்/கணவன்மார் அல்லது இப்போதைய ஆண் துணைவர்/கணவர் என்று கூறப்படும் கருத்து நமது நாட்டுக்குப் பொருந்தாது. பழைமையின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறாத சமூகத்தில் வாழும் ஒரு பெண்
80

யதேச்சையாக ஆண்களை விவாகரத்துச் செய்து மீண்டும் மீண்டும் திருமணம் செய்தல் நமது நாட்டில் நிகழ்வதில்லை. ஆனால் காதலில் தோல்வியுற்ற ஆண்களோ, அத்தோல்வி பற்றிக் காலங் கடந்து அறிந்து கொண்ட கணவர்களோ பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பற்றிய நம்பகமுள்ள புள்ளிவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் அவை சாத்தியமான நிகழ்வுகளேயாகும்.
ஐ.நாடுகளின் வியன்னாபிரகடனம் கூறும்வரைவிலக்கணம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் சமர்ப்பிக்கப்பட்டபோது வரையறை ஆகும். எனவே அது நமது நாட்டுக்கும் ஏற்புடையது என்று கொள்வதில் தவறு இல்லை. எனினும் அவ்வரைவிலக்கணத்தை நமது நாட்டுப் பெண்கள் நிலைமையைப் பரிசீலிக்கப் பிரயோகிக்கும் போது விழிப்பாயிருக்க வேண்டும். உதரணமாக DomesticViolence என்பது வீட்டில் நிகழும் வன்செயல்,குடும்பத்தில் நிகழும் வன்செயல் என்னும் இரண்டையும் குறிக்கின்றது. வீட்டில் நிகழும் வன்செயல் என்று கூறும்போது வாடகை வீட்டில் வசிக்கும் திருமணமாகாத பெண்கள், கணவரோடு சேர்ந்து வாழாமல் தனித்து வாழும் பெண்கள், விவாகரத்துப் பெற்ற பெண்கள் போன்றோர் அந்நிய ஆண்களின் அத்துமீறல்களுக்கு இரையாகும். கொடுமைகளை ஆய்வாளர் கவனத்திற் கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிகழும் வன்செயல் என்னும் போது விரிகுடும்பம் அல்லது கூட்டுக் குடும்பம் (Extended Family) அணுநிலைக்குடும்பம் அல்லது தனிக்குடும்பம் (Nuclear Family) என்னும் இருவகைக் குடும்பங்களிலும் பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைக் கருத்திற்கொள்ள வேண்டும். அக்குடும்பங்களில் நிகழும் வன்செயல்களைப் புரிபவர்கள் கணவன், மைத்துனர் போன்ற ஆடவர்களாக இருப்பர். இத்தகைய கருத்துக்கள் ஐ. நா. பிரகடனத்தில் வெளிப்படையாக விவரிக்கப்படவில்லை. அவ்வாறு விவரணம் செய்யப்படுமென எதிர்பார்க்கவும் முடியாது. சுருங்கக் கூறின் ஐ. நாடுகளின் பிரகடனம் கூறும் பொதுக்கருத்துக்களை ஒவ்வொரு நாடும் தனது தேசிய நோக்கிற்பிரயோகிக்க வேண்டும், பயன் அடையவும் வேண்டும்.
குடும்ப நிலையில் திருமணங்கள் பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் ஆகிய இருவகைப் பெண்களுக்கும் எதிராக இழைக்கப்படும் வன்செயல்களைப் பின்வருமாறு பகுத்துப் பரிசீலிக்கலாம்.
1 உடல்சார் வகை - கன்னத்தில் அறைதல், ஆயுதங்களால்/உபகரணங்
களால் தாக்குதல்/ பயமுறுத்தல்/ காயப்படுத்தல் போன்றன.
8.

Page 47
2 உணர்ச்சிசார் வகை - தொடர்கண்டனம், பிறர்முன் அவமதிப்பு,
தன்னம்பிக்கைத் தகர்ப்பு 3. பொருண்மியஞ்சார்
ଘlଜi]) ! ' - வேலைவாய்ப்பைத் தடுத்தல், நிதி வழங்க மறுத்தல், (சீதன / வரதட்சணை வற்புறுத்தல்கள், நிதிச்சுரண்டல்கள் போன்றன)
4. பாலியல் வகை - விரும்பத்தகாத பாலியல் நெருக்கம், கற்பழிப்பு,
பாலியல் துஷ்பிரயோகம் போன்றன.
- செயற்கையாகப் பருவம் அடையச் செய்தல் (விராலிப் பட்டி குடும்ப வழக்கம்), கருக்கலைப்பு முதலியன. முற்கூறிய குடும்ப வன்செயல் வகைகளிலே பின்வரும் இயல்புக் கூறுகள் புலப்படுகின்றன.
1. ஸ்கொட்டிஷ் அறிக்கை (1997) கூறுவன :
1. குடும்ப வன்செயல் வேறு அந்நியர் வன்செயல் வேறு.
2. குடும்ப வன்செயல் திரும்பத் திரும்ப நிகழ்கின்றது.
3. அது அந்தரங்கமாக நிகழ்கின்றது.
4. பொதுவாக, கண்ணுக்குப் புலப்படாத உறுப்புக்களே
தாக்கப்படுகின்றன.
5. அது திருமணமான முதல் மூன்று வருடங்களுக்குள் தொடங்கி விடுகின்றது, காலப்போக்கில் அதன் கடுமை அதிகரிக்கின்றது. (ஆதாரம் : டுபாஷ்சகடுபாஷ் அறிக்கை)
6. குடும்ப வன்செயல் உயிருக்கு ஆபத்து ஆகலாம் - அச் செயல்புரிபவர்
இப்போதைய கணவர் அல்லது பழைய கணவர்.
ஸ்கொட்டிஷ் அறிக்கை (1997) குடும்ப வன்செயல்களின் இயல்புகள் பற்றிய விவரித்துள்ள கருத்துக்களில் 1, 6 என்னும் இரண்டு பற்றி இச்சந்தர்ப்பத்தில் விமர்சனம் செய்தல் பொருத்தமாகும்.
ஸ்கொட்டிஷ் அறிக்கை மேலை நாட்டுப் பண்பாடு, சமூக அமைப்பு தனிக்குடும்ப வாழ்க்கை முறை என்பவற்றின் அடிப்படையில் மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வு நோக்கங்களுக்கு இணங்கச் சமர்ப்பிக்கப்பட்டது. எனவே ஒரு குடும்பப் பெண்ணுக்குத் தற்போதைய கணவர் அல்லது முன்னைய கணவர்கள் இழைக்கும் வன்செயல்களையும் அந்நியர் எனக்
82.

கருதப்படும் ஏனையோர் இழைக்கும் வன்செயல்களையும் அது வேறுபடுத்துகின்றது. இவ்வேறுபாடு தொடர்பாக அது பின்வருமாறு கூறுகின்றது:
"Domestic violence cannot be seen as synonymous with other forms of intra-familial abuse including abuse of the elderly, child abuse and abuse by women against men.”
ஆயின் கொள்ளையடித்தல், கற்பழித்தல், பழிவாங்கல் போன்ற நோக்கங்களுக்காக அத்துமீறி வீடுகளினுள்ளே நுழையும் அந்நியர் ஆகிய ஒருவரோ ஒரு குழுவினரோ மணமான பெண்களுக்கு எதிராகவோ, மணமாகாத பெண்களுக்கு எதிராகவோ, இழைக்கும் வன்செயல்கள் இலங்கையிலும் இந்திய மாநிலங்களிலும் நிகழ்கின்றன. அவை பற்றிய தகவல்கள் ஊடகங்கள் மூலம் அவ்வப்போது வெளிவருகின்றன.
மேலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வன்செயல் புரிபவர் பழைய கணவர் என்னும் கருத்து, விரிசிந்தனை நோக்கிலே மீளாய்வு செய்தற்குரியது பழைய காதலர், கொள்ளையர்கள், காமவெறியர்கள், குடும்பக்குரோதிகள், சமூகவிரோதிகள் போன்ற பிறழ்நிலை நடத்தையாளர்கள், யாவருமே உயிரிழப்பு நேரிடக் கூடிய வன்செயல் புரியும் அந்நியராகக் கருதப்படுதல் பொருத்தம் ஆகும்.
எனவே சுருங்கக் கூறின், ஸ்கொட்டிஷ் அறிக்கை குவிசிந்தனை நோக்கிற் சமர்ப்பித்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுவதற்குப் பதிலாக விரிசிந்தனை நோக்கின் அடிப்படையில் நமது நாட்டிலே பெண்களுக்கு இழைக்கப்படும் குடும்ப வன்செயல்களைப் பரிசீலனை செய்வதே தகுதியும் பொருத்தமும் ஆகும்.
1. நமது நாட்டு வன்செயல்கள் புலப்படுத்துவன.
1. சமூகப் பிரிவுகள் தொடர்பாக பழைமைவாதிகள் வெளிப்படுத்தும்
பிற்போக்குச் செயற்பாடுகளின் கடுமை.
2. குடும்பப் பொருளாதார வேறுபாடுகளை மதிக்காத பெற்றோரின் மண்ணாசை, பொன்னாசை, ஏனைய ஆசைகளின் தீவிரம் (2-ம் சீதனவிடு, நிலபுலம், பொன்னாபரணங்களின் வகை தொகை, வாகன அன்பளிப்பு, நிதி, நன்கொடை, தலைப்பிரசவச் செலவுப் பொறுப்பு)
.83.

