கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்று நோக்கில் சில கருத்துக்களும் நிகழ்வுகளும்

Page 1
மாற்று நோக்கில்
நிகழ்வு
žės
ヴJ1982
 
 

சில கருத்துக்களும் புகளும்
s
RC
2002
Ué9ůUnéProuň
செ.யோகராசா

Page 2

மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
Ilji IIT fifulf b6VIIHj GJ. EIIIbJTjT
தலைவர், தமிழ்த்துறை, கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம் 2004

Page 3
தலைப்பு
பதிப்பாசிரியர்
பதிப்பு
elt-60L ஓவியம்
அட்டை வடிவமைப்பு
அச்சு
ଗଣନା6ff\uf(b
Title
Editor
Edition
Cover Designed
Printing
Publishers
; மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
கலாநிதி செ. யோகராசா
: 2004
; பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம்
: ö, ԼՕԱյՄ6ն
குமரன் அச்சகம்
201, டாம் வீதி கொழும்பு - 12 தொ.பேசி - 2421388
; பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம் (C)
58, தர்மராம வீதி கொழும்பு - 6
: Maatru Nookil Sila Karuttum Nigalvugalum : Dr. S. Yogarajah
: 2004
: K. Maiyuran
: Kumaran Press (IPvt) Ltd.
20l., Dam Street Colombo - 12 Tel. - 242 388
: Women's Education and Research Centre C
58, Dharmarama Road Colombo - 6

முன்னுரை
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட செய்திமடலில் பல முக்கியமான விடயங்களும் பதிவுகளும் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இவற்றைத் தொகுத்து ஒரு சிறு நூல்வடிவமாகக் கொண்டுவரலாமென இத்தகைய விமர்சனங்கள் எம்மை ஊக்குவித்தன. எல்லாவற்றையும் ஒன்று திரட்டி நாம் அவற்றை வாசித்தபொழுது அக்கருத்து எங்களுக்கும் சரியாகத் தோன்றியது. இதனாலேயே இதை நூல் வடிவமாகக் கொண்டுவர முயற்சித்தோம். பல ஆண்டுகளாகப் பல்வேறு விடயங்கள் பெண்நிலை நோக்கில் எம்மை எட்டின அவற்றிற்கு விமர்சனமும் எதிர்ப்பும் சில சமயங்களில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளே பிரவாகினியின் விடயங்களாக அமைந்தன. அவற்றை ஒன்றுசேரத்திரட்டிப் பார்க்கும். பொழுது அவற்றின் பரிமாணங்களும் தாற்பரியங்களும் முக்கியமானவை என்று கருதினோம். இப்பணியைச் செவ்வனே செய்து முடிப்பதற்காக திரு. யோகராசா அவர்களை அணுகினோம். அவரும் மனமுவந்து இப்பணியை மேற்கொண்டார். பிரவாகினியில் வெளிக்கொண்டு வரப்பட்ட விடயங்கள் யாவும் ஒருவருடைய முயற்சியல்ல. இது பெண்கள் கல்வி ஆய்வுநிறுவன அங்கத்தவர்களின் கூட்டு முயற்சி. அந்த ரீதியில் பல புரிதல்களும் வித்தியாசங்களும் இதில் அடங்கியுள்ளன. அவற்றைப் பிரித்து, தொகுத்து, வகுத்து மூன்று பகுதிகளாக திரு யோகராசா அவர்கள் தந்துள்ளார். அவருடைய முயற்சி பாராட்டுக்குரியது. பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம் அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறது.
இந்நூலை வெளிக்கொண்டு வருவதன் குறிக்கோள்கள் யாது?
இந்நூல் யாருக்குப் பயன்படும்?

Page 4
இவ்விரு கேள்விகளையும் நாம் எழுப்பி இதற்கு விடைகாண முயன்றோமானால் கீழ்வருவனவற்றை நாங்கள் முன் வைக்கலாம்.
பெண்ணியம், பெண்விடுதலை, பெண்நிலைநோக்கு என்றால் என்ன? இவை ஒரு வீண் சலசலப்பா? வீண் கோஷங்களா? பெண்களுக்கு என்னதான் பிரச்சினை? அவர்கள் கல்வி கற்று, உத்தியோகம் பார்த்து, மணம்முடித்து தாய்மார்களாகி, உண்டு உறங்கி சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள். ஏன் அவர்களை ஆண்களிலிருந்து பிரிந்து அவர்களை வாழ்வில் ஒரு பகுதியாக்கி அவர்களை நாம் பார்க்க வேண்டும்? இப்படியான கேள்விகளைப் பலரும் பலநிலைகளிலும் பல சமயங்களிலும் இன்னும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மேடைகளிலும் வீடுகளிலும் கட்டுரைகள், நூல்கள் வழியாகவும் இக் கேள்விகளை எழுப்புகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வேளை சில விடயங்களைப் புகட்டலாம். சில விடயங்களை விரிவுபடுத்தலாம். சில விடயங்களின் புரிதலைப் பூரணமாக்கலாம்.
அரச சார்பற்ற நிறுவனங்களின், மேலும் மனித உரிமைகள் பேசும் நிறுவனங்கள் தங்களுடைய செயற்திட்டங்களில் பெண்நிலை நோக்கையும் ஒருங்கிணைந்திருப்பதை நாம் காண்கிறோம். அந்நிறுவனங்களில் போதிய புரிதலின்மையும் ஒரு மயக்கநிலமையும் தோன்றிக் கொண்டேயிருக்கிறது. அந்நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்நூல் பயன்படும் என நாம் கருதுகிறோம்.
அடுத்ததாக ஊடகங்களில் வேலை பார்ப்போருக்கும் இந்நூல் பலவிடயங்களைப் புரியவைக்கும் என நாம் நம்புகிறோம்.
செல்வி திருச்சந்திரன் பணிப்பாளர் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம்

ஓர் அறிமுகம்
இச் சிறுநூற் தொகுப்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வரும் செய்தி மடலான 'பிரவாகினி’ இதழ்களிலிருந்து (1.15) தெரிந்தெடுக்கப்பட்டவை. நீங்கள் பிரவாகினி வாசகராக இருந்திருப்பினும் கூட செய்தி மடலொன்றில் இத்தனை விடயங்கள் இடம் பெற்றிருந்தனவென்பது உங்களுக்கு வியப்பளிக்கக் கூடும். இன்னொரு விதமாகக் கூறின், ஏனைய செய்திமடல்கள் போன்று ‘பிரவாகினி வெறும் செய்திகள் கொண்ட மடலாக மட்டும் வெளிவரவில்லை; செய்திகள் கனதியாக இருந்துள்ளன; செய்திகளுடே கனதியான விடயங்கள் இடம் பெற்றிருந்தன என்பது இவற்றிலிருந்து புலப்படுகின்றன எனலாம்.
இத்தொகுப்பு முயற்சியினை மேலோட்டமாக அவதானிக்கின்ற போது இலகுவான தென்பதுண்மை. இன்னொரு விதத்தில் நோக்கின் இங்குமங்கும் தொடர்பின்றி செய்திகள் - துணுக்குகள் - சிறு கட்டுரைகள்ஆக உள்ளவற்றை தொகுத்து, வகுத்து, இணைத்துத் தருவதென்பது கடினமான பணியும்கூட. எவ்வாறாயினும் பாரதியார் பாடியுள்ளது போன்று, இறுதி நிலையில், "கல்லை வயிரமணியாக்கல், செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல், வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்"ஆக இந்நூல் பரிணமித்துள்ளதென்று நம்புகின்றோம்.
இச்செய்தி மடலிலுள்ள விடயங்கள் இன்றைய பிரச்சினைகள்’, 'பாராட்டுக்கள்’, ‘பதிவுகள்’ என்ற மூன்று அடிப்படைகளிலே வகைப் படுத்தப்பட்டுள்ளன. உங்களிற் சிலர், 'பதிவுகள் தேவையற்றவையென்று கருதுவீர்கள். எனினும், ஆய்வாளருக்கும் ஆர்வலருக்கும் அவ்விடயங்கள் அவசியமானவை; தொடர்ந்து தேடலுக்குப் பயன்படுபவை என்ற விதத்தில் அவசியமானவை என்றே கருதுகின்றோம். இத்தகைய முயற்சியிலிடுபட வாய்ப்பளித்த பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக.
Qaf, CuITSJITFI

Page 5
முன்னுரை
ஓர் அறிமுகம்
பகுதி - 1:
தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இன்றைய பிரச்சினைகள் பெண்களும் வன்முறையும் தொழிலுலகும் பெண்களும் குடும்பமும் பெண்களும் தொடரும் அவலம் : சீதனம் புதிய கொடுமைகள் அரசியலில் பெண்களின் பிரவேசம் : சில கேள்விகள்
தொடர்பூடகங்களில் பெண்கள் : சில அவதானங்கள்
பகுதி - I : வரலாற்றில் தடம் பதித்தவர்கள்
இலங்கையில். இந்தியாவில். வங்காளத்தில். ஈரானில்.
பகுதி - I : பதிவுகள்
பெண்களும் கருத்தரங்கு - கலந்துரையாடல் நிகழ்வுகளும்
உலக பெண்கள் மாநாடுகள் கவனத்திற்குரிய நூல்கள்
தெரிந்தெடுத்த கவிதைகள்
vii
03
16
32
37
39
45
47
55
64
68
69
73
79
84 87

தற்காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும்
இன்றைய பிரச்சினைகள்

Page 6

பெண்களும் வன்முறையும்
பெண்கள் மீது ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்ற வன்முறைகள் நீண்டகால வரலாறு கொண்டவை. இன்று உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்று வருபவை.
எனினும், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச ரீதியாகவும் தேசிய மட்டத்திலும் பெண்கள் மீதான வன்முறைகள் முக்கிய பிரச்சினையாக எடுக்கப்பட்டன. பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கான ஐ.நா.சபையின் இணக்க ஒப்பந்தம் 1979ல் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் இந்த உறுதிப்படிவத்திலும் பாலியல் வல்லுறவையும் வீட்டினுள் நடைபெறும் வன்முறையையும் தடுக்கும் விதிகள் சேர்க்கப்படவில்லை. இதனால் 1993ல் வீயன்னாவில் கூடிய உலக மகளிர் அமைப்பு பெண்கள் மீதான வன்முறைக்குத் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.சபையை வற்புறுத்தியது. அதன் பின்பே ஐ.நா.பொதுச்சபை அதுபற்றிய அறிக்கையை வெளியிட்டது; அது மட்டுமன்றி, ஐ.நா.சபை, பெண்கள் மீதான வன்முறைகளுக் கெதிரான சிறப்பு ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயினும், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய வன்முறைகளுள் பாலியல் வன்முறைகள் அவற்றுள் கொடூரமான பாலியல் வல்லுறவு சார்ந்த வன்முறைகள் என்பன அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.

Page 7
4. மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
1. இலங்கையில்.
வேலைத்தலங்களில்.
வேலைத்தலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பாலியல் வன்செயல்கள் சகலவிதமான வேலைத்தலங்களிலும் கீழ்மட்டத்திலிருந்து உயர் அதிகாரிவரை எல்லா மட்டத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றிற்கு ஆளாகும் பெண்கள் இவற்றைப்பற்றி முறைப்பாடு செய்தாலும் அங்குள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர் அதைக் கவனத்தில் கொள்வதில்லை. இன்றைய சமுதாயத்தில் பெண் ஆக்கத்துறை. மூளைசார்துறை, பொருளாதாரத்துறை முதலியவற்றில் தமது முதன்மையான பங்களிப்பைச் செய்கின்றாள். இப்பாலியல் துன்புறுத்தல் அவளது ஆக்க முயற்சிகளுக்கே இடைஞ்சலாக உள்ளது.
இப்பாலியல் துன்புறுத்தல்கள் பின்வருமாறு பலவகைகளில் அமைகின்றன:
1. உடல் தொடர்பு அல்லது அதற்கான எத்தனங்கள்
2. பாலியல் சலுகைக்கான வேண்டுகோள் கோரிக்கை.
3. பாலியல் சார்ந்த பகிடிப் பேச்சுக்கள்.
4. நிர்வாணப்படங்களைக் காட்சிப்படுத்துதல்.
5. விரும்பத்தகாத வகையில் உடலால் வாய்மொழியால் அல்லது வாய் மொழியின்றி பாலியலைக் காட்டும் நடத்தை.
சுதந்திர வர்த்தக வலயத்தில் .
இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயத்தில் வேலைபார்க்கும் பெண்கள் இப்பாலியல் வன்செயல்களால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள். பதவி உயர்வு பெறுவதற்காகப் பெண்கள் மேற்பார்வையாளர்கள், முகாமையாளர்களுடன் உடலுறவு கொண்ட சம்பவங்களும் உண்டு. கவர்ச்சியான பெண்களுக்கு அவர்களின் கவர்ச்சிக்காகக் கூடுதல் கொடுப்பனவு, சலுகை, பதவி உயர்வு முதலியவற்றை நிர்வாகம் அளித்த பல சந்தர்ப்பங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இச்சலுகைகளை

பெண்களும் வன்முறையும் 5
அளிப்பவருடன் இப்பெண்தொழிலாளர்கள் உடலுறவு புரிய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறதாம்.
(பெண்ணின் குரல், டிசம்பர் 1999, இதழ் 19)
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடி மத்திய கிழக்கிற்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்பவர்கள் அங்கு தொழில் வழங்குபவர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். "திரைகடல் ஒடியும் திரவியந்தேடு" என்பதற்கமைய, திரவியம் தேடச்சென்ற எத்தனையோ பெண்கள் நாம் திகிலடையும் வகையில் கொலை செய்யப்பட்டு பிணமாக வரும் சோகக் கதைகள் சொல்லில் அடங்கா.
பெருந்தோட்டங்களில்.
அடுத்து பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கப்படுவது அவர்களின் வாழ்க்கையின் அம்சமாகிவிட்டது. 1981இல் (பெண்ணின்குரல்) வெளியிடப்பட்ட ஆய்வொன்றின்படி மேலதிகாரியின் பலவந்தத்திற்கு பாலியல் தேவையை பெண்கள் அளிப்பது அங்கே எப்போதும் நிலவுகின்ற ஒரு காட்சியாகும். சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களினது பாராமுகப்போக்கினால் பாதிக்கப்படும் பெண்களை முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் ஊக்கப்படுத்துவதில்லை.
தொழில் நிறுவனங்களில்.
பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுபவர்கள் கல்வியறிவற்ற ஏழைப் பெண்கள் மட்டுமல்ல. உயர்கல்வி கற்று உயர் பதவி வகிப்பவர் கூட அவர்கள் பெண்கள் என்ற காரணத்தால் இந்தக் கொடுமைக்குப் பலியாகிறார்கள்.
இலங்கை வங்கியை எடுத்துக்கொண்டால் இங்கு பணிபுரிபவர். களில் 30 வீதமானோர் பெண்கள். இலங்கை வங்கியின் அதிஉயர் பதவியில் இருப்பவர் ஒரு பெண் என்பது பற்றி மிகப் பெருமையாகப் பேசப்படுகின்றது. தவிர 10 பெண்கள் உயர்மட்ட அதிகாரிகளாகவும் 30 பெண்கள் சட்ட ஆலோசகர்களாகவும் 1200 பெண்கள் முகாமையாளர்கள் தரத்திலும் இலங்கை வங்கியில் பணிபுரிகின்றனர்.

Page 8
6 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
உதவி முகாமையாளராகப் பணிபுரியும் பெண்கள் மேலதிகாரிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறார்கள். தட்டெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். சில சம்பவங்கள் நீதி மன்று வரை சென்றுமிருக்கின்றன. இந்த விடயம் உயர்பதவிகளில் இருக்கும் பெண்மணிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது. ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும் ஒரு பெண்மணிதான் ஆனால் அவர்கள் இந்த விடயத்தில் எது வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரிவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்களை விட்டு குற்றஞ் சாட்டப்பட்டவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற முயலுகிறார்கள் என்று வங்கி ஊழியர் சங்கம் கூறுகிறது.
போர்ச்சூழலில்.
போர்ச்சூழலினால் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். அரச படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்யப்படும் பெண்கள் பலர். இவர்களுக்கு நீதி கிடைப்பதில் இழுத்தடிப்புகள் ஏனோ? யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் பாலியல் வல்லுறவுக் கொலைக் - குற்றச்சாட்டு வழக்கு ஏற்கனவே நடைபெற்றுள்ளது. கிருஷாந்திக்கு நடந்த அதேகதி கிழக்கு மாகாணம் 4ம் கொலனியைச் சேர்ந்த கோணேஸ்வரி, தங்கநாயகி, வடமாகாணத்தைச் சேர்ந்த ராஜினி போன்றவர்களுக்கும் நடந்தது. ஆனால் இவர்களது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. கிருஷாந்தி வழக்கை நடாத்தி வெளி உலகிற்கு தான் நீதியாகவும், மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும் காட்டிக் கொள்ளும் அரசு பாதிக்கப்பட்ட மற்றைய பெண்களது வழக்கையும் நடாத்தி அவர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்யுமா என்பது கேள்விக்குறியே.
போரும், பாலியல் வல்லுறவும் பாலியல் வல்லுறவுக்குப் பின் கொலையும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சாதாரணமாகி. விட்டன. தங்கநாயகி என்னும் 42வ்யதுப் பெண் மத்திய முகாம் பொலிஸாரினால் செப்டம்பர் 23, 1997ல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் கொலை செய்யப்பட்டார். இவரது கணவர் பொலிஸாரின் துப்பாக்கி

பெண்களும் வன்முறையும் 7
சூட்டுக்கு இறந்த நிலையில். தங்கநாயகியையும் தோளில் துப்பாக்கியினால் சுட்டு காயப்படுத்திய பின் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திக் கொலை செய்துள்ளனர் பொலிஸார். இக் கொடூரங்கள் கிருஷாந்தி, கோணேஸ்வரி என்று தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பல கொடூரங்கள் வெளியுலகுக்குத்தெரியாமலும் மறைக்கப்பட்டுள்ளன. மனித தோற்றம் வெளிப்புறத்தில் மட்டுமல்ல அகப்புறத்திலும் தோன்ற வேண்டும். புறத்தில் மட்டும் மனித தோற்றம் கொண்ட மிருகங்கள் புரியும் இப் பாதகச் செயல்களை சட்டம் தண்டிக்குமா? கொலைக்குள்ளான தங்கநாயகிக்கு நீதி கிடைக்குமா? இது எத்தனையாவது பாலியல் வல்லுறவுக் காட்சி.?
1. கிருஷாந்தி
2. கோணேஸ்வரி
3. தங்கநாயகி
4. ராஜினி
கடந்த 26.06.2001 இல் மருதானையிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும்போது பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரண்டுபிள்ளைகளின் தாயான இருபத்தெட்டு வயதுடைய பெண் ஒருவர் சோதனைச் சாவடிக்குள் இழுத்துச் செல்லப்பட்டுமிருகத்தனமான முறையில் பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தப்பட்டாள். இப்பெண் தனக்கு நேர்ந்த இப்பரிதாபநிலையை மருதானைப் பொலிஸில் முறையீடு செய்ததையிட்டு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பச்சிளங்குழந்தையும்.
பாலகரில் இருந்து பருவம் அடைந்த பெண் வரை இப் பாலியல் வன்முறை தனது பலாத்காரத்தைக் காட்டிய வண்ணமே இருக்கிறது. தொட்டிலில் கிடக்கும் பெண்குழந்தையை ஈ, கொசுமொய்த்து விடுமோ என்று பயந்த காலம் போய், அவள் ஒரு ஆணின் கண்ணில் படக்கூடாது என்று பயந்து நடுங்கும் காலம் வந்து விட்டது. ஏனெனில், அக்கரைப்பற்றில் பெண்சிசுவொன்றை ஊர்காவல்படைவீரர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என்று வீரகேசரி சில மாதங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது. பச்சைப் பாலகிக்கே இந்த நிலை என்றால்

Page 9
8 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
பருவமடைந்த மங்கையின் நிலையை எண்ணிப் பார்க்க முடியாத சந்தர்ப்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கொழும்பு விடுதியில். W
வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு யுவதி சில மாதங்களுக்கு முன்னர் வந்துவிடுதியொன்றில் தங்கியிருந்தார். தேடுதல் வேட்டை என்ற போர்வையில் தனியாக அவளை விசாரணைக்கென அழைத்துச் சென்ற இரு கடற்படை வீரர்கள் இரவுமுழுவதும் அவளை பாலியற் பலாத்காரம் செய்தனர். இப்படியான சம்பவங்கள் இனியும் இடம் பெறாமல் தடுப்பதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பதனை வலியுறுத்துகிறோம்.
பெண்படையினரிடத்தில்.
முன்னர், யாழ்ப்பாணம், பலாலி, வசாவிளான், மற்றும் முன்னரங்க நிலைகளில் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவிருந்த ஐந்தாவது படைப்பிரிவினர். தாம் அதிக அளவில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதாக முறைப்பாடு செய்திருந்ததாக அறியமுடிகின்றது.
அவர்களின் கருத்தின்படி, அவர்களை நிர்வகித்துவந்த இராணுவ அதிகாரிகள் பலர் இப்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதுவரை அதிக அளவில் பெண் படையினர் இந்நிலைக்கு உள்ளாகியிருந்தனர் தமது இச்சைக்கு அடிபணியாதவர்கள் பலதரப்பட்ட பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.
அடிக்கடி வேலைகளில் ஈடுபடுத்துதல், விடுப்புப் பெற்றுக்கொடுக்காமை இவற்றுள் அடங்கும். இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் பெண் படையினர் சிலர் தற்கொலை புரிந்தும் உள்ளனர். கடந்த வருடம் (1998ல்) ஒக்டோபர் மாதம் கர்ப்பிணியான ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணமடைந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் மூன்று நான்கு பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களினால் கருவுற்று வந்துள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

பெண்களும் வன்முறையும் 9
மதப் போர்வையில்.
இன்றைய உலகில் மக்கள், தங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இறைவனின் தூதுவர்கள் என்றழைக்கப்படும் இப்போலிகளிடம் சரணடைகிறார்கள். இவர்களின் தேவைகளை சாதுரியமாக அறிந்துகொள்ளும் போலிச்சாமிகள் தம்மை நாடி வந்தவர்களின் மனம்குளிரும் படியும்; ஏற்கக்கூடியமுறையிலும் சாந்தப்படுத்துவதினால் மக்கள் முழுமையாகப் போலிகளை நம்புகின்றனர். இவர்கள் மீது தங்கள் வன்முறைகளைப் பிரயோகிப்பது மிகவும் சுலபம் என்று திட்டவட்டமாக அறிந்து கொள்ளும் போலிகள் வன்முறைகளைப் பிரயோகிக்கின்றனர். இப்போலிகளை நம்பிய பக்தர்களாலேயே, இவர்களின் மதத்துக்கும், சமுதாயத்துக்கும் எதிரான சம்பவங்கள் வெளியுலகிற்கு எடுத்தியம்பய்படுகிறது.
உதாரணமாக சில வருடங்களுக்கு முன்னர், பிரேமானந்தா (இந்தியா) என்னும் போலிச்சாமி தம்மீது நம்பிக்கை வைத்திருந்த பக்தர்கள் மீது தனது வன்முறைகளாகிய பாலியல் வன்முறை, கொலை, கருக்கலைப்பு போன்ற மதத்துக்கும் மனித சமுதாயத்திற்கும் எதிரான செயல்களைப் புரிந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட இவரின் பக்தையாகிய ஒரு பெண் விழிப்புணர்வுடன் செயற்பட்டதினால் இவரின் ஆச்சிரமத்தில், திரைமறைவில் நடந்து கொண்டிருந்த சம்பவங்கள் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன. இதே போல் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலும் குருமார்களையும், காவிவஸ்திரர்களையும் நம்பிப் போகும் மக்களை வன்முறைக்குட்படுத்துவது அதாவது அநேகமாகப் பெண்களையும் சிறுமியர்களையும் ஊனமுற்றவர்களையும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
இந்து மதத்தைச் சேர்ந்த சாமிமாரும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் புரிந்துள்ள வன்முறைகளை நாம் பொதுஜன ஊடகங்கள் மூலம் முன்னர் அறிந்துள்ளோம். ஆனால் இலங்கையில் புத்தரின் வழிவந்த புத்தரின் போதனைகளைக் கடைப்பிடிக்கும்பிக்குமார் கூட தம்மை நம்பிநாடிவந்தவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்துள்ள கீழ்க்காணும் சம்பவம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Page 10
10 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
கதிர்காமம் வெடிஹிட்டிகந்த பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் 70 வயதுடைய பிரதம பிக்கு இரண்டு சிறுமியர்களைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இப்பிரதமகுரு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய சம்பவமும் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஆதாரம் : வீரகேசரி 29.10.97)
மதங்கள் அன்பு, பண்பு, பாசம், தர்மம் போன்றவற்றைக் கடைப்பிடித்து மனித சமுதாயத்தை நல்வழியில் செல்லவே சொல்லுகின்றன. இதனை தலைமேற் கொண்டு மக்களுக்கு போதிக்க வந்த மதகுருமார்கள் இப் பண்புகளையும், மனுதர்மங்களையும் புதைத்துவிட்டுகேவலமான நடத்தைகளிலும் வன்முறையிலும் மதத்தை போர்வையாக்கிச் செயற்படுகின்றனர்.
பாடசாலையில்.
கேகாலை மாவட்ட தமிழ் வித்தியாலய மாணவி ஒருவரை அப்பாடசாலை அதிபர் ஏமாற்றி பாலியல் உறவுகொண்டுள்ளதாயும், இதனால் கருத்தரித்த அம்மாணவி சிசுவொன்றைப் பிரசவித்துள்ளதாக (4.6.94) பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
கல்விக்கூடங்கள் எமது கலாசாரத்தில் கோயில்கள் எனக் கருதப்படுகின்றன. 'மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற கூற்றின் படி ஆசிரியர் என்பவர் பெற்றோருக்கு அடுத்த ஸ்தானத்தை வகிப்பது எமது பாரம்பரியமாகும். இந்நிலையில் வேலி பயிரை மேய்ந்த கதையாக, பாதுகாப்பு அளிக்க வேண்டிய பாடசாலை அதிபரே முறைகேடாக நடந்து கொண்டமை மிகவும் வருந்தத்தக்க, கண்டனத்துக்கு உரிய விடயமாகும்.
திரைப்படத்துறையில்.
எந்த ஒரு கலைஞரினாலும் தனது ஆற்றலினால் சமுதாயத்தை விழிப்படையச் செய்ய முடியும். இன, மத, பூசல்கள் சகலவிதமான வன்முறைகளையும் இயல், இசை, நாடகம், போன்ற கலைகளினால் மக்களை கேவலமான பிற்போக்கு சிந்தனைகளில் இருந்து மீட்டு அறிவுள்ளவர்களாகவும் ஒற்றுமையுள்ளவர்களாகவும் முன்னேற்ற கலைஞரினால் முடியும். முந்திய கலைஞர்கள் தங்களின் கலைகளின் வெளிப்பாட்டினால் மக்களை எழுச்சியுறச் செய்தனர். ஆனால் இப்போ

