கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலத்துயர்

Page 1
س
LLY
 


Page 2

காலத் துயர் (கவிதைகள்)
சு.வில்வரெத்தினம்

Page 3
KAALATTHUYAR
A Collection of poems by
S. Vilvaratnam C
PUBLISHED BY : V.J. PUBLICATIONS
6, U.C. QUARTERs, GANDHI NAGAR, TRINCOMALEE.
PAGES : 40
PRICE: : 4-5/-
PRINTED BY : TECHNOPRINT
6, JEYAWARDENAAVE, DEHIWALA.
PUBLISHER : V.JEYAMURUGAN

முன்பதாக .
18-10-19926)
யாழ்ப்பாணத்தின் தீவுகள் சிறைப்பிடிக்கப்படுவதற்கு முதல்நாள் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மறுநாட்காலை ஊர்திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நானும் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்தேன்.
நம்பிக்கை பொய்யாயிற்று. ஊர்திரும்ப முடியவில்லை. தீவகத்தையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்த பாலமும் துண்டிக்கப்பட்டாயிற்று. நான் துடித்துப் போனேன் ஊரில் என் குடும்பம். நானோ யாழ்ப்பாணத்தில், குடும்பத்தவருடன் இணையத் துடித்து துயரிடைக் கழிந்தன எட்டு மாதங்கள் இந்தக் காலத்துயர் கவிதைகளாயின யாழ்ப்பாணத்தில் நின்ற காலத்திலேயே பிரதிநிலையில் 'காலத்துயர் எனும் தலைப்பில் தொகுப்பாயிற்று.
நியாயமாகப் பார்த்தால்,
'காற்று வழிக் கிராமம் தொகுப்பிற்கு முன்னதாகவே காலத்துயர் வெளிவந்திருக்க வேண்டியது, எனினும்
இன்றைய யாழ்ப்பாணத்தின் பெரும்பெயர்வின் சூழலில் இது வெளிவருவதும் காலப்பொருத்தமுடையதாகவே உள்ளது. 'தொல்லிருப்பு' 'தோப்பிழந்த குயிலின் துயர்' எனும் கவிதைகள் இரண்டும் பின்னாட்களில் எழுதப்பட்டனவாயினும் பொருத்தம் கருதி இதில் இணைக்கப்பட்டுள்ளன.
பெயர்வு நிகழ்ந்த பின்னால் பெயர்வுற்றவர்களின் துயரங்கள், துன்பங்களையும் பிறந்தகம் குறித்த ஏக்கங்களையும் 'காலத்துயர்'

Page 4
பிரதிபலிக்கிறது. "காற்றுவழிக்கிராமமோ மக்களில்லாத பாலையாகி விடும் கிராமங்களின் வெறுமை கொண்ட வாழ்வை பதிவு செய்கிறது. ஒரே நிகழ்வின் இரு பக்க அவலங்களையும் பதிவு செய்ய முடிந்தமை குறித்து காலக் கடமையை செய்து முடித்ததாய் ஒரு திருப்தி
'காற்று வழிக்கிராமம் வெளிவந்து மாதங்கள் பலவாகியும் அது பற்றிய விமர்சனங்களையோ குறைந்த பட்சம் அபிப்பிராயங்களையோசஞ்சிகைகள், பத்திரிகைகளில் எதிர்பார்க்க ஒரு கலைஞனுக்கு அவாவுண்டு. துரதிஷ்டவசமாக அவ்வாறு எதுவும் இங்கு ஆழமாக நிகழ்வதில்லை. யாவும், ஆக்கபூர்வமானவை யாவும் இங்கு கிணற்றில் போட்ட கல்லாகவே 'ஆழம்' கொண்டுவிடுகின்றன. 'காலத்துயருக்கும் அவ்வாறே நிகழ வாய்ப்புண்டு. இன்றைய ஈழத்து இலக்கியப்பரப்பில் படிந்துள்ள மந்தநிலைமைக்குச் சான்றாகவே இதைக் கொள்ளலாம். இந்த மந்த நிலையைத் தகர்க்கவும் தேக்கத்தை உடைக்கவும் கலைஞனே முன்கை எடுக்க வேண்டிய நிலையையும் இது குறித்துநிற்பதாகவும் கொள்ளலாம்.
இதற்கான காலப் பணியையும் நாம் உணரவே செய்கின்றோம். காலத்தில் அதற்கான கள முயற்சிகளையும் முனைந்து முயல்வோம். இனி எமது பணிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும். 'காற்றுவழிக் கிராமம் தொகுப்பிற்கு நிறைந்த ஆதரவை நல்கிய வாசகர் இக் 'காலத்துயருக்கும் 'தமது நல்குவர் என்ற எதிர்பார்ப்புடனும், இவ் வெளியீட்டுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் நன்றியுடனும்
சு.வில்வரத்தினம் 25.12.95

பதிப்பாளர் குறிப்பு
கவிஞர் சு.வில்வரெத்தினம் அவர்களின் 'காலத்துயர் கவிதை நூல் எமது பதிப்பகத்தின் முதலாவது முயற்சியாகும்.
இவரது கவிதைகள், தமிழ்பேசும் மக்களின் சமகாலத் துயர்களை, புலப்பெயர்வின் அவலங்களை, தொடரும் இன்னல்களை கவித்துவத்தோடு பேசுகின்றன.
எங்கள் சமூகத்தின் சமகால நிகழ்வுகளை வரலாற்றில் பதியும் எங்கள் முயற்சிகளுக்கு சகலரின் ஆதரவையும் வேண்டிநிற்கின்றோம்.
வை. ஜெயமுருகன்
வி.ஜெ. பதிப்பகம் சார்பாக,

Page 5

குருநாதருக்கு

Page 6

சூரிய நமஸ்காரம்
ஒளிக் குருதி வீச்சோடு எழுகின்ற சூரியனே பார் இரத்தப்பிடிப்பின்றி சோகையுற்றோம் உன்குருதியை எமக்குள் பாய்ச்சு
குந்தியீன்ற புத்திரனைப் போல எம்மைத் தள்ளி விடாதே
சொல்
பேர் சொல்லியழைக்கவும் பிள்ளைகளற்றுப் போவாளா எம் தாய்?
தன் உதிரக் கனிகளின் ஊர் கொள்ளா விளைச்சல் வீடுவந்து சேர்கவென ஓயாது புலம்புகிறாள்
கூவிக்கூவி பரவெளியெங்கும் அலையும் அவள் குரல் உனது கதிர்களில் ஊடறுத்து அதிரவில்லையா?
ஒளிக்கனி நாடி சிறகடித்த பறவைகளின் சங்கீதத்தை எரிந்த சாம்பரினின்றும் மீட்டுத் தா இருள் படிந்த புதைவுகளினின்றும் புதிய குருதிப் பொலிவோடு இவள் பிள்ளைகளை எழுப்பித் தா
வீரியரின் பூமியாக இது விளங்கட்டும்
சோகையுற்ற வாழ் நிலத்திலும் சுதந்திரம் வரண்ட தேசத்திலும் வலம்வருதல் உனக்கு வெட்கமாயிருந்தால் ஒளிநிறை வாழ்வின் உன்னதத்தை எமக்குத் தா!
12-02-92
காலத்துயர்

