கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக மக்களுடைய இனத்துவ இருப்பில் பால்நிலை

Page 1

at 6) @00 'j, JR LS S S S S S S L S S S S S SS SS SS
| ■
T6606

Page 2

D6)6) IDš356 560) LuI இனத்துவ
இருப்பில் பால்நிலை
கமலினி கணேசன்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்

Page 3
முதற் பதிப்பு ; ஆனி 1999
தலைப்பு மலையக மக்களுடைய இனத்துவ
இருப்பில் பால்நிலை
ஆய்வுப்பொருள் : இனத்துவம், பால்நிலை, தொழில்,
பெருந்தோட்டங்கள்
பக்கம் 262
விலை : 250/=
வெளியீடு : பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
முன் அட்டை : வாசுகி ஜெயசங்கர்
கணணி வடிவமைப்பு: துரைராஜா தக்ஷாயினி
First Edition : June 1999
Title : The Dynamics of Gender in the Ethnic
Composition of the up Country Tamils in Sri Lanka.
Subject : Ethnicity, Gender, Labour, Plantation
No of Pages : 262
Price : 250/=
Published : Women's Education and Research Centre
Cover Design :Vasukai Jaya Shankar
Type setting : Thurairajah Dakshayini

பொருளடக்கம்
முன்னுரை
பகுதி 1
மலையகப் பெண்கள் என்ற பொருள் வகுப்பு
ஆய்வின் முறைமையியலும் ஆய்வனுபவமும்
கடந்தகால ஆய்வுகளும் அவற்றின் தாத்பரியமும்
பகுதி 11
மலையகமக்களும் இனத்துவமும்
மாறிவரும் மலையகமும் பெண்களும்
2-8
9-37
38-47
49-86
87—III

Page 4
பகுதி 111
அரசியற் பொருளாதாரமும் பால்நிலையும் 113-126
பால்நிலைக்கருத்தியற்பாற்பட்ட தொழிற்படி முறைமை 127-152
கட்டுப்பாடுகளும் அடக்கு முறைகளும் அர்த்தப்படல் 153-186
வேலை : கால நேரமும், ஊதியமும், ஒரு பால் நிலைக் கணிப்பீடு
குடும்ப அமைப்பில் பால்ரீதியான தொழிற்பிரிவு 187-207
தொழிற்சங்கங்களும் பெண் தொழிலாளிகளும் 2O8-244
வரலாறு
தொழிற்சங்கங்களின் இயக்கமும் அவற்றில் பெண்களின் இருப்பும்
உசாத்துணை நூல்கள் 245-249

முன்னுரை
இவ் வாய்வு இனத்துவநிலையில் சாதிநிலையில் , வர்க்கநிலையில், கீழ்நிலையில் உள்ள ஒரு மக்கட் கூட்டத்தைப் பற்றியது.
தமிழ் மக்கள் என்ற ரீதியில் பெரும்பான்மை இனத்திலிருந்து கீழிறங்கிய ஒரு நிலை மாத்திரம் இவர்களுக்கு இனத்துவ பகுப்பில் தோன்றவில்லை. ஏனைய தமிழ் மக்களாகிய யாழ்ப் பாண, மட்டக் களப் புத் தமிழ் மக்களால் பெருங்குடிகள் தாம் என்ற கணிப்பில் "அந்நிய இந்தியத் தமிழர்” என்ற ஒரு பிரிவினைக்குட்படுத்தப்பட்ட மக்களாக இவர்கள் கணிக்கப்பட்டது ஒரு வரலாற்றுண்மை. எங்கிருந்து வந்தார்களோ, என்ன சாதியினரோ என்று ஒரு கேள்விக்குறிக்குள் அடக்கப்ட்ட ஒரு சாதி நிலையில் இவர்களை இனங்கண்டதும் இன்னுமொரு பிரிவினை. கொழுந்து பிடுங்கும், பெருந்தோட்டம் திருத்தியமைக்கும் கூலி வேலையாட்கள் என்றும், அந்நிய செலாவாணி ஈட்டித்தரும் தொழிலாளர்கள் என்றும் முதலாளித்துவ கண்ணோட்டக் கணிப்பில் தோன்றிய ஒரு வர்க்க நிலையும் இவர்களுக்குண்டு. தனிப்பட்ட இலாபம் சேர்க்கும் தோட்டத் துரைமாரும் முதலாளித்துவ அரசும் இவர்களைத் தொழிலாளர்களாகவே வைத்திருப்பதில் எப்பொழுதும்

Page 5
கண்ணும் கருத்துமாயிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இதற்கும் அப்பால் ஆண் மகனுக்கு அடிமை என்ற கருத்தியற் பாற்பட்ட ஒரு பால் நிலையில் உள்ள பெண்களைப் பற்றியது இவ்வாய்வு என்று நாம் விளக்கினால் இதன் பல்வேறுபட்ட பரந்த, விரிந்த பரிணாமங்களை நாம் இலகுவில் விளங்கிக் கொள்ளலாம்.
இவ்வாய்வு தமிழில் எழுதப்பட்ட முதல் கள ஆய்வாக எமது நிறுவனதத்தினால் வெளியிடப்படுகின்றது என்பதில் இதற்கு ஒரு தனிச்சிறப்புண்டு. தமிழில் பல வெளியீடுகள் வந்திருந்தபோதிலும் கள ஆய்வு என்ற ரீதியில் இதுவே எமது முதல் வெளியீடு. பல கஷ்டங்களுக்கிடையில் காலதாமதமாக இந்நூல் வெளிவருகிறது. கள ஆய்வு என்பதில் எப்பொழுதும் பல சிக்கல்களை எதிர்நோக்கியே தீர வேண்டும். மலயைகத்தின் நுழைவே முதல் பிரச்சனை. அங்கு ஓயாது ஓடி ஒடி உழைக்கும் மக்களச்ை சந்திப்பது, அளவளாவுவது.கதடைப்பது,ஆய்வு நோக்கி எமது இலக்கத்ை திருப்புவது என்பன ஒரு நீண்ட கரடுமுரடானபாதை. அதிலும் நேர்மமையாக ஆழமான ஆய்வுத் தாத்பரியங்களை உள்ளடக்கிய ஒரு வழியை நாம் தேர்ந்தெடுத்தபடியால் திருப்தி நிலையை எய்வது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த ஆய்வைத் தேர்ந்தெடுத்தது முதல் அதன் ஆய்வுக் களத்தை நிறுவி அதன் காலவரையில் இறுதிவரை ஈடுபட்ட ஒரு பங்களிப்பு எனக்கிருந்த படியால், கமலினியின் ஆய்வனுபவத்திலும் அதில் நேர்ந்தபல இடுக்கண்களையும் நான் பூரணமாக -அறிந்துள்ளேன். ‘முழுமையான' முடிவான ஆய்வு என்று ஒன்று ஒரு போதும் இருக்க முடியாது. ஆனாலும் எமக்கு பூரண திருப்தி தருவதாக இவ்வாய்வு இல்லை என்பதை நாம் கூறித்தான் ஆக வேண்டும். அனாலும் கமலினி மிகவும் நேர்மையாக ஈடுபட்டு தன்னை இவ்வாய்வுக்குட்படுத்தி உள்ளார்
II

எண்பதில் சற்றேனும் ஐயமில்லை.
தொழிலாள வர்க்கத்தில் பிரத்தியேகமாக பெண்களது உரிமைமறுப்புக்களில் ஆண் ஆதிக்க வெளிப்பாடுகள் எப்படித் தோன்றுகின்றன, எப்படி நிலவுகின்றன எப்படி அவை பெண்ணைத்தாக்கி அவளை அவ்வர்க்கத்திலும் கூட ஓரங்கட்டி விடுகிறது, என்பதை இனங்காணுவது கொஞ்சம் கஷ்டமான வேலையாகத்தான் முதலில் இருந்தது. தொழிலாள வர்க்கம் என்ற ரீதியில் ஆணும் பெண்ணும் கொடுரமான முறையில் நடத்தப்பட்டு, அவர்களது உழைப்பின் பலன் அவர்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது எ னி பதில் யாதொரு ஐயமுமில்லை. ஆனாலும் முதலாளிவர்க்கமும் ஆண் தொழிலாளரும் ஒருங்கிணைந்து வெவ்வேறு நிலகைளில் பெண் தொழிலாளர்களை உழைப்பு ரீதியிலும், பால்நிலை ரீதியிலும் துன்பப்படுத்து வதை இனங்கண்டவர்கள் பெண்நிலைவாதிகளே. வேலை என்று வரும் பொழுது (labour) அது வீட்டு வேலை என் 'றால் அதை ஊதியமில்லாதவாறு பெண் தனியே செய்ய வேண்டும். “பெண் வீட்டுக்குரியவள்” (மன+ைவி) ஆனாலும் அவள் நாளும் பொழுதும் கொழுந்து பிடுங்கவேண்டும். இரவு வீடு சென்று வீட்டு வேலை = சமையல் கழுவல் கூட்டுதல் துணிதோய்த்தல் போன்ற வேலைகளையும் தனியே குடும்ப மேம்பாட்டுக்காகச் செய்ய வேண்டும். இந்த வீடு என்ற கலாசார "விழுமியங்களை நாம் கேள்விக்குறியா எடுக்காவிட்டால் அங்கு ஒரு பூரண விடுதலைவாதத்தை நாம் காண முடியாது. ஆக்கலுடன் (சமையல்) அழுக்கை அகற்றல், குழந்தை அழுக்காக்கிய துண்டு கழுவுதல், கூட்டித்துப்புவு செய்தல் "குப்பை கொட்டுதல்” பாத்திரங்களைக் கழுவதல் போன்ற வேலைகள் "குடும்பப்பணி” என்று மெருகூட்டப்பட்டு பெண்கள் தலையில் சுமத்தப்பட்ட, அதை முதலாளி
III

Page 6
வர்க்கத்தால் துன்புறுத்தப்படும் ஆண் தொழிலாளி கண்டும் காணாமல் அதை எமது கலாசாரம் என்று ஏற்று வீடுதிரும்பியதும் குடித்துக்களித்து "சும்மா” இருந்து சில சமயமோ பல சமயமோ மனைவியை அடித்துத் துன்பறுத்துவதை ஒரு காட்சியாகவே பல மனைகளில் நாம் காண்கிறோம். வரம்பு நிலையிலிருந்த இவ்வுரிமை மறுப்புக்களைத், துன்பங்களை, அவலங்களை நாம் மையத்துக்குக் கொண்டு வந்த பொழுது பலருக்கு அது ஒரு கஷ்டமான நிலையை உண்டுபண்ணி விட்டது சில மாக்ஸிசவாதிகள் கசப்பான உண்மை இது என்று ஏற ‘றுக் கொண்டார்கள் பெண்நிலைவாதிகளுடன் ஒன்று சேர முன்வந்தார்கள். ஒரு சிலர் இவர்கள் விடுதலைவாதத்தைப் பிரிக்கும் பிரிவினை வாதிகள் என்றார்கள். தேசியத்தில் ஏன் எப்படி பிரிவினை வாதம் தோன்றியது? உரிமை மறுப்புக்களையும் ஒருவர் முன்வைக்கும் வாதங்களை ஏற்று மதிப்பிளித்து அதற்குரிய அந்தஸ்தையும் அங்கீகரிப்புையம் மேலாதிக்கசக்திகள் வளங்கியிருந்தால் பிரிவினைவாதம் தோன் றாது. பிளவுபட்டிருக்கும் வரிடுதலை வாதம் சமூகத்தில் பிளவுபட்டிருக்கும் சாதி , வர்க்கம், பால்நிலை, இனத்துவம் போன்ற சகல பகுப்புக்களையும் அவற்றின் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறை, அவலம், அல்லல், வன்முறை போன்ற அனத்தையும் உள்வாங்கி ஒருபூரண வரிடுதலை வாதத்தை உருவாக்கவேண்டும். குருடர் யானையை பார்த்தகதையாக அது இருக்கக்கூடாது. எங்கெங்கு எவ எவ அடக்குமுறையும் கொடுரமும் தலைதுக்குகிறதோ அங்கங்கு அவ்அவ் பிரச்சனகைளை இனங்கண்டு தெளிந்து உணர்ச்சி பூர்வாக அதைக் களைந்தெறிய நாம் முன்வரவேண்டும். அதைத் தனித்தனியே செய்யவேண்டிய நிலை உருவாகும் பொழுது அதை நாம் ஏற்றே தீரவேண்டும். வர்க்க முரண்பாடுகள் மறையும் வரை காத்திருக்கத் தேவையில்லை. வர்க்கக் முரண்பாடுகள்
IV

மறைந்தால் ஒரு சுமூக சபிட்சநிலை தோன்றும் என்றால் அது தோன்றட்டும். அதை வரவேற்று சந்திப்போம். அந்த எதிர்கால சுபிட்டத்தை எதிர்கொண்டு நாம் இப்பொழுது ஏனைய கொடூரங்களைக் கண்டு கொள்ளக்கூடாது. அதைத் நிவிர்த்திக்க ஒன்றும் செய்யக்கூடாது என்று சொல்வது அபத்தம்.
கமலினியின் இந்த ஆய்வம் அதைத்தான் சொல்லாமல் சொல்லுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை போராடிப் பெற இயங்கும் தொழிற் சங்கங்கள் கூட பெண் தொழிலாளர்களின் பிரத்தியேகப் பிரச்சனைகள் கண்டு கொள்ளப்படவில்லை என்பது மிகவும் துரதிஷ்டமானது.
இவ்வாய்வுக்கு முகவுரை எழுதும் பொழுது மனதில் ஒரு நெருடல். இவ்வாய்வு முழுமையற்றது என்று நான் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. பெருந்தோட்டங்களில் மலையகமக்களிடையே ஒரு மத்திய தர வர்க்கம் எழுச்சி பெற்றது காலத்தின் கட்டாயமாகவே படுகிறது . ஆய்வறிவாளர், சட்டத்தரணிகள், படிப்பறிவுள்ளோர், ஆசிரியர்கள், நடுநிலை உத்தியோகத்தர்கள் என்ற ரீதியில் Class fraction என்று சொல்லககூடிய மேல் மத்தியதர, கீழ்மத்தியதர வர்க்கங்களுடன் இணைந்தும் பிரிந்தும் பல்வேறு நிலைகளில் இம் மக்களில் சிலர் இருக்கிறார்கள். இவர்களது நிலைப்பாடு யாது? முரண்பாடுகள் எவை ? இவர்களது குடும்பம், பிள்ளைகள், மனைவிமார்களின் சமூகவியக்கம் எப்படி வேறுபடுகிறது.
எப்படி மாறிவருகிறது என்பவை கூட எம்மாய்வின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் துாரதிஷ்டவசமாக அவ்வாய்வை நாம் முன்னெடுக்கக முடியாமல் போய் விட்டது. அது ஒரு துரோக வரலாறாக அமைந்து விட்டது.

Page 7
அப்பகுதியாய்வை செய்வதாக எமக்கு வாக்களித்து, கடுதாசியில் கையெழுத்துப் போட்டு அதற்குரிய ஆய்வுப்பணம், ப்ோக்குவரத்துச் செலவு, தங்கும் விடுதிச் செலவு என்று முற்பணம் பெற்றவர் ஒழிந்து மறைந்து இறுதியில் நாட்டை விட்டே ஓடிப்போய் விட்டார். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்ததிற்கு இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி இது ஒரு முதல் அனுபவம். இந்த ஆய்வாளரைத் தெரிந் தெடுத்த பொறுப்பு என்னுடையதாக இருந்ததால் இதனால் எனக்கு மிகவும் பாதிப்பு. மனச்சஞ்சலம், எனது நிர்வாகத் திறமையின் ஒரு கறுப்புப்புள்ளி ஏற்பட்டுவிட்டமை என்மீதே எனக்கே நம்பிக்கையற்ற நிலை போன்று பல வகைகளில் நான் இதனால் பாதிப்புற்றேன்.
இதனால் ஏற்பட்ட பலாபலன்களை நானே பொறுப்பேற்று பணிப்பாளர் குழுவிற்கும், இவ்வாய்வை செய்ய உதவிய நொறாட் (Norad) நிறுவனத்திற்கும் அதைத் தெரிவித்து ஒரு சஞ்சல படலத்தை எமது நிறுவனத்தில் நிறைவேற்றிய துர்ப்பாக்கிய அனுபவம் மிகவும் என்னைப் பாதித்தது. சமூகத்தை வழிநடத்த வேண்டிய ஆய்வறிவாளர் என்ற கணிப்பில் இருப்போரும் பச்சைத்துரோகிகளாக மாறியது, நாம் சந்தித்த முதல் அனுபவம். இதுவே கடைசியனு பவமாகவும் இருக்க வேண்டும் என்பது என் அங்கலாப்ப்பு.
நிறைவேறாத அவ்வாய்வு இவ்வாயிவின் குறைபாடே.
இவ்வாய்வு பலவிடயங்களில் ஒரு முதற் கட்டமாகவே இருக்கும் அதைத் தொடர்ந்து பல ஆய்வுகள் பல மட்டங்களில் செய்யப்பட வேண்டும். ஆனாலும் அவை யாவும் மலையகமக்களின் வாழ்வுக்கு கொள்கை ரீதியில் அரசினாலும் விமோசனத்திற்கு வளிவகுக்கபடவேண்டும் என்பதே எமது அவா. இது எக்காலத்தில் ஈடேறும்?
VI

இக் கேள் வரியடணி இம் முகவுரையை முடித்துக் கொள்கிறேன். ஆய்வுகள் இன்றி இது ஈடேறுமா? ஆம் என்ற வரிடை வந்தால் அது மனதுக்கு மிகவம் திருப்தியாயிருக்கும். உடனே நடைபெற்றால்!!
செல்வி திருச்சந்திரண்.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்
58 தர்மராம வீதி, கொழும்பு 06.
VII

Page 8

நன்றியுரை
இந்த ஆய்வு அர்த்தமுடையவகையில் முற்றுப்பெறுவதற்கு பலர் தங்களுடைய உதவிகளை எமக்கு வழங்கியுள்ளனர். அவர்கள் எல்லோருடைய உதவியுமே இங்கு இந்த ஆவணமாக விளைந்துள்ளது. அவர்களை நினைவுகூர்ந்து இவ்வாவணத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வினைச் செய்யுமாறும் அதற்குரிய நிதியுதவியையும் ஏனைய உதவிகளையும் அளிப்பார்கள் என்ற உறுதியையும் தூண்டுதலையும், மேற்பார்வையையும் வழங்கியமையே இந்த ஆய்வு ஆரம்பமாவதற்கும் நிறைவேறுவதற்கும் பிரதான காரணமாகும். குறிப்பாக, கலாநிதி செல்வி திருச் சந்திரன் இந்த ஆய்வில் பிரதான பங்கை ஆற்றியுள்ளார். அவர் இந்த ஆய்வின் மேற்பார்வை யாளராகத் தொழிற்பட்டு இவ்வாய்வினை வழிநடத்தினார். அவருக்கு எனது நன்றி உரித்தாகுக. செல்வி தக்ஷாயினி இந்த ஆய்வினை ஆவணமாக்குமுகமாக கணணியில் பதியும் பொறுப்பினை எடுத்துக் கொண்டதுடன் மிகவும் பொறுமையுடனும் திருத்தங்களை மீண்டும் மீண்டும் திருத்தி இவ் வேலை முற்றுப் பெறும் வரை பொறுமையுடன் ஒத்துழைத்தார். அவருக்கு எமது நன்றி உரித்தாகுக. இது போல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தைச் சோந்த
IX

Page 9
அலுவலகர் கள் எ ல் லோரும் தமது உதவரியை வழங்கியுள்ளனர். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ் வாய் வு செம்மையாக நிறைவுபெறுவதற்கு மலையகத்தைச் சேர்ந்த பல அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவிநல்கியுள்ளன. குறிப்பாக ஹற்றனில் இயங்குகின்ற கிறிஸ்தவ தொழிலாளர் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றிய உதவிகள் அளப்பரியன. திரு மோகன் சுப்பிரமணியம், திரு. நேசமணி , செல்வி பரமேஸ், திரு செபமாலை, செல்வி ருசானி ஆகியோருக்கும் எமது நன்றிகள். அத்துடன் எமக்கு தனிப்பட்ட வகையில் உதவிய திருமதி மோகன் சுப்பிரமணியம் அவருடைய சகோதரியின் குடும்பத்தவர் ஆகியோருக்கும் எமது நன்றி.
ஹற்றனில் இயங்கி வருகின்ற பெண்கள் விமோசன ஞானோதய அங்கத்தவர்களான திருமதி நிர்மலா, எலிசபெத், சிறிதேவி ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நோர்வூட்டில் இயங்கிவருகின்ற நவயுகநிறுவனமும் எமது ஆய்வுக்கு பல உதவிகளைச் செய்துள்ளது. குறிப்பாக செல்வி மார்கிரட் திரு மைக்கல்ராஜ் ஆகியோர் தமக்கு தம்மாலான உதவியை முழுமனத்துடன் செய்துள்ளனர்.
லபுகல தோட்டத்தைச் சேர்ந்த கள உத்தியோகத்தர் திரு டானியலுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது நன்றி. அதே தோட்டத்தைச் சேர்ந்தவரான தென்னவனும் எமக்கும் பல உதவிகளைச் செய்துள்ளர் அவருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.

சத்தியோதயம் நூலகத்தில் எமக்கு உதவிகளை நல்கிய உதவிநூலகர் இற்கும் இயக்குணர் திரு சேனநாயக்கா அவர்களிற்கும் இங்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாய்வில் எனக்கு உதவியாளராகத் தொழிற்பட்டு தகவல்களைத் சேகரித்த வாசுகி ஜெயசங்கரின் உதவியும் அளப்பரியது அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை அவர் சார்பில் பின்வருவோருக்கு எனது நன்றிகளைத்தெரிவிக்கின்றேன்.
நவயுக நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி புஷ்பராணி, அவரது குடும்பத்தவர் ஆகியோர் வாசுகி குறிப்பிட்ட தோட்டத்தில் தங்குவதற்குரிய வசதிகளை செய்து கொடுத்தனர். அத்துடன் ஹற்றணில் அவர் தங்குவதற்கு வசதிகளைச் செய்த தெய்வேந்திரம் குடும்பத்தவருக்கும் வாசு கிசார்பில் நன்றிகள் உரித்தாகுக.
இவ்வாய்வு செம்மையாக நிறைவேறுவதற்கு உதவியாக ஒலிநாடாவிலிருந்து நேர்காணலை எழுத்து வடிவத்துடன் தேசிய சுவடிகள் திணைக்களத்தில் சில தகவல்களைத் திரட்டித்தந்த நிக்சனிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாயவினைத் திட்டமிடுகின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாய்வு தொடர்பாக திரு சந்திரபோஸ், பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோருடன் உரையாடலை மேற்கொண்டதால் அவர்களுடைய வழிநடத்தல் எனக்குக் கிடைத்தது அவர்களுக்கு எமது நன்றிகள்.
டன்பார் தோட்டத்தைச் சேர்ந்த திரு கன்ணையா எமக்கு சில தோட்டங்களுக்கு வழிகாட்டலைமேற்கொண்டனர். அவருக்கு எமது நன்றிகள். அத்துடன் குறிப்பிட்ட சில

Page 10
தோட்டங்களில் எமக்கு வழிகாட் டலை வழங்கிய தொழிற்சங்கத்தலைவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்தில் இந்த ஆய்விற்கான திட்டத்தைத் தயாரிப்பதில் பங்களிப்புச் செய்த திரு வ.ச. ஜெயபாலன் அவர்களிற்கும் எனது நன்றிகள்.
எல்லாவற்றிலும் மேலாக தமக்குக் கிடைக்கும் குறுகிய நேர இடைவேளைகளிற்கும் எம்மை உபசரித்து எம்மிடம் உரையாடி எமக்கு நேர்காணலை வழங்கிய பெண் தோட்டத்தெழிலாளருக்கு எமது நன்றிள்.
XII

பகுதி 1

Page 11

மலையகப்பெண்கள் என்ற பொருள் வகுப்பு
மலையகமக்களினுடைய இனத்துவத்திற்கான தேடலில் பால்நிலைப்பாடு என்ற தலைப்பிலான இந்த ஆய்வினுடைய பிரதான கவனிப்பு மலையகப்பெண்கள் என்ற பொருள் வகுப்பு தொடர்பானதாகவுள்ளதால் இப் பொருள் வகுப்பினை வரைவிலக்கணப்படுத்துவதிலுள்ள சிக்கல்களை முதலில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மலையகப்பெண்கள் என்ற பதப்பிரயோகத்தை நாங்கள் மலையகத்தமிழர் என்ற பதப்பிரயோகத்தினுாடாகவே பெற்றுக்கொள்கின்றோம். மலையகத்தமிழர் என்ற பதப்பிர யோகமானது இலங்கையில் வாழ்கின்ற, இதுவரைகாலமும் இந்திய வம்சாவழியினர் என அலுவலகரீதியாக அழைக்கப்பட்டுவந்த குழுமத்தினுடைய அடையாளத்திற்கான தேடலை வெளிப்படுத்துவதாக பொதுவான போக்குகளில் கொள்ளப்படுகின்றது.
மலையக மக்கள் என்னும் சொற்றொடரை அல்லது மலையகம் என்ற பதத்தினை பொதுவான போக்கு களிலுள்ள கருத்துக்களினுாடாக ஆராய்வோமானால், இப்பதப்பிரயோகமானது மலையகமக்கள் தங்களை ஏனைய இனக்குழுக்களிடமிருந்து வேறுபட்டவர்களாகக் காட்ட வேண்டிய தேவையின் அடிப்படையிலான செயற்பாடுகள் சார்ந்ததாக இருக்கின்றது, அத்துடன் பெருந்தோட்டத்துறை என்ற உற்பத்தித்துறை சார்ந்ததாக மட்டும் அமைந்து

Page 12
விடாமல் அதனை ஒரு மக்கள் குழு சார்ந்ததாக அமைப்பதும் ஒரு நோக்கமாகும். இனத்துவத்திற்கான இத்தேடலில் மலையகமக்கள் எனும் வகைப்பாட்டில் இந்தியாவிலிருந்து பெருந்தோட்டத்துறைக்கு என அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களுடன் வர்த்தகம் போன்ற ஏனைய வாய்ப்புக்களைத் தேடிவந்தவர்களும் அடங்குவர். மேலும் தொழிலாளர் என்ற கருத்தில் இத்தனை காலமும் மலையகமக்களில் ஒருசாராரைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவகையிலும், அவர்களது வாழ்வனு பவத்தின் ஒரு அம்சமான வர்க்கம் என்பதை அடையாளப்படுத்துகின்ற போராட்டங்கள் என்ற வகையிலும் இதுவரைகாலமும் கவனிப்பு இருந்து வந்ததையும் கருத்திற்கொண்டு அதற்கு அப்பாலும் செல்லும் நடவடிக்கையினை எடுத்துக்காட்டு வதாகவும் இப்பதம் உள்ளது.
இது தவிர மத்திய மலைநாடு எனும் புவியியற்பிரதேசத்தில் குறுகிவிடக்கூடிய ஒரு பார்வையைத் தவிர்ப்பதும் இப்பதப்பிரயோகத்தின் நோக்கமாகவுள்ளது. ஏனெனில் கொழும்பு, கொழும்பை அண்டிய நகர்ப்பிரதேசம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஏனைய சிறுநகரங்கள் எனப்பல இடங்களில் பரவியுள்ளவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து அங்கு முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையை ஒரு தேசமாகக் கொள்ளுகின்றவிடத்து ஏனைய இனக்குழுக்களுடனான உறவுகளைப்பற்றிய ஒரு நிலைப்பர்ட்டினை முன்வைப்பதாகவும் இப்பதப்பிரயோகம் உள்ளது. சுதந்திரத்திற்குப்பின்னால் சிங் களவரைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்னால் வெளிப்படையாகக் காட்டப்பட்ட பாரபட்ச நிலைமைகள் சிங்கள இனத்துடன் மலையக மக்களின் உறவுகளை வரையறுப்பதாகவுள்ளது. அவ்வகையில்

குறிப்பாக 1931ல் தோட்டத்தொழிலாளரின் வாக்குரிமை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது பின்னர் 1948ல் பிரஜா உரிமைச் சட்டத்தினுாடாக வாக்குரிமை பறிக்கப்பட்டது, அதன் பின்னால் அறிமுகப்படுத்தப்பட்ட நிலச்சட்டங்கள், கிராம விஸ்தரிப்புக்கள், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்ற அரசினுடைய அண்மைக்கால கொள்கைகள் வரை எல்லாவற்றையும் சிங்களப்பெரும்பான்மையினரும், ஏனைய இனக்குழுக்களும் ஏற்றுக்கொண்டு வாளாவிருந்த போக்கு இவ்வின முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது.
இக்கொள்கைமாற்றங்கள் தொடர்பாக வடக்குகிழக்கு தமிழர் எடுக்கும் நிலைப்பாடுகள் வடக்குகிழக்குத் தமிழருக்கும் மலையகமக்களுக்குமான இன உறவுகளை தீர்மானிப்பன வானவாகவே உள்ளன. வடக்குகிழக்குத் தமிழ் அரசியல் வாதிகளுள் (சுந்தரலிங்கம் தவிர) பலர் மலையகத்தமிழரை இலங்கை அரசியலில் தமிழராகச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதுடன் மலையகமக்களுக்கு காட்டப்பட்ட பாரபட்சம் மிகவும் பாதகநிலைமையை அடைந்தபோதும் கூட மெளனித்து இருந்திருக்கின்றனர். வர்க்கப்போராட்டங்களில் கூட இவ்விரு இனக்குழுக்களும் சில பிரதான சந்தர்ப்பங் களில் காலைவாரிவிட்டு தங்களது இன அடையாளத்தை வர்க்க அடையாளத்தினும் மேலானதாக உறுதிப்படுத்தி யுள்ளனர்.
மேலும் வடக்குகிழக்கு பிரதேசங்களில் நடைபெற்றுவரும் தனிநாட்டுக்கோரிக்கைக்கான போராட்டங்களும் இவ்வுறவு களை வரையறை செய்வனவாகவுள்ளன. வடக்குகிழக்கில் நடைபெற்றுவரும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு மலைய கமக்கள் எம்மாதிரியான நிலைப்பாட்டினை எடுத்து வந்துள்ளனர் என்பதனையும் இவ்விடுதலை இயக்கங்கள் மலையகமக்களை எவ்வாறு அணுகினர் என்பதும் பிரதான விடயங்களாகும்.

Page 13
அவ்வகையில் ஏனைய இனக்குழுக்களின் வரைவிலக்கணங் களுக்கமைய ஏற்படுத்தப்பட்ட பதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கையாகவும் இம்மாற்றுப்பதம் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் அரசியலானது இனத்துவ அரசியலாகவே பெரும்பாலும் இருந்து வருகின்றது. இனத்துவ விகிதாசாரம் 1931ல் நீக்கப் பட்டாலும், பின்னையகாலங்களில் இலங்கை ஒரு ஜனநாயக நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும் ஒருபோதும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளிலும் சட்டவாக்கத் திலும், தன்னை ஒரு (Secular State)சார்புகளற்ற அரசு என அடையாளப்படுத்தியதில்லை. அவ்வகையில் ஏனைய இனத்துவங்களும் தமது அடையாளங்களை வலியுறுத்த வேண்டிய நிலையிலேயே இருந்தன. இந்த இனத்துவ அரசியலானது மலையக மக்களை ஓரங் கட்டியதுடன் அவர்களது பிரநிதித்துவத்தையும் மறுத்துள்ளது. இந்நிலையில் மலையகமக்கள் எனும் பதம் தமது அடையாளத்தை தாமே வெளிப்படுத்தும் பதமாக, தமது பிரதிநிதித்துவத்தை தாமே தேடிக்கொள்ளும் ஒன்றாக முன்வைக்கப்பட்டது. அவ்வகையில் மலையகமக்கள் என்ற சொற்றொடர் ஏற்கனவே இருந்த பலபதங்களை நிராகரித்த தாகவே முன்வைக்கப்பட்டது. உதாரணமாக சிங்கள வரிடையே பேச்சுவழக்கிலுள்ள மொழிப்பிரயோகமான வத்துதெமிழ எனும் பதம் இன்றைக்கும் பழக்கத்திலுள்ள அர்த்தத்தில் மரியாதைக்குரியதாக இல்லை. அதேபோல வடக்குகிழக்குத்தமிழரிடையே பழக்கத்திலுள்ள தோட்டக் காட்டார் என்றபதத்தினை கவனத்திற்கொள்ளலாம். இவ்வாறான போக்குகளை கவனிக்குமிடத்து மலையகமக்கள் என்ற சொற்பதம் சிங்களப்பெரும்பான்மையினரிடமிருந்து மட்டுமல்லாமல் குறிப்பாக வடக்குகிழக்குத் தமிழரிடமிருந்தும் தம்மை பிரித்து நோக்கவேண்டிய ஒரு தேவையை, தமது அடையாளத்தை தனித்துவமானதாக ஆக்க வேண்டிய

தேவையைக் காட்டுதாக உள்ளது.
மலையகத்தில் இனத்துவத்திற்கான தேடலில் ஒன்றுபடுதல் என்ற உணர்வு பண்பாட்டு, அரசியற் சமூக செயற்பாடுகள் மூலமாக வெளிப்படுகிறது என்று நாம் கொள்ளலாம். இதன் போக்கு 70களின் பின்னால் இலக்கிய ஆக்கங்களிலும் பத்திரிகை களிலும் ஏனைய வெளியீடுகளிலும் பிரபலப்படுத்தப்பட்டு வருவதைகக்காணலாம். இச்செயற் பாடானது மலையகத்தில் இலக்கிய கர்த்தாக்கள், ஆய்வறி வாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், உயர்குழாத்தினர் எனப் பல வகைப்பட்டவர்களால் எடுத்துச்சொல்லப்
படுகின்றது,
எனினும் மலையகமக்கள் என்ற சொற்றொடர் பிரச்சனைக் குரியதாகவும் அமைந்துள்ளது. இப்பதமானது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கின்றதாக மலையகத்தைச் சேர்ந்தவர்களிற் சிலர் கருதுகின்றார்கள். இதற்குப்பல காரணங்களை அவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக தமது பண்பாடு சார்ந்த அடையாளமானது இந்தியாவுடன் தொடர்புபட்டது என்பதை மறுக்கமுடியாது எனும் வாதத்தை முன்வைப்பவர்களது நிலைப்பாட்டினை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அவர்களது கருத்தில் மலையகம் என்ற பதமானது தமது வரலாற்றினைத் துண்டிப்பது போலாகும். இந்திய வம்சாவழியினர் என்ற பதமே பொருத்தமானதாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அரச ஆவணங்களிலும் இந்திய வம்சா வழியினர் என்னும் சொற்றொடரே பெரும்பாலும் உபயோகிக்கப்படுவதாகவே உள்ளது. பிரஜா உரிமைப் பிரச்சனை கூட இன்னமும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சனை யாகவே உள்ளது. பிரஜா உரிமைப் பிரச்சனை மக்களின் அரசியல் நிலைமைகளை நிர்ணயிப்பதாகவுள்ளது. அதனால் இந்திய வம்சாவழியினர் என்றபதத்தினை விட்டு திடீரென

Page 14
மலையகமக்கள் என்ற பதத்தினை தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்பதை அவர்கள் கருத்தாகக் கொண்டுள்ளனர். அவ்வகையில் இந்திய வம்சாவழியினர் என்ற பதம் எந்தவகையிலும் இழிவானதல்ல எனவும் அதுதான் உண்மையை எடுத்துக் காட்டுவதாகவும் உள்ளதாகக் கூறுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் இனத்துவ விகிதாசாரம் சார்ந்து மலையக மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதால் சிலபத்திரங்களில் இந்திய வம்சாவழித்தமிழர் என்ற சொற்றொடரை உபயோகிக்க வேண்டிய தேவை யிருப்பதையும் இங்கு விளக்கிக்கொள்ள வேண்டும். அவ்வகையில் மாணவர்கள் அல்லது உத்தியோகத்தர் அரசினால் அல்லது ஏனைய அரசுகளினாலும் நிறுவனங் களினாலும் வழங்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்த வேண்டி யுள்ளது. உதாரணமாக புலமைப்பரிசில்களைக் குறிப்பிடலாம். அவ்வகையில் பத்திரங்களில் மலையகத் தமிழர் என எழுதமுடியாத ஒரு சிக்கல் யதார்த்தத்தில் இருப்பதைப்பலர் ஒரு பிரச்சனையாக எடுத்துக்காட்டி யுள்ளனர்.
இப்பதம் தொடர்பாக எழுகின்ற பிரச்சனைகளுடன் சம்பந்தப்பட்டதாக, இனத்துவத்திற்கான தேடல் எனும் செயற்பாடு சார்ந்த இச்சமூகத் தோற்றப்பாட்டினை வேறுபட்ட நிலைப்பாடுகளில் நாம் சிந்தித்துப்பார்க்கின்ற போதும் இங்கு பல பிரச்சனைகள் எழுகின்றன. வேறுபட்ட நிலைப்பாடுகள் எனும் போது, வர்க்கம் சார்ந்து, பால்நிலைசார்ந்து, சாதிசார்ந்து எனப்பல நிலைப்பாடு களைக் குறிப்பிடலாம். வர்க்கம், சாதி, பால்நிலை என்பன சமூகக் குணாம்சங்கள் எனக் கொள்ளப்படுகின்றன. இந்நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளும் இடத்து இனத்துவமானது ஒரே மாதிரியாக்கற் செயற்பாட்டினை

(Homogenisation) அடிப்படையாகக் கொண்டது. அதாவது இக் குணாம்சங்கள் இனத்துவத்திற்கான தேடலை அடிப்படையாக்கொண்ட செயற்பாடுகளில் முனைப்புப் பெற வாய்ப்பில்லை. அதனால் இனத்துவம் எனும் சமூகக்குணாம்சத்திற்கு அங்கு பிரதான இடம்கொடுக்கப் பட்டு ஏனைய சமூகக்குணாம்சங்கள் இரண்டாம் இடத்தைப் பெறுகின்றன. இக்குணாம்சங்கள் இனத்துவத்தின் கீழ்வருகின்ற உபசுறுகளாகவே அங்கு கொள்ளப்படு கின்றன.
அவ்வகையில் பால்நிலைசார்ந்ததாக நோக்குகின்றபோது, இனத்துவ அழுத்தம் பிரச்சனைக்குரியதொரு விடய மாகின்றது. இவ்வாய்வினுடைய நோக்கம் பால்நிலை சார்ந்ததொரு விளங்கிக்கொள்ளலை ஏற்படுத்துவதாக வுள்ளதால் இனத்துவ முனைப்பு என்பது விமர்சனத்திற் குரியதும் கேள்விக்குரியதுமான ஒரு விடயமாகின்றது. அவ்வகையில் இனத்துவ அடையாளத்தை முதன்மைப் படுத்திய செயற்பாடுகள் மலையகத்தில் ஆங்காங்கே முனைப்புப்பெற்று, ஒரு செயற்பாடாக வெளிப்படுத் தப்படும்போது பெண்களுடைய நிலைமை எப்படி மாறுகின்றது என்றகேள்வி எழுகின்றது. அதனால் இதுதொடர்பான பல பிரச்சினைகளையும் இடர்களையும் கருத்திற் கொண்டுதான் இப் பதம் இவ் வாய் வில் பிரயோகிக்கப்படுகின்றது என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஒரு பொதுவான போக்கிலுள்ள செயற்பாடுகளிலிருந்தே இப்பதம் பெறப்படுகின்றதேயன்றி பால்நிலைக்கான ஒரு மாற்றுக்கருத்தியலினூடாகவல்ல. பெண் இயக்கங்கள் தமது செயற்பாடுகளினுாடாக மாற்றுக்கருத்தியல் ஒன்றையே முன் வைக் கின் றன. மாற்றுக் கருத்திய ல் ஒன்று உருவாவதற்கான பொதுவான போக்கினை விளங்கிக் கொள்வதும் தற்போது நிலவும் கருத்தியலை விளங்கிக்

Page 15
கொள்வதும் அவசியமானது. எமது ஆய்வு முதலில் பொதுவான போக்குகளை இனங்கண்டு அதனுடாக பெண்களுடைய நிலைமையை விளங்கிக்கொள்ளும் ஒன்றாகவே இருக்கும்.
பால்நிலை எனும் சமூகக்குணாம்சத்தினைப் போலவே சாதி, வர்க்கம் ஆகியனவும் அமையும். வர்க்கம் சார்ந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் அமைந்தநோக்கினை எடுத்துக்கொண்டும், மலையகத்திலுள்ள பிரச்சனைகளையும் நாம் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும். இதுவரை காலமும் பல ஆய்வுகளிலும் செயற்பாடுகளிலும் வர் க் கப் போராட்டத்தின் தன்மையை மலையகம் சார்ந்து நோக்கியுள்ளனர். அங்கு மலையகம் என்ற பதத்திலும் பார்க்க தோட்டத்தொழிலாளர் என்ற பதமே பொருத்த மானதாக இருந்தது. வர்க்கப்பார்வை ஒன்று மலையக மக்களைப் பொறுத்தவரை அவசியமான ஒன்றே. ஏனெனில் கூடுதலான விகிதத்தினர் மலையகத்தில் தோட்டத் தொழிலாளராகவே உள்ளனர். இலங்கையில் மார்க்ஸிட்டு களின் நோக்கிலும், தொழில் இயக்கங்களின் நோக்கிலும் மலையகமக்கள் பாரிய இடத்தை வகித்துள்ளனர். அதன் விளைவாக எழுந்த போராட்டங்களினூடாக தொழிலாளர் என்ற விதத்தில் மலையகமக்கள் அடைந்து கொண்ட நோக்கங்களும் குறிப்பிடத்தக்களவில் உள்ளன. எனினும் இன்றைய சூழ்நிலையில் வர்க்கம் சார்ந்த நிலைப்பாடு மலையகமக்களைப் பொறுத்தவரை பலகுறைபாடுகளை முன்வைத்துள்ளது. மலையக தோட்டத்தொழிலாளரின் பிரச்சினைகள் தொடர்ச்சியாக, பிரநிதித்துவப்படுத்தக் கூடியவகையில் இடதுசாரி இயக்கங்கள் வெற்றியீட்ட வில்லை என்றே கூறலாம் இதற்குப்பல காரணங்கள் சூழ்நிலைகள் இருந்தாலும் கடைசியில் மலையகமக்களின் டரிரச்சனைகள் தொழிலாளர்களாக போதியளவு

வெளிப்படவில்லை என்பது பிரதானமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமே. அவ்வகையில் இத்தோல் விக்கு இலங்கையின் இனத்துவ அரசியலும் காரணமாக அமைந்துள்ளது. மலையகமக்களிற்கென்ற இடதுசாரி இயக்கம் ஒன்றின் காத்திரமான பங்களிப்பு, தொடர்ச்சி யானதாக இல்லாததும் ஒரு காரணம். எனினும் வர்க்கம் என்ற நிலைப்பாடு ஒரு தோல்வி எனக்கொண்டு இனத்துவ அடையாளத்தின் ஒரு கூறாக வர்க்க அடையாளத்தைக் கருத்திற்கொள்ளுதலும் சிக்கலானதும் பிரச்சனைக்குரியது மான விடயமே. இவ்வினத்துவ அடையாளத்தை நிலைப் படுத்தும் செயற்பாடுகள் தொழிலாளரின் வர்க்கம் சார்ந்த மோசமான நிலைமையை அதற்கே உரியவகையில் எடுத்துக்காட்டுமா என்பது சந்தேகத்திற் கிடமான ஒரு விடயமே. மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி சமூகமாற்றத்தைக் கொண்டுவரும் எனும் கருத்து இப்பொதுவான போக்குகளில் பலமாகவுள்ளது. மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி என்பது ஆய்வறிவாளர், உயர்குழாம் போன்ற வகைப்பாடுகளை ஏற்படுத்தாமல் ஒரு வகையி னதாக, பலரையும் உள்ளடக்கிய ஒன்றாகவே இங்கு விளங்கிக்கொள்ளப்படுகின்றது. அதாவது இனத்துவம் தொடர்பான செயற்பாட்டில் மலையகத்தில் உள்ள பொதுவான கருத்து என்னவெனில் இனத்துவத்திற்கான தேடலுக்கு மத்திய தரவர் க்கம் ஒன்றினது எழுச்சி அவசியமானது என்பதாகும் . மேலும் மலையக யதார்த்தத்தில் அவ்வகை மாற்றம் காணப்படுகின்றதாகவும் அது நேர்நிலையாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
மத்தியதரவர்க்கம் என்ற பதம் இன்றைய கருத்தாடல்களில் விமர்சனத்திற்குரியதொன்றாக, குறிப்பாக காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தப்பட்ட சமூகங்களில் உயர்குழாம் என்ற
11

Page 16
குழுமத்தின் பங்களிப்பு மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதக் கருத்துக்களில் விமர்ச்சனத்திற்குரியதொரு விடயமாகவே நோக்கப்படுகின்றது. உயர் குழாத்தினர் யாருடைய தேவையைப் பிரதிபலித்தனர் என்ற கேள்வி இன்று காலனித்துவஆட்சிக்குட்படுத்தப்பட்ட சமூகங்களில் கேட்கப்படும் கேள்வியாகவுள்ளது. அதனால் மலையகத்தில் மத்தியதரவர்க்கம் என்றபதத்தினை உயர்குழாம் எனும் கருத்திலிருந்து பிரித்தறியாமல் அல்லது ஆய்வறிவாளர் குழுமத்தியிலிருந்து பிரித்து நோக்கப்படாமல் ஒரே குழுமாகக் கொள்ளுதல் என்பது தோட்டத் தொழிலாளரது நன்மைகளைப் புறக்கணிக்கக்கூடும். தொழிலாளரின் எழுச்சி அல்லாத போராட்டங்கள் எல்லாமே தொழிலாளரை ஊமைகளாகக்கொள்ளும் போராட்டங்களாகி விடுகின்றன. அடித்தள மக்கள் பேசமுடியாதவர்கள் என்ற கருத்தை அது வலியுறுத்துவதாக அமையும் . அவ் வகையில் தொழிலாளரல்லாதவர்கள் குறிப்பாக வர்த்தகர்கள் எவ்வளவு தூரம் மலையகத்தின் தோட்டத் தொழிலாளர் களின் குரலை வெளிப்படுத்துவர் என்பது ஒரு வர்க்க நிலைப்பாடு சார்ந்த நியாயமான கேள்வியாகும், ஏனெனில் மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி என்பது கட்டாயமாக தோட்டத் தொழிலாளரின் நன் மைகளைத் தமது கருத்தாடல்களில் பிரதிபலிக்கும் எனக்கொள்ள முடியாது. அவ்வகையில் அடித்தள மக்களின் எழுச்சி அல்லது அடித்தளமக்கள் பெற்றுக்கொள்ளும் பிரக்ஞை என்பதை புறந்தள்ளிய ஒரு கோட்பாடாகவே மத்தியதரவர்க்கத்தின் எழுச்சி நேர்நிலையான சமூகமாற்றத்தை உண்டுபண்ணும் என்பதாக அமைக்கின்றது. அவ்வகையில் வர்க்கப்பார்வை சார்ந்ததொரு நிலைப்பாடானது மலையகமக்கள் என்ற பதத்தினையும் அதுசார்ந்த செயற்பாடுகளையும் கேள்விக் குள்ளாக்கக் கூடியது.
12

சாதி எனும் சமூகக்குணாம்சம் சார்ந்ததாக இப்பதத்தினையும் இச்செயற்பாட்டையும் ஆராய முற்படுமிடத்தும் பிரச்சினைகள் உருவாகின்றன. மலையகமக்கள் என்று சொல்லக் கூடிய வகைப்பாட்டில் கூடுதலானவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட அல்லது குறைந்த சாதியினர் எனச் சமூகத்தினால் கருதப்படுபவர்களாக இருப்பதனால் அவர்கள் சாதி தொடர்பான அடையாளத்தினை எவ்வாறு முன்னெடுத்து ள்ளனர் என்பதைக் கருத்திற்கொள்ள வேண்டும் , பெண்ணிலைவாத இயக்கங்களைப்போலவே சாதிசார்ந்த போராட்டங்கள் வெளிப்படையாக இல்லையாயினும் சாதியென்பது பலசந்தர்ப்பங்களில் முனைப்புப் பெறும் ஒரு விடயமாக அறியப்படுகின்றது. அவ்வகையில் சாதி அடையாளத்தை இனத்துவ போராட்டம் ஒன்று எவ்வகையில் கவனத்திற்கொள்கின்றது என்ற விடயம் கவனிக்கத்தக்கதே .
இவற்றைக் கருத்திற்கொள்ளுமிடத்து மலையக மக்கள் எனும் சொற்றொடரும் அதுசார்ந்த செயற்பாடுகளும் கவனமாக அணுகப்பட வேண்டிய ஒன்றாகின்றது. முற்றுமுழுதாக பிரச்சினைகள் அற்ற ஒருபதமாகவோ அல்லது முடிந்த முடிவாகவோ இதனைக்கொள்ள முடியாது. இச் சிக் கல்களை விளங்கிக் கொண்டே மலையகப் பெண்கள் எனும் சொற்பதம் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றது.
மலையகப் பெண் களுடைய வாழ்வனுபவங் களை அறிவதனுTடாக இனத்துவத்திற்கான தேடலை மையப்படுத்திய மலையக சமூகமாற்றத்தில் பெண்களின் நிலைப்பாடும் பங்களிப்பும் எவ்வாறானது என்பதை அறிவது இவ்வாய்வின் நோக்கமாகவுள்ளது. நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவும், ஏதோ ஒரு வகையில் ஆய்வின் சனத்தொகையை வரையறுக்கவேண்டிய
13

Page 17
தேவையும் முன்வைத்து மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களை மையப்படுத்தியதாகவே எமது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்வின் முடிவுகளைப் பொதுமைப்படுத்தல் என்பது மலையகத்தில் தோட்டத்துறையில் வாழ்கின்ற பெண்களது நிலைமையை பால்நிலை, இனத்துவம், வர்க்கம், சாதி என்ற பல்வேறு சமூகக்குணாம்சங்கள் சார்ந்து வாழ்வோரின் குரல், வலிமையுடன் வெளிப்பட வேண்டும் என்ற நிலையிலேயே சாத்தியப்படும்.
பால்நிலை சார்ந்து, மலையகமக்கள் என்றவகைப்பாட்டினை அணுகுக்கின்றபோது மலையகத்திலுள்ள பெண்களுடைய அனுபவங்கள் இக்கருத்தாடல்களில் எவ்வளவுதூரம் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. பெண்களுடைய பிரச்சினைகள் எவ்வளவு தூரம் பெண்களுடைய பிரச்சனைகளாகவும், பெண்களுடைய குரலாகவும் வெளிப்படுகின்றது என்பதே அவ்விருபிரதான கேள்விகளாகும். பெண்கள் தமது கருத்துக்களைப் போதியளவு வெளிப்படுத்தாத சந்தர்ப்பத்தில் தனியே ஆண்தலைமைத்துவ ஆட்சிக் கருத்தியலின் வெளிப் பாடாகவே அவை அமையக்கூடும். அவ்வாறானதொரு போக்கில் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றதான அல்லது பகடைக்காய்களாகு கின்றதான அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் இவ்வாய்வு இச்சமூக மாற்றங்கள் பால்நிலை சார்ந்த கருத்திலும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற தேவையை வலியுறுத்துமுகமாகவே மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் சமூகமாற்றத்தின் முக்கிய பிரதானிகள். பால்நிலைக் கருத்திகருத்தியலை உள்ளடக்கிய ஒரு சமூக இயக்கமாக அவர்கள் எவ்வாறு இயங்குகின்றனர்? அவ்வாறு அயங்குகிறார்கள்ா? அவ்வாறு இயங்காவிட்டால் அதற்கான
14

காரணங்களைக் கண்டறிதல் என்பனவே எமது ஆய்வின் பிரதான நோக்கமாகும்.
மலையகத்தில் தேயிலைத்தோட்டங்களில் வாழும் பெண்கள் என்ற பொருள்வகுப்பு, இலங்கையின் ஏனைய இனத்துவக் குழுக்களிடையே அல்லது உலகின் பெருந்தோட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் காணமுடியாதவகையில்,சில குணாம்சங்களைக் கொண்டுள்ளது மொத்த வேலைச்சக்தியின் எண்ணிக்கையில் 50%ற்கு அல்லது அதற்கு அதிகமான விகிதத்தினர் பெண்களாகக் காணப்படுதல், தோட்டங்களில் வாழும் பெண்களில் 90% மானவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருத்தல், வீட்டிற்கு கூடுதலான வருவாயை ஈட்டித்தருபவர்களாக இருத்தல் இவற்றுட் சில. மேலும் பெருந்தோட்டத்துறை யானது முற்றுமுழுதாக ஏற்றுமதியுடன் சம்மந்தப்பட்டிப்பதால் இலங்கையின் அரசியற் பொருளா தாரத்தை உலக முறைமையுடன் இணைக்கின்றவர்களாகவும் கூடுதல் பங்களிப்பினை பெண்கள் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.
மேலும் மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியற் கட்சிகளாகவும் இருப்பதனால் பெண் களுடைய அங்கத்துவம் அரசியற்தேவைகளுக்காக தொழிற்சங்கங் களினால் வேண்டப்படும் ஒரு விடயமாக உள்ளது. அவ்வகையில் பெண்களுடைய தொழிற்சங்க அங்கத்துவம் அவர்களை நேரடியாக தேசிய அரசியலுடன் தொடர்பு பட்டவர்களாக்குகின்றது. அதாவது தேசிய அரசியலில் மலையகம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்து பவர்களாக பெண்கள் தங்களை அறியாமலேயே இயங்கிவருகின்றனர். எனினும் கட்சிகள் பிரக்ஞை பூர்வமாக பெண்களது அங்கத்துவத்தை ஊக்கப்படுத்துகின்றன.
மேலும் பெண்கள் தொழிலாளர்களாக இருக்கும் அதே
15

Page 18
சந்தர்ப்பத்தில் வீடுகளில் மனையாள் என்றவேலையையும் ஆற்ற வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வகையில் இரட்டைச்சுமை எனும் எண்ணக்கருவை வெளிப்படுத்து வதாகவும் இப் பொருள் வகுப்பு இருப்பதை நாம் காணலாம்.
இவ்வகையில் பலவிசேட குணாம்சங்களையும், முக்கியத்து வத்தையும் கொண்டதாக இப்பொருள் வகுப்புகாணப்படு கின்றது. ஆனாலும் அவற்றிற்குமாறான சில வெளிப்படை யான அவதானிப்புக்களையும் மேற்கொள்ளக் கூடியதாக வுள்ளது. அதாவது தொழிற் பிரிப்பு என்பதை எடுத்துக் கொள்கின்றபோது குறிப்பிட்ட வகையிலான வேலைகள் மட்டுமே பெண்களுக்கு கொடுக்கப்படுகின்றது. அவர்களது சம்பள முறைமை மணித்தியாலங்களை அடிப்படையாக வைத் தும் நிறையை அடிப் படையாக வைத்தும் கணிப்பிடப்படுவதாகவுள்ளது. அவ்வகையில் சம்பள முறைமையானது. மாதச் சம்பளமாக அல்லாமல் நாட்சம்பளமாக அமைந்துள்ளது. எத்தனை நாளைக்கு வேலை கிடைக்கும் என்பதும் நிச்சயமற்றதே, இவ்வாறு பலவிடயங்களில் வேலைநிலைமை பாதகமாகவே பெண்களுக்கு அமைந்துள்ளது. வாழ்விடமும் வேலையுடன் தொடர்புடையதாக அமைக்கப்பட்டிருப்பதால் வாழ்விற்கு அத்தியாவசியமான தேவைகள் நிறைவேற்றப்படாத நிலையிலேயே வரலாறு நீண்டு கொண்டு போகின்றது. அவ்வகையில் தோட்டங்களில் வாழும் மலையகப்பெண்கள் பேரம் பேசுவதற்கான நிலைமைகளும் மோசமானதாகவே இருக்கின்றன. அதிகாரம் சார்ந்த எந்தவொருபடி யமைப்பை எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்கு குறைந்த இடம் ஒன்றே கொடுக்கப்படுகின்றது.
ஒரு புறத்தில் பலவிசேட குணாம்சங்களைக் கொண்ட பொருள் வகுப்பாக இருப்பதுடன் முக்கியத்துவம்

வாய்ந்ததவர்களாகவும் காணப்படும் இப் பொருள் வகுப்பினர் மறுபுறத்தில் சுரண்டலுக்கும், கீழ்நிலைக்கும் இரண்டாம்பட்சமாக்கலுக்கும் ஆளாவதை பிரதான முரண்பட்ட நிலைமையாக இவ்வாய்வு எடுத்துக் கொள்கின்றது.
அவ்வகையில் அணிதிரட்டல், ஒன்றுபடுதல், சமூக மாற்றத்தின் கர்த்தாக்களாகத் திகழ்தல் என்பவைசார்ந்து தோட்டங்களில் வாழும் மலையகப்பெண்கள், பெண்கள் இயக்கமாகச்செயற்பட வேண்டிய தேவை உள்ளதை இவ்வாய்வினூடாக வலியுறுத்துகின்றோம்.
அப்படி ஒரு இயக்கம் மலையகத்தில் உள்ளதா? உள்ளதாயின் அதன் செயற்பாடுகள் எவை? அவ்வாறு இல்லாது போனால் வேறு ஏதாவது வகையில் பெண்கள் தங்களை வெளிப்படுத்துகின்றனரா?. இவ்விரண்டு சந்தர்ப்பங்களும் இல்லாத சந்தர்ப்பங்களில் ஏன் அவர்கள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில் லைP அதற்கான தடைகள் எவை? என்பவற்றை அறிவது ஆய்வின் நோக்கங்களாகும்.
இவ்வாய்வு, மேற்கூறியவிடயங்களைக் கருத்திற்கொண்டதாக தேயிலைத்தோட்டங்களில் வாழும் பெண்களை தனியே வேலைச்சக்திகளாகக் கொள்ளாமல் பல்வேறு தளங்களில் அவர்களது வாழ்வியலை விளங்கிக்கொள்வதாக இருக்கின்றது, தோட்டத்தொழிலாளர்கள் என்ற நிலைப்பாடு சார்ந்து வர்க்கப்போராட்டங்களில் மலையகமக்களின் பெரும்பான்மை யினரான தோட்டங்களில் வாழ்பவரின் பங்கு ஒரளவிற்கு பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே ஆய்வுகளிலும் பெருந்தோட்டங்கள் என்ற கருத்துச்சார்ந்த கருத்துக்கள் பெருமளவிற்கு உள்ளன. உலகத்திலுள்ள
17

Page 19
ஏனைய பெருந்தோட்டங்கள் பற்றிய ஆய்வானாலும் Fff? இலங்கைப்பெருந்தோட்டங்களைப் பற்றிய ஆய்வானாலும் சரி அவை ஏராளமாக உள்ளன. அதனால் பெருந் தோட்டங்கள் என்ற தலைப்பானது கூடுதல் ஆய்விற்குட்பட்ட ஒருவிடயம். எமது ஆய்விலும் பெருந்தோட்டங்கள் என்ற சிந்தனையையும் இணைக்கின்ற ஒன்றாகவே உள்ளது. எனினும் எமது ஆய்வில் பால்நிலைப்பாட்டிற்கும் அரசியற் பொருளாதாரத்திற்குமான தொடர்பு பெருந்தோட்டங்கள் சார்ந்து வலியுறுத்தப் படுகின்றது. அவ்வகையில் ஏற்கனவே செய்யப்பட்ட ஆய்வுகள் பால்நிலைசார்ந்த சமனற்ற தன்மையினைப் பெரிதுபடுத்தவில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
மேலும் பெருந்தோட்டங்களை அநேக ஆய்வுகள் கருத்திற் கொள்வது போல ஒரு மூடியமுறைமையாக இவ்வாய்வு கொள்ளவில்லை. பெண்களை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் பெருந்தோட்டத்துறை திறந்த ஒரு முறைமையாகக் கொள்வதற்கு இருகாரணங்கள் உண்டு.
ஏற்கனவே பார்த்ததுபோல பெண்களுடைய தொழில் ரீதியான பங்களிப்பு பெருந்தோட்டங்களை உலக முறைமை யுடன் இணைப்பது ஒரு காரணம். இரண்டாவதாக பெண்களின் தொழிற்சங்க அங்கத்துவத்தினூடாக அவர்கள் தேசிய அரசியலில் தொழிலாளராக பங்குபற்றுவதால் அவர்கள் ஒரு மூடிய முறைமையில் இருப்பவர்கள் என்று நாம் கருதமுடியாது.
மேலும் வரலாறு எனும் விடயத்தை எடுத்துக்கொண்டால்
கோப்பிப்பயிற்செய்கைக் காலத்திலிருந்து இன்றுவரை பால் நிலை அசமத்துவம் பல்வேறு நிலைகளில்
18

உருவாக்கப்பட்டும் நிலைப்படுத்தப்பட்டும் வந்திருக்கின்றது என்பதையும் ஒரு முக்கிய அம்சமாக நாம் கருத வேண்டும். ஆரம்ப காலத்தில் சர்வதேசரீதியில் தொழிலாளரை நகர்த்தும் செயற்பாடானது பெண்களை எவ்வாறு பாதித்தது என்பதையும் காலனித்துவ அரசின் ஈர்ப்புக்கள் , காலனித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளின் பொருளாதார அரசியல், சமூக உறவுகளை எவ்வாறு பாதித்தன என்பதையும் அதனுTடாக இந்நாடுகள் எவ்வாறு உலகப்பொருளாதாரத்தில் கட்டமைப்புரீதியாக இரண்டாம் பட்சநிலைமைக்கு மாற்றப்பட்டன என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அதாவது காலனித்துவ அரசு எவ்வாறு நாடுகளிற்கிடையேயான அசமத்துவ நிலையினை மறுபடி உறுதிப் படுத்தியது அல்லது உருவாக்கி நிலைப்படுத்தின என்பதும் முக்கியமான விடயங்கள்.
தொழிலாளர்களாகவும், மலையகத்தமிழராயும் மலயகப் பெண்களின் வரலாறு தனித்துவமானதாக இருக்கின்றது. எனினும் எல்லா இடங்களையும் போலவே இங்கும் பெண்கள் தொடர்பான வரலாற்றுப்பக்கங்கள் எழுதப்படாமலேயே இருக்கின்றன. அதனால் வாய்மொழி இலக்கியங்களிலும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டறிவத னுாடாகவும் வரலாறு பற்றி அறியக்கூடியதாகவுள்ளது.
இவற்றைத்தொகுத்து நோக்குமிடத்து மலையகப்பெண்கள் என்ற பொருள்வகுப்பானது இச்சொற்றொடர்ப்பிரயோகம் தொடர்பாகவுள்ள பிரச்சினைகளைக்கருத்திற் கொண்ட தாகவும் பலதளங்கள் சார்ந்தும் அணுகப்பட வேண்டிய ஒன்றாகவுமுள்ளது. மேலும் ஒரு முடிந்த விடயமாக அல்லாமல் மாற்றங்களிற்குட்படுவதும் செயற்பாடு சார்ந்ததுமான ஒரு பொருள் வகுப்பு என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.

