கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கானல் வரி

Page 1

)

Page 2

&TGOT6) Gif
சேரன்

Page 3
சேரனின் பிற கவிதைத் தொகுதிகள் :
இரண்டாவது சூரியோதயம்
шшо6йт

TGOTG) 6f
சேரன்
பொன்னி

Page 4
கானல் வரி 0 கவிதைகள்
உரிமை : சேரன் முதல் பதிப்பு : ஆகஸ்டு 20, 1989 விலை : ரூ. 6-00
வெளியீடு : பொன்னி, 12, முதல் பிரதான சாலை, நேரு நகர், அடையாறு, சென்னை-20.
அச்சு : இராசகிளி பிரிண்டர்ஸ்

சேரன்
ஈழத் தமிழர் போராட்ட அரசியல் நெறியை யும் வாழ்க்கை யதார்த்தத்தையும் இரண்டாவது சூரியோதயம், யமன் ஆகிய தமது கவிதைத் தொகுப்புகள் மூலம் வெளிப்படுத்தியவர் சேரன்.
"தேசிய ஒடுக்கு முறையின் ராணுவப் பயங்கரவாதம் ஆயுதப் போராட்டம் மரணம்இவையான இரத்தம் சிந்தும் அரசியலே இன்று எமது கவிதையின் பிரதான கூறாக அமை கிறது. இந்த வகையில் இவை தரும் சேதிகள், கிளர்த்தும் அனுபவங்கள் தொற்ற வைக்கும் உணர்வுகள் தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் புதிய வாழ்நிலைகளைக் கொண்டு வருகின்றன’ (மரணத்துள் வாழ்வோம்-சேரனின் முன்னுரை) என்று ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் பற்றி சேரன் குறிப்பிட்டிருப்பது, இரண்டாவது சூரியோதயம், யமன் ஆகிய இவர் கவிதைத் தொகுப்புகளுக்கு மிகவும் பொருந்தும்.
இதுவரை அறியப்பட்ட கவிதைகளுக்குரிய சேரனிலிருந்து இத்தொகுப்பு வழியாய் அறியப் படும் சேரன் வித்தியாசமானவர்.

Page 5
ஐந்து தலைமுறைகளைச் சேர்ந்த ஈழத்துக் கவிஞர்கள் இருபது பேரின் பன்முகப்பட்ட கவித்துவ வெளிப்பாடான பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் எனும் தொகுப்பில் முதலில் இடம் பெற்றிருப்பவர் மஹாகவி. இறுதியில் இடம் பெற்றிருப்பவர் சேரன். மஹாகவியின் புதல்வர் சேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சேரனின் கவிதை ஆக்கத்திற்கு கலை ஈடுபாடு கொண்ட அவர் குடும்பமே தூண்டுத லாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

1975 தொடரும் இருப்பு ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வருகிறது.
1976
ഞ്ഞഗ്ഗ
நிசி,
1977
காத்திருப்பு
கடல் தோணிகள் வரும் ஒரு மாலை.
1978
இறந்த காலம்
1979
போய் வருதல் சமாந்தரம் கொள்ளாத உலகங்கள் மழை காலமும் கூலிப் பெண்களும் பிரிதல்
பறந்து போகும் சிறகு,

Page 6
1980 வேர்களிலிருந்தும் பூக்கள் நதி மூலம்
கோடை
நிலாவெளி ஆகாயத்திலிருந்து பூமிக்கு கானல் வரி
திரிதல்
sts) SET6) DT&S இனியும் ஒரு முகம் எதிர் கொள்ளல்
நெய்தல்
பூமியின் நிழல்
1981
சடங்கு
ஒரு நாள்; இன்னொரு நாள் பகல் பொழுதின் மரணம்.

தொடரும் இருப்பு
கரை முழுதும் ஈரமணல் ஒயா திரைந்தபடி தொடர்ந்தும் அலைக்கரங்கள் நிலம் நனைக்கும் கால் பதிய நீள நடக்கின்றேன் நடையில் நழுவி விழும் ஒவ்வோரடியும் தடங்கள் பதிக்கு மொரு வாழ்க்கை நிகழ்வாம் காலமெனும் வெப்பக் கதிர் வீசிச் சூடடிக்க எல்லாத் தடமும் உதிரும்; உலர்ந்து விடும்
தனித்தபடி எஞ்சுகிற ஒன்றோ மீண்டும் தடங்கள் பதிக்குமொரு வாழ்வில்
இனித் தொடரும்
1.
சேரன்

Page 7
அலைக் கரங்கள் மணலுக்கு ஆகாய வெளியிருந்த செம்பரிதி கடலுக்கு ஆழப் பதிந்தபடி என் கவிதைச் சுவடுகளோ உயிர் வாழும் துடிப்பிற்கு.
O
கானல் வரி

ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வருகிறது
இலையோடும்
அலை ஒடும் வயல் வெளியை வகிடெடுத்த புதுத் தெருவின் எதிர்முகங்கள் இரு புறத்தும் தலையுயர்த்தி இருட் கறுப்பாய் எழுந்து நிற்கும் கருந் தூண்கள்
வயல் வரம்பின் மேலேயும் புல் சரிந்த வாய்க்காலின் இருபுறமும் செயல் கெட்டுப் பலகாலம் புரண்டிருந்த கருந்தூண்கள் திடீரென்று உயிர் கொள்ளும்
கோழி குரல்கொடுத்து
அதிகாலை. விழிப்பெடுக்கும் என்னுரரின் தலைமேலே விஞ்ஞான விரிப்புக்கள் கூரையின்றிச் சடசடத்த வாகனங்கள் அவை காவும்
3
சேரன்