Page 7
துளிமுகத்துள் கங்கை
உலகம் இன்று வறுமையுற்றுள்ளது அன்பிலே வறிய வன்பாலை உலகு செய்தோம் அன்பகத்தீர் தயவுசெய்து ஒரு பிடி அன்பு செய்வீரா?
பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும் உனது பாத்திரத்தின் உள்ளே ஒட்டிக் கொண்டிருக்கும் அன்பின் அவிழ்பதம் கண்டாயா? ஆயின் நீ பாக்கியசாலி
காலத்துயர்

அன்பின் வறிய அயலான் ஒருவனுக்கு அதை வழங்கு ஒரு துளி நேசிப்பில் தொடங்குகிறது அன்பின் இதழவிழல்
அன்பின் அவிழ்பதம் அளித்தாயா? அதன் எதிர்வரவு காத்திருக்காதே வரவை எதிர்வு காத்திருப்போன் வாழ்க்கையை கடைவிரிப்பாக்குகிறான் வாழ்க்கையோ ஓர் தன்மலர்வின் வெளியகம்.
காவ்ய மேகலையாள் தன் மலர்ந்த வாழ்வின் பாத்திரமாகியபோது அன்பின் குழைவை அள்ளி அள்ளி வழங்கிக் கொண்டேயிருந்தாள் வற்றாத அன்பின் வாழ்வுடைமையில் இது ஒன்றும் அதிசயமில்லை ஆதலால் அன்பின் ஊற்று முகத்தை திறந்து வை மானுடனே தன்மலர்ந்த வாழ்வு உனதாகும்
துன்புறுவோரின் காற்துாசியையும் கழுவி விடும் அன்பின் ஊற்று இன்பெருக்காய் எங்கும் அவிழ
அங்கழியும்
தான், தனதென்ற சிறு வட்டம்
சிறுவட்டம் தாண்டி எழுகின்ற பேரன்பு ஆகாய கங்கையையும் பூமிக்கு இறக்கிவரும்
துாயன்பின் துளி போதும் தொடங்கு.
14-02-1992
காலத்துயர்

Page 8
பிருங்கப்பட்ட ஒரு சூர்யகாந்திக்கான கவிதை
பிடுங்கப்பட்ட ஓர் இதயத்தின் பிரிவாற்றாது புண்ணுண்ட இந்தப் பூந்தண்டைப் பார்
பார்த்தாயா? விழியிருந்தால் பார்
யார் பிடுங்கினார்கள்?
சூர்யமே இலக்காய் சூல்கொள்ளும் ஓர் இதயகாந்தியை
பிடுங்கிப்போட ஒரு பிசாசுக்கே கை நீளும்
பிய்த்தெறிந்த அல்லிகளாய் சிதறுண்ட எனதகத்துள் பிடுங்குண்ட அந்த இதயத்தின் துடிப்பைப்பார்.
பூத்திருப்பைப் பறிகொடுத்த நினைவுகளின் காம்புகுக்கும் நெகிழ்வுருகல் நீயறிய மாட்டாய்!
சிதறுண்ட அகத்தைச் சேர்த்தெடுத்து உறவின் கொடியோட்டப் பந்தலில் படரவிடும் வரை - பார் என் கையும் முள்கொள்ளும்
காலத்துயர்

தள்ளி நில் பிய்த்துப் பிடுங்குதற்கு நகங்கொண்ட பிசாசே உன் கையை எடு! எம் உயிர்கொண்ட பிணைப்பின் வலயத்துள் ஏன் நுழைந்தாய்? உந்திக் கமலத்தின் உடனிருப்பை ஏன் பறித்தாய்?
குறுநகை மலர்வுகளை குழந்தைகளின் கழுத்தைத் திருகியெறிந்ததெனக் காலடிக்கீழ் போட்டாயே பாவி! பால் குடியின் மென் கதறல் கேளாச் செவி படைத்தாய்
காலையெனக் கமழும் கிராமத்தின் இதயத்தை பெயர்த்துப் பிடுங்குகிற கோரக் கொடுங்கையே துாரப் போ!
எமது உயிர்ப்பு வலயத்தின் எல்லைக்கு அப்பாற்போ!
பிசாசுகளுக்கல்ல எங்கள் பூந்தோப்பு பெயர்த்து எறிவதற்கல்ல உயிர் மலர்வு
அதனை அதனதன் கண் மலர விடு! எல்லையின்மை ஏந்த இதழ்விரி தேன்சுரபிகளின் இனிதிருப்பைப் பிடுங்காதே
விலகுங்கள் பிசாசுகளே வேர்கொண்ட வாழ்தோப்பில்
விருட்சங்கள் பூத்திருக்க.
15-02-1992
காலத்துயர்

Page 9
அது ஒரு காலம்
அது ஒரு காலம்
ஆமாம் எங்கள் மண்ணில் நாங்கள் இராசாக்கள் எங்கள் வழியில் குறுக்கிட எவருமில்லை வாழ்வில் இனிமை வழியும் கனவை வறுமை கூடத் தடுக்கவில்லை.
ஆமாம் அது ஒரு காலம்
வரண்ட மண்ணில் வாழ்வை விளைத்தோம் வாய்க்கால் ஒரப் புல்லுக்கும் வாழும் முறைமை காத்தோம் வியர்வை சொரிந்த உழைப்பின் விளைச்சல் முன்றலில் அனைவர்க்கும் காலம் வண்டிமாட்டின் சதங்கைகளாய் கலகலவென்னக் குலுங்க நடந்த அது ஒரு காலம்
ஆமாம் எங்கள் வயல்கள் எங்களுடையவை எங்கள் தெருக்கள் எங்களுடையன இனியது இரவு இனியது நிலவு இனியன எங்கள் காலை ஒவ்வொன்றும் வாழ்வொரு காதற் தேன்வதையாக சுவைத்த
அது ஒரு காலம்
இன்றோ எங்கள் மண் கைம்மை பூண்ட பெண்ணாக பட்ட காயங்கள் எழுப்பும் ஒலங்களோடு
ஆமாம்
இது ஒரு காலம் குருதி சுவறிய தெருக்களின் மீதில் அடிமைகளாக.
25-03-92
காலத்துயர்