Page 48
3. ஆண்களின் நவீன எதிர்பார்ப்புக்கள், பெண்களின் நவீன எதிர்பார்ப்புக்கள் என்பனவற்றின் இடையே எழும் பிரச்சினைகளின் சிக்கற் பண்பு.
4. வதிவிடப்பெயர்ச்சி உருவாக்கும் புதிய பண்பாட்டுச் சூழ்நிலைத்
தாக்கங்களின் தீவிரம் அல்லது முறுகற் பண்பு.
* குடும்ப வன்செயல்களின் விளைவுகள்.
குடும்ப வன்செயல் வகைகள், அவற்றின் தன்மைகள் அல்லது இயல்புகள் காரணமாகப் பல்வேறு விளைவுகளைப் பெண்கள் அவர்களின் பிள்ளைகள், தொடர்புடைய பிறர் ஆகியோர் நிகழ் காலத்தில் எதிர்நோக்குகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவை ஒரு தலைமுறைக்குப் பின்னரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை பற்றி இப்போது சுருக்கமாக நோக்குவோம்.
* பெண்களுக்கு
ஆண்களின் வன்செயல்களுக்கு நேர் இலக்காக அமைபவர்கள் பெண்களே ஆவர். எனவே அவர்கள் மீது அவிழ்த்துவிடப்படும் வன்செயல்களின் விளைவுகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறலாம்.
குறுங்கால விளைவுகள்
 ைஉடலியல் விளைவுகள் - உடற்காயங்கள், உட்காயங்கள் தழும்புகள்
போன்ற உடல்நலச் சீர்கேடுகள்.
 ைஉளநலச் சீர்குலைவுகள் - பதகளிப்பு, திகில், துக்கம், தூக்கப்பிரச்சினை,
மனச்சோர்வு போன்றன. wM
* நெடுங்கால விளைவுகள்
மது நுகர்ச்சிக்கு அடிமையாதல் (உ-ம்: போதைப் பொருள் பாவனை) பிரசவ காலச் சிரமங்கள் (அமரோ குழுவினர் ஆய்வு முடிபுகள்) என்பன குறிப்பிடத்தக்கன.
* பிள்ளைகளுக்கு
குடும்ப வன்செயல்களைக் கண்ணாற் காணும் சந்தர்ப்பங்களைப் பெற்ற பிள்ளைகள் மீது அவை பின்வருமாறு பலவித தாக்கங்களை விளைவிக்கின்றன.
84

பதகளிப்பின் மட்டம் அதிகரித்தல். உளமூல உடற்பிணிகள்.
துக்கமிகுதி
மனத்தளர்ச்சி நிலைமைகள். செயல்களில் ஈடுபட முன்வராமை (Withdrawal) கல்வித்தடை சமூகத் தகைமை பற்றிய அளவீட்டில் கீழ்நிலை.
குடும்ப வன்செயல்கள் காரணமாகப் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அல்லது பாதக விளைவுகள் பற்றி ரெபெக்கா ஏபிராம்ஸ்
கூறும் பின்வரும் தகவல்களும் :
(அ) விமர்சனக் குறிப்புக்களும் நமது சிந்தனைக்கும் பரிகார முயற்சிகளுக்கும் ஏற்றன ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய இராச்சியத்திற் குறைந்த பட்சம் ஐம்பது பிள்ளைகள் தமது பெற்றாரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுவதன் விளைவான தீவிர துயர அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலே கார் விபத்துக்களினால் காயப்பட்டவர்கள், திடீர்த்தாக்குதல் புரியும் கொள்ளையர்கள், கற்பழிப்புச் செய்யும் முன்னறிமுகமில்லாதவர்கள் ஆகியோரால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிக தொகைப் பெண்கள் தமது கணவர்களாலோ துணைவர்களாலோ துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழி முறையில் அநாதைகளான பிள்ளைகள் பெரும்பாலும் தமது பெற்றோர்க்கு நேரிட்ட படுகொலையைக் கண்ணாற் கண்டவர்களேயாவர். அந்தப் பயங்கரக் காட்சியைக் கண்ணாற் காணும் நிலைமை ஏற்படாவிட்டாலும் அப்பிள்ளைகளின் வாழ்க்கைகள் பெரும்பாலும் சீர்கேடுகளில் மூழ்கடிக்கப்படுகின்றன.
(a) Every year in the U.K. atleast fifty children endure the extreme trauma of one of their parents killing the other. In the U. S. A. more women are abused by husbands or partners than are hurtin car accidents or by muggers or unknown rapists. The children who find themselves or phoned in this way have often witnessed their parents murder and even if spared that horror, their lives are invariably plunged into disarray'Rebecca Abrams “When
Parents die’-pp45

Page 49
(அ) பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோர் -
பிள்ளைகளுக்கு ஏற்பட்ட விளைவுகள்.
"வன்முறைச் சூழல்களில் இறந்த பெற்றோரின் பிள்ளைகள் இருவர் பற்றி நான் அறிவேன். ஒருவர் வடஅயர்லாந்தில் உள்ளவர். மற்றவர்பெய்ரூட்டில் வசிப்பவர். இவர்கள் இருவருமே அவ்வன்செயல்களினால் விளைந்த, ஆழமான, உணர்ச்சி தொடர்பான, உளவியல்சார் தழும்புகளை இப்போதும் தாங்கிக் கொள்ள நேரிட்டுள்ளது. அவர்களின் பெற்றோர்களின் மரணத்தின் பின் பத்து வருடங்களுக்குமேல் கழிந்து விட்டாலும் அவர்களில் எவருமே இந்த உலகம் தமது அந்தரங்கம் காக்கும் என்றோ நம்பத்தக்கது என்றோ இன்னமும் கருதத் தயாராய் இல்லை. மேலும் அவர்களில் எவரின் வாழ்வுமே முழுமையான வாழ்க்கை என்று கருத இயலவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் பெற்றாரில் ஒருவரின் மரணத்தை அடுத்து சாதாரணமாக ஏற்படும், அச்சம், ஆத்திரம், ஆற்றாமை ஆகிய உணர்வுகள் பூதாகார வடிவம் எடுத்துள்ளன, ஊனம் தரும் பரிமாணங்களைப் பெற்றுள்ளன.”
(b) Two people I know whose parents died in violent circumstances - in both cases the victims of terrorist attacks, one in northern ireland and, the other in Beirut - still bear deep emotional and psychological scars - neither has recovered confidence and trust in the world and neither lives anything like a fulfilling life, even though their respective parents died more than ten years ago. For them, the feelings of fear, anger and desolation which are normal after a parent's death, are magnified to vast and crippling proportions.“ Rebecca Abrams.“When parents die’pp.45-46.
ரெபெக்கா ஏபிராம்ஸ் விவரிக்கும் இந்தப் பாதக விளைவுகள் நமது நாட்டில் குடும்ப வன்செயல்களால் பாதிக்கப்பட்ட உயிர்நீத்த தாய்க்குலத்தின் அநாதைப் பிள்ளைகளின் சமகால நிலைக்கும் பொருந்தும்,
* தொடர்புடைய பிறருக்கு
தம்பி, தங்கை போன்ற தொடர்புடைய பிறர்மீதும் அவை முற்கூறிய தாக்கங்களிற் சிலவற்றையோ பலவற்றையோடு விளைக்கின்றன. அவற்றோடு பழிவாங்கும் உணர்வு, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபாடு,
86.

