கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்னொரு நூற்றாண்டுக்காய்

Page 1
இன்னொரு நூா
1920 களில் இலங்ை கமிம்ப் பெண்ணின் அ சிந்தை
பெண்கள் கல்வி
 

ாற்றாண்டுக்காய்
கயில் வாழ்ந்த ஒரு ரசியல், வாக்குரிமைச் னகள்
ஆய்வு நிறுவனம்

Page 2

இன்னொரு நூற்றாண்டுக்காய்
(1920 களில் இலங்கையில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அரசியல், வாக்குரிமைச் சிந்தனைகள்)
சாரல் நாடன்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்

Page 3
பொருளடக்கம்
முகவுரை
அறிமுகம்
பெணி வைத்தியர்
சமுதாயப் பணியில் பெண்கள்
மகளிர் வாக்குரிமைச் சங்கம்
காலப் பின்னணி
பெண்கள் முன்னேற்றம்
சர்வஜன வாக்குரிமை
நிறைவாக
அடிக்குறிப்புகள்
அட்டவணை 1
அட்டவணை 2
அட்டவணை 3
பின்னிணைப்பு
இந்திய இல்வாழ்க்கை
ஸப்திரீகளும் வாக்குரிமைகளும்

முகவுரை
சாரல் நாடனின் இச்சிறு நூல் என்னை பல வகையில் கவர்நதுள்ளது. மூனறு விதங்களில அதன முக்கியத்துவத்தை நான் உணருகிறேன். ஒரு ஆணி. ஒரு வரலாற்றுப் பெணணின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு சிறப்பம்சம். இறைவனுக்கு தொண்டு செய்யும் பெணணையும் கற்பரசிகளையுமே கதைத் தலைவியாகக் கொள்வது இலக்கிய மரபு மாத்திரமன்று சமூக நூல்களும் கூட பெணணினி பெருமையை அக்கோணத்தில் மட்டுமே நிறுவி வந்தன. அந்நிலையில் அரசியல உரைத்த ஒரு பெணணைக் கதைத் தலைவியாகக் கொண்டு ஒரு சமூக நூல் வெளிவருவது. அதுவும் கூட ஒரு ஆணினால் இயற்றப்படுவது ஒரு சிறப்பம்சமே. வரலாறு பொதுவாகப் பெண்ணுக்கு ஒர வஞ்சனை செய்து கொண்டே வந்திருக்கிறது. பெணி பற்றிய வரலாற்றுச் செய்திகள் காலத்தால் புதைக்கப்பட்டு விட்டன. ஒரு ஆணுக்கிருந்த வரலாற்று மகிமை பெண்ணுக்கு கிடைக்கவில்லை. தற்போது உலகெங்கிலும் பெணநிலைவாதிகள் பெண்களது ஆக்கங்கள் செய்கைகள் போன்றவற்றை தேடி எடுத்து இன்னுமொரு வரலாற்றை உருவாக்குகிறார்கள் சமூகத்தில் மேலாண்மை படைத்த அரசர் மந்திரி அவர்கள் வகுத்த அரசியல் போர் சமாதானம் போன்றவை மாத்திரம் வரலாறாக இருந்த காலம் போய் மக்கள் வரலாறு சமூக வரலாறு போனறன கவனத்திற்கெடுக்கப்பட்ட காலத்திலுங் கூட பெண்கள் 617 to 60LDuggi/dig 6.176,5560s. Women's History, New Hitoricism போனற சொற்றொடர்கள் இப்படி ஓரங்கட்டப்பட்டோரை மையத்துக்கு கொணடு வருவதற்கான முயற்சிகளின் விளைவுகளே. இந்தியாவில் சுசிதாருவும் லலிதாவும் பெண்கள் இலக்கியங்களை இந்தியா முழுவதும் அலசித் தேடி இரு வெளியீடுகளை

Page 4
பதிப்பித்துள்ளார்கள் பல அதிசயிக்கத்தக்க அற்புதமான படைப்புக்களை இன்று நாம் அம் முயற்சியின் பலனாகப் பெற்றுள்ளோம் சி. எஸ். லக்ஷமிநாடு முழுவதிலும் சரித்திர முக்கியத்துவம் பெறாத ஆனால் அப்பதவிக்கு லாயக்கான பல பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டி சிறு நூல்களாக ஆக்கி உள்ளார் இவ் வரலாறுகள் புதைந்து போனது, ஆணி நோக்கில் வரலாறுகளைபார்ப்பதின விளைவேதானி என்பதில் ஐயமில்லை. −
நல்லம்மாவை வெளிக்கொணர சாரல்நாடன் பல தளங்களில் உழைத்துள்ளார். ஆய்வுகள் பல செய்துள்ளார். பெண் வைத்தியராகிய நல்லம்மா பெண்களது வாக்குரிமைக்கு ஏனைய பல பெண்களுடன் ஒத்துழைத்து தீவிரமாகப் போராடி உள்ளார்.
சாரலி நாடனினி இந் நூல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது.
முதற் பாகம் அவரது கருத்தோட்டத்தில் நல்லம்மாவின் பங்கு எத்தகையது என்பதை விளக்குகிறது.
இரணடாம் பாகம் பின்னிணைப்பாக நல்லம்மாவினால் எழுதிப் பிரசுரிக்கப்பட்ட சில கட்டுரைகளைக்
கொண்டுள்ளது.
இந் நிலையில் சாரல் நாடனின் இச்சிறு நூல் வரலாற்றில் ஒரு பெண்ணின் பங்களிப்பை ஆவணப்படுத்தி உள்ளது.
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பு 06

முதற்பதிப்பு : ஆனி 1999
தலைப்பு ; இன்னொரு நூற்றாண்டுக்காய் ஆசிரியர் சாரல் நாடன்
முகவரி ; ‘சாரலகம், 60 ரொசிட்டா
வீடமைப்புத் திட்டம், கொட்டகலை,
வெளியீடு பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
விலை : ebusT 75/=
பக்கம் 53 .

Page 5

இன்னொரு நூற்றாண்டுக்காய்
பெண்களின் உரிமைகள் குறித்து இன்றும் இலங்கையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. தியாகம், தாய்மை, ஒழுக்கம், இல்லறம் என்ற உயர்க் குணங்களுடையவர்களாக அவர்களைக் காண விரும்புபவர்களே நிறைய உள்ளனர். எல்லாவிதத்திலும் அவர்களைத் தம்மோடு சமமானவர்களாகக் கருதும் மனோபாவம் ஆண்கள் பலரிடையே இன்னும் எழக்கானோம்.
தக்கம் நிலவிய தொழில் துறைகளிலெல்லாம் இன்று ரமாகப் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனினும், ஆ பெண்கள் வெற்
பெண்களைப்ற்றி பெண்களே சிந்திக்கவும் பெண்களே அணிவகுக்கவும் ஆரம்பித்துள்ள ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். உலகமெங்கும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களின் மனித உரிமைகள்' என்பது 1998ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உரிமைகளுக்காக முன்னின்று உழைத்தப் பெண்களைப்பற்றிய தகவல்கள் மேலெடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த முறையில், கட்சி அரசியலுக்குட்படாது, பெண்களின் வாக்குரிமை குறித்து சிந்தித்த ஒரு பெண்மணியின் சிந்தனைகள் இங்கு அறிமுகப் படுத்தப் படுகிறன.
அறிமுகம்
இருபத ம் நூற்றாண்டின் இரண்டாம் கூறுகளில் நல்லம்மாவும் ர் சத்யவாகீஸ்வரய்யரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தனர். அப்போது இலங்கையில் பிரித்தானியரின் ஆட்சி நடைபெற்றுக்
நன்டைபெற்து. எனவே, தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கெர்வதற்கு மேலதிகமான பிரயத்தனங்களையும்,
களில் தேயிலைத் தோட்டப் பொருளாதாரம் நாட்டின்
முதுலுெம்பாகச் செழித்து நின்றது. புதிது புதிதாக சாலைகள் திறக்ப்பட்டன. மிஷனரிகளின் u60 ful 6OTT6) பள்ளிகள்

Page 6
தோற்றுவிக்கப்பட்டன. தென்னிந்தியாவிலிருந்து லட்சக்காசாக்கில் ஏழைத் தமிழ் மக்கள் தேயிலைத் தோட்டங்களில் செறிவாகக் குடியேறி உழைத்துக் கொண்டிருந்தனர். கொழும்புத் துறைமுகத்தில் பல்லாயிரக் கணக்கான கேரளத்து மக்கள் தொழிலாளர்களாகச் சேவை செய்து கொண்டிருந்தனர்.
கொழும்பு நகரில் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களும் வியாபாரத்துறையில் சிறந்து விளங்கினர். பொதுவாக நாடு பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை எதிர்பார்த்து இந்தியாவில் மக்கள் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததைப்போல இலங்கை மக்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற இயக்கத்தின் மூலம் அரசியல் சீர்திருத்தத்துக்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன. துறைமுகத்தொழிலாளர்களும் புகையிரத தொழிலாளர்களும் வேலை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். கடல் கடந்த இந்தியர்கைளைப்பற்றி, இந்தியாவில் கரிசனை காட்டுபவர்கள் உரத்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தனர். இத்தகு சூழலில்தான் நல்லம்மா - சத்ய வாகீஸ்வரய்யர் தம்பதியினர் நமக்கு அறிமுகமாகின்றனர். இவர்கள் 1907 ம் ஆண்டு வங்கால்ப்பிரிவினையின் போது பீறிட்டுக் கிளம்பிய தேசிய உணர்வினால் உந்தபட்டவர்கள்.
பெண் வைத்தியர்
நல்லம்மா மருத்துவம் பயின்ற இந்தியப் பெண்மணிதம்மைப்போல மருத்துவத்துறையில் பணியாற்றும் பெண்கள் மேற்கத்திய நாடுகளில் ஆற்றுகின்ற சமூகப் பணிகளை அவர் நன்கு அறிந்து னித்திருந்தார்.
பட்டமும் L. M பட்டமும் பெற்றவர். இவருக்குச் சுன்னாக இணுவில் என்னுமிடத்தில்அமைந்திருந்த மெக்லியட் மருத்துவ மனையில் பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது.
லண்டன் எடின்பரோவிலும், டப்ளினிலும் படித்து :: & S
மெக்லியட் தனியார் பெண்கள் மருத்துவமனை 1898 ல் மெரிக்க மிஷனரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. சுற்றுவட்டத்தில்வசித்த
மேரிரட்னத்தின் சமூக சேவையும், பெண்களுக்கான அசியல் நடவடிக்கைகளும் நல்லம்மாவைப் பெரிதும் கவர்ந்தன.
 
 
 

"இலங்கைப் பெண்களிடை உளக்க மூட்டிய வெளிநாட்டுப் பெண்களில் வைத்தியத் தொழில் புரிந்தவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். மிஷனரி வேலைத்திட்டங்களிலும் காலனித்துவ மருத்துவ சேவையிலும், தனிப்பட்ட முறையிலும் அவர்கள் பணியாற்றினர். மிஷனரி வைத்தியராக இலங்கைக்கு வந்து பணிபுரிந்து மிகப்பிரபலமான பெண் வைத்தியர் மேரி ஹெலன் ரட் னம் ஆவார். சுமார் 50 வருடங்கள் சமூக சீர்தருத்தம், உடல் நலக்கல்வி குடும்பத்திட்டமிடல், பெண்களின் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை முன்னெடுத்த ஒரு தேசிய பிரமுகர்’ என்று அப்பெண்மணியைக் குமாரிஜெயவர்தனாதன்நூலில் குறிப்பிடுகின்றார். நல்லம்மாவின் சிந்தனைகளில அவற்றின் பிரதிபலிப்பை காணலாம்.
மருத்துவ மாதர்களுக்கு சமூக உணர்வு அதிகம். தமது தொழிலில் ஆண் ஆதிக்கப் பாதிப்புக்கு முகங்கொடுத்து வாழும் சூழல் வைத்தியத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு அதிகம். மற்றையப் பெண்களுடன் ஒப்பிடுகையில், இத்துறையில் ஈடுபடும் பெண்களுக்கு இதனால் நெஞ்சுறுதி அதிகம் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளுண்டு.
பாரத நாட்டுப் பெண்களில் பலர் ஆங்கில சாம்ராஜ்யத்துக்கெதிரான நடவடிக்கைகளிலீடுபட்டுத் தேசத்தலைவர்களுடன் சிறைக்குச் சென்றதையும் நல்லம்மா அறிவார்.
சத்யவாகீஸ்வரய்யர் சென்னையில் பயின்றவர். பீ.ஏ. பட்டதாரி. கொழும்பில் அட்வகேட்டாக பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்குகிறார். இக்காலப்பகுதியில் கொழும்பை வசிப்பிடமாக வைத்துக்கொண்டு இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வக்கீலாகப்பணி புரிவதில் வேறுசில இந்தியர்களும் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தனர்.
சத்யவாகீஸ்வரய்யர் இந்திய வம்சாவளித்தோட்ட மக்களின் விடுதலைக்கு உழைப்பதில் தமது சட்ட அறிவைப்பயன்படுத்தினார். அந்த மக்களுக்காக, கட்டணம் எதுவும் அறவிடாது நீதிமன்றங்களில் தோன்றி வாதாடினார். அவ்விதம் வாதாடுவது தன்னுடைய சமூகக் கடமைகளில் ஒன்றென அவர் கருதினார்.
1922ம் ஆண்டு இரத்தினபுரி பகுதியில் ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டவன் ஒரு தோட்டத்தொழிலாளி. அவனுக்காக வாதாடுவதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை என்றிருந்த ஒரு பலவீனமான நிலைமையில் அவர் வழக்கை பாரமெடுத்தார். “முத்தண்ணன் கொலை வழக்கில் முதன்முதலாக ஆஜரானேன்.அதுவே தோட்டி மக்களோடு
3

Page 7
எனக்குண்டான முதல் தொடர்பு” என்று அவரே ஒன்பதாண்டுகளுக்கு பிறகு (28-20-1931) கண்டி நகரசபை மண்டபத்தில் நடந்த ஒர் அரசியல் கூட்டத்தில் அந்த நிகழ்ச்சியைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.
இந்திய மக்களின் அவலத்தைத் துடைப்பது மாத்திரமல்ல, அவர்களுக்கெதிராக வீசப்படும் அவதூறையும் சத்யவாகீஸ்வரய்யர் வெறுத்தார்.
“நம்மை அடிமை என்றும் படிப்பறிவில்லாதவர்களென்றும் கூறுகிறார்களே இதை மாற்றி அமைக்க நமக்கு பத்திரிகை அவசியம்” என்று நாவலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் 4-11-1928ல் நடந்த அரசியல் கூட்டமொன்றில் வலியுறுத்திய அவர்,
“இந்தியர்களும் மனுஷர்கள்தான் என்று காண்பிக்கும் பொருட்டு தமிழிலும், இங்கிலீஸிலும் பத்திரிகை நடத்த வேண்டும்” என்றும் ஆலோசனை கூறினார். உண்மையில் அதே ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து “இலங்கை இந்தியன்” என்ற பெயரில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வாரப்பத்திரிகையை அவர் நடாத்த ஆரம்பித்தார்.
இலங்கை இந்தியன்’ வாரப்பத்திரிகையில் டாக்டர் ச. நல்லம்மா என்று தமிழில் தன்னை முன்னிறுத்தியும், கீழே அடைப்புக் குறிக்குள் gråléfiloloģfilâd Dr. (Mrs.) Nallamma Satia Vagiswarar GT6örg அடையாளங்காட்டிக் கொண்டும் சத்யவாகீஸ்வரய்யரின் மனைவி நல்லம்மா எழுதியிருக்கும் கட்டுரைகளில் காணப்படும் கருத்சுக்களும், தகவல்களும் அவரை நமக்கு இனங்காட்ட உதவுகின்றன.
இலங்கையின் நவீன சமூக அரசியல் வரலாற்றின் உருவாக்கத்திற்குப் பங்களித்தவர்களுள் நல்லம்மாவுக்கும் தனியானதோர் இடமுண்டு என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.
சமுதாயப்பணியில் பெண்கள்
தமிழ்ச் சமூதாயத்தில் இல்லற வாழ்க்கையின் நல்லறம் பேணுபவர்களாகவே பெண்கள் கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். தமிழிலக்கியமும், இந்து சமயமும் இவைகளையே வலியுறுத்தி வந்திருக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் அரசியல் விழிப்புணர்வு ஆசியக்கண்டத்தில்

ஏற்பட்டதன் விளைவாகவே பெண்களின் மத்தியில் புத்துணர்வு ஏற்பட்டது. பெண்களின் நிலைமைக் குறித்து ஆண்களும் முன்னேற்றமாகச் சிந்திக்க ஆரம்பித்தனர்.
காலனித்துவ இலங்கையில் அரசியல், சமூக சீர்த்திருத்தத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களென மூன்று தமிழ்ப் ப்ெண்களைப்பற்றி அறிய முடிகிறது. ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மற்றிருவர் இலங்கையில் குடியேறி வாழ்ந்த இந்திய வம்சாவளித் தமிழ்ப் பெண்மணிகள். மீனாட்சியம்மாள், நல்லம்மா என்ற அந்த இருவரும் தம்முடைய கணவர் மாரின் சமூக, அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பக்கதுணையாக நின்று பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சியம்மாவின் கணவர் நடேசய்யர் தோட்டப் புறங்களில் முதற் தொழிற்சங்கத்தை, அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் - நிறுவியவர். சட்ட நிரூபண சபையிலும் (1925-1931) அரசாங்க சபையிலும் (1936-1947) இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணியவர். சத்யவாகீஸ்வரய்யர் காந்தி சங்கம்' என்ற அரசியல் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவராயிருந்தவர். தம் கணவரின் செயற்பாடுகளில் மீனாட்சியம்மைக்கும், நல்லம்மாவுக்கும் பிடிப்பிருந்தன.
நடேசய்யர் சத்யவாகீஸ்வரய்யர் என்ற இருவருமே 1947 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.
இலங்கையர்களிடையே ஆங்கிலக் கல்வியும், கிறித்தவ மதப்பிரசாரமும் ஏற்படுத்திய சாதக பாதகங்களை இந்த பெண்மணிகள் மூவருமே விளங்கி கொள்ளும் திறமைப் பெற்றிருந்தனர்.
தமிழ்ப் பெண்களும் இந்த மாற்றங்களுக்கேற்ப தம்மை பக்குவப் படுத்திக் கொள்ளவும் தயாராக வேண்டுமென்பது அவர்களின் விருப்பமாயமைந்தது.
பொது வாழ்வில் ஈடுபட்டுழைப்பவர்களுக்குப் பேச்சாற்றலும்
எழுத்தாற்றலும் இருபெரும் சக்திமிகுந்த ஆயுதங்களாகப் பயன்படுகின்றன என்பதை நம்மால் இன்று எளிதில் விளங்கிக் கொள்ள
முடிகிறது.
சமகாலத்தவர்களான இந்த மூன்று பெண்மணிகளும் எழுத்து, பேச்சு,

Page 8
பத்திரிகைத்துறை ஆகியனவற்றில் ஈடுபாட்டுடன் உழைத்திருப்பதைக் காணுகையில் சமூக மேம்பாட்டில் இவர்களுக்கிருந்த ஆர்வம் தெட்டெனப் புலப்படும். இம்மூவரிலும் நல்லம்மாவுக்கே அரசியலிலும், பெண்கள் வாக்குரிமையிலும் அதிக ஈடுபாடிருந்ததாக தெரிகிறது. அவரால் எழுதப்பட்டவைகளில் நமக்கு இன்று கிடைக்கப் பெறுகின்ற சில கட்டுரைகளைக் கொண்டே இவ்விதம் அவரைப் பற்றிய உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது என்றால், அவரைப் பற்றிய மேலதிக தேடுதல்கள் இன்னும் மேலான அபிப்பிராயத்துக்கு இட்டுச் செல்ல இடமிருக்கிறது.
பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவது மாத்திரமன்றி அரசியலில் பங்கேற்கவும் வேண்டும் என்பதில் நல்லம்மா தீவிரமாக இருந்துள்ளார்.
மகளிர் வாக்குரிமைச் சங்கம்
1927 st லேடி டயஸ் பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைக்கப்பட்ட இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கம் Ceylon Women's Franchise Association 5L6g GustioTessit ugusoly அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. நல்லம்மாவும் அதில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் இந்த சங்கம் பெண்களுக்கு வாக்குரிமைப் பெறுவதில் தீவிரமாக முன்னின்று உழைத்தது. டொனமூர் ஆணக்குழுவினர். அரசியல் சீர்த்திருத்த விசாரணைகளை மேற்கொண்டபொழுது இச்சங்கத்தினரும் ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியம் அளித்தனர்.
1928 ஜனவரி பதினொன்றாம் திகதி டொனமூர் சீர்திருத்த ஆணைக்குழுவினர் முன் தோன்றியவர்களுள் நல்லம்மாவும் ஒருவர். அப்போது அவர் அச்சங்கத்தின் இணைச்செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். டொனமூர் விசாரணைக் குழுவினரின் ஆரம்பகால விசாரணைகளில் ஆண்களின் பங்களிப்பு மாத்திரமே இருந்தது. விசாரணைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிச் செய்தவர்களில் நல்லம்மாவும் ஒருவர்.
அக்காலப்பகுதியில் பெண்களின் உரிமைகளைப்பற்றி பேசுபவர்கள் அரசியலில் உரிமை கொடுப்பதை பகிரங்கமாக மேடைகளிலும் சிலர் எதிர்த்தனர். புகழ்பெற்ற அரசியல் வாதிகளில் ஒருவரான சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களில் ஒருவராவர்.

