கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மதச் சார்பற்ற ஒரு அரசியலமைப்பு சமாதானத்துக்கு இன்றியமையாதது

Page 1
மதச் சார்பற்ற ஒ ερπετοσέ Ε
افقی
பெண்கள் கல்வி
 

ኣኧ
ஆய்
ଶY
நிறுவனம்

Page 2

மதச் சார்பற்ற ஒரு அரசியலமைப்பு சமாதானத்திற்கு இன்றியமையாதது
ஜி. அன்டன் ஃபெர்னாண்டோ

Page 3

உள்ளடக்கம்
பக்கம்
முன்னுரை V நன்றி உரை VII அறிமுகம் х
1 மதச்சார்பற்ற அரசியலமைப்பு சமாதானத்திற்கு இன்றியமையாதது l
2. மனித சுதந்திரத்திற்கான உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச
சட்டவாக்கங்கள் 8
3. வெளிநாட்டு அரசியலமைப்புகள்
4. இந்தியாவில் மதச்சார்பின்மை 16
5. இலங்கை அரசியலமைப்பு உருவாக்கத்திலுள்ள தவறுகள் 21
6. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன்
அவசியம் 25
7. கண்டிய உடன்படிக்கையும் அதன் பிறகும் 32
8. கலாநிதி J. G.L. குறெயின் மேலதிக அவதானிப்புகள் 36
9. இலங்கையில் பெரும்பான்மைவாதம் வலிவுறுத்தப்படல் 38
10 சிறுபான்மையினரைப் பாதுகாப்பது சமாதானத்திற்கு
இன்றியமையாதது 42
11. பின்னிணைப்பு 47
12. நூற்பட்டியல் 53

Page 4

முன்னுரை
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பிரஜைகளான ' இரு தரப்பினர்க்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் சமாதானத்தைப் பற்றி பேசி வருகிறோம். அண்மையில் பல உயர்தர மட்டத்தில் முரண்பாடுகளை எப்படித் தீர்ப்பது என்றும், முரண்பாடுகளை அகற்றுவது எப்படி என்றும், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவும் திறமையும் படைத்த அரசாங்க உத்தியோகத்தினரும், மற்றவர்களும் சமாதானத்தைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் இது பற்றிச் சாதகமாக எழுதியிருக்கும் அதே சமயம் பலர் அது பற்றி எதிர்ப்புக் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினராகிய நாம் இத்தகைய பேச்சுக்கள் ஒரு தவறான பாதையில் செல்வதாக உணருகின்றோம். பெரும்பாலும் தவறான அர்த்தப்பாடுகளும், தவறான விளக்கங்களும், தவறான சொற் பிரயோகங்களும், கருத்துப் பிரயோகங்களும், திட்டமிடப்பட்ட கருத்து மாற்றங்களும், உதாரணங்களும், அனுபவங்களும், மக்களைத் திசை திருப்புவதற்கும், மக்கள் மத்தியில் மனப்பிதியை ஏற்படுத்தும் நோக்கிலுமே எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இப் பிழையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்கள் தங்கள் தங்கள் சுய அடையாள உருவாக்கத்தில் ஐயம் ஏற்பட்டு குழம்பிப் போய் உள்ளனர். இதனால் எம் நாட்டு மக்களுக்கு இவை பற்றி தெளிவுபடுத்துவது ஒரு நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. இந் நோக்குடன் நாங்கள் சில விடயங்கள், கருத்துக்கள், முரண்பாடுகளைத் தெரிவு செய்து இவற்றைச் சரியான முறையில் எப்படி விளக்க வேண்டுமோ அதன்படி விளக்கம் கொடுக்க முனைகின்றோம். சில புதிய விளக்கங்களும் தேவைப்படுகின்றன. தீவிர கட்சி அரசியல் சார்பற்ற சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளோம். தொடர்ந்தும் மனித விழுமியங்களில் நம்பிக்கை உடையோரையும், ஜனநாயகப் பண்பாட்டில் அவாவுள்ளவர்களையும், இலங்கையின் சமய சார்பற்ற பன்முகத் தன்மையை பேணுபவர்களையும் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இம்மீள் கட்டமைப்பில் நாம் ஒரு சமூக நீதியைப் பேணும் ஜனநாயகப் பண்பாட்டை எதிர்பார்க்கின்றோம். இப்பண்பாடு சகல இன மக்களினதும் தனி மனித உரிமைகளையும், சமூக உரிமைகளையும், சுதந்திர மனப்பாங்கையும் பேணும் ஒரு நிலமையை ஏற்படுத்தும் என்பதும் நமது எதிர்பார்ப்பு.
இளையோர் முதியோர் என ஏழாயிரம் பேருக்கு இச்சிறு நூல் சென்றடையும்.
கனவுகள் நிஜமாவதுண்டு எதிர்பார்ப்புகள் பல செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 5

நன்றி உரை
இத் திட்டம் பலரினதும் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்றோரும், செயலூக்க வல்லுனரும் கலந்து கொண்டனர். முதலில் இச்சிறு நூல்களிற்குத் தலைப்புக்களைத் தெரிந்தெடுப்பதற்கு மேற் குறிப்பிட்டோரும், எமது நிறுவன அங்கத்தினரும் சேர்ந்து ஒரு சிறு குழுவை உருவாக்கினோம்.
திருமதி பேணடின் சில்வா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து திரு. ஏ. ஜே. கனகரட்ண ஆகியோருடன் கலந்துரையாடித் தலைப்புக்களைத் தெரிவு செய்து பத்து ஆய்வாளர்களையும் இனங்கண்டு கொண்டோம். ஆனால் எங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் ஐந்து ஆய்வாளர்கள் தான் எங்களுடன் நிலைத்து நின்றார்கள். திரு. ஜெகன் பெரேரா, கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ, கலாநிதி குமார் டேவிட், செல்வி டில்றுக்சி பொன்சேகா, திரு. அன்ரன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எமது நன்றிகள்.
மூலப்பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்தமையால் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. திருமதி சோமா ஜெயக்கொடி, திருமதி இந்திராணி கோவிந்தசாமி, திரு. ஏ. ஜே. கனகரட்ண, திரு. கே. நடேசன், திரு. வைரமுத்து சுந்தரேசன் ஆகியோர் மொழி பெயர்ப்பதற்கு உதவியாக இருந்தனர். இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவியவர்கள் யுனி ஆர்ட்ஸி' நிறுவனத்தினராவர். இவர்களின் பொறுமையும் கடமையுணர்வும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இத்திட்டம் வெற்றி பெறக்காரணமாக உதவிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன அங்கத்தவர்களையும், மரினி டி லிவேரா, மகேஸ் வைரமுத்து, அட்டைப்படம் வரைந்து உதவிய சாந்தினி குணவர்த்தன அவர்கட்கும், மேலும் எமது உதவியாளர் சந்திரசேனவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 6

அறிமுகம்
இலங்கையில் நிலவும் இனத்துவ உறவுகளை சமூக, வரலாற்று சூழலில் எளிய மொழி நடையில் அலசுவதே இச்சிறு நூலின் நோக்கம் ஆகும். இச்சிறு நூலின் தலைப்பிலேயே இது தொடங்குகின்றது. இந் நூல் கல்வி நோக்கங்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டுள்ளமையால் இயன்றளவு எளிய மொழி நடை பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆராயப்படும் விடயம் எளிமையானது அல்ல. எனவே உள்ளடக்கப்பட்ட விடயங்களை மீள் வாசித்தல் அல்லது ஆறுதலாக வாசித்தல் சிறந்த பலன்தரும் என்பது இங்கு அறிவுறுத்தப்படுகிறது.
நாம் யார் என்பது பற்றியும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஏன் தடைகள் உள்ளன என்பது பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இனத்துவ உறவுகள் தொடர்பான சமூக சூழமைவு அவசியமாகிறது. இனத்துவ உறவுகளைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுச் சூழமைவும் அவசியமாகும். ஏனெனில் இச்சூழமைவிலேதான் எமது பெரும்பாலான தப்பபிப்பிராயங்கள், தப்பெண்ணங்கள், அச்சுவார்பான படிமங்கள் என்பன உறைந்துள்ளன. ஆனால் மிக முக்கிய அம்சமாக இங்கு அமைவது வரலாற்றுச் சூழமைவில் இனத்துவம், தேசம், பல்கலாசாரம் ஆகிய எண்ணக்கருக்களைப் புரிந்துகொள்வதாகும்.
எந்தவொரு இனக்குழுவிற்கும் பக்கச்சார்பின்றி, நாட்டில் இன முரண்பாடு பற்றிய நடுநிலையானதும் புறநிலையானதுமான ஒரு விளக்கத்தை தருவதற்கு இச்சிறு நூல் முனைகிறது. எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் நிலவிவந்த நல்லுறவுகளைச் சீர்குலைத்த கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விமர்சிப்பதற்கு நூலாசிரியர் தயங்கவில்லை. சமாதான அமைதி நிகழ்வுத் தொடர் குறித்து நேரான மனப்பாங்குடன் நூல் முற்றுப்பெறுகிறது.
நூலினதும் அதன் உள் அடக்கங்களினதும் நோக்கமாக அமைவது இன ஐக்கியத்தை மீளமைத்து சமாதானத்தை நாட்டில் முன்னெடுப்பதாகும். சமாதானத்தை முன்னெடுப்பதற்கு சமாதானம் பற்றிய அதிக அளவிலான விளக்க நூல்கள் அவசியம் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டதொன்று. சமாதானம் பற்றிய வாசிப்பு ஏடுகளின் பற்றாக்குறை சமாதான இயக்கத்தின் ஒரு பிரதான குறைபாடாக இந்நாட்டில் அமைகிறது. ஆகவே இந்நூல் இவ்விடைவெளியை சிற்றளவில் நிவர்த்தி செய்ய முனைகிறது.
சாதாரண மக்கள் வாசிப்பதற்கு அல்லது பயிற்சிக் காலங்களில் கல்வி ஏடாக அவர்களால் பயன்படுத்தப்படுவதற்காக இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நோக்கங்களுக்காக நூலானது சிங்களத்திலும் தமிழிலும் மேலும் விளக்கத்துடன் மொழிப்பெயர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது.
ஆயினும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த முதற்பதிப்பு இனத்துவ உறவுகள், தொடர்பாடல் ஆகிய விடயங்களில் ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகப் பயன்படுத்த முயற்சிக்கும் படித்த இளைஞர்களுக்கு பிரயோசனம் மிக்கதாக விளங்கும்.

Page 7

அத்தியாயம் 1
மதச்சார்பற்ற அரசியலமைப்பு சமாதானத்திற்கு
இன்றியமையாதது
மதச்சார்பின்மை என்பதன் பொருள்
மதச்சார்பற்ற அரசு என்பது என்ன?
மதசார்பற்ற அரசென்பது மதத்திற்கு மாறானதென்றோ நாத்திக அரசென்றோ பொருள்படாது. அது கருதுவதெல்லாம் மதவிஷயங்கள் யாவற்றிலும் அரசு நடுநிலையானது என்பதே. மத விஷயங்களில் தலையிடாமை என்பது மத உரிமைகள், தத்துவங்கள் சம்பந்தப்பட்ட பிணக்குகளைப் பொறுத்தளவில் நியாயப்படுத்த முனையாமை என்பதை உள்ளடக்கும்.
மதச்சார்பற்ற அரசொன்றின் அரசியலமைப்பின் சரத்துக்கள் மதச்சார்பற்ற அரசொன்று பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கும்:
1.
அரசு, மத விஷயங்களில் தலையிடாததுடன், கிறிஸ்தவ தேவாலயங்கள், புத்த கோவில்கள், மசூதிகள், இந்துக் கோவில்கள் போன்றவற்றை அமைக்கவோ அவற்றை நிறுவுவதை ஊக்குவிக்கவோ மாட்டாது.
எந்த ஒரு மதத்தை வளர்ப்பதற்கும் அரசு நிதியுதவி வழங்காது.
வெவ்வேறு மதப்பிரிவுகளுக்கென அமைச்சுக்களிரா.
ஒவ்வொரு மதமும் தன் அலவர்களை நிர்வகிக்கும்.
பொது இடங்கள் மத நோக்கங்களுக்காகப் பயன் படுத்தப்பட
DITLIT.
மதச்சார்பற்ற அரசுகள் சமஷ்டி அல்லது சமஷ்டியையொத்த அமைப்புடையன. சமஷ்டி என்பது சிறுபான்மையினரைப் பாதுக்ாக்கும் ஒரு ஆமைப்பாகும். சமஷ்டி என்பது பிரிவினையன்று; பிரிவினையை அது தடுக்கும். சமஷ்டி பல்லின, பன்மொழி, பல்மத பல்பண்பாட்டு சமூகங்களுக்கும் பாதுகாப்பளிக்கும். அவர்களின் உரிமைகள் மதச்

Page 8
சார்பற்ற அரசியலமைப்பொன்றின் கழ உறுதிப்படுத்தப்பட்டு, நாட்டின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேண உதவும்.
7. ஒருவர் தனது பண்பாட்டைப் பேணும் உரிமையும், தான் தேர்ந்தெடுக்கும் மொழியில் கல்வி பயிலும் உரிமையும், மதச் சார்பின்மை என்ற் கருதுகோளின் பிரிக்கவியலாத பகுதியாகும். (இந்தியாவின் மதச் சார்பின்மை பற்றி அத்தியாயம் 5 ல் பார்க்க.)
8. இன மற்றும் மத அடிப்படைகளில் அரசியற் கட்சிகளை உருவாக்குதல், சமத்துவத்திற்கும் பாரபட்சம் காட்டாமைக்கு எதிரானதுமான உரிமையினை மீறுவதாகும். மதச் சார்பற்ற ஜனநாயகமொன்றில் சிறுபான்மையினரின் உரிமைகள் அரசியலமைப்பினால் உத்தரவாதப் படுத்தப்படுவதே இலங்கைக்கு அவசியமான ஒன்றாகும். (பல் பண்பாட்டுத்தன்மை மற்றும் ஒருமைப்பாடு பற்றி அத்தியாயம் 10 ல் பார்க்க)
இன, மத, மொழி, பண்பாட்டு ரீதியில் நாடு பிளவுபட்டிருப்பின் நாங்கள் ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்குதல் இயலாது.
மதச்சார்பின்மை மற்றும் மதச்சுதந்திரம், என்ற கருதுகோள் மற்றும் திருச்சபைக்கும் அரசுக்கும் உள்ள உறவு பற்றி எபர்ஸன் எதிர் கல்விச்சபை' வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்த தீப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றிய சுருக்கமான உண்மைகள் வருமாறு:
ஆர்தர் அன்டர்ஸன் நியூஜெர்ஸியின் ஒரு குடிமகனும் வரியிறுப்பாளருமாவர். மதப் பயிற்சியளிக்கப்படும் கத்தோலிக்கப் பாடசாலையொன்றிற்கு மாணவர்கள் போக்குவரத்துச் செய்வதற்காகத் தன் வரிப்பணம் பயன்படுத்தப்படுவதாகவும் ஆகவே அரசியலமைப்பிற்கு மாறாக அது மதத்திற்கு ஆதரவளிப்பதாகிறது என்றும் அவர் ஆட்சேபனை தெரிவித்தார். ட்றென்ரன் நகரக் கல்விச் சபை, அப்படியான கொடுப்பனவிற்கு அதிகாரமளிக்கும் அரசின் ஆணையொன்றைக் குறிப்பிட்டுத் தனது நடவடிக்கை சரியென்று வாதிட்டது. நீதிபதி பிளாக் தமது தீர்ப்பிற் குறிப்பிடுவதாவது: முதலாவது திருத்தத்தின் மதத்தை நிறுவுதல்' என்றும் சரத்து குறைந்தபட்சம் பின் வருவதனையாவது கருதும்:
(1) 330 U.S. II (1947)

'மத்திய அரசோ அல்லது சமஷ்டி நிர்வாகமோ கூட ஒரு வழிபாட்டிடத்தை அமைக்கவியலாது. இவ்விரண்டில் எதுவும் ஒரு நபரை அவரது விருப்பிற்கு மாறாக ஒரு வழிபாட்டிடத்திற்குச் செல்லுமாறோ அன்றி செல்லாதிருக்குமாறோ செல்வாக்குச் செலுத்தவோ, வற்புறுத்தவோ இயலாது. அல்லது எந்த ஒரு மதத்தின் மீதாவது நம்பிக்கையையோ, நம்பிக்கையின்மையையோ கைக்கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. வழிபாடொன்றின் மீதான நம்பிக்கையை அல்லது நம்பிக்கையின்மையைக் கொண்டிருப்பதற்காக எந்த ஒருவரும் தண்டிக்கப்படவியலாது. 4
எந்த மதச் செயற்பாடுகளுக்காகவோ நிறுவனங்களுக்காகவோ, அவை எவ்வாறு இழைக்கப்பட்டாலும் அல்லது அவை மதத்தைக் கற்பிக்க அல்லது பின் பற்றச்செய்ய என்ன வழியைக் கைக்கொண்டாலும் அவற்றிக்காக எந்த வரியும் கூடுதலாகவோ குறைவாகவோ எந்த அளவிலும் அறவிடப்படலாகாது. மத்திய அரசோ அன்றி சமஷ்டி நிர்வாகமோ, வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ எந்த மத நிறுவனத்தினதும் குழுவினதும் விவகாரங்களில் பங்குபற்றவோ அல்லது எந்த மத நிறுவனமோ குழுவோ மத்திய அரசினது அல்லது சமஷ்டி நிர்வாகத்தினது விவகாரங்களில் பங்குபற்றவோ இயலாது.
ஜெஃபர்ஸனின் வார்த்தைகளிற் கூறுவதாயின், சட்டரீதியாக மதத்தை
நிறுவுவதற்கெதிரான சரத்தானது, 'திருச்சபைக்கும் அரசுக்குமிடையில் ஒரு பிரிசுவரைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது.
அமெரிக்க அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தின் மதத்தை நிறுவுவற்கெதிரான தடையை, 9 கூலி பின்வருமாறு அர்த்தப்படுத்துகிறார்:
மதத்தை நிறுவுதல் என்பது ஒரு அரசு திருச்சபையை உருவாக்குதல் அல்லது அங்கீகரித்தல் அல்லது குறைந்தபட்சம் ஏனைய பிரிவுகட்கு மறுதலிக்கப்படும் உதவிகள் மற்றும் அநுகூலங்களை ஒரு திருச்சபைக்கு அளித்தல் எனப்பொருள்படும். ? மதத்தை அங்கீகரிப்பதில் இருந்து அரசு தடைசெய்யப்பட வேண்டுமென்றோ அல்லது சிலவேளைகளில் அரசு செயற்பாட்டின்போது தெய்வீக அருளென்பதை அங்கீகரித்து மதவழிபாடு அநுமதிக்கப்படாது என்றோ அரசியலமைப்பு ஒரு போதுங் கருதவில்லை. அப்படியான வேளைகளில் வெவ்வேறு மதநம்பிக்கைகள், நிறுவனங்கள் பிரிவுகளிடையே தனிப்பட்ட பாகுபாடுகள் காட்டப்படாத விதமாக அது செய்யப்படல் வேண்டும்.
(2) அரசியலமைப்புச் சட்டம் 4 ஆம் பதிப்பு - கூலி Luis ; 269 (3) இந்திய அரசியலமைப்புச் சட்டம்,

