கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புக்களும்

Page 1
少,;---:
* 颂
(~
ல்வி
ண்கள் க
LI
 


Page 2

பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புகளும்
ஜெகன் பெரெரா
தமிழாக்கம் : இந்திரா கோவிந்தசாமி

Page 3

உள்ளடக்கம்
பக்கம்
முன்னுரை V
நன்றி உரை VII
அறிமுகம் IX
1 பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புக்களும் 1

Page 4

முன்னுரை
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கைப் பிரஜைகளான இரு தரப்பினர்க்கிடையில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பத்து வருடங்களுக்கு மேலாக நாங்கள் சமாதானத்தைப் பற்றி பேசி வருகிறோம். அண்மையில் பல உயர்தர மட்டத்தில் முரண்பாடுகளை எப்படித் தீர்ப்பது என்றும், முரண்பாடுகளை அகற்றுவது எப்படி என்றும், பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவும் திறமையும் படைத்த அரசாங்க உத்தியோகத்தினரும், மற்றவர்களும் சமாதானத்தைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் இது பற்றிச் சாதகமாக எழுதியிருக்கும் அதே சமயம் பலர் அது பற்றி எதிர்ப்புக் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினராகிய நாம் இத்தகைய பேச்சுக்கள் ஒரு தவறான பாதையில் செல்வதாக உணருகின்றோம். பெரும்பாலும் தவறான அர்த்தப்பாடுகளும், தவறான விளக்கங்களும், தவறான சொற்பிரயோகங்களும், கருத்துப் பிரயோகங்களும், திட்டமிடப்பட்ட கருத்து மாற்றங்களும், உதாரணங்களும், அனுபவங்களும், மக்களைத் திசை திருப்புவதற்கும், மக்கள் மத்தியில் மனப்பீதியை ஏற்படுத்தும் நோக்கிலுமே எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. இப் பிழையான நிலைப்பாட்டின் அடிப்படையில் மக்கள் தங்கள் தங்கள் சுய அடையாள உருவாக்கத்தில் ஐயம் ஏற்பட்டு குழம்பிப் போய் உள்ளனர். இதனால் எம் நாட்டு மக்களுக்கு இவை பற்றி தெளிவுபடுத்துவது ஒரு நீண்ட காலத் தேவையாக இருக்கிறது. இந் நோக்குடன் நாங்கள் சில விடயங்கள், கருத்துக்கள், முரண்பாடுகளைத் தெரிவு செய்து இவற்றைச் சரியான முறையில் எப்படி விளக்க வேண்டுமோ அதன்படி விளக்கம் கொடுக்க முனைகின்றோம். சில புதிய விளக்கங்களும் தேவைப்படுகின்றன. தீவிர கட்சி அரசியல் சார்பற்ற சிலரையும் தேர்ந்தெடுத்துள்ளோம். தொடர்ந்தும் மனித விழுமியங்களில் நம்பிக்கை உடையோரையும், ஜனநாயகப் பண்பாட்டின் அவாவுள்ளவர்களையும், இலங்கையின் சமய சார்பற்ற பன்முகத் தன்மையை பேணுபவர்களையும் இதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இம்மீள் கட்டமைப்பில் நாம் ஒரு சமூக நீதியைப் பேணும் ஜனநாயகப் பண்பாட்டை எதிர்பார்க்கின்றோம். இப்பண்பாடு சகல இன மக்களினதும் தனி மனித உரிமைகளையும், சமூக உரிமைகளையும், சுதந்திர மனப்பாங்கையும் பேணும் ஒரு நிலமையை ஏற்படுத்தும் என்பதும் நமது எதிர்பார்ப்பு.
இளையோர் முதியோர் என ஏழாயிரம் பேருக்கு இச்சிறு நூல் QöTAB60)Luqb. −
கனவுகள் நிஜமாவதுண்டு எதிர்பார்ப்புகள் பல செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 5

நன்றி உரை
இத் திட்டம் பலரினதும் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்றோரும், செயலூக்க வல்லுனரும் கலந்து கொண்டனர். முதலில் இச் சிறு நூல்களிற்குத் தலைப்புக்களைத் தெரிந்தெடுப்பதற்கு மேற் குறிப்பிட்டோரும், எமது நிறுவன அங்கத்தினரும் சேர்ந்து ஒரு சிறு குழுவை உருவாக்கினோம். , ar
திருமதி பேணடின் சில்வா, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து திரு. ஏ. ஜே. கனகரட்ண ஆகியோருடன் கலந்துரையாடித் தலைப்புக்களைத் தெரிவு செய்து பத்து ஆய்வாளர்களையும் இனங்கண்டு கொண்டோம். ஆனால் எங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் ஐந்து ஆய்வாளர்கள் தான் எங்களுடன் நிலைத்து நின்றார்கள். திரு. ஜெகன் பெரேரா, கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ, கலாநிதி குமார் டேவிட், செல்வி டில்றுக்சி பொன்சேகா, திரு. அன்ரன் பெர்னாண்டோ ஆகியோருக்கு எமது நன்றிகள்.
மூலப்பிரதிகள் ஆங்கிலத்தில் இருந்தமையால் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. திருமதி சோமா ஜெயக்கொடி, திருமதி இந்திராணி கோவிந்தசாமி, திரு. ஏ. ஜே. கனகரட்ண, திரு. கே. நடேசன், திரு. வைரமுத்து சுந்தரேசன் ஆகியோர் மொழி பெயர்ப்பதற்கு உதவியாக இருந்தனர். இவர்களுக்கும் எமது நன்றிகள். இந்நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவியவர்கள் யுனி ஆர்ட்ஸ்' நிறுவனத்தினராவர். இவர்களின் பொறுமையும் கடமையுணர்வும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இத்திட்டம் வெற்றி பெறக்காரணமாக உதவிய பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன அங்கத்தவர்களையும், மரினி டி லிவேரா, மகேஸ் வைரமுத்து, அட்டைப்படம் வரைந்து உதவிய சாந்தினி குணவர்த்தன அவர்கட்கும், மேலும் எமது உதவியாளர் சந்திரசேனவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
செல்வி திருச்சந்திரன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 6

அறிமுகம்
இலங்கையில் நிலவும் இனத்துவ உறவுகளை சமூக, வரலாற்று சூழலில் எளிய மொழி நடையில் அலசுவதே இச்சிறு நூலின் நோக்கம் ஆகும். இச்சிறு நூலின் தலைப்பிலேயே இது தொடங்குகின்றது. இந் நூல் கல்வி நோக்கங்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டுள்ளமையால் இயன்றளவு எளிய மொழி நடை பிரயோகிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆராயப்படும் விடயம் எளிமையானது அல்ல. எனவே உள்ளடக்கப்பட்ட விடயங்களை மீள் வாசித்தல் அல்லது ஆறுதலாக வாசித்தல் சிறந்த பலன்தரும் என்பது இங்கு அறிவுறுத்தப்படுகிறது.
நாம் யார் என்பது பற்றியும் நாம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஏன் தடைகள் உள்ளன என்பது பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இனத்துவ உறவுகள் தொடர்பான சமூக சூழமைவு அவசியமாகிறது. இனத்துவ உறவுகளைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்றுச் சூழமைவும் அவசியமாகும். ஏனெனில் இச்சூழமைவிலேதான் எமது பெரும்பாலான தப்பபிப்பிராயங்கள், தப்பெண்ணங்கள், அச்சுவார்பான படிமங்கள் என்பன உறைந்துள்ளன. ஆனால் மிக முக்கிய அம்சமாக இங்கு அமைவது வரலாற்றுச் சூழமைவில் இனத்துவம், தேசம், பல்கலாசாரம் ஆகிய எண்ணக்கருக்களைப் புரிந்துகொள்வதாகும்.
எந்தவொரு இனக்குழுவிற்கும் பக்கச்சார்பின்றி, நாட்டில் இன முரண்பாடு பற்றிய நடுநிலையானதும் புறநிலையானதுமான ஒரு விளக்கத்தை தருவதற்கு இச்சிறு நூல் முனைகிறது. எனினும் இனக்குழுக்களுக்கு இடையில் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் நிலவிவந்த நல்லுறவுகளைச் சீர்குலைத்த கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விமர்சிப்பதற்கு நூலாசிரியர் தயங்கவில்லை. சமாதான அமைதி நிகழ்வுத் தொடர் குறித்து நேரான மனப்பாங்குடன் நூல் முற்றுப்பெறுகிறது.
நூலினதும் அதன் உள் அடக்கங்களினதும் நோக்கமாக அமைவது இன ஐக்கியத்தை மீளமைத்து சமாதானத்தை நாட்டில் முன்னெடுப்பதாகும். சமாதானத்தை முன்னெடுப்பதற்கு சமாதானம் பற்றிய அதிக அளவிலான விளக்க நூல்கள் அவசியம் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டதொன்று. சமாதானம் பற்றிய வாசிப்பு ஏடுகளின் பற்றாக்குறை சமாதான இயக்கத்தின் ஒரு பிரதான குறைபாடாக இந்நாட்டில் அமைகிறது. ஆகவே இந்நூல் இவ்விடைவெளியை சிற்றளவில் நிவர்த்தி செய்ய முனைகிறது.
சாதாரண மக்கள் வாசிப்பதற்கு அல்லது பயிற்சிக் காலங்களில் கல்வி ஏடாக அவர்களால் பயன்படுத்தப்படுவதற்காக இச்சிறு நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நோக்கங்களுக்காக நூலானது சிங்களத்திலும் தமிழிலும் மேலும் விளக்கத்துடன் மொழிப்பெயர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது.
ஆயினும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த முதற்பதிப்பு இனத்துவ உறவுகள், தொடர்பாடல் ஆகிய விடயங்களில் ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகப் பயன்படுத்த முயற்சிக்கும் படித்த இளைஞர்களுக்கு பிரயோசனம் மிக்கதாக விளங்கும்.

Page 7

பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புக்களும்
யுத்த செலவினங்களைப் பற்றி, முக்கியமாக பொருளாதார பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் யுத்தத்தின் செலவினங்கள், விரிவானதாகவும் பெரும்பாலும் மனித, சமூக, அரசியல், நடத்தை பரிமாணங்களை உள்ளடக்கியும் உள்ளன. 2000 இல் தேசிய சமாதான ஆலோசனை சபை யுத்த செலவினங்களைப் பற்றி ஆய்வு செய்துள்ளது. டாக்டர் கொட்ப்றி குணதிலக்கவின் தலைமையில் 'மார்கா நிறுவனத்தின் ஆய்வாளர்கள் குழு ஒன்று நடத்திய ஆய்வே இதில் முன்னோடியானது. யுத்தத்தினால் பயனில்லை என்பதனைத் தெளிவாக வித்தியாசமான செலவினங்களைக் குறிப்பிட்டுக் காட்டியது. புலனாய்வின் முக்கிய பகுதிகளாக பொருளாதாரச் செலவினங்கள், மனித இழப்புகள், சமூக, நடத்தை இழப்புகள் முதலியன இருந்தன. அதனை தொடர்ந்து வந்த வருடத்தில் யுத்த செலவினங்கள் மிக அதிகமாக கூடிவிட்டன. ஆனையிரவு இராணுவ முகாம் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இழக்கப் பட்டதுடன், அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாண நகள் வரை வருகை தந்ததை பார்க்கக் கூடியதான கடுமையான யுத்தம் ஏற்பட்டது. அதுவரையில் யுத்தங்களில் பாவனை செய்யப்பட்டிராத நாசம் விளைவிக்கும் ஆயுதங்கள், ஏராளமான துப்பாக்கிக் குழாய்களைக் கொண்ட சக்திவாய்ந்த ராக்கட் கிரனைட்டுக்கள் முதற்கொண்டு யாழ்ப்பாண யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தின் எல்லைப்புறத்தில் உள்ள சாவகச்சேரி நகர் முற்று முழுவதாக தரைமட்டமாக ஆக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தாக்குதலைத் தொடர்ந்து சில மாதங்களில், நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்கப் பட்டது. தரையில் நின்ற அரைவாசி தேசிய பிரயாணிகள் விமானமான ஏயார் லங்கா அழிக்கப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க இலங்கை விமானப்படை விமானங்கள் சிலவும் இருந்தன. அழிப்புகளால் ஏற்படுத்தப்பட்ட உடனடிச் செலவினங்களை விட, நாட்டின் பொருளாதாரம் அதிகளவு பலவீனப்படுத்தப்பட்டது. சர்வதேச இன்சூரன்ஸ் கொடுப்பணவுகள் அதிகளவு உயர்ந்தது, ஏற்றுமதி ஒப்பந்தங்களை நேர காலத்தில் மேற்கொள்ள முடியவில்லை, சுற்றுலா துறை ஊசலாடியது, நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்தது. 2001 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக 1. 4 வீதமே இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து ஐந்து தசாப்தங்களில் எதிர்மறைவான வளர்ச்சி பதியப்பட்டது. யுத்த இழப்புகள் வெளிப்படையாக இருந்ததுடன, அது பெப்ரவரி 2002 இல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழி வகுத்தது.

Page 8
யுத்தத்தில் மனித இழப்புகள்
யுத்தத்தினால் ஏற்படும் செலவினங்களின் முக்கிய புள்ளி விபரங்கள், இலங்கையில் யுத்தத்தினால் ஏற்படும் மனித இழப்புகளினதும், துன்பங்களினதும் அளவு அடர்த்தியை வெளிப்படுத்துகின்றன.
அழிவுகள்:
அழிவுகளின் மிகச் சரியான, பக்கசார்பற்ற புள்ளிவிபரங்ளைப் பெறுதல்
கடினமான காரியம்; சர்வதேச மூலகங்களின் தகவல்களையும், அரசு மூலகங்கள், அரசு சார்பற்ற நிறுவனங்கள் முதலியன தயாரித்த
அறிக்கைகளையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மதிப்பீடுகள்.
0 யுத்தத்தினால் 2001 ஆம் ஆண்டு வரை இறந்தவர்களின் எண்ணிக்கை
மதிப்பீடாக ஏறக்குறைய 65,000 ஆகும்.
0 போர் வீரர்களில் இறந்தோரின் எண்ணிக்கை மதிப்பீடாக: 25,000
முதல் 35,000 வரை.
போர் வீரர்களின் மரணங்கள்.
அதிகாரபூர்வமாக யுத்த வீரர்களிலும், பாதுகாப்பு உத்தியோகத்தள்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 17,000 (2001ஆம் ஆண்டு வரை) ஆகும். அதிகாரபூர்வமாக போர்முனையில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டு வரை 3,500 ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை அவர்களின் பிரதேசத்தில் ஏற்பட்டவையாகும். இதில் இறந்த ஏனைய போராளிகளின் கணக்கு சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அதில் பெரும்பாலானோர் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டோராவர். யாழ்ப்பாண யுத்தம் ஒன்றில் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளால் TELO போராளிகள் 200 பேர் கொல்லப்பட்டனர். ஏனைய போராட்டக் குழுக்களில் இறந்தோர் தொகை ஏறத்தாழ 2000 ம் g(35LD.
பொதுமக்களின் இறப்புகள்.
பொதுமக்களில் இறந்தவர்களின் ஒழுங்கற்ற மதிப்பீட்டை சில மூலகங்களின் தகவல்களைக் கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். 1992 ஆம் ஆண்டு
2

வரை, வடக்கு கிழக்கில் இறந்தவர்களினதும் காணாமற்போனோரினதும் எண்ணிக்கை, புனர்வாழ்வு, மீள்நிர்மாண அமைச்சின் நஷ்ட ஈடுகளைப் பெறுவதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பங்களின் படி 17,529 ஆக இருந்தது. தென்னிலங்கையில் கலகம் ஏற்பட்ட சமயம், ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் சமயம் ஏற்பட்ட அநுபவங்கள் தெரிவித்துள்ளப்படி நஷ்ட ஈட்டுக்கான விண்ணப்பங்கள் அநேகமாக மிகைப்படுத்தப்பட்ட அளவே கொடுக்கப்படும். இதனால் இந்த மதிப்பீடுகள் குறைத்தே கணிக்கப்பட வேண்டும். 1994 - 2001 வரை வெகுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கான g5 L55661 (Most Affected Persons Scheme) dip 6 Lds(g5, d5.pdd56) அரசாங்கத்தால் 21,374 பேருக்கு, இறந்த பொதுமக்களுக்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் ஆயுத குழுக்களால் முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் 1980 களின் நடுப்பகுதிகளில் பொது மக்கள் கொலை செய்யப்படுவது ஆரம்பமாகியது. 1985 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் நவம்பர் 1985 இல் படுகொலைசெய்யப்பட்ட 146 பொதுமக்களும், மே மாதம் 1987 இல் கொழும்பில் மோட்டார் வாகன வெடி குண்டினால் இறந்த 113 பொதுமக்களும் அடங்குவர். 1985 - 1990 வரையான காலப்பகுதியில் இவ்வாறான தாக்குதல்களால் இறந்த பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை 2,000 ஆகும். சீரான இடைவெளிகளில் நடைப் பெற்ற இவ்வாறான தாக்குதல்கள் பெருமளவிலான உயிர்களை எடுத்தது. 1990 - 1998 வரை இவ்வாறான 78 பாரிய பயங்கரவாத நிகழ்வுகள், எல்லைப் புறங்களிலும், கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஏறக்குறைய 1,800 பொதுஜன உயிர்களை காவுகொண்டது.
பொதுமக்கள் இறப்புகளின் தன்மைகளைக் கவனம் செய்தல்.
9 மேற்கூறப்பட்ட எண்ணிக்கைகளின்படி, 2001 ஆம் ஆண்டுவரை பொதுமக்களின் இறப்புகள் 25,000 முதல் 30,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
0 காணமற் போன, உயிரோடு பிடிக்கப்பட்டு, சிறை வைக்கப்பட்ட போர் வீரர்களின் இழப்புக்களை யுத்தத்தின் கொடுரம் தெளிவாக்குகிறது.
0 தராதரமில்லாமல் நிராயுதபாணியான வீரர்கள் அல்லாதோரைக் கொல்லும் முறை இரு பக்க போர் வீரர்களினதும் குணத்தைக் காட்டுகிறது.

Page 9
  

Page 10
மற்றும் சட்ட, நிர்வாக முறைகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பில்லாமை. பரம்பரைச் சொத்தைப் பெற்றுக் கொள்ளுவதில் பிரச்சனையுள்ள சட்டங்கள், சொத்து உரிமை, நில உடந்தை ஆகியன. ~
9 பெளதீக, உளவியல் பாதிப்புக்கு உள்ளாகுதல்: விதவைகளை வழிவகையாக பாரமாக கருதுவதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய போஷாக்கும் சுகாதார வசதிகளும் மறுக்கப்பட்டு அதன் விளைவாக பெளதீக உளவியல் துஷபிரயோகத்திற்கு ஆளாகுதல்.
இலங்கையில் உள்ள விதவைகளின் தொகையின் மதிப்பீட்டைப் பெறுவதற்கு எவ்வித விசாலமான புள்ளிவிபரங்களும் இல்லை. யாழ்ப்பாணத்தில் மட்டும் 18,000 விதவைகளும் நாடு முழுவதும் 400,000 விதவைகளும் வாழ்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அநேகமானோர் இராணுவத்தினருக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழும் யுத்த வீரரல்லாத குடும்பங்கள் நஷ்ட ஈட்டு திட்டத்தின் கீழும் அனுகூலங்களைப் பெறுகின்றனர். இராணுவ வீரரை மணம் செய்திருந்த விதவைக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். ஆயினும் அவரது கணவரின் குடும்பத்தினர் அவளை மீண்டும் மணம் செய்து கொள்ள அனுமதிப்பதில்லை. ஆய்வுகளின் படி அரசாங்கம் அவர்களுக்கு தேவையான பொருள் உதவிகளைச் செய்தாலும் விதவைகள் பல்வேறு வகையான சமுதாய தவிர்ப்புகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
இடம் பெயர்தலும் வீடற்று இருத்தலும்:
யுத்தங்களினால் ஏற்படும் ஒரு மிக மோசமானதும், பரந்த அளவில் பாதிப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தும் நிலை என்பது இடம் பெயர்தலும் வீடற்று இருத்தலும் ஆகும். UNHCR (2002) இல் எடுத்த புள்ளி விபரத்தின் படி 710,000 பேர் இலங்கையின் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். 2001 ஆம் ஆண்டின் முடிவில் இடம்பெயர்ந்த மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 184,000 ஆகும். அவர்களில் 42,000 பேர் நலம்புரி நிலையங்களிலும் 142,000 பேர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவர்களின் பாதுகாப்பு, வசதி, அந்தரங்கம் என்பன மறுக்கப்பட்டும் வாழ்கின்றனர். முக்கியமாக நலம்புரி நிலையங்களில் இருப்பவர்கள் வாழ்வதற்கான மிகக் குறைந்த தேவைகளுடன் அடிமட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அநேக குடும்பங்கள் இம்மாதிரியான சூழலில் நெடுங்காலம் இருக்க நேரிடுகின்றது. பலர் ஒரு முறைக்கும் மேலாக அவர்களின் அனுபவமான புகலிடம் தேடுதலை நலம்புரிச் சங்கங்களிலும், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலும் செய்வதனால், யுத்தம் தொடர்வதில் நம்பிக்கையும்

