கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்

Page 1
يج"
பெண்கள் கல்வி
 

ஆய்வு நிறுவனம்

Page 2

சமாதான முயற்சிகளில் பால்நிலை
பிரதிநிதித்துவம்
டில்ருக்ஷி பொன்சேகா
தமிழாக்கம் : நவாலியூர் நடேசன்

Page 3

உள்ளடக்கம்
பக்கம்
முன்னுரை V
நன்றி உரை VII
அறிமுகம் LX
1. ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்
துவப் படுத்துகை பற்றி நாம் என்ன அர்த்தம் கொண்டுள்ளோம் 1
2. யுத்தகாலத்தில் சாதாரணமாக நிகழும் பெண்களுக்கெதிரான
பாலியல் வன்முறைகளும் அதன் அர்த்தத்தையும் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம் / விளக்கலாம் 7
3. சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்
படுத்துகையை மேம்படுத்துவதற்கு தடைகள் என்ன? 19
4. இலங்கையில் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு
சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகைக்கு எதிரான சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளும்? 25
5. இலங்கையில் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த
விடயம் பற்றி நான் என்ன முடிவுகளுக்கு வரலாம்? 28

Page 4

முன்னுரை
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பிரஜைகளான இரு தரப்பினர்க்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் சமாதானத்தைப் பற்றி பேசி வருகிறோம். அண்மையில் பல உயர்தர மட்டத்தில் முரண்பாடுகளை எப்படித் தீர்ப்பது என்றும், முரண்பாடுகளை அகற்றுவது எப்படி என்றும், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவும் திறமையும் படைத்த அரசாங்க உத்தியோகத்தினரும், மற்றவர்களும் சமாதானத்தைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் இது பற்றிச் சாதகமாக எழுதியிருக்கும் அதே சமயம் பலர் அது பற்றி எதிர்ப்புக் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினராகிய நாம் இத்தகைய பேச்சுக்கள் ஒரு தவறான பாதையில் செல்வதாக உணருகின்றோம். பெரும்பாலும் தவறான அர்த்தப்பாடுகளும், தவறான விளக்கங்களும், தவறான சொற்பிரயோகங்களும், கருத்துப் பிரயோகங்களும், திட்டமிடப்பட்ட கருத்து மாற்றங்களும், உதாரணங்களும், அனுபவங்களும், மக்களைத் திசை திருப்புவதற்கும், மக்கள் மத்தியில் மனப்பிதியை ஏற்படுத்தும் நோக்கிலுமே எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இப் பிழையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்கள் தங்கள் தங்கள் சுய அடையாள உருவாக்கத்தில் ஐயம் ஏற்பட்டு குழம்பிப் போய் உள்ளனர். இதனால் எம் நாட்டு மக்களுக்கு இவை பற்றி தெளிவுபடுத்துவது ஒரு நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. இந் நோக்குடன் நாங்கள் சில விடயங்கள், கருத்துக்கள், முரண்பாடுகளைத் தெரிவு செய்து இவற்றைச் சரியான முறையில் எப்படி விளக்க வேண்டுமோ அதன்படி விளக்கம் கொடுக்க முனைகின்றோம். சில புதிய விளக்கங்களும் தேவைப்படுகின்றன. தீவிர கட்சி அரசியல் சார்பற்ற சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளோம். தொடர்ந்தும் மனித விழுமியங்களில் நம்பிக்கை உடையோரையும், ஜனநாயகப் பண்பாட்டில் அவாவுயுள்ளவர்களையம், இலங்கையின் சமய சார்பற்ற பன்முகத் தன்மையை பேணுபவர்களையும் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இம்மீள் கட்டமைப்பில் நாம் ஒரு சமூக நீதியைப் பேணும் ஜனநாயகப் பண்பாட்டை எதிர்பார்க்கின்றோம். இப்பண்பாடு சகல இன மக்களினதும் தனி மனித உரிமைகளையும், சமூக உரிமைகளையும், சுதந்திர மனப்பாங்கையும் பேணும் ஒரு நிலமையை ஏற்படுத்தும் என்பதும் நமது எதிர்பார்ப்பு.
இளையோர் முதியோர் என ஏழாயிரம் பேருக்கு இச்சிறு நூல் சென்றடையும்.
கனவுகள் நிஜமாவதுண்டு எதிர்பார்ப்புகள் பல செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 5

நன்றி உரை
இத் திட்டம் பலரினதும் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்றோரும், செயலூக்க வல்லுனரும் கலந்து கொண்டனர். முதலில் இச்சிறு நூல்களிற்குத் தலைப்புக்களைத் தெரிந்தெடுப்பதற்கு மேற் குறிப்பிட்டோரும், எமது நிறுவன அங்கத்தினரும் சேர்ந்து ஒரு சிறு குழுவை உருவாக்கினோம்.
திருமதி பேணடின் சில்வா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து திரு. ஏ. ஜே. கனகரட்ண ஆகியோருடன் கலந்துரையாடித் தலைப்புக்களைத் தெரிவு செய்து பத்து ஆய்வாளர்களையும் இனங்கண்டு கொண்டோம். ஆனால் எங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் ஐந்து ஆய்வாளர்கள் தான் எங்களுடன் நிலைத்து நின்றார்கள். திரு. ஜெகன் பெரேரா, கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ, கலாநிதி குமார் டேவிட், செல்வி டில்றுக்சி பொன்சேகா, திரு. அன்ரன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எமது நன்றிகள்.
மூலப்பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்தமையால் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. திருமதி சோமா ஜெயக்கொடி, திருமதி இந்திராணி கோவிந்தசாமி, திரு. ஏ. ஜே. கனகரட்ண, திரு. கே. நடேசன், திரு. வைரமுத்து சுந்தரேசன் ஆகியோர் மொழி பெயர்ப்பதற்கு உதவியாக இருந்தனர். இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவியவர்கள் யுனி ஆர்ட்ஸ்' நிறுவனத்தினராவர். இவர்களின் பொறுமையும் கடமையுணர்வும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இத்திட்டம் வெற்றி பெறக்காரணமாக உதவிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன அங்கத்தவர்களையும், மரினி டி லிவேரா, மகேஸ் வைரமுத்து, அட்டைப்படம் வரைந்து உதவிய சாந்தினி குணவர்த்தன அவர்கட்கும், மேலும் எமது உதவியாளர் சந்திரசேனவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
Vii

Page 6

அறிமுகம்
இலங்கையில் நிலவும் இனத்துவ உறவுகளை சமூக, வரலாற்று சூழலில் எளிய மொழி நடையில் அலசுவதே இச்சிறு நூலின் நோக்கம் ஆகும். இச்சிறு நூலின் தலைப்பிலேயே இது தொடங்குகின்றது. இந் நூல் கல்வி நோக்கங்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டுள்ளமையால் இயன்றளவு எளிய மொழி நடை பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆராயப்படும் விடயம் எளிமையானது அல்ல. எனவே உள்ளடக்கப்பட்ட விடயங்களை மீள் வாசித்தல் அல்லது ஆறுதலாக வாசித்தல் சிறந்த பலன்தரும் என்பது இங்கு அறிவுறுத்தப்படுகிறது.
நாம் யார் என்பது பற்றியும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஏன் தடைகள் உள்ளன என்பது பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இனத்துவ உறவுகள் தொடர்பான சமூக சூழமைவு அவசியமாகிறது. இனத்துவ உறவுகளைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுச் சூழமைவும் அவசியமாகும். ஏனெனில் இச்சூழமைவிலேதான் எமது பெரும்பாலான தப்பபிப்பிராயங்கள், தப்பெண்ணங்கள், அச்சுவார்பான படிமங்கள் என்பன உறைந்துள்ளன. ஆனால் மிக முக்கிய அம்சமாக இங்கு அமைவது வரலாற்றுச் சூழமைவில் இனத்துவம், தேசம், பல்கலாசாரம் ஆகிய எண்ணக்கருக்களைப் புரிந்துகொள்வதாகும்.
எந்தவொரு இனக்குழுவிற்கும் பக்கச்சார்பின்றி, நாட்டில் இன முரண்பாடு பற்றிய நடுநிலையானதும் புறநிலையானதுமான ஒரு விளக்கத்தை தருவதற்கு இச்சிறு நூல் முனைகிறது. எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் நிலவிவந்த நல்லுறவுகளைச் சீர்குலைத்த கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விமர்சிப்பதற்கு நூலாசிரியர் தயங்கவில்லை. சமாதான அமைதி நிகழ்வுத் தொடர் குறித்து நேரான மனப்பாங்குடன் நூல் முற்றுப்பெறுகிறது.
நூலினதும் அதன் உள் அடக்கங்களினதும் நோக்கமாக அமைவது இன ஐக்கியத்தை மீளமைத்து சமாதானத்தை நாட்டில் முன்னெடுப்பதாகும். சமாதானத்தை முன்னெடுப்பதற்கு சமாதானம் பற்றிய அதிக அளவிலான விளக்க நூல்கள் அவசியம் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டதொன்று. சமாதானம் பற்றிய வாசிப்பு ஏடுகளின் பற்றாக்குறை சமாதான இயக்கத்தின் ஒரு பிரதான குறைபாடாக இந்நாட்டில் அமைகிறது. ஆகவே இந்நூல் இவ்விடைவெளியை சிற்றளவில் நிவர்த்தி செய்ய முனைகிறது.
சாதாரண மக்கள் வாசிப்பதற்கு அல்லது பயிற்சிக் காலங்களில் கல்வி ஏடாக அவர்களால் பயன்படுத்தப்படுவதற்காக இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நோக்கங்களுக்காக நூலானது சிங்களத்திலும் தமிழிலும் மேலும் விளக்கத்துடன் மொழிப்பெயர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது.
ஆயினும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த முதற்பதிப்பு இனத்துவ உறவுகள், தொடர்பாடல் ஆகிய விடயங்களில் ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகப் பயன்படுத்த முயற்சிக்கும் படித்த இளைஞர்களுக்கு பிரயோசனம் மிக்கதாக விளங்கும்.

Page 7

ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பற்றி நாம் என்ன அர்த்தம் கொண்டுள்ளோம்.
சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பெண்ணியம், சமாதானம் பற்றிய கலந்துரையாடல்களின் போது ஆய்வாளர்களினதும், தொழிற்படுவோரினதும் கவனத்தைப்பற்றி நிற்கும் ஒரு விடயமாகும். அனைத்துலக அமைப்புகள், தேசிய அரசாங்கங்கள், குடியுரிமைச் சமூகம் போன்றவை யுத்தம் பற்றி ஆராயும் நிகழ்ச்சி நிரலில் முதன்மை வாய்ந்த விடயமாக அதனை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. முரண்பாடுகளிலிருந்து விடுபட்டு வரும் சமூகங்கள் தங்கள் தங்கள் சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகையை உறுதிப்படுத்தவும், மேம்படுத்தவும் நுட்பமான வழிவகைகளை விருத்தி செய்து வருகின்றன.
ஆனால், நாம் சமாதான, நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகை குறித்து உண்மையில் என்ன அர்த்தம் கொண்டுள்ளோம்?
ஒருபுறம் பால்நிலைச் சமத்துவம் இல்லை. அத்துடன் அதனோடு சமன்படுத்தக் கூடாது. துரதிஷ்டவசமாக பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை எண்ணிக்கையளவிலே அடிக்கடி கலந்துரையாடப்படுகிறது. அது ஒரு நிகழ்ச்சித் தொடருக்குள் இருபாலாரின் பிரதிநிதித்துவப்படுத்துகையை சமன்படுத்துவதாகவே உள்ளது. இலங்கை உட்பட உலகம் முழுவதிலும் மொத்தத்தில் சமாதான நிகழ்வுத் தொடரில் பெண்கள் குறைந்த அளவிலேதான் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள் என்பது யதார்த்தமாகும். சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு பெண்களின் பங்களிப்பினை அதிகரித்தல் அத்தியாவசிய முதன்மை வாய்ந்ததாகவும், ஒரு சவாலாகவும் உள்ளது. இருப்பினும் ஒரு பேச்சுவார்த்தை மேசையைச் சூழ்ந்து பெண்கள் சமூகமாயிருத்தல் நிகழ்வுத் தொடருக்குள் அவர்களின் தேவைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை மேம்படுத்தவும் உறுதி செய்வதாகாது. சமாதான நிகழ்வுத் தொடரை பால்நிலைச் சமத்துவமாக உருவாக்கிவிடுதல் அதேயளவு முக்கியமானதாகும். அப்பொழுதுதான் பெண்களின் யுத்தகால அனுபவங்களை அது பிரதிபலிப்பதோடு, அவர்களின் நலன்களையும், தேவைகளையும் சமாதானப் பின்னணி அர்த்தமுள்ளதாக்கும். பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையினை இருபாலாரையும் உள்ளடக்குதல், பால்நிலை சார்ந்த உணர்திறன் ஆகிய இந்த இரண்டிற்கும் உத்தரவாதம் அளித்தல் என்று நாம் அர்த்தம் கொள்கிறோம்.

