கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி பிறக்குது

Page 1


Page 2

சக்தி பிறக்குது
(ஒரு மேடை நிகழ்வு
நாடகமாகவும் இருக்கலாம்)
கலாநிதி சி. மெளனகுரு
பெண்கள் கல்வி, ஆய்வுநிறுவனம்

Page 3
Title
Subject
First Published :
Author
Address
Publishers
Printers
Cover Art
Cover Design
Price
: SAKTHI PRAKKUTHU
: Drama
December 1997
: Dr. S. Maunaguru
: Eastern University
Vantharumoulai Chenkalady.
: Women's Education Research Centre
No.58, Dharmarama Road, Colombo - 06.
: Techno Print
83, Hospital Road, Kalubowila.
: Vasugi Jeyasangar
: A.M.Rasmi

சமர்ப்பணம்
யாழ். அன்னையர் முன்னணியின் முன்னணித் தலைவியருள் ஒருவரான மறைந்த நிர்மலா பாலரட்ணத்திற்கும் இந் நாடகத்தில் நடித்த முன்னணிக் கலைஞர்களான மறைந்த
இ.சிவானந்தன்
அ.ஜெயகுமார்
ஆகியோருக்கும்

Page 4

பதிப்புரை
மெளனகுருவின் இந்நாடகம் பல பரிமாணங் களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பெண்மை யின் அவலங்கள் யாவும் வெளிக்கொணரும் முறை யில் எழுதப்பட்ட ஒரு நாடகமிது என்ற ரீதியில் மட்டும் இதை நான் காணவில்லை. ஒரு சமூகத்தின் பல்வேறுபட்ட மட்டங்களின் கூறுகளில் பெண் களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இங்கு இனங் காணப்படுகின்றன.
வீட்டுக்கரசியான பெண்ணின் பொறுப்பும் சுமை யும் வேலைப்பழுவும் குடும்பம் தாய், என்ற மேன்மைகளில் ஒளிந்து மறைந்து விடுவதையும் அந்தச்சுமையின் இன்னொரு பரிமாணமாக எடி, போடி போன்ற வாய்ச்சொல் வன்முறையும் தள்ளு தல், அடித்தல் போன்ற உடல் ரீதியான வன்முறை வெளிப்பாடுகளும் எப்படி சகஜமாகி விடுகின்றன என்பதை நாடகத்தில் வெளிக் கொண்டுவரப்பட்ட உத்தி நன்றாக இருக்கிறது.
நெசவு ஆலையிலும், தேயிலைத் தோட்டத்திலும் வர்க்கமும் பெண்நிலையும் எப்படி இணைந்து இரட்டிப்பு சுரண்டலுக்கு வழிகோலுகிறது என்ப தும் இந்நாடகத்தின் ஒரு வெளிப்பாடு. இங்கு அவளது பால்நிலை, அவளது பால்மையை எப்படி வர்க்கத்தின் கீழ்நிலையில் ஒரு கங்காணியின்

Page 5
சக்தி பிறக்குது
போகப்பொருளாக மாற்றி விடுகிறது என்பது ஒரு இருமுனைத்தாக்கமாக பெண்ணை சென்றடை கிறது. கங்காணிஇங்கு ஆண்மை + மேல்வர்க்கமாக தோற்றமளிக்கிறான். அவளது பெண்மையை அனு பவிப்பதற்கு அவள் அன்று வேலை செய்யத் தேவையில்லை என்ற நிலை அல்லது குறைந்த வேலை என்ற அவளது ஊதியத்தின் வேரே 'விலை யாகப் பேசப்படுகிறது.
"செய்யாட்டி ஒன்றும் பரவாயில்லை.
அந்திக்கு பிறகு குளிச்சு முழுகிட்டு
அந்தப்பக்கம் வா, புரிகிறதா’ என்ற குறியீட்டுப் பேச்சு அவளது, பெண்மையின் பால்மைக்கு அழைப்பு. தெருவோர இள வட்டங்களின் அவலப் பேச்சு பெண்ணின் அபல நிலையால் ஏற்படுவதல்ல.
உன்னைத்தான் நில்லடி
உன் பேரைச் சொல்லடி
எடியேய் பொட்டச்சி
இங்கெம்மைப் பாரடி
காலங்காலமாக ஆணுக்களிக்கப்பட்ட சலுகைகள், உரிமைகள் ஆதிக்கங்கள் போன்றவற்றில் ஊறிய சமுதாய மரபாகிவிட்ட வக்கிரங்களின் வெளிப் பாடு. இது ஆண்பிள்ளை சுபாவம் கண்டுகொள்ளக் கூடாது என்று விட்ட, விடப்பட்ட ஒரு எண்ணத் தின் கிரம வளர்ச்சி. இப்படியான பல ஆணாதிக்க வெளிப்பாடுகளை சமூக, வர்க்க குடும்ப நிலையில் இருந்து அவற்றின் சேர்க்கைகளையும், பேதங்களை யும் இனங்காணமுயலுகிறது இந்நாடகம். இந்நாட கம் நடிக்கப்பட்ட பொழுது அதைக் காணும் சந்தர்ப் பம் எனக்கு கிட்டவில்லை. ஆனாலும் அதில் கையாளப்பட்ட உத்திகளும், கிரம வரன்முறையும், வளர்ச்சியும் ஒரு செய்தியை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது என்ற எண்ணத்தைத் தோற்று விக்கிறது.

சக்தி பிறக்குது
முடிவு, திரண்டெழுந்த சக்தியைக் காட்டுகிறது. பல்வேறு குரல்கள், திட்டங்கள், அணுகுமுறை களை உள்ளடக்கி ஒரு பெண்நிலைவாத மேடை சக்தி பெற்று, சக்தியைப் பிறப்பிக்கிறது. ஆனால் அச்சக்தியால் எவ்வளவு தூரத்திற்கு பிரச்சினைகள் குறைக்கப்பட்டு விட்டன? மெளனகுரு கூற எத்தனிக்கவில்லை. வரலாறுதான் கூறவேண்டும்.
சக்தி பிறக்கிறது என்ற இந்நாடகத்தின் முக்கியத் துவம் இது யாழ்ப்பாணத்தில் மேடை ஏறிய முதல் ஒரு பெண்நிலைவாத நாடகம் என்பதிலும் தங்கி யுள்ளது. வெகுஜன ஊடகங்களில் (நாடகம், சினிமா, தெருக்கூத்து) வாசிப்பு ஊடகங்களிலும் பார்க்கக் கூடிய தாக்கத்தை மக்களிடம் உண்டாக்கு கின்றன. சக்தி பிறக்குது என்ற நாடகத்தின் தாக்கம் எத்தகையது என்பது கூட இங்கு தொகுத்துத் தரப் பட்டிருக்கிறது. குழந்தை சண்முகலிங்கம், சிதம்பர நாதன் போன்ற மற்றைய ஆண்களின் பெண்நிலை வாத நாடக பங்களிப்புக்களும் ஆண்களின் விழிப் புணர்ச்சிக்கு சான்று பகர்வனவாக இருக்கின்றன. இவ்வரிசையில் நாம் ரஜனி திரணகமவையும் அவ ரது நாடகப்பங்களிப்பையும் கூட பெருமிதத்துடன் நினைவுகூர்வோமாக.
செம்மனச்செல்வி
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் கொழும்பு 06.

Page 6

முன்னுரை
யாழ்ப்பாணப் பெண்கள் ஆய்வு வட்டத்தினர்1986ல் தாம் முதலில் நடத்திய சர்வதேசப் பெண்கள் ஆண்டுவிழாவில் மேடையேற்றுவதற்காக என்னை ஒரு நாடகம் தயாரித்துத் தரும்படி கேட்டனர். யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது சர்வதேசப் பெண்கள் தினம் அது என்றே நினைக்கின்றேன்.
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களு டன் உரையாடி எழுதப்பட்டதே இந்நாடகம். இதனை நாடகம் என்பதைவிட மேடை நிகழ்வு என்றே நான் கூறுவேன்.
எல்லா நாடகங்களும் ஒரு வகையில் மேடை நிகழ்வுதான். ஆனால் எல்லா மேடை நிகழ்வுகளும் நாடகமாகி விடுவதில்லை. நாடக அம்சம் நிரம்பிய மேடை நிகழ்வுகளை என்ன சொல்லால் அழைப் பது? எனவே தான் இதனை நான் ஒரு மேடை நிகழ்வு; நாடகமாகவும் இருக்கலாம் என்று குறிப் பிட்டேன்.
நாடகத்திற்கென்று சில வரையறைகளை நாம் ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். வரையறைக் குள் நின்று சிருஷ்டிப்பது சிரமமான காரியம். சிருஷ்டியில் புதிது புதிதாகச் செய்ய விரும்பு வோருக்கு மரபுகள் தடைகளாகி விடுகின்றன.

Page 7
சக்தி பிறக்குது
இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே நான் செய்தேன். பரதம், கூத்து, கொட்டகைக்கூத்துச்சாயல், நாட்டா ரிசை, கர்நாடக இசை, நாடகம், நாட்டிய நாடகம் என்ற நானாவித அம்சங்களையும் கலந்து அதனை உருவாக்க முயன்றேன். அதன் அடிச்சரடு பெண் நிலைவாதம் என்ற கருத்து நிலையாகும். புராணங் களிலும் இதிகாசங்களிலும் சக்தி என்று போற்றப் படும் பெண் நடைமுறையில் கீழாகவே ஆணாதிக் கச்சமூகத்தால் கணிக்கப்படுகின்றாள். இந்தச் சமூக முரணை வெளிக்காட்டுவதும், சக்தியான பெண்கள் தம் சக்தியை உணர்த்துவதும் தான் எனது எழுத்தின் நோக்கு.
மேடையில் இது வெற்றி கண்டது. பலரை இது கவர்ந்தது. இளைஞர் சிலர் வெகு கோபத்தோடு மண்டபத்தை விட்டுச் சென்றனர். சிலரை இது முகம் சிவக்கச் செய்தது, இன்னும் சிலரை இது வெகுவாக அசைத்தது எனப் பின்னால் அறிந்தேன். ஏதோ ஒரு வகையில் பார்வையாளர் இதற்களித்த response எனக்குத் திருப்தியை தந்தது.
பெண்ணிலைவாதக் கருத்தியலுக்கு என்னை அறி முகமாக்கிய சித்திரலேகாவுக்கு இவ்விடத்தில் மிகுந்த நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந் நாடகத்தின் உந்து சக்திகளாக அமைந்தவர்கள் சர்வமங்களம் கைலாசபதியும், சித்திரலேகாவும் ஆவர்.
இந்நாடகத்தின் தயாரிப்பில் வழக்கம் போல எனக் குக் குழந்தை சண்முகலிங்கம் பேருதவியாக இருந் தார். நாடக அரங்கக் கல்லூரி நடிகர்களையும், யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட மாணவிகளையும் இணைத்து அதனைத் தயாரிக்க ஆலோசனை தந்தவர் அவரே,
பிரான்ஸிஸ் ஜெனம், ருத்ரேஸ்வரன், (மறைந்த) சிவானந்தன், AT. பொன்னுத்துரை, சுந்தரலிங்கம், பூரீகணேசன் போன்ற யாழ்ப்பாணத்தின் சிறந்த நாடகக்காரர்கள் அதில் நடித்தனர். நுண்கலைப்பீட

சக்தி பிறக்குது
மாணவியர்கள் தாம் அவர்கட்குச் சளைத்தவர்க ளில்லை என்று நிரூபித்தனர். திறமையான கலை ஞர்களின் சங்கமிப்பாக இது அமைந்தது.
இந்நாடகத்திற்கான இசைப் பொறுப்பைக் கண்ண னும், பரதநாட்டியப் பகுதியை பல்கலைக்கழக நடன விரிவுரையாளர் சாந்தா பொன்னுத்துரையும் பொறுப்பேற்றனர். பின்னணி வயலின் இசையை இசை விரிவுரையாளர் பாக்கியலட்சுமி நடராஜா ஏற்றிருந்தார். அனைவரின் உதவியும் முழுமையாக எனக்குக் கிடைத்தன. மிகுந்த அற்புதமான அந்த யாழ்ப்பாண நாட்கள் மனதை விட்டு அகலாதவை. இந்நாடக உருவாக்கத்தின் பின்னணியில் நின்ற அனைவரும் என் நன்றிக்கு உரியவர்கள்.
இந்நாடகத்தின் தன்மைகளையும் செய்தியையும் அறிந்த கலாநிதி செம்மனச்செல்வி திருச்சந்திரன் அவர்கள் இதனைத் தங்களின் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) மூலமாக வெளியிடலாம் என்று என்னிடம் கூறினார். இதனால் அதனை மேலும் திருத்தியும், சில விடயங்களை உட்புகுத் தியும் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்நாடக மேடை நிகழ்வு அச்சில் வெளி வருகை யில், இந்த நாடக மேடை நிகழ்வு சம்பந்தமாகப் பத்திரிகையில் அன்று வந்த விமர்சனங்களையும் சேர்க்கும் படி நண்பர்கள் கூறினார்கள். அது நல்ல ஆலோசனையாக எனக்குப்பட்டது. அவையும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு கால மன உண ர்வை அறிய இவை உதவும்.
நோர்வேயில் வசிக்கும் எனது மாணவரும் நண்பரு மான சத்தியேந்திரா இந் நாடகத்தை மேடையிட்டு அது சம்பந்தமாக வந்த வாதப் பிரதிவாதங்களை நறுக்குகளாக எனக்கு அனுப்பி வைத்திருந்தார். இவை யாவும் எதிர்வினைகள் என்ற தலைப்பின் கீழ் இடம் பெறுகின்றன.

Page 8
சக்தி பிறக்குது
நூலுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்நாடகத்தை மீண்டும் தயாரிக்கும் ஆசை யும் துளிர் விடுகிறது. செம்மனச் செல்வி திருச் சந்திரன் இதன்ன அவசியம் மீண்டும் தயாரிக்கும் படி வற்புறுத்துகின்றார். வசதியும் வாய்ப்பும் ஏற்படின் அது நிகழும் சாத்தியப்பாடுகளுண்டு. இந்நூலைக் கணணியில் வடிவமைத்த செல்வி து.தாட்சாயினிக்கும், இந்நூலை வெளியிடும் WERC நிறுவனத்திற்கும் குறிப்பாக இதில் ஆர்வம் காட்டிய கலாநிதி செம்மனச்செல்வி திருச்சந்திர னுக்கும் அட்டைப்படம் வரைந்து தந்த வாசுகி ஜெயசங்கருக்கும், அட்டையினை வடிவமைத்த ஏ.எம்.ரஷ்மிக்கும் நூலின் வடிவமைப்பை மேற் கொண்ட ரெக்னோ பிறின்ட் நிறுவனத்திற்கும் என் நன்றிகள்.
சி.மெளனகுரு
கலைப்பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம். வந்தாறுமூலை, செங்கலடி.
O5.09. 1997

(நாதஸ்வரத்தில் பூபாள இராகம் கம்பீரமாக ஒலித்து அரங்கினை நிறைக்கிறது. சில வினாடிகள் கழிய இராகத்தின் அசைவுக்கு இயைய மெல்ல திரை விலகுகிறது. மேடையின் மத்தியில் சூலம் தாங்கி, கொடுமைகளை அழிக்கும் பாவனையில் ஒரு பெண் நிற்கிறாள். அவள் முகத்தில் உலகத்தின் கொடுமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் கோபக் குறி. கண்கள் கோபத்தை பிரமாதமாக வெளிப்படுத்துகின்றன. வெறித்தனம் இல்லா ததும், நிதானமும் அழுத்தமும் மிக்க கோபம் அது.
அவளின் பின்னால் நான்கு பெண்கள், சூலம் தாங்கிய சக்தியின் மீதி எட்டுக் கைகளும் தெரியும் படியான ஒரு அமைப்பில் நிற்கிறார்கள். அவர்கள் முகத்திலும் அதே கோபபாவம்.
இந்தக் காட்சி பத்துக் கைகளுடன், மகிடாசூரனைச் சங்காரம் செய்த ஆதிபராசக்தியை நினைவூட்டு வதாக அமைந்துள்ளது.
சம்ஹாரமூர்த்தத்திற் காட்சி தரும் சக்தியின் இடது புறக் காலடியில் ஒரு பெண் கைகூப்பிய நிலையில் இடது காலைப் பின்னால் மடித்தபடி வலது முழங் காலில் வணங்கியபடி நிற்கிறாள்.
மேடையில் அடிப்பாகத்தில் நாடகத்தின் பின்னால் வரப்போகின்ற கணவன், கங்காணி, விடலைப் பையன்கள் இருவர், நெசவு ஆலை முதலாளி ஆகிய ஐவரும் சபைக்குப்பின்புறம் காட்டியபடி நிற்கிறார்

Page 9
சக்தி பிறக்குது
கள். அவர்கள் தம் கைகளில் பின்னால் எடுத்துரை ஞர் கூறப்போகின்ற வாக்கியங்களைத் தாங்கிய அட்டைகளை வைத்திருக்கிறார்கள்.
திரை முற்றாகத் திறந்ததும் மேடையின் கீழ் இருந்து நான்கு எடுத்துரைஞர்கள், சக்தியாக நிற்கும் பெண் களின் அருகே வந்து மேடையின் இடதுபக்க மூலை யில் நின்று மிகுந்த பயபக்தியுடன் வணங்கு கிறார்கள்.
நாதஸ்வர ஒலி நிற்கிறது. வீணை ஒலி ஆரம்ப udit6pgi.
பணிந்தவர்கள் மந்திர உச்சாடன ஒலியில் வயிற்றின் அடியிலிருந்து வரும் தொனியில் கீழ் வரும் சுலோ கங்களைக் கூறுகிறார்கள்.)
சர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண் நேத்ரியம்பகே கெளரி
நாராயணிநமோஸ்துதே
கலாதாட்சாயணீ
பரிணாமப் பிரதாஜினி
திருஹ்யஷ்யோ பிரதவசக்தி
நாராயணிநமோ ஸ்துதே
திருஷ்டி திதி விநாசானாம்
சக்தி பூதே ஜனார்த்தனி
குனஸ்ரயே குணமயே
நாராயணிநமோஸ்துதே.
(பின்னணியில் நாதஸ்வரம் எழுந்து ஒலித்து மங்குகிறது. காண்டாமணி ஓசை ஓம் ஒம் என

கலாநிதி.சி.மெளனகுரு 3
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 1 :
முழங்குகிறது. சுலோகம் முடிய எடுத்துரை
ஞர்கள் 1உம், 2உம் மேடையின் இடது
மூலைக்குச் செல்ல எடுத்துரைஞர் 3 உம் 4 உம் மேடையின் வலது மூலைக்குச் செல்கின்றனர் எடுத்துரைஞர் 1அங்கு நின்றபடி சக்தி முகூர்த் தத்தில் நிற்கும் பெண்களைப் பார்த்துப் பாடு கிறார்.)
(விருத்தம்) போற்றி எம்வாழ் முதல் ஆகிய சக்தி புவிகளை நீயே படைத்தனை என்பார் அண்டங்கள் எல்லாம் ஆக்கினாய் என்பார்
அனேக உயிர்களைத் தோற்றினாய் என்பார்.
(விருத்தம் முடிய சிருஷ்டித் தொழிலுக்கான இசை முழங்குகிறது. சக்தியும் பின்னால் நின்ற நான்கு பெண்களும் உறை நிலையினின்றும் விடுபட்டு மேடையின் மூலைக்கு இசைக்கு ஏற்ப அசைந்து வந்து, உலகையும் சூரிய சந் திரர்களையம் படைப்பது போல அபிநயம் புரிகிறார்கள். படைப்புத் தொழில் முடிந்ததும் முன்பு நின்ற நிலையில் பழைய இடத்திற்குச் சென்று முன்னர் நின்றது போல உறை நிலை யில் நிற்கிறார்கள். நின்றதும் எடுத்துரைஞர் 1 மீண்டும் விருத்தத்தைத் தொடங்குகின்றார்.)
(விருத்தம்) அதர்மங்கள் எல்லாம் தலைதூக்கும் நேரம்
அடக்கினாய் என்று புராணத்திற் சொல்வார்.
(சம்ஹாரத்திற்கான இசைமுழங்குகிறது. மீண் டும் அதே பெண்கள் மேடையின் இடது மூலைக்கு வேகமாகச் சென்று மகிடாசூரனை

Page 10
சக்தி பிறக்குது
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
வதைத்தமையை அபிநயித்து மீண்டும் பழைய படி நின்ற இடத்திற்குச் சென்று உறை நிலை யில் நிற்கிறார்கள். நின்றதும் விருத்தம் தொடர்கிறது)
(விருத்தம்)
அன்னையே தாயே பெண்மையே உன்னை
அனைவரும் இங்கு பணிந்திட வந்தோம்
(விருத்தம் முடிகிறது. அன்னையைப் பணிந்து ஏற்றும் அபிநய பாவத்துடன் எடுத்துரைஞர் கள் சக்தியின் இடதுபுறம் நின்றபடி பின்வரும் வரிகளை விருத்தம் பாடிய இராகத்தில் இசைக் கிறார்கள்)
பெண்மையைப் போற்றுவோம்
தாய்க்குலம் வாழ்க
பெண்கள் சமூகத்தின் கண்கள்
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.
(மேலேயுள்ள வரிகளை எடுத்துரைஞர் இசை க்க இசைக்க மேடையின் அடிப்பாகத்தில் அவ்வரிகளைத் தாங்கிய அட்டைகள் வைத் திருந்த ஆண்கள் ஐவரும் மேடையின் முன் பகுதிக்கு அட்டைகளைத் தூக்கிச் சபையோரு க்கு காட்டியபடி புன்முறுவலோடு வந்து மேடையின் முன்புறம் வரிசையாக நிற்கிறார் கள். அட்டைகளின் வாசகங்கள் சபையோரு க்கு வெகு தெளிவாகத் தெரிகின்றன. சக்தியின் வலதுபுறமும் இடதுபுறமும், நின்ற எடுத் துரைஞர்களும் தத்தம் பைகளில் சுலோகங்கள் எழுதி வைத்திருந்த காகிதச் சுருள்களை ஒவ் வொன்றாகக் கீழ்வரும் ஒழுங்கில் விரித்துக்