மனோதிடமும் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் அவர்கள்
திரும்பிச் செல்வதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாக இருப்பதுடன்,
அப்படிச் சென்றாலும் வீட்டை மீள்கட்டியோ, திருத்தியோ வாழ்வை திரும்பவும்
ஆரம்பிக்க வேண்டியுள்ளது. நலம்புரி நிலையங்களில் வாழ்வோரில் மூன்றில்
ஒருவர் தங்கள் குடும்பத் தலைவரை இழந்து விட்டிருப்பதோடு அதே அளவிலான சொத்துக்களையும் இழந்துள்ளனர்.
IDP யினால் பால் வேறாக வேறுப்படுத்திய புள்ளி விபரங்களை எடுக்க முடியாது போனாலும் UNHCR உம், குடிப்பெயர்வுகளைப் பற்றி எடுத்த ஆய்வும், உலகளாவில் உள்நாட் டிலேயே இடம் பெயர்வுக்கு உள்ளாக்கப்படுவோரின் தொகையில், 80 சதவீதமானோர் பெண்களும், சிறுவர்களுமே என்று உறுதியாகக் கூறுகிறது. நிச்சயமற்ற நீண்டகால புலம்பெயர்வு, பெண்களுக்கு சொல்லொண்ணா துயர்களை ஏற்படுத்துவதோடு அவர்கள் அகதி முகாம்களில் உணவிற்காக பிச்சை எடுக்கவும், உடல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதும் பழக்கமற்ற சூழல்களில் வாழ வேண்டிய அவசியத்திற்கும் தள்ளப் படுகின்றனர்.
சிறுவர்களின் தாக்கங்கள்
யுத்தத்தினால் சிறுவர்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில், அவர்களின் இளம் பதின்வயதிலேயே விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் சேர்க்கப்பட்டும், ஒரு பெற்றோரையோ அல்லது பெற்றோர் இருவரையுமோ இழந்து பெருந்தொகையானோர் அநாதைகளாக ஆக்கப்பட்டும், யுத்த கொடுரங்களை எதிர்க்கொண்டு அதன் விளைவாக வெகுவாக மனப்பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ள சிறுவர், சிறுமிகள் அடங்குவர். இடம் பெயர்ந்த மக்கட்தொகையினரில் வயது பிரகாரம் பிரித்தெடுத்த கணக்கெடுப்பு புள்ளிவிபரம் இல்லை. எனினும் தேசிய கணக்கெடுப்பின்படி பிரதேசங்களில் இடம்பெயர்ந்த ஜனத்தொகையில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 250,000 பேர் ஆகும். சிறுவர் குடித்தொகையில் இந்த ஒரு பிரிவினர் இயல்பான குழந்தைப்பருவத்தையும், வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான அடிப்படை சூழலையும் இழந்தவர்களாக இருக்கின்றனர். ஆய்வு அறிக்கைகள் சில கடினமான சூழ்நிலைகளில் இச்சிறுவர்கள் நிலைத்து வாழ்வதைப் பற்றி கூறுகின்றன.
சிறுவர் போராளிகள்
இலங்கையில் சிறுவர்களை போருக்கு சேர்த்துக் கொள்வது நடைமுறையில் உள்ள யுத்தத்தில் நிலைத்து நிற்கும் ஒரு வழக்கமாகும். முக்கியமாக

Page 11
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் போராள்களாக பெருமளவு சேர்த்துக் கொண்டதுக்கு காரணமாகவுள்ளனர். அரசு, அரசு சார்பற்ற நம்பிக்கைகளின்படி சிறுவர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வது அதிகரித்து வரும் வழிமுறையாகவுள்ளது. தற்பொழுது உலகெங்கும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்ல் ஏறக்குறைய 300,000 பேர் பாரிய யுத்தத்தில் FGLILG6i,61T6Orff.
இலங்கையில் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களின் மொத்த எண்ணிக்கையை எடுப்பது கடினமாயினும், அது சில நூறுகளைக் கொண்டிருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய போராளிகளைச் சேர்த்துக் கொள்ளும் கொள்கையின்படி வீட்டுக்கு ஒருவர் 'இராணுவ சேவை' யைச் செய்ய வேண்டும். பத்து வயது சிறுவனாலும் இயக்கக்கூடிய பாரமற்ற இலகுவில் இயங்கும் ஆயுதங்கள் சுலபமாகப் பெறக்கூடியதாக இருந்தமை சிறுவர் போராளிகள் அதிகரித்தமைக்கு ஒரு பகுதி காரணமாகும். கட்டளைகளுக்கு மறுப்பு கூறுவது குறைவு என்ற காரணத்தினால் சிறுவர்கள் இராணுவத்தில் அதிகம் பிரயோகிக்கப் படுகின்றனர். அவர்கள் வன்முறைகளினால் கடுமையான உளவியல் தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர். UNICEF 15 வயதிற்கு உட்பட்ட தமிழீழ விடுதலைப் போராளிகள் தூக்கமின்மை, ஆக்ரோசகமான திடீர்ப்பாய்ச்சல், விபரீதமான நடத்தைகள் போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள் என அறிவித்துள்ளது.
1988 மே மாதம் சிறுவர்களுக்கும் ஆயுத போராட்டங்களுக்குமான ஐக்கிய (8g5&fu u 6î3FL Jgf6f6f6 (UN Special Representative of Children and Armed conflict) இலங்கைக்கு விஜயம் மேற்கொணி டு அரசு அதிகாரிகளுடனும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொண்டார். அதன் பிரகாரம் உடனடியாக 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை போராளிகளாக இணைத்துக் கொள்வதையும், 18 வயதுக்கு உட்பட்டவர்களை யுத்த களத்திற்கு அனுப்புவதையும் நிறுத்தி வைத்திருந்தனர். ஆயினும் 1998 இல் நூற்றுக்கணக்கான போராளிகளைப் பாரிய யுத்தத்தில் இழந்தவுடன், யாழ்ப்பாண தீபகத்தின் சில பகுதிகளில் புதிதாக போர் வீரர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
1998 நவம்பர் மாதம் முழுவதும் பெருமளவிளான சிறுவர்கள், அதில் சிலர் 14 வயதே நிறைவடைந்தவர்கள் வலுக்கட்டாயமாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பெற்றவர்கள் அவர்களைச் சந்திக்க சென்ற சமயங்களில் அவர்கள் அவர்களின் மகன்களுடனோ, மகள்களிடமோ பேசுவதற்கு அனுமதிக்கப்பட வில்லை. தொலைவில் நின்று அவர்களை அவதானிக்க அனுமதித்தனர். ஒரு தாய், அவரது 14 வயது மகன் அவரைக் கண்டதும் அவரை நோக்கி ஓடி வந்ததாகவும், எப்படி அவர் பிடிபட்டு, முகாமுக்குள் வற்புறுத்தி கொண்டு செல்லப்பட்டான் என்றும் விளக்கினார்.
8

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல சிறுவர்களை போருக்கு அமர்த்தும் ஆயத போராளிகள். சர்வதேச மன்னிப்புச்சபையின் நம்பத்தகுந்த அறிக்கைகளின் படி இலங்கை இராணுவத்துடன் இணைந்து இருக்கும் ப்ளொட்டும் (PLOTE) சிறுவர்களை போராட்டத்திற்கு சேர்த்துள்ளதாக இருக்கின்றது. 2001 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதிகளில் வவுனியா பிரதேசத்தில் PLOTE அங்கத்தவர்கள் 12 வயதே நிறைந்த சிறுவர்களையும் சேர்த்துக் கொண்டுள்ளதாக தெரிகின்றது. (சர்வதேச மன்னிப்புச்சபை 2002) په
சமூக, பொருளாதார நஷ்டங்கள்.
வடக்கு கிழக்குகளின் இழப்புகளின் மதிப்பீட்டு தொகை, அங்குள்ள அனைத்து மக்களும் அனுபவித்த பெருங் கஷ்ட்டங்களை எடுத்துக் கூறும் குறிக்காட்டியாகவுள்ளது. குடும்ப வருமானங்கள் 1982 இல் இருந்ததில் அரை வாசியாக ஆகிவிட்டது. அடிப்படைத் தேவைப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம், பூச்சி மருந்துகளுக்கு பாரிய அளவிலான பற்றாக் குறை காணப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டவுடன், எளிதில் நகரும் தன்மை கட்டுப்படுத்தப்பட்டது. முன்னர் மின்சாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை பாவனை செய்தவர்களின் வாழ்க்கைத் தரம் பெரிதளவு வீழ்ச்சிக் கண்டது. முற்றாக வாழ் நிலை உயிர் பிழைப்பதற்கான நிலைக்கு தள்ளப்பட்டது. இது அரசு கட்டுப்பாட்டுக்கு வெளியே அமைந்துள்ள பிரதேசத்திற்கே அதிகம் பொருந்தும்.
யுத்தம் முடிவுக்கு வராத நிலையில், இவ்வாறான சேவைகளுக்காகத் தேவைப்படுவோரை அவ்வவ் விடங்களில் நியமிப்பது கடினமானதொன்றாகும். தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளில் நடத்தப் பட்ட ஆய்வுகளின் படி போஷாக்கின்மையும், சிசு மரணங்களும் அதிகரித்துவிட்டன.
அரசாங்கமோ, அது இல்லாது இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளோ மக்களுக்கு தேவையான சுகாதார கவனிப்பு, கல்வி, உணவு பகிர்வு, நீர், கழிவறை போன்வற்றை தேவையான அளவு கொடுக்க முடிவதில்லை. அரசு, விடுதலைப் புலிகள் இரண்டினதும் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசங்கள் கல்வி கற்பதற்கு ஏற்றதான சூழலில் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப்படி கல்விக்கு எவ்வித இடைஞ்சல்களும், பரீட்சை சமயத்திலோ, பாடசாலை நடைபெறும் சமயத்திலோ எவ்வித இடையூறுகளையும் அளிக்கக் கூடாது என்றிருந்தாலும் பாடசாலைகளிலிருந்து கல்வியை இடைநிறுத்துதல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

Page 12
கல்வியை இடைநிறுத்துதல் நாட்டின் வடக்கு கிழக்குகளிலேயே அதிகமாக இடம் பெறுகின்றது. வடக்கில் இன்னும் அதிகமாக ஆண்கள் 12, 2 வீதமும் பெண்கள் 9, 7 வீதமும் இடை நடுவே நிறுத்துகிறார்கள். தேசிய அளவு 4. 2 உம் 2, 9 வீதமுமாகவே இருக்கின்றது.
பயமும் பாதுகாப்பின்மையும்
பாதுகாப்பின்மை என்னும் உணர்வு அனைத்து மக்களின் வாழ்விலும் ஒரு பகுதியாகவே ஊடுருவியிருக்கிறது. சுமார் 130,000 குடும்பங்களில் அவர்களின் குடும்ப அங்கத்தவர் இராணுவத்தில் இருப்பதனால் மரண பயம் எப்பொழுதும் இருக்கின்றது. ஏனையோருக்கோ வன்முறையும், பயங்கரவாத நடவடிக்கைகளும் அடிக்கடி, ஆனால் எதிர்பாராமல் ஏற்படுகின்றது. சிறு இடைவெளிகளில் இப்படி நடைப்பெறுவதனால் குறுகிய மீட்சிக்கும் சூழலுக்கும் ஏற்ப சீராகி வரும் வாழ்வு குலைக்கப்படுவதுடன் நிகழ்வுகளுக்கிடையே சிறு பரிகாரங்களையே ஏற்படுத்துகின்றது. இதனால் போரானது முழு சமுதாயத்தினதும் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்கை வளத்தையும் பாரதூரமாக பலவீனப் படுத்தியுள்ளது.
சிறு ஆயுதங்கள்
சிறு ஆயுதங்கள்
• 1999 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட 49 யுத்தங்களில் 90 வீதம் பிரத்தியேகமான ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை தற்கால யுத்தத்தின் முகத்தையே மாற்றி, பொது மக்களின் இறப்பை அதிகரிக்கச் செய்து விட்டது. (அண்ணளவாக 80 வீதம்) வருடாந்தம் ஐந்து இலட்சம் மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. விலை மலிவானதாகவும், அனைத்து பாவனையாளருக்கும் இலகுவில் கிடைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
0 இராணுவக் கலைப்பு, ஆயதக் குறைப்பு, மீள்கட்டுமானம் முதலியனவற்றை மேற்கொள்ளுவதற்கு பெருமளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதோடு யுத்தத்திற்கு பின்னர் வன்முறைகளும், குற்றச் செயல்களும் அதிகரிக்க வழி வகுத்துள்ளது.
0 இலகுவாக கிடைப்பதும் அதன் பாவனையும் சம்பவங்களில் துயரத்தை உண்டு பண்ணுவதுடன், சித்திரவதை, சிறுவர் போராளிகள், வீட்டு வன்முறை மற்றும் இராணுவத்தினரால் ஏற்படுத்தப்படும் வன்முறை போன்றவற்றுக்கு பயன்படுத்தப் படுகின்றது.
10

பெருமளவிலான ஆயுதக் குவிப்பினால் இலங்கை குறிப்பிடத்தக்களவு பாதிக்கப் பட்டுள்ளது. கட்டுப்பாடில்லாத ஆயுத பாவனை (சட்டப்படியும், சட்ட விரோதமாகவும்) பரவியுள்ளமை யுத்தத்தை மோசமடையச் செய்துள்ளதோடு, வன்முறைக் கலாச்சாரத்தை நிலையானதாக ஆக்கி விட்டது. இலங்கையின் பெரும்பாலான மரணங்கள் சிறிய போர் கருவிகளாலும், பாரமற்ற ஆயுதங்களாலுமே ஏற்படுகின்றது. தொடர்ந்தும் அவை அபரீதமாக இருப்பதனால் சமாதானம் கட்டியெழுப்பப் படுவதையும், சமூக, பொருளாதார மீள்கட்டுமானத்தையும் பலவீனப்படுத்தியுள்ளதோடு சட்டத் தடங்களுக்கு வழிவகுத்து, மீண்டும் யுத்தத்தை உயிர்ப்பித்து, பதட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
பெண்களும் யுத்தமும்.
யுத்தங்களில் பொதுவாக ஏற்படுவது போலேவே இலங்கைப் போரிலும் பெண் களும் , ஆண் களும் வித் தியாசமான அனுபவங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே மூலதனங்களைப் (அதிகாரம், முடிவெடுத்தல் உட்பட) பெற்றுக் கொள்வதில், தேவைகள், பங்களிப்பு, உறவுகள், அடையாளம் என்பனவற்றில் வேறுபாடுகள் உள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலையற்ற, பயனில்லாத யுத்தத்தினாலும், யுத்தத்தின் பின்னர் உள்ள சூழலினாலும் வன்முறைக்கும், பொதுவான பலவீனத்திற்கும் (கற்பழிப்பு, உடலுறவு சித்திரவதைகள் போன்ற உதாரணங்கள்) ஆளாகின்றனர். பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதை இல்லாமல் ஆக்கும் சபையானது (The Committee in Elimination of Discrimination against Women), நிபுணர்களைக் கொண்ட ஒரு சர்வதேச சபையாகும். இது அரசாங்கங்கள் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய பெண்களுக்கான ஒப்பந்தத்திற்கு (CEDAW), மதிப்பளிக்கிறார்களா என கண்காணிக்கின்றது. இது 2002 ஆம் ஆண்டு பெண்களின் உரிமைகளை மீள்ப்பார்க்கும் பொழுது, வருடக்கணக்கில் பொலிஸ் சோதனைச் சாவடிகளில் சிறுபான்மை தமிழ்ப் பெண்கள் அரச படைகளால் கற்பழிப்புக்கும், பாலுறவு வன்முறைக்களுக்கும் உள்ளாக்கப்பட்டதை முக்கியப்படுத்திக் காண்பித்தது. பெண்களுக்கு பாதுகாப்பின்மையை அதிகரித்து இருக்கும் இச்சமயத்தில், முன்னால் வீரர்களையும், வன்முறைக்கு ஆளானவர்களையும் கவனிக்க வேண்டிய சுமை ஏற்கனவே முன்னேற்றம் தடுக்கப்பட்டு, உடைந்துள்ள குடும்பங்களுக்கும், சமூகங்களுக்கும் ஏற்படுகின்றது. பெண்கள் பொருளாதார கஷடங்களுக்கு ஆளாகி, பாரிய பாதுகாப்பின்மை உணர்வுக்கும், சொல்லொண்ணா பாரம்பரிய சமூக, கலாச்சாரங்களுக்கும் முகம் கொடுக்கின்றனர்.
11

Page 13
ஆயினும், இவ்வாறான பாரிய கஷ்டங்களுக்கு ஆளாகினாலும் பெண்கள் பாதிப்புக்கு மட்டும் உள்ளாகவில்லை. அவர்கள் பல்வேறு உயர்நிலைப் பதவிகளில் போராளிகளாக, (விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு 1984 ஆம் ஆண்டு தொடக்கம் பெண்களுக்கு போர்ப் பயிற்சிகளைக் கொடுக்கிறது. இலங்கை இராணுவத்தில் 1979 ஆம் ஆண்டு தொடக்கம் பெண்கள் சேவை செய்கின்றனர். தற்பொழுது அங்கு 2,400 பெண் வீரர்கள் இருக்கிறார்கள்), சமூகத்திற்கு பராமரிப்பும், ஆதரவும் அளிப்பவராக, ஆசிரியர்களாகவும், பேச்சு வார்த்தை நடத்துபவராகவும், உயிர் தப்பி வாழ்தல், அமைதியுண்டாக்கல், மீள்கட்டுமான நடவடிக்கைகள் போன்ற சமூகத்தின் முக்கிய பாத்திரங்களை வகிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இல்ல வன்முறை
பலவிதமான ஆய்வுகள், வன்முறை சுழற்சியும், சமூகத்தில் ஆயதபாணிகள் முக்கியமாக யுத்த காலத்தில் அதிகரித்தமையும், இல்ல வன்முறைகளைக் குறிப்பாக யுத்த காலத்திற்குப் பின்னர் அதிகரிக்கச் செய்துள்ளது எனக் காட்டுகின்றது. பெண்களுக் கெதிரான வன்முறைகளைப்பற்றி ஆய்வு செய்யும் தேசிய அரசு சார்பற்ற ஒரு நிறுவனமான இல்லங்களுக்கான மனித உரிமைகள் (Home for Human Rights), p 6ibsTLG ugbg5tb Gu(bLD6T66) 6 Lisé6) எல்லைக்கொண்டிருக்க, "வன்முறையின் ஒரு பங்காக ஒவ்வொருவரும் ஆகிறார்கள்’ என அறிவித்துள்ளது.
தேசிய அளவில் பெண்களுக்கெதிரான வன்முறையைப் பற்றி எவ்வித ஆய்வும் நடத்தப் படவில்லை. ஆயினும் பொலிஸ் அறிக்கைகளின் பிரகாரம் 1996 இலிருந்து 50,000 இல்ல வன்முறை சம்பவங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன் சிறு ஆயுதங்கள் இலகுவாக கிடைப்பதனால் இல்ல வன்முறையில் கொடூரமும், கொலைகளும் அதிகரித்துள்ளது.
கண்ணி வெடிகள்
பின்வருவன வருடாந்த கண்ணிவெடி கண்காணிப்பு அறிக்கையிலிருந்து பதிவு செய்த குறிப்புகளாகும். இவை கண்ணிவெடிகளை சர்வதேச அளவில் தடைசெய்யும் பிரசாரத்தின் (ICBL) ஆரம்ப கண்ணிவெடி கண்காணிப்பிலிருந்து கிடைத்தவையாகும். ICBL இவ்வறிக்கையின் கதாசிரியர். ICBL இன் ஸ்தாபக அங்கத்தவரும். பூர் வாங்க கண்ணிவெடி கண்காணிப்பு இணைப்பாளருமான ஆய்வு நிறுவனமாகிய HRW இவ்வறிக்கைகளை வெளியிட்டவர்களாவர்.
12

பாவனையும் விளைவுகளும்
கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும், மக்களைத் தாக்கும் கண்ணிவெடிகளை (antipersonal mines) பெருமளவு பயன்படுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசு படையினர் அதன் யுத்த முன்னணி நிலைகளிலும், முக்கிய அரண்கள், பாதுகாப்பிடங்களிலும் விடுதலைப் புலிகள் மீண்டும் யாழ்ப்பாண பகுதிகளைக் கைப்பற்றி விடாமல் இருப்பதற்காக பயன்படுத்தினர். குறிப்பாக இந்த கண்ணி வெடிகள் விசேட வடிவில் அடையாளமிடப்பட்ட வரைபடத்துடன் பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகளின் ஜூன் 2001 ஆம் அறிக்கையின் படி, ‘கண்ணிவெடிகள் இரு சாராராலும் யுத்த தந்திர வியூகங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. . . . . அரச படைகளோ தமிழீழ விடுதலைப் புலிகளோ பொதுமக்களைக் குறிவைத்து பிரயோகிக்க வில்லை. அத்துடன் குறிப்பிட்ட அப்பிரதேசங்களை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை' என இருக்கிறது. ஆயினும் இது 2002 ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதியில் கண்ணிவெடி கண்காணிப்பு குழுவுக்கு கிடைத்த தகவல்களுக்கு, அதாவது சில சமயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், வசதி வாய்ப்புக்கள், புகலிடம், உணவு, நீர் முதலியவற்றைப் மக்கள் பெறுவதைத் தடுப்பதற்காக பிரயோகம் செய்ததாக கூறும் கூற்றுக்கு எதிர் மறையாக இருக்கின்றது.
மக்களைத் தாக்கும் கண்ணிவெடிகள் ஏராளமாகப் பாவிக்கப்பட்டுள்ளமை பெரும் பரப்பிலான விவசாய நிலங்கள், நகள் புரம், வீதிகள், நீர் நிலைகள், கால்நடைகள் முதலியவற்றை முக்கியமாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பெரிதும் பாதித்துள்ளது. துரதிஷ்டவசமாக கண்ணிவெடிகள் அதிக ஜன நெருக்கடியுள்ளர இடங்களிலும், அதிக செழிப்பான நிலங்களிலும் புதைக்கப்பட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு அதிகாரி, ஆஸ்டின் பர்ணான்டோ அரசு படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் சுமார் 700,000 கண்ணிவெடிகள் தீபகத்தின் பாதைகளிலும், வயல்வெளிகளிளும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் மதிப்பிடுகிறார். 1999 இல் அரசாங்கம் 25,000 கண்ணிவெடிகள் புதைக்கப் பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரண்டு மில்லியன் மக்களைத் தாக்கும் கண்ணிவெடிகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு பிற்பகுதியில் சண்டையின் அளவு கணிசமாகக் குறைந்து விட்டதுடன், டிசெம்பர் 2001 இல் ஒருதலைப்பட்சமாக இருபக்கங்களிலும் யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தப் பட்டதன் பின்னர் முற்றாக நிறுத்தப்பட்டு
13