தற்பாதுகாப்புக் கலைகளிற் பயிற்சி போன்ற விளைவுகளும் அவர்களிடம் ஏற்படுதலைக் குறிப்பிடுதல் பொருத்தம் ஆகும்.
குடும்ப வன்செயல்களின் விரிவு மேலை நாடுகளின் நிலை
குடும்ப வன்செயல்களின் விரிவு பற்றிய முறையான கணிப்பீடு செய்ய முடியாத நிலை பல நாடுகளிற் காணப்படுகின்றது. இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பன்னிரு மாத காலப்பகுதியில் 125 மில்லியன் பெண்கள் (12.5 இலட்சம் பெண்கள்) குடும்ப வன்செயல்களை அநுபவித்திருக்கக்கூடும் என ஐக்கிய இராச்சியத்தின் அறிக்கை (1989) தெரிவிக்கின்றது. இத்தகைய தகவற்குறைபாட்டின் காரணம் வன்செயலுக்கான இலக்கான பெண்களிற் பெரும்பாலோர் காவல்துறைக்கு முறைப்பாடு செய்யாமையே ஆகும். முற்குறித்த அறிக்கையின்படி 100க்கு 2 விழுக்காட்டினரே, சதவீதத்தினரே தமக்கு இழைக்கப்பட்ட வன்செயல்கள் பற்றிக் காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் இதே மனப்பாங்கு தான் ஐக்கிய அமெரிக்கப் பெண்களிடமும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. *
இலங்கை இந்திய நிலைகள்
குடும்ப வன்செயல்கள் பற்றிக் காவல்துறைக்கு முறைப்பாடு செய்தல் என்னும் விடயத்தில் இலங்கைப் பெண்கள், இந்தியப் பெண்கள் ஆகியோரிடமும் முற்கூறிய மனப்பாங்குதான் காணப்படுகின்றது. அதனால் திருத்தமான தரவுகளை அரசு சார்நிலையங்கள் மூலம் முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஆய்வாளருக்கு ஒரு பிரச்சினையாக விளங்குகின்றது. எனினும் பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் கொழும்பு சூரியா அமைப்பு மட்டக்களப்பு, அதிர்வுகள் மலையகப் பெண்கள் அமைப்பு போன்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆய்வாளருக்குத் துணைபுரிகின்றன. அவை தமது நிதிவளத்திற்கும் பிற வளங்களுக்கும் இணங்கப் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் /வன்செயல்கள் பற்றிய தகவல்களையும், புள்ளிவிவரத் தரவுகளையும் திரட்டல், வெளிப்படுத்தல் முதலிய பணிகள் மூலம் ஆய்வாளர் எதிர்நோக்கும் பிரச்சினையின் கடுமையைக் குறைத்து வருகின்றன. அத்தகைய அமைப்புக்கள் திரட்டிய புள்ளிவிபரங்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், பெண்களின் திருமண வயது அதிகரிப்பு, பெண்களின் தற்கொலை முயற்சி, பெண்களின் நலன்களைப் பேணும் சட்டங்களை நிறைவேற்றிய நாடுகள் என்பன பற்றிய மாவட்ட ரீதித்
87.

Page 50
தரவுப்பகுப்பாய்வுக்கு உதவுகின்றன. ஆயின் அவை பெண்கள் குடும்பத்தின் உள்ளே அநுபவிக்க நேரிடும் வன்செயல்கள் பற்றிய புள்ளிவிவரங்களை இனங்காண உதவ முடியவில்லை. (பார்க்க பின்னிணைப்பு சூரியா அமைப்பின் அட்டவணை - வீரகேசரி 10.12.2003) இதன் காரணம் பாதிக்கப்பட்ட பெண்களின் மனப்பாங்கு என்றே கூறவேண்டியுள்ளது.
குடும்ப வன்செயல்களை இனங்காணல்
குடும்ப வன்செயல்கள் பற்றிக் காவல்துறைக்கோ அரச சார்பற்ற நிறுவனத்துக்கோ முறைப்பாடு செய்ய அல்லது ஆறுதலும் ஆலோசனையும் பெற முன்வராத அபலைப் பெண்களின் மனப்பாங்கு ஒட்டுணர்வின் (Empathy) அடிப்படையிற் பரிசீலித்தற்குரியது. ஒரு குடும்பத்தினுள்ளே பாலியல் சார்ந்த அல்லது பாலியல் சாராத வன்செயல்களாற் பாதிக்கப்பட்ட பெண் அதுபற்றி எவரிடமும் பேசவோ, முறையிடவோ தயங்கத் தகுந்த காரணங்கள் இருக்கும் என்பதை எவரும் ஏற்கத்தான் வேண்டும். முதலாவதாக, தனது பிரச்சினை பற்றிய உரையாடலை அல்லது விவரணத்தை எப்படித் தொடங்குவது, எத்தனை தகவல்களைச் சொல்லுவது எனத் தீர்மானிக்க முடியாத தயக்கம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காணப்படும். இரண்டாவதாக தனது கணவர் அல்லது தந்தை போன்றோர் அப்பாதிப்புப் பற்றிப் பேசியதை அறிந்து கொள்ள நேரிட்டால் என்ன நிகழுமோ என்ற பயம் மற்றொரு காரணமாகலாம். இறுதியாக, தான் கூறுவதைக் கேட்குநர் தன்னைப் பற்றி என்ன அபிப்பிராயத்தை உருவாக்குவர் எத்தகைய கணிப்பீடு செய்வர் என்ற அச்சம் மற்றொரு காரணமாகலாம். எனவே வன்செயல்களை இனங்காணும் நுட்பத்தைக் கையாள்பவர்கள் அந்நுட்பத்தின் கூறுகள் பற்றிய விளக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும். .
இனங்காணும் நுட்பக் கூறுகள்
1. வீட்டு வன்செயல்கள் நிகழும் சாத்தியம் பற்றிய விழிப்புணர்வு.
2. வீட்டு வன்செயல்களின் கட்புலக் குறிகுணங்கள், அறிகுறிகள்
என்பனவற்றை அடையாளங் காணல்.
3. வீட்டு வன்செயல்கள் பற்றி முகம் எதிர்முகம் நிலையிலே அநுதாப உணர்வுடனும் முடிவு கூறும் நோக்கம் இல்லாமலும் கேள்விகள் கேட்டு உரையாடலைத் தானே முதலில் தொடங்குதல்.

