கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடவுளரும் மனிதரும்

Page 1


Page 2

கடவுளரும் மனிதரும்
பவாணி
வெளியீடு : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பு லங்கா

Page 3
Title
Author
Copyright
Edition
Publisher
Printer
Cover Design
Price
ISBN
Kadavularum Manitharum
Bawani
Author
2nd - 1994
Women's Education and Research Centre
Lanka Asia Print (Pvt) Ltd. S-26, 3rd Floor, C.C.S.M. Complex, Colombo - 11.
Vashicara Advertising
RS. 160/=
955 - 926 - OO - 2

altira Lissib
1. லச்சுமி
2. பொரிக்காத முட்டை
3. அழியாப்புகழ்
4. அன்பின் விலை
5. வாழ்வது எதற்காக?
6. பிரார்த்தனை
7. STÜ
8. விடிவை நோக்கி
9. மன்னிப்பாரா?
10. சந்திப்பு
11. மனிதன்
12. ஜீவநதி
13. புதிர்
14. நிறைவு
15. Mesir Godesor Gryr
16. சரியா தப்பா?
17. கனவு
18. மீண்டும் வந்தது வசந்தம்
19. கானல்
20. ஒரு நினைவு
பக்கம்
19
37
49
65
72
79
91
97
102
109
115
122
134
141

Page 4
என்
அன்னைக்கும் தந்தைக்கும் அர்ப்பணம்
 

ஆசிரியருரை
1962ம் ஆண்டு வெளிவந்து காலப்போக்கில் மறைந்தும் மறந்தும் போய்விட்டதென்று நான் எண்ணி இருந்த என் சிறுகதைத்தொகுப்பு முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினர் (WERC) எடுத்த முயற்சியின் பயனாக மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது நான் முற்றும் எதிர்பார்த் திராததொரு திருப்பம். அன்று என் எழுத்தை வாசித்து விமர்சித்தவர்களும் இன்று புதிதாய் வாசித்து விமர்சிக்கக்கூடிய வர்களும் எந்தக் கண்ணோட்டத்தில் கணிப்பார்களோ, எத்தகைய வரவேற்புக் கொடுப்பார்களோ என்பது போன்ற பல்வேறு மாறுபட்ட உணர்ச்சிகளுடன்தான் இந்த மறுவெளியீட்டுக்குச் சம்மதித்தேன். முதற்பதிப்பில் இடம்பெற்றிராத சில கதைகளும் இப்பதிப்பில் உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகள் எல்லாம் 1959-65 ஆண்டுகளுக்
டையே வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, கலைச்செல்வி, ரைக்கலை, திருகோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்க ஆண்டு மலர், மரகதம், சங்கம், தினகரன், தேனருவி, உன்னைப்பற்றி, செந்தாமரை ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுர மானவை. அறிமுகமில்லாத இளம் எழுத்தாளரான என்னை ஊக்குவித்த இப்பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி.
ஈழத்தமிழ்ச் சிறுகதை இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றிலே இத்தொகுப்பு உரிய இடத்தைப் பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் முன்னின்று அயராது செயல்பட்டு மீண்டும் இதனை அச்சேற்றிய செல்வி திருச்சந்திரனுக்கும் WERC நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நனற.
பவானி
18, கனிங்ஹாம் அவென்யூ, aslsöLGurt..s, g(3), GU1 2PE, ஐக்கிய ராஜ்யம்.

Page 5
"பவானியின் சிறு கதைகளைத் தொகுத்துக் கணித்தால் அவற்றில் இழையோடும் முக்கியமான கருத்தோட்டம் சமுதாய அவலங்களும் அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகளும் எப்படி ஆணையும், பெண்ணையும் அலைக்கழிக்கின்றன; அவர்கள் எப்படி அவற்றின் பாரிய தாக்கத்துக்குட்படுகிறார்கள் என்பதே. அவர் கதை கூறும் பாணியும் கதை முடிக்கும் பாணியும் கதாபாத்திரங்களைப் பரிதாபத்துக்கு ஆளாக்கவில்லை. அவர்கள் பண்பாட்டிலிருந்து இறங்கிய நிலையிலும் தங்கள் உரிமைகளைப்
பேசுவது போலவே அக்கதாபாத்திரங்கள் படைக்கப் பட்டிருக்கின்றன. முடிவுகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன.”
- செல்வி -

முனனுரை
ஒரு சமுதாயத்தில் உளரீதியாகக் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய தொடர்பு சாதன ஊடகங்களில் சிறுகதை மிகவும் முக்கியமானது. தற்போதைய விரைவுயுகத்தில் அதாவது ஒன்றுக்கும் நேரமில்லை என்ற எமது தற்கால வாழ்க்கை நிலையில் சிறு கதையின் முக்கி யத்துவம் மேலும் விரிவடைகிறது; காலத்தின் தேவையாகிறது. இந்த நிலையில் காத்திரமான உள்ளடக்கத்தைக் கொண்ட சிறு கதைகளின் பங்கு சமுதாயத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே நாம் எண்ணுவோம். பவானியின் "கடவுளரும் மனிதரும்" என்ற சிறு கதைத்தொகுதி அறுபதுகளில் வெளிவந்த போது அது ஏற்படுத்திய தாக்கம் வேறுபட்டதாக இருந்தது. தாக்கமான நல்ல கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதன என்ற பிற்போக்கான விமர் சனத்துக் குட்படுகின்றன. தாழ்ந்த சாதியினருக் குரிமையும் சலுகை யும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ஒரு காலத்தில் பெரும் புரட்சிக் கொள்கையைக தெரிந்தது. தற்போது அவர்களுக் குள் கலியானம் செய்யக்கூடாது, ஆனால் அவர்கள் அனுபவிப்பதை அனுபவிக்கட்டும் என்ற தாராள மனப்பான்மை ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. அதாவது ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க கருத்துக்களை அக்கால வரவுக்கு முன்னரே அதன் தேவையைப் புரிந்து கொண்டு அதன் அநீதியையும் அழுக்கு மனப்பான்மையையும் அகற்றி, சமூகத்துக்குப் புத்துயிர் கொடுக்கும் கருத்துக்களையும் கொள்கைகளையும் முன் வைப்போர் தீர்க்க தரிசிகள். அவர்களை நாம் போற்றிப் புகழ வேண்டும். அந்த வகையில் பவானியின் கதைகளும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவையே.
ஒரு விலைமாதின் உள்ளக் கிடக்கைகளையும் சமூகம் அவளுக்கு இழைத்த அநீதிகளையும் அவள் ஏன் விலைமாதானாள் என்பதைச் சமூகப் பொருளாதார பின்னணியில் விளக்கிச் சமூகக் கண்ணோட்டத்தில் கதை எழுதினால் அந்த எழுத்தாளரும் ஒரு விலைமாதோ என்று எண்ணும் வாசகர் வட்டங்களும் உண்டு. இந்தச் சின்னத்தனங்களை மீறி, மேவி அப்படைப்பை விமர்சனம் செய்யும் மனப்பான்மை ஒரு சிலருக்கே உண்டு.
அறுபதுகளில் வெளிவந்த பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ் சஞ்சிகையான இளங்கதிரிலும் ஏனைய பத்திரிகைகளிலும் வெளி வந்த பவானியின் சில கதைகள் என்னையும் எனது சினேகிதிகளை யும் ஒரு பெரும் விவாதத்துக்குட் படுத்தியதும் உண்மையே! ஆனால் அது ஹில்டா ஒபயசேகர விடுதியின் ஒர் அறைக்குள்ளேயே அடங்கி விட்டது. முப்பது வருடங்கள் கழித்து அதே கதைகளை மறு பிர சுரம் செய்வதற்கும் அதற்கு ஒரு விமர்சனம் எழுதுவதற்கும் நாம் முன்வந்தமை. அதிசயம் என நான் கருதவில்லை. அது என்னைப்

Page 6
பொறுத்த வரை எனது உணர்ச்சிகளின் ஒரு தொடர்பு நிலையே என்று நான் கருதுகிறேன். அந்தக் கதைகளுக்கு நான் கொடுத்த வரவேற்பும் அதை ஏனையோர் மறுத்ததும் எல்லாம் சேர்ந்து எனது மனதில் தேங்கியிருந்த உணர்ச்சிக் கோவைகள் காலத்தால் வளர்ந்து முதிர்ச்சியடைந்து எனது தற்கால நிலையில் அதாவது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் பொறுப்பாளராக கடமையாற்றும் பொழுது இட்ட குறை தொட்ட குறையாக இருந்ததை பூர்த்தி செய்யும் ஒரு பணியாகவே நான் கருதுகிறேன்.
மூடு பணியாகக் கிடந்த இந்த ஆசையைக் கிளறி விடுவது போல ஒரு சம்பவம் நடந்தது. முஸ்லிம் பெண்கள் ஆய்வு நிறு வனத்தார் நடத்திய ஒரு கருத்தரங்கிற்கு வந்திருந்த நூஃமான் இச் சிறு கதைத் தொகுப்பைக் கொண்டு வந்து அதை விமர்சித்தார். அவரும் கூட அச் சிறு கதைத் தொகுப்புக்கு போதிய ஆதரவு இல்லை என்பதையே தெரிவித்தார். பின்பு அவருடன் அதைப் பற்றி விரிவாக எனது கருத்துக்களைத் தெரிவித்தேன். அவரிடம் இருந்த அந்தச் சிறு கதைதிதொகுதியை பிரதி பண்ணி மறு பிரசுரம் செய்ய எனக்கிருந்த எண்ணத்தை அவரும் ஆமோதித்து அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். பின்பு எப்படியோ பவானியின் விலாசத்தை அறிந்து அவருக்கு எழுதி அவரின் சம்மதத்தைப் பெற்று நேரில் அவரைச் சந்தித்து தொகுதிக்குள் அடங்காத வேறு சில கதை களையும் சேர்த்து பிரசுரிக்க முன் வந்தோம். இந்நிலையில் நூஃமானுக்கும் பவானிக்கும் எமது நன்றி உரித்தாகுக.
இச் சிறு கதைகளை நாம் மறுபிரசுரம் செய்வதற்கு இன்னு மொரு காரணமும் உண்டு. அதாவது ஒரு பெண் எழுத்தாளரது கதைகள் அவரது பெண்நிலைவாதக் கருத்துக்களை நாம் வரவேற்கி றோம் என்ற காரணங்க்ள மட்டுமல்ல நாம் இப் பணியை செய்வ தற்குத் தூண்டு கோலாக இருந்தது "தமிழில் சிறு கதைவரலாறும் வளர்ச்சியும்" என்ற (பெ. கோ. சுந்தரராஜன் சோ. சிவபாதசுந்தரம் கிரியா - சென்னை. 1989) நூலிலாவது கா. சிவத்தம்பி எழுதிய "தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்". என்ற நூலிலாவது இலங்கையில் சிறுகதை எழுத்தாளருக்குக் கொடுத்த பகுதியில் பவானியின் சிறு கதைகளைப் பற்றிய குறிப்பு எதுவு மில்லை. அந்த நிலையில் இம் மறு பிரசுரம் ஒரு இலக்கியத் தேவையாகவுமிருக்கிறது. இலக்கிய விமர்சர்களும். இலக்கிய வரலாற் றாசிரியர்களும் தங்களது நூல்களை மறு பரிசீலனை செய்து பவானியின் சிறு கதைகளுக்குரிய இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பது எனது அவா. இந்த எண்ணத்தை வலியுறுத்துவதாக ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது.
திருமறைக் கலாமன்றத்தினரால் "சிறு கதை இலக்கியம்” என்னும் பொருளில் 24, 4. 93ல் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் தெளி

வத்தை ஜோசப் மிகவும் சுவையான கருத்துக்களை ஆராய்ச்சி பூர்வமாக வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் வெளிக் கொணர்ந்தார். அக்கருத்தரங்கில் பங்கு பற்றிய நான் பவானியின் "கடவுளரும் மனி தரும்" என்ற சிறு கதைத் தொகுதியில் அடங்கிய சிறு கதைகளை அவர் எவ்வாறு மதிப்பீடு செய்வார் என்ற ஒரு கேள்வியை எழுப்பினேன். இரண்டு கருத்துக்களை அவர் தெரிவித்தார். அவை நல்ல கதைகள், பாராட்டத்தக்கவை என்பது அவரது முதற் கருத்து. அதுவும் அந்தக் காலத்தில் மிகவும் துணிகரமாக பெண் எழுத்தாளர் ஒருவர் அப்படிக் கதை எழுதியது மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒரு விடயம் என்று அவர் தனது இரண்டாவது கருத்தை மிக ஆணித்தரமாகக் கூறினார். இந்த நிகழ்வு நான் எடுக்கும் இம் முயற்சியின் ஒரு வரலாற்றுப்படி என்றே கருதி மகிழ்ச்சியுற்றேன்.
இவ்வளவையும் முன்னுரையாகக் கூறிய நான் பவானியின் சிறு கதை உள்ளடக்கதைப் பற்றி கூறுவது மிகவும் முக்கியம்.
பவானியின் சிறு கதைகளைத் தொகுத்துக் கணித்தால் அவற் றில் இழையோடும் முக்கியமான கருத்தோட்டம் சமுதாய அவலங்க ளும் அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகளும் எப்படி ஆணையும், பெண்ணையும் அலைக்கழிக்கின்றன. அவர்கள் எப்படி அவற்றன் பாரிய தாக்கத்துக்குட்படுகிறார்கள் என்பதே. அவர் கதை கூறும் பாணியும் கதை முடிக்கும் பாணியும் கதாபாத்திரங்களைப் பரிதாபத்துக்கு ஆளாக்கவில்லை. அவர்கள் பண்பாட்டிலிருந்து இறங் கிய நிலையிலும் தங்கள் உரிமைகளைப் பேசுவது போலவே அக் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. முடிவுகள் வாசகர்க ளைச் சிந்திக்க வைக்கின்றன. குறிப்பிட்ட கதாபாத்திரம் ஏன் அவ் வாறு இயங்கியது! ஏன் மாறியது என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன. உள்ளடக்கங்களை மட்டுமே வைத்து திறனாய்வு செய்வது என் நோக்கமல்ல. கதைக்கு, கதாபாத்திரத்திற்கு புறம்பான சமுதாய, பொருளாதார, அரசியல் சூழ்நிலைகளும் அரங்குகளும் எப்படி சிறு கதையின் கருவை அமைத்து விடுகிறது என்பதையே நான் இங்கு வலியுறுத்துகிறேன். சமுதாய மாற்றத்துக்கு மட்டுமே இலக்கியம் பயன்படவேண்டியது என்ற கருத்தையே நான் இங்கு கூறுகிறேன் என்று வாசகர்கள் எண்ணவேண்டாம். கதாபாத்திரங்கள் எப்படி சமுதாயச் சிக்கல்களிலிருந்து தோன்றுகிறார்கள். யதார்த்த படைப்புக்களை எப்படி சமுதாய குறைகளைப் பிரதி பலிக்கின்றன என்பதையே நான் இங்கு கூறுகிறேன். இந்தச் சமூகத் தன்மையை சமூகத்தன்மையாக மட்டுமே கூறினால் அது சமுதாயவியல் அல்லது மானிடவியல் என்ற சமூக விஞ்ஞானப் படைப்புகளாகவே இருக்கும். இந்தச் சமுதாயத் தன்மையை பாத்திரங்களிறுனூடாக வெளிக் கொணர்ந்து அதன் பிரத்தியட்சமான நிலை எப்படி மானிடரை வாழ வைக்கிறது, எப்படி தாக்குகிறது, எப்படி அவலங்கொள்ள வைக்கிற, என்று அழகியலோடு கூறுவதே உன்னதமான ஒரு இலக்

Page 7
கியம் என்று தான் நான் கருதுகிறேன். இந்த அழகியல் யதார்த் தத்தை ஒட்டியதாக மானிடரின் சிந்தனையைத் தூண்டும் ஒரு கருவி யாகவே இருக்க வேண்டும். சமூகக் காரணிகளை நாம் இனங் கண்டு அவற்றின் தாற்பரியத்தை உணர்ந்து அதன் அழகியலையும் தெரிந்து அனுபவிக்கிறோம். கதையின் சமுகத் தன்மையை மட்டும் கருத்தில் கொண்டு படைக்கப் பெறும் இலக்கியங்கள் எல்லாம் பிரச்சார ஊடகங்கள் என்று கூறும் திறனாய்வுக் கொள்கையை நான் முற்றாக மறுக்கிறேன். பிரச்சாரம் அழகியலினுடாக பிரச் சாரம் என்ற பண்பை இழந்து சமூக யதார்த்தத்தை அழகுபடக் கூறு கிறது. அந்த யதார்த்தமும் அந்த அழயியலும் அதாவது கூறும் வித மும் இரண்டும் சேர்ந்தே வாசகர்களைச் சிந்திக்க வைக்கிறது. அந்த அழகியலில் நுகர்ச்சி கட்டாயம் இன்பம் தான் தர வேண்டும் என் றில்லை. ஒரு துன்ப நிகழ்ச்சியை அழகாகக் கூறி எம்மை அத்துன் பத்தின் ஆழத்தையும் அகலத்தையும் எமக்கும் படம் பிடித்துக் காட்டு வது அந்த அழகியலின் ஆளுமை தான்.
பவானியின் கதைகளைப் படிக்கும் பொழுது என்னை மிகவும் கவரும் அம்சம் இந்த இரண்டில், அதாவது சமூகத் தன்மையினதும் அழகியலினதும் ஒன்றுபட்ட தாக்கமே. இந்தத் தாக்கம் எப்படி வாசகர்களை சிந்திக்க வைக்கிறது காலங்காலமாக வரம்பு கட்டி வைக்கப்பட்ட பெண்களது உணர்ச்சிகள் எவ்வாறு. தேவையை ஒட்டி அவ்வரம்புக் கட்டங்களை மீறுகின்றன என்பதை தனது பல கதைகளில் கருவூலமாகக் கொண்டிருக்கிறார். ஆணாதிக்கம் ஓர் அன்பு மனைவியை விபசாரியே வெளியே போ என்று கூற அவர் வெளியே சென்று எப்படி உண்மையிலேயே விபசாரியாகிறார் திருந்தித் தனது பிழையை உணர்ந்த கணவன் விபசார மனைவியை ஏற்றுக் கொள்ளச் செல்லும் பொழுது விபசாரியாகவே தன்னை ஏற்றுக் கொள்ளும் அன்பு மிக்க இன்னுமொரு மனிதனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்கிறாள். அன்பும் பண்பும் மனைவியின் உணர்வுகளையும் நேர்மையையும் மதிக்கும் ஒருவனே தோழமை உடைய கணவன் என்று. அன்பும் பண்பும் அற்ற, சந் தேகமும் உள்ள கணவனை நிராகரிக்கிறாள். பெண்மையின் அவலங் களை அவள் தாண்டி தனக்கொரு வழி அமைக்கிறாள். இது "சந்திப்பு” என்ற சிறு கதையின் சாரம் இங்கு நான் இச் சிறு கதைத் தொகுதிக்கு ஒரு விமர்சனம் செய்ய விரும்பவில்லை. வாசகர் களுக்கு இச் சிறு கதைத் தொகுதி கையில் கிட்டியவுடன், இன்னு மொரு சமயம் அதைச் செய்யலாம் என்பது எனது சித்தம். ஆகவே எனது முன்னுரையை இத்துடன் முடித்துக் கொண்டு இதை மறு பிரசுரம் செய்வதற்கு இசைந்த பவானிக்கு எனது நன்றியைக் கூறுகி mேன்.
(D செல்வி திருச்சந்திரன்
Lu goofit Linienst பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்.

லச்சுமி
அன்று விடிந்ததும் விடியாததுமாய்ச் சின்ன ன் லச்சுமியின் பேச்சோடு வந்தாள். நான் நித்திரையிலிருந்து எழுந்து ஐந்து நிமிஷம் இருக்காது. பற்பசையும் கையுமாகப் பல்விளக்க மனமின்றிச் சோம்பல் வழியக் கிணற்றுத் துரவில் இருந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தேன்.
"நான் என்னத்தைச் சொல்லுவன் மீனா பிள்ளை, அவன் பிரம்மஹத்தி புடிப்பான், காத்தாலைக்கே துவங்கிட்டான். லச்சுமி யின்டை கழுத்தைப் புடிச்சல்லே நெரிச்சு. நான் இல்லையெண்டா இம்மளவுக்கு என்ன நடந்திருக்குமோ." சின்னன் அங்கலாய்த்தாள். அவள் சொற்கள் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்க வில்லை. நேற்றுக் கொழும்பிலிருந்து வந்து சேர்ந்ததிலிருந்து லச்சுமி யைப் பற்றிக் கேள்விப்பட வேண்டிய தெல்லாம் கேள்விப்பட்டு விட்டேன். ஆனால் அத்தனையையும் அப்படியே நம்பிவிட்டேன் என்று மட்டும் சொல்ல முடியாது. நான் நன்கறிந்த எவருக்காவது இப்படி நடந்திருக்கு மென்று என்னால் சுலபத்தில் நம்பிவிட முடியவில்லை.
"அம்மா எங்கை பிள்ளைP?
"உப்பிடிக் குசினிப் பக்கமாப் போனா" சின்னன் அம்மாவைத் தேடிப் போனது எனக்குப் பெரிய நிம்மதியாய்ப் போய்விட்டது. சின் னன் லச்சுமியின் தாயின் சகோதரி. அவளுக்கு லச்சுமியின் மீது ஒரு விசேஷ பாசம், பற்றுதல். அவளுக்கு ஓயாத வாய். சதா தொன தொணத்துக் கொண்டேயிருப்பாள். நானோ யாருடனும் டி பேச்சுக் கொடுக்கும் மனநிலையில் அப்போது இருக்கவில்லை. இன்னமும் உறங்கும் மனதோடு சோம்பும் உடலை வருடிக் கூந்தலுள் புகுந்து சிலுசிலுத்துச் சென்ற இளங்காற்றின் உணர்வில் மட்டுமே மூழ்கி யிருந்தேன். ஆனால் சின்னனின் வார்த்தைகள் அந்த நிலையைக் கலைத்து விட்டன. என்னை யறியாமலே என் கண்கள் வீட்டு வெளி முற்றத்தை நோக்கின. பொன்னியின் மூத்த பெட்டைதான் இப் பொழுது தினமும் கூட்ட வருகிறாளாம். லச்சுமி கூட்டும் போது மட் டும் ஒரு கஞ்சல், குப்பை, ஒரு முள் இல்லாமல், மெழுகி விட்டால் போல் இந்த வளவு துப்புரவாயிருக்கும் பார்ப்பதற்கே அழகாய், ஆசையாய் இருக்கும்.

Page 8
லச்சுமி அழகியல்ல. ஆனால் அவளுடைய நீண்ட, ஒடிசலான அங்கங்களின் லாவகத்திலும் செந்தளிப்பான, முகத்திலும் ஒரு கவர்ச்சி மிளிர்ந்தது. எப்பொழுதும் கூந்தலுக்கு எண்ணெய் தடவிப் படிய வாரி இழுத்து ஒரு பாக்கு அளவு கொண்டை போட்டிருப் பாள். அவளினத்தவர் பலரிடத்துக் காணாத ஒரு சுத்தமும் நளின மும் அவளிடத்து உள்ளார்ந்திருந்தது. அதோடு அவள் ஓரளவு நிற முங் கூட.
“மீனா இன்னமும் என்னடி நெளிவெடுக்கிறாய்? பல்லை விளக்கி முகத்தைக் கழுவன், கோப்பி ஆறிப் போகுது," என்று அம்மா ஒரு சத்தம் போட்டா.
"ம்ம்ம்! ..." தூங்கி எழும் பூனை போல உடம்பை வளைத்து முறிவெடுத்தேன். முகங் கழுவிக் கோப்பியை ஒரே மூச்சில் குடித்து விட்டுச் சுளகில் வெங்காயத்தை அள்ளிக்கொண்டு உரிக்க உட்கார்ந் துவிட்டேன். ஆனால் லச்சுமியைப் பற்றிய நினைவுகளே என்னை விடாப்பிடியாய்த் தொடர்ந்தன. லச்சுமிக்கும் எனக்கும் ஒரே வயது தான் இருக்கும். நான் பல்கலைக் கழகத்தில் புகுந்த முதலாண்டில் தான் அவளுக்குக் கல்யாணம் நடந்தது. அம்மா எழுதித்தான் எனக் குத் தெரியும். அம்மா கடிதத்தில் பிற் குறிப்பிட்டு எழுதியிருந்தா, "லச்சுமிக்கும் போன சனிக்கிழமை கல்யாணம் நடந்து விட்டது” என்று. இத்தனை நாட்களுக்குப் பிறகும் இச்சிற விவரங்கள் நினை விற்கு வருவதுதான் எவ்வளவு விசித்திரம்!
விடுமுறைக்கு நான் வீட்டிற்கு வரும் பொழுது முதன் முதலில் லச்சுமி வந்து நேரே என்னோடு பேசத் தொடங்க மாட்டாள். வ்கள் வீடு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில்தான் இருந்தது. ர்ன் புகையிரத நிலையத்திலிருந்து நடந்து வீட்டை அடையு முன்பே நான் வந்துள்ள செய்தி பரவி விடும். நான் வீட்டை அடைந்து சிறிது நேரத்திற் கெல்லாம் லச்சுமி வந்து விடுவாள். நான் எப் பொழுதுமே வந்தவுடன் வெளி விறாந்தையிலிருந்த வாங்கிலில் உட்கார்ந்து விடுவேன். அம்மா கொடுக்கும் தேநீரைச் சுவைத்தபடி சிறிது நேரம் அம்மாவுடனும் மற்றவர்களுடனும் வம்பளந்துவிட்டுத் தான் உள்ளே போவேன். லச்சுமி வரும்போது நான் வாங்கில் உட் கார்ந்திருந்தால் அவள் வீட்டுச் சுவர் முடக்கின் மறைவில் சுவரைப் பிடித்தவாறு நின்றுகொண்டு தலையை மட்டும் மெல்ல நீட்டி எட் டிப் பார்ப்பாள். நான் அவளைப் பார்த்து விட்டாலோ வெற்றிலைக் கறைபடிந்த உதடுகள் விரிந்து சற்றே மிதப்பான பற்கள் தெரியச் சிரித்தபடி தலையை இழுத்துக்கொண்டு மறைந்து கொள்வாள். தப்பித் தவறி, "என்னடி லச்சுமி எட்டிப் பாக்கிறாய்? இங்காலை வாவன்," என்று சொல்லி விட்டேனோ போதும் வெருண்டு பதுங் கும் பிராணி போலச் சுவரோடு சுவராய் ஒண்டிக் கொள்ளுவாள்.
2.

ஆனால் அவள் எட்டிப் பார்ப்பதையும் மறைந்து கொள்வதையும் நான் கண்டாலும் காணாத மாதிரி இருந்து விடுவேன். சிறிது நேரத் திற்குப் பிறகு தானாகவே சுவரின் மறைவிலிருந்து வெளிப்பட்டு மெல்ல நகர்ந்து வந்து விறாந்தைக் கப்பைக் கட்டிக் கொண்டு நிற்பாள். நானும் அவளைப் பொருட் படுத்தாது பாக்குச் சீவுவது போலோ ஏதோ நினைவில் ஆழ்ந்தது போலோ வாங்கில் இருப் பேன். திடீரென்று எனக்குப் பின்னால் ஒரு குரல் எழும்.
“எப்பன் போயிலை தாரும் மீனா, பிள்ளை" நான் ஆச்சரியத் தோடு திரும்பிப்பார்ப்பேன். அவள் வாங்கின் காலோடு சாய்ந்தபடி தரையில் உட்கார்ந்திருப்பாள்.
"உனக்கு நினைச்ச நேரம் போயிலை குடுக்க இதென்னடி கடையெண்டு நினைச்சியேP” என்று அதட்டிய படி புகையிலையைக் கிள்ளிக் கொடுப்பேன். அவள் ஏதோ பெரும் பகிடியைக் கேட்டது போல் சிரித்துக் கொண்டு புகையிலையைக் கொடுப்புக்குள் அதக்கு வாள். ஒவ்வொரு முறையும் நான் பள்ளி விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் போது தவறாமல் நடக்கும் நாடகம் இது. இப்பொழுது அவளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இம்முறை நான் போகும் போதும் சுவர் மறைவிலிருந்து எட்டிப் பார்ப்பாளோ என்று சற்று வருத்தத்தோடு நினைத்துக் கொண்டேன். ஆனால் அடுத்து நான் அவளைக் காண்பதற்குள் வெகு காலமாகிவிட்டது.
கல்யாணமாகி ஒரு மாதத்திற்குள் லச்சுமியின் புருஷன் வாதத் தால் பீடிக்கப்பட்டுப் படுக்கையில் விழுந்து விட்டான். புருஷனையும் வீட்டையும் கவனித்துக் கொண்டு நடுகைக்குப் போய் நாலு காசு உழைக்கத்தான் அவளுக்குப் பொழுது சரியா யிருந்தது. அதனால் அவள் எங்கள் வளவு கூட்ட வருவதை விட்டு விட்டாள். அச்சமயம் அவள் கருவுற்றிருந்தாள் என்று அறிந்ததும் எனக்கு ஏனோ அவ ளைப் பார்க்க ஆசையாயிருந்தது. என்னை வந்து பார்க்கச் சொல் லிக் கூட அம்முறை அவளுக்குச் சொல்லி அனுப்பி விட்டேன். ஆனால் அவள் வரவில்லை. அடுத்து வந்த இரு விடுமுறைகளின் போதும் நான் அவளைக் காண வில்லை. நாளடைவில் நான் அவளை மறந்து விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். சில வேளைகளில் எதிர்பாராத சமயங்களில் எனக்கு அவள் நினைவு வரும். லச்சுமியின் பிள்ளையும் பிறந்திருக்குமே! அம்மாவும் ஒன்றும் எழுதவில்லை. நானாவது எழுதிக் கேட்க வேண்டுமென்று எனக்குச் சில சமயம் தோன்றும். ஆனால் அம்மாவுக்குக் கடிதம் எழுத உட்காரும் போதெல்லாம் எப்படியோ அதைப் பற்றி அடியோடு மறந்து விடுவேன். அந்த விடுமுறைக்கு வீடு போய்ச் சேர்ந்து முற்றத்தில் கால்வைத்த போதுதான் எனக்கு லச்சுமியின் நினைவு பளிச்சிட்டது. அந்த நினைவின் தாக்கத்தில் ஒரு கணம் அசையாமல் நின்றேன்.

Page 9
"அம்மா! லச்சுமி இப்பவும் கூட்ட வாறவளேP” என்றேன்.
"அதையேன் கேக்கிறாய்! அவளுக்கெல்லே பிள்ளை தப்பினதும் ஒரு அருந்தப்புத்தான். ரண்டு மாசமாப் படுக்கையாக் கிடந்து இப்ப தான் ஒரு மாதிரி எழும்பி உலாவுறாள். அவளெங்கை வேலைக்கு "வாறது. ஹம் இருந்தும் பிள்ளை போனாலும் புருஷன் எழும்பியிட்
டான். இனியெண்டாலும் அவள் நல்லாயிருக்கட்டும்."
"ஏனம்மா, கந்தனுக்கு இப்ப சுகப்பட்டுட்டுதே" எனக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விடடது.
"சுகம் எண்டால் அப்பிடி யொரு சுகம்! வேலைக்குக் கூடப் போறானே!." லச்சுமிக்காக நான் சந்தோஷப்பட்டேன். ஐந்தாறு நாட்க ஒளுக்குப் பிறகு ஒரு நாள் அந்திப் பொழுதாக குடமும் கையுமாக லச்சுமி வந்தாள். கிணற்றடியில் குடத்தை வைத்துவிட்டு வந்தவள் வாங்கில் என்னைக் கண்டதும் தலையைச் சாய்த்து வெட்கத்தோடு சிரித்தாள். அதே வெள்ளைச் சிரிப்புத்தான். வழக்கம் போல் விறாந் தைக் கப்பைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவள் எப்பொழு துமே அப்படித் தான். எதிலாவது சாயாமல் அவளுக்கு நிற்கவே வராது. எனக்கும் அவளைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே முடிந்தது. ஏதோ அசட்டுக் கூச்சம் என்னையும் பற்றிக் கொண்டது. அவ ளோடு எதுவுமே பேசத் தோன்றவில்லை எனக்கு. திடீரென்று சிரிப் பில் உதடு துடிக்க,
"எப்பன் போயிலை வேணுமே லச்சுமிP” என்று பரிகாசமாகக் கேட்டேன். பல் தெரியச் சிரித்தவள் கப்பிலே முகத்தைப் புதைத்துக் கொண்டாள். பழைய லச்சுமியின் விளையாட்டுத் தனத்தையும் ஓயாத பேச்சையும் பரிகாசத்தையும் இனி என்றுமே காண்பதற்கில்லை போலும். நான் தண்ணிர் அள்ளி அவள் குடத்தை நிரப்பி விட்டேன். குடத்தை லாவகமாய்த் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு என்னைப் பார்த்து முறுவலித்தாள். அவள் படலைக்கு அப்பால் மறையும் வரை அவள் போவதையே பார்த்து நின்றேன். எப்பொழு துமே ஒல்லியாய் இருந்தவள் தான். ஆனால் இப்பொழுதோ ஒடிந்து விழுவதுபோல் மெலிந்து விட்டாள். சற்றுப் பூசினாற் போல் மேவிய வயிறு அவள் தாய்மைச் சுமையை உணர்த்தி நின்றது. ஆனால் அவளிடத்தில் உள்ளூர ஏற்பட்டிருந்த மாறுதல்தான் எனக்குப் புதுமையாயிருந்தது. அவள் நடையில் புகுந்து விட்ட நிதானமும், அவள் உருவிலும் தன்மையிலும் மிளிர்ந்த அடக்கமும் பெண்மைப் பொலிவுமாக அவள் இதுவரை நான் கண்டிராததொரு லச்சுமி யாகத் தோன்றினாள். அவளை ஒரு சொல் பேச வைக்கப் பத்துக் கேள்வி கேட்க வேண்டியிருந்தது. இவளா என்னை முன்னும் பின்னும் விரட்டிய படி வம்புக்கிழுத்த லச்சுமி என்று வியந்தேன். ஏனோ அவள் போவதைப் பார்த்து நிற்க என் மனதில் காரண
4

மில்லாது சஞ்சலம் சூழ்ந்தது.
முதலாண்டுப் பரீட்சையில் நான் சித்தி பெற்று விட்டேன். இன் னும் இரண்டு வருடப் படிப்பு என்னைக் காத்திருந்தது. நான் கொழும்புக்குப் புறப்படுவதன் முன் அவளைக் காணவில்லை. அவ ளுக்குக் கொடுக்கும்படி என் பழைய சேலைகளில் இரண்டை அம்மாவிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். இம்முறை யோடு அம்மாவுக்கு எழுதும் கடிதங்களில் இடைக்கிடை லச்சுமியைப் பற்றி வ.ாmத்துக் கொள்வேன். அச்சமயந்தான் இருக்கவேண்டும் கந்தனின் குணமும் மாறத்தொடங்கியது. சில்லறைச் சச்சரவும், ஏச்சும் பேச்சு மாய்த் தொடங்கியது அடி, உதையில் போய் நின்றது. அவனையும் புரிந்து கொள்ள முடிய வில்லை. ஒரு நாளைக்கு அவளைக் கண் மூடித்தனமாக அடித்து நொருக்குவானாம். இரண்டு நாளைக்குத் தன் கையாலேயே தேநீர், கோப்பி என்று போட்டுக் கொடுத்து ஒரேயடி யாய்ப் பரிந்து பேசுவானாம். மூன்றாம் நாளோ கட்டாயம் வட்டியும் முதலுமாக அடியை வாங்கிக் கொள்வாளாம். எத்தனையோ நாள் அவளை வீட்டை விட்டே விரட்டி இருக்கிறான். பின்பு தானாகவே போய்த் தாய் வீட்டிலிருந்து கூட்டியும் வந்திருக்கிறான். அவளுக் காகப் பச்சாதாபப்படுவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்?
லச்சுமி பிரசவித்த பொழுது நான் கொழும்பில் இருந்தேன். பிர சவத்தின்போது அவளுக்கு ஹிஸ்டீரியா கண்டு இன்னமும் குணமாக வில்லை என்று அம்மா எழுதியிருந்தா. நான் அதைப் பெரிதாய் எண்ணவில்லை. நாளடைவில் தெளிந்து விடும் என்று நினைத்து விட்டேன். ஆனால் பல மாதங்கள் சென்றும் அவள் நிலைமோச மானதே தவிரத் தேறுவதாய்த் தெரியவில்லை. தெளிவற்ற பேச்சும் செயலுமாய்ப் பைத்தியம் போலாகி விட்டாளாம்.
ஆனால் அவளுக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாகத்தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு இப்போது தான் விடுமுறைக்கு வந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அவள் இங்கு அடிக்கடி வருவதுண்டு என்று அம்மா சொன்னாள். எனக்கு அவ ளைப் பார்க்கவும் ஆசையாயிருந்தது; ஏனோ பார்க்க வேண்டாம் போலும் தோன்றியது.
அன்று மத்தியானம் லச்சுமி வந்தாள். மத்தியானம் இரண்டு மணியிருக்கும். சாப்பாட்டுக்குப் பிறகு நாங்கள் காற்றோட்டமான வெளி விறாந்தையில் பேசிக் கொண்டு இருந்தோம். அப்பொழுது தோளில் சாத்திய குழந்தையை ஒரு கையால் அணைத்த படி மற்றக் கையில் ஒரு இரும்புச் சாவியும் சோடாப் போத்தல் போன்றவொரு வெள்ளைப் போத்தலில் வாயில் சூப்பி போட்டு அதில் பாலுங் கொண்டு போக்கற்றவள் போல் அவள் வந்தாள். நான் அதிர்ச்சியை
5

Page 10
உணர்ந்தேன் என்றால் அது அப்பொழுதுதான் முடுக்கிவிட்டது. யந் திரப் பொம்மை போல் விறாந்தையை அடைந்தவள் போத்தலையும் சாவியைவும் பக்கத்தில் வைத்து விட்டுச் சுவரோடு சாய்ந்தபடி தரை யில் உட்கார்ந்து மகனை மடியில் கிடத்திக் கொண்டாள். என்னை யறியாமலே, என் காலடியில் சுகமாகச் சுருண்டு படுத்திருந்த ஜிம்மி யின் முதுகை என் விரல்கள் வருடின. லச்சுமியின் கோலத்தைக் காணச் சகிக்கவில்லை. எலும்பும் தோலுமாகி விட்டாள் அவள். சிக்குப் பிடித்த பரட்டைக் கூந்தலும் அழுக்கில் நிறந் தெரியாத சேலையுமாக உருத்தெரி 1ாமல் போய்விட்டாள். வாடி, வெளிறிக் களையிழந்து விட்ட அவள் முகத்தில் எலும்புகள் பீறிக் கொண்டு நின்றன. உயிரற்ற அந்த முகத்தில் குழி விழுந்த வெறித்த கண்களில் தான் ஒரு ஜீவச்சாயல் ஒட்டியிருந்தது. அந்தப் பேயறைந்த, வெறித்த கண்களை என்னால் என்றுமே மறக்க முடியாது. ஒவ்வொரு முகமாய்ச் சுரத்தின்றி நழுவி வந்த அவள் பார்வை என் முகத்தை அடைந்ததும், லச்சுமி சிரித்தாள். அதில் பழைய சிரிப்பின் நிழலாடியது. இவளா பைத்தியம்? இவளை இப்படியாக்குவதற்கு இவளுக்கு என்னதான் நடந்ததோ என்று நினைத்துக் கொண்டேன். அவளைப் பார்க்கப் பார்க்க என் மனதிற்கு ஒரே சங்கடமாய் இருந்தது. இலக்கற்ற, உணர்வற்ற அந்தச் சூனியப் பார்வையின் பின்னால் அவள் மனம் என்ற ஒன்று இயங்குகின்றதா? அவள் என்ன நினைக்கிறாள்? தன் நிலையை உணருகிறாளாP அல்லது அவள் உடல் கோதினுள் நுழைந்து பரந்துவிட்ட வெறுமையில் உணரும் தன்மையை இழந்து விட்டாளா?
"லெச்சுமி. லச்சுமி.” எங்கோ மோனத்தில் லயித்துவிட்ட முனிபுங்கவரின் கவனத்தை ஈர்ப்பது போல் பயபக்தியுடனும் என் உள்ளத்தில் ஊற்றெடுத்த பரிவுடனும் அவளை அழைத்தேன் யந்தி ரப் பாவைபோல் திரும்பிப் பார்த்தாள்.
"மகனுக்கு என்ன பேர் வைச்சிருக்கிறாய் லச்சுமிP" அப் பொழுது தான் அவள் முகத்தில் உயிரின் அசைவு தோன்றியது. அக் கணத்தில் அவளும் மனிதப் பிறவி போலத் தோன்றினாள். தலையைக் குனிந்து மடியில் கிடந்த குழந்தையைப் பார்த்தவள், "சொக்கன்” என்று லஜ்ஜையோடு சிரித்தாள். அவள் முகத்தில் தோன்றிய பெருமித்தையும் பரிவையும் கண்டு அதிசயித்தேன். ஆனால் எல்லாம் அந்த ஒரு கணப்பொழுது தான். மீண்டும் தறதற வென்று முழிக்கத் தொடங்கினாள்.
"ஏன்டி லச்சுமி, உவனின்டை வாய்ப்புண் இப்ப எப்படியடி இருக்குP” என்று ஆச்சி கேட்டதும் தான் எனக்கு ஞாபகம் வந்தது. இரண்டு கிழமைக்கு முன் இருக்கும். அந்தப் பச்சைக் குழந்தைக்குச் சுண்ணாம்பை அள்ளித் தீத்தியிருக்கிறாள், பாவிப் பெண். பிள்ளை
6

யின் வாயெல்லாம் அவிந்து புண்ணாகிப் பெரும் பாடாகிப் போய் விட்டதாம். இன்னமும் புண்கள் சரியாக ஆறவில்லை. திறந்த வாயி னுாடே அவனுடைய வீங்கிய நாக்கு இன்னமும் வெளியே தள்ளிய படியே இருந்தது. அவள் எதற்கும் தனது ஒரே பதிலான அந்த வெக்கறைச் சிரிப்பைச் செலுத்தினாள்.
(༽
"நீ போற இடமெல்லாம் இவனைத் தூக்கிக் கொண்டு போனால் எப்படியடி வேலைசெய்யப் போறாய்? கிணத்தடியிலை நாலு ஓலை பிழந்து போட்டுக் கிடக்கு உவனை உப்பிடிக் கிடத்திப் போட்டுப் போய் அதைப் பின்னிப் போடன்” என்றாள் ஆச்சி.
"அவனிருக்க மாட்டான்” என்று அனுங்கியவள் குழந்தையைத் தரையில் கிடத்தப் போனாள். அவன் "அம்மா! அம்மா!” என்று வீறிட்டு அழத் தொடங்கினான். அவனை அப்படியே அள்ளி மார் போடணைத்துக் கொண்டவள் மறுபடியும், "அவனிருக்க மாட் டான்" என்றாள் ஏதோ மன்னிப்புக் கேட்கும் தோரணையில்.
அந்த நாட்களில் அவள் அடிக்கடி வருவாள். இப்படித்தான். எங்காவது . ஒரு பக்கமாக மடியில் பிள்ளையோடு மணிக் கணக் காகப் பேயறைந்தவள் போலப் பேசாமல், தன் நினைவில்லாமல் இருப்பாள். ஒரு நாள் முற்றத்துப் புழுதியில் உட்கார்ந்திருந்தாள். சொக்கன் அவள் மடியிலிருந்து இறங்கிப் புழுதியில் தவழ்ந்து புரண்டு குளித்துக் கைக்கு அகப்படடதை யெல்லாம் வாயில் போட் டுக் கொண்டிருந்தான். அவளோ சூனிய வெளியில் நிலைத்த விழிக ளுடன் பேய் பிடித்தவள் போல் பேந்தப் பேந்த முழித்தபடி உணர் வற்றுச் சூழலை மறந்து இருந்தாள். அவளுடைய கேவலத்தைப் பார்க்கப் பார்க்க என் நெஞ்சில் ஏதோ ஒன்று குறு குறுத்தது. அவள் எந் நேரம் வந்தாலும் அவளுக்கென்று ஏதோ கொஞ்சம் சாப் பாடு எடுத்து வைத்துக் கொடுக்கத் தொடங்கினேன். அது என்னவா யிருந்தாலும், பிள்ளைக்கு ஆகுமோ ஆகாதோ, அவனுக்கும் ஊட்டித் தான் தானும் சாப்பிடுவாள். வெம்பி விழுந்த மாம்பிஞ்சுகளைக் கொந்தல் மாங்காய்களைக் கூட அவள் கடித்துச் சப்பிப் பிள்ளைக்கு ஊட்டுவதை எத்தனையோ நாள் கண்டிருக்கிறேன்.
“லச்சுமி, புருஷன் அடிச்சுவனேடி இண்டைக்கு? ஆச்சி மெது வாகக் கேட்டாள். அவள் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு சிரித் தாள்.
“ஏண்டி சொல்லன் அடிச்சவனே? நீ சோறு காச்சி வைக்கேல் லையே? . பின்னை ஏன்டி அடிச்சவன்? ஆச்சி எவ்வளவுதான் கேட்டும் அந்தச் சிரிப்பைத் தவிர அவளிடமிருந்து "ஓம்" என்ற ஒரு வார்த்தையோ தலையசைப்போ கிடைக்கவில்லை.

Page 11
"நீ இங்கை வந்திருக்கிறாயெண்டு அவனுக்குத் தெரியுமேடி? அவன் வந்து தேடப் போறான். நேரமாப் போச்சு. அவன் வர முந்தி நீ வீட்டைபோடி!” என்றாள் அம்மா. கீழ்ப்படிவான குழந்தை போல் உடனேயே எழுந்து விட்டாள்.
எனக்கு அவள் என்றைக்குமே ஒரு வேதனை நினைவாய் மாறிவிட்டாள். விடுமுறை முடிய நானும் கொழும்புக்குத் திரும்பி விட்டேன். ஒரு மாதம் சென்றிருக்கும். அன்று காலை விரிவுரைக்குப் புறப்படும் அவசரத்தில் அம்மா விடமிருந்து அப்போதுதான் வந்தி ருந்த கடிதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தபடியே திறந்தேன். அம்மாவோ எங்கள் வீட்டு நாய் ஜிம்மியின், பசு குமாரியின் சுகம் முதல் கடந்த சில நாட்களுக்குள் யார் யார் வீட்டிற்கு வந்தார்கள், யார் யார் என்ன சொன்னார்கள் என்று கடிதம் என்ற பெயரில் ஒரு பாரதமே வரைவாள். அதனால் நான் மேலெழுந்த வாரியாகக் கடிதத்தில் கண்சளை ஒட்டியபடி விரைந் தேன்.
". . . . . அப்பா நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு பெருஞ் சாதிக் கோழி வாங்கிக்கொண்டு வந்தார். முந்தநாள் கொக்குவிலி லிருந்து சபாநாயகம் வீட்டார் வந்திருந்தார்கள். அவருடைய இரண் டாவது மகள் நாளன்றைக்குக் கொழும்புக்கு வ:சிறrவாம். அவ ளிடம் உனக்குக் கொஞ்சம் முறுக்குச் செய்து கொடுத்து விடுகி றேன். இங்கை நேற்று வேலியடைப்புத் தொடங்கியிருப்பதால் கொஞ்சம் கஷ்டமாயிருக்கிறது. லச்சுமியின் பிள்ளையும் நேற்றுச் செத்துப் போச்சுது. உன்னுடைய இருமல் இப்ப மாறிவிட்டதோP." ஆ! என்னால் நம்ப முடியவில்லை. மறுபடியும் வாசித்தேன் "லெச்சு மியின் பிள்ளையும் நேற்றுச் செத்துப் போச்சுது" . அந்த வார்த்தை கள் என் மனதில் பதியச் சிறிது நேரம் எடுத்தது. அந்த வசனத்தை இரண்டு மூன்று தடவை வாசித்த பின்தான் அதன் முழுவேகமும் என்னைத் தாக்கியது. என்னைச் சுற்றிலும் இயங்கும் மனிதக் கூட் டத்தை, உயிரோட்டத்தை மறந்த நிலையில் நடுத்தெருவில் திகைத்து நின்றேன். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முடி டயவே முடியவில்லை. லச்சுமி, பாவி, இனி எதைக்கொண்டு வாழப்
போகிறாயடி?

பொரிக்காத முட்டை
தன் பேனையை எங்கோ மறதியாக வைத்துவிட்ட சந்திரன் உஷாவின் பேனையைப் பாவிக்கும் எண்ணத்துடன் அவள் மேஜை முன் அமர்ந்தான். சோதனை போல் மேஜை மேல் அவள் பேனை யையும் காணவில்லை. ஒரு லாச்சியை இழுத்தான், அதிலும் இல்லை. மற்ற லாச்சியை இழுத்தான் ஆனால் அது பூட்டியிருந்தது. இந்த லாச்சியைப் பூட்டி வைத்திருக்கும்படி உஷா இதில் என்ன தான் வைத்திருக்கிறாளோ என்று நினைத்த சந்திரனின் மனதை வேதனைக்கீற்று ஊடுருவியது. அந்த வேதனை அவனுக்கே ஆச்சரிய மளித்தது. உஷாவைப் பற்றிய தென்றால் இத்தகைய அற்ப விஷயம் கூடத் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கின்றதே! சந்திரன் தன் னையே சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றான். உஷாவை அவ னுக்கு எத்தனை காலமாகத் தெரியும்P ஆறே ஆறு மாதமாகத் தானே! அவர்கள் இருவருக்கும் கல்யாணமாகி ஆறு மாதங்கள் தானே ஆகின்றன. ஆறு மாதங்களுள் ஒருவரை யொருவர் முற்றாக அறிந்து கொள்ள முடியுமா? ஆனால் என்றது அவன் உள்ளம். ஆனால் என்ன? இந்த ஆறு மாதங்களுக்கு முன் சென்ற அவளது இருபது வருட வாழ்க்கையில் அவனுக்கு என்னபங்கு? அந்த வாழ்க்கைப் பகுதியும் அவனுக்குப் பூட்டிய கபாடமாகவே இருந்து விடுமோ? ஆறு மாதங்களுக்கு முன்வரை உஷா என்றோரு பெண் இருப்பதே அவனுக்குத் தெரிந்திருக்க வில்லை. ஆனால் இன்றோ உஷா என்ற அந்தப்பெண் இல்லாத வாழ்க்கையையே அவனால் நினைத்துப் பார்க்க முடிய வில்லை. அவன் வாழ்க்கையில் அடி யெடுத்துவைத்து அவன் உள்ளத்தில் நிறைந்து, உயிரில் கலந்து அவனுக்கு எல்லாமே ஆகிவிட்டாள் உஷா. அவன் உள்ளத்தில் வேதனை நெருடியது. சிறுமியாய் இருந்தபோது உஷா எப்படி இருந்திருப்பாள்? அவள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன் றினவோ? சந்திரனின் விரல்கள் அந்த லாச்சியின் குமிழியோடு விளையாடின. அந்த மேஜை உஷா சிறுமியாய் இருந்தது முதல் பாவித்த மேஜை. ஆனால் அவளுக்கும் அவனுக்குமோ ஆறுமாத உறவுதான். அப்படியிருந்தும் இரு அந்நியர்களை நொடியில் யுகபுக மாய்ப் பழகியவர் போல் இணைத்துவிடும் கணவன், மனைவி என்ற இந்தப் பந்தத்தின் தன்மை தான் என்ன? தவறு யுக யுகப் பழக்த் திலும் தோன்றாத ஒரு நெருக்கத்தில் அவர்களைப் பிணைத்து விட்ட இந்த உறவினைப் போன்ற தொரு அற்புதம் வேறு இருக்க முடி
9.

Page 12
யாதே ஒரு பெரும் உண்மையை உணரும் சிலிர்ப்பில் சந்திரன் நினைத்தான். இறை தத்துவமே இந்த உறவின் தத்துவத்தில் அடங் கியிருக்கின்றது என்று இறைவனும் ஆன்மாவும் எவ்வாறு அந்நியர் களல்லவோ அவ்வாறே அவனும் அவளும் அந்நியர்கள் அல்ல.
உஷா அவனைத் தேடி வந்தாள்.
இங்கேயா இருக்கிறீர்கள்? ஒன்பது மணியாகிறதே, சாப்பிட வில்லையா? மேஜையின் மேலிருந்த புத்தகக் குவியல் ஒன்றின்மேல் முழங்கைகளை ஊன்றிச் சற்றே சாய்ந்து கொண்டவள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.
‘என்ன யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்றாள். சந்திரன் தன் மனதை நினைவுப் பிடியிலிருந்து பிரித்திழுத்து வந்தான்.
'இல்லை. பேனையைத் தேடி வந்தேன். ஆமாம், நீ சாப்பிட்டு Gill LTurTP" pop/T6ficô இதழ்க் கடையில் இளநகை தலை நீட்டியது. சற்றே முகத்தை மறுபக்கம் திருப்பியவள்,
'இல்லை. எனக்கு. எனக்கு ஒரேயடியாக வயிற்றைக் குமட்டு கிறது," என்று உதட்டைப் பிதுக்கினாள். சந்திரன் மெல்லச் சிரித் தான். உஷா எவ்வளவு அழகாய் இருந்தாள். குழந்தையினது போன்ற கன்னக் கதுப்புகளும், ஆழ்கடல் போன்ற அகன்ற ஒளிவிழிகளும் அவளிடத்துக் குடிகொண்டிருந்த பெண்மையின் மென்மையுமாக நிறைவான அவள் அழகு அவனுள் வியாபித்து அவனைக் குளிர் வித்தது. உஷா. என் ஆருயிர் உஷா. என்று நினைத்தான் சந்திரன். திடீரென்று அவன் உள்ளத்தில் மடைதிறந்தாற் போலப் பாசவெள் ளம் கரைபுரண்டெழுந்தது. அந்தப் பாசக் கனிவிலே அவளைப் பார்த்தான். கன்னத்தில் கொஞ்சும் கேசச் சுருள்களுடனும் அதிச யிக்கும் விழிகளுடனும் அவளே குழந்தை போலத் தோன்றினாள். ஆமாம் அவளே இன்னும் குழந்தை தான். அதற்குள் அவளுக்கு ஒரு குழந்தையா?. சந்திரன் பூட்டியிருந்த லாச்சியை நோக்கினான்.
'உஷா. இந்த லாச்சியைத் திறக்க முடியவில்லையே, பூட்டி வைத்திருக்கிறாயா?" என்று கேட்டான். உஷா சிரித்தாள்.
ஆமாம், இதில் தான் என் பொக்கிஷங்களெல்லாம் இருக் கின்றன. நான் சிறுமியாய் இருந்ெெபாழுது சேகரித்த பொருட்களுள் வீசிவிட மனமில்லாதவற்றை எல்லாம் பல்கலைக் கழகத்திற்குப் போகு முன் இதில் போட்டுப் பூட்டிவிட்டேன். அதன்பிறகு, இன்று வரை நான் கூட இந்த லாச்சியைத் திறந்து பார்க்கவில்லை தெரி யுமா? இப்போ திறந்து பார்ப்போமா? என்று ஒரு குழந்தையின் ஆவலோடு கேட்டாள் உஷா. உடனேயும் அலமாரியிலிருந்து சாவியை
10

எடுத்து வந்து லாச்சியைத் திறந்தாள். இருவரும் ஒரு கணம் மெளனமாய் லாச்சியுள் நோக்கியவாறு நின்றனர். தான் அறிந்திருக் காத சிறுமி உஷாவைத் தனக்குக் காட்டித் தரப்போகும் பொருட்கள் இவையென நினைத்தான் சந்திரன். சென்று விட்ட, இனித் திரும்ப முடியாத வாழ்க்கைக் கட்டத்தை நினைவூட்ட மிஞ்சிக்கிடந்த அப் பொருட்களைக் கண்டதும் உஷாவின் மனதில் ஒரு சோகம் கவிந்தது. தான் விடை கொடுத்திராத தன் குழந்தைப் பருவத்திற்கு இன்றுதான் விடை கொடுக்கப்படுவதுபோல் உணர்ந்தாள்.
"ஆளுக்கொரு பொருளாய் எடுத்துப்பார்ப்போம். சரியா உஷா? நீ முதல் எடு," என்றான் சந்திரன். இருவருமே சிரித்துக்கொண்டு குழந்தைகள் போல் போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை எடுத்துப் பார்ப்பதும், உஷா ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளக்கம் கூறுவதுமாக இருந்தனர். உஷா ஒரு தகரப் பெட்டியை எடுத்தாள். அது நிறைய் வர்ண ஈயத்தாள்கள் இருந்தன.
அடடா, விஜி ஈயத்தாள் கேட்டுக் கொண்டிருந்தாளே! அவளுக் குக் கொடுக்கலாம்" என்றான் சந்திரன். ஒரு துணிச்சுருளை எடுத் துப் பிரித்தான். அதனுள் பல வர்ணப் பளிங்குத் துண்டுகள் கிடந் தன.
"இந்த உடைந்த துண்டுகளை யெல்லாம் ஏன் பதுக்கி வைத் திருக்கிறாய் உஷா?" என்றான்.
'இது அப்பா ஒரு முறை வெளிநாடு சென்றபோது கொண்டு வந்த சிறு மயில் பதுமையின் துண்டுகள். அது தானாகவே இப் படித் துண்டு துண்டாய் உடைந்து விழுந்தது. அதை ஒட்ட வேண் டும் என்று எடுத்து வைத்தேன். ஆனால் கடைசியில் ஒட்டவுமில்லை; எறிந்து விட மனம் வரவுமில்லை. ஆமாம் இதென்ன பெட்டிP ஞாப கமில்லையே!..". என்றவள் ஒரு சிறிய சதுர காகிதப் பெட்டியை எடுத்தாள். அவள் பெட்டியைத் தூக்கிய வேக்த்தில் மூடி கையோடு வந்து விடக் கீழ்ப்பெட்டி லாச்சி விளிம்பில் தட்டுப்பட்டுக் கீழே விழுந்தது. பெட்டியினுள் இருந்த சிறிய குருவி முட்டையொன்று உடைந்துவிட்டது. உஷா ஒரு கணம் திகைத்துப் போய் நின்றாள். அதிர்ச்சியின் தாக்குதலிற் சிக்கியவளாய் குழம்பிய கண்களுடன் சந்திரனை நோக்கினாள். பின் அவள் கண்கள் மெல்ல நழுவி அந்தக் குருவி முட்டையின் கோதில் நிலைத்தன. தயக்கத்துடன். எதையோ அறிய முயலும் தடுமாற்றத்துடன் அவளறியாது எண்ணங் கள் சொற்களாய் நழுவி வெளிப்படுவது போலப் பேசினாள்.
"அந்தக் கரிக் குருவியின் முட்டை. மறந்தே விட்டேன். ஆனால் இத்தனை காலம் . ஏன் இப்போP." பிரமை பிடித்தவள்
11

Page 13
போல் முணுமுணுத்தாள்.
“உஷா சந்திரன் அழுத்தமாக அழைத்தான். உஷா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவள் கண்கள் கலங்கின. அவள் மனதில் இனந்தெரி யாத தொரு அச்சம் எழுந்து பரவியது. உதடுதுடிக்க, “கரிக்குருவி யின் முட்டை அத்தான்” என்றாள். அந்த வார்த்தைகளில் எல்லாமே விளக்கமாகிவிட்டது. போல் ஏதோ சக்தியால் இயக்கப்பட்டவள் போல் மண்டியிட்டு அந்த முட்டைக் கோதுத்துண்டுகளைப் பெட்டி பல் சேகரிக்கலானாள். சட்டென்று லாச்சியை முடிப்பூட்டினான் சந்திரன். " ۔۔۔
உஷா, கிடக்கட்டும் விடு பெடியனைச் சுத்தமாக்கச் சொல்ல வா, சாப்பிடலாம்," என்றான்.
"இல்லையத்தான், எனக்கு இது வேண்டும்." என்றாள் உஷா. சிறிது நேரம் அவளையே மெளனமாய்ப் பார்த்த சந்திரன், கனிவு உன் சொன்னான்,
உனக்கு ஆறுதல் தருமென்றால் வைத்துக்கிொள். ஆனால் இந்த அற்பவிஷயத்திற்கு இப்படியேன் கலங்குகிறாய்?" என்றான். உஷா அதற்கொன்றும் பேசவில்லை.
அன்று மாலை வேலையிலிருந்து திரும்பி உடைமாற்ற அறை யினுள் நுழைந்த சந்திரன் அறைச்சுவர்களை அலங்கரித்த படங்க ளைக் கண்டதும் ஆச்சரியத்தில் நின்று விட்டான். பூரித்த சொக்கைக ளுடன் பொக்கை வாய்ச் சிரிப்பைச் சிந்தும் குழந்தைகளின் பெரிய அளவுப் படங்கள் சுவர்களை அலங்கரித்தன. உஷா தேநீர் கொண்டு வந்தாள்.
'இதெல்லாம் என்ன உஷா.P என்று கையை வீசினான் சந்திரன்
'இது. இப்படி அழகான படங்களை இப்போது பார்ப்பது நல்லது அத்தான். அப்போ பிறக்கும் குழந்தையும் இந்தக் குழந்தை களைப் போல அழகாக இருக்கும்" என்று கள்ளமற்ற குழந்தை போல் சொன்னாள்.
'உஷா, உஷா! பனிமலர் போல் இத்தனை அழகாக இருக்கி றாயே, உன் குழந்தை இந்தப் படங்களைப் பார்த்துத்தான் அழகாய் இருக்கவேண்டுமா? உன் அழகு அதற்கிருக்காதா? அவள் மனதிலி ருப்பதைத் தேடுவது போல அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.
"அதுசரி உஷா, இவ்வளவு நாளும் இல்லாமல் ஏன் இப்போ
2
Aede

மட்டும் திடீரென்று உனக்கிந்தக் குழந்தைப் பட மோகம் ஏற்பட்டது. அவன் கண்களைச் சந்திக்காது அங்கு மிங்கும் குழப்பத்துடன் நோக், கிய உஷா. "இருக்கட்டுமே" என்று முணுமுணுத்துவிட்டுச் சட்டென்று திரும்பி அறையை விட்டு ஓடாத குறையாக வெளியேறினான். சந்தி ரன் யோசனையில் ஆழ்ந்தான். உஷாவினிடம் ஏற்பட்டிருந்த இந்தத் தடீர் மாற்றத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் மனதில் ஏதோ பாரம் அழுத்துவதை உணர்ந்தான். அவளாகவே அதைப் பற்றிப் பேசுவாளென்று பார்த்தால் அது நடப்பதாகத் தெரியவில்லை. அவளுக்கு மனதில் ஏதோ பயம் இருப்பதாகவே அவனுக்குப் பட்டது. அதை அவள் மனதில் வைத்து மாய்ந்து கொண்டிருந்தாள். அவள் எதற்காகப் பயப்படுகிறாள்? கலங்கு கிறாள்? பிள்ளைப் பேற்றை எண்ணியா? இல்லை. இது அண்மை யில் வந்த கலக்கம். இதற்கு முன் அவள் இத்தகைய பயத்தை வெளியிட்டதே யில்லையே அப்படியானால். எதை எதையோ அவன் எண்ணிப் பார்த்தாலும், அந்தக் குருவி முட்டை உடைந்ததன் பின்பு தான் உஷாவினிடத்து இந்த விசித்திரமான மாற்றம் ஏற்பட்டது என்பதை அவன் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவளாகவே அதைப்பற்றிக் கதைக்காவிட்டால் அதைப்பற் றிப் பேசி அவளைக் கலவரப் படுத்த அவன் விரும்பவில்லை. பிரமை பிடித்தவள் போல் அவள் யோசனையில் ஆழ்ந்து விடுவதும், அவள் கண்களின் ஆழத்தில் தோன்றும் அச்சத்தின் நிழலும் அவன் நெஞ்சைப் பிழிந்தன. அவள் மனதை அரிப்பது தான் என்ன? சந்திரன் ஒரு முடிவுக்கு வந்தான். அவளும் ஒன்றும் சொல்கிறா ளில்லை. அவனும் பேசாதிருந்து விட்டால் அவள் மனதில் விழுந்த விஷ விதை வளர்ந்து விருட்சமாகிவிடும். 'உஷா, இப்படி வாவேன். ஏன் ஓடி ஒடிப் போகிறாய்?
நான் ஓடவில்லை. வேலைதான் என்றவள் சிரித்தாள். ஆனால் அவள் தன்னுள் ஒடுங்கி ஒதுங்கியிருப்பது போல் உணர்ந்தான் சந்திரன்.
'ஒன்றுமில்லை, எனக்கு என்ன குழந்தை வேண்டுமென்றும் விரும்புகிறேனென்று ரவி கேட்டான்'
'நீங்கள் என்ன சொன்னீர்கள்? ஒதுக்கத்தையும் மீறி ஆவல் எழுத்தது.
எனக்குப் பெண் குழந்தை தான் வேண்டுமென்றேன்"
ஏன் அப்படி?
"ஏனா? அப்படித்தான். அது உன்னைப் போலவும் இருக்க வேண்டும். அவள் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டாள்.
13