கலாநிதி.சி.மெளனகுரு 5
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
காட்டிப் பாடியபடி ஆண்கள் ஐவருடனும் வரிசையில் இணைகிறார்கள்.)
தெய்வம் தொழாள் தொழுநற்றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மை உண்டாகப் பெறின்.
இல்லாள் அகத்திருக்க இல்லாதொன்றில்லை
மாதா பராசக்தி வையமெல்லாம் காக்கிறாள்.
(விருத்தம் முடிய மேடையின் முன்புறம் அட்டை தாங்கியபடி வரிசையில் நின்ற ஆண் களிடமிருந்து 'பெண்மையைப் போற்று வோம். தாய்க்குலம் வாழ்க’ என்ற வரிகள் ஒலிக்கின்றன. ஒரு அணிநடைப் பாணியில் அவர்கள் வரிசையாக மேடையில் பவனிவரு கிறார்கள். இப்பவனி அவர்கள் அதனை ஒற் றுமையாகக் கூறுகிறார்கள் என்பதனைப் புலப் படுத்துகிறது.
சிறிது நேரம் பவனியின் பின் மேடையின் அடிப்பாகத்தில் நின்றவர்கள் பழையபடி சென்று மேடைக்குப் பின்புறம் காட்டியபடி நிற்க, எடுத்துரைஞர்கள் 1 உம், 2 உம் மேடை யின் இடது பக்கமூலைக்கு வந்து நிற்கிறார் கள். மேடையில் தத்தம் நிலைகளில் நின்றபடி எடுத்துரைஞர்கள் பின்வரும் பாடல்களைப் பாடுகிறார்கள்)
(விருத்தம்)
சக்தியைப் பெண்மை என்றும்
சக்தியைத் தாய்மை என்றும்
(விருத்தம்)
சக்தியைத் தெய்வம் என்றும்
தாரணி தனித்துப் போற்றும்

Page 11
சக்தி பிறக்குது
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
(விருத்தம்)
இன்று நாம் உலகிற் காணும் எங்களின் பெண்கள் எல்லாம்
(விருத்தம்)
சக்தியின் துளிகள் என்று
சாற்றினால் பிழைகள் உண்டோ
(பாடல் முடிய மேடையின் வலது மூலையில் நின்ற எடுத்துரைஞர் 1 மேடையின் இடது மூலையில் நின்ற எடுத்துரைஞர் 2ஐக் காட்டிக் கூறுகிறார்) அதோ ஜீவராசிகளை வலிய வந்து ஆட்கொள்ளும் எம்பெருமான் ஆலயத்தில் கானவாருதி, காலேட் சபசிங்கம், ஞானக்கொழுந்து அருட்திரு சொரூபா னந்தம்பிள்ளை அவர்கள் காலேட்சபம் செய்கிறார்
(தம் மைக் காலேட்சபம் செய்யும் பாகவத ராகப் பாவனை செய்த படி கைகளினால் சப்பிளாக்கட்டையை அடித்தபடி பாடுகிறார்)
திமிகிட திமிகிட வாத்ய மிருதங்கம்
பரமானந்தமதே.
பரமானந்தமதே.
(வசனத்தில் சுருதியுடன்) மெய்யன்பர்களே சக்தி மிகப் பெரியவள், சர்வம் சக்திமயம் என்று நம்முன்னோர் கூறினர். அண்டங்க ளை யெல்லாம் படைத்தவர் யார்? (கேள்வியைக் கேட்டு விட்டு ஒரு நிமிடம் சபையிடம் பதிலை எதிர்பார்க்கும் முகபாவத்தில் நிறுத்துகிறார். பின் பதிலை தாமே கூறுகிறார்) அன்னை அகிலாண் டேஸ்வரி தான், பிரமா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் யார்? (விடையை எதிர்பார்க் கிறார் பின் தானே கூறுகிறார்) சாட்சாத் அம்பிகை யின் பிரதிபிம்பங்களே, பெண்களையெல்லாம்

கலாநிதி.சி.மெளனகுரு 7
அன்னையே (நிதானித்து) அன்னை ஜே என்று வணங்கினார் சுவாமி இராமகிருஷ்ணண பரம கம்சர். இன்று நாம் காணும் பெண்கள் எல்லாம் அன்னையின் வடிவங்களே.
எனவே அன்னையைப் போற்றுவோம்.
அன்னையைப் போற்றுவோம்.
(அன்னையைப் போற்றுவோம் அன்னையைப் போற்றுவோம் என்ற அடிகள் இராகத்தில் பாடப்படத் தொட ங்க எடுத்துரைஞர்கள் அதே ராகத்தை
தந்தன தனனதந்தன தன
தந்தன தனனதனதானா
தான தனாதன தானதனாதன
தானனதனன தனதானா
என்ற தாளக் கட்டில் பாடுகின்றனர்.
அந்தத்தாளக் கட்டின் பின்னணியில் பராசக்தி யாகவும், அவளின் அங்கமாகவும் உறை நிலை யில் நின்ற பெண்கள் குடும்பத் தலைவிகளாக அபிநயம் பண்ணத் தொடங்குகிறார்கள். மேடை முழுவதும் பரவுகிறார்கள். நின்ற படியும் இருந்த படியும் குடும்பப் பெண்கள் கஷ்டப்பட்டு வேலை செய்வது போல அபி நயிக்கிறார்கள்.
சட்டி பானை கழுவுதல்
அம்மியில் மிளகாய் அரைத்தல்
மா இடித்தல்
துணிதுவைத்தல்
சமையல் வேலை செய்தல்
போன்ற அபிநயங்களைச் செய்கிறார்கள். மேடையின் அடிப்பாகத்தில் சபைக்குத் தமது

Page 12
சக்தி பிறக்குது
எடுத்துரைஞர் அனைவரும்
எடுத்துரைஞர் 1 :
பின்புறத்தைக் காட்டியபடி நின்ற ஆண்கள் ஐவரும் மேடையின் அடிப்பாகம் முழுவதும் வலமிருந்து இடமாகவும், பின் இடமிருந்து வலமாக்வும் நடந்து ஒரு பிரேதத்தைப் பாடை யில் காவியபடி சுடலைக்குக் கொண்டு செல் வது போல அபிநயிக்கிறார்கள். நான்கு பேர் பிரேதம் காவ ஒருவர் அரிசிப் பொரியைப் பிரேதத்தின் மேல் எறிந்த படி செல்கிறார். பெண் விடுதலைச் சிந்தனைகள் ஆண்கள் சிலரால் சுடுகாட்டுக்கு அனுப்பப்படுவதனை இக்குறியீடு உணர்த்துகிறது. தாளக்கட்டுகளும் பாடல்களும் எடுத்துரைஞரால் மாறி மாறிப் பாடப்படுகின்றன. தாளக் கட்டுக்கள் பாடப் படுகையில் பிரேதம் காவுதல் நடைபெற, வேலை செய்த பெண்கள் உறை நிலையில் நிற்கிறார்கள். பாடல் பாடப்படுகையில் பெண்கள் தம் வேலைகளைச் செய்ய பாடை காவிய ஆண்கள் உறை நிலையில் நிற்கிறார் கள்.)
(தாளக்கட்டு)
தந்தன தனன தந்தன தனன
தந்தன தனன தனதானா
தான தனா தனதான தனாதன
தானனனதனனதனதானா
(தாளக்கட்டு முடிய பெண்களின் வேலைகள் ஆரம்பமாகின்றன. எடுத்துரைஞர் இருவரும் வேலை செய்யும் பெண்கள் மத்தியில் நடந்த படி பாடல்களைப் பாடுகிறார்கள் அவர்க ளோடு அளவளாவுவது போல பாவனை புரி கிறார்கள்)
(பாடல்)
குடும்பம் இயக்கும் அச்சாணி - எம்
குடும்பப் பெண்ணே இவளம்மா

கலாநிதி.சி.மெளனகுரு 9
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் அனைவரும்
எடுத்துரைஞர் 1 :
காலையில் எழுந்து மாலை வரும்வரை கடின உழைப்பிவள் செயலம்மா
(பாடல்)
வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி
கணவன் பிள்ளைகள் வாழவைப்பாள் வாசலில் அவர்கள் மகிழ்வர் இவளோ குசினியிற் காலம் கழித்திருப்பாள்.
(பாடல் முடிய தமது பழைய இடங்களுக்கு எடுத்துரைஞர் செல்ல பெண்கள் உறை நிலைப்பட பின்னால் பிரேதம் காவுதல் நடை பெறுகிறது)
(தாளக்கட்டு)
தந்தன தனன தந்தன தனன
தந்தன தனன தனதானா
தான தனா தன தான தனாதன
தானினதனனதனதானா
(பிரேதம் காவியவர்கள் உறை நிலையில் நிற்க, பெண்கள் இப்போது புத்தகக் கட்டுக் களைத் தாங்கியபடி பாடசாலை செல்லும் பெண்கள் போல நின்ற இடத்தில் நடந்து அபிநயிக்கிறார்கள். எடுத்துரைஞர்கள் முன்பு போல அவர்கள் மத்தியில் திரிந்து அவர்க ளோடு உரையாடுவது போல அபிநயித்துப் பாடுகிறார்கள்)
(பாடல்)
நாளை மலரும் சமூகத்தை இங்கு
நடத்தப் போகிற தலைமுறையாள்
பாடசாலை செல்கிறாள் கல்வி
பயின்று வர அவள் செல்கிறாள்)

Page 13
சக்தி பிறக்குது
10
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் அனைவரும்
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
(பாடல்)
இன்றைய கல்வியிற் பயனில்லை
என்றாலும் இதிலிருந்து பெறும்
நன்மைகள் தம்மைத் திரட்டியேயிவள்
நாளைய சமூகத்திற் குதவிடுவாள்
(பழைய இடங்களுக்கு எடுத்துரைஞர் செல் கின்றனர் - உறை நிலை ஆண்கள் அசைகின்ற னர்)
(தாளக்கட்டு)
தந்தன.தனனதந்தன.தனன
தந்தன தனன தனதானா
தானதனாதன தானதனாதன
தானினதனனதனதானா
(பிரேதம் காவியோர் உறை நிலையில் நிற்க, பெண்கள் இப்போது தேயிலைத் தோட்டத் தில் கொழுந்து கொய்யும் பெண்களாக அபி நயிக்கிறார்கள். எடுத்துரைஞர் அவர்கள் மத்தி யில் சென்று பாடுகின்றனர்.)
(பாடல்)
இலங்கை நாட்டின் இதயத்தை இயக்கும் இவள் ஒரு தொழிலாளி தேயிலைக் கொழுந்து பறித்தெடுக்கும் தேயிலைத் தோட்டப் பெண்ணம்மா.
(பாடல்)
கூலி, வசதி அத்தனையும்
குறைவாய்ப் பெற்று நாள் முழுதும் பாடுபடும் இப்பெண் வாழ்வோ
பரிதாபம் மிகப் பரிதாபம்

கலாநிதி.சி.மெளனகுரு 11
எடுத்துரைஞர் அனைவரும்
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 1 :
(பழைய இடங்களுக்கு எடுத்துரைஞர் செல் கின்றனர். பெண்கள் உறை நிலை. ஆண்கள் அசைவு.)
(தாளக்கட்டு)
தந்தன தனன தந்தன தனன
தந்தன தனன தனதானா
தான தனாதனதான தனாதன
தானினதனனதனதானா
(பிரேதம் காவியோர் உறைநிலையில் நிற்க, பெண்கள் நெசவு செய்யும் தொழிலாளிப் பெண்களைப், போல அபிநயிக்கிறார்கள். எடுத்துரைஞர்கள் அவர்கள் மத்தியிற் சென்று பாடுகிறார்கள்.)
(பாடல்)
நெசவாலை ஒன்றில் பணியாற்றும்
பாவம் பெண் தொழிலாளி இவள்
காலையில் இருந்து மாலை வரைக்கும்
கடுமையாக உழைக்கின்றாள்.
(பாடல்)
ஆண்மகனைப்போல் எட்டுமணிவரை
அருமையாயிவள் உழைத்தாலும்
பெண்ணாயிருக்கும் காரணத்தால்
சம்பளமோ மிகக் குறைவம்மா.
(பாடல்)
பெண்ணாய்ப் பேசாதிருப்பதனால்
பெருமைமிக்க ஆண்களினம்
தம்முடை வேலைகள் அத்தனையுமிவள்
தலையிற் கட்டி அடிக்கின்றார்.

Page 14
12
சக்தி பிறக்குது
எடுத்துரைஞர் அனைவரும்
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
(பழைய இடங்களுக்கு எடுத்துரைஞர்கள் செல்கின்றனர். பெண்கள் உறைநிலையில் நிற்க ஆண்கள் அசைகிறார்கள்.)
(தாளக்கட்டு)
தந்தன தனனதந்தன தனன
தந்தன தனன தனதானா
தானதனா தனதானதனாதன
தானினதனன தனதானா
(குடும்பப் பெண்ணாகவும் தேயிலைத் தோட் டப் பெண்ணாகவும் பாடசாலை செல்லும் பெண்ணாகவும் நெசவு செய்யும் பெண்ணா கவும் ஒவ்வொருவரும் அபிநயிக்கிறார்கள். சக்தியாக அபிநயித்தவர் கீழே அமர்ந்திருக் கிறார். அபிநயிக்கும் ஒவ்வொரு பெண்ணை யும் சுட்டிக் காட்டி எடுத்துரைஞர்கள் பாடு கிறார்கள்.)
(குடும்பப் பெண்ணைக் காட்டி)
குடும்பம் இயக்கும் அச்சாணி
குடும்பப் பெண்ணே இவளம்மா
(பாடசாலை செல்லும் பெண்ணைக் காட்டி)
பாடசாலை செல்கிறாள் கல்வி
பயின்று வர இவள் செல்கின்றாள்.
(தோட்டத் தொழிலாளப் பெண்ணைக் காட்டி)
தேயிலைக் கொழுந்து பறித்தெடுக்கும்
தேயிலைத் தோட்டப் பெண்ணம்மா
(நெசவு செய்யும் பெண்ணைக் காட்டி)
பவர் லூமில் வேலை செய்கின்றாள்
சம்பளமோ மிகக் குறைவம்மா.

கலாநிதி.சி.மெளனகுரு 13
(பின்வரும் பாடலை மேடையின் முன்னுக்கு வந்து ஆவேசத் தொனியுடன் எடுத்துரைஞர் கள் பாடுகிறார்கள். பாடலின் விரைவுக்கு ஏற்பப் பெண்களும் வேலைகளை விரைவா கச் செய்கிறார்கள். பிரேதம் காவிய ஆண்களும் விரைவாக நடந்து கருமாரிகளைக்கெதியாக முடித்து விட்டுப் பழையபடி தமது இடங் கட்குச் சென்று உறைநிலையில் நிற்கிறார்கள்.)
எடுத்துரைஞர் 1,2: இவர்கள் யாவரும் பெண்கள் இனம்
இவர்கள் யாவரும் எங்கள் இனம் இவர்கள் அனைவரும் தாய்க்குலமே
வர்கள் அனைவரும் சக்திமயம்
ரு
சக்தியைப் போற்றுவோம் ஓர் நிலையில் பெண்மையைப் போற்றுவோம் ஓர் நிலையில் பெண்மையைப் பழிப்போம் இன்னோர்நிலையில் பேதைகள் வாழ்வைப்பாருங்கள்
(எடுத்துரைஞர்கள்தத்தம் பழைய இடங்களுக் குச் சென்று நிற்கிறார்கள். பெண்கள் அனை வரும் மேடையின் நான்கு மூலையிலும் நான்கு விதமான நிலைகளில் நிற்கிறார்கள். ஒருநிலை சமையல் வேலை; இன்னொரு நிலை தேயிலைக் கொழுந்து கொய்தல்; அடுத்த நிலை பாடசாலை செல்லல்; மற்ற நிலை நெசவு நெய்தல், சக்தியாக வந்த பெண் பின் மேடையின் நடுவில் அமர்ந்திருக்கிறாள்.
ஒரு சிறு நேர அமைதிக்குப் பின் மேடையின் வலது மூலையில் நின்ற எடுத்துரைஞர்3, முன் மேடையின் நடுப்பகுதிக்கு வருகிறார். தன் கைப்பைக்குள் இருந்த பைலை எடுக்கிறார். எதையோ தேடுகிறார். கண்டு விட்ட மகிழ்ச்சி

Page 15
சக்தி பிறக்குது
14
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் அனைவரும்
முகத்தில் தோன்றுகிறது. ஒருவித இராகத்தில் கூறுகிறார்.
குடும்பப் பெண்ணின் கணவர் வருகிறார் பெயர்: குலசேகரம். காரியாலயம் ஒன்றிலே கணக்காளராய் வேலை பார்ப்பவர் இவரே காரியாலயம் முடிந்து வந்ததும்
காப்பியைக் குடிப்பார். பிடியாவிட்டால் மனைவியை அடிப்பார். குடிப்பதும் அடிப்பதும் இவர் தொழிலாகும். இவர் போற் கணவன்மார் எத்தனையோ பேர்.
எத்தனையோ பேர்.
(எடுத்துரைஞர் 3 பழையபடி தன்னிடத்திற் சென்று நின்று பின்வரும் தாளக்கட்டை ஏனைய எடுத்துரைஞருடன் சேர்ந்து பாடுகிறார்.)
(தாளக்கட்டு)
தந்தன தனன தனதனனாதன
தந்தன தானினனா - தன
தந்தன தனன தனதனனாதன
தந்தன தானினனா
(மேடையின் அடிப்பாகத்தில் நின்ற ஆண்க ளுள் ஒருவரான குடும்பஸ்தர் குலசேகரம், தாளக்கட்டுக்கு ஏற்ப ஆடி அசைந்தபடி நிறை வெறியில் மேடையின் இடதுபக்க மூலைக்கு வருகிறார். பைலை வைக்கிறார். கோட்டைக் கழற்றி மாற்றுகிறார். இவரை மேடையின் இடது மூலையில் நிற்கும் மனைவி காண் கிறாள். அவசர அவசரமாகக் கோப்பி போடு

கலாநிதி.சி.மெளனகுரு 15
குலசேகரம்
மனைவி
குலசேகரம்
மனைவி
கின்றாள். சிரித்தபடி கொணர்ந்து கொடுக்கி றாள் அவர் சிரிக்காமல் மனைவியை முறைத்த படியே கோப்பியை வாங்கி ருசி பார்க்கின் றார். அவர் முகம் மேலும் கோணலாகின்றது. மனைவியின் முகத்தில் துப்பிக் கோப்பியை எறிகிறார். பின்னர் பாடுகிறார்.)
(பாடல்)
என்னடி உந்தன் கோப்பியில் ஒருசிறு
இனிப்பும் காணவில்லை
பெண்களுக்கு இதுவும் தெரியாவிட்டால்
சீச்சி பெரிய பிழை
(பாடல்)
காலை தொடக்கம் மாலை வரையும்
மாடாய் உழைக்கின்றேன்
கரிசனையோடு கோப்பி தருகிறேன்
கடிந்து கொள்கிறீர்கள்.
(Lu ITL6iy)
உனக்கும் உந்தன் பிள்ளைகளுக்கும்
உழைப்பவன் நானல்லவோ
உழைத்துக் களைத்து வீடுவந்த பின் உருசியும் வேண்டாமோ? - சின்ன
உருசியும் வேண்டாமோ?
(பாடல்)
உழைப்பது நீங்கள் மட்டும் தானா
உண்மையைப் பாருங்கள்
நானும் அங்கு குடும்பத்திற்காக
நாளும் உழைக்கலையோ?

