கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 1999 (6.1,2)

Page 1
நிவே
பால்நிலை கற்ை
இதழ் 6 மலர் 1,2
தமிழிக்கியப்
ாலியலும்|தேசியமும்
KolL JEElgafler H.L TIL TILL
விர்ைகள் கல்வி
 

goof
க நெறிச்சஞ்சிகை
இரட்டை இதழ் 1999
lLES GEFLuLr
ஆய்வு நிறுவனம்

Page 2
எமது குறிக்கோள்களில் சில்
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம், சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயக பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இன பெண்களின் முன்னேற்றத் திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றை சேகரிக்கும் இந்நிறுவனம் , மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப் புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு வரிழிப் புணர்ச்சியை ஏற்படுத் தி, அக் கறையைத் துரண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக் கப்பட்ட ஒதுக் கப்பட்ட குழுக் களுக்கான (அகதிகள் , வேலையற்றோர் , சேரி வாசிகள் ) மீளக் குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் நல்கல்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

பொருளடக்கம்
தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் பெண்பாற் புலவர் சில யதார்த்தங்கள் அம்மன்கிளி முருகதாஸ்
தலித் பெண்ணியம் : ஒரு விவாதத்திற்கான முன்வரைவு அ. மார்க்ஸ்
பாலியலும் தேசீயமும் : தேசீய அரசியலில் “இலட்சியப்” பெண்ணின் கட்டமைப்பு எஸ். ஆனந்தி
சமூக அரச நிலைகளினூடு வேறுபட்டு விளங்கும் பால்நிலைத் தோற்றங்கள் : ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
செல்வி திருச்சந்திரன்
நமது வருங்கால சந்ததியினரை அச்சமில்லை என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம்! செல்வநாச்சியார் பெரிசுந்தரம்
பெண்களும் அரசியலும் அரசியல் மாணவி
பெண்ணியம் போட்ட பதியங்கள் : அமெரிக்காவில் சித்து மா. சாலமன்
நவீனத்துவ1ப் பின்னயத்தை விளங்கிக்கொள்ள: செல்வி திருச்சந்திரன்
பெண்மக்கள் விலங்கு
த. வேதநாயகி
20
41
62
74
78
83
107
126

Page 3
இச் சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரை களிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக்கருத்துக்களே, இதழாசிரியருடையவை .(9H Gu) (Guیہ
இதழ் பதிப்பு
செல்வி திருச்சந்திரன்
58, தர்மராம வீதி கொழும்பு -06 இலங்கை Ό και 595296 Fax No : 596313
ISSN: 1391-0353

ஆசிரியர் உரை
இம்முறை இவ்விதழில் ஆசிரியர், Editor என்ற ஆங்கிலப் பதத்திற்கு தமிழ் மொழி பெயர்ப்பாக உபயோகத்திலிருக்கும் சொல்லைத் தவிர்க்க எண்ணுகிறேன். Editor என்பதின் அர்த்தம் கட்டுரைகளைச் தேடிச்சேகரித்து, தெரிந்தெடுத்து, எழுத்துப்பிழை இலக்கணப்பிழைகளைத்திருத்தி, ஒன்றாகத் தொகுத்தளிப்பவர் என்பதே. ஆசிரியர் என்றால் போதிப்பவர், கல்வி கற்பிப்பவர். எப்படி, ஏன் இந்தச் சொல் Editorக்கு உபயோகப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. வேறு சொல் கிடைக்காமையற் போலும்.
நிவேதினியின் இவ்விதழ் பல்வேறுபட்ட விடயங்களைச் கருப் பொருளாகக் கொண்டு வெளிவருகிறது. வேறு நூல்களிலிருந்து பெறப்பட்ட கட்டுரைகள் இவ்விதழ்களிற் சேர்த்துக் கொள்ளப் பட்டமையை வாசகர்கள் கண்டு கொள்ளலாம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நிவேதினிக்கு கட்டுரை எழுதுவதற்கு பலர் முன்வராதது, தருவோம் என்று சொன்னவர்கள் தர முடியாமற்டோய் விட்டமை. இரண்டாவது காரணம் முக்கியமானது. பொருள் விசேஷம் கருதி ஏற்கனவே பிரசுரிக் கப் பட்டவை சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. தலித்தியம் கிளப்பி விட்ட தர்க்கம் பெண் நிலைவாதத்தையும் தாக்கி உள்ளது. பெண்நிலைவாதக் கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி இப்போது தன்னுள் பல விடயங்களை இணைத்துக் கொண்டுள்ளது. தேசீயமும் பால்நிலையும் என்ற விடயம் ஆங்கிலத்தில் பல முனைகளில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஒன்று. இவை நம் வாசகர்களையும் சென் றடைய வேண்டும் என்பதற்காக ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகள் சேர்த்துக்கொள்ளப்ட்டுள்ளன.

Page 4
பெண்களின் அரசியல் ஈடுபாடு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை விளக்கும் இரு கட்டுரைகளில் ஒன்று "அரசியல் மாணவியினால் " எழுதப்பட்டது என்பது சந்தோஷம் தரும் செய்தி. இப்போது எங்கே போய்விட்டார்கள் இந்த அரசியல மாணவிகள்? அவர்கள் ஏன் எழுதுவதில்லை. ஒரு வரலாற்றுச் செய்தியாக செல் வ நாசி சரியார் பொரிய சுந் தரத் தன் 1945 ஆண்டின்“சொற்பொழிவை"யும் இவ்விதழில் தருகிறோம். இலங்கை இந்தியக் காங்கிரசின் மாதர் பகுதி ஒன்று இருந்தது என்பதும்,அதன் பெயர் இலங்கை இந்திய மாதர் காங்கிரஸ் என்பதும், அது 1945ஆம்ஆண்டு வத்துகாமம் பன்விலையில் தொடக்கப்பட்டது என்பதும், பெண்களது வரலாற்றில் ஆவணப்படுத்தப்படவேண்டிய விடயங்கள் . இந்திய வம்சாவழிப் பெண்களின் அன்றைய அரசியல் ஈடுபாட்டிற்கும் அவர்களால் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இக் கட்டுரை சான்று பகரும். இன்று நிலைமை எவ்வளவுக்கு மாறிவிட்டது, மாற்றப்பட்டுள்ளது என்ற முக்கியமான கேள்விகளையையும் இக்கட்டுரை எழுப்புகிறது.
அடுத்து 1938லியே பெண்நிலை வாதத்தை முன்வைத்து ஒரு தமிழ்ப்பெண்மணி எப்படி வாதித்துள்ளார் என்ற செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக பெண் மக்கள் வரிலங் கு என் ற கட்டுரையையும் இணைத்துள்ளோம். இக்கட்டுரை பற்றி மேலும் சில செய்திகள்: பெண் ணை அடிமைப் படுத்தும் , அலைக் கழிக் கும் அவலங் களைப் பற்றிக் கூறி சமையல் , சாப் பாடு , விடயங்களைபற்றியும் அவை எப்படி பெண்ணை சமையல் அறையில் முடக்கிவிடுகிறது என்பது உட்பட விளக்கிய பெண்மக்கள் விலங்கு என்ற வேதநாயகியின் கட்டுரையில் இழையோடும் ஒரு நூல் என்னைச் சற்று சிந்திக்க வைக்கிறது. துறவறத்தை நாடும் அவரது மனமும், இச் சிந்தனைப் போக்கும் தான் அது. பெண் விலங்குகளை உடைக்க துறவறமே தான் சிறந்தது என்ற ஒரு ஆற்றாமையாக அது
2

அவருக்குத் தோன்றுகிறதா? இருக்கிறதா? வேறு வழி தெரியவில்லையா? ஆனால் வேறு வழிகளையும் அவர் கூறுகிறார். பெளத்த சமய பெண்ககவிகளின் தேரிகாத்தா கவிதைகளும் பெண்ணைப் பூட்டி வைத்த விலங்குகளை விடுத்து தாம் துறவறம் பூண்டதைக் கூறுகின்றன. இவ்வொற்றுமை வியக்கத்தக்கதல்ல. ஏனெனில் பெண்களின் அனுபவங்களில் கால தேச வரையறைகளை கடந்த ஒரு ஒற்றுமையைக் காணலாம் என்பது பெண்நிலைவாதிகளால் ஏற்கனவே உணரப்பட்ட ஒரு விடயம்.
நவீனத்துப்பின்னயம் பலரைக்குழப்பிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அதைப்பற்றியும் தமிழில் ஒரு விளக்கம் தேவை ஏற்பட்டதால் அதைப் பற்றியும் ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது. மேலைநாடுகளில் பெரும்பாலும் அது கைவிடப்பட்ட ஒரு கோட்பாடாகிவிடும் போலத் தெரிகின்ற இவ்வேளையில் தமிழ் நாட்டிலும், புலம் பெயர் தமிழ் மக்களிடமும் அது பெரிதாக தற்போது பேசப்படுகிறது.
நிவேதினி புலம் பெயர் மக்களாக மேலை நாடுகளில் வதியும் தமிழ் மக்களையும் சென்றடைகிறது. அவர்களும் நிவேதினிக்கு கதை கட்டுரை அனுப்புவார்கள் என்றால் நிவேதினி இன்னும் சிறப்புற்று விளங்கும்.
இவ்வாண்டின் முதலும் இறுதியுமான நிவேதினியாகவே இது வெளிவருகிறது ஆனியில் வெளிவர இருந்த இதழ் போதிய கட்டுரைகள் கிடைக்கப்பெறாததால் வெளிவரவில்லை. எம் நாட்டில் சமூகப் பிரக்ஞையுடன் எழுதுவோர் மிகச்சிலரே. அதுவும் பெண்நிலையில் அதை விளங்கிப் புரிந்து எழுதுவோர் இன்னும் மிகச்சிலரே. ஆகவே இக்குறைபாடு தொடர்ந்து கொண்டே போனால் நிவேதினி வருடமொருமுறையே தோன்றக்கூடியதாக வந்துவிடும். ஆங்கிலத்தில் வெளிவரும் இதழுக்கு பெரும்பாலும் இப் பிரச்சனை இல்லை. சர்வதேசரீதியிலும் அதற்கு கட்டுரைகள் வந்து சேரக்கூடியதாக இருக்கிறது.

Page 5
தமிழிலக்கியப் பாரம்பரியத்தில் பெண்பாற் புலவர் ஒளவையார் பாடல்கள் பற்றிய ஆய்வு
அம்மன்கிளி முருகதாஸ்
ஒளவையார் யாரென்பது
தமிழிலக்கிய வரலாற்றில் பெண்பாற்புலவர்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிலும் சங்ககாலத்தில் தான் 29 பெண்பாற்புலவர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். இவர்களின் காலத்தைத் தொடர்ந்து அதாவது கி.பி 3ம் நூற்றாண்டின் பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை மூன்றே மூன்று பெண்பாற் புலவர்களே இனங்காணப் பட்டுள்ளனர்.
ஒருவர் காரைக்காலம்மையார். அடுத்தவர் ஆண்டாள். மூன்றாமவர் ஒளவையார் (பிற்காலத்துக்குரியவர்)
இந்த நிலமையானது தமிழ்ப்புலமை வரலாற்றில் மேலாதிக்கம் செலுத்தி நின்ற ஆணாதிக்கத்தையே இனங்காட்டி நிற்கின்றது. மேற்குறிப்பிட்டவர்களுள் ஆண்டாளும் காரைக்காலம்மையாரும் பக்தி இலக்கியம் பாதுகாக்கப்பட்டமையினால் பாதுகாக்கப் பட்டவர்கள். பிற்கால ஒளவையார் அற இலக்கியங்கள் பாதுகாக்கப்பட்டமையாற் பாதுகாக்கப்பட்டவர்.
இக்கட்டுரை சங்ககால ஒளவையார். ஒளவையாரைப்பற்றியே பேசுகிறது. ஒளைவையாரைப் பற்றிச் சில ஐதீகக் கதைகள் உண்டு.
1. ஒளவையார் பிள்ளையாரை வேண்டி முதுமைக் கோலம்
பெற்றமை 2. முருகனிடம் சுட்டபழம் கேட்டது.

3, முருகனிடம் துரது சென்றது. 4.பேயோட்டியது. 5.அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றது
கி.பி 3ம் நூற்றாண்டில் முந்தியதெனக்கருதப்படும் சங்ககால ஒளவையாரின் பாடல்களிலிருந்து அதியமானிடம் நெல்லிக்கனி பெற்றகதை மட்டுமே உறுதிப்படுத்தப்படுகின்றது.(புறம் : 91),
ஒளவை என்ற சொல் தமிழில் தாய், செவிலி, முதியோள் (Mother, Matron, old woman)6 6Tp 3(555ci) 6) up513EI'll Gesi Gigi. -91 ĝ5g5 L_ 6őI ĝ56) uloj (0) Lu 6ööI (Female ascetic, especially used by the Jania Sect) என்ற கருத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒளவையார் பற்றி வழங்கும் கதைகளுடன் (கிழவி எனக் கருதுதல்) ஒளவை என்ற பெயரை ஒப்பிடும் போது இது அவரின் இயற் பெயரல்லவோ எனவும் எண்ண வைக்கிறது.
சங்கஇலக்கியத்தினூடு இவர் அதியமான் நெடுமானஞ்சி என்ற குறுநில மன்னன் ஒருவனின் அரசவைப் புலவராக இருந்திருக் கின்றார் என அறிய முடிகின்றது. இவர் பாடியதாகக் கிடைக்கின்ற 33 புறநானுாற்றுப் பாடல்களில் 24 பாடல்கள் அதிய மான் நெடுமான ஞ் சரியைப் பாடியவையாகும் . மூன்றுபாடல்கள் அதியமானின் மகன் பொருட்டெழினியைப் பாடியவையாகும்.அதியமானினன் வீரம், கொடை, வள்ளன்மை என்பன இவரது பாடல்களால் அறியப்படுகின்றன. அதியமானின் மகன் பிறந்த போது பாடிய பாடல் ஒன்றும் கிடைத்துள்ளது. (அவன் பொருடெழினி யாகலாம் புறம் 100) பின்னர் பொருட்டெழினியையும் பாடுகின்றார். (புறம் 96 , 102, 392) அதியமான் இறந்தபோது கையறுநிலைப் பாடல்களையும் பாடியுள்ளார். (புறம் : 231, 235) எனவே அதியமானின் இளமைக்காலம் தொடக்கம் அதியமான் இறந்த பின்மகன் பொருட்டெழினி அரசு கட்டிலேறி அரசாண்டதுவரை அவர் தொடர்ந்து பாடியுள்ளார். மேலும் சில வீரர்பற்றியும், மூவேந்தர் பற்றியும் பாடியுள்ளார். (புறம் 367).

Page 6
மற்றும் படி ஒளவையாரின் பிறப்பு,வளர்ப்பு, என்பதைப் பற்றியும் அவர் எப்படி அரசவைப் புலவரானார் என்பது பற்றியும் விபரங்கள் கிடைக்கவில்லை. ஒளவையார் விறலி என்பது நாராயணசாமி ஐயரின் கருத்தாகும். புறப்பாடல் ஒன்றில் விறலி என்று ஒளவையார் தன்னைத்தானே குறிப்பிடு வதை நாராயணசுவாமி ஐயர் உதாரணம் காட்டியுள்ளார்.(புறம் : 89)
இவர் பாணர் மரபினர் இளமையில் விறலியராக ஆடல் பாடல் முதலியவற்றிலே தேர்ந்து விளங்கியவர். புறம் அசா இல் தம்மை வரிற லியெ ன் று தாமே கூறுமாற்றானறிக. (நற்றினை 1914 : 14).
ஆனால் உ வே.சாமிநாதையர் இவரை விறலியல்லர் என
மறுக்கின்றார்.
தம்முடைய கூற்றாகவன்றிப் பாடியிருத்தற்குரிய விறலி முதலியவரின் கூற்றுக்களாகவும் இவர் பாடிய பாடல்கள் இந்த நூலிலும் பிற நூல்களிலும் காணப்படும். ஆராய்வோர் அதனைக் கொண்டு இவரை விறலி முதலியவர்களாக நினைந்து விரைந்து முடிவு செய்து விடுதல் மரபன்று. அங்ங்னம் பாடுதல் கவிமரபெனக் கொள்ளுதல் முறை
(புறநாறுாறு 1956 : 32).
ஆயின் ஒளவையார் விறலியராக இருந்திருக்கக்கூடிய சான்றுகளை வேறு பாடல்களும் தருகின்றன. ஒன்று விறலியை ஆற்றுப்படுத்திய பாடல்
ஒருதலைப் பதலைதுாங்க ஒருதலைத் துரம்பகச் சிறுமுழாத் துரங்கத் துரங்கிக் கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச் சுரன் முதலிருந்த சில்வளை விறலி
(11 spli) : 103 : 1 : - 4)

என வழியிலிருந்த விறலியை நோக்கிப் பாடும் ஒளவை அதியமான் பரிசில் நீட்டித்தபோது
காவிளெங்கலனே சுருக்கினேங்கலப்பை மரங்கொஃறச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத்தற்றே எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே
(புறம் :206:10-14)
நெடுங்கடை நின்று தடாரி இயக்கிப் பாடுதல் பற்றி 390.392 புறநானூற்றுப் பாடல்களிற் குறிப்பிடுகிறார்.
மலைக்கணத்தன்ன மாடஞ்சிலம்பவென் அரிக்குரற்றடாரி யிரிய ஏற்றிப் பாடிநின்ற பன்னாளன்றியும் (புறம் 390; 7-9)
பொருகளிற்றடி வழியன்ன வென்கை ஒருகண் மாக்கினை ஏற்றுபு கொடாஅ
வைகலுடிவ வாழிய பெரிதெனச் சென்றியானின்றனெனாக.( 1றம் 392:5-6 11-12)
இவர் ஊரூராகச் சென்று பாடியவராகலாம் எனக்கருத இவை இடமளிக்கின்றன. அதியமானின் தயவில் நெடுங்காலம் வாழ்ந்துள்ளார் என்பதும் அறியப்படுகின்றது.
ஒளவையார் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டற்கான சான்றுகள் அவரது பாடல்களிலேனும் கர்ணபரம்பரைக்கதைகளிலேனும் இல்லை.
ஒளவையார் வாழ்ந்த சமூகமும், சமூக அறக் கோட்பாடுகளும்.
ஒளவையார் வாழ்ந்த சமூகம் ஒரு வீரயுக சமூகமாகும், இந்த யுகத்தில் இனக்குழுத்தலைவர்களை வென்றடக்கிய வேந்தரும் அவர்களுக்கு திறைசெலுத்தும் அல்லது படையுதவும் குறுநில
7

Page 7
மன்னரும் வாழ்ந்தனர். ஆண்கள் பெரும்பாலும் மன்னருக்கு உதவிய வீரர்களாக இருந்தனர். போர் இந்த யுகத்தில் பிரதான பண்பாக இருந்தது. காலாட்படை வீரரும், களிறு மா, தேர்கொண்டு போராடும் போர்வீரரும் காணப்பட்டனர்.
பொருளாதாரத்தில் வேட்டுவநிலை மீன்பிடி, மந்தை மேய்ப்பு, உழவுத் தொழில் என்பவற்றுடன், கடல்வணிகம், தரைவணிகம், சிறுகைவினைத் தொழில்கள் என்பனவும் காணப்படுவதைச் சங்கநூல்கள் தெரிவிக்கின்றன. உழவும், மந்தைமேய்ப்பும் நிலையான விவசாயத்துக்கு வித்திடத் தொடங்குகையில் நிலவுடமை தோன்றத் தொடங்கியிருந்தது. அதனால் போர்கள் எயில்காத்தலும் எயில்வளைத்தலுமாக மாறின. டோர் இந்த மக்களின் பிரதான தொழிலுமாயிற்று.
ஒளவையாரின் புறப்பாடல்கள்
ஒளவையார் ஏனைய புகழ்பெற்ற புலவர்களைப் போல (கபிலர்,பரணர்போன்றோர்) புறப்பாடல்கள் பலவற்றைப் பாடி யுள்ளார் ,முன்னர் கூறியது போலவேந்தரையும் குறுநில மன்னரையும், வீரரையும்
இவர்பாடிய புறப்பாடல்கள்.
புறநானூறு: 87-104,140,206,230,232,235,269 ,286,290,295,311,
315,367,390,392 பெண்பாற்புலவர் என்ற வகையில் மற்றைய புலவர்கள் பாடியபாடல்களுடன் ஒப்பிடுமிடத்து ஒளவையார் பாடல்களிற் காணக் கூடிய தனித்தன்மையே இங்கு நோக்கப்பட வேண்டியதாகும்.
ஒளவையாரின் எல்லாப்பாடல்களிலும் ஏனைய புலவர்கள் மன்னரை வாழ்த்தியது போலவே மன்னரின் புகழ் பேசப்படு கின்றது. வீரம்பேசப்படுகின்றது. வள்ளன்மை பேசப்படு கின்றது அத்துடன் மறக்குடிப் பெண்களும் பேசப்படுகின்றனர்.
8

போர்க்களத்தில் நெஞ்சிலேவேல்பட்டு இறந்த மகனைக் கண்டதாயின் வாடுமுலையூறிச் சுரந்தன என்று பாடுகின்றார். (புறம் 295) இவ்வாறு செங்களம் துழவிய தாயைக் காக்கை பாடினியார் நச்செள்ளையாரும் பாடுகிறார். (புறம் 278) ஒளவையாரின் பாடல்மட்டும் இப்போரிலே மகனை இழந்த தாயின் துயரத்தை மிக அழகாக கூறுகின்றது.
வெள்ளை வெள்யாட்டுச் செச்சைபோலத் தன்னோரன்ன இளையரிருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென்சிறுவளை (பி.ம் நீட்டிப் பண்டையென்) கால் கழிகட்டிலிற் கிடப்பித் துவெள்ளறுவை போர்ப்பித் திலதே (புறம்:286)
தன்னைப்போல இளையர் ஆட்டுக்கிடாய்கள் போல இருப்ப எனது மகன் மட்டும் வெள்ளைத்துணியால் போர்க்கப்பட்டு கால்கழிகட்டிலில் (பாடையில்) கிடக்கிறான் என இரங்குவதாக இது அமைகிறது.
கால்கழி கட்டிலிற் கிடப்பித் துவெள்ளறுவை போர்ப்பித்திலதே
என்ற தாயின் ஒலம் மிகத்துல்லியமாக மிகத் தெளிவாக ஒளவையாரால் வரையப்படுகின்றது. தலைவனை இழந்த மனைவியர் புலம்பும்பாடல்கள் உள எனினும், இவள்தனே. மகனைப் போருக்கு அனுப்பிவிட்டு
ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே என்ற நிலமை ஒரு புறமிருக்க தன்னைப்போல இளையரிருப்ப இவன் மட்டும் இறந்துவிட்டான் எனக்கூறும் அவலம் மற்றப் புலவரிடமிருந்து ஒளவையாரை வேறுபடுத்துகிறது. சங்கஇலக்கியத்தில் காமம் என்ற சொல் பெண் ஆணின்பால் கொண்ட விருப்பை, அல்லது ஆண், பெண்ணின் பால்
9

Page 8
கொண்ட விருப்பை வெளிப்படுத்தும் ஒரு சொல் லாக விளங்குகின்றது. இந்த விருப்பை ஒருவருக்கொருவர் தெரிவிப்பதில் அல்லது பிறருக்குத் தெரிவிப்பதில் சில வரையறைகள் இருந்தன என்பதை சங்கப்பாடல்களாலும், தொல்காப்பியக்குறிப்புக்களாலும் அறியமுடிகிறது.
ஆணுக்கெனச் சில கடப்பாடுகளும் பெண்ணுக்கெனச் சில கடப்பாடுகளும்வகுக்கப்பட்டிருந்தமையைச் சங்கப் பாடல் களினூடாக அறியத்தக்கதாக உள்ளது. இந்தக் கடமைகள் பெண்ணை வீட்டுக்குரியவளாக ஆக்கியிருந்தன.
வினையே ஆடவர்க்குயிரே மனையுறை
மகளிர்க்கு ஆடவர் உயிரென (குறு : 1.35:1-2) வகுத்தமையை அறியமுடிகின்றது. திருமணத்தின் போது பெண்
கற்பினின் வழாஅ நற்பல உதவி
பெற்றோற்பெட்கும் பிணையை ஆகென.
(அகம்:8 ம 13-14)
வாழ்த்தப்படுகிறாள். கணவனி விரும் 1ம் பெண்ணாக இருத்தலவசியமாக இருந்ததுடன் கற்பினின் வழுவாதவளாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறாள். முல்லை சான்ற கற்பு,அருந்ததியன்ன கற், கடவுள்சான்ற கற்பு என பெண்கள் கற்புடையவராயிருத்தல் புகழ்தற்கு உரியதாகின்றது.
குழந்தையை ஈன்று புறந்தருதல் தாயின் கடனாகவும் சான்றோனாக்குதல் தந்தையின் கடனாகவும் வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லனின் கடனாகவும் , களிறெறிந்து பெயர் த ல் காளையரின் கடனாகவும் கருதப் பட்டன . ஆண்குழந்தையைப் பெறுதல் முக்கியமானதாக கருதப்பட்டது. சங்கப்பாடல்கள் ஒன்றேனும் புதல்வியுடனான தாயைக் காட்டவில்லை.