Page 14
அன்றிரவு சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு உணர்வு விழிப்பூட்டியது. கண்களைத் திறந்தான். உஷா கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தாள். சந்திரன் கையை நீட்டி மேஜை விளக்கைப் போட்டான்.
'ad lost... என்னசெய்கிறது? உஷா சட்டென்று போர்வையை இழுத்துக் கொண்டு படுத்துக்கொண்டாள்.
'ஒன்றுமில்லை" சந்திரன் முழங்கையில் எழுந்து சாய்ந்து கொண்டான். மேஜை விளக்கின் ஒளியில் அவள் முகம் வெளிறித் தோன்றியது. ரத்தமற்ற முகத்தில் கண்கள் இரண்டும் இருட் குளங் களாய்த் தோன்றின.
'உடம்பு ஏதாவது செய்கிறதா? இல்லை
"ஏதாவது கனாக் கண்டாயாP என்றான் சந்திரன்.
"ஆமாம்". ஏதோ ... ஏதோ கனாக் கண்டேன்’
"இதோ பார் உஷா. உன் மனதில் ஏதாவது இருக்கிறதா? என்னிடம் சொல்லக்கூடாதா? சந்திரன் மெதுவாகக் கேட்டான். உஷா அவனையே வெறித்துப் பார்த்தாள். அவள் தன் பாதுகாப்புகளைத் தளர்த்திவிட்டுப் பலவீனங்களை மேலெழ விட்ட நிலையில் அவளை அவன் கண்டுகொண்டான். அவள் மனம் மறுக்கத் திராணியற்றுத் திறந்துகொண்டது.
'குழந்தை. நல்லபடியாகப் பிறந்துவிடும் இல்லையா?. நல்ல படியாகக். குறையில்லாமல்." அவள் குரல் நடுங்கியது.
'உஷா, ஏன் இப்படிக் கலவரப்படுகிறாய்? நீ பயப்படும்படி யாக எதுவுமே நடக்காது. இதோ பார்! நீ அறிவுள்ளவள் உஷா. அச்சத்திற்கு ஒரு நாளும் இடங்கொடுக்கக்கூடாது என்று உனக்குத் தெரியாதா? அதைப் போல் உயிர்க் கொல்லிவேறு எதுவுமே இல்லை. உனக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா? நான் சொல்கி றேன் எதுவுமே நடக்காது" சந்திரன் அழுத்தமாய்ப் பரிவுடன் பேசி 6T60.
"ஆனால். ஏன். ஏன். தனக்குத் தான் அரற்றினாள். உஷா கண்களை மூடினாள். உடனே அக்காட்சி எழுந்தது. நொறுங்கிய முட்டைக்கோது. கருவாய்க் கிடந்த கோது விட்டுப் பிரியாது கூழாகிக் காய்ந்து விட்ட உயிரின் துகள்கள் மஞ்சளாய்ச் சிந்திக்கிடந்தன.
14

அதுவே கண்ணை மூடினாலும் திறந்தாலும் நித்தம் அவள் முன் னெழும் காட்சி. சந்திரன் பரிவுடன் அவள் கன்னத்தை வருடினான். அவனுக்குப் புரிந்து விட்டது. அவன் மெல்லக் கேட்டான்.
"உனக்கு அது எப்படிக் கிடைத்தது உஷா? அவள் துணுக் குற்றாள். வெடித்து விடுவது போல் அவள் இதயம் அடித்துக் கொண்டது. தைரியத்தையும் பலத்தையும் அவனிடமிருந்து பெற்றுக் கொள்வது போல் சந்திரனின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். பின் மெதுவாக, "எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும். வீட்டு வெளிச் சுவரில் கரிக்குருவி கூடு கட்டியிருந்தது. ஒரு நாள் குருவி இல்லாத போது அண்ணை ஏணி வைத்து ஏறிப்பார்த்தான். நாலைந்து முட்டைகள் இருந்தன. எடுத்துவந்து விட்டான். அதில் நான் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அம்மா கண்டு ஏசியதில் அண்ணை மற்ற முட்டைகளைக் கூட்டில் திருப்பி வைத்துவிட்டான். ஆனால் நான் - நான் எடுத்ததை வைத்திருந்துவிட்டேன்' அவள் நிறுத்தினாள்.
'அவ்வளவு தானே உஷா, அதோடு விஷயம் முடிந்து விட்டது. இதில் பயப்பட என்ன இருக்கிறது? அதோடு அன்று நடந்த சம்ப வதிற்கும் உனக்கும் ஒரு தொடர்புமில்லை.
'அதெப்படி முடியுமத்தான்?
"இதோ பார். இன்றிருக்கும் நீ வேறு உஷா, அன்று அந்த முட் டையை எடுத்தவள் வேறு உஷா, அவள் செயலுக்கு நீ பொறுப்பாக (LpLy-ul D/T?"
'குழந்தையோ பெரியவளோ இருவரும் நான்தானே?
'இல்லை உஷா, குழந்தையின் மனநிலைக்கும் பெரியவர்களின் மனநிலைக்கும் வேற்றுமையுண்டு. ஒரு குழந்தைக்குத் தன்னளவில் உணர்ச்சிகளை உணர்ந்து வெளிப்படுத்தும் தன்மையே உண்டு. ஆனால் பெரியவர்களுக்கு உணர்ச்சிகளை மட்டுமன்றிப் பிறரின் உணர்ச்சிகளையும் உணரும் ஆற்றல் உண்டு. இதோ பார். நீ குழந் தையாய் இருந்தபோது குயில் கூவும் போதெல்லாம் வேடிக்கையாய் பதிலுக்குக் கூவி இருக்கிறாய் தானே? ஆனால் அன்று விஜி அப்ப டிச் செய்தபோது, அந்த அப்பாவிக் குயிலை ஏன் ஏமாற்றுகிறாய்? என்று நீ அவளைக் கடிந்து கொள்ளவில்லையா? குழந்தைகளின் உணர்ச்சிகள் முதிராதபடியால் அவர்களுக்கு இதை எல்லாம் உணர முடிஎதில்லை. ஆகையால் குழந்தைகளின் செயல்களுக்குப் பெரிய வர்களின் நிலைப்படித் தீர்ப்புக்கூற முடியாது உஷா. உன் மனதில் தோன்றியிருப்பது வீண் பிரமை சந்திரன் அவள் கண்களை ஆழ்ந்து
15

Page 15
நோக்கினான். அவற்றுள் நம்பிக்கை இல்லை. ஆனால் எங்கோ ஆழத்தில் ஐயத்தின் சாயை காட்டியது.
'உஷா, பைத்தியக்காரத்தனமாய் எல்லாம் யோசிக்காதே. படுத் துத் தூங்கு சந்திரன் படுத்துக்கொண்டான். மனிதமனம் எவ்வளவு விசித்திரமானது என்று நினைத்துக்கொண்டான். அறிவுக்கும் அறியா மைக்கும் இடையேயுள்ள எல்லைக்கோடுதான் என்ன? உஷாவின் போக்கு அவனுக்கு அதிசயமாகவே இருந்தது. உஷா படித்தவள், பட்டதாரி, ஆழ்ந்த அறிவுள்ளவள், ஆராய்ந்து அறியும் மனமுள்ள வள். அப்படிப்பட்டவள் இப்படிப் பேதையாய் மூட நம்பிக்கையின் பிடியில் அகப்பட்டு அஞ்சித் தத்தளிக்கிறாளே! அதற்குக் காரணம் கருவுற்றுள்ள அவளின் பலவீன நிலைதானே? அல்லது எந்த அறி வாளியும் மூட நம்பிக்கைகளின் பிடியிலிருந்து முற்றாய் விடுபடுவ தில்லையோ?
குளவி ஒன்று அங்குமிங்கும் பறப்பதை அண்ணாந்து பார்த்த வாறு நின்றாள் உஷா.
'இதென்ன உஷா, இப்போதான் சிறுபிள்ளைபோல் வண்டு பறப்பதைப் பார்த்துக்கொண்டு நிற்கிறாய்? என்றான் சந்திரன்.
சும்மா இருங்கள். குளவியொன்று கூட கட்டப் பார்க்கின்றது அதுதான்."
சந்திரன் துள்ளியெழுந்தான். "என்ன குளவியாP விடாதே! துரத்து! ஷ! உஷா அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
"சும்மா இருங்கள். அதைக் கலைப்பது பாவம். அது கூடு கட் டட்டும்.
"சரிதான் இனி அடுத்தது பாம்பு வந்தால் அடிக்காதீர்கள் அது கடிக்கட்டும் என்று சொல்வாய் போலிருக்கே" என்றான்.
“உங்களுக்கென்ன் தெரியும். அக்கா கருவுற்றிருக்கும் போது வீட்டில் குளவி கூடு கட்டியிருந்தது. அத்தான் ஒரு நாள் கூட்டை உடைத்து விட்டார். அக்காவுக்குக் குறைப்பிரசவம் ஆனதுதான் மிச் சம் என்று படபடத்தாள் உஷா.
"அது சரி உஷா, உன் அக்கா டாக்டராச்சே, அவள் கருவுற்றி ருந்த போதும் நோயாளிகளைக் கவனித்து வந்தாளே. தினமும் நோயையும் நொடியையும் பார்த்தாளே. ஆனால் அவள் குழந்தைகள் இரண்டும் அழகாய் உருப்படியாய் பிறக்கவிலையா? அதற்கென்ன
16

சொல்கிறாய் அவனை அடியுண்டவள் போல் நிமிர்ந்து பார்த்த உஷா மெல்லத் திரும்பி நடந்தாள்.
நாட்கள் வேகமாய் மறைந்தன். உஷாவின் பயப்பிராந்தியோ, மனஉளைச்சலோ மறைவதாயத் தெரியவில்லை. சில வேளைகளில், அவள் தன்னை மறந்த நேரங்களில் பழைய உஷா தோன்றுவாள். ஆனால் எதிர் பாராத ஒரு சொல் அல்லது சைகை அவளை மீண் டும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். பிரசவத்திற்கு நாள் நெருங்க நெருங்க உஷாவின் மனச் சுமை அவளைக் கூடக் கூட அழுத்து வதைச் சந்திரன் உணர்ந்தான். அவள் தவிப்பதையும் அச்சத்தையும் உணர்ந்தான். ஆனால் அதைத் தீர்க்க என்ன செய்வதென்றே அனுத் குத் தெரிய வில்லை. அ61ள் ஏதேதோ பயங்கரக் கற்பனைகளின் பிடியில் அகப்பட்டு உழன்றாள். சந்திரன் செய்வதறியாது தவித் தான.
உஷா அறை மேஜயில் ஒரு சிறிய கிருஷ்ணன் பொம்மை வைத் திருந்தாள். தவழும் நிலையிலுள்ள பாலகிருஷ்ணனின் வடிவம் அது. இரவில் அந்த விக்கிரகத்தைப் பார்த்தவாறே தூங்கிவிடுவாள். காலையில் விழிக்கும் போது அந்த விக்கிரகத்தில் தான் விழிப்பாள். அன்று காலை அதைத் துடைத்து விட்டு வைக்கும் போது சந்திர னின் கைக்கடிகாரத்தின் வார்நுனி அதன் அடியில் அகப்பட்டு விட் டதை அவள் .கவனிக்கவில்லை. அவள் வைத்துவிட்டு அப்பால் செல்லவும் சந்திரன் கடிகாரத்தை எடுக்கவும் சரியாயிருந்தது. அவன் கடிகாரத்தை எடுக்க அதனோடு சேர்ந்து இழுபட்ட பொம்மை நிலத்தில் விழுந்து உடைந்தது. விறுக்கென்று திரும்பிய உஷா கத்தி விட்டாள்.
"ஐயோ உடைத்துவிட்டீர்களே!"
தட்டுப்பட்டு விழுந்துவிட்டது. உஷா என்றான் சந்திரன், ஆனால் அவள் அவன் வார்த்தைகளைக் கவனிக்கவில்லை. பெரும் விம்மல்கள் அவள் நெஞ்சைப் பிளந்தன.
'நீங்கள். நீங்கள் தட்டிவிட்டீர்களே நீங்கள் தட்டிவிட்டீர் களே." என்று திணறிய உஷாவின் உடலை ஈட்டி போல் ஊடுருவி பாய்ந்ததொரு நோ. அவள் இடுப்பைப் பிடிததுக் கொண்டு உட் கார்ந்து விட்டாள். சந்திரன் அவளிடம் ஓடினான். வேதனை பாய்ந்த அவள் விழிகள் அவன் முகத்தில் படிந்து நழுவின. 'என் குழந்தை' என முனகியவள் உணர்விழந்தாள்.
ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுத்திருந்த உஷாவின் நெஞ்சில் ஏதோ உறுத்தியது. அவள் புருவத்தைச் சுருக்கினாள். அறையினுள் நுழை ந்த சந்திரனைக் கண்டதும் வெட்கத்துடன் சிரித்தாள்.
17

Page 16
நீங்கள் விரும்பியதுபோல் பெண்தான் பிறந்திருக்கிறாள் சந்தி ரன் கண்களால் அவள் முகத்தை தேடுவதுபோல் பார்த்தான்.
"ஆமாம். நான் விரும்பியவாறே எனக்கு அழகான சின்னஞ்சிறு உஷா கிடைத்துவிட்டாள். உஷா. அவ்வளவுதானா? தயங்கியவாறு கேட்டான்.
'இல்லை. என் மனம் வெகு லேசாக இருக்கிறது காற்றுப் போல். என் மனதில் படிந்திருந்த ஏதோ நிழல் அகன்று விட்டது போல் எவ்வளவு சுகமாய் இருக்கிறது. நல்ல நித்திரையடித்துவிட்டு நீங்கள் வருமுன் தான் எழுந்தேன் தெரியுமா? இப்படித் தூங்கி வெகு நாள் போலத் தெரிகிறது" உஷா கள்ளமற்ற குழந்தை போலச் சிரித்தாள். 'இன்று வீடு திரும்பியதும் அந்தக் கோதுத் துண்டுகளை எடுத்து எறிந்துவிட வேண்டும்" என்று நினைத்துக் கொண்ட சந்தி ரன் அவளைப் பார்த்து பதிலுக்குச் சிரித்தான்.
18

அழியாப்பு கழ்
வான் முகட்டின் உச்சியைத் தொட்டுவிட்டது முழு நிலவு. ஆனால் அந்தப் புல் மேட்டில் சாய்ந்து கிடந்த அமலனோ இன்னும் அசையவில்லை. வான் வெளியிலே நிலைத்த அவன் கண்களில் ஒரு தாகம், நிறைவின்மை. ஆயிரம் கற்பனைகளை உள்ளத்திலே தோற் றித் தோற்றி அழித்தும் அவன் தேடிய பூரணத்துவம் கிட்டவில்லை. சிறிது தூரத்தில் அவனையே பார்த்துக் கால் கடுக்க நின்ற மது ராவின் பொறுமை எல்லையற்றதாP வெகு நேரமாய் நிற்கிறாள். அவள் வரவை உணர்ந்து, முகம் மலரத் துள்ளி எழுந்து, "உனக் காகத் தான் காத்திருந்தேன் மதுரா" என்றெல்லாம் சொல்லுவான் என்றெண்ணி மகிழ்ந்து நின்றாள். ஆனால் அமலன் அவளை எங்கே கவனித்தான்? பொறுமை யிழந்த மதுரா தானாகவே அமல னுக்கு அருகில் வந்து அமர்ந்தாள். ஒரு நொடி அவளை நோக்கிய அமலனின் விழிகள் மீண்டும் நிலவில் நீண்டு நிலைத்தன.
"அமலா, விழிதேயும் படி பார்க்க அந் நிலவில் என்ன அற்பு தத்தைக் கண்டாய்?"
"என் மதுராவின் வடிவழகைக் கண்டும் உன் முகத்தைக் காட்ட என்ன தைரியம் உனக்கு என்று கேட்டுக் கொண்டிருந்தேன்", என்று சொல்லுவான் என்று மதுரா நினைத்திருந்தால் ஏமாற்றமே அடைந்தாள்.
"மதுரா, இவ்வுலகிலே ஆதி மனிதனும் இந் நிலவைத் தான் கண்டு களித்தான். அதே நிலவு இன்றும் ஒளி வீசுகிறது. நாளையும் ஒளி வீசும். இந்த நிலவைப் போல’ நானும் நிலைபெற வேண்டும். தேய்ந்து, மாய்ந்து, வளர்ந்து நிறையும் நிலவாக அல்ல. தேயாத இன்றைய முழு நிலவாக உலக வானிலே அமலநாதனின் உருவம் நிலைக்க வேண்டும் மதுரா" தொடர்ந்து ஏக்கப் பெருமூச்சு. யார்? மதுராவா? அமலனாP மதுரா அமலனை எண்ணி ஏங்கினாள். அமலன் அமரத்துவத்தை எண்ணி ஏங்கினான். அமலனின் பிரச் சினை இதுதான். எப்போது பார்த்தாலும் இதே பேச்சுத் தானா? தூக்கத்திலும் விழிப்பிலும் அவன் உள்ளத்தை ஆக்கிரமித்த எண்ணம் இதுதானா? அவன் உள்ளத்திலே ஆட்சி புரியக் கனவு கண்ட மது ராவுக்குத் தோல்விதானா? அமலனின் விபரீத ஆசையை- அவளைப் பொறுத்த அளவில் விபரீத ஆசைதான்- அறிந்து கொண்ட நாள்
19

Page 17
முதலாக அவனை நோக்கி ஓடும் தன் உள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வேறு விழியில் செலுத்த எவ்வளவோ முயன்றாள் மதுரா. மதுரா பெண்மையின் முழு நிறைவையும் பெற்று வாழ விரும்பினாள். ஆனால் தன் உள்ள உணர்ச்சிகளுக்கு அணை போட வழியறியாது தவித்தாள். எப்போதாவது அமலனின் வாயிலிருந்து உதிரும் அன்பு மொழிக்காகச் சாதகப் பட்சி போல் தவங் கிடந்தாள். அமலனுக்கு அவள் மேல அன்பு இல்லை யென்று அல்ல. மதுராவிடம் அவ னுக்கு அன்பு, பற்றுதல் எல்லாம் உண்டு. ஆனால். அவன் லட்சி யத்தின் முன்?. அவன் இதயதாகத்தின் முன்?. மதுராவுக்கு ஆத்தி ரத்தில் உதடுகள் துடித்தன.
"அமலா, இத்தனை இளம் வயதிலேயே குருதேவரே போற்றும் படியான உயிர்ச் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறாய். உன் வாழ்க் கையே உன் முன் விரிந்து கிடக்கிறது. உன் கை உளிக்கு ஓய்வு கொடுக்கப் போகிறாயா என்ன? நீ விட்டுச் செல்லும் சிற்பச் செல் வங்களில் நீ என்றும் வாழ்ந்து கொண்டிருப்பாய். உன் லட்சியம் நிறைய வில்லையாP”
அமலன் திரும்பாமலே பேசினான்.
"மதுரா, நதியின் போக்கிலே நிமிர்ந்து நிற்கும் குன்றும் நதிப் பெருக்கால் அரிக்கப்பட்டுக் காலக் கிரமத்தில் தேய்ந்து தேய்ந்து நதிப் படுகையில் மறைந்துவிடும். அப்படித்தான் இச் சிற்பங்களும்! கால வெள்ளத்தில் கரையாத சின்னத்தை, உலகம் உள்ளளவும் என் னை வாழவைக்கும் சின்னத்தை நான் சமைக்க வேண்டும் மதுரா! அமலநாதன் என்றொருவன் வாழ்ந்தான் என்பதை உலகம் மறந்து விடுமோ என்று நினைக்கவே என் மனம் நடுங்குகிறது. நான் வாழ வேண்டும் மதுரா வரலாற்றிலே நான் வாழ வேண்டும்" அமலன் தன் இதய தாபத்தைக் கொட்டித் தீர்த்தான்.
"அமலா, உனக்குச் சதா இதே நினைவு தானா? வெறி தானா? ஆம் அமலா! இது உன் கண்களைத் திரையிட்டுத் தடுமாறச் சொய் யும் வெறிதான். இந்த வெறியிலே உனக்கு எதுவுமே லட்சிய மில் லையாP. நான்கூட லட்சிய மில்லையாP" மதுராவின் உள்ள ஆதங் கம் பெண்மையின் கட்டுப்பாட்டையும் மீறி எழுந்தது.
"நீ கூட லட்சிய மில்லைத்தான் ஆ1. மதுரா." சொல்லிக் கொண்டே திரும்பிய அமலன் சட்டென்று நிமிர்ந்தான். அவன் உள்ளத்தில் ஏதோ வொரு உணர்ச்சி பொங்கி எழுந்தது. மதுரா எவ்வளவு அழகாக விளங்கினாள். நில வொளியைத் தூரிகையில் குழைத்துத் தீட்டிய சித்திரம் போல் மதுராவின் முகம் பொன்னிறம் வீசியது. அதிலே இருட் குவளையென இரு விழிகள். கனியிதழ்கள்
20

மெல்லத் துடித்தன. மெல்லிய, நீண்ட மென்கழுத்து இளமையின் இன்பமென ஏறெடுத்து நிற்கும் கனிமார்பு அத்தனையையும் கண்க ளால் பருகினான்.
"மதுரா எவ்வளவு அழகாக இருக்கிறாய்! அமலன் அவள் கையைப் பற்றி முரட்டுத்தனமாக இழுத்தான். மெல்ல மெல்ல அவன் முகம் குனிந்தது. மதுராவின் கண்கள் இயல்பாக மூடின. இயற்கையே ஒரு கணம் இயக்க மிழந்து நின்றது போல். ஆனால், பாவம் மதுரா! அவள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அமலனை ஏதோ ஓர் உணர்வு உந்தியது. அவன் விரல்கள் துடித்தன. துள்ளி யெழுந்தான்.
"மதுரா, இந்த அற்புத அழகு மறைந்து விடுவதா?." அமலe மதுராவின் கையைப் பற்றி அவளைத் தரதரவென்று இழுத்து கொண்டு ஓடினான். அவன் குடிசையின் பின்புறத்தில் முடிந்ததும் முடியாததுமான சிற்ப வடிவங்களும் வெறும் பாறைகளும் கிடந்தன. அங்கு வந்ததும் தான் அமலன் நின்றான். V
“இப்படி உட்கார் மதுரா" என்று விட்டுத் தன் உளியை எடுத் தான். மதுராவின் ஏமாற்றம் ஆத்திரமாயக் குமுறியது.
"முடியாது அமலா! நான் மாட்டவே மாட்டேன்!”
"மதுரா, எனக்காக இந்தச் சிறு உதவி G)&Fuiju LD/TL'LITusTP” மதுரா அவனை ஏறிட்டுப்பார்த்தாள்.
"எதற்காகச் செய்ய வேண்டும் அமலாP எனக்கென்று உன் எண்ணத்தில் என்றாவது இடம் கொடுத்திருக்கிறாயா? உனக்கு நான் ஏன் உதவ வேண்டும்?" அமலனின் கை மெல்ல அவள் தோளை வளைத்து அணைத்தது.
"மதுரா, இது என்ன குழந்தைத் தனம்? என் உள்ள அந்தரங்க மெல்லாம் உன் ஒருத்திக்குத் தானே சொந்தம்? நீயே என்னைப் புரிந்து கொள்ள மறுத்தால்?. மதுரா எனக்காக”.
மதுரா நெட்டுயிர்த்தாள்.
"எப்படியும் உன் உள்ளத்திலே எனக்கு இரண்டாம் இடம் தானே அமலாP" மதுரா நிலவொளியில் தரையில் அமர்ந்தாள். நில வின் பாலொளி மதுராவிற்கு ஓர் அமானுஷிகத் தன்மையை அளித் தது. அமலன் செதுக்கலானான். மதுரா அவனையே கண் கொட்டா மல் பார்த்திருந்தாள். மெல்ல மெல்ல அவள் உளத்தின் தாகம்,
21

Page 18
ஆதுரம் எல்லாம் வாடும் உதடுகளில், ஏங்கும் கண்களில், பிரதி பலிக்கலாயிற்று . அமலன் செதுக்கிக்கொண்டேயிருந்தான்.
முடிந்த சிற்ப வடிவின் முன் அமலன் அமர்ந்திருந்தான். பின் புறமிருந்து அவன் தோள்களில் இரு மெல்லிய கரங்கள் பதிந்தன. அமலன் திரும்பாமலே பேசினான்.
"மதுரா, பார் என் படைப்பை !” அப்போதுதான் மதுரா சிற் பத்தைப் பார்த்தாள்.
"ஆ! நான் "
"ஆமாம் மதுரா! நீ தான் ! நீயோ தான்! என் ஜீவ சிருஷ்டி!" அமலன் எக்களித்தான். அவன் முகத்திலே கர்வம் தெறித்தது. உண்மையில் அது வெறும் சிற்பமாக இல்லை! வெறும் கல்லாக இல்லை. அந்தச் சிற்ப வடிவிலே மதுராவின் உருவத்தை மட்டு மல்ல, அவள் உயிரை, உணர்வை அமலன் சிறைபிடித்து விட்டான். மதுராவே அமர்ந்திருப்பது போல் ஒரு பிரமை. பட்டப்பகல்தான்! ஆனால் அந்தச் சிற்பத்தைப் பார்க்கப் பார்க்க அமலன் அதைச் செதுக்கிய சூழல் அந்த வசீகர நிலவொளி, அது எழுப்பிய மாய உணர்வு எல்லாமே தோற்றமாயிற்று . மதுரா உதட்டைக் கடித் தாள். சிற்ப வடிவத்தின் முகத்தில் தெரிந்த ஆழ்ந்த ஏக்கமும் தாப மும் அவள் முகததிலும்!. அந்தச் சிற்பத்திலே கலை அம்சத்தைக் காணும் அமலனின் உள்ளம் அதிலே தெரியும் பெண்ணின் உள்ளத் தைக் காணும் உணர்வற்றதா? அமலா என்று அழுதது அவள் உள்ளம். கண்களை நீர் குருடாக்க மதுரா திரும்பி ஓடினாள்.
அதற்குப்பின் ஒரு வாரமாக எப்படியோ அவள் அமலனின் குடிசைப் பக்கம் போகாமலே இருந்தாள். ஆனால் அமலன் அவளைப்பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரிவில்லை. அன்று அந்தி மாலையின் ஏகாந்தத் தோடு தன் உள்ளத் தனிமையை உறவு பூண விட்டுத் தன் குடிசை வாசலில் அமர்ந்திருந்தாள் மதுரா. தொலை வில் ஓர் உருவம் விரைந்து வந்து கொண்டிருந்தது. ஆமலனா? ஆமாம், அமலன் தான்! அவளைத் தேடி வருகிறான்! உள்ளம் துடிக்க அவள் இருந்தாள். அமலன் அவளிடம் தான் வந்தான் ஆனந்தப் பரவசனாய் வந்தான்.
"மதுரா என் கனவு நிறைவேறும் வழி கண்டுவிட்டேன்! கால ஏட்டிலே என் பெயரைப் பொறிக்க வழி கண்டுவிட்டேன்! கேள்விப் படவில்லையா நீ? மதுரா, எங்கள் மாமன்னர் ராஜராஜ சோழர் தஞ்சையிலே திருக்கோயில் எடுக்க முடிவு செய்துள்ளார். அக் கோயில் கட்டும் பெறுப்பை ஏற்றுக் கொள்ளத் தமிழ் நாட்டிலே மிகச் சிறந்த சிற்பியைத் தேர்ந்தெடுக்கப் போகிறாராம். அதற்காகச்
22.

சிற்ப விழா நடத்த விருக்கிறார் மாமன்னர்."
மதுரா இடைமறித்தாள்.
"கேள்விப்பட்டேன். ஆனால் அதற்கென்ன அமலாP”
"என்ன மதுரா, புரியவில்லையா? தஞ்சைக் கோயிலை என் பொறுப்பில் மட்டும் மாமன்னர் கொடுத்தாரானால். தஞ்சைக் கோயி லைக் கட்டிய சிற்பி அமலநாதனின் புகழ் கோயிலோடு வாழுமே! வரலாற்றில் இடம் பெறுமே!"
"அமலா, நீ வெறும் கானலை நம்பி ஓடுகிறாய்!” அமலன் சிரித்தான்.
"பைத்தியக்காரி கானல் நீராய்ச் சாரமற்று மறைந்துவிடக் கூடிய வாழ்வை நிலையுள்ள தொன்றாக்கத்தானே போகிறேன். இன் னும் ஒரு திங்களில் சிற்பவிழா மதுரா. நாளை உதயத்தில் நான் உறையூருக்குப் பயணமாகிறேன்." அவள் மெளனத்தை அப்பொழு துதான் உணர்ந்தவன் போல் நிறுத்தினான்.
“aT6ಕT657 மதுரா, உனக்கு சந்தோஷமாக வில்லையா?” “போகிறாயா அமலா? நீ போகத்தான் போகிறாயா?" மெல்ல முணுமுணுத்தாள். பின்பு நிமிர்ந்து தயக்கத்தோடு கேட்டாள்,
"அமலா,. நீ அன்று செதுக்கினாயே என்னைப் போலொரு சிற்பம்! அதை எனக்குத் தந்துவிட்டுப் போகிறாயா?" அமலன்
உரத்துத் சிரித்தான்.
"அதைத்தானே போட்டியில் சேர்க்கப்போகிறேன் மதுரா அந்த ஒரு சிற்பம் தானே எனக்கு வெற்றியளிக்கப் போகிறது. போய் வருகிறேன் மதுரா"
"என்னை மறந்துவிட மாட்டாயே அமலாP." அமலன் ஒரு கணம் அவளைக் கனிவோடு நோக்கினான்.
"இல்லை மதுரா மறக்க மாட்டேன்." திரும்பி நடந்தான். இருள் அவன் உருவை விழுங்கிய பின்னும் மதுரா அவன் போன வழி யைப் பார்த்திருந்தாள்.
சிற்பப் போட்டி முடிந்து விட்டது. ஆயிர மாயிரம் சிற்பங்க ளில், வெவ்வேறு கற்பனைக் கோணங்களில், மாமன்னரைக் கவர்ந் தது அமலநாதனின் ஜீவ சிருஷ்டிதான். அமலநாதன் அதிசயிக்க வில்லை. அது அவன் எதிர்பார்த்த முடிவுதான்.
23

Page 19
"அமலநாதா, இளைஞனாயிருக்கிறாயே! தஞ்சையின் கற்கோயில் கலைக் கோயிலாய்த் திகழ வேண்டும். உன்னிடம் அந்தக் கலை பரிபூரணமாய் நிறைந்திருக்கிறது. எத்தனை காலமானாலும் கவலை யில்லை. அவகாச மெடுத்து நீ எனக்கொரு அற்புதக் கலைச் சின் னத்தை ஆக்கித்தர வேண்டும்." அமலன் உடம்பை வளைத்து வணங் கினான்.
"மகாப்பிரபு, என் பாக்கியமே பாக்கியம்!”
தஞ்சையில் உருவாகப் போகும் கோயிலின் திட்டம் அமலனின் கற்பனையில் உருவாக ஒரு வருடமாயிற்று. கோயிலின் ஒரு கல் கூடத் தவறாது அவன் திட்டத்தில் இடம்பெற்றது. திட்டத்தை மன்ன ரிடம் சமர்ப்பித்தான். ராஜராஜசோழருக்கு ஆத்ம திருப்தி. கோயில் வேலைகள் ஆரம்பமாயின. ஆயிரமாயிரம் சிற்பிகள் அமலநாதனின் கீழ் ஓயாது ஒழியாது உழைத்தார்கள். மெல்ல மெல்ல பிருகதீஸ்வ ரரின் ஆலயம் உருவாயிற்று. ஆயிரமாயிரம் கைகள் ஆக்கவேலையில் பங்குபற்றின. அவற்றில் இரண்டு தான் அமலனின் கைகளும். ஆனால் அவன் ஒருவனின் கற்பனை தான் அந்த ஆலயத்தைத் தோற்றுவித்தது. நாட்கள் நலிந்து, மாதங்கள் தேய்ந்து, வருடங்கள் நழுவி ஓடின. ராஜராஜன் சொல்லி யிருந்தான் "எத்தனை கால மானாலும் கவலை யில்லை, என்று. அமலன் தன் கலைக் கனவு களை எல்லாம் ஊட்டி வளர்த்தான் ஆலயத்தை. அவனை வாழ் விக்கப் போகும் ஆலயம் அல்லவா? எத்தனை வருடங்கள் உருண்ட னவோ அமலன் அறியான். மன்னர் அடிக்கடி ஆலயத்தைப் பார்வையிட்டுச் செல்வார். ஒரு நாள் திருக்கோயில் பூர்த்தி பெற்று விட்டது என்று மன்னருக்குச் செய்தி வந்தது. வானளாவும் கோபுரத்தை அண்ணாந்து நோக்கிய மன்னரின் மனம் பூரித்து விம் மியது.
"அமலநாதா, நீ மகாசிற்பி. கோபுரத்தின் சிகரமாய் அமைந்த விமானம் கலையின் சிகரத்தையல்லவா உணர்த்துகிறது," என்றார் மன்னர்பிரான். கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தினார் ராஜராஜ சோழர். அப்பொழுது அமலநாதனையும் கெளரவித்தார்.
"இந்தக் கோயிலை அமைத்துதவிய அமலநாதனுக்குச் சிற்பச் சக்கரவர்த்தி என்னும் விருதை வழங்குகிறேன்," என்று ராஜராஜர் கூறியதும் மக்கள் ஆரவாரித்தனர். அமலநாதன் தன்னையே மறந் தான். விருரை நினைத்தல்ல. "இந்தக் கோயிலை அமைத்துதவிய அமலநாதர்” என்ற சொற்கள்தான் அவனைக் கிறங்கச் செய்தன. மன்னரே கூறிவிட்டாரே! இனி என்ன?
அமலநாதன் காஞ்சியிலே தங்கிவிட்டான். புகழ்ப்போதையிலே மூழ்கித் திளைத்தான். தஞ்சை ஆலயம் உருவாகி நான்காவது வருடம்
24

மாமன்னர் ராஜராஜசோழர் புகழுடம்பெய்தினார். இளவரசர் ராஜேந் திரர் அரியணை ஏறினார். காலம் கனவேகமாய் ஓடி மறைந்தது. இப்பொழுது அமலநாதருக்கு எழுபது வயதிருக்கும். ஓய்வு பெற்று வாழ்ந்து வருகிறார். இப்பொழுது அவருக்கு வாழ்க்கையின் எல்லைக் கோட்டை மிதிக்கும் உணர்வு தோன்றுகிறது. கொஞ்ச நாட் களாகவே அவர் உள்ளத்தை ஓர் ஆசை அரித்துவந்தது. மீண்டு மொரு முறை தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்த்துவிட்டுக் கண் களை மூடவேண்டும் என்றொரு தூண்டுதல். ஒருநாள் சிஷ்யர்களி லொருவனான சுதாமனைத் துணையாக அழைத்துக்கொண்டு புறப் பட்டே விட்டார். கோயிலில் ஒரு இடம் விடாது சுற்றிச் சுற்றி வந்தார். நின்று நின்று கண்களால் பருகினார். பழைய நினைவுகள் பசுமை மாறாது மனதில் கூடின. ஒரு படியாக அமலநாதர் வெளிப் பிரகாரத்திற்கு வந்து கோயில் கோபுரத்தையும் விமானத்தையும் நிமிர்ந்து நோக்கினார். அவர் உள்ளப் பெருமிதமும் அப்படியே நிமிர்ந்து வளர்ந்தது. அருகில் மூன்று நான்கு இளைஞர்கள் கூடி நின்றனர். அமலநாதருக்குத் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. தன்பெருமையைப் பிறர் வாயிலிருந்தே கேட்டுவிடும் ஆவல். அவர் களை நெருங்கினார்.
"ஐயா, இந்தக் கோயிலை யார் கட்டியது, தெரியுமா?" என்றார் அவ் விளைஞன் சிரித்தான்.
"இவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டீர் பெரியவரே, இது தெரியாதா? ராஜராஜ சோழர் கட்டிய கோயிலாக்கும் இது!” அமல நாதருக்குத் தஞ்சைக் கோபுரமே தலையில் சரிந்தது போலிருந்தது. வெறும் ஏமாற்றமாP அவர் மனோரதம் அவர் கண்முன்னாலேயே துாள் தூளாகக் கண்டார். எப்படியெல்லாம் மனப்பால் குடித்தி ருந்தார்.
"சிச்சீ முட்டாள் ராஜராஜ சோழன் கோயிலைக் கட்டுவித்தனர். கட்டியவன் நான் தெரியுமா? இந்தக் கோயிலைக் கற்பனைக் கரு விலே காத்து, வளர்த்து, ஆக்கிய சிற்பி நான், தெரியுமா? சிற்பச் சக்கரவர்த்தி அமலநாதன் தெரியுமாP' படபடத்தார்.
“நீர் ஒருவர்தானா பெரியவரே? எத்தனையோ ஆயிரம் சிற்பிக ளின் கை உளிகள்தான் இந்தக் கோயிலை உருவாக்க உழைத்தன. அவர்கள் எல்லோருமே தத்தம் பெயர்களைப் பொறித்துவிட்டா போனார்கள்? இந்த ராஜராஜேஸ்வரம் ராஜராஜசோழன் அமைத்த ஆலயம் தான்!” அவன் போய்விட்டான். அமலநாதர் அடங்கி ஒடுங் கிப்போனார். அவர் பெருமிதமும், வீறும் போன இடம் தெரிய வில்லை. அப்பொழுதுதான் முதுமை வரப்பெற்றவர் போல் முதுகு கூனக், கண்கள் மங்க, மனமொடிந்து நின்றார். அவர் உள்ளத்திலே
25.

Page 20
ஒளிக்கீற்று போலொரு எண்ணம் ஓடியது. "தன்னைச் சிறுமைப் படுத்தி என்னைப் பெருமைப்படுத்திய மாமன்னனின் புகழ் வாழ் கிறது. இறைவா, மனிதனின் ஆணவமும் அகந்தையும் வலுவிழந்து அவன் உன்னிலே தன்னை இழந்துவிடவேண்டிய உந்தன் சந்நிதியை என் ஆணவத்தை வாழவைக்கும் கருவியாக்க முயன்றேனே! உன் னைத் தவிர நித்தியம் என் றேதுP” அமலநாதர் ஏதோ அற்புதத்தை உணர்ந்தவர் போல் நின்றார். மெல்ல மெல்ல மாண்டவர் உலகிலி ருந்து வருவது போலொரு குரல் அமலநாதரின் செவிப்புலனைத் தொட்டது.
"நீ போகப் போகிறாயா அமலா?"
"என்னை, மறந்துவிட மாட்டாயே அமலா-”
"மதுரா! மதுரா!” அமலநாதர் வாய்விட்டே கூவிவிட்டார். சுதாமன் பதறிவிட்டான்.
“சுதாமா, நான் இப்பொழுதே மதுராவைப் பார்க்கவேண்டும்! புறப்படு!”
உதயத்திலே அமலநாதர் மதுராவின் குடிசையை அடைந்தார். எத்தனையோ ஆண்டுகள் கழித்து வருகிறார். இளைஞராய், இதய மற்றவராய்ச் சென்றவர், முதியவராய், ஒரு பெண்ணுக் கிழைத்த துரோகப் பெருஞ்சுமையோடு வருகிறார். மதுரா அவரை அறிந்து கொள்வாளா? படபடக்கும் நெஞ்சோடு வாசலில் நின்று மெல்ல அழைத்தார். பதிலில்லை. திறந்த வாசலூடே எட்டிப் பார்த்தார். மதுரா ஒரு பாயில் கிடந்தாள். மதுராவா? ஆமாம். காலத்தின் கீறல் விழுந்த முகத்தோடு, முதுமையின் வற்றிய உடம்போடு மதுராதான். ஆனால் அமலநாதரின் கண்களுக்கு அந்த உருவிலும் அன்று நில வொளியில் அமர்ந்த மங்கை தோன்றினாள். அவளருகில் அமர்ந் g5IIII.
"மதுரா, மதுராவின் குழி விழுந்த கண்கள் திறந்தன.
“வந்துவிட்டீர்களா? அவள் உதடுகள் முணுமுணுத்தன. அவள் முகத்தின் சுருக்கங்களெல்லாம் நிறைந்து மலர்வது போல முகத்தி லொரு பிரகாசம். அமலநாதர் சொல்லொணாக் கசப்போடு பேசி 60TITT.
"ஆமாம் மதுரா ஊழி வரை என் புகழை நிலை நாட்டச் சென்றேன். அது ஒரு தலைமுறைக்குக் கூட வாழவில்லை யென் பதை என் காதாலேயே கேட்டுவிட்டேன்."
26

"இல்லையில்லை! உங்கள் பெயர் வாழும், தஞ்சைக் கோயி லைக் கட்டிய மகாசிற்பியென."
"இல்லை மதுரா இல்லை! தஞ்சைக் கோயிலைக் கட்டியவன் ராஜராஜ சோழன். ஒரு பெண்ணின் இதயத்திலே கோயில் கட்டி வீற்றிருக்கும் பாக்கியத்தை உதாசீனம் செய்த என்னை இவ்வுலகம் அறியவே வேண்டாம். ஒரு பெண்ணின் உள்ள உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ள முடியாமற் போன நானும் கலைஞனாP. என்னை உன்னால் மன்னிக்கத்தான் முடியுமா மதுராP மெல்ல முறுவலித்தாள் மதுரா, அவள் தலை சாய்ந்துவிட்டது. காமெல்லாம் ஏங்கி ஏங்கி நிழல் வாழ்க்கை நடத்தியவள் இனி என்றுமே அவர் நினைவில் நிழலாகிவிட்டாள். மனமொடிந்து நின்றவருக்கு மனச் சாந்தி அளித்திருக்கக் கூடியவள் மறைந்து விட்டாள். இனி அவ ருக்கு எவ்விதத்தில் நிம்மதிP அமலநாதர் அழவில்லை. அது வெறும் கண்ணிரால் கழுவிவிடும் துன்ப மல்ல.
27

Page 21
அன்பின் விலை
வாயிலருகில் முக்காலி மேல் பன்னீர்ச் செம்பு தனியே நின் றது. சந்தனக்கோப்பை தரையில் விழுந்து நசுங்கிக் கிடந்தது. அதிலி ருந்து பெருகிப் பளபளக்கும் கறுப்புத்தரையில் பெரிய பொட்டுப் போல் பரவி உறைந்துவிடட சந்தனத்தை விரிந்து, வெறித்த கண்க ளால் கட்டுண்டவள் போல் உன்னிப்பாய்ப் பார்த்திருந்த இரத்தினா சுவரோடு சுவராய் ஒருக்களித்துச் சாய்ந்திருந்தாள். அருகில், பிரம்பு நாற்காலியுள் முடங்கிக் கிடந்தார் கருணாகரர். அவரது கம்பீரமான உருவிலும் களை சிந்தும் முகத்திலும் ஒரு நொடியில் இத்தனை பெரிய மாறுதல் ஏற்படக் கூடுமா? ஒரு மனிதன் கணப்பொழுதில் மூப்படையக் கூடுமா? கூனிக் குறுகிய வடிவும், ஜீவனற்ற முகமும், மங்கிய கண்களுமாகக் கருணாகரர் உள்ளம் நைந்து, சிதைந்த கிழவராகிவிட்டார். விதியின் சூழ்ச்சிச் சுழலிலே மீட்சியின்றி மூழ் கிவிட்டார். தான் மட்டுமல்ல. தன்னோடு இரத்தினாவையும் சேர்த்து மூழ்கடித்து விட்டார். அவள் செய்யாத பாவத்திற்காக அவள் அவதி யுற வேண்டுமா? அன்றி, அவள் பாபத்தின் சின்னம் என்று சமூகம் கணித்து விட்டதால் பரிதவிக்க வேண்டியவளாP கந்தையா அந்தக் கிழம் அவர் வாழ்க்கையில் குறக்கே குறுக்கே வந்து விழக் கங்கணம் கட்டிக் கொண்டதோ என்னவோ?. கருணாகரர் இரத்தினாவைப் பார்க்கும் தைரியமற்றவராய் முகத்தை மார்பின் மேல் கவிழ்த்துக் கொண்டார். இன்னுஞ் சிறிது நேரத்தில் இரத்தினா அவரைக் கேட்கப் போகிறாள். கந்தையா நடந்துகொண்ட விதத்திற்குக் கார ணம் கேட்கப் போகிறாள். அவளுக்கு என்ன சொல்வது? தன் வாழ்க்கையின் அவலத்தை எடுத்துச் சொல்வதாP எப்படிச் சொல் வது? தன் வாழ்க்கையின் கறை அவள் மேல் படியாது இத்தனை வருஷமாகப் பாதுகாத்தும் இன்று அது அவள் வாழ்க்கையையே கண்ணிமைப் பொழுதில் கருக்கி விட்டதே! இரத்தினா, நானாவது வாழ்ந்தேன். வருட மொன்றானாலும் வான் நிறைந்த இன்பம், என் வாழ் நாள் முழுவதுமே மணக்கும் இன்பத்தோடு வாழ்ந்தோம் சரோவும் நானும். ஆனால் நீ? நீ இனி என்றைக்குமே வாழ முடி யாது இரத்தினா. உன்னை எவனும் மணக்க மாட்டான். என்று மெளனமாய்ப் புலம்பியது அவர் உள்ளம். அதிர்நது விட்ட அவர் மனதிலே சித்திரத் தொடர் போலக் கடந்த நிகழ்ச்சிகள் தோன்றின. அன்று ஞாயிற்றுக்கிழமை. விச்ராந்தியாகப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த கருணாகரரை இரத்தினா "அவர் பெற்ற பெண் தேடிவந்தாள். மேசை மேல் சாய்ந்து தன் கைவிரல் நகத்தைச் சப்பி
28

யபடி வெகுநேரம் பேசாமல் நின்றாள். அது அவளுக்கே உரித்தான பழக்கம். இரத்தினா தன் வட்டக்கரிய விழிகளைக் கூசியபடி நகத் தைச் சப்பினால், அது இரத்தினா தன் தந்தையைக் 'காக்காய் பிடிக்க ஆயத்தமாகிறாள் என்று அர்த்தம்!
“என்னம்மாP" என்று மெல்லத் தூண்டினார் கருணாகரர்.
"அப்பா. அப்பா, என் திருமண விஷயத்தில் என் விருப்பப் படி தானே நடப்பீர்கள்? சுவரைப் பார்த்துக் கேட்டாள்.
"இதிலென்ன சந்தேகம் இரத்தினா”
"அப்படியானால், நான் . ஒருவரை விரும்புகிறேன் அப்பா. அவரைக் கல்யாணம் செய்துகொள்ளத் தடையேதும்." இரத்தினா தன் விரல்களைக் கவனமாய் ஆராய்ந்தாள். கருணாகரர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.
“விவரமாய்ச் சொல்லம்மா" என்றார். இரத்தினா சொன்னாள் பூரீதரைப் பற்றி. அவன் அன்பு இதயத்தைப் பற்றியெல்லாம் சொன்னாள். தந்தை சம்மதித்தால் பூரீதர் பெண் பார்க்கத் தன் வீட் டாரை அழைத்து வருவான் என்றுஞ் சொன்னாள். கருணாகரர் மறு பேச்சில்லாமல் சரியென்றார். அதன் விளைவுதான் இப்பொழுது தந்தையும் மகளும் பேயறைந்தவர் போல் சமைந்து போய் இருந் தனா.
அன்று சரியாக ஐந்து மணிக்கு வாசலில் 'கார் வந்து நின்றது. கருணாகரர் வாசலுக்கு விரைந்தார். 'காரருகே நின்ற இளைஞன் மேல்தான் அவர் கண்கள் முதலில் விழுந்துன.
"நமஸ்காரம்” என்று கைகுவித்தான். அவன் அழகனல்ல என் பதை முதல் பார்வையில் கருணாகரர் கண்டு கொண்டார். ஆனால் அவன் முகத்தில் நிலவிய பாவம், கண்களில் தேங்கிய உணர்ச்சிஅது அவன் உள்ளத்தின் தன்மையோ, ஆத்மாவின் இனிமையோ என்னவோ-ஏதோ ஓர் உருத்தெரியாக் கவர்ச்சி மனதைக் கொள்ளை கொண்டது. அவனுடைய மெல்லிய உதடுகள் களங்கமற்ற மலரிதழ் போல இனிமையாய் மலர்ந்தன. பின்னால் அவன் தந்தைபோலும். கருணாகரர் கைகூப்பினார்.
"வாருங்கள்! வாருங்கள்!” என்று உபசரித்தார் பூரீதர் பின்னால் திரும்பினான்.
"இவர் என் தாத்தா” கடைசியாக இறங்கிய கிழவர் படியேறி
29

Page 22
நிமிர்ந்தார். அந்த முகத்தை, அந்த மனதரைக் கருணாகரர் மறக்க முடியுமா? கருணாகரரின் இதயம் ஒரு கணம் ஓய்ந்து, பின் மும்ம டங்கு வேகத்தோடு துடிக்கலாயிற்று. கழுத்து நரம்புகள் புடைத்து இறுகி, நா வரண்டுவிட்டது. நெற்றியில் வியர்வை அரும்பியது எல் லாம் ஒரு கணத்துள். கிழவர் முகத்தை முன்னே தள்ளிக் கூர்ந்து பார்த்தார். படலம். படர்ந்த பூனைக் கண்களில் திடீரென்று நினைவு பிறந்தது.
"அட பாவி! கருணாகரா! நீயாP என்ன துணிச்சலடா உனக்கு! உன் பெண்ணை என் பேரன் தலையில் கட்டவா? வாடா பூரீதரா! ஆகாதடா இந்த வீட்டுச் சம்மந்தம்! வா போகலாம்!” அவர் திரும்பிய வேகத்தில் மேஜை மேலிருந்த சந்தனக் கோப்பை அவர் கை பட்டுத் தரையில் விழுந்தது. பூரீதர் திகைத்தான். ஏதோ சொல்ல வெயெடுத் தான். ஆனால் கிழவர் அவன் தந்தை காதில் ஏதோ குசு குசுத்தார்: அவ்வளவு தான்! அவர் "வா பூரீதர்” என்று உறுமிவிட்டுக் கிழவ ரோடு காரில் ஏறிவிட்டார். பூரீதர் ஒரு கணம் கருணாகரருக்கு அப் பால் பார்த்தான். சுவரில் சாய்ந்தபடி நின்றாள் இரத்தினா. அவள் கண்கள் பூரீதரைக் கெஞ்சின. பூரீதர் மெல்லத் திரும்பிக் காரில் ஏறினான் கார் உறுமிக் கொண்டு பாய்ந்தது. இரத்தினா நிற்கச் சக்தியற்றவள் போல் சுவரோடு சாய்ந்துவிட்டாள்.
வெளியே அந்தி நிழல்கள் நீண்டு, வளர்ந்து, தேய்ந்து கவிந்து விட்ட இருளில் ஒன்றி மறைந்தன. வீடடினுள்ளும் இருள் புகுந்து பரவியது. தந்தையும் மகளும் ஒரு வார்த்தை பேசவில்லை. இடம் விட்டு அசையவில்லை. இரு இதயங்களும் அவ்விருளை வரவேற் றன. அந்த இருள் தங்கும் வரை இரத்தினாவிட மிருந்து தன் ரகசி யத்தை மறைத்து விடலாம் என்ற பைத்தியக்கார எண்ணம் கருணா கரருக்கு. உலகத்திற்கும் தனக்குமிடையே தொடர்பறுத்த அந்த இரு ளிலே, மாலை நடந்த நிகழ்ச்சி பயங்கரக் கனவுதான் என்று தன்னை ஏமாற்றிக் கொண்டாள் இரத்தினா. இருவரும் விளக்கை ஏற்றி அந்த இருளைக் கலைக்க விரும்ப வில்லை. மூலையில் பதுங் கித் தன் காயங்களை நக்கிக் கொடுக்கும் விலங்கு போல இருளின் மறைவிலே தத்தம் இதயத்தில் பட்ட காயத்தைத் தடவிக் கொடுக்க முயன்றன அவ்விரு உள்ளங்களும்.
வாசலில் சப்பாத்துச் சத்தம் கேட்டது. செருமல் கேட்டது. ஆனால் மனதை எங்கோ நிலைக்க விட்ட அவ்விருவர் செவிப்புல னிலும் அச்சத்தம் ஏறவில்லை. வாசலில் நின்ற மனிதர் இரண்டு மூன்று தடவை உரத்துக் குரல் கொடுத்ததும் தான் கருணாகரர் விழித்துக் கொண்டார்.
"யாரதுP" என்றார் கருணாகரர். பெருந் தயக்கத்தோடு பதில்
30

வந்தது.
"நான். நான்தான் . பூரீதர்."
"பூரீதரா? ஏதோ விளங்காத புதிருக்கு விடை காண்பது போலத் தடுமாறிய கருணாகரரின் மனதில் திடீரென்று உணர்வு முற்றாக விழித்துக்கொண்டது. "விறுக் கென்று எழுந்து விளக்கை ஏற்றினார். பளிச் சென்று பாய்ந்த ஒளியில் மூவரும் கண்களைக் கூசிக்கொண்டனர். கருணாகரரைப் பார்த்துத் தெளிவாகப் பேசி னான் பூஜீதர்.
"மிஸ்டர் கருணாகரர், நான் இரத்தினாவை முழுமனதோடு காதலிக்கிறேன். இரத்தினாவுக்கும் எனக்கும் கல்யாணம் கனவில் கூட நடக்கக் கூடா தென்கிறார் என் தந்தை ரத்தினாவை என் மனைவி என்ற நிலையில் வைத்து எண்ணிய பின் வேறெந்தப் பெண்ணையும் அந் நிலையில் வைத்து எண்ணுவது என் மனத் தாலும் உடலாலும் அறவே முடியாத காரியம். அதனால் தான் உங்களைக் கேட்கிறேன் மறைக்காமல் சொல்லுங்கள். என் பாட்ட னார் சொல்லுவது உண்மையாP உங்கள் வார்த்தையில் எங்கள் வாழ்வு தங்கியிருக்கிறது என்பதைக் கருதியாவது நடந்ததைச் சொல் வீர்களா? கருணாகரர் எங்கோ பார்த்தவாறு, விரக்தியோடு,
“கந்தையா தான் சொல்லியிருப்பாரே" என்றார்.
"மிஸ்டர் கருணாகரன், எந்தப் பிரச்சினைக்கும் இரண்டு வித விளக்கங்கள் இருக்கக் கூடுமல்லவா? என் தந்தையினதும், என் பாட் டனதும் வாதத்தைக் கேட்டு விட்டேன். ஆனால் உங்கள் வாதம் தான் நியாயமான தெனப்பட்டால் இரத்தினாவை நான்- இல்லை அகாரணமாய் உங்கள் உள்ளத்தில் நான் நம்பிக்கையை வளர்க்க விரும்பவில்லை. உங்கள் கதையைக் கேட்டபின் இரத்தினாவை மணப்பது என் மனச்சாட்சிக்கு விரோதமாகப் பட்டால் இரத்தினா என்னை மன்னிக்கட்டும்." பூரீதரின் குரல் இலேசாக நடுங்கியது. கருணாகரர் கதிரையில் மெல்ல உட்கார்ந்தார்.
"உட்காரப்பா பூரீதர். இவ்வளவு நாளும் நான் இரத்தினாவிற் குக் கூட இதைச் சொல்லாமல் ஒளித்துவிட்டேன். ஹராம்! பெரும் பிழை செய்துவிட்டேன். என்றோ அவளுக்குச் சொல்லியிருக்க வேண் டும்." அவரையும் மீறி அவர் கண்கள் இரத்தினாவை நோக்கின. இரத்தினாவின் ஆழக் கருவிழிகள் அவரையே வெறித்துப் பார்த்தன. வேதனை கொப்பளிக்கும் கண்கள், வெளிறி உயிரிழந்த முகம் இரத்தினாவா?. இல்லை. இது சரோவின் முகம். இருபது ஆண்டு களுக்கு முன் அன்று சரோவும் இப்படித்தான் அவரைப் பார்த்
31

Page 23
தாள். பேச்சிழந்து, ஊமையாய் அவரைப் பார்த்தாள். இதே வேத னைக் கண்களால். கருணாகரர் இதயத்தை நெருடிவிட்டார். அவர் கண்கள் பனித்தன.
"பூரீதர், இந்த என் மகளுக்காகத் தான் நான் என்றோ வெறுத் துவிட்ட வாழ்வை இன்னும் பற்றி நிற்கிறேன். இவளுக்காகத்தான் இன்று குற்றவாளிக் கூண்டில் ஏறவும் விசாரணை செய்யப்படவும் சம்மதிக்கிறேன். ஆனால். ஆனால் பூரீதர். கடவுள் சாட்சியாக நான் ஒரு குற்றமும் செய்யவில்லையப்பா. சந்தர்ப்ப வசத்தால் ஒன்று நடந்தால் நாமே அதற்கு முழுப் பொறுப்பாளிகளா? பூரீதர், அப்போது எனக்கு ஏழு வயது. மனிதச் செயல்களின் காரைணங் களை ஆய்ந்தறியும் பருவமல்ல. ஆனால், மனிதச் செயல்கள், பசு மரத்தாணி போல் மனதில் பச்சையாய்ப் பதிந்துவிடும் பருவம். என் தந்தை உல்லாசப் பிரியர்." கருணாகரர் கதை சொன்னாரா? இல்லை யில்லை, அவர் வாழ்ந்து, முடிந்து, மறந்து விட முயன்ற நாட்களை மீண்டும் வாழ்ந்துகொண்டிருந்தார். அவர் பூரீதரை மறந்தார்! இரத்தினாவை மறந்தார்! தன் நா சொற்களை உருவாக்கி உதிர்க்கும் நினைவையே மறந்தார். கருணாகரருக்கு நினைவு தெரியும் பருவம் முதல் அவர் மனதில் ஒரு விஷயம் ஆழமாய்ப் பதிந்து விட்டது. அது தன் தந்தை ஆறுமுகத்துக்குத் தன் தாயைக் கண் டாலே பிடிக்காது என்பதுதான். ஆறுமுகம் உல்லாசப்பிரியர். சிற் றின்ப உணர்வு மிகுந்தவர். அவர் மனைவியோ அதற்கு நேரெதிர். ஆனால் இதெல்லாம் இப்படி விளக்கமாகக் குழந்தை கருணாகர னுக்குப் புரியவில்லை. தன் தந்தை தாயோடு அன்பாக, இனிமை யாக ஒரு நாள் கூட, ஒரு சொல் கூடப் பேசியதில்லை. அவள் மீது எரிந்து விழுவதற்கும் திட்டுவதற்கு மட்டுமே அவளோடு பேசினார். அடிக்கடி சேர்நது இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டுப் பக்கமே வராது இருந்து விடுவார் என்பதுதான் அவனுக்குத் தெரிந்தது. கருணாகரனுக்கு ஒரு தங்கை, மூன்று வயதுக் குழந்தையும் இருந் தாள். மனைவியையும் மகளையும் விஷமென வெறுத்த ஆறுமுகத்திற் குக் கருணாகரன் மேலோ கொள்ளை ஆசை, “நீ அப்பன் அச்சில் வார்த்தெடுத்த பிள்ளையட்ா” என்று அடிக்கடி சொல்வார். கருணாச ரன் உருவத்தில், முகச் சாயலில் சரியாக ஆறுமுகத்தின் மறு வார்ப் பாகவே இருந்தான். கருணாகரனுக்கு ஏழு வயது நடக்கும் பொழுது ஒரு நாள் கருணாகரனையும் அழைத்துக் கொண்டு ஆறுமுகம் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் அவர் வீடு திரும்ப வேயில்லை. யாழ்ப்பாண மண்ணை விட்டு வெளியேறிய ஆறுமுக மும் கருணாகரனும் மறுநாள் கருணாகரன் முன்பு போயிராத ஒரு புது வீட்டை அடைந்தனர். அங்கிருந்த ஒரு பெண்ணைக் கருணாகர னுக்கு காட்டி, "இவள்தான் இனி உன் அம்மா" என்றார் ஆறுமு கம். அங்குதான் கருணாகரன் வளர்ந்து வாலிபனானான். ஆறுமுகம் இன்பத்திலே திளைத்து வாழ்ந்தாலும் கருணாகரனைக் கவனத்தோடு வளர்த்தார். கருணாகரன் படித்து டாக்டரானான். முதல் வகுப்பில்
32