Page 8
சமாதான நிகழ்வுத் தொடர் என்றால் சமாதான பேச்சு வார்த்தை என்று அர்த்தமல்ல. அதற்குள் அது மட்டுப்படுத்தப்படவும் கூடாது. ஒரு சமாதான நிகழ்வுத் தொடரில் அடிவேர் நடவடிக்கைகளிலிருந்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் வரை எல்லா மட்டங்களிலும் சமாதானத்தை உருவாக்குவதிலும், கட்டியெழுப்புதலிலும் அடங்குகின்றன. பிணக்குகள் மூன்று பாதைகளை உள்ளடக்கியுள்ளன. முதலாவது பாதை உத்தியோக பூர்வமான் (ராஜதந்திர) மட்டம், இரண்டாவது பாதை (நடு) மட்டம், மூன்றாவது பாதை நுண்மட்டம் (அடிமட்டம்). (1) பெண்கள் சமாதானத்திற்கு எல்லா மட்டங்களிலும் முக்கிய பங்களிப்புச் செய்கிறார்கள். எல்லா மட்டங்களிலுமான அவர்களின் இப்பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்த முடியும்.
முடிவாக சமாதானம் என்பது யுத்தம் இல்லாத நிலை அல்ல. அதை அந்த எல்லைக்குள் அர்த்தம் கொள்ளவும் கூடாது. பெண்கள் தொடர்பாக இது விசேட முக்கியத்துவம் வாய்ந்தது. யுத்தகாலத்தில் மாத்திரமல்ல, சமாதான காலத்திலும் பெண்கள் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் தமது நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக வீட்டு வன்முறைகளையும், பாலியல் தொல்லைகளையும் அனுபவிப்பவர்களாக உள்ளனர். அத்துடன் பொருளாதார, சமூக தப்பெண்ணங்களையும், அநீதிகளையும் தமது நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாக அனுபவித்து வருகிறார்கள். சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகை, சமாதானம் பற்றிய மிகவும் விசாலமான புரிந்துணர்வுடன், அதாவது எல்லா வடிவங்களிலும் உள்ள வன்முறைகள் (தனிப்பட்ட, வீட்டு அமைப்பு சார்ந்த பண்பாடு) இல்லாது மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் பூரணமாக அனுபவிக்கும் நிலையே சமாதானம் என்ற வரையறைக்குள் கலந்துரையாடப்பட வேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகை மட்டங்கள் பற்றி நாம் திருப்தி அடையலாமா?
நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாகப் பெண்கள் சமாதானத்தை வளர்ப்பதற்கு தமது சமுதாயத்திற்குள்ளேயும், அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர். இது இன்று எப்போதையையும்விட மிகப் பொருத்தமானது. அனைத்துலகிலும் நாம் உதாரணங்கள் மூலம் அறிந்ததின்படி பெண்கள் தத்தமது சமூகங்களின் பிணக்குகளிலிருந்து மாற்றம் பெறுவதற்கான வழிமுறைகளில் பலவழிகளில் சேவையாற்றி வருகின்றனர். அனைத்துலக நிறுவனங்கள், தேசிய அரசாங்கங்கள், குடியுரிமை சமூக அமைப்புக்கள் முதலியன சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள் சேவையின் பெறுமதிகளைத் தெளிவாக உணர்ந்து, எல்லா
2

மட்டங்களிலும் சமாதானத்தை உருவாக்குதலுக்கும், சமாதானத்தைக் கட்டியெழுப்புதலுக்கும் பெண்கள் கூடுதலாகப் பங்கு கொள்வதற்கு அதிக ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால் முற்போக்காக இப்போக்கு இருப்பினும் சமாதான ஆய்வுகளிலும் பெண்கள் ஒதுக்கப்பட்டு தொடர்ந்து ஆண்களே அவற்றில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் நுண்மட்டத்தில் பெண்கள் அர்த்த புஷ்டியுள்ள பங்காற்றினாலும் அவர்கள் வேறு மட்டங்களில், குறிப்பாக உத்தியோகபூர்வ மட்டத்தில் இன்றும் புறக்கணிக்கப்பட்டவர்களாக உள்ளனர். சமாதான வழிமுறைகளில் 'பால்நிலை இடைவெளி ஒரு சவாலாக தொடர்ந்து அமைகிறது.
இலங்கையிலுள்ள இத்தகைய நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையின் மட்டங்கள் குறித்து நாம் திருப்தி அடையலாமா?
இலங்கையின் நிலைமை சிறிது வித்தியாசமாக இருப்பது வருந்தத்தக்கது. இலங்கையின் சூழமைவில் பெண்கள் சமாதானத்தின் செயற்திறன் கொண்ட முகவர்களாகவோ அதன் அடிநிலையிலிருந்து செயற்படுவோராகவோ, குடியுரிமைச் சமூக சேவையில் உழைப்பவர்களாகவோ, கொள்கை ஆலோசகர்களாகவோ, சிந்தனையாளர்களாகவோ, ஆய்வாளர்களாகவோ ஒரு புறம் இருக்கிறார்கள். அரசியல், இன பிளவுகளிடையே நாட்டில் சமாதானம் நோக்கிய முன்னேற்றத்திற்கான வலைப்பின்னலையும், கூட்டுச் சேர்தலையும் கட்டியெழுப்புவதில் பெண்கள் குறிப்பிடத்தக்க வெற் யடைந்துள்ளனர். r
எப்படியாயினும், சமாதானத்தை உருவாக்குவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும் பெண்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப் படுவதாகவும், குழிபறிக்கப்படுவதாகவுமே தோன்றுகின்றது. இலங்கையிலுள்ள பெண்கள் சமாதானம் பற்றிய விடயங்களில் தீர்மானம் செய்யும் பெரும்பாலான குழுக்களில் மிகவும் குறைந்த தொகையிலே பிரதிநிதித்துவப்படுத்தப் படுவதோடு உத்தியோகபூர்வமாக சமாதானத்தை உருவாக்கும். குறிப்பிடத்தக்க பெரும்பாலான நிகழ்வுத் தொடர்களில் அவர்கள் சேர்க்கப்படாதுள்ளனர். இலங்கையின் சமாதான நிகழ்வுத் தொடரில் 'பால்நிலை சார்ந்த இடைவெளி ஏனைய சூழமைவுகளில் உள்ளதுபோல் இருக்கிறது என்பதே ஓர் உண்மையாகும்.
(1) John Paul Laderach, Building Peace: Sustainable.

Page 9
யுத்தத்தின் தாக்கம்/விளைவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் வேறுபட்டவையா?
சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகையினை நன்கு விளங்கிக் கொள்வதற்கு முதலில் நாம் பெண்கள் மீதான யுத்தத்தின் தாக்கத்தை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆண்களும், பெண்களும் யுத்தத்தின் மூலம் பொதுவான பல அனுபவங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. யுத்தத்தின் காரணமாக அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வன்முறையினையும் பொருளாதார, சமூக இடப்பெயர்வினையும் சகித்துக் கொண்டனர். அவர்கள் போராளிகளாகவும், முகாம் பொறுப்பாளர்களாகவும், சிறு வருமானத்திற்குத் தனியாக உழைப்பாளர்களாகவும், பேச்சுவார்த்தை நடத்துவோராகவும், அரசியல் தலைவர்களாகவும் புதிய பாத்திரங்களையும், பொறுப்புக்களையும் எடுத்துக் கொண்டனர்.
எப்படியாயினும் பால்நிலையும், பால்நிலை சார்ந்த வேறுபாடுகளும் இந்த அனுபவங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுக்கின்றது. பெண்கள், பெண்கள் என்ற முறையில் அவர்களுக்குரிய ஒழுக்கத்திற்குள் இருக்க வேண்டிய வர்களாக உள்ளதால், அவர்களே பெரும்பாலும் குறிப்பிட்ட வகை வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் வன்முறையை பல்வேறு வகைகளிலும் அளவிலும் தாங்கிக் கொள்கிறார்கள். உதாரணமாக யுத்த காலத்தில் பெண்களே தமது ஆண் துணைவர்களைவிட பாலியல் வன்முறைகளால் கூடுதலாகப் பாதிக்கப்படுபவர்களாகிறார்கள். அத்துடன் அவர்கள் தமது பால்நிலைக்குரிய பண்புகளாக அன்னையர், பராமரிப்பவர் என்ற பாத்திரங்களாக யுத்தத்தின் பல்வேறு முகங்களையும் அனுபவிக் கின்றனர். அத்தகைய சூழமைவுகளில் தமது பால்நிலை பண்புக்குரிய பல்வேறு பாத்திரங்களையும், பொறுப்புக்களையும் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
யுத்தகாலத்தில் பெண்களது அனுபவங்களை ஒருவர் பொதுமைப்படுத்த இயலாது. யுத்தம் பற்றிய பெண்களின் அனுபவங்களை உருவாக்குவதில் பால்நிலை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தபோதிலும் அவர்களின் அனுபவங்கள் வேறும் பல காரணிகளால் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக முரண்பாட்டின் தன்மை, அரசியல், பொருளாதார சமூக நிலைமைகள், இனத்துவம், சமய கலாசாரப் பின்னணிகளைக் குறிப்பிடலாம். உதாரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள பெண்களின் யுத்தகால அனுபவங்கள் நாட்டின் தென்பகுதிகளிலுள்ள பெண்களின் அனுபவங்களிலிருந்து கணிசமான விதத்தில் வேறுபடுகின்றன. மேலும் வடபகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பல தரங்களில்
4

இருந்து போராடும் பெண் போராளிகளின் அனுபவங்களைவிட கிழக்குப் பகுதியில் உள்ளகமாக இடம்பெயர்ந்து மீள்குடியமர்வு முகாம்களில் வாழும் பெண்களின் அனுபவங்கள் பெரும்பாலும் வித்தியாசமானவை.
சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகையின் முக்கியத்துவம் பற்றி விளங்கிக் கொள்வதற்கு பெண்களின் மீதான யுத்தத்தின் தாக்கம் பற்றி விளங்கிக் கொள்வது முக்கியமாக இருக்கையில் பெண்கள் யுத்தத்தினால் எதிர்மறையான சந்திப்புக்களைத் திரட்டுவதில் உள்ள அபாயங்கள் பற்றி விழிப்பாக இருக்கவேண்டும்.
யுத்தம் பெண்களை எவ்வாறு தாக்குகிறதுவிளைவை ஏற்படுத்துகிறது?
இன்றைய பெரும்பாலான யுத்தங்கள் ஒரு தேசத்திற்குள்ளே நடக்கும் இயல்புள்ளவையாக, அங்கே நெருக்கமாக அருகருகே வாழும் சமூகங் களுக்கு உள்ளேயும், சமூகங்களிடையேயும் வன்முறைகள் இடம் பெறுகின்றன. வன்முறைகளும், வன்முறைகளால் பாதிக்கப்படுவோரும் போராளிகள், போராளிகள் அல்லாதவர்கள் என்ற பிரிவுகளில் சரியாக அடங்குவதில்லை. அத்தகைய சூழமைவுகளில் பொதுமக்களே வன்முறைக்கு இலக்காகிறார்கள். அப்பொதுமக்கள் தொகையில் பெண்களே பெரும்பான்மையினராக இடம்பெறுகிறார்கள். பெண்கள் கொல்லப்படுவது அல்லது அங்கவீனம் ஆக்கப்படுவது மாத்திரமல்ல, சிறை, சித்திரவதை, அங்கங்களை வெட்டிவிடுதல் உட்பட பல்வேறு வடிவில் உடல், உணர்வுபூர்வமான நெருக்குதல்களுக்கு ஆளாகின்றார்கள்.
பெண்கள் யுத்த காலங்களில் இடப்பெயர்வினையும் அனுபவிக்கிறார்கள். ஐ.நா.சபையின் அகதிகளுக்கான ஆணையராலயம் எல்லா அகதிகளிலும், உள்ளகமாக இடம்பெயர்ந்தோர்களிலும் எண்பது வீதத்திற்கு மேற்பட்டோர் பெண்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இலங்கையிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் பெண்கள் காலத்திற்குக் காலம் இடம்பெயர்ந்து இன்னொரு இடத்தில் இருக்கும் நிலைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். அவர்களில் சிலர் வன்முறைகளைச் சந்தித்தாலும், வன்முறை அச்சுறுத் தலாலும் மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் தமது இல்லங்களை விட்டு புகலிடம் தேடி ஓட வேண்டியிருந்தது. தற்காலிகமான புகலிடங்களிலும், முகாம்களிலும் வாழும் பெண்கள் உடல், பொருளாதார ரீதியான தாங்க இயலாத கொடிய கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களாலும், மேற்படி இடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளாலும் வன்முறைக்கும் பாலியல் வன்முறைக்கும் சுலபமாக இரையாகின்றனர்.

