கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பேரன் கவிதைகள்

Page 1
Hi Toti వివాism)
ዩዓ4, ፭ዘ |
PER

首 தகள்
G. பேரன் الدمة لذة تاره
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH..

Page 2

பேரன் கவிதைகள்
நெல்லை க. பேரன்
வெளியீடு: ஷர்மிளா பதிப்பகம், நெல்லியடி.
அமரர் க. பரமானந்தம் நினைவாக

Page 3
“PERAN KAVITHAIKAL”
(A Collection of Poems)
Author: Nelai Ka. Peran
Address; Nelliady. Karaveddy.
1st Editisn; August 1989
Printed at Parvathy Press. Jafna.
ஆசிரியரின் பிறநூல்கள்
1. ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகிருள்
(சிறுகதைத் தொகுதி 1975)
2. வளைவுகளும் நேர்கோடுகளும்
(நாவல் - வீரகேசரி பிரசுரம் - 1978)
3. சந்திப்பு
(கட்டைவேலி ஞானசாரியார் கல்லூரி மாணவருடன் பேட்டிச் சிறுநூல் - 1986)
4. விமானங்கள் மீண்டும் வரும்
(முதற் பரிசுக் குறுநாவல் - 1986)
5. சத்தியங்கள்
(சிறுகதைத் தொகுதி - 1987)


Page 4

FJELD] | | |_| | | 1 5 :)) LID
H --------
ص ، ص .
பேரன்பிற்குரிய மாமனுர்
அமரர் க. பரமானந்தம் அவர்களுக்கு
証斑 କ୍ଷୁଃ:&
அமரர் க.
முடக்கா டு - நெல்லியடி
தோற்றம் 30-6-1925 ம -7. 19St.
. 晶 அன்பினுல் எல்லாம கவர்ந்தீர் அன்பினுஸ் ஈ வகையே ஆளாம் என்பெல்லாம் உருக வேண்டுகிறுேம் அன்புருவே சாந்தி பெறுவீர்."

Page 5

என்னுரை
1966 முதல் சிறுகதை, கவிதை, நாடகம், கட் டுரைகள், நாவல், நடிப்பு என்று பல்வேறு துறை களிலும் ஈடுபாடு கொண்டுள்ள எனக்கு மரபுவழிக் கவிதைகளில் நாட்டம் இருந்தபோதிலும் அவற்றை எழுதுவதில் போதிய பயிற்சி இருக்கவில்லை. ஆனல், ‘உள்ளத்துள்ளது கவிதை, உண்மை உருவெடுப்பது கவிதை' என்ற கோட்பாட்டிற்கு அமைவாக அவ்வப் போது பல கவிதைகளை உரைநடையாகவும், புதுக் கவிதைப் பாணியிலும் எழுதியுள்ளேன், சில வீர கேசரி, மித்திரன் பத்திரிகைகளில் பிரசுரமாகின. வானெலிக் கவியரங்குகள் பலவற்றில் ஒலிபரப்பாகி
யுள்ளன.
குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கவி யரங்குகளில் பங்குபற்றியும் தலைமை தாங்கியும் வந் திருக்கிறேன். சிறுகதை, நாவல்துறையில் மட்டும் அதிகமாக எழுதிவரும் நான் எனது கவிதைகள் சில வற்றையும் அச்சிட விரும்பினேன். எனது மாமனர் அமரர் கந்தவனம் பரமானந்தம் அவர்களது 31ம் நாள் நினைவாக நினைவு மலர் ஒன்றை அச்சிடும் நோக் கம் எனது குடும்பத்தாருக்கு இருந்தது. வெறுமனே அவரைப் புகழ்ந்தும் அன்னரது உறவினர்களது பிர லாபங்களையும் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த தேவார திருவாசகங்களையும் பதிப்பித்து ஒரு வாய்ப் பாட்டு முறையான நினைவுமலரை அச்சிடும் விருப்பம் எனக்கு இருக்கவில்லை.
இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியாவது எமது ஆக்கங்கள் சிலவேனும் நூலுருப் பெறுவது சால வும் பொருத்தமானது என விரும்பினேன். மனைவி யும் இந்த எண்ணத்துடன் ஒருப்பட்டார். கனடா

Page 6
வில் இருக்கும் எனது மைத்துனர்கள் ப. கிருஷ்ண மூர்த்தி, ப. சுபாகர் இருவரும் சகலன் தா. செல்வ ரத்தினமும் எனது இலக்கிய முயற்சிகளுக்கு என்றும் ஆதரவு தருபவர்களே. எனவே எல்லோரது விருப்பங் களும் இசைவாகி இச்சிறு கவிதை நூல் உருவானது. இதனை எனது பெருமதிப்புக்குரிய மாமனுர் அமரர் க. பரமானந்தம் அவர்களின் மலரடிகளுக்குச் சமர்ப் பணஞ் செய்வதுடன் ஈழத்து இலக்கிய உலகிற்கும் அர்ப்பணிக்கின்றேன்.
இந்நூலின் பல கவிதைகளை வெளியிட்ட பத்திரி கைகளின் ஆசிரியர்களுக்கும், வானெலியினருக்கும் விரைவாகவும் அழகாகவும் அச்சிட்டு உதவிய பூரீ பார் வதி அச்சகத்தின் அதிபர் 'ரவி அவர்களுக்கும். தொழி லாளர்களுக்கும் என் அன்புகலந்த நன்றி உரியது.
நெல்லியடி, கரவெட்டி. நெல்லை க. பேரன்
6-8-89
(DU)

அன்புள்ள தமிழ்ப்பெண்ணே!
அன்புள்ள தமிழ்ப் பெண்ணே! என் சொல்லைக் கேட்டிடுவாய் இன்றுன்னைப் பார்த்த என்னை - உனது இனிமை சொட்டும் மதுஅதரம் கனிவு காட்டும் காந்தக் கண்கள் பணிவு கொண்ட பண்புப் பேச்சு தனிமையான அன்பு உணர்வு - இத்தனையும்
வண்டைக் கவர்ந்த மலரைப்போல கொண்டை கவரும் மல்லிகைபோல தமிழைக் கவரும் இனிமைபோல அமிழ்தாய் என்னைக் கவர்ந்ததடி - ஆகவே
இனியும் விளக்கம் ஏனடி பெண்ணே! கனிவாய் காதல் செய்திடுவோம் நீ ஏற்காவிட்டால் துன்பமடி ஏற்றுவிட்டால் இன்பமடி.
கடலே!
கவிபாடிய பொருளாய் - உயர் புவி தோன்றிய கடலே!
துரை சாடிடும் அலையே! - உன்னைக் கரை காண்பதும் இயல்போ?
இரைவாய் நன்கு இரைவாய் - நல்ல குரைநாய்கள் போல் இரைவாய்
நரைமேவிய தலைபோல் - நுரைத் திரைமேவிய கடலே!
அழுவாய் நன்கு அழுவாய் - கவி உளம் போலவே அழுவாய்.