4. பாதிக்கப்பட்டவர் கூறுபவற்றை விருப்பத்துடன் கேட்டலும் அதற்காகத் தனது ஓய்வற்ற வேலையட்டவணைக்கு அமைவாக அதிக நேரத்தை ஒதுக்குதலும்.
5. ஆலோசனை வழங்கலும் ஆதரவு தரும் சேவைகள் பற்றிய
தகவல்கள் வழங்கலும்.
இத்தகைய இனங்காணல் நுட்பத்தைப் பிரயோகிக்கும் தொண்டர் பொருத்தமான வயது, அநுபவம், மனப்பக்குவம், உளவியல், பயிற்சி, தேர்ச்சி என்பன அமைந்த கண்ணியம்மிக்க பெண்மணியாக இருக்க வேண்டும்.
தீர்வுகள்
பெண்கள் தமக்கு எதிராக இழைக்கப்படும் குடும்ப வன்செயல்கள் தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய தீர்வுகள் :
(அ) முன்செய்யத்தக்கன.
(ஆ) உடனே செய்யத்தக்கன.
(இ) பின் செய்யத்தக்கன
என்னும் முப்பெரும்பிரிவுகளில் அடங்கும். இங்கு பெண்கள் என்று
கூறப்படுபவர்கள் திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் ஆகிய இருவகையினரும் ஆவர். குடும்ப வன்செயல்களை இழைப்பவர்களெனக் கணவர், பழைய காதலர், மாமியார் உள்ளிட்ட விரிகுடும்ப உறுப்பினர்கள், அந்நியர்கள் ஆகியோரைக் கூறலாம். இனி பெண்கள் மேற்கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பரிசீலிப்போம்.
(அ) முன்செய்யத்தக்கன - முன்னெச்சரிக்கைச் செயல்கள்.
எந்த ஆணும் இழைக்கக்கூடிய வன்செயல்களுக்கு எதிராகப் பெண்கள் மேற்கொள்ளும் இவ்வகை நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கைச் செயல்கள் அல்லது தற்பாதுகாப்பு முயற்சிகள் என்ற வகையில் துணைபுரியும் சாத்தியமுள்ளதே தவிர அவை பூரண தீர்வுகள் ஆகா. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தப் பெண்ணும் ஓர் ஆண் வன்செயல் புரிய முற்படுவதன் நோக்கம் அல்லது காரணம் என்ன என்பதை அவதானிப்புகள் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். வன்செயல் புரிய முனைபவர் கணவரானால் மனைவியின் நடத்தைமீது தோன்றிய சந்தேகம் ஒரு காரணமாகலாம் அல்லது போதைப் பொருள் பாவனைக்குப் பணம் பறிக்கும்
89.

Page 51
தேவை காரணமாகலாம் அல்லது தாழ்வுமனச்சிக்கல் காரணமாகலாம். வேறு காரணங்களும் இருக்கலாம். கணவரின் சந்தேகம் வன்செயல்முனைப்பின் காரணமானால் சந்தேகத்தைத் தீர்க்க முயலவேண்டும். இத்தீர்வு முயற்சி அவரவர் எதிர்நோக்கும் பிரச்சினையின் தன்மைக்கு ஏற்ப வேறுபடும்.
கணவரின் வன்செயல் போதைப் பொருள் பாவனைக்குப் பணம் பறிப்பதாக இருந்தால் அத்தீய பழக்கத்திற்கு அடிமையாக மூல காரணமான வாழ்க்கைப் பிரச்சினையை உசாவியறிந்து தீர்வுகாணல், கணவரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தப் பொறுமையோடு முயலல், மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தல் என்னும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
பழைய காதலரின் வன்செயல் முனைவுக்குத் தீர்வு காணல் என்பது தனியாய்வுக்குரிய சிக்கலான பிரச்சினை. பழைய காதலர் எனப்படுவர் எந்தப் பெண்ணுக்குக் கொடுமை செய்ய முனைந்தாரோ அந்தப் பெண்ணின்மீது அவர்கொண்டது உண்மையான காதலா, ஒரு தலைக்காதலா காமவெறியா என்பதைத் தெளிவாக இனங் கண்ட பின்னரே அதற்குரிய தீர்க்கமான தீர்வுகளைக் கூறல் பொருத்தமாகும். எனவே இத்தகைய வன்செயல் தடுப்பு முயற்சி பற்றி இச்சந்தர்ப்பத்திலே முடிவாக எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
குடும்பத்திலே பெண்களுக்கு எதிராக வன்செயல்கள் இழைப்பவர்களிலே மாமியார் என்பவர் 21ஆம் நூற்றாண்டிலும், திருமணமானவர்களுக்கும், திருமணத்தை எதிர் நோக்குபவர்களுக்கும் கொடுமையின் உருவமாகக் காணப்படுகின்றார். பல்கலைக்கழகங்களிலே பகிடிவதைக்கு இலக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் மறுவருடம் புதிய மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு அநுமதி பெற்றதும் வட்டியும் முதலுமாக பகிடிவதை புரிந்து தமதுவதைச் செயல்களை நியாயப்படுத்துவது போலவே'மாமியார் - மருமகள், பூசல் ஒரு தொடர்கதை மாறி விட்டது. 'யான் அடைந்த துன்பம் உறுக என் மருமகள்' எனப் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் மனப்பாங்கு (Sadism) மாறாதவரை மாமியார் கொடுமை தொடர்தலை எதிர்நோக்கவே நேரிடும். சதிபதிகள் தனிக்குடும்ப வாழ்வை ஏற்றுக் கொள்ளல் இப்பிரச்சினைக்குரிய ஒரு தீர்வாகும்.
அந்நியர்களால் ஏற்படக்கூடிய வன்செயல்களிலிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளப் பெண்கள் தற்பாதுகாப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். வீட்டிலே தன்னந்தனியே இருக்கும்போது
90.

கொள்ளைக்காரனையோ, காமவெறியனையோ எதிர்க்க வேண்டிய நிலைமையிலே வர்மக்கலைத் தேர்ச்சியுள்ள பெண் எதிரியின் நாடிநரம்புகளில் எந்த இடத்தில் தாக்கினால் அவன் மயக்கம் அடைவான் அல்லது இறந்து போவான் என்னும் தந்திரோபாயத்தைப் பிரயோகித்தல் மூலம் தன்னைத்தானே காத்துக் கொள்ள முடியும். அத்தகைய அந்நியர்கள் குருவாக வந்து கொடுமைபுரிய நேரிடும் போதும் உதவி கிடைக்கும் வரை அல்லது தப்பிச் செல்லும் உபாயம் கைகூடும் வரை வர்மக்கலை போன்ற தற்பாதுகாப்புக் கலைத்தேர்ச்சி துணைபுரியும். தீர்வு மார்க்கம் ஆகும். அயல்வீட்டாருடன் சுமூகமான தொடர்புறவுகளைக் கட்டியெழுப்புதலும் இத்தகைய நிலைமைகளை வெற்றிகரமாகச் சமாளிக்கத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.
உடனே செய்யத்தக்கன
எந்தப் பெண்ணும் தனக்கு எதிராகக் குடும்பத்தில் இழைக்கப்படும் வன்செயல்களுக்கு உடன் முடிவு காணமேற்கொள்ளக்கூடிய தீர்வுகள்
மூன்றே ஆகும். 0 முதல் தீர்வு வன்செயல் புரிய முனைபவரிடம் மனமாற்றத்தை
ஏற்படுத்தல். e இரண்டாம் தீர்வு : வன்செயல்புரிய முற்படுபவரிடமிருந்து தப்பிச் செல்ல
முயலுதல். O மூன்றாந் தீர்வு வன்செயல் புரிபவரைத் திடீரெனத் தாக்குதல்.
இம்மூவகைத் தீர்வுகளில் எதனைத் தெரிவுசெய்ய வேண்டும் என்பது அவரவர் முகங்கொடுக்கும் வன்செயற் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேறுபடும்.
மனமாற்றத்தை ஏற்படுத்தல்
சில சந்தர்ப்பங்களில் ஒரு கணவன் அல்லது ஒர் ஆண் மிருக உணர்ச்சியின் தற்காலிக அல்லது கணநேரத்துாண்டுதலால் மனைவியை அல்லது ஒரு பெண்ணைத்தாக்க முயலலாம். அத்தகைய சந்தர்ப்பத்தில் கணவனின் அல்லது ஆணின் நடத்தையின் விபரீதத்தைத் தடுத்து நிறுத்தவும் மனமாற்றத்தை ஏற்படுத்தவும் தாக்குதலுக்கு இலக்கான பெண் வன்செயலாளரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தக் கையாளும் உத்தி வெற்றி அளிக்கலாம். இதற்கு உதாரணமாக ஒரு உண்மைச் சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். -
91