Page 16
சக்தி பிறக்குது 16
குலசேகரம் (பாடல்)
சம்பளம் களைய்ாய்க்கொண்டு தருகிறேன்
சமைத்துப் போடுகிறாய் - எடியேய்
சும்மா இருந்து சாப்பிடுகிற நீ வேலைகள் செய்தால் என்ன?
மனைவி (பாடல்)
சும்மா இருந்தா சாப்பிடுகின்றேன் யோசித்துப் பாருங்கள் என்ர வேலைக்குச் சம்பளம் கேட்டேனானால்
சம்பளம் போதாது - உங்கட
சம்பளம் போதாது.
குலசேகரம் : (பாடல்)
(சற்று யோசித்து)
என்ர சம்பளம் குறைவு என்று
நக்கலடிக்கிறியோ?
மனைவி (பாடல்)
இல்ல பிழையாய் விளங்காதீர்கள்
நான் அதச் சொல்லல
குலசேகரம் (பாடல்)
வேற எதை நீ கருதிக்கொண்டு
இப்படிச் சொல்லுகிறாய்?
மனைவி (பாடல்)
சம்பளம் வாங்காத உழைப்பாளி - என்பதைச்
சாற்றுகிறேன் இங்கே
குலசேகரம் : (பாடல்)
(நக்கலுடன்)

கலாநிதி.சி.மெளனகுரு 17
எடுத்துரைஞர் 1 :
சம்பளம் வாங்காம வேலை செய்யுறியோ
கனக்கக் கதையாத
சும்மா வீட்டில்இருக்கிற உனக்குச்
சுளையாய்ச் சம்பளமோ?
(மனைவியை ஏசிவிட்டுக் குலசேகரம் மேடை யின் அடிப்பாகத்துக்குச் செல்கின்றார். அங்கு நின்ற ஏனைய ஆண்களுடன் சேர்ந்து சீட்டாடு கின்றார். மனைவி தொடர்ந்து கஷ்டப்பட்டு வேலைகளைச் செய்கிறாள். எடுத்துரைஞர் இந்த அநியாயத்தைச் சுட்டிக்காட்டிப் பாடு கிறார்கள்.)
(பாடல்)
காலையில் எழுகிறாள் வீட்டைக் கூட்டுகிறாள்
காப்பி வைக்கின்றாள்
கடைக்குப் போகின்றாள் பின்னர் காலைச்
சாப்பாடு சமைக்கின்றாள்.
ஒருமணி தொடக்கம் நாலுமணி வரை
உழுந்து அரைக்கின்றாள்
நாலு மணிக்கு அவருக்குக் கோப்பி
போட்டிவள் கொடுக்கின்றாள்.
ஐந்து மணிக்கு இராச்சாப்பாட்டை ஆக்கத் தொடங்குகின்றாள் - இரவு
எட்டு மணிவரை ஒய்வே இல்லை
இவளின் வாழ்க்கை இதுதான்.
(இப்பாடல் முடிய சீட்டாட்டம் முடிந்த குல சேகரம் உடன் விளையாடிய நண்பர்களிடம்
பிரியாவிடைபெற்று வீட்டுக்கு வருகின்றான்)

Page 17
சக்தி பிறக்குது
18
மனைவி
குலசேகரம்
மனைவி
எடுத்துரைஞர் 1 :
(மனைவி பாடுகிறாள்)
(உரையாடல் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நடைபெறுகிறது)
(பாடல்)
பத்து மணிக்கு அலுத்துக் களைச்சி
படுக்கைக்கு வந்தாலோ
அங்கும் எனக்கு அமைதி கிடைக்குமா
ஆரிடம் சொல்லி அழ.
(பாடல்)
செய்வது எல்லாம் செய்துவிட்டு நீ
எதிர்த்தோ பேசுகிறாய்?
சீசீநாயே அடக்காவிடில் உன்
திமிரோ கூடிவிடும்.
(மனைவிக்கு அறைகிறார். தலையைப் பிடி த்து இழுத்து அடிக்கிறார். முதுகில் குத்து கிறார், உதைக்கிறார் அவள் கீழே விழுகிறாள். குலசேகரம் பழையபடி தான் நின்ற மேடை யின் அடிப்பாகத்திற் சென்று நிற்கிறார். மனைவி கீழே விழுந்து கிடந்தபடி பாடுகிறாள்.)
(பாடல்)
ஐயோ என்ர தலைவிதி இதுவோ
ஆண்டவனே இங்கே
என்னை எனது கணவன் நன்றாய்
விளங்குகிறான் இல்லை.
(பாடல்)
கணவர்களாலே அடக்குமுறைக்கு
ஆளாகின்றார்கள்

கலாநிதி.சி.மெளனகுரு 19
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
கல்லானாலும் கணவன் என்று
ஊமைகளானார்கள்.
(பாடல்)
சக்தி சக்தி பெண்மை என்று
தாயைப் போற்றுகிறோம் புத்தி கெட்டுப் பெண்மையை இங்கு
போட்டு மிதிக்கின்றோம்.
(பாடல் முடிய கீழே விழுந்து கிடந்த மனைவி எழுந்து மேடையின் வலது பக்க மூலையில் உறை நிலையில் நிற்கிறாள். மேடையின் இடது பக்க மூலையில் நின்ற எடுத்துரைஞர் செய்தி அறிவிக்கும் பாணியில் கூறுகிறார்.)
இன்றைய தினசரிச் செய்திகள்
வீரகேசரி 22.01.1985
(பேப்பர் பார்ப்பது போல் அபிநயித்து பேப் பர் வாசிக்கும் பாவனையில்)
கணவனின் ஏச்சுத் தாங்காமல் மனைவி தற் கொலை, மன்னார் ஜனவரி 22. கோப்பிக்குச் சீனி போதாது என்ற காரணம் காட்டி கணவன் அடித்ததி னால் மனைவி கிருமிநாசினி உட்கொண்டு மரண மானாள். மரண விசாரணை அதிகாரி நடேசமூர்த்தி விசாரணையின் இறுதியில் தற்கொலை என்று தீர்ப் பளித்தார்.
தினகரன் 24.01.1985
எதிர்த்துப் பேசிய மனைவியின் கூந்தல் அறுக்கப் பட்டது. ஜனவரி 24. தன்னை எதிர்த்துப் பேசிய தனது மனைவியின் அழகான நீண்ட கூந்தலை கணவன் கத்தரித்து விட்டான். அவள் நியாயம் கேட்க முற்பட்ட போது அவள் முன்வாய்ப் பல் இரண்டும் கணவனால் உடைக்கப்பட்டன. கூந்தல் அழகாலும், பல் அழகாலும் அவன் மனைவி கர்வ

Page 18
சக்தி பிறக்குது 20
முற்றிருந்ததாகத் தெரியவந்தது. அவள் கர்வத்தை அடக்கவே தான் அதனைச் செய்ததாகக் கணவன் ஒப்புக்கொண்டான். VM
(மேடையின் வலதுபக்க மூலையில் நின்ற எடுத்துரைஞர் 3 இப்போது முன் மேடையின் நடுப்பகுதிக்கு வருகிறார். பைலை எடுக்கிறார் பார்க்கிறார் அதற்குள் எதையோ தேடுகிறார். கண்டு விட்ட மகிழ்ச்சி முகத்தில் ஒருவித இராகத்தில் கூறுகிறார்.)
எடுத்துரைஞர் 3 : இளம் தலைமுறை இருவர்
சுரேஷ் இவர்
(மேடையின் அடிப்பாகத்தில் நின்ற சுரேஷ் மேடையின் இடதுபக்க மூலைக்கு ஓடிவந்து தன்னைச் சபையோருக்குக் காட்டுகிறார். பின் எடுத்துரைஞர் கூறுவதற்கு அபிநயிக்கிறார்.)
சுந்தர புருஷன்
மினி சினிமாக்களைத் தனியே பார்ப்பார்
சிகரட் ஊதுவார்
சில்லறை வேலைகள் சிலவும் செய்வார்
மகேஷ்! (கூப்பிடுகிறார்)
(மேடையின் அடிப்பாகத்தில் நின்ற மகேஷ் ஓடிவந்து சுரேஷ"டன் இணைந்து கொள் கிறார். பின் அவரும் கூறலுக்கு அபிநயிக் கிறார்)
மகேஷ் அவர்
. மைனர் மச்சான்
சந்திகள், தனியிடம் இவர்களின்
இருப்பிடம்
பெண்களைக் கண்டால் பின்னால்
வழிவதே இவர்களின் முக்கிய

கலாநிதி.சி.மெளனகுரு 21
சுரேஷ்
மகேஷ்
மகேஷ்
சுரேஷ்
மகேஷ்
சுரேஷ்
பொழுது போக்காகும்
இவர்கள் ஜென்மம் எடுத்தது
இவற்றிற்காகவே
(மேடையின் வலதுபக்க மூலையில் ஒரு பெண் பாடசாலை செல்வது போல அபிநயிக் கிறாள். நின்ற இடத்தில் நடக்கிறாள். அவ ளைப் பார்த்த சுரேசும், மகேசும் அவளைப் பார்த்துப் பாடுகிறார்கள்.)
(பாடல்)
அந்தா போறாள் அழகாய் ஒரு பெண்
அவளைப் பார்த்தால் ஆஹா ஆஹா!
(பாடல்)
இந்தா மச்சான் இவளை நாம் போய் எப்படியாகிலும் வெருட்டிப் பிடிப்போம்
(அவள் திரும்பிப் பார்த்து இவர்களைக் கவனி யாது நடப்பது போல ஊமம் செய்கிறாள்)
(பாடல்)
கிட்டப் போய்வெல்லை
கெதியாய் அடிப்போம்
(பாடல்)
முட்டிவிட்டுப் பின் சொறி சொல்லிப் பார்ப்போம்.
(பாடல்)
முதுகில் அடித்தே
முன்னால் ஓடுவோம்
(பாடல்)
தூர இருந்தே
கூக் காட்டிடுவோம்

Page 19
சக்தி பிறக்குது 22
(மகேஷ் இல்லையென்று சைகை செய்கிறான். பின் சுரேசை அழைத்துக் கொண்டு பெண் ணின் பின்னாற் செல்கிறான்.)
மகேஷ் உஷ்! உஷ்
சுரேஷ் : L56,of L56tuf
மகேஷ் உஷ்! உஷ்!
சுரேஷ் : uÉlgiu! Élgiu!
மகேஷ் உஷ்!
சுரேஷ் : மிஸ்
சுரேஷ் உஷ்!
இருவரும் (பாடல்)
உம்மைத்தான் நில்லும்
(அவள் கவனிக்காத மாதிரி விரைவாக நடக்கிறாள்)
மகேஷ் (பாடல்)
உன்னைத்தான் நில்லடி
உன்பேரைச் சொல்லடி
சுரேஷ் (பாடல்)
(கோபத்துடன்)
எடியேய் பொட்டச்சி!
இங்கெம்மைப் பாரடி
மகேஷ் (பாடல்)
எம்மைத்தான் பார்க்காட்டி
தருவோம் நாம் பொல்அடி
(சுரேஷ் மகேசைப் பிரமாதமாக மெச்சி பொல் லடியை அழுத்திக் கூறுகிறான்)

கலாநிதி.சி.மெளனகுரு 23
சுரேஷ்
மகேஷ்
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
(பாடல்)
தருவோம் நாம் பொல்அடி
பொல்அடி
(அவள் அருவருப்புடன் தலையிற் கைவைத்த
படி நிற்கிறாள். தூரத்தில் வான் வரும் ஓசை
கேட்கிறது. மேடையின் இடது மூலைக்கு
சுரேஷ் ஓடி வந்து பார்க்கிறான். பின் மகேசைக் கூப்பிடுகிறான், அவனும் வர இவன் பாடு
கிறான்.)
(பாடல்)
வான் ஒன்று வருகுது
நம்பர் பிளேட் இல்ல
கெதியாய்ப் போவோம்
இல்லாட்டிச் சங்கடம்
(இருவரும் மெல்ல நழுவிப் பழைய இடம் சென்று நின்றார்கள். எடுத்துரைஞர்3உம் 4உம்
மாணவிக்கு இரு பக்கத்திலும் வந்து நின்று கூறுகிறார்கள். அவர்கள் முகத்தில் கோபம்.)
இளம் பெண்கள் இங்கே தனிச்செல்ல வழியில்லை பெண்களுக் கிங்கே பாதுகாப்பொன்றில்லை.
சக்தி என்று பெண்ணை
அங்கு போற்றினோம் புத்தி கெட்டுப் போய்ப்
போட்டு மிதிக்கிறோம்.
(எடுத்துரைஞர் 3 உம் 4 உம் தமது பழைய இடங்களுக்குச் செல்கிறார்கள். மேடையின் வலது மூலையில் நின்ற எடுத்துரைஞர்1ரெலி

Page 20
சக்தி பிறக்குது
24
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
போன் எண்களைச் சுழற்றுவது போல பாவனை செய்கின்றார். பெல் அடிக்கிறது. மேடையின் இடது மூலையில் நிற்கும் எடுத் துரைஞர் 4உம், எடுத்துரைஞர் 1உம் போனில் பேசுவது போல பாவனை.)
ஹ லோ, ஹ லோ.
யெஸ். யெஸ்.
ஸ் ற் லேக்ஹவுஸ்
யெஸ். யெஸ். பிளீஸ், புட் மிஒன் ரூ தினகரன்.
தமிழ் டெய்லி செக்சன் பிளிஸ்
(எடுத்துரைஞர் 4 ரீசிவரை வைத்து விட்டு பொத்தான்களை அழுத்துவது போல பாவனை, பெல் அடிக்கிறது. எடுத்துரைஞர் 3 போனை எடுக்கிறார்.)
ஹலோ! தினகரன் லேக்ஹவுஸ்
குட் ஐ ஸ்பீக் ரூ மிஸ்டர் பரமசாமி,
தினகரன் நியூஸ் எடிட்டர் பிளிஸ்
சேர் குட் ஈவினிங். நான் உங்கட குரலை மதிக் கல்ல. நான் இங்க யாழ்ப்பாணத்தில் இருந்து பேசுறன். உங்கட பேப்பர் றிப் போட்டர் மிஸ் குமாரசாமி.
ஆ1 மிஸ் குமாரசாமியே (போனில் ஆர்வத்துடன் பேசுவது போல முகத்தை வைத்துக் கொள்கிறார். முகத்தில அசட்டுச் சிரிப்பு) எப்படிச் சுகம்? யாழ்ப் பாணம் எப்படி?
நல்ல சுகம் சேர். யாழ்ப்பாணம் வழக்கம் போலத் தான். சேர் ஒரு நியூஸ் குறிச்சிக் கொள்றிங்களே?
ஓம் சொல்லுங்கோ
(காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு சொல்

கலாநிதி.சி.மெளனகுரு 25
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 3 :
வதை எழுத ஆயத்தமாகிறார். பின் சொல் வதை எழுதுகிறார்.)
நடுச்சந்தி மைனர்களால் நங்கையர்க்குத் தொல்லை. யாழ்ப்பாணம் 28, பாடசாலை சென்ற பெண்களை சந்தியில் நின்று வம்புக்கிழுப்பதன் காரணமாக இளம் பெண்கள் தனியே செல்லப் பயப்படுகிறாரகள். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இச்சேட்டைகள் நடைபெறுவதினால் இதை அடக்குவது மிகக் கஷ்டமாக இருக்கிறது என்று பொறுப்பாளர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
பெண்களைக் கலைக்கிறதே இப்ப சிலருக்கு தொழி லாப் போச்சு.
(பெண்களை கலைக்கிறதே என உச்சரித்து ஏனைய வாசகங்களையும் எழுதியதுபோல இதனையும் எடுத்துரைஞர் 3 எழுத ஆரம் பிக்கிறார்.)
சேர்! கடைசியாகச் சொன்னது நியூஸ் இல்ல. என்ர வயிற்றெரிச்சல்.
ஒ.(முகத்தில் அசட்டுச் சிரிப்புடன் மென்மையாக)
மிஸ் குமாரசாமி.
வைக்கிறன் குட்பை.
(ரிசீவரை வைக்கிறார். எடுத்துரைஞர்3 ரிசீ வரை காதிலிருந்து எடுத்தபடி திகைப்புடன் நிற்கிறார்.)
(எடுத்துரைஞர் 3 முன்பக்க மேடையின் மத்தி க்கு வருகிறார். மீண்டும் தம் கைப்பைக்குள் இருந்த பைலை எடுக்கிறார். எதையோ தேடு கிறார். எதையோ கண்டுவிட்ட மகிழ்ச்சிமுகத் திற் தோன்றுகிறது. ஒருவித இராகத்திற் கூறு கிறார்.)
இங்காலே நிற்பவர்
கங்காணி செல்லையா

Page 21
சக்தி பிறக்குது 26
பெண்களைக் கொடுமையாய்
வேலைகட்கேவுவார் தொரையின் வீட்டுக்குத் தனியே
வரவும் சொல்லுவார்
மறுத்துரைத்தாலோ
சம்பளம் வெட்டுவார்
சம்பளம் வெட்டுவார்.
(எடுத்துரைஞர் 3 பழையபடி தன் இடத்திற் சென்று பின்வரும் தாளக்கட்டை ஏனைய எடுத்துரைஞருடன் சேர்ந்து பாடுகின்றார்.)
எடுத்துரைஞர் (தாளக்கட்டு)
னைவரும் அ (5 தநதனததான தனதான தன
தான தந்தனத் தானானா
தந்தனத்தான தனதான தன
தானதந்தனத் தானானா
(மேடையின் அடிப்பாகத்தில் நின்ற ஆண் களுள் ஒருவரான கங்காணி குடையை விரித் துப் பிடித்தபடி மலையிலிருந்து இறங்கி வரு வது போன்ற உடலசைவுடன் தாளக் கட்டுக்கு ஏற்ப ஆடி அசைந்தவாறு மேடையின் இடது பக்க மூலைவழியாக முன்பக்க மேடையின் மத்திக்கு வருகிறார்.
நடு மேடையின் இடதுபக்க மூலையில் தேயி லைக்கொழுந்து கிள்ளுவது போல அபிநயித்த படி இரண்டு பெண்கள் நிற்கிறார்கள். ஆட்டம் முடிந்ததும் கங்காணி வேலை செய்து கொண் டிருக்கும் பெண்களருகில் வருகிறார். அவர் கள் வேலை செய்வதை அவதானிக்கிறார். அவர்களுள் ஒரு பெண் வேலை செய்வதை நிறுத்தி வெற்றிலை போடுகிறாள். இது கங்

கலாநிதி.சி.மெளனகுரு 27
கங்காணி
வேலாயி
கங்காணி
முத்தாயி
காணிக்குப் பொறுக்கவில்லை. பதறிப்போய்
ஓடி வந்து அவளைப் பார்த்துப் பாடுகிறார்.)
(பாடல்)
என்னடி முத்துவேலாயி - அங்க ஏன் வேலை செய்யாம நிற்கிறா நீ
(கூடையை எட்டிப் பார்க்கிறார்)
கூடைக்க கொழுந்தக் காணலியே
கொஞ்சத்தானிங்கு வந்தனியோ?
(பாடல்)
(கோபத்துடன்)
கொஞ்ச நான் வரல்ல கங்காணி ஐயா
கொழுந்து பறிக்கத்தான் வந்திருக்கன்
எங்கட கஷ்டத்த ஆரறிவார் பின்னும்
ஏதுக்கு நீங்க வெருட்டுறிய.
(பாடல்)
(முத்தாயியைப் பார்த்து)
எட்டு மணிக்குள்ள வேலைக்கு நின்னாத்தான்
ஏதாகிலும் கூடச் செய்திடலாம்
எட்டு மணிசென்று வாறிக - உங்க
இஷ்டம் போல வேலை செய்கிறீக
(பாடல்)
அட்டைக் கடி குளிரோடு நாங்க
அத்தனை பெண்களும் காலையில்
மெத்தக் கெதியாய் எழும்புகிறோம்
வீட்டு வேலைகளைச் செய்கிறோம்

Page 22
சக்தி பிறக்குது 28
கடைக்குப் போவதும் நாங்கள் ஐயா - கன
சாமான் வாங்குவதும் நாங்கள் ஐயா சமைச்சுப் போட்டு வீட்டு வேலையெல்லாம்
தானே முடிப்பதும் நாங்கள் ஐயா
இத்தனையும் செய்து இங்கு வரக் கொஞ்சம்
நேரம் எடுப்பதியல் பல்லவா?
இத்தனையும் நீ தெரிஞ்சிருந்தும் இப்ப
ஏதுக்குக் கங்காணி கோபிக்கிறா?
கங்காணி (பாடல்)
(செல்லக் கோபத்துடன் பொட்டச்சி அடி பொட்டச்சி என்று அவளைத் துரத்திக் கொண்டு சென்று அவள் கன்னத்தைச் செல்ல மாகக் கிள்ளி)
பொட்டச்சி அதிகம் பேசாத உன்ர
பொறுப்பு அதுகள் தெரிஞ்சிக்கடி
கூட நிறையோணும் இல்லாட்டி கோவிப்பாரு துரை சொல்லிப் போட்டன்.
(நின்று கொஞ்ச நேரம் யோசித்து)
செய்யாட்டி ஒன்றும் பரவாயில்லை
நான் சீரியஸ்ஸாக எடுக்கமாட்டான்
அந்திக்குப் பிறகு குளிச்சி முழுகிட்டு
அந்தப்பக்கம் வா! புரிகிறதா?
(அவள் உடன் திகைக்கிறாள். பின் அவள் முகத்தில் பெரும் கோபம் தொனிக்கிறது. கங்காணியை அடிக்கக் கையோங்குகிறாள். கங்காணிஅங்கும் இங்கும் பார்த்தபடி மெல்ல நழுவுகின்றார்.)