தேறிய கருணாகரனுக்குக் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் வேலை ஒப்புக்கொள்ளும்படி உத்தரவு வந்தது. ஆனால் வேலை ஏற்கு முன் தந்தைக்குக் கொள்ளி வைக்க வேண்டுமென்பது அவன் விதி. தன் மனைவியாய் வாழ்ந்தவளைக் காட்டி,
“என்னைத் தவிர இவளுக்கொரு நாதியுமில்லை. இந்த வீட்டை யும், என் பொருளையும் இவளுக்கு எழுதிவிட்டேன். உன்னைப் படிப்பித்து விட்டேன். கருணாகரா." என்று கூறிக்கொண்டே ஆறு முகம் மறைந்துவிட்டார்.
கருணாகரன் கொழும்புக்கு வந்து வேலையேற்றுக் கிட்டத்தட்ட ஒரு வரடம் ஓடிவிட்டது. ஒரு நாள் காலை, நினைவு தப்பிய நிலை யில் தன் தாயை ஓர் இளம் பெண் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந் தாள். கருணாகரன் தான் நோயாளியைக் கவனிக்க வேண்டி நேர்ந்தது. ஆனால் ஆஸ்பத்திரியில் சேர்ந்து ஒரு மணி நேரத்தில் அம் மாது நினைவு திரும்பாமலே இறந்துவிட்டாள். அந்தப் பெண் அழகான பெண், பாவம் கண்ணிர் வரண்ட கண்களால் வெறித்துப் பார்த்தவாறு விக்கித்து நின்றாள். அவளைக் கண்டது முதல் கருணாகரனின் உள்ளத்திலே ஏதோ இனந்தெரியா ஏக்கம். மெல்ல அவளை விசாரிக்கலானான். அவனை மருண்ட கண்களால் பார்த்த வள். "அம்மா. அம்மாதான் எனக்கிருந்தாள். இப்போ. நான் ந. நான். ஐயோ அம்மா! 'கண்ணிர் அணையுடைத்த வெள்ளமாய்ப் பொங்கிற்று. கைக்குட்டையை வாயிலடைத்து விம்மலை அடக்க முயன்றாள். அவள் சரோஜினிக்கு இருந்ததெல்லாம் அம்மாதான். பயிற்றப்பட்ட ஆசிரியையான சரோவுக்குக் கொழும்பில் வேலை. தாயும் மகளும் விடுதியொன்றில் அறை எடுத்து இருந்து வந்தனர். இதையெல்லாம் கருணாகரன் மெல்லக் கேள்வி போட்டு அவளிடம் கேட்டறிந்தான். சிறகொடிந்த பறவையாய்த் துடித்து நின்ற சரோவுக் குத் தாயின் ஈமக்கரியைகளைச் செய்வதற்கான ஒழுங்குகளை யெல்லாம் கருணாகரன் தான் செய்ய உதவினான். ஆனால், அதெல் லாம் நடந்து பழங்கதையான பின்பும் கருணாகரனால் சரோவை மறக்கமுடியவில்லை. சரோவின் சிவந்த மேனியழகையும், புரண்டு மிரளும் நீள்விழிகளையும, கூர்மையான நாசியையும் நினைக்க நினைக்க அவன் இதயம் பாய்ந்து துடித்தது. அந்தக் கொள்ளை அழகைத் தன் கரங்களிலே சிறைப் பிடிக்கத், தன் இதயத்தோடு அனைததுக் கொள்ள ஏங்கினான். அடிக்கடி சரோவைச் சந்திக்க லானான். அவர்களிடையே பிறந்த பாசம், அன்பாய் இறுகி, அளப் பரும் காதலாய் மலர்ந்தது. ஊரைக் கூட்டி மேளம் கொட்டாமலே இறைவன் ஒருவனே சாட்சியும், சொந்தமும் இனமும் சனமுமாய்க் கருணாகரன் சரோவுக்குத் தாலி கட்டினான். சரோவும் கருணாக ரனும் காதல் உலகிலே களித்தனர். மாதங்க்ள மறைந்தன சரோ கருவுற்றதும் கருணாகரனின் இன்பக்கிண்ணம் நிரம்பித் துளும்பியது.
33

Page 24
சரோவின் பிரசவத்திற்கு இன்னும் இரு மாதங்கள் இருக்கும்பொழுது கருணாகரனுக்கு யாழ்ப்பான ஆஸ்பத்திரிக்கு மாற்றல் உத்தரவு வந்தது. இருவரும் யாழ்ப்பாணம் வந்து ஒரு வாரத்திற்கு ஒன்றும் விசேஷமாய் நடக்கவில்லை. இருந்தும் கருணாகரன் மனதில் இனந் தெரியாத திகில் ஊடாடியது.
. அன்று ‘பஸ் ஸில் ஏறிய கருணாகரன் காலியாயிருந்த ஒரே இடத்தில் போய் அமர்ந்தான். அவனருகில் இருந்த முதியவர்- அவர் பெயர் கந்தையா- அவனை உற்று உற்று நோக்கினார். கந்தையா ஆறுமுகத்தின் ஊர்க்காரர். இன்னும் சொல்லப்போனால் ஆறுமுகத் தின் பக்கத்து வீட்டுக்காரர். கருணாகரனைக் கண்ட கந்தையாவுக்கு மாறாத இளமையோடு வாலிபனான ஆறுமுகத்தைக் கண்ட பிரமை ஏற்பட்டது. இவன் ஆறுமுகத்தின் மகன்தான் என்று அவருக்கு நிச் சயமாகப் பட்டது. அவனை விசாரிக்கலானார். கேள்விகளும் பதில்க ளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கருணாகரனின் தந்தையும், கந்தை யாவின் நண்பரும் ஒரே ஆறுமுகம்தான் என்பது சந்தேகமற நிறுவப் பட்டது. கருணாகரனின் தங்கைக்கு வேற்றுாரில் வேலை கிடைத்து மூன்று வருஷங்களுக்கு முன் தாயும் அவளும் ஊரைவிட்டே போனவர்கள் இதுவரை திரும்பவில்லை என்றார் கந்தையா. வீட் டிற்கு வந்து தன் மனைவியையும் கண்டு செல்லும்படி கந்தையாவை அழைத்தான் கருணாகரன். கதவைத்திறந்த சரோவைக் கண்டதும் கந்தையா கூவிவிட்டார்.
"பிள்ளை . நீயா". நீயா? தம்பி. இவள் உன்னுடைய
மனைவியாP” கந்தையா குழறினார். "தம்பி. இவள் உன் தங்கச்சி. உன் கூடப் பிறந்தவள். சகோதரி பிள்ளை, இவன் உன் அண் ணன்!. எனக்குத் தெரியும் இவன் ஆறுமுகத்தின் மகன்.” வயிறும் பிள்ளையுமாய் நின்ற சரோவை ஏற இறங்கப் பார்த்தார் கந்தையா. சிச்சீ. என்ன அவலச் சீவியம். அதுக்குள்ளை பிள்ளையுங்கூட." அவர் மேலும் ஒரு கணம் நிற்கவில்லை. போய்விட்டார். கருணாக ரன் சரோவைப் பார்க்க முடியாதவனாய் நின்றான். சரோ விழித் துக் கொண்டவள் போலக் கேட்டாள்,
"உண்மையர் இது? சொல்லுங்கள்! உண்மையாP" கருணாகர னின் வேதனை பாய்ந்த முகமே போதுமே பதில் சொல்ல!.
"ஐயோ! ஐயோ!" என்று சரோ தலையிலடித்துக் கொண்டாள். அவர்களுக்கு வாழ்வு ஒரு பாசாங்காக மாறியது. இருவரும் நடைப்பிணமாய் உலாவினர். ஒருவரை யொருவர் பார்த்துப் பேசத் தயங்கினர். சரோ எதையோ எதிர்பார்ப்பது போல் நாட்களை ஒட்டி னாள். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு முன்னே, நிறைமாதத் தொடக்கதிலேயே குழந்தை, பெண் குழந்தை பிறந்தது. பிறந்து
34

இரண்டு வாரமிருக்கும். ஒரு நாள் காலை குழந்தையின் ஓயாத அழுகை கருணாகரனை நித்திரையினின்றும் எழுப்பியது. குழந்தை யைத் தூக்கச் சென்றான். அதன் தலைபக்கம் அவனுக்கு விலாச மிட்ட உறையொன்று இருந்தது. கருணாகரன் அதை எடுத்துக் கொண்டு “சரோ சரோ! வென்று கத்தினான். வீட்டிலெங்கும் அவ ளில்லை கடிதத்தை பிரித்தான்.
அன்புள்ள கணவருக்கு,
பால் குடிக்கும் கன்றினை நூறு பசுக்களிடையே அவிழ்த்து விட்டால் அது தன் தாய்ப் பசுவை உணர்ந்து அறிந்து கொள்ளும். ஆனால் தன் தாயைத் தனியே உணர்ந்தறியும் ஆற்றலற்ற மனிதக் குழவி எப்பெண்ணின் முலையிலும் பாலுண்ணும். அண்ணன் தங்கை என்ற உறவின் உணர்வற்று வெவ்வேறாக வளர்ந்த நாம், ஆணும் பெண்ணும் என்ற நிலையில் சந்தித்த போது நம் உள்ளத் தில் காதல் மலர்ந்தது குற்றமா? இன்று நாங்கள் ஒரு தாயின் குழந்தைகள் என்று சொல்லிலாவிட்டால் நீங்கள் என் கழுத்தில் கட்டிய தாலியை மறந்துவிட முடியுமா? என் கருவிலே நான் காத் துப் பெற்றெடுத்த உங்கள் குழந்தையை இல்லை யென்று விட முடி யுமா? நாம் தம்பதிகள் என்பதை மறந்து சகோதரர்களாகி விட முடி யுமா? இல்லை நீங்கள் என் கணவர் என்ற உணர்வு தேயவில்லை. என் காதல் அழியவில்லை. ஆனால் சமூகமும் அதன் நீதியும் நியாயங்களும் இனி எங்களை இணைந்து வாழவிடா. எங்கள் குழந்தை தாயையும் தந்தையையும் பெறும்பாக்கியம் அற்றது. எங்கள் செல்வத்தை எங்கள் வாழ்க்கையின் கறையே படியாது வளர்த்து விடுங்கள். அத்தான், உங்களோடு வாழத் துடிக்கிறது என் இதயம். ஆனால் இந்த சமூகத்திலே, உலகிலே நாம் வாழ வழி யில்லை. நான் சாகத் துணிந்து விட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை.
உங்கள் சரோ.
"சரோ! சரோ!" கருணாகரர் துடித்தார். அக்கடிதத்தின் . ஒவ் வொரு வார்த்தையும் அன்று போல் இன்றும், இப்பொழுதும் அவர் கண்முன் தோன்றின. உணர்ச்சி வேகத்தில் பேசி வந்தவர் மெளனத்தில் ஆழ்ந்தார். இரத்தினா சிலையாய் அவரைப் பார்த்திருந் தாள. V−
"அவள் விருப்பப்படியே செய்தேன் பூரீதர். அதன்பின் யாழ்ப்பாணமே நான் செல்லவில்லை. ஆனால் விதி கந்தையாவின் உருவில் இரத்தினாவையும் தொடரும் என்று சரோ அறிந்திருப்
frC367 ITP'
35

Page 25
பூரீதர் நிமிர்ந்தான்.
"அப்படியானால் தாத்தா சொன்னது அத்தனையும் உண்மை தான்!”
"உண்மைதான் பரீதர். ஆனால் நாம் என்ன செய்வோம்?.
"என் பாட்டனாருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்கு உங்கள் சரித்திரம் தெரியும். உங்கள் மகளை நான் மணந்தால் உங்கள் பாபத்தின் நிழல் என் மீதும் படியும். சமூகத்திலே என் அந்தஸ்து, மரியாதை எல்லாம் பறந்துவிடும். என் எதிர்காலமே பாழகி விடும். நண்பரை யிழந்து, நிம்மதி யிழந்து. இல்லை, தயவு செய்து என்னை..... மன்னித்துவிடுங்கள்." பூரீதர் எழுந்து வாசலைக் கடந் தான்.
"அப்பா! அப்பா!" உடைந்த இதயத்தின் மரணத்துடிப்பாய் எழுந்தது அக்குரல்! பூஜீதர் திரும்பினான். முகத்தை முழங்காலில் கவிழ்த்து இரத்தினா விம்மி கொண்டிருந்தாள். கண்களில் நீர் பெருக் கும் கருணாகரன். தனிமைப்பட்ட இதயங்கள் இரண்டு சமூகத்தின் வேலிக்கு அப்பால் நிற்கும் இதயங்கள் அவை செய்த பிழையென்ன? ஒன்றுமில்லை. இதில் பரிதாபம் என்னவென்றால் அவை செய்த குற்றம் ஒன்றுமேயில்லை. இரத்தினா இன்றுலர்ந்த மலர். கருணாக ரர் இறந்து விட்டால் அவள் துணையற்று, வாழ்வில் பொருளற்று என்ன செய்வாள்? தன் தாயைப் போலவே அவளும்.
"இரத்தினா! இரத்தினா!" என்று குழறியவாறு பூரீதர் பாய்ந்து சென்று அவளருகே மண்டியிட்டு, அவள் முகத்தை நிமிர்த்தித் தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“வேண்டாம் இரத்தினா! அழாதே! நானிருக்கிறேன் உனக்கு. இதோ, நானிருக்கிறேன் உனக்கு" மெல்ல அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்." உன்னை விட்டுப் போகம்ாட்டேன் இரத்தினா, அழாதே!"
36

வாழ்வது எதற்காக?
“செல்வி அச்சகத்திலிருந்து அழைப்பிதழ்கள் வந்து விட்டன. இதோ பார்!.." சொல்லிக்கொண்டே அறையில் நுழைந்த சந்திரன் திகைத்து நின்றான். வெளிறிய முகத்தோடு செல்வி படுக்கையில் துவண்டு கிடந்தாள். பகத்தத்தில் அவள் தாய், சந்திரனின் மாமி செல்லம்மாள் அச்சத்தோடு இருந்தாள்.
"ஐயோ தம்பி, ஐந்து நிமிஷத்திற்கு முன் திடீரென்று மயங்கி விழுந்து விட்டாள். மயக்கம் தெளிந்த பிறகும் இரத்த ஓட்டமில்லாமல் முகம் ஒரேயடியாய் வெளிறிக்கிடக்குது. உடம்பு பச்சைத் தண்ணி யாய்க் குளிருது. உன்னையும் காணாமல் நான் தவிச்சுப் போனேன். என்ன தம்பி செய்யP” என்று பிரலாபித்தாள் செல்லம்மாள். சந்திர னின் உணர்வற்ற விரல்களிலிருந்து அழைப்பிதழ் நழுவி விழுந்தது. அவன் செல்வியை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். செல்வி எப் பொழுதுமே ஒல்லியாக, ஒடிசலாகத்தான் இருந்தாள். ஆனால் இப் பொழுது மெலிந்து, பலவீனமாய் அவள் உருவம் அச்சமூட்டியது.
“டாக்டரிடம் கூட்டிப்போகிறேன், மாமி. இதோ 'டாக்ஸி பிடித் துக் கொண்டுவருகிறேன். அவளைத் தயார்ப்படுத்துP”
செல்வியை டாக்டர் சோதிக்கும் வரை சந்திரனின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. இன்னுமொரு மாதத்தில் செல்விக்குக் கல் யாணம். அது நடந்துவிட்டால் அதன் பின் சந்திரன் தன் கல்யாணத் தைப் பற்றி நினைக்கலாமே! கலா அவனுக்காக எத்தனை காலம் காத்திருப்பாள்? அதற்கிடையில் செல்விக்கு என்ன நேர்ந்து விட்டது? பழிவாங்குவதுபோல் டாக்டர் நெடுநேரமாகச் சோதிக்கிறாரே, என் றெல்லாம் சந்திரனின் உள்ளம் அடித்துக்கொண்டது. டாக்டர் ஒரு படியாக வெளிப்பட்டார். அவனைத் தனியே தம் அலுவல் அறை க்கு அழைத்துச் சென்றார்.
"மிஸ்டர் சந்திரன், நான் சொல்ல விருக்கும் விஷயம் உங்க ளுக்கு வேதனை யளிக்கப்போகிறது. மனதைத் திடப்படுத்திக்கொள் ளுங்கள். செல்விக்குள்ள வியாதியைக் குணப்படுத்தவே முடியாது அவள் இன்னும் அதிக காலம் உயிர் வாழமாட்டாள்."
"டாக்டர்!” சந்திரன் துடித்தான்.
32

Page 26
"சந்திரன், இந்த விஷயத்தில் எதையும் மற்ைக்காது கூறுவதே என் கடமை. செல்வி கூடியது ஆறு மாதந்தான் உயிரோடிருப்பாள். அதுவும் அவள் உள்ளத்திற்கு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படாது பூரண அமைதியோடு வாழ்ந்தால் தான். எதற்கும் நீங்கள் வேறு டாக்டர்களின் கருத்தை அறிதலும் நன்று. ஆனால் இதை மட்டும் அசட்டை செய்யாதீர்கள். அவள் சிறிது காலமாவது வாழ வேண்டு மென்றால் அவள் மனைவியாக வாழவே கூடாது!"
“டாக்டர், இதை எப்படி நான் அவளிடம் சொல்வேன்?
"அப்படியே சொல்லி விடக்கூடாது. சந்திரன் அதுவே பெரிய அதிர்ச்சியாகிவிடும். ஆனால் ஓரளவுக்கு உண்மையைக் கூறுதல் நம் கடமை. அவள் இருதயம் மிகப் பலவீனமாயிருப்பதால் சாதாரண வாழ்க்கை நடத்துதல் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் கவன மெடுத்தால் இரண்டொரு வருடங்கள் வாழக் கூடும் என்றும் விஷ யத்தைப் படிப்படியாகச் சொல்லுங்கள்."
சந்திரன் எப்படியோ விஷயத்தைச் சொல்லிவிட்டான். கண்ணிர் பெருக நெஞ்சை அழுத்தியபடி செல்லம்மாள் சுவரோடு சாய்ந்து விட்டாள். செல்விக்குச் சிந்திக்கும் திறனே செத்து விட்டது போல் தோன்றியது. "நான் சீக்கிரம் செத்துப் போவன், நான் சீக்கிரம் செத்துப்போவேன்” என்று முணுமுணுத்துக் கொண்டாள். பெரும் விம்மல்கள் அவளின் மெலிந்த உடலைக் கீறிப் பிளந்தன.
"செல்வி, வீணாக அழதே. அப்படி யென்ன நடந்து விட்டது? கொஞ்சம் கவனமாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்?"
"அத்தான் வாழ்க்கையின் தலைவாயிலில் நின்ற நான் இமைப் பொழுதில் சாவின் கடையோரத்திற்கு வந்துவிட்டேன். மரண தண் டனை விதிக்கப்பட்டவனுக்கு தவணையிட்டு அவனைத் தூக்கிலிடுதல் போல் நானும் சாவை எதிர்நோக்கிச் சாகாமல் சாகத் தவணை அளித்துவிட்டார்கள். நிமிடங்களை, வினாடிகளை, ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாவதைவிட நான் ஒரேயடியாக இக்கணமே செத்துவிடக்கூடாதா? நான் மணமற்ற மலராய், நடைப் பிணமாய் வாழ்வது உண்மையில் வாழ்வதாகுமா அத்தான்? சந்திரன் என்ன பதில் சொல்வான்? பேசாமல் வெளியேறினான். அவனுக்குச் சிந் திக்க அவகாசம் தேவைப்பட்டது. செல்வியின் கல்யாணமோ இனி நடக்காது. ஆனால் இனித்தான் செல்வியின் மனம் பன்மடங்கு ஆவ லோடு, ஆசையோடு வாழத் துடிக்கும். இனித்தான் அபரிமிதமான அன்புக்கும் ஆதரவுக்கும் அவள் உள்ளம் தவிக்கும். செல்வியை வாழ்விப்பதற்கான ஒரு வழி அவன் உள்ளத்தில் உருவெடுத்தது. வெகு நேரமாகச் சந்திரன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். பிறகு
38

விழித்துக் கொண்டவன்போல் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து மணியாகிவிட்டது. கலா அவனுக்காகக் காத்திருப்பாள். கலாவை நினைத்த மாத்திரத்தில் அவன் உள்ளத்தில் இன்பச் சிலிர்ப்பு ஏற் பட்டது. கலா அவனைக் கண்டதும் உதட்டைக் கோணி அழகு காட்டினாள். சந்திரன் சிரிக்க முயன்றான்
"என்ன கலா, வெகு கோபமாP” என்று கேட்ட அவன் முகத் தைச் சிறிது நேரம் உற்றுக் கவனித்த கலா
"என் கோபம் கிடக்கட்டும். உங்கள் மனதில் ஏதோ கவலை யிருக்கிறது. முதலில் அதைச் சொல்லுங்கள்" என்றாள். சந்திரன் பெருமூச்சுவிட்டான். பிறகு செல்வியைப் பற்றிக் கலாவுக்குச் சொன் னான். கலா தன் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்தாள்.
"பாவம் செல்வி, என்ன வேதனைப் படுகிறாளோP” என்றாள் 56).
"கலா அவள் தன் வேதனையைச் சொல்லவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் படும் பாடும் அவளைத் தேற்ற முடியாமல் மாமியும் நானும் படும் பாடும் சகிக்கமுடியவில்லை. அவள் வாழ் வதற்கு இன்னும் ஆறு மாதங்கள் தான் இருக்கின்றன. அவள் சந் தோஷமாக, அமைதியோடு வாழவேண்டிய ஆறு மாதங்களும் அவள் கண்ணிரிலே கரைந்து விடும் போலிருக்கிறது. எப்படியாவது அவள் உள்ளத்திலே இன்பம் மலரச் செய்ய வேண்டும் கலா!"
"அதெப்படி முடியும் சந்திரன்? மண வாழ்வைப் பற்றி எத் தனை இன்பக் கனவுகள் கண்டாளோ? அவளைப் பொறுத்த மட் டில் அவை இனி என்றுமே கைகூடாக் கனவுகள்தான் என்றாகி விட்டபோது அவள் இதயத்தில் இன்பம் மலருமா? பயங்கர எதிர் காலம் அவளுக்குத் தரவிருக்கும் ஒரே வரிசை நெருங்கிவிட்ட சாவு தான் என்று தெரிந்தபின் அவள் உள்ளத்தில் சந்தோஷம் தோன் றுமாP" சந்திரன் தயங்கினான்.
"அதற்கு. ஒரு வழியிருக்கிறது கலா. அவளுக்கு மணம் முடித் துவிட வேண்டும். ஆனால் அவளை மணப்பவன் உள்ளத்தால் மட் டுமே அவளுக்குக் கணவனாய் இருக்கலாமேயொழிய உடலால் அல்ல. அவள் கன்னியாகவே இருக்கவேண்டும்."
"9/g) சாத்தியமா, சந்திரன் அவநம்பிக்கையோடு சொன் னrள்.
“கலா. ஒருவன். ஒருவன் அப்படி வாழத்தயாராயிருக்கி றான்."
39

Page 27
'சந்திரன் மென்று விழுங்கினான் "ஆனால். ஆனால் அதற்கு உன் அனுமதி வேண்டும்"
"என் அனுமதியா? புதிர் போடுகிறீர்களே சந்திரன்?" கலா நெற்றியைச் சுருக்கினாள்.
"கலா, அவள் செல்வி, அதிக நாள் உயிர்வாழ மாட்டாள். அவளை நான் மணந்துகொண்டால்.”
"சந்திரன்! என்ன! நீங்கள் அவளை மணக்கவா? நீங்களா? அப் போ என் கதிP"
"பொறு கலா. தன் கைக்கெட்டி வாய்க்கெட்டுமுன் நழுவி விட்ட வாழ்வை எண்ணிச் செல்வி ஏங்குகிறாள். செல்வி மறைந்து மண்ணாகிவிட்ட் பின்பும் நாம் வாழ்ந்து கொண்டுதானிருப்போம். ஆனால் அவளை நான் மணந்தால் அவள் உள்ள நிறைவோடு உயிர் துறப்பாள். அவள் உள்ளத்தின் நிறைவு உன் துயரத்தைத் துடைத்துவிடும். அதன் பின்பும் நீ என்னை ஏற்றுக் கொண்டால், எனக்காகக் காத்திருந்தால்." கலா சீறினாள்.
"அவளுக்கு உங்களைத் தாரை வார்த்துவிடச் சொல்கிறீர்களா என்னை? நீங்கள் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்க, நான் உங்க ளுக்காக வாழால் இருப்பதா? நல்ல நியாயம் சந்திரன்! ஒரு நாளும் முடியாது!”
"அவளும் ஒரு பெண்தானே கலா, உன்னைப் போலP."
"ஏன், நானும் ஒரு பெண்தானே? அவளைப்போல. எனக்கு மட்டும் வாழ வேண்டுமென்ற துடிப்பில்லையா? நான், என் உள்ளம் முழுவதாலும் காதலிப்பவரான நீங்கள், இன்னொரு பெண்ணைத் தொட்டு மணப்பதை என் இதயம் எப்படி ஏற்றுக்கொள்ளும், சந்திரன்? ر
"நான் மட்டும் உன்னைக் காதலிக்கவில்லையா? உன்னிடத்திலே அவளை வைப்பதில் நான் இன்பம் காண்கிறேன் என்று நினைக்கி றாயா? கலா, உனை நான் சந்தித்திரா விட்டால் அவளைத் தான் மணந்திருப்பேன். ஆனால் அவளை மண்ப்பதானால் அதையொரு கடமையெனக் கருதிச் செய்கறேனே யொழிய இன்ப மெனக் கருதிச் செய்யவில்லை. ஆனால் நான் உன் உடமை கலா. நீ அனுமதிக்கா விட்டால் நான் அவளை மணக்கமாட்டேன்” என்றான்.
“gej LLAT! [b5/T6õT ஏன் வேண்டாமென்கிறேன்? உங்கள் விருப்
40

பப்படியே நடந்து கொள்ளுங்கள். ஆனால் இதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்காக நான் ஒரு நாளும் காத்திருக்கப் போவ தில்லை. இன்றொடு என்னை மறந்துவிடுங்கள்!” சொற்களைக் கக்கிய கலா அதற்கு மேலும் அங்கு நிற்க வில்லை.
சந்திரன் ஏதோ இயந்திரம்போல் இயங்கினான். கலாவை இழந்துவிட்டோம் என்ற நினைவு அவனைப் பித்தாக்கியது. செல் வியோ சரியாகச் சாப்பிடுவதில்லை. மணிக் கணக்காகச் சூன்ய வெளியை வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருப்பாள். சந்திரன் மூழ்கவும் முடியாமல் மிதக்கவும் முடியாமல் தத்தளித்தான். கலா வைச் சந்தித்து ஒரு நீண்ட வாரம் கழிந்துவிட்டது. அன்று மாலை காரியாலயத்தை விட்டு வெளியேறிய சந்திரன் தனக்காகக் காத்து நின்ற கலாவைக் கண்டதும் பேச்சிழந்து நின்றான்.
"கலா நீயா" என்று அவன் உதடுகள் குவிந்தன. கலா வேதனையோடு சிரித்தாள்.
“நானேதான் சந்திரன். அன்று ஆத்திரத்தில் கூறியவற்றை மற்துவிடுங்கள். உங்கள் மேலுள்ள அளவற்ற அன்புதான் அப்படி யெல்லாம் பேசச்செய்தது. ஆனால் அன்று என்னை மட்டும் பொருட் டாக நினைத்ததால் தான் அப்படிப் பேசினேன். அதனால் தான், உள்ளத்தளவில் மட்டுமே செல்வியின் கணவனாய் வாழ முடியும் என்று தெரிந்தும், உங்கள் உணர்ச்சிகளை அடக்கி அவளுக்கு நிறை வளிக்க முன்வந்த உங்களின் தியாகம் எனக்குத் தெரியவில்லை. வாழ்வில் உள்ளதை யெல்லாம் இழந்து நிற்கும் ஒரு பேதைப் பெண்ணுக்கு இரங்கும் மனிதத் தன்னமையை இழந்தேன்"
"இல்லை கலா இல்லவே யில்லை! நான்தான் உன்னைக் கேட் கக் கூடாததைக் கேட்டேன்." கலா கவனியாததுபோல் மேலே பேசி 6отптоїт.
"நான் உங்களை இல்லாவிடில் இன்னொருவரை மணந்து வாழ முடியும். ஆனால் செல்விக்காக இப்படித் தியாகஞ் செய்ய உங்களைப் போல இன்னொருவர் கிடைக்க மாட்டார். சந்திரன், நீங்கள் செல்வியை மணந்து அவளை வாழ்வியுங்கள். நான் . நான் காத்திருக்கிறேன் சந்திரன்." சந்திரனுக்கு இது கனவோ என்ற பிரமை.
“கலா! உண்மையாகவா கலாP இல்லை. வேண்டாம். நீ இப் படி யொரு தியாகத்தால் உன்னையே பலி கொடுக்காதே கலா. உன் ஆசாபாசங்களை அழிக்காதே. டாக்டர் சொன்னார், சில சமயம் செல்வி பல வருடங்கள் வாழக்கூடும்."
41

Page 28
"அதுவரை என்னை அடியோடு மறந்து செல்வியை வாழ்வி யுங்கள் சந்திரன். நான் . நான் எத்தனை காலமானாலும் உங்களுக் காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." கலாவின் கண்களிலே நீர் நிறைந்தது. இருந்தும் அவள் துடிக்கும் உதடுகளால் சிரிக்க முயன் றாள.
42

பிரார்த்தனை
நடராஜ விக்கிரகத்தின் முன் குத்து விளக்குச் சுடர் விட்டது. சுமதி தரையிலே மண்டியிட்டுக் கை கூப்பிக் கண் மூடி, ஓசை யெழுப்பாது, உதடு ஓயாது பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்! உலகை மறந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்! இதில் பிரமாதம் என்ன என்று கேட்கிறீர்களா? இதில் அதிசயம் என்னவென்றால் சுமதி கடைசியாகக் கடவுளை நினைத்தே பத்து வருஷம் இருக்குமே! அப்படியானால் கடவுள் என்ற கற்பனையில் அவளுக்குத் திடீ ரென்று நம்பிக்கை மீண்டும் பொங்கியெழக் காரணம்?
அந்தச் சிறிய அறையில், சுமதிக்குச் சிறிது தூரத்தில், படுக்கையில் ஒரு கிழம் கட்டைபோல் கிடந்தது. உற்று நோக்கினால் நூலிழை அளவு எழுந்து எழுந்து படியும் மார்புக்கூடு உடலில் இன் னும் உயிர் ஒட்டியிருப்பதை அறிவித்தது. சதை வடிந்து கோதான உடல்; கிடங்குக் கண்கள்; குழிக் கன்னங்கள்; ஆவெனத் திறந்த பொக்கை வாய் சவக்களை கட்டிவிட்டதே! இந்தப் பரிதாப ஜீவனுக் காகவா சுமதி நெஞ்சுருக வேண்டுகிறாள்? தந்தையென்ற பாசத்த விப்பா? அவள் என்றோ நம்பிக்கை யிழந்து விட்ட கடவுளைக் கூட நாடச் செய்கிறது? சேச்சே! இது அவள் கணவனல்லவா? ஆமாம் பாடாத இளமை உருவமான, பருவப் பாவையான சுமதியின் கணவனே தான்! இந்த அழுகி, உளுத்த உருவமேதான் அவள் கணவன்!.
பத்து வருஷங்களுக்கு முன் சுமதிக்குப் பதினெட்டு வயது. கறையான் புற்றுப் போன்ற 'வீட்டில் ஈசல் போலப் பொபொலத்த ராமசாமியின் எட்டுக் குழந்தைகளுள் "புரொடக்ஷன் நெம்பர்1" தான் சுமதி. ராமசாமி மூன்று பிள்ளைகளை ஓரளவாவது படிக்க வைக்க வேண்டுமென்றதனால் சுமதியும். தங்கைகளும் பள்ளிக்கூட வாசல் மிதிக்கவில்லை. சுமதி வளர்ந்தாள். வயிறு காய்ந்தாலும் சுமதியின் உடல் ஏனோ காயவில்லை. வாழ்வு செழிக்கவில்லை யென்றாலும் அவள் உடல் செழித்தது. சுமதியின் முகத்தில் காவியக் கன்னியரின் அழகில்லை. ஆனால் அதில் பெண்மையின் தனியழகும், இதழவிழும் Da)fõõt இனிமையும் மிளிர்ந்தன. வார்த்தெடுத்தாற் போன்ற திரண்ட, மிருதுவான அங்கங்கள்; இயற்கையாகவே மதர்த்தெழுந்த இளமார்புகள்; பருவத்தால் செழித்த உடல்; ஆடவனின் இதயத்தைச் சுண்டியிழுக்கும் தரம் வாய்ந்தன. சுமதிக்கு உடையின் எளிமை
43

Page 29
உடலின் வனப்பை மேலும் சோபிதமாய் எடுத்துக்காட்டியது. பக் கத்து வீட்டில் சேகரும் அவன் தாயாரும் வசித்து வந்தார்கள். சேகருக்கு யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை. ஏழு, எட்டு மைல்தான். தினமும் சொந்தக் காரில் போய் வருவான். அவர்கள் வீட்டுக் கிணற்றில் தான் நெடுகச் சுமதி வீட்டாரும் புழங்கி வந்தார் கள். கொல்லை வேலியில் "பொட்டு வைத்து அது வழியேதான் போய் வருவார்கள். பொழுது புலரச் சுமதி குடமும் கையுமாகக் கிணற்றை அடையச் சேகரும் 'பிரஷ்ஷும் கையுமாக வரச் சரியாயி ருக்கும். ஒரே கிணற்றடியில் புழங்கியும் அவர்கள் பேசிக்கொண்ட சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணலாம். சேகர் கண்களில் ஒருவித வேகத்தோடு சுமதியின் ஒவ்வொரு அசைவையும், உடலின் ஒய்யார வனப்பையும் பார்த்தபடியே பல் துலக்கி நிற்பான். அந்தப் பார்வையின் தன்மையை உணர்ந்த சுமதி இயன்றளவு கிணற்றடியுல் தாமதிப்பாள். சில சமயம் அவர்கள் பார்வை சந்திப்பதுண்டு. சேகரின் பார்வை. அப்பப்பா! சுமதியின் உடல் புல்லரிக்கும்! தினம் தவறாது சமயம் வாய்த்த போதெல்லாம் நடக்கும் நாடகம் தானிது. எதனால் இப்படி? இருவருக்கு மிடையில் காதலா? இல்லை. காதலென்றில்லை. பருவத்தின் கவர்ச்சிதான். சேகரைத் தன் கணவ னாகச் சுமதி கருதிய தில்லை. ஆனால் அவன் ஆண்மை அவள் பெண்மையை நெருடியது. இந்தப் பருவ விழிப்பு, உணர்ச்சி யனுப வம் சுமதியின் மனதில் பலகனவுகளை எழுப்பிவிட்டது. சுமதி மண வாழ்வைப்பற்றி, வரப்போகும் மணாளனைப் பற்றி இனிய நினைவு களில் திளைத்தாள். பேரழகனை, அந்தஸ்துள்ளவனை, "அரசகுமார னை மணக்க வேண்டுமென்று அவள் பேராசைப்பட வில்லை. சேகரைப் போன்றவர்கள் சுமதியின் உலகத்தவர்களல்லவே! குழந்தை சுமதி என்றோ மங்கையாகிவிட்டாள். அவள் உணர்ச்சிகள் முதிர்ந்து விட்டன; உடலும் உள்ளமும் துணை தேடின. இயற்கையின் நியதி அது. சுமதி மணக்க விரும்பினாள். வாட்ட சாட்டமானவனாய். ஒரு வாலிபனை.
சுமதி மணக்க வேண்டும் சமூகத்தின் நியதி அது. இப்படித் தான் அவளைப் பெற்றவரும் நினைத்தார். ஆனால் நினைத்தவுடன் செயற்படும் காரியமா இது? நூறு ரூபாய் சம்பளம் வாங்குபவனும் இன்று ஆயிரம் என்று சீதனம் கேட்கிறானே! சுமதிக்கு வயது பதி னெட்டுத்தானே. அவசரம் எதற்கு என்று நினைத்தால் அவள் உட லின் வளர்ச்சி அவரை விரட்டி விரட்டி அடித்தது. வயது வந்த பெண்ணை வீட்டோடு வைத்திருந்தால் ஊர் அபவாதத்திற்குப் பயப்படவேண்டும். ராமசாமி வழியறியாது திணறிக் கொண்டிருக்கும் பொழுது தான் அந்த நற்செய்தி அவர் காதிலும் விழுந்தது. சபாபதி ஏற்கனவே இருதாரங்களைச் சுடலைக்கு அனுப்பி வைத்த புண்ணி யவான். வயது நிச்சயம் அறுபதுக்குக் குறையாது. மேலும் தாமதிக் காது ராமசாமி போய்ச் சபாபதியைக் கண்டார். அன்று வீடு திரும்
44

பிய போது ராமசாமி ஏதோ பெருஞ்சுமையை இறக்கிவிட்ட தென் போடு வந்தார்.
"சுமதிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்துவிட்டேன்!” அவர் மனைவி படபடத்தாள்.
“நிச்சயம் செய்துவிட்டீர்களா? பையன் யார்? சீதனம்?." திடீ ரென்று ராமசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. மென்று விழுங்கி னார்.
"சீதனமே வேண்டாமாம்! நாம் நினைத்துப்பார்க்க முடியாத இடம். சுமதி அதிர்ஷ்டசாலிதான்! இங்கிருந்ததை விட நன்றாக வாழுவாள். மாப்பிள்ளையின் வயது தான் கொஞ்சம் அதிகம். ஒன்றும் பிரமாதமல்ல; ஐம்பதுக்கு மேலிருக்காது." அவர் குரல் குழப்பத்துடன் தேய்ந்து, ஒடுங்கி ஒருவித விபரீத அமைதி நிலவியது. சுமதிP சுமதி சிரிக்கத் தொடங்கினாள். திடீரென்று அடக்கமுடியாது, கட்டற்றுக் கலகலவென்று சிரித்தாள்.
"அப்பா! நல்ல வேடிக்கை ஐம்பது வயதுப் பாட்டனுக்கும் பதி னெட்டு வயதுப் பேத்திக்கும் கல்யாணமாம்! நல்ல லட்சணமான வரன் பார்த்தீர்கள், போங்கள்!"
"பின்னே, உன்னை இருபது வயது இளைஞன் கட்டிகொள் வான் என்று நப்பாசையா? உன்னைச் சுமந்து கொண்டு ஊர் அப வாதத்தையும் என்னால் சுமக்க முடியாது. உனக்குப் பின் நாலு பெண்கள் இருக்கிறார்கள்!" குத்தலாகப் பேசினார் ராமசாமி
"சுமக்க முடியாதவர் ஏன் குழந்தைகளைப் பெறவேண்டுமோ?” முணுமுணுத்தாள் சுமதி.
“என்ன சொன்னாய்?" கர்ஜித்துக்கொண்டு பாய்ந்தார் ராமசாமி.
“ஒன்றுமில்லை அப்பா!” மழுப்பினாள் பீதியுடன். பளார்!
பளார்! சுமதியின் இரண்டு கன்னங்களும் தெறித்தன. எழுந்த வேகத்துடன் ராமசாமியின் சினம் வடிந்தது. சிச்சீ துப்புக்கெட்டவர்! அவள் சொன்னதில் பிழையென்ன? பாவம் சுமதி, பதினெட்டு
வயது மங்கை அவளுக்கு இருக்காதா ஆசைகள்? அவளைப் பலி யாடாக்கித் தமது கையாலாகாதனத்திற்கு அவளைப் பழி வாங்கு 6) 195ITP...
அன்று முதல் சுமதிக்கு வாழ்க்கை முடிவில்லாத துர்ச்சொப் பனமாக மாறிவிடடது. முதற் திகைப்பு மாறியதும் சுமதி துடித்தாள்!
45

Page 30
கண்ணிர் வடித்தாள் கதறினாள். ஆனால் விரைவில் அவன் கண்ணிர் வற்றிவிட்டது. சபாபதியின் நினைவு, அவர் கிழட்டு முகம் அவளை வினாடி வினாடியாக வதைத்தது. எண்ணி எண்ணி ஓய்ந்து விட்ட சுமதிக்கு ஒரேயொரு வழிதான் புலப்பட்டது. கசந்து வெறுத்து விட்ட அவள் மனதிற்கு மரணம் ஒன்றுதான் மருந்தாகத் தோன்றியது. இரவில் தூங்கலாம், ஒரு சில மணி நேரம் தன்னை, உலகத்தை மறக்கலாம் என்று நினைத்தால், அப்பொழுதுதான், உலகமே உறங்கிவிட்ட தனிமையில்தான் அவளை எதிர்பார்த்து நின்ற வாழ்வின் பயங்கரம் விஸ்வரூபம் எடுக்கும். மன உளைச்சல் அவளை விரட்டும். எத்தனையோ தடவை எல்லாரும் உறங்கியதும் எழுந்து கிணற்றடிக்குப் போயிருக்கிறாள். ஆனால் வாழவேண்டும் என்ற துடிப்பு எளிதில் சாகாது. கிணற்றுக் கட்டில் நின்று கீழே பார்த்தவுடன் சாக வேண்டு மென்ற வேகம் வடிந்துவிடும். அவசர மாகப் பின்வாங்குவாள். சாவுக்குப் பின்வருவதை அறியாத தன்பை தான் வாழ்வைப் பிடிவிடாததற்குக் காரணமோP அசாத்திய நெரு, கடியிலும் மனித உள்ளத்தில் ஒட்டி ஊசலாடும் நம்பிக்கைதான் காரணமோ? எப்படியாவது இந்தக் கல்யாணம் நடக்காமல் நின்று விடக்கூடுமென்ற நப்பாசையோ?. நிலைமை மீறினால் கிணறு இருக் கத்தான் செய்கிறதே!
ஆனால் சுமதி சாகவில்லை. கல்யாணமும் நடக்கத்தான் செய் தது. அப்படியானால் அதற்குப்பின்னும் சுமதி வாழவேண்டிய கார ணம்? என்றாவது, எப்படியாவது அந்தப் பயங்கர வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையா? ஆமாம், அந்த நம் பிக்கை வீண் போகவில்லை. பத்து வருஷங்களாகக் காணாத விடு தலை, கனவாகிவிட்ட விடுதலை, இதோ, கிடைக்கப்போகின்றது. சபாபதி மரண வாசலில் நிற்கிறார். அவர் பிழைப்பது துர்லபம். இதற்காககத் தானே சுமதி காத்திருந்தாள் நாட்களை, நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தாள்! சந்தோஷப்படவேண்டிய சுமதி மனமொன்றி இறைவனை இறைஞ்சுகிறாளே, ஏன்? தன்னை விடு விக்கப் போகும் விதியைத் தடுக்கவா? மரணத்தை வெல்லவா? அவள் மனதிலே இந்தத் திருப்பம் ஏற்படக் காரணம்? அவள் கழுத் தில் மின்னும் மாங்கல்யத்தின் மகிமையா? இதனைத் தான் கற்பு என்பார்களோP தோல் சுருங்கித் தலை தொய்ந்த கூடு என்றாலும் அவள் கணவன் என்றதனாலாP. s
சேச்சே! இருக்கமுடியாது! பத்து நீண்ட வருடங்களின் நரகானு பவத்தைச் சுமதி மறந்துவிட்டாளாP உடலில் தேவையோடு உணர் சியின் தாகத்தோடு போராடியதை மறந்துவிட்டாளா? இந்த மனிதப் பேய் இன்னமும் வாழ வேண்டும் என விரும்புகிறாளா? அந்த நாட்களில் தான் சேகர் அவள் மனதில் சதா தோன்றிக் கொண்டி ருந்தான். சுமதி சேகர் மேல் காதல் கொண்டாளென்றால் அப்
46

பொழுது தான் என்று சொல்லலாம். காதலா அல்லது சேகர் குறித்து நின்ற இன்பத்திற்கும் வாழ்விற்கும் கொண்ட தாபமா? எவ்வளவுக் கெவ்வளவு சேகரை எண்ணினாளோ அவ்வளவுக் கவ்வளவு சபாபதியிடத்து வெறுப்பும் அவருப்பும் வளர்ந்தன. இந்த வழுக்கல் நிலத்தில் நடமாடிய சுமதி எத்தனை சுலபமாகத் தன்னை மறந்து நெறி தவறி விடலாம்.
எத்தனை கொடிய இரவுகள்!. சபாபதி அவளைத் தீண்டி விட்டால் சுமதியின் சதை கூசும் முதலில் தன் விதியை ஏற்றுக் கொள்ள முயன்றாள். மனதை ஒடுக்கித் தனக்கு விதிக்கப்பூட்டஇUழ் வில் ஒழுகத்தான் முயன்றாள். ஆனால் சபாபதி பசிபபாாவையோடு அவளை அணுகும் போது, கரங்களால் அவளை அணைக்கும் போது சுமதிக்குக் கூச்சலிடவேண்டும் போலருக்கும். எப்படித்தான் பொறுத்துக்கொள்வாளோP. அன்று அந்த முதலிரவின் நினைவு! அதுகூடவா சுமதிக்கு மங்கி மறைந்து விட்டது? அன்றுதான் சுமதியின் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்த நம்பிக்கையின் நிழலும் செத்துவிட்டது. அன்று சபாபதி அவளை நெருங்கி இரு கைகளா லும் அணைத்து அவள் உதடுகளில் தமது சொற சொறத்த உதடு களை. சுமதிக்கு எங்கிருந்து அந்தப்பலம் வந்ததோ தெரியாது! அவர் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு எப்படியோ அடுக்களைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டாள். அதன்பின் சபாபதியின் தொந்தரவு சகிக்க முடியாத இரவுகளை இப்படித்தான் அடுக்களை யில் கழித்தாள். இதுதான் பத்து வரஷங்களாகச் சுமதி நடத்தி வரும் வாழ்க்கை. இன்று சபாபதி கண்ணை மூடிவிட்டால் சுமதிக்கு அது விமேசனமாகாதா? ஏன், எத்தனை நாள் ஆத்திரத்தில், வெறுப்பில் எண்ணியிருக்கிறாள், "இந்தக் கிழம் செத்துத்தொலைக்காதா என்று! இன்று அப்படியே நடந்துவிடும்போல் தோன்றுகையில் மட்டும் ஏன் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டுகிறாள்? உலகத்துக்குப் பயந்தாP விதவை என்று சமூகம் புறக்கணித்து விடுமே என்ற g560TITaunt P...
அல்லது நேற்று நடந்த சம்பவத்தாலா? சுமதி அவருக்குப் பாலாற்றிக் கொண்டிருந்தாள். உதட்டை நாவால் நனைத்தபடி, "ஹெஹற்ஹே.ஷ"மதி. இப்படி வந்து உக்காரேன்." என்று படுக்கை யைத் தட்டினார் சபாபதி. சுமதி கேளாததுபோல் பாலை முக்காலி மேல் வைத்துவிட்டுத் திரும்ப அவள் கையைப் பற்றினார். அவள் கையை உதறிக்கொண்டாள். அவர் சபாபதியின் கையில் அவள் சேலைத் தலைப்பு சிக்குண்டது. சுமதி தலைப்பை இழுத்துக் கொண்டு பின் வாங்கினாள். அவரும் விடுவதாயில்லை. இளித்துக் கொண்டு நெருங்கலானார். திடீரென்று. எப்படி நடந்ததோ தொரி யாது சபாபதி தடுமாறி அலங்கோலமாய் விழுந்தார். கதிரை ஒன் றில் தலை சரியாக அடிபட்டுவிட்டது. அப்பொழுது தப்பிய நினைவு இன்னமும் திருபம்ப வில்லை. வைத்தியர் ஏதோ ஊசி ஏற்றிவிட்டுத்
47

Page 31
தம்மா லியன்றதைச் செய்வதாகக் கூறிச் சென்றார். அதாவது கையை விரித்து விட்டார் என்று அர்த்தம். சுமதிக்கு ஏன் அது சந்தோஷ மளிக்கவில்லைP சபாபதியின் சாவுதானே அவளுக்கு வாழ் வாகப் போகிறது? இதை அறிந்தும் எதற்காக மாங்கல்யப் பிச்சை கேட்கிறாள்? ஒரு வேளை தன்னால் தான் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததென்ற குறுகுறுப்போP அவளால் தானே அவர் விழ வேண்டி நேர்ந்தது? அவர் இறந்து விட்டால் அவர் சாவுக்குக் காரணம் தானே என்ற குற்ற உணர்வின் எதிரொலியா இந்த வேண்டுதல்?
சுமதி மெல்லக் கண்களைத் திறந்து சபாபதியை உற்று நோக்கி னாள். அப்படியே, போட்டபடியே கிடந்தார். உடலில் உயிர் ஒட்டி யிருப்பதற்கு மார்புக் கூட்டின் மெல்லிய அசைவு சாட்சி கூறுகிறது. சுமதியின் கண்களில் தோயும் உணர்ச்சி ஏமாற்றமாP குத்து விளக் கைத் தூண்டி விட்ட சுமதி நெடுமூச்சோடு கண்களை மூடுகிறாள். உதடுகள் குவிந்து முணுமுணுக்கின்றன. என்னதான் அப்படிப் பிரார்த்திக்கிறாள்?. பத்து வருஷங்களாக வேண்டாத இறைவனை வேண்டுகிறாள்! உள்த்தின் அடியிலிருந்து, உணர்ச்சி ஒன்றிய வேகத் தோடு, புதிய நம்பிக்கையோடு வேண்டுகிறாள் "கடவுளே அவர் சாகட்டும். கடவுளே அவர் சாகட்டும். Vy
48

காப்பு
அழகின் அருமையை அறிவுறுத்தவே என் போன்ற வரையும் பிரம்மதேவன் படைத்தான் போலும் பெண்ணென்ற உணர்வு எனக்குத் தோன்றிய நாள் தொட்டுப் புகைந்து பொருமத் தொடங்கிய என் உள்ளம் இன்னும் வடிய வில்லை. நான் மட்டும் ஏன் இத் தனை குரூபியாக இருக்கவேண்டும்? எனக்கு மட்டு மேன் இந்த அநீதிP இளமைத் துடிப்போடு இன்பக் கனவுகள் காணும் உள் ளத்தை மட்டும் அள்ளிக் கொடுத்த ஆண்டவன் அவற்றை நினை வாக்கிக் கொள்ள என் தோற்றத்தில் ஒரு சிறிது கவர்ச்சியை அளித் த்திருக்கக் கூடாது. என் தந்தையின் பணப் பெட்டியி லடக்கிய ஆயிரங்கல் கவர்ச்சியைக் கண்ட ஒருவன் எனக்கு மாலையிட்டான். மனைவியாக்கிக் கொண்டான்! வாழ்க்கை ஏதோ செல்கிறது; நிறைவு தான் இல்லை! 'பிளாட்பாரத்தில் நின்ற என் தந்தை ஏதோ சொல் (லிக்கொண்டே யிருந்தார். 'உம்' கொட்டினேனே தவிர என் கண் <கள் பெட்டியின் மறு மூலையில் இருந்த இளைஞனை நோக்கின. அத்தனை அழகனென்று சொல்லமுடியாது. இருந்தும் என் கண்க tளுக்கு அனங்கன் போல் தோன்றினான். நாமிருவர் மட்டுமே இருந் தோம். என் பார்வையை உணர்ந்தவன் போல் திரும்பினான். அரு வருப்பும் வெறுப்பும் தெறித்து விழ முகத்தைச் சுளித்தவன் ஜன்ன லுக்கு வெளியே தலையை நீட்டினான். எனக்குச் 'சுருக்கென்றது.
முதல் மணி அடித்துவிட்டது. ஒரு சிறுவன் ஓடி வந்து எங்கள் பெட்டியின் கதவைத் திறந்துவிட்டுத் திரும்பி, "சீக்கிரம் வா அக்கா! இங்கு இடமிருக்கிறது!" என்று கத்தினான். நானும் மெல்லப் பார்த்தேன். என் முகம் கறுத்ததோ என்னவோ, என் உள்ளத் தீ மூண்டெழுந்தது. என் வரண்ட மனம் கூட அப்பெண்ணின் அழகை மறுக்கத் துணியவில்லை. ஓடிவந்தவள் கைப்பெட்டியோடு உள்ளே ஏறி எனக்கு எதிரே அமர்ந்து கொண்டாள். பின்னால் வந்த "போட்டர் பெரிய 'ஸ் ட்கேஸை" உள்ளே தள்ளினான். என்னை யறியாமல் என் கண்கள் வாலிபனை நோக்கின. அவன் கண்கள் கக்கிய உணர்ச்சி என்னை குத்தியெடுத்தது. என்னையும் ஒருவன் ஆசையின் வேகதத்தோடு பார்க்கவேண்டும், அடையத் துடிக்கவேண் டும் என்று நான் ஏங்கிய நாட்கள் முடிந்து விடவில்லை இங்கு இவள் அவனைப் பார்க்கக் கூடவில்லை. இருந்தும் அவன். ஹராம்! மதுமலர்தானே வண்டிைக் கவரும். காகிதப் பூவிற்கு அந்தத் திறன் இல்லையே!
t 49

Page 32
அப்பா ஏதோ சொல்கிறாரே!
"நல்லது. உனக்கும் துணையாய்ப் போச்சு போனதும் கடிதம் போடு!” வண்டி புறப்பட்டு விட்டதாP அடடா தலையை வேகமாக ஆட்டினேன். "போய் வருகிறேனப்பா", என்றேன். ரயில் ஸ்டேஷனை விட்டு நகர்ந்தது.
அவள் என்னைப்பார்த்துப் புன்னகை புரிந்தாள். நான் கவனி யாதது போல் வெளியே பார்த்தேன். பெரிய 'ஸகுட்கேஸை" "ஸ்ட் டின் கீழே தள்ளியவள் சிறிது கைப் பெட்டியை மேலே தட்டில் வைக்கமுயன்றாள். அவளுக்கு எட்டவில்லை. அதனோடு ரயிலின் ஆட்டத்திற்கு நிலை தடுமாறினாள். மூலையிலிருந்த இளைஞன் துள் ளிப் பாய்ந்து அவளருகே வந்தான்.
"இப்படிக் கொடுங்கள்! நான் வைத்து விடுகிறேன்." அவள் கையிலிருந்து பெட்டியை வலிந்து வாங்கினான். அவள் மறுக்கவு மில்லை, தடுக்கவுமில்லை. மாறுதலில்லாத அதே புன்னகையைச் செலுத்தி விட்டுக் கைப் பெட்டியை அவனிடம் கொடுத்து விட்டு மீண்டும் ஜன்னலருகே எனக்கு எதிரில் அமர்ந்தாள். அவனும் அவளுக்கருகில் அமர்ந்து கொண்டான். அவள் பார்வை ஜன்னலுக்கு வெளியே நிலைத்திருந்தது. இரண்டு மூன்று தடவை அவளைக் கடைக் கண்ணால் பார்த்தான்.
"நீங்கள் எதுவரைக்கும் போகிறீர்கள்? அவன் கேட்டான். அவள் மெல்லப் பார்வையைப் பெயர்த்து அவனைப் பார்த்தாள். நெட்டயிர்த்தவள், "கொழும்புவரை”, என்றாள். அடுத்து நான் எதிர் பார்க்கவில்லை! அவன் திரும்பி என்னைப்பர்த்து,
"நீங்கள்?", என்று கேட்டான். ஹராம்! என்னைப்பார்க்கச் சகி யாது முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டிருந்தவன், இப்பொழுது அவளுடைய புண்ணியத்தால் என்னுடன் பேசவும் செய்துவிட்டானே! எனக்கு அவமானம் தாங்கவில்லை! ஆத்திரம் கொதித்துப் பொங் கியது. அவனைச் சுட்டெரித்து விடுவது போல் வெறித்துப் பார்த் தேனே யொழிய ஒன்றும் சொல்லவில்லை. அவனுடைய முகம் கறுத்து அதில் புன்னகை அப்படியே உறைந்து விட்டது. அதன்பின் அவன் என் பக்கம் திரும்பவேயில்லை.
வெளியே நிரை நிரையாய் நின்ற மரங்களெல்லாம் காந்தத்தால் கவரப்பட்டவை போல் ரயிலைச் சந்திக்க விரைந்து ஓடி மினவெட் டென மறைந்தன. வாழ்க்கையும் இப்படித்தானே என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையிலும் நம்மை, நம் மனதை ஏதேதோ வெல்லாம் ஆகர்ஷிக்கின்றன. அவையெல்லாம் ஒரு கணத்தோற்ற மாய்த் தம் பிடிப்பை இழந்து மறைந்து விடுகின்றன. வெளியே ஓடி
50

மறையும் மரங்களிலே என் பார்வை பெயர்க்க முடியாது கட்டுண்டு கிடந்தது. ஆனால் அவளை அவன் கேட்டகேள்விகள், அவளோடு பேசிய பேச்சுக்கள் யாவும் என் காதில் வந்து விழுந்தன. அவளைப் பேசவைக்க அவன் கையாண்ட தந்திரங்கள், அவனுடைய பேச்சுச் சாதுரியம் கைதேர்ந்த அரசியல்வாதியையே தோற்கடிப்பதா யிருந் தது. அவனது குரலைக் கேட்கக் கேட்கக் காரணமில்லாத ஆத்திரம் 6Ꭲ ᎧᏑᎢ மனதில் குமைந்தெழுந்தது அவளிடத்து எனக்கெழுந்த பொறாமை யெல்லாம் ஏளனமாக மாறியது. ஆமாம்! மானங்கெட்ட சிறுக்கி! அவன் தான் நிலை தவறி நடந்து கொண்டானென்றால், அவனோடு பல் சுளுக்கும்படி அவளை இளித்து இளித்துப் பேசச் சொல்லிக் கிடக்குதா என்ன? பண்பு தெரியாதவள்! என்றெல்லாம் அவளைத் தூற்றி மகிழ்ந்தது என் இதயம். எவள் அழகை, வசீக ரத்தை எண்ணிப் பொறாமைப்பட்டேனோ, எவள் நிலையில் இருக்க ஏங்கினேனோ, அவனை ஒழுக்க மற்றவள் என்று ஏசி மகிழ்ந்தேன். சந்தர்ப்பமின்மை என்மேல் சுமதிவிட்ட நிலையைக் கற்பின் திண்மை யென என் மனதோடு கூறிக்கொண்டேன். சீச்சி இந்தப் பழம் புளிக் கும் என்றதாம் நரி என் மனதின் பித்தலாட்டத்தை நினைத்து எனக்கே சிரிப்பும் வெறுப்பும் வந்தது. இந்த மனோவாதையும் வேதனை இதயமும் கடவுள் எனக்கென உவந்தளித்த செல்வமா?.
வெளியே மெல்ல இருள் கவிந்து கொண்டிருந்தது. அந்த இருட் படலம் ஜன்னல் வழியே உள்ளே புகுந்து படர்நது தங்கிற்று. அது என் உள்ளத்தின் புதையிருளை மறைக்க முயன்றதோ என எண்ணினேன். என் பார்வையை உள்ளுக் கிழுத்து அவனுடைய உருவத்தில் நிலைக்க விட்டேன். திடீரென மின் விளக்குகள் எல்லாம் பிரகாசித்தன. நான் அவனையே பார்த்திருந்தேன். அவள் அழகைக் கண்களால் அள்ளிப் பருகிக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டுத் 'திருதிரு வென்று என்னைப் பார்த்து விழித்தான். அவன் முகத்தில் வழிந்த அசடைக் காண எனக்குச் சிறிது திருப்தியாக இருந்தது. என்னை ஏளனம் செய்த அவனிடத்து இது நான் ஈட்டிய சிறு வெற்றிபோல் எனக்கு ஆறுதல் அளித்தது. கடகடத்தவாறு ஆரவாரத் தோடு புகையிரதம் நிலையத்திற்குள் புகுந்தது.
"காப்பி, டிபன் வாங்கி வருகிறேன். நீங்கள் என்ன சாப்பிடு கிறீர்கள்?", என்று அவளைப் பார்த்துக் கேட்டு விட்டு எழுந்தான். அகல விரிந்த கண்களால் அவள் நிதானமாக அவனைப் பார்த்தாள். அழகான கண்கள் அவை உணர்ச்சியின் சுவடில்லாத பற்றற்ற தன்மையையே பிரதிபலித்தன. இருந்தும் அது கூடக் கண்களை அழகு படுத்தியதாகவே தோன்றியது.
"பரவாயில்லை. நீங்கள் சிரமப்படாதீர்கள். நான் டிபன் கொண்டு வந்து விட்டேன்". சொல்லிவிட்டு என்னை ஒரு கணம்
51

Page 33
பார்த்தாள். அந்தக் கணப்பார்வை என்னை ஏதோ செய்தது. என் உதவியை யாசித்தாளாP ஆதரவைக் கேட்டாளாP மீண்டும் அவளைக் கூர்ந்து பார்த்தேன். ஆனால் என்னைப்பார்க்க அஞ்சியவள் போல் அவள் என் பக்கம் திரும்பவே யில்லை.
"அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் காப்பியாவது சாப்பிட வேண்டும்." அவன் சிரித்துக்கொண்டே வற்புறுத்தினான்.
“இல்லையில்லை. உங்களுக்கு வீண் தொல்லை!" அவள் முகத் தில் அலுப்புத் தட்டியது. அவன் வெற்றிப் புன்னகை உதிர்த்தான். சந்திர மண்டலத்திற்கு வழி கண்டவன் கூட அத்தனை எக்களிப்பு அடைந்திருக்கமாட்டான்.
"இதென்ன தொல்லை? ஐந்து நிமிஷம் பொறுத்துக் கொள்ளுங் கள்." என்னை ஏதோ ஒன்று பேச வைத்தது.
“என்னிடம் காப்பி இருக்கிறது. இருவருக்கும் அதுபோதும். நீங்கள் சிரமப்படாது போய்ச் சாப்பிடுங்கள். அவன் என்னைப் பார் வையால் கொன்றுவிட்டு ரெஸ்டரன்ட் காரை நோக்கி நடந்தான். அவள் நன்றி தெரிவிக்க வில்லை. என்னைப் பார்த்துச் சிரிக்கவு மில்லை. தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டிருந்தாள். நான் சாப்பிடத் தொடங்கினேன். அவள் சாப்பிடவில்லை. நானும் கேட்க வில்லை. சாப்பிட்டு முடிந்ததும் காப்பியை ஊற்றி நீட்டினேன். அவள் பேசாமல் வாங்கிக் குடித்தாள். ரயில் மீண்டும் புறப்பட்டு விட்டது. போர்த்தியிருந்த சேலைத்தலைப்பின் நுனியை இறுகப் பற்றியவாறு ஜன்னல் சட்டத்தில் தலையைச் சாய்த்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவன் திரும் பிவிட்டான். நான் அவனை எதிர்பார்த்துத்தா னிருந்தேன். மீண்டும் பழைய இடத்திலேயே அமர்ந்தான்.
"நான் புகை பிடிப்பது உங்களுக்குச் சிரமமாய் இருக்குமா? அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் "சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டான். சுரள் சுருளாக மேலெழுந்த புகையை ர்சித்துச் கொண்டிருந்தான். நான் ஜன்னலில் கையை ஊன்றி அதில் தலை யைத் தாங்கிக் கொண்டேன். கண்களையும் மூடிக்கொண்டிடேன் என்றுதான் நினைக்கிறேன். என் நினைவெல்லாம் அந்தப் பெண் ணைச்சுற்றி படர்ந்தது. அவளை நினைத்துப் புழுங்குகிறேன். பொறாமைப்படுகிறேன். அவளைப்போல வேண்டாம். ஆனாலும் அதில் ஒரு சிறிய பங்கு அழகு என்னுடையதாய் இருந்து, இவனைப் போல் இளைஞனொருவன் என் புருஷனாய் இருந்தால் வாழ்வே எனக்குப் பெரும் விழாவாயிருக்கும். ஆனால் என் கணவரின் கற்பனையோ வியாபாரத்திலும் பணத்திலும் பின்னிக்
52.