Page 14
விட்டது. உத்தியோகப் பூர்வ போர் நிறுத்தம் பெப்ரவரி 23, 2002 இல் மேற்கொள்ளப்பட்டது. டிசெம்பர் 2001 இற்குப் பின்னர் எந்த ஒரு பக்கத்தினராலும் புதியதாக கண்ணிவெடிகள் வைக்கப்பட்டதாக அறிக்கைகள் இல்லை.
யுத்த நிறுத்தம் இறுதியாக கண்ணிவெடி செயற்திட்டங்களைச் செயற்படுத்த வழி வகுத்தது. ஆயினும் இடம்பெயர்ந்தவர்களுக்கு, அவர்கள் அவர்களின் இடங்களுக்கு மீண்டும் செல்ல ஆரம்பித்தமையால் கண்ணிவெடி அபாயங்கள் ஏற்பட்டு விடும் என்னும் பெருங் கரிசனம் ஏற்பட்டது. மார்ச் 2001 இல் உலக வங்கியால், ஒரு மில்லியன் US டொலர்கள் UNDP யினால் ஆரம்பிக்கப்பட்ட கண்ணிவெடி அகற்றும் திட்ட நடவடிக்கைகளுக்கு அளிக்கப்பட்டது. UNICEF கண்ணிவெடி அபாயங்கள் பற்றிய போதனையை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தது. UN, ஏப்ரல் 2001 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் குடியமர்த்துவது அபாயகரமானது எனக் கூறியுள்ளது. யுத்த நிறுத்தம் நடைமுறையில் இருப்பதனாலேயே இப்பிரச்சனையின் அளவு அதிகரித்து வருகின்றது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உடனடியாக மீள வேண்டும் என்னும் எதிர்ப்பார்ப்பு கண்ணிவெடி அகற்றல், கண்ணிவெடி நிலத்தை அடையாளம் இடல், கண்ணிவெடி அபாயங்களைப் பற்றிய போதனை என்பனவற்றில் ஆழ்ந்த அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தன்னிச்சையாக கண்ணி வெடிகளை அகற்றும் முன்னர் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதாக ஏற்கனவே அறிவிப்புகள் வருகின்றன.
கண்ணி வெடி அகற்றும் திட்டங்கள்
மார்ச் 26, 2002 இல் உலக வங்கி US $ ஒரு மில்லியனை UNDP யினால் அமுலாக்கப்பட்ட கண்ணிவெடி நடவடிக்கை திட்டத்திற்காக கொடுப்பதாக வெளியிட்டது. இதில் நில அளவை, வரைபடம் தயாரிப்பு, பொதுமக்கள் நிர்வாகத்தில் உள்ள பிரதேசங்களில் கண்ணி வெடியகற்றப் பயிற்சி முதலியனவும் உள்ளடங்கும். இத்துடன் UNDP US $ 300,000 ஐயும் UN 5603160ofG6Il9 bL69é60)5 (3960)6 (UNMAS) USS 58,000 ggub இத்திட்டத்திற்காக அளிக்கின்றது. பெப்ரவரி 2002 இல் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் US $75,000 ஐ அகதிகளுக்கான UN உயர் ஸ்தானிகருக்கு (UNHCR) கண்ணிவெடி நடவடிக்கைக்கு நிபுணர்களின் ஆலோசனைகளையும் கண்ணிவெடி அபாயத்தைப் பற்றிய கல்வி நடவடிக்கைகளையும் அளித்து, நாட்டின் வடக்கு, கிழக்குகளில் இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் செல்வதற்கு வழி வகுப்பதற்காக கொடுத்துள்ளது. ܝ
14

ஜூன் 2002 இல் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் UNDPயுடன் கண்ணிவெடி நடவடிக்கை களுக்காக US$ 285,000 அளிப்பதாக ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையின் மீள்கட்டுமான, மீள்குடியமர்த்தும், அகதிகள் அமைச்சு யுத்தத்தினால் சீர்குலைந்த நகரான சாவகச்சேரிய்யிலும் அதன் வட பகுதி சுற்றுப்புறத்திலும் கண்ணிவெடி அகற்றுவதற்கு 300 மில்லியன் ரூபாய்கள் (US$3.2Million) தேவை என்று மதிப்பீடு செய்துள்ளது. UNICEF, இங்கிலாந்து, ஸ்வீடன் அரசுகளிடம் இருந்து 2001 ஆம் ஆணி டுகளில் US$75,000 ஐ கணிணிவெடி அபாய கலவி நடவடிக்கைகளுக்காகப் பெற்றுள்ளது. அரசு கட்டுப்பாட்டுப் பகுதியில் US$60,000 மும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் US$15,000 மும் கண்ணிவெடி அபாய கல்வி நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
சேதங்கள்
கண்ணிவெடி சேதங்களை கணக்கெடுக்க மையப்படுத்தப்பட்ட ஸ்தாபனம் ஒன்றும் இலங்கையில் இல்லை. கிடைத்த தகவல்களை வைத்து 2001 ஆம் ஆண்டுகளில் புதிய சேதங்கள் அதிகரித்துள்ளன. வெவ்வேறு மூலகங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி 300 புதிய கண்ணிவெடி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் எப்பொழுதும் குறைத்த கண்ணிவெடி தகவல்களே கொடுக்கப்படும் என நம்பப்படுகின்றது. 2002 இல் 223 புதிய கண்ணிவெடி விபத்துகள் தெரிவிக்கப்பட்டன. கண்ணிவெடி தொடர்ந்தும் இலங்கை இராணுவத்ததையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தாக்கி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றது. ஜனவரி 2001 இல் யாழ்ப்பாணத் தீபகத்தில் கண்ணிவெடி அகற்றும் பொழுது ஏற்பட்ட விபத்தில் பதினொரு இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 2001 இல் யாழ்ப்பாணத் தாக்குதலின் பொழுது அரசு படையினரில் சுமார் 180 - 300 இராணுவத்தினர் கண்ணிவெடியில் மட்டும் இறந்துள்ளதாக UNMAS அறிவித்துள்ளது. இரு வேறு சந்தர்ப்பங்களில் 2001 ஆம் ஆண்டு மே மாதமும், ஜூன் மாதமும் வாகனத்திற்கு எதிரான கண்ணிவெடியில் தாக்குண்டு பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த 62 யுத்த வீரர்கள் மரணமோ, காயமோ அடைந்தனர்.
கண்ணிவெடி தாக்கி உயிர்த்தப்பியவர்களுக்காக எவ்விதமான விசேட சமூக, பொருளாதார மீள் இணைப்பு திட்டங்கள் இல்லை. எனினும், பல்வேறு உள்நாட்டு, சர்வதேச நிறுவனங்கள் நாடெங்கிலும் யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு விதமான புனர்வாழ்வு திட்டங்களை நடத்தி வருகின்றது.
15

Page 15
யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள சமுக - அரசியல், நன்னடத்தை இழப்புகள்
அரசியல் நஷ்டங்கள்.
யுத்தமானது உள்ளூர் அரசியல் முறைகளில் பாரிய நஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வாழ்வில் அனைத்துப் பகுதிகளிலும் அது உட்புகுந்து ஜனநாயக நடைமுறைகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தத்தினால் அரசியல் முறையில் ஏற்பட்ட சில முக்கிய தாக்கங்கள் கீழே ஆராயப்பட்டுள்ளது.
அவசரகால நிலைமை
அவசரகால நிலைமை அரசினால் சட்டங்களை ஏற்படுத்தவும், நிபந்தனைகளை விதிக்கவும் ஏதுவாக இருந்ததனால், ஜனநாயகத்தை அனுசரிக்கும் வழக்கம்
பாதுகாப்பின் காரணமாக தடுக்கப்பட்டிருந்தது. 1980 இல் இலங்கையினால்
ஒத்துக்கொள்ளப்பட்டிருந்த சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச
ஒப்பந்தத்தின் (ICCPR) அளவுகளை மீறி, அதிகளவிலான தடுப்புச்
சட்டங்களையும் நிபந்தனைகளையும் விதித்தது. அவசரகால நிலைமையின்
கீழ் அளிக்கப்பட்டிருந்த மிதமிஞ்சிய அதிகாரங்களும் அவற்றின் பங்களிப்பும்,
யுத்தத்தின் சமயம் மனித உரிமைகளை மீறியதைப் பற்றி பல்வேறு சர்வதேச,
உள்ளுர் மனித உரிமை நிறுவனங்கள் விமர்சனம் செய்ததோடு,
ஆவணப்படுத்தவும் செய்தது.
ஜனநாயக அரசியல் நடவடிக்கைகள்.
ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தேர்ந்தெடுக் கப்பட்டதாகவும், அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கும், யுத்தத்தைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்குமே முக்கியமாக பிரயோகிக்கப்பட்டது. உதாரணமாக அரசியல் சுதந்திரம் 1983 இல் அரசியல் கட்சிகளின் பகிஷ்கரிப்பு உட்பட துண்டிக்கப்பட்டிருந்தது, 1987 இல் மே தின கூட்டத்திற்கு தடை விதித்திருந்தது, 1987 இன் சில கால கட்டங்களில் செய்தி தணிக்கை செய்திருந்தது போன்றவை, மிக மோசமாக அவசரக்காலச் சட்டங்களை அமுல் படுத்தியிருந்தது. 1987 தொடக்கம் 1989 வரையிலான காலப்பகுதிகளில் இருந்த கலக எழுச்சி சமயமே, ஏனைய கால கட்டங்களில் அவசரக்காலச் சட்டம் ஒப்பிடும் பொழுது மிதமாக இருந்தாலும், அரசின் அவசரக் காலமும் அதனால் அரசாங்கத்திடமிருந்த அதிகாரங்களும் இலைமறையாக
16

அச்சுறுத்தலை ஏற்படுத்தியதனால், அரசியற் கட்சிகளோ குடிமக்களோ ஜனநாயக உரிமைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அது தடையாக இருந்தது.
கைது செய்யும் நிபந்தனைகள்
2000 ம் ஆண்டு மே மாதம் இலங்கை ஜனாதிபதி புதிய அவசரகால சட்டங்களை ஏற்படுத்தினார். அதன்படி பொலிஸ், இராணுவத்தினரை விட 'அதிகாரம் கொடுக்கப் பட்ட ஒருவருக்கும் கைது செய்யவோ காவலில் வைப்பதற்கோ கணிசமான அளவு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இச்சட்டங்கள் இத்துடன் தணிக்கை செய்வதற்கு, பொது கூட்டங்கள், ஊர்வலங்களைத் தடை செய்வதற்கு, நாட்டின் பாதுகாப்பு, அமைதிக்கோ அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கோ குந்தகமானது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில் அப்படிப்பட்ட அமைப்புக்களைத் தடை செய்ய பரந்தளவில் அதிகாரம் கொடுக்கப்பட்டது.
கைதிகளும் தடுப்பு காவலில் உள்ளோரும்
இலங்கையில் கைதிகளுக்கும், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவருக்கும் முழுப் பாதுகாப்புக் கொடுப்பது விமரிசிக்கப்படுமளவு முக்கியமானது. ஏனெனில் நிறைவேற்றப்பட்ட அல்லது தன்னிச்சை இல்லாமல் காணாமற் போனோரும், சித்திரவதைக்குள்ளானோருக்குமான ஐக்கிய நாடுகளின் தொழிற் குழுவின் காரணமில்லாமல் ‘காணாமல் போனோரின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. சித்திரவதையையும் ‘காணாமல் போவதையும் தடுப்பதற்கு மிகவும் சிறந்த பாதுகாப்பு எதுவெனில், எந்த கைதியையும் விசாரணைக்காக நீண்ட நாட்கள் காவலில் வைக்காமலும், அவருடைய உறவினர், வக்கீல், வைத்தியர் ஆகியோர் அவரை சந்திக்கக் கூடியதாக வசதி செய்து கொடுப்பதும் ஆகும். ஆனால் புதிய சட்டங்கள், காவலில் வைக்கப்படும் கால அவகாசத்தை குறிப்பிடும் அளவு அதிகரித்து உள்ளதனால் குற்றவாளிகள் அவர்களை விசாரிப்போர்களால் தடுத்து வைக்கப்படுவதுடன் முன்பு இருந்த பாதுகாப்புகளையும் பலவீனப் படுத்தி விட்டது.
அரசியல் கொலைகள்
யுத்தத்தின் மிகக் கொடுரமான பின்விளைவு, தலைவர்களையும் அரசியல் கட்சிகளின் முக்கிய அங்கத்தவர்களையும் படுகொலை செய்வததாகும். இதில் ஜனாதிபதி பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க, பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேயரட்ன, ஜனாதிபதியாகும் தகுதியைக் கொண்டிருந்த லலித் அதுலத்முதலி ஆகிய ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள்
17

Page 16
அடங்குவர். பல TULF தலைவர்களும் பல போராளிகளும் களத்திலேயே கொல்லப்பட்டனர். இம்மாதிரியான அரசியல் படுகொலைகளால் எந்தளவு அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்டது என்பதை கணக்கிலிட முடியாது. அரசியல் தைரியசாலிகளின் இழப்பு UNP யின் பாரிய ஆதரவைத் தேடக் கூடிய அளவைக் குறைத்துவிட்டது. ஆயினும், அதனால் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொண்டு உள்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் இரண்டில் ஒன்றாக இருக்க முடிந்துள்ளது. இத்தனை குறைபாடுகள் இருந்தாலும் வடக்கு, கிழக்கு தவிர்ந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெரியளவில் ஜனநாயக அரசியல் அமைப்பே உள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும்
வடக்கு கிழக்கின் நிலையோ அதிக வித்தியாசமானது. அங்கு TULF தலைவர்கள் கொல்லப்படும் முன்னராகவே போராளி இளைஞர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டு தலைமை நிலைகளுக்கு நகர்ந்து விட்டிருந்தனர். யுத்தம் ஜனநாயக அரசியல் முறையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதுடன் ஜனநாயக அரசியல் கட்சியான TULF ஐ ஓரங்கட்டிவிட்டது. அப்பொழுது இருந்து படிப்படியாக தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களின் எதிரிகளை, TULF உட்பட அனைவரையும் அழித்து அரசியல் அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டது. யுத்தம் காரணமாகவும் அது தொடரப்பட்டதனாலும், வட, கிழக்குகளில் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டன. அங்கு நடந்த தேர்தல்களும் அனைவரும் சுதந்திரமாகவும் முழுமையாகவும் பங்கு பற்றாமலே நடைப்பெற்றன. 1987 இல் தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபையும் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) சென்றவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டின் கீழ் வந்தவுடன் கலைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுவாக தேர்தல்களைப் பகிஷ்கரிப்பதுடன், பொதுமக்களையும் வாக்களிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யும்.
1994 இல் வடக்கு மாகாணத்தில் நடைப்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் குறைவானவர்கள் பங்களித்ததனால், அத்தேர்தல் ஜனநாயக பிரதிநிதித்துவத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது. உள்நாட்டு ஜனநாயக அரசாங்கத்தை அங்கு நிறுவுவதற்காக எடுக்கப் பட்ட அனைத்து முயற்சிகளும் தமழீழ விடுதலைப் புலிகளினால் இடை மறிக்கப்பட்டன. இவ்வாறான நடைமுறைகள் தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் நிர்வாகத்திலும், ஜனநாயக அரசியல் கட்சிகளினதும் இருக்க வேண்டிய சட்டபூர்வமான பிரதிநிதித்துவத்தை முற்றாக அழித்து விட்டது.
18

JVP (ஜாதிக்க விமுக்தி பெரமுன) யின் அரசியல் வன்முறைகள்.
இந்த நிலைமைகள் பல்வேறு வடிவிலான அரசியல் வன்முறைகள் உருவாவதற்கு வழி கோலியது. இளைஞர்கள் கலக எழுச்சியினால் (1987 - 1989) VP யின் இளைஞர் பிரிவான DJVP க்கு இராணுவத்தில் இருந்து தப்பி ஓடி வந்த வீரர்களில் தீவிரமானவர்கள் புதிய அங்கத்தவர்களாகினர். இயல்பான கால கட்டத்தில் பெற்றிருக்க முடியாத ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் JVP யினால் பெற்றுக் கொள்ள முடிந்தது. வடக்கு கிழக்குகளில் யுத்தம் இல்லாதிருந்தால் இளைஞர் கிளர்ச்சியின் வன்முறை, அந்தளவு அதிகரித்திருக்க முடியாது. JVP யினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகள் அரசியல் வாதிகளுக்கு அதிகரித்த பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு வழிப்படுத்தியது. ஆபத்துக்கு உரியவர்கள் என கருதப்பட்ட அரசியல் வாதிகளுக்கு ஆயுதம் தரித்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகரிக்கிறது; முக்கியமாக தேர்தல் சமயங்களில்,
மனித, சிவில் உரிமைகள்
யுத்தம், இலங்கை மக்களின் மனித உரிமைகளை கட்டுப்படுத்திவிட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளும், GOSL, LTTE ஆகியோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய அவசியமும் மக்களின் மேல் பெரிய சுமையை வைத்துவிட்டது. வடக்கு, கிழக்குக்கு வெளியே மக்கள் செறிந்து வாழும் இடங்களில் பல்வேறு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் பாதுகாப்பின் நிமித்தம் நடைபெறும் அன்றாட நடவடிக்கையாகியது. யுத்தம் தொடரும் வரை முழு நாட்டிலும் சுதந்திரம் இழக்கப்பட்டும், மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுமே இருக்கும்.
சித்திரவதை
பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA), அவசரகால நிபந்தனைகள் என்பனவற்றின் கீழ், கைது செய்யப்பட்ட ஒருவரை சித்திரவதை செய்வதும், தரக்குறைவாக நடத்துவதும் யுத்தத்தின் காரணமாக நிகழ்வதாகும். சித்திரவதை பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கைகள் இருப்பதில்லை. ஆயினும் இனப்பிரச்சினை சம்பந்தமாக சித்திரவதையை தடுத்தல் சர்வதேச மன்னிப்பு சபையால் (Al-Amnesty International), சித்திரவதைக்கு எதிரான ggébéu (35fu f60)U (UN - Committee Against Torture (CAT)) uITQpLD கண்காணிக்கப்படுகின்றது. A1 அறிகைகள், 1986/87 களில் இதன் எண்ணிக்கை திடீரென கூடியதாகவும், தடுப்புக் காவலிலிடப்பட்ட தமிழ் இளைஞர்கள் பூசா முகாமிலும், வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ
19

Page 17
முகாம்களிலும் பயங்கரமான விதங்களில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கூறின. சந்தேகத்துக்கு இடமானோரை சூடேற்றிய இரும்பு கம்பிகளில் சுடுவது, தொங்கவிட்டு சந்தேகிகளை அடிப்பது, மிளகாய் தூளை காயங்களின் மேல் பூசுவது போன்றவை இதில் இடம்பெறும்.
இலங்கையில் சித்திரவதையின் நிலைமைகளை மீள்பார்க்கும் CAT ஆனது மே மாதம் 1998 இல் கூட்டிய அதன் 341ஆம் கூட்டத்தில் இவ்வழக்கம் பயங்கரமாக துஷ் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் முக்கியமாக காணாமற்போனோர் சித்திரவதைக்கு உள்ளாவது கூடியுள்ளதாகவும்’ வருத்தப்பட்டது. ஜூன் மாதம் 1999 இல் A கொடுத்த அறிக்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், அவசரகால நிலைமைகளிலும் கைது செய்யப்பட்டவர்களில் சித்திரவதைக்கு உள்ளான பலரைப் பற்றி வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருந்த மனுக்களின் பிரகாரம் சித்திரவதைக்கும், சட்டதிற்கும் புறம்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் எண்ணக்கை 1997 இல் 325, 1998 இல் அது 184 க்கு குறைந்து, பின் 1999 இல் 296 ஆகக் கூடியது. 2000 ஆம் ஆண்டு முதற் காலாண்டுப் பகுதியில் 106 மனுக்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அதே காலப் பகுதியில் இராணுவ உத்தியோகத்தரின் எண்ணிக்கை 79, 37, 63, 42 ஆகும். பொலிஸாருக்கான எண்ணிக்கை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், அவசரகால நிலைமைகளில் செய்த குற்றச் செயல்களுக்கும் சாதாரணச் சட்டத்தின் கீழ் செய்த குற்றச் செயல்களுக்கும், வன்முறைக்கும் பொருந்தும்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் சித்திரவதையை ராஜ துரோகிகள்', "உளவு கொடுப்போா' ஆகியோருக்கு கொடுக்கும் சாதாரண தண்டனையாக பாவிக்கின்றது. AI, தமிழீழ விடுதலைப் புலிகளின் பல சித்திரவதை நிகழ்வுகளைப் பற்றி ஆவணப்படுத்தியுள்ளது. ஜூன் 1999 இல் Al, பூசா முகாமில் 1987 இல் கைதிகளுக்கு செய்த முறைகளிலேயே பல சித்திரவதைகளைச் செய்ததாக அறிவித்தது. (அதாவது, தலை கீழாக கைதிகளை தொங்க விட்டு அவர்களை அடித்தல், மிளகாய்ப் புகையை உள்ளே இழுத்தல், பின்களையோ ஆணிகளையோ விரல் நகங்களில் குத்துதல், சூடேற்றிய இரும்பு கம்பிகளில் சுடுதல் போன்றவை)
ஊழல்
சமுதாயத்தில் வெளிப்படையாகவும், பதில் சொல்லக்கூடியதாகவும் இருந்த முறைகளை யுத்தம் பலவீனப் படுத்தி விட்டது. இது முக்கியமாக மனித உரிமைகளுக்கு பொருந்தும்.
பெரும்பாலான பகுதிகளில் யுத்த நடைமுறைகளின் இயல்புகள் குறைத்து மதிப்பிடப்படுவதனால் அது வழமையான வெளிப்படையான, பதில் சொல்லக்கூடிய ஆட்சிமுறையை ஏற்படுத்த முடியாமல் செய்கின்றது.
2O