கலாநிதி.சி.மெளனகுரு 29
எடுத்துரைஞர் 1,2:
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 2 :
(எடுத்துரைஞர்1உம் 2உம் மேடையின் இடது பக்க மூலையில் நின்று கொழுந்து பறிக்கும் பெண்களின் இருபுறமும் வந்து நின்று பாடு கின்றார்கள்.) ஆண்பிள்ளை மேற்பார்வை பெண்ணை அதட்டுது
அங்காலும் சில கேட்குது பார் பெண்ணாயிருப்பதால் கூடைச் சுமையோடு
பிற சுமைகளும் தாங்குகின்றாள். சக்தி சக்தியென்று பெண்ணையே தாயாக
தாரணி மீதினிற் போற்றுகிறோம் புத்தி கெட்டுப் போய்ப் பெண்மையை நாமிங்கே
போட்டுக்கால் கீழே மிதிக்கிறோம்.
(எடுத்துரைஞர் 1 உம் 2 உம் பழையபடி தம் இடத்திற்குச் செல்கிறார்கள். மேடையின் வலதுபக்கம் மூலையில் நின்றனடுத்துரைஞர் 4 றேடியோவில் அறிவிப்பாளர் பாணியில் பேசுகிறார்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரம் 6 மணி 30 நிமிடம். செய்திகள் வாசிப்பவர் மேக நாதன் மதிவாணன்.
(செய்தி வாசிக்கும் தொனியில்)
கோணகொல்லைத் தோட்டத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுற்றது. ஆறு நாள் ஐரோப் பிய விடயத்தை முடித்துக் கொண்டு முகுண்டா ஜனாதிபதி நாடு திரும்பினார். ' பெண்களுக்கெதி ராக வன்முறைகள்’ நிறுத்தப்பட வேண்டுமென்று அகில உலக பெண்கள் சம்மேளனத் தலைவி சுபா ஹ"ட் குறிப்பிட்டார்.
கோனகொல்லைத் தோட்டத்தில் கங்காணி ஒருவ னால் ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண் கடுமையாகத் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து அத்

Page 23
சக்தி பிறக்குது
30
எடுத்துரைஞர் 4 :
எடுத்துரைஞர் 3 :
தோட்டத் தொழிலாளர் அனைவரும் வேலை நிறுத் தத்திலீடுபட்டார்கள். கங்காணியின் இஷ்டத்திற்கு இசையாததால் கங்காணிசம்பளத்தை வெட்டினார் என்றம் எதிர்த்துக் கேள்வி கேட்டபோது பெண் கங்காணியாற் தாக்கப்பட்டாள் என்றும் செய்திகள் கூறுகின்றன.
முகுண்டா ஜனாதிபதி பிடிதமான் அவர்கள் ஆறு நாள் ஐரோப்பிய விடயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஐரோப்பிய முறையில் தம் நாட்டை முன்னேற்றப் போவதாக அவர் செய்தி யாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான சகல அடக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டுமென்று வனிதா சமிதிக் கூட் டத்தில் உரையாற்றிய மர்ஹ"ம் தெரிவித்தார். பெண்களைப் பலவீனமானவர்களாக எண்ணிப் பலரும் அவளை அடக்கி ஒடுக்க எண்ணுகிறார்கள் என்று அவர் சிலரைக் குற்றம் சாட்டினார்.
(ஆத்திரத்துடன் றேடியோவை மூடுவது போல பாவனை செய்கிறார்)
சே! பெண்கள் பெண்கள்!! பெண்கள்!!!
அநியாயம் கூடிப்போச்சு
(எடுத்துரைஞர் 3 வலது மூலையில் நின்றவர் முன் மேடையின் மத்திக்கு வருகின்றார். மீண்டும் தன் கைப்பைக்குள் இருந்த பைலை எடுக்கிறார் எதையோ அதிற் தேடுகிறார். கண்டுவிட்ட மகிழ்ச்சி கண்களில், ஒருவித இராகத்திற் பின்வருமாறு கூறுகிறார்)
இதோ வருகிறார்
ஆலை முதலாளி அருமைநாயகம்
நெசவாலை வைத்துப்
பணம் சேர்ப்பவர் இவரே
சுரண்டலின் உருவம்

கலாநிதி.சி.மெளனகுரு 31
எதையும் சுரண்டுவார்
பெண் என்றால் இன்னும்
கூடச் சுரண்டுவார்.
(எடுத்துரைஞர் 3 பழையபடிதன் இடத்திற்குச் சென்று நின்று பின்வரும் தாளக்கட்டை ஏனைய எடுத்துரைஞர்களுடன் சேர்ந்து பாடுகின்றார்)
எடுத்துரைஞர் (தாளக்கட்டு)
னைவாகம் 9 அ G5 தநதனத தனதததன
தந்தனத்தனத்த தன
தந்தனத்தனத்த தன
தானினா
(மேடையின் அடிப்பாகத்தில் ஆண்களுள் ஒருவராக நின்ற ஆலை முதலாளி அருமை நாயகம் ஆடியபடி மேடையின் இடதுபக்க மூலையில் கம்பீரமாகப் பிரசன்னமாகிறார். பின் பாடுகிறார்)
அருமைநாயகம் : (பாடல்)
சரிகைக் கரைச் சால்வைபோட்டு
சந்தனப் பொட்டொன்று வச்சி
பெருமை மிக்க பேரம்பலம்
தோற்றினார்.
நெசவாலையை வைத்திருக்கும்
நெவர் மைண்ட் பேரம்பலத்தான்
பணத்தால் எதையும் பதம்
பாத்திடுவான்.

Page 24
சகதி பிறக்குது 32
அதிகமான பெண்களையே
ஆலைக்கு வேலைக்குச் சேர்த்தால் ஆதாயம் அதிகமுண்டு அதை நான்
அறிவேன்.
ஐஸ் எதுவும் அடிக்கமாட்டார் அமைதியாக வேலை செய்வார்
சொன்ன சொல்லைத் தட்டமாட்டார்
குழப்பம் செய்யார்.
சம்பளமும் அதிகம் இல்லை சாப்பாடும் குறையத் தின்பார் என்னிடத்தில் அதிகம் பெண்கள்
வேலை செய்கிறார்.
இடைக்கிடை ஏச்சுவிட்டால்
இடக்கெதுவும் பண்ண மாட்டார்
(ஒருத்தி வேலை செய்வதைப் பார்க்கிறார்.)
இதென்ன அவள் வேலை
இன்னும் முடிக்கவில்லை.
(நடுமேடையின் வலதுபக்க மூலையில் பெண் ணொருத்தி கஷ்டப்பட்டு நெசவுத்தறியில் வேலை செய்வது போல அபிநயித்தபடி நிற் கிறாள். அருமைநாயகம் அவளைக் காண் கிறார். அருகிற் செல்கிறார். அவதானிக்கிறார். முகத்தில் திருப்தியில்லை. அவளைப் பார்த் துப் பாடுகிறார்.)

கலாநிதி.சி.மெளனகுரு 33
அருமைநாயகம் :
காந்திமதி
அருமைநாயகம் :
காந்திமதி
அருமைநாயகம் :
காந்திமதி
அருமைநாயகம் :
காந்திமதி
அருமைநாயகம் :
காந்திமதி
(பாடல்)
என்னடி காந்திமதி இன்னும் அந்த
வேலை முடியலையே
(பாடல்)
தனியாள் பெண்ணொருத்தி அதனை
எப்படி நான் முடிக்க?
(பாடல்)
கெதியாய் அதனை முடிக்கோணும்
(பாடல்)
தனியாக என்னால் முடியாது.
(பாடல்)
என்னடி காந்திமதி இன்னுமந்த
வேலை முடியலையோ?
(பாடல்)
தனியாள் பெண்ணொருத்தி அதனை எப்படி நான் முடிக்க
(பாடல்)
மாதம் முடியவே சுளையாச் சம்பளம்
வாங்கியே நீங்கள் செல்கின்றீர்.
(பாடல்)
தருகிற சம்பளம் போதாது ஆனால்
வேலைகள் அதிகம் தருகின்றீர்!
(பாடல்)
வாய் பேசாமல் வேலையைச் செய்
(பாடல்)
வேலைக்குத் தகுந்த சம்பளம் தா

Page 25
சக்தி பிறக்குது 34
அருமைநாயகம் : (பாடல்)
எதிர்த்தோ பேசுகிறாய் அடிப்பேன் பாரடி .
(அருமைநாயகம் அவளை அடிக்கிறார். அவள் கீழே விழுகிறார். முதலாளி அவளைக் கோபத் துடன் பார்த்துவிட்டுச் சென்று பழைய இடத் தில் நின்று கொள்கிறார். அவர் சென்றதும் எடுத்துரைஞர்1உம் 2உம் அவளுக்கிருபுறமும் வந்து நின்று பாடுகிறார்கள்.)
எடுத்துாைநைர் 1,2: (பாடல்)
முதலாளிமார் பெண்களை
முதலாய் வைத்தே
வேலை வாங்கியே பெரும்
முதல் சேர்க்கிறார்.
அடக்கமாக இருக்கோணும் பெண்
என்று அறம்பல போதிப்பார்.
அடக்கி ஒடுக்கி வேலைகள் வாங்கியே
அதிக பணம் இவர் சேமிப்பார்.
சக்தி சக்தி என்று
தாளைப் போற்றுகிறோம்.
புத்தி கெட்டுப் பெண்மையை இங்கு
போட்டு மிதிக்கிறோம்.
(எடுத்துரைஞர் நால் வரும், பெண்களும் மேடையில் ஊர்வலமாகச் செல்கிறார்கள். செல்லுகையில் பின்வரும் கோஷங்கள் கோசிக்கப்படுகின்றன)
பெண்களை அடிப்பதை நிறுத்து
வேலைக்குத் தகுந்த சம்பளம் தா
சம சம்பளம் எமக்கு வேண்டும்

கலாநிதி.சி.மெளனகுரு 35
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எட்டு மணி நேரமே வேலை செய்வோம்.
இரவு நேர வேலை பெண்களுக்குத்
தேவையில்லை.
(ஊர்வலத்தினை மேடையில் நின்ற ஆண் களும் பெண்களும் வியப்புடன் பார்க்கிறார் கள். இப் பெண்கள் ஊர்வலத்துடன் இணை கிறார்கள். ஊர்வலத்தின் போது எடுத்துரை ஞர்1 பார்வையாளர்கட்கு நோட்டீஸ் விநி யோகிக்கிறார். அனைவரும் வாங்குகின்றனர். படிக்கின்றனர்.)
(நோட்டீஸ் வாசிக்கிறார்) நெசவுத் தொழிற்சாலை பெண் தொழிலாளர்களே!
ஒன்று திரள்க. பெண்களை ஹிம்சிப்பதைக் கண்டித்தும் பெண் களுக்குச் சம்பள உயர்வு கோரியும் மாபெரும் பொதுக்கூட்டம். இடம். முற்றவெளி மைதானம். காலம் 15.02.85 பிற்பகல் 4 மணி. அனைவரும் திரண்டு வருக. உழைக்கும் பெண்கள் மன்றம்.
(மேடையில் நின்ற அனைவரும் பொதுக் கூட்டத்திற்குச் செல்கிறார்கள். மேடையின் வலது மூலையில் பொதுக் கூட்டத்திற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக் கள் தரையில் கூட்டம் பார்க்க வசதியாக மேடை முழுவதும் பரந்து அமர்கிறார்கள்.)
(பேச்சாளர் பேச முன் வருகின்றார். அவருக்கு மாலைகள் போடப்படுகின்றன. சோடா கொடுக்கப்படுகின்றது. கைதட்டல்கள் விழு கின்றன. அவர் மைக்கைப் பரிசோதனை செய் கின்றார். பின் மைக்கைப் பிடித்தபடி தேர்தல் பிரச்சாரத் தொனியிற் பேசஆரம்பிக்கின்றார்.)
உழைக்கும் பெண்களே
உமக்கென் வணக்கம்

Page 26
சக்தி பிறக்குது 36
பெண் 1
பெண்கள் அனைவரும்
பெண் 2
காலம் காலமாக குறைந்த சம்பளத்திலே
இந்த நெசவு ஆலையிலே நீங்கள் வேலை செய்கிறீர்கள்.
(கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு பெண் எழுந்து நின்று கூவுகிறாள்.)
பெண்கள் பிரச்சனையை பெண்களே பேசட்டும்.
(கைகளை உயர்த்தி)
ஓம் ஓம் பெண்களே பேசட்டும்
(கூட்டத்தில் முணுமுணுப்பு சலசலப்பு. பேச் சாளர், திகைக்கிறார். நிலைமையை உணர் கிறார். மெதுவாகப் பின்வாங்குகின்றார். கூட் டத்தினுள் இருந்து பெண் ஒருத்தி எழுந்து வருகிறாள். அனைவரும் கைதட்டுகின்றனர்.)
(பெண் மைக் முன்னால் வருகின்றாள். ஆரம் பத்தில் தயக்கத்துடன் பேசத் தொடங்குகி றாள். பின் மெல்ல மெல்ல உறுதியுடனும் ஆர்வத்துடனும் பேசுகின்றாள்.)
அனைவருக்கும் வணக்கம். பெண்கள் பிரச்சி னையை ஆண்கள் பேசக்கூடாது என்பது எம் வாத மல்ல. எமது பிரச்சனையை நாம் தான் இன்னும் தெளிவாக மற்றவர்க்குப்புரிய வைக்க முடியும். பெண் என்ற பெயரிலே நாம் தொழிற்சாலைகளில் அடிமைப்படுத்தப்படுகிறோம். சம்பளம் மிகக் குறைவாகப் பெறுகிறோம். சில முதலாளிமார் எம்மை அடிக்கவும் செய்கிறார்கள். எதிர்த்துப் பேசினால் எம்மீது பிழையான அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். சமூகம் அதனை நம்பி விடுகிறது. எங்களுக்கு எதிராக இவர்கள் சகல அடக்கு முறைகளையும் கையாளுகிறார்கள்.
(மேடையின் வலதுபக்க மூலையில் நிற்கும் எடுத்துரைஞர்களிடமிருந்து உரத்த தொனியில் நிதானமாகவும் ஆழமாகவும் பின்வரும் வரிகள் வருகின்றன.)

கலாநிதி.சி.மெளனகுரு 37
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
ாடுத்துரைஞர் 4 :
பெண்களுக்கெதிரான அடக்கு முறைகள் ஒன்றா இரண்டா எண்ணிச் சொல்ல.
கணவன் ஒருபுறம் மனைவியை அடக்குவான்.
(முன்னர் மனைவியை அடித்த அதே கணவன் கூட்டத்தில் பார்வையாளராய் இருந்த தன் மனைவியைக் கலைத்துத் திரிந்து அடிக்கி றான். இருவரும் உறை நிலையில் நிற் கிறார்கள்.)
கங்காணி ஒருபுறம் அவனை மடக்குவான்.
(முன்னர் கொழுந்து பறிக்கும் பெண்களை வெருட்டிய கங்காணி கூட்டத்திலிருந்து எழு ந்து கூட்டத்தில் பார்வையாளராயிருந்த கொழுந்து பறிக்கும் இரண்டு பெண்களையும் கலைத்து கலைத்து ஏசுகிறான். பின் மூவரும் உறைநிலையில் நிற்கிறார்கள்.)
முதலாளி இவளை முறைப்பான் வெருட்டுவான்
(முன்னர் வந்த முதலாளி அருமைநாயகம் நெசவு வேலை செய்த பெண்ணைக் கலைத்து அடிக்கிறான். பின் இருவரும் உறைநிலையில் நிற்கிறார்கள்.)
காளையர் கன்னிகளைக் கலைத்துத்திரிவர்.
(முன்னர் வந்த மைனர்களான சுரேசும், மகே சும் பாடசாலை செல்லும் பெண்களைக் கலை த்து ஒடுகிறார்கள். உறைநிலையில் பின்வரும் மூவரும் நிற்கிறார்கள்.)
(கூட்டத்திலிருந்து ஒரு பெண் எழுந்து மேடை யின், வலது பக்க மூலைக்குச் சென்று வெளியே எதையோ பார்த்துப் பயந்த முகத் தோடு ஆமி என்று கத்துகிறாள். பின் மேடை முழுக்க அலக்க பரக்க ஓடுகிறாள். அனை வரும் பதை பதைக்கின்றனர். பயந்து சுழன்று ஒடிய அவள் இறுதியில் மேடையின் மத்தியில்

Page 27
சக்தி பிறக்குது 38
விழுகின்றாள். விழுந்த அவளை நோக்கி எடுத் துரைஞர் கூறுகிறார்.) எடுத்துரைஞர் 1 : இராணுவம் கூடக் கலைத்துத் திரியும்
(பின்னணியில் இசைஒலிக்கிறது. உறைநிலை யில் நின்றவர்கள் அசைகிறார்கள்.)
(கணவன் மனைவியை அடிக்கிறான். அருமை நாயகம் நெசவுத் தொழிலாளப் பெண்ணை அடிக்கிறார்.)
(கங்காணி கொழுந்து கிள்ளும் பெண்களைக் கலைக்கிறார்.)
(சுரேசும், மகேசும் பாடசாலை செல்லும் பெண்ணைக் கலைக்கிறார்கள்.)
(எடுத்துரைஞர் கூறத் தொடங்க அசைவுகள் படிப்படியாக நிறுத்தப்பட உறைநிலைக்கு எல்லோரும் வருகின்றனர். மெல்ல மெல்ல எடுத்துரைஞர் கூறுவதனை அவதானிக்கவும் செல்கின்றனர்.)
எடுத்துரைஞர் 1 : எல்லோருக்கும் வாழ்வு ஒரு சுமை என்றால்
இவர்கட்கோ வாழ்வே இரட்டைச் சுமையாம். எடுத்துரைஞர் 2 : காரணம் இவர்கள் பெண் என்பதாலா? எடுத்துரைஞர் 3 : பெண்ணாய்ப் பிறந்த குற்றத்திற்காக
பேசாது ஊமையாய் காலம் கழிப்பதா? எடுத்துரைஞர் 4 : காலம் காலமாய் உழைத்து மாள்கிறீர்
கவலைகள் உமைப் பற்றிக் கொண்டவர் யாவர்? எடுத்துரைஞர் 1 : ஒ! ஒ! பெண்களே எழுந்து வாரீர்! உலகை ஒருதரம் நிமிர்ந்து பாரீர்!
(எடுத்துரைஞர் மேடையின் இடது பக்க மூலையில் நின்றபடி வாசிக்கிறார். பெண்கள் மெல்ல மெல்ல இந்த வாசகங்களைக் கேட்டு உணர்வு பெறுகிறார்கள். ஒருவரையொருவர்

கலாநிதி.சி.மெளனகுரு 39
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
அர்த்த புஷ்டியுடன் பார்த்துக் கொள்கிறார்கள்.
உரையாடுகிறார்கள்.)
உலகத்தில் பெண்கள் அமைப்புகள் சில
கியூபாப் பெண்கள் பெடரேசன்,
ஆர்ஜென்டீனா பெண்கள் சங்கம். ஜேர்மனி ஜனநாயக மாதர் லீக்,
ஆபிரிக்க பெண்கள் முன்னணி, பசுபிக் ஆசியப் பெண்கள் கூட்டம், லெபனான் பெண்ணுரிமை லீக். இந்தியாவில் பெண்கள் அமைப்புகள் சில அகமதாபாத் பெண்கள் சமத்துவ உரிமைக்குழு. பங்களூர் விமோசனா பெண்கள் அமைப்பு, பம்பாய் - மைத்ரேயி பெண்கள் அமைப்பு,
பம்பாய் அன்னபூரணா மகிளாமண்டலம் கல்கத்தா பெண்கள் ஆய்வுக்குழு நியூடெல்லி - மனுஷி பெண்கள் அமைப்பு,
நியூடெல்லி - இந்தியப் பெண்களின் தேசிய பெடரேசன்.
தமிழ்நாட்டில் பெண்கள் அமைப்புக்கள் சில சக்தி கேந்திர பெண்கள் அமைப்பு,
ஜனநாயக மாதர் காங்கிரஸ் பெண்ணுரிமை இயக்கம். இலங்கையிற் பெண்கள் அமைப்புகள் சில இலங்கை முற்போக்கு மாதர் முன்னணி. பெண்கள் விடுதலை இயக்கம் கொழும்பு, பெண்ணின் குரல் கொழும்பு,
ஹட்டன் மாதர் சங்கம்,

Page 28
சக்தி பிறக்குது 40
அன்னையர் முன்னணி யாழ்ப்பாணம்.
மாதர் மறுமலர்ச்சிப் பேரணி யாழ்ப்பாணம்.
(மெல்ல் மெல்ல எழுந்த பெண்கள் அவை களை உள்வாங்கிய நிலையில் வளர்ச்சி பெற்ற வர்களாகின்றார். மேடையில் ஒரு ஒழுங்கு முறைப்படி நிற்கிறார்கள். ஆண்கள் அவர் களின் மெதுவான முன்னேற்றத்தினை ஆச்சரி யத்துடன் பார்க்கிறார்கள்.)
எடுத்துரைஞர் 1 : பெண்கள் பிரச்சனை பற்றிய பத்திரிகைகள்
(பத்திரிகைகள் ஒவ்வொன்றின் பெயரையும் ஒவ்வொருவராக அங்கு நின்ற பெண்கள் உரத்த குரலில் கூறுகின்றனர்.)
வுமின்
ஸ்பெர் றிப்பு
வொயிஸ் ஒவ்வுமின்
மனுஷி
சகலி!
மகளிர் சிந்தனை!!
பெண்ணுரிமைக் குரல்
ஹாந்த கண்ட!
பெண்ணின் குரல்!!
(எடுத்துரைஞர் 2 மேடையின் இடது மூலைக் குச் சென்று கீழ்வரும் வாசகங்களை நின்றபடி பிரகடனம் செய்ய பெண்கள் அனைவரும் அவர் பின்னால் திரள்கிறார்கள்.) எடுத்துரைஞர் 2 : பெண்கள் தம் உரிமைக்காகத் தாமே குரல் தரு கிறார்கள். இங்கிலாந்தில் அணுஆயுதத்தளம் நிறுவு வதற்கு எதிராக உலக நன்மை கருதித்திற்கு முன் னால் பெண்கள் சமாதான முகாம் அமைத்து நான்கு வருடங்கள் தொடர்ச்சியாகப் போராடுகிறார்கள்.

கலாநிதி.சி.மெளனகுரு 41
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 1 :
எடுத்துரைஞர் 2 :
எடுத்துரைஞர் 3 :
எடுத்துரைஞர் 4 :
(மேடையின் வலதுபக்க மூலையில் எடுத்
துரைஞர் 1 கீழ்வரும் வாசகங்களை நின்றபடி
கூற, அவர் கீழ்ப் பெண்கள் திரள்கிறார்கள்.)
தமது உரிமைக்காக மாத்திரமல்ல உலக நன்மைக் காகவும் தாமே போராடுகிறார்கள். பெண்களின் சர்வதேச ஜனநாயகப் பெடரேசனின் தொடர்ச்சி யான பணிகளாலும் வற்புறுத்தலாலும் ஐ.நாஸ்தாப னம் தனது 29வது செசனில் யுத்த நெருக்கடிகளிலும் பெண்களும் குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
(இசைஒலிக்கிறது. மீண்டும் பழையபடி சோர் ந்து முதல் நின்ற நிலைகளில் பெண்கள் நிற் கிறார்கள். சோர்ந்து நிற்கும் பெண்களை எடுத்துரைஞர்கள் கனிவோடும் துக்கத்தோ டும் பார்க்கின்றனர். பின் கீழ்வரும் வாசகங் களைக் கூறுகின்றனர். ஒன்றை விட ஒன்று வேகமாகவும் அழுத்தமாகவும் கூறப்படுகின் றது. கடைசி வாசகம் உச்சத் தொனியில் ஒலிக் கின்றது. ஒவ்வோர் வாசகத்துக்கும் பெண்கள் மெல்ல மெல்ல உணர்வு பெறுகிறார்கள்.)
உலகில் எத்தனை எத்தனை மாற்றம்
ஊமைகளாக இங்குநீர் வாழ்கிறீர்.
சீதனம் என்ற சிறைக்குள் வாழ்ந்து
சின்னதோர் வாழ்க்கையை வாழ்ந்த முடிப்பதா?
அடக்க அடக்க அடிமைகளாக
அடங்கி வாழவா பிறவி எடுத்தீர்?
உங்கள் மீது சுமத்திய சிலுவையை
உங்கள் கரங்களே தூக்கி எறியட்டும்.