ஆண்கள் தொழிலுக்குரியவராக வீரத்துக்குரியவராக, பொருள்
தேடுதற்குரியவராக குறிக்கப்பட்டுள்னர். பொருள்வயிற்
பிரிவிற்கு உடன்பட்ட தலைவியை நோக்கி தலைவி
வெள்ளிப் வல்சி வேற்றுநாட்டு ஆரிடைச் சேறும் நாம் எனச் சொல்ல சேயிழை நன்று எனப் புரிந்தோம் நன்று செய்தனையே செயல்படுமனத்தர் செய்பொருட்கு அகல்வர் ஆடவர் (நற் 24: 5-9)
என ஆடவரின்பண்பாக செய்பொருட்கு அகல்தலைப்பற்றிக் கூறுகின்றாள். பொருள் உயிரினும் சிறந்தது எனப்படுகின்றது.
உயிரினும் சிறந்த ஒண்பொருள் தருமார் நன்று ரிசாட்சியர் (அகம் : 245)
என அகம் கூறும் மேலும், செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறும் இடத்து உதவி ஆண்மையும் இருக்க வேண்டுமெனவும் அறன் கடைப்படா வாழ்க்கையும் பிறன் கடைப்படாச் செல்வமும் உடையவனாக இருக்கவேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
பெண்கள் அன்பும், மடனும், சாயலும், இயல்பும் என்பு நெகிழ்க்கும் கிளவியும், உடையவராதல் வேண்டுமெனவும் ஆயத்துடன் வெளியே செல்லாது காப்புப்பூண்டவராக வீட்டில் இருத்தல் வேண்டுமெனவும் கூறப்படுகின்றது.
அகப்பாடல்களை நோக்கும் போது பெண் தன் காமத்தை வெளிப்படையாகச் சொல்லமுடியாத சமூகச் சூழல் இருந்தமையைச் சங்க இலக்கியம் (நற் : 94) காட்டும். ஆண் தனது காமத்தைச் சொல்லக்கூடியவனாக இருந்தான்.
நோய் அலைக்கலங்கி மதனழிபொழுதில் காமஞ் செப்ப ஆண்மகற்கு அமையும்
11

Page 9
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி கைவல் கம்மியன் கவின் பெறக்கழாஅ மண்ணாப்பசுமுத்துஏய்ப்ப (நற் : 94: 1-5)
இருப்பதாகத் தலைவி கூறுகிறாள். அதாவது நன்றாகக் கழுவப்படாத பசுமுத்துப் போல தனது காமம் வெளிப்படுத்தப் படாது இருக்கிறது என தலைவி கூறுகிறாள் தொல் காப்பியத்திலும் தலைவி தனது வேட்கையை வெளிப்படையாகச் சொல்லுதல் கூடாது எனப்தாக விதி அமைக்கப்பட்டுள்ளது.
பிறநீர்மாக்களின் அறிய ஆயிடைப் பெய்ந்நீர் போலும் உணர்விற்றென்ப(தால்:கற் : 22)
மட்குடத்துட்பெய்த நீர் கசிவினால் அறியப்படுவது போல அவளின் விருப்பமும் அவளின் தோற்றத்தினால் அறியப்பட வேண்டும் என்பர்.
காமத் திணையின் கண்ணின்று வருவம் நாணும் மடனும் பெண்மைய வாதலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்படவாரா அவன் வயினான (கற் : 18)
தலைவியிடத்தே நிலை பெற்றுவரும் நாணமும் மடனும் பெண் மைக்கு அங்கமாகலின் காமவொழுகத்தின் கண் குறிப்பினும் இடத்தினுமல்லது வேட்கை புலப்பட நிகழாது தலைவியிடத்து என்பர்.
உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும் என்றுற்றன கொல் இவையெனின் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக்கில்லை
எனத் தலைவி தலைவனைத் தேடிச் செல்ல முடியாது எனக்கூறப்படுகிறது. ஆயின் சங்கஇலக்கியப் பெண்பாற்
12

புலவர்களின் தலைவியர் மேற்கூறிய விதிகளை மீறிச் செல்பவராக உள்ளனர். பெண்பாற் புலவர்களின் பாடல்களில்
தலைவி கூற்றுக்களே அதிகம்.
இந்த வகையில் ஒளவையார், வெள்ளிவீதியார் அள்ளுர் நன்முல்லையார் என்போர் முக்கியமானவர்கள். அவர்கள் மேற் குறிப்பிட்ட பெண்ணுக்குரிய விதிகளை மீறிய பாத்திரங்களைப் படைத்துள்னார். ஒளவையாரின் தலைவி, தலைவனைக் காணாத தன் தாங்கமுடியாத வேட்கையைப் பின்வருமாறு வெளிப்படுத்துகிறாள்.
மூட்டுவேள் கொல் தாக்குவேன் கொல் ஒரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல் அரமரல் அனசவளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே (குறு :28)
என்று தன்துயரை அறியாது துஞ்சும் ஊரை மூட்டுவேனோ தாக்குவேனோ எனக் கூறுவதாக அமைகிறது. தலைவி இவற்றில் ஒன்றையும் செய்ய முடியாது கைகட்டிப் போட்ட நிலையில் இக்கூற்றுகளாக வெளிப்படுத்துகிறாள் (குறு: 102). ஆம் பாடலில் தலைவி தன் காமம் பற்றிக் கூறுகிறாள்.
உள்ளின் உள்ளம் வேமே உள்ளது இருப்பின் எம் அளவைத்து அன்றே வருந்தி வான்தோய்வற்றே காமம் சான்றோர் அல்லர் நாம் மரீஇயோரோ
என்கிறாள். இந்த இடத்தில் ஒரு ஆண்பாற்புலவரின் பாட
லையும் நோக்கலாம் அப்பாடலிலும் தலைவி தலைவன்
மீது கொண்ட விருப்பை வானினும் உயர்ந்தது என்கிறாள்.
3

Page 10
நிலத்திலும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே
(தேவகுலத்தவர் குறு : 3) வான்தோய்வற்றே காமம் என்பதற்கும் வானினும் உயர்ந்தது என்பதற்குமிடையே
உணர்வுநிலையில் வேறுபாடு உள்ளது.மேலும் தலை வனுடைய உறவு நட்பு என்றே இவரால் பேசப்படுகிறது. ஒளவையாரோ காமம் என்றே கூறுகின்றார்.
மேலும் அகம் 147வது பாடலில் ஒளவையாரின் தலைவி தலைவனை அடையத் தான் விரும்புவதை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். மேலும் பின்வரும் பாடலில்,
வம் விரித்தன்ன கம்மென பொங்குமாற் கான்யாற்றும் படுகினை தாழ்ந்த பயிலுணர் எ க்கள் மெய் குவன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்ன்ே (அகம் = 1 ; 7 : 1)
எனக்கூறுகிறார். மெய்/குவன்ன கைகவர் முயக்கம், கம்மென என்ற தொடர்கள், தலைவியின் விருப்பத்தை மிக நாசூக்காகத் தெரிவிக்கின்றன.இன்னொருபாடலில் காமத்தை 'உள்ளந்தாங்கா வெள்ளம்" என உவமிக்கிறார். தலைவன் தலைவியைத் தழுவ தலை 'உயர் கோட்டு மகவுடை மந்திபோல அகனுறத் தழுவுதலுக்கு உவமிக்கிறார்( குறு : 29)
இவை சங்ககால ஆண்பாற்புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துகின்றன.

பெண்ணின் உணர்வுகளும், அனுபவங்களும்
பெண்ணின் உணர்வுகளும் அனுபவங்களும் ஒளவையின் பாடல்களினுடாக மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தப் படுகின்றன. தன்னைப் பிரிந்த தலைவன் பற்றி தலைவி
பின்வருமாறு நினைப்பதாகப் பாடுகிறார்.
நலம்கவர் பசலை நலியவும் நம்துயர் அறியார் கொல்லோ தாமே அறியினும் நம்மனத்து அன்ன மென்மை இன்மையின் நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ
யாங்கென உணர் கோ யானோ (அகம் 273)
பெண்களுக்கு இருக்கக்கூடிய மென்மை உயர்வு அவனிடம் இல்லாததால் என்துயரை அவன் அறியானோ என்பதாக அமையும் இப்பாடலில் ஆண்களின் சிந்தனை வேறு என்பதும் பெண்களின் சிந்தனை வேறு என்பதும் நம்முடைய உலகம்’ என்ற தொடரால் வெளிப்படுத்தப்படுகின்றது.
தலைவனைத் தான் நினைத்தமைபற்றிக் கூறுகையில்
உள்ளினன் அல்லனோ யாரோ உள்ளி நினைத்தனன் அல்லனோ பெரிதே நினைந்து மருண்டானன் அல்லனோ உலகத்துப் பண்பே.
(நன் : 90) உள்ளுதல் நினைத்தல், மருள்தல் என்பன பெண்களின்
செயல்கள், பெண் தன் காமத்தை மறைத்தல் பற்றி
இடைபிறர் அறிதல் அஞ்கி மறைகரந்து பேரைய் கண்ட கனவின் பன்மாண் நுண்ணிதின் இயைந்த காமம்
(அகம் : 303: 1-37) எனக் கூறுவதையும் காணலாம்.
தலைவியின் தலைவனுடனான உறவை அறிந்து அவள் இற்
15

Page 11
செறிக்கப்பட்ட நிலையில் தலைவன் திருமணம் செய்ய நினைக்காத சூழலில் தலைவி கூறுவது மிகமிக இயல்பாக அமைகிறது. இந்த வகையில் சங்கப்பாடல்களைப் பாடிய ஆண்பாற் புலவர் பாடவில்லை.
யாவும் அஃது அறிந்தனன்.
அருங்கடி அயர்ந்தனன் காட்டே எந்தை வேறு பல் நாட்டுக் கால்தரவந்த பல்வினை நாவாய் தோன்றும் பெருந்துறை கலிமடைக் கள்ளின் சாடி அன்ன எம் இளநலம் இற்கடை ஒழியச் சேறும் வாழியோ முதிர்கம் யாமே.
எமது இளநலம் இல்லிலே ஒழிய நாம் முதிர்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகின்றது. செவிலி நற்றாய்குக் கூறுவதாக அமைந்த பாடலில் செவிலி நற்றாயைத் தோழி' என அழைப்பதும் இவரின் பாடல்களில் தான்.
மேலும் பெண்கள் துணையிலர் அணியர் என்ற சமூகக் கருத்தைப் பாடல் ஒன்றில் வெளிப்படுத்துகிறார்.
நெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும் கருவிசை உருமின் கழறுகுரல் அளை இக் காலொடு வந்த கமஞ்சூல் மாமழை ஆர்.அளி இலையோ நீயே பேரிசை இமயமும் துளக்கும் பண்பினை துணைஇலர் அளியர் பெண்டிர் இஃது எவளே (குறு : 158) என அமையும் இப்பாடலில் பெண்டிர் துணையில்லாதவர்கள்
இரக்கத்துக்குரியவர்கள் என்ற கருத்து புலப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் யாவும் பாத்திரங்களின் கூற்றுக்களே எனினும் பெண்பாற் புலவரின் பாடல்களில் அமையும் தலைவி பாத்திரங்கள் ஆண்பாற் புலவரின் பாத்திரங்களை விடவும் சிறப்புற்றிருக்கின்றன. காரணம் பெண்
16

தனது நிலையில் நின்று பாடுதலாகும். உதாரணமாக கபிலரின் பாடல் வரி ஒன்றையும் ஒளவையாரின் பாடல் வரி ஒன்றையும் காட்ட முடியும்.
சிறுகோட்டுப் பெரும்பழம் துரங்கியாங்கு இவள் உயிர்தவச்சிறிது காமமோ பெரிதே (கபிலர்) என தலைவியின் காதல் பற்றித் தோழி கூறுகிறாள்
ஒளவையாரின் தலைவியோ
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் கெழுதகைமையின் அழுதன தோழி ! . கண்ணே என்கிறாள்.
ஒளவையின் பாடல்களின் மொழிநடை ஆண்பாற் புலவரின் பாடல்களின் மொழிநடையுடன் ஒப்பு நோக்கும் போது வேறுபட்டுள்ளது. ஒளவையார் கூடுதலாக உணர்வுநிலையில் பேசுகின்றார். உணர்வு இடைச்சொற்கள் அதிகம் கையாளப்
படுகின்றன.
மூட்டுவேன் கொல், தாக்குவேன் கொல்
ஆசு ஒல்லெனக்கூவுவேன் கொல்
உள்ளினன் அல்லனோ, உள்ளி நினைந்தனன்
அல்லலோ
நினைந்து மருண் உளென் அல்லலோ,
உணர்வைக்கட்டுப்படுத்தாத நிலைகளை வெளிப்படுத்துகையில்
உள்ளத் தாங்கா வெள்ளம் வான்தோய்வற்றே காமம்
அழுதனதோழி . கண்ணே.
வினைச்சொற்களை அதிகம் கையாண்டுள்ளார். அலமருதல் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார்.
7

Page 12
சங்க இலக்கியத்திற் புலவனின் ஆளுைைமயைக் கணிப்பதற்கு சிறிய பாடல்களே அதிகம் பொருத்தமானவை. பாடல்கள் நீண்டு செல்ல, "கவிதைக்கு வேண்டும்" என /லவர் அக்காலத்து நினைத்த பல செய்திகளை இணைத்துச் சொல்லத் தொடங்கி விடுவதால் சிறுபாடல்களில் இருக்கும் கவர்ச்சி பெரிய பாடல்களில் குறைந்து போய் விடுகிறது.
கபிலரின் பாடல்களையும் ஒளவையாரின் பாடல்களையும் ஒப்புநோக்கி ஆராயும் போது சங்க இலக்கியத்திற்கெனக் கூறப்பட்ட பண்புகள் பல பெண்களின் பாடல்களில் உடைந்து
போவதையும் காணமுடிகின்றது.
உள்ளுறை பற்றிய விடயம் இவற்றுட் பிரதானமானது. வெளியே சொல்ல முடியாத அகவிடயங்களை உள்ளுறை யிற்சுறுதல் சங்க இலக்கியப் பொதுமரபாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. ஆயின் குறுந்தொகையில் உள்ள கடபிலர் பாடல்களையும் ஒளவையாரின் பாடல்களையும் ஒப்பு நோக்கும்
போது ஒளவையாரின் பாடல்களில் உள்ளுறை இல்லை.
மேலும் கபிலரின் தலைவிதான் தன்லவனுக்கு அவன் வரும் வழியில் ஏற்படக்கூடிய பயம்பற்றி, நினைக்கிறாள் (கபிலர் : 153) ஒளவையோ கார்காலத்தில் தலைவனைப் பிரிந்திருந்தலால் ஏற்படக்கூடிய துயர் பற்றியே சிந்திக்கிறாள். (ஒளவை குறு: 158) மேலும் தலைவனின் (ஆணின்) பெருமை பற்றி தலைவி, தலைவன் பேசுகின்ற பாடல்கள் கபிலரின் பாடல்களிலேயே வருகின்றன.
நீர் ஓரன்ன சாயல் தீ ஒரன்ன என் உரன் அவித்தன்றே (குறு : 95) கல்லினும் வலியன் தோழி (குறு - 158) கொடியர் அல்லர் எம் குன்று கெழுநாடர் (குறு:87) எனத்தலைவன் பேசப்படுகிறான்.
மேலும் அகப்பாடல்களில் வாழ்க்கை அறம்பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் ஆண்பாற் புலவர்களாகவே உள்ளனர்.
18

நில்லாமையே நிலையிற்று ஆகலின் நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின் கடப்பாட்டாளனுடையப் பொருள் போலத் தங்குதற்குரியதன்று நின் அம்கலும் மேனிப் பாய பசப்பே (குறு : 143 : நக்கீரர்) பசலைக்கு உவமையாக நில்லாமை, உவமிக்கப்படுகிறது.
வினையே ஆடவர்க்குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் (குறு: 135,பாலை
h− பாடிய பெருங்கடுங்கோ) எனப் பல விடயங்கள் பேசப்படுகின்றன. இன்னும் நுண்ணிதாகப் பார்க்கும் போது மேலும் பல விடயங்கள் வெளிப்பட வாய்ப்புண்டு .
எனவே ஒளவையாரின் பாடல்கள் பற்றிய இந்த ஆய்வு
பெண்பாற்புலவரின் சிந்தனைமுறையை அறிவதற்கான வாய்ப்பாக அமைகின்றது.
19

Page 13
தலித் பெண்ணியம் : ஒரு விவாதத்திற்கான முன்வரைவு
9. Dnt frj6iv (1)
பெண்ணியங்களில் பலவகைகள் என்பது தவிர்க முடியாதது. இவற்றில் "உண்மையான" பெண்ணியத்தைத் தேடுவதென்பது கேலிக்குரியது
சந்தால் மொஃபே
மதத்திலிருந்து பிரிந்து சுயேச்சையாக அரசியல் செயற்படத் தொடங்கியதென்பது பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்புதான். எனவே இதற்குப் பிந்திய அரசியலை நாம் நவீன அரசியல் எனலாம். மார்க்சியம், முதலாளியம், தேசியம், பாசிசம் . முதலான எதிரெதிரான அரசியற்போக்குகளை எல்லாம் நவீன அரசியல் என்கிற ஒரே வகைப்பாட்டிற்குள் அடக்கி விடலாம். அப்படி அடக்குவதற்குக் காரணமாய் இருக்கக்கூடிய நவீனத்துவ அரசியல் கூறுகளாவன :
(அ) எதார்த்த்திலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் ஒரு குறிப்பான அடித்தளத்தை (Foundation) ஆதார மாகக் கொண்டு பகுப்பாய்வு செய்து இதனடிப் படையில் அவற்றை எதிர்கொள்ளுதல். எடுத்துக் காட்டாக உற்பத்திமுறை/ வர்க்கப் பகுப்பாய்வு என்கிற அடிப்படையில் மார்க்சியம் எல்லாப் பிரச்சினைகளையும் அணுகும். (ஆ) சாராம்சமான ஒரு அடையாளத்தின் (Essential iden
tity )அடிப்படையில் தனக்குரிய மக்கள்திரளை அவ்வரசியல் கட்டமைக்கும். எடுத்துக்காட்டாக நாசிசம் தனக்குரிய மக்கள்திரளை"ஆரியன் என்கிற சாராம்ச அடையாளத்துடன் தனது எதிரியையும்
நன்றி இருன்வெளி, மே 15.05.1999

அது வரையறுத்தது.'வர்க்கம்', 'ஆண்மை" பெண்மை என்பன இதர சில சாராம்ச அடையாளங்கள். சாராம்ச அடையாளம் என்பது மாற்றிக் கொள்ள கொள்ளத்தக்கதல்ல.ஒருவரது எல்லாப் பண்புகளிலும் நடவடிக்கைகளிலும் அது வெளிப்படும்.
இன்று இந்த சாராம்ச அடையாளம் என்கிற கருத்தாக்கம் நடைமுறையில் நெருக்கடி க்குள் ளாகியுள் ளது பின் அமைப்பியல், பின்நவீனத்துவமும் முதலிய சிந்தனைகள் ‘சாரம்சம்' என்பதைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. ஒற்றை ஒருமித்த அடையாளத்துடன் நாம் வாழ்வதில்லை. பல்வேறு அடையாளங்கள் ஒன்றோடொன்று ஊடுபாவும் வலைப் பின்னலாகவே நாம் அமைகிறோம் 'தமிழராக இருக்கும் ஒருவரே ஒரு குறிப்பிட்ட சாதிக்காரராகவும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தவராகவும் (முதலாளி, தொழிலாளி, விவசாயி அதிகாரி, எடுபிடி ..) ஒரு குறிப்பிட்ட பாலியல் அடையாளம் (அலி, பெண் ஆண்) உடையவராகவும் இருக்கிறார். இவை அனைத்தும் ஒருவருக்குள்ளாகவே ஊடுபாவுகின்றன என்பதாலேயே ஒன்றோடொன்று ஒத்திசைந்துள்ளன எனச் சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றை யொன்று கவிழ்க்கக் கூடியதாகவும் உள்ளன. தொழிலாளியாக இருக்கும் ஒருவரே உயர்சாதிக்காரராகவும் இருக்கும் போது தொழிலாளியின் சாரம்ச முற்போக்குத் தன்மை ஆட்டம் காண்கிறது. இவ்வாறு வித்தியாசமான பல்வேறு தன்னிலைக் கூறுகளால் கட்டமைக்கப்பட்டவராக சமூக உறுப்பினர்
உருவாகிறார்.
இந்தப்புரிதல் இன்று மரபுவழிப்பட்ட அடையாள அரசியலில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது சாராம்ச அடையாளங்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட அரசியல் சமூகங்களின் பிடிக்குள் அகப்படாமல் துருத்திக்கொண்டு வெளியே நிற்கும் எச்சசொச்சங்கள், மிச்சம் மீதிகள் (Remainders) தங்கள் குரலை
இன்று மேலெழுப்பத் தொடங்கியுள்ளனர். தங்களுக்கான
2

Page 14
அரசியலை இன்று உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். பெண்ணிய அரசியலில் இது எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இனி பார்ப்போம்.
ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என எழுந்த முதலாளியப் பெண்ணியமாகட்டும். குடும்பம் உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியமாகட்டும், தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப் பிடித்த தீவிரப்பெண்ணியமாகட்டும் (Radical Feminism).9a06) 9/60607 gig, in "G.L. 1600i" 61667 Lig, fibes, ஒரு சாராம்சமான அடையாளத்தை ஏற்றுக்கொண்டன. 2-4 - sibéjn.60) sp - 9/ L}_5g5617 LDfT 5ë (Biological foundation) (6).J.TGö07G) பெண்ணுறுப்புக் களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளையும் ஒன்றெனக் கொண்டன. பெண் எனக் கண்டன, ஒட்டுமொத்தமான பெண்களின் விடுதலையை இவை பேசின.
பெண்களனைவரையும் ஒன்றெனக் காணும் உடற்கூறு அடித்தளவாதத்திற்கெதிரான பெண்ணியக் குரல்கள் இன்று இரு திசைகளிலிருந்து மெலெழும்புகின்றன அவை,
(அ) வெள்ளை இனப்பெண்களிலிருந்து தங்களை
வேறுபடுத்திக் கொண்டு முற்றிலும் புதிய நோக்குடன் ஆண்,பெண், உறவுகளை அணுகிய கறுப்பினப் பெண்களின் எழுச்சி. (乌) ஓரினப் பெண்ணுறவாளர்கள் (Lesbians) LDfbn)|to
பால் கடந்த மனித உயிரிகளின் (Transexuals) இருப்பிற்கு இடளிக்க வேண்டும் என எழுந்த குரல்கள்.
ஏங்கலா டேவிஸ், குளோரியா யோசப், லிண்டா நிக்கல்சன், சந்தால் மொஃபே முதலியோர் இப்படிக் குரெலழுப்பு கிறவர்களில் சிலர்.
22

'பெண்" என்றால் என்ன? 'பெண்" என்கிற சொல்லின் பொருளென்ன? எந்த ஒரு சொல்லுக்கும் பொருள் என்பது ஒரு தனித்துவமான பண்பைப் பிரித்து வரையறுத்துக் காட்டுவதல்ல. விட்கென்ஸ்ட் டெய்ன் சொல்வது போல வித்தியாசமான பல்வேறு மொழி விளையாட்டுக்களில் பங்குபெறுவதனூடாகவே ஒரு சொல்லின் பொருளை நாம் உணர்ந்து கொள்கிறோம். "சொல்" என்பது ஒரு தனித்து வமான பொருளுடன் தீர்மானகரமான உறவைக் கொண்டு ள்ளது என்பதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாக அது விரிவு பெறுகிறது என்பதே சரியாகும்.
"விளையாட்டு" என்கிற சொல்லை எடுத்துக் கொள்வார் விட்கென்ஸ்ட்டெய்ன.பல விளையாட்டுக்களை நாம் அறிவோம் சீட்டு விளையாட்டுக்கள் பலகை விளையாட்டுக்கள் (செஸ் கேரம் ...) பந்து விளையாட்டுகள் . இப்படி இவை எல்லாவற்றுக்கிடையேயான பொதுமைகள் (Commonalities) என்பதைக் காட்டிலும் ஒப்புமைகள் (Similarities) உறவுகள், குறுக்கீடுகள் ஆகியவற்றின் மூலமாகவே 'விளையாட்டு’ என்கிற சொல் லின் பொருள் நம் மிடம் உருவாகிறது . "விட்கென்ஸ்ட்டெய்ன் விளையாட்டு பற்றிச் சொன்னது பெண்ணுக்கும் பொருந்தும்" என்கிறார் லிண்டா நிக்கல்சன். பெண்ணை ஒரு குறிப்பான பண்புக்குரியவளாகக் காட்டுவதைக் காட்டிலும் சிக்கலான பல பண்புகளின் வலைப்பின்னலாகப் பார்ப்பதே சரியாக இருக்கும் கருப்பை அல்லது பெண்குறி தான் ஒரு பெண்ணின் சாராம்சம் என்றால் இவை இல்லாமலும் பெண்களாய் இருப்பவர்களை, உணர்பவர்களை என்ன சொல்வது என்கிற கேள்வியை எழுப்புகிறார் லிண்டா. உடற்கூறு அடித்தளவாதத்தின் அடிப்படையில் பெண்ணு றுப்புகள் உள்ளவர்களையெல்லாம் ஒரே மாதிரியாகப் பெண்கள் எனப் பார்த்து அவர்கள் அனைவரின் அனுபவங் களையும் பொதுமைப்படுத்த முடியாது. ஒரு கறுப்புப் பெண்ணின் அனுபவமும் வெள்ளைப் பெண் ணின் அனுபவமும் ஒன்றாய் இருக்கமுடியுமா?
23

Page 15
அப்படியானால் பொதுமைக்கூறுகளோடு வித்தியாசங்களும் உண்டு எனப்பார்க்கலாமா? அப்படிப்பார்ப்பதென்பது பின் ஏதோவொரு வடிவில் உடற்கூற்று அடிப்படையிலான பொதுமைகளைப் பிரதானப் படுத்தி வித்தியாசங்களைப் புறக்கணிப்பதில் தான் முடியுமென்கிறார் லிண்டா.
பெண்ணின் மீதான் ஒடுக்குமுறை + இனஅடிப்படையிலான ஒடுக்குமுறை = கறுப்புப் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை என்பது போன்ற ஆய்வுகளை 'கூட்டல் கழித்தல் பகுப்பாய்வு' எனக் கேலி செய்யும் எலிசபெத் ஸ்பெல்மான், "ஒரே மாதிரியான- பாலியல் ஒடுக்குமுறையானாலும் அதை எதிர் கொள்ளும் சூழல் என்பது ஒரு வெள்ளைப்பெண்ணுக்கும் கறுப்புப்பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இல்லாததை இத்தகைய பகுப்பாய்வுகள் கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை. எனவே கறுப்புபெண்ணின் அனுபவங்கள் இத்தகைய கூட்டல் கழித்தல் பகுப்பாய்வுகள் மூலம் சரியாக வெளிக்கொணரப்படுவதில்லை" என்கிறார். கறுப்புப் பெண்ணின் மீதான மொத்த ஒடுக்குமுறை பெண் எனும் நிலையான ஒடுக் குமுறை = இன அடிப் படையிலான ஒடுக் குமுறை எண் றெல் லாம் கணக்குப்போடுவது அபத்தம். கறுப்பு அடையாளமும் பெண் எனும் அடையாளமும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது, ஏதொன்றையும் தனியாக பார்க்க முடியாது எனவே வெள்ளைப் பெண்ணுக்கும் கறுப்பு பெண்ணுக்குமான பொதுமைக் கூறுகளைக் காட்டிலும் வித்தியாசங்களே முக்கியம் இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
கறுப்புப்பெண்ணின் பிரச்சனைகள் தனித்துவமானவை என்கிற கருத்தை சோஜர்னர் ட்ரூத் முதலானவர்கள் சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சுட்டிக் காட்டியுள்ளனர். 1851ல் செனகாவில் நடந்த 'பெண்ணுரிமை மாநாட்டில்
அவர் இதனை வலியுறுத்தினார்.கருப்புப்பெண்கள் பொதுவான பெண்ணிய இயக்கங்களிலிருந்து சற்றே விலகி நிற்கும் போக்கு இந்த நூற்றாண்டில் உறுதியாகி கருப்புப்பெண்ணியம் என்கிற
24