பெண்களும் வன்முறையும் 11
வளரும் சில கலைஞர்கள் தங்கள் கலைகளை முழுமையாக மக்களின் விழிப்புணர்ச்சிக்கு பயன்படுத்துவதில்லை. மாறாக பணத்திற்காகவும் பிற்போக்கு எண்ணங்களுக்குமே பயன்படுத்துகின்றனர் நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல; பிரபல சிங்கள திரைப்பட நாடக நடிகரான கமல் அத்தர ஆராச்சி, இவர் ஒரு சிறந்த நடிகன். மக்களின் செல்வாக்கை தனது நடிப்பின் ஆற்றலினால் பெற்றவர். மேன்மேலும் மக்களின் செல்வாக்கைப் பெற்று சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு தன்னாலான பணியைச் செய்ய வேண்டியவர். இனோக்கா கால்லகே எனும் 16 வயது மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை இவரின் பிற்போக்குத் தன்மையைக் சுட்டுகின்றது. இவர் இக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க தனது செல்வாக்கையும் அந்தஸ்தையும் பயன்படுத்தினார். ஆனால் ராவய பத்திரிகையும், பெண்கள் அணிகளும் இனோக்காவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என முனைந்தன. இதனால் கமல் அத்தர ஆராச்சி மீண்டும் விசாரிக்கப்பட்டு குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளார். ஆனால் பிற்போக்கு எண்ணங்கொண்ட சில அரசியல்வாதிகளும், திரையுலகைச் சேர்ந்தோரும் கமல் அத்தர ஆராச்சிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இவர்களின் செல்வாக்கின் மூலம் கமல் அத்தர ஆராச்சிக்கு மன்னிப்பு வழங்கப்படுமாயின் சட்டத்தின் மூலம் நீதிநிலைக்குமா என்பதுமட்டுமல்ல இக்கலைஞனின் மூலம் சமூகத்திற்கு பயனுண்டா என்பதும் கேள்விக்குறியே!
வெளிநாட்டுப் பெண்ணிடம்.
பம்பாயைச் சேர்ந்த மணப்பெண் ரீட்டா மனோகரன் தனது கணவனுடன் 18.10.98 அன்று மோதரை கடற்கரைக்குச் சென்றிருந்தபோது போதைவஸ்து பிரியர்களினால் கணவன் தாக்கப்பட்டு ரீட்டா கடத்திச் செல்லப்பட்டு பலரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஐ ட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். எமது நாட்டைப் பார்க்க ஆவலோடு வந்த மணப்பெண் ரீட்டாவுக்கு நடந்த கோரச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் எமது நாட்டின் சட்டம், பாதுகாப்பு, ஒழுங்கு என்ன தரத்தில் உள்ளது என்பதை அப்பட்டமாகத் தெரிந்து கொண்டோம். இப்படியான சம்பவங்கள் இனியும் தொடராமல் போதை வஸ்துக்களை கடத்தும் கடத்தல் மன்னர்கள் உட்பட சகல வன்முறையாளர்களையும் இனங்கண்டு உரிய தண்டனை வழங்கி சட்டம். ஒழுங்கு பாதுகாப்பு என்பவற்றை முழுமைப்படுத்தி மக்கள் சுதந்திரமாகவும்

Page 11
12 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
பயமின்றியும் வாழ அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன் வைக்கிறோம்.
xiv. சொந்த மகளிடத்தில்.
பெற்ற பிள்ளைகள், உடன்பிறந்த சகோதரர்கள் என்ற உறவைக்கூட உடைத்தெறிந்துவிட்டு அதற்குள் ஊடுருவும் பாலியலை என்னவென்று சொல்லுவது? முற்காலம் தொட்டே அப்பா, அம்மா, பெரியப்பா, சித்தப்பா, அண்ணா என்ற உறவுகள் புனிதமானவையாகப் பேணப்பட்டு வந்தன. ஆனால் இன்று பாலியல் வன்முறைக்குள் அந்த உறவுகளே கேள்விக்குறியாகிவிட்டன. ஒரு பெண், பெரிய பெண் ஆனதில் இருந்து அவளுடைய தகப்பன் அவளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி உள்ளார். சுமார் நான்கு மாதங்களாக, தொடர்ச்சியாக இச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது (சரிநிகர் மார்ச் - 01, மார்ச் - 22). மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட புன்னைச்சோலை என்ற இடத்தில் வசித்து வந்த சங்கரப்பிள்ளை ராஜா என்ற முப்பத்தொரு வயதுடைய தகப்பன், பிரதீபா என்ற தனது மகளை அடிக்கடி பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி உள்ளார். அதைத் தட்டிக் கேட்க வெளிக்கிட்ட தாயைத் தாக்கி அவளை ஆஸ்பத்திரியில் படுக்கவைத்து விட்டார் அந்தத் தகப்பன் (சரிநிகர் - மார்ச் 08 பக்கம் 10). தகப்பனால் அக்காவும் தங்கையும் பயமுறுத்தப்பட்டு, நீண்ட நாட்களாக வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்கள் அதற்கு அவர்களது பாட்டியும் உடந்தை (சரிநிகர் - மார்ச் 22).
வேலியே பயிரை மேய்ந்து விட்டது. யாரிடம் சொல்லி அழுவது? பேணி வளர்க்கும் தந்தையே பெண்ணுக்கு எதிரி என்றால் அவள் யாரிடம் போய் வாழ்வது? பிள்ளை என்றாலும் பரவாயில்லை காம இன்பம் தான் பெரிது என்று நினைக்கும் தகப்பன்மாரால் தந்தை என்னும் உறவிற்கே இழுக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய படுபாதகச் செயலை எந்த ஒரு சிறந்த தகப்பனாலும் ஜீரணிக்க முடியாது.
2. இந்தியாவில்.
இந்தியாவிலுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள்
முன்னேற்றத்திட்டத்தைச் சார்ந்த பன்வாரிபாய் என்னும் சமூகசேவகி
செப்டம்பர் மாதம் 1992ம் ஆண்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பெண்களும் வன்முறையும் 13,
இவர் தமது பெண்கள் முன்னேற்றத் திட்டத்தையொட்டி பால்ய விவாகமொன்றைத் தடுக்கும் நோக்கில் செயல்பட்டமையால் குஜார் பிரிவைச் சேர்ந்த ஆண்களால் இவ்வாறான தண்டனைக்கு" உள்ளாக்கப்பட்டார்.
இவ் அசம்பாவிதம் இவர்மூலமாயும் வேறு சமூக சேவகிகளாலும் பலதடவை அரசுக்கு முறையிடப்பட்ட போதிலும், இது நாள்வரை குற்றம்புரிந்தோர் எதுவித தண்டனைக்கும் உள்ளாகவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் முன்னேற்றத்திட்டம் பதின்மூன்று மாவட்டங்களில், சுமார் 1,200 சமூக சேவகிகள் மூலம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் ஒடுக்கப்பட்ட சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கப் பெண்கள் இவற்றால் விழிப்புணர்வு பெற்றுவருகிறார்கள்.
அரசாங்க ஊழியரான இப்பெண்மணி தமது கடமையைச் சரிவர செய்யமுன்வந்ததால் இவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை இனம் கண்டு. அரசு குற்றவாளிகளைத் தண்டிக்காதவரை இப்பேர்ப்பட்ட எந்தத் திட்டமும் முழுப்பலனை அளிக்காது. இச் சமூகசேவகிகளது தனிப்பட்ட பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் வரை இவர்களது கடமையில் மயக்கமும் தேக்கமும் தவிர்க்க முடியாதவையாகும்.
3. ஜப்பானில்.
ஜப்பானில் வேலைபார்க்கும் பெண்கள் தங்களுக்கு பாலியல் ரீதியாக பாரபட்சம் காட்டப்படுவதாக ஆண்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யும் வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஜப்பானிய வேலைத்தலங்கள் ஆண்களின் ஆதிக்கத்துள் இருப்பதை பெண்கள் வெறுக்கின்றனர். தங்களது ஆண் உயரதிகாரிகளுக்கு தேநீர் பரிமாறுவதற்கோ தொலைபேசி அழைப்புக்களுக்கு பதில் கூறுவதற்கோ இப் பெண்கள் மறுப்புத் தெரிவிப்பதாக ஹெய்யோ பல்கலைக்கழக பேராசிரியரான யோசிகோ தக்ஹாசி கூறுகின்றார். ஜப்பானிய பல்கலைக்கழகமொன்றில் முதல் தடவையாக நிறுவப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்குழுவின் தலைவராகவும் இவர் விளங்குகிறார்.
ஜப்பானியப் பெண்களின் தொழில் முறைகளில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை சமீபத்திய புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. 2000ம் வருட யூலை மாத புள்ளி விபரங்களின்படி சுமார்

Page 12
14 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
அறுபதாயிரம் பெண்கள், கம்பனிகளின் தலைவர்களாக விளங்குகின்றனர். இது கடந்த வருடத்தை விட 3.3 சதவீத அதிகரிப்பு ஆகும். தான் வேலை பார்க்கும் கம்பனியில் ஆண்களுக்கு சமமாக தான் நடத்தப்படவில்லை என்று கோரி 56 வயதுடைய ஹிசமிநாக்கா வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். நீதிபதி இக் கோரிக்கையை ஏற்று அவருக்கு 3 கோடி ஜென் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
4. அமெரிக்காவில்.
பாலியல் பலாத்காரங்கள் பற்றிய புள்ளி விபரங்களை அமெரிக்க அரசு 1992ம் ஆண்டில் சேகரித்து வெளியிட்ட போது திடுக்கிடும் உண்மைகள் பல புலனாயின. பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட பெண்களில் 61% பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள், 3/10 பேர் பதினொரு வயதைத் தாண்டாதவர்கள் 80% பெண்கள் தம்மைப் பலாத்காரம் செய்த ஆணை நன்கு அறிந்தவர்கள். ஆயினும், 16% வீதத்தோரே அதனைப்பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நாம் கவனித்த விடயங்கள் எமக்குப் பேரதிர்ச்சி தருபவையாகவுள்ளனவாயினும், இவை என்ன எப்போதாவது ஒருதடவை நடைபெற்ற சம்பவங்கள்தானே? என்று எம்முள் பலர் கருதக்கூடும். உண்மை அதுவன்று. இவ்வாறு பல சம்பவங்கள் தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், அம்பலத்திற்கு வந்த ஒரிரு சம்பவங்களே இவை என்பதனை நாம் மனங்கொள்வதவசியமாகின்றது.
இத்தகைய கொடுமைகளைக் கண்டு, நடுங்கி, ஈழத்துக் கவிஞர் ஒளவை, தனது மகளை நினைவு கூர்ந்து கூறுவதுபோல்,
"சிறிய மலராய் விரிந்து மலரும் எண் மகளுக்கு எப்படிக் காட்டுவேன் இந்த உலகை"
என்று பாடிய கவிதை இவ்வேளை நினைவிற்கு வருகின்றது.
இத்தகைய கொடுமைகளிலிருந்து மீளவேண்டின், ஒன்று திரண்டு போராட்டம் நிகழ்த்துதல், சட்டங்களை இயற்றுதல் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்தச் செய்தல், அதிகூடிய தண்டனை வழங்கச் செய்தல் என்பனவே வழிவகைகளாகும் என்று கருதுகின்றோம்.

பெண்களும் வன்முறையும் 15
பாலியல் வன்முறைக்குத் தடை
வேலைத்தளங்களில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களைப் பாலியல் வன்முறைக் குட்படுத்துவதை இந்திய உயர்நீதிமன்றம் தடைசெய்துள்ளது. மேலும் இந்நீதிமன்றம் இருபாலாருக்கும் சம உரிமைகளை வழங்க வேண்டுமென தனியார், பொது அமைப்புக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், பாலியல் தொந்தரவுகள் பெண் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படுவதற்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்து உடல்ரீதியான தொந்தரவுகள் உட்பட, பாலியல் வல்லுறவுக்குட்படுத்துதல், ஆபாசப் படங்களைக் காட்டி உடல், உள ரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படல் போன்றன தவிர்க்கப்படல் வேண்டுமெனவும் வற்புறுத்தி, பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை விசாரிக்கும் விசாரணைக்குழுவில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகவே இருக்க வேண்டும் எனவும் தொழில் வழங்குனர்களுக்கு எழுத்துமூலம் கட்டளையை மேற்படி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நாம் இப்படி ஒரு திட்டத்தை மேற்கொள்ள யாரை அணுக வேண்டும்? பெண்கள் விவகார அமைச்சு, பெண்கள் ஆணைக்குழு சட்ட நிபுணர்கள் இதற்கு ஆவன செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறோம்.

Page 13
தொழிலுலகும் பெண்களும்
1988ஆம் ஆண்டு ஏற்றுமதியினால் பெற்றுள்ள சம்பாத்தியம் 55 % தேயிலையில் இருந்தும் புடவைக் கைத்தொழில் ஏற்றுமதியிலிருந்தும் பெற்றுக் கொள்ளப்பட்டன. எனவே வருமானம், வேலைவாய்ப்பு, வெளிநாட்டுச் செலாவாணிச் சம்பாத்தியம் என்பவற்றின் வடிவில் தேயிலையும், புடவைக் கைத்தொழிலும் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தமது பெரும் பங்களிப்பை நல்கியுள்ளன. இவ்விரு தொழில்துறைகளிலும் 70 % ற்கு மேல் பெண்களே தொழில் புரிகின்றனர்.
உலகின் பாதிப் பங்கினரான பெண்கள் ஆண்களிலும் பார்க்க இருபங்கு நேரம் உழைக்கின்றனர். நாள் தோறும் சராசரி 15 மணிநேரத்திற்கு குறையாது உழைத்து, உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலையைச் செய்கின்றனர். உலகின் பாதி உணவை பெண்களே உற்பத்தி செய்கின்றனர். ஆனால் கிடைப்பதோ உலகின் பத்தில் ஒரு பங்கு வருமானம்; சொத்துடமை நூறில் ஒரு பங்கிற்கும் குறைவானது. இவ்வாறு உலகப் பெண்கள் நிலை பற்றிய ஐ.நா.சபையின் ஆண்டறிக்கை கூறுகிறது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 1972ம் ஆண்டறிக்கையின் படி “உலகின் எந்த நாட்டிலும் திரைப்படத்துறை. ஒலி, ஒளிபரப்புத்துறை. பத்திரிகைத் தொடர்புத்துறை ஆகியவற்றில் தொழில் பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை முழு எண்ணிக்கையிலும் 30 சதவீதத்திற்கு உட்பட்டதாகும். அதிலும் செயல் திட்ட முடிவுகள் எடுக்கப்படும் இயக்குனர் மட்டங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானதாகவே இருக்கின்றனர். இன்று உலகில் 94 கோடி 86 இலட்சம் பேர் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரு பங்கினர் பெண்களாவர் என்று யுனெஸ்கோ அறிக்கை ஒன்று கூறுகிறது.

தொழிலுலகும் பெண்களும் 17
1. மலையகத் தோட்டங்களில்.
மலையகத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இலங்கையில் உள்ள ஏனைய இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்களிடமிருந்து வித்தியாசமானவர்களாக உள்ளனர். இவை, மலையகத்தில் தொண்ணுறு வீதமான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக உள்ளனர் என்ற விதத்திலும், மொத்தமாக வேலை செய்வோரில் இவர்கள் ஏறத்தாழ ஐம்பதுவீதமாக ற ள்ளனர் என்ற விதத்திலும் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள் என்ற வகையில் அமைப்பு ரீதியாகப் பிணைக்கப் பட்டவராகவுள்ளனர் என்ற விதத்திலும் இடம்பெறுகின்றன. அதுமட்டுமன்றி, பெண்களுக்கான இரட்டைப்பளு என்பதனை அனுபவரீதியில் அதிகளவு உணர்ந்தவர்களாக இருப்பவர்களும் இவர்களே!
இன்னொரு நிலையில், இலங்கையின் அந்நிய செலாவணிக்கு ஊன்றுகோலாக விளங்குபவர்கள் இம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. சுமார் மூன்றரை இலட்சம் தோட்டத் தொழிலாளர்களில் அரைவாசிக்கு அதிகமாக பெண்களே உள்ளனர். 1970ஆம் ஆண்டுகளுக்கு முன் எமது நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில் அதிகமான நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுத்த தேயிலை உற்பத்தியானது எண்பதுகளின் பின் உலகமயமாக்கலுடன் 20 சதவீத நிரந்தர வருமானத்தைப் பெற்றுத்தரும் உற்பத்தித் துறையாகவே இன்னும் உள்ளது. தோட்டத் தொழிலாளப் பெண்களின் வாழ்க்கை நிலையை நோக்கினால் அன்றும் இன்றும் முன்னேற்றம் இல்லாத அவல நிலையாகவே காணப்படுகிறது.
தேயிலை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்தல் மற்றும் சில்லறை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மழை என்றும் குளிர் என்றும் பாராமல் உயரமான மலைகளில் ஏறி இறங்கியும் அது மாத்திரமல்லாமல் பல கிலோ கொழுந்தை தலையில் சுமந்தும் அட்டைகளால் அவர்கள் இரத்தம் உறிஞ்சப்பட்டும் பல தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தே தமது உழைப்பை அர்ப்பணிக்கிறார்கள்.
காலை 7.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை அவர்கள் இத்தகைய வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கிய பின்

Page 14
18 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
இருபது நிமிடங்களே அவர்களுக்கு தேநீர் இடைவேளை அளிக்கப்படுகிறது. மதிய உணவிற்கு 1 - 1 1/2 மணி நேரமும் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்கள் அவர்கள் இத்தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். மலையகப் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளில் அதிகமான நேரத்தை இத்தோட்டத்திற்கு உழைப்பாகவே வழங்குகின்றனர். தொழிலாளியொருவர் ஒரு நாள் சம்பளத்தை இந்த உழைப்பு நேரத்தில் இரண்டு மணி நேரத்தில் பெற்றுக் கொடுத்திடுவார். இப்பெண்களின் ஆறு மணி நேர உழைப்பும் சுரண்டப்படுகிறது.
இவர்களின் சம்பள நிலையை எடுத்து நோக்குவோமானால் ஏனைய பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 200 - 300 ரூபாவரை சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் அடிப்படை வருமானமாக ஒரு நாளைக்கு 101 ரூபாவையே பெறுகின்றனர். எனவே உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இவர்களுக்கு வழங்கப்படாமை இவர்களை மேலும் மேலும் வறுமையில் வாடச் செய்கிறது. பொருளாதாரக் கஷ்டம் காரணமாக இப்பெண்கள் கொழுந்து பறித்தலுடன் வேறு வேலைகளையும் செய்ய முற்படுகிறார்கள்.
கொழுந்து அதிகமாக விளையும் காலங்களில் ஒன்றரை நாள் சம்பளம் பெறுவதற்காக ஞாயிறு போயா தினங்களிலும் 20 - 30 கிலோ கொழுந்தும் ஏனைய காலங்களில் 20 கிலோவிற்குக் குறையாமலும் கொழுந்து பறிக்கும்படி உத்தரவிடுகிறது நிர்வாகம். அப்பாவிப் பெண்களைப் பிழிந்தெடுத்த உழைப்பு, உலகமே விரும்பி ருசிக்கும் உயர் தேயிலையாக மாறுகிறது. அது மாத்திரம் இல்லாமல் மேலதிக சம்பளம் பெறும் நோக்குடன் ஒரு கிலோ கொழுந்து 4.50 சதத்திற்கு வேலை செய்கின்றனர். ஒய்வு பெற்றவர்களுக்கும் 18 வயதிற்கு உட்பட்டவர். களுக்கும் ஒரு கிலோ கொழுந்து 5 ரூபாவாக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட அளவு கொழுந்து பறிக்கத் தவறுவார்களேயானால் அவர்களுக்கு பெயர் வழங்க மறுக்கப்படுகிறது அல்லது அரைநாள் வேலை போன்றன பெண் தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் ஒன்றாகும்.
தம் உதிரத்தை உரமாக்கும் இத்தேயிலைத் தொழிலாளர்களுக்கு கிடைப்பது மிகவும் தரம் குறைந்த லேபர் டஸ்ட் எனப்படும் தேயிலையாகும். இன்று ஒரு கிலோ பி-ஓ-பிதேயிலையின் சராசரி விலை 250 ரூபாவாக உள்ளது. ஒரு கிலோ தேயிலை 2 கிலோ கொழுந்தில் இருந்து பெறப்படுகிறது.

தொழிலுலகும் பெண்களும் 19
இத்தேயிலை உற்பத்தியில் கூடிய உழைப்பிற்கு குறைந்த வருமானத்தைப் பெறுவதால் ஆண் தொழிலாளர்கள் மாதத்தில் பாதி நாட்களில் வெளியிடங்களில் வேலை செய்வதற்காகச் செல்கிறார்கள். இதனால் பெண்களே குடும்பத்திற்கு நிரந்தர வருமானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அதிக பங்கை வகிக்கிறார்கள்.
இதனால் அவர்களின் வேதனையின் வெடிப்பே பலத்த போராட்டமாக மாறியது. பலத்த போராட்டத்தின் பின் இவர்களது நாட் சம்பளம் (2001 ம் ஆண்டளவில்) 121 ரூபாவாக உயர்தப்பட்டிருந்தது. இவர்களது ஏழ்மை வாழ்வை இச்சிறு தொகை மாற்றிவிடுமா என்பது ஐயத்திற்குரிய ஒன்றாகும்.
குடும்பமட்டத்தில் அவதானிக்கும்போது, பெருந்தோட்டங்களில் தங்களது தினக்கூலியைப் பெறும் உரிமையை பெண் தொழிலாளர்கள் தங்கள் கணவன்மார்களுக்கு விட்டுக்கொடுத்து விட்டார்கள். அந்த உரிமை உணரப்படாமையால் பல தொல்லைகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. அப்பணம் சில சமயங்களில் அவர்களிடம் முற்றாகச் சேர்வதில்லை. சில சமயங்களில் ஒன்றுமே அவளிடம் சேர்வதில்லை. குடிக்கும் பீடிக்கும் சுருட்டுக்கும் அவை செலவழிக்கப்படுகின்றன.
இந் நாட்டின் அந்நிய செலாவணியை பெருமளவில் ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் பல மறுக்கப்படும் இந்நிலையில் பெண் தொழிலாளர்களுக்கு இன்னும் பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று பெண்களினது பிரசவசகாயநிதியில் பாரிய அநீதியாகும். அரச நிறுவனங்களில் தொழில் புரியும் மற்றைய பெண்களுக்கு பிரசவ காலத்தில் 3 மாத விடுமுறையும், 3 மாத சம்பளமும் வழங்கப்படுகின்றது. ஆனால் தோட்டப் பெண்களுக்கு பிரசவ சகாயநிதி என்ற பெயரில் சிறியதொரு தொகையே வழங்கப்படுகின்றது.
எமது நாட்டிற்குச் செல்வத்தைத் தேடித்தருபவர்களுள் முக்கிய இடம் வகிப்பவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. இங்கே 90% 1ன பெண்கள் தொழில் செய்பவர்களாகக் காணப்படுகிறார்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் விளக்கேற்றி வைக்கும் இவர்கள் வாழ்வு ஒளியிழந்து இருண்டு காணப்படுகிறது. சாதாரணமாக ஒரு மனிதனுக்குக் கொடுக்கும் குறைந்த பட்ச உரிமைகூட இப்பெண்களுக்கு மறுக்கப்| l(Oմյ0ֆl.