டொனமூர் ஆணைக்குழு சம்பந்தமான விவாதத்தில் கலந்து கொண்டு 1928 ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி அரசாங்க சபையில் பேசிய இராமநாதன் -
“பெண்கள் வாக்குரிமை என்பது நாறிப்போன தத்துவம்” என்று கூறியுள்ளார். இராமநாதனும் டொனமூர் சீர்திருத்த ஆணைக்குழுவினர் முன்தோன்றி சாட்சியமளித்துள்ளார். அவரது சாட்சியம் 1927 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ம் திகதி பதிவாகியுள்ளது.
“நீங்கள் எங்கள் பெண்களை அவர்கள் பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளமை எதற்காக என்பது பற்றிநிங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் விட்டிலேயே இருக்க வேண்டும் அதற்கப்பாலான ஒரு உலகமும் இல்லை. வீட்டுப்பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம் "
என்று அவர் வாதிட்டிருப்பதைக் காணுகையில் பெண்ணுரிமைபற்றி பேசுவதற்கு எந்தளவுக்கு ஒருவருக்கு மனோதைரியம் தேவைப்பட்டிருக்கின்றது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ளமுடிகிறது.
இத்தகு சூழலில்தான் “இலங்கைவாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கம்” தோற்றுவிக்கப்பட்டது. பெண்ணுரிமை கோஷத்துக்காக, போர்க் கொடியுடன் தோற்றுவிக்கப்பட்ட இச்சங்கத்தின் பணிகளைப்பற்றி நல்லம்மா தனது கட்டுரை ஒன்றில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார் (2)
"ஆண் மக்கள் பலர் பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது புத்தியல்ல என்று பேசிக் கொள்கிறார்கள் என்று நாம் கேள்விப்பட்ட பொழுது இதுதான் ஏற்றசமயமெனக் கண்டு பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஒன்றை தாபித்தோம்” என்ற வரிகள் டொனமூர் ஆணைக்குழுவினர் முன் தோன்றிய இராமநாதன் போன்ற ஆண் களின் பிற்போக்கான வாதங்கள் எதிர்ப்பின்றிச் செயற்பட விடக்கூடாதென்ற எண்ணத்தை நல்லம்மாவுக்கு ஏற்படுத்தியதை வெளிப்படுத்துகின்றது
." அத்தோடு நாம் நின்று விடவில்லை சட்ட விசாரணைக்காரரை நாம் முகதாவில் கண்டு, நமது தேச அரசாட்சியில் காணப்படும் பெரும் குறைகள் இவையென எடுத்துக்காட்டிப் பேசினோம்”என்ற வரிகள் விசாரணைகளில் ஆண்கள் கலந்து கொள்வதையும், ஆணாதிக்கம் தேச அரசியலிலும் வேரூன்றியிருப்பதையும்
7

Page 9
வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கிறது.
“அவர்களும் தீர்க்கமாய் விசாரணை செய்து, நாங்கள் சுட்டிக் காட்டியவை LLIT6)th உண்மையென’
ஒப்புக்கொண்டனர் அதனால்தான், அவர்கள் பெண்களாகிய நமக்கு வாக்குரிமை கிடைக்கத்தான் வேண்டுமேற்று சிபார்சு செய்வார்கள் என்ற நிச்சயம் நமது மனதிலுண்டாயிற்று நாம் காத்திருந்த படியே சட் ட திருத்த விசாரணைக்காரர் இலங்கைவாழ் மகளிர்க்கு வாக்குரிமை கொடுக்கப்பட
2 o * タタ
என தமது அறிக்கைப் பத்திரத்தில் வெளிப்படுத்தினர். நாம் கவலையற்று முயற்சியற்று சும்மாவிருந்ததினால் இவ்வுரிமை நமக்குக் கிடைக்கவில்லை. நாம் பிரயாசைப்பட்டு வேலை செய்தோம், அதனாலே இதைப் பெற்றுக் கொண்டோம்” என்று பெருமிதத்துடன்இக்கட்டுரையை எழுதிச்செல்லும் நல்லம்மா பெண்கள் வாக்குரிமை என்பதைத் தனது போராட்டங்களில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறார் எனலாம். .
டொனமூர் ஆணைக்குழுவினர் பெண்களுக்கு வழங்கியிருந்த வாக்குரிமைக்கு பெண்களுக்கு முப்பதென்றும் ஆண்களுக்கு இருபத்தொன்று என்றும் “கீழ்மட்ட வயதெல்லை’ நிர்ணயம் செய்திருந்தனர். அதாவது வாக்குரிமை தகுதி பெறுவதற்கு ஆண்களாயிருந்தால் 21 வயது பூர்த்தியடைந்திருக்கவேண்டும், பெண்களாயிருந்தால் 30வயது பூர்த்தியடைந்த பிறகே அவர்களுக்கு வாக்களிக்க உரிமை கிடைக்கும். இத்தீர்மானம் நல்லம்மாவுக்குத் திருப்தியளிக்கவில்லை.
இத்தீர்மானத்தை வாக்குரிமைச்சங்கத்தைச் சேர்ந்த பல பெண்கள் திருப்தியோடு ஏற்றுக்கொண்டனர். ஆண் ஆதிக்கத்துக்கெதிரான தமது குரலுக்குப் பலன் கிடைத்ததை எண்ணி அவர்கள் அக மகிழ்ந்தனர். அவனியெங்கும் ஏற்பட்டு வரும் தீவிர மாறுதல்களைக் கண்டு கொள்ளும்ஆற்றல் பெற்றிருந்த நல்லம்மா போன்ற முன்னேற்ற தீவிர சிந்தனைவாதிகள் இந்த வயதெல்லையின் மூலம பல்லாயிரக்கணக்கான பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சி நடைபெறுகிறது எனச்சாடினார், ஆண் பெண் சமத்துவம் வேண்டும்
8

தமது நோக்கத்திற்கு இது ஏற்றதாக இல்லை என்று குற்றஞ்சாட்டினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதை இருபத்தொரு வயதுக்கு குறைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் வாக்களிக்கும் உரிமைக்கு 21 வயதெல்லை பொதுவாக அமையவேண்டும் என்றும் வேண்டினார். இந்தக் கருத்தைத் தமது சங்கத்தில் தீர்மானமாக மேற்கொண்டனர். இலங்கைவாழ் மகளிர் வாக்குரிமைச்சங்கத்தின் கொள்கையாக
இத்தீர்மானத்தைப் பிரகடனமும் செய்தனர்.
கொள்கையளவில் இது மிகவும் வரவேற்கத்தக்க தீர்மானமாக இருந்ததென்றாலும், நடைமுறையில் இது சாத்தியமான ஒன்றாக இருக்கவில்லை. பெண்களின் முன்னேற்றம் அப்போது ஆரோக்கிமானதாக இல்லை, வாக்குரிமையை பற்றிய அறிவையும், அரசியல் கருத்துக்கள் பற்றிய சிந்தனையையும் பெண்பாலாரிடையே பரப்பவேண்டிய அடிப்படை அவசியத்தை நல்லம்மாவும் அவரது நண்பர்களும் உணர்ந்தனர். அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.
* மகளிரும் வாக்குரிமையும்” என்ற மகுடத்தில் ஒரு சிறு நூலை அச்சில் கொண்டுவந்தனர். அதில் பெண்கள் வாக்குரிமை பெறுவதால் கிடைக்கும் நன்மைககள் விவரிக்கப்பட்டிருந்தன, வாக்குரிமையைப் பயன்படுத்தும் முறைகள் விளக்கப்பட்டிருந்தன, வாக்குரிமையின் முக்கியத்துவம் கூறப்பட்டிருந்தன. ஆண்களும் பெண்களும் வாக்குரிமை பெறுவதில் சமமானவர்களாக இருக்கவேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டிருந்தன. பெண்களை வ்ாக்குரிமைக்குத் தயார் பண்ணுவதற்கு மகளிரும் வாக்குரிமையும் ஒரு சாதனமாக விளங்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.
அந்த நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆங்கில அறிவு மிகுந்தோரே இலங்கைவாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கத்தில அங்கத்தினராக இருந்தமையால் ஆரம்பச்செயற்பாடு அவ்விதம் அமைந்தது இயல்பான ஒன்றே. ஆனால், தமது அங்கத்தினர்களை மாத்திரம் தயார் பண்ணுவதன் மூலம் பெண்ணுலகின் வளர்ச்சியைப்

Page 10
பேணும் தமது நோக்கம் நிறைவேறப்போவதில்லை என்பதை நல்லம்மா உணர்ந்தார்.
இந்நூலின் உண்மையான பலனை தமிழ்மாத்திரமே அறிந்தவர்களும் இந்திய வம்சாவளி தோட்டமக்களும் பெறுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த நல்லம்மா, இந்நூலின் முக்கிய பகுதிகளை மொழி பெயர்த்து தனது கணவன் நடாத்திவரும் வாரப்பத்திரிகையில் தொடராக வெளியிடச்செய்தார் (3)
ஒவ்வொரு புதன்கிழமையும் "இலங்கை இந்தியன்” என்ற வாரப்பத்திரிகையை வாசிப்பதன் மூலம் பெண்களும் ஏன் ஆண்களும் கூடபெண்களுக்கு வாக்குரிமை கொடுபட வேண்டியதன் அவசியத்தை உணராலாயினர்.
இலங்கையில் தமிழ்ப்பெண்களின் அரசியலறிவை வளர்த்தெடுப்பதிலும், நங்கையர்களை நாட்டு நடப்புகளில் நாட்டம் உள்ளவர்களாக உருவாக்குவதிலும் நல்லம்மா இவ்விதம் முன்னின்று உழைத்தார்
உலகில் ஏற்பட்டுவரும் மாறுதல்களை உன்னிப்பாக அவதானித்து வந்துள்ள நல்லம்மா “மகளிர் முன்னேற்றத்துக்கு திட்டமான மூலதனம் வாக்குரிமை “ என்று ஆணித்தரமாக நம்பினார். (4)
“புருஷர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கும் வண்ணமே சமநிலையாக மகளிருக்கும் வாக்குரிமை கிடைக்கவேண்டும் 95] கிடைக்கும் வரைக்கும் ஸ்திரிகள் புருஷரைப் பார்க்கிலும் குறைவான நிலையிலேயே இருக்கவேண்டி வரும். அதிணிமித்தமாய் அவர்கள் தந்தேசீய சம்பந்த விஷயங்களிலும் புருஷரைப் பார்க்கிலும் தாழ்ந்த இடத்தையே அடைய வேண்டி நேரிடும்”என்று காரணங்களை எடுத்துக் கூறும் நல்லம்மா உலகின் பல பாகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், அம்மாற்றங்களுக்காக பெண்கள் ஆற்றிவரும் பணிகளையும் நமது பெண்கள் ஆற்றி வரும் பணிகளையும் நமது பெண்கள் அறிந்து மகிழ்ச்சியும் தைரியமும் பெறவேண்டும் என்று விரும்பினார். இந்தக் கருத்துக்கள் எழுபதாண்டுகளுக்கு முன்னால் (1928) உதிர்க்கப்பட்டவை என்பதை நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.
“வருஷங்கள் செல்லச் செல்ல ஒரு நூற்றாண்டு கடந்து இன்னொரு நூற்றாண்டு ஆரம்பிக்க காலத்துக்கேற்ற கோலமாய் புதிதான ஒழுங்குகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இப்புதிய மாறுதல்களில் முக்கியமாய் நாம் கவனிக்கக் கூடியது ஸ்திரீ ஜனங்கள் நிலையில் காணப்படும்
0

மாறுதலேயாம் கல்விப் பயிற்சியிலும் சீர்திருத்தத்திலும் குடிநிலையிலும் ஸ்திரீகள் தற்காலத்தில் அதிகமாய் முன்னேறியிருக்கின்றனர். இன்றைக்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்திரீகளின் தேர்ச்சி இவ்விதமாயிருந்ததென்று நாம் சொல்ல முடியாது. சென்று போன நூற்றாண்டுகளில் கல்வியென்றால் அதைப்பற்றி நகைப்போர் எத்தனை பேர்? தற்காலத்தில் பென்கள் கல்வி கற்க வேண்டுமென்பதே பொதுஜன வாஞ்சையாயிருக்கிறது” என்று நல்லம்மா கூறியதற்கொப்ப புதிய சிந்தனைகள் உரிய வலிவோடு உருப்பெற்று வருகின்றன. இவ்வாண்டு (1998) பெண்களின் மனித உரிமைகள்' என்பது சர்வதேச மகளிர் தின தொனிப் பொருளாக அமைந்திருப்பதும் நல்லம்மா கனவு கண்ட காலத்துக்கேற்ற கோலம் தான் புதிதான விதிமுறைகளாக, புதிதான நோக்கங்களாக, புதிதான ஒழுங்குகளாக மனித நாகரீகத்தில் வேர்கொண்ட மகளிர் வாக்குரிமை என்ற அத்திவாரத்திலேயே பெண்களின் முன்னேற்றத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்ற எழுபதாண்டுகளுக்கு முற்பட்ட நல்லம்மா என்ற தீரமிக்க பெண் வைத்தியரின் கூற்றை ஆராயும்போது, மகளிர் முன்னேற்றத்தில் அந்த மங்கைக்கிருந்த ஈடுபாடும், முன்யோசனையும் நன்கு புலப்படுகின்றது.
“மனித ஜாதியாரின் முழுத் தொகையில் அரைப்பங்கு ஸ்திரிகளாவர் அவர்களும் மனிதஜாதியாருக்கு அத்தியாவசியமானவர்கள் ஆகையால் எந்த ஜாதியாவது தனது பொதுஜன ஜிவியத்தில் ஸ்திரியையும் பங்காளியாகச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அந்த ஜாதி அறிவிலும் தேர்ச்சியிலும் மற்றெல்லா விஷயங்களிலும் குறைவடைந்திருக்குமேயன்றி வேறல்ல”என்று நிர்தாட்சண்யமாக-பெண்களை இல்லறவாழ்க்கையில் மாத்திரமல்ல, ஏனைய சமூக பொருளாதார, அரசியல் வாழ்க்கையிலும் சம பங்காளியாக ஏற்றுக்கொள்ளாத எந்த சமூகத்தவரும் முன்னேற்றம் காணமுடியாதென்று வலியுறத்துகிறார்.
காலப்பின்னணி
இந்தக்கருத்தை அவர் இத்தனை வலிமையாக எந்தக்காலத்தில் கூறினார் ?.
“பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பது பன்றிகளின் முன்னர் முத்தை அள்ளி வீசுவது போன்ற செயல்” (5) என்று தேசிய பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் பிரசித்தமான அரசியல்வாதி தேசிய தலைவராக

Page 11
கருதப்பட்ட காலப்பகுதியில், பெண்களும் சமபங்காளிகள்தாம் என்று
நல்லம்மா எழுத்தில் வலியுறுத்துகிறார்.
அக்காலப்பகுதியில் செய்தி ஊடகங்கள் மூலம் பெண்களுக்கு எதிரான கருத்துக்களே படித்த தமிழர்களிடையே ஊறிப்போயிருந்தது. அக்காலப்பகுதியில் வெளிவந்திருக்கும் சஞ்சிகைகளில் - குறிப்பாக தமிழர்போதினி, திராவிடன், ஈழகேசரி, இந்துசாதனம் போன்றவைகளில் பெண் விடுதலைக்கும், பெண்ணுரிமைக்கும் எதிரான கருத்துக்களை உள்ளடக்கியகட்டுரைகளும், செய்திகளும் நிறையவே வெளிவந்துள்ளன. அதிலும் சிறப்பாக ஈழகேசரி, நல்லம்மா வைத்திய தொழில் புரிந்த சுன்னாகத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது.
அந்தக்காலப்பகுதியில் வேரூன்றியிருந்த பிற்போக்குத்தனத்துக்கும், ஆணாதிக்க மனோபாவத்துக்கும் சான்றுகளாக விளங்கும் அவைகளில்
சிலவற்றை இங்கு கவனிப்போம்.
“பன்னிரண்டு வயதுக்கு மேல் கல்விக் கழகத்துக்குச் சென்று பயிலுதல் நமக்கு மரபல்லவாதவின் வீட்டிலிருந்து குடும்பத்தை நடாத்த வேண்டிய சமைத்தல் முதலான சகல வேலைகளையும் கற்றுக்கொள்ளல் வேண்டும்.”ஈழகேசரி 22-06-1930
“தமக்கென்றவோர் சொந்த அபிப்பிராயமும் விஷயங்களைப் பற்றி பூரணமாக ஆலோசனை செய்து சரி பிழையறியும் ஆற்றலும் பெண்களுக்கு எங்கே இருக்கிறது. ஈழகேசரி 10-09-1930
மேற்படி கருத்துக்கள் டொனமூர் ஆனைக்குழுவினரின் சிபார்சுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்க்கும்போது, உண்மையில் பெண்களுக்கு வாக்குரிமைக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம். என்று கூறுவதைவிட, பெண்களுக்கு விடுதலைக் கோரி நின்றவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று கூறுவதே பொருந்தும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இந்து சாதனம் பத்திரிகை (6) ஒர் ஆசிரிய தலையங்கமே எழுதியிருந்தது.
“கொழும்பிலேயுள்ள ஆண் தன்மை பூண்ட தன்னிஷ்டப் பெண் ஜென்மங்கள் சிலர் கேள்விக்கிசைந்தே விசாரணைச் சபையாரும், பெண்னென்றால் பேயும் இசையும் என்ற பழமொழிப்படி உடன்பட்டு விட்டார்கள். இத்திருத்தம் எங்கள் சமயம், சாதி, தேசம் பழக்க வழக்கம் எல்லாவற்றிற்கும் முழுமாறானதாகும்.”
“இந்தவிதமாக எங்கள் சாதிக்கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண்கள் பொதுக்கருமங்களில் பிரவேசிக்கச் செய்து பொது மகளிராக்கி.”
என்ற வரிகளில் வெளிப்பட்டிருக்கும் படு பிற்போக்குத்தனமான, சாதித்திமிர் பிடித்த, மிலேச்சப் புலம்பலைக் காணுகையில் நம்மால் வியக்காமலிருக்க முடியவில்லை. கொழும்பிலேதான் சத்யவாகீஸ்வரரும் நல்லம்மாவும் வீடு வாங்கியிருந்தனர். கொழும்பு வாழ் நல்லம்மா போன்ற பெண்களை சாதித்திமிரில் திளைத்த, உயர் மட்ட வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்த பழமை வாதிகள் எத்தனை இழிவாக நோக்கியிருக்கின்றனர். எத்தகு நச்சுச் சொற்களால் சாடியிருக்கின்றனர்? என்பதை அறியும்போது நல்லம்மா போன்ற பெண்களுக்கு நாம் எந்த அளவு கடைமைப்பட்டிருக்கின்றோம் என்பது புலனாகின்றது.
பெண்கள் முன்னேற்றம்
பெண்கள் முன்னேற்றத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டு நல்லம்மாவின் அதே காலப்பகுதியில் தேயிலைத்தோட்டப்புறங்களில் உழைத்த மீனாட்சியம்மைக்கும் அவருக்கும் நல்லுறவு இருந்தது. இவர்கள் இருவரின் கணவர்மார்களான நடேசய்யரும் சத்யவாகீஸ்வரரும் 193th ஆண்டு வரை அரசியலில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். அதன் பின்னர் நெருங்கிய நண்பர்களாயினர். ஒருவருக்கொருவர் பெரிதும் துணையாயிருந்தனர், சேர்ந்து செயல்பட்டனர். அவர்களின் கூட்டு நடவடிக்கைகளால் இந்திய வம்சாவளியினர் செறிந்து வாழ்ந்த தோட்டப்புறங்களில் விழிப்பு உண்டாயிற்று
3