காலத் துயர்
என்னுயிர்ப் பங்கி நாம் பிரிவுற்றோம்
பிரிவின் துயரில் நெகிழ்வுறும் போதெல்லாம் உணர்வின் திரண்ட கொடியாய் நீ எவ்விதம் தழிஇக்கிடக்கிறாய் என்பதுணர்கிறேன் நினைவில் விலக்க முயல்கையில் படரும் உணர்கொம்பின் மென்முனை முறிந்து போவது போன்ற வேதனை என்னுள்.
துயர்க் கொடீ உணர்வின் மென்தண்டாகிப் போனேன் நான் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகும் வெண்பனியின் இதயம் படைத்தேனா? இல்லையெனில் ஏன் சிறு துாசியின் அலைவும் என்னைத் துன்புறுத்துகின்றது சிற்றெறும்பின் நசிவும் நோகிறது காற்றில் முனை நடுங்கும் தளிரும் உறைபனியின் தோய்வில் இமை நெகிழ்த்த இயலாச்சிறுபூவும் காணில் உயிர் வேகிறது.
என்ன இது? ஏனிந்தத் துயர்? என்னைப் பிரிந்ததிலா? எல்லாவற்றினதும் உள்ளோடி நின்ற உயிர்ப்பைப் பிரிந்ததிலா?
இன்னும் கேள் தளிரீ
என்னைப் போலவே வாழ்வகத்தைப் பிரிந்த மாந்தர் பலர் ஊரகத்தே உணர்வுகளைக் கைநீட்டி கொண்டும் கொடுத்தும் குலவிய என்புலத்தார் உணர்வின் இழையறுந்து ஊமையராய் உலைகின்றார் வீதியெல்லாம்.
காலத்துயர்

Page 10
பனி உறைந்த இன்றைக் காலைப் பொழுது அதிர வந்ததொரு பேருந்து அகதிமுகாம் வாசலிற்கு பொருக்குலர்ந்த புலராமுகங்களுடன் இடுக்கிய குழந்தைகளும் சிறுச்சிறு முடிச்சுக்களுமாய் இழுபறிப்பட்டு ஏறுகிறார் மீண்டும் ஒரு வேர்கிளம்பல்
விழுதுவிட்டுக் கிளையெறிந்து
வேர்கொண்ட வாழ்வு வேறுவேறாய்ப் பெயர இருப்பிழந்தார் இப்போது எந்தக் காடோ கரம்பையோ முள்விளையும் பாலையோ போக்கறியாவாழ்வின் பொறிதளத்தை நோக்கியோ போகின்றார் அவரின் உளப்பொருமலை ஆரறிவார்?
காலம் இவரை எக்கரையில் சேர்க்குமோ? யாருக்கு யாரை உறவாக மீதம் விடுமோ? பாரெல்லாம் இந்தப் படரும் துயர்தானோ?
பாழும் மனிதப் பிறவி படும் பாடெல்லாம் என் நெஞ்சின் படுகையிலே காலத்துயர் நெய்தல் காணடியோ ஊரும் உறவும் ஊர்வன பேர்வனவும் உணர்வற்றனவும் என் வாழ்நிலையில் உராய்ந்துராய்ந்து உணர்வெளியில் உயிரொன்றக் கரைந்துருகி சொரிவாய்ச் சொரியுதடி துயர்ப் பெய்கை தொல்லுணர்வின் மென் கசிவோ?
துாரத்தே தொடுவானை நீலக் கடல் நனைக்கும் ஈரவளைவில் விழிதோய்வாய்
LITULe
உன் காலடிக் கீழ் பூமிப்பரப்பெங்கும் புல்லிதழ் நுனியெல்லாம் ஆவிஉயிர்க்கிறது என் இதயம்
30-02-1992
காலத்துயர்

உயிர்ப்பின் கணங்கள்
பேரிருப்பினின்றும் எனைப் பிரித்த மனம் போல இடைமறித்த திரைகடல் காலாதிகாலத் துயர்ப் பரப்பை தாண்டவா பிறப்பெடுத்தோம்?
மூன்றாம் பிறைகண்டு உன் முறுவல் கண்டு கடவுளை வேண்டி நடந்த பயணம் தான் வழியெல்லாம் நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் மண் பெயர்ந்து ஏகுகிறார் மக்கள் மணலுட்புதை தேரின் வடமிழுத்து மாள்கின்ற துயர்ப்பயணம் தேரூர்ந்த தடமாய் நெஞ்செல்லாம் ஏதோ நெருடல் போகின்றேன் புலர்வோடு மீள்வனென
இடைமறித்த கடல்தாண்டி இக்கரை வந்து சேர்ந்ததன் பின் திரும்பிப் பார்க்கிறேன் தொலைவில் இருளின் புகாருள் புதைவுறுகின்றன எம் தீவுகள்
துயரப் பெருமூச்சிழைய
பெல்ல இசைக்கின்றேன்
மிதியுருளி உருள்கிறது
உறவின் சுவடறியாத் தெருவழியே
காலத்துயர்

Page 11
10
விடிகிறது காலையா விடிகிறது இங்கெல்லாம்? மனதின் ஒலம் தொலையா நீள்வில் துயரின் மற்றுமோர் படிவம் புரள்கிறது
துயிலற்றுப்போன இரவின் சுமை சுமந்த விழிகளும் கல்லாய்க் கணக்கின்ற நெஞ்சுமாய் எழுந்து நகர்கின்றேன்.
தெருவெல்லாம்
துயர்ப் பறவைகளாய் கையலைத்துப் பதறும் மனிதர் காலப் பெருமூச்சு இழையக் கணக்கின்ற காற்றை எதிருந்திப் பாலத்தின் வாசலை அணுகவும் சொன்னார்கள் சேதி
“எம் தீவும் பிறர் கொண்டார்”
“பயணம்” “பயணமோ? பாலம் பிளந்தல்லோ போச்சு” “போச்சுதா?” “போச்சு”
போச்சுது கைகோத்த சங்கிலிப் பாலம் அறுப்புண்டு போச்சுதடி கூறுண்டு துடிக்குதெல்லோ ஒரு கூட்டுப் பறவையடி உறவு பிளந்தெல்லோ உயிரலகு இரண்டாச்சு.
பாலம் பிளந்து கிடந்தது கிடந்ததேதான் ஒரு பூச்சி நகரவில்லை பிளவுண்ட எதிரெதிர் முனைகளிலே பகை மூட்டம் அரண் கொள்ளும்
பாளமாய்ப் பிளந்தது என் நெஞ்சகம்
கரைகொள்ளாத் துயர் திரண்டு பெயர்ந்து வந்து மோதுகுது
காலத்துயர்