Page 9
'ஒவ்வொரு மனிதனும் தன்தன் வழியில் சுவர்க்கத்துக்குப் போக விடப்படவேண்டும். ஆண்டவனைத் தொழுதல் அவரவர் மனச்சான்றுக்குரியது என்ற மகா அலெக்சாந்தரின் கூற்றினை இங்கு குறிப்பிடுதல் பொருத்தம். மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளும் நாடுகளில், மதப்பிரிவுகளுக்கென விசேட அமைச்சுக்களுக்கு இடமில்லை. ஒவ்வொரு மதநிறுவனமும் அரசின் தலையீடின்றித் தன் விவகாரங்களைத் தானே நிர்வகித்துக் கொள்ளும். ஒரு மில்லியன் மக்கள் தொகையையும் அதில் ஏறத்தாழ 80 சத வீத இந்துக்களையும் கொண்ட இந்தியாவிற்கூட அரசியலமைப்பின் மதச்சார்பின்மையானது, யாப்பின் பல்வேறு சரத்துக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய அரசியற் சட்ட அறிஞரான H.M. சீவாய் கூறினார்: "இந்தியா மதச் சார்பற்ற நாடு. ஆனால் மதத்திற்கெதிரான நாடு அன்று. ஏனெனில் அது மனச்சான்று மற்றும் மதம் இவற்றின் சுதந்திரத்திற்கு உத்தரவாதமளிக்கிறது. எனினும் மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவிலுள்ளோர் பின்பற்றும் மதங்களையிட்டு அரசு அக்கறைப்படவில்லை என்பதுடன் அது எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் பின்பற்றவோ ஆதரிக்கவோ இயலாது என்ற உண்மையையும் விளக்குவதாகும். ? இவ்வாறாக பெரும்பான்மையினரின் மதமாகிய இந்து மதத்திற்கு இந்திய அரசியலமைப்பு விசேட இடம் அளிக்கவில்லை.
பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் கூட இந்துக் குருமார் ஆட்சியை அறிமுகப்படுத்துவதற்கான கோரிக்கையை 1998 மார்ச் 7ந் திகதி இடம்பெற்ற தலைமைத்துவக் கூட்டமொன்றில் நிராகரித்து, மதச்சார்பின்மை எமது இரத்தத்தில் ஊறியது எனக் குறிப்பிட்டார். இவ்வாறாக இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது.
உரிமையின் எல்லையும் இயல்பும் மதசார்பின்மை மதசுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துகிறது.
மதச்சுதந்திரத்திற்கான உரிமை அரசியலமைப்பு விதிகளால் செயற்படுத்தப்படுகிறது. அதன் எல்லையும் இயல்பும் வெவ்வேறு யாப்புக்களில் மாறுபடுகின்றன. அதேபோல, அரசியலமைப்பின் மதசார்பற்ற தன்மையானது உரிய சட்ட விதிகளாற் பாதுகாக்கப்படுகிறது. வெவ்வேறு அரசியலமைப்புக்களிற்
(4) இந்திய அரசியலமைப்புச் சட்டம்8ஆம் பதிப்பு: பக்கங்கள் 897, 1626 கலாநிதி J.A
யால் மேற்கோள் காட்டப்பட்டவாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டம். 8ஆம் பதிப்பு: பக்கங்கள் 897, 1626 L. குறெயால் மேற்கோள் காட்டப்பட்டவாறு இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் ப. 623, n.48

காணப்படும் மதசுதந்திரத்திற்கான உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட விதிகளை ஒருவர் கவனத்திலெடுக்கையில், அமைதியின் நன்மைக்காக மதசார்பற்ற அரசொன்று அவசியம் என்ற முடிவிற்கு வருவார். பெரும்பான்மையினரின் மதத்தைச் சேராத மக்கள் தம் சொந்த நாட்டிலேயே தாம் இரண்டாந்தரப் பிரசைகள் என்று உணரக் கூடாது. சில இஸ்லாமிய அரசுகளில் (மத அரசுகள்) மட்டுந்தான், இஸ்லாம் அரசமதமாக ஆக்கப்பட்டுள்ளது. 100 % சனத்தொகையும் முஸ்லிம்களாக இருந்த பாகிஸ்தானை உருவாக்கியதால் வெற்றியடைந்த பின்னர், ஜின்னா அதனை ஒரு மதசார்பற்ற நாடாக ஆக்க விரும்பினாரெனினும் அதில் தோல்வியுற்றிர்.
ஆகவே, எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற ஒரு அரசு அவசியம். அரசியலமைப்புத் தன்மைக்கும் மதசார்பின்மைக்குமேற்ற கொள்கைகளை அங்கீகரித்து உள்ளனரென்பதால் இவ்வாறான அரசியலமைப்புக்கள் நீண்டு நிலைத்து இருக்கின்றன. அதாவது, அரசியலமைப்பே உச்சமானது. அத்துடன் அதனுள் "இடக்கப்பட்டிருக்கும் சட்ட விதிகள் சிலவேளைகளில் 2 இல் 3 பெரும்பான்மையுடன் கூட மாற்ற இயலாதவை. அநேகமான நவீன அரசியலமைப்புக்கள் மதசாபற்றவையே. -
மதச்சுதந்திரத்திற்கான வெளிப்பாடு உரிமை என்பது, மதச்சார்பின்மை என்று பொருளாகிவிடாது. சில அரசியலமைப்புக்களில் மதச்சுதந்திரத்திற்கான உத்தரவாதமளிக்கப் பட்டிருப்பினும், நாடு, அரசு என்பவற்றிற்கிடையில் தெளிவான வேறுபாடு கிடையாது. சில அரசியலமைப்புக்கள் எல்லா மதங்களையும் குறிப்பிடுகின்றன. ஆனால் அவற்றில் ஏதோ ஒன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதுடன் எல்லா மதங்களுமே பாதுகாக்கவும் பேணவும் படுகின்றன. எப்படியிருப்பினும் இலங்கையில் பெளத்தத்திற்கு முதன்மை கொடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறான அரசியலமைப்புக்கள் மதசார்பற்றவையன்று.
மதச்சார்பற்ற நாடொன்றில், மத விவகாரங்களைப் பொறுத்தளவில் அரசு நடுநிலையாயிருக்கும். ஏதோ ஒரு மதத் தற்கு மட்டும் முதன்மையளிக்கப்படமாட்டாது. எல்லா மதப் பிரிவுகளுமே ஒரே மாதிரியாக நடத்தப்படும். இது மிக அவசியம். ஏனெனில் அநேகமான நாடுகளின் சமூகங்கள் பல்லின, பன்மொழி, பன்மத சமூகங்களாகவேயுள்ளன. இவ்வாறுதான் அமெரிக்கா, கனடா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளில் உள்ளது.

Page 10
இந்த நாடுகளின் அரசியலமைப்புச்சட்டங்கள் மத சுதந்திரத்திற்கான உரிமைக்கும் மத நம்பிக்கைகளின் மீதான சகலவிதமான சகியாமைகளை ஒழித்தல் பற்றிய ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கும் அமைவானவை.
பன்மைத்துவம் பற்றிய கருத்துருவாக்கத்திற்குச் செயலுருக் கொடுக்கும் விதமாக, பன்மொழி வழக்குள்ள நாடுகள் பலவும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை நிர்வாக மொழியாக அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த உரிமைகளை அங்கீகரிக்க வேண்டிய ஒரு தேவை நவீன சமூகத்திற்குள்ளது. அவ்வுரிமைகளை அங்கீகரிக்காது, அரசு பெரும்பான்மையினரின் மொழியையும் மதத்தையும் நடைமுறைப்படுத்த முயலுமெனில், இன மற்றும் மத சிறுபான்மையினரிடை முரண்கள் உண்டாகும். இது இலங்கையில் நடந்தது. எனவே சமாதானம் நிலவ வேண்டுமாயின் மதசார்பற்ற அரசொன்று அவசியம். மதசார்பற்ற அரசியலமைப்பானது சமத்துவத்திற்கான உரிமையையும் பாகுபாடு காட்டாமையையும் உறுதி செய்கிறது.
ஒரு மதம், மதச்சார்பற்ற பல நடவடிக்கைகளைக் கொண்டிருக்கக் கூடும். அது மதச்சார்பற்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த மதச் சார் பற்ற நடவடிக் கைகளும் அம்சங்களும் ஒரு மதத்தை அரசியலமைப்பின் விளக்கத்திற்கேற்றவாறு ஆக்கமாட்டா.
"பொது ஒழுங்கு வெளிப்பாடு:
மதக் கழகங்களை உருவாக்கவும் அவற்றினுTடாகத் தம் மதக் கொள்கைகளைப் பரப்பவும் எவருக்கும் சுதந்திரமுண்டு. இதற்காக ஒரு பருவ வெளியீடு கூட வெளியிடப்படலாமெனினும், நாட்டிலுள்ள ஏனையோரின் உரிமைகள் சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் குறுக்கிடாதவாறு அல்லது பொது ஒழுங்கு, ஒழுக்கம் அல்லது நலன் ஆகியவற்றையும் பாதிக்காதவாறு எல்லையொன்று வகுக்கப்படவேண்டும். ?
அவ்வாறு ஒரு எல்லை மீறல் ஏற்பட்டவுடன், அரசு தலையிட முன்வரும். 'மதச் சுதந்திரமென்பது, எழுந்தமானமான கட்டுப்பாடுகளில்லாமை
(5) டெய்லி நியூஸ், 9 மார்ச் 1998
(6) அடிலெய்ட் சோ. எதிர் பொதுநலவாயம் 67 CLR 16

என்பதைத்தான் கருதுமேயொழிய சமூக நலன் சார்ந்த நியாயமான விதிகள், தடைகள், இவற்றிலிருந்து விலக்களக்கபடுதல் என்பதையன்று. '
இந்தியா மதச்சார்பற்ற ஒரு நாடாக இருப்பினும், ஒவ்வொரு மதத்திற்கும் பிரசார உரிமை இருப்பினும், அவ்வாறான பிரசாரம் குடிசனம் செறிந்த
இடமொன்றில், பொது நலனின் ஒழுக்கம், நலன், ஒழுங்குகளுக்கும் பாதகமாக
அமையுமெனில் அது சரத்து 25 மூலம் தடை செய்யப்பட்டுள்ளது."
(7) சிகாகோ B & GR கோ எதிர் மக்குயர் 219 Us 549 (8) Air 1956 Cal.

Page 11
அத்தியாயம் 2
மனித சுதந்திரத்திற்கான உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச சட்டவாக்கங்கள்:
மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம்
'ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனச்சான்று மற்றும் மதம் பற்றிய சுதந்திரத்திற்கான உரிமையுண்டு; இந்த உரிமைகள் தன் மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான உரிமை மற்றும் தனியாகவோ ஏனையோருடன் இணைந்தோ, பகிரங்கமாகவோ அந்தரங்கமாகவோ தன் மதத்தின் அல்லது நம்பிக்கையின் போதனை, கடைப்பிடிப்பு, பிரார்த்தனை, பின்பற்றலுக்கான உரிமை ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
சமூக, அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை
1.
ஒவ்வொருவருக்கும் சிந்தனை, மனச்சான்று, மற்றும் மதம்பற்றிய சுதந்திரத்திற்கான உரிமையுண்டு. இந்த உரிமையானது தான் தேர்ந்த
மதத்தை அல்லது நம்பிக்கையைக் கொண்டிருக்கும் அல்லது
ஏற்றுக்கொள்ளும் உரிமை, அத்துடன் தனியாகவோ அல்லது ஏனையோருடன் இணைந்து சமூகமாகவோ, பகிரங்கமாகவோ அன்றி அந்தரங்கமாகவோ தன் மதத்தின் அல்லது நம்பிக்கையின் பிரார்த்தனை, கடைப்பிடிப்பு, பின்பற்றல் மற்றும் போதனை என்பதற்கான உரிமை ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
தான் தேர்ந்த மதத்தை அல்லது நம்பிக்கையை வைத்திருக்கும் அல்லது ஏற்றுக் கொள்ளும் உரிமையைப் பாதிக்கும் விதமாக எவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் படலாகாது.
ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் சுதந்திரமானது, சட்டத்தால் விபரிக்கப்பட்டுள்ளவையும் , பொதுப்பாதுகாப்பு, ஒழுங்கு, நலம், ஒழுக்கம் அல்லது ஏனையோரின் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அவசியமானவையுமான கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே உட்படும்.
இந்த உடன்படிக்கையில் பங்குபெறும் அரசானது, தம் பிள்ளைகளின் மத மற்றும் ஒழுக்கக் கல்வியை தம் சொந்தப் பற்றுக்கோளுக்கு

ஏற்றவாறு நிச்சயிக்கும் பெற்றோரதும், ஏற்றவிடத்து சட்டபூர்வமான பாதுகாவலரினதும் சுதந்திரத்தை மதிக்கும் பொறுப்பினை ஏற்கிறது.
5. மதம் மற்றும் நம்பிக்கையினடியாக எழும் எல்லாவித சகிப்பின்மை மற்றும் பாரபட்சம் இவற்றை இல்லாதொழிக்கும் ஐ. நா. பிரகடனம். மதம் மற்றும் நம்பிக்கையினடியாக எழும் எல்லாவித சகிப்பின்மை மற்றும் பாரபட்சம் இவற்றை இல்லாதொழிக்கும் ஐ.நா.பிரகடகமானது, ஆணைக்குழு மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஏறத்தாழ 20 ஆண்டு முயற்சியின் பின் பொதுச் சபையினால் 1981 நவம்பர் 25 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
'ஒவ்வொருவருக்கும் தான் தேர்ந்த ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையை வைத்திருக்கும் உரிமையும் அத்துடன் தனியாகவோ அல்லது ஏனையோருடன் இணைந்து சமூகமாகவோ பகிரங்கமாகவோ அன்றி அந்தரங்கமாகவோ தன் மதத்தின் அல்லது நம்பிக்கையின் பிரார்த்தனை, கடைப்பிடிப்பு, பின்பற்றல் மற்றும் போதனை என்பவற்றுக்கான உரிமை ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
தான்தேர்ந்த மதத்தை அல்லது நம்பிக்கையை வைத்திருக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும் உரிமையைப் பாதிக்கும் விதமாக எவரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுதலாகாது; தான் கொண்டிருக்கும் மதம் அல்லது நம்பிக்கை காரணமாக எவரும் எந்த அரசினாலோ, நிறுவனத்தாலோ, குழுக்களாலோ, தனிப்பட்ட ஒருவராலோ பாகுபாட்டிற்கு உட்படுத்தப் படவியலாது. (முழுமையான பிரகடனத்திற்கு பின்னிணைப்பைப் பார்க்க.)
இந்தப் பிரகடனமானது மத அல்லது நம்பிக்கை பற்றிய சுதந்திரம் தொடர்பாகவும் திட்டவட்டமான அம்சங்களை முன்வைக்கின்றது. 1984 இல் உபகுழுவானது, மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றின் மீதான சகிப்புத்தன்மையின்மை மற்றும் பாரபட்சம் ஆகிய பிரச்சினைகளின் சமகாலப் பரிமாணங்கள் பற்றிய ஆய்வொன்றினுக்கு ஏற்பாடு செய்தது. 1984 இல், குழுவானது, பிரகடனத்திற்கமைவாக இல்லாத அரசு நடவடிக்கை மற்றும் சம்பவங்கள் பற்றிய அறிக்கையின் மீதான தன் தீவிர அக்கறையை வெளிப்படுத்துவதற்காக, அவ்வாறான அறிக்கைகளை ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்பு அறிக்கையாளரை நியமித்தது. அவர் தம் அறிக்கைகளை 1986 லும் 1987 லும் சமர்ப்பித்தார். மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உபகுழுவும் இப்பிரச்சினையைத் தொடர்ந்தும் கவனமாக ஆராய்ந்து வருகின்றன. (பின்னிணைப்பைப் பார்க்கவும்.),

Page 12
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பிற்கான ஐரோப்பிய மாநாட்டின் 12 வது சரத்து, மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க மாநாட்டின் 12 வது சரத்து மற்றும் மனித உரிமை பற்றிய ஆபிரிக்க சாசனத்தின் 8 ஆம் சரத்து ஆகியவை மிகத்திடமான முறையில் மத சுதந்திரத்திற்கான, உரிமை பற்றிப் பேசுகின்றன என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
ஒருவர் தம் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் தொடர்பாக சில எல்லைப்பாடுகளிருப்பதை சர்வதேச மனித உரிமை நியமங்கள் அநுமதிக்கும் அதே வேளையில், தன் தேர்விற்குரிய ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் உரிமை உட்பட்ட, சிந்தனை, மனச்சான்று மற்றும் மதத்திற்கான சுதந்திரத்தின் முற்று முழுதான பண்பினை அங்கீகரித்துள்ளன.
பிரபல அரசியல் சட்ட அறிஞரும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் குழுவின் முன்னாற் உறுப்பினருமான கலாநிதி J.A.L குறே ?, மனித உரிமைகளுக்கான சர்வதேச அங்கீகாரம்' பற்றிய தன் தலைமை உரையில், மனித உரிமைகளை உலக மயமாக்கல் மற்றும் சர்வதேச மயமாக்கல் என்பது தற்கால உலகின் சட்ட ஒழுங்கில் முனைப்புற்றுள்ள ஒரு இயல்பாகும் எனக் குறிப்பிட்டார்.
ஐ. நா. சாசனத்தினால் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பற்றிய புதிய சர்வதேச சட்டத்தின் கீழ், ஒரு அரசு தன் குடிமக்களை நடத்தும் விதம் முற்று முழுதாக ஒரு "உள்நாட்டு நீதி நிர்வாகம்' என இனியும் வாதிட இயலாது. '
(9) சர்வதேச சட்டம் பற்றிய இலங்கை இதழ் தொகுதி 6. 1994. (10)
10

அத்தியாயம் 3
வெளிநாட்டு அரசியலமைப்புகள்
மதச்சுதந்திரத்திற்கான உரிமை பற்றிய பிற நீதி நிர்வாக எல்லைகளின் சரத்துக்கள் பற்றிய ஆய்வு, ஏனைய நாடுகள் எவ்வாறு இவ்வுரிமையைத் தத்தம் அரசியல் யாப்புக்களில் உள்ளடக்கியுள்ளன என்பதைத் தெளிவுற அறிந்து கொள்வதற்கு அவசியம்.
சமத்துவம் மற்றும் பாரபட்சமின்மை பற்றிய நியமமானது இப்போது மனித உரிமைகள் பற்றிய சர்வதேச வழமைச் சட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு நியமமாகும். ஏனைய நீதிநிர்வாக எல்லைகளிலுள்ள இவ்வுரிமை பற்றிய பொருத்தமான சரத்துக்கள், பின்னிணைப்பு 1 இல் தரப்பட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்க நாடுகள்:
அரசியல் யாப்பிற்கான முதலாவது திருத்தம் (1791) கூறுவதாவது:
மதநிறுவனமொன்றின் உருவாக்கல் அல்லது அதிலிருந்து சுதந்திரமான செயற்பாடுகளைத் தடைசெய்தல் பற்றி எந்த ஒரு சட்டத்தையும் கொங்கிரஸ் இயற்றமுடியாது.
மியான்மார்
புதிய அரசியல் யாப்பொன்றிற்காக 1996 மார்ச்சில் கூடிய தேசிய மாநாட்டின் அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:
1. பொது ஒழுங்கு, ஒழுக்கம், நலம் மற்றும் அரசியல் சட்டத்திற்கமைவாக,
மனச்சான்று சுதந்திரம், மதத்தைப் பின்பற்றவும் அநுட்டிக்கவுமான
உரிமை, இவற்றிற்கு ஒவ்வொரு பிரஜையும் சம அளவில் உரித்துடையவராவர்.
2. மேற்சொன்ன உரிமையானது, மதத்தைப் பின்பற்றலுடன் தொடர்புடைய
எவ்வித பொருளியல், நீதி, அரசியல் அல்லது மதச்சார்பற்ற செயற்பாடுகளையும் உள்ளடக்காது.
11