Page 12
இந்த-இருவரில் கோ. நடேசய்யர் சட்ட நிரூபண சபையில் (1925-1931) அங்கத்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் பெண்கள் சம்பந்தமான முற்போக்கான கருத்துக்களையும், பெண் வாக்குரிமைத் தொடர்பாக சேர் பொன்னம்பலம் இராமநாதனின் கருத்துக்களுக் கெதிரான எண்ணங்களையும் அவரால் அங்கு வெளிபடுத்த முடிந்தது. −
“பெண்களின் சீதனத்தைப் பெற்றுக்கொண்டு தம்மை உயர்த்திக் கொள்பவர்கள், பெண்களுக்கு உரிமைக் கொடுப்பதற்கு மாத்திரம் மறுப்பதெதனால்” என்று அவர் வினவினார்.
“பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்று கூறும் எனது நண்பர்கள் சிலர் தங்களுக்கு கிடைத்த சீதன பணத்தால் சட்ட சபைக்கு வந்திருக்கிறார்கள். பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தேர்தலில் மனைவியும் நிற்பாள் என்று நினைத்து அவர்கள் தயங்குகிறார்களா? என்று நடேசய்யர் இராமநாதனை நேரிடையாகவே சட்டநிரூபணசபையில் பரிகசித்தார்.(7)
நடேசய்யரின் இந்தப் பேச்சும், நல்லம்மாவின் பத்திரிகைக் கட்டுரைகளும் ஒரே போக்கில் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கத்தில் மீனாட்சியம்மை, நடேசய்யரின் மனைவி - அங்கம் வகிக்கவில்லை. ஆனால், பெண்மக்கள் வாக்குரிமைப் பெறவேண்டும் என்று வாதாடி நின்றார். மகளிர் வாக்குரிமைச் சங்கத்தினரின் பணிகள் தமிழ் மாத்திரமே தெரிந்த பெண்களுக்குப் பயனளிக்காதிருப்பதைத் தமது பேச்சுக்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துக் காட்டினார். மேற்படி சங்கத்தில் பொறுப்பான பதவி வகித்த நல்லம்மா - சத்யவாகீஸ்வரரின் மனைவி, அந்தக் கருத்துக்களைச் செயற்படுத்தி காட்டினார்.
இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கத்தின் செயற்பாட்டையும் பயன்பாட்டையும் அவர்கள் அந்தக் கண் கொண்டே நோக்கினர்.
“மேற்படி சங்கத்துக்கு வருஷ சந்தா ரூபா ஐம்பது ஆக வைத்திருக்கிறபடியால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் இதில்
14

சேர்ந்துழைக்க வசதியிராது. பணம் படைத்தவர்கள் மாத்திரம் தங்கள் காரியத்தைச் செய்து முடிப்பது போதுமானதாகாது. எல்லா சகோதரிகளும் கலந்துழைக்க வேண்டிய வேளையில் பணம் படைத்தவர்கள் மாத்திரம் தலையிடுவதைக் கொண்டு அதிக பலன் கிடைக்காது. ஆகவே சகோதரிகள் தாங்கள் கொண்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஆங்கிலம் தெரியாத சகோதரிகளிடத்தும் பிரசார வேலைைையத்துவக்க வேண்டும்”
என்ற மீனாட்சியம்மையின் கட்டுரை (8) க்குச் செயலுருக் கொடுத்தார் நல்லம்மா. மீனாட்சியம்மை தம்மை முழுவதாகத் தோட்டப்புறத்து ஏழைத் தமிழ்த் தொழிலாளர்களின்பால் அர்ப்பணித்திருந்தார் அவளது கணவர் சட்ட நிரூபண சபை அங்கத்தவராக இருந்த போதும், அவரும் - ஏழை இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள் மத்தியிலேயே மையம் கொண்டிருந்தார்.
ஆக, சமூகத்தில் மதிப்பும் செல்வமும் உயர்நிலையையும் கொண்டிருந்த வைத்தியத் தொழில் புரிந்தபோதும், அதிலும் தகைமைகளனைத்தும் கொண்ட பெண் வைத்தியராக இருந்த போதும், உயர்மட்டப் பெண்களுடனும், அரசியல் பிரமுகர்களுடனும் பழகுகின்ற சந்தர்ப்பங்களுக்கு மத்தியிலும் ஏழைத்தமிழ்ப் பெண்களைப் பற்றியே அவரது சிந்தனை அதிகமாகச் சென்றிருக்கின்றதென்பதைப் பல கட்டுரைகளின் மூலம் காண முடிகின்றது.
1929ம் ஆண்டு வெளிவந்து கொண்டிருந்த - இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கத்தின் உத்தியோகப் பூர்வமான ஏடு “பிரபுத்திஸ்திரி” 6T6ôTugme5úb. (PRABUDDHASTRI)
ஆரம்பத்தில், ஏழை மக்களின் பயன்பாட்டைக் கருத்திலெடுத்துத்துத் தமிழிலும் சிங்களத்திலும் வெளியிடச் செய்வதற்காக முன்னின்று உழைத்தவர் நல்லம்மாவே ஆவார்.
மகளிர் சங்கங்களைத் தோற்றுவிப்பதிலும் அச்சங்கங்களில் முன்னின்று பொறுப்புக்களைக் கையேற்று அயராது உழைப்பதிலும்
தனியானதோர் இன்பம் கண்ட ஒரு பெண்மணியெனப் பலராலும் புகழப் பெற்றவர் டாக்டர் மேரி ரட்னம்.
15

Page 13
டாக்டர் மேரி ரட்னத்தின் தொடர்பும், அவரது தொடர்பு மிகுந்த "மெக்லியட் மருத்துவ மனையும் அவரது முற்போக்கான அரசியல் சிந்தனைகளும் நல்லம்மாவுக்குப் பெரிய உந்து சக்தியாக இருந்துள்ளது. தனது செயற்பாடுகளை அவர் வழி நின்றே மேற்கொண்டார்.
வாக்குரிமைப் பெண்களுக்குக் கொடுக்கப்படக் கூடாதென்றவர்களும் மேற்கல்விக்குப் பெண்கள் உகந்தவர்கள் அல்லர் என்றவர்களும், பெண்களின் பங்களிப்பை வீட்டுக்குள்ளாக வைத்துக் கொள்ளவே விரும்பினர். இந்தக் கருத்துக்களை நல்லம்மா தீவிரமாக எதிர்த்தார்.
இலங்கைப் பெண்கள் கல்விப் பயிற்சியுடையவர்களென்று அவர் முன்னின்று வாதிட்டார். பெண்கள் அரசியலிலீடுபட்டுச் சட்ட சபைக்குப் பிரதிநிதிகளாகத் தெரிவாக வேண்டுமென்பதிலும் அவர் குறியா நின்றார்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் பெண்கள் உலகின் பல பகுதிகளில் விழிப்புற்றுச் செயற்பட்டனர் என்பதை நாம் வரலாற்றில் காண்கின்றோம் இக்காலப் பகுதியில்தான் நல்லம்மா இலங்கையில் வாழத்தொடங்கியிருக்கிறார். அவ்விதம் வாழ்ந்த 1928ம் வருடம் தான் டொனமூர் சீர்திருத்த ஆணைக்குழு இலங்கை வந்தது.
இந்திய தேசிய காங்கிரஸ்ஸில் அன்னிபெசன்ட், சரோஜினிநாயுடு, நெல்லி சென்குப்தா போன்ற பெண்கள் முக்கிய பங்கேற்று காங்கிரஸின் தலைவர்களாக இருந்து வெற்றிகரமாகப் பணியாற்றியிருந்தமை நல்லம்மாவுக்கு நன்றாகத் தெரியும்.
சென்னைப்பிரசிடென்சியில் நடந்த மூன்றாவது தேர்தலில் (1926) முத்துலெட்சுமி என்ற பெண் தெரிவாகி முதல் சட்டசபை உறுப்பினர் என்ற பெருமையடைந்ததையும் அவர் அறிந்தே வைத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிகளினால், பெண்கள் அரசியலில் ஈடுபடுவது இலங்கையிலும் நிகழ்வதாயிற்று, வைத்தியரான நேசம் சரவணமுத்து 1932-5-28 ல் தேர்தலில் நின்று பெரும்பான்மை வாக்குளால் வெற்றிபெற முடிந்தது.
“நமது தாய்த் தேசமாகிய இந்தியாவிலும் பர்மா, துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலான மற்றக் கீழ்த்தேசங்களிலும் மகளிர்
16

முன்னேற்றம் தேச நன்மைக்கு முக்கியமான ஒர் எத்தனம் என்னும் உண்மையை ஜனங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனாற்றான் இப்போ அத்தேசங்கங்களில் ஸ்திரீகளுக்குப்பல சவுக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. துருக்கி, ஆப்கானிஸ்தான் முதலிய தேசங்களில்தானும் தற்காலத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தேசங்களை ஆளும் மன்னர் ஸ்திரீகளை வீட்டுக்குள்ளே அடைத்து வைப்பதும் அவர்கள் முக்காடிட்டுக் கொண்டேயிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதும் பெரும் மூடத்தனமெனக் காட்டி அக்கொள்கைகளை அகற்றி விட்டிருக்கின்றனர்.” என்றெழுதும் நல்லம்மா கமால்பாட்சாவின் நடவடிக்கைகளால் முற்றாக ஆகர்ஷிக்கப்பட்டார். கமால் பாட்சா பெண்களுக்கு அளித்த கெளரவ ஸ்தானம் நல்லம்மாவின் இதயத்தைக் கவர்ந்தது. ஒரு தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. என்பதை அவர் பூரணமாக நம்பினார். அதனால்தான், “பெண்பாலாரை எந்தத் தேசம் அடக்கி வைத்து அடிமைகள் போல நடத்தி அவர்களுக்கு ஆண்மக்களைப்போலவே சம சுதந்திரம் கொடுக்கப் பின் வாங்கி நிற்கிறதோ அந்தத் தேசமானது உண்மையான சுயாதீனம் அடையவே அடையாது.” என்ற கமால் பாட்சாவின் கூற்றினை மேற்கோள்காட்டி தனது கட்டுரையை நிறைவு செய்கிறார். (9)
இலங்கை வாழ்ப் பெண்களின் கல்விப் பயிற்சியைப் பற்றி இலங்கை இந்தியன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் (10-10-1928)
“நமது தாய்த் தேசமாகிய இந்தியாவில் 1921ல் சில மாகாணங்களில், ஸ்திரீகளுக்கு வாக்குரிமை சுதந்திரம் கிடைத்தது. அவ்வருஷத்தில், இந்தியாவில் எழுத வாசிக்கக்கூடிய ஸ்திரீகளின் தொகை நூற்றுக்கு 2 வீதம் மாத்திரம் அதை இலங்கையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். 1921ம் வருஷத்தில் இலங்கை வாழ் ஸ்தீரிகளில் எழுத வாசிக்கக் கூடியவர்களின் தொகை நூற்றுக்கு 21 வீதம். பெண் கல்வி வருஷா வருஷம் அதிகப்பட்டு வரும் இவ்விலங்கையில் இந்த வருஷத்தின் தொகையைப் பார்ப்போமானால் அது நூற்றுக்கு 25 வீதமாகிவிட்டது என்று சொல்லலாம்.” என்று இலங்கையிலும் இந்தியாவிலும் பெண்களின் கல்வி நிலைமைகளைப் புள்ளி விபரங்களுடன் எழுதும் நல்லம்மா, இலங்கையில் கல்வி வீதம் கூடியிருந்தாலும் இந்தியாவில் சர்வகலாசாலைப் பட்டதாரிகளாக ஆயிரக்கணக்கான பெண்மணிகள் இருக்கின்றனர். இலங்கையில் அவ்விதம் இல்லை என்றும் குறிப்பிட்டுக் கவலை தெரிவிக்கின்றார். இக்கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் (1928) இலங்கையில் பல்கலைக்கழகம் அமைக்கப்படவில்லை. அதாவது உயர்
7

Page 14
பட்டப்படிப்புக்கான வாய்ப்புக்களில்லை. எனவே இந்தியாவில் படித்துப் பட்டம் பெற்றவர்களுடன் ஒப்பிடுவது நியாயமாகாது என்று கூறிவிட்டு
“சில வருஷங்களுக்குள் இலங்கையிலும் ஓர் சர்வகலாசாலை ஸ்தாபிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். அது ஸ்தாபனமான பிற்பாடு இலங்கைப் பெண்மணிகளும் தங்கள் இந்திய சகோதரிகளைப்போல் கலாசாலைகளில் கற்று அரங்கேறிப் பட்டதாரிகளாவது நிச்சயம். இலங்கையில் பெண்கள் கல்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்பது, வித்தியாதாரப் பகுதித் தலைவரின் அறிக்கைப் பத்திரத்தைப் பார்க்கும்போது, தெளிவாக விளங்கும். அவ்வறிக்கைப் பத்திரத்தின்படி 1926 - 1927 வருடங்களில் பாடசாலைகளில் கல்வி கற்று வரும் பெண்களின் தொகை 12,789 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இது போதிய நியாயமாகும்” என்கிறார்.
இந்திய இலங்கை கல்வி நிலைமைகளையும், பெண்களின் பங்களிப்பையும் நேரில் தெரிந்து வைத்திருந்தவர் நல்லம்மா. அவர் மேற்கொண்டிருந்த வைத்தியத் தொழிலால் அது மேலும் விசாலிப்படைந்தது. அந்த பின்னணியில், இலங்கையின் எதிர்காலத்தைப்பற்றி ரம்மியமானக் கனவுகளை அவர் கண்டார். இலங்கைப் பெண்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாகி பாரில் பவனி வருவதை அவர் கற்பனைச் செய்தார். பெண்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பதை எண்ணி மகிழ்ந்தார்.
1923 ம் வருடம் இலங்கையில் திருமணமான பெண்களின் நில சம்பந்தமான ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது. திருமணம் முடித்த பெண்கள் தமது கணவன்மார்களின் சம்மதமின்றி, தங்கள் சொத்துக்களை விற்கவாவது, வேறொருவருக்குக் கொடுக்கவாவது, தனியாக ஆட்சிசெய்யவாவது, தமது சொத்துக்களை சீதனம் என்ற பேரில் ஆண்களிடத்தில் கொடுத்துவிட்டு பரிதவித்த பெண்களுக்கு இது விமோசனத்தைக் கொடுத்தது.
“மேற்கூறியசட்டம், இந்த நிபந்தனைகளையெல்லாம் அகற்றிவிட்டு ஸ்திரீகள் தாங்களே தங்களிஷ்டப்படி காணி பூமி சொத்துக்களை வாங்கவும் விற்கவும் வரிகளைக் கூட்டவும் ஆட்சி பண்ணவும் கூடும் என்பதாகத் தீாத்து விட்டது, காணி, பூமி பொருள் பண்டம் இவைகளை எல்லாம் ஆண்டு நடத்தி, ஒழுங்கு, கொள்ளத்தக்க வல்லமையும் யுக்தியும், ஸ்திரீகளுக்கு உண்டென்பதைச் சட்டம் ஒப்புக்கொள்கிறது” என்று எடுத்துக்காட்டும் நல்லம்மா
8

பெண்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுக்குத்தரப்பட்ட வரப்பிரசாதமாகக் கருதுகிறார், பெண்கள் தம்மைத்தாமே ஆளத்தகுதியானவர்கள் என்ற தீர்மானத்திலிருந்துதான் இப்படி ஒரு சட்டம் பிறக்கமுடியும் என்றும் நம்புகிறார். பெண்களின் வல்லபத்துக்கு கிடைத்த சன்மானமாகவே இச்சட்டத்தை எண்ணி மகிழ்கின்றார். நடைமுறையில் இச்சட்டம் ஆணாதிக்கத்தை எதிர்த்து வெளிவரத்துடிக்கும் பெண்களுக்குக்கிடைத்த பெரியதொரு சாதனமாகும்.
இக்காலப்பகுதியில் வாழ்ந்த எல்லா ஆண்களின் கல்வித்தரமும் மிக உயர்ந்ததாகக் கூறமுடியாது. அவர்கள்தாமும் தமது உரிமைகளைப்பற்றி அறிந்துவைத்திருந்தார்களென்று சொல்வதற்கில்லை.
“இலங்கை இந்தியன்’ பத்திரிகையில் டாக்டர் நல்லம்மாவின் கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்த அதே இதழில் வெளியாகியிருக்கும் சுகாதார இலாகா வைத்திய அதிகாரி டாக்டர் ஸி.வி.அஸரப்பா அவர்களின் ஒரு கட்டுரையில்
“இங்குள்ள தொழிலாளர்களுக்கு தங்கள் உரிமைகளென்னவென்று தெரிந்து கொள்ளவோ, அவ்வுரிமைகளை தங்களுக்கு அளிக்கவேண்டு மென்று கேட்கவோ போதிய கல்விப்பயிற்சி இதுகாறும் கிடைக்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் நிலைமையை அறிந்து கொண்டு உரிமைகளுக்குகாகக் கூச்சலிடும் நாள் வந்தே தீரும். அந்நிலைக்கு வரும் வரைக்கும் காத்திருப்பது புத்திசாலித் தனமல்ல” என்று எச்சரித்திருப்பதைக்காணலாம்.
நல்லம்மா தனது அரசியல், பெண்ணுரிமைகளுக்கான வாதங்களைச் சிந்தனை பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் முன் வைத்த அதே வேளை பண்பாட்டு பெருமைபேணவும் தவறவில்லை. இந்த இரண்டையும் அவர் ஒரு சேர முன்னெடுத்துதமைக்கு அவரது பல்துறை அறிவே அடிப்படையாக அமைந்தது, அவர் நிறைய நூல்களைத்தேடி வாசிப்பவராகவும் இருந்திருக்கிறார். நூல்களில் காணக்கிடைக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்த ஒரு நீண்ட கட்டுரையையும் அவர் ஒரு முறை எழுதினார்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் கதரின் மேயோ, 1927ம் ஆண்டு பாரத நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த அநுபவத்தைக் கொண்டு ஒரு நூலை எழுதினாள். “இந்திய மாதா” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்நூலில் பெண்களைக் கீழ்மைப்படுத்தும் கருத்துக்கள் -இந்திய
19

Page 15
பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு எழுதப்பட்டிருந்தன. இதற்கான பதிலை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி வெளியிட்ட நல்லம்மா அக்கட்டுரைக்கு இந்திய இல்வாழ்க்கை என்று தலைப்பிட்டிருந்தார். (10)
சர்வஜன வாக்குரிமை
பிரிட்டிஷாருக்கச் சொக்கமான குடியேற்ற நாடுகளில் இலங்கைக்கே
டிஷாருககு நத டியேறற ந முதன்முதலாக சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.
ஆசியாக்கண்டம் முழுவதிலும் பெண்களுக்கு வாக்குரிமையளித்த நாடுகளில் இலங்கை இரண்டாமிடத்திலுருக்கிறது (பார்க்க அட்டவணை-1) .
இலங்கைச் சுதந்திரம் பெற்ற 1948 ம் ஆண்டு வரையிலும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடுகளின் அட்டவணையை ஒப்பிட்டுப்பார்த்தால் இலங்கை இந்த விடயத்தில் பெற்றிருந்த முக்கியத்துவம் - முன்னேற்றம் உணரப்படும்.
இந்தியா, ஃபிரான்ஸ், இத்தாலி,இஸ்ரேல்,ஜப்பான் போன்ற நாடுகளெல்லாம் பெண்களுக்குவாக்குரிமையளிப்பதில் இலங்கையைவிட பின்தங்கியிருந்தன என்பதைக்காணலாம்.
எனினும் கிடைத்த உரிமையைச் சரிவர நடைமுறைப்படுத்துவதில் umrifluu குறைபாடுகள் ஏற்பட்டன. 1948 Lh ஆண்டு, தோட்டப்புறத்தைச்சார்ந்த பத்து லட்சம் மக்களின் வாக்குரிமைகள் இல்லாமல் அடிக்கப்பட்டன. இதற்கான முயற்சிகள் 1928 களிலேயே வெவ்வேறான பாங்கில் வெளிப்பட்டுள்ளன என்பதையும் ஒரு கட்டுரையில் நல்லம்மா எழுதியுள்ளார்.
“ஒரு வகுப்பாரோ, ஒரு கூட்டத்தாரோ ஒரு பகுதியாரோ அவர்கள் எல்லாரும் வாக்குரிமையைப்பாவிக்கும் சுதந்திரம் அற்றவராயிருப்பின் அது தேசத்துக்குப் பாரிய நட்டத்துக்கேதுவாயிருக்கும் என்பதற்கையமில்லை”(1) என்று எழுதிய நல்லம்மாவும் அவரது கணவர் சத்யவாகீஸ்வரரும் வாக்குரிமைச் சம்பந்தமட்டில் இலங்கைவாழ் இந்தியருக்கெதிராகவேர்விடும் விஷக்கருத்துக்களையும் அறிந்தே இருந்தனர் என்பதை மிகத்துலாம்பரமாக வெளிப்படுத்தும் ஒரு நடவடிக்கையை “இலங்கை இந்தியன்”பத்திரிகையிலே காணமுடிகிறது.
மேற்குறித்த கட்டுரை இலங்கை இந்தியன் பத்திரிகை-17வது இதழில்
20