Page 10
யுத்த நிலைமை சமூகங்களில் பொருளாதார சமூக மாற்றங்களை விசேடமாக பெண்களோடு சம்பந்தப்படுத்தியே ஏற்படுத்துகின்றது. பல சமூகங்களில் பெண்களே தத்தமது குடும்பங்களின் தேவைகளைக் கவனிப்பதற்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர். பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த உணவு முறைக்கு வழியில்லாமிலும், சுகாதார நலனைப் பேணவும் இயலாத நிலையே யுத்தத்தின் குணாம்சமாகக் கொள்ளப்படுகிறது. எனவே இது சம்பந்தமாக பெண்களின் சுமைகள் அதிகரிக்கின்றன. கணவர்களை யுத்தத்தில் இழந்த பெண்கள் பிரதானமாக அவர்களே உணவிற்கு உழைக்க வேண்டியவர்களாக்கப்படுகின்றனர். அவர்கள் வாழ்வதற்காக புதிய இடங்களில் இடைக்கிடை அற்ப சம்பாத்தியம் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். பெண்களைப் பொறுத்தவரை யுத்த காலத்திலும், யுத்தத்திற்குப் பிற்பட்ட காலத்திலும் மிகப் பாரிய சமூக, பொருளாதாரம் சம்பந்தப் பட்டவைகளுள் ஒன்றான சொத்துடைமையையும், காணி உரிமையையும் அவர்கள் அடைவது பற்றியதாகும். பல சமூகங்களில் (இலங்கையின் சில பகுதிகள் உட்பட) காணிகள் தகப்பனது பரம்பரைச் சொத்தாக வழங்கப்படுகின்றன. யுத்தத்தால் கைம்பெண்களாகியவர்கள், தமது இறந்த கணவர்களின் அந்தப் பரம்பரைச் சொத்துக்களுக்கு தமக்கான உரிமையைக் கோருவதோ அல்லது உரித்துடையவர்களாவதோ மறுக்கப்படுகிறது.
யுத்த காலத்தில் வீட்டு வன்முறைகள் திடீரென அதிகரித்துள்ளதாக அண்மைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கணவர்கள் தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக நிலைமைகள் ஏற்படும்போது தமது விரக்தியின் வெளிப்பாடுகளாக வன்முறையை பெண்கள்மீது அடிக்கடி கட்டவிழ்த்து விடுகின்றனர். யுத்த காலத்தில் ஆயுதங்கள் சமூகத்தில் புகுந்து கொள்வதாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குரிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கின்றன. உதாரணமாக இலங்கையில் முன்னால் இராணுவ உத்தியோகத்தர்களும் சிறு ஆயுதங்களுடன் இராணுவத்தை விட்டுத் தப்பி ஒடியவர்களுமே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் (வீட்டு, பாலியல்) குற்றங்களைச் செய்கிறார்கள்.

யுத்தகாலத்தில் சாதாரணமாக நிகழும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளும், அதன் அர்த்தத்தையும் நாம் எவ்வாறு விளங்கிக் கொள்ளலாம்/விளக்கலாம்.
யுத்த காலத்தில் சாதாரணமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை குறித்துப் பல வழிகளில் நாம் விளங்கிக் கொள்ளலாம். ஒரு மட்டத்தில் அது யுத்தத்தால் கொண்டுவரப்பட்ட உச்ச நிலையை அடைந்த வன்முறையின் வெளிப்பாடே பிணக்குகள் சமுதாயத்தை இராணுவ மயமாக்கலுக்கு இட்டுச் செல்கிறது. அதன் பிரதிபலனாக தீவிரமடையும் வன்முறையின் முழுப் பலத்துடன் கூடிய தாக்குதல் பெண்களால் தாங்கிக் கொள்ளப்படுகிறது.
ஆயுதப் போராட்டம் சட்ட ஒழுங்கின் சிதைவிற்கு அல்லது மாறாக மிகக் கொடிய சட்டங்களுக்கும் கொண்டு செல்கிறது. இவை இரண்டும் இராணுவத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குச் சாதகமாகின்றது. எங்கும் ஊடுருவியிருக்கும் புரட்சியான குழப்பநிலை அல்லது மாறாக இராணுவ ஆட்சி பழிக்குப் பயமின்றி ஆண்களைப் பாலியல் வன்முறைக்குத் தூண்டுகிறது. உதாரணமாக இலங்கையில் யுத்தம் உச்ச நிலைக்குச் சென்றிருந்த வேளை இராணுவச் சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு என்ற போர்வையில் பெண்கள் அடிக்கடி தொந்தரவு செய்யப்பட்டனர். இத்தகைய சம்பவங்களுள் 1997 ஆம் ஆண்டு 16 வயதுள்ள பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி ஆயுதப்படையினரால் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டமை எல்லோரும் மிகவும் அறிந்த ஒரு விடயமாகும்.
யுத்த காலத்தில் அவர்கள் ஆற்றிய பணிக்குரிய இலாபமாகவும் அது பயன்படுத்தப்படுகிறது. இது போலவே இரண்டாவது உலக யுத்தத்தின்போது அக்கால 'சல்லாபப் பெண்கள்’ அரசு வலைப்பின்னலாக நடத்திய விபசார விடுதிகளில் யப்பானிய இராணுவத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் பாலியல் அடிமைகளாகச் சேவை செய்வதற்கு வற்புறுத்தப்பட்டார்கள். இப்பெண்கள் (சிலர் 15 வயதென மதிக்கத்தக்கவர்கள்) இராணுவத்தினர் ஒய்வாக இருக்கும்போது அல்லது யுத்த களத்தில் செய்த பணிக்கான பரிசாக ஒரு நாளைக்கு 10-15 முறைகள் இராணுவ வீரருடன் உடலுறவில் ஈடுபட வற்புறுத்தப்பட்டனர்.

Page 11
பாலியல் வல்லுறவு பழிக்குப்பழி வாங்குவதற்கும், தண்டனை கொடுப்பதற்கும் சக்திவாய்ந்த ஓர் ஆயுதமாகும். உதாரணமாக ஹையிட்டியிலும், கிழக்குத் திமோரிலும் எதிரிகளின் மனைவிகள், தாய்மார்கள் அல்லது பெண்பிள்ளைகள் அடிக்கடி இதற்கு இலக்காவது "அரசியல் கற்பழிப்பு என்று அச்சமூகத்தில் வழங்கப்படுகிறது. (2) இறுதியாக பாலியல் வன்முறை ஒருவரை இனங்காட்டும் சக்திவாய்ந்த ஓர் அடையாளமாகும். எனவேதான் ஒரு குழுவினரை வஞ்சம் தீர்க்கவும், அதன் மூலம் 'பிறத்தியாரை அவமானப்படுத்தவும் வெளிப்படையாக அது பயன்படுத்தப்படுகிறது. ஒரு பெண்ணைக் கற்பழிப்பது அவளது கெளரவத்திற்கு விழும் ஒரு அடியாக, அதற்கிடையே அவளது சமூகத்தின் கெளரவத்திற்கும் விழும் அடியாகவும் நோக்கப்படுகிறது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினை காலத்தில் பெண்கள் அவர்களது இனத்துவ அடையாளத்தின் பொருட்டு கற்பழிப்பிற்காக இலக்கு வைக்கப்பட்டனர். ஏனெனில் பெண்களே அவர்களது தேச இனத்தின் அடையாளங்களைத் தாங்கியுள்ளவர்களாக விளங்கியதால் பெறுமதி வாய்ந்த அப்பகுதி பழிவாங்கலுக்கும், இழிவுபடுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டது. (3) இதுபோலவே முன்னாள் யூகோஸ்லாவியாவில் நடந்த யுத்தங்களின்போது இராணுவ நடவடிக்கைகளில் கற்பழிப்பை ஒரு யுத்த தந்திர ஆயுதமாக்கி எதிர்த்தரப்பு இனத்துவ அழிப்பின் ஒரு வடிவமாக மேற்கொள்ளப்பட்டது.
பாலியல் வன்முறை யுத்தகாலத்தில் பல வடிவங்களை எடுக்கிறது. ஒரு புறம் கற்பழிப்பிலிருந்து பெண்கள் யுத்த வீரர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சேவை செய்வதற்காக பாலியல் அடிமைகளாவதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். இது யுத்தங்கள் நடைபெறும் புறுண்டி, செய்ராலேயோன் ஆகியவற்றில் சாதாரண வழமையாக உள்ளது. அங்கு பெண்கள் அவர்களது கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு பற்றை (Bush) மனைவிகளாகச் சேவை செய்யவும், வீட்டு வேலைகளை நிறைவேற்றவும் (உதாரணம் சமைத்தல், சுத்தம் செய்தல்), ஒருவர் அல்லது அதற்கு மேற்பட்ட யுத்த வீரர்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வற்புறுத்தப்படுகின்றனர். பெருந்தொகையான இராணுவத்தினரின் வருகையும், விபசாரத்திற்கான தேவையை அதிகரிக்க வழிவகுக்கின்றது. இத்தேவையைப் பூர்த்தி செய்ய வெவ்வேறு சமூகங்களிலிருந்து சட்ட விரோத வியாபார முறையில் பெண்கள் கொண்டுவரப்படுகிறார்கள். முன்பு குறிப்பிட்டதுபோல் இத்தகைய செயற்பாடுகளுள்
r
(2) Report of the special Rapporeur on Violence Against Women, its causes and consequences, missions to Haiti (1998) and Indonesia and East Timor (1999)
(3) Ritu Menon and Kamala Bhasin Bordeers and Boundaries: Women in India's Partition, New Delhi, Kali, 1998.

மிகவும் பிரபலமாக அறியப்பட்ட விடயம் நான் முன்பு குறிப்பிட்டது போல் இரண்டாம் உலக யுத்த கால 'சல்லாபப் பெண்கள்' சமாதானம் பேணும் இராணுவங்களின் (ஐ.நா.சமாதானம் பேணும் இராணுவம் உட்பட) வருகையும் அவர்களின் முகாம்களின் சுற்றாடலில் பெண்களுடனான தகாத செயற்பாடுகளையும், விபசாரத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளதாக அண்மைய ஆராய்ச்சி குறிப்பிடுகின்றது. பாலியல் வன்முறை பெண்களுக்கு பிரத்தியேக அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. அவைகளுள் முக்கியமாக ஆரோக்கியமும், ஆரோக்கியம் பேணலும், பாலியல் வன்முறையின் பாதிப்பை அனுபவிக்கும் பெண்கள் சமூகத்தின் முன் அவமானத்திற்காக வைத்திய பராமரிப்பைத் தேடிச் செல்ல விரும்பமாட்டார்கள். பல யுத்த சூழ்நிலைகளில் ஆரோக்கியத்தைப் பராமரித்தலில் ஏற்படும் தடங்கல் பாலியல் மீறல்களினால் ஆபத்தான பாதிப்பிற்குள்ளானோருக்கு அதற்குரிய செம்மையான சிகிச்சையளிக்க முடியாதிருப்பதையும் புலப்படுத்துகிறது. பெண்கள் ஒரு புறம் பாலியல் வன்முறையால் ஏற்பட்ட தமது உடல் ரீதியான பாதிப்பிற்கும் மறுபுறம் அதன் காரணமாக கடுமையான உளவியல் தாக்கத்திற்கும் உள்ளாகிறார்கள். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைக் கற்பழித்தவர்களை அடையாளம் தெரிந்தவர்களாக இருப்பின் அவர்கள் தஞ்சம் தேடுவதற்கும், துயரமான அந்த அனுபவத்திற்குப் பின்பு கூட சில வேளைகளில் அவர்களது நெருங்கிய அயலில் வசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்போதும் அச்சம் அடைகிறார்கள். உள்நாட்டு யுத்தம் நடைபெறும் இன்றைய சந்தர்ப்பத்தில் இது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். Y
பாலியல் ரீதியாக கற்பழிப்பிற்குள்ளான பெண்கள் தமது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் திரும்பிச் செல்வதற்கு வெட்கப்படுகிறார்கள். இதற்கு எதிரிடையாக அத்தகையப் பெண்களை தமது வட்டங்களுள் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் பல குடும்பங்களும், சமூகங்களும் எச்சரிக்கையாக இருக்கின்றன. கற்பழிப்பு என்பது சமூகத்தில் பாரதூரமான பெரிய களங்கம் என்பதில் ஊறிப்போயுள்ள பழைமை பேணும் சமூகங்களில் இது காணப்படுகிறது. பிரிவினைக்காக பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷிற்கும் இடையில் நடந்த யுத்தத்தின் பின் முஸ்லிம் கணவன்மார் தமது சமூக ரீதியாக தாம் ஒதுக்கப்பட்டு விடுவார்கள் என்பதற்காக எதிரித் தரப்பு இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட தமது மனைவியாரை ஏற்கத் தயங்கினார்கள்.