Page 8
ஏணிகளும் தண்டுகளும் ஒரு நாளில் தெருவிறங்கிக் கம்பிகளும் கோப்பைகளும் கருந்தூணை அரவணைக்கும்
தெருமேலே
வயல் மேலே
இன்னும் தொலைவு கொண்டு திருப்பங்கள் நிறைந்திருக்கும் கல்லொழுங்கை மேலேயும் பளபளத்து நீள்கின்ற வெண்தகடாய்க் கம்பிகளின் முடிவற்ற நீட்சி.
பெருந்தெருவின் ஓரத்தில் சடைத்திருந்த குடைவாகை. ஆலமரம், மலைவேம்பு, நிசியில் பயங்காட்டத் தலை விரித்த பனைமரங்கள் ஒவ்வொன்றாய் இலையிழந்து
கிளையிழந்து
உடலிழந்து
உயிரிழக்கும் குடைவாகை நிழல் விரித்த பெருந் தெருவின் தார் தடையின்றி வெயில் எரியும் கரிக்குருவி பொந்தெடுக்கப் பனங்காகம் கூச்சலிட
4.
கானல் வரி

இருப்பாக அமைந்தபடி தொலைவிருந்தும் பார்வை கொள்ளும் பெரு மரங்கள் வெறுந் தூண்கள் சிலவற்றின் தலையெடுப்பில் நிலம் தழுவும்
மதில்கள், குரோட்டன் எனப் படர்ந்திருக்கும் வீடுகளில் புதுமாற்றம் திடீரென்று தலைக்குமேல் விளக்கேந்திக் கரகமிடும் சில வீடு நீலத்தில் குளுகுளுப்பாய்க் கோலமிடும் இன்னும் சில எனினும், பல வீட்டில் திரிதூண்டி, விளக்கெடுத்துத் தீப்பெட்டி உரசலினால் மெது மெதுவாய்ச் சிறு வெளிச்சம் சிணுங்கிச் சிணுங்கி அழும்.
இனிமேல் எனதுரரில் இருளில் முகம் காட்டும் தெருவிளக்கு;
நீண்டதென விரைகின்ற கம்பிகள் மேல் குருவிகளின் குடியிருப்பு.
சேரன்

Page 9
மழைநாள்
உன் நினைவில் வருகிறதா அந்த மழைநாள்? மஞ்சள் வெயிலில்தான் துவங்கி மழையாகப் போய் முடிந்தது மாலை. சைக்கிளிலே,
கொஞ்சம் விலகித்தான் நீ வந்தாய் பக்கத்தில் எனினும் நிழலிரண்டும் என்னவோ சேர்ந்தபடிதான் அசைய, வானம் இருண்டு, வரம்புகளில்லாத ஒரு மழையில் நிலத்தில் புழுதி செத்துப் போயிற்று. தெருவோரச் சிறு குடிலுள் மழைக் கொதுங்கி முகம் துடைத்தபோது கைகளும் ஈரம் உன் நினைவில் வருகிறதா அந்த மழை நாள்? நீர் வழிந்து, மை ஊறி நனைந்து போன பாடக் குறிப்புகள் மறுபடியும் எழுதப்படாமலே போயிற்று.
6
கானல் வரி

சோர்ந்துபோன மரங்கள் மீதும் பூவரசமிலைகள் துடிதுடிக்கவும், பனை ஓலைகளூடாக வருகிற காற்று அன்று கடலோடு உறைந்து போகவும் மழை.
அருகில் நீ குடிலுக்குள் நச நசத்த ஈரம் திரண்டிருந்த விசும்பு மழைக்கறுப்பில் மின்னல், கோடாய் எழுந்து அலைந்து அழிகிறது. கொடிமின்னல் என்று நீ சொல்ல வான்வெளியை நான் பார்க்கிறேன். கணத்துள் அது முடிய அடுத்ததற்காய்க் காத்திருப்பாய். அப்போது இடி முழங்கும். மழைச்சாரல் தெறித்த முகத்தில் நனைந்தபடி நீண்ட மயிரொன்று கழுத்துவரை, ஒரு வழி தப்பிய ஆடு.
மழை குறையத் தூற்றல் மனங் கொள்ள மீண்டும் பயணம்
தெருவோரம்,
மனுஷப் பிசாசுகளின் விழி விதைத்த பார்வை அம்புகளாய்க் குத்தும், ஈட்டிகளாய்த் துருவும்தான்
எனினும்,
7
சேரன்

Page 10
இணை கொண்ட போது தெருவும் சிதறுகிறது.
மீண்டும் சிறு துாற்றல் மழை முகிலின் இருள் கவிய நானும் நீயும் சமாந்தரமாய். உன் நினைவில் வருகிறதா அந்த மழைநாள்?
28.01, 1976
O
கானல் வரி

நிசி
இரவு;
தனியாக இருந்தும் இடையிடையே சருகுகளும் மேல்மண் துகளும் சுழல் கொண்டு விறாந்தை முழுதும் நிறைகின்ற பின்னிரவு நேரம்; நிலவு தலைநீட்டிக் கொண்டிருக்கும் வேளை; வெளியில் எழுந்து நடந்து வந்தால்
முன் நின்று ஆடும் தனியே உடல் கலைந்து முற்றத்தில் வேம்பு ஒருக்களித்துத் தலையாட்டும் ஒற்றைப் பனைகள் தனித் தனியாய் ஒவ்வொன்றும்
இரவில் படிப்பெனக்கு நீள்கின்ற காலங்கள் எப்போதும் இப்படியே
9
சேரன்

Page 11
வேம்பில் இருந்தோ முள் நிறைந்த "கல்லணிஞ்சில்" கொம்பில் இருந்தோ துயில்கலைந்து தொலைவெங்கும் நீளக் குரல் கொடுத்துப் போகின்ற ராக்குயில்கள் போகப் பிறகும் தனியாக இவ்விரவு நீள்கையிலே எப்போதெனினும் உயரத்தில் கண்சிமிட்டி யாரை அழைத்தோ ஒற்றையாய்க் கிழக்கிருந்து போகும் விமானமொன்று சிவப்பாய் அதன் கொள்ளிக் கண்கள் தொலைவிருந்தும் எனை உறுத்துப்
பார்த்த படி.
உள்ளறையில் மேசை முழுதும் விரிந்திருக்கும் Zoology Notes (5tbug) i@56ir இருந்தோர் குரல்
எனக்குக்
கேட்டதென இருக்கும்.
10
கானல் வரி