வெளிவந்துள்ளது. 18வது இதழில்.மேற்படி “மகளிரும் வாக்குரிமையும்” என்ற தொடர் கட்டுரையின் இரண்டாம் பகுதி வெளிவந்துள்ளது 17வது இதழ் வரையிலும் தன்னை “ஓர் சிறந்த தமிழ் வாரப் பத்திரிகை” என்று பிரகடனப் படுத்திக் கொண்டிருந்த 'இலங்கை இந்தியன் 18வது இதழில் “இலங்கை இந்தியரின் நலவுரிமைகளுக்காக உழைத்து வரும் ஒர் சிறந்த தமிழ் வாரப் பத்திரிகை என்று தனது பிரசன்னத்தின் நோக்கத்தை 9955ló 5, petibl$556r6Tg5). (A Weekly Journal Which espouses the cause of Indians in Ceylon)s
அரசியலில் ஈடுபட மாத்திரமல்ல, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களுக்குத் தலைமைத்துவம் கொடுக்க முனைபவர்களுக்குக் கல்வி, அறிவு, தொழில்சார் நிபுணத்துவம், சட்ட அறிவு ஆதியன இருத்தல் வேண்டும். இத்தகு குணாம்சங்கள் பெற்றவராகவே நல்லம்மா விளங்கியுள்ளதை அவரது சிந்தனைகள் வெளி படுத்துகின்றன.
சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட 1931 லிருந்து 1994 ம் ஆண்டுவரையிலான சட்டசபை பிரதிநிதித்துவத்தைப் பரிசீலித்துப் பார்க்குகையில் பெண்களின் விகிதாசாரம் சீரானதாக இல்லை என்பதைக் காணலாம். (பார்க்க அட்டவணை 3).
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5 சதவீதமாகும். இலங்கையின்சனத் தொகையில் 52 சதவீதத்தினருக்கும் மேலானவர்களாகப் பெண்களிருந்தபோதும் அரசியல் பங்களிப்பில் இன்னும்கூட அவர்களுக்குரிய இடமில்லாதுள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், தொழிற்சங்கத்திலும் மகளிர் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தோட்டப்புறத் தொழிற் சங்கங்களின் மாநாட்டு வரவேற்புரை அளிப்பதோடு பெண்களின் பங்கு முடக்கப்பட்டு விடுகின்றது.
இந்த நிலைமையில் தனது வேட்பாளர் பட்டியலில் இருபத்தைந்து சத விகிதத்தினராகப் பெண்களின் பெயரை இணைக்க வேண்டுமென அரசாங்கம் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இந்தியாவிலும் இவ்விதம் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டுமென்று, மிகவும் ஆர்ப்பாட்டமாகக் கருத்துக்கள் பரிமாறப் பட்டாலும், மேற்படி தீர்மானம் நாடாளுமன்றத்தில் சட்டமாக உருவாகாமல் முற்றாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பெண்களின் முன்னெடுப்புக்கள் இன்னும் தீவிரமாக்கப்படல் வேண்டும் என்றே கூறத்தோன்றுகிறது.
21

Page 16
1998ம் ஆண்டு இலங்கையில் - மாகாணசபைத் தேர்தலுக்கு பெண்கள் அணி ஒன்று நுவரெலியா தொகுதியில் வேட்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது. 18 பெண்களை உள்ளடக்கிய இச் சுயேட்சைக் குழுவில் நகர்ப்புற, தோட்டப்புற, என்று வெவ்வேறு மட்டங்களைச்
சேர்ந்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது ஒரு புதிய முன்னேற்றகரமான முயற்சி என்று கருதுவதிலும் பார்க்க தங்களுக்கு உரிய இடத்தைக் கொடுப்பதற்கு ஆண்கள் தயாராக இல்லை என்பதை விளங்கிக் கொண்ட பெண்கள் அணிதிரள ஆரம்பித்துள்ளார்கள் என்றுணர்வதே சாலப்பொருந்தும், எனினும், அது மாத்திரம் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்போதுமானதாயிருக்கப்போவதில்லை.
அண்மைக்கால புள்ளி விபரங்களைப்பார்த்தால் அதிகமான அளவில் பெண்கள் தொழில் புரிந்து சம்பாதிப்பவர்களாக இருந்தாலும் உயர்மட்டத் தொழில் புரியும் பெண்களின் எண்ணிக்கைக் குறைவாகவே உள்ளதைக்
கண்டு கொள்ளலாம். (12)
எஸ். எல். ஏ. எஸ். நிர்வாகத்துறையில் - 17-5%
பேராசிரியர் பணிபுரிவதில் - 9-4%
நிர்வாகிப் பணி புரிவதில் -- 1--7%ر
உடல் உழைப்பாளர் பணி புரிவதில் 58-5%
நிறைவாக
அரசியலில் பெண்கள் பங்கேற்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புக்கள் சட்ட ரீதியாகக்கப்படல் வேண்டும். அவ்விதம் பெண்கள் பங்கேற்று பணியாற்றுவதற்கு சாதகமான குடும்ப, சமூகச் சூழல் உருவாக்கப்படுதல் வேண்டும்.
22

பால் அடிப்படையில் பெண்களென்றால் பூகோளம் முழுவதிலும பெண்கள் தாம், இனம் மதம், மொழி கடந்த நிலையில் பெண்களை
இலங்கை பெருமைப்படுத்தியிருக்கிறது.
தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்கு, அயல் நாட்டில் பிறந்த டொரீன் விக்ரமசிங்காவை (1952) தெரிவு செய்து முழு ஆசியாவுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது.
உலகிலேயே முதற் பெண் பிரதமரைத் தந்த பெருமையும் இலங்கைக்குண்டு மேலும், இலங்கையில் பழமைப் பேணுவதற்கு பெயர் போன தமிழரும், கண்டிச் சிங்களவரும் தாம் தமது பிரதிநிதிகளாகப் பெண்களைத் தெரிவு செய்வதில் முன் நின்றிருக்கின்றனர்.
இந்த விதத்தில், மகளிர் வாக்குரிமைக்கும் சட்ட சபை பிரதிநிதித்துவத்துக்கும் குரலெழுப்பி கடினமும் சிரமும் மிகுந்த பணிகளை, ஏளனத்துக்கும் இடைஞ்சலுக்கும் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற நல்லம்மாவின் வாழ்க்கையையும், செயற்பாடுகளையும் நாம் பூரணமாக அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
சமூக விழுமியம் பேணுவதில், பல்கலைக் கழகபட்டம் பெற்ற பெண்
வைத்தியராகக் கடமை ஆற்றிய இவர் சிறந்திருந்ததோடு, சமூக, அரசியல் பத்திரிகை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுழைத்தார்.
தலைமைத்துவத்திற்குவரத்துடிக்கும் பெண்கள் சகல விடயங்களிலும்
அறிவாற்றல் பெற்றிருக்க வேண்டு மென்பதற்கு அவர் மிகச் சிறந்த உதாரணமாவார்.
23

Page 17
அடிக்குறிப்புக்கள்
1 டாக்டர் மேரி ரட்னம் - குமாரி ஜெயவர்த்தனா - 1993
2. இலங்கை இந்தியன் - தமிழ் வார வெளியீடு மலர் 1 - இதழ் 17 3. டாக்டர் ச. நல்லம்மா - மகளிரும் வாக்குரிமையும் இலங்கை
இந்தியன்
4. -மேலது
5. Daily News-English Daily-16-1-1928
6. இந்து சாதனம் - தமிழ்ப் பத்திரிகை - 8 - 1 - 1928
7. சாரல் நாடன் - தேச பக்தன் கோ. நடேசய்யர் நூல் -
8. தேச பக்தன் நாளிதழ் - 26 -- 1 - 1929
9. இலங்கை இந்தியன் - வார வெளியீடு 3 - 10 -1928
10. இலங்கை இந்தியன் - வாரவெளியீடு 4 - 7 - 1928
1. இலங்கை இந்தியன் - வார வெளியீடு 3 - 10 - 1928
12. Economic Review.
24

வாகடம்
1893
1902
1906
1913
1915
1917
1918
1920
1921
1924
1929
1930
1931
1932
1934
1935
1937
1944
1945
1946 1947
1948
அட்டவணை -1-
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய சில நாடுகள்
வழங்கிய நாடுகள்
நியூசிலாந்து - (உலகில் முதல் பெண் வாக்குரிமை) ஆஸ்திரேலியா
ஃபின்லாந்
நோர்வே
டென்மார்க்
சோவியத்ருஸ்யா, நெதர்லாந்து ஐக்கிய ராஜ்யம், கனடா, அயர்லாந்து, ஆஸ்திரியா ஹங்கேரி, அமெரிக்கா
சுவீடன்
மொங்கோலியா ( ஆசியாவில் முதல் பெண் வாக்குரிமை) ஈகுவேடா
தென்னாபிரிக்கா இலங்கை (ஆசியாவில் இரண்டாவது பெண் வாக்குரிமை) தாய்லாந்து, பிறேசில்
கியூபா,துருக்கி
இந்தியா, பர்மா
பிலிப்பைன்ஸ்
ஃபிரான்ஸ்
இத்தாலி ஜப்பான்,பனாமா,யூகோஸ்லாவியா
ஆர்ஜன்டீனா, சீனா, பாகிஸ்தான், பல்கேரியா.
இஸ்ரேல், கொரியா, பெல்ஜியம்.
(ஆதாரம் - யுனெஸ்கோ கூரியர் Vol. No 11/ 1955)
25

Page 18
அட்டவணை -2-
இலங்கையில் சட்டசபை, நர்டாளுமன்றம்
பெண் பிரதிநிதித்துவம்
முதலாவது சட்டசபை
இரண்டாவது சட்டசபை
முதலாவது நாடாளுமன்றம்
இரண்டாவது நாடாளுமன்றம்
மூன்றாவது நாடாளுமன்றம்
நான்காவது நாடாளுமன்றம்
ஐந்தாவது நாடாளுமன்றம்
ஆறாவது நாடாளுமன்றம்
ஏழாவது நாடாளுமன்றம் எட்டாவது நாடாளுமன்றம்
ஒன்பதாவது நாடாளுமன்றம்
பத்தாவது நாடாளுமன்றம்
26
1931
1936
1947
1952
1956
1960
1960
1965
伯70
1977
1989
1994
2.8%
1.1%
26%
1.9%
3.9%
1.3%
甘8%
3.5%
3.5%
3.2%
5.3%
4.8%

அட்டவணை -3-
விகிதாசார வரைபடம்
1931
1936
1947
1952
1956
1960
1960
1965
1970
1977
1989
1994
இலங்கை நாடாளுமன்ற பெண் பிரதிநிதித்துவம்
27

Page 19
பின்னிணைப்பு
28

இந்திய இல்வாழ்க்கை
Dr. F. 566) biort,
L. R. C.P. & s. (Edin) L. M. (Duplin)
அமெரிக்கா தேசத்தாளாகிய, கதறின் மேயோ (Miss Katherine Mayo) என்னும் மாது கடந்து போன வருஷத்தில், நமது தாய்த் தேசமாகிய இந்தியாவுக்குப் போய், சுற்றிப் பார்த்து, நாடு நகர்களின் நிலையையும், சனங்களின் நடவடிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், ஆசார ஒழுங்குகளையும் பற்றித் தீர்க்கமாய் விசாரித்தவள் போலப் பாசாங்கு பண்ணிக் கொண்டு வந்தாளென்பதையும், அவள் திரும்பித் தன் தேசத்துக்குச் சென்று, இந்தியாவைப்பற்றிய அறிவை உலகத்தாருக்கு ஊட்டும் நோக்கங் கொண்டவளெனக் காட்டி, “இந்திய மாதா” என்னும் நாமதேயமுள்ள, ஒரு புஸ்தகத்தைஎழுதியிருக்கிறாளென்றும், நம்மவரில் அநேகரரிவர். இப்புஸ்தகத்தை எழுதிய மாது எத்தகையவளென்பதைப் பற்றியாவது, அவள் உண்மையாகவே இந்தியரின் பெரு நன்மை கருதி அப்புஸ்தகத்தை யெழுதிப் பரப்பினாளோ அல்லவோ என்பதை பற்றியாவது, நாம் இவ்விடம் விசாரிக்கவில்லை. அம்மாதும், அப்புத்தகத்தை எழுதும்படி அவளை ஏவிவிட்ட அவள் கூட்டத்தாரும், வெகு மாறுபாடான எண்ணத்துடன்தான் இப்படிச் செய்தனர். எனக் காரியம் அறிந்த பல தேசீய நண்பர் சாதிக்கின்றனர். அதெப்படியிருப்பினும் “இந்திய மாதா” என்னும் கட்டுக் கதையில் காணப்படும் விபரங்கள் யாவும், களங்கமற்ற உண்மை வாக்குகள் தான் என்று, நமது தேசத்தைச் சரிவர அறிந்தவர், எவராவது சொல்லவே மாட்டார். ஒரு தேசத்தைப் பற்றியாவது ஒருவர் பூரணமாய் அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் அத்தேசத்தின் தாங்களே சிறிது காலம் தங்கித்தரித்து, சனங்களுடன் ஊடாடிக்கலந்து சீவித்து, அவர்களின் சீர் சிறப்பையும், ஒழுக்க வழக்கங்களையும், அந்நியரை உபசரிக்கும் குணங்களையும், ஐயமற ஆராய்ந்து ஊகித்துக் கொள்வது தான் நேரான செய்கையாகும். அதைவிட்டு ஆவேசங்கொண்டு.அந்தரத்தில் பறந்து திரியும், பருந்து போல வாயுவேகம் மனோவேகமாய் இரண்டொரு மாசத்துக்குள், அங்குமிங்கும் ஒடித்திரிந்து தேசத்துரோகிகளாயுள்ள சிலரோடு சங்சாரங்செய்து சம்பாஷித்து,அவர்கள் சொன்னவைகளையே உண்மையெனக் கொண்டு, ஒரு பெரிய இழிவான கட்டுக்கதையை யொத்த,பிரபந்தமொன்றை, எழுதிப்பரப்பின அப்பெண்ணின் சாமர்த்தியமே, சாமர்த்தியம். இக்கதை, எவ்வளவோ கேடான சிந்தனைகளையும் வாக்குவாதங்களையும் சனங்களுக்கிடையே உண்டாக்கிக் கொண்டு வருகிறதென்று, நாம் அறிகிறோம். இவ்வித தப்பெண்ணங்களை மாற்றும்படியாகவும், இந்தியதேசத்தாரின் பரமார்த்தமான, சீவிய நோக்கங்களையும்,
29

Page 20
போதனைகளையும் தெளிவாய் விளங்கப்படுத்தும்படியாகவும், சில மகான்கள் வெளிப்பட்டு இப்புத்தகத்திற் காணப்படும், அபத்தங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டிக் கண்டனம் செய்து எழுதியிருக்கிறார்கள்.
அவைகளின் முக்கியமாய்க் காணப்படும் விஷயம், “இந்திய இல்வாழ்க்கை”யாம். இந்திய இல்வாழ்க்கையானது, ஏதோ மிகவும் கேவலமானஸ்திதியிலுள்ளது என்பது போலப் பலவிதமான உதாரணங்களைக்காட்டி மேயோ மாது எழுதியிருக்கிறாள். “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்பார்க்கிறது” என்று ஒரு முதுமொழியுண்டு. அதைக்கருதித்தானோ எங்கேயோ, கீழ்த்தரமான மூலையில் தான் கேட்டறிந்த ஒரு சம்பவத்தை ஆதாரமாகக்கொண்டு ஒரே அடியில் இந்திய இல்வாழ்க்கையை இழிவான காட்டுமிருகாண்டி சாதியாரின் வாழ்க்கைக்கொப்பிட்டு, இந்தமாது எழுதியிருக்கிறார்.ஆயின் சோற்றுக்கு பதம் பார்க்கிறவர் எவராவது அடிப்பானையில் இருக்கும், கரிச்சோற்றை எடுத்துப்பார்க்க மாட்டார். என்பதை இவள் அறிந்தாளில்லை. ஆழமாய் ஆராய்ந்து பார்க்குமிடத்து, நமது தேசத்தாரின் இல்வாழ்க்கையானது, மகா உத்தமமானதும் மாசற்ற மகத்துவமுள்ளதுமெனக் காணப்படும்.
இல்வாழ்க்கைக்கு இன்றியமையாததாயுள்ள வீடு' என்னும் ஸ்தாபனத்தை சற்றுக் கவனிப்போம். மேல் நாட்டு நாகரீகமானது, நம்மைச் சூழ்ந்து பிடித்துக் கொள்வதற்கு முன் கட்டப்பட்டுள்ளதான சாதாரண வீடொன்றை நாம், பார்க்குமிடத்து சில விசேஷங்கள், நமக்குத் தெளிவாய்த் தென்படும். அவ்வீடானது பெரும்பான்மையாய் ஒரு நாற்சார் வீடாகவிருக்கும். அதாவது வீட்டின் மத்தியில் ஒரு நாற்சதுரமான திறந்த முற்றமும் அம்முற்றத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு விசாலாமான வீட்டிறப்பு, அல்லது விறாந்தாக்களும் உள்ளதாயிருக்கும். வீட்டுக்குள்ளே போகப்போக, வீடும் விசாலித்துக்கொண்டேவருகிறது போலத்தோற்றும். அந்த உள்முற்றமானது என்னத்துக்காக செய்யப்பட்டது?. வீட்டுக்குள்ளே இரவும் பகலும் தங்கியிருப்போராகிய பெண்களும் சிறுபிள்ளைகளும் நல்ல சுத்தமான ஆகாயத்தையும் சூரிய வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக அம்முற்றத்தைச்சுற்றியிருக்கும் நான்கு விசாலித்த வீட்டிறப்புகளும் என்னத்தைக் காட்டுகின்றன? அவ்விறாந்தாக்கள் என்னத்துக்காகக் கட்டப்பட்டன?. விருந்தாளிகளாய் எத்தனைபேர் அவ்வீட்டுக்கு வந்தாலும், அத்தனைபேரும் தாராளமாய் அங்கே உட்கார்ந்து விருந்தருந்தி வீட்டுக்காரரின் உபசரணையைப் பெற்றுப்போகும்படியாகவே இவ்விசாலித்த இடம் வைக்கப்பட்டது. இந்திய இல்வாழ்க்கையில் விருந்தோம்பி அந்நியரை உபசரிக்கும், செய்கையானது, எத்தனை உதாரகுணமுள்ளதென பார்த்தீர்களா?. வீட்டின் மேற்பகுதியில் போசன அறையிருக்கும். தெற்குப்பக்கத்தில், சமையலறை காணப்படும்.
30