Page 7
பாரதி
பாடல்கள் பாடவே பாரினில் ஆசையை ஊட்டிய பாவலன் பாரதி.
தேன் தமிழ்த் தீஞ்சுவைக் காவியம் தீட்டிய பைந்தமிழ்க் கவிஞன் பாரதி.
அடுப்பூதிடும் பெண்களும் ஆண்களைப்போல் எடுப்பாக விருந்திடப் பாரதி.
தீண்டாமையும் மூடக் கொள்கைகளுமிங்கு வேண்டாமே என்றிட்ட பாரதி.
சுதந்திர வேட்கையும் தாய்மொழிப் பற்றையும் நிரந்தரமாக்கிய பாரதி, புரட்சி புரட்சி என்ற பாரதி - பாரில் புரட்கிக் கவியர்னன் பாரதி.
பாரதி பாரினில் சாரதி - அவன் சாகவில்லைத் தமிழ் ஆகிவிட்டான்.
பூராயம்
யாழ்ப்பாண வேலிகளின் கிடுகு ஒட்டைகளில் கண்களைப் புதைத்துப் பாதைகளில் போகும் பாமர மனிதரை நோட்டம் விட்டுச் சாதி பார்ப்பவர் சல்லடை போட்டுப் பரம்பரை கிளறிப் பேரையும் ஊரையும் தெருவையும் அயலையும் கேட்டுப் பார்த்து உற்று உணர்ந்து பூராயம் பேசிடும் நா(ய்)கரீகம் ஒழிக!

- 3 -
‘பாணதுற கரையோரப் புகைவண்டி
தக்குத்தக்கெனப் பூட்சொலித்திட புக்குப்புக்கெனச் சுக்குச் சுக்கென விக்கி ஒடிடும் கரிவண்டியில் நிற்கவே இடமில்லையே எனச் சொல்லியே விரைவாகவே நடை
கட்டிடும் வீரக்காளைகாள்
சாந்துப் பூச்சினில் வேர்வை அரும்பிடச் சொண்டுப் பூச்சினில் சொக்கி மகிழ்ந்திட வண்டு மொய்த்திடும் பூச்சரஞ் சூட்டிய நீண்ட கூந்தலே இல்லாத கன்னியர் குதி உயர்ந்திட இடை வருந்திட மிதி மிதியென்று ஒடி வந்தனர்.
*மகளிர் மாத்திரம் சூட்டிய பெட்டியில் தாமும் மகளிராய் மாறிய ஆடவர் இருக்கையமர்ந்திட இடமும் அகன்றிட முருங்கைபோல் வளைபிடித்து நின்றன பெட்டியும் எஞ்சினும் ஆடவாடப் ஆடவர் பெண்டிரும் ஆடவாடப் பாலமும் பல தூரமும் தாண்டிப் *பாணதுற* வண்டி போனதுவே.
(1967)

Page 8
- 4 -
காற்சட்டை உத்தியோகம்
அந்நியர் ஆட்சியிலே சுரண்டல் முதலாளிகளின் கணக்கு வழக்குக் காரியங்கள் பார்க்கவென்றே ஆக்கிவைத்த காற்சட்டை உத்தியோகம் * வைற் கொலர் ஜொப்" என்ற மாயத்திரை போட்டு மக்களையும் ஆட்டிவைக்க, யாழ்ப்பாணக் கிராம மொன்றில் விவசாயம் செய்து வாழும் - என் அப்புவும் ஆத்தையுமாய் - என்னைக் காற்சட்டை போடவென்று கொழும்புக்கு அனுப்பி வைத்தார் சம்பளம் நான் எடுத்துக் காற்சட்டை வாங்கவென்று - மெயின் வீதிகளில் அலைந்து வந்தேன் காற்சட்டை வாங்கிவிட்டால் சாப்பாட்டுக் கடைக்கும் - பின்னர் அறை வாடகைக்கும் வேறு சில்லறைத் தேவைகளுக்கும் காசுக்கு என்ன செய்வேன்? அரிசி, துணி எல்லாம் ஆனைவிலை, குதிரைவிலை சிங்கள ரியூசனுக்கும் தனியாகக் காசு தேவை வாழ்க்கைச் செலவுகளைத் தாங்காமல் அழுகின்றேன் அப்புவிடங் காசு கேட்க
நாவெல்லோ கூசு குது.
(1966)

سه 5 س
வந்திடுவேன் தைக்கு முன்னர்.
அன்புள்ள அப்பாவே என்னுள்ளம் கேட்டிடுவீர் கண்டியிலே கண்கவரும் குண்டக சாலையினிலே விவசாயம் விளைபொருட்கள் நவமான விஞ்ஞானமுறை உற்பத்தி ஆக்கங்கள் உயிரினங்கள், உடலோம்பல் பலவகையும் படித்திட்டுப் பண்பாகும் வேளையிலே
குண்டகசாலை மாணவிதான் குண்டுமணிக் கையெழுத்தாள் கண்டமென்ன கற்கண்டு கதையென்னவோ தேன்பாகு குணம், ஆகா! தங்கக்கட்டி குமரியவள் மானின் குட்டி கண்டவுடன் காதல் கொண்டேன் வாக்குறுதி கொடுத்துவிட்டேன் தைக்கு முன்னர் வீட்டை வாறன் வாறபோதே கூட்டியாறன்,
என்தன் அப்பா அருமை அப்பா மைந்தன் சொல்லைக் கேட்கும் அப்பா அம்மா என்ருல் சும்மாவோ? தம்பி சொன்னல் தட்டவே மாட்டாள் என்ற துணிச்சல் எனக்கு அப்பா உங்கள் மைந்தன் ஒரே மைந்தன் எந்தன் சுகமே உங்கள் சுகமும் ஆதலால் எழுதினேன் அன்பான அப்பா தப்பாமல் வந்திடுவேன் தைக்கு முன்னர்
(1970)