Page 20
ஆய்வின் முறைமையியலும் ஆய்வனுபவமும்
இந்த ஆய்வு முற்றுமுழுதாக பால்நிலை எனும் எண்ணக்கருவை மையமாகக்கொண்ட ஆய்வாக அமைகிறது. பால்நிலையை மையப்படுத்திய ஒரு ஆய்வை நாங்கள் ஏன் மேற்கொள்கின்றோம் என்பதையும் அங்கு பால்நிலை என்றால் என்ன என்பதையும் முதலில் நோக்கவேண்டிய ஒரு தேவையிருக்கின்றது.
பெளதீக ரீதியானவையில்லாமல் அதனின்றும் வித்தியாசப் படுத்திப்பார்க்கக் கூடியவகையில் பால்களுக்கிடையேயான உறவுகளை ஒரு சமூக அம்சமாகக்கருதுவதுடன், சமூகத்தின் உருவாக்கமாகவும் அவற்றைக்கொள்ளும் எண்ணக்கரு பால்நிலை என்பதாகக் கொள்ளப்படுகின்றது. பெளதீக ரீதியான ஒரு விடயமாகக் கொள்ளப்படும் பால் (sex) என்பதிலிருந்து வித்தியாசப்படுத்திப் பார்க்கப்படும் ஒரு விடயமாக பால்நிலையைக் (Gender) கருதவேண்டும்.
பால்நிலை என்பது ஒரு எண்ணகருவாக பெண்நிலைவாதம் சார்ந்த கல்விப்புலத்தில் முன்வைக்கப்படுகின்றது. பெண்நிலை வாதிகளே இவ்வெண்ணக்கருவினை முன்வைக்கின்றனர். பெண்ணிநிலைவாதம் சார்ந்த சமூகவிஞ்ஞானங்களுக்கு இவ் வெண்ணக் கரு அடித்தளமாக அமைகின்றது. அவ்வகையில் பால்நிலைசார்ந்த ஆய்வுகள் பெண்நிலை வாதக்கருத்துக்களை மையப்படுத்தியனவாக உள்ளன. அதனால் பெண்நிலைவாதத்தின் வரலாறு, அதன் அவசியம்,

ஒரு கல்விப்புலமாக அதில் நடைபெறும் கருத்தாடல்கள் என்பவற்றில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு, இவ்வாய்வில் பயன்படுத்தப்படும் பதங்கள் , கோட்பாட்டாக்கம் , முறைமையியல், தரவு சேகரிக்கும் முறைகள் என்பன புதியவிடயமாக இருக்கக்கூடும். அவ்வகையில் பெண்நிலை வாதத்தின் அடிப்படைக் கருத்துக்களில் பரிச்சயம் இல்லாதவர்கள் ஏதோ ஒரு வகையில் பெண்நிலைவாதம் தொடர்பான பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய ஒரு நிலையிலேயே உள்ளனர் என்பதை வலியுறுத்த வேண்டிய அதேவேளை, பெண்நிலைவாத ஆய்வு என்றால் என்ன என்பற்கான சில விளக்கங்களும், இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்ட முறைகள், ஆய்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்பவற்றைக் கலந்துரையாடுவது இப்பகுதியின் நோக்கமாக வுள்ளது.
பெண்நிலைவாதம் என்பது பெண்களை ஒரு வகுப்பாக ஏற்றுக்கொண்டு அதனுடாகத் தோற்றம் பெற்றதாகும். பகுப்பாய்வு நோக்கத்திற்கும் அவ்வாறான பொருள் வகுப்பு தேவையானதாகவுள்ளது. இவ்வாறான ஒரு தனித்த பொருள்வகுப்பை நெறிப்படுத்துகின்ற செயற்பாடு பலருக்கு கேள்விகளை எழுப்புவதாகவுள்ளது. சமூகயதார்த்தத்திற்குப் புறம்பாக அல்லது மாறாக அவ்வாறானதொரு பொருள் வகுப்பை ஏன் பிரித்து நோக்கவேண்டும் என்பது பலரது கேள்வியாகவுள்ளது. ஆண்களும் பெண்களுமாக சமூக யதார்த்தத்தை உருவாக்குபவர்களாக இருக்கின்றபோது, சமூக உறவுகள் அவ்வாறான ஒரு பிரிப்பை வெளிப்படையாகக் காட்டாத போது அவ்வாறானதொரு பிரிவை நாங்கள் ஏன் ஏற்படுத்த வேண்டும் என்பது பலரால் முன்வைக்கப்படும் கேள்வியாகும். அவ்வகையில் பெண்களை ஆண்களிலிருந்து பிரித்து ஏன் ஒரு குழுவாக நோக்கவேண்டும் எனப்பலர் கேட்பதுண்டு.
21

Page 21
வரலாற்றுரீதியாக பெண்களை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இரண்டாம் பட்ச இடத்திற் குரியவராக கருதி வந்தமையாலும், இச்செயற்பாடு இன்றும் இயங்கி வருவதாலும் சமூக யதார்த்தமானது சமத்துவமற்ற முறையில் இயங்கிவருகின்றது. அதனால் பாதிக்கப் பட்டவர்கள், இரண்டாம் பட்சமாக்கப்பட்டவர்களை ஒரு குழுமமாகவைத்து நோக்குவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. அவ்வகையில் இரண்டாம் பட்சமாக்கப்பட்டவர்களின் உயர்வினை நோக்கமாகக் கொண்டே பெண்நிலைவாதம் தோற்றம் பெற்றது. அதனால் பெண்களை ஒரு குழுமமாகக் கொள்வது அவசியமானதே. உலகளாவிய ரீதியில் பெண்களை ஒரு குழுமமாகக் கொள்ளுமிடத்து நாட்டிற்கு நாடு, பண்பாட்டிற்குபண்பாடு, சமூகத்துக்கு சமூகம், மேலும் வர்க்கம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பெண்கள் என்ற குழுமம் வித்தியாசப்படினும் பெண்நிலைவாத ஆய்வுகள் பெண்களுடைய அடையாளத்தையே பிரதானமாக எடுத்துக்கொள்கின்றன. பெண்நிலைவாதம் என்பது ஒரு வாழ்வனுபவமாகவும், ஒரு பயிற்சியாகவும், தொடர்ந்த விமர்சனமாகவும் இருப்பதனால் அதற்கு வெளியேயுள்ள வர்களுக்கு அதனை விளங்கிக்கொள்வது சிரமமான விடயமே,
பெண்நிலைவாத ஆய்வு என்பது அல்லது பால்நிலை எனும் எண்ணக்கருவை அடிப்படையாக வைத்த ஆய்வு என்பது தனித்த வரைவிலக்கணத்தையுடையது. அதன் முறைமையியல், ஆய்வுமுறைகள் என்பன அங்கு தனித்தன்மை உடையன, இவ்வகை ஆய்வில் ஈடுபடுபவர்களின் ஆய்வனுபவம் ஏனைய சமூகவிஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுபவர்களுடைய ஆய்வனுபவத்தினின்றும் வித்தியாசமானது. ஆய்வு தொடர்பாக மரபுரீதியாக இருந்துவரும் கருத்துக்களை கேள்வி கேட்கின்ற ஒரு கருத்தாகவும் அவற்றை விமர்சிப்பதாகவும், மாற்றி யமைப்பதாகவும் பெண்நிலைவாத ஆய்வு உருவாகின்றது.
2
2

பெண்நிலைவாத வரலாற்றில் உலகளாவிய ரீதியில் அவ்வாறான ஆய்வனுபவங்கள் ஓரளவிற்கு காத்திரமான ஆவணங்களாகவுள்ளன.
இலங்கையில் பெண்நிலைவாதம் சார்ந்த ஆய்வுகள் ஏராளம் இடம்பெற்றிருப்பினும் ஆய்வில் ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் ஆய்வுமுறைகள் சார்ந்து எழும் பிரச்சனைகளையும் பகிருகின்ற போக்கானது முறைசாராத சம்பாசணைகளாக இருந்தபோதும் காத்திரமான கலந்துரை யாடல்களாக இடம்பெறுவது குறைவாகவே உள்ளது. அவற்றினை ஆவணப்படுத்தும் போக்கும் குறைவாகவே உள்ளது. அவ்வகையில் ஆய்வாளராக எனது அனுபவங் களைப் பகிரும் ஒருசிறு முயற்சியாகவே இப்பகுதி அமைகின்றது.
பால்நிலை எனும் எண்ணக்கரு நிலவுகின்ற ᎶᏗ ᎧᏡ6ᏡᎢu 1 கருத்தியலினுடாக மலையகத்தில், குறிப்பாக தோட்டங்களில் எவ்வாறு இயங்குகின்றதென விளங்கிக்கொள்ளுதல் எம் ஆய்வின் ஒரு நோக்கு, பெண்களுடைய பிரச்சனைகள் அவற்றை வெளிப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல், பெண்நிலைவாத இயக்கங்கள் மலையகம் சார்ந்ததாக எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிதல், இவ்வாய்வினூடாக மாற்றங்களை பிரயோகித்தல் என்பவையும் இங்கு முக்கியமான விடயங்களாக அமைகின்றன.
பால்நிலையானது வீடுகளில், தொழில் இடங்களில், அரசு எனும் நிறுவனத்தில், பண்பாட்டில், பாலியலில், வன்செயலில் எனச்சமூகவாழ்வின் பல்வேறு தளங்களில் உருவாக்கப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் வருவதாக வுள்ளது. ஒரு தந்தை / ஆண் தலைமைத்துவ சமூகத்தில் அவை எப்பொழுதும் பெண்களுடைய இரண்டாம்
23

Page 22
பட்சநிலைக்குரிய வகையிலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. சமூகங்களில் பால்நிலைபற்றிய கருத்தியலை விளங்கிக் கொள்வது, பெண்களுடைய நிலைமையை விளங்கிக் கொள்வதற்குரிய முதற் படி . இக் கருத்திய லானது பெண்களுடைய தாழ்ந்த நிலையை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதனால் இதை விளங்கிக்கொள்வதின் மூலம் மாற்றுக்கருத்தியலை முன்வைப்பது சாத்தியமாகிறது. மாற்றுக்கருத்தியலானது பொதுவாக பெண்கள் இயக்கம் ஒன்றினுடைய தோற்றத்தினூடாகவும், செயற்பாட்டினுடாகவும் சாத்தியமாகின்றது. மாற்றுக் கருத்தியலானது பெண்களை மையப்படுத்தியதாக அவர்களுடைய உயர்வை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும்.
இத்தகைய நோக்கத்தைக் கொண்ட எமது ஆய்விற்கு நாம் நேர் காணல் மூலம் தரவு சேகரிக்கும் முறையைத் எடுத்துக்கொண்டோம். தரவு சேகரித்தல் எனும் செயற்பாடு ஏறத்தாள ஏழு மாதங்கள் நடைபெற்றன. நுவரெலியா மஸ்கெலியா மாவட்டங்களிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் சிலவற்றை மாதிரியான ஆய்விற்காக தெரிவு செய்தோம். நூறு பெண்கள் ஆய்வுச் செயற்பாட்டில் பங்குபற்றினர். இந்நேர்காணல்கள் என்னாலும் எனது ஆய்வு உதவி யாளராலும் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தோட்டத்தை தவிர ஏனைய தோட்டங்களில் ஆய்வினை மேற்கொண்டபோது தோட்டங்களுக்கு வெளியே தங்கியிருந்து தினமும் தோட்டங்களுக்குச் சென்று தரவுகளைத் திரட்டினோம். ஒரு தோட்டத்தில் ஒருவாரம் தங்கியிருக்கக்கூடியதாக இருந்தது. ஒரு தோட்டத்தில் எனது ஆய்வு உதவியாளர் தங்கியிருந்து தரவுகளைத்திரட்டினார். அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூகசேவை நிறுவனங்களும் ஆய்வுச்செயற்பாட்டில் எமக்கு உதவிசெய்தன. தோட்டங்களைத் தெரிவு செய்தல், மாதிரிகளைத் தெரிவு செய்தல், அறிமுகம் செய்தல் போன்ற
24

ஆய்வுச்செயற்பாடுகளில் அவர்களது உதவி இருந்தது. பெண்களுடன் உரையாடுவது என்பது தவிர சந்தர்ப்பம் கிடைத்தபோது தோட்டநிர்வாகிகள், தொழில் சங்கத் தலைவர்கள் போன்றவர்களுடனும் உரையாடினோம்.
நேர்காணல் மூலம் தரவுகளைத்திரட்டல் என்பது ஆட்களை அவர்களது இடத்தில் சந்தித்து கேள்விகளை நேரடியாக கேட்பதன் ஊடாக விபரங்களைப்பெறுதல் என்பதாகும். நேர்காணல் முறை பல அனுகூலங்களையும் சில பாதக நிலைமைகளையும் உள்ளடக்கிய ஒரு தரவு சேகரிக்கும் முறையாகும். மரபுரீதியான பெண்நிலைவாத ஆய்வுகளிலும் நேர்காணல் முறை வித்தியாசமானதாக அமைகின்றது. அதாவது மரபு ரீதியாக நேர்காணல் முறை எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டதோ அதில் முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட தாகவே பெண்நிலைவாத ஆய்வுகளில் நேர்காணல் பயன்படுத்தப்படுகின்றது.
நேர்காணல் முறையில் பன்படுத்தப்படும் கேள்விகள் முன்னரே ஓரளவிற்கு தீர்மானிக்கப்பட்டவையாக இருக்கின்றன. நேர்காணல் முறையில் கேள்விகள் ஒழுங்குபடுத்தும் அடிப்படையைக் கொண்டு இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று கட்டமைக்கப்பட்ட தெனவும் (Structured) LDippg, g"LGOLDóJILLIIggiI(Un Structured) 676076pio அழைக்கப்படும். கட்டமைக்கப்பட்ட நேர்காணலானது முற்றுமுழுதாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட கேள்விகளையும் ஒழுங்கினையும் கொண்டது. இம்முறையே மரபு ரீதியான ஆய்வுகளில் கூடுதலாகப் பின்பற்றப்பட்டது. இம்முறை யிலுள்ள குறைபாடு என்னவெனில் இங்கு ஆய்வாளர் ஆய்வுச்செயற்பாட்டை முற்றுமுழுதாக கட்டுப்படுத்துபவராக இருக்கின்றனர். ஆய்விற்கு உட்படுத்தப்படுபவர்களுக்கு
25

Page 23
ஆய்வுச் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் சந்தர்ப்பத்தினை ஆய்வாளர் தீர்மானிப்பதால் வரையறுக்கப்பட்ட அளவிலேயே வெளிப்பாடுகள் அமையும். இருபக்கத்தொடர்பு என்பது இயல்பானதாக இல்லாமல் ஒரு வழிப்பட்ட தொடர்பே பிரதானமாக இருக்கும். தவிர ஒரு கேள்விக்கான பதிலை அடிப்படையாகக்கொண்டு மற்றைய கேள்வி அமையாது. அதனால் ஆய்வுச்செயற்பாட்டில், நேர்காணப்படுபவர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர பங்குபற்றுவதில்லை.
இம்முறை தொடர்பான விமர்சனங்களினாலேயே கட்டமைக்கப்படாத கேள்விகளையும் ஒழுங்கினையும் பயன்படுத்தும் முறை உருவானது. இது ஓரளவிற்கு தரரீதியானதொரு முறையாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் கேள்விகளிற்கான பதிலை அடிப்படையாகக் கொண்டே அடுத்த கேள்வி கேட்கப்படும். ஆய்விற்கு உட்படுபவர் அங்கு தன்னை வெளிப்படுத்தவும் ஆய்வில் பங்குபற்றவும் கூடுதல் சந்தர்ப்பம் கொடுக்கப்படும்.
இம்முறையில் உள்ள அனுகூலங்கள் காரணமாக பெண்நிலைவாதிகள் ஓரளவிற்கு கட்டமைக்கப்படாத கேள்விகளையும் ஒழுங்கினையும் விரும்புகின்றனர். இம்முறையிலும் பிரச்சனைகள் இருப்பினும் இம்முறையின் அனுகூலங்கள் காரணமாக எம்மாலும் இம்முறையே தெரிவு செய்யப்படுகிறது.
ஆரம்பத்தில், அதாவது ஆய்விற்கான திட்டத்தைத் தயாரித்த போது ஆய்வுச் செய்யப்படும் மக்களுடன் வசித்து அவர்களது 6) Typó603, Qup60pGOLD560)67 -96ug516Of5g56U(Participant Observation) எனும் தரவுசேகரிக்கும் முறையையும் பின்பற்றுவதாக இருந்தோம் எனினும் சில நடைமுறைப்பிரச்சனைகள் காரணமாக இம்முறை சாத்தியமாகவில்லை.
26

பெண்நிலைவாத ஆய்வு முறையில் ஒன்றான பெண்களைப் பெண்கள் நேர்முகம் காண்பது என்ற முறையையே இங்கு பயன்படுத்தினோம். பெண்களைப் பெண்கள் நேர்காணும் முறையானது பெண்களிற்குள். அதாவது ஆய்வாளருக்கும் ஆய்விற்கு உட்படுபவரிற்குமிடையிலான தொடர்பாடலையும் புரிந்துணர்வையும் கூடுதலாக வளர்க்கும் எனக்கொள்ளப் படுகின்றது. பெண்களைப்பற்றியதான ஒரு ஆய்வில் பெண்கள் தங்களது வாழ்பனுபவங்களைத் தங்களது வார்த்தைகளில் எவ்வாறு தெரியப்படுத்துகின்றனர் என்பது கூடுதலாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அதிலும் அவர்களின் கருத்துக்கள் நம்பிக்கைகள் பெறுமதிகள் அவர்களது அனுபவங்கள் உணர்வுபூர்வமாக வெளிப்படு த்தப்படும் போது பெண் ஆய்வாளர்களினால் கூடுதல் கவனிப்புடன் விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருப்பதால் பெண்களுடைய பகிர்ந்து கொள்ளும் ஆற்றல், வெளிப்படுத்தும் திறன் என்பன ஊக்குவிக்கப்படுகின்றன. அவ்வகையில் நேர்காணல் முறை மிகவும் சிறந்ததொன்றாக நெகிழ்வுடைய ஒன்றாகவும் பின்பற்றப்படுகின்றது.
பெண் நிலைவாத ஆய்வு என்பது பெண்களுடைய தன்னிலைப்பட்ட (Subjective) நிலைமைகளை வெளிக் கொணர்வதும் அதனுடாக பெண்கள் தங்களது வாழ்வுபற்றி தாங்களே எத்தகைய எண்ணங்களை ஏற்படுத்துகின்றனர் எனஆவணப்படுத்துகின்ற ஒரு முறை என்பதை Ann Oakly அவர்கள் வரையறுக்கும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பெண்கள் பெண்களாகவும் ஆட்களாகவும் தமது அனுபவங்களைத் தன்னிலைப்பட்டவர்களாக வெளிப் 'படுத்தும் போது அறிதல் என்பதும் அதனை ஆவணப் படுத்தல் என்பதும் பெண்நிலைவாத ஆய்வில் பிரதானமானது எனக் கொள்கின்ற போது இக்கருத்து மரபபரிதியான ஆய்வினின்றும் வித்தியாசமானதாகக் கொள்ளப்படுகின்றது.
27

Page 24
மரபுரீதியான ஆய்வுகளில் தர்க்கரீதியான புறநிலைப்பட்ட (Obejective)விடயங்களிற்கு மட்டுமே மதிப்புக்கொடுக்கப்பட்டது. அகவயத்தன்மை என்பது அங்கு புறக்கணிக்கப்பட்டது. பெண்கள் பெண்களாக தம்மை வெளிப்படுத்துகின்றதன்மை அங்கு கவனிக்கப்படவில்லை, பெண்களது கருத்துக்கள் இவ்வாறான முறையினை கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது பெண்நிலைவாதிகள் பலரால் விமர்சிக்கப்பட்டது. மேலும் புறவயத்தன்மையானது ஆண்கள் ஆய்வாளர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் பால்வாதத்திற்கு துணைபோனதுடன் தந்தைவழி சமூக -ஆண் தலைமைத்துவ சமூக கருத்தியலுக்கு துணைபோவதாக இருந்து வந்துள்ளதாக பெண்நிலைவாதிகள் விமர்சித்துள்ளனர். புறவயத்தன்மை என்பது ஆய்வாளரை சமூக யதார்த்தத்தில் பங்குபற்றுபவராகக் கொள்வதில்லை. சமூக யதார்தத்திற்கு வெளியே நின்று சமூக யதார்தத்தை அறிபவராகவே ஆய்வாளர் இருக்கின்றார்.
மரபுரீதியான ஆய்வுமுறைக்கிணங்க ஆய்வாளர் ஆய்விற்கு உட்படும் சமூக யதார்த்தம் தொடர்பான விமர்சனம் எதையும் முன்வைக்கமுடியாது. ஆனால் பெண்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளை எடுத்துக்கொண்டால், நாம் எதற்காக ஆய்வைச்செய்கின்றோம் என்ற அடிப்படைக் கேள்வியைக் கேட்போமானால் நிலவுகின்ற சமூக யதார்த்தத்தை அடையாளம் காண்பது அதன் அசமத்துவநிலையையும் பெண்களுக்கு பாதகமாக இருக்கும் அதிகாரமுறையை விமர்சிப்பது, பெண்களின் உயர்விற்கான மாற்றுக்கருத்தியலை முன்வைப்பது என்பன ஆய்வின் நோக்கமாகவுள்ளது. அதனால் ஆய்வாளர் மாற்றத்தைக் கொண்டுவர முயல்பவர் என்ற முறையில் ஆய்விற்கு உட்படும் சமூக யதார்தத்தில் ஓரளவிற்குப் பங்குபற்றுபவராகவே இருக்கின்றார். எமது ஆய்விலும் பெண்கள் இயக்கம் தொடர்பானதான செயல்வாதம் சார்ந்த மாற்றம் ஒன்றை மலையகப்பெண்கள் கொண்டுவர
28

வேண்டும் என்ற நோக்கம் காரணமாயிருந்ததால் மரபு ரீதியாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுவந்த புறவயத்தன்மை பின்பற்றப்படவில்லை.
எமது நேர்காணலில் பெண்களின் பெயர், வயது, திருமணமானவரா இல்லை போன்ற குடும்பவிபரங்கள், தோட்டத்தில் பதிந்த வயது, வருமானம் போன்ற கேள்விகள் பாரம்பரிய நேர்காணல் முறையில் எல்லோரிடமும் அனேகமாகக் கேட்கப்பட்டனவாயினும் இவ்வாறான கேள்விகள் ஒரு அறிமுகத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தன.
அனேக நேர்காணல்கள் பங்குபற்றுபவருக்கு முற்கூட்டியே அறிவிக்கப்பட்டு அவர்களுடைய நேர இடவசதி கருதியும் நடைபெற்றன. நாங்கள் அவர்களுடைய வீடுகளிற்கு (லயன்) நேரடியாக சென்றே தரவுகளைத்திரட்டினோம். ஆய்வினுடைய நோக்கமும் எம்மைப்பற்றிய விபரங்களும் எல்லோருக்கும் தெரிவிக்கட்பட்டன. ஆய்வில் பங்குபற்றுவதற்கு அவர்கள் விருப்பந் தெரிவித்த பின்பே கேள்விகள் கேட்கப்பட்டன. பதில் கூறும் வேளையில் நாம் அநாவசியமாக குறுக்கிடுவ தில்லை என்ற முற்கூட்டிய தீர்மானம் எம்மிடம் இருந்தது. அதனால் நேர்காணல்கள் அனேகமாக நீண்ட நேர்காணல் களாக இருந்தன. வெளிப்படுத்தலுக்கு போதிய சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதுடன் கேள்விகளை அவர்கள் கேட்பதற்கும் போதிய சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. வேலைப்பிரிவு, தொழிற்சங்க நடவடிக்கைகள் சுகாதார நிலைமைகள் போன்ற விடயங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்பட்டன. அதனால் எமது நேர்காணல் கட்டமைக்கப் படாததாக முற்றுமுழுதாக இருக்கவில்லை அவை ஓரளவிற்கு கட்டமைக்கப்பட்டனவாகவே இருந்தன (Semi - Structured) இம்முறையில் நாம் எதிர்பார்க்காத பல புதிய விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது.
29

Page 25
எமது ஆய்வில் பலபிரச்சனைகளும் எதிர்கொள்ளப்பட்டன. பெண்களையும் தனியாகச் சந்தித்துப் பேசுதல் என்பது பல சந்தர்ப்பங்க்ளில் முடியாத காரியமாகவே இருந்தது. எல்லாப் பெண்களையும் அணுகுவதற்கு (Getting access to Women) எமது ஆய்வுக்களத்தின் சூழ்நிலை சரியாக உதவவில்லை என்றே கூறலாம்.
தோட்டங்களில் ஆய்வினைச் செய்வதற்கு கம்பனிகளிடமிருந்தும் அமைச்சிடமிருந்தும் அனுமதிகேட்டு எழுதிய கடிதங்களுக்கு அவை பதில் எழுதவில்லை. தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களுடன் தொழிலாளர்களையும் லயன்களையும் அவர்கள் வாழ்வு, நலன்கள் என்பவற்றையும் சொந்தங் கொண்டாடக்கூடிய ஒரு முறைமையாகவே பெருந் தோட்டங்கள் காணப்படுகின்றன. அதனால் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனேயே பெண்களைக்கண்டு உரையாடுவதற்கான வாய்ப்புக்கிடைத்தது. ஒரேயொரு தோட்டத்தில் மட்டுமே அலுவலக உத்தியோகத்தரின் உதவியினுTடாக அது சாத்தியமாகியது. ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களின் பெண்களுடைய பிரிவு ஒன்று அவர்களது வேலைகள் தொடர்பாக தோட்டங்களிற்கு சென்று வந்தமையாலும் தோட்டங் களில் தமது அங்கத்தவர்களை வைத்திருந்த காரணத்தினாலும் அவர்களினூடாக பெண்களை அணுகுகின்ற வாய்ப்பு எமக்குகிடைத்தது. எனினும் பெரும்பாலான தோட்டங்களில் தோட்டச்சங்கத்தலைவர்களின் அறிமுகமும் அவர்களுடைய முறைசாராத (Informal) அனுமதியும் தேவையாயிருந்தது. ஏனெனில் தோட்டங்களில் எமது பிரசன்னம் வெளிப் படையாகத் தெரிகின்ற ஒன்றாய் இருப்பதால் எம்மைப்பற்றிய அனாவசிய சந்தேகங்களைத் தவிர்ப்பது எம்மைக் கூட்டிச் சென்றவர்களுக்குத் தேவையானதாக இருந்தது. இக்காரணங்களினால் பெண்களைத்தனியே சந்தித்துப்
30

பேசுவது என்பது அதுவும் நீண்டநேரம் பேசுவது என்பது மிகவும் சிரமமான காரியமாகவே இருந்தது.
தவிர ஏனைய சமூகங்களைப் போல பெண்களைத்தனியே சந்தித்துப் பேசுவது மலையகத்தில். தோட்டப்புறங்களில் இலகுவானதாக இருக்கவில்லை என்பதற்கு அவர்களுடைய வேலையின் தன்மை, லயன்களின் அமைப்பு, குடும்பப் பொறுப்புக்கள் என்பனவும் காரணமாகவிருந்தன. பெண்கள் பொதுவாக ஓய்வாக இருப்பதில்லை என்பதை இங்கு கவனத்திற்கொள்ள வேண்டும். காலையில் ஐந்துமணிக்கு எழும்புவதிலிருந்து இரவு 11.30 மணிவரை அவர்களுக்கு வேலையிலிருந்தது. நாங்கள் மாலை வேளையில்தான் அவர்களைச் சந்தித்தோம். அப்பொழுதும் அவர்கள் வேலையால் வந்த களைப்பில் இருப்பார்கள். அதற்குப் பின்னாலும் தொடராக வேலைகள் காத்திருக்கும். இங்கு ஒரு ஆய்வாளர் அவர்களது நாளாந்த நேர அட்டவணையில் குறுக்கிட்டுத் தான் தனது வேலைகளைச் செய்யவேண்டி யுள்ளது. இந்த நேர இடைவெளிக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தான் முடிகிறதேயொழிய நீண்டநேர நேர்காணல்களை ஏற்படுத்த முடியாமல் இருக்கும். நீண்ட நேர்காணல்கள் அவர்களுக்கு பலவழிகளில் பாதகசூழ் நிலையை ஏற்படுத்துபவனவாகவுள்ளன. அது போல ஒரு பெண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் சந்தித்துப் பேசுவதும் பிரச்சனையாகவே இருந்தது. இவ்வாறான பல தடைகளையும் மீறி நேர்காணல் எனும் செயற்பாடு எமது ஆய்வில் சாத்தியமாவதற்கு அவர்கள் ஆய்வுதொடர்பாக காட்டிய ஆர்வமும் ஈடுபாடுமே காரணமாயிருந்தன.
எமது ஆய்வில் ஆரம்ப நோக்கமானது பெண்களுடைய நிலைமை
பற்றியதும், கருத்தியல் பற்றியதுமான ஒரு புரிதலாக இருந்தது. விழிப்புணர்வுடைய பெண்கள் சமூகம், அணிதிரட்டல் என்பன
31

Page 26
நீண்டகால நோக்கங்களாக இருந்தபோதிலும் இக்குறிப்பிட்ட ஒருவருட ஆய்வு என்பது பெரிதும் நிலைமையை விளங்கிக்கொள்வது, ஆவணப்படுத்துவது, பகுப்பாய்வு செய்து விமர்சனங்களை முன்வைப்பது, சமூகமாற்றங்களை உண்டுபண்ணுவது என்ற தொடரான செயற்பாடுகளில் சில முன்னெடுப்புக்களை செய்வதற்கே உதவியது. அதனால் நாம் ஆய்வுக்களத்திற்குச் சென்றபோதும், பெண்களுடன் உரையாடிய போதும், எமது ஆய்வுநோக்கத்தை விளக்கியபோது நீண்டநேர உரையாடலின் பின்பே அதனை விளக்க முடிந்தது. நாம் சந்தித்த பெண்களுடைய வாழ்பனுபவத்தை வறுமையிலிருந்து பிரித்து நோக்கமுடியாது இருந்தது. அவ்வனுபவம் வறுமையிலேயே குணாம்சப்படுத்தப்படுவதா யிருந்தது. அதனால் நாங்கள் அவர்களுடன் பேசும்போது, கேள்விகளைக் கேட்கும்போது, அவர்களுடைய வறுமை நிலைமையை எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் என்பதையே விரும்பினர். இந்த ஆய்வினூடாக தமது பிரச்சனைகள் உடனடியாக எவ்வாறு தீரும் என்ற கேள்வி அவர்களுக்கு இருந்தது. அதனால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இவ்வாறானதொரு சமூகத்தில் முதலாளித்துவ சமூகம் பற்றிய பிரச்சனையாகவும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அதனால் பெண்களுடைய பிரச்சினைகளை அரூபமாக்கப்பட்ட ஒரு விடயமாகக் கருதாமல், பொருளாதார ரீதியாக மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் அவை எவ்வாறானவை என்ற கேள்விசார்ந்தே கருதவேண்டியதாக இருந்தது. எனினும் பொருளாதாரரீதியாக அவர்கள் எதிர்பார்த்த உடனடித்தீவு, கருத்துரீதியாக ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நீண்டகாலத்தீர்வு என்பன ஆய்வுச்செயற்பாட்டில் தொடர்ச்சியானதொரு பிரச்சினையாகவே இருந்தது.
ஆய்வாளருடைய வேலை தரவுசேகரித்தல் மட்டுமே என்ற கருத்திலிருந்து விடுபட்டு எமது நோக்கத்தை மட்டும்
32

அடிப்படையாகக்கொண்ட ஒரு ஆய்வுச்செயற்பாடாக தொடர்ச்சியாக ஆய்வினை முன்னெடுக்க முடியவில்லை. எமது ஆய்வைப்பற்றியும், வெளியுலகைப்பற்றியும் அறியவும் தங்களை வெளிப்படுத்தவும் இந்த ஆய்வில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் இந்த ஆய்வு அவர்களது உடனடிப் பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப்போகின்றது என்ற கேள்வி அவர்களிடம் எப்பொழுதும் இருந்தது.
ஆய்வு தொடர்பாக எமக்கிருந்த இன்னொரு பிரச்சினை யையும் இங்கு குறிப்பிடலாம். இப்பிரச்சினை ஆய்வில் ஆய்வாளரது சமூக அடையாளம் எவ்வகையானது என்ற விடயம் சார்ந்ததாகவுள்ளது. ஏனெனில் மலையகமக்களின் இனத்துவமானது ஏனைய இனங்களுடனான உறவுகளி னுாடாக தீர்மானிக்கப்படுவதாகவுள்ளது. அவ்வகையில் யார் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர் அது யாருக்காக செய்யப்படுகின்றது போன்ற கேள்விகள் தொடர்பான விழிப்புணர்வு தோட்டங்களில் இல்லாது போனாலும் மலையக ஆய்வறிவாளருள் ஒரு சாராரிடம் இருந்தது. யாழ்ப்பாணத்து தமிழர் தொடர்பான சிந்தனைகளை மலையகமக்கள் தங்களது கருத்தாடல்களில் வெளிப்படுத்தும் காலமிது மலையகமக்கள் பற்றிய ஆய்வுகள் மலையகத்தைச் சேர்ந்தவர்களினால் மட்டுமே செய்யப்படக் கூடியன என்ற கருத்துடைய ஒரு சில ஆய்வறிவாளர்களையும் நாம் சந்தித்ததுண்டு. பெண்களாயி ருப்பதனால் எமக்கு ஒரே அடையாளம் இருக்கின்றது என்ற விடயம்சார்ந்த நிலைப்பாடும் இன்று கேள்விக்குரிய தொன்றாகிவிட்டது. அவ்வகையில் வித்தியாசங்கள் (Differences) கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து எமக்கு இருந்தாலும் இந்த ஆய்வு தொடர்பாக, பெண்களுடைய உயர்வு என்பதே எமது நோக்கமாயிருந்தது.
பால்நிலை அடையாளமானது இன, வர்க்க, சாதி
33

Page 27
(இதுபோன்ற ஏனையவை உட்பட) எனப்பல சமூகக்குணாம் சங்கள் சார்ந்து தீர்மானிக்கப்படுகின்றது என்பதை ஏற்றுக் கொண்டாலும், பெண்ணிலைவாதமானது வித்தியாசங்களை வலியுறுத்தும் ஒரு முழுமையாக இருக்கவேண்டும் என்ற கருத்து எம்மிடம் இருந்தது. அவ்வகையில் மலையகத்தில் பெண்களை அவர்களுடைய பிரச்சினைகளுடன் விளங்கிக் கொள்ளப் போகின்றோமாயின் நாம் யார் என்ற கேள்வியும் அங்கு தொடர்ச்சியாக தலைகாட்டுவதாகவே இருந்தது. நாங்கள் பெண்களாக இருப்பதாலும் தந்தை வழி சமூகத்து கருத்தியலின் பாதகசூழ்நிலையை அனுபவித்து வருபவர் என்றரீதியிலும் பலசந்தர்ப்பங்களில் அவர்களுள் ஒருவர் (insider) என்ற உணர்வையும் பால்நிலையல்லாத ஏனைய சமூகக்குணாம் சங்களை நோக்குமிடத்து பலசந்தர்ப்பங்களில் வெளியாள் என்ற உணர்வையும் (Outsider) பெறக் கூடியதாக இருந்தது. எனினும் பெண்கள் என்ற விடயத்தில் நெருங்கிய பரஸ்பர உணர்வை எமது ஆய்வில் பங்குபற்றியோருடன் ஏற்படுத்தக் கூடியதாகவிருந்தது.
ஆய்வில் பங்குபற்றிய பெண்கள் ஆய்வுதொடர்பாகவும் பெண்கள் சார்ந்த சிந்தனை தொடர்பாகவும், எம்மைப்பற்றியும் பலகேள்விகளைக் கேட்டனர். அவ்வகையில் ஆய்வில் அவர்களுடைய பங்குபற்றல் கூடுதலாகவே இருந்தது. இங்கு ஒரு சுவாரஸ்சியமான விடயத்தை ஆய்வு அனுபவமாகக் குறிப்பிடலாம். நாங்கள் ஆய்வுக்களத்திற்குச் சென்றபோது அனேகமாக தோட்டச் சங்கத்தலைவர்கள், நிர்வாகத்தினைச் சேர்ந்தவர்கள் தோட்டப்பெரியவர்கள், மலையகத்தைச் சேர்ந்த ஆய்வறிவாளர் எனப்பல ஆண்களையும் சந்தித்தோம்.
நாங்கள் ஏன் இந்த ஆய்வில் ஈடுபடுகின்றோம் என்பதைத்
தெரிந்துகொள்ள அவர்களிற்பலர் ஆர்வம் காட்டினர். தவிர அவர்களுடைய கருத்துக்களை அறியவும் நாங்கள்
34

விளைந்தோம். அவர்கள் நகரங்களுடனும் வெளியுலகுடனும் அதிகம் தொடர்புடையவர்களாக இருந்தனர். பெண்கள் நிறுவனங்கள், பெண்நிலைவாதம் தொடர்பான கருத்துக் களையும் அவர்கள் ஓரளவிற்கு அறிந்திருந்தனர் அவர்களில் அனேகமானோர் எமக்கு ஒரு அறிவுரையை வழங்கினர். அதாவது தோட்டங்களில் படிப்பறிவற்றவர்கள் கூடுதலாக இருப்பதால் நாங்கள் உண்மைநிலையை அறிந்து கொள்வதில் கவனமாக இருக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளப் பட்டோம். அவரவர் அவரவருக்குத் தெரிந்த விடயங்களைச் சொல்வார்கள். அறியாமை என்பது பெண்களிடம் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் வெளியிடும் கருத்தில் மிகுந்த கவனம் தேவை என எமக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது எல்லாத்தோட்டங்களிலும் எமக்குப்பெரியவர்களினால் வழங்கப்பட்ட அறிவுரையாகும். ஆனால் பெண்களுடன் உரையாடியபோது அவர்கள் அப்படிப்பட்டவர்களாக எமக்குத்தெரியவில்லை, அவர்கள் எல்லாவிடயங்களையும் அறிந்தவர்களாக இருந்தனர். நாங்கள் பெண்களாக இருப்பதால் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். இங்கு உண்மை எது அதன் வரைவிலக்கணம் யாது என்பது பிரச்சினைக்குரியதாகின்றதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
அதிகாரத்திலிருப்பவர்களின் கருத்து மட்டும் உண்மையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமா என்பது இங்கு கேள்விக்குரிய விடயமாகும். உண்மை என எது வலியுறுத்தப்பட்டதோ அது ஆண்களின் கருத்துக்களாகவே பெரிதும் இருந்தன. பெண்களுடைய கருத்துக்களை அறிதல் என்பதே எமக்குப் பிரதானமாயிருந்தது என்பதை ஆண்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. மேலும் விவாகரத்து தொடர்பாக குடும்பத்தில் பெண்களது அந்தஸ்து தொடர்பாக, வேலைதொடர்பாக ஆண்களது கருத்துக்களையும் நாங்கள் கேட்டறிந்து
35

Page 28
கொண்டோம். அங்கு பெண்களுடைய கருத்துக்களுக்கும்
ஆண்களுடைய கருத்துக்களுக்கும் முரண்பாடு இருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
ஆய்விற்கு இரண்டாம்தரவுகளைப் பயன்படுத்துதல் (Secondary data)தொடர்பாகவும் சில பிரச்சனைகளை நாம் எதிர் நோக்கினோம். மலையகமக்கள் தொடர்பாக, குறிப்பாக தொழிலாளர் தொடர்பாக அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை அலுவலகரீதியாகப் பெற்றுக்கொள்வது என்பது ஆய்வில் ஒரு பிரச்சனையாகவே இருந்தது. குறிப்பாக எத்தனை பெண்கள் தேர்தல்களில் வாக்களிக்கின்றனர், பெண்களுடைய வருமானம், செலவு, சேமிப்பு தொடர்பான விடயங்களை இரண்டாம்தர தரவுகளாகப் பெறுவது கடினமாக உள்ளது. பால்ரீதியாகவும் இனத்துவரீதியாகவும் இவர்கள் ஒதுக்கப்படுவதனால் இப்பிரச்சனை எழுகின்றது. மத்தியவங்கி ஆய்வுகளில் ஓரளவிற்கு பெருந்தோட்டத்துறை என்ற தலைப்பின் கீழ் சில தகவல்களைப் பெறக்கூடியதாக இருந்தாலும் அவை குழுப்பெருந்தோட்டங்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளன. தோட்டங்களுக்குத் தோட்டம் உள்ள வித்தியாசம் பயிர்களுக்குப் பயிர்கள் உள்ள வித்தியாசங்கள் இவ்வாய்வுகளில் பிரதிபலிக்கப்படவில்லை. இவ்வாறான கணிப்பீடுகள் பல பாதகநிலைமைகளை உண்டுபண் ணக் கூடியன. உதாரணமாக பெருந்தோட்டங்கள் நாட்கூலியின் அடிப்படை யிலேயே மாதச்சம்பளத்தை கணிப்பிடுகின்றன. ஆனால் வேலைநாட்கள் நிச்சயமற்றனவாக உள்ளதுடன் தோட்ட த்திற்குத் தோட்டம் காலத்திற்கு காலம் மாற்றமடையும் தன்மையுடையனவாகவும் உள்ளன. புள்ளிவிபரக் கணிப்பீடு களில் பொதுமைப்படுத்தப்பட்ட தரவுகள் வெளியிடப்படு கின்றன. இவை சிலருக்குப் சாதக நிலமை யையும் சிலரிற்கு பாதக நிலமையையும் உண்டு பண்ணக்கூடியன.
36

மத்திய வங்கியினால் 1986/87 காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார ஆய்விற்கிணங்க பெருந்தோட்டங்களில் வருமானம் சராசரியாக 1830வாக உள்ளது. அண்மையில் உலகவங்கியினால் வறுமைக் கோட்டின்கீழ் உள்ளோர் எனக் கணிப்பிடப்பட்டவர்கள் 12.62 ஆக தோட்டத்துறையில் இருந்தனர். இது ஒரு பொதுமைப் படுத்தப்பட்ட கணிப்பீடாகும். வேலை நாட்களில் உள்ள வேறுபாடுகளையோ சம்பள அளவில் உள்ள வேறுபாடு களையோ இத்தரவுகள் பிரச்சனையாகக் கொள்வதில்லை. இதனால் இவ்வாறான கணிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்த உதவித் திட்டங்கள் (உ+ம் ஜனசவிய) மலையகத்து தோட்டத் தொழிலாளரைச் சென்றடைவதில்லை.
புள்ளிவிபர ரீதியாக உள்ள தரவுகள் கிடைக்காமை, கிடைக்கின்ற தரவுகளில் உள்ள பொருந்தாமை என்பன எம்மால் எதிர்நோக்கப்பட்ட சில பிரச்சனைகளாகும். இக்காரணங்களுக்காகவும் எண்ரீதியான ஆய்வு பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை பொருத்தமற்ற ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. ஏனெனில் தரவுகள் ஒரு போதும் எக்காலச் சமூகத்திலும், அலுவலகரீதியாக, வர்க்கநிலை சார்ந்து அல்லது பால்நிலைசார்ந்து திரட்டப்படுவதில்லை. இவ்வாறாக எமது ஆய்வனுபவம் சுவாரசியமானதாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் அமைந்திருந்தது. ஆய்வுதொடர்பாக பல கேள்விகளை முன்வைப்பதாகவும் இருந்தது. இவ்வாய் வனுபவத்தை எமக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே நாம் கொள்கிறோம். இவ்வெற்றிக்கு ஆய்வில் ஈடுபட்ட பெண்கள் காட்டிய ஆர்வமும், தங்களை அவர்கள் வெளிப்படுத்திய மையையும் கருத்துக்களைப் பகிர்ந்த முறைகளுமே காரணமாகும்
நேர்காணல்கள் அனுமதியுடன் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டன. அவை ஆய்வாளர்களின் தேவைக்கு மட்டுமே
37

Page 29
பயன்படுத்தப்படும் என்ற உறுதியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. தரவு சேகரித்தலின் முடிவில் அவை எழுதி எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.
38

கடந்தகால ஆய்வுகளும் அவற்றின் தாத்பரியமும்
மலையகமக்களை இனத்துவம் சார்ந்த ஒரு பொருள் வகுப்பாக எடுத்துக்கொள்ளும் போது பால்நிலை எவ்வாறு பிரச்சனைக்குள்ளாகின்றது எனும் வினாவை ஒட்டியதாக ஆய்வொன்று இதுவரை நடைபெறவில்லை என்றே கூறலாம். எனினும் மலையக மக்களை ஒரு பொருள் வகுப்பாக எடுத்துக்கொள்ளும் போது அக்குழுமம் சார்ந்ததாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட விடயத்தை தலைப்பாக எடுத்துக்கொண்ட ஆய்வுகள் ஏராளம் உள்ளன. பொருளியல், வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல் என ஏதாவது ஒ ரு துறை சார்ந்தவையாக அவை அமைந்துள்ளன.
இவ்வாய்வுகளில் எமது ஆய்வில் குறிப்பிட்டது போலான ஒரு வரைவிலக்கணத்தை மலையக மக்கள் என்ற பொருள் வகுப்பு தொடர்பாக காணமுடியாவிட்டாலும் இவ் வரைவிலக்கணத்தை ஒட்டிய அல்லது அதனுடன் தொடர்புள்ள வரைவிலக்கணங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் பெருமளவு ஆய்வுகள் தோட்டத்துறை அல்லது தோட்டத்தொழிலாளர் என்ற தலைப்பினை ஒட்டியதாக அமைந்துள்ளன. அதாவது பெருந்தோட்டத்துறை எனும் உற்பத்தித்துறையை பொருளியல் அலகாகக் கொண்டவையாகவும் தோட்டத்தொழிலாளர் எனும், வேலை என்கின்ற உற்பத்திக்காரணியினடிப்படையில் அமைந்த பொருள் வகுப்பினர் பற்றியதுமான ஆய்வுகளே

Page 30
கூடுதலானவையாக மேற் கொள்ளப் பட்டுள்ளன . இவ்வாய்வுகள் பெருந்தோட்டங்களை ஒரு பொருளியல் தாபனமாகவும் முதலாளித்துவம் சார்ந்த விவசாயமாகவும், ஏற்றுமதியுடன் தொடர்புடைய உற்பத்தி முறைமையாகவும் நோக்குகின்ற பொருளியல் ஆய்வுகளாகவுள்ளன. வேலை அல்லது ஊழியப்படையின் தன்மை, மேற்பார்வை, உற்பத்திக் கட்டுப்பாடு, சந்தையமைப்பு, விலைநிர்ணயம், பாரிய முதலீடுகள், வருமானத்தினளவு போன்ற விடயங்கள் அங்கு கவனத்திற் கொள்ளப்படுகின்றன. இவை அனேகமாக பொருளியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளாகும். அரசியற் பொருளாதாரம் எனும் தலைப் பரினுள் அடங்கக்கூடியனவாக இவை அமைந்துள்ளன.
ஆரம்பகால வரலாறு பற்றிய ஆய்வுகளும் இவற்றுள் குறிப்பிட்டுக் கூறக் கூடியனவாக இருக்கின்றன. பெருந்தோட்டங்களில் குடியமர்ந்தவர்கள், எதற்காக தமது இடங்களைவிட்டு குடிபெயர்ந்து இலங்கைக்கு வந்தனர்? இலங்கையில் ஏன் போதிய ஊழியர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது? ஆட்சேர்ப்புத் தொடர்பாக காலனித்துவ அரசு கையாண்ட கொள்கைகள், குடிப்பெயர்வின் தன்மை, குடி அமர்வின் தன்மை, தொழிலாளர்களை மீளவும் வெளியேற்றியமை, இவற்றின் அரசியல், இவைசார்ந்த வெளிநாட்டு உறவுகள் எவ்வகையில் மாற்றமடைந்து வந்துள்ளன என்பவற்றை ஆய்வின் பிரச்சனைகளாக ஆய்வாளர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.
உதாரணமாக எல்.ஆர்.ஜெயவர்தனவினுடைய ஆய்வானது காலனித்துவ அரசின் கொள்கைகள் ஊழிய நிரம்பல் தொடர்பாக எவ்வாறானதாக இருந்தது? என்ற வினா தொடர்பானதாக இருக்கின்றது. 1830-1930 என்ற காலப்பகுதியிலான சிங்கள வேலையாட்களின் நிரம்பல்
40

இலங்கைப் பெருந்தோட்டங்களுக்கு எவ்வகையானதாக அமைந்திருந்தது என்ற தலைப்பிலான நூலாக அது உள்ளது. காலனித்துவ அரசின் கொள்கையானது முழுநேர வேலையை உள்ளூர்வாசிகளுக்கு வழங்காதனாலேயே வேலை எனும் உற்பத்திக்காரணியை வெளியே பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற கருத்தை அவர் வெளிப்படுத்துகின்றார். ஆரம்பகால தோட்டச்சொந்தக்காரர் எவ்வாறு அருந்தலான வேலை நிரம்பல் எனும் பிரச்சினையைச் சமாளித்தனர் என்பது தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்திருந்தது.
SB.DDe Silva என்பவருடைய ஆய்வு வர்த்தக / வியாபார மூலதனத்தினை அல்லது முகவர் நிலையங்களின் பங்கினை பெருந்தோட்டங்கள் சார்ந்ததாக நோக்குவதாகவுள்ளது. முகவர் நிலையங்கள் உற்பத்திக்குப் போதுமான பங்களிப்பினைச் செய்யாது விட்டமையால் ஏற்பட்ட தொழில்நுட்ப தேங்கல் நிலைமை பற்றியதாக இவ்வாய்வு உள்ளது.
Van den Driesen 1Hஎன்பவர் இலங்கையில் குடியமர்ந்த இந்தியப்பெருந்தோட்ட ஊழியர் பற்றியதான குடிவரவு தொடர்பாக வரலாற்றினை ஆய்வு செய்தார், அவருடைய இன்னுமொரு நூலில் (1982) கோப்பிப் பயிர்ச்செய்கையின் வரலாற்றினை ஆய்வு செய்கின்றார்.
ஆரம்பகால வரலாற்றைத் தேடுகின்ற நூல்களை எடுத்து நோக்குகின்ற போது இலங்கையில் சரி, உலகின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள பெருந்தோட்டங்கள் பற்றிய ஆய்வுகளில் சரி, சில விவாதங்கள் வெளிப்படுவதை அவதானிக்கலாம்.
பெருந்தோட்டங்களை மையப்படுத்திய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் பெருந்தோட்டங்களில் குடியமர்ந்தவர்கள்
4.

Page 31
எதற்காக தமது நாட்டை விட்டு குடிபெயர்ந்தனர் என்ற வினாவை முன்வைத்ததான சில விளக்கங்கள் தருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அவர்கள் வெளித்தள்ளும் dITUGoofs eit 2 676tfielbó (gild JITUGoofdigit (Push Factor & Pull Factor) என இருவகை காரணிகளை எடுத்துக் காட்டுகின்றனர். தொழிலாளர்கள் வாழ்ந்த சமூகத்தின் அவல நிலையும் வேலைவாய்ப்பு மந்தநிலையும் வெளித்தள்ளும் காரணிகளாயும் பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்ட இடங்களிலிருந்த வாய்ப்புத்தன்மைகள் உள்ளிருக்கும் காரணிகளாக அமைந்திருந்ததையும் அவர்கள் எடுத்துக்காட்டுவர். அது போல இவ்வரிரு காரணிகளையும் மறுத்து, குடி பெயர்ந்ததற்கான காரணங்களாக பிரித்தானியரின் மோகவலை அதற்குத்துணை போன கங்காணி முறைமை போன்றவற்றை எடுத்துக் கூறுவோரும் உள்ளனர் அது போல பெருந் தோட்டங்களுக்கும் அடிமை முறைக்குமான தொடர்பு, பெருந்தோட்டங்களை எவ்வாறு நவீன அடிமைமுறையாகக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் சார்ந்த விவாதமும் சில நூல்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்கலாம், Huge Tinker போன்றவர்வர்களே இவ்வகைக் கருத்துக்களை முன்வைத்தனர். தொழிலாளர்களின் , இறப்புகள், அவர்களைத் தாக்கிய நோய்கள் , கோப்பிப் பயிர்ச் செய்கைக்காலத்தில் நிலவிய அவலநிலை போன்றவற்றை எடுத்துக்காட்டும் நூல்களையும் இங்கு குறிப்பிடலாம். DMorich 6T 6ór 6) (D, God Lu Bitter Berry Bondage at 69), Lib DJToy Lib அவ்வகையினதே.
பெருந்தோட்டங்கள் என்ற தலைப்பிலான ஆய்வுகளை எடுத்துக்கொள்ளும் போது ஆரம்பகால நூல்களில் பெருந்தோட்டங்களை மூடிய முறைமையாகக்கொள்வது தொடர்பான ஒரு விவாதம் அமைந்திருந்ததனை அவதானிக்கலாம். அதாவது பெருந்தோட்டங்களை புவியியல்
42

சார்ந்ததாகவும் சமூகம் சார்ந்ததாகவும் பிரிந்து வாழ்கின்ற, எல்லைகளை உடைய, தன்னிறைவான மூடிய சமூகமாகவே பல ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர், இவ்வாறு பெருந்தோட்டங்களைத் தனித்த அலகாக வரைவிலக்கணஞ் செய்யும் போக்கை பல ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். பெருந்தோட்ட முறைமையானது வெளியுலகுடன் கொண்டுள்ள தொடர்புகளை குறைத்து மதிப்பிடுகின்றதாகவே இவ்வரைவிலக்கணம் அமைந்துள்ளதாக இவ்விமர்சனம் grp/dairpg). Smith, Mandle, Jain, Selvaratnam GSL 1st 667 (p6) fig6floit எழுத்துக்களில் இவ்வகை விவாதத்தினைக் காணலாம்.
பெண்களைக்கருத்திற் கொண்டதான ஆய்வுகள் மிகவும் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்டவாறு பொருளியற் துறையினைச் சேர்ந்தவரான ரேச்சல் குரியன் ஓரளவிற்கு தனது பங்களிப்பினை பெண்கள் சார்ந்ததாகச் Gaflig(55.f.a57 pitfit. State, Capital and Labour in the Plantation Industry in Sri Lanka 1834-1984' 6769) to 15ft ajai 9 afico).5uildi பெருந்தோட்ட உற்பத்தியாக்கம் எனும் பொருளாதாரத் துறையில் ‘வேலை எனும் உற்பத்திக் காரணியின் பங்கினைஆய்வு செய்கின்றார். அதனூடாக நடைமுறை விடயங்கள் சிலவற்றை ஆராய்வதும் அரசினாலும் தோட்ட நிர்வாகத்தினாலும் நிறுவனப் படுத்தப்படும் கட்டுப்பாடுகளை ஆராய்வதாகவும் அவரது ஆய்வு உள்ளது. இவ்வாய்வு 1980- 1985 காலப்பகுதியில் "மேற்கொள்ளப்பட்டதாகவும் கூடுதலாக பெண்களை மாதிரிகளாக எடுத்து தரவுகளைத் திட்டியதாகவும் ஆய்வாளர் கூறுகின்றார். தொழிற்சங்களின் வரலாறும் நிகழ் கால நிலைமையும் , தொழிலின் படிமுறையமைப்பு அரசின் பங்கு, மூலதன அமைப்பு, பெண்களின் நிலை எனப்பல விடயங்களை அவர் ஆய்வில் சேர்த்துக் கொள்கின்றார். இவ்வாய்வு காத்திரமான ஒன்றாகவே அமைந்துள்ளது. எனினும் பெருந் தோட்டத்துறை
43

Page 32
எனும் உற்பத்தித்துறையுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின் றமையால் இன்றைய சூழ்நிலையை எடுத்துப்பார்க்கின்ற 'போது இவ்வாய்விற்கு அப்பாலும் விடயங்கள் விரிந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் 90 வீதப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தரவு சேகரிக்கப்பட்டாலும் ஆவணமானது போதியளவிற்கு பெண்கள் பற்றிய ஒரு தனித்த ஆய்வாக வெளிப்படவில்லை 6T 6öILugJ 6ò(5 (g56Oopp untu fT356)||6767 g/. Women in the Sri Lankan Plantation Sector 6T 6õTp Rachel Kurien 6ởT IJT GJITGOTg 1982) Giv வெளிவந்தது. இலங்கையில் பெண்தோட்டத் தொழிலாளரது வாழ்க்கை நிலைகளையும் வேலை நிலைமைகளையும் எடுத்துக்காட்டி ஆவணப்படுத்துகின்ற நூலாக உள்ளது. கூலியின் தன்மை, வேலையின் தன்மை, பெண் தொழிலாளியினுடைய அன்றாட வாழ்வின் வேலைப்பளு, சுரண்டல், பால்ரீதியான வேலைப்பிரிப்பு, சுகாதாரம், கல்வி, போன்ற விடயங்களை எடுத்து ஆராய்கின்றார். பெண்களும் தொழிற்சங்கங்களும் என்ற விடயத்தையும் அவர் எடுத்துக்கொள்கின்றார், தொழிற்சங்கங்களில் பெண்களுக்கு போதிய இடம் இல்லை என்பதையும் ஆண்கள் பெண்களுடைய பிரச்சனைகளை பிரதிநிதித்துவப்படுத்தாத தன்மையையும் பெண்களின் தாழ்வு நிலையின் தொடர்ச்சிக்கு பெண் களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் இந்நூல் முன்வைக்கின்றது.
61676if 3,600TL Igll 56160617 6T6öT 1610560Lu ADecade of Change in the Plantations, The Implication for Wbman Workers 616örp சிறு நூல் பெண்களுடைய பிரச்சனைகளை ஓரளவிற்கு ஆராய்கின்றதாக உள்ளது. அதில் பெண்களுடைய வேலை, வேலையின்மை, இரட்டைச்சுமை, சுகாதாரம் கல்வி போன்ற விடங்களில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்கின்றார்.
44

வேலை எனும் உற்பத்திக்காரணி சார்ந்ததாகவும், பெருந்தோட்டம் எனும் விடயம் சார்ந்ததாகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆய்வு செய்த கட்டுரைகளையும் நூல்களையும் மலையகம் தொடர்பாக காணக்கூடியதாக உள்ளது. மாக்சிய அணுகுமுறையில் எழுதப்பட்டவையாக, வர்க்கம் எனும் சமூகக்குணாம்சம் தொடர்புபட்டவைகயாக அவை உள்ளன. குமாரி ஜெயவர்த்தனாவின் The Rise of the Labour Movement in Ceylon 6f 657 pp 15 TaSaôT 6R (E), J.L G560Juigi தோட்டத்தொழிலாளர் இயக்கங்களின் எழுச்சி பற்றிக் கூறுகின்றார். அவரும் ரேச்சல் குரியனும் மேற்கொண்ட The History of the Plantations in Sri Lanka 676öip goOauli SarigoT ஆய்வில் பெருந்தோட்டங்களில் தொழிலாளர் இயக்கம் எவப் வகையில் அமைந்திருந்தது என்ற வரலாற்றைக் காணக்கூடியதாக உள்ளது. இது இன்னமும் நூலுருப் பெறவில்லை.
சாதிமுறைமை தொடர்பான ஆய்வுகளை (Wasumperuma) வசும் பெரும் போன்றவர்கள் மேற்கொண்டுள்ளனர். அண்மையில் வெளிவந்த நூலான ஒட்வர்குலப் (Oddvar Holup) எனும் நோர்வே நாட்டு மானிடவியலாளரின் Bonded Labour (பிணைக்கப்பட்ட வேலை) என்னும் நூல் 1982 - 1984 காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக 1994ல் வெளியிடப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சாதித்துவ பண்பாட்டு நிலைகளை இந் நூலில் ஆய்வு செய்கிறார் . தோட்டத் தொழிலாளிகள் கூலித்தொழிலாளிகள் வெளிப்படையாக கண்ணுக்குத் தெரியாத வாழ்வனுபவங்களையும் தங்கள் அடையாளத்தையும் எவ்வகையில் பேணிக்கொள்கிறார்கள் என்பதையும் அதனை எவ்வகையில் வெளிப்படுத்து கின்றார்கள் என்பதையும் ஆய்வாளர் கவனத்தில்
45

Page 33
எடுத்துக்கொள்கின்றார் சாதி அடையாளம் என்பது தோட்டப் புறங் களில் உறுதிப் படுத்தப் படுகின் ற அடையாளங்களில் ஒன்று என்பதை அவர் வலியுறுத்து கின்றார். ஒரு நல்ல மானிடவியல் ஆய்வாக அமைந்திரு ப்பினும் பால்நிலை சார்ந்த சமனற்ற தன்மையினைப் பெரிதுபடுத்தாத ஒரு ஆய்வாக அமைந்துள்ளமையும் மலையகம் தொடர்பான இன்றைய சூழ்நிலையில் இனத்துவம் எனும் சமூகக் குணாம்சம் சார்ந்த மாற்றங்களிற்கு இணங்க அமையாமையும் குறைபாடுகளாக உள்ளன.
இங்கு இதுவரை தொகுத்து நோக்கப்பட்ட நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவந்த சில நூல்களாகும் பொருளிய லாளர்கள் அரசியல் விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், மானிடவியலாளர்கள் எனப்பலர் ஆய்வுகளை மேற்கொண்டு ள்ளார்கள். அதுபோல தமிழிலும் ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளமையை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். தமிழில் போதியளவு நூல்கள் வெளிவராமை, ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை, மொழிபெயர்ப்புக்கள் இல்லாமை விவாதங்கள் நடைபெறாமை என்பன குறைபாடுகளாகக் காணப்படினும் ஒரு சில நூல்களை இங்கு குறிப்பிட்டுக்
கூறலாம்.
சோம. சந்திரசேகரத்தினுடைய இலங்கையில் இந்தியத் தமிழர் வரலாறு எனும் நூலில் ஒரளவிற்கு இலங்கை முழுவதும் பரந்துள்ள இந்தியர்களை பொருள்வகுப்பாகக் கொண்டு ள்ளதை அவதானிக்கலாம். மலையகத்தமிழர் என எமது ஆய்வில் நாம் வரைவிலக்கணப்படுத்திய பொருள் வகுப்புடன் மிகவும் நெருங்கியதானதொரு பொருள் வகுப்பை அவர் எடுத்துள்ளார். ஆனாலும் மலையகத் தமிழர் என்ற பதத்தினை அவர் பிரயோகிக்கவில்லை. இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் என்ற சொற்றொடரையே அவர்
46

பிரயோகிக்கின்றார், இப்பொருள் வகுப்பினுடைய முக்கியத்துவம். வரலாறு போன்ற விடயங்களை அவர் கவனித்துள்ளார். ஓரளவிற்கு இனத்துவ உறவுகள் பற்றிய சிந்தனை அவரது நூலில் வெளிப்படுகின்றது. சனத்தொகை சார்ந்ததான சில பகுப்பாய்வுகளை புள்ளி விபரரீதியாக வியாக்கியானப்படுத்தியுள்ளார். குடித்தொகைப்பரம்பல், இனத்துவரீதியாக தோட்டத் தொழிலாளரின் பரம்பல் என்பவற்றை அங்கு அவர் புள்ளிவிபரரீதியாக ஆய்வு செய்கின்றார். இலங்கையில் அரசியல் ரீதியாகவும், வரலாற்றுரீதியாகவும் மலையகமக்களின் முக்கியத்துவத்தையும் தனித்தன்மையையும் எடுத்துக் காட்டுவதாக இந்நூல் உள்ளது. இனரீதியாக படிப்படியாக மலையகமக்கள் எவ்வாறு ஒரங்கட்டப்பட்டனர் என்பதைப் போதிய தரவுகளுடன் விளக்குகின்றார். பெருந்தோட்டங்களுக்கு வெளியேயும் பரந்த பார்வையை முன்வைப்பது, இலகுதமிழில் எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையில் எழுதியமை என்பது இந்நூலின் சிறப்பம்சங்களாகும்.
கார்த்திகேசு சிவத்தம்பி தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்றின் ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட மலையமக்கள் பாரம்பரியம் எனும் நூலானது மலையகமக்களின் பாரம்பரியத்தினை ஒரு தரவுக்களஞ்சியமாகத்தரும் நோக்குடன் எழுதப்பட்டுள்ள தாயினும் பாரம்பரியத்திற்கும் சமூக எழுச்சிக்குமான தொடர்பு அவற்றிற்கும் அரசியலுக்குமான தொடர்பு என்பன இந்நூலில் ஆராயப்படவில்லை இது ஒரு குறைபாடாகவே உள்ளது.
முத்தையா அவர்களுடைய எழுதாத வரலாறு எனும் நூல் திராவிட இயக் கத்தின் எழுச் சரி இலங்கையில் தோட்டப்புறங்களில் எவ்வாறானதாக அமைந்திருந்தது. என்பதை எடுத்து விளக்குகின்றது. திராவிட இயக்கத்திற்கும்
47

Page 34
மலையகத்திற்கும் தொடர்பை ஏற்படுத்துகின்ற ஒரு நூலாக இது அமைந்துள்ளது. நூலின் பெரும்பகுதி இளஞ்செழியன் எனும் தனிஆளின் பங்கை மட்டுமே கவனத்தில் எடுத்துள்ளமை பெரும் குறைபாடாகவுள்ளது.
இந்நூல்களைத்தொகுத்து நோக்குகின்ற போது ஏற்கனவே குறிப்பிட்டது போல பலவிடயங்கள் சார்ந்ததாக பல ஆய்வுகள் மலையகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இவற்றைத் தொகுத்து நோக்குகின்ற போது மலையகம் என்ற பொருள் வகுப்பானது கூடுதலாக ஆய்வு செய்யப்பட்ட ஒன்றாகவும் தென்படுகின்றது. இதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று மலையகம் என்பைதவிட பெருந்தோட்டத்துறை (Plantation Sector) என்பது ஆய்விற்குரிய ஒரு துறையாக அமைந்துள்ளமை. மற்றயது பொருளியல் சார்ந்ததாக தோட்டத்துறைக்கு இருக்கின்ற முக்கியத்துவம். மேலும் வர்க்கம் சார்ந்த ஆய்வுகள் சமூகவிஞ்ஞானிகளினதும் மார்க்சிய வாதிகளினதும் கவனிப்பாக இருந்ததும் பிரதான காரணமாகும். இக்குறிப்பிட்ட விடயம் / இவ்வாய்வுகளைத் தொகுத்து நோக்கும் போது நீண்டகால நோக்கில் குறைபாடாகவும் காணப்படுகின்றது. அதாவது வர்க்கச்சிந்தனையை மையப்படுத்தியதாகவே தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றமையால் அக்குறிப்பிட்ட விடயத்தினை ஏனைய சமூகக்குணாம்சங்களுடன் தொடர்புபடுத்தாமல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறைபாடாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இனத்துவம் பால்நிலை போன்ற விடயங்களை கவனத்திற் கொள்ளாமை என்பது இவ்வாய்வுகளை கருத்திற்கொள்ளும் போது வெளிப்படையாக அவதானிக்கக் கூடியதொரு விடயமாகவுள்ளது. அவ்வகையில் வர்க்கச்சிந்தனையுடன் இணைந்ததாக இனத்துவம் பால்நிலை ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வதே எமது ஆய்வின் நோக்கமாக உள்ளது.
48

பகுதி 11

Page 35

மலையகமக்களும் இனத்துவமும்
மலையக மக்களை ஒரு தனித்த இனத்துவமாக வரையறுக்க வேண்டிய தேவையை இவ்வாய்வில் ஏற்றுக்கொள்வதற்கு வரலாற்று ரீதியானதும் சமூக இயக்கங்களின் செயற்பாடுகள் சார்ந்ததுமான பல காரணங்கள் உண்டு.
உலகிலுள்ள பெருந்தோட்ட முறைமைகளில் அனேகமான வற்றில் கூலிவேலைசெய்வோர் குடிபெயர்ந்து வந்து குடியமர்ந்தவர்கள் என்ற குணாம்சவகைக்குள் அடக்கப்படும் தன்மை உடையோராக இருத்தல் சகஜம். இவர்கள் ஏற்கனவே நாட்டில் இருந்தவர்களிலிருந்து வித்தியாசமானதொரு சனத்தொகையை உருவாக்குவர். இலங்கையிலும் பெருந்தோட்டங்களை எடுத்துக்கொள்ளும் போதும் இத்தன்மை தோன்றியிருப்பதை அவதானிக்கலாம். பெருந்தோட்ட முறைமையின் தன்மை, பண்பாட்டு சமூகக் காரணிகள், பிரஜா உரிமைப்பிரச்சனைகள் என்பவற்றினால் பெருந்தோட்டங்களில் வாழும் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்து குடியேறிய தமிழர்கள் ஏனைய இனக்குழுக்களிடமிருந்து பிரிந்து ஒரு சமூகக்குழுவினை உருவாக்கி இருக்கின்றனர். இக்குணாம்சம் உலகிலுள்ள எல்லாப் பெருந்தோட்டங்களையும் எடுத்துக் கொள்ளும் போது அவதானிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது என்பதை பல சமூகவிஞ்ஞானிகள் எடுத்துக்காட்டியுள்னர்

Page 36
எனினும் இங்கு பெருந்தோட்டங்களை மையப்படுத்தியதாக மட்டும் மலையகமக்கள் எனும் இனத்துவக்குழுவினை வரைவிலக்கணப்படுத்தமுடியாது. பெருந்தோட்டங்கள் தவிர இலங்கை எங்கும் பரந்து வாழ்கின்ற, இந்தியாவிலிருந்து ஏனைய நோக்கங்களிற்காகவும் (உ+ம் வர்த்தகம்) குடிபெயர்ந்து வந்தவர்களையும் மலையகமக்கள் எனும் இனக்குழு உள்ளடக்கும்.
மலையகமக்களை இனத்துவக்குழுவாக வரையறுக்க வேண்டிய தேவையை இலங்கைச் சமூகம் தனது அரசியல், வரலாறு, பொருளியல் சார்ந்த காரணிகளினால் நிர்ணயித்து ள்ளது என்று கூறலாம். இலங்கைச் சமூகம் இனத்துவ அரசியலினால் குணாம்சப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகும். இவ்வினத்துவ அரசியலானது ஏறத்தாள காலனித்துவ காலங்களிலே ஆரம்பித்ததாக சமூக விஞ்ஞானிகள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.
புள்ளிவிபரரீதியான கணக்கெடுப்பிற்காக ஆட்களை எண்ணுதல், வகைப்படுத்தல் என்பவற்றிற்கு அடிப்படையாக இனத்துவத்தினைப் பயன்படுத்தியமை, இனவிகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையை அமுல்படுத்தியமை, நாட்டில் பிரித்தாளும் தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியமை போன்றவை காலனித்துவ கால மாற்றங்களாக அமைந்து அவை இனத்துவ அரசியலிற்கு வழிகோலியதாகக் கூறுவர். இவ்வாறு இனத்துவ அரசியலைத் தூண்டிவிட்ட அதே காலனித்துவ அரசு 1931ல் டொனமூர் யாப்பினுாடாக மறுபடி இனவிகிதாசார பிரதிநிதித்துவத்தை நீக்கியது. ஆனாலும், இனத்துவ அரசியல் மறைமுகமாகத் தொடரவும் பெரும்பான்மையினர் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் உதவக்கூடிய ஒரு சூழ்நிலையே இலங்கையில் தொடர்ந்து நிலவியது. அதனால் சிறுபான்மையினர் தொடர்ந்து
52

ஓரங்கட்டப்பட்டனர். நீண்டகாலத்தில் பெரும்பான்மையினர் எனச் சிங்கள இனத்துவம் சிறுபான்மையினர் என வடக்குக் கிழக்குத் தமிழரும் வரைவிலக்கணப்படுத்தப்பட்டனர்.
இலங்கை ஒரு பல்தன்மை உடையநாடு. மொழி, சமயம், சாதி என சமூகப் பொருளாதார நிலைமைகள் சார்ந்து பல தனித்துவமான பிரச்சனைகளையுடைய சமூகக் குழுக்களைக் கொண்ட நாடு. இந் நிலைமையைப் புறந்தள்ளி கடைசியில் இலங்கையில் ஒரு பெரும்பான்மையினரும் ஒரு சிறுபான்மையினரும் வாழ்கின்றனர் என்ற இவ்வினத்துவ அரசியல் தோற்றம் பெற்றது. குறிப்பாக மலையகமக்கள், முஸ்லிம்கள், பறங்கியர், வேடுவர் எனப்பல இனத்துவக் குழுக்களினுடைய தனித்துவங்கள் அங்கு மறைக்கப்பட்டன. இவைதவிர ஏனைய சமூக அடையாளங்களும் அவைசார்ந்த பிரச்சனைகளும் இனத்துவ அரசியலிற்குப் பலியாகிப் போயின. என்றே கூறலாம். உதாரணமாக சாதி சார்ந்த அடையாளங்கள், பெண் எனும் அடையாளம், தொழிலாளர் எனும் வர்க்க அடையாளம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர பிரதேச தனித்துவங்கள் வட்டார வழக்குகள் சார்ந்த தனித்துவங்கள் என்பன இனத்துவ அரசியல் காரணமாகப் பின்தள்ளப்பட்டன.
காலனித்துவத்திலிருந்து தனது தளைகளை விடுவித்துக் கொண்ட பின்னரே பெரும்பான்மையினம் கூடுதலாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது. அதற்கு முரண்பட்ட ஒரு சிறுபான்மையினம் அதன் பின்னர் தனது எழுச்சியை வெளிப்படுத்தி தனது தோற்றப்பாட்டையும் நிறுவியது. 70 களிற்குப் பின்னர் அதிலும் குறிப்பாக 80கள், 90களில் காலனித்துவத்திற்குப் பின்னாலானதொரு சமூகத்துக்குரிய வகையில் பல்தன்மைகள் தனித்துவங்கள் எனப்பல பக்கங்களிலிருந்து வெளிப்படத்தொடங்கின.