Page 52
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இரவு10.00 மணி வரையில் "அண்ணை என்னை அடிக்கிறார், ஐயோ அடிக்கிறார்” என்ற ஒலம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன். அப்போது நான் என் கல்லூரிச் சகபாடியின் வீட்டில் வாடகையறையில் வசித்துவந்தேன். என் நண்பர் X என்பவர் கலகலப்பாகவும் வேடிக்கையாகவும் பேசும் இயல்புள்ளவர்; கலாநிதிப் பட்டதாரி, நல்ல வருமானமுள்ள, பெரிய பதவி வகித்தவர். அவரின் மனைவி Y என்பவர் அவரைப்போலவே கலகலப்பாகவும் வேடிக்கையாகவும் பேசும் இயல்புள்ளவர். அவர்களின் வளர்ந்த பிள்ளைகளில் ஆண்கள் அச்சம்பவம் நிகழ்ந்த வேளையில் வீட்டில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனந்தமாக வாழ்ந்த அவர்களின் வாழ்வில் ஏன் இந்தச் சலசலப்பு? ஒரு கணத்திகைப்பை உதறிவிட்டு நிதானமாக என் அறையைத் திறந்துவிட்டு வாசலில் நின்றேன். என் கண் எதிரே சற்றுத் தூரத்தில் நின்ற அவர்களை மெளனமாக ஏறிட்டு நோக்கினேன். Y இன் உடலில் எந்தக் காயமும் தெரியவில்லை. என் நண்பர் X தன்முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டார். மதுவின் வாடையை உணர்ந்து கொண்டேன். அன்று அவர்கள் கலந்து கொண்ட விருந்துக்கேளிக்கையில் X சற்று அதிகம் மது அருந்தி இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். சிறிது நேரம் மெளனமாகவே என் வாசலில் நின்றேன். இருவரையும் மாறி மாறி நோக்கினேன் சற்று நேரத்தில் அவர்கள் தமது அறைக்குள் மெளனமாகச் சென்றார்கள். நான் என் அறைக்குள் மெளனமாகச் சென்று என் செவிப்புலன்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டேன். அதன்பின் எத்தகைய அசம்பாவிதமோ ஒலமோ கேட்கவே இல்லை. காலையில் எழுந்ததும் முதல் நாள் சலசலப்பை முற்றாக மறந்தவர்களாக அவர்கள் வழக்கம் போலக் காலை வந்தனம் கூறினர், தேநீர் தந்து உபசரித்தனர், காலையுணவு வேளையிலும் ஒரே மேசையில் கூட்டாக உண்ணச் சேர்ந்து கொண்டனர். அந்தச் சம்பவம் பற்றி அவர்களிடமோ வேறு எவரிடமுமோ எதுவும் சொல்லவில்லை. ஏட்டிக்குப் போட்டியாகப் பேசித் தர்க்கப்பட்டதன் விளைவே அன்றைய ஒலத்தின் காரணமாகவே இருக்கலாம் என ஊகித்தேன். அவர்கள் வீட்டில் அதன் தங்கியிருந்த காலம் முழுவதும் எத்தகைய அசம்பாவிதமும் நிகழவில்லை. நான் இடமாற்றம் பெற்று ஊர் செல்லும் தருணத்திலே என் மனைவியையும் என்னையும் அழைத்து விருந்துபசாரம் செய்தார்கள். அதன் பின்னரும் எமது நண்பர்களாகவே உள்ளனர்.
Y இன் ஒலம் உண்மையாகவே பலமாகத் தாக்கப்பட்டதன் பின்
வெளிப்பட்ட அபயக் குரலா அல்லது X மனமாற்றத்தை ஏற்படுத்தப் பிரயோகிக்கப்பட்ட உபாயமா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.
92.

அவர்களின் வாழ்க்கைத் தடாகத்தில் ஒருக்கல்லெறி விழுந்ததனால் விளைந்த சிறுசலனம் நானறிந்தவரையில் மீண்டும் நிகழவில்லை என்ற திருப்தி எனக்கு ஏற்பட்டது. சுயகெளரவம், அந்தரங்களைப் பேணல் வேண்டும். என்பவற்றை மதிக்கும் ஒரு குடும்ப நண்பரிடம் மன மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் வகித்த மெளனப்பங்கு வெற்றி தந்தமை ஒர் அபூர்வமான தீர்வுதான் ஆயினும் பாதிக்கப்படும் நிலையிலுள்ள பெண்கள் இத்தகைய மனமாற்ற உபாயத்தை உசிதமான சந்தர்ப்பங்களிற் பின்பற்றலாம்.
தப்பிச் செல்ல / தவிர்த்துக் கொள்ள முயலுதல்
- குடும்பத்தில் வன் செயல் புரிய முனைபவர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்த அந்நியராயின் வீட்டின் அமைப்பிற்கு ஏற்பத் தப்பிச் செல்வதற்குரிய ஒரு வழியை / மார்க்கத்தை முன்னதாகவே வகுத்துக் கொள்ள வேண்டும். அதனோடு, ஆபத்துவேளைகளில் உதவக் கூடிய ஆதரவாளர்களோடு நல்லுறவைப் பேணி அவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வீட்டினுள் வன் செயல் புரிபவர் கணவரானால் அவரின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்பத் தனது உபாயத்தை அநுசரிக்க வேண்டும். இலங்கையிலுள்ள மத்தியதரவர்க்கக் குடும்பங்களிற் பெரும்பாலானவற்றிலே இத்தகைய வன்செயலின் சூத்திரதாரியாக மாமியாரே காணப்படுவார். அச்சூத்திரதாரியின் இயக்குத் திறனுக்குக் கட்டுப்பட்டு ஓர் ஆண்மகன் தன் மனைவியைக் கொடுமைப் படுத்துவது காலங் காலமாக நிகழும் தொடர்கதையாகவே உள்ளது. அந்த வகைக் கொடுமையை எதிர்நோக்கும் ஒரு மனைவி என்ன செய்ய முடியும்? என்ன உபாயத்தைப் பின்பற்ற வேண்டும்? இந்தப் புதிருக்குரிய தீர்வின் அம்சங்களை உணர்த்தக் கூடிய உண்மைச் சம்பவம் ஒன்றைக் கூறுகிறேன்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபல பாடசாலையில் ஆசிரியராகக் கடமையாற்றினேன். அப்போது என் சகா ஒருவர் கற்பித்தற் பணியையும் விளையாட்டுத் துறை பொறுப்புக்களையும் ஒருங்கே புரிந்து வந்தார். அவர் ஒரு பட்டதாரி, எப்போதும் சிரித்த முகத்தோடு கலகலப்பாகப் பேசுவார். கட்டுமஸ்தான உடற் கட்டுள்ளவர். அவருடைய மனைவியும் ஒரு பட்டதாரி, அயலிலுள்ள ஒரு பிரபல பெண்கள் கல்லூரியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இருவரும் சிலமைல் தொலைவிலுள்ள ஒரு மாடிவீட்டில் வசதிகளோடு வாழ்ந்து வந்தனர். பொருளாதார நிலையில் என்னைவிட உயர்ந்த நிலையில் வாழ்ந்தவரானாலும் என்னோடு நகைச்சுவையும் கலகலப்பும் சேர அன்பாக பழகிவந்தார்.
93.