Page 9
- 6 -
பயனுள்ள வழிகளில் செலவிடுவாயா?
வேலையில்லை என்ற வேதனை மிக்குண்டு சாலையோரங்களில் சந்தி பொந்துகளில் குந்தியே காலத்தைப் போக்கிடும் காளையே! நெஞ்சில் உரமுண்டு நேர்மைத் திறனுண்டு கையில் வலுவுண்டு காலமும் தானுண்டு பையவே பல்தொழில் செய்து பிழைத்திட மெய்யாகவே உன்னிடம் ஆற்றல்தானில்லையா ? பொய்வேண்டாம் என்னுளம் பொய்யரைக் கொள்ளாது.
அரசாங்க வேலைதான் ஆடம்பரமாகச் சீதனம் வாங்கலாம் சீருஞ்சிறப்பாக என்றிட்ட காரணம் காலத்தைப் போக்கிடத் தின்றிட்ட நேரத்தில் திண்ணையிலே தூங்கித் தினவுத்தோள் சோர்ந்திடும் சோம்பேறிக்காளையே! அரசாங்க வேலையும் ஆடம் பரங்களும் வருங்காலம் தானுக வந்து சேரட்டுமே! அதுவரை காலமும் பலவாறு நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவிடுவாயா?

- 7 -
ஓ! மிளகாய்ப் பழமே!
ஏக்கர் கணக்கில், நீண்டு விரிந்த, விஸ்வமடுக் காணிகளில் தேயிலைச் செடிகள் போல் காட்சிதரும் மிளகாயே! உன்னையும் பாடவொரு
காலம் வந்த தடி
உன்சிவப்பு அதரங்கள் பசுமையான கன்னங்கள் தென்னங் கீற்றிலே கிழித்த ஈர்க்குச்சி போல மென்மையான பாதங்கள் இத்தனைக்கும் சேர்த்துத் தான் இப்போது விலையா?
அன்புள்ள மிளகாய்ப் பழமே ! உன் சிவந்த அதரங்களை
நாடிக் கடித்திட்டால். என்னமாய் உறைக்கின்ருய்? சும்மா சொல்லக் கூடாது நல்ல உறைப்புத்தான் அச்சம் மடம் உள்ள - தமிழ் மங்கைக்கு ஏற்ற நியாயமான முறைப்பு உனக்குள்ள கோபம் எம்
பெண்களுக்கும் வேண்டாமோ?

Page 10
- 8 -
சாதி சாதி சாதி
பனைமூடிய எங்கள் யாழ்ப்பாணக் கிராமங்களில் இன்றும் நடப்பதுதான் வீடு கட்டக் கிணறு வெட்டக் கூலிக்காய் ஆள் பிடிப்பார் வீடு கட்டியானவுடன் - சாமர்த்தியமாக நல்ல சாந்தியொன்று செய்துவிட்டுக் கட்டியவரைத் தள்ளிவைப்பார் உள்நுழைதல் பாவம் என் பார் கீழ்சாதி என்று சொல்லிக் கிணற்றிலும் அள்ள விடார் இத்தகைய மக்களிடம் - இனிக்
கூலிக்கும் போகாதீர்.
சாதி சாதியென்று
சாகும் வரை சொல்லி வைப்பார் செத்த பின்னர் இவர்சாதி என்னவென்று செப்புவீரோ? *கோப்பறேஷன்" சென்று இவர் இருகரம் நீட்டி அந்தப் பச்சைப் பிளா பிடித்துக் கொண்டால் உறிஞ்சிக் குடிக்கையிலே சாதியொன்றும் பார்க்க மாட்டார் வீடுகளில் வீதிகளில் வேதியர்கள் ஒதுகின்ற தெய்வச் சபைகளிலே சாதியென்று ஒதிடுவார் சங்கடங்கள் செய்திடுவார்
நாடு மூழுதும் நல்லாய் பகுத்தறிவு பிறந்திட்டால் - இச் சாதிக் கொடுமையெல்லாம்
பஞ்சாய்ப் பறந்து போகும்.
(1968)

( 9 ).
பொங்கல் கவிதை
குத்தரிசிப் பொங்கலில்லை கற்கண்டு சர்க்கரை யில்லை கசுக்கொட்டை பிளம்ஸ் இல்லை தேங்காய்ப்பூத் துருவல் இல்லை - அம்மா உள்ளத்து உணர்ச்சிகளைப் பொங்கியே சொல்லி வைப்பேன் போலிச் சம்பிரதாயங்சுள் வரட்டுக் கெளரவங்கள் பம்மாத்து வேலை யெல்லாம் பஞ்சாய்ப் பறக்கவென்று பண்பாடும் கவிஞர்களே ! பலமாகப் பொங்குங்கள்.
இந்தப் புதுஆண்டில் உங்கள் எழுத்தெல்லாம் உங்கள் பேச்செல்லாம் உங்கள் மூச்செல்லாம் புதுமைக்குப் பலமாய் மக்களுக்கு வளமாய் சமூகத்தின் பயனுய் சங்குகளாய் ஒலிக்கட்டும் சக்கரமாய்ச் சுழரட்டும் பொங்கல் வாழ்க - தமிழர் பண்பாடு வாழ்க.