காத்திருப்பு
தொலைவில் விழி எறிந்து காத்திருந்தேன்.
பூக்காமல் பூவரச மரம் ஒன்று அருகில் சிலு சிலுத்தும்,
நுதல் சுருங்கிக் கோடு விழப் புருவம் சுழிப்பெடுக்கும் வெய்யில்;
நடுப்பகலில் மரம் கூட நிழல் தேடும்; நிழல் கூடச் சிறிதாகும் இப்போதில்
வழி தொடரும் விழி விழி தொடரும்
எதிர்பார்ப்பு வெயில் கரைக்கும் காலத்தை
d56356T 56T66' 660T
அர்த்தமற்ற காத்திருப்போ என்பதுவாய் நினைவசைந்தும்
6

Page 12
அடிமனதில் விளக்கெரியத் தவமாகிப் போகாது. நீள்கிறதென்
காத்திருப்பு.
2
கானல் வரி

கடல்
அலை எழுப்பி நுரை தள்ளும் கரையில். நிலம் அணைக்கக் கரம் நீட்டும் திரைகள்.
கண் தொட்ட தொலைவிருந்து மணல் புரளும் தரைவரையும் இளநீலத் துகில், அசைந்து கலையும்.
சிலவேளை,
சலனமற்று வான் நோக்கி, நிலம் நோக்கிப் பெரு வெளியாய் விரிந்தபடி.
இருள் தழுவும் மாலைகளில் தலையுயர்த்திச் சாய்ந்தாடும் பனைமரத்து இலை போல அலை உயரும். இருள் தழுவ,
இருள் தழுவ அலை உயரும்.
13
சேரன்

Page 13
இன்னும், சிலவேளை ஒளிக்கதிர்கள் தெறித்தபடி படகுகளின் துடுப்பசைவில் நிலம் நோக்கிச் சலசலக்கும்.
அலை தழுவும் கரையிருக்கும் எனக்குள்ளும் விரிகிறது,
கடல்.
14
கானல் வரி

தோணிகள் வரும் ஒரு மாலை
பொன்மணல் சரியும் காலடிப் புதையலில் நீள நீளமாய்த் தாழைகள் விரியும். தென்னையின் கீற்று நெளியும்.
வானம்,
கீழே தெறிக்கக்
கடல் நிறம் மறைந்து தூரம் தூரமாய் நீலம் வெளிறும். வெண்ணிறப் பாய்கள் தொலைவிருந்தசைந்து முன் வரும் மேகம் கவிந்து தழுவும். இன்னும் இரவின் திரைகள் இறங்கா மாலையில், வெய்யில் மெலிந்து மெலிந்து அடங்கி மறைகையில்
15
சேரன்

Page 14
கரைவரும் தோணிகள் இரையும்
கடலில் இன்னும் மெதுவாய்ப் பாய்கள் அசையும்.
விடியல் எழுந்து விரியும் வரைக்கும் கரையில் படகும் பிறையின் நிலவும்.
Γ
16
கானல் வரி

போய் வருதல்
அண்ணாந்து வான் நோக்கும் தண்டவாளங்களோ, வெறுமையாய்ப் பிரியும், அதிர்வுற்று
ரயில் செல்லும் போதுகளில் சிலிர்த்தாலும், பழையபடி, வெறுமை கொண்டு வெயில் காயும்.
ஒரத்தே
தனியாகக் கைகாட்டி மரம் நிற்கும்! காற்றில் அதனருகே
கண்சிமிட்டும் பூவிரித்துச் சீமைக் கிளுவைகளின் சிலுசிலுப்பு போகையிலே இப்படித்தான். வீடு திரும்புகையில் வயல் வெளிக்குள், நெல் விரித்த பச்சைப் படுகைக்குள் குளித்துத் தலை உலர்த்தும் பெண்போல, பனை ஒன்று ஒற்றையாய் ஒலைகளை வீசும்
17
சேரன்

Page 15
ரயிலுக்காய்,
ஒதுங்கி நின்று கைதுாக்கிக் கூச்சலிடும் சின்னப் பயல்களது நிர்வாணம் கணப் பொழுது விழித்திரையில்
மீண்டும் வயல் வெளிகள் இடையிடையே ஒர்தரிப்பு துயர் கொண்டு குரல் நீட்டி வழி தொடரும் புகைவண்டி. நிறுத்தத்தில்,
நான் இறங்கி நடத்தல் தொடங்குகையில் செம்மை பரவிவரும் கீழ்வானம், வாகைமர இன்லைகள் துவளத் துவங்கும்.
பனையோலைச் சரசரப்பும்; தனித்தபடி என் நடப்பும்!
18
கானல் வரி

சமாந்தரம் கொள்ளாத உலகங்கள்
இரண்டு பெண்கள், இரண்டு ஆடுகள்.
அறுவடை முடித்த வயல் வெளி கடந்து,
கிழக்கே நடந்தனர். கிழக்கிலும் வயல் வெளி நீளம் நீளமாய் வரம்பு தெரிந்தது. நீலம் நீலமாய் வானம் தெரிந்தது. மஞ்சள் மலர்கள் பூத்து நிறைந்தன; சணல் மரப் புதர்களுள் மைனாக் குருவிகள், மெல்ல எழுந்து வெளியே பறந்தன.
இரண்டு பெண்கள்
ஒருத்தி சிறியவள்; மற்றவள் உடலை இளமை மெதுவாய்ப் போர்த்தி இருந்தது. முன்னும் பின்னுமாய்
இரண்டு ஆடுகள் நடந்து சென்றன.
19
சேரன்

Page 16
இடையில் நின்று அறுகம் புற்களில் முதுகைத் தேய்த்து மீண்டும் நடந்தன. அடிவான் சரிவில் நீண்டதான சமாந்தர ரேகைகள் விழத்தியபடி ஒரு விமானம் எழுந்தது.
எழவும், வயல் வெளி இருந்த விழிகள் நான்கும் விண் வெளிப் பரப்பில் சில கணம் தரிக்க அமைதி தழுவி இருந்த வெளிகளில் மெல்லிய அதிர்வு இன்னும் விரைவாய் விமானம் உயரும் இன்னும் சமாந்தர ரேகைகள் வரையும் மாலைக் காற்றுக் கூந்தலை வருட வரம்பு நீளத் தம் வழி தொடரும் இரண்டு பெண்கள்
இரண்டு ஆடுகள்.
20
கானல் வரி