Page 13
இவ்வாறு உத்தரவாதப்படுத்தப்பட்ட சுதந்திரமானது, சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் போன்றவற்றிற்கான சட்டங்களை நடைமுறைப் படுத்துவதினின்றும் அரசினைத் தடுக்காது.
நாட்டின் மிகப்பெரும்பான்மையினராற் பின்பற்றப்படும் மதம் என்ற வகையில் பெளத்தத்தின் சிறப்பான இடத்தினை அரசு அங்கீகரிக்கிறது.
இஸ்லாம், கிறிஸ்தவம், இந்துமதம் மற்றும் ஆன்மவாதம் ஆகியவற்றையும் அரசியல் யாப்பு நடைமுறைக்கு வருந்திகதியில் சமஷ்டியில் வழக்கில் உள்ள மதங்களாக அரசு அங்கீகரிக்கிறது.
தான் அங்கீகரிக்கும் மதங்களுக்கு உதவவும் அவற்றைப் பாதுகாக்கவும் அரசு தன்னாலியன்றளவு உதவும்.
அரசியற் காரணங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வெறுப்பு, பகைமை, தகராறு போன்றவற்றை இன, மத, சமூகங்களிடை அல்லது பிரிவுகளிடை தூண்டுவதனை நோக்கமாக அல்லது சாத்தியமாகக் கொண்ட எந்த நடவடிக்கையும் அரசியல் யாப்புக்கு முரணானதும் சட்டத்தால் தண்டிக்கப்படக்கூடியதுமாகும்.
பாகிஸ்தான்:
சட்டம், பொது ஒழுங்கு, ஒழுக்கம், இவற்றிற்கமைவாக:
12
1.
ஒவ்வொரு பிரசையும் தன் மதத்தைப்பின்பற்றவும், அநுஷ்டிக்கவும், பரப்பவும் உரிமையுடையவராவர். அத்துடன்,
ஒவ்வொரு மதப்பிரிவும், அதன் ஒவ்வொரு குழுவும் தம் நிறுவனங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் நிர்வகிக்கவும் உரிமை உடையது. தன்னுடைய மதமல்லாத இன்னொரு மதத்தின் பரப்பலுக்கோ பராமரிப்பிற்கோ பயன்படுத்தக் கூடிய எவ்வித விசேட வரியையும் செலுத்துமாறு எந்தப் பிரசையும் கட்டாயப்படுத்தப்பட (ԼԶlՁեւ յո5l.
எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் பயிலும் எவரும், மத விளக்கங்களைப் பெறுமாறோ, மதச் சடங்குகளில் பங்குபற்றுமாறு அல்லது மத வழிபாட்டில் கலந்து

3. சட்டத்திற்கமைவாக:
கொள்ளுமாறு - அந்த விளக்கங்களோ, சடங்குகளோ, வழிபாடோ அவருடைய சொந்தமதந் தவிர்ந்த இன்னொரு மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் பட்சத்தில், கோரப்படலாகாது. எந்த மத நிறுவனத்தைப் பொறுத்தளவிலும், வரிவிதிப்புத் தொடர்பான விலக்குகள், சலுகைகள் விஷயங்களில் எந்த ஒரு சமூகத்திற்குமெதிராகப பாரபட்சம் இருத்தல் கூடாது.
ges
எந்த ஒரு மதப்பிரிவோ, குழுவோ, முற்று முழுதாகத் தன்னால் பராமரிக்கப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் அந்த மதப்பிரிவு, அல்லது குழு, சமூகஞ்சார்ந்த மாணவர்கட்கு சமயவிளக்கங்கள் அளிப்பதிலிருந்து தடுக்கப்
படலாகாது.
ா பொது இறைவரியிலிருந்து உதவிபெறும் எந்தக் கல்வி நிறுவனத்திற்குமான அநுமதியானது, இனம், மதம், சாதி, அல்லது பிறந்த இடம், இவற்றின் அடிப்படையில் மட்டும் எந்த ஒரு பிரசைக்கும் மறுக்கப்படலாகாது.
அயர்லாந்து:
1.
பொது வழிபாட்டின் மூலம் மரியாதை செலுத்துதல் என்பது எல்லாம் வல்லஇறைவனின் மூலமே என்பதை அரசு ஏற்றுக் கொள்கிறது. இறை நாமத்தை வணக்கத்துடன் பற்றுவதுடன் அரசானது மதத்திற்கு மதிப்பும் கெளரமும் அளிக்கும். தூய கத்தோலிக்க அப்போஸ்தல மற்றும் ரோமன் திருச்சபையினை மிகப் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதத்தின் காவலன் என்கிற விசேட நிலையில் அரசு அங்கீகரிக்கிறது. இந்த அரசியலமைப்பு அமுலுக்கு வருந்தினத்தில் நடைமுறையிலுள்ள அயர்லாந்து திருச்சபை, அயர்லாந்திலிருக்கும் பிறெஸ்பைரீரியன் திருச்சபை, அயர்லாந்து மெதடிஸ்த திருச்சபை, அயர்லாந்து நண்பர்கள் மதச் சங்கம், அத்துடன் யூதகுழாங்கள் மற்றும் ஏனைய மதகுழுக்கள் ஆகியவற்றையும் அரசு அங்கீகரிக்கிறது. (i) மனச்சான்றுச் சுதந்திரம் மற்றும் சுயாதீனமாக மதத்தைப் பின்பற்றும், அனுட்டிக்கும் சுதந்திரம் ஆகியவை பொது ஒழுக்கம் ஆகியவற்றிற்குட்பட்டு ஒவ்வொரு பிரசைக்கும் உத்தரவாதப்படுத்தப் படுகின்றன.
3.

Page 14
(i) மனச்சான்றுச் சுதந்திரம் மற்றும் சுயாதீனமாக மதத்தைப் பின்பற்றும், அனுட்டிக்கும் சுதந்திரம் ஆகியவை பொது ஒழுங்கு, ஒழுக்கம் ஆகியவற்றிற்குட்பட்டு ஒவ்வொரு பிரசைக்கும் உத்தரவாதப்படுத்தப்படுகின்றன.
மியான்மார் மற்றும் அயர்லாந்தின் அசசியலமைப்புக்கள் நாட்டின் ஏனைய மதங்களுக்கும் அரசின் அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பளிக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது. பெளத்த நாடான ஜப்பான் மற்றும் இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் ஆகியவை குறிப்பாக எந்த மதம் பற்றியும் அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை.
ஜப்பான்
1946 அரசியலமைப்பின் சரத்து 20 கூறுவதாவது:
எல்லோருக்கும் மத சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எந்த மத நடவடிக்கையிலோ, கொண்டாட்டத்திலோ, சடங்கிலோ அன்றி அனுட்டானத்திலோ பங்குபற்றுமாறு எந்த ஒரு நபரும் வற்புறுத்தப்படவியலாது. அரசும் அதன் அங்கங்களும் மதக் கல்வி அல்லது வேறெந்த மதச்செயற்பாட்டிலிருந்தும் விலகியிருத்தல் வேண்டும். எந்தப் பொது நிதியோ அல்லது சொத்தோ, எந்த மத நிறுவனத்தினதும் அல்லது அமைப்பினதும் நன்மைக்காக அல்லது பராமரிப்பிற்காக அல்லது பொது அதிகாரத்தின் கீழ் வராத எந்த அறக் கல்வி அல்லது உதவி அமைப்புகளுக்காகவெனப் பயன்படுத்தப்படவோ ஒதுக்கீடு செய்யப்படவோ இயலாது. (சரத்து 89)
இலங்கை அரசியலமைப்பில் இவ்வுரிமையினைப் பாதுகாக்கும் இது போன்ற சரத்துக்களெதுவும் உள்ளடக்கப்படவில்லை.
பொதுநிதிகள் பற்றிப் பல்வேறு மதக்குழுக்களும் சண்டையிட ஆரம்பித்து விடலாகாது என்பதை நிச்சயம் செய்து கொள்வது ஐக்கிய அமெரிக்காவின் யாப்பினை வரைந்தோரின் முக்கிய அக்கறைகளிலொன்றாக இருந்தது. மத அடிப்படையில் அரசியல் பிரிவுகள் ஏற்படுதல்தான் ஒரு ஜனநாயகத்தில் ஏற்படக்கூடிய மிக இழிவான விஷயம் என ஹாவார்ட் சட்டக் கல்லூரியின் பேராசிரியர் ஃபிறாய்ன்ட் கூறிவந்தார். ஒரு மதக்குழுவின் நன்மைகளை ஒரு அரசியற்கட்சி முன்னெடுப்பது முறையானதன்று.
மதசார்பின்மை மற்றும் மதசுதந்திரம் பற்றிய கருதுகோளானது எபர்ஸன் எதிர் கல்விச்சபை வழக்கின் புகழ்பெற்ற தீர்ப்பில் விரிவாக உள்ளடக்கப்
14

பட்டிருப்பதுடன் மேலும் இல்லினொய்ஸ் அரசு எதிர் கல்விச்சபை வழக்கு மற்றும் ஏனைய தீர்ப்புகளிலும் மேலும் விளக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் TR. பவல் ' கூறினார்: 'அரசின் நடுநிலைபற்றிய எமது கொள்கையென்பது, மதத்தின் மீது அரசு கைவையாமை மட்டுமன்றி அரசின்மீது மதத்தின் கைகள் படியாமையுமாகும். அதற்கும் மேலாக எந்த மதக்குழுவிற்கேனும், பொதுக்கொள்கை அல்லது uொதுநிதியினால் அநுகூலம் ஏற்படுவதை மறுப்பதன் மூலம் கசப்பான மதவாதங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதுமாகும்.
'எமது அரசியல் யாப்பானது பொதுப்பள்ளிகளில் மதக்கல்வியை விலக்குதலுடன் மதச்சார்புள்ள பள்ளிகளில் பொதுநிதியானது மதத்தின் உதவிக்காகப் பயன்படுத்தப் படுவதைத் தடுக்கவும் செய்கிறது. அரசு அத்துடன் மாணவர்களின் நேரம் முற்றாகப் பெற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலைக்கு வெளியே பெற்றோராலும் மதச் சபைகளாலும் மதக் கல வி மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பினை அளிப்பதையும் அது பரிந்துரைக்கிறது.
1976 ல் மேரிலான்ட் மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இறையியல் பட்டங்களை அளிக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைத் தவிர்த்து ஏனைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கட்கு அரசு நிதியினை வழங்குவது பற்றிய ஒரு சட்டத்தை ஐக்கிய அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அந்நிறுவனங்கள் முறையற்ற விதத்தில் குழு சார்ந்தவை யன்று என்பதும் இதனை நியாயப்படுத்துங் காரணியாயின.
பொதுப்பள்ளிகளின் வகுப்பறைச் சுவர்களில் பத்துக் கட்டளைகளை விளம்பரப்படுத்துதல் என்பது அரசியலமைப்பிற்கு மாறானது என ஸ்ரோன் எதிர் சிரஹம் வழக்கில் உறுதி செய்யப்பட்டது. '
(11) தனியார் பாடசாலைகளுக்கும் பொது. TR புவல் (12) 449 US 39 101 S. G. 192.
15

Page 15
அத்தியாயம் 4
இந்தியாவில் மதச்சார்பின்மை
'இந்திய மதச்சார்பின்மை என்பது, எப்படியிருப்பினும், அதன் மேற்கத்திய மாதிரியின் நேரெதிர்மாறானது. எல்லா மதங்களையும், சம கெளரவத்துடன் கையாளும் ஒரு நேரான கருதுகோளாகும் அது. இந்தியா ஒரு பன்மத, பன்மொழி, பல்லின சமூகமாகும். நாகரீகம் உதயமான காலத்திலிருந்தே, மத சார்பற்ற நிலைகளிலேயே இந்தியா இருந்து வந்துள்ளது. இது ஒரு வெற்றுத் தத்துவமாகவன்றி, உயிருள்ள யதார்த்தமாயுள்ளது"
எனவே, இந்தியாவின் மதசார்பின்மை என்பது, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருதுகோள் அன்று. ஆண்டவன் இல்லாத ஒரு சமூகத்தை அது கருதவில்லை. வெவ்வேறு சமூகங்கள் குழுக்கள் போன்றவற்றின் நூற்றாண்டுக் கணக்கான சகவாழ்வின் விளைவாக உருவான ஒரு கருதுகோள் அது.
இந்திய அரசியலமைப்பின் மதசுதந்திரம் பற்றிய ஒரு நுண்ணிய ஆய்வு, அது ஒரு ஆசிய நாடென்கிற வகையில், பொருத்தமாகிறது. அந்த சரத்துகள் நாட்டின் மதசார்பற்ற தன்மையையும், மத சுதந்திரத்தையும் பேணுகின்றன. இந்திய அரசியலமைப்பினை வரைந்தோர் மதசுதந்திரதிற்கான உரிமையை உறுதிப்படுத்தவும் இந்தியாவை ஒரு மத சார்பற்ற நாடாகவும் ஆக்க வேண்டிக் கடுமையாக உழைத்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்பிலுள்ள பொருத்தமான சரத்துக்கள்:
பொருத்தப்பாடுடைய சரத்துக்களான 25, 26, 27, 28 ஆகியவை மத
வழிபாட்டுச் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவது மட்டுமன்றி, இந்திய அரசியலமைப்பின் மதசார்பற்ற தன்மையையும் பாதுகாக்கின்றன.
(13) அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்புத் தீர்வுகளும் வி. ஜி. ராமச்சந்திரன்
பக். 342
16

மனச்சான்றுச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான மதப்பின்பற்றல் மத அநுட்டிப்பு, மதம் பரப்பல். (சரத்து 26)
1.
பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலன் அத்துடன் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தரவுகளுக்கமைவாக, எல்லா மனிதரும் மனச்சான்றுச் சுதந்திரம் மற்றும் சுதந்திரமான மதத்தைப் பின்பற்றல், அனுட்டித்தல், பரப்பல் ஆகியவற்றிற்கான உரிமை என்பவற்றுக்கு சமஅளவில் உரித்துடையவர்களாவர்.
இச் சரத்திலுள்ள எதுவும் பின் வருவன சம்பந்தமாக நடைமுறையிலுள்ள எந்தச் சட்டத்தினையாவது அமுலாக்குவதையோ அன்றி அரசு ஏதாவது சட்டத்தை உருவாக்குவதையோ
தடைசெய்யாது.
மத அநுட்டிப்புடன் தொடர்பு பட்டிருக்கக் கூடிய எந்தப் பொருளியல், அரசியல் அல்லது மதசார் பற்ற செயற்பாடு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் அல்லது மட்டுப்படுத்தும்.
சுமூகநலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது பொதுத் தன்மை கொண்ட இந்துமத அமைப்புக்களை எல்லா வகுப்பு மற்றும் பிரிவு இந்துக்களுக்கும் திறந்துவிடல்.
மத விவகாரங்களை நிர்வகித்தலுக்கான சுதந்திரம் (சரத்து 26)
மதவிவகாரங்களை நிர்வகித்தலுக்கான சுதந்திரம்: பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் நலன் என்பவற்றிற்கமைவாக, ஒவ்வொரு மதப்பிரிவும் குழுவும் பின்வருவனவற்றிற்கான உரிமையைக் கொண்டிருக்கும்:
l.
மத மற்றும் அற நோக்கங்களுக்கான நிறுவனங்களை உருவாக்குதலும் பராமரித்தலும்.
மதம் சம்பந்தமான விஷயங்களில் தம் சொந்த விவகாரங்களை நிர்வகித்தல்.
அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை உரிமைகொள்ளல்
மற்றும் ஈட்டுதல்.
சட்டத்திற்கமைவாக இச்சொத்துக்களை நிர்வகித்தல்.
17

Page 16
ஒரு குறிப்பிட்ட மதத்தின் முன்னெடுப்பிற்கான வரியிறுப்பு சம்பந்தமான சுதந்திரம் (சரத்து 27):
ஒரு குறிப்பிட்ட மதத்தின் முன்னெடுப்பிற்கான வரியிறுப்பு சம்பந்தமான சுதந்திரம், எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது மதப்பிரிவை முன்னெடுத்தல் அல்லது பராமரித்தலுக்கான செலவுகளைச் செலுத்துவதற்கெனக் குறிப்பாக ஒதுக்கப்படும் வருமானத்தைத் தரும் எந்த வரியையும் செலுத்துமாறு எந்த W ஒருவரும் கட்டாயப்படுத்தப்படலாகாது.
கல்வி நிறுவனங்களில் மதபோதனை அல்லது மதவழிபாடு போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான சுதந்திரம் (சரத்து 28)
குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் மதபோதனை அல்லது மதவழிபாடு போன்றவற்றில் கலந்துகொள்வதற்கான சுதந்திரம்:
I.
அரசு நிதியினால் முழுமையாகப் பராமரிக்கப்படும் எந்தக் கல்வி நிலையத்திலும் மதபோதனைகள் வழங்கப்படலாகாது.
சரத்து 25 (1) ன் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரம் பின்வருவனவற்றிற்கு அமைவானது:
(1) பொது ஒழுங்கு, (2) ஒழுக்கம், (3) நலன், (4) அரசியலமைப் பின் பகுதி II ல் உள்ள ஏனைய உத்தரவாதங்கள். இவ்வாறு உத்தரவாதமளிக்கப்பட்ட சுதந்திரங்களாவன: (1) மனச்சான்றுச் சுதந்திரம், (2) சுதந்திரமாக மதத்தைப் பின்பற்றல், அநுட்டித்தல், மற்றும் பரப்புதலுக்கான உரிமை.
ஆனால் இது சரத்து 25 (2) க்கமைவானது. அதாவது பின்வரும் நிலைமைகளின் கீழின்றி அரசுக்கு அதிகாரமளிக்கும்.
(1) மத அனுட்டிப்போடு தொடர்புடையதாயிருக்கக் கூடிய எந்தப் பொருளியல், அரசியல் அல்லது
மட்டுப்படுத்தும்; m W
(2) சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் அல்லது பொதுத் தன்மை கொண்ட இந்து மத அமைப்புக்களை எல்லா வகுப்பு மற்றும் பிரிவு இந்துக்களுக்கும் திறந்துவிடல்