இப்படியான நிலைமைகளில் நிதி பொறுப்புகளில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பும், ஒழுங்கின்மையும் ஊழலும் ஏற்படச் சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன. இதை முக்கியமாக இராணுவ செலவினங்களில் பார்க்க முடிகின்றது. இராணுவ செலவினங்களில் GDP யில் 5 வீதம் உயர்ந்துள்ளதுடன் இலங்கை வருமானத்தில் 30 வீதத்தையும் உட்கிறக்க்கிறது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எதிர்ப்பார்ப்பதைப் போல ஆயதங்கள், வேறு இராணுவ பொருட்கள் கொள்முதல் பரிமாற்றங்களிளும், சேவைகளிளும் குற்றச்சாட்டுக்கள் ஏற்படுவதுடன், ஒரு சில உயர் இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் ஆழ்ந்த சோதனைக்கும் உள்ளாகிறார்கள்.
வன்முறைக் கலாச்சாரம்
இராணுவ நடவடிக்கைகளைத் தவிர, 1950 களிலிருந்தே தொடர்ச்சியான வன்முறைகள் ஏற்பட்டு வருகின்றன. இது, இன அடிப்படையில் பொதுமக்கள், பெண்கள், சிறுவர்களை கண்மூடித்தனமாக தாக்கி, மனிதாபிமானம் இன்மையையும், இரக்கமுமற்ற தன்மையையும் வெளிக்காட்டி, நாகரீகமடைந்த எந்த சமூகத்தின் அத்திவாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1957/ 58, 1977, 1983 ஆண்டுகளில் ஏற்பட்ட இனக் கலவரங்கள், எல்லைப்புற கிராமத்தவரைக் கொலை செய்தது, படுகொலைகள், பயங்கரவாத நடவடிக்கைகளாக பெருந்திரளான பொதுமக்களை கூட்டமான இடங்களிலும் நகர்களிலும் (முக்கியமாக கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும்) கொன்றது, இராணுவத்தினரால் பதிலுக்காக நிராயுதபாணிகளான பொதுமக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற வன்முறைகள் இதில் அடங்கும்.
உற்சாகமூட்டக் கூடிய அறிகுறி என்ன வெனில் 1983 இல் பார்த்த இன வன்முறைகள் முற்றாக மறைந்து விட்டமை. ஆயினும் யுத்தத்தினால் உருவான வன்முறை சுழற்சி சமூகத்தின் வேறு பகுதிகளினுள் ஊடுருவி விட்டது. JVP அதன் சுய காரணங்களுக்காக மேலெழுந்து 1987 - 1989 களில் செய்த கொடுரமான வன்முறைகள், யுத்தம் காரணமாக இலகுவாக கிடைத்த ஆயுதங்களாலும், இராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்களின் பங்களிப்பாலும் ஏற்பட்டன. வன்முறைகள் உருவாவதற்கு யுத்தத்தினால் கிடைத்த சந்தர்ப்பங்கள், அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனநாயக அரசியல் கட்சிகளிடையேயான கசப்புறவுகளை உண்டாக்கிக் கொள்ளவும் ஏற்படும் வன்முறைக்கும் பங்களித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் ஆழ்ந்த வெறுப்பையும், கோபத்தையும் வளர்க்கும் இடமாக இருக்கின்றது. இதனால் இவற்றை சமாளிக்க வேண்டிய சமூகம், இக்
21

Page 18
கொடூரங்களிலிருந்து சமாளித்து வாழ உணர்ச்சிகளற்ற தன்மையை வளர்த்துக்கொண்டுள்ளது. தங்கள் சொந்த சமூகத்துக்குள்ளேயே ஆழ்ந்த துயரங்கள் ஏற்படுவதை அறிந்தும் தங்களால் அதற்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் உள்ள மக்கள் இடையே இது பொதுவாக இருக்கிறது. வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் மக்கள் இம்மாதிரியான ஆபத்தான மனநிலையில் தங்கள் அன்றாட வாழ்வை, தங்கள் அயலவர்கள் துன்பத்திலும், துயரிலும் பாதிக்கப்பட்டிருப்பினும் வாழ்ந்து வருகிறார்கள். 1970 கள் தொடக்கம் பிறந்த தலைமுறையினரே ஒழுக்க சீர்குலைவுக்கும், வன்முறைக் கலாச்சாரத்திற்கும் உள்ளாகியுள்ளனர். வடக்கு, கிழக்குகளிலே இருந்த இந்த நிலைமை அங்குள்ள பெண்களும், சிறுவர்களும் முன்னிலும் அதிகமாக உக்கிரமான போருக்காக ஒன்று சேர்ந்தார்கள். சமாதானத்தையும், புனர்வாழ்வையும் ஏற்படுத்தி வன்முறைக் கலாச்சாரத்தையும், பழிவாங்கலையும் முடிவுக்கு கொண்டு வந்து, சமூகத்தில் மனிதவாழ்வின் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கடுமையான செயன்லச் செய்வதற்கு பெரிய அளவில் மனித, நிதி வளங்கள் தேவை.
யுத்தத்தினால் இழந்த மனித விலைகளை எண்ணில் அளக்க முடியாது. அன்பு செலுத்தியவர்களின் இழப்பினாலோ, குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதனாலோ, காயங்களால் உடல் ஊனமுற்றவராக இருப்பதோ அல்லது அப்படி ஒருவருடன் இருப்பதனாலோ ஏற்படும் பெருந்துன்பங்களை எண்ணிக்கையில் வெளிப்படுத்த முடியாது. இப்பகுதியில் உள்ள மனித இழப்புகளின் விபரம், பல நிகழ்வுகளின் ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவையாகும். நினைவு படுத்தி, மீண்டும் கூறப்பட்ட ஆதாரங்களை ஆதாரமாகக் கொண்டு, யுத்தத்தினால் ஏற்பட்ட மனித இழப்புக்கை
கண்டறிய முயற்சிக்கப்பட்டுள்ளது.
இறந்தோர், அங்கவீனமுற்றோர், இடம்பெயர்ந்தோர் மற்றும் இடைவிடாமல் பயத்திலும், பாதுகாப்பின்மையிலும் இருப்போரைப் பற்றிய மதிப்பீடு கிடைத்துள்ளன. இதில் சிலமதிப்பீடுகள் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீடுகள் மொத்த மனித இழப்புகளின் அளவுகளில் ஒரு பகுதி குறிப்புகளே. அந்தஎண்ணிக்கையால்மட்டும் அவர்களுடையதுயரங்களிலும், இழப்புகளிலும் தொடர்புகொள்ளமுடியாது.உதாரணமாகஇழந்தஒருவரின்வாழ்ந்திருக்கக்கூடிய வாழ்நாளை எண்ணுவது, எஞ்சியிருப்பவர்களுக்கு இறந்தவரின் இடத்தை ஈடு செய்யாது.
இப்பகுதியில், மனித இழப்புகள் பிரித்தாராயப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளதுடன் "துயர்துடைத்தல்' இல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
22

துயர்துடைக்கும் கொள்கை, ஏற்பட்டுள்ள பெளதீக நஷ்ட்டங்களுக்காக மட்டும் அல்ல, அதைவிட முக்கியமாக மனநிலை இழப்புகளை, மன வெழுச்சிக்கும் உளவியல் காயப்படுத்தலுமான - ஒரு சோக நிலையை ஈடு செய்யவே பயன் படுத்தப் படுகின்றது. சாதாரண மனித வாழ்வில் பல காரணங்களுக்காக இது ஏற்படுகின்றது; விபத்து, வியாதி, இயற்கை அனர்த்தங்கள் போன்றவை. ஆயினும் யுத்த நிலை என்பது வேறுபட்ட ஒரு நிலையே. இங்கு தனித்துவமாக, மக்களின் துயரங்கள் தீவிரமாகவும், பாரியதாகவும், காலங் கடந்தும் இருக்கின்றது.
நிகழ்வுகளின் ஆய்வுகள்
இலங்கை இராணுவத்திலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிலும் சுமார் 30,000 வீரர்கள் இறந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இது குறித்துக் காட்டுவது என்ன வெனில், அதே அளவிலான குடும்பங்கள் தங்கள் இளம் குடும்ப அங்கத்தவரை இழந்த அனுபவத்துக்குள்ளாகி யுள்ளார்கள் என்பதே. மூன்று நிகழ்ச்சிகளின் ஆய்வுகளிலிருந்து போரில் ஒரு அங்கத்தவர் இறந்தால் குடும்பங்கள் படும் துயரங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இரண்டாவது, ஒரு இளம் மனைவியினாலும், சிங்கள போர் வீரரின் தாயினாலும், கொடுக்கப் பட்ட நேரடி அறிக்கைகள். மூன்றாவது ஒரு தமிழீழ விடுதலைப் புலி வீரரின் தாயினால் கூறப் பட்டதைப் பற்றி விசாரணை செய்தவர் கொடுத்த அறிக்கை.
பொதுவான ஏழ்மை பின்னணி
இந்த ஆதாரங்களில் அநேகமான விடயங்களில் பொதுவானதாக இருந்தது. அதில் ஒன்று, அனைவருமே ஏழ்மைப் பின்னணியைக் கொண்டிருந்தனர்.
இளம் மனைவி பேசிய பொழுது, அந்த இளம் தம்பதிகள் வாழ்வதற்காக போராடிய காலகட்டத்தைப் பற்றிக் கூறினார். நாங்கள் மிகுந்த கஷடப்பட்டோம். பல நாட்கள் பசியிலேயே வாடினோம்.
தாய், அவரது குடும்பம் காய்கறிகள் விற்று அதன் மூலம் குடும்ப வருமானத்தைப் பெற்றதாகக் கூறினார். ஒரு கட்டுக் கீரை ஐந்து சதம், நாங்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்தோம்.
மூன்றாவது ஆதாரத்தில் தமிழீழ விடுதலைப் புலி வீரரால் கூறப்பட்டது, வீட்டில் இருந்த வறுமையின் காரணமாக, அவர் 8ஆம் ஆண்டுடன் அவரது படிப்பை இடை நிறுத்தி கூலி வேலை செய்ய ஆரம்பித்தார்.
இரு சிங்கள வீரர்களும், அவர்கள் வறுமையை ஒழிப்பதற்காகவும் தங்கள்
பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்காகவும் இராணுவத்தில் 23

Page 19
இணைந்துள்ளனர். இராணுவத்தில் இணைந்ததனால், அவர்களுக்கு வருமானமும் பொருளாதார பாதுகாப்பும் கிடைத்தது. இதை அவர்கள் வேறு எந்த தொழில்களிலும் பெற்றுக் கொள்ள முடியாது. தாய் கூறியதாவது: அவருடைய ஊதியத்தில் இருந்தே நாங்கள் எங்கள் வீட்டுக்குத் தேவையான - சகோதரியின் படிப்பு, சகோதரனின் படிப்பு, நோய்க்கு வைத்தியம் அனைத்தையும் மேற் கொண்டோம்.
இராணுவ சீருடையில் இருந்தது குடும்பத்திற்கு ஒரு மதிப்பைக் கொடுத்தது, அதை அவர்கள் பெரிதும் வரவேற்றார்கள். தாய் தன் மகனை முதன் முறை சீருடையில் பார்த்த காட்சியை வர்ணித்தார். என் உணர்வுகளில் மிதமிஞ்சிய மகிழ்ச்சி ஏற்பட்டது. கண்களில் கண்ணிர் வந்தது. நான் அழுதேன். ஆனால் அது கவலையினால் ஆன கண்ணிர் அல்ல, சந்தோஷத்தினால் ஏற்பட்டது. நாங்கள் அப்படி ஒரு நாளைப் பார்த்ததே இல்லை. அங்கே என் மகன் சீருடையில் நிற்பதைப் பார்த்தேன். அது நிஜமாகவே பெரிய விஷயம். அனைவரது கண்களிலுமே கண்ணிர். அது மகிழ்ச்சியினால் ஏற்பட்டதா அல்லது கவலையினால் ஏற்பட்டதா என்பதைக் கூற முடியவில்லை.
யுத்தத்தில் தமிழ் இளைஞர் இணைந்தது அதிக விசனத்தை ஏற்படுத்தியது: அதன் பின்னர், வன்முறையின் காரணமாக சிலர் இராணுவத்தின் கீழ் இருந்த அப்பகுதியை விட்டு வெளியேறி போராளிகளாக தங்களைப் பதிவு செய்துக் கொண்டனர். தேவகுமாருடன் சென்றவர்களில் ஒருவன் ஒரு மாதத்தின் பின்னர் அவனது பெற்றோர்களிடம் திரும்பி வந்தான். இன்னொருவன் மூன்று மாதங்களுக்குப் பின்னர் திரும்பி வந்தான். தேவகுமார் எங்கு இருக்கிறான் என்பதனை நான் அதன் பின்னர் அறிந்து கொண்டேன். பல கஷ்டங்களுக்குப் பின்னர் நான் அவனுடன் கதைத்தேன். அவனுடைய கண்கள் கலங்கி இருந்தாலும், அவன் என்னுடன் திரும்பி வரவில்லை.
அச்சமும் மன விசாரமும்
மூன்று ஆதாரங்களிலுமே, நடந்துக் கொண்டிருக்கும் யுத்த முனையில் அவர்களின் குடும்ப அங்கத்தவர் இருந்தப் பொழுது அச்சம், மன விசாரம், எதிர்ப்பார்ப்பு போன்ற மனநிலைகளில் வாழ வேண்டி இருந்தது தெரிந்தது.
இளம் மனைவி கூறியது:
பலமுறை அவர் வீட்டுக்கு வந்தார்; அதனால் அவர் இறந்ததை என்னால் நம்ப முடியவில்லை.
24

தாய் இம்மாதிரியான வருத்தத்தை தெரிவித்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது மகன் காயத்துக்கோ மரணத்துக்கோ உள்ளாகி விட்டார் என செய்தி வந்தது, ஆனால் பின்னர் அந்தத் தகவல் தப்பானது என செய்தி கிடைத்தது. .
அந்த நிகழ்ச்சி எங்களுக்கு அவரது மரண நினைப்பை எதிர் கொள்ள உதவியது.
தமிழ்த் தாயோ வித்தியாசமான சூழலில், யுத்தத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் நடுவில் வாழ்ந்தார்: ஒன்றரை வருடத்திற்குப் பின்னர் இன்னொரு தகவல், அவர் துப்பாக்கிக் காயத்துக்கு உள்ளாகி வருத்தத்தில் இருப்பதாக வந்தது. பெரும் மனக் கவலையுடன் நான் காட்டுப் பகுதிக்குச் சென்று ஒரு வீட்டில் காத்திருந்தேன். நான்கு பேர் அவனை ஒரு சாக்கு கட்டிலில் தூக்கிக் கொண்டு வந்தனர். அவனுக்கு தாடியெல்லாம் வளர்ந்து உடல் முழுவதும் சேறாக இருந்தது. முழங்காலில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டிருந்தது. முதுகெலும்பு உடைந்து நடக்க முடியாத நிலையில் இருந்தான். நான் இருக்கும் பொழுதே அவனுக்கு ஒரு ஊசியை செலுத்தி மீண்டும் அவனைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.
மரணத்தினாலாகும் மன அதிர்ச்சி
இறப்பு என்ற செய்தி வரும் சமயம் குடும்பத்தினர் படும் வேதனை மிகவும் மோசமானது. ஒவ்வொரு நிகழ்வையும் கூறும் பொழுது அநதந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட வேதனை உணர்வுகள் தனிப்பட்டதாகவே இருக்கின்றன.
இளம் மனைவி தொடர் நிகழ்வுகளாக அதைப் பற்றிக் கூறினார். இறப்பும், இழப்பின் இறுதியும் அந்த தம்பதிகளிடையே இருந்த நெருக்கத்தையும், வாழ்வில் அவர்களுக்காகவும், அவர்களின் குழந்தைகளுக்காகவுமான எதிர்ப்பார்ப்புக்களையும் அதிகரிக்கச் செய்து விடுகிறது.
நான் என் சகோதரியிடமிருந்து 100 கமாண்டோக்கள் போரில் மாண்டதைப் பற்றிய செய்தியை அறிந்தேன். அன்று நான் பத்திரிக்கையை வாசித்து இருக்கவில்லை. அதன் காரணம், நான் சாதாரணமாக ஒரு மணித்தியாலத்தை அவருக்காகவும், அவரது பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனையில் செலுத்துவதே ஆகும். நான் ஆலயத்தில் இருந்து திரும்பி வந்த சமயம், என் வீட்டில் சிறு கூட்டம் இருப்பதைப் பார்த்தேன். அப்பொழுதும் நான் என் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகி இருக்கும் என்றே எண்ணினேன். சிலர் என்னிடம் முகாமுக்குச் சென்று தகவல் அறிந்து வரும்படிக் கூறினர். அப்பொழுதுதான் நான்
25

Page 20
வாழ்வில் தனிமை உணர்வை உணர்ந்தேன். . . . என்னால் எப்படி முகாமுக்குத் தனியாகப் போக முடியும்? நான் என் கணவரின் நண்பர் கபிலனின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அவரது மனைவி என்னைக் கட்டித் தழுவி அழுதார். அப்பொழுதும் எனக்கு என் கணவருக்கு எதுவும் மோசமாக நடந்து இருக்காது என்ற உணர்வே இருந்தது.
நான் பிறகு வேறொரு நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு, களுத்துறையில் இருந்து சென்ற ஒருவருக்கும் ஒன்றும் நடை பெறவில்லை என்று எனக்கு கூறப்பட்டது. நான் நம்பிக்கை அலைகளையும், மன ஆறுதலையும் பெற்றேன். ஏதோ இறப்பில் இருந்தே மீண்டது போன்றும் எனது பிரச்சினைகள் அனைத்தும் அகன்று விட்டது போன்றும் இருந்தது.
மழைத் தூறிக் கொண்டிருந்தமையால் என் ஆடைகள் நனைந்து விட்டன. நான் வீட்டுக்குத் திரும்பி வந்த பொழுது என் வீட்டில் கூட்டம் இருப்பதைக் கண்டேன். என் கணவர் லக்ஷ்மண் தான் வந்து விட்டிருப்பார் என்றும், மழையில் நனைந்ததற்கு கோவிக்கப் போகிறார் என்றும் நினைத்தேன். இம்மாதிரியான எண்ணங்கள் தான் என் தலையில் ஓடியது.
எல்லோரும் ஏன் என்னைக் கட்டிக் கொள்கிறார்கள் எனக் கேட்டேன். யாருக்கு என்ன நடந்தது? யாரோ சொல்வது கேட்டது, அவள் இதைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டாம்' அப்பொழுது என் தங்கை என்னிடம் வந்து 'எல்லாம் முடிந்து விட்டது, லக்ஷ்மண் அண்ணா போய் விட்டார்’ என்று கூறினாள். அதன் பிறகு எனக்கு ஒன்றுமே நினைவு இல்லை. என் கணவரின் இறுதி சடலம் என சொல்லி அனுப்பியது, சீல் வைக்கப் பட்ட சவப்பெட்டியே.
தாயின் கதை மகனின் திருமணத்தை தொடர்ந்து ஆரம்பமாகியது. மகனின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். பொலிஸ் அவரது வீட்டுக்கு வந்து செய்தியை சொல்கிறார்கள். அவரால் கூற முடிந்ததெல்லாம் அதைத் தொடர்ந்து ஒரே குழப்பம் ஏற்பட்டது. பைத்தியத்தனமாக, பிஸ்ஸ" பிடித்த மாதிரி. அவர் மரணச் சடங்குகளின் பின்னர் நடந்த கசப்பான ஒரு நிகழ்வை நினைவு கூறினார். W
என் மகனின் நண்பர்கள் மகனின் உடைகளை கொண்டு வந்தனர். அன்றையத் தினம் ஏதோ மரணத்தையே என் வீட்டினுள் கொண்டு வருவது போலிருந்தது. பெரிதாக நான் ஓலமிட்டது நினைவிருக்கிறது. எங்களுக்கு ஆத்திரம் ஏற்படுகிறது. ஏனெனில் அதிகாரிகளுக்கு என் மகனின் உடம்பை
26

எங்களிடம் ஒப்படைப்பதில் தயக்கம் இருந்ததாக நாங்கள் உணர்ந்தோம். என்னைப் போன்று எத்தனை தாய்மார் இதேமாதிரியான துயரத்தை அனுபவித்திருப்பார்கள் என எண்ணிக் கொண்டேன். எப்படி வார்த்தைகளால் எங்கள் துயரைப் போக்க முடியும் என்று கூறுங்கள்?
தமிழ்த்தாயின் பின்வாங்கும் வார்த்தைகளால் கொடுத்த பதில் மனதை உருக்குவதாக இருந்தது: நான்கு வருடங்களாக என் மகனை நான் பார்த்திருக்கா விட்டாலும், அவனிடமிருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தது. அவன் சுகமாக இருப்பதும், மோட்டார் சைக்கிலில் சுற்றிக் கொண்டிருப்பதும் எனக்கு தெரிய வந்தது. பிறது 3, 7 98 இல் எனக்கு ஒரு கடிதம் அவனுடைய இறப்பை தெரிவித்துக் கொண்டு வந்தது. அவனுடைய கடைசிக் காரியங்களில் என்னால் கலந்துக் கொள்ள முடியவில்லை. புதைக்கப்பட்டு ஐந்து நாட்கள் சென்றப் பின்னரே அவன் இறப்பைப் பற்றி எனக்கு தெரிய வந்தது. ஒரு அநாதையைப் போல் அவன் புதைக்கப் பட்டதை நினைக்கையில் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய துயரை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை. தங்கள் ஒரே சகோதரனை, சகோதரிகள் அனைவரும் இழந்து விட்டனர்.
யுத்தம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இடங்களில் நிலைமைகள் மிகவும் வேறுபடும். தமிழ்த் தாய்க்கு தன் மகனுக்கு மரணச் சடங்கு கூட செய்ய முடியவில்லை. மரணம் சடங்கில்லாமலே நடைப்பெற்றது. தாயோ தனிமையில் தவிக்கிறார்.
பெற்றோர் பராமரிப்பை இழத்தல்
சிறுவர்களுக்கு ஒரு பெற்றவரை இழப்பது, பாதுகாப்பும், பாசமுமான பெற்றோரின் கவனிப்பின் ஒரு பகுதியை இழத்தல் ஆகும். யுத்தப் பிரதேசத்தில், வேறு சில சந்தர்ப்பங்களில் பதிவு செய்த நிகழ்வுகளில் யுத்தப் பிரதேசத்தில் ஒரு சாதாரண பிரஜையோ, சமூகமோ இறந்தால், அந்தப் பிள்ளைகள் மீள முடியாத இழப்புக்களையும் பாதுகாப்பின்மையையும் அனுபவிக்கிறார்கள். (இதைப் பற்றி பின்னால் வரும் பகுதிகளில் விரிவாக பரீட்சிக்கப்படும்)
இளம் மனைவி குழப்பமும் சோகத்திலிருக்கும் தன் குழந்தைகளைப் பற்றியும்
தொடர்ந்து விபரித்தார். அவள் அவளது அழுகையை பிள்ளைகளுக்காக கட்டுப்படுத்த வேண்டியுள்ள்தாகக் கூறுகிறார்.
27