மழைகாலமும் கூலிப்பெண்களும்
வாகைமரம் பூச்சூடும்; வயல் வரம்பை நெல் மறைக்கும் மஞ்சள் வெயில் தெரியாது மழைமுகில்கள் கவிந்து வரும் தலைமயிரை விரல் கொடுத்து நீவி விடும் குளிர்காற்றில் வெண் கொக்கும், சிறகைகளும் வான் முழுதும் இறகசைக்கும் வெய்யிலுக்கு மேனிதந்து வெண்காயம் கிண்டவரும் என் அழகுக் கிராமத்துப் பெண்களது கால்
இனிமேல் வெள்ளத்துள் ஆழம்; விரல்களுக்குச் சேறெடுக்கும் எப்போதும்போல் இவர்கள் நாற்று நடுகையிலே எல்லை வரம்புகளில் நெருஞ்சி மலர் விரியும் மீண்டும் இவர்கள்
21
சேரன்

Page 17
திரும்பி வருகையிலோ, நெற்கதிர்கள் குலைதள்ளும்; நீள் வரம்பு மறைந்துவிடும் எனினும் இவர்களது பூமி இருள்தின்னும் பொழுது விடிந்தாலும்.
O
22
கானல் வரி

பிரிதல்
கொடி எங்கும் மல்லிகைப்பூ குளமெங்கும் அல்லி மொட்டு வேலி வரிச்சுகள் மேல் முள் முருக்குப் பூத்திருக்கு பார்த்தபடி நானிருக்க, இப்படித்தான் விரியும் வசந்தம் என்று சொன்னபடி நீ போனாய்! அன்றைக்குஇன்றைக்கோ,
நந்திமரக் கொப்பில் உடல் சிலுப்பி இறகுதிர்க்கும் குருவி ஒன்று, உயரே உலாப் போகும் மஞ்சு,
குளக்கரையில் நீளக் காலூன்றி ஒரு கொக்கு, தவமிருக்கு.
23
சேரன்

Page 18
பறந்து போகும் சிறகு
காற்றின் நரம்புகளில் மின் விசிறிகள் சுழலும். மெலிதாய்ப் படபடக்கும் காகிதங்கள் உரத்ததென, lecturer இன் குரலோசை, சிலவேளை நிலம் உராயும் செருப்புக்கள் (தொடர்ந்தபடி.எப்போதெனினும் இருமல்)
மற்றபடி 960) LDf 5(up6f 6f(5b lecture room. முன் வரிசைக் கதிரைகளில் முகங்கள் நிரம்பி எனைப் பின்னுக்கனுப்பி விடும் போதுகளில் எப்போதும் இப்படித்தான். மெதுவாய், இறகு கட்டி மிதந்தபடி வெளியேறும் என்மனதுஎனினும் சமயங்களில் மீண்டும் திரும்பி வரும் மணி பார்த்துப் போக எனதூரத்தில் ரயிலோசை துவங்கிவிட இங்கிருந்து
24
கானல் வரி

1eva1 crossing மணி ஒலிக்காய்க் காத்திருக்கும்; பின்னர் தடதடத்து ரயில் கடக்கப் பெட்டிகளை எண்ணுதற்காய்ப் போய்த் திரும்பும்; பெரும்பாலும் தோல்வியுறும்! முன் கதிரைக் குழிவுள் முதுகு சரிந்தபடி உட்கார்ந்தெழுதும் ஒரு பெண்ணின், பிடரிக்குள்
கறுப்பாய்ச் சுருள் கொண்டு நெளிந்திருக்கும் பூனைமயிர்க் கற்றைகளை நிமிண்டி விட விரல் நுனிக்குப் பசி கொடுக்கும். இடையிடையே விழி நிமிர்த்தி Black bord இல் மேய்ந்தாலும், நாளைக்கு, முன் வரிசைக் கதிரைகளில் போயமரும் எண்ணம் உதித்தெழவும்மீண்டும் வெளிப் பறக்கும். Degree (pty-fisg, sir, உடலோ தனித்தபடி 11terview போய்த் திரும்பிப் போய்த் திரும்பிப் போய்த் திரும்ப, எப்போதும் போல ஈர்ப்பு விசை எதுவுமற்று வெளியில் திரியும் இது. தூவி இறகாக என் மனது! () தை 1979
25
சேரன்

Page 19
இறந்த காலம்
யாருமற்ற தெருவில்
மழையில், ஒரு வாகை மரத்தடியில்
திடீரென
உன்னைக் காண்பேன் என நம்புதல் இயலாது; ஆயினும் நடந்தது. நெடுநாளின் பின் வண்ணத்துப் பூச்சியாய்த் துடிக்கிற உனது இமைகளை, புத்தகக் கட்டையும், குடையையும் இறுகப் பற்றியிருந்தும் நடுங்கும் விரல்களைப் பார்க்கிறேன். அதிர்ந்து டோனாய்.
முகம்,
திருப்பவும் முடியாது
மழை
விட்டு
விலகவும் இயலாது
LID6 oop.
26
கானல் வரி

*வெயில் வா: மழை போ" என்று மனதில் செபிக்கிறாய் போல.
என் சின்னப் பெண்ணே!
எமது, அன்றைய சூரியன்
அன்றே மறைந்து போயிற்று.
1978
சேரன்

Page 20
வேர்களிலிருந்தும் பூக்கள்
தெருவில் காற்று மட்டுமே வெப்பமாக என்மேல் உரசிற்று. இரண்டு கரையும் உலர்ந்து போன புற்களும், மண்ணும் "நான் இறந்து போனேன்" என்பதாய், மெல்ல எனக்குச் சொன்னது மழைகாலம். உரத்துச் சிரித்தது பெருங்காற்று. Ф— 6йт, சட்டைக் கிழியலினூடே திரிந்து கிச்சுக் கிச்சு மூட்டிய வண்ணம் உனக்கு,
விழிகளில் தான் உயிர்ப்பில்லை; நீள ஒரு தடி மட்டும் கைகளிலே உணர் கொம்பு.
இடமும் வலமும் தொட்டுத் தொட்டு, இவ்வெய்யிலூடாக நடந்து நீ நகரம் செல்வதைத்
28
கானல் வரி