Page 29
சக்தி பிறக்குது 42
எடுத்துரைஞர் 5 ஒடுக்கும் சகல தடையையும் உடைக்க
உலகப் பெண்களே ஒன்ற திரள்வீர்!
(அனைத்துப் பெண்களும் ஒரே குரலில் முழங்குகின்றனர்.) உலகப் பெண்களே ஒன்று திரள்வீர்! உலகப் பெண்களே ஒன்று திரள்வீர்! உலகப் பெண்களே ஒன்று திரள்வீர்!
(அடக்கிக் கொண்டிருந்த ஆண்கள்தம் அடக்கு முறையை நிறுத்துகின்றார்கள். சக்திக்கு மீண் டும் உரு வருகிறது. சூலாயுதத்தைப் பிடித்த பாவனையில் அடக்கப்பட்டுக் கொண்டிருக் கும் பெண்கள் ஒவ்வொருத்தியாகத் தட்டி எழுப்புகிறாள். சக்தியின் தலைமையில் ஆடல் தொடங்குகிறது. அனைத்துப் பெண்களும் ஆட்டத்தில் இணைகிறார்கள். ஆண்கள் இதனை அவதானிக்கிறார்கள்.
தமக்குள் கதைக்கிறார்கள். பெண்கள் அலை அலையாக முன்னேறுகிறார்கள். சோர்வடை கிறார்கள். தொடர்ந்தும் முன்னேறுகிறார்கள். வெளியில் இருந்து சிலர் ஓடி வந்து ஆட்டத்தில் இணை கிறார்கள். எடுத்துரைஞர்களும் ஆட்டத்தில் இணைகிறார்கள். ஆண்கள் ஒரிருவர் தவிர அனைவரும் ஆட்டத்தில் இணைகிறார்கள். ஆட்டம் அடக்குமுறைகளையும் தகர்த்து எறி கின்ற ஊழித்தாண்டவமாக மெல்ல மெல்ல உச்சநிலைக்குச் செல்கிறது.
மேடை முழுவதும் அனைவரும் வியாபித்து
நின்று இறுதித்தாண்டவம் நிகழ்த்துகையில் பின்வரும் பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.)
பாடல் பெண்கள் ஓர் அணியிலே வந்தனர்
எல்லோரும் ஒன்று திரண்டனர்

கலாநிதி.சி.மெளனகுரு 43
தம்முடைய தர்மத்தை
தாமே திருத்திட வன்மமோடின்றிவர் எழுந்தனர் சக்தியை இன்றிவர் அடைந்தனர் - பெரிய சக்தியாக இவர்கள் மாறினர். சமூகத்தை மாற்றுகிற சக்தியுடன் சேர்ந் திருந்தவர்கள் தம் விடுதலைக்காக உழைத்தனர். பெண்கள் ஓர் அணியிலே வந்தனர். எல்லோரும் ஒன்று திரண்டனர்.
(தாண்டவம் நடைபெறுகிறது.)
(திரை மூடுகிறது.)

Page 30

சக்தி பிறக்குது
அவைக்காற்றுகைக்கான
எதிர்வினைகள்

Page 31

கலாநிதி.சி.மெளனகுரு 47
மெளனகுருவின் சக்தி பிறக்குது?
சோ.பத்மநாதன் ஈழமுரசு 23.04.1986
பொழுது புலர்கிறது தவறு. புலர்வதன் முன் ஒரு காட்சி, எல்லா வீடுகளிலும் நிகழ்வதுதான். துடித்துப் பதைத்து எழுகிறார்கள் பரக்கப் பரக்க வேலை செய்கிறார்கள். இடிக்கிறார்கள். அரைக்கிறார்கள், சமைக்கிறார்கள். கழுவுகிறார்கள், துணி துவைக்கிறார்கள். வீடு பெருக்கிறார்கள் இத்தனையும் பெண்கள் செய்ய ஆண்கள் ஆறுதலாகக் கொட்டாவி விட்டபடி எழுகிறார்கள் கோப்பி குடிக்க, பத்திரிகை பார்க்க, அதிகாரம் செய்ய.
நண்பர்களோடு கூடிக் குடித்துவிட்டு மதுபோதையில் வீடு திரும்பு கிறான் கணவன். செய்த வேலையையும் விட்டு விட்டு, கோப்பி தயாரித்துக் கொடுக்கும் மனைவி மீது 'என்னடி உந்தன் கோப்பியிலே ஒர் இனிப்பும் காணவில்லை?" என்று பாய்கிறான். அடிக்கிறான் இது ஒரு காட்சி.
தேயிலைத் தோட்டம். இலங்கை நாட்டின் இதயமாகத் துடித்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பெண்கள். அவர்கள் மீது அதிகாரம் செய்யும் கிழட்டுக் கங்காணி.
“என்னடி முத்துவேலாயிஅங்கை ஏன் வேலை
செய்யாம நிற்கிறாய் நீ?"
என்று மிரட்டும் அவன் உள்நோக்கம்.
“அந்திக்குப் பிறகு குளிச்சு முழுக்கிட்டு
அந்த பக்கம் வா புரியிறதோ? என்று கொஞ்சும் போது தெளிவாகவே புரிகிறது. இது ஒரு காட்சி.

Page 32
சக்தி பிறக்குது 48
ஏழைப் பெண் தொழிலாளர்களை அவர்களுடைய வேலைக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காமல் வஞ்சித்து வயிறு வளர்க்கும் ஆலை முதலாளி ஒருவர். அவர் படாடோபமாகப் பவனிவருவது அடுத்த காட்சி.
கல்லூரிக்குப் போகும் ஓர் இளம்பெண். தெருவில் அவளைத் தொடர்ந்து சென்று மடக்கி கேலியும், கிண்டலும் செய்யும் வேலையற்ற இளைஞர் சிலர், இந்த மைனர்கள் முன்னிலையில் வெட்கத்தால் அவமானத்தால், அவமதிப்பால் அவள் குறுகிப் போவது பிறிதொரு காட்சி.
இக்காட்சிகளின் தொகுப்பே சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னி ட்டு, பெண்கள் ஆய்வுவட்டம் கைலாசபதி கலையரங்கில் மேடை யேற்றிய 'சக்தி பிறக்குது' என்ற நாடகம். சில காட்சிகளின் - சம்பவங் களின் தொகுப்பாக இருந்தாலும், ஓர் ஆண் ஆதிக்க உலகில் ஒடுக்கப் படும். குரல்வளை நெரிக்கப்படும் - பெண்ணின் அவலத்தை, எவர் உள்ளத்திலும் தைக்கக்கூடிய விதமாக கலைப்படைப்பாக - தருகிறது, 'சக்தி பிறக்குது பாரதி 'எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை" என்று முழங்கிய பிறகும், பாரதிதாசன், 'பெண்ணடிமை தீருமட்டும் பேசந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே' என்று பாடிய பிறகும் நம் சமூகத்தில் பெண்கள் பல விதமான ஒடுக்குமுறை களுக்கு ஆளாகிறார்கள் என்பதுண்மை. அவர்கள் கவிதை மூலம் சாதிக்காததை, இயலும் இசையும் கூத்தும் கலந்த ஓர் கட்புல, செவிப்புல கலையாக்கத்தின் மூலம் சாதிக்க முனைகிறார் மெளனகுரு.
ஏதோ இன்று பெண்கள் உயர்கல்வி கற்பதாலும், உத்தியோகம் பார்ப் பதாலும் 'தாதரென்ற நிலைமை மாறி ஆண்களோடு சரிநிகர் சமான மாக' வாழ்வதாக நம்பி நாம் திருப்தியடைந்தால், அது பிரச்சினையை நுனித்து நோக்காமையையே காட்டும்.
சீதனக் கொடுமையால் பாதிக்கப்படாத பெண்யார்? சினிமாவில் வணிக விளம்பரங்களில் எல்லாம் பெண் - அவள் உடல் மிகக் கேவலமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பற்றி வெட்கமில்லை. வெட்கமில்லை, இங்கு யாருக்கும் வெட்கமில்லை.
மேல் நாடுகளில் பெண்விடுதலை இயக்கங்கள் மிகுந்த உத்வேகத்தோடு பணியாற்றி வந்துள்ளன. நம் சமூகத்தில் அண்மைக்காலத்தில் தான் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். பெண்கள் எழுச்சியில் உள்ள நியாயத்தை, ஆண்கள் முதன்மை வகிக்கும் ஒரு சமூகத்தில், ஒரு கலை வடிவத்தினூடாக உணர்த்துவது மேலான -

கலாநிதி.சி.மெளனகுரு 49
தக்க-முயற்சியாகும். ஆண் ஆதிக்கத்தை அனுசரித்துப் போகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக இவ்வளவு தீவிரமாகப் பெண்கள் கிளர்ந்து எழுந்தது இதுவே முதல் தடவையாகும். அதிகாரம் செய்யும் குடும்பத் தலைவன், காமாந்தகாரக் கங்காணி, வயிற்றிலடிக்கும் ஆலை முதலாளி, இளம் பெண்களை வட்டமிடும் மைனர் மச்சான்கள், கற்பழிக்கும் ஊர்காவற் கயவர்கள் - எல்லோரும் பெண்களைப் போட்டு மிதிக்கும் ஆண்களின் வகைமாதிரிகளே, மெத்தச் சரி. பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் எங்கள் இளம் பெண்களைத் தூஷணைக்கும் அவமதிப்புக்கும் உள்ளாக்கும் ஆண்கள் எந்த ரகம்? அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து தம்மினத்தைக் காப்பாற்ற பெண்கள் ஆய்வுவட்டம் முன்வருமா? ஆண்கள் மட்டும்தான் பெண்களை இழிவு செய்கிறார்கள் என்பதில்லை. பெண்மையை இழிவு செய்யும் ஒரு பெண்பாத்திரத்தையும் சேர்த்திருந் தால் ஒரு முழுமை ஏற்பட்டிருக்கும். புதிய கருத்துக்களைச் சொல்ல புதிய வடிவம் தேவை என்பதை ஒரு கோட்பாடாகவே வரித்துக் கொண்டுள்ளார் மெளனகுரு. புதிய வடிவம் வேறெங்கோ இருந்து வருவதாயின், அது மக்களிடையே செல்லாது. மக்களிடையே வழங்கி வரும் சில கலை வடிவங்களின் நேர்த்தியான சேர்க்கையாகவே 'சக்தி பிறக்குது’ விளங்குகிறது. தமது 'சங்காரத்தில்' நாட்டுக் கூத்தையும், பரதத்தின் ஓரிரு அம்சங்களையும் இணைத்துப் பரிசோதனை செய்த மெளனகுரு, இந்நாடகத்தில் நாட்டுக்கூத்து, கரகம், கிராமிய இசை, கர்நாடக இசை, பரதம் என தமிழரிடையே வழங்கும் கலை வடிவங்களின் சங்கமமாக இப்படையலைத் தருகிறார்.
'நராயணி நாமோஸ் துதே' என்ற வேத மந்திர கோஷத்துடன், சக்தி வழிபாட்டுடன் தொடங்கும் இந்த மேடை நிகழ்வு, அன்னை சக்தியின் வடிவங்களான பெண்கள் சக்தியிடமிருந்து ஆற்றலும் உந்துதலும் பெற்று நிகழ்த்தும் ஆட்டத்தோடு முடியும் போது ஒரு வட்டத்தைப் பூரணமாக்கிய நிறைவு நமக்கேற்படுகிறது. போற்றுதலும் வழிபாடும் ஒரு புறம் - அது லட்சியம். தூற்றுதலும் ஒடுக்குமுறையும் மறுபுறம் - இது யதார்த்தம். இவையிரண்டும் அருகருகே அல்லது ஒன்றன்பின் ஒன்றாகப் காட்டப்படுவது நல்ல சுவை (ypgGðIT (irony)
“சக்தி சக்தி பெண்மை என்று தாளைப் போற்றுகிறோம்
புத்தி கெட்டுப் பெண்ணைஇங்கு போட்டு மிதிக்கிறோம்."

Page 33
சக்தி பிறக்குது SO
சக்திக்குத் துதி பாடுதல் மேடையில் நிகழ, பின்னணியில் இறுதி ஊர் வலம் நடைபெறுவது (வாய்க்கரிசி போடுகிறார் ஒருவர்) பொருத்தமான குறியீடு.
பெண்ணின் உயர்வைப் பற்றி வள்ளுவரும் பிறரும் சொன்ன வாசகங் களை ஏந்திப் பாத்திரங்கள் செய்யும் பவனி இந்த உத்தியின்பாற்பட்டதே.
கங்காணி செல்லையா, குடும்பஸ்தர் குலசேகரம் ஆகியோர் சபைக்கு அறிமுகமாவது ரசமான கட்டங்கள். கொட்டகைக் கூத்துப் பாணியில் அவர்கள் அடி எடுத்து வைப்பது, சும்மா சொல்லக்கூடாது. ரசிகர்களைச் சுண்டியிழுக்கின்றது. ஆலை முதலாளி அருமைநாயகம் பேரம்பலம் வடமோடியில் கட்டியம் கூறிக் கொண்டு வருவது இன்னொரு நுட்ப மான சேர்க்கை. இப்பாத்திரங்களை ஏற்ற சுந்தரலிங்கம், ருத்ரேசுவரன், ஜெனம் ஆகியோர் பண்பட்ட நடிகர்கள் என்பதை யாரும் இனங்கண்டு கொள்வர். சபையோரின் பாராட்டை ஒரு சில நிமிட நடிப்பிலேயே பெற்று விடுகிறார்கள். இளவட்டங்களாக நடிக்கும் பூரீகணேஷ், சந்திர குமார் சுந்தரலிங்கம் ஆகியோர்.
நடிகையருள் சக்தி வேடமேற்ற நிமிலினி, கதைத்தொடர்பைச் செய்த மாலதி, கார்த்தியாயினி மனதில் நிற்கிறார்கள். ஜெயக்குமாருக்கு நல்ல சாரீரம். கதையைப் பிரமாதமாக நடத்திச் செல்கிறார். சொரூபானாந்தம் பிள்ளையாக நடித்த சிவானந்தனைப் பற்றி ஒரு வார்த்தை. பத்திரிகா சிரியராகச் சோபித்த அளவுக்கு கதாகாலேட்சபகராக அவர் சோபிக்க வில்லை. குரல் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். அது சரி தோளில் தொங்க் விட்டபடி கையில் ஓர் file வைத்துக்கொண்டு கதாப்பிரசங்கம் செய்யும் யாரையாவது கண்டிருக்கிறீர்களா?
பிரதியாக்கம். பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாதிரிக்கு ஒன்று:
“எட்டு மணி செல்லவாறிக - உங்க
இஷ்டம் போல வேலை செய்யுறிக’
இது திருநெல்வேலித் தமிழ். தேயிலைத் தோட்டங்களில் வழங்கும் தமிழ். புதுமைப்பித்தன்'துன்பக்கேணியை' இந்தத் தமிழிலேயே எழுதி னார். பேச்சு வழக்கு பற்றிய நாடகாசிரியருடைய பிரக்ஞை பாராட்டுக்குரியது.
இசை அமைத்த கண்ணன் கெட்டிக்காரர். கிராமியப் பாடல்களைப் பெரும்பான்மையும், சமமாக மேனாட்டு இசையையும் அற்புதமாகச்

கலாநிதி.சி.மெளனகுரு 51
சேர்த்திருக்கிறார். இளம் பெண்ணை வாலிபர் வட்டமிடும் போது பின்னணியில் ஒலிக்கும் ரீயூனுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
நடனம் நாடகத்தோடு ஒட்டி நிற்பது தனிச்சிறப்பு. சாந்தா பொன்னுத் துரை நுண்கலை மாணவியரை நன்கு பயிற்றியிருக்கிறார். மேடை நிகழ்வு க்ளைமாக்சை நோக்கி விறுவிறுப்பாக ஏறிச் செல்வது நடன அமைப்பாலேதான். சக்தியாக நடிக்கும் பெண். ஆடிக்கொண்டே ஒவ் வொரு பெண்ணாக உசுப்பி விடுவது. அவர்கள் சக்தி பெற்று உக்கிரமாக ஆடுவது எல்லாம் சாந்தா பொன்னுத்துரையின் தனி முத்திரை.
பிரசாரத் தன்மை மேலோங்கியிருப்பதையும் குறிப்பிட வேண்டும். பெண்கள் ஆய்வுவட்டம் அது அவசியம் என்று கருதியிருக்கலாம். ஆனால் அது ஓர் எல்லை கடந்து உலகெங்கும் உள்ள பெண்கள் இயக்கங் களைப் பட்டியல் போட்டு காட்டுமளவுக்குப் போயிருக்க வேண்டாம்.

Page 34
சக்தி பிறக்குது 52
சக்தி பிறக்குது;
ஒரு பரிசோதனை பற்றிய குறிப்பு
முருகையன் மல்லிகை, ஏப்பிரல், 1986
மார்ச் மாதம் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினமாகும். இந்த ஆண்டு அத்தினத்திலே, கவனிப்புக்குரிய நிகழ்ச்சிகள் சில இடம் பெற்றன. அவற்றுள் இரண்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே, கைலாசபதி கலையரங்கில் இடம் பெற்ற இரு அரங்க நிகழ்ச்சிகளாகும்.
ஒன்று திரு.சிதம்பரநாதனின் நெறியாள்கையில் உருவான கவிதா நிகழ்வு. மற்றையது கலாநிதி சி.மெளனகுரு அவர்களின் நெறியாள்கை யில் உருவான 'சக்தி பிறக்கிறது? இது ஒரு பரிசோதனை, நாடகமாகவும் இருக்கலாம் என்று நெறியாளரே ஓரளவு தயக்கத்தோடுதான் குறிப்பிட் டிருந்தார்.
கவிதா நிகழ்வில் இடம் பெற்ற கவிதைகள் பெண்நிலைவாதம் (அல்லது ஃபெமினிசம்) எனப்படும் கொள்கை வழிப்பட்ட கருத்துகளை உணர்த் துவனவாக இருந்தன. ஆணாதிக்கத்தின் பேறாகப் பெண்கள் அனுபவிக் கும் இன்னல்கள் எடுத்துக் கூறப்பட்டன. குடும்பம் என்னும் நிறுவனத் தில் அகப்பட்டு, கணக்கு வழக்கில்லாத இலவச உழைப்பில் ஈடுபடும் பெண்கள் சொத்துரிமை உட்படப் பல்வேறு உரிமைகள் இழந்த நிலையிலே துன்புற்றும் திண்டாடும் சூழ் நிலை - வீட்டிலும், தொழிற் களத்திலும், பொது வாழ்விலும், தனிவாழ்விலும் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள இடைஞ்சல்கள் துன்பதுயரங்கள் - இவை யாவற்றையும் காட்சிப்படுத்தி, இசை, பா ஒதல் நடிப்பு, அபிநயம் ஆகிய பல்வேறு உத்திகளின் வாயிலாக, தாக்கமானதொரு கலைப்படைப்பாக இக்கவிதா நிகழ்வு அமையலாயிற்று. அதன் பின்னர் இடம் பெற்ற

கலாநிதி.சி.மெளனகுரு 53
இரண்டாவது நிகழ்ச்சியாகிய 'சக்தி பிறக்குது என்பதற்கு ஒரு பாயிரம்போல, வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுக்க' என்ற தலைப்பிலே அக் கவிதா நிகழ்வு நடைபெற்றது எனலாம்.
அடுத்து இடம் பெற்ற 'சக்தி பிறக்குது ஏறத்தாள ஒரு மணி நேரம் நடைபெற்ற ஒரு கலைக்கோலம் ஆகும். சக்தி என்னும் சொல்லின் பல்வேறு கருத்துச் சாயைகளையும் இந்த நாடகத்தை எழுதி நெறிப்படுத்திய மெளனகுரு நன்கு பயன்படுத்தியுள்ளார். ஆற்றல் வலிமை என்றவாறு வரும் உலகியல் அர்த்தங்களோடு கூட, சமயச் சார்பான அர்த்தங்களையும் நினைவூட்டி, பெண்மையுடன் தொடர்பு காட்டி உண்டாக்கும் உணர்வோட்டம். சக்தி பற்றிய எண்ணச் சூழ்வு மிகவும் கலைநயத்துடன் கையாளப்பட்டுள்ளது. ‘மெய்யன்பர்களே, சக்தி மிகப் பெரியவள், ஜகம் சக்திமயம் என்று நம்முன்னோர் கூறினர். அண்டங்களைப் படைத்தவள் யார்? அன்னை அகிலாண்டேஸ்வரிதான், பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும் மூர்த்திகளும் யார்? சாட்சாத் அம்பிகையின் பிரதிபலிப்புகளே. பெண்களை எல்லாம் அன்னையே என்று வணங்கினார் சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர். இன்று நாம் காணும் பெண்கள் எல்லாம் அன்னையின் வடிவங்களே. எனவே அன்னையைப் போற்றுவோம்' என்று வரும் சொற்களைத் தொடர்ந்து, குடும்பப் பெண், பாடசாலைச் சிறுமி, தேயிலைக் கொழுந்து பறித் தெடுக்கும் தேயிலைத் தோட்டப் பெண், பவர்லூம் ஒன்றிற் பணியாற் றும் பெண் தொழிலாளி ஆகியோர் அறிமுகம் செய்யப்படுகிறார்கள்.
பின்னர், இவர்கள் ஒவ்வொருவரின் சூழலும், நிலைமைகளும், இன்னல் களும், இக்கட்டுகளும் சற்றே விவரமாகச் சித்திரிக்கப்படுகின்றன. முதலிலே கணக்காளர் ஒருவரின் குடும்பம் காட்டப்படுகின்றது. கணவன் மனைவியிடையே தோன்றும் சச்சரவும் வாக்குவாதமும் கொட்டகைக் கூத்துப்பாணியிலே படம் பிடித்துக் காட்டப்படுகின்றன. காலை தொடங்கி இரவு பத்து மணி வரைக்கும் ஓயாது உழைத்துக் களைத்து அலுப்படைந்து உலைந்தும் கூட கணவன் அவற்றையெல்லாம் கணிப்பீடு செய்யாது அலட்சியம் செய்வதையிட்டு அக்குடும்பப் பெண் சலிப்படைகிறாள்.
ஐயோ என்ர தலைவிதி இதுவோ
ஆண்டவனே, இங்கே
என்னை எனது கணவன் நன்றாய்
விளங்குகிறாரில்லை"
என்று அவள் தனது தலைவிதியை நொந்து கொள்ளுகிறாள்.