இருவெகு புனிதமுள்ளதாயும் போதியளவுவெளிச்சமும் சுத்த ஆகாயமும் வந்து கொண்டேயிருக்கக்கூடிய இடமாயியுமிருக்கும், பெரியவீடுகளில் உள்ளே இன்னுமொரு நாற்சதுரமுற்றமும் அதைச்சுற்றி விறாந்தாக்களும் அறைகளும் காணப்படும். வீட்டுக்காரரின் உள்ளத்தையும் ஆழ்ந்த அன்பையும் றாம் பழகப்பழக அறிந்து கொள்ளக்கூடும் என்பதை பொருட்பாடமாய் காட்டுகிறாப்போல் அவ்வீடானது, உள்ளே போகப்போக விசாலித்துக்கொண்டும், வருகிறவர் யாவரையும் ஏற்றுக்கொள்ள ஆவலோடுதன் கரங்களை நீட்டிக்கொண்டிருக்கிறதாகவும் காணப்படும்.
வீட்டாரில் துலங்கிக்கொண்டிருக்கும் முக்கிய குணாதிசயங்கங்கள் எவை? வீட்டிலுள்ளாருக்குரியதாகிய ஆழ்ந்த அன்பும் ஆதரவும், வீட்டுக்கு மூலாதாரமாய்காணப்படும் மார்க்காபிமானமும், கூட்டுக்குடும்ப ஒழங்கும், வீட்டில் நிறைந்திருக்கும் உபசார சீலம், என்னும் குணமாகிய இவைகளேயாம், இவைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெருந்தகமையுள்ளதென்பது யாவருக்கும் விளங்கும்.
இந்திய இல்வாழ்க்கையின் விவாகமுறைமயைப்பற்றிக்கவனிப்போம். இம்முறைமையின் ஆதிநோக்கம் எப்படிப்பட்தென்று சற்றும் ஆராயாது மேயோமாது, அம்முறமையை முற்றாகவே அபாண்டப்படுத்திவிட்டாள். அம்முறமையின் அருமையான அர்த்தத்தை அவள் விளங்கிக்கொள்ளவேயில்லை.
இந்திய வாழ்க்கையின் விவாகமானது குடும்பஸ்தானத்தின் மூலாதாரமாகும். மேலைத்தேசத்தாரைப் போல் பெண்ணும், மாப்பிள்ளையும் மணம்விரும்பி ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து மணந்து கொள்ளுதல், இந்திய இல்வாழ்க்கை நியமத்துக்கு விரோதமானது. அப்டிப்பட்ட ஒரு விவாகம் ஆயிரத்திலொருமுறை நிறைவேறக்கூடும். ஆனால் பெரும்பான்மையாக பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளையைத்தெரிந்து, அவர்களை விவாகம் செய்து கொடுக்கும் உரிமை பெற்றோருக்கும், குடும்பத்தின் பெரியார்களுக்குமே உடையது. பெற்றோர் தமது பிள்ளைகளுடைய நன்மையை விரும்பி புருஷன், மனைவியாக அவர்கள் ஒருமித்துச்சந்தோசமாய் வாழ்வதற்கேதுவான குணாதிசயங்கள் எங்கே காணப்படுகிறதோ, அங்கேயே சம்பந்தஞ்செய்து கொள்ளத் தீர்மானிப்பார்கள்.
நமது விவாக நியமம் முழுவதையும், தனக்குள்ளடக்கியிருக்கும் விதிமுறையானது ஒன்றே. அது ஒரு மரத்தின கிளையை இன்னொருமரத்துடன் ஒட்டவைக்கும் விதியையொத்திருக்கிறது ஒரு குடும்பத்தின் சந்ததியுடன் இணைந்து ஒன்றித்து ஒரே குடும்பம்போல்
3

Page 21
வாழ்வதே இந்திய விவாகநிலமையின் உன்னத இலக்கு. இவ்விலக்குப் பூரணநிலையடைய வேண்டுமானால் ஒட்டப்படும் கிளையானது கொழுந்துப்பருவமாயிருக்கவேண்டியதவசியம். வசந்த காலங்களில் மரக்கிளைகளில் நாம் பலமுறையும் காண்கிற சின்னஞ்சிறிய அரும்புகளான இலை வெளிப்படாத மொக்குகளை நாம் கொழுந்துப்பருவம் எனக்கொள்ளவில்லை. அரும்புகளானது சற்று வளர்ந்து சுருண்டு மூடப்பட்டிருக்கும் இலைகளானது விரிந்து பார்ப்போர் கண்களைக் கவரத்தக்கதான இளஞ்செந்நிறமடைந்து அலங்காரமாகத்தோற்றும் அவைகளையே கொழுந்துப்பருவம் எனக்கொள்ளலாம். இவ்வித பருவத்திலிருக்கும் சிறுகிளைகளையே மரத்துடன் ஒட்ட வைப்பார்கள் அதைவிட்டு முதிர்ந்த பச்சிலை நிறம்பற்றிய இலைகளுள்ள கிளையை இன்னொருமரத்தில் ஒட்டிவிட்டு அது மரத்துடனிணைந்து வளர்ந்து செழிக்குமென்று காத்திருப்பது விருதா இது காரணமாகவே நம் முன்னோர் இளம்பருவ விவாக நியமனத்தை, இந்தியாவில் நிறுவினர். இந்த ஒழுங்கின் பலனாகத்தான் ஒருகுடும்பத்தாருடன் இன்னொரு குடும்பத்தார் ஒன்றுபட்டு ஒரே கூட்டமாகக் காணப்பட்டபோதிலும் அவ்வக்குடும்பமானது தன் செல்வாக்கையும் தனியுரிமையையும் இழந்து விடுகிறதேயில்லை இவ்வித நியமனத்தினாலாளப்படும் ஒர் இந்து குடும்பமானது தன் சிறப்பியல்பாயிருக்கும், குணாதிசயங்களையும் உள்ளதாய் கலப்பற்று வாழ்ந்து வருகின்றது.
இந்துவிவாகத்தின், உண்மையான சாரம் இன்னதென்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டுமானால் நாம் இந்த நியமத்தை ஓர் கற்பனாசாரம் என்று தானும் கொள்ளாது, அது ஒர் திவ்விய சம்ஸ்கார மெனப்பூசிக்கவேண்டியது. தற்காலத்தில் நிறைவேறும் விவாகங்களிலநேகம் வெறும் வீண்சம்பந்தங்களையும், செல்வம், கீர்த்தி, வல்லமை இவைகளையே காத்திமெனக்கணிக்கும் இருபகுதியருடைய நிபந்தனாசாசனமாகவும் இருக்கின்றன. நம்மூதாதைகளின் பரமார்த்த நோக்கம் இவ்விகூடியத்தில் இப்படிப்பட்டதல்ல. அவர்களுக்கு விவாகமானது மகாபரிசுத்தமான ஒர்பந்தனம். உடலுடன் உடலும் உயிரும் ஆவியுடன் ஆவியும் ஒன்றுபட்டு,சம்சாரமாகிய சகடத்தை ஒரேநேராகவும் ஒத்த நோக்கத்துடனும் இழுத்துச்சென்று, தெய்வப்பிரீதியைப்பெற்ற தம்பிதிகளாய் அவர்கள் சுவர்க்க நிலையடைவதை அதன் சம்பூர்ணநிலையாம் இதைப்பார்க்கிலும் பாக்கியமான நிலை வேறென்ன?. காலபேதங்களினால் இவ்வுன்னத நியமனங்கள் இலக்கு வேறுபட்டு, குறிமாறி, அன்னியதேச ஆசாரங்களுடன் கலப்புற்று இனந்தெரியாமல் கலங்கியிருக்கிறதை நாம் 6) இடங்களிலும் காண்கிறோமல்லவா?”முன்னே வந்த செவியை பின்னே வந்த கொம்பு
32

மறைக்கிறது” போல தொன்று தொட்டுப்பரம்பரையாயுள்ள மாசற்ற நியமனங்களையும், ஆழ்ந்த அர்த்தமடங்கிய சடங்காசாரங்களையும் நாம் மறந்துவிட்ட இப்போது நமக்குப் பகட்டிக்கொண்டிருக்கும், அர்த்தமற்ற போலியாசாரங்களையே பெரிதேனக்கருதி கைக்கொண்டு வருவது மகாமூடத்தனமன்றோ?
காரியமிப்படியிருக்க நாம் செய்யவேண்டியதென்ன? இந்த நியமனங்களையெல்லாம் முற்றாகவே அழிந்து போகவிடுவோமா? அப்படியல்ல, ஆதிகாலந்தொட்டு நியமனம் பெற்று இதுவரைக்கும் அனுசரிக்கப்படடுக்கொண்டுவந்திருக்கிறவைகளாகிய இந்த சாசனங்கள் மறுபடியும் புதிதாக விளங்கப்படுத்தப்படவேண்டும்.சடங்காசாரங்களின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளக்கூடுமானால் நம்மவரிலனேகர் திரும்பபும் இலைகளைக்கைக்கொள்ள முன்வருவார்களென்று சொல்லலாம். தற்கால இளஞ்சந்ததியாருக்கு இவைகளை நாம் தெளிவாக எடுத்துக்காட்டி, இவைகளினால் நமக்கு நன்மைதான் பயக்குமன்று தீமை மபயக்காது என வற்புறுத்துவோமானால், அவர்களும் தாங்கள் இழந்துபோன பெரிய செல்வமாகிய இந்தச்சாசனங்களை மீளவும் பெற்றுக்கொள்வதற்காகப் பிரயாசப்படுகிறார்களென்று காத்திருக்கலாம்.
மேலும், இந்துமாதரின் குடிநிலை எப்படிப்பட்டது?. வீட்டுக்குள்ளேயும்.வேறு இடங்சளிலும் அவர்கள் எவ்விதமாய் நடத்தப்படுகிறார்கள்? இதைப்பற்றியும் மிகவும் தவறான எண்ணங்கள்தான் அதிகமாய் பரவியிருக்கின்றன என்று காண்கின்றோம். இந்தியாவிலே “பெண்’ என்று சொன்னால் அது ஏதோ அற்பப்பொருள் போல் எண்ணப்படுகிறதென்று தான் பலரும்
நினைக்கிறார்கள் ? வீடுகளிலும், குடும்பங்களிலும் பெண்களை விளையாட்டுச்சாமான்கள் போலும் பணிமுட்டுகளைப்போலும் பாவிக்கிறதும் அவர்களைப்பற்றி யாராவது சட்டைபண்ணாதிருக்கிறதும்தான் பொதுவான வழக்கம் என்று ஒரு பெரிய பேச்சு நெடுங்காலமாக நடமாடிவருகிறது. உண்மை நிலையை உள்ளே ஆராய்ந்து பார்த்தால் அது அப்படியல்லவென்று தெரியவரும். ஒரு பெண்ணானவள் விவாகமாகி தாய் வீட்டிலிருந்து தனது புருஷனுடைய வீடடுக்குப் போகிறாளென்று வைத்துக்கொளவோம், ஒழுங்காய் நடத்தப்படும் அவ்வீட்டிலுடனே அவளை ஒருவிலையற்ற பொருள்போலப்பாவித்து நடத்துகிறதாக நாம் காணவில்லை. இரண்டு மூன்று பிள்ளைகளுக்கு தாயாக அவள் வரும்வரைக்கும் , அவள்
33

Page 22
பெரியோர் அதிகாரத்துள்ளடங்கி, அவர்கள் சித்தப்படியே அமைந்திருக்கவேண்டியிருக்கலாம். ஆனால் அது சிறிது காலத்துக்குத்தான். இந்த சில வருஷங்களுள் அந்தப் பெண்ணானவள் பல விரதங்களைக்கற்றுக்கொண்டும் குடும்பத்தை நடத்தும் முறைமைகளைக் கற்றுக்கொண்டும் “குடும்பத்தலைவி” என்னும் பதவிக்குத் தன்னைத் தகுந்தவளாக்கிக் கொள்கிறாள். இதன்பின் அவள் வீட்டுக்கு ஒர் அரசிதான். வீட்டுக்கு வரும் பணத்தையும், பொருள்பண்டங்களையும் கையாடவும் இனத்தார், சனத்தார்,குடிமக்கள், வேலைக்காரர் ஆகியஇவர்களையெல்லாம் ஆதரித்துநடத்திக்கொள்ளவும் அவளுக்கு இப்போ அறிவும் அதிகாரமும் உண்டு. தன்னுடைய மகளுக்கோ மகனுக் கோ விவாகம் செய்து கொடுக் க வேண்டுமானால் குடும்பத் தலை வியாகிய அவளுடைய சம்மதமே முதலாவது கிடைக்கவேண்டும். புருஷன் இவ்விடயத்தில் இவளுடைய சொல்லைத்தட்டி நடக்கமாட்டான். புருஷன் வெளியே போய் நாள் முழுவதும் கஷ்டப்பட்டுப்பணம் சம்பாதித்துக்கொண்டுவரலாம். ஆனால் வீ ட் டி லி ரு ந் து  ெக |ா ண் டு அ டு ப் ப ங் க  ைர யி ன் காரியங்களைக்கவனித்துக்கொண்வரும் மனைவிக்கே அதிகாரம் மிக்கஉண்டு. சம்ஸாரம் நடத்தும் விஷயங்களிலெல்லாம் கணவனுக்கும் , மனைவிக்கும் ஒரேவிதமான உரிமையுண்டு. மனைவியானவள் வ  ேல |ா ற் க எ ர மா ய் , இ ந் த ச ல |ா க் கி ய த்  ைத அடித்துப்பறித்துப்பெற்றுக்கொள்கிறவளல்ல. தன் விடாமுயற்சியினாலும், தன் குடும்ப வாழ்வுக்கென்று இரவும் பகலும் , கண்ணும் கருத்துமாய் உழைத்துக்கொண்டு வருகிறதினாலும், அவைகளின் பதிலுபகாரமாய் “குடும்பராணி’ என்ற பதவியை அடைகிறாள்.
ஏல்லா காரியங்களிலும், புருஷனும் மனைவியும், ஒரேசமமான நிலைக்குரித்தானவர் என்று நாம் சொல்லவில்லை. சமத்துவம் சில சமயங்களில் ஒருமிப்பையல்ல, பிளப்பையே உண்டாக்குகிறது. இதனால்தான் இந்தியராகிய நாம் சமத்துவ விதியைய்ப் பின் பற்றாமல் அன்பின் விதியைப் பின் பற்றுகிறோம். அன்பு எங்கே தலை எழும்பியிருக்கின்றதோ, அங்கேயே ஒருவரை ஒருவர் மதித்துக் கனப்பபடுத்தும் தன்மையும் காணப்படும். அன்பை ஏவும் கருவியாய்க் கொண்டு புருஷணை மனைவியும் , மனைவியை புருஷனும் தெய்வமென மதித்துக் வருவதுதான் இல்வாழ்க்கை ஒழுங்காம். இது சீவியத்தின் பிரமாணமாயிருக்கும்போது, அதிகாரியென்று புருஷனையும் அடங்கியிருப்பவனென்று மனைவியையும் சொல்லவேண்டியதில்லை.
34

அன்பினாலாளப்பட்டு, ஸ்திரியானவள் தன் புருஷனுக்கு அமைந்திருக்க வேண்டிய விஷயங்களில் மனப்பூர்த்தியாய் அமைந்திருப்பாள். ஆகவே சமாதானமும் சந்தோஷமுமன்றி. சண்டை சச்சரவு என்பவை குடும்பங்களின் காணப்படா. இதுவே இந்து குடும்பங்களின் அனுகூலமான சீவியத்துக்கு அத்தியாவசியாமாயிருக்கும். தாய் வேராயிருக்கின்றது. இதனாலாளப்படும் பொழுது இந்திய இல்வாழ்க்கை மகத்துவம் பொருந்தியதாயிருக்மென்பது தெளிவாய் விளங்கும்.
35

Page 23
ஸ்திரீகளும் வாக்குரிமையும்
இலங்கை அரசியல் சீர்திருத்த விஷயமாக டொனமூர் கமிஷனர்களால் வெளியிடப்பட்ட யாதாஸ்தை ஒவ்வொருவரும் நன்கு ஆராய்ந்திருப்பார்கள் இக்கமிஷனர்கள் இலங்கை வாழ் ஸ்திரீகள் சம்பந்தப்பட்டவரை நடத்தியிருக்கும்விதம் மிகவும் திருப்திகரமாகவே இருந்து வருகிறது. இலங்கை மாதர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திய அக்கமிஷனர்களுக்கு நாம் நன்றி பாராட்டக்கடமைப்பட்டுள்ளோம். இச்சிறு தீவிலுள்ள ஸ்திரீகளாகிய நாம் இப்போதுதான் நமது உறக்கத்தினின்று விழித்து எழுந்து நமது உரிமைகளைப்பெற முயற்சி செய்கிறோம். இவ்வாறு நமது உரிமைகளைப் பெற முயற்சிப்பதைப்பல ஆடவர்கள் ஆதரித்த போதிலும், இலங்கை தேசிய காங்கிரஸ் சபையிலும் இலங்கைப் பெண்மணிகளுக்குவாக்குரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்ட போதிலும் இப்போது நாம் கையாண்டிருக்கும் காரியம் மிகச்சிறியதெனவே. நாம் வெளிப்படையாக கூறவேண்டியதாயிருக்கிறது.
நாம் பெறவேண்டிய உரிமைகளை உன்னி ஆலோசிக்கும்போது இப்போது பெற முயற்சித்திருப்பது ஒரு தினையளவே ஒக்கும். இந்நாட்டிலிருக்கும் ஸ்திரிகளின் நிலமையை ஒப்பிட்டுப்பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்பட்டுவிடாது.இந்தியாவிலுள்ள ஸ்திரீகளைக் காட்டிலும் நம் கல்வியில் தேர்ந்துவிட்டோம் என்று சொல்வதாவது நம் நாட்டு ஸதிரீகளின் கல்வியை மற்ற நாட்டு ஸ்திரீகளின் கல்வி முன்னேற்றத்துடன் ஒப்பிடுவதாவது யாதொருபயனையும் அளிக்கப்போவதில்லை. தற்போது நம் இலங்கையிலுள்ள ஸ்திரீகளின் நிலமையையும் கமிஷனர்களால் நம்மவர்களில் 30 வயதுக்கு மேற்பட்ாேருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருப்பதையும் எவ்விதத்தும் நியாயமுறையாக பூராவாகப் பரிசீலனை செய்யவேண்டியதே இப்போது நம்முடைய கடமையாயிருக்கிறது. நாம் கேட்டதற்கு அதிகமாகவே கமிஷனர் நமக்கு உரிமை அளித்திருக்கிறார்கள் என்பதை நாம் ஞாபகத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டினோம். நம்மவர்கள் வாக்குரிமை பெறச்சிறிது கற்றவர்களாகவும், ஓர் சிறு தொகையை சம்பாதிப்பவர்களாகவோ அல்லது சொத்துடயவர்களாகவோ இருக்கவெண்டுமென்றும் அவ்வாறு உள்ளவர்களுக்கே வாக்குரிமை அளிக்கப்பட்டால் அதுவே தகுந்ததெனவும் நாம் வேண்டிக்கொண்டோம்.
36