தினமும் பார்க்கிறேன். மெதுவாய்க் கூட உன் கைத்தடி படுகையில் கத்திரிப்பூவாய்க் கரையில் மலர்ந்த தொட்டாற் சுருங்கிகள் மெல்லச் சிணுங்கலாம்.
அதனால் என்ன?
அவற்றின் முட்கள், உான் கால் விரல் நுனிகளைக் கிழிக்க இன்னும் விழித்தே இருக்கும். நீ இன்னும்
கரை ஒதுங்காதே.
உனது முதுகிலும் துயரச்சிலுவை. உனது தலையிலும் முள்முடி. இருப்பினும் ஒவ்வொரு கணமும் வாழ்க்கை உனக்குச் சாரம் மிக்கதாய் தோன்றுதல் கூடுமோ..?
29
சேரன்

Page 21
நதிமூலம்
உன் வட்டத்துக்குள் நான் வந்தாயிற்று, எப்போதோ.
இன்று,
நீ விலகப் போகிறாய் என்று தெரிந்தும், நான் நீயாக முடியாமலும் நான், நானாக பிரிய இயலாமலும் நடுவில், அந்தரங் கொண்டு.
இப்போதும் கூட கிழக்குப்புற மலை உச்சியில் 岛一
மேற்குப்புற உச்சியில் நான்.
அர்த்தத்தோடு, பார்த்துக் கொள்ளலாம் பேசிக் கொள்ளலாம் நெருங்கித் திரியலாம்
30
கானல் வரி

நீயும் கீழே இறங்காமல் நானும் கீழே இறங்காமல் (எவ்வளவு காலம் வரை?)
நடந்ததெல்லாம் கனவுகளாய் நிறம் மாற, உன் விலகலை ஏற்று சுமையுடன் நான் இறங்கலாம்! நீயும்,
கிழக்கிருந்து தனியே இறங்கி நடக்கலாம், பிறகு நெடுவழியும் தனித்துத் தான் உன்பயணம் என நான் அறிவேன்!
ஆனால்
வாழ்க்கை, ஒரு காற்று மாதிரி பூவையும் உதிர்க்கும்; இலையையும் உதிர்க்கும்; மரத்தையும் முறிக்கும்எப்போதென்று தெரியாமல். உனக்கு மேலும் ஒரு பூ, எனக்கு மேலும் தான் நாங்கள் இணைந்தபோது.
இனி, எதை, எதையெல்லாம் இந்தக் காற்று
எங்கள் மீது, உதிர்க்குமோ தெரியாது
31
சேரன்

Page 22
அன்றைக்குசூரிய கிரகணம் நிகழ்ந்தவேளை, அந்திநேரமும் மஞ்சள் வெயிலும் திடீரென்று வந்தபோது
எனக்கு,
சூரியனைப் பார்க்க ஆசையாயிற்று வேண்டாம் என்றாய்
அப்போது காற்றே இல்லை!
இனிநீள வழிப்பயணம் நடப்போம் என்ன?
12-03-1980 נרן
32
கானல் வரி

கோடைகால வாவிக்கரை
தோணிக்காரா தொலைவு கொண்டு போகிறாய் நீ. இப்போதும்
நான் இங்கே கரையில் இருந்தபடி,
பார்வையில்
பச்சை நீர்ச் சுழிப்பு
ஆற்றில்
உச்சி வெய்யில் துடுப்பசைவில் தெறிக்கின்ற ஈரச் சூரியன்.
பெருங்காற்றுக்குத்
தப்பி, இன்னும் சில எட்டி மரங்கள் காய்களுடன், கரையருகே தென்னை மரங்களும்தான் ஐதாக,
வெயில் காய்ந்தபடி பாலத்தின் மேலும்
33
சேரன்

Page 23
இன்னும் ஒயா இரைச்சல்,
நீ போகிறாய் இன்னும் தொலைவில், தோணிக்காரா, நான்மட்டும் கரையில் தனியாக
காதலுடன்
30-03-1980
34
கானல் வரி

நிலாவெளி
பச்சை அடம்பன்கொடி. பாய்விரித்த மணற்பரப்பில் கத்தரிப்பூ, நீலத்தில் எங்கும் மலர் விரியும் கண் அளந்த நீலம்
இரவு ஒரு பகலாக நிலவு உலவும் வானவெளி நீளத்தில், ஆழத்தில் நீலப்பளிங்குகளாய் நீர்ப்பரப்பும் நிலாவெளியும்.
அண்ணாந்து பார்த்தபடி தாழை அடுத்தடுத்துக் கொம்புகளில் தாவுவதாய் கூச்சல் எழுப்புவதாய், குந்தி இருந்து தலை கோதுவதாய் அங்கங்கே குரங்குகளின் கூட்டம்
கடல் நீரை உள் வாங்கி விரிந்த குடா ஓரம் இறால் பிடிக்க உடல் வளைத்த பெண்கள் அங்கங்கே உடல் நெளிவில் உயிர் தெரியும்
35
சேரன்

Page 24
நீர் நனைந்த ஆடை நுனி உயர்த்தியதில் பளிச்சிட்டு வெளித் தெரியும் ஒளி தழுவா மினுமினுப்பு. வெயில் தின்னும் கடல் கரையில் கண நேரம் விழிமூட, கால் தழுவி, மணல் ஏறித் தாலாட்டுப் பாடுகின்ற வெள்ளலைகள், உயர்ந்தபடி, தொடர்ந்தபடி, வெள்ளலைகள்
எப்போதும் இந்தக் கரையருகே கண்மூடும் வேட்டை எழுகிறது. மெல்லத் தலைநிமிர்த்த உச்சிவெளி, வான் விரிப்பில் தொலைவு கொண்டு செல்கின்ற மழைக் கண்ணிப் பறவைகளின் கூட்டம், திரள் திரளாய் தெற்கிருந்து கிழக்காக.
O
36
கானல் வரி