Page 12
ஆனால், பெண்கள் சாதாரணமாக யுத்தத்தால் துன்புறுபவர்களா?
சந்தேகத்திற்கிடமின்றி பெண்கள் யுத்தத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள். எனினும், அவர்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சாதாரணமாகப் பாதிக்கப்பட்டவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும் அல்லர் பெண்களின் மீதான யுத்தத்தின் தாக்கம் பற்றிய கலந்துரையாடல்கள் பெண்கள் சாதாரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அழுத்தமாகச் சித்தரிப்பதையே சார்ந்து நிற்கின்றன. இதில் இயல்பாகவே உள்ள ஆபத்து என்னவென்றால் பெண்களுக்கும், யுத்தத்திற்கும் உள்ள அநேக தொடர்புகளை நோக்க விடாது எமது எண்ணங்களை அது மறைத்து விடுகிறது.
யுத்தத்தின்போது பெண்கள் வன்செயல்களைத் தூண்டி விடவும், அவற்றைச் செய்யவும் அவர்களால் முடியும். தென்னாபிரிக்காவிலும், றுவண்டாவிலும் நடந்த யுத்தங்கள் பற்றி சமீபத்தில் எழுந்த எழுத்துக்கள் (இலக்கியங்கள்) பெண்கள் எதிர்த்தரப்பு பெண்களுக்கு எதிரான வன்முறையிலான பயங்கரச் செயல்களைச் செய்யவும் ஆற்றல் உள்ளவர்கள் என்பதற்குச் சான்று பகள்கின்றன. வரலாறு முழுவதும் பெண்கள் தாம் சார்ந்த சமூகத்தின் யுத்த முன்னெடுப்புகளுக்கு தமது உதவிகளையும், தீச்செயலுக்கான உதவிகளையும் வழங்குவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்துள்ளார்கள். சரித்திர ஆசிரியர்களும், இலக்கிய கள்த்தாக்களும் தமது புதல்வர்களை யுத்தம் புரிவதற்கு உற்சாகமளித்துத் தூண்டிய தாய்மார்களின் சிறந்த கதைகளைக் கூறியுள்ளார்கள். பெண்கள் யுத்த காலத்தில் ஆயுதங்களையும் வெடிப்பொருட்களையும் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்ததன் மூலம் யுத்த முன்னெடுப்புகளுக்கு உதவியளித்திருக்கிறார்கள். இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்தானியாவிலும், அமெரிக்காவிலும் இயங்கிய பெண்கள் வேலை செய்த வெடிமருந்துத் தொழிற்சாலை தேச பக்தியின் சின்னங்களாகப் பேணப்படுகின்றன. இன்று அதிகமதிகமான பெண்கள் அரச இராணுவ கட்டமைப்பிலும், அரசாங்கமல்லாத இராணுவத்திலும் பல தரங்களில் சேவை செய்கிறார்கள். நிக்கரகுவா, சேய்ராலியோன், ஹரீலங்கா போன்ற நாடுகளில் பெண்கள் போராளிகளாகக் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியுள்ளார்கள். பெண் போராளிகள் பற்றிய விவாதம் அதிகாரமளித்தல்,
அதிகாரத்தை இல்லாது செய்தல் என்பது பற்றிய பிரச்சினைகள் குறித்து உருப்பெற்றுள்ளது. ஒரு பகுதி சிந்தனையாளர்கள் இராணுவத்தில் பெண்களது பங்களிப்பு அவர்களின் விடுதலைக்கு ஒரு படியாக அமைகின்றது என்று வாதிடுகின்றனர். இன்னொரு சிந்தனையாளர் குழுவினர் பெண் போராளிகள் விடுதலையை நாடுபவர்களாகக் கருத முடியாது என்றும், அவர்கள் ஆணாதிக்க அமைப்பிற்குள் பகடைக்காயாக உள்ளனர் என்றும்
10

வாதாடுகின்றனர். விடுதலை பற்றிய விவாதம் ஒரு புறம் இருக்க, பெண் போராளிகளின் போர்க் குணத்தன்மை வேறு பல பிரச்சினைகளையும் எழுப்புகின்றது. பெண் போராளிகள் யுத்தத்திலும், இராணுவத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள ஆண்களால் வன்முறையை இருவகையில் அனுபவிக்கிறார்கள். உதாரணமாக கொலம்பியாவில் பல பெண் போராளிகள் தமது சொந்த மேலதிகாரிகளால் அவர்களது கடமையின் ஒரு பகுதியாகக் கற்பழிக்கப்பட்டார்கள். (4) யுத்தத்தின் பின்னர் பெண் போராளிகளது நிலை ஒரு சவாலானதுமாகும். தமது குடும்பங்களுக்குத் திரும்பிச் செல்வதிலும் முன்னாள் போராளிகளிடம் கஷ்டங்கள் உள்ளன. அவர்கள் பொது மக்களுக்குரிய அன்றாட கடமைகளுக்கும், முயற்சிகளுக்கும் திரும்பிச் செல்வதற்குக் கடினமாகவே இருக்கும்.
பெண்கள் யுத்தத்தின் மூலம் பயன் பெற பல வழிகள் உண்டு. உதாரணமாக முகாம்களுக்குத் தனிப் பெற்றோராகச் செல்லும் பெண்களிடம் அவர்களின் தேவைகளையும், பிள்ளைகளின் தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அவர்கள் முகாம் தலைவர்களுடன் தொடர்பு கொள்ளவும், முகாம் நடவடிக்கைகளில் பல்வேறு பொறுப்புள்ள பதவிகளை வகிக்கவும் அதிகாரம் பெறுகிறார்கள். மேலும் இன்னொரு உதாரணம், யுத்தகளத்தில் கணவர்களை இழந்த பெண்கள் புது ஜீவனோபாயங்களைப் பெற்று அவற்றைச் செய்வ்தன் மூலம் அவற்றின் புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அரசு, அரசு அற்ற இராணுவங்களில் பெண் போராளிகளின் தொகை வளர்ந்து செல்வதால் போர்க்காலத்தில் பெண்களின் போர்க்குணத் தன்மைபற்றி நாம் * பாராமுகமாக இருக்க முடியாது. உதாரணமாக இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான நிகழ்ச்சித் திட்டத்தில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது எதிர்காலம் பற்றியதான விவாதம் முக்கியம் வாய்ந்ததாக விளங்கும். பெண்கள் யுத்த காலத்தில் தமது புதுமையான செயற்பாட்டாலும், புதிய தொழில்களைத் தொடக்கி நடத்திய துணிவினாலும் எவ்வாறு உயிர் வாழ்ந்தனர் என்பதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. எனவே இனியும் நாம் பெண்கள் யுத்தத்தின் மூலம் உண்மையில் எவ்வாறு பயன்' பெறுகிறார்கள் என்ற பிரச்சினையை ஒதுக்கிவிட முடியாது. பெண்கள் வெறுமனே யுத்தத்தால் பாதிக்கப்படுபவர்கள் என்ற நிலையிலிருந்து நாம் விலகி யுத்தத்திற்கும், சமாதானத்திற்கும் உள்ள பெருமளவு தொடர்புகளை பூரணமாக விளங்கிக் கொள்வது முக்கியமானதாகும்.
(4) Report of the special Rapporreuron Violence Against Women, Its Causes and Consequences, Mission to Colombia. (2002)
11

Page 13
பெண்களுக்கும், சமாதானத்திற்கும் உள்ள தொடர்புகள் எவை?
பெண்கள் மீதான யுத்தத்தின் தாக்கம்/விளைவு அவர்கள் பெண்கள் என்ற அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. அது போலவே சமாதானத்திற்குப் பெண்களின் பிரதிபலிப்பு அவர்கள் பெண்கள் என்ற அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. சமாதானத்திற்கான பயனளிக்கக்கூடிய முகவர்களாக இருப்பதற்குப் பெண்கள் தனிப்பட்ட நிலையிலும், ஒரு குழு நிலையிலும்
மனோசக்தியும், ஆற்றலும் உள்ளவர்கள். யுத்தத்திற்கு எதிராக ஒலித்த
அதி பலம் மிக்க குரல்களுள் பெண்கள் அமைப்புக்களின் குரல்களும் உலகம் முழுவதும் ஒலித்துள்ளன. பெண்களது சமாதானத்திற்கான ஆற்றல்களை நாம் பொதுமைப்படுத்த முடியாது. சமாதானத்திற்காகச் செயற்படும் அவர்களது சக்தி, பங்களிப்பு பால்நிலை சார்ந்தமைக்கு அப்பால் வைத்து பல்வேறு நிலைகளில் ஆலோசித்து தீர்மானிக்கப்பட வேண்டும்.
பெண்களை எது சமாதானத்தைக் கட்டியெழுப்பும் சக்தி வாய்ந்தவர்கள் ஆக்குகிறது?
நாம் மேலே ஆராய்ந்தபடி பெண்கள் பால்நிலை சார்ந்த தாய்மார், பராமரிப்போர் என்ற நற்பண்பு மிக்க பாத்திரங்களின்படி அவர்கள் பலம் மிக்க சமாதானத்தைக் கட்டியெழுப்புவோர் என்று அறியப்பட்டது. தாய்மை குறியீட்டு
அடிப்படையிலும் , நேரடியாக உணரக் கூடிய அனுபவத் திலும் சமாதானத்திற்காக சக்திமிக்க அறைகூவலாக உள்ளது.
ஆனால் பெண்கள் "இயல்பாக சமாதானம் உள்ளவர்களா?
இக்கேள்வி பெண்ணியல்வாதிகளின் சொற்பொழிவுகளில் அடிக்கடி பல
சந்தர்ப்பங்களில் மீண்டும், மீண்டும் ஆராயப்பட்டுள்ளது. அடிப்படைவாதிகள் குழுவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் பெண்கள் உடலியல் அமைப்பாலும், உணர்வாலும் அவர்கள் குழந்தைகளைப் பராமரிப்பவர்கள் என்ற நிலையில்
அவை இயல்பாகவே அவர்களைச் சமாதானம் உள்ளவர்கள் ஆக்குகின்றன என்று வாதிடுகின்றனர். யதார்த்த சிந்தனையாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் சமூகக் கட்டமைப்புப் பெண்களை பராமரிப்பு அளிப்போராக்கியதால் அது அவர்களை சமாதானத்தின் பக்கம் கூடிய விருப்புள்ளவர்களாக்குகிறது என்று வாதிடும் அதேவேளை அவர்களின் உடலியல் அமைப்பால் என்று கூறியதை மறுக்கிறார்கள். இருப்பினும் இரு குழுக்களின் முக்கிய கருத்து வேறுபாடுகளுக்கிடையில் அடிப்படை வாதிகளும், யதார்த்த வாதிகளும் தாய்மையின் பண்புகளில் அழுத்தமாகச் சார்ந்து சமாதானம் குறித்து பெண்கள் கூடுதல் தயை உள்ளவர்கள் என்று கொள்கின்றனர்.
12