Page 15
20 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
மழை வெயில் பாராது. அயராது உழைக்கும் இப்பெண்கள் இரு பிள்ளைகள் பெற்றதும் குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியப் பகுதியினர் ஆலோசனை வழங்குகின்றனர். இப்பெண்களை குடும்பக்கட்டுப்பாடு. சத்திரசிகிச்சை அளித்த பின்பும் டிராக்டர்வண்டிகளில் நெரிசலாக வீடுகளுக்குத் திருப்பி அனுப்புகின்றனர். இச்செயல் மனித உரிமையை மீறுவதாக உள்ளது. இன்றைய சமூகத்தில் மிருகங்களுக்குக் கூட இந்த நிலை இல்லை. எனவே அநீதியாக நடக்கும் இச்செயலை சுகாதாரத் திணைக்களம் கணக்கில் எடுக்க வேண்டும்.
2. சுதந்திர வர்த்தக வலயத்தில்.
சில வருடங்களுக்கு (1984) முற்பட்ட புள்ளி விபரங்களின் படி சுதந்திரவர்த்தக வலயத்திலே 90% பெண் தொழிலாளர்களே வேலை செய்து வந்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களால் இவ்வாறு பெண்தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவதற்குக் காரணம், இவர்களுக்குக் குறைந்த வேதனம் கொடுக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகும். இவ்வேதனமானது, அத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நாட்டிலே தமது தொழிலாளர்களுக்கு கொடுக்கும் வேதனத்தை விட 20 -30 மடங்கு குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமன்றி, சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் மிகக் கீழ்த்தரமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். இவர்கள் ஒய்வின்றி நீண்ட நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெண் தொழிலாளர்களிற்கு பிரசவ விடுமுறை போல் தொற்றுநோயால் பீடிக்கப்பட்ட காலங்களில் அது குணப்படும் வரை ஒய்வு வழங்கப்பட வேண்டும். மேலும் பெண்களைப் பொறுத்தளவில் வேண்டிய நேரம் மலசல கூடங்களைப் பாவிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என சுதந்திரவர்த்தக வலயத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். வீதியோரங்களின் பெட்டிக் கடைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களிற்கு கிடைக்கும் சலுகைகள் கூட இச் சுதந்திர வர்த்தக வலயத்தின் "அடிமைக் கொட்டகைகளில்’ உள்ள பெண்களிற்குக் கிடைப்பதில்லை. அப்பெண் தொழிலாளர்கள் பல மணித்தியாலங்கள் வேலை வாங்கப்படுகின்ற போதும், தமக்குத் தேவையான நேரத்தில் தமது வசதிக்கேற்ப மலசல கூடங்களைய்பாவிக்கும் அற்ப சலுகையைக் கூட பெறமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

தொழிலுலகும் பெண்களும் 21
சில தொழிற்சாலைகளில் சிறுநீர் கழிப்பதாயின் ‘Choo card’ என சுரப்படும் சிறுநீர் கழிப்பதற்கான அட்டையினை தொழிலாளர்கள் தமது மேற்பார்வையாளரிடமிருந்தோ அல்லது தமது சிரேஷ்ட ஊழியரிடமிருந்தோ பெறவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் இருக்கிறது. வேறு சில தொழிற்சாலைகளில் இவ் ஊழியர்கள் பதிவேடு ஒன்றில் தமது கையொப்பத்தினை இட்ட பின்னரே மலசலகூடங்களைப்பாவிப்பதற்கான அனுமதியினைப் பெறக் கூடியதாக இருக்கிறது. ஆனாலும் புதிதாக வேலைக்கமர்த்தப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்தும் பல வாரங்களுக்கு மலசல கூடங்களைப் பாவிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இத்தகைய வெறுக்கத்தக்க மனிதாபிமானமற்ற செயல் கடந்த பல காலமாக சில தொழிற்சாலைகளில் நடைமுறையில் உள்ளதெனவும் வேறு சில தொழிற்சாலைகளில் அவை ஆரம்பித்த காலங்களிலிருந்தே இத்தகைய மனிதாபிமானமற்ற கட்டுப்பாடு நடைமுறையிலுள்ளதெனவும் இவ்வலயத்தில் வேலை செய்யும் பெண்கள் கூறுகிறார்கள். கடந்த கார்த்திகை மாதம் “Week end Express’ பத்திரிகையில் இத்தகைய தொழிற்சாலை ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி வெளியான கட்டுரை ஒன்று நம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் வேதனைக்குள்ளாக்கியது.
இவ்வலயத்தில் உள்ள ஓர் தொழிற்சாலையில் புதிதாக வேலையில் சேர்ந்த பெண் ஒருவர் தான் வேலையில் சேர்ந்த ஒரு கிழமையின் பின் தனக்குரிய ‘Choo Card’ இனை தனது சிரேஷ்ட ஊழியரிடமிருந்து பெற்றுக்கொள்ள சென்ற போது "எத்தனை துணிச்சலாக வேலையில் சேர்ந்து சிறிது காலத்திற்குள் உனக்குரிய அட்டையை கேட்கிறாய்? உன்னால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாதா?" என்றும் தாங்கள் வேலையில் சேர்ந்துமூன்று மாதங்களின் பின் தான் தங்களிற்குரிய"Choo Card"ஐ பெற்றுக் கொண்டதாகவும் கூறி அச் சிரேஷ்ட ஊழியர் எதிர்வாதம் செய்தார். எனினும் இப்பதில் தனது பிரச்சினைகளுக்குரிய தீர்வு இல்லை என எண்ணிய அவ் ஊழியர் தொடர்ச்சியாக சில நாட்கள் தனக்குரிய அட்டையை தரும்படி கோரியும் அது கிடைக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்து தான் இருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழிப்பேன் என பயமுறுத்திய போது தான் குழப்பமடைந்த அச் சிரேஷ்ட ஊழியர் அப் பெண்ணிற்குரிய "Choo card"ஐ வழங்கினார். இவ்வாறாக அவ் ஊழியர் மனிதாபிமானமற்ற செயல்களை தொடர்ந்து எதிர்த்து வந்ததினாலும் பின்னர் அத்தொழிற்சாலையில், நடைபெற்ற வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டதை காரணமாக வைத்து வேலையிலிருந்தும் நீக்கப்பட்டதாக அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

Page 16
22 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
இவ் வலயத்தில் வேலை செய்யும் பெரும்பாலான ஊழியர்கள் பின்தங்கிய கிராமங்களில் உள்ள வறிய குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பதினால் தமது வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக இம் மனிதாபிமானமற்ற கட்டள்ைக்கு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள். வேலை நேரங்களில் தண்ணிர் அருந்துவதைத் தவிர்ப்பதன் மூலம் மலசல கூட பாவனைப்பிரச்சினைக்கு தீர்வுகாண்கிறார்கள். இவ்வாறுநீர் அருந்தாமல், சிறுநீர் கழிக்காமல் இருப்பதனால் அவர்களின் சிறுநீரகங்களினதும் ஏனைய உடலுறுப்புகளினதும் தொழிற்பாடு பாதிப்படைகின்றது. ஆனாலும் இங்கே உள்ள சுயநலம் பிடித்த வேலை கொள்வோர் தொழிலாளர்களின் நலனின் மேல் சிறிதளவேனும் அக்கறை உள்ளவராகத் தெரியவில்லை. "செய்’ அல்லது "செத்துமடி’ என்னும் மனோநிலையுடனே தொழிலாளர்களிடமிருந்து கடுமையான வேலை வாங்கி தமது ஒரே குறிக்கோளான இலாபத்தை அடைய முனைகிறார்கள்.
மேலும் இவ்வலயத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஓய்வின்றி நீண்டநேரமாக இரைச்சலான சூழலில் வேலை செய்வதனால் கடுமையான தலைவலிக்கு ஆளாகின்றனர். இது எதிர்காலத்தில் நரம்புத்தளர்ச்சி, உறக்கமின்மை போன்ற பல ஆபத்தான நிலைகளைத் தோற்றுவிக்கும். சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களிற்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை பல பத்திரிகைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை எதுவித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனை “Week end Express' இல் வெளியான கட்டுரையும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. பெண்களின் நலனைப் பேணும் அமைப்பு என்ற ரீதியில் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் சுதந்திர வர்த்தக தொழிலாளர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்து விரிவான ஒரு கடிதத்தை தொழில் அமைச்சு, இலங்கைப் பெண்கள் பணியகம், மகளிர் விவகார அமைச்சு என்பவற்றிற்கு கடந்த (1998) கார்த்திகை மாதம் அனுப்பி வைத்திருந்தது. இது சம்பந்தமாக தாம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதாக அவ் அமைப்புக்களிலிருந்து பதில் கிடைத்திருந்தது.
இவ் அதிகாரம் வாய்ந்த அமைப்புக்கள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும், மேலும் வேலை கொள்வோரும் தொழிலாளருக்குரிய பிரச்சினைகளை கருத்திற் கொண்டு அவர்களிற்குரிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என எம் நிறுவனத்தினர் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலுலகும் பெண்களும் 23
புதிய தகவல்கள்
1977 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையால் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில்களில் மிக முக்கியயானதும் வருமானம் ஈட்டித் தருவதும் ஆடைத் தயாரிப்புத்தொழில். ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளில் உளத்தாக்கங்கள் தொடர்பான விடயங்கள் பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இவ்வாய்வு நிறுவனத்தின் ஆய்வுக்கு ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் 1000 பெண்கள் நேர்காணப்பட்டனர். அவர்களது வதிவிடங்களும் பார்வையிடப்பட்டன. அங்கு பெறப்பட்ட தகவல்கள் சில :
9 பெண்கள் 9 மணித்தியாலம் முதல் 16 மணித்தியாலம் வரை நின்றநிலையில் வேலை செய்கிறார்கள். உணவுக்காக சிறிய இடைவேளை உண்டு.
9 வேலை முடிந்து அகாலத்தில் வீடு திரும்புவதால் வாகனவசதி இல்லை. திருடர்களாலும் பெண்களுக்குத் தொல்லை கொடுப்போராலும் ஏற்படும் துன்பங்கள்.
9 விடுமுறை கிடையாது. ஒய்வெடுக்க உணவு உட்கொள்ள போதிய நேரம் அனுமதிக்கப்படுவதில்லை. மோசமான வதிவிடங்கள் 10 X 10 அறையில் 5 - 6 பேர் தங்குதல், மலசல கூட வசதி, குளிக்க குடிக்க நீரின்றி அவதி.
9 நல்ல உணவு கிடையாது; வசிக்கும் அறையிலேயே ஏதாவது ஒரு மலிவான மரக்கறியோடு 3 நேர உணவும் தயாரித்தல். சத்துள்ள உணவுகள் இல்லை.
9 அனேகர் கிராமப்புறப் பெண்கள், புதிய சூழ்நிலை. மனம்விட்டுப் பேச முடியாது. நேரமும் கிடையாது. வேலையையும் விடமுடியாது. குடும்பத்தவருக்காக உழைத்தே ஆகவேண்டும் என்ற நிலை. விளைவு உளத்தாக்கம்.
9 தமது மன உளைச்சல்களை வெளியே சொல்ல முடியாது தமக்குள்ளே வைத்து வருந்துதல் அல்லது அலட்சியப்படுத்தல். இப் பெண்கள் உழைக்கும் கிராமத்திலும் சொந்தக் கிராமங்களிலும் கூட ஓரங்கட்டப்படுகின்றனர்.

Page 17
24 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
9 இப்பிரச்சினைகளால் சிலர் தவறான தொடர்பால் தாய்மை. யடைதல், சட்டத்திற்குப் புறம்பான கருக்கலைப்புகள், தற்கொலை, போதைப் பொருள் பாவனை சிலர் மது அருந்தக்கூடத் தொடங்குகின்றனர். இப் பெண்களுக்கு வைத்திய வசதி கூடக் கிடையாது.
தொழிற்சங்கங்களில் ஆணாதிக்கம்
இலங்கையின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்கள் பெண்கள் இவர்களில் 35 வீதமானவர்கள் தொழில்புரிகின்றனர். தேயிலை, றப்பர்த் தோட்டங்களிலும் மற்றும் அரச, தனியார் துறைகளிலும் தொழில் புரிகின்றனர். இரட்டை வேலை அதாவது வீட்டுவேலை, வேலைத்தளங்களில் வேலை புரியும் பெண்களுக்கு எவ்வகையிலும் அதிகாரமோ, தொழிற்சங்கங்களில் தலைமைப்பதவியோ அரிதிலும் அரிது. இதற்குக் காரணம் ஆணாதிக்கமே. காலங்காலமாக ஆண்வர்க்கத்தினர் பெண்களை அடக்கி ஒருக்கிதங்களுக்கு அடிபணியவே வைத்துள்ளனர். இதனால் பெண்கள் முன்னேறவோ, தலைமைப் பதவி வகிக்கவோ முடியாதிருப்பது பெண்களின் பலவீனத்தைக் காட்டுகின்றதா? அல்லது ஆணாதிக்கத்தினரின் அடக்குமுறையைக் காட்டுகின்றதா? குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணுக்கு அதிகாரபலம் இல்லை குடும்பத்தில், வேலைத்தளங்களிலுள்ள தொழிற்சங்கங்களில் தலைமைப் பதவி. யில்லை. ஏன் ஆண்களுக்கு பொருளாதாரத்திலும், தொழிற்சங்கங்களிலும் உள்ள உரிமை போல பெண்களுக்கும் வழங்கினால் என்ன?
3. மத்திய கிழக்கு நாடுகளில்.
இலங்கைப் பெண்கள்பலர் மத்திய கிழக்குநாடுகளுக்கு பணிப் பெண்களாகச் செல்கின்ற நிலைமை ஏறத்தாழ 1975களிலிருந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இலங்கையில் ைேலவாய்ப்பு கிடைப்பது அரிதாகவுள்ளமையும், வாழ்க்கை பூராவும் வேலை செய்து இந்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்று சொற்ப ஆண்டுகளில் சம்பாதிக்கும் வாய்ப்புள்ளமையும், இவ்வாறு செல்வோர் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்வதற்கு காரணங்களாகின்றன எனலாம். இவர்களில் பெரும்பாலானோர் குவைத், ஐக்கிய அரேபியக்குடியரசு, சவூதிஅரேபியா ஆகிய மூன்றுநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

தொழிலுலகும் பெண்களும் 25
இவ்வாறு மத்தியகிழக்கு நாடுகளிலே பணிபுரிவோர் இங்கு கிடைப்பதைவிட அதிக பணத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளமை உண்மையேயாயினும் தாம் பணிபுரியும் நாடுகளிலே பல்வேறுகஷ்டங்கள், துன்புறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றமை அனைவருமறிந்த இரகசியங்களே. அந்நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவரலுவலகங்களில் பணிபுரிவோரால் இவர்கள் துன்புறுத்தப்படுகின்றார்களென்பது அண்மைக்கால அதிர்ச்சித்தகவலாகும். (யூலை 2004) மேலும், இவ்வாறு செல்கின்ற பெண்கள் சிலரின் இங்குள்ள பிள்ளைகள் கவனிப்பாரற்றுச் சீரழிவதும் குடும்பங்கள் சிதைவுறுவதும் நாமறிந்த விடயங்களே.
அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் இவ்வாறு செல்கின்றனர். இவர்கள் பணிபுரியும் இடங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் அவ்வப்போது பத்திரிகைகளில் வருகின்றன. சமீபத்தில், (1995) சித்தி இஸ்மாயில் என்னும் இருபது வயதுப் பணிப்பெண்ணுக்கு ஐக்கிய அரபுக்குடியரசு அளித்த மரணதண்டனையும், அதன் பின்னணியும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் பணிப்பெண்ணாகத் தொழில் புரியுமிடத்தில் சிறு குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போன்று சிங்கப்பூரில் பிலிப்பினைச்சேர்ந்த பணிப் பெண்ணொருவரும் மரண தண்டனைக்குள்ளாகியிருப்பது அனைவரும் அறிந்ததே.
ஆயினும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கான வழக்கு விசாரணைகளின் விபரம் சம்பந்தப்பட்டோருக்கு வெளியாகவில்லை.
அன்னியச் செலாவணியை நம் நாட்டுக்குப் பெருமளவில் சம்பாதித்துக் கொடுக்கும் இப் பணிப்பெண்களது நலனுக்காக வேண்டி பிரத்தியேகச் சட்டங்கள் அனைத்துநாடுகளிலும் இயற்றப்பட்டுள்ளனவா?
புலம் பெயர்ந்து தொழில் புரியும் இப்பெண்களது நலன்களையும், இடர்ப்பாடுகளையும் எமது நாட்டுத் தூதரகங்கள் கண் காணிக்கின்றனவா?
இவர்களைப் பணிக்கமர்த்தும் பிற நாட்டு அரசுகளுக்கும் நமது நாட்டுக்குமிடையே இவர்களது பாதுகாப்பு சம்பந்தமாக உடன் படிக்கைகள் ஏதாயினும் இது நாள் வரை உள்ளனவா?

Page 18
26 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
அந்நாடுகளில் இவர்கள்பால் சுமத்தப்படும் எந்தவித குற்றங்களும் எமது தூதரகங்களுடாக முறையாக நீதிமன்றங்களுக்குத் தாக்கல் செய்யப்படுகின்றனவா?
இவை எமது தொழில் அமைச்சிடம் இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும், ஒவ்வொரு பெண்ணும் கேட்கும் வினாக்களாகும்.
நிற்க, யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் நாட்டின் தேசிய வருமானம் சரிந்த வண்ணமே காணப்படுகின்றது. இலங்கைப் பொருளாதாரத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு இவ்வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் பெரிதும் உதவுவதாக உள்ளது. வெளிநாட்டு உழைப்பில் பெரும்பான்மை பெண்களின் உழைப்பாகத்தான் இருக்கிறது. இப் பெண்கள் வீட்டுவேலை போன்ற தேர்ச்சியற்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 4000 ரூபா முதல் 10000 ரூபா வரையிலான ஊதியத்திற்கு வேலை செய்கின்றனர்.
வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு ஓர் அவமானமான பக்கமும் உண்டு. சில வேளைகளில் பெண் ஊழியர்கள் தங்களது எஜமானர்களது உடைமைகளாக நடத்தப்படுகின்றனர். மிதமிஞ்சி வேலை வாங்கப்படுகின்றனர். இவர்கள் குறைந்த பட்ச உரிமைகள் தன்னும் அனுபவிப்பவர்களாக இல்லை.
வெளிநாட்டில் வேலைபார்க்கும் இத் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் கொண்ட ஒரு குழுவாகிய வெளிநாட்டு வேலையாட்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு அக்ற்போர்ம் (ACTFORM) உருவாகி உள்ளது. வெளிநாட்டு வேலையாட்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பின் செய்திமடல் “தரணி” என்ற பெயரில் வெளிவருகின்றது.
இவ் வலையமைப்பு, வெளிநாட்டு உழைப்புப்பற்றிய விடயத்தில் அக்கறையுடன் பணியாற்றுகின்ற அரசசார்பற்ற நிறுவனங்களையும் ஆட்களையும் கொண்டுள்ளது.
4. குழந்தைத் தொழிலாளர்களாக.
சமுதாயவிருத்தியின் அச்சாணியாக உருவாகும் சிறுவர் பல வழிமுறைகளால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

தொழிலுலகும் பெண்களும் 27
பாதிப்புக்குள்ளாகும் சிறுவர்களின் அடிப்படைக் காரணங்களை நோக்கினால் அவர்களின் பெற்றோர்கள் வறியவர்களாகவும் படிப்பறிவு அiறவர்களாகவும் அல்லது குழந்தைகள் மீது அக்கறை அற்றவர்கஎாகவும் காணப்படுகின்றார்கள். இவர்கள் தங்கள் வறுமையைப் போக்குவதற்கு தங்கள் குழந்தைகளை பணவருவாயை ஈட்டித் தருவதற்காகப் பயன்படுத்துகின்றார்கள்.
இச் சிறுவர்கள் குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே பெற்றோர்களினால் அவர்களின் குழந்தைத் தன்மைக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது பறிக்கப்பட்டு தொழிலுக்கு அனுப்பப்படுகின்றார்கள். வசதிபடைத்த குடும்பங்களுக்கு சமையல் வேலைக்காகவும் தொட்டாட்டு வேலை புரிவதற்காகவும் மற்றும் கடைகளில், தோட்டங்களில் தொழில் புரிவதற்காகவும் குழந்தைகளின் விருப்பத்திற்கு எதிராக பலவந்தமாக அனுப்பப்படுகின்றார்கள்.
குடும்பச் சூழலில் வேலைபுரியும் சிறுவர்கள் கொடுமைகளுக்கும், வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். கொடுமைகளும், வன்முறைகளும் பிஞ்சு உடம்புகளின் சக்திக்கு பல மடங்கு அப்பாற்பட்டவையாகும். இச் சிறுவர்கள் மீது அளவுக்கு அதிகமான வேலைப்பழு திணிக்கப்படுகின்றது. அவர்களுக்கு போதுமான உணவு மறுக்கப்படுகின்றது. இவர்களின் ஒய்வும் பறிக்கப்படுகின்றது. இவையனைத்துமே சிறுவர்களின் உரிமை மீறல்களே. அத்துடன் வேலை செய்ய மறுத்து எதிர்க்கும் சிறுவர்களுக்கு தண்டனை என்னும் பெயரில் கட்டி வைத்து அடித்தல், உணவு வழங்கப்படாமல் பட்டினி போடல், நெருப்பினால் சுடுதல் இதையும் மீறிக் கொலை செய்யும் துணிச்சல் போன்றன பிரயோகிக்கப்படுகின்றன. இச் சம்பவங்களில் அநேகமானவை புதைகுழி தோண்டி புதைக்கப்படுகின்றன. ஒரு சில சம்பவங்கள் வெளியுலகிற்கும் சட்டத்திற்கும் தெரியவருகின்றன. தெரியவரும் இச்சம்பவங்கள் மூலம் சட்டம் எவ்வளவு தூரம், சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குகிறது என்பதும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கோ சிறுமிக்கோ நீதி கிடைக்கும் என்பதும் வன்முறையாளர்களின் பணப்பலம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் என்பனவே தீர்மானிக்கின்றன.
கடைகளில், தோட்டங்களில், தொழிற்சாலைகளில் வேலை புரியும் சிறுவர்களின் உழைப்பு மறைமுகமாகச் சுரண்டப்படுகின்றது. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் (கூலி) மிகவும் குறைவானதே. ஆனால் அவர்களின் வேலை நேரம் பெரியவர்களுக்கு வழங்கப்படும்

Page 19
28 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
வேலை நேரத்தைப் போன்றதாகவோ அல்லது கூடவாகவோ இருக்கும். இச் சிறுவர்கள் கரும்பு ஆலைகளில் கரும்பு பிழியப்படுவது போன்று கசக்கிப் பிழியப்படுகின்றார்கள். இதனால் இவர்களின் உடல் நலிவுறுகின்றது. சுகாதாரத்தைப் பேண முடியாமல் போகின்றது. இவர்களின் வாழ்வுக்காலம் அண்மையை நோக்குகின்றது.
இவர்களின் சம்பளம் ஏழ்மையிலிருந்து விலக வழிவகுக்குமா? அநேகமான தொழிற்சாலைகளில் சிறுவர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். ஏனெனில் இவர்களின் உழைப்பு அதிகம், கூலி குறைவு என்பதே காரணம். சிறுவர்களின் உழைப்பை உறுஞ்சிக் கொழுக்கும் தனவாந்தர்களே சிறுவர்களை உதாசீனப்படுத்துவதற்கும் காரணமாகின்றனர்.
குடும்ப ஏழ்மை காரணமாக பெற்றோர்களாலேயே பிஞ்சு உள்ளங்களை பாலியலுக்காக விற்பனை செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கொடுமையும் இவ்வுலகில் நடைபெறுகின்றது. மிகுந்த அன்பும் கவனிப்பும் செலுத்தப்பட வேண்டிய இச் சிறுவர்கள் தம் குடும்ப ஜீவனோபாயத்திற்காக தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் அர்ப்பணிக்கச் செய்ய பலவந்தப்படுத்தப்படுகின்றனர். தம் வயதையொத்த பணக்கார சிறுவர்கள் பாடசாலைச் சீருடையுடன் தம் அறிவை விருத்திசெய்யபாடசாலை செல்லும் காட்சியைக் காணும் இச் சிறுவர்கள் மெளனமாகவே அழும் காட்சி இப் பிள்ளைகளின் பெற்றோருக்கோ இப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் பெரிய மனிதர்களுக்கோ தெரிவதில்லையே!
மேற்கூறிய அனைத்துச் சம்பவங்களின் இந்நிலையானது வருங்கால சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய சிறுவர்களை நலிவுறச் செய்வதுடன், வளரும் சமுதாய நிலையை அடி மட்டத்திலேயே தக்க வைத்துக் கொள்கின்றது. இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் சிறந்த, பயனுள்ள, அறிவுபூர்வமான, திடகாத்திரமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவது என்பது கேள்விக்குறியே! இதற்குப் பெற்றோர் மட்டுமல்ல காரணம், அரசு, சமூக சேவை செய்யும் பொது நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் ஆகிய அனைவரும் காரணம்.

தொழிலுலகும் பெண்களும் 29
5. பாலியல் தொழிலாளர்களாக .
பெண் தொழிலாளர்களுள் பாலியற் தொழிலாளர் நிலை ஏனைய தொழிலாளர்களிலிருந்து வித்தியாசமானது. ஏனெனில், இவர்கள் பாலியல் தொழில்நடத்தி உயிர் வாழவேண்டியநிலையிலிருக்கிறார்கள். நேரத்திற்கு நேரம் மாறுபட்ட வாடிக்கையாளர்களுடன் ஒழுங்கற்ற உறவு கொள்பவர்களாகவும் பாலியல் உறவு இணைவின் போது தன்னுணர்வற்று இருப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறாக பெண் தொழிலாளர் பாலியல் தொழிலிலீடுபடும் நிலை ஆண்மேலாதிக்கம் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. மேலும் இப் பாலியல் தொழிலாளர் மீது ஆண் அதிகார அமைப்பு தண்டனை வழங்கிவருவதும் விசனத்திற்குரியது.
அவ்வாறாயினும், இப் பாலியற் தொழிலாளி என்றதும் பலர் கண்களிலும் அவள் ஒரு பாவப்பட்ட ஆத்மாவாகவே கருதப்படுகிறாள். அவள் ஏன் அப்பாவப்பட்ட தொழிலுக்கு தள்ளப்பட்டு விட்டாள் என்று யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வறுமை, குடும்பப்பொறுப்பு, போரின் கொடூரம் போன்ற சில அசாதாரணச் சூழ்நிலைகள் அவளை அப்படிக் குழிக்குள் தள்ளி விடுகின்றன. “தானழிந்து மணம் கொடுக்கும் சந்தனம் போல்” தன்னை அழித்துப் பிறரை வாழ வைக்க எண்ணும் இத்தொழிலாளர்களது இன்னல்களை எம் கண்முன் சற்று நிறுத்திச் சிந்திப்போம்.
பொதுவாக இலங்கைச் சமூகக் கட்டமைப்பில் பெண் தூய்மை. ானவளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அதேவேளை ஆண் பாலியல்நாட்டத்திற்கு உரித்துடையவன் என்ற கருத்தேற்புநிலவி வருகிறது. இந்தக் கருத்தேற்பு பாலியல் தொடர்பை நியாயப்படுத்துவதோடு இளம் பெண்கள் பலரும் இதற்குள் அகப்பட்டுக் கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்தே இவ்வொழுக்கம் நியாயப்படுத்தப்பட்டு வய்திருக்கிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் செல்வதும் பின் தலைவி தலைவன் மீது ஊடல் கொள்வதுமாக இவ்வொழுக்கம் விளக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் கஷ்டம் காரணமாக இத்தொழிலைத் தேர்ந்தெடுப்போர் ஒருபுறமிருக்க. இளவயதிலே ஏமாற்றப்பட்டோ, அல்லது ா' 1யப்படுத்தப்பட்டோ இத் தொழிலுக்குள் சிலர் தள்ளப்பட்டு விடுகிறார்கள். சில வேளைகளில் ஒரு தடவை தரகர்களால் ஏமாற்றப்பட்டு இப்பொறிக்குள் அகப்பட்டு விடும் பெண்கள் கற்பு என்ற பெண் சார்ந்த

Page 20
30 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
ஒழுக்கவியல் எண்ணப்பாட்டுக்குப்புறம்பாகத் தாம் நடந்துவிட்டதாகவும் இனி இந்தச் சமூகம் தம்மை ஏற்றுக்கொள்ளாது என்று கருதியும் காலம் முழுவதும் தம்மைக் கரைக்கும் இத்தொழிலில் கரைந்து விடுகின்றனர்.
இப்பாலியற் தொழிலாளர்களின் உழைப்பில் எத்தனை முதலாளிமார், தரகர்கள் பசியாறுகிறார்கள். இவர்கள் பற்றி ஆராய்ந்த "ஜொடிமிலர்"குறிப்பிடும்போது தெருக்களிலோ, விபச்சாரவிடுதிகளிலோ, மசாஜ் பாலர்களிலோ பெண்கள் பொலிசாரால் தவறான முறையில் நடத்தப்படுவது இன்னுமொருவித பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
இலங்கையிலுள்ள விபச்சாரம் தொடர்பான சட்டங்களும் தனிப்ப்ட்ட ரீதியில் பெண்களைத் தாக்குபவையாகவேயுள்ளன. இலங்கையில் அலைந்து திரிவோர் சட்டம் என்பதன் கீழ் சில தடைகள் இருந்த போதிலும் எந்த ஒரு ஆண் தரகரோ அல்லது டெக்சி, ஆட்டோ சாரதியோ இதன் கீழ் தண்டனை அனுபவிப்பதை நாம் கேள்விப்படவில்லை என மேலும் பலர் கூறுவர். இப்பாலியற் தொழிலாளர்கள் படும் அல்லல்கள் அனைவரும் அறிந்ததொன்றே. எனவே இவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளாமல் இவர்களது உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கும் வாழ்வு அளிக்க வேண்டும்.
உலகம் பெண்ணைக் காட்சிப் பொருளாகவும், போகப் பொருளாகவும், அடிமையாகவும் நோக்குகின்றதே தவிர அவள் ஒரு ஜீவன் என்பதைக் காண மறுக்கிறது. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தாலென்ன முதலாளித்துவ நாடாக இருந்தாலென்ன பெண்கள் விடயத்தில் இவைகளுக்கிடையில் வித்தியாசமே இருப்பதில்லை.
பெண்விடுதலை பற்றி அதிகம் பேசிய நான்காவது சர்வதேசப் பெண்கள் மாநாடு 1995ல் சீனாவில் நடைபெற்றது. இது ஒரு கம்யூனிஸ்ட் நாடு. பொதுவுடமை பேசும் இந் நாட்டில் பெண்கள் கொத்தடிமைகளாக இன்றும் ஒடுக்கப்படுகின்றனர். இவ்விடயம் இம் மாநாட்டில் மறைக்கப்பட்டிருப்பது உண்மையே.
வறுமையில் வாடும் குடும்பங்களில் இருந்தும் போதை வஸ்துக்கு அடிமையாகிய குடும்பங்களில் இருந்தும் பெண்களை உயர் குடிச் சீனப் பணக்காரர்களுக்கு விற்கின்றார்கள்.