தனித்துவமான சிந்தனைப் போக்கு உருவாவதற்குக் காரணமாகியுள்ளது. கறுப்புப் பெண்ணியத்தின் அவசியம் குறித்து அய்டா வெல்ஸ் , ஆங்கெலா டேவிஸ் , பாட் ஆர்ம்ஸ்ரோங் குளோரியா யோசப் முதலானோர் முன்வைக்கும் கருத்துக்களை இப்பகுதியில் தொகுத்துக்கொள்ளுவோம். தோழர்கள் இப்பகுதியைப் படி க்கும் போது இந்தச் சிந்தனைகள் நமது சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் எந்தெந்த அம்சங்களில் பொருந்தாது என்பதைக் கூடவே சிந்தித்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன் , கறுப்புப் பெண்ணியாரின் நியாயங்கள் மார்க்சியப் பெண் ணியம் பாலியலுக்குரிய முக்கியத்துவத்தை அளிப்பதில்லை (Sex blind) எனத் தீவிரப் பெண்ணியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே இனப்பிரச்சனையில் குருட்டுத் தனமாய் (Race blind)இருக்கிறார்கள். ஆணாதிக்கச் சமீகத்தில் பெண்கள் ஆற்றல் இழந்தவர்களாய் இருப்பது உண்மை. ஆனால் எல்லாப் பெண்களும் சம அளவில் ஆற்றல் இழந்தவர்களாக இல்லை. அடிமைமுறை என்பது கறுப்பர்கள் மத்தியிலான ஆண் - பெண் உறவுகளில் பல வித்தியாசங்களுக்குகுக்காரணமாகியுள்ளது. கறுப்பர்களுக்கு ள்ளான ஆண்- பெண் உறவுகளில் அது ஒருமுரணான பாத்திரத்தை வகிக்கிறது. கறுப்பர்களுக்குள் ஒப்பீட்டளவில் ஆண்-பெண் சமத்துவத்திற்கு அடிமை முறை காரணமாகி யுள்ளது. வயல்களிலும் பண்ணை இல்லங்களிலும் கறுப்பு ஆண்-பெண் இருபாலார்மீதும் மேற்கொள்ளப்படும் சமமான மனிதத் தன்மையற்ற கொடுங்கோன்மைகள் (பெண்கள் மீதான பாலியல் வன்முறை, ஆண்களைக் கொல்லுதல், ஆண்மை நீக்கம் செய்தல். முதலியன) இத்தகைய 'முரண் சமனி (ironic equaliser)யாகச் செயல்படுகின்றன. ஒரே மாதிரியான கொடுங்கோண்மை என்பது ஓரளவு கறுப்புப் பெண்ணின் விடுதலைக்குக் காரணமாகியுள்ளது.
டபிள்யூ.ஈ.பி. துரபோய்ஸ்: “கறுப்புப்பெண்ணின் விடுதலை அவர் மீது கொடுங்கோன்மையாய்த் திணிக்கப்படுகிறது."
25

Page 16
ஆங்கெலா டேவிஸ்: "அடிமையாயச் செயற்படுவதற்கு முதலில் அவரது பெண் என்னும் அடையாளம் அழிகக்ப்படுகிறது" எனவே வெள்ளை இனத்தவர் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் கருப்பர்கள் மத்தியிலுள்ள ஆண்-பெண் உறவும் ஒரே மாதிரியாக இல்லை என்பதால் கருப்பர்கள் மத்தியில் ஆண்பெண் உறவைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தனித்துவமான பெண் ணியப் பகுப் பாயப் வுகள் தேவையாகின் றன . கருப்புப்பெண் மீதான கருப்பு ஆணின் கொடுங்கோன்மை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. வீட்டுக்குள் பெண்களே வீட்டு வேலைகளைச் செய்பவர்களாக உள்ளார்கள் என்பது கருப்புச் சமூகத்திற்கும் பொருந்தும் என்றாலும் இந்த அடிப்படையில் வெள்ளை இனக்குடும்ப உறவுகளும் கருப்பின குடும்ப உறவுகளும் ஒரே மாதிரியானவை னெச் சொல்ல முடியாது. கருப்புச் சமூகத்திற்குள் குடும்ப உறவுகள் வெள்ளை இனக்குடும்ப உறவுகள் நெகிழ்ச்சியாயுள்ளன. ஒப்பீட்டளவில் கருப்புப் பெண் குடும்ப உறவுகளிலும் விடுதலை பெற்றவளாக
୬ - ମୈtଗt || Tଟit.
இதுபோலவே பாலியல் நோக்கில் பொதுப்புலம்(Public Sphere) தனிப் புலம் (Private sphere) என்கிற பிரிவினையும் கூட
வெள்ளைச்சமூகத்திற்குப் பொருந்துகிற அளவுக்கு கருப்புச் சமூகத்திற்குப் பொருந்துவதில்லை. கருப்புப்பொதுப்புலம் வெள்ளைப்பொதுப் புலத்தின் அளவு ஆண் தன்மையானதாக (masculine) 9 gigola).
எனவே ஒட்டுமொத்தமாக ஆண்களின் ஆதிக்கம், பெண்களின் அடிமைத் னம் எ ன் றெல்லாம் சொல் ல முடியாது. ஒட்டுமொத்தமான ஆண்களின் ஆதிக்கம் இந்தச் சமூகத்திற்குள் இருப்பதாகச் சொல்லமுடியாது. எந்தக் கறுப்பு ஆணும் வெள்ளைப்பெண்ணை ஆதிக்கம் செய்வதில்லை. ஆனால் எல்லா வெள்ளை ஆண்களும் வெள்ளைப் பெண்கள் மீது மட்டுமல்லாது கறுப்புப் பெண்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர். தவிரவும் இன அடிப்படையில்
26

வெள்ளைப் பெண்கள் கறுப்பு ஆண்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உள்ளனர். கறுப்புப் பெண்கள் மீதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே வெள்ளைப் பெண்கள் 'பெண்’ என்கிற அடிப்படையில் ஒடுக்கப்படுவடராக உள்ள போதே இனம் ' என் கிற அடிப் படையில் ஒடுங்குபவராகவும் உள்ளனர்.
எனவே இச்சமூகத்தை வெறும் 'ஆணாதிக்கச் சமூகம்’ எனச் சொல்வதைக் காட்டிலும் "வெள்ளை ஆணாதிக்கச் சமூகம்’ ( White male patriarchy) 6T 60T di G (g II G) 61 (5 g (GL II (b55 Lib. ஆணாதிக் கச் சமூகத்தின் அடிப் படையாக உள் ளது . ஆண்களுக்கிடையேயான திண்ம ஒற்றுமை (Solidarity). ஒரு கலப்பினச் சமூகத்தில் அதையும் கூட நாம் கட்டுடைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்களுக்குள்ளே திண்ம ஒற்றுமை நிலவுவதாகச் சொல்ல முடியாது. ஒரு வெள்ளை ஆணுக்கும் கறுப் 11 ஆணுக்குமிடையேயான திண்மலுற்றுமையைக் காட்டிலும் ஒரு வெள்ளை ஆணுக்கும் வெள்ளைப் பெண்ணுக்குமிடையேயான ஒற்றுமை கூடுதலாக உள்ளது. அது போலவே ஒரு வெள்ளைப் பெண்ணுக்கு மிடையேயான ஒற்றுமை கூடுதலாக உள்ளது. அது போலவே ஒரு வெள்ளைப் பெண்ணுக்கும் கறுப்புப்பெண்ணுக்குமான திண்ம ஒற்றுமையைக் காட்டிலும் இன அடிப்படையிலான ஒற்றுமுமையே இரு பக்கமும் வன்மையாகச் செயல்படுகிறது.
கறுப்புப்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவள் பெண்ணாக கறுப் பதனால் படும் துன் பங் களை வரிட அவள் கறுப்புப்பெண்ணாக இருப்பதனால் படும் துயரங்களும் அனுபவிக்கும் கொடுமைகளுமே அதிகம். எனவே கறுப்புப் பெண்ணைப் பொறுத்தமட்டில் 'பெண்’ என்பது அவளது முழு அடையாளமாக இருக்கமுடியாது.
வெள்ளைப்பெண்ணைப் பொறுத்தமட்டில் அவள் ஒடுக்கும் நிலையிலிருந்து இருபால் கறுப்பரையும் ஒடுக்குபவராகவும்
27

Page 17
உள்ளதால் அவளது உடனடி ஆர்வம் இன ஆதிக்கத்தைத்தக்க வைப்பதாகவே உள்ளது. எனவே எப்படிப் பெண்கள் தங்கள் விடுதலைக்காக ஆண்களை நம்பிருக்க முடியாதோ அது போலவே கறுப்புப் பெண்கள் தமது விடுதலைக்காக
வெள்ளைப் பெண்களை நம்பிருக்க முடியாது.
பாட் ஆம்ஸ்ரோங்:
"அமெரிக் காவரிலுள்ள வெள்ளைப் பெண்கள் இனவெறியால் பயன்பெறுபவர்களாக உள்ளதால் அவர்களது வெள்ளைத் தன்மை பெண் எனும் நிலையைக் கட்டுப் படுத்துகிறது. வெள்ளைப் பெண்ணியவாதிகள் தங்களின் வெள்ளைத்தன்மையின் இந்தக் கட்டுப்படுத்தும் நிலையை உணர்ந்து கொள்ளவேண்டும்" என்று கூறுகிறார்
குளோரியா ஜோசப்: "எனவே வெள்ளைப் பெண்ணியர்கள் மீது கீழ்க் கண்ட கட்டுப்பாடுகள் உள்ளன.
(7) இனவெறி அமைப்பின் கருவிகளாகவும்
பயன்பெறுபவர்களாகவும் தாங்கள் உள்ளதை அவர்கள் அறிந்தேற்க வேண்டும். (2) உழைக்கும் மகளிரில் உள்ள கருப்புப்
பெண்களின் தனித்துவமான பிரச்சனை களுக்காகப் போராடவேண்டும். (3) மூலதனத்திற்கும் ஆணாதிக்கச் சமுகத்திற்குமான
கூட்டு உறவில் வெள்ளை ஆண்களின் பாத்திரத்ததிற்கும் கறுப் ஆண்களின் பாத்திரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்தறிதல் வேண்டும்.
கறுப்புப்பெண்ணியர்களின் கருத்துக்கள் இங்கே அவர்களின் மொழியிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. இவை எந்த அளவிற்கு தமது சூழலுக்குப் பொருத்தமுடையனவாக உள்ளன என்பதை இனிப்பார்ப்போம்.
28

தலித் பெண்ணியத்தைக் கட்டமைக்கும் முயற்சியிலுள்ள நாம் உலகளவில் இதற்குரிய முன்மாதிரிகளைத் தேடுவதும், பொருத்தமான அம்சங்களை நமது சூழலுக்குரிய முறையில் வளர்த்தெடுப்பதும் தவிர்க்க இயலாதது. ஏதோ ஒரு அடிப்படையில் ஒன்றோடொன்று நெருங்க இயலாத கூறுகளாகப் பிரிவுண்ட ஒரு சமூகத்தில் பெண்ணியர்கள் மத்தியில் இப்பிரச்சினை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது எனத் தேடும் போது அமெரிக்க அடிமைச் சூழல் தென்னாபிரிக்க இன ஒதுக்கல் சூழல் ஆகியன நமது கவனத்தில் படுவது தவிர்க இயலாதது. அமெரிக்க அடிமைச் சூழலில்வெள்ளைப் பெண்களுக்கும் கறுப்புப்பெண்களுக்கு மிடையேயான வித்தியாசம் என்பது இந்திய-தீண்டாமைச் சூழலில் உயர்சாதிப் பெண்களுக்கும் தலித் பெண்களுக்கு மிடையிலான வித்தியாசத்தோடு பொருந்திப் பார்க்கத்தக்கதாக உள்ளது. ஒவ்வொன்றாய்ட் பார்ப்போம்.
இங்கும்கூட ஒட்டுமொத்தமாய் ஆண்கள் அனைவருக்குமிடையே திண்ம ஒற்றுமை இருப்பதாகச் சொல்லமுடியாது. உயர்சாதி ஆண்களுக்கும் தலித் ஆண்களுக்கு மிடையேயான ஒற்றுமையைக் காட் டி லும் உயர் சாதி ஆண் களுக்கும் உயர் சாதிப் பெண்களுக்குமிடையேயான ஒற்றுமையே அதிகம். தலித் பெண் களுக்கும் மற்ற பெண் களுக்குமிடையேயான ஒற்றுமையைக் காட்டிலும் தலித்பெண்களுக்கும் தலித் ஆண் களுக்குமிடையேயான ஒற்றுமையே அதிகம் . உயர்சாதிப்பெண் தீண்டாமையின் மூலம் தலித் பெண்கள் மீது மட்டுமல்ல தலித் ஆண்கள் மீதும் அதிகாரம்செலுத்தக் கூடியவளாகவும் அதன் மூலம் பயன் பெறுபவளாகவுமே உள்ளாள். கிராமப்புறங்களில் இது வெளிப்படையாகவே தெரியும். எனவே தன் மீதான இழிவை ஒழிப்பதற்கு ஒரு தலித் பெண் மற்ற உயர்சாதிப் பெண்களை நம்பியிருக்க
(Lf) L | - | 1 | Tiġbil .
ஒரு தலித்பெண்ணுக்கு 'பெண்’ என்கிற நிலையைக் காட்டிலும்
29

Page 18
‘தலித் பெண் ' என்கிற நிலையிலேயே அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. ஒரு தலித் பெண்ணின் பிரச்சனைகள் அவள் பெண்ணாக இருப்பதாலேயே ஏற்படுகின்றன. பாமாவின் கதைப் பெண்கள் படும்பாடுகள் இதைத் தெளிவாக்கும்.
மேற்சாதி சமூகங்களுக்குள் நிலவும் ஆண்-பெண் உறவையும் தலித் சமூகங்களிற்குள் நிலவும் ஆண்-பெண் உறவையும் நாம் ஒரே பகுப் பாய்வின் மூலம் விளக்கிவிட முடியாது. குடும்பத்திற்குள் தலித்பெண் கூடுதலாக வேலை செய்கிறாள் எனினும் தலித் குடும்ப உறவுகளுக்கும் மேற்சாதி குடும்ப உறவுகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒப்பீட்டளவில் தலித்பெண் கூடுதல் சுதந்திரம் உடையவளாக இருக்கிறாள். விதவை நிலை (வைதவயம்) என்பது தலித் சமூகத்தில் இல்லை. கற்பு’ என்னும் கருத் தாக்கத்திலும் கூட இங்கே வித்தியாசமுள்ளது. கணவனே கண்கண்டதெய்வம் என்பது தலித் சமூகத்தில் ஏற்புடையதல்ல. அறுத்துக்கட்டுதல் இங்கே சமூகத் தடைக்குரிய நடைமுறை அல்ல.
தலித் பொதுப் புலம் ஆண் சார்ப்ற்றது எனச் சொல்ல முடியாதெனினும் இதிலும் மேற்சாதிப் பொதுப் புலத்தினளவு ஆண்சார்புத்தன்மை இல்லை எனலாம்.
சுருக்கமாகச் சொல்வதெனில் தலித் பெண்களின் பிரச்சினைகள் பொதுவான பெண்களின் பிரச்சனைகளிலிருந்து வித்தியாசப் படுகின்றன. தனித்துவமுடையனவாய் உள்ளன. நம்முடையது ஒரு வெறும் ஆணாதிக்கச்சமூகம் அல்ல. இது ஒரு உயர்சாதி ஆண்களின் சமூகம். தலித் பெண்ணியம் சாதீயத்தையும் பார்ப்பனியத்தையும் ஆணாதிக்கத்திற்கிணையான இலக்குகளாகக் கொள்வது தவிர்க்க இயலாதது.
இந்தியச்சூழலில் பெண்ணியச் சிந்தனைகளில் இருபோக்கு களைக் சுட்டிக்காட்ட முடியும். உடன்கட்டை, குழந்தைத்
30

திருமணம் ஆகியவற்றை ஒழித்தல், பெண் கல்விக்குரிய தடைகளை நீக்குதல் என்கிற அளவில் இங்கே பெண்ணியச் சிந்தனைகள் தலையெடுத்தன. இவை அனைத்தும் அன்றைய முக்கிய தேவைகளாகவும் உடனடிச் செயற்பாடுகளாகவு மிருந்தன என்பதில் அய்யமில்லை. எனினும் இவற்றை முன்னிலைப்படுத்திப் போராடிய முதற்கட்ட முன்னோடிகள் யாரும் சாதி ஆதிக்கம், பார்ப்பனியம், இந்(து)திய மரபு ஆகியவற்றைக் கேள் வரிக் குள் ளா கியவர் களில் லை , ஆங்கிலேயரது வருகையை ஒட்டி இந்தியச் சமூகங்களில் ஏற்பட்ட நவீன மாற்றங்களுக்கிணையாக இந்திய மரபைப் புதுப்பிக்க முயன்றவர்கள் இவர்கள். நகர்மயம் ஆங்கிலக்கல்வி, மத்தியதரவர்க்கம் முதலியவற்றின் வளர்ச்சியை ஒட்டி அதற்கு ஒத்திசையாத அம்சங்களை இந்துமரபிலிருந்து கவ்வி எறிய முயன்றவர்கள் இவர்கள். குழந்தைகளை நவீன உலகத்திற்குரிய முறையில் வளர்க்கத் தெரிந்த வரும் நண்பர் களை உபசரிக்கக்கூடிய பழமையை உதறிய ஆனால் இந்திய மரபுக்குகந்த நவீன இந்திய மனைவியரை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். வேதம் இந்துமதம் இந்(து)திய மரபு முதலியவற்றை இவர்கள் மேன்மையானதாகக் கண்டனர். கற் குடும்பம் முதலிய நிறுவனங்கள் ஆணாதிக்கத்திற்குத் துணைபோவது பற்றி இவர்கள் எந்தக் கேள்வியையும் எழுப்பத் தயாராக இல்லை. இவர்களது வழியில் வந்தவர்களிலேயே திவிரமான சிந்தனைப் பொறிகளை எழுப்பியவராகிய பாரதி கூட கற்பு என்பதை இரு சாராருக்கும் பொதுவில் வைப்பது என்கிற அளவிற்குத்தான் வந்தாரேயொழிய கற்பு என்பதையே கேள்விக்குள்ளாக்கத் துணியவில்லை.
பெண்ணியச் சிந்தனைகளில் இன்னொரு போக்கிற்குக் காரணமாக இருந்தவர்கள் இந்திய மரபையும், இந்து மதத் தையும் , வேதங் களை யும் , சாதியத் தை யும் , பார்ப்பனியத்தையும் கேள்விக்குள்ளாக்கியவர்கள். பெரியார் (ஈ.வே.ரா), ஜோதிபா பூலே முதலானோர் இந்தத் திசையில் முன்னணியில் இருப்பவர்கள் கற்பு குடும்பம் முதலான
31

Page 19
கருத்தாக்கங்களை முதன் முதலாகக் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பு முதன் முதலில் இவர்களுக்குத்தான் கிட்டியது. பெண்ணியம் குறித்த மிக நவீனமான சிந்தனைகளையெல்லாம் பெரியார் முன் வைத்தார். பெண்கல்விக்கு முதன்மையளித்த பூலே பால் சாராத மொழியில் எழுதுதல் முதலியன வற்றையெல்லாம் அன்றே முயற்சித்தவர். பெண்ணியம் குறித்து அதிகம் எழுதாத வராயினும் டாக் கடர் அம்பேத்கர் இந்துமதத்திற்கு மாற்றாக இங்கே உயர்த்திப் பிடித்த புத்தமதம் இந்துமதத்தைக்காட்டிலும் பெண்களுக்கு சம வாய்புகளை அளித்ததாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மரபுக்குரிய பெண்ணியம் என்கிற கருத்தை இன்று இந்துத்துவத்தை உயர்த்திப்பிடிப்போர் முன் வைக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பெண்கள் பிரிவாகிய "மகிள மோர்ச்சா'வைச் சேர்ந்த மிருதுளா சின்கா சொல்வது
"இந்தியப் பாரம்பரியம் முன்வைத்து ஏற்றுக்கொண்ட பாலியல் சமத்துவத்தை மீட்டுத்தருவதென பாரதிய ஜனதாக் கட்சி சபதேமற்கிறது. மேற்கில் வளர்ந்து வரும் பெண்விடுதலை இயக்கங்களிலிருந்து நாங்கள் கோட்பாட்டளவில் வேறுபடு கின்றோம். சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒருவகையான மறுசீரமைப்பை நாங்கள் போருகிறோம். மதிப்பீடுகளில் அடிப்படை மாற் றங்கள் தேவையில்லை. வட்டுக்குள்ளும் சமூகத்திலும் இந்தியப் பெண்களுக்கு எப்பொழுதும் ஒரு கவுரவமான இடம் இருந்து வந்திருக்கிறது. இதனை மறு உறுதிசெய்து நிறுவினால் போதுமானது"
ேைநராபியில் நடைபெற்ற ஐ.நா பெண்கள் மாநாடொன்றில் பெண்களின் வீட்டுவேலைக்கு ஊதியம் கணக்கிடப்பட வேண்டுமெனவும் லெஸ்பியனிசம் எனப்படும் ஓரினச்சேர்க்கை (ஒரு பால் ) உறவுக்குச் சட்ட ஏற்பு வழங்கப்பட வேண்டுமெனவும் வாதிடப் பட்டது. இது குறித்த
32

'மகிளமோர்ச்சா'வின் கருத்து
"இந்தியச் சமூக ஒழுங் கிற்கும் கலாசாரப் பாரம் பாரியத்திற்கும் இவை எதிரானவை . வீட்டுப்பணிக்குக் கூலி நிர்ணயிப்பதென்பது இந்தியத் தாய்மையை இழிவுசெய்வது "லெஸ்பினிசத்திற்கு சட்டஏற்பு என்பது ஆபாசமான கோரிக்கை. இந்தியச் சூழலுக்கு ஒவ்வாதது"
இந்திய மரபுக்குரிய பெண்ணியம் என்கிற கருத்தை பாரதீய ஜனதா வெளிப்படையாக முன்வைக்கிறதென்றால் இன்னும் பலர் இதே சிந்தனையை மறைமுகமாக வைக்கின்றனர். சாதி ஆதிக்கம், பார்ப்பனியம், இந்துத்துவம் ஆகியவற்றைக் கேள்விக் குள் ளாக் காமல் பெண் வரிடுதலை பேச நினைக்கும் எல்லோரையும் இந்த வரிசையில் நிறுத்திவிட முடியும். இவர்களுக்குப் பெண்விடுதலை என்றால் அழகிப் போட்டியை எதிர்ப்பது, ஆபாசச் சுவெராட்டிகளைக் கிழிப்பது, வீட்டுப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கெதிராகப் ஆர்ப்பாட்டம் செய்வது, சாதி வாரி ஒதுக்கீடு இல்லாமல் பெண்களுக்கு 33 சதம் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுவது என்பவைதான். இவர்கள் மேற்கொள்ளும் ஆக முற்போக்கான செயற்பாடுகள் காவல்நிலைய பாலியல் வன்முறைகளைக் கண்டித்து இயக்கம் நடத்துவதுதான். குடும்பம், கற்பு சாதி, இந்(து)திய மரபு முதலானவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதை இவர்களால் சகிக்க முடியாது. பெரியாரை அப்பழுக்கற்றவராகக்காட்ட முயலும் ஒரு சிலரும் கூட அவரது பெண்ணியச் சிந்தனைகளை உயர்த்திப்பிடிப்பதில்லை. அவரது எதிர் கலாச்சாரச் சிந்தனைகளை மனதார ஏற்றுக்கொள்வதில்லை. அலிகள் , பால் கடந்த உயிரினர், ஒரு பால் உறவினர் (ஓரினச்சேர்க்கை) பற்றிப் பேசுவதை இவர்களால் சகித்துக் கொள்ளவே
(LDL 9 ill fig1.
தலித் பெண்ணியம் இத்தகைய இந்துத்துவப் பெண்ணிய
33

Page 20
த்திலிருந்து விலகி நிற்கும் என்பதைச் சொல்லவேண்டிய தில்லை. அயோத்திதாசரும் அம்பேத்தகாரும் முயற்சித்ததைப் போலத் தலித் பெண்ணியமும் இந்திய மரபு என்பதை வைதீக வேர்களிலிருந்து அல்லாமல்பவுத்த, சைன, அவைதீக மரபில் தேட முயலும். அம்பேதகர், பெரியார், பூலே வழியில் நின்று சாதீயம், பார்ப்பணியம், ஆணாதிக்கம் ஆகியவற்றை எதிர்க்கும். ஆணை அது தன் எதிரியாக நிறுத்தாமல் உயர் சாதி ஆணாதிக்கச் சமூகத்தை அது தனது இலக்காகக் கொள்ளும்.
இப்போது நம்முன் இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதல் கேள்வி ஒரு தலித் ஆண் தலித் பெண்ணைக் கொடுமைப் படுத் துவதே இல் லையா ? ஆதரிக் கம் செய்வதில்லையா? நீங்கள் சொல்லும் நிலைப்பாடு தலித் ஆண்களுக்கு தலித் பெண்களுக்கெதிரான பாதுகாப்பை வழங்குவதாகாதா?
தலித் சமூகம் ஒரு படித்தானது என நாம் சொல்லவில்லை. அதற்குள்ளும் பல்வேறு தனித் துவங்கள் இருக்கவே செய்கின்றன. தலித் பெண் களின் பிரச்சனைகளும் அனுபவங்களும் நிச்சயமாக தலித் ஆண்களின் பிரச்சனை களிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் வித்தியாசப்பட்டு உள்ளதால்தான் ‘தலித்’ பெண்ணியம் என்கிற கருத்தாக்கத்தை முன் வைக்கிறோம். இல்லையேல் தலித்தியம்' என்பதோடு நிறுத்திக்கொண்டிருப்போம். தலித் சமூகத்திற்குள் தலித் பெண்களின் மீதான தலித் ஆணின் ஒடுக்குமுறையை தலித் பெண்ணியம் நிச்சயமாக எதிர்த்து நிற்கும் ‘தலித்’ என்னும் உரிமையைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண் , தலித் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அது ஏற்றுக் கொள்ளாது.கறுப்புப்பெண்ணிய அனுபவங்களிலிருந்து இங்கே ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு (1991) கிளாரென்ஸ் தாமஸ் என்ற கறுப்பர் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்ட போது அனிதாஹில் என்னும் கறுப்புப் பெண் அவர்மீது பாலியல் வன்முறை
34