கிடந்தது. புகையிரதத்தின் போக்கைப்போல் என் சிந்தனைத்தொடரும் நீண்டு கொண்டே சென்றது. யோசனையில் ஆழ்ந்திருந்தேனோ அன்றித் தூங்கித்தான் விட்டேனோ தெரியாது. திடீரென உணர்வு எனக்கு விழிப்பூட்டியது தலையை அசைக்காது, இறக்கிய இமை களுடே அவனைப்பார்த்தேன், அவனையே பார்த்துக்கொண்டிருந் தேன். சட்டிப்பாலைப் பார்த்துப் பார்த்து வாயூறும் கள்ளப் பூனை யைப் போலிருந்தது அவனைப் பார்க்க! என்னைப் பார்த்துப் பார்த்து அணுவணுவாக அவளருகே நெருங்கிக் கொண்டிருந்தான். அவள் உட்கார்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தாள். தோளும் தோளும் உராயும்படி அவளருகே நெருங்கிவிட்டான். ரயிலின் ஆட்டத்தோடு ஆடிஆடி அவள் தலை மெல்ல அவன் தோளில் சாய்ந்தது. பாவம் தன்னை மறந்து தூங்கினாள். சற்று நிதானித் தவன் துவண்டு கிடந்த அவளுடைய மெல்லிய நீண்ட விரல்களைப் பற்றக் கையை நீட்டினான். என் இதயம் படபடத்தது. உடலெல்லாம் நடுங்கியது. ஆமாம்! அவளுக்காக, அந்த அழகிக்காக, என் நெஞ்சு துடித்தது! அவளை எழுப்பவா? அவனை அதட்டவா? என் அருகில், சீட்டில் இருந்த பால் செம்பு பளபளத்து மின்னிற்று. எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் தூங்கி விழுந்தேன். ஜன்னல் சட்டத்தில் ஊன்றிய என் கை நழுவிக் கீழே பால் செம்பில் பட்டு அதைத்தட்டி விழுத்தியது. பெருஞ் சத்தத்தோடு கீழே விழுந்த செம்பு கலகலத்து உருண்டோடியது. அவள் விழித்துக் கொண்டு பதறினாள். ஒரு கணம் செயலற்று நின்றவன், அவள் நிதானித்துக் கொள்வதற்குள் வெளியே பாய்ந் தோடினான்.
நான் அவளைப் பார்த்தேன் நன்றாகப் பார்த்தேன். அவள் என் பார்வையை ஒரு வினாடி சந்தித்தாள். அந்தக் கண்களில் ஒரு கணம் மின்னிய உணர்ச்சி உள்ளத்தின் வேதனையாP நன்றிப் பெருக்கா?. அதற்குள் இமைகள் துடித்துக் கண்களைத் திரை யிட்டன. அவள் என் செம்பை எடுக்கக் குனிந்தாள். போர்த்தியிருந்த சேலைத் தலைப்பு நழுவிச் சரிந்தது. தாழ வெட்டிய ரவிக்கைக் கழுத்து- அதிலிருந்து எழுந்த வெண்மையான, மிருதுவான சங்குக் கழுத்து- கழுத்தை அணைத்துப் புரண்டு ஒளி வீசியது மாங்கலியம்!
இதுவரை அழகான ஒரு பெண்ணைப் பார்த்து பொருமிய என் உள்ளத்தில் பரிதாப உணர்வு ஊறிப் பெருகியது. அந்தப் பெருக்கிலே என் பொறாமையும் வெறுப்பும் அடித்துச் செல்லப் பட்டன. அனுதாபத்தோடு அவளைப் பார்த்தேன். அழகிருந்தது அவளிடம். ஆயினும் அவளுக்கு அது அவலத்தையே அளித்தது. அந்தக் கண்களின் சூனியம் அவள் உள்ளத்தின் கசப்பை உணர்த் திற்று. பாவம் கணவன் என்ற ஒருவனால் கூட அவளுக்கு அளிக்க முடியாத காப்பினை என் குரூபம் எனக்கு அளித்துவிட்டதே!
53

Page 34
விடிவை நோக்கி
ஒரு கையில் பாடப் புத்தகங்களும் ஒரு கையில் குடையுமாக அன்னம் நடந்துகொண்டிருந்தாள். யாழ்ப்பாணத்துக் கோடை வெய் யில் ஈவிரக்க மின்றிக் கொளுத்திக் கொண்டிருந்தது. பார்த்த இட மெங்கும் கானல் நீர்த் தோற்றம் கண்களில் மின்னிற்று. அன்னம் நெட்டுயிர்த்தாள். இதுவரை வாழ் வென்பதும் கானலாக அவளை வஞ்சித்து வந்தது. அவள் வாழ்வில் கோடை மறைந்து வசந்தம் வீச வில்லை. இடைக்காடு கிராமமே தூக்கக் கிறக்கத்தில் சுருண்டு கிடக்கும் வேளை. மூன்றாந் தரத்திற்குச் சரித்திரம் கற்பித்துச் கொண்டிருக்க வேண்டிய அன்னம் இந்தக் கொதி வெய்யிலில் வீடு திரும்புகிறாள். காரணம், அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் அன்னத்திற்கு இதை நினைக்கச் சிரிப்பாகவும் இருந்தது, சலிப்பாக வும் வந்தது. அம்மாவின் ஆக்கினைக்காகத் தானே அன்னம் இதற்கு உடன்படுகிறாள். பள்ளியில் இருக்கும் போது வீட்டுக்குப் போகா மலே இருந்து விடுவோம் என்று நினைத்தாள். வருபவர்கள் நன்றாக வந்து விட்டுப் போகட்டும்! ஏன் இப்போ கூட. பள்ளிக்குத் திரும்பவா? அவளென்ன, சூடு, சுரணை இழந்தவளா? சிச்சீ அவ ளுக்கு இதெல்லாம் அலுத்து வெறுத்து விட்டது. இதில் கிஞ்சித் தேனும் விருப்ப மில்லை!!. விருப்ப மில்லையாவா?. உண்மையாகச் பின் ஏன் இந்தக் கால்கள் இன்னும் வீட்டை நோக்கி நடைபோடு கின்றன? இந்த மனதிற்குத் தான் எவ்வளவு நம்பிக்கை என்று வியந் தாள் அன்னம். சிறுமைப்பட்டு வெகுண்ட அவள் மனம் திருமண எண்ணத்தையே உதாசீனம் செய்ய முயன்றது. இதய நோவை, ஏக்கத்தை மறைத்து மனம் நிமிர்ந்து பெருமை காட்ட முயன்றது. ஆனால். உள்ளுக்குள் உணர்வு துடித்தது. உள்ளம் ஏங்கியது. இந்த முறையாகிலும், இந்த இடமாயினும் பொருந்தி வராதா என்ற ஆசைத் துடிப்பு. அவள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள மறுத்த துடிப்பு. அவள் உள்ளத்து உயிர்நிலையை அரித்து வந்த துடிப்பு.
இருபக்கமும் வேலிக் கதியால்கள் நிழல் பரப்பும் ஒழுங்கைச் குள் 'அப்பாடா” என்று திரும்பினாள் அன்னம். குடையைச் சுருக்கி நடையை நிதானித்தாள். எதிரேயாரோ வந்து கொண்டிருந்தார்கள் ஊரே உறங்கும் இந்த மத்தியான வேளையில் யாராயிருக்கும்? அந்த நடை ஆமாம். ரத்தினக்காதான்! அன்னம் முகத்தைச் சுளித்தாள். நல்ல முழுவியளம்தான்! "இவவைப் பாத்த சகுனம் வாற மாப்
54

பிள்ளையும் வீதியோடை போய் விடுவார்" என்று முணுமுணுத்தாள் அன்னம். ஊரில் ரத்தினத்தின் மேல் பரிவு கொண்டவர் ஒருவரு மில்லை. அவளைக் கண்டு பயந்தவர்கள் என்றால் ஒருவர் மிச்ச மில்லை. வம்பு பேசுதலை ஒரு நன்கலை என்ற அளவுக்கு வளர்த் திருந்தாள் அழகான ஒரு பெண்ணைக் கண்டால் அவளைப் பற்றி அவதூறு சொல்லாவிட்டால் ரத்தினத்திற்கு அமைதியே வராது. மற்றவருக்குத் துயர் விளைப்பதில் நிறைவும் இன்பமும் காணும் விகார மனம் ரத்தினத்தினுடையது. அதனால் அவளை உள்ளூர வெறுத்தவர்கள் எல்லோரும் வெளியில் இனிப்பாகத்தான் பேசினார்
556.
"ஆரது, அபிராமின்டை மேளேP என்ன பள்ளியாலை வெள் ளெனத் திரும்பிறாய் அன்னம்?"
"இல்லை ரத்தினக்கா, சரியான தலையிடி, அதுதான் லிவு போட்டுட்டு வீட்டை போறன்."
"இந்த வெயிலுக்கு எல்லா வருத்தமும் வரும். போய்க் குடி நீரிலை வைப்பிச்சுக்குடி. போ பிள்ளை!” அவளைத் தாண்டிய அன்னம் "பெரிய கரிசனம்தான்" என்று முணுமுணுத்தாள். தன் னைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்பது ரத்தினத்திற்கு நன்றா கத் தெரியும் என அன்னம் அறிவாள். அன்னத்தின் பொய் ரத்தினத்தை ஏமாற்ற வில்லை. மாறாக, ஆத்திரத்தைத்தான் கிளப்பி யது. அன்னம் தன்னை லட்சியம் செய்யவில்லை என்ற ஆத்திரம். ஆனால் அன்னத்திற்கு ஒரு அலட்சியம் ரத்தினத்தின்மேல் தனக் குள்ள வெறுப்பை அவள்மறைக்க முயன்றதில்லை. என்றுமே ரத்தி னத்தைத் தூக்கியெறிந்து பேசுவாள். ரத்தினம் அதை மறப்பவளு மல்ல, மன்னிப்பவளுமல்ல!
படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அன்னம். அபிராமி தந்த தேனிரை அருத்திவிட்டு அலங்காரத்தில் ஈடபட்டாள். ஒரு முறையா, இரண்டு முறையா? இது பதினேழாவது தடவை இருந்தும் அவள் உள்ளத்தில் ஒரு பரபரப்பு! ஒரு சலனம்! உள்ளத்தில் ஏதோ ஒன்று வியாபித்த உணர்வு. அன்னத்தின் மன திலே எண்ணங்கள் குமிழியிட்டன. வருபவருக்கு வயது முப்பத தொன்பது இருக்குமாம்! அதற்கென்ன? அவளுக்கு என்ன வயசு குறைவோ? இருபத்தெட்டு ஆகிவிட்டது. நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி இருக்கவேண்டிய வயசு! ஆனால், அவள் இன்னும் கன்னி கழியாமல்! ..ஹம்! வருபவருக்கு நல்ல உத்தியோகமாம்!. அப்படி யானால் சீதனமும்?. சீதனம்! இந்த நான்கெழுத்து மந்திரத்தில் தான் அவள் வாழ்வு தங்கியிருக்கிறது. அவளை, ஒரு பெண்ணை விட அவள் கொண்டு வரவிருக்கும் பணத்தில் தான் அவளைப் பெண்
55

Page 35
பார்க்க வந்தோரின் அக்கறை சென்றது, பணமே இருபதாயிரத் துக்குக் குறையாமல் கேட்கிறார்கள். பிறகு நகை, காணி என்று.
அன்னம் கூந்தலை அவிழ்த்துச் சீவத் தொடங்கினாள்: அன்னத் தின் தாய் பத்தாயிரம் காசும் இந்த வீடும் சீதனமாய் கொண்டு வந்தாள். அதில் மிஞ்சியது இந்த ஒட்டு வீடுதான். அன்னத்தின் தந்தை- அவரை, அவளுக்கு ஞாபகமே இல்லை - கட்டு LDLL9.6i லாது குடித்தார். அபிராமியை மணக்கும் போது அவருக்கு" இருபத் தொரு வயது இரண்டு வருடத்தில் அபிராமியின் சீதனமும் கரைந்து விட அவரும் கட்டையைப் போட்டுவிட்டார். அந்த மட்டில் இந்த வீடாவது மிஞ்சியது. அன்னத்திற்கு அவள் அறியாத தந்தையின்மேல் வெறுப்பும், அலட்சியமுமே தோன்றியது. அவர் மனிதராய் வாழ்ந் திருந்தால் அவளுக்கு இன்று இந்தக் கதி ஏற்படுமா?
வாசலில் கார் வந்து நின்றது. அபிராமி வந்தவர்களை வர வேற்றாள். சிறிது நேரத்தில் அன்னத்தின் பிரவேசக் கட்டம் வந்தது. மாப்பிள்ளை பார்ப்பதற்கு மிக மிகச் சாதாரணமாகத் தானிருந்தார். அன்னமும் அப்படி, யொன்றும் பிரமாத அழகியல்ல. இருந்தும் மானிறத்தில் ஒரு மாற்று உயர்ந்த நிறத்திலும், பளபளக்கும் முகத் தில் ஒளிகாட்டும் வட்ட விழிகளிலும், மெல்லிய உதடுகள் சிரிப்பில் மலர எட்டிப் பார்க்கும் தெற்றுப் பல்லிலும் கவர்ச்சி இல்லை என்று சொல்ல முடியுமா? அன்னத்தின் செழித்த உடல் ஏழு யார்ச் சேலையில் முடங்கிக் கிடந்தது. அபிராமி இந்தக் காலத்து ஜார் ஜெட்டையும் நைலானையும் சேலையாக மதிப்பதில்லை. இந்தக் கட்டம் முடிந்ததும் சீதன விஷயம் எடுபட்டது. எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பாக சீதனக்காசே இருபத்தையாயிரம் என்றார் மாப்பிள்ளை யின் மாமாக் கிழவர். அதன்பின் விஷயத்தைத் தொடர்ந்து என்ன பிரயோசனம்? ஆறுாத புண்ணிலே கோலிட்டுக் கிளறிக்கொண்டே இருந்தால் எரிச்சல் கூடுமா, குறையுமா? அன்னத்தின் அவமான உணர்ச்சியும். ஏமாற்றமும், ஏக்கமும் சினமாய் உருவெடுத்தன.
"அம்மா, இனிமேலும் என்னை இப்படி வேஷம் பேடவைச்சு அவமானப்படுத்தாதேங்கோ இனியும் எனக்குத் கலியாணமாகும் என்ற ஆசையை விட்டுடுங்கோ! அன்னம் சீறினாள் அபிராமி பெருமூச்சுவிட்டாள்.
"உனக்கொரு வழி, செய்யமுடியாமல் நான் படுகிற வேதனை உனக்கென்ன தெரியும் தங்கச்சிP ஹம் எல்லாம் விதி! ஆனால் எனக்கு இன்னொரு நம்பிக்கை இருக்கு மேனை. அண்ணரின்டை மகன் வேலுப்பிள்ளை சிங்கப்பூரிலையிருந்து வாறதெண்டு எழுதி யிருந்தானே! நாளண்டைக்கோ என்னவோ வந்திடுவான். கலியானஞ் செய்து கொண்டு ஊரோடிை இருக்கத்தான், வாறான். அவன்
56

உன்னைஸ் முடிக்காமல் வேறை ஆரைப் பிள்ளை முடிக்கபீ போறான்? அன்னம் சூள் கொட்டிவிட்டுப் போனாள்.
அபிராமி பாவாடைப் பருவத்தில் இருக்கும் போதே அவள் அண்ணன் சிங்கப்பூர் மச்சாளைக் கலியாணஞ் செய்து அங்கேய்ே குடியேறிவிட்டான். இப்பொழுது அண்ணனும் மச்சாளும் கண்ணை மூடிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அண்ணனின் மகன் வேலுப் பிள்ளை, அன்னத்தின் முறைப் பையன் அவளை மணக்க மாட் டானா என்ற நம்பிக்கை அபிராமிக்கு.
வேலுப்பிள்ளையைக் கண்ட அன்னத்திற்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர் உருவம் அவள் உள்ளத்தை உலுக்கிவிட்டது, வழுக்கை விழுந்த முன்தலையும் இரட்டை நாடியும், உடலின் ஒவ். வொரு அசைவுக்கும் ஒப்டத் தாளம் போடுந் தொந்தியும் அவள் மனதிற்கு இதமளிக்கவில்லையே! அவரைத் தன் கணவன் என்று நினைத்துப் பார்க்கவே அன்னத்திற்கு அருவருத்தது. இருந்தும் வேறு வழியற்ற போதுP
冷 வந்ததும் வராததுமாய் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பதென்று சந்தர்ப்பதைக் காத்திருந்தாள் அபிராமி. வேலுப்பிள்ளை வந்து ஒரு வாரமிருக்கும். அன்று காலையில் போனவர் பின்னேரமாகத்தான், வீடு திரும்பினார். கூடத்தில் அவருக்குத் தேனீர் கொண்டுவந்து கொடுத்த அபிராமி பேச்சைத் தொடங்கினாள்.
"தம்பி, இன்னம் எவ்வளவு நாள் கலியாணஞ் செய்யாமல் இருக்கப் போறாய்? மெல்லத் தூண்டிவிட்டாள். வேலுப்பிள்ளை ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார்.
"அதுதான் நானும் ஒரு நல்ல இடிமாய்ப் பாத்துக் கொண்டிஷ் ருந்தனான் மாமி”.
"எப்பவும் சொந்தத்துக்குள்ளை சம்பந்தம் செய்யிறதுதான் நல்லது. அன்னமும் சும்மா இருக்குது. சொந்த மச்சானிருக்க வெளி யிலே செய்யிறது நல்லாயில்லை யெண்டு வைச்சிருக்கிறன். உனக்கும்: அன்னத்துக்கும்.” நம்பிக்கையும் கெஞ்சலும் இழைந்தோடிய கேள் விக்குறியில் அபிராமியின் குரல் ஒடுங்கியது. அவள் கேள்வி. கனத்து அக்கூடத்தை வியாபிப்பது போலிருந்தது. வேலுப்பிள்ளை ஆறுத லாகச் சொற்களை அளந்து பேசினார்.
"அன்னத்தை நீங்கள் எனக்குத் தரச் சம்மதப்படுவீங்கள் எண்டு
நான் நினைக்கேல்லை. தரகர் முத்தையா ஒழுங்குபடுத்தின; இட மொண்டு எனக்குப் பிடிச்சுக் கொண்டுது. கலியானத்துக்கு நாள்
57

Page 36
தான் பாக்க வேணும். " அபிராமி நெஞ்சை அழுத்தினாள்.
"பெடிச்சி ஆர் தம்பிP கஷ்டப்பட்டுக் கேட்டாள்."
“பொன்னம்மாவின் மேள், மாமி"
"ஆ! அந்தச் செவிட்டுப் பெட்டையையே கட்டப் போறாய்?"
"காது கேக்கிறது குறைவெண்டால் என்ன மாமிP சீதனம் இருபத்தையாயிரம் தருகினம். அதோடை அந்தப் பெடிச்சி இந்த மெஷின் தையல் எல்லாம் நல்லாச் செய்யுமாம். தையலாலை மாதம் இரண்டு நூறுக்கு மேலை சம்பாதிக்கிதாம்." அபிராமி இடிந்து போய் உட்கார்ந்துவிட்டாள். வேலுப்பிள்ளை தரகதைக் காணப் புறப் ULLITŤ.
அறையில் பாடக் கொப்பிகள் திருத்திக்கொண்டிருந்த அன்னத் தின் காதில் இதெல்லாம் விழாமலில்லை. வேலுப்பிள்ளையின் பேச் சைக்கேட்டு அவள் மனம் விக்கித்து நின்றது. மெல்ல மெல்ல உள் ளத்தில் உணர்ச்சி ஊறத்தொடங்கியது. வேலுப்பிள்ளையைத் தான் மணக்க ஒப்புவது பெருந்தன்மையான செயல் என்று அன்னம் நினைத்தாளே யொழிய வேலுப்பிள்ளை தன்னை மணக்க மறுத்து விடுவார்; அதுவும் ஒரு செவிட்டுப் பெண்ணுக்காக என்று அவள் ஒரு கணம் கூட நினைக்கவில்லை. கடைசியில் நடந்ததுP தொந்தியும் தொப்பையுமான வேலுப்பிள்ளையை அன்னத்தின் பெண்மையின் கவர்ச்சியைவிட ஒரு செவிட்டுப் பெண்ணின் சீதனக் கவர்ச்சியே ஈர்த்தது. அவளது வகையற்ற நிலை, செயலற்ற தன்மை அவளைக் குத்தியெடுத்தது. அவள் ஒன்றுக்குமே உதவாதவளாP ஆண் உள் ளத்தைச் சலனப்படுத்தும் சக்தி கூடவா எனக்கு இல்லை? என்னைத் தனதாக்கிச் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஒருவன் உள் ளத்தில் எழுப்பும் தன்மை எனக்கில்லையா? என்று நிறைவு பெறாத உள்ளம் நிலை தடுமாறியது. ஏதோ ஒரு வெறி அவளுள் பிறந்தது." அபிராமி எட்டிப் பார்த்தாள்.
"நான் கோயிலுக்குப் போட்டு வாறன், அன்னம் தம்பியும் வெளியிலை போட்டுது."
அன்னம் தன் அறைக் கதவைச் சாத்திவிட்டு நிலைக்கண்ணாடி யின் முன் வந்து நின்றாள். அதில் தெரிந்த அவள் உருவம் தலை யோடு வழித்து வாரப்பட்ட கூந்தல் கோடாலிக் கொண்டையாகப் பிடரிக் கழுத்தில் படுத்துக் கிடந்தது. உடலைச் சுற்றிய முரட்டுச் சேலை அவள் அங்கமைப்புகளை உருத் தெரியாமல் மறைத்தது. உடம்போடு இறுக்கிப் பிடிக்காது சற்று தொளதொளத்த ரவிக்கை வயிறு தெரியாமல் இடுப்புச் சேல்ைக்குள் திணிக்கப்பட்டிருந்தது.
58

யுவதியாய் இருக்கும்போதே கணவனை இழந்த அபிராமி ஊர் அபவாதத்திற்குப் பயந்து தன் நடத்தையில் மாசு கற்பிக்க எவ்விதச் சந்தர்ப்பமும் ஏற்படக் கூடாதென்ற பயத்தில் கட்டுப்பெட்டியாக வாழ்ந்தாள். மகளையும் நவநாகரிகத்தின் சுவடு படாமல் வளர்த்தாள். எஸ். எஸ். ஸி. தேறியதும் அன்னத்திற்கு வாத்தியார் வேலை கிடைத்தது. அபிராமியின் கட்டுப்பாட்டின் கடுமையும் கூடியது. சிறிது காலத்தில் இடைக்காட்டிலும் நவநாகரிகத்தின் கிளைகள் எட் டின. தன் மாணவிகளைப் போல் எல்லாம் விதவிதமாய் உடுத்திக் கொள்ள, அலங்கரிக்க அன்னத்திற்கு ஆசைதான். ஆனால், அபிராமி அதற்கு இடங்கொடுக்க மாட்டாள். அன்னத்திற்கும் திடீரெனத் தன் போக்கை மாற்றிக் கொள்வது என்னவோ போலிருந்தது.
அன்னம் அலமாரியைத் திறந்து ஒரு வெண்ணெய் நிற நைலான் சேலையை எடுத்தாள். இது அவள் அபிராமிக்குத் தெரி யாமல் வாங்கியது. அணிய முடியாவிட்டாலும் அதை வைத்திருப் பதே ஒரு வித நிறைவளித்தது. அதற்கொன அவள் ரகசியமாகத் தைத்த பச்சை சில்க் ரவிக்கையை எடுத்து அணிந்தாள். தோள்களி லிருந்து தாழ வெட்டிய கழுத்தோடு வியிறு தெரியும் ரவிக்கை. 'நைலான்’ சேலையைச் சுற்றிக்கொண்டு கண்ணாடியின் முன் நின் றாள். அலட்சியமாக அள்ளி எறிந்த தலைப்புசேலை தோளை விட்டு நழுவிய படியே இருந்தது. விரித்துத் தூக்கிக் கட்டிய கூந்தல் திரை போல் தொங்கியது. அப்படியும் இப்படியுமாக உடலை ஒடித்து வளைத்தாள் அன்னம். நிமிர்ந்த இளமார்பின் எடுப்புக்குத் தடை செய்யாது தழுவிக் கொடுத்தது தாவணி. கச்சணிந்த மார்பில் ஏற்றத்திலிருந்து மலைச்சரிவு போல் இறங்கி, ஒடுங்கிய இடை. பூரித்து மலர்ந்த நிதம்பங்கள். தெரிந்தும் தெரியாத ரகசியம் போல் சேலையினுாடே தெரிந்த துடைகளின் திரட்சி உடலின் நெளிவு வளைவுகளோடு ஒட்டி உறவாடும் சேலை! அன்னத்திற்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எவ்வளவு அழகான உடல் நமக்கு என வியந்தாள். அதிலே ஒருவிதப் பெருமை அவளுக்கு ஏற்பட்டது. தனக்கு நேர்ந்த சிறுமை, மனக்குனிவு, அவமானம், எல்லாவற்றை யுமே துடைத்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. கண்ணாடியின் முன் நின்றாள், நடந்தாள், ஒய்யாரமாகச் சிரித்தாள்.
"படபட" வென்று வாசற் கதவு தட்டும் ஓசை! அன்னம் அந்த வேகத்தில் சேலையைக் கழற்றத் தொடங்கினாள். வாசலில் வேலுப்பிள்ளையாய்த் தானிருக்கவேண்டும்! அபிராமி என்றால் கொல்லை வழியே வந்திருப்பாள். இந்த உடையோடு எப்படி அவர் முன் போவதுP திடீரென்று அன்னத்தின் உள்ளத்தில் ஒரு பொறி விழுந்தது. வேலுப்பிள்ளைதானே! அப்படியானால் அவள் ஏன் இப்படியே அவர் முன் போகக்கூடாது? பெண்மையின் முழுப்
59.

Page 37
பொலிவையும் அவர் பார்க்கட்டுமே! அதன் பின்னும் அவர் மனம் பேதலிக்கிறதா இல்லையா பார்ப்போமே! இந்தப் புதிய அன்னம் அவர் உணர்ச்சிகளைச் சுண்டி இழுக்கிறாளா இல்லையா பார்ட் போமே!... தன்னை மறந்த நிலையில் அன்னம் தயங்கவில்லை விரைந்து கதவைத் திறந்தாள் அங்கே வாசற்படியில்
ரத்தினம்! அன்னத்தின் உடல் குளிர்ந்து விட்டது.
"அபிராமி இல்லையேP.ஆ.ர.துP." ரத்தினத்தின் பாம்புக் கண்கள் ஒரு பார்வையில் அன்னத்தைத் தலையிலிருந்து கால்வரை படம் பிடித்தன "...ஆரது. அன்னமே! ஒமோம்! அன்னந்தான்! எங்கை பட்டணத்துக்குப் போறியோP. படம் பாக்கவோP." என்று இழுத்த ரத்தினத்தின் பார்வையோ ஆயிரம் சொல்லிற்று
"இல்லை. எங்கேயும் போகேல்லை," என்று நழுவி ஓடும் சேலையோடு போராடிக் கொண்டே முணுமுணுத்தாள் அன்னம்.
"அபிராமி இல்லையே?
"அம்மா கோயிலுக்குப் போயிட்டா ரத்தினக்கார்
"அப்ப வாறன் பிள்ளை." ரத்தினம் திரும்பினாள். அதே சமயம் படலை கிறீச்சிட்டது. வேலுப்பிள்ளைதான்! அவரையும் அன்னத்தையும் மாறி மாறிப் பார்த்த ரத்தினத்தின் முகம், "ஓ ஹோஹோ!" என்பது போல் மாறியது. வேலுப்பிள்ளையைக் கண்ட அன்னம் கதவைத் திறந்தபடியே விட்டு விட்டு உள்ளே மறைந்தாள். ரத்தினத்தோடு பேச நின்ற வேலுப்பிள்ளை அவளைக் கவனிக்க வில்லை. அறைக்குள் அன்னம் நைலான் சேலையை உரிந்து கழற் றிப் பந்தாகத் திரட்டி அலமாரிக்குள் திணித்தாள். படபட வென அவள் இதயம் அடித்துக்கொண்டது.
ஒரு வாரத்தில் வேலுப்பிள்ளையின் கல்யாணம் நடந்து அவர் மனைவி வீட்டோடு போய்விட்டார். அன்னத்திற்குத் தெருவிலும் பள்ளிக்கூடத்திலும் எல்லோரும் தன்னைக் காணும் பொழுதெல்லாம் கிசுகிசுவென்று காதைக் கடிப்பதும், விகல்பமாகச் சிரிப்பதும் போற் பட்டது. தனக்கு இன்னமும் மணமாகாததே இதற்குக் காரணம் என்று நினைத்துக்கொண்டாள். ஆனால் அவள் வகுப்பில் ஒழுங்காயி ருக்கும் மாணவிகள் அவளை அசட்டை செய்யத் தொடங்கியது அவளுக்குப் புதிராகவே இருந்தது. அன்று தலைமையாசிரியை தன்னை வந்து காணும்படி செய்தி அனுப்பியதும் அன்னம் பயந்து விட்டாள். தலைமை ஆசிரியை சுற்றி வளைக்கவில்லை.
60

"உன்னை வேலையிலிருந்து நிறுத்த வேண்டியதற்கு வருந்து கிறேன் அன்னம்? இதை அன்னம் புரிந்துகொள்வதற்குச் சிறிது நேரம் எடுத்தது, மெல்ல உதட்டைக் கூட்டினாள். "என்ன?"
"ஆமாம். உன் நடத்தையைப் பற்றி ஊரில் கேவலமாகக் கதைக்கிறார்கள். உன்னால் பள்ளிக்கூடத்திற்கு இழுக்கு ஏற்படக் கூடாதல்லவா?
“என் நடத்தையா? நீங்கள் நம்புகிறீர்களா?" அன்னத்தின் குரல் திழுதழுத்தது.
"நான் நம்புகிறேனோ இல்லையோ, நெருப்பில்லாமல் புகை யாது அன்னம்!”
"ஈர விறகு புகைவதுண்டு அம்மா!" பதிலுக்கு வேலை நீக்கத் துண்டுதான் கிடைத்தது. அன்னம் எதை எதிர்பார்த்தாலும் இதை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அவள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி; அதன் காரணம் தான் அவளுக்கு விளங்கவில்லை. வேலைபோய் விட்டது. கிடைத்ததோ பழி! இனி இந்த ஊரில் எப்படி வாழ்வது? கனக்கும் இதயத்தோடு அன்னம் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தாள். ‘பஸ் நிலையத்தில் நின்ற விதானை வேலாயுதம் அன்னத்தைப் பார்த்து அவருக்கே உரிய கேவலச் சிரிப்பைச் சிந்தினார்.
“என்ன அன்னம், பள்ளிக்கூடத்தாலையோP" தலையாட்டிய அன்னம் நிற்காமல் நடந்தாள். அவரைக் கண்டாலே அவளுக்குப் பயம். ஆனால் இந்தச் சிறு நிகழ்ச்சியைக் கவனித்துவிட்ட கண்கள் பல அர்த்த புஷ்டியோடு ஒன்றை யொன்று நோக்கின. இதைச் கவனித்த விதானையாருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது. ஏன் ஆத்ம திருப்தியேனதான்! " . .
அன்னம் வீடு போய்ச் சேர்ந்ததும், "சீதேவிக் கிழவி கிணத்தடி யிலை விழுந்து பேச்சு மூச்சில்லாமல் கிடக்குதாம் அன்னம்! எட்டிப் பாத்திட்டு ஓடி வாறன். கதவைச் சாத்திப்போட்டு இரு," என்று அபிராமி போய்விட்டாள். அன்னம் தாய் போனதையோ அவள் சொன்னதையோ கவனிக்கவில்லை. அவள் மனம் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அன்னம் அழகின் அவதாரமா யில்லாவிட்டாலும் பெண்மையின் பூரிப்போடும் பொலிவோடும் விளங்கினாள். அவளை எடைபோட்ட வண்டுகள் பணத்தின் எடை தேடிப் பறந்துவிடடன. அவள் மனத்தின் தாபம் தீரவில்லை. உணர்ச்சித் துடிப்பு அடங்க வில்லை. அவளுக்கு வாழ்வின் கதவம் திறக்கவில்லை. ஒருத்தி நெறி தவறிவிட இந்த மனோநிலை மட்டுமே போதாதா? ஆனால், மாறாக, பருவத் தூண்டுதலை, வேகத்தை அடக்கிக் கட்டுப்படுத்தி வாழ்ந்தவ
61

Page 38
ளுக்குக் கிடைத்த பரிசு ஒழுக்கங் கெட்டவள் என்ற அவச்சொல். வளம் பெற்ற காவியமாய் வாழ நினைத்தவள் கருத்தற்ற கதை போலாகிவிடடாளா? பெயர் முதல் பழக்கம் வரை அடக்கமே உருவான அன்னத்திற்காக இக் கதி?
கதவு பலமாகத் தட்டப்பட்டது. அன்னம் எழுந்து திறந்தாள். வாசலில் நின்றார் விதானை வேலாயுதம். இந்த வேலாயுதம் வீட்டில் பொன்னி என்ற இளம் பெண் ஒருத்தி வளவு கூட்டிவந்தாள். அவள் விதானையின் வைப்பு என்று ஊர் கதைத்தது. விதானை யாருக்குக் கல்யாணமாகி இரண்டு மாதமிராது. ஒரு நாள் அதி காலையில் அவர் மனைவி கிணற்றில் மிதந்து கொண்டிருந்தாள். இருள் பிரியுமுன் குளிக்கவந்தவள் தண்ணீர் அள்ளும்போது தவறிக் கிணற்றில் விழுந்திருக்கவேண்டும் என்று விதானையார் சொன்னார் 'கோர்ட்டும் சொல்லிற்று. ஆனால் ஊர் என்னவோ வேறு வித மாகத்தான் பேசிற்று. அதன் பிறகு பொன்னிக்கு இரண்டு குழந்தை (956 (9 L.
“என்ன அன்னம், ஒரேயடியாப் பாக்கிறாய்?" உல்லாசமாய்ச் சிரித்த விதானையார் உள்ளே நுழைந்தார். வீதியில் அவளோடு பேச்சுக்கொடுக்க முயன்றவரே தவிர இதுவரை அவர் இப்படி வீட் டிற்கு வரத் துணிந்தவரல்லர்.
“என்ன அம்மா இல்லையேP” என்றவர் சுவாதீனமாகத் கதிரை யில் அமர்ந்து அன்னத்தின் மேல் கண்களை மேயவிட்டார்.
"என்ன, பேசாமல் நிக்கிறாய்? உன்னோடை ஒரு விஷயம் பேசத்தான் வந்தனான்" அவருடைய கண்களில் ஒரு வெறி, பசி! அன்னத்தின் உள்ளம் பயந்து நடுங்கியது. ஆனால் அந்தப் பயத்தி லும் ஒரு புல்லரிப்பு பெண்மையின் சிலிர்ப்பு! கடுமையாக நிமிர்ந்த அன்னம்,
“என்ன விஷயம்?" என்றாள்.
"அன்னம் இன்னமும் எத்தனை நாள் இப்படித் தனிய இருப் பாய்? இந்த ஊரிலை என்னைத் தட்டிக் கேட்க ஒருத்தரும் இல்லை. நீ சீவியத்திலை காணாத காசு உன்டை கையிலை வழியும். இனி உன்னை ஒருத்தரும் கட்டிக் கொள்ளவும் மாட்டினம். என்டை பேச்சைக்கேட்டால் ராணி போல இருக்கலாம்.” ஏதேதோ தறி கெட்டுப் பேசினார் வேலாயுதம். அன்னத்திற்கு அவமானத்தால் உடல் குன்றியது. இப்படியெல்லாம் ஒருவர் அவளிடம் பேசும்படி அவள் என்ன பிழை செய்தாள்? எங்கு தவறினாள்? தடுமாறினாள்? அன்னம் சீறினாள்.
62

"மூடு வாயை! என்னை என்னவெண்டு நினைச்சுப் பேசிறாய்? நட வெளியிலை" வேலாயுதம் திகைத்தார். ஒரு கணம்தான்! உடனே s96jft. விழிகளில் ஏளனம் கெக்கலி கொட்டியது.
"ஏன் வேலுப்பிள்ளையின்டை காசுக்கு விலை. போனது என்டை காசுக்கு விலை போகாதா?
"ஆ" அன்னம் துடித்தெழுந்தாள்.
"எனக்கா தெரியாது உண்டை வண்டவாளம்? ஊரெல்லாம் வெளிச்சமாப் போச்சுது. ரத்தினக்காதான் உங்களைக் கண்ணாலை பாத்தாவே!." அன்னத்தின் மனதில் பளிச்சிட்டது ஒரு காட்சி.
அங்கங்களை அடுத்தது காட்டும் பளிங்குபோல் எடுத்துக் காட்டும் நைலான் சேலையணிந்து வாசலில் நிற்கும் அன்னம். வாசற்படியில் ரத்தினம். படலையைத் திறக்கும் வேலுப்பிள்ளை. அன்னம் ஒரு பொருட்டெனக் கருதாது மறந்துவிட்ட சம்பவம். அதுவா இந்த அபவாதம் உருவாகக் காரணம்? சில நிமிஷ நேர உள்ளத் தடுமாற் றத்தால் விளைந்த வீண் பழியா? இரண்டும் இரண்டும் ஐந்தெனக் கணக்கிடும் ஊராரின் உபகாரமாP அன்னத்தின் ஆத்திரம் மழையில் நனைந்த நெருப்பாய் அணைந்தது.
“என்ன ..... என்ன சொல்கிறீர்கள்? ஜீவனற்ற குரலில் முணு முணுத்தாள்.
“பார் அன்னம், வேலாயுதத்தின் குரலில் குழைவு தோன்றியது "இங்கை பார். இதிலை ஐந்நூறு இருக்கிது. ஐந்நூறு இல்லை ஐயாயிரம். நீ மனம் வைச்சால், உனக்குத்தான். ஊரிலை ஒருத்தர் இதைப்பற்றி மூச்சுவிடாமல் பாத்துக் கொள்ளிறன். * அன்னம் நோட்டுக் கற்றையைப் பார்த்தாள். வேலாயுதத்தின் வெறிக் கண் களைப் பார்த்தாள். மேட்டில் இருந்தவள் சேற்றில் விழுந்துவிட்டாள். இனி இந்தச் சமூகச் சகதியிலிருந்து அவளுக்கு ஏது விடுதலை? அவள் தீக்குளித்து எழுந்தாலும் தூயவள் என்று ஒப்புக்கொள்ளுமா இந்த ஊர்? இல்லை. அவள் கெட்டவள் கெட்டவள்தான். அன்னம் வாழ்க்கையின் மேலுள்ள பிடிப்பை இழந்துவிட்டாளா? போராடும் உணர்வை இழந்துவிட்டாளாP சந்தர்ப்பக் கோளாறால் நேர்ந்த பழியை வாழும் நெறியாகக் கொள்ளப் போகிறாளாP. அன்னம் தலை நிமிர்ந்தாள். இசைவு, வீழ்ச்சி அவள் கண்களில் தெரிந்திருக்க வேண்டும். வேலாயுதம் சிரித்தார்.
"அப்ப நான் இண்டைக்கு நேரஞ்செல்ல வாறன். அபிராமிக் கும் சொல்லிவை அன்னம்" வேலாயுதம் போய்விட்டார்.
63

Page 39
அன்னத்திற்குத் திடீரென்று அடக்க முடியாத சிரிப்பு எழுந் தது. கல்யாணம் செய்யும் நோக்கத்தோடு அவளைப் பெண் பார்க்க வந்தவர்கள் மணந்து கொள்வதற்குக் கூலியும் கேட்டனர். ஆனால் பணத்தையும் தானே கொடுத்து அவளைத் தனதாக்க முனைந்தவர் ஒருவர்தான் வேலாயுதம்! அட கடவுளே! நெறியோடு முறையோடு மணம் பேசிச் சென்றால் மனைவி என்ற ஸ்தானத்தை அவர் களுக்குப் பெரு விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. கரும்பையும் கொடுத்து சுவைக்கக் கூலியும் கொடுக்கவேண்டி யிருக்கிறது. ஆனால் அதே மனிதர்கள்தான் ஆசைநாயகிக்காகப் பணத்தை அள்ளி அள்ளி இறைக்கிறார்கள். அவள் கற்பை விலை கூறிய வேலாயுதம் சீரான முறையில் அவளை மணம் செய்து கொள்ள முன்வந்திருக்கலாமே!.
அபிராமி திறந்த தகவின் வழியே வந்தாள்.
"என்ன அன்னம் கதவையும் சாத்தாமல்!. * அன்னம் கடகட வென்று வாய்விட்டுச் சிரித்தாள்.
"அம்மா உடனே உங்கடை துணிமணிகளைப் பெட்டியிலை எடுத்து வையுங்கோ. நாங்கள் இண்டைக்கு, இப்பவே - இந்த ஊரை விட்டுப்போகிறோம்!"
“என்ன தங்கச்சி, உனக்குப் பைத்தியமா? இங்கையிருந்து எங்கை போவதுP" அன்னம் அபிராமியை வெறித்துப் பார்த்தாள். அந்தப் பார்வை அபிராமிக்கு அச்சமூட்டியது.
"எங்கையோ?. இவ்வளவு தூரம் வந்துவிட்ட நான் இனி எங் கெங்கெல்லாம் போகப் போகிறேனோ? எதை யெல்லாம் காண்பே னோ?” எனத் தனக்குள் முணுமுணுத்த அன்னம் அதே விரக்தி யோடு உரத்துச் சொன்னாள் "இனி இந்த ஊரில் நாங்கள் வாழ முடியாது அம்மா. , எல்லாம் பிறகு சொல்லிறன். இப்போ போய் ஆயத்தப்படுத்துங்கோ. நாப்பத்தைந்து நிமிஷத்திலை கொழும்பு ரயில் வெளிக்கிடும். அதைப் பிடிக்கவேணும்!" அன்னம் எழுந்து தன் பெட்டியைத் துரசி தட்டித் திறந்தாள்.
-9/éGLITLift 1961.

மன்னிப்பாரா?
"மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவை தானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ் வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்ற வில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்கவேண்டு மென்றால் அந்தக் குலம் கெட்டவளை மனங் குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதுாக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவது
தான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!. எங்கே, என்னைப் பார் மூர்த்தி. அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா. ஒரு வார்த்
தைதான்!. பெற்றவள் கெஞ்சுகிறேன்." மூர்த்தி அந்தக் காட்சியை நினைவு கூரச் சகியாதவன்போல் கண்களை இறுக மூடிக்கொண் டான். பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வு மிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ் சோதனை. அவன் நிலைமை ஒன்றும் புதிதல்ல. யுகபுகமாய் இரு வகை உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம் தான். ஒன்றைக் கடமை என்பர் மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித் திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டு மிருக்கிறான். அவனுடைய ஐந்து நண்பர்கள் காதலித்தார்கள். அவர்க ளில் நால்வர் காதலை மறந்து கடமை பெரி தெனக் கவலை யற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலில் வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந் தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள். எல்லா விததிலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்கத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திர மறிந்துதான் இடச் சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இட மறிந்து மதிப்பிட்டுக் கொடுக்க வேண்டுமோ?
அந்தச் சம்பவம் நடந்து இன்று ஆறு மாதங்கள் சென்று விட்டன. நாளை உதயத்தில் சுசீலாவுக்குத் திருமணம். குலம், கோத் திரம் பார்த்துத் திருமணம், உலகின் உதய வேளையில் சுசீலாவின் வாழ்வும் மூர்த்தியின் வாழ்வும் அஸ்தமித்து இருள் பாய்ந்துவிடும். வீட்டு மாடியிலே அவன் அறையில் மூர்த்தியின் உருவம் சாய்வு
65

Page 40
நாற்காலியில் கிடந்தது. அவன் உணர்வோ தெருக் கோடியில் சுசீலாவின் கல்யாணக் களை தோய்ந் வீட்டை நோக்கி ஓடி விட்டது. மூர்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது. நாதஸ்வர கீதம் திறந்து ஜன்னலூடே காற்றில் மிதந்து வந்தது. மேள ஒலி அவன் இதயத்தைப் பிளப்பது போலிருந்தது. மனதில் பட்ட பச்சைக் காயம் ரணமாக வலித்தது. மூர்த்தி எழுந்து ஜன்னலை அறைந்து மூடினான். சுசீலாவின் குணத்திலே குறை யில்லை என்றாலும் பிறப் பிலே குறை வைத்துவிட்டார் படைத்த கடவுள் அவளின் நிலையை அறிந்தும், தன் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்களென்று தெரிந் தும் மூர்த்தி தன் உள்ளத்தை நெகிழவிட்டான். எண்ணும் திறனெனத் தனக்கு இருந்த தெல்லாம் அவளைச் சுற்றிப் படர விட்டான். தன் அறிவின் எச்சரிக்கைக்குப் புறம்பான முடிவைக் கொண்டு விட் டான். ஆனால் அந்த முடிவைப் பின்பற்றிச் செல்லவேண்டிய தரு ணத்தில் துணி விழந்த கோழையாகி விட்டான்.
சுசீலா ஒளிவு மறைவு அற்றவள். அவள் மூர்த்தியிடம் எதை யுமே மறைக்கவில்லை.
"மூர்த்தி, ஏழ்மையிலும் நான் கண்ட் நிறைவே நான் தரக்கூடிய நிதியம். குணமே நான் தரும் குலம். ஆனால் நமது சமூகம் கொடுமை வாய்ந்தது மூர்த்தி. எண்ணித் தான் துணிந்தீர்களா? அல்லது இவை உணர்ச்சி வேகத்தில் பேசும் வார்த்தைகளா?”
"நான் துணிந்துவிட்டேன் சுசீ. உலகம் வேகமாக முன்னேறு கிறது. அந்த முன்னேற்றப் பாதையில் சாதி வரம்புகள் நிலைத்து நிற்க முடியாது. நாளைய உலகம் நம்மைத் தான் ஆதரிக்கும் சசீ. இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது? எவ்வளவு தன்னம்பிக்கை யோடு மூர்த்தி அன்று பேசினான். இன்று மனச்சாட்சியின் உபாதை தாங்காது புழுப்போல் நெளிகிறான். சுசீலா அவனில் நம்பிக்கை வைத்தாள். இன்று அவள் எண்ணத்தில் ஒரு கணம் கூட நிலைக்கத் தகுதியற்றவன் ஆகிவிட்டான்.
மூர்த்தியின் மனம் கலாசாலை நாட்களை நோக்கித் தாவியது. எத்தனை இன்பமான நாட்கள் அவை. அந்த வாலிப சமுதாயத் திலே காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு தான் கிடைத்தது. அந்தக் கவலையற்ற வாழ்க்கை ஒட்டத்தில் பெற்றோர்கள் எதிர்க்கக் கூடு மென்ற சிறு நினைவுகூடத் தேய்ந்து விட்டது. வாழ்க்கையின் பரிதாபமே அதுதான். சீர்திருத்தக் கருத்துக்களைச் சிந்தையாய்க் கொண்ட இளைஞர் உலகம் சாதிசமய வேற்றுமைகளை மதிப்ப தில்லை. அவை இன்றைய சந்ததிக்கு அர்த்தமற்றவையாய்த் தோன் றும். அதனால் தான் பழமையில் ஊறிய முதிய சந்ததியின் மனப் போக்கு அதற்கு விளங்குவதில்லை. ஆசார அனுஷ்டானங்களில் ஊறிப் பழைய சமூக திட்டத்தைப் போற்றி வாழும் முதிய சந்ததி
66

சமூக சீர்திருத்தத்தை ஆதரிப்பதில்லை. சாதியை ஒழிப்பது சத்தி யத்தை அழிப்பதை ஒக்கும் என்றெண்ணும் சந்ததி அது. அதனால் தான் கடமையைப் பாசத்தைக் காட்டிக் களங்கமற்ற இளம் உள்ளங் களைச் சிதைத்து விடுகிறது. மூர்த்தியின் தந்தை கண்கலங்கக் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.
"epīģg, உனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அளிக்க முடியாது போய்விடுமோ என்ற பயத்தால் எனக்கு வேறு குழந்தையே பிறக்காது பார்த்துக்கொண்டேன். விளைாட்டல்ல, மூர்த்தி. உண்மைதான். கடைசியில் எனக்கு நீ செய்யும் உபகாரம் இதுதானா? மானத்தோடு வாழ்ந்து விட்டேனப்பா மானத்தோடு என்னைச் சாகவிடு மூர்த்தி!” மூர்த்திக்கு மனம் தாளவில்லை. அவர் பச்சையாய்த் தம் உள்ளத்தைத் திறந்து காட்டியது அவனை என்னவோ செய்தது. உள்ளத்தில் கொப்பளிக்கும் ஆற்றாமை தானே அவரை அப்படிப் பேசச் செய்தது? இப்படியும் ஒரு தியாகமா?
՞-9|ւնւմn...... அப்பா. நீங்கள் விரும்பியபடியே செய்கிறேன் அப்பா!” மூர்த்திக்கு அப்பொழுது தன் குரலே வேற்று மனிதனின் குரல் போல் தோன்றியது. மூர்த்தி சற்றே உடம்பை நெளிந்து கொடுத்தான். பெற்றோருக்கு நிம்மதி அளித்து விட்டவன் தன் நிம்ம தியைப் பறிகொடுத்துவிட்டான் அவன் இதயத்தில் செதுக்கப்பட்ட அந்த உயிரோவியத்தை என்ன முயன்றும் அவனால் அகற்றிவிட முடியவில்லை. சசீலா தான் அவனைப்பற்றி என்ன நினைத்திருப் பாள். அன்றொரு நாள் அவளிடம் பெரிதாக வீரம் பேசினானே!
"மூர்த்தி எங்கள் இருவரை மட்டுமன்றி, இது உங்கள் பெற் றோரையும் சுற்றத்தையும் சம்பந்தப்பட்ட விஷயம். எங்கள் சமூகம் அப்படிப்பட்டது. எனக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் உறுதி உங்களுக்குண்டா? எனக்காக ரத்த பாசத்தின் பிணைப்பைக்கூட உதறி விடமுடியுமா உங்களால்? சுசீயின் உள்ள அடித் தளத்திலே இந்த அச்சம் சதா அதிர்துக்கொண்டி ருந்தது. நியாயமான அச்சந் தானே! மூர்த்தி அவளுடைய விரிந்த கண்களை, சற்றே திறந்த உதடுகளைப், புருவ வளைவைப் பார்த்துப் பாசத்தோடு, பெருமை யோடு சிரித்தான்.
"சுசீ. தாழ்வில் நீ கண்ட திருப்திதான் வாழ்வில் எனக்கும் வேண்டியது. எனக்குச் சுற்றமும் சூழலும் இனி நீ தானே? ஒரு வருக்கொருவர் துணையாக வாழ்வது போதாதா சுசீP என் மேல் அத்தனை அவநம்பிக்கையா உனக்குP” அத்தனையும் சொற்கள் தான். வெறும் வெற்றுச் சொற்கள்தான். அன்று அந்தச் சிறுமிக்கு இருந்த அறிவு, தைரியம் அவற்றில் ஒரு துளி கூட அவனுக்கு ல்லாமல் போய்விட்டது. அவள் உள்ளத்தின் நம்பிக்கை, ஆசை, கனவு, அத்தனையையும் குழி தோண்டிப் புதைத்து விட்டான்.
67

Page 41
சுசீலா அவனை நோக வில்லை; குற்றம் கூற வில்லை. வெறுக்கவு மில்லை.
"மூர்த்தி, உங்கள் பெற்றோரின் மனக்கசப்பின் அடிப்படை யிலே நம் வாழ்வை அமைத்துக் கொள்வதால் சுக மில்லை. உங்கள் மனைவியாக வருபவள் உங்கள் குடும்பத்தை வாழ்விக்க வருபவள். குடும்பத்தை குலைக்க வருபவள் அல்ல. வருந்தாதீர்கள். காலம் உங்கள் உள்ளக்காயத்தை ஆற்றிவிடும்." அறிவு வார்த்தைகளை உரு வாக்கி உதிர்த்தது. ஆனால் உள்ளமோ உடைந்து சுக்கலாகிக் கொண்டிருந்தது. அடிடக்க முடியாது கண்களில் பொங்கிய கண் ணிர் துடைக்கத் துடைக்கப் பெருகியது.
"சுசீ உன்னை எப்படி மறப்பேன் சுசீ உன்னை எப்படி மறப்பேன்?" சட்டென்று அவள் கைகளைப் பற்றித் தன் மார்பில் புதைத்துக் கொண்டான். "சுசீ இன்னொருவன் உடைமையாவதTP முடியாது! முடியவே முடியாது!" வெறிபிடிததவன் போல் அவளை
மையாது பார்த்து நின்றான்.
"சுசீ, உனக் களித்து விட்ட இதயத்தை வேறெந்தப் பெண்ணுக் கும் என்னால் கொடுக்க முடியாது சுசீ எனக்கு மிக அருகில் இருந்த நீ இன்று அணுக முடியாத இலட்சியம் ஆகிவிட்டாய். என் நெஞ்சில் நிலைத்த உன் நினைவிலேயே நான் வாழ்வில் திருப்தி காணுவேன். நீ என்னை மறந்து சந்தோஷமாக வாழவேண்டும் சுசீ. மறுபிறவி என்று ஒன்றிருந்தால்!. yy
மறுபிறவி தொடுவானம்போல் உரு விளங்காத, புரியாத மறு பிறவியை நினைத்து ஆசையை, உள்ளத் தாபத்தைத் தணித்துக் கொள்ள முடியுமா?
மூர்த்தி, பெருமூச்சு விட்டான். மெல்லிய நாதஸ்வர ஒலி அடங்கி வெகு நேரமாகி விட்டது. வெளியே பால் நிலவு காய்ந்து கொண்டிருந்து. உலக இருளுக்கு ஒளி ஏற்ற ஒரு நிலவு உண்டு! அவன் உள்ள இருளுக்குP. ஏன் இல்லை? சுசீயின் நினைவு, அவன் உள்ளத்தில் என்றும் சிரிக்கும் சுசீயின் அழகு முகம் அவன் வாழ்வில் இருளென்பதே இல்லாமற் செய்துவிடும். விடிய ஆறு மணிக்குக் கோயிலில் முஹூர்த்தம் என்று கேள்விப்பட்டிருந் தான் கல்யாண வீட்டுக்காரர் எல்லோருமே தூங்கியிருப்பார்கள். உலகமே உறங்கிவிட்டது. ஆனால் அவன் உள்ளத்திற்குத் தான் இனி உறக்க மென்பதில்லையே! சுசீலா தூங்குவாளா? அல்லது அவனைப்போல் நினைவுகளால் அலைப்புண்டு தவித்துக்கொண்டிருப்பாளா? சுசீலா தான் அதற்குள் திருமணத்திற்குச் சம்மதிப்பாள் என்று அவன் நினைக்க வில்லை. அதற்குள் அவனை அவளால் மறக்க முடிந் ததா? ஏன் மறக்கக் கூடாது? அவனை நினைத்து அவள் ஏன் உருக
68.

வேண்டும்? நம்பி வந்தவளை நட்டாற்றில் விட்டு விட்டான். ஏளனத் திற்கு, அவமானத்திற்கு, அவதூறுக்கு ஆளாக்கி விட்டான், அவனுக் காக அவள் வாழ் வெல்லம் நிராதரவாய், நிறைவற்றவளாய் அலைய வேண்டும் என்று நியதியா? ஆமாம். சுசீலா அவனை மறக் கத் தான் வேண்டும். அதுதான் அவனுக்குத் தகுந்த தண்டனை. ஆனால். ஆனால் மூர்த்தியால்தான் அவளை மறக்க முடிய வில்லையே! அவன் அவளை மறக்க விரும்ப வில்லையே! அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்றுபோல் அவன் காதில் ஒலித் தன.
“மூர்த்தி, உங்கள் மனைவியாய் வாழ நான் கொடுத்து வைக்க வில்லை. இருந்தும், நீங்கள் என்னை என்னை மட்டுமே காதலிக்கி நீர்கள் என்ற நினைவே எனக்கு நிறை வளிக்கும். நான் எதற்காக வும் வருந்தவில்லை. நான் எங்கு சென்றாலும், என்னவானாலும் உங்கள் நினைவு தான் என்னை வாழ்விக்கும். மறவாதீர்கள்!” சுசீலா ஆழ்ந்து, உணர்ந்து வாழ்பவள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ அற்புதத்தை, ஜீவ ரகசியத்தை உணர்பவள். அவளுக்கா இந்தக் கொடுமை நடக்கவேண்டும். இலைகளினூடே தென்றலின் முணுமுணுப்புப் போல அவள் குரல் தான் அந்த வார்த்தைகளை அவன் காதில் வந்து ஒதிற்று. ஏனோ மூர்த்திக்கு உடம் பெல்லாம் புல்லரித்தது. சுசீலா அருகிலிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. மூர்த்தி தன் இதயத்தை அமுக்கிப் பிடித்தான். முகத்தைக் கரங்களில் புதைத்துக் கொண்டான்.
"ஐயோ சுசீ" உள்ளத்தைப் பிளந்து எழுந்தது அவ் வேதனைக் குரல். "ஐயோ சுசீ” பாவம் அவன் வேறென்ன சொல்ல முடியும்? வார்த்தைகளில் வடிக்கமுடியுமா அந்த வேதனையைP சொல்லித் தெரிய முடியுமா அந்த இதயத்தின் வலிP அனுபவித்தல்லவா அறிய வேண்டும்!
"மூர்த்தி, மனச்சாட்சி ஒன்றின் முன் தான் மனிதன் இவ்வுல கில் மண்டியிட வேண்டும். மனச்சாட்சியின் சொற்படி வாழ்வை அமைப்பவன் தெய்வத்தின் வழி நடப்பவன் ஆவான்.” மீண்டும் சுசீயின் அதே ரகசியக் குரல். மூர்த்தி உடம்பைச் சிலிர்த்துக் கொண் டான். ஏன் இன்று மட்டும் இந்த எண்ணங்கள் அவன் நினைவில் தோன்றுகின்றன? சுசீயைப் பற்றி எத்தனையோ இனிய நினைவுகள், இன்பக் கதைகள் எல்லாம் இருக்க, இன்றுமட்டும் இந்தச் சில வார்த்தைகள் அவன் நினைவில் ஓங்குகின்றன.P சுசீ நாளை இன் னொருவனை மணக்கப் போகிறாளென்றா? இல்லையில்லை. சுசீ உள்ளமும் உணர்வுமாக என்றும் அவனுக்கே உரியவள். அவளை மணக்கப்போகிறவன் பாவம் அவள் உடலைத் தானே ஆளப்போகி றான்? ஆமாம். அவள் தன்னை மறந்துவிட்டாள் என்று நினைத்தது மடத்தனம். சுசீ தன் காதலின் நினைவை என்றென்றும் மறக்கமாட்
69

Page 42
டாள்! மறக்கமுடியாது. இந்த நினைவு மூர்த்தியின் நொந்த மனதிற்கு ஏதோவொரு நிறைவளித்தது.
சலக். சலசலக்...... மூர்த்தி திடுக்கிட்டுச் சப்தம் வந்த பக்கம் திரும்பினான். சலசலக். சலக் மூடிய யன்னல் கண்ணாடி யின் வெளிப்புறத்தில் 'சிறு கற்கள் மோதிவிழுந்தன. யாரோ வெளியே நின்று அக்கற்களை எறிந்து அவன் கவனத்தைக் கவர முயல்கிறார்கள் போலும் மூர்த்தி எழுந்து யன்னலைத் திறந்தான் அங்கே... அங்கே.
"சுசீலா!” மூர்த்தி மெல்லக் கூவினான். ஆமாம்! அவள் தான்! கரிய போர்வையால் முக்காடிட்டு இருந்தாள். நிமிர்ந்து மேல் நோக்கிய அவள் முகத்தில் நிலவொளி வீசியது. மூர்த்தி திரும்பிப் படிகளை இரண்டு எட்டில் கடந்து வெளியே ஓடினான். அவள் நின்ற இடத்தில் அவளைக் காணவில்லை! பிரமையோ என. W
"மூர்த்திP" மெல்ல இழைபோல் அவள் குரல் இருளிலிருந்து எழுந்தது.
"உண்மையாக நீயா சுசீP இங்கு எப்படி வந்தாய்? உன்னைத் தேடமாட்டார்களா?"
"இல்லை மூர்த்தி. தலையிடி என்று சீக்கிரமே தூங்கிவிட்டார் கள். அறைக் கதவைப் பூட்டிச் சாவியை எடுத்து வந்தேன். விடியு மட்டும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்கள் ஏழுந்தி ருக்கு முன் திரும்பிவிடுவேன்."
"சரி. இங்கே நிற்கவேண்டாம். உள்ளே 'வா சுசீ. வீட்டில் என்னைத் தவிர ஒருவரும் இல்லை. அப்பா, அம்மா வெளியூர் போய்விட்டார்கள். வா! அறையினுள் மூர்த்தி விளக்கை ஏற்றினான். சுசீலா கண்களைக் கூசிக்கொண்டு அவனுக்கெதிரே சுவரில் சாய்ந்து கொண்டாள்.
“நாளைக்கு எனக்குத் திருமணம். பாதி தனக்குள்ளும் பாதி உரத்துமாய் முணுமுணுத்த சுசீலா மூர்த்தியை நிமிர்ந்து நோக்கி
னாள்.
"மூர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப்ப போகிறேன் என்றதும் ஆச்சரியப்பட்டீர்களா? என் தாயின் திருப்திக்காக, இந்த சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகத் திருமணம் செய்துகொள் உடன்பட் டேன். மூர்த்தி, என் உள்ளத்தையும் உணர்வையும் உங்கள் ஒரு வரால் தான் தொடமுடியும். ஆனால். ஆனால். இன்று என் உடலைக் கூட இன்னொருவன் தொட நேரும் என்ற நினைப்பையே
70

என்னால் தாங்க முடியவில்லை. மூர்த்தி, நான் உங்களுக் குரியவள். என் உள்ளமும் உணர்வும் உடலும் உங்களுக் குரியவை. என் வாழ்வு உங்களோடு ஆரம்பித்து உங்களோடு முடிவதொன்று. உங்களுக் குள்ளே அது என்றென்றைக்குமாய் ஒன்றிவிடட்டும். மூர்த்தி ஆண்டவனுக்கு அர்ப்பணமாகிவிட்ட மலர் பொன்தட்டில் இருந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் புனிதம் குறையாது. உங்களோடு ஒன்றுவதால் என் புனிதம் குறையாது மூர்த்தி!” அவள் நிறுத்தவிட்டு அவனைப் பார்த்தாள்,
"நீ என்ன. சொல்கிறாய் சுசீP" அவன் குரல் நடுங்கியது.
"உங்களுக்குப் புரியவில்லையா மூர்த்தி? இல்லை. உங்களுக்கு நன்றாகப் புரிகிறது மூர்த்தி, காதலித்தவனையே கணவனாகக் கொள் வதுதான் கற்பெனில், இந்த என் முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல மூர்த்தி. p
"உண்மையாகவா சுசீ* கற்பனைக் கெட்டாத சுகம் என்று ஒன்று இருந்தால் மூர்த்தி அதை அக்கணம் உணர்ந்தான். சுசீலா ஓடிவந்து அவனருகே மண்டியிட்டாள்.
"மூர்த்தி, நேர்மையே உருவான உங்கள் சுசீயா ஒழுக்கந் தவறிப் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை. என் மனச் சாட்சிக்கு மதிப்புக் கொடுத்ததால் தான் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் உரிமையை இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்து விடுவோம். கோடி இன்பங் களையும் ஒரு கணத்தினுள் குவித்துக்கொள்வோம். நாளை சுசீலா நடைப்பினமாகிவிடுவாள்."
சட்டதிட்டத்தைச், சாதிவரம்புகளை மதித்தவர்கள் மனித இதயங்களை மதிக்கவில்லை. அதனால் சுசீலா இன்று பண்பிழந்த வளா? ஒழுக்கங்கெட்டவளா? வழுக்கிவிழுந்தவளா? அன்றி இதுதான்
வாழும் வீரமாP
சுசீலா துடிக்கும் உதடுகளைப் பல்லால் அழுத்தி பிடித்தாள்.
"epiģģ9..... மூர்த்தி மானசீகமாய் மட்டுமன்றி என்னால்
என்றுமே உங்களோடு வாழமுடியாது. ஆனால். இந்தக்கணம் உங்களோடு வாழ்கிறேன். இதை அறிந்தால் உலகம் என்னைக் கேவலமாய்க் கருதும். பகிஷ்கரித்துவிடும், ஆனால். ஆனால்
கடவுள் என்னை மன்னிப்பார் இல்லையா?
"சுசீ” மூர்த்தி அவளை இறுக அணைத்துக்கொண்டான். "நிச்சயமாக நம்மை மன்னிப்பார்”
71