Page 11
( 10 )
முட்டாள்கள் அல்ல
அன்ருடக் கூலி நான் அரைக்கொத்து, அரிசி வாங்க வக்கில்லாத மனித ஜந்து இறுகிச் சிவந்த ܐܗܝ தோட்ட நிலத்தைக் கொத்திப் பிழைப்பவன் என்னைப் போன்ற ஏழைகளைக் கொத்தி எத்தனையோ பேர் பிழைக்கின்ருர்கள் எங்களைக் கொத்தியே பங்களா கட்டினர்கள் எங்களைச் சுரண்டியே சுகபோகம் காண்கிருர்கள் இவர்களை நாங்கள் நன்ருய் அறிவோம் எத்தனை காலந்தான் ஏமாற்று வார்கள்? இனியும் இவர்கள் எங்களை ஏமாற்ற நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
{ 1969)

( 11 )
எப்ப நான் சரிவேன்?
எப்பவோ வேய்ந்த ஒலைக் குடிசை - என்னுடையதுதான் வளைகள் சரிந்து. கப்புகள் பாறி குறுக்குச் சட்டங்கள் விலகித் தெறித்துப் பலமாய் வீசும் காற்றை எதிர்த்து ஆட்டம் கண்டு மழையைத் தாங்கி ஒழுக்கு ஒழுக்காய் கீழே விழுகின்றன செத்துப் போன அப்புவினுடைய சால்வைத் துண்டை அரையில் கட்டிக் கூதல் காற்றில் கூனிக் குறுகி. வாசல் வரைக்கும் வந்து பார்க்கிறேன் முற்றத்தில் அசையும் ஒற்றைப் பனையொன்று காற்றின் வேகம் அதிகரித்து வரவே - என் பயத்தின் வேகமும் கூடி வருகிறது பனை சொல்கிறது எப்பநான் சரிவேன் எப்ப நான் சரிவேன்?
(1969)

Page 12
( 12 )
போகாமல் நிற்பதேன்?
மாலை வேளை கடற்கரையோரம் உதய சூரியன் மறைந்திடும் நேரம் கன்னியர் இருவர் கடற்கரை வந்தனர் கரையினில் இறங்கிக் கால்கள் நனைய அலைகள் அளைந்து ஆடி நின்றனர் கண்ணைச் சிமிட்டிச் சிரித்துப்பேசி உரக்கத் தமிழில் உல்லாச மாகவே என்னவோ பேசிச் சிரித்து நின்றனர் இன்னுமிக் கன்னியர் போகாமல் நிற்பதேன்?
இருட்டி நேரம் அதிகமாய் விட்டதே கரையில் மக்களைக் காணவே இல்லை இப்பெண்களின் நாட்டத்தை என்னென்று சொல்வது? இதுகூடத் தெரியாதா என்னிள நண்பனே! மதுவைத் தேடும் வுண்டுகள் போல் இளம் காளையர் தேடும் பெண்கள் இவர்களே! காமத்தின் கைகளில் சிக்குண்டு தவிக்கும் பிசாசுகள் இவர்கள், பெண்களே அல்லர். யார் வருவார் பணம் யார் தருவார் என்று
நீர்த்திரை மேவிய நீலக் கடற்கரை ஒரத்திலே நின்று சைகைகள் காட்டியே மானிட ஜன்மத்தில் மறையாமலேயுள்ள காமத்தின் கால்களைத் தட்டியெழுப்பிடும் காசுக்கும் ஆசைக்கும் கற்பினை விற்றிடும் சாகசக் காரிகள் கூட்டமன்ருே இது பாரதி காட்டிய பாங்கான பெண்களைப் பார்ப்பதும் அம்புலி பிடிப்பதும் ஒன்றன்ருே?
O வெள்ளவத்தைக் கடற்கரை
(1967)

( 13 )
மாணவிகள்
வெள்ளைப் பட்டு விரித்தது போல் வெள்ளவத்தைப் பாதையோரம் வரிசையாக மாணவக் கூட்டம் கவர்ச்சியான பெண்கள் கூட்டம் அழகுக் கலையின் இனிய ஊட்டம் பார்க்க எனக்கு மிகவும் நாட்டம்
இரட்டைப் பின்னல் சொகுசுக்காரி வட்டக் கொண்டை வடிவக் குமரி சுருட்டை மயிரும் சுழட்டும் கண்ணும் கிறங்க வைக்கும் சுழட்டல் காரி நீண்ட கூந்தல் குதிரை வாலி பார்த்து விட்டால் முகத்தைத் திருப்பும் கண்ணகி போலப் பசப்புக் காரி
இத்தனை ரகமும் சேர்ந்து வந்தால் எவளை நானும் பார்த்து நிற்பேன் அன்ன நடையில் மெல்ல நடந்து பாதைமீது கவனம் வைத்து யானும் நோக்க நிலத்தை நோக்கித் தமிழின் இனிமை முகத்தில் சொட்ட கனிவுப் பெண்ணுய் ஒருத்தி வருவாள்.
கொழும்பு செவணின் கொழுத்த குமரி குதிகள் உயரச் செருப்புப் போட்டுச் சொண்டு நிறையச் சிவப்புப் பூசிக் கண்ணில் கரிய மையைத் தடவித் தளுக்கிக் குலுக்கி மினுக்குப் பண்ணி பலரைக் கூட்டிப் பொலிவு காட்டிடும் கல்லூரிப் பெண்ணுய் ஒருத்தி வருவாள்
(1969) - மித்திரன்

Page 13
( 14 )
இல்லறம் நல்லறமாகும்
அன்புள்ள நண்ப,
பண்புள்ள நங்காய்! சீர்கெட்ட அமைப்பினிலே சீர்மைகளை உருவாக்கவும் சுரண்டல் உலகினிலே சுரண்டுவோரை ஒழிக்கவும் மூடக் கொள்கைகளும் சாதிப் பிரிவுகளும் சக்தியற்றுப் போகவென்றும் இவ்வினிய திருமண விழாவினிலே சங்கற்பம் செய்திடுவீர் சத்தியமாய் சொல்லிவைப்பேன் நீர் நினைத்தால்
எத்தனையோ சாதிப்பீர்
Ο Ο O
புரட்சியைப் பூக்க வைக்கும் புதுயுகக் குழந்தைகளைப் பெற்றிடுவீர் தங்கைய்ரே ! 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!" சான்ருேளுக்குதல் தந்தைக்குக் கடனே!' என்ற சங்க இலக்கியத்தின்
கருத்திற்கு அமைய என் அருமை நண்பரே! இன்றைய விழாவின் நாயகரே! இன்று இரவுக் கன்னி உமக்காய் வந்துள்ளாள் - அந்த நிலவுக் கன்னியோ ஒழியவே மாட்டாள் மெதுவாய் விளக்கை அனைத்து நீரும் சான்றேனுக்க வல்ல புரட்சிக் குழந்தைக் காய் தப்பாமல் முயன்றிடுவீர் நிச்சயமாய் உங்கள் இல்லறம் நல்லறமாகும்.