Page 21
எங்கள் ஆலயத்தின் விழா, அங்கு கொண்டாடப்பட்டது. என் குழந்தைகள் அவர்களின் மைத்துனர்கள் தங்கள் தந்தையுடன் ஒன்றாக செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பின் தங்களுக்குள், நம் தந்தை உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தானே நாமும் அவருடன் சென்றிருப்போம்" என பேசிக் கொண்டார்கள்.
சமூகத்திலிருந்து மறுக்கப்படுதல்
இறப்பைப் பற்றிய சமுதாயத்தின் தாக்கம் கலவையானது. கணவரை இழப்பதனால் ஒரு மனைவிக்கு ஏற்படும் இழப்பு, பெற்றோரை இழப்பதனால் ஏற்படும் இழப்பிலிருந்து மாறுபடுகின்றது. சமூகத்தில் பல பிரிவினரின் பரம்பரை வழக்கங்களின்படி கணவனை இழந்த பெண்கள் சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள். இதனால், ஏற்கனவே பரிதாபகரமான நிலையில் இருக்கும் இளம் மனைவி சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்படுகிறாள்.
இளம் மனைவி தன் கணவரின் இறப்பினால் ஏற்பட்டுள்ள வேறு எதிர் விளைவுகளையும் பற்றிக் கூறினார். அவர், சமூகத்தில் அவருக்கு உள்ள இடத்தை தொலைத்து விட்டதாகக் கூறினார். இளமைப் பருவத்திலேயே கைம்பெண்ணாகியதனால், சமூகத்தால் அவள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை எனக் கூறினார். மக்கள் அவரை துரதிஷ்டசாலியாகவும் கெட்ட சகுனமாகவும் கருதுகிறார்கள்: நான் எங்கு சென்றாலும் சமூகம் என்னை ஒதுக்கி வைப்பதை உணர்கின்றேன். (சமாஜய மாவ கொன் கரலா)
தமிழ்த் தாய் கூறுவது: என் மகன் எங்கள் குடும்பத்துடன் இருந்திருந்தால், குடும்பம் ஓரளவு முன்னேறி இருக்கும். குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்த மகன், சகோதரிகளுடன் அதிக பிரியத்தை வைத்திருந்த சகோதரன், வாழ வேண்டிய ஒருவனைத் தொலைத்து விட்டோம்.
சிங்களத் தாய் அவரது கதையில், அவரது புதிதாக மணம் செய்திருந்த மருமகள் அவரை விட்டு விட்டு அரசினால் கொடுக்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார். தாய் தனித்து விடப்பட்டுள்ளார். அவரது மற்றொரு மகனும் இராணுவத்தில் இருப்பதனால், அவர் அவரின் எதிர்க் காலத்திற்காக சகிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். y
28

யுத்தத்தைப் பற்றிய எண்ணம்
விபரங்களைக் கூறிய மூவருமே யுத்தம் தொடர்வதைப் பற்றி விசனப் பட்டதுடன் யுத்தம் முடிவடைய வேண்டும் எனவும் கூறினர். அவர்கள் இது எப்படி பெறப்பட வேண்டும் என்று எதுவும் கூறவில்லை. அவர்களில் எவருமே மற்றைய இனச் சமூகத்தின் மேல் ஆழ்ந்த கோபத்தை காட்டவில்லை. யுத்தத்தில் தங்களுக்கு பிரியமானவரை இழந்தவர்களின் மனநிலையை விட, வேறு சூழ்நிலைகளில், அதாவது பயங்கரவாத தாக்குதல் போன்றவற்றில் இழந்தவர்களின் மனநிலை வேறுபட்டிருப்பதை பின்னால் நாம் பார்ப்போம்.
சிங்களத் தாய் 1983 க்கு முன்னர் இருந்த இன நல்லுறவும், ஒற்றுமையும் பற்றிக் கூறினார். காய்கறி விற்பவரான அவர் சந்தையில் எப்படி சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்தனர் எனக் கூறினார். 1983 இல் நடை பெற்ற பயங்கர சம்பவத்தைப் பற்றிக் கூறினார்: எனக்கு ஞாபகம் உள்ள வகையில், என் முத்த மகன் (இறந்தவர்) 8 ஆவதோ, 9 தாவதோ வகுப்பில் இருந்தார். கலவரம் ஏற்பட்ட அன்று அவருக்குப் பரீட்சை இருந்தது. பெளத்தம் பாடத்தில் பரீட்சை அன்று. அத்தனையையும் என்னால் நன்கு நினைவுக்குக் கொண்டு வர முடிகின்றது. அன்று, எங்களுடன் வேலை செய்யும், எங்கள் அனைவராலும் நேசிக்கப்பட்ட எங்கள் தமிழ் முதலாளி அடித்து கொலை செய்யப்பட்டு தொங்க விடப்பட்டார். எங்கள் மனதிலேயே ஆத்திரம் தான் ஏற்பட்டது.
அவருக்கு தன் மகனை நிரந்தரமாக பிரிய நேரிட்ட யுத்தத்திற்கு பொறுப்பானவர்கள் அனைவரின் மீதும் ஆழ்ந்த கோபமிருப்பதாக ஒத்துக் கொண்டார். w
நான் அனைத்து தாய் மாருக்கும் எனக்கு ஏற்பட்ட துயர் ஏற்படாமல் இருக்க வேண்டுமென முழு மனதுடன் எதிர்ப் பார்க்கின்றேன். ஆம், எனக்கு யுத்தம் முடிய வேண்டும். யுத்தம் முடிவுக்கு வந்தாலும், என் மகன் எனக்கு கிடைக்கப் போவதில்லை. . ஆயினும் யுத்தம் நின்றால், மற்றைய தாய்மார் என்னைப் போல் கண்ணிர் சிந்த தேவை வராது.
விபரம் கூறிய மூவருமே இதையே எதிரொலித்தனர் - யுத்தம் முடிவுக்கு வந்தாலும் என் மகன், என் கணவர் திரும்பி வரப் போவதில்லை.
ஆறுதல் கூறமுடியாத துயரம் தொடர்ந்தும் இருக்கின்றது.
29

Page 22
பொது மக்களின் இறப்புகளும் அங்கவீனங்களும்.
வடக்கு, கிழக்கு, மற்றும் நாடெங்கிலும் பல் வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கொலைக்கும், அங்கவீனங்களுக்கும் உள்ளானார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவலின்படி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்கள் 3,471 பேர் ஆகும். அரசாங்க வெளியீடுகளின் படி தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட பொதுமக்கள் 3,269 ஆகும்,
தமிழீழ விடுதலைப் புலிகள் வைக்கும் கண்ணிவெடிகளில் இராணுவ வீரர்கள் இறக்கும் சமயங்களில் அநியாயமாக பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் பலி வாங்கப் படுவர். யுத்தத்தின் ஆரம்ப கட்ட காலங்களில் இம்மாதிரியாக இருமுறை வல்வெட்டித்துறையில் 75 பேரையும், வவுனியாவில் 100 பேருக்கு மேலாகவும் படுகொலைகள் செய்திருந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். இராணுவ நடவடிக்கைச் சமயங்களில் ஆகாய குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி பெருந்தொகையான பொதுமக்கள் இறந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கண்ணி வெடிகளை கண்டறிவதற்காக நடந்து செல்லுமாறு கட்டாயப் படுத்தப் பட்ட சமயங்களில் 30 பேர் இறந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தது. இராணுவ நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்வாங்கல் சமயங்களில் பொதுமக்கள் கேடயங்களாகப் பாவிக்கப் பட்டதனால் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் (வேறு போராட்டக் குழுக்களும்) நாட்டின் பல் வேறு இடங்களில் பொதுமக்களைப் படுகொலை செய்தனர். யுத்த ஆரம்ப கால கட்டங்களில் கண்மூடித்தனமான இரு கொலைகளை, புண்ணிய பூமியான அநுராதபுரத்தில் 125 பொதுமக்களையும், அரந்தலாவையில் 30 பெளத்தப் பிக்குமாரையும் கொலை செய்தனர். வடக்கு, கிழக்கு எல்லைக் கிராமங்களில் பெருந்தொகையான ஆண்கள், பெண்கள், சிறுவர்களும், கொழும்பிலும் அதன் சுற்றுப் புறத்திலும் வெடிகுண்டுகளாலும், தற்கொலைக் குண்டுகளாலும் நூற்றுக் கணக்கானோரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப் பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிகள் அரசியல் தலைவர்களைக் குறி வைக்கின்றனர். அதில் பலர் கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.
இலங்கையின் இனப் போராட்டத்தில், இம்மாதிரியான கொலைகள் அடிக்கடி இருபக்கத்தினராலும் நடத்தப் படுவதனால் அதன் கொடுரமும், மனிதாபிமானம் அற்ற செயல்களும் உலகளாவில் அண்மைக் காலங்களில் நடத்தப் பட்ட மோசமான இரத்தக் களரியாக் கருதப் படுகின்றது. ஒவ்வொரு சம்பவத்திலும் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை வன்முறையின் பாரிய அளவை எடுத்துக் கூறுகிறது; ஆயினும் அது இவ்வாறான நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட
30

தனிப்பட்ட மக்களினதும், குடும்பங்களினதும் தனிப்பட்ட பாதிப்புகளையும், மனித துயரையும் எடுத்துக் கூறுவதில்லை.
திடீர் பயங்கரம்
திடீரெனவும் எதிர்ப்பாராமலும் ஏற்படும் பயங்கரங்களில் அவர்களுடைய குடும்பங்களுக்கு ஏற்பட்ட துயரங்களைப் பற்றி மூவர் கூறினர்.
காலியில் இருந்து அன்றாட வேலை நிமித்தம் கொழும்புக்கு வந்தவரைப் பற்றி ஒரு மனைவி முதலில் கூறினார்.
இன்று போல் அத்தினம் எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. அவர் பகல் போசனத்தை அருந்திய பின்னர், திரும்பி வருவதற்கு பின்னிரவு ஆகும் எனக் கூறிவிட்டு கொழும்பு நோக்கிச் சென்றார். அவர் வருவதற்காக காலை 2 மணி வரை நான் விழித்து காத்திருந்தேன். பின்னர் நித்திரையானேன். காலை எழுந்தவுடன் அவர் வந்திராததைக் கண்டு, மகளிடம் அப்பா இன்னும் வீடு வரவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டேன். சிறிது நேரத்தின் பின்னர் முதலாளி (அவரிடம் தான் என் கணவர் வேலை செய்தார்) வீட்டுக்கு வந்து கொழும்பில் குண்டு ஒன்று வெடித்துள்ளது என்றும், என் கணவருக்கு காலில் சிறு காயமேற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் கூறினார். எனக்கு பேச்சே எழவில்லை. 'இல்லை, அவருக்கு ஒன்றும் மோசமாக நடந்து இருக்காது. எப்படி நடக்கும்? சற்று முன்னர் தானே நான் அவரை சுகமாகவும் உயிருடனும் பார்த்தேன்’ என எண்ணிக் கொண்டேன். மனைவி வைத்தியசாலைக்கு சென்று அவரது கணவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளதை கண்டார். சில மணித்தியாளங்களில் ஒரு தாதி வந்து அவரிடம் அவள் இறந்து விட்டதாகத் தகவல் கொடுத்தார்: நான் எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. என்னால் பேச முடியவில்லை, என் சிந்தனை. நான் எனது பள்ளி செல்லும் மூன்று குழந்தைகளுடன் தனித்து விடப்பட்டு விட்டேன் எனச் சென்றது. எந்தப் பெண்ணால் தான் இந்த துயரத்தை தாங்கிக் கொள்ள முடியும்,
தங்கள் உயிருக்குயிரானவரை இறந்தப்பின் கடைசியாக பார்த்து ஆறுதல் அடையக் கூடிய சந்தர்ப்பமும் கிடைக்காதது, அவர்களின் திடீர் இழப்பின் அதிர்ச்சியைக் கூட்டி விட்டது:
உடல் மறு நாள் கொண்டு வரப்பட்டது. அது சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டியில் இருந்தது. மகள் கூறினாள், அப்பா இறந்துவிட்டார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய உடலைக் கூட எங்களால் பார்க்க முடியவில்லை.
31

Page 23
இரண்டாவதாக, மத்திய வங்கி குண்டு வெடிப்பில் உயிரிழந்த 145 பேரில் ஒருவரின் மாமியாரும் மனைவியும் விபரம் கூறினார்கள். மாமியார் கிராமத்தில் அவருடைய வீட்டை விட்டு விட்டு விதவையாகிவிட்ட மகளிடம் அவளின் கஷ்டமான நிலையில் உதவுவதற்காக வந்து விட்டார். எனக்கோ வயதாகி விட்டது. என்னால் அதிகம் வேலை செய்ய முடிவதில்லை. நான் பல வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அவையெல்லாம் என் மருமகனால் செய்யப் பட்டிருக்க வேண்டியவை. பணம் மட்டும் இருந்தால் போதாது.
மகளும் அவருக்கு வந்துள்ள புதிய பொறுப்புகளைப் பற்றி ஆதங்கப் படுகிறாள்: என் கணவர் இறந்த சமயம், எங்கள் முத்த மகனை நாங்கள் ஆனந்தா கல்லூாயில் சேர்த்து நான்கு மாதமே ஆகியிருந்தது. தந்தையும் நானும் ஒன்றாகவே காலையில் சென்றோம். என் விதி புதிரானது. என் இரு குழந்தைகளுடன் நான் தனித்து விடப் பட்டுள்ளேன். என் வேதனையைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. நான் என் கணவரை. இந்த சிறுவர்களின் தந்தையை இழந்து விட்டேன். அந்த விடயங்களை நினைவுப் படுத்தாதீர்கள். என் காயங்களைப் புதிதாக்குகிறீர்கள். எனக்கு பலம் இல்லை. 8
மூன்றாவதாக கூறியவர் மத்திய வங்கி குண்டு வெடித்தாக்கலில் தனது பார்வையை இழந்தவர். அவர் அன்று விடுமுறையில் இருந்திருக்க வேண்டிய நாள் என நினைவு கொள்கிறார். அவருடைய மற்றைய வேலை ரத்து செய்யப் பட்டதனால் அங்கு வேலைக்குச் செல்வோம் என்று சென்றிருக்கின்றார். வீடியோ எடுக்கும் தொழில் நுட்பவாளரான அவருக்கு சிறந்த பார்வையும், தெளிவான நோக்கும் இருத்தல் அவசியமாகும். அவர் தனது நிலைமையை யோசித்து தான் தற்பொழுது வாழ்வோடும் சாவோடும் வாழ்வதாகக் கூறுகிறார். நீங்கள் கண்களை முழு இருட்டாகும் வரை முழுவதும் முடிக்கொண்டு, அந்த தொலைபேசி வரை நடந்து சென்று பாருங்கள்; உங்கள் மனதில் என்ன சிந்தனை வருகின்றது என யோசித்துப் பாருங்கள். . அது ஒரு பயங்கரம், வார்த்தைகளால் கூற முடியாத பயங்கரம். என் வாழ்வின் அத்தனை எதிர்ப்பார்ப்புக்களும் உடைந்து விட்டன. என்னால் எப்படி இந்த சமூகத்தில் ஒருவனாக இருக்க முடியும்? என் வாழ்க்கை அதன் பாதையை தொலைத்துவிட்டது. நான் தொலைந்து விட்டேன்.
அவர் தான் தொடர்ந்தும் வாழ்வதற்கு அவரது மனைவி காட்டும் கவனிப்பும் கரிசனையுமே காரணம் என்றார். அவரது மனைவியும் குழந்தைகளும் அவர் வாழ வேண்டும் என்று அவரது தொழிலுக்கு உதவி செய்கிறார்கள். அவர் அவரது நாளை எப்படி நேர்காண்போருக்காக செலவிடுகிறார் என்றும், எப்படி எழுந்து பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார் என்றும் கூறுகிறார்.
32

நான் பார்வையை இழக்கும் முன்னர் எனக்கு முழு நாள் வேலை இருந்தது. நிறைய வீட்டு வேலைகள் செய்வதற்கென இருக்கும் பல எண்ணங்கள் இருந்தன. இப்பொழுது ஒன்றும் இல்லை. நான் பயனற்ற எண்ணத்துடன், என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வெளிச்சம் வந்து என் கண்ணில் பாயும் என்றவாறு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். . ஏதோ வாழ் நாள் முழுவதும் என்னை ஒரு சிறைக்குள் அடைத்து விட்டதுப் போல் இருக்கிறது.
போர் வீரர் அல்லாத சாதாரண குடிமகன் எதிர்ப்பாராத பயங்கரத்தை அனுபவிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அந்நிலைக்கு பொறுப்பானவர்களின் மீது அளவுக்கடங்காத வெறுப்பை வளர்த்துக் கொள்கின்றனர். விதவையும், பார்வை இழந்தவனும் அவர்களின் வெறுப்பை அந்த தீஞ்செயலைச் செய்து அவர்களின் வாழ்வில் துயரத்தை ஏற்படுத்தியவர்களின் மேல் ஆழமான கோபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பாவிக்கும் வார்த்தைகளில்கூட தமிழர்களை தெமலயா, எனக்கூறி அந்த வெறுப்பைக் காட்டுகிறார்கள். மற்றைய விதவையோ தன் துயரங்களுடன் தனது குழந்தைகளின் துயரங்களுடனும் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, அந்த விபத்துக்குக் காரணமானவர்களைப் பற்றி எதுவும் பேச வில்லை.
வேறு தாக்கங்கள்.
மத்திய வங்கி தாக்குதலினால் விதவையான இளம் பெண்ணும் முன்னால் பேசியவர்கள் போன்றவாறே சமுதாயத்தின் பிரதிபலிப்பு இருப்பதாகக் கூறினார். அவருடைய கணவரின் உறவினர்கள் அவளது துரதிஷ்டமே அவர்களின் மகன் மேல் விழுந்ததற்கான காரணம் எனக் கூறுகின்றனர்.
சமூகம் எங்களை விசித்திரமான கண்ணோட்டத்தில் பார்க்கும். எப்பொழுதும் எங்களில் ஏதோ ஒரு குறையை. நாங்கள் கடைக்கு குழந்தைகளுக்காக ஒரு பாடசாலைப் புத்தகம் வாங்கப் போனால், சுகவீனத்திற்கு மருந்து வாங்கப் போனால். ஏன் எங்கள் வீட்டில் ஏதோ வேலைக்காக தச்சன் (baas) வந்தால் கூட, காண விளையும்.
பேசிய அனைவருமே துயரங்களின் தாக்கங்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வையும் பாதித்து விட்டதைப் பற்றி கூறினார்கள். முதலில் பேசியவர் முக்கியமாக எப்படி தன் மூத்த மகனின் பாடசாலைக் கல்வி இடைநிறுத்தப் பட்டது எனக் கூறினார். அவர்கள் தங்கள் சிறுவர்களின் வாழ்வில் தந்தை இல்லாததனாலோ அங்கவீனமுற்றிருப்பதனாலோ ஏற்பட்டுள்ள இடைவெளியைப் பற்றி விளக்கினார்கள்.
33

Page 24
பேசிய இருவர் தமிழ் சமூகத்தின் மேல் யுத்தத்தினால் பாதிப்புக்கு உள்ளானவர்களைப் போல் அல்லாது, வேறுபட்ட மனோபாவங்களைக் காட்டினார்கள். போர் சூழ்நிலையில் அது யுத்தத்தின் தாக்கம் என்று ஓரளவு ஏற்றுக் கொள்கின்றனர். தன் சகோதரனை போரில் இழந்த மற்றொரு போர் வீரன், ‘இராணுவ வீரர்க்ள் அனைவருமே எங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்’ எனக் கூறுகிறார்.
பயத்தில் வாழ்தல்.
வடக்கு, கிழக்குகளில் பேசியவர்கள் எல்லோரும் வித்தியாசமாகப் பேசினார்கள். தெற்கில் கூறப்பட்டதைப் போல் அல்லாது மாறுபட்ட துயரங்களைக் கூறினார்கள். யுத்தமும், வன்முறையும் அவர்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. அவர்கள் மரணம், சொத்துக்களை இழத்தல், யுத்தத்தின் தாக்கங்களை நேரடியாக அனுபவித்தல் போன்றவற்றில் மிகவும் பரிச்சயம் ஆகிவிட்டார்கள்.
பாக்கியராஜாவும் அவரது குடும்பத்தினரும்
பாக்கியராஜா இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
ஏற்பட்ட சமரில் அகப்பட்டு 15 வயதில் இறந்தார். அவருக்கு 10 வயதாக
இருக்கும் சமயம் அவர் இந்திய அமைதி காக்கும் படையினரால் (IPKF),
நடத்தப்பட்ட மிகப் பெரிய மனித படுகொலையை நேரடியாகப் பார்த்தான்.
போர் வீரர்கள் தங்கள் தோழர்கள் சிலர் கண்ணி வெடியில் கொல்லப்
பட்டமைக்காக பழி வாங்கிக் கொண்டிருந்தனர். போர் வீரர்கள் 125 பேரைக்
கொன்றனர். பெண்கள் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டினர். பின்னர்
அவர்களைச் சித்திரவதையும், கற்பழிப்பும் செய்தனர். பாக்கியராஜா அவரது
தாயைப் பின் தொடர்ந்து சென்ற பொழுது ஒரு வீரரால் பிடிபட்டு தூக்கி எறியப்பட்டார். பின்னர் அங்கு வந்த உத்தியோகத்தர் ஒருவர் அந்த் வீரர்களின் செய்கையில் சினமுற்று, மற்றைய உத்தியோகத்தர்கள்
முன்னிலையில் தண்டனை விதித்தார். சிறுவனான பாக்கயராஜா இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவரது தாய் பின்வருமாறு கூறினார்: பாக்கியராஜா அவனுடைய சகோதரனுடன் கூலி வேலை செய்வதற்குச் செல்வது வழக்கம். 5, 6, 92 இல் அவனுடைய ஏழு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறினான். அவன் செல்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவன் பிடிவாதமாகச் சென்றான். அவன் தாவலை எனக் கூறப்படும் இடத்திற்குச் சென்றான். அந்த சமயம்
34