இன்னொருவகையில் பிளவுபட்ட சமூகங்கள் கூட்டுச் சேர்தலை வளர்ப்பதில் துயரப்படும் தாயின் குறியீடு சக்தி வாய்ந்ததொன்றென எண்பிக்கப்பட்டுள்ளது. உண்மையில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பெண்களது சமாதான இயக்கங்கள் தாய்மையின் உணர்வு, பேச்சுத்திறன் பற்றி ஆராய்ந்து வருகிறது. பராமரிப்பு அளிப்போர் (எழுதி வைத்தோ பங்கு ஒதுக்கியோ) என்ற அதிகம் "சாத்தியப்பாடான மட்டத்தில் பெண்களின் உளவியல் தோற்றப்பாடு, யுத்தத்தை துண்டுவோர் கொடுக்கும் உளவியல் தோற்றப்பாட்டிற்கு எதிரிடையானதாக உள்ளது. மிக முக்கியமான பெண்கள் தாய்மார், பராமரிப்பு அளிப்பவர் என்ற சீரிய பண்பு மிக்க நிலையில் சமாதான வழிக்கு பல்வேறு வகை அக்கறைகளையும், முதன்மைகளையும் கொண்டு வருவதற்கு உள்ளுறை சக்தியை வைத்திருக்கிறார்கள். உத்தியோகபூர்வ சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பெண்கள் முக்கிய பங்காளிகளாகக் கலந்து கொண்ட சந்தர்ப்பங்களில், மனிதப் பாதுகாப்பையும், மனித நலன்களையும் பற்றிய பிரச்சினைகளைக் கவனிப்பதில் அதிக அக்கறையுள்ளவர்களாக அவர்கள் செயற்பட்டார்கள். உதாரணத்திற்கு வட அயர்லாந்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தனது அனுபவங்களில் ஒரு பகுதியை எடுத்துக் கூறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஜாகிசன், எல்லாப் பகுதிகளிலுமிருந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவதற்கு வருகை தந்த பெண்கள், அவர்கள் வந்திருந்த ஆண்கள் வாதத்திற்குரிய பிரச்சினைகளிலே கூடுதலாக நின்றபோதும், இவள்கள் கல்வியையும், சுகாதாரம் பேணுவதற்கான தேவைகளையும் கவனிப்பதற்கு ஒரே மேடையில் நின்றார்கள் (5) என்று குறிப்பிட்டார்.
வரலாற்று ரீதியாக பெரும்பாலான சமூகங்களில் பெண்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் விலக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அரசியலிலும்
யுத்தம் பற்றிய கருத்தியல் ரீதியான பயன் குறித்தும் ஆர்வம் குறைந்தவர்கள் போல் காணப்படுகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் யுத்தத்தை எதிர்த்து ஏன் சமாதானத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். இதே வழியில் சமாதான நடவடிக்கை பெண்கள் வரலாற்று ரீதியாக விலக்கப்பட்ட துறைகளுக்குச் செல்லும் வழியைப் (குறிப்பாக அரசியல் வட்டங்கள்) பெறும் வாய்ப்பினை அளிக்கின்றது. பல தத்துவ அறிஞர்கள் யுத்தத்திற்குப் பின் தோன்றும் சமூகங்கள் மாற்றம் காண்பதற்கு தங்குதடையற்றதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். எனவே பால்நிலையினையும் வேறு சமூகத்தடைகளையும் உடைத்து வீழ்த்த இது வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாகும். சமாதானத்திற்காக பெண்களைத் திரட்டிய சில அனைத்துலக எடுத்துக்காட்டுகள் இந்தத் தத்துவத்தை ஆதரிக்கின்றன.
(5) Women at the Peace Table : Making A Difference, United Nations Development for Women (2002)
13

Page 14
உதாரணத்திற்கு வட அயர்லாந்திலும், தென்னாபிரிக்காவிலும், சமாதானம் பற்றிய பிரச்சினைகள் குறித்து முதன் முறையாகக் கூட்டப்பட்ட பல பெண்கள் குழுக்கள் தத்தமது நாடுகளின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், செல்வாக்குப் பெற்றும் பயனடைகிறார்கள்.
பெண்கள் தமது சமூகங்களில் யுத்தத்தினால் மிகவும் மோசமான பலன்களை அனுபவித்து துன்பப்படுகிறார்கள். இதனால் அவர்கள் யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கு ஊக்கத்துடன் பணியாற்றுகிறார்கள். அத்துடன் பெண்கள் யுத்தத்திலும், அதேவேளை நாளாந்த சமூகத்திலும் வன்முறையையும், பாலியல் வன்முறையையும் அனுபவிப்பதோடு தமது நாளாந்த வாழ்வில் பொருளாதார, சமூக பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகவும் உள்ளனர். இதன் விளைவாக பெண்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மாத்திரம் திரட்டப்படவில்லை. சமூகத்தில் அமைப்பு, கலாசார வன்முறை உட்பட எல்லா வடிவங்களிலுமுள்ள வன்முறைகளுக்கும் முடிவு கட்டுவதற்காகவுமே திரட்டப்பட்டார்கள். பெண்கள் யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கு வழங்கும் தமது பங்களிப்பை நீளமும், விசாலமும் கொண்ட மனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் அனுபவிப்பதற்கு எல்லாப் பெரிய போராட்டத்தின் ஒரு பகுதியாக நோக்குகின்றனர்.
சமாதான நடவடிக்கையில் பெண் முகவரின் வெவ்வேறு வடிவங்கள் எவை?
பெண்கள் உள்ளுர் அல்லது சமுதாய மட்டங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் மிகவும் சுறு சுறுப்புடன் உழைக்கக் கூடியவர்கள். சமுதாய மட்டத்தில் முதலாவதாக பெண்கள் யுத்தத்தை நேரடியாக அனுபவித்து உள்ளார்கள். அதன் காரணமாக அதன் முடிவை நோக்குவதில் மிகப்பலமான மனோநிலை அவர்களிடம் இருக்கிறது. யுத்தம் எவ்வாறு நாட்டில் நடந்ததோ அதே மாதிரியான பூரணத்துவமான விளக்கம் பெண்களிடம் இருப்பதால் அவர்கள் இன சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பங்கு கொள்ளுதல் பெரியதோர் மூலதனமாகும். அடிமட்டத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பணிபுரியும் பெண்கள் தமது தலையீட்டில் கலாசார பாரம்பரியங்களையும், சமுதாய பழக்கவழக்கங்களையும் ஒன்றுசேர்க்க முடியும். அடிமட்டத்தில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் பெண்களது பணி அவர்கள் சமூகத்தில் வகிக்கும் பாரம்பரியமான பங்களிப்புக்களால் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு கென்யாவிலுள்ள வஜிரியிலும் அங்குள்ள குழுக்களுக்கிடையே நடைபெற்ற சண்டையில் தலையிடுவதற்குப் பெண்கள் சந்தை இடங்களில் தாம் வகிக்கும் செல்வாக்கைக் கையாண்டனர். (6)
(6)Andersen.S, Women & Reconciliation, From People Building Peace: 3 Inspiring Stories from Around the World. (1999) s
14

குழுக்களிடையே நிலவும் முறுகல் நிலைபற்றிய வதந்திகளைப் பதிவு செய்யவும், அத்தகைய முறுகல் நிலையை பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமும் தணிப்பதற்கும் அவர்கள் சந்தை இடங்களைப் பயன்படுத்தி இவ்வாறு செய்தார்கள். இதேபோல் பிலிப்பைன்சிலுள்ள மிண்டனோவில் பெண்கள் சண்டையிடும் குழுக்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி அவர்கள் சமாதானம் அடைவதற்கு உதவும் பொருட்டு தமக்கு அளிக்கப்பட்ட செல்வாக்கையும், கெளரவத்தையும் பயன்படுத்தினார்கள். (7). அடிமட்டத்திலும், சமுதாய மட்டத்திலும் அவசர தேவைகளையும் யுத்தத்தால் ஏற்பட்ட சம்பவங்களையும் கவனிப்பதில் பெண்களே அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள். உதாரணத்திற்கு பெண்களின் குழுக்கள் நிவாரணம், மீள்கட்டுமானம், உளவியல் நலம் பெறுதல் போன்ற விடயங்கள் குறித்து ஒன்று கூடுவதை மிகவும் சாதாரணமாகக் காணலாம்.
குடியுரிமையுள்ள சமூகம் சமாதானத்திற்காகத் தலையிடுதலிலும் பெண்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளார்கள். அத்தகைய தலையீடுகள் பல வடிவங்களை எடுக்கின்றன. குடியுரிமையுள்ள சமூகத்து இயக்கங்களிலுள்ள பெண்கள் சமுதாயங்களைக் கடந்து ஒன்று திரள்வதிலும் புரிந்துணர்வை வளர்ப்பதிலும் வெற்றியடைந்து உள்ளனர். மத்திய கிழக்கில் ஜெருசலேம் இணைப்பு பெண் களது ஓர் அமைப்பு அது சம்பந்தமாக உன்னத வெற்றி அடைந்தமைக்கு ஓர் உதாரணமாகும். 1987 ஆம் ஆண்டு இன்றிவாடா கிளர்ச்சிக்குப் பின்பு ஜெருசலேம் இணைப்பு அமைக்கப்பட்டு, இஸ்ரேலில் இருந்தும், பலஸ்தீனில் இருந்தும் பெண்களைப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வருவதற்காகப் பணியாற்றத் தொடங்கியது. இப்பெண்கள் தத்தமது அரசாங்கங்களின் கொடுமையான செயல்களுக்கு எதிரான ஒரு பொது நோக்கினைக் கட்டியெழுப்புவதில் மிகப் பெரும் வெற்றி பெற்றார்கள்.
இலங்கையும் சமாதானத்திற்காகப் பெண்களின் செயற்பாடு பற்றிய நீண்ட வரலாற்றினை வைத்திருக்கிறது. 1980களில் அமைக்கப்பட்ட அன்னையர் முன்னணி சமாதானத்திற்கும், யுத்தத்தில் காணாமல் தமது ஆண் பிள்ளைகளைக் கண்டு பிடிப்பதற்கும் சேவையாற்றியுள்ளது. அதுபோல் பெண்களின் நடவடிக்கைக் குழுவும் 1980களில் அமைக்கப்பட்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குப் பரிகாரம் தேடுதல் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் ஆகிய விடயங்களை மேற்கொண்டது. முக்கியமான பிரச்சினைகளுக்கும் பொதுநலன் மிக்க விடயங்களுக்கும் சேவை செய்வதற்கும் நிறுவனங்களையும், இனத்துவ அடையாளங்களையும் கடந்து பெண்கள் கூட்டமைப்புக்களை உருவாக்கும் திறமையுடையவர்கள் என்பதற்கு இவை இரண்டும் சிறந்த உதாரணங்கள். சமாதானத்திற்காகச்
15

Page 15
செயற்படும் இலங்கையிலுள்ள பெண்கள் பிணக்குகளின் வரல்ாற்றுக்காலம் முழுவதும் பாலியல் சார்ந்த அக்கறைகளைத் தவறாது தெளிவாக முக்கியப் படுத்தியதோடு சமாதான முயற்சிகளில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகைக்காகத் தொடர்ந்து ஆதரவு தேடிக் குரல் கொடுத்துள்ளார்கள்.
சமுதாயங்களிடையேயும் குடியுரிமையுள்ள சமூகத்திலும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பணிபுரியும் பெண்கள், தீர்மானம் எடுப்பதற்காகப் பணிபுரியும் பெண்கள், தீர்மானம் எடுப்பவர்களின் கரங்களை உத்தியோகபூர்வ மட்டங்களில் அடிக்கடி அழுத்தம் கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பெண்களின் சமாதானத்திற்கான கூட்டமைப்பை அடிக்கடி புறக்கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் பிளவுபட்டவர்களிடையே எண்ணிக்கை உடையோரின் ஆதரவைச் சேர்க்கும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது.
இதற்கு அடிக் கடி கூறப்படும் உதாரணங்களுள் ஒன்று ஆர்ஜென்டினாவிலுள்ள வெஸ் மட்றெஸ் அல்லது பிளாஸாவின் அன்னையர். தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக மிகச் சிறிய தொகை அன்னையரால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழு தமது ‘காணாமல் போன மைந்தர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தேடி அறிவதற்கு ஒவ்வொரு கிழமையும் போனஸ் ஐறிசிலுள்ள மத்திய பிளாஸாவில் கூடி மெளனம் அனுஷ்டித்தவாறு இருந்தார்கள். சிறிய தொகை படிப்படியாக பரந்த அடித்தளம் கொண்ட பெண்கள் கூட்டிணைப்பாகத் தோற்றம் பெற்று ஆர்ஜென்ரீனா அரசாங்கம் காணாமல் போனவர்கள் பற்றிய அரச கோப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அழுத்தம் கொடுக்க குறிப்பிடத்தக்க அதன் பலம் போதுமானதாக இருந்தது. பெண் களது இயக்கங்கள் தமது ஒழுங்குபடுத்தப்பட்ட செய்முறைகள, அனுபவங்கள், சாமர்த்தியம் နှီးနှီ மூலம் சமாதான நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதி t வெற்றியடைந்துள்ளன. தென்னாபிரிக்காவிலுள்ள பெண்கள் குழுக்கள் த்தத்தின் பின்னர் உண்மையை நிலைநாட்டவும் , தென்னாபிரிக்கர்களிடையே சமாதானத்தை வளர்க்கவும் ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பான தென்னாபிரிக்க உண்மைக்கும் சமாதானத்திற்குமான ஆணைக் குழுவின் ஆயுட் காலம் முழுவதும் பால் நிலை சார்ந்த விவகாரங்களை முக்கியப்படுத்தி வெளியிடுவதில் பொறுப்பாக இருந்தன. இதேபோல் பெண்களின் குழுக்கள் பிறர் உதவியின்றி தனித்துவர்களாக முன்னாள் சல்லாபப் பெண்களுக்கு நீதி கோரி பொறுப்புள்ளவர்களாக ஒன்று திரண்டதன் உச்சமாக அனைத்துலக யுத்த குற்றங்களுக்கான நீதிமன்று இரண்டாம் உலக யுத்தம் நிகழ்ந்து ஏறத்தாழ 50 வருடங்களின் பின்னர் நிறுவப்பட்டது.
16

