கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமைதியான இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு

Page 1
ਅ பெண்கள் கல்வி
 

ஆய்வு நிறுவனம்

Page 2

அமைதியான இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையின் முலம்
இனப்பிர்ச்சினைக்குத் தீர்வு
(பேராசிரியர் குமார் டேவிட்டின் ஆய்வுரையொன்றுக்கு அமைய தயார் செய்யப்பட்டது)
சுதந்திர தொழில்சங்க அபிவிருத்திக்கான நிலையம்
அனுசரனை: ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம்

Page 3

உள்ளடக்கம்
முன்னுரை
நன்றி உரை
அறிமுகம்
கைநூல் தொடர்பாக - ஜி. வி. டீ. திலக்சிறி
1.
2.
நாம் இன்னொரு யுத்தத்தைச் சந்திக்க வேண்டும் என்பதை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம்
சமஷ்டி ஆட்சிமுறை இனப் பிரச்சினைக்கான தீர்வாகும்
பக்கம்
VIII
XIII

Page 4

முன்னுரை
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பிரஜைகளான இரு தரப்பினர்க்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் சமாதானத்தைப் பற்றி பேசி வருகிறோம். அண்மையில் பல உயர்தர மட்டத்தில் முரண்பாடுகளை எப்படித் திர்ப்பது என்றும், முரண்பாடுகளை அகற்றுவது எப்படி என்றும், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவும் திறமையும் படைத்த அரசாங்க உத்தியோகத்தினரும், மற்றவர்களும் சமாதானத்தைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் இது பற்றிச் சாதகமாக எழுதியிருக்கும் அதே சமயம் பலர் அது பற்றி எதிர்ப்புக் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினராகிய நாம் இத்தகைய பேச்சுக்கள் ஒரு தவறான பாதையில் செல்வதாக உணருகின்றோம். பெரும்பாலும் தவறான அர்த்தப்பாடுகளும், தவறான விளக்கங்களும், தவறான சொற் பிரயோகங்களும், கருத்துப் பிரயோகங்களும், திட்டமிடப்பட்ட கருத்து மாற்றங்களும், உதாரணங்களும், அனுபவங்களும், மக்களைத் திசை திருப்புவதற்கும், மக்கள் மத்தியில் மனப்பீதியை ஏற்படுத்தும் நோக்கிலுமே எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இப் பிழையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்கள் தங்கள் தங்கள் சுய அடையாள உருவாக்கத்தில் ஐயம் ஏற்பட்டு குழம்பிப் போய் உள்ளனர். இதனால் எம் நாட்டு மக்களுக்கு இவை பற்றி தெளிவுபடுத்துவது ஒரு நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. இந் நோக்குடன் நாங்கள் சில விடயங்கள், கருத்துக்கள், முரண்பாடுகளைத் தெரிவு செய்து இவற்றைச் சரியான முறையில் எப்படி விளக்க வேண்டுமோ அதன்படி விளக்கம் கொடுக்க முனைகின்றோம். சில புதிய விளக்கங்களும் தேவைப்படுகின்றன. தீவிர கட்சி அரசியல் சார்பற்ற சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளோம். தொடர்ந்தும் மனித விழுமியங்களில் நம்பிக்கை உடையோரையும், ஜனநாயகப் பண்பாட்டில் அவாவுள்ளவர்களையும், இலங்கையின் சமய சார்பற்ற பன்முகத் தன்மையை பேணுபவர்களையும் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இம்மீள் கட்டமைப்பில் நாம் ஒரு சமூக நீதியைப் பேணும் ஜனநாயகப் பண்பாட்டை எதிர்பார்க்கின்றோம். இப்பண்பாடு சகல இன மக்களினதும் தனி மனித உரிமைகளையும், சமூக உரிமைகளையும், சுதந்திர மனப்பாங்கையும் பேணும் ஒரு நிலமையை ஏற்படுத்தும் என்பதும் நமது எதிர்பார்ப்பு.
இளையோர் முதியோர் என ஏழாயிரம் பேருக்கு இச்சிறு நூல் சென்றடையும்.
கனவுகள் நிஜமாவதுண்டு
எதிர்பார்ப்புகள் பல செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 5

நன்றி உரை
இத் திட்டம் பலரினதும் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்றோரும், செயலூக்க வல்லுனரும் கலந்து கொண்டனர். முதலில் இச்சிறு நூல்களிற்குத் தலைப்புக்களைத் தெரிந்தெடுப்பதற்கு மேற் குறிப்பிட்டோரும், எமது நிறுவன அங்கத்தினரும் சேர்ந்து ஒரு சிறு
குழுவை உருவாக்கினோம். پخلی
திருமதி பேணடின் சில்வா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து திரு. ஏ. ஜே. கனகரட்ண ஆகியோருடன் கலந்துரையாடித் தலைப்புக்களைத் தெரிவு செய்து பத்து ஆய்வாளர்களையும் இனங்கண்டு கொண்டோம். ஆனால் எங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் ஐந்து ஆய்வாளர்கள் தான் எங்களுடன் நிலைத்து நின்றார்கள். திரு. ஜெகன் பெரேரா, கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ, கலாநிதி குமார் டேவிட், செல்வி டில்றுக்சி பொன்சேகா, திரு. அன்ரன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எமது நன்றிகள்.
மூலப்பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்தமையால் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. திருமதி சோமா ஜெயக்கொடி, திருமதி இந்திராணி கோவிந்தசாமி, திரு. ஏ. ஜே. கனகரட்ண, திரு. கே. நடேசன், திரு. வைரமுத்து சுந்தரேசன் ஆகியோர் மொழி பெயர்ப்பதற்கு உதவியாக இருந்தனர். இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவியவர்கள் யுனி ஆர்ட்ஸ்' நிறுவனத்தினராவர். இவர்களின் பொறுமையும் கடமையுணர்வும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இத்திட்டம் வெற்றி பெறக்காரணமாக உதவிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன அங்கத்தவர்களையும், மரினி டி லிவேரா, மகேஸ் வைரமுத்து, அட்டைப்படம் வரைந்து உதவிய சாந்தினி குணவர்த்தன அவர்கட்கும், மேலும் எமது உதவியாளர் சந்திரசேனவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
Vii