Page 53
ஒரு நாள் காலை 6.00 மணியளவில் என்னைக் காண வந்தார். அந்தரங்கமாகப் பேச விரும்பினார். அவருடைய கலகலப்பும் வேடிக்கைப்பேச்சும் அவரைவிட்டோடிப் போய்விட்டன. அவரின் முகத்தில் மன இறுக்கத்தின் உணர்ச்சிச் சாயல்கள் புலப்பட்டன. அவர் தானாகவே தன்மனக் குமுறல்களைக் கொட்டினார். “சிவா, என்னால் இந்தப் பிரச்சினையை இனிமேல் சகிக்கமுடியாது மாமியார் - மருமகள் போராட்டம் என்னை வதைக்கிறது எனக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை. எனக்கு ஒரு வழியைச் சொல்லும்” என்று சொல்லி முடித்தார். அவரை ஆசுவாசப்படுத்தினேன். முந்திய தினம் பகலிலும் இரவிலும் கணவர் J க்கும் மனைவி K க்கும் இடையே என்ன நடந்தது என்று நான் உசாவமுற்படவில்லை. அவர்களிடையே என்ன நடந்திருக்கக் கூடும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு தட்டு தட்டினாலே அப்பெண்ணால் அதனைத் தாங்க முடியாமல் தத்தளிப்பார் என்பதையும் என்னால் ஊகிக்க முடிந்தது. உற்றார், உறவினர்கள், அயலில் வசிக்கும் சகாக்கள் ஆகியோரிடம் சென்று ஆலோசனைக் கேட்காமல் சற்றுத்தொலைவில் வசித்த என்னிடம் வந்தமைக்குத் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும் என்பதையும் என்னால் ஊகிக்க முடிந்தது. அவர் தனது மனைவியின் ஆலோசனையை அனுசரித்து என்னிடம் வந்திருக்க வேண்டும் என எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
நண்பர் J யின் மனவேகம் தணிந்ததும் சுருக்கமாகச் சொன்னேன்:- “இது உணர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலான பிரச்சினை. கொஞ்சம் ஆறுதலாகக் கேளும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையினால் அனர்த்தங்கள் மேலோங்கும் சந்தர்ப்பங்கள் தமிழ்நாட்டில் கூடுதலாக நிகழ்வதைப் பல வருடங்கள் அங்கு அவதானித்துள்ளேன். யாழ்ப்பாணச் சமூகத்திலும் அத்தகைய அனர்த்தங்கள் பலரை வதைக்கின்றன என்பதையும் அறிவேன். உம்முடைய நிலைமை துயரத்தைத் தருகின்றது. உமது நிலையில் நானிருந்தால் என்ன செய்வேன் தெரியுமா? கூட்டுக் குடும்ப வாழ்வைத் தவிர்த்து தனிக்குடும்ப வாழ்வைத் தீர்வாகக் கொள்ளுவேன். அதுவும் தொலைவிடத்தில் தனிக்குடும்ப வாழ்வை நடத்தவே முயலுவேன். இந்தப் பிரச்சினைக்குரிய உடன்தீர்வு மாமியாரின் கெடுபிடிகளிலிருந்து தப்பும் / விலகும் சந்தர்ப்பத்தை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்குவதுதான், உம்முடைய முகத்தில் புன்முறுவலையும் பேச்சில் கலகலப்பையும் விரைவில் காண விரும்புகிறேன்.”
94.

அதன் பின் அவரைக் கல்லூரியிற் சந்திக்கும்போது எல்லாம் அவரின் உற்சாகமான பேச்சையும் சிரித்த முகத்தையும் அவதானித்து மகிழ்ச்சி அடைந்தேன். சில மாதங்கள் கழிந்ததும் நான் வெளி மாவட்டங்களில் என் பணிகளைத் தொடர நேரிட்டது. சுமார் 25 ஆண்டுகளின் பின் அவரைக் கொழும்பில் சந்திக்க நேரிட்டபோது பழைய நினைவுகளை எல்லாம் மிகவும் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் மீண்டும் பகிர்ந்து கொண்டோம். மகிழ்ச்சியடைந்தோம்.
இந்தச் சம்பவம் தொடர்பான விவரணம் ஒரு பெண் தன்னை வாட்டிய கொடுமையிலிருந்து தப்ப / விலகக்யைாளக்கூடிய உபாயத்தைக் குறிக்கின்றது. பொறுமை, சாதுரியம், நன்னம்பிக்கை என்னும் அம்சங்கள் அல்லது பண்புக்கூறுகள் அந்த உபாயத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திடீர் தாக்குதல் / அதிரடித்தாக்குதல்
ஒரு பெண் வீட்டில் இருக்கும் போது ஒரு கொள்ளைக்காரனோ, காமவெறியனோ, பழிதூற்றுபவனோ பயமுறுத்தும் வேளையில் பயந்தவன் போலப் பாவனை செய்து திடீர் தாக்குதல் அல்லது அதிரடித்தாக்குதல் மூலம் அவனை உணர்விழக்கச் செய்தல் ஒரு தற்காப்புநுட்பம் ஆகும். கராட்டிக் கலைப் பயிற்சி, வர்மகலைத் தேர்ச்சி போன்றன பெண்கள் பயில வேண்டிய அத்தியாவசிய கலைகள் ஆகும்.
(இ) பின் செய்யத்தக்கன s
குடும்ப வன்செயல்கள் காரணமாக விளையும் பாதிப்புகள் அப் பெண்களின் எதிர்காலத்தைச் சிதைத்து விடுவதனோடு நின்று விடுவதில்லை அவர்களின் பிள்ளைகளான ஆண்கள், பெண்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்களான தம்பி, தங்கைகள் ஆகியோரின் எதிர்காலத்தையும் கெடுத்து விடுதலும் தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படுகின்றது. ஒரு தலைமுறையில் நிகழ்ந்த கொடுமைகள் அதன்பின் சில தலைமுறைகளையும் இடர்ப்படுத்துவதும் உண்டு.
இவற்றையும் உள்ளடக்கும் தீர்வுகளே பின் செய்யத்தக்கன என்ற தொகுதியில் விதந்து கூறப்படுகின்றன. அத்தொகுதியிலே
95

Page 54
(1) பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாகச் செய்யத்தக்கன
(i) அவர்களின் பிள்ளைகள் நெருங்கிய உறவினர்கள் தொடர்பாகச்
செய்யத்தக்கன.
(i) பெண்ணினம் தொடர்பாகச் செய்யத்தக்கன என்னும் பகுதிகள்
அடங்கியுள்ளன. அவற்றைச் சுருக்கமாகப் பரிசீலிப்போம்.
(1) பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் செய்யத்தக்கன
வன்செயலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் செய்யவேண்டிய உதவிகள் இரண்டு ஆகும்.
ஒன்று அவர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனையின்
அடிப்படையில் பரிகார சிகிச்சை அளித்தல் இரண்டு அவர்களுக்குச் சுயதொழிற் பயிற்சி மூலம் புனர்வாழ்வு
அளித்தல். இவை படுகொலை பயங்கரவாதத்தைத் தாக்குதல் காரணமாக விதவையானோர்க்கு சிறப்பாகப் பொருந்தும் தீர்வுகளாகும். இவை தொடர்பாக ரெபெக்கா ஏபிராமஸ் கூறுவதைச் சுட்டிக் காட்டல் பொருத்தம் ஆகும்.
“சிகிச்சை நிலையம் ஒன்றைச் சேர்ந்த நூறுநோயாளிகள் தொடர்பான பின்னிகழ்விவரண ஆய்வின் மூலம் இவ்வகை இழப்பின் பின்னர் வழங்கப்படும் நிபுணத்துவ ஆதரவானது தனிநபர் ஒருவர் தமது (துயர) அநுபவத்திலிருந்து மீட்சி பெறும் ஆற்றலிலே கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்னும் முடிபு அறியப்பட்டுள்ளது.”
"A Follow-up survey of 100 patients from the clinic showed that
skilled support after a los of this kind made A significant difference to the Individual's Ability to Recover From His or Her Experience.”
(Rebecca Abrams: “When Parents Die“ P6-46)
ரெபெக்கா ஏபிராம்ஸ் சுயதொழில் வாய்ப்பு மூலம் புணர்வாழ்வளித்தல் பற்றி இச்சந்தர்ப்பத்தில் கூறவில்லை. ஆயின் அதற்குரிய அவசிய தேவை நமது நாட்டு நிலைமையில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