தொடர்பான குற்றச்சாட்டை வைத்த செய்தி உலகின் கவனத்தை ஈர்த்தது. ஒரு கட்டத்தில் தாமஸ் “ஒரு கறுப்பர் உச்சநீதிமன்ற நீதிபதியானதைத் தடுக்க மேற்கொள்ளப்படம் சதி இது" என்றார். சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையில் வெள்ளையர் கள் கறுப் பர் களைக் கொல் வதற்குப் பயன்படுத்தப்படும் "lynching" என்ற சொல்லைப் பயன் படுத்தினார். அனிதாவுக்கு ஆதரவாகப் போராடிய கருப்புப் பெண்ணியர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர்.lynching" எனச் சொல்வதன் மூலம் அனிதா ஒரு கறுப்புப்பெண் என்ற உண்மை மறைக்கப்படுகிறது. அவருக்குக் கருப் அடையாளம் மறுக்கப்படுகிறது. ஒரு கறுப்புப் பெண்ணின் இருப்பு அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்கள் முழங்கினர். ‘இன ஒதுக்கல்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு கறுப்பு ஆண் கறுப்புப் பெண்ணுக்கு எதிரான சலுகையை கோரமுடியாது. தீண்ாடமை என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி ஒரு தலித் ஆண் தலித் பெண்ணுக்கு எதிரான சலுகையைக் கோரமுடியாது. இனவெறி எதிர்ப்பு அல்லது தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை என்பன கறுப்பு அல்லது தலித்பெண்ணுக்கு எதிராகச் செயல்பட
(LfD) til 1 f f g .
இனி இரண்டாவதுகேள்வி : தலித்பெண்களை இப்படி இதர பெண்களிலிருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கி நிற்கவைத்ல் என்ன நியாயம்? பெண் என்ற சொல்லிற்கு அர்த்தமே இல்லையா? பொதுவான மாதிரிகள் (Common patterns) நடைமுறையில் சாத்தியமே இல்லையா? பொதுவான செயற்பாடுகள் தேவையே இல்லையா? இத்தகைய கேள்விகள் வழக்கமாக தலித்தியம் பின்நவீனத்துவம் முதலியவற்றிற்கெதிராக வைக்கப்படக்கூடிய கேள்விகள்தான். இப்படியெல்லாம் முடிவுக்கு வருவதற்கு எந்த நியாயமும் இல்லை. லிண்டா நிக்கல்சன் சொல்வார்.
"பெண் என்பதற்கு தெளிவான ஒற்றை அர்த்தம் கிடையாது எனச் சொல்வது பெண் என்பதற்கு
35

Page 21
அர்த்தமேயில்லை எனச் சொல்வதல்ல"
பொதுவான மாதிரிகள் சாத்தியமில்லை என்பதும் நம் கருத்தல்ல. பொதுவான மாதிரிகளைத் தேட வேண்டாம் எனவும் சொல்லவில்லை. ஆனால் பொதுவான மாதிரி என்பது ஒரு நிரந்தரமான விசயமல்ல. பொதுவான மாதிரிகள் கரைந்து மறையும் புள்ளிகளும் உண்டு. இந்தப்புள்ளிகள் ஒதுக்கப்பட வேண்டியவையல்ல முக்கியமானவை. 'பெண்' என்பதன் பொருள் பல்வேறு வித்தியாசங்களும் ஒப்புமைகளும் சந்திக்கும் வரைபடமாக உள்ளது எனச் சொல்லும் போது, பொதுமை எண் கிற பெயரில் ஏ தொன் றின் தனத் துவ மும் அழித்தொழிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. சனநாயக பூர்வமான கூட்டிணைவு அரசியலுக்கு இப்போதுதான் சாத்தியமும் ஏற்படுகிறது. "பெண் குறித்த மரபு வழிப்பட்ட புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு புரிதல் அர்த்தம் பற்றிய திமிரான அகல்முறைக்கு மாற்றான ஒரு அணுகல்முறை ஆகியவையே இதன் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகள், பொதுவான கரிசனங்களின் அடிப்படையில் கூட்டிணைவு என்பதைக் கருப்புப் பெண்ணியமோ தலித்பெண்ணியமோ மறுக்கவில்லை. சனநாயகச் சமத்துவ நோக்கிலான நாம்" என்கிற கூட்டு அடையாளத்திற்கு நாம் என்றுமே எதிரிகளல்ல. கறுப்புப் பெண்ணியர்கள் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தலித்பெண்ணியர்களுக்கும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. சுருங்கச் சொல்வதெனில் சாராம்ச அடையாளம் சாத்திய மரில் லை என்பது மட்டுமே தலித் பெண் ணியம் சொல்லவருவது அடையாளமே சாத்தியமில்லை. என்பது அதன் கருத்தல்ல. சந்தால் மொஃபே சொல்வார்.
“என்னைப் பொறுத்தமட்டில் பெண்ணியம் என்பது பெண்களின் சமத்துவத்திற்கான போராட்டமே ஆனால் பொதுவான சாராம்சமும் அடையாளமும் கொண்ட வரையறுக்கத்தக்க ஒரு குழுவின் சமத்துவத்திற்கான போராட்டமாக இதைக் கருதக்கூடாது. மாறாக
36

ஒடுக் கப்படும் வகையினமாகப் பெண் 'ணைக் கட்டமைக்கும் பல்வேறு சாத்தியங்களுக்கும் எதிரான போராட்டமாக அதைக் கருதவேண்டும். எனவே பெண்ணிய நோக்குகளைப் பல்வேறு வித்தியாசமான வழிகளில் கட்டமைக்கலாம் என் கிற உணர்வு நமக்குத் தேவை . எனவே வரித்தியாசமான பல சொல்லாடல்கள் இது தொடர்பாகச் சாத்தியம் - பல பெண்ணியங்கள் என்பது இவ்வாறு தவிர்க்க இயலாததாகிறது. இவற்றில் உண்மையான பெண்ணிய வடிவத்தைத் தேடுவது அபத்தமானது."
தலித் பெண்ணியம் குறித்த சில முன்வரைவுகளை நாம் இப்போது முன்வைக்க முடியும் எனத் தோன்றுகிறது.
தலித் பெண்களின் அனுபவங்கள் தனித்துவமானவை. உயர்சாதி ஆணாதிக்கசசமூகத்தின் வன்கொடுமைக்குப் பலியான வரலாறு அவர்களுடையது. இந்திய வரலாற்றில் அடிமைகளாக விற்கப்பட்ட பெண்கள், விபச்சாரிகளாக்கப்பட்ட பெண்கள் , தேர்க்கால்களில் பலியிடப்பட்ட பெண்கள் என்றெல்லாம் பார்த்தோமானால் இவர்களில் பெரும்பாலான வர்கள் தலித் பெண்கள் என்பது தெரியவரும். இன்றளவும் காவல்நிலையப் பாலியல்வன்முறைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால் அதிலும் தலித் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது புலப்படும்.
தீண்டாமை என்பது ஒரு முரண்சமனியாகவும் செயற்பட்டதன் விளைவாக தலித்பெண்கள் மத்தியில் ஒப்பீட்டளவில இந்துத் துவ, ஆணாதிக்க மதிப்பீடுகள் குறையாகவே வேரூன்றியுள்ளன. குடும்ப உறவுகள் நெகிழ்ச்சியாக உள்ளன. தலித்பெண்களின் சிறப்புமிக்க இந்தத் தனித்தவமான கூறுகளை தலித்பெண்ணியம் உரத்துக்கூவும், உயர்த்திப்பிடிக்கும்.
தலித்பெண்ணியம் தனக்கு அணுக்கமாக வைதீக இந்(து)திய
37

Page 22
மரபை எடுத்துக் கொள்ளாது. பவுத்த சைன அவைதீக மதிப்பீடுகள் பூலே, பெரியார், அம்பேத்கர் என்றொரு பாரம்பரியத்தை வரித்துக் கொள்ளும். இந்த மாபில் நின்று இந்(து)தியச் சமூகத்தை வெறும் ஆணாதிக்கச் சமூகமாகக் காணாமல் உயர்சாதி ஆணாதிக்கச் சமூகமாகக் காணும். சாராம்ச அடையாளம், உயிரியல் அடித்தளம், மொத்தத்துவம் ஆகியவற்றை மறுக்கும் வகையில் பின்நவீனத்துவச் சாய்வுடையதாக தலித்பெண்ணியம் அமைவது தவிர்க்க
இயலாது.
தலித் பெணக்ள் மீதான வன்கொடுமைகளில் அரசின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் தனது இலக்குகளில் ஒன்றாக உயர்சாதி ஆணாதிக்க அரசை தலித் பெண்ணியம் கருதும். பொதுவான கரிசனங்களின் அடிப்படையில் இதர பெண்களுடன் கட்டிணைவிற்கு தலித் பெண்ணியம் எப்போதும் தயாராக இருக்கும். ஆணாதிக்கம் மட்டுமன்றி சாதி ஆதிக்கத்தையும் எதிர்த்து நிற்கும் போதே இந்தக் கூட்டிணைவிற்கான சாத்தியங்கள் உருவாகும். சாதியச் சூழலில் பெண் ணடிமைத் தனத்தை உயர் சாதிப் பெண் கள் விளங்கிக்கொள்ள முனையும்போதே இந்தச் சாத்தியங்கள் நடைமுறையாக மாறும்.
38

குறிப்புகள்
3.
மேற்கோள்களாகத் தொகுக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் பெண்களின் எழுத்துக்களிலிருந்து மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.
சில முக்கிய நூற்கள்: Linda Nicholson. Steven Seidmam (Ed), "SOCIAL POSTMODERNISM Cambridge 1995 Lydia Sargent "THE UNHAPPY MARRIAGE OF MARXISM AND FEMINISM' Pluto 1986 Angela Davis," WOMEN, RACE AND CLASS", WOMEN'S Press, 1986 Judith Buttler, Joan Scott, 'FEMINISTS THEORISE THE PO
LITICAL', Routledge, 1992 அமெரிக்காவின் அடிமை ஒழிப்பு இயக்கம், கறுப்பர்களின் சிவில் உரிமை இயக்கம் ஆகியவற்றிகும் நமது தலித் இயக்கங்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. அடிமை ஒழிப்பு இயக்கத்தில் தொடக்கத்தில் இருந்து கறுப்புப் பெண்களின் பங்கு குறிப்பிடத் தக்கதாக இருந்தது.இந்தவகையில் அடிமை ஒழிப்பு இயக்கத்தில் கறுப்பினப் பெண்களின் பங்கு என்பது அமெரிக்கப் பெண்ணிய இயக்கதிற்கே முன்னோடியாக அமைந்தது. இங்கே அத்தகைய நிலை இல்லை என்பது அதற்குரிய காரணங்களும் சிந்திக்கத்தக்கன. வெள்ளைப்பெண்களின் அரசியலில் இருந்தது கறுப்புப் பெண்கள் விலகி நின்றதற்கு ஒரு எடுத்துக் காட்டு: வெள்ளைப் பெண்கள் வன்புணர்ச்சி எதிர்ப்பு இயக்கம்" (Anti-Rape movement) (bl. : ģgu I (3L FT JA USÍDL'i ju' (G) i 6ð07 3567 ’கறுப்பினப்படு கொலை எதிாப்பு இயக்கத்தை முன்னெடுத்தனர் . கறுப் பர்கள் அனைவரும் வன்புணர்ச்சியாளர்கள் என்கிற புனைவு ஒன்றைக் கட்டமைப்பதற்கு வன்புணாச்சி எதிர்ப்பு இயக்கம் துணைபோனது. அதன்மிலம் கறுப்பர்கள் சட்டத்திற்கு
39

Page 23
40
அப்பாற்பட்ட முறையில் படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்கிற கருத்துக்கும் இது வரித் திட்டது . ஆனால் நடைமுறை என்பது அப்படியில்லை. காலங்காலமாக கறுப்புப்பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதே உண்மை. எனினும் வன்புணர்ச்சிக்காக அமெரிக்க நீதிமன்றங்களில் தண்டிக்கப்ட்ட ஆண்களில் பெரும்பான்மையோர் கறுப்பர்கள். கூட்டுவன்முறை மூலம் கறுப்பர்களைக் கொலைசெய்வதற்கு (Lynching) மறைமுகமாகத் துணைபோன வெள்ளைப்பெண்களின் அரசியலோடு கருப்புப் பெண்கள் இணையாமல் கறுப்பினப்படு கொலை எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை முழுவதும் உயர்சாதி ஆணாதிக்கச் சமூகம என்கிற கருத்தாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கே உயர்சாதி என்பது ஒருபடித்தானதாக இல்லை. உயர்சாதியினரை பார்பபன வேளாள மேல்சாதியினர் எனவும் இதர இடைநிலைச் சாதியினர் எனவும் இரு கூறுகளாகத் தொகுக்கலாம். குடும்ப உறவுகளில் நெகிழ்வு, அறுத்துக்கட்டுதல் முதலான சில் அம்சங்களில் இடைநிலைச் சாதிப் பெண்கள் தலித் பெண்களோடு ஒப்புமை உடையவர்களாக உள்ளனர்.எனினும் தீண்டாமை அவர்களை வித்தியாச ப்படுத்துகிறது.

பாலியலும் தேசீயமும் : தேசீய அரசியலில் "இலட்சியப்" பெணிணின் கட்டமைப்பு
எஸ். ஆனந்தி
ஒருபடித்தான அடையாளத்தை உருவாக்கும் தேசியமானது தேசம் என்கிற வெளிக்குள் உள்ளடக்கப்படும் பிரதேச, இனவேறுபாடுகளை மூர்க்கத்தனமாக அழிக்கிறது. மதச் சிறுபாண்மையினர், தலித்துக்கள் போன்ற விளிம்புகளில் உள்ளவர்களுக்கு முழுக்குடியுரிமையை மறுத்து அவர்களை ஓரங் கட்டுகிறது. வேறுவிதமாகக் கூறுவதென்றால் சில குறிப்பிட்ட தன்னிலைகளை மேன்மைப்படுத்தியும் "மற்றவை" யாக ஒதுக்கப்படும் மாற்றுத் தன்னிலைகளைச் சிறுமைப் படுத்தியும் தேசீயத்தின் "நாம்" வரையறுக்கப்படுகிறது. இத்தகைய வரையறுப்புக்களோடுதான் நவீன தேசம் என்பது ஒரு "கற்பிதம் செய்யப்பட்ட சமூதாயமாக”க் கட்டமைக்கப் படுகிறது. இவ்வாறு ஒரு தேசத்தின் "நாம்” ஜக் கட்டமைப்ப தென்பது ஒருவகை "எல்லை வகுக்கும்” செயல்பாடாகும். தேசீய அடையாளத்தின் அளவுகோல்களாக பெண்மை மற்றும் பால்நிலைகளைக் (Female Sexuality) கட்டமைப்பதின் அடியாக இந்த எல்லை வகுக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேசீய கலாசாதரத்தை உயர்த்திப் பிடிப்பவர்களாகப் பெண்கள் கட்டமைக்கப்படும்போது பெண்களின் பாலியல் உடல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஓரங்கட்டப்படுகிறது. நாஜி ஜெர்மனி முதல் வகை ஒடுக்குமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது “தேசீய ஆண் (குடி) மகனின் "கடமை தவறாத தாய்" போன்ற வகைகளின் கருத்தியல் கட்டமைப்புகள் நிகழ்கின்றன.
நன்றி ; விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும்

Page 24
இத்தகைய இரு கட்டமைப்புகளுமே தூய்மையான இலட்சியப் பெண்கள் என்று கூறப்படுபவர்களின் குணாம்சங்களை துலக்கிக் காட்டுவதோடு இத்தகைய பெண்களைப் போற்றிக் கொண்டாடுகின்றன. இவர்களுக்குப் பெருமித உணர்வையும், பங்கு பெறும் உணர்வையும் ஊட்டி தேசீயவாத தந்தைவழிக் கட்டமைப்புக்கு (Nationalist Patriarchy) இணங்கச் செய்கின்றன. மாற்றுப் பாலியல் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலான பெண்களின் மாற்றுத் தன்னிலைகளுக்கான வாய்ப்புக்களை நீதிக்குப் புறம்பானவை (illegitimate) யாக மாறுகின்றன. இது போன்ற மாற்றுத் தன்னிலைகளைக் கொண்ட தேவதாசிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்றோர் தேசத்தின் துரய்மைக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகின்றனர். இலட்சியப் பெண்களின் "மற்றவர் " களாகக் கட்டமைக்ப்படுகின்றனர். காலனிய கால தமிழகத்தின் (அகில இந்தியத்) தேசீய அரசியலை ஆராய்வதன் மூலம் இப்பிரச்சினைகளை இக் கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
தேசிய அரசியலில் பெண்கள் பிரச்சனை
தமிழ் நாட்டில் தோன்றிய காலன்யத்திற்கெதிரான தேசீய இயக்கத்தின் (ஆண்கள் மயமான) தலைமையின் “பெண்கள் பிரச்சனை’ தலைமையின் பார்வைகளை விளக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸின் இரு முக்கிய தலைவர்களான எஸ் சத்தியமுர்த்தி மற்றும் திரு.வி.க ஆகியோரது பார்வைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம். தமிழ்நாட்டுத் தேசிய அரசியலில் மேலாதிக்கம் செலுத்திய கருத்தியல் போக்குகளின் வகை மாதிரிகளாக இவை அமைந்துள்ளன. ஒரு சனாதனப் பார்ப்பனர் என்கிற வகையில் தமிழக காங்கிரசில் மேலாதிக்கம் செலுத்திய தலைமையின் மாதிரியாகவும் பிரதிநிதியாகவும் விளங்குகிற சத்தியமுர்த்தி, தாம் செயலூக்கத்துடன் விளங்கிய அரசியல் வாழ்க்கை முழுவதிலும் பெண்கள் பிரச்சினைகளில் வெளிப்படையாகக் கவனம் செலுத்தினர். இதே போல திரு.வி.கவும் பெண்கள் பற்றி அதிகம் எழுதியவர் .
42

அறிவு/கட்டும் நோக்கில் எழுதப்பட்டவை அவை. காங்கிரசில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர் என்கிற வகையில் திரு.வி.கவின் அரசியலுக்கு ஒரு மாறுபட்ட ஏற்புச் சுழல் இருந்தது.
பெண்கள் பிரச்சனையில் சத்தியமுர்த்தி
1941ம் ஆண்டில் தான் சிறையிலிருந்த காலத்தில் தனது, பதினாறு வயதான மகள் லட்சுமிக்கு எழுதிய தொடர் கடிதங்களில் பெண்கள் குறித்த தனது கருத்துக்களை சத்தியமுர்த்தி (ச.மு) வெளிப்படுத்தியுள்ளார். அடிப்படையில் பெண்கள் என்போர் தாய்மார்கள், மனைவியர் மட்டுமே என்கிற கருத்து இக்கடிதங்களில் விரவிக் கிடக்கிறது. பெண்களுக்குத் தமது பங்களின்பின் முக்கியத்துவத்தை உணரச் செய்வது ஆண்களின் கடமை. தாய்மையே பெண்களின் தலையாய பணி என்கிற வகையில் திருமணம் அவர்களுக்கு அவசியமானது. தமது விடுதலைக்குத் திருமணம் தடையாக இருக்கும் எனப் பெண்கள் கருதக்கூடாது என்கிறார். ச.மு இவ்வாறு “காலனியத்தின் மற்றவருக்கு’ (அதாவது காலனியம் கட்மைத்த நவீன பெண் மொ.பெ) எதிராக நிற்கக் கூடியவர்களாக "மரபுவழிப் பெண்ணைக்" கட்டமைக்கிறார் ச.மு. பதிவிரதா தர்மத்தையும் கற்பையும் (மரபுவழிப்) பெண்களுக்கு வற்புறுத்துவதன் முலம் குடும்பத்தின் நன்மைக்காக மட்டுமன்றி நாட்டின் நன்மைக்காகவும் பெண்களின் பாலியல் கட்டப்படு த்தப்பட வேண்டியது அவசியம் என வரையறுக்கிறார் (ச.மு.3), அவரைப் பொறுத்தவரை இராமயாண சீதையே இந்தியப் பெண்ணின் இலட்சிய மாதிரி. ஏனெனில் இராமனின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்தது கொள்வதே சீதையின் ஒரே விருப்பமாக இருந்தது. சீதை தைரியமானவள்
கற்புடையவள் தியாக மனப்பாண்மை கொண்டவள் "
பெண்களின் நியாயப்பூர்வமான இடம் வீடு என எல்லைகள் வகுத்த ச.மு அதன் தொடர்ச்சியாக சடங்காசாரங்கள் கொண்ட
43

Page 25
திருமணமே அவர்களின் விதி எனக் கருதினார். எனினும் அவர் பெண் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் பெண் கல்வி என்பது மரபின் எல்லைகளைத் தாண்டக்கூடாது என்று கருதினர். வீட்டைப் பராமரிப்பதற்குப் பெண்களைப் பொறுப்பாக்கிய ச.மு பெண்கல்வி என்பது முறைசார்ந்த கல்வியாக இருக்கக்கூடாது என வலியுறுத்தினார். தங்களின் அனுபவங்கள் மற்றும் சுற்றியுள்ள சுழல்களின் மூலமாகக் கற்கும் விதமாக பெண் கல்வி அமைய வேண்டும் என்பது அவர் கருத்து, ஆனால் ஆண்கள் சம்பாதிக்க வேண்டியவர்கள்; எனவே அவர்கள் தொழிலநுட்பக் கல்வி பெறுவது அவசியம் என்றார் " இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ். சிறிது உலக வரலாறு புவியியல், குடும்ப சுகாதார முறைகள்,இசை, ஓவியம் போன்றவற்றைப் பெண்கள் கற்கலாம் என அவர் பரிந்துரைத்தார் பாடத்திட்டம் அவர்களை வீட்டோடு கட்டிப்போடுவதைத் தான்
i
ச.மு பரிந்துரைத்த பெண் கல்விக்கான
நோக்கமாகக் கொண்டதேயொழிய வேலை (Job) என்கிற பொதுவெளியில் அவர்கள் இயங்குவதை அல்ல.
இலட்சியப் பெண்ணை அடையாளம் காட்ட ச.மு வால் பயன்படுத்தப்பட்ட வீடு வெளி உலகம் என்னும் இருமை மற்றும் அவர் கட்டமைத்த தாய்/மனைவி என்கிற இலட்சிய மாதிரிகள் என்பன வீட்டுக்குள்ளேயே தமது செயற்பாடுகளை முடித்துக்கொள்ளதாத பெண்கள் பகுதியை ஒதுக்கியது. சாதி அடுக்கில் கீழ் மட்டத்தில் உள்ள பெண்கள், வயிற்றுப் பிழைப் 1 க்காக வfட்டை வரிட்டு வெளியே சென்று உழைக்கவேண்டிய பெண் கள் ஆகியோரை ச.மு வின்வரையறை விலக்கிய விளிம்புக்குத் தள்ளியது.
பெண்களுக்கு உரிய இடம் வீடு தான் எனக் கருதிய ச.மு பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை அச்சத்துடனேயே எதிர் கொண்டார். சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புக்கள் போன்ற பொது அரசியல் அமைப் புக்களில் பெண்கள் பங்களிக்கும் சாத்தியக் கூற்றை அவர் மறுத்தார். ஆண்களைப்
44

போலன்றி பெண்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்களால் குறிப்பிட்டுச் சொல்லும்படி சாதிக்க இயலாது; பொதுவாழ்க்கைக்குரிய போதிய திறமை அவர்களுக்குக் கிடையாது என்றார். ச.மு பொதுவாழ்வில் தீவிரமாகச் செயற்பட்ட பெண்களுக்கு அவர் எச்சரிக்கையும் விடுத்தார். அவர்கள் தாம் பெண் என்பதை மறந்துவிடக் கூடாது. தமது உரிமையையும் ஆண் களுடனான சமத் துவத்தையும் கோருவதற்காகப் பொதுமேடைகளைப் பயன்படுத்தக்கூடாது என்றார்.
பார்ப்பனிய தந்தை வழி சார்ந்த இந்தக் கட்டமைப்பே ச.மு பொதுவாழ்வில் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் அடிப்படையாக இருந்தது. பெண்மை குறித்த அவரது இந்தக் கட்டுமானம் gò (56) 199)jởb(g) gò (5.595 (monogamous sexuality) என்பதாகப் பாலியலை வரையறுத்துப் போற்றியது.
1929ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்தில் "குழுந்தைத் திருமணத் தடைச் சட்டம்" அறிமுகம் செய்யப்பட்டது. காங்கிரஸில் அன்று தீவிரமாய்ச் செயற்பட்டுக் கொண்டிருந்து ச.மூ இந்தச சட்டத்தைக் கொண்டு வந்ததற்காகக் காங்கிரஸ் கட்சி மீதும், அரசின் மீதும், பெண்கள் அமைப்புக்கள் மீதும் கடும் தாக்குதல் தொடுத்தார் . இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கெனவே "சானாதன தர்ம மாநாடு” ஒன்றை ஏற்பாடு செய்து அதில் கலந்தும் கொண்டார் (காங்கிரஸ் கட்சியே இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொண்டபோது கட்சியிலிருந்து தான் விலகப் போவதாக எச்சரித்த ச.மு அப்படி விலகாவிட்டாலும் கட்சிக்கள் இந்த சட்டத்திற்கு எதிராக அப்பிப்பிராயத்தை உருவாக்கப்போவதாக அறிவித்தார். இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதற்காக அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் நீண்ட சக்தியாக்கிரகத்தை நடத்துவது, அல்லது குழந்தைத் திருமணங்களை வெளிப்படையாக நடத்துவதன் மூலம் சட்டத்தை மீறுவது என்கிற செயற்றிட்டங்களை
முன்வைத்தார் "
45