அவ்விடத்தில் புலிகளைத் தேடுவதற்காகச் சிலர் காத்திருந்ததைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. கடலோரம் இருந்த தென்னங்காட்டில் இரவெல்லாம் அவர்கள் இருந்திருக்கின்றனர். காலையில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டு எழுந்திருக்கிறார்கள். அவனுடைய நண்பர்கள் பக்கத்துக் கிராமமான சவுக்கடியை நோக்கி தப்பி ஓடியிருக்கிறார்கள். ஆனால் பாக்கியராஜா அவனுடைய நண்பர்களுடன் ஒடிச் செல்லவில்லை.
பாக்கியராஜாவின் நண்பர்கள் திரும்பி வந்து பெற்றோரிடம் அவர்கள் உயிர் தப்பி வந்து விட்டதாகவும் பாக்கியராஜாவுக்கு என்ன நேர்ந்தது என்றுத் தெரியவில்லை என்றும் கூறினார்கள். அவன் பத்திரமாக திரும்பி வந்து விடுவான் என்று எதிர் பார்த்தார்கள். இரவு வந்தது, அவன் திரும்பி வரவில்லை.
பிறகு, நாங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு புகார் கொடுத்தோம். அவர்களும் தேடிப் பார்த்தார்கள். எப்படியிருந்தும் எங்கள் மகன் கிடைக்கவில்லை. பின்னால் எங்களுக்கு பாக்கியராஜா கையைத் தூக்கிய வண்ணம் இராணுவத்தினரை நோக்கி ஓடிச் சென்றதாகவும், அவர்கள் அவர்களை நோக்கி ஒருவன் ஓடி வருவதைப் பார்த்தவுடன் அவனைச் சுட்டுவிட்டதாகவும் கேள்விப் பட்டோம். பாக்கியராஜா அங்கே விழுந்து அந்த இடத்திலேயே உயிர் விட்டிருக்கிறான். அவன் ஒரு பொதுமகன் என்பதனைக் கண்ணுற்ற இராணுவத்தினர் அவனது உடலைக் கடலில் வீசிவிட்டு சென்று விட்டனர். இராணுவத்தினர் இத்தகவல்களைக் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் அவனது உடல் கரையேறிவிடும் என எண்ணிருக்கின்றனர். ஆனால் அப்படி நடக்க வில்லை. நான்கு நாட்களுக்குப் பின்னர் கடலுக்குச் சென்ற ஒருவர் மண்ணில் புதையுண்டு ஒரு பிணத்தின் கால் தெரிவதைக் கண்டு இருக்கிறார். இத் தகவல் எங்களுக்கு வந்தது. நாங்கள் அங்கு சென்று பிணத்தை தோண்டி எடுத்து அது எங்கள் மகன் தான் என்பதனைக் கண்டோம். அது மோசமாக அழுகி இருந்தது. அதை அங்கேயே புதைத்து விட்டு நாங்கள் திரும்பி வந்தோம்.
பல ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வந்த குடிசையும் எங்கள் உடமைகளும்
இராணுவத்தினரால், எங்கள் கிராமம் தாக்கப் பட்ட சமயம் எரிக்கப்பட்டது.
அதன் பின்னர் நாங்கள் பல இடங்களுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வந்தோம். இப்பொழுது ஒரு குடிசையில் இருக்கிறோம். என் கணவரும்
சுகவீனமுற்று நோயாளியாக இருக்கிறார். இந்திய அமைதி காக்கும்
படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர் ஒரு கண்ணை இழந்து விட்டார்.
இப்படியெல்லாம் நடக்கு முன்னர் நாங்கள் சிறு குடிசைக் கைத்தொழில்
செய்துக் கொண்டு வாழ்ந்து வந்தோம்.
35

Page 25
எப்பொழுதுதான் இந்த யுத்தம் முடிவுக்கு வரும் என எங்களுக்குத் தெரியவில்லை. என்ன நடக்கப் போகின்றது என்று எங்களுக்கு அக்கறை யில்லை. எங்கள் மகனின் இழப்பினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முடியாது. அவன் தாயின் மேல் அக்கறையுள்ள சிறந்த மகன். நாங்கள் எங்கள் பிராப்தப்படி, வாழ வேண்டிய காலம் வரை வாழுவோம்.
இந்த நிகழ்வு வடக்கு, கிழக்குகளில் பொதுவாக நடைப்பெறும் தனிப்பட்ட துயர சம்பவங்களில் ஒன்றாகும். தெற்கைப் போல் அல்லாது, தனிப்பட்ட இழப்புகளாக மீண்டும், மீண்டும் ஏற்படும் துயர சம்பவங்களில் ஒரு பகுதியாகும். இது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு குடும்பத்திலேயே ஏற்பட்டு பல அங்கத்தவர்களை பலி எடுக்கின்றது. இக்கதையின் படி, இந்த குடும்பம் அவர்களின் வீடு, உடமைகள், கண்ணியமான தொழில் முதலியவற்றை இழந்து அகதி நிலைக்கு இறக்கப் பட்டுள்ளனர். தந்தை ஒரு கண்ணை இழந்துள்ளார். தாய் வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், அவர் அவருடன் இருந்த இன்னொரு கிராமத்துப் பெண்ணுடன் சித்திரவதைக்கும் கற்பழிப்புக்கும் உள்ளாகி யுள்ளார்.
திருக்கோணமலையில் உள்ள ஒரு குடும்பம்.
இந்த இரண்டாவது கதை மத்திய தரத்தை விடக் குறைந்த நிலையில் இருக்கும் குடும்பம் ஒன்றின் கதை. கணவர் திருக்கோணமலை கடற்படையில் வேலை செய்த ஒரு இலிகிதர். சரித்திர ஆசிரியரான மனைவி, அவரது முதற் குழந்தையின் பிறப்பில் இருந்து தொடர்ச்சியாக மனநிலை பாதிக்கப் பட்டவராக இருந்திருக்கிறார். அக்குடும்ப அங்கத்தவர் எவருக்குமே யுத்தத்தில் எந்தப் பெரிய ஈடுபாடும் இருக்க வில்லை, தானுண்டு தன் வாழ்வுண்டு என வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கையில் இரண்டு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் குழுக்களிடையே அகப்பட்டுக் கொண்டார்கள். கடற்படை வேலையில் இருந்து ஓய்வுப் பெற்றப் பின்னர் கணவர் யாழ்ப்பாணத்தில் குடியேறி அவராகவே சிறு கமம் ஒன்றை, ஆரம்பித்துச் செய்து வந்தார். மனைவியும் மனநோயில் இருந்து குணமாகி கிழக்கு மாகாணத்தில் அவரது சொந்த கிராமத்திலுள்ள அரசாங்க பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இச்சமயத்தில்தான் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) யாழ்ப்பாணத்தில் இருந்தது. பரராஜசிங்கம் அவரது கமத்தில் இருந்து காய்கறிகளையும், பாலையும் அவரது கமத்துக்கு அருகே மையமிட்டிருந்த IPKF குழுவுக்கு சீராக கொடுத்துக் கொண்டு வநதாா.
36

நேர்காணல் கொடுத்தவரின் தகவல்களின் படி:
பரராஜசிங்கம் உளவு கொடுப்பவர் என்று அவரின் மேல் பொறாமைக் கொண்டிருந்த அயல்வாசி ஒருவர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சொல்லிக் கொடுத்தார். தமிழீழ விடுதலைப் புல்லிகள் அவரைக் கைது செய்து, சுட்டு, விளக்குக் கம்பத்தில் தொங்க விட்டனர். அவரது மகன்மாரும் உளவாளிகள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளால் சந்தேகிக்கப்பட்டு இரு வெவ்வேறான சந்தர்ப்பங்களில் - யாழ்ப்பாணத்தில் ஒன்றும், மட்டக்களப்பில் மற்றதுமாக, கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டார்கள். சில நாட்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். தாய் மீண்டும் மனநோய்க்கு உள்ளாகியதுடன், அவர் நிலைமையும் மெதுவாக சீரழிந்து போய் விட்டது.
இடம்பெயர்தலாலும் வீடற்று போவதானாலும் ஏற்படும் துயரம்.
UNHCR அன்மையில் எடுத்த மதிப்பீட்டின் பிரகாரம் யுத்தத்தினால் அகதிகளான, இடம்பெயர்ந்த, வீடற்றுப் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1,116,000 ஆகும். இவர்கள் பல்வேறுபட்ட பிரிவுகளுக்குள் அடங்குவர். பொருளாதார வசதிகளுக்காகவும் வாழ்க்கை வளம் பெறுவதற்காகவும் தன்னார்வத்தில் வேறிடங்களுக்கு குடியேறியவர்களையும், புகலிடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுவோரையும் வித்தியாசப் படுத்திப் பார்ப்பது இலகுவானது அல்ல.
சர்வதேசங்களில் இடம்பெயர்ந்தவர்கள்
9 மேற்கு ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பரவலாக 16
நாடுகளில் ஏறத்தாழ 180,000 பேர் உள்ளனர். 0 இந்தியாவில் ஏறத்தாழ 110,000 பேர், அதில் 70,000 பேர் அகதி
முகாம்களில் இருக்கின்றனர். 9 ஏறத்தாழ 20,000 பேர், 11 நாடுகளில் 'திக்கற்ற தேக்க நிலை யில், ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்குள் குடியேறச் செல்லும் சமயங்களில் நுழைவு அனுமதியைப் பெற முடியாமற் போவதனால் திக்கற்ற தேக்க நிலைக்கு உள்ளாகியுள்ளர்கள்.
தற்போதைய அறிக்கை இந்த மூன்று பிரிவுகளையும் எடுத்து செயலாற்றவில்லை. அவர்கள் குடிபெயர்ந்ததற்கான சூழ்நிலைக் காரணங்களையும், இப்பொழுது வாழும் நிலமைகளைப் பற்றியும் தனிப்பட்ட விதத்தில் விசாரணை செய்து, அதிலிருந்து மனித இழப்புக்களின் மீள் மதிப்பு எடுக்கப்பட வேண்டும். -
37

Page 26
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு குடிபெயர்ந்த தமிழரில் பெரும்பாலானோர் ஆங்கில கல்வியைப் பெற்ற மத்தியத் தர வர்க்கத்தினர். ஒப்பிடும் பொழுது அவர்கள் இலங்கையில் உயர் பதவிகளிலும், சமூக அந்தஸ்த்துடன் வாழ்ந்தவர்கள். இந்தப்பிரிவினரே 1958, 1983 வன்முறைகளில் அதிர்ச்சிக்கும், மனதை புண்படுத்தும் விளைவுகளுக்கும் உள்ளானவர்கள். காலத்தால் மறையாத மனித இழப்புகள் அளப்பரியது. வெளி நாட்டில் குடியேறியவர்கள், பிரிவினைவாதிகளுக்கு கொடுக்கும் முழுமையான ஆதரவு, அவர்கள் அனுபவித்த துயரங்களின் எல்லையை எடுத்துக் காட்டுகின்றது.
உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள்:
1958, 1977-1983 ஆம் ஆண்டுகளில் வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழர்களாகும். இந்த இரு அலைகளினதும் விளைவாக சிங்களம் பேசப்படும் பகுதிகளில் கொழும்புக்கு வெளியேயும் அதன் சுற்றுப் புறங்களிலும் இருந்து தமிழ் மக்களின் குடிசனத்தொகை பெரும் அளவு குறைந்தது. அவ்வகையிலேயே சிங்கள குடிகள் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்தனர். ஆயினும் சாட்சிகளின்படி சிங்களவர்கள், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்ற அளவு துன்பங்களை அனுபவிக்க வில்லை. (தற்போதைய ஆய்வில் அவ்விரு சமயங்களில் நடைப்பெற்ற குடிபெயர்வுகள் இடம் பெறவில்லை.)
இராணுவப் போராட்டத்தினால் இடம்பெயர்ந்த மூன்று இனக்குழுக்களினதும்
தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் 800,000 ஆகும். இதில் பெரும்பான்மையானோர் தமிழர்களாகும். யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கில் இருந்தும், பெருந்திரளான மக்கள் கட்டாயப்படுத்தி யாழ்ப்பாணத்தை காலிசெய்தது உட்பட வெளியேற்றப்பட்டு முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் மலைநாட்டிலிருந்து 1977 களிலிருந்து 'ஏற்பட்ட இன கலவரங்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களும் அடங்குவர். இடம்பெயர்ந்த சிங்களவரில் அநேகமானோர் வட கிழக்கு மீன்பிடி குடியேற்றங்களைச் சேர்ந்தவர்களாவர். இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பொழுது வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் புகலிடம் எடுத்தவர்கள். (அனைத்து மூன்று குழுக்களிலிருந்தும் ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளது)
விபரங்களில் கொடுக்கப்பட்டுள்ள பொதுவான கருத்துகள்
38

இடம்பெயர்வு திடீரெனவும் எதிர்ப்பாராமலும் இடம் பெறுகிறது.
இடம் பெயர்வு அளவற்ற மனித இழப்புகளை ஏற்படுத்துகிறது. கூடவே வளர்ந்து வந்த உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களை விட்டு வேருடன் குடும்பங்களாக அகற்றப் பட்டனர்.
வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து சேர்த்து வைத்திருந்த சமூக, பொருளாதார வளங்கள் ஒரே பகலிலோ, இரவிலோ அழிக்கப்பட்டது. இதனால் வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்கு புது வழிகளைத் தேடும் அவசியம் ஏற்பட்டது.
பெரும்பாலானோர் முகாம்களில், ஒரு சில நாட்களாவது வாழ வேண்டி வருகிறது. அங்கு வீட்டில் உள்ள இடவசதியும், அந்தரங்கமும் இல்லாதிருக்கும். அடிப்படை தேவைகளான தண்ணி, கழிவறை வசதிகள் குறைந்தளவே இருக்கும். குடும்பத்தில் தொழில் செய்து கொண்டிருப்பவர் தொழிலை இழக்க வேண்டிவருகிறது. பிள்ளைகளின் கல்வி இடைநடுவே நிறுத்தப்பட்டு விடுகிறது.
முகாமில் இருந்து தனி வீட்டுத் தொகுதிகளுக்கு சென்று, பின் சில காலக்கட்டத்தில் சாதாரண வீட்டு வாழ்வுக்கு திரும்ப வேண்டி வரும். இவ்வாறான சூழல்களுக்குத் தக்க தம்மை மாற்றிப் பொருத்திக் கொள்ளும் நடவடிக்கை மிகவும் வேதனையானது. அநேகமானோர் புதிய அயலவர்களுடன் வாழ வேண்டியுள்ளதனால், வெளியார் என்று விரோத மனப்பான்மைக்கும், ஆட்சேபத்திற்கும் ஆளாக வேண்டி வருகிறது. அங்கிருக்கும் அரசு உதவியாளர்கள், அவர்களை தனியாக வேறுபடுத்தி இம்மாதிரி நடத்தப்பட காரணமாக இருக்கிறார்கள்.
1995 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் பின்னரான முகாம் வாழ்க்கை.
மனோன்மணி சாவகச்சேரியில் பிறந்தவர். மனோன்மணி சிறுமியாக இருக்கும் சமயத்தில், விவசாயத்திற்கு கூடிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும் என்று விவசாயிகளான அவருடைய பெற்றோர், பரந்தனுக்கு குடிப் போய் விட்டார்கள். அவரும் அவரது இரு குழந்தைகளும் வவுனியா முகாம்களில் வாழ்பவர்களாவர். நான் வியாபாரியாக வருமானம் பெறும் ஒரு சிங்களவரை மணம் செய்தேன். அவர் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே பொருட்களைக் கொண்டு சென்று வியாபாரம் செய்வார். வியாபாரத்திற்காக 1990 இல் ஒரு நாள்
39

Page 27
பயணம் மேற்கொண்டு சென்றவரை, இது வரை நான் பார்க்க வில்லை. கடைசியாக அவர் சென்ற சமயம், கொழும்புக்கு செல்வதாகக் கூறிச் சென்றார். நான் இன்று தனியாக இருக்கின்றேன். எனக்கு உதவுவதற்கு யாரும் இல்லை. இராணுவம் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் எங்களை வன்னிக்கு போகச் சொன்னார்கள். இராணுவம் எங்களைக் கொன்று விடும் என்று அவர்கள் எங்களிடம் கூறினார்கள். முதலில் நாங்கள் சாவகச்சேரிக்குச் சென்று பின்னர் கிளிநொச்சிக்கு சென்றோம். அதன் பின்னர் என் குழந்தைகளுடன் இந்த முகாமுக்கு நான் வந்து விட்டேன்.
மனோன்மணி முகாமின் நிலைமையை அவருடைய நியாயமான வீட்டின் நிலைமையுடன் ஒப்பிட்டுக் கூறினார். இங்கிருந்து என் இரு பிள்ளைகளும் பாடசாலைக்கு அனுப்ப முடியும் என்பதனால் நான் இங்கு வந்தேன். அவர்கள் பாடசாலை செல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் முகாம் வாழ்க்கை கடினமானது. நாங்கள் வாழ்ந்த வீடு மண் சுவரையும், ஒலைக் கூரையையும் கொண்டிருந்தது. ஆயினும் அடிப்படை வசதிகள் அனைத்தும் அதில் இருந்தது. தண்ணி, கழிப்பறை, இடவசதி, சுதந்திரம் அனைத்தும், நாங்கள் இப்பொழுது கூண்டில் இருப்பதுப் போல் வாழ்கிறோம். அந்தக் கட்டிடத்தில் முன்னர் கோழி வளர்க்கப்பட்டதாக கூறுகிறார்கள். பிள்ளைகளால் எப்படி இந்தச் சூழலில் படிக்க முடியும்? அடிக்கடி நாங்கள் அன்றாடத் தேவையான தண்ணிரைப் பெறுவதற்காகவும், கழிவறையைப் பாவிப்பதற்காகவும் க்யூ வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
மனோன்மணியைப் போன்றவர்களுக்கு யுத்தத்தின் கொடுரம் பாரியளவு உள்ளது. வீடு, வருமானம், நண்பர்கள் உறவினர்கள் பந்தங்களையெல்லாம் இழந்து தனிமையையும், தனித்து விடப்பட்ட தன்மையையும் அனுபவிக்கின்றார். என் கணவர் மாதம் 4000 ரூபாய்களை சம்பாதித்து வந்தார். வாரத்தில் ஒரு முறை சினிமாவுக்கு சென்று படம் பார்த்து வந்தோம். எங்கள் வாழ்வைப் பற்றித் திருப்தியுடன் வாழ்ந்து வந்தோம். யுத்தம் இது அனைத்தையும் எங்களிடம் இருந்து பறித்து விட்டது. இப்பொழுது எங்கள் உறவினர்கள் எல்லோரும் சிலர் இந்தியாவிலும், சிலர் கொழும்பிலுமாக எங்கெங்கோ பிரிந்து விட்டோம். அவர்களிடம் இருந்து தொடர்பு அற்றுப் போய் விட்டது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எங்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய்கள் கிடைக்கின்றன. ஒரு நாய்க்கு உணவளிக்கக் கூட இது பற்றாது. எங்களுக்கு நகருக்குப் போய் வர நான்கு மணித்தியாளங்கள் கிடைக்கும். முகாமில் இருக்கும் அதிகாரிகள் நேர வரம்பில் கண்டிப்பானவர்கள்; தாமதமாக நாங்கள் வர நேர்ந்தால் இரகசியமாக கேள்விகளுக்கு ஆளாவோம்.
40