தொலைவிலே வானின் துயர் வளைவில் புதைந்த விழி மீளாமல் கைபிளந்து நிற்கின்றேன்
பிளவுற்ற கைகளிடைக் காலம் தன் முகம் புதைத்து கதறியழும் குரலை காற்றெடுத்துச் சென்று ககனவெளியலைப்ப திசையின் சுவர்களதை எதிரறையப் புவியின் செவிப்பறைகள் அதிர்ந்தனவோ? திகைத்துப் போய் நிற்கிறேன்! திகைப்பின் கணங்களைத் திருடிப் புகுந்ததோடி தொல்லிருள் தான் தொல்லிருளின் சூழ்வில் வழி மறிக்கப் பட்டதடீ எம் வாழ்முழுமை
நீயும் நானும் தனித்தனித் தீவுகளின் திட்டுகளில் குழவும் குரைகடல். பனிமூட்ட நெய்தற் பரப்பெங்கும் துயர். பெருமூச்செறிகை சுடுகிறது இருளில் பெயர்ந்தலையும் நிழல்களென யார் யாரோ போகின்றார் வருகின்றார் பாலத்தின் பிளவை ஊடறுத்தோடும் உப்புக் கடல்நீரில் தொல்லிருளின் வீழ்படிவம் கண்டோ விலகி இவர் போகின்றார்
போக்கென்ன வரவென்ன? புறப்பாடில்லாது இருப்புற்ற தேராக நான் காத்திருக்கின்றேன் பிளவை மேடுறுத்தி இணைவின் முழுமைக்காய் பயணிக்கும் நாள் நோக்கி நான் காத்திருக்கின்றேன்.
MNAuh 11

Page 12
12
தெரியுமடி
நீயும்தான் காத்திருப்பாய் நெருஞ்சி பூத்த வழியெல்லாம் விழிநோக. ஒற்றைக்குருவி உன் உயிர்ச்சிறகின் பதகளிப்பை இந்த காற்றெனக்கு சொல்கிறது தீக்குள் தகிக்கின்ற தேவதையுன் துன்புறுதல் எலும்பின் குருத்தையெல்லாம் உருக்குதடி
என் செய்ய?
இதோ பிளவின் வாசலிலே காலமகள் நின்று தன் கையைப் பிசைகின்றாள் ஒலம், துயரம் உனக்கு மட்டுமா பெண்ணே மனவாசற்படியெல்லாம் குமுறலடி.
வாராதிருப்பதுவும் வழியடைத்துப் போனதுவும் காலம் பிளவுண்டு கண்ணெதிரே நிற்பதுவும் கண்டு துயரில் அழிதல் விதியாமோ? காலத்தை வென்றெழுதல் கைகூடாதோ?
கால முதிர்வின் கனிவிற்காய் காத்திருக்கின்றேன் நான் வாழும் கணங்களுக்கு உயிரேற்றி
ஆழ்துயரில் வீழ்ந்த அதிர்ச்சி அகத்தின் அடியோட்டத்தைத் திறந்து விட பேருணர்வில் நீருறிஞ்ச விழையும் நீள்புலனின் வேராகக் காத்திருக்கின்றேன் வாழும் கணங்களுக்கு உயிர்பாய்ச்சி!
கூருற்ற உள்ளுணர்வு நீர் மொண்டு வீங்கியெழுந்து நெடுந்தாரைப் பனிப்பின் நுண்துளியாய் காத்திருப்பின் நாசி நுனியில் நறுக்கென்ன மோனப்பெருக்கில் முக்குளித்த கணங்கள்.
காலத்துயர்

பேரிருப்பின் சிறு பருக்கையைப் பிய்த்துண்டேனோடி பேதாய் கேள் பிரிவின் துயரழிந்த கணங்களவை.
நீயறிக தொல்லிருளும் துயரும் வேர்கொள்ள சுயமழிந்து வீழ்தல் தகுமோ? உன்னதத்தை நாடும் உயிர்க்குருத்தை துயர்தின்ன விடலாமோ துாயாய் வாழ்வெடுத்தோம் ஆழ்தளத்தை அறியாது அழிவதற்கோ?
என் உணர்வின் வளமார்ந்த பாதியே நானறிவேன் எரிகனலை உள்வளர்த்தபடி அசோகவனத் தவமிருப்பாய் காலத் தீ உன்னுள் கனன்றெரியும் எனதுள்ளும்தான் வழியடைத்த தொல்லிருள் விழுங்கி வளர்கிறது ஆதி நெருப்பின் கொழுந்து.
அசோகவனத்துயரின் தகன மோனத்தினுாடே தெரியுதடி பிளவின் தடமழிந்த மேம்பாலம்
சுதந்திர மேம்பாலத்தில் எம் சுகித்திருப்பின் உயிர்த்தளத்தில் பாதிகள் அல்லடி நாம்
முழுமைச் சுயமடியோ என் மூன்றாம் பிறை நகையே!
31-01-1992
oodud 13

Page 13
14
தனித்து விடப்பட்ட தீவின் புதல்வனுக்கு
உலகின் கண்ணாய சூரியன்
தனித்துப் போன அந்தத் தீவிலும் எழுகிறான்.
அருமைப் புதல்வனே
நீயும் எழுந்திருப்பாய் கைவிடப்பட்ட கிராமத்தின் கண்மலர்வாய்.
காலத்துயர்

முன்பெல்லாம் நிலா மலர்ந்த முற்றத்திலே மார்பிலே சார்த்தியுன் தலைமுடி கோதிய விரல்கள் இன்று வெறுமனே நெஞ்சை வருட நனைகின்ற விழியோரம்
GT6 கிராமத்தின் கனவுகள் தடுமாறும்.
எட்டாத் தொலைவில் இங்கேயுன் தந்தை
எனினும் நீ தனித்துப் போனவன் அல்ல.
ஊரெல்லாம் உழுது வரும் உன் செயலின் விளைவேந்த மடிவிரித்துக் காத்திருப்பாள் கிராமத்தின் தாயினியாள்
அண்ணாந்து பார் அங்கே வானமெனும் தந்தை உன் நிமிர்வை கூவி அழைக்கிறான்.
உனக்கென்றோர் காற்று வெளி உனக்கெனவும் சிறகுகள் உனக்குள்ளும் வானெட்டும் உந்தல் சூடிக்கொள்ள ஒரு சூரியன்
காற்றிலேறி கிராமத்தின் குட்டி இளவரசனாய் வலம் வா
அன்னையின் ஏந்துகரமாய் விரிந்த வீதியெல்லாம் உனதேதான்.
10-03-92
MJN9Auur 15