Page 26
தனிப்பட்டவரின் அந்தரங்க வாழ்விலிருந்து (Private life ) மேற்கத்தியக் காலனியத் தலையீட்டை விலக்கி வைக்க வேண்டும் என்பது அவர் கருத்தாக இருந்தது. அதாவது அந்தரங்க வாழ்வை காலனியப்படுத்தப்படாத "வெளி" (Space) யாகப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் "மரபு” என்பதன் மூலமாகச் செயற்படும் இந்திய ஆண்களின் அதிகாரத்துக்குக் கீழ் இந்த வெளி அமைய வேண்டும். ச.மூ வைப் பொருத்த வரை இந்து, பார்ப்பனிய, சனாதன மரபே சுதேசிய இந்தியக் கலாசாரம் இந்தக் கலாச்சாரம் குடும்பம் என்கிற "அந்தரங்க வெளியில்" (Private Space) பாலியலை நெறிப்படுத்துகிறது; திருமணம் இத்தகைய நெறிப்படுத்தலில் ஒரு அங்கம். இதில் பொது நிறுவனங்களான, (Public Institutions) நீதிமன்னறங்களோ, சட்டமன்னறங்களோ தலையிடக் கூடாது. இந்த நிறுவனங்கள் மேற்கத்தியப் பண்பாட்டின் உருவாக்கங்கள்" இந்து திருமண முறிவுச் சட்டம்" என்ற விவாகரத்துச் சட்டம் குறித்த சமூ வின் நிலைப்பாடும் சுதேவி மேற்கத்திய என்கிற இருமையை வலியுறுத்தியது. விவாகரத்து என்பது அருவருக்கத்தக்து. இந்துக்களுக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கித் தள்ளினார் ச.மூ"
காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட மக்களின் பாலியலை நெறிப் படுத்தும் அதிகாரத்தை காலனிய அரசு க்கு மறுப்பதற்காகவே மணஉறவு தொடர்பான சட்டங்களில் ச.மூ மேற்குறித்த நிலைபாடுகளை மேற்கொண்டார். ஆனால் காலனியர்களின் / மேற்கத்தியர்களின் சாராம்சமான பண்பாக சத்திய முர்த்தியால் அடையாளம் காணப்டும் பூப்புக்குப் பிந்திய திருமணம், திருமணமுறிவு உரிமை போன்றவை தமிழக அடித்தளச் சாதியினரின் சமுக உறவுகளில் இரண்டறக் கலந்திருந்தவை. எனவே ச.மூ வின் சொல்லாடல் மேற்கத்தியப் பெண்களை மட்டுமன்றி அடித்தளச் சாதிப் பெண்களையும் ஒரே அடையாளங் களுடன் உருவகப்படுத்து கிறது. கட்டமைக்கிறது. இவ்விரு பிரிவினரையுமே தேசியத்தின் "லட்சியப் பெண்" என்ற வகைப்பாட்டிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. ஒரு தாரக் குடும்பத்தை (Monogamous family)
46

இந்தியாவின் சாராம்ச அடையாளமாகச் சித்தரித்த போதும், இத்தகைய குடும்ப நியதிக்கு வெளியே இயங்கிய தேவதாசி முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் ச.மூ எதிர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த விசயத்தில் அவரது கரிசனம் ஒரு பார்ப்பனர்கதரியதாகவே இருந்தது. தேவதாசி முறை என்பது அடிப்படையில் சுதேசிய இந்து தேசீய கலாச்சாரத்தின் அங்கம் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவரது வாதம். இப்போது தேவதாசி முறையை ஒழிப்பதென்பது பின்னர் கோயில் அர்ச்சகர்களை ஒழிக்க வேண்டும் என்கிற பார்ப்பனர் அல் லாதோரின் கோரிக் கைகளுக்கும் இடமளிப்பதாகிவிடும் எனத் தேவதாசி முறை ஒழிப்பிற்கு எதிராக எச்சரித்தார் ' தேவதாசி முறையை நியாயப்படுத்தும் முகமாக அவர்களது பாலியல் நிலையே சமூ மறுக்க முனைந்ததே இங்கு நமது விவாதத்திற்கு முக்கியமாகிறது. பார்ப்பனியத் தனி உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதன் முலம் தேவதாசிகளைப் பாலியல் அற்றவராகச் சித்தரித்தார். அவர்களைக் கிறிஸ்தவப் பெண் துறவியருடன் (கன்னியர்) ஒப்பிடும் அளவிற்குச் சென்றார். தேவதாசியரதும் கிறிஸ்தவக் கன்னியரதுமான வாழ்க்கைமுறைகள் ஒன்றாக இருக்கும் போது யாரும் கண் னரியர் முறையை ஒழிப் பதற் காகக்
13
குரலெழுப்பவில்லையே என்றார்
சத்தியமுர்த்தி ஆதரித்த பெண்கள் தொடர்பான ஒரே சட்டம் பாலியல் தொழிலை (Prostitution) த் தடைசெய்யும் சட்டந்தான். ஏனெனில் இந்தப் பிரச்சினை அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்கும் என அவர் கருதினார். எனவே மீண்டும் குடும்பம் தான் நியதி என்பதே அவரது மையக் கருத்தாக இருக்கின்றது. எனினும் புதிய சட்டம் ஏதும் தேவையில்லை என அவர் சட்டமன்றத்தில் வாதிட்டார். பாலியல் தொழில் நடைபெறும் விடுதிகள் மற்றும் வீடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாநகர காவல்துறைச் சட்டத்தின் 52 மற்றுமு 57 வது பிரிவுகள் காவல்துறை ஆணையாளருக்குப் போதிய அதிகாரம்
47

Page 27
அளிப்பதாக அவர் வாதிட்டார். பாலியல் தொழில் நடத்தும் விடுதிகளுக்குள் புகுந்து பாலியல் தொழிலாளர்களைப் பல இன்னல்களுக்கு உட்படுத்தக் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கும் மாநகர காவல் சட்டத்தை அவர் எவ்வித
விமர்சனமுமின்றி ஏற்றுக் கொண்டார்.
சத்தியமுாத்தியைப் பொறுத்தவரை இந்திய தேசியத்தின் "நாம்” களை வரையறுக்கும் உறுதிமிக்க இலட்சியப் பெண்கள் யாரெனில் வீட்டுக்குள் அடங்கிய, ஒருவரை மட்டும் மணம் புரிந்து வாழ்கிற, உயர் சாதி, இந்துப் பெண் ஆவார். இத்தகைய பெண்களின் தன்னிலையை "தேசியப் பெண் தன்னிலை" யாக உயர்த்திக் காட்டிய சமூ பொருளியல் காரணங்களுக்காக வெளியில் செல்லக் கூடிய, பாலியல் நிலை பெருமளவில் ஒடுக்கப்படாத அடித்தளப் பெண்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்களை இலட்சியத்திற்கான "மாற்றுத் தன்னிலை "யாக்கினார். ஆனால் தேவதாசியரை மட்டும் அவர் விலக்காமல் ஏற்றுகொண்டார். அதற்குக் காரணமிருக்கிறது. பார்ப்பனிய இந்துத் துவத்தின் சடங் காசாரங்களுக்குள் அவர்களுக்கு இடமிருந்தது.
பெண்கள் பிரச்சனையில் திரு. வி.கலியான சுந்தர முதலியார்
முன்டே குறிப்பிடத்தக்கது போல பார்ப்பன மேலாதிக்கம் நிலவிய தமிழக காங்கிரசில் திரு.வி.க பார்ப்பனரல்லாத தேசியவாதியாக இருந்தார். அவரது அரசியல் ச.மூவுடன் ஒப்பிடுகையில் சற்றே குறைந்த சனாதனப் பண்பைக் கொண்டிருந்தது. பொறுமை, சகிப்புத்தன்மை, தியாகம், தன்னலமின்மை, அழகு, அன்பு போன்ற பண்புகளைத் தன் னகத்தே கொண்டதுதான் பெண் மை எனவும் அடிப்படையில் அது தாய்மைதான் எனவும் புகழ்பெற்ற தொடக்ககால நுாலான “பெண்ணின் பெருமை” யில் திரு.வ.க. வரையறை செய்திருந்தார்" பெண்மை என்பது ஒரு வரலாற்று உருவாக்கம் என்பதை மறுத்த அவர் உயிர்களுக்கான
48

இயற்கைச் சூழலை உருவாக்கும் மண் நீர், காற்று , ஒளி, வானம் என்கிற பஞ்சபூதங்களைப் போவே பெண்மையின் இயல்புகள் இயற்கையானவை என வாதிட்டார்"
துணிவுப் திறமையுமிக்க மக்களைப் பெற்றெடுத்து புதிய தலைமுறையினருக்கு ஒழுக்க மதிப்பீடுகளைப் புகட்டுகிற நல்ல தாய்மார்கள் தேசியச் சொத்துக்கள் என்பது அவரது கருத்து ஒரு நல்ல தாயாக விளங்க வேண்டுமெனில் ஒரு பெண் நன்னடத்தை மிக்கவராக இருக்கவேண்டும், கல்வியின் மூலம் இந்நன்னடத்தையைப் பெறமுடியும் என்று கருதினார் . மேற்கத்திய வகையிலான கல்வியை எதிர்த்த அவர் மர | சார்ந்த" நல்லொழுக்கம் மற்றும் மத மதிப்பீடுகளை பெண்களிடம் ஆழமாகப் பதிக்கக்கூடியதும் குழந்தை வளர்ப்பு, சமையல் தூய்மை போன்ற வீட்டு வேலைகளில் பெண்களைப் பயிற்றுவிக்கக்கூடியதுமான கல்வியை பெண்களுக்குப் பரிந்துரைத்தார். இதோடு நெல்குத்துதல், அரிசி அரைத்தல் நுாற்பு துணி தைத்தல் போன்ற குறிப்பிட்ட உடற் பயிற்சிகளையும் சேர்த்தக் கொள்ள வேண்டுமென்றார்"
தனது சொல்லாடலில் தாய்மையை மையப்படுத்திய திரு.வி.க திருமணம் என்பதைப் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான அம்சமாகக் கருதினார். ஆனால் இந்தத் திருமணம் மேற்கத்திய முறையில் அமையக்கூடாது. பழந்தமிழர் முறையில் நடைபெற வேண்டும்". இதே போல விவாகரத்தையும் திரு.வி.க கண்டித்தார். குழந்தைப் பேறு, குழந்தைவளர்ப்பு என்கிற தாய்மைப் பண்புகளே பெண்களின் சாரம்சம் என அவர் கருதியதன் விளைவாகவே மேற்குலகின் கருத்தடை முறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். அவரைப் பொறுத்தமட்டில் திருமணம் என்பது குழந்தை பெறுவதற்காகவேயன்றி வெறும் "உடல் கிளர்ச்சிக்காக " அல்ல "
பெண்களின் மரபு சார்ந்த பாத்திரங்களுக்காக வாதாடிய திரு.வி.க கற்பிற்கு கண்ணகியையும்", சிந்தனைத் திறனில்
49

Page 28
மணிமேகலையையும் பக்திக்கு ஆண்டாளையும் இலட்சியமாகத் தொடர்ந்து சித்தரித்து வந்தார். எனினும் திரவுபதியைப் (பாஞ்சாலி) பெண்களுக்கு ஆதர்சமாகக் காட்டியே பாது திரு.வ.க சமணர்களின் மகாபாரதத்திலிருந்து திரெளபதியைக் கட்டமைத்தது குறிப்பிடத்தக்கது. வெ. வியாசரின் திரெளபதி அய்வருக்கு மனைவி . ஆனால் சமண மரபுத் திரெளபதியே அர்ஜுனனை மட்டுமே திருமணம் செய்து கொண்ட கற்டை நங்கை என்பதே இதற்கக் காரணம்! ஆக திரு.வி. கவிற்கும் கூட சத்திய மூர்த்தியைப் போலவே ஒருவரை மணந்து வாழும் பாலியல் நியதி கொண்ட உயர் சாதிப் பெண்களே மரபை உணர்த்தினர்.
எனினும் சில பிரச்சினைகளில் திரு.வி. க. சத்திய மூர்தியிடமிருந்து வேறுபட்ட பார்வைகளைக் கொண்டிருந்தார் நாம் எற்கனவே குறிப்பிட்டபடி தேவதாசி முறையை ஆதரித்தவர்களை திரு.வி.க. கண்டனம் செய்தார். ஆனால் வேறுபாடுகளின் பின்னணியில் எந்தச் சாரமுமே இல்லை என்பது தான் உண்மை. தேவதாசி முறை உயர்சாதிப் பெண் பாலியல் நியதிகளுக்குள் வாராததாலேயே அதனை திரு.வி.க எதிர்த்தார். மேலும் தேவதாசிக்ள் பார்ப்பனரல்லாத ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். எனவே மரபு சார்ந்த குடும்ப நியதிகளைக் காப்பதற்கும் பார்ப்பனரல்லாததோரின் கவுரவத்தைக் காப்பதற்குமான வழியாக தேவதாசி முறை ஒழிப்பை திரு.வி.க. முன் வைத்தார். இத்தகைய 'இலட்சிப் பெண்’ என்கிற கட்டமைப்பிற்கு தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பெண்களின் எதிர் கொள்ளல் எவ்வாறு இருந்தது என்பதைப்
பார்ப்போம்.
தேசீய இயக்கத்தின் பெண்கள்.
நாம் முன்பே சொன்னது போல இலட்சியப் பெண்கள் குறித்த பார்ப்பன உயர் சாதி ஆணின் கருதுகோளைப் பயன்படுத்தி பெண் பாலியலைக் கருத்தியல் ரீதியில்
50

கட்டுப்படுத்தியதின் மூலம் தேசீய இயக்கத்தின் ஆணாதிக்கத் தந்தைவழித் தலைமை பெண்களை அடக்கி வைத்திருந்தது. இந்த இலட்சியப் பெண்கள் அவர்களது வரையறையின்படி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டி இருந்தபோதிலும் அரசியல் காரணங்களுக்காக இவர்களின் பங்கேற்பைத் தேசிய இயக்கம் கோரியது. ஆனால் அதே சமயத்தில் ஆண்களின் பங்கேற்பிலிருந்து இது மாறுபட்டதாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இது வற்புறுத்தியது. தேசியத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள், தேசிய இயக்கத்தின் ஆணாதிக்கத் தலைமைக்கு உடந்தையாக இருப்பவர்களாகவே அறியப்
L Jl l_fTsé}56f .
இந்தப் பின்னணியில் பெண் இயக்கவாதிகளின் பார்வை களையும் அவர்கள் பெண்கள் பிரச்சினைகளை அணுகிய விதத்தையும் ஆராய வேண் யடி து முக்கியமாகிறது. அடக்குமுறை நிறைந்த மத்தியதர வர்க்கக் குடும்பங்களிலிருந்து வந்து ஆணாதிககம் நிறைந்த காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து அரசியலில் ஈடுபட்ட இப் பெண்களின் குரல்கள் தேசிய இயக்கத்து ஆண் தலைமையின் குரலை விட வேறுபட்டதாக இருந்ததா? இல்லை. குடும்பத்தை மையமாகக் கொண்ட பெண்மை பற்றிய இந்தத் தந்தைவழிக் கருத்தியலைத்தான் எவ்வித விமர்சனமுமின்றி வெளிவிவகாரங்களுக்கும் (Public Space) நீட்டித்தார்கள் இவர்கள். நாட்டைக் குடும்பத்தோடு ஒப்பிட்டுக் கொண்ட இவர்கள், குடும்பத்தில் அவர்களுக்கிருந்த “சக்தி" களையும் திறமைகளையும் நாட்டைப் புத்துயிர்ப்பதற்காக பொதுவாழ்க்கையில் பயன்படுத்துவது அவசியம் என வாதிட்டடார். எடுத்துக்காட்டாக தேசிய முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு குறித்து.
"நாம் தேவி சக்தியின் அம்சம். சரஸ்வதி அறிவும் ஞானமுமாய் விளங்குகிறாள். ஒரு குடும்பத்தின் பெருமையோ சிறுமையோ, ஒற்றுமையோ சண்டை சச்சரவோ, அக்குடும்பத்தின் பெண்களைச் சார்ந்தே
5

Page 29
இருக்கிறது. வீட்டு நிர்வாகம் என்பது நடைமுறை ராஜ்ய
பரிபாலனம். வீடு மற்றும் நாடு இரண்டிற்கும் ஒரே
விதமான நிர்வாகத் திறமை தேவைப்படுகிறது." என்று எழுதுகிறார்.
எஸ்.ஜெயலட்சுமி அம்மாள்' மற்றொரு தேசியப் பெண் எழுத்தாளரான கவுரி அம்மாள் பொறுமை, சகிப்புத்தன்மை, தன்னலமற்ற தியாகம் போஷிப்பு போன்ற, பெண்களின் இயல்பான குணங்களை தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்? இதே போல மற்றொரு முன்னணிப் பெண் தேசியவாதியான லட்சுமி சங்கர அய்யர் "தமிழ் நாடு பெண்கள் அரசியல் மாநாட்டில்" பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே பெண்கள் தேசத்திற்குப் பங்களிக்க முடியும் எனவும் குடும்பத்தினரைக் கவனித்துக் கொள்வது, நமது குழந்தைகளுக்குத் தேச பக்தியை ஊட்டுவது, தாய்மார்களாகவும் மனைவியராகவும் தம்மை அர்ப்பணித்ததுக் கொள்வது போன்றவற்றின் மூலம் தேசத்திற்கு தொண்டாற்ற முடியும் என்றார் " பெண்களின் முதன்மையான பாத்திரம் தாயாக இருப்பது தாய்மை என்பது அனைத்துப் பெண்களிடமும் உள்ள இயற்கைக் குணம் என்க் கருதப்பட்டது. தமது குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பதன் மூலமும் தேச பக்த மதிப்பீடுகளை ஊட்டுவதன் மூலம் பெண்கள் தாய்மார்கள் என்கிற வடிவில் தேசிய இயக்கத்ததிற்குப் பங்காற்ற முடியும் என வாதிடப்பட்டது "
அரசியலில் பெண்களின் பங்கு குறித்து எழுதிய பவளம் " மாபெரும் மனிதர்களை உருவாக்கக் கூடிய புகலிடம் பெண்களது வீடு என்பதை மறக்கக்கூடாது. தாய்மை என்பது வாழ்வில் பெறற்கரிய கொடை. இயற்கைதான் பெண்களுக்கு இந்தப் பெருமை மிக்க தாய்மையை அளித்திருக்கிறது" என்று கூறினார் 25 பெண்கள் தங்களின் இந்தப் பாத்திரத்தை வீட்டிலும் வெளியிலும் மேற்கொள்வதற்கு ஏற்ப அவர்களுக்குத் "தேசியக் கல்வி" அளிக்கப்டவேண்டும் எனப் பெண்
52

இயக்கவாதிகள் வாதிட்டனர். சகோதரி வி. பாலாம்பாளை இத்தகைய கல் வரி "பெண் மைக் குணங்களையும் " தேசப் பற்றையும் , பழங் கால இந்திய மரபுகளையும் , வழமைகளையும் குடும் டங் களில் பெண் களுக்கான கடமைகளையும் போதிக்க வேண்டும் என்று கூறுகிறார்". இதே போன்ற கருத்துக்களை விசாலாட்சியும் தெரிவிக்கிறார். பொதுவாழ்வில் சக்தியாக்கிரகம், சுதேசிப் பணி போன்ற போராட்டங்களே பெண்களுக்கு ஏற்றவை என இவர்கள் வாதிட்டனர். இந்த இரு போராட் வடிவங்களுமே அன்பு, பாசத்தை அடிப்படையாகக் கொண்டவை, எனவே இவற்றில் பெண்கள் உயர்ந்தபட்சப் பங்களிப்பு செய்ய முடியும் என்பது அவர்கள் கருத்து ' தேசிய இயக்கத்தில் தம் போன்ற பெண்களை ஈடுபடத் துTண்டுவதற்காக முன் வைத்த இவ்விவாதங்கள் அதே சமயத்தில் பெண்களுக்கான மரபு சார்ந்த குடும். நியதிகளையும் போற்றிப் பாடின.
தேசிய இயக்கம் சார்ர்ந்த பெண் கதாசிரியர்களும் அதே போன்ற கருத்தியல் நோக்கைப் பரப்பினாார்கள். இருபதே ஆண்டுகளில் 115 நாவல்களையும் பல கவிதைகளையும் எழுதி வை.மு. கோதைநாயகி அம்மாள் (வை.மு.கோ) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தேசிய இயக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் தேசீயவாதகக் கருத்துக்களைபப் பரப்பிய ஜெகன் மோகினி என்ற தமிழ் சஞ்சிகைக்கு ஆசிரியராகவும் விளங்கியவர் வை.மு.கோ. அவரது சாவலான "வீர வசந்தா” வில் பெண் விடுதலை என்ற கருத்தாக்கம் பெண்களுக்கு எந்தவிதமான பொருளைத் தந்தது, மேற்கத்திய மயமாதலுடன் இணைந்த நவீனத்துவம் எவ்வாறு பெண்களின் வாழ்வைக் குலைக்க முடியும் என்பவை குறித்து விவாதிக்கிறார். இந்த நாவலின் கதாநாகி மேற்கத்திய பழக்க வழக்கங்களுக்கு அடிமையான ஒரு தமிழ்ப் பார்ப்பணி. ஒரு கிறிஸ்தவரிடம் காதல் கொண்டு கர்ப்பமடைகிறாள். ஆனால் கட்டாயத்தின் விளைவாக ஒரு இந்துப் பையனை மணக்க நேரிடுகிறது. நாயகியின் பழைய உறவும், கருவுற்ற செய்தியும் கணவனுக்குத் தெரியவரும் போது
53

Page 30
தற்கொலை செய்து கொள்கிறாள். கடைசியாக அவள் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் ஒரு கிறிஸ்துவனுடனான பழக்கத்தினால் தனக்கு இந்த நாசம் விளைந்ததாக அதில் அவள் கூறுகிறாள். இந்து தர்மத்தை நேர்மையாகக் கடைப்பிடித்திருந்தால், சாதிய நியதிகளையும் டெண்களுக்கான மரபு சார்ந்த பணிகளையும் மேற்கொண்டிருந்தால் தனது தூய்மையையும் கன்னித் தன்மையையும் காப்பாற்றப்பட்டி ருக்கும் என்கிறாள். பூப்பெய்துவதற்கு முன்பு பெண்களுக்குத திருமணம் செய்வது போன்ற மரபு சார்ந்த பழக்கவழக் கங்களைக் கைவிட்டு மேற்கத்திய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்ததற்காகத் தனது தந்தையைக் குற்றஞ்சாட்டும் நாயகி, இவைதான் தன் வாழ்வு நாசமானதற்கக் காரணம் எனக் கூறுகிறார். (பெண்) விடுதலை பெண்களுக்கு எதிரானது என்று கூறி கடிதத்தை முடிக்கிறாள் ”
சுருக்கமாகச் சொல்வதானால் இந்த நாவலில் மரபு சார்ந்த பெண்மை தேசியக் கலாசாரத்தின் அடையாளமாக நிறுத்தப் படுகிறது; ஒழுக்கமின்மை, கீழ்ப்படியாமை கண்மூடித்தனம் ஆகியவை மேற்கத்திய மயமாதலின் அடையாளம் பெண்களின் வாழ்வை அழிக்கும் மேற்கத்திய காலனியாதிக்க மனிதன் குறித்த வை.மு.கோ வின் கற்பித படிமமே. நாவலில் வருவது ஒரு கிறிஸ்தவ பையன்.அதே சமயத்தில் மரபுசார்ந்த பார்ப்பன ஆண் இப்படி குடும்பத்தை உடைக்கும் காரியங்களைச் செய்ய மாட்டான் . வை.மு.கோ. வைப் பொறுத்தவரை ஒரு உண்மையான மரபு சார்ந்த இந்தியப் பெண், பெண் விடுதலை உட்பட்ட எல்லாவிதமான மேற்கத்தியமயமாதலையும் எதிர்க்க வேண்டும். பெண் விடுதலை உட்பட எல்லாவிதமான மேற்கத்திய மயமாதலையும் எதிர்க்க வேண்டும். பெண் விடுதலை என்பது குடும்பங்களுக்கு ஊறுவிளைவிக்காததாகவும் பெண்மைப் பண்புகளான கற்பு, சகிப்புத்தன்மை, பொறுமை போன் ற பெண் மை சார்ந்த நியதிகளை அடையும் நோக்தத்துடனும் அமைய வேண்டும் என்பது வை.மு.கோ. வின் கருத்துது
54

பெண் கல்வி என்பதுங்கூட அவரைப் பொறுத்தமட்டில் மரபு சார்ந்த பெண்மைப் பண் களையும் கடமைகளையும் அவர்களுக்குகு அறிவுறுத்தும் நோக்கத்திற்காகத்தான். ரோஜா மலர் என்ற நாவலில் பெண்கள் பள்ளிகளில் பெண்களுக்குக் கல்வி கற்பித்தால்தான் "ஸ்திரீதர்மத்தை" ப் பாதுகாக்க முடியும் என்கிறார். திருமணத்தைப் பொருத்த மட்டில் சத்தியமூர்த்தி போலவே வை. மு. கோவும் குழந்தை மணத்தை ஏற்றுக் கொள்கிறார். அவரே குழந்தையாக இருந்தபோதே மணம் செய்விக்கப்பட்டவர். இது ஒரு அடிப்படையான பார்ப்பனச் சடங்கு எனக்கூறி ஏற்றுக் கொண்டவர். குழந்தைத் திருமணம் என்பது குடும்பத்தில் அமைதி நிலவச் செய்வதோடு அனைத்து வகையான "உணர்வுபூர்வமான வேதனைகளிலிருந்தும்" பெண்களை விடுகிக்கிறது என்பத அவர் கருத்து.
இவ்வாறு வை.மு. கோ வின் நாவல்கள் தேசீய ஆண் தலைவர் களின் டெண் கள் குறித்த சரிந்தனை யை வழிமொழிகிறது.இந்து பார்ப்பனக் கலாச்சாரமே இவர்களுக்குத் தேசிய கலாச்சாரம். இந்தக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் டதிலியாகவும் மரபுவழிப்பட்ட பாத்திரங்களில் பெண்கள் சிறப்புறுகின்றனர். வை.மு.கோ.வும் இதர தேசியப் பெண் இயக்கவாதிகளும் சுயேட்சையாகச் செயல்படவில்லை. தேசிய இயக்கத்தின் ஆணியத் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்களாகவே
உள்ளனர்.
மரியாதைக்குரிய அரசியல் “இலட்சிய" இந்துப் பெண்களும் "மற்ற" பெண்களும்
தேசிய இயக்கத்தில் பங்கேற்ற, ஆனால் அவ்வளவு மாரியாதைக் குரிய வர் களாகக் கருதப் படாத " மற் ற ” பெண்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ள மத்தியதர வர்க்கத்தைச்சேர்ந்த பெண் இயக்கவாதிகள் மேற்கொண்ட முயற்சிகளிலும் மரபு சார்ந்த தந்தை வழிச் சமூக நியதிகளை
55