Page 6

அறிமுகம்
இலங்கையில் நிலவும் இனத்துவ உறவுகளை சமூக, வரலாற்று சூழலில் எளிய மொழி நடையில் அலசுவதே இச்சிறு நூலின் நோக்கம் ஆகும். இச்சிறு நூலின் தலைப்பிலேயே இது தொடங்குகின்றது. இந் நூல் கல்வி நோக்கங்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டுள்ளமையால் இயன்றளவு எளிய மொழி நடை பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆராயப்படும் விடயம் எளிமையானது அல்ல. எனவே உள்ளடக்கப்பட்ட விடியங்களை மீள் வாசித்தல் அல்லது ஆறுதலர்க வாசித்தல் சிறந்த பலன்தரும் என்பது இங்கு அறிவுறுத்தப்படுகிறது.
நாம் யார் என்பது பற்றியும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஏன் தடைகள் உள்ளன என்பது பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இனத்துவ உறவுகள் தொடர்பான சமூக சூழமைவு அவசியமாகிறது. இனத்துவ உறவுகளைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுச் சூழமைவும் அவசியமாகும். ஏனெனில் இச்சூழமைவிலேதான் எமது பெரும்பாலான தப்பபிப்பிராயங்கள், தப்பெண்ணங்கள், அச்சுவார்பான படிமங்கள் என்பன உறைந்துள்ளன. ஆனால் மிக முக்கிய அம்சமாக இங்கு அமைவது வரலாற்றுச் சூழமைவில் இனத்துவம், தேசம், பல்கலாசாரம் ஆகிய எண்ணக்கருக்களைப் புரிந்துகொள்வதாகும்.
எந்தவொரு இனக்குழுவிற்கும் பக்கச்சார்பின்றி, நாட்டில் இன முரண்பாடு பற்றிய நடுநிலையானதும் புறநிலையானதுமான ஒரு விளக்கத்தை தருவதற்கு இச்சிறு நூல் முனைகிறது. எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் நிலவிவந்த நல்லுறவுகளைச் சீர்குலைத்த கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விமர்சிப்பதற்கு நூலாசிரியர் தயங்கவில்லை. சமாதான அமைதி நிகழ்வுத் தொடர் குறித்து நேரான மனப்பாங்குடன் நூல் முற்றுப்பெறுகிறது.
நூலினதும் அதன் உள் அடக்கங்களினதும் நோக்கமாக அமைவது இன ஐக்கியத்தை மீளமைத்து சமாதானத்தை நாட்டில் முன்னெடுப்பதாகும். சமாதானத்தை முன்னெடுப்பதற்கு சமாதானம் பற்றிய அதிக அளவிலான விளக்க நூல்கள் அவசியம் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டதொன்று. சமாதானம் பற்றிய வாசிப்பு ஏடுகளின் பற்றாக்குறை சமாதான இயக்கத்தின் ஒரு பிரதான குறைபாடாக இந்நாட்டில் அமைகிறது. ஆகவே இந்நூல் இவ்விடைவெளியை சிற்றளவில் நிவர்த்தி செய்ய முனைகிறது.
சாதாரண மக்கள் வாசிப்பதற்கு அல்லது பயிற்சிக் காலங்களில் கல்வி ஏடாக அவர்களால் பயன்படுத்தப்படுவதற்காக இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நோக்கங்களுக்காக நூலானது சிங்களத்திலும் தமிழிலும் மேலும் விளக்கத்துடன் மொழிப்பெயர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது.
ஆயினும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த முதற்பதிப்பு இனத்துவ உறவுகள், தொடர்பாடல் ஆகிய விடயங்களில் ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகப் பயன்படுத்த முயற்சிக்கும் படித்த இளைஞர்களுக்கு பிரயோசனம் மிக்கதாக விளங்கும்.

Page 7

கைந்நூல் தொடர்பாக
இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வாக பேச்சுவார்த்தைகளின் மூலம் அடைந்து கொள்ளவேண்டிய யாப்புத் திருத்தங்கள் தொடர்பாகச் சமாதான முன்னெடுப்புக்களைத் தொடர்ந்து நாம் 2002 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் திகதி பேராசிரியர் குமார் டேவிட்டின் பங்கேற்பில் கருத்தரங்கொன்னுற நடாத்தினோம். அதனைத் தொடர்ந்து இதுவரை விரிவுரைகள், கருத்தரங்குகள்
கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
இதன் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் பல செயலமர்வுகளை நடாத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வேலைத்தளங்கள் மற்றும் கிராமியத் தலைவர்களின் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய அரசியல் யாப்புத் திருத்தங்கள் மற்றும் தேசியப் பிரச்சினைக்குச் சமாதானத் தீவொன்றை அடைந்துகொள்வது எவ்வாறு என்பது பற்றிய பரந்ததொரு கலந்துரையாடலுக்கு இதன் மூலம் வழி செய்யப்படுகின்றது. இங்கு சமஷ்டி ஆட்சி முறையொன்றின் வடிவம் தொடர்பான கலந்துரையாடலொன்றைக் கட்டியெழுப்ப நாம் உத்தேசித் துள்ளோம். இது தொடர்பில் கோட்பாடு ரீதியான ஆவணமொன்றின் தேவையை நாம் பேராசிரியர் குமார் டேவிட்டிற்குத் தெரியப்படுத்திய பின்னர் அவர் தயார் செய்துள்ள கருத்துக்கள் சில ஆங்கில மொழியில் எமக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஆழமான அரசியல் கருத்துக்கள் ஊடாக
விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இங்கு நாம் அரசியல் விடயங்களைவிட சனநாயக மறுசீரமைப்பு
வரையறையொன்றினுாடே சகல இனங்களும் இணங்கக்கூடியவாறான பரந்த
கலந்துரையாடலுக்கான ஆரம்பத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம். எனவே குறித்த ஆவணம் மேலும் பல அறிஞர்களுக்கு அது தொடர்பான கருத்துக் கோரி சிங்கப்பூரில் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வனைத்துக் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு சிங்களம், தமிழ் மொழிகளில் இச்சிறிய கைந்நூல் அச்சிடப்பட்டுள்ளதுடன் இதனை வேலைத்தளங்கள், அலுவலகங்கள், கிராமிய
விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் கொண்டு செல்வது
xi