Page 14
16
வாழி நீ திங்காள்
தென்கடலின் ஒரம் திகழும் நிலாக்கொழுந்தே துாரத்தே எம்தீவு இன்று துயராடும் தனித்திடல்
தீவுத்திடலின் சிறியதொரு முற்றத்திலே என் வாழ்முதலின் வித்துக்கள் வளர் முளைகள் உனை நோக்கிக் கை நீட்டும்.
வாடியிருக்கும் இளவதனங்களில் வழித்தெடுத்த பச்சைவெண்ணெயினால் தடவி உச்சி முகர்ந்து வருவாயா? ஓ நிலவம்மா அவரை முத்தித்த அடையாளம் உன் முகத்தில் நான் காணநில்லு
பிரிவாற்றள் என் மனையாள் ஒற்றைக் குருவியென உயிர் இழந்த குரலினாள் உண்ணும் கவளம் ஒவ்வொன்றிலும் நீர் உருகிச் சொரியும் விழியாளின், கன்னங்களை மென்கரம் நீட்டித் துடைப்பாயா?
புண்ணுண்டிருக்கும் என் புனிதைக்கு அன்பொன்றே அருமருந்தாம் அதை வழங்கு தேன்பிறையே.
இன்னும் எம்தீவில் வேரறா வாழ்வின் மிடுக்குடையார்,
காலத்துயர்

அன்பகலாத அருந்தவத்தார், துன்பின் விளிம்பில் துயராடும் முதியவர், குஞ்சு குருமான்களை தம் சிறகுள் தழுவுகிற தாய்மார்,
மற்றாங்கே சுற்றத்தின் வரவும் சுகதுக்கமும் முன்னுரைக்கும் காக்கைகள், வெளியைக் காதலிக்கும் குருவிகள், முள்முருக்கில் தம் மூக்கேபோல் பூத்த செவ்விதழ்கள் கோதி செல்லம் பொழியும் பசுங்கிளிகள், முற்றத்தே "குறுகுறு" நடக்கும் புறவுகள்,
உறவு சூழன்பின் துணையிழந்து கதறியழுகின்ற மாடுகள், கன்றுகள், ஓயாமல் ஊளையிட்டு அழுகின்ற நாய்கள்,
கைவிட்டுப்போனவரின் காலடியை பொத்திவைத்து காத்திருக்கும் புழுதி மணல் தெருக்கள்,
ஆரும் அறியாமல் போனவழிக் காதலுக்காய் பனிநீர் பொசியும் நிழல் தருக்கள்,
இன்னுமொரு மாரிக்காய் இதயம் பிளந்து கிடக்கின்ற ஏரிகள், குளங்கள்,
இவைக்கெல்லாம் வாரி அருள் சொரியாயோ வள்ளல் பிறைத் திங்காள், எம்புலத்து மக்கள் எய்தும் இருள்நீங்க தொன்மெய்ச்சுடரே துணையிருப்பாய் வாழியவே.
10-02-1992
WMwb bur 17

Page 15
18
குருதிக்காட்டின் ஒலங்கள்
““உளையிலிடுவாளை”
ஆத்ம உக்கிரத்தோடு ஓங்கி ஆணையிட வல்ல
ஒருகுரல்தானும் இன்றில்லை.
என்ன நடந்துகொண்டிருக்கிறது? இந்த
அழகிய சொர்க்கத் தீவில் - ஏணிப்படி நரகத்தின் கூக்குரல்கள்? சிந்திய முத்தின் துளியாம் இதனுள் உப்புப் பேர்ந்த குருதிக்கடல் மறிந்து மோதலென்ன?
ஒருமொழிபேசும் இனங்களே இணைவின்றி எதிர் எதிராய் கிராமத்தின் மேல் கிராமங்கள் பட்டணங்களின் மேல் பட்டணங்களென வெகுண்டெழுந்து பட்டயங்களை உருவியாயிற்று.
இலக்குகள் மாறிய மோதல்கள் எங்கும் இரத்தங்களின் கூப்பிடல்கள்.
காலத்துயர்

நள்ளிரவு. துயில்கின்ற ஊர்மனையின் நெற்றி விளக்கு துடிக்கத் துடிக்க விழுந்த அடியைத் தொடர்ந்து மின்விச்சு வெட்டுக்கள் தாறுமாறாய்
தாறுமாறாய்.
இரவுக்கன்னியின் இரத்தப்பெருக்குள் துவண்டன துண்டாடப்பட்ட உயிர்மத் துடிப்புகள். விசிய வாள்களின்
குருதிவிளிம்பில் குரூரத்தின் வெட்டுமுகங்கள்.
தொழுகைக்கு குனிந்த தலைகளை, கூப்பிய கையோடு மன்றாடிகளை, பூக்கலையாத கூந்தலுடைப் புனிதங்களை அவர்களுந்தான்
இவர்களுந்தான் முடிவற்று வெட்டிக் கொண்டே இருக்கிறார்கள் கை சலிக்காமல்
பூமித்தாயின் இருதயத்தில்
பெரிய குழி
குருதிதேக்கிக் குளியலிட
குளியலிட்டு
குளியலிட்டு எழுந்தலைகின்றார் யாவருமே புனிதயுத்தப் போர்வை போர்த்தி. எவருடைய வாள்களும் உறைகளுக்குள் இல்லை.
முட்களை வெட்ட ஏந்தியவாள்கள் மலர்களை,
தளிர்களை,
பிஞ்சுகளை
குலுங்கக் குலுங்க கனிய நின்ற தோப்புகளை
காலத்துயர் 19

Page 16
20
வெட்டி எறிந்த குருதிக்காட்டில் எதுபூக்கும்?
தளிரின் குருதி கணுவைக் கூப்பிடுகிறது பூவின் குருதி பூங்காம்பை இரங்கிறது காம்பின் குருதி பூந்தண்டை ஏங்கிறது புடுங்குண்ட வாழ்வின் வேர்க்குருதி பூமாதை அழைக்கிறது.
மண்ணவளே மாதோ உன்குருதி ஊற்றை உறிஞ்சித் தழைத்தவர் நாம்
இதழ் இதழாய் பிய்ந்தோம் பிடுங்குண்டோம் பிடுங்குப்படுகின்றோம்
காற்று வெளியில் வாழ்வியற்றும் கனவின் தலைகளைக் கொய்து நிதம் உருட்டுகிறோம் உன்மடியில்.
இருளின் போர்வையினுள்ளிருந்து இழுத்தெடுத்த பட்டயங்களால் துயிலினிய நரம்புகளை சோரி சிந்தச் செய்கின்ற நாமெல்லாம்
நாளைக் காலை முளைத்துவரும் சூரியர்க்கு கண் முழிக்கத் தகுமோடீ தாய் நல்லாள் நீயே சொல்.
(1992 சித்திரை இறுதியில் கிழக்கில் முஸ்லீம்-தமிழ் கிராமங்கள் மோதிக் கொண்டபோது)
23-04-1992
காலத்துயர்