Page 31
உயர்வாக மதித்த கருத்தியல் போக்குகள் வெளிப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பாக காந்திய நிர்மாணத் திட்டங்களில் பங்கெடுத்த பெரும்பாலான பெண் கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களே "மரியாதைக்குரியவர்களாக"க் கருத்ப்பட்ட போதிலும் "மற்றவர்களும் " தேசிய இயக்கத்தில் இருந்தனர். உண்மையில் மத்தியதர வர்க்க ஆண்கள் மற்றும் பெண்களின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் மிகப் பெரும் எண்ணிக்கையில் பாலியல் தொழிலாளரும் தேவதாசிகளும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒத்துழையாமை இயக்கத்தில் (1921) பாலியல் தொழிலாளிகள் பெருந்திரளில் கலந்து கொண்டனர்; பொதுக் கூட்டங்களில் பங்கு பெற்றதோடு மேடைகளில் தேசீய கீதங்களையும் பாடினர்" காந்தி, மாயவரம் (மயிலாடுதுறை) நகரத்திற்கு வந்தபோது (1927) தேவதாசிகள் வரவேற்புக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து அவருக்குப் பணமுடிப்பையும் தங்க வளையல்களையும் அளித்தனர். தேசிய இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்பதாகவும் காந்தியிடம் உறுதியளித்தனர்" பொது அரங்கில் இவர்களோடு பங்கேற்பதன் விளைவாக தாமும் "வழுக்கிவிழுந்தவர்களோடு" குழப்பிக்கொள்ளப்படு வோமோ என்ப் பல மத்தியதர வர்க்கப் பெண்கள் அச்சமுற்றனர்.32 அந்தரங்க வெளி/பகிரங்க வெளி ஆகியவற்றில் பெண்களின் பங்கு பற்றிய காங்கிரஸ் , காந்தி ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் தேவதாசிகள்
3.
ஓரங்கட்டப் பட்டனர் மாயவரத்தில் தேவதாசிகளுடனான காந்தியின் உரையாடலே இதற்கொருசான்று தேவதாசியர் அளித்த நகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்பு காந்தி ஒர விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டார். அவர்கள் தமது தேவதாசித் தொழிலை விட்டு விட்டு "மரியாதைக்குரிய மண வாழ்வை" நடத்துகின்றார்களா என்பதே காந்தி அறிந்து கொள்ள விரும்பியது. காந்தியால் நிந்திக்கப்படுவோம் என்கிற அச்சத்தில் பல தேவதாசிகள் தாம் கணவன்மார்களுமடனும், குழந்தைகளுடனும் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகத் தெரிவித்தனர் . தமது சாதி நியதியின் படி தாலி
56

அணியாதிருந்ததைக் கண்ட காந்தி "மரியாதைக்குரிய இந்துப்
84
பெண் என்பதன் அடையாளமாகிய தாலியை அணிந்து கொள்ளச் சொல்லி அறிவுரை பகன்றார் "ஒழுக்கங்கெட்ட தேவதாசித் தொழிலுக்குப் பதிலாக நூல் நூற்கலாமே என வற்புறுத்தினார். நூல் நூற்பதன் மூலம் உயிர் வாழ்வதற்குப் போதுமான வருமானம் பெற முடியாதே என்பதைச் சில தேவதாசிப் பெண்டிர் சுட்டிக்காட்டியேபாது காந்தியிடம்
31
பதிலில்லை
காலணிய அரசு சிறைகளில் தேவதாசியரையும் பாலியல் தொழிலாளிகளையும் மற்ற பெண்களிடமிருந்து பிரித்து இழிவு செய்த போதும் காங்கிரசும் அதன் நடுத்தர வர்க்கப் பெண் இயக்கவாதிகளும் தங்களின் " மரியாதைக்குரிய அரசியலை “வெளிப்படுத்தினார்" காந்திமதி அம்மாள், பெரியநாச்சி அம்மாள் என்ற இரு ("மரியாதையற்ற") பெண்களுக்கு சிறையில் "சி" பிரிவு ஒதுக்கித் தீர்ப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நீதிபதி.
"இந்த இரண்டு பெண்களும் மலிவான வகையில் தியாகிப் பட்டம் பெற முயற்சிக்கின்றனர். அவர்கள் முரட்டுத்தனமான வர்களாகவும் கெட்டவர்களாகவும் தெரிகிறார் கள் விதிகளில் அலையக் கூடிய வகைகளாகத் தோன்றுகிறன்றார். அவர்களைப் பற்றிப் பொதுமக்கள் அக்கறைப்படுவபவர்கள் என நான் கருதவில்லை." -
இதே போல வேறு இரண்டு முன்னணி அரசியல் இயக்கப் பெண்களாகிய தாயாரம்மாள் மற்றும் சீதாலட்சுமி குறித்துக் கூறிய மதுரை மாவட்ட நீதிபதி
"முதலாமவர் ஒரு நாட்டுக் கோட்டைச் செட்டியாரின்
35
என்றார்
வைப்பாட்டி மற்றவர் ஒரு சாதாரண விபச்சாரி " என்றார்36 காங்கிரஸ் கட்சியோ இல்லை இதரப் பெண் போராளிகளோ இத்தகைய பேச்சிற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக் கவரில் லை . ஆனால் சரிறைச் சாலைக் குள்
57.

Page 32
“மரியாதைகுரிய" இந்துப் பெண்களின் தாலி, குங்குமம் முதலிய மங்கலச் சின்னங்களை அகற்றிவிட்டதாகக் கூறப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் பெண்கள் அமைப்பினரும் பெரும் சச்சரவை ஏற்படுத்தினர். தலைச்சேரி நீதிபதி ஒரு பெண் கைதியின் தாலியை அகற்றச் சொன்னார் எனக் கூறப்பட்ட செய்தியைக் கண்டித்த தமிழகம் என்ற உள்ளுர்த்தினசரி, இந்தியப் பெண்களுக்குத் தங்களது உயிரைவிட தாலியே மதிப்பு வாய்ந்தது. தங்களின் புனிதச் சங்கிலி பறிக்கப்படுவைத அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனப் பெருமைப்பட்டுக் கொண்டது". சிறைச்சாலைக்குள் மணமான பெண்களின் நெற்றிக் குங்குமம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது பற்றி சட்ட உறுப்பினர்(சட்டட அமைச்சர்) உடனடியாக விளக்கம் தரவேண்டுமெனச் சொன்ன சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சாடினர்.” மணமான இந்துப் பெண்களின் மங்கலச் சின்னங்களை அகற்றியதை எதிர்த்து" இந்தியப் பெண்கள் அமைப்பும் கூட அரசிற்கு மனு அனுப்பியது"
58

முடிவுகள் இது வரை மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் அடிப்படையில் எழுந்த முடிவுகளைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறலாம்.
1. தமிழக்தில் தேசீய இயக்கத்தின் ஆண் தலைமை பெண்களை"தேசீய கலாச்சாரத்தின் ஆன்மீகப் பண்பை வெளிப்படுத்தும் பிரதான களமாக"க் கையாண்டது. பெண்ணைத் தேசீயத்தின் பதிலியாக (trope) நிறுத்துவதன் மூலம் பெண்கள் குறித்த பார்ப்பன மேற்சாதி மரபு வழி அடையாளங்களையே உறுதி செய்தன். காலனிய அடையாளத்திலிருந்து தேசிய அடையாளத்தைப் பிரித்துக் காட்டும் நோக்குடன் மேற்குறித்த அடையாளங்களை முன்வைத்து அவர்கள் பெண்களைத் திரட்டினர். இந்த அளவீடுகளின் படி வீட்டுக்குள் அடங்கிய ஒருதார மணம் கொண்ட உயர்சாதிப் பெண்ணே “இலட்சியமாக" முன்வைக்கப் ட்டது. மாறாக அடித்தளச் சாதியரைச் சேர்ந்த பெண்டிரும், தேவதாசிகள், பாலியல் தொழிலாளிகள் போன்ற ஒருதார முறையின் நியதிக்குள் அடங்காத பாலியல் நிலை கொண்டவர்களுமான அடித்தளப் பெண்கள் இந்த இலட்சிய தேசியப் பெண்ணின் "மாற்றாக" வைக்கப்பட்டனர்.
2. தேசிய இயக்கம் சார்ந்த பெண் இயக்கவாதிகளின் குரல்கள் ஆண் தலைவர்களின் குரல்களிலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்பது முக்கியம். ஒரு தளத்தில் பார்க்கும் போது வெளிஅரங்கில் அரசியலில் பெண்களின் பங்கேற்பென்பது குடும்பத்தை மையமாக வைத்த ஆணாதிக்கச் சூழலின் நீட்சியாகவே இருக்கிறது. இன்னொரு தளத்தில் “மரியாதைக்குரிய தன்மையின்” அரசியலின் வழியாக உயர்சாதி, மத்திதர வர்க்கக் குடும்ப நியதிகளே தமது தேசியம் மற்றும் கவுரவம் குறித்த கருத்தாக்கத்தின் மையமாக இருக்கிறது. என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர்
59

Page 33
குறிப்புக்கள் :
1.
16.
17.
8.
19.
2O.
21.
22.
23.
24.
60
Catherine Hall, Missionary Stories : Gender and Ethinicity in
Lowrence Grossberg et all, Culture Studies 1992. Valentine M. Moghandam (ed), Ldentity Politics P42-75
ஜூலை 16, 1941 தேதியயிட்ட சத்திய முர்த்தி லட்சுமிக்கு எழுதிய கடிதம் பார்க்க : அரும்புதல்விக்கு, 1988 ஆக 9, 1941 தேதியிட்ட கடிதம் மே.கு.நா ஜூலை 11, 1941 தேதியிட்ட கடிதம் மே.கு நா மே 30,1941 தேதி கடிதம் மே.கு.நா ஜுலை 19, 1941 தேதிய கடிதம் மே கு.நா சுதேசமித்திரன், டிச.3, 1929 சுதேசமித்திரன், ஆக.22, 1929
சுதேசமித்திரன், ஆக 22, 1929, சுதேசமித்திரன், ஜூலை 20, 1929, M.R. Papers. Subject file no 11. part 11 Lud, 344 மே.கு.நா பக் 344
MLCP, 9 ġ5. IO, 1928 திரு.வி.கலியாணசுந்தரனர், பெண்ணின் பெருமை அல்வது
வாழ்க்கைத்துணை, 1986 (13ம். பதிப்பு) 1927ல் எழுதப்பட்ட இந்நூல் திருக்குறள் அளவிற்கு மரியாதையாகப் போற்றிப் படிக்கப்ட்ட நூல். மே.கு.நா பக் 20
மே.கு.நா பக் 73 மே.கு.நா பக் 73, 75, 76, 81, 86, 100 மே.கு.நா பக் 199
மே.கு.நா பக் 167 எஸ் ஜெயலஷ்மி அம்மாள் தேசிய முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு, Sri Dharma ஆக, 1932 (ஆங்கிலம்) கெளரி, பெண்ணும் தொண்டும், மங்கை அக் 1946. சுதேசமித்திரன், ஜன 31, 1936 Stridharma, (3LD 1931 LD/äj60)9, 9/ ë. 1946 Indian ladies Magazine. LDrift d. 1931

26
27.
28.
29.
BO.
31.
'' ()
« } ፈሣ •
33.
34.
35.
36.
37.
38.
39.
சுதேசமித்தரன், மார்ச் 15, 1921 Stridharma Jan. 1931
சுதேசமித்திரன், ஜூலை 7, 1930 முத்துலட்சுமி ரெட்டி மற்றும் சரஸ்வதி அம்மாளின் பேச்சுக்களைக் காண்க.
வை.மு. கோதைநாயகி அம்மாள், வீரவசந்தா (நாவல்) மே.மு.நா கல்கி தேவியரின் தேச சேவை, ஆனந்தவிகடன், செப் 17, 1931 தமிழ நாடு Sep 15 1927 "மரியாதைக்குரிய அரசியல் ” என்கிற கருத்தாக்கத்தை "D.A Low (ed). The Indian National Congress Centenary Hindsights 1988 67 gör dip 15ft a gygit 677 Geraldine Forbes 66, J.L.G560 g யிலிருந்து எடுத்துள்ளேன். பாலியல் தொழிலாளர் பற்றிய காந்தியின் கருத்துக்களுக்குப் பார்க்க EPW (ஆக் 5, 1985) ல் வந்துள்ள மது கிஷ்வாரின்
கட்டுரை. g5L6 ppb TGS, M.R.Papers, File No: 12, Li 3, 12 மூவலூர் இராமமிர்தம் அம்மாள் தாசி ஜகன்னாதம்மாள் முதலானோர் இந்த உரையாடலின்போது வேறு சிலருடன் கலந்து கொண்டனர். law (General). G.O. No 1671, 2.3.4.1932. (31 D. (eg); 15f1 G.O. No. 1539, 15.4 1932
Public Press, G.O.No. 316, 15.2.1941. Law (General). G.O. No 3219. 1.9.1932. GLD.(g).fb/T. G.O. No.1552, 16.4.1932.
61

Page 34
சமூக அரச நிலைகளினுடு வேறுபட்டு விளங்கும் பால்நிலைத் தோற்றங்கள் : ஒரு வரலாற்றுக்
3560oir GGOOTTILLLLLřð
செல்வி திருச்சந்திரன்
ஒரு கால கட்டம் அரசியல் ரீதியில் இதற்கு முந்திய காலகட்டத்திலிருந்து வேறுபட்டது எனினும் முந்திய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான மரபில் பாரிய மாற்றம் எதுவும் காணப்படுவதில்லை. அதே பழைய நடத்தை நியமங்கள் மிகச்சிறிய மாற்றங்களுடன் அல்லது எவ்வித மாற்றங்களும் இன்றித் தொடரும் இவ்வாய்வ பால்நிலை நோக்கில் தமிழகத்துப் பல்லவ சோழர்காலங்களை ஆய்வுக்குட்படுத்துகிறது. இரண்டு காரணங்களுக்காக இக்காலகட்டம் முக்கியமானது என்று நாம் கூறலாம். முதலாவது தனிமனித நிலையில் இரண்டு பெண் ஞானிகள் இக்காலகட்டத்தில் உருவாகினர். தங்கள் ஆழமான பக்தி உணர்வுகளை இவர்கள் தங்கள் கவிதையில் வெளியிட்டனர். மேலும் 'வேறுபட்டவர்கள்' என அடையாளப்படுத்தத்தக்க நடத்தைக் கோலத்தை வெளிக்காட்டினர் (காரைக் கால் அம்மையார் ஆண்டாள்) இரண்டாவது காரணம் தேவதாசி மர! ! நிறுவன மயமாக்கப்பட்டமையாகும் இதன் மூலம் நுண்கலைத் துறையில் ஈடுபட்ட சில பெண்கள் கோயில்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டனர். இவை இரண்டுமே கருத்தாக்க ரீதியில் முன்னைய காலகட்டத்தின் தொடர்ச்சி என்றே நோக்கப்படலாம். முதலாவது, மறைந்து போன பெண் புரோகிதர்களின் எச்சமாகும். மற்றயது சங்ககால விறலி, பாணினி ஆகியோரின் தொடர்ச்சியாகும். காலனித்துவ காலகட்டத்தில் தேவதாசிமுறை ஒழிக்கப்பட வேண்டும் என கானித்துவ ஆட்சியாளர் நினைக்கும் அளவுக்கு தேவதாசிகள் கவனத்தை கவர்ந்திருந்தனர்.

சமூக அரசியல் நிலைமைகளும் பால்நிலை உறவுகளும்
கி.பி 550 ஐ அடுத்துவந்த முதல் மூன்றரை நூற்றாண்டுகளும் வாதாபிச் சாலுக்கியர்கள், காஞ்சிப் பல்லவர்கள், மதுரைப் பாண்டியர்கள் ஆகிய மூன்று அரச பரம்பரைகளுக்கிடையே நில வரிய பரஸ் பர மோதல் களின் வரலாறாகவே அமைந்துள்ளது. கி.பி 850 முதல் 1200 வரையுள்ள காலப்பகுதியில் முழுத் தமிழகமும் சோழர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது இந்தியாவுக்கு வெளியிலும் தாங்கள் சாம்ராச்சியத்தைக் கட்டியமைக்கும் அளவுக்கு இவர்கள் அரசியல் வலிமை வெற்றிருந்தனர். இக் காலப்பகுதிக்குரிய பிரதான குணாம்சங்கள் இரண்டு வேறுபட்ட கட்டங்களுக்குரிய தாக பகுத்து நோக்கப்படத்தக்கன. முதலில் பாண்டிய பல்வல ஆட்சிக்காலகட்டம் மற்றது சோழர் ஆட்சிக் காலகட்டம். ஒரு கட்டத்தில் இருந்து மறு கட்டத்துக் கான வளர்ச் சரி அவ்வக்காலகட்டங்களில் நிலவிய நிறுவனங்களிலும் கருத்து நிலைகளிலும் காணப்படுகின்றன. இந்நிறுவனங்களும் கருத்தியலும் மேலோட்டமாக வேறுபடக் கூடும், ஆயினும் சாராம்சத்தில் அவற்றுக்கிடையே ஒருமைப்பாட்டைக் காண
முடியும்.
தர்ம மஹ7ராஜ//தி/7//ஜ போன்ற அரசர்களின் பட்டங்கள், ஏகாதிபத்தியம், வெற்றி கொள்தல் ஆகியவற்றில் இருந்து மதக்கடமை வேறுபடுத்தப்படமுடியாதது என்பதைக் குறித்து நின்றன. பல்வலவர் காலத்தில் பிராமணர்களின் மேலாதிக்கம் தமிழகத்தில் மிகவும் வெளிப்படையாக இருந்தது. பல்லவர் காலத் தொடக்கத்தில் தமிழப் பிரதேசங்களில் பெளத்தர் களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மேலாதிக்க கருத்துகள் போராட்டம் நிலவியது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். பெளத்த இந்து மத ஞானிகள் பல்லவ மன்னர்களைத் தங்கள் தங்கள் மதங்களுக்கு மதமாற்றம் செய்வதற்கு தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். இறுதியில் பெளத்தத்தைத் தமிழ்ப் பிரதேசத்தில் இருந்து
63

Page 35
அகற்றுவதில் இந்துக்கள் வெற்றி பெற்றனர். பக்தி இயக்கத்தின் தோற்றம் பெளத்த மதத்தின் அறிவுவாத ஒழுக்கவியலுக்கு எதிரான கருத்துநிலையாக அமைந்தது. சமஸ்கிருத சமய இலக்கியங்களில் புலமை பெற்ற பிராமணர்களின் மதநூல் தொடர்பான கருத்துக்கள் அரசர்களின் அங்கீகாரத்தைப் பெற்றன. அக்கிரகாரம் எனப்பட்ட தனித்தனிக் கிராமங்களில் அவர்கள் குடியமர்த்தப்பட்டனர். சோழ ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் பிரமதேயம் என அழைக்கப்பட்ட நன்கொடைக் கிராமங்கள் அவர்களது தனிப்பட்ட வாழிடங்களாயின தனித்து வாழும் இத் தன்மை அவர் களது வாழ்க்கை முறைமையை மட்டும் குறிக்கவில்லை. அவர்களுக்கே உரிய சிறப்பான வாய்ப்புக்களையும் குறித்தது. சமூகத்தின் பிற பகுதியினரிடம் இருந்து தனிமைப்பட்டு கோயிலைக் சூழ்ந்து, சடங்குகளை நிறைவேற்றும் அதிகாரத்துடன் இவர்கள் வாழ்ந்தமை இவர் கள் துய்மையானவர்கள் என்ற அர்த்தத்தையும் கொடுத்தது. இக்காலகட்டத்தில் பிராமணர்கள் கோயில் பூசகர்கள், மதக்கடமையாற்றும் தலைவர்கள் என்ற வகையில் மட்டுமன்றி அமைச்சர்கள், அரச அதிகாரிகள் இராணுவத் தளபதிகள் என்றவகையிலும் ஆதிக்கம் பெற்றவர்களாயினர் (பிள்ளை 1977 : 29).
பிராமணர்களின் மேலாதிக்கமும் , வேதகால இந்துமதத்தின் மேலாண்மைக் கருத்து நிலையும் சமஸ் கிருத வேத இலக்கியங்களும் மற்றும் தர்மசாஸ்திரங்களின் பரவலும் தந்தை வழிக் கருத்துநிலை பரவுவதற்கு தீவிர உந்து சக்தியாக அமைந்தன. சோழர்கால மன்னர்கள் மனுஸ் மிருதியின் அடிப்படையில் நாட்டை ஆண்டமை பற்றிப் பெருமிதம் அடைந்தனர். மனுஸ் மிருதியை அவர்கள் மிக உயர்வாக மதித்தனர். அரசுரிமை நடைமுறைச் சட்டம் ஆகியவற்றுக்குரிய அதிகார ஆவணமாக அவர்கள் அதனைத் கருதினர் (பத்மநாதன் 1988; 116) பிராமணிய மற்றும் உயர்சாதி சமய, சமூக நியமங்களை ஏனைய சாதியினரும் எளிதாக அறியக் கூடியதாய் இருந்தது. இதற்குக் காரணம் அரச, மற்றும்
64

சமய அதிகாரிகளால் (அரசர்களும் பிராமணர்களும்) இம் மேலாண்மை மூலக் கோட்பாடுகள் நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டமையாகும் மேல்நிலையாக்க முறைமை யையும்இதனோடு தொடர்படுத்த முடியும். பொருளாதாரத் தன்மை கொண்ட பிறிதொருகாரணியும் உண்டு பல்லவர் காலப்பகுதியில் பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை வளர்ச்சியடைந்தது.
பொருளாதாரக் கூட்டினால் எற்படும் பரஸ்பர லாபம் இவ்வேற்றுமைக்குத் தூண்டுதலாய் அமைந்தது. (ஸ்ரெயின் 1980 : 83) சோழர் ஆட்சிக்காலத்திலேயே இவ்விரு சாதியினரதும் கூட்டு முயற்சியினால் மாபெரும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன . அதற்கு அரச ஆதரவும் கிடைத்தது இதன்டெறுபேறாக ஏற்பட்ட அரசியல், சமூக, மத உறுதிப்பாடு சமூகரீதியான வேறு பின்விளைவுகளையும் கொண்டிருந்தது. வெள்ளாளர்களும், சமூக ரீதியில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர் களும் பரிராமணர் களை நெருங் கினர் . சமஸ்கிருதத்திலும், வேத நூல்களிலும் அவர்கள் பெற்ற அறிவு அவர்களது அந்தஸ்த்தை மேலும் உயர்த்தியது.
டரி ராமணர் களின் தந்தைவழி உறவு முறைகள் வெள்ளாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனினும் முற்றிலும் எல்லோராலும் அது தழுவிக் கொள்ளப்படவில்லை. சொத்துரிமை பெறவும் சொத்துக்களை உடைமையாகக் கொள்வும் பெண்களுக்கிருந்த உரிமை நீக்கப்படவில்லை விதவை மணத்தடையும், விதவைகளை ஒதுக்கி வைத்தலும் பால்ய விவாகமும் பெரும்பாலான வெள்ளாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனப்பாங்கிலும் சடங்கு சம்பிரதாயங் களிலும் காணப்பட்ட இருமுகத் தன்மைக்கு இதுவே காரணமாயிற்று. சாதி அடிப்படையிலும் பிராந்திய அடிப்படையிலும் தமிழ் நாட்டுப் பெண்கள் வெவ்வேறு நியமங்களைப் பின்பற்றியமைக்கும் இதுவே காரணமாயிற்று. நிருவாகத் தலைநகரங்களை விட்டுத் தூரத்தில் அமைந்த
65

Page 36
தமிழ்நாட்டுப் பிரதேசங்கள் இக்கலாசாரப் பாதிப்புக்கு மிகக் குறைவாக உட்பட்டன.
இக்காலகட்டத்துக் கருத்தியல் நிலை உளவாக்கத்தில் உற்பத்தி முறையின் செல்வாக்கையும் பாதிப்பையும் பற்றிப் பேசுகையில், உற்பத்திமுறை வகைமைபற்றி ஆய்வாளர்கள் மத்தியில் நிலவும் கருத்துவேறுபாடுகளை நாம் எதிர்கொள்ள நேர்கின்றது. இக்காலகட்டத்தில் நிலமான்ய முறையே நிலை பெற்றிருந்தது என்பது பொதுவான கருதுகோளாகும். (வானமாலை, 1968) கத்லீன் கெள (1980:332) ஆசிய உற்பத்தி முறையை "ஒத்த ஒரு உற்பத்தி முறையே நிலவியது எனக் கருதுகிறார். அது பற்றிய நீண்ட விவாதத்தை ஒரு புறம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ஆசிய உற்பத்தி முறையின் பிரதானமான பண்புகளாக தனிஉடைமை இன்மை, விவசாயம் கைவினைத் தொழில் ஆகியவற்றில் அரசின் மேலாதிக்கம், கிராமியத் தன்நிறைவு எளிமையான உற்பத் திமுறை என்பனவற்றைக் இக்காலத்துக்குரியன எனக் கொள்ளலாம்.
இரு அம்சங்களை இக்காலகட்டத்தின் ஆதிக்கப் பண்புகளாக நாம் இனங்காணலாம். ஒன்று மிகுந்த மத்தியத்துவப்படுத்தப் பட்ட ஆட்சி முறைமை, மற்றது உள்ளுர் ஆட்சி அலகுகள் கொண்டிருந்த கணிசமான அளவு சுயாதீனம் இவை இரண்டுக்கும் இடையே இருந்த பரஸ்பரத் தொடர்பு தொடர்ச்சியான, நிலையான, ஒழுங்குமுறைக் குட்பட்டிருந்தது. மத்தியத்துவம் நேரடியான கட்டுப்பாட்டில் அன்றி ஒழுங்கு முறையிலேயே தங்கியிருந்தது. முகாமைத்துவ முறைமை, சடங்குகள், விழாக்கள் பற்றிய விரிவான தகவல்களைத்தரும் அனேக சாசனங்களால் இதனை அறிய முடிகின்றது. பொரு ளாதாரச் செயற்பாடுகளின் ஒழுங்குமுறை சாதியமைப்பில் ஒழுங்குமுறையைத் தோற்றுவித்தது. (சிவத்தம்பி 1988: 220) வேளாள பிராமணக்ககூட்டு சோழ அரசர்களின் நலனுக்காகவே நிகழ்ந்தது. சமூக பொருளாதார மற்றும் சமூக-மையச் செயற்பாடுகளை நிலைப்படுத்தும் நோக்கில் இது அமைந்தது அரசு சுமுகமாகச் செயற்படுவதை இது உறுதிப்படுத்தியது.
66