Page 8
எமது அடுத்த கட்ட நடவடிக்கையாகும். எனவே இதனைத் தனியொருவரின் கருத்தாகவோ எமது ஆக்கமொன்றாகவோ கருத வேண்டாம். உங்களின் கருத்துக்கள், விமர்சனங்களை எமக்கு அனுப்புவீர்களாயின் நன்றியுடைய
வராவோம்.
இந்தப் பாரிய பணிக்கான அனுசரணையை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் வழங்கியுள்ளது. எனவே அந்த அமைப்புக்கும் இதற்கான ஆரம்ப கருத்துக்களை ஒன்றுதிரட்டித் தந்த பேராசிரியர் குமார் டேவிட் அவர்களுக்கும், இது சம்பந்தமாக ஆராய்ந்த அறிஞர்களுக்கும் கைப்பிரதியை தயார் செய்யும்போது உதவிய ஹாவூனி சகோதரிக்கும், இதனை அச்சிட்டுத் தந்த யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் எமது நன்றி உரித்தாகட்டும்.
ஜ.வி.டி.திலக்கசிறி
தலைவர்
சுதந்திர தொழிற்சங்க அபிவிருத்தி நிலையம் 11/36 ஏ, ஆனந்த ராஜகருணா மாவத்தை, கொழும்பு 10.
2004. 12.06
E-mail : ftudcGsltnet.lk
xii

நாம் இன்னொரு யுத்தத்தைச் சந்திக்க வேண்டுமா என்பதை மீண்டும் சிந்தித்துப்பார்ப்போம்
யுத்தத்துக்கான மனிதச் செலவினம் 1988 தொடக்கம் 2002 போர் நிறுத்தம் வரையான காலப்பகுதி
6 சுமார் 65,000 பேர் யுத்தத்தினால் உயிரிழந்துள்ளனர்.
இவர் களில் பெரும்பாலானோர் 20க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். 9 தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பின் 17,648 உறுப்பினர்கள்
உயிரிழந்துள்ளனர். 6 அரச பாதுகாப்பு படையின் 14,790 வீரர்கள் யுத்தத்தினால்
உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையின் 10,343 வீரர்கள் பூரண அங்கவீனர்களாகியுள்ளனர். இராணுவத்திலிருந்து 30,000-40,000 பேர் தப்பி ஓடியுள்ளனர். இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 12 இலட்சமாகும். இடம்பெயர்ந்தவர்களில் 250,000 பேர் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களாகும். இந்தியாவிலுள்ள அகதிமுகாம்களில் 66,000 பேரும், முகாம்களுக்கு வெளியே 40,000 பேரும் வாழ்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு 200,000 பேர் தப்பி ஓடியுள்ளனர். இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் 800,000 பேர் வாழ்கின்றனர்.
:
(தரவுகள் : யுத்தத்தின் நட்டஈடு என்ற சிங்கள நூலிலிருந்து தேசிய சமாதான பேரவையின் வெளியீடு)
சமஷ்டி ஆட்சிமுறையின் அவசியத்தன்மை குறித்து 1926 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் நோக்கிய யதார்த்தத்தை மீண்டும் சிந்திக்க வேண்டிய காலம் தோன்றியுள்ளது.
"வரலாற்றை நோக்கும்போது நாம் அவதானிக்கக் கூடிய விடயம் தமிழ் கரையோர மற்றும் மலைநாட்டு சிங்களவர் ஆகிய இனத்தவர்கள் சுமார் 1000 ஆண்டுக்கும் மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வந்த போதும் அவர்கள் ஒன்று சேர எந்தவொரு முயற்சியையும் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தத்தமது பாரம்பரியங்கள், மொழி விவகாரங்கள், சமய சம்பிரதாயங்களை வெவ்வேறாகப் பேணி வருகின்றனர். இந்த வேறுபாடுகள் படிப்படியாக இல்லாமலொழியுமென்று ஒரு மூடனுக்கு மட்டுமே நினைக்க முடியும்.”
(1926 யூலை 17ஆம் திகதிய மோர்னிங் லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியொன்றிலிருந்து)
xiii

Page 9

சமஷ்டி ஆட்சிமுறை இனப்பிரச்சினைக்கான தீர்வாகும்
(செயலமர்வுகளின்போது கலந்துரையாடுவதற்காகப் பேராசிரியர் குமார் டேவிட்டின் ஆய்வுரையொன்றிற்கமையத் தயார் செய்யப்பட்ட கைந்நூலொன்றாகும்.)
அறிமுகம்
இக்கைந்நூலில் உள்ளடங்கியுள்ள கருத்துக்கள், வேலைத்தளங்கள், அலுவலகங்கள், கிராமிய விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில், அவர்களின் கருத்துக்கள் மற்றும் கலந்துரையாடல்களைக் கட்டியெழுப்பு வதற்கான மூல ஆவணமாகத் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் குறிக்கோள் சமஷ்டி ஆட்சி முறை தொடர்பான வரையறை அற்ற கலந்துரையாடலுக்கான பின்னணியை உருவாக்குவதாகும். இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும், நியாயமானதுமான தீர்வொன்றை அடைந்து கொள்ள இலங்கை மக்கள் மிக விருப்பத்துடன் இருப்பது பல காரணிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1994க்குப் பின் அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டு வரும்போது யுத்தத்திற்கு எதிராகச் சமாதானத்தை எதிர்பார்த்துப் பொது மக்கள் வாக்களித்துள்ளனர்.
இனப்பிரச்சினைக்குத் தர்க்க ரீதியான மற்றும் செயல் ரீதியான தீர்வொன்றை
அடைந்துகொள்வதற்காக இதுவரை சமாதானப் பேச்சுவார்த்தையொன்று
முன்னெடுக்கப்படவில்லை எனவே முன் தீர்மானங்கள் மற்றும் திணிப்புக ‘களற்றதும், பொது மக்களுக்கு பக்கச் சார்பின்றித் தீர்மானம் மேற்கொள்ளவும்
கூடியவாறு நாட்டில் சிறந்த கலந்துரையாடலொன்றைப் பேணி வருவது
அவசியம். அதற்காக இதில் அடங்கியுள்ள விடயங்களைத் தர்க்க ரீதியாக ஆராய முடியும். அவ்வாறான சந்தர்ப்பத்தினை உருவாக்கிக் கொள்ள முடியுமாயின், உத்தேச இலக்கினையடைந்து சிறந்த சேவையை ஆற்ற (ԼՔlգավԼD.
பின்னணி
கடந்த இருபது வருட காலமாக மோதலுடன் தொடர்புடைய தரப்பினர்கள், இராணுவ தலையீடு மற்றும் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளனர். இதன் விளைவாக யுத்தத்தை நிறுத்தி சமாதான முன்னெடுப்பிற்காக இரு தரப்பினரும் இணங்கியதுடன், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சமாதான இணக்கப்பாடொன்றிற்கு வந்துள்ளனர்.