தொழிலுலகும் பெண்களும் 31
இப்பெண்கள் வீட்டு வேலைகள் செய்வதிலிருந்து எஜமானர்களின் காம இச்சையைப்பூர்த்தியாக்கும் வரை இம்சைப்படுத்தப்படுகின்றார்கள். இப் பெண்கள் மீது எஜமானருக்கு வெறுப்பு ஏற்பட்டால் அப் பெண்ணை விபச்சார விடுதிக்கோ வேறு ஒரு குடும்பத்துக்கோ விற்றுவிடுவார்கள்.
ஜப்பானில் கெய்ஷா இனப் பெண்களைச் சின்ன வீடாக வைத்திருப்பது அவர்களின் கெளரவம். “எம்மினத்தவர்களை சின்ன வீடுகளாக வைத்துக் கொண்டு பெண்ணினத்தையே கேவலப்படுத்துகிறார்கள்’ என்று ஜப்பானியப் பிரதமர் யூனோ வின் சின்ன வீடாக இருந்த கெய்ஷா இனப் பெண்ணாகிய நாகாநிஷி கூறியுள்ளார்.
சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வியாபாரம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது, குவைற், கட்டார், சார்ஜா, டுபாய், பஹ்ரேன் போன்ற திறந்த பொருளாதாரத்துறை நாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் செல்லும் இலங்கை, இந்தியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், இவ் வியாபாரத்தின் நோக்கம், அதனால் ஏற்படும் பாதிப்புக்களைப் புரிந்து கொண்டும் அதிக பணம் தேடும் பேராசையினால் இவ்வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
கொலம்பியாவில் சிறுமியர்களைக் கூட விபச்சாரத்திற்காக வாங்குகிறார்கள். நேபாளம், பிரேசில், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை இன்னும் பல நாடுகளிலும் சிறுமியர்களை விபச்சாரத்தில் Iடுபடுத்தும் கொடுமை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய 1ாரணம் வறுமையே தான் என்று ஆய்வாளர் கூறுகிறார்கள். முன்னேறிக் கொண்டிருக்கும் இவ் உலகில் மனிதத்துவம் பின்னோக்கி.

Page 21
குடும்பமும் பெண்களும்
“குடும்பம் என்பது ஒரு கோவில் போன்றது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். பெண்களே ஒரு குடும்பத்தின் குல விளக்கு போன்றவர்கள். இல்லற ஜோதி அவள். ஒரு பெண் இல்லாத வீடு இலட்சுமிகரம் அற்றது” எனப்பலவாறாகப் பெண்களைப் புகழ்ந்துபூசிப்பர். ஆனால் அந்த இல்லற ஜோதி எத்தனை இடர்ப்பாடுகள் மத்தியில் துவண்டுதுடித்து ஒளிகொடுக்கிறது என்பதை யாரும் அறியமாட்டார்கள். எமது சமூக அமைப்பில் பெண் என்பவளுக்கு பாதுகாப்பு என்று போடப்படும் விலங்காக தகப்பன், கணவன், மகன் ஆகியோர் காணப்படுகிறார்கள் இளவயதில் தந்தையின் அதிகாரத்துள் அடங்குமவள், திருமணமானபின் கணவனின் அதிகாரத்துள் அடங்குமவள், வயோதிபய் பருவத்தில் மகனின் அதிகாரத்துள் அடங்கி மரணிக்கும் போது மட்டுமே அவளது அதிகார விலங்கு அவிழ்க்கப்படுகிறது.
எனவே இக்குடும்ப நிறுவனமானது பெண்களைப் பொறுத்த மட்டில் ஒரு கேள்விக் குறியாகவே இன்றுள்ளது. குடும்பத்தைப் பொறுத்தவரை கணவராலும் ஏனைய குடும்ப ஆண் உறுப்பினர்களாலும் பல வகையில் பெண்கள் வன்முறைக்கும் பலாத்காரத்திற்கும் உள்ளாகி வருகிறார்கள். இலங்கையில் இத்தகைய குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளமை சமீபத்திய ஆய்வுப் புள்ளி விபரங்கள் மூலம் தெரிகிறது. இவ்வகையில் அறுபது சதவீதத்திற்கு மேலான பெண்கள் குடும்ப வன்முறைக்கு உட்பட்டுள்ளமை தெரியவருகிறது.
குடும்ப அமைப்பில் ஆணாதிக்கச் சிந்தனையால் பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதனால் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். இது மாத்திரமா சிலவேளைகளில் பெண்பிள்ளைகள் தந்தை. சகோதரராலும் சொல்ரீதியாக வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்

குடும்பமும் பெண்களும் 33
அநேகமாகப் பெண்களின் வாழ்க்கையில் இவ்வக்கிரமான சொற்
பிரயோகங்கள் அவர்களை வாட்டி வதைக்கிறது. இவை நடைபெறும்
சந்தர்ப்பங்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்தலாம். ஆண் தனது
விருப்பங்களை சுயநலன்களைப் பெண் நிறைவேற்றத் தவறும் இடத்து
அவளை வன்சொற்களால் அடக்க முற்படுகின்றான். குடிவெறியின்
போதும் தன் சுயநிலை இழந்து இருக்கும் போதும் இந்நிலை உருவாக்கப்
படுகிறது. பெண்களின் மீது ஏற்படும் தேவையில்லாத சந்தேகங்கள்
இச்சூழ்நிலையை உருவாக்குகிறது. ஆணின் தவறுகளைப் பெண்
சுட்டிக்காட்டும் போதும் திருத்த முற்படும் போதும் வன்முறைக்கு
உள்ளாக்கப்படுகின்றாள். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடித்தல், உதைத்தல், வெட்டுதல், தீயினால் சுடுதல், குரல்வளையை நெரித்தல்
போன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆணைவிட பெண்
கல்வியிலோ தரத்திலோ உயர்ந்து செல்கின்ற போதும் இந்நிலை
ஏற்படுகிறது. பெண் தனது சுதந்திரத்தைப் பேண முற்படும் போது
இந்நிலை ஏற்படுகின்றது. அதிகமாக வேலைக்குச் செல்லாத பெண்கள்
தங்கள் உழைப்பு இன்பங்கள் யாவற்றையும் கணவனுக்கும் குழந்தை. களுக்கும் அர்ப்பணிக்கும் ஒரு தியாகச் சுடராகக் காணப்படுகிறார்கள்.
இன்றும் அவளது உழைப்போ அவளது தியாகமோ செல்லாக் காசாகத்
தான் காணப்படுகிறது.
சில வேளைகளில் குடும்பத்தில் ஆண்விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நியாயத்தைக் கூற முற்படும் போது உடல்ரீதியான தாக்குதலுக்கும் உள்ளாக்கப்படுகின்றாள். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடித்தல், உதைத்தல், வெட்டுதல், தீயினால் சுடுதல், குரல்வளையை நெரித்தல் போன்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
சில படித்த அறிவார்ந்த ஆண்களும், இலக்கிய வாதிகளும் கூட பெண்களைச் சொல்லாலும், உடம்பாலும் வன்முறைகளுக்கு உட்படுத்துவது மிகவும் விபரீதமாகவேபடுகிறது. “படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயில்’ படித்த அவர்கள் பெற்ற அறிவுகூட சில சமயங்களில் பயனற்றவையாகவே காணப்படுகின்றன. எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் ஆணுக்கு அடிபணிந்து போகும் பெண்ணின் நிலையை மாற்ற வேண்டும். நீதி, நியாயங்கள் இரு பகுதியினருக்கும் பொதுவானவையே. பேச்சினாலும், அடியினாலும் பெண்ணின் உரிமைகளை உருக்குலைக்கக் கூடாது. பெண்ணின் அணிகலன் அடக்கம் எனக்கூறி அவளை அடித்து அடக்க முற்படும் ஆணாதிக்க நிலை மாற வேண்டும்.

Page 22
34 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் பெண் சட்ட நடவடிக்கையை நாடும்போது பெண்களின் குற்றச்சாட்டுக்களை பொலிஸ் அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர். அது மாத்திரமன்றி ஆணில் தங்கிவாழும் பெண்கள் வருமான பிரச்சின்ை காரணமாகவும் இவ்வன்முறைகளைத் தம் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஏற்றுக் கொள்கின்றனர்.
எங்கள் கலாசாரத்தில் கணவனுக்கு அடங்கி வாழ்பவளே மனைவி என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதைத் தாண்டுபவள் அடங்காய்பிடாரி, ஆண்மூச்சுக்காரி, இல்லற வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் எனப் பலவாறு அவள் சமூகத்தில் இழிந்துரைக்கப்படுகிறாள்.
எனவே தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகளைத் தாங்க முடியாதவளாக தனித்தியங்கும் வல்லமையின்மை போன்றவற்றால் பல பெண்கள் சட்டநடவடிக்கையை நாடுவதைவிடத் தற்கொலை செய்வதே தமது முடிவாகக் கொள்கின்றனர்.
ஒபயசேகரபுர :
இலங்கையைப் பொறுத்தவரையில் குடும்ப வன்முறை முதன்மையிடம் கிராமங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இவ்வன். முறையின் இன்னொரு பரிமாணம் தற்போது தெரியவந்துள்ளது. இச்சேரியிலுள்ள ஆண்கள் தமது அண்டை அயலவருடன் பிணக்குப் பட நேர்ந்தால், மனைவிகள் மீது வன்முறை பிரயோகிப்பதன் மூலம் தமது ஆத்திரத்தைத் தணித்துக் கொள்கின்றனர். இம்முறை இங்கு ஒரு கலாசாரமாகக் கருதப்படுகின்றது என சமூகக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் கூறுகின்றனர். குடும்பப் பொறுப்பு, பொருளாதார வசதியின்மை, பிணி, இவற்றுடன் கணவனது கோப தாபங்களுக்கு வடிகாலாய் இருக்கும் இப் பெண்கள் ஆகாகிக் கொண்டிருக்கின்றனர்.
திருக்கோயில் :
அண்மைக்காலமாக, திருக்கோயில் கிராமமும் எமது கவனத்தை ஈர்த்து வருகின்றது. கணவரின் தொல்லை தாங்க முடியாது பெண் ஒருவர் மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி விட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட திகிலூட்டிய சம்பவம் மட்டக்களப்பு திருக்கோயில் பிரதேசத்தில் அண்மையில் நிகழ்ந்துள்ளது.

குடும்பமும் பெண்களும் 35.
தினமும் மது அருந்தும் கணவரின் துன்பங்கள் தாங்கமுடியாது இப்பெண் மூன்று குழந்தைகளுக்கும் கிருமிநாசினியை குடிக்கக்கொடுத்து, தானும் குடித்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்தகொண்ட பெண் 30 வயதுள்ள தாயாரான கலைமதிதேவி 9வயதுள்ள கமஸ் என்னும் பெண்பிள்ளையும், 4 வயதுள்ள வானேசன் என்பவரும் தாய் நஞ்சூட்டியதால் மரணமானார்கள்.
திருக்கோயில் பிரதேசத்தில், கசிப்பும், மதுபானமும் கள்ளும் தாராளமாகக் கிடைப்பதனால் அதிகமான ஏழைக்குடும்பங்கள் மதுபானத்துக்கு அடிமையாகி தற்கொலையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்துவற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாளுக்கு நாள் நல்லதங்காள்களின் தொகை எமதுநாட்டில் பெருகிக்கொண்டே இருக்கும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர். ஆணாதிக்கம் அட்டகாசம் புரிவதற்கு பெரும்பாலான ஆண்களுக்கு துணையாக விளங்குவது மது போதை என்பதை மறைக்க முடியாது.
புதிய தகவல்கள்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல கோணங்களிலும் இருந்து வருகின்றன. இவற்றுள் மிக முக்கியமானதும் பெருந்தொகையானவர்கள் பாதிப்புறச் செய்வதும் வீடுகளில் நடைபெறும் வன்முறையே. சமீபத்தில் (1999 ல்) இவ்விடயம் பற்றி CATS EYE பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெறப்பட்ட தகவல்கள் இவை:
> 15-56 வயதிற்கிடைப்பட்ட 62 பெண்கள் நேர்காணப்பட்டனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர் விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
9 சிங்கள தமிழ் முஸ்லீம் பெண்கள் இந்த ஆய்விற்குட்படுத்தப்பட்டனர். இப் பெண்களில் பெரும் பான்மையானவர்கள் 20 வயதிற்கு முன்பே திருமணமானவர்கள். பெரும்பான்மையானவர் இன்னமும் கணவருடன் தான் வாழ்கின்றனர். கணவனைப் பிரிந்து வாழ்பவர்கள். கைவிடப்பட்டவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் மிகச்சிலரே.

Page 23
36
மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
9 இவர்களில் 30 பேர் சுய வருமானம் உள்ளவர்கள். பெரும்
பான்மையினர் கருத்துப்படி திருமணமான 2-3 வருடங்களின் பின் தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. கர்ப்பமுற்றி. ருக்கும் வேளைக்ளில் கூட வன்முறைக் குள்ளாகின்றனர். அவர்கள் மடடுமல்ல பிள்ளைகளும் வன்முறைக்குள்ளா. கின்றனர்.
வன்முறையைச் சகித்துக்கொண்டு வாழ்வதற்குக் காரணம் அச்சம், அவமானம் ஏற்படுமே என்ற பயம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயம். வன்முறைகள் ஏற்படுவதற்குக் காரணம் மது, ஏனைய உறவுகள், பணப்பிரச்சினைகள். உடல்ரீதியான காயங்கள் ஏற்பட்டாலும் கூட வைத்தியரிடம் போவதில்லை. போனாலும் உண்மையான காரணங்களைக் கூறுவதில்லை. காரணம் பொலிஸ், நீதிமன்றம், தண்டனை என்பவை பற்றிய அச்சம். பெற்றோர் அயலவர்கள் உதவி. னாலும் கூட கணவனை விட்டுவிடாதே குடும்பத்தைக் குலைத்து விடாதே என்று தான் கூறுகிறார்கள்.
பொலிசாரிடம் போனாலும் கூட உரிய உதவி கிடைப்பதில்லை. சகித்துப்போ, பொறுத்துப்போ என்பது போன்ற ஆலோசனைகள் தான் கிடைக்கும்.
குடும்பப் பெண் அனுபவிக்கும் தாக்கங்கள்
1.
வீட்டுவேலை உலகரீதியாக "தொழில்" எனும் தலையங் கத்தின் கீழ் அடங்குவதில்லை.
குடும்பப்பெண் இந்நிலையில் மற்றோரில் தங்கிவாழ்பவளாகக் காணப்படுகிறாள்.
வீட்டு வேலையே பெண்களது வாழ்க்கையில் முதன்மை யிடத்தைப் பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சமுதாயத்தில் நிலவுகிறது.
வீட்டுவேலை ஒரே பாங்கானதாகவும் சலிப்பூட்டுவதாகவும் அமைகிறது.

தொடரும் அவலம்: சீதனம்
சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற நீண்டகாலமாக நிலவிவருகின்ற, பிரச்சினைகளில் சீதனமும் ஒன்றாகும். ஒரு பெண் திருமண பந்தத்திற்குள் நுழைய வேண்டுமாயின் அங்கு சீதனத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பெண்ணுக்கும், பெண்ணின் உணர்வுகளுக்குமல்ல முக்கியத்துவம், சீதனமும் ஆண்களின் பதவி, அந்தஸ்துபோன்ற பல காரணங்களை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக ஆண்கள் திருமண பந்தத்தில் ஏலத்தில் விடப்படுகின்றார்கள். அத்துடன் ஆண்கள் தமக்கு வரும் பெண் சிலைகளைப் போன்று உருக்கி வார்க்கப்பட்டவர்களாகவும், வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும், இருத்தல் வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்கின்றனர். தங்களின் அருவம், உருவம் பற்றியோ, தமது நடத்தைகள் பற்றியோ எந்தவிதமான நிபந்தனையுமில்லை. சிலைகள் போல் அல்லாத பெண்களினதும் சீதனம் இல்லாத பெண்களினதும் வாழ்க்கை கேள்விக்குறியே. அனேகமாக பெண் பிள்ளைகள் அதிகமாக உள்ள குடும்பங்களின்நிலைமை பரிதாபத்திற்குரியதே. ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தால் அளிக்கப்படும் உயர்ந்த பதவியாகிய “குடும்பப்பெண்’ எனும் அந்தஸ்து தங்கள் பெண்பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் பலர் பல கவிழ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். தங்கள் பெற்றோர் தங்ளினால் பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகின்றனர். தங்கள் பெற்றோர் தங்களினால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருப்பதைத் தாங்கவும் ஏற்றுக் கொள்ளவும் முடியாத பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவைத் தாங்களே சுயமாகத் தீர்மானிக்கின்றனர். அதாவது தற்கொலை செய்வதன் மூலம் முடிவைத் தேடிக் கொள்கின்றனர்.

Page 24
38 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
ஒரு அர்த்தமான திருமண வாழ்க்கைக்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி முக்கியமானவர்களோ அதேபோல் சீதனம் என்ற மூன்றாவது காரணியும் இன்றியமையாததாக புகுத்தப்பட்டுள்ளது. இச் சீதனம் பல்வேறு வடிவங்களில் பெண்ணின் பெற்றோர்களால் அல்லது பெண்ணின் பாதுகாவலர்களினால் ஆணிற்கு வழங்கப்படுகின்றது. உங்கள் பிள்ளைக் குத் தேவையானதை நீங்கள் கொடுங்கள் என்று ஒரு நாகரிகமான முறையிலேயே சீதனம் கேட்கப்படுகிறது.
இவ்வாறு சீதனத்தைக் கேட்கும் போது கல்வித் தகைமையோ அவளின் உழைப்புத்திறனோ பெண் வீட்டாரின் குடும்ப நிலைமையோ கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இத்தகைய கொடுமையினால் எத்தனையோ பெண்கள் திருமண வாழ்க்கையை அமைக்க முடியாமலும் திருமணத்தின் பின்னும் நிம்மதியற்ற ஓர் குழப்பமான வாழ்க்கையினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெண்களோ மிகக் கொடுமையான முறையில் மாப்பிள்ளை வீட்டாரால் இம்சிக்கப்படுகிறார்கள். தீமூட்டிக் கொளுத்தப்படுகிறார்கள். மேலும் சிலர் திருமணத்தின் பின்பும் சீதனம் கேட்டு பிறந்தகத்திற்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இவ்வாறான நிலைமை இன்னமும் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் அது தனக்குத்தான் சுமை என்ற ஒரு வீணான எண்ணத்தில், கேட்கும் சீதனத்தை தமது தகுதிக்கு அப்பாற்பட்டதாயினும் கடன் மூலமாவது திரட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். ஏனென்றால் இன்று மாப்பிள்ளை எடுப்பது என்பது ஒரு ஏல விற்பனைபோல் மாறிவிட்டது. யார் கூடிய சீதனம் கொடுக்கிறார்களோ அங்கே தான் மாப்பிள்ளை வீட்டாரின் கவனம் திரும்புகிறது. மணம் முடித்து புதிதாக குடும்பத்தை ஆரம்பிப்பதற்கு முதல் ஒன்று அவசியம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அந்தப் பொருளாதாரச் செலவை அம் மூலதனத்தை ஏன் மணமகன் வீட்டாரும் பெண்வீட்டாரும் தங்கள் தங்கள் குடும்ப நிலவரத்திற்கேற்ப பகிர்ந்தெடுக்கக் கூடாது? சீதனம் என்பது அழிக்க முடியாத ஒரு சமுதாய நோயாகத் தொடர்வது வேதனைக்குரியதே. சமுதாயத்தினால் மட்டுமே இச்சீதனக் கொடுமையை அழிக்க முடியும். தனியொருவரினால் அல்ல. (சீதனம் வாங்குவதற்கெதிராக பெண்கள் போராட்டம் நடத்துவது பற்றி புகலிட எழுத்தாளர் ந. பார்த்திபன் தனது "ஆண்கள் விற்பனைக்கு" என்ற நாவலில் திறம்படச் சித்திரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது).

புதிய கொடுமைகள்
பென் சிசுக்கொலை
குறிப்பாக தமிழ்ச் சமூகத்தில் பெண் மதிப்பும் உயர்வும் பெற்றிருக்கும் வாய்ப்பு இன்று கூட பெருமளவு அதிகரித்திருப்பதாகக் கூற முடியாதுள்ளது. தமிழ்நாட்டில் அண்மைக் காலம் தொடக்கம் அதிகரித்து வரும் சிசுக்கொலை இதனையே நீருபித்துவருகின்றது. பிறக்கும் பெண் குழந்தை சுமையானதாகவும், விரும்பத்தகாததாகவும், செலவு ஏற்படுத்துவதாகவும், எதிர்காலத்தில் திருமணம் செய்து வைப்பதுவரை பாதுகாத்து பொறுப்புடன் வளர்க்க வேண்டியிருப்பதாகவும் காணப்படுவதால் பெண் பிறவி தவிர்க்கப்பட்டு வருகின்றது. இதனால் வறுமைக் கோட்டில் வாழ்ந்துவரும் தமிழ் நாட்டில் சில பிரதேசங்களிலுள்ள குடும்பங்கள் அவற்றை எதிர்கொள்ள முடியாதநிலையில் தமக்குப் பிறக்கும் குழந்தைகளை பிறந்த சிலநாட்களுள் கொன்றுவிடுகின்றனர். எருக்கலம்பாலூட்டுதல் தலையைத் திருகிக் கொல்லுதல் முதலான வழிமுறைகளில் அவற்றைச் செயற்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சில வருடங்களாக சிசுக்கொலைகள் வெகுவாக அதிகரித்து வருவதை ஒழித்துக் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்குழந்தை பிறந்ததும் அப்பிள்ளையை வளர்ப்பதற்குப் பெருந்தொகைப் பணத்தைச் செலவிட வேண்டியிருப்பதாகவும் அப்பிள்ளையைத் திருமணம் செய்து கொடுத்தாலும் பிரச். சினைகள் ஏற்படுகின்றன என கிராமவாசிகள் கருதுகின்றனர். இதனால் பெண்குழந்தை பிறந்ததும் 24 மணி நேரத்துக்குள் அக்குழந்தையைக் கொன்று விடுகின்றனர். பெற்றோரின் உதவியுடனேயே பெண் குழந்தைகள் பிறந்த உடன் கொல்லப்படுகின்றன. சிசுக்கொலைகளை கண்மூடித்தனமாக பார்த்துக்கொண்டிருக்க வேண்டாமென காவல்துறையினர்

Page 25
40 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
கேட்கப்பட்டுள்ளனர். வீடுவீடாகச் சென்று சிசுக் கொலைகளை நிறுத்துவதற்கும் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. தமிழ் நாட்டின் பஸ்களில் "பெண்குழந்தைகளைக் கொல்லாதீர்கள்"என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிசுக்கொலைகளை பெருமளவில் இடம்பெறும் சேலம், மதுரை, மாவட்டங்களில் சிசுக்கள் கொல்லப்படுவதைக் கண்காணிப்பதற்கு பெண்கள் தலைமையில் விழிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. (ராஜம் கிருஷ்ணன் எழுதிய "மண்ணகத்தில் பூந்தளிர்கள்" என்ற நாவல் சிசுக்கொலை பற்றித் திறம்படச் சித்திரித்துள்ளமை கவனத்திற்குரியது).
கருக்கலைப்பு மரணங்கள்
"சட்டவிரோத கருக்கலைப்பினால் ஒரு குழந்தைக்குத் தாயான 32 வயதுப் பெண் மரணம்" "பெண்ணின் கணவரும் கருக்கலைப்புச் செய்த வைத்தியரும் கைது" (MIDWEEK MIRROR 13.10.99) இது போன்ற செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் இடம் பெறுகின்றன. இலங்கையில் நாளொன்றுக்கு 500 - 750 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக (31.01.99) Obsever பத்திரிகை கூறியது. இக் கருக்கலைப்புகளில் 90% ம் பாதுகாப்பற்ற முறையில் செய்யப்படுகின்றன. பலர் இறக்கின்றனர். பெரும்பாலானவர்கள் பல்வேறு வகையான உடல் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர்.
இவ்விதம் கருக்கலைப்புக்கள் ஆற்றப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
1. குடும்பக் கட்டுப்பாட்டுமுறைகள் பற்றிய அறிவின்மை, அறிவை
இலகுவில் பெற முடியாதிருப்பது.
2. திருமணமாகாமல் அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்ட
Tgll D6).
3. பாலியல் வல்லுறவினால் ஏற்படும் விளைவுகள்.
சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்வதன் மூலம் பெண்கள் பாதிக்கப்படாதிருக்க வேண்டுமாயின் தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க சட்டபூர்வமான உரிமை வேண்டும். அபிவிருத்தியடைந்துவரும்நாடுகளில் இது சட்டமாக்கப்படுவது கடினம். கலாசாரம், மத நம்பிக்கைகள் என்பன கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க தடையாக இருக்கும். இவற்றைப் பெண்கள் அமைப்புக்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