( 15 )
துடிக்கும் இதயம்
சங்கத் தமிழாலே தாலாட்டுப்பாடி என்தன் தங்கக் குழந்தையை நான் நித்திரை யாக்கிவிட்டால் திடீரென்று கேட்கும் வெடிச்சத்தம் எங்கோ அர்த்த ராத்திரியில் ஆசையாய் மணம் முடித்த அன்பு மனையாளைக் கட்டியணைத்து ஒரு முத்தம் தரவென்று சிந்தையில் நினைத்திட்டால் கேட்கும் ஒர் குண்டுச் சத்தம் நெஞ்சு கலங்கி என் வேட்கையும் கலைந்து மிக்க வேதனையோடு நான் முகத்தைத் திருப்பிடுவேன் வேதனையொடு நான் முகத்தைத் திருப்பிடுவேன் குண்டுகள் வந்து கூரையைத் துளைத்தாலும் என்று கட்டிலின் அடியினிலே பிள்ளையை பெண்டிலை நான் தள்ளியே சாக்கால் மூடிப் பதுங்கியே பதகளிப்பேன் கறுப்புக் கழுகுகள் ஆகாயத்தில் வட்டமிட்டால் ஐயோ வென்று அலறும் இதயம் எப்பெப்ப. என்னென்ன எங்கேயோ என்றெல்லாம் எண்ணி ஏங்கித் தீய்ந்து கருகி உருகி வாடும் பாழும் இதயம் துளிர்க்கத் துடிக்கும். ஆனல் நாட்டிலோ
ஈரலிப்பு இல்லையே. (1987 யூலை)
1987 g.
eVa VV

Page 14
( 16 )
அந்தநாள் ஞாபகம். . .
அன்ருெரு நாள், முழுநிலவை அனுபவித்த கிராம வாழ்க்கை நெல்லியடிச் சந்தியிலே "செக்கன்ஷோ" பார்த்துவிட்டு சந்தியிலே ஹோட்டலிலே பாங்கான ரீ குடித்துப் பாட்டோடு நான் வீடுசென்ற அந்த நாட்கள். யாழ்ப்பாணம் சென்று நானும் வேலையெல்லாம் முடித்துப் பின் எம். ஜி. ஆர். நடித்த அந்த "மன்னதி மன்னன் பார்த்து மலாயா கபே தனிலே "டீ" ஒன்று அடித்துவிட்டுப் பட பஸ்சில் ஏறிப் பின்னர் வீடு வந்து சேர்வேன், வீரசிங்கம் மண்டபத்தில் பெளர்ணமி இரவிலன்று திறந்தவெளிக் கலையரங்கில் கலைநிகழ்ச்சி பார்த்த நாட்கள் துரையப்பா விளையாட்டரங்கில் துடுக்கான பந்தாட்டம் கோட்டை முனியப்பரிலே மூன்று கால பூசை என்றும் முனைந்து நானும் சென்ற நாட்கள். அப்பா என்றழைக்கும் என் அன்புச் செல்வங்களுடன் பருத்தித்துறைக் கடற்கரையில் வள்ளங்கள் காட்டவென்று சைக்கிளிலே நான் இருத்திக் கரையோரம் உலா வருவேன் வள்ளத்தில் வந்து சேரும் வெள்ளம்டோல் மீன்கள் கூட்டம் சுரு என்றும் பாரை என்றும் திருக்கை சூடை என்றும். கூடை கூடையாய்க் கொட்டிடுவார் சந்தையிலே பருத்தித்துறை வடையோடு மீனையும் வாங்கி நான் பைசிக்கிள் தனிலே பக்குவமாய் ஏறிவந்த அந்த நாட்கள் வந்திடாதோ? ஒயிலாக டான்ஸ் ஆடும் கொக்குவில் சின்னத்துரையின் மயில் போன்ற நடைபயிலும் சின்னமேளக் காரிகளும் கரவெட்டிக் கார்த்திகேசுவின் கலையாத சப்பறமும் *மாத்தயாவின் லைட்மிகPனும் வாணவேடிக்கைகளும் கண்ணன், ரங்கன் என்று விதம்விதமாய்க் கோஷ்டிகளும் திருவிழா உபயகாரர் ஆளடக்கி அகம் மகிழ இரவிரவாய் விழித்திருந்து நான் மகிழ்ந்த நாட்கள் இனித்
திரும்பியே வந்திட்டால் .
(1988

( 17 )
காலத்தின் கவிதைகள்.
காலத்தையொட்டியே கவிதைகளும் பிறக்கும் என்ற வரலாற்று உண்மையினை நானும் உணர்ந்து வாழுகின்ற சமுகத்தில் வாழ்ந்துவரும் மக்களையே பாடிப் பகர்ந்துவர மெல்லமாய்த் தலைப்பட்டேன் கம்பநாடன் கவிதைகளில் பெண்கள் அழுதகண்ணிர் ஆருகப் பெருகிவரும் புகழேந்திப் பாக்களிலோ பாலுந் தெளிதேனும் நாட்டு வீதிகளில் ஆருகப் பெருக்கெடுக்கும் மன்னர்கள், பிரபுக்களைப் பல்லக்கில் தூக்கி வைத்துப் பாடினர்கள் அக்காலம்! பரிசுகளும் பெற்ருர்கள் உண்ட மயக்கத்தில் தம் காதல் மனைவியரின் கூந்தல் வெளிக்கிளம்பும் வாசம் என்னவென்று சந்தேகம் தீர்ப்பதற்கும் பாட்டுவேண்டும் அக்காலம் இவையெல்லாம் பாட்டல்ல இக்காலம் நன்குணர்ந்து பாடுவதே சிறப்பு என்று இருபதாம் நூற்ரு ன்டில்
தனியொருவனுக்கு உணவில்லையெனில் - இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதிப் புலவனின் சிந்தனை அடியொற்றிப் பாடல்கள் பாடவென்று நானும் முன்வந்தேன் பஞ்சத்தைப் பாடிடுவேன் - நாளும் சோறின்றி வாடும் மக்கள் நெஞ்சத்தைப் பாடி வைப்பேன் நாளும் வயல்நிலத்தில் வேலைசெய்து பின்னர் பாழும் வயிற்றுக்குப் பசியாற்றவென்று ஒரு பேணி தேநீர் அருந்தத்தானும் சீனிக்கு வகையின்றி வாழும் சீழ்பிடித்த சமுதாயக் கொடுமையினைப் பாடிடுவேன் சாதியும், அடிமைமுறை , மூடத்தனங்களுடன் பெண்ணடிமை போகவென்று எண்ணியே பாடிவைப்பேன்!
(1985)