ஆகாயத்திலிருந்து பூமிக்கு
ஆற்றங்கரையில் காற்றை எதிர்த்துக் கைகளை 6† ̧န္တီးငှါ நீள நடத்தல், மிகவும் பெரிதென மீண்டு மொருமுறை விழிகள் அளந்ததில் விண் வெளி எங்கும் நான் பார்க்கையில் பூக்கும் வெள்ளி மல்லிகைகளைப் பார்த்தபடியே கால்களை விரித்து,
கண்களை மூடி வெண்மணல் மீது படுத்துக் கிடத்தல், ஈச்சையும் கள்ளியும் நெருங்கிக் கிடக்கும் இலுப்பை உச்சியில் தூக்கணங் குருவிக் கூடுகள் அசையும் தனி வழி ஓரம் நடந்து செல்கையில் உரத்த குரலில் பாட்டுப்பாடுதல், அது ஒரு காலம்
கொஞ்ச நாட்களில் எல்லாம் முடிந்தது!
37
சேரன்

Page 25
பிரச்சினை நுனிகள் கழுத்தைவருடும் தொல்லைகள், சோளகம் எழாத கோடையாய் உறுத்தும் சூழலின் இறுக்கம், ஒன்றுமே இல்லை மனது முழுவதும் காற்றே வீசும். அது ஒரு காலம்! முடிந்தது. இனிமேல், விரிவுரை நினைவுப் பாரம் அழுந்த இடையில் முறியும் காலைத்தூக்கம் இரவின் கனவில் ஊசி குத்திய கால்கள் முறுக தசைகளை இழுத்து உடலை நிமிர்த்தும் மண்டலந் தவளை,
மஞ்சள் மலர்கள் கொடியென இறங்கும் கொன்றை மரமும் குலவும் காதலும் எல்லைகளற்று விரிகிற உலகில் கொஞ்சநாள் இருந்தேன்
இன்று மறுபடி, பழைய சதுரக் கோட்டினுள் வந்துள்ளேன். இது ஒரு காலம், W காற்றே இலாமல் வெயில் எரித்தாலும் நிழல்கள் விரிக்க
மரங்களா இல்லை?
() சித்திரை 80
38
கானல் வரி

கானல் வரி
மறுபடியும் எல்லோரும் வந்தாயிற்று. மாமா, சித்தப்பா, மணியக்கா, அண்ணாந்து சாய்ந்தபடி அப்பா கதிரைக்குள். சுருட்டு புகை கிளப்பும் மார்பு மயிர்க்காட்டில் மேய்கிற விரல்கள்.
மறுபடியும்;
காணி உறுதிகள். கூறைச் சேலையுடன் உறங்கி, உறங்கி, அதற்கும் தொற்றிய, நப்தலீன் வாசனை. சரசா! எனது அருமைச் சரசா!!
நீ என்ன செய்வாய்? அவர்களோ உள்ளே உனது விலைக்குப் பேரம் பேசுவர்.
39
சேரன்

Page 26
மகிழம்பூ சிந்தியிருக்கும் தண்ணிர் ஊற்றவும் பாலாய் நெளிகிற நிலவில்
இரவு. குந்தியிருப்பாய் கிணற்றுக்கட்டில் கண்களை மூடி, கற்களை எறிந்து. குருட்டுச் சாத்திரம் பார்த்தபடியே.
"இம்முறையேனும்.
காத்திரு.
உனக்காய் இவர்களனைவரும் கொண்டு வருவர்; ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பொன்னிற இறகுகள் தலையில் மினுங்கும் "தூய கூடித்திரியனை
பார்த்திரு உனது கூந்தல் வெளுத்த பின்பும் கூட.
40
கானல் வரி

திரிதல்
எதிர் எதிராக அமர்ந்து கொள்கிறோம் யன்னல்கள் எல்லாம் சிறகுகளாக விரைகிறது ரயில்.
சிதறிப் பறந்தன வண்ணாத்திப் பூச்சிகள் விட்டு விட்டுத் தொடர்கிறது வயல்வெளி.
இன்னும், கடலும் அழகு; மலையும் அழகு நதியும்கூட அழகுதான்
எல்லாம்
எங்கள் இருப்பில் அர்த்தம் கொள்ளும்.
[III]
41
சேரன்

Page 27
காலங் காலமாக
sß, முன்பே சொல்லியிருக்கலாம் உனது வீட்டின் பின் இவ்வளவு நீலமான கடல் என்று.
"அல்போன்ஸோ!” என்று கூப்பிட மூக்குக் கண்ணாடியைச் சரி செய்தபடி, நீ
வருகிறாய் நாம் நடக்கிறோம். தென்னைகள் நிறைகிற கரை, எப்போதும் அணைத்துக் கொள்ள என்று இருக்கிற கடல்
அமர்கிறோம். முழங்கால் அழுந்த மார்புக் குவடு நெளிந்தபடி. எதிரே இருந்து கிடுகு பின்னுகிற பெண் ஒருத்தி, உலகத்தைக் காலடியில்
42
கானல் வரி

மிதிப்பதென, சலனமற்று, நேராய் ஒருகணப் பார்வை.
பிறகு தொடர்ந்தும் பின்னுவாள் பழைய கிடுகு வேலிகளை. மீளவும் புதுப்பிக்க, எண்ணங் கொண்டாள் போல.
எப்போதும் சுற்றிவர வேலிகள் தான்
"அவர்கள்’ வெளியில் நின்று அடைப்பார்கள். சிறகு வெட்டிய பறவையாய் நீயோ உள்ளிரு. கிடுகுகளையும் பின்னிக் கொடு! ஒரு நூறாண்டுகள் இவளைப்போல எத்தனை பேர்கள்? என்பதாய் ஒருகணம் திரும்பிற்று கவனம். * * 6Ts568T Gagft5öT6OTTuiu?” என்று கேட்கிறேன்.
அல்போன்ஸோ மீண்டும் சொல்லத் தொடங்குவான் 'பரந்தனில் இருந்து.”
"; 1 அக்டோபர் 1980
43
சேரன்

Page 28
  

Page 29
எதிர்கொள்ளல்
இணைந்து நடக்கிறோம் மீளவும், மீளவும்
சமாந்தரமாய் விரிதல் என ரயில் பாதை திடீரென இணைந்துபோய் வழிமாறித்
திசைமாறி மீண்டும் விரிதல் கூடும் எனினும், W எப்போதும் "மிகவும் மெதுவாய் நட' என உணர்த்தும் அரை நிலவில் நடக்கையில் முதன் முதலாய் நிலம் தொடுகிற பறவையின் சிறகு போல், மிருதுவாய் என்னில் படிந்த விரல்கள்.
பிறகும், நடத்தலில்
சூழவும் ஆயிரம் கண் பூத்த வேலி,
46
கானல் வரி