நிமிர்வு
விழிந்திரு இன்றையத் தியான அமர்வில்
TSRussi 60LD
தண்குரலை றங்கிமுரசறையலாம்.
உயர்மலையின் சமிக்ஞை வாங்கியாய் அகம் திறந்திரு பிரபஞ்சப் பேருணர்வின் மீட்டல் நிகழலாம்.
எய்தும் பெரும்பிறப்பில் சிறுமை கழன்று
Al-Ay
எழுந்துநில் செயலாண்மை பொதியநட
SuStoSsi செங்கோன்மை நினதாகலாம்.
(தோ நிமிர்வின் தேவபாட்டையில் உன்பின்னால் ஆயிரம் காலடிகள் சப்திக்காமல்
1-02-1992
NAAM 21

Page 17
22
தொல்லிருப்பு
நாகரிகம் தொட்டிலிடும் முன்னால் தொல்லாற்றங் கரையொன்றில் பாசிப் பழுப்பேறிய பாறை மீது அமர்ந்திருக்கும் ஆதிநிர்வாணியாய் எனை உணர்கிறேன்.
கவச குண்டலங்களை இழந்தவனாய் ஒட்டியிருந்த அங்கிகள் பிடுங்கப்பட்ட நிலையில் நானும் என் தீவும்.
சோகச்சுருதி மாறாக் குரைகடல், வெட்டுப்போகங்கள் தப்பிச் சடைத்திருக்கும் விருட்சங்கள், ஒற்றையடிப்பாதை உயிரின் சுவடுகளை நறும்பித் தின்னுகின்ற முட்புதர்கள், தொல்பழங்குடிகளென முதியவர்
கைவிடப்பட்ட தீவகம் முழுவதுமே காலத்தின் மூப்பேறல், தொன்மையின் அடையாளங்கள்.
காலத்துபர்

வேர்கிளம்பிய தொல்விருட்சம் குடைசாய்ந்த ஓசை அதிர்வினை உள்வாங்கி வீங்கியதென்ன கிராமம் முழுவதையும் தொன்மை உறைபோட்டிருந்தது.
தொன்மையின் உறைவினுள் தொக்கிருந்த காற்று கடற்பாசிப் பூங்கறை நாற்றத்தை எற்றிவிட்டுக் கடந்துசெல்கையில் துாவெனக் காறித்துப்பி நிமிர்கிறேன்
காலவெளியில் கதிர்த்தெழும் தொல்பிழம்பெனச் சூரியன் ஏறுமுகம் மேலும் மேலும் கடுப்புற காலத்தால் தடித்த தோலிலும் தொல் சூட்டின் வெக்கையை உணர்கிறேன்.
கடலாடு தொல்விளிம்பில் தன் வெக்கைக்கே தானாற்றச் சூரியன் மூழ்குகையில் உமிழும் சாமூச்சை குழைத்து எங்கும் அப்பினாற் போல இருள்
தொல்இருள்.
பன்முகப்பாடு அழிந்து இருளில் தன்முக(மு)ம் அழிகிறது புவித்தலம்.
என்முகம் தேடுகிறேன் நான்.
காலத்திரை எறிவின் துளியகத்துள் கலங்கும் யுகங்களின் திணிவென கப்பியிருக்கும் தொல்லிருளில்
காலத்துயர் 23

Page 18
24
என் முகம் தேடுகிறேன் நான்.
என் இருப்பு எங்கே என் இருப்பு எங்கே
கேள்வியின் சூக்கும அதிர்வின் கிளர்வென்ன எழுகிற திங்களின் திரள்வுருகி யுகங்களின் இருளில் வழிகிறது.
களங்கமுற்றனவெலாம் கழுவித் துடைக்கப்பட்டு ஒளியேற்றம் கொள்வதென ஒரழகு நிலாரித்து எங்கும் நிறைகிறது.
நான் அமர்ந்திருக்கும் பெரியகிராய் பாற்கடலோ எனப்பளிங்குற நண்டுகளும் நெட்டுரிகளும் நழுவித் தழுவுகிற கரையில்
பறையாமை ஒன்று
ஐந்தும் ஒடுக்கியதாய் அசைவின்றி.
கழுவித் துடைத்த பார்வை மதியத்தால் காண்கிறேன்
நான் வீற்றிருந்த பாறை சிறுத்துச் சிறுத்து தொல்லுலகைத் தாங்கியிருக்கின்ற ஆமையாய் மாற்றமுறுகிறது.
நானும்
நான் சார்ந்திருந்த உலகும் தொல்கூர்மத்தின்
உள்ளொடுங்க தன்முனைப்புறும் என்முகமும் அழிகிறது.
ஆதி இருப்பாய் அமைந்தோன் காண்க.
19-09-1994
காலத்துயா

தோப்பிழந்த குயிலின் துயர்
திருக்கோணமலை வீதியொன்றில் விலைப்பட்டிருந்தது நுங்கு
வியப்பால் குமிழ் திறந்தென விழிகள் மூடாமலேயே நின்றிருக்க நீள நடந்தன நினைவுகள் நிமிர் பனங்கூடலாம் தீவினை நோக்கி.
நுங்குக்காலம்
அணில் கொறித்து வீழ்ந்தவை தேடி பிள்ளைகள் வெட்டி உணக்கண்ட மனையாள் பார்வையாலேயே எனைத்துாண்ட மறுநாளே
நூறு நூறென நுங்குகள் முன்றலில்.
குதூகலந்தான்.
குமிழ் நீக்கி ஒவ்வொன்றாய் வெட்டிய நுங்கின் கண்கள் இனிதுாறத் திறந்து உண்டால் அம்ம, அமிழ்தம்.
மனையாளும் மக்களும் மகிழினிய சுற்றமுமாய் சூழவிருந்துண்ட சுகம் இன்னும் நினைவின் கண் தெறிக்கும் நுங்கின் அமிழ்தாய் உரைசலிடும்.
காலத்துயர் 25

Page 19
26
உரைசலிட உரைசலிட மெல்ல மெல்ல தித்திப்பின் அடியில் இற்றைநாட் துயரின் கயர் பிரளும்.
தொலை தீவின் அவலம் தொண்டைக்குழிவரை திரண்டு வரும்.
திரண்டிருந்தோம் பனந்தோப்பாய் தொலைதீவின் மக்கள் நாம் இந்நாள்
நுங்கின் குலைபோல் சிதறுண்டு போனோம் தெறித்தோடிய ஒன்றின் சிதைவாய் திருக்கோணமலையில் நான் திக்குக்கு ஒருவராய் எம்மவர்கள்.
ஒக்க இருந்து உயிர்வளர்த்தோமே எப்ப வரும் இனிய எம் நாட்கள்?
கூரையின் தாழ்வார நீர்கோர்ப்பாய் தொடர் நினைவுகள் துயர்கோர்க்க நின்றிருந்தேன்
விழிகளில்
திரண்டு
சுட்ட பழம் போல் தொப்பென்று வீழ்ந்தன நீர்த்துளிகள்.
துடைத்தபடி நடக்கின்றேன் தோப்பிழந்த குயிலின் துாரத்துக் கசிவோ தொடர்ந்தபடி.
23-06-1995
காலத்துயர்