Page 10
தேசியப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் போது ஒரு தரப்பிற்கு வழங்கக்கூடிய உச்ச அளவும், மற்றைய தரப்பிற்குப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக் குறைந்த அளவும் என்ற வகையில் சமஷ்டி ஆட்சி முறையொன்றை
ஏற்படுத்தவேண்டியுள்ளது.
இன்று அமைதியான இலங்கையைக் கட்டியெழுப்புவதில் அடைந்துகொள்ளக் கூடிய அரசியல் யாப்பு ரீதியான ஏற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ள ஒரே இணக்கப்பாடு சமஷ்டி ஆட்சிமுறையொன்றாகும். இங்கு நிரந்தரத் தீர்வொன்றாகச் சமஷ்டி ஆட்சிமுறையொன்றின் அமைப்பைச் சட்டமாக்கிக் கொள்வதற்காக, அவ்வாறான தீர்வொன்றிற்கு விருப்பமுள்ள சகல தரப்புக்களினதும் இணக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எனினும் இலங்கை மக்களுக்கு இது இலகுவான விடயமொன்றல்ல என்பதுடன், இம்முக்கிய சவாலை பாரிய பல நெருக்கடிகளுக்கு மத்தியிலாயினும் எதிர்காலத்தில் வெற்றிகொள்ள வேண்டும்.
பிரிந்து செல்லும் உரிமை உட்பட, தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதெனக் கடந்த மூன்று தசாப்த காலமாக இடதுசாரி மற்றும் முற்போக்கு அறிஞர்கள் கருதுகின்றனர். எனினும் அவ்வாறான உரிமை உள்ளபோதும் அவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேசியப் பிரச்சினைக்குரிய தீர்வாகத் தமிழ் மக்களுக்குப் பிரிந்து செல்லுமாறு யோசனை சமர்ப்பிக்கவில்லை.
இடதுசாரி மற்றும் முற்போக்குவாதிகளின் கருத்துக்களின் மூலம் பெரும்பாலான தமிழ் இளம் போராளிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. 1970 தொடக்கம் 2000 வரையான மூன்று தசாப்த காலமாக தமிழ் இளம் போராளிகளின் புரிந்துகொள்ளமுடியாத சூட்சுமமான எண்ணக்கருவும் அதுவாகும். எனினும் தற்போது தமிழ் இளம் போராளிகள் பிரிந்து செல்லாது தன்னாதிக்கம், சுயாட்சி, பிராந்திய சுயநிர்ணயம் ஆகிய எண்ணக் கருக்களுக்கு அமைய உரிமைகளை வென்றெடுக்க இணங்கியமை இலங்கை மக்களின் வெற்றியாகும். எனவே பிரிந்து செல்லும் தனி இராச்சிய எண்ணக்கரு எதிர்காலத்தில் செல்லுபடியாகாது. கோட்பாட்டு ரீதியில் பிரிந்து செல்லும் உரிமையும் பிரிதொரு இராச்சியம் தொடர்பான கருத்தும் சரியாயினும் இன்றைய சனநாயக மூலோபாயங்களின் முன் செயல் ரீதியாக ஏற்புடையதாக்கிக்கொள்ள முடியாதவையாகும்.
கோட்பாட்டு ரீதியில் இவ்வாறு பொழிப்புரையாக்கப்பட்டாலும், செயல் ரீதியான, உய உபாய முறையிலான மற்றும் அனுபவங்களை யாப்பு ரீதியிலான சட்டமாக்க முயற்சிக்கும் போது சிக்கலான நிலையைக் காட்டுகின்றது. எனவே கொள்கை ரீதியான விடயங்களின் அடிப்படையில் அச்சமின்றி
2

விடயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டால் தேசிய பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதில் சிங்களப் பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தினை இனவாத சக்திகளைத் தோல்வியுறச் செய்து நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறான பின்னணியில் அரசியல், பொருளாதார, சமூக நிலைப்பாட்டிற்கான அடிப்படையை ஏற்படுத்தி சமாதானமான ஐக்கிய இலங்கையினுள்ளே பொருளாதார சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.
கொள்கை 1 - தேசியத்துவமும் இறைமையும்
தற்போதைய தேசிய பின்னணியின் கீழ் இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு செயல் ரீதியான யாப்புத் திருத்தமொன்றில் பின்வரும் பண்புகள் காணப்பட வேண்டும்.
சிங்கள மக்களுக்குப் புதிய யாப்புத் திருத்தத்தின் மூலம் அரசியல், நிர்வாக மற்றும் இராணுவ ரீதியாகப் பிரிந்து செல்லவோ அல்லது நாடு இரு தேசங்களாக இரண்டாகப் பிரிந்து செல்லவோ மாட்டாதென்று உறுதியளித்தல் வேண்டும்.
வடக்கு கிழக் குத் தமிழ் மக்களுக்கு அவர்களின் அன்றாட நடவடிக்கைகளின் போது பிராந்திய சுயாட்சி நிலை இருக்கின்றமை உறுதி செய்யப்பட வேண்டும். சமூக, பொருளாதார, கலாசார விடயங்களின்போது பக்கச்சார்பற்று, தொல்லையற்று நியாயமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கு அவர்களுக்குத் தன்னாதிக்க அதிகாரம் உள்ளது உறுதிசெய்யப்படல் வேண்டும்.
கூடுதலாக தமிழ் மக்கள் வாழ்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களுக்கு மதத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம், அவர்களின் கலாசார நடவடிக்கைகளுக்கும், தனித்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மதிக்கப்படல், பாதுகாப்பு தமிழ் ஆட்சியின்கீழ் தலைகுனியாது வாழ்வது உறுதிசெய்யப்படல் வேண்டும்.
மலையகத் தமிழ் மக்கள் அனைவரும் பூரணமாக இலங்கைப் பிரசைகளாக் கப்படல் வேண்டும். அவர்கள் வாழும் பிரதேசத்தைச் சூழவுள்ள சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற பொருளாதார, சமூக, காலச்சார, அபிவிருத்திச் சந்தர்ப்பங்களை அவர்களுக்கும் சமமாக அனுபவிக்க சந்தர்ப்பமுள்ளமை உறுதிசெய்யப்படல் வேண்டும்.
அனுபவத்தின் மூலம் கண்டறியப்பட்டவாறு சட்டவாக்க நிறுவனங்கள் பல காணப்படுவது கீழ் மட்டம் வரை அதிகாரப் பகிர்வுக்கு இலங்கையினுள் உதவியாக இருக்கவில்லை. சமஷ்டி ஆட்சிமுறையின் கீழ் சட்டவாக்க நிறுவனங்களுக்கும், நிர்வாகக் கட்டமைப்பிற்குமிடையே மோதலொன்று
3