புதிய கொடுமைகள் 41
பெண்களுக்குத் தமது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும். கிராமப்புறப் பெண்களுக்கும் நகர்ப்புறங்களில் பெண்கள் பெரும்பான்மையாகத் தொழில் புரியும் சுதந்திர வர்த்தக வலையம் போன்றவற்றிலும் இதற்கான விசேட திட்டங்கள் வகுக்கப்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஆற்றுவதன் மூலம் இப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். மகளிர் அமைப்புக்கள் இவ்விடயத்தில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் நாட்டில் சென்ற ஆண்டில் 4000 பெண்கருக்கள் முளை. யிலேயே கிள்ளி எறியப்பட்டுள்ளன. மூலகாரணம் என்ன தெரியுமா? பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்று கருவிலேயே ‘அம்மியோ சென்ரெசிஸ் (Amniocentesis) என்ற விஞ்ஞான முறை மூலம் கண்டு பிடிக்கப்பட்டமைதான்.
ஆண் குழந்தைதான் வேண்டும் என விரும்பும் பெண்தன் வயிற்றில் துள்ளுவது பெண் என்று தெரிந்ததும் உடனேயே அக்கருவை அழித்து விடுகிறாள். இந்த முறை நீடித்தால் இப்போதிருக்கும் பெண்களின் விகிதாசாரம் மேலும் குறைந்துவிடலாம். பிறகு ஒரு பெண் பல கணவர்களுடன் வாழும் நிலைமை ஏற்படலாம். இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பெண்கள் குமுறுகின்றனர்.
நேபாளத்தில் ஆண்பிள்ளை பெறவேண்டும் என்னும் அவாவில் எத்தனையோ அன்னைகள் தம் கருவில் இருப்பது பெண் என்று அறிந்ததும் அழித்துவிடுகிறார்கள். இதனால் பல அன்னையர் சில விபரீத விளைவுகளையும் சந்திக்கிறார்கள். நேபாளத்தில் கருச்சிதைவு சட்டவிரோதமானது. இங்கு தாய்மார் பலரும் பெண் பிள்ளையைத் தவிர்ப்பதற்காக கருச்சிதைப்பின் விளைவுகளை சகித்துக்கொள்ளவும் இதனால் இருபது வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்கவும் கூடத் தயாராக உள்ளனர். நேபாளத்தில் உள்ள சட்டவிதிகள் கருச்சிதைவிற்கும் கரு அழிப்பிற்கும் வேறுபாடு காண்பிக்காததால் அந்நாட்டுக்கான கருச்சிதைவை ஆதரிக்கும் சட்டம் ஒன்று தேவை என்று மகளிர் குழுக்கள் கோரிவருகின்றன.
பாதுபாய்பாற்ற இக் கருச்சிதைப்பு காரணமாக கிராமப்புறங்களில் வாழ்கின்ற வறிய கிராமப் பெண்கள் சிலர் கருவுடன் சேர்ந்து தாங்களும் கரைந்து விடுவார்கள். நேபாளத்தில் இடம்பெறும் மகப்பேற்று மரணவீதம் உலகிலேயே மிகவும் உயர்ந்தது. ஆயிரம் மகப்பேறுகளில் 850

Page 26
42 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
மரணத்தில் முடிகின்றன. வயிற்றில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால் கருச்சிதைவு செய்வதையே அநேகமான பெற்றோர் விரும்புவதாக நேபாள மகப்பேற்று நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஜகேஸ்வர் கோதாம் தெரிவித்தார். இத்தகைய கருச்சிதைவுகளைச் செய்து கொள்ள தலைநகர் காத்மண்டுவில் அநேகமான டாக்டர்களும் சிகிச்சை நிலையங்களும் இருப்பதாக திரிபுவான் பல்கலைக்கழக போதனா ஆஸ்பத்திரியைச் சேர்ந்த சிரேஸ்ட மகப்பேற்றுநிபுணர் போலா றியால் கூறினார். நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் தினமும் குறைந்தது பதினைந்து பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்கிறார்கள் என்று செல்வாக்கான நேபாளப் பத்திரிகையான காந்பர் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. பெண் என்று தெரிந்தவுடன் அதனைக் கருவிலேயே துடைத்தெறிந்துவிட்டால்நாளை இவ்வுலகில் பெண் இனமே கேள்விக்குறியாகிவிடும். ஒரு ஆணை உலகிற்கு முழுதாகக் கொண்டு வருபவள் அவளே. அவளைக் கருவிலேயே கலைத்து விட்டால் சமுதாயத்தில் ஆண்களின்நிலையும் கேள்விக்குறியாகிவிடும் அல்லவா?
பெண்குழந்தை வெறுப்பு - தடுப்புச்சட்டம்
இந்தியாவில் பிறக்கப்போகும் குழந்தை பெண்குழந்தையா? ஆண்குழந்தையா? என மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர் வசதியுள்ளோர். பிறந்த குழந்தை பெண்ணாயின் வெறுத்து ஒதுக்குகின்றனர் ஏழைகள். பெண் குழந்தை" களை வெறுத்து ஒதுக்குவதற்கு முக்கிய காரணம் சீதனக் கொடுமையே.
இந்தியாவில் பெண் குழந்கைளை வெறுத்து ஒதுக்குவதை தடுப்பதற்காக ஏழைக்குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு மாதம் 500 ரூபாய் வழங்கும் திட்டம் ஒன்றை மத்திய அரசு அக்டோபர் 2ம் திகதி நடைமுறைப்படுத்தியுள்ளது. இத் திட்டம் எவ்வளவு கேவலமாகப் பெண்களை இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் செய்துள்ளது. அதாவது பெண்கள் ஒரு கேவலமான பிறப்புக்கள் அவர்களைக் கொலை செய்வதையோ, வெறுத்து ஒதுக்குவதையோ தடுப்பதற்குத்தான் இத்திட்டம். அவர்களும் மனித உயிர்கள். அவர்கள் வாழ்வதற்கு உரிமையுண்டு. அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன? அவர்களுடைய பிரச்சினைக்கு யார் காரணம்?இதையெல்லாம் கருத்திற் கொள்ளாமல் இத்திட்டத்தை அமுல்படுத்தியது வேதனையே, பெண் குழந்தைகளை வெறுத்து ஒதுக்குவதற்கான மூலகாரணமாகிய சீதனக் கொடுமைக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கலாம்.

புதிய கொடுமைகள் 43
பெண்குழந்தையாக இருக்கும்போது கொடுக்கும் 500 ரூபா பணமாகிய இத் திட்டம் அவர்கள் வளர்ந்து பெரியவர்களானதும் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினையாகிய சீதனத்துக்கும் ஈடு செய்யுமா? அப் பணம் என்றென்றும் பெண்ணின் இழிநிலைக்கு சான்று பகிர்வதாக, அதை நியாயப்படுத்துவதாகவே அமையும்.
மரணதண்டனை
கடந்த பத்து பன்னிரண்டு ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் இருபத்தெட்டுப் பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் இப்பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் கணவர்களை அல்லது தந்தையர்களைக் கொலை செய்த குற்றத்திற்கு ஆளானவர்கள் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
சவூதி சட்டசபையில் பெண்களுக்கு கடும் பிரதிகூலங்கள் இருப்பதாகவும் அது கூறியது. ஆண் விசாரணையாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி பெண்களை நிர்பந்திப்பதாகவும் அது கூறியது. நியாயமற்ற வகையில் நடைபெறும் விசாரணையின் மூலம் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் மனித உரிமைக் குழு தெரிவித்திருக்கிறது.
சமூகத்தில் பெண்களின்நிலை மிகவும் பாதகமாக குறிப்பாக வீட்டு வேலைக்காரப் பெண்களின்நிலை மோசமாகவுள்ளது என்றும் விசாரணை இரகசியமான முறையிலேயே நடைபெறுவதாகவும் மேலும் அது கூறி உள்ளது.
பெண்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் பற்றிக் குறிப்பிட்டுள் சர்வதேச மன்னிப்புச்சபை 1990 ஆம் ஆண்டுக்குப் பின் பதினாறு பெண்கள் கொலைக் குற்றத்தின் பேரில் மரணதண்டனைக்கு ஆளாகியுள்ளனர் என்றும் இவர்களில் பத்துப்பேர் தங்கள் கணவர்களை அல்லது தந்தையர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டனர் என்றும் மேலும் கூறி உள்ளது.
சவூதி அரேபியப் பெண்களுக்கு பிரயாணம் செய்யும் இடங்கள் யாருடன் அவர்கள் தொடர்பு கொள்வது என்ற அம்சங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் அது கூறியது.

Page 27
44 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
மிகக்கொடுரமான தண்டனைகள்
ஆப்கானிஸ்தானில் இயங்கும் தாலிபான் இயக்கம் இஸ்லாமிய சட்டங்கள் என சில சட்டங்கிளை அமுலாக்கி அவற்றை மீறுவோருக்கு மனிதாபிமானமற்ற முறையில் மிகக் கொடூரமான தண்டனைகளை வழங்குகின்றது. அச்சட்டங்களை மீறியதற்காக நூற்றிற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் தண்டிக்கப்பட்டனர்.
ஆண்கள் தாடியை மழிக்கக்கூடாதெனவும் பெண்கள் இஸ்லாமிய முறையிலான பர்தா ஆடையை அணிய வேண்டுமெனவும் ஆண் துணையின்றியோ இரத்த உறவு அல்லாத ஆண்களுடனோ பெண்கள் வெளியே செல்லக்கூடாதெனவும் கணுக்கால்களை வெளியே காட்டி பெருங்குதிக்கால் கொண்ட பாதணிகளை அணியக்கூடாதெனவும் இவ்வியக்கம் கட்டளை விதித்துள்ளது. இக்கட்டளைகளை மீறுவோருக்கு கசையடிகள் உட்பட மனிதாபிமானமற்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

அரசியலில் பெண்களின் பிரவேசம் : சில கேள்விகள்
உலக சனத்தொகையில் பெண்கள் 50வீதமானோர், ஆயினும் எமது தேசிய,பொருளாதார கட்டமைப்புக்களில் அவர்களது பங்களிப்பு இன்னமும் இலைமறைவு, காய் மறைவாகவே இருந்து வருகின்றது. 159 தேசத் தலைவர்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளில் தலைவர்கள் மட்டுமே பெண்களாவர். 154 நாடுகளில் பெண்களுக்கு தலைமைத்துவம், முடிவு எடுக்கும் பொறுப்புக்கள் அளிக்கப்படவில்லை. 50 நாடுகளில் பெண்கள் தலைமைத்துவம் வாய்ந்த பதவிகளில் அதாவது, அமைச்சர், பிரதி அமைச்சர், செயலாளர், ஆகியவை போன்ற பதவிகளில் அடியோடு இல்லை. இவை பெண்கள் அரசியலிலும், தேசிய அரசியலும், பிரதிநிதித்துவம் வகிக்காததைத் தெளிவுபடுத்துகின்றன. வளர்முக நாடுகளில் மட்டுமன்றி, வளர்ச்சி பெற்ற நாடுகளிலும், பொதுவுடைமை நாடுகளிலும் கூட இதே நிலை காணப்படுகின்றது.
இலங்கையில் பெண்கள் அரசியல் ஈடுபாடு கொள்வது பலகாலமாக இருந்து வந்துள்ளது. உலகில் முதல் பெண் பிரதமர் பதவியேற்ற எமது நாட்டில் தற்போது ஆசியாவின் நான்காவது ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் பதவியேற்றுள்ளார்கள். இத்துடன் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா, மற்றும் சிறிமணி அத்துலத் முதலி (சுற்றாடல், பெண்கள் நலன், போக்குவரத்து) ஆகியோரையும் எமது தேசிய அரசு கொண்டிருந்தது.
எமது முன்னைய பாராளுமன்றத்தில் 255 அங்கத்தவர்களிடையே 11 பெண்கள் பதவியேற்றிருந்தனர்.

Page 28
46 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
இது எமது தேசிய அர்சியல் ஒரு முன்னேற்றத்தைக் காண்பிக்கின்றது. எனினும், பாராளுமன்ற அங்கத்தவர்களில் 5 வீதமானோரும், அமைச்சர் பதவி வகிப்போரில் 20 வீதமானோரும் மட்டுமே பெண்களா. யிருந்தனர். இந்த யதார்த்தம் எதைக் குறிப்பிடுகின்றது?
பெண்கள் அரசியலில் வாரிசு’ க்களாக மட்டுமே கருதப்படுகிறார்களா?
அல்லது ஆண்களைப் போன்றே மக்களது இனப் பிரதிநிதிகளாக அங்கம் வகிக்கின்றனரா? இதனால் பெண்களுடைய தற்போதைய உரிமைகளில், சமத்துவநிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்படுமா, அல்லது எமது பிரச்சினைகள் வழக்கம் போல் நீருக்கடியில் போய்விடுமா?

தொடர்பு ஊடகங்களில் பெண்கள் : சில அவதானங்கள்
வானொலி நாடகங்களில்.
வானொலி நாடகங்களில் பெண்களை சித்திரிக்கும் முறை பற்றி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கவனத்திற்கு கொண்டுவர பெண்ணின்குரல் சஞ்சிகை விரும்பியிருந்தது. குறுநாடகங்களிலும் நாடகத்தின் பகுதியாக பிரச்சாரம் செய்யப்படும் நாடகங்களிலும் பெண்கள் பாத்திரமானது எப்போதும் கண்ணிர் வழிகின்ற, புலம்புகின்ற பாத்திரமாக சித்திரிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். பெண் தொடர்ந்தும் அழுகின்ற காட்சிகளைக் கொண்ட நாடகங்கள் தவிர வேறு நாடகங்கள் இல்லை என்ற நிலை காணப்படுகின்றது. பெண்கள் பலவீனமான சுபாவம் உள்ளவர்களாகவும் சிறு பிரச்சினைகளில்கூட கண்ணிர் வடிப்பவர்களாகவும். சிறுபிள்ளைத்தனமானவர்களாகவும், சித்திரிக்கப்படுவதற்கு எமது பூரண எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். பொருளாதார சமூக வாழ்வில் அவர்கள் சமவாய்ப்பைப் பெறாத குறைந்த ஒரு பிரிவினராகவும் அவர்களின் நிலையைத் தொடர்ந்தும் அவ்விதம் வைத்திருப்பதற்கு உதவுவதாகவும் எமக்குப்படுகின்றது. பெண்களை இவ்வாறு சித்திரிப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தையும், நாடக எழுத்தாளர்களையும், நாங்கள் மிகத்தயவுடன் கேட்டுக்கொள்வதோடு, அவமானத்துக்குரிய பெண்பாத்திரங்களில் நடித்தலை பகிஷ்கரிக்கும்படி நடிகைகளையும், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்விதமே பெண்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் புலம்புகின்ற விம்முகின்ற பிரிவினராக இல்லாதிருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். பெண்ணின் குரல் 1978 முதலாம் இதழில் கூறப்பட்ட இதே கருத்துக்களும் விமர்சனங்களும் இன்னும் தொடரும் நிலை விசனத்துக்குரியது.

Page 29
48 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
தொலைக்காட்சி விளம்பரங்களில்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் பெண்ணுரிமை, பெண்விடுதலை, ஆண், பெண் சமத்துவம் என்பன பரவலாகப் பேசப்படும் இக்கால கட்டத்தில் எமது விளம்பரங்கள் யதார்த்தத்தை ஏற்க மறுப்பது புலனாகின்றது.
பெண் பெரும்பாலான விளம்பரங்களில் கவர்ச்சியின் சின்னமாகவே இடம்பெறுவதனை அவதானிக்க முடிகின்றது. சில விளம்பரங்கள், குறிப்பிட்ட பொருட்களுக்கா அல்லது பெண்களுக்கா என்ற குழப்பத்தைக் கூட ஏற்படுத்தும் விதத்திலுள்ளன; அதாவது பெண்களே அவற்றில் முதன்மையிடம் பெறுகின்றனர். விளம்பரங்களுக்கும் பெண்களுக்கும் எதுவித தொடர்புகளுமற்றவாறு அமைந்துள்ள விளம்பரங்களும் காட்டப்படுவதுண்டு.
அனைத்தையும் விட, இவற்றிலே பால் ரீதியான பாரபட்சங்கள் இடம் பெறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, லக்சபான பற்றறியில் விளையாடுபவரோ கிறிக்கட் பார்த்து மகிழ்பவராக சிறுவராகவோ ஆணாகவேதான் காணப்படுவார்; ஒருபோதும் சிறுமியாகவோ பெண்ணாகவோ இடம் பெறுவதில்லை.
இலங்கைத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பப்பட்டு வந்த ஒரு குறிப்பிட்ட சலவைச் சவர்க்கார விளம்பரம் இச்சமுதாய மாற்றங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறது. தனது உடைகளை ஒழுங்காக மனைவி துவைக்கவில்லை எனக் கூப்பாடு போடும் கணவனும், பயத்தோடும் கலங்கிய கண்களோடும் அதை ஏற்று அவதிக்குள்ளாகும் மனைவியும் பெண் அடிமை நிலையை மீளவலியுறுத்தும் கதாபாத்திரங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். w
இதே விளம்பரத்தின் சிங்களப் பதிப்பில், கூப்பாடுபோடும் கணவனிடம் “அப்படியானால் உங்கள் துணிகளை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள்’ என மனைவி தைரியமாகப் பதில் அளிக்கிறார். மாறிவரும் சமுதாய அமைப்பின் யதார்த்தத்தை இது குறிக்கிறது. ஆக, பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் எமது ‘கலாசாரம்’ என விளம்பரத் தயாரிப்பாளர் மறைமுகமாகக் கூறுகின்றாரா?

தொடர்பு ஊடகங்களில் பெண்கள் : சில அவதானங்கள் 49
இரு நல்ல நாடகங்கள்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ‘பூச்சியம்' கலைக் குழுவுடன் இணைந்து இரண்டு தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. முதலாவது நாடகத்தின் தலைப்பு “து’. இந்த நாடகம் தொலைக்காட்சியைத் தொடர்ச்சியாகப் பார்த்துவரும் ஒருவருக்கு ஏற்படும் மனோநிலை மாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது. தொலைக்காட்சி நாடக கதாநாயகர்களைப் பின்பற்றி அவரைப் போல நடக்க முற்படும் உளரீதியான தாக்கத்தை இது சித்திரிக்கின்றது.
இரண்டாவது நாடகத்தின் தலைப்பு “தூ’. இந்த நாடகம் பெண்கள் தொடர்பான ஒரு கருத்தும் படிமத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பல பெண்களுடன் தொடர்புகொண்ட ஒரு ஆண் தனது மனைவி ஆண்களுடன் எதுவிதத் தொடர்பும் கொண்டவளாக இருக்கக்கூடாது என்ற ஆண்களின் மனோபாவத்தையும் இதற்குத் துணையாக மிகப் பழைய காலந்தொட்டு மணப் பெண்களின் கன்னித் தன்மையை நிரூபிக்க புதுமணத் தம்பதிகளின் படுக்கையில் வெள்ளை விரிப்பு விரிக்கும் வழக்கத்தையும் அதனால் பெண் அடையும் பாதிப்பையும் இது எவ்வளவு அருவருப்பான கருத்து என்பதையும் சித்திரித்துக் காட்டுகிறது.
இந்த நாடகங்களில் உள்ள விசேட தன்மை என்னவெனில் இதில் நடித்த கதாபாத்திரங்கள் உரையாடலின்றி வெறும் நடிப்பின் மூலமே கருத்துக்களை வெளிகாட்டியுள்ளமையாகும்.
'ஒழுக்காற்று விதி
தற்போதைய யதார்த்த வாழ்வில் பெண்களின் பங்களிப்பு, ஆற்றல்கள் பால்நிலைச் சமத்துவம் என்பவற்றைப் பிரதிபலிப்பனவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைவதன் அவசியத்தை உணர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள், கொள்கை வகுப்போர், விளம்பரத் தயாரிப்பாளர்கள் போன்றவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுக்காற்று விதிகள் கொண்ட சிறு நூல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு பின்னர் சிங்கள, தமிழ் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Page 30
50 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
மூன்று மாத காலம் தொடர்ச்சியாக அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளையும் ஆய்வுக்குட்படுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு தொடர்புடைய பல அறிஞர்களோடு கலந்து விவாதித்தும் ஏனைய நாட்டு ஒழுக்காற்று விதிகளை ஆய்வு செய்தும் ஆராய்ந்தும் இந்த நூல் எழுதப்பட்டது பல்வேறு நாடுகளில் இவை தொடர்பாக வெளிவந்த நூல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. வருங்காலத்தில் பெண்கள் பற்றிய கருத்தியலில் காணப்படும் தவறான கருத்தியல்கள் நீக்கப்பட்டு புதிய கருத்துப் படிமங்கள் ஏற்படுத்த இந்த நூல் உதவும்.
சினிமாக்களில்.
சினிமாக்களில் பெண் சித்திரிக்கப்படுகின்ற விதம் குறித்து ஜெர்மனிய பெண் இயக்குனரான ஈவாஹாய்மன் கூறியதுபோன்று, "அது ஜெர்மனியானாலென்ன, சீனாவென்றாலென்ன அமெரிக்கா அல்லது இந்தியா என்றாலென்ன பெண்மேல் ஆண்மேலாதிக்கம் கட்டவிழ்த்து விடுகின்ற குரூரங்களின் அடிப்படை ஒன்றுதான். பெண்ணுக்கு இழைக்கப்படுகின்ற கொடூரங்களின் அளவுதான் இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. ஆண் மேலாதிக்கக் கண்ணோட்டத்தில் உருவாக்கப்படுகின்ற சினிமாக்களும் அவற்றில் பெண்ணின் வாழ்க்கையை அதற்கேற்பவே வடிவமைக்க முயல்கின்றன. சில சோஷலிச நாடுகள் தவிர்ந்த உலகின் ஏனைய எல்லா நாடுகளிலும் பெண்ணினத்தை அவமானப்படுத்துகின்ற கலைவடிவமாகவே சினிமாத்துறை விளங்கி வருகின்றது. ஆய்வாளரொருவர் கூறுவது போன்று, "ஒன்றில் குடும்பக் கடமைகளுடன் பிணைத்துப் பின்னப்பட்ட கெளரவ அடிமையாகப் பெண் சித்திரிக்கப்படுகின்றாள். அல்லது பெண்ணை வெறும் போகப் பொருளாகவும் இனக்கவர்ச்சியின் அடையாளமாகவும் காட்டுகின்றனர்”
அதேவேளையில் மேற்கூறியதன்மைகளுக்கெதிரான போராட்டங்களும் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. சினிமாத்துறையினுள் பல்துறைகளிலும் பெண்களும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், நமது நாட்டின் நிலைமை வேறு விதமானது. நல்ல சினிமா பற்றிய அறிவையும் ரசனையையும் ஏற்படுத்துவதிலேகூட அக்கறை கொள்வோர் அரிது. இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் பெண்கள் கல்வி ஆய்வு வட்டம் அவ்வப்போதுநல்ல சினிமாக்களைக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்பு ஊடகங்களில் பெண்கள் : சில அவதானங்கள் 51
இலையும் முள்ளும்’
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம் (2001.03.23) மேற்படி மலையாளத் திரைப்படத்தை கருத்தரங்கு மண்டபத்தில் காட்டியது.
ஆணாதிக்கச் சமுதாயத்தின் கீழ்ப் பெண்கள் படும் துயரங்களை இப்படத்தின் இயக்குனர் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். தப்புவதற்கே வழியில்லாமல் தவிக்கும் பெண்ணின் அவலம் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. எந்தப் பக்கம் அவள் திரும்பினாலும் அவளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் சபலங்களை சாகடிக்கத் துணியும் அத்திரைப்படத்தின் கதாநாயகி இறுதியில் ஆணாதிக்க அலைகளால் அடிக்கப்பட்டு அணைந்து போகும் பரிதாப நிலை அனைவர் உள்ளத்தையும் உருக்கி விட்டது. வாழத் துடிக்கும் அப்பெண் இறுதியில் வழி தெரியாது வாடி வதங்கி விடுகிறாள். இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பெண்கள் அனுபவிக்கும் துயரங்களை இப்பெண்ணின் மூலம் அனைவர் முன்னும் கொண்டு வந்து நிறுத்தி வழி தேட வைக்கிறார் இயக்குனர். முள்ளில் இலைபட்டாலும் இலையில் முள்பட்டாலும் இலைக்கே காயம். பெண்ணின் பரிதாபம் படத்தைப் பார்த்தோரது சிந்தனையைத் தூண்டுகிறது.
(35III Lng fr’ (God Mother)
சமூகத்தில் ஆண்கள் என்றால் எப்போதும் அதிகாரம் உடையவர்கள். பெண் என்பவள் அவனுக்கு எப்போதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என பெண் என்பவள் எப்போதும் கீழேயே தள்ளப்படுகிறாள். இச்சூழ்நிலையில் பெண் என்பவள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது எப்படி இருக்கும் என்பதைச் சித்திரிப்பதாக இப்படம் விளக்குகிறது.
இயக்குனர் லினய் சுக்லா இதில் கதாநாயகியாக வரும் ரம்மி. தேவியை மிகவும் துணிச்சலும் புத்திசாலித்தனமுமான பெண்ணாகவும் எடுத்துக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில் அவளும் ஒரு சாதாரண குடும்பய் பெண்ணாகவே காட்டப்படுகிறாள். ஆனால் அரசியல் சதியினால் அவளது கணவன் கொலை செய்யப்பட்டதும் அவளது இதயம் ஆவேசம் கொள்கிறது. கணவனை இழந்த ரம்மிதேவியை அவளது மைத்துனர் மிதிக்க முற்படும் போது துடித்தெழும்புகிறாள்.

Page 31
52 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
தற்பொழுது பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு வன்முறை பெருந்தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ரம்மிதேவியும் இதற்கு விதிவிலக்கானவள் அல்ல. ரம்மிதேவி அரசியலில் ஈடுபடுவதுடன் இறப்புவரை பல ஆண்களைச் சந்திக்கிறாள். தன் எதிரிகளையும் கேடு நினைப்பவரையும் ஈவிரக்கமின்றிக் கொல்லுகிறாள். ஆழ்ந்த அனுதா. பங்களுடன் மரணச் சடங்குகளில் பங்கு கொள்ளும் போக்கு, அரசியலில் வன்முறை என்று வரும்போது அங்கே பெண்ணைய் பயங்காட்டித் தள்ள முடியாது என்ற அவளது மனவுறுதி, அஞ்சா நெஞ்சம், ஆழ்ந்த அறிவு அரசியல் சாதுர்யம் என்பவை எடுத்துக் காட்டுகின்றன.
தயாரிக்கமுடியாதபடி தடுக்கப்பட்ட வோட்டர் (Water)
தவறுதலாக கருத்துச் சொல்லக்கூட கலைஞர்களுக்கு உரிமை உண்டு. அதை எதிர்ப்பவர்கள் கலையின் மூலம்தான் எதிர்க்க வேண்டுமே ஒழிய வன்முறையின் மூலம் எதிர்க்கக்கூடாது என்கிறார் பிரபஞ்சன். வோட்டர் திரைப்படத்தை இயக்கிய தீபா மேத்தா. இப்படத்தின் கையெழுத்துப் பிரதியை மத்திய அரசுச் செய்தி விளம்பரத்துறையிடம் அளித்த அங்கீகாரம் பெற்றவர். அதை வைத்துக்கொண்டு படம் எடுக்கக் கங்கை நதிக்குச் சென்ற போது சல்பரிவார் அமைப்புக்கள் ஆர். எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்து படத்தை எடுக்க முடியாது செய்துவிட்டனர்.
கங்கைக் கரையில் வாழும் விதவைகளை, விபச்சாரிகளாகக் காட்ட முயற்சி செய்வதை எதிர்ப்பதாக இந்த இயக்கங்கள் கூறுகின்றன. கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கையை, தீபா மேத்தா கலையின் மூலம் சொல்ல முற்படுகிறார். ஆனால் இப்படி எடுத்தால் கலாசாரம் தூக்கி எறியப்படுகின்றது என்று இந்த இயக்கங்கள் கூறுகின்றன.
ஒரு விதவைப் பெண் எந்த மாதிரி இன்பத்தைப் பெறவேண்டும் என அவள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கலைஞர்களை ஒடுக்கத் தான் செய்கிறார்கள். கலைஞர்களின் சுதந்திரத்தைப் பறிப்பதை எதிர்த்து கலைஞர்கள் போராட வேண்டும் . கலைஞர் என்ற முறையில் தீபா மேத்தாவின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். தவறுதலாக கருத்துச் சொல்லக்கூட கலைஞர்களுக்கு உரிமை உண்டு. அதை எதிர்ப்பவர்கள் கலையின் மூலம் தான் எதிர்க்க வேண்டும் என்கிறார் பிரபஞ்சன். (Fire, Earth முதலான சர்ச்சைக்குரிய படங்கள் மேற்குறிப்பிட்ட தீபா மேத்தாவினாலேயே எடுக்கப்பட்டன.)