ஈரப்பதன்
இந்தமண் எனது கால்களின் கீழுள்ள துாசிப் படலம் அல்ல. உணர்வார்ந்த பிடிப்பின் துார்ந்து போகாத உயிர்த்தளம்.
வேலியடைப்பிற்குள்ளும், வெறும் பற்றுக்களின் சுற்றுகைக்குள்ளும் இது இல்லை பண்பாடென்னும் வாழ்வூட்டம் பருகப் பெற்றோமே அந்தப் பச்சைக் கடனுக்கான உறுதிப்பத்திரமாய வாழ்விற்தான் உள்ளது.
வாழ்வில் பேணப்படும் ஈரப்பதன்தான் இம்மண்ணினது குருதிச்சூட்டை தக்கவைத்திருக்கும். மண்ணின் ஒவ்வோர் உயிர்முளைக்கும் இந்த ஈரப்பதனே காப்பு.
FFe#IT எனக்கோர் வரமருள் என் சிந்தைச் சுயம்புலத்தில் காலவிதைப்புக்கான ஈரப்பதனும்
உயிர்ச்சூடும் எப்போதும் சுவறியிருப்பதாக.
31-02-1992
காலத்துயர் 27

Page 20
28
குருதி உறைந்த மெளனத்தினின்றும்
இதயமே ஏன் கிடந்து புலம்புகிறாய்
உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட தீவின் குமுறலாய் புலம்பெயர்ந்து அலைகிற குரல்களின் பாடலாய் பொழுதெலாம் துயரெடுத்து நீள்கிறது உன் புலம்பல்.
என்ன நேர்ந்தது? எந்த ஈட்டிமுனையின் குற்றுயிர்த் துடிப்பானாய்? இதயத்து மென்சவ்வில் கோல்கொண்டு அறையும் கொடுங்கோன் யார்?
சொல்
சொல்லியழு. அழுவதற்கான உன் சுதந்திரத்தை வாய்விட்டுச் சொல்லி அழு.
எதை இழந்தாய்? எதனின்றும் பெயர்த்தெடுக்கப்பட்டாய்? பச்சையாய் தோண்டி உனை துடிக்கத் துடிக்க தொங்கவிட்டவரார்? குருதி உறைந்த மெளனங்களின் குரலெடுத்தோ புலம்புகிறாய்?
காலமே நில் இரக்கமற்றுச் செல்லாதே. குருதிசொட்டும் இதயத்துக்குயிலின் சுருதியைக் கேள் அறுபட்ட நரம்புகளின் தொலைந்தலையும் கீதத்தைக் கேள் அகண்டத்தின் செவிமடுப்பை நமஸ்கரித்துக் காத்கிருக்கும் இதன் பாடல் உனக்குச் சமர்ப்பணம்
05-03-1992
காலத்துயர்

முடிவது எங்கு?
(1)
விண்ணிருந்தும் கைவிடப்பட்டவரின் குரல். விஞ்ஞானம் உந்திய விண்கலத்திலிருந்து விண்ணோடிகளின் மண்ணோக்கி விழுதிறங்கும் நாட்பட்ட கதறல்,
"ஏன் என்னைக் கைவிட்டீர் ஏன் என்னைக் கைவிட்டீர்;
மண்ணின் பெயர்வில் வேரற்றுப்போன குரல்களில் இதுவும் ஒன்று.
வானக் கடலில் கைவிடப்பட்ட தீவாய் மிதக்கின்ற செய்மதியில் அறையப்பட்டவரின் குரல்
ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் ஆருமில்லைக் கேட்பதற்கு
(2)
வல்லரசுகளின் பனிப்போரின் இன்னொரு தறமாய் மாறிய விண்வெளி அறை கூவல்கள் மண்ணகத்தில் நாறும் சேரிகளையும் கணக்கில் எடுக்காமல் நிகழ்த்திய பாய்ச்சல்கள்,
காலத்துயர் 29

Page 21
30
விண்ணகத்தையும் யுத்த களமாக்குவதில் போய் முடிய
“பால் வழி”யில்
"மரணவெள்ளி”களை விதைக்கும் போர்த்திட்டமும் ஆயிற்று.
இரும்புத்திரை அகல பனிப்போர்த்திரையும் விலக திரை நீக்கத்தோடே எல்லாமும் அரங்கேறத் தொடங்கின.
திறந்தவெளிக் கலகலப்பில் மறக்கப்பட்டவற்றுள் மனிதனை ஏந்திய விண்கலமும் ஒன்றாகியது.
விண்கல மனிதன் துண்டுபட்ட ஒன்றியத்தின் சேதியறிந்தானா? சித்தம் கலங்கினான்.
“இறங்குதளம் எங்கே?” "மிர்”ரோடு தொடர்பு கொண்டான் "மீட்பர்” யாரென்றான். “மிர்” ஆய்வகத்தின் கணனிகள் "உர் உர்”ரென்று கூவிக்கொண்டேயிருந்தன.
மீட்பதற்கு யாருமில்லை விட்டெறிந்த தொங்குகலம் அலறும் குரலோடு பிரபஞ்ச வலம் வரும்.
“ஏன் என்னைக் கைவிட்டீர் ஏன் என்னைக் கைவிட்டீர்"
மீட்பதற்கு யாருமில்லை விஞ்ஞான மீட்பருக்கோ
வேறுண்டு பலசோலி ஆயுத வியாபாரச் சந்தை அமர்க்களம்.
காலத்துயர

ஆயுதங்கள் ஏலம்விடும் கூச்சல் களேபரம்
எப்படிக் கேட்கும் கைவிடப்பட்ட குரல்கள்.
(3)
“வாங்கோ வாங்கோ வாங்கிக் கொல்லுங்கோ அணுகுண்டு ஆக்கிகள், சாதனங்கள், ஊக்கிகள் விலை மலிவு விலை மலிவு”
“சிவப்பு முலாம் பூசாத பச்சை யூரேனியம் மிக மலிவு மிக மலிவு"
பூமிக்கு அடியிலே புதைத்து வைத்ததெலாம் வெளியரங்கமாக வேஷங்கலைந்தாடும் சுலோகங்கள் வியாபாரம் அமளி துமளி
ஆப்கானிஸ்தானிலே தாய்ச்சி மறித்தாடியவர் தரைவிலக கோழிச் சண்டைக்கும் கூரைபிளக்கின்ற உந்துகணை.
வளருது வளருது ஆயுதச் சந்தைகள் வளர்முக நாடுகளில்
யுத்த முகம் வீங்கூது.
வளருது வளருது
வளர்முக நாடுகளில் வயிற்றுப்பசி வீங்கூது. பெருங்குடல் சிறுகுடல்களை தின்னுகுது மூன்றாம் உலகம் எங்கும்
காலத்துயர் 31