Page 43
சந்திப்பு
சண்முகம் பாதி யெரிந்த சிகரெட்டைத் தட்டில் போட்டு நசுக்கி அணைத்தான். தன் இதய உளைச்சலைப் போக்க முயல்வது போல் நெடுமூச்செறிந்தான். சுந்தரம் சொன்ன செய்தி உண்மையாய் இருக் குமோ என்று மீண்டும் மீண்டும் தன்னைத் தானே கேட்டுக்கொண் டான். நேற்று மாலை சுந்தரம் அந்த விஷயத்தைச் சொன்னது முதல் அவன் இதுயத்தைக் கணம் கணமாய் அரித்து வந்த கேள்வி இது தான். கோமதி அப்படிச் செய்வாளா? சீச்சீ அவள் அப்படிப்பட்ட வளல்ல. இருந்தும். சுந்தரம் தன் கண்ணால் கண்டதாகச் சொல்கி றானே! இல்லை சந்தேகம் தான் அவனுக்கு உடன்பிறந்த நோய் ஆயிற்றே! நன்றாய் அனுபவப்பட்ட பின்பும் அவசர புத்தியாP கண்ணால் காண்பதும் பொய்யாகக் கூடுமல்லவா? அப்படியல்லாமல் உண்மையாய் இருந்தாலும் அது அவள் குற்றமா? சண்முகம் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு கடுதாசித் துண்டை எடுத்தான். இல 24, அலோ அவெனியூ, கொழும்பு, என்று சுந்தரம் அதில் எழுதி இருந்தான். கோமதிக்கு நேர்ந்த கதிக்குத் தானே காரணம் என்று எண்ணிய சுந்தரம் அவளைத் தேடுவதில் முழுமூச்சாய் நின்றான். நேற்று மாலை முழுவதும் அவளைப் போய் பார் பாரென்று சண்முகத்தை அரித்தெடுத்தான். சண்முகம் அவளை இனிக் காண் போம் என்ற ஆசையை என்றோ விட்டுவிட்டான். அதோடு என்றா வது உள்ள அமைதி பெற முடியும் என்ற நம்பிக்கையையும் இழந் திருந்தான். ஆனால் இப்போது!. சண்முகத்தின் உள்ளம் நிலை கொள்ளாமல் தவித்தது. இதயத்தில் பொங்கிய பரபரப்பை, ஆவலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அணைந்து விட்ட அவன் ஆசைகளும் வேட்கைகளும் தணிந்து மடியும் நெருப்பு காற்றின் வீச்சினால் ஜுவாலைவிட்டு மூண்டெழுவது போல் மூண்டெழுந்தன. அவளைக் காணத் துடியாய்த் துடித்தான். ஆனால், அத்தனை ஆவலிலும் ஒரு தயக்கம் ஊடோடியது. அவன் கோமதிக்கு அளித்த வாழ்வுக்காக அவனை அவள் வரவேற்கப் போகிறாளாP வரவேற்கி றாளோ இல்லையோ, மனதில் சந்தோஷம் இல்லாவிட்டாலும் அமைதியாவது வேண்டாமா? இரவு பகலாய், கன்வு நினைவாய் அவனை விரட்டி வந்த குற்ற உணர்வைத் தொலைப்ப தென்றால் அவளைப் போய்ப் பார்க்கத் தான் வேண்டும்.
ஐந்து வருடங்களில் அவன் கணமும் மறந் தறியாத கோமதி யின் அழகுருவைத் தன் மனக் கண்களால் மேய்ந்தான். சண்முகம்,

உதயத்திலே மலரிதழ்மேல் கூடி நிற்கும் பனித்துளிபோல மென்மை யும் புதுமையும் கொண்டவளாய்க் காப்பற்றவளாய் நின்ற கோமதி யைக் கதியற்றவளாக்கிவிட்டான். அவள் திரண்ட அங்கங்களில் வாளிப்பான உடற் கட்டில் பொதிந்த கவிதை, சலனமற்ற நீர்க் குளம்போல் ஆழ்ந்து அமைதியுற்ற கண்களின் அழகு, அவன் உணர்ச்சிகளைச் சுண்டியிழுக்கும் உதடுகளின் கீழேயமைந்த கரிய மச்சத்தின் கவர்ச்சி அவன் ஆண்டு, அனுபவித்துப் போற்றிப் பேணியிருக்க வேண்டிய அழகு! அநியாயமாய்ப் போக்கிவிட்டான்! ஐந்து வருடங்களில் அவளிடத்து என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கும்?. சண்முகம் கதிரையை விட்டெழுந்து திரைச் சீலையை ஒதுக்கிச் சாளரத்தின் வழியே பார்த்தான் பலபலவென வானம் வெளுத்துக் கொண்டிருந்தது. இன்றைக்குக் கந்தோருக்கு லிவு போட்டுவிட்டு எப்படியாவது அவளைப் பார்க்கத்தான் வேண்டும் என்று முணு முணுத்தவன் பெருமூச்சோடு சாளரத்தை விட்டகன்றான்.
சண்முகம் தெருவோடு அவசர அவசரமாக விரைந்து கொண் டிருந்தான். சற்றுத் தயங்கினாலும் மேலே நடக்கத் தைரியம் வராது என்றோ என்னவோ ஓட்டமும் நடையுமாக விரைந்தான். அலோ அவெனியூவுக்குள் திரும்பித் தயங்காது நடந்தான். சுந்தரம் சொல்லி ருந்தான், வலது பக்கத்தில் ஆறாவது வீடு என்று இதோ இல. 24 - சிறிய அடக்கமான வீடு. சண்முகம் நடையைத் தளர்த்தாது அதே வேகத்தில் வீட்டை யடைந்து கதவைத் தட்டினான். வாசற்படியில் நின்ற அந்த ஒரு கணத்தில் திடீரென அவன் தைரியம் எல்லாம் வடிந்து திரும்பி விடட்டுமா என்று நினைத்தான். அதற்குள் வேலைக்காரன் கதவைத்திறந்தான். சண்முகம் உலர்ந்த உதடுகளில் நாவை ஒட்டிவிட்டுக் கேட்டான்.
ஐயா...இருக்கிறரா?
இல்லை. கந்தோருக்குப் போட்டார்”. சண்முகம் தயங்கினான். "அம். அம்மா இருக்கிறாவா? "இருக்கிறா. உக்காருங்க ஐயா. உங்கள் பேர் என்ன?”
“G3Lugin?...... பேர். சண்முகம். சண்முகம்" அவன் யாரென அறிந்த பின்னும் அவனைப் பார்க்க அவள் சம்மதப்படுவாளா? ஏன் பெயரைச் சொன்னோம் என்று ஆயிற்று சண்முகத்திற்கு. இல்லை. அவனைக்காண வேண்டுமென்ற ஆவல் அவளுக்கிருக்காதா? அவன் எதற்காக வந்திருக்கிறான் என்றறிய விரும்பாளா? இந்த இதயம் ஏன் இப்படி அடித்துக்கொள்கிறது. அறையெங்கும் எதிரொலிப்பது போல் என்று எண்ணினான் சண்முகம். சண்முகம் அறை வாச லையே வெறித்துப் பார்த்தான். ஒசைப்படாமல் நடந்ததால் கோமதி திடீரென வாசலில் தோன்றினாள். சண்முகம் கதிரையை விட்டுப் பாதியெழுந்தான். அவள் அமைதியாக நடந்து வந்து அவனுக்கு
73

Page 44
எதிரே ஒரு கதிரையில் அமர்ந்தாள். அவளைக் காணும் ஆவலில் துடித்தவன் ஏனோ தலையைக் குனிந்து கொண்டான். ஆனால் கோமதி மெளனத்தைக் கலைக்கப் போவதாய்த் தெரியவில்லை. அந்த மெளனத்தின் நெருக்கத்தைத் தாங்க இயலாதவனாய்த் தலை நிமிர்ந் தான். கோமதி முன்னை விடச் சற்று மெலிருந்தாளே தவிர அவள் உருவத்தில் வேறு மாறுத லில்லை. ஆனால் அவள் கண்கள் தான் அவன் இதயத்தைக் தாக்கின. அந்த ஆழந்து அமைதியுற்ற கண்க ளில் தெரிந்த விரக்தி - இல்லையில்லை - வெறுமையைக் கண்டு அவன் உள்ளம் அதிர்ந்தது. அதை அவனால் தாங்க முடியவில்லை. எதையாவது பேசித் தொலைக்கவேண்டும் போலிருந்தது.
"கோமதி, அன்று நடந்ததற்கு. pg
"அன்று நடந்ததற்குP. " அவள் கேள்வியில் ஏளனத்தின் மெல்லிய இழையோடியது.
"என்னை மன்னித்துவிடு என்று கேட்பதில் அர்த்தமில்லைத் தான். ஆனாலும் என் உள்ளத்தின் அடியிலிருந்து கேட்கிறேன். என்னை மன்னித்துவிடு. என் ஆத்திரம் அடங்கிய பின்தான் சுந்தரத் திடம் உண்மையையை அறிந்தேன். உன்னை அன்று முதல் தேடிக் கொண்டே யிருக்கிறேன்." கோமதி சண்முகத்தைப் பார்த்தாள். முன் நெற்றி மயிர் வெகுவாக உதிர்ந்து அவன் நெற்றி மேலும் அகன்றி ருந்தது. அவனுடைய தீட்சண்ணியமான கண்கள் ஒளி மங்கிப் புதைந்திருந்தன. இறுக, அழுத்தி மூடிய உதடுகள் உள்ள உணர்ச் சிகளை அடக்கி அடக்கி வந்ததன் அறிகுறி போலும்.
அன்று நடந்ததற்கு.
இருவரும் மெளனத்தில் மூழ்கினர். இருவர் மனதிலும் அதே நிகழ்ச்சிகள் நிழலாடின. அன்று ஐந்து மணிக்கெல்லாம் சுந்தரம் வந்துவிட்டான்.
“என்ன கோமதி, சண்முகம் இன்னும் வரவில்லையா? என்று கேட்டவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தான். சுந்தரம் சண்முகத்தின் நெருங்கிய நண்பன். மணமாகாதவன்.
"இவன் எங்கே தொலைந்தான்? ஒரே பசியாய் இருக்கிறதே, கோமதி" என்று புறுபுறுத்தான் சுந்தரம்.
"அவர் வரட்டும். நீங்கள் சாப்பிடுங்களேன்! நேற்று அவர் ஆப் பிள் வாங்கி வந்தார்." கோமதி ஒரு தட்டில் மூன்று நான்கு பழங்க ளும் கத்தியும் கொண்டுவந்து கொடுத்தாள்.
"கத்தி சரியான கூர், கவனம்!"
74

நறுக்! அவள் சொல்லி முடியக் கத்தி அவன் விரலைப்பதம் பார்த்துவிட்டது. விரலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தது. அதைப் பார்த்ததும் சுந்தரத்திற்கு உடலெல்லாம் சோர்ந்து தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. அவன் அப்படியே மயக்கமாய்ச் சாய்ந்துவிட்டான். நல்ல வேளை அது சாய்வு நாற்காலி. கோமதிக்குக் கைகால் ஓட வில்லை. சுந்தரத்தின் முகம் வெளிறிப் பயங்கரமாய். அவன் சட்டைப்பையில் தலை நீட்டிய கைக்குட்டையை எடுத்து மேசையி லிருந்து கிளாஸ் தண்ணிரில் தோய்த்து அவன் விரலுக்குக் கட்டுப் போட்டாள். அவனை விட்டகலவும் பயம். அப்படியே பிரேதம் மாதி ரிக் கிடந்தான். கோமதி தன் முந்தானையின் ஒரு மூலையைத் தண்ணீரில் தோய்த்து அதால் சுந்தரத்தின் முகத்தைத் துடைக் கலானாள். அறைக்குள் நுழைந்த சண்முகம் இந்தக் காட்சியைக் கண்டு மலைத்து நின்றான். அவன் நெற்றி நரம்பு புடைத்தெழுந்தது. அவன் முகத்தில் பொங்கிய சினத்தைக் கண்ட கோமதி வெல வெலத்துப் போனாள். அவன் அவளையே வெறித்துப் பார்த்தான். அதைத் தாங்க இயலாது அவள் தலை குனிந்தாள். அப்பொழுது தான் அவளுக்குத் தண்ணிரில் தோய்த்த முந்தானையைக், கையிலி ருந்த கிளாஸைப் பற்றிய உணர்வு ஏற்பட்டது. அவளுக்குப் பேச நாவெழவில்லை. சண்முகம் பேசாமல் அவளைத் தாண்டி உள்ளே தன் அறைக்குள் போனான். கோமதி சுந்தரத்தின் வெளிறிய முகத் தைப் பார்த்தாள். தயங்கித் தயங்கிச் சண்முகத்தின் அறை வாசலை அடைந்தாள்.
"அ.த்தான், அவர் மயக்கமாய்க் கிடக்கிறார், வந்து பாருங்க ளேன்” சண்முகம் ஆத்திரத்தோடு அவளருகே வந்து முரட்டுத்தன மாகத் தோளைப் பிடித்து அவளை வெளியே தள்ளிவிட்டு அறைக் கதவைச் சாத்தினான். கோமதிக்கு அடி வயிற்றிலிருந்து அழுகை பொங்கி யெழுந்தது. வாய்விட்டுக் கதறவேண்டும் போல். சுந்த ரத்தை நினைத்தவள் அவனிடம் போனாள். சுந்தரம் எழுந்து உட்கார்ந்திருந்தான்.
"கோமதி, எனக்குச் சின்ன வயசிலிருந்து இப்படித்தான். இரத்
தத்தைக் கண்டால் தாங்க முடியாது. நான் வீட்டுக்குப் போய் படுக் கப் போகிறேன்."
"தனியாய் எப்படிப் போவீர்கள்?"
" நான் டாக்ஸிசியில் போகிறேன். சண்முகம் வந்தால் சொல். கோமதி உயிரற்றவள் போல் தலையசைத்தாள். சண்முகம் அவன்
போகும் வரை காத்திருந்தவன் போல் வெளியே வந்தான். கோமதி யின் இதயத்தில் பீதி சூழ்ந்தது.
"அத்...தான், அவர் விரலை வெட்டிக்கொண்டு மயக்கமாய்
75

Page 45
விழுந்திட்டார். pp.
" வாய்ப்பான மயக்கம் தான்!" வார்த்தைகளைக் கக்குவது GBunresiv GoIFT6õTEOTT6õT.
"அத்தான்-”
"சிச்சீர் கேடு கெட்டவள்! வெளியே போ! விபசாரி!"
“ஆபத்துக்குப் பாபமில்லை அத்தான். இந்தச் சின்ன விஷயத் துக்கு." அவள் குரலில் கோபம் தலை தூக்கியது.
"விபசாரி" வேண்டுமென்றே சொன்னான். "இந்த வீட்டில் உனக்கு இடமில்லை. போ வெளியே!" அவள் கெஞ்சக் கெஞ்ச அவ ளைப் பிடித்து வெளியே தள்ளி வாசற் கதவை மூடினான்.
w கோமதி இமைகளுடே சண்முகத்தைப் பார்த்தாள். துரியோத னன் கூட எடுக்கவோ கோக்கவோ என்று கேட்கும் அளவுக்குப் பண்பு படைத்தவனா யிருந்தான் என்று நினைத்தாள். அன்று அவள் யாராவது சிநேகிதியிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம்.- ஏன் சுந்தரத் தையே உதவி கேட்டிருக்கலாம். ஆனால்
"நீ பிடிவாதக்காரி, கோமதி." கோமதி சற்று ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தாள்.
"எப்படியாவது உன்னைக் கண்டு பிடித்து உனக்கிழைத்த அநீ திக்கு ஈடுசெய்ய வேண்டு மென்ற ஆசை தான் என்னை இயக்கி வருகிறது. உன்னை எங்கெல்லாம் தேடினேன்."
" நான் என்ன ஆனேன் என்று அறியவேண்டுமா?" கோமதி சிரித்தாள் - வரண்ட சிரிப்பு. " என் ஐந்து வருட வாழ்க்கையைப் பற்றித் தெரிய வேண்டாமா?
"வேண்டாம் கோமதி. அதைப்பற்றி நான் ஒரு நாளும் கேட்கமாட்டேன். நீ மட்டும் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்." கோமதி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
"உண்மை தெரிந்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள். அன்று ஒரு குற்றமறியாத என்னை விபசாரி என்று சொல்லித் தெருவில் தள்ளி விட்டீாகள். ஆனால் இன்று தான் நான் உண்மையில் விப gF[Trf?....”
"கோமதி!” தன்னையறியாமல் கூவிவிட்டான். அவன் தொட்டுத்
76

தாலி கட்டிய பெண் இவள்-அவன் மனைவி. அவள் சொல்லு முன்பே அதைப்பற்றி அவனுக்குத் தெரியுமென்பது உண்மைதான். ஆனால் அதை அவள் வாயிலிருந்தே கேட்கும் பொழுது அவனால் அந்த இதயவலியைத் தாங்க முடியவில்லை. அவளுடைய வெறிச் சோடிய கண்களை நோக்கினான். ஒரு காலத்தில் அவனைக் காத லோடு, கனிவோடு நோக்கிய கண்கள். ஆனால் இப்போது அவை அவனைக் கண்டதாகவே படவில்லை. அவளைப் பார்க்கப் பார்க்க அவள் உள்ளமும் ஆன்மாவும் கூடியது. அவள் உடல் இங்கிருந்தது. ஆனால் அவள் இங்கில்லை. கோமதி உணர்ச்சியற்றுச் சிரித் தாள.
“உங்கள் மனதைப் புண்படுத்தச் சொல்லவில்லை ஆனால் நீங் கள் அறிந்து தீர்மானிக்க வேண்டுமென்பதற்காக."
"கோமதி, நடந்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முழு மனதோடு கேட்கிறேன். என்னோடு வந்துவிடு கோமதி." கோமதி யன்னல் வழியே நீலவானத்தைப் பார்த்தாள். தன்னந் தனியே வெண் முகிலொன்று மிதந்து கொண்டிருந்தது. ஏகாம்பரத்தின் மெலிந்து நெடிதுயர்ந்த உருவம் கோமதியின் நினைவில் எழுந்தது. நரைபாய்ந்த அடர்ந்த கேசம். சுருக்கம் விழுந்த நெற்றி. காருண்ய விழிகள். குழந்தையினது போன்ற மிருதுவான நிறைந்த உதடுகள். கோமதி பலவகையான மனிதர்களைப் பார்த்திருந்தாள். ஆனால் ஏகாம் பரத்தைப் போல் பரிவும் அன்பும் மிக்கவரை அவள் கண்டதில்லை. மூன்று நாள் அவளிடம் அடுத்தடுத்து வந்தார். நான்காவது நாள் தயங்கித் தயங்கிக் கேட்டார் "என் மனைவி பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். ஒரு மகன் தான். அவன் என்னோடு இருப்ப தில்லை. எனக்கு உன்னை நன்றாகப் பிடித்து விட்டது. உனக்கு விருப்பமென்றால் என்னோடு வந்துவிடேன்." கோமதி உடனேயே இணக்கம் தெரிவித்தாள். ஏகாம்பரத்திற்குத் தன்னிடம் உண்மை யிலே அன்பு உண்டு என்பதைச் சில நாட்களில் கோமதி உணர்ந்து கொண்டாள். அவள் போய்விட்டால் அவர் நிச்சயம் வருந்துவார். கோமதி சண்முகத்தைப் பார்த்தாள். அவளைப் பழியேற்றிப் புறக் கணித்தவன். இருந்தும் கணவன்.
"நான் வர முடியாவிட்டால்?.. gg
'வர முடியாதா? சட்டபூர்வமாக நீ என் மனைவி உன்னை யார் தடுக்கமுடியும்? கோமதி ஒரு கணம் யோசித்தாள்.
“Frf, நான் வர விரும்பாவிட்டால்உ"
"கோமதி!” ஒலியற்றுச் சொல்லைக் கூட்டின அவன் உதடுகள்
77

Page 46
"ஆமாம் எப்படி வாழ்ந்தாலும் இனி எனக்கு ஒன்று தான்.
அதைச் சண்முகம் நம்பினான். இனி அவளை எதுவுமே தொட முடியாது. அவள் உள்ளமும் உணர்வும் இந்த வாழ்க்கையின் புறத்தே, அதன் பிடிக்கு அப்பால் நின்றன. அதோடு அவன் புரிந் தும் கொண்டான். அவளைச் சகதியில் தள்ளிவிட்டது அவன், அவள் கணவன். ஆனால் அவளுக்குக் கைகொடுத்து உதவியது வேறொருவன் தான். சண்முகம் எழுந்தான். இதயச் சுமையை இறக்கி விட வந்தவன் அதைவிடப் பெருஞ் சுமையை ஏற்றிக் கொண்டு விட்டான். அவனுடைய வேதனை விழிகளும் அவளுடைய வெறுமை விழிகளும் ஒரு கணம் சந்தித்தன. சண்முகம் திரும்பி வீட்டை விட்டு வெளியேறினான்.
ஆனி, 1962
78

மனிதன்
கைநிறைய மணலை அள்ளி விரல் இடுக்குகளின் வழியே வழிய விட்ட மாயா கலகலவென்று நகைத்தாள். கடற்கரையின் மணற் பரப்பில் அவளுக்கு எதிரே அமர்ந்திருந்த சுரேஷ் அவளையே கண்கொட்டாமல் பார்த்தான். மாயாவின் எழிற் சிரிப்பிலே அவனு டைய சிந்தை மயங்கித் தடுமாறியது.
“எதற்காக இத்தனை அவசரப்படுகிறீாகள் சுரேஷ்? குறும் பாகக் கேட்டாள். சுரேஷ் பெருமூச்செறிந்தவாறு கடலை நோக்கி னான்.
"மாயா, கரையைத் தழுவும் ஆவலில் இந்த அலைகள் தலை தெறிக்கும் வேகத்தோடு தாவிப் பாய்ந்து வருவதைப் பார்! என் உள்ளத்தின் தன்மையை, உணர்ச்சியின் வேகத்தை இந்த அலைக ளின் வேகத்தில் காண்கிறாய் மாயா! நம் கல்யாணத்திற்கு ஏன் அவ சரப்படுகிறேன் என்று நீ கேட்கிறாய்! ஒரு காதலி தன் காதலனைப் பார்த்துக் கேட்கும் கேள்வியா இதுP" மாயாவின் கண்களில் குறும்பு கூடியதே தவிரக் குறைவதாகத் தெரியவில்லை.
"நீங்கள் அலை, நான் கரை- அப்படியா சுரேஷ்? வேண்டவே வேண்டாம்! கரையில் மோதியதால் அத்தனை பெரிய அலை சிதறித் தூளாகிவிட்டதே சுரேஷ். வானும் நிலவும், வீணையும் நாதமும் இப்படி ஏதாவது கூறுங்கள்!"
"மாயா, இருந்தாலும் உனக்கு இத்தைனை குறும்பு ஆகா தம்மா!" ஆள்காட்டி விரலைக் காட்டி அவளை வேடிக்கையாகப் பயமுறுத்திய சுரேஷ் அவள் சிரிப்பில் கலந்துகொண்டான்.
இல்லை சுரேஷ்! திடீரென்று நம் விஷயத்தை அப்பாவிடம் எப்படிக் கூறுவது? அப்பாவே கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கட்டும், சொல்லலாம் என்றிருக்கிறேன்." இத்தனை காலமும் தன் கருத்திற்கு மாறாகச் சொல்லாத தந்தை இவ்விஷயத்திலா தடை நிற்கப் போகிறார் என்று நினைத்துக்கொண்டாள் மாயா. தன் கைக்கடிகாரத் தைப் பார்த்த மாயா மணலைத் தட்டிக் கொண்டு எழுந்தாள்.
"நேரமாகி விட்டதே சுரேஷ் ! அப்பா தேடுவார்"
79

Page 47
"சரி மாயா, வா போவோம்.” மனமின்றி எழுந்த சுரேஷ் மாயா வின் கார் வரை அவளோடு நடந்தான். காரை ஒட்டத்தொடக்கிய மாயா ஒரு கையை ஒய்யாரமாகத் தூக்கி அசைத்தாள். அவளுடைய மெல்லிய விரல்களின் பிடியில் அந்தப் பெரிய கார் கட்டுக்கடங்கிய காட்டு யானைப்போல் அமைதியாக ஓடியது. மாயாவின் சிந்தனை சுரேஷைச் சுற்றி ஒடியது. சுரேஷ் இன்று ஒரு பிரசித்தி பெற்ற எழுத்தாளன். இள வயதிலேயே இலக்கிய உலகில் தனக் கென்று ஒரு தனியிடத்தை ஆக்கிக் கொண்டு விட்டான். தற்போது ஒரு பத்திரிகை ஸ்தாபனத்தில் வேலை பார்த்து வந்தான். அவனது குடும் பமோ பெரியது! அவன் மாதா மாதம் வாங்கும் எளிய சம்பளத் தைத் தான் நம்பி வாழ்ந்தது.
ஆனால் மாயாP - அவளோ ஆயிரங்களைச் சதங்களாக மதிக் கும் தந்தைக்கு ஒரேயொரு குழந்தை. கல்வியும் அழகும் அவளிடம் குற்ை வின்றி நிறைந் திருந்தன. சிந்தனையால் சுருங்கிய நெற்றி யோடு, கவலை குடி கொண்ட கண்களோடு தன் வீட்டுப் படலைக் குள் காரைத் திருப்பினாள் மாயா. வீட்டிற்குள் நுழைந்தவளை அவள் தந்தையின் குரல் வரவேற்றது.
"மாயா, இங்கே வாம்மா!”, என்று ராமேஸ்வரம் குரல் கொடுத்தார்.
“என்னப்பாP” என்று வினவிய வாறே அவரது அலுவலறைக் குள் நுழைந்த மாயான, அங்கு அவரோடு உரையாடிக் கொண்டி ருந்த வேற்று மனிதரைக் கண்டதும் தயங்கி நின்றாள்.
"மாயா இவர் டாக்டர் ரகுநாதன். இவள் தான் என் மகள் Lonun, gübL71”
“வணக்கம்." கைகுவித்த அவ் விளைஞனைக் கண்களை மலர்த்தி நோக்கினாள் மாயா. நெடி துயர்ந்த வடிவம்; சுருண்டு அடர்ந்த கேசம்: தீர்க்கமான நாசி மெல்லிய உதடுகளை அலங்கரித்த சிறு மீசை - சந்தேகமில்லாமல் ஆணழகன் தான்.
“வணக்கம்!", என்று * பதிலுக்கு முறுவலித்தாள் DITTT. ரகுநாதன் விடைபெற்றுச் சென்றதும் ராமேஸ்வரம் மாயாவை அருகில் அழைத்துக் கொண்டார்.
"மாயா." கேள்விக்குறியோடு தந்தையை நோக்கினாள் மாயா. ராமேஸ்வரத்தின் சுருங்கிய முகம் சந்தோஷத்தால் மலர்ந் திருந்தது.
"மாயா, ரகுநாதனை நன்றாகப் பார்த்தாயா? கண் நிறைந்த அழகோடு இருக்கிறான், இல்லையா அம்மா?" மாயாவுக்கு இந்தக்
80

கேள்வி ஆச்சரியம் அளித்தது. மெளனமாக அவரைப் பார்த்தான்!
* ரகுவைத் தானம்மா உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கிறேன்!”
"அப்பாr யாரோ இரும்புக் கைகளால் இரக்கமின்றித் தன் கழுத்தை அணு அணுவாய் நெரிப்பது போல் மாயாவுக்கு மூச்சு முட்டியது. காதை அடைத்துக்கொண்டு வந்தது. ராமேஸ்வரம் தம் போக்கில் பேசிக்கெண்டே போனார்.
"ஆமாம் மாயா. தாயற்ற உன்னைக் குறைவின்றி வளர்க்க வேண்டுமே யென்ற கவலையில் நான் உறங்காத இரவுகள் எத்தனையோ! தாயைப் போலத் தன் பெண்ணின் மனதைத் தந்தை புரிந்து கொள்ள முடியுமா அம்மாP ரகுவைப் போன்ற ஒருவன் தான் உன் கணவனாக வாய்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் மாயா. அழகும் குணமும் அளவிறந்த ஆஸ்தியும் அவனுக்கு உண்டு.
"அப்பா!” யந்திரம் போல் மாயாவின் உதடுகள் அசைந்தன.
இத்தனை நாளும் உன்னைக் கண் கலங்காமல் காத்து விட்டேன். ஆனால் நான் இன்னும் பல நாள் வாழப் போவதில்லை. கஷ்டத்தை அறியாத உன்னை இனியும் குறை வின்றிக் காக்கும் கணவனைத் தேடி விட்டேனம்மா.. எங்கே, இந்தக் காலத்துப் பெண்களைப் போல யாராவது அநாதை பரதேசியைப் தான் மனப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பாயோ என்று நான் பயந்ததும் உண்டு, மாயா. எங்கே மாயா. ராமேஸ்வரம் மகளின் முகத்தைப் பார்த்தார்- என்னைப் பார்த்துச் சொல் மாயா. ரகுவை உனக்குப் பிடித்து விட்டதா? மாயா புரிந்து கொண்டாள். ராமேஸ்வரம் அவளைச் செல்லமாகத் தான் வளர்த்தார். ஒரு பொருள் தனக்குத் தேவை யென்று அவள் வாய் திறக்கு முன் வாங்கிவற்து விடுவார். கலாசாலைக்குச் சென்று மேல் படிப்புப் படிக்க விரும்பினாள்: படிக்க விட்டார். அவள் கேட்காமலே அவளுக் கென்று தனியே ஒரு காரும் வாங்கினார். அவள் எங்கு சென்றாலும் ஏனென்று கேட்ட தில்லை! ... ஏன்? ஏன்?.ஏனா? ஒரு மகனுக்கு அளிப்பதைப் போல் இத்தனை சுதந்திரம் அளித்தும் தன் மகள் பண்பு கெடாமல், தன்னை மறக்காமல் நடந்து கொள்கிறாளே என்ற துணிவில் தான் தன்னைத் தந்தை இப்படி வளர்த்தார் என்று உணர்ந்தாள் மாயா. முற்போக்குக் கருத்துடையவர் தான் ராமேஸ்வரம். ஆயினும் அவர் மனம் பழமையை முற்றிலும் உதறிவிட ஒப்பவில்லை. பழமையும் புதுமையும் சங்கமமாகிய உள்ளம் கொண்டவர் ராமேஸ்வரம். ரகுநாதனை அவள் தானே சந்தித்துக் காதலித்திருந்தால் ராமேஸ் வரம் சந்தோஷப் பட்டிருப்பார். ஆனால் அவள் காதலிப்பது சமூகத் தின் சாக்கடையில் உழலும் சுரேஷை யல்லவா?. шпштојде,
81

Page 48
அழுகை தான் பொங்கி எழுந்தது மேஜையில் கைகளை மடக்கியவள் அப்படியே தன் முகத்தை அவற்றில் கவிழ்த்துக் கொண்டாள். அவள் கண்களில் பெருகிக் கைகளை நனைத்த கண்ணிரை ராமேஸ்வரம் காணவில்லை. அவள் மனதில் மின்னலாய்ப் பளிச் சிட்ட எண்ணங்களை அவர் அறியவில்லை சந்தோஷமாய்ச் சிரித்த வர், மாயாவின் தலையுை வருடினார்.
“இத்தனை படித்த பெண் நீ, இப்படி வெட்கப்படுவாய் என்று நான் நினைக்கவே யில்லை! நல்ல பெண் நீயம்மா! சிரித்துச் கொண்டே அவர் போய்விட்டார்.
மாயா எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாளோ தெரியாது. அவள் மெல்லத் தலையைத் தூக்கிய பொழுது அறையினுள் இருள் படர்ந்து கொண்டிருந்தது. மரத்துப் போன அவள் மூளை மெல்ல வேலை செய்யத் தொடங்கியது. தந்தையின் சொற்கள் முழு வேகத் தோடு அவளைத் தாக்கின. கடவுளே! இது என்ன சோதனை: சுரேஷப் பற்றி அறிந்திருந்தால் ரகுநாதன் அவளை மணக்கச் சம்மதித் திருப்பானா? முன் பின் அறியாத அவரையும் ஏமாற்ற வேண்டுமா? அப்பாவிடம் எடுத்துக் கூறினால் அவர் நிச்சயம் புரிந்து கொள்வார் - அப்பா? பாவம் அப்பா! சிறு குழந்தை போல் எவ்வளவு சந்தோஷப்பட்டுக்கொண்டு சென்றார். அவர் எது நடந்து விடக்கூடா தென்று பயந்தாரோ அது நடந்தே நடந்து விட்டது என்று அறிந்தால் தாங்குவாரா? பட்ட மரம் புயல் வீசினால் சாய்ந்து விடாதா? ஐயோ! இதை அறிந்தால் அந்தக் கிழ மனம் பதறித் துடித்துத் துடித்து உயிரை விடாதா? அவளைத தவிர உலகில் அவருக்கு என்ன இருக்கிறது? அதனால் மூன்று பேரின் வாழ் வைப் பலியிடுவதாP அப்பாவிடம் சொல்லியே தீரவேண்டும். அவரை ஒப்புக் கொள்ள வைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. மாயா தீர்மானத்தோடு எழுந்து வெளியே சென்றாள்.
“என்ன சொல்கிறாய் மாயாP உன்னை மறந்து விடுவதா? விளையாடுகிறாயா என்ன? சந்தேகத்தோடு கேட்டான் சுரேஷ். மாயா அவனை நிமிர்ந்து நோக்கினாள்.
“இல்லை சுரேஷ், விளையாட்வில்லை. அப்பாவிடம் எவ்வள வோ கேட்டுப் பார்த்தேன். அவர் நம் மணத்திற்குச் சம்மத மளிக்க மறுத்து விட்டார். எனக்கு வேறு வரன் பார்த்து நிச்சயித்தும் விட் டார்." துயரத்தால் அவள் குரல் தழுதழுத்தது" என்னை மன்னித்து விடுங்கள் சுரேஷ். நான் வேறு என்ன செய்வது? என்மேல் உயி ரையே வைத்திருக்கும் தந்தையை எப்படி உதறி விடுவது சுரேஷ்? பச்சை மரத்தை வெட்டினால் அது மீண்டும் தளிர்த்து விடும். துயரத்தை எதிர்க்கும் சக்தி இளம் உள்ளங்களுக்கு உண்டு சுரேஷ், ஆனால் ஓய்துவிட்ட என் தந்தையின் உள்ளம் ஏமாற்றத்தைத்
82.

தாங்காது சுரேஷ், என் உணர்ச்சிகளைக் கொன்று அவர் உள்ளத் தைக் காக்கத் துணிந்து விட்டேன்! தந்தையின் பாசத்தை உதறும் துணிவற்ற கோழை யென்னை மன்னித்து விடுங்கள்." கண்ணீரில் நீந்நிய கண்களால் அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள். சுரேஷ் உரத்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பிலே கோபம் கனன்று தெறித்தது.
"மாயா, புரிந்து விட்டது! என்னை எப்படி உன்னால் காதலிக்க முடிந்தது என்று நான் பல முறை ஆச்சரியப்பட்டேன் இன்று எனக்குப் புரிந்து விட்டது மாயா! நீ நடத்திய காதல் நாடக் கத்தின் உச்சக் கட்டமா இது? சீ நீ இப்படி மோசம் செய்வா யென்று தெரிந்திருந்தால் உன் முகத்தைத் திரும்பியே பார்த்திருக்க மாட்டேன்! என் உணர்ச்சிகளோடு பொழுது போக்க விளையாடிப் பார்த்தாயா என்ன?”
"சுரேஷ்!" அடிபட்ட மான் போலத் துடித்தாள் மாயா. "சுரேஷ் இதென்ன பேச்சு? என்னையா இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்? நீங்கள் ஆத்திரப்படுவது நியாயம் தான் சுரேஷ். ஆனால் என் கஷ்டத்தையும் கொஞ்சம் நினைத்துப் பாருங் கள். உங்கள் உள்ளமெல்லாம் நான் நிறைந்திருக்கிறேன் என்பீர்களே! அந்த அன்பின் பெயரால் என்னை மன்னிக்க மாட்டீர்களா?
"அன்பு உன் வாழ்வில் அன்புக்குப் பொருளுண்டா? என் வாழ்வைக் கீறிப் புதைத்து விட்ட உன் வாழ்வுக்கு என்னை வாழ்த்துப் பத்திரம் வாசிக்கச் சொல்கிறாயா? ஆஹா தாராளமாகச் செய்கிறேன்! ஊரும் உலகமும் உன்னைப் பார்த்து எள்ளி நகை யாடச் செய்கிறேன். என் வாழ்த்திலே உன் வாழ்வைப் பலி எடுக் கப் போகிறேன். எங்கள் காதலின் கதையை உலகம் வாசித்து மகிழப் போகிறது - விரைவில்! அதன் பிறகும் உனக்கு வாழ்வாP"
"சுரேஷ்!" காதைப் பொத்தினாள் மாயா. "சுரேஷ், ஏமாற்றத் தினால் அன்பு ஆத்திரமாகினால், காதல் வெறுப்பாகினால் உங்கள் உள்ளத்தில் உண்மையில் அன்பே யில்லை. நீங்கள் என்றுமே என்மேல் உண்மையான அன்புகொண்ட தில்லை சுரேஷ், கொண்டி ருந்தால் இத்தகைய கொடிய எண்ணங்கள் உங்களுக்கு வரவே வராது. போயும் போயும் உங்கள் மேல் அன்பு செலுத்தினேனே சீச்சீ நீங்களும் ஒரு மனிதரா?”
பளார் மாயாவின் கன்னத்தை சுரேஷின் விரல்கள் பதம்
பார்த்தன.
"சீ வாயை மூடு மாயா! “ அவன் சீறினான். தடுமாறிய மாயா சமாளித்துக்கொண்டாள். ஏளனத்தோடு அவனை ஒரு முநை நோக்கி விட்டுத் திரும்பி வேகமாக நடந்தாள்
83.

Page 49
பின்னால் தலையை அழுத்திய பூவின் சுமையாலோ அன்றிச் கண்களில் முட்டிய நீரின் சுமையாலோ கவிழ்ந்த தலையோடு சுவ ரோடு சாய்ந்து நின்றாள் மாயா. அவள் உடலில் மின்னிய புதுப் புடவை, அவள் கழுத்தை வளைத்துக் கிடந்த மாங்கல்யம் தாமே தம் கதையைக் கூறின. இன்று மாயா ரகுநாதனின் மனைவியாகி விட்டாள் அறை வாசலில் ரகு நிற்பதைக் கூடக் கவனியாது மாயா சிந்தனையில் மூழ்கி நின்றாள். அவள் உள்ள்த்தில் கேள்விக் குறியொன்று விஸ்வரூபம் எடுத்து அவளை வாட்டியது. அவளையே நோக்கிய ரகு தனக்குள் சிரித்துக் கொண்டான்.
"மாயா!' திடுக்கிட்டுப் நிமிர்ந்தாள்.
“எந்தக் கோட்டைக்குக் கண்ணி வைக்கிறாய் மாயாP கட்டிலில் வந்து அமர்ந்தான் ரகு. மெதுவாக நடந்து வந்து மாயா மண்டியிட்டு அவன் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டாள். பிறகு மனதைத் திடப்படுத்திக் கொண்டவள் போல் ரகுவை ஏறெடுத்துப் பார்த்தாள்.
"நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய தொன்று உண்டு.” பிரயாசையோடு பேசினாள்.
"என்ன மாயாP "ரகு மெதுவாகக்கேட்டான்.
"அதை அதை அறிந்த பின் என்ன சொல்வீர்களோ தெரியாது நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அது என் பாக்கியம்" ஆனால் மாயாவின் குரலில் நம்பிக்கை தொனிக்கவில்லை- "அன்றி எங்கள் விவாக பந்தத்தை நீங்கள் முறிக்க விரும்பினாலும் நான் அதற்குத் தடையாய் நிற்கமாட்டேன்." ரகு ஒன்றும் சொல்லவில்லை. மாயா பல்லைக் கடித்துக்கொண்டு தொடர்ந்தாள்.
"இதற்கு முன் நான் ஒருவரை விரும்பினேன். அவரும் என்னை விரும்பினார்! அப்பா எங்கள் மணத்திற்குச் சம்மதமளிக்க மறுத்துவிட்டார். அப்பாவின் விருப்பப்படியே நான் உங்களை மணக்க இசைந்தேன். இனி நீங்கள் என் கணவர். என் உள்ளத்தில் இனி உங்களைத் தவிர எவருக்கும் இடமில்லை. இதை மற்றவர் வாயிலிருந்து நீங்கள் அறிவதை விட நான் சொல்லிவிடுவதே மேல் என்று நினைத்ததால் சொன்னேன். என்னை மன்னித்து விடுங் கள்." தொடர்ந்த நிசப்தத்தில் கடிகாரத்தின் "டிக் டிக் சப்தம் தன் இதயத்தின் துடிப்பாகவே மாயாவுக்கு பட்டது. ரகு மாயாவை ஒரு வித அற்புதத்தோடு பார்த்தான். இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல அவளுக்கு எவ்வளவு தைரியம் வேண்டியிருக்க வேண்டும்?
84

"அதனாலென்ன மாயா? நான் உன் வாழ்வில் குறுக்கிடு முன் நடந்ததைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? உன்னையும் றி நடந்த நிகழ்ச்சிகளுக்கு நீ என்ன செய்வாய்? எல்லா மனிதர்களும் தம் வாழ்வில் ஏதோ வொரு சமயத்தில் தவ றிழைக்கத் தான் செய்கிறார்கள். அதனால் வாழ்வே அஸ்தமித்து விடுவதில்ல்ை மாயா. நம் வாழ்வு இனித் தானே ஆரம்பிக்கப்போகிறது. இந்தச் சமயத்தில் அவலப் பேச்சுக்கள் எதற்குP அழும் குழந்தையைத் தேற்றுவது போல் ஆறுதலாகப் பேசினான் ரகு. கோபத்தையும் வெறுப்பையும் அவனிடம் எதிர்பார்த்த மாயாவால் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. இப்படியும் ஒரு மனிதரா? அவன் அழகு, செல்வம் அத்தனைக் குள்ளும் மறைந்து கிடந்த அவனது பண்பட்ட இதயம் அவளை மெய்சிலிர்க்க வைத்தது.
அத்தான் . நீங்கள் மனிதரல்ல! . தெய்வம் என்தெய்வம்."
ஆகஸ்ட், 1960.
85

Page 50
ஜீவநதி
இன்னும் பதினைந்து நிமிஷங்களில் புகையிரதம் மணிகண் டானை அடைந்துவிடும்.
ஜன்னலுக்கு வெளியே நோக்கினான் இராமலிங்கம். இலை களை யெல்லாம் உதிர்த்து மொட்டையாய் நின்ற மரங்கள் தளிர் தள்ளி நின்றன. இளவேனில் பிறந்து விட்டது. இயற்கை புதிய வாழ்க்கை தொடங்குகிறது. புதிய உலகைப் படைக்கின்றது.
இராமலிங்கம் இன்பமாக நெட்டுயிர்த்தான். மடியிலிருந்த அட்டைப் பெட்டியைத் தடவிக்கொண்டான்.P நேர்மையான உடலு ழைப்பில் கிடைத்த வெகுமதி யல்லவா அது சிறையென்ற உலை யிலே உருக்கிப்படைக்கபட்ட புதிய பிம்பமல்லவா இன்றைய இராமலிங்கம். அந்தத் தனிமையில் தான் எத்தனை துடிப்பு! சிறைச் சுவர்களோடு அவன் சொந்தம் கொண்டாடிய நாட்களில் தான் தங்கத்தை எவ்வளவு தூரம் காதலித்தான் என்பதை உணர்ந்தான் அவளுக்காக ஒவ்வொரு வினாடியும் ஏங்கினான். அவனை அவள் வெறுக்காதிருந்த போதும் தனக்கு அந்தத் திருட்டுக் குணம் இன என்றுமே வராதென்று தான் திடமாக நம்பினான். இந்த ஞானோதயம் நீடிக்கும் என்பது என்ன நிச்சயம்? பணத்தோடு விளையாடினால் தானே அந்தச் சோதனை ஏற்படும்? அதற்கு இராமலிங்கம் தான் சந்தர்ப்பமே அளிக்கப் போவ தில்லையே.
"ஐயா, இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது? எதிரேயிருந்த மனிதரை நூறுதரம் மணி கேட்டுவிட்டான். அவரும் எரிச்சலைக் கஷ்டத்தோடு அடக்கிக்கொண்டு பதிலளித்தார். அவனது துடிப்பு அவருக் கெங்கே தெரியும்?
"இன்னும் மூன்று நிமிஷம்தான். அவசரமாகப் போகவேண் டுமா?"
"ஆமாம். ஆமாம். so s so « » அவசரம் தான்” ஏழு வருஷத்திய அவசர மல்லவா அது? தங்கத்திற்கு இதை பற்றி ஒன்றும் தெரியாது அவள் பெயரைப் போலவே பத்தரை மாற்றுத் தங்கம்தான் அவனைப் பற்றிய உண்மையை அறிந்திருந்தால் அவனைத் திரும்பி պւն பார்த்திருக்கமாட்டாள்! அவன் கைதாகும் காரணத்தை அறிந்த
86.

தும் தங்கம் மலைத்துப் போனாள். ஆழ்ந்த துயரம் அவள் முகத்தில் பரந்தது. வாழ்க்கையின் தொடர்பு அறுந்து கற்சுவரும் கம்பிக்கதவும் அவனுக்கு உலகமான போது நினைவிலும் கனவிலும் கற்பனை யிலும் தங்கத்தின் துயர்படிந்த முகமே அவனை விரட்டி விரட்டி வந்தது. ஆனால் இப்போதோ அவளுக்குகந்தவனாகத் தான் ஆகி விட்ட பெருமிதம் அவன் உள்ளத்தில் பொங்கியது.
உயிரினும் மேலான அந்த அட்டைப் பெட்டியைத் தன் நேர் மையின் திறத்தைக் தங்கத்திற்கு நிறுவப் போகும் பரிசாக நெஞ் சோடு அணைத்துப் பிடித்தவாறு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து தெருவில் இறங்கி நடந்தான்.
தெருவின் எதிர்ப் பக்கத்தில் சிறுவரும் சிறுமியரும் கலகலத் தவாறு சிட்டுக்கள் போல் தாவியும் நடந்தும் வந்து கொண்டிருந் தனர். இராமலிங்கத்தின் சிந்தைனை தன் குழந்தையை நோக்கிப் பறந்தது. அவளும் இவர்களைப் போலக் கவலை யின்றிச் சிட்டுப் போலச் சிரித்துத் திரிவாளல்லவா? தெருவைக் கடந்து கொகண்டி ருந்த குழந்தைகளைப் பார்த்தவாறு தன்னையறியாது நின்றுவிட்டான். கடைசியாக வந்து கொண்டிருந்த சிறு பெண் ஒருத்தியின் புத்தக மொன்று நழுவித் தெருவில் திறந்தவாறு விழுந்தது. அதன் ஒற்றை களிடையே அந்தப் பெண் வைத்திருந்த வர்ணக்காகிதத் துண்டுக ளெல்லாம் தெருவில் சிதறின. அவள் பட்டுப்பூச்சி போல அங்கும் இங்கும் பறந்து, பறந்து, உட்கார்ந்து, எழுந்த அவற்றைப் பொறுக் கலானாள். தெருவைக் கடந்துவிட்ட சிறுமிகளுள் ஒருத்தி திரும்பிக், "கமலம் கெதியாக வா!” என்று கத்தினாள்.
திடீரென்று ஹாரன் அலறல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிய சிறுமி நடுத் தெருவில் போட்டு விட்ட புத்தகக்கட்டை வாரிக் கொண்டு திரும்பித் தெரு ஓரத்தை நோக்கிப் பாய்ந்தாள். இராமலிங் கம் கையைத் தூக்கிக்கொண்டு கத்திய அதே கணம் "கார்" அவளை மோதி எறிந்தது.
இராமலிங்கம் சிறிது தயங்கினான். பாவம் யார் குழந்தையோ? இதற்கு அவன் என்ன செய்து விடமுடியும்? அவனுக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? ஒரு வம்பில் அகப்பட்டு அனுபவித்தது போதும் என்று குழம்பியது அவன் மனம். அக் குழந்தைகளில் ஒன்று ஒலமிட்டு அழத் தொடங்கியது. அவன் திரும்பிப் பார்த்தான் இரத்தத்தில் மிதந்த அந்த முகத்தில் நிலவிய அமைதி அவனை உலுக்கிற்று. திரும்பிச் சிறுமி கிடந்த இடத்திற்கு வந்தான்.
"இது யார் குழந்தைP” என்று கேட்டான்.
“எங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளை” என்றான் அவர்களுள்
87

Page 51
பெரியவனான பையன் ஒருவன்.
"சரி தம்பி, நீ இரண்டு எட்டில் ஸ்டேஷனுக்கு ஓடி ஒரு டாக்ஸி கூட்டிக்கொண்டு வா. கெதியாக!” என்றவன் மண்டியிட்டுத் தன் துண்டை அவளுடைய தலையில் சுற்றிக் கட்டுப் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு தெரு ஓரத்திற்குப் போனான். சிறு போதில் டாக்ஸி வந்தது.
"தம்பி, நீ இவர்கள் வீட்டுக்குப் போய் நடந்ததைச் சொல்லி ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்! டிரைவர், ஆஸ்பத்திரிக்குக் கெதியாக ஒடப்பா!" என்று உத்தரவிட்டான். வண்டியைக் கூடிய அளவு வேக மாக ஒட்டியும் இராமலிங்கத்திற்குத் திருப்தியாக வில்லை.
கமலத்தின் முகத்தைப் பார்த்தான். மலருமுன் கிள்ளி யெறியப் பட்ட அரும்பாகக் கிடந்தாள். இனிய முகம்! அவனுடைய குழந்தை யும் இப்படித் தானே இருப்பாள்? தங்கம் என்ன பெயர் வைத்தா ளோ? பெண் குழந்தை யாரைக் கொண்டதோ? தந்தையைக் கொள் ளும் என்று சொல்லுவார்கள். இல்லை. தங்கத்தின் குழந்தை எது வும் அவளைப் போலத் தான் இருக்கும். இருக்கவேண்டும்! இந்தக் கமலததைப் போல் மொட்டு இதழ்களும் பட்டு இமைகளும் தங்கத்தின் சிவந்த நிறமுகமாகத் தான் இருப்பாள்.
இனிய கனவில் இராமலிங்கம் மெல்ல மடியைத் தடவினான். அவனுக்குப் பகீரென்றது. அவனுடைய பெட்டி!. எங்கே? எங்கேP பரபரவென்று மேலும் கீழும் பார்த்தான். கமலத்திற்கு கட்டுப்போட அதைத் தெருவில் வைத்தவன் பிறகு அதை எடுக்கவே யில்லை. அவனது அன்பு மனைவிக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் கொண்டுவந்த அன்பை அடக்கியதல்லவா அந்தப்பெட்டி, குரோதம் பொங்க கமலத்தைப் பார்த்தான். சனியன்! இவ்வளவு தூரம் வந்தவனுக்கு கடைசி நேரத்தில் சகுனத் தடை போல் முளைத்தது. போதாதென்று அவன் இன்பத்தைச் சூறையாடியுமல்லவா விட்டது, மூதேவி! அதைச்சாவின் வாயிலிருந்து மீட்க வேறு அழைத்துச் செல்கிறான்.
"ஆஸ்பத்திரி வந்துவிட்டது ஐயா," என்று திரும்பிய டிரைவர் இராமலிங்கத்தின் முகத்தில் பொங்கிய கடூரத்தைக் கண்டு திகைத் துப் போனான் . 'மீட்டரைப் பார்த்து வேண்டா வெறுப்பாக இரண் டரை ரூபாயை நீடடியவன் கமலத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவனைக் காத்திருக்கச் சொல்லிக் கமலத்தைச் சிகிச்சைக்குக் கொண்டு போய்விட்டார்கள். இராமலிங்கம் கமலத்தை யும் தன்னையும் மாறி மாறிச் சபித்துக் கொண்டான். ஆத்திர எண்ணங்களோடு எவ்வளவு நேரம் இருந்தானோ தெரியாது, டாக்ட ரைக் கண்டதும் எழுந்தான்.
88

"இருங்கள் ஐயா. அந்தக் குழந்தைக்கு அதிகப்படியான இரத் தம் சேதமாகி விட்டது. உடனே இரத்தம் செலுத்த வேண்டும். எங்களிடம் தேவையான இரத்தத் தொகுதி இல்லை. அடுத்த நகர் ஆஸ்பத்திரிக்கு டெலிபோன் செய்திருக்கிறோம். அவர்களிடம் இந்த இரத்தத் தொகுதி இருந்தாலும் அது இங்கு கொண்டு வரப்படுமுன் குழந்தை ஒருவேளை இறந்துவிடக்கூடும். தாய் அல்லது தந்தையின் இரத்தம் ஒத்துப்போகக் கூடும் என்று நினைக்கிறேன். அவர்கள் மட்டும் சீக்கிரம் வந்தால்- யாரென்றே உங்களுக்குத் தெரியாதா?”
"தெரியாது! தெரியாது!.. அவர்கள் வந்து விடுவார்கள். அந்தச் சிறுவன் போய்ச் சொல்லவேண்டாமா? நான் அவசர அலுவலாய்ப் போய்க்கொண்டிருந்தேன். இப்பொழுதே தாமதமாகிவிட்டது. இனியா வது போகலாமா? கடுமையாக, எரிச்சலோடு பேசினான். அவனது வார்த்தைகளுக்குச் செவி சாய்க்காது டாக்டர் உள்ளே சென்று விட்டார். தனித்திருந்த இராமலிங்கம் வெளியேறினான்.
ஆஸ்பத்திரி வாசலில் ஒரு "போஸ்டர் அவன் கண்ணைக் கவர்ந்தது. இரத்த தானம் செய்யும்படி ஒரு தாதி அழைத்துக் கொண்டிருந்தாள். ஒரு யோசனை அவன் மனதில் 'பளிச்சிட்டது. அவனுடைய இரத்தத்தைக் கொடுத்து பத்து ரூபாய் சம்பாதிக்கலாம். அதில் குழந்தைக்காவது ஏதாவது வாங்கிப் போகலாம். நடந்ததை யெல்லாம் அறிந்ததும், தன் பாசத்தின் ஆழத்தை அறிந்து தங்கம் மகிழ்வாளல்லவா? இராமலிங்கம் மீண்டும் உள்ளே திரும்பினான்.
இராமலிங்கம் கண்ணாடிக் குழாயில் ஏறிய இரத்தத்தைப் பார்த்தான். களைப்பில் சிறிது நேரம் படுத்திருந்தான். ஆயாசம் நீங்கி யதும அவன் எழுந்திருக்க உதவி, அவனுடைய சட்டையை எடுத்துக் கொடுத்தாள் ஒரு தாதி. இராமலிங்கம் பணத்தைப் பெற்றுக் கொள் ளச் சென்றான். வார்டுகளைத் தாண்டி செல்லும் பொழுது ஒரு வார்டிலிருந்து வெளியே வந்த பழைய தாதி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
"நீங்கள் இரத்த தானம் செய்ய வந்த வேளை நல்ல வேளை. ஒரு குழந்தைக்கு உயிரளித்து விட்டீர்கள். டாக்டர் கூடக் கைவிட்டி ருந்தார். குழந்தையைப் பார்க்க வருகிறீர்களா? அதன் தாய் உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறாள்" அவள் அவசரத்தோடு போய்விட் டாள். இன்னொரு குழந்தையாய் இருந்திருந்தால் இதற்காக இராமலிங்கம் பெருமை அடைந்திருப்பான். ஆனால் கமலத்தை நினைத்ததும் அவன் உள்ளத்தில் குரோதம் பொங்கியெழுந்தது. தன் மகளுக்குக் கொண்டு வந்த அன்புப் பரிசைத் தட்டிக்கொண்ட குட்டிப் பிசாசு கமலம் என்ற வெறுப்பு அவனுக்கு. வார்டு வாசலை அடைந்ததும் அவனுடைய கால்கள் சிறிது தயங்கின. கட்டிலருகில்
89

Page 52
கண்களில் நீர் சோர ஒரு பெண் நின்றாள். எதையோ நினைவு கூர்வது போல் கண்களைக் கூசினான் இராமலிங்கம். அது யார்?
"தங்கம்! தங்கம்!" என்று கூவினான்.
“யார்? ...நீங்களாP விந்துவிட்டீர்களா? தாவிச் சென்று அவள் கைகளைப் பற்றினான் இராமலிங்கம்.
தங்கம், நீ எங்கே இங்கு வந்தாய்? தங்கம் விம்மினாள்
"இதோ ...இதோ . உங்கள் மகள் கமலம். gy
"ஐயோ!" இராமலிங்கம் அந்தப் பிஞ்சுப்பாதங்களில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினான். அவன் விருப்புடன் வாங்கிய பரிசுகள் எதற்கு? அவள் வெறுப்புடன் அளித்த உயிர்ப்
பரிசு, ஜீவநதியாக மாறி அவள் உடலில் பாய்ந்துகொண்டிருந் ததே!.
90

புதிர்
இன்னும் எத்தனை நாள் இப்படியே இருந்துவிட உத்தேசம் சாருP சாருவின் நீண்ட கருங் கூந்தலைப் பின்னிக்கொண்டே மெது வாகக் கேட்டாள் சித்ரா. சாருவின் உதடுகளில் நெளிந்த ரகசியப் புன்னகையை, முகத்தில் படிந்த கலவரத்தைச் சித்ரா காணவில்லை.
"செய்யவேண்டியது தான் மச்சாள். காலம் வந்தால் எல்லாம் தானே நடக்கு மென்று நீங்கள் தான் அடிக்கடி சொல்வீர் களே!"சாருவின் குரலில் ஒரு துள்ளல், ஓர் எழுச்சி வெளிப்பட்டது. சித்ரா ஆச்சரியத்தில் ஒரு கணம் பின்னுங் கை ஓய்ந்து இருந்தாள். சாருவிடம் இந்தக் கேள்வியைச் சித்ரா கேட்டது இது முதல் தடவை யல்ல. எத்தனையோ தடவை கேட்டுவிட்டாள். ஆனால் எப்பொழுதும் அவளுக்குக் கிடைத்த பதில் அணுக முடியாத, கீறிப்பிளக்க முடியாத மெளனம் தான். சிற்சில சமயங்களில் "எனக்குச் சோறு போடுவது உங்களுக்குப் பாரமாக இருக்கிறதா மச்சாள்” என்று வெடுக் கென்று கேட்டு அவள் வாயை அடைத்து விடுவாள். அதனால் தான் சாரு பதிலளித்த விதமும், அவள் குரலில் தொனித்த உல்லாசமும் நாணச் சாயலும் சித்ராவுக்குத் திகைப் பூட்டின. "சாரு, அப்படியானால் அண்ணாவிடம் சொல்லட்டுமா? பதிலுக்குத் தன் அரிசிப் பல்வரிசை தெரியச் சிரித்த சாரு தன் பின் னலை வெடுக்கென்று பறித்துக்கொண்டு கொல்லைக்கு ஓடினாள். மடிநிறைய மல்லிகை மொட்டுக்களைப் பந்தலிலிருந்து பறித்தவள், கொல்லைப் படியில் அமர்ந்து அவற்றைத் தொடுக்கலானாள். சாரு மணம் முடிக்கச் சம்மதிக்கிறா ளில்லை என்பது ராகவனுக்கும் சித்ராவுக்கும் பெரிய மனக்குறை தான். ஆனால் சாருவால் தான் இதுவரை தன் மனதைச் சமாதானப்படுத்திக் கொள்ள முடிய வில்லை. தன் மனதிலிருந்து முரளியின் நினைவை இதுவரை அவளால் அழிக்கமுடிய வில்லை. ஆனால் இனிP தனக்குள் சிரித்துக்கொண்டாள் சாரு. இரண்டுவருடங்களாகச் சிரிக்காததாலோ என்னவோ சாருவின் உள்ளத்தில் சதா சிரிப்புக் குமிழியிட்டுக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் புன்னகையில் தவழ்ந்தன. இரண்டு வருடங்களாக அவள் நெஞ்சில் நிலைத்த உருவத்தைக் கல்லி எறிந்து விட்டாளா? இல்லை. வருவேன் என்று போனவன் வந்துவிட்டான். முரளி வந்துவிட்டான். இனி அவளேன் சிரிக்கமாட்டாள்? குதூகலமாய்ப் பேச மாட்டாள்?
91

Page 53
அன்று காலை சித்ராவும் சாருவும் கடைத் தெருவுக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி ஒரு கார் வேகமாக வந்தது. சாருவும் சித்ராவும் அது போகு மட்டும் ஓரமாய் ஒதுங்கி நின்றார்கள். கார் அருகில் வந்து அவர்களைத் தாண்டுவதற் கிடை யில் சாரு அதை ஒட்டி வந்தவனை இனம் கண்டுகொண்டாள். அவன் - முரளி தன்னைப் புரிந்து கொண்டான் என்றும் தெரிந்து கொண்டாள். திடீரெனக் “காரின் வேகம் குறைந்தது. அதை ஒட்டி யவன் காரை நிறுத்தவோ வேண்டாமோ என்று யோசிப்பது போல் தோன்றியது. ஆனால் கடைசியில் கார் நிற்காமல் அதே போக்கில் போயிற்று. அதோடு சாருவின் இதயபாரமும் வேதனையும் போயிற்று. அவன் தன்னிடம் பின்னர் வருவான் என்று அவளுக்குத் தெரியும். சாரு பெருமூச்சு விட்டாள். இரண்டு வருடங்களாக அவளை ஏங்க வைத்து விட்டானே முரளி முரளியும் அவளும் சந்தித்த விதமே ஏதோகதைகளில் நடக்கும் சம்பவம் போலவே யிருந்தது. நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதாகவே அவர்களின் அன்புப் பிணைப்பும் தோன்றியது. அது விபரீத ஆசை யென்று இன்றைய சாருவுக்கு ஒரு வேளை தோன்றியிருக்கக் கூடும். ஆனால் அன்று சாரு வேறு பெண். அனுபவத்தின் தழும்புகள் அவள் உள்ளத்தைக் கறைப்படுத்தி யிருக்கவில்லை. அது முற்றும் அவிழாத மலராகவே இருந்தது.
சேந்தன் தோப்பு எத்தனையோ கிராமங்களைப் போல இன்னு மொன்று. பெயரைப் போலவே தோப்புகளுக்குப் பிரசித்தமானது. பக்கத்து நகரிலிருந்து பல பெரிய மனிதர்கள் பறவை வேட்டைக்காக அங்கு வருவதுண்டு. ராகவனும், அவன் மனைவி சித்ராவும், தங்கை சாருவும் தோப்புக்குக் கூப்பிடு தூரத்தில் தெருவோடு குடியிருந்தனர். ராகவன் சேந்தன் தோப்புப் பாடசாலையில் ஆசிரி யரா யிருந்தான். சாருவுக்குத் தோப்பில் சுற்றுவ தென்றால் ஒரே பித்து. அப்பொழுது, ஐந்து வருஷ மணவாழ்வின் பின்பு சித்ரா பிள்ளைப் பேற்றிற்காகப் பிறந்த வீடு சென்றிருந்தாள். அன்று சனிக்கிழமை. உண்ட மயக்கம் தீர உறங்கும் மத்தியான வேளை. சாரு தோப்பில் ஒரு மாவில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அந்தக் கிறங்கும மத்தியான அமைதியைக் கிழித்துக் கொண்டு அண்மையில் வேட்டுச் சத்தம் எழுந்தது. அந்த வேட்டின் எதிரொலி ஒயுமுன் சிறகுகள் சடசடக்கச் சுழன்று சுழன்று வந்து சிறிது தூரத்தில் விழுந்தது ஒரு பறவை. சாரு அருகில் போய்க் குனிந்து பார்த்தாள். புறா அது செத்துவிட்டது. அருகில் காய்ந்த சருகுகள் சரசரத்தன. சாரு புறாவைக் கையில் எடுத்துக்கொண்டு நிமிர்ந்தாள். எதிரே ஓர் இளைஞன் நின்றான். அவன் கையில் புகை உமிழும் துப்பாக்கி யொன்றை அனைத்துப் பிடித்திருந்தான். அலட்சியம் பொங்கும் ஆண்மை வடிவம். உலகையே விலைக்கு வாங்கிவிட்ட தோரணை.
92