(i) பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகள், தம்பி, தங்கைகளுக்குச்
செய்யத்தக்கன.
குடும்ப வன்செயல்களாற் பாதிக்கப்பட்ட பெண்களின் பிள்ளைகள், தம்பி, தங்கைகள் ஆகியோர் சட்டம் வரையறுக்கும் வயதுவந்தோர் MOORS வயது வராதோர் MHORS என்னும் இரு பிரிவுகளில் அடங்குவர். இவர்கள் யாவருக்கும் நேரிட்டிருக்கக்கூடிய, "அதிர்ச்சியிலிருந்து மீட்சி அளிக்கும் உளவளத்துறைச் சேவைகள் வழங்குவது முதலிற் செய்யத்தக்க தீர்வுப்பணி ஆகும். இரண்டாவதாக, அவ்விருபிரிவினரும் அடிப்படை மனித உரிமைகள் சாசனம், சிறுவர், உரிமைகள், பிரகடனம், பெண்கள் உரிமைகள் பிரகடனம் என்பவற்றைப்பாகுபாடுகள் இல்லாமல் அநுபவிக்கவும் அமைதியாக வாழவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நடவடிக்கைகள் அவர்களின்
(அ) நலன்களைப் பேணலும் மேம்படுத்தலும்
(ஆ) உரிமை மீறல்களைத் தடுத்தலும், கண்காணித்தலும் என்னும் இரு வழிகளில் அமுல் செய்யப்படவேண்டும். விரிந்த பரந்த பொருட்பரப்புடைய அந்நடவடிக்கைகள் தனித்தனிப் பரிசீலனைக்கும் அமுலாக்கத்துக்கும் உரியன ஆகும். அவை பற்றிச் சுருக்கமாக கூறுவதாயின்,
பாதிக்கப்பட்ட பெண்களில் தங்கிவாழும் வயது வராதோர், வயது வந்தோர் ஆகிய இரு பிரிவினரும், கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, உயிர்ப்பாதுகாப்பு, சமத்துவம், இனப்பண்பாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பேணவும் மேம்படுத்தவும் வேண்டும்.
(i) பெண்ணினம் சார்பாகச் செய்யத்தக்கன.
குடும்ப வன்செயல்களால் பாதிக்கப்படும் பெண்கள் என்பவர்கள் பெண்ணினம் என்னும் முழுத்தொகுதியின் ஒரு சிறப்புப் பகுதியினரே ஆவர். பெண்களுக்கு குடும்ப மட்டத்தில் இழைக்கப்படும் வன் செயல்களுக்கும் தொழிலிடம், கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது மையங்களில் அவிழ்த்து விடப்படும் வன்செயல்களுக்கும் இடையே இரு முகத் தொடர்பு உள்ளது. எனவே பெண்ணினம் சார்பாகச் செய்யத்தக்கன பற்றிச் சுருக்கமாகப் பரிசீலித்தல் தகுதியும் பொருத்தமும் ஆகும். அவ்வாறு செய்யப்படவேண்டியன
97-.

Page 55
1) பெண்ணியச் சிந்தனைகளைத் திரட்டல், பரப்பல், மேம்படுத்தல்
2) சட்டத்திருத்தங்களும், புதுச்சட்டவரைவும் ஆகிய இரு வகுதிகளில் அடங்கும். இவை பற்றிய சில கருத்துக்கள் இப்போது சமர்ப்பிக்கப்படுகின்றன.
* சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல்
பெண்ணியச் சிந்தனைகள் பெண்பாலாரிடம் விழிப்புணர்ச்சியையும் செயலூக்கத்தையும் ஏற்படுத்தும் அளவில் நின்றுவிடாது ஆண் பாலாரின் மனச்சான்றின் உறக்கத்தை கலைத்துவிடல், புரிந்துணர்வையும் ஆதரவையும் இணைத்துக் கொள்ளல் என்னும் இலக்கை நோக்கி விரிந்து செல்லவேண்டும். இத்தகைய விரிநோக்குடன் செயற்படும் பெண்ணிய அமைப்புகளும் அவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் ஊடகங்களும் பகிரங்கப்படுத்திய சம்பவத் தகவல்கள் சில பற்றிய அவதானக் குறிப்புகள் சுருக்கமாகத் தரப்படுகின்றன.
0 சம்பவம் -1 : விராலிப்பட்டிக் கொடுமை (பிரவாகினிஜனவரி 2003)
“பெண்கள் வயதுக்கு வருவதென்பது இயற்கையாக நடக்கும் விடயம். இந்த இயற்கையான விடயத்தைச் சிறுமிகள் மீது எவ்வளவு கொடூரமாகத் திணிக்கிறது இச்சமூகம். “(பிரவாகினி - 1-03) இந்தக் கொடூரத்தின் அடிப்படைக் காரணம் என்ன? அக்கொடூரத்திற்குரிய தீர்வு என்ன? மூடநம்பிக்கையும் படிப்பறிவின்மையுமே இக்கொடூரத்தின் அடிப்படைக் காரணங்களாகப் புலப்படுகின்றன. அறியாமை இருளில் வாழும் இத்தகைய கிராமங்களில் அறிவொளியைப் பாய்ச்சுதலும் சீர்திருத்தப்பணிகள் புரிதலுமே அக்கொடூரத்துக்குரிய நிரந்தரத் தீர்வுகள் ஆகும். இப்பணிகளில் பல் தேச அமைப்புக்கள் இணைந்து செயற்படுதல் வரவேற்கத்தக்க வழியாகும்.
0 சம்பவம் - 2: மலையகத்தில் நிகழும் கருத்தடை
அதிர்வுகள் என்னும் மலையகப்பெண்கள் அமைப்புமலையக மக்களின் சமூக-பொருளாதார நிலையைப்பயன்படுத்தி திட்டமிட்ட கருவழிப்பு தொடர்பான பிரச்சாரப்போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது. அவ்வமைப்பு நடத்தும் பிரச்சாரப் போராட்டத்தில், “இனப்படுகொலையைத் தவிர்ப்போம்” மலையகத்தில் திட்டமிட்ட கருத்தடையை ஒழிப்போம்” என்னும் சுவரொட்டி வாசகங்கள் சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் உபாயமாகப் பிரயோகிக்கப்பட்டன. இவை நாம் அறிந்து கொண்ட செய்திகளாகும்.
مسييه 98ى

அவ்வமைப்பின் பிரச்சாரம் தொடர்பாகப் பின்னர் ஒரு மறுப்பு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டது. அம்மறுப்பிலே மருத்துவர்கள் தம்மிடம் கருத்தடைக் கோரிக்கையோடு வந்தவர்களுக்கு தமது கடமையைச் செய்தார்களே ஒழிய கட்டாயப்படுத்தல் திட்டமிட்டுச் செயற்படல் ஆகிய குற்றச்சாட்டுக்களைப் புரியவில்லையென்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மறுப்பு உண்மையெனநம்பத்தக்க முறையில் ஒளிபரப்பப்பட்டது என்பதைப் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்வர். ஏனெனில் மறுப்புரையில் பங்குவகித்த மருத்துவத்துறை அதிகாரி கருத்தடையைத் தொழிற் கடமையாக மருத்துவர்கள் செய்தார்கள் என்று கூறினாரே தவிர அதனை வேறு எவருமே திட்டமிடவில்லை என்றோ அதன் நோக்கம் இனப்படுகொலையாக இருக்கவில்லை என்றோ கூறவில்லை. எனவே 'அதிர்வுகள்’ என்னும் அமைப்புக்கு ஏற்பட்ட சந்தேகத்துக்குரிய நிவிர்த்தியை வேறு வழியில் தான் அறிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் மலையக மக்களிலே எஞ்சியுள்ள நாடற்றவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் எதிர்ப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை எல்லோரும் அறிவர். இத்தீர்மானம் நிறைவேறியதன் பின்னர் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் இல்லாத அமைப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் உள்ள மற்றோர் அமைப்போடு முரண்பட்டு வாக்குவாதம் செய்த தகவற் குறிப்பு ஒன்று தினசரி ஒன்றிலே பிரசுரமானது. முரண்பட்ட அமைப்பு மற்றைய அமைப்பு அத்தீர்மானத்தை எதிர்த்துவாக்களித்திருக்க வேண்டும் என்று வாதமிட்டபோது கூறிய காரணம் இலங்கையில் சிறுபான்மை மக்களின் தொகையும் பிரதிநிதித்துவமும் அதிகரிக்க இடம் அளித்திருக்கக்கூடாது என்பது ஆகும். இச்செய்தி இனப்படுகொலையைத் திட்டமிடுபவர் யார் என்ற வினாவிற்கு விடை கூறுகின்றது.
 ைசம்பவம் - 3 : துணிச்சல் மிக்க மணப்பெண் - ஆதாரம் வீரகேசரி 7
5-2003
நிஷா சர்மா உயர்கல்வித் தகைமையுள்ள, போதிய வளமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண், அவர் வரதட்சணைப் பிரச்சினையை வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கலாம். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் தனது மறப்பை உறுதியாகத்
99