Page 22
32
எழுந்து படர்கிறது சிலுவைக் குரல்
"ஏன் எம்மைக் கைவிட்டீர் "ஏன் எம்மைக் கைவிட்டீர்"
மண்ணிலும் விண்ணிலும் மாறி மாறி வல்லரசுகளைக் கூவும் வாளாவெட்டிக் குரல்கள்
வளர்முக நாடுகளின் எலும்புக் கூடுகள் ஏந்திய கபால ஒடுகளுக்குள் வந்துவிழுகின்றன இரத்தத்தை பிழிந்தெடுத்த வங்கிகளின் கடன் பத்திரங்கள்.
சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் மனிதனின் குரல்களும் பசியில் அறையப்பட்டனவாய். ஆவி அகத்ததா? புறத்ததா? ஆய்வார் எவருமில்லை.
கேட்பாரும் இல்லை.
கிளர்வாரும் இல்லை.
செவிட்டு விஞ்ஞான வல்லாண்மை உந்திய விண்ணோடியே கேட்கப்படாத எம் வாழ்வும் தொங்குகலம்தான்.
விஞ்ஞானத்தோர்க்கோ இன்று வேறு பலசோலி ஒருபெரும் பாய்ச்சலென சந்திரனில் அடிபதித்த சுவடுகளிலும் பூமியின் குருதிக்கறை.
அறஞ்செயவிரும்பென்ற ஒளவையின் இருப்பிடத்தை
காலத்துயர்

சுவீகரித்த காலடிச்சுவடுகள் தஞ்சமென கூவியழைத்தென்ன? கும்பிட்டென்ன?
நாட்பட்டு அழுகி உலரும் குரலாக விண்கலமும் வீழ்ந்தழிய காற்றுவெளியில் இடம் தாராளம்.
பூமியே நாளை ஒரு கோளப் போலியாய் மிதந்துருள பாழ்வெளியில் பரப்பதிகம் நாமறிவோம்.
புவிஈர்ப்புள் வாராத
திரு.மனிதா
திக்கற்று விண்கடலில் அலையும்
உன்குரலோடு ஏக்கம் தொனிக்கும் எம்குரல்களும் சங்கமிக்கும். ஆயினும் என்ன? ஒரு மீட்பின் குரலையே குருதிகொட்டச் சிலுவையில் அறைந்தவர் யுகம் இதிலே எங்களின் கதறல் எதைச் சாதிக்கும்?
சிலுவையில் அறைந்தவரின் சந்ததிகளின் சிதைவினை முன்னிரங்கி அழுத குரலையே கேலியாடி கேள்வி கொண்டறைபவர் இன்றுமிகக் கவல்கின்றார்.
ஓசோன் படலத்தில் ஓட்டையாம் ஒட்டை யார் போட்டது,? விஞ்ஞானத்தின் விபரீத நகம் பிறாண்டிய திக்கெல்லாம் தான் ஒட்டை உள்ளுணர்விலோ பெருங்கோறை. பூமித்தாயின் கருப்பையுள் கதிர்வீச்சு, இரத்தப்போக்கு
எவரறிவார்?
காலத்துயர் 33

Page 23
34
விஞ்ஞானக்காந்தாரி பெற்ற இயந்திர நுாற்றுவரின் இரும்புக்கரங்களிடை நெருக்குறும் ஆன்மாவின் ஈனக்குரல் எவர் கேட்பார்?
இயற்கையை சவாரிக்க முனைந்தவரின் எறிகயிற்றில் சிக்குண்டு இரும்புச் சிலுவையிலே தொக்கிற்று ஞாயிறு 616 ft (335 UTit?
திக்கிருண்டது திறவுகோலுக்குப் பதிலாய் ஆய்வாளர் கையில் இன்று ஆணிகளும் சுத்தியலும்.
இயற்கையின் குருதிப்போக்கில் நனைத்தெடுத்த அங்கிகளை ஏலம் புோடுவோர் சுலோகங்கள் எங்கெங்கும்.
விண்உயர இவர்வகுத்த எல்லைவரைப் பறந்தாலும் மண்ணில் பிணம் நாடும் கீழ்நோக்கு.
மனிதா
உன் இலக்கு எது? கரியமிலப் புகையிருட்டில் இலக்கு முகம் தேடிக்களைத்தாயா?
இரு சற்றே ஏகாந்தியாய் புலன் வழித்தரவுகளில் பொய் முலாம்களில் நெறியழிந்திட்டவரிடம் சற்றே விலகியிருந்து உள்நோக்கு உயிர் இருக்கும் இடம் நாடு.
காலத்துயர்

நீறு தங்கிய நினைவுகளைத் தேய்த்துப்பார் பிரக்ஞையின் இலக்குமுகம்
தெரிகிறதா?
இன்னும்
ஆழப்போ
பரிதிக் கனி பறிக்க உந்திய வாயு புத்திரனாய் உள்வெளித்தாவு.
ஒளிகூரத்
தெளிவேற உள்ளுணர்வு மீதுார பேர் இருப்பில் உயிர் தரிப்பு
அறிக உனதிருப்பில் இமயத்தின் வலுவேற்றம் உச்சியிலே விடுதலை ஞாயிற்றின் சிரசுதயம் மீட்டெடு! மீட்டெடு!
புவியெங்கும் உயிர்க்குருதிச் சுற்றோட்டம் நிகழுவிடு.
வாழ்வின் ஒளித்தொகுப்பு வையம் முழுமைக்கும் ஆகுக.
இலக்கற்று அலைபவைகள் கைவிடப்பட்டவைகள் பேரா இயற்கைப் பெருவாழ்வில் நிலைபெறட்டும் பேரா இயற்கை என்பது பேரிருப்பில் நிலைபெறுதல்.
(1992இன் முற்பகுதியில் ரஷ்யவிண்கலம் ஒன்றின் விண்ணோடிகள் இறங்குதளமற்றவராய் அலைந்தமை குறித்து பாதிப்பில் எழுந்த கவிதை)
15-05-1992
காலத்துயர் 35

Page 24
விழுதுவிட்டுக் கிளை
வேர்கொண்ட வாழ்வு வேறுவேறாய்ப் பெப
இருப்பிழந்தார் இப்போது
எந்தக் கரம்
முள்விளையும் பாை போக்கறியாவாழ்வின் பொறிதளத்தை நோ Girls றார்
அவரின் உளப்பொழு
 
 

r f
"
鼬 *