Page 11
எதிர்பார்க்கப்படுவதில்லை. எனவே ஏனைய சகல நிறுவனங்களும் சமஷ்டி ஆட்சி முறைக்கமைய உருவாக்கப்படல் வேண்டும். ஆகவே மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பணியாக சனநாயக சுய நிர்வாக ஆட்சி முறையொன்றின் கீழ் பொது மக்களுக்குச் சேவையாற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களாக அவை இருப்பதாகும்.
பொதுவாக நோக்கும்போது சில இன ரீதியான மூலங்களுடாக இன்றுவரை வியாபித்துள்ள இலங்கைச் சமூகத்தின் இனப்பிரச்சினையானது பொருளாதார, அரசியல் விடயமொன்றை விடவும் இலங்கை சமூகத்தின் பிரசைகளாகச் சகலரும் சமமாக, கெளரவமாக மதிக்கப்படுவதும், கூட்டமாக வாழ்வதும் புதிய யாப்பொன்றின் முதலாவதும், முக்கியமானதுமான காரணியாகக் கவனத்திற்கொள்ளப்படல் வேண்டும்.
கொள்கை 2 - சமஷ்டி ஆட்சிமுறையின் மூலதத்துவங்கள்
இலங்கையின் தன்மைக்கு அமைய இரு அலகுகளை ஏற்படுத்திக்கொள்வது உகந்ததெனக் கருதப்படுகின்றது. ஒரு அலகு வடக்கு கிழக்குப் பிரதேசமென்றும் மற்றைய அலகு எஞ்சிய முழுப் பிரதேசமென்றும் கருதுவது உகந்தது. இது தொடர்பாகக் கலந்துரையாடலின் மூலம் அறிவியல் ரீதியான இணக்கமொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கை மிகச் சிறிய நாடாதலால், பல அலகுகளாகப் பிரித்துக்கொள்வது உகந்ததல்ல. அதன் மூலம் பல சிக்கல்கள் எழுவதுடன், நிர்வாக அரசியல் ரீதியாக நோக்கும்போது மேலதிகச் செலவொன்றை மக்கள் ஏற்கவேண்டிய நிலைமை ஏற்படும். கடந்த அதிகாரப் பகிர்வு அனுபவங்களின் மூலம் இதனைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். மாகாண சபைகளும், உள்ளுராட்சி, மன்றங்களும் தற்போதுள்ள அதிகார வரையறைக்குள் செயற்படுவது உகந்தது.
தெளிவாகத் தேசிய மட்டத்திலான சட்டவாக்க அதிகாரம் சமஷ்டி (மத்திய) பாராளுமன்றத்திற்கே உரித்தாகுமென்பதுடன், அப்பாராளுமன்றம் மற்றும் சமஷ்டி அலகுகளின் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதானது இணக்கப் பாடொன்றின் மூலம் நடைபெறவேண்டும். எனவே மத்திய நிர்வாகத்தினதும், சமஷ்டி அலகுகளினதும் செயற்பாடுகள் மிக முக்கியமாகும். தேசியத்துவமும், இறைமையும் இணைந்த சுதந்திரமான நாடொன்றின் நிலைத்திருத்தலானது அதன் மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும். 1972 இன் யாப்பு ஆக்கத்தின் போது வரப்பிரசாதம் பெற்ற வகுப்பினரொன்றின் விருப்பு வெறுப்புக்களுக்கமைய தேசிய அரசுப் பேரவை செல்லுபடியற்ற தாக்கப்பட்டது. எவ்வாறாயினும் சமஷ்டி ஆட்சி முறையொன்றின் போது அவ்வாறான உச்ச நிலைப் பேரவையொன்றின் மூலம் பல்வேறு

அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதன் மூலம் எழுகின்ற சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் தேசிய சமநிலையை உறுதி செய்வதற்காக அவ்வாறான பேரவையொன்று அவசியமானதாகின்றது.
சனாதிபதி பதவி மற்றும் அரசின் நிறைவேற்றுத் துறைக்குரித்தான அதிக அதிகாரங்கள் கூட்டுச்சேர்வதைக் கவனத்திற்கொள்ளும்போது சட்டவாக்கச் சபைகளிடம் பலம் வாய்ந்த அதிகாரமொன்று இருத்தல் வேண்டும். கடந்த 26 வருட கசப்பான அனுபவங்களுடன் நிறைவேற்று சனாதிபதி முறைன்ய முற்று முழுதாக ஒழித்துத் தற்போதுள்ள முறையிலும் பார்க்க அதிகாரம் வரையறுக்கப்பட்ட முறையொன்றை அறிமுகம் செய்து மக்களின் சனநாயக உரிமையை வலுவூட்ட வேண்டியுள்ளது. அவ்வாறான நடவடிக்கையொன்றின் போது நீதிமன்றம், தேர்தல் ஆணையாளர், கணக்காய்வாளர் தலைமை அதிபதி போன்ற துறைகளின் சுதந்திரம் முற்றுமுழுதாகப் பாதுகாக்கப்படக்கூடிய வகையிலான பிரிவுகள் புதிய அரசியல் யாப்பில் உள்ளடங்க வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார மற்றும் விருப்புவாக்கு முறையைச் செல்லுபடியற்றதாக்கி யப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தென்கொரியா போன்ற நாடுகளின் விடயங்களை ஆராய்ந்து மத்திய மற்றும் அலகு மட்டத்திலான கலப்புத் தேர்தல் முறை ஒன்றின் மூலம் தொகுதி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையொன்றை ஏற்படுத்துவது அவசியம்.
இரு அலகுகளைக் கொண்ட சமஷ்டி முறையொன்றுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், முஸ்லிம்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பது குறித்துத் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். சமஷ்டி முறையொன்றை உருவாக்குவதில் எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சினை இதுவாகும். வடக்கு கிழக்கை ஒரு அலகாக ஒன்றிணைக்கும் போது கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினமாக முஸ்லிம்கள் உள்ளனர். இது 42% ஆகும். தமிழ் மக்கள் 30% ஆகும். மேலும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் 41% ஆகும். அம்பாறை மாவட்டத்தில் 19% ஆகும். எனவே வடக்கு கிழக்கின் சமஷ்டி அலகானது பல்லினங்களைக் கொண்டதனால் அதனை உருவாக்கிக் கொள்வது பாரிய சவாலாகும். இதனை முஸ்லிம்களும், சிங்கள மக்களும் புறக் கணித்தால் இம்முறையானது தோல்வியடையும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் 49% உம், சிங்கள மக்கள் 40% உம் உள்ளதனால் அம்பாறை மாவட்டத்தைப் பிரிப்பதன் மூலம் சிக்கலைத் தீர்த்துக்கொள்ள முடியாது. எனவே அலகு எதுவாயினும், பல்லினங்களைக் கொண்டதும், சனநாயக ரீதியிலுமான சமஷ்டி முறையொன்றை உருவாக்குவதற்கான சவால் தவிர்க்கப்பட முடியாத தொன்றாகும். (புள்ளிவிபரங்கள் 2001 இன் சனத்தொகை கணக்கெடுப்பின் மூலம்)