ஆனால் இத்தகைய நிபந்தனைகள் யாதொன்றையுமே லட்சியம் செய்யாது அவைகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு “ஓர் ஸ்திரீயானவள் வாக்குரிமைளை உபயோகப்படுத்துவதற்கு முன்பு, அறிவு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.” என்ற ஓர் நிபந்தனையை மட்டும் கமிஷனர்கள் கூறியிருக்கிறார்கள். ஆடவர்களுக்கு ஜன சமுதாயத்தில் எவ்வளவு : உரிமைகளுண்டோ அத்துணை சம உரிமைகள் பெண்டிர்களுக்குமிருப்பது இயற்கைதானே. இருதிறத்தாருக்கும் ஒரேதன்மையானதிறமையும், அறிவுமுதிர்ச்சியும் இருந்து வருகின்றதையும் நாம் கண்கூரப்பார்த்து வருகிறோம்.
முதன்மையாக வாக்குரிமை என்பதென்னென்று ஆராய்வோம்
வாக்குரிமையெனப்படுவது சுவாதந்திரியம் அல்லது ஒர் அரசாங்கத்தாராலோ அல்லது ஒர் அரசாலோ அளிக்கப்படும் சுதந்திரத்துக்கே வாக்குரிமை என்பது. இதிலிருந்து நாட்டின் அரசியலைச்சரிவர நடத்துவதற்கு ஏற்படுத்தப்படும் பார்லிமென்ட் சபைகளில் ஜனப்பிரதிநிதிகளை தெரிந்தனுப்ப உபயோகிக்கப்படும் உரிமைக்கே வாக்குரிமை எனக்கூறப்பட்டது. இலங்கை ஸ்திரீகளுக்கு வாக்குரிமை கொடுக்கப்படவேண்டுமென்பது அவர்கள் சட்டசபையில் பிரதிநிதிகளை தேர்ந்தனுப்பும் உரிமையைத் தான் பெறுவதெனப் பொருள்படும். ஒர் பிரதிநிதியை தெரிந்தெடுப்பதற்குள்ள உரிமையால் தேர்தலுக்கு நிற்கவேண்டிய நிபந்தனைகளையும் நிதானிக்க வேண்டிவருகிறது இது சம்பந்தப்பட்டவரை இலங்கையிலுள்ள முப்பது வயதிற்கு மேற்பட்ட எல்லா பெண்டிரும், அவர்களுக்கு கல்வியறிவு இருந்தாலும் சரி, பொருளிருந்தாலும் சரி ஒன்றுமே இல்லாவிட்டாலும் சரி, யாதொரு வித்தியாசமுமின்றி தமக்குரிய வாக்குரிமையை உபயோகிக்கப்பதிவு செய்துகொண்டு தமக்கு யாரிடத்தில் நம்பிக்கையிருக்கிறதோ அன்னாருக்கு தமது வாக்குரிமையைக் கொடுக்கலாம் எனக் கமிஷனர்கள் சிபார்சு செய்திருக்கிறார்கள்.
ஸ்திரீககள் சட்டசபையிலோ, அரசாங்கசபையிலோ அங்கத்தினராக விழைந்தார்களானால் ஆங்கிலக்கல்வி கற்றிருக்க வேண்டுமெனவும் வேறுயாதொரு நிபந்தனையும் தேவையில்லை எனவும் கமிஷனர்கள் சிபார்சு செய்துள்ளார்கள். ஆதலால் தேசிய உரிமையை அளிக்கும் விஷயத்தில் ஆடவர்க்கும், ஸ்திரீகளுக்கும் சரிசமத்துவமான முறையையே கமிஷனர்கள் சிபார்சுசெய்திருக்கிறார்கள். ஆனால் ஸ்திரீகளுக்கு வாக்குரிமை வயது நிர்ணயத்தை மட்டும் ஆடவர்க்குரிய வயதினின்றும் 9
37

Page 24
வருடங்களை உயர்த்தியுள்ளார்கள். ஸ்திரீகள் தேசிய விஷயங்களில் பிரவேசித்ததினால் தமது சமூகவாழ்க்கையே நாசமடைந்து விடுகிறதென சிலர் நினைக்கிறார்கள். இது விடயத்தில் யாம் அதிகம் பேசவிரும்பவில்லையாயினும் இரண்டொருவார்த்தை கூற விரும்புகிறோம். தேசத்தின் பொதுஜன சேவையில் ஸ்திரீகள் ஈடுபட்டு வருவதினால் அவர்கள் தம்மில் வாழ்க்கையின் காரியங்களை ஒழுங்குபெற நடத்த யோக்கியதை அற்றவர்களாய் ஆகிவிடமாட்டார்களென்பது எமது அனுபவத்திலிருந்து அறிந்து கொண்டோம். அரசாங்கத்தின் நிர்வாகம் முழுவதையும் தேசத்தின் தேசிய கைங்கரியத்தையும் தனியாகத்தம் கைக்கொண்ட ஆடவர்கள் தம்மில் வாழ்க்கையைச் சரிவர நடத்த யோக்கியதையற்றவர்களாயிருக்கிறார்களா? Α அவர்கள் குழவிகளிடத்துக் கொண்டுள்ள அன்பு அறவே அற்றவர்களாயிருக்கிறார்களா?. சமுதாய வாழ்க்கையின் சமாதானத்தையும், திருப்தியையும் பெறாதிருக்கிறார்களா?. இல்லையே அதுபோல ஸ்திரீகளும் ஏன் பொதுஜன கைங்கரியத்தில் ஈடுபட அனுமதிக்கலாகாது?. ஆங்கில அருங்கவியான ஷெல்லி என்பவர் சொன்னபடி “ஸ்திரீகர்களாகிய நாம் இல்வாழ்க்கையின் சுற்றத்தாருக்கும் வெளி உலகத்தாருக்கும் உண்மையாக நடந்துகொள்ளக்கூடும். அவ்வாறு உண்மையாக நடந்துகொள்ளவும் வேண்டும்” என்பதை நாம் ஈண்டு குறிப்பிடவேண்டியதாயிருக்கிறது.
ஸ்திரீகளுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டிய அவசியமென்ன?. அதனைப்பெற்று அவர்கள் என்ன விசேஷ காரியங்கள் செய்யப்போகிறார்கள் என்பதாகப் பலர் கேட்கலாம். “சிசு சம்ரஷனைக்கும்,இல்லங்களை சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதற்கும் மருத்துவத்திற்கும் மற்றும் பல காரியங்களுக்கும் இலங்கையில் ஸ்திரீகளின் கைங்கரியம் மிகவும் மாண்புடைத்ததாகவும், பிரயோசனமுடையதாகவும் இருக்கிறது.” எனக் கமிஷனர்களே தமது யதாஸ்தில் குறித்துள்ளார்கள். டொனமூர் கமிஷனர்கள் சரியான உண்மையை அறிந்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இவ்வருட ஆரம்பத்தில் எங்களுள் சிலர் கமிஷனர்களுக்கு முன் சாட்சியங் கொடுத்தபோது மேற்குறிக்கப்பட்டிருக்கும் விஷயங்களின் அவசியத்தையே வற்புறுத்தி எடுத்துக்கூறி அதன் காரணத்தினாலேயே எமக்கு வாக்குரிமை அளிக்கப்படவேண்டுமென்று மன்றாடினோம். அதனால் கமிஷனர்கள் கவரப்பட்டு விட்டார்களளென்றே கூறுவோம்.
உதாரணமாக இலங்கையில் ஏற்படும் சிகிமரண விகிதத்தை எடுத்துப்பார்க்கும்போது 1000 குழந்தைகளுக்கு 172 குழந்தைகள் சிசு
38

பருவத்திலேயே மரித்து விடுகின்றனவென்று 1925 ம் வருஷ அறிக்கையினின்றும் தெரிய வருகிறது. 1924 ம் வருஷமுதல் 1925 ம் வருஷம் வரைக்கும் இங்கிலாந்திலும் வேல்ஷிலும் 1000த்துக்கும் 86 சிசு மரணங்களே ஏற்பட்டிருக்கின்றன. அத்துடன் இலங்கைச்சிசு மரணத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது இலங்கையில் இச்சிசுமரணத்தை நிறுத்துவதற்கென எவ்வளவு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கிறதென்து விளங்கும். இவ்வாறு சிசுமரணம் ஏற்படுவதின் காரணத்தை ஆடவர் அறிவார்களா என்பதே கேள்வி. சிசுக்களின் சம்ரஷணையைக் கவனிக்கும் பொறுப்பு ஆடவர் குறித்ததோ அல்லது பெண்டிருக்குறித்ததோ என்பது இப்போதெழும் கேள்வி. நாம் இந்த இலங்கைத்தீவின் கண்ணமைந்த நடுத்தர ஜனங்களுடன் அளவளாவிப் பார்த்த வரையிலும் பத்துமாதம் பல துன்பப்பட்டுப் பெற்றெடுத்த தழந்தைகளைத் தாய்மார்கள் பிரிய நேரிடும் காஷி கண்டோர் மனதைக் கலைந்துறையும்படி செய்யத்தக்கதாயிருந்தது. இத்தகைய விஷயங்களை சீர்திருத்த சட்ட சபையில் யாவர் மன்றாடக்கூடும்?. இத்தகைய கண் காணாக்காஷிகளை அநுபவ பூர்வமாகக்கண்ட ஸ்திரிகளே தான் இங்கு பலர் மனதில் பதியுமாறும் எடுத்துக்கூறமுடியும். ஆதலால் ஸ்திரிகளேதான் அத்தகைய குறைகளைச்சட்ட சபைகளில் எடுத்துப்பேசிநிவர்த்தி செய்ய இயலும்.
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினையை எடுத்து ஆராய்வோமானால் அப்போதும் ஸ்திரிகளே தான் மிகவும் சங்கடப்படவேண்டி ஏற்டுகிறது இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் ஊன்றிப் பார்க்குமிடத்து எத்துணையோ விடயங்கள் ஸ்திரீகளால் சட்ட சபைகளில் எடுத்துப்பேசி நாட்டை முன்னேற்றப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. கமிஷனர்கள் நமக்கு வாக்குரிமையை அளித்து விட்டார்களென்றும் அதனால் இனி நமக்கு வேண்டியது யாதொன்றுமில்லையெனவும் நாம் வாளாயிருந்துவிடக்கூடாது. இப்பொழுதுதான் நாம் தேசிய கைங்கரியத்தின் முதற்படியில் கால் வைத்திருக்கிறோம். கல்வியைப் பெற்றவர்களுக்கும், உலக அறிவு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கும் அந்த வாக்குரிமையின் மூலம் தேச சேவையின் உணர்வு ஏற்படும். வாக்குரிமை என்பது ஒர் வகைச் சுதந்திரம் எனச் சற்று முன்னர் கூறினோம். சுதந்திரத்துடன் பொறுப்பு வந்து சேர்வது இயற்கையன்றோ. நமக்கு எப்போது வாக்குரிமை கொடுக்கப்பட்டதோ அப்போதே நம்மிடம் ஒர்வகை நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறதென்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆதலால் நாம் ஒவ்வோர் தேசிய
39

Page 25
பிச்சினைகளையும் தெறிவுறத்தெரிந்து அவைகளைக் கற்று முன்னேற்றத்தை அடைய முயற்சி செய்வதுடன் தேச சேவையையும் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்.
“இலங்கைவாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கம்” என நாமம் படைத்து ஓர் சங்கம் சென்ற வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதென்பதைப் பலரும் அறிந்திருப்பர். இச்சங்கம் மிகவும் சமயோஜிதமான காலத்திலேயே தோன்றியது என்று கொள்ளலாம். ஏனெனில் அந்நாட்களில்தானே இலங்கைச்சட்டதிருத்த விசாரணைகாரர், இவ்விடம் வந்திருந்தார்கள். அவர்கள் தேசமெங்கும்போய் ஆராய்ச்சி செய்து இலங்கைத்தீவின் அரசாங்கநிலை, ஜனசமூகநிலை எப்படிப் பட்டனவாயிருக் கின்றனவென்று அறிந்து கொண்டார்கள். இதற்காகவே அவர்கள் இலங்கைவாசிகள் பலரையுங்கண்டு பேசி அவர்கள் வாக்குமூலத்தை கேட்டறிந்தார்கள் . இவைகளிலெல்லாம் ஆண்மக்கள் மாத்திரம் பங்குபெற்றார்களன்றிப் பெண்மக்கள் சிலகாலமாக யாதொருபங்கும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனதுபற்றி, இலங்கையில் வசிக்கும் பெண்மக்கள் தங்களாலாகவெண்டிய காரியங்களையும் ஆண்மக்கள் பேரிலேயே போட்டுவிட்டு தன்தேசநன்மை கருதாது வேண்டாவெறுப்புடன் ஜீவித்து வருகிறார்களோ என்று இவ்விடம் வந்திருந்த சட்ட திருத்த விசாரணைக்காரர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் பெண்களாகிய நாம் சமயம் கிடைக்கும் வரையும் காத்திருந்தோமேயன்றி வேறல்ல. ஆண்மக்களில் பலர் பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பது புத்தியல்ல வென்று பேசிக்கொள்கிறார்கள் என்று நாம் கேள்விப்பட்டபோது இதுதான் ஏற்றசமயமென்று கண்டு , பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தோம். அதோடு நாம் நின்றுவிடவில்லை. சட்ட விசாரணைக்காரரை நாம் முகதாவில் கண்டு நமது தேச அரசாட்சியில் காணப்படும் பெரும் குறைவுகள் இவையென எடுத்துக்காட்டிப்பேசினோம். அவர்களும் தீர்க்கமாய் விசாரணை செய்து, நாங்கள் குறித்துக் காட்டினவைகள் யாவும் உண்மையே யென ஒப்புக்கொண்டனர். அதினால்தான், அவர்கள் பெண்களாகிய நமக்கு வாக்குரிமை கிடைக்கத்தான் வேண்டுமென்று சிபார்சு ச்ெய்வார்கள் என்ற நிச்சயம் மனதிலுண்டாயிற்று. நாம் காத்திருந்தபடியே சட்ட திருத்த விசாரணைக்காரர் “இலங்கை வாழ் மகளிருக்கு வாக்குரிமை கொடுக்கப்படவேண்டியது அவசியம்” என்பதாகத் தமது அறிக்கைப் பத்திரத்தில் வெளிப்படுத்தினர். நாம் கவலையற்று முயற்சியற்று சும்மாவிருந்ததினால் இவ்வுரிமை நமக்குக் கிடைக்கவில்லை. நாம்
40

பிரயாசப்பட்டு வேலை செய்தோம். அதினாலேயே இதைப் பெற்றுக் கொண்டோம். என்றாலும் வாக்குரிமை 30 வயசு துவங்கி அதற்கு மேற்பட்ட ஸ்திரீகளுக்கு மாத்திரம் கொடுக்கப்பட வேண்டுமென்பதாக சட்ட திருத்த விசாரணைக்காரர் குறிப்பிட்டனர். அப்படி எல்லைப் படுத்திக் கொள்வதினால் சற்று வயசு குறைந்த அநேக ஆயிரக்கணக்கான பெண்கள் வாக்குரிமையைப் பெற்றுக் கொள்ளக்கூடாமற்போகிறது என நமது சங்கத்தார் கண்டும் சொற்பகாலத்துக்கு ஒப்புக்கொள்ளுவோமென முதல் நினைத்தார்கள். ஆனால் தற்கால நிலையைக் கவனிக்குமிடத்து 30 வயசு வரும் வரைக்கும் பெண்கள் காத்திராமல் 21 வயசிலேயே வாக்குரிமையைப் பெற்றுக்கொள்வது அவசியம். என்பதாகக் கண்டனர். ஆனதால் இதையே பெற்றுக்கொள்வதற்காக நாம் முயற்சி செய்ய வெண்டுமென்பதே சங்கத்தின் தற்காலக் கொள்கை. ஆனால் இலங்கையில் வசிக்கும் பெண்கள் யாவரும் வாக்குரிமை என்றால் என்ன?, அது நமக்கு கிடைக்க வேண்டுமென்று என்னத்துக்காக கேட்கிறோம், அது கிடைத்தால் நாம் அதை எவ்விதமாய் பிரயோகிக்கவேண்டும், என்பதைப்பற்றி அறிந்திருக்கிறார்கள்,என்று நாம் சொல்வதற்கிமில்லை. எல்லா ஸ்திரிகளுக்கும் இவ்விஷயத்தைப்பற்றி அறிவூட்டவேண்டியது வாக்குரிமைச்சங்கத்தாரின் கடமையெள நமக்குத் தோன்றியது. இதற்காக இங்கிலிஸ்பாஷையில் “மகளிரும் வாக்குரிமையும்” என ஒரு சிறு புத்தக்த்தை பிரசுரஞ்செய்திருக்கின்றோம். இப்புஸ்தகம் சில நாட்களுக்குப்பின் தமிழிலும், சிங்களத்திலும் பிரசுரிக்கப்படும். இப்புத்தகத்தில் காணப்படும் சில விசேஷமான பகுதிகளை மொழிபெயர்த்து “இலங்கை இந்தியன்’ பத்திரிகையை வாசிக்கும் பெண்மக்கள் அறிந்து கொள்ளும்படியாக இவ்விடம் தருவது நலமென எனக்கு காணப்பட்டது.
புஸ்தகத்தின் முதற்பாகத்தில் “வாக்குரிமை” என்றதின் அர்த்தம்
இன்னதென்றும், பற்பல தேசங்களிலும் பெண்மக்கள் அதை எவ்விதம் அங்கீகரித்து வருகிறார்கள் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. வாக்குரிமையாவது என்ன?. அது தேர்தல் காலத்தில் தேர்தல் சீட்டில் x இவ்விதமாக X அடையாளம் போடுவதற்குக் கிடைத்திருக்கும் உரித்தும் இவ்வடையாளத்தைத் தேர்தல் சீட்டில் ஒருவனாவது , ஒருத்தியாவது போட்டுவிட்டால் அச் சீட்டின் மூலமாய் அவன் அல்லது அவள் சட்ட நிருபணசபை ஆகிய இச்சபைகளில் தனது பிரதி நிதியைத் தெரிந்து கொள்ளுகிறதாயிருக்கும். இவ்விதமாய் வாக்குரிமைக்காரன்தன் மூலமாயும் தனது பிரதிநிதி மூலமாயும் தனது தேசத்தின் சட்ட திட்டங்களை
4

Page 26
ஒருவாறு ஒழுங்குபடுத்திக் கொள்ளக்கூடிய சுதந்திரம் அடைகிறான். அது நகரவாசி, நாட்டுவாசி என்பவர்குரித்தாயுள்ள குறியாயும் ஒரு செய்கையாயும் இருக்கின்றது. தனி ஒரு ஆள் ஒருவன் “வாக்குரிமை” ஒர் பெரிய சுதந்திரம். எனக்கணிக்காமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவன் தனது வாக்குரிமையைப்பாவித்துத்தான் வேண்டும் என அவனைக் கட்டாயப்படுத்தவுமில்லை. அவன்மாத்திரம் தன் வாக்குரிமையைப் பாவிக்காவிட்டாலும் அது தேசத்துக்கு பெரும் கேட்டை உண்டாக்குவதுமில்லை.ஆனால் ஒரு வகுப்பாரோ அவர்கள் எல்லாரும் வாக்குரிமையைப் பாவிக்கும் சுதந்திரமற்றவராயிருப்பின் அது தேசத்துக்குப் பாரநட்டத்துக்கு ஏதுவாயிருக்கும் என்பதற்கையமில்லை. எந்தெந்த தேசத்தில் வாக்குரிமை ச்சுதந்திரம் ஜனங்களுக்கு க் கொடுக்கப்பட்டீருக்கிறதோ அந்தந்த தேசங்களில் எல்லாம் ஜனங்கள் கல்வியிலும் சன்மார்க்கத்திலிலும் செல்வத்திலும் ஞானத்திலும் அதிகப்பட்டுக் கொண்டே வருகின்றனர் என்பதை தேச வர்த்தமானங்களை படித்துக்கொண்டுவரும் யாவரும் அறிவார்கள்.
மகளிர் முன்னேற்றத்துக்குத் திட்டமான மூலாதாரம் வாக்குரிமையெனச் சொல்லலாம். புருஷர்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கும் வண்ணமே சம நிலையாக மகளிருக்கும் வாக்குரிமை கிடைக்க வேண்டும். அது கிடைக்கும்வரைக்கும் ஸ்திரிகள் புருஷரைப்பார்க்கிலும் குறைவான நிலையிலேயே இருக்கவேண்டிவரும். அதன்நிமித்தமாய் அவர்கள் தன் தேசிய சம்பந்த விஷயகளிலும் புருஷரைப்பார்க்கிலும் தாழ்ந்த இடத்தையே அடையவேண்டி நேரிடும் உலகத்தில் அநேக நேரங்களில் ஸ்திரிகள் தாழ்ந்த நிலை என்னும் ஸ்திதி தற்காலத்தில் மாறிக்கொண்டே வருகிறது. இது சந்தோஷத்திற்கும் தைரியத்திற்கும் ஏதுவானது. வருஷங்கள் செல்ல செல்ல ஒரு நுாற்றாண்டு கடந்து இன்னொரு நுாற்றாண்டு ஆரம்பிக்க காலத்துக்கேற்ற கோலமாய் புதிதான விதி முறைகள் புதிதான நோக்கங்கள் புதிதான ஒழுக்கங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. இப்புதிய மாறுதல்களின் முக்கியமாய் நாம் கவனிக்கக்கூடியது ஸ்திரி ஜனங்கள் நிலையில் காணப்படும் மாறுதலேயாம். கல்வி பயிற்சியிலும் சீரிதிருத்தத்திலும் குடி நிலையிரும் ஸ்திரிகள் தற்காலத்தில் அதிகமாய் முன்னேறியிருக்கின்றனர் . இற்றைக்கு இரண்டு மூன்று நுாற்றாண்டுகளுக்கு முன் ஸ்திரிகளின் தேர்ச்சி இவ்விதமாயிருந்ததென்று நாம் சொல்ல முடியாது. சென்றுபோன நுாற்றாண்டுகளில் பெண்கள் கல்வியென்றால் அதைப்பற்றி நகைப்போர்
42