மனோன்மணி வீடு திரும்புவதில் ஆவலாய் உள்ளார். எங்கு வாழப் போகிறேன் என்பது முக்கியமில்லை. என் கணவர் இருந்திருந்தால் விடயமே வேறாக இருக்கும். என்னிடம் இப்பொழுது ஒன்றும் இல்லை. என் குழந்தைகளைப் பற்றி எண்ண வேண்டியுள்ளது. யுத்தத்தைப்பற்றி கூறுவதானால் மனோன்மணிக்கு தற்காலிக யுத்த நிறுத்தத்திலும் பேச்சுக்களிலும் சிறிதளவே நம்பிக்கை யுள்ளது. அவர் யுத்தம் நிரந்தர தீர்வுக்கு வர வழி ஒன்று காண வேண்டும் எனக் கூறுகிறார்: அப்படியில்லை யென்றால் யுத்தம் மீண்டும் ஆரம்பமாகி, நாங்கள் மீண்டும் அகதிகளாவோம்.
இனச் சுத்தம் செய்யப்பட்டதில் இடம்பெயர்ந்தவர்.
எம். பீ. நாகூரும் அவரது குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பகுதி அராலி வீதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஆவர். இளம் வயதிலேயே அவர் விரும்பிய முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்து விட்டார். திருமணம் ஆகாத ஆண்கள் எல்லோரும் அச்சமயம் பல்வேறு ஆயுதக் குழுக்களிலும் சேருமாறு வற்புறுத்தப்பட்டனர். அவர்களுக்கு 5 குழந்தைகள். நாகூரின் ரூபாய் 3000 தொடக்கம் 4000 வரையிலான மாத சம்பாத்தியம் அவர்களின் நியாயமான தேவைகளுக்குப் போதுமாக இருந்தது. 'எனக்கொன்றும் இன்னும் நன்றாக வாழ வேண்டும் என்னும் ஆசையில்லாமல் இல்லை. யுத்தம் அவற்றை யெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. ஒக்டோபர் 1990 இல் ஏனைய முஸ்லிம்களுடன் அவர்களும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமாறு தமிழீழ விடுதலைப் புலிகளால் பணிக்கப்பட்டனர். அவர்கள் ஒரே இரவில் அவர்களது அனைத்து சொத்துகளையும் வாழ்நாள் சேமிப்புக்களையும் இழந்தனர். ஐயோ சேர், நாங்கள் ஒன்றும் தெரியாத மக்கள். தமிழர்களுக்கு எவ்வித கெடுதலும் செய்யாமல் நாங்கள் நேர்மையாக வாழ்ந்து கொண்டு இருந்தோம். ஆனால் ஒரு நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒலிப்பெருக்கி பொருத்திய வான் ஒன்றில் வந்து நாங்கள் ஒரு மணித்தியாலத்திற்குள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று கூறிச் சென்றார்கள். எங்கள் உயிருக்கு பயந்துக் கொண்டு நாங்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிவிட்டோம். அன்று என்ன நடந்தது என்று மீண்டும் யோசித்துப் பார்த்தால் குழப்பம்தான் என் மனதில் ஏற்படுகின்றது. நாங்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம்; நாங்கள் நான்கு அறைகளையும், ஒட்டுக் கூரையும், சீமெந்துத் தரையும், மின்சாரமும் கொண்ட வீடொன்றைக் கட்டிக் கொண்டிருந்தோம். தோட்டத்தில் கிணறு ஒன்றிருந்தது. நான் கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளை வளர்த்து வந்தேன். இப்படித்தான் நாங்கள் முஸ்லிம்கள் அனைவரும் வாழ்ந்து கொண்டிருந்தோம், எங்கள் வேலையை நாங்கள் கவனித்துக் கொண்டு இருந்தோம்.
41

Page 28
நாகூர் அவரும் அவரது குழந்தைகளும் புதிய அயலகத்தில் சமாளித்து வாழ்வதற்குப் பட்ட கஷ்டங்களை விபரமாகக் கூறினார். அவர் அங்கு வந்த சமயம் நிலைமைகள் அத்தனை மோசமாக இருக்க வில்லை என்றார். முஸ்லிம்கள் அவரை வரவேற்றனர். அவருக்கு கற்பிட்டியில் மைத்துனர் ஒருவர் இருந்தார். அவர் மூலமாக அவர் மீன்பிடித் தொழிலைப் பெற்றுக் கொண்டார். ஆனால் அவர்களின் சிறுவர்கள் வளர, பாடசாலைக்கு செல்ல வேண்டிய சமயம் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளானார்:
இப்பொழுது என் பிள்ளைகள் பாடசாலைச் செல்ல வேண்டும். அவர்களை அனுமதிக்கச் சென்ற சமயம், அவர்களின் பிறப்புச் சான்றிதழையும், வேறு ஆவணங்களையும் காட்ட வேண்டியிருந்தது. எங்களிடம் இவை இல்லை. இவற்றை எப்படி நாங்கள் பெறுவது? அவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மட்டுமே கிடைக்கும். பின்னர் அவர்களுக்கு கிராம சேவகரின் அத்தாட்சியும், சான்றிதழ்களும் வேண்டும். அவர்கள் கேட்ட அத்தனையையும் எங்களால் யாழ்ப்பாணத்தில் இருந்து இலகுவாகப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். பாடசாலைகளும், சர்வகலாசாலையும் எங்கள் வீட்டிலிருந்து நடை தூரத்திலேயே இருந்தன. ஆனால் இங்கு எங்கள் குழந்தைகள் ஐந்து மைல் தொலைவில் இருக்கும் பாடசாலைக்கு பஸ் வண்டியில் செல்ல வேண்டியுள்ளது; அதிலும் ஒரு பஸ் வண்டியே உள்ளது. சமயங்களில் அந்த பஸ்ஸ"ம் வரா விட்டால் பாடசாலை செல்ல முடியாது. அவர்கள் பாடசாலை செல்லும் தினங்களைவிட வீட்டில் இருக்கும் நாட்களே அதிகம்.
யுத்தம் முடியவேண்டும் என்பதற்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் கூறினார்: இரு பக்கங்களும் போதிய அளவு சண்டையிட்டு விட்டன. போதுமான அளவு கொன்று விட்டார்கள். நாங்கள் இழந்ததை மறக்க நான் தயாராக இருக்கின்றேன். இப்பொழுது எஞ்சி இருப்பவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். ஜனாதிபதியும், பிரபாகரனும் கட்டாயமாக ஒருவரோடு ஒருவர் பேசி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்கள் எங்களைப் போன்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சாதாரணமானவர்களைப் பற்றி எண்ணி ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.
வட கிழக்கில் இருந்த வாசஸ்தலத்தின் இழப்பு
லக்ஷ்மன் அந்தனி முல்லைத்தீவு மாவட்டத்தில் நையாறு என்னும் சிறு சிங்கள மீனவக் குடியேற்றத்தில் வாழ்ந்தவன். 28 வயது வரை நையாறு
அவனுடைய வீடாக, யுத்தம் காரணமாக அவனும், ஏனைய சிங்களக் குடும்பங்களும் அங்கிருந்து வெளியேறும் வரை இருந்தது. இந்த குடும்பங்கள்
42

தற்பொழுது மீகமுவ துவவில் உள்ள அகதி குடியிருப்பில் வாழ்கின்றன. அவர்கள் தமிழ்ப் பிரதேசங்களில் வளர்ந்ததனால் நன்கு தமிழ்ப் பேசுகின்றனர். அந்தனி நையாறுவைப் பற்றி மிகுந்த ஆவலுடன் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் முன்னர் வாழ்ந்த அவனுடைய வாழ்க்கையைப் பற்றி பேசுகிறான். தமிழ் கிராமத்தவருக்கும் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கும் இடையிலான அவனுடைய ஞாபகங்கள் மிகவும் உறுதியானவை.
நீர்கொழும்பைப் பார்க்கிலும் நையாறில் மீன்பிடிப்பு சிறந்ததாகும். அங்கு எங்களுக்கு நிறைய மீன்கள் கிடைத்ததுடன் அதிகம் சம்பாதிக்கவும் செய்தோம். எங்கள் குடியேற்றத்துக்கு அருகாமையில்தான் தமிழ் கிராமங்கள் இருந்தன. தமிழ்க் கிராமத்தவர் எங்களிடம் மீனும் கருவாடும் வாங்குவார்கள்; நாங்கள் அவர்களிடம் காய்கறி, பால், எள்ளினால் செய்த கவுன் வகையான இனிப்பு பலகாரங்கள் எல்லாம் வாங்குவோம். நாங்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பத்தினரைப் போல் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம் எங்களுக்கு இது ஏன் நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென எல்லாம் மாறிவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல், திடீரென எவ்வித எச்சரிக்கையும் இன்றி வந்தது. நான்கு கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் தாக்கப் படப் போகிறோம் என்று கிராமத்தவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்றே நாங்கள் எண்ணுகின்றோம். அவர்கள் எங்களை எச்சரிக்கை செய்யவில்லை என்று நாங்கள் வருந்துகின்றோம். எங்களுக்கு உதவவும் அவர்கள் வரவில்லை. இராணுவம்தான் எங்களை காட்டில் இருந்து காப்பாற்றியது.
தாக்குதலுக்குப் பின்னர் குடியேற்றம் காலி செய்யப்பட்டது:
எங்கள் குடியேற்றம் அழிக்கப்பட்டு விட்டது. எங்கள் சொத்துக்கள் உடைகள் தளபாடங்கள் அனைத்தையும் இழந்தோம். ஒரே இரவில் பிச்சைக் காரராகிவிட்டோம். எங்கள் வாழ்வுக்காக நாளாந்த கூலி வேலைச் செய்து உழைக்கிறோம். எங்கள் அயலவர் ஒருவர் அங்கிருந்து எங்களுடன் வர மறுத்து விட்டார். அவர் இது என் இடம். எனக்குப் போக வேறு இடமில்லை என்றார். பின்னர் அவர் நெரித்துக் கொல்லப்பட்டு, அடையாளம் காணமுடியாமல் சிதைக்கப் பட்டார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.
அந்தோனியை இன்றைய வாழ்க்கையுடன் நையாறு வாழ்க்கையை ஒப்பிட்டுக் கூறக் கேட்டோம். இப்பொழுது நகர வாழ்க்கையில் எத்தனையோ வசதிகளையும் வாய்ப்புகளையும் அனுபவித்தாலும் அந்த குக்கிராமமான நையாறு வாழ்க்கையே சிறந்தது என அவன் தெளிவாகக் கூறினான். நையாறில்
43

Page 29
அவனால் அவனது குடும்பத்திற்கு உயர் தர வாழ்க்கையை பெற்றுக் கொடுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்ததாகக் கூறினான். யுத்தத்திற்கு முன்னால் மக்களால் இலகுவாக நீர்கொழும்பில் இருந்து, முல்லைத் தீவுக்கு பஸ்ஸில் போய் வரக் கூடியதாக இருந்ததாகக் கூறினான். அந்த சூழலில் நையாறில் அவனால் வளமfக வாழ்ந்து அவனது பிள்ளைகளுக்கான நியாயமான நோக்கங்களை அடைய முடிந்திருக்கும் எனக் கூறினார்.
ஏனையோரைப் போன்றே அகதி முகாம் வாழ்க்கை ஒரு நரக வாழ்வைப் போல் இருப்பதாகக் கூறினான் - நரகம்’ உணவு உண்ணுதல், நித்திரை செய்தல், அனைத்து வீட்டு வேலைகளையும் ஒரே இடத்தில் செய்ய வேண்டியுள்ளது. எங்களால் சற்று அமர்ந்து ஒய்வெடுக்க இயலாது. சிறு துண்டு பாயில் நித்திரை செய்ய் வேண்டியுள்ளது. தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருக்கிறது. நாங்கள் அதிக துயரை அனுபவிக்கின்றோம்.
அந்தோனியைப் பொறுத்த வரை நையாறில் இருந்த அவனது அயலவர்களே இந்த புதிய குடியேற்றத்திற்கும் வந்திருப்பது ஒரு அதிர்ஷ்டமே. அவர்களுடன் அதே நல்லுறவைப் பேண முடிகின்றது என அவன் கூறினான். அவர்களால் தமிழர்களுடனான உறவுகளைக் தொடர்ந்தும் கட்டி எழுப்ப முடியவில்லை என்று வருந்தினான்.
நாங்கள் இன அடிப்படையில் பிரிக்கப் பட்டிருக்கவில்லை. சிங்களவர், தமிழர் என்று எங்களுக்கு எவ்வித பேதமும் இல்லை.
எல்லைக் கிராமங்களில் வாழ்க்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எல்லைப் புறக் கிராமங்களில் வாழ்பவர்கள் எந்நேரமும் பயம், பாதுகாப்பின்மை, கஷடங்கள் போன்பனவற்றை அநுபவிக்கின்றார்கள். ஐந்து குடும்பங்களின் அநுபவங்கள் வட மத்தியப் பிரதேசத்தில் இருந்து, தென்கிழக்குப் பகுதி வரையான, மொனறாகலைப் பிரதேசத்தில் இருந்து எடுக்கப் பட்ட ஆவணங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அவை அங்கிருக்கும் பெண்கள், சிறுவர்கள், சமூகத்தின் வாழ்வை பயங்கரமாக மாற்றிய சம்பவங்களைக் கூறுகின்றன. அங்குண்டாக்கப்பட்ட பிரச்சினைகளின் மனோபாவங்களை எடுத்துக் கூறுவதுடன் மீள் புணர் வாழ் விற்கும், மீள்நிர்மாணத்திற்கும், நிவாரண நடவடிக்கைகளுக்கும் இருக்கும் தேவையை எடுத்துக் காட்டுகின்றது.
44

யுத்தத்திற்கு முன்னால்.
இச்சமூகங்கள், பிரதேசங்களுக்கு இடைநடுவே இருப்பதனால் பெரும்பான்மைத் தமிழரும், சிங்களவர்களும் இணைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தனர். இரு சமூகங்களும் ஒருவரோடு ஒருவர் வியாபாரத்தில் ஈடுபட்டு, ஒருவர் மற்றவரின் மொழியில் பேசி, கலாச்சார நடைமுறைகளில் பங்கு கொண்டு வாழ்ந்தனர். சில கலப்புத் திருமணங்களும் நடைப்பெற்றன. கூறப்பட்டுள்ள ஐந்து கதைகளிலும் இந்த உறவு உடைந்துள்ளதையும் தமிழ், சிங்கள சமூகங்களிடையே ஒரு மத்தியஸ்த்தம் செய்ய வேண்டிய ‘கலாச்சாரம் ஏற்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.
கிராமங்களில் மாற்றங்கள்
யுத்தமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லைக் கிராமங்களைத் தாக்கும் தந்திரமும் கிராமங்களை இராணுவ எல்லைகளாக மாற்றி விட்டது. நாங்கள் யாருக்கும் கெடுதல் செய்யாத தீங்கற்ற அகிம்சை வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தோம், என்று அநுராதபுரத்தை சேர்ந்த யக்கவேவா கூறினார். விவசாயிகள், ஊர் காவற் படை வீரர்களாக ஆக வேண்டி வந்துவிட்டது. கிராமத்தவர்கள் இடையிறாத தாக்குதல்களினால், தங்கள் வாழ்வை மீள் அமைத்துக் கொண்டார்கள். அவர்களின் பகல் வேலை நேரம் குறைக்கப்பட்டு விட்டது. இரவை பதுங்கு குழிகளில் செலவிடுகின்றனர். இவ்விடங்களில் பெண்களும் சிறுவர்களும் காடுகளில் மறைவிடங்களில் தூங்குகின்றனர். யுத்தத்திற்கு முன்னர் இருந்த வகையில் வீடுகள் நிம்மதியையும், ஓய்வையும் கொடுக்கும் இடங்களாக இல்லாமல் போய் விட்டது.
சிறுவர்களில் பாதிப்புகள்
சிறுவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் துப்பாக்கிகளைப் பாவிக்கப் பழகியுள்ளார்கள். அவர்கள் அவர்களின் திறமைகளை ஆய்வாளர்களுக்குச் செய்துக் காட்டியுள்ளார்கள். பாடசாலைகளை ஒழுங்காக நடத்த முடிவதில்லை. சிறுவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கிராமத்துக்கு வெளியே உறவினர்கள் இருக்கும் குடும்பத்தவர்கள் சிலர், அவர்களின் பிள்ளைகளை பாடசாலை செல்வதற்காக அங்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.
அடிப்படை சேவைகள் இல்லாதிருத்தல்
இந்த கிராமங்களின் பூகோள அமைப்பின் படி, சாதாரண நாட்களில் கூட குக்கிராமங்களுக்குக் கிடைக்கும் பொதுவான வசதிகளும், வாய்ப்புகளும்
45

Page 30
இங்கு கிடைப்பதில்லை. யுத்தத்தைப் பற்றி நிச்சயமற்ற நிலையில், கிராமத்தவர்களால் அத்தியாவசிய சேவை செய்யும் பொது அரசு சேவைகள், ஆசிரியர்கள், வைத்திய அதிகாரிகளைத் தொடர்ந்தும் இங்கு வைத்திருக்க முடிவதில்லை. யுத்தத்தின் முன்னர் ஏழ்மையில் இருந்த இக்கிராமங்களில், தற்பொழுது தரித்திர நிலைம்ை கூடிவிட்டது.
அதிர்ச்சி
தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அக்கிரமங்களும், மாபெரும் கூட்டுக் கொலைகளும் சமூகங்களுக்கு கூட்டுமொத்த அதிர்ச்சியையும், தங்கள் உறவினர்கள் நண்பர்களை இழந்தவர்களின் மனதில் மிகவும் ஆழமான தனிப்பட்ட அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் தங்களின் அன்புக்குப் பாத்திரமானவர்கள் கொடுரமாக கொல்லப்படுவதை பார்த்திருக்கின்றனர். பல சிறுவர்கள் தங்கள் இரு பெற்றோரையும், பல குடும்பங்கள் குடும்பத்தில் ஒருவர், இருவர் மிஞ்சி இருக்க ஏனைய அனைவரையும் இழந்துள்ளனர்.
யுத்தத்தைப் பற்றிய அபிப்பிராயம்.
கிராமத்தவரை நேர்காணல் செய்தபொழுது, அவர்களிடையே யுத்தத்தைப் பற்றிய அபிப்பிராயம் கலவையாக இருந்தது. தாக்குதல்களை நேரிடையாகப் பார்த்த சிலருக்கு தமிழர் மேல் வெறுப்பிருக்கிறது. ஆனால் பலர் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் வித்தியாசப் படுத்திப் பார்க்கின்றனர். ஆனால் அநேகள் யுத்தத்திற்கு முன்னர் நட்புறவோடு தங்களுடன் பழகிய தமிழ் கிராமத்தவர் தங்களுக்கு ஏன் எவ்வித உதவியும் செய்ய வரவில்லை யென்று குழப்பத்துடன் அங்கலாய்க்கின்றனர். மற்றவர்களோ எல்லைகளில் வாழும் அனைத்து சமூகத்தினருமே பயத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டுள்ளனர்.
சமூகத்தினிடையே பெரிய போராளப் பிரிவு இருப்பதுடன், அவர்கள் போராட வேண்டும் என்பதில் பெரும் பிடிவாதமாகவும், கிராமங்களை விட்டு விட்டுச் செல்லும் எண்ணம் இல்லாமலும் இருக்கிறார்கள். இந்தப் போராளிகளுமே யுத்தத்தினால் அநியாயமாக மனித இழப்புகள் ஏற்படுவதை யுணர்ந்து அது முடிவுக்கு வர வேண்டும் என்னும் மனநிலையிலேயே இருக்கின்றனர். ஒரு இளம் ஊர் காவற் படை வீரர் கூறுகிறார். என் பச்சிளம் மகனை அனைத்துக் கொண்டு வீட்டில் இருக்க ஆவலாய் உள்ள இந்த நேரத்தில், துப்பாக்கியை ஏந்தியவண்ணம் நான் ஏன் இங்கு இருக்கிறேன்? v
46

கிராமத்தவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்து, யுத்தத்திற்கு முன்னால் இருந்த உறவுமுறை மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றனர், கொட்டியாகலையில் இருந்து ஒரு கிராமத்தவர் இப்படிப் பார்க்கின்றார்: இந்த யுத்தத்தில் ஒன்றுமறியாத மக்கள் கொல்லப்படுகின்றனர். இக் கொலைகளினால் இராணுவத்திற்கோ, விடுதலைப் புலிகளுக்கோ எவ்வித வெற்றியும் வரப்போவதில்லை. எங்களுக்கு இப்படிக் கொல்வது தேவையில்லை. இந்தக் கொலைகளுக்கெல்லாம் முன்னர் நாம் வாழ்ந்தது போல் வாழ வேண்டும். மாத்தியா, யுத்தத்தின் காரணத்தினால் சிலர் நல்ல வசதிகளையும் வளங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
பின்வரும் பகுதி இராணவ வீரர்கள் சிலர் கூறிய கதைகளிலிருந்து எடுத்த சுருக்கங்கள்:
கொட்டியாகல கிராமம் - மொனறாகல
கொட்டியாகல எல்லைப் புறக் கிராமங்களைப் போன்று ஒரு ஏழ்மையான கிராமம் ஆகும், கமச்செய்கையே அதன் முக்கிய வாழ்க்கை முறையாகும். வயலுக்கோ, மேட்டுக் காணிகளுக்கோ வேண்டிய நீர் வசதி போதுமானதாக இல்லை. கொட்டியாகலையில் உள்ள சிறு கிணற்றில் உள்ள நீர் ஒரு பயிருக்கே போதுமானதாகும்;
இது வெகு காலமாக பராமரிக்கப் படவேண்டிய நிலையில் உள்ளது. அரசியல்வாதிகள் இங்கு வந்து, உறுதிமொழிகள் பல அளித்து விட்டுச் சென்றாலும் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இங்கு ஏழு ஆழ்கிணறுகள் இருக்கின்றன. அதில் இரண்டே பாவனையில் உள்ளது. குடிநீர் ஒரு கிணற்றில் இருந்தே கிடைக்கின்றது. ஒவ்வொரு நாட் காலையிலும் அந்த கிணற்றடியில் நீண்ட கியூ வரிசை நிற்கும்.
பெரும்பாலான வீடுகள் சிறிதாகவும் மோசமான நிலையிலும் இருக்கின்றன. அநேகவற்றில் கழிவறைகள் இல்லை. கிராமத்துக்கு மின்வசதியோ, தொலை பேசி வசதியோ இல்லை. ஒரு பஸ் சேவை மட்டுமே கிராமத்தில் உள்ளது. அது பக்கத்து நகருக்கு நாளொன்றுக்கு நான்கு முறை செல்ல வேண்டும். ஆனால் சில நாட்கள் அது ஒடுவதே இல்லை. யுத்தத்திற்கு முன்னர் அங்கு ஒரு மருந்துச்சாலை (டிஸ்பென்சரி) இருந்தது. அதற்கு வாரத்துக்கு ஒரு முறை வைத்திய அதிகாரி ஒருவர் வந்து செல்வார். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர் இந்த ஒரு விஜயமும் இல்லாமல் போய் விட்டது. கிராமத்தின் நிலைமையைப் பற்றிக் கூறிய கிராமத்தவர் குற்றஞ்சொன்னது: மருந்தெடுப்பதற்கு நாங்கள் பக்கத்தில் உள்ள வைத்திய சாலைக்கு 12 மைல்கள் செல்ல வேண்டும்.
47