Page 12
அதிகாரப் பகிர்வு
மத்திய அரசிற்கும் சமஷ்டி அலகுகளுக்குமிடையே பணிகளைக் கையளிப்பது மிகவும் சிக்கலான விடயமாக இருக்கும் எனவே மீண்டும் இறைமையுடைய அரசொன்றின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது ஒருபுறம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும் என்பதுடன் மறுபுறம் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் தன்னாதிக்கம், சுயாட்சி, பிராந்திய சுயாட்சி என்பன உறுதி செய்யப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம் மக்களின் தனித்துவத்தைப் பாதுகாத்தலும், மலைநாட்டுத் தமிழ் மக்களின் சம அந்தஸ்த்தும் உறுதி செய்யப்படுவது இங்கு கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். எனவே அவற்றிடையே சமநிலையை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இடைக்கால சுயாட்சி அதிகார சபை (ISGA)
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள இடைக்கால சுயாட்சி அதிகாரசபை தொடர்பான யோசனைகள் மூலம் உச்ச அளவில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்களின் நலன்புரி மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வை விஞ்சிய கோரிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. எனினும் அதில் மிகச் சிறந்ததொரு பண்பு உள்ளது. அதாவது தமிழ் மக்களின் தன்னாதிக்கம், வடக்கு கிழக்கு சமஷ்டி அலகின் நிலையான அபிவிருத்திக்காகச் செயற்படுத்தப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே கோரிக்கைகளையும், இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வதற்காக அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தல் வேண்டும். எனவே குறித்த யோசனைகள் தொடர்பில் பொதுவாக ஆராய வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
அ) சட்டத்தையும் சமாதானத்தினையும் பாதுகாத்தல் - தற்போது இலங்கையிலுள்ள சட்டங்களினுடாகச் சமஷ்டி ஆட்சிமுறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு குற்றவியல் சட்டத்தை விடவும் கம்பனிச் சட்டம், வர்த்தக மற்றும் தொழில் சட்ட முறைகள் நாட்டில் வளர்ச்சியடைந்துள்ளதனால் அவற்றை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கு மாகாணத்திற்குள் மிக விரைவில் முதலீட்டுக்கான வசதிகளைச் செய்து கொள்ள வேண்டியுள்ளது. நிரந்தரமான நீதிமன்றச் சட்டக் கட்டமைப்பொன்று இன்றி இதனைச் செய்ய முடியாது. அத்துடன் சமஷ்டி அலகிற்குப் பொருத்தமான சட்டங்கள் காலத்துடன் இணைந்து படிப்படியாகக் கட்டியெழுப்பப்படும்.

ஆ) யாப்பு வரைவிலக்கணம் - இடைக்கால நிர்வாகக் காலப்பகுதியில் யாப்பு ரீதியான சிக்கல்கள் எதுவாயினும் அது இறுதி சமஷ்டி யாப்பிற்கு ஏற்பத் தீர்த்துக்கொள்ள வேண்டும். 8
இ) வருமான வரி - பிரதான வருமான வழிகள் மத்திய அரசிற்கே உரித்தாகும். வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கின்ற உச்சநிலை அதிகாரமாவது, தேசிய மட்டத்திலான சட்டவாக்கமான தேசியப் பாராளுமன்றமாகும். அவ்வாறே அதற்குச் சமமாகச் சமஷ்டி அலகுகளினால் அவ்வலகுகள் தொடர்பான வருமானம் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பாகப் பல்வேறு சமஷ்டி ஆட்சிமுறைகள் தொடர்பான சர்வதேச அனுபவங்களைக் கவனத்திற் கொள்ளவேண்டும்.
ஈ) கடல் வளம் - கடற்பரப்பு, வான்பரப்பு, குடிவரவு, குடியகல்வு, சுங்கம், முப்படைகள் போன்றன தெளிவாகவே மத்திய அரசிற்கு உரித்தான தத்துவங்களில் உள்ளடங்குகின்றன. கடலிலுள்ள வளங்களில் எந்தளவு வரை சமஷ்டி ஆட்சி அலகிற்கு உரித்தானது என்பது தொடர்பில் இணக்கமொன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
உ) மொழி - சிங்களம், தமிழ் ஆகியன அரச கரும மொழிகளாக சமஷ்டி அலகுகள் இரண்டிலும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆங்கில மொழி இணைப்பு மொழியாக இருத்தல் வேண்டுமென்பதுடன், அதனைக் கற்றுக்கொள்ள ஊக்கமளித்தலுடன், சகலருக்கும் சர்வதேசக் கலந்துரையாடலுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல் வேண்டும்.
ஊ) மதம் - இலங்கை மதச்சார்பற்ற அரசொன்றாக யாப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவும், அமெரிக்காவும் யாப்புக்களைக் கட்டியெழுப்பும்போது இத்தூரநோக்குடைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், இது சகல இனங்களிடையேயும் சமாதானச் சூழலொன்றைப் பேணிவரக் காரணமாக அமையும். எனவே மதத்தையும் அரசையும் பிரித்து வைப்பது உகந்தது.
எ) மக்கள் சுதந்திரம் - சமஷ்டி அலகுகளிற்கிடையே எந்தவொரு தடைகளோ அல்லது கேள்விகளோ இன்றிப் பிரசைகளுக்கு சுதந்திரமாக நாடு முழுவதும் பயணிக்கக் கூடிய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறே நாட்டின் சகல மாகாணங்களிலும் காணிகளைக் கொள்வனவு செய்தல், தொழில் செய்தல், வியாபாரம் செய்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு பிரசைக்கும் உரிமை இருப்பது யாப்பின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.