வரலாற்றில் தடம் பதித்தோர்

Page 32

வரலாற்றில் தடம் பதித்தோர்
1. இலங்கையில்
அ. அரசியல் வரலாற்றில்
i. பெண்களின் உரிமைக்கும் நீதிக்குமாகப் போராடிய
விவியன் குணவர்த்தன
இலங்கையில் ஒடுக்கப்பட்டவர்கள். ஏழைகள் பெண்கள் தொடர்பான போராட்டங்களில் முன்னின்று உழைத்தவர் “விவி” என அன்புடன் அழைக்கப்படும் விவியன் குணவர்த்தன அவர்கள்.
எமது நாட்டு அரசியல் வரலாற்றில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகச் சில பெண்களில் விவி என்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
அவிசாவலையைச் சேர்ந்த மிகச் செல்வந்தரான பொரலுகொட ராலகாமியின் பேத்தியான இவர் பிறப்பால் செல்வந்தராக இருந்த பொழுதும் ஏழை மக்கள் மீது இரக்கம், நியாயத்துக்காகப் போராடும் தன்மை, தாம் சரியென்று நினைப்பதைத் தயங்காமல் வெளியிடும் குணம், எதற்கும் அஞ்சாத துணிவு என்பவற்றைக் கொண்டவர்.
பாரதி கூறியது போல நிமிர்ந்த நன்னடையையும் நேர்கொண்ட பார்வையும் ஞாலத்தில் யார்க்கும் அஞ்சாத தன்மையும் கொண்டவர்.
கல்வியில் சிறந்து விளங்கிய போதிலும் அக்காலத்து ஆணாதிக்க சமூகக் கட்டுப்பாடு அவருடைய கல்விக்குத் தடை விதித்தது. பொரலு கொடை சிங்கங்கள் என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்த்தன, ரோபேட் குணவர்த்தன என்னும் தாய் மாமன்மாரின் உதவியால் இரகசியமாகவே படித்துப் பட்டம் பெற வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டது.

Page 33
56 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
சிறு வயதிலேயே சேவை மனப்பான்மை கொண்ட வி.வி. நாட்டில் மலேரியா நோயில் நூற்றுக்கணக்கில் மக்கள் மடிந்து கொண்டிருந்தபோது வைத்தியரான தந்தையுடன் சேர்ந்து நோயுற்ற மக்களுக்குச் சேவை செய்தார்.
மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சூரியமலர் இயக்கத்தில் மிக ஆர்வத்தோடு செயற்பட்ட விவி; இந்த இயக்கம் லங்கா சமசமாஜக் கட்சியாக உருவான பொழுதில் அதில் இணைந்து கொண்டவர். லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்களின் ஒருவரான லெஸ்லி குணவர்த்தனாவைக் காதலித்தார். “சாதி” குறுக்கிட்டது. வீட்டில் சிறை வைக்கப்பட்டார். சட்டத்தின் உதவியால் திருமணத்தை நிறைவேற்றினார்.
பட்டம் பெற ஒரு போராட்டம். காதலிக்க ஒரு போராட்டம்.
திருமணத்துக்கு ஒரு போராட்டம். நாட்டு விடுதலைக்கு ஒரு போராட்டம் என போராட்டமே வாழ்வாகக் கொண்டவர் வீர மங்கை விவி.
சுதந்திரத்தின் பின் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டார். மே தின ஊர்வலங்கள் மகளிர் தின ஊர்வலங்கள், வேலை நிறுத்தங்கள் என்பவற்றில் கோஷமெழுப்பிய விவி பொலீசாரால் தாக்கப்பட்டதுமுண்டு.
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களது பிரச்சினைகள் தொடர்பாகவும், புலம் பெயர்ந்து செல்லும் பெண் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிக அக்கறை காட்டி அவற்றுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர்களையும் அரசையும் வற்புறுத்தி வந்தார்.
i. வாக்குரிமை தந்த நல்லம்மா
இந்திய வழக்கறிஞரான சத்திய வாகீஸ்வரன் அவர்களின் மனைவி திருமதி நல்லம்மா. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் உழைக்கக் கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைச் சுரண்டித் தமது நாட்டுத் திறைசேரியை நிரப்பிய ஆங்கிலேயர் தாம் அறியாமலே செய்து விட்ட நற்காரியம் திருமதிநல்லம்மாவை இங்கு வரச் செய்தது.
ஆண் தொழிலாளர்களே அடிமைப்பட்டுக் கிடக் கையில் பெண்களின்நிலை பற்றிநினைக்கவே முடியாது. அவ்வளவு அவலமானது.

வரலாற்றில் தடம் பதித்தோர் 57.
சம்பளமற்ற அடிமைகளாக குடும்பச் சுமையையும் சேர்த்துச் சுமக்கும் பொதிமாடுகளாக வாழ்ந்தனர்.
இங்கு சமூகப் பணியாற்ற வைத்தியர்களாக, ஆசிரியர்களாக கன்னியாஸ்திரிகளாக வந்த ஆங்கிலேயப் பெண்களைக்கண்டு, இவர்களால் சமூகப் பணியாற்ற முடியுமானால் ஏன் எங்களால் முடியாது? என்ற எண்ணம் திருமதி நல்லம்மாவுக்கு ஏற்பட்டது. அவரது கருத்தை அவரது கணவரும் ஆதரித்தார். கணவர் நடத்திய பத்திரிகையில் பெண்களுக்காக நல்லம்மா எழுதினார். ஆங்கிலக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவரது முன்னேற்றக் கருத்துக்கள் பரவத் தொடங்கின. பலர் அவரது அணியில் திரண்டனர்.
டொனமூர் ஆணைக்குழு மக்களது கருத்துக்களைக் கேட்ட பொழுதில் திருமதிநல்லம்மா ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தார். பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அவரது கருத்து பலத்த எதிர்ப்புக்குள்ளானது. எதிர்த்தவர்களில் முக்கியமானவர் சேர். பொன். இராமநாதன். தீவிர எதிர்ப்பின் மத்தியிலும் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.
இன்று தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கின்றனர். அபேட்சகர். களாகப் போட்டியிடுகின்றனர் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர். களில் ஒருவர் திருமதி நல்லம்மா அவர்களே. பெண்களின் முன்னேற்ற வரலாற்றில் வாக்குரிமை பெற்றுத்தந்தநல்லம்மா அவர்கள் இன்னுமொரு மைல்கல் ஆகிறார்.
(இவர் பற்றிய விரிவான வரலாறு, பெ.க.ஆ நிறுவனத்தினால் "இன்னொரு நூற்றாண்டுக்காய்" (சாரல் நாடன்) என்ற நூலாக வெளியிடப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது)
i. பெண்களுக்கு கல்விக் கண் திறந்த தங்கம்மா
சேர் பொன் இராமநாதன் யாழ்ப்பாணத்தில் இராமநாதன் கல்லூரியைப் பெண்களுக்காக நிறுவினார். இதே போன்றதொரு கல்லூரியைத் திருமலையில் நிறுவ வேண்டும் என்ற எண்ணம் யாழ்ப்பாணம் சென்ற பொழுது திருமலையில் வாழ்ந்த திரு. சிற்றம்பலம் சண்முகம்பிள்ளைக்கு ஏற்பட்டது.

Page 34
58 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
இவ்வெண்ணத்தை அவர் தமது துணைவியாரான தங்கம்மா அவர்களிடம் கூறியிருந்தார். இருவருமாக கல்லூரியொன்றை நிறுவும் முயற்சியை ஆரம்பிக்க முன்னரே திரு. சண்முகம்பிள்ளை காலமாகி. விட்டார்.
கணவனை இழந்த நிலையிலும் அவரது கனவை நனவாக்க விரும்பிய தங்கம்மா கணவரின் பெயரால் பூரிசண்முக வித்தியாலயத்தை நிறுவினார். அதிபர் ஆசிரியர்களை நியமித்துக் கல்லூரியைத் திறம்பட நிர்வகித்தார். சிறந்த தரமான கல்வியை அளிக்க விரும்பி இந்தியாவில் இருந்து சிறந்த கல்விமான்களை அழைத்து ஆசிரியர்களாக நியமித்தார். கல்லூரியும் வளர்ச்சி பெற்றது.
தனது காலத்தின் பின்பும் பெண்கள் முன்னேற்றத்திற்கான இப்பணி செவ்வனே தொடர சட்டபூர்வமாக தமது பெறாமகனாகிய திரு.கிருஷ்ணதாசனது பொறுப்பில் இயங்கச் செய்தார்.
நகைகளை விற்றுத்தான் இந்தக் கல்லூரிக்கு தேவையான பணம் பெறப்பட்டது. பெண்களைப் பொதுவாக நகைப் பித்து பிடித்தவர்கள் என்று கூறுவது ஆண்களின் இயல்பு. இங்கு தனது சொத்துக்களை விற்று நகைகளையும் விற்று பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று பாடுபட்ட ஒரு பெண்ணைச் சந்திக்கிறோம்.
திருமதி தங்கம்மா பெண்களின் கல்விக் கண்ணைத்திறக்க கல்லூரி ஒன்றை நிறுவியவர். இவர் இந்த நாட்டுப் பெண்களின் முன்னேற்ற வரலாற்றில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.
iv. மாதர் ஐக்கிய சங்கம் நிறுவிய தையல்நாயகி சுப்பிரமணியம்
பெண் முன்னேற்றம் தொடர்பாக திருமதி தையல் நாயகி சுப்பிரமணியம் என்பவர் "திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் என்னும் அமைப்பு ஒன்றை ஏறத்தாழ 1920ம் ஆண்டளவில் நிறுவி அதன் காரியதரிசியாக விளங்கினார். 1927ம் ஆண்டு மாதர் மதிமாலிகை" என்ற பெண்கள் சஞ்சிகையை ஆரம்பித்து சில ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டார். பல இடர்கள் மத்தியிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அவர் பல சேவைகள் புரிந்துள்ளார். (இவர் பற்றிய விரிவான தகவல் கொண்ட, "பெண் விரிவாக்கச் சிந்தனைஉருவாக்கத்திலும் செயற்பாட்டிலும் திருகோணமலைப் பிரதேசம் என்ற, தலைப்பிலான கட்டுரை இத்தொகுப்பின் பதிப்பாசிரியரால் ஞானம், மார்ச் 2004ல் எழுதப்பட்டுள்ளது.)

வரலாற்றில் தடம் பதித்தோர் 59
V. தொழிலாளர் உரிமைக்காகப் போராடிய ஜெயலட்சுமி
தோட்டத் தொழிலாளர்கள் என்றால் நிர்வாகத்தால் சுரண்டப்படும் வாயில்லாய் பூச்சிகள் என்பதே பொருள்.
தொழிலாளரைச் சுரண்டித் தமது பணப்பெட்டிகளை நிரப்ப பல்வேறு வகையான தந்திரோபாயங்கள் காலத்துக் காலம் முதலாளிகளால் கையாளப்படும்.
போகவந்தலாவைத் தோட்டத்தில் உற்பத்தியைப் பெருக்குங்கள் இலாபத்தில் 50% பங்கு தரப்படும் என்று ஆசை காட்டியது நிர்வாகம். தொழிலாளர் ஒத்துழைத்தனர். லாபமும் கிடைத்தது. ஆனால், தொழிலாளர் ஏமாற்றப்பட்டனர். முதலில் லாபத்தில் 50 வீதம் தர ஒப்புக் கொண்ட நிர்வாகம் லாபத்தில் 10 வீதம், 5 வீதம் எனக் குறைத்தது. இறுதியில் எதுவுமே கொடுக்கவில்லை.
இந்தத் தோட்டத்த் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். இந்தப் பெண் தொழிலாளர்களில் ஒருவர் தான் ஜெயலட்சுமி. வாக்களித்தபடி லாபத்தில் பங்கு தரமறுத்த நிர்வாகத்தைப் பணிய வைக்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். வேலைநிறுத்தம் செய்தவர்களில் பெண்களை விட்டு விட்டு ஆண்களை வேலைக்கழைக்க நிர்வாகம் முயன்றது. ஆண்களும் பெண்களை விட்டு விட்டு வேலைக்குப் போகத் தீர்மானித்தனர். பெண்களை விட்டு விட்டு வேலைக்குப் போகும் ஆண்களைவிவாகரத்துச் செய்வோம் எனக் கொதித் தெழுந்தனர் பெண்கள். இந்த மிரட்டலுக்குத் தலைமை தாங்கியவர் ஜெயலட்சுமி. மிரட்டல் பலனளித்தது வேலைக்குப்போகும் எண்ணம் கைவிடப்பட்டது.
இப்பிரச்சினை பற்றிப் பேச ஒரு பிரதிநிதியை அனுப்பும்படி கேட்டது நிர்வாகம். தொழிலாளர்கள் ஜெயலட்சுமியைத் தமது பிரதிநிதியாகச் தெரிவு செய்தனர். பேச்சு வார்த்கையின் போது தொழிலாளர் சார்பில் வாதாடி லாபத்தில் பங்கு பெறச் செய்தார் ஜெயலட்சுமி.
இந்தப் பெண் துணிந்துநின்று தனது வர்க்கத்துக்காகத் தலைமை தாங்கிப் போராடியபடியால் உரிமைகளை வென்றெடுக்க முடிந்தது. துணிந்து நின்று போராடினால் எமது உரிமைகளை நாமே வென்றெடுக்க முடியும் என்பதை இது காட்டுகின்றது.

Page 35
60 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
ஆ. சமகாலத்தில்
1. ஒவியர் - நிலந்தி வீரசேகர
இலங்கையில் ஒவியத்தின் மூலம் தன்னை ஒரு பெண்நிலைவாதியாக இனங்காட்டிக் கொண்டவர்களுள்நிலந்தி வீரசேகரவும் ஒருவர். இவரின் “உருவகிக்கப்பட்ட பெண்’ எனும் ஓவியக் கண்காட்சி 1998 நவம்பர் 13 தொடக்கம் 23 வரை கொள்ளுப்பிட்டி ஹெரிடேஜ் கலாபவனத்தின் நடைபெற்றது.
ஆண்களினால் பெண்களின் உருவமைப்புக்கள் அவர்களின் விருப்பத்திற்கும் இச்சைக்கும் ஏற்றமாதிரியே உண்மைக்குப் புறம்பான (உண்மையான பெண் என்ற அமைப்பில் இல்லாமல்) சித்திரிக்கப்பட்டு வந்தது, வருகின்றது. ஆனால் நிலந்தி வீரசேகர ஒரு பெண் என்றபடியால் தான் பெண்ணின் உருவமைப்பை “பெண்ணாகவே சித்திரித்திருக்கின்றார். இது ஆண்களால் முடியாததே. அவர்கள் பெண்களை அடிமைகளாகவும், பாலியல் பண்டமாகவும், போகப் பொருளாகவுமே ரசிக்கின்றனர். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க மறுக்கின்றனர்.நிலந்தி வீரசேகரவின் “உருவகிக்கப்பட்ட பெண்’ஓவியக் கண்காட்சியில் பெண்களின் மேற் பிரயோகிக்கப்படும் பாலியல் வல்லுறுவுகள், அடிமைத்தனங்கள் போன்ற சகலவிதமான வன்முறைகளையும் தனது அடிமனதின் ஆழத்தில் சிறுவயது முதல் பதிந்திருந்த கொடுமைகளை ஒவியத்தின் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார். சமுதாயத்தில் பெண் சுயதீர்மானம் எடுக்க முடியாமல் அடக்கி ஒடுக்கப்பட்டு ஆண்களின் உடமைகளாக ஆட்டுவிக்கப்படுகின்றாள். பெண்களாகிய நாம் பல சந்தர்ப்பங்களில் எமது உரிமைகளை இழந்து விடுகின்றோம். இதுவும் பெண்களுக்கெதிரான வன்முறையே என்று கருதும் இவர், “எனது அபிப்பிராயங்களே எனது ஒவியங்களாகும்’ என்கிறார்.
i. இளங்கவிஞர்- முத்து பத்மகுமார
பத்தொன்பது வயதுடைய மு(த்)து பத்மகுமார எனும் பெண் மிக இளவயதில் தனது இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அங்கு g6of(3ugbi 6JT6OT6N6io” (There are No More Rain Bows) 660Db bis 6oo6o வெளியிட்டுள்ளார்.

வரலாற்றில் தடம் பதித்தோர் 61
நமது நாட்டில் தொடர்ந்தும் தாண்டவமாடும் போரும், போரைச் சாதகமாக்கி சட்டத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் பெண்கள் மீது புரியும் பாலியல் வல்லுறவும் போர் பற்றிப் புரிந்து கொள்ள முடியாத சின்னஞ்சிறார்கள் பாதிக்கப்படுவதும் மனித உள்ளங்களை வேதனைப் படுத்துகின்றனது. இவ்வேதனை இவரையும் பாதித்துள்ளது. இவர் போரின் நடுவே இல்லாவிடிலும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் இவரின் மனதின் ஆழத்தில் பதிந்தன. இவ் வேதனையைத் தனது கவிதை மூலம்(வானவில்கள் இனி இல்லை) சமர்ப்பித்துள்ளார், மு(த்)து பத்மகுமார இலங்கையில் மிக இளவயதில் தனது இரண்டாவது கவிதைத் தொகுதியை வெளியிட்ட முதலாவது பெண்ணும் இவரேயாவர். இவரின் இரண்டாவது கவிதைத் தொகுதி சாதாரண மக்களுக்கு சென்றடையும் என்பதும் ஐயமே. சாதாரண தாளில் இக் கவிதைத் தொகுதியை வெளியிட்டு பெருந்தொகையான மக்களுக்குக் கிடைக்கச் செய்வது பயன் உள்ளதாக இருக்கும் என்பது 2 60ö760)LD.
i. எழுத்தாளரும் சமூகசேவகியும் - மொறின் செனவிரத்ன
இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளரும், சமூக சேவகியுமாகிய மொறின் செனவிரத்ன அவர்கள் அகில உலகரீதியிலான (ஹெல்மான் ஹம்மட்) விருதுக்காக 1995ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொறின் அவர்கள் எமது நாட்டில் மனித உரிமைகளின் அத்துமீறல்கள், சிறுவர்களது அடிப்படை உரிமைகள் போன்றவற்றிற்கு மனிதாபிமான கோட்பாடுகளை நிலைநாட்டிக் குரல் கொடுத்துவரும் எழுத்தாளராவார். ஏறக்குறையப்பன்னிரண்டு வெளியீடுகளுக்கும் PEACE என்னும் அரசு சார்பற்ற சமூக சேவை நிறுவனத்துக்கும் காரண கர்த்தாவாகிய இவர், தமது எழுத்துக்களில் பெண்களது உரிமைகள், சமூகத்தில் பெண்களின் அசமத்துவநிலை போன்ற பெண்நிலைவாதம் சார்பான பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்துள்ளார். எமது நிறுவனத்தின் சமீபத்தைய வெளியீடுகளில் “அஸ்வத்தாவின் இலைகள்” (The Leaves of ASVaththa) 6T65, 50lb diplab60gbgs Glgbit gig5 (96)iggs படைப்புக்களில் ஒன்றாகும்.

Page 36
62 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
iv. உபவேந்தர் - சாவித்திரி குணசேகர
இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக (1999ல்) நியமிக்கப்பட்டார். இவர் தான் சாவித்திரி குணசேகர, சட்டத்துறைப் பேராசிரியராகவும், பல்கலைக்கழக மானியங்கள் குழு உறுப்பினராகவும், பல பிராந்திய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களில் பெண்கள் சிறுவர் தொடர்பான சட்ட ஆலோசகராகவும் பணி புரிகிறார்.
பெண்கள் ஆய்வு மையத்தின் பணிப்பாளர்களில் ஒருவராகவும், இருந்து வருகிறார். பெண்களது உரிமைகள்,சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், பால்ரீதியான சமத்துவம் என்பன பற்றி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சட்டம் சம்பந்தமான பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.
V. காவல்துறைப்ப்ொறுப்பதிகாரி (ASP) - பிரமிளா திவாகர
பெண்கள் இலங்கையில் காவல் துறையில் சில காலமாகப் பணிபுரிந்து வருகின்றனர். எமதுபாரம்பரிய கலாசாரத்திலிருந்து விடுபட்டு, பெண்கள் தொழில் புரியும் துறைகளில் காவல்துறை மிகச் சக்தி வாய்ந்ததொன்று என்பது உண்மை. இவர்களுக்குப் பெண் என்ற பாலியல் ரீதியான காரணத்தை ஒட்டியே கடமைகள் வழங்கப்படுகின்றனவா என்பது இது வரைகாலமும் கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது பிரமிளா திவாகர அவர்கள் 16 வருட சேவையின் பின் பொறுப்பதிகாரியாக (ASP) நியமிக்கப்பட்டுள்ளது பெண் காவல்துறையினருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இதுதனிமனித உழைப்புக்கான விருது எனத் தெளிவாகிறது.
wi. சிறப்பு விருதுக்குரியவர் - திலகா ஹேரத்
கலிபோனியாவிலுள்ள ஷாலர் அடம்ஸ் நிதி நிறுவனம் (Shaler Adams Foundation) வாய்ப்புவளங்களும், ஈடுபாடும் நிறைந்த பெண்மணி ஒருவரைத் தேர்வு செய்யுமாறு பெண்கள் ஆய்வு நிறுவனத்திடம் கோரியிருந்தது. அதற்கிணங்க, நாம் கிராமியப் பெண்கள் அமைப்புக்களில் ஒன்றான பெண்கள் முற்போக்கு முன்னணி (இப்பகமுவ) யைச் சேர்ந்த திலகா ஹேரத் அவர்களைத் தெரிவு செய்தோம். இவர் 1994

வரலாற்றில் தடம் பதித்தோர் 63
ஆண்டுக்கான இச்சிறப்பு விருதினைப் பெறத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதையிட்டு பெருமிதம் அடைகிறோம். இவர் பெற்றுள்ள விருதின் பெறுமதியாகிய 1000 அமெரிக்க டாலர்களில் 750 இவர் சார்ந்துள்ள பெண்கள் முற்போக்கு முன்னணிக்கும், மிகுதி இவருக்கான தனிப்பட்ட அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
wi. விஷக்கடி வைத்தியர் - மீரா லெப்பை நைஜானும்மா
கிழக் கிலங்கையில், குறிப்பாக, அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் பாரம்பரியமாக விஷக்கடி வைத்தியத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் ஒருவரான மீரா லெப்பை நைஜானும்மா, பெரும்பாலும் முஸ்லிம் விவசாயிகளே வ்சிக்கும் நிந்தவூர் மக்களுக்கு அளப்பரிய சேவை செய்து வருகிறார்.
இவர் ஒரு விஷக்கடி வைத்தியர், ஒலைச்சுவடிகளில் உள்ள வாகட முறைகளில் விஷக்கடிக்கும் ஏனைய நோய்களுக்கும் சிகிச்சை. யளிக்கிறார். இத் தொழிலை இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறது. தனது தகப்பனாரிடம் இவ் வைத்திய முறைகளைக் கற்றறிந்தார். இவர் அதிகம் படிக்காவிட்டாலும் கூட ஒலைச்சுவடிகளில் காணப்பட்ட சிகிச்சை முறைகளை மனப்பாடம் செய்து அவற்றின்படியே. செய்து வருகிறார்.
விஷக்கடி மட்டுமன்றி சுளுக்கு எடுத்தல், சல அடைப்பு, பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி வெளியேறாதிருத்தல் போன்றவற்றிற்கும் சிகிச்சையளிக்கிறார். கிராமத்தில் வாழும் ஏழைகளுக்கு நைஜானும்மாவின் சேவை மிகவும் பயனுள்ளதாகவே அமைந்திருக்கும். அத்துடன் அவர் இலவசமாகவே சேவை செய்கிறார் என்பது வியப்புக்குரியது.
தான் அல்லாவின் நாமத்தைக் துணையாகக் கொண்டுதான் சிகிச்சையளிப்பதாக அவர் கூறுகிறார். 22 வயதில் தனக்குத் திருமணமாயிற்று என்றும், தனது குடும்பத்தவர் தனது வைத்தியத் தொழிலுக்கு ஆதரவாகவே இருந்தனர் என்றும் கூறுகிறார். இரவு பகல் எந்த நேரத்திலும் நோயாளிகள் வருவார்கள் என்றும், ஆண் நோயாளிகளை தான் வேப்பங் கொத்தினால் தொட்டுச் சிகிச்சையளிப்பதாகவும் மிக அவசியம் ஏற்பட்டால் மட்டுமே தொட வேண்டி ஏற்படும் என்றும் அது