எனினும், பெண்கள் சமுதாய மட்டத்திலும், குடியுரிமையுள்ள சமூக மட்டத்திலும் சமாதான நிகழ்வுத் தொடர்களுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தாலும், உத்தியோக பூர்வ மட்டத்தில் அவர்களது பிரதிநிதித்துவப்படுத்துகை புறக்கணிக்கப்படுவதாகவே உள்ளது. உத்தி யோகபூர்வ மட்டத்தில் அவர்களது பிரதிநிதித்துவப்படுத்துகை மிகக் குறைந்திருப்பது அரசியல் அதிகாரத்திற்கும், அரசியல் தீர்மானம் செய்வதற்கும் அவர்கள் செல்லமுடியாதிருப்பதுடன் நேரடித் தொடர்பு கொண்டது. பெரும்பாலான சமாதான நிகழ்வுத் தொடர்களின் அரசியல் தன்மை சிலவேளைகளில் பெண்கள் குழுக்கள் உட்பட குடியுரிமைச் சமூகத்தையும் தவிர்த்து விடுகின்றது.
பெரும்பாலும் சமீப ஆண்டுகளாக உலகம் சுற்றிலும் நடைபெறும் சில நிகழ்வுகள் இந்த வரலாற்றுப் போக்கு மாற்றம் பெறலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. 1997 ஆம் ஆண்டு விடுதலை உணர்வு கொண்ட மிகச் சிறுதொகையினரான பெண்கள் ஆக்ராவில் நடைபெற்ற முழுதும் ஆண்களையே கொண்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு அழைக்கப் படாதவர்களாகச் சென்று தமக்கு உரித்தான இடம் தரப்படவேண்டும் என்று கோரினார்கள்.
அவர்களது முயற்சிகளுக்குப் பரிசு கிடைத்தது போல் பேச்சு வார்த்தைகளில் அவர்களுக்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து அரச சபையிலும் சேர்க்கப்பட்டார்கள். தென்னாபிரிக்க பேச்சுவார்த்தை நிகழ்வுத் தொடரில் பெண்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு பகுதியாகவும், அதேபோல் யுத்தத்திற்குப் பின்னரான கட்டத்தில் பெண்கள் விவகாரம் சம்பந்தமாக பிரதிநிதித்துவப்படுத்துகைக்கு நிறுவப்பட்ட பல்வேறு அமைப்புக்களில் ஒரு பகுதியாகவும் விளங்கினர்.
வட அயர்லாந்து சமாதான நிகழ்வுத் தொடரும் உத்தியோகபூர்வ ஒரு நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையின் ஒரு மாதிரியை வழங்குகின்றது. வடக்கு அயர்லாந்திலுள்ள பெண்கள் குழுக்கள் 1990 களின் முற்பகுதியில் 'வடக்கு அயர்லாந்து பெண்கள் கூட்டமைப்பை (NIWC) நிறுவ ஒன்று சேர்ந்தார்கள். இக்கூட்டமைப்பு 1998 ஆம் ஆண்டில் பெரிய வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பங்கு பற்றியதோடு அதைத் தொடர்ந்து வட அயர்லாந்து சட்ட சபையில் பிரதிநிதித்துவப்படுத்துகை அளிக்கப்பட்டது.
இலங்கையில் பெண்கள் யுத்த வரலாறு முழுவதும் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்டனர். நாட்டின் இன
7

Page 16
அரசியல் பிணக்குகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட முயற்சிகளில் பெண்களுக்கு வழக்கப்படியான எத்தகைய பங்களிப்பும் மறுக் கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தாய்லாந்தில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடம் பெற்ற நாலாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்காக ஓர் உப குழுவை நிறுவியமை மிகவும் அண்மைக்கால பேச்சுவார்த்தைகள் நிகழ்வுத் தொடரில் (2002 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது) மிகவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளில் ஒன்றாகும்.
18

சமாதான நிகழ்வுத் தொடர்களில் பால்நிலை சார்ந்த
பிரதிநிதித்துவப்படுத்துகையை மேம்படுத்துவதற்கு தடைகள் எவை?
சமாதானத்தை வளர்ப்பதில் பெண்களின் பிரதிநிதித்துவப்படுத்துகை பல காரணிகளால் அச்சுறுத்தப்படுகின்றது. அவற்றுள் முதலாவதும், மிக முக்கியமானதும் சமுதாயத்தின் ஆணாதிக்கத் தன்மையுள்ள சமூகம். இது பல வழிகளில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகையைத் தடை செய்கிறது. முதலாவதாக ஆணாதிக்கத் தன்மைப் பெண்கள் சில பங்களிப்புகளையும், பொறுப்புகளையும் ஏற்ற நிறைவேற்ற இயலாத குறைந்த பால் நிலை சார்ந்தோர் என்று மதிக்கும் சில நியமங்களையும், விழுமியங்களையும் ஒரு சமூகத்திற்குள் அதிகாரபூர்வமாக விதிக்கின்றது. ஓர் ஆணாதிக்க அமைப்பிற்குள் பெண்கள் தனிப்பட்ட' (Private) துறைக்கு உரியவர்களாக ஒதுக்கப்படுகிறார்கள். அரசியல், பொருளாதார அமைப்புக்கள், கல்வி அதேபோல் நாளாந்த வாழ்க்கைப் போராட்டங்கள் அத்துடன் தனிப்பட்ட முறைத் தொடர்புகள் ஊடாகவே இந்த நியமங்கள், விழுமியங்கள், பங்களிப்புகள் யாவும் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. மிகச்சில பெண்கள் துப்பாக்கியை ஏந்தினார்கள். சமாதான ஒப்பந்தங்களின்போது போராடியவர்களுக்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டது. எப்படியாயினும், பெண்கள் யுத்தம் செய்திருப்பினும், யுத்தப்பிரிவுகளில் அவர்கள் ஒரு பகுதியாக இருந்திருப்பினும் சமாதானப்பேச்சுவார்த்தைகளில் அவர்கள் மீண்டும் தென்படாதவர்களாகிவிட்டார்கள். வழக்கமான பேச்சுவார்த்தைக்கான குழுக்கள் அரசாங்கத்திலிருந்தும், இராஜ தந்திரிகள் அல்லது இராணுவ அதிகாரிகளிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டன. அரசாங்கத்தினது அதிகாரமுள்ளவையாக இயங்கும் மேற்படி கட்டமைப்புக்களில் பெண்கள் பெரும்பாலும் இல்லாதபடியால் அவர்களை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் சேர்ப்பதற்கு ஆலோசிக்கப்படவில்லை.
சமாதானத்தை உருவாக்குதல், சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் ஆகியவற்றின் பரப்புக்கள் பொதுமக்களது விடயங்களின் எல்லை என்று கருதப்படுபவைகளிலிருந்து பெண்கள் தொடர்ந்து சேர்க்கப்படாதுள்ளனர். வன்முறைக்கு ஒரு முடிவு கட்டுவதற்கு பெண்கள் ஊக்கத்துடன் சேர்ந்து கொண்டபோதும், யுத்தத்தை நிறுத்துவதற்கு அடிமட்டத்திலும், குடியுரிமை சமூகத்தின் தலையீடுகளின் மூலமும் குறிப்பிடத்தக்கதொரு பங்களிப்புகளை அவர்கள் செய்தபோதும், யுத்தத்திற்கு முடிவு கட்டத் தொடரும் பேச்க் வார்த்தை நிகழ்வுத்தொடர்களிலோ அல்லது அரசியல் நிகழ்வுத்தொடர்களிலோ அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. பலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும்
19

Page 17
இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பலஸ்தீன பிரதிநிதிகள் குழுவில் ஓர் உறுப்பினராகவிருந்த கலாநிதி கணன் அஸ்ரவி (பலஸ்தீன குழுவின் உறுப்பினர்) தனது அனுபவங்களை விபரிக்கையில் ஆண்கள் தாமே வழிநடாத்துபவர் என்ற மனோபாவனையை எவ்வாறு பெண் சமாதானச் செயற்பாட்டாளர்மீது கடைப்பிடிக்கிறார் என்பது பற்றி கருத்துக்கூறுகையில் வன்முறை ஒழிந்த பின்பு அதிகாரப்பங்கீடு, அரசியல் சீர்திருத்தம் பொருளாதார மீள் கட்டுமானம் ஆகிய பிணக்குகளின் கடினமான விடயங்கள் பற்றி ஆண்கள் கலந்தாலோசித்து சமாதானம் செய்து வைக்கவிட்டு விட்டு பெண்கள் குசினிக்குள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம் சிறிது சிறிதாக அவர்களுள் புகுந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். (9)
பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நிகழ்வுத் தொடர்களுக்கு பங்களிப்பதற்கான பெண்களின் உள்ளுறை சக்தி அவரவர் சமூகங்களில் ஆணாதிக்க மட்டங்களுடன் தொடர்பு பட்டிருக்கிறது. பெண்கள் ஏற்கனவே அரசியல் அமைப்புக்களில் சேர்க்கப்படாது தவிர்க்கப்பட்டிருந்தால் சமாதானம் பற்றிக் கலந்தாலோசிக்கும் அமைப்புக்களுக்குச் செல்லும் வழி மிகவும் கஷ்டமானதாகவே அவர்களுக்குக் காணப்படும். எப்படியிருப்பினும் முன்பு குறிப்பிட்டதுபோல் யுத்தத்தின் பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் வரலாற்று ரீதியாக அவர்கள் தவிர்க்கப்பட்டு வந்த அந்த அமைப்புக்களுள் பிரவேசிப்பதற்கு வாய்ப்புக்களை உதவிய சில சந்தர்ப்பங்கள் உள்ளன. உதாரணமாக வெள்ளை இனத்தவரையும் மற்றையவரையும் தனித்தனியே பிரிக்கும் கோட்பாட்டையுடைய தென்னாபிரிக்காவிற்குப் பின்னர், தென்னாபிரிக்காவில் சமாதான நிகழ்வுத் தொடர்களில் பெண்களது பங்குபற்றுகை அரசியலிலும் பொருளாதாரத் துறையிலும் தீர்மானம் எடுப்பதற்கு பெருமளவில் அவர்களைச் சேர்ப்பதற்கான கதவைத் திறந்தது. இன்று தென்னாபிரிக்க பாராளுமன்றத்திலே பெண்கள் மற்றவர்களோடு இணைந்தவர்களாகத் திறம்பட பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு தென்னாபிரிக்க
சமூகத்திற்கு முன்பைவிட பெரிய பங்களிப்பினைச் செய்து வருகின்றனர்.
அடிமட்டத்திலும் குடியுரிமைச் சமூக மட்டத்திலும் சமாதானத்தை
உருவாக்குவதற்கும், சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பெண்களின்
பங்களிப்பிற்குப் பற்றாக் குறையான மூலவளங்கள், நலிந்த வலைப்பின்னல், நலிந்த ஆவணப்படுத்தல் ஆகியவற்றால் தடைபோடப்படுகின்றது.
சமாதானத்திற்கு இந்த மட்டங்களில் பெண்களின் பங்களிப்பு தனிப்பட்ட அல்லது உத்தியோகபூர்வமற்ற நடவடிக்கைகள் என்றே தொடர்ந்து கருதப்படும் என்ற உண்மையில் பெரும்பாலான மேற்படி பிரச்சினைகள் தங்கி நிற்கின்றன. எப்படியாயினும், அனைத்துலக நிறுவனங்கள் இது சம்பந்தமாக பெண்களது
(9) Women at the Peace Table: Making A Difference IBID
2O