எத்தனை பேர்.? தற்காலத்தில் பெண்கள் கல்வி கற்க வெண்டுமென்பதே பொது ஜனவாஞ்சையாயிருக்கிறது அவ்விதமே பெண் என்றால் பின்னே நிற்கவேண்டுமென்றார் சில வருஷங்களுக்கு முன் இப்போ பெண்களும் முன்னேறி வந்தால் தான் தேசத்துக்கு நன்மை என்று பெரும்பான்மையும் ஒத்துக்கொள்கிறார்கள். பெண்பாலரின் வாக்குமூலம் வாக்குரிமையாகிய இவைகளைத் தற்காலத்தில் புறக்கணித்து நடக்கவே முடியாது. அவர்களும் ஒவ்வொரு தேசத்திலும் விசேஷ அம்சங்களெனக் கணிக்கப்பட்டு வருகிறார்கள். நாரீகமடைந்திருக்கும் தேசங்களிலெல்லாம் பெண்பாலார்க்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தேசத்தின் முன்னேற்றமாவது சாதியாரின் முன்னேற்றமாவது பூரணப்பட வேண்டுமாகில் ஸ்திரி ஜனங்களைப் பின்னே வைத்துக் காக்கிறதினால் நிறைவேறாது ஸ்திரிகள் எவ்வளவு றிவிலும் நேர்மையிலும் அதிகப்படுகிறார்களோ அவ்வளவுக்குத் தேசமும் வளர்ந்தோங்கும் கல்விப் பயிற்சி அதிகப்பட சாதாரண ஜிவிய சுகாதார முறைகளைப்பற்றிய அறிவும் அதிகப்பட குடும்பங்கள் செழிக்கும் . பிள்ளைகள் சுகம் பெலமடையோராய் வளர்க்கப்படுவார்கள் . அதிலுஞ்சிறுவயதில் மரிப்போர் தொகையும் குறைந்துவிடும். மனித ஜாதியாரின் முழு தொகையில் அரைப்பங்கு ஸ்திரிகள் அவர்களும் மனிதஜாதியாருக்கு அத்தியாவசிய மாணவர்கள். ஆகையால் எந்த ஜாதியாவது தனது பொது ஜன ஜிவியத்தில் ஸ்திரீயையும் பங்காளியாகச் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அந்த ஜாதி அறிவிலும், தேர்ச்சியிலும் மற்றெல்லா விஷயங்களிலும் குறைவடைந்திருக்குமேயன்றி வேறல்ல.
ஒர் குடும்பத்தில் பிதாவும், மாதாவும் ஒரே மனதுடன் உழைத்தால்தான் அக்குடும்பத்தின் குறைவுகள் நீங்கி நிறைவுண்டாகும். அது போலவே தேசநன்மைக்கென்று புருஷரும் ஸ்திரீகளும் ஒருமித்து உழைத்து வந்தால் தான் ஒவ்வொரு தேசத்திலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களும் செழிப்படையும்.
ஸ்திரியானவள் தன்னுடைய குடும்ப விடயங்களில் மாத்திரம் கவனஞ்செலுத்தி தேசம் என்ன கேடு கெட்டாலும் தமக்கென்னவென்று சொல்லிக்கொண்டு காலங்கழிக்க முடியாது தனது தேசத்தினது நல்வாழ்க்கையையும் அவள் தனது இலக்காக்கிக் கொண்டு உழைக்க வேண்டியவளாயிருக்கிறாள். இவ்விதமாக பல தேசங்களில் பெண்பாலர் தேசியத்துக்கடுத்தான் பெரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு
43

Page 27
வேலைகளைச் செவ்வனே நடத்தி வருகிறார்கள் அப்படி ஸ்திரீகளும் தங்கள் பொறுப்பை யேற்று வேலை செய்து வரும் தேசங்களில் எல்லாம் சீரடைந்து செழித்து வருகின்றன. இத்தேசங்களில் தற்கால நிலைமையைப்பார்த்து பார்த்து நமது தாய்த்தேசமாகிய இந்தியாவிலும் பர்மா துருக்கி , ஆப்கானிஸ்தான் முதலான மற்றக் கீழ்தேசங்களிலும் மகளிர் முன்னேற்றம் தேசநன்மைக்கு முக்கியமான ஓர் எத்தனம் என்னும் ஜனங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதனாற்றான் இப்போ அத்தேசங்களில் ஸ்திரீகளுக்கு பல சலாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன துருக்கி அபுகானிஸ்தான் முதலிய தேசங்களில் தானும் தற்காலத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தேசங்களை ஆளும் மன்னர் ஸ்திரீகளை வீட்டுக்குள்ளே அடைத்து வைப்பதும் அவர்கள் முக்காடிட்டுக் கொண்டேயிருக்வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதும் பெரும் மூடத்தனமெனக் காட்டி அக்கொள்கைகளையகற்றி விட்டிருக்கின்றனர்.
கெமால்பாஷா என்னும் துருக்கி யரசர் சில மாதங்களுக்கு முன் அத்தேசத்தை ஒர் பிராஜாதிபத்திய நாடாக்கிவிட்டார். அப்படி அவர் செய்தவுடன் முதன் முதலாக அத்தேசப் பெண்களுக்குச் சுயாதின நிலை கிடைக்கவேண்டுமென நிருபித்தார். அப்படி அவர் செய்வதற்குக் காரணம் என்னவென்று விசாரித்தபோது பெண்பாலரை எந்தத் தேசம் அடக்கி வைத்து அடிமைகள் போல நடத்தி அவர்களுக்கு ஆண்களைப் போலவே சம சுதந்திரம் கொடுக்ககப் பின் வாங்க நிற்கிறதோ அந்தத் தேசமானது உண்மையான சுயாதீனம் அடையக் காத்திருக்கவே கூடாது எனக் கூறினார்.
பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படக் கூடாதென்பது பலருடைய அபிப்பிராயம் . அவர்கள் இதுவிடயத்தில் அநேக ஆட்சேபனைகள் செய்திருக்கிறார்கள். அவைகளில் முதலாவதாய் அவர்கள் சொல்லிக்கொண்டது “ இலங்கைப்பெண்கள் வாக்குரிமை பெற்றுக்கொள்வதற்கு தகுதியான கல்விப்பயிற்சி உடையவாராயிருக்கவில்லை” என்பது. இதனைமறுத்துக் கூறுவோம்.
நமது தாய் தேசமாகிய இந்தியாவில் 1921 -வருஷம் சிலமாகாணங்களில் ஸ்திரிகளுக்கு “வாக்குரிமை”சுதந்திரம் கிடைத்தது அவ்வருஷத்தில் இந்தியாவில் எழுத வாசிக்கக் கூடிய ஸ்திரிகளின் தொகை நூற்றுக்கு 2 வீதம் மாத்திரம். அதை இலங்கையோடு ஒப்பிட்டுப்
44

பார்ப்போம். 1921 ம் வருஷத்தில் இலங்கைவாழ் ஸ்திரிகளில் எழுத வாசிக்ககூடியவர்கள் தொகை நுாற்றுக்கு 21 வீதம். பெண்கல்வி வருஷா வருஷம் அதிகப்பட்டுவரும் இவ்விலங்கையில் இந்தவருஷத்தின் தொகையைப் பார்ப்போமானால், அது நுாற்றுக்கு 25 வீதமாகிவிட்டது என்று சொல்லாம். இந்தியாவில் சர்வகலாசாலை பட்டதாரியாக ஆயிரக்கணக்கான பெண்மணிகளிருக்கின்றதென்பது வாஸ்தவமே. இலங்கைப் பெண்களில் பெரும்பான்மையார் பட்டதாரிகளல்லர். ஆனால் பட்டதாரிகளானால் மாத்திரம் ஒருவர் வாக்குரிமையைப் பெறத்தகுதியுள்ளவரென்பது ஒவ்வாது. சட்டசபை பிரதிநிதிகளாவோர் தானும் பட்டதாரிகளாயிருக்கவேண்டுமென்பது பிரதானமல்ல. பட்டதாரிகள் தங்கள் கல்வியறிவுக்கேற்ப தேசத்தாருக்காக விடாமுயற்சியுடன் வருந்தி உழைக்கக் கூடிய வராயிருக்கக்கூடும். பட்டதாரியல்லாதோர் ஜனநன்மைக்காக உழைப்பதில்லை என்பது அதில் அர்த்தமில்லை. ஆவவே சபைப் பிரதிநிதிக்கு கலாசாலை பட்டங்கள் அத்தியாவசியமல்லாவிடில் பிரதிநிதியைத் தெரிந்தனுப்பும் தேசவாசிக்கு அவசியமன்று. அன்றியும் கலாசாலைகளிலும் கல்லுாரிகளிலும் ل9g படித்து அரங்கேறினவர்களே வாக்குரிமைக்குத் தகுந்தவரென நாம் கணிக்குமிடத்து இலங்கை வாசிகளாகிய எத்தனை ஆண்மக்கள வாக்குரிமையைப் பெற்றுக்கொள்வார் என்று விசாரிப்பது நியாயமாகும். விசாரிக்குங்கால் தற்போதுவாக்குரிமை பெற்றிருக்கும் ஆண்மக்களில் எட்டில் எழுபங்கு பெயரும் வாககுரிமை யற்றவர்களாவாரென்று சொல்லலாம்.
அரசாங்க ஒழுங்குகளுக்கு அடுத்த உரித்துகள் ஒருதேசத்தாருக்குக் கொடுக்கப்படும்போது. அத்தேசம் முழுவதும் அதையிட்டு சிலர் மாத்திரம் முன்னேறுவதைக் கவனிக்க வேண்டும். அதைவிட்டு சிலர் மாத்திரம் முன்னேறியிருந்தால் போதும் என்றுகொள்வது தவறு. சிலவருஷங்களுக்குள் இலங்கையிலும் ஒர்சர்வகலாசாலை ஸ்தாபிக்கப்படும் என்று யாவரும் எதிர் பார்த்ததிருகிறார்கள். அது ஸ்தாபனமான பிற்பாடு இலங்கையிப் பெண்மணிகளும் தங்கள் இந்திய சகோதரிகளைப்போல் கலாசாலைகளில் கற்று அரங்கேறிப் பட்டதாரிகளாவார்களென்பது நிச்சயம். இலங்கையில் பெண்கள் கல்வி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதென்பது வித்தியாதாரப் பகுதித்தலைவரின் அறிக்கைப் பத்திரத்திரத்தைப் பார்க்கும்போது தெளிவாக விளங்கும் . அவ்வறிக்கைப் பத்திரத்தின் படி 1926- 1927 வருடங்களிள் பாடசாலைகளில் கல்விகற்றுவரும் பெண்களின் தொகை
45

Page 28
12,789 எனக்கணக்கிடப்பட்டிருக்கிறது. இதுபோதிய நியாயமாகும்.
மேலும் 1928 ம் வருஷத்தில் இலங்கையில் ஒர் புதுச் சட்டம் ஒன்று உண்டாக்கப்பட்டது அது விவாகஞ்செய்து கொண்ட ஸ்திரிகளின் காணி, பூமி, பொருள் இவைகளின் ஆட்சியைப் பற்றியதாகும். இச்சட்டம் உண்டாக்கப்படுமுன் விவாகமான ஸ்திரிகள் தானும் தங்கள் புருஷருடைய சம்மதமின்றி தங்கள் சொத்துக்ளை விற்கவாவது வேறொரு வருக்குச் கொடுக்கவாவது தனியாக ஆட்சி செய்யவாவது முடியாது மேற்கூறிய சட்டம் , இந்த நிபந்தனைகளை எல்லலாம் அகற்றிவிட்டு ஸ்திரிகள் தாங்களே தங்களிஷ்டப்படி காணிபூமிசொத்துகளை வாங்கவும் விற்கவும் வரிகளைக்கட்டவும் ஆட்சிபண்ணவும் கூடும் என்பதாகத் தீர்த்துவிட்டது. காணி , பூமி பொருள் பண்டம் அவைகளை எல்லாம் ஆண்டு நடத்தி ஒழுங்குசெய்து கொள்ளத்தக்க வல்லபமும் யுக்தியும் ஸ்திரிகளுக்குண்டென்பதை சட்டம் ஒப்புக் கொள்ளுகின்றது. அப்படியிருக்க சட்டசபைப் பிரதிநிதிகளைத் தெரிந்து கொள்ளத்தக் பகுத்தறியும நேர்மையும் நமது தேசஸ்திரிகளில் காணப்படவில்லையென்று சொல்வது எவ்வளவு புத்தியீனம்.
வாக்குரிமை பெறுவதற்கு ஒவ்வொருவரும் எழுதவாசிக்கத் தக்கவராயிருக்க வேண்டும் என்னும் கொள்கையை டொனமூர் கமிஷனர்கள் அதாவது சட்டதிருத்த விசாரணைக்காரர் தங்கள் யாதாஸ்த்தில் எழுதிவைத்திருக்கின்றனர். அவர்கள் சொல்லுவதாவது
தேசத்தின் சட்டசபைகளுக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் விஷயத்தில் வாக்காளர் யாவரும் எழுதவாசிக்கத் தெரிந்தவர்களாய் தானிருக்க வேண்டுமென்று நாங்கள் கருதவில்லை இது அவசியமுமன்று அரசாட்சியானது பொது ஜனங்களுடைய பொறுப்பில் அமைத்து நடைபெறவேண்டுமாகில் யாதொரு வித்தியாசமுமின்றி ஜனங்கள் எல்லோரும் அதில் பங்கு பெருஞ்சிலாக்கியத்தை யடையவேண்டும் பெரியோரென்றுஞ் சிறியோரென்றும் கல்விகற்றவர் , கல்விகல்லாதவர் என்றும் ஆண்மக்கள் என்றும் பெண்மக்கள் என்றும் பிரித்துப் பேதமுண்டாக்குவது நீதியாகாது. அப்படிப்பிரிப்பது அநீதியென்று நமக்குக் தோன்றுகிறதனால் நாங்கள் வாக்குரிமையை ஜனங்களுக்குக் கொடுக்கும் விஷயத்தில் “கல்விகற்றோர் மாத்திரமே இதற்குரித்தானவர்” என்று கொள்வது நீதியல்ல, யுக்தியுமல்ல என்று சொல்லுகிறோம் என்பதே நமது தாய்தேசமாகிய இந்தியாவிலும் நாம் குடியேறியிருக்கும் தேசமாகிய
46

இவ்விலங்கையிலும் தற்காலத்தில் பல ஜன சமூகங்களால் எதிர்த்துப் போராடப்பட்டு வரும் முக்கிய விஷயங்களில் ஒன்று மாதர் முன்னேற்றமேயாகும். முற்காலத்தில் நம்தேசமாதர்கள் தத்தம் இல்லங்களிலும் நகரங்களிலும் உத்தம செல்வாக்குள்ளவர்களாய் விளங்கி தேசத்தைக்ச் சிறப்பித்து நற்செய்கைகளின் பேருற்றாயும் நல்லறிவுக் களஞ்சியங்களாகவுமிருந்து வந்தார்களென்பதை யாவரும் அறிவர். காலஞ் செல்லச் செல்ல, அவர்கள் இத்தகைய நிலையில் இருந்து குறைவுபட்டதுமன்றி தத்தமது முன்னேற்றத்தையே முற்றும் மறந்துவிட்டனர். தங்களுடையவும் தங்கள் ஜாதி இனத்தவருடையவும் தேசத்தாருடையவும் செல்வம் வளர்ச்சி சிறப்பு சு தந்திரம், சக்தி, பணி செய்து கிடக்கும், சிலாக்கியம் ஆகிய இவைகளைப் பற்றிச் சிந்தித்து விசாரித்து அவைகளை நிவர்த்திக்கப் பண்ணுதற்கேதுவான முயற்சி செய்து வருவது ஆண் மக்களின் கடமையே அற்றி பெண்மணிகளாகிய தமது கடமையும் சிலாக்கியமும், என்பதைச் சற்றேனும் சாதித்தாரல்லர்.
“மாதர் “என்னும் தழிழ் சொல்லுக்கு “தலைவி யர்” என்பது அர்த்தமாகும். தலைவியாயிருந்தும் தமது செல்வாக்குள்ளடங்கி இருக்கும் இடங்கள் எவைகளோ அவ்விடங்களில் சத்தியத்தை நாட்டி அன்பின் செங்கோல் செலுத்தி அணைத்து ஆதரித்து காத்து, இரைந்து நம்மவரை நற்பாதையில் நடத்தும் சுவீகாரத்தைப் பெற்றவராகிய நாம் நமது சக்தியை மறந்து கை சோர்ந்தவர் பொன்றிருப்பதற்குக் காரணம் யாது?. பாரத்தையும் பழியையும் நமது குடும்பத்தலைவராயிருக்கும் ஆண்மக்களிற் சாற்றி விடுவோமா? அல்லது சாதியபிமானம் தேசாபிமானம் அதிகரித்து ராஜிய தந்திரிகளாயும் தேசிய வாதிகளாயுமிருந்து தேசத்தாரை நடத்துவோராயுமிருக்கும் தேசக்ர்த்தாக்களின் மேல் போடுவோமாஅல்லது நமது காருண்ணிய ராஜாங்கத்தாரிலும் , சட்டசபை அங்கத்தவரிலுமுண்டென்று சொல் வோமா? அல்ல, அல்ல, நமது குன்றிய நிலைமைக்கு உதவிக் கருவிகளாய் அவர்கள் இருந்தார்கயேயன்றி மூலகாகாரணர்களாயிருந்தார்களென்று சாதிப்பது தவறாகும் . உயர்ந்த ஸ்திதியிலிருந்து தாழ்ந்த ஸ்திதிக்கு நாம் இறங்கிக் கொண்டே வருவதற்குக் காரண கர்த்தாக்கள் பெண்மணிகளாகிய நாமேயன்றி வேறுயாருமல்லர். என்று சொல்லத் துணிகிறோம்.
பெண்பிறப்பெடுத்தோராகிய நமக்கு நிகரற்ற செல்வமாகிய வசீகரத்தன்மையும் , சாந்தத்துடனமைந்த சக்தியையும் சிருஷ்டி கர்த்தா
47

Page 29
கொடுத்திருக்கின்றார். இவ்விலட்சணங்களமைந்தோராய் நாமிருக்க வேண்டிய இயற்கைப்பிரமாணமாம். இதுபற்றியே நம்மைக் குடும்பப்பாதுகாவலராயும் சந்ததிகளையாதரிப்போராயும் இல்லங்களின் இறைவிகளாயும் சகல தேசத்தாரும் ஏற்றுக்கொண்டனர். “இல்லானகத்திருக்க, இல்லாததொன்றில்லை” என்றார் உலக ஞானியர். அதென்னவெனின் ஒரு வீட்டிலே உத்தமஸ்திரி இருப்பாளாயின், அவ்வீட்டிலே சகல சம்பத்தும் பாக்கியமுமே தங்கியிருக்குமன்றி, நிர்ப்பந்தமும் நிர்ப்பாக்கியமும் தங்கியிருக்காது என்பதேயாம்.
இப்படியிருக்க. தற்போது நமது குடும்பங்களிலும் , கிராமங்களிலும் நாடு தேசங்களிலும் காணப்படும் காட்சிகள் என்ன?. நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கறையற்ற நெறியும் இடுக்கன்னற்ற ஜிவியமுமாயிருக்கிறதா?. அல்லவே, எங்கே பார்த்தாலும் அதர்மம், எங்கே பார்த்தாலும் கூக்குரல், சச்சரவு, கொடுரக்காட்சி யதிகப்பட்டு வருகிறதே அன்றி குளிர்ந்த காட்சியைக் காணோமே. இவைகளைப் பெண்களாகிய நாம் கண்ணாரக் கண்டிருந்தும், அப்படிக்கண்டிராத பட்சத்தில் காதாரக் கேட்டிருந்தும் சற்றேனும் உணர்ச்சியாவது, கவலையாவது அற்றவராய் மெய்மறந்திருக்கிறோமல்லவா?. நாம் அன்பின் பணி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டதல்லவா? அப்பணிசெய்வதற்கேற்ற எத்தனங்கள் யாவும் தற்போது நமது கைவசமிருக்கின்றனவா?. நாம் வேண்டாவெறுப்புடன் அயர்ந்து போயிருக்கும் சமயத்தில் இவைகள் நாமறியாதவிதமாய் நம்மை விட்டு வழுவி அகன்று போயினவா? அப்படியாயின் , நாம் இன்னும் அசதியாயிருப்பது நமது பிறப்புக்கும் , சுதந்திரத்துக்கும் ஏற்றதான செய்கையா?. அவைகளை ஆராய்ந்து, ஆலோசித்து நம்மிற் காணப்படும் குறைகளையும் , சக்த்தியீனத்தையும் , அகற்றி நாம் முன்னேறி வரவேண்டியது அத்தியாவசியமென நமக்குத்தோன்றவில்லையா?. நமது தேசத்தாரின் தேய்வு நிலைமையும் ,அடிமைத்தனத்தையும் காண்கிறோம்ல்லவா?
அடக்கி நெருக்கி கீழ்மைப்படுத்தும் அடிமைத்தன ஸ்திதியிலிருந்தும் நீங்கி நமது தேசம் செழித்தோங்க வேண்டுமாகில் மாதராகிய நாம் முன்னேறிவந்து நமது கடமைகளைக்குறைவின்றி நிறைவேற்ற வேண்டியிருக்கிறதென்பதை அறிந்து கொள்வோமாக.
ஒரு தேசமானது சுயாதீன நிலையடைந்து போற்றப்படத்தக்க செய்கைகளால் பேர் படைக்கவேண்டுமாகில், அத்தேசத்தின் குடும்பங்கள்
48