சமீப காலங்களில் தன் மதச்சார்பற்ற தன்மையின் மீதான பாரிய தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாகத் தாக்குப் பிடித்துள்ளது. இந்தியாவில் மதச்சார்பின்மை' என்ற அண்மைய கட்டுரையொன்றில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: yr
இந்தியாவின் மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்புக் கடப்பாடு மட்டுமன்றிச் சமூகத் தேவையாகவும் பண்பாட்டிற்கு அத்தியாவசியம் ஆனதாகவும் உள்ளது. அது நூற்றாண்டு காலமாக வளர்ச்சியுற்றதுடன் முற்றும் தன் நெகிழ்ச்சித் தன்மையினாலேயே தப்பிப் பிழைத்துமுள்ளது. அதன் தாராள இயல்பும், சகிப்புத் தன்மை கொண்ட உணர்வும் அதன் முக்கிய சிறப்புக்களாகும். பரந்ததோர் வரலாற்று நோக்கில், இந்திய மதசார்பின்மை என்பதானது எல்லா மதங்களுக்கும் சமகெளரவம், மற்றோர் பார்வைக்கும் சமகணிப்பு, சட்டத்தின் முன் தன் பிரசைகளெல்லோரையும் சமமெனக் கருதல் என்பதாகப் பொருள் தரும்"
சரத்து மேலும் கூறுகிறது:
இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தோரிடம் எதிர்பார்க்கப்பட்ட மதச்சார்பு அற்றதேசம் என்ற இலட்சியம் பற்றிய நோக்கில், மிகப் பெரும்பான்மையினரான பிரசைகளால் பின்பற்றப் படுவதான ஒரு குறிப்பிட்ட மதத்தின் 'சிறப்பிடத்தினை, அரசு அங்கீகரிக்கிற ஏனைய அரசியலமைப்புக்களிலும் பார்க்க, இந்திய அரசியலமைப்பு அதிகம் மதசார்பற்றதாக உள்ளதென இந்திய சட்டவல்லுநர் ஒருவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1993 செப்டம்பர் 4ம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற கொங்கிரஸ் கட்சிக் கூட்டமொன்றில் இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்மராவ் கூறினார், மதமும் அரசியலும் ஏற்கெனவே தனித்தனியே தானுள்ளன. ஆனால் அவற்றைக் கலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் மதத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதைத் தடுக்கச் சட்டம் அவசியம் என்று ராவ் கூறினார். அரசியலமைப்பின் கீழ் அரசானது ‘ஒரு மதத்திற்கு உதவுவதற்கென்றோ அல்லது ஒரு மதத்திலும் பார்க்க இன்னொன்றிற்கு முன்னுரிமை கொடுக்கவென்றோ சட்டங்களை இயற்ற இயலாதென உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதென அவர் கூறினார். ஆகவே, 'மதங்களில் கைவையாதே' என்று பொருள்படும் ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின் முதலாவது திருத்தத்தில் தங்கியுள்ள
(14) இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய கட்டுரை R நாராயணா AIR 1993
19

Page 17
அமெரிக்கக் கருது கோளிலிருந்து இந்தியாவின் மதசார்பின்மை தொடர்பான கருதுகோள் மாறுபட்டதென்பது தெளிவாகும் ' ஆசிய நாடுகளுக்கும் பொருத்தமான இந்தியக் கருதுகோளானது, ஏதாவது ஒரு மதத்திற்கு அரசு முன்னுரிமை கொடுக்க முயல்வதைத் தடுக்க முனைகிறது. அத்துடன் அரசியலமைப்பு எந்த ஒரு மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை.
பொன்மெயிட் எதிர் இந்தியா ? வழக்கில், உச்ச நீதிமன்றமானது பின்வரும் கருத்தினைக் கொண்டிருந்தது:
'அரசியலமைப்பின் மதசார்பற்ற தன்மைக்குப் பாதகம் விளைவிக்கக் கூடிய முனைப்பின் அடிப்படையில் எந்த ஒரு கட்சியோ அன்றி அமைப்போ ஒரு தேர்தலில் போட்டியிட விரும்புமெனில் அது அரசியலமைப்புக்கு மாறான செயற்பாடொன்றினை ஆற்றும் குற்றத்தைச் செய்ததாகிறது.
"இந்திய அரசியலமைப்பு முற்றுமுழுதான மதசார்பற்ற தேசம் பற்றிய கருத்தினையே உள்ளடக்கியுள்ளது. அது அரசாங்க மதமொன்றினை ஆக்குவதென்பதையோ அங்கீகரிப்பதையோ செய்யாது என்பதுடன் ஏனைய மதங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள அநுகூலங்களை அல்லது விசேட சலுகைகளை எந்த ஒரு மதத்திற்கும் வழங்காது. அரசியலமைப்பானது எல்லா மக்களுக்கும் மனச்சான்றுச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் சுதந்திரமான மதப் பின்பற்றல், அனுட்டிப்பு, வளர்ப்பு, என்பவற்றிற்கான உரிமை ஆகியவற்றை வழங்குகின்றது.
இந்துமதம் இந்தியாவின் புராதனமதமாயுள்ள போதிலும் நாட்டின் மரபானது, கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், ஜாரதுஷடிர போன்ற பிறமதங்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கும் இடமளித்தே வந்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மதத்திற்குமென அரசதிணைக்களம் கிடையாது என்பதுடன், இந்திய அரசாங்கம் எம்மதத்திற்கும் எந்த நிதி உதவி வழங்குவதுமில்லை.
ஜப்பானின் அரசியலமைப்பானது இந்திய அரசியலமைப்பின் 25 வது சரத்தினையொத்த 89ம் சரத்தினைக் கொண்டுள்ளது. இவற்றையொத்த பாகிஸ்தான் அரசியலமைப்பின் 21வது சரத்தும் எந்த ஒரு விசேஷ வரியும் விதிக்கப்பட்டு அதன் வருமானம் எந்த ஒரு மதத்தின் பரப்பலுக்கும் பராமரிப்புக்குமென செலவிடப்படுவதைத் தடை செய்கிறது.
(15) ' (16),
20

அத்தியாயம் 5
இலங்கை அரசியலமைப்பு உருவாக்கத்திலுள்ள தவறுகள்
அரசியலமைப்பு உருவாக்கத்தைப் பொறுத்தளவில் அடுத்தடுத்து வநத அரசாங்கங்கள், ஒரு பல்பண்பாட்டு சமூகத்தின் தேவைகளுக்குக் கவனமளிக்கத் தவறிவிட்டன. 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகள் சிறுபான்மையினர்பால் பாரபட்சம் காட்டின. அரசியலமைப்பு, கல்வி மற்றும் கலாசார உரிமைகட்குப் பாதுகாப்பளிக்காததுடன் ஒரு மதத்திற்கு முதன்மை இடமும் கொடுத்தது. ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்புகள் அரசியற்கட்சிகளின் நோக்கங்கட் கேற்றவையாயிருந்ததுடன், பெரும்பான்மை வாதத்தையும் பலப்படுத்தின.
சிறுபான்மையினர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சரத்துக்கள்
சோல்பரி அரசியலமைப்பானது மதசார்பற்ற ஒன்றாக இருந்ததுடன் எந்த ஒரு மதத்திற்கும் விசேட இடம் கொடுக்கவில்லை. அத்துடன் யாப்பின் 29 (2) சரத்தானது, மத சிறுபான்மையினரின் உரிமைகளுக்குங் கூடப் பாதுகாப்பளித்தது.
வலியுறுத்தப்பட்டுள்ள இச்சரத்தின் புனிதமானது, பிரிவி கவுன்ஸிலில் லஞ்ச ஆணையாளர் எதிர் ரணசிங்க' வழக்கில் பியர்ஸ் பிரபுவினால் வலியுறுத்தப்பட்டது. அவர் குறிப்பிட்டார்: எந்த அடிப்படை நிலைமைகளின் நன்மைக்காக அவர்கள் அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டார்களோ அந்த இலங்கைக் குடி மக்களிடையிலான உரிமைகளின் நிச்சயமான சமநிலையினை சரத்து 29 (2) குறிக்கிறது: ஆகவே இவை அரசியலமைப்பின் கீழ் மாற்ற முடியாதவையும் ஆகின்றன. அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களைப் பொறுத்தளவில் இலங்கையின் சுதந்திர சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தினால் திருத்தப்படவியலாதெனவும் சிலர் வாதிடுவர்.
(1947 ன் சோல்பரி அரசியலமைப்பில் அளிக்கப்பட்டிருந்த விதிகள் பின்னிணைப்பு II இல் தரப்பட்டுள்ளன.)
(17) 66 NLR 78 & 2 WLR 1301
21

Page 18
அரசியலமைப்பின் சரத்து 29 (2), 1972 ல் ஒரு 'கெல்செனியன் புரட்சி' மூலம் தூக்கியெறியப்பட்டது. இவ்வாறு 1948 விருந்து 1972 வரையிலிருந்த சரத்து 29 ஆனது 1972 ன் அரசியலமைப்பினால் இல்லாமலாக்கப்பட்டது.
இம்மாற்றத்தினை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய முன்னணி அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்புச் சபையை நியமிக்கத் தீர்மானித்தது. அரசியலமைப்புச் சபை பாராளுமன்றத்தால் அமைக்கப்படாமல் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டதாகக் கொள்ளப்பட்டது. அரசியலமைப்புச் சபையில் 1972 அரசியலமைப்பின் வரைவு ஆராயப்பட்டுக் கொண்டிருந்தபோது, தி. ஏ. அஸிஸினால் முன்மொழியப்பட்டு, திரு ட்யளில், ஏ. கபூரினால் வழிமொழியப்பட்ட, சரத்து 10 ல் 'உறுதிகூற' என்ற சொற்களுக்கும் ‘எல்லா மதங்கள்’ என்ற சொற்களுக்கும் இடையில், "இந்து சமயம், இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் என்ற சொல்களைப் புகுத்த வேண்டும் என்ற பிரேரணையின் மீதான விவாதத்தில், நாட்டின் இம்மூன்று மதங்களுங்கூட இந்நாட்டின் ஒரு பகுதி மக்களின் கலாசார வாழ்வில் ஒரு முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன " எனக் குறிப்பிட்டார். பிரேரணை அரசினால் நிராகரிக்கப்பட்டது.
1972 ன் முதலாவது குடியரசு அரசியலமைப்பு பெளத்தத்திற்கு முதன்மை இடம் கொடுத்ததுடன், பகுதி 18 (1) (d) யினால் வழங்கப்பட உரிமைகளை ஏனைய மதங்களுக்கு உறுதியளிக்கும் அதேவேளையில் பெளத்தத்தைக் காப்பற்றுவதும் வளர்ப்பதும் அரசின் கடமையாயிருக்கும்’ என்று குறிப்பிடுவது வரை சென்றது.
பேராசிரியர் கே. ஏம். டி சில்வா குறிப்பிட்டார்: "பெளத்த செல்வாக்குக் குழுக்கள் விரும்பியிருக்கக் கூடியவாறு இலங்கை அரசு ஒரு மதகுருமார் ஆட்சியிலான அரசாக அமையவில்லையெனினும், இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இப்போதில்லை என்பது தெட்டத் தெளிவானது' (?
1978ன் அரசியலமைப்பானது சரத்து 9ல் பெளத்தத்திற்கு முதன்மை இடம் கொடுத்ததுடன், ‘சரத்து 10 மற்றும் 14 (1) (e) யினால் எல்லா மதங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை புத்தசாசனத்தைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் அரசின் கடமையாயிருக்கும் எனவும் குறிப்பிட்டது. ‘புத்த சாசனம்' என்ற சொற்களின் பொருள் பெளத்தம்' என்ற சொல்லிலும் பார்க்கப் பரந்துபட்டது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
(18) இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம் - கலாநிதி J.A.L குறே
ப.623 அரசியலமைப்புச் சபை விவாதங்கள் ப.633 (19) இலங்கைச் சரித்திரம் தே. ஏம். டி. சில்வா பக். 550
22

அரசியலமைப்பானது, மேலும் சரத்து 105 (4)ல், "பிக்குமாரின் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவுசெய்யவும் தீர்ப்பளிக்கவுமென நீதிமன்றங்கள் முறையீட்டுமன்றங்கள் அல்லது அமைப்புக்களை ஏற்படுத்தவும் இடமளித்தது. பெளத்த சங்கங்களைத் திருப்தி செய்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த சரத்துக்கள் இரண்டு அரசியலமைப்புக்களில் வெளிப்படையாகவே உள்ளடக்கப்பட்டன. இந்த சரத்துக்களை இப்போது ஒரு புதிய அரசியலமைப்பில் தவிர்ப்பது சிரமம்.
மதம் சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள்:
1948 ன் அரசியலமைப்பு
சோல்பரி அரசியலமைப்பு எம்மதத்தையும் குறிப்பிடவோ அல்லது பெளத்தத்திற்கு முதன்மை இடம் கொடுக்கவோ இல்லை. இக்கட்டளையின் நிபந்தனை விதிகளுக்கமைவாக, தீவின் அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவற்றிற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை நாடாளுமன்றம் கொண்டிருக்கும் என சரத்து 29 (1) கூறுகிறது.
(2) அவ்வாறான சட்டமெதுவும்
எந்த மதத்தையெனினும் சுதந்திரமாகப் பின்பற்றுதலைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது; அல்லது
ஏனைய சமூகங்கள், மதங்களைச் சார்ந்தவர்கட்கு உரித்தளிக்கப்படாத இயலாமைகள், கட்டுப்பாடுகளுக்கு எந்த சமூகத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்களை உரித்தாக்க முடியாது.
ஏனைய சமூகங்கள் மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படாத எந்த சலுகை அல்லது அநுகூலத்தையோ, ஒரு சமூகத்தை அல்லது மதத்தை சார்ந்தவர்கட்கு அளிக்க முடியாது; அல்லது எல்லா சிறுபான்மையினருக்கும் ஒரு உத்தரவாதத்திற்கு இடமளிக்க வேண்டும்.
எந்த மத அமைப்பின் யாப்பினையும் அம்மத அமைப்பினை நிர்வகிக்கும் சபையின் அநுமதியின்றி மாற்ற முடியாது. எப்படியிருப்பினும் ஒரு மத அமைப்பானது சட்டத்தின் மூலம் கூட்டிணைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவ்வாறான
23

Page 19
மாற்றமானது அவ்வமைப்பினை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றோரின் வேண்டுதல் இருந்தாலன்றிச் செய்ய இயலாது.
இந்த நிபந்தனை விதிகள் சிறுபான்மையினரின் உரிமைகளைப் போதுமான அளவிற்குப் பாதுகாத்தன. நாம் சரத்து 29க்குத் திரும்பிச் சென்று எதிர்கால ஒற்றுமையின்மையைத் தடுக்க இயலாதா? நாம் ஒரு இணைந்த தேசமாகத் தொடர்ந்திருக்க வேண்டுமெனில் துணிவான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1972 ன் அரசியலமைப்பு:
முதலாவது குடியரசு அரசியலமைப்பானது, இலங்கைக் குடியரசு சரத்து 18 (1) ன் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும் உரிமைகளை எல்லா மதங்களுக்கும் உறுதியளிக்கும் வேளையில் பெளத்தத்திற்கு முதலிடம் கொடுத்ததுடன் அதன்படி பெளத்தத்தைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகும் என்றுங் கூறியது.
1978 ன் அரசியலமைப்பு:
இந்த அரசியலமைப்பு அதே சரத்தை மீண்டுங் குறிப்பிட்டது. இலங்கைக் குடியரசு, சரத்து 18 (1) மற்றும் 14 (1) (ந) ஆகியவற்றால் அளிக்கப்பட்ட உரிமைகளை எல்லா மதங்களுக்கும் உறுதியளிக்கும் அதேவேளை, இலங்கைக் குடியரசானது பெளத்தத்திற்கு முதன்மை இடம் கொடுப்பதுடன் அதன் பிரகாரம் பெளத்த சாசனத்தைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் அரசின் கடமையாகும்.
24

அத்தியாயம் 6
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம்:
நிலையான சமாதானம் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டுழெனில் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோமென்றும் தங்கள் உரிமைகள் அரசியலமைப்பினால் பாதுகாக்கப்படவில்லையென்றும் நாட்டு மக்களில் எந்தப் பிரிவினரும் கசப்புணர்வு கொள்ளக் கூடாது. அவர்களின் இனத்துவம், மொழி, பண்பாடு எதுவாயிருப்பினும் ஒரு அரசியலமைப்பு தன் எல்லாப் பிரசைகட்கும் பாதுகாப்பளிக்க வேண்டும்.
ஒரு அரசியலமைப்பு, கருத்தொருமைப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாயிருக்க வேண்டுமேயன்றி, பெரும்பான்மையினர்க்குப் பாதுகாப்பும், முன்னுரிமையும் கொடுக்கும் ஒரு ஆவணமன்று. அரசியலமைப்பு, ஒரு நாட்டின் அதியுயர் சட்டமும் மற்றெல்லாச் சட்டங்களுக்கும் மேலானதுமாகும். அரசியலமைப்பு குறை இழைக்குமானால் அது புரட்சி என்ற வெடிமருந்தைப் பற்றவைப்பது என்றாகும்.
சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு அநேக நாடுகள் பல்வேறு தந்திரோபாயங்களைத் தம் அரசியலமைப்புக்களில் கையாண்டுள்ளன. சமவாய்ப்புச் சட்டம் மற்றும் அரசியல் சிந்தனை, மதம், இனம், பால் என்பவற்றினடிப்படையிலான பாரபட்சத்திற்கெதிரான சட்டங்கள் போன்ற சட்டரீதியான, பெரும்பான்மை வாதத்திற்கெதிரான ஏற்பாடுகள் அவை.
நடைமுறைப் படுத்தப்படக் கூடிய அடிப்படை உரிமைகளுடனும் சுதந்திரங்களுடனுங்கூடிய ஒரு அதிகாரப்பரவலாக்கல் வழிமுறை அரசியலமைப்பில் இடம்பெற்றிருப்பது அவசியமாகும். பிரபல அரசியலமைப்புச் சட்ட அறிஞரான கலாநிதி J.AL குறே கூறினார்: *)
'அப்படியான ஒரு அரசியலமைப்பானது அதியுயர் சட்ட ஆவணமென்பதுடன், தன் மக்களை உள்ளடக்கிய எல்லா சமூகங்களினதும் அரசியல் கூட்டு ஒப்பந்தமாக அவர்களின் மரியாதையையும் அதன் பேறாகப் பணிதலையும் பெற்றுக் கொள்ளும்.
(20) சர்வதேச சட்டம்பற்றிய இலங்கையின் சஞ்சிகை பகுதி 6 T (1994)
25