Page 37
ஆரம்பத்தில் சிங்களவர் தமிழர் என்ற பிரிவே இனத்துவம் சார்ந்த பிரிவாக காலனித்துவத்திற்குப் பின் இலங்கையில் நிலவிற்று. தமிழர் என்ற வகுப்பில் யார் யார் அடங்குவர் என்ற தெளிவான வரையறை இருக்கவில்லை. வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் கட்டாயமாக இதில் உள்ளடங்கினர் மலையகத்தமிழர் தொடர்பான தெளிவான போக்கு தென்படவில்லை. எனினும் தமிழர் எனும் வகையில் பல விடயங்களில் மலையகத்தமிழரும் சேர்த்துக்கொள்ளப் பட்டனராயினும் மலையகத்தமிழர் தொடர்பான வடக்குக் கிழக்குத் தமிழரின் மனப்பாங்கு சிக்கலாதொன்றாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான இனத்துவ அரசியல் சிங்களப் பெரும்பான்மையினர் தோற்றுவித்த தேசியவாதத்திற்கு எதிரான வகையில் உருவான இலங்கைத்தமிழத் தேசியவாதம் என்பது ஆரம்பத்தில் யார் யாரை உள்ளடக்குகின்றது என்ற தெளிவான வரையறையை முன்வைக்கவில்லையாயினும் வடக்குக் கிழக்குப் பகுதியையே தனது மையமாகக் கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக வடக்கு முனைப்பு ஒன்று இருந்தது எனக்கூறலாம்.
தமிழ்த்தேசியவாதம் என்பது வடக்கு கிழக்கு தமிழரின் இனத்துவ அடையாளத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன் மொழி, பிரதேச சுயாதீனம் ஆகியவற்றை ஆரம்பத்தில் உள்ளடக்கி வடக்கு கிழக்கைச் சேர்ந்த உயர் குழாத்தினரால் முன்வைக்கப்டுவதாக இருந்தது. 70களிற்குப் பின்னால் தமிழ்த்தேசியவாதம் தனியரசுக் கோட்பாடாகவும் உருவானது. தனியரசுக் கோட்பாடு தீவிர ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்த பின்னால் 90 களில் வடக்கிலிருந்து மூஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனால், மொழிவழித் தேசியவாதம் என்ற எண்ணக்கரு கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன் நீண்டகாலத்தில் தனது புவியியல் பரப்பை வரையறுத்துக் கொண்டதுடன் மலைய மக்களையும் புறம்பானவர்கள் என எடுத்துக்
54

பட்டிற்று. இத்தகையதொரு மாற்றம் கடைசியில் இன்றைய சூழ்நிலையில் அரசுக்கும் தமிழ்ஈழ விடுதலைப்புகளிற்கும் இடையேயான யுத்தமாக இனங் காணப்படுவதாகவும், சர்வதேச அளவில் அவ்வாறு அறியப்பட்டு வருவதாகவும் இலங்கையின் அரசியற் போக்கை நிர்ணயிப்பதாகவும் உள்ளது.
இப்படியானதொரு பின்னணியில் பிரதானமாக அரசினால் முன்வைக்கப்படும் சிங் களத் தேசியவாதம் தமிழ் ஈழவிடுதலைப்புலிகளிால் முன்வைக்கப்படும் தமிழ்த் தேசிய வாதம் என்ற இரண்டு தேசியவாதங்களுமே நாட்டில் கவனிப்பிற்குரிய விடயங்களாக நோக்கப்பட்டு வரும் வேளையில், ஏனைய இனத்துவக்குழுக்களிடைய சிந்தனை எத்தகையது என்பது சமூக விஞ்ஞானிகள் இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.
மூஸ்லிம்மக்கள், மலையகமக்கள், பறங்கியர் வேடர் என்போர் இவ்விரு தேசியவாதங்களினாலும் வேண்டாதவர்கள் போல் நடாத்தப்பட்டு வருவதுடன், அவர்களது அரசியல் உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுவதாகவும் இருந்து வந்துள்ளது. இத்தகைய வரலாற்றுச்சூழலில் மலையக மக்களுடைய இனத்துவம் நோக்கப்படவேண்டிய தொன்றாக அமைந்துள்ளது.
மலையக மக்களுடைய இருப்பு, அவர்களுடைய அரசியல் உரிமைகள், இலங்கைச் சமூகத்தில் அவர்களுடைய தகுநிலை என்பன மேற்கூறியவாறான இனத்துவ உறவுகளினால் தீர்மானிக்ப்படுவனவாக உள்ளன. இவ்வகையில் வரலாறு சார்ந்ததும் அரசியல் சமூகக் காரணிகள் சார்ந்ததுமான இத்தகையதொரு பின்னணியில் மலையக மக்களுடைய இனத்துவத்தை இங்கு ஆய்விற்கு எடுத்துக்கொண்ட
55

Page 38
நோக்கத்தில் கருதுவோமேயானால் ஒரு சிறிய வரலாற்றுச் சுருக்கமாக நாம் இனங்காணலாம்.
1815ல் கண்டி இராச்சியம் பிரித்தானியரினால் கைப்பற்றப் பட்டதுடன் மத்திய மலை நாட்டில் கோப்பிப்பயிர்ச் செய்கைக்காக 1823ல் முதன்முதலில் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டதுடன் பெருந்தோட்ட ங்கள் சார்ந்ததாக ஒரு வளர்ச்சியும் ஆரம்பமாகின்றது. அதனுடன் இணைந்ததாக வர்த்தக நோக்கத்திற்காக அதன் பின்னால் வந்த காலங்களில் குடிபெயர்ந்து வந்தவர்களும் இக்குழுவுடன் இணைந்து கொள்கின்றனர். எனினும் 1911ம் ஆண்டு புள்ளி விபரக்கணிப்பீட்டில் இலங்கைத்தமிழர் 12.8% த்தினராகவும் இந்தியத்தமிழர் 12.9% த்தினராகவும இருந்தனர். இலங்கையில் மலையக மக்களின் இருப்புப்பற்றிச் சிந்திக்கின்ற போது வாக்குரிமைப் பிரச்சனை பிரஜா உரிமைப்பிரச்சனை என்ற இரு விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. வாக்குரிமைப் பிரச்சனை, பிரஜா உரிமைப்பிரச்சனை என்ற இரு விடயங்களையும் விளங்கிக்கொள்ளுதல் மிகவும் சிக்கலான விடயங்களாக இருப்பதுடன் இவை இரண்டும் இலங்கையின் இனத்துவ அரசியலின் இரு முக்கிய வெளிப்பாடுகளாக இங்கு அமைந்துள்ளன என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
வாக்குரிமைப்பிரச்சனையை எடுத்துக்கொள்கின்ற போது 1931ல் அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் யாப்பின் பிரேரணை களுடன் ஆரம்பமாகும் ஒரு பிரச்சனையாக இதை எடுத்துக் கொள்ளலாம். டொனமூர் யாப்பானது இலங்கை மக்களுக்கு சர்வஜன வாக்குரிமையைப் பெற்றுத்தந்ததொன்றாகவே பொதுவாகக் கவனிக்கப்படுகின்றது. எனினும் டொனமூர் யாப்பின் பிரேரணைகள் முன்வைக்கப்பட்ட காலத்தைய விவாதங்கள் இலங்கைச்சமூகத்தின் இனத்துவ உறவுகளையும்
56

அவை சார்ந்த கருத்தியலையும் வெளிப்படுத்துபவனவாக உள்ளன. குறிப்பாக இலங்கையில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதா இல்லையா எனும் கேள்வி சார்ந்த விவாதமும், பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதா இல்லையா என்ற விவாதமும், சாதி எனும் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதா இல்லையா எனும் விவாதமும் எழுந்தன. அவ்வகையில் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்ற கருத்தையே பெரும்பாலான சிங்களப் பெரும்பான்மையினர் கொண்டி ருந்தனர். இக்கருத்துச்சார்ந்த சிபாரிசுகளையும் டொனமூர் ஆணைக்குழுவினர் முன்னிலையில் சமர்ப்பித்து ஸ்ளனர். இதன்விளைவாக இலங்கையில் வாழும் இந்தியர்களின் வதிவிடம் (Domicile) என்பதும் அவர்களுடைய கல்வி என்பதும் அங்கு முக்கியம் பெறும் இரு விடயங்களாகின. முதன்முதலில் மலையகத் தமிழருக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுத்த யாப்பாக டொனமூர் யாப்புக் காணப்பட்டாலும் இலங்கையில் ஏனைய இனத்துவங்களுடன் ஒப்பிடும் போது மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமையையே அவர்கள் பெற்றுக் கொண்டனர் எனலாம். மலையகத் தமிழரை இலங்கையில் வாழும் ஏனைய இனத்துவக்குழுக்கள் அன்னியர்களாகக் கருதியமையே இவ்வாறானதொரு நிலைமையை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. மேலும் தோட்டங்களில் தமது வாழ்விடத்தைக் கொண்டிருந்தமை, அவர்கள் தொழிலாளராகக் கருதப்பட்டமை போன்ற விடயங்கள் சார்ந்ததொரு படிமமாக்கலையே இலங்கையில் உள்ள ஏனைய இனத்துவங்களைச் சேர்ந்த மக்கள் கொண்டிருந்தனர். இன்றைக்கும் இந்த நிலைமையே காணப்படுகின்றது.
இலங்கையரில் வாழ் கின்ற இந்தியத் தமிழருள் / மலையகத்தமிழருள் பல்தன்மையான மக்கள் வாழ்கின்றனர்
57

Page 39
என்பதைப்பலர் கவனத்திற்கொள்வதில்லை. உதாரணமாக நகரங்களில் தொழில் செய்பவர், வர்த்தகர்கள் எனப்பலர் இருக்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் இவர்களது எண்ணிக்கை அதிகரித்ததாகவும், வியாபித்தும் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள் எனத்தொழில் ரீதியான தொழில் வல்லுனர்களாக இருக்கின்றனர். எனினும் மேற்கூறிய படிமமாக்கல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
டொனமூர் யாப்பினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டவர்களாகத் தோட்டத் தொழிலாளரே காணப்பட்டனர். 1936ல் தோட்டத் தொழிலாளரின் எண்ணிக்கை 400,000மாக இருந்தது (Oddvar Holup , 1994 : 39 ) மொத்தமாக இலங்கையில் வாழும் இந்தியர்களுள் 100000 பேர் மட்டுமே வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டனர். (Jayawardana , 1972:334) மொத்தமாக 81,8500 இந்தியர்கள் 1931ல் இலங்கையில் இருந்தனர். இச் சனத்தொகை இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 15.42% ஆகும்.
இரண்டாவதாக மலையக மக்களின் சமூக இருப்பில் பாரியதாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக குடியுரிமை விடயம் அமைகின்றது. 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்றதுடன் குடியுரிமை தொடர்பான சட்டங்களும் இயற்றப்பட்டன. (இலக்கம் 18) 1948ல் இலங்கைக் குடியுரிமைச்சட்டமானது பரம்பரையாகக் குடியுரிமை பெற்றோரையும் பதிவுமூலம் குடியுரிமை பெற்றோரையும் வித்தியாசப்படுத்தியது. இச்சட்டமானது மலையகமக்களுக்குப் பாதகமாகவே அமைந்தது. இச்சட்டத்திற்கமைய குடியுரிமையைப் பெற்ற ஒரு ஆளின் தகப்பன் அல்லது தகப்பன் வழி பாட்டனர் இலங்கையில் பிறந்திருக்க வேண்டும். மலையகத்தமிழர் அவ்வாறான சான்றுகள் எதனையும் வைத்திருக்கவில்லை. இந்திய பாகிஸ்தானிய வதிவோர் குடியுரிமைச்சட்டம்
58

(இல.3 1949) அன்னியர் பதிவின் மூலம் குடியுரிமையைப் பெறலாம் என்ற ஏற்பாட்டை வழங்கியது. இச்சட்டத்திற்கமைய இலங்கையில் வாழ்ந்த மொத்த இந்தியரில் 12% மானவர்கள் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டனர் (13000 பேர்) இச்செயற்பாடு 1964ம் ஆண்டு வரை நடைபெற்றுவந்தது. ஏனையோர் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நாடற்றோர் பிரச்சனை இழுபறியானது. கடைசியில் 1946ல் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் தீர்க்கப்பட்டது. இதன் படி புதிய சட்டம் 1967ல் உருவாக்கப்பட்டது.இச்சட்டத்திற்கமைய நாடற்றவராக்கப் பட்டோரில் 3,00,000 பேரை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்று பதிதல் மூலம் குடியுரிமையை வழங்கும் என உறுதியளித்தது. 5,25,000 பேர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாக இந்தியாவிற்கு அனுப்பப்படுவர் எனவும், எஞ்சிய 1,50,000 பேரினது முடிவு பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் இணங்கப்பட்டது. (மொத்தம் 975000). 1974ல் இந்த 1,50,000 பேரில் 7,50,000பேரை இந்தியா ஏற்பதெனவும் மீதி 75,000பேரை இலங்கை ஏற்பதெனவும் தீர்மானிக்கப்பட்து. இதன்படி 1968இன் பின்வந்த வருடங்களில் இந்த 5,25,000 பேரும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். 1983ம் ஆண்டு கலவரத்துடன் திருப்பி அனுப்பும் செயற்பாடு தடைப்பட்டதால், 1986ல் திருப்பி அனுப்பப்படாத இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க இலங்கை அரசு தீர்மானித்தது. எனினும் இன்னமும் முழுமையாக இதனை இலங்கை அரசு அமுல்படுத்த வில்லை. (இதற்கிடையில் சனத்தொகை மாற்றங்களினால் இந்த எண்களில் மாற்றம் ஏற்பட்டதைக் கருத்திற் கொள்ளவேண்டும்).இன்னமும் திருப்பி அனுப்பப்படாமலும் இன்னமும் குடியுரிமை வழங்கப் படாமலும் பலர் தோட்டங்களில் வாழ்கின்றனர். உறவினர்களில் சிலர் இந்தியாவிலும் சிலர் இலங்கையிலும் எனப் பிரிந்த நிலையிலேயே பலர் இன்று வாழ்கின்றனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரிந்த நிலையிலேயே வாழ்கின்றனர்.

Page 40
இக்குடியுரிமை விவகாரமானது மலையகத்தமிழர்களை அன்னியர்களாவும், அவர்களை தேசிய சமூகத்துடன் சேர்த்துக்கொள்ளத்தயங்குகின்ற போக்கையுமே எடுத்துக் காட்டுகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை அரசினுடைய பிரஜா உரிமைக் கொள்கைகள் மிகவும் இ றுக்கமானதாகவும் உயர்குழாம் மையப்பட்டதாகவும் அமைந்துள்ளதைக் காணலாம். உலகில் உள்ள ஏனைய பெருந்தோட்டங்களில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பொருளியல் ரீதியாகப் பெரும்பங்களிக் கின்ற ஒரு குழுமம் தொடர்பாக இலங்கை அரசும் ஏனைய குழுமங்களும் கையாளும் கொள்கைகள் இலங்கைச் சமூகத்தின் பல்தன்மையை வரவேற்பதாக இல்லை.
இன்னமும் இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தவர்கள் அனுபவிக்கின்ற வசதிகள், நன்மைகள், சமூகநலன்கள் மலையகமக்களுக்கு வழங்கப்படாததுடன் அடிப்படை உரிமைமீறல்களும் நடைபெற்றுவருவதை அவதானிக்கலாம். கல்வி, சுகாதார போக்குவரத்து, மின்சாரவசதிகள் எனப்பல விடயங்களை இங்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இலங்கையில் உள்ள ஏனையோர் பெறும் இலவச வீடமைப்புத்திட்டம், கடன் வசதிகள் போன்றன மலையக மக்களுக்கு வழங்கப்படுவதில்லை.
மேலும் பொருளியல் ரீதியான கொள்கைமாற்றங்களும் இத்தகைய உதாசீனத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளன. உதாரணமாக 1972ல் அமுல்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தச்சட்டத்தினூடாக தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்ட போது அதன் பாதக நிலைமையை தோட்டத்தொழிலாளரே அனுபவித்தனர். அதாவது அரசுடைமையாக்கலினுடாக தோட்டங்களில் கூடுதலாக சிங்களப் பெரும்பான்மையினர்
60

நிர்வாக உத்தியோகத்தர்களாக ஆக்கப்பட்டதுடன் இறுக்கமான அலுவலக முறைமைகளும் அறிமுகப்படுத்தப் பட்டன. தோட்டக் காணிகளில் சிங்களப் பெரும்பான்மையினர் குடியேறத்தொடங்கியமை, சிங்களமக்கள் தொழிலாளர்களாகச் சேரும் வாய்ப்பும் கிட்டியமை,அதிகாரதுஷ்பிர யோகத்தினூடாக பதவிக்கு வந்த உத்தியோகத்தர்களுக்கு தோட்ட முறைமை சமாளிக்க முடியாத ஒன்றாக இருந்தமை போன்ற காரணங்களால் இலாபம் குறைந்ததினால் கூலியும் குறைந்தது. தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டமை என்பது தொழிலாளர்களை தேசிய அரசுடன் இணைக்கும் ஒரு செயற்பாடாகவும் பலரால் கருதப்பட்டது. ஏனெனில் அதுவரைகாலமும் வெளிநாட்டவரின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களாக இருந்தவர்கள் தேசியமயமாக்கல் மூலம் அரசின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர் ஆகின்றனர். அதே நேரம் தோட்டங்களுள் சிங்களத் தேசிய வாதம் உட்புகுந்த ஒரு நிகழ்வாகவும் தேசிய மயமாக்கல் கொள்ளப்படுகின்றது. இதனால் தோட்டத்தொழிலாளரே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர்.
இதன் பின்னால் 1994ல் அரசாங்கம் தோட்டங்களை தனியாருக்குக் குத்தகைக்கு கொடுக்கத்தீர்மானித்தது. அதனால் தனியார்மயமாக்கற் கொள்கையினுாடாக தொடர்ந்தும் முதலாளித்துவ முறைமைக்குட் சிக்கி மிகவும் மோசமான முறையில் தொடர்ந்தும் சுரண்டலுக்கு ஆளானவர்களாக, தனிமைப்படுத்தப்பட்டவர்களாக, உதாசீனத்திற்குரியவர்களாக தோட்டத் தொழிலாளர் வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய சூழ்நிலையில் தோட்டங்கள் தனியார் உரிமையாக்கப்பட்டநிலையில், அரசு தனது குடிமக்களுக்குரிய அடிப் படை உரிமைகள் , வசதிகளைக் கவனிக்க வேண்டியதாக இருந்தும் தோட்டங்கள் தனியார் உரிமையில்
61

Page 41
இருப்பதனால் இவ்வுரிமைகள் உதாசீனத்திற்குரியனவாகவே உள்ளன. குடியிருப்புக்களை வழங்கல் அதாவது லயன்கள் சொந்தமாக்கப்படுதல் மின்சாரம் வழங்கல் என்ற அண்மைக்காலப் பேச்சுக்கள் வரை கூர்ந்து அவதானிக்கு மிடத்து, மலையகமக்கள் மீதான உண்மையான அக்கறையுடன் அரசு செயற்படவில்லை என்பதையே காணக்கூடியதாக உள்ளது.
கூலிமுறைமை என்பதும் இலங்கையில் ஏனைய துறைகளில் இல்லாதவாறு நாட்கூலி எனும் அடிப்படையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அதாவது மாதச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டாலும் கூலியின் அடிப்படை நிர்ணயமானது நாட்கூலி எனும் கணக்கிலேயே அமைகின்றது. ஒரு மாதத்திற்கு இத்தனை நாள் வேலை என்பது தோட்டத்திற்குத் தோட்டம் மாறுபடும். ஒரு தோட்டத்திலேயே காலநிலைக்கு காலநிலை வேலை நாட்கள் மாறுபடும். அதனால் வருமானம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பது தோட்டத் தொழிலாளரால் எதிர்நோக்கப்படுகின்றது. சு கயின விடுமுறையும், அமைய(Casual Leave) ஏனைய விடு முறைகளும் தோட்டப்புறங்களில் தெளிவாக இல்லை. இத்தகையதொரு கூலி முறைமை உருவாவதற்கும் அதன் தொடர்ச்சித்தன்மை பேணப்படுவதற்கும் தோட்டங்களை பெளதீகரீதியாகத் தனிமைப்படுத்தி வைத்திருத்தல், மலையகமக்கள் எனும் இனத்துவ ரீதியான உதாசீனம், அவர்களை அன்னியர்களாக கருதும் மனப்போக்கு என்பனவே காரணமாகும்.
அரசினுடைய கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றிற்கு அடுத்ததாக, மலையகமக்கள் எனும் குழுமத்திற்கு ஏனைய இனங்களுடன் ஏற்படும் உறவுகளை எடுத்து நோக்கினால் அவர்கள் எவ்வாறு ஒரு தனித்த இனக்குழுவாகச்
62

சிந்திக்கப்படுகிறார்கள் என்பதை அறியலாம்.
மலையகமக்களுக்கும் சிங்களப் பெரும்பான்மையினருக்குமான உறவுகளை முதலில் எடுத்துக்கொள்கின்ற போது, இலங்கை அரசானது சிங்களப் பெரும்பான்மையினரால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதாக இருப்பதனால், அரசினுடைய கொள்கைகள் பொதுவாக சிங்களப் பெரும்பான்மையினர் சார்புடையதாகவே இருக்கின்றன. அரசினது கருத்தியல் ஓரளவிற்கு சிங்களப் பெரும்பான்மை யினரின் கருத்தியலை ஒட்டியதாகவே இருக்கின்றது. அதனால் மலையக மக்களைப் பொறுத்தவரை அரசின் கொள்கைகள், திட்டங்கள், அவற்றின் அமுலாக்கங்கள் என்பன சிங்கள மக்களுடனான உறவுகளைத் தீர்மானிப்பனவையாகவே இருக்கின்றன.
மறுபுறத்தில் சிங்கள மக்களுக்கும் மலையகமக்களுக்குமான இனத்துவ உறவுகளை எடுத்து நோக்குகின்ற போது அதற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளதை அவதானிக்கலாம். அது காலனித்துவ காலத்திலிருந்து ஆரம்பமாவதாக இருக்கின்றது. ஆரம்பகாலத்தில் பிரித்தானியர் இலங்கையில் முதன்முதலில் கோப்பிப்பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்திய காலத்திலிருந்து சிங்கள மக்களுக்கும் மலையக மக்களுக்குமான உறவு ஆரம்பமாகின்றது. சிங்கள மக்கள் தோட்டங்களில் வேலை செய்ய மறுத்ததினாலேயே இந்தியாவிலிருந்து தொழிலாளரை அழைத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சிங்களவர்களைப் பொறுத்தவரை தோட்டத்தில் வேலை செய்வது என்பது தொடர்ந்தும் குறைவான ஒன்றாகவே மனங்கொள்ளப்படுகின்றது. கண்டியும் கண்டியைச்சூழ உள்ள பிரதேசமும் சிங்கள மக்களுக்குரிய பாரம்பரிய பிரதேசமாகவே கொள்ளப் படுகின்றது. சிங்கள மக்களைப் பொறுத்தவரை மலையகம் ஒரு புவியியற் பிரதேசமாகக் கொள்ளப்படும் போது உயர்சாதியினரின் மையப்பிரதேசமாகக்
63

Page 42
கொள்ளப்படுகின்றது. அப்படியானதொரு பிரதேசத்தில் சிங்களவரல்லாதோர் குடியேறுவதையும் அவர்களின் சனத்தொகை பெருவதையும் குடியேற்றம் பரவலாக்கப்படு வதையும் சிங்களமக்கள் விரும்புவதில்லை. மேலும் இலங்கை ஒரு பெளத்தநாடு, அது சிங்களவருக்குரிய நாடு என்ற கருத்தியலானது வரலாற்றுரீதியாகப் பேணப்பட்டுவரும் ஒன்றாகவே உள்ளது. அவ்வகையில் மலையகமக்களின் குடியேற்றம் என்பதும் அவர்களை இலங்கையராக சமத்துவமாக நடத்துவதும் பலரால் ஏற்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.
ஆரம்பத்தில் கோப்பித் தோட்டங்களாக மாற்றப்படுவதற்காக காட்டு நிலங்கள் விற்கப்படுவதை சிங்களவர்கள் எதிர்த்தனர். அவர்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கு காட்டுநிலங்கள் மிகவும் அவசியமாக இருந்தது. மேலும் இந்தியரின் வருகைக்கு முன்னால் ஐரோப்பியர் மீதும் காலனித்துவம் மீதும் இருந்த வெறுப்பு இந்தியரைக் குடியேற்றிய பின்னால் இந்தியரையும் உள்ளடக்கிய வெறுப்பாக மாற்றமடைந்தது. காட்டு நிலங்களில் ஆரம்பித்து, பின்னர் பெருந்தோட்டங்கள் பயிர்செய்யும் நிலத்தையும் உள்ளடக்கியபோது சிங்களவர் தமது நிலத்தை இழக்கவேண்டிய நிலை உருவானது. தோட்டங்களில் குடியேறியிருந்த இந்தியர்களுக்கும் உள்ளூர்க்கிராம வாசிகளுக்குமான தொடர்பு முற்றாகவே இல்லாத ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. தோட்ட நிர்வாகத்தின் நிர்வாக முறைமையே இதற்குக் காரணமாக இருந்தது.
1930களில் இந்தியர்களின் வருகையைத் தடைசெய்ய வேண்டும் என சிங்களத்தலைவர்கள் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் வாய்ப்புக் களுக்காக இன உணர்வினைத் தூண்டி விட்டுப்பயன் படுத்தினர் . கண்டித் தலைவர்கள் அவர்களுடைய
64

தனித்துவத்தினை வலியுறுத்துவோராக இருந்தனர்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்கள் இலங்கை மயமாக்கலை அல்லது இலங்கையர் மயமாக்கலை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இதனால் தோட்டங்களுக்கு வெளியே துறைமுகம், புகையிரதம், நிர்வாகம் போன்ற துறைகளில் இருந்த இந்தியர்கள் வேலையை இழக்கவேண்டி ஏற்பட்டது. இச்செயற்பாடு 30 களிலேயே ஆரம்பமான ஒன்றாக இருந்தது. அக்காலத்தில் பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் அரச வேலையிலிருந்து விலக்கப்பட்டனர். இவற்றின் தொடர்ச்சியாகவே குடியுரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 8
தோட்டங்கள் புவியியற்பிரதேசமாக எடுத்த நோக்கப்படுகின்ற போது அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள் சிங்களக் கிராமங்களாக இருக்கின்றன. இன்றைக்கும் இத்தோற்றப்பாடு இனத்துவ உறவுகளைத் தீர்மானிக்கின்ற முக்கியகாரணிகளுள் ஒன்றாக உள்ளது. தோட்டங்களின் எல்லை விஸ்தரிக்கப்படல், அல்லது குறுகுதல் கிராமங்களின் எல்லைகள் விஸ்தரிக்கப் படல் அல்லது குறுகுதல் என்பது அங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டும்.
1972ல் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டதுடன் நிர்வாகிகள் அலுவலர்கள் என தொழிலாளர்களுக்கு மேல் மட்டத்தி லுள்ளவர்கள் அனேகம் பேர் சிங்களவர்களாக இருந்தனர். 72ம் ஆண்டுக்குப்பின் சிங்களத் தொழிலாளர்கள் பலர் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவையும் இனத்துவ உறவுகளைத் தீர்மானிக்கின்ற விடயங்களாக உள்ளன.
அண்மைக்காலத்தில் தோட்டக்காணிகள் பல கிராமங்களுடன்
65

Page 43
இணைக்கப்பட்டு வருவதும் பெரும்பான்மையினராக மலையகத்தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அரசு திட்டமிட்ட வகையில் சிங் களவரைக் குடியேற்றிவருவதையும் மலையகமக்கள் கவனத்திற் கொண்டுள்ளனர்.
மேலும் நாட்டில் நடைபெற்று வரும் யுத்தத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டாலும் மலையகமக்கள் தமிழராக இருக்கின்ற காரணத்தால் பல வகையான பிரச்சனைகளுக்கு ஆளாகுபவர்களாக இருக்கின்றனர் ஒவ்வொரு வன்செயலிலும் பாதிக்கப்படுதல், பிரயாணங்களின் போது கூடுதலாக சோதனைக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். அவ்வகையில் இலங்கையில் அவர்களுடைய இருப்பு, பரந்து வாழ்தல் என்பன பிரச்சனைக்குரிய விடயங்களாகவே உள்ளன. பல தோட்டத்தொழிலாளர்கள் தோட்டங்களில் வாழ்வதை பாதுகாப்பான ஒன்றாகவே கருதுகின்றனர். நகரங்களில் வாழ்ந்து, வன்செயல்களினால் பாதிக்கப்பட்டு திரும்பி வந்து தோட்டங்களில் வாழும் பலரைக் காணக்கூடியதாக வுள்ளது. தோட்டங்களில் வாழ்பவர்கள் அந்தஸ்து தொடர்பாகவும் பொருளியல் ரீதியாகவும் மேல்நோக்கிய அசைவை ஏற்படுத்தினாலும் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லப்பயப்படுபவர்களாகவே உள்ளனர். ஓரளவிற்கு அரசியல் ரீதியாகப் பலம் வாய்ந்த பின்னணியை உடையவர்கள் இவ்வாறு நகரங்களில் வாழக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறு பலவிடயங்களை உள்ளடக்கியதாக சிங்களவர் களுக்கும் மலையகமக்களுக்குமான உறவுகள் காணப்படு கின்றன. ஒரு சில தோட்டங்களில் சிங்களவருக்கும் மலையகமக்களுக்கும் திருமணங்கள் இடம்பெற்றிருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது.
66

அடுத்ததாக வடக்குக்கிழக்குத் தமிழருக்கும் மலையகத் தமிழருக்குமான உறவுகளை எடுத்து நோக்குகின்ற போது மொழி, சமயம், பண்பாடு, நம்பிக்கைகள் எனப்பல விடயங்களில் வடக்குக்கிழக்குத் தமிழருக்கும் மலையகத் தமிழருக்கும் ஒற்றுமையும் தொடர்புகளும் காணப்பட்டாலும் மலையகத் தமிழர் தமக்கென்ற ஒரு தனித்த இனத்துவ இருப்பைக் கொண்டுள்ளனர்.
மலையகமக்களுடைய இனத்துவ இருப்பானது புலம்பெயர்ந்து வந்த வரலாறு, குடியமர்ந்த வரலாறு, தோட்டத் தொழிற்துறையின் வேலையனுபவம், தேசிய அரசுடன் இணைத்துக்கொள்வதற்கு அரசு எடுத்த முயற்சிகள், ஏனைய இனத்துவங்களுடனான உறவுகள், மலையகமக்களின் பண்பாடு, இக்குழுமத்தின் கட்டமைப்பு, சமூக அடுக்கமைவு, சமூகமாற்றம், மலையகமக்களின் சிந்தனைப் போக்கு, ஆய்வறிவாளரின் எழுச்சி போன்ற பல விடயங்களினால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது.
வடக்குக் கிழக்குத்தமிழரின் பண்பாடும் பாரம்பரியமும் அவர்களின் வதிவிடங்களை மையமாகக் கொண்டதாகவும் அவர்களின் வரலாறு சமூகமாற்றம் என்பவற்றினடிப் படையில் அமைந்ததாகவும் உள்ளது. இலங்கைச் சமூகத்தில் அவர்களுடைய பிரச்சனைகளும் இருப்பும் எத்தகையதாக இருக்கின்றது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
முதலில் மொழி, பண்பாடு,சமூக அடுக்கமைவு, சமூகக் கட்டமைப்பு இவ்விடயங்களைக் கருத்தில் எடுப்போமானால் மொழிவழக்கில் வடக்குக்கிழக்குத்தமிழரின் பேச்சு வழக்கும் மலையகத் தமிழரின் பேச்சுவழக்கும் வேறுபடுவதை அவதானிக்கலாம். பண்பாட்டு விடயங்களை எடுத்துக் கொண்டாலும் மலையகமக்கள் கூடுதலாக தோட்டப்புற
67

Page 44
வாழ்க்கைக்கமைய தமது பண்பாட்டில் பல விடயங்களை மாற்றிக்கொண்டமையையும் பல விடயங்களில் பண்பாட்டின் தொடர்ச்சியைப் பேணுவதனையும் அவதானிக்கலாம். குறிப்பாக உணவுமுறைகள் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகின்ற ஒன்றாக உள்ளன. ஏனைய விடயங்களில் வடக்குக்கிழக்குத் தமிழருடன் ஒப்பிடும் போது அண்மையில் குடிபெயர்ந்து வந்ததனால் இந்தியாவுடன் கூடுதல் தொடர்பினைக் கொண்டுள்ளதையும் அவதானிக்கலாம்.
எனினும் மலையகத்தில் மொழி, சமயம் போன்ற அடையாளங்களின் தொடர்ச்சி என்பது சில சந்தர்ப்பங்களில் மாறுபட்டு அமைவதைக் காணலாம் . உதாரணம் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்நது வந்த தெலுங்கு பேசுகின்ற மக்கள் தற்பொழுது தமிழ்பேசுவதனை அவதானிக்கலாம். அது போல கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்த மலையாளிகளும் தற்பொழுது தமிழையே தமது பேச்சுமொழியாகக் கொண்டுள்ளனர்.
தோட்டங்களுக்கு வெளியே நகரங்களில் வாழ்கின்ற மலையகத் தமிழரை எடுத்துக்கொண்டால், அவர்களுடைய பண்பாட்டு வழக்கங்கள் உணவு, உடை என்பன தோட்டங்களில் வாழும் மலையகத்தமிழரிடமிருந்து வித்தியாசமானதாக இருப்பினும் அது வடக்குக்கிழக்குத் தமிழருடன் ஒத்ததாக இல்லை.
வடக்குக்கிழக்குத் தமிழரிடையே நிலவும் சாதியமைப்பும் மலையகத் தமிழரிடையே நிலவும் சாதியமைப்பும் வித்தியாசமானதாக அமைகின்றது.
வடக்குக்கிழக்குத் தமிழரின் அரசியல் ஈடுபாடும் அவர்களது
பிரச்சனைகளும் வித்தியாசமானவையாகவும் மலையக மக்களின் அரசியல் ஈடுபாடும் பிரச்சனைகளும் வித்தியாச
68

மானவையாகவும் அமைந்துள்ளன.
வடக்குக்கிழக்குத் தமிழரின் மனப்பாங்கை நோக்கினால் மலையகத்தமிழரை அவர்கள் தம்மை விட தகுதிநிலையில் குறைந்தவர்களாகவே கருதுகின்றனர். தோட்டங்கள் சார்ந்ததான வேலைகளைக் குறைவாக நினைத்தல், இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து இலங்கையில் அண்மையில் குடியேறிய அனைவரையும் தோட்டங்கள் சார்ந்தவர்களாகப் பார்த்தல் என்பன வடக்குக்கிழக்குத் தமிழரின் மனப்பாங்கின் சில அம்சங்களாகும்.
தோட்டக்காட்டார், வடக்கத்தையார், இந்தியர், எஸ்டேட் தமிழர் என வழங்கும் பதங்கள் இவ்வாறான மனப்பாங்கின் வெளிப்பாடுகளே. புவியியல்ரீதியாகவும் வடக்குக்கிழக்குத் தமிழரும் மலையகத்தமிழரும் வித்தியாசமான இடங்களில் வாழ்ந்து வந்துள்ளனர்.
வடக்குக்கிழக்குத் தமிழரின் இத்தகைய மனப்பாங்கு அரசியலிலும் வெளிப்பட்டுள்ளது. வடக்குக்கிழக்குத் தமிழரின் அரசியலை வரலாற்று ரீதியாக நோக்கும் போது யாழ்ப்பாண உயர்குழாத்தினரை மையமாகக் கொண்டிருந்தது என்ற உண்மை புலப்படும். ஓரிரு விதிவிலக்கான சந்தர்ப்பங் களைத்தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் மலையகமக்கள் ஓரங்கட்டப்பட்ட போது அல்லது உதாசீனப்படுத்தப்பட்ட போது, குறிப்பாக குடியுரிமைப் பிரச்சனைகள் தலைதுாக்கிய போது வடக்குக்கிழக்குத்தமிழர் அதனைப் பொருட்படுத்த வில்லை. தமிழர்கள் என்ற வகையில் ஒன்று சேரவும் இல்லை.
சிங்களவர் தமிழர் என்பவருக்கு அடுத்ததாக LDGOGL)IJS மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவானது அனேகம்
69

Page 45
பேரால் சிந்திக்கப்படாத ஒரு விடயமாகவே உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மலையகமக்களும் மூஸ்லிம்களும் இனத்துவம் தொடர்பான பிரச்சனைகளை எடுத்து நோக்குகின்ற போது ஓரங்கட்டப்பட்ட நிலையில் தமது எழுச்சியை தாமே தேடிக்கொள்கின்ற இரு இனத்துவக் குழுக்களாக உள்ளார்கள். அவர்களிற்கிடையேயான உறவு சிங்களவருக்கும் மலையகமக்களுக்குமான உறவினைப்போல அல்லது மலையகமக்களுக்கும் வடக்கு கிழக்கு தமிழருக்குமான உறவினைப்போல சிக்கலாக இல்லாவிட்டாலும் இரண்டு குழுக்களும் தமது தனித்தன்மையைப் பேணுகின்ற குழுக்களாகவே உள்ளன. சில தோட்டங்களில் முஸ்லிம் தொழிலாளர்களும் மலையகத்தமிழருடன் வேலை செய்வதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அங்கு தமது குழு அடையாளங்களைப் பேணுபவர்களாக முஸ்லிம்கள் இருந்த போதும் இனத்துவம் சார்ந்த குரோத நிலைமைகள் அல்லது சிக்கலான நிலைமைகள் ஏதும் வெளிப்படாமல் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
மலையக மக்களுடைய இனத்துவம் பற்றிச்சிந்திக்கின்ற போது, இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றினையும் சிந்தித்துப் பார்த்தல் நல்லது. இலங்கையின் தொழிற்சங்க வரலாறானது முழுஇலங்கைக்கும் இணைந்த தொழிற்சங்க நடவடிக்கை களாகவோ அல்லது முழு இலங்கைக்குமான கூட்டான தொழிற்சங்க இயக்கம் என்ற பொதுமை நிலைமையை எடுத்துக்காட்டுவதாகவோ இருக்கவில்லை. நகரங்களில் குறிப்பாக கொழும்பை மையப்படுத்திய தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒரு புறமும் பெருந் தோட்டங்களை மையப்படுத்திய தொழிற்சங்க நடவடிக்கைகள் மறுபுறமுமாக இருவேறு செயற்பாடுகளாகவே நிகழ்ந்து வந்ததுள்ளன. இவ்விடயத்தை நோக்கும் போது இலங்கைத்தேசத்தில் வர்க்க ஒற்றுமை என்பது ஒரு போதும் இனத்துவக்காரணிகளை
70

மேவியதாக அடையப்படவில்லை என்பைத விளங்கிக் கொள்ளலாம்.
அடுத்ததாக, மலையகமக்களுடைய தனித்துவ இருப்பு, இனத்துவம் என்பவை பற்றிய சிந்தனையில் முக்கியமாக இருப்பது அவர்களுடைய முயற்சிகள், தேடல், இனத்துவ எழுச்சி என்பது இதில் முக்கியமானது. மேற்கூறிய ஒரு வரலாற்றுச் சூழலிலே இனத்துவ ரீதியாகப் பின்தள்ளப்பட்ட ஒரு நிலைமையினையும் அவ்வாறானதொரு பின் தள்ளுதலின் விளைவாக ஒரு இனத்துவத்தின் எழுச்சி என்பதும் இங்கு பிரதானமான விடயங்களாகும். இவ்விடயத்தில் மலையக மக்களின் தனித்த அடையாளமானது சிங் களப் பெரும்பான்மை யினரிடமிருந்து வித்தியாசமானது என்பதையும் வடக்குக் கிழக்குத் தமிழரின் அடையாளத்தினின்றும் கூட வித்தியாசமான தொன்றென்ப தையும் மலையக மக்கள் வலியுறுத்திக் கொள்ள விளைவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் அவ்வகை யிலானதொரு எழுச்சி முழுமையாக இலங்கை அரசியற் சூழலில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவும் சமூகம் சார்ந்த ஒரு எழுச்சியாகவும் அமைந்துள்ளது.
மலையகத்ததில் ஆய்வறிவாளர்கள், உயர்குழாத்தினர், மத்தியதர வர்க்கத்தினர், இலக்கியவாதிகள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், போன்றோரை உள்ளடக்கிய ஒரு பகுதியினர் மலையகமக்களின் தனித்துவம், உரிமைகள், இனத்துவ இருப்பு போன்ற விடயங்கள் பற்றிய சிந்தனையில் ஈடுபடுவதனையும் , அச் சிந்தனையை ஒட்டியதான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதனையும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது. மலையக மக்களின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் கட்டுரைகள் , போன்றன
71

Page 46
வெளிவருவதையும் பத்திரிகைகளில் கருத்துச் சிதறல்களாக இக்கருத்து வெளிப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
முற்றுமுழுதாக இனத்துவ அரசியலினால் பின்தள்ளப்ட்ட ஒரு குழுமம் தனது இனத்துவ அடையாளத்தினை முதன்மைப்படுத்தும் கோரிக்கைகளினுTடாக தனது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் தவறேதும் இல்லை என்றே கூறலாம். இவ்வகையிற்தான் இனத்துவமானது சமத்துவத்தைப் பெற்றுத்தரும் ஒரு சமூகக்குணாம்சமாகச் சிந்திக்கப்படுகின்றது.
அவ்வாறானதொரு சிந்தனை ஆய்வறிவாளர் மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தொன்றாகவே உள்ளது. இலங்கையின் தேசிய அடையாளத்தில் மலையகத்தமிழரின் அடையாளத்தை ஒருங்கிணைக்கின்ற ஒரு நடவடிக்கையாகவும் இம்முயற்சி அமையும். இலங்கைச் சமூகத்தின் பல்தன்மையை வலியுறுத்தவும் இச்சிந்தனைப்போக்கு அவசியமானதாகும்.
இச்சிந்தனையானது மலையகமக்களின், குறிப்பாகத் தோட்டத் தொழிலாளரின் பொருளியல் பங்களிப்பினை நோக்குகின்ற போது மேலும் காத்திரமானதொன்றாகின்றது. இலங்கையின் தேசிய வருமானத்தில் மிகவும் கூடுதலான பங்களிப்பினை ஆற்றுபவர்களாக பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இருந்துவருகின்ற போதும் அத்தகைய பங்களிப்புக்குச் சமாந்திரமான அரசியற் பிரதிநிதித்துவம் இன்மை என்பது இங்கு பாரிய பிரச்சனையாக உள்ளது.
இனத்துவம் என்பது ஒரு செயற்பாடாக மலையகமக்களினால்
முன்வைக்கப்படுவதனையும் ஒரு குறிப்பிட்ட குழுமம் தங்களது அடையாளத்தினைத் தாமே தேடிக்கொள்கின்ற, வெளிப்படுத்து
72

கின்ற ஒரு எழுச்சியாகவும் இதனை நோக்கலாம். இத்தகையதான தொரு தேடல், செயற்பாடுகள் என்பன பலபிரச்சனைகளையும் சிக்கல்களையும் முன்வைப்பனவாக இருப்பினும் அவ்வாறான தொரு சமூகத்தோற்றப்பாடானது மலையகமக்கள் தாங்களாகத் தங்கள் இருப்புப் பற்றி சிந்திக்கத் தொடங்கியமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இவ்வாறான சுய விழிப்புணர்வு என்பது மலையக மக்களுடைய இனத்துவ இருப்பினை ஸ்திரப்படுத்து தாக உள்ளது. இத்தகைய தொரு மாற்றம் 70களிற்குப் பின்னால் மலையகத்தில் அவதானிக்கக்கூடிய ஒன்றாக நிகழ்ந்து வருகின்றது. இதனால் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்து இலங்கையில் மலைநாடு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழர்களும், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழர்களும் ஒரு இனத்துவகுழுமாகக் கருதப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டவாறான பல விடயங்களைக் கருத்திற் கொள்ளுமிடத்து மலையகமக்களுடைய இனத்துவம் என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரதானமான விடயமாக இன்றைய சமூக சூழ்நிலையில் அமைந்துள்ளது.
இனத்துவமும் பால் நிலையும் எண்ணக் கருக்களை விளங்கிக்கொள்ளல்
இவ்வாய்வானது இனத்துவத்திற்கும் பால்நிலைக்குமான தொடர்பினை பிரதான கருத்தாகக்கொண்டுள்ளமையால் இனத்துவம் பால்நிலை என்ற இருபதங்களும் சமூகச் செயற்பாடுகளுடன் தொடர்புடையனவாக, கல்விசார் கருத்தாடல்களில் எத்தகையதாக விளங்கிக்கொள்ளப்படு கின்றன என அறியவேண்டிய தேவை எழுகின்றது.
ஆங்கிலத்தில் ethnicity எனவுள்ள பதத்தினையே தமிழில் இனத்துவம் என மொழிபெயர்த்துக் கொள்கின்றோம்.
73

Page 47
இப்பதமானது ஆங்கிலத்திற்கு, கிரேக்க மொழியிலுள்ள ethno எனும் பதத்தினுாடாகப்பெறப்பட்டது. ethno என்பது கிரேக்க மொழியில் மக்கட்கூட்டம் என்ற அர்த்தத்தைப் பெறும். இப் பதப்பிரயோகமானது மிக அண்மைக்காலத்தில் பயன்படுத்தப்படத்தொடங்கிய ஒன்றாகும். அதற்கு முன்னர் race என ஆங்கிலத்திலுள்ள பதமே கூடுதலாக பழக்கத்திலிருந்தது. ethnicity என ஆங்கிலத்திலுள்ளபதம் 1960 களிலேயே உபயோகிக்கப்படத்தொடங்கியது. இலங்கையில் 1971ம் ஆண்டில்தான் முதன்முதலில் புள்ளிவிபரக்கணிப்பீடுகளில் இப்பதம் உபயோகிக்கப்பட்டது. இதற்கு முதல் race எனும் ஆங்கிலப்பதமே கூடுதலாக உபயோகிக்கப்பட்டது. Race எனும் பதம் பொதுவாக உடல் ரீதியான குணாம்சங்களுடன் இணைத்துச்சிந்திக்கப்படக் கூடிய ஒன்றாகும். இன்றைய நடைமுறையில் ethnicity என்ற பதம் கூடுதலாக சமூக விடயமாகக் கொள்ளப்படுகின்றது. அவ்வகையில் race எனும் பதமும் ethnicity எனும் பதமும் சமூக விஞ்ஞானங்களில் பிரித்தே சிந்திக்கப்படுகின்றன. இனம் எனும் பதம் தமிழில் இருந்துவந்தாலும் ஆங்கிலத்திலுள்ள வாறான அர்த்தத்துடன் பிரயோகத்திற்கு வந்தது 60 களுக்குப் பின்னரே ஆகும். அதிலும் சமூக விஞ்ஞானங்களில் ethnicity என ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் சொல்லிற்கு ஈடாக தமிழில் இனத்துவம் எனும் சொல் பிரயோகத்திற்கு வந்தது மிக அண்மைக் காலத்திலேயே ஆகும். அவ்வகையில் race என ஆங்கிலத்திலுள்ள பதத்திற்கு தமிழில் பொருத்தமான தொருபதம் இல்லை என்றே கூறலாம். அதிலும் ஆங்கிலத்திலுள்ளவாறான race ethnicity என்ற பிரித்தறியக் கூடிய பதங்களைச் சுட்டிநிற்கக் கூடிய வகையில் race எனும் பதத்திற்கு பொருத்தமான தமிழ்ச்சொல் இன்றைக்கு வழக்கத்தில் இல்லை.
இவ்வாய்வில் ஆங்கிலத்தில்ethnicity என உள்ள சொல்லையே
74

தமிழில் இனத்துவம் எனப்பயன்படுத்துகிறோம்.
இனத்துவம் எனும் பதத்திற்கு பொதுவாக எல்லோராலும் கொடுக்கப்படும் வரைவிலக்கணமானது இவ்வர்த்தத்தைத் தழுவியதாக இனக்குழு எனும் பதத்திற்கு சமனானதாகக் கொடுக்கப்படுகின்றது. ஏதாயினுமொரு சமூக விஞ்ஞானங்கள் சார்ந்த அகராதியினை எடுத்துப்பார்க்கின்ற போதும் இத்தகைய வரைவிலக்கணத்தைக் காணக்கூடியதாக உள்ளது. மரபு ரீதியான மானிடவியலிலும் இவ்வரைவிலக்கணத்தையே காணலாம். அதற்கிணங்க இனக்குழுவானது பண்பாட்டுரீதியில் வித்தியாசமானதும் தனித்துவமானதுமான ஒரு குழுவாகக் கொள்ளப்படும். எல்லோராலும் பகிரப்படுகின்ற பண்பாட்டு விடயங்களையும் அவைசார்ந்த சமூகநிறுவனங்களையும் குறித்து நிற்பதாக இனத்துவம் அங்கு கொள்ளப்படும்.
பண்பாடு என்பது இங்கு குறிப்பாக தனிநபர்களுக்கு வெளியே உருவாக்கப்படும் ஒன்றாகவும் அவர்களிற்கு முன்னேயும் பரின் னேயும் இருக் கின் ற ஒன்றாகவும் இங்கு கொள்ளப்படுகின்றது. இமைல் துர்க்கைம் (Emile Durkheim) மினுடைய கூட்டான பிரதிநிதித்துவம் (Collective Representation) என்ற கருத்துடன் தொடர்புடையதாகவே இவ்வரை விலக்கணம் கொடுக்கப்படுகின்றது. அதாவது இனத்துவ மானது தனிநபர்களுக்கு வெளியே இருக்கின்ற ஒரு புறவயமான விடயமாகக் கொள்ளப்படுகின்றது.
இதனால் இனத்துவம் எனும்பதம் இனக்குழுவுடன் சேர்த்து நோக்கப்படும் ஒன்றாக உள்ளது. சமூகவிஞ்ஞானங்களில் உடனடியாகக் கொடுக்கப்படும் வரைவிலக்கணமாக இது உள்ளது. தற்காலிகமான ஒரு வரைவிலக்கணமான ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இனத்துவமானது இங்கு பிரச்சனைகள் அற்ற ஒரு விடயமாக நோக்கப்படுகின்றது.
75

Page 48
அவ்வகையில் சமூகமுரண்பாடுகளை ஆராய்வதற்குப் போதாத ஒரு வரைவிலக்கணமாகவே இது உள்ளது.
இனத்துவமானது எவ்வகையில் ஒரு அகவயமான விடயமாக உள்ளது என்பதையும், ஒரு சமூக செயற்பாடாக எவ்வகையில் நோக்கப்படக் கூடியது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
LD&6ivGaul Ift (Max Weber) 5607g, Economy & Society 6169/to நூலில் இனத்துவத்தை ஒரு மனிதகுழுவாக வரைவிலக்கணஞ் செய்கின்றார். இக்குழுவிலுள்ளவர்கள் தமது உருவாக்கததில் அல் லது தோற்றுவாயிலுள்ள நம் பரிக் கையை அர்த்தப்படுத்துவதுடன் அதனுTடாக ஒரு வகுப்பை உருவாக்கவும் விளைகின்றனர். மேலும் மக்ஸ் வெபரின் கருத்தை நோக்கும் போது, தமக்குள் இருக்கும் பெளதீக ரீதியான அல்லது உடல்ரீதியான ஒற்றுமையை அல்லது வழக்குகளை அல்லது இவையிரண்டையும் அல்லது காலனித்துவத்தினதும், இடம்பெயர்ந்ததன் ஞாபகங்களையும் வைத்திருப்பதனால் தாம் பொதுவான வழிவந்தவர்கள் என்ற நம்பிக்கையை அகவயமாகக் கொண்டிருக்கும் மனித குழுக்கள் இனத்துவக்குழுக்களாகும் (குறிப்பு I)
இனத்துவமானது மக்ஸ்வெபரினால் இங்கு அகவயமான நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டுள்ள ஒரு செயற்பாடாக வலியுறுத்தப்படுகின்றது. மேலும் மனிதர்களுக்கு வெளியே உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளாக அல்லாமல் மனிதர்கள் பங்குபற்றும் ஒரு செயற்பாடாகக் கொள்ளப்படுவதால் இனத்துவம் ஒரு செயற்பாடாகவும் ஆகின்றது. இனத்துவம் என்பது ஒரு இனக்குழுவின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடியதும், ஆர்வங்களை வெளிப்படுத்தக்கூடியதுமான, சுய பிரக்ஞை
76

யினை அடைகின்ற ஒரு செயற்பாடாக நோக்கப்படக் கூடியது. இச்சுயபிரகஞையை அடைதல் எனும் செயற்பாடு அரசியற் சூழலிலேயே எழுவதாயுள்ளது.
இனத்துவம் என்பது அரசியற்தோற்றப்பாட்டுடன் இணைந்த விடயமாகக் கொள்ளப்படும்போது, இனக்குழுக்களாவன ஏற்கனவே உருவாக்கப்பட்ட முறைமை சார்ந்த கட்டமைப்பில் அதிகாரத்திற்காகப் போராடுகின்ற குழுக்களாகவும் வரைவிலக்கணப்படுத்தக்கூடியன.
மேலும் இனத்துவம் எனும்பதம் பெரும்பாலும் அரசியல் தனித்துவத்திற்கான கோரிக்கையை சிறுபான்மையினர் முன்வைக்கின்றபோது பிரதானப்படுத்தும் ஒரு பதமாக இருப்பதால் பிரதிநிதித்துவத்தின் அரசியலையும் சுட்டிநிற்பதாகவுள்ளது. பிரதிநிதித்துவம் என்பது ஏனைய இனங்கள் சார்ந்து எழும் மேலாதிக்க நிலைமைகளிற்கு முகம் கொடுப்பதுடன் குறிப்பிட்ட இனத்தினுள் எழும் மேலாதிக்க நிலைமைகளையும் அணுகுவதாகவுள்ளது.
இனத்துவம் என்பது ஒரு அடிப்படை அடையாளமாகவும் உள்ளது. ஒரு ஆளின் அடிப்படைக்குழு அடையாளத்தினைத் தீர்மானிப்பதாக இனத்துவம் உள்ளது. குறிப்பிட்ட அடையாளத்தினை எடுத்துக்கொள்பவருக்கு எதிராக அல்லது அதனை உறுதிப்படுத்துவருக்கு எதிராக சமூக பொருளாதார விடயங்கள் மாறிச் செல்கையில் இவ்வடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்.
சமூகவிஞ்ஞானிகள் இனஉணர்வை ஒரு உணர்வு பூர்வமான மாறியாகக் கொள்வர். இன உணர்வின் தீவிரமும் முக்கியத்துவமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் நிர்ணயிக்கப் படுவதாக உள்ளன. இவ்விடத்தில் அடையாளங்களாவன
77

Page 49
சிக்கலானவையாக அமைந்திருக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அடையாளங்கள் பல்தன்மை யுடையன அவை வரலாற்றினூடாக தோற்றம் பெறுவனவாக உள்ளன. இவ் வரலாறானது அரசியல் பண்பாடு, பொருளாதாரம் போன்ற சமூகக்காரணிகளினால் தீர்மானிக்கப் படுகின்றன.
அனேக சந்தர்ப்பங்களில் அடையாளங்கள் ஏனையவர்களின் அடையாளங்களின் எதிர்விளைவுகளாகவும் உள்ளன. அவ்வகையில் இனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட குழு அங்கத்தவர்கள் தமது சுயத்தினை இனங்காணும் ஒரு செயற்பாடாகவுள்ளது. வேறுபட்ட இனத்துவக் குழுக்களுடன் இடையூட்டத்தை மேற்கொள்ளும் போது அல்லது பொதுவான சமூக சூழ்நிலையில் ஒன்றாகக் கொண்டுவரப்படும் பொழுது இனத்துவ அடையாளம் அர்த்தமுடையதாகின்றது. இனத்துவரீதியில் ஒரேமாதிரியான மக்களைக்கொண்ட நாடுகளில் இனத்துவம் தொடர்பான கலந்துரையாடல் அல்லது இனத்துவ அடையாளம் என்பது குறைந்த முக்கியத்துவத்தையே பெறுகின்றது.
இவற்றைக் கருத்திற் கொள்ளுமிடத்து இனத்துவம் எனும் பதம், அது முக்கியத்துவம் பெறும் சமூக சூழ்நிலை சார்ந்தே ஆராயப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது என்பதை நாம் வலியுறுத்திக்கொள்ளலாம்.
பிரெட்ரிக் பார்த்தினுடைய கருத்தில் இனத்துவக் குழுக்களானவை சமூகரீதியில் உருவாக்கப்படுகின்றன. குழுவின் எல்லை என்பதனை நாங்கள் கண்டுகொள்ள வேண்டும் . எல்லைகளுக்குள் இணைவாக்கவும் தொடர்ச்சித்தன்மையும் கவனிக்கப்பட வேண்டியவை. மாற்றங்கள் ஏனைய இனக்குழுகளுடன் ஒன்றாகும் தன்மை
78

என்பன எல்லையுடன் முரண்படுகின்றன. பிரெட்ரிக் பாத்தினுடைய கருத்தில் இனக்குழுவின் வடிவம் (Form) பிரதானமானது அதன் உள்ளடக்கமல்ல. வடிவம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலை சார்ந்ததாகும். உள்ளடக்கம் என்பது (Centent) இனத்துவத்தின் நிரந்தரப் போக்கை வலியுறுத்துவ
தாகும.
மேலும் இனத்துவம் எனும் பதம் தனிமையில் விளங்கிக்கொள்ளப்பட முடியாத ஒரு மாறி ஆகும் (Protean) இனத்துவமானது ஒரு செயற்பாடாக ஏனைய சமூகக்குணாம்சங்கள் சார்ந்த செயற்பாடுகளுடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளது. அதாவது சமூகத்திலுள்ள விடயங்களில் குணாம்சங்களாக வர்க்கம், சாதி, பால்நிலை போன்றன அமைகின்றன. இனத்துவம் எனும் செயற்பாட்டினை ஒரு சமூகச்செயற்பாடாக வரை விலக்கணஞ் செய்யும் போது ஏனைய சமூகக்குணாம்சங்கள் சார்ந்த செயற்பாடுகள் இக்குறிப்பிட்ட செயற்பாட்டினை எ வி வாறு ஊடறுக்கின்றன என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும்.
இனத்துவம் என்பது சாதி, வர்க்கம், பால்நிலை போன்ற வற்றுள் ஒரு சமூகக்குணாம்சமாகவே சமூகவிஞ்ஞானங்களில் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. ஆய்வினை இலகுபடுத்தும் ஒரு எண்ணக்கருவாகவும் இனத்துவம் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சமூகநிலைகளைப் புரிந்துகொள்ளவும். குறிப்பாக காலனித்துவகால. அதற்குப் பின்னான கால சமூக நிலைகளைப் புரிந்துகொள்ளவும் இவ் வெண் ணக் கரு உதவும் . இவ் வெண் ணக் கரு எவ்வகையிலும் முரண்பாட்டை வளர்த்தெடுக்கும் அல்லது ஆதிக்கநிலையை வளர்த்தெடுக்கும் பதமாக அமையாது. மாறாக சமத்துவத்திற்கான ஒரு தேடலின் மையமாகவே
79

Page 50
இவர் வெண் ணக் கரு அமையும் Washbrook, Dount போன்றவர்களின் கருத்தில் இனத்துவம் என்பது சமத்துவம் என்னும் பெறுமதியினை அடைவதற்காக முன்வைக்கப்படும் ஒரு குணாம்சமாகும். இனத்துவம் சார்ந்த ஒரு சிந்தனையானது இனங்களிற்கிடையேயான சமத்துவத்தையும் ஒரு இனக்குழுவிற்குள் உள்ள அங்கத்தவர்களின் சம உரிமையையும் வலியுறுத்துவதாகும்.
மாறாக இனவாதம் எனும் பதம் அசமத்துவ நிலையையும், மேலாதிக்கநிலைமையையும் சுட்டி நிற்கும். அதனால் இனத்துவம் எனும் பதம் இனவாதம் எனும் பதத்திலிருந்து பிரித்துநோக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது.
எனினும் இனத்துவம் எனும் எண்ணக்கரு அதன் வரையறைகளையும் பிரச்சனைகைளயும் உடையதாகவே விளங்கிக்கொள்ளப்படுகின்றது. நிலவுகின்ற சமூக அமைப்புக்களில் இனத்துவம் சார்ந்ததாக முனைப்புப் பெறும் பிரச்சனைகளில் அல்லது இனத்துவம் சார்ந்ததாக தோற்றம் பெற்று இயங்கிவரும் இயக்கங்கங்களை விளங்கிக்கொள்ளும் போது, இனத்துவம் எனும் எண்ணக்கரு பிரச்சினைக்குரிய தாகவே உள்ளது. இனத்துவமுனைப்பு என்பது ஒரேமாதிரி யாக்கலை அடிப்படையாகக்கொண்ட (Homogenisation) ஒரு சமூகக்குணாம்சமாகவும் கொள்ளப்படலாம். இனத்துவக் குழுவிற்குள் எழும் ஏனைய சமூகக்குணாம்சங்கள் சார்ந்த பிரச்சனைகளைக் குறைத்துமதிப்பிடுவதாகவும், அவற்றிற்கு இரண்டாவது இடம் ஒன்றினைக் கொடுப்பதாகவுமே அனேக இனத்துவம் சார்ந்த இயக்கங்கள் இயங்கி வருபவனவாக உள்ளன. அவ்வகையில் ஒரு இனத்துவக்குழுவிற்கு உள்ளே எழும் முரண்பாடுகள் இன்று முனைப்புப்பெறுவனவாக உள்ளன. யார் இந்த இனத்துவப்போராட்டங்களின் அல்லது இயக்கங்களின் அரசியலை வழிநடத்திச்செல்கின்றனர்? அவர்கள் யாருக்காக அவற்றை வழிநடத்திச்செல்கின்றனர்.
8()

இவ்வியக்கங்கள் வழிநடத்தப்படுகின்ற வடிவம் என்பன பிரதானமான கேள்விகளாக இங்கு கேட்கப்படுகின்றன.
இவ்வகையான ஒரு சிக்கலை மையப்படுத்தியதாகவே பெண்களும் இனத்துவமும் எனும் தலைப்பிலானதொரு விடயம் ஆரம்பமாகின்றது.
பால்நிலை சார்ந்ததாக இனத்துவமும் எனும் எண்ணக்கரு அணுகப்படும் போது இனத்துவமானது சிக்கலானதொரு செயற்பாடாகவே விளங்கிக்கொள்ளப்படுகின்றது. உலகின் பல்வேறு சமூகங்களிலும் இவ்விடயத்தினை அவதானிகக்கக் கூடியதாகவுள்ளது. அவ்வகையில் இனத்துவமானது பால்நிலையுடன் இணைத்துச்சிந்திக்கப்பட வேண்டியதொரு எண்ணக் கருவாகும் . இவ்வாய் வினுடைய பிரதரன கவனிப்பானது பால்நிலைக்கும் இனத்துவத்திற்குமான தொடர்பை நோக்கியதாகவுள்ளது. இவ்விடயமானது ஏனைய சமூகங்களிலும்கூட குறைந்தளவு கோட்பாட்டாக்கத்திற்கு உட்பட்ட விடயமாகும். எனினும் விவாதங்களிலும் செயற்பாடுகளிலும் அவை போதியளவு வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
இனத்துவமும் பால் நிலையும் சமூகத்தினி இரு குணாம்சங்களாகும் இவ்விரு குணாம்சங்களும் தனிமனிதர் களினதும் குழுக்களினதும் அடையாங்களைத் தீர்மானிப்பவை யாக உள்ளன. அவை சமூக இயக்கங்களின் பிரதான காரணிகளாவும் அமைந்துள்ளன. இக்காரணிகளின் முனைப்பு, அவை ஒன்றை ஒன்று ஊடறுக்கும் தன்மை, அவை சார்ந்த பிரச்சினைகள் என்பன. குறிப்பிட்ட சமூகம் தொடர்பானவையாகவும் விளங்கிக்கொள்ளப்பட வேண்டிய வையாகும்.
8

Page 51
பெண் எனும் அடையாளத்தினை மையப்படுத்தியதான போராட்டங்கள் அல்லது இயக்கங்கள் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டதாக இருப்பினும் ஒரு நாட்டுக்குள் இத்தகைய வெவ்வேறு இயக்கங்களிற்கிடையே தொடர்புகள் இருக்கும். அதுபோல சர்வதேசரீதியிலும் இத்தொடர்புகள் இருக்கும். பெண்களை இரண்டாம்பட்சமாக்கல் எனும் செயற்பாடு உலகம் முழுவதும் (வெவ்வேறு வடிவங்களையும் அளவுகளையும் கொண்டிருப்பினும்) காணப்படும் ஒரு குணாம்சமாக இருப்பதே இத்தொடர்புகளை வலியுறுத்து வதாக இருக்கின்றது.
பெண்களை இரண்டாம்பட்ச ஆட்களாகக் கருதும் செயற்பாடு காலாகாலமாக இருந்துவரினும் பெண்களுடைய கல்வியறிவு, பெண்கள் வேலைக்குச் செல்லுதல் போன்ற காரணிகளுடன் சர்வதேசரீதியில் நடைபெற்றுவரும் பெண்நிலைவாத செயற்பாடுகளில் தொடர்புகிடைத்தல், பெண்கள் குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விழிப்புணர்வுவடைதல். அணிதிரள்தல் போன்ற காரணிகளினால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் சார்ந்த போராட்டங்கள் இயக்கங்கள் என்பன தோற்றம் பெறுகின்றன.
மரபுரீதியாகவும் பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்ற போராட்டங்கள் இருந்துவந்திருப்பினும் காலப்போக்கில் அவைபால்நிலை சார்ந்த இயக்கங்களாக நவீன அர்த்தத்தில். மாற்றம் அடைந்து முறைமையான போராட்டங்களில் ஈடுபடுகின்றன. சில சமூகங்களில் இம்மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. பொதுவாக கீழைத்தேய சமூகங்களில் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு சார்ந்த இயக்கங்கள் மெதுவான வளர்ச்சியையே உடையன. இப்போராட்டங்களை சமூகத்தில் உள்ள எல்லோரும் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. சமூகத்தில்
82

ஏற்கனவே காலங்காலமாக இருந்து வருகின்ற இரண்டாம் பட்ச நிலைமையின் தாக்கமாகவே இத்தோற்றப்பாடு உள்ளது. சமூகத்தில் ஆண்களால் முன்னெடுக்கப்படும் இயக்கங்கள் துரிதமாகவும் பரவலாகவும் தீவிரமடைவதையும் இதனுடன் ஒப்பிடலாம். ஆண்முனைப்பு சமூகம் தலைமைத்துவம் இதற்கு வசதியாக இருப்பதே பிரதான காரணமாகும்.
இனத்துவம் பால்நிலை எனும் இரு சமூகக்குணாம் சங்களிற்குமான தொடர்பினை இங்கு ஏற்படுத்துவேமாயின். பால்நிலை சார்ந்த போராட்டங்கள் இயக்கங்கள் எழுச்சிகள், இனத்துவம் சார்ந்த போராட்டங்கள் இயக்கங்கள் என்பவற்றின் எழுச்சி இரண்டையும் தொடர்புபடுத்திச் சிந்திப்பார்த்தல் இங்கு அவசியமானதாகும்.
இனத்துவப்போராட்டங்கள் பொதுவாக ஆண்களாலேயே முன்னெடுக்கப் படுகின்றன. பின்னர் நீண்டகாலப்போக்கில் பெண்கள் பகுதி ஒன்று அதில் இணைத்துக் கொள்ளப்படு கின்றது. பெண்கள் தலைவிகளாக இருப்பதோ அல்லது பெண்கள் தொடர்பான விழிப்புணர்வுடன், பிரதான வழிநடத்துணர்களாகப் பெண்கள் இருப்பதோ அரிதாகவே உள்ளது. அனேகசந்தர்ப்பங்களில் அவ்வாறானதொரு தோற்றப்பாடு இருப்பதேயில்லை.
மேலும் இனத்துவம் என்பதே இனத்துவப்பேராட்டங்களில் முதன்மைப்படுத்தப்பட்டும் அடையாளமாக உள்ளது அங்கு ஏனைய அடையாளங்கள் இரண்டாம் பட்சமானவை. அவ்வகையில் இனத்துவ அடையாளத்தினை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றிற்கு பால்நிலை அடையாளம் இரண்டாம் பட்சமானதே. பெண்களை இனத்துவம் தொடர்பான பிரச்சினைகள் தாக்குவதில்லை என நாம் கொள்ள முடியாது.ஆனால் இனத்துவம் தொடர்பான பிரச்சனைகள்
83

Page 52
அவர்கள் ஆண்தலைமைத்துவத்துவக்கருத்தியல் தொடர்பாக சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளிற்கு ஈடானவை. பெண்கள் இரண்டையுமே கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஒன்றைவிடுத்து ஒன்றை வலியுறுத்த முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
பொதுவாக இனத்துவ அடையாளத்தை வலியுறுத்த முயல்கின்றபோது அவ்வினத்துவத்திற்கான பண்பாட்டு அடையாளங் களை வலியுறுத் துவது இனத்துவ இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடாகும். பொதுவாகப் பண்பாட்டுச்சின்னங்களின் சுமைதாங்கிகளாக அனோக சமூகங்களில் பெண்களே காணப்படுகின்றனர். பண்பாட்டுக்கூறுகள் பலபெண்களிற்குப் பாதகமாக அமையினும் அவைபற்றிய விமர்சனங்கள் இன்றி அவற்றின் தொடர்ச்சி வலியுறுத்தப்படுகின்றது. இவ்விடயமும் அனேக இனத்துவப் போராட்டங்களில் அவதானிக்கக் கூடிய தொன்றாக உள்ளது.
மேலும் இனத்தை விருத்திசெய்தல், போராட்டம் மேலும் வலுவடைந்து ஆயுதப்போராட்டமாக உருவம் எடுக்கினற போது போருக்கு ஆட்சேர்த்தல் போன்றவை பெண்களுடைய மீள் உற்பத்திச் செயற்பாட்டுடன் தொடர்புடையவை. அவை அனேகமான வேளையில் பெண்கள் மேற்சுமத்தப்படு வனவாகவே உள்ளன. மறுபுறத்தில் ஆதிக்கம் செலுத்தும் இனத்தின் செயற்பாடுகள் வேண்டும் என்றே சனத்தொகைப் பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தல் என்ற பெயரில் பெண்கள் மீது தமது தீர்மானங்களைச் சுமத்துவதாக அமையக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங் களில் பெண்கள் விழிப்புணர்வுடன் செயற்படுவதும் பெண்கள் இயக்கத்தின் அவசியமும் வேண்டப்படுவதாகவுள்ளது.
84

இவ்வாறு பலசந்தர்ப்பங்களில் இனத்துவமும் பால்நிலையும் தொடர்புடைய சமூகக்கூறுகளாவுள்ளன. எனினும் சமூகங்களுக்குச் சமூகம் இத்தொடர்பு மாறுபட்ட வடிவத்தினை எடுக்கும். ஒரு சமூகத்திலுள்ள பெண்கள் இயக்கங்களின் செயற்பாடு, இனத்துவ அடையாளத்திற்கான செயற்பாடு, சமூக அரசியல் பொருளாதார சூழ்நிலை, வரலாறு என்பன சார்ந்தே இத்தொடர்பை விளங்கிக்கொள்ளலாம்.
இனத்துவ அடையாளமா பால் அடையாளமா குறிப்பிட்ட நிலையில் முனைப்புப்பெறுகின்றது என்ற கேள்வி மிகவும் சிக்கலானதாகும். பொதுவாக இனத்துவ இயக்கங்கள் பால்நிலை அடையாளத்தினை இனத்துவ அடையாளத்துள் அடங்கும் பல அடையாளங்களுள் ஒன்றுதான் என்ற வாதத்தை முன்வைப்பர். இவ்விரண்டு வாதங்களும் கவனமாக அணுகப்பட வேண்டிய இரு விடயங்களே ஏனெனில் பெண்களை தனிநபர்களாக எடுத்துக்கொள்ளும் போது இனத்துவம் சார்ந்த மேலாதிக்க நிலைகளுக்கு அவர்கள் எவ்வகையில் முகம்கொடுக்கின்றனர், தந்தைவழிச்சமூகம் சார்ந்த மேலாதிக்க நிலைமைகளுக்கு எவ்வகையில் முகம் கொடுக்கின்றனர் இந்த இரண்டிலும் எதனை முதன்மைப் படுத்துகின்றனர் . இரண்டையும் எவ் வகையில் இணைத்துக்கொள்கின்றனர். இவ்விரண்டுவிடயங்களையும் கருத்திற்கொள்ள முடியுமா போன்ற கேள்விகள் சிக்கலானவையே, குறிப்பிட்ட சமூக சூழ்நிலைக்கு ஏற்ப அதாவது மேலாதிக்க நிலைமைகளின் தன்மைக்கேற்பவே இவை அமையும் என்பதே பிரதான காரணமாகும்.
இலங்கையில் மலையகத்தில் வாழ்கின்ற, குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் வாழ்கின்ற பெண்களின் நிலைமையை பால்நிலை, இனத்துவம் என்கின்ற இரு காரணிகளின் இணைவாகச் சிந்தித்தல் என்பது இன்றைய சூழ்நிலையில்

Page 53
அவசியமானதொன்றாகவே தென்படுகின்றது.
மலையகத்தில் பொதுவான் போக்குகளில் ஆய்வறிவாளர்கள், இலக்கியவாதிகள், உயர்குழாத்தினர், மத்தியதரவர்க்கத்தினர், வர்த்தகர்கள் எனப்பலரிடையே எழுச்சிபெற்றுவரும் இனத்துவம் சார்ந்த சிந்தனை என்பது ஒரு புறமும் மலையகத்தில் வாழ்கின்ற, குறிப்பாக தேயிலைத்தோட்டங்களில் வாழ்கின்ற பெண்களது நிலைமை என்பது மறுபுறமும் இரண்டு தொடர்புள்ள மாறிகளாக இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
மலையகத்தில் பொதுவான போக்குகளில் நடைபெறும் தனித்துவத்திற்கான தேடல் எத்தகையது என விளங்கிக் கொள்வது ஒரு நோக்கமாகவும் மலையகத்தில், தோட்டங்களில் வாழும் பெண்களது பிரச்சனைகளை விளங்கிக்கொள்வது பிரதான நோக்காகவும் இவ்வாய்வில் அமைகின்றன.
தேயிலைத்தோட்டங்களில் வாழும் பெண்களது நிலைமை என்ற எமது பிரதான கவனிப்பிற்கு வருமுன், மலையத்தில் பிரதான போக்குகளில் நடைபெற்றுவரும் தனித்துவத்திற்கான தேடல் என்பதை முதலில் இங்கு மலையகமக்களின் வரலாறு சார்ந்த ஒரு விடயமாக நோக்குவோம்.
ஏற்கனவே நாம் எடுத்துக்கொண்ட இனத்துவம் சார்ந்த பொதுவான பிரச்சனைகள் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் பெண்களையும் பாதிப்பனவாகவே உள்ளன. இலங்கை அரசியலில் இனத்துவம் முனைப்புப்பெற்ற ஒரு மாறியாக இருக்கின்ற விடத்து அரசியலில் மலையகமக்கள் பின் தள்ளப்படுபவர்களாக இருக்கின்ற போது அவ்விடயத்தில் பெண்களும் அடங்குவர். எனினும் இவ்வாறானதொரு இனத்துவம் சார்ந்ததாக பின்தள்ளப்பட்ட ஒரு குழுமம் தமது
86