அம்புகள் எரியும்
கதைத்தலில் காற்றையும் நம்ப இயலாது காதுகள் மிதக்கும் என அஞ்சி எல்லோரும், மனது கறுத்துக் குறுகிப் போன மனிதர்கள்தான் போல.
எனினும்
மறுபடியும், மறுபடியும் இணைந்தே நடக்கிறோம் காலையில் சூர்யன் எழுவது போல.
47
சேரன்

Page 30
நெய்தல்
கடலின் புலவு காற்றில் பெயரும் கரையில்,
மிகவும், மிகவும் மீன்களுக்காகக் காத்திருந்து தூவானமாய், நீர் உதிரக் கால் நனைய அலை இரையும் கடல். பரவைக் கடல் இருந்து வரும் போகும் விசைப்படகு இனியும் வரும்.
காத்திருப்பேன் மீன்களுக்கு
பாம்புக் கழுத்து வளையக் கடற்காகம் களங்கண்டிக் கொம்பில் சிறகு விரித்துலர்த்தும். ஆவா, பிடிக்கிறது மீன் குஞ்சை,
இரவு முழுவதும் உரத்த காற்றெனினும்
படகுகள் வந்தவாறுள்ளன
48
கானல் வரி

மீன்கள் அவற்றுள்ளே செட்டையடிக்கும். பிறகு மணலிலும் காற்றுக் குடித்துக் கறுப்பு மார்புகள் விரிய
விலை சொல்கிற பெண்கள் வாழையும், கெளிறும், ஒட்டியும் வேண்டாம் போகட்டும் இன்னும் சிறிது காத்திருக்கலாம்.
ஏழுமணி காலை மெலிதாய் நிலத்துக்குச் சாயம் பூசுகிறது மஞ்சள் வெயில்
ஃபிரான்சிஸ்கா", "கடல் ராணி" எலிஸபெத்'
இன்னும் படகுகள் வந்தவாறுள்ளன மீன்களைக் கொட்ட உடம்பு வளைவதில் நர்த்தனமிடுவது கழுத்தில் குரிசு.
நீளமாய், ஆவெனத் திறந்த வாயினுள் பற்கள் தெரிய என்ன இது ? இன்று எல்லாமே வாழைமீன் ? “முள்ளுக் குத்தும் தின்ன ஏலா."
49
சேரன்

Page 31
தங்கச்சி சொன்னது நினைவில் வருகிறது
போகட்டும் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம்
அப்புறமாக,
அவர்கள் கூடை கூடையாய்க் கொண்டு போனார்கள் மீன்களை; எனினும் நான் காத்துள்ளேன் படகுகள் வருமென,
மீண்டும் அவர்கள் கடலுக்கு மறுபடி நானும் வீட்டுக்குப் போகலாம் எனது மீன்கள் வருமெனில்,
இவற்றோடு, இதனையும் சொல்லி ஆகத்தான் வேண்டும் முக்கியமாய்
"எனக்கு, மீன்கள் வேண்டத் தெரியா தென்பதை
0 தை 1981.
50
கானல் வரி

பூமியின் நிழல்
நீண்ட நாட்களாய்
எனக்கொரு சந்தேகம்
இந்தப் பூமியின் நிழல் ஒருவட்டமா ? இல்லை தட்டையா ? அல்லது முட்டை போல் தானோ ? எப்படியாயினும் அது ஒழுங்காய் இருக்கச் சாத்தியமில்லை (என்றுதான் எனக்குத்) தோன்றிக் கொண்டிருக்கிறது வெகுநாளாய்)
கடலின் அலைகளோ உயரே எழுவன; தரையிலோ தம்முள் பொருதும் மனிதர்கள்; மலைகளோ தொடர்ந்தும் முளைத்து வளர்வன; அங்கு
முகில்கள் தங்கும்
5
சேரன்

Page 32
காற்றோ மிக மிக, மழைக்குப் பதிலாய் நெருப்பே உதிரும் உருவமற்றுப் போக எப்படி வரும்? இந்தப் பூமிக்கு ஒரு நிழல் ?
() ஐப்பசி 1980
52
கானல் வரி

சடங்கு
பிறகு அனைவரும் அமர்ந்தனர் நாற்சார் வீடு
நடுவில் நீளமாய், மேசை போட்டுத், துணிவிரித்துகாணி எழுதி வீடு எழுதிப் படம் எடுத்து, காடெண்ணிப் பார்த்துத் தலையாட்டி அதையும் படமெடுத்து பெரிய புத்தகங்களில் குனிந்தபடி கையெழுத்து வைத்து மோதிரமும் மாற்றிய
பிறகு,
அனைவரும் அமர்ந்தனர், நிலத்தில்,
இரவு தானே ! இட்டலி சாப்பாடென்று ஆக குழந்தைகளும் அலறித் தூங்க ஆரம்பித்த
53
சேரன்

Page 33
பிறகு, மறுபடியும் அவளருகே அமர்ந்தான் கொஞ்சம் சிநேகத்துடன்
"அவன்".
() 27 சித்திரை 81
54
தானல் வரி

ஒருநாள் ; இன்னொருநாள்
எனது, நிலத்தின் மீதும் முகில்கள் திரிகிற வெண்பனி புற்களின் இதழ்களில் படிகிற
566)
நடுக்குறும் எலும்புகள் ஒருதரம், உதறிநிமிர்கிறது என் உடல்.
"குளிக்க வேணும் இண்டைக் கெண்டாலும் ரெண்டு நாளாச்சு
பூவரசு போய் விரிந்த மாரிக் கிணற்றடி; நீர்மட்டம் மேலே குளிரும் தான் எனினும் குளிக்கிறேன்
பிறகு, மறுபடி எனது புறப்பாடு
அதிர்ந்து போய், விறைத்துப் பனைமரங்கள் எல்லை கட்டிய
55
சேரன்