Page 20
சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமைவதற்கப்பால் அரசு அதிகாரங்களைப் பன்முகப்படுத்தலும் பரவலாக்கலுமானது. பொருளாதார வளர்ச்சிக்கும் நலப்பணிக்கும் அத்தியாவசியமானது எனக் கலாநிதி குறே நம்பினார். பிரதேச ரீதியான ஒரு அதிகாரப்பரவலாக்கல் பற்றியும் அவர் யோசனை கூறினார். மாகாண சபைகள் முறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்பதில் அவர் டொனமூர் ஆணைக்குழவினருடனும் SWRD பண்டாரநாயக்கவுடனும் ஒத்துப் போனார். எது 1950 களில் ஆலோசிக்கப் பட்டதோ அது கடைசியில் இரத்தமும் கண்ணிரும் விலையாகக் கொடுக்கப்பட்ட பின்னர் மிகவும் தாமதமாக நிறுவப்பட வேண்டியுள்ளது.
கலாநிதி குறே மேலுங் கூறியதாவது 'அரசியலமைப்பினை உருவாக்குவதென்பது ஒரு தேசியப் பொறுப்பு. அரசியலும் அரசியலமைப்புருவாக்கமும் ஒன்றாய்ச் செய்வதியலாது. சமூகத் தேசத்தினதும் பிரதிநிதிகளான திறமை மிகு ஆண்களாலும் பெண்களாலும் நுணுக்கமும் கவனமும் வாய்ந்த ஆய்வின் பின்னர் நாம் எமது நாட்டினதும் அதன் எல்லா மக்களினதும் ‘நன்மைக்காக, கூடுதல் சிறப்பான ஒன்றைப் பதிலீடு செய்கிறோம் என நியாயமாக நம்புவோமெனில் அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.
சிறுபான்மை அரசியலமைப்பு உத்தரவாதங்கள்:
இன, மத, மொழிச் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கான ஏற்ற சட்டத் தொகுப்பொன்றினை வரைவதற்காக ஐக்கிய நாடுகள் சபை 1948 லிருந்தே பல குழுக்களை அமைத்துள்ளது.
சிறுபான்மையினர் என்பது இவ்வாறு பொருள் கொள்ளப்பட வேண்டியது:
ஒரு நாட்டின் மீதத் தொகையினரிலும் பார்க்கக் குறைவான எண்ணிக்கையுடையோராயும், மேலாதிக்கம் கொள்ளாத ஒரு நிலையிலும், அந்நாட்டின் குடிமக்களாகவும், மீதி சனத்தொகையிலிருந்து வேறுபட்ட இன, மத, மொழிப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் உள்ளார்ந்த ரீதியாகத் தம் கலாசாரப் பாரம்பரியம், மதம் அல்லது மொழியினைப் பேண வேண்டுமென்ற ஒன்றுபட்ட உணர்வினைக் காட்டுவோராயும் உள்ள ஒரு குழுவினர்.
இந்திய உச்ச நீதிமன்றம் சிறுபான்மையினர் என்பதற்கு இவ்வாறு வரைவிலக்கணங் கூறிற்று:
26

‘ஒரு நாட்டின் சனத்தொகை எண்ணிக்கையில் 50 சத வீதத்திற்கும் குறைந்த மத அல்லது மொழி ரீதியான சமூகம், சரத்து 30 ன் கீழ் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு ஏற்புடைய சிறுபான்மையினர் ஆகும். கேரள மாநிலத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கள் ஒரு சிறுபான்மையினராகக் கொள்ளப்பட்டனர். )ே பாரபட்சம் - என்ற சொல் வெவ்வேறு விதமாக நடத்துதல்' எனப் ப்ொருள் தரும். ஒக்ஸ்ஃபோட் அகராதி அதை இவ்வாறு விளக்குகிறது: ப்ாதகமான வேறுபாட்டினை உருவாக்குதல் அல்லது ஏனையோரிடமிருந்து சாதகமற்ற முறையில் வேறுபடுத்தப்படுதல். தடைசெய்யப்பட்ட பாரபட்சம் என்பது, மதம், இனம், சாதி, பால், பிறந்த இடம் போன்ற குறிப்பிட்ட அடிப்படைகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விதிகள் "பாரபட்சமென்பது, அரசினால், ஒரு பொதுக்கூட்டுத்தாபனத்தினால், ஒரு உள்ளுராட்சிச் சபையினால், அரசுடைமையான ஒரு வர்த்தக நிறுவனத்தினால், அல்லது 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்குகளை அரசுடைமையாகக் கொண்ட ஒரு பொதுக் கொம்பனியினால், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியற் கருத்து அல்லது பிறந்த இடம் இவற்றினடிப்படையில் நீதியற்ற முறையில் நடத்தப் படுவது என்பதாகும். பாரபட்சமான நடவடிக்கை என்ற பிரயோகம் இதற்கமைவாகப் பொருள் கொள்ளப்படவேண்டும்.
தென் ஆப்பிரிக்கா:
சரத்து 15 - மதம், நம்பிக்கை, மற்றும் கருத்து சுதந்திரம்.
1. ஒவ்வொருவருக்கும் மனச்சான்று, மதம், எண்ணம், நம்பிக்கை, கருத்து
சுதந்திரத்திற்கான உரிமை உண்டு.
2. மத அநுட்டானங்கள், அரச அல்லது அரச உதவிபெறும்
நிறுவனங்களில் பின்வரும் நிலைகளில் நடத்தப்படலாம்.
அவ்வனுட்டானங்கள் ஏற்புடைய பொதுசன அதிகாரிகளால் O , விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுமிடத்து.
அவை நேர்மையான அடிப்படையில் அமையுமிடத்து.
(21) 2 Ker LR 67 AIR 1965 Ker 75
27

Page 21
அவற்றில் பங்குபெறுதல் சுதந்திரமானதும் சுய விருப்பிற்குரியதுமாகும்.
மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளைத் தீர்க்கும் நிலையம்.
28
மதமாற்றத் தடைச் சட்டங்களை வைத்திருப்பதிலும் பார்க்க தென்னாபிரிக்காவிலும் சிங்கப்பூரிலும் உள்ளவை போன்ற மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளைத் தீர்க்கும் நிலையங்களை வைத்திருப்பது விரும்பத்தக்கது.
தென்னாபிரிக்க அரசியலமைப்பு:
பண்பாடு, மத, மொழி, சமூகங்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான ஆணைக்குழு: V
ஆணைக்குழுவின் செயற்பாடுகள்:
l.
பண்பாட்டு, மத, மொழி, சமூகங்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான ஆணைக்குழுவின்
முதன்மை நோக்கங்களாவன:
பண்பாட்டு, மத, மொழி, சமூகங்களின் உரிமைக்கான பங்களிப்பினை மேம்படுத்தல்
பண்பாட்டு, மத, மொழி, சமூகங்களிடையே சமத்துவம், பாரபட்சமின்மை மற்றும் சுதந்திரமான கலந்துறவாடல்
போன்றவற்றினடிப்படையில், அமைதி, நட்புறவு, மானுட
நேயம், சகிப்புத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்தலும் விரிவுபடுத்தலும். தென்னாபிரிக்காவிலுள்ள ஒரு சமூகம் அல்லது சமூகங்களுக்கான பண்பாட்டுக் கழகம் அல்லது பிறகழகம் அல்லது கழகங்களை உருவாக்குதலை அல்லது நாட்டின் சட்ட வரம்பினுக்கிசைவானபடி அங்கீகரித்தலைப் பரிந்துரை செய்தல்.
பண்பாட்டு, மத மற்றும் மொழிச் சமூகங்களின் உரிமைகள் சம்பந்தமான விவகாரங்களைக் கண்காணித்தல், விசாரித்தல்,

ஆய்வு நடத்தல், கற்பித்தல், ஆதரவு தேடல், ஆலோசனை கூறல் மற்றும் அறிக்கை செய்தல் உட்பட்ட அதன் முதன்மை நோக்கங்களை அடைவதற்குத் தேவையான அதிகாரத்தினை, நாட்டின் சட்டத்தால் வரையறை செய்யப்பட்டவாறு ஆணைக்குழு கொண்டிருக்கும்.
3. ஆணைக்குழுவானது தன் அதிகாரங்கள், செயற்பாடுகள் ஆகியவற்றுள் அடங்கும். எந்த விவகாரத்தையும் விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடலாம்.
4. நாட்டின் சட்டங்களால் கட்டளையிடப்பட்ட மேலதிக அதிகாரங்களையும் செயற்பாடுகளையும் ஆணைக்குழு கொண்டிருக்கும்.
சிங்கப்பூர்
மத ஒற்றுமையை வளர்ப்பதில் ஐக்கிய மத நிறுவனமாவது சிங்கப்பூரிடமிருந்தும் ஒரு வழிகாட்டிக்குறிப்பினை எடுத்துக் கொள்ள முடியும். இரண்டாண்டுகட்கு முன் மத ஒற்றுமை பற்றிய விதி ஒன்றினை அறிமுகப்படுத்திய சிங்கப்பூர் அது வெற்றிகரமாக அமைந்தமையையுங் கண்டது.
அந்த பிரகடனமானது மத ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அதன் மீதான சிங்கப்பூர் மக்களின் கடப்பாட்டையும் உறுதிசெய்தது. மத ஒற்றுமையைப் பிரதிபலிப்பதற்கும் அதனையடைவதற்கும் என்ன செய்யப்பட வேண்டுமென்பதற்கும் அவர்களுக்கு அது ஒரு ஆதாரமாய் அமைந்தது. எல்லா மதப்பிரிவுகளின் பிரதிநிதிகளையுங் கொண்ட, மதங்களுக்கிடையிலான ஒற்றுமை வட்டம் (IRHC) இப் பிரகடனத்தை உருவாக்கிற்று.
இப்பிரகடனம், பிரசைகள், நிரந்தர வசிப்பாளர், அங்கு வேலை செய்து வாழும் வெளிநாட்டார் என்று சிங்கப்பூரில் வசிப்போர் அனைவருக்கும் உரியது. ஒவ்வொருவருக்கும் இதில் பங்கும் பணியும் உள்ளது என அரசு கூறிற்று.
இதன் ஒரு தொடக்கமாக இப்பிரகடனத்தை ஒவ்வொராண்டும் இன ஒற்றுமை
நாள் (ஜூலை 21) வாரத்தில் சிங்கப்பூர் மக்கள் நினைவுபடுத்திக் கூறுவதை ஊக்குவிக்க அரசு தீர்மானித்தது.
29

Page 22
இப்பிரகடனம் பின்வரும் ஐந்து முக்கிய விழுமியங்களை உறுதிப்படுத்திற்று:
1. நாம் நாட்டின் மதசார்பற்ற தன்மையை அங்கீகரிக்கிறோம். இது சிங்கப்பூர் ஒருபல்லின பன்மத நாடு என்னும் அதேவேளை, எமது சமூகத்தில் எல்லா மதங்களைப் பின்பற்றுவோரும் சமமானவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காகும்.
2. எமது சமூகத்தில் சமூக இசைவுபடுதலை மேம்படுத்துவதற்கான
எமது கடப்பாட்டை நாம் வெளிக்காட்டுகிறோம், அத்துடன்
3. பரஸ்பரம் மற்றவரின் மதசுதந்திரத்தை மதிக்கிறோம்.
4. எமது பல்வகைமையை மதிக்கும் அதேவேளை, எமது பொதுவான தளங்களையும் எப்போதும் வளர்த்துக் கொள்வோம். பரந்த பொதுத் தளமானது எமது தனித்துவ அடையாளங்களை இழப்பதன் மூலம் அடையப்பட வேண்டியதில்லை. சிறப்பான புரிந்துணர்வுடன் இரண்டுமே ஒன்றாக வளர்ச்சிபெற முடியும்.
5. மதங்களுக்கிடையிலான தொடர்புகளை வளர்க்க நாம் முயல்வோம்.
அதிகரித்த தொடர்புகள் முரண்களைக் குறைக்க உதவும்.
இவ்விழுமியங்களைப் பயிலுதல் மூலம் நம்நாட்டில் முரணையும் ஒற்றுமையின்மையையும் உருவாக்குவதற்காக மத துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டாதென்பதை உறுதி செய்வதற்கு சிங்கப்பூர் அரசு திட்டமிட்டது. எல்லா மதங்களும் அமைதி, அன்பு, பரிவில் நம்பிக்கை கொண்டுள்ளன. மதங்களின் பெயரால் கெடுதலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாதிருப்பதை உறுதி செய்ய அரசு விரும்பிற்று.
அவ் வேளையில் இடம் பெற்ற சில சம்பவங்கள், வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கை, நம்பகத்தன்மை மட்டங்களைப் பாதித்திருக்க வேண்டுமென்பதை சிங்கப்பூர் அரசு புரிந்துகொண்டது.
முடிவில், ஒரு விலை கொடுக்காமல் எதுவுமே சாத்தியமில்லை என்பதை வலியுறுத்த வேண்டியிருந்தது. மத ஒற்றுமையை அடைவதும் இதற்கு விதிவிலக்கன்று. மத ஒற்றுமைக்கான எம் அர்ப்பணிப்பின் விசுவாசம் பற்றிய உண்மையான பரிசோதனை, அதற்கான விலையைக் கொடுக்க முன்வரும் எமது விருப்பேயாகும்.

ஜனநாயகம் ஃபாஸிஸமாக வீழ்ச்சியடைந்து விடுவதைத் தடுக்க விரும்பும் மத சமூகம் ஒவ்வொன்றும் மத ஒற்றுமையில் ஒருங்கிணைந்து கொள்ள வேண்டும் என்பதுடன் எமது மதங்களுக்கிடையேயான இசைவுத் தன்மையை மேம்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்களையும் திருத்தங்களையும் ஏற்றுக் கொள்ளச் சித்தமாகவும் இருக்க வேண்டும்.

Page 23
அத்தியாயம் 7
கண்டிய உடன்படிக்கையும் அதன் பிறகும்
கண்டிய உடன்படிக்கை என்பது, தமது அரசுக்குத் துரோகமிழைத்துவிட்டு கண்டி ராஜ்யத்தை பிரிட்டிஷ்காரரிடம் ஒப்புவித்த கண்டிப் பிரதானிகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குமிடையில் உருவான உடன்பாடாகும். எனினும் கண்டிய உடன்படிக்கை முழுநாட்டிற்குமன்றிக் கண்டி மாகாணத்திற்கு மாத்திரமே பிரயோகிக்கப்படவேண்டுமென வற்புறுத்தப்பட்டது.
அரசியலமைப்பில் பெளத்தத்திற்கு விசேட இடம் கொடுபட வேண்டுமென்ற வாதத்தில் கண்டிய "உடன்படிக்கை * அடிக்கடி மேற்கோள்காட்டப்பட்டு வந்தது. உடன்படிக்கையின் 5ம் சரத்து கூறுவதாவது: இம்மாகாணங்களில் பிரதானிகளாலும், வசிப்போராலும் பின்பற்றப்படும் பொது மதம் (பெளத்தம்) மீறப்படமுடியாததென்பதுடன் அதன் சடங்குகள், குருமார், மற்றும் வழிபாட்டிடங்கள் யாவும் பராமரிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். எப்படியாயினும் உடன்படிக்கையின் சரத்து 5, 1818 பிரகடனத்தில் விலக்கப்பட்டு அதற்குப் பதில் இடம்பெற்ற சரத்து 16 கூறுவதாவது: பெளத்த மதக் குருமாருக்கும், எல்லா விழாக்கள் ஊர்வலங்களுக்கும் முன்னர் அளிக்கப்பட்ட மரியாதை தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும்; அதேவேளை மற்ற எல்லோரும் தாம்தாம் பின்பற்றும் மதத்தினை அமைதியான முறையில் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கோ, உரிய இடங்களில் வழிபாட்டிடங்களை அதிகெளரவமிக்கவரிடம் உரிய அநுமதிபெற்று அமைப்பதற்கோ அரசுப் பாதுகாப்பு மறுக்கப்படும் என எவ்விதத்திலும் பொருள் கொள்ளப்படலாகாது.
உடன்படிக்கையின் இந்த சரத்துக்கு வெவ்வேறு வியாக்கியானங்கள் கொடுக்கபட்டன. குடியேற்ற நாட்டு அலுவலகத்தின் சட்ட ஆலோசகள் ஸேர், ஜேம்ஸ் ஸரீட்பன், பிரிட்டிஷ் அரசின் வியாக்கியானம் இவ்வாறெனக் குறிப்பிட்டார்:
'கண்டி அரசனின் மதக்கடமையையும் மதஇயல்பையும் 3ம் ஜோர்ஜ் மன்னர் தொடரவேண்டுமெனவும் கிறிஸ்தவ மதத்தின் காவலன் அதேரீதியில் பெளத்த மத காவலனாய் ஆகவேண்டுமெனவும் உடன்படிக்கை
(22) ஆவணக் காப்பகத்தில் உள்ளது, சட்ட அமுலாக்கல் VI XX அத்தியாயம் 873யையும்
பார்க்க
32.