Page 13
ஏ) சுதந்தரமான நிறுவனங்களை அமைத் துருவாக்குதலி - இடைக்காலச் சுயாட்சி அதிகார சபையானது சனநாயக ரீதியாகப் பிரதிநிதிகளை நியமனம் செய்து கொண்ட நிறுவனமொன்றல்ல. எனவே உடனடியாகக் கணக்காளரொருவரையோ அல்லது சட்டமா அதிபர் ஒருவரையோ அப்பிரதேசத்திற்கு நியமனம் செய்யப் பிரேரிப்பது அர்த்தமற்றது. எவ்வாறாயினும் சமஷ்டி ஆட்சிமுறையைச் சட்டமாக்கிய பின்னர் அவ்வலகுகளுக்கு இந்தியாவைப் போன்று அத்தியாவசிய அதிகாரிகளை நியமனம் செய்து கொள்வதற்கான சுதந்திரம் யாப்பின் மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும்.
ஐ) ஏனையன - காணி, கல்வி, போக்குவரத்து, நீர், சமூக சேவைகள் போன்ற நீண்டதொரு பட்டியலொன்றின் விடயங்கள் அரசியல் யாப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்று குறித்தும் கவனத்திற் கொண்டு உகந்தவாறு இணக்கப் பாட்டிற்கு வரவேண்டும்.
கொள்கை 3 - மனித மற்றும் சனநாயக உரிமைகள்
நீண்டகாலமாகக் காணப்பட்ட யுத்தப் பின்னணி காரணமாக இருதரப்பு மக்களினதும் மனித உரிமைகள் பல மீறப்பட்டு வந்துள்ளன. எனவே சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு சமஷ்டி அலகுகளிலும், முழு ஆட்சிக் கட்டமைப்பிலும் சனநாயகப் பண்புசார் நிலைத்திருத்தல், யாப்பு ரீதியாக உறுதி செய்யப்படல் வேண்டும். தேர்தலின் மூலம் நியமனம் பெறுதல் மற்றும் அரசாங்கத்தையும், ஆட்களையும் மாற்றுவதற்குப் பொது மக்களுக்குள்ள இறைமையானது நாடு முழுவதிலும் உறுதி செய்யப்படல் வேண்டும். இது அமுல்படுத்தப்படும்போது எழக்கூடிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சர்வதேச கண்காணிப்பிற்குக் குறுகிய காலத்திற்கேனும் உள்ளாதல் வேண்டும்.
கொள்கை 4 - சமூக, பொருளாதாரத் தத்துவங்கள்
இங்கு தேசிய ஒருமைப்பாட்டு உணர்வுடன் சகல தரப்பினரும் செயற்படுவது அவசியம். சமூக சமத்துவம், நியாயத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய தேசிய வழிகாட்டலொன்றை அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டியுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடொன்றிற்கு உகந்தது, சகல தரப்புக்களையும் உள்ளடக்கக்கூடியதும், திட்டமிட்டு வழிநடாத்தக்கூடியதுமான வறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கக்கூடிய சமூகப் பொருளாதாரச் சூழலொன்றாகும். பொருளாதார ரீதியில் பின்னடைவான
8

நாடுகளில் சக்திவாய்ந்த வர்த்தக சமூகமொன்று இன்மை காரணமாக சனநாயக உரிமைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் நியாயமான மற்றும் முற்போக்குப் பணிகளினுடாகத் தலையீடு செய்யும் தேவையுள்ளது. இந்த நிலையில் யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ளாமையும், சமாதான நடவடிக்கைகளிலிருந்து விலகிச் செல்லாமையும் அவசியம். இதனைச் சகல தரப்புக்களினதும் ஏகமனதான இணக்கப்பாடாக மாற்றிக்கொள்ளல் வேண்டும்.
கொள்கை 5 - சுதந்திர அரசொன்றாக இருப்பதை உறுதி செய்தல்
புதிய யாப்பினைக் கட்டியெழுப்பும்போது விசேடமாகக் கவனத்திற்கொள்ள வேண்டிய அடிப்படை அம்சமொன்று சர்வதேச சமூகமாகும். அதற்கமைய சர்வதேச மூலதனச் சக்திகள் இலங்கை போன்ற வறிய நாடுகளின் வளங்களை சுரண்டுகின்ற நிலைமை காணப்படுகின்றது. அதிலிருந்து நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் யாப்பில் உள்ளடக்கப்படல் வேண்டும். அவ்வாறே யுத்த ஆற்றலின் அடிப்படையில் சக்திவாய்ந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு ஆளாகாதிருப்பதும் கட்டாயத் தேவைப்பாடாகும். வலய ரீதியில் சமாதானமானதும், அமைதியுமான சூழல் வளரக்கூடியவாறு மத்தியஸ்தமான கொள்கையைப் பின்பற்றுதல் வேண்டும். திறந்த பொருளாதாரச் சூழலில் எழுகின்ற சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான சுதந்திரமான அரசொன்றின் நிலைத்திருத்தலை உறுதி செய்தல் வேண்டும். சகல அரசியல், சமூக, பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ள மக்களின் இறைமையையும், மக்களுக்கு முழுச் சுதந்திரமுள்ளமையும் புதிய யாப்பின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஏனைய சிக்கல்கள்
விசேட நிலப்பிரதேசங்கள் - இலங்கையில் பல விசேட பண்புகள் வாய்ந்த நிலப்பிரதேசங்கள் காணப்படுவதுடன், அவற்றின் தன்மை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். அவற்றில் பிரதானமானவை கொழும்பு நகரத்தின் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமும், திருகோணமலைத் துறைமுகமும், அதனைச் சூழவுள்ள பிரதேசமுமாகும். அவற்றின் பின்னணியானது உறுதியாகப் பொதுத் தேசிய வளமாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறே சகல சர்வதேசத் துறைமுகங்களும் பிரயாணிகள் மற்றும் பண்டங்களைக் கொண்டு செல்கின்ற விமான நிலையங்களும் மத்திய அரசினால் நிர்வகிக்கப்படுகின்ற வலயங்களாதல் வேண்டும். இந்நிலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் ஏற்புடையது. இது கூடுதலாகக் கலந்துரையாடப்படக்கூடிய இடமொன்றாகும். நாட்டின் சகல பிரதேசங்களிலு முள்ள இராணுவ முகாம்களும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பிரதேசங்களாகக் கருதப்பட வேண்டுமென்பதுடன், அவற்றின்