Page 15
f I8 )
சின்னஞ்சிறு வயதில்.
சின்னஞ்சிறு வயதில் - என்
பிஞ்சுப் பருவத்தில்
"அம்மா’ என்றழைக்க - என்
அன்புத் தாயாவாள் வெளி முற்றத்தில் தூக்கி என்னைப் பால்நிலாக் காட்டி நல்ல பாற்சோறு உண்ணவைப்பாள் - பின்னர் பாயிலே படுத்தி இனிய பண்ணுேடு சேர்த்து அவள் தங்கத் தமிழாலே தாலாட்டுப் பாடிடுவாள் - அவள் தாலாட்டின் இனிமையொலி இன்றும் என் காதுகளில் சங்க நாதம்போல் - ஒலித்துக் கேட்கிறது தாலாட்டுக் கவிதைகளின்
கன்னற் சுவைதனிலே
கட்டுண்ட என் இதயம்
தானுகக் கவித்துறையில் நாட்டமும் கொண்டதென்பேன் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் ஒளவையார் பாடலென்றும் *ஆலமரம் ஆலமரம் அழகான ஆலமரம்!" "அம்மா அப்பா ஆனவரே! ஆடை அணிகள் தருபவரே "சிங்காரமானவண்டி சீமையிலே செய்தவண்டி அக்காளும் தங்கையும்போல் அவை செல்லும் அழகைப்பார்! என்றெல்லாம் கூடிப்பாடி ஓடி, ஆடி உல்லாச மாகவெல்லோ பள்ளிக்கூடம் சென்று வந்தோம் - மீண்டும். உல்லாசம் வந்திடுமா? - மனத்தை நெருடுகின்ற அந்தநாட்கள் திரும்பியே வந்திடுமா?
í 1988)

( 19 )
என்னருமைச் சிறிய நாடே.
திறமையைப் புறக்கணித்தாய் - இங்கு
திறமையுள்ளவர்கள் நTட்டை வெறுமையாய் விட்டு விட்டுத் தங்கள் வறுமையும் போகவென்று வெளிநாடு செல்வார்கள் சிறிய நாடே! நீ இன்னும் வறுமையாகின்ருய். உழைப்பவரை உயர்த்து அவர்தம் உழைப்புக்குக் கூலிகொடு! - இதனுல் உற்பத்தி பெருகும் ஊதியமும் பெருகும் உற்சாகம் மிளிரும்! பொழுமைகளும் அகலும் இனபேதம் இல்லாமல் தொழிற்சாலைகளைப் பெருக்கு திறமையைப் பயன்படுத்தி வேலைகளைப் பகிர்ந்துகொடு வேலியே பயிரைமேயும் விந்தைகளை அகற்று காரியால வேளைகளில் கந்தோரில் வந்திருந்து சீட்டாட்டம், குதிரைவிடல், பார்களைத் தேடிப்போய்ச் சாராயம் குடித்துவிட்டு நரம்பில்லா நாக்கை வளைத்து வகுப்புவாதம், பூராயம், கிசுகிசுப்புப் பேசி எங்கள் நிர்வாக யந்திரத்தை மெதுவாகச் சீரழிக்கும் தேசத்துரோகிகளைக் கொன்றெழிக்கச் சட்டம் தேவை! நீதிக்கு மதிப்புவேண்டும் நீசரை மடக்கவேண்டும் உழைப்பவர் உயர்ந்து வாழ உழைப்பவர் ஆட்சி வேண்டும்.
(1969)

Page 16
( 20 )
உழைக்கும் கரங்கள் உயரட்டும்
உழைக்கும் கரங்கள் உயரட்டும் உலகம் இன்றே விழிக்கட்டும்!
*உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - என்ற பாரதி பாட்டினை நம் சிந்தையில் கொள்வோம் ஆணிகளைப் பேணிகளை ஆலைகளில் செய்துதரும் திராணியுள்ள வாலிபரை வாழ்த்தி வரவேற்போம்
(உழைக்கும்) காடுகளை மேடுகளைக் கல்லுமுள்ளுப் பாதைகளை வாட்டுகின்ற வெய்யிலிலே ரத்தமாக வேர்வை சிந்தி தேயிலையாய் றப்பர்களாய் கொக்கோவாய் ஆக்கிவிட்ட தோட்டத் தொழிலாளர் வாழ்கவென வாழ்த்திடுவோம்
(உழைக்கும்) காற்சட்டை போட்டு நல்ல சப்பாத்தும் மாட்டிவிட்டோம் காற்ருடிக் கீழ் இருந்து காலாட்டி வே ைசெய்வோம் என்றெல்லாம் எண்ணி எண்ணி வேலைதேடும் வாலிபனே! வீட்டைவிட உத்தியோகம் பொழுதுபோக்க நல்லசுகம் என்றெண்ணும் மங்கையரே! - நீவீர் உழைப்பைத் தேடி ஒடுங்கள் உற்பத்தி பெருக்கி வாழுங்கள் பரந்துகிடக்கும் சிவந்த நிலத்தைப் பண்படுத்திப் பயிர்கள் வளர்ப்போம் (உழைக்கும்)
ஒருவரை மற்றவர் சுரண்டி வாழும் அருவருப்பான பிழைப்பு வேண்டாம் சொந்தக்கையால் தாமே உழைத்து
வந்தனை செய்யும் வாழ்வு வேண்டும்.
உழைக்கும் கரங்கள் உயரட்டும் உலகம் இன்றே விழிக்கட்டும்!
(1970 வாணுெவி)