இலக்கியமாதிரிகள் கண்ணகிக்குப் பதிலாக சீதை
சோழர் ஆட்சிக் காலத்தில் காவியங்கள் இலக்கணநூல்கள், புதிய யாப் வடிவங்கள், கலை வடிவங்கள், என பல்வேறு புதிய அம்சங்கள் தோன்றின. மதச்சார்பற்ற சமஸ்கிருத இலக் கியங்கள் மொழிபெயர் க் கப்பட்டன அல்லது தழுவப்பட்டன.காப்பியங்களும், பிற நீண்ட கவிதைகளும் ஏதோ ஒரு சமயக் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் அவற்றை முற்றிலும் மதச்சார்பு இலக்கியங்கள் எனக் கூறுதல் பொருந்தாது. மதச்சார்பின்மை என்பது இங்கு வேறுபட்ட தத்ததுவார்த்த, சமய இலக்கியத்தையே குறிக்கின்றது. இந்த்த பிரதான போக்குகள் சில இலக்கிய மாதிரிகளையும் கருத்தியலையும் கொண்டிருந்தன. இவை பின்னரும் தொடர்ந்து நிலைத்தன. இக்காலகட்டத்தில் கருத்தியலையும் எண்ணக் கருத்துக்களும் காப்பியங்கள் புராணங்களில் இடம்பெறும் பாத்திரங்களோடு இணைக்கப்பட்டன. இப்பாத்திரங்கள் கதாநாயகிகள் வில்லன்கள் என்ற வகையிலும், சமாதானம் சாந்தி என்பவற்றை ஆக்குபவர்கள், அழிப்பவர்கள் என்ற வகையிலும் இப் போது அமைந்தன. ராணிகளும் இராஜகுமாரிகளும் (மகாபாரதம், ராமாயணம்) ஞானிகளும் முனிவர்களதும் மனைவிமார்களும் (புராணங்கள்) இவ் எண்ணக்கருத்துக்கள் இணைக்கப்படுவதற்குரிய மாதிரிகளாக அமைந்தனர். பால்நிலைக் கருத்துநிலையின் வெளிப்பாடுகளாக அவை அமைந்தன. தந்தைவழி முறைமையை நோக்கிய போக்கு புறக்கணிக்கப்பட முடியாதது. சமஸ்கிருத மொழி பரவலாகக் கற்பிக்கப்பட்து. அம் மொழியைக் கற்பதும் பயன்படுத்துவதும் ஒரு அரிய வாய்ப்பாகக் கருதப்பட்டது.
பலருஷமணம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஒரு மகாபாரதக் கதையை அடிப் படையாகக் கொண்டு மிகப் பிரபலமான சமஸ்கிருத நாடகமான, காளிதாசரின் சாகுந்தலம் எழுதப்பட்டது. மூலக்கதையின்படி கதாநாயகியான திடசித்தம் கொண்ட சகுந்தலை தமக்குப் பிறக்கும் மகனுக்கே
67

Page 37
அரசுரிமை கிடைக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், அரசனோடு காதல் உறவு கொள்கின்றாள் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகாசிரியரான காளிதாசரின் கையில் சகுந்தலை அடக்கமும் கீழ்ப் படிவும் உள்ளவளாகவும் ஆதரவற்றவளாகவும் தன்விதிக்குக் கட்டுப்பட்டவளாகவும் சித்திரிக்கப்படுகிறாள். இன்று காளிதாசரின் சகுந்தலை அங்கீகாரம் பெற்றுவிட்டாள் "அதற்கு ஆதரவான ஒரு தெரிவு செயற்படுத்தப்பட்டது" (தாப்பர் 1987; 3).
இராமாயணத்தில் சீதையின் பாத்திர உருவாக்கம் பிறிதொரு உதாரணமாகும் பல்வேறு ராமாயணக் கதை மரபுகள் வழக்கில் உள்ளன. "மூல ராமாயணத்தில்" (சக்ரவர்த்தி 1983:70 74) கணவன் மனைவியரிடையே விசுவாசம் இழக்கப்படுதல், தீக்குளித்து தூய்மை நிரூபித்தல் ராமன் சீதையை நிராகரித்தல் என்பன பற்றிய ஓர் எளிமையான கதையாகும். சமண மரபின்படி இறுதிக் கட்டத்தில் இரட்டைக் குழந்தைகளுடன், சீதையை ராமன் சந்திக்கும் போது, அவளுடைய கற்புடைமையை நிரூபிப்பதற்காகத் தீக்குளித்து வரும்படி அவன் கேட்கிறான். சீதை தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறாள் ராமனையும் இரண்டு’குழந்தைகளையும் கைவிட்டு சமணத்துறவியாகின்றாள். சீதை பற்றி ஒரு நாடோடி மரபு தந்தைவழி நியமத்தை முற்றாக நிராகரிப்பதாக அமைக்கின்றது. அக்கதையின்படி குழந்தைகளின் தந்தை வழிப்பாரம்பரியத்தைக் கைவிட அவள்தீர்மானிக்கிறாள் தந்தையின் உரிமைககளை
முற்றாக நிராகரித்து குழந்தைகளுக்கு ஒரு தாய்வழிப் பாரம்பரியத்தைக் கொடுக்கின்றாள். தன்னை அவமரியாதை செய்த ராமனிடம் தான் திரும்பிப் போகமாட்டேன் என்கிற1ள் தன் கற்புடைமையை நிரூபிக்கத் தீக்குளித்து தன்துயரங்களுக் கெல் லாம் காரணமான அரண் மனை யை வரி டட் டு வெளியேறுகிறாள்.(சக்கரவர்த்தி 1983: 72).
வால்மீகியின் சீதை புதுமாதிரியானவளர். ஒரு பிராமணியப் படிமம். தன்னடக்கம் உடையவள், சாதுவானவள். மதச்சார்பற்ற பாரம்பரியக் கதை ஒன்று ஒரு புனிதப்பிரதியாக மாற்றப்படும்
68

போது அது கூறும் சமுதாயப் பண்பிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இக்கதையின் படி ராமனும் சீதையும் விஷ்ணு, லட்சுமி ஆகிய தெய்வங்களின் அவதாரங்கள். சோழ மன்னனின் அரசவைக் கவிஞனான கம்பன் வால்மீகியின் கதையையே தேர்ந்தெடுத்தான். ஏனெனில் அக்காலத்தில் அரசவையில் பிராமணர் களின் சமஸ் கிருதமொழியே மேலாண்மை பெற்றிருந்தது. சமூகவாழ்வில் பெண்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளும் அக்காலத்தில் மேலாண்மை அந்தஸ்துப் பெற்றிருந்தன. இக் கதையைத் தழுவிய கம்பன் தன் பங்குக்கு சீதையின் கற்புருமாதிரியை சில அம்சங்களின் மேலும் மெருகுபடுத்தியுள்ளான்.
தாய் வழிப் படிமங்களை ஓரங் கட்டும் இப் போக்கின் மிகமுக்கியமான விளைவு கண்ணகிவழிபாடு ஓரங்கட்டப்பட்ட மையாகும். கண்ணகி கொண்டாடப்பட்டமைக்கு அவளது கற்பே காரணமாக அமைந்தது. அவளுடைய நடத்தையில் இருந்த தீவிரமும் இதற்கு பிறிதொரு காரணமாகும். சமூகத்தின் செயற்பாடுள்ள பிரஜை என்ற வகையில் தன் நீதி உரிமை களுக்காக அவள் அன்று வன்முறையுடன் போராடினாள். அரச சபையில் அரசனுடன் வாதிட்டாள், தன் வழக்கைத் தானே பேசினாள். சான்றுகளின் மூலம் அரசன் அநீதி புரிந்தான் என்பதை நிரூபித் தாள் அரசனும் அரசவையும் திகைப்படைந்தாலும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டி இருந்தது.
கணவனை இழந்த கண்ணகியை இவை சமாதானப்படுத்த வில்லை. அவள் இராச்சியத்தையே அழித்து விடுகிறாள் (இவ்வகையில் அவள் நீதியின் முன் உதாரணமாகத் திகழ்ந்தாள்) அவளது இந்தப் படிமம்தான் இலங்கையில் சிங்களவர் மத்தியில் பத்தினி வழிபாடாகக் கொண்டாடப்பட்டது. இந்தியத் தமிழ்ப் பிரதேசத்தில் ஒரு காலத்தில கண்ணகியின் படிமம் மிகப்பிரபலமாக இருந்தது. சிலப்பதி காரத்தின் மூலம் கற்புத் தெய்வமாக எழுச்சியடைந்த கண்ணகி வழிபாடு
69

Page 38
இலங்கையிலும் பரவியது ஆனால் தமிழகத்தில் இவ்வழிபாடு நிலைத்து நிற்கவில்லை. இன்று இலங்கையிலும் கண்ணகி ஒரு சிறு பாரம்பரியத்துக்குரிய தெய்வமாக மாறி இருப்பது ஓர் முரண் நகையாகும். பல்லவர் சோழர் காலத்தில் பத்தினி வழிபாடு சீதை மற்றும் ஏனைய பெளராணிக கற்புடைப் பெண் டிரான சாவித்திரி, அருந்ததி முதலியோரின் படிமங்களால் மறைக்கப்பட்டுவிட்டது. பிராமணியத்தினதும் சங்ககால/ சங்கமருவிய காலத் தமிழ் மரபினதும் மேலாதிக்க கருத்து நிலையில் கற்புக்கோட்பாடும் ஓர் அம்சமாக இருந்தது என்ற வகையில் இந்த இருமுகத்தன்மை வியப்பூட்டுவதாகும். எனினும் அதற்காக விளக்கம் எளிமையானது. கற்பு ஆதிக்கக்கருத்து நிலையின் ஒரு பகுதியாக இருந்ததெனினும் கண்ணகி வழபாடு பிராமணியச்சார் பற்றிருந்தது அது. அதனை "சிறு பாரம்பரியத்துக்குள்" தள்ளிவிடப் போதுமான காரணமாகியது. சிலப்பதிகாரம் ஒரு தமிழ் சமணக் கவி ஒருவரால் இயற்றப்பட்டது. மேலும் கண்ணகி ஒரு சமணப் பெண்ணாகக் கருதப்பட்டாள்."சிறு பாரம் பரியத்தைச் சேர்ந்த சடங்குகளும் கலைவடிவங்களும் இவ்வாறே மேலாண்மை மூலக் கோட்பாட்டுக்கு ஏற்ப உயர் நிலையில் இருந்து தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டன. சுகந்திரப் போராட்ட காலத்தில் காந்தி பெண்களுக்குரிய இந்திய தேசிய மாதிரியாக தூய அடக்கமுடைய சீதையின் படிமத்தையே முன்மாதிரியாகக் கொண்டனர். இது சாதுவான சீதையின் படிமம் மீண்டும் மேலாண்மை பெற காரணமாயிற்று. கண்ணகிக்கும் சீதைக்கும் இடையே நிகழ்ந்த மேலாண்மைக்கான போராட்டம் நீதிக்கான தீவிரமான போராட்டத்துக்கும் அடங் கிப் போதல் செயற்பாடின் மை ஆகியவற்றிக்கும் இடையே நடந்த போராட்டமாகும். பால்நிலை உறவில் அடங்கிப் போகும் பெண்மைக்கும், துணிவும் தைரியமுள்ள பெண்மைக்கும் நடந்த போராட்டத்தைக் குறிப்பதாகும். எனினும் கண்ணகி சீதை ஆகிய இரு படிமங்களுக்கும் கற்பு நெறி பொதுவான பண்பாகவே அமைந்தது.
70

மணமகனுக்குப் பணமாகவும் சொத்தாகவும் கொடுக்கப்படும் சீதனம் பிற்காலத்தில் தந்தை வழி எதிர்பார்ப்பில் ஏற்பட்ட ஒரு திருப்பமாகும். சாசனச் சான்றுகள் விருப்பார்வத்துக்குரிய சில தகவல்களைத் தருகின்றன. ஒரு சாசனம் (சாசனம் 1
1925) மனைவியின் சொத்தை விரயமாக்கியமைக்காக கணவன் அவளுக்கு நட்ட ஈடு வழங்கவேண்டி இருந்தமை பற்றிக் குறிப்படுகின்றது. தனது பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட மனைவியின் சொத்து தனியாகப் பேணப்பட்டது என்ற உண்மையை இது நெறிப்படுத்துகின்றது.சோழர் காலத்திலும் பெண்கள் தங்கள் சொந்தப் பெயர்களில் பல வேறு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர். (சாசனம் 4: 1936; 7) மேலும் தங்கள் மூலதனத்தை முதலிடு செய்து அதன் வட்டியை அறக்கொடைகளுக்கு அளித்துள்ளனர். (சாசனம் 5 : 1925). பெண்கள் தங்கள் தந்தையிடம் இருந்தும் கணவரிடம் இருந்தும் (சாசனம் 3:1926) சொத்துக்களைப் பெற்றனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. பெண்களின் இந்த உரிமை பின்னர் நீக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் சொத்துரிமை பெறுவது முற்றாகத் தடுக்கப்பட்டது. இலங்கைத்தமிழ்ப் பெண்கள் இன்று கூட சொத்துரிமையும் அதைத் தனித்துப் பேணும் உரிமையும் உடையவர்களாக உள்ளனர். அவர்களது சம்பிரதாயச் சட்டங்கள் (தேசவழமை) அதற்குச் சான்றாக உள்ளன. இச் சட்டங்கள் பிராமணிய தர்மசாஸ்திரங்களால் அரிதாகவே
பாதிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகாலத்தில் இருந்தே தமிழ்ப்பண்பாட்டின் அமைப்புக்குள் ஒன்றுக்கொன்று எதிரான போக்குகள் காணப்படுகின்றன. இதில் ஒரு தெரிவுக்கிரமம் உள்ளது. இது பொதுவாக எப்போதும் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்காகப் பெரிதும் தந்தைவழிசார்ந்த அமைப்புக்களைத் தெரிவதிலேயே முடிவடைந்தது. சமூக உறவுகளில் அடிக் கடி ஓர் இருமுகத்தன்மை பக்கம் பக்கமாக நிலைபெற்றிருந்தது. ஆயினும் நடைமுறையில் இந்த சிறுபான்மை நடத்தை நியமங்களுக்கு எதிராக தந்தைவழிக் கோலங்களுக்கே சிறப்பு
71

Page 39
அளிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பங்களில் எல்லாம் மேலாண்மை மூலக் கோட்பாட்டின் செயற்பாட்டை (Hegemony)நாம் காணமுடியும்.
சாதிசார்ந்த பால்நிலை உறவுகள்
சாதிஅமைப்பு, சமூகநடைமுறையில் மட்டுமன்றி அரசியல், பொருளாதார அமைப்புகளிலும் செயற்பாடு உள்ள வகையில் மிகவும் உறுதிப்பாடு அடைந்தது. பால்நிலை எதிர்பார்ப்புக்கள் ஒரு பெண்ணின் சாதிக்கு ஏற்ப வேறுபட்டதோடு அவை இன்னும் இறுக்கம் அடைந்தன. " சதி" (உடன்கட்டைஏறுதல்) ஒரு சத்திரியப் பெண்ணின் சாதிசார்ந்த தருமம் ஆகியது. விதவை ஒழிப்பும் குழந்தை மணமும் ஒரு பிராமணிய விதியாக மாறின. பொதுவான அடங்கிப்போதலும் ஒதுங்கிப்போதலும் நடுத்தரச் சாதிகளின் நியமமாக மாறின. ஆண்களுக்கு பாலியல் சேவை புரிதல் நுண்கலைகளுடன் தொடர்புடைய பெண்களின் (தேவதாசி) சாதிசார் தொழிலாகியது. கட்டுப்பாடுகள் குறைந்த அல்லது கட்டுப்பாடுகளேயற்ற சுயாதீனமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த குறைந்த சாதிப் பெண்கள் இணங்கிப்போகத்தக்கவர் என இழிவுபடுத்தப்பட்டனர். இது ஒரு சாதிக்கே உரிய நடத்தையாக அவர்களது சாதியுடன் தொடர்புபடுத்தப்பட்டது. பிற்காலத்தில் சாதிக்கே உரிய நடைமுறைகளாக அங்கீகரிக்கப்பட்ட சாதி தொடர்பான பாலியல் உறவுகள் வடிவம் பெறத் தொடங்கின. ஒரு மேல் நிலையாக்கக் கிரமத்தின் மூலம் அரச குடும்பத்துக்குரிய சாதி முறைமை பொதுமக்களாலும் பின்பற்றப்பட்டது. சாசனம் ஒன்று விதவைத்தத்துவத்துக்கு அஞ்சி ஒரு பெண் உடன்கட்டை ஏறியது பற்றிக் கூறுகின்றது. (சாசனம் : 6 : 1906) இதன்படி விதவை ஒழிப்புச் சம்பிரதாயம், தாங்கள் உயர் சாதியினர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக வேளாளப் பெண்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிகிறது.
பால்நிலைத்தன்மைகள் ஒரேஸ்திரமானவை அல்ல. அவற்றின் கருத்தியலும் கோட்பாடுகளும் முரண்பட்ட நிலையில்
72

மாறிக்கொண்டே போகின்றன. சமூக அரசநிலைகளுக்கும் உற்பத்தி முறைகளுக்கும் மேலாண்மைக் கோட்பாட்டுக்குரிய (Theory of Hegemony) gait 60). Dó(g, 9600Tris J.61 to 9,6061 மாறுபடுகின் றன . இந்த மாறுபடும் தன் மை பல முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
சாசனச்சான்றுகள்
1. A.R.E39 of 1925 Annual Reports of Epigraphical Department of the Archeological Survey Southern Circle, Government of Madras. 2. Epigraphica India Vol XXI part VP 193, Archives of Madras. 3. A.R.E 94 of 1926 Annual Reports of Epigraphical Department of the Archeological Survey Southern Circle, Government of Madras. 4. A.R.E 17 of 1936-7 Annual Reports of Epigraphical Department of
the Archeological Survey Southern Circle, Government of Madras. 5. A.R.E 492 of 1925 Annual Reports of Epigraphical Department of the Archeological Survey Southern Circle, Government of Madras. 6. A.R.E 156 of 1925 Annual Reports of Epigraphical Department of
the Archeological Survey Southern Circle, Government of Madras. 8. S.I.T.I. Vol XIII South Indian Temple Inscription, No 251 P281
Archives of Government of Madras., Law Department, 1953-7 9. A.R.E. 136 of 1934 Annual Reports of Epigraphical 137-138 of 1935
Department of the Archeological Survey Southern Circle, Government of Madras.
73

Page 40
நமது வருங்கால சந்ததியினரை அச்சமில்லை என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம்! (1)
செல்வநாச்சியார் பெரிசுந்தரம்
(காந்தி மகாத்ம7வின் ஆசிர்வாதத்தோடு பண்டித ஜவஹர்லி/7ல் நேரு அவர்களால் இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் நலன் பாதுகாப்/க்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியக் க7ங்கிரசின் மாதர் பகுதியை இலங்கை இந்திய மாதர் காங்கிரஸ் என்ற பெயரே7டு 1945ம் ஆண்டு நவம்// // ப 35உ
ஞாயிற்றுக்கிழமை வத்து காமம் பன் விலையில் அங்குர/7ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அந்த அங்குர7ர்ப்பண வைபவத்தில் பூனிமதி செல்வநாச்சிய7ர் பெரிசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழி விலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றே7ம்)
இம் மாநாடு இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் சரித்திரத்தில் ஓர் புதிய தசாப்தமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் வாழும் மொத்த ஜனத்தொகை அறுபது லட்சமாகும் இவர்களில் எட்டு லட்சம் பேர் இந்திய வம்சா வழியினர் இதில் தேயிலை றப்பர் தோட்டங்களில் அமர்ந்து தொழில் புரியும் தமிழ் மக்களின் தொகை ஆறரை லட்சம். அவர்களில் சரிபாதி பெண்கள். இப்பெரும் மாதர் சமுதாய த்திற்குத் தொண்டு செய்யவே இந்த மாதர் ஸ்தாபனம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
' 15/5/85 வீரகேசரியிலிருந்து எடுக்கப்பட்டது. 1945ம் ஆண்டு சொற்பொழிவு ஒன்று வரலாற்று முக்கியத்துவம் கருதி மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

இந்த ஆறரை லட்சம் பேர்கள் சுமார் 2000 தோட்டங்களில் வேலை செய்து குடித்தனம் செய்துவருகிறார்கள்.ஐந்தரை லட்சம் ஏக்கர்கள் அடங்கிய தேயிலைத் தோட்டங்களிலும், ஆறரை லட்சம் ஏக்கர்கள் அடங்கிய றப்பர் தோட்டங்களிலும் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் பிறந்த நிரந்தரவாசிகள்
1915ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கண்டி ராஜ்யத்தைக் கைப் பற்றிய பின் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்க முற்பட்டார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் உதவ இந்த நாட்டில் யாரும் முன்வராததால் தென்னிந்தியாவிலிருந்து தமிழ்மக்களை தொழிலாளர்களாக அழைத்து வந்தார்கள். அப்பொழுது அந்தத் தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றில் இறங்கி கரடி, புலி, யானைகள் நடமாடும் காட்டு வழியாக கால் நடையாகவே நடந்து பன்னாகம் என்னும் மாத்தளை ஊரில் வந்து கூடாரம் போடுவார்கள். தொண்டைமானாற்றிலிருந்து பசியாலும், பனியாலும் விலங்குகளுக்கு இரையாகியும் மடிபவர்கள் அனேகள். தப்பிப்பிழைத்தவர்கள் தான் பன்னாகமத்திலிருந்து பல மலைப்பகுதிகளுக்குச் செல்வார்கள். ரயில் வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் அங்கும் நடந்தே சென்று தேயிலையும் ரப்பரையும் உண்டு பண்ணினார்கள்.
அந்தக்காலத்தில் அங்கு அச்சுத வருடத்தில் கடும்பஞ்சத்தில் இந்தத் தொழிலாளருக்கு ஒரு வருடம் வரை சம்பளம் கொடுக்கப்படவில்லை. என்றும் அவர்கள் தழைகளையும் இலைகளையும் அவித்துச் சாப்பிட்டே காலங்கடத்தினார்கள் என்று ஒரு நீதிபதி தன் தஸ்தாவேஜுகளில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிப்பாடுபட்டு இலங்கைமண்ணுக்கு இரையானவர்கள் இலட்சம் பேர்கள். அவர்கள் செய்த தியாகத்தின்பயனாகத்தான் இலங்கை இவ்வளவு செழிப்பும் சுபீட்சமும் பெற்றிருக்கிறது சரித்திரம் கண்ட உண்மையாகும்.
75

Page 41
"பன்னிரண்டடி நீளம் பத்தடி அகலம் கொண்ட ஒரு சிறு அறைதான் தொழிலாளரின் குடியிருப்பு. ஆகவே உட்காரும் அறை உடுக்கும் அறை படுக்கும் அறை சமையல் அறை, பண்டகசாலை எல்லாம் அதுவே, அந்த அறைக்கு ஒரே வாசல் ஒரே ஜன்னல் ஒரே தாழ்ப்பாள். இந்தப் பத்துப் பன்னிரெண்டடி மாளிகைக்குள் ருசன், மனைவி வாலிபப் பெண், பையன்கள் குழந்தைகள் எல்லோரும் கும்பலாகக் கூடி வாழ்ந்தார்கள். இந்தப் பரிதாப நிலையே ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.
2300 தோட்டங்களில் அரசின் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 919 தான் உண்டு. பத்து வயதிற்குட்பட்ட வர்களுக்கு கல்வி கட்டாயமாக இருந்தும் பத்துக்கு ஐந்து பிள்ளைகளே பள்ளி செல்கின்றனர். 100க்கு 60க்கும் அதிகமானோர் இரண்டாம் வகுப்புக்குமேல் படிக்காதவர்கள் 100க்கு 3 பேர் கூட ஐந்தாம் வகுப்பில் படிக்கவில்லை.
அன்றும் இன்றும் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உண்மையாய் உழைக்கும் பாட்டாளிகளுக்கு தங்கள் சொந்தபலமே வீர சக்தி! பெண்மக்கள் பொறுமைக்கு உறைவிடமாயிருப்பினும், எமது வீரம் ஆடவர்களிலிருந்து குறைந்ததல்ல, மண்டோதரி, சாவித்திரி, மங்கம்மா கஸ்தூரிபாய் காந்தி, கமலா நேரு ஆகியவர்களின் நாமம் நமக்கு முன்மாதிரியாயிருக்கின்றன. நமது வருங்காலச் சந்ததியினரை நாம் வீரமிக்கவர்களாய் அச்சமில்லை அச்சமில்லை , அச்சமென்பதில்லையே என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போமாக!
இன்று இங்கு பூரீமதி தொண்ட மான் அவர்கள் உயர்த்தியகொடி பட்டொளி வீசிப்பறப்பதைப் பாருங்கள். அவ்வம்மையாருக்கு எனது வந்தனம் இந்திய வம்சாவழி மாதர்களை சலியாது தட்டி எழுப்பிய பெருமை செல்வி சிவபாக்கியம் பழனிச்சாமிக்கே உரியதுவரவேற்புக்கமிட்டித்
76

தலைவியென்ற முறையில் ஊக்கத்தோடு தொண்டு புரிந்த டாக்கடர். பூரீமதி சரோஜினி ராமானுஜம்அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக.
77

Page 42
பெண்களும் அரசியலும்
அரசியல் மாணவி
பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள், வெறும் பிள்ளை பெறும் பாத்திரங்கள். அவர்களுக்குரிய இடம் வீடு தான் , மற்றயதில் பொதுஜன சேவைத் துறைகளிலோ ஈடுபடலாயக்கற்றவர்கள். சரியான பதவிகளை வகித்து ஆண்களைப் போல கடமையாற்ற லாயக்கற்றவர். ஆற்றலோ சாமர்த்தியமோ பெண்களுக்குக் கிடையாதென்றெல்லாம் சொல்லப்படும் கொள்கைக்கு இனி இடமில்லை. அக்காலம் மலையேறிவிட்டது ஆண்களுடன் பெண்களும் சரிசமமாக அநேக துறைகளில் ஈடுபட்டு தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். ஒவ்வொரு நாட்டிலும் ஆண்களுடன் விழிப்புற்றுப் பெண்களும் தங்கள் உரிமைகளைப் பெற்றுக் கடமையைச் செய்து வருகிறார்கள் பிரதானமாக ரஷ்யாவைப் பாருங்கள். அங்கு ஆண்களுடன் பெண்களும் அநேகத் துறைகளில்முன்னேறியிருக்கிறார்கள். மற்ற நாடுகளைவிட பெண்களின் நிலை ரஷ்யாவில் மிகவும் உயர்ந்திருக்கலாம்.
பக்கத்திலுள்ள மகத்தான இந்தியாவைப் பார்ப்போம். அங்கும் பெண்கள் பல முக்கிய துறைகளில் முன்னேறி வருகிறார்கள். விடுதலை பெற்ற இந்தியாவில் அவர்கள் வருங்காலத்தில் இன்னும் உன்னதமான நிலையை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. சுகந்திர இந்தியாலில் இன்று அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் பெண்களை கெளரவிப்பவர்கள்.
வீரகேசரி 1947. பெண்களின் அரசியல் உணர்வுகள் 1947ம் ஆண்டு எப்படி இருந்தது என்பதற்கு அரசியல் மாணவியின் இக் கட்டுரை ஒரு சான்று