Page 34
வயல்வெளி ஒரம்
நடந்து
ஸ்ரேஷனுக்கு வர வெயிலும் வருகிறது கூடவே
GéST6ar if அனைவரும் வருவர் அதேமுகம் அதே நிழல் ஒரே நிறம்.
ரயில் செல்கையில் நகரும் வயல்களை, மரங்களை அல்லது விரித்த பத்திரிகையை அர்த்தமற்று வெறிக்கிறார்கள் இயந்திரம் போல. இடையிடையே இறங்கிப் போவர் மாலை
வருவர்.
வெளியில் நெருப்பெனினும் என்ன?
இரவு, அவரவர் பொந்துகளுள் புதைந்து கொள்வார்கள்.
பின்னரும், விடிய எழுந்து
தெருவைப்பார்த்து "எல்லாம் சரி' எனில் புறப்பாடு
தொடர் வழி, இவர்களுக்கு இதுதான் என்று
56
கானல் வரி

நான் அறியேன்.
ஆனால், நிலமும், நீள்கிற ரயிலின் தடமும்
இப்படியே தொடரும் என்றும் தோன்றவில்லை.
O
57
சேரன்

Page 35
மரணமும், வாழ்வும்
இருள் மெதுவாகச் சூழ்ந்து வருகையில் மரங்களும், இலைகளும் நிறங்களை இழந்தன அத்துவான் வெளியில் முகில்கள் சிதைந்தன. என்று தான் தோன்ற. யார் நினைத்தார் இதை?
"அடிவானத்தில் மிதந்தது புகை' எனச்
சொல்லி, இதழ்கள் மூட முன்பு தொலைவிருந்தொரு குரல், கூக்குரல் பிறகு நெருப்பு.
காலையில், ஆத்து வாழைகள் பூத்துக் கிடந்ததில் கத்தரிப் பூவாய் நீர்;
58
கானல் வரி

நிறம் பெற்றது வாவி. அருகே, தொடர்வது பாதை.
மாலையில், வருகிறார்கள் அவர்களின் மீதும் நெருப்புச் சுடரும்அவர்களின் கைகளில் வாள்கள் மினுங்கும்
தன்னந் தனியனாய் அவர்களை எதிர்த்து ஒற்றை இறகுடன் பறந்தாய்
உனது, தோள்களை வெட்டி
மண்டையைப் பிளந்து குரல்வளை நரம்பில் கத்தியால் கிழித்து ஆற்றில் போட்டனர்.
குருதியில் நனைந்தது ஆறு.
"பிள்ளையான் தம்பி.'
துறை நீலாவணை வாவிக் கரையில் புலம் பெயர்ந்தகனும் கோடைக் காற்று
59
சேரன்

Page 36
உனது பெயரை எனக்கும் ஒலித்தது.
கண்ணகி கோவில் மரங்களின் கீழே வெய்யிலில் உரத்து நெடுமூச்செறியும் கருங்கற்களின் மீதும் அலைகள் உனது நினைவை
எழுதும்.
இப்படி, உனது வாழ்வு மரணத்தில் ஆயிற்று.
14-08-1981 ום
60
கானல் வரி

சிறகு வலை விரித்த பரவைக் கடல் மேலே, மூச்செறியும் காற்று. கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம் கரை தெரிகிறது பனைமரமும், இடையிடையே ஒடுகளும். அலையும், "என் ஜின்’ இரையும் பொழுது சிதறும் துளியும். ஒன்றரை மணி நேரம் எப்படி முடிந்ததாம். பிறகு,
மணல் நிமிர்ந்த வெளி அதனுள் புதைந்தன பனைகள், ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக் கன்னி மணல் மீது தலை நீட்டும். மணி லோ, கண்ணாடி விதையிட்டுச் சூரியர் போய்க் குடியிருந்த பொன்னின் துகள்.
அதன் கீழ் இரண்டாயிரம் ஆண்டுகள்
61
சேரன்

Page 37
முன்பாக, என் முன்னோர் நடந்த நிலப்பரப்பு. ஒரு காலடி, ஆனால் ஓராயிரம் ஆண்டு எம் வேர் நீண்டுள்ளது துயிலாது, இந்த அலைகரையில் நின்று விண்மீர் சிதறிக் கடலுள் விழுகிறதைப் பார்த்திரங்கிய,
அல்லது
தொடுவான் வெளி பிளந்து கரை சேரும் நாவாய்க்குக் காத்திருந்த பெண்ணின் வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில், பின் மாலை, அந்திப் பொழுது புடமிட்ட தென்னோலை காற்றாடும் வெளியின் மண் மூடிய சுவடுகளில், என் முன்னோர் விட்டுப் போயுள்ளார்கள் எனக்கொரு செய்தி. நூறு நூறாயிரம் தோள்களின் மீது ஏறி நின்று, எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன் ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி அதன் மேல் எழுகிற அலைகளை மீறி அதனைக் கொண்டு போய் எங்கும் ஒலிக்கிறது காற்று.
*எனது நிலம் எனது நிலம்
62
கானல் வரி

பகல் பொழுதின் மரணம்
ஒவ்வொரு நாளும்
இரவு, எல்லோரும் படுத்த பிற்பாடு நாய்களின் அரவம் குன்றி, நட்சத்திரங்கள் வெறும் வானுடன் தனித்த போது துரங்கப் போவேர்.
சனங்கள் நெருங்கிய சந்தடியில் ஓடவும் முடியாது, இருக்கவும் தெரியாது மூச்சு வாங்கிச் சரிகிறதான ஒரு கனவில்,
பாதி இரவில்
விழிப்பு வரும்.
ஒரோர் சமயம் கடலும், நதியும் மஞ்சளாகக் கார்த்திகைப் பூக்கள் புறம் புறம் விரிய நடத்தலும் வரும்
63
சேரன்

Page 38
காலையில் எழுந்ததும் கைகள் ஒருபுறம் கால் ஒரு திசையில் முகமும் தான் எங்கோ சிதறிக் கிடக்கும்.
அனைத்தையும் பொருத்தி நிமிர்ந்து வந்து எனது பகலை உன்னிடம் விற்கிறேன்.
T ஆனி 1981.
64
கானல் வரி


Page 39