( 21 )
எக்கவுண்டன் ஆகி.
கொழும்பிலே வாழ்ந்த போது
"எக்கவுண்டன்' ஆகி ஒரு கொழுத்த பணக்காரப் பெண்ணைக் கட்டவென்று கனவுகள் கண்டிருந்தேன் - எங்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் "எக்கவுண்டன்’ என்ருல் எக்கச் சக்கமாய் சீதனம் தருவார் "எக்கவுண்டன்" ஆவதற்கு ஆர்ம்பத்தில் நான் வெள்ளவத்தையில் மூன்று கடைகளுக்கு "எக்கவுண்டன் ஆனேன் வேல்முருகன் லொட்ஜிலும், பூரீ முருகன் ஹோட்டலிலும் கோட்டை வாசலிலே * ஆனந்த பவனிலும்" எக்கவுண்டு வைத்தேன் - அந்த எக்கவுண்டுகள் இன்னும் செற்றில் பண்ணவில்லை - ஆனல் இன்று யாழ்ப்பாணத்தோடு செற்றில் பண்ணிவிட்டேன் பிறகும், * சாட்டட் எக்கவுண்டன்’ ஆக வரவிரும்பி - இங்கு 'டிப்ளோம்ா இன் எக்கவுண்டன்சி வகுப்பில் முதலாம் வருடத்தில் ஒரு
*ஸ்ராட்டட் எக்கவுண்டனுய்" இருந்து வருகின்றேன் சீதனம் எனக்கு நிறைய வேண்டும் உத்தியோகம் பார்க்கின்றேன் - எதிர்காலத்தில் நல்ல புறெஸ்பெக்ட்ஸ் உண்டு
வெளிநாடும் போவேன்! ஐயா தரகர்களே! என் விபரத்தை உங்கள் பதிவேடுகளில் குறித்து வையுங்கள்.
(1972 - வானெலி)

Page 17
( 22 )
பாரதியே நீ இருந்தால்,.
கற்பனையோ டுணர்ச்சியெனும் கலைக்குதிரை
தமிழ்த்தேரில் கட்டி நல்ல சொற்பொருளால் கடிவாளம் தொடர்புறவே பூட்டி
இன்பம் துலங்க இந்நாள் பாவினம் பாடுகின்ற நம்தமிழ்க் கவிஞர்க்குக்
குழாமமைத்துப் பண்பாடிப் பலர் போற்றும் காவலனுய் இருந்திருப்பாய், பாவரங்கும் சுவையுணர்வும்
தழைத்திடவே வழிசெய்வாய் பாரதியே நீ இருந்தால்.
d d O
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை வேண்டும்
பெண்களும் ஆண்களுடன் சமமாக வேணுமென்ருய் திமிர்பிடித்து "மினி" யணிந்து சொண்டுக்குச் சாந்து பூசித்
துடைதெரிய இடைமுறிய நடைநடந்து நம்மவர்கள் பண்பாடு பழித்தல் கண்டால் பாரதியே! பெண்களுக்காய் இரங்கினேனே! பேதை நான் எம்மளவு பாடுபட்டேன் கேட்டாரா தமிழ்ப் பெண்கள்
மாறுவரா தமிழர்களாய் என்றிடுவாய் கவியே நீ!
O O O
காந்தியுடன் திலகரர் அருங்கலை தெரிந்த
ரவிவருமர் கலைஞர் மற்றும் சாந்திநிறை தலைவரெல்லாம் தழைத்தோங்கும்
அறத்தெருக்கள் தம்மில் எல்லாம் வாதிட்டுப் பலர்போற்றும் புறக்கருத்துச் சொன்னுய்நீ
எங்கள் யாழ்ப்பாணக் கிராமங்களில் சாதிக்குச் சண்டையிடும் நந்தமிழர் கூட்டத்தினைக்
கைகொட்டிச் சிரியாயோ பாரதிநீ இங்கிருந்தால்
О O O
(1969)

( 23 )
பற்றிப் பிடியுங்கள்
வெள்ளவத்தைக் கரையினிலே, வாடகைக் குடியிருப்பில் கட்டுக்கட்டாய் வைத்திருந்த கட்டுரைகள், கவிதையெல்லாம் நாடகங்கள், நாவல் எல்லாம் எண்பத்திமூன்று ஆடி வெள்ளத்தில் அள்ளுண்டு போயினவே - இதனல் இலக்கியமே வேண்டாம் என்று இதயம் வெறுத்திருந்தேன் மாடி மனை குடிசைகளா? மனிதவுயிர் உடமைகளா? மாதரார் கற்பா? மனிதாபிமானமா? - காலொடிந்த ஆட்டுக்காய் கண்ணிர்விட்ட புத்தபிரான் மனிதவதை இதுகண்டு மனம் பதைக்க மாட்டாரா?
மாவலியாள் சிரிக்கின்ருள்" மாவலியாள் ஒடுகின்ருள் - என்று பொங்கும் மன எழுச்சியுடன் - அங்கு கூடிக்குலாவியதை - இன்னும் குறிஞ்சிக்குமரனிலே - வாழ்க்கைப் பயணத்தின் காதல் கதைபேசிக் களிப்புற்ற சேதிகளை மீண்டும் ஒரு தடவை நினைத்துப் பார்க்கின்றேன் * மீண்டும் ஒரு முழு நிலவில் கூடிக் கலைவோமா? என்ற "மல்லிகைப் பாட்டொன்று ஞாபகம் வருகிறது பாதிப்பேர் செய்த பாவச் செயலுக்காய் மீதிப்பேரை நாங்கள் முழுதும் மறக்கவில்லை
கடைசி நொடியினிலும் கைகோர்த்துக் கொள்ளிடவே நேச முகத்துடனே நீட்டுகின்ருேம் கைகளினே பற்றிப் பிடியுங்கள் பற்றிப் பிடியுங்கள்! மீண்டும் நாம் மாவலியில் - உரிமையுடன் நீந்த விரும்புகின்ருேம்!
(1984)