Page 14
எல்லைகள், அமைப்பு குறித்து மேலும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வருவது அவசியம்.
இராணுவத்தைக் கூட்டிணைத்தல்
இறுதியாக ஐக்கிய இறைமையைக் கொண்ட அரசொன்றின் தேவை இருப்பின் ஒரு இராணுவப்படை மட்டுமே இருத்தல் வேண்டும். சிவில் யுத்தமொன்றின் பின்னர் வெற்றிகரமாக இராணுவக் கூட்டிணைத்தலுக்கான முன்னுதாரணங்கள் உள்ளன. சிம்பாப்வே லென்கெஸ்டர் ஹவுஸ் ஒப்பந்தத்திற்கமைய மூன்று இராணுவப் படைகள் - கெரில்லா வகையான இரண்டு படையணிகளும், ரொடேசியாவின் நிரந்தரப் படையணியும் - கூட்டிணைந்தன. அவ்வாறு புலிகளின் இராணுவப் படையணியையும். கடற்படையணியையும் இலங்கையின் நிரந்தர இராணுவப் படையுடன் கூட்டிணைத்தல் வேண்டுமென்பதுடன், ஏனைய படைப் பிரிவுகள் பிராந்திய பொலிஸ் படையணியாக மாற்றியமைக்கப்படல் வேண்டும்.
இடைக்கால நிர்வாகத் திட்டங்கள்
இங்கு இடைக்கால நிர்வாகத் திட்டமானது இறுதித் தீர்வை நோக்கி இயற்கையாகப் பயணிக்கக்கூடிய வகையில் கட்டம் கட்டமாகத் திட்டமிடப்படல் வேண்டும். இறுதித் தீர்வின் வடிவம் எவ்வாறானது என்பதை ஆரம்பத்தில் தெரிவிக்க இயலாது. எனவே இடைக்கால நிர்வாகத் திட்டங்களை வகுக்கும்போது நிலையான தன்மை காணப்படுவது அவசியம். இங்கு இறுதித் திர்வொன்றின் மூலம் உத்தேசித்துள்ள சுதந்திர அரசொன்றின் தன்மை தொடர்பான எண்ணக்கருக்களின் மூலம் இடைக்கால ஆட்சித் திட்டமிடல் வழிநடாத்தப்பட வேண்டும். இறைமையுடைய அரசொன்றில் காணப்படுகின்ற சுயாட்சிச் சுதந்திர அரசுகள் தொடர்பாகக் கொள்ளக்கூடிய முன்மாதிரிகள் உலகில் வேண்டியமட்டும் உள்ளதுடன் அதற்கான உதாரணங்களாக மக்கள் சீனக் குடியரசின் கீழ் உள்ள ஹொங்கொங் மற்றும் மெக்காஒ தீவுகள் தொடர்பில் காணப்படுகின்ற "ஒரே நாட்டில் இரு வகையான ஆட்சி முறைகள்” மற்றும் மலேசியா, காணப்பட்டதும், தற்போது அமுலில் இல்லாததுமான கூட்டரசு முறைமை, அவ்வாறே பல்வேறு வடிவங்களிலுள்ள இதற்குச் சமமான சமஷ்டி ஆட்சி முறைகள் - இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, மலேசியா போன்ற நாடுகளைக் குறிப்பிட முடியும். இங்கு இந்தியா மற்றும் மலேசியாவின் முறைகளைச் சற்று ஆழமாக ஆராய்ந்து இந்த ஆசிய முறைகளில் காணப்படுகின்ற சிறந்த பண்புகளை ஒன்றிணைத்துச் சிறந்த திர்வொன்றை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும். எவ்வாறாயினும் தனித்துவமான முறையொன்றினை நாம் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள சவால், தமிழ் மக்களின் சன்நாயக, மனித உரிமைகளை உறுதி செய்வது எவ்வாறு என்பதும், இக்காலப்பகுதிக்குள்
10

போராளி அமைப்புக்கள் அதிகாரங்களைத் துஷபிரயோகம் செய்வதையும், தமக்கு உரியவாறு பயன்படுத்துவதையும் தடுத்துக் கொள்வதுமாகும்.
இறுதியாக
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பாக இருதரப்பினரும் இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளதாகத் தெரியவில்லை. எனினும் ஆரம்பமாகப் பேச்சுவார்த்தைக்காக முன்வைத்துள்ள யோசனைகளின் பொழிப்பாக இருதரப்பினரும், புனரமைப்பு, புனர்வாழ்வு - ஒருமைப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளல் என்ற அடிப்படை விடயங்களினுாடாக முன்னோக்கிச் சென்றால் சமாதான சூழலை ஏற்படுத்திக் கொள்வதும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் இலகுவானதாகும். அவ்வழியினுடாக நிரந்தரத் தீவொன்றை அடைந்து கொள்வதற்கு வழி திறந்துள்ளது. எனவே சமாதானத் தீர்வு ஒன்றை எதிர்பார்க்கின்ற இருதரப்பினரினதும் பொறுப்பு, அவ்வாறானதாக இருத்தல் வேண்டுமென்பதுடன், சமாதானத் தீர்வை எதிர்பார்க்கின்ற சகல சனநாயக அமைப்புக்களும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகின்றது.
11

Page 15