ஒவ்வொன்றும், செவ்வனே நடைபெற்றுவரவேண்டும். நமது சந்ததியார் பெரியோரெனக் கணிக்கப்படவேண்டுமாகில், நமது ஆண் மக்கள் தர்மந்தவறாநெறியினராயும் வலிமிகுந்த தைரிய புருஸராயு ம் பூவுலகத்தார் புகழும் புத்திசாலிகளாயும் இருக்க வேண்டுமாகில் நாம் கவனித்து பராமரிக்கவேண்டிய இடம் “குடும்பம்” ஆம் இதுவே, சாதி தேசம் என்னும் சங்கங்களுக்கு முளையாணியாகும். மானிட சன்மார்க்கமெல்லாவற்றிற்கும் குடும்பமே மூலாதார பராக்கிரமசாலியையும் ராஜ்ய தந்திரிகளையும் பிரசைகளையும் அறிவிற் பெருத்தோரையும் தேசபக்தர்களையும், மதபோதகர்களையும் உற்பத்தியாக்கி வளர்த்து அங்கங்கே அனுப்பிவைப்பது குடும்பமேயாகும் தேசத்தின் சக்தி சிறு சிறு வீடுகளிலிருந்தே உற்பத்தியாகின்றது. ஆகவே தேசத்தின் உன்னத நிலைக்கு தேவையாயிருப்து உத்தம மாதராம்.
உத்தம மாதரை நாம் எப்படி உண்டாக்குவது? நாம் இழிவு நிலைக்கு வந்து விட்டோமே என்று கண்டு மனங்கசிந்து, நமது வர்க்கத்தாரை முற்றாயழித்து விட்டு புதிதான மாதர் கூட்டமொன்றை உண்டாக்குவோமென்று சொல்வதா? அது அசாத்தியமன்றோ?. அதுவுமின்றி அது இயற்கைக்கு விரோதமானதாகு மல்லவோ? பெண்ணுடம்பெடுத்த நம்முடன் உடன் பிறந்த குணாதியங்களில் ஒன்றாவது நம்மை விட்டு முற்றாக அகன்று போய்விட்டதென்று நாம் சொல்லத்தகாது. பற்பல காரயங்களின் நியித்தமாய் அலை ஒழிந்து மறைந்து, மங்கி தேய்ந்து குற்றுயிருடன் காணப்படுகின்றன. இவைகள் முற்றும் அழிந்து விடாதபடி காப்பாற்றிக் கொள்வதற்கேற்றயத்தனங்களை நாம் கைக்கொண்டு அவசியம் முன்னேறிவரவேண்டியது. அவ்வெத்தனங்கள் யாவை?. நமது ஈடேற்றத்துக்கு வழிவகைகள் யாவை?. அவைகளில சிலவற்றை இவ்விடம் கூறுவோம். இவ்வெத்தனங்களில் முதலிடம் பெற்று முக்கியமாய் விளங்கவேண்டியது தெய்வ பக்தியாம். லெளகீகசிந்தையே தலையெடுத்து தர்ம சிந்தையை நிறுத்தி விடப்பார்த்து தானே விசேஷம் போலக் காட்டிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் பெண்மணிகளாகிய நம்மில் துலாம்பரமாய்த் தோற்றப்பட வேண்டிய இலட்சணமிதுவேயென்று தைரியத்துடன் சொல்லுவோம். தெய்வபத்தியற்ற பெண்ணானவள் தனக்கும் தன்னைச்சேர்ந்த யாவருக்கும் பெருங்கேட்டையும் , இழிவையும் வருவிப்பாளென்பது திண்ணம். தெய்வ பக்தியற்ற பெண்ணுருவை நாம் மனேபாவனையிலாகிலும் கனவிலாகிலும் காணாமலிருப்பது நன்று. தெய்வநேசமற்ற மாதா, தன் கற்பத்தின் கனிகளாகிய
49

Page 30
அரும்பெருங்குழந்தைகளுக்கு எவ்விதமாக சன்மார்க்க போதனையைப் புகட்டுவாள்? அவள் தனது பிள்ளையை வளர்க்குஞ்சலாக்கியத்தைப் பெறாதிருப்பது நல்லது. சன்மார்க்கப் புருஷர் தெய்வ பக்தியுள்ள மாதர் மாராலேயே உண்டாக்கப்படவேண்டும். நமது மதக்கொள்கைகளும், போதனைகளும், சாதனைகளும், சடங்கா சாரங்களும் எவைகளோ அவைகளில் நன்மை யானவைகளைக் கொண்டு நமது, சிருஷ்டி கர்த்தாவை நேசித்துப் பூசித்து, அன்பின் பணிசெய்து ஆசியடைவோமாக.
இரண்டாவது எத்தனமாக நமது சுய பாஷைக் கல்வியைக் குறிப்போம். கல்வியென்ற விசாலித்த பெயரைக் கொடுப்பதினால், முதலாவதாக மேலைத் தேசப்பாஷைகளைக் கற்றுத் தேறுவதே சிறந்த கல்வியென நம்மவரிலனேகர் நினைத்துக்கொள்ளுகிறார்கள். தனது தாய்ப்பாஷையை யறியாமலிருந்துக் கொண்டு அன்னிய பாஷைகளின் பெருமையைப் பற்றிப் பேசுவதில் பிரயோசனமென்ன? எமது பாஷையாகிய தமிழ் மொழியில் இருக்கும் நூல்கள் எவ்விதமானவை? அவைகளிற் புதைந்து கிடக்கும் அறிவுத் திரவியங்கள் எண்ணுக்கடங்காதவை? அவைகளின் இனிமையையும் அழகையும் பெருமையையும் யாரால் சொல்ல முடியும்? இந்நூல்கள் ஒவ்வொன்றும் கல்விக் கழகங்கள் அன்றோ? இவைகள் நமது கைக்குள் கிடக்க நாம் அன்னிய பாைைஷகளில் காணப்படும் திரவியம் தேடிப் போவதென்ன? இது நமது அறியாமை அல்லவோ? தன் வீட்டில் நெல் ஏராளமாய் கட்டி இருக்க அயலவர் வீட்டில் அரிசி இரக்கப் போனவள் சிலமாய் அல்லவோ நமது நிலமை இருக்கிறது. நமது சுய பாஷையில் கல்வித் தேர்ச்சியையே இலக்காக்கி நாம் அதற்கென்று அதிக உற்சாசத்துடன் உழைக்க வேண்டுமென்று மிக ஆவலுடன் கேட்டுக் கொள்கிறோம். இல்லற ஒழுக்கம், சாதியாசாரம், தேசத்தின் பழக்க வழக்கங்கள் நமது தேசத்தாரின் முற்காலமகிமைப் பெற்ற நிலை, பண்டைக் கால பெண்களின் நேர்மை, கற்பு, மந்திரித்துவம், ஆகிய இவைகள் ஒவ்வொன்றையும் தமிழ் பாஷை கற்றுக்கொண்டாலன்றி நாம் பூரணமாய் அறிந்து கொள்வது அரிது. பவளமாலை கொடிபோல எத்தனை உதாரணங்கள் நமக்கு முன் தோன்றுகின்றன. இவைகளைப் பார்த்து ஆனந்த பரவசம் அடையாது அந்நியர் கழுத்தில் காணும் மாலைகளையன்றோ நாம் கவருகின்றோம். நமது ஞானக் கண்கள் திறக்கப்படவும், நமது பாஷையின் சிறப்பை நாமே உணர்ந்துக் கொள்ளவும் அதன் தேர்ச்சிக்காகவும் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவும் நாம் தீர்மானம் பண்ணிக் கொள்ளுவோமாக.
50

மூன்றாவது எத்தன்மாக பிறர் நேசம் என்னும் புண்ணிய குணத்தையும் அணிகலமாகக் கொள்ளுவோம். இதற்கு முதற் கூறியிருக்கும் எத்தனங்களும் நம்மிடம் இருக்குமானால் மூன்றாவதாகிய பிறர் நேசம் தானே தோன்றி வளரும். பிறர் நேசமின்றி தன்னய விருப்புள்ளோராய் நாம் இருக்கும் பட்சத்தில் அன்புடன் பணி செய்து கிடப்பது, முடியாத காரியமாகும். தன்னிடத்தில் இருக்கும் அரும் பெரும் திரவிங்கள் எவைகளோ அவைகளை எல்லாம் பூலோக வாசிகள் யாவர்க்கும் அள்ளி வீசி அவர்கள் வாழ்வைப் பார்த்து, ஆனந்த மடையும் தயாள சீவியல்லவோ பாரத மாதா? பாரத பூமியில் பிறந்த நாம் உலோபிகளாய் வாழ்வது நியாயமா?. நம்மை மறந்து பிறர் நன்மைக்கும் முன்னேற்றத்துக்குமென நம்மையையே தத்தம் செய்து உத்தம ஊழியராய் நாம் உழைத்து வருவோமாயின் நாம் முன்னேற்றம் அடைந்து நமது தேசத்திற்கும் பெரும் பெரும் நன்மைகள் உண்டாவதற்கேற்ற நற்பாத்திரங்களாய் விளங்குவோம்
என்பது நிச்சயமே நிச்சயம்.
நான்காவதாக நமது தேசத்தின் தற்கால உண்மை நிலை எப்படிப் பட்டது என்பதைப் பற்றிய தீர்க்க அறிவுநம்மிடத்தில் காணப்பட வேண்டும். “அறியாமையே, ஆனந்தமாயிருக்க அறிவு தேடுவது மடமை.” என்று இங்கிலிஸில் ஒரு முது மொழி உண்டு. இம் முது மொழியையே நமது நியாயமாகக் கொண்டு சீவியம் நடத்துபவர் போல நாம் காணப்படுகின்றோம். ஒவ்வொரு வீட்டுத் தலைவியும் தன் தன் குடும்பமானது பெருத்துப் பெருகி, சிறப்புச் சீராக தழைத் தோங்கி வாழ வேண்டுமென்று விரும்புகிறான் அல்லவா?. வாழும் வீடு, காண்போர் பலருக்கு சந்தோசத்தை உண்டாக்குவது இயற்கை. அது ஒர் கண்ணுக்கு இனிமையான காட்சி. அப்படிப்பட்ட வீடொன்று யாதொரு பிரயாசையும் அன்றிதானே உண்டாகுமா?. ஆகாது. வீட்டுத் தலைவியானவள் நுன்னிய கூர்மையுடன் தனது வீட்டின் நிலபரங்களை யாவையும் ஆராய்ந்து அறிந்துக் கொண்டு அதற்கேற்றபடி தன் வீட்டுக் காரியங்களை கவனமாக நடத்தி வந்தால்தான், வீடும் குடும்பமும் உத்தம நிலையில் நிலைத்திருக்கும். அப்படி இல்லாமல் அவள் நிர்விசாரியாய், முழு மூடத்தனமுள்ளவள் போல, தன் மனம் போனபடி குடும்பம் நடத்த எத்தனிப்பாளாகில் அது ஆனந்தக் காட்சியல்ல, அகோரமான காட்சியையே உண்டாக்கும். அதுபோலவே நமது தேசிய சீவியத்திலும்
5

Page 31
காண்கிற்ோம். தற்காலத்தில் நமது தேசத்தின் நிலைமை எப்படிப்பட்டதாய் இருக்கிறதென்று பெண்களாகிய நாம் விசாரித்து அறிந்துக் கொள்ள முயற்சிக்கின்றோமா?.ஊரிலுள்ளோர் யாவரும் யாதொரு குறைவின்றி உண்டு, உடுத்து, மணரம்மியமாய் வாழ்ந்து வருகின்றார்களா? நம்மவாகிய அநேகர் வசித்து வரும் சிறு சிறு குடிசைகளிலெல்லாம் சுகாதார விதிகளுக்கு ஏற்ற விதமாய் கட்டப்பட்டு இருக்கின்றனவா?. அன்றாடம் தத்தம் சீவியத்துக்கு என்று காலை துவக்கம் மாலை வரையும் இளைப்பாற்றின்றி வருந்தி உழைத்து வரும் இலட்சக்கணக்கான கூலி சனங்களின் கெதி எவ்விதமாய் இருக்கிறது.? நமது பட்டணங்களின் தெருக்களிலும் திண்ணைகளிலும் சந்துகளிலும் முடுக்கு மூலைகளிலும் ஒடித் திரிந்து விளையாடிக் கொண்டு இருக்கும் சிறு பாலராகிய ஆண் பெண் குழந்தைகளின் அலங்கோலத்தை ஆதரவற்ற ஸ்திரியையும் பற்றி அறிவோமா?. இவைகளைப்பற்றி நாம் எப்போதாவதாவது கரிசனையுடன் விசாரணை செய்ததுண்டா?.
“கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்”நாய் வாழ்ந்தால் என்ன? பூனை மாய்ந்தால் என்ன? ஊரிலுள்ளோர் எக்கேடும் கெட்டுப் போகட்டுமே, என் குடும்பம், என் வீடு, என் வாழ்வு சரியாய் இருந்தால் போதாதா? பிறர் காரியங்களைப் பற்றி நமக்கென்ன தொல்லை, என்பதாக நாம் நமக்குள்ளே சொல்லிக் கொண்டு கண்ணை மூடிச் சும்மா இருப்பது தர்மமா?.
நம்மில் எவராவது தனக்கென்று மாத்திரமே சீவித்திருப்பது கூடாத காரியம். ஓர் சரீரத்தின் ஒர் அங்கமானது அச்சரீரத்தின் இன்னோர் அங்கத்துடன் சார்ந்து பொருந்தியிருக்கிறது. அவ்வங்கத்தில் ஒன்று நோய்வடையும்போதுமற்றோர் அங்கமும் அனுதாபப்பட்டு அதோடு சேர்ந்து நோவை உணர்ந்துக் கொள்கிறது. அவ்விதமே ஒவ்வொரு தேச நடவடிக்கைகளிலும் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பம், ஒவ்வொரு கூட்டத்தார், ஒவ்வொரு கிராமம் நோயினாலேயோ, அல்லது பஞ்சத்தினாலேயோ வருந்தும் போது அது அயல் குடும்பத்தையும், அயல் கூட்டத்தாரையும், அயல் கிராமத்தாரையும் தாக்காமல் இருக்கவே மாட்டாது. ஆகையால் பிறருடைய நன்மை தீமையோ வாழ்வு தாழ்வோ, சுக துக்கங்களோ, இவையெல்லாம் நமக்கும் பங்காகும். இப்படி இருப்பதனால் நாம் நம்மயகலத்தவரின் நிலைமை எப்படி என்று அறிந்து அவர்கள் குறைகளைத் தீர்க்கப் பார்ப்பது நற்செய்கையாகும். பிறருடைய கஷ்டங்களைப் பார்த்து இரக்கமடைவது தெய்வ லட்சணமாம். அவ்வித
52

லட்சணம் நம்மில் காணப்பட வேண்டும். இதைக் குறித்தே தாயுமானவர்
“எவ்வுயிருமென்னுயிர் போலெண்ணியிரங்கவுநின் தெய்வவருட்கருணை செய்வாய் பராபரமே” என்றும்,
எல்லாரு மின்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”
என்றும் பாடியிருக்கிறார்.
நமது கிராமத்திலும் நாட்டிலும் தேசத்திலும் என்னென்ன சம்பவங்கள் நடந்தேறுகிறது எவ்வகையாக, சீர்த்திருத்தம் அறிவு என்பவை அதிகரித்து வருகின்றன. எவ்விதமாய் சட்ட திட்டங்கள் கையாளப்படுகின்றன. என்பதாக நாம் ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள வேண்டும். நமது தேசத்தில் எவ்விதமான நாகரீகம் மேலிட்டுத் தலையுயர்த்திக் கொண்டு விருகிறதென்பதை நாம் கவனித்ததுண்டா? நமது தாய்த் தேசத்துக்கு ஆதிகாலமுதல், சுதந்திரமாகியுள்ள உன்னத சன்மாக்கமும், உத்தம தர்மசிந்தையும் பொருந்திய நாகரீகமா, நமது தேசத்திற் தற்போது காணப்படுகிறது. இல்லேயே “முந்தாநேற்றுப் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான் போலக் காணப்படும் மேல் நாட்டு நாகரீகமல்லவோ தலையெடுக்கப் பார்க்கின்றது. நம்மையறியாமலே, இது வளர்ந்து வளர்ந்து வந்து நமது நற் சீவியத்தை நாசம் பண்ணுகிறது.
காரியமிப்படியிருக்க, கீழைத்தேசத்தாராகிய நாம் முன்னேறி வருவதெப்படி? நாம், கண்களைத் திறந்து, நமது நிலையைச் சீர்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது. உலகத்தின் நானா திசைகளிலுமுள்ள பெண்கள், தத்தம் தேச உயர்ச்சி, தாய்மாராகிய நம்மிலே அதிகமாய்த்தங்கியிருக்கிறதென்பதை மறந்து விடாதிருப்போமாக. நாம், உயர்ந்தால், நமது தேசமும் உயரும். இதுவே முறையாகையால் இதையே நமது இலக்காகக் கொண்டு, நாம் ஜாக்கிரதையுடன் முயற்சி செய்வது அவசியமென நமக்குத் தோன்றுகிறது.
53

Page 32
எமது வெ
வார்ப்புகள்
இந்தியர்களது இலங்கை வாழ்க்ன
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சில
பெண்ணடிமையின் பரிமாணங்களு
சக்தி பிறக்குது (நாடகம்)
வர்க்கம் சாதி பெனன்னிலை பன் பற்றிய ஒரு சமூக நோக்கு
பெண்ணிலைவாதமும் கோட்பாட்டு
ஒரு சமூகவியல் நோக்கு
The Pilitics is chill aid Willili
(Colonial Sri Linkil
Fc|IllinisIII il Sri Lanka in llic Dc::
FragmenГs of a Journey
Scole: Literary Woman of Sri Lank
Images
Life Under Milkwood: Woman W
AIL 0 wicrwiew
Ideology, Caste, Class and Gender The Spectrum of FeIIlininity: A P
SLI is Of SLIIwi Is Willimel
The Other Wictims of War Wulu II
இவற்றை எம் நிறுவனத்திலும் பிரபல புத்தக நிலையங்:
ISBN - 55 - 1-5-)

|ளியீடுகள்
பாரதி
E lisäFETLI)
மீனாட்சி அம்மாள்
வற்றில் ஒரு பெண் நிலை நோக்து
செல்வி திருச்சந்திரன்
ம் பெண்ணுரிமையின் விளக்கமும் செல்வி திருச்சந்திரன்
சி. மெளனகுரு
பாடு பெரியாரின் சிந்தனைகள்
முரண்பாடுகளும் !
- செல்வி திருச்சந்திரன்
h's Agency in pist
- Selwy Thiruchandra II
de - KLIITILIlari Jaya Wardane
Jei Arısalı ay:light II
:1 - Ey:1, R3arh:L"WeeT:ı
- Edited by Selwy
Thi LIchandran
orkers in Rubber Plantitill
- Jayadewa Jyalingida - Selwy. Thiruchandran
TLLLss of DeconsLTuctic IIl
- Selwy. Thir uchandrilyn
- Sasanka Perer El
: II - Selwy Thiruchandran
ஏனைய நிறுவனத்திலும் ஏனைய களிலும் பெற்றுக் கொள்ளலாம்