அடையாளத்தை தேடும் முயற்சியானது சமூக விஞ்ஞானி களால் நேர்நிலையாக நோக்கப்பட வேண்டும் என வாதிடும் அதே நேரம் இவ்வினத்துவமுனைப்பில் பெண்களுடைய பங்களிப்பு என்ன அவர்களுக்குக் கொடுக்கப்படும் இடம் என்ன எனக்கவனிக்கின்ற போது, பெண்கள் அவற்றில் கூடிய ஈடுபாடுடையவர்கள் என்பதை வலியுறுத்திக்
din (DOLptu Figil.
இனத்துவம் சார்ந்ததாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளாக சுரண்டல், சனத்தொகைக்கட்டுப்பாடு, பாலியல்வன்முறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இங்கு பெண்கள் இனத்துவரீதியாக மலையகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது மட்டுமே அவர்கள் பாதிக்கப்படுவதற்கான பிரதான காரணம் எனக் கூறமுடியாது. பெண்களாக அவர்கள் இருப்பதினாலேயே இனத்துவரீதியாக மேற்கூறியவாறான கூடுதல் பாதிப்புகளிற்குள்ளாகின்றார்கள். அதனால் பெண்கள் என்ற அடையாளத்துடன் இனத்துவ ரீதியான பிரச்சனைகளை அணுகவேண்டிய வர்களாக மலையகப்பெண்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக சாதி, வர்க்கம், போன்ற மாறிகளை எடுத்து நோக்குகின்ற போது பெண் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தனிப்பட்டனவாக உள்ளன. இவற்றைக் கருத்திற் கொள்ளும் போது அடித்தளமக்கள் என்று சொல்லக்கூடிய வகையிலான தமிழ்ப் பெண் தோட்டத் தொழிலாளருடைய எழுச்சி என ஒன்று நிகழ்வது அவசியமாக உள்ளது. அத்தகைய போக்கு மலையக் சமூக மாற்றத்தில் இன்னமும் தென்படவில்லை.
சாதி, வர்க்கம், பால்நிலை இனத்துவம் என்ற சமூக மாறிகளினது பிரச்சனைகள் பல்தன்மைவாய்ந்தன. இவை சார்ந்ததான இயக்கங்கள் எல்லாம் சமாந்தரமாக தோற்றம் பெற்று சமாந்தரமாக முனைப்புப் பெறும் போது தான்
87

Page 54
இவற்றில் எது முதன்மையான அடையாளம் என்பதைக் கண்டுகொள்ளலாம். ஒரு காரணிதான் பெண்களைக் கூடுதலாகத்தாக்குகின்றது எனக் கூறமுடியாது.
இனத்துவமுனைப்புபெறும் ஒரு போராட்டத்தில் பெண்கள் தீவிரமாகப் பங்குபற்றாதவிடத்து பெண்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகம் உண்டு. இக்காரணத்தினால் பெண்கள் தமக்கென பெண்நிலை சார்ந்ததான இயக் கங் கங்களை மலையகத்தில் பெருந்தோட்டங்களில் உருவாக்கிக்கொள்வது அவசியமாகும் அவ்வாறனதொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே பெண்களுடைய பிரச்சனைகள் உரியவகையில் வெளிப்படுத்தப்படவும் அணுகப்படவும் வாய்ப்புண்டு.
88

மாறிவரும் மலையகமும் பெண்களும்
மலையகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
சமூகரீதியானவை பொருளியல் ரீதியானவை அரசியல் ரீதியானவை
சமூக அரசியல் பொருளியல் காரணிகளை தனித்தனியே பகுப் பாய்வு செய்வது, ஒரு சமூக சூழ்நிலையில் கடினமானதாகும் ஏனெனில் அவை ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையன. எனினும் விளங்கிக்கொள்ளலை இலகுபடுத்தும் வகையில் இங்கு மூன்றுவகையான தலையங்கங்களின் கீழ் பகுப்பாய்வு செய்கின்றோம்.
சமூகரீதியான மாற்றங்களில், குறிப்பாக மலையக மக்களிடையே, தமது இருப்பு தொடர்பாக ஏற்படும் விழிப்புணர் வினைக் குறிப்பிடலாம். இனரீதியான உணர்வு குறிப்பாக தமக்கு வழங்கப்படாத உரிமைகள், தாம் ஒதுக்கப்படல் என்பதை அறிதல், வன்செயல்களுக்குட்படல், வெளியிடங்களிற்குச் செல்ல முடியாது இருத்தல் போன்றவை சார்ந்ததாக தொழிலாளர்களுக்கு இருக்கின்ற தாயினும் நகரங்களில் ஆய்வறிவாளர்களிடையேயும், மத்திய,

Page 55
உயர்வர்க்கத்தினரிடையேயும் ஏற்பட்டுவரும் அடையாளம் தொடர்பான விழிப்புணர்வு, அரசியலாக தொழிலாளர் மட்டத்தில், குறிப்பாக பெண்களிடையே வெளிப்படையாக அவதானிக்கக் கூடிய வகையில் ஏற்பட்டுவருவதாக இல்லை. எனினும் இவ்வாறான மாற்றங்கள் பெண்களைப் பாதிப்பனவாகவே உள்ளன.
அரசியல் ரீதியான மாற்றங்கள் எனும் போது தேர்தல்கள் மூலம் மலையகமக்கள் முக்கியத்துவப்படுத்தப்படும் போக்கு, தேர்தல்கள் மூலம் பதவிக்குவரும் அரசு அமுல் படுத்தப்படுகின்ற திட்டங்கள், வழங்குகின்ற வசதிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம். தோட்டங்கள் தமிழ்த் தொழிலாளரை கூடுதலாக உள்ளடக்கியிருப்பதால் இலங்கை அரசியலில் அவர்கள் முக்கியத்துவம் பெறுபவர்களாக உள்ளனர். இலங்கையில் குடியமர்ந்த காலத்திலிருந்து இற்றைவரை இம்முக்கியத்துவம் வெளிப்படுவதாக உள்ளது. குறிப்பாக குடியுரிமை, வாக்குரிமை குடியிருக்கின்ற நிலம் என்பன அரசியல் விவாதங்களிற்கு உட்படுகின்ற விடயங்களாக உள்ளன. மலையக அரசியல் என்பது குறிப்பாக ஆய்விற்குட்படாத விடயமாகினும் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.
பொருளியல்ரீதியான மாற்றங்களை எடுத்துக்கொள்ளும் போது தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுவரும் தனியார் மயமாக்கல் கொள்கை முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
இவ்வாறனதொரு பின்னணியிலேயே மலையகமக்களின் பிரச்சனைகள் சிந்திக்கப்பட வேண்டியனவாக உள்ளன. இப்பிரச்சனைகளில் தொழிலாளர்களுடைய பிரச்சனைகள் தீவிரமானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளலாம்.
90

பெண்களுடைய பிரச்சனைகளை எடுத்துக்கொண்டால், குறைந்த வேதனம், குறைந்த, நிச்சயமற்ற வேலைநாட்கள், மோசமானவாழ்க்கைநிலைமை, மோசமான தொழில்நிலைமை, நிலமற்றதன்மை, அடிப்படை உரிமை மீறல்கள் எனப்பலவற்றைக் கூறலாம். சாதி, வர்க்கம், பால் எனும் மாறிகள்சார்ந்த மிகவும் அடித்தளநிலையில் இருப்பதால் இவர்கள் பாதிப்படைவது கூடுதலாக உள்ளது. இத்தகைய பின்னணியில் மட்டுமே பெண்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருப்பதால் இப்பகுதியில் முதலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அணுகுவதும் பின்னர் ஆடைதொழிற்சாலை களில் பெண்கள், மத்தியகிழக்கிற்குச் செல்லும் பெண்கள் எனும் இருவிடயங்களைக் கவனிப்பதும் பொருத்தமானதாகும்.
பெண் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள்.
குடியுரிமை, வாக்குரிமை, இனத்துவம், நிலமற்றதன்மை தோட்டத்தொழிலாளர்களின் ஏனைய பிரச்சனைகள் என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவையாக உள்ளன. இவ்வாய்வில் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வரும் விடயமான இனத்துவம் என்பது மலையகமக்களுடைய வாழ்வில் குறிப்பாக தொழிலாளர் வாழ்வில் கூடுதல் முக்கியத்துவம் உள்ள விடயமாக உள்ளது. இலங்கையில் உள்ள ஏனைய இனத்துவங்களைச் சேர்ந்த மக்கள் மலையகமக்களை, குறிப்பாக தொழிலாளரை குறைவாக நடத்துவதால், வர்க்கம் சார்ந்ததாகவும் வரலாறு சார்ந்ததாகவும் தமது அடையாளத்தைப் பேணவேண்டிய நிலமை ஒன்று இவர்களுக்குண்டு. இலங்கையில் பெரும் பொருளியல் பங்களிப்பினைச் செய்பவர்களாக இருந்தும் அப்பங்களிப்பு மதிக்கப்படாமை, குடியுரிமை, வாக்குரிமைப் பிரச்சனைகள் இலங்கை அரசியலில் முக்கியத்துவம் உடையவர்கள் என்பது
91

Page 56
உணரப்படாமை போன்றவை இவர்களை பாதித்தன என்பதும் இங்கு மனங்கொள்ளப்படவேண்டும். அதனால் கறுப்பர், பெண்கள் இந்தியாவில் தலித்துக்கள், என்ற பொருள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் நிலையில் உள்ளதைப் போலவே மலையக மக்களுடைய பிரச்சனைகள் குறிப்பாக தொழிலாளரின் அதிலும் குறிப்பாக பெண் தொழிலாளரின் பிரச்சனைகள் உள்ளன.
தொழிலாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறிய லயன்களில் வாழ்பவர்களாக, வாழவேண்டியவர்களாக உள்ளனர். அந்த லயன் அறைகள் கூட அவர்களஞக்குச் சொந்தமானதாக இல்லை. அதில் ஏதாவது மாற்றங்களைச் செய்ய முடியாதவர்களாகவும் உள்ளனர். லயன்கள் நிர்வாகத்திற்குச் சொந்தமானவையாகும். இந்த லயன்களை தொழிலாளருக்கு உரியதாக மாற்றுவது என்ற கதைகளை அரசாங்கம் தொடர்புசாதனங்களில் கூறிவருகின்றதாயினும் உண்மையில் அவ்வாறான திட்டத்தை அமுல்படுத்தும் முயற்சிகள் இன்றுவரை கைகூடவில்லை. 1972ல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன் நிலமற்ற தன்மை என்பது பூதாகாரமான ஒரு பிரச்சனையாக வெளித் தெரியத் தொடங்கியது. தொழிலாளர் விவசாயம் செய்வதற்கோ கால்நடை வளர்ப்பதற்கோ வீடுகட்டுவதற்கோ நிலம் இல்லாத நிலையில் உள்ளனர். இவ்வாறு நிலமற்றதன்மை, வேறு இடங்களுக்கு இடம் பெயரக்கூடிய வசதி இல்லாமை என்பன தொழிலாளரை தோட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போடுகின்ற சில காரணிகளை உண்டுபண்ணிவிட்டது. எனினும் நகரங்களில் உள்ள வர்த்தகர்கள், உயர்வர்க்கத்தினர் மத்தியதர வர்க்கத்தினர் என்போர் பணம் தந்த செல்வாக்கு, சுதந்திரம், காரணமாகவும் (தொழிலாளருடன் ஒப்பிடும் போது) குடியுரிமை, உடையவர் என்பதனாலும் நகரங்களில் நிலத்தை
92

வாங்கக்கூடியவர்களாகவும் உள்ளனர். மலையகத்தில் அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு பெரிய அளவில் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுபவர்களாகவும் மதுபானக்கடைகளை வைத்திருப்பவர்களாகவும் உள்ளனர்.
இதனால் குடியுரிமை, வாக்குரிமை தொடர்பானதும் அந்தஸ்து தொடர்பானதுமான பிரச்சனைகள் பெண்களைக் கூடுதலாகப் பாதிப்பதாக உள்ளன.
பெண் களுக்கும் குடியுரிமைக் குமான தொடர்பு , பெண்களுக்கும் வாக்குரிமைக்குமான தொடர்பு பெண்களுக்கும் நிலமற்ற தன்மைக்குமான தொடர்பு என்பன மிகவும் பலமானவையாகும். பெண்களை ஆட்களாகவும் பொருளியல் அரசியல் ஆகியவற்றில் பங்குபற்றுபவர்களாகவும் தமது அந்தஸ் தினையும் இருப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்பவர்களாகவும் கருதுமிடத்து இப்பிரச்சனைகள் அவற்றிக்கு தடையை ஏற்படுத்துபவையாக உள்ளன. பெருமளவிலான தொழிலாளர் தற்போது வாக்குரிமை உடையவர்களாக இருந்தும் பலர் இன்னமும் அவற்றைப் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளனர்.
கண்ணம்மா என அழைக்கப்படக்கூடிய பெண் தனது சகோதரர்கள் கணவர் எல்லோரும் இறந்து போய்விட்ட காரணத்தால் தனது மகள் திருமணஞ்செய்து வந்த தோட்டத்தில் மகளுடன் வசிக்கிறார். இவர் ஓய்வு பெற்று விட்டதால் சந்தா கட்டுவதில்லை. இவர் பிறந்துவளர்ந்த தோட்டத்திலிருந்து தேர்தலின் போது வாக்களிக்கும் அட்டை தற்பொழுது வசிக்கும் தோட்டத்திற்கு மாற்றப்படவில்லை. துரையுடன் கதைத்து பெறப்படும் கடிதத்தினுடாகவே அவ்வாறு மாற்றலாம். இவரது கருத்தில் அவ்வாறு கடிதத்தைப் பெறுவது சிரமமாகும். (அலைச்சல்) அவர்
93

Page 57
சந்தாகட்டாததால் சங்கத்தவர்களும் அம்முயற்சியில் ஈடுபடுவதில்லை. இக்காரணத்தினால் இவர் வாக்களிப்ப தில்லை.
இவ்வாறு நிர்வாகத்தில் இருக்கின்ற இறுக்கமான நடைமுறைகள் தொழிற் சங்கங்களின் உதாசீனம், கல்வியறிவின்மை போன்ற பல காரணங்களினால் வாக்குரிமை இருக்கின்ற பெண்களும் வாக்களிப்பதில்லை.
இவை தவிர கல்வி, சுகாதாரம், மனித உரிமைமீறல்கள், சனத்தொகைக்கட்டுப்பாடு தொடர்பான பிரச்சனைகள் எனப் பல பிரச்சனைகள் பெண்களைப் பாதிப்பனவாக உள்ளன.
கல்வி
1920களில் கல்விச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதனுாடாக தோட்டங்களில் பாடசாலைக்குச் செல்வது கட்டாயமாக்கப் பட்டது. இது ஆரம்பக்கல்வியை குறிப்பாக தமிழில் எழுத வாசிக்கப்பழகுவதற்காக இருந்தது. 1904ல் 2000 பிள்ளைகள் பாடசாலையில் இருந்ததாகவும், 1930களில் 26000 பிள்ளைகள் இருந்தாகவும், 18% கல்வியறிவு பெருந்தோட்டங்களில் நிலவியதாகவும் அதில் 7.1% பெண்கள் இருந்ததாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன (Jayawardena, 1972:35).
1972ல் அரசாங்கம் தோட்டங்களைப் பெறுப்பெடுக்கும் வரை தோட்டங்களில் உள்ளவர்களின் சமூகநலன், கல்வி, சுகாதாரம் தொழில்நிலமைகள் வாழ்க்கை நிலமைகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்திற்குரிய பொறுப்புக்களாகக் கொள்ளப்படவில்லை. 1972ல் இலங்கை அரசாங்கம் தோட்டங்களைப் பொறுப் பெடுத்ததிலிருந்து சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. IRDP,PSEDP போன்ற திட்டங்களை 80களில் தோட்டங்களில்
94

அமுல்படுத்தப்பட்டன. இத்திட்டங்களிற்கு SIDANORD, GTZ போன்ற நிறுவனங்கள் உதவிசெய்தன எனினும் அரசாங்கம் 70களிற்குப் பின் பல தமிழ்ப்பாடசாலைகளை மூடியதுடன் மலையகத்தில் கல்வியில் இனத்துவரீதியாக சிங்களமக்களுக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்துவந்திருக்கின்றது. 70களுக்கு முன்னாலும் சரி தற்பொழுதும் சரி நிர்வாகமும் அரசும் தோட்ட வேலைகளுக்கு கல்வி அவசியமில்லை என்ற கருத்தைக் கொண்டுள்ளதுடன் அதற்கான வழிவகைகளை எடுக்கத் தேவையில்லை என்ற போக்கையே காட்டி வருகின்றது. அதனால் ஆகக்கூடியது ஐந்தாம் தரம் மட்டும் உள்ள பாடசாலைகளே கூடுதலாக இயங்கி வந்தன. 13 வயதில் தோட்டங்களில் பெயர் பதியக்கூடிய நிலமை அக்காலத்தில் இருந்தது. இரசாயானம் மூலம் களைகளை அகற்றும் வழமை அப்பொழுது இருக்கவில்லை ஆகையால் சிறுவர்கள் கூடுதலாக வேலைக்கமர்த்தப்பட்டனர். மேலும் பெண்களை விடக் குறைந்த சம்பளமே சிறுவர்களுக்கு வழங்கப்பட்டதால் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது இலாபகரமாக இருந்தது. இன்றைய நிலமைபோல் அல்லாமல் அன்றைய நிலைமையில் தொழில்வாய்ப்பு தோட்டங்களில் அதிகமாக இருந்தது. இக்காரணத்தால் வறுமைகாரணமாக பிள்ளைகள் தொழில் செய்வதையே விரும்பினர். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
85/86ல் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார ஆய்வில் 10-14 வயதெல்லைக்குட்பட்டவர்களிடையே கல்வியறிவு வீதம் 54.73% ஆகவும் 50-54 என்ற வயதெல்லைக்குட்பட்ட வரிடையே 27.28% ஆகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. தமிழ்த் தொழிலாளர்கள் கூடுதலாக உள்ள இடங்களில் ஏனைய இனத்துவங்களுடன் ஒப்பிடும் போது குறைவான தமிழ்ப் பாடசாலைகள் உள்ளதுடன் ஆசிரியர் மாணவர் விகிதாசாரமும் குறைவாக இருந்தும் சிங்கள பாடசாலை
95

Page 58
களின் எண்ணிக்கை கூடுதலாகவும் உள்ளது.
சிறீபாத கல்லூரியானது மலையமக்களுடைய கல்வியைக் கருத்திற் கொண்டு கட்டப்பட்டதாயினும் இன்றைக்கு மலையகத் தமிழரை விட சிங்களவரே கூடுதலாகப் படிக்கின்றனர். சிங்களவரே கூடுதலாகத் தொழில் புரிகின்றனர்.
பெண்கள் பொருளியல் தேவைகளுக்காக குறைந்த வயதில் வேலைக்குச் சேர்வது அவர்களுடைய கல்வியைப் பாதிக்கும் மற்றுமொரு காரணியாகும். குடும்பப்பொறுப்பை கூடுதலாகச் சுமக்க வேண்டியிருத்தல் இதற்கு பிரதான காரணமாகும். இதனால் கல்வி பாதிக்கப்படுவது மட்டு மல்லாமல் பெருந்தோட்டங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை, அரசியலில் பங்குபற்றாமை என்பனவும் இதன் விளைவு களாகின்றன. இதனால் ஆண்கள் பெண்களைக் கட்டுப்படுத்துகின்ற தன்மை மீளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
எமது ஆய்வில் நாம் சந்தித்த பெண்களையும் பெற்றோரையும் எடுத்துக்கொள்ளும் போது பெண்கல்விக்கு ஆண்களை விட குறைவாக முக்கியத்துவம் கொடுப்பதாக யாரும் கூறவில்லை. (ஆனால் ஆண்குழந்தை விருப்பு இருக்கின்றது). தற்போதைய நிலையில் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் சித்தியடையாததால் அதிலும் கூடுதலானோர் கணித பாடத்தில் சித்தியடையாததால் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் படிப்பை நிறுத்தியுள்ளனர். சில காலத்திற்கு முன் பெண்கள் பருவமடைந்ததும் பாடசாலையிலிருந்து நிறுத்தும் வழக்கம் இருந்ததாகவும் கூறுகின்றனர். எனினும் பெண்குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கின்ற வேலைச்சுமை, ஏனைய பொறுப்புக்கள், தடைகள் என்பன கல்வியைப் பாதிக்கச் செய்கின்றன.
96

என்போரின் எண்ணிக்கை என்பன ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே உள்ளன. தோட்டங்களில் கருச்சிதைவு, சிசுமரணம் என்பன கூடுதலாக உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் கூடுதலான இறப்பு, சிசுமரண வீதம், தாய் மரணம் என்பன பதிவாகியுள்ளதை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றிக்கான காரணங்களாகப் பயிற்சியளிக்கப்பட்ட தாதிமார்/ மருத்துவிச்சிகள் பற்றாக்குறை, தாய்மார் போஷாக்கில்லாது இருத்தல், சுகாதாரமற்ற நிலைமைகளில் குழந்தைகள் பிறப்பது போன்றனவற்றைக் கூறலாம். கருப்பை இறக்கம் என்பது பொதுவான நோயாக பெண் தொழிலாளர்களிடையே உள்ளது. இதற்கு மலைகளில் தொடர்ந்து ஏறுதல, பாரமான தேயிலைக்கொழுந்து அடங்கிய கூடைகளைச் சுமத்தல் என்பன காரணங்களாக கூறப்படுகின்றன. வெறுங்காலுடன் வேலை செய்தல், குளிரங்கி அணியாமை, லயன் அறைகள் வசதியற்றனவாக இருத்தல் போன்ற காரணங்களால் கூடுதலான பெண்கள் சளி, இருமல் காய்ச்சல் போன்ற நோய்களிற்கு ஆளாகின்றனர். இரும்புச்சத்துக் குறைபாடு, அயடீன் குறைபாடு என்பன பொதுவாக பெண்களிடம் காணப்படுகின்றன. இதை தவிர தோட்டப்புறங்களில் நாடாப்புழுக்கள் இருப்பது அனேகமாக எல்லாத் தொழிலாளிகளுக்கும் உள்ள பிரச்சனையாகும். இவற்றில் பல பிற சுகாதாரம் சார்ந்த ஆய்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களாகும்.
லயன் கள் பொதுவாக அலுமினியம் கூரையால் வேயப்பட்டனவாகவும் நிலமும் சுவரும் மண்ணால் ஆனதாகவும் ஒரு சிறிய குடும்பத்திற்கு ஒரு சிறிய அறையும் விரிவாக்கப்பட்ட குடும்பத்துக்கு இரண்டு அறைகளும் கொடுக்கப்படுகின்றன. சுகாதாரமுறையில் அமைக்கப்பட்ட மலசலசுடங்கள் மிகவும் குறைவான அளவிலும், கிடங்குகள்
97

Page 59
நாம் சந்தித்த பெண்களில் ஒருவர் மட்டும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றார். இவருடைய தாயார் ஒரு தோட்டத் தொழிலாளி, தந்தையார் ஒரு ஓவியர். 1983 வன்செயலிற்கு முன்னால் இவர்கள் கொழும்பில் இருந்துள்ளனர். இக் காரணத்தினால் இக் குடும் பத்தின் நிலைமை தோட்டத்தொழிலாளர் நிலைமையைவிட சற்று வித்தியாசமாக உள்ளது.
சிறீபாத கல்லூரியில் கல்விகற்ற/கற்கின்ற ஒரு பெண்ணையும் மூன்று ஆண்களையும் சந்தித்தோம். அது போல தோட்டங்களிலேயே இருந்து கல்விகற்று ஆசிரியர்களான மூன்று ஆண்களைச் சந்தித்தோம் பெண்கள் எவரையும் சந்திக்கவில்லை.
பெண்களுடைய கல்வியானது வறுமை, இனத்துவம், பண்பாடுசார்ந்த கருத்தியல் எனப்பல காரணிகளால் தடைப்படுவதாக இருக்கின்றது. மறுபுறத்தில் பெண்களுடைய கல்விதடைப்படுவது ஏனைய பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இவ்வாறான ஒரு சுற்று வட்டத்தில் பெண்களுடைய வாழ்க்கை இயங்குவதால் பெண்களுடைய கல்வியின் முக்கியத்துவம் கொள்கை வகுப்பாளர்களின் கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒன்றாக உள்ளது.
சுகாதாரம்
சுகாதாரம் தொடர்பாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் லயன்களின் வசதியற்ற தன்மை, தண்ணிர் பற்றாக்குறை போஷாக்கின்மை வேலைப்பளு, மலசசுட வசதியின்மை. கல்வியறிவின்மை போன்றகாரணிகளுடன் தொடர்புடையன. சனத்தொகைக்கு ஏற்ப வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, படுக்கைகளின் எண்ணிக்கை, வைத்தியர்கள், தாதிகள்
98

கூடுதலான அளவிலும், மலசலசுட வசதிகள் அற்றவர்கள் பலராகவும் காணப்படகின்றனர்.
UNICEF, IRDP UNFPA (3 fT6öIsp 526) 6OTr556 957g5TU நடைமுறைகளில் கூடுதல் கவனஞ் செலுத்தி வருகின்றன எனினும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை என்றே கூறலாம்.
ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவ அறை (ward) இருக்க வேண்டும். என்ற கட்டாயம் இருக்கின்றது. எனினும் எல்லாத்தோட்டங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. மகப்பேற்று மருத்துவ அறை இருந்தாலும் அது சரியாகப் பேணப்படுவதில்லை. இதனால் பெண்கள் தோட்டத்தில் உள்ள மகப் பேற்றுமருத்துவ நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். ஆயினும் குழந்தை ஒன்றைப் பிரசவித்த தாய்க்கு அவரது சம்பளத்திலிருந்து மகப்பேற்று மருத்துவ நிலையத்திற்கு கட்ட வேண்டிய பணம் கட்டாயமாக அறவிடப்படுகின்றது. மகப்பேற்று மருத்துவ நிலையத்திற்குச் செல்வதைத் தவிர்த்து வீடுகளில் மருத்துவிச்சியினுடைய உதவியுடன் குழந்தைப்பேறுகள் நிகழந்து வந்தன. தற்பொழுது குழந்தைப்பேற்றின் போது சம்பவிக்கும் மரணங்கள் தொடர்பான விழிப்புணர்வு காரணமாக கூடுதலான பெண்கள் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்கின்றனர்.
நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்குச் செல்வது போக்குவரத்து வசதிகள் இன்மை காரணமாக சிரமமானதாக உள்ளது. பெண்களுக்கு பிரசவலி ஆரம்பமான பின்னர் லொறிகளிலேயே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படு கின்றனர். இவ்வாறான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் லொறிகள் தோட்டங்களில் கொழுந்தைக் கொண்டு
99

Page 60
செல்லப்பயன்படுத்தப்படும் லொறிகளாகும்.
பெண்கள் பிரசவத்தின்போது குறிப்பிட்ட தோட்டத்தில் உதவியில்லாத போது தமது தாய்வீட்டிற்குச் செல்வதையே விரும்புகின்றனர். இவ்வாறு தாய்வீட்டிற்கு அவர்கள் பிரசவத்திற்காகச் சென்றாலும் அவர்கள் வசிக்கும் குறிப்பிட்ட தோட்டத்தில் மகப்பேற்று மருத்துவ நிலையத்திற்கான பணம் அறவிடப்படுகின்றது.
வீட்டு வசதிகள்.
வீடுகள் மிகவும் மோசமான நிலையில் அமைக்கப்பட்டிருப்பது தோட்டங்களில் சமூகப் பொருளாதார பிரச்சனைக்களுக்கு பிரதான காரணியாக உள்ளது. குறிப்பாக சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளை எடுத்துக்கொள்ளலாம். மறுபுறத்தில் வீடுகள் மிகவும் மோசமான நிலையில் அமைக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களை வர்க்கரீதியாகவும் இனத்துவ ரீதியாகவும் அரசும் நிர்வாகமும் உதாசீனப்படுத்துவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. லயன்கள் வெளிச்சம் குறைவானதாக, காற்று இல்லாதவாறு அமைக்கப்படுகின்றன. வீட்டுக் கூரைகள் அலுமினியத்தினாலும் சுவர்களும் நிலமும் மண்ணாலும் (சில சந்தர்ப்பங்களில் சுவர்களிற்கு சுண்ணாம்பு பூசப்படும்) கட்டப்பட்ட லயன்கள் பலகாலமாக திருத்தப்படா மேலயே பேணப்படுகின்றன. தொழிலாளர் தாங்களாக தமது முயற்சியிலேயே திருத்தங்கள் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
மலசலகூட வசதியின்மை குடிநீர் வசதியின்மை, மின்சார வசதியின்மை போன்றன வீட்டு வசதிகளுடன் இணைந்த ஏனைய பரிரச் சனைகளாகும் . இவ்வாறு குறுகிய இடவசதிகொண்ட வீடுகள் இருப்பதால் பெண்கள் பாலியல்
100

வன்முறைக்கு உட்படுத்தப்படல், தகாத பாலியல் உறவுகளிற்கு வற்புறுத்தப்படல் என்பனவற்றிக்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது வறியமக்களுக்கு வீடுகளைக்கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாயினும் சிங்கள மக்களை மையமாகக் கொண்டே இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அவ்வகையில் மலையகத்தில் தமிழ்மக்களை இத்திட்டம் சென்றடையவில்லை.
பெருந்தோட்டங்களில் மொத்தமாக 183000 தொழிலாளர் குடும்பங்கள் இருப்பதாகவும் 78,8000 சனத்தொகையை பெருந்தோட்டங்கள் கொண்டனவாகவும் உள்ளன. அவர்களுக்கு ஒதுக்கப்படும் வீட்டுக் கூறுகளின் எண்ணிக்கை 17,8000 ஆக உள்ளன. லயன்கள் வசதியற்றனவாக உள்ளதுடன் அதிகரித்து வருவதாக இல்லை.(மாணிக்கம், 1995).
சனத்தொகைக்கட்டுப்பாட்டுத்திட்டங்கள்
கடந்த இருபதாண்டு காலப்பகுதியில் தோட்டங்களில் சனத்தொகைக்கட்டுப்பாடு சார்ந்த திட்டங்கள் இலங்கையின் ஏனைய பாகங்களை விட மிகவுந் தீவிரமாக அமுல் படுத்தப்பட்டு வருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையின் சனத்தொகைக்குப் பொறுப்பான அமைச்சு உட்பட ஏனைய குடும்பக்கட்டுப்பாடு சார்ந்த அமைப்புக்கள் இத்தகைய தீவிரபணியில் ஈடுபட்டுள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளுள் மிகவும் பிரதான முறையாக தோட்டங்களில் LRT முறைகாணப்படுகின்றது. எல்லாப் பெண்களுமே தான் 'ஆப்பிரேசன் பண்ணிக்கிட்டேன்’ என்று கூறுவதைக் கேட்கக்கூடியதாக உள்ளது. எமது ஆய்வில் நேர்காணப்பட்ட பெண்களின் கருத்துக்களுக்கமைய LRT
101

Page 61
செய்துகொள்வதற்காக கொடுக்கப்படும் பணத்திற்காகவே கூடுதலானவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். இவ்வாறனதொரு முறை அமைப்புக்களைப் பொறுத்தவரை வெற்றிகரமான ஒன்றாக இருந்தாலும் பெண்கள் இவற்றை உண்மையிலேயே குடும்பக்கட்டுப்பாடு சார்ந்த அறிவுடன்/ விழிப்புணர்வுடன் ஏற்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
LRT செய்து கொள்வதற்காக பண ஊக்குவிப்பும் 3 நாள் சம்பளத்துடன் விடுப்பும் கொடுக்கப்படுகின்றன. LRT செய்து கொள்ளும் பெண்கள் லொறியிலேயே மீண்டும் தோட்டங்களிற்கு அழைத்து வருகின்றனர். சத்திரசிகிச்சை வல்லுனர்களால் LRT செய்யப்படுவதில்லை என்பதையும் நிரந்தர முறையிலான LRT முறையையும் கூடுதலாக தோட்டங்களில் அமுல்படுத்தி வருவதாக பத்மா கொடித்துவக்கு தமது ஆய்வில் எடுத்துக் காட்டியுள்ளார். (No more Babies-options 1996 Oct No. 8 Padma Kotithuvakku gigs, பிள்ளைகளைப் பெறுதல் அதனால் தாய்மாருக்கு நோய் ஏற்படல் பொருளாதார ரீதியாக சமாளிக்க முடியாது போதல் என்பன தோட்டங்களில் பிரச்சனையாக இருப்பினும் குடும்பக்கட்டுப்பாடானது அதற்கேற்ற விழிப்புணர்வுத் திட்டங்களுடன் அமுல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அதுபோல சனத்தொகை கட்டுப்பாடு தோட்டங்களில் இனத்துவம் சார்ந்ததாக ஏற்படுத்தப்படுகின்றது என்ற கருத்தை மலையகத்தைச் சேர்ந்த ஆண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறான கருத்தில் உண்மையிருப்பினும் கூடுதல் பிள்ளைகளை பெறுதலை ஆண்கள் பெண்கள் மேல் சுமத்த முடியாது என்பதையும் கவனத்திற்கெடுக்க வேண்டும். இவ்வகையான சந்தர்ப்பங்களிலேயே இனத்துவம் என்பது பெண்களுக்குரிய விடயமாக பெண்களால் சிந்திக்கப்பட வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது.
102

பெண்களுடைய கல்வியில் ஏற்படும் மாற்றம், அந்தஸ்தில் ஏற்படும் மாற்றம் பெண்கள் இயக்கங்களின் உருவாக்கம் என்பவற்றினூடாகவே இவற்றிக்கு தீர்வு காணப்படலாம்.
தோட்டங்களில் பெண்களுடைய உரிமை மீறல்
பெண்களுடைய உரிமைகளை வரையறுத்துக் கொள்ளல் என்பது சட்டரீதியான விளக்கங்களுடன் தொடர்புடையது. இவ்வாறு வரையறுத்துக்கொள்ளல் என்பது நீண்ட சமூகவாழ்வில் பெண்களுடைய பங்குபற்றலுடனும் தொடர்புடையதாகும். பெண்கள் உரிமைகள் சர்வதேச மட்டத்தில் இயங்கிவருகின்ற பெண்நிலைசார்ந்த இயக்கங்களினால் வென்றெடுக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டவை என்பதால் அவை பண்பாடுகளை, நாடுகளை, பல எல்லைகளை ஊடறுக்கக் கூடியன. எனினும் பெண்களுடைய தேவைகள் உரிமைகள் என்பன நடைமுறையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளுடன் தொடர்புபட்டன. பெண்களாக குறிப்பிட்ட சமூக சூழலில் வாழ்வதால் ஏற்படும் அனுபவத்தினுாடாக விளங்கிக்கொள்ளப்படவேண்டிய விடயங்களாக அவை உள்ளன. குறிப்பாக பால்ரீதியான தொழிற்பிரிப்பினை விளங்கிக்கொள்வதனுடாவும் பெண்களுடைய அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றிக் கொள்ளும் பாங்கினை அறிந்து கொள்வதனூடாகவும் விளங்கிக்கொள்ளப்பட வேண்டியவை ιμπΘίο.
வேலைவாய்ப்பு தொடர்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான சமத் துவத்தை பேணுமுகமாக பெண்களுக்கெதிரான பாரபட்சங்களை நீக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல் அவசியமாகும்.
103

Page 62
குறிப்பாக,
a) எல்லா மனிதர்களையும் போல வேலை செய்வதற்கான
go faol D.
b) வேலைக்குச் சேர்த்துக்கொள்ளல் தொடர்பாக அடிப்படை
விடயங்களிலமைந்த (Criteria) தெரிவுமுறைகளை பெண்களுக்கும் பிரயோகித்தல்.
C) சுதந்திரமாக தமது தொழிலை தெரிவு செய்தல், பதவி உயர்வுக்கான உரிமை, வேலையின் நிச்சயமற்றதன்மை எல்லா வகையான நன்மைகள், வேலைநிலைமைகள் பயிற்சிகள் போன்றவற்றுக்கான உரிமைகள்.
இது போல பெண்களுடைய உரிமைகளில் அணிதிரளும் உரிமை, ஆகக்குறைந்த சம்பளவீதம், வருடவிடுமுறைகள், மகப்பேற்றுவிடுப்பு, ஓய்வுபெறும் உரிமை, சேமலாபநிதி தொடர்பான உரிமை என்பன உண்டு. இவற்றை நடை முறைப்படுத்துவது என்பது எமது நாடுகளைப் பொறுத்த வரை பெண்கள் இயக்கங்களினூடாகவே சாத்தியமாகின்றது.
தோட்டங்களில் பெண்களுடைய உரிமைகள் பலவாறாக மீறப்படுகின்றன. ஆண்களுக்கு ஒரு மாதிரியான வேலை நேரம் பெண்களுக்கு ஒரு மாதிரியான வேலை நேரம், பெண்களுடைய வேலை நேரத்திற்கு மேலதிகமாக கொழுந்தை நிறுப்பதற்கான நேரத்தை வைத்திருத்தல், நிச்சயமற்ற வேலை நாட்கள், நிரந்தர தொழில் புரிபவர்களாக இருந்தும் இன்னமும் மாதச் சம்பளமுறையை அமுல்படுத்தாமல் நாட்கூலியினடிப்படையில் மாதச்சம்பளத்தை வழங்குதல், போன்ற பல உரிமை மீறல்களை நாங்கள் இங்கு காணலாம். உதாரணமாக இன்னும் சிலவற்றை இங்கு கூறலாம். தொழிலில் பதவி உயர்விற்கு வழிவகை இல்லாது இருத்தல், மோசமான வேலைநிலைமைகள் உதாரணமாக குளிரில்,

சீரற்றபாதைகளில் போதியபாதுகாப்பின்றி தொடர்ச்சியாக நாள் முழுவதும் வேலை செய்தல், இவ்வாறான நிலைமைகள் இருந்தும் மருத்துவ வசதிகள் போதியளவு இல்லாதிருத்தல், மருத்துவச்செலவிற்கான படியோ அல்லது பாதுகாப்பான உடைகளோ இவர்களுக்கு வழங்கப்படவில்லை. மோசமான வாழ்விட நிலமைகள், சுகாதாரம் கல்வி நிலமற்றதன்மை புறக்கணிக்கப்படல், லொறிகளில் காப்பிணித்தாய்மார்களை வைத்தியசாலைகளிற்கு எடுத்துச் செல்லல், பிரசவம் முடிந்ததும் மீளவும் எடுத்துவரல் என்பனவும் இத்தகைய உரிமை மீறல்களே.
இவை தவிர பெண்கள் வன்முறைக்கு உட்படல் பாலியல் வன்முறைக்கு உட்படல் என்பனவும் தோட்டங்களில் உள்ள குறைபாடுகள் . குறிப்பாக வீடுகளில் கணவனின் குடிப்பழக்கத்தால் வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்படுத்தப்படல், குடும்பத்தில் தகாத பாலியல் உறவுசார்ந்த வன்முறைக் குட்படுத்தப்பட ல் , வேலைத்தளத்தில் கங்காணிகளினால், நிர்வாகிகளினால், மோசமாக நடத்தப்படல் என்பவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். சில்லறைச் சேஷ்டைகள் செய்து பெண்களிடம் தேவையில்லாத வார்த்தைகளைப் பிரயோகித்தல், பெண்களுடன் கூடுதலாகவும் அனாவசியமாகவும் பழகமுயலுதல், கையைப்பிடித்தல் போன்றன வெல்லாம் பாலியல் தொல்லைகளாகக் கருதப்படச் கூடியன. பெண்கள் பெண்களாக இருப்பதால் அனாவ சியமாக அதிகாரத்தைப் பிரயோகித்தல்,தேயிலை நிறையைச் குறைத்து எழுதுதல், வேலையால் விரட்டுதல் போன்றன தம் ஆசைக்கு இணங்காத பெண்களுக்கு வழங்கும் தண்டனைகள்.
இவை தவிர இனத்துவ ரீதியாக பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்களும் தோட்டங்களில்
105

Page 63
இடம் பெறுவதுண்டு. ஏனைய தொழிலாளர்கள் அதிகாரிகள், துரை அயல்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனப்பலர் இவ்வாறாக பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.
தோட்டங்களுடன் இணைந்ததாக செயற்படுகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களது உரிமைகளை துஷ்பிரயோகம் செய்வதையும் அவர்களைத் தொல்லைப் படுத்துவதையும் அறியக்கூடியதாக உள்ளது. அது போல தொழிற்சங்கங்களுள் பாலியல் தொல்லை நடைபெறுவதையும் பலர் எமக்குத் தெரிவித்துள்ளனர்.
இவை தவிர வெளிநாடு செல்வதற்காக பணத்தை பெண்களிடம் வாங்கி ஏமாற்றுகின்ற முகவர்களையும் தோட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது. சில சந்தர்ப்பங்களில் பணத்தை வாங்கி ஏமாற்றுவதுடன் பாலியல் தொல்லைகளுக்கும் உட்படுத்தியுள்ளமையை அறியக்கூடியதாக உள்ளது. அது போல வெளிநாடுகளுக்குப் பெண்களை அனுப்பி மோசமான வேலைநிலமைகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படல் போன்ற காரணங்களால் பெண்கள் திரும்பி வந்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தமது ஆபரணங்களை கால்நடைகளை விற்றுத்தான் பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு திரும்பி வருகின்ற போது இந்தப்பணத்தை முகவர்கள் திருப்பிக் கொடுப்பதில்லை. இவையெல்லாம் உரிமைகள் மீறல்களாகவே இருக்கின்றன.
இவ்வாறு பலவகையில் பெண்களுடைய உரிமைகள் தோட்டப்புறங்களில் மீறப்படுவதாக உள்ளது. பெண்களுக்கு பெண்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு அவசியமானதாக இருக்கின்றது.
106

மாற்றங்கள்
பெண்கள் தாங்களாகவே மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது என்பது மேற்கூறியவாறான பிரச்சனைகள், பெண்களுடைய வாழ்க்கை நிலமைகள் என்பவற்றைக் கருத்திற் கொள்ளுமிடத்து சாத்தியமுள்ளதொன்றாக இல்லை. சர்வதேசமட்டத்திலும் தேசியமட்டத்திலும் நடைபெறும் மாற்றங்களே பெண்களது வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவனவாக உள்ளன. குறிப்பாக இலங்கை அரசாங்கம் பின்பற்றி வருகின்ற தனியார் மயமாக்கல் கொள்கைகள், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், அன்னியச்செலாவணி உழைப்பை ஊக்குவித்தல் போன்றவை பெண்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தனியார் மயமாக்கல் என்பது தற்போது குறிப்பாக தோட்டங்களை 50 ஆண்டுகள் குத்தகைக்குவிடல் தொடர்பானதாக இருக்கின்றது. தோட்டத்தொழிலாளரின் வாழ்வில் பாரியதாக்கத்தை ஏற்படுத்திய விடயமாக 70களில் தேசியமயமாக்கல் காணப்படுகின்றது. அக்காலத்தில் பலர் வேலையிழந்தனர். பலர் வாழ்விடங்களை இழந்தனர். பஞ்சம் பட்டினி நோய் என்பவற்றிற்கு ஆளாகினர். அதுபோலான ஒரு மாற்றமே தனியார் மயமாக்கல் மூலமாக ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே காணப்படுகின்றது. சம்பள உயர்வுகள் ஓரளவிற்கு வேலை நிறுத்தங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளினுாடாக பெற்றுக்கொள்ளப் பட்டாலும் வேலைநாட்களில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. முன்னரைப்போல தொழில்வாய்ப்புகள் கட்டற்றதாக இல்லாமல் தற்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. தொழிளாளருக்கான வசதிகளும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவே இருக்கின்றது. வரவர தங்களது நிலமை மோசமாகி வருகின்றது என்ற கருத்தையே தொழிலாளர் கொண்டுள்ளனர். முன்னைக்கு இப்ப மோசம்'
107

Page 64
என்பது எல்லோருடைய கருத்தாகவும் உள்ளது.
இவ்வாறான நிலமையில் ஓரளவுக்கு படித்த பெண்கள் குறிப்பாக க.பொ.த சாதாரணதரம் வரைகற்று சித்தி எய்தாத பெண்கள் பெருந்தோட்டத்துறையிலுள்ள வெறுப்புக் காரணமாகவும், வேலையின்மை காரணமாகவும் ஏதோ ஒரு வகையில் தமது நிலமையையும் மாற்றிக் கொள்ளும் நோக்குடன் மாற்றுவழிகளை நாடுகின்றனர். தோட்டப் புறங்களில் பெண்களுக்குள்ள மாற்றுவழிகளாக ஆடைத் தொழிற்சாலைகளில் சேருதல் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுதல் ஆசிரியர்களாகச் சேருதல் போன்றன மாற்று வழிகளாக உள்ளன.
ஆடைத்தொழிற்சாலைகள்
மலையகத்தில் தோட்டப்புறங்களில் ஆடைத்தொழிற்சா லைகள் அமைக்கப்படுதல் என்பது அண்மைக்காலத் தோற்றப்பாடாக உள்ளது. தோட்டக்காணிகளே இவ்வாறு ஆடைத் தொழிற் சாலைகளை நிர்மானிப் பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. தோட்டங்களைச் சேர்ந்த பெண்களே கூடுதலாக ஆடைத்தொழிற்சாலைகளில் தொழில்புரிகின்றனர்.உரிமையாளர்கள் சிங்களவர்களாகவும் முஸ்லிம்களாகவும் வெளிநாட்டவராகவும் உள்ளனர். ஓரளவுக்குப் படித்த பெண்கள் தோட்டங்களில் வேலை செய்வதை விரும்பாத காரணத்தால் ஆடைத்தொழிற் சாலைகளில் தொழில் செய்வதையே விரும்புகின்றனர்.
ஆடைத்தொழிற்சாலைகளில் பெண்களை வேலைக்கு எடுக்கும் போது படித்தவர்களாக எடுக்கின்றார்கள். அங்கும் தோட்டத்தில் கிடைக்கும் சம்பளமே கிடைக்கிறது. தோட்டங்களில் வேலை செயவதைப்போலவே நீண்ட நேர
108

வேலையாகவும் திரும்பவும் திரும்பவும் ஒரே வேலையைச் செய்ய வேண்டியதாகவும் உள்ளது. பால் ரீதியாக பெண் களுக்கென வரைவிலக்கணப் படுத்தப் படும் வேலையாகவும் உள்ளது. தேயிலைத்தோட்டங்களைப் போல வேலை நிச்சயமில லாமலேயே இருக்கின்றது. ஆடைத்தொழிற்சாலைகள் தற்பொழுதுதான் மலையகத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதனால் தொழிலாளர்கள் உறவுகள் பற்றியோ தொழில் நிலமைகள் பற்றியோ சட்டங்கள் பின்பற்றப்படுவது குறைவாக உள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளும் வளர்ச்சி அடைந்த நிலையில் இல்லை. தொழிற்சாலைகளில் இரவு நேரங்களிலும் வேலை செய்ய வேண்டியுள்ளது. காலையில் 6 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் மீண்டும் மாலையில் 6 மணிக்கே திரும்பி வருகின்றனர். ஆடைத் தொழிற் சாலைகள் லயன்களிற்கு அருகில் தாபிக்கப்படுவதும் இல்லை. அதனால் இம்முறை நிண்ட நேர பிரயாணத்தை உள்ளடக்கியது. தோட்டங்களில் வேலை செய்வதைப் போல மழையிலும் வெயிலிலும் குளிரிலும் அட்டைக்கடியிலும் வேலை செய்யாவிட்டாலும் ஆடைத்தொழிற்சாலைகளும் கடினவேலையினடிப்படையில் அமைந்தனவே. துரசியிலும் சுகாதாரமற்ற நிலமைகளிலும் பெண்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. எனினும் தோட்ட வேலையில் வெறுப்பு அதில் அவர்கள் காட்டும் எதிர்ப்பு என்பவற்றினாலேயே ஆடைத்தொழிற்சாலைகளில் சேர்ந்துகொண்டுள்ளனர் எனக்கூறலாம்.
இரவில் ஆடைத்தொழிற்சாலைகளிலிருந்து வீடுதிரும்பும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுதலால் அவர்கள் பற்றிய அபிப்பிராயம் ஏனையோரிடம் நல்லதாக இல்லை. பாரம்பரியமாக உள்ள கருத்துக்கள் இதற்கு காரணமாக உள்ளன. வேலை கடினமானதாகவும்
109.

Page 65
இருப்பதால் ஆடைத்தொழிற்சாலைகளில் நீண்டகாலத்திற்கு பெண்கள் தொழில் செய்வதில்லை. •
மத்திய கிழக்கு நாடுகளிற்குச் செல்லும் பெண்கள்
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லுதல் என்ற தோற்றப்பாடும் ஆடைத்தொழிற்சாலைகளைப் போலவே மலையகத்தில் மிகவும் அண்மையில் உருவான ஒரு தோற்றப்பாடாகும். பெண்கள் பணிப் பெண்களாச் செல்லுதல் என்பதும் இனத்துவ ரீதியான ஒரு விடயம் என்பதை பல சமூகவியலாளர்களும் பால்நிலை கற்கைகளில் ஈடுபடுபவர்களும் எடுத்துக்காட்டியுள்ளனர். 1983ற்கு முன்னர் பெண்களும் குழந்தைகளும் கூடுதலாக வடக்கு கிழக்கு தெற்கு பிரதேசங்களில் பணியாட்களாக தொழில் செய்து வந்துள்ளனர். தற்பொழுது இனப் பிரச்சனை காரணமாக அவ்வாறு வடக்கு கிழக்கு பிரதேசங்களிற்கு செல்லுதல் தடைப்பட்டதனால் கொழும்பிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பெண்கள் பணிப்பெண்களாக தொழில் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அத்துடன் நமது நாட்டில் அரசினால் காட்டப்படும் ஏற்றுமதிப்பொருளாதார ஊக்குவிப்பு அன்னியச்செலாவணி ஊக்குவிப்பு தொடர்பான கொள்கைகள் இதற்கு காரணமாகும். முகவர் நிலையங்களின் அதிகரிப்பு, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் இல்லாதன்மை போன்றன இலங்கை முழுவதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பெண்கள் பணிப்பெண்களாகச் செல்லும் போக்கினை அதிகரித்துள்ளன.
மிகவும் அண்மைக்காலங்களிலேயே அரசாங்கம் ஒரு சில சட்டங்களையும் பெண்களுடைய பாதுகாப்புச் சார்பான நிறுவனங்களையும் இலங்கையிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தாபிக்க முயற்சி எடுத்து வருவதை அவதானிக்க
()

கூடியதாக உள்ளது. எனினும் இவை இன்னமும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. அதனால் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்களுடைய பாதுகாப்பை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாமலேயே உள்ளது. பெண்கள் முகவர்களினால் ஏமாற்றப்படல் பணம் கொடுக்காமல் வெளிநாடுகளில் ஏமாற்றப்படுதல் , பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுதல், மோசமான வேலை நிலைமைகளை எதிர்நோக்குதல் போன்ற பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
எமது ஆய்வில் நாம் சந்தித்த பெண்களில் சிலர் இவ்வாறாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்து வந்து நல்லநிலையில் உள்ளனர். அவர்களுடைய கருத்தில் இவ்வாறு வேலைக்குச் செல்வதில் ஏற்படும் வெற்றியும் தோல் வரியும் அவர் களிற்கு வாய் க்கும் தொழில் தருனரைப்பொறுத்து. சிலர் நல்ல இடங்களில் வேலையை பெறுவதால் பிரச்சனையின்றி சம்பாதிக்க முடிகின்றது. சிலர் பாரதுரமான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சிலர் போன சில காலத்திலேயே சம்பாதிக்காமல் பல சிரமங்களை எதிர்நோக்கி திரும்பி வருகின்றனர். சிலர் பல வருடங்களாகத தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து வேலை செய்பவர்கள் தமது லயன்களை சிமேந்து பூசிய வீடுகளாக மாற்றியுள்ளனர். வங்கிக் கணக்குகளை வைத்திருக்கின்றனர். தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுபவர்களாகவும் உள்ளனர். எனினும் இவர் வாறான வெற்றியெ ன்பது தமது கணவரின் ஒத்துழைப்புடனேயே சாத்தியமாவதாக கூறுகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்கள் தமது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி முஸ்லிம்கள்

Page 66
போலச் செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஐந்து நேரத்தொழுகையிலும் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களால் பின்பற்றப்படும் இறுக்கமான நடைமுறை களையும் இவர்கள் பின்பற்றுகின்றனர். ஒரு தொழிற்சங்கம் தோட்டப்புறங்களில் வெளிநாட்டுக்கு வேலை வாய் ப் பைத் தேடித் தரும் முகவர் நிலையமாக தொழிற்படுகின்றது. நாம் சந்தித்த ஒரு பெண் இக்குறிப்பிட்ட தொழிற்சங்கத்தினால் மாலைதீவுக்கு தொழில் வாயப்பிற்காக அனுப்பப்பட்டு திரும்பி வந்துள்ளார். அவரது கருத்தில் அவருக்கு தொழில் கிடைத்த நிறுவனம் மிகவும் மோசமான தொழில் நிலைமைகளைக் கொண்டது. தான் எதிர்பார்த்தது போல அங்கு தொழில் நிலைமைகள் இல்லாததாலேயே தான் திரும்பி வந்துள்ளதாக கூறுகின்றார். குறிப்பிட்ட தொழிற்சங்கத்திற்கு இவர் வெளிநாடு செல்வதற்காக கொடுத்த பணமும் இவருக்கு மீளவழங்கப்பட வில்லை. தமது மாட்டை விற்றே இவர் மாலை தீவுக்குச் சென்றுள்ளார். நாம் ஆய்வை மேற்கொண்டபோது இவர் திரும்பி வந்து மீளவும் தோட்டத்தில் தன்னைப்பதியவில்லை. இவரது தாயார் தனது அங்கத்துவத்தை குறிப்பிட்ட கட்சியிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார்.
அது போலவே இன்னொரு பெண் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு சென்று இம்சைப்படுத்தப்பட்டதால் திரும்பி வந்துள்ளார். இவர் மீண்டும் குறிப்பிட்ட தோட்டத்திற்கு வந்து தனது வேலையைத் தொடரவிரும்பினாராயினும் அவரை அனுப்பிய முகவர் அவரை அனுப்ப குறிப்பிட்ட அளவு செலவைத்தான் பொறுப்பேற்பதாகவும் இப்பெண் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்று சம்பாதித்து தனக்கு வரவேண்டிய தொகையை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகிறார். இக்காரணத்தால் குறிப்பிட்டபெண் மீண்டும் மத்திய கிழக்கிற்குசெல்ல வேண்டிய நிலையில் உள்ளார்.
12

இவ்வாறான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல பெண்கள் தோட்டங்களில் வேலை செய்வதால் தமக்கு மீட்சி இல்லை எனக்கருதுவதால் வெளிநாடுகளுக்குச் செல்வதை விரும்பு கின்றனர்.
இவ்வாறு ஆடைத்தொழிற்சாலைக்கு தமது தொழிலை மாற்றிக் கொள்ளுதல், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லுதல் என்ற இரு தெரிவுகளையே தேயிலைத் தோட்டங்களில் தொழில் புரியும் பெண்கள் கொண்டுள்ளனர்.
113

Page 67

பகுதி 111

Page 68

அரசியற் பொருளாதாரமும் பால்நிலையும்
சமூகமானது மனிதர்களிற்கிடையேயானதும் குழுக்களிற்கு இடையேயானதுமான உறவுகளினாலானது எனச் சமூகவியலாளர்கள் கூறுவர். மார்க்சியவாதிகள் மார்க்சினுடைய கருத்தினைப் பின்பற்றி உற்பத்தி உறவுகள்தான் சமூக உறவுகள் என்பர். மார்க்சினுடைய கருத்தில் சமூகமானது மனிதர்களுக்கும் பொருள் ரீதியான உலகத்துக்குமான தொடர்பினாலானது. அதாவது மனிதன் உற்பத்தி எனும் செயற்பாட்டினுடாக இயற்கையுடன் தொடர்புகொண்டு தனது தேவைகளை நிறைவு செய்கின்றபோது ஏற்படுகின்ற உறவுமுறைகள் சமூகத்தை உருவாக்கும் என மார்க்ஸ் கூறுகின்றார். மனிதன் தனது தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு இயற்கையுடன் தொடர்பு கொள்ளும் செயற்பாடு வேலை எனப்படும்.
மலையக சமூகத்தை எடுத்துக்கொள்கின்ற போது, மலையக மக்களின் சனத்தொகையில் கூடுதலானோரின் பிரதான உற்பத்தி முறை பெருந்தோட்டங்களுடன் தொடர்புபட்டது. அவ்வகையில் குறிப்பிட்ட வேலைகளைப் பெண்கள் செய்பவர்களாகவும் வேறு குறிப்பிட்ட வேலைகளை ஆண்கள் செய்பவர்களாவும் இருக்கின்றனர். இவ்வுற்பத்திமுறையானது முதலாளித்துவத்தினடிப்படையில் அமைந்ததாக இருக்கின்றது. மூலதனமானது இங்கு உற்பத்திப்பொருட்களை சந்தையில் விற்பதனை அடிப்படையாகக் கொண்டு உள்ளிடப்படுவதாக

Page 69
இருக்கின்றது. அதாவது தொழிலாளர்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் உற்பத்தி செய்வதற்கான சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு அதனடிப்படையில் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மூலதனமானது உற்பத்தியை அதிகரிப் பதனையும் செல்வத்தைத் திரட்டுவதனையும் நோக்கமாகக் கொண்டு உள்ளிடப்படு கின்றது. அங்கு தொழிற்செயற்பாடு மூலதனத்தினால் செறிவுள்ளதாக்கப்படுகின்றது. தொழிலாளர்கள் தமது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு தேவையான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள எவ்வளவு வேலை செய்ய வேண்டுமோ அதைவிடக் கூடுதலான உற்பத்தியிலிடு படுகின்றனர். இவ்வாறு அவர்கள் மேலதிகமாக மேற் கொள்ளும் உற்பத்திப் பெறுமதியினை முதலாளிகள் எடுத்துக்கொள்கின்றனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தப்படுவனவாக இருக்கின்றன.
இத்தகைய பண்புகளையே நவீன முதலாளித்துவம் கொண்டிருக்கின்றது. நவீனமுதலாளித்துவத்தின் இத்தகைய அடிப்படைப் பண்புகளுடனேயே பெருந்தோட்டங்கள் இயங்கிவருகின்றன. இத்தகைய பண்புகளுடனேயே பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்வகை முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிவர்க்கம் என்ற ஒரு சமூகவர்க்கம், உற்பத்திக்கு ஏதுவான பொருட்களுக்கு உரிமையைக் கொண்டாடும் அதேவேளை உற்பத்தி செயற்பாட்டிலிடுபடும் தொழிலாளர் உற்பத்திக்கு ஏதுவான காரணிகளிலிருந்து பிரிக்கப்பட்டிருப்பர்.
முதலாளித்துவத்தின் இத்தகைய செயற்பாட்டில் பெண்களுடைய வேலைகள் இவை ஆண்களுடைய
118.

வேலைகள் இவை எனப்பிரிக்கப்பட்டதன் பிரதான நோக்கம் இலாபம் என்பதாக இருக்கும். இவ்வகையான பிரிப்பு பால்ரீதியான தொழிற்பிரிப்பு எனப்படும்.
மேற்கு நாடுகளைப் போல , மரபுரீதியானதொரு சமூகத்திலிருந்து படிப்படியாக நவீனமுதலாளித்துவமாக உருவான ஒரு சமூகமாக பெருந்தோட்டங்கள் அமை வதில்லை. மாறாக நவீன முதலாளித்துவத்தின் உருவாக்கமாகவே பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காலனித்துவத்தினூடாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு உற்பத்தி முறைமையாக பெருந்தோட்டங்கள் இருக்கின்றன.
வேலையென்பது இருவகைப்படும் அது உற்பத்தி தொடர்பானதும் மீள் உற்பத்தி தொடர்பானதுமாக அமைகின்றன. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டன. மீள்உற்பத்தி என்பது மனிதர்களை உற்பத்தி செய்தல் ஒரு செயற்பாடாக இருக்கின்றது. மனிதர்களை உற்பத்தி செய்வதுடன் மட்டும் நின்றுவிடலாம் அவர்களைக் கவனித்தல், வளர்த்தல் எனும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தொரு விடயமாக மீள் உற்பத்திச் செயற்பாடு உள்ளது.
வரலாற்று ரீதியாக சமூகங்களை எடுத்துநோக்கும் போது மாற் றங்களினுTடாக குடும்பம் எனும் முறைமை உருவாகியதாகவும் அங்கு பெண்களுடைய வேலைகளாக இந்த மீள் உற்பத்திச்செயற்பாடு வரைவிலக்கணப் படுத்தப்படுவதாகவும் உள்ளது. அதாவது பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் என்ற தொழிற்பாட்டுடன் மட்டும் நின்றுவிடாது வீட்டிலிருந்து உணவுதயாரித்தல். வீட்டைத் துப்புரவாக்குதல், பராமரித்தல், பிள்ளைகளை வளர்த்தல், கணவனைக்
119

Page 70
கவனித்தல், தண்ணிர் எடுத்துவரல், விறகு எடுத்துவரல் போன்ற வேலைகள் பெண்களுடைய தாக்கப்படுகின்றன. ஆண்கள் வெளியில் சென்று வேட்டையாடுதல் வேறு பொருள் தேடும் உற்பத்தியில் ஈடுபடுதல் போன்ற வேலைகளை மேற்கொள்வர். இதுதான் தந்தை வழிச் சமூகத்தின் உருவாக்கமாகவும் இருக்கின்றது, குடும்பத்தின் தலைவனாக ஆண்கொள்ளப்படும் போக்கு குடும்பம் எனும் நிறுவனத்துடன் உருவானதாகவும் அங்கு பெண்கள், குழந்தைகள், வீடு, நிலம் என்பன ஆண்களுடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஒரு நிலைமையை மாற்றங்கள் உருவாக்கின.
மேற்கு நாடுகளை மையமாகக்கொண்ட இத்தகைய ஒரு வரலாற்று நோக்கில் சமூகம் இத்தகைய நிலைமையிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்ததன் ஒரு காலகட்டமே முதலாளித்துவம் எனக்கொள்வர். நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குப்பின்னால் பெண்களும் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்கின்றனர். மேலதிகமாக ஆட்கள் தொழிற்சாலை வேலைக்கு தேவைப்படும் போது பெண்கள் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். குடும்பத்திற்கு மேலதிகமாகச் சம்பளம் தேவைப்படுகின்றபோது பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அதற்கு முன்னர் பெண்கள் மேற்குறிப்பிட்டவாறு மீள் உற்பத்தி வேலைகள், வீட்டு வேலைகள் என்பவை தவிர விவசாயத்தில் ஈடுபட்ட வர்களாகவும் வீடுகளில் சிறு கைத்தொழிலில் ஈடுபட்டவர் களாகவும் இருந்துள்ளனர். அவ்வாறான வேலைகள் வேலைகளாக மதிக்கப்படாததுடன் அவற்றிற்கு சம்பளமும் கொடுபடுவதில்லை. பெண்கள் கூடுதலாகத் தொழிற்சாலை களில் வேலைக்குச் செல்லத்தொடங்கியதுடன் அரசியல் மாற்றங்களும் ஏற்பட்ட காரணத்தினால் (ஜனநாயகம் பற்றிய சிந்தனை, மனித உரிமைகள், வாக்குரிமை போன்றன)
120

பெண்கள் இயக்கங்கள் உருவாகின. பெண்களுடைய வேலை மதிக்கப்பட வேண்டும் என்ற போராட்டங்கள், எட்டு மணிநேர வேலை, சம சம்பளம் எனப் பெண்கள் போராட்டங்கள் தொடர்ந்தன. பெண்கள் இயக்கங்களும் வளர்ச்சியடையத் தொடங்குகின்றன.
முதலாளித்துவமானது அவ்வகையில் பெண்களைத் தன்னுள் உள் வாங்கிக்கொண்டவிதம் இங்கு முதலாளித்துவத்தின் கருத்தியலை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவ்வகை யிலேயே முதலாளித்துவத்திற்கு பால்ரீதியான தொழிற் பிரிப்பிற்குமான தொடர்பு விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும். அதாவது பெண்கள் செய்யும் வேலைகள் இவை, ஆண்கள் செய்யும் வேலைகள் இவை என்றபிரிவு முதலாளித்துவம் தனது இலாப நோக்கங்களிற்கு ஏற்ப உருவாக்குகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. அவ்வகையில் ஆரம்பத்தில் கூடுதலான தொழிலாளர்கள் தேவைப்படுகின்ற போது வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்கள் காலப்போக்கில் குறிப்பிட்ட உற்பத்திகளில் மையமாக ஆகின்றனர். பெண்களின் உற்பத்தி என்று சில உற்பத்தித்துறைகளை இன்றைக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக உள்ளது. இலங்கையில் இன்றைக்கு ஆடை உற்பத்தியை அவ்வாறான தொன்றாகக் குறிப்பிடலாம். இவ்வாறான மாற்றங்களுடன் பெண்கள் மேலதிக வருவாயைத் தேடித்தருபவர்களாக அல்லாமல் பிரதான உழைப்பாளர்களாக அனேக குடும்பங்களில் மாறுகின்றனர்.
இவ்வகையான வரலாற்று நோக்கில் பெண்களுடைய மீள் உற்பத்திச் செயற்பாடு, வீட்டுவேலை என்பனவும் முதலாளித்துவத்துடன் தொடர்புடைய விடயங்களாக நோக்கப்பட வேண்டியன. தொழிற்சாலைக்கு ஆண்களைத் தொழிலார்களாக வழங்குவதற்கும் அவர்களைப்
21

Page 71
பராமரிப்பவர்களாக அவர்கள் தொடர்ச்சியாக உணவு, ஓய்வு என்பவற்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக குடும்ப முறைமையைப் பேணுபவர்களாக பெண் கள் தொழிற்படுகின்றனர். பெண்கள் அவ்வாறு தொழிற்படுவது முதலாளித்துவத்தின் தொடர்ச்சிக்கு அவசியமாக இருக்கின்றது.
பெண்கள் வேலைக்குச் செல்லத்தொடங்கியதும் இரண்டு வகையான உற்பத்தியுடன் தொடர்புடையவர்களாக ஆவதுடன் இவ்விரண்டு வகையான உற்பத்திமுறையிலும் அவர்கள் ஈடுபடுவது இரட்டைச் சுமையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. அதாவது வீட்டில் வேலைகளில் ஈடுபடுதல், பிள்ளைகளைப் பெறுதல், வளர்த்தெடுத்தல் என்ற மீள் உற்பத்திச் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற அதேவேளை தொழிற்சாலைகளில் வேலை செய்தல் வீட்டிற்கு வருமானத்தைத் தேடித்தருதல் என்ற செயற்பாட்டையும் செய்பவர்களாக இருக்கின்றனர். தந்தைவழிச் சமூகத்தின் இணைவு முதலாளித்துவத்துடன் ஏற்படும் போதே இந்நிலமை ஏற்படுகின்றது. இவை மேற்கு நாடுகளின் வரலாற்றுடன் தொடர்புபட்ட விடயங்களாகும். கீழைத்தேய நாடுகளை எடுத்துக்கொள்கின்ற போது முதலாளித்துவத்தின் பரப்பு வெளிப்படையாகத் தாபிக்கப்பட்ட ஒரு பிரதான முறைமையாக பெருந்தோட்ட உற்பத்தி முறைமையில் காணப்படுகின்றது. காலனித்துவத்தின் உருவாக்கமாக புதிய முறையிலான அடிமைமுறை ஒன்றாக பெருந்தோட்டங்கள் காணப்படு கின்றன. மரபுரீதியான சமூகமுறைமையிலிருந்து படிப்படியாக நவீனமுதலாளித்துவம் உருவான ஒரு முறைமையாக மூன்றாம் உலக நாடுகளில் பெருந்தோட்டங் களைக் கொள்ள முடியாது. விவசாயத்துறையில் தொழில் செய்து வந்தவர்கள் திடீரென பெருந்தோட்டங்களுக்கு முதலாளித்துவ முறையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
122

தோட்டத்துறையில் பெண்கள் வேலைக்குச் செல்லத் தொடங்கிய வரலாறு அவ்வகையில் தனித்துவமானது. ஆய்வாளர்கள் பொதுவாக தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் குடியமர்ந்த காலப்பகுதியினை மூன்றாகப் பிரிப்பர். முதலாவது காலகட்டமானது ஒப்பந்த அடிப் படையிலமைந்த தற் காலிகத் தொழிலை தொழிலாளருக்கு வழங்கிய காலகட்டமாகும். இக்காலத்தில் பெண் கள் ஓரள வரிற்கு இந்தியாவிலிருந்து வந்துபோய்க்கொண்டிருந்தனர். இலங்கையில் 1920கள் வரையான காலப்பகுதியில் முதலாவது காலகட்டம் முடிவடைகிறது.
இரண்டாவது காலகட்டமாக குடியமர்ந்த காலம் காணப்படு கின்றது. அதாவது ஒப்பந்த அடிப்படையிலிருந்து நீங்கி நிரந்தர தொழிலாளராகின்ற காலகட்டமாக இரண்டாவது காலகட்டம் அமைகின்றது. மூன்றாவது காலகட்டமாக தொழிலாளர்கள் என்ற நிலைமைக்கு அப்பால் குறிப்பிட்ட நாட்டின் தேசிய அரசுடன் இணைந்து கொள்ளும் காலகட்டம் அமைகின்றது. மலையகமக்களுடைய வருகையையும் குடியமர்வையும் இத்தகையதாக நோக்கினும், பெண்களுடைய வரலாறு இரண்டாவது காலகட்டத்துடனேயே ஆரம்பிக் கின்றது.
குடியமர்வு என்பது, குடும்பம் எனும் நிறுவனத்துடன் தொடர்புபட்டதாக உள்ளது.அத்துடன் அது தோட்டங்களுடன் இணைந்ததாக தொழிலாளர்களின் குடியிருப்பிடமாக வரையறுக்கப்பட்ட தோட்ட முறைமையை ஒரு முழுமையான நிறுவனமாக்கும் ஒரு செயல்பாடாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இங்கு தேயிலைச் செடிகளைப் போலவே தொழிலாளரும் முதலாளிகளின் உரிமையாக்கப்படுகின்ற போக்கு தென்படுவதாக உள்ளது. பெண்களுடைய உற்பத்திச்
123

Page 72
செய்றபாடுளும் மீளுற்பத்திச் செயற்பாடும் தோட்ட முறைமையின் தொடர்ச்சியைப் பேண அவசியமான இரு விடயங்களாகின்றன. பெண்கள் குடும்பப்பெண்களாக இருந்து பின்னர் மேலதிகவருமானத்திற்காக தோட்டத்தில் வேலைக்குச் செல்லவில்லை . மாறாக தோட்டத்தில் வேலை செய்வதற்காகவே இந்தியாவிலிருந்து அழைத்துவரப் படுகின்றனர்.
கொழுந்து பறிப்பது பெண்களுடைய வேலை என வரையறுக்கப்பட்டு விட்டது. ஆரம்பகாலத்தில் குறைந்தளவிலான கூலியே பெண்களுக்கு வழங்கப்பட்டமையால் பெண்களை வேலைக்கமர்த்துவது இலாபகரமானதாக இருந்தது. இன்றைக்கு சமசம்பளம் இருப்பினும் ஓவர்கிலோ முறைமையால் பெண்களுடைய வேலை இலாபகர மானதாகவே இருக்கின்றது. அவ்வகையில் ஒரு புறத்தில் தொழில் செய்பவர்களாக பெண்கள் விரும்பப்பட்ட அதே வேளை மீள் உற்பத்தி தொடர்பாகவும், குடும்பம் எனும் அமைப்பை தோட்டங்களிற்குள்ளேயே பேணிக்கொள்வதற் காகவும் அவர்கள் வேண்டப்பட்டமையால் உற்பத்தி, மீள்உற்பத்தி என்ற சுற்றுவட்டத்துள் இருப்பவர்களாக பெண்களது வருகையும் குடியமர்வும் ஊக்கப்படுத்தப்பட்ட தனாலேயே பெண்தொழிலாளர் எனும் எண்ணக்கரு தோட்டப்புறங்களில் உருவானது இன்றைக்கும் அத்தகையதொரு முறை தோட்டங்களில் தொடருவதைக் காணலாம் உற்பத்திக்கும் மீள் உற்பத்திக்கும் ஏற்றவகையில் தோட்டமுறைகள், குடும்ப அமைப்பு என்பன பெருந்தோட்டங்களில் ஏற்படுத்தப்பட்டவையாகவும் பராமரிக்கப்படுபவையாகவும் உள்ளன.
இவ்வாறான ஒரு நிலைமையில் பெண் தொழிலாளி
வீட்டுமனையாள் என்ற இரட்டைப்பாத்திரங்களை இவை சார்ந்த கருத்தியலும், பெண்களுடைய இரண்டாம்பட்ச
124