கருதவுமில்லை; கருதவுமியலாது. ஒப்பந்தம் கருதுவதெல்லாம் (அது இதையே கருதுகிறதென நாட்டின் பிரசை ஒவ்வொருவரும் அறிந்திருந்தார்கள்.) நீங்கள் உங்கள் மதசார்பற்ற அரசுரிமையை பெரிய பிரித்தானியாவிடம் ஒப் புவித் தாலி , உங்கள் மதத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாமென்பதுதான்.
உடன்படிக்கையின் சரத்து 5ன் அமுலாக்கல் சாத்தியம் பற்றித் தீர்மானிப்பதற்கு நீதிமன்றம் கோரப்பட்டபோது எடுக்கப்பட்ட ஒரே முடிவு பஸ்நாயக்க நிலமே எதிர் A.G ஸ்தான். )ே முறைப்பாட்டாளர் ஒரு தேவாலயத்தின் பொறுப்பாளர். 1912 ல் அவர் ஒரு ஊர்வலம் (பெரஹர) நடத்த விரும்பி அரசாங்க அதிபரிடம் அநுமதிக்கு விண்ணப்பித்தார். தெருவோரத்திலிருந்த ‘ஒரு முஸ்லிம் மசூதியின் இருபக்கங்களிரும் 100 யாருக்கு முற்று முழுதான நிசப்பதம் பேணப்பட வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் அநுமதி வழங்கப்பட்டது.
நிபந்தனையை எதிர்த்து முறைப்பாட்டாளர் கண்டி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். நீதிவான், முறைப்பாட்டாளரின் கோரிக்கையை ஏற்று, "உடன்படிக்கையானது கட்டுப்படுத்துவதும் மாற்றமுடியாததுமான ஒரு சட்டத்தைக் கொண்டுள்ளது, எனக் கூறினார். சட்டமா அதிபர் மேன் முறையீடு செய்தார். காலனி நாடுகள் மற்றும் இங்கிலாந்தின் தீர்ப்புகள் பலவற்றை ஆராய்ந்தபின், மேன்முறையீட்டினை விசாரித்த நீதிமன்றம், ஊர்வலங்களின் அநுமதிகள் சம்பந்தப்பட்ட பொலிஸ் சட்டத்தின் விதிகள் எந்த விதத்திலும் கண்டிய உடன்படிக்கைக்கு முரணானவையல்லவென்றும், மாவட்ட நீதிமன்றமோ அல்லது மேன்முறையீட்டினை விசாரித்த நீதிமன்றமோ இந்தச் சட்டங்களுக் கெதிராக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த நியாயாதிக்கம் கொண்டிருக்கவில்லை என ஏகமனதாக முடிவு செய்தது.
1972ன் அரசியலமைப்பு அடிப்படை உரிமைகள் பற்றிய ஒரு அத்தியாயத்தைக் கொண்டிருந்தது. ஆனால் மீறல்கள் பற்றிய மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான முறைமைகள் பற்றி எதுவும் அதிலிருக்கவில்லை. எப்படியாயிருப்பினும் 1978 அரசியலமைப்பில் மீறல்கள் பற்றிய மனுக்களானவை, குற்றஞ் சாட்டப்பட்ட மீறல். அது இடம்பெற்ற ஒரு மாதத்திற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்ற சரத்து 126 ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் சரிசெய்யப்பட்டது. நீதிமன்றத்திற்கு செல்வதற்கு இந்திய அரசியலமைப்பு ஒரு கால எல்லையை நிர்ணயிக்கவில்லை. நியாயமான ஒரு கால எல்லைக்குள் மனு தாக்கல் செய்யப்பட வேண்டுமென்பதுடன் உயர்நீதிமன்றுக்கும் அதேவேளை நியாயாதிக்கம் இருந்தது.
(23) 18 NLR 193
33

Page 24
உரிய முறையிலான உரிமைக் கோரிக்கையைக் கொண்ட அரசியலமைப்புக்கு ஒரு அவசரதேவை உண்டு. அரசியல் கட்சிகளின் நோக்கங்கட்கு ஏற்றவாறுதான் இலங்கையில் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
ஏனைய மதங்களுக்கு மதச்சுதந்திரம் கொடுக்காமல், அதேவேளை குறிப்பிட்ட மதமொன்றிற்கு மட்டும் முதன்மை இடம் கொடுப்பதற்கான சரத்துக்களை அரசியலமைப்பின் மூலம் அளிப்பது மட்டுமே சரியான நடைமுறையில் மதச்சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விடாது. பாரபட்சமில்லாத வகையில் மதச்சுதந்திரம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சமத்துவத்திற்கான உரிமையை உறுதிப்படுத்துவதான திடமுயற்சி அரசிடம் இருந்தாக வேண்டும்.
பெரும்பான்மை மக்கள் இந்துக்களாயும் முஸ்லிம்களாயுமிருக்கும் வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஒரு புது அரசியலமைப்பின் மூலம் பிராந்திய சபைகள் அமைக்கப்படுகையில் அவை பெளத்தத்திற்கு முதன்மை இடம் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது. பெளத்த, இந்து, இஸ்லாமிய மதங்களை வளர்பதற்கேற்ற விசேட அமைச்சுக்களை அமைத்திருப்பது இலங்கையில் மட்டுமாய்த்தான் இருக்கும். எனவே, பெளதத்திற்கும் கலாசார் அலுவல்களுக்கும் ஒரு அமைச்சு, இந்து மதத்திற்கொரு அமைச்சு, முஸ்லிம் விவகாரங்க்ளுக்கும், கிறிஸ்தவ விவகாரங்களுக்கும் ஒரு அமைச்சு என்பவற்றை நாம் காண்கிறோம். இந்த அமைச்சுக்களை நிறுவவும் பராமரிக்கவும் வரியிறுப்பாளர்களின் பணம் பயன்படுத்தப்படுகிறதென்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். முற்றுமுழுதும் மதநோக்கங்களுக்காக வென்று அரசிடம் இருந்து பொது நிதிகளை தமக்குப் பெற்றுக் கொள்வதற்காக மதச்சிறுபான்மைக் குழுக்களால் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எம்மதத்தையாவது வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்குமென அமைச்சுக்கள் அவசியமா என ஒருவர் கேட்கலாம். மதத்திற்கு அரசின் ஆதரவோ பாதுகாப்போ அவசியமில்லை. பதற்றங்கள், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக ஒரு அமைச்சினால் அதிக பணம் செலவிடப் படும்போது 6JsiLL6).T.D. அரசின் தலையீடும், ஆதரவுமின்றி மதப்பிரிவுகள் தத்தம் விஷயங்களைத் தாமே நிர்வகிக்க முடியும். உண்மையில் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் பொதுச் சொத்தில் கட்டபடக் கூடாது.
எல்லா மதங்களையும் ஒருவர் சமமாக நடத்த வேண்டுமெனில், வெவ்வேறு மதங்களை மேம்படுத்தவும் வளர்க்கவுமென அவற்றின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்றவாறு, அவை தத்தம் விவகாரங்களை அரசுத் தலையீடு அல்லது போஷிப்பு இன்றிக் கவனித்துக் கொள்ளத்தக்கதாக மத அமைப்புக்களுக்கு அரசு நிதியுதவிகளை வழங்க முடியுமெனில் அது
34

விரும்பத்தக்கது. மதம், அரசியல் ஆதாயத்திற்காகப் LJuj66, JG55t. IUL6)T85 Tg5). மதத்தை அரசியல் நோக்கங்கட்காகப் பயன்படுத்துவது, ஜப்பான் மற்றும் மியான்மார் அரசியல் அமைப்புக்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் குழுவில் கேள்விக்குள்ளாக்கபட்டமை:
அக்டோபர் 1983ல் இலங்கை பற்றிய அறிக்கை மீதான ஆய்வொன்றின்றோது பேராசிரியர் திமித்ரிஜெவிக், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவிடம், எவ்வாறு சர்வதேச உடன்படிக்கைகளை மீறி இலங்கை அரசு பெளத்தத்திற்கு மேலாண்மை அளிக்க இயலும் என வினவினார் என்பதைக் கருத்திற் கொள்வது சுவையானது. ஐக்கிய நாடுகள் பதிவேட்டிலிருந்து இங்கே தரப்படும் அவர் கருத்துக்கள் வருமாறு:
(1980ல் அரசியல், குடியியல் உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசினால் உறுதிப்படுத்தப் பட்ட) உடன்படிக்கையின் 26 சரத்து சம்பந்தமாக எவ்வாறு ஒரு பன்மத, பல்லின, பன்மொழி நாடான இலங்கையின் அரசியலமைப்பு பெளத்தத்திற்கு மேலாண்மை கொடுத்துக் கொண்டு அதே வேளையில் ஏனைய எல்லா மதங்களையும் பாதுகாப்பது இயலும் என அவர் வினவினார். அதேபோல அரசகரும மொழி LD sö g3 Lf5 தேசிய மொழி என்பவற்றிற்கிடையிலான வேறுபாடுபற்றியும் அவர் வியப்புற்று, இரண்டு மொழிகளை அறிந்திருக்க வேண்டிய அவசியமானது, சனத்தொகையில் பெருமளவானோர்க்கு அரச சேவையில் சேர்வது அல்லது பல்கலைக்கழக
அநுமதி போன்றவற்றிற்கு ஒரு தடையாக அமையாதா எனவும் வினவினார். (24)
திரும்பவும் அதேகேள்வி மனித உரிமைகள் குழுவிற் கேட்கப்பட்டதால், அரசின் பிரதிநிதி யொருவர், 1815 ன் கண்டிய உடன்படிக்கையின்படி அரசு பெளத்தத்தைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் வேண்டியுள்ளதென்றும் பெளத்தத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டியுள்தென்றும் கூறினார். எப்படியெனினும் இது கடந்தகால சரித்திரம். இப்போது நாம் ஒரு பன்மைச் சமூகத்தை கொண்ட சுதந்திர தேசம். அரசு, சர்வதேச உடன்படிக்கைகளை குறிப்பாக அரசியல் மற்றும் குடியியல் உரிமைகள் பற்றிய உடன்படிக்கையை ஜூன் 1980 ல் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்திய பின்னர் மீறுதல் கூடாது. அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச உடன்படிக்கைகளை அநுசரித்து, அரசு எந்த ஒரு மதத்திற்கும் முன்னுரிமை கொடுத்து நடத்தலாகாது.
(24) மனித உரிமைகள் குழுவின் அறிக்கை 1983.
35

Page 25
அத்தியாயம் 8
கலாநிதி J.G.L. குறெயின் மேலதிக அவதானிப்புகள்:
காலத்திற்குக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் யாப்புகள் பற்றி கலாநிதி J.G.L. குறே ஆண்டுக் கணக்காகவே ஆழ்ந்த அக்கறை காட்டிவந்தார். சுதந்திரத்திற்கு முன்பு கூட அவர் உரிமைகள் பற்றிய வரைவிற்காக வாதங்களை முன்னெடுத்தார். அவர் பிரசுரங்களும் எழுத்துக்களும் அரசியலமைப்புத் தத்துவங்கள் பற்றிய முழுமையான அறிவினை மட்டுமன்றி அதிகார துஷ்பிரயோகங்களுக்கெதிராக எடுக்கப்படக்கூடிய பாதுகாப்புகளின் அவசியம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் ஆகியவற்றையும் வெளிப்படுத்தின. ஒரு சுதந்திரமான நீதி நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தலுக்கான செயன்முறைப் பரிகாரங்களைக் கொண்டிருக்கக் கூடிய உத்தரவாதப் படுத்தப்பட்ட உரிமைகள் பற்றிய அரசியல் யாப்பு &FL 6160J6), பல்லின, பன்மத சமூகமொன்றின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் கணிசமான அளவு உதவக்கூடியதென்ற கருத்தை முதலில் வெளியிட்டவர் கலாநிதி குறே.
1943 ல் சுதந்திர இலங்கைக்கான யாப்பு வரைவொன்றினை ஆக்குமாறு கலாநிதி குறே தேசிய கொங்கிரஸால் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஜனநாயக, மதசார்பற்ற அரசு அமைப்பொன்றினையும், நீதியான அடிப்படை உரிமைகளை உள்ளடக்கிய சட்ட வரைவொன்றையும் கொண்டிருந்த இந்த வரைவு அரசியலமைப்பு கொங்கிரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் மந்திரிசபைக்கு அரசியலமைப்பு விவகாரங்களில் உத்தியோகப்பற்றற்ற ஆலோசகராகவிருந்த ஸேர் ஐவர் ஜென்னிங்ஸ், உரிமைகள் பற்றிய சட்ட வரைவினை அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 'எம்மிடம் பிரிட்டனில் உரிமைகள் பற்றிய சட்டவரைவுகள் இல்லை," என அவர் எழுதினார்.
சட்டவாக்கத்தில் வெறுமனே பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவதற்கப்பால் எல்லாப் பிரசைகளுக்கும் சொந்தமான உரிமைகள் காக்கப்பட்டாலன்றி, பெரும்பான்மை ஆட்சிக்கு இடமளிக்கும் ஒரு அரசியலமைப்பு ஜனநாயகப் பண்புடையது எனக் கூறவியலாது,' என கலாநிதி குறே வாதிட்டார். மனித உரிமைகள் பற்றிய கருதுகோளானது மனிதனின் மதம் மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியங்களின் ஓர் அம்சம். மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் மூலங்களைக் கொண்டிருந்த உலக மதங்கள் மற்றும் புராதன
36

தத்துவங்களினடியாய் இவை உருவாகின. அவ்வாறான உரிமைகள் மற்றும் நீதிமன்ற வாதமானது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாலும் அநீதியாலும் பாதிக்கப்பட்டு வருந்தும் ஒருவருக்குப் பரிகாரத்தை உத்தரவாதமளிக்கப் போதுமானவையென அவர் வலியுறுத்தினார்.
சட்டப்பரிகாரத்திற்கு மேலதிகமாக சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கமைவாக அமைக்கப்பட்ட சுதந்திர அதிகார அமைப்புக்களினாலும் இப்படியான ஒருவருக்கு செலவற்ற, முறைப்படியமையாத உடனடிப் பரிகாரத்தையும் அவர் முன்வைத்து வாதாடினார். புதிய அரசியலமைப்பு தேசிய கருத்தொருமைப்பாட்டில் அமைந்தாலும் எல்லா மக்களினதும் பிரதிநிதிகளால் வரையப்பட்டதாயும் இருக்க வேண்டும். ஏற்கனவேயுள்ள சட்ட, அரசியலமைப்பானது போதுமானதல்லதாக அல்லது செயற்படவியலாததாக ஆகிவிடக்கூடிய ஒரு சீரற்ற நிர்வாகத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஒருவருக்குப் பரிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக சுதந்திர அமைப்பொன்றினை நிறுவவேண்டிய அவசிய தேவையொன்று நாட்டிலிருந்தது. குறைகேள் அதிகாரி ஒருவர்க்கான (Ombudsman) அவசியம் பற்றி வலியுறுத்துகையில் ஒரே விதமான மக்களைக் கொண்டுள்ள நாடுகளிலும் பார்க்க, ஆசிய பிராந்தியத்திலுள்ள கலப்பு சமூகங்களில் இம்முறைப்பாடுகள் மிகவுந் தீவிரமான தன்மையைப் பெற்று விடுமென அவர் குறிப்பிட்டார். முறைப்பாடுகள் நேரடியாக குறைகேள் அதிகாரியைச் சென்றடையக் கூடிய வழியொன்றைப் பெற்றிருத்தல் வேண்டுமெனவும் அவர் கருதினார்.
மத மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஏனைய நாடுகளின் பதில் விளைவுகள், ரஷ்யா, ஃபிஜி போன்ற நாடுகளிற் கூட மனமாற்றத்தைக் குறிக்கின்றன."
ரஷ்யாவில் மத சுதந்திரத்தில் கடும் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியிருக்கக் கூடியதும், அமெரிக்காவாலும் பாப்பரசர் 2 ஆம் அருளப்பர் சின்னப்பராலும் எதிர்க்கப்பட்டதுமான ஒரு சர்ச்சைக்குரிய சட்ட வரைவினை ஜனாதிபதி பொறிஸ் யெல்ற்ஸலின், ஜூலை 1997 ல் நிராகரித்தார். கிரெம்ளினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், பிரசையொருவருக்கு அரசியலமைப்பு அளித்துள்ள உரிமைகள் சுதந்திரங்களை, "மனச்சான்று மத ஒன்று கூடல் சுதந்திரம் பற்றிய சட்ட வரைவின் பல சரத்துக்கள் மீறுவதன் மூலம் அது எல்லா மதங்களுக்கும் சமத்துவத்தை உத்தரவாதப் படுத்தும் ரஷ்ய அரசியலமைப்புக்கு முரணாகறது என்பதால் அதில் தாம் ஒப்பமிடுவதில்லையெனத் தயக்கத்தோடு தீர்மானித்ததாக யெல்ற்ஸின் கூறினார்.
(25) டெய்லி நியூஸ் 27 பெப்ரவரி 1997
37

Page 26
அத்தியாயம் 9
இலங்கையில் பெரும்பான்மை வாதம் வலிவுறுத்தப்படல்
‘சுதந்திரம் பெற்றதிலிருந்தே பெரும்பான்மை சமூகத்தின் மொழிக்கும் மதத்திற்கும் முதன்மை கொடுக்கப்படுகிற பெரும்பான்மை வாதம் படிப்படியாக வலிவுறுத்தப்பட்டதானது, இனப் பதற்றங்களை வளர்த்து உண்மையான பல்லின, பன்மத பன்மைத்துவ சமூகம் என்ற கருதுகோளுக்கும் குழிபறித்தது.'
அரசகரும மொழிச் சட்டம், அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கும் பெளத்தத்திற்கும் உயர்ந்த இடங் கொடுத்த முதலாவது குடியரசு யாப்பு 1972 ல் அறிமுகப்படுத்தப்பட்டமை ஆகியன, நாடு பிளவு நோக்கிச் சரிந்தமையில் குறிப்பிடத்தக்க கட்டங்களாகும்.
நாட்டின் சிறுபான்மையினரின் குறைகளைக் கவனத்திலெடுத்திருக்க வேண்டிய வரைவு அரசியலமைப்பின் பிற்போக்கான அம்சம் என்னவெனில், சுயாட்சியின் தேவை என்கிற அவர்களின் தேவையொன்றினைக் கவனத்திற்கு எடுத்த வேளையில் அது பெரும்பான்மை வாதத்தை மேலும் பலப்படுத்தியமையாகும்.
பெளத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் சட்டவாசகம் பேணப்பட்டதுடன் நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டு விட முடியாததும் எல்லா அரசாங்கங்களும் கலந்தாலோசிக் வேண்டியதுமான, அரசியலைமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அமைப்பினை நிறுவியதன் மூலம் அதற்கப்பாலும் சென்றது. இந்த அதியுயர் சபையானது அரசியலை மதமயமாக்குவதை மட்டுமன்றி, மதத்தை அரசியல் மயமாக்குவதையும் வளர்க்கும். w
அரசு அநேகமாக துறவிகளையே இச்சபைக்கு நியமிக்கும். புத்த சாசனத்தைப் பாதுகாப்பது, வளர்ப்பது சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் இச்சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும். இச் சொற்றொடரின் வரைவிலக்கணம் யாது? சுற்றுலா, மதுபான அநுமதி, உள்நாட்டு மீன்பிடி, இன உறவுகள், ஏனைய மதங்களைச் சார்ந்தோரின் உரிமை ஆகியவற்றையும் அது உள்ளடக்குகிறதா?
போலந்தின் றோமன் கத்தோலிக்க திருச்சபையோ, பாகிஸ்தானின் இஸ்லாமிய மதகுருமாரோ அல்லது இலங்கையிலுள்ள பெளத்த சங்கமோ, எதுவெனினும்
38

மத அமைப்புக்களை அரசியல் அமைப்புக்களிலிருந்து பிரிப்பதே ஒரு நவீன, தாராளவாத ஜனநாயகத்திற்கு அவசியமானது. ° குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க அரசு விரும்பினால், நாம் சோல்பரி யாப்பின் 29ம் சரத்திற்குத் திரும் பிச் செல்ல வேண்டும் அல்லது அரசியலமைப் பரினை மதச்சார்பற்றதாக்குவதற்கேற்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
ஆங்கில மொழியைப் புறந்தள்ளல்:
மதசார்பற்ற அரசொன்றுடன் மொழிபற்றிய வினா தொடர்புடையது. அநேகமாக ஒரு பன்மைத்துவ சமூகத்திலேயே அரசியலமைப்பு மதசுதந்திரத்திற்கான உரிமையை உறுதிப் படுத்துவதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்ற உண்மையையும் ஏற்றுக் கொள்கிறது. இயல்பான ஒழுங்கு மற்றும் இயல்பான நீதி என்ற கொள்கைகளை மதசார்பின்மை குறிக்கின்றது. மதம் மற்றும் மொழி ஆகியவற்றைப் பொறுத்தளவில் எல்லோரும் சமமென்பதை இக்கொள்கைகள் வேண்டி நிற்கின்றன. இந்த சூழலமைவில் நோக்கும் போது இலங்கை ஆங்கிலப் பயன்பாட்டைப் புறந்தள்ளியதால் ஏற்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதும் பொருத்தமாகிறது.
அரச நிர்வாகத்தைச் சிங்களத்தில் நடத்தியமையுடன் சேர்த்து சுயபாஷைக் கல்வியையும் அறிமுகப் படுத்தியமையின் விளைவு, பிரிட்டிஷ் பொதுநலவாய அமைப்பிலேயே ஆங்கிலக் கல்வியில் சிறந்ததாகப் பரவலாகக் கருதப்பட்டுவந்த ஒரு கல்வியமைப்பைச் சிதைத்தமையாக அமைந்தது.
அதன் பயனாய் சிங்களத்திலும் தமிழிலும் கல்வி கற்ற இளைஞர்களுக்கு அரசாங்க துறைக்கு வெளியே வேலைவாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிட்டின. இது, நாட்டின் தெற்கில் பயங்கரவாதங்களையும், வடக்கில் ஒரு உள்நாட்டு யுத்தத்தையும் தோற்றுவித்தது. மேலும் ஒரு பொதுவான கல்விமொழியின்மை காரணமாக வெவ்வேறு இனங்களிடையே தொடர்பு இடைவெளியையும் அது உருவாக்கிற்று.
"ஆங்கிலக் கல்வியின்மையால் புதிய தொழில் நுட்பங்களுக்கான வழிகளைப் பெறவும் வெளிநாடுகளில் கல்வியைத் தொடரவும் வாய்ப்பின்றிப் போனமையால், தென்கிழக்காசிய நாடுகளில் தெளிவாகத் தெரிகிற பூகோளமயமாக்கல், தொழில் நுட்பப் புரட்சி இவற்றின் செயற்பாடு இலங்கைச் சமுதாயத்தில்
26) மனித உரிமைகள் குழுவின் அறிக்கை 1983
39