"அந்தப் புறாவைத் தருகிறாயா? நான் தான் அதைச் சுட் டேன்," என்றவன் கையை அதிகாரத்தோடு நீட்டினான். சா பேசாமல் புறாவைக் கொடுத்துத் தானிருப்பாள். ஆனால் அவன் அலட்சிய தோரணையோ, ஆணவமோ, ஏதோ ஒன்று அவளுக்கு எரிச்சல் மூட்டியது. -
"அது சொல்லாமலே புரிகிறது!" உதட்டைப் பிதுக்கிப் புரு வத்தை உயர்த்தி அவனை மேலுங் கீழும் அதிசயப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தாள். சுற்றி விளங்கிய இயற்கையின் பிரிக்க முடியாத அங்கமாய், அழகுருவாய், அன்றலர்ந்த மலராய் நின்ற சாருவை அவன் கண்கள் அளவெடுத்தன.
"புரிந்துகொண்டாயல்லவா? இனியாவது புறாவைத் தருகி gp/Tulum?” சிரித்துக்கொண்டு கேட்டான்.ஆண்மையும் கவர்ச்சியும் தவழ்ந்த அவன் முகம் அவளை மயக்கியது.
'தர முடியாது.”
“என்ன? அவன் திகைத்தான்.
"தரமுடியாது." அழுத்தமாகச் சொன்னாள்.
"ஓஹோ! உனக்குத் தரத்தெரியாவிட்டால் உன்னிடமிருந்து எடுத் துக் கொள்ள எனக்குத் தெரியும்.” எரிச்சலோடு சொன்னவன் அதைச் செயலாக்குவதுபோல் அவளை நோக்கி அடியெடுத்தான்.
"எடுத்துக்கொள்ளேன் பார்க்கலாம்! வார்த்தையை வீசியவள் சட்டென்று திரும்பி மின்வெட்டுவதுபோல மரங்களிடையே ஓடி மறைந்தாள். இதை எதிர்பார்க்காத முரளி அப்படியே திகைத்து நின்றான்.
JQ0 șRGA ' . a)
"ஏதோ குறும்புத்தனத்தில் புறாவைத் தூக்கி ஓடி வந்து விட்டாளே தவிர யோசித்துப் பார்க்க அவளுக்குத் திக்கென்றது. தன் நடத்தையைப் பற்றி புகார் செய்ய அந்த மனிதர் விசாரித்துக் கொண்டு வீடுதேடி வந்து விடுவாரோ என்று பயந்தாள். ஆனால் இரண்டு நாட்களாகியும் ஒருவரும் வரவில்லை என்று கண்டதும் மீண்டும் தோப்பை நாடினாள். ஏனோ முரளியின் ஆண்மையும் மிடுக்கும் பொங்கும் வடிவம் அவள் மனதில் சதா தோன்றலாயிற்று. அவனை மீண்டும் காணவேண்டு மென்ற விழைவு ஏற்பட்டது. அந்தத்தோப்பு அவளைக் கவர்ந்திழுத்தது. அங்கு தான் முரளியும் சாருவும் தினமும் சந்தித்தார்கள். முரளியின் குறும்பும் கேலியும் அழகும் சாருவின் குழந்தை யுள்ளத்தைச் சூறையாடிவிட்டன.
93

Page 54
நாட்கள் வந்து போயின. அவர்களின் அன்புப் பிணைப்பும் இறுகி இணைந்தது. முரளி ஒருமாதம் சேந்தன் தோப்பில் தங்கினான். முரளி ஊர் திரும்புகிறான் என்றதும் சாருவின் கண்களில் நீர் முட்டிச் சிதறியது. சாருவுக்கு அவர்களின் சந்திப்பு அந்த ஒரு மாத காலத்தின் இன்பம் எல்லாம் ஒரு கனவுத் தன்மையோடு தான் தோன்றின. அதில் உண்ம்ையான ஒரு பொருள் முரளியே என்றும், அவன் போய்விட்டால் அவர்கள் இருவரையும் சுற்றி யெழுந்த உலகமும் நொறுங்கித் தூளாகி மறைந்துவிடும் போலும் அவளுக்குத் தோன்றியது. முரளி அவள் கண்ணிரைத் துடைத்தான்.
"இதற்கு அழுகிறாயா சாரு? நான் என் அப்பாவிடம் நம்மைப் பற்றிச் சொல்லி அவரோடு முறையாகப் பெண் கேட்டு உங்கள் வீட்டுக்கு வரவேண்டாமா? சாரு, ஏழே ஏழு நாட்கள் தான். அடுத்த வாரம் வந்துவிடுவேன். எங்கே சிரி. சிரிப்பை உதிர்த்துக்கொண்டே அவன் போய்விட்டான்.
அவன் சொன்ன ஏழு நாட்களும் அதற்கு மேலும் வந்து போயின. முரளிதான் வரவில்லை. அவனிடமிருந்து எவ்விதத் தகவலு மில்லை. அப்பொழுது தான், உணர்ச்சியின் வேகம் கண்ணை மறைக்காத நிலையில் நடந்ததை எண்ணிப் பார்க்கலா னாள். முரளியின் செல்வ நிலை, அவன் அந்தஸ்து எல்லாம் முழு உருவங்கொண்டன. அவளோ ஏழை ஆசிரியனின் தங்கை. இயற்கை அளித்த அழகு ஒன்றுதான் அவளிடம் இருந்தது. பள்ளத்திலுள்ள நீர் மலையுச்சியை அடைய முடியுமா? அவள் ஏன் இதையெல்லாம் முன்பே எண்ணிப்பார்க்க வில்லை? சாதாரண கதியில் ஒடும் வாழ்க்கையில் விபரீதங்கள் ஏன் ஏற்படுகின்றன? மனித எத்தனத்தி ற்கும் மேம்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் மறந்து விடாதி ருக்கவா? முரளி மேல் அவளுக்கிருந்த நம்பிக்கையைக் கொல்ல ஆறு மாதங்க ளெடுத்தன. ஆனால் அவன் மேல் கொண்ட அன்பைத் தான் என்ன முயன்றும் அவளாள் கொல்ல முடியவில்லை. முரளியை அவளால் மறக்கவே முடியவில்லை. தன்னை வஞ்சித்து விட்டானே என்று அவனை வெறுக்கவும் முடிய வில்லை. ஆனால் அவன் தான் வந்துவிட்டானே என்னத்தான் நடந்திருந்தாலும் அவன் வந்து விட்டான்.
"சாரு சாரு!" சித்ராவின் குரல் சாருவின் சிந்தனைத் தொடரை அறுத்தது. சாரு மல்லிகைச் சரத்தைப் பந்தாகச் சுருட்டி எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.
"சாரு, நான் அண்ணாவோடு டிஸ்பென்ஸ்ரிக்குப் போய் வருகிறேன். அடுத்த வீட்டுக் கமலி இப்போதான் நீலாவைத் தூக்கிக் கொண்டு போகிறாள். இருளு முன் நீலாவைக் கூட்டி வந்து விடு.
94

வீட்டைப் பார்த்துக்கொள். சரியென்று தலையாட்டிய சாரு, ராகவ னையும் சித்ராவையும் வழியனுப்பிக் கதவைச் சாத்தினாள். மல்லி கைச் சரத்தில் சுவாமிப் படத்துக்குச் சூட்டிவிட்டுத் தன் தலையிலும் வைத்துக்கொண்டாள். முகத்தைக் கழுவிக் கண்களுக்கு மையிட்டு நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டாள். வீட்டின் உள் முற்றத்தில் வந்து உட்கார்ந்து மேலே நீல வானைப் பார்த்தவாறு யோசனையி லாழ்ந்தாள். திடீரென்று கதவு தட்டிக்கேட்டது. சாருவின் இதயம் விம்மி வெடிக்கும் போல் அடித்துக்கொண்டது. அவள் உள்ளத்தை ஏதோ ஒன்று நிறைத்து அடைப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. மெல்ல எழுந்து சென்று கதவைத் திறந்தாள். முரளிதான் நின்றான். சாரு அவனைக் கண்கொட்டாமல் பார்தாள். உள்ளத்தில் நின்ற உருவமே எதிரில் தோன்றுவது போலிருந்தது. நினைவு கூடக் கனவு போலத் தோன்றுவது உண்டு. ஆனால் கனவில் நடக்கக் கூடியது மட்டுமே அவள் விஷயத்தில் நினைவில் நடந்து விட்டது. சாரு மெல்லப் பின் வாங்கினாள்.
"வாருங்கள்," அவள் கை தானாக எழுந்து நாற்காலியைச் சுட் டிக் காட்டிற்று. முரளி பேசாமல் வந்து கதிரையில் அமர்ந்தான். சாரு அவனெதிரே அமர்ந்தாள். என்ன வெல்லாமோ அவனிடம் சொல்ல வேண்டும். கேட்க வேண்டும் என்று துடித்தாள். காலையில் அவனைக் கண்டது முதல் இந்தச் சந்திப்பைப் பற்றி என்ன வெல்லாமோ கற்பனை செய்துகொண்டாள். ஆனால் இப்பொழுதோ அவளுக்கு நாவெழ மறுத்தது. ஆனால் உணர்ச்சியின் எல்லையிலே மெளனம் தானே பாஷைP. முரளிதான் முதலில் பேசினான்.
"என்னை அதிகமாய் வெறுக்கிறாயா சாருP" கரகரத்த குரலில் கேட்டான். சாரு சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவ னுக்கே உரித்தான மிடுக்கை அவனிடம் காணவில்லை. ஏதோ ஓர் அடங்கிய தன்மை தான் அவனிடம் தென்பட்டது. சாரு கஷ்டத்தோடு மெதுவாகப் பேசினாள்.
"இல்லை. வெறுக்க வில்லை. நான் ..நான் உங்களை நம்பினேன்." அவன் வரண்ட சிரிப்பை உதிர்தான்.
"நீ என்னை நம்பினாய். நான்.நான் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தினேன்.” தனக்குத்தான் பேசிக் கொள்வது போல் முணுமுணுத்தான். பின்பு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
"என்னை உன்னால் மன்னிக்கமுடியாது தான் சாரு. ஆனால் என் அன்பு நானே யளித்த துன்பத்திற்கு ஈடுசெய்யும் சாரு. சாரு.அவளைக் கெஞ்சும் கண்களோடு பார்த்தான். &II(5 என்னை மணந்துகொள்வாயா? மணந்து கொள்வதா? அவன் வரு
95

Page 55
வான் என்று தானே இவ்வளவு நாளும் காத்திருந்தாள்? அவனுக் காகத் தானே ஏங்கி ஏங்கி உருக்குலைந்தாள்? அவன் வந்து விட்டான். அவள் வாழ்வு நிறைந்துவிட்டது. சாரு தலைநிமிர்ந்தாள். உணர்ச்சி வேகத்தில் அவளுக்கு நாத்தடுமாறியது. "முரளி உங்களுக் காதத்தான் காத்திருந்தேன்” என்று கத்தவேண்டும் போலிருந்தது அவளுக்கு. சாரு வாய் திறந்தாள்.
"-9) toLDITl........ அம்மா! நீலாதான் கூப்பிட்டவாறு வாசலைக் கடந்தாள். யாரோ இருப்பதைக் கண்டதும் அவளை அழைத்து வந்த கமலி வாசலோடு போய்விட்டாள். அந்நிய மனிதரைக் கண்டதும் குழந்தை நீலா மிரண்டு நின்றாள். வட்டக்கருவிழிகளால் முரளியை மிரள மிரளப் பார்த்தவாறு மெல்ல மெல்ல நடந்து வந்து சாரு வோடு ஒட்டிக்கொண்டாள். முரளி திகைப்போடு, சந்தேகம் மனதைக்கெளவ சாருவையும் நீலாவையும் மாறிப் மாறிப் பார்த் தான். சாருவின் கை நீலாவை அணைத்துக் கொண்டது. அவள் கண்களில் ஒரு வேகம் தோன்றியது.
"நான் என் கணவரோடும் குழந்தையோடும் சந்தோஷமாக வாழ் கிறேன்." தெளிவாக அமைதியாகச் சொன்னாள்.
"சாரு! அவன் இதய மூச்சோடு எழுந்தது அச்சொல்.
கண்கள் கலங்கி அவற்றில் நீர் ஊறக் கதிரையில் முடங்கிக் கிடந்தான் முரளி. சற்று நேரத்தில் எழுந்தவன் தொய்ந்த தலையோடு மெல்ல மெல்ல நடந்து வெளியேறினான்.
தன் கண்களில் நிறைந்த நீரைச் சிந்தவிடாது கண்ணிமைக ளைப் படபடவென்று வெட்டித் தடுத்தாள் சாரு.
டிசெம்பர் 1962.

நிறைவு
"உன் முடிவு இதுதானா, உஷாP" நிராசை நிறைந்த குரலில் கேட்டான் சேகர். புதுமுகம் உஷாதேவி தன் புருவங்களைச் சுருக்கி னாள். அவளுடைய அழகிய முகத்திலே ஒரு வேகம் தோன்றியது.
"ஆமாம் சேகர். என் கனவு நினை வெல்லாம் வெள்ளித் திரை யிலே நான் அணையாத தாரையாக மின்ன வேண்டுமென்பதே! பேரும், புகழும், கோடி கோடியான மக்களின் வழிபாட்டையும் நான் பெறவேண்டும். இந்த லட்சியப் பாதையிலே நான் சென்றிருக் கும் தூரம் சிறிது தான் சேகர். இதே வழியில் நான் முன்னேறி திரை யுலகிலே சிறந்த நடிகையாக விளங்க வேண்டும். இதைத் தான் நான் வாழ்வில் எதிர்பார்க்கிறேன். கல்யாணம் செய்து குடும் பம் நடத்துவதில் எனக்கு ஆசையோ, பற்றோ அன்றி ஆவலோ எதுவுமில்லை சேகர்." V−
"நீ சொல்லும் இவை யெல்லாம் வாழ்வாகுமா உஷா? திரு மணம் உன் லட்சியத்திற்குக் குறுக்கே வராது என்று நான் உறுதி கூறுகிறேனே! நான் இந்த சினிமா வாழ்வை அறியாதவனா? நானும் ஓர் உதவி டைரெக்டர் தானே! எத்தனேயோ நட்சத்திரங்கள் குடும்ப வாழ்வில் ஈடுபட வில்லையா? இதுதான் உன் ஆட்சேபம் என்றால் நான் உன் முடிவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை உஷா. ஆனால் 8 ஆனால் நீ என்னை வெறுப்பதாக இருந்தால் அல்லது வேறொரு வனை மணக்க விரும்பினால், உன்னை இனி என்றுமே தொந்தரவு செய்யமாட்டேன்." உஷாவிற்கு இவனை என்ன செய்வதென்றே தெரிய வில்லை. அவள் இளம் உள்ளத்தின் ஆர்வ மெல்லாம் அவளைக் கவர்ந்திழுத்த அந்த நட்சத்திர வாழ்வையே நோக்கிப் பாய்ந்தது. தன்மேல் உயிரையே வைத்திருந்த சேகரை நினைக்க அவளுக்குப் பச்சதாபமாகவும் இருந்தது.
"சேகர், உன்னை நான் ஏன் வெறுக்கப் போகிறேன்? அல்லா மல் நான் உன் நட்பைப் போற்றுகிறேன் அந்த நட்பு வேறு உணர்ச் சியாக மாறாதவரை! உனக்கு மட்டுமல்ல, வேறு எந்த ஆடவனுக்கும் என் வாழ்வில் இடமில்லை." சேகர் தன் அடர்ந்த கேசத்தை விரல்க ளால் கோதினரன்.
"உஷா, இந்தச் சினிமா உலகம் ஒரு கனவுலகம் உஷா. இந்தக்
97

Page 56
கற்பனை வாழ்வில் நீ எத்தனை காலம் திருப்தி காணப் போகிறாய்? ஓர் அரிய, அற்புத விளையாட்டுப் பொருளைக் கண்டு திகைத்து மயங்கி நிற்கும் குழந்தையின் நிலையிருக்கிறாய், உஷா. இந்த வெள்ளி உலகின் ஒளி விளக்குகள் உன் கண்களைக் குருடாக்கி விட்டன. அதற்கப்பால் காத்திருக்கும் வாழ்வை நீ காண முயல வில்லை, உஷா."
"முயலவேண்டிய தில்லை. விரும்பியதுமில்லை சேகர். இந்தக் கனவுலகம் தான் என் உலகம். இங்கு பெறும் வாழ்வுதான் என் மனம் போன்ற வாழ்வு. நீங்கள் காட்டும் வாழ்வு எனக்குத் திருப் தியளிக்கப் போவதில்லை." என்ன இருந்தாலும் உஷாவின் உள்ளம் வருந்தத்தான் செய்தது. அவள் நீல நெடுங் கண்களில் பரிதாபம் மின்னியது.
"உன் உள்ளத்தை நோக வைப்பதற்காக வருந்துகிறேன் சேகர். ஆனால் என் முடிவு மாற்ற முடியாதது." சேகரின் நெற்றி நரம்பு புடைத்தது.
"நீ எனக்காகப் பரிதாபப்பட வேண்டாம் உஷா. உன் அன்பை யாசித்தேனே தவிர உன் அனுதாபத்தை நான் வேண்ட வில்லை. சீ நீ உயிரும் உணர்வுமற்ற வெறும் உருவம் உஷா மரப்பாச்சி! பொம்மை! காதலின் வேதனை யெல்லாம் வெள்ளித்திரையில் அள்ளிக் காட்டும் நீ உன் உள்ளத்தில் அதை உணரத் தவறியது ஏன் உஷாP உணர்ச்சியின் பிழம்பாய்த் திரையில் தோன்றுவாயே இப்பொழுது உணர்வற்ற ஜடமாய் நிற்கிறாயே!. இன்று எனக்காக அனுதாப்படுகிறாய் உஷா. ஆனால் உன் நிலைக்காக, உனக்காக, நீயே அனுதாபப்படும் நாள் வரும் உஷா. நான் வருகிறேன்." சேகர் அதே மூச்சோடு போய்விட்டான்.
"பாவம் சேகர்" என்று முணுமுணுத்த உஷா மணியைப் பார்த்துவிட்டு அவசரமாக ஷட்டிங்'க்குப் புறப்பட்டு விட்டாள். அவள் சேகரை மறந்து விட்டாள்.
காலம் காத்திருப்ப தில்லை. இன்பத்தையோ, துன்பத்தையோ, இடரையோ, ஏற்றத்தையோ கண்டு அது தயங்குவது மில்லை அது தன் கதியில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று உஷா புகழ்பெற்ற நட்சத் திரமாகிவிட்டாள். அவள் தேடிய பெரும் புகழும் அவள் நினைத் தற்கு மேலாகவே கிடைத்து விட்டன. அவளை ஒப்பந்தம் செய்ய நான் நீயென்று முந்திக்கொண்டனர் தயாரிப்பாளர்கள். குழந்தை முதல் கிழவர் வரை வந்திக்கும் தெய்வமாகிவிட்டாள் உஷா.
98.

புகழின் ருசியிலே, வெற்றியின் பெருமிதத்திலே மயங்கிக் கிடந் தாள் உஷா. அவள் இதயதாகம் தணிந்திருக்க வேண்டுமே! ஆனால் அவள் உள்ளத்தில் ஏதோ குறையிருக்கத்தான் செய்தது. அவள் உள் ளத்தை அரித்த அந்தக் குறை யுணர்ச்சிக்கு அவளால் உருவம் கொடுக்க முடிய வில்லை. நிகரற்ற நட்சத்திரமாய் விளங்கி என் பேரும் புகளும் பெருகி யென்னP ஏனோ அவள் உள்ளம் திருப் திப்பட வில்லை. அவளுக்கு எதிலும் புலன் செல்லவில்லை. காரண மின்றி எல்லோர் மீதும் எரிந்து விழத் தொடங்கினாள். ஓய்வில்லா கடும் உழைப்பு மிகுதியே அவள் மனச் சஞ்சலத்திற்குக் காரண மென்றனர். ஒரே சமயத்தில் இருபத்தைந்து படங்களில் நடித்து வந்தாளல்லவா? தங்கள் படத்தின் வெற்றியை மனதில் கொண்ட தயாரிப்பாளர்கள் அவளைச் சிறிது காலம் ஒய்வெடுத்துக் கொள்ளத் தூண்டினர். தன் பிறந்த ஊரான சோலையூருக்குச் சென்று நிம்மதி யாக ஒருவாரமாவது இருந்துவிட்டு வரலாம் என்று அவள் தாயும் தூண்டினாள். உஷாவுக்கு அது நல்லதாகவே பட்டது. தத்தளிக்கும் தன் மனதை நிலைப்படுத்தி வரலாம் என்று நினைத்தாள். பிரபல நட்சத்திரம் உஷா சாதாரணப் பெண்ணாகச் சோலையூர் சென்றாள். ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அங்குகிடைத்த தனிமையும் ஓய்வும் அவள் சஞ்சலத்தை வளர்தனவே யொழிய அதற்கு மருந்தாக வில்லை. அந்தக் கிராமத்தின் சூழ்நிலை அவளை மேலும் கலக்கி LU 3).
மாலை வேளையில் உஷா ஆற்றங்கரைக்குச் சென்று பொழு தைக் கழிப்பாள். அங்குதான் ஊர் மக்களெல்லாம் மாலையில் தம் பொழுதை இன்பமாய்க் கழிக்க வருவார்கள். அந்த இன்பம் அவர் கள் திருப்திக்குப் போதும். உஷா அவர்களை வேடிக்கை பார்ப் பாள். அன்றும் உஷா வருவோர் போவோரை வேடிக்கை பார்த்த படியே இருந்தாள். தூரத்தில் வந்துகொண்டிருந்த இளைஞ னொரு வன் அவள் கண்களில் தட்டுப்பட்டான். அவனருகில் உரிமையோடு ஓர் இளம்பெண் ஒயிலாக நடந்து வந்தாள். அவள் கையில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தை. அந்த இளைஞனை எங்கோ பார்த் தது போல். சேகரா? அவள் இதயம் வேதனையோடு பாய்ந்து துடித்தது. வைத்த கண் வாங்காது பார்த்தாள் அவர்கள் நெருங்கி வந்தார்கள். இல்லையில்லை ! அவன் சேகரேயல்ல! ஆனால் அதே சாயல்தான்! அப்பாடா! உஷா நிம்மதியாக மூச்சு விட்டாள். அவ ளுக்கே ஆச்சரியமாக விருந்தது. அவன் சேகரல்ல என்றதும் தனக் கேன் இத்தனை ஆறுதல் ஏற்படவேண்டும்? அவர்கள் அழகான இளந் தம்பதிகள் தான்! உஷாவுக்குச் சிறிது தூரத்தில் அமர்ந் தார்கள். குழந்தையைச் சாக்கிட்டு அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட இன்பப் பேச்சுக்கள் எல்லாம் அவள் காதில் அரை குறையா விழுந்தன. உஷா தனக்குள் சிரித்துக் கொண்டாள். இதைப் போல் எத்தனையோ காதல் கட்டங்களில் அவள் நடித்திருக்கிறாள்
99

Page 57
தத்ரூபமாக ஆனால் அதில் ஒன்று கூட அவள் நெஞ்சத்தைத் தொட்ட தில்லையே! உஷாவின் உள்ளத்தில் ஏக்கம் பொங்கியது. பயங்கரத் தனிமை உணர்ச்சி அவளை வாட்டியது. அன்று சேகர் சொன்ன சொற்கள். அவள் இன்றுவரை மறந்து விட்ட சொற்கள் அக்கணத்தில் பசுமையாக அவள் நினைவில் எழுந்தன" காதலின் வேதனையெல்லாம் வெள்ளித் திரையில் அள்ளிக்காட்டும் நீ, உன் உள்ளத்தில் அதை உணரத் தவறியது ஏன் உஷா? இன்று எனக்காக அனுதாபப் படுகிறாய்! உனக்காக நீயோ அனுதாப்படும் நாள் வரும் உஷா? அன்று தீர்க்கதரிசி போல் சேகர் எவ்வளவு பெரிய உண்மையைக் கூறி விட்டான். உஷா தன்னைத் தானே உணர்ந்து கொண்டதைவிடச் சேகர் அவளை எவ்வளவு நன்றாக உணர்ந் திருந்தான். அவன் அவளிடம் கொண்ட ஆழந்த அன்புதான் அதற் குக் காரணமோ? கண்களில் நீர் திரையிட உஷா எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள்.
அன்று "ஷுட்டிங்" குறிப்பிட்ட நேரத்திற்குப் பிந்தி விட்டதால் சேகர் வீடு திரும்பும் பொழுது இரவு மணி பத்தாகிவிட்டது. யாரோ தன்னைக் காண வெகுநேரம் காத்திருப்பதாக அறிந்ததும் நேரே யாரென்று காணச் சென்றான். அங்கு பொறுமையாக அமர்ந் திருந்த பெண்ணைக் கண்டதும் தன்னை மறந்து கூவி விட்டான்.
"உஷா உஷா” உஷா கஷ்டப்பட்டுச் சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தாள்.
"நானே தான் சேகர். நம்பமுடியவில்லையா, அன்று, அதற்குப் பிறகு உன்னைக் காணவே இல்லையே? நானாவது உன்னைக் கண்டு செல்லலாமென்று நினைத்தேன்."
"உண்மையில் நீதான் உஷா என் கண்களின் குறும்பு தானாக் கும் என்று நிைைத்தேன். என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே!," என்று சேகள் சிரித்தான். உஷாவுக்குச் சுருக் கென்று தைத்தது. வரண்ட புன்னகையொன்று அவள் உதடுகளில் நெளிந்தது.
"6T6ir இலட்சியம் நிறைவேறி விட்டது சேகர்." சேகர் ஒன்றும் பேசாது அவளைப் பார்த்தான். உஷா மெதுவாகத் தொடர்ந்தாள்.
"சேகர் ஆனால் இப்பொழுது தான் நான் எனக்காக வருந்து கிறேன், சேகர் எனக்காக அனுதாபப் பட்டுக்கொண்டிருக்கி றேன்."
"உஷா, இதென்ன பேச்சு? தேயாத மதியாக நட்சத்திர வானில் விளங்குகிறாய். பேரும். புகழும், வாழ்த்தும், வந்தனையும் வேண்டிய அளவு-"
100'

இருக்கிறதுதான் சேகர். ஆனால் வாழ்வில் எனக்கு இவை நிறைவளிக்க வில்லையே! என் மனதின் ஏக்கத்தை இவை தணிக்க வில்லையே, சேகர் என்னை என்னை மன்னிக்கும்படி கேட்கவே வந்தேன்."
"உஷா” சேகரின் உணர்ச்சி வசப்பட்ட அழைப்பு அவளை மெய்சிலிர்க்கச் செய்தது
"உஷா, இதைத்தான் உனக்கு அன்று சொல்ல முயன்றேன். ஆனால் நீ புரிந்துகொள்ளவில்லை. தானாக நீ உணரும் வரை பொறுத்திருக்க நினைத்தேன்!”
“சேகர், உண்மையாகவா, " உஷாவின் உள்ள ஏக்கம் தேய்ந்து மறைந்து மனக் கலசம் பொங்கி நிறைந்தது
“இன்று பத்திரிைகையைப் பார்த்தாயா உஷாP சேகர் சிரித்து கொண்டே கேட்டான். அவன் தோள்வழியே எட்டிப்பார்தாள் உஷா.
"திரையுலகின் மகத்தான நஷ்டம்! பிரபல நட்சத்திரம் உஷா
திரையுலகைத் துறந்து விட்டார்,” என்று கொட்டை எழுத்துகளில் இருந்தது. உஷா தன் கணவனைப் பார்த்து முறுவலித்தாள்.
101

Page 58
உன்னை உணர
சுந்தரியைப் போன்று பொருத்தமான பெயர் பெற்றவர் எவரும் இருக்க முடியாது. சுந்தரியை அழகி என்று சொன்னால் சாதார ணமாய்ப் போய்விடும். ஒரு வயதுக் குழந்தையான சுந்தரியைத் தனக் குப் பாரமாக விட்டு விட்டுத் தன் மகனும் மருமகளும் கார் விபத் தில் மாண்டு போகப் பாட்டனார் ராமசுந்தரமே அவளை எடுத்து வளர்த்தார். அவளுடைய சிவந்த மேனியையும் சுருள் கூந்தலையும் வண்டுக் கண்களையும ரோஜா உதடுகளையும் கண்டு அவர் தான் அவளுக்குச் சுந்தரி என்று பெயரிட்டார். அந்த அமானுஷ்யமான செளந்தரியம் அவருக்குப் பலத்த யோசனையைக் கொடுத்தது. ராம சுந்தரம் பழங்காலத்து மனுஷர். பழைய நம்பிக்கையில் ஊறியவர். ஒரு பெண்ணுக்கு இத்தனை அழகாP அழகோடு அளவிறந்த செல்வ முமா? இவ்வளவு அழகும் என்ன அனர்த்தத்திற்கோ ? இது மனித அழகல்ல. தெய்வீக அழகு" என்று அச்சத்தோடு எண்ணிக் கொள் வார். ஆனால் சுந்தரி இதையெல்லாம் அறியாது, தன்னுணர்வின்றி, அடக்குவாரின்றிச் சுயேச்சையாகக் காட்டுமான் போல் வளர்ந்தாள்.
தான் அழகானவள் என்று அறிந்து பூரிக்காத பெண் எங்கு மில்லை. ஆனால் சுந்தரி தன் அழகை நோகவேண்டிய காலம் சீக்கிரமாகவே வந்தடைந்தது. தாத்தாவின் மென்மையான அர வணைப்பில் வளர்ந்த சுந்தரிக்கு வெளி யுலகத்தாரின் கொடுமை விளங்கவில்லை. தன் வயதுப் பெண்கள் தன்னை ஏன் குத்திப் பேசுகிறார்கள், மனம் நோகச் செய்கிறார்கள் என்று அவளுக்கு முதலில் விளங்க வில்லை. அவள் திறந்த மனத்தோடு உள்ளன் போடு சிநேகத்தை எதிர்பார்த்துத் தன் சக மாணவிகளை நெருங்கு வாள். ஆனால் அங்கு பதிலுக்கு எரிச்சலையும், பொறாமையையும், வெறுப்பையுமே கண்டாள். அவர்கள் பேச்சிலிருந்து சிறிது சிறிதாக அவர்கள் நடத்தையின் காரணம் புலனாயிற்று. அதன் பிறகு தான் தன் உருவத்தைப் புதுக் கண்களோடு நோக்கினாள். தன் அழகை அன்று தான் உணர்ந்தாள். அழகோடு பிறந்தது அவள் குற்றமா?,
தாத்தாவைத் தவிர வேறு ஆண்களை அறியாத சுந்தரிக்கு இந்த ஆடவர்களின் போக்கும் பார்வையும் சகிக்க முடியவில்லை. அவர்கள் தேன் குடித்த நரி போலத் தன்னை நோக்குவதை காணச் *ந்தரியின் உடல் கூசிக் கூனிக் குறுகும். அவர்கள் என்னைப் பார்க் கவில்லை - என் அழகைத் தான் பார்க்கிறார்கள்! சே! இவ்வளவு
O2

தானா நம் மதிப்புP அழகு அழகு என்று மாய்கிறார்களே! இதனால்
என்ன நன்மைP மனிதனின் கடையான குணங்கள் எவையோ அவற்றை யெல்லாம் தூண்டி விடுகிறதே யொழிய இதனால்
உயர்ந்த எண்ணம் கொண்ட ஒருவரைக் கூடக் காண வில்லையே
என்றெல்லாம் எண்ணி நொந்தாள். சுந்தரியின் மனம் பதினெட்டு
வயதிற்குள் பாறை போலாகி விட்டது. தன் அழகை விஷம் போல
வெறுத்தாள். ஆனால் அது கூடுவதே யொழியக் குறைவதாகத் தெரியவில்லை. ஒரு நாள் ராமசுந்தரத்திடம் தயங்கியபடியே வந்து
நின்றாள். "அப்பா நான் இனிமேல் கலாசாலைக்குப் போக வில்லை" தயக்கத்தோடு கூறினாள். புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்த
ராமசுந்தரம் "ஏனம்மாP" என்றார். எல்லோரும் என்னழைகைப்
பார்க்கிறார்கள் - என்னால் தாங்கமுடியவில்லை என்று எப்படிச்
சொல்லுவாள்?
“என்னவோ பிடிக்கவில்லை அப்பா! நீங்கள் தனியே இத்தனை பெரிய வீட்டில் இருக்கிறீர்களே! உங்களோடு இருக்க வேண்டும் போலிருக்கிறது" என்று மழுப்பினாள். அழகின் பூரணப் பொலி வோடு நின்ற சுந்தரியை ராமசுந்தரம் பார்த்தார். அவர் நெற்றியில் ஒரு சுருக்கம் விழுந்தது. சுந்தரி நேற்றிருந்தவளாP அவள் படர வேண்டிய கொடி!
"அதற்கென்ன அம்மா! பெண்ணுக்கு அதிகப்பட்ட படிப் பெதற்கு? எனக்கும் வயதாகி விட்டது. உனக்கொரு கல்யாணம் செய்து வைத்து விட்டால் நான் நிம்மதியாக மூச்சு விடலாம்!" ராமசுந்தரம் பேச்சோடு நின்றுவிடாமல் அதைச் செயலாக்குவதில் முழு மூச்சோடு இறங்கினார். சுந்தரி இதை என்றோ நடக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டாள். ஆனால் பருவ மங்கையின் மனதில் எழும் இனிய கனவுகள், கற்பனைகள் அவள் மனதில் காணப்பெற வில்லை. ஆசையை அன்றி வேறொன் றையும் ஆண்களின் கண்களில் கண்டறியாது அருவருப்புக் கொண்ட சுந்தரியின் மனதில் காதல் நினைவுகள் எழவில்லை. ஆனால் கல்யாணமாகி விட்டால், தான் ஒருவனுக்குச் சொந்தமாகி விட்ட அந்த நிலை மற்ற ஆடவரின் எண்ணங்களிலிருந்து தனக்குப் பாது காப்பு அளிக்கும் என்றொரு நம்பிக்கை துளிர்த்துவிட்டது.
ராமசுந்தரமும் சுந்தரிக் கேற்ற வரனைத் தேடிவிட்டார்.
சந்திரசேகரன் விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்ந்த பதவி வகித்து வந்தான். இத்தனை இளம் வயதில் தன் ஆற்றலைப் பல வித்திலும் காட்டிவிட்டான். அவன் எதிர்காலத்தில் உயர்ந்த நிலை அடைவான் என்று கூறினார்கள்.தற்பொழுதும் ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். சந்துரு சுந்தரியைக் கண்டதும்
103

Page 59
சம்மதம் தெரிவித்துவிட்டான். சுந்தரியின் கல்யாணமும் நடந்தது. சந்துரு முழுவதும் அவள் அழகில் கண்டுண்டு கிடந்தான். ஓய்வு நேரமெல்லாம் ஆராய்ச்சியில் மூழ்கிக் கிடப்பவன், சுந்தரியைச் சுற்றி வந்தான். அவளைப் பல இடங்களுக்கும் பெருமையோடு அழைத்துச் செல்வதில் பூரித்தான். சந்துருவிடம் ஆசையோடு அன்பையும் உணர்ந்த சுந்தரி கணவனின் பாசத்தால் கட்டுண்டு நிம்மதியான இன்பத்தை அனுபவித்தாள்.
அன்று சந்துருவின் நண்பர் வீட்டில் விருந்து. தாத்தாவிற்குச் சாப்பாடு போட்டுவிட்டுப் பாலைக் காய்ச்சிக் கொடுத்து விட்டு உடுத்திக் கொள்ள வந்தவள் அறையிலிருந்து வெளியேறிய சந்துரு வோடு முட்டிக் கொண்டாள். அவன் மடிப்புக் கலையாத உடையில் காட்சியளித்தான்.
"நீங்கள் உடுத்தி விட்டீர்களா?" என்றாள் சுந்தரி. ஒரு கண நேரம் அவன் முகத்தில் சங்கடம் பாய்ந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டு, சுந்தரி என்றான் தயக்கத்தோடு. "அந்த அழைப்பு எனக்கு மட்டும்தான். அது ஆடவர்கள் விருந்தாம். இருவருக்கும் என்று நினைத்து உன்னையும் ஆயத்தமாய் இருக்கச் சொல்லிக் காலையில் சொல்லிவிட்டேன் இழுத்தான் சந்துரு.
"அதற்கென்ன? நீங்கள் போய் வாருங்கள்" அமைதியாகச் சொன்னாள் சுந்தரி. நிம்மதியாக மூச்சு விட்ட சந்துரு போய் விட் டான். சுந்தரி நேரே போய் மேஜையின் மேல் பார்த்தாள். பிறகு கீழேயிருந்த குப்பைக் கூடைக்குள் குனிற்து துளாவினாள்.
அதற்குள் அந்த அழைப்பிதழ் கிழிந்து கிடந்தது. துண்டுகளைச் சேர்த்துப் பிடித்துப் பார்த்தாள். அவள் நினைத்ததுபோல் அழைப்பு இரண்டு பேருக்கும் தான். அப்படியானால் சந்துரு ஏன் பொய் சொன்னான்? நெற்றியைச் சுருக்கினாள் சுந்தரி. அன்றிரவு விருந் திலிருந்து திரும்பியதும் சந்துரு வீட்டிலமைத்திருந்த தன் ஆராய்ச்சிக் கூடத்திற்குள் புகுந்துகொண்டான். இரவு வெகுநேரம் வரை அங் கேயே இருந்தான். எப்பொழுது வந்து படுத்தானோ தெரியாது.
அன்றிலிருந்து சந்துருவிடம் உள்ளுர ஏதோவொரு மாற்றம் புலனாகத் தொடங்கியது. சிறிது காலத்திற்குப் பின் சந்துரு பொய் சொல்லிக் கஷ்டப்படவில்லை. "நீ வரவேண்டாம்” என்று வெளிப் படையாகவே சொல்லி விடுவான். ஒரு நாள் அவன் விருந்திலிருந்து: திரும்பிய போது தான் அவளுக்கு விஷயம் விளங்கியது. நெற்றி நரம்பு புடைக்கச் சிவந்த முகத்தோடு வந்தான் சந்துரு. சுந்தரியைக் கண்டதும் அவன் எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. "மனை.
104

வியாம் மனைவி மண்ணாங்கட்டி! எத்தனை வருஷத்திய நண்பன் நான் நிற்கிறேன். என்னைக் கவனிக்கிறானா? மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று உயிரை விடுகிறான்! ஏமாற்றி விட் டேனாம் ஏமாற்றி" பொரிந்து தள்ளினான்7. சுந்தரி அப்பொழுது தான், சந்துரு பொறாமை பிடித்து அலைந்தான், என்ற றிந்தாள். அதுவும் தன் அழகு தூண்டிய பொறாமை! எந்த அழகை வெறுத் தாளோ, எந்த அழகுக்கு வேலி யமைத்து விட்டதாக நினைதாளோ அந்த அழகால் எரிந்த பொறாமை என்று நினைக்க அவளுக்குத் தாங்க முடியவில்லை. சந்துரு எதிலும் மனதைச் செலுத்த முடி யாமல் நிலை கொள்ளாமல் தவித்தான். அவனுடைய ஆராய்சிக் கூடத்தில் தூசி படிந்தது. அவனுடைய நடத்தை வரவர விபரீத மாகிக் கொண்டு வந்தது.
வீட்டிற்கு யாராவது வந்தால் சுந்தரியை அவர்கள் கண்ணில் பட விட மாட்டான். அவள் வீட்டில் இருக்கவே எங்கோ போய்விட் டாள் என்று கூசாமல் பொய் சொல்லுவான். அவளை வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதிக்க மாட்டான். ஓரிருவர் அவளைக் களங்கமான மனதோடு பார்க்கலாம். ஆனால், சந்துருவின் சந்தேக மனத்திற்கு எலலாமே அப்படித் தோன்றிற்று. யாராவது சாதாரண மாக, “உன் மனைவியை அழைத்து வரவில்லையா?" என்று கேட் டால் போதும். அது அவன் மனதிற்கு விகற்பமாகவே பட்டது. அதன் பிறகு அவன் மனம் வேறெதிலும் ஓடாது.
அன்றிரவு மூன்று மணியிருக்கும். சுந்தரி யன்னல் வழியே வானத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றாள். சந்துருவின் மெல்லிய மூச்சு அவளுக்குக் கேட்டது. அமைதியாகத் தூங்குகிறான். இவன் தான் சிறிது நேரத்திற்கு முன் கனல் கக்கும் எரிமலையாகக் குமுறி னான் என்று அவளால் நம்பமுடிய வில்லை. அன்று சந்துருவின் பெரியப்பா பிள்ளையின் கலியானம். அவர்கள் சுந்தரியைக் கையோடு அழைத்துப் போய்விட்டார்கள். சந்துருவால் ஒன்றும் செய்ய முடியவில்.ை இரவு விருந்திற்குப் பின்தான் அவர்கள் வீட்டிற்குத் திரும்ப முடிந்தது. வந்ததும் அவவன் போட்டுவிட்ட சத்தம்! கண்டபடி திட்டினான். அவறற்றைச் சுந்தரி ஒரு பொருட் டாக மதிக்க வில்லை. ஆனால் அவன் சொன்ன சில வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் மனதில் சம்மட்டி கொண்டு அறைந்தன.
"நீ குறுக்கும் நெடுக்கும் அவசியமில்லாமல் நூறுதரம் நடக்கத வும், அந்த மடையன்கள் உன்னைப் பார்துப் பல்லையிளரிக்கவும். அவர்களைச் சொல்லியென்ன? நீ ஒழுங்காக இருந்தால் அவர்கள் ஏன் நெருங்குகிறார்கள்? உனக்கென்ன பல்லிளிப்பு வேண்டியிருக் கிறது?. " சுந்தரி இடிந்துபோய் அப்படியே உட்கார்ந்து விட் டாள். ஏசட்டும் திட்டட்டும் பரவாயில்லை. ஆனால் தன் கணவனே
105

Page 60
தன் நடத்தைக்குமாசு கற்பிப்பதா? இதென்ன விபரீதம்? கணவன் என்று ஒருவன் வந்தால் தனக்குக் காப்பு என்று நினைத்தாள். அவன் எண்ணியதில் தவறில்லை. மற்றவர்களின் எண்ணங்க ளிலிருந்து அவளுக்கு காப்பாக அமைந்தான். ஆனால் அவனுடைய தடம் புரண்டு மனத்திலிருந்து, எண்ணங்களிலிருந்து என்ன காப்பு இருக்கிறது? எல்லாவற்றிற்கும் என் அழகு தானே காரணம்? இந்த அழைகத் தவிர்த்து என் உள்ளத்தை ஒருவரும் உணவரவில்லையே? என்னை என் அழகுக்காக அல்லாமல் உள்ளத்திற்காக மதிக்கும் ஒரு வரைக் கண்டால் போதும் என்று பலவாறு எண்ணி ஏங்கி நைந் தாள் சுந்தரி.
அதிர்ச்சியிலிருந்து மீண்ட சுந்தரி வந்து பார்த்தபொழுது சந்துரு. ஜன்னலை விட்டு மேசைக்கடியில் போய் உட்காாந்தாள் சுந்ாரி. நான்கு மணியிருக்கும், மெல்லிய உதய ஒளி ஜன்னல் வழியே புகுந் தது. அதன் வெளிச்தத்தில் சுந்தரி என்னேவொ வேகமாக எழுதிக் கொண்டிருந்தாள். சந்துருவை நோக்கிளாள். அவன் அசையாமல் படுத்திருந்தான். வானம் வெளுத்துவிட்டது. சுந்தரி கடிகாரத்தைப் பார்த்தாள். ஆறு மணியாகி விட்டது. அவள் பேனையை மூடிவிட்டுக் கையிலிருந்த சிறு புத்தகத்தைக் கொண்டுபோய்த் தன் சேலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரி லாச்சியினுள் ஓசைப்படாமல் வைத்துவிட்டு வெளியேறினாள்.
அவள் அடுப்பு மூட்டிப் பால் காய்ச்சிக் காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வந்த போது சந்துருவைப் படுக்கையில் காண வில்லை. பல் துலக்கப் போய்விட்டான் போலும் என நினைத்தவள், மேசை மீது காப்பியை வைத்து மூடினாள். நேற்றிரவுக்குப் பின சந்துருவைப பார்கக் அஞ்சினாள்.சிறிது நேரம் தயங்கிவிட்டு, ராமசுந்தரத்துக்குக் காப்பி கொடுக்கவில்லை என்ற நினைவு வரப் GLJTi6îll"LITeI.
சந்துரு ஐந்து நாட்களாக எட்டிப் பார்க்காத தன் ஆராய்ச்சிக் கூடத்தில் உற்சாகத்தோடு வேலை செய்து கொண்டிருந்தான். தன் குறிப்புக்களை வைத்துக் கொண்டு அதைப் பார்த்து ஏதோ ஒரு கூட்டுத் திராவகத்தை ஒரு குழாயில் தயாரித்தான். அடுப்பை மூட்டிக் குழாயை அதன்மேல் பொருத்தினான். அவன செய்து வந்த ஆராய்ச் சியில் இதுவரை எடுத்த குறிப்புக்ககள் இவை. இவ்வளவு நாளு மில்லாத உற்சாகத்தோடு இருக்கிறானே. ஆராய்ச்சியின் முடிவு காணப்போகிறானோP சந்துரு குழாயில் கொதித்துக்கொண்டிருந்த திராவகத்தை உற்று நோக்கியபடி அருகில் நின்றான். அவனுடைய முகத்தில் ஒரு அலாதியான திருப்தி நிலவிற்று.
106

இன்னொரு குழாயைக் கையி லெடுத்தான். அதிலிருந்த திரா வகத்தை அடுப்பின் மேலிருந்த குழாயில் விட்டான். அவனுடைய மெல்லிய உதடுகளில் ஒரு விசித்தரமான புன்னகை நெளிந்தது. நெற்றியில் வியர்வை முத்துக்கள் மின்னின. குழாய்த் திராவகம் கொதித்துப் பொங்கி ஒரு வித ஆவி எழுந்தது. சந்துரு அசையாமல் கட்டுண்டவன் போல் குழாயில் நடனமிடும் திராவகத்தைப் பார்த்த வாறு நின்றான்.
"படீர்! குழாய் வெடித்துத் திராவகம் நான்கு திக்கும் சிதறியது. சந்துருவின் கண்களில், முகத்தில் தெறித்து வழந்தது. கொல்லும் வேதனையைத் தாங்கமுடியாத சந்துரு தலையைக் கைகளால் பிடித் துக்கொண்டு, "சுந்தரி!” சுந்தரி என்று கத்தினான். இந்தக் கூப்பாட் டைக் கேட்ட சுந்தரி "இரவுக் கூத்தின் தொடர்ச்சிக்குத்தான் கத்து கிறாரோP” என்று நினைத்து பயத்தால் மனம் வெலவெலக்க ஓடிவந் தாள். ஆராய்ச்சிக் கூடத்துக்குள் அடி எடுத்து வைத்தவள் திகைத்து நின்றாள். "கிறீச்" சென்று அவள் தொண்டையிலிருந்து பரிதாப ஒலம் ஒன்று எழுந்தது.
கண்களைச் சுற்றி கட்டோடு சந்துரு படுத்திருந்தான். பழரசத் தோடு சுந்தரி அறையினுள் பிரவேசித்தாள். காலடி யோசை கேட்ட தும் சந்துரு "சுந்தரிP" கேள்விக் குறியோடு கேட்டாள். "இதைக் குடிக்கிறீர்களா?" என்று கேட்டவாறு அருகில் வந்தாள்.
"குடிக்கிறேன், முதலில் இப்படி உட்கார்” என்று கட்டிலைத் தட்டினான். சுந்தரி மெளனமாக உட்கார்ந்தாள்.
"சுந்தரி, டாக்டர். என்ன சொன்னார்? எனக்குக் கண். மீண்டும் . @grflպւDITP"
சுந்தரியின் கண்ணிர் சந்துருவின் கையில் பட்டுத் தெறித்தது. "சுந்தரி!” அவன். தட்டித் தடவி அவள் முகத்தைத் தொட்டான். கண்ணிரில் தோயும் கன்னங்களைத் தடவினான். அவனுடைய காய்ந்த உதடுகளில் ஒரு புன்னகை தோன்றிற்று. "அப்படியா னால். அப்படியானால் எனக்கு இனி மேல் கண் தெரியாது! அதுதானே ... ஒரு நிமிஷம் பயந்து விட்டேன் எங்கே என். ps
தனக்குத் தானே பேசுவது போல் முணுமுணுத்தான்.
"அத்தான்!” சுந்தரி வேதனையோடு அச்சத்தோடு குறுக்கிட் டாள். "என்ன சொல்கிறீர்கள் அத்தான்?"
"என்ன சுந்தரி 1 என் கண்கள் போய் விட்டாலும் உன் கனவு பலித்துவிடும். வேண்டுமென்று தான் அந்தத் திராவதகத்தை என்
107

Page 61
கண்களுக்குள் தெறிக்கவிட்டேன். அந்தத்திராவகம் என் கண்ணின் மணிகளைச் சுட்டெரித்து விடும். நான் அதற்காகவே அதைத் தயா ரித்தேன்."
"ஐயோ அத்தான்! என்னைப் பார்க்கக் கூடாதென்று உங்கள் கண்களைப் பறித்து விட்டீர்களா? நான் உங்களுக்கு அத்தனை பாவி யாகவா தெரிகிநேன்?"
"உன்னைப் பார்க்கக் கூடாதென்று அல்ல கூந்தரி. உன் அழ கைப் பார்க்கக் கூடாதென்றுதான். நீ உன் குறிப்புப் புத்தகத்தில் எழுதியிருந்தாயேP மனிதனின் கடையான குணங்களைத் தூண்டி விடு கிறதே யொழிய இதனால் உயர்ந்த எண்ணம் கொண்டவர் ஒருவரு மில்லை. புற அழைக்த தவிர்த்து உள்ளேயிருக்கும் பெண்ணை மதிக் கும் ஒருவலைக் கண்டாலாவது நிம்மதியேற்படும் என்று”
"அத்தான்! ஐயோ! நீங்கள் அதைப் படித்து விட்டீர்களா? உங் களை இந்த முடிவுக்கு விரட்டியது நானா?
"சட்! சுந்தரி! நான் தூங்கி விட்டேன் என்று நீ நினைத்தாய். ஆனால் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். உன் மேல் கொண்ட சந்தேகத்தால் தான் நீ போனபின் அந்தப் புத்த கத்தை அலமாரியிலிருந்து எடுத்து முழுவதும் படித்தேன். அதுதான் என் அறிவுக் கண்களைத் திறந்து விட்டது. எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருந்தேன் என்ற றிந்தேன். ஆனால் தெளிந்த குளத்திலும் கற்கள் விழுந்தால் கலங்கிகச் சேறாகி விடும். இப் பொழுது தெளிந்துவிட்ட என் அறிவு மீண்டும் கலங்கி விடுமோ என்று ஆஞ்சினேன். ஒன்று எனக்கு உறுதியாய்ப் பட்டது. உனக்கும் எனக்கும் நிம்மதி வேண்டு மென்றால் என் புறக் கண்கள் தெரியக் கூடாது. அவை தெரிந்தால் தானே என் புத்தி விகல்பமடையும், உனக்கிழைத்த அநீதிகளுக்கு என் பிராயச்சித்தம் இது. உன் பரிபூரண அழகை அறிய, உன்னை உணர எனக்குக் கண்கள் தேவையில்லை. எங்கே ஏதோ குடிக்கக் கொண்டுவந்தாயேP"
சுந்தரி தன் உடலழகுக்காக அன்றி உள்ளத்திற்காகத் தன்னை மதிக்கும் ஒருவனுக்காக ஏங்கினாள் - அவன் அவள் கணவனாகவே அமைந்து விட்டான். இதை விடப் பேறு உண்டா! ஆனால் இந்த முறையிலா பெறவேண்டும்? அட கடவுளே!
G3D, 1962
108

சரியா தப்பா?
"நீ வர மாட்டா யென்று எனக்குத் தெரியும் விமலா காதலுக்கு நான் வேண்டும் கற்புக்கு உன் கணவன் வேண்டும்! அப்படித் தானே?" வார்த்தைகளைக் கக்கிவிட்டு சுந்தர் புயலெனப் போய் விட்டான். ஆனால் அந்தக் குத்தல் மொழிகள் மட்டும் விமலாவின் காதில் சுழன்று ஒலித்தன. அவள் செயலிழந்து சிலையென உட் கார்ந்திருந்தாள்.
சுந்தர் விமலாவிடம் இத்தனை கடுமையாகக் கசப்போடு இது வரை பேசியதே யில்லை. அவள் இதயம் நொந்தது. "கணவ னாம். கணவன்! என்று முணுமுணுத்த விமலா ஆனந்தனை நினைத்துப் பார்ாத்தாள். அருவருப்பால் அவள் முகம் சுருங்கியது! அழகுக்கு அவள் இலக்கண மென்றால் ஆனந்தனோடு அவளை இணைத்து வைத்தது விதியின் குறும்புத்தான்.
ஆனந்தனை விமலா விரும்பவில்லை. ஆனால் அவனிடம் இல் லாத கவர்ச்சி அவனுடைய பணத்தில் இருந்தது. அற்ப ஆசைச களைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத வறுமையோடு போராடிய விமலாவுக்குப் பணமொன்றே பெருந் தெய்வமாகத் தோன்றியது. அந்த மயக்கத்தில் ஆனந்தனை மணந்தாள். பண மிருந்தால் வாழ்வைப் படைத்துக் கொள்ளலாம் என்று நம்பினாள் சுந்தர் அவள் வாழ்வில் குறக்கிம் வரை.
ஆனந்தன் தான் தன் நண்பன் சுந்தரை வீட்டிற்க அழைத்து
வந்தான். ஆனால் விதியின் குறும்புகளை ரசிக்கும் நிலையிலா விமலா இருந்தாள்? அன்று தான் விமலா உண்மையில் தரின் இழந்து விட்ட செல்வத்தை உணர்ந்தாள். தான் இழந்து விட்ட இன்ப வாழ்வின் உருவமாக சுந்தர் அவள் கண்களுக்குத் தோன்றி னான். விமலா சுந்தரைக் காதலித்தாள்; உள்ளத்தின் ஒவ்வொரு அணுவாலும் காதலித்தாள். சுந்தரையும் அவன் அளித்து நின்ற இன்பத்தையும் தனதாக்கிக் கொள்ள விமலாவின் உள்ளம் துடித் தது. ஆனால் அவள் கால்களைப் பிணைத்து நின்ற பெரு விலங்கு ஒன்று அவளை அசைய வொட்டாது தடுத்து நிறுத்தியது - ஆனந்தன் - அவள் கணவன்!. அல்ல கொடும் பேய்!
ஆனந்தனும் தன் இரண்டு வருட மணவாழ்க்கையும் குழந்தை
109

Page 62
உஷாவும் ஒரு கெட்ட கனவாகக் கலைந்து விடக் கூடாதா என்று விமலா ஏங்கினாள். அதைக் கனவாகவே மாற்றிவிடச் சுந்தர் அவளை உந்தினான்; வழிகாட்டினான்.
"என்னோடு வந்துவிடு விமலா இதைவிட வேறு சமயம் வாய்க்காது. நாளை ஆனந்தன் திரும்புமுன் நாம் வெகுதூரம் போய் விடலாம்! நம் வாழ்வைத் தொடங்கலாம்! வந்துவிடு. " சிறிது முன்பு தானே சொன்னான். இதோ அவன் குரல் விமலாவின் காதில் ரகசியமாக வற்புறுத்திக் கொண்டிருந்தது. அவன் கண்களில் தெறிந்த அழைப்புத் தான் எப்படி அவள் உள்ளத்தைக் கிறங்கச் செய்தது!
"வந்துவிடு விமலா வந்துவிடு!” மீண்டும் மீண்டும் அவள் கைககளைப் பிடித்து உலுக்கினான். அப்பொழுது விமலா திகைத் தாள்! அவனுக்கு மட்டும் எவ்வளவு துணிச்சல்! இன்று செய்துவிட்டு நாளை மறந்துவிடக் கூடிய காரியமா இது? நீரோட்டத்தை எதிர்த்து ந்தும் வல்லமைதான் அவளுக் குண்டாP விமலாவின் உள்ளம் அஞ்சி நடுங்கியது. சுந்தரோடு செல்ல அல்ல! ஆனந்தனை நினைத் தல்ல! உலகம் தூற்றுமே யென்று பயந்தாள்! சமூகம் பழி சொல் லுமே யென்று அஞ்சினாள்!
"உனக்கு என் காதலும் வேண்டும்! உன் கணவனும் வேண்டும்.
இல்லையா விமலா? ஆனால் எனக்கு உன்னை மட்டுமே வேண்டும்.
முழுவதும் எனக்குச் சொந்தமாக வேண்டும்! அது முடியாவிட்டால் என்னை மறந்துவிடு!”
சுந்தர் ஒரு நாளும் அவளைப் புரிந்துகொள்ளத்த தவறிய தில்லை; அவள் உள்ளத்தைச் சந்தேகிக்க வில்லை. இன்றுமட்டும் ஏன் இப்படிப் பேசினான்?
விமலா தலையைக் கைகளால் அமுக்கிப் பிடித்துக் கொண் டாள். சுந்தருக்கு என்ன பதில் சொல்லியிருந்தாள்? நினைவுக்கு வர மாட்டேனென்கிறதே!. s2, . . . . . . . . LDITLD!
"சுந்தர் உன்னை மறப்பதாP என் உயிரை நான் மறந்தால் உன்னை மறக்க முடியும் சுந்தர்! ஆனால். ஆனால்.” விமலா மேலும் என்ன சொல்ல நினைத்தாளோ அவளுக்கே தெரியவில்லை. அதற்கிடையில் திடீரென்று குழந்தை உஷா வீறிட்டலறினாள், அவளைச் சமாதானப்படுத்த முற்பட்ட ஆயாவின் குரலும் கேட்டது. விமலா தன்னை யறியாது குழந்தையிடம் செல்ல எழுந்தாள். சுந்தர் தாவிவந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
"ஆனால் உன் குழந்தை வேண்டுமா விமலாP என்னைக்
110

காதலிப்பதானால் உன் குழந்தையையும் மறந்துவிட வேண்டும் விமலா! இப்பொழுது நீ குழந்தையிடம் போனால் உன் வாழ்வை விட்டே நான் போய் விடுவேன்’ சுந்தரின் முகத்தில் உறுதி தெரிந் தது. தன் கையை மெல்ல விடுவித்துக் கொண்ட விமலா கன்றிவிட்ட மணிக்கட்டைத் தடவியவாறு அப்படியே சோபாவில் உட்கார்ந்து 65 'LIT6it.
இப்பொழுது நினைத்துப் பார்க்கவும் விமலாவின் கண்களின் விளிம்பில் நீர் கோத்து நின்றது. இமைகளை வெட்டி அதை விழாமல் தடுத்தாள். ஹம். பிறகு என்ன?
அ. . . . . . . ம்! குழந்தையின் அழுகை அடங்கி ஓய்ந்தது. "திருப்திதானே சுந்தர்,” அவள் குரல் மெதுவாக ஒலித்தது.
"இதற்குமேல் நீ தயங்குவதேன் விமலா? அவன் ஆத்திரப்பட் LIT6óT.
"சுந்தர், உன்னோடு வருவதால் நான் பெறும் வாழ்வை அனுபவிக்க உலகம் என்னை விடாதே" என்று ஒருவாறு சொல்லி யிருந்தாள்.
"என்ன சொல்லுகிறாய் விமலா? அவன் புருவத்தைச் சுருக்கி னான். அந்த முகத்தின் அழகு தான் எப்படி அவள் இதயத்தைச் சுண்டியிழுத்தது! தன்னை நிலை தடுமாற வைக்கும் அத்தனை மோகத்தை அவனுக்கு அள்ளிக் கொடுத்த கடவுளை எத்தனை நாள் நொந்திருக்கிறாள்?
“ஓடிப் போனவள் என்று உலகம் தூற்றுமே சுந்தர். எந்தச் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் வாழ வேண்டுமோ அந்தச் சமூகமே நம்மை ஒதுக்கிவிடும்; இழித்துப் பேசும். விமலா அவனை மடக்கி விட்டதாக நினைத்தாள். ஆனால் சுந்தர் அதற்கும் ஒருவிடை வைத்தி ருந்தான்.
"சமூகத்தின் கோட்பாடுகள் காலத்தால் மாறுபவை விமலா. இன்று ஓடிப்போனவள் என்னும் அதே வாயால் நாளைக்குக் காதலுக்கு மதிப்புக் கொடுத்தவள் என்று புகழ் பேசும்."
ஆனால் அதை நினைத்துப் பார்க்கவும் விமலாவின் மனம் நடுங்கியது. பழமையில் ஊறிய சமுதாயம்: அதில் வேதமென ஊன்றிவிட்ட வாழ்க்கை விதிகள். அவற்றை மீறி நடக்கத் துணி வதா? மனதில் இப்படி நினைத்தவள் அதை வாய் விட்டே சொல்லி யும் விட்டாள்.
111

Page 63
"உன் மனதின் உந்தலுக்கு இடம் கொடுக்கப் பயந்து நீ யாரோ சொல்வதைக் கேட்டு வாழும் கோழை யென்றால் உனக்குக் காதலிக்க உரிமையே யில்லை விமலா அந்த எண்ணத்தையே மறந்து விடு! இப்படிக் கத்திய சுந்தர் போயே விட்டான்.
"சுந்தர் போகாதே போகாதே! அவள் எழுப்பிய குரலின் எதி ரொலி இன்னும் முற்றும் அடங்கவில்லை.
விமலா எழுந்து ஜன்னலருகே சென்று வானத்தைப் பார்த்தாள் அது மேக மற்று நிர்மல நீலமாய் விரிந்து கிடந்தது.
விமலாவுக்குத் தன் மனம் முற்றும் புரியவில்லை. மனதின் மூலையில் உறுத்திய உணர்ச்சிகளுக்கு அவளால் உருவம் கொடுக்க முடியவில்லை.
கணவனே கடவுள் என்பது அவள் தாய் கற்றுக் கொடுத்த பாடமா? இரத்தத்தில் ஏற்றிவிட்ட நம்பிக்கையா? இலக்கியங்கள் கண்ட முடிவா?
சீ வெறும் கருத்துக்களை, கற்பனைகளை நம்பித் தன் உள்ளத்தை உணர்ச்சிகளை அழித்துக்கொள்வதா?
தோட்டக்கார ரங்கன் வாயசைத்துப் பாடியவாறு பாத்திகளைக் கிண்டிக் கொண்டிருந்தான். பாட்டொலி காற்றில் மிதந்து வந்தது.
"காதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றமானால் கண்ணைப் படைத்த கடவுள் செய்கை சரியா தப்பாP
"கல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்ற மானால் கற்பைப் படைத்த மனிதன் செய்கை சரியா தப்பாP”
அவன் திருப்பித் திருப்பிப் பாடினான். அதற்கு மேல் சொற் கள் தெரியாதா என்ன அவனுக்குP ரங்கனின் குரல் தேய்ந்து மறைந்து விமலாவின் உள்ளக் குரல் அவ் வார்த்தைகளைப் பற்றிக் கொண்டது! திருப்பித் திருப்பி உருப்போட்டது! சுந்தர் தான் சொல் லாமல் சொன்னானாP. விமலா யோசித்தாள்.
ஆழமறியாமல் காலை விட்டு விட்டால் குழியின் மண்ணை உதறிவிட்டு மீளும் எண்ணமே கூடாதா? நாளைய சாப்பாட்டை நினைத்து இன்று பட்டினி கிடப்பவர் உண்டா விமலாP கண்முன் காத்து நிற்கும் வாழ்வைக் காணாத சொர்க்க சுகத்திற்காக உதறி
112