Page 35
சக்தி பிறக்குது - 54
சக்தி சக்தி பெண்மை என்று
தாளைப் போற்றுகிறோம்.
புத்தி கெட்டுப் பெண்மையை இங்கு
போட்டு மிதிக்கின்றோம்." என்று எடுத்துரைஞர்கள் பாடுவது 'நாடகாசிரியரின் கருத்துரைக கூற்றாகும்.
இவ்வாறே பள்ளிச் சிறுமியின் பரிதாப நிலையும் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. காலிப் பயல்களின் தொல்லைகள் ஒவியமாக்கப்பட் டுள்ளன. பாடசாலை செல்லும் சிறுமியை அணுகி, சுரேஷ், மகேஷ் என்னும் இருவரும் சேட்டை செய்ய முயலுகிறார்கள். பின்னர் நம்பர் பிளேற் இல்லாத வான் ஒன்று வருவதைக் கண்டு அஞ்சி ஒடுகிறார்கள்.
"இளம் பெண்கள் இங்கே
தனிச் செல்ல வழியில்லை
பெண்களுக்கிங்கே
பாதுகாப்பொன்றில்லை"
என்று எடுத்துரைஞர் வாயிலாக ஆசிரியர் விமர்சனஞ் செய்கிறார்.
பின்னர், தோட்டத் தொழிலாளியாகிய பெண்ணின் வில்லங்கம் காட்டப் படுகிறது. கங்காணி ஒருவன் வந்து, முத்து வேலாயியை வெருட்டு கிறான்.
‘என்னடி முத்து வேலாயி - அங்க ஏன் வேல செய்யாம நிக்கிறா நீ கூடைக்க கொழுந்தக் காணலியே - அடி கொஞ்சத்தானிங்க வந்தனியோ" என்று கங்காணி அதட்ட, முத்து வேலாயி சில எதிர் நியாயங்களை எடுத்துக் கூறுகிறாள்.
ஆண்பிள்ளை மேற்பார்வை பெண்ணை அதட்டுது அங்காலும் சில கேட்குது பார் பெண்ணாயிருப்பதால் கூடைச்சுமையோடு பிற சுமைகளும் தாங்குகிறாள். என எடுத்துரைஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அடுத்து எடுத்தாளப்படுவது ஆலை முதலாளிக்கும் பவ(ர்)லும் தொழிலாளிக்குமிடையில் நடைபெறும் சம் வாதமாகும். ஆலை முதலாளியின் பெயர் அருமைநாயகம், தொழிலாளியின் பெயர் காந்திமதி.

கலாநிதி.சி.மெளனகுரு 55
என்னடி காந்திமதி - இன்னுமந்த வேலை முடியலையோ? என்று அதட்டுகிற அருமை நாயகத்துக்கு.
தனியாள் பெண்ணெருத்தி - அதனை
எப்படி நான் முடிக்க? என்று வேறொரு கேள்வி மூலம் பதிலளிக்கிறாள் காந்திமதி. முதலாளி மார் பெண்களை முதலாய் வைத்தே வேலை வாங்கிப் பெரும் முதல் சேர்க்கும் நடைமுறையில் நமது பார்வையில் நமது பார்வையைப் பதிய வைக்கிறார் நெறியாளர்.
மேலே கூறியவாறெல்லாம் பெண்ணின் நிலை வாத்தையும், ஆண் ஆதிக்கத்தின் உக்கிரத்தையும் ஒவியமாக்கியபின், பெண்கள் உணர்ச்சி பெற்றுச் செயலூக்கம் கொள்வதை உணர்த்தியுள்ளார் நெறியாளர். உலக மட்டத்தில் இயங்கும் பெண்களின் அமைப்புக்கள், தமிழ் நாட்டில் இயங்கும் பெண்களின் அமைப்புக்கள், இலங்கையில் இயங்கும் பெண்களின் அமைப்புக்களாகிய இவற்றையெல்லாம் நினைவூட்டி, சக்தியின் எழுச்சியாக, பெண்மையின் முழக்கமாக ஓங்கி ஒலிக்கும் குரல்களோடு சூறாவளியாக இயங்கிய நாட்டிய வடிவத்திலே காட்சி மயமாக்கப்பட்ட உணர்ச்சிச் சுழிப்புடன் 'நாடகம் முடிவடைகிறது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மேடை நிகழ்வில் நெறியாளரின் முத்திரையை நாம் தெளிவாகக் காண்கிறோம். வழக்கம் போலவே அவர் பல்வேறு விதமான உத்திகளை யும் போட்டிகளையும் இங்கு சங்கமிக்கச் செய்துள்ளார். இதன்வழி இலங்கைத் தமிழர்க்கெனத் தனித்தன்மையுடைய நாடக மேடை மர பொன்றினை நவீன தேவைகளுக்கு ஏற்ப ஆக்கிக் கொள்ளும் முயற்சிக்கு ஒரு பங்களிப்பாக 'சக்தி பிறக்குது என்னும் மேடை நிகழ்வையும் நமக்கு வழங்கியுள்ளார்.
இந்த முயற்சியில், சுன்னாகம் இராமநாதன்நுண்கலைக்கழகமும் நாடக அரங்கக் கல்லூரியும் நெறியாளர் மெளனகுருவுக்கு உதவியுள்ளனர் என அறியவருகிறோம். இம் மேடை நிகழ்வில், பரத நாட்டிய அசைவுகளும், கொட்டகைக் கூத்து மோடியும், நவீன நாடகப் பாணியும் ஆகிய உத்தி களெல்லாம் இணைந்து வருகின்றன. அவ்வாறே கர்நாடக இசைமரபும் நாடோடி இசைப் பண்புகளும், பேச்சோசை வயப்பட்ட உச்சாடனங் களும் ஒருங்கு சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேர்க்கப்படுவதற்கு அவ்வத்துறைகளிற் சிறப்புத் திறமை பெற்ற கலைஞர்கள் மனமொப்பி ஒத்துழைத்துள்ளனர். ஒவ்வொருவரும் மற்றையோரின் கலைப்

Page 36
சக்தி பிறக்குது 56
பாணிகளை மதித்தும் நயந்தும் புரிந்துணர்வோடு செயற்பட்டுள்ளனர். இது மிகவும் வரவேற்கக் கூடியதொரு வளர்ச்சியாகும். கலைஞர்களின் விரிந்த மனப்பான்மையையும் நேர்க்கையும் கூட்டிக் காட்டுவதாகும்.
எனினும் இந்த மேடை நிகழ்வை அநுபவித்த பின்னர் ஏதோ ஒரு சிறு குறை இருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த மேடை நிகழ்வின் அடிக்கருத்து சிக்கலானது. இந்த அடிக்கருத்தினை அறிவு நெறிப்பட்ட தொரு வாதச் சரட்டினை ஆதாரமாக வைத்து வலியுறுத்தம் போக்கிலே ஆசிரியர் தமது கலையாக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் பொரு ட்டு மெய்மை சார்ந்த சில நிகழ்ச்சித் துணுக்குகளைத் துணையாகக் கொண்டுள்ளார். இந்தத் துணுக்குகளையெல்லாம் இறுகப் பற்றி ஒரு முழுமையையும் கட்டுக்கோப்பையும் தருவதற்கான ஆற்றல், கையாளப் பட்ட கலையுத்திகளுக்கு இருந்ததா? இதுவே நம் முன் உள்ள கேள்வி. உத்திகளின் பன்மைப்பாடே இங்கு ஒரு பிரச்சனையாகி விட்டதோ? அந்தப் பன்மையிலும் ஒரு இசைவை, முழுமையான ஒருமைப் பண் பைக் காண்பதற்கு இன்னும் அதிக முயற்சியும் பயிற்சியும் உதவக் கூடும் என்றே தோன்றுகிறது.
இத்தகைய உத்திப் பிரச்சனைகளுக்கு அப்பால், 'சக்தி பிறக்குது நமது சமூகத்தின் நடைமுறைகளையும் கட்டுதிட்டங்களையும் கடுமையாக விமரிசனஞ் செய்யும் ஒரு படைப்பாகவே உள்ளது. ஆண் ஆதிக்கத்தின் கெடுபிடிகளை வன்மையாகக் கண்டித்து எதிர்க்கும் பெண்மையின் முழக்கம் என்று அதனை வருணிக்கலாம்.

கலாநிதி.சி.மெளனகுரு 57
‘சக்தி பிறக்கிறது" பரீட்சார்த்த நாடகம்
ஏரி.பொன்னுத்துரை முரசொலி ஏப்ரல் 1986
நல்ல நாடகப் பிரதியில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம்பெற வேண் டும் என்பர். ஒன்று செய்தி (information) இரண்டு படிப்பு (Education) மூன்று சுவை அல்லது ரசனை (Entertainment) நான்கு ஒரு இலட்சி யத்தை நோக்கிச் செல்லுதல் (Motivation) 08.02.86 பெண்கள் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற கலாநிதி சி.மெளனகுருவின் 'சக்தி பிறக்குது என்ற நாடகத்தில் மேற் குறிப்பிட்ட நான்கு அம்சங்களும் பொருத்தமாக இழையோடின. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்தல் என்ற இலட்சி யத்தைப் பிட்டுக்காட்டும் பரீட் சார்த்த நாடகம் இது. புதிய புதிய கருத்துக்களை சொல்ல புதிய புதிய வடிவங்களைத் தேடும் முயற்சியின் அறுவடை இந்த நாடகம். இதில் கொட்டகைக் கூத்துப்பாணி, பரதம், கிராமிய இசை, கர்நாடக இசை பொருத்தமாகச் சேர்க்கப்பட்டன.
பதினாறு மகளிரும் எட்டு ஆண்களும் தாம் தாங்கிய பாத்திரப் பண்புக்குத் தக சுவைஞர்கள் திருப்தியுறும் அளவுக்கு நடித்தனர். பலரிடமும் கூடிய வல்லமை பளிச்சிட்டது. உரைஞர்களாக தோன்றிய பெண்ணும், எஸ்.ஜெயக்குமார், இ.சிவானந்தன் என்போரும் மிகத் திறம்படத் தம் பங்களிப்பைச் செய்தனர். இனிமையும் ஜெயகுமாரின் அட்சரசுத்தியுடன் கூடிய வலுவான குரலும் தெளிவும், சிவானந்தனின் இயற்கையான நடிப்பும் நாடகத்துக்கு உரமூட்டி நின்றன. கொட்டகைக் கூத்துப் பாணி புகுத்தப்பட்ட மூன்று முக்கிய கட்டங்களில் நடிப்பு மேம்பட்டிருந்த அளவுக்கு இசைவளம் சிறக்கவில்லை. சிறந்திருக்க வேண்டும். பிரான்

Page 37
சக்தி பிறக்குது 58
சிஸ் குரலில் கம்பீரம் இருந்தது. மற்றவர்களும் உரமூட்டிச் சுத்தமாய்ப் பாடி நடித்திருந்தால் இன்னும் ஒரு படி நாடகம் மேம்பட்டிருக்கலாம்.
சில கட்டங்கள், நடிகர்கள். -
குடிகாரனாக வந்து கலாட்டா செய்த பிரான்சிஸ், கங்காணியாக வந்த சி. சுந்தரலிங்கம், முதலாளியாகத் தோன்றிய க.உருத்திரேஸ்வரன் அரங்கக் கல்லூரிபுடம் செய்த நடிகர்கள். இவர்களின் நடிப்புத் தரத்திற்கு சவால் விடும் வகையில் மகளிரின் நடிப்பும் இருந்தது. குடிகாரன் மனைவி, தேயிலை கொய்யும் பெட்டைகள் நடிப்பு பாணி நயத்துடன் அமைந்தன.
இளம் பெண்ணைச் சுற்றிவரும் மூன்று மைனர்களினதும் நடிப்பு ஒரு வகை நகைச்சுவையை ஊட்டின. உயரம் கூடியவரது புன்சிரிப்பே நடித்ததெனலாம். பொருத்தமான சிரிப்பு, நளினநடிப்பு, நாடகத்தில் மகளிரால் காட்டப்பட்ட ஸ்தம்பித்து நிற்கும் நிலைகள், ஊமங்கள், பல்வேறு நடைகள், பாவனைகள், பாவங்கள், கூட்டப்பாடல்கள், இலகுவாக உணர்ந்து நடித்த தன்மைகள் பரவலாக நாடகத்துக்கு தனியழகு கொடுத்தன. மகளிர் தோற்றப் பொலிவும் பங்களிப்பு செய்துள்ளது. இடையிடையே வந்த நடன பாவங்களைவிட இறுதிக் கட்டத்தில் நாடகத்தோடு இணைந்து பிணைந்த நாட்டிய அமைப்பில் சாந்தா பொன்னுத்துரையின் சாதுரியம் வெகுவாகப் பளிச்சிட்டது. ஒரு 'பாலே பார்ப்பது போன்ற உணர்வோட்டம் ஏற்பட்டது.
கூட்டுமுயற்சி
பெண்களை வெறும் பாவைகளாகக் கருதாது ஆண்களுக்கு சமமான வர்களே என்ற நோக்கில் ஆண் சமூகம் இயங்க வேண்டும் என்ற கருத்தை சுவைஞர்கள் உட்கொண்டனர். வலுவான வடிவம் உறுதுணையாய் அமைந்தது. பிரதியாக்கம் நெறியாள்கை செய்த கலாநிதி சி. மெளன குருவின் வெற்றிக்கு பக்கபலமாய் அமைந்தவர்கள் பலர். மேடை நிர்வாகி குழந்தை சண்முகலிங்கம், நடன அமைப்பாளர் சாந்தா பொன் னுத்துரை, இசையமைப்பாளர் கண்ணன், ஒப்பனையாளர் அரசர், வயலின் பாக்கியலட்சுமி நடராசா குறிப்பிடத்தக்கவர்கள். பெண்கள் ஆய்வு வட்டம் தயாரித்த ‘சக்தி பிறக்குது ஒரு முன்னோடி முயற்சியே.

கலாநிதி.சி.மெளனகுரு 59
சி.மெளனகுருவின் சக்தி பிறக்குது
லோஹர்ஸா எங்கரசு தினகரன் 28.06.1986
'அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தியே தீருவோம் என அன்று தொட்டு பேசிவரும் கிராமிய சொற்றொடருக்கு உவப்பாக யாழ்ப்பாண மண்ணில் இன்றுள்ள அவலங்களின் மத்தியிலும் பல ஆரோக்கியமான நாடகங்கள் மேடை நிகழ்வுகள் மிக வேகமாக மேடை யேறி வருவதைப் பார்க்கும் போது இன்னல்கள் புதிய சக்தியை தோற்று விக்கிறது என எண்ணத் தூண்டுகிறது. இவ்வகையில் மேடையேறிய நிகழ்வுகளில் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் நெறியாண்ட 'சக்தி பிறக்குது தனிப்படைப்பு என்றால் மிகையாகாது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தயாரிக்கப்பட்ட இந்த நிகழ்வானது அண்மையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக 'புவியியலாளன்' சஞ்சிகை யின் நிதியுதவிக் காட்சியாக கைலாசபதி கலையரங்கில் மேடை யேறியது. பெண்கள் அக வாழ்க்கையில் ஆண்வர்க்கத்தினரால் அடக்கி ஒடுக்கி வாழ்க்கைப்படும் அவலம் சொல்லப்பட்டு, இவையெல்லாம் மீறி, பெண்ணினம் எல்லாம் சக்திமயம் என்று எழுச்சி வரை அங்கு அமைகிறது.
நாடகம் என்றவுடன் ஒருவகையில் அதன் ஆரம்பம் வளர்ச்சி, உச்சம், முடிவு, காட்சியமைப்பு, உரையாடல் என்பன எம் நினைவுக்கு வருகின் றன. அவ்வகையில் இது அமையாது இன்றைய உலகின் பல்வேறு பிரச்சினைகளைக் கூறப் பல்வேறு வடிவங்கள் தேவைப்படுவது போன்ற இந்த மேடை நிகழ்வு ஒரு பரிசோதனை முயற்சியாக பல நவீன

Page 38
சக்தி பிறக்குது 60
உத்திகளின் சாயலை தன்னகத்தை கொண்டு பார்வையாளர்களின் கற்பனைக் கண்களை அகலத்திறந்து விடுகிறது. இவ்வகையில்தான் இது ஒரு மேடை நிகழ்வு என நெறியாளரால் அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். காலை விடிவு, பூபாள ராகங்கள், இசையோடு திரை விலகுகிறது. 'போற்றியெம் வாழ் முதல் ஆகிய சக்தி புவிகளை நீயே படைத்தன என்பார்’ என்ற பாடலோடு சூலம் தாங்கி அருள் பாலிக்கும் சக்தியை அர்ச்சிக்கும் காட்சி தெய்வ சிந்தனையைத் தூண்டுகிறது. பொழுது புலர்கிறது. ஒவ்வொரு பெண்களும் அரக்கப் பரக்க ஓடி, ஒடி வேலை செய்கிறார்கள். ஆனால் ஆண்களோ கொட்டாவியோடு துயிலெழுகிறார்கள். கடின உழைப்பாளி செல்லம்மா, பாடசாலை செல்லும் ஒருத்தி, தேயிலைத் தோட்டப் பெண், ஆலைத் தொழிலாளப் பெண் ஆகியோர் மேடைக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.
இவர்கள் யாவும் பெண்கள் இனம்
இவர்கள் யாவரும் எங்கள் இனம்
இவர்கள் யாவரும் தாய்குலமே
இவர்கள் அனைவரும் சக்திமயம் குடும்பப் பெண் செல்லம்மாவின் கணவன் குலசேகரம் காரியாலயம் ஒன்றில் கணக்காளராய் கடமையாற்றுபவர். கூட்டாளிகளோடு சேர்ந்து குடித்துவிட்டு வீடு வருகிறார். இவர் வருகை கண்ட மனைவி தன் வேலையை விட்டு அன்போடு கோப்பி தயாரித்துக் கொடுக்கிறாள். கோப்பியின் ருசி போதாதென்று குற்றம் சுமத்துபவன் வாய்ப்பேச்சு, இறுதியில் அவளை ஓங்கி அடிக்கும்வரை நகருகிறது.
"ஐயோ என்ர தலைவிதி இதுவோ
ஆண்டவனே இங்கே
என்னை எனது கணவன் நன்றாய்
விளங்குகிறாரில்லை” அவள் அவலம் மதிகெட்டு ஆடுபவனுக்கு எங்கே விளங்கப் போகிறது. 'கல்லானாலும் கணவர்கள்' என்று பெண்கள் ஊமைகளானார்கள் என்பது ஒரு காட்சியாகக் காட்டப்படுகிறது.
அடுத்த காட்சியில் தேயிலைத் தோட்டத்து கங்காணி வருகிறார். கொழுந்து கிள்ளும் பெண்களிடம் வேலையைச் சாடி வெருட்டுகிறார். பின். நான் சீரியசாக எடுக்கமாட்டேன் அந்திக்குப் பிறகு குளிச்சு முழுகிட்டு அந்தப் பக்கம் வா புரிகிறதோ? அவர் கேள்வி வளர்கிறது. மிரளும் பெண்களிடம் பல்லிளிச்சபடி கிட்ட வந்து அவர்களின் காதைக் கிள்ளும் வரை சேட்டைத்தனம் வளர்வது வரை காட்டப்படுகிறது.