வேலையின் பெறுமதியை வேகமாக உணர்ந்து கொண்டு இன்றியமையாத இத்துறையை வளர்க்க அவர்களது திறமைகளையும் முன்னிலைப்படுத்தி வெளிக்காட்டி வருகிறது. பல அனைத்துலக அரசுசாரா நிறுவனங்கள் வாழ்க்கையில் எதிலும் தலையிட்டு நடத்துவதற்கான பயிற்சியையும், திறமையையும் அளிப்பதற்கான பெண்களை மையமாகக் கொண்ட சமாதான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
சமாதான நிகழ்வுத்தொடர்களில் பெண்களின் பிரதிநிதித்துவப்படுத்துகை பற்றிய விடயங்களில் ஓர் ஆபத்தும் இருக்கிறது. பெண்கள் பற்றிய அச்சு வார்ப்பான படிமங்களை அது மேலும் பலப்படுத்தக்கூடும். சமாதானத்திற்காகப் பணிபுரியும் பெண்கள் சாதாரணமாக பிரபலமாகிய சொற்களாகிய தாய், பராமரிப்போர் என்ற அவர்களது இயற்கையான பாத்திரங்களாகவே தெரிந்து கொள்ளப்படுகிறார்கள். உதாரணமாக காயப்பட்டோரைப் பராமரித்தல் அல்லது மன அதிர்ச்சிக்கு உள்ளானோருக்கு உளவியல் ஆதரவு அளித்தல் ஆகியன யுத்த காலத்தில் பெண்களது இயல்பான பங்களிப்பின் ஒரு பகுதி என்று நோக்கப்பட்டு சமாதான முயற்சிகளுக்கு பெண்களின் பங்களிப்புகளைத் தொடர்ந்து குறைத்து மதிப்பிடுவதற்கான பங்களிப்பைச் செய்கின்றது. ஒரு சமாதான நிகழ்வுத்தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகைக்கு இன்னொரு தடையாக இருப்பது குடும்ப நண்பர் வழக்கங்களும், தொடர்புகளும் போதியளவு இல்லாதிருப்பதாகும். சமாதான நிகழ்வுத் தொடர்கள் நீளமானவையாகவும், நீளமாக்கப்பட்டவையாகவும் உள்ளன. சமாதான நடவடிக்கையில் ஈடுபடுவோர் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் அடிக்கடி : பிரயாணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிகழ்வுத் தொடர்களில் பெண்கள் எல்லோரும் மிகவும் தெளிவாகக் காணக்கூடிய பாத்திரத்தை வகிக்கிறார்கள் என்பதற்கு இது சிந்திக்கத் தக்கதாக நிற்கும் அதே வேளை அவர்கள் தமது குடும்பப் பொறுப்புகளோடு நிகழ்வுத் தொடர்களின் பொறுப்புக்களையும் சமப்படுத்த வேண்டியவர்களாகவும் உள்ளனர்.
இலங்கையின் சமாதானத்திற்கு பால்நிலை சார்ந்த விசேட தேவைகளும் எதிர்ச் சவால்களும் எவை?
முன்பு குறிப்பிட்டது போல் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை அதிகமாக பால்நிலைச் சமத்துவம் பற்றியதாக இருப்பது போல், பால்நிலை உணர்வுத்திறன் பற்றியதாகவும் இருக்கிறது. கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உடன்பாட்டிற்கு வந்து ஒரு சமாதான எல்லைக் கோட்டிற்குள் இலங்கையில் அமைக்கப்பட்ட கட்டமைப்புக்களும் ஒழுங்குமுறைகளும் ஒவ்வொன்றும் பால்நிலை சார்ந்த பரிமாணமும் அர்த்தங்களும் கொண்டுள்ளன.
21

Page 18
மனித பாதுகாப்பு
யுத்தம் தொடர்பான வன்முறைத் தாக்குதலுக்குள்ளான பெண்களுக்கு முகாம் சுற்றாடல்களுக்கு உள்ளேயும், அதுபோல் மீள் குடியமர்வுக் காலங்களிலும், திரும்பிச் செல்லும் காலங்களிலும் போதுமான காவலும், பாதுகாப்பும் தேவைப்படுகின்றது.
உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரும் மீள் குடியமர்வும்
ஒருபுறம் அவர்களது அடிப்படைத் தேவைகளான உணவு அடிப்படையான ஆரோக்கியம் பேணல் போன்றவற்றைவிட முகாம்களில் வாழும் பெண்களுக்குச் சுத்தத்தைப் பேணுவதற்கான தேவைகள், கர்ப்பகால கவனிப்பு , அத்துடன் அவர்கள் தங்களை கெளரவமாகக் கவனிப்பதற்குத் தேவையான அந்தரங்க நிலைமைகள் வழங்கப்பட வேண்டும்.
பெண்களை, குடும்ப உறுப்பினர்களதும், முகாம் தலைவர்களினதும் வன்முறைக் கரங்களிலிருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்படவேண்டும்.
மீள் குடியமர்வு பற்றித் தீர்மானம் செய்யும் நிகழ்வுத் தொடர்களில் பெண்களும் சேர்க்கப்படுவதோடு, அது குறித்து காத்திரமான முடிவுகள் எடுப்பதற்கு, அவர்களுக்குத் தேவையான போதிய தகவல்வசதி வழங்கப்பட வேண்டும்.
மீள் கட்டுமானமும் ஜீவனோபாயமும்
22
மீள்கட்டுமானத்திற்கான மூலப்பொருட்கள் ஒதுக்கப்படுவதைத் தீர்மானிக்கும்போது யுத்தத்திற்குப் பின்னரான நிகழ்ச்சித் திட்டத்தில் கைம்பெண்களினதும் குறிப்பிடக்கூடிய வடுப்படத்தக்க அழிவுகளின் நிலையை கணக்கெடுக்க வேண்டும்.
பெண்கள் யுத்தத்திற்குப் பின்னர் காணிகளையும், ஜீவனோபாயத்தையும் பெறுவதைத் தடுக்கின்ற பரம்பரைச் சொத்துச் சட்டத்தையும், வேறு தடைகளையும் திருத்தம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண்கள் தமது சமூகங்களின் திட்டமிடலிலும், மீள் கட்டுமானத்திலும் பங்கு பற்றுவதற்கு உற்சாகமளித்தல் வேண்டும்.
இப்போது இருக்கின்ற, இனி வரப்போகின்ற எல்லா வேலை வாய்ப்புக்களிலும் பெண்களுக்கு ஆண்களுக்குச் சமதையான அடிப்படையில் வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் கடன் பெறவும், வியாபாரங்களில் ஈடுபடவும் வசதி அளிக்கப்பட வேண்டும்.

கைம்பெண்களைச் சூழ்ந்து நிற்கும் எதிர்மறை உணர்ச்சிகளை அகற்றும் பொருட்டு நல்லுணர்வுகளை ஊட்டும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் யுத்தத்திற்குப் பின்னரான சமூகங்களுக்குத் தேவைப்படுகின்றது. இதனால் யுத்தத்தால் கைம்பெண்களாகியவர்கள் சமூக களங்கம் பற்றிய அச்சமில்ல்ாது தமது சமுதாய வாழ்க்கையில் முழுமையாகக் கலந்து கொள்ள முடியும்.
மீள் முழுமையாக்கல்
முன்னாள் போராளிகள் மக்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான கல்வி, பயிற்சி, வேலை வாய்ப்புக்களை அவர்களுக்கு அளிப்பதற்கு யுத்தத்திற்குப் பின்னரான மீள் கட்டுமான முயற்சிகளில் விசேட முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
முன்னாள் போராளிகள் யுத்தத்தால் ஏற்பட்ட தமது அனுபவங்கள்
பற்றிச் சிந்திப்பதற்குச் சில காலம் தேவைப்படுகிறது. அதுபோல் யுத்தத்திற்குப் பின்னரான நாட்டு நிலையில் தமது வாழ்க்கைத் தேர்வுகள் பற்றிச் சிந்திக்கவும் இடைக்காலம் தேவைப்படுகிறது. இதற்கு அவர்களுக்கு விசேட உளவியல் உதவி தேவைப்படும்.
அவர்களின் நிலைமைகளை உணர்ந்து புரிந்து கொள்வதற்கு இப்பெண்கள் திரும்பிச் செல்லும் சமூகங்களுக்கும் சில அளவு கல்வியும் விஷயம் தெரிந்த அறிவு நிலையும் தேவைப்படுகிறது.
அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் தொடர்புச் சாதனங்களின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளனர். பெருமளவு பெண்கள் இளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து (அல்லது வலிந்து சேர்க்கப்பட்டனர்) தமது வாழ்க்கையில் பெரும்பாலான பகுதியை தீவிரமான யுத்தத்தில் கழித்தாள்கள். இப்பெண்களின் நிலை யுத்தத்திற்குப் பின்னர் எவ்வாறு இருக்கும் என்பது மிகவும் தெளிவற்ற ஒரு விடயமாக உள்ளது. அவர்கள் போராளிகள் நிலையிலிருந்து சமூகத்தில்கூடிய அதிகாரம் மிக்க பாத்திரங்களாக இலகுவில் மாறுவார்கள் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். அவர்கள் 'சாதாரண இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது கடினமாக இருக்கும் என்று மற்றவர்கள் தெரிவிக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் படைப்பிரிவினரைப் பொறுத்தவரையும், பெரும்பாலும் ஏனைய சமூகங்களிடையே உள்ள பெண்படையினரைப் பொறுத்தவரையும் ஏற்கெனவே குறிப்பிட்ட இனங்களிடையே இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க மட்டங்களிலேதான் மீளவும் ஒன்றுசேர்க்கும் நிகழ்ச்சித்தொடர்கள் தீர்மானிக்கப்படும்.
23

Page 19
பெண்களுக்கு எதிரான வன்முறை
• பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி சொற்பொழிவாற்றுவது சமாதான நிகழ்வுத் தொடரில் ஒரு முழுமையான பகுதி என்பதை கருத்தில் எடுக்க வேண்டும்.
பாலுறவு வன்முறையால் ப்ாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள், ஆலோசனை வசதிகளுடன் தேவையான சந்தர்ப்பங்களில் சட்ட உதவியும் தேவைப்படுகின்றன.
* கற்பழிக்கப்பட்ட பெண்கள் அல்லது பாலுறவு வன்செயலுக்கு ஆளானவர்கள் கற்பழிப்பால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுபட்டு சமூகத்துடன் மீண்டும் ஒன்று சேர்வதற்கு உதவி அளிக்க வேண்டும்.
முறைகளும், கட்டமைப்புக்களும் பெண்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாப்பதாக இருப்பின் பெண்களுக்கு எதிரான வன்செயல்களைச் செய்த தீயவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சமாதானத் தீர்வுகள், அதிகாரப் பங்கீடு யுத்தத்தின் பின்னர்
அரசமைப்பு ஆக்கம்.
யுத்தத்தின் பின்னரான சமாதானத் தீர்வுகளும், அரசமைப்பு ஆக்கமும் பெண்களின் தேவைகளைப் பிரதிபலிப்பவையாக இருத்தல் வேண்டும்.
இது தொடர்பாகத் தீர்மானம் செய்யும் எல்லா நிகழ்வுத் தொடர்களிலும் பெண்களைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையில் ஒரு சமாதானத் தீர்வு அல்லது ஓர் அதிகாரப் பங்கீடு பற்றிய உடன்பாடு எத்தகைய அடிப்படைச் சட்டங்களால் நாடு ஆளப்படும் என்பதை முக்கியமாக வரையறை செய்யும். ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் சமூகத்தின் பொறுப்புக்களை அவை வரையறை செய்யும். இதன் விளைவாக ஓர் இறுதியான சமாதானத் தீர்வு அல்லது உடன்பாடு நாட்டின் 'சமூக ஒப்பந்தம்' ஆகிவிடும். இதன் முழுக்காரணமாகவே வளர்ந்து செல்லும் சமாதான உடன்பாட்டு நிகழ்வுத் தொடர்களிலும் புதிய அரசமைப்பு ஆக்கமும் இடம்பெறும் போதும் பொதுமக்கள் பெண்கள் உட்பட பரந்த அடிப்படையில் அவற்றில் சேர்க்கப்படவேண்டும். அடிப்படை அரசியல் சட்டத்தினதும் சமூகத்தினதும் பொருளாதார கட்டமைப்புக்களினதும் மாற்றங்களுக்காகப் பெண்கள் உண்மையாக உழைக்காதுவிட்டால் உள்ளுள் மட்டத்தில் அவர்கள் பெறும் பயன்பாடுகள் அவர்களுக்குரிய முழுச்சமத்துவத்தையும் வழங்காது.
24

இலங்கையில் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகைக்கு எதிரான சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளும்?
பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழு கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க விடயங்களைக் கடந்து வந்துள்ளது. அவற்றில் இலங்கையில் பால்நிலை சார்ந்த சமாதான நிகழ்ச்சித் தொடரில் பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைச் சேர்ப்பதற்கு சம்பிரதாயபூர்வமான முதல் முயற்சியாகச் சேவை செய்துள்ளது. பிரதான பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுக்களுக்கு பால்நிலை சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்திலிருந்து சேவை செய்தலே இக்குழுவின் பங்களிப்பாகும். ஏனைய குழுக்களின் செயற்பாட்டு நிபந்தனைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுக்களால் உருவாக்கப்பட்ட வழமையிலிருந்து விலகி தமது சொந்த நிபந்தனைகளைத் தாமே உருவாக்கும் கடமை இக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்களுக்குள்ளே பரஸ்பரம் கலந்தாலோசித்தும் அதுபோல் நாட்டிலுள்ள மகளிர் குழுக்களோடும் கலந்தாலோசித்தும் தங்களுடைய நிபந்தனைகளை உருவாக்கும் தன்னாதிக்கத்தை இது பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவிற்கு வழங்கியுள்ளது.
இன்னொரு விசேட நோக்கம் பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவின் ஒன்று சேர்த்தலும் இனத்துவ பிரதிநிதித்துவப்படுத்துகையும் ஆகும். இந்த உபகுழு அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப்புலிகளினதும் நியமனம் பெற்ற பத்துப்பேரை சமபங்காகக் கொண்டதாக உள்ளது. அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள் (அவர்கள் தங்களை அடையாளம் காட்டாவிட்டாலும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தாவிட்டாலும்) சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுபவர்கள் (அவர்கள் தங்களை அடையாளம் காட்டாவிட்டாலும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தாவிட்டாலும்) தமிழினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவர்கள் எவரும் தேசிய அரச பதவிகளில் உத்தியோகபூர்வமானபங்கு வகிக்கவில்லை. அரசு எடுக்கும் தீர்மானங்களில் எவ்வளவு செல்வாக்கை இவர்கள் செலுத்த முடியும் என்பது மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்கள் கொழும்பை அடித்தளமாகக் கொண்ட மத்தியதர வர்க்கத்தினரைச் சேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் கீழ்மட்டத்திலுள்ள அம்மக்களது மனவேதனைகளையும், தேவைகளையும் எப்படி அறிந்திருக்க
25