நிலைமையும், ஒரு வர்க்கம் சார்ந்த தோற்றப்பாடாக இருக்கின்றது என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். முதலாளிவர் க் கத்தில் குடும்பம் என்பது ஆண் உழைப்பாளியையும், பெண் வீட்டுப்பராமரிப்பாளரையும் மையமாகக் கொண்டது. தொழிலாளி வர்க்கத்தில் நிலமை வேறுவிதமானது.
அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட உழைப்பாளிகள் ஒரு குடும்பத்தில் இருப்பர். பெண்கள் முழுநேரக்குடும்பப் பொறுப்பை உடையவராக இருக்கமாட்டார்கள். அது போல பொருளாதார ரீதியாக்கத் தங்கியிருக்கமாட்டார்கள். அதே நேரம் அவர்கள் தொழிலாளர்களாக என்ன வேலையைச் செய்கின்றார்கள் என்பதும், அந்த வேலைக்கான பெறுமதி, அவ்வேலைசார்ந்த ஒரு படிமுறையமைப்பில் அவர்களது வேலையின் நிலை என்பவை சமூகத்தில் அவர்களது இரண்டாம்பட்ச நிலமை தொடர்பாக (பால் ரீதியாகவும் வர்க்கரீதியாகவும் அல்லது இனத்துவ ரீதியாகவும்) அமையும் சமூக உறவுகளினால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கின்றது.
முதலாளித்துவத்தில் பெண்களுடைய நிலைமையானது முதலாளித்துவ உற்பத்தி உறவுகளினால் தீர்மானிக்கப் படுகின்றது. அதாவது முதலாளிகளுக்கும் தொழிலாளி களுக்குமான உறவு ஒரு புறமாகவும் மறுபுறம் பெண்களுக்கும் ஆண்களுக்குமான உறவினாலும் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது.
பால்நிலைக்கும் அரசியற்பொருளாதாரத்திற்குமான தொடர் பானது முதலாளித்துவத்தில் ஆண்களுக்கு இன்ன வேலை பெண்களுக்கு இன்னவேலை என்ற பிரிப்பை மட்டுமல்லாமல் அதனூடாக ஆண்களிற்கும் பெண்களுக்கும் இடையேயான வலு சார்ந்த உறவுகளையும் தீர்மானிப்பதாயுள்ளது.
125

Page 73
அதனால் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் பால்நிலை உறவுகள் வர்க்க உறவுகள் என்பன பெண்களுடைய தகுநிலையைத் தீர்மானிப்பவையாக உள்ளன. அது அரசினுடைய கொள்கைகள், இனத்துவ உறவுகள், சமூகத்தில் நிலவும் சாதி சார்ந்த உறவுகள், பண்பாட்டுக்காரணிகள் என்பவற்றினால் குறித்த சமூகத்திற்குரியதாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. அங்கு இன்னொரு பிரதான காரணியாக சர்வதேசவர்த்தகம், குறித்த நாட்டிற்கு சர்வதேச பொருளாதாரத்தில் உள்ள அந்தஸ்து என்பனவும் பெண்களுடைய நிலைமையைத் தீர்மானிப்பனவாக உள்ளன.
இலங்கையில் பெருந்தோட்டங்களில், காலனித்துவ காலத்திலிருந்து 1972ல் தேசிய மயமாக்கல்வரை மூலதனத்தை உள்ளிட்டவர்கள் வெளிநாட்டவர்களாகவே இருந்தனர். தோட்டங்கள் அதாவது பெளதீகரீதியாக பெருந்தோட்டங்களை தக்கவைக்கத்தக்கவகையில் பராமரிக்கப்பட்டனவேயன்றி மேலதிகப் பெறுமானம் வெளிநாடுகளுக்கே போய்ச்சேர்ந்தன. தேசியமயமாக்கலின் பின்னர் இலங்கை அரசு பெருந் தோட்டங்களை தக்கவைத்துக்கொள்ளக்கூட முடியாத நிலைமையில் சுரண்டல், வலுத்துஷ்பிரயோகங்கள் என்பன ஏற்படத் தொடங்கியதுடன் முதலாளித்துவம், தந்தைவழிச் சமூகம் என்பவற்றிக் கிணையாக பெண் களுடைய நிலைமையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இனத்துவம் புகுந்து கொள்கிறது. இதற்கு முன்னரும் இனத்துவம் ஒரு காரணியாக இருந்து வந்தாலும் 72ல் அரசினுடைய கொள்கைகள் பெரும்பாலும் சிங்களமக்களின் கருத்தியலைக் மையமாகக் கொண்டவையாக இருந்தமை, அலுவலகள்களாகவும், நிர்வாகிகளாகவும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டமை, தோட்டங்கள் கிராமங்களாக்கப்பட்டமை போன்ற மாற்றங்கள் நிச்சயமாகப் பெண் களுடைய வாழ்க் கையைப் பாதிப்பனவாகவே இருந்தன. 94ம் ஆண்டிற்குப் பின்னால்
126

தோட்டங்கள் வெளிநாட்ட வருக்கு குத் த ைகக்கு விடப்படத்தொடங்கிய பின்னால் மீண்டும் வெளிநாட்டவர் முதலாளிகளாகின்ற நிலமை ஏற்படுகின்றது.
இன்றைக்கு இலங்கையின் தேசிய அரசின் பொருளாதார வளர்ச்சியை அல்லது பொருளாதார ரீதியாக இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கும் பிரதான காரணிகளாக சர்வதேச ரீதியில் நடைபெற்றுவரும் மாற்றங்களும் ஆதிக்க நாடுகளின் கொள்கைகளும் இயங்கிவருகின்றன. சர்வதேசரீதியில் இயங்கிவரும் அரசியற்பொருளாதாரம் என்பது இன்றைக்கு விளங்கிக் கொள்வதற்கு மிகவும் சிக்கலானதொரு விடயமாக உள்ளது. பல்தேசியக் கம்பனிகள், சர்வதேச வங்கிகள் சர்வதேசசந்தை எனப்பல விடயங்கள் இங்கு முக்கியத்துவம் பெறறுகின்றன. இவை குறிப்பிட்ட நாட்டின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதனுTடாக உள்ளூர் வர்க்க உறவுகளைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன. அவ்வகையிற்தான் பால்நிலைக்கும் அரசியற் பொருளாதார த்திற்குமான தொடர்பு சர்வதேசமட்டத்திலும் இலங்கையிலும் ஏற்படுகிறது என்பது ஒரு முக்கியமான விடயம்.
பல்தேசியக் கம்பனிகள் உள்ளூர்ப்பொருளாதாரத்துடன் இணைவாக்கப்பட்டவை அல்ல. அவை தமது இலாபத்தை தேசிய பொருளாதாரத்திற்கு வெளியே எடுத்துச்செல்லும் வாய்ப்பினை உடையன. அவை குறைந்த சம்பளத்தை வழங்குவதனையும் கூடிய வேலையைப் பெற்றுக் கொள்வதனையும் நோக்கமாகக் கொண் டவை . அவ்வகையிற்தான் பெண்களுடைய வேலை என்பது அவற்றினால் வேண்டப்படும் ஒன்றாகின்றது.
இவ்வகையான மூலதனத்திற்கு வசதியாக உள்ளூர் ஆளும் வர்க்கமும், அரசும் துணைபோவனவாக இருக்கின்றன.
127

Page 74
இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை அரசியற்சூழலில் இனத்துவ ரீதியாக சிறுபான்மையினர் தொழிலாளிகளாக இருப்பது இத்தகையதொரு வாய்ப்பு நிலைமையை ஏறுபடுத்துவதாக உள்ளது. அதனாலேயே மிகவும் G3 DTFLD føOt நிலைமையில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அத்துடன் இத்தகைய செயற்பாடுகளினால் ஆண்,பெண் என்ற இருபாலாரினதும் வேலையின் தன்மை தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. அதனால் பால்நிலைக்கும் அரசியற் பொருளாதாரத்திற்குமான தொடர்பினை விளங்கிக்கொள்வது என்பது தொழிற் பிரிவினை விரிவாக விளங்கிக்கொள்வதாக உள்ளது.
பால்ரீதியான தொழிற்பிரிவு என்பது தனியே ஆண்களுக்கும் பெண்களுக்குமான வேலையின் தன்மையை மட்டும் கொண்டதாக அல்லாமல் அதன் பயனாக ஆண்கள் எவ்வாறு பெண் களின் வேலை மீதான கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளனர், அவர்கள் எவ்வாறு பெண்களின் பாலியல் மீதான கட்டுப்பாட்டினைக் கொண்டுள்ளனர் போன்ற வற்றையும் உள்ளடக்கி உள்ளது அதனுாடாக திருமணம், குடும்பம் போன்ற முறைமைகள் எவ்வாறு இயங்குகின்றன, பெண்களுடைய தொழில், நிருவாகக் கட்டமைப்பில் பால் ரீதியான தொழிற்பிரிவு தொழிற்சங்கங்களில் எவ்வாறு இயங்குகின்றது என்பதையும் கொண்டுள்ளது.
மலையக தேயிலைத்தோட்டங்களில் பெண்களுடைய இருப்பானது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பிரதானப்படுத்தப்படுவதாக இருக்க வேண்டியநிலையில் மூடிய முறையாக பேண வேண்டும் என்ற நிர்வாகத்தின் கொள்கையினால் அது குறைத்து மதிப்பிடப்படுகின்றது. இதனால் வெளிப்படையாக மலையக மக்களோ இலங்கையில் வாழும் எனைய இனக்குழுக்களோ தமிழ்பெண் தொழிலாள
28

ருடைய பிரச்சனைகளையும் அவர்களுடைய முக்கியத்து வத்தையும் உணருகின்ற போக்கு எதுவும் தென்படுவதில்லை.
இவ்வாறு மூடியமுறைமை என்ற நிர்வாகத்தின் கொள்கையின் கீழ் பெண்களுடைய தொழிலின் தன்மை, நிர்வாகக் கட்டமைப்பில் அவர்களிற்கு கொடுக்கப்படும் இடம் என்ற இரு விடயங்களும் நேரடியாக நோக்கப்படக் கூடியன. மறைமுகமாக குடும்ப அமைப்பில் பெண்களுடைய குடும்ப அந்தஸ்தையும் தொழிற்சங்கங்களில் அவர்களுடைய அந்தஸ்தைத் தீர்மானிப்பதாக உள்ளது. பெண்களுடைய தொழிலின் தன்மை, நிர்வாக் கட்டமைப்பில் பெண்களின் நிலை , குடும்ப அமைப்பில் அவர்களின் நிலை , தொழிற்சங்கங்களில் அவர்களுடைய நிலை என்ற நான்கு விடயங்களும் பால்ரீதியான தொழிற்பிரிப்பின் அடிப்படையில் அமைந்துள்ளதுடன் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு டையனவாக ஒரு நச்சுவட்டம் போல இயங்கி வருகின்றன. பால்ரீதியான தொழிற்பிரிப்பு என்பது பெண்களுக்கு இன்ன வேலை ஆண்களுக்கு இன்ன வேலை என்ற அடிப்படைப்பிரிவு என்பதாக வரைவிலக்கணப்படுத்தப் படலாம். பால்ரீரியான தொழிற்பிரிவினால் சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வலுசார்ந்த உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இவை பெண், ஆண் இருபாலாரதும அந்தஸ்தையும் நிர்ணகிக் கின்றன. சமூகங்களில் இவ்வகையான பால்ரீதியான தொழிற்பிரிப்பு பெண்களுடைய கீழ் நிலையை வெளிப்படுத்துவதுடன் அதனை உறுதிப் படுத்தி வருவதாகவும் உள்ளது. பால்ரீதியான தொழிற்பிரிவானது வரலாற்று ரீதியாக தோற்றுவிக்கப்படுவதாக உள்ளது.
அவ்வகையில் தமிழ் பெண் தொழிலாளரின் அந்தஸ்து என்பது மலையகத்தில் வரலாற்றுரீதியாக பால்ரீதியான
129

Page 75
தொழிற்பிரிவு தொடர்பாக இயங்கிவரும் கருத்தியலுடன் நேரடி யாகத் தொடர்புடையது. முதலாளித்துவம் , தமிழ்ப்பண்பாடு சார்ந்த காரணிகள், இனத்துவம் சார்ந்த காரணிகள் என்பன இக்கருத்தியலை உருவாக்குவனவாக உள்ளன. இக்கருத்தியலின் நிலவுகை என்பது மேற்கூறிய நான்கு வகையிலும் பெண்களுடைய இருப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. பெண்களுடைய வாழ்வின் எல்லா விதமான கூறுகளிலும் பால் ரீதியான தொழிற்பிரிவு வெளிப்படையான நிலைகளை அவதானிக்கக்கூடியதாக உள்ளதுடன் மிகவும் இறுக்கமாக தொழிற்படுவதாகவும் உள்ளது.
பெண்கள் அமைப்புகளின் தோற்றம், தோட்டங்களில் இடம்பெறாமை, வெளிக்காரணிகளின் ஊடுருவல் குறைவாக இருத்தல் என்பன மாற்றங்களை இலகுவில் ஏற்படுத்த வாய்ப்பினை அழிக்கவில்லை. தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளினூடாக இந்நிலைமையை மாற்றுவதற்கு தொழிற்படவில்லை. நடைமுறையில் அவையும் பால்ரீதியான தொழிற்பிரிவினுாடாக பெண்களுடைய கீழ்நிலையை வலியுறுத்தவதால் இத்தகைய மாற்றம் ஏற்படவில்லை. இனத்துவ ரீதியான விழிப்புணர்வு என்பதும் ஆண்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அவ்வகையில் மாற்றம் ஒன்று ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் எல்லாவகையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்கள் அமைப்புகளின் தோற்றம், அரசு, அரசசார்பற்ற நிறுவனங்களின் பெண்சார்நிலைக்கொள்கைகள் என்பனவே நீண்டகாலத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளாக உள்ளன.
30

பால்நிலைக் கருத்தியற்பாற்பட்ட
தொழிற்படிமுறைமை
பெருந்தோட்டங்களாவன நவீன பொருளியற் தாபனங்களாகும் அவை இலங்கையில் கோப்பிப்பயிர்ச் செய்கையுடன் ஆரம்பிக்கப்பட்டன. உலகிலுள்ள பெரும்பாலான பெருந்தோட்டங்கள் தற்பொழுது மூன்றாம் உலகநாடுகள் என்ற வகைப்பாட்டிற்குள் அடங்கக்கூடியதும் முன்னைய காலனித்துவத்திற்குட்பட்ட நாடுகள் என்ற பிரிவினுள் அடங்கும் நாடுகளிலேயே தாபிக்கப்பட்டன. அதனால் அவற்றை காலனித்துவத்தின் உருவாக்கமாக விளங்கிக் கொள்கின்ற அதே வேளை தற்போது காலனித்துவத்திற்குப் பின்னாலான சமூகங்களின் சூழ்நிலையில் மையப்படுத்த வேண்டிய ஒரு தேவையும் உள்ளது. பெருந்தோட்டங்கள் குறிப்பாக பிரித்தானியருடைய மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியரால் நிர்வகிக்கப்படும் தாபனங்களாக ஆரம்பிக்கப்பட்டன. வெப்பமண்டல நாடுகள் இவற்றின் வளர்ச்சிக்குப் பொருத்தமானவையாக அமைந்தன. நிலம் வேலை என்ற இரு ஆக்கக்காரணிகளின் செறிவை வேண்டிநிற்கும் உற்பத்தித் துறையாக இவை அமைகின்றன. உள்ளூரில் நிலம் என்பது கூடியளவு கிடைக்கக்கூடிய ஒரு உற்பத்திக் காரணியாக இருப்பினும் வேலை எனும் உற்பத்திக்காரணி குடிபெயர்ந்து வந்தவர்களினாலேயே குணாம்சப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. பாரிய அளவிலான நிலப்பயன்பாடு, தொழிலாளர், ஏற்றுமதி,

Page 76
இலாபம் என்பவற்றினடிப்படையில் தாபிக்கப்பட்டவையாக பெருந்தோட்டங்கள் இருக்கின்றன. குறைந்தளவு கூலி என்பது பிரதான கொள்கையாக அங்கு இருக்கின்றது. இலாபத்தில் பெரும்பகுதி மீண்டும் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. இன்றைக்கு அவற்றை பல் தேசியக் கம்பனிகள் எடுத்துக்கொள்கின்றன. மேலும் தீவிர மேற்பார்வை, இறுக்கமான நிர்வாகமுறை உற்பத்திக் கட்டுப்பாடு என்பவையும் பெருந்தோடங்களிற்கு அடிப்படை யாக அமைகின்றன.
இலங்கையில், 1815ம் ஆண்டில் ஆங்கிலேயர் மத்திய மலைநாட்டினைக் கைப் பற்றியதுடன் 1820களில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. பெருந்
தோட்டங்களை உருவாக்குவதற்குவசதியாக நிலத்தைப் பெறுவதற்க காலனித்து அரசு காடுகளையும், பயன் படுத்தப்படாத நிலத்தையும், யாரும் குடியிருக்காத நிலத்தையும் இரண்டு சட்டங்களினூடாக முடிக்குரிய நிலமாக ஆக்கிக் கொண்டது. 1840 ஆம் ஆண்டின் முடிக்குரிய நிலங்களின் அபகரிப்புச்சட்டம் ,1897ம் ஆண்டின் பயன்படுத்தப்படாத நிலங்களின் சட்டம் என்ற இரண்டுமே அவையாகும். இதனால் மலைநாட்டு நிலம், ஓரளவு உயரம் குறைந்த இடங்களிலுள்ள நிலங்கள் எனப்பெருமளவிலான நிலம் முடிக்குரியதாகியது. இந்த முடிக்குரிய நிலங்களை இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மலிவான விலைக்கு வாங்கித் தங்களுடையதாக்கிக் கொண்டனர்.
கோப்பிப்பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட போது கண்டியைச் சேர்ந்த குடியானவர்கள் அதில் வேலைசெய்யத் தயக்கம் காட்டியதால் தொழிலாளர் பற்றாக்குறையை பெருந்தோட்டச் சொந்தக்காரர் எதிர்நோக்குகினர். இப்பிரச்சனையைச் சமாளிப்பதற்காக 1833ல் இராஜகாரிய முறைஒழிக்கப்படு
32

கின்றது. அப்படியிருந்தும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமாக இருக்கவே இந்தியாவிலிருந்து தொழிலாளரை அழைத்துவரத் தீர்மானித்தனர்.
ஆரம்பத்தில் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர்கள் ஆண்களாகவே இருந்தனர். அவர்கள் கோப்பரி அறுவடை செய்யப்படும் காலங்களில் இந்தியாவிலிருந்து வந்து அறுவடை முடிந்ததும் மீண்டும் இந்தியாவிற்குச் செல்பவர்களாக இருந்தனர்.
அக்காலத்தில் தோட்டங்களில் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. கொடூரமான நிர்வாக முறை நிலவியதுடன் இந்தியாவிலிருந்து பெருந்தோட்டங்கள்வரையிலான பயணம் மிகவும் கடினமாக இருந்தது. கொடிய நோய்கள் தொழிலாளரைத் தாக்கின. அதனால் தொழிலாளர் பலர் இறந்தனர், பலர் நோயாளராயினர்.
பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட வரலாறானது உலகின் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட வரலாற்றுடன் தொடர்புடைய தென்றெனக் கூறுவர். நவீன பெருந்தோட்டங்களுக்கு முன்னாலும் பெருந்தோட்டங்கள் இருந்து வந்துள்ளன. அவை அடிமைமுறையுடன் தொடர்புடையனவாக இருந்தன. கரும்பு பயிர்ச்செய்கை, சீனி உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புடையனவாக இவை 15ம் நூற்றாண்டில் அபிவிருத்தியடைந்தன. போர்த்துக்கேயர்களே முதன்முதலில் சீனிப் பயிர்ச் செய்கையிலிடுபட்டனர். ஸ்பானியர்கள் தொழில்நுட்பத்தையும் சமூக அமைப்பையும் அவற்றிக்கு ஏற்றவாறு விரிவாக்குவதனுடாக பெருந்தோட்ட முறைமையில் வெற்றிகண்டனர். அங்கு அடிமைகள் குறிப்பிட்ட புவியியல் பிரதேசத்தினுள் அல்லது எல்லையுள் வைத்திருக்கப்பட்டனர். வேலை என்பது நிர்ப்பந்திக்கப்படும் ஒன்றாக அமைந்தது.
133

Page 77
பெருந்தோட்டச் சொந்தக்காரருக்கு முழு அதிகாரமும் இருந்தது. ஏகாதிபத்திய நரடுகள் எல்லாமே இவ்வாறான அடிமை முறையைப் பயன்படுத்தி அக் காலத்தில் பெருந்தோட்டங்களை விஸ் தரித்திருந்தன. 1833ல் பிரித்தானியாவின் எல்லைக்குட்பட்ட நாடுகளில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய ஏகாதிபத்திய நாடுகளிலும் அடிமைமுறை ஒழிக்கப்பட்து. இவ்வாறு ஒழிக்கப்பட்ட அடிமைமுறையின் ஒரு புதிய வடிவமாகவே பெருந் தோட்டங் கள் ஆரம் பரிக் கப் பட்டன என பெருந்தோட்டங்கள் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் கூறுவர். அடிமைமுறை என்பது ஆகக்கூடுதலான அளவிலான நிர்ப்பந்தமுறையாக இருந்தது. பெளதீக ரீதியான பலவந்த முறையிலேயே வேலை என்பது செய்விக்கப்பட்டதாக அமைந்திருந்தது. அதற்கு அடுத்தபடியான வேலை நிலைமைகளை பெருந்தோட்டங்கள் ஆரம்பத்திற் கொண்டிருந்தன. இன்றைக்கும் அதன் எச்சங்கள் பெருந்தோட்டங்களில் தொடர்வதை அவதானிக்கலாம்.
1830 களில்தான் முதன்முதலில் கோப்பிப்பயிர்ச்செய்கைக்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் பெருமளவில் அழைத்து வரப்பட்டனராயினும் 1920 களிலேயே இந்தியாவிலிருந்து ஆட்கள் காடழித்தல் போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடுவதற்காக சிறிய அளவில் அழைத்து வரப்பட்டனர்.
இலங்கையில் பெருந்தோட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதற்கு பிரித்தானிய தோட்டச் சொந்தக்காரர்கள் கங்காணி முறையையே பயன்படுத்தினர். தோட்டச்சொந்தக்காரர் கங்காணிகளுக்கு பணத்தைக் கடனாகக் கொடுப்பதனுடாக தொழிலாளரைக் கங்காணிகள் இலங்கைக்கு அழைப்பித்தனர். அவ்வாறு அழைத்து வருவதற்கு கங் காணிகளுக்கு தரகுப்பணம் கொடுக்கப்பட்டது.

தொழிலாளரை வேலைக்கமர்த்துவது தொடர்பாக ஆரம்பத்தில் அரசாங்கம் எது வித கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. அதனால் இலங்கையில், ஆரம்பத்தில் பெருந்தோட்டங்களில் சுதந்திரமான வேலைமுறைமை இருந்ததாகக் கூறுவர். தொழிலாளர்கள் விரும்பிய நேரத்திற்கு இந்தியாவிற்குச் செல்லக்கூடிய வாய்ப்பு இருந்தது. அது போல தோட்டச் சொந்தக்காரரும் தொழிலாளரை விரும்பிய நேரத்தில் வேலையால் விலக்கக் கூடியதாக இருந்தது.
எனினும் தொழிலாளரை அழைத்துவர ஏற்பட்ட செலவினை பின்னர் நிர்வாகம் தொழிலாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டமையால் தொழிலாளர் அக்கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை குறிப்பிட்ட தோட்டத்திலேயே வேலை செய்யவேண்டி இருந்தது. இது ஓரளவிற்கு கட்டுப்பாட்டினை விதிக்கின்ற ஒரு முறைமையாகவும் குறைந்தளவிலான கூலிக்கும் வழிகோலியது.
தொழிலாளர்கள் கூடுதலாக தமிழ்நாட்டிலிருந்து சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் உபகங்காணிக்குக் கீழ் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். உபகங்காணிக்குக்கீழ் வேலைக்கு அமர்த்தப் படுபவர்கள் ஒரு குழுவாகவும் அனேகமாக உறவினர் களாகவும் இருந்தனர். இக்குழுவாக்கம் சாதியினடிப் படையிலும் அமைந்திருந்தது. கங்காணிகள் தமது சாதியைச் சேர்ந்தவர்களையும் தனது உறவினர்களையுமே கூடுதலாக அழைத்து வந்தனர். குடிப்பெயர்வும் இவ்வகையான முறைமையினாலேயே தீர்மானிக்கப்பட்டன. அதனால் தோட்ட முறைமையில் கங்காணிக்கு எப்பொழுதும் அதிகாரம் இருந்தது. தனது சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லாத இடத்து
135

Page 78
தன்னை விட குறைந்தது என சமூகத்தால் கொள்ளப்படும் சாதியினைச் சேர்ந்தவர்களையே கங்காணிகள் அழைத்து வந்தனர். இவ்வகையில் 'தோட்டங்களில் இவ்வமைப்பும் உறவுமுறையும் நீடித்ததுடன் கங்காணிகள் மேற்பார்வை யாளர்களாக நியமிக்கப்பட்டதனால் தொழில் சார்ந்த உறவுகளையும் நிர்வாகத்தையும் ஒழுங்குபடுத்துவதில் அவர்களுக்கு கூடுதல் அதிகாரம் இருந்தது.
தலைமைக் கங்காணிக்கு அல்லது பெரிய கங்காணிக்கு தோட்ட உடமையாளர்கள் ஒரு தொழிலாளியைக் இந்தியாவிலிருந்து அழைத்து வருவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முற்பணமாக வழங்கினர். இந்த முற்பணம் போக்குவரத்துச் செலவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. பொருளாதார ரீதியாக மிகவும் அடிமட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் இப்பணத்தை கங்காணியிடமிருந்து கடனாகப்பெற்றனர். இவை தவிர இலங்கைக்கு வந்தபின்னால் தொழிலாளருக்கு ஏற்பட்ட இதர செலவுகளைச் சமாளிக்கவும் தலைமைக் கங்காணியிடமிருந்து கடனைாப் பெற்றனர் இத்தகைய கடனுக்கு கங்காணியால் உயர்ந்த வட்டியும் பெறப்பட்டது. இதனால் தொழிலாளரின் குடிப்பெயர்வு, தொழில், குடியமர்வு, பெருந்தோட்டங்களில் அவர்களுடைய வாழ்வு என்பன கடனுடனேயே ஆரம்பித்து. கங் காணிக்கும் தொழிலாளர்க்குமான கடன் கொடுநர் கடன்படுநர் என்ற உறவு தொழிலாளரின் வாழ்வை நிர்ணயிக்கும் பிரதான விடயமாயிற்று.
கங்காணியுடைய அதிகாரம் துண்டுமுறைமையால் மேலும் பலப்படுத்தப்படுவதாக இருந்தது. அதாவது குறிப்பிட்ட தொழிலாளி குறிப்பிட்ட தோட்ட உடமையாளருக்கு குறிப்பிட்டளவு பணத்தொகையைக் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார். அவ்வாறு அத்தொகையை செலுத்தி முடியாத
136

பட்சத்தில் அந்நபர் வேறு இடத்தில் வேலைக்குச் சேரமுடியாது, எனக் கையெழுத்திட்டு பெறப்படும் ஒரு பத்திரமே துண்டு எனப்படும்
கங்காணிக்கு தோட்ட உடமையாளர் கொடுக்கின்ற கொடுப்பனவானது ஒவ்வொருநாளும் தொழிலுக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறித்த ஒரு தொகை (ஆரம்பத்தில் 6 சதம்) என்ற கணக்கையும் உள்ளடக்கி இருந்தது. இது தவிர தலைமைக்கங்காணிக்கு மாதாந்த சம்பளமும் வழங்கப்பட்டது. இவ்வாறான கொடுப்பனவுகள் தலைமைக்கங்காணிக்கு பொருளியல்ரீதியாக பலமான அந்தஸ்தை வழங்கியதுடன் தோட்டத்தில் துரைக்கு அடுத்த படியாக தொழிலாளரால் கருதப்படும் ஒரு ஆளாக கங்காணி காணப்பட்டார். தோட்ட உடமையாளர்களும் தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகளை இலகுவாகக் கையாள்வதற்கு கங்காணிகளைப் பயன்படுத்தினர். இக்காரணத்தினால் கங்காணிகளிடம் கூடுதல் அதிகாரத்தினைக் கையளித்தனர். தொழிலாளரின் தொழில் தொடர்பானதும் சாதாரண வாழ்வு தொடர்பானதுமான பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பவராக கங்காணி காணப்பட்டார். ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் குழுவினை தனக்கு ஏற்றவகையில் ஆட்டிப்படைப்பவராகவே ஏறத்தாள கங்காணிகள் செயற்பட்டனர். தொழிலாளரின் சம்பளமும் கங்காணியினுடாகவே வழங்கப்பட்டது. அதனால் கங்காணி தனக்கு வரவேண்டிய தொகையை விரும்பிய நேரத்தில் சம்பளத்திலிருந்து கழித்துக் கொண்டு கொடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தது. கங்காணி பதவியானது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பரம்பரை பரம்பரையாக கையளிக்கப்படும் ஒன்றாக இருந்தது. மேலும் சாதி தொடர்பாக தொழிலாளரை விட கங்காணி கூடுதல் சமூக அந்தஸ்தை அனுபவித்ததனால் கங் காணியிடத்து தொழிலாளர்கள் மரியாதை காட்ட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
37

Page 79
இவ்வகையில் கங்காணியின் அதிகாரம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்வை பிணைக்கப்பட்ட ஒன்றாகவும் சுய விடுதலை பெற முடியாத ஒன்றாகவும் நிலைப்படுத்தியது. பெண் களைப் பொறுத்தவரை இவ்வதிகாரம் பாலியல் தொந்தரவு உட்பட, பெண்களுடைய தொழில் தொடர்பானதும் வாழ்வு தொடர்பானதுமான பிரச்சனைகளை உள்ளடக்கிய ஆண்தலைமைத்துவ மேலாதிக்க நிலைமைகளுக்கு இட்டுச் செல்ல வழிவகுத்து.
துண்டு முறைமை 1921ல் சட்டவாக்கம் ஒன்றின் மூலம் ஒழிக்கப்பட்டது. 1930களில் கங்காணிகளின் கடன் மீளப்பெறும் முறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இவ்வாறு நீண்டகாலத்தில் கங்காணிகளின் அதிகாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இன்றைக்கு கங்காணிகளாகவும் கணக்கப்பிள்ளைகளாகவும் தொழிற்படுபவர்கள் முன்னர் கங்காணிகளாக இருந்துள்ளனர்.
இவ்வகையில் ஆரம்பத்தில் கங்காணிகள் தொழிலாளரைத் திரட்டுவதிலும், குடியமர்த்துவதிலும் கூடுல் அதிகாரம் செலுத்தினர். தொழிலாளர் குடிபெயர்ந்து இலங்கைக்கு வந்து குடியமர்வதில் கங்காணி காட்டிய ஆசைவார்த்தைகள் பெரும்பங்களிப்பைச் செய்தன.
இந்தியாவில் நிலவிய பண்ணைமுறையின் கொடுமை, இந்தியாவில் அக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், வறுமை, நிலமற்றதன்மை என்பன இந்தியாவிலருந்து தொழிலாளரை வெளித்தள்ளும் காரணிகளாக அமைந்தன எனவும் இலங்கையில் கிடைத்த வேலைவாய்ப்பு நிலமைகள் உள்ளிழுக்கும் காரணியாக அமைந்தன எனவும் ஆய்வாளர்கள் கூறுவர். எனினும் கூடுதலாக கங் காணிகளுடைய ஆசைவார்த்தைகள், தொழிலாளரின் அறியாமை என்பனவே
138

தொழிலாளர்கள் இலங்கைக்கு வரக்காரணமாக இருந்ததாகக் கொள்ளும் கருத்துக்களையும் இங்கு கவனத்தில் எடுத்தல் நல்லது.
1850களில் தோட்டச் சொந்தக்காரர்கள் தொழிலாளர் நிரம்பலை ஒழுங்குபடுத்த விரும்பினர். அதன் நிமித்தம் 1858ல் தொழிலாளர் குடி வரவு ஆணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இவ்வாணைக்குழுவின் விதந்துரைகள் பெண்களும் ஆண்களுடன் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துச்சார்ந்து இருந்தன. பெண் தொழிலாளர் கூடுதலாக நிலையான தன்மையுடைய வேலையை வழங்கக்கூடியவர்கள் எனவும் அவர்களை வேலைக்கு அமர்த்துவதால் வேலையத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறைந்த சம்பளத்தை அவர்களுக்கு வழங்கலாம் எனவும் இவ்வாணைக்குழு தனது முடிவுகளை முன்வைத்தது. அதனால் பெண்களையும் தொழிலாளர்களாகச் சேர்த்துக்கொள்ளும் போக்கு பெருந்தோட்டங்களில் ஆரம்பித்தது, எனினும் 1880 வரை அதாவது கோப்பிக்காலம் முடியும்வரை குறைவான பெண்களே வேலைக்குச் சேர்ந்தனர். பெண் தொழிலாளர் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததனால் அவர்கள் பாதுகாப்பான ஒரு நிலைமையில் இருக்கவில்லை. ஆண்கள் அவர்களை பாலியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் சுரண்டுபவர்களாகவும் பயன்படுத்துவோராகவும் இருந்தனர்.
தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே கூடுதலான பெண்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இக்காலத்தில் வேலைக்கு வந்து போய்க்கொண்டிருந்தவர்களை ஓர் இடத்தில் நிரந்தரமாக குடியமர்த்தும் தேவை ஒன்று தோட்டச் சொந்தக்காரருக்கு இருந்தமையால் ஒரு புறம் மலிவான வேலைச்சக்தியைப் பெறல், மறுபுறம் நிரந்தர குடியிருப்புக்
39

Page 80
களை ஏற்படுத்துதல் என்ற இரு நோக்கங்களுக்காக பெண்களை வேலைக்கமர்த்துவதில் கூடுதல் ஊக்கம் காட்டினர். இதனால் அனேகம் ஆட்கள் குடும்பமாக குடிபெயரத் தொடங்கினர். குடும்பம் எனும் முறைமை தோட்டங்களில் அப்பொழுதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது 1880ல் 100 ஆண்களுக்கு மூன்று பெண்கள் என்ற நிலைமாறி 1911ல் 100 ஆண்களுக்கு 84 பெண்கள் என்ற அளவில் பெண்களின் சனத்தொகைமாற்றம் அடைந்தது. பெண்களது வேலை ஆண்களால் மேற்பார்வை செய்யப்படுவதாக உருவாக்கப்பட்டது. பெண்கள் தம்மை கூட்டாக ஒன்றுபடுத்தி அணிதிரட்டக்கூடியவர்கள் அல்ல என்ற கருத்தையும் அவர்கள் அடக்கமானவர்கள் என்ற கருத்தையும் தோட்டச் சொந்தக்காரர் கொண்டிருந்தமை பெண்களை வேலைக்கு அமர்த்துவதில் காட்டிய அக்கறைக்கு அடுத்த காரணமாக இருந்தது. குடும்பம் என்ற அமைப்பினுடாக தொழிலாளர் நிரம்பலை ஒழுங்குபடுத்தலாம் என்பது இன்னுமொரு காரணமாக இருந்தது. இவ்வாறாக உற்பத்தி மீள் உற்பத்தி ஆகிய இரு தொழிற்பாட்டுடன் இணைந்து, இலங்கையில் பெருந்தோட்டங்களை நோக்கியதாக ஒன்றாகவே பெண்களுடைய வருகை ஆரம்பித்தது.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இருந்த பண்பாட்டுப் பெறுமதிகள் இவ்வகையான கருத்தியலை ஆதரிப்பதாகவே இருந்தன. தந்தை வழி சமூகத்தின் கருத்தியலாக பெண்களை ஆண்களுக்கு குறைவாக மதிக்கும் போக்கு அக்காலத்தில் இங்கிலாந்திலும் இருந்தமையால் இங்கிலாந்திலும் பெண்களுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்ட்டது. இவ்வாறு இரு சமூகங்களிலும் பெண்களின் வேலை என்பது இரண்டாம்பட்சமான ஒன்றாக மதிக்கப்பட்டமையே பெண்களுடைய வேலை என்ற வரலாற்று ரீதியான உருவாக்கம் மலையகத்தில் இரண்டாம் பட்சமான ஒன்றாக
140

அமைவதற்கு காரணமாக இருந்தது. வேலைசார்ந்ததாக மட்டுமல்லாமல் ஏனைய சமூகவிடயங்களிலும் ஆண்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதனால் பெண்கள் எல்லாத்தளங்களிலும் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்துடனேயே பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. தோட்டங்களிலும் வீடுகளிலும் அவர்களுடைய நிலைமை இரண்டாம் பட்சமானதாகவே இருந்தது. ஏறத்தாள ஒரு நாளைக்கு பத்து மணித்தியாலங்கள் தோட்டங்களில் வேலை செய்பவர்களாகவும் மிகுதி நேரங்களில் வீடுகளில் வேலை செய்பவர்களாகவும் பெண்கள் ஆக்கப்பட்டனர். கணவன், சகோதரன், கங்காணி, தோட்டச்சொந்தக்காரர் எனப்பலவகை ஆண்கள் அவர்களைத் வாழ்வினைத் தீர்மானிப்பவராகினர். பால்ரீதியான தொழிற்பிரிப்பு என்பது உருவாக்கப்பட்டு காலப்போக்கில் நிலைப்படுத்தப்படும் ஒன்றாக இவ்வாறு அமையும் போது, கொழுந்து பறித்தல் என்பது வேலைத்தளத்தில் பெண்களின் பிரதான வேலையாகின்றது. காலப்போக்கில் 50 சதவீதமானவர்கள் தோட்டங்களில் பெண்களாகின்றனர். பெண்கள் கொழுந்து பறிக்கின்ற வேலைகளில் ஈடுபட ஆண்கள் களைபிடுங்குதல், உரமிடுதல் கவ்வாத்துவெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
1984ம் ஆண்டுவரை ஆண்களும் பெண்களும் வேறுவகையான சம்பளத்தையே பெறுகின்றனர். 1984ல் சமசம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் வேலையின் தன்மையையும் வேலை நேரத்தையும் எடுத்து நோக்கும் போது பெண்களுடைய வேலைக்கான மதிப்பு உரியமுறையில் இன்றைக்கும் வழங்கப்படாமல் இருப்பதைக்காணலாம். ஆரம்பத்தில் பெண்களுக்கு நாட்சம்பளமாக 25 சதமும் ஆண்களிற்கு 33 சதமும் கொடுக்கப்பட்டது. சம்பளத்துக்கு மேலதிகமாகக் கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளிலும் 84ம்
41

Page 81
ஆண்டுவரை வித்தியாசம் காணப்பட்டது.
இன்றைக்கு ஆண்களுடைய வேலை பாதிநாளில் முடிந்து விடுவதாகவும் பெண்களுடைய வேலை முழுநாளும் தொடர்வதாகவும் வேலையின் தன்மை அமைந்துள்ளது. ஆண்களுடைய வேலை குறிப்பிட்ட நோக்கத்துடன் (Task) இணைக்கப்ட்டதாகவும் பெண்களுடைய வேலை குறிப்பிட்ட அளவுடன் (Norm) சம்பந்தப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
பெண்கள் வேலைக்குச சேர்த்துக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து அதாவது தோட்டங்கள் ஒரு முழுமையான நிறுவனங்களாக தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பெண்களுடைய இரண்டாம் பட்ச நிலைமையும் இவ்விரண்டாம் பட்சநிலை சார்ந்த பால்ரீதியான தொழிற்பிரிவு தொடர்ந்து தாபிக்கப்பட்டு நிலைப்படுத்தப்படுவனவாகவே இருக்கின்றன.
பால்ரீதியான தொழிற்பிரிப்பு என்ற விடயத்தில் விரிவான விளக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால் தோட்டங்களின் அமைப்பு முறையை நோக்குதல் அவசியமானதாகும்.
பொதுவாக பெருந்தோட்டங்கள் ஒப்பீட்டு ரீதியில் மூடிய முறைமைகளாகக் கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட எல்லைகளை உடையதும் மற் றய சமூகங்களுடன் தொடர்பற்றதுமான ஒரு தாபனமான அவை கொள்ளப்படு கின்றன. தொழிலாளர்களுடைய வாழ்வும் சாவும் தோட்டங்களிற்குள்ளேயே நிகழ்கின்றன. அவர்களது வீடும் வேலையும் இந்த எல்லைக்குட்பட்டதாக இருக்கின்றன. மிகவும் குறைந்தளவிலான அடிப்படைத்தேவைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவை குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நிறைவேற்றப்படுகின்றன.
142

ஒரு தோட்டமானது லயன்கள், ஒரு மருந்தகம், ஒரு சிறு மகப்பேற்று நிலையம், ஒரு பாடசாலை ஒரு பிள்ளை மடுவம், ஒரு கோயில், போக்குவரத்து வசதிகள், இலவசமருத்துவ வசதி, ஒரு மருத்துவ தாத சலவை செய்வதற்கு ஒரு ஆள், முடிவெட்டுவதற்கு ஒரு ஆள் என எல்லா வசதிகளையும் உடையதாக ஆரம்பத்தில் நிறுவப்பட்டன. அவ்வகையில் கோட்பாட்டுரீதியாக ஒரு தோட்டம் ஒரு முழுமையான நிறுவனமாகக் கருதப்பட்டது. தோட்டங்கள் தன்னிறைவாக இருக்கவேண்டும் எனக் கருதப்பட்டன. இத்தகைய குணாம்சங்களைக் கொண்டிருந்ததால் தோட்டங்கள் நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து பிரிந்தனவாக அவற்றுடன் தொடர்பற்றவையாக குறிப்பிட்டளவிலான சமூக உறவுகளைக் கொண்டவையாக அமைகின்றன.
பெருந்தோட்ட நிர்வாகத்திற்கு, தோட்டங்கள் இவ்வகையில் பிரித்திருப்பதும் ஒரு முழுமையான நிறுவனமாக அமைந்திருப்பதும் மூடிய முறைமையாக அமைந்திருப்பதும், பெருந்தோட்டங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியமானதாக இருக்கின்றது. மேலும் இனத்துவ ரீதியாக பரிாரிந் திருக்கின் ற ஒரு சமூகமாக இருப்பது தோட்டமுறைமையின் நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருக்கின்றது. தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தோட்டங்கள் இவ்வாறு முழுமையான நிறுவனங்களாக இருக்கவேண்டும் என்ற தோட்டச்சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுவரும் ஒன்றாகவே உள்ளது. இம்முறையினூடாக குறைந்தளவு கூலியை வழங்குவதும் சாத்தியமானதாகின்றது. நிர்வாகமுறைமையும் இதனைக் கடுமையாகப் பேணிவருவதை அவதானிக்கலாம் . வெளியாட்கள் தோட்டங்களுக்குள் செல்வது இன்றைக்கும் கடினமானதாகவே உள்ளது.
43

Page 82
அவ்வகையில் தோட்டங்கள் மூடிய முறைமையாக ஒரு மட்டத்தில் இயங்கிவருவது உண்மையே. மூடியமுறைமை என்பது மட்டுப்படுத்தப்பட்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும் வறுமையையும்ஒரு வகை கட்டுப்படுத்தப்படட அடிமைமுறைமையையும் மீளவும் வலியுறுத்துவதாகவும், அத்தகைய நிலைமையை வெளி உலகிற்குத் தெரியாமல் மறைத்து வைப்பதாகவும் உள்ளது அதனால் இந்த (fl. 9-ul முறைமை ஒரு முழுமையாக இயங்குகின்றது என்பதை ஏற்கமுடியாது. மேலும் அவ்வாறான நிலைமை ஒன்று தோட்டங்களில் இருப்பினும் ஒரு பரந்த விளக்கத்திலும் நீண்டகால நோக்கிலும் அத்தகைய கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. ஏனெனில் பெருந் தோட்டங்கள் பொருளியல்ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இலங்கைத் தேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தாபனங்களாக உள்ளன. அவை சர்வதேச மட்டத்திலும் அவ்வாறனதொரு தொடர்பை அரசியற் பொருளாதாரத்துடன் கொண்டுள்ளன. இவ்வகையான ஒரு காரணத்தினால் ஒரு மட்டத்தில் பெருந்தோட்டங்களை மூடியமுறைமையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இன்னொரு மட்டத்தில் பெருந்தோட்டங்களுக்கும் தேசிய அரசிற்கும், தேசியப் பொருளாதாரத்திற்குமான தொடர்பையும் சர்வதேச ரீதியில் அரசியற் பொருளாதாரத்திற்குமான தொடர்பையும் விளங்கிக்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது.
அவ் வகையில் தான் பெண்களுடைய வேலையும் நோக்கப்படவேண்டும். ஒரு மட்டத்தில் தோட்ட நிர்வாக முறைமையின் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டாம் பட்சமாகவும் கீழ்நிலையிலும் கணிக்கப்படும் பெண்களுடைய வேலை இன்னொரு மட்டத்தில் இலங்கைத் தேசிய வருமானத்தின் பெரும் பங்கை ஈட்டித்தருகின்றதாகவும் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்குமான பொருளியல்

அரசியல் உறவுகளைத் தீர்மானிப்பதாகவும் உள்ளது.மேலும் ஆண்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒன்றாயினும் பெண்களுடைய தொழிற்சங்க அங்கத்துவம் தேசிய அரசியலில் ஒரு தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.
இரண்டாம் பட்ச நிலையில் மதிக்கப்பட்டாலும் குடும்பங்களுக்கு கூடுதல் வருமானத்தைத் தேடித்தருபவர்களாப் பெண்கள் உள்ளனர். அது போல மொத்தத் தொழிலாளருள் கூடுதலான வீதத்தினர் பெண்களாக உள்ளனர்.
இவ்வகையிலேயே பெண்களுடைய வேலையின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது பெண்கள் அவ்வாறானதொரு மூடியமுறைமையில் வாழ்பவர்களாயினும் அவர்களுடைய வாழ்வின் பங்களிப்பு அதனை உடைக்கக்கூடியதாக உள்ளது.
இவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து பெருந்தோட்டங்களாவன பெண்களுடைய மலிவான வேலையினடிப் படையிலும் அவர்களுடைய மீள்உற்பத்தித் தொழிற்பாட்டி னடிப்படையிலும் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாகப் பேணப்படும் நிறுவனங்களாகும். அங்கு பெண்களின் இரண்டாம் பட்சநிலை பெருந்தோட்டங்களின் தொடர்ச்சிக்கு அவசியமானதாக இருக்கின்றது. இத்தகைய நோக்கில் பெண்களுடைய இரண்டாம் பட்ச நிலைமையை அகற்றுவது ஒரு சவாலாக உள்ளது. இப்பிரச்சனையை அணுகுவதற்கு பெண்களுடைய வேலையின் தன்மையை பால்ரீதியான தொழிற்பிரிப்புனுரடாக விளங்கிக் கொள்வது அவசியமானதாகும்.
மேற் கூறியவாறான ஒரு வரலாற்று நோக் கில் பெருந்தோட்டங்களை விளங்கிக் கொள்கின்ற போது பெண்நிலை சார்ந்ததாக அவற்றைப் பின்வருமாறு வரையறுத்துக் கொள்ளலாம். பெண்களுடைய வேலையையும்

Page 83
வாழ்வினையும் ஒட்டியதான இறுக்கமான பிணைப்புடன் பரிணாமம் பெற் றதும் தன்னைத் தக்கவைத் து வளர்ச்சியடைந்து வரும் தர்பனங்களாகப் பெருந்தோட்டங்கள் அமைகின்றன.
பெண்களுக்கு குறைந்த கூலியைக் கொடுப்பதனுாடாக கூடியலாபத்தை உழைக்கின்ற இத்தாபனம் பெண்களுடைய வாழ்வை தோட்டமட்டத்தில் மூடியதாக வைத்திருப்பினும் வாக்குரிமையூடாக தேசிய அரசியலுடனும் ஏற்றுமதிச் செயற்பாட்டினுடாக தேசிய பொருளாதாரத்துடனும் சர்வதேச மட்டத்தில் அரசியல் பொருளாதாரத்துடனும் தொடர்புற வைக்கும் ஒரு நிறுவனமாகும்.
சிறுபான்மை இனக்குழுவைச் சேர்ந்த பெண்களாக, ஆண் தலைமைத்தவ சமூகத்தின் கருத்தியலில் இயங்கிவரும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக, தீவிர மேற்பார்வையையும் இறுக்கமான நிர்வாகத்தையும் கொண்ட ஒரு உற்பத்தி முறையில் தொழில் செய்பவர்களாக எல்லாமட்டங்களிலும் சுரண் டலையும் சிறுமையையும் அனுபவிக்கும் ஒரு நிலைமையை பெருந்தோட்டங்கள் ஏற்படுத்துவனவாக உள்ளன. பெருந்தோட்டங்கள் ஏற்படுத்தும் அதிகாரப்படி முறை அமைப்பினையும் அந்தஸ்து ஸ்தானங்களையும் சமூக ரீதியாக முக்கியத்துவம் பெறுவனவாக உள்ளன. அவ்வகையில் பெண்களுடைய வேலையையும் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டவையாக பெருந்தோட்டங்கள் அமைவதுடன் அவர்களின் சமூக வாழ்வினையும் தீர்மானிப்பவையாகவும் உள்ளன.
பெண்கள் கூடுதலாக வேலை செய்தல், அனேகமாக எல்லா பெண்களுமே வேலைக்குச் செல்லல், அவர்கள் கூடுதலான வருவாயை குடும்பத்திற்கு தேடித்தருபவர்களாக இருத்தல், மேற்கூறியவாறு தேசிய அரசியலிலும் தேசிய பொருளாதாரத்
46

திலும் பங்களிப்புச் செய்பவர்களாக இருத்தல், சர்வதேச மட்டத்தில் அரசியல் பொருளாதாரத்துடன் தொடர்புடைய வர்களாக இருத்தல் என்பன இங்கு நேர்நிலையாக நோக்கப்பட வேண்டிய விடயங்களாக உள்ளன. அதே நேரத்தில் இவ்வாறான நேர்நிலையான குணாம்சங்களிற்கு எதிர்மாறாக சிறுமை, இரண்டாம் பட்சநிலமை, சுரண்டல் உதாசீனம் என்பவற்றிற்கு ஆளாபவர்களாக இருத்தல் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் சமூகம் சார்ந்ததாக, ஆய்விற்குரிய ஒரு பிரச்சனையாக உள்ளது. அதனை ஒரு முரண்பாட்டு மெய்மையாக (Paradox) ஒரு சவாலாக, தீர்வு காணப்பட வேண்டிய ஒரு சிக்கலாகக் கொள்ளலாம்.
இப்பிரச்சனையை விளங்கிக் கொள்ளல் என்பது, பால்ரீதியான தொழிற்பிரிவினுடாக பெண்களுடைய வேலையின் தன்மையை விளங்கிக் கொள்ளல், முதலாளித்துவத்தினதும் தந்தைவழிச் சமூகத்தினதும் கருத்தியலை விளங்கிக் கொள்ளல், இலங்கையின் இனத்துவ உறவுகளினூடாக மலையகப் பெண்களின் இனத்துவத்தை விளங்கிக் கொள்ளல் எனப்பல விடயங்களுடன் தொடர்புடையது.
பால், பால்நிலை, பாலியற்தன்மை, பெண்இயல்பு, பெண்மை (sex, gender, femininity, womanhood) GSL IT 6ói so Lug Itil J56it இன்றைக்கு பெண்கள் பற்றிய சமூகவியலில் முக்கியத்துவம் பெற்றுவரும் பதங்களாகும். அவைபற்றி பொருத்தமான வளக் கங்களும் பரிரயோகங்களும் இ ன்  ைறக்கு அவசியமாகின்றன. பால், பால்நிலை ஆகியவற்றிற்கான சுருக்க விளக்கம் ஒன்றையும் முன்னர் பார்த்தோம். அவ்வகையில் அவற்றிற்கும் பாலியல், பெண்இயல்பு, பெண்மை போன்ற பதங்களிற்குமான தொடர்பையும் இம்மூன்று பதங்களையும் அறிவது பால்ரீதியான தொழிற் பிரிவை விளங்கிக் கொள்வதற்கு அவசியமாக உள்ளது.
47

Page 84
பெண்களும் ஆண்களும் ஒருவரிலிருந்து மற்றவர்கள் வித்தியாசமானவர்களாக இருந்து வருகின்றனர். இந்த வித்தியாசமானது அவர்களிற்கு இடையேயான உயிரியல் ரீதியானதும் உளவியல்ரீதியானதும் சமூகரீதியானதுமான காரணங்களினால் ஆனதாக உள்ளது. இயற்கையாக உள்ள உயிரியல் வித்தியாசங்கள் பால் எனவும் சமூக உருவாக்க வித்தியாசங்கள் பால்நிலை எனவும் அழைக்கப்படும். பால், பால்நிலை இரண்டும் பிரித்தறிய வேண்டிய விடயங்களாயினும் இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. உடல் என்பது உயிரியல் விடயமாகினும் வரலாற்று ரீதியில் பொருள் வகுப்புடைய ஒரு விடயமாக அது உள்ளது. அவ்வகையில் சமூக விடயங்களுடன் அது தொடர்புடையது. பெண் இயல்பு, ஆண் இயல்பு என்பன வரலாற்று ரீதியான பொருள் வகுப்புடைய விடயங்களாகவும் உள்ளன. அதே போல பாலியற்தன்மை என்பதும் வரலாறு சார்ந்ததும் சமூகம் சார்ந்ததுமான ஒரு விடயமாகும். பெண்மை என்பதும் ஒரு சமூக விடயமே. ஆனால் பால் என்பது தனியே உயிரியல் ரீதியானது அது உலகப் பொதுவான வித்தியாசங்களை ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ளதாகக் கொண்டது.
பொதுவான நம்பிக்கைகளிலும் உலக வழக்குகளிலும் பால் பால்நிலை என்ற இருவிடயங்களுக்கும் வேறுபாட்டினை மக்கள் ஏற்படுத்துவதில்லை. நடத்தைகள் எல்லாமே இயற்கையுடன் சம்பந்தப்பட்டவை என்ற கருத்தையே நம்பிக்கைகளும் சமூக வழக்குகளும் வெளிப்படுத்துகின்றன. எனினும் சமூக விஞ்ஞானங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மனிதர்களுடைய நடத்தையில் கூடுதல் செல்வாக்கைச் செலுத்தும் காரணிகளாக சமூகக் காரணிகள் அமைந்துள்ளதை எடுத்துக் காட்டியுள்ளன.
148

மேற்கூறியவாறான பொதுவான நம்பிக்கைகளாவன மனிதர்களின் நடத்தையை இயற்கையே தீர்மானிக்கின்றது என்ற கருத்துச் சார்ந்து இருக்கின்றமையால் பெண்களும் ஆண்களும் சமூகத்தில் வெவ்வேறு பங்கினை வகிக்க வேண்டும் என்ற முடிவிற்கும் வருகின்றனர். அதாவது உயிரியல் ரீதியான வித்தியாசங்கள் காரணமாக ஆண்களினதும் பெண்களினதும் பங்கு சமூகத்தில் வேறுபட்டு அமையும் என்ற கருத்தை பொதுவாக சமூகங்களில் காணலாம். இந்த உயிரியல் வித்தியாசங்களுக்கு ஏற்பவே மனிதர்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்ற கருத்தியல் காலாகாலமாக எல்லா சமூகங்களிலும் இருந்து வருகின்றது. பால் சார்ந்ததான இவ்வகைப் பிரிவு பின்னர் சமூக நம்பிக்கையினுடாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. அதனால் பெண்களும் ஆண்களும் வகிக்கின்ற பங்குகளும் ஆற்றுகின்ற செயற்பாடுகளும் சமூக நிர்ணயமாக அமைகின்றன. இவை வரலாற்று ரீதியாக மாற்றம் பெற்று வருகின்றன. அவ்வகையில் வீட்டில் செய்கின்ற வேலைகள் வீட்டிற்கு வெளியே கூலி சார்ந்தாக செய்கின்ற வேலைகள் எல்லாவற்றிற்கும் இவை ஆண்களுக்குரியவை இவை பெண்களுக்குரியவை என்ற பிரிப்பு ஏற்படுகின்றது. ச த்தில் ஆண்களும் பெண்களும் எடுக்கின்ற பொறுப்புகளும் அவ்வகையில் வேறுபட்டு அமைகின்றன. ஒரு ஆண் தலைமைத்துவ சமூகத்தில் ஆண்மேலானவன், ஆண் எதையும் செய்யக்கூடியவன், ஆண் வல்லமைமிக்கவன், மறுபுறத்தில் பெண் மென்மையானவள் இயலாதவள் வல்லமை குறைந்தவள் போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே அசமத்துவ முறைமை ஒன்று ஏற்படுகின்றது.
இவ்விடயத்தில் பாலியற்த்தன்மை என்ற பதத்திற்கான அர்த்தத்தை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
149

Page 85
பாலியற்தன்மை என்பது பால்நிலை எனும் எண்ணக் கருவைப் போலவே பால் எனும் விடயத்துடன் தொடர்புடைய தாகினும் அது சமூக உருவ்ாக்கமாகவும் உள்ளது.சமூகத்தில் உருவாக்கப்படும் மேல் வரிச்சட்டங்களிற்கு இணங்கவே ஆண்களும் பெண்களும் கூடுதலாக பாலியற்தன்மையைப் பெற்றுக் கொள்கின்றனர். சமூக உறவுகளின் போது அறியப்படுவதும் பெறப்படுவதுமான ஒரு விடயமாக பாலியற்தன்மை உள்ளது. அதனால் பாலியற்தன்மை என்பது ஒரு சமூகத்திற்குரியதாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அது சமூக அரசியல் பொருளியல் , சமயக்காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது.
பாலியல் உறவுகள் சமூக வலு உறவுகளை அடிப்படையாகக் கொண்டவை. பொதுவாக ஆண் தலைமைத்துவ சமூகத்தில் பெண்களின் பாலியற்தன்மையை கட்டுப்படுத்துபவர்களாக ஆண்கள் உள்ளனர். இவ்வாறான சமூகங்களில் ஆண்கள் பாலியல் உந்துதல்களை உடையவர்களாகவும் பெண்கள் அவற்றிற்கு தம்மை சமர்ப்பிப்பவர்களாகவும் கருதப்படு கின்றனர். ஆணுடைய பாலியற்தன்மையின் மேலாதிக்க நிலமை என்பது ஆண்தலைமைத்துவ சமுகத்தின் கருத்தியலின் பிரதான விடயமாகும். திருமணம், குடும்பம் அரசு போன்ற நிறுவனங்களினுTடாக இந்த மேலாதிக்க நிலைமை உறுதிப்படுத்தப்பட்டு வருவனவாக உள்ளது. இவ்வாறான பாலியற்தன்மையின் மேலாதிக்க நிலைமை என்பது ஆண்களுடைய பாலியல் உறவுகளை கட்டுப்பாடற்ற ஒன்றாக வெளிப் படுத்துகின்றது. இக் கருத்திய லிற் கமைய பெண்களுடைய பாலியற் தன்மை கட்டுப்பாடுடைய ஒன்றாகிறது. இக்கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பும் பொதுவாக ஆண்களுக்கே கொடுக்கப்படுகின்றது. பாலியல்ரீதியாக ஆண்கள் பெண்கள் மீது செலுத்தும் கட்டுப்பாடும் சமுகத்தில் பெண்களுடைய தாழ்வு நிலைக்கு
150

பிரதான காரணமாக அமைகின்றது. மேற்கூறியவாறு பெண்களுடைய பாலியற்தன்மையானது ஆண்களுடைய பாலியல் உந்துதலுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற ஒன்றாக வரைவிலக்கணப்படுத்தப்படும் போது பெண்கள் அர்ப்பணிப்பவர்களாக, மென்மையானவர்களாக, விட்டுக் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளிப்படுகின்றது. இதன் விளைவாக, இவ்வாறான குணங்களைப் பெண்கள் இயற்கையிலேயே உடையவர்கள் என்ற ஐதீகம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாக உள்ளது. அதனால் பாலியற்தன்மை என்பது உண்மையில் ஒரு சமூக விடயமாக இருப்பினும் அதனை இயற்கையான விடயமாகவே பொதுவாக வலியுறுதிக்கொள்வர். பாலியற் தன்மை என்பது குடும்பம், குடும்ப விரிவாக்கம், மீள்உற்பத்தி என்பவற்றுடன் தொடர்புடையதாகையால் சமூகம் ஒரு போலி ஸ்திரத்தன்மையை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளவதற்கு இவ்வாறான கருத்தியலையும் பேண வேண்டியுள்ளது. அவ்வகையில் பாலியற் தனி மைக்கும் பால் ரீதியான தொழிற்பிரிவுக்கும் உள்ள தொடர்பை அவதானிக்கலாம்.
பெண்களுக்கு இன்ன வேலை ஆண்களுக்கு இன்ன வேலை என ஒரு பிரிவை ஏற்படுத்தப்படுகின்ற போது சமூகம் எதிர்பார்க்கின்ற பெண்களுக்குரிய பாலியற்தன்மை என்பதும் கவனத்திற் கொள்ளப்படும் ஒரு விடயமாகின்றது. அவ்வகையில் ஆண் வலிமையாவன் பெண் மென்மை யானவள் என்ற கருத்துச் சார்ந்தே பால்ரீதியான தொழிற்பிரிவு ஏற்படுத்தப்படுகின்றது. வீட்டு வேலை பெண்களுடைய வேலைகளாக கருதப்படுவதும் பாலியற் தன்மைக்கும் அவ்வகையில் தொடர்பிருப்பதை அவதானிக்கலாம். இவற்றைக் கருத்தில் கொள்ளுமிடத்து ஒரு சமூகத்தில் பால்நிலை உறவுகள், பாலியல், வேலை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய விடயங்கள் என்பதை அவதானிக்கலாம்.
151

Page 86
மருத்துவ தாதிகளாகப் பெண்கள் இருப்பது, கற்பித்தல், பணிப்பெண்கள், ஆடைத்தொழில் போன்ற வேலைகளில் பெண்கள் இருப்பது ஸ்ன்பது பெண்கள் இவ்வாறான வேலைகளிற்குப் பொருத்தமானவர்கள், இவ்வாறான வேலைகள் மென்மையாக அணுகப்பட வேண்டியவை என்ற கருத்தைச் சார்ந்த விடயமே. அவ்வகையிற் தான் கொழுந் தெடுத்தல் இலகு வேலை என்றும் பெண்களுக்குப் பொருத்தமானது என்ற கருத்தும் உருவானது.
இவ்வாறு இவை பெண்களுடைய வேலைகள், இவை ஆண்களுடைய வேலைகள் என்ற பிரிவு ஆண்களிற்கும் பெண்களிற்கும் அனுபவத்தை, தொழில் சார்ந்ததாகவும் வாழ்வு சார்ந்தாகவும் வேறுவேறானதாக்குகின்றது. இப்பிரிவு சமூகத்தில் படிமுறையமைப்பை ஏற்படுத்துவதாகவும் சமூகத்தில் அதிகார முறையை அல்லது வலு உறவுகளை மீளவும் வலியுறுத்துபனவாகனவும் உள்ளன. ஆண்கள் பெண்களுடைய வேலைகளை கட்டுப்படுத்துவதனையும் பால்ரீதியான தொழிற்பிரிவு நியாயப்படுத்துகின்றது.
அவ்வகையில் பாலியற்தன்மை தொடர்பான இரண்டாம் பட்சநிலை, வீட்டு வேலைகளில் இரண்டாம் பட்ச நிலமை, தொழிலில் இரண்டாம் பட்ச நிலை என்பன ஒன்றுடன் ஒன்று தொடர்புடயைனவாக ஒரு நச்சு வட்டம் போல இயங்கிவருகின்றன.
பெண்களுடைய வீட்டு வேலைகளினாலும் அதன் சுமையினாலும் பெண்கள் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கப் படுகின்றனர். அவர்களுடைய தொழிலினுாடாக அவர்கள் பொது வாழ்வில் இணைக்கப்பட்டாலும் அது இரண்டாம் பட்சமான ஒன்றாக குடும்ப வாழ்வின் இரண்டாம் பட்ச நிலமையையும் பிரதிபலிக்கின்ற ஒன்றாக உள்ளது.
52

பால்ரீதியான தொழிற்பிரிவுக்கும் அரசியலுக்கும் தொடர்பு உள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ளுதல் நல்லது.
அரசு என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் சமத்துவமான உரிமைகளையும் வசதிகளையும் நன்மைகளையும் வழங்கும் ஒரு மத்தியஸ்தலமாக பொதுவாகக் கொள்ளப்படுகின்றது. நாட்டு மக்களிடையே வேறுபட்ட ஆர்வங்களை உடைய சமூக குழுக்களிடையே தோன்றும் முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் ஒரு நடுநிலைமையான, இவ்வாறான ஒரு பக்கச் சார்பான ஆர்வங்களில் இருந்து விடுபட்டு சுயாதீனமான இயங்கும் ஒரு அமைப்பாகவே ஒரு சனநாயக தேசத்தில் அரசினை வரைவிலக்கணப்படுத்தலாம்.
ஆனால் நடைமுறையில் அரசு என்பது சமூக உறவுகளில் காணப்படும் அசமத்துவ நிலையையும், மேலாதிக்க நிலையையும் சுட்டி நிற்கும் கட்டமைப்பின் வெளிப் பாடாகவே அமைகின்றது. சமூக உறவுகள், பால், வர்க்கம், இனத்துவம் எனப்பல விடயங்களினால் தீர்மானிக்கப்படுவனவையாக உள்ளன. இவற்றின் அசமத்துவ நிலைகள் இன்றைய அரசு எனும் அமைப்பிலும் பிரதிபலிக்கவே செய்கின்றன. அவ்வகையில் பொதுவாக அரசு ஆண்தலைமைத்துவ சமூகக்கருத்தியலினையே வெளிப்படுத்துவதாக உள்ளது. அது போல இனத்துவ ரீதியாக பெரும்பான்மைச் சமூகத்தின் கருத்தியலை பிரதிபலிப்பதாகவே அரசு அமைகின்றது.
பொதுவாக அரசு பெண்களை ஆண்களால் தலைமைத்துவப் படுத்தப்படும் குடும்ப அலகுகளின் உறுப்பினர்களாக நோக்குகின்றது. அவர்களின் வேலை, பாலியல் நடத்தை என்பவற்றை ஆண்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தையே அரசும் வெளிப்படுத்துகின்றது. பெண்கள் கணவனதும் பிள்ளைகளினதும் தேவைகளைக் கவனிக்க
153

Page 87
வேண்டியவர்களாகவும் அவ்வாறான வேலைகள் பெறுமதியற்றவை என்பதையும் அரசு உறுதிப்படுத்துகின்றது. பெண்களுடைய தொழிலை ன்டுத்துக் கொண்டாலும் தொழில் குறைவாக மதிக்கப்படல், சம்பளம் குறைவாக கொடுபடல், நீண்ட வேலை நேரம் போன்றவற்றை அரசும் ஏற்று வெளிப்படுத்தி ஆதரிப்பதாகவே இருக்கின்றது. அது போல இவை ஆண்களது வேலை, இவை பெண்களுடைய வேலை, இம்மாதிரியான வேலையை பெண்கள் செய்யக்கூடியவர்கள், இவற்றைச் செய்யமுடியாதவர்கள் என்ற தொழிற் பிரிவை அரசு அங்கீகரிக்கிறது.
தன்னுடைய சட்டவாக்கம், கொள்கைகள், திட்டமிடல், நிதிஒதுக்கீடு வளங்களின் ஒதுக்கீடு என எல்லாவிடயங்களிலம் அரசு இக்கருத்தியலை வெளிப்படுத்துவதுடன் பால்நிலை உறவுகளை மீளவும் வரைவிலக்கணப்படுத்துகின்றது. அதனால் அரசு என்பது பால்ரீதியான தொழிற்பிரிவையும் அதனூடாக எழும் சமூக உறவுகளையும் தீர்மானிக்கும் ஒரு பலம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது.
இவற்றைக் கருத்திற் கொள்ளுமிடத்து பால்ரீதியான தொழிற்பிரிவு என்பது தற்செயலான ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். அத்துடன் பெண்களுடைய இரண்டாம் பட்ச நிலமையின் தொடர்ச்சிக்கு காரணமான ஒன்றாகவும் எல்லாச் சமூக நிறுவனங்களினாலும் உறுதிப்படுத்தப்படுவதாகவும் உள்ளதைக் காணலாம்.
இவ்வகையானதொரு கருத்தாக்கத்தினடிப்படையில் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களுடைய வேலையையும் வாழ்வையும் விளங்கிக் கொள்வது பொருத்தமானதாகும்.
இங்கு பெண்களுடைய வேலை என்பது மதிக்கப்படாமல்
154

இருப்பது, அவர்கள் பிரதான வருவாயைத் தேடித்தருபவர் கள் என்று கருதப்படாமை போன்ற விடயங்களும் பால்நிலைக்கருத்தியலுடன் தொடர்புடைய விடயங்களாகும்.
பெண்நிலைவாதிகளிற்கிடையேயும் கொள்கை வகுப்பாளர் களிடையேயும் உற்பத்தித் துறையிலும் வருமானம் தேடித்தரும் துறையிலும் பெண்கள் ஈடுபத்தப்பட்டால், பொருளியல் ரீதியாக பெண்களுடைய பங்குபற்றல் அதிகரிக்கும் போது இரண்டாம் பட்ச நிலையில் இருந்து அவர்களை விடுவிக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவியது. ஆனால் அவ்வகைத் திட்டங்களை அமுல்படுத்தும் போது பொருளியல் ரீதியாக பெண்கள் எவ்வளவுதான் தமது பங்களிப்பை வழங்கினாலும் சமூகத்திலும் தொழில் ரீதியாகவும் குடும்பத்திலும், தொடர்ந்தும் இரண்டாம் பட்ச நிலை தொடருவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதனால் பெண்களை பயன்தரு தொழில்களில் ஈடுபடுத்துவது என்ற விடயத்தைவிட அவர்கள் ஈடுபடும் தொழிலின் தன்மையே பிரதானமானது என்பதையும் சமூகப் பயன்பாடு விழுமியங்களில் மாற்றங்களை ஏற்படுத்து வது அவசியம் என்றும் தற்பொழுது உணரப்படுகின்றது.
அவ்வகையில் அரசியல் சார்ந்ததாக பெண்கள் இயக்கங்க ளினூடாக நிலமைகளை மாற்றுவது மிகவும் பிரதானமான விடயமாகும். அங்கு பிரதானமாக பெண்கள் உற்பத்திச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்தல் பெண்களின் வீட்டு வேலைகளில் பெறுமதியை உணர்தல், பால்நிலை, பாலியற்தன்மை போன்ற விடயங்கள் சமூகத்தினுடைய உருவாக்கம் என உணரல் போன்ற மாற்றுக்கருத்துக்களை முன்வைத்தலும் போராடுலும் அவசியமானதாக உள்ளது.
பெண்கள் இயக்கம் ஒன்று பலமானதாக அமைகின்ற போது பெண்களுடைய பிரதிநிதித்துவம் பெண்நிலை சார்ந்த
155