Page 18
( 24 )
இயேசுவாய் மாறிவிட்டேன்
யாழ்ப்பாணத்தில் - வெள்ளிக்கிழமை ஒரு பின்னேரம் "மல்லிகைப் பந்தலில்’ கவிஞர் மேத்தாதாசனுடன் ஒரு சந்திப்பு என்று அழைப்பிதழ் கிடைத்து அங்கு சென்றேன் ஆறுமணியோடு பஸ்சை நிறுத்தினர்கள் * வெடிச்சத்தங்கள் தான் காரணம் என்ருர்கள் ஐயகோ என்ன செய்வேன்! அரைமணியாய்க் காத்திருந்து, அரை முத்தல் பாணையொத்த சிமினிவான்" ஒன்றைக் கண்டு உள்ளம் புளசித்தேன் முண்டியடித்தவரோ சீற்றெல்லாம் நிரப்பிவிட்டார் இன்னுஞ் சிலபேரோ "கூட்டிலும் ஏறிவிட்டார் இதைவிட்டால் வழியில்லை - அதனல் வாசலிலே நின்றுகொண்டேன் குறுக்கே ஒடுகின்ற வளையொன்றைக் கைப்பிடித்தேன் நாரியைச் சவட்டி நான் சிலுவையைச் சுமந்த அந்த இயேசுவாய் மாறிவிட்டேன்.
பாவிகள் பயணம் செய்யும் பாதை என்றுதான் பாராமுகமாய் இருக்கின்ருர்களோ? ஒன்றரை மணிநேரம் ஒற்றைக் காலில் நான் செய்த நெடும் பயணம் வாழ்வில் மறப்பேனே? நாரிப் பிடிப்பு இன்னும்
நன்முக மாறவில்லை.
( 1086)

* 2:5 )
ஏற்றுமதிக் கூலிகள்
மத்திய கிழக்கினிலே கருவாட்டுச் சம்பளத்தில் மாடாய் உழைத்துருகும் எம்மவரைக் கண்டேன் அழகான கல்வீடு, கார்விடக் கூட்" என்று இந்தியாவும் சேர்த்திழுக்க இதமான ரி. வி. ஒன்று விதம் விதமாய் ஆபரணங்கள், வீட்டுக்கும் 'இனம்" என்று பாஷணுகிப் போய்விட்ட வீடுகளில் வளம் சேர்க்கு வாடி உழைத்துவரும் வாலிபரை அங்கு கண்டேன் அன்ருெருநாள், தேயிலைத்தூரில் தேங்காய் மாசி இருக்குதென்று சொல்லி வீராயி காமாட்சி மீனுட்சிகளையெல்லாம் வெள்ளைத்துரை ஏஜண்டுகள் கப்பலிலே கூட்டிவர இங்கே வந்தவர்கள் காட்டை வெட்டினர்கள் தேயிலை, கோப்பி நட்டுப் பொன்னைக் கொழித்தார்கள் இப்பொழுது, அராபிய முதலாளிகளின் அடிமை ஏஜன்சிகள் பத்துப் பதினெட்டு இருபத்தியெட்டு என்று வாங்கி இரண்டுக்கும் மூன்றுக்கும் கூலி வாங்குதற்காய் பிளேன் ஏற்றி அனுப்புகின்ருர் 'ஹவுஸ் மெயிட்ஸ்" என்று கெளரவமாய்க் சொல்கின்றீர்
- அங்கு காசுக்கர்ய் அவர்படும் இன்னல்கள் நீர் அறியீர் பெண்ணடிமை போகவென்று பொங்கிய பாரதியும்
பெண்ணின் பெருமை சொன்ன திரு. வி. க. அன்னரும் இன்றிங்கு உயிரோடு இல்லையென்ற காரணத்தால் கட்டம் கட்டமாகக் கன்னியரை அனுப்புகின்றீர் காலம் உங்களுக்குக் கட்டாயம் பதில்சொல்லும்,
(1985)
குறிப்பு: (1981 - 83 வரை கவிஞர் குவைத் நாட்டில் வாழ்ந்
தார் என்பது குறிப்பிடத்தக்கது)

Page 19
ஒ! தமிழ்ப்பெண்ணே!
ஓ! தமிழ்ப்பெண்ணே கொஞ்சம் நில், கவனி! இத்தனை நாட்களும் நீ இருட்டிலே இருந்தது போதும் இனிமேலாவது வெளிச்சத்துக்கு வா பெண்ணே! கல்லானுலும் கணவன், புல்லானுலும் புருஷன் என்று கணவன் ‘கசிப்பைப்" போட்டுவிட்டுக் கன்னு பின்னவென்று திட்டி - உன் மயிரைப் பிடித்திழுத்து மார்பகத்தை நகத்தால் கீறிச் சித்திரவதை செய்தாலும் "என்ரை தெய்வம்" என்று பேசாமல் பார்த்திருப்பாய்? பாவம் நீ பெண்ணே நாயகனைத் திருத்தவந்த நல்லதொரு நாயகியாய் வாய் வன்மை கொண்ட நல்ல சீரிய பெண்மணியாய் பொங்கியெழு பெண்ணே நீ பொறுத்தது போதும் மாற்ருனின் மனையாளை மயக்கத்துடன் பார்த்திடுவார் கல்லூரிக் கன்னியரைக் கனவினிலும் கண்டிடுவார் கள்ள மனங்கொண்ட பல வெள்ளைவேட்டிக் காரர்களைக் கட்டி இழுத்து வந்து கம்பத்தில் கட்டிடுவாய் கற்பென்றும் காப்பென்றும் கண்டபடி பேசிடுவார் கற்பென்ருல் என்ன? பெண்களுக்கு மட்டுந்தானு? *அண்ணு போல் பழகிக்கொண்டு கள்ளமாக ஆசை வைப்பார் பெண்ணுகப் பிறந்து நீயும் பட்டவைகள் போதும் இனி! பொங்கி எழுந்திடுவாங்! போர்க்கோலம் பூண்டிடுவாய் மூடக் கொள்கைகளைச் சாதிக் கொடுமைகளைச் சீதனப் பிசாசுகளைத் தீவிரமாய் எதிர்த்திடுவாய்! பெண்ணே உனக்கு இங்கு கடமைகள் பலவுண்டு கண்ணியமாய்ச் செயற்படுவாய் - வீண் பேச்சினைக் குறைத்து வீர வனிதையாய்ப் புறப்படுவாய்
(1984)


Page 20
இந்நூலின் விற்பனையில் கிை தும் வதிரி பரம
தைச் சிறுவர்கள்
படும்.
 

ஆக்கச் செலவு தள்ளி டக்கும் வருவாய் அனேத் ானந்தா ஆச்சிரம அணு ரின் நிதிக்கு வழங்கப்