Page 20
முடியும்? அவர்களுடன் எப்படிப் பழக முடியும் என்பன மனதில் வேதனையை எழுப்புகிறது. மறுதலையாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமனம் பெற்றவர்கள் அனைவரும் அவர்களது அணியைச் சேர்ந்தவர்களாகவே
காணப்படுகிறார்கள். விடுதலைப் புலிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு சுதந்திரமாக இயங்க முடியும் என்பதும் வேதனையை எழுப்புகிறது. அவர்கள் எல்லாத் தமிழ்ப் பெண்களுக்கும் அல்லது வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து தமிழ்ப் பெண்களுக்கும் எவ்வாறு பிரதிநிதிகளாகமுடியும் என்ற கவலையை மேலும் எழுப்புகிறது.
பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவின் கூட்டு நாட்டிலுள்ள பல குழுக்களின் பலத்த எதிர்விளைவுகளைத் தூண்டியுள்ளது. அரசாங்கத் தினதும் , தமிழீழ விடுதலைப் புலிகளினதும் நியமனம் பெற்ற இருபிரிவினராகவுள்ள அக்குழுவின் உறுப்பினர்கள் மேலும் எதிரெதிர்த் துருவ நிலையை வளர்க்கவே தமது பங்களிப்பினைச் செய்வார்கள் என்றும் சிலர் கருதுகிறார்கள். பால்நிலை சார்ந்த விவகாரங்களையும், பால்நிலை சார்ந்த தேவைகளையும், பற்றி முனைப்புடன் வளர்ச்சி பெற்ற புரிந்துணர்வுள்ளவர்களாக மனித உரிமைகளுக்காகவும், சமாதான விடயங்களுக்காகவும் யுத்த வரலாறு முழுவதும் உழைத்த தமிழ்ப் பெண்கள் பலர் இருக்கிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்ப் பெண்களை இக்குழுவில் சேர்க்காதமை நேர்மையற்றது என்று இன்னொரு சிலர் கருதுகிறார்கள். பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவின் அமைப்பிலும், அதனைக் கூட்டிய விதத்திலும் குறைகள் இருந்தாலும், அது சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த விடயங்களின் முன்னேற்றத்திலே குறிப்பிடத்தக்க ஒரு படியாக இருப்பதால் கவனிக்காது விட்டு விடக்கூடாது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவின் உறுப்பினர்கள் பால்நிலை சார்ந்த நோக்கலிருந்து புனரமைப்பு, கல்வி, சுகாதாரம் பேணல் போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக இரு தடவைகள் கூட்டம் கூட்டினார்கள். அதன்பின் உடனடியாக சமாதானப் பேச்சுவார்த்தையில் நகரமுடியாத நிலை ஏற்பட்டதால் (அது அப்படியே போய்க்கொண்டிருக்கிறது). அவர்களால் தமது வேலைகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் மிகவிரைவில் மீண்டும் ஆரம்பமாகுமா என்பதும், அவ்வாறு ஆரம்பமாகினால், கடந்த பேச்சு வார்த்தைகளின் போது அமைக் கப்பட்ட உபகுழுக்களுக்கு புத்துயிரளிக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் தெளிவு இல்லாமல் இருக்கிறது. பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகைக்கு பால்நிலை சார்ந்த பிரச்சினைகளுக்கான உபகுழுவின் அணுகுமுறை இலங்கையின் சூழமைவில்
26

தனித்துவமான எடுத்துக்காட்டாக உள்ளது. அது மீண்டும் தனது பணியை ஆற்றத் தொடங்கினால் பால்நிலை சார்ந்த பிரச்சினைக்கான அதன் பங்களிப்பும், சக்தியும் கவனத்தை ஈர்க்கும் அகத்தெளிவை வழங்கும்.
சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகையில் உள்ள பிரச்சினைக்கு உபகுழு ஒரு சர்வரோக நிவாரணியல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது உத்தியோகபூர்வ மட்டத்தில் பெண்கள் பேச்சுவார்த்தைக்குச் செல்லவும், அதிலே செல்வாக்குச் செலுத்தவும் ஒரு (ஒடுங்கிய) பாதையை வகுத்துள்ளது. எனினும், அதை மாத்திரம் சமாதான நிகழ்வுத் தொடருக்குள் பிரவேசிக்கும் ஒரேயொரு இடமாகக் கருதக் கூடாது. பெண்கள் குழுக்களும், அவற்றில் செயற்படுவோரும் யுத்த வரலாற்றுக் காலம் முழுவதும் தாங்கள் செய்ததுபோல் நிகழ்வுத் தொடர்களுக்கு வெளியிலிருந்தவாறு தொடர்ந்து ஆதரவு கோருவதுடன் செல்வாக்குச் செலுத்தவும் வேண்டும். இது மிகவும் பிரதானமாகிறது. ஏனென்றால் உத்தியோகபூர்வ அமைப்புக்களினதோ, செயற்படுவோரினதோ ஆணையின் கீழ் முற்றும் முழுதாக இல்லாமல் சுதந்திரமானதும், பக்கச் சார்பற்றதுமான குரலைப் பேணிக்கொள்ள பெண்களுக்கு இது வாய்ப் பளிக்கிறது. மகளிர் குழுக்கள் நாட்டிலுள்ள பல்வேறு சமூகங்களோடும், குடியுரிமைச் சமுதாயத்தோடும் பங்களிப்புச் செய்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அப்பொழுதுதான் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான முயற்சிகளில் பரந்துபட்ட அளவு அவர்கள் அணுகி தமது செல்வாக்கை உறுதி செய்யலாம். e
27

Page 21
இலங்கையில் சமாதான நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த விடயம் பற்றி நாம் என்ன முடிவுகளுக்கு வரலாம்?
இலங்கையில் நிகழ்வுத் தொடரில் பால்நிலை சார்ந்த பிரதிநிதித்துவப் படுத்துகை பல காரணங்களுக்காக ஒரு சவாலாக உள்ளது. கடுமையான ஆணாதிக்க அமைப்புக்களுக்கு இடமளித்திருப்பது பெண்கள் சமாதான நிகழ்வுத் தொடரில், குறிப்பாக உத்தியோக மட்டத்தில் ஈடுபடுவது, செல்வாக்கால் கவர்வது என்பவை தொடர்ந்து கடினமாகவே இருக்கும். இலங்கையில் யுத்தத்தால் ஏற்பட்ட பெண்களின் அனுபவங்களும், சமாதானத்திற்கான பிரதிபலன்களும் ஒரே சமதன்மை உடையவை அல்ல.
பெண்கள் பல்வேறு அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு இனத்துவங்களாலும், அரசியல் விசுவாசங்களாலும் பாதிப்படைந்து, யுத்தத்தின் காரணங்கள் பற்றியும், அவற்றின் சமாதானத்திற்கான வழிகள் பற்றியும் வித்தியாசமான அபிப்பிராயங்களுடன் ஒரு சமாதான நிகழ்வுத் தொடருக்கு வருகின்றனர். பெண்களுக்கென ஒரு பொது நிகழ்ச்சி நிரலை விருத்தி செய்வது இலகுவான ஒரு விடயமாக இருக்க முடியாது.
இலங்கையின் சூழமைவில் சமாதானத்திற்கு பால் நிலை சார்ந்த பிரதிநிதித்துவப்படுத்துகை மூன்று அடிப்படைக் காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரலாம். முதலாவதாக, பொது வாழ்வில் பெண்களின் பங்குபற்றுகைக்கு மனித உரிமைகள் சமத்துவத்தினதும், நேர்மையினதும் தரங்கள் தேவைப்படுகின்றது. இலங்கை ஏனைய 174 நாடுகளுடன் பெண்களுக்கு எதிரான எல்லா வகை யான பாரபட்சங்களையும்ஒதுக்கி வைக்காது ஒழிப்பதற்கான கூட்டத்தைக் கூட்டி உறுதி செய்துள்ளது. (பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் ஒழிப்பதற்கான கூட்டம்) எட்டாவது வாசகம் அதற்கான தேவையை இப்படிக் குறிப்பிடுகிறது: "பெண்களுக்கு பாரபட்சம் காட்டாது ஆண்களோடு சமத்துவமான நிபந்தனைகளின் அடிப்படையில் அனைத்துலக மட்டத்திலும் தத்தமது அரசாங்கங்களின் சார்பில் பிரதிநிதித்துவம் வகிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமாதானத்தை நோக்கிச் செல்வதற்கும் எல்லா முயற்சிகளையும் செய்து வரும் இந்தச் சூழமைவில் நாடு இதனை செய்வதற்கு தவறக்கூடாது.
இரண்டாவது, நாம் அறிந்து கொண்டபடி யுத்தம் பலமாக பால்நிலைப்படுத்தப் பட்டுள்ளது. யுத்தகாலத்தில் பல்வேறு வகையான அனுபவங்கள் யுத்தத்திற்குப்
28

பின்னரான அவர்களது முதன்மைகளையும், தேவைகளையும் தீர்மானிப்பதற்கு அடித்தளமாக இருக்கின்றன. எனவே இந்த அனுபவங்களை நிகழ்வுத் தொடரின் எல்லாக் கட்டங்களிலும் நேரடியாக முன்வைத்து கவனத்திற்கு எடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும். பயன்தரக்கூடிய சமாதான நிகழ்வுத் தொடர் பரந்த அனுபவம் என்னும் அடித்தளத்தில் கட்டப்பட வேண்டும். எனவே யுத்தகாலத்தில் சாதாரண பெண்கள் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்களையும், யுத்தத்திற்குப் பின்னர் அவர்களது மிகப்பெரிய பொறுப்புக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
மூன்றாவதாக பெண் கள் இலங்கையின் யுத்தத் தாலி பாதிக்கப்பட்டவர்கள் என்று மாத்திரம் நோக்கப் படுவதிலிருந்து விலகி, அவர்களை புதிய மாற்றங்களுக்கான அதிகாரமுள்ள முகவர்களாக நோக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். நிகழ்வுத் தொடர்களுக்கு பெண்கள் தமது பரந்துபட்ட அனுபவங்களையும் திறமைகளையும், அறிவையும் வழங்குவார்கள் என்பது இலங்கையின் அனுபவத்திலிருந்து வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்நோக்கினையும், கருத்துக்களையும் சேர்க்கத்தவறினால் ஆரோக்கியமற்ற சமாதானத்திற்கே செல்ல நேரிடும்.
இலங்கையில் சமாதானத்தைக் கட்டி வளர்ப்பதில் உள்ள பிரச்சினைகளுக்கு பால்நிலை சார்ந்த பிரதிநிதிக்குவப்படுத்துகை ஒரு சர்வரோக நிவாரணியல்ல. எனினும், நாட்டிலுள்ள பெண்களின் அனுபவங்களையும், தேவைகளையும், அந்தஸ்துக்களையும், நலன்களையும் நிகழ்வுத்தொடரில் சேர்த்துக் கொள்வதற்கு இது ஓர் இன்றியமையாத படியாகும். அத்துடன் நாட்டிலுள்ள பெண்களின் பலங்கள், திறமைகள், அகத்தெளிவு ஆகியவற்றயுைம் நிகழ்வுத் தொடரில் சேர்த்துக் கொள்வதற்கும் இது ஓர் முக்கிய படியாக அமையும். இது மாத்திரமே இலங்கையில் யுத்தத்தின் புதிய மாற்றத்திற்கான நிகழ்வுத் தொடரை விருத்தி செய்யத் துணை நின்று எம்மைச் சமாதானத்தில் ஏற்றமளிக்கக் கூடிய முடிவிற்குக் கிட்ட ஓர் அடி எடுத்து முன்னே வைக்கச் செய்யும்.
29

Page 22
PHI'ITEYTE ANTE FWTLT

'DI CILICEOITEL: C15