Page 88
கருத்தியல் ஒன்றும் நீண்ட காலத்தில் அடையப்படக் கூடிய விடயங்களாக அமையும். அப்பொழுது அரசும் பெண்களின் தகுதிநிலையை மாற்ற வேண்டி நேரிடும்.
இவைபால்ரீதியான தொழிற்பிரிப்பு தொடர்பாக உள்ள சில அடிப்படை எண்ணக்கருக்களாகும். இவற்றினடிப்படையில் மலையகத்தில் பெண்களுடைய தொழிலையும் வாழ்வையும் பல மட்டங்களில் ஆய்வு நோக்கில் நாம் பார்க்க முற்பட்டோம்.
156

கட்டுப்பாடுகளும் அடக்கு முறைகளும் அர்த்தப்படல்
மிகவும் இறுக்கமானதும் தீவிர கண்காணிப்பின் அடிப் படையிலும் அமைந்த ஒரு தாபனமாக பெருந்தோட்டங்களை வரைவிலக்கணப்படுத்தலாம். பயமுறுத்தல்கள், தடைகள், எச்சரிக்கைகள், தண்டனைகள் என்பன பெருந்தோட்ட வரலாற்றில் பிரபலமானவை. அவ்வகையில் அதிகாரம் என்பது ஆகக்கூடிய அளவில் பிரயோகிக்கப்படும ஒரு தாபனமாக டெருந்தோட்டங்கள் அமைகின்றன. அதிகளவான தொழிலாளர்களையும் சிறிய தொகையினரான நிர்வாகிகளையும் கொண்டவையாகவும் நிர்வாகமுறைமைகளிலும் இயந்திரமயமாக்கலிலும் உலகெங்கும் அதிவேகமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் கூட இவையிரண்டிலும் மாற்றங்கள் ஏற்படுத்தாத வகையில் இன்னமும் பாரம்பரிய நிர்வாக முறைகளையும் தொழில் முறைகளையும் பின்பற்றும் ஒரு தாபனமாகவும் அமைகின்றது.
இத்தகைய நிலைமைகள் பெருந்தோட்டங்களில் நிலவுவதற்கு இரு காரணிகள் வாய்ப்பாக இருக்கின்றன. ஒன்று பெருந்தோட்டங்களில் தொழில் செய்பவர்கள் இனத்துவ ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு குழுவினைச்

Page 89
சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இரண்டாவது கூடுதலான பெண்கள் வேலைசெய்கின்றனர். இந்த இரண்டு காரணங்களினாலும் வரலாற்று ரீதியாக தீவிர கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு குழுவாகத் தொழிலாளர்கள் கருதப்பட்டு வருகின்றனர்.
தொழிலாளரின் வாழ்வும் தொழிலும் தோட்டம் என்னும் புவியியல் எ ல் லைக்குள் வரையறுக் கப்பட்டதாக இருப்பதால், தொழில் தவிர்நத ஏனைய விடயங்களிலும் நிர்வாகக்கட்டுப்பாட்டினை விதிக்க கூடிய வகையிலேயே பெருந்தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலம் என்பது தொழிலாளரின் உடைமையல்ல தொழிலாளர்களின் சொத்து க்கள், பாத்திரங்கள், புடவைகள், கால்நடைகள், சொற்ப ஆபரணங்கள் என்பவற்றுள் அடங்கிவிடும். லயன்கள் என ஒதுக் கப்பட்ட இடங்களைத் தவிர தொழிலாளர் தற்காலிகமாக கால்நடைகளை வளர்ப்பதற்கு, சமையல் செய்வதற்கு எனச் சிறிய கொட்டில்கள் அமைப்பதுண்டு. அவ்வாறு கொட்டில்களை அமைப்பதற்கு நிர்வாகத்தின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது. இது போல பல விடயங்களிற்கு நிர்வாகத்தின் அனுமதி அவசியமாகின்றது. முன் அனுமதி பெறாத சந்தாப்பத்தில் இவ்வாறான காரியங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். விறகுத் தேவைக்கு மரம் வெட்டியமை, அனுமதியின் றி வெறுமையாக இருந்த லயன் அறையில் குடியிருந்தமை போன்றவற்றிற்காக தண்டனை வழங்கப்படுகின்றது. தண்டனைகள் சிறுபணத் தொகையாக அல்லது சில நாட்சம்பளமாக இருக்கும். சில சந்தர்ப்பங்களில் குறித்த சில நாட்களுக்கு வேலையால் நிறுத்தப்படுவதுண்டு.
வேலை சார்ந்ததாக தண்டனைகளை எடுத்துக் கொள்ளும் போது தாமதமாகி வேலைக்கு வரல், தொடர்ச்சியாக
58

சிலநாள்வேலைக்கு வராது நிற்றல் (சு கயினம் காரணமாக அல்லது வேறு காரணங்களுக்காக), கொழுந்துடன் வேறு இலைகளையும் கொய்தல் போன்ற சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். வேலைக்கு தாமதமாகின்ற போது விரட்டப்படுதல், தொடர்ச்சியாக வேலைக்கு வராத போது வேலையில் இருந்து நிறுத்துதல், கொழுந்து சரியாக இல்லை என கிலோக் கணக்கை குறைத்து எழுதுதல, பாதிநாள் வேலையை பதிதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவையெல்லாம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தொழிலாளாருக்கு பாதிப்பை ஏற்படுத்துவனவாக உள்ளன.
வேலையை விட்டு நிறுத்துதல் என்பது பலவிளைவுகளை கொண்டு வரக்கூடியது தோட்டத்தொழிலாளரைப் பொறுத்த வரை தோட்டங்களுக்கு வெளியில் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்வது கடினமாகும். பெற்றுக் கொண்டாலும் தற்காலிகமான வேலைகளாகவே அவை இருக்கும். வேலையால் நிறுத்தப்படுதல் என்பது லயன்களில் வசிக்கும் உரிமையை இழத்தலையும் குறித்து நிற்கும். இவ்வாறு தொழிலாளரின் தொழிலும் வாழ்வும் தீவிரகண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இயங்கி வருகின்றதாக இருப்பதற்கு நிர்வாகம் மிகவும் இறுக்கமான அதிகார முறையைப் பின்பற்றுவதே காரணமாக இருக்கின்றது. அதனால் தொழிலாளர் நிர்வாகம் என்ற பரந்த அளவிலான பிரிப்பு அடிப்படையில் சிக்கலான உறவுகளைச் சுட்டி நிற்பதாக இருக்கின்றது. தொழிலாளர் மட்டத்திற்கும் நிர்வாக மட்டத்திற்கும் இடையில் இயங்குகின்ற அலுவலர்களும் (staft) தொழிலாளர் சார்பாக இயங்குவதில்லை. அந்தஸ்தைப் பொறுத்தவரை தொழிலாளர் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவர்களாகவும் அலுவலர்கள் நடுத்தர மட்டத்தில் இருப்பவர்களாகவும் நிர்வாகிகள் உயர் மட்டத்தில் இருப்பவர்களாகவும் மூன்று வகையான படிமுறைகளை
59

Page 90
பெருந்தோட்டங்களில் காணலாம். மூன்று வகையான படிமுறையமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கப்படும் வசதிகளும் மாறுபட்ட வகையிலேயே அமையும் . நிர்வாகிகளுக்கு கொடுக்கப்படும் வீடுகள் எல்லா வசதிகளையும் உடையதாக இருக்கும். அதற்கு அடுத்ததாக அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் விடுதிகள் ஓரளவுக்கு வசதிகளை உடையதாகவும் தொழிலாளர் லயன்கள் வசதிகளே அற்றதாக இருக்கும்.
இவ்வாறு தொழிலாளர், அலுவலர்கள் நிர்வாகிகள் என இருக்கும் பிரிப்பு இனத்துவ ரீதியான பிரிப்பையும் சுட்டிக் நிற்கும். அலுவலர்கள் ஒன்றில் பிரித்தானியர்களாக, சிங்களவராக அல்லது வடக்கு கிழக்கு தமிழராகவே இருந்தனர். தொழிலாளர்கள் மலையகத் தமிழராக இருந்தனர். தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் நிர்வாகிகளும் அலுவலர்களும் கூடுதலாக சிங்களவர்களாக இருந்தனர். இலங்கையை சேர்ந்த தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் விற்கப்பட்ட காலத்தில் இலங்கையர் அவற்றின் உடமையாளராக இருந்தனர். தற்பொழுது தேயிலைத் தோட்டங்கள் வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்டு வருவதால் வெளிநாட்டவர் தோட்ட உடமையாளராக இருந்தாலும் நிர்வாகிகள் சிங்களவராகவே இருக்கின்றனர். 1983 இனக்கலவரங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்குத் தமிழர்கள் சிலர் நிர்வாகிகளாகவும் அலுவலர்களாகவும் தொழில் செய்துள்ளனர். இன்றைய நிலைமை அவ்வாறானதல்ல. எனினும் அலுவலக மட்டத்தில் ஒரு சில மலையகத் தமிழர் கணக்கப்பிள்ளைகளாகவும் மேற்பார்வையாளார்களாவும் தொழிற்சாலை அலுவலர்களாகவும் வேலையைப் பெற்றுள்ளனர். 1983ற்குப் பின்னர் வடக்கு கிழக்கு தமிழர் பெருந்தோட்டங்களில் நிர்வாகிகளாக அல்லது அலுவலர்களாக தொழில் பார்ப்பது குறைவு. இன்றைக்கு ஒரு சிலரே
160

அவ்வாறு பெருந்தோட்டங்களில் தொழில் புரிகின்றனர். அலுவலர் மட்டத்தில் இருக்கும் மலையகத் தமிழர் பெரும்பாலும் உயர்சாதியினராகவே இருக்கின்றனர்.
பால்ரீதியான கட்டமைப்பு தொழிற்படிமுறையமைப்பில் எத்தகையது எனப்பார்க்கின்ற போது தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் தொழிலாளர் எனும் அந்தஸ்தை உடையவராகவே இருக்கின்றனர் என்பதை அலுவலர் மட்டத்திலே, நிர்வாக மட்டத்திலே பெண்கள், தொழில்பார்ப்பது இல்லை. பிள்ளை மடுவத்தைப் பராமரிப்பவர், மருத்துவ தாதி ஆகிய இருபதவிகளிலும் பெண்கள் இருக்கின்றனராயினும் அவர்கள் பெரும்பாலும் மலையகத் தமிழராக இருப்பதில்லை. மேலும் தொழிலாளர் வாழ்நாள் முழுவதும் தொழிளார்களாக இருக்கின்ற முறைமையே பெருந்தோட்டங்களில் பேணப்படுகின்றது. பதவி உயர்விற்கான வாய்ப்புகள் எதுவும் தொழிலாளருக்கு வழங்கப்படுவதில்லை. ஆகையால் தொழிலாளர்கள் எனும் பதவி தவிர்ந்த ஏனைய பதவிகள் ஆண்களுக்குரியனவாகக் கருதப்படுகின்றன.
தொழிற் கட்டமைப்பானது வர்க்க முறைசார்ந்ததாக இறுக்கமாக இருப்பதுடன் இனத்துவ ரீதியான, சாதிரீதியான, பால்ரீதியான குணாம்சங்களை வெளிப்டுத்துவதாக உள்ளது. இதனால் அதிகாரக்குவிவு என்பது கீழ் மட்டத்தில் உள்ளோரை அச்சுறுத்துவதாகவும் அவர்களது கீழ்மையை மேலும் மேலும் வலியுறுத்துவதாகவும் உள்ளது. பெண்களது தொழில் பெண்களுக்கு உரியதாகவும் தொழில் வகைப்பாடுகள் எல்லாம் பால்ரீதியான பொருத்தப்பாட்டுடன் நடைமுறை யிலுள்ளன என்றே கருதப்படுகின்றன. இவ்வாறானதொரு கருத்தியலிற்குப் பின்னால் பெண்கள் தொடர்ச்சியாக கட்டுப்படக்கூடியவர்கள் மேற்பார்வை செய்யப்படக் கூடியவர்கள் என்ற கருத்து வேரூன்றியதாக உள்ளது. பெண்கள் தொழிலாளர்களாக வகிக்கின்ற பங்கிற்கு உயர்ந்த பங்கினை வகிப்பவர்கள் எல்லோரும்
61

Page 91
ஆண்களாகவே இருக்கின்றனர்.
தொழிலாளர்கள் தொழிற் படிமுறையமைப்பின் மிகவும் அடிமட்ட சமூக அந்தஸ்தை உடையவர்களாகவும் மிகவும் குறைந்த வேதனத்தை உடையவர்களாகவும் உள்ளனர். அவர்கள் எல்லோரும் நாட்கூலியின் அடிப்படையில் மாதாந்தம் திரட்டிய சம்பளத்தை பெறுபவர்களாக இருக்கின்றனர். தொழிலாளர் எல்லோரும் பெறும் சம்பள அளவு ஒன்றாக இருக்கின்றது. அதாவது நாட்கூலியானது தொழிலாளர் எல்லோருக்கும் ஒரே அளவான தொகையாகும். (எனினும் மொத்தமாதாந்த சம்பள அளவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓவர்கிலோ முறைமையால் மாற்றமடையும்) சம்பள நிர்ணயத்தைப் பொறுத்தவரை தொழிலாளர் எல்லோரும் தேர்ச்சியடையாத தொழிலாளர்களாக கொள்ளப்படுகின்றனர்.தொழிலாளர் மட்டத்தில் வேலைகளின் தன்மையில் வித்தியாசங்கள் இருப்பினும் சம்பள அளவில் அல்லது அந்தஸ்தில் வித்தியாசம் இருப்பதில்லை. தோட்டத்தொழிலாளர் நியமனம் கல்வியறிவை வேண்டி நிறகாத ஒன்றாக உள்ளது. அதுபோல வேலையில் பயிற்சியினுடாக பதவி உயர்வையும் வழங்க வாய்ப்பளிக்காத ஒன்றாகும். இவ்வாறான அடிமட்டத் தொழிலில் தொடர்ந்தும் பெண்கள் இருப்பது வாழ்நாள் முழுவதும் எதுவித முன்னேற்றமும் இல்லாத ஒரு நிலைமையை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது.
தொழிலாளர்களுக்கு அடுத்த படியாக தொழிற் படி முறையமைப்பில் அலுவலர்கள் காணப்படுகின்றனர். பெருந்தோட்டங்களில் அலுவலர்களாகக் கடமையாற்றுபவர்கள் அலுவலகம், தொழிற்சாலை தோட்டங்கள், மருத்துவசாலை, பிள்ளைமடுவம் ஆகிய இடங்களில் வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.
அலுவலகம் என்பது கோப்புகள், புத்தகங்கள், பதிவுகள்,
162

என்பவற்றுடன் சம்பந்தப்பட்டதாக கணக்கு வழக்குகளுடன் இணைந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு பிரதான லிகிதர் அவருக்கு கீழ் வேலைசெய்கின்ற லிகிதர்கள் தட்டெழுத்தாளர், கணக்காளர் ஆகியோரை உள்ளடக்கியது. தோட்டங்களின் இலாப நட்டங்கள், வரவு செலவுகள், தொழிலாளர்களின் விபரங்கள், சம்பள விபரங்கள்,லிவு விபரங்கள், ஓய்வூதியம் தொடர்பான விடயங்கள், சேமலாபநிதி தொடர்பான விடயங்கள் என்பன இங்கு பேணப்படும்.
தொழிற்சாலையில் தேயிலை உற்பத்தியுடன் இணைந்த நாளாந்த செயற்பாடுகள் நடைபெறும். தொழிற்சாலைத் தலைமையானது தலைமை அலுவலரின் (ரீமேக்கர்) தலைமையில் இயங்குகின்றது. இவரின்கீழ் உதவியாளர்கள் அலுவலர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய பிரதான வேலை தொழிற்சாலைகளில் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை செய்வதாக இருக்கும்.
தோட்டங்களில் அதாவது விவசாய தளத்தில் பிரதான பங்காற்றுபவராக கள உத்தியோகத்தர் (கண்டக்டர்) இருக்கின்றார். தேயிலை எனும் பயிருடன் சம்பந்தப்பட்ட விவசாயத் துறை சார்ந்த விடயங்களை மேற்பார்வை செய்பவராக கண்டக்டர் பணியாற்றுவார். காலையில் கங்காணிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலையை பகிர்ந்து கொடுப்பது இவருடைய பிரதான பணியாகும். ஒரு தொழிலாளியின் ஒரு நாள் வேலை திருப்தி கரமானது எனும் அர்த்தத்தில் கண்டக்டர் தனது கையொப்பதை இட்டால் மட்டுமே குறிப்பிட்ட தொழிலாளி தனது நாளுக்கான கூலியைப் பெறலாம். கண்டக்டருக்கு கீழ் வேலை செய்பவர்களாக கணக்குப்பிள்ளைகளும் மேற்பார்வை யாளர்களும் இயங்குவர். அலுவலர்களுக்கு கீழ் கங்காணிகள் இயங்குவர். கங்காணிகளுக்கு கீழ் தொழிலாளர் இயங்குவர்.
163

Page 92
கங்காணிகளும் தொழிலாளரும் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்நதவர்களாகவும் கணக்கப்பிள்ளைகளும் மேற்பார்வை யாளர்களும் அலுவலர்களர்கவும் கருதப்படுவர்.
பெண் தொழிலாளர்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவரா
கங்காணிகள் இருக்கின்றனர். தொழிலாளர்களின் வேலைை
எந்த நேரமும் கண்காணிப்பதுடன் பெண்தொழிலாளர்கள்
கொழுந்து பறிக்கும் போது அதிகம் அளவளாவக் கூடாது, எந்நேரமும் கொழுந்தெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், மட்டத்தைக் குழப்பக் கூடாது, நேரத்தை வீணாக்கக் கூடாது என்பவற்றைத் தொடர்ச்சியாக செயற்படுத்துபவராக கங்காணிகள் இயங்குவர். அது போல நிறையைக் கணிப்பிடுவதில, பெயர் போடுவதில, மாதாந்தம் சம்பளத் தொகை கணிப்பிடுவதில் , லிவு நாட்களை கணிப்பிடுவதில் என மேற்பார்வையாளர்களினதும் கணக்கப்பிள்ளைகளினதும் செல்வாக்கு இருக்கும். எடுக்கப்பட்ட கொழுந்து சரியாக இல்லை வேறு இலைகளும் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டை இவர்கள் சுமத்தலாம். நிறையைக் குறைத்து போடலாம். இப்படியாக பெண் தொழிலாளர்கள் தொழில்சார்ந்த நிலமைகள் அவர்களிற்கு மேல்மட்டத்தில் பணிபுரியும் ஆண்தொழிலாளிகளினாலும் அலுவலர்களினாலும் எந்நேரமும் கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்.
இவர்கள் தவிர அலுவலர்கள் எனும் வகைப்பட்டில் ஒரு வைத்தியர் ஒரு குடும்பத்திட்ட மேற்பார்வையாளர் வாகனச் சாரதி ஆகியோரும் அடங்குபவர்களாக இருக்கின்றனர்.
அலுவலர் மட்டத்திற்கு அடுத்ததாக நிர்வாகத்தில் உள்ளோர் ஒரு படிமுறையைத் தோற்றுவிக்கின்றனர். நிர்வாகம் எனும் மட்டத்தில் முகாமையாளரும் உதவிமுகாமையாளரும் அடங்குவர். நிர்வாக மட்டத்தில் துரை, சின்னத்துரை, என
164

இருவரும் அழைக்கப்படுவார்கள். தோட்டத்தின் முழுமையான முகாமைத்துவத்துக்கு பொறுப்பாக துரை இருக்கின்றார். தோட்டமுகாமையாளர்களினால் இவர்கள் நியமிக்கப் படுவார்கள். அதாவது தனியார் கம்பனிகளினால் அல்லது அரசினால் நியமிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். துரை எனர் பவர் ஒரு அதிகாரத்து குரிய உருவமாகவும் படிமுறையமைப்பின் நடுநாயகமாகவும் இருக்கின்றார். காலனித்துவ காலங்களில் ஆங்கிலேயர்களே இப்பதவியில் இருந்தனர். ஆரம்பத்தில் தோட்டங்களை இலங்கையில் வாங்கியவர்கள் இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகரிகளாக இருந்தனர். தவிர காலனித்துவ காலங்களில் காலனிகளில் இருந்தவர்கள் தொடர்பாக மேற்கத்தையரின் கருத்தியல் என்பவற்றின் வெளிப்பாடாக துரைக்கும் ஏனையோருக்கும் இடையிலான உறவு இறுக்கமானதாகவும் ஆண்டான் அடிமை உறவு போலான ஒன்றாகவுமே காணப்பட்டது. இன்னமும் காலனித்துவ காலத்தைய உருவகப்படுத்தல்களின் எச்சங்கள் துரைதொடர்பாக எல்லோரும் அச்சத்துடன் நோக்கப்படுபவராக இருப்பதும் இன்றைக்கும் முன்னர் இருந்தமுறை தொடர்வதையே காட்டுகின்றன.
அதிகாரம் முழுவதும் முகாமையாளரிடம் குவிந்திருந்தாலும் முகாமையாளர் அவற்றுக்குரிய எல்லா அலுவல்களையும் தானே செய்வதில்லை. உதவி முகாமையாளரிடம் கூடுதலான வேலைகள் பாரங்கொடுக்கப்பட்டிருக்கும். ஆவணங்களில் கையெழுத்திடுவது, தீர்மானங்களை எடுப்பது அமுல்படுத்து வது என்பவற்றுடன் அவ்வப்போது தொழிற்சாலையைப் பார்வையிடுவது, தோட்டங்களை மேற்பார்வையிடுவது ஆகியவையே துரையின் நாளாந்த அலுவல்களாகும்.
பெருந்தோட்டங்களில் சமூக இடையூடாட்டமானது
165

Page 93
தொழிற்படிமுறை அமைப்பிற்கேற்ப தொழிலாளர் அலுவலர் நிர்வாகிகள் என்ற மூன்று பிரிவுகளுக்கேற்ப நிகழ்வதாக உள்ளது. தொழில் மட்டத்தில் இம்முன்று பிரிவுகளுக்குமான உறவுகள் மேற்கூறியவாறு அலுவல்கள் கடமைகள், உரிமைகள், அதிகாரம், பொறுப்புகள் அந்தஸ்து, சம்பள அளவு என்பவற்றிற்கேற்ப தீர்மானிக்கப்படுவதாக இருப்பினும் தொழிலுக்கு வெளியே பொதுவாழ்விலும் இவை சமூக அந்தஸ் தைத் தீர்மானிப்பனவாக இருக்கின்றன. இவ்விடயத்தைக் கருத்திற் கொள்ளும் போது பெண்களுடைய சமூக அந்தஸ்திற்கான உயர்வை அல்லது மேல் நோக்கிய அசைவை வழங்க முடியாத ஒரு தொழில் முறையே பெருந்தோட்டங்களில் நிலவி வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஒரு பெண் தொழிலாளியின் தொழில் சார்ந்ததாக ஒரு படிமுறையமைப்பை பின்வருமாறு விளங்கிக் கொள்ளலாம். ஒரு பெண் தொழிலாளியின் அன்றாட தொழிலுடன் சம்பந்தப்பட்ட நேரடியான உயர்அலுவலர்களையும் நிர்வாகிகளையும் மட்டுமே இங்கு கருத்திற் கொள்வதாக இவ்வரைபடம் அமைந்துள்ளது.
நிர்வாகம்(ஆண்)
அலுவலர் (ஆண்)
தொழிலாளர் (பெண்களும் ஆண்களும்)
|66

முகாமையாளர் (புெரிய துரை) (ஆண்)
உதவிமுகாமையாள்ர் (சின்னத்துரை ஆண்)
விவசாய கள அலுவ்லர் (கண்டக்டர்) (ஆண்)
பெரிய கணக்கப்பிள்ளை (ஆண்)
மேற்பார்வையாளர் (சுப்பவைசர்) +உதவிக்கணக்கப்பிள்ளை
(ஆண்)
கங்காணி (ஆண்)
தொழில்ாளி (பெண்)
ஒரு தோட்டத்தின் படிமுறையமைப்பானது இத்கையதான பால்ரீதியான தொழிற்பிரிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஏறத்தாழ 150 வருடங்களுக்கு மேலாக இதே முறைமையே பின்பற்றப்பட்டுவருவதாக உள்ளது. பெண்களுடைய சமூக அந்தஸ்தைப் பாதிக்கின்ற இப்பிரதான விடயம் தொடர்பாக பெண்நிலை சார்ந்த கொள்கைவகுப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒரு நிலையிலேயே உள்ளனர்.
கல்வியறிவை வளர்த்தல், பயிற்சிகளை வழங்குதல் இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்துதல், பதவி உயர்வுக்கான வழிவகைகளை ஏற்படுத்தல், நவீன வழிமுறைகளை அமுல்படுத்தல் நிர்வாகத்தைப் பெண்கள் சார்புடையதாகவும் நெகிழ்வுள்ளதாகவும் ஆக்குதல் என்பன சில மாற்றுவழிகளாகும்.
167

Page 94
வேலை : கால நேரமும் ஊதியமும், ஒருபால்நிலைக் கணிப்பீடு
தோட்டத்தில் நடைபெறுகின்ற வேலைகள் தேயிலை என்னும் பயிரை வளர்த்தல, பராமரித்தல, உச்சவிளைச்சலைப் பேணுதல் , கொழுந்தெடுத்தல், தொழிற்சாலையில் கொழுந்தைப் பதப்படுத்தி தேயிலையாக்குதல், பொதி செய்தல் எனப் பலவகையான தொடர் செயற்பாடுகளுடன் தொடர்புடையன.
அவ்வேலைகளை கொழுந்தெடுத்தல், சில்லறை வேலைகள், மேற்பார்வையும் நிர்வாகமும், தொழிற்சாலை வேலைகள் எனப்பிரிக்கலாம். அவற்றுள் பல சிறு சிறு வேலைகள் அடங்கக் கூடியன. அவ்வேலைகளில் கொழுந்தெடுத்தல் என்பதும் சில்லறை வேலைகள் என்பதும் பொதுவாக தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் வேலை களாகும். மேற்பார்வை, நிர்வாகம் ஆகியன அலுவலர்களினாலும், தொழிற்சாலை வேலைகளிற் சில தொழிலாளர்களினாலும, சில அலுவலர்களினாலும் மேற்கொள்ளப்படுவனவாகும். இவை தவிர தோட்ட முறைமையை ஒரு முழுமையான மூடிய நிறுவனமாகப் பேணும் வகையில் ஏற்படுத்தப்படும் வசதிகள் சார்ந்தும் சில வேலைகள் அமையும். மருத்துவ தாதி, பிள்ளை மடுவத்தைப் பராமரிப்பவர், சலவைத் தொழிலாளி, முடிவெட்டுபவர், ஆசிரியர்கள் போன்றோர் அவ்வாறான வர்கள். தொழிற்படி முறையமைப்பில் முக்கியமாக மிகவும் முதல் இடத்தில் துரையும், கடைசி இடத்தில் தொழிலாளரும் இருப்பர். தொழிலாளர்கள் அதே தோட்டத்தைச் சேர்ந்தவர்களாக லயன்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள். அலுவலர்களுக்கு வசதியான சிறிய வீடுகள் தோட்டத்தில் கொடுக்கப்பட்டி ருக்கும். துரைக்குப் பெரிய பங்களா ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும்.
168

தற்போதைய நிலைமையில் தொழிலாளர்கள் அல்லது ஒரு தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே தோட்டத்தில் வசிப்பவர்கள் எனக்கொள்ள முடியாது. மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள், ஆடைத்தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்கள், கொழும்பு போன்ற நகரங்களில் வீடுகளில், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் எனப் பலர் தோட்டங்களைத் தமது நிரந்தர முகவரியாகக் கொண்டவர்களாக உள்ளனர். எனினும் பெரும்பான்மையானவர்கள் தோட்டங்களில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர்.
தோட்டங்களில் வேலை செய்பவர்களை அவர்களுடைய வேலையுடன் தொடர்புடையவர்களாக, பால் அடிப்படையில் சிந்திப்போமாயின் பொதுவாக கொழுந்தெடுக்கும் வேலையைச் செய்பவர்களாக பெண்கள் இருக்கின்றார்கள். தேயிலை விளைச்சல் கூடுதலாக இருக்கின்ற போது சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் கொழுந்தெடுக்கும் வேலையில் ஈடுபடுவர். பெண்கள் சில்லறை வேலைகள் சிலவற்றில் அவ்வப்போது ஈடுபடுவர். அவை மட்டம் வெட்டுதல, களைண்டுத்தல் என்பனவாகப் பொதுவாக அமையும். இவ்வாறான சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களைத்தவிர சாதாரணமாக தோட்டங்கள் பால்ரீதியான தொழிற்பிரிப்பை தெளிவாக் காட்டும் அமைப்புக்களாகும். மேற்பார்வை யாளர்களாக பெண்கள் இருப்பது கிடையாது. அலுவலர்களில் மிகச்சிலரே பெண்களாக இருக்கின்றனர்.
கொழுந்தெடுத்தல்
கொழுந்தெடுத்தல் என்னும் வேலையானது எந்தவித அடிப்படைக் கல்வியையோ பயிற்சியையோ வேண்டி நிற்காத ஒன்றாகும். பொதுவாக பெண்களாற் செய்யப்படும் வேலையாகும். வயதெல்லை என்பது தீவிரமாகப்
169

Page 95
பின்பற்றப்படுவதில்லை. பொதுவாக 16 வயதில் பெயர் பதிவார்கள். தேயிலைச் செடியைவிட உயரமானவர்களாக கொழுந்தெடுப்பவர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இக்காரணத்தைக் கருத்திற்கொண்டே வயதெல்லை என்பது கவனத்தில் கொள்ளப்படுகின்றது. அதே தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களும் கல்யாணம் செய்து குறிப்பிட்ட தோட்டத்திற்கு வந்தவர்களும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். வேலை செய்கின்ற போதே பழகிக்கொள்ளும் ஒரு வேலையாக இது இருக்கின்றது. முழுமையாக ஊழியச் செறிவை வேண்டிநிற்கும் ஒரு வேலையாக இது இருக்கின்றது. அதாவது இயந்திரபாவனை என்பது கொழுந்தெடுத்தலில் இல்லை. மலைகள் சரிவுடையனவாக இருப்பது, கரடுமுரடாக சீராக இல்லாமல் இருப்பது, தேயிலைக் கொழுந்தைத் தெரிந்தெடுக்க வேண்டியிருப்பது போன்ற காரணங்களால் இயந்திரப் பாவனை சாத்தியமில்லாமல் இருப்பதும், குறைந்த கூலியில் வேலையைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருத்தலும் இவ்வாறு இயந்திரப்பாவனையை அறிமுகப்படுத்தாமல் இருப்பதற்குக் காரணங்களாகும். வேலை செய்கின்ற போதே பழகிக்கொள்ளும் வேலையாக இருப்பினும் தேர்ச்சி என்பது இங்கு அவசியமாகும். விரைவாகக் கொழுந்தெடுத்தல், மட்டத்தைக் குழப்பாது கொழுந்தெடுத்தல், இரண்டு மென்மையான இலைகளும் குருத்தும் என தெரிந்து பிடுங்குதல், போன்றன இங்கு அடிப்படை விடயங்களா கையால் இங்கு கவனமும் அனுபவமும் தேவையாக உள்ளது. நன்றாக கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு நிர்வாகம் கூடுதலான மதிப்புக் கொடுப்பதைக் காணலாம். எனினும் கொழுந்தெடுக்கும் வேலையில் பதவியுயர்வு என்பது கிடையாது.
யாரை எந்த மலைக்கு அனுப்புவது எவ்வளவு பேரை
70

ஒருமலைக்கு அனுப்புவது என்ற தீர்மானம் தேயிலை வளர்ந்திருக்கும் முறைக்கேற்பவும் உற்பத்தித் தேவைகளுக்கு ஏற்பவும் தீர்மானிக்கபப்டும். கொழுந்து எடுக்கும் போது ஒரு குழுவினாலேயே பொதுவாக எடுக்கப்படும். இக்குழுவிற்கு ஒரு கங்காணி பொறுப்பாக இருப்பார். கொழுந்தெடுத்தல் வேலையானது கூடுதலாக மேற்பார்வைக்கு உட்படும் ஒரு வேலையாகும். அங்கு கங்காணிக்கு முழு அதிகாரமும் இருக்கும். அனேகமாக 30 பெண்கள் ஒரு கங்காணிக்குக் கீழ் வேலை செய்வர். பொதுவாக 7 நாட்களுக்கு ஒரு குழு ஒரு மலையில் வேலை செய்யும். 7 நாட்களுக்கு ஒரு முறை பொதுவாக மலையை மாற்றிக் கொடுப்பர். ஒரு மலையில் கொழுந்து பறிக்கப்பட்டதும் மறுபடியும் வளர்வதற்கு 7 நாட்கள் விடுவார்கள். கவ்வாத்து வெட்டிய பின் கொழுந்தெடுக்கத்தயாராக இருக்கும் மலை புது மலை எனப்படும். புது மலையில் கொழுந்து கூடுதலாக இருக்கும். அனேகமாக அனுபவமும் தேர்ச்சியும் உடைய பெண்களையே புதுமலையில் கொழுந்தெடுக்க விடுவார்கள். இக்குழு A குழு எனவும் பழையமலையில் கொழுந்து எடுப்பவர்கள் குழு B எனவும் அழைக்கப்படும்.
கொழுந்தெடுப்பவர்கள் கொழுந்தெடுக்கும் கூடையை முதுகில் தொங்க விடுவர். தற்போது சாக்கு உரப்பை போன்றவற்றையும் கூடைக்கு மாற்றீடாகப் பயன்படுத்துகின்றனர். தலையில் ஒரு பெரிய துணியைப்போர்த்தி அதில் கூடையின் வாரை மாட்டி இருப்பார்கள். கூடையின்வார் அண்டாமல் இருப்பதற்கும் வெய்யிலுக்குப் பாதுகாப்பைக் கொடுப்பதற்கும் இத்துணி பயன்படும். கொழுந்து எடுக்கும் போது படங்கு என்று சொல்லப்படும் ஒரு வகை தடித்த போர்வை போலான ஒன்றை இடையில் கட்டியிருப்பர். தேயிலைச் செடிகளுக் கிடையில் இலகுவாக நடமாடவும் முள்ளுக்குத்தாமல் இருப்பதற்கும் படங்கு உதவும். காலில் பொதுவாக எதையும்
7

Page 96
அணிய மாட்டார்கள். பொதுவாக கொழுந்தெடுக்கும் பெண்களுடைய விரல்கள் காய்ந்து போய், கடினமானதாக மாறியிருக்கும். குளிரான பிரதேசங்களாக இப்பிரதேசங்கள் இருப்பினும் கால்களுக்கு எதுவித பாதுகாப்பையும் கொழுந்தெடுக்கும் போது பெண்கள் தேடுவதில்லை. பாதை கரடுமுரடானதாகவும் முட்களும் லீச் அட்டைகளும் நிறைந்ததாக இருக்கும். மிகவும் குளிரான காலங்களில் மட்டும் ஒரு சிலர் குளிரங்கி (Sweaters) அணிவார்கள்.
கொழுந்து பறிக்கும் போது கையில் ஒரு சிறு வளைந்த கத்தியையும் வைத்திருப்பர். இதுகோப்பிக்கத்தி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும். இந்தக்கத்தியை வங்கிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்துவர். வங்கிக்கொழுந்து என்பது கொழுந்து எடுப்பதற்கு தயாராக இருக்கும் இலைகளுடன் வளரும் ஒரு தண்டாகும். இத்தண்டை விட்டுவைத்தால் புதிய இலைகள் செழிக் கமாட்டா. இந்த வேலையையும் கொழுந்தெடுக்கும் போது செய்வதற்காகவே இக்கத்தி பயன்படும். கொழுந்து எடுத்தல் என்பது நேரம் கூடுதலாகத் தேவைப்படும் வேலையாகும். பொறுமை, அவதானம் என்பன அவசியமானவையாகும். திரும்பவும், திரும்பவும் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையைச் செய்வதால் சலிப்பைத் தருகின்ற ஒரு வேலையாகவும் இது இருக்கும்.
பெண்கள் மென்மையானவர்கள், அவர்களின் மென்மையான விரல்கள் கொழுந்தெடுக்கும் வேலைக்குப் பொருத்தமானவை, அவர்கள் பொறுமையானவர்கள், சலிப்பைக் காட்டாது தொடர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள், கங்காணியின் தீவிர மேற்பார்வைக்கு உட்படக் கூடியவர்கள், குறைந்த சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தப்படக்கூடியவர்கள் என்ற பால்நிலை கருத்தியலைச் சார்ந்தே கொழுந்தெடுக்கும் வேலையானது பெண்களுக்குரியதாகக் கொள்ளப்படுகின்றது.
172

கொழுந்தெடுத்தல் என்பது தோட்டத்தில் மிகவும் பிரதானமான வேலையாகும். ஒரு தோட்டத்தில் இலாபம் என்பது கொழுந்தெடுத்திலிலேயே கூடுதலாக தங்கியுள்ளது.
கொழுந்தெடுத்தல் என்பது மிகவும் லாவகமான ஒரு வேலையாகும். கவ்வாத்து வெட்டப்பட்ட கொழுந்துச் செடியில் கிளைகள் விடும் போது அக்கிளையின் முடிவில் இரண்டு மென்மையான பச்சை இலைகளும் அவற்றிற்கு நடுவில் ஒரு சுருண்ட சிறிய மஞ்சள் நிறத்தாலான குருத்தும் வளர்ந்திருக்கும். இம்மூன்று இலைகளும் சேர்ந்தே கொழுந்து எனப்படும். கொழுந்துடன் கட்டை இலை, கரத்தை இலை, வங்கி போன்றனவும் வளர்ந்திருக்கும். கட்டை இலையென்பது கொழுந்துடன் சேர்ந்ததாக வளர்ந்திருக்கும் நாலாவது இலையாகும். கரத்தை இலையென்பது கூடுதலாக முற்றிய இலையாகும். இவைதவிர பக்கங்களில் வளர்ந்திருக்கும் கொழுந்துகள், அரும்புகள் என்பனவும் கொழுந்தடன் வளர்ந்திருக்கும். இவை எல்லாவற்றையும் தவிர்த்து நேராக வளர்த்திருக்கும் கொழுந்தையே பறிக்க வேண்டும். பறிக்கப்பட்ட கொழுந்தை கைகளில் கசங்காத வகையில் மெதுவாக சேர்க்க வேண்டும். பொதுவாக ஒருகையின் பெருவிரல் சுட்டுவிரல் என்பவற்றால் கொழுந்தின் கீழுள்ள தண்டை மணிக்கட்டை அசைத்து மெதுவாக கொய்து மறுகையில் சேர்த்து வைத்திருப்பர். இவ்வாறு சேர்த்து வைத்திருக்கும் கொழுந்தை கைநிறைந்ததும் கூடையில் போடுவர். இவையெல்லாம் மென்மையாக அவதானத்துடன் செய்யப்பட வேண்டிய வேலைகளாயினும் பொதுவாக பெண்கள் விரைவாகவே அவ்வேலையைச் செய்கின்றனர். சரியான கொழுந்தைக் கண்டு பிடித்தல, விரைவாகக் கொய்தல் என்பவற்றிலேயே ஒரு தொழிலாளியின் அனுபவமும் தேர் ச் சரியம் அமையும் . சரியான கொழுந்துகளுடன் அரும்பு, கட்டையிலை, கரத்தையிலை
173

Page 97
என்பன கூடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டால் அது அத்தொழிலாளிக்கு தேர்ச்சியடைந்த தொழிலாளி என்ற பட்டத்தைத் தேடித்தராது. இவ்வாறு ஏனைய இலைகள் அல்லது அரும்பு கூடுதலாக் கூடையில் இருந்தால், அன்றைய நாட்கூலியில் குறிப்பிட்ட தொகையை தண்டமாக்கழிக்கும் அதிகாரம் கங்காணிக்கு உண்டு. இவ்வாறு ஏனைய இலைகளைப் பறித்தல் என்பது தேயிலைச் செடியின் வருங்கால விளைச்சலைப் பாதிப்பதுடன் பறிக்கப்பட்ட கொழுந்தின் தரத்தையும் பாதிக்கும்.அது போல பறிக்கப்பட வேண்டிய கொழுந்து களைப்பறிக்காமல் குறிப்பிட்ட தொழிலாளிக்கு கொழுந்து எடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேலையை முடிப்பதும் நல்லதல்ல. இந்தவகையில் கொழுந்து எடுத்தல் வேலையென்பது மிகவும் லாவகமான ஒன்றாகவும் அவதானத்துடன் செய்யப்பட வேண்டியதாகவும் உள்ளது.
கொழுந்திருக்கும் வரை பெண்களுக்கு வேலையிருந்து கொண்டேயிருக்கும். தோட்டங்களுக்குத் தோட்டம் காலத்துக்குக்காலம் தேயிலை வளரும் அளவிற்கேற்ப பெண்களுக்கு வேலை கொடுபடும். ஒருவாரத்திற்கு சில சமயங்களில் 7 நாட்களும் வேலையிருக்கும். சிலசமயங்களில் 4நாட்கள்,மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் எனக்குறை வாகவும் வேலையிருக்கும். சுவாத்தியம், நிர்வாகத்தினது தோட்டங்களைப்பராமரிக்கும் திறமை, சந்தைவிலை, கேள்வி போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துவனவாக உள்ளன. அதனால் தொழிலாளர் நிச்சயமற்றதன்மையை எதிர் நோக்குபவர்களாக உள்ளனர். 1984ம் ஆண்டில் வாரத்திற்கு ஆறு நாள் வேலையென்பது சட்டமாக்கப் பட்டாலும் இவ்விடயத்தினை அமுல்படுத்துவது குறைவாகவே உள்ளது. அலுவலக நேரமானது காலையில் எட்டுமணிக்கு ஆரம்பமாவதாகப் பொதுவாக் கொள்ளப்படும். ஆனால்
174

வேலையை பொறுப்பெடுப்பதற்காக 7.30 மணிக்கு, சில தோட்டங்களில் 7 மணிக்கு என வேலை பொறுப்பெடுக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும். அனேகமாக வேலை பொறுப்பெடுக்கும் இடம், வேலை செய்ய வேண்டிய மலை என்பன லயன்கள் இருக்கும் இடங்களில் இருந்து தூரத்தில் இருப்பதால் 6.30 மணிக்கே லயன்களை விட்டு கிளம்ப வேண்டியதாக இருக்கும். இது சராசரியான நேர அளவாகும். சிலர் 6மணிக்கு, 5.30 மணிக்கு என லயன்களை விட்டு கிளம்ப வேண்டிய நேரம் மாறுபடும். குறிப்பிட்ட இடத்திற்கு வந்து அவர்களது பெயரைப் பதிவு செய்து விட்டு குறிப்பிட்ட மலைக்கு கொழுந்த எடுப்பதற்காக செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிந்தி வருபவர்கள் விரட்டப்படுவர்கள். அதாவது அவர்களது பெயர் அன்றைக்கு பதியப்படமாட்டாது. லயன்களிற்கு மீண்டும் திரும்பி அனுப்பிவிடுவர்கள்.
ராணி என அழைக்கப்படக்கூடிய பெண் விரட்டபப்படுதல் தொடர்பாகவும் பின்வருமாறு கூறுகின்றார்.
"தோட்டத்தில் உள்ள பெண் களைப் பொறுத்தவரையில் எதை எடுத்தாலும் கஷ்டம்தான் வேலைக்குப் போயிற்று கொழுந்து பறிச்சு கூடுதலாய் இருந்தாற்தான் பெயர்பதிவாங்க, இல்லையென்னா பதியமாட்டாங்க. காலையில ரைமுக்கு வேலைக்கு போகவேணும் வேலைக்குப் போறநேரத்தில பிள்ளைகளை பிள்ளைக் காம்பறாவில விட்டிருவாங்க. வீட்டில வசதி யுள்ளவங்க வீட்டில வைச்சிருவாங்க. இவ் விசயத்தில் பெண்களிற்கு சரியான கஸ்டம். ஆண்கள் கவனிக்கமாட்டாங்க. காலையில் எழும்பி அவங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டுப்
75

Page 98
போயிடுவாங் க. ரைமுக்கு வேலைக்குப் போகவேணும் இல்லாட்டி விரட்டிவிடுவாங்க. பிறகு ஒருநாள் சம்பளத்துக்கு கஸ்டப்படனும், அதை எடுக்க அலையனும், ஞாயிறு என்றால் விறகு எடுக்க போகணும், நோய் எண்டால் ஆஸ்பத்திரிக்கு நாம தான் கொண்டு போக வேணும் வீடுவாசல் கழுவணும் தண்ணி எடுக்க போகவேணும் சகலதும் பெண்கள் தான்”.
"ஏத்தமான மலையில ஏறித்தான் வேலை செய்யணும். துாரத்து மலைக்கு போற நேரம் ஏறேலாது. அப்படிப்பட்ட நேரத்தில் சாப்பிட ரைம் இருக்காது, நோய் தீராது, சல்லி செலவு செய்து தான் குணப்படுத்தேலும்."
கொழுந்து அதிகமாக இருக்கும் காலங்களில் சாதாரணமாக வேலை நேரத்திற்கு மேலதிகமாக காலையில் 5.30 மணிக்கு அல்லது 6.00 மணிக்கு வேலையை ஆரம்பிப்பர். இந்த நேரத்திற்கு சாதாரண சம்பள அளவைவிட கூடுதலான கொடுப்பனவு ஒன்று கொடுக்கப்படும் இது கைப்பணம் என அழைக்கப்படும். மதிய நேர இடைவெளி ஒன்று சாப்பிடுவதற்காக வழங்கப்படும். இது அநேகமாக ஒரு மணித்தியாலமாக இருக்கும். லயன்கள் மிகவும் அருகில் உள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்று வருவர். ஏனையோர் மலையிலேயே சாப்பாட்டை முடித்துக் கொள்வர். வேலை முடியும் நேரம் 4.30 மணி எனக்கொள்ளப்பட்டாலும் அதன் பின்னர் கொழுந்தை நிறுத்துப்பாரம் கொடுத்து அவர்கள் வேலைத்தளத்துலிருந்து திரும்பும் நேரம் 5.30 ஆகிவிடும். இவ்வகையில் வேலை நேரம் என்பது நீண்டதாகவே இருக்கும்.
176

வேலை நேரம் தோட்டங்களுக்குத் தோட்டம் மாறுபட்டதாக அமையும். சில தோட்டங்கள் காலையில் 7.30 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12.30ற்கு மதிய இடைவேளை ஒரு மணி நேரத்திற்கு பின்னால் மீண்டும் 1.30 மணிக்கு வேலை ஆரம்பமாகி 4.30 மணி வரை வேலை தொடரும் சில தோட்டங்களில் காலையில் எட்டு மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12 மணிக்கு ஒரு மணி நேர மதிய இடைவெளிக்குப் பின்னர் மாலை ஐந்து மணிவரை வேலை தொடரும். எவ்வாறாயினும் எட்டு மணிநேர வேலை நேரம் என்பது பேணப்படும். ஆனால் காலையில் வேலை பாரம் எடுக்கும் நேரமும் மாலையில் கொழுந்து நிறுக்கும் நேரமும் கணக்கில் எடுக்கப்படுவதில்லை. ஒரு நாளைக்கு எடுத்த கொழுந்தை மூன்று தரம் நிறுப்பார்கள். தேனீர் இடைவேளையின் போது ஒரு தரம். மதியம் ஒருதரம். மாலையில் ஒருதரம் என இது மாறுபடும். நிச்சமாக இந்த நேரம் தான் எல்லா தோட்டங்களிலும் எனக்குறிப்பிட்டுக் கூற முடியாது.
தொழிலாளருக்கு மாத முடிவில் சம்பளம் கொடுபடும். ஆனால் இது மாதச் சம்பள அடிப்படையில் அமையாது. நாட்கூலியடிப்படையிலேயே அமையும். இந்த மொத்தத் தொகை குறிப்பிட்ட பெண் மாதத்தில் எத்தனை நாள் வேலை செய்திருக்கிறார் என்ற அடிப்படையிலேயே அமையும். பெண்களைப் பொறுத்தவரை அவர்களுடைய வேலை கொழுந்து எடுத்தல் என்பதாக இருப்பதால் மேற்கூறியவாறு வேலைநாட்களில் நிச்சயமற்ற தன்மை இருப்பதனால் சம்பளத் தொகையும் நிச்சயமற்தாகவே இருக்கும். சம்பள அளவில் மாதாமாதம் பாரிய மாற்றங்கள் ஏற்படும். சம்பள முற்பணம் ஒன்றை மாத நடுப்பகுதியில் கொடுக்கின்ற வழக்கமும் தோட்டங்களில் உண்டு.
கொழுந்தெடுப்பவர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு கொழுந்து
77ן

Page 99
எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். இது நோர்ம் (Norm) எனப்படும். தற்போது இந்த அளவு 12 கிலோ கிராம் என்பதாக இருக்கின்றது. எனினும் தோட்டத்துக்குத் தோட்டம் இந்த அளவு மாறுபடும். இந்த அளவு இருக்கின்ற போது மட்டுமே அடிப்படை நாட்சம்பளம் அவர்களது கணக்கில் போடப்படும். இந்த அளவிற்கு கூடுதல் கொழுந்தை எடுக்கின்ற போது ஒரு கிலோவிற்கு இத்தனை ரூபாய் என்ற கணக்கில் கூலி கொடுபடும். இந்தக்கணக்கு சாதாரண அடிப்படை சம்பள அளவில் கிலோவிற்கான கூலியை விடக்குறைவானதகவே இருக்கும். இந்த வகையில் அடிப்படை அளவிற்கு கூடுதலாக எடுக்கப்படும் கொழுந்து స్థaufr கிலோ எனப்படும். அடிப்படை அளவுக்கும் கூடுதலான அளவுக்குமான கூலியின் கூட்டுத்தொகை நாட்கூலிக்கணக்கில் பதியப்படும். இந்த நாட் கூலியின் கூட்டுத்தொகை மாதமுடிவில் சம்பளமாகக் கொடுபடும். ஒரு நாளுக்கான அடிப்படைச்சம்பளம் நாம் தகவல் திரட்டிய போது 75ரூபாவாக இருந்தது. பின்னர் 82 ரூபாவாக சில காலம் இருந்தது. தற்பொழுது 105ரூபாவாக இருக்கின்றது. தகவல் திரட்டிய போது ஓவர்கிலோவிற்கான கொடுப்பனவு 3.25 சதமாக இருந்தது. இந்த ஓவர் கிலோவிற்கான கொடுப்பனவு பல காலமாக மாற்றங்கள் எதுவும் இல்லாமல் 3.25 சதமாக இருந்து வருகின்றது. 12கிலோ அடிப்படையில் அளவு எடுக்கப்பட வேண்டும் என்ற கட்டாயமாகையால் எல்லோரும் கட்டாயமாக 12 கிலோ கொழுந்து எடுப்பார்கள். அனேகமாக பெண்கள் 14 கிலோ 15 கிலோ என எடுப்பதுண்டு. அதற்கு கூடுதலாகவும் எடுப்பர் இந்த ஓவர் கிலோ முறையாலும் பெண் கள் கூடுதலான வருமானத்தை தேடிக்கொள்ளுவதற்கு வாய்ப்பிருந்தாலும் ஓவர்கிலோ முறையானது பெண்களுக்கு ஊக்குவிப்பு முறையாக இருப்பதற்குப் பதிலாக சுரண்டலுக்கு வழிவகுப்பதாகவே இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு
78

கூடுதல் கிலோவிற்கும் அடிப்படைச் சம்பளத்தின் விகிதத்திலும் கூடுதல் பெறுமதியே வழங்கப்பட வேண்டும். அதற்கு மாறாக அடிப்படைச் சம்பளத்தில ஒரு கிலோவிற்கான விகிதத்திற்கு சமானான அல்லது குறைவான பெறுமதியே வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் நாட்டி ன் ஏனைய அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் இருக்கின்ற நடைமுறையானது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யும் சந்தர்ப்பத்தில் இந்த நாளுக்கான கொடுப்பனவு மேலதிக வேலைநேரத்தினடிப் படையில் (overtime)கணிப்பிடப்படும். ஆனால் தோட்டங்களிவி சாதாரண நாட்சம்பளமே வழங்கப்படுகின்றது. இந்தச் சம்பளத்தில் சலவைத் தொழிலாளிக்கான கொடுப்பனவு, முடிவெட்டுவதற்கான கொடுப்பளவு, கோயிலுக்கு கொடுபடும் கொடுப்பனவு, தொழிற்சங்கத்துக்கான மாதாந்த கழிப்பனவு என்பனவெல்லாம் கழிக்கப்பட்ட தொகையே சம்பளமாகக் கையில் கிடைக்கும்.
அடிப்படை அளவு கொழுந்தைப் பெண்கள் விரைவாக எடுத்துவிட்டு வீட்டுக்குவர முடியாது. மாலை நேரம் வரை அவர்கள் மலையில் வேலைசெய்ய வேண்டும். பெண்கள் எவ்வாறு பாரபட்சப்படுத்தப்படுகின்றனர், பால்ரீதியான தொழிற்பிரிப்பு எவ்வகையில் தொழிற்படுகின்றதுஎன்ற விடயங்களை தெளிவாக்காட்டும் ஒரு தோற்றப்பாட்டினை இங்கு கவனத்தில் கொள்ளலாம். ஆண்கள் கொழுந்தெடுக்கும் வேலையில் ஈடுபடுகின்ற போது அவர்கள் மதிய நேரத்துக்கு வீட்டுக்குச் செல்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் பெண்கள் அவ்வாறு செல்ல முடியாது. அதாவது பெண்கள் எடுக்க வேண்டிய அளவிலும் பாதிஅளவு கொழுந்தை ஆண்கள் எடுத்தால் போதுமானது.
79

Page 100
நாம் நேர்காணலில் ஈடுபட்டபோது ஒரு பெண்- அவரை செல்லாயி என அழைப்போம் இவ்வாறானதொரு பாரபட்சமுறையைப் பின்வ்ருமாறு எடுத்துக் கூறுகின்றார்.
"தோட்டத்தில் சம்பள மெல்லாம் சமமாத்தான் குடுக்கிறாங்க. அதிலெல்லாம் குறைவில்லை. எங்களுக்கு (பெண்களுக்கு) வந்து இந்த வேலைகள் கொஞ்சம் கஷ்டம் பதினாலு எடுக்கணும் பேருக்கு. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, கொழுந்தில்லை. ஏழு கிலோ போட்டு பகலைக்கு எங்களையெல்லாம் விரட்டியாச்சு".
இன்னுமொரு பெண் அவரை சுந்தரி என அழைப்போம். அவர் பின்வருமாறு கூறுகின்றார்.
"நாங்க ஒரு நாளைக்கு 24 கிலோ எடுக்கணுங்க ஆம்பிளையாளுங்க பன்னிரென்டு கிலோ எடுத்தா போதும் அவங்க டெயிலி கொழுந்துக்குப் போறதில்லை தானுங்களே. அவங்க கானுவெட்ட போவாங்க. முள்ளுக்குத்தப்போவாங்க. டெயிலி வேலை அவங்களுக்கு இல்லை."
கொழுந்தெடுத்தல் எனும் வேலையில் உள்ள கஷ்டத்தை சுந்தரி இவ்வாறு விபரிக்கின்றார்.
80
"அவங்க (ஆண்கள்) வேலையும் கஷ்டந்தாங்க ஆனா எங்களுக்கு நின்னுகிட்டே கொழுந்தெடுக்க வேணும். இப்பெல்லாம் பதினாலு கிலோ போட்டாத்தான் ஒண்ணுமே செய்யாம பெயர் போட றாங்க. இப்பெல்லாம் கொழுந்து இல்லதானுங்களே. அதால ஓவர் கிலோ போடமுடியாது."

கமலா எனறு நாம் அழைக்கும் பெண்ணிடமிருந்து பின்வருங்கூற்றை கேட்கக் கூடியதாக இருக்கினறது.
“தேயிலையில கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு தேய்ஞ்சு போயிட்டம்."
இப்படியான கருத்துக்களை நேர்காணலின் போது பெண்களிடமிருந்து கேட்க முடிந்தது
அடிப்படைச் சம்பளம் என்பது முன்னர் அடிப்படை வீதத்தையும் வாழ்க்கைச் செலவுப்படியையும் உள்ளடக்கி யிருந்தது. தற்பொழுது வாழ்க்கைச் செலவுப் படி வழங்கப்படுவதில்லை. ஒரு தொழிலாளி மாதச் சம்பளத்தைப் பெறுவதற்கு மொத்தமாக வேலை செய்த நாட்களைக் கணக்கிட்டு குறிப்பிட்ட அலுவலர்களின் கையெழுத்துப் போடப்படுவது அவசியமாகும். ஒரு நாளுக்கான பெயர் போடுவதற்கும் அப்படியான கையெழுத்து அவசியமான தாகும். இவ்வாறு கையெழுத்துப் போடுவதற்கு அலுவலர்களின் கணிப்பீட்டில் குறிப்பிட்ட தொழிலாளி தனது வேலையை திருப்தியாகச் செய்ய வேண்டும். செய்யவில்லை எனக்கணிப்பிடப்படும் பட்சத்தில் நாள் சம்பளத்தினை பாதியாக மாற்றவோ அல்லது குறைக்கவோ அலுவலகருக்கு அதிகாரம் உண்டு.
தோட்டங்களில் அடிப்படைச் சம்பள அளவு. (நாளுக்கு)
183O - 25 சதம்
1979 1.25
198O II.69
1982 13.97
1983 14.47
1984 I6.26
18

Page 101
1988 35.OO
1995 75. OO
1997 82. OO தற்பொழுது 105.00 (ஜனவரியில்)
கொழுந்து எடுப்பதைத் தவிர சில சமயங்களில் பெண்கள் மட்டம் வெட்டும் வேலையிலும் ஈடுபடுவர். இது மிகவும் பிரதானமான ஒரு வேலையாகும். அங்கு அனுபவம் வாய்ந்த, தேர்ச்சியடைந்த தொழிலாளர்களே தெரிவு செய்யப்படுவர். கொழுந்தெடுக்கும் பெண்கள் இந்த வேலைக்கு மாற்றப்படுவர். மட்டம் வெட்டுதல் தொடர்பாகவும் கொழுந்தெடுத்தல் தொடர்பாகவும் புஷ்பா பின்வரும் கருத்தைக் கூறுகின்றார்.
"ஆம்பிளையாளுங்கள் மட்டம் எடுக்கமாட்டங்க அவங்களுக்கு செய்யத் தெரியாது. அதனால் மட்டம் வெட்டுகிற மலைய பொம்புள ஆளுகளுககே கொடுப்பாங்க. ஆம்பிள ஆளுங்க 7கிலோ 8கிலோ தான் எடுப்பாங்க அதுக்குப் பெயர் போடுவாங்க நமக்கெண்ணா போடமாட்டாங்க. ஆம்பிளை ஆளுங்க பொதுவாக கூட எடுக்கிறதில்லை. நாம தான் 4.30 மணிவரைக்கும் நிற்கணும்."
அது போல களை பிடுங்குகின்ற வேலையிலும் பெண்கள் ஈடுபடுவர். கையால் களைபிடுங்கும் வேலையையே பெண்கள் செய்வார்கள். மேலும் தேயிலைத் தொழிற்சாலையில் கொழுந்துகளுக்கிடையில் அகப்படும் கஞ்சல்களையும் சிறுகுச்சிகளையும் பொறுக்குகின்ற வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுவர். இவையே பொதுவாக தேயிலைத்தோட்டங்களில் மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண் தொழிலாளர்கள் செய்கின்ற வேலைகளாகும்.
182

தேயிலைத் தோட்டங்களில் ஆண்கள் செய்கின்ற வேலைகள் பொதுவாக ஒரு நாளைக்கு குறிப்பிட்ட ஒரு கடமை அல்லது நோக்கத்தை நிறை வேற்றுவதாக அமைகின்றன. இதனை task என்று கூறுவர். இக்குறிப்பிட்ட வேலையை அவர்கள் முடித்துக் கொடுத்ததும் அன்றைக்கு அவர்களுடைய வேலை (Uplg bgi 6 filGS th (Piece - work method). 96o 3GI560Lu வேலைகள் கொழுந்து பறித்தல் தவிர்ந்த ஏனைய விவசாயத்துடன் தொடர்புடைய வேலைகளாக இருக்கும். இவற்றைச் சில்லறை வேலைகள் எனப்பேச்சு வழக்கில் சொல்லிக் கொள்வர். தேயிலைச் செடிகளையும் நிலத்தையும் நன்கு பராமரிப்பரதே இச் சில்லறை வேலைகளின் பொது நோக்கு. கவ்வாத்து வெட்டுதல், மட்டம் வெட்டுதல், முள்ளுக்குத்துதல், கான் வெட்டுதல், உரம் போடுதல், இரசாயனங்கள் மூலம் களைகள் அழித்தல், துப்புரவு செய்தல், ரோட்டுப்போடுதல் போன்ற வேலைகளே ஆண்கள் செய்யும் வேலைகளாக இருக்கின்றன.
ஆண்களால் மட்டுமே செய்யக்கூடியன, பெண்கள் இவற்றைச் செய்ய முடியாதவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் ஆண்களிற்கென இவை வரையறுக்கப்பட்ட வேலைகளாகும். அதாவது கடினமான வேலைகளாக இவ்வேலைகள் கருதப் படுகின் றன . ஆண் களுடைய வேலைகள் பெண்களுடையதைப்போல நீண்ட நேரத்தை எடுப்பதில்லை. அனேகமாக மதிய உணவிற்கு அவர்கள் லயன்களிற்கு திரும்பிச் சென்று விடுகிறார்கள். மேலும் பெண்களுடன் ஒப்பிடும் போது ஒரே வேலையை வாழ்நாள் பூராவும் செய்ய வேண்டியிருக்காது. வேலைகளை மாறிமாறிச் செய்வதனால் கொழுந்து பறித் தலைப் போன்று சலிப்பைத்தருவனவாக இவை இருப்பதில்லை.
83

Page 102
கவ்வாத்து வெட்டுதல்.
கவ்வாத்து வெட்டுதல் என்பது தேயிலைத் தே. கட்டாயமானதும் மிகவும்அவசியமானதுமான வேலையாகும். இவர் வேலை ஆண்களாலேயே செய்யப்படுவதாக இருக்கின்றது. கடினமான வேலையாகக் கருதப்படுவதனால் பெண்களும் சிறுவர்களும் இவ் வேலையை செய்ய முடியாதவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். தேயிலைச் செடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் நல்ல விளைச்சலை உண்டு பண்ணவும் கவ்வாத்து வெட்டுதல் அவசியமாகும். தேயிலைச் செடிகள் பொதுவாக ஒரு ஆளின் இடுப்பளவில் தேயிலைக் கொழுந்து எடுப்பதற்கு வசதியான உயரத்தில் தொடர்ந்து பேணப்படுகின்றன. கவ்வாத்து வெட்டுவதன் மூலமும் அவற்றைப்பின்னர் வளரவிடுவதன் மூலமும் இந்த உயரம் பேணப்படும். கவ்வாத்து வெட்டாத சந்தர்ப்பங்களில் தேயிலைச் செடிகள் மரங்களாக உயரத்திற்கு வளர்ந்துவிடும். கவ்வாத்து வெட்டுதல் பலவகைப்பட அமையும். சாதாரண தேயிலைச் செடியின் உயரத்திலிருந்து இரண்டு அங்குலம் குறைத்து வெட்டுதல், செடியின் பாதியளவுக்கு வெட்டுதல், நிலத்திலிருந்து 8 அங்குலத்தில் வெட்டுதல் என்பனவே பொதுவான மூன்று முறைகளாகும். பேச்சு வழக்கில் இவை முறையே மேசை வெட்டு, மேல்வெட்டு, அடிவெட்டு என அழைக்கப்படுகின்றன. பொதுவாக மலைசரிந்திருக்கும் பக்கத்திற்கு ஏற்ப தேயிலைச் செடிகளை சாய்த்து வெட்டுவார்கள். அதாவது மலை சரிந்திருக்கும் பக்கத்திற்கு கவ்வாத்து வெட்டப்பட்டாலும் சரித்து வெட்டுவதால் அவை நேராக தோற்றமளிக்கும். ஆனால் மூன்றாவது வகையான அடி வெட்டில் அவ்வாறு சரித்து வெட்டமாட்டார்கள். நிலத்திற்கு சாமாந்திரமாக நேராக வெட்டுவார்கள். சரித்து வெட்டுவதை சாச்சி வெட்டு எனவும் நேராக வெட்டுவதை பொட்டு வெட்டு எனவும் அழைப்பார்கள்.
84

கவ்வாத்து வெட்டுவதற்கு நீண்ட வளைந்த கத்தியைப் பயன்படுத்துவர். இது கவ்வாத்துக்கத்தி எனப்படும். ஒரேயடியாக பலத்தைத் திரட்டி வெட்டுதல் அவசியமாகும். பலமுறை வெட்டுவது தவறானதாகும். பல முறை வெட்டுவதால் தடிகள் பிரிந்திருக்க வாய்ப்புண்டு. அவ்வாறு அவை பிரியுமானால் தேயிலைச் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். கொழுந்தெடுக்க முடியாது போய்விடும். இவ்வாறு ஒரேயடியாக பலமாக மணிக்கட்டை சிறிதளவு அசைத்து தேவையான அளவிற்கு சரித்து வெட்டுதல் கடினமான ஒரு செயற்பாடாக கொள்ளப்படும். இதன் காரணமாகவே இது பெண்களால் செய்யப்பட முடியாத வேலையாகக் கொள்ளப் படும். பொதுவாக ஒரு தொழிலாளிக்கான ஒரு நாள் வேலை 150 செடிகளிற்கு கவ்வாத்து வெட்டுவதாக இருக்கும்.
மேற்கூறியவாறான மூன்று வகையான கவ் வாத்து வெட்டலிலும் முறையே 35 நாட்கள், 90 நாட்கள், 120 நாட்களிற்குப் பின்னர் கொழுந்தெடுக்கலாம். எனினும் எந்த அளவிற்கு வெட்டுதல், எத்தனை நாட்களின் பின் கொழுந்தெடுக்கலாம் எனும் கணக்கு கட்டாயமாக இவ்வளவு தான் என அமையாது. அது மாறுபட்டும் அமையும். எந்த அளவிற்கு வெட்டுதல் பொருத்தமானது எத்தனை நாளுக்குப் பிறகு கொழுந்தெடுக்கலாம் போன்ற விடயங்களை தொழிலாளர் அறிந்து வைத்திருப்பர். கங்காணியே இந்தத் தீர்மானத்தை எடுப்பர்.
ஏனைய சில்லறை வேலைகள
கவ்வாத்து வெட்டியபின் தேயிலைச் செடிகள் மறுபடியும் கிளைவிட்டு வளர்ந்த பின்னால் மட்டப்படுத்தல் போன்ற வேலைகள் நடைபெறும். இவ்வேலைகளையும் பொதுவாக
185

Page 103
ஆண்களே கூடுதலாகச் செய்வார்கள். இவை தவிர வயதான தேயிலைச் செடிகளை அகற்றிவிட்டு குறிப்பிட்ட மலையில் இருவருடங்களுக்கு புற்கள் நாட்டிவளர்க்கும் வேலையிலும் ஆண்களே ஈடுபடுவர். இவ்வாறு புற்களை நடுவதன் நோக்கம் மீண்டும் மண் வளமுள்ளதாக ஆகவேண்டும் என்பதாகும். இரண்டு வருடங்களிற்குப் பின்னால் புற்களை நீக்கிவிட்டு, புதிய தேயிலைச் செடிகளை நாட்டுவர். இவ்வேலையையும் ஆண்களே செய்வார்கள். இவ்வாறு நடப்பட்ட தேயிலைச் செடிகளை கடுமையான சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கவும் மண்சரிவைத்தடுக்கவும் தேயிலைச் செடிகளுக்கு இடையே மரங்கள் வளர்க்கப்படும். இத்தகயை மரங்களை வேறு இடங்களில் வளர்த்து எடுத்து வந்து குறிப்பிட்ட மலைகளில் நடும் வேலையையும் ஆண்களே செய்வார்கள். இவை தவிர தேயிலையை லொறிகளில் ஏற்றிச் செல்லுதல், பதப்படுத்தல் என்பவற்றுடன் தொடர்புடைய வேலைகளையும் ஆண்கள் செய்வார்கள்.
இவையே பொதுவாக ஆண்களால் செய்யப்படும் வேலைகளாகும்.
தேயிலைத் தோட்டங்களில் நடைபெறுகின்ற எல்லாச் செயற்பாடுகளும் பால்ரீதியான தொழிற்பிரிப்பை தெளிவாக் காட்டுவனவாக உள்ளன. அதாவது ஆண்களுடைய வேலைகள் இவை. பெண்களுடைய வேலைகள் இவை என்ற பிரிவு தேயிலைத்தோட்டங்களில் மிகவும் தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.
விதிவிலக்குகள் மிகவும் குறைந்தனவாக இருப்பினும், பொதுவாக தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால் பெண்கள் கொழுந்தெடுக்கும் வேலையிலும் ஆண்கள் கவ்வாத்து வெட்டுதல் போன்ற சில்லறை வேலைகளிலும் ஈடுபடுவர்.
186

பெண்களுடைய வேலைகள் மிகக்குறைந்த கூடிய அளவு ரீதியில் நிர்ணயிக்கப்படுவதாலும் ஆண்களுடைய வேலைகள் குறிப்பிட்ட கடமை முடித்துக் கொடுத்தல் என்பதாலும் குணாம்சப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. பால்நிலைக் கருத்தியலின் வெளிப்பாடு ஒன்று இங்கு தெற்றெனத் தெரிகிறது. இவை இரண்டும் அடிப்படை நாட்சம்பளம் என்ற கொடுப்பனவை உள்ளடக்கியன. பெண்களுடைய வேலைகள் நீண்ட நேரத்தின் அடிப்படையிலும் ஆண்களுடைய வேலைகள் குறுகிய வேலை நேரத்தின் அடிப்படையிலும் அமைந்தன.
பெண்களுடையதும் ஆண்களுடையதும் வேலைகள் தோட்டங்களில் பால் உறவுகளைத் தீர்மானிப்னவாகவும் சமூக அந்தஸ் ததை நிர்ணயிப்பனவாகவும் இருக்கின்றன. பெண்களுடையதும் ஆண்களுடையதும் வேலைகள் பெண்மை, பாலியல்தன்மை போன்றவற்றையும் தீர்மானிப்பனவாக உள்ளன. அங்கு மென்மை முரட்டுத்தனம் பலவீனம், பலம் என்ற எதிரிடையான குணாம்சங்கள் கருத்திய லாக வெளிப்படுகின்றன. இவ்வாறான தொழிற்பிரிவை நோக்குகின்ற போது அது முதலாளித்துவத்தை வளர்த் தெடுப்பதற்காக முதலாளித்துவத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு பேணப்படும் ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஓவர்கிலோ என்னும் முறை முற்றுமுழுதாக சுரண்டலை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. பெண்களுடைய வேலைநேரத்தின் அளவு தன்மை என்பன அடுத்ததபடியாக சுரண்டலுக்கு வழி வகுக்கின்றன. மூன்றாவதாக இன்னமும் நாட்கூலி முறை அமுலில் இருப்பது தொழிலாளர்களின் மோசமான நிலைமையை எடுத்துக்காட்டுகினறது. அதிலும் குறிப்பாக வேலைகளில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதால் அதன் முழுச் சுமையையும் முதலாளித்துவம் தொழிலாளர் மீது சுமத்தப்பட்ட நிலைமை காணப்படுகிறது. பெண்களுடைய
87

Page 104
சம்பள அளவு 1984 வரை ஆண்களைவிடக் குறைவாகவே இருந்து வந்துள்ளது. தற்போது சமசம்பளமுறை அமுல்படுத்தப்பட்டாலும் ஓவர்கிலோ முறையினுடாக பெண்களால் செய்யப்படுகின்ற வேலைக்கு உண்மையில் கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் கொடுபடுவதில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். பால்நிலைக் கருத்தியலை முதலாளித்துவம் தனக்குச் சாதகமாகச் சாதுரியமாகச் செயற்படுத்தி உள்ளது.
ஆண்களுடைய வேலை குறுகிய நேரத்தின் அடிப்படையிலும் பெண்களுடைய வேலை நீண்ட நேரத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பதால் ஓய்வு நேரத்திலும் பால்ரீதியாக அசமத்துவ நிலை காணப்படுகின்றது.
பெண்களுடைய வேலைகள் ஆண்களால் மேற்பார்வை செய்யப்படுவதால் அவ்வகையில் பெண்தொழிலாளர்கள் அதிகாரமற்றவர்களாகவும் உள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்களுடய வேலைகள் கொழுந்து பறித்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் வருடம் முழுவதும் ஒரளவிற்கு வருமானத்தைக் கொடுக்கின்ற ஒன்றாக உள்ளது. தவிர ஓவர் கிலோ முறைமையால் சுரண்டலுக்குட்பட்டாலும் ஒருநாளைக்கு ஆண்களைவிட கூடுதலாக சம்பளத்தை பெண்கள் பெறுகின்றனர். இவ்விரு காரணங்களினாலும் பெண்கள் ஆண்களைவிட கூடுதல் வருவாயை குடும்பத்திற்கு ஈட்டித்தருபவர்களாக இருக்கினறனர். எனினும் அவ்வாறான தொரு முக்கியத்துவம் சமூகத்தில் உணரப்படுவதில்லை.
தொழிற் படிமுறையமைப்பை எடுத்து நோக்கும் போது, தொழிலாளர் எப்பொழுதும் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். பதவி உயர்விற்கு எவ்வித வழிவகைகளையும் தேயிலைத் தோட்டங்களில் காணமுடியாது. பெண்கள்
88

மேற்பார்வையாளராக தொழிலைப் பெறுவதோ, தமிழ்பெண் தொழிலாளர் குறிப்பாக தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலர்களாக தொழிலைப்பெறுவதோ நடைமுறையில் இல்லாத ஒருவிடயமாகும். இங்கு சாதி, வாக்கம், இனத்துவம் என்னும் சமூக குணாம்சங்களுக்கும் பால்நிலைக்குமான தொடர்பை விளங்கிக் கொள்ளலாம்.
தேயிலைத்தோட்டங்களை எடுத்தக் கொள்ளும் போது, பெண்தொழிலாளர்கள் கூடுதலாக கொழுந்தெடுப்பவர் களாகவே இருப்பதை அவதானிக்கலாம்.
கொழுந்தெடுத்தல் என்பது தோட்டங்களில் பிரதான தொழிலாகவும், ஆண்களுடன் ஒப்பிடும் போது சுரண்டலுக்கு மத்தியிலும் கூடுதல் வருவாயைத்தேடித்தரும் தொழிலாகவும் உள்ளது.
தற்போதைய நிலைமையில் தோட்டங்களில் திட்டமிடுதல் மாற்றிடுகளாக, பெண்களுடைய தொழில்களில் பால் ரீதியானதாக தொழில் பிரிவு ஒன்று முன்வைக்கப்படும் பொழுது அவை பால் நிலைக் கருத்தியல் ரீதியாக நிலைநிறுத்தப்பட்டமையும் பெண் தொழிலாளரது பாரிய பொருளாதாரப் பங்களிப்பையும் விளங்கிக் கொள்ளல் மிகவும் அவசியம். இவற்றில் ஊடுருவி நிற்கும் அசமத்துவத்தையும் சுரண்டல் போக்கையும் நீக்குவதற்கு பின்வரும் முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
l. ஓவர்கிலோ முறைமையை ஒழித்தல், கூடுதலாகப்
பறிக்கப்படும் கூலிவீதத்தினை அறிமுகப்படுத்துதல். 2. பெண்களுடயை ஓய்வு நேரத்தை அதிகரித்தல்.
3. மாதாந்த சம்பள முறையை அறிமுப்படுத்துதல்.
189

Page 105
190
வாழ்க்கைச்செலவுப்படியை மறுபடி அறிமுகப்படு த்துதல். p
தொழிலாளர்களிற்கு பதவிஉயர்விற்கான வழிவகை களைக் கவனத்தில் எடுத்தல். அனுபவத்திற்கேற்ப சம்பளத்தைக்கூட்டும் திட்டத்தையாவது அறிமுகப் படுத்துதல்.அலுவலர்கள் கங்காணிகள் போன்ற வேலைகளைப் தொழிலாளர்களில் உள்ள பெண்கள் செய்வதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குதல்.
பெண்தொழிலாளர்களின் பிற தொழல் வாய்ப்பிற்கான மட்டுப்படுத்த தன்மையை சாதி, வர்க்க, இனத்துவ குணாம்சங்களினுடாக விளங்கிக்கொள்ளுதலும் அவற்றை நீக்குவதற்கான வழிவகைகளையும் ஆராய்தல்.
தோட்டங்களில் பால்ரீதியான தொழிற்பிரிவை நெகிழ்வுள்ள ஒன்றாக மாற்றுதல்.
தோட்டத்துறையில் பெண்களுடைய கல்விக்கும் தொழிலுக்கும் இடஒதுக்கீடு போன்ற நேர்நிலையான U ITU IL'FUDGOopGOulu (positive discriminination) s 9 spóUp 35Lu படுத்தல்.