விடுவதா?8 8 Ad A சொர்க்கம் உண்மை அல்ல விமலா சுந்தரும் அவன் அளிக்கும் சுகமும் இன்பங்களுமே உண்மை உன்னை நாடி வரும் இன்ப தை அனுபவிப்ப தொன்றே உண்மை!
மலா தன் அறைக்கு ஓடினாள். தன் உடமைகளை ஒரு சிறு கைப் ட்டியில் அடக்கிக் கொண்டு அறையின் நடுவில் இருந்த தொட் லை நெருங்கினாள்.
வள் குழந்தை - அல்ல - அவள் உடைத்தெறியப் போகும். பாசவ ங்கு நிம்மதியாகத் தூங்கியது. விமலா மெல்ல ஒரு விரலை நீட்டி, அதன் உச்சியைத் தொட்டாள். உஷா சற்று அசைந்து கொடுத்தாள்.
՞ւք..... OT!”
விமலாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது அம்மா அம்மா! ஏதோ ஒரு புது வார்த்தையைச் சொல்லிப் பழகிக் கொள்வது போல் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டாள். அவள் உறுதி மெல்ல ஆட்டங் கண்டது. அவள் இக் குழந்தையின் தாய்! பத்து மாதம் சுமந்து பெற்ற தாய்! உஷா - அவள் உள்ளத்தின் ஒரு கூறு உதி ரத்தின் உதிரம் முளை விட்ட கொடியைப் பக்குமாய்க் காத்துப் படரவிடுவது அவள் கடமையா? கடமைக்குத் தான் முதல் உரி மையா? விமலாவின் உலகம் இனி குழந்தையில் அடங்க வேண்டி யது தானா?
இல்லை! இது ஆனந்தனின் குழந்தை. அவளுடைய தல்ல. அவள்- விமலா, ஒரு பெண். விருப்பு வெறுப்புக்காளான சாதா ரணப்பெண். அவளுக்கு வாழ் வளிக்கக் காத்திருக்கும் சுந்தர் தான் இனி அவள் உலகம்! சுந்தர் தான் அவள் உலகம். விமலா பெண்ணென்றால் அதனால் உஷா தன் தாயை இழந்து தவிப்பதா? விமலாவிடம் தாய்மை செத்தே விட்டதா?
விமலா ஓங்கித் தலையில் அடித்துக் கொண்டாள். கைப் பெட்டி மெல்ல நழுவிக் கீழே விழுந்தது.
சுந்தர் கையிருந்த சிகரட்டை விட்டெறிந்தான். விமலாவின் மனதை அவளைவிடச் சுந்தரே நன்றாக அறவான். அவள் தன்னி டம் வருவாள் என்று அவன் சந்தேகமற நம்பினான். இல்லா விட்டால் இவ்வளவு கடுமையாகப் பேசிவிட்டு வந்திருப்பானா? விமலாவின் மனதில் இப்படி எத்தனையோ போராட்டங்கள்! ஆனால் அவற்றின் முடிவு மட்டும் சுந்தருக்கு முன்பே முடிந்த விஷயமாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று நேரம் போனதே தவிர விமலாவைக் காணவில்லை. சுந்தருக்குக் கவலை தொட்டது.
113

Page 64
பொறுமையிழந்தவன் எழுந்து கூண்டுப் புலியாய் மேலும் கீழும் நடக்கலானான்.
விமலா ஆனந்தனை எவ்வளவுக்கு வெறுத்தாளென்பதை அவனறிவான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் குழந்தைப் பாசம் அவள் உள்ளத்தின் உறுதியைக் குலைத்து மனதை மாற்றி விடு மென்று அவன் அஞ்சினான்- பெரிதும் அஞ்சினான். பாசத்தை முறிக்கக் காதலின் போதை தேவையென்றது அவன் மனம்! இன் றில்லா விட்டால் இனி என்றுமே யில்லை என்று சுந்தர் உணர்ந் தான். விமலாவிடம் போ, போ என்று அவன் உள்ளம் அவனை உந்தித் தள்ளியது. சுந்தர் சட்டென்று திரும்பினான் - "விமலா!! விமலாP” வியப்போடு உள்ள எழுச்சியோடு கூவினான். கதவில் சாய்ந்த நின்றாள் விமலா- சுந்தர் கேட்காத கேள்விக்குப் பதிலாகத் தன் தலையைமெல்ல அசைத்தவள் கைப்பெட்டியைக் கீழே வைத்தாள். சுவாதீனத்தோடு உள்ளே வந்து ஸோபாவில் சாய்ந்த விமலா கண்களை மூடினாள். அவள் இதயத்தைத் துடைத்தொரு நெடுமூச்சு எழுந்தது.
114

கனவு
மணி ஒன்பதரை இருக்கும். மலையாளத்தானுடைய தேனிர் கடையில் வேலை வெட்டியென்று தேடி அலுத்தவர்களும், வேலை வேலை வெட்டியென்ற ஒன்றின் தேவை யற்றவர்களும், வேலை வெட்டி இல்லாது பிழைக்கத் தெரிந்தவர்களுமாக, வழக்கமாய்க் கூடிப் பொழுது பொழுதாய் அமர்ந்து தேனிர் உறிஞ்சும் ஏழெட்டுப் பேரும் ஊர் வம்பு பரிமாறிக்கொண்டு இருந்தனர். நாற்பது நிமிஷத்துக்கு ஒரு முறை தொலைவில் பாடசாலை மணியடிக்கும் ஓசை சோம்பும் காற்றில் மிதந்து வந்தது. இடைக்கிடையே தெருப் புழுதியைக் கடைந்தெழுப்பி எறிந்துகொண்டு 'கார் கள் கீரி மலையை நோக்கி விரைந்தன. எங்கோ அருகில் மீன்காரக் கிழவி ஆதிக்கத்தின் நடுங்கின குரல் அபஸ்வரக் கேரலாய் எழுந்தது. முற்றின மொந்தன் தார் ஒன்றைச் சுமக்க மாட்டாமல் சுமந்தபடி முத்து தெருவில் தாண்டித் தாண்டி நடந்து கொண்டிருந்தான். நாயர் கடை வாசலில் உட்கார்ந்திருந்த பாலசிங்கம் முத்துவைக் கண்டதும் குரல் கொடுத்தான்
'முத்து, எங்கையடா அப்பா உவ்வளவு அவசரமாய்? காலம் பற தேத்தண்ணிக்குக்கூட வரேல்லைP முத்து வாசலடிக்கு வந்தா லும் வாழைத்தாரை இறக்கி வைக்க முயலவில்லை. அவன் முகம் அதன் இயல்பான சிரிப்பில் மலர்ந்தது. அந்த முகம் சிரிப்பதற் கென்றே ஆக்கப்பட்டது போல் தோன்றியது. அவனுடைய மெல்லிய உதடுகள் மலர்ந்து விரியும் அந்த அகன்ற சிரிப்பில் குழந்தைச் சிரிப்பின் கவர்ச்சியும் கபடற்ற தன்மையும் பொலிந்தன.
நாளைக்குப் 'பிரக்கிராசி வீட்டிலை பொன்னுருக் கல்லே இண்டைக்கு விடியவே வரச் சொல்லிட்டினம். அதுதான் தேத்தண் னிக்கும் வரக் கிடைக்கேல்லை" பாலசிங்கம் சிரித்தான்.
"அதுதானே ஆளின்டை அசுமாத்தத்தையே காணேல்லை எண்டு நினைச்சன். ஏண்டா முத்து இவ்வளவு நாளைக்கும் எத்தினை ஊர்க் கலியாணங்களுக்கு உழைச்சுக் கொட்டியிருப்பாய்? நீ மட்டும் தனி மரமாய் நிண்டுவிட்டாய், நீயும் ஒரு கலியாணத்தை எப்பகட்டப் போறாய்? உன்டை கண்ணுக்கு முன்னாலை வளந்த பெடியன்கள் கூடத் தகப்பனாய் விட்டுதுகள்" என்று கண்களைச் சிமிட்டிக் கேலிக் குரலில் இழுத்தான் பாலசிங்கம். முத்துவின் இதயம் படபடக்கத்
115

Page 65
தொடங்கியது. அவன் உதடுகளில் விளையாடிய புன்முறுவல் துடைத்து விட்டாற்போல் மறைந்தது. அங்கு மிங்குமாகத் ವ್ಹಿತ್ಲಿ தவித்து அலை பாய்ந்த அவன் கண்கள் தாழநது விட்ட இமைக ன பின்னால் தஞ்சம் புகுந்தன. கலவரம் படிநிதி முத்துவின் முகததைப பார்க்கப்பார்க்க பாலசிங்கத்துக்கு வேடிக்கையாக இருந்தது.
"எனக்கு. எனக்கு என்னத்துக்கு தம்பி. கலி. கலியானம் என்டை ஒரு வயித்தைக் கழுவிறதே திண்டாட்டமாயிருக்கு. அம்மா இருக்குமட்டும் இருந்தா. அவ அவ செத்து இருவத்தி மூண்டு வருஷமாகுது. நானும் தனிய இருந்திட்டன். மிச்ச நாளைக்கும் இப்படியே, தடுமாறினான் முத்து. அவன் குரலில் ஆத்திரத்தின் மெல்லிய இழை யோடியது. மேலும் அங்கு நிற்க விரும்பாதவன் போல் முத்து "வாறன்தம்பி என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு எட்டி நடக்கலானான்."
'முத்துவைப் போலை வெக்கறையை நான் எங்கையும் கண்ட தில்லை" பாலசிங்கம் பக்கத்தில் பூனைத்துரக்கம் தூங்கிக் கொண்டி ருந்த பரமுவிடம் அலுத்துக் கொண்டான்.
பாலசிங்கத்தின் சொற்கள் முத்துவின் மனதை கலங்கிய குட்டையாக்கிவிட்டன. சதுப்பு நிலம்போன்று அவன் மனம் பாலசிங் கத்தின் வார்த்தைகளை உறிஞ்சி விழுங்கிக் கொண்டது. அவன் மனதிலே நினைவுக் குமிழிகள் வெடித்தன. அவனிடம் பட்டம் விடக் கற்றுக்கொண்ட பெடியன்கள் இன்று ஆண்பிள்ளையாகிக் கலி யாணம் செய்து குடும்பமாகி விட்டார்கள். இப்படியொரு வாழ்வை முத்து வெறுத்தான் என்றல்ல . ஆனால் . முத்து நெட்டு யிர்த்தான். முத்துவுக்கு வயது முப்பத்தெட்டு என்றால் எவரும் நம்ப மாட்டார்கள். அவனது ஒல்லியான வாலிப உருவம் இளமை மாறா முகவெட்டும் இருபது வயது இளைஞனுடையது. முத்துவின் அடக்க மான சுபாவத்தையும் நாண இயல்பையும் கண்டு அவன் நண்பர்கள் அவனைப் பெட்டைக் குருநாதி என்று பட்சத்துடன் கிண்டல் செய்தனர். அப்போதெல்லாம் முத்துவும் அவர்களுடன் சேர்ந்து லஜ்ஜையோடு சிரிப்பான். ஆனால் அவன் மனதிலோ எரிச்சல் குமுறும், பெண்ணினத்தையே குழ்தோண்டிப் புதைக்க வேண்டும் போல் அவனுக்குத் தோன்றும். ஆனால் மேலுக்குச் சிரித்துக் கொள் வான். எப்போதும் சிரித்துக்கொள்வான். முத்துவுக்கு ஐந்து வயதாய் இருக்கும்போது அவன் தந்தை யாரோ ஒருத்தியோடு ஓடிப்போய் விட்டாராம். எவ்வளவோ காலத்துக்குப் பிறகுதான் இவ் விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. ஆனால் அந்தச் சம்பவம் ஒரு விதத்தில் அவன் மனதில் பதிந்து விட்டது. சதா அழுத கோலமாய் இருந்த அவன் தாயின் முகம் மங்கிய குழந்தைப் பருவ நினைவாய் முத்து வின் மனத்திரையில் இன்றும் நிழலாடியது. அதுதான் அவன் தந்தை ஒடிப்போன சமயமாமிருக்கவேண்டும். முத்துவுக்குத் தன்
116

தாயைப் பற்றிய முதல் நினைவே அந்த அழுத முகம் தான். கணவன் ஓடிப்போன பின் முத்துவின் தாய்க்கு இருந்த தெல்லாம் முத்துதான். அவனையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவளுக்கு. தன் அரவணைப்புக்கு வெளியே 9856) விடாது அவனைக் கட்டிக் காத்து வளர்த்தாள். முத்து தாயின் உரிமைப் பிணைப்பிலே கட்டுண்டு கிடந்தான். இன்று கூட அந்தத் தாயை நினைக்கையில் அவன் கண்களில் நீர் நிறைந்தது. ஏன், அவள்
செத்த அன்று கூட முத்துவின் தேவை தானே அவளுக்குத் பெரி தாய்ப்பட்டது. அப்பொழுது முத்துவுக்கு வயது பதினைந்து. அன்று சிநேகிதரோடு அரட்டை அடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது இரவு மணி ஏழு. அவன் தாய் நெஞ்சு வலி என்று படுத்திருந்தாள். அந்த நெஞ்சு வலியோடும் அவள் எழுந்து வந்து முத்துவுக்குச் சோறு போட்டுத் திரணை திரணையாகக் குழைத்துக் கொடுத் துவிட்டுத் தான் மீண்டும் படுத்துக்கொண்டாள். அவன் தாய் இறந்த பிறகு அந்த ஊரே முத்துவை சுவீகரித்துக்கொண்டது. ஒவ்வொருத் தர் வீட்டில் ஏதாவது சில்லறை வேலை செய்து சாப்பாட்டுக்குப் பிழை இல்லாமல் வாழ்ந்து வந்தான். போதாதற்கு வீட்டில் ஆடு, கோழி, என்று வளர்த்தான். இட்டவேலை எதுவாயினும் முகங் கோணாது அந்த இயல்பான் வெள்ளைப் புன்னகையோடு செய்து முடித்து விடுவான். முத்து என்றால் எல்லோருக்கும் ஒரு பட்சம். எதிரே வரும் வாத்தியார் ராமலிங்கத்தைக் கண்டதும் முத்துவின் நடையின் வேகம் தானே குறைந்தது.
‘என்ன முத்தம்மா, வாழைத்தாரும் கையுமாக அன்னை நடை போடுறாய்? துலைக்கேP முத்து அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். வாத்தியார் எப்போதும் அவனை முத்தம்மா என்றுதான் அழைப் பார். அது ஏதோ பெரிய ஹாஸ்யம் என்பது அவர் நினைப்பு. ஆனால் முத்துவின் காதுகளிலோ நாராசமாய்ப் பாய்ந்தது அச் சொல்! முத்து வாத்தியாரை வெறுத்தான் என்று சொன்னால் சாதாரணமாய்ப் போய்விடும். அவரிடம் முகங்கொடுத்து பேசவே அவனுக்கு மனமில்லை.
'இல்லை, உப்பிடிப் 'பிரக்கிராசி' யார் வீட்டை வரைக்கும். என்று இழுத்தன்.
'உன்னை வீட்டுப் பக்கமாகவும் காணேல்லை. விறகும் கொத் தாமக் கிடக்கு.
'உங்கடை விறகைக் கொத்துறத்துக்கு வேறை ஆள் பார்த்துக் கொள்ளுங்கோ என்று மறுத்து விட முத்துவின் நா துடித்தது. தனது வெறுப்பையெல்லாம் வார்த்தைகளில் உமிழ்ந் துவிடத் துடித்தான். ஆனால், வாத்தியாருடைய கைத்தடியின் வெள்ளிப் பூணைப் பார்த்து முறுவலிக்க மட்டுமே அவனாால் முடிந்தது.
117

Page 66
"அதுக்கென்ன, நாளைக்கு மத்தியானமாய் வந்து கொத்திப் போடுறன் என்றான் பணிவாக. வாத்தியார் தன்னுடைய அலுவல் முடிந்த திருப்தியில் மேலே நடந்தார். தலைப் பாரத்தைச் சற்று நகர்த்திக் கொடுத்த முத்து மனக் கசப்பைச் சுவைத்தவாறு நடக்க லானான்.
மணி பன்னிரண்டரை இருக்கும்போது முத்து 'பிரக்கிராசி" யாருடைய மனைவி பொன்னம்மாவை அணுகினான். பொன்னம்மா கவனித்து விசாரிக்குமட்டும் சுவரோடு சுவராய் நின்றான் முத்து.
"ஆட்டுக்குக் கஞ்சித் தண்ணி வைக்கவேணும் ஒருக்கா வீட்டை போட்டு வரட்டே? என்று முணுமுணுத்தான்.
"பந்தி போடுற நேரத்திலே போக நிக்கிறாய்! ஆடென்ன சாகப் போகுதே, கொஞ்சம் செல்லப் போவேன்' என்றாள் பொன்னம்மா முத்துவின் முகத்தில் கவலை தொட்டது.
'இல்லையக்கா, அது குட்டித் தாச்சி ஆடு, பாவம். நான் இரண்டு எட்டிலை போட்டு வாறன். இப்ப போனதும் வந்ததுமாய் வந்திடுவன்' அவன் குரலில் வற்புறுத்தல் தொனித்தது.
"சரி, சரி போட்டு ஓடியா முத்து ஒட்டமும் நடையுமாகத் தன் இரண்டறை மண்வீட்டை அடைந்தான், தாய்மைப் பூரிப்போடு குலுங் கிக்கொண்டு நின்ற ஆட்டுக்குக் கஞ்சியைக் கொண்டு போய் வைத்த வன் நேரே வீட்டு வேலியோடு வளர்ந்த மாமரத்தில் மளமளவென்று ஏறினான். மேல் மரத்துக்கு ஏறி மாவின் சடைத்த கிளைகளில் மறைந்து கொண்டான். முத்துவின் வேலிக்கும், பக்கத்தில் செல்லப் பருடைய வளவு வேலிக்கும் இடையில் ஒரு குச்சொழுங்கை ஓடியது. செல்லப்பருடைய வளவையும், வளவிலிருந்த சின்னக் கல் வீட்டை யும் பென்தகொஸ்த சபையினர் வாடகைக்கு எடுத்திருந்தனர். செல்லப்பர் வளவில் கிணறு ஒழுங்கைப் பக்கத்து வேலியோடு இருந்தது. கிணற்றைச் சுற்றிக் கிடுகுகளால் அடைப்புக் கட்டியிருந் தது. முத்துவுக்கு மாமரத்தில் இருந்து பார்க்க செல்லப்பரின் வளவு முழுவதும் தெரிந்தது. முத்து மாமரத்தில் ஏறிச் சிறிது நேரத்தில் பென்னடி கொஸ்ட் பெண்ணொருத்தி குளிப்பதற்கென்று குறுக்குக்கட் டோடு கிணற்றடிக்கு வந்தாள். முத்துவின் இதயம் படபடக்கத் தொடங்கியது. உடலெங்கும் புல்லரித்தது. அந்தப் பெண் வாளி வாளியாகத் தண்ணிரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டாள். அவளுடைய ஈரச் சேலை அவள் உடலோடு ஒட்டிக்கொண்டது. அவளுடைய வெறுமையான தோள்களும் கைகளும் நீரில் நனைந்து மினுமினுத்தன. முத்து விழுங்கும் கண்களால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் முத்து மாங்காய் பறிப்பதற்கென்று மரத்தில் ஏறியிருந்தபோது தான் முதன் முதல் தற்செயலாய்
118

இப்படியொரு காட்சியைக் கண்டான். அன்று முதல் இது அவனுக்கு நித்திய நடவடிக்கை ஆகிவிட்டது. அந்தப் பெண் குளித்து முடித்தாள். அவள் உருவம் பார்வையிலிருந்து மறைந்ததும் முத்து மரத்திலிருந்து இறங்கிப் 'பிரக்கிராசி வீட்டைப் பார்க்க நடந் தான்.
வேலியோரமாக, ஒடித்து விழுத்திய முருக்கம் இலைகளை முத்து பொறுக்கிக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடத்தின் கடைசி மணி தொலைவில் கேட்டது. சற்று நேரத்துக் கெல்லாம் ஒழுங்கை யில் தாழ்ந்த பேச்சுக் குரல் கேட்டது. சத்தம் போடாமல் நகர்ந்த முத்து வேலிக் கிடுகின் நீக்கலில் கண் வைத்துப் பார்த்தான். ஆறுமுகத்தின் மகள் மீனாவும் அந்த வறுத்தலை விளான் பெடியன் யோகேஸ்வரனும் சல்லாபித்துக் கொண்டு நின்றனர். அந்த ஒழுங்கை கிட்டதட்டச் சன நடமாட்டமே அற்றது. முத்து கிடுகு நீக்கல் வழியே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். சைக்கிளில் சாய்ந்தபடி நின்ற யோகேஸ்வரன் குனிந்து மீனாவின் காதுக்குள் என்னவோ ரகசியம் பேசினான். மீனா சிணுங்கலும் சிரிப்புமாய் அவன் முகத்தைத் தள்ளிவிட்டாள்.
‘என்ன பெரிய விலை வைக்கிறாய் மீனா. யோகேஸ்வரன் அவள் கன்னத்தைக் கிள்ளினாான்.
'உமக்கு வரவரக் கை நீளுது. மீனா செல்லமாய்க்கோபித்தாள், முத்துவின் இதயத்தில் கூரிய வேதனை குடைந்து கிளறியது. நிராசையின் கைப்பு நெஞ்சில் கரித்தது. சீச்சீ. நாமும் ஒரு பிறவியா என்று அவன் மனம் அலுத்துக்கொண்டது. பள்ளியாலை இன்னும் வெளிகக்கிடாத பெடியன். அவனுக்குக் கூடினது வயசு பதினெட்டு இருக்கும். அதுக்கிடையிலை அவனுக்கு ஒரு பெட்டை. நானும் இருக்கிறனே ஆம்பிளைச் சிங்கம்! உப்பிடி ஒரு நாளாவது சீவியத் திலை. நான் தானே உதுக்கெல்லாம் வகையற்றவன்; உதவாத வன் என்று முததுவின் மனதில் எண்ணங்கள் மின்வெட்டின. யோகேஸ்வரன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான்.
"நேரமாகுது. நாளைக்கும் இந்த நேரத்துக்கு வாறன், சரியே?" மீனாவின் தோள்களை ஒரு கணம் வளைத்து அணைத்தவன்சைக்கி ளில் ஏறி மறைந்தான். மீனாவும் அவனைத் தொடர்ந்தாள். திடீ ரெனத் தெளிவாகச் சுந்தரனின் கேலிக் குரல் முத்துவின் காதுகளில் சவ்வுபிரிவதுபோல் ஒலித்தது. "ஒரு பெட்டையைப் பார்த்துக் கண்ணடிக்கத் தெரியாத பெட்டைக் குருநாதியாய் இருக்கிறாய் முத்து இதை எப்பொழுது சொன்னான்.P. ஓ. அன்று சுந்தரனும் மற்றப் பெடியன்களும் திருவிழாவுக்குப் புறப்படும்போதே முத்து தானும் அவர்களோடு வருவதாகச் சொன்னான். அப்பொழுது தான் சுந்தரன் இப்படிக் கேலி செய்து "உனக்கேன் திருவிழா என்று
119

Page 67
கேட்டான். முத்துவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது அந்தச் சம்ப வம். முத்து நெடு நேரமாக வேலியடியில் குந்திய படி இருந்தான்.
அடுத்த நாள் முத்து வேளைக்கே வேலியடிக்கு வந்துவிட்டான். சிறிது நேரத்தில் மீனா வந்தாள். முத்து வேலிப் பொட்டு வழியே பார்த்தான். மீனா புத்தகக்கட்டை DrTřTG3u TC3) அனைத்தவாறு பென்ஸிலின் வால் கட்டையைச் சப்பியபடி நின்றாள். முத்துவுக்கு தன் நெஞசத்தின் ஆற்றாமை தன் மீதே வெறுப்பாக உருவெடுத்தது. அந்த வெறுப்பின் வேகத்தை, உந்தலை அவனால் தாங்கமுடி யல்லை. யோகேஸ்வரனை இன்னும் காணவில்லை. சருகுகள் சரசரக்காமல் மெல்ல வேலியை விட்டகன்ற முத்து தன்னுடைய படலையால் வெளிக்கிட்டுத் தெருவால் சுத்திக் கொண்டு குச்சொழுங் கைக்குள் புகுந்தான். அவனைக் கண்டதும் ஒரு கணம் திகைத்த மீனா சுதாரித்துக்கொண்டு அவனை நோக்கி விறுவிறென்று நடக்கத் தொடங்கினாள். அவள் அருகே வந்ததும் முத்து வழியை மறைத்துக் கொண்டு நின்றான்.
‘எப்பிடிச் சுகமே முத்துP. நான் ராசமணி அக்காவைப் பாத் திட்டு வாறன் மீனா சிரித்தாள். முத்து அவளையே வெறித்துப் பார்த்தான்.
'மீனா. அவன் உதடு காய்ந்து நா மேலண்ணத் தோடு ஒட்டிக் கொண்டு மரத்துக் கிடந்தது" உதட்டில் நாவை ஒட்டினான்.
'மீனா. முத்துவின் தொண்டை முறுகி வார்த்தைகள் பிரயாசையோடு நிறுதுதி நிறுத்தி வெளிவந்தன. "யோகேஸ்வரன் இன்னம் வரக்காணேல்லை மீனா. பரவாயில்லை. முத்துவின் இமையாத வெறி நோக்கு மீனாவின் அடிவயிற்றைக் கலக்கியது அவள் முகத்தில் பீதி படர்ந்தது. 'அவன் வராட்டில் என்ன? நான் இருக்கிறன் இப்பிடிக் கிட்ட வாவன் மீனா. அவனிட்டைப் போக லாம் . என்னட்டை வரக் கூடாதேP. வாவன்'. முத்து எட்டி அவள் கையைப் பிடித்திழுத்தான்.
"ஐயோ! ஐயோ! மீனா கிறீச் சென்று கத்தினாள். அவன் பிடி யில் திமிறித் திமிறிக் கத்தினாள். கிட்டவா, கிட்டவா, என்று முணுமுணுத்தபடி முத்து அவளை அனைத்துப் பிடிக்க முயன் றான். மீனாவின் கூப்பாட்டைக் கேட்டு ஓடி வந்த பென்டிகோஸ்ட் பெண்கள் வேலியால் கத்த முத்து திடுக்கிட்டுத் தரும்பினான். அந்த ஒரு கணத்தைப் பயன்படுத்திக் கொண்டு மீனா அவன் பிடியி லிருந்து நழுவி ஓட்டம் பிடித்தாள். முத்து சிலைபோல் நின்றான். அவன் முகத்தில் பட்ட நகக் காயங்களிலிருந்து ரத்தம் கசிந்தது. குழப்பம் தோய்ந்த முகத்தோடு கண் கலங்க நின்றான். பிறகு மெல்லத் தன் இரு கைகளையும் தூக்கிப்ப பிடித்துப் பார்த்தான்.
120

நாயரின் கடையில் சுருட்டுப் பற்றவைத்துக் கொண்டு நின்ற பாலசிங்கம் தூரத்தில் ஐந்தாறு பேர் கூட்டமாய் வருவதை உன்னிப் பாய்க் கவனித்தான். ஆறுமுகம், அவனுடைய தம்பி கந்தையா, வேறு சரவணை, சின்னையா தம்பித்துரை, சிதம்பரம் என்று கணக் கெடுத்த பாலசிங்கம் "பொல்லுத்தடியளோடை எங்கை படையெடுக்கி றாங்களோ என்று முணுமுணுத்தான். கடையை விட்டுத் தெருவில் இறங்கிய பாலசிங்கம் குரல் கொடுத்தான்.
"என்ன ஆறுமுக அண்ணை, எந்தச் சண்டைக்கு இவ்வளவு ஆரவாரமா. ஆறுமுகம் தொண்டை கிழியக் கத்தினானான்.
‘எல்லாம் உன்டை முத்தான் முத்து இருக்கிறானே, நாசமாப்
போவான் அவனை ஒரு கைபாக்கத்தான், அவனை எலும்பு
எலும்பா முறிச்சுப் போடாட்டில் என்டை பேர் ஆறுமுகம்
ல்லை.".
"ஏன் இப்ப முத்துப் பெடியன் என்ன செய்திட்டான்?
'6T657607 செய்திட்டானோ? ஒழுங்கைக்குள்ளை என்டை மேளிலை கை வைக்கப் பார்த்தவனல்லே! நல்ல வேளை அந்தப் பென்டிகொஸ்ட் மனிசியள் வந்து குளறினதாலை அவள் இண்டைக் குத் தப்பினாள். அவனை விட்டு வைச்சால் ஊரிலை ஒரு குமர் உலவேலாது. நான் அவனுக்கு வேலை பார்க்கிறன். ஆறுமுகம் காறித் துப்பிவிட்டுத் தன்னுடைய ஆட்களோடு நடந்தான். சுருட்டைக் கொடுப்புக்குள் சொருகியபடி, "உவன்டை மேள் பெரிய பத்தினிப் பெண்தான் என்று முணுமுணுத்த பாலசிங்கம் சற்றுத் தூரத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தான். முத்துவின் படலையைத் தள்ளும்போது குட்டித்தாச்சி ஆட்டின் பரிதாப ஒலம் தான் அவர் களை வரவேற்றது. பாவம் பிரசவ வேதனை போலும்,
டேய் முத்து, வாடா வெளியிலைP ஆறுமுகம் கத்தினான். பதிலில்லை. மீண்டும் மீண்டும் கத்தினான் ஆறுமுகம். கொதிப்பேறிய ஆறுமுகம் வாசல் கதவை ஓங்கி உதைத்தான். கதவு படாரென்று திறந்துகொண்டது. உத்தரத்திலிருந்து தொங்கிய கயிற்றின் நுனியிலே முத்துவின் உடல் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஊசலாடும் அந்த உடலைப் பார்த்தவாறு எல்லோரும் மரம் போல் நின்றார்கள். குட்டித்தாச்சி ஆட்டின் வதையுண்ட வேதனை யோலம் கிறீச்சிட்டு எழுந்தது. ஒரு கணம் எங்கும் நிறைந்து தங்கிய அந்த ஒலம் மெல்ல மெல்ல தேய்ந்து அடங்கி ஓய்ந்தது.
121

Page 68
மீண்டும் வந்தது வசந்தம்
அந்த வசந்தத்தின் போதுதான் இக் கதை தொடங்கிற்று. தெருவளைவிலே பூத்துக் குலுங்கிக் கொத்துக் கொத்தாய் உணர்ச்சிக் குழம்பெனத் தூங்கும் பொன் மஞ்சள் பூக்களைத் தாங்கி நின்ற அந்தப் பரந்த, பெரு விருட்சம் என் நினைவில் எழுகிறது. முதன் முதலாக என் நினைவிற்கு வருவதே அந்த நெடுமரம் தான். அப்பொழுது என் பல்கலைக் கழக வாழ்க்கையின் முதலாண்டு முடிவுறும் சமயம். பக்குவ மடையாத, அனுபவமற்ற ஒரு வேளை, ஒருவித பண்படாத அழகோடு கூடிய இளைஞனாய்ப் படிப்பிலே மனமொன்றிக் கிடந்தேன். வேறு எதுவுமே எனக்கு ஒரு பொருட் டாகப் படவில்லை. நானும் என் படிப்பும் என்ற என் தனியுலகிலே நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோதுதான், திடீரென்று, அந்த வசந்தத்தின் போது, என்னையிழந்து மறந்து அடங்காத காதல் வசப்பட்ட புருஷனாக முதிர்ந்தேன்.
முதலில் நான் அவளைக் கவனியாததே ஒரு விந்தைதான். அந்த உருவற்ற பெண்கள் கும்பலினின்றும் அவள் எவ்வளவு வேறபட்டுத் தனித் தன்மையோடு நின்றாள். அவளைக் கவனியாதி ருக்கவே முடியாது. உன்மத்தமாக்கும் அவளுடைய ஒல்லியான, லாகவமான, கடைந்தெடுத்த உடலின் அழகு என்னால் சொல்லி uLhidsfTgl.
அன்று நான் தெருவோரத்துக் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து சுந்தருக்காகக் காத்திருந்தேன். காலை வெயிலின் இளஞ் சூட்டை அனுபவித்தவாறு விரிவுரைக்கு வரும் மாணவர் கூட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் அவளைக் கண்டேன். என் இதயம் விழிப்புற அவளைக் கண்டேன். புன்சிரிப்பின் சாயல் படிந்த அவள் முகத்திலே என் விழிகள் நிலைகுத்தி நின்றன. அழகான, இரகசிய முகம் அது. ஒரு கையில் ஓரிரு புத்தகங்களை அலட்சியமாகப் பிடித்தவாறு பெண்மானின் ஒயிலோடு நடந்து வந்தவள் நேரே என் இதயத்தில் புகுந்துவிட்டாள். என் நெஞ்சமே அவளாக நிறைந்து விட்டாள்.
எனக்குப் புதிய தோர் அனுபவம் இந்தக் காதல். என்னை எப்படியெல்லாம் மாற்றிவிட்டது! எனக்கு நானே அந்நியனாகி விட்டேன். பொல்லாத ஆசைகளும் வேட்கைகளும் என் உள்ளத்தை
122

அரித்துத் தின்றன. நித்திரையற்ற எத்தனை நீண்ட இரவுகளைக் கழித்தேனோ தெரியாது. விடியுமட்டும் விநாடிகளை எண்ணி எண்ணிக் கழிப்பேன். எனக்கு விரிவுரை இருக்குமோ இல்லையோ, மணி எட்டாகிவிட்டால் என்னை விரிவுரைக் கட்டடப் பகுதியில் காணலாம். இவ்வளவு பாடும் அவளுக்காகத் தான். அவள் வரும் அழகை சில வேளைகளில் தன்னை மறந்து சிந்தனையி லாழ்ந்த வளாய் எங்கோ நிலைத்த விழிகளுடன் அவள் வரும் அழகைப் பார்ப்பதற் கென்றே காத்திருப்பேன்.
என் மனக் குழப்பம் சில நாட்களில் தீர்ந்து விடும் என்றுதான் நான் நினைத்தேன். என் உணர்ச்சிகளை நானே கூறுபோட்டு ஆராய முயன்றேன். இது காதலல்ல, வெறும் மயக்கமென்றும், சில நாட்களில் தானே மறைந்துவிடுமென்றும் என் மனதை நம்பவைத்து விட்ட தாக நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் விரிவுரைகளில், தெருவில், வழியில் எங்கு அவள் எதிர்ப்பட்டாலும், இதயம் பட படத்து எனக்கேற்படும் பரபரப்பில் அவளை நிமிர்ந்து பார்க்கவே எனக்குத் தைரியம் வராது. ஒருபடியாக எங்கள் விடுமுறையூம் வந்தது. ஒருவித நிம்மதியோடு தான் பெட்டியை அடுக்கினேன். வீட்டிலிருக்கும் அந்த ஒன்றரை மாத காலத்தில் அவளை முற்றாக மறந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அந்த ஒன்றரை மாத காலத்தின் போது தான்’ நான் சுரேகாவைக் காதலித்தேன் என்று நன்றாக உணர்ந்து கொண்டேன். ஆனால் அந்த உணர்வு எனக்கு எவ்விதமான ஆறுதலும் அளிக்க வில்லை. தினமும் தவறாது மாலையில் கடற்கரைக்குப் போவேன். கொந்தளிக்கும் கடலலைகளும் உணர்ச்சிக் குழம்பான இரத்த வானமும் அவளையே எனக்கு நினை வூட்டின். அந்தச் செக்கர் வானத்தில் இருள் தோயு மட்டும் நான் கடற்கரையை விட்டு அசைய மாட்டேன். ஊர்ந்து நகர்ந்த அந்த விடுமுறை நாட்கள் முடிவுறும் என்ற நம்பிக்கையையே நான் விட்டு விட்டேன். பல்கலைக் கழகத்திற்குத் திரும்பியதும் அவளிடம் என் காதலைத் தெரிவிக்கவேண்டும் என்று நான் தீர்மானித்து விட்டேன். எத்தனை நாளைக்கு இந்த இரண்டுங் கெட்டான் நிலையை என்னால் சகித்துக்கொள்ள முடியும்?
தவணை தொடங்கிக் கிட்டத் தட்ட ஒரு மாதமாகி விட்டது. அடிக்கடி அவள் விடுதிக்குத் திரும்பும் சமயம் "தற்செயலாக நானும் அவளருகே தோன்றி, "நானும் இப்படித் தான் போகிறேன். உங்களளோடு நடக்கலாமாP" என்பேன். அவள் மெளனமாகச் சரியெனத் தலையசைப்பாள். ஆனால் தானாக ஒன்றும் பேச மாட்டாள். நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்லு வாள். அவள் என் பாசாங்கைப் புரிந்து கொண்டாளோ தெரியாது. என் காதலை அவளுக்குத் தெரிவிக்க மூன்று தடவையாவது வாயெடுத்திருப்பேன். அவளுக்குக் கேட்டுவிடும் போல் என் நாவின்
123

Page 69
நுனியிலே வார்த்தைகள் தடுமாறின. ஆனால். அவள் என்னை மறுத்து விட்டால். அந்த ஒரு நினைவுதான் என்னைத் தடுத்தது. என் காதலை வெளியிட வழியறியாது என் உள்ளத்திலேயே கொதித்துக் கொப்பளிக்கவிட்டேன்.
அன்று மாலை விரிவுரைக்குப் பின் அவளோடு கூட நடந்து வந்தேன். மாலை மஞ்சள் வெயிலில் பொன் படர்ந்த அவள் முகத்தை என் கைகளில் ஏந்தி, அந்தக் கண்களின் காந்தப் பார்வை யில் கலந்து விட, என் உள்ளம் ஏங்கித் துடித்தது. அந்த நெடிய பெருமரத்தை அடைந்ததும் நான் தயங்கி நின்றேன். அவ்விடத்தி லேதான் அவள் விடுதிக்குப் போகத் திரும்புவாள். அப்போது அந்த மரத்தில் ஒரு மலர்கூட இல்லை. அங்கு மிங்குமாக நெருக்கமற்றுக் கிளைகளில் ஒட்டி நின்ற ஒரு சில இலைகளைத் தவிர மரம் மொட்டையாய் நின்றது. அப்போதுதான் பூச் சொரிந்து நின்றது அந்த மரமல்ல என்பதைக் கவனித்தேன். அந்த மரம் பூப்பதே யில்லை. அத்தனை மஞ்சள் பூக்களும் அந்த மரத்தின் கிளைகளிலே பின்னிப் படர்ந்து, சரம் சரமாய்த் தூங்கிய கொடியின் பூக்கள்தான். இன்னமும் ஆங்காங்கு உதிரும் நிலையில் ஓரிரு பூக்கள் கொடியில் ஒட்டி நின்றன. பூக்கும் காலங்களில் மரத்திற்கும் கொடிக்கும் வித்தியாசமே தெரிவதில்லை. போவோர் வருவோரை மறந்த நிலை யில் நின்ற நான் ஒருவாறு சுதர்ரித்துக் கொண்டு,
"உன்னிடம். ஒரு விஷயம் சொல்லவேண்டும்." என்று இழுத் தேன். அவள் கேட்கத் தயாரென்ற பாவனையில் தலையை ஒரு பக்கம் சற்றுச் சாய்த்தவாறு பேசாமல் நின்றாள். ஆனால் எனக்கு நாவெழ மறுத்தது.
"அது. அது ஒன்றுமில்லை. நான். வருகிறேன்," என்று முணுமுணுத்தவாறு போகத் திரும்பினேன். அதுவரை நிலம் நோக்கிய கண்களோடு எதிலுமே சம்பந்தப்படாதவள் போல் நின்றி ருந்தாள். ஒரு முறையாவது என்னைப் பார்க்கவும் இல்லை. ஆனால் இப்பொழுது தலை நிமிர்ந்தவள்,
“நில்லுங்கள். உங்கள் மனதில் என்னவோ இருக்கிறது. என் னிடம் சொல்லுங்கள்," என்றாள் மெதுவாக, பரிகாசமாக என்று
நினைக்கிறேன்.
"நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றேன் நான் அசட்டுத் தனமாக, சாதாரணமாக. ஆமாம். "நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
அவ்வளேவேதான்! எனக்குவேறு எதுவுமே சொல்லத் தோன்ற வில்லை. அவள் இதைக் கேட்டுப் பரிகாசமாகச் சிரிப்பாள் என்று
124

தான் நான் நினைத்தேன். ஆனால் அவள் சிரிக்கவில்லை. மெளன மாய், புரிந்து கொள்ளமுடியாத அந்த ஆழ நெடுங்கண்களால் நீண்ட கணப்பொழுது என்னை நோக்கினாள். பிறகு, "ஆமாம். நானுந்தான் காதலிக்கிறேன்" என்றவள், திரும்பி விடுதியை நோக்கி விரைந்தாள்.
என் உள்ள நிலையை எனக்கு விவரிக்கத் தெரியவில்லை. எதையுமே பொருட்படுத்தாத நான் வாழ்க்கையின் பொருளை உணர்ந்து கொண்டுவிட்டேன். ஆனால் எனக்கு மட்டும் நிகழவிருப் பதை முன்னறியும் திறமிருந்திருந்தால்?.. ஆனால் அப்பொழுது என் இதயத்தில் வருந்துதலுக்கு இடமிருக்கவில்லை. ஆனால் நடக்கப் போவதை நான் அறிந்திருந்தாலும் கூட அவளை அணுகா திருந் திருப்பேனாP.
இப்பொழுதோ வெனில் சுரேகாவையும் என்னையும் தவிர வேறு உலகம் எதுவுமே இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இரவில் திடீரென்று விழித்தெழுந்து கட்டிலில் அமர்ந்தவாறு மெது வாக வாய்விட்டு, "சுரேகா, என் சுரேகா" என்று திருப்பித் திருப் Lýér சொல்லிப் பார்ப்பேன். அவளுடைய gd L6) நொந்து புண்ணாகும்படி அவளை என் நெஞ்சோடு இறுக அணைத்துக் கொள்ளத் துடித்தேன். என் கைகளால் அவள் உடலைத் தழுவி, அவள் கனியிதழ்களைச் சுவைக்க ஏங்கினேன். ஆனால் சுரேகா விடத்து நான் சரியாகப் புரிந்து கொள்ளாத ஏதோ ஒரு தன்மை பொலிந்தது. விடுவிக்க முடியாத புதிராகவே அவள் எனக்குத் தோன்றினாள். அவள் என்னைக் காதலிக்கிறாள். ஆ. மாம். அப்படித்தான் அவள் சொல்கிறாள். ஆனால் எப்படியோ அவள் என்னிடமிருந்து ஒதுங்கிக்கொள்வது போலத்தான் எனக்குப் பட்டது. அவள் என்னை நெருங்கவிடாது விலகி விலகி நிற்பது போல் எனக்கு ஏன் தோன்ற வேண்டும்? அவளறியாது சில வேளைகளில் தூர ஒதுங்கி நின்று அவளைக் கவனித்திருக்கிறேன். அப்பொழுது. அப்பொழுதெல்லாம் அவள்மேல் கவிந்திருந்த ஏதோ ஒரு நிழல் நீங்கியது போல் அவள் எவ்வளவு குதூகலமாக உயிர்த்துடிப்போடு தென்பட்டாள். வெகு அருமையாகச் சில வேளைகளில் தன் நீண்ட மென்விரல்களை என் முரட்டுப் பிடியிலே நான் சிறைபிடிக்க விட்டுக்கொடுப்பாள். ஆனால் வழக்கமாக, தன் கையை என் பிடியிலிருந்து வெடுக்கென்று பறித்துக் கொண்டு குளிர்கண்டவள் போல் உடலைச் சிலிர்த்துக் கொள்வாள். ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்று அவளைக் கேட்கும் துணிவு எனக்கில்லை. அவளை இழந்து விடுவேன் என்ற பயம் எனக்கு அவளிடத்து ஏதோவொரு கட்டுக்கடங்காத இயற்கைத் தன்மை நான் ւյrfl/55/ கொள்ளத் துடித்ததன்மை நிறைந்திருந்தது. நிலவு குளித்த இரவுக ளில் உணர்ச்சிக் குளமான அவள் முகம் அதில் கனிந்து எரியும் கரிய ஒளிக் கண்கள் என் இதயத் தீயை விசிறிவிடுவன. என்
25

Page 70
உதடுகளின் ஸ்பரிசம் பட்டு அவள் உதடுகள் துடிப்பதை உணர, என் இதயத் தீ அவள் கண்களில் பிரதி பலித்துக் கனன்று, கொழுந்து விடுவதைக் காணத் தவியாய்த் தவிப்பேன். அனால் அம்மாதிரி வேளைகளில் தான் அவள் என்னை விட்டு எங்கோ தொலை தூரத்திற்குச் சென்று விட்டாள் போலத் தோன்றும். அதைப் பற்றி நான் அவ்வளவாக அப்போது கவலைப்பட வில்லை.
அவள்மீது என் உள்ளத்தில் எழுந்த காதலிலேயே நான் முழுக்க முழுக்க மூழ்கிக் கிடந்தேன். அந்தக் காதலைத் தவிர வேறு எதுவுமே என் கண்களுக்குப் புலனாக வில்லை. இப்பொழுது எனக்கு எல்லாம் நன்றாகப் புரியத்தான் செய்கிறது. ஆனால் அது கூடச் சரியாக அல்ல என்றுதான் நினைக்கிறேன்.
மீண்டும் இந்தப் பாழாய்ப் போன விடுமுறை ஏன் வர வேண்டும்? நான் அவளைப் பிரியவேண்டுமே! அவள் ஏதோ அழத் தான் செய்தாள். ஆனால் என்னை மட்டும் தன் அருகில் நெருங்க விடாது பார்த்துக்கொண்டாள் என்பதும் நினைவிற்கு வருகிறது.
"நீங்கள் என்னை மறந்து விட மாட்டீர்கள், இல்லையா? திருப் பித் திருப்பிக் கேட்டாள். வேடிக்கையாக இல்லையா சுரேகாP எனக்கு இப்போது நினைத்துப் பார்க்க ஒரே வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
மூன்று முழு மாதங்கள்! அச்சமும், ஐயமும், ஏக்கமும் நிறைந்த ஊழிபோல் நீண்டு கிடந்த மாதங்கள்! ஆனால் ஒருபடியாக நாட்க ளும் நகர்ந்து மறைந்தன. பேராதனைக்குத் திரும்பினேன். அவளைக் காணும் ஆர்வத்தினூடே எனக்கொரு பயமும் கூட. அவள் வந்தி ராள் என்று. ஆனால் அவள் வந்து தான் இருந்தாள். அவளை ஓர் இமைப்பொழுது கண்டேன். என் இதயம் இன்ப வேதனையில் பாய்ந்து துடித்தது. அந்த ஒரு மணி நேர விரிவுரை மூன்று மாத விடு முறையிலும் நீண்டதாக எனக்குத் தோன்றியது. விரிவுரை முடிந்ததும் அவளைக் காணவிரைந்தேன். ஆனால் அவளை. அவளை வழக்கமான இடத்தில் காணவில்லை. வளைந்து படுத்தி ருக்கும் 'கம்பஸ் தெருவில் என் வேதனை கனத்த விழிகளை மெல்லச் செலுத்தினேன். ஆமாம், அதோ, அவள் தொலைவில் இலாகவமாக வீசி நடந்து கொண்டிருந்தாள்.
எப்படியாவது அவளைச் சந்தித்தே தீருவதென்று நான் கறுவிக் கொண்டேன். நான் எவ்வளவு நொந்து போயிருந்தேன் என்று அவளுக்கென்ன தெரியும்? ஆனால் அவள் எப்படியோ என்னிடம் அகப்படாமல் நழுவி வந்தாள். பிறகு தன் சிநேகிதி ஒருத்தியின்
126

மூலம் சொல்லியனுப்பினாள் நாங்கள் கொஞ்சக் காலத்திற்குக் கவன மாய் இருக்க வேண்டுமாம்! அதனால் தன்னைச் சந்திக்கவேண்டா மாம்! நான் இதையெல்லாம் நம்பும் நிலை கடந்துவிட்டேன். நான் விரிவுரைகளுக்கு மட்டம் போட்டு விட்டு அங்குமிங்குமாக நின்று நின்று கடைசியில் அவளை வகையாகப் பிடித்துக் கொண்டேன். அப்போது அவளைப் பார்க்க வலையில் அகப்பட்ட ஒரு பிராணி யைப் போலிருந்தது. எனக்கே அவள்மீது இரக்கம் ஏற்படும் போலிருந்தது. அத்தோடு அவள் நிலை எனக்குச் சற்றுத் திருப்தி யாகவும் இருந்தது. ஆனால் அதற்குள் அவள் சட்டென்று ஏதோ முடிவுக்கு வந்தவள் போல் நிமிர்ந்தாள்.
"நான் இப்பொழுதே உனக்குச் சொல்ல வென்றிருக்க வில்லை. கூடிய அளவுக்கு உனக்கு அந்த வேதனையைக் கொடுக்க வேண்டா மென்று நினைத்தேன். நீ என்னை மறந்துவிடு, குரு." நான். நான் இப்படி எதையோ எதிர்பார்த்திருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தும் என் இதயத்தில் விழுந்த அடியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்னைச் சுக்கல் சுக்கலாகச் சிதறடித்து விட்டது அவள் இதயமற்ற பேச்சு. முரட்டுத்தனமாக அவள் கையைப் பிடித் திழுத்தேன்.
"ஏன்? ஏன்” அந்த ஒரு சொல்லை மட்டுமே இயந்திரம் போல் என்னால் திருப்பித் திருப்பிச் சொல்ல முடிந்தது. சுரேகா மெல்லச் சிரிக்கும், இனிய சுரேகா அல்ல சீறிச் சினம் கக்கும் சுரேகா கொடூரமாய் வார்த்தைகளைக் கக்கினாள் "சீ மிருகம் கையைவிடு! மிருகம்! மிருகம்!”
ஐயோ! என் இதயம் எப்படித் துடியாய்த் துடித்தது! "ஏன் என்று சொல்லேன்?"
"ஏனா? நீ என்னிலும் இளையவன், அதனால்தான்!” ஸ்தம்பித்த வனாய் அவளை வெறித்துப் பார்த்து நிற்கமட்டுமே முடிந்தது என் னால், சிந்திக்கும் திறனை என் மனம் இழந்து விட்டது. எத் தனையோ கேள்விகளால், தர்க்க வாதங்களால் நான் அவளை மடக்கியிருக்கலாம். ஆனால் எனக்கென நினைவுகள் மட்டும் மிஞ்சி நின்ற போதுதான் அன்று நான் எப்படியெல்லாம் நடந்திருக்க
வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொள்வேன். ஹராம்! அதனால் தான் என்ன பயன்? நானொரு மடையன். "நீ என்னிலும் இளையவன், அதனால்தான்!” எவ்வளவு சுலபமாய்ச் சொல்லி 6 ft LT6it.
"உனக்கது தெரியுமென்று நினைத்தேன்," என் நடுங்கும்
127

Page 71
குரலை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
"எனக்கெப்படித் தெரியும் நீ எனக்குச் சொல்லவேயில்லை." மரத்துவிட்ட உதடுகளைப் பிரயாசையோடு கூட்டினேன். "அதனா லென்ன? ஒரு சில மாதங்கள் தானே? அது ஒரு பொருட்டாP” உணர்வற்ற குரலில் முணுமுணுத்தேன்.
"பொருட்டுத்தான். முன்பே எனக்கு இது தெரிந்திருந்தால் கதையே வேறாகியிருக்கும். ஆனபடியால் நீ என்னைக் குற்றஞ் சொல்லக் காரணமில்லை." நான் சுதாரித்துக் கொள்வதற்குள் அவள் தன் கையைப் பறித்துக் கொண்டு என்னை நழுவித் தாண்டி ஒட்ட மும் நடையுமாகப் போய்விட்டாள். தெரு வழியே அவள் போவ தைப் பார்த்து நின்றேன். பெண்புலியினது போன்று மழமழத்த இளந்தேகம் இலயம் பிசகாது ஒயிலாக நடந்தாள். கடவுளே, நான் அவளை இவ்வளவு தூரத்திற்கு வெறுக்க முடியுமா? துடிதுடிக்கும் வெறுப்பு என்னுள் திரண்டெழுவதை, என் இதயத்தில் ஊறும் கசப்பை என்னால் உணர முடிந்தது. விஷ வெறுப்பு என் D LaSaif உதிரத்தைத் திரைப்பதை உணர்ந்தேன். அப்பொழு தென்றால் சுலபமாக, முயலாமேலே என் கைகளால் அவளை கொன்றிருக்க முடியும். மன்னிக்க முடியாத வகையில் அவள் என்னை நோகடித்து விட்டாள், சிறுமைப்படுத்தி விட்டாள். என்னை வெற்றுடலாய் நிறுத்திவிட்டாள். கோதென, வெறும் மனிதனென உதறிவிட்டாள். அதற்காகவே அவளை நான் கொன்றிருக்க முடியும், Lungsdal
நீ என்னிலும் மூத்தவள், எனக்கு வயது கூடிவிட்டாய் என்ப தற்காக உன்னை நான் நிராகரித்திருந்தால் உனக்கெப்படி இருந்திருக் கும் சுரேகாP. அவள் என்னில் சீரியதையெல்லாம் அபகரித்துக் கொண்டுவிட்டாள். இன்னொரு பெண்ணுக்கு இனி நான் எதைக் கொடுப்பதுP ஆமாம். நான் நிச்சயமாகக் கல்யாணஞ் செய்து கொள்ளத்தான் போகிறேன். பட்டம் பெற்றுக் காலூன்றியதும் நான் செய்யப் போகும் முதல் காரியம் அதுதான். ஆனால் என் மனைவி யென்று வரப்போகிறவளுக்கு அளிப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது? மாசடைந்த முறிந்த இதயமா? செலவாகிவிட்ட காதலின் சக்கையா? என்னையே தகிக்கும் வெப்பின் வேகத்தோடு என் உள்ளத்தின் சக்தியெல்லாம் கொண்டு அவளை வெறுத்தேன்.
குடி என்னவென்றே மணந்தும் அறியாத பச்சைப் பொடியன் நான். குடியே சகலதும் என்று தஞ்சம் அடைந்தேன். ஆனால் குடித்துக் குடித்து வாந்தியெடுத்தேனே தவிர என் இதயத்தில் நின்று நகைத்த அவள் உருவை என்னால் நீக்கிவிட முடியில்லை. குடிவெறியில் அகப்பட்டவர்களிடம் எல்லாம் நான் அவளோடு
28

'காதல் புரிந்த அழகையெல்லாம் அலம்புவேனாம். அதில் முக் காலுக்கு மேல் என் கற்பனைச் சரக்கு. கொடிய இழிந்த பொய்கள். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் என் உள்ளு ணர்வில் நன்றாக உணரத்தான் செய்தேன். அந்த உணர்வு எனக்குப் பரமதிருப்தி அளித்தது. திருப்தி என்ன பரிபூரண மகிழ்ச்சியேதான். இதெல்லாம் சுற்றிவளைத்து அவள் காதுகளுக்கும் எட்டும் என்று எனக்குத் தெரியும். அந்த நினைவு தான் என் நொந்த இதயத்திற்கு எவ்வளவு இதமாய் இருந்தது. அவளைப் புண் படுத்தவேண்டும். வதையாய் வதைக்க வேண்டும். வேதனையில் அவள் நெளிந்து துடிக்கவேண்டும் என்ற ஆவேசம் எனக்கு. ஆனால் அவள் மட்டும் இதனாலெல்லாம் துளியேனும் கவலைப் பட்டதாகவே தெரிய வில்லை. தாங்கொணாத ஆத்திரம் என் இதயத்தில் பீறிப் பொங்கி யது அன்று. அவள் என்னை வேண்டாமென்று உதறித் தள்ளிய அன்று அவளிடம் நான் கெஞ்சி மன்றாடியதன் நினைவு மட்டும் பச்சைக் காயமாய் என் இதயத்தில் வலித்தது.
தூ! அவளும் ஒரு பெண்ணாP பசப்புக்காரி மானங்கெட்டவள்! நான் அவளுக்கு உபயோகமற்றவனாகி விட்டேன். அவள் இனி நிம்மதியாக எவனாவது அப்பாவி ஒருவனை மணந்து கொள் வாளாக்கும்! என் மனம் குழம்பியிருந்தது. அவளை நான் காதலித் தேனா அல்லது வெறுத்தேனா என்பதே எனக்குப் புரியவில்லை. சுரேகாவை நான் இன்னமும் காதலித்தேன் என்று எரிச்சலோடு அலுத்துக் கொண்டான் சுந்தர். ஒரு வேளை அவன் சொன்னது உண்மையாயிருக்கக் கூடுமோP.
விரிவுரைகளின் போது தவிர அவளைக் காண்பதே அருமை யாகி விட்டது. தன்னுள்ளே ஒடுங்கியவளாய் ' எங்கோ விலகியவ ளாய்த் தென்பட்டாள்.
அன்று விரிவுரை முடிந்ததும் மழை பிடித்துக்கொண்டது. மழை விடு மட்டும் போலும் அந்த விறாந்தையில் சற்றுத் தூணோடு சாய்ந்தவாறு சுரேகா நின்றுகொண்டிருந்தாள். என்னை யறியாது அவளைப் பார்த்தபடியே வெகு நேரமாய் நான் நின்றுவிட்டேன். திடீரென்று அவள் என்னைச் சற்று ஆச்சரியத்தோடு பார்க்கும்வரை அவளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வே எனக் கெழவில்லை. எனக்கே ஆச்சரியமாய்ப் போய் விட்டது. என்னை அந்த விரிந்த கண்களால் மருண்டு பார்த்தவள் சேலைத் தலைப்பை இழுத்து இறுகப் பேர்த்திக்கொண்டு சட்டென்று திரும்பி மழையில் நனைந்து கொண்டே விரைந்து நடந்தாள். அவள் போய்விட்டாளே யென்று எனக்கு ஒரே வருத்தமாய் இருந்தது.
சுரேகாவை நான் மீண்டும் காதலிக்கலானேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அல்லது நான் அவளை நெடுகிலுமே
129

Page 72
காதலித்துத்தான் வந்தேனா? ஆனால் இப்பொழுது நான் அவளைக் காதலிக்க விரும்பவில்லை! கடவுளறிய விரும்பவில்லை!!
எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அன்று விடிந்ததுமுதல். ஒரே மழை அப்போதுதான் ஒரு படியாக ஓய்ந்திருந்ததென்றாலும் இன்னமும் தூறலும் சொட்டலுமாய் ஒரே அழுகைக் கோலமாய் இருந்தது. என் மனதின் நெகிழ்ச்சியை அவள் எப்படியோ உணர்ந் திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.
"நான் உனக்குப் பெரும் பிழை செய்துவிட்டேன், குரு. அதற்கு ஈடு செய்ய விரும்புகிறேன்." பெரும் பிரயாசையோடு பேசினாள். அவள் கண்கள் அடிபட்ட மானின் கண்கள் அப்படித் தான் இருக் கும் போலும்.
"நான் இன்னமும் உன்னிலும் இளையவன்தான், தெரியுமா?" என்றேன், கொடூரமாக, மிருகத்தனமாக. அவள் கரிய பெருங்கண் களில் கண்ணிர் ஊறிக் கன்னங்களில் கோடிழுத்தது. அதை உணராதவள் போல் அழுத்தி மூடிய உதடுகளோடு தலையைக் குனிந்து கொண்டாள். அந்தக் கண்ணிர் பாசாங்கல்ல. எனக்கு நன்றாகத் தெரியும். சுரேகா விசித்திரப் பிறவிதான். கைக்கெட்டாத ஏதோ வொரு தன்மை, என்னைத் திகைப்பூட்டிக் குழப்பிய ஏதோ வொரு தன்மையுடையவள் அவள். 'கண்டீன் மேசையில் கை விரலால் கோடிழுத்தவாறு பேசாது பதுமையாய் உட்கார்ந்திருந்தாள்.
"உன்னிடம் ஒழுக்கம் இல்லைத்தான். இருந்தும் நீ அழகான வள். அழகு மற்றதற்கு ஈடு செய்யாதா என்ன?" என்றேன் குத்த லாக. அவளுக்குச் சுட்டிருக்கவேண்டும். ஆனால் அவளைப் புண் படுத்த வேண்டுமென்றே சொன்னேன். சுரேகாவின் இதயத்தைப் புண்படுத்துவதுதான் வெகு சுலபமாயிற்றே! ஆனால் அவள் வாய் திறக்கவில்லை. கல்லாக்கிக் கொண்டேன் என்று நினைத்த என் இதயம் நெகிழ்ந்து கரைந்து உருகிற்று. என் குரல் உணர்ச்சியால் தடித்து நடுங்குவது எனக்கே கேட்டது. என் இதயத்தில் காம அனல் மூண்டெழுந்தது.
“முன்னைவிட அதிகமாகவே இப்போது உன்னைக் காதலிக்கி றேன் என்று நினைக்கிறேன் சுரேகா, ஏனென்றே எனக்குத் தெரிய வில்லை. மறுபடியும் என்னை உதறிவிடாதே. அப்படிச் செய்தாயா னால் நான் முறிந்து சீரழிந்து போவேன்."
"அப்படிச் செய்யமாட்டேன், குரு, செய்யவேமாட்டேன்.” ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் ஒடுங்கிய குரலில் சொன்னாள். என்
130