Page 56
தெரிவித்துவிட்டு வெளியேறிய அவரின் துணிச்சல் உலகு எங்கும் வாழும் பெண்களின் கவனத்தையும் கொடுமைகளை நீடிக்க விடலாகாது எனக்கருதும் ஆண்களின் கவனத்தையும் ஒருங்கே ஒருமுனைப்படுத்துவதில் வெற்றி ஈட்டியுள்ளன. அந்த நோக்கில் அவரின் பாயம் பாராட்டத்தகுந்ததேயாகும்.
* பெண்கள் நலன்பேணும் சட்டவாக்கம்
சொத்துரிமை, கல்வியுரிமை சிலவகைத் தொழில் புரியும் உரிமை போன்றன மறுக்கப்படும், பறிக்கப்படும் நாடுகளும் பிரதேசங்களும் உலகின் சில கண்டங்களில் இன்றும் காணப்படுகின்றன. எனவே பெண்களின் நலன்களைப் பேணும் புதிய சட்டங்களின் வரைவும் ஏற்கனவே அமுலிலுள்ள சட்டங்களிற் காணப்படும் குறைகளை நீக்கித் திருத்தங்கள் செய்தலும் அவசியம் ஆகும். உதாரணமாக, இலங்கையின் கல்விச்சட்டவரலாற்றை எடுத்துக் கொண்டால் கட்டாயக் கல்வியைப் பொறுத்த வரையில் ஒரு காலத்திலே முஸ்லிம் பெண்கள், தமிழ் பெண்களில் ஒரு சாரார் ஆகியோருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அடுத்த நிலையில் பிள்ளைகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் விதந்து கூறிய போதும் அதனை அமுலாக்க அவசியமான சட்ட விதிகள் வரையப்படவில்லை. ஆகவே கட்டாயக் கல்விச் சட்டம் வலுவற்ற ஒன்றாகவே நீடித்தது. ஆனால் இப்போது பள்ளிப்பருவ பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றாருக்குத் தண்டனை வழங்கும் ஏற்பாடுள்ள புதிய கல்வித் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அமுல் செய்யப்படுகின்றது. இச்சட்டத்திருத்தம் பெண்களின் கல்வியுரிமையை மேம்படுத்துகின்றது என்பது தெளிவு.
மற்றுமொரு உதாரணம் : இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலே இலங்கையில் பொறியியற் கல்வி பயிலும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பின் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஒரு தசாப்தத்தின் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் பெண்களையும் பொறியியற்கல்லி பயில அனுமதித்தது.
இந்த உதாரணங்கள் பெண்களின் நலன்களை முழுமையாகப் பேணும்
புதிய சட்டங்களை வரையறுத்தலின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. பல நாடுகள் பெண்களின் நலன்களை பேணும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
100

(பார்க்க : பின்னிணைப்பு அட்டவணை - பிரவாகினி ஜனவரி, 2003). நமது நாட்டில் அத்தகைய முழுமையான சட்டம் ஒன்றை உருவாக்கல் அவசியம். அத்தகைய சட்டம், அது பற்றிய குற்றவியல் தண்டனைக்கோவை என்பவற்றின் அடிப்படையிலே விசாரணை செய்து குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் விதிக்க மகளிர் நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும். இவை பெண்களின் நலன்களை மேம்படுத்தப் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.
* முடிவுரை
பெண்களின் உயர்வுக்கு உறுதுணை புரிதல் ஆண்களின் தவிர்க்க இயலாத கடமை ஆகும். இது தொடர்பாக சுவாமி விவேகானந்தர் விடுத்த அறைகூவலோடு இந்த ஆய்வுரையை நிறைவு செய்கிறேன்.
“நீங்கள் எப்போதும் பெண்களையே குறை கூறுகிறீர்கள். ஆனால் அவர்களுடைய நன்மைக்காக ஏதாவது செய்திருக்கிறீர்களா? அவர்களுக்கு எதிராகச் சாஸ்திரங்களில் எழுதிக் கொண்டும், கடுமையான சட்டங்களின் மூலம் அவர்களை அடக்கி வைத்துக் கொண்டும், அவர்களை வெறும் பிள்ளைபெறும் இயந்திரங்களாகவே ஆக்கிவிட்டீர்கள். அன்னை பராசக்தியின் தோற்றங்களான பெண்களை உயர்வுபெறச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு உயர்வடைய எந்த வழியும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்”
பெண்களின் உயர்வே ஆண்களின் உயர்வின் அடிப்படை என்ற விவேகானந்தரின் சிந்தனை இன்றும் மதிக்கப்படவேண்டிய உண்மை என்பதில் ஐயமில்லை.
(சுவாமி விவேகானந்தர் இந்தியப் பெண்மணிகள் : ப - 17)
101

Page 57
References
Amaroh Friedl, Cabcal H - VIOLENCEDURING PREGNANCY AND SUBSTANCESABUSE
Et Al (1990) Burge Sk (1989)
Dobash R.E & Dobash R.P (1979)
Jaffe PC, Wolfd. A Wilson S.K (1990)
- American Journal of Public Health 80-575 - VIOLENCE AGAINST WOMENASA HEALTHCARE ISSUE - Family Medicine. 21:368-73 - WOLENCE AGAINST WIVES - The Free Press, New York - FOURTH WORLD CONFERENCE ON WOMEN (1995) - Beijing, China
- CHILDREN OF BATTERED WOMEN - Sage, New Bury Park, California
Mirrlees Black C (1995) - ESTIMATING THE EXTENT OF DOMESTIC VIOLENCE
Mullender A & Morley R (1994) Rebecca Abrams (1999)
Scottish Forum For
Public Health Medicine
(1997)
Sian Griffiths &
David J. Hunter (1999)
(EO)
United Nations (1993)
W.H.O. (1997)
- FINDINGS FROM THE 1992 BRITISH CRIME SURVEY - Home Office, Research and Planning Unit, London
CHELDERN LIVING WITH DOMESTC WOLENCE - Whiting and Birch, London
- WHEN PARENTS DE
Routledge, New York SCOTTISH NEEDS ASSESSMENT PROGRAMME REPORT, - Scottish Forum For Public Health Medicine,
Glascow
- PERSPECTIVES IN PUBLIC HEALTH - Rade Liffe Medical Press Ltd, Abingdon Oxon
DECLARATION ON THE ELMINATION OF WOLENCE
AGAINST WOMEN,
- U. N. General Assembly, Vienna.
- VIOLENCE AGAINST WOMENA PRIORITY HEALTHISSUE
- W.H.O, Geneva
102.


Page 58
67ZZz7 626
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்,
இR, ஃதரிராம வீதி கோழும்பு கிெ. தோலைபேசி: 2595295, 259682
O.
பெண்கள் கல்வி ஆய்வு
மலையக மக்களுடைய இை கமலினி கணேசன்
சமூகக் கோட்பாட்டுத் தளத்தி
வர்த்தகம் சாதி பெண்நிலை செல்விதிருச்சந்திரன்
பெண்நிலைச் சிந்தனைகள் சித்திரலேகா மெகானகுரு
பெண்களின் வாய்மொழி இ ஒப்பாரி தாலாட்டு பற்றிய சமூ செல்விதிருச்சந்திரன்
Gendered Subjects (Eng Ed. By Sey ThirLIChandran
Subjectivities and Histo; By Sesy. Thiruchandran
Feminine Speech Trans An Exploration into the Lul Ву Se/ly Thiruc/алсrал
Writing an Inheritance: 1860 - 1948, Wol. 1 Edited by: Neouser derine, M
Celebrating Sri Lankan " Wolume II Edited by as line Gooneral,
PRINTED BY UNIE ARTS (PWT) LTD

வளிமfடுகள்
நிறுவன புத்தக வெளியீடுகள்
ாத்துவ இருப்பில் பால்நிலை
தில் பால்நிலை
ப் பண்பாடு பற்றிய நோக்கு
லக்கியம் முகவியல் நோக்கு
lish)
ricism
missions labies and Dirges of Women
Women's Writing in Sri Lanka
finoli Samarakkody
Women's English Writing
|. COLOMBO 13, TEL:2330195, 2478133