Page 37
64 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
தன்னை எது விதத்திலும் பாதித்ததில்லை எனவும் கூறுகிறார். நோயாளிகள் பெரும்பாலும் வீட்டுக்கே வருவார்கள். சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே தக்க துணையோடு நோயாளர் வீடுகளுக்குப் போக வேண்டி வரும் எனவும் குறிப்பிட்டார். இந்தப் பெண்மணியின் சேவைக்கு ஆதரவாக இருக்கும் குடும்பம் நிச்சயம் பாராட்டப்படவேண்டியது.
மிகப் பின் தங்கிய கிராமத்தில் வாழும் ஒரு முஸ்லீம் பெண் இவ்வளவு அரிய சேவை செய்கிறார் என்றால் அது வியப்பிற்குரியது. பெண்களை பிறர் முகம் பாராது பூட்டி வைக்கும் முஸ்லிம் சமூகத்தில் ஒரு புரட்சியையே செய்திருக்கிறார் ஜனாபா நைஜானும்மா. தனது தள்ளாத வயதிலும் கூட நோயாளர்கள் வந்து விட்டால் தனது முதுமையையும் பொருட்படுத்தாது பிறர் துன்பம் துடைக்கும் இவர் பண்பு பாராட்டுக்குரியது.
2. இந்தியாவில்
1. நாடக இயக்குனர் - அ. மங்கை
மெனளக்குரல் என்ற பெயரில் தமிழ் நாட்டில் இயங்கி வரும் பெண்கள் அரங்குக் குழுவானது நாடக அரங்குக் கலையை பெண்கள் தொடர்பான சிந்தனைத் தேடல்களை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், பார்வையாளருடைய சிந்தனையை துண்டக்கூடிய தொடர்பாடலாகவும் உருவாக்குவது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இவ்வரங்குக் குழு காலகாலமாக பெண் எவ்வாறு ஒரே வகைப்பட்ட மாதிரிப்படிமமாகச் சித்திரிக்கப்பட்டாள் என்பதை எடுத்துக்காட்டி, அவ்விம்பத்திற்கும் இன்றைய நிஜவாழ்வில் பங்காளியாக செயற்படும் பெண்ணின் பிம்பத்திற்கும் இடையிலான வித்தியாசங்களை எடுத்துக்காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அரங்கத்துறையில் அனுபவம் மிக்கவரும், நாட்டார் ஊடகங்களில் ஆர்வமுள்ளவருமான அ. மங்கையை (முனைவர் வே. பத்மா) இயக்குனராகக் கொண்ட இவர்களது குழுவின் முதலாவது பயிற்சிக்களத்தில் ‘சுப்புத்தாய்’ என்ற குறு நாடகம் உருவானது. இந்நாடகம், முடிவுகள் எடுப்பதில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்ததாக அமைந்தது. தற்பொழுது ‘சுவடுகள்’ ‘மெளனக்குறம்’ ஆகிய இரு நாடகங்கள் நிகழ்த்துவதற்கு தயாராக உள்ளதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வரலாற்றில் தடம் பதித்தோர் 65
மணலூர் மணியம்மாவின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றி எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற புதினத்தை கதையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாடகம் தான் ‘சுவடுகள்’. மணியம்மா தன் வாழ்க்கையை நடாத்திய நியாய ஆவேசம், நசுக்கப்பட்டோர் சார்பான சமூகப்பொறுப்பு, மனஉறுதி என்பன எவ்வாறுகட்டுப்பெட்டித்தனமிக்க விதவைக்கோலத்தை, வர்க்க முரண்பாடுகளை, சாதீய அடக்குமுறைகளைக் கேள்வி கேட்டன என்பதைக் கருத்தாகக் கொண்டது இந்நாடகம், ‘வரலாற்றில் உளுத்துப்போன பக்கங்களில் மங்கிக் கிடக்கும் வரலாறு படைத்த பெண்ணின் சுவடுகளைத் தேடியதில் கிடைத்த ஒரு பிம்பம்தான்மணலூர் மணியம்மா’ என்கிறார்கள் குழுவினர். இந்நாடகம் மீனா சுவாமிநாதன் உதவியுடன் அ. மங்கையால் கருத்துருவாக்கம், நெறியாள்கை செய்யப்பட்டது.
இரண்டாவது நாடகமான 'மெளனக்குறம் இந்தியப் பெண் பற்றிய பெளராணிக உருவகம் எவ்வளவுதூரம் உண்மை வாழ்விற்கு புறம்பானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. கடைசியில் குறவாழ்வில் காணப்படும் இயற்கையோடு இணைந்த மரபுரீதியான தொழில் திறனைக் கொண்ட தன்மையை அவள் எவ்வாறு நிலைநாட்டுகிறாள் என்பதும் அதனுடு தன்னுடைய கருத்தில் ஆண் பெண் உறவை எவ்வாறு சித்திரிக்கிறாள் என்பதுமான கருத்துருவாக்கத்தை கொண்டது.
நாட்டார் வடிவத்தின் இசை நடனக்கூறுகளை மொழியாகக் கொண்ட இந்நாடகத்தின் கருத்துருவாக்கத்தை அ. மங்கையும் பிரதியாக்கத்தையும் நெறியர்ள்கையையும் சே.இமானுஜமும் செய்திருக்கின்றனர்."சமகாலப் பெண்ணிற்கான பிம்பத்தை கண்டெடுப்பதில் குறத்தி நம்முன் பேருருவமாய் நிற்பதாகக் கூறியுள்ளனர் இக்குழுவினர்.
பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனம் மற்றும் விபவி கலாசார மையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ‘அரங்கமும் பெண்ணியமும்’ என்ற தலைப்பில் (1998ல்) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொண்டு இயக்குனர் மங்கை உரையாற்றுகையில் தன்னை இலக்கியவாதி என்று சொல்வதை விட நாடகக்காரி என்ற கூறுவதிலேயே தான் பெருமையடைவதாகக் கூறினார். “அரங்கமும் பெண்ணியமும் ஒரு பெண்ணின் இரண்டு கண்கள்" எனக்கூறும் இவர், தொடர்பு ஊடகங்களில் சக்தி வாய்ந்த ஊடகமான அரங்கியலுரடாக பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சித்திரித்துக் காட்டுகிறார். இலக்கியம் சமூகத்தை நல்வழிப்படுத்தப் பயன்பட வேண்டுமெனவும், அவை எல்லாவகை மக்களையும்

Page 38
66 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
சென்றடைய வேண்டுமெனும் நோக்கில் உடல், உள்ளம் குரல் (சொல், செயல், உணர்வு) மூன்றையும் ஆயுதமாகப் பயன்படுத்தி தெரு நாடகங்களை அதிகமாக நடாத்திவருகின்றார். மங்கை, தம்நாடகங்கள் மூலம் கூறப்படும் கருத்துக்கள் பெண்களையும் சென்றடைய வேண்டும் என்பதனால், பெண்களும் அதில் பங்குகொள்ளும் வகையில் பொருத்தமான இடம் நேரம் என்பவற்றை தெரிவு செய்வதில் பெரும் கவனம் செலுத்துகிறார். பெரும்பாலும் பெண்களிற்கு அத்தகைய நாடகங்கள் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றில் பங்குகொள்ள நேரம் கிடைப்பதில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களாயின் வேலைத்தளத்தினால் வந்து வீட்டுவேலைகளைக் கவனிப்பதற்கே நேரம் போதுமானதாக இருக்கிறது. வீட்டிலிருக்கும் பெண்ணும் வீட்டு வேலைகளிற்கு தன் கைகளை மட்டுமே நம்பியிருப்பதால் தமது அறிவினைப் பெருக்கிக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இத்தகைய காரணங்களினால் மங்கை, பெண்கள் வேலை செய்யும் இடங்கள், குடியிருக்கும் இடங்களிற் சென்று அரங்கம் நடத்துகிறார். பெண்களை அடக்கி ஆளும் ஆணாதிக்கத்தினர் தங்களையும் மிஞ்சி ஒரு பெண் தன் உணர்வுகளை துணிவுடன் வெளிப்படுத்துவதையோ அல்லது சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதையோ விரும்பவில்லை. ‘ஒளவை’ எனும் பெண் புலவரை மக்கள் ஏற்றுக்கொண்டபோது ஆணாதிக்கத்தினர் ஒளவையை பெண்ணாகப் பார்க்கவில்லை. மாறாக கிழவியாகவே பார்த்தனர். சகல முடிவுகளையும் தாமாகவே தீர்மானிக்கும் ஆணாதிக்கத்தினர் ஒளவை இளம் பெண்ணாக இருந்துதான் பாட்டியாகி இருப்பார் எனும் யதார்த்தத்தை ஏற்க மறுத்து ஒளவைப்பாட்டி, ஒளவையார் என்று அழைத்தனர். பெண்ணியத்தை உயர்த்திப் பிடித்த பாண்குலப் பெண்ணாக அவளது உண்மை முகத்தை வெளிக்காட்டும் முயற்சியாக ஒளவை’ எனும் புதுமையான நவீன நாடகத்தை அரங்கியல் மூலமாக அண்மையில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வரதட்சணைக் கொடுமை, பெண் சிசுக் கொலை மற்றும் சமுதாயத்தினால் பெண்ணின் மேல் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளைக் கருப்பொருளாக வைத்து தனது அரங்கத்தை நடாத்தி பெண்களிற்கும் ஏனையோரிற்கும் ஒர் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகப் பிரச்சினைகளை உணர வைப்பதன் மூலம், அவற்றிற்குரிய தீர்வை அவர்களே எடுக்க தனது நாடகங்கள் மூலம் மங்கை அவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்.

வரலாற்றில் தடம் பதித்தோர் 67
i. காவல்துறைக் கமிஷனர் - கிரண்பேடி
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறைக் கமிஷனராகிய கிரண்பேடி அவர்கள் 1994ம் வருடத்தைய மகசேசே விருதுக்கு உரியவராகத் தெரிந் தெடுக்கப்பட்டுள்ளார். சமூக முன்னேற்றம், சீர்திருத்தங்களுக்காக இந்த ஆசிய விருதினைப் பெறும் முதல் காவல்துறை உத்தியோகத்தரும், முதல் பெண்மணியும் இவரேயாகும்.
இந்தியக் காவல்துறையில் முதல் பெண் அதிகாரியாக இவர் 1972ம் ஆண்டு நியமிக்கப்பட்டு, பின்னர் டெல்லி மத்திய அரசிலும், பஞ்சாப், மீஜோரம் ஆகிய மாநிலங்களிலும் போற்றத்தக்க முறையில் சீராகவும் நேர்மையாகவும் கடமையாற்றியுள்ளார். டெல்லியில் போக்குவரத்து அதிகாரியாகக் கிரண் கடமையாற்றிய போது எதிர் கொண்ட சிக்கல்கள் ஏராளம். பெண்களது பொதுக் கழிப்பறையில் ஒளிந்திருந்த குற்றத்துக்காக வழக்கறிஞர் ஒருவர் கிரண்பேடி அவர்களால் விலங்கு பூட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டது; வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் உண்டாகியது. இதன் மூலம் இவர் கடமைகளுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டது மட்டுமின்றி, கிரண்பேடி கட்டாயப் பதவி மாற்றத்துக்கும் உள்ளானார். இதன் பின் கிரண்பேடி பஞ்சாப் மாநிலத்துக்கு காவல்துறை அதிகாரியாக அனுப்பப்பட்டார். அரசியல், இனச் சிக்கல்கள் நிறைந்த பஞ்சாபில் இவரது நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை, ஆகியன மக்களுக்கு நன்மை பயக்கும் முறையில் பயன்படுத்தப்பட்டன. தனக்கு அளிக்கப்பட்ட ‘தண்டனையை’ ஒரு சவாலாக ஏற்று, பஞ்சாப் மக்களுக்கு இவர் செய்த நன்மைகள் அகில இந்திய அளவில் புகழ் பெற்றன. ஆயுதபலத்தைப் பிரயோகிக்காது மனிதாபிமான அடிப்படையில் இவர் பஞ்சாப் தீவிரவாதிகளைக் கையாண்ட முறைகள் காவல்துறைக்கே ஒரு புதிய பாதை எனலாம்.
இதன் பின் மீண்டும் தலைநகரில் தீகார் சிறைச்சாலை பொறுப்பதிகாரியாக இவர் பதவியில் அமர்த்தப்பட்டார். இவரால் தீகார் சிறைச்சாலை தண்டனைக்குரிய இடமல்லாது சீர்திருத்தக் கூடமாக மாறியது என்றால் மிகையாகாது. பயங்கரக் குற்றவாளிகளை உள்ளடக்கிய இச் சிறையில் தியானம், முதியோர் கல்வி, தொழில்கல்வி, பெண்கள் கல்வி போன்ற சீர்திருத்தங்கள் இவரது கடும் முயற்சியின் பயனால் உருவாக்கப்பட்டு குற்றவாளிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டனர். இவரது கடமை உணர்வு, மனிதாபிமானம், நேர்மை,

Page 39
68 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
ஆகிய குணங்கள் இவருக்குத் தனிப்பட்ட முறையில் குந்தகங்களையும் சோதனைகளையும் தேடித்தராமலில்லை. ஆயினும் கிரண் இதனால் தளரவோ, தன்னிரக்கம் கொள்ளவோ இல்லை. முக்கியமாக, இவர் தாம் பெண் என்ற பாலியல் ரீதியான காரணத்தை உபயோகித்து எந்த சலுகைகளையும் யாசிக்கவில்லை. “முதலில் நான் ஒரு காவல்துறை அதிகாரி. அதன் பின் தான் ஒரு பெண்’ என யதார்த்தமாகக் கூறும் இவர், 1972d ஆண்டில் பெண் காவல்துறையினரும் ஆண்கள் அணிவது போன்ற சீருடையையே (கால்சாரம்) அணிந்து கடமை புரிதல் வேண்டும் என வலியுறுத்தி,அதில் வெற்றியும் கண்டவர்.
3. வங்காளத்தில்
எழுத்தாளர் - தஸ்லிமா நஸ்ரின்
வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவரான தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துக்கள் தற்போது உலகம் முழுவதிலும் பிரபல்யம் அடைந்துள்ளன. வங்க மொழியிலுள்ள இவரது படைப்புக்களில் மொழிவளம் மட்டுமன்றி முற்போக்குக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. பழமை வாதம், அடிப்படை மதவாதம், மதத்தின் பெயரால் பெண்கள் ஒதுக்கப்படுதல், அவர்கள் மீதான பாலியல் அடக்கு முறைகளும், பலாத்காரங்களும், இஸ்லாமியத் திருமணச்சட்டம் இவற்றை விமர்சித்தும், கண்டித்தும் எழுதப்படும் தஸ்லிமாவின் படைப்புக்கள் பாராட்டையும் எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் இவருக்குத் தேடித் தந்துள்ளன நிர்ப்பச்சித்தாகாலம்' எனப்படும் தொகுப்பு சிறந்ததென கல்கத்தாவிலுள்ள புகழ் பெற்ற பத்திரிகை நிறுவனமொன்று இவருக்கு விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. அதே சமயம், இத்தொகுப்பு இஸ்லாம் மதக்கோட்பாடுகளுக்குத் தவறான விளக்கம் அளிக்கின்றது எனப் பழமைவாதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆண்வர்க்கத்துக்கு எதிராக இவரது எழுத்துக்கள் உள்ளன என முஸ்லிம் இளைஞர் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரது நாவலான ‘லஜ்ஜா (வெட்கம்)வில் சிறுபான்மையோர் பெரும்பான்மையோரால் அனுபவிக்கும் அடக்குமுறை பற்றிய துணிச்சலான பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
வங்க அரசு இவரது எழுத்துக்களுக்கு தடைவிதித்ததுமட்டுமன்றி,
வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல விடாது கடவுச்சீட்டினையும் பறிமுதல் செய்துள்ளது. மதவாதக்குழு ஒன்று இவரைக் கொல்பவருக்கு ரூ. 50,000

வரலாற்றில் தடம் பதித்தோர் 69
பரிசு எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதனால் தனக்கும் பாதுகாப்பு அவசியம் என நீதிமன்றத்துக்கு மனுச்செய்து பாதுகாப்புப் பெற்றுள்ளார். இவ்வாறான பலவித எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும் தஸ்லிமாவின் நூல்கள் அவருக்குப் பெரும்புகழையும் பணத்தையும் தேடித்தந்துள்ளன என்பது உண்மை.
4. ஈரானில்
நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் - விஸ்லாவா ஸிம்போஸ்கா
சர்வதேசரீதியில் பெண்ணினம் எதிர்நோக்கும் அடக்கு முறைகள். பலாத்காரம் என்பவற்றிற்கெதிராக அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று போராடிய பிரபல எழுத்தாளரான இவர் 1996ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண் கவிஞர் ஆவர். 73 வயது நிரம்பிய இவர் தனது சுதந்திரமான வெகுஜனமயமாக்கப்படட கவிதைகளின் மூலம் சர்வதேச மதிப்பைப் பெற்றவர். தான் எழுதிய-“Portrait of a Woman’ என்ற கவிதையிலே பெண்களின் அவலநிலை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். “ஆண்களை முற்றாக எதிர்க்கின்ற பெண்ணியல்வாதிகளுள் ஒருவராக என்னை அடையாளம் காட்டவில்லை’ எனக்கூறும் இவர்; ஆண்களை மிகவும் விரும்புகின்றேன் என்றும் பெண்கள் மீதான அடாவடித்தனம். அடக்குமுறை, துஷ்பிரயோகம் அதிகரிக்கும் போது பெண்ணியல்வாதத்தை ஆதரிக்கின்றேன் என்றும் கூறுவதுடன், ஈரானியப் பெண்கள் மீதான நடவடிக்கைக்கு பெண்ணியல்வாதம் அவசியமானது எனவும் கூறுகிறார்.

Page 40

பதிவுகள்

Page 41

பெண்களும் கருத்தரங்கு கலந்துரையாடல் நிகழ்வுகளும்
உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுவரும் பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை, விரிவடைந்துவரும் எண்ணங்களை, அத்துறையில் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் எடுத்து விளக்கி கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கருத்தரங்குகளும், கலந்துரையாடல்களும் அடிக்கடி ஏற்பாடு செய்யப்படுவது அவசியமானதே. -
இவ்வாறான நிகழ்ச்சிகளை எழுந்தமானத்தில் ஏற்பாடு செய்துவிடமுடியாது. பலரும் பங்குபற்றுவதற்குப் பொருத்தமான நாள், பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களை அடக்கக் கூடியதான மண்டபவசதி, அவர்களுக்குத் தேநீர் முதலிய ஏற்பாடுகள், நிகழ்வுகளுக்குப் பொருத்தமான நெறியாளர்கள், கருத்துரையாளர்களைக் கண்டு பிடித்தல் போன்ற பலசிரமங்களுக்கு மத்தியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது இலகுவானதல்ல.
எமது சமூகத்தில் பெண்களுக்குரிய சம அந்தஸ்தும் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லையே என ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்போர் பலர். இவர்களில் பெண்கள் சமூகத்தினரைப் பிரதானமாகக் குறிப்பிடலாம். "ஏட்டுச் சுரைக்காய்கறிக்கு உதவாது" எண்ணமும் ஏக்கமும் இருந்தால் மட்டும் போதாது. வெளியே வந்து செயற்பாட்டிலும் காண்பிக்க வேண்டும்.

Page 42
74. மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
முன்னேற்றத்துக்கான கருத்துக்களைப் பகிர்ந்து தெளிவையும் அறிவையும் பெற வேண்டும்.
இன்று பெரும்பாலும் என்ன நடைபெறுகிறது? கலியாணங்கள், நடன இசை நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் என்றால் அழைப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட எமது பெண்கள். மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டு முண்டியடித்து அம்மண்டபங்களை நிறைத்து விடுகிறார்கள் ஆனால். • .
அவர்களின் மேம்பாட்டுக்கான கருத்துக்களை விளக்குவதற்காகப் பல சிரமங்கள் மத்தியில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளப் பெருமளவு பெண்கள் முன்வருவதில்லை. பெண்களின் முன்னேற்றத்துக்காக நடைபெறும் நிகழ்வுகளில் பல ஆண்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. அதனை வரவேற்று பாராட்டுகிற அதே வேளையில், பெண்களில் பெரும்பாலானவர்கள் தமது பிரச்சினை. களைப் பற்றி அறிய, ஆராய வழிகாண அக்கறையில்லாதோராக அடுப்பங்கரையும், பிள்ளைபராமரிப்பும் தமக்குப் போதும் என்ற எண்ணமுள்ளவராக வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்களோ என ஐயமுற வேண்டியுள்ளது!
பெரும்பாலான பெண்களிடமுள்ள இந்த மனோநிலை மாற. வேண்டும். கூட்டங்கள் கருத்தரங்குகளுக்கு சமூகமளித்தால் "எழுந்து பேசச் சொல்லிக்கேட்பார்களே” எனக் கூச்சப்பட்டு வராமலிருக்கக் கூடாது. ஒரு நிகழ்வில் எல்லோரும் பேசமுடியாது. கூறப்படும் கருத்துக்களைக் கேட்பதனால் சிந்தனை வளரும், அறிவு பெருகும், தெளிவு பிறக்கும், விழிப்புணர்வு உண்டாகும்.
பெண்கள் இன்றைய சமுதாயத்தில் தமது உரிமைகளை நிலைநாட்டி முன்னேறுவதற்கு அறிவு அவசியம். பெண்ணிய அறிவையும் தெளிவையும் ஊட்டவல்ல கருத்தரங்கு, மற்றும் உரை நிகழ்வுகளுக்கு தவறாமல் சமூகமளிக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பெண்களும் கருத்தரங்கு கலந்துரையாடல் நிகழ்வுகளும் 75
1. கலந்துரையாடல்
பெண்நிலைவாதமும் சமூகக் கண்ணோட்டமும்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் (23.12.95இல்) நடைபெற்ற இக்கலந்துரையாடலின் ஆரம்ப உரையை சாந்தி சச்சிதானந்தன் நிகழ்த்தினார். ஒரு பெண், பெண்நிலைவாதம் தொடர்பான கருத்துருவை மனதிற் கொண்டு அவளுடைய பணிசார்பாக செயல்படும் போது, எவ்வாறு சமூகத்தினால் விமர்சிக்கப்படுகின்றாள் என்பதை ஒட்டியதாக 96)(560DL ULI உரை அமைந்திருந்தது. சமூகத்தை நோக்கிய ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் திட்டமிடல், தீர்மானம் எடுத்தல், நடைமுறைப்படுத்தல் என்ற "வெளி"உலகை நோக்கி, காலங் காலமாக "வீடு" என்னும் இடத்திலிருந்து நகரும்போது எவ்வகையில் அவளது நடவடிக்கைகள் சமூகத்தினால் ஏற்றுக் கொள்ள இயலாத விடயமாகின்றன என்பதை அவர் விளக்கினார்.
இவரது கருத்துப்படி இவ்வியலாமையைச் சமூகமானது அவளது வேலை சம்பந்தமான விடயங்களைப் புறக்கணித்து தனிப்பட்ட வாழ்க்கை நடை உடை பாவனை ஆகியவற்றைச் சார்ந்து பெரிதும் வெளிப்படுத்துகின்றது. மேலும் இவை தொடர்பாய் சமூகத்தினுடைய சிந்தனை எவ்வாறு கிழக்கு மேற்கு என்கிற இருவகைப்பட்ட கலாசாரங்களை இட்டு குழப்ப நிலைக்கு உட்படுகிறது என்பதையும் இவர் ஆராய்விற்குரிய விடயமாக விளக்கினார். முடிவாக கலாசாரம், பாரம்பரியம் என்பன தீர்மானிக்கப்பட்ட திட்டவட்டமான விடயங்கள் அல்ல எனவும், அவை வரலாற்று ரீதியாக அறிவுபூர்வமாக அணுகப்பட வேண்டியவை எனவும் கூறினார். எழுந்தமானமாக முன்வைக்கப்படும் நிலைப்பாடுகள் மறுபடியும் பெண்ணின் பின்தங்கியநிலைக்கும் இரண்டாம் பட்சமாக்கலுக்கும் இட்டுச் செல்லுமே ஒழிய இவற்றிலிருந்து வெளிக் கொணரா என்றும் கூறினார். இவ்வகையில் கலாசாரம் என்கிற பதத்தை இவர்கள் ஒரு உபாயமாக, பெண்நிலைவாதிகளைச் சாடுவதற்கு பயன்படுத்துகிறார்கள்" எனவும் கருத்துத் தெரிவித்தார். இவருடைய உரை மிகவும் சுவாரசியமானதாகவும், பல கருத்துக்களை முன் வைப்பதாகவும், வரலாற்று ரீதியாக பெண்நிலைவாத நோக்கில் கலாசாரத்தை எவ்வகையில் அணுகுவது என்கிற கேள்வி சார்ந்த சிந்தனைப் போக்கை வளர்ப்பதாகவும் இருந்தது.

Page 43
76 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
"பெண்நிலைவாதம் ஏன் பிரச்சினைக்குள்ளாகியது" என்ற தலைப்பில் கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆற்றிய உரை "கலாசாரம்" மரபு" நாகரீகம்" என்பவற்றின் வரைவிலக்கணங்களை ஆராய்வதாக அமைந்தது. மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் எவ்வகையில் சாதி அல்லது வர்க்கம் சார்பாய் முன்வைக்கப்பட்டு பொதுமைப்படுத்தப்படுகின்றன என்பதை அவர் விளக்கினார். உலகின் சிறுசிறு கலாசாரங்கள் அல்லது மரபுகள் இவ்வாறு பாரிய மரபுகளின் ஆதிக்கத்தில் அழிந்து வருவதை ஏனைய சமூகவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர் எனவும் சுட்டிக் காட்டினார். இவ்வாய்வின் பயன்பாடு எமக்கும் பொருந்தக் கூடியது என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். இவ்வகையில் எவை எமது கலாசாரம். எவை அவ்வாறு அல்லாதன என பிரித்துப் பார்க்கலாம் என்ற கேள்வியை முன்வைத்தார்.
இவரது கருத்தும் கலாசாரம் என்பது ஒரு இறுகிய, முடிந்த முடிபு அல்ல அது ஒரு வர்க்கத்தின், ஒரு குழுவின் எண்ணத்தை மற்றவரில் திணிக்கும் விடயமும் அல்ல என்பதே.
2. மூன்று கருத்தரங்குகள்
"பெரியாரியம்" - 17-09-96 (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)
1. பெரியாரின் தோற்றுவாய்க்கு களமாக அமைந்த தமிழ்நாட்டு
சமூக அரசியல் நிலை. - பேராசிரியர் சிவத்தம்பி
2. தேசிய வாத கருத்தியலும் பெரியாரின் தேசிய வாதமும்,
- த. சிவராம்
3. தமிழ் கலாசாரத்தில் பெரியாரின் கோபாவேசமான கடவுள்
மறுப்புக் கொள்கையின் தாக்கம்.
- ந. இரவீந்திரன்
4. பெரியாரின் பெண்ணிலைவாதக் கொள்கை.
- சித்திரலேகா மெளனகுரு

பெண்களும் கருத்தரங்கு கலந்துரையாடல் நிகழ்வுகளும் 77
5. வர்க்க முரண்பாடுகளை புறக்கணித்து சாதீயத்தை அடிப்படையாகக் கொண்டு பெரியார் வேண்டி நின்ற சமூக உருமாற்றம் சாத்தியப்படுமா?
- கலாநிதி செல்வி திருச்சந்திரன்
6. மொழியும் இலக்கியமும் : பெரியாரின் சிந்தனைகள்.
- கலாநிதி எம்.எ.நுஃமான்
(இக் கருத்தரங்கு கட்டுரைகள் நூல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது)
தமிழ்ப் படைப்பிலக்கியங்களில் பெண்கள்" - O8.03.1997 (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)
1. சிவரமணியின் கவிதைகள் - விஜித்சிங்
2. கலை, இலக்கியப் பிரதிகளில் பெண்ணிய விமர்சனம்,
- மதுபாஷினி
3. தமிழ்க்கவிதைகளில் பெண்ணிய நோக்கு - ஒளவை
4. பெண்ணிலைவாதக் கருத்தாடல்களில் வித்தியாசங்கள்
என்ற எண்ணக்கரு - கமலினி
(இக் கருத்தரங்கின் சில கட்டுரைகள் பெ.க.ஆ.நிறுவனம் வெளியிடும் நிவேதினியில் இடம்பெற்றுள்ளன)
பால்நிலையும் சமூகக் கோட்பாடுகளும்" - 4, 5-7-1998 (பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்)
1. பெண்நிலைவாதத்தின் தமிழ்நிலைநின்ற சித்திரிப்புக்களும்
ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களும். - பத்மா சோமகாந்தன்
2. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய பெண் நிலைச் சவால்
களை இனம் காணல்.
- ஜனுTபா அப்துல் காதர்

Page 44
78 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
3. உணர்வுகளும் வெளிப்பாடுகளும் பற்றிய பால்நிலைப்
பண்பாட்டுச் சிக்கல்கள். - சூரியகுமாரி பஞ்சநாதன்
4. இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள்.
- கலாநிதி யோகராஜா
5. கலைகளில் பிரதிபலிக்கும் வகை முறை - விஜித்சிங்
6. 19ம் நூற்றாண்டு இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பு
- கமலினி கணேசன்
7. மலையகத் தோட்டப்புறங்களில் வயதான பெண்களின் சமூக
இருப்பு - தனலக்சுமி கறுப்பையா
8. குடும்பம் என்ற அலகில் பெண்கள் - தேவகெளரி
(இக் கருத்தரங்கு கட்டுரைகள் நூல்வடிவில் வெளியிடப்பட்டுள்ளன)