உள்ளத்தில் மகிழ்ச்சி பிறந்தது. ஆமாம். நீண்ட காலத்திற்குப் பிறகு நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். அவள் என்னிடம் மீண்டும் விட்டாள். அந்த ஓர் உணர்விலே நான் நடந்ததை யெல்லாம் மறந்து விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் அவள் ஏன் அப்படியெல்லாம் நடந்து கொண்டாளோ என்று சில சமயம் நான் எண்ணுவதுண்டு. அப்பொழுதெல்லாம் என் இதயத்தில் வேதனை சுளிட்டுப் பாயும். ஆனால் அந்தக் கசப்பான நினைவுகளை மறந்துவிடுவதே நலம் என்று என் மனதிற்கு உபதேசித்துக் கொண் டேன். அவற்றை மறந்துவிட் நான் தயாராயும் இருந்தேன். இருந்தும் முழுதும் அவளுக்கு என்னை இழந்து விடாதிருக்க, என் உள்ளத் தோடு ஓயாது போராடினேன்.
"என்னை உன் அடிமை யாக்கிவிடுவாய் போலிருக்கிறதே சுரேகா” என்றேன் அவளிடம் ஒருநாள்.
"இல்லை குரு நான் உன் அடிமையாய் இருப்பேன்" என்றாள். அவள் குருலில் ஏதோ ஒன்று. எனக்குச் சரியாகப் பிடிபட வில்லை. ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கும் போதுதான் அவள் எவ்வளவு ஒதுங்கி விலகி நின்றாள் என்பதை உணர்கிறேன். அவள் குரல்தான் எவ்வளவு உண்ர்ச்சியற்று ஒலித்தது! ஏதோ பாடம் ஒப்பிப்பது போலல்லவா சொன்னாள்! ஆனால் அவள்தான் ஆழங்காண முடியாதவளாயிற்றே! சில சமயம் அவளை என் கைகளால் அணைக்கும் அளவுக்கு எனக்கு மிக மிக அருகில் நெருங்கியிருப்பாள். இருந்தும். என்னை விட்டு எங்கோ அணுக முடியாத தொலை தூரத்திற்கு அவள் போய் விடுவதாகவே எனக் குப் படும். இத்தனை நாட்களுக்குப் பின்னும் அவள் எனக்கு அந்நிய வளாகவே இருந்தாள். தன் ஒருத்தியுள்ளே பல் வேறு பேரை அடக்கியவள் போலவே தோன்றினாள். ஆனால் அத் தோற்றங் களில் எதுவுமே அவள் உண்மைச் சொரூபமாக எனக்குப் பட வில்லை. இதை ஒரு நாள் அவளிடமும் சொன்னேன். அவள் மெல்ல. நெட்டுயிர்த்தாள்.
"நான் அப்படி இருக்கக் கூடாதென்று தான் முயல்கிறேன், குரு," என்றாள் தொனியற்ற குரலில். அந்தி மாலையின் சோக வானம் போல அவள் முகத்தில் உள்ளமுருக்கும் சோகங்கவிந்தது. அவளுக்கு இடைஞ்சலாய், இருக்கக் கூடாத இடத்தில் நான் இருப்பது போன்ற எக்கச் சக்கமான உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவசர அவசரமாக என் கையால் அவள் தோள்களை வளைத்துகி கொண்டேன். ஆனால் என் ஸ்பரிசத்தை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. அசைவற்று, உயிரற்ற சிலைபோல 6 TfÄuG395IT நிலைத்த மனத்தோடு இருந்தாள். நான் அருகில் இருக்கும் நினைவே
131

Page 73
அவளுக்கில்லை என்று நினைக்கிறேன்.
மனோரம்மிய வசந்த காலம் மீண்டும் மலர்ந்தது. அது எங்கள் இறுதி ஆண்டு. நாங்கள் ஒன்றாய்க் கழித்த அந்த இறுதி நாள் ன்னமும் என் நினைவில் உண்மையாய்ப் பசுமையாய் விளங்குகி றது. சுரேகா என் இதயத்தில் மிக. மிக நெருங்கி இருந்தாள் அன்று. அன்று தான், அவள் என்னை உண்மையில் காதலித்தாள் என்று நம்பினேன். ஏனோ சில சமயங்களில் எனக்கு நம்பிக்கை விழ வில்லை. நாங்கள் மத்தியானம் 'கன்டீனில் சாப்பிட்டுவிட்டு அங்குமிங்கும் உலவினோம். அருவி வீழ்ச்சி போல் சரம் சரமாய் மஞ்சள் பூக்களைத் தாங்கி நிற்கும் அந்த மரத்தின் கீழ்தான் நாம் பிரிந்தோம். ஆனால் அப்போது ஓரிரு பூக்களைத் தவிர எல்லாம் உதிர்ந்து தெருவிற்குக் கம்பளமிட்டு எங்கள் பாதங்களின் கீழ் அரையுண்டு சிதைந்து கிடந்தன. பூக்களற்று வெறுமையாய் நின்ற மரம் எலும்புருவாய்க் கோரமாய்க் காட்சியளித்தது.
"எனக்கு உடனடியாகக் கடிதம் போடு, குரு. உன் கடிதம் நாளை அல்லது மறுநாள் எனக்குக் கிடைக்க வேண்டும்," என்றாள் சுரேகா. எனக்கேதோ விசித்திரமாகப் பட்டது. ஆமாம். ஏதோ ஒரு விகாரக் கேலிக் கூத்துப் போல. ஆனால் அப்போது எனக்கு ஒன்றுமே தெளிவாகப் புரிய வில்லை.
நான் வீடு போய்ச் சேர்ந்ததுமே அவளுக்கு எழுதினேன். ஆனால் அவள் பதில் எழுத வில்லை. ஒரு கிழமை ஒரு முழுக் கிழமை அவள் பதிலுக்காகத் தவங்கிடந்தேன். இனந் தெரியாத பயமொன்று என் இதயத்தில் சூழ்ந்தது. கடவுளே நான் அவளை அடைய வேண்டும்! அவள் என்னைக் காதலித்தே தீரவேண்டும்.
ஒருவேளை கடிதம் தபாலில் தொலைந்திருக்கக் கூடும். நான் இன்னொரு கடிதம் போட்டேன். உண்மையில் நான் பதிலை எதிர் பார்த்திருக்க வில்லை. ஒரு முறை சூடு கண்ட பூனைக்கு மறு முறை சொல்லியா தெரிய வேண்டும்? அவள் என்னை ஏமாற்றி விட்டாள் என்பதை உணர்ந்துகொள்வது அவ்வளவு கடினமல்லவே! நானே இரண்டு வித்தியாசமான பேர் போல புழுப்போலத் துடித்துத் துவண்டு நெளியும் என்னை நானே விலகி நின்று பற்றற்றுப் பார்ப்பதுபோன்ற தொடர் பிழந்த உணர்வு என்னுள் எழுந்தது.
அச்சமயம்தான் அவள் கடிதம் வந்தது. என் மனதிலிருந்து எவ்வளவு பெரிய பாரம் விலகிற்று என்று, என் இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கை என்னால் வார்த்தைகளில் வடிக்கவே முடியாது. ஆனால்.ஹ"ம்! அந்தக் கடித்தை நான் இன்னமும் வைத் திருக்கிறேன். ஏனெனில் ஒரு நாள் நான் கல்யாணம் செய்துகொள்
132

வேன். அப்போது அந்தக் கடித்தை என் மனைவிக்குக் காட்டுவேன். எமக்கிடையே ஏற்படப்போகும் உறவின் மீது சென்றதன் நிழல் கவியக்கூடாதல்லவா?
நான் சுரேகாவை வெறுக்கிறேனா? இ.ல்.லை.இல்லை. வேறு எந்தப் பெண்ணையும் அதே உன்மத்த வேகத்தோடு என்னால் காதலிக்க முடியாது. அவள் மீது பிழை இல்லையென்று பெருந் தன்மை காட்டும் நிலையில் நான் இல்லை. எனினும். குழம்பிய, தெளிவற்ற விதத்தில் அவளைப் புரிந்துகொள்வது போலும் எனக்குப்படுகிறது. அவள் ஒருபோதும் என்னுடையவள ஆகமாட் டாள் என்று என் உள்ளுணர்வில் எனக்குத் தெரிந்திருக்கவேண்டும்ெ அதனால் தான் அவளை எனதாக்க நான் அவசரப்பட்டேன். ஆனால் எப்படியோ அவள் தப்பிவிட்டாள். அவள் . சுயேச்சை யானவள். காட்டு மான் போன்றவள். வேறு உலகத்தவள்.
நீங்களும் கடிதத்தைப் படித்துப் பாருங்கள்.
@@,
நான் உன் இயத்தைப் புண்படுத்தப் போகிறேன். ஆனால் உண்மையை உனக்குச் சொல்லிவிடுவதே மேல் என்று எனக்குப் படுகிறது. நான் உனக்கு எத்தனையோ பொய்கள் சொல்லிவிட்டேன். எனக்குத் தெரியும், நீ என்னை விஷமென வெறுக்கப் போகிறாள். அது தான் உனக்கும் சுலபமான வழி. நான் உன்னை எப்போதுமே காதலித்ததில்லை என்றுதான் நினைக்கிறேன். நீ என் உள்ளத்தில் அருவருப்பைத்தான் கிளறிவிட்டாய். இதை உணர்ந்ததும் நான் பீதியடைந்தேன். எப்படியாவது இந்தக் குழப்பத்திலிருந்து விடுபட விரும்பினேன். உன் ஸ்பரிசம்படும் போதெல்லாம் எனக்குக் கத்த வேண்டம் போலிருக்கும். நான் என்றுமே உன்னைக் காதலித்திருக்க முடியாது. உனக்கு நான் உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஏனோ அப்படிச் செய்யவில்லை. பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன். நீ என்னை மனமாரக் காதலித்தாய் என்றறிவேன். இருந்தும். நீ நுண்ணுணர்வே அற்றவன். நினைக்க நினைக்க உன்னைக் கேவலமாய் நடத்தி விட்டேன் என்று எனக்குப் பட்டது. அதன் பிறகு உன்னைக் காதலிக்க நான் எவ்வளவோ முயன்றேன் குரு. உண்மையாக... ஆனால். ஆனால். உனக்குத் தெரியும். என்னால் முடியாது. என்றுமே முடியாது. -
எனக்குத் தேகமே குளிர்ந்து விறைத்துவிட்டது. பிறகு பிறகு ஏற்பட்ட பலவீன உணர்வில் எனக்கு வெறுப்போ, கோபமோ அன்றி வேதனையோ படக் கூட சக்தியிருக்க வில்லை. எனக்கில்லை என்று எனக்குத் தெரியும். இருந்தும். அவள். அவள் எவ்வளவு அழகானவள்...?
133

Page 74
கானல்
அன்னம்மா குசினி வாசலில் உட்கார்ந்து வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். அருகில் கப்பொன்றைக் கட்டிக்கொண்டு நின்ற யோகனின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் மின்னிச் சுழன்றன. அவ் வெண்ணங்களின் மையமாகP யோகன் மெல்ல வந்து அன்னம்மா வின் அருகில் ஒட்டினாற் போல் உட்கார்ந்து கொண்டான். தன் கால் பெருவிரல் நகத்தைக் கவனமாக ஆராய்ந்தபடி மெல்லிய, இரகசியக் குரலில் கெஞ்சுதலாகக் கேட்டான்.
"எனை அம்மா, Dafi அக்காண்டை கலியாணத்துக்கு அண்ணைக்குப் பதிலா நான் மாப்பிள்ளைத் தோழனாப் போற னெனை?
"நீ என்னடா, கறையான் அரிச்ச மாதிரி நெடுக அரிச்சுக் கொண்டிருக்கிறாய்! அவை அண்ணையைத் தான் கேட்டிருக்கினம். நான் எப்படி, உன்னை விடுறதுP பேசாமக் கிட!” அன்னம்மா எரிந்து சினந்தாள். யோகனின் பிஞ்சு முகம் கறுத்துச் சிறுத்தது. என்றாலும் விடாது தொடர்ந்தான்.
“அவை மூத்தவனைக் கேக்க வேண்டு மெண்டு தான் அணைணையைக் கேட்டிருப்பினம் அம்மா, நான்தான் எணை அண்ணனிலும் பாக்க வடிவு. அண்னை கறுப்பு எணை. அதோடை அவன் எவ்வளவு வளர்த்தி! நான் தான் தோழனுக்கு உயரஞ் சரி. அம்மா நான் எவ்வளவு வெள்ளை பாரெணை. யோகன் தன் கையைத் தூக்கிப் பிடித்தான். அன்னம்மாவுக்கு ஒரே வியப்பாகக் கிடந்தது. யோகனுடைய குழந்தை மனதில் இத்தகைய எண்ணங்கள் எப்படித் தான் தோன்றினவோ என்று அதிசயித்தாள். யோகன் நிமிர்ந்து தாயின் முகத்தைப் ப்ர்ர்த்தான் அவன் கண்களில் நிறைந்த விழைவும் ஏக்கமும் அன்னம்மாவின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தன.
“என்டை அம்மா அல்லே, நீ அவைக்குச் சொல் எணை, அண்ணைக்குப் பதிலா என்னை எடுக்கச் சொல்லி. நீ சொன்னா அவை ஓம் எண்ணுவினம்.” இந்தப் பொடியன் ஏன் இப்படி அளவு, வரம்பில்லாமல் ஆசைப்படுகிறானோ என்று எண்ணினாள் அன்னம்மா. சுந்தரன்தான் மாப்பிள்ளைத் தோழன் என்று தெரிந்த நாள்முதல் யோகனுக்கு இதைத் தவிர வேறு பேச்சுக் கிடையாது.
134

“ஏண்டா யோகா என்டை உயிரை வாங்கிறாய்? உனக்குத் தோழனாயிருக்க ஆசை யெண்டால் அண்ணைக்கும் ஆசையாய் இருக்கும் தானே? நாளண்டைக்குக் கலியாணம் அதுக்குள்ளை நாங்கள் இப்படிக் குழப்பினால் அவை என்ன நினைப்பினம்!” யோகன் மெளனத்தில் ஆழ்ந்தான். அம்மா சொன்னது உண்மைதான். தனக்கே இவ்வளவு ஆசையாய் இருந்தால் அண்ணைக்கும் இதைப் போல ஆசை இருக்காதா? அண்ணை எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்! யோகனின் கண்கள் கலங்கி அவற்றில் நீர் ஊறின.
'99/LDLDfT". “ùoùb!” "9 to DfT...” "6T6öT60TLITP'
பதிலில்லை. அன்னம்ா ஒரக்கண்ணால் அவன் முகத்தைப் பார்த்தாள். யோகனின் பால்முகம் சிவந்து, கண்களில் நீர் மின்னிற்று. அவன் மெல்லிய உதடுகள் துடித்தன. அன்னம் மாவின் இதயம் கசிந்தது.
"என்னடா மேனைP" பரிவோடு கேட்டாள்.
"அம்மா, அவை.அவை அண்ணைக்கு ஒரு. ஒரு மோதிரம் குடுப்பினம், இல்லையே..."
"ஓம் மேனை".
"மோதிரத்தை நீ பாத்தனியே அம்மா? எப்படிச் செய்திருக் கினமெனைP கல்லு வைச்சுச் செய்ததேP வடிவாயிருக்கே எணைP." கண்களில் ஆவல் பளபளக்கக் கேட்டான்.
"நான் பாக்கேல்லையடா மேனை."துடிக்கும் உதடுகளை யோகன் பிரயாசையோடு கூட்டினான்.
"அம்மா. நான் என்டை விரலிலை ஒருக்காப் போட்டுப் பாக்கப் பிறகு அண்ணையிட்டை அந்த மோதிரத்தை வாங்கித் தாநியேP. ஒரே ஒருக்காப் போட்டுத் திருப்பிக் குடுத்திடுறன் எணை.” குழைந்து, கெஞ்சும் குரலில் கேட்டான். அவன் கண்களில் நிறைந்து நின்ற் கண்ணிர் பொல பொல வெனக் கன்னங்களில் வழிந்தது.
"இதுக்கேன் மேனை அழுகிறாய்? நான் அண்ணையிட்டை
சொல்லி வாங்கித்தாறன்" பாவம், பிள்ளை எவ்வளவு ஆசைப் படுகிறான் என்று நினைத்தாள் அன்னம்மா. ஆனால் அப்படிப்
135

Page 75
பட்ட விலையான ஆசைகளை நிறைவேற்றிவைக்கும் சக்தி அவளுக் கேது? ஏமாற்றத்தால் கூம்பிய அவன் முகத்தைப் பார்க்க வேதனை யாகக் கிடந்தது. "நீயேன் இப்பிடிக் கவலைப்படுகிறாய்? மலர் அக்காவுக்குப் பிறகு தேவி அக்கா இருக்கிறா. அவவிண்டை கலியாணத்துக்கு உன்னைத் தான் மாப்பிள்ளைத் தோழனா யெடுப் பினம்," என்றாள் சமாதானமாக.
"மெய்யாக எணை, என்னையே எடுப்பினம்?” நம்பிக்கை துளிர் விடும் குரலில் கேட்டான்.
“மெய்யாத்தான் சொல்லிறன்"
"அப்ப. அப்ப எனக்கும் தனிய ஒரு மோதிரம் கிடைக்கும், என்னம்மாP." ஏமாற்றத்தால் கசந்து விட்ட யோகனின் இதயத்தை இந்த எண்ணம் தடவிக்கொடுத்தது. பட்டு வேட்டியும் சட்டையும் தலைப்பாகையுமாக, எல்லாவற்றுக்கும் மேலாக விரலில் சுடர்விடும் தங்க மோதிரத்தோடு கூடிய தன் உருவத்தை யோகன் மனத்திரை யில் கண்டான். அந்த மோதிரத்தை அவன் ஒரு நிமிஷம் கூடக் கழற்றப் போவதில்லை. எந்நேரமும், எப்பொழுதும் அதை அணிந்து கொள்வது என்று யோகன் இப்பொழுதே முடிவு செய்து விட்டான். அவனையறியாமலே அவன் உதடுகள் சிரிப்பில் மலர்ந்தன. முகத் தில் திருப்தியின் சாயை படிந்தது.
"அம்மா, அண்ணையின்டை மோதிரத்தை இப்ப நான் ஒருக் காப் போட்டு பார்க்க மட்டும் வாங்கித் தாணை. நான் நெடுகிலும் கேக்கமாட்டன். ஒரே ஒருக்கா மடடும். தருவியே எணைP"
"வாங்கித் தாறனெண்டு ஒருக்காச் சொன்னா கேக்கமாட்டியேP வாங்கித் தாறன். இப்ப ஓடிப்போய் நாலைஞ்சு மூரி மட்டையள் பொறுக்கிக்கொண்டா, போ!' யோகன் துள்ளிக்கொண்டு எழுந்தான். அவன் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. "பிப்பீப்பீப்1. பீப்பீப்1. ர்ர்ர். பீப்பிப்பீப். யோகன் கார் விட்டுக்கொண்டே ஓடினான். புன்சிரிப்போடு அவன் போவதைப் பார்த்திருந்த அன்னம்மாவுக்கு ஒரு கணம் இதயம் தீய்ந்தது. கோபத்தோடு கத்தினாள். கிணத்து மிதியாலை ஓடாதையெண்டு உனக்கு எத்தினை தரஞ் சொல்லிறது? ஒரு நாள் கிணத்துக்குள்ளை விழுந்து துலைக் கத்தான் மிதியாலை ஒடுறாய்." ஆனால் தொலைவிலிருந்து பிப்பீப் பீப் என்ற யோகனின் ஹாரன் ஒலி தான் அவளுக்குப் பதிலாகக் கிடைத்தது.
"அண்ணை, ஒருக்காத் தரமாட்டியேP விரலிலை போட்ட உடனையும் கழத்தித் தாறன் அண்ணை," என்று கெஞ்சினான்
136

யோகன். அவன் அந்த ஒரே எண்ணத்தில் தான் வாழ்ந்தான். வேறு எதிலுமே அவன் மனம் செல்ல மறுத்தது. அந்த மோதிரத்தைத் தன் விரலில் போட்டு வடிவுபார்க்க வேண்டுமென்ற தணியாத வேட்கை அவன் உள்ளத்தில் வியாபித்தது.
"அண்ணை, ஒருக்காத் தாவன் அண்ணை...." சுந்தரன் அவனை முறைத்துப் பார்த்தான். சாதாரணமாகக் சுந்தரன் அந்த மோதிரத்தைப் புதுமைக்கு இரண்டொரு நாள் அணிந்துவிட்டுக் கழற்றிப் போட்டிருப்பான். அதன் பிறகு யோகன் அதை எடுத்தா லும் அணிந்ததிருந்தாலும் சுந்தரன் ஒரு வேளை அதைப் பரவாய்ப் படுத்தி யிருக்கமாட்டான். ஆனால் யோகன் எவ்வளவுக் கெவ்வளவு அதை அணிய ஆசைப்பட்டானோ அவ்வளவுக்கவ்வளவு சுந்தரனுக்கு அது தன்னுடையது என்ற உரிமை உணர்ச்சி வலுப்பட்டது.
"உனக்கேன்டா இவ்வளவு எரிச்சல்? அவை உன்னை வேண்டாமெண்டு தானே என்னைக் கேட்டவை! என்டை மோதி ரத்தை நான் போட்டிருக்க உனக்குப் பொறுக்கேல்லையேடா நான் உனக்குக் கழத்தித் தந்துவிடுவன் பாத்துக்கொண்டிரு!” சுந்தரன் பொரிந்தான் யோகனின் முகம் சுருங்கியது. அவனுடைய பிஞ்சு உள்ளம் நைந்து நொந்தது. ஆனால் ஆசை தணியவில்லை. மோதிரத் தின் வசியம் தெளியவில்லை.
"அண்ணை, என்டை அண்ணை அல்லே, உன்டை துணியெல்
லாம் தோச்சுப் போடுறன் அண்ணை." அண்ணனின் முகத்தைப் பார்த்தான். சுந்தரனின் முகக்கடுமை இளகவில்லை. "என்டை மூண்டு கல்லுப்போளையையும் ஐந்து கண்ணாடிப் போளையையும் உனக்குத் தாறன் அண்ணை. மோதிரத்தை ஒருக்கா மட்டும்." சுந்தரன் என்ன நினைத்தானோ தெரியாது. சற்று யோசித்தவன் தன் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றி நீட்டினான்.
"இந்தா, போட்டுப் பாத்திட்டுத் தா” யோகனுக்குத் தன் காது களையும் கண்களையும் நம்பமுடியவில்லை. சுந்தரனின் உள்ளங்கை யில் கிடந்த மோதிரத்தி லிருந்து அவனால் தன் பார்வையை அகற்ற முடியவில்லை. உள்ளத்தின் ஆவல் முகத்திற் பொங்க, மனம் துடிக்கச் சுந்தரனை அணுகி மோதிரத்தை எடுக்கக் கையை நீட்டி னான். யோகனின் நடுங்கும் விரல்கள் மோதிரத்தைப் பற்ற நீண்டன. சட்டென்று சுந்தரன் தன் கையை மூடிக் கொண்டு பின்னுக்கிழுத் தான.
"வெக்கிப் போனியே! வெக்கிப் போனியே! மோதிரத்தைத் தருவனெண்டு நினைச்சியே! உனக்கும் எண்ணந்தான் உன்னை ஏய்ச்சிட்டன் தானே!..." சுந்தரன் விழுந்து விழுந்து சிரித்தான்.
137

Page 76
மோதிரத்தைக் காட்டிக் காட்டிச் சிரித்தான். யோகனுக்கு அவமான மும் ஏமாற்றமும் தாங்கமுடியவில்லை. அவன் பூவிதயம் புண்ணாக நொந்தது. கண்களில் நீர் பொங்கி வழிய யோகன் வீட்டுக்குள் தடுமாறிக் கொண்டே ஓடினான். சுந்தரனின் சிரிப் பொலிதான் அவன் காதுகளில் எதிரொலித்தது."
ஏதுதோ காரியமாக அறைக்குள் நுழைந்த அன்னம்மாவின் கண்கள் அகல விரிந்தன. அங்கு மூலையில், வெறுந்தரையில் சுவ ரைப் பார்த்தவாறு யோகன் முடங்கிக்கி கிடந்தான்.
"யோகா ஏன் படுத்திருக்கிறாய்?"
பதிலில்லை. அன்னம்மா குனிந்து பார்த்தாள். அழுதழுது யோகனின் முகம் சிவந்து வீங்கிக் கண்கள் இடுங்கிப் போயிருந்தன. காய்ந்த கண்ணிர்க் கறை கன்னங்களில் கோடு இழுத்திருந்தது.
“ஏண்டா மேனை, என்ன நடந்ததுP சொல்லன்." தாயின் குரலில் தொனித்த பரிவைக் கேட்டதும் யோகனுக்கு மீண்டும் அழுகை ஊற்றெடுத்தது. கேவிக் கேவி அழத் தொடங்கினான்.
"அம்மா. அம்மா. அணைனை மோதிரத்தைத் தாறனெண்டு
சொல்லி என்னை. வேய்ச்சுப் போட்டான் எனை." அன்னம்மா அவனை அணைத்துக்கொண்டாள். அவளுந்தான் சுந்தரனை எத்த னையோ தரம் கேட்டுவிட்டாள். "உன்டை தம்பிதானே! அவன்
போட்டால் தேஞ்சு போமோ? குடடா," என்று அன்னம்மா சொன் னால், "ஓ! ஒ! உனக்கு அவனிலைதான் விருப்பம். அதுதான் என்டை பொருளை அவனுக்குக் குடுக்கச் சொல்லிறாய்" என்பான் அல்லது ஒரேயடியாக மறுத்துவிடுவான். அன்னம்மா யோகனின் முதுகைத் தடவிக் கொடுத்தாள்.
"வாடா ராசா, போய்ச் சாப்பிடலாம். ஐயா சனிக்கிழமை பளையாலை வருவார். அவரிட்டைச் சொல்லி உனக்கு நான் மோதி ரத்தை வாங்கித் தாறன் வா மேனை"
பூனைபோல நடந்து, வந்து யோகன் சுந்தரனின் பாய்ச் சுருளி லிருந்து ஒரு சிறு தகரப் பெட்டியை எடுத்தான். அந்தப் பெட்டியில் தான் சுந்தரனின் செல்வ மெல்லாம் அடங்கியிருந்தது. முழுகப்போன சுந்தரன் மோதிரத்தைக் கழற்றிப் பெட்டியில் வைத்ததை யோகன் கண்டு விட்டான். சுந்தரன் முழுகிவரு முன்பு மோதிரத்தை ஒரு முறை போட்டுப் பார்த்துவிட்டுத் திரும்பவும் இருந்த இடத்தில் வைத்து விடலாம் என்ற எண்ணம் உந்த யோகன் வந்து பெட்டி யைத் திறந்துவிட்டான். அங்கு அந்த மோதிரம் ஒளிவிட்டு அவனைப் பார்த்துக்கண் சிமிட்டியது. யோகனின் இதயம் பூரித்து
138

விம்மியது. ஆள் காட்டி விரலை நீட்டி மோதிரத்தை மெல்ல வருடினான். வாய்க்கு உருசியான உணவைச் சுவைத்துச் சுவைத்து நேரமெடுத்து உண்பதுபோல், மோதிரத்தைத் தானே தொட்டு எடுத்து அணியும் இன்பத்தைக் கணம் கணமாய்ச் சுவைத்து அனுபவிப்பவ னாய் யோகன் மோதிரத்தை எடுத்துத் தன் உள்ளங் கையில் வைத்து
"உன்னை ஆரடா என்டை பெட்டியை எடுக்கச் சொன்னது? யோகனின் முதுகில் பளார் என்றோர் அறை விழுந்தது. மோதிரம் அவன் கையிலிருந்து நழுவிப் பெட்டியில் விழுந்தது. சுந்தரன் ரெளத்திர மூர்த்தியாய் நின்றான்.
“ஏடுப்பியேடா? இனிமேல் எடுப்பியேடா?"
"ஐயோ அடிக்காதையண்ணை! நான் எடுக்கேல்லை! இனிமே எடுக்கேல்லை . அம்மா!... அம்மா!. " முதுகிலும் தலையிலு மாக மாறி மாறி விழுந்த அடிகளைத் தாங்கமுடியாது யோகன் குழறிக்கொண்டு ஓடினான். சுந்தரன் விட்ாது துரத்தினான்
"அம்மா.. அம்மா. அண்ணை அடிக்கிறான். அம்மா!” குசி னியை நோக்கி ஓடினான் யோகன். கிணற்றடியைத் தாண்டும் பொழுது மிதியில் தேங்கி நின்ற தண்ணிரில் யோகனின் கால் சறுக்கி "ஐயோ அம்மா!. தம்பி கிணத்திலை விழுந்திட்டான். அம்மா!..." சுந்தரன் அடிவயிற்றிலிருந்து கத்தினான்.
யோகனின் சடலத்தைப் பிரம்புக் கட்டிலில் கிடத்தியிருந்தார்கள் கட்டில் விளிம்பிலே முழங்கையைப் பதித்துக் கைவிரல் நுனியிலே நெற்றியைத் தாங்கிப் பிரமை பிடித்தவள் போல் யோகனின் முகத் தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அன்னம்மா. இதயத்தைச் சிலிர்க்கும் சோகம் அவள் முகத்தில் கவிந்திருந்தது. துடுதுடுத்தவு னாய் இளங்கன்று போலத் துள்ளித் திரிந்த யோகன் எவ்வளவு அமைதியாய், அசைவற்றுப் பிணம்போல "ஐயோ!..." அலறினாள் அன்னம்மா. அவளுடைய யோகன் பிணம்தானே!. இப்போது வெறும் பிணம்தானே!. தொடமுன் நீரில் மிதக்கும் யோகனின் பேசும் விழிகளை இமைகள் என்றென்றைக்குமாய்த் திரையிட்டு விட்டன. "என்டை அம்மா அல்லே' என்று குழைந்து குழைந்து அவள் கால்களைச் சுற்றி வந்தவன் உயிரற்ற, உணர்வற்ற சவமாகி விட்டான். அன்னம்மா மெல்ல அவன் கையைத் தொட்டாள். சில்லிட்ட ஸ்பரிசம் அவள் உயிர்நிலையை ஊடுருவியது. இந்த அநி யாயச் சாவுக்குத்தான் இப்படி வளர்ந்து வடிவு பெற்றாயோ என்று எண்ணினாள். பளிங்கு போன்று வெண்மையாய் ஒளிர்ந்த அவன் முகச் சருமத்தில் கடைவாயடியில் கறுப்பாய் விளங்கிய மச்சம் முகத்திற்கு எவ்வளவு கவர்ச்சி அளித்தது!.. அன்னம்மா வெறித்த
39

Page 77
கண்களால் யோகனின் முகத்தைப் பார்த்தாள் அந்தப் பால்வடியும்
பச்சை முகத்தில் ஏக்கத்தின சாயை படிவது போன்ற பிரமை
அவளுக்கு. அவள் இதயம் வெந்து துடித்தது.
"அன்னம்மா, சவத்தைக் குளிப்பாட்ட நேரமாம்.” கனவு
கலைந்தவள் போல் அன்னம்மா நிமிர்ந்தாள். அவள் தமக்கை பாக்கி யம் நின்றாள்.
"அக்கா, அவன் மலரின்டை கலியாணத்துக்குத் தோழனாப் போக எவ்வளவு ஆசைப்பட்டான் அந்த. அந்த. மோதிரம் மோதி
ரம் எண்டுதான். உயிரைவிட்டான்!. சுந்தரன்டை பெட்டியிலை இருக்கும். அக்கா, அதை எடுத்து அவன்டை விரலிலை போட்டு விடு. அவன்டை சவத்திலையாவது போடுவம்." அன்னம்மா
விம்மினாள். பாக்கியம் மோதிரத்தைக் கொண்டுவந்து போட்டு விட்டாள். கண்களில் பெருகிய நீரால் அன்னம்மாவுக்கு யோகனின் முகமே தெரியவில்லை. சவத்தைக் குளிப்பாட்டக் கொண்டு போய் விட்டார்கள். யோகனின் கெஞ்சும் கண்களை அவளால் நினைவி லிருந்து அகற்ற முடியவில்லை. நெஞ்சு வலியாய் வலித்தது. யோகன் அவளுக்கு வைத்துப் போயிருக்கும் துன்பம், வாழும் துன்பம். சவத்தைக் குளிப்பாட்டி அன்னம் அவன் முகத்தைப் பார்த் தாள். மெல்ல அவள் பார்வை நழுவி அவன் கைவிரல்களில் விழுந்தது.
"ஐயோ மோதிரத்தைக் காணேல்லைஅக்கா!...” அன்னம்மா கத்தினாள். சற்று முன் அவன் விரலில் மின்னய மோதிரத்தைக் காணவில்லை. அவன் விரல் வெறுமையாய், மூளியாயக் கிடந்தது. அவனைக் குளிப்பாட்டிய இடத்தில் எல்லாம் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தார்கள் கிடைக்க வில்லை. சவத்தைக் குளிப்பாட்டிய போது யோரோ நெஞ்சற்ற புண்ணியவான் அதைக் கழற்றி எடுத்து விட்டார்; கேவலம் திருடிவிட்டார்.
"யோகா, என்டை ராசா!...” அன்னம்மா சுவரில் தலையை மோதி மோதி அழுதாள்.
J9ěsG3LITL Jř7, 1962
140

ஒரு நினைவு
மகேந்திரன் வாசலில் நின்று நாடகக் கொட்டகையை ஒரு நோட்டம். விட்டான். சிதறலாக, ஒரு கையளவு பேர்தான் கூட்டமேயில்லை. மகேன் தன்னை யறியாமலே சுவர்ப் பக்கமாய் ஒரு கதிரையில் அமர்ந்தான். அமர்ந்ததும் தான் அதிர்ச்சியோடு நினைவு தாக்கியது. அன்று பத்து வருடங்களுக்குமுன், இதே போலத்தான், இதே மண்டபத்தில் நுழைந்து சுவர்ப் புறமாய் ஒரு கதிரையில் அமர்ந்தான். ஆனால் அன்று அவன் ஜீவமோகமும், ஆவலும், ஆதங்கமும் “பொங்கும் இதயத்தோடு வத்தான். பூரித்து முழு நிலையடைந்த நீர்க் குழி திடீரென విప్లొడ్డి போல் கணப்பொழுதில் அவன் இதயத்தில் அன்று சூழ்ந்து TSட்ட வெறுமை. மகேனுக்குத் தன் மனமே புரியவில்லை. இன்று எதற்கிTs இந் நாடகத்திற்கு வந்தான்? அவன் விருப்பத்திற்கு மாறாக அவனை இங்கு இழுத்து வந்த சக்திதான் எது? நொந்த இடத்தையே மேலும் நோவூட்டுவதில் இன்பமும் நிறைவும் காணும் குரூர மனப்பான்மை தான் தன்னை இன்று இங்கு வரத் தூண்டியதோ என எண்ணினான் மகேன்.
மகேன் மேடையை மறைத்த திரைச் சீலையைப் பார்த்தான். திரைச் சீலையின் மேற்புறத்தில் தொங்கிய சிவப்புப் பட்டுத் துணி யில் பொன் எழுத்துக்களில் நாடகத்தன் பெயர் பொறிக்கப்பட்டி ருந்தது. நாடகம். புராணக் கதைதான். என்றோ வாழந்து, மகிழ்ந்து, வேதனைப்பட்டு மறைந்து நிழலாகி விட்டவரின் கதை உண்மையில் வாழ்ந்தார்கள் என்றுதான் யார் கண்டனர்? ஏதோ இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் அக் கதா பாத்திரங்களின் மோதல்களும் இன்று மகேன் அறிந்து, புரிந்து கொள்ளக்சுடியனவாய் இருக்கின் றன. அவர்களுக்கும் மகேனுக்கும் என்ன சொந்தம்? ஆமாம். மனிதருக்கு மனிதர் சொந்தமில்லை. மனிதக் கோதுகள் மறைந்து பொய்யாகிவிடுகின்றன. ஆனால் உணர்ச்சிகள் மடிவதில்லை; அவை தொடர் பிழப்ப தில்லை. நிரந்தரமாய் என்றென்றும் அவை வாழ்ந்து கொண்டே யிருப்பன. என்றும். என்றும்.மகேன் பற்களை நெரித் தான். அவன் உதட்டில் பல் பதிந்த இடத்தில் ஒரு சொட்டு இரத் தம் சிவந்து தளும்பிற்று. அந்த உணர்ச்சித் தொடர்ச்சியினை அறுக் கும் முயற்சியில் தான் இன்று இங்கு வந்தானா? அவனை யறியாது அவன்அடிமனத்திலிருந்து அவனை இயக்கிய எண்ணம் இதுதானா? நீரில் மூழ்குபவன் இறுதி முயற்சியாகக் கை கால்களைப்
141.

Page 78
பலவீனமாக உதறிக்கொள்வது போல, இது கடைசி எத்தனமா? மிதமிஞ்சி இறுக்கப்பட்ட வீணைத் தந்திகள் போல் மகேனின் நரம்புகள் இறுகியிருந்தன. அவன் இதயம் எதையோ எதிர்ப்பார்த் துக் கட்டுக் கடங்காது துடித்தது.
மகேன் சுயநினைவு வந்தவானாய்ச் சுற்று முற்றும் பார்த் தான்.மண்டபத்தில் இன்னமும் அவ்வளவு கூட்டமில்லை. அன்று பத்து வருடங்களுக்கு முன எப்படி இருந்திருக்குமோ என்று நினைத் தான் மகேன். அவள் நடிக்கும் நாடகம் என்றால் கூட்டத்திற்கு ந் கேட்கவா வேண்டும்? அவளைப் பார்க்கும் ஆவலில் எத்தனை பேர் காத்திருந்தார்களோ?. ஆனால் அந்த ஒரு நாள் தான் வரவே. யில்லை! அப்படியொரு நாள் விடியவே யில்லை. அவள்.அவள் எல்லோரையுமே ஏமாற்றி விட்டாள். அவனைக் கூட. திரையின் பின்னால் இருந்து எழுந்த மெல்லிய இசையொலி, மண்டபத்தின் மங்கிய விளக்கொளி, நாடக மண்டபத்துக்கே உரித்தான சூழ்நிலை அவனுக்கு ஏதோ கனவுலகில் இருக்கும் உணர்வைக் கொடுத்தன. உள்ளொடுங்கிய நிலையில், கதிரையில் குறுகி , அமர்ந்திருந்த மகேனின் காதுகளில் அவனது இதயத் துடிப்பின் ஒலியே பெருஞ் சத்தமாய் எதிரொலித்தது. மகேனின் உள்ளத்தில் ஏதோ வோர் இனந்தெரியாத அச்சம் ஊடுருவிப் பாய்ந்தது. இதுதான் எல்லை, இதுதான் முடிவு என்ற ஏதோ ஓர் உணர்வு.மகேனுக்குத் திடீ ரெனத் தன பலமெல்லாம் வற்றிவிட்டாற் போன்று ஒரே களைப் பாய் இருந்தது. பத்து வருடங்களாக அவன் உள்ளத்தில் நிகழ்ந்து வந்த உணர்ச்சிப் GLITg/TLLIä56*, கொந்தளிப்புகள் எல்லாம் அடங்கி உள்ளமும் உடலும் ஓய்ந்த உணர்வு ஏற்பட்டது. எல்லாமே தோல்வி தான்! அவன் வாழ்க்கையின் ஆதார சுருதியே தோல்வி தானே! அவன் முயற்சிகள், எத்தனங்கள் எண்ணங்களே தோல்வி யடைவது டுமல்ல, அவனே ஒரு தோல்வி தான். சிருஷ்டியிலே அவன் மாபெரும் தோல்வி. உலகிலே L J Golf கனவுகளிலே வாழ்க்கையைக் கழித்துவிடுகின்றனர். அந்தக் கனவுகள் இல்லா விட்டால் வாழ்க்கை அவர்களுக்குத் தாங்க வொண்ணாத தொன்றாகி விடும். அத்தகைய ஒருவன்தான் மகேன். வாழ்க்கையிலிருந்து அவன் பெற்றுக் கொண்டது சொற்பம்: அதற்கு அவன் கொடுத்தது அதை விடச் சொற்பம். மகேன் கண்ட கனவுகள் பல. ஏதாவது ஒரு துறையிலே சிறப்படைந்து உலகப் புகழ்பெற்று வாழவேண்டுமென்று ஆசைப்பட்டான். தன்னைப் பேர் பெற்றதோர் எழுத்தாளானாகவோ கலைஞனாகவோ கற்பனை செய்து கொள்வான். ஆயினும் தனக்குக் கலையை இரசிக்கும் ஆற்றல் இருந்ததே தவிரக் கலையைப் படைக் கும் ஆற்றல் இருக்கவில்லை என்பதை அவன் விரைவில் உணர்ந்து கொண்டான். மகேனுக்குத் தான் எழுதிய கதை ஒன்றா வது பிரசுரமாகிப் பார்க்கவேண்டுமென்று ஒரே ஆசை. ஆனால் தான் எழுதிய கதைகள் இலக்கிய மல்ல என்று அவனுக்கே பட்டது.
142

அவற்றைப் பிரசுரத்திற்கு அனுப்பாவிட்டாலும், கிழித்துப்போட மன மில்லாது, பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அவன் தந்தையோ மகன் மேற்படிப்புப் படித்து உயர்ந்த அரசாங்க உத்தியோகம் வகிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஆனால் மகேன் தனது பத்தொன்ப தாவது வயதிலாவது எஸ்.எஸ்.ஸி. சோதனை தேறிவிட்ட அதிர்ச்சி யிலோ என்னவோ, அவன் தந்தை இறந்துவிட்டதால், அவன் யார் யாருடைய தயவாலோ கொழும்பில் ஒரு வர்த்தகக் கம்பெனியில் இலிகிதர் ஆனான். மந்த கதியில் சுரத்தற்றுச் சென்ற அவன் வாழ்க்கையில் அசாதரணமாய் எதுவுமே நடக்கவில்லை. மாறி மாறி உண்பதும் உறங்குவதுமான இயந்திரச் சுழற்சியாகவே வாழ்க்கை தோன்றியது. அவனைப்போல் எத்தனை ஆயிரம் பேர், ஏமாற் றங்கள் நிறைந்த தத் தமது வாழ்க்கையிலே நடைப்பிணமாய் உலவி மக்கிப் போகின்றனர்.P எவ்வளவுக்கு மகேனின் வாழ்க்கை சாதாரண கதியில் சென்றதோ அவ்வளவுக்கு அவன் உள்ளம் புதுமை அனுபவங்களுக்காக, உற்சாகத்திற்காக ஏங்கியது. நாளையே தன் வாழ்க்கையிலும் விசேஷம் தோன்றக் கூடும் என்ற நம்பிக்கையை அவன் முற்றாக இழக்க வில்லை. தன் வாழ்க்கை பயனற்றது என்ற உணர்வின் பிடியில் அவன் துடித்துக்கொண்டிருந்த போது தான், அவன் இதுவரை உணாந்த ஏமாற்றங்களுக் கெல்லாம் ஈடு செய்வது போல் அவள் அவன் பாதையில் குறுக்கிட்டாள்.
மகேன் ஒரு வார லிவில் தன் தாயைப் பார்க்க ஊர் வந்தடைந்தான். மகேனின் விட்டுப் பக்கத்து வீடு இரண்டு மூன்று ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்தது. ஆனால் இம்முறை அவன் தன் வீட்டுப் படலையை அடைந்ததுமே அடுத்த வீட்டில் ஆட்கள் குடி யிருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டான். தன் தாயை விசாரித்ததில் அங்கு ஒரு நாடக நடிகையும் அவளது தந்தையும் வசிப்பதாகவும, அவர்கள் பொதுவாகத் தினமும் காலையில் யாழ்ப்பாணம் சென்று இரவில்தான் திரும்புவார்கள் என்று மறிந்தான். அன்று மத்தியானம் சாப்பிட்ட பின் மகேன் திண்ணையில் படுத்திருந்தான். தூக்கம் அவன் கண்களைச் சொருகியது. நித்திரைக்கும் விழிப்புக்கும் இடையே மயங்கிய நிலையில் மெல்ல, இனிய பாட்டொலி காற்றில் மிதந்து வந்து அவன் செவிப்புலனின் புகுந்தது. முதலில் மகேன் தான் தூங்கிக் கனவு காண்பதாகவே நினைத்தான். ஆனால் இலேசாக விழிப்பு ஏற்பட்டதும் யாரோ உண்மையில் பாடுவதை உணர்ந்தான். திண்ணையில் எழுந்து நின்று மகேன் ஆச்சரியத்தோடு அடுத்த விட்டுத் தோட்டத்துப் பக்கம் நோக்கினான். அங்கு செழித்துக் குடைவிரித்த ஒரு மாவின் கீழ் ஒரு பெண் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தாள். மகேன் அந்த இனிய கானத்தில் கட்டுண்டவனாய்த் தன்னையுமறியாமல் இரு வீடுகளையும் பிரித்த வேலியருகே போய் நின்று அவளையே கண்கொட்டாமல் பார்த தவாறு நின்றான். அவன் பார்வையை உணர்ந்தவள் போல் அவள்
143

Page 79
திடீரென்று திரும்பிப் பார்த்தாள். பாதியில் துண்டிக்கப் பட்டது போல் பாட்டு நின்றது. அவள் குரலின் ஒலி தேய்ந்து காற்றோடு கலந்து மறைந்தது. அவள் அப்படியே மகேனைப் பார்த்தபடியே இருந்தாள். மகேனுக்குச் சுய நினைவு திரும்பியது. சுதாகரித்துக் கொண்டான்.
“மன்னிக்கவேண்டும். உங்கள் இனிய பாட்டொலி கேட்டுத்தான் வந்தேன். தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள்.” மகேன் தயங்கி னான். அவள் மெல்ல எழுந்து ஆறுதலாக நடந்து வேலியருகே வந் தாள். மகேன் எண்ணுந் திறனிழந்து நின்றான். தன் கண்முன்னே குலுங்கிய அழகுக் கொள்ளையிலே தன் இதயத்தைப் பறிகொடுத்து நின்றான். தந்தத்தின் நிறம் கொண்ட அவள் முகத்தில் விசால கருநீலக் கண்கள் விரிந்து அவனைக் குறும்பாக நோக்கின. இளஞ் சிவப்புப் பாய்ந்த மெல்லிதழ்கள் குவிந்திருந்தன. நீண்ட மிருதுவான் கழுத்து அதைத் தொட்டுத் தடவ மகேனின் விரல்கள் துடித்தன. அவள் தலையைச் சற்றே ஒருபுறம் சாய்த்து "நான் அவ்வளவு நன்றாகப் பாடுகிறேனா?” என்றாள்.
"என்னது. என்ன சொன்னீர்கள்?.” மகேனின் தடுமாற் றம் அவ்ளுக்கு நகைப்பூட்டியது. மறுபடியும் தன் கேள்வியைத் தொடுத்தாள்.
"நன்றாகவா?. இவ்வளவு மதுரமான கீதத்தை நான் இது வரை கேட்டதேயில்லை!. ஆமாம், நீங்கள் யார்? இவ்வளவு ஞானத் தைக் குடத்துள் விளக்காய் வைத்திருக்கறிர்களே!." உணர்ச்சி வேகத்தில் அவனுடைய மெலிந்த, நீண்ட முகம் சிவந்து, கண்கள் ஒளிர நெற்றியில் கலைந்து புரளும் கேசத்தோடு மகேன் அவன் அதை உணராத போதும் ஒருவித பரிதாப அழகோடு தோன்றி 6TT6.
"நானொரு நாடக நடிகை. என்னைப் பற்றிக் கேள்விப் பட்டி ருப்பீர்களோ தெரியாது. என் பெயர் சுந்தரவதனி.." என்றாள்
FpU 6MT. DIT 35.
"சுந்தரவதனி மகேன் தன் நாவிலே பெயரைப் புரளவிட்டான். "அழகான பெயர். சுந்தரவதனி. * கேலிச் சிரிப்பிலே அவள் உதடுகள் நெளிந்தன. மகேனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. சிறிது நேரம் இருவரும் மெளனமாய் நின்றனர். திடீ ரென்று எதையோ நினைத்துக் கொண்டவள் போல் எதுவுமே பேசாது அவள் திரும்பி வீட்டை நோக்கி நடந்தாள். அவள் நடைக் கேற்ப அவள் தொடைகளில் அவளுடைய நீண்ட பின்னல் மாறி மாறி விழும் அழகை இரசித்தவாறு நின்றான் மகேன்.
144,

எதிலும் ஒட்டாமல் இயங்கிவந்த மகேனுக்கு வாழ்க்கையில் பிடிப்பும் பற்றுதலும் தோன்றியது. அவன் உள்ளத்தில் ஏதோ ஒரு மடை திறந்தாற் போல உணர்ச்சி கொந்தளித்துப் பொங்கியது. வதனி அவனை ஆட்கொண்டுவிட்டாள். மகேன் அவள் அழகிலே வசியமாகி விட்டான். வதனியின் அழகு ஒளி யேற்றி மறு கணம் பொருளற்றுப் போகும் அழகல்ல. எவ்வளவு காலமானாலும் தெவிட் டாத அழகு. வாழுந் தன்னமையுள்ள அழியாத அழகு அது. வெறும் மேனியின் வசீகரம் மட்டுமல்ல அவள் அழகு. ஆனால் அந்த உருவ அழகுக்கு உயிரூட்டிய ஆத்மாவின் சக்தியே உள்ளத்தை ஊடுருவியது. வதனி வீட்டிலிருக்கும் சமயங்களிலெல்லாம் மகேன் அவளைப் பார்க்கப் போவான். சில சமயங்களில் அவள் கலகலப் பாக வெகு நேரம் அவனோடு பேசுவாள். மற்றும் சமயங்களில் "ஆம்" இல்லை என்பதைத் தவிர அவளிடமிருந்து வேறெந்த வார்த் தையையும் வருவிக்க இயலாது. மகேனுக்கு அவளைத் தவிர வேறு எதிலுமே புலன் செல்லவில்லை. வதணியின் மேல் அவன் கொண்ட காதலின் வேகம் சிலசமயம் அவனுக்கே அச்சமூட்டியது. வதணிக்கு அவனிடத்து ஒருவித பரிவும் அன்பும் ஏற்பட்டன. அவன் மறைக்க நினைக்காத காதல் அவள் மனதை நெகிழ வைத்தது.
மகேனின் ஒரு வார லிவு ஒரு நாள் போல ஓடி மறைந்தது. அன்றுதான் அவன் லிவின் கடைசி நாள். அவர்கள் சந்தித்த நாளன்று வதனி அமர்ந்திருந்த மாவின் கீழ் இருவரும் இருந்து பேசினார்கள்.
"இன்னுமொரு கிழமைக்கு லிவு எடுக்கட்டுமா என்று நினைக்கிறேன்" என்றான் மகேன். அவனை ஒரு கணம் ஊடுருவிப் பார்த்த வதனி ஒன்றும் பேசாமல் புல் ஒன்றைக் கிள்ளி, நுனிப் பல்லால் அதைச் சப்பலானாள். திடீரென்று பேசியே தீரவேண்டும் என்று தன்னுள் எழுந்த தூண்டுதலை மகேனால் அடக்கமுடியவில்லை. அவனையும் மீறி வார்த்தைகள் பீறிட்டெழுந்தன.
“எனக்கு. எனக்கு இங்கிருந்து போகவே மனமில்லை. என்ன வதனி, உனக்குத் தெரியவில்லையாP. வதனி, நான் மிகவும் அற்ப மானவன். வாழ்க்கையில் நான் சாதித்தது ஒன்று மில்லை. எவ்வித விசேஷத்திறமையும் எனக்கில்லை. உலகின் மீது நான் எந்த அடை யாளமும் விட்டுச் செல்லப் போவதில்லை. அழகுக் கோயிலான உனக்கு நான் ஏற்றவனே யல்ல. இருந்தும் நான் உன்னைக் காத லிக்கிறேன். என் சர்வசாதாரண வாழ்விலே நிகழ்ந்த ஒரேயோர் அற்புதம் நீதான் வதனி, வாழ்க்கையில் பொருளுண்டு, இப்பிர பஞ்சத்திற்கு அர்த்தமுண்டு என்று எனக்கு உணர்த்தியவள். நீதான். உன்னை. உன்னைக் காதலிக்கிறேன்." LDG3560fait குரல் மெளனத்தில் ஒடுங்கியது. அந்தப் பேச்சுப் பிரவாகத்தோடு அவன்
145

Page 80
துணிவும் மறைந்து விட்டது. மகேன் அச்சத்தோடு அவளைப் பார்த்தான் அவள் எப்போது சிரிப்பாள் எப்போது சினப்பாள் என்றுதான் அவனால் கண்டுபிடிக்கவே முடியாதே. வதணியின் முகத்தில் சோக மேகம் கவிந்தது. சிறிது நேரம் மெளனமாய் இருந்தவள், சிறு குழந்தையிடம் பேசுவதுபோல் பரிவும் மென்மையும் தோய்ந்த குருலில் பேசினாள்.
“மகேன்! நான் நடிகை. என் நினைவு தெரிந்த நாள் முதல் நடிகையாகவே இருந்து வருகிறேன். என் தொழிலில், உங்கள் உள்ளத்தில் எழுவது போன்ற களங்கமற்ற உணர்ச்சிகளைக் காண முடியாது. அன்புக்கும் வழிபாட்டுக்கு முரிய பொருளாய்ப் போற்றப் படும் இன்பத்தை இந்தச் சில நாட்கள்தான் அனுபவித்தேன். நான் நான் ஒரு பெண் என்பதை நான் மறந்து எவ்வளவோ காலமாகி விட்டது மகேன்." ஒரு கணம் தன் இதயத்தின் வலியிலே விக்கித்து நின்றான் மகேன்.
"இல்லை யில்லை. வதனி, இல்லை. பல்லாண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூப்போல, உன்போன்ற பெண்ணழகும் பல்லாண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றும். உன் அழகு இன்று மலர்ந்து நாளை மடியும் மலரின் அழகல்ல வதனி, யுகங்கள் மாறினும் தம் தன்மை மாறாத கடலின், மலையின் அழகு போன் றது உன் அழகு. உன்னை எம்மனிதனுக்காவது சொந்தமாக்குவதே பெரும் பாவம். ஆனால் உன் தூய அழகை என் சொந்தமாக்க ஏங்கித் துடிக்கும் என் மனதை என்னால் கட்டுப்படத்த முடிய வில்லையே!. வதனி, இனி நீ நாடகங்களில் நடிக்கவேண்டாம். என்னை. என்னை மணந்து கொள்வாயா? ஒரு நீண்ட கண நேரம் வதனி மகேனை உற்று நோக்கினாள். அவள் கரிய கண்க ளில் தேங்கிய உர்ச்சியை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
"ஏன் கூடாது மகேன்?" வதனி கலகலவென்று கேலியாகச் சிரித்தாள். நான் உங்களை, ஏன் இன்றே, இப்பொழுதே மணக்கக் கூடாதுP மகேனன் முகம் சுருங்கியது.
"கேலி செய்கிறாயா வதனிP."
"இல்லவே இல்லை மகேன். ஒரு நிமிஷம் பொறுங்கள்.” வதனி துள்ளி எழுந்தாள். சேலைத் தலைப்பைக் கோலிப் பிடித்தவாறு அதற்குள் மல்லிகைச் செடியிலிருந்த மொட்டுக்களைப் பறித்தெடுத் தாள். ஐந்து நிமிஷத்தில் அவள் ஒரு சிறு பூச்சரம் கட்டிவிட்டாள். சரத்தை மாலையாய்த் தூக்கிப் பிடித்தவள் அவளுக்கே உரித்தான கேலிச் சிரிப்பைச் சிந்தினாள்.
“மகேன்! இதோ, பொன்தாலி இல்லாவிட்டாலும் பூத்தாலி.
146

மகேன் மந்திரத்திலடங்கியவன் போல் அதை வாங்கினான்.
"இப்படிச் சொல்லுங்கள், மகேன். வதனி, இறைவனும் இயற் கையும சாட்சியாக உன்னை என் மனைவியாய்க் கொள்கிறேன்." என்றாள் வதனி. மகேன் சொன்னான்.
"இறைவனும் இயற்கையும் சாட்சியாக உன்னை என்மனை வியாகக் கொள்கிறேன்". மகேன் பூச்சரத்தை வதனியின் கழுத்தில் கட்டினான் உடனே.
"ஆனால் வதனி, உண்மையில் என்னை மணந்துகொள்வாயா? என்றான். வதனி சிறுநகையோடு அவனை நோக்கினாள்.
"e 6öotoopulai) உங்களை மணந்துகொள்கிறேன். மகேன், என்றாள். இருந்தும் மகேனுக்கு இதெல்லாம் கனவுதான் என்ற உணர்வு கலையவில்லை.
"அப்படியானால் நம் கல்யாணத்தை எப்போது வைத்துக் கொள்வோம" என்றான் மகேன். ஆனால் அவள் ஏதோ நினைவில் ஆழ்ந்துவிட்டாள். நீண்ட நேரத்திற்குப் பின் நெட்டுயிர்த்தவள் திடுக் கெனத் தன் சூழலுக்கு விழித்துக் கொண்டாள். எனினும் அவன் கேள்விக்கே பதிலிறுத்தாள்.
" நீங்கள் இம் முறை கொழும்புக்கு போய் வாருங்கள். புன்பு கலியாணத்தை வைத்துக் கொள்ளலாம். ஏன், எப்படியும் இருப தாம் திகதி வருவீர்களல்லவா?. மறந்து விட்டீர்களா? அன்றுதான் நாடகத்தின் முதற்காட்சி. கல்யாணத்தின் முன் சுந்தர வதணியின் கடைசி நாடகமல்லவா? என் பாட்டைக் கேட்க வருவீர்கள்தானே?." என்றாள்.
"வராமல் இருப்பேனா வதனி? நாட்களை எண்ணிக் கொண்டி ருப்பேன்."
"வருகிறேன் வதனி,” மகேன் திரும்பி நடந்தான். வதணியின் கேலிச் சிரிப்பொலி அவனைத் தொடர்ந்து விரட்டி வந்தது.
இருபதாம் திகதி அந்த இருபதாம் திகதிதான் அவனுக்கு விடியவே யில்லையே! அந்த நாடகம் நடக்கும் வரைதான் அவள் காத்திருக்கவில்லையே. அவன் யாழ்ப்பாணத்திற்குப் போகவேண்டிய தேவையில்லாமலே செய்துவிட்டாள் வதனி. அதற்காக அவளை அவனால் என்றுமே மன்னிக்க முடியாது. அவள் இறந்துவிட்ட செய்தியை அவன் பத்திரிகை வாயிலாகத்தான் அறிந்தான். நாடக
147

Page 81
நடிகை சுந்தரவதனி மாரடைப்பால் இறந்து விட்டாளாம்!. பத்திரிகைச் செய்தி கூறிற்று. ஆமாம், அவன் கொழும்பில் கவலை யற்று ஏதோ இன்பக் கற்பனைகளில் திளைத்திருந்த அதே வேளை யில் அவள் மாரடைப்பால் இறந்துவிட்டாளாம். மகேன் வதனியின் செத்த வீட்டிற்குப் போகவில்லை. அன்று அவளை விட்டுப் பிரிந்த தன் பின் அவளை அவன் பார்க்கவேயில்லை. அவள் தசையும் இரத்தமும் ஜீவனுமுள்ள வதனியாய் எந்நேரமும் எக் கணமும் அவனோடு வாழ்ந்து கொண்டிருக்கையில் அவளது உயிரற்ற உடலை அவன் எதற்காகப் பார்க்கவேண்டும்? ஈருடலும் ஒருயிருமாய் இருப்பதே பிரிவென்றெண்ணி உடலை நீத்து அவனுள் ஒன்றி விட்டாளோ?. ஹூம்!. அவன் வாழ்க்கையில் எப்பொழுதுமே இப்
படித்தான்! கைக் கெட்டியது வாய்க்கெட்டுவ தில்லை. ஆனால் அவன் கனவுகளின் இந்த முடிவு ஒரு விதத்தி அவனுக்கு ஆச்சரிய மளிக்கவில்லை. இப்படி நடக்காவிட்டால் நிகழ்ச்சிக் கோவை
பூர்த்தியடையுமா?. வதனியினுடைய மரணத்தின் அதிர்ச்சி காலப் போக்கில் மழுங்கிற்று. ஆனால் நினைவின் பசுமை தேய்வதா யில்லை. வதனியின் நினைவிலிருந்து மகேனால் விடுபட முடிய வில்லை. உயிர்துடிக்கும் வசீகர நினைவாய் வதனி மகேனை ஆட்கொண்டு பத்து வருடங்களாகிவிட்டன. அந்தப் பத்து வருடங் களில் வதனி அவன் வாழ்க்கையில் விட்டுச் சென்ற சூனியத்தை நிரப்ப, கைகூடாக் கனவின் வதைக்கும் நினைவை அழித்துவிட அவன் பட்டபாடு! தன் இதயத்தின் இருள் மூலைகளை நிரப்பி நிலவுலகில் கால் ஊன்ற அவன் வலிந்து தேடிக் கொண்டவற்றுள் இரண்டுதான் அர்த்தமற்ற தொரு கல்யாணமும், பேருக்கொரு மனை வியும். ஆனால் வதனியை அவனால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? சிதைந்து விட்ட வாழ்க்கையின் சிதிலங்கள் தான் அந்தப் பத்து வருடப் பாதையில் சிதறிக் கிடந்தன. அவன் பார் வைக்கும் பிடிக்கும் அடங்கிய பொருள்களும், அவன் அன்றாட வாழ்க்கையின் களமான இந்த ஸ்தூல உலகும் உருவற்ற, உண்மை யில்லாத பனிப்படலமாய் மங்கி இருண்டு, உயிரும், உணர்வும், உருவுமுடைய ஒரு நினைவின் பின்னணியாகி விட்டன. மகேனுக்குத் தன் வாழ்க்கையிலும் பார்க்க அந்த நினைவே உண்மையாகிவிட்டது.
அந்த நினைவிலே வதனியும் அவனும் இரண்டறக் கலந்து சங்கமித்துவிட்டனர். அவனை இயக்குவித்ததே அந்த நினைவுதான். எல்லாமே தேய்ந்து கரைந்து இன்மையாகி விட, அந்த நினைவு மட்டுமே மிஞ்சியது. அந்த நினைவின் உண்மையில் தான் வாழ்ந் தான். அந்த நினைவுக்கு வெளியே அவனுக்கு வேறு உலகம் இருக்கவில்லை: இருக்கவேண்டும் என்று அவன் விரும்பவு மில்லை.
ஆனால் பத்து வருடங்களுக்குப் பின், இப்போது, இந்த நாடக விளம்பரத்தைக் கண்டான். பத்து வருடங்களுக்குப் பின் அதே
148

நாடகம். ஆனால் அவள் நடித்திருக்கவேண்டிய பாத்திரத்தில் யாரோ ஒருத்தி நடிப்பாள். மின்னல் போல் பைத்தியகார எண்ணம் அவன் மனதில் எழுந்தது. இந் நாடகத்தை அவன் சென்று பார்த்தால் அவனைப் பிணித்த பந்தம் அறுந்து, அவனை ஆட்கொண்ட வதனி யின் உருவம் தேய்ந்து மறைந்து விடும் என்று நினைத்தான். இருந் தும் அவன் இதயத்தில் ஏதோ சஞ்சலம். அன்றி அது சபலமா?. ஏதோ ஓர் இனந் தெரியாத உணர்ச்சியின் பிடியிலே ஒரு முடிவுக்கு வர இயலாது ஊசலாடினான். ஆனால் இறுதியில் நாடகத்திற்குப் போவது என்று முடிவு செய்துவிட்டான். மகேன் கைக் கடிகாரத் தைப் பார்த்தான். ஆறரை ஆக இன்னும் ஐந்து நிமிஷமேதான். அவன் இதயத்தை நெருடிய உணர்ச்சி என்ன?.அச்சமா? வதனியை இழந்துவிடப் போகும் அச்சமா?. அல்லது அவள் நினைவிலிருந்து விடுபடப்போகும் ஆறுதலா? ...மகேன் மெல்லக் கண்களை உயர்த்தித் திரைச்சீலையைப் பார்த்தான். இதென்ன மனப்பிரமை அந்தக் கறுப்புத் திரைசீலையில் வதனியின் தந்த நிற முகம் அவன் கண், களுக்குத் தோன்றி நிழலாடியது. அந்த முகத்தின் கருநீலக் கண்கள் சிரிப்பிலே மிதந்தன. அதன் இளஞ் சிவப்பு மெல்லிதழ்கள் கேலி யாய் நெளிந்து பல் தெரியச் சிரித்தன. மகேன் கண்களை இறுக மூடிக்கொண்டான். "இன்னும் சில நிமிஷங்கள் தான்”, என்று நெரித்த பற்களுடே முணுமுணுத்தான் மகேன்.
பெப்ரவரி, 1964.
149

Page 82