Page 31
பாடசாலையில் 650 மாணவர்களும், 20 ஆசிரியர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பயந்து அந்த எண்ணிக்கை இப்பொழுது 363 மாணவர்களும், 7 ஆசிரியர்களுமாகக் குறைந்து விட்டது. நேர்காணப் பட்ட கிராமத்தவர் இந்த எண்ணிக்கையும் நிலைக்குமோ என சந்தேகிக்கின்றர்: அக்குறசவில் இருந்து வந்த’ ஆசிரியர் ஒருவர் இருக்கிறார்; என்று அவர் போய்விடுவார் என எங்களுக்குத் தெரியாது.
இக்கிராமத்தவர்களின் எதிர்ப்பார்புக்கள் நியாயமானது: விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் எங்கள் கமத்தொழிலில் சில அபிவிருத்திகளைச் செய்துக் கொண்டு இருந்தோம். ஒரு நல்ல வீட்டைக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் விதி அவை அனைத்துக்கும் ஒரு முடிவைக் கொண்டு வந்து விட்டது. விடுதலைப் புலிகள் எங்கள் வீடுகளை அழித்து விட்டார்கள். இப்பொழுது நாங்கள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். எந்த முயற்ச்சிகளையும் இப்பொழுது எடுக்க எங்களுக்கு மனம் இல்லை. அது பிரயோசனமற்றது.
ஒரு கிராமத்தவர் அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தில் ஆறு பேரை விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இழந்தார். அத் தாக்குதலின் விளக்கமும், இன்றைய நிலைமையும்: ஒரு மாலையில் எதிர்ப்பாராமல் அத் தாக்குதல் ஏற்பட்டது. சேனையில் இருந்த கிராமத்தவரை தாக்கிவிட்டுப் பின்னர் கிராமத்தினுள் வந்தனர். கொல்லப்பட்ட 19 பேரில், 6 பேர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என் பெற்றோர் இருவரும் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் மீண்டும் எங்கள் கிராமத்துக்கு வரவில்லை. ஆனால் சேனைக்கு வேலைக்கு சென்ற சிலரைத் தொலைத்து இருக்கிறோம். விடுதலைப் புலிகள் கொலை செய்யும் பொழுது அவர்களின் இலக்குகளில் வேறுபாடு பார்ப்பதில்லை. அனைவரும் கொல்லப் படுவர். கிராமத்தவர் அனைவரும் பயத்திலேயே வாழ்கின்றனர்.
அவனுடைய விதியைப் பற்றி சகிப்புடன் இவ்வார்த்தைகளில் கூறுகிறார்: என் வாழ்வில் நான் எப்படி திருப்தி கொள்ள முடியும். நான் பிறந்து விட்டேன். ஏதோ ஒரு நாள் சாகும்வரை வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர் நான் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். நிலைமை அப்பொழுது இருந்தது போலவே இருந்திருந்தால், இந்நேரம் என்னால் ஒரு கை உழும் இயந்திரத்துக்கு (கை டிரக்டர்) சொந்தக் காரராக ஆகியிருக்க முடியும்.
48

வில்லாச்சியா கிராமம் - அநுராதபுரம்,
வில்லாச்சியா கிராமத்தில் நிகழ்வைப்பற்றி கூறுகையில் அது கொடியாகல வாழ்வைவிட அதிக வாதத்துக்குள்ளானதாக இருந்தது. போராளிகள் 1985 இல் அங்கிருந்த பொலிஸ் நிலையத்தைத் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொன்றனர். ஆனால் கிராமத்தவருக்கு எவ்வித தீங்கும் இழைக்கவில்லை. 1994 இல் கிராமம் தாக்குதலுக்கு உள்ளாகி 27 கிராமத்தவர் கொல்லப்பட்டனர். வில்லாச்சியாவில் நடந்த கதையைப் பற்றி அங்கிருக்கும் ஊர்க்காவற் படை வீரர் கூறியது:
எங்கள் கிராமத்தவரின் பாதுகாப்பு எங்கள் கையில் இருப்பது எனக்குத் தெரியும். எங்களுக்கு புலிகள் தயார் செய்யாமல் தாக்கமாட்டார்கள் என்பதும், எங்கள் கிராமத்தைச் சுற்றி ஏதாவது சமிங்கைகள் ஏற்படுவதைக் கண்டால் நாங்கள் விரைவில் தாக்கப்படுவோம் என்பதும் தெரியும். கிராமத்தவருக்கு எச்சரிக்கை விடுவோம். சில சமயங்களில் முன்பாதுகாப்பாக எங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பான இன்னொரு கிராமத்துக்கு அனுப்பிவிடுவோம். முழு இரவும் காடுகளில் கழிப்போம்; எங்கள் குழந்தைகளை ஒரு நேரத்தில் நாட்கணக்கில் பார்க்காமலும் இருப்போம்.
யுத்தத்தினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களைப் பற்றிக் கூறினார்: காலையில் எழுந்ததும் எங்கள் சிறுவர்கள், துப்பாக்கியுடன் நாங்கள் திரும்பி வருவதைப் பார்க்கிறார்கள். பகலில் நாங்கள் துப்பாக்கியுடன் கிராமத்தில் அங்கும் இங்கும் செல்வதைப் பார்க்கிறார்கள். இரவு வந்ததும் அதுவே நடக்கிறது. சிறுவர்களின் மனம் முழுவதும் யுத்தமும் துப்பாக்கியும் தான் இருக்கிறது. அவர்கள் விளையாடும் பொழுது, அவர்கள் துப்பாக்கி வைத்திருப்பது போல் பாவனை செய்து விளையாடுகிறார்கள்.
அப்பொழுது அங்கு வந்த சிறுவன் ஒருவன் கூறியது: எங்களுக்கு விளையாடுவதற்கு ஒரு விளையாட்டு சாமானும் இல்லை. அதனால் நாங்கள் தடிகளால் துப்பாக்கி செய்து விளையாடுவோம். என் தந்தையின் T56 ஐ என்னால் பிரித்து விடமுடியும். சில சமயங்களில் என்னை என் தந்தை, அவரது துப்பாக்கியை துப்பரவு செய்து தரும்படி கூறுவார். இப்பொழுது என்னால் நன்றாக துப்பாக்கியைப் பிரித்து விட்டு மீண்டும் ஒன்று சேர்க்க முடியும். என் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளே இராணுவத்தில் சேருவதுதான்.
இரவை எப்படிக் கழிக்கிறார்கள் என்று தாய் விளக்குகிறார்: எட்டு மணி அளவில் நாங்கள் விளக்கை அணைத்து விடுவோம். என் கணவர் பங்கள் பதுங்கு குழிக்குப் போய் விடுவார். நான் என் குழந்தைகளுடன் தனியாக
49

Page 32
இருப்பேன். இரவில் குழந்தைகள் தூக்கத்தில் அழுவர்கள். ஒருமுறை என் மகன் தான் புலிகளைப் பற்றி கனவு கண்டதாகவும் அதில் அவர்களின் தந்தையை புலிகள் தூக்கி சென்றுவிட்டதாகவும் கூறினார். அவனைச் சமாதானப் படுத்துவதற்காக நாங்கள் அவனை அவனது தந்தையிடம் கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது. r
இன்னொரு கிராமத்தவர் அவர்களுக்கு T56 துப்பாக்கி கொடுக்கவில்லை என்றும் அப்படிக் கொடுத்தால் அவர்களும் முன்னால் செல்வார்கள் என்றும் கூறினார்:
அவர்கள் எங்களை துண்டு, துண்டாக ஆக்கினாலும், எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் போராடுவோம். துப்பாக்கி வெடிச் சத்தத்தைக் கேட்டு அலன்ற காலமும் ஒன்றிருந்தது. ஆனால் இப்பொழுது அச்சத்தத்தை அடிக்கடி கேட்பதனால், அதனால் எவ்வித தாக்கமும் எங்களுக்கு ஏற்படுவதில்லை.
வில்லாச்சியாவிலும் கொடுக்கப்பட்ட ஆதாரங்களிலும் வித்தியாசமான அபிப்பிராங்கள் கூறப்பட்டன. அதன்படி சிங்களவர்களும், தமிழர்களும் ஒத்து வாழ்ந்ததாகவும் அயலவர்களுடன் நல்ல உறவை வைத்திருந்ததாகவும் இருக்கிறது. நேர்காணல் செய்தவரிடம் ஒருவர் பல தமிழர்கள் சிங்களவர்களை மணம் செய்துள்ளதாகக் கூறினார். பல சமயங்களில் இவர்கள்தான் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்களோ என்று சந்தேகின்றோம்.
யுத்த சூழ்நிலையில் இம்மாதிரியான தொடர்புகள் சந்தேகத்தையும், பாதுகாப்பின்மையையும் தோற்றுவதுடன, உருவாகும் நம்பிக்கையின்மை நெருங்கிய மனித உறவுகளுக்குள் நஞ்சுண்டாக்கி விடுகின்றது. G(5 ஆதாரத்தில், விடுதலைப் புலிகளால் பிடிக்கப் பட்ட சிங்களவர் ஒருவர் பின்னர் தப்பி வந்து இருக்கிறார். அவர் புலிகளிடம் ஏதோ ஒரு ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் தப்பி வந்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் பொலிஸாரும், கிராமத்தவரும் அவரை கூர்மையாக கண்காணித்து வந்தனர். இந்த நிகழ்வை விளக்கும் பொழுது இன்னொரு கிராமத்தவர் கூறியது: பாவம் அவன், அனைத்துப் பக்கங்களிலும் இருந்து தாக்கப்படுகின்றான். சில சமயங்களில் அவனுக்காக வருந்துகின்றோம்.
வெலிகந்த கிராமம் - பொலன்னறுவ
வெலிகந்தவில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் படி அங்கு பயமும்
பாதுகாப்பின்மையும் மிகச் சமீபத்தில் நடந்துள்ளதாக இருக்கின்றது. முந்தைய
50

இரவில் ஒரு மைலுக்கு அப்பால் உள்ள கிராமத்தில் தாக்குதல் நடந்ததாக நேர்காணல் செய்தவர் அறிந்து கொண்டார்.
நாளை அது நாங்களாக இருக்கலாம். இப்பொழுது பேசுகின்றேன், நாளை நான் இறந்துவிட்டிருக்கலாம். வெடிச்சத்தத்திற்கு நாங்கள் பழகிவிட்டோம். அது எங்கள் வாழ்வில் ஒரு பகுதியாகிவிட்டது. இறப்பும் பழக்கப்படுத்தி விட்டது. எந்த புலி தாக்கினாலும் நாங்கள் அடுத்த நாள் மீண்டும் எங்கள் வயலில் நிற்போம். a.
யுத்தத்தின் பின்னர் எங்கள் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. எங்கள் பாடசாலைகள் முடப்பட்டுவிட்டன. இங்கிருந்து கிட்டிய தூரத்தில் இருக்கும் பாடசாலை 12 மைல் தொலைவில் இருக்கிறது. அதன் விளைவாக பலர் பள்ளியில் இருந்து இடைநின்று விட்டார்கள். நாங்கள் இப்பொழுது எங்கள் அறுவடை, உழுதல் வேலைகளை பொலிஸாரின் ஆலோசனையில்லாமல் செய்வதில்லை. முன்னர் இம்மாதிரியான விடயங்களுக்காக விவசாயிகள் கூட்டம் கூடுவோம், ஆனால் இப்பொழுது பொலிஸாருடன் கூட்டம் கூடுகிறோம்.
தங்கள் கிராமத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையின் துயரத்தைப்பற்றி ஒரு சிறுவன் கொடுக்கும் தகவல்:
பரீட்சைக்கு சில நாட்களே இருக்கின்றன; பாருங்கள் என்னால் படிக்க முடியாது என் புத்தகத்தை கையில் எடுக்கும் பொழுது நான் பார்ப்பதெல்லாம்
மனிதர்கள் கொல்லப்பட்டு கிடப்பதைத்தான். ஏனென்றால் நானும் என்
தாயும்தான் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இருந்து தப்பினோம். திடீரென புலிகள் வயல் வெளியில் நுழைந்து வேலை செய்துக் கொண்டிருந்த மக்களைச் சுட்டார்கள். எப்படி மக்கள் அலறினார்கள், எப்படி என் தாய் கதறினார். இப்பொழுதும் நான் உணர்ந்த பயங்கரத்தின் ஒவ்வொரு நொடியையும் நினைவு கூருகின்றேன். ஒரு சிறுவன் தலையில் பின்னால் இருந்து சுடப்பட்டான் - அங்கு பார்ப்பதற்கு முகமே இருக்கவில்லை, சதைத் துண்டங்களே இருந்தன. என்னால் நான் பார்த்ததை விபரிக்க முடியாது. என் நெஞ்சில் வெறுமையையே உணர்கின்றேன். யோசித்துப் பாருங்கள் என்னால் எப்படிப் படிக்க முடியும். நான் ஏன் பிறந்தேன் என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன். ஒவ்வொரு இரவும் பிரச்சினைகளை எதிர்ப்பார்த்து நாங்கள் கழிப்போம். சில சமயங்களில் பயங்கரமானவற்றை கற்பனை செய்து பார்ப்போம். பல இரவுகள் நாங்கள் நித்திரை யில்லாமல் அலறிக் கொண்டிருப்போம். எங்களால் ஒழுங்காக நித்திரை கொள்வது கடினம். இப்பொழுது எங்கள் சிறு தங்கை இருக்கிறாள்; அவருக்கு பட்டாசு வெடிச் சத்தத்தையும் தாங்க முடியாது. பட்டாசு வெடிப்பேன் என்று பயமுறுத்துங்கள், அவளிடம் எந்த வேலையையும் செய்து வாங்கி விடலாம்.
51

Page 33
ஒரு ஊர் காவற்படை வீரர் வில்லாச்சியாவில் கேட்ட கதையையே மீண்டும் கூறினார். இக்கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் காலையில் இருந்து இரவு வரை பாதுகாப்பரணுள் (பங்கர்) கொசுக்களைக் கொன்றவாறு இருப்போம். எங்கள் கைகள் மண்வெட்டியைப் பிடித்து நமுத்துப் போன காலங்களும் இருந்தன. ஆனால் இப்பொழுது துப்பாக்கிகளால் நமுத்துப் போகின்றன.
நாங்களும் மனிதர்கள்தான். நாங்களும் எங்கள் ஆதரவான பிள்ளைகளுடன் நிம்மதியாக நித்திரை செய்ய வேண்டாமா. மாதத்தில் 2 அல்லது 3 முறைதான் எங்களால் அப்படி இருக்க முடிகின்றது. எனக்கு ஆறே மாதமான கைக் குழந்தை யொன்று இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் துப்பாக்கியைத் தூக்கும் சமயமும் நான் அவனைப் பற்றி நினைப்பேன். எனக்கு அவனைக் தூக்கிக்கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அதிகமான நாட்கள் நான் அவனை விட்டு வெகு தொலைவில் இருக்கின்றேன்.
யக்கவேவா கிராமம் - அநுராதபுரம்.
யக்கவேவா அநுராதபுரத்தின் எல்லையில் கெப்பெடிகொல்லெவா பிரிவில்
இருக்கின்றது. ஒரு கிராமத்தவள் எப்படி அவர்கள் அண்டைக் கிராமங்களில்
இருந்த தமிழருடன் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் எனக் கூறினார். இக்கதை
எல்லைக் கிராமங்களில் முன்னர் கூறப்பட்டதைப் போன்றவாறே இருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 45 கிராமத்தவர்கள்
கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார். அவர்கள் அனைவரும் பாரிய சவக்குழியில் புதைக்கப்பட்டனர். அந்த கொலைகள் அவ்வளவு கொடூரம். சிறுவர்களின் தலைகள் துப்பாக்கியினால் நொறுக்கப்பட்டிருந்தன. அதைச் செய்த தமிழர்களுக்கு எங்கள் மேல் அளவுகடந்த வெறுப்பு இருந்திருக்கின்றது. அந்த வெறுப்பு ஏற்பட்டதன் காரணம் எங்களுக்கு புரியவில்லை.
கிராமத்தவர்கள் எந்நேரமும் சந்தேகத்துடனும் பயத்துடனுமே வாழ்கின்றனர்: எங்கள் கிராமத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் நாம் விழிப்புடனும் சந்தேகத்துடனுமே பார்க்கின்றோம். தாக்குதலுக்குப் பின்னர் கிராமத்தவருக்கு பாதுகாப்பிற்காக துப்பாக்கிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் இப்பொழுது கிராமத்துக்கு ஆபத்து அதிகரித்து விட்டது. ஏன்? விடுதலைப் புலிகள் துப்பாக்கிகளைக் கைப்பற்ற எண்ணலாம். அதனால் இங்கிருக்கும் அனைவருமே யுத்த சூழ்நிலைக்கு பழகிவிட்டனர். ஒரு ஏழு வயது சிறுவனால் கூட T56 துப்பாக்கியை கழட்டி மீண்டும் பொருத்த முடியும்.
52

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர் நாங்கள் எல்லோரும் அகதி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டோம். எங்களால் முகாமில் மற்றவர்கள் கொடுக்கும் உணவை உண்டு கொண்டு இருக்க முடியவில்லை. எங்களுக்கு எங்கள் கிராமத்திற்கு திரும்பி வர வேண்டும் என்றிருந்தது. கிராமத்தில் ஊர் காவற்படையினருக்கு அவர்களின் கடமைகளின் நிமித்தம் ஊதியம் அளிக்கப்படுகின்றது. மக்கள் அவர்களின் பரம்பரை விவசாயத் தொழிலில் இருந்து விடுபட்டு விட்டனர். இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதில் ஆவலாய் உள்ளனர். e
இருட்டத் தொடங்கியதும் கிராமத்தின் அனைத்து வேலைகளும் நிறுத்தப் பட்டுவிடும். காடுகளுக்குப் போயிருந்த அனைவரும் கிராமத்தினுள் வந்துவிடுவர். இராச் சாப்பாட்டை மாலையிலேயே சாப்பிட்டு விடுவோம். ஆண்கள் வீடுகளை விட்டு கிராமத்தின் பாதுகாப்பிற்காக வரிசையில் ஒன்று சேர்வர். இரவு குடும்பங்களைப் பிரித்து விடும். இதில் எங்களுக்கு அதிக வருத்தம்.
புத்தம் எங்கள் வாழ்வை வெகுவாக மாற்றி விட்டது. நாளையைப் பற்றி நாம் எண்ண முடியாது. நாங்கள் வயலுக்குப் போய் உழத் தொடங்கியதும் எங்களுக்கு ஏற்பட்ட பெருந்துயர் எண்ணத்திற்கு வரும். எங்களுக்கு வேலை செய்யும் எண்ணம் வராது. கிராமம் எங்கும் பயம்தான் இருக்கின்றது.
சிறுவர்கள் யுத்த விளையாட்டுக்களையே விளையாடுவர். அவர்களின் விளையாட்டு போர் நடவடிக்கைகள், பதுங்கு குழிகள், ஜீப் வண்டிகள், T56 என்பனவற்றைக் கொண்டிருக்கும். சிறுவர்கள் கிராமத்தின் சாரணர்களாகவும், உளவாளிகளாகவும் மாறிவிட்டார்கள்.
(pg.6)
யுத்தத்தில் ஏற்படும் மனித இழப்புகளின் மதிப்பீடு, மனித இழப்புகளைக் கணக்கிட முடியாது என்பதனைக் காட்டுகின்றது. அது, வீடுகளையிழந்த குடும்பங்களின் துயரம், யுத்தத்தில் நேரிடையாக ஈடுபட்டிருப்போரின் பயமும், பாதுகாப்பின்மையும், யுத்தப் பிரதேசங்களில் இருக்கும் மக்களின் சமூக, பொருளாதார வீழ்ச்சி, எதிர்ப்பாராமல் ஏற்படும் பயங்கரங்களினால் ஏற்படும் பீதி, மனித, அரசியல் உரிமைகளின் இழப்பு, தொடர் வன்முறையினால் நடத்தையில் ஏற்படும் பாதிப்பு, யுத்தத்தினை நடத்துவதனால் மேற்கொள்ளப்படும் நிபந்தனைகள் ஆகியவற்றினால் சூழப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டியுள்ளப்படி, பொருளாதாரச் சுமை, யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக, அரசியல் சுமைகள் மக்களிடையே சமமாக விழவில்லை. வடக்கு
53

Page 34
கிழக்குகளில் உள்ள மக்களும், அனைத்து தமிழ் மக்களும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். -
எனினும், அனைத்து மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள நஷ்டம் பாரியது. யுத்தத்தின் நேரடிச் செலவுகள், பரந்த பொருளாதார நிர்வாகத்தை மேற்கொள்வதை மேலும் கடினமாக ஆக்கியுள்ளது. பொருளாதார சந்தர்ப்பங்களின் இழப்பு, பொருளாதார வளர்ச்சியினால் தீர்க்கப்படும் முக்கியப் பிரச்சினைகளான தொழில் வாய்ப்பின்மை, நிலையான ஏழ்மை, போசாக்கின்மை போன்றவை உடனடியாகத் தீர்க்கப் படுவதைத் தடுக்கின்றது. தொடர்ந்து இருக்கும் பீதி, இலங்கையின் அனைத்து இன மக்களினதும் வாழ்க்கையின் தரத்தைக் குறைத்து விட்டது. யுத்த நெருக்கடியும், அதற்கான அவசியமான தேவைகளும் சிறந்த ஆட்சிக்கான பரிமாணத்தைக் குறைத்துவிட்டது. அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பம் இருக்கும் நிலையில் யுத்தம் தொடர்வதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய நீதிநியாயங்கள் இல்லை. அனைத்துக் கட்சிகளும் சமாதானத்தின் தீர்வை பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படுத்த வேண்டும்.
54


Page 35
PRINTED BY LINEARTSPTL

1, ČILEJ Il TE:311