Page 27
மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தையே கொண்டுள்ளது. எல்லாத் தரப்பு இளைஞர்களிடையேயும் இன்றுள்ள அவசியமான தேவை, உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் தொழில்வாய்ப்புக்களைத் தேடித் தரக்கூடியதான நல்லதொரு ஆங்கிலக் கல்விக்கானது.
அத்துடன் மதசார்பற்ற அரசொன்றில் சமூகத்தின் எல்லாத் தரப்பினர்க்கும் சமவாய்ப்பளிக்கும் சமூக நீதிக்கான தேவையுமுள்ளது. கடந்த காலத்திலிருந்தது போல மக்களிடையே தொடர்புகளையும் நல்ல புரிந்துணர்வையும் மேம்படுத்துவதால் சமூகங்களுக்கிடையிலான இணைப்புக் கண்ணியாகவும் ஆங்கிலக் கல்வி அமையும் தேவையெனில் வெளிநாடுகளிலிருந்து ஆங்கில ஆசிரியர்களை அழைத்தென்றாலும், நாட்டின் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆங்கில மூலமான கல்விக்கான வசதிகளை அளிப்பதே வெளிப்படையான தீர்வாகும். கடந்த காலத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் செய்தது போல மக்களைப் பிரிக்காமல், இது எல்லா இன மக்களையும் இணைப்பதில் ஒரு கிரியா ஊக்கியாக அமையும்.?
சிங்களத்திலும் தமிழிலும் கல்வியைத் தொடர விரும்புவோர் அவ்வாறு தொடரலாம். எப்படியிருப்பினும் சர்வதேச பாடசாலைகட்கு அனுமதி பெறுவதாலும் ஆங்கிலக் கல்வியைப் பெறும் வாய்ப்புப் பெற்றுள்ள பணக்காரப் பிள்ளைகள் என்ற சலுகைபடைத்த வர்க்கமொன்றை இல்லாததாக்க வேண்டியுள்ளது.
ஆங்கிலக் கல்வியை மீள் அறிமுகஞ் செய்தலென்பது சிங்கள, தமிழ், பண்பாடுகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென்று கருதுவது ஒரு போலி வாதமாகும். இந்த விஷயத்தில் அவசியமானதென்னவெனில், சுதந்திரத்திலிருந்தே பெருமளவு காணப்படும் அம்மொழிகளிலான இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்விக்கான போதிய வசதிகளுக்கு மேலதிகமாக அரசு ஆதரவை வழங்குவதாகும். சுயபாஷைக் கல்விக்கான முழு அர்ப்பணிப்பிற்கு முன்னரே, இந்நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே, சிங்களக் கலாசாரமானது, ஒரு உயர்மட்ட முதிர்ச்சியைக் கண்டு விட்டது. இன்றுவரையில் சிங்களக் கலாசாரத்தின் முன்னணியிலிருக்கும் பலர் தமது கல்வியை ஆங்கிலம் மூலமே பெற்றனர்.
இந்தியா, எவ்வாறாயினும் நிர்வாக நோக்கங்கட்காக ஆங்கிலத்தின் பயன்பாட்டைத் தொடர்ந்து வைத்துக் கொண்டதன் மூலம் மொழிப்பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு
(27) V. S. நடராஜாவின் கட்டுரை, ஐலண்ட், 1 மார்ச் 1998
40

சரத்து 343, 'அரசியலமைப்பு தொடங்குவதிலிருந்து 15 ஆண்டு காலத்திற்கு இந்திய யூனியனின் அரசகரும மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டுமெனக் கூறிற்று. 15 ஆண்டுகளின் பின்னரும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம், மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் எல்லா செயற்பாடுகளும், நாடாளுமன்றத்தின் சட்ட வரைவுகளும் சட்டங்களும், விதிகளும் ஆங்கிலத்திலேயே உள்ளன.
ஆங்கிலத்தின் பயன்பாடு தொடர்பாக இணைப்பு மொழி’ என்ற பிரயோகம் எவ்விடத்திலும் வரையறை செய்யப்படவில்லை. அது தெளிவின்றி இருப்பதுடன், ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேசப் பொது மொழியொன்றின் மூலம் எல்லா இனப் பிரிவுகளையும் ஒன்றாக்குவதாக அது இருக்கலாமெனினும் உண்மையில் அதன் பொருள் என்னவென்பது எவருக்குந் தெரியாது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இந்திமொழியுடனும் வங்காள மொழியுடனும் ஆங்கிலம் ஒரு அரசகரும மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமைக்கான இரண்டாவது தீர்வு விதி என்னவெனில் நாட்டின் ஒவ்வொரு பிரசைக்கும் சமவாய்ப்பிற்கான உத்தரவாதமளிக்கபடுவதன் அவசியமாகும். பாரபட்சத்திற்கு எதிரான சட்டத்தின் மூலம் சமவாய்ப்பினை நிறுவனப்படுத்திக் கொள்வதனால் இதை அடையலாம். அரசாங்கத் துறை வேலைகளில் சமவாய்ப்பிற்கான உரிமை, இந்திய அரசியலமைப்பிலிருப்பது போல ஒரு குறிப்பான அடிப்படை உரிமையாக ஆக்கப்பட வேண்டும். தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கும், ஒற்றுமையான தேசமொன்றிற்கான அதிகரித்த ஆதரவொன்றினைத் தூண்டுவதற்கும் இதுதான் அடிப்படையாக அமைய இயலும்.
41

Page 28
அத்தியாயம் 10
சிறுபான்மையினரைப் பாதுகாப்பது சமாதானத்திற்கு இன்றியமையாதது:
மதசார்பற்ற அரசொன்று சமாதானத்திற்குத் தேவை:
மதசார்பற்ற அரசொன்று ஆண்டவனற்ற அரசல்ல என்றார் அதிமேற்றிராணியார் டெஸ்மன்ட் டுட்டு.
மதசார்பற்ற ஒரு அரசென்பது, மதமற்ற அரசென்றோ, நாஸ்திக அரசென்றோ பொருள் தராது. இது கருதுவதெல்லாம், மத விவகாரங்களில் அரசு நடுநிலையாயிருக்கும் என்பதனையே. மதத்தில் தவையிடாமை என்பது, மத உரிமைகள் தத்துவங்கள் சம்பந்தப்பட்ட சச்சரவுகளைப் பொறுத்தளவில் நியாயப்படுத்த முனையாமை என்பதாகும். இந்தியா அறுபது கோடிக்கும் அதிகமாக இந்துக்களைக் கொண்டிருந்துங்கூட மதசார்பற்ற ஒரு நாடாக இருப்பதுடன், இந்திய அரசியலமைப்பு இந்து மதத்திற்கு ஒரு முதன்மை இடம் கொடுக்கவில்லை. அண்மைக் காலங்களில் தம் மதசார்பற்ற தன்மைக்கெதிரான தீவிர தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாகத் தாக்குப்பிடித்துள்ளது. இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய அண்மைய கட்டுரையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மதசுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்கும் பல அரசியலமைப்புகளின் சரத்துக்களை ஒருவர் ஆராய்வார் என்றால் சமாதானத்திற்கு மதசார்பற்ற ஒரு அரசு அவசியமாகிறது. பெரும்பான்மையினரின் மதத்தைச் சாராதோர் தம் சொந்த நாட்டிலேயே தாம் இரண்டாந்தரப் பிரசைகள் என்றுணரல் ஆகாது.
கிறிஸ்தவர்களின் சனத்தொகை 80 சத வீதம் அதிகமாக இருந்த போதும், புதிய தென்னாப்பிரிக்கா மதசார்பற்ற ஒரு நாடாக இருக்கவேண்டுமென்ற இயக்கத்தை அதிமேற்றிராணியார் டெஸ்மன்ட் டுட்டு முன்னின்று நடத்தினார். 'மதசார்பற்ற அரசு ஆண்டவனற்ற ஒன்றோ, ஒழுக்கமற்ற ஒன்றோ அன்று. அதில் அரசு எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் சாராது ஆகையால் மதமில்லை. எனவே மதசார்பற்ற அரசென்பது எல்லாப் பிரசைகளும் சமமாக நடத்தப்படும் ஒரு தேசத்திற்கு இன்றியமையாததாகும்.' என அவர் குறிப்பிட்டார்.
42

உள்வாங்கல், ஒருமைப்பாடு மற்றும் பன்மைத்துவப் பண்பாடு, இவைதாம் வழியாகத் தெரிகிறது.
பிரான்சின் அரசுப் பாடசாலைகளில் மதசின்னங்களைத் தடை செய்யவும் அலுவலகங்களில் அவற்றைக் கட்டுப்படுத்தவுமென ஒரு சட்டத்தை டிசம்பள் 2003 ல் ஜக்ஸ் வழிராக் முன் மொழிந்தார். பிரெஞ்சுக் கலாசாரந்தான், குறைந்த பட்சம் வெளிப்படையாகவாவது ஒப்புக் கொள்ளப்பட்டுப் பின்பற்றப் படும் என்ற வகையில் ஒருமைப்பாட்டினை மேம்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது. பிரெஞ்சுக் குடியரசு அமைப்பின் கீழ் அவர் இஸ்லாத்தை இரண்டாந் தரத்திற்குத் தள்ளிவிடவில்லை.
தேசியமென்பது இனத்தாலோ பாரம்பரியத்தாலோ பாதிக்கப்படாதது. ஆனால் அது பண்பாட்டு ரீதியானதென்பதால் பழக்கப்படுத்திக் கொள்ளப்படக்கூடியது என்பதே. எப்போதும் பிரான்சின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. பிரான்ஸ், குடியேற்றத்திற்கு மிகவும் திறந்த தன்மை கொண்ட ஒரு நாடு என்பதுடன், உள்வாங்கல், ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்தவும் செய்கிறது.
தடைசெய்ய முயற்சிக்கப்பட்டது என்னவெனில், வேறுபாட்டையும் புறம்பான தன்மையையுங் காட்டும் பளிச்சிட்ட அடையாளங்கள். முஸ்லிம் நங்கையர் தலைக்குட்டைகளையும் பையன்கள் மொட்டைத் தொப்பிகளையும் அணிகையில் நிச்சயமாக இம்மாதிரி ஆகின்றது. பெரிய சிலுவைகளை அணிவதும் தடை செய்யப்பட்டமை, தாக்குதல் முஸ்லிம் சமயத்திற்கும் கலாசார நடவடிக்கைகட்கும் எதிராக மட்டுமல்ல என்பதையும் அது ஒரு பாரபட்சமல்ல என்பதையும் நிரூபிக்கும். முதலில் பிரெஞ்சுப் பிரசையாக இரு என்பதே அறைகூவலாக அமைகிறது. பிரெஞ்சுக் கலாசாரத்தை மேற்கொண்டு அதைப் பொது இடங்களிற் காட்டுங்கள், மத, இன வேறுபாடுகளை வீட்டின் அந்தரங்கத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்.
அதீத பல்வகைப் பண்பாட்டுத் தன்மைக்காகக் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாடு கனடா. அந்நாட்டின் சனத்தொகை எந்தக் குறிப்பிட்ட இன பாரம்பரிய அல்லது பண்பாட்டு அடிப்படயிலானதன்று. கனடிய அரசியலமைப்பு பிரசைகள் தங்கள் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாமென்றும், தம் பாரம்பரியத்தை ஒப்புக் கொண் டு இதற்கு உரியோராயப் மகிழ்வடையலாமென்றும், சட்டத்திற்கு முன் அனைவரும் சமமென்பதையும் உறுதி செய்கிறது. அது, இனரீதியாகப் புறமொதுக்குதல், வெறுப்பு, பாரபட்சம், வன்முறைகள் என்பவற்றை நிராகரிக்கிறது. மொத்த சனத்தொகையான 29,000,000 ல் 13.4 வீதத்தினர் சிறுபான்மையினர்.

Page 29
இந்திய தேசியக் கொடி பற்றிய காந்தியின் கருத்துக்கள் பண்பட்ட, உயர்ந்த ஆளுமையொன்றின் பிரதிபலிப்பே என்பதில் ஐயமில்லை. அது பின்வறுமாறு:
'எந்தத் தேசத்திற்கும் கொடி ஒன்று வேண்டும். இந்தியக் கொடியிலுள்ள வெள்ளைப்பட்டை, இந்துமதம் இஸ்லாம் இரண்டுமல்லாத ஏனைய மதங்களைக் குறிப்பதாகும். இஸ்லாத்தின் நிறம் (பச்சை) அதனைத்தொடர, இந்து மத நிறம் (காவி) கடைசியில் இடம்பெறும். அதாவது, பலமானவர்கள் பலமற்றவர்களைத் காக்க வேண்டுமென்பதைக் காட்டுவதற்காக. அத்துடன் பலமற்றோரும் பலமானவருக்கு சமமென்பதைக் காட்டுவதற்காக மூன்று பட்டைகளும் ஒரே அளவினைக் கொண்டிருக்கும். (காந்தி 1924: 198-99)
இந்துக்களல்லாதோர் காந்தியைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், இந்திய தேசியக் கொடி எவ்வாறு அமைய வெண்டுமென்பது பற்றி அவர் கூறியவை, ஒரு சமத்துவ மனப்பாங்கின் பிரதிபலிப்பேயாகும். அவர் சமத்துவத்தில் காலூன்றிய ஒரு மதக் கூட்டமைப்பாக இந்தியாவைக் கண்டார். எனவே இந்திய தேசியக் கொடி பற்றிய அவரது அறிவுகாட்டும் ஆழ்ந்த கூற்று ஆச்சரியமானதன்று.
ஒரு தீவிரவாதியல்லாதவரான காந்தி பல்பண்பாட்டுத் தன்மையென்பது சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தியோக பூர்வமாக அங்கீகரிப்பதாகும் என்ற வாதத்தினை முன்னெடுத்தார். ஒரு தேசியக் கொடியென்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததென்பது சொல்லத் தேவையில்லை. அப்படியான ஒரு சின்னம் உள்ளடக்கியிருக்க வேண்டிய மிகவும் மதிப்பார்ந்த, உள்ளார்ந்த சமத்துவ நோக்குப் பற்றிய கொள்கையானது பரவலான நோக்கில் அணுகப்படுகையில் கவனம் பெறாது விட்டு விடப்படலாகாது.
பெரும்பான்மையான குழுவொன்று அற்பமானதாகக் கருதும் ஒன்றினை ஏனையோர் அவ்வாறு கருதாது போகலாம். ஏனெனில் இந்த அற்பங்கள்தாம் எண்ணிக்கையில் குறைந்த தன்மைக்கு உகந்த அங்கீகாரங்களாகும் எண்ணந்தான் முக்கியமானது.
பல பாட்டுத் தன்மையானது, வெவ்வேறு சமூகங்களின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உதவுவது. ஒரு ஐக்கிய இலங்கைக்கு அவசியமான ஒவ்வொரு பிரசைக்குமான தேசிய அடையாளத்தையும் உருவாக்கும். வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்குத்தான் தேவை உள்ளது.
அரசியலமைப்பின் மதம் தொடர்பான Iம் அத்தியாயத்தை விட்டுவிடுவது இப்போது அநேகமாக இயலாத தொன்று. எப்படியோ கடந்த 30
44

ஆண்டுகளாக இந்த சரத்து அங்கே இருந்திருக்கிறது. ஒருவர் அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். பெரும் பான்மையாளருக்கு வழங்கப்பட்டதை இப்பொழுது எடுத்து விட இயலாது. அதிகபட்சம் நாம் மியான்மார் மற்றும் அயர்லாந்தின் அரசியலமைப்புகளிலுள்ளது போல் அத்தியாயம் II ல் ஏனைய மதங்களையும் குறிப்பிடுதல் வேண்டும்.
தென்னாப்பிரிக்க அரசியலமைப்பின் முன்னுரை இலங்கைக்கு ஏற்புடையது.
நாம் தென்னாபிரிக்காவின் மக்கள். கட்ந்த கால அநீதிகளை இனங்காண்கிறோம்; எம் மண்ணில் நீதிக்கும் சுதந்திரத்திற்குமாக
வருந்தியவர்களை கெளரவிக்கிறோம். எமது நாட்டைக் கட்டியெழுப்பவும் வளர்க்கவும்
உழைத்தவர்களை மதிப்பதுடன் தென்னாபிரிக்கா அதில் வசிக்கும் எல்லோருக்கும்
உரியது. வேற்றுமையிலும் ஒற்றுமைப்பட்டோம்.
எனவே நாம் சுதந்திரமாகத் தெரிவு செய்யப்பட்ட
எம் பிரதிநிதியளுடாக இந்த அரசியலமைப்பினைக் குடியரசின் அதியுயர் சட்டமாக
ஏற்றுக் கொள்கிறோம், பின்வருவனவற்றிற்காக:
கடந்தகாலப் பிரிவுகளை இல்லாமலாக்கி, ஜனநாயக
விழுமியங்கள், சமூக நீதி மற்றும் அடிப்படை மனித உரிமைகள் ஆகியவற்றிலமைந்த ஒரு சமூகத்தை உருவாக்கவும்;
மக்களின் விருப்பில் உருவான அரசினைக் கொண்டதும் ஒவ்வொரு பிரசையும் சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப் படுவதுமான ஒரு ஜனநாயக மயப்பட்ட, திறந்த தன்மை கொண்ட சமூகத்திற்கு அத்திவாரமிடவும்:
எல்லாப்பிரசைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்
படுத்தவும், ஒவ்வொருவரின் உள்ளார்ந்த
ஆற்றலுக்கு வாய்ப்பளிக்கவும்,
45

Page 30
இறைமை வாய்ந்த ஒரு நாடாக நாடுகளின் குடும்பத்தில்
தனக்குரிய இடத்தைப் பெறக்கூடியதாக ஒரு ஐக்கிய, ஜனநாயக தென்னா பிரிக்காவைக் கட்டியெழுப்பவும்.
1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளின் முன்னுரைக்கும் தென்னாபிரிக்கா
மற்றும் இந்தியாவின் அரசியலமைப்புகளின் முன்னுரைகளுக்குமான வேறுபாட்டைக் கவனியுங்கள்.
46