கலாநிதி.சி.மெளனகுரு 61
"ஆண்பிள்ளை மேற்பார்வை பெண்ணை அதட்டுவது அங்காலும் சில கேட்குது பார் பெண்ணாய் இருப்பதால் கூடைச் சுமையோடு பிற சுமைகளும் தாங்குகிறாள்.
'மூன்றாவது காட்சியில் ஒரு பாடசாலைப் பெண் வாலிபச் சேட்டை மூலம் வதைக்கப்படுவது காட்டப்படுகிறது. எடியே பொட்டச்சி. இங்கெம்மை பாரடி உன்னைத்தான் நில்லடி உன்பேரைச் சொல்லடி.
இப்பாடல் வரிகள் மைனர்களின் குரங்குத் தனத்தின் உச்சத்தை வெளிப் படுத்துகிறது. இந்த வால்கள் நம்பர் பிளேட் இல்லாத வான் ஒன்றைக் கண்டு ஆபத்தில் மாட்டிக் கொள்ளாமல் மெதுவாக நழுவுவது மிக நயமாகக் காட்டப்படுகிறது.
சரிகைக்கரை சால்வை போட்டு, சந்தனப்பொட்டு வைத்து பொலிவான உடம்போடு பெருமைகளை முகத்தில் தேக்கி ஆலை முதலாளி பேரம் பலம் அடுத்தவராகக் காட்டப்படுகிறார். இலாப நோக்கம் கருதி மலிவான கூலிகளான பெண்களை வேலைக்கமர்த்தி சம்பளம் போதா தென்ற போதும் வேலைகளைக் கடுமையாக்கி அதிக பணம் சேர்க்கும் அவர் முதலாளித்தனம் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. 'முதலாளிமார் பெண்களை முதலாய் வைத்தே, வேலை வாங்கியே பெரும் முதல் சேர்க்கிறார்' இப்பாடல் வரிகள் காட்சியில் நினைவு கூரத்தக்கவை.
பெண்களை அடிமைப்படுத்தும் நிகழ்வுகள் சமூகத்திற் பலவிருந்த போதும் மேற்சொல்லிய ஒரு சில காட்சிகள் சிறப்பு உதாரணங்களாக சுட்டிக் காட்டப்படுவது சிறப்பாக அமைகிறது.
இந்நிகழ்வின் அமைப்பில் பல தனிச்சிறப்புகளை அவதானிக்க முடியும். அதாவது யாழ்ப்பாணத்தின் கொட்டகைக் கூத்து தொடக்கம் பரத நாட்டியம் வரை பல்வேறு பாரம்பரியக் கலைகள் கலக்கப்பட்டுள்ளன. புராண இதிகாசக் கதைகளை மட்டும் பரதத்தில் விளக்கலாம் என்ப தில்லை. சமகாலப் பிரச்சினைகளையும், இந்நிகழ்வின் மூலம் நெறி யாளர் காட்டுகிறார்.
கங்காணி செல்லையா, குடும்பஸ்தர் குலசேகரம் ஆகியோர் கொட்ட கைக் கூத்துப்பாணியில் அடிவைத்து வருவதும், மோடிப் பாணியில் பாத்திரங்கள் கட்டியம் கூறுவதும் வாலிப முறுக்கில் வரும் இளவட்டங் கள் மேலைத்தேய பாணியிலே அசைந்து வருவதும் நிகழ்வின் ஆரம்ப மானது. நாதஸ்வர ஓசையுடனும், முடிவு பரதக் கலையுடனும், நிகழ்வின் 'உரு’ பாடல் வரிகளாலும் தொட்டுச் செல்லப்படுவதும் நெறியாளர்தன் கருத்துக்களைச் சொல்ல புதிய வடிவங்களை எமது பாரம்பரிய கலை

Page 39
சக்தி பிறக்குது 62
வடிவங்களிலிருந்து எடுத்துப் புதுமெருகூட்டுகிறார் என்பதை வெளிப் படுத்துகிறது. இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் எமது இனத்தின் தனித்துவமான கலை கலாசாரத்தை வளர்க்கும் ஒரு சமூகக் கடமையாக நெறியாளர் இதைக் கொண்டுள்ளார் போலும். ஒரு தேசிய நாடக வடிவை முன்னெடுத்துச் செல்லும் இவரது இந்த மூச்சை சாதாரண பல மேடைகளிலும் அவதானிக்க முடிந்தது. ஆடலும் பாடலும் நிறைந்த இந்நிகழ்வு நீண்ட நேர வசனம் பேசும் ஞாபக சக்திக்கும், குரல் தொனிக் கும் இடம் கொடாது பூரண கலை வடிவத்தை, இலக்கிய வடிவத்தை பிரதியாக்கம் செய்தமை இன்னொரு தனிச்சிறப்பாக உள்ளதை அவ தானிக்கலாம்.
இந்நிகழ்வானது அத்தனைச் சிறப்புக்களைக் கொண்டிருந்த போதும் குறிப்பிடக்கூடிய சில ஐயப்பாடுகளையும் தோற்றுவிக்கும் என்பது தவிர்க்க முடியாதவைதான். இந்நிகழ்வுகள் சேர்க்கப்பட்ட காட்சிகளு டன் இன்றும் எம் சமுதாயத்திலே புரையோடிப் போன புண்ணாகக் காணப்படும் சீதனப் பிரச்சினையையும் ஒரு காட்சியாகச் சேர்த்திருப்பின் சிறப்பாக அமைந்திருக்கும். மேலும் பெண்களைச் சக்தியாக மதிக்கும் எங்கள் சமுதாயம் பெண்களைப் போட்டு மிதிப்பதாக சொல்லும் நெறி யாளர் இதே பெண்கள் தம்மைத் தாமே விளம்பரப் பொருளாகவும் விற் பனைப் பண்டமாகவும் மாற்றியிருக்கும் சூழ்நிலையைச் சொல்ல மறந் தமை ஏனோ என எண்ண வைக்கிறது. பெண்கள் இன்று விழிப்புற்றுவிட் டார்கள் என்பதை எடுத்துக்காட்ட உலக நாடுகளிலுள்ள பெண்கள் அமை ப்புக்களை பட்டியலிட்டுக் காட்டுவது காட்சி வடிவினின்று வேறுபட்டு பத்திரிகை உலகை ஞாபகப்படுத்துகிறது. இவ் வடிவமைப்புக்களை மக்கள் பத்திரிகைளிலோ சஞ்சிகைகளிலோ, வாசித்து அறியட்டும்.
இயல்பிலே பெண்கள் மெல்லினமாக இருப்பினும் இந்த மென்மை வாழ்வின் பலவீனமாகி அவர்களுக்கு ஒரு ஆண்துணையை அதாவது பலவானைத் தேடவைத்தது எனவும், அவர்தம் பலவீனம் இயல்பாகவே அவர்களை பின்தள்ளியதும் இவை உடலமைப்பில் இயல்பானமையும் விசேடமாக கவனிக்கத்தக்கவையாம். இந்நிலையில் பெண்கள் தம்மைத் தாமே மெல்லியர் எனக் கொள்ளாது எதிலும் தாம் தீவிரமாக இயங்குவ தாக எண்ணுவதும், அதாவது தான் ஆணுக்கு அடிமையாக இயங்க வில்லை மாறாக தக்க துணையாக சமமான பலத்தில் இயங்குவதாகவும் இது தமது கடமை என எண்ணுவதும், போன்ற வகையில் தம் மன நிலையை மாற்றிக் கொள்ளின் அதன் மூலம் வெற்றியை அடையலாம் என எண்ணத் தோன்றுகிறது. இங்கு பெண் அடிமையல்லள் என்ற மனநிலை முதிர்வுற வேண்டியது அவசியமாகும்.

கலாநிதி.சி.மெளனகுரு 63
ஒருவர் பல பாத்திரங்களாக மாறுவதும் சில கருத்து வெளிப்பாடுகளை குறியீடுகள் மூலம் வெளிப்படுத்துவதும் கதையின் போக்கிற்குப் பொலிவைக் கொடுக்கின்றன. مح۔ பாத்திரங்களின் வார்ப்பும், பங்காளரின் நடிப்பும் இந்நிகழ்வின் வெற்றிக்கு இன்னொரு வகையில் உதவுகின்றன. நல்ல சாரீரத்தோடு பாடும் ஜெயக்குமார் தெளிவான குரலில் நிகழ்வைத் தொகுத்து வருவ தும், குடிகாரனாக வரும் பிரான்சிஸ் ஜெனம் தன் தனி நடிப்பின் முத்திரிரையை பொறிப்பதும், கங்காணி, முதலாளி பாத்திரங்களது பண்பட்ட நடிப்பும் நாடகத்தில் பளிச்சிடுகிறது. மைனர்களாக வரும் இருவரும் தமது வயதுக்குரிய சேட்டைத் தனமோ எதுவோ நன்றாக நடித்து சபையின் சபாசைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதே போல் இப்பாத்திரங்களுக்குச் சோடியாக நடிக்கும் பெண் பாத்திரங்களும் ஈடுகொடுத்துத் துணையாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாகப் பெண்கள் அலை அலையாக ஆடித்தம் எழுச்சியை காட்டு வது ஒரு நிறைவைத் தருகிறது. இவ்வகையில் நடனஅமைப்பை நிகழ்வோட்டத்துக்கு ஏற்ப அமைத்துக் கொடுத்த நடன விரிவுரையாளர் செல்வி சாந்தா பொன்னுத்துரை பாராட்டப்பட வேண்டியவர். இவர் தனது நடன முத்திரையை இந் நிகழ்வின் மூலம் வெளிக்கொண்டுவரச் சக்தி பிறக்குது வழிவகுத் திருக்கிறது. எவை எப்படி இருப்பினும் எமது மண்ணிலிருந்து, எமது பாரம்பரியங் களை, நமது பரதம், நமது கர்நாடக இசை, நமது கூத்துக்கள், கரகம், காவடி, நாட்டார் பாடல்கள் என்பவற்றிலிருந்து கட்டி எழுப்பப்படும் சக்தி பிறக்குது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் எமக்கான ஒரு தேசிய கலை வடிவத்தை கொடுக்கும் என்பதில் எத்துணை ஐயமும் இல்லை. இந்நிகழ்வை நல்ல கற்பனை நயத்தோடு கண்டுகளித்தவர்கள் நல்ல கலை அனுபவத்தோடு வெளியேறி இருப்பார்கள் என்பது அசையாத நம்பிக்கையாகும். பாடல்களை கொண்டமைந்த இந்நிகழ் விற்கு இசையமைப்பாளர் கண்ணன் நல்ல மெட்டுக்களில் இசையமைத்திருப்பதும், நடனமாதரின் அசைவோடு இசையை சேர்த்திருக்கும் ஒழுங்கும் காதுக்குத் தேனைப் பாய்ச்சுகிறது. இவ்வகையில் பலரின் பங்களிப்பு மெளனகுருவின் கற்பனைக்கு நல்லதொரு வாய்ப்பாகியதில் வியப்பில்லை.

Page 40
சக்தி பிறக்குது 64
A SUCCESSFUL BLEND
S. Pathmananthan Saturday Review 15.03.1986
(The Cultural highlights of last National Women's Day (Saturday, 8th March) were a play and a poetry performance.
(The reviewer confines himself to the play Sakthi Pirakkuthu)
Jaffna Society which is usually considered conservative was recently roused from its indolence. The occasion was International Women's Day, the grand finale of which was a play staged at the Kailaspathy Auditorium, University of Jaffna.
Sakthi Pirakkuthu is really a collection of episodes - a documentary. The bullying husband, the lecherous kangany, the heartless mill - owner, the rapist soldier and the young men who hang around girls are all prototypes of males who oppress Women. Granted what about those varsity students, who, underpretext of "ragging'subject women freshers to all sorts of insults, abuse and humiliation? Are the victims not singled out for harsher treatment because they belong to the second sex? Will the Women's Research Circle organise a campaign to protect the younger of their species?
That's by the way but let not anyone underestimate Maunaguru's efforts, his search for a form. He works within the epic framework. The castis impressive, twenty four on the stage. There are four narrators. A Few actors play more than one role.
But such techniques have already been tried out. What then is new is Sakthi Pirakkuthu? Maunaguru blends folk drama, folk music, Carnatic

கலாநிதி.சி.மெளனகுரு 65
music and Bharata Natyam. In other words, the search for a form does not lead him astray. He draws form tradition. The absence of a plot may be a short- Coming but at least one thing has been provedand this should satisfy the Women's Research Circle who produced the play that even Propaganda Could come very close to Art.
Irony is the most effective technique employed. On the one hand, sakthi, the divine mother the source of all Energy (power) is worshipped. And on the other in practice Women, who are forms of sakthi, are scorned, ridiculed, bartered, trampled and enslaved. This gap between precept and practice is well brought out through a symbol: While sakthi - pooja is enacted on the stage, the hearse of a woman moves in the back ground. The parade with banners saying a lot of wonderful things about women is yet another feature that reveals how hollow men are.
The Bharata Natyam sequence is a good example of innovation. Shantha Ponnuthurai leaves no Stone unturned. The inevitable buildup towards the climax is achieved by the dance piece. The Divine mother's cosmic dance shakes up all women and prods them to action. Never has the cause of Women been so forcefully expressed on the local stage.
Jeanm, Sundaralingam and Rudreswaran are seasoned actors, The narrators, especially Jayakumar and Karthikayinido their parts very well. Nimalini who played Sakthi's part is a young artiste with promise.
Kannan and Kirupaharan handle both folk and western music with ease. A case in point is the background music for the scene in which Sri Ganesh comes off with flying colours.

Page 41
சக்தி பிறக்குது 66
சக்தி பிறக்கிறது? நெறியாளர் சர்வேந்திராவுடன் ஒரு சந்திப்பு
நந்தன் சுவடுகள். நோர்வே, ஆவணி 1989
நாடக முயற்சியில் புதிய சிந்தனைகள், புதிய வடிவங்கள் அல்லது மெருகூட்டப்பட்ட எமது பாரம்பரிய வடிவங்கள் என்பன ஈழத்திலுள்ள நாடக ரசிகர்களுக்குப் புதியனவல்ல. ஆயினும் புலம்பெயர்ந்து இங்கே வாழும் தமிழர்களிடையே இவ்வாறான நிகழ்வுகள் முற்றிலும் பழக்கப் பட்ட ஒன்றல்ல. ஆங்காங்கே சில குறிப்பிடத்தக்க முயற்சிகள் நிகழ்ந் திருந்தாலும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்களுக்கென இவ் வாறானதொரு நாடக முயற்சி அண்மையிலேயே சாத்தியமாகியுள்ளது. தமிழ்ச்சங்கத்தின் பத்தாண்டு நிறைவுக் கலைவிழாவில் இடம்பெற்ற 'சக்தி பிறக்கிறது’ நாடகமே இவ்வாறானதொரு சாத்தியத்தை ஏற்படுத்தி யது. ஈழத்திலிருக்கும் போதே நாடக, அரங்கப் பயிற்சி பெற்றவரும் யாழ் பல்கலைக்கழகக் கலாசாரக் குழுவில் முக்கிய பங்கேற்றுப் பணி புரிந்தவருமான 'சக்தி பிறக்குது நெறியாளர் த.சர்வவேந்திராவை சுவடுகள் சார்பில் சந்தித்தேன்.
'சக்தி பிறக்குது பெண்கள் ஆய்வு வட்டத்தினர்க்காக கலாநிதி மெளன குரு அவர்களால் 1985ல் மேடையேற்றப்பட்டது. நாடகத்தில் வரும் நடனப் பகுதியை செல்வி சாந்தா பொன்னுத்துரையும் இசையைக் கண்ணனும், கிருபாகரனும் மற்றும் சிலரும் அமைத்திருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவு மாணவர்களும் நடித்த இந்த நாடகத்தில் மேடையேற்றம் நான்கு

கலாநிதி.சி.மெளனகுரு 67
அல்லது ஐந்து தடவைகளே நிகழ்ந்தது. இங்குள்ள சில கலைஞர்கள் நாட்டியம் இணைந்த நாடகம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என விரும்பியதற்கிணங்கவே இந்நாடகம் தயாரிக்கப்பட்டது. ஈழத்தில் இந்த நாடக மேடையேற்றத்தின் போது 'இது ஒரு மேடைநிகழ்வு. இது நாடகமாகவும் இருக்கலாம் என்று நெறியாளர் மெளனகுரு விளக்க மளித்திருந்தார்' இவ்வாறு நாடகம் பற்றி விளக்கமளித்தார் சர்வேந்திரா.
'இங்குள்ள சூழலில் இவ்வாறானதொரு நாடகத்தை மேடையேற்றும் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது?' என்ற கேள்விக்கு 'இங்குள்ள அந்நியச்சூழலில் இவ்வாறான நாடக மேடையேற்றம் பற்றிய எண்ணம் அனுரேகா, ரவிக்குமார், சுந்தரமூர்த்தி, கிருபாகரன் ஆகியோரின் மனதில் தோன்றியது. இந்நாட்டில் பெண்கள் இவ்வாறான முயற்சிக்கு ஆதரவும், பங்கும் வழங்குவார்களா என்ற கேள்விகள் எழுந்த போதும், நடிப்ப தற்கு ஆண்களைச் சேர்க்க கிருபாகரனும், பெண்களைச் சேர்க்க அனு ரேகாவும் முன்னின்றுழைத்தமை நாடகத்தைச்சாத்தியமாக்க உதவிற்று' என்று பதில் சொன்னார் சர்வேந்திரா.
'நாடகத்துக்குப் பெண்கள் பங்களிக்க முன்வந்தார்களா? என்று நான் கேட்டபோது 'நாடக ஒத்திகைகளுக்கான முதல் சந்திப்பு மே 17ம் திகதி நடைபெற்றது. தொடர்ந்த ஒத்திகைகளின் போது பெண்களின் பங்களி ப்பு, மேடையேற்றம் பற்றி நம்பிக்கை ஏற்பட்டது. அனேகர் நாடக மேடைக்குப் புதியவர்கள் எனினும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி நாடகத்தைச் சாத்தியமாக்கி வெற்றிபெற உழைத்தனர்' என்றார் சர்வேந்திரா.
'நாடகத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டனவா’ என்ற கேள்விக் குப் பின்வருமாறு பதில் சொன்னார் அவர். 'இப்பிரதி பெண்கள் ஆய்வு வட்டத்தினருக்காக எழுதப்பட்டமையால் சில இடங்களில் பிரசாரத் தன்மை மேலோங்கியிருந்தது. இது குறித்து நாடக ஆசிரியருடன் நேரடி யாகக் கலந்து முடிவெடுக்கும் சூழல், சாத்தியம் இருக்கவில்லை. பொது வாக நாடகப் பிரதி வெளிப்படுத்தும் செய்தியைச் சிதைக்காமல் சில பகுதிகளைத் தவிர்க்க நெறியாளருக்கு உரிமையுண்டு.
நாடக வடிவம் அடிப்படையில் மாற்றப்படவில்லை பிரதியிலிருந்த குறிப்புக்களைப் பின்பற்றியதுடன் காட்சிப்படுத்தலையும் புகுத்தி னோம். இதில் முக்கியமாக நிகழ்த்திக்காட்டல் மூலம் வெளிக்கொணரப் பட்ட சீதனக்காட்சியைக் குறிப்பிடலாம். நாட்டிய வடிவம் மீளமைக்கப் பட்டது. நடனத்தில் வெளிக் கொணரப்பட வேண்டிய செய்தியை நெறியாளர் என்ற முறையில் நான் வெளிப்படுத்த அதனை உள்வாங்கி

Page 42
சக்தி பிறக்குது 68
நடனக் காட்சிகளை முன்னின்றமைத்தவர் அனுரேகா அந்தோனிப் பிள்ளை, சசிகலா, கிரிதரன் இவருக்குத் துணையாக நின்றுதவினார். நேரடியாக நாடகத்தில் பங்கு பெறாவிட்டாலும் நடனத்தை வடிவமை க்க மிர்தவர்சினி பாலசிங்கம் உதவி புரிந்தார். நடனத்துக்குரிய ஜதிகளை கிருபாகரன் பரமசாமி அமைத்திருந்தார்’ என நாடகத்தின் வடிவம் பற்றி விளக்கமளித்த சர்வேந்திராவிடம் மேடையேற்றம் பற்றிக் கேட்டேன்.
'சக்தி பிறக்குது' மேடையேற்ற முதல் முயற்சி எடுக்கப்பட்ட போது நோர்வே தமிழ்ச் சங்கம் இதற்கு ஆதரவளிக்க முன்வந்தது. சங்கத்தின் பத்து வருட நிறைவில் இந்நாடகம் மேடையேறியது. ஒத்திகைகளுக் கான இடவசதியை தமிழ் நோர்வே மக்கள் இணைவுகூடம் ஏற்படுத்தித் தந்தது.
ஒலிவாங்கியைத் தவிர்த்தே (மேடையில்) நாடகத்தை மேடையேற்றி னோம். மேடையேற்றத்தில் சபையோரின் ஒத்துழைப்புக் கிடைத்தமை தொடர்ந்தும் நாடக முயற்சிகளை மேற்கொள்ள நம்பிக்கை ஊட்டியுள் ளது. வரையறுக்கப்பட்ட வசதிகளுடனேயே இந்த மேடையேற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக மேடையில் ஒளியமைப்பு வசதி குறைவாகவே இருந்தது. எனினும் ஒளியமைப்புக்காக டென்மார்க்கிலிருந்து வந்திருந்த க.ஆதவன் மேடையில் கிடைத்த ஒளியமைப்புக் கருவிகளை உச்ச அளவில் பயன்படுத்தியதால் வசதிக்குறைவு ஓரளவு தவிர்க்கப்பட்டது.
ஒப்பனையில் தேர்ச்சி பெற்ற கலைஞர்கள் எமக்குக் கிடைத்திருப்பின் நாடகத்தை மேலும் சிறப்பாக்கியிருக்கலாம்" என்றார் 'சக்தி பிறக்குது' நெறியாளர் சர்வேந்திரா.
‘சக்தி பிறக்குது நாடகத்தை மேடையேற்ற நோர்வேயின் பல பகுதிகளில் இருந்தும், சில வெளிநாடுகளிலிருந்தும் அழைப்புக் கிடைத்திருப்பதாக நான் அறிந்தது பற்றிக் கேட்டேன். 'நாடகங்களை ஒரு மேடையேற்றத்துடன் நிறுத்திவிடாது சாத்தியமான எல்லா இடங்களிலும் மேடையேற்றுவது நாடகத்தை நேசிப்பவர்களின் கடமை. அவ்வகையில் இந்நாடகத்தை தொடர்ந்து மேடையேற்றவே நாம் விருப்பம் கொண்டுள்ளோம். எமக்கான தேசிய நாடக வடிவமொன்றை உருவாக்கும் முயற்சியில் எமது பங்களிப்பை வழங்கும் வகையில் பணியாற்றுவது இன்று எம் அனைவர் முன்னும் உள்ள பணியாகும்' என எதிர்காலம் பற்றிய நம்பிக்கையோடு பதில் கூறினார் சர்வேந்திரா.