உலக - பெண்கள் மாநாடுகள்
1. மணிலா நகரில். பெண்களுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களது மகாநாடு 1993
பெண்கள் முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய மகாநாடு ஒன்று சென்ற வருடம் (1993) கார்த்திகை 16-20ஆம் திகதிகளில் மணிலாநகரில் நடைபெற்றது. ஆசிய, பசுபிக் நாடுகளைச் சேர்ந்த சுமார் நானுாறு நிறுவனங்களது பிரதிநிதிகளாக அறுநூற்றுக்கும் அதிகமான பெண்கள் இதில் பங்கேற்றனர். உடல்நலம், தொழில், விவசாயம், கல்வி, கலாசாரம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதான ஆறு தனிப்பட்ட செயலமர்வுகள் இங்கு இடம்பெற்றன. இந் நிறுவனங்கள் யாவும் பின்வரும் செயல் திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என முடிவாக்கப்பட்டது.
1. பெண்களைப் பாதிக்கும்பாலியல்ரீதியான ஒடுக்குமுறைகள், பலாத்காரங்கள்முதலியவற்றைக்கணக்கெடுத்து, பாதிப்புக்கு ஆளானோருக்காக புனர்வாழ்வு மையங்களை ஏற்படுத்துதல்,
2. மனித உரிமைகள் அத்துமீறலைக் கண்காணிக்கும் செயலாக் கங்களைப் பிராந்தியம் முழுவதிலும் ஏற்படுத்தல். முக்கிய மாக, ஆயுதப்போர் நடைபெறுமிடங்களில் பெண்களது நிலைமை கணிக்கப்பட்டு அவை பகிரங்கப்படுத்தப்படல்.
3. பெண்கள் மற்றும் ஏழை, எளியவர்களைப் பாதிக்கும் பொருளாதாரக் கட்டமைப்புக்களை உருவாக்கும் சட்ட முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்,

Page 45
80 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
4. அகதிகள், புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் போன்றோ
ரது சட்ட பூர்வமான உரிமைகளுக்கு ஆதரவளித்தல்.
5. பெண்களை ஒடுக்கலுக்கு உள்ளாக்கும் அரசியல், இன, மத,
அடிப்படை வாதங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்.
6. நிரந்தர, தற்காலிக மற்றும் பகுதி நேரத் தொழிலாளர் களுக்கான சட்ட பூர்வ பாதுகாப்புக்கள் பற்றிய உண்மை நிலையை வெளிக்கொண்டு வருதல்.
இம்மகாநாட்டின் முடிவில் பிராந்திய ரீதியிலான தொடர்புக் குழுக்களும், நடவடிக்கை மையங்களும் அமைக்கப்படும் திட்டமொன்று உருவாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக 1995ஆம் ஆண்டு பீஜிங் நகரில் அகில உலக ரீதியிலான மகாநாடொன்று நடைபெற உள்ளது.
2. பீஜிங் நகரில்.
பீஜிங் மாநாடு
ஐக்கிய நாடுகளின் பெண்கள் மகாநாட்டுடன் தொடர்புடையதாக பீஜிங்கில் 1995 ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரை அரசசார்பற்ற நிறுவனங்களின் பெண்கள் அமைப்புக்களது ஒன்றுகூடல் கோலாகலமாக நடைபெற்றது. இவ்வொன்று கூடலில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் (ஆண்களும்) கலந்து கொண்டனர். முன்னொருபோதும் இல்லாதவாறு எண்ணிக்கையில் அதிகமானோர் எல்லா மட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டதாலும், வழமையிலும் கூடுதலாக செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருவதாலும், மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுவதாலும் இம்மாநாடு தனித்துவம் மிக்கதொன்றாகிறது. தவிர, எல்லாவித கலாசாரங்களிலிருந்தும் பெண்கள் வந்து ஒன்று கூடியிருந்தமையால் பல்லின கலாசாரங்கள் பற்றியும், அவற்றிலிருந்து பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும், பரஸ்பரம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இம்மாநாடு பெரிதும் உதவியது. நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் இயல்பாக பங்குபற்றுதலை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்திருந்தன. இவை கலந்துரையாடல்கள், வேலைக் களங்கள் நாடக அரங்கங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள். பொருட்காட்சிகள், ஆடல் பாடல் என பலவகைப்பட்டனவாக நிகழ்த்தப்பட்டன. கூடாரங்களில்,

உலக - பெண்கள் மாநாடுகள் 81
திறந்தவெளிகளில், தெருக்களில் என எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு நிகழ்வு நடந்தவண்ணம் இருந்தது. "பெண்ணின் பார்வை ஊடாக உலகைப் பார்த்தல்"என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு, பொருளியல், அரசியல், மனித உரிமைகள், அமைதி, சமாதானம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, கலாசாரம், தொடர்பாடல், சமயம், அணுஆயுதப் பரீட்சை, ஊடகங்கள் என்ற வகையில் ஆயிரக்கணக்கான தலைப்புக்களில் இந்நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. இவற்றுள் சில முக்கிய விடயங்கள் இனங்காணப்பட்டு பாரிய நிகழ்வுகளாக இடம்பெற்றன. இவையெல்லாம் பெண்கள் குரலை ஹஸுவைறுநகரில் ஓங்கி ஒலிக்க வைப்பதாக இருந்தன. மொத்தத்தில் பெண்கள் பெண்களாக இருக்கவும், ஒரு நூலிழையில் உலகத்துப் பெண்கள் அனைவரின் சோகங்களும் அதிருப்திகளும் ஒன்றாய் ஒடிக் கொண்டிருப்பதை உணரவும் இம்மாநாடு உதவியது. எமது வாழ்விலும் பெண்நிலைவாதத்தின் வரலாற்றிலும் மறக்கமுடியாத நாட்களாக அவை பதிந்து விட்டன.
பிரபல்யமான இம்மாநாடு ஒரு புறத்தில் பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உலகளாவிய விழிப்புணர்வையும், அது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியதாக்கத்தையும் வெளிப்படுத்தும் அதேவேளை மறுபுறத்தில் தனது பங்களிப்பை பெண்களுக்கு பல்வேறு வகையில் வழங்கியுள்ளது. பெண்களின் உணர்வுபூர்வமான வெளிப்படுத்தல்களுக்கும், உரையாடல்களுக்கும் பகிர்தலுக்கும் வாய்ப்பும் முக்கியத்துவம் கொடுத்த இந்த ஒன்று கூடல் ஐக்கியநாடுகளின் நாலாவது பெண்கள் மகாநாட்டின் கருப்பொருளாக "உலகளாவிய செயற்பாட்டிற்கான நிகழ்ச்சித் திட்டத்தை அணுகுதல்" என்ற நோக்கத்தை கொண்டிருந்தது. அவ்வகையில் இவ்வொன்று கூடலின் கடைசி 3 நாட்களும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பங்கு எவ்வாறானதாக இருக்கக்கூடும் என்பது பற்றிய காத்திரமான கலந்துரையாடல்களைக் கொண்டிருந்தது.
ஐ.நா.விற்கான4வது பெண்கள் மாநாடு செய்டம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கம் 13ம் திகதி பீஜிங்கில் நடைபெற்றது. 181 நாடுகளிலிருந்து 17000 பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்து பார்வையாளர் என்ற முறையில் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் வறுமை, கல்வி, சுகாதாரம், பாலியல்வன்முறை, அதிகாரப்பங்கீடும் தீர்மானம் எடுத்தலும், பெண்களின் உயர்ச்சியை முன்னெடுத்தல், ஆயுதப்பிரச்சினைகள், சூழல்

Page 46
82. மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
விவகாரங்கள் பெண்குழந்தை சார்பான சமூகப் பிரச்சினைகள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் ஆராயப்பட்டன. கடந்தகால நிகழ்ச்சித் திட்டங்கள் ஆராயப்பட்டு பெண்களுக்கான உயர்வு தொடர்பாக எதிர்கொள்ளப்பட்ட தடைக்ள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன. இவற்றுள், மீள் உற்பத்தி உரிமைகள், பாலியல் உரிமைகள் ஆகியன அவசியம் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்களாக இனங்காணப்பட்டன. சூழல் தொடர்பாக ஆதிவாசிப் பெண்களின் பாரம்பரிய மருத்துவமுறைகள், அவர்களது சூழல் அறிவைப் பேணுதல், சுதேசிய தொழில் நுட்பங்களை கண்டுகொள்ளல் என்பவற்றை நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்குமுகமாக ஆராயப்பட்டது.
அரசாங்கங்கள் தமது கொள்கைகளை பால்நிலைப்பட்ட நோக்கில், இந்த உலகளாவிய நிகழ்ச்சித்திட்டத்தை கருத்தில் கொண்டதாக மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கசார்பற்ற பெண்கள் அமைப்புக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிஜிங்குக்கான இலங்கைப் பெண்களின் அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டு, இலங்கை அரசுடன் மேற்படி தீர்மானங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளது. இதில், மறுஉற்பத்தி உரிமைகள் தொடர்பான சட்டவாக்கம் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் என்பன விசேடமானவை என்று இவர்கள் கருதுகின்றனர். இலங்கை அரசாங்கத்தினை ஐ.நா.வினுடைய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான ஆணையில் கையெழுத்திட கேட்டுக்கொள்வது என்பது இவற்றில் ஒரு விடயமாகும். ஆகவே, எம்மை எதிர்நோக்கியுள்ள சவால், இந்த செயல்பாட்டிற்கான நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ளது எனவும் எமது நிறுவனமும் இதில் தீவிரமாகப் பங்குபற்றும் எனபதுதான் எமது செய்தி.
இவ்வாறான ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக் கங்கள் ஏற்படும் வேளையில், நமது நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரச சார்பற்ற நிறவனங்கள் தொடர்பான சர்ச்சைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் சார்பாக வாதப்பிர்திவாதங்கள் எப்பொழுதும் இருந்து வருபவைதான். அவை போர்க்காலங்களில் அல்லது அரசியல் குழப்பங்களின் போது மேலோங்குகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களுடன் தொடர்புடையவை. மனிதாபிமானப் பணிகளை அடிப்படையாகக்கொண்டு இந்நிறுவனங்கள் பல சந்தர்ப்பங்களில்

உலக - பெண்கள் மாநாடுகள் 83
முடிவுகள் எடுப்பதிலும் செயல்படுவதிலும் காலதாமதமற்ற தன்மையை வேண்டி நிற்கின்றன. இவை இதுவரை காலமும் வெற்றிகரமாக இயங்கியமைக்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரமே காரணமாகி இருந்திருக்கின்றது. மேலும், இந்நிறுவனங்களில் உள்ளோர் தனிமனிதர் என்ற விதத்திலும் கூட்டு மனிதர் என்ற விதத்திலும் தங்களுடைய வேலை சம்பந்தமாக அல்லது தனிப்பட்ட காரணங்களிற்காக அரசியல் பற்றி சிந்திக்க வேண்டியவராகவும் உள்ளனர். இவ்வாறான முடிவுகள் எடுக்கும் சுதந்திரம் மனித உரிமையின் அடிப்படையான ஒரு அம்சமே. அரச சார்பற்ற நிறுவனங்கள் உழைப்பதற்கும், மக்களை அணுகக் கூடியதாயிருப்பதற்கு காரணம் இந்த உரிமைகளை அவர்கள் மதிப்பதும் பின்பற்றுவதும் தான். எந்த ஒரு குடியாட்சியிலும் பழகுதலிற்கான உரிமை என்பது மனித உரிமையாகத்தான் கருதப்படுகிறது. அண்மைக்கால அசம்பாவிதங்கள் மேற்கூறிய கருத்துக்களை கவனத்தில் கொண்டனவையா இல்லையா என்பது எமக்குத் தெரியவில்லை. எனினும், அரசாங்கம் இந்நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பாதிக்காத வகையில் இவற்றிற்கு அடிப்படை மனித உரிமைகள் வழங்கவேண்டும். இந்நிறுவனங்களின் வேலை செய்வோரின் அறிவு ஜீவித தனத்தின் கெளரவத்தை பாதிக்காத வகையில் அரசு தனது அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

Page 47
கவனத்திற்குரிய நூல்கள்
இதுவரை பெண்களால் எழுதப்படாத வரலாறுகள் - பெண்களால் (படிப்பறிவின்மையால்) எழுதப்பட முடியாத வரலாறுகள் - என்பனவற்றை வெளிக் கொணர்வது காலத்தின் கட்டாய தேவையாகின்றது. இந்தியாவில் மும்பையில் உள்ள SPARROW என்ற (மகளிர் பற்றிய ஆராய்ச்சிக்கான ஒலி மற்றும் ஒலிப்பதிவுகளின்) ஆவணகம் வாய்மொழி வரலாற்றுப் பயிலரங்குகளுடாக இத்தகைய அரும்பணியை ஆற்றி வருகின்றது. அவ்விதத்தில் அவ்வமைப்பு வெளியிட்ட (2001) இருநூல்கள் எமது கவனத்தை ஈர்த்துள்ளன :
சொல்லாத கதைகள் : வாய்மொழி வரலாற்று பயிலரங்கில் பெண்களின் பதிவுகள்.
ஆங்கிலப் பிரதி உருவாக்கம் : சி. என். லஷ்மி
தமிழில் : அ. பூணூரீனிவாஸன்
எம். சிவசுப்பிரமணியன்
வெளியீடு : ஸ்பாரோ (SPARROW) 2001
விலை : ரூபா 150.
வாய்மொழி வரலாற்று பயிலரங்குகள் ஸ்பாரோவின் செயல்திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நூலில் பலதரப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து ஒரு நோக்கமும் அர்த்தமும் தர முயன்ற பெண்களின் வாழ்க்கைக் கதைகளைக் காணலாம். "தனியாய் ஒரு போராட்டம்" "பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்" நாங்களும் படைத்தோம் வரலாறு" நடவுகால உரையாடல்" "நெஞ்சில் துயில் கொள்ளும் ஒரு கவிதை" "இனக்கலவர நினைவுகள்” (குமுறும் குரல்கள்) போன்ற

கவனத்திற்குரிய நூல்கள் 85
உள்ளடக்கங்களைக் கொண்ட பதிவுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றது. இதில் ஒரு விடுதலைப்போராளி, ஒரு விஞ்ஞானி, ஓர் எழுத்தாளர், ஒர் ஆதிவாசிப் பெண், ஒர் உருதுக் கவிஞர் மற்றும் இனக் கலவரத்தின் பயங்கரவாதத்தை நேரில் அனுபவித்த பெண்கள் சிலருடன் லஷ்மி நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. யதார்த்த நிலையையும் அனுபவவாயிலான சித்திரத்தையும் பதிவு செய்திருக்கும் இப்படைப்பை நாம் தவறவிடக்கூடாது.
பயணப்படாத பாதைகள் : காட்சி வடிவ வரலாற்றுப் பயிலரங்கில் பெண் கலைஞர்களின் பதிவுகள்.
ஆங்கிலப் பிரதி உருவாக்கம் : சி. எஸ். லஷ்மி
தமிழில் : அ. பூஜீனிவாஸன்
எம். சிவசுப்பிரமணியன்
வெளியீடு : ஸ்பாரோ (SPARROW) 2001
விலை : ரூபா 150
இப்படைப்பில் ஒரு பழைய நடிகையும், ஒரு நாட்டியக் கலைஞரும், ஒரு மராட்டிய நாட்டியக் கலைஞரும், ஒர் அரங்கக் கலைஞரும், மற்றும் ஒரு பாரம்பரிய ஓவியரும் தங்கள் தங்கள் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பானது ஒரு பெண்ணாகவும் ஒரு கலைஞராகவும் அவர்கள் தங்களை இனம்காட்டி கலையை வாழ்வின் மையமாக அமைத்துக் கொண்ட விதத்தையும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் வெளிப்படுத்துகின்றது. லஷ்மியின் (அம்பை) ஒவ்வொருவரின் வரலாற்றைப்பற்றி புரிந்து கொள்ள எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது. மொழிபெயர்ப்பும் மிகவும் எளிமையான முறையில் இருக்கின்றது. இத்தொகுப்பும் (SPARROW) செயல் திட்டங்களில் மிக முக்கியமானது.
யுத்தம் நிகழ்கின்ற போது பல்வேறு காரணங்களினாலும் சொல்லொண்ணாத பாதிப்பிற்குள்ளாகுபவர்கள் பெண்களே. இலங்கையும் அவ்வப்போது கிளர்ச்சிகளையும் அண்மைக்காலத்தில் யுத்தத்தையும் சந்தித்திருக்கின்றது. இத்தகைய வேளைகளில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்களின் பதிவுகள் பற்றிய இரு நூல்கள் இங்கு எமது கவனத்தை ஈர்த்துள்ளன:

Page 48
86 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
தப்பிப்பிழைத்தவர்கள் கதை - பகுதி 1 (STORIES OF SURVIVORS)
ஆசிரியர் : சசங்கா புெரேரா
தென்னிலங்கையில் ஏற்பட்ட இளைஞர் கிளர்ச்சிகளின் போது பரம்பரை பரம்பரையாக ஆண் தலைமைத்துவத்தின் கீழ் வாழ்ந்த குடும்பங்களில் குடும்பத்தலைவரும், ஆண்பிள்ளைகளும் கொல்லப்பட்டு அல்லது காணாமற்போய்விட்ட நிலையில் பெண்கள் குடும்பத் தலைவி. களாகப் பொறுப்பேற்றனர். இப்பின்னணியில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள், தாக்கங்கள் பற்றி மொனராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் இவர்களது நிச்சயமற்ற வாழ்வு பற்றிய பல தகவல்கள், பாதிப்படைந்தவர்களது அனுபவங்கள் என்பன கூறப்படுகின்றன.
போருக்குப் பலியான வேறு சிலர் - பகுதி II (THE OTHERVICTIMS OF WAR)
ஆசிரியர் : செல்வி திருச்சந்திரன்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் தொடரும் யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடும்பத் தலைவர்களை இழந்து நிற்கின்றன. இக்குடும்பங்களைப் பெண்களே பொறுப்பேற்று நடத்துகின்றனர். அக்குடும்பங்களில் பெண்களும் பிள்ளைகளும் அடைந்துள்ள உடல் உளரீதியான தாக்கங்கள், பாதுகாப்பற்ற, நிச்சயமற்ற வாழ்வு, பயங்கரங்களுக்கு நித்தமும் முகம் கொடுக்க வேண்டியநிலை பற்றிய தகவல்கள், சம்பந்தப்பட்ட பெண்களே கூறிய நெஞ்சுருக வைக்கும் சம்பவங்கள் என்பன இந்த நூல்களில் கூறப்படுகின்றன.
தமிழில் இத்தகைய நூல்களின் வரவுகள் வெகு அரிதாகவே உள்ளன. இவ்விதத்தில், "உண்மைக் கதைகள்" என்ற தொடரில் வெளிவந்த "அம்மாளைக் கும்பிடுறானுகள்" "வில்லுக் குளத்துப் பறவைகள்” ஆகிய இரு நூல்களிலும் இந்திய, இலங்கை இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்குள்ளான வடபகுதிப் பெண்கள் பற்றிய சில கதைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிந்தெடுத்த கவிதைகள்
‘பிரவாகினி’ இதழ்களில் கவிதைகள் குறைவாகவே பிரசுரமாகி. யுள்ளன. இவற்றுள்ளும் மறுபிரசுரக் கவிதைகளே அதிகமானவை. எனினும், இவற்றின் பொருத்தப்பாடும், முக்கியத்துவமும் கருதி இவற்றுள் தெரிந்தெடுத்த சில கவிதைகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
உடையட்டும் சிறைக்கதவு
பெண்ணே நீ வீட்டின் வெளியாலே போக முடியாது - சிறைக் கூட்டிற்குள் கிடந்துமடி - இல்லை சாக நாளும் குறி என்று பலகாலம் ஏமாற்றி வைத்திருந்தோம் இதனாலே. சிலை போல நிற்கவைத்து சீதனத்தால் நிறம் தீட்டி விலை பேசி விற்று விடும் பேதமை நீங்கவில்லை உலை வைக்கும் தொழில் விடுத்து வேதனத்தைப் பெறுகின்ற தொழிலுக்கு போகாதே என்றெல்லாம் இன்றும் கூறுகிறோம் சம உரிமை கேட்டதற்கு

Page 49
88 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
செம உதைகள் உதைத்து கம கமக்கும் பட்டுடுத்து
சுமங்கலியாய் இருந்துவிடு இதுவே போதுமென்று A. இருட்டடிப்புச் செய்கின்றோம் இனியும் இவை வேண்டாம் உடையட்டும் சிறைக்கதவு
- பறவையது பறக்கட்டும் சுதந்திரமாய்
- யு. ஜே. றஜி
பெண்ணே நீ விழித்தெழு
“பெண்ணே உறங்கிவிடாதே’ பெண்ணே உறங்கிவிடாதே - விழித்தெழு
ஆணின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட - விழித்தெழு அறியாமை இருளை அகற்றிட - விழித்தெழு மடமை இருளை அகற்றிட - விழித்தெழு சமுதாயத்தைக் கட்டி எழுப்பிட - விழித்தெழு சமத்துவத்தை நிலைநாட்டிட - விழித்தெழு
பெண்ணே,
போலிநியாயங்களைப் புதைத்திட - விழித்தெழு அநீதியை அடியோடு அழித்திட விழித்தெழு பெண்ணின் விடுதலைக்காக விழித்தெழு ஆணை மயக்குபவள் நீஅல்ல - அந்த
ஆடவன் அறிந்திட விழித்தெழு
ஆணுக்கு பெண் இளைத்தவள் அல்ல - அதை இவனிடம் உணர்த்திட - விழித்தெழு
“பெண்ணே உறங்கிவிடாதே’ பெண்ணே நீ உறங்கிவிடாதே

தெரிந்தெடுத்த கவிதைகள் 89
பென்னே, கற்பு கன்னியருக்கு மட்டுமல்ல அது கண்டிப்பாக காமனுக்கும் - தேவையென்றும் அடக்கம் பெண்மைக்கு மட்டுமல்ல - அது ஆண்மைக்கும் உரியதென்றும் - விழித்தெழு
“பெண்ணே உறங்கிவிடாதே’
பெண்ணே நீ உறங்கிவிடாதே. விழித்தெழு
பெண்ணே மடமை கொண்டவளாக - மடக்கப்படுகிறாய் விலைமகளாக விமர்சிக்கப்படுகின்றாள் காட்சிப் பொருளாகக் காட்டப்படுகிறாய் இவற்றை அறிந்தும் உறங்கிவிடாதே - விழித்தெழு
“பெண்ணே உறங்கிவிடாதே’
பெண்ணே நீ உறங்கிவிடாதே.
பெண்ணே உன்னிடத்தில் இருப்பதோ - மாபெரும் சக்தி அதை உன்னவரும் உணரவில்லை மன்னவரும் உணரவில்லை. - அதை அவர்களிடத்தில் உணர்த்திட - விழித்தெழு
- வி. சரஸ்வதி
கணவன்
“இது என்வீடு உன்னை நான் தொடுவேன் முத்தமிடுவேன்
துய்ப்பேன்
அதற்குத்தான் உன்னை வைத்திருக்கிறேன் நீ எனக்காகச் சமைக்கிறாய் அதனால் உனக்கு இருவேளை உணவுண்டு
என் பிள்ளைகளுக்கு நீ முலையூட்டினாய் அதனால் தான் - உனக்கு

Page 50
90
மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
தாயென்னும்
சமூகத் தகுதி தந்தேன்
நான
என் தந்தைமையை ம்றுத்து விட்டால் நீ உன் தாய்மையை இழந்து விடுவாய்! முழுமையாய்
நீஎன் உடைமை
ஏனெனில்
நான் உன் கணவன்’
- பூபதிவறிரா நந்தினி
மூலம்: சிந்தி நன்றி,தினகரன்
இடம் மாறும் அசோக வனங்கள்
அசோகவனம் என்னவோ எப்போதும் போல. காலியாகவே. அவரவர் வீடுகளே அபலை சீதைகளின் அசோகவனமானது
சீதைக்கு
தீக்குளிப்பு வாழ்க்கையில் ஒரு சம்பவம் எங்கள் சீதைகளுக்கு தீக்குளிப்புக்குள்ளே வாழ்க்கை இதுவே நிரந்தரம்
சீதைகளை சிறைமீட்கிறேன் என புறப்பட . அநுமார் (கல்யாண) புறோக்கர்களாலே

தெரிந்தெடுத்த கவிதைகள் 91
சீதைகளுக்கு திரும்ப. எப்போதும் போல. காலியாகவே.
எங்கள்.
மண்ணிலே நடப்பது
Lg560DL DULJAT 607
TITLDsTu 600TD இத்தாலி, கனடா, பிரான்ஸ் என இராமர்கள் தான் இரவல் நாடுகளில் சீதன யுத்தம் மாத்திரம் சபதமின்றி. அங்கே மெளனமாய்
இங்கே கல்யாண யுத்தகளத்தில் சீதைகள் தான் திருப்பியனுப்பப்படுகிறார்கள் இராமர்களால். இன்றுபோய்
நாளைவா..! இன்னும் நிறைய கொண்டுவா என்று அசோகவனம் என்னவோ எப்போதும் போல.
நிலாவெளிக்கைலை நன்றி: இனியும் சூல் கொள் (புகலிட இலக்கிய சிறப்புமலர்)

Page 51
92 மாற்று நோக்கில் சில கருத்தும் நிகழ்வுகளும்
உரிமைகளை மீட்டுெப்போம்
ƏgəyğFöFüb DLib நாணயம் பயிர்ப்பு நால்வகைக் குணங்களாம்.
A.
எங்கள் உணர்வுகளைச் சிதைத்து உரிமைகளைச் சிறைப்பிடித்து இடப்பட்ட இறுக்கமான பூட்டுக்கள்
சிறைக்கள் நாங்கள் சீதைகளாம் பூட்டுக்கள் எப்படி புனிதமாகலாம்?
ஆடவராலும் ஆட்சியாளராலும்
எங்கள்
உரிகைள்
பறிக்கப்பட்டு மடமையின் அடிமைகளாய் நேர்றுவரை வாழ்ந்துவிட்டதை இன்று நாங்கள் உணர்கிறோம்.
பூட்டுக்களை உடைத்துவிட்டே புறப்பட்டு வருகிறோம்.
இழக்கப்பட்ட உரிமைகள் எங்களாலேயே மீட்கப்பட வேண்டும்.
- நிருபா நன்றி மறையாத மறுபாதி (புகலிடப் பெண்களின் கவிதைத் தொகுப்பு)


Page 52
eெsigned & KLumlardanı Pre 55 F
| Լիր Տլքը: | 1 .
 
 

ISBN 955-92-3-
|
IT I고
Printed by Private Limited E C