பின்னிணைப்பு
எல்லா விதமான சகிப்புத் தன்மையின்மைகள் மற்றும் மத அல்லது விசுவாச அடிப்படையில் பாரபட்சம் ஆகியவற்றை இல்லாதொழித்தல் பற்றிய பிரகடனம்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச்சபையானது 1981 நவம்பரில் ஏற்றுக் கொண்டு அறிவித்த எல்லாவிதமான சகிப்புத் தன்மையின்மைகள் மற்றும் மத அல்லது விசுவாச அடிப்படையில் பாரபட்சம் ஆகியவற்ன்ற இல்லாதொழித்தல் பற்றிய பிரகடனத்தில் ஒரு முன்னுரையும் எட்டுச் சரத்துக்களும் உள்ளன.
மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை குறிப்பாக எண்ணம், மனச்சான்று, மதம் அல்லது எந்த நம்பிக்கையாகவிருப்பினும் அவற்றை மதியாமை அல்லது மீறுதல்தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ போர்களையும் மனித குலத்திற்குப் பெருந்துன்பங்களையுங் கொண்டு வந்துள்ளதென்பதை, விசேடமாக வேறுநாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய தலையீட்டுக்கான ஏதுவாகத் தொழிற்படுவதுடன் மக்களிடையேயும் நாடுகளிடையேயும் பகைமையைத் தூண்டவும் காரணமாகிவிடுகின்றன என்பதையும், பிரகடனம் தன் முன்னுரையில் சுட்டிக் காட்டுகிறது.
உலகின் சில பகுதிகளில் இன்னமுங் காணப்படும் சகிப்புத் தன்மையின்மை மற்றும் மத அல்லது விசுவாச அடிப்படையில் பாரபட்சம் ஆகிய பற்றியும் அவ்வாறான தடைகளை அவற்றின் எல்லா வடிவங்களிலும் எல்லா வெளிப்பாடுகளிலும் விரைந்து களைவதற்கும் அத்துடன் மத அல்லது விசுவாச அடிப்படையில் பாரபட்சத்தைத் தடுக்கவும் அதற்கெதிராகப் போராடவும் அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கும் அதனைத் தீர்ப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் அக்கறையையும் பிரகடனம் வெளிப்படுத்துகிறது. எண்ணம், மனச்சான்று மற்றும் மத உரிமை பற்றிய பொதுவான கொள்கைப் பிரகடனத்தின் சரத்து I பின்வருமாறு கூறுகின்றது:
(1) ஒவ்வொருவருக்கும் தமது தேர்வுக்கும் சுதந்திரத்திற்குமுரிய ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையைத் தனியாகவோ அல்லது ஏனையோருடன் இணைந்து சமூகமாகவோ, வெளிப்படையாகவோ அல்லது அந்தரங்கமாகவோ தன் மதம் அல்லது நம்பிக்கையை வழிப்பாட்டில், பின்பற்றலில் மற்றும் போதிப்பதில் வெளிப்படுத்தும் உரிமை உண்டு.
47

Page 31
(2) தான் தேர்ந்தெடுத்த மதத்தை அல்லது நம்பிக்கையைப் பின்பற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் அச்சுறுத்தலுக்கு எவரும் உட்படுத்தப்படலாகாது.
(3) தன் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒருவரின் சுதந்திரமானது. பொதுப்பாதுகாப்பு, ஒழுங்கு ஆரோக்கியம், ஒழுக்கம், அல்லது ஏனையோரின் உரிமைகள் சுதந்திரங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.
சரத்து 2 மதம் அல்லது ஏனைய நம்பிக்கைகளின் அடிப்படையிலான பாரபட்சம் பற்றியது. எவரும் எந்த அரசாலோ, நிறுவனத்தாலோ, ஆட்களின் குழுவாலோ அல்லது நபராலோ, மத மற்றும் நம்பிக்கை அடிப்படையில் எந்தப் பாரபட்சத்திற்கும் உட்படுத்தப்படலாகாது என்பதை சரத்து 2 அதன் 1ம் பந்தியில் கூறுகிறது.
மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாரபட்சம்’ என்கிற கூற்றானது, மத அல்லது நம்பிக்கை அடிப்படையில் எதுவித வேறுபாடு, தவிர்ப்பு, கட்டுப்பாடு அல்லது விருப்புத் தேர்வு என்பதையும் அவற்றின் விளைவாக சமத்துவ அடிப்படையில் மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் அங்கீகரித்தலை அல்லது நடைமுறைப்படுத்தலை இல்லாதொழித்தல் அல்லது ஊறுபடுத்தல் ஆகியவற்றையும் கருதும் என்பதைப் பிரகடனத்தின் நோக்கத்திற்காக அது பந்தி 2 ல் வரையறை செய்கிறது.
சரத்து 3 பிரகடனப்படுத்துவதாவது:
மத அல்லது நம்பிக்கை அடிப்படையில் மனிதர்களுக்கிடையில் பாரபட்சம் காட்டுதல் மனித கெளரவத்திற்கு இழுக்கு என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனத்தின் மீறலென்றும் ஆகுமென்பதுடன் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறலெனக் கண்டிக்கப்பட வேண்டியதும் நாடுகளுக்கிடையிலான சிநேகயூர்வ சமாதான உறவுகளுக்குத் தடையுமாகும்.
சரத்து 4, மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாரபட்சத்தைத்
தடுத்தலிலும் இல்லாதொழித்தலிலும் அரசுகளின் பொறுப்பு பற்றி அறிவிப்பதுடன், பின்வருவனவற்றையுங் கூறுகிறது:
48

(l)
(2)
குடிசார், பொருளியல், அரசியல், சமூக மற்றும் கலாசாரம் சார்ந்த எல்லாத் துறைகளிலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்தல், பின்பற்றல், அநுபவித்தல் ஆகியவற்றில் மத அல்லது நம்பிக்கை அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுதலைத் தடுக்க அல்லது இல்லாதொழிக்க எல்லா அரசுகளும் ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.
எல்லா அரசுகளும் அவ்வாறான பாரபடசத்தைத் தடை செய்வதற்கு வேண்டிய சட்டவாக்கங்களை நடைமுறைப் படுத்தவோ, நீக்கவோ முயல வேண்டும் என்பதுடன் இவ்விஷயத்தில் மத அல்லது நம்பிக்கை அடிப்படையில் சகிப்புத் தன்மையின்மைக்கெதிராகப் போராடுவதற்குப் பொருத்தமான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கவும் வேண்டும்.
சரத்து 5, மத அல்லது நம்பிக்கை தொடர்பாக குழந்தைகளின் உரிமைகளையும், பெற்றோர் பாதுகாவலரின் பொறுப்புகளையும் பின்வரும் விதமாக அறிவிக்கிறது.
(l)
(2)
பிள்ளையின் பெற்றோர் அல்லது நிலைமையைப் பொறுத்து சட்டபூர்வமான பாதுகாவலர்கள் அவர்களின் மதம் அல்லது நம்பிக்கைக்கேற்றவிதமாகவும், எவ்விதமான ஒழுக்கக் கல்வியினூடாகப் பிள்ளை வளர்க்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்தும், குடும்பத்தினுள் வாழ்வை அமைத்துக் கொள்ள உரிமை கொண்டவர்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர் அல்லது நிலைமையைப் பொறுத்து சட்டபூர்வமான பாதுகாவலர்களின் விருப் பங்களுக்கேற்ப, மத அல்லது நம்பிக்கை விஷயங்களிலான கல்வியைப் பெறும் உரிமையைப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதுடன், பிள்ளையின் அதியுயர் நலன் என்பது மட்டுமே கருத்தில் கொள்ளப்படுதலால், பெற்றோர் அல்லது சட்ட பூர்வமான பாதுகாவலரின் விருப்பங்களுக்கு மாறாக மத அல்லது நம்பிக்கை விஷயங்களிலான கல்வியைப்பெறக் கட்டாயப்படுத்தப் tful 6T 85ft gl.
49

Page 32
(3) மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான எவ்வித பாரபட்சத்தினின்றும் பிள்ளை பாதுகாக்கப்பட வேண்டும். புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, மக்களிடையேயான நட்புறவு, அமைதி, சர்வதேச சகோதரத்துவம், ஏனையோரின் மத சுதந்திரத்தின் பாலான மரியாதை மற்றும் தன் சக மனிதர்களின் தேவைக்காகவேதான் தன் சக்தியும் திறன்களும் பயன்படுத்தப்பட வேண்டுமென்ற முழுமையான உணர்வுநிலை போன்ற இயல்புகளுடன் வளர்க்கப்படுதல் வேண்டும். 8
(4) தன் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலரின் பராமரிப்பில் இல்லாத ஒரு பிள்ளையின் விஷயத்தில், பிள்ளையின் அதியுயர் நலன் என்பதன் அடிப்படையில் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மதம் அல்லது நம்பிக்கை உரிய முறையில் கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
(5) இந்தப் பிரகடனத்தின் சரத்து 1, பந்தி 3 கவனத்திற் கொள்ளப்பட்டு, ஒரு பிள்ளை வளர்க்கப்படுகிற மத அல்லது நம்பிக்கை சூழலானது, அப்பிள்ளையின் உடல், உள ஆரோக்கியத்திற்கோ அல்லது அதன் முழுமையான வளர்ச்சிக்கோ பாதகமாயிராதவாறு பார்த்துக் கொள்ளப் படல் வேண்டும்
சரத்து 6 என்பது, சரத்து 1க்கு ஏற்றமுறையிலும் சரத்து 1 பந்தி 3 இன் நிபந்தனை விதிகளுக்கமையவும், கருத்துச் சுதந்திரம், மனச்சான்று, மதம் அல்லது நம்பிக்கை ஆகியவற்றிற்கான உரிமை, பின்வரும் சுதந்திரங்களை உள்ளடக்குவதாகக் குறிப்பிடுகிறது.
(1) ஒரு மதம் அல்லது நம்பிக்கை சம்பந்தமாகத் தொழுதல் அல்லது ஒன்று கூடுதல் செய்யவும், இந்நோக்கங்கட்காக
இடங்களை நிறுவவும் பராமரிக்கவும்,
(2) ஏற்ற அற அல்லது மனிதாபிமான நிறுவனங்களை நிறுவவும்
பராமரிக்கவும்,
(3) ତୂ(5 LD5 அல்லது நம்பிக்கையின் சடங்குகள், நடைமுறைகளுடன் தொடர்புபட்ட, தேவையான அடிப்படைப் பொருட்கள் மற்றும்
50

ஆக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றைப் போதுமான அளவு உண்டாக்கவும், பெற்றுக் கொள்ளவும், பயன் படுத்தவும்,
(4) இவ்விஷயங்கள் பற்றிப் பொருத்தமான வெளியீடுகளை
எழுதவும், விநியோகிக்கவும், பரப்பவும்,
(5) ஒரு மதத்தை அல்லது நம்பிக்கையை அவற்றுக்குப்
பொருத்தமான இடங்களில் கற்பித்தலுக்கு, 4.
(6) தனியாரிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும், விரும்பித்தரப்படும் நிதி மற்றும் ஏனைய பங்களிப்புகளைக் கோரவும் பெற்றுக் கொள்ளவும்,
(7) எந்த மத அல்லது நம்பிக்கையின் தேவைகள் மற்றும் நியமங்களுக்கு அவசியமான ஏற்ற தலைவர்களைத் தொடர்ச்சியாகப் பயிற்றுவிக்க, நியமிக்க, தேர்வுசெய்ய அல்லது பொறுப்பளிக்க,
(8) ஒருவரின் மத அல்லது நம்பிக்கை அறிவுரைகளுக்கமைவாக ஒய்வு நாட்களைக் கடைப்பிடிக்கவும், விடுமுறை அல்லது கொண்டாட்டங்களைக் கொண்டாடவும்,
(9) மத அல்லது நம்பிக்கை விவகாரங்களில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தனியாருடன் அல்லது சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் தொடரவும்.
பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சுதந்திரங்களும் நடைமுறையில் ஒவ்வொருவருக்குங் கிட்டக் கூடிய விதத்தில் தேசிய சட்டங்களில் இடம்பெறச் செய்யப்பட வேண்டுமென்பதை சரத்து 7 கூறுகிறது.
பிரகடனத்திலுள்ள எதுவும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள எந்த உரிமைக்கும் கட்டுப்பாடு அல்லது பங்கம் விளைவிக்கக்கூடிய விதமாகப் பொருள் கொள்ளப்படலாகாது என்ற கூற்றினைக் கொண்ட சரத்து 8, பிரகடனத்தை முழுமையாக்குகிறது. மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் தொடர்பான திட்ட வட்டமான அடிப்படைகளையும் பிரகடனம் முன் வைக்கிறது.
51

Page 33
குறிப்பிட்ட
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
குறிப்பிட்ட
(1)
(2)
சர்வதேச அதிகாரபூர்வ பத்திரங்கள் வருமாறு:
மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனம்.
அரசியல் மற்றும் குடியியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை.
மனித அடிப்படையிலான சகல சகிப்புத் தன்மையின்மைகள் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் பிரகடனம்.
மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க மகாநாடு ஐரோப்பிய மகாநாடு, மனித, மக்கள் உரிமைகள் பற்றிய ஆபிரிக்க ஒப்பந்த ஆவணம்.
மனித உரிமைகள் துறையில் ஐக்கிய நாடுகள் நடவடிக்கை.
ஐக்கிய நாடுகள் சபையால் மனித உரிமைகள் குழுவின் 1983 அக்டோபர் கூட்ட நிகழ்ச்சியின் அறிக்கை.
அரசியலமைப்புக்கள் வருமாறு:
ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பர்மா, பாகிஸ்தான், சீனா, யூகோஸ்லேவியா, சுவிற்ஸர்லாந்து, அயர், ஜேர்மனி, சோ.சோ.கு.ஓ, நாலாவது பிரெஞ்சுக் குடியரசு, இலங்கை, ரூமேனியா, பங்களாதேஷ், நேபாளம், தென்னாபிரிக்கா, தாய்லாந்து.
இலங்கையின் 1947, 1972, 1978 அரசியலமைப்புக்கள் மற்றும் 1998 வரைவு அரசியலமைப்பு.

(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
(12)
(13)
(14)
Եnfbuւլգեւ16ծ
அடிப்படை உரிமைகளும் அரசியலமைப்புப் பரிகாரங்களும் - வி. ஜி. இராமச்சந்திரன் பாகம் 2
எழுத்தானைச் சட்டமும் அடிப்படை உரிமைகளும்
- ஏ. எஸ். செளதுரி பாகம் 1 1958
அரசியலமைப்புச் சட்டம் 4ம் பதிப்பு - கூலி
உச்சநீதிமன்றமும் மனித உரிமைகளும் - பேர்க் மார்ஷல் ("போரம் தொடர்)
அமெரிக்கப் பொதுப்பள்ளிகள் சட்டம் - கேர்ண் மற்றும் டேவிட் அலெக்ஸாண்டர், 1980
இலங்கையில் அரசியலமைப்பு ஆட்சி - U.L.M. குறே.
சட்டத்தத்துவமும் அரசும் - கெல்கன்.
தாராள அரசின் நிறுவனங்கள் மற்றும் ‘சுதந்திரம் தொட்டு இலங்கையில் அரசியலமைப்பு மாற்றம்’ ஆகியவைப் பற்றிய றோஹான் எதிரிசிங்கவின் கட்டுரைகள்.
மனித உரிமைகள் பற்றிய துறைகளில் ஐக்கிய நாடுகள்
ஏனைய ஐக்கிய நாடுகள் பிரசுரங்கள்.
அக்டோபர் 1983 ல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நடவடிக்கைகள்.
இலங்கையின் சட்டவாக்கல் சட்டங்கள் (1980)
தனியார் பள்ளிகளுக்கும் பொது சலுகைகள்
- பேராசிரியர் ரீ.ஆர்.பவல்
அமெரிக்கப் பொதுப் பள்ளிகள் சட்டம் - டேவிட் மற்றும் கேள்ன் அலெக்ஸாண்டர்
53

Page 34
54
(15)
(16)
(17)
(18)
(19)
(1)
(2)
(3)
வளர்முக சமூகமொன்றில் அரசியலமைப்பு ஆட்சியும் மனித உரிமைகளும்.
கலாநிதி ஜே.ஏ.எல்.குறே
அரசியலமைப்பு நிர்வாகச் சட்டம் - கலாநிதி ஜே.ஏ.எல்.குறே
கிறிஸ்தவத்தின் வரலாறு - பிளாக்கி அன்ட்சன், 1929
சர்வதேச சட்டத்திற்கான இலங்கை சஞ்சிகை. - (பாகம் VI. 1994)
மத சுதந்திரம் - எஸ். பேற்ஸ்
கேள்விக் கொத்து
இலங்கை ஒரு பல்பண்பாட்டு, பல்லின, பன்மொழி, பன்மத நாடா? (ஆம்/இல்லை)
அண்மைய புள்ளி விபரமொன்றின்படி சிங்கள பெளத்தர்களின் வீதம் 69.8 %, முப்பது வீதத்திற்கும் மேற்பட்டோர் சிறுபான்மையினர். இவ்வாறான ஒரு சமூகத்தில் எந்தவொரு இன, மொழி அல்லது மதப்பிரிவிற்கேனும் முன்னுரிமை காட்டி நடத்தப்படுதல் வேண்டுமா? (ஆம் / இல்லை)
பிரசைகளுடைய இனத்துவம் அல்லது மதம் எதுவாக இருப்பினும் அவர்கள் எல்லா உரிமைகளுடனும் எவ்வித பாரபட்சமுமின்றி நடத்தப் படுவதை அரசியலமைப்பினால் உத்தரவாதப் படுத்தக் கூடிய, ஒரு பன்மைத்துவ சமூகத்திற்கு ஏற்ற விதமான, அரசியலமைப்பு எது? (சமஷ்டி /சமஷ்டியை யொத்த முறை / ஒற்றையாட்சி)
பி.கு: ஒரு பில்லியன் சனத்தொகையையும் அதில் 80% க்கு அதிகமான இந்துக் களையும் கொண்டுள்ள இந்தியா மதவிவகாரங்களில் அரசு நடுநிலை பேணுவதான மதசார்பற்ற ஒரு அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.)

(4)
(5)
(6)
(7)
(8)
ஒரு சமஷ்டி அல்லது சமஷ்டியையொத்த அரசியலமைப்பானது சிறுபான்மையினரின் மத சுதந்திர உரிமையை உத்தரவாதப் படுத்துவதன் மூலம் நாட்டில் அமைதியையும் நிறைவையும் நிலைநாட்ட முடியுமா? (ஆம்/இல்லை)
இனப் பிரச்சினைக்கு மதசார்பற்ற அரசியலமைப்புதான் தீர்வாகுமா? (ஆம்/இல்லை)
சிறுபான்மையினரின் உரிமைகள் அரசியலமைப்பில் உறுதிப் படுத்தப்பட வேண்டுமா? (ஆம்/இல்லை)
ஒரு சமஷ்டி அல்லது சமஷ்டியையொத்த அரசியலமைப்பு இலங்கைக்கு அதிகம் ஏற்புடையதா? (ஆம்/இல்லை)
மதகுருமாரை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்வது மதசார்பின்மைக் கொள்கைகளைப் பாதிக்குமா? (ஆம்/இல்லை)
55

Page 35
PRIFTED BY LJhIE AT PWT LITI

}. COLOLHR.) 13:LTEL: FL015.