கலாநிதி.சி.மெளனகுரு 69
எமக்கான தேசிய நாடக வடிவமொன்றை உருவாக்கும் தேசத்தை விட்டுப் பிரிக்கப்பட்டாலும் எமது கலை வடிவங்களில் மிகுந்த அக்கறை யோடு (பணப்) பெறுமதி மிக்க நேரத்தை அர்ப்பணித்து நல்ல முயற்சி களை மேற்கொள்ளும் 'சக்தி பிறக்குது கலைஞர்களுக்கு சுவடுகள் சார்பில் நெறியாளர் சர்வேந்திராவிடம் வாழ்த்துக்கூறி விடைபெற்றேன்.
ஒஸ்லோவில் ஒரு ஒன்றுகூடல்
இமேஜ்"
'மனம் திறந்த கதைத்தல்"
'உண்மையைச் சொல்லு மச்சான்'
மற்றவை சொல்லேக்கை கேக்கவேணும்? இப்படிப் பலவகையான சனநாயக உரையாடல்கள். சொற்களைப் பாவிக்கும் விதத்திலும் சரி, இவைவெளிவிட்டு மற்ற மனிதன் என்ன சொல்லுகிறான் என்று கேட்பதில் அவர்கள் காட்டும் பொறுமையிலும் சரி.
இதை ‘சனநாயக உரையாடல்’ என்பது சாலவும் பொருந்தும். நான் எதைச் சொல்லுகிறேனென்றால் ஒஸ்லோவில் நடந்த ஒரு உரையாடல்
'நாடகம்' என்ற சொல் எல்லோர்க்கும் பரிச்சயமானது. ஆனால் அதைப் பற்றி கதைத்தல் சாத்தியமற்றது. பொதுவாக பாலேந்திரா, மெளனகுரு, தாசீசியஸ், சிதம்பரநாதன். நீண்டு கொண்டு போய் கடைசியில் ஒரு மாணவன் 'தமிழ் நாடக வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரை வரைக என்ற 'ரியூற்ரோறியலுக்கு மறுமொழிசொல்லும் விதமாக அமைந்து விட்டது,
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 'தமிழ் நாடக வளர்ச்சி என்றால் என்ன? 'நவீன நாடக வளர்ச்சி' என்றால் என்ன? என்பது பற்றி.
நவீன நமது நாடகம் துரதிஸ் டவசமாக இயக்கம் சார்ந்து போனது. 'நாடகத்தைப் பிரச்சாரப்படுத்து என்ற கோசமும் இல்லாவிடில், எழுதாமல். நடிக்காமல். அடங்கிவிடு என்ற நிர்ப்பந்தமும் இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
எண்பத்து மூன்றுகளுக்குப் பிறகு இயக்கஞ்சாராத நாடகங்கள் வர வில்லை. வரவும் முடியாது. 'மெளனகுரு' வால் 'சக்தி பிறக்குது போட முடிந்தது இயக்கஞ்சாராமல், கலை மக்களுக்கான எனும் மூளைச் சலவையினுள் ஆட்பட்ட கலைஞன் தனக்கு வசதியான இடத்தில் தன்

Page 43
சக்தி பிறக்குது 70
கலையைத் தேடிப் படைக்க முயல்வது இயல்பு. இயக்கஞ் சாராத ஒரு பெரிய இயக்கம் பெண்விடுதலை இயக்கம். (மெளனகுருசார் மன்னிக்க இது உங்களுக்கில்லை) 殆
சர்வேந்திராவுடன் கதைத்த போது அவர் 'கலை மக்களுக்காகவே என்றும் 'கலை கலைக்காகவே' என்று நான் சொன்னபோது 'நீங்கள் தீவிரமாக விரக்தி அடைந்துவிட்டீர்கள்’ என்றும் சொல்லுமளவுக்கு அவர் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் எனவும் எண்ணத் தோன்று கிறது. என்னைப் பொறுத்தவரையில் கலை பற்றிய கோட்பாடுகளை ஒருவன் கற்றுத் தேற வேண்டியதில்லை. உண்மைக் கலைஞனையும். உண்மைக் கலையையும் என்றைக்கும் எமது மண் இனங்காணத் தவறிய தில்லை. இங்கே நாம் விடும் தவறு படைப்புகளை விட விமர்சகர்களால் மக்களைச் சீரழிக்கிறோம் என்பது தான்.
ஒரு வைரமுத்துவை. அல்லது அடங்காப் பிடாரியை. தட்சணா மூர்த்தியைத் தெரிந்த அளவுக்கு பாலேந்திராவையோ. சிதம்பர நாதனையோ. மெளனகுருவையோ தெரிந்திருக்க நியாயமில்லை. எமது மக்களுக்கு, ஆனால் இதிலுள்ள முக்கிய விடயம் முன் மூவரும் இயக்கஞ்சாரவில்லை. இவர்களுக்கு கலைபற்றிய கோட்பாடு தெரி யாது. இவர்களிடம் ஒறிTனாலிட்டி இருந்தது. இவர்கள் படைத்தார் கள். கலையை கலைக்காகப் படைத்தார்கள். உதாரணமாகத் தட்சணா மூர்த்திக்குக் கலைக் கோட்பாடு தெரியாது. தன் தவிலைத் தானே ரசித் தான். தவிலில் அவன் தன்பாட்டில் விளையாடினான். அவனுக்கென உண்டான தலைக்கணம் நியாயமானது. என் திறம் எவர்க்குமில்லை எனும் கனம். அவனது கலை மக்களுக்குச் சேவை செய்ததைவிட கலைக்குக் கூடச் சேவை செய்தது. அவன் வாழ்கிறான் அவன் கலை வாழ்கிறது. இந்த 'ஓடியன்சுக்கு இப்படித்தான் நாடகம் போட வேண்டும் என்ற கோட்பாட்டை விட்டுவிட்டு ஒரு நல்ல நாடகத்தைப் போடுங்கோ, அதை மக்கள் ரசிப்பார்கள் நிச்சயமாக, கலையின் தரத்துக்கு மக்களை உயர்த்த வேண்டியதை விட்டுவிட்டு மக்களின் தரத்துக்குக் கலையை இறக்குவது ஒரு கலைஞனின் வேலை அல்ல. மக்களின் தரத்திற்கு என்றைக்கு ஒரு கலைஞன் இறங்குகிறானோ அன்றைக்கு அவன் கலைஞன் பெயரை இழந்து புதிய பெயர் பெறுகிறான். அவன் பெயர் என்ன தெரியுமோ? அரசியல்வாதி.
ஒஸ்லோவில் சுமார் முந்நூறு பேர் சர்வேயின் 'சக்தி பிறக்குதுவை ரசித்தார்கள் என்றால் சொல்லப்பட்ட கருத்தை ரசித்தார்கள் என்பது

கலாநிதி.சி.மெளனகுரு 71
சுத்தப்பொய். இலங்கையில் இப்பொழுது எவ்வாறு பெண்கள் அடக்கப் படுகிறார்கள் என்பதை அண்மையில் இலங்கைக்குப் போய் வந்த டொக்டர்சண்முகரட்ணத்தால் மிக அழகாகச் சொல்ல முடியும். இதற்குக் காலத்தால் பிந்திய மெளனகுருவின் ஸ்கிறிப்ற் தேவையில்லை. மக்கள் வடிவத்தைத்தான் ரசித்தார்கள். தமக்குத் தெரிந்த விசயத்தை எவ்வளவு அழகாக இவன் சொல்கிறான் என்பதைத்தான் ரசித்தார்கள். மெளனகுரு இதற்கூடாகப் புதிய செய்தியெதையும் சொல்லிவிடவில்லை. இங்கே கலையைத்தான் பார்த்தார்கள். இந்த இயக்குநர்இதை ‘நாட்டிய நாடகம் என்று போட்டதே பரதக் கலைக்காகத்தான். கலை மக்களுக்காக எனும் கோட்பாடு கொண்டவர் ஏன் மக்களின் கடும் பிரச்சினைகளைத் தொட்டிருக்கக்கூடாது. இவருக்கு மக்களைவிட கலையில் கூட நாட்ட மென்பதுதான் உண்மை.
இதைத்தான் இன்னோர் வார்த்தையில் 'கலை கலைக்காக" என்று சொல்கிறார்கள்.
நாடகம் நடந்து முடிந்த பின்னர் ஒரு கதையாடல். உண்மையில் நாடகக் கலைஞர்கள் மனம் விட்டுப் பேசினார்கள். ஒரு நடிகை, தான் ஒஸ் லோவை விட்டுப் பிரிகிறேன். இந்தக் குழுவைவிட்டுப் பிரிகிறேன். எனச் சொல்லி அழுதாள். அனைவரும் அழுதோம் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு "சீரியசான நாடகக்குழு இது. 'மிளகாய்த்தூள் உங்கட "கொமியூன் இல என்ன விலை விக்குது? என்று கேட்கிற சனத்திலயிருந்து வேறுபட்டுத் தங்களைக் கலைக்காகப் பலியிடுகிற கூட்டம் இது: அதுவும் பெண்கள் எந்தக் 'கிசு கிசுகளுக்கு அஞ்சாமல் தங்கட "இமேஜ்" பற்றின சுயவிமர்சனம் செய்ய முன்வந்தது புல்லரிக்க வைக்குது. நான் ஒன்றுமட்டும் சொல்வேன்.
நல்லது வாழும்
கெட்டதுதாழும்
தை நோட்டீஸ் அடிச்சு ஒட்ட வேண்டிய தேவையில்லை.
g5 ( 5pb. ஒ
ஆதவன்
(டென்மார்க்)
பிற்குறிப்பு:
இது ஒரு ஆய்வுக் கட்டுரையல்ல. ஒரு மனத் 'திறப்பு". இத்திறப்பால் மனக்கதவுகள் பலவற்றைத் திறக்க முடியும் என நம்புகிறேன்.

Page 44
சக்தி பிறக்குது 72
மனத்திறப்புப் பற்றி ஒர் மனம் திறந்த கருத்து
தமயந்தி (ஸ்தவாங்கர்) சுவடுகள் மார்கழி (1989)
'சத்தியமாய் திரும்பத் திரும்ப கேக்கிறனெண்டு கோபப்படாதை மச்சான். இது நீ நல்லா அறிஞ்ச பிறகுதான் கதைக்கிறியா? என்னால் இன்னுந்தானடாப்பா நம்பேலாமல் கிடக்கு.
நான்வேறை யாரோ எண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறன். இப்ப நீ சொன்ன பிறகு தானடாப்பா நம்மட ஆதவன் சார்தான் எண்டு எனக்குத் தெரியும். உண்மையா ஜீரணிக்கேலாமல் கிடக்கெடாப்பா'
இப்படி 'ஒஸ்லோவில் ஓர் ஒன்றுகூடல்' என்ற தலைப்பில் ஆதவன் சாரின் மனத்திறப்பை படித்த சில உள்ளங்கள் ஆதங்கப்பட்டன (ஆதவன் சாரில் மதிப்பு வைத்துள்ள சில உள்ளங்கள்)
'சக்கரை ஜாஸ்தி, சாயா கம்மி என்று சென்னை கோடம் பாக்கத் தெருவின் ஒருமூலைப் பெட்டிக்கடையில் தேவருக்குச் சொல்லிவிட்டு ஆதவன் சாரோடு மனந் திறந்த பேசியவைகள் இப்போதும் மறக்க முடியாதவை. 1984 ல் 'சேர் நானொரு கவிதைத் தொகுப்புக் கொண்டு வரலாமெண்டு நினைக்கிறேன். என்ன நினைக்கிறியள்?"
முன்னால் கொண்டு வந்து வைக்கப்பட்ட அரைக் கிளாஸ் ரீயில் ஒரு மிடறு இழுத்துவிட்டு 'போராட்ட பூமியில் எல்லாம் முளைக்கட்டு மடாப்பா. காலப்போக்கில் மக்களுக்குத் தேவையான கலைப் படைப்பு கள் எல்லாம் வடிகட்டி மேல தங்கும். மற்றதெல்லாம் மறைஞ்சு போகும். உனக்கு ஒண்டு மட்டும் சொல்லுவன்: கலைப் படைப்புகள் எல்லாம் மக்களுக்கானது எண்டதக் கருத்தில் கொள்ளு’

கலாநிதி.சி.மெளனகுரு 73
இப்படி 'கலை மக்களுக்கானது' என்ற கருத்தை எம் போன்றோர்க்கு விதைத்த ஆதவன் சேருக்கு இப்போது 'கலை கலைக்காக’ என்று கூறும் அளவுக்கு என்ன நேர்ந்தது?
ஆதவன் சாரின் இந்தக் கட்டுரை தொடர்பாக 'இது சர்வேந்திராவுக்கும் ஆதவனுக்கும் இடையிலான பிரச்சனை அல்லது கருத்து முரண்பாடு என்று சொல்லி நாம் ஒதுங்க முடியாது. சுருங்கக்கூறின், கலைஞன் முதலில் ஒரு மனிதன். கலைஞனுக்கு ஒரு சமூகக் கடமையுண்டு. அதனை 'கலை கலைக்காக’ என்ற கருத்து நிராகரிக்கின்றது.
கலை கலைக்காக என்ற வாதம் ஆளும் வர்க்கத்துக்கும் அடக்குமுறை யாளர்களுக்கும் சாதகமாய் அமையக்கூடிய அபாயத்தைக் கொண்டது. இவற்றை சீர்தூக்கிப் பார்த்து கருத்திற்கொண்டு, அன்று கலை மக்களுக் காக என்ற கருத்தைக் கொண்ட ஆதவன் சார் இன்று 'கலை மக்களுக்காக என்று சொல்பவர்கள் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள், கலை கலைக்காகத்தான்' என்று கூறுமளவுக்கு அவருக்கு என்ன நேர்ந்தது?"
ஆதவன் சாரின் கூற்றுப்படி சமூகக் கடமையைக் கருத்திற் கொண்டவன் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டவன்.
காலத்துக்குக்காலம் கருத்தை மாற்றிக் கொண்டு ஊசலாடும் மனநிலை யில் இருக்கும் ஆதவன் சாரைப் பார்க்கும் போது உண்மையிலேயே அதீத விரக்திக்கு ஆளாகிவிட்டாரோ என்ற அச்சம் எமக்கு எழச்செய்கிறது.
இவை ஒரு புறமிருக்க
''. . . . . . கடைசியில் ஒரு மாணவன் 'தமிழ் நாடக வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரை வரைக என்ற ரீயூற்றோரியலுக்கு மறுமொழி சொல்லும் விதமாக அமைந்துவிட்டது' என்று ஆதவன் சார் சொல்லகிறார். கழுதை தேய்ந்து கட்டெறும் பானது என்று பொருள்பட அமைந்த இந்தக் கருத்தை என்னால் மட்டுமல்ல பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் பதட்டமான சூழ்நிலைகளுள்ளும் அதிவேகமாக இல்லை யெனினும் ஒரளவு நாடகக் கலைவடிவம் பல பரிசோதனை முயற்சிகளு டாக செழுமைப்படுத்தப்பட்டுப் படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆதவன் சார் ஒரேயடியாக மறுக்க முடியாது.
இவை சேரவேண்டிய விதத்தில் மக்களிடம் சேர்ந்திருக்கின்றன. கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு சார்? 'நாடகத்தைப் பிரச்சாரப்படுத்து; இல்லாவிடில் எழுதாமல். நடிக்காமல் அடங்கிவிடு என்ற நிர்ப்பந்

Page 45
சக்தி பிறக்குது 74
தமும் இருந்தது. இருக்கிறது, இருக்கும்’ என்ற ஆதவன் சாரின் கருத்தை முற்று முழுதாக ஏற்க முடியாது. இயக்கத் தலையீடுகளின்றி, இயக்கம் சாராத பல படைப்புகள் வெளி வந்துள்ளன. (நாடகக் கலை மட்டுமல்ல இயக்க சார்பற்ற ஓவியக்கலை, புகைப்படைக்கலை போன்றவையும் இயக்கங்களின் ஒத்துழைப்பு களுடன் நடந்துள்ளன.)
'எண்பத்து மூன்றுகளுக்குப் பிறகு இயக்கம் சாராத நாடகங்கள் வர வில்லை. வரவும் முடியாது என்ற ஆதவன்சாரின் கருத்தை இம்மியளவும் ஏற்றுக்கொள்ள முடியாது. இயக்கத் தலையீடுகளின்றி படைப்புகள் வெளியாகித்தான் உள்ளன. படைப்புகளுக்கு சகல இயக்கங்களும் ஆதரவு வழங்கிய சம்பவங்களும் உண்டு. (உண்மையிலேயே இவை தெரியாமல் இருப்பின் ஆதவன் சார் கேட்டுத் தெரிந்துகொள்க)
'சக்தி பிறக்குது: கருத்தை ரசித்தார்கள் என்பது சுத்தப்பொய்’ என்று எந்த எடுகோளின் பெயரில் இப்படியொரு பொது முடிவை ஆதவன் சார் அடித்துக் கூறுவார்? ஒரிரு மனிதனையாவது 'சக்தி பிறக்குது' கருத்து பற்றிக் கொண்டிருந் தால் ஓரிரு மனிதனாவது 'சக்தி பிறக்குது கருத்துக்களை உள்வாங்கி இருந்தால் எமது சமுதாய மாற்றத்துக்கான கணிசமான பங்கை அவர்க ளால் செய்ய முடியும். அவர்களுக்காக 'சக்தி பிறக்குது சமுதாய மாற்றத்துக்கான தனது ஆணிசமான பணியைச் செய்யும்.
குறைந்தபட்சம் 'சக்தி பிறக்குது கருத்துகள் சமுதாய மாற்றத்துக்காக ஒரு மனிதனையாவது உருவாக்கித்தான் இருக்கும். இதனூடாக இந்தப் படைப்பின் கலைஞன் தனது சமுதாயக் கடமைகளைச் செய்கின்றான்.
அடுத்து இதனை காலத்தால் பிந்திய ஸ்கிறிப்ற் என்று ஆதவன் சார் எதன் அடிப்படையில் கூறுகின்றார்? இந்தப் பிரச்சினைகள் காலத்தால் பிந்தியவை என்கிறாரா? இந்தப் பிரச்சினைகள் எமது சமுதாயத்தில் தீர்ந்து விட்டன என்கிறாரா?
சரி. ஆதவன் சாரின் கூற்றுப்படி மக்களோடு அல்லாமல், மக்களின் பிரச்சினைகளில் அவர்களோடு நின்று முகம் கொடுக்காமல் வெறும் 'நோக்காளராக' சென்றுவந்த டொக்டர் சண்முகரட்ணத்தால் மிக அழகாகச் சொல்லக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இது காலத்தால் பிந்திய ஸ்கிறிப்ற் என்று எப்படிக் கூற முடியும்? இந்தப் பிரச்சினைகள் தீர்ந்திருந்தால் சில வேளை காலத்தால் பிந்திய ஸ்கிறிப்ற் என்று கூற

கலாநிதி.சி.மெளனகுரு 75
முடியும். பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே இருக்கும் போது அந்தப் பிரச்சினைகளைச் சொல்லும் படைப்பு எப்படிக் காலத்தால் பிந்திய ஸ் கிறிப்பிற் ஆகமுடியும்? இவை மக்களைச் சுடும் பிரச்சினைகள் இல்லை என்பதை எந்தக் கருதுகோளின் அடிப்படையில் ஆதவன் சார் சொல்லுகிறார்.
இறுதியாக ஆதவன் சாரின் - 'கலையின் தரத்துக்கு மக்களை உயர்த்த வேண்டும் ' என்ற கருத்துக்கூட 'மக்களைப் பலாத்காரமாக கட்டி இழுத்துவந்து கலைகளைத் திணி என்பது போல் உள்ளது.
கலைப்படைப்பின் தரத்துக்கு மக்களின் ரசனைத் தரத்தை உயர்த்தாது விட்டால் மக்களால் கலைப்படைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.
மக்களின் ரசனைத் தரத்தை உயர்த்துவது சமூகப் பொறுப்புள்ள நேசிக் கின்ற கலைஞர் கூட்டத்தினாற்றான் செய்ய முடியும்.
மக்களுக்கான கலையை: மக்களிடமிருந்தும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்தும் கற்றுத்தான் படைக்கமுடியும். சிகெரட் புகை வளையங்களுக்குள் மட்டும் தேடினால் அது கிடையாது. சமூகப் பணியைக் கருத்திற் கொண்டு செயற்படும் கலைஞனின் மக்களுக்கான கலைப் படைப்புக்கள் மக்களைச் சென்றடையத் தவறியதில்லை என்பதையும் நோட்டீஸ் அடிச்சு ஒட்ட வேண்டிய தேவையில்லை.

Page 46

குருவின் இந்நாடகம் பல பரிமானங் தன்னகத்தோண்டுள்ளது.பெண்ம்ை வலங்கள் யாவும் வளிக் கொரு
எழுதப்பட்ட ஒரு நாடகமிதுன் டும் இதை நாள் கனவில்லை. இரு
பல்வேறுபட்டரச்சினைகள் இங்கே
சமனச்செல்வி முன்னுரையில்
முகத்தின் நடைமுறைகளையும் கட்டு ଦଣ கதிராகவிமர்சனம்செய்யும் இது தமிழர்க்கன தனித்தனர்:
க்கேற்ப ஆக்கும் முயற்சிக்கு இரு பாகசக்திவிறக்குது அமைந்துள்ளது
முருகையனி- நல்லிகைக்கட்டுரை
El Saturday Review