குடும்ப அமைப்பில் பால்ரீதியான தொழிற்பிரிவு
பெண்கள் ஆக்கபூர்வமான உற்பத்தித்துறையில் ஈடுபடுவதில்லை, ஆண்களே அவ்வாறான தொழிற் பாட்டை ஆற்றிவருகின்றனர் என்ற கருத்தியல் உலகளாவியரீதியில் நிலவுகின்ற ஒன்றாக உள்ளது. ஆனால் பெண்கள் செய்கின்ற ஆக்க பூர்வமான உற்பத்தி வேலைகள் இரண்டாம் பட்ச மானதாகவும், அவர்கள் குடும் பத்திற்கு உழைத்துக்கொடுக்கும் வருமானம் மேலதிகமானதாகவுமே கொள்ளப்படுகின்றது. இவ்வாறான நிலமையில் ஆண்களுக்கு உரியதளம் வேலைத்தளமாகவும் பெண்களுக்குரியதளம் குடும்ப அல்லது வீட்டு அமைப்பாகவும் கருதப்படுகின்றது.
இவ்வாறானதொரு பொதுவான கருத்தியலே மலையகத்திலும் தேயிலைத் தோட்டங்களிலும் காணப்படுகின்றது. கொழுந்து பறித்தல் என்பது தேயிலை உற்பத்தித்துறையில் பிரதானமான ஒரு செயற்பாடாக இருக்கின்ற போதிலும் பெண்கள் இவ்வுற்பத்தித்துறையில் முதன்மையானவர்கள் என்ற கருத்தை நிர்வாகமோ, சமூகமோ, அரசோ, அல்லது குடும்பம் என்னும் அமைப்போ ஏற்றுக்கொள்வதில்லை. அது போல பெண்கள் ஆண்களைவிடக் கூடுதலான வருவாயைக் குடும்பத்திற்கு ஈட்டித்தருபவர்களாக இருந்தபோதும் அவர்கள் குடும்பத்தில் பிரதான உழைப்பாளிகளாகக் கொள்ளப்படுவதில்லை. மேலும் பெண்களுடைய வேலை நேரம் ஆண்களுடைய வேலை நேரத்தைவிட கூடுதலாக இருந்தும் வீடு எனும் தளமும் அதன்

Page 106
அலுவல்களும் பெண்களுக்குரிதாகவே கருதப்படுகின்றது.
பெண்களுடைய பெளதீக ரீதியான, அல்லது உடல்சார்ந்த காரணிகளால் அவர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றார் களாயினும் கூடுதலாக சமூகபண்பாட்டுக் காரணிகளால் அவர்கள் குடும்ப அங்கத்தவர்களின் பராமரிப்பிற்கும் கவனத்துக்கும் பொறுப்பானவர்கள் என்ற கருத்து உருவாகியுள்ளது. குடும்ப அமைப்பினைப் பேணிப் பராமரிக்கின்ற பொறுப்பு பெண்களுக்கு உரியதாக இருப்பினும் குடும்பத்தின் தலைமை அந்தஸ்து ஆண்களுக்கே ஒரு தந்தைவழிச் சமூகத்தில், கொடுக்கப்படுகின்றது.
வரலாற்று ரீதியாக மலையக சமூகத்தின், பெருந்தோட்டங் களின் உருவாக்கம், குடிபெயர்வு, குடியமர்வு, சமூக உருவாக்கம் என்பவற்றை நோக்குகின்ற போது இத் தந்தைவழிச் சமூகக் கருத்தியலின் இணைவு முதலாளித்துவத்துடன் ஏற்படுவதை நோக்கக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் குடும்ப உருவாக்கம், அதனுாடான மீள் உற்பத்தியினடிப்படையில் அமைந்த தொடர்ச்சியான தொழிலாளர் நிரம்ப ல் , பெண்களுடைய குறைந்த வேதனத்துடனான வேலை ஆகியவற்றின் தன்மைகள் சார்ந்தே முதலாளித்துவம் பெருந்தோட்ட அமைப்பை உருவாக்கியது என்பதை முன்னர் கவனித்தோம்.
இவ்வகையான ஒரு கருத்தியலின் அடிப்படையிலேயே இன்றைக்கும் அவை இயங்கிவருகின்றன. இப்படியானதொரு நிலைமையில் பால்ரீதியான தொழிற்பிரிவென்பது குடும்ப அமைப்பில் ஆணைபிரதான வருவாய் தேடித்தரும் ஆளாகவும் பெண்ணை வீட்டுவேலை செய்யும் ஆளாகவும் கருத வாய்ப்பினை வழங்குகின்றது. அத்துடன் இரட்டைச் சுமையையும் பெண்கள் மேல் சுமத்துவதாக உள்ளது.
192

பெருந்தோட்டங்களில் குடும்ப அமைப்பு
குடும்பம் என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கண மானது சமூகவிஞ்ஞானிகளினால் பலவாறாகக் கொடுக்கப்படு கின்றது. குடும்பம் என்ற பதத்திற்கு வரைவிலக்கணத்தை கொடுப்பது சிக்கலானதும் கடினமானதுமான செயலாகும். சமூகத்திற்குச் சமூகம் ஆட்களுக்கு ஆட்கள் குழுக்களுக்கு குழுக்கள் பலவாறான அர்த்தத்தை மனத்திற்கொண்டிருப்பர். இத்தகைய அாத்தப்படுத்தல்கள் காலத்துக்குக் காலம் மாற்றமுறுவதாக இருக்கும். உதாரணமாக மேற்கு நாடுகளில் தற்பொழுது எல்லாக்குடும்பங்களும் தனிக்குடும்பங்களாகும். கீழைத்தேய நாடுகளில் கூட்டுக் குடும்பங்கள் தனிக்குடும்பங் களாக மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கின்றன. இன்னமும் பல சமூகங்களில் கூட்டுக் குடும்பங்கள் உள்ளன.
தனிக்குடும்பங்களாவன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வகையில், ஆண் பெண் என்ற இருபாலாருக்கிடையிலான பாலியல் உறவினடிப்படையில் உருவான குழந்தைகளையும் பெற்றோரையும் உள்ளடக்கியதான ஒன்றாகும். பொதுவான வாழ்விடம் பொருளாதார ரீதியானதும் உளவியல் ரீதியானதும் தங்கியிருத்தல், அங்கு குறிப்பிட்ட வகையில் அங்கத்தவர்களுக் கிடையே உறவுகள் கட்டமைக்கப்பட்டிருக்கும். இவ்வுறவுகளின் தொடர்ச்சித்தன்மை என்பது ஓரளவிற்கு நீண்ட காலத்திற்கு இருக்கும்.
கூட்டுக் குடும்பம் என்பது பிள்ளைகள் திருமணஞ் செய்த பின்னாலும் தாய்தந்தையருடன் தொடர்ந்திருக்கின்ற பாரம்பரிய முறையைக்குறிக்கும். தாய் வழிச்சமூகம் ஒன்றில் பொதுவாக மனைவியின் வீட்டி ற்கு கணவன் வதிவிடத்தை எடுத்துக்கொள்கின்ற முறையும் தந்தை வழிச் சமூகம் ஒன்றில் கணவனின் வீட்டிற்கு மனைவி வதிவிடத்தை அமைக்கும்
193

Page 107
முறையும் காணப்படும். கூட்டுக்குடும்பம் என்பது கணவன் மனைவி பிள்ளைகள் என்ற வட்டத்திற்கு அப்பாலும் உறவு முறைகளைத் தொடர்ச்சியாகப் பேணும் ஒன்றாகும். இது சமூகத்திற்குச் சமூகம் என்ற வகையில் மாறுபடும். தாய்வழிச் சமூகமா தந்தைவழிச் சமூகமா என்பதைப் பொறுத்து உறவு முறைகள், சொத்துக்களைக் கையளிக்கும் முறைகள் என்பனவும் வதிவிடமும் மாறுபடும்.
மலையக சமுகமானது தென்னிந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காரணத்தினால் தந்தை வழிச் சமூகத்திற்குரிய குணாம்சங்களையே பெரிதும் கொண்டதாக இருக்கின்றது. மலையாளிகளிடையே தாய் வழிச் சமூகத்திற்குரிய எச்சங்கள் காணப்பட்டாலும் தற்போது அவர்களும் தந்தை வழிச் சமூகத்திற்குரிய வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். தென்னிந்திய சமூகத்தில் அசையாத சொத்தை உடையவர்கள் ஆண்களுக்குச் சொத்தைக் கையளிக்கின்ற முறைமை இருக்கின்றமையாலேயே பெண்கள் கணவனின் வதிவிடத்தை தமது வதிவிடமாக்குகின்ற முறை காணப்படுகின்றது.
குடும்பம் என்பது ஒரு சமூகநிறுவனமாகும். அங்கு உறவுகள் கட்டமைக்கப்பட்டிருக்கும். அக்கட்டமைப்பின் வடிவமைப்பு மாற்றமடையினும் கட்டமைப்பு தொடர்ச்சியாக இருக்கும். குடும்பமானது சமூகத்தில் அரசு, கல்வி, பொருளாதாரம், சமயம் போன்ற ஒரு நிறுவனமாகும்.
குடும்பம் எனும் நிறுவனம் தற்பொழுது நிலைப்படுத்தப் பட்டிருக்கும். விதம் அதன் அங்கத்தவர்கள் எல்லோருக்கும் சமனான அந்தஸ்த்தை வழங்குவதாக இல்லை. பொதுவாக ஆண்முனைப்பு சமூகங்களே தற்போது நிலவி வருவதால் ஆண்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
94.

காரணங்களால் அங்கத்தவர்களிடையேயான உறவுகள் மாறுபட்டுக் காணப்படும். பெரியோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் சிறியோருக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் அனேகமாக சமூகங்களில் உள்ள வழமையாகும். ஆண்முனைப்பு சமூகத்தின் தன்மைகளினால் குடும்பத்தில் பெண்களுக்குக் குறைந்த அந்தஸ்து வழங்கப்படுவதுடன் பெண்கள் கீழ் நிலைக்கும் உதாசீனத்திற்கும் உட்படுகின்றனர். குடும்பத்தில் கூடுதல் அதிகாரம் ஆண்களுக்கு வழங்கப்படுகின்றது. ஆண் குடும் பத்தில் தலைவனாகவும் , பல சாலியாகவும் விவேகமானவனாகவும் கருதப்படுகின்றான். தாய்வழிச் சமூகங்களான முன்னர் இருந்த சமூகங்களும் தற்போதய தந்தைவழிச் சமூகங்களிற்குரிய குணாம்சங்களுடன் மாற்றமுற்று வருகின்றன. குடும்பமானது சமத்துவத்தைப் பேணும் நிறுவனமாக இல்லாது இருப்பதுடன் அநேக சந்தர்ப்பங்களில் வன்முறைக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் உரிய ஒரு தளமாகவும் இயங்குகின்றது. பெண்களும் குழந்தைகளுமே அதனால் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர்.
பெண்கள் பற்றிய கற்கைநெறியில் தற்போது குடும்பம் எனும் நிறுவனம் எவ்வாறு சமூகங்களில் நிலவுகின்றது. அதில் பெண்களுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்த்து என்ன? அதில் பால்ரீதியான தொழிற்பிரிவு எவ்வாறு நிலவுகின்றது- என்ற கேள்விகள் பிரதானமானவையாக உள்ளன. சமூக மாற்றம் ஒன்றை விரும்புவர்கள் இந்நிறுவனங்களில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களினூடாகவே அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
குடும்பம் என்ற நிறுவனத்தை விளங்கிக்கொள்ளுதல் என்பது வீடு எனும் விடயத்துடன் தொடர்புடையது. வீடு என்பது
95

Page 108
குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றாகத்தங்குகின்ற ஒரு வரையறுக்கப்பட்ட இடமாகும். இது ஒரு பொருளியல் கூறாக இயங்குவதனால் அங்கு குடும்ப அங்கத்தவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும், அங்கத்துவமும் தொடர்பு களும் மீளவும் உறுதிப்படுத்தப்படும்.
தற் காலத்தில் இவ் வாழ்விடமானது கட்டாயமாக நிரந்தரமானதாக இருக்காது. கணவன் அல்லது மனைவி வெளியூர்களுக்கு வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சந்தர்ப்பங்களில் நீண்ட கால வதிவிடமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீடு இருப்பினும் ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் அங்கு இருத்தலும் தற்காலிக வதிவிடம் மாற்றமுறுவதாக இருக்கும் அல்லது சில குடும்பங்களில் பிள்ளைகள் வெளியிடங்களில் தற்காலிகமாக வசிக்கின்றனர். உதாரணமாக மலையகத்தில், தோட்டங்களில் ஆண்கள் வாகன ஓட்டுநர்கள் போன்ற வேலை வாய்ப்புக்களைத் தேடியும் பெண்கள் பணிப்பெண்கள் வேலையை நாடியும் வெளிநாடுகளிற்கும் வெளியூர்களிற்கும் செய்வதுண்டு. பிள்ளைகள் வெளியூர்களில் கடைகளிலும் வீடுகளிலும் வேலை செல்வதுண்டு. இவ்வாறு பிரிந்திருக்கின்ற குடும்ப அங்கத்தவர்கள் பண்டிகைக் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் வீட்டுக்கு வருவார்கள். அவர்களது வருமானமானது வீட்டு வருமானத்தில் ஒரு பகுதியாக அமைந்திருக்கும்.
பொதுவாக ஏனைய சமூகங்களில் வீடு என்பது ஒரு பொருளியல் கூறாக, சொத்தினை வைத்திருத்தல், அச்சொத்தினூடாக வருமானத்தைத்தேடுதல் அதனைப் பங்கிடுதல், நுகருதல் செலவழித்தல் போன்ற செய்றபாடு களினால் குணாம்சப்படுத்தப்பட்டிருக்கும். குடும்ப உறவுகள் பெரிதும் அசையாத சொத்தினை சந்ததி சந்ததியாக்க கையளித்தலுடன் தொடர்புடையனவாக அமைந்திருக்கும்.
196

ஆனால் தேயிலைத்தோட்டங்களில் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத் தைத் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருளியல் கூறாகவே வீடு அர்த்தப்படுகிறது. அசையாத சொத்துக்கள் பெருமளவில் சொந்தம் கொண்டாடும் பொருளியல் கூறுகளாக இருப்பதில்லை.
வீடு என்பது தேயிலைத் தோட்டங்களில் ஒரு சிறிய லயம் காம்றா, அல்லது ஒரு விறாந்தை ஆகியவற்றை உள்ளடக்கும் அறைகளின் விஸ்தீரணம் 10x12 என்பதாகவும் விறாந்தைகளின் விஸ்தீரணம் 6x6 என்பதாகவும் பொதுவாக அமைந்திருக்கும் லயன் காம்பிறாக்களிற்கு முன்னால் தொழிலாளர் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிறிய குசினி இருக்கும்.
குடும்ப அமைப்பு தனிக்குடும்ப வகையினைச் சேர்ந்ததா அல்லது கூட்டுக் குடும்ப வகையினை சேர்ந்ததா என்ற திட்டவட்டமான வறையறை என்பது தேயிலைத் தோட்டங்களில் இல்லை. மரபுரீதியாக மலையக சமூகமானது கூட்டுக் குடும்ப வகையினைச் சேர்ந்ததாகவே இருந்து வருகின்றது. பெண் திருமணஞ் செய்து ஆணுடைய வீட்டை வதிவிடமாக எடுத்துக் கொள்கிறாள். அதனால் கணவனுடைய பெற்றோருடனும் சகோதரர்களுடனும் திருமணத்திற்குப் பின்னால் அவள் வாழ்கின்றாள். இதுவே பொதுவான மரபாக விளங்கிவந்துள்ளது. எனினும் தோட்ட நிர்வாகத்தில் நடைமுறையானது ஆணுக்கு கல்யாணமாகும் போது அவர்கள் வாழும் லயன்காம்பிறாவிற்கு அருகில் ஒரு லயன்காம்பிறாவை ஒதுக்கிக் கொடுத்து, தனியாக் குடியிருக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இவ்வாறான நடைமுறை கட்டாயமானதொன்றல்ல. இடமிருக்கின்ற போது மட்டுமே நிர்வாகம் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும். லயன்காம்பிறாக்கள் சிறியதாக இருப்பதால் கட்டயமாக இவ்வாறானதொரு கூடுதல் இடவசதியை தொழிலாளர்கள்
197

Page 109
விரும்பி ஏற்கின்றனர். அவ்வகையில் தனிக்குடும்பம் என்பது கணவனின் பெற்றோர் வதியுமிடத்தில் இருந்து முற்றுமுழுதாக ஒரு புதிய இடத்திற்கு திருமணஞ் செய்தவர்கள் இடம் பெயர்ந்து செல்வதைக்குறித்து நிற்பதில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட ஆண் சகோதரர்கள் இருக்கின்ற குடும்பத்தில் கடைசி மகன் திருமணஞ்செய்து பெற்றோருடன் இருக்கின்ற வழமையே உண்டு. எனினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளே பெரிதும் குடும்ப அமைப்பின் வகையினைத் தீர்மானிப்பன வாக உள்ளன. பெற்றோர் இருக்கின்ற போது கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பமாகும். பிள்ளைகள் திருமணஞ்செய்யும் போது தனிக்குடும்பம் கூட்டுக் குடும்பமாகும். புள்ளி விபரரீதியான தரவுகள் தனிக்குடும்பங்கள் அதிகரித்துச் செல்லும் போக்கையே காட்டுகின்றன.
சில விதிவிலக்கான சந்தர்ப் பங்களில் கணவன் திருமணத்திற்குப் பின்னால் மனைவியின் வீட்டில் தனது வதிவிடத்தை ஏற்படுத்திக் கொள்வதுமுண்டு. இவ்வழமை வீட்டோடு மாப்பிள்ளையாக வருதல் என அழைக்கப்படு கின்றது. மனைவியின் குடும்பம் வசதியானதாக இருக்கின்ற போதும், மனைவி அவளுடைய குடும்பத்தில் ஒரே பெண்ணாக இருக்கின்ற போதும் இவ்வாறு நடப்பதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மனைவியின் சமூக அந்தஸ்து கணவனின் சமூக அந்தஸ்தை விடக் கூடுதலானதாகவே இருக்கும்.
பெண் திருமணஞ்செய்து கணவன் வீட்டிற்கு வரும் நிலமை இருப்பதால் தனது பெற்றோருடன் இதுவரை காலமும் இருந்த வந்த சூழ்நிலையிலிருந்து தான் இது வரைகாலமும் வேலை செய்து வந்த சூழ்நிலையிலிருந்து, நண்பர்களிடமிருந்து பிரிந்து புதியதொரு இடத்தில, புதிய சூழல் நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நிாப்பந்தம் ஏற்படும். செல்வி இவ்விடயத்தைப் பின்வருமாறு விபரிக்கின்றார்.
198

"எல்லாமே வித்தியாசம் தான் வேலைசெய்யிற இடம், எங் கசுட வேலைசெய்யிறவங்க எல்லாமே வித்தியாசம். குடும்பம் எண்ணு வந்திட்டா எல்லாம் வித்தியாசத்துக்கும், நாம அவங்களுக்கு அடிபணிய வேணும். மாப்பிள்ளைக்கு, மாமனுக்கு, மாமியாருக்கு. எல்லாத்துக்குமே அவங்க பேச்சுதான் எடுபடும். அம்மா வீட்டில் இந்த போது நமக்கு அதிகாரம் இருந்திருச்சு”
திருமணஞ் செய்து புதிதாக வரும் பெண்ணுக்கு உடனடியாக தோட்டத்தில் பதியமாட்டார்கள். பதிவதற்கு காலவிரயம் ஏற்படும். சந்தர்ப்பதைப்பொறுத்து சிலவேளைகளில் ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு செல்ல வேண்டியதாக இருக்கும் சிலவேளைகளில் ஏதோ தோட்டத்தில் வேறு வீட்டிற்குச் செல்ல வேண்டியதாக இருக்கும்.
வீடு என்பது சிறிய இடமாக இருப்பதால் குடும்பத்தில் உறவுகளும் இக்குறுகிய இடத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். திருமணமான தம்பதிகளிற்கு தனிமை கிடைப் பதில்லை. புதிதாக திருமணஞ் செய்து வரும் மணப்பெண் கூடுதலாக கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற நிலை, குடும்பத்தில் ஏனையோரின் அலுவல்களையும் குறிப்பிட்ட பெண் கவனிக்க வேண்டியநிலை போன்றன புதிய சூழல்நிலைதொடர்பாக மணப்பெண்ணுக்கு ஏற்படும். தோட்டங்களில் நிர்வாக முறை, விளைச்சல் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளுமிடத்து, சில பெண்கள் ஒப்பீட்டு ரீதியில் தாங்கள் திருமணஞ் செய்து வந்த தோட்டத்தில் சந்தோசமாக இருப்பதாகக் கூறுகின்றனர். இந்நிலமை எதிர்மாறாகவும் நடப்பதுண்டு.
மலையகத்தில் சொந்தத்தில் திருமணஞ் செய்யும் திராவிட
199

Page 110
வழமையானது இப்பொழுதும் ஓரளவிற்கு நிலவி வருகின்றது. மாமாவின் மகளை அத்தையின் மகளை, மாமாவை எனஉறவில் திருமணஞ்செய்பவர்கள் உள்ளனர். மாமாவைச் திருமணஞ் செய்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர். சொந்தத்தில் திருமணம் நடைபெறாததை பேச்சு வழக்கில் "பிறைவேற்றில்” திருமணஞ் செய்தல் எனக்கூறுகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளரின் உறவினர் பலர் குடியுரிமைப் பிரச்சனையுடன் இந்தியாவிற்குச் திரும்பிச் சென்றமையால் இவ்வாறு சொந்தத்தில் திருமணஞ் செய்யும் வழமை அருகிப்போவதற்கான காரணம் என அவர்கள் குறிப்பிட்டனர். முன்னர் மணமகன் அல்லது மணமகள் அத்தை பெண்பையன் என்ற உறவு முறையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து திருமணஞ் செய்த வழமை இருந்து வந்துள்ளது. தற்பொழுது குடியுரிமைப்பிரச்சனை களால் யாரும் அவ்வாறு திருமணத்திற்காக வருவதில்லை. அதைத் தவிர சமூக மாற்றமும் இ ந்த வழமையை மாற்றியுள்ளது எனக்கூறலாம். திருமணங்கள் சொந்தத்தில் நடைபெறுவனவாக இருக்கின்ற போது பெண்கள் தமது கணவனைமுன்னமே அறிந்தவர்களாக இருப்பார்கள். பல சந்தர்ப்பங்களில் பெண்ணின் பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கவே திருமணங்கள் கூடுதலாக நடைபெறுகின்றன. பெண் ணுடைய வரிருப்பம் என்பது பெரிதும் மதிக்கப்படுவதில்லை.
பெண் வீட்டார் திருமணத்துக்குச் சீர்கொடுக்கும் வழக்கம் ஏனைய தமிழ் சமூகங்களில் உள்ளதைப் போல இருந்தாலும் சற்றுத்தளர்வான ஒன்றாகவே இது காணப்படுகின்றது. பணமாக ஒரு சிறிய தொகை, சிறியளவிலான நகை, பாத்திரங்கள் போன்றவையே பொதுவாக பெண்வீட்டிலிருந்து கொடுக்கப்படும். மாப்பிள்ளை பெண்ணுக்கு ஒரு சங்கிலி செய்து போட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
200

அனேக சந்தட்பங்களில் சீவரிசை இல்லாமலேயே திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தற்பொழுது இவ்வாறு சீர் கேட்கின்ற நிலமை அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. பெண் வேலைக்குச் செல்பவளாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துவருவதாக உள்ளது. அசையாத சொத்துக்கள் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களிடம் இல்லாத காரணத்தால், அசையாத சொத்துக்களை சீராகக் கொடுக்கும் வழமை இல்லை. மலையகத்தில் குடும்பம் என்ற அமைப்பும் வீடு என்று கூறும் தந்தைவழிச் சமூகத்தின் அல்லது ஆண் தலமைத்துவ சமூகத்தின் கருத்தியலிற்கமைய ஆணை நடுநாயமாகக் கொண்டதாகவே தேயிலைத்தோட்டங்களில் காணப்படுகின்றன. தமிழ்ப் பண்பாட்டு மரபுகளிற்கிணங்க பெண்தொடர்பான வரைவிலக்கணங்கள் பெண் கணவனுக்கு அடங்கி நடப்பவளாகவும், குடும்பத்தைப் பேண வேண்டியவளாகவும், வீட்டுஅலுவல்களைக் கவனிக்க வேண்டியவளாகவும், பாலியல்ரீதியாக ஒழுக்கமுடையவளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறாள். திருமணத்திற்கு தாலி அணிவது, பூ வைப்பது, சிவட்ட நிறத்தில் சேலைகட்டுவது, நகைகள் அணிவது என்பது மலையகத்திலும் பின்பற்றப்படு கின்றது.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்,
கணவனே கண்கண்ட தெய்வம் போன்ற பழமொழிகள் இங்கும் வழக்கத்தில் இருக்கின்றன. பெண்கள் திருமணத்திற்கு முன்னர் கன்னித்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தல், திருமணத்திற்குப்பின் கணவனின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என எதிர்பார்த்தல், திருமணத்திற்குப் பின்னர் கணவனைத்தவிர பிற ஆண்களுடன் பழகக்கூடாது போன்ற எதிர்பார்ப்புக்களையும் கருத்தியல் ரீதியாக காணக்கூடியதாக உள்ளது. இவை தமிழ்ப் பண்பாட்டில் கடைப்பிடிக்கும் வழமைகளாகும்.
20

Page 111
பெண்கள் கணவனின் பெயரை அதிகம் உச்சரிக்கக் கூடாது என்ற வழமையும் பின்பற்றப்படும் ஒன்றாகவே உள்ளது. "இதுகளின் அப்பா” என்று பிள்ளைகளைச் சுட்டிக்காட்டிக் கூறுவார்கள். தற்பொழுது நிலமை சற்று மாறிவருகின்றது.
பெண்கள் கணவனை இழந்தால் பொட்டு வைக்கக் கூடாது, பூ வைக்கக் கூடாது, கடும் வர்ணச் சேலை உடுத்தக் கூடாது, நகைகள் அணியக் கூடாது போன்ற தடைகளும் மலையகத்தில் பின்பற்றப்படுகின்றன. பெண்கள் தீர்மானம் எடுக்க முடியாதவர்கள், அவர்கள் உலக வழக்கம் தெரியாதவர்கள், பலமற்றவர்கள் கணக்கு வழக்குப்பார்க்கத்தெரியாதவர்கள், வெட்டிப்பொழுது போக்குபவர்கள், அரட்டையடிப்பவர்கள் என்ற பெண் தொடர்பாக உருவகப்படுத்தல்களும் ஆண்கள் உலகவிடயங்கள் தெரிந்தவர்கள், தீர்மானம் எடுக்க கூடியவர்கள், கணக்கு வழக்குப் பார்க்கக் கூடியவர்கள் பலசாலிகள் என்ற ஆண் தொடர்பான உருவகப்படுத்தலும் நிலவுவதை அவதானிக்கலாம்.
இவ்வாறானதொரு கருத்தியல் மையப்பட்டதாகவே, வீட்டு வேலைகள் பெண்களுக்குரியனவாகக் கருதப்படுகின்றன. குடும்ப உறவுகளையும் வீடு எனும் பொருளியல் கூறின் தீர்மானங்களையும் ஆண்மேலாதிக்கமே நிர்ணயிப்பதாக உள்ளது.
பெண்களுடைய வேலை என்பது, வீட்டிற்கு வெளியில் வருமானத்தைத் தேடித்தருகின்ற தொழில் எவ்வாறு நீண்டதாகவும், சுமையானதாகவும், சலிப்பை தருவதாகவும் இருக்கின்றதோ, வீட்டிலும் அவ்வாறானதாவே இருக்கின்றது.
பெண்கள் காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு நித்திரை விட்டு எழுந்திருப்பர். காலையில் தண்ணி சேகரித்து,
202

அடுப்பை பற்ற வைத்து தண்ணி வைத்து விட்டு, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் கூட்டுவார்கள். அதன்பின்னால் முகம்கைகால் கழுவி பல்தேய்த்து விட்டு தேனிர் ஊற்றி, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் கொடுத்து தானும் அருந்தி விட்டு, பாத்திரங்களை கழுவுவார்கள். காலைச் சாப்பாட்டிற்கு ரொட்டி தயாரித்து அதற்கு ஒரு கறியோ சம்பலோ செய்வார்கள். கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறி, பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு தயார்ப்படுத்தி, தானும் உடுத்திக் கொண்டு, தனது சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்கிறாள். சிறு குழந்தைகள் இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களை பிள்ளைமடுவத்தில் விட்டுவிட்டுத் தான் அவள் வேலைக்குச் செல்ல வேண்டும்.
பெண்கள் காலைச்சாப்பாட்டை பெரும்பாலும் தேனிர் இடைவேளையின் போதுதான் சாப்பிடுவார்கள். வேலை செய்கின்ற இடம் லயன்களிலிருந்து மிகவும் தூரத்தில் இருந்தால் மதிய உணவையும் எடுத்துச் செல்வார்கள். இது ரொட்டியாகவே இருக்கும். அல்லாத சந்தர்ப்பங்களில் மதிய இடைவேளையில் மதிய உணவைத் தயாரிப்பர். அது குறுகிய நேரத்தில் சமைக்கப்படும் சிறிய சமையலாக இருக்கும். வீட்டில் வேலைக்குச் செல்லாதவர்கள் இருந்தால் மதிய உணவை அவர்கள் தயாரிப்பார்கள். குழந்தை அல்லது வேலைக்குச் செல்லாதவர்கள் வீட்டில் இருந்தால் பெண்கள் வேலை செய்யும் இடத்திற்கு அவர்கள் தேனிரையும் சாப்பாட்டையும் எடுத்துச் செல்வர்.
மாலையில் வீடு திரும்பும் பெண்கள் கைகால் முகம் கழுவி தேனிர்தயாரித்து, வீட்டை துப்பரவு செய்து, பாத்திரங்களைக் கழுவி இரவு உணவு தயாரிப்பார்கள். காலையிலும் மதியமும் கூடுதலாக ரொட்டியையே உண்பதால் இரவு உணவு
203

Page 112
தயாரித்தல் என்பது மிகவும் பிரதானமான ஒன்றாகவும் கூடுதல் நேரத்தை எடுப்பதாகவும் இருக்கும். சோறு ஆக்குவது என்பது இரவிலும் வார இறுதி நாட்களிலும் வேலையில்லாத நாட்களிலுமாக இருக்கும். இரவு உணவுக்கு சோறும் இருகறிகளும் ஆக்குவார்கள்.
காலையில் தன்னுடைய வேலையைப் பற்றி செல்வி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“காலையில் 4.30 மணிக்கு எழுந்திருக்கணும். எங்களுக்கு தண்ணிக்கு சரியான கஸ்ரம் சரியா 6க்கு இருட்டில் தண்ணி நிற்கும். ஒராள் தான் தண்ணிபிடிப்பம் அடுத்தாளுக்கு தண்ணி கிடையாது. காலையில் எழும்பி கைகால் கழுவி, வீடுவாசல் சுத்தம் பண்ணி சாம்பல் அள்ளி டீ குடிப்போம். 6.45ற்கு ரொட்டி சுட்டு பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து அவங்களை ஸ்கூலுக்கு அனுப்பனும். அப்புறம் மாப்பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கணும், மலைக்கு அவருக்கு சாப்பாடு கட்டணும். அவருக்கு டீ ஊத்தி வைக்கணும் நமக்கு டீ கொண்டு போகணும். காலையில் சாப்பிடமாட்டம் நாங்க பார்சல் எல்லாம் கட்டடிக்கிட்டுபோய் 9.30 மணிக்கு நிறுக்கிறாங்க எங்களுக்கு, அப்ப சாப்பிடுவம் சரியாக 7.30 மணிக்கு வேலைக்கு நிக்கணும் இல்லைன்னா விரட்டிடுவாங்க."
பெண்கள் வாரஇறுதி நாட்களிலும், வேலை கொடுக்கப்படாத நாட்களிலும், நேரம் கிடைக்கின்ற போது விறகு சேகரித்தல், உடுப்பு கழுவுதல், மரக்கறித்தோட்டம் செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். பெண்களுக்கு இவ்வேலை களைச் செய்ய நேரம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பெண்
204

குழந்தைகள் இந்த வேலைகளைச் செய்வார்கள். விறகு சேகரித்தல், கால்நடைகளைக்கவனித்தல் மரக்கறித்தோட்டம் செய்தல் போன்ற வேலைகளில் ஆண்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து, ஈடுபட்டு பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் சமைத்தல் உடைகளைக் கழுவுதல், வீட்டைத் துப்புரவு செய்தல் போன்ற வேலைகளில் ஆண்கள் பொதுவாக ஈடுபடுவதில்லை. விதிவிலக்காக ஒரு சில ஆண்கள் அவ்வாறான வேலைகளில் ஈடுபட்டாலும் தொடர்ச்சியான பங்களிப்பு என்பது இங்கு இருப்பதில்லை. பெண்களே தொடர்ச்சி யாக வீட்டு வேலைகளில் ஈடுபடுபவர்களாகவும் அதற்கான பொறுப் பரினை எடுப் பவர் களாகவும் இருக்கின்றனர். அத்துடன் இவ்வேலைகள் பெண்களுக்குரியன என்றே கருதப்படுகின்றன.
ஆண்களுடைய வேலைகள் பெருந்தோட்டங்களில் மதிய நேரத்துடன் முடிவுறுவதாக உள்ளது. அவர்கள் மதியச் சாப்பாட்டிற்கு வீடுகளுக்கு வந்து விடுகிறார்கள். குழந்தைகளும் அவ்வாறு மதியச் சாப்பாட்டுக்கு பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். மதியச்சாப்பாட்டுக்குப் பின்னால் அவர்கள் கடைகளுக்கு செல்லுதல், விறகு பொறுக்குதல், கால்நடைகளுக்கு புல்லுச் சேகரித்தல், கால்நடைகளைக் கவனித்தல் மரக்கறித் தோட்டத்தைக் கவனித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுவர். எல்லோரும் அவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதில்லை. ஏனையோர் அரட்டையடித்தல் மதுபானம் அருந்துதல், இளைப்பாறுதல் போன்றவற்றில் ஈடுபடுவர். இவ்வாறு மது அருந்துபவர்கள் மாலையில் களைத்து வீடுதிரும்பும் பெண்களைத் தொல்லைப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
கடைக்குச் செல்லுதல் பொருட்களை கொள்வனவு செய்தல் போன்ற அலுவல்களை பெண்கள் செய்வது மிகவும் குறைவு. ஆண்களே கூடுதலாக இந்த வேலைகளைச் செய்பவர்களாக
205

Page 113
உள்ளனர். சில சந்தர்ப்பங்களில் பெண்கள் தமது கணவருடன் இணைந்து கடைக்குச் செல்வதுண்டு. இளமையான வயதில் இம்மாதிரியான கட்டுப்ப்ாடு கூடுதலாக பெண்களுக்கு இருக்கின்றது. பெண் தலமைத்துவக் குடும்பங்களில் உள்ள பெண் அல்லது வயதான பெண்கள் தனியே கடைகளுக்குச் செல்வதுணி டு தோட்டங் களில் பாதைகளிலும் , வாசிகசாலைகளிலும், பொது இடங்களிலும் ஆண்கள் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருந்து அரட்டை யடிப்பதைக் காணலாம். அவ்வேளையில் பெண்கள் அடுப்படியில் புகையின் நடுவில் அமர்ந்திருந்து சமையல் வேலையில் ஈடுபடுவர்.
பல சந்தர்ப்பங்களில் குடும்பம் என்பது பிரச்சனை அற்ற நிறுவனமாகவோ வன்முறைகள் அற்றதாகவோ இருப்ப தில்லை. ஆண்கள் குடிப்பது, குடித்துவிட்டு பெண்களைத் துன்புறுத்துவது, அனாவசியமாகச் செலவுகளைச் செய்வது, மனைவியின் சம்பளத்தை எடுத்துச் செலவு செய்வது, மனைவியிடம் பாலியல் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும் அதே சந்தர்ப்பத்தில் தான் பிற பெண்களிடம் சென்று வருதல், குடித்துவிட்டு பெண்கள் விரும்பாத சமயங்களிலும் இன்பத்தை பாலியல் நிறைவை விளைதல் போன்ற விடயங்கள் ஆண்களுடைய ஆதிக்கத்தின் வெளிப்பாடுகள் இவை குடும்பங்கள் அமைதியான பிரச்சனையற்ற நிறுவனங்கள் என்ற கருத்தியலுக்கு முரண்பாடாக உள்ளன.
ஏனைய சமூகங்களைப் போலல்லாமல் தோட்டங்களைச் சேர்ந்த ஆண்களில் கூடுதலானோர் சமையல் வேலைகளையும் வீட்டு வேலைகளையும் தெரிந்தவர்களாக இருக்கின்றனறர். எனினும் சமையற்பொறுப்பை முற்றுமுழுதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டு வேலைகள் பெண்களுக்குரியன எனும் கருத்திலேயே அடிப் படையில் பால்ரீதியான தொழிற்பிரிப்பாக வீடுகளில் நிலைப்படுத்தப்படுகின்றது.
206

அநேக தோட்டங்களில் வாசிகசாலை ஒன்றிருக்கின்றது. இதனை ஏதாவது அரசசார்பற்ற நிறுவனங்கள் நிர்மாணித்து நிருவகிப்பதாக இருக்கும். ஆண்கள் மாலை வேளைகளில் பத்திரிகை வாசிப்பார்கள். ஆனால் பெண்கள் பத்திரிகை வாசிப்பதற்கோ நாட்டிலும் உலகத்திலும் நடப்பவை பற்றி அறிவதற்கு சந்தர்ப்பமும் நேரமும் கிடைப்பதில்லை. அது போல சினிமா பார்ப்பதற்கோ, வேறு ஏதாவது பொழுது போக்கிற்கோ பெண்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
வீட்டுக் கணக்கு வழக்குகளை பெரும்பாலும் ஆண்களே கவனிப்பார்கள். பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் மட்டும் பெண்கள் இவ்வேலைகளைக் கவனிப்பார்கள். அது போல பெண்கள் தமது சம்பளத்தைப் பெரும்பாலும் ஆண்கள் கையில் கொடுத்துவிடுவார்கள். சம்பளம் கொடுக்கும் நாட்களிலும் முற்பணம் கொடுக்கும் நாட்களிலும் அரைநேரம் விடுமுறை கொடுப்பதால் பெண்கள் வீட்டுவேலைகளில் மூழ்கிவிடுவார்கள். ஆண்களே பெண்களுடைய சம்பளத்தையும் எடுத்துவருவார்கள். ஆணுக்கு குடிக்கும் பழக்கமிருக்குமாயின் அநேகமாகக் குடித்துவிட்டே வருவார்கள். மிகச் சொற்பமான குடும்பங்களிலேயே பெண்கள் தமது பணத்தை தாங்களே நிர்வகிக்கின்றனர். ஒரு சில குடும்பங்களில் கணவனும் மனைவியுமாக திட்டமிட்டுச் செலவு செய்வதாக் கூறுகின்றார்கள்.
இத்தகையதொரு அமைப்பில், தேயிலைத் தோட்டங்களில் பால்ரீதியான தொழிற்பிரிவு வீடுகளில் நிலவி வருகின்றது. வீடுகளில் பால் ரீதியான தொழிற்பிரிவு தேயிலைத் தோட்டங்களில் நிலவிவருவதைப் போலவே உள்ளது. பெண்கள் வருவாயைத் தேடித்தருபவர்களாக இருந்தாலும், கூடுதல் வேலை நேரத்தை தொழில்ரீதியாக தோட்டங்களில் செலவிடுபவர்களாக இருந்தாலும் வீடுகளில் அவர்கள்
207

Page 114
வேலைகள் சுமையானதாகவும் ஓய்வற்றதன்மையைக் கொண்டதாகவும் இருக்கின்றது.
பால்ரீதியான தொழிற்பிரிவு வீடுகளில் எவ்வாறு நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றது என அறிதல், அது தொடர்பான பிரக்ஞை என்பன சமூக மாற்றத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற சமூக விஞ்ஞானிகளுக்கு அவசியமான தொன்றாகும். ஏனெனில் பெண்களுடைய வேலைகள் இவை ஆண்களுடைய வேலைகள் இவை எனும் கருத்தியலை மாற்றியமைக்காதவரை பெண்களுடைய பிரச்சனைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வது எவ்வளவு துரம் பிரதான மானதோ அது போல பெண்களுடைய பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதும் அவசியமாகும். இவை இரண்டையும் ஒன்றைமற்றொன்றாக நினைத்து பல கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களையும் தீர்வுகளையும் முன் வைப்பதுண்டு. அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வது பெண்களுடைய வேலைகளை இலகுபடுத்தக்கூடும் ஆனால் பெண்களுடைய அந்தஸ்தை மாற்றியமைக்க உதவமாட்டா.
அவ்வாறான அடிப்படைத்தேவைகளைப் பின்வருவமாறு இனங்காணலாம். தண்ணி வசதியை ஏற்படுத்துதல், மின்சாரம் வழங்குதல், லயன்அறைகளை விஸ்தீரணமுள்ள தாக்குதல், சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல், தொழிலில் பொருத்தமுள்ள இயந்திரப்பாவனையை அறிமுகப் படுத்துதல், பொருத்தமான உடைகளை வழங்குதல், சமைத்த உணவுகளை வழங்குதல், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவற்றில் சிலவற்றின் சாத்தியப்பாடுகள் தொடர்பான விவாதங்கள் இங்கு கருத்தில் எடுக்காவிட்டாலும் இங்கு இவ்வாறான மாற்றீடுகள் தொழிலாளரின அடிப்படை வசதிகளுடன் தொடர்புடையன என்பதை விளங்கிக் கொள்ள
208

வேண்டும். இவை பெண்களுடைய வேலைப்பளுவைக் குறைக்குமானாலும் பால் ரீதியான தொழிற்பிரிவை மாற்றியமைக்கமாட்டா. இங்கு பண்பாட்டு ரீதியாக கருத்தியல் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும்.
பிள்ளை மடுவங்களை எடுத்தக் கொள்வோமாயின் பரிள்ளை மடு வங்கள் உண்மையில் பெண் களின் வேலைப்பளுவை குறைக்கும் வகையில் அமைந்துள்ளன என வெளியாள் ஒருவர் நினைக்கலாம். ஆனால் தோட்டங்களில் பிள்ளை மடுவங்கள் பெண்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் அமையவில்லை என்பதை இங்கு விளங்கிக்க கொள்ள வேண்டும். பிள்ளை மடுவங்கள் நிருவாகத்தினால் தாபிக்கப்பட்டதற்கான பிரதான நோக்கம் பிள்ளைகள் பிள்ளைமடுவத்தில் விடுவதனால் பெண்கள் தமது வேலையில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்பதாகும். பெண்கள் பிள்ளைகளை பிள்ளை மடுவத்தில் விடுதல், மீண்டும் கூட்டி வருதல் போன்ற வேலைகளையும் செய்கின்றனர். லயன்கள் கட்டாயமாக பிள்ளை மடுவத்திற்கு அண்மையில் அமைந்திருப்பவை எனக்கூற முடியாது. பிள்ளைமடுவம் தூரத்தில் இருக்கின்ற போது பிள்ளைகளைக் கூட்டிச் செல்வதும் வருவதும் காலதாமதத்தை ஏற்படுத்து வதாக இருக்கும். பிள்ளை மடுவங்கள் பொதுவாக நல்ல முறையில் பராமரிக்கப்படுவதுகுறைவு. பிள்ளை மடுவத்திற்குப் பொறுப்பானவர் மலையகத்தமிழராக இருப்பதில்லை. அவ்வாறு பொறுப்பாயிருப்பவர் எப்பொழுதும் தோட்டங்களில் தங்கியிருப்பதில்லை. உதவியாளரே தொடர்ந்தும் வேலைகளைக் கவனிப்பவராக இருப்பார். வீட்டில் வயதானவர்கள் அல்லது பாடசாலைக்குச் செல்லாத ஓரளவு வளர்ந்த சிறுமிகள் இருக்கின்ற போது பெண்கள் குழந்தையை அவர்களுடனேயே விட்டுச் செல்லவிரும்புகின்றனர்.
209

Page 115
மலையகத்தில் தேயிலைத்தோட்டத்து, குடும்பங்களில் பாலியல் ரீதியான தொழிற்பிரிவை ஒரு வர்க்கம் சார்ந்த விடயமாகவும் விளங்கிக்கொள்ளவேண்டும். பெண்கள் எல்லோரும் வருமானம் உழைப்பவர்களாக இருக்கிறார்கள் வேலைக்குச் செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகியவற்றுடன் இரட்டைச் சுமையையும் சுமக்கிறார்கள். ஆனால் பால்ரீதியான தொழிற்பிரிவை கருத்திற் கொள்ளுமிடத்து சில நெகிழ்ச்சித் தன்மைகளை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மத்தியதர/ உயர் வாக்கத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களுடைய பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதிலும் மாற்றுவதிலும் காட்டும் எதிர்ப்பையயும் இறுக்கமான தன்மையையும் தொழிலாளர் வர்க்கத்தில் ஆண்கள் காட்டுவது குறைவு. தொழிலாளர் வர்க்கத்தில் ஆண்கள் ஓரளவிற்கு சமைக்கத்தெரிந்தவர்களாகவும் வீட்டு வேலை தெரிந்தவர்களாகவும் சிலசமயங்களில் அவ்வேலைகளைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர். பெண்கள் தமது எதிப்யுைம் கோபத்தையும் வெளிக்காட்டும் சுதந்திரத்தையும் ஓரளவிற்குக் கொண்டுள்ளனர். இவை விதிவிலக்குகளாகவும், ஒப்பீட்டுரீதியில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயங்களு மாகும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் உயர் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதில்லை. முழு நேரமும் வீட்டு வேலைகளைக் கவனிப்பவர்களாக இருக்கின்றனர். நகரங்களில் வாழும் பெண்கள் தாங்களாகவே வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் கடைகளில் வாங்குவது வீட்டு நிர்வாகத்தில் ஈடுபடுவது, பிள்ளைகளை பாடசாலைக்குக் கூட்டிச் செல்வது கூட்டி வருவது போன்ற வேலைகளில் ஈடுபடுவர். அல்லது பணிப்பெண்கள் உதவியாளர் மூலம் இவற்றை நிறைவேற்றுவர். ஆண்கள் வீட்டுவேலைகளில் இருந்து விலகியவர்களாக இருப்பார்கள். தோட்டங்களிலே ஓரளவிற்கு வசதியானவர்கள் தங்களது மனைவியை வேலைக்குச் செல்லவிடுவதில்லை.
210

இவற்றை நோக்குமிடத்து மலையகத்தில் தோட்டங்களில் பால்ரீதியான தொழிற்பிரிவு சாராத ஒரு சூழலை, ஏற்படுத்துவது ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது சாத்தியமானதொன்றாகவே உள்ளது. எப்படியாயினும் பெண் குடும்பம் தொடர்பான பண்பாட்டு ரீதியான வரை விலக்கணங்கள், பாலியல் ஒழுக்கம் தொடர்புபட்டதாக, கற்பு எனும் விடயம் தொடர்புபட்டதாக, பெண்மை எனும் விடயம் தொடர்புபட்டதாக தமிழ்ப்பண்பாட்டிற்கு உரியதாகவே எல்லா வர்க்கங்களிலும் கருத்தியல் ரீதியாக ஒரே மாதிரியானவை யாகவே இருக்கின்றன. தொழிற்பிரிவு குடும்பங்களில் நிலவுவதற்கு பண்பாட்டுரீதியான காரணிகளே கூடுதலான பங்களிப்புச் செய்கின்றன. மாற்றத்தினை ஏற்படுத்துவது என்பது பெண்களுடைய விழிப்புணர்வு மூலமும் சமூகத்தில் ஏற்படக் கூடிய விழிப்புணர்வின் மூலமுமே சாத்தியமாகும்.
சமூக மாற்றத்தை விரும்பும் ஏதாவது ஒரு விடயத்தை புகுத்தும் பொழுது வீடுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் நிலவும் அசமத்துவ உறவுகளை கருத்திற் கொள்ளுதல் அவசியமாகும். குடும்பத்தில் பெண்களுடைய சுயம் சார்ந்த மரியாதையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், குடும்பத்தில் பொறுப்புக்களைப் பகிருவதற்கான திட்டங்களை உருவாக் குதல், சமூக பண்பாட்டு, சட்டரீதியான பாரபட்சங்களை நீக்குதல் என்பன அவசியமாகும்.
211

Page 116
தொழிற்சங்கங்களும் பெண் தொழிலாளிகளும்
வரலாறு
மூன்றாம் உலக நாடுகளுக்கு அல்லது கீழைத்தேய நாடுகளுக்கு முதலாளித்துவம் புகுந்த பிரதான வழிமுறையாகவும் காலனித்துவம் நிலைப்படுத்தப்பட்ட வழிமுறையாகவும் பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. மேற்கு நாடுகளில் மரபுரீதியாக இருந்த சமூகங்கள் அல்லது நிலமானிய முறையிலிருந்த சமூகங்கள் படிப்படியாக மாற்றமுற்று முதலாளித்துவம் உருவாகிய வரலாறு போன்ற ஒரு படிப்படியான வளர்ச்சியை கீழைத்தேய நாடுகளில் தேடமுடியாது. !
முதலாளித்துவமும் காலனித்துவமும் இணைந்த விடயங்களாக கீழைத்தேய நாடுகளில் பரவியமையால் சுரண்டலுக்கான வாய்ப்பு, ஆதிக்கத்துடன் இணைந்து தீவிரமான ஒன்றாகவே ஆரம்பத்தில் நிலவியது. முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற வர்க் கரீதியான உறவுகளுடன் மேலைத்தேயத்தோர் கீழைத்தேயத்தோர் என்ற இன ரீதியானதும் நிற ரீதியானமாக ஆதிக்கமும் இணைந்து காணப்பட்டது. மேற்கு நாடுகளில் மறுமலர்ச்சி, புரட்சி போன்ற மாற்றங்களினுாடாக ஏற்படுத்தப்பட்ட பண்பாட்டு மாற்றங்கள், கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பன நவீன முதலாளித் துவத்தின் தோற்றத்துடன்

சமாந்தாரமாக ஏற்பட்ட மாற்றங்களாகும். தவிர நிலமானித்துவ முறையிலிருந்து விடுபட்ட ஒன்றாக முற்று முழுதாக பணரீதியான வேதனம் என்பது முதலாளித்துவத்தை குணாம்சப்படுத்தியது.
தொழிலாளர் இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் என்பன நவீன முதலாளித்துவத்தின் தோற்றத்துடனேயே மேற்கு நாடுகளில் அர்த்த முடையதாகின்றன. அதற்கு முன்னால் குடியானவர் இயக்கங்கள், கலவரங்கள் போன்ற எதிர்ப்பு வடிவங்களே இருந்தன.
இத்தகையதோர் படிப்படியான வளர்ச்சி இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படவில்லையாகையால் பெருந்தோட்டங்களில் ஆரம்ப காலத்தில் எந்தவிதமான அரசியல்ரீதியான அல்லது பொருளியல் ரீதியான அணிதிரட்டல் வடிவம் ஒன்று தொழிலாளர்களிடையே நிலவவில்லை.
நிரந்தரமான வதிவிடத்தைக் கொண்டிராமை, ஏனைய சமூகத்தவருடன் இருந்து பிரிந்து வாழும் நிலைமை, நிர்வாகத்தின் இறுக்கமான கட்டுப்பாடு கல்வியறிவின்மை, அரசியல்ரீதியான உரிமையின்மை, அரசியல்ரீதியான பிரக்ஞை இன்மை, கங் காணி முறைமை, கங் காணிகளுக்கு கடன்படுநராக இருந்தமை, முற்றுமுழுதாக பணரீதியான சம்பளம் கொடுபடாத முறை என்பன பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஆரம்பத்தில் உருவாகாமல் இருந்தமைக்கு காரணங்களாகும். இவை தவிர இலங்கையில் 1922ம் ஆண்டு வரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாக இருந்தது. அதன் பின்னரும் தொழிற்சங்கவாதிகள் பெருந்தோட்டங்களுக்குள் செல்லுவதற்கான அனுமதி இருக்கவில்லை. கூலி முறை சரியாக நிர்வகிக்கப்படாமையால் முதலாளிக்கும் தொழிலாளிக்குமான பிணைப்பு ஒன்று
213

Page 117
மானியமுறையில் இருந்தது போல நிலவியமையும் தொழிற்சங்கங்கள் தோன்றாமைக்கு காரணமாக அமைந்தது. அவ்வகையில் முதலாளித்துவ முறைமை, கூடுதலான தொழிலாளர், மோசமான சுரண்டல் நிலைமை என்பன பெருந்தோட்டங்களில் காணப்பட்டாலும், முதன்முதலில் கீழைத்தேய நாடுகளில் தொழிற்சங்கங்கள் உருவாகிய வரலாற்றுப் பண்புகள் பெருந்தோட்டங்களில் தோன்ற வில்லை.
சுதேசிகளுடைய தேசியவாதம் சார்ந்ததும் அதனுடன் இணைந்த சமயம் சார்ந்ததுமான எதிர்ப்புகள் மத்தியதரவர்க்கத்தினராலே காலனித்துவ நாடுகளில் முன்வைக்கபட்டன. இவ்வாறான எதிர்ப்புகளுடன் இணைந்ததாக, நகரங்களில் தொழிலாளர்களிடையே தொழிற்சங்கங்கள் ஆங்கில முதலாளிகளுக்கு எதிராக அணிதிரட்டல் போன்ற சம்பவங்களாக கீழைத்தேய நாடுகளில் முதன்முதலில் தோற்றம் பெற்றன. வர்க்கம் என்பது அணிதிரட்டலுக்கான காரணியாக அமைந்து, தொழிலாளர் வர் ககத்திலிருந்து உருவான ஒரு தலைவரால் வழிநடத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் என ஆரம்பத்தில் எதுவித சங்கங்களும் இருக்கவில்லை.
தொழிற் சங்கங்களை முன்னின்று நடத்தியோர், நடுத்தர வர்க்கத்தவராக, உயர்ந்த சாதியினராக, ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தனர். அத்துடன் மத்தியதர வர்க்கத்தின் உதவியில்லாமல் தொழிலாளர் போராட்டங்கள் வெற்றி பெற்ற வரலாறு இருக்கவில்லை. ஆரம்ப கால வரலாற்றை எடுத்துக் கொள்ளும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள் போலான போராட்டங்கள் இடம்பெற்றனவாகிலும் உண்மையான அணிதிரட்டல் இடம்பெறவில்லை.
இலங்கையில் தொழிற்சங்க வரலாற்றை எடுத்துக் கொண்டால்
214

காலனித்துவ காலங்களில் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் தோற்றம் பெறுவதற்கு முன்னால் நகரங்களில் தோற்றம் பெற்றமையை அறியலாம். தவிர நகரங்களில் இடம் பெற்ற தொழிற் சங்க நடவடிக்கைகளும் பின்னர் வந்த காலங்களில் பெருந்தோட்டங்களில் இடம்பெறத் தொடங்கிய தொழிற்சங்க நடவடிக்கைளும் எந்த ஒரு காலத்திலும் இணைந்ததாக நடைபெறவில்லை.
இலங்கை போன்ற நாடுகளில் காலனித்துவத்தினூடாக முதலாளித்துவ முறைமை பரவியமையால் முதலாளித்துவ முறைமையிலமைந்த வர்க்க உறவுகளை காலனித்துவமே ஏற்படுத்தியது. பிரதான தொழிலாளர் வாக்கமாக பெருந்தோட்டத்தொழிலாளர் காணப்பட்டனர். இரண்டாவதாக நகரங்களில் உருவான தொழிலாளர் வர்க்கத்தைக் குறிப்பிடலாம். நகரங்களில் உருவான தொழிலாளர் வர்க்கமும் உண்மையில் பெருந்தோட்டங்களின் வளர்ச்சியின் விளைவாகவே உருவானது எனலாம். நகர பொருளாதார மானது காலனித்துவத்தின் உருவாக்கமாக, பெருந்தோட்டப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து, வங்கி, காப்புறுதி, துறைமுகம், மாநகரசபை, வீடுகளில் வேலை செய்பவர்கள் போன்றவற்றுடன் இணைந்ததாகவே நகரத் தொழிலாளி வர்க்கம் உருவானது. இந்த நகரத் தொழிலாளர் வர்க்கத்தில் சிங்களவரும் இந்தியாவிலிருந்து நகரங்களிற்கு இடம்பெயர்ந்து வந்த தொழிலாளரும் அடங்கினர்.
உயர்வர்க்கதினர் எனும் வகையில் பிரித்தானியரும் மத்தியதர, உயர் மத்தியதரவர்க்கத்தினர் என்ற வகையில் சில இலங்கையரும் இருந்தனர். இவர்கள் பெருந்தோட்ட சொந்தக்காரர்களாகவும் தொழிற்சாலைகளின் அதிபர்களாகவும் வங்கி காப்புறுதி, துறைமுகம், போக்குவரத்து மாநகர சபை
215

Page 118
ஆகியவற்றின் அதிகாரிகளாகவும் இருந்தனர் . சிவில்நிர்வாகத்தில் படித்த இலங்கையர் வேலைக்கமர்ந் திருந்தனர். பறங்கியர், சிங்களவர், வடக்கு கிழக்கு தமிழர் முஸ்லிம்கள் ஆகியோர் இந்த வகையில் ஓரளவிற்கு படித்தவர்கள் பெற்றுக்கொள்ளும் வேலைகளைப் பெற்றுக் கொண்டனர்.
நகரத்தொழிலாளரில் அச்சுத்தொழிலாளர், புகையிரதத் தொழிலாளர், சலவைத்தொழிலாளர்கள், வண்டியோட்டிகள், சுங்கதுறையைச் சேர்ந்தவர்கள் போன்றோரே ஆரம்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 1893ல் முதன் முதலில் அச்சுத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடாத்தப்பட்டது. இந்நடவடிக்கை சட்டவிரோதமாக கருதப்பட்டதுடன் அதற்கேற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. குறைந்த சம்பளம் மோசமான வேலை நிலைமைகள் என்பவற்றிற்கு எதிராகவே இவ்வேலை நிறுத்தம் நடாத்தப்பட்டது. 1896ல் நடாத்தப்பட்ட சலவைத்தொழிலாளர் வேலை நிறுத்தம் நீண்டகாலமாக நடைபெற்றாலும் பெருமளவிற்கு வெற்றியளிக்கவில்லை. அச்சுத்தொழிலாளரின் வேலை நிறுத்தத்தைப்போலவே சட்ட விரோதமான ஒன்றாக கருதப்பட்டது. சலவைத் தொழிலாளரை மாநகர சபையில் பதிய வேண்டும் என அறிவிக்கட்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. 1906ல் நடைபெற்ற மாட்டுவண்டியோட்டிகளின் வேலைநிறுத்தம் வண்டியோட்டும் போது வண்டி ஒட்டிகள் அவற்றில் ஏறியிருக்கப்படாது என்ற மாநகரசபைச்சட்டத்திற்கு எதிரானதாக இருந்தது. இது மத்தியதர வர்க்கத் தலைவர்களின் ஆதரவுடன் நடாத்தப்பட்டமையால் ஓரளவிற்கு வெற்றியளித்த ஒன்றாக இருந்தது. 1912ல் புகையிரதத் தொழிலாளர் வேலைநிலைமைகள் சம்பளம் என்பவை தொடர்பானவையாக இருந்தது. இது பலகாலமாக தீர்க்கப்படாமலேயே தொடர்ந்தது.
216

இலங்கையின் முதலாவது தொழிற்சங்கம் அச்சுத் தொழிலாளர் தொழிற்சங்கமாகவும் இரண்டாவதாக வண்டி யோட்டிகள் சங்கமும் அமைந்தது. இவை இரண்டிற்கும் படித்த மத்தியதரவர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது. இலங்கையரான புல்ஜென்ஸ் எனும் பறங்கியர் இவ்வாறு முதன்முதலாக தொழிற்சங்கம் பற்றிய கருத்துக்களைப் பரப்பியவராக இருந்தார்.
1915 -1920 என்ற காலப்பகுதியில் இலங்கைத் தொழிலாளர் கூட்டு போன்ற தொழிலாளருக்கான சங்கங்கள் தாபிக்கப்பட்டன. இக்காலப்பகுதியில் இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றின் பிரபல தொழிற்சங்கவாதியான ஏ.ஈ குணசிங்க இலங்கைத் தொழிலாளர் கூட்டில் சேர்கின்றார். எனினும் இச்சங்கம் இலங்கை தேசிய காங்கிரசின் செல்வாக்கிற்குட்பட்டிருந்ததால் தொழிலாளரின் நன்மைகளைக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். அவருடைய முயற்சியால் 1922ல் செப்டம்பர் மாதம் 10ம் திகதி இலங்கை தொழிலாளர் சங்கம் தாபிக்கப்பட்டது. 1928ல் இலங்கை தொழிலாளர் கட்சி தாபிக்கப்பட்டது. அதே ஆண்டில் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் தாபிக்கப்பட்டது.
இவை இலங்கையில் நகரப்புறத்தில் தொழிலாளர் இயக்கம் தொடர்பான வளர்ச்சியாகும். பெருந்தோட்டங்களில் உருவாகிய தொழிற்சங்கங்கள் நகரங்களில் உருவாகி வளர்ந்து வந்த தொழிற்சங்க நடவடிக்கைளுக்கும் இயக்கங்களுக்கும் புறம்பானவையாகவே உருவாகின. நகரங்களில் இயங்கிய தொழிற்சங்க இயக்கங்களுக்கு அரசியல் சார்ந்ததும் சமயம் சார்ந்ததுமான தேசியவாத இயக்கங்களினதும் மத்தியதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பும் தூண்டுதலும் காரணமாக இருந்தன. இவ்வாறு அரசியல் சார்ந்த காரணங்கள் தேசியவாதத்துடன் இணைந்ததாக இருந்தன. நகரத்
27

Page 119
தொழிலாளருக்கு இலங்கை பெளத்த மத்தியதர தேசியவாதிகளுடன் இருந்த இணக்கம் இறுதிவரை தொழிலாளர் பிரச்சனைகளை தனியே வர்க்கம் சார்ந்த ஒன்றாக கருதவிடவில்லை. பெருந்தோட்டத்தொழிலாளரின் பிரச்சனைகளை அறிந்தவர்களாக இருந்தாலும் அதனைப்பற்றிய அக்கறை நகரத்தொழிலாளருக்கும் தலைவர் களிற்கும் குறைவாக இருந்தது. மேலும் நகரத் தொழிலாளரின் நிலைமை பெருந்தோட்டத் தொழிலாளருடன் ஒப்பிடுமிடத்து உயர்வானதாகவே இருந்தது. சிங்களவருக்கும், வடக்குகிழக்கு தமிழருக்கும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக இருந்த எதிாப்புணர்வு, அவர்களை அந்நியர்களாக கருதியமை போன்ற காரணங்கள் இங்கு தொழிலாளரிடையேயும் தலைகாட்டியது. பெருந்தோட்டத் தொழிலாளரையும் நகர தொழிலாளரையும் இணைய விடாது தடுத்து, தனிமைப்படுத்தப்பட்ட இரு தொழிலாளர் இயக்கங்களாக அவை இலங்கை வரலாற்றில் உருவாவதற்கான காரணங்களாகவும் அமைந்தன. இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த தொழிலாளர் தமது வேலைகளைப் பறித்து விடுவார்கள் என்ற பயமும் நகரதொழிலாளரிடையே இருந்தது.
1920களிற்கு பின்னால் மலையகத்தில் பெருந்தோட்டங்களில் நிலையான குடியிருப்புத்தன்மை ஏற்பட்டமை, 1931இல் இலங்கை அரசியல் யாப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற காரணங்களினால் 30களில் இலங்கை அரசியலில் மலையக பிரதிநிதித்துவம் ஏற்படத் தொடங்கியமையால் அரசியலுடன் இணைந்ததான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்படத் தொடங்கின.
பெருந்தோட்டங்களில் தொழிலாளர் இயக்கமானது
218

தென்இந்தியாவில் தஞ்சாவூரில் அரச உத்தியோகத்தராக இருந்து இலங்கைக்கு தனது அரசியல் உந்துதலாலும் பத்திரிகைத்துறை ஆர்வத்தினாலும் வந்த நடேசையரினால் தலைமைத்துவப்படுத்தப்பட்டதாக ஆரம்பித்து. இவருக்கு இந்தியாவில் கொம்யூனிசவாதியான மணிலால் என்பவரின் நட்பினாலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு ஏற்பட்டது.
இலங்கையில் நடேசையர் தேசநேசன் எனும் பத்திரிகை யினுடாக தனது கருத்துக்களை வெளியிட்டார். அத்துடன் சிட்டிசன் எனும் ஆங்கிலப் பத்திரிகையுடனும் அவருக்கு தொடர்பிருந்தது. பெருந்தோட்டங்களுக்குச் செல்வதற்கு பல தடைகள் இருந்தும் நடேசய்யர் துணிவியாபாரி ஒருவரின் உதவியுடன் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களின் நிலமைகளை அறிந்து தொழிலாளர்கள் சார்பாக ஆங்கிலேயர்களுக்கு பலகோரிக்கைகளை விடுத்தார். பின்னர் வந்த காலங்களில் சட்டவாக்க சபையின் பிரதிநிதியாக இருந்தமையால் தொழிலாளர் சார்பாக பல வேண்டு கோள்களை விடுத்தார்.
1931ல் நடேசையர் அகில இலங்கை தோட்டத்தொழிலாளர் கூட்டினை உருவாக்கினார். தொழிலாளரைக் கடன் தொல் லையிலிருந்து விடுவித்தல் , கல்வியறிவை தொழிலாளரிடையே ஏற்படுத்துதல், பொருளியல் அந்தஸ்த்தை உயர்த்துதல், அரசியல் பிரக்ஞையை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுமுகமாக பல நடவடிக்கைகளை எடுத்தார். தொழிற்சங்கங்கள் பெருந்தோட்டத்திற்குள் நுழைவதென்பது சட்டப்படி குற்றமாக கருதப்பட்டமையால் கூட்டங்களை நகரங்களில் கூட்டுவதே சாத்தியமாக இருந்தது. இக்கூட்டங்களில் தொழிலாளர்கள் உரிமைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். இவை துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும்
219

Page 120
தொழிலாளருக்கு அனுப்பப்பட்டன. தவிர தனிப்பட்ட
பிரச்சனைகளை முறைப்பாடுகளாக அனுப்பும் அலுவல்களையும் மேற்கொண்டார். p
இவருடைய துணைவியார் மீனாட்சியம்மாள் நடேசையரும் இவருக்கு உறுதுணையாக இருந்தார். பெண்தொழிலாளர் உயர் விற்காக அவர் பாடுபட்டார். தொழிலாளரின் நிலமைகளைப் பற்றி பல பாடல்களையும் மீனாட்சியம்மாள் யாத்தர்.
நடேசையரின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பெருந்தோட்டச்சொந்தக்காரர்கள் பல நடவடிக்கைகளை எடுத்தனர். அவ்வகையில் நகர தொழிற்சங்கவாதிகளை விட பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கவாதிகள் கூடிய இடர்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இவ்விடர்களின் மத்தியிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தன. 1921ம் ஆண்டில் ஆகக் குறைந்த சம்பளச் சட்டம் உருவானதுடன் தொழிலாளரின் சம்பள அளவு நிர்ணயிக்கப்பட்டதுடன் அதுவரை காலமும் பெற்ற சம்பளத்தைவிட கூடுதல் சம்பளத்தை தொழிலாளர் பெற்றனர். இவ்வாறு சம்பளம், நிர்ணயிக்கப்பட்டதால் தொழிலாளரின் தொழிற்சங்கப் பங்களிப்பும் அதிகரித்தது.
1920களின் கடைசிப் பகுதியில் ஏ.ஈ குணசிங்காவிற்கும் நடேசையருக்குமான நட்பு நகரத்தொழிலளார் வர்க்கத்தையும் தோட்டத்தொழிலாளர் வர்க்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்பட்டதாயினும் குறுகிய காலமே அது நிலைத்தது.
1930களுக்கு முன்னால் ஆகக்குறைந்த வேதனம் தொடர்பாக சம்பளம் ஓரளவிற்கு நிச்சயமானதாகவும், ஒப்பீட்டளவில் உயர்வானதாகவும் நிர்ணயிக்கப்பட்டதுடன் தொழிற்சங்க
220

நடவடிக்கைகள் பெருந்தோட்டங்களில் அதிகரித்ததாயினும் 1930களுக்குப் பின்னால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலமை காரணமாக இரண்டு தடவைகள் 1932லும் 1933லும் தொழிலாளரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இது தொழிற்சங்க நடவடிக்கையின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.
1939ல் நேரு இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் இலங்கைத் தோட்டத் தொழிலாளார் இலங்கை இந்தியன் காங்கிரசை ஆரம்பித்தனர். 1950ல் இலங்கை இந்திய காங்கிரஸ் தனது பெயரை இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றிக் கொண்டது.
1940களில் குடியுரிமைப்பிரச்சனையுடன் CWC தனது ஆதரவை தொழிலாளரிடமிருந்து திரட்டிக் கொண்டது. இக்காலத்தில் கொழும்பு நகரத்தில் வேலை செய்து வந்த, இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்து குடியமர்ந்த தொழிலாளரும் சேர்ந்து கொண்டனர். அதனால் தொழிலாளர் பிரச்சனை என்பது பெருந்தோட்டங்களுக்கு வெளியிலும் சிந்திக்கப்படலாயிற்று. அத்துடன் தொழிலாளர் பிரச்சனை என்பது அரசியல் ரீதியான பிரச்சனையாகவும் சிந்திக்கப்படலாயிற்று.
1956ல் ஆசீசுக்கும் தொண்டமானுக்கும் இடையே ஏற்பட்ட பரிணக்கினால் ஆசீஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்து, ஜனநாயக தொழிலாளர் காங்கிரசைத் தாபித்தார். 1965ல் மீண்டும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பிரிந்து ஒரு குழு தொழிலாளர் தேசிய காங்கிரசை ஆரம்பித்தது.
1972ற்குப் பின்னால் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன் பல தொழிற்சங்கங்கள் தேசிய அரசியலுடன் இணைந்து பெரும்பான்மையினருடன் இயங்கும் கட்சிகளின் பிரிவுகளாக
22

Page 121
தாபிக்கப்பட்டன. LEWV என்ற ஜக்கிய தேசியக்கட்சியின் தொழிற்சங்கம் அத்தகையதாகவே ஆரம்பிக்கப்பட்டது.
நமசமாஜக் கட்சியின் தோட்டதொழிலாளருக்கான நடவடிக்கைகள் 1940களிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதுதவிர 70களில் CPWV தனது செயற்படுகட்சிகளை ஆரம்பித்தது. இக்காலத்தில் நமசமாஜக் கட்சியின் தோட்டத்துறைக்கான பிரிவாக LEWV உம் ஆரம்பிக்கப்பட்டது. NRFWV எனும் மார்க்சிய கட்சியும் தனது சங்கத்தை ஆரம்பித்தது. தோட்டத்தொழிலாளரிடையே தொழிற்சங்க நடவடிக்கைகளில் பல பிளவுகள் ஏற்பட்டது. தோட்டதொழிலாளரின் வாக்குகள் நாட்டின் அரசியலை நிர்ணயிக் கின்ற பிரதான விடயங்களாகின.
கட்சி சார்ந்த ஆர்வங்களினால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தனியே தொழிலாளர் ஆர்வங்கள், அவர்களின் உரிமைகளைப் பெற்றெடுக்கும் போக்கு என்பன தன்மையில் மாற்றம் பெறத்தொடங்கின.
1970களில் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டதுடன் நிலச்சீர்திருத்தச்சட்டம் 1972லும் 1975லும் அறிமுகப்படுத்தப் பட்டதுடன் வேலையின்மை, ஒழுங்கற்ற சம்பளக்கொடுப்பனவு, ஒழுங்கற்ற வேலை, சுகாதாரப் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகள் பெருந்தோட்டங்களில் ஏற்பட்டதுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான வாய்ப்பும் மட்டுப்படுத்தப்பட்டது. 1973ல் தொழிற்சங்கங்கள் எல்லாமாக இணைந்து, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. 1980களில் LEWV (UNP யினுடைய பெருந்தோட்டங்களிற்கான பிரிவு) பெருந் தோட்டங்களில் கூடுதல் அங்கத்தவர்களைத் திரட்டிக் கொண்டது.
1981ல் பெருந்தோட்டங்களில் எல்லாமாக 14 தொழிற்சங்கங்கள்
222

இருந்தன. ஏறத்தாள 95% மான தொழிலாளர்கள் தமது அங்கத்துவத்தை தொழிற்சங்கங்களில் கொண்டிருந்தாலும் மலையகத்தில் தொழிற்சங்கங்கள் பலம் வாய்ந்த ஒரு சக்தியாக இயங்காது போனமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது.
இதன் பின் வந்த காலங்களில் மிகக்குறைந்தளவு சந்தர்ப்பங்களிலேயே பொதுவான கோரிக்கையை எல்லாத் தொழிற்சங்கங்களும் இணைந்ததாக முன்வைத்து வெற்றி கொள்ளக்கூடியதாக இருந்தது. 1984ல் தொழிற்சங்க நடவடிக்கையினால் ஆறுநாள் வேலை வெற்றி கொள்ளப்பட்டது. அதே போல 1984 ல் சமசம்பள மீதான கோரிக்கையும் வெற்றி கொள்ளப்பட்டது.
1997, 98 (UNE வரை) காலப் பகுதியில் பின்வரும் கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
1. இலாபத்தில் பங்கு
2) வரவுசெலவுகள் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்
3) சம்பள உயர்வு
4) ஊழியர் சேமலாபநிதி வழங்குவதிலுள்ள இழுபறியை
நீக்குதல்.
5) வயது வந்த இளைஞ்ர் யுவதிகளிற்கு பெயர்
பதியப்பட வேண்டும்.
6) தோட்டங்களில் மரம் நடுவதை நிறுத்த வேண்டும்.
இலங்கையின் ஏனைய தொழிற்துறைகளுடன் ஒப்பிடுமிடத்து பெருந்தோட்டத்துறையில் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருப்பினும் தொழிலாள ருடைய பிரச்சனைகளைக் கருத்திற் கொள்ளுமிடத்து போதுமானவகையில் அமைவதில்லை.
223

Page 122
இத்கையதொரு வரலாற்றை எடுத்து நோக்குகின்றபோது தொழிலாளர் பிரச்சனைகளும் மலையக மக்களுடைய இனப்பிரச்சனைகளும் ப்லம்வாய்ந்ததாக தொழிற்சங்க நடவடிக்கையாகவும் அரசியல் நடவடிக்கையாகவும் போதியளவிற்கு அரசியல் கட்சிகளாக இயங்கும் தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. மலையக மக்களிடையே கூடுதலான சனத்தொகையினர் தொழிலாளராக இருந்தும் தொழிலாளரிடையே இருந்து தொழிற்சங்கவாதிகள் போதியளவு உருவாவதில்லை. கல்வியறிவில் ஏற்படும் உயர்ச்சி அதனுடாக ஏற்படும் பிரக்ஞை, சமூக மாற்றம் என்பவற்றிற்கு பதிலாக தொழிற்சங்க தலைமைத்துவம் மத்திய உயர்தர வர்க்கத்தினரிடமிருந்தும் உயர்சாதியினரிடமிருந்தும் உருவாக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது.
தொழிலாளர் நலன்கள், சாதி ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள், பெண்கள் உரிமைகள், அவர்களது
அங்கத்துவம் என்பன பகடைக்காய்களாக அரசியலில்
பயன்படுத்தப்படுவனவாகவே உள்ளன. அரசியல்வாதிகள்
ஏனைய பெரும்பான்மை இனக்கட்சிகளுடன் ஒத்துப்போக
வேண்டிய நிலமையிருப்பதும் இவ்வாறான சூழ்நிலைக்குக்
காரணமாகும்.
மலையக மக்களது அரசியல், தொழிற்சங்கங்களினூடாக இயங்கி வருகின்ற ஒன்றாக இருக்கின்றது. அவ்வகையில் மலையக தமிழர் தமக்கான அரசியற்கட்சிகளை தோட்டங்களில் இருந்து பிரித்து ஏற்படுத்தவில்லை. அவ்வாறான சூழ் நிலையில் தொழிலாளர் பிரச்சனைகள் வர்க்கப் பிரச்சனையாக தொடர்ந்தும் நிலைத்து வருகின்றன. வேதனம் தொடர்பான விடயங்களையே கூடுதலாக தொழிற்சங்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் இன்னமும் மாதச் சம்பளம் என்பது
224

பெற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. இதற்குப் புறம்பாக சமூக விடயங்கள் குறிப்பாக மனித உரிமைகள் சார்ந்ததும் அதிலும் குறிப்பாக பெண்களுடையதும் குழந்தைகளுடையதும் சார்ந்த வரிடயங் களைத் தொழிற்சங்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.
தொழிற் சங்கங்கள் பெருமளவிற்கு தொழிலாளர் சந்தாப்பணத்தை பெற்றுக் கொண்டு இயங்கி வருகின்ற அரசியற்கட்சிகளாக இருந்தும் கூட தேசியமட்டத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சனைகள் போதியளவு பிரதிபலிக்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் தொழிற்சங்கங்கள் முன் நிற்பதில்லை. அவ்வகையில் தொழிலாளரின் பிரச்சனைகள் சமூகப் பிரச்சனைகளாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
தொழிற்சங்கங்களின் இயக்கமும் அவற்றில் பெண்கள் இருப்பும்
பெருந்தோட்டங்களில் 95%மான பெண்கள் தொழிற்சங்கங்களில் அங்கத்துவம் பெற்றவராகவும் சந்தா செலுத்துபவர்களாவும் இருக்கின்றனர். சந்தாப்பணமானது எல்லோருடைய சம்பளத்திலும் கழிக்கப்பட்டே மாதாமாதம் கொடுக்கப்படு கின்றது. சம்பளத்தில் கழிக்குமாறு கொடுக்கப்படும் கடிதம் ஒன்றின் அடிப்படையிலேயே அவ்வாறு கழிக்கப்படுகின்றது. தொழிற்சங்கத்திற்கு தொழிற்சங்கம் இத்தொகை மாறுபட்ட வகையில் அமைகின்றது. 20ரூபாவிலிருந்து 30 ரூபாவரை வேறுபடு கின்றது. பெண்களுடைய வேலை தொடர்பானதும் வாழ்வு தொடர்பானதும் நிச்சயமற்றதன்மை இவ்வாறான பாரதூரமான நிலமையிலும் அங்கத்துவத்தை நீக்கிக் கொள்ளவிடாது தடுத்து வைப்பதாக உள்ளது. எனினும் சந்தர்ப்பங்களில் ஒரு சங்கத்திலிருந்து இன்னொரு சங்கத்திற்கு
225

Page 123
அங்கத்துவத்தை மாற்றுகின்ற வழக்கம் உண்டு.
எல்லோருக்கும் அங்கத்துவம் இருப்பினும் பெண்கள் எல்லோருமே தொழிற்சங்கம் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயற்படுகின்றனர் எனக் கூற முடியாது. சங்கங்களில் நம்பிக்கையில்லாது அக்கறையின்றி இருப்போர் பலர் வீட்டு வேலைகளினதும் தொழிலினதும் சுமையினால் கவனமின்றி யிருப்போர் வேறுசிலர், குடும்பத்தில் கணவரினாலும் சகோதரரினாலும் ஏனையோரின் கட்டுப்பாடு காரணமாகவும் தீவிரமாகத் தொழிற்படாது இருப்போர் எனப்பல தரப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். அரசியல் பற்றியும் சங்கங்கள் பற்றியும் அக்கறையில்லாது பல பெண்கள் இருப்பதை அவதானிக்கலாம். சில தோட்டங்களில் சங்கங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்போர் இல்லாத காரணங்க ளினாலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவது குறைவாக இருக்கிறது.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கு பற்றும் பெண் தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால் தோட்டமட்டங்களில் மாதர் சங்கத் தலைவி, கமிட்டியில் உள்ள பெண்கள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு கட்சியும் ஒரு மாதர் சங்கத்தலைவியை நியமித்திருக்கும். இவர் சங்கத்தலைவரின் கீழ் இயங்குபவராக இருப்பார். பெண்களுடைய தொழில் தொடர்பானதும் வாழ்வு தொடர்பானதுமான பிரச்சனைகளை மாதர் சங்கத்தலை வியினுடாகவே தொழிற்சங்க தலைவருக்குத் தெரியப்படுத்தப் படும். அனேக தொழிற்சங்கங்கள் மாதர் அணி என்ற ஒன்றை தேசிய மட்டத்தில் உருவாக்கியுள்ளன. மாதர் சங்கத் தலைவி தோட்ட மட்டத்தில் பெண்களுடைய பிரச்சனைகளைக் கேட்டறிபவராக, அவற்றை தொழிற்சங்க தலைவரின் உதவியுடன் அணுகுபவராக, அங்கத்தவர்களை
226

திரட்டுபவராக அங்கத்தவர்களுடன் நல்லுறவுகளை பேணுபவராக இருக்கின்றார்.
இலங்கை தொழிலாளார் காங்கிரஸ் இவ்வாறு மாதர் அணியை எல்லா தோட்டங்களிலும் பேணுகின்ற ஒரு கட்சியாக இருக்கின்றது. தேசிய மட்டத்தில் மாதர் அணிக்குப் பொறுப்பான வராக ஒரு பெண் இருப்பார். பொதுவாக மேற்கூறியவாறான கடமைகள் அமைந்திருப்பினும் தோட்டங்களுக்குத் தோட்டம் கடமைகள் மாறுபட்ட வகையில் அமைகின்றன.
எமது ஆய்வின் போது தோட்டக்கமிட்டித்தலைவராக இயங்கும் பெண் ஒருவரையும் சந்திக்கவில்லை எனினும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது கட்சியில் ஓரிரு இடங்களில் தோட்டக்கமிட்டித் தலைவராக பெண்கள் இயங்குவதாயும், தமது யாப்பிற்கிணங்க எல்லாத்தோட்டங்களிலும் உபதலைவர் பதவி பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. இது நடைமுறைப் படுத்தப்படுவதை அவதானிக்க முடியவில்லை. பேச்சளவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை ஒரு சில கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காணமுடியவில்லை. அவ்வகையில் எல்லாமட்டத்திலும் பெண்கள் ஆண்களுக்கு கீழ் அவர்கள் கட்டளைக்கிணங்க இயங்குபவர்களாவே இருக்கின்றனர். மாதர் சங்கத் தலைவிகளின் கடமைகள் பால்ரீதியான வேறுபாட்டை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன. உதாரணமாக ஒரு தோட்டத்தில் மாதர் சங்கத்தலைவியின் செயற்பாடுகள் எவை எனக் கேட்டபோது தோட்டத்தில் நடைபெறுகின்ற விசேட வைபவங்களிற்கு அன்பளிப்பு பொருட்கள் வாங்குதல் திருமண வீட்டிற்கு குத்து விளக்கு வாங்கி அன்பளிப்பு செய்தல் என்பவை மாதர் சங்கத்தலைவியின் கடமைகள் என கூறப்பட்டது. கூட்டங்கள் கூட்டும் போது பொட்டு
227

Page 124
வைத்தல் மாலைபோடுதல் போன்ற வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர்.
பெண்களுடைய பிரச்சனைகள் பொதுவாக ஆணாதிக்க கருத்தினுடாகத் தீர்த்து வைக்கப்படுவதுடன் பால் அசமத்துவ நிலையினை மேலும் உறுதிப்படுத்துப்படும் அணுகு முறைகளாகவே காணப்படுகின்றன. உதாரணமாக மனைவியை அடித்தல் அல்லது மனைவியின் சம்பளத்தை கணவர் குடித்துச் செலவழித்தல் போன்ற நிலைமைகள் பிரச்சனைகளாக உருவாகும் போது "குடும்பம்" என்ற உறவு நிலைக்குள் நடப்பன அவை, தனிமனித தனிப்பட்ட விடயங்கள் அவை என்ற கருத்தியலே மேலோங்கி நிற்பதால் அதன் வழிப்பட்ட தீர்மானமே குறிப்பிட்ட பெண்களுக்கு வழங்கப்படுகின்றது.
தொழிற்சங்கவாதிகளுடன் இது தொடர்பாய் பேசிய போது அவர்கள் பெண்களுக்கு தலைமை தாங்கும் திறமையிருந்தால் நிச்சயமாக உயர்பதவிகள் அவர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறுகின்றனர். ஆனால் தோட்ட மட்டத்தில் தோட்டக்கமிட்டி தலைவராக இருக்கின்ற கல்வித்தராதரம் அனுபவம் திறமை என்பன பெண்களுக்கு இருந்தாலும் அத்தகைய பதவி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. தோட்டங்களில் இயங்கும்கமிட்டி தலைவரிலிருந்து தேசிய மட்டத்தில் இயங்குகின்ற கட்சித் தலைவர்கள் வரை விசுவாசம், செல்வாக்கு சாதிசார்ந்த அம்சங்கள் எனப்பல காரணங்களி னாலேயே தெரிவு செய்யப்படுகின்றார்கள். மாதர் சங்கத் தலைவிகளையும் தோட்டக்கமிட்டி தலைவரே நியமிக்கின்றார். வாக்குகளின் அடிப்படையில் அங்கத்தவர்களால் அவர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. எனினும் அதிகாரத்திலுள்ளோர் தம் கட்சிகள் கட்சி யாப்பின்படி வாக்களிப்பினுடாகவே அங்கத்த வர்களைத் தெரிவு செய்கிறார்கள் எனத் தெரிவிக்கின்றன்றனர். அவ்வகையில் தொழிற்சங்கங்களின் கட்டமைப்பில்
228.

பெண்களின் அங்கத்துவம் பெயரளவிலே ஒரு புறமும் அரசியல் லாபத்திற்காக மறுபுறமும் பேணப்படும் ஒன்றாகவே இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்களுக்கு பதவிகள் வழங்குதல் என்பது அவர்களைப் பகடைக் காய்களாக்குவதற்காகவே போலத் தெரிகிறது.
தொழிற்சங்க நடவடிக்கைகளில், உதாரணமாக வேலை நிறுத்தங்களின் போது பெண்களே முன்னிற்பதாகவும் அவ்வகையில் பெண்களுக்கு முன்னின்று நடாத்தும் திறமை அதிகரிப்பதாகவும் பொதுவான கருத்து ஒன்று நிலவுகின்றது. இது பற்றி நாம் அறியமுற்பட்ட போது, பெண்களை அவ்வாறு முன்னே நிறுத்துகின்ற போக்கு மலையக தொழிற்சங்க வரலாற்றில் காணப்படுவதாகவும் ஆண்களே கூடுதலாகப் பெண்களை முன்னே நிறுத்தத்துரண்டுவதாகவும் கூறப்படுகின்றது. கண்ணிப்புகை பிரயோகிக்கப்படும் போது, அடிதடி துப்பாக்கிப் பிரயோகம் எனவரும் போது பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் அறியக்கூடியதாக உள்ளது.
இவற்றைத் தொகுத்து நோக்குகின்ற போது தொழிலாளர் என்ற வகையில் பெண்களுடைய நிலைமையை மாற்றி யமைப்பதற்கு முயல வேண்டிய ஒரே ஒரு வழி முறையாகக் கருதப்படும் தொழிற்சங்க நடவடிக்கையும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தொழிற்படுவதை அவதானிக்கலாம். பெண்கள் தொழிற்சங்க கட்டமைப்புக்குள்ளேயே தமது உரிமை களுக்காகவும் உரிய இடத்திற்காவும் போராடுவது அல்லது தனியான தொழிற்சங்கங்களை அமைப்பது என்ற இரு மாற்றீடுகள் தீவுகளாக முன்வைக்கப்படினும் இரண்டுக்கான சாத்தியக்கூறுகளும் எமது ஆய்வின் தரவுகளிற்கிணங்க சாத்தியமானதாகப் பெண்கள் கருதவில்லை.
தொழிற்சங்கங்களில் இருக்கின்ற ஆண்களும் ஏனைய
229

Page 125
அலுவலர்களும் பத்திரிகைகள் ஊடாகவும் கூட்டங் களினூடாகவும் இத்தகைய கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. (வீரகேசரி குறிஞ்சிப் பரல்கள் (14-6-98) எமது ஆய்வின் போதும் ஆண்களி டமிருந்து அவ்வாறான கருத்துக்களை அறியக்கூடியதாக உள்ளது.
இத்தகைய ஒரு நிலமையில் பெண்களது பிரச்சனைகள் ஒரு புறம் தீவிரமானவையாக இருக்கின்ற போது மறுபுறத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெண்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் . பெண் தொழிலாளரின் நிலைமை இத்தகையதாக இருக்கின்ற போது மலையகத்தில் இனத்துவப்பிரச்சனைகளை பெண் தொழிலாளர் சார்பில் நோக்குவது மிகவும் சிக்கலானதொரு விடயமாக உள்ளது.
ஏதோ ஒரு வகையில் பெண் தொழிலாளர்களுக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி அதனுடாக பெண்களுடைய விழிப்புணர்வு, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, தலைமைத்துவ வளர்ச்சி எனபவற்றை ஏற்படுத்துவதனூடாக பெண்களே தங்களுடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வரும்வரை பெண்கள் தொடர்ந்தும் பகடைக் காய்களாவே உபயோகிக்கப்படுவர்.
குறிப்பிட்ட தோட்டம் ஒன்றை எடுத்துக் கொண்டால் அத்தோட்டத்தில் எல்லாத் தொழிற் சங்கங்களும் இயங்குகின்றன எனச் சொல்லமுடியாது. சில தோட்டங்களில் ஐந்து தொழிற்சங்கங்கள் சிலவற்றில் நாலு, மூன்று, இரண்டு என செயற்படுகின்ற தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை மாறுபடும். அது போல குறிப்பிட்ட தோட்டத்தில் எந்தத்தொழிற்சங்கம் கூடுதல் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதும் தோட்டத்திற்குத் தோட்டம் மாறுபடும். சில
230

தோட்டங்கள் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில் பெயர்போன தோட்டங்களாக இருக்கின்றன. சில தோட்டங்கள் வரலாற்று ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பெயர்போன தோட்டங்களாக இருக்கின்றன.
தோட்டமட்டத்தில் 'சங்கம் யூனியன் கட்சி போன்ற பதங்கள் பழக்கத்தில் இருக்கின்றன. கட்சி என்ற பதம் அரசியல் ரீதியான சிந்தனையுடன் இணைந்ததாக, தேசிய மட்டத்தில் சிந்திப்பவர்களால் பெரிதும் உபயோகிக்கப்படும். சில சமயங்களில் பிளவுகள், சச்சரவுகள் சுட்டிக்காட்டிப் பேசுகின்றபோதும் உபயோகிக்கப்படும். தோட்டமட்டங்களில் தொழிற்சங்கத்தின் சார்பாக இயங்குகின்ற பிரதிநிதி தலைவர் என அழைக்கப்படுவார். "சங்கத்தலைவர் "யூனியன் தலைவர் என்ற சொற்தொடர்களும் உபயோகத்தில் உள்ளன. இயங்குகின்ற சங்கங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தலைவர்களின் எண்ணிக்கை தோட்டமட்டத்தில் மாறுபடும்.
நிர்வாகத்திற்கும் தொழிலாளாருக்குமான தொடர்பினை ஏற்படுத்துபவராக தலைவர் கடமையாற்றுவார். இவை தொழிலாளரின் அன்றாட பிரச்சனைகளுடன் தொடர்புபட்ட தாக இருக்கின்றன. வேலைசார்ந்ததும் பொதுவான வாழ்வு சார்ந்ததுமான பிரச்சனைகளை அணுகுபவராக தொழிற்சங்கதலைவர்கள் தோட்டங்களில் செயற்படுவர்.
வேலைக்கு தாமதமாகி விரட்டப்படுதல், பெயர்போடாமல் விடல், குறைந்தளவு நிறையை கணக்கெடுத்தல், சம்பளக் கணிப்புகள் , ஓய்வூதியக் கணிப்புக்கள் ,சேமலாபக் கொடுப்பனவின் கணிப்புகள் போன்றவை வேலையுடன் தொடர்புபட்ட பொதுவான பிரச்சனைகளாகும். இவற்றிற்கு அடுத்ததாக லயன்களில் வசதி, சுகாதார வசதி போன்ற
23

Page 126
விடயங்களும் லயன்களில் குடும்பத்தகராறு, அயலவர் தகராறு, கடன் பிரச்சனைகள் போன்றவற்றையும் அணுகுபவராக தோட்டக் கமிட்டித்தலைவர் இருப்பார்.
தோட்டங்களில் நடைபெறுகின்ற விசேட நிகழ்ச்சிகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பவர்களாகவும் அவற்றில் முழுமையாக பங்கு பற்றுபவர்களாகவும் தோட்டக்கமிட்டித் தலைவர்கள் இருப்பார்கள். உதாரணமாக குறிப்பிட்ட தோட்டத்திலுள்ள கோயிலில் நடைபெறும் திருவிழாவை அல்லது சடங்கை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான தோட்டங்களில் கோயில் கமிட்டியும் தோட்டக்கமிட்டியும் இணைந்து அவ்வருடத்திற்கான நிகழ்ச்சிகள் பற்றிய தீர்மானங்கள் எடுக்கும். சில தோட்டங்களில் திருவிழா நடைபெறுகின்றபோது, குறிப்பிட்ட நாள் திருவிழா இன்ன சங்கத்திற்கு என ஒதுக்குகின்ற வழக்கம் இருக்கும். அவ்வகையில் கோயில் திருவிழா காரியங்கள் என்பவற்றிலும் தோட்டகமிட்டித்தலைவர்களின் செல்வாக்கு இருக்கும். எல்லாத் தோட்டங்களிலும் வழமை இது தான் என்று சொல்ல முடியாது. தோட்டத்திற்குத் தோட்டம் வழமை மாறுபடும்.
இவைதவிர நாட்டில் அரசியல் ரீதியாக பிரதான தினங்கள் கொண்டாடப்படுகின்ற போது தோட்டங்களில் சங்கங்கள் வாரியாக அல்லது கட்சிவாரியாக தலைவரின் தலைமைத்துவத்தில் கொண்டாடப்படுவதுண்டு. சில தோட்டங்கள் சங்கங்கள் எல்லாமாக இணைந்து இத்தினங்களைக் கொண்டாடுவர். உதாரணமாக சுதந்திர தினத்தை எடுத்துக் கொண்டால், ஒரு சங்கத்தைச் சேர்நதவர்கள் காலையில் ஒரு பொதுவான இடத்தில் தங்கள் அங்கத்தவர்களைக் கூப்பிட்டுக் குழுமிக் கொடியேற்றுவர். இன்னொரு சங்கம் அவ்வாறு மாலையில் கொடியேற்றும். சில தோட்டங்களில் எல்லாச் சங்கமும் இணைந்து கொடியேற்றும் . இவ்வாறு அரசியல் ரீதியான
232

கொண்டாட்டங்களையும் சங்கத்தலைவர்களே முன்னின்று நடாத்துவர்.
இவ்வாறு தொழிற்சங்க தலைவர்களின் பங்கு தோட்ட மட்டத்தில்
சமூக வாழ்வின் எல்லா நிறுவனங்களிலும் பரவியதாக இருக்கும்
தோட்டங்களில் நடக்கும் எல்லா விடயங்களையும் தோட்டக்கமிட்டித்தலைவர் அறிந்தவராக இருப்பார்.
உதாரணமாக ஆய்வாளராக நாங்கள் தோட்டங்களுக்குச் செல்வதையும் எங்கள் நடமாட்டத்தையும் தோட்டகமிட்டித்
தலைவர்கள் அறிந்திருப்பர். தோட்டத்தில் எங்களை அறிமுகப்படுத்தும் உதவியைச் செய்கின்ற நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் நட்பைப் பேணுகின்ற நிறுவனமாக
இருக்குமாயின் தொழிற்சங்கத் தலைவர்களினூடாகவே
அவ்வாறான அறிமுகத்தை விரும்புவார்கள். அவ்வகையில் கிராமங்களில் பிரமுகர்கள் கிராமசேவையாளர் போன்றவர்களுக்கு இணையான ஒரு பதவியை தோட்டங்களில் தொழிற்சங்க
தலைவர்கள் வகிப்பதை அவதானிக்கலாம். எனினும் எமது
அறிமுகமானது பெரும் பாலும் அரசசார்பற்ற நிறுவனங் களினூடாக, அதிலும் குறிப்பாக, பெண்களுடன் தொடர்பு டையதான நிறுவனங்களினூடாகவே நேர்ந்தது. இந்நிறுவ
னங்களின் அங்கத்தவர்கள் தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் வசிப்பவர்களாகவும் அமைகின்ற போது அவ்வாறான
சந்தட்பங்கள் ஏற்பட்டது குறைவு. எனினும் ஓரிரு சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கத் தலைவரின் அறிமுகத்தினூடாகவும், மறைமுகமாக
அவர்களுடைய அனுமதியுடனும் செல்ல வேண்டிய
சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு.
தோட்டக்கமிட்டிதலைவர் மாவட்டக் கமிட்டித் தலைவரின் கீழ் இயங்குபவராக இருப்பார். தோட்டமட்டத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் மாவட்ட மட்டத் தலைவரிடம் எடுத்துச் செல்லப்படும். தோட்டமட்டத்தில் தீர்க்கப்படாத
233

Page 127
அன்றாடப் பிரச்சனைகள் தவிர்ந்த ஏனைய பிரச்சனைகள் மாவட்ட மட்ட தலைவரிடம் எடுத்துச் செல்லப்படும்.
பெரும்பாலான தோட்டத்தொழிலாளர்கள் தமது உரிமைகள் பற்றியும், சட்டதிட்டங்களைப் பற்றியும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அறிந்திருப்பவர்களும் அவற்றைச் செயற்படுத்தவதற்கான அதிகாரம் அற்றவர்களாக இருக்கின்றனர். தோட்டமுறைமையையும் அவ்வாறானதாக வளரவில்லை. தொழிற்சங்கங்களும் தொழிலாளரை அவ்வாறானதொரு நிலைமைக்கு வளர்த்தெடுக்க வில்லை. தோட்டங்களில் தொழிலாளரிடையே கல்வி அறிவு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. இக்காரணங்களினால் தொழிலாளர்கள் இச்சங்கத்தலைவர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தோட்டமட்டத்திலும் தொழிற்சங்கத்தலைவர் இவ்வாறு எல்லா விடயங்களையும் அறிந்தவராக இருப்பதில்லை. ஏனைய தொழிலாளருடன் ஒப்பிடுமிடத்து, ஓரளவிற்கு விடயம் தெரிந்தவராக இருக்கின்றாரே தவிர அவர் எல்லாம் தெரிந்தவராக இருப்பதில்லை. மாவட்ட, பிரதேச மட்டத்திலே இருக்கின்ற தொழிற்சங்கத் தலைவர்கள் ஒப்பீட்டளவில் தோட்ட மட்டத்திலுள்ள தொழிற் சங்கத் தலைவரை விடதொழிலாளரின் உரிமைகள் பற்றியும் பிரச்சனைகளைத் தீர்க்கின்ற அணுகுமுறை பற்றித் தெரிந்தவராகவும் இருக்கின்றார். அவ்வாறு உண்மையில் தெரியாவிட்டாலும் தெரிந்தவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றார்.
தொழிற்சங்கங்கள் இவ்வாறான கடமையைச் செய்ய வேண்டும்
என எதிர்பார்க்கப்படுகின்றனவாயினும் ஓரிரு பிரச்சனைகளை அவை உண்மையிலேயே அவ்வாறு தீர்க்கின்றனராயினும்
234

பொதுவான தொழிலாளர்களிடையே நம்பிக்கையீனமும் வெறுப்பும் தொழிற்சங்கங்களில் இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. தொழிற்சங்கங்கள், தொழிலாளரின் வேலை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்ற ஒரு அமைப்பாக இயங்குகின்ற முறைமையை அவதானிக்குமிடத்து தற்காலிகத் தீர்வுகளையும், அன்றாடப் பிரச்சனைகளையும் தனித்த விடயங்களாக தோட்டமட்டத்தில் தீர்ப்பதனுாடாக தொழிலாளரை மேலும் மேலும் தொழிற்சங்கங்களில் தங்கியிருக்க வைக்கின்ற அணுகு முறையையே தொழிற்சங்கத் தலைவர்கள் பின்பற்றுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக பிரக்ஞையை ஊட்டுவதற்குப் பதிலாக இவ்வாறு தங்கியிருக்க வைக்கின்ற நிலைமை எற்படுத்துவதால் முன்னர் கங்காணிகளில் தங்கியிருந்த நிலமைமாறி தற்போது அதே போல இன்னொரு முறைமை உருவாகி இருப்பதை அவதானிக்கலாம். தொழிலாளரிடையே பலம்வாய்ந்த ஒரு ஆளாக தொழிற்சங்கத் தலைவர் காணப்படுகிறார்.
சம்பள அதிகரிப்பு போன்ற விடயங்கள், சார்ந்ததாக அனைத்து தோட்டங்களிலும் மலையகம் முழுவதிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்கள் போன்றவற்றை தோட்டமட்டத்தில் ஒழுங்கு செய்யும் பொறுப்பு தோட்டகமிட்டித் தலைவரையே சாரும். இவை தவிர அவ்வப்போது கொழும்பில் அல்லது ஏனைய நகரங்களில் நடைபெறும் கட்சிக்கூட்டங்களுக்குத் தொழிலாளரை அழைத்துச் செல்லல் போன்ற ஒழுங்குகளையும் தோட்டக்கமிட்டி தலைவரே செய்வார்.
வெற்றிபெறும் தொழிற்சங்கங்கள், அல்லது அதிகாரத்தில்
உள்ள தொழிற்சங்கம் தேசியமட்டத்து அரசியலில் எவ்வாறு செயற்படுகின்றது என்ற விடயத்தைக் கவனத்தில் எடுத்துக்
235

Page 128
கொள்கின்ற போது, இவ்வாறான கட்சியின் அரசியலிற் செல்வாக்கு எத்தகையது என்ற கேள்வியை நாம் எழுப்பியே தீரவேண்டும். குறிப்பிட்டகட்சி நாட்டில் ஆட்சியி லிருக்கின்ற கட்சியுடன் எவ்வாறு தனது தொடர்புகளைப் பேணுகின்றது என்பதைப் பொறுத்தே அச்செல்வாக்கு இருக்கும். உதாரணமாக மலையகம் முழுவதுமான வேலைநிறுத்தங்களில் குறிப்பிட்ட ஒருகட்சி தனது அரசியற் செல்வாக்கை பேண முற்பட்டால் அது தொழிலாளர் நலனைப் புறக்கணிப்பதில் பின்னிற்காது.
தோட்டக்கமிட்டித்தலைவர் தோட்டவாழ்விற்கும் வெளியுலக வாழ்விற்குமான முகவராகவும் தொழிற்படுகின்றார். உதாரணமாக வெளிநாடுகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று கொடுக்கின்ற முகவர்களாக குறிப்பிட்ட ஒரு தொழிற்சங்கம் இயங்குவதை ஒரு நேர்காணல் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
தேசிய மட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொள்கைகளையும் செய்தியையும் எடுத்துச் செல்பவராகவும் உள்ளூர் மட்டத்தில் கட்சியின் கொள்கைகளை தொழிற்சங்கங்களினுடாக அமுல்படுத்துபவராகவும் தோட்ட கமிட்டித்தலைவர் கடமையாற்றுகின்றார். ஆனால் தொழிலாளரின் பிரச்சனைகள் தேசிய மட்ட அரசியலில் பிரதிபலிப்பது மிகவும் குறைவு. ஆனால் தொழிலாளரின் வாக்குகள் தேசிய அரசியலை நிர்ணயிப்பதாக உள்ளன.
தோட்டமட்டங்களில் நிலைமை, தொழிற்சங்கங்கள் தொடர்பாக இன்றைக்கு இவ்வாறானதாகவே காணப்படுகின்றது. தொழிலாளர்களின் சந்தாப்பணத்திலும் வாக்குகளிலும் இயங்குகின்ற தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கு எதனையும் செய்வதில்லை என்ற கருத்தே தொழிலாளர் மத்தியில் காணப்படுகின்றது.
236

எனினும் நம்பிக்கையீனத்தின் மத்தியிலும் தொழிலாளர் தொடர்ந்தும் தமது அங்கத்துவத்தை பேண வேண்டிய ஒரு நிலைமையிலேயே இருக்கின்றனர். அல்லாது போனால் தமது அன்றாட தொழில் சார்ந்த வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதவர்களாகவும் தமது வாழ்வு தொடர்பாக நிச்சயமற்ற தன்மையையும் அவர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவ்வகையில் விரும்பியோ விரும்பாமலோ தொழிற்சங்க அங்கத்துவத்தைப் பேண வேண்டிய ஒரு கட்டாயத்தில் தொழிலாளர் இருப்பது கண்கூடு.
இலங்கையில் தொழிற்சங்க வரலாற்றை எடுத்து நோக்குகின்ற போது, தொழிற்சங்க நடவடிக்கைகள் நகரங்களிலும் பெருந்தோட்டங்களிலும் வேறுவேறானவையாக வளர்ச்சியடைந்து வந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நகரங்களில் 1893 அளவிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகின. பெருந்தோட்டங்களில் 1931ம் ஆண்டிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பித்தன. இலங்கையின் தொழிற்சங்க வரலாறானது ஆரம்பத்தில் சமயம் சார்ந்ததும் தேசியவாதம் சார்ந்ததுமான ஆர்வங்களுடன் இணைந்ததாக மத்தியதர வர்க்கத்து ஆண்களினால் ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தது. பெருந் தோட்டங்களிலும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களினாலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாயின முன்னெடுக்கப்பட்டன. பெருந்தோட்டத் தொழிற்சங்க வரலாறானது நாட்டின் தொழிற்சங்க வரலாற்றிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒன்றாக அமைந் திருந்தமை இலங்கை தொழிற்சங்க வரலாற்றில் மறைமுகமாக இனத்துவ முனைட்புகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. அதுபோல மலையக தொழிற்சங்க வரலாற்றில் தலைமைத்துவம் உயர்சாதியினரைக் கொண்டதாகவே எப்போழுதும் இருந்து வந்ததை அவதானிக்கலாம்.
237

Page 129
நீண்டகாலத்தில் பெருந்தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அரசியலுடன் இணைந்ததாக, மலையக அரசியல் வாழ்வைத்தீர்மானிக்கின்ற செயற்பாடுகளாகின. மலையக அரசியல் வாழ்வானது தொழிற்சங்க நடவடிக்கை களுக்கு புறம்பாக ஒரு அரசியல் நிறுவனத்தை உருவாக்க வில்லை. ஏனைய சமூகங்களில் அரசியல் நிறுவனங்கள் நீண்டகாலத்தில் தொழிற்சங்கங்களையும் சேர்த்துக்கொண்டு ள்ளதை அவதானிக்கலாம். அவ்வகையில் தோட்டத் தொழிலாளர்களிடையே பிரக்ஞை வெளிப்பாடு, பொருளியல் ரீதியானதும் சமூக வாழ்வு தொடர்பானதுமான உயற்சி, தீவிர பங்குபற்றல் என்பன இல்லாமலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளும் மலையக அரசியலும் தொடர்வதாக உள்ளது.
தொழிலாளர் வர்க்கத்திலிருந்து தொழிற்சங்கவாதியொருவர் உருவாகி தலைமைத்தவத்தை ஏற்றுக்கொண்ட வரலாறு ஒன்றைக் காணமுடியாதுள்ளது. இக்காரணத்தினால் நீண்டகாலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கமுடியாத தொழிற்சங்கங்களின் நிலவுகையை மீண்டும் நீடிக்கின்றன. தொழிற்சங்க வரலாற்றில் தொழிலாளர்களின் நன்மைகள் புறக்கணிக்கப்பட்டனவாகக் காணும் பொழுது பெண் தொழிலாளர்களின் நிலைமைகள் எவ்வாறானதாக இருந்தது என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கைத்தொழிலாளர்களை எடுத்துக் கொள்ளும் போது மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட ஒரு குழுவாக பெருந்தோட்டங்களிலுள்ள பெண் தொழிலாளர்களைக் குறிப்பிடலாம் . 1881ம் ஆண்டில் இலங்கையில் பெருந்தோட்டங்களில் 81000 பெண்தொழிலாளர்கள் இருந்தனர். 1911ம் ஆண்டில் அவ்வெண்ணிக்கை 2,34000 ஆக அதிகரித்தது. 1930களில் பெண்களுடைய நாட்சம்பளம் 15சதமாக இருந்தது. இதேகாலப்பகுதியில் ஆண்களுடைய
238

நாட்கூலி 33 சதாமாக இருந்தது. பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது கூடுதல் மணித்தியாலங்களுக்கு வேலை செய்ததுடன் பெருந்தோட்டங்களில் மிகவும் பிரதான வேலையாகிய கொழுந்தெடுத்தல் வேலையைச் செய்து வருகின்றனர். பெண்களுடைய சுகாதாரம் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாக இருந்து வருகின்றது. கல்வியும் அவ்வாறானதாகவே இருக்கின்றது. வீட்டிலும் பெண்களுடைய வேலை சுமையாக இருந்து வருகின்றது. கங் காணிகளின் ஆதிக் கம், துரைகளினதும் நிர்வாகத்தினதும் ஆதிக்கம், கணவர் சகோதரர் ஆகியோரின் ஆதிக்கம் என்பன பெண்களுடைய தொழிலிலும் வாழ்விலும் நிலவிவருவதாக உள்ளது.
எனினும் பெண்கள் அணிதிரள்வது, தமது பிரச்சனைகளை தொழிற்சங்கங்களினூடாக தீர்த்துக் கொள்வது, அல்லது பெண்களுடைய பிரச்சனைகள் தொழிற்சங்க நடவடிக்கை களில் போதியளவு பிரதிபலிக்கப்படுவது என்பது வரலாற்று ரீதியாக இருக்கவில்லை. உலகில் பலபாகங்களிலும் இவ்வாறான பிரச்சனைகளைக் காணக் கூடியதாக உள்ளது. எனினும் பெண்கள் தமது எதிர்ப்பைக் காட்டிய சந்தர்ப்பங்கள் பெருந்தோட்டங்களில் வரலாற்று ரீதியாக உண்டு. பெண்கள் தமக்குத் தொழில் நிலமைகள் பிடிக்காத சந்தர்ப்பங்களில் வேலையை விட்டு விலகி தமது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இவ்வாறு வேலையை விட்டு விலகுதல் அக்காலத்தில் சட்டப்படி குற்றமாகும். அதனால் பல பெண்கள் சிறைக்குச் செல்ல வேண்டி நேரிட்டது.
தொழிற்சங்க வரலாற்றில் செயற்பட்ட பெண்ணாக நடேசயரின் துணைவியார் மீனாட்சியம்மாளைக் குறிப்பிடலாம். இவர் நடேசயருடன் இணைந்து பல தொழிற்சங்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். பொதுவாக தொழிலாளருக்காவும் பெண்களுக்காவும் தனது செயற்பாடுகளை ஆற்றியுள்ளார்.
239

Page 130
தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெண்களும் பங்கு பற்றி இருக்கினர் றன ராயினும் பெண் கள் எல்லோரும் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாக இருப்பினும், பெண்களுக்கான ஒரு அணியை பெண்களாக உருவாக்க வில்லை. பெண் தொழிற்சங்க வாதியொருவரும் உருவாக வில்லை. பெண்நிலை நோக்கில் நடவடிக்கைகளை எடுப்பதும் வரலாற்றில் இல்லாத ஒன்றாகவே உள்ளது. சமசம்பளம் தொடர்பான சட்டங்கள் சர்வதேசரீதியில் அமுல்படுத்தப் பட்டமை அவ்வாறானதொரு சாதனையாகவே கருதப்படு கின்றது.
மலையகத்தில் தொழிற்சங்கங்கள் எவ்வாறு பால்நிலை அசமத்துவத் தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதைக் கவனிப்பதற்கு முன்னால் பெண்களுக்கும் தொழிற்சங்கங்க ளுக்குமான தொடர்பினையும் பெண்நிலை சார்ந்த தொழிற்சங்கங்களின் உருவாக்கத்தின் அவசியத்தையும் கவனிக்கவேண்டியுள்ளது.
ஏன் தொழிற்சங்கவாதம்? (பெண்களுக்கு)
தொழிற்சங்கமானது தொழிலாளரின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பை வழங்கவும் கூட்டான பேரம் பேசலை சாத்தியப்டுத்தவும் தொழிலாளரால் தாபிக்கப்படும் ஒரு அமைப்பாகும்.
தேசியமட்டத்தில் குறிப்பிட்ட நாட்டிலுள்ள சட்டங்களினாலும் சர்வதேச மட்டத்தில் (ILO) எனப்டுகின்ற சர்வதேச தொழிலாளர் தாபனத்தினாலும் தொழிற் சங்கங்கள் நெறிப்படுத்தப்படுகின்றன.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் பெண்கள் பெண்களுக்காக
240

ஈடுபடுதல் என்பது கல்வியறிவுடனும் பெண்நிலை சார்ந்த விழிப்புணர்வுடனும் இணைந்த ஒரு விடயமாகவே சர்வதேச வரலாற்றில் உள்ளது. கல்வியறிவை வளர்த்தல், பெண்நிலை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் என்பன மன உறுதியையும் தேர்ச்சியையும் பெண்களுக்கு வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்தது பெண்கள் முன்னின்று செயற்படுத்திய தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கின்ற போது, அவற்றைக் தலைமைப்படுத்தியவர்கள் படித்த பெண்களாகவே இருக்கின்றனர். அவ்வகையில் பெண் களுக்கான தொழிற் சங்க நடவடிக்கையை ஊக்கப்படுத்தல் என்பது கல்வியறிவை வளர்த்தல், பெண்நிலைசார்ந்த நோக்கில் பிரக்ஞையை வளர்த்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டவையாகும்.
தொழிற்சங்கங்கள் பொதுவாக ஆண்களால் வழிநடாத்தப் டுகின்றன. இனத்துவ போராட்டங்களைப் போல, சாதிசார்ந்த போராட்டங்களைப்போல, வர்க்கம் சார்ந்த ஒரு பிரச்சனையாக மட்டும் பெண் தொழிலாளரின் பிரச்சனைகள் நோக்கப் படுகின்ற போது, பெண் தொழிலாளரின் பிரச்சனைகள் என்ற தனியான ஒரு வகைப்பாடு ஏற்பட வாய்ப்பில்லாது போகின்றது. அவ்கையில் பெண்தொழிலாளர்களின் பிரச்சனைகள் இரண்டாம் பட்சமானவையாகவே கருதப்படுகின்றன.
தொழிலின் தன்மை, நிர்வாக் கட்டமைப்பு, தொழிற் சங்கங்களின் தன்மை பண்பாடு சார்ந்த காரணிகள் என்பவற்றைப் பொறுத்து தொழிற்சங்கங்களில் பெண்களுக்கு கொடுக் கப்படும் முக்கியத்துவமும் பெண் களின் நடவடிக்கைகளும் மாறுபடும்.
தொழிலின் தன்மை என்பது தொழிலின் பால்ரீதியான
241

Page 131
பிரிவுடன் பிரதானமாகத் தொடர்புபட்டது. சில தொழில்கள் பெரும்பான்மையாக ஆண்களையும் சிறுபான்மையாகப் பெண் களையும் கொண்டவையாக அமைகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களே கூடுதல் பங்களிப்பை வழங்குபவர்களாக இருக்கின்றனர். பெண்களுடைய பிரச்சனைகள் தொழிற்சங்க நடவடிக்கை களில் பிரதிபலிக்கப்படுவது குறைவு.
சில தொழில்களில் பெண்களும் ஆண்களும் சமனான எண்ணிக்கையை உடையவராக இருப்பினும் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மை பண்பாட்டுக்காரணிகள் என்பவை காரணமாக பெண்கள் தொழிற்சங்கவாதிகளாவதோ அல்லது பெண்களின் பிரச்சனைகள் முனைப்புப் பெறுவதோ சாத்தியமில்லாமல் இருக்கின்றது.
சில தொழில்கள் முற்றுமுழுதாகப் பெண்களுக்குரியதாக இருந்தும் நிர்வாகத்தின் நடைமுறைகள் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கைகள் சாத்தியமில்லாது போகின்றன. பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள தொழில்களை எடுத்துக் கொண்டால் மருத்துவதாதியர், ஆடைத்தொழிற்சாலையில் தொழில் புரியும் பெண்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். மருத்துவத் தாதியர் தொழிலானது அத்தியாவசிய சேவையாகவும், பயிற்சி, கல்வியறிவு என்பவலற்றின் அடிப்படையிலும் அமைந்து ள்ளது. இலங்கையில் பெருந்தொகையான மருத்துவத்தாதியர் அரசதுறையைச் சேர்ந்தவர்களாக இருக்கினறனர். அத்கைய காரணங்களினால் தாதியர்சங்கம் பலமுள்ள ஒன்றாகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் போது வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றாகவும் இருக்கின்றது.
ஆனால் ஆடைத்தொழிற்சாலைகளை எடுத்துக் கொண்டால்
242

தனியார் துறையாக இருத்தல், கல்வியறிவு தேவைப்படாது இருத்தல், மிகவும் குறைந்த வேதனத்தை வழங்கல்,பயிற்சி அதிகம் தேவைப்படாது இருத்தல் போன்ற காரணங்களினால் பெண்கள் கூடுதலாக இருந்தும் தொழிற்சங்க நடவடிக்கை கள் வெற்றியளிக்கவாய்ப்பில்லாத ஒரு துறையாகவே உள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் பொதுவாக ஆண் களையும் பெண்களையும் சம எண்ணிக்கையாகக் கொண்ட துறை யாயினும் பெரிதும் ஆண்களால் வழிபடுத்தப்படுவ தாகவே உள்ளது. எனினும் பெண்கள் கூடுதலாகச் சுரண்டப்படுதல் எனும் தோற்றப்பாட்டினை ஆசிரியத் தொழிலில் காண (LDL 9 till fig1.
பெருந்தோட்டங்களை எடுத்துக் கொண்டால் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையை உடையவர்களாக இருக்கின்றனர். சந்தர்ப்பங்களைப் பொறுத்து பெண்கள் கூடுதலாக எண்ணிக்கையிலும் காணப்படுகின்றனர். கொழுந்தெடுத்தல் என்பது பிரதானமான ஒரு வேலையாக இருக்கின்றது. ஒப்பீட்டளவில் பெண்கள் கூடுதலாகச் சுரண்டப்படுபவர்களாக இருக்கின்றனர். தொழில் தவிர்ந்த சமூக வாழ்வு தொடர்பான நிலமைகள் மோசமானவையாகவே இருக்கின்றன. அரச உடமையாக இருந்த போதும் தனியார் உடைமையாக இருந்த போதும் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தருகின்ற ஒரு துறையாக இருந்தும் இறுக்கமான நிர்வாக முறைமையைக் கொண்ட ஒரு அமைப்பாகவே பெருந்தோட்டங்கள் இருக்கின்றன. பெண்களுடைய பிரச்சனைகள் தனித்துவமானதாக இருந்தும் பெண்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறைவாகவே உள்ளது.
243

Page 132
இவ்வாறு தொழிலின் தன்மை நிர்வாகக் கட்டமைப்பு எனப்பலவிடயங்கள் சார்ந்து பெண்களுடடைய தொழிற்சங்க நடவடிக்கைகள் அமைந்திருப்பினும், பொதுவாக எல்லாத் துறைகளிலும் தொழிற்சங்கங்களில் பெண்களுடைய செயற்பாடுகள் தீவிரமாக இல்லாதிருப்பதற்கு அவை தவிர பண்பாட்டு சார்ந்த காரணங்களே கூடுதல் பங்களிப்பைச் செய்கின்றன. நிலவுகின்ற பண்பாடு நடைமுறைகள் பெண்களுக்கு தொழிற்சங்கங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமையை வழங்குவதில்லை.
பெண்கள் மீதான சுரண்டல் தீவிரமாக இருக்கின்ற போதும் அவர்களுடைய பிரச்சனைகள் தனித்துவமானவையாக இருக்கின்ற போதும் இப்பிரச்சனைகளின் காத்திரத்தன்மையை சக ஆண்தொழிற்சங்கவாதிகள் விளங்கிக் கொள்வதில்லை. பெண்களுடைய வேலையின் தன்மை, (உதாரணமாக நீண்ட வேலை நேரம்) வீட்டு வேலைகளின் தன்மை, கல்வியறிவு என்பவை சார்ந்த பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அவற்றிற்கு ஏற்றவகையில் தொழிற்சங்கங்கள் தமது செயற்பாடுகளை மாற்றியமைப்பதில்லை. அல்லது இவ்வாறான பிரச்சனைகளைத் தீர்க்க முனைவதில்லை. ஆண்கள் தலைமைப் பதவிகளில் இருப்பதனால் பெண்களின் ஆற்றலை குறைத்து மதிப்பிடுவதுண்டு. பெண்களுக்கு தலமைத்துவப் பதவி என்பது பொருந்தாது என்ற கருத்தே நமது பண்பாடடில் பலமானதாக உள்ளது. தொழிற்சங்கம் என்பது ஆண்களுக்குரிய உலகமாகவும் அதில் பெண்கள் உதவியாளராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுவதை அவதானிக்கலாம். மேலும் பெருந்தோட்டங்களை உதாரணமாக எடுத்து கொண்டால் பெண்களுடைய அங்கத்துவம் அரசியல் வெற்றிக்கு அவசியமாகவுள்ளது. அதாவது பெண்களுடைய வாக்குகள் தேர்தல் காலங்களில் தேவையானதாக உள்ளது. பெண்கள அங்கத்தவர்களாக
244

இருப்பதால் சந்தாப்பணம் கிடைக்கின்றது. இச்சந்தாப்ணம் தொழிற்சங்கங்கங்களின் இயக்கத்திற்கு அவசியமாகும். இவ்விரண்டு காரணங்களினாலும் பெண்களுடைய அங்கத்துவ எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளும் நோக்குடன் பெண்களை தொழிற்சங்கங்களில் உதவியாளர்களாக நியமிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு போதும் அவர்களுக்கு உயர்ந்த பதவிகள் வழங்கப்படுவதில்லை.
மேலும் குடும்பத்தில் எவ்வாறு பெண்களுக்கு இரண்டாம் பட்ச இடம் கொடுக்கப்படுகின்றதோ, தொழில் நிலமைகளில் எவ்வாறு இரண்டாம் பட்ச இடம்கொடுக்கப்படுகின்றதோ, நிர்வாக கட்டமைப்பில் எவ்வாறு இரண்டாம் இடம் கொடுக்கப்படுகின்றதோ அதே போல தொழிற்சங்கங்களிலும் இரண்டாம் பட்ச இடமே கொடுக்கப்படுகின்றது. சமூகத்தில் நிலவும் ஆண் தலைமைத்துவக் கருத்தியலே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான காரணங்களினாலேயே பெண்கள் தொழிற்சங்கங் களில் தீவிரமாகப் பங்குகொள்வதில்லை. பெண்களுடைய பிரச்சனைகளை பெண்களாக முன் வைக்கின்றபோதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முன்னின்று செயற்படுகின்ற போதும் இத்தகைய காரணங்களினால் தந்திரோபாயங்களை கையாள வேண்டியவராக இருக்கின்றனர். அதிலும் காலம் காலமாக தாபிக்கப்பட்டு இயங்கி வருகின்ற தொழிற்சங்கங்களில் இறுக்கமான கட்டமைப்பில் தமது பிரச்சனைகளை முன்வைக்கப் போராட வேண்டி உள்ளது. பொதுவாக சக ஆண் தொழிற்சங்க வாதிகளுக்கு தமது தொழிற்சங்கம் பிரிந்து விடுமோ என்ற பயம் இருக்கச்செய்கின்றது. ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் அவ்வாறான பயம் இருக்கின்றது. ஏனைய ஆண் தொழிற்சங்க வாதிகள் பெண்கள் தமது பிரச்சனைகள் தொடர்பாக எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காமல்
245

Page 133
இருக்கலாம். குறிப்பிட்ட ஒரு பிரச்சனை இதுவரை காலமும் எதிர்நோக்கபடாத புதிய பிரச்சனையாக இருக்கலாம். சட்டதிட்டங்கள் போதியளவு அப்பிரச்சனை தொடர்பாக உருவாக்கப்படாமல் இருக்கலாம் நிர்வாகம் குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகள் பாரதூரமான வையாக இருக்கலாம். இவ்வாறான சந்தட்பங்கள் பெண்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கு பற்ற வைப்பதில் பின்னடவை ஏற்படுத்துகின்றன.
அவ்வகையில் பெண்களுடைய தொழிற்சங்க நடவடிக்கையை ஊக்கப்படுத்தல் என்பது பண்பாட்டு நடைமுறைகள் சார்ந்த ஒரு விடயமாகும். தொழிற்சங்க கட்டமைப்புக்குள்ளேயே தமது போராட்டங்களைப் பெண்கள் முன்வைக்க வேண்டியிருப்பதே இங்கு துல்லியமாக கவனித்து அணுக வேண்டிய விடயமாக உள்ளது. அதிலும் காலாகாலமாகத் தாபிக்கப்பட்டு ஆழவேரூன்றிய இறுகிய கட்டமைப்பை உடைத்தெறிவது என்பதே சவாலாக உள்ளது.
பெண்கள் அவ்வாறான போராட்டங்களைத் தவிர்ப்பதற்காக தனியான தொழிற்சங்கங்களை அமைப்பதும் ஒரு மாற்று வழியாக உள்ளது. இவ்வாறு தனியான தொழிற்சங்கங்களை தாபிப்பதும் பல சிரமங்களையும் பிரச்சனைகளையும் கொண்ட சவாலாகவே உள்ளது. இத்தகைய காரணங்களினாலேயே பெண்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் அமைதியானவர்களாக மெளனம் சாதிப்பவர்களாக தொடர்ந்து இயங்கி வருகின்றனர்.
பெண்கள் அமைப்புகள், அல்லது பெண்களுக்கான தொழிலாளர் இயக்கங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை அணுகுகின்ற போது அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் ஏற்கனவே இருக்கின்ற தொழிற்சங்க அமைப்புகளும் தமது சமூகத்தை மலினப்படுத்துவதற்காக வேண்டுமென்றே எடுக்கின்ற நடவடிக்கையாக இவ்வாறான அணுகு
46

முறைகளைக் கருதுகின்றனர். வர்க்கரீதியான அல்லது இனத்துவ ரீதியான ஒற்றுமையைக் குறைக்கின்ற நடவடிக்கைகளாகவே அவற்றைக் கருதுகின்றனர். அவ்வகையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட வர்க்கத்தை சேர்ந்த பெண்களே இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமானதாக உள்ளது.
அவ்வாறு பெண்கள் பெண்நிலை நோக்கில் அமைந்த தொழிற் சங்கவாதிகளாக உருவாவதால் தொழிற்சங்க நடவடிக்கைகளின் பரப்பு விரிவடைவதுடன் தனியே கூலிசார்ந்த விடயங்கள் மட்டுமல்லாமல் பெண்களுக்கென்று குறிப்பிட்ட பிரச்சனை களையும் சமூகப் பிரச்சனைகளையும் அணுகுவதனூடாகவே பெண்கள் தொடர்பான நெகிழ்வுள்ள சமூகம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமாகின்றது.
பெருந்தோட்டங்களில் பெண் தொழிலாளரின் நிலைமை யானது பால்ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், இனத்துவ ரீதியாகவும் சாதிரீதியாகவும் பலமட்டங்களில் கீழ் நிலைப்படுத்தப்படும் ஒன்றாக உள்ளதை விளங்கிக் கொள்ளலாம். இத்தகைய சூழ்நிலையில் தொழிற்சங்க வாதம் என்பது பெண்களுக்கு அவசியமானதாக இருக்கின்றது.
247

Page 134
குறிப்பு 1
மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அதே பெயருடன் இலங்கை அரசியலில் அரசியற்கட்சிகளாகவும் உள்ளது மலையகத்தின் தனித்த குணாம்சமாகும்.
குடி வரவு - Immigration குடியமர்வு - Settlement குடிப்பெயர்வு - Migration மீளவும் வெளியேறியமை - Repatriation ஊழியர்களை வழங்குதல் - Labour Supply அருந்தல் - Scarcity வர்தக மூலதனம் - Merchant Capital முகவர் நிலையங்கள் - Agency Houses ஆவணம் - Document
248

உசாத்துணை நூல்கள் கடந்தகால ஆய்வுகளும் அவற்றின் தாத்பரியம் எனும் பகுதியில் குறிப்பில் எடுக்கப்பட்ட நூல்கள்.
Jayawardena, L.R., 1963. The Supply of Sinhalese Labour to
Ceylon Plantations (1830 - 1930): A Study of the Imperial Policy in Peasant Society. Phd Thesis, University of Cambridge.
Rachel Kurian, 1989. State, Capital and Labour in the Plantation
Industry in Sri Lanka, 1834-1984 - Unpublished.
Jeyawardena, K.V., 1972.The Rise of The Labour Movement in
Ceylon, Durham Norm Carolina, Duke
University Press
De Silva S.B.D., 1982. The Political Economy of Under
Development London, Routledge and kegan Paul
Tinker, Hugh, 1974. A New System of Slavery: The Export of
Indian Labour Overseas 1830 - 1920, Oxford University Press.
Wesumperuma, Dharmapriya, 1986. Indian Immigrant
Plantation Workers in Sri Lanka : A Historical Perspective 1880-1910, Kelaniya Vidyalankar Press
Vanden Deriesen I.H., 1982. Indian Plantation Labour in
Sri Lanka: Aspects of the History of Immigration in the 19th Century, University of Western Australia. -
Kanapathipillai, Valli, 1992. A decade of Change in the
Plantations : The Implications for Women Workers, International Centre for Ethnic Studies, Colombo.
249

Page 135
Hollup Oddvar, 1994. Bonded Labour, Caste and Cultural Identity, Among Tamil Plantation Workers in Sri Lanka,Charles Subasingh & Sons Sri Lanka.
D.Moldrich, 1988. Bitter Berry Bondage, The 19th Century
Coffee Workers in Sri Lanka, Co-ordinating Secretariat for Plantation Area Kandy, Sri Lanka.
Smith, R.T., 1967. "Social Stratification, Cultural Pluralism.
and Integration in West Indian Societies', in Caribbean Integration papers on Social Political and Economic Integration, Sybil Lewis and Thomas, ed.
G. Matthews Rio, 1967. Pedras , Institute of
Caribbean Studies.
Bandarage.A., 1983. Colonialism in Sri Lanka:The Political
Economy of the Kandian Highlands, 18331886. Berlin,Mouton Publishers
Banks, Marcus, 1996 Ethnicity, Anthropological Constructions, Routledge, London
Barth, Frederick, 1969 C (eds), A Ethnic group and
Boundaries : The Cultural Difference, Bergen London: George Allen and UnWin
Kanapathipillai, Valli, 1992, A Decade of Change in the
Plantations: The Implications for Women Workers, ICES
250

Barth, Frederick, 1969 b,(eds).Ethnic Group and
Boundaries: The Social Organisation of Cultural Difference, Bergen London:George Allen and Unwin
Barth.Frederick, 1969 (eds) A Ethnic Group and Boundaries
: The Social Organisation of Cultural Difference, Bergen London:George Allen and Unwin
Bastian,Sunil 1987, Plantation Labour in a Changing
Context in Abeyasekera, Charles, Newton Gunasinghe(eds), Facets of Ethnicity in Sri Lanka, Colombo,SSA
Caspersz,Paul, 1991 Inter-ethnic Relations in the Plantation
Areas of Sri-Lanka: A question of a Sri Lankan Identity and Consciousness, Kandy,Satyodaya
Dumont,L., 1966 Homohierearchicus, Paris, Religen, politics
and history in India
w w w w w w w Health Status of Plantation Women Workers in Sri Lanka, A Research Study,CWC,CLFCIDA
Hollup,Odvar, 1994, Bonded Labour: Caste and Cultural
Identity among Tamil Plantation Workers in Sri Lanka, Sri Lanka,Charles Subasinghe and Sons
Jeyawardena.K.V. 1972, The Rise of the Labour Movement
in Ceylon Durham North Carolina, Duke University Press
25

Page 136
Jeyaweera, Swarna, 1991 Women in the Estate Sector,
ColombO: CENWOR
Kurian, Rachel, 1982 Women Workers in the Sri Lankan
Plantation Sector,Geneva,ILO
Kurian, Rachel, and Jeyawardena, Kumari,(1984).The
Exploitation of Women on the Plantation Tamil Workers on the Tea estates of Sri Lanka, Colombo,WERC
Kurian, Rachel, 1989 State, Capital and Labour in
ThePlantation Sector in Sri Lanka, 1834-1984, University of Amsterdam, unpublished thesis
Moldrich Donovan, 1989, Bitter Berry bondage, The
Nineteenth Century Coffee Workers of Sri Lanka, Co-ordinating Secretariat for Plantation Areas Kandy, Sri Lanka
Oakley, Ann, 1981, Interviewing Women: A Contradiction in
Terms in Helen Roberts(eds)(1981) Doing Feminist Research Routledge
Reinharz, Shulamit, 1992 Feminist Methods in Social
Research, New York, Oxford University Press.
Smith, Anthony.D., 1981The Ethnic
Revival,Cambridge,Cambridge University Press
Smith, antony.D., 1986, The Ethnic origins of Nations
Oxford. Basil Blackwell
252

Washbrook,D.A.Ethnicity and Racialism in the Colonial
Indian Society
Weber,M., 1968,Economy and Society, Vol 1 NewYork
Wesumperuma, Dharmapriya,(1986), Indian Immigrant
Plantation Workers in Sri Linka: A Historical Perspective 1880-1910. Kelaniya,Vidyalankara
preSS.
Wickramasinghe,Nira, 1995, Ethnic Politics in the Colonial
Srilanka,Vickas Publishing House Pvt Ltd
கார்த்திகேசு திவத்தம்பி; (1993), இலங்கை மலையகத்
தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்
Vol. 1 Colombo Udayam Foundation
நடேசய்யர் மீனாகூஷியம்மாள், இந்தியர்களது இலங்கை
வாழ்க்கையின் நிலைமை
(பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)
253

Page 137
எமது ே
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் : - விசள்வி தி
வர்க்கம் சாதி பெண்நிலை பண் பற்றிய ஒரு சமூக நோக்கு
இன்னோரு நூற்றாண்டுககாய்
சக்தி பிறக்குது நாடகம் )
பெண்நிலைச்சிந்தனைகள்
Stories of Survivors: Socio-Poli Households in Post Terror South — Sasa
The Other Willins if War: Eme Households in Eastern Sri Lank: – Selwy
Wiwi: A Biography of Wivienne (
— PLulls
ISBN: 955-926-14-2
'rimi ' ul hyo Kirful LII-ulinker „k & Ini, Liu.

வெளியீடுகள்
சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு ருச்சந்திரன்
பாடு : விபரிபாரின் சிந்தனைகள்
- சாரல் நாடன்
- சி.மெளனகுரு
- சித்திரலேகா மெளனகுரு
itical Contexts of Female Headed |ern Sп || апka. (Volume || || İnkı Perera
gence if Fellale Headed l (Wilung: || 1 )
| Thi LIchandran
GoOne wurdena Lr:1 Liyanage
Prict 25OW