பெண்கள் உரிமைக்காகப் போரிட்டவர்கள். பெண்களை உயர்த்தப் பாடுபடுகிறார்கள். இன்று இந்தியா விடுதலை பெற்று வரிளங்குகிறதென் றால் அதற் குக் காரணம் தேசசேவையலிடுபட்ட பெண்களின் தொண்டே எனலாம். மகாத்மா தலைமையில் எத்தனையோ பெண்கள் சக்தியாக்கிரகம் செய்து தேச விடுதலைக்காக அடிபட்டிருக்கிறார்கள். உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அஹிம்சையில் பூரண நம்பிக்கையில்லாத புரட்சிக் கொள்கையுடைய பெண்களும் இந்தியாவின் விடுதவைக்காக அடிபட்டிருக்கிறார்கள். சிறை சென்றிருக்கிறார்கள். 1942ம் வருடம்கடந்த ஆகஸ்டு புரட்சியின் போது பூரீமதி அருணா ஆஸப் அவி போன்றவர்கள் தலை மறைவாக இருந்து அந்நிய அரசாங்கத்தைக் கவிழ்க்க பெரிதும் பாடுபட்டனர் என்பதை யாரால் மறுக்க முடியும்? அதே சமயத்தில் இந்தியாவுக்கு வெளியிலும் பாரத நாட்டு வீராங்கனைகள் சுபாஷ்பாபு தலைமையில் அருந்தொண்டாற்றி யிருக்கிறார்கள். ஜான்ஸிராணி படையில் சேர்ந்து ராணுவ சேவையும் செய்தார்கள். பூரீமதி லட்சுமி தேவி இந்திய தேசீய ராணுவத்தில் முக்கிய பதவி ஏற்று நிர்வகித்து புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலை பெற்ற இந்தியா பெண் களை எப்படி கெளரவிக்கிறதென்பதற்கு உதாரணம் வேண்டுமா? ஐக்கிய மாகாணத்தின் கவர்னர் பதவியை சரோஜினி வகிக்கிறார். பூரீமதி விஜயலட்சுமி பண்டிட் இந்தியாவின் இணையற்ற புத்திரி என்று சொல்லத்தக்க முறையில் மாஸ்கோவில் இந்திய தூதராகவும்,ஐக்கியநாட்டு மகா சபையில் இந்திய தூதுகோஷ்டித் தலைவராகவும் கடமையாற்றிவருகிறார். இந்திய டொமினியன் அரசாங்கத்தில் பூரீமதி அமிர்தகெளரி அமைச்சர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்திய டொமினியன் மந்திரி சபைக்கு உதவியாக நியமிக்கப்பட இருக்கும் பார் லிமெண்டரி காரிய தாரிசிகளில் ஒருவராக அம் முஸ் வாமிநாதன் நியமிக்கப்படலாம் என்று ஓர் செய்தி கூறுகிறது. இன்னும் இந்தியாவில் பொதுவாழ்வில் எவ்வளவோ பெண்கள் ஈடுபட்டு,
79

Page 43
பொறுப்பான பதவரிகளை வகித்து வருகிறார்கள் . வருங்காலத்தில் பெண்களின் நிலை அங்கு இன்னும் உயரும் என்று சொல்ல வேண்டியதில்லை.
இனிநம் பூரீலங்காவை நோக்குவோம். இங்கு பொதுவில் பெண்களிடையே போதிய அரசியல் மனச்சாட்சி எழுச்சி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் ஓர் 1றம் ஏழைக் குடும்பங்களிலே வறுமையால் கணக்கற்ற பெண்கள் தங்கள் சுய ஆற்றலை பயன்படுத்தி மேலே வருவதற்கு முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போதிய படிப்பு வாசனைக்குச் சரியானபடி வழிசெய்யப்பட வில்லை. பெண் சமூகம் உயர சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வில்லை. உதவியும் இல்லை. படிக்காத பெண்களின் பாடு இவ்விதமிருக்கிறது. படித்த பெண்களோ நாட்டின் நலனிலோ, சமூகசேவையிலோ அதிக கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. மேல்நாட்டு நாகரிக மோகத்தில் 'மேக் அப் செய்து கொள்வதிலும், ஆடை அலங்கார பந்திகளில் அதிக நேரத்தைக் கழிப்பதிலும் மோட்டார்களில் சென்று கடைகளில் (ஷாப்பிங்) ஆடம்பரப் பொருட்களை வாங்குவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் ஆனால் எல்லோருமே இவ்விதம் காலம் கழிக்கிறார்கள் என்று சொல்லவில்லை. சமூக சேவையில் ஆர்வமுடன் தொண்டு செய்யும் மாதர்களும் இல்லாமல் இல்லை. சில சமூக சேவா சங்கங்களின்மூலம் பெண்கள் தொண்டு செய்துவருகிறார்கள். ஆனால் நம் நாட்டு அரசியலிலே பெண்கள் அதிகமாகப் பங்கெடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், இப்பொழுது சோல்பரித் திட்டப் படி 1 / திய அரசியல் அமைப் / அமுலுக்கு வந் திருக்கிறது . விரைவரில் டொமினியன் அந்தஸ்து வரப்போகிறது வந்துவிட்ட தென்றெல்லாம் இப்பொழுது சொல் லப் படுகிறது. சோல் பாரித் திட்டப் படி நாம் பார் லிமெண்டை (ஜனப் பிரதிநிதிகள் சபை, செனட் ) அமைத்துவிட்டோம் பார்லிமெண்ட் தேர்தலில் ஒருசில பெண்களாவது துணிவுடன் போட்டி போட முன்வந்ததைப்
80

பாராட்டுகிறேன். ஆனால் பார்லிமெண்ட் தேர்தலில் ஒரேஒரு பெண்மணிதான் வெற்றிபெற்றிருக்கிறார். ‘எங்கள் சென்னை சட்டசபையில் ஸ்திரீ அங்கத்தினர் இருக்கிறார்கள் இலங்கையின் ஜனட் பிரதிநிதிகள் சபைக்கு ஒரேஒரு பெண் அங்கத்தினர்தான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் . இந்நிலை மிகவும் வருந்தத்தக்கது. இங்குள்ள ஸ்திரிகள் தங்கள் வாக்குகளை அதிகமாக அளித்து அதிகமாய் பெண் அங்கத்தினர்களை பார்லிமெண்டிற்கு அனுப்பவேண்டும்" என்று இங்குவந்து சென்ற மாஜிசென்னைசுகாதார மந்திரி திருமதி ருக்மணி லட்சுமிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார். படித்த பெண்கள் நாட்டின் சேவைக்காக அரசியலிலும் ஈடுபட்டு உழைக்க வேண்டும். அப்பொழுது பார்லிமெண்டை கைப்பற்றுவது அவர்களுக்கு ஒரு பெரிய காரியமல்ல.
இலங்கையின் பழைய அரசாங்க சபையில் காலஞ்சென்ற பூரீமதி மொலமுரே போன்றவர்கள் அங்கம் வகித்திரு க்கிறார்கள். சோல்பரித்திட்டத்தின்படி பிறந்துள்ள இட்புதிய பார்லிமென்டில் ஒரே பெண் அங்கத்தினர்தான் இடம் பெற்றிருக்கிறார். அவர் பெயர் பூரீமதி பிளரான்ஸ் சேனநாயகா ஆறு குழந்தைகளுக்குத்தாய், ஆசிரியைத் தொழில் நடத்தி அனுபவம் பெற்றவர். சிங் களம் ஆங்கிலம் முதலிய பாஷைகளில் திறமையுடன் பேசும் ஆற்றலுள்ளவர். தமிழும் சிறிது பேச அவருக்குத் தெரியுமாம். அரசியலிலே முற்போக்குக் கொள்கையுடையவர். இலங்கையின் பொதுநலனுக்காக இவர் பெரிதும் போராடுவர் என்று சொல்லவேண்டியதில்லை. இலங்கை செனெட்(சபை)யில் இரு ஸ்திரிகள் அங்கம் வகிக்கின்றார்கள். ஒருவர் அரசாங்கசபை அங்கத்தினராகவும் இருந்திருக்கிறார்.
மற்றோர் செனெட் அங்கத்தினரின் பெயர் மிஸ் ஸிஸ்ஸி குரே இவர் சமூக சேவையில் பொதும் ஆர்வமுள்ளவர், பல ஆண்டுகளாகவே சமூகசேவை செய்து வந்திருக்கிறார். அரசியலிலே முற்போக்குக் கொள்கையைப் பின்பற்றுகிறவர்.
81

Page 44
சமுதாய சேவையின் மூலம் பெரிய காரியங்களைச் செய்துமுடிக்க விரும்புகிறவர்கள், அரசியலிலும் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று அபிப்பிராயப் படுகிறவர்.இம்மூன்று ஸ்திரிகளும் இலங்கையில் அரசியல் வாழ்வை மேற்கொள்ளவந்திருப்பதை நாம் பாராட்ட வேண்டும். ஆண்களுடன் பெண் களும் பல துறைகளிலும் டரின் வாங்காமல்போட்டிபோட்டுகொண்டு சேவை செய்ய வேண்டும்.
82

பெண்ணியம் போட்ட பதியங்கள். அமெரிக்காவில்
சித்து மா. சாலமன்
பெண்ணியம் என்பது பெண் விடுதலை இயக்கத்தை வழி நடத்திச் செல்லும் தத்துவமும் வாழ்க்கை முறையுமாகும். பெண்ணியம் என்ற இந்த இயக்கம் ஒரு நீண்ட வரலாற்றை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த இயக்கத்திற்கான விதை கி.பி 1400களில் விதைக்கப்பட்டது. மார்க்சியத்தைப் போலவே பெண்ணியமும் 19ம் நூற்றாண்டுகளில் ஈரோப்பாவில் தோன்றிய ஒரு சிந்தனையேயாகும். 18ம் நூற்றாண்டுக் காலத்திலும் அதற்கு முன்பும் பெண்விடுதலை பற்றிய சிந்தனை அவ்வப்போது முளைவிட்டு துளிர்விட முயன்றிருந்தாலும், சரியாகச் சொல்வதெனில் 19ம் நூற்றாண்டில் தான் பெண்ணியமும் முறையான வடிவத்தில் பதியம் போடத்து வங்கியது.
பெண் கள் தங்களை அவமதிக் கும் , துன்புறுத்தும் ஆண்வர்க்கத்தை எதிர்த்து போராட நினைத்த நிலை. நாடுகளின் மொழிவாரியாக இவ்வுணர்வு இருந்ததாகக் கூறலாம். பாலியல் உறவு என்பது வெறும் உடல் கூறு சம்பந்தமானது என்று மட்டும் நினைத்த உணர்வு மாறி, அதை நாகரீகமாக கருதிய போக்கு; ஆண்வாக்கத்தினரின் குறுகிய மனப்பான்மையையும், பாரபட்ச மனப்பான்மையையும், எதிர்த்து பெண்கள் சமூகத்தில் உண்மையான அந்தஸ்தும் மதிப்பும் பெறவேண்டும் என்ற நோக்கு உண்டான இந்த மூன்று போக்குகள் கி.பி. 1400 களிலிருந்து கி.பி 1789 வரையிலான காலகட்டங்களில் உருவாயின என்று சொல்லலாம்.
நன்றி ; பெண்ணியம் போட்ட பதியங்கள்

Page 45
1848ம் ஆண்டில் தான் பெண்கள் உரிமைகள் பற்றிய முதல் 9| 5560).J., ( First declaration of women's Rights) (GJ 607 Sri Li TaSai பெண்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. 1860ம் ஆண்டில் பிரிட்டனில் திருமணமான பெண்களின் சொத்துரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்ணியவாதிகளும் நீண்ட நெடியதான பெண் விடுதலைக்கான போராட்டத்தின் முதல் கட்டத்தைக் கடந்து கொண்டிருந்தனர் இந்த முதல் கட்டமுமே அடிமை ஒழிப்பு பற்றிய உலகளவிலான மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பின்னர் தான் ஏற்பட்டது.
பெண்ணியத்தின் இந்த முதல் காலகட்டம் பெண் சமூகத்தில் ஒரு பெரும் சிந்தனை மாற்றம் உருவாக ஒரு முக்கிய துாண்டுகோலாக இருந்தது என்றால் பின் வந்த கால கட்டங்களானது அவர்களின் கருத்தை செயல்படுத்தி வெற்றி காண வைத்தது என்று சொல்லலாம். இப்படி வளர்ந்து வந்த இந்த வரலாற்றுச் சூழலில் இரு பேரலைகள் மகாப்பிரளயம் போல் சீறிப் பாய்ந்து வந்தன. அப்படிச் சீறிப் பாய்ந்து வந்த அந்த இரண்டு பேரலைகளில் ஒன்றான முதல் அலையானது 1830களில் அமெரிக்காவில் தோன்றிப் பரவிப்பரவி ஈரோப்பாவிற்கு விரைவாகப்பரவியது.
பெண்கள் இயக்கம் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெண்களுக்கான அரசியல் மற்றும் சட்டரீதியான உரிமைகள், கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான போராட்டப் பிரச்சாரமாக மாற்றம் கண்டது.
சூசன் அண்டனி, அண்டாய்னட் ப்ரெளன், லூசிஸ்டோன் போன்றவர்களை முக்கியமாகக் கொண்ட ஓர் பெண்ணிய இயக்கம் 1830களில் உருவானது இந்த இயக்கத்தின் நோக்கமாக ஆண்களை எதிர்த்து பெண்களின் உரிமையை
நிலைநாட்டுவதாக அமைந்தது.
84

மார்க்சும் எங்கல்சும் உலகத்தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அறைகூவல் விடத்தொடங்கிய காலத்தில் தான் துவக்க காலப் பெண்ணிய வாதிகளும் 1840களில் லண்டனில் அடிமை ஒழிப்பு மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கவில்லை இதைப் பெண்ணியவாதிகள் மிகக் கடுமையாகச் சாடினர் . பெண்கள் ஒடுக்கப்படுவதை முழுவதுமாக அழிப்பது என்பது அடிமைத்தனத்தை ஒழிப்பதை விட மிக கடுமையானதாகும் என்று சில பெண்ணிய வாதிகள் அப்போது கருத்துத் தெரிவித்தனர்.
செனகாபால்ஸ் மாநாடு
18ம் நூற்றாண்டு காலத்திலும் அதற்கு முன்பும் பெண் விடுதலை பற்றிய சிந்தனை அவ்வப்போது தோன்றியிருந்தாலும் கூட 19ம் நூற்றாண்டில் தான் பெண்கள் இயக்கமும் முறையாக எழுச்சி பெறத் துவங்கியது. 1848ஆம் ஆண்டில் தான் "பெண் கள் உரிமைகள் பற்றிய முதல் அறிக்கை" அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள செனகா பால்சில் நடந்த பெண்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. லூக்கிரியா மாட் மற்றும் எலிசெபத் கேடிஸ் டான்டன் என்ற இரு பெண்ணிய வாதிகள் இம் மாநாட்டை முன்னின்று நடத்தினர்.
1848ம் ஆண்டு கூடிய செனகா பால்ஸ் பேரவையில் எலிசபெத் காடி ஷான்டர் என்பவரால் அமெரிக்காவின் சுகந்திரப் பிரகடனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்களின் உரிமை s 94 fr56) îN' I / (Declaration of the Rights of Women) 6T 6ởT sp gift L DIT 60 ilio கொண்டு வரப்பட்டது. இத் தீர்மானம் பெண்ணியக் கருத்து க் களுக்கு 9| | | | | | | 60 L tu II (g, அமைந்தது . அத்தீர்மானத்தின் கருத்துக்கள் இதோ.
"ஆண் களும் பெண் களும் இயற்கை யரில் சமமானவர்களாக படைக்கப்பட்டுள்ளனர் என்ற
85

Page 46
86
வெளிப் படையான உண்மையை ஏற் றுக் கொள்கிறோம். அவர்கள் மாற்றமுடியாத உரிமை களைக் கடவுளின் மூலம் பெற்றுள் ளனர் இவ்வுரிமைகளுள், வாழ்விற்கும், சுகந்திரத்திற்கும் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கும் தேவையான உரிமைகளைப் பெறவே அரசாங்கம் என்னும் அமைப்பு ஆளப்படுவர்களின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளது. அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறுமெனில்அவ்வரசாங்கத்தால் துன்பப்படுபவர்கள் அவ்வரசாங்கத்திற்குத் தங்கள் ஆதரவை மறுத்துத் தங்கள் பாதுகாப் பரிற் கும் மகிழ்ச் சரி க்கும் உத்தரவாதமளிக்கும் வேறொரு அரசாங்கத்தை நிறுவ வேண்டுமென வலியுறுத்த வேண்டும். இதுவரை அரசாங்கம் செய்த கொடுமைகளைப் பெண்கள் பொறுமையோடு அனுப வரித் திருக்கின் றனர் . இப்பொழுது அவர்கள் தங்களுக்குச் சம உரிமை கோரிப் போராட வேண்டியது அவசியமாகின்றது.
மனித சமுதாயத்தின் வரலாறு ஆண் கள, பெண்களைத் திரும்பத் திரும்பப் புண்படுத்தி, வஞ்சித்து, பெண்களைக் கொடுங்கோல் ஆட்சிக்கு உட்படுத்தியதையே காட்டுகின்றது. இதற்கு ஆதாரமாக ஆண் பெண்களுக்கு வாக்குரிமையை மறுத்திருக்கின்றான். அவள் சம்மதமின்றி இயற்றப் பட்ட சட்டங்களுக்கு கட்டுப்படுமாறு வற்புறுத்து கின்றான். கீழ்த்தரமான ஆண்களுக்குக் கொடுக்கப் படும் உரிமைகளைக்கூட அவளுக்கு அவன் கொடுக்க வில்லை. அவளுக்கு ஒட்டுரிமை மறுக்கப்பட்டதால், அவள் சார்பாகக் கருத்துக்களை எடுத்துரைக்க ஆளின்றி எல்லா வகைகளிலும் அவளைநசுக்குகிறான். அவளுக்குத் திருமணமானால், சமுதாயச் சட்டங் களைப் பொறுத்தவரையில் அவளை இறந்த வளாகவே கருதுகின்றான். அவளுடைய எல்லா

சொத்துரிமை களையும், அவள் ஈட்டும் ஊதியத்தின் மேலுள்ள உரிமைகளைக் கூட, அவன் பறித்து விட்டான் ஒழுக்கக் கட்டுப்பாட்டை பொறுத்தவரை அவளைப் பொறுப்பற்றவளாக ஆக்கியுள்ளான் , அவள் கணவன் எந்தவிதமான தவறுகளையும்
செய்யலாம்.
திருமண முறைப் படி அவள் கட்டாயமாகக் கணவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்க வேண்டும். கணவனே எல்லா வகையிலும் அவளுக்கு முதலாளி என்று விதித்துள்ளான். சட்டம் அவனுக்கு அவள் மேல் அதிகாரம் செலுத்த உரிமை அளித்துள்ளது. திருமண விலக்கிலும், குழந்தைகளின் பாதுகாப்பிலும் பெண்களின் மகிழ்ச்சியைக் கருத்தில் கொள்ளாது அவனுக்கு மட்டும் எல்லா உரிமைகளும் கிடைக்கு மாறு சட்டதிட்டங்களை வகுத்துள்ளான். ஒரு பெண் மணமாகாமல் இருந்தால் அவள் சொத்தின் மேல் வரிவிதித்து அதன் மூலம் அவளை அரசாங்கத்தை ஆதரிக்க வைத்திருக்கின்றான்.
எல்லாவிதமான உயர்வான தொழில்களையும் தனதென வைத்துக்கொண்டு, குறைந்த ஊதியம் அளிக்கும் வேலைகளுக்கு மட்டுமே அவளை அனுமதித்திருக் கின்றான். அவளுக்கு கல்லூரிகளில் கிடைக்கும் கல்வியை மறுத்துள்ளான் சர்ச்சிலும் அரசாங்கத்திலும் கீழ் நிலைகளில் உள்ள தொழில்களில் மட்டுமே அவளை அனுமதித்துள்ளான் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறான சமூக ஒழுக்க நியதிகளை வகுத்துள்ளான். அவள் சார்பாகச் செயற்பட வேண்டியதும் தானே என்று வகுத்துள்ளான் பெண்ணின் மன உறுதியையும், வலிமையையும், சுய கெளரவத்தையும் வகுத்து அவளைத் தன்னைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தி வைத்துள்ளான்.
87

Page 47
88
அதனால் பெண்கள் அமெரிக்க நாட்டு குடிமக்கள் என்ற முறையில், எல்லாக் கடமைகளுக்கும் உரிமை களுக்கும் உரியவர்களாகின்றனர். இதைச் செயல் படுத்த நாங்கள் எங்கள் சக்திக்கு உள்பட்ட எல்லா விதங்களிலும் செயற்படுவோம்.
இயற்கையான சட்ட திட்டங்கள் கடவுளால் தீர்மானிக்கப்பட்டவை என்ற முறையில் அவை எல்லா வகைகளிலும் மேன்மையானவை. அவை உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் எல்லா கால கட்டங்களுக்கும் பொதுவானவை. இதற்கு மாறாக உள்ள எந்தச் சட்டமும் உண்மைக்குப் புறம்பான தாகும் அதனால் கீழ்கண்ட தீர்மானங்கள் இயற்றப்படு கின்றன.
பெண்களின் மகிழ்ச்சிக்கு எதிராக உள்ள எந்தச் சட்டமும் இயற்கைக்கும் உண்மைக்கும் மாறானதாகும் அதே போன்று அவளை தாழ்நிலையில் வைக்கும் சட்டங்களும் அவளை மனம் விரும்பியபடி சமூகத்தில் எந்த நிலையையும் அடைய முடியாமல் தடுக்கும் சட்டங்களும் இயற்கைக்கு மாறானவையாகும். அதனால் அவைகளுக்கு அதிகாரம் கிடையாது. பெண் ஆணுக்குச் சமமாகவும் மனித சமுதாயத்தின் மேன்மைக்காகவும் படைக்கப்பட்டுள்ளாள் அதனால் அவள் அவ்வாறே மதிக்கப்பட வேண்டும். பெண்ணைக் கட்டுப்படுத்தும் எல்லாச் சட்டங்களும் அவளுக்கு உணர்த்தப்பட வேண்டும். அவள் தன் நிலை குறித்து திருப்தியுடன் இருக்கிறாள் என்று தன்னைத் தாழ்வுபடுத்திக்கொண்டே, அவள் எல்லா உரிமைகளையும் பெற்றிருக்கிறாள் என்ற அறியாமை யையோ வெளிப்படுத்துதல் கூடாது. ஆண், பெண்ணை மதக் கூட்டங்களில் பேசவும்,
கற்பிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

5. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமான நற்குணங்
களும் நன்னடத்தைகளும் அதை மீறுபவர்களுக்கு ஒரே விதமான தண்டனைகளும் அளிக்கப்படவேண்டும்.
6. பெண்கள் பொதுக்கூட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும்,
பங்கு கொள்ளும் போது அவள் தோற்றத்திற்கு முக்கியமளிப்பது கண்டிக்கப்படுகிறது. அவள் வாழ்வின் எல்லைகள் விரிவாக்கப்பட வேண்டும்.
7. பெண் ஒட்டுரிமை பெற வேண்டும். மனித சம உரிமை எல்லா இனமக்களுக்கும் ஒரே விதமான திறமைகளும் பொறுப்புக்களும் உள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
8. ஆணும் பெண்ணும் கடவுளால் ஒரே விதமாகப்
படைக்கப்பட்டவர்கள். பெண் ஆணுக்குச் FLOIOf T60 உரிமைகளையும் கடமைகளையும் பெறவேண்டும். இதற்கு எதிரானவை எல்லாம் மனிதனுக்கு எதிரானவை என்றும் தீர்மானிக்கின்றோம்.
9. இந்த வெற்றியை ஆணும் பெண்ணும் சேர்த்து
உழைத்துப் பெற்று இருவரும் எல்லா நிலைகளிலும் பங்குபெற வேண்டும் எனத் தீர்மானிக்கின்றோம்.
தேசியப் பெண்கள் ஒட்டுரிமை அமைப்பு
1840களிலும் 50 களிலும் அமெரிக் காவில் சோசலிசப் பெண்ணியத்தின் பல சிந்தனைகள் பெண் உரிமைக்காக நடத்தப்பட்ட கூட்டங்களில் இணைந்து வலியுறுத்தப்பட்டன. ஒகையோ மாநிலத்திலுள்ள சேலம் நகரில் நடந்த ஒரு மாநாட்டில் ஆண்களை வெளிப்படையாக எதிர்த்து பேசினர். மேலும் இம் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை உலகுக்கு வெளிக்காட்ட அனைவரும் ஆண்கள் அணிவது போன்ற சூட் அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கப் பெண்கள் குடி ஒழிப்பு குழுக்களைத்
89

Page 48
தோற்றுவித்து குடி ஒழிப்பு பிரச்சாரம் செய்யத்துவங்கினர். 1869ல் பெண்ணியச் செயல்பாட்டாளர்கள் மற்ற அனைத்து உரிமைகளையும் அடைய ஒட்டுரிமை மிகமிக இன்றியமையாதது என்று கருதி இதன் பொருட்டு அமெரிக்கப் பெண்கள் ஒட்டுரிமை கோரும் சங்கம் என்ற அமைப்பை துவங்கினர். இதை அடியொற்றி 1890களில் சூசன் ஆண்டனி, எலிசபெத் கேடிஸ்டான்டன் என்ற இருவரும் தலைமை ஏற்க தேசிய பெண்கள் ஓட்டுரிமை அமைப்பு தோற்றம் பெற்றது. இது பெண்களின் ஒட்டுரிமைக்காகத் தீவிரமாகப் போராடியது. இந்த அமைப்புகளோடு மேல்மட்ட, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து போராடினர். 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஒட்டுரிமை இயக்கங்கள் நிறைய தோன்றி ஒன்றோடு ஒன்று இணைந்து ஒட்டுரிமை என்ற ஒரே இலக்கை வலியுறுத்தத் தொடங்கின. இப்படி 50 ஆண்டுகளாகப் போராடியதின் பலனாக 1920ல் ஆன்டனி சட்ட சீர்திருத்தம் அல்லது 19வது சட்டத்திருத்தம் பெண்களுக்கு ஒட்டுரிமையை அளித்தது.
நான்கு குழுக்கள்
பெண்கள் போராட்டத்தின் மூலம் முதல் வெற்றிப் படியாக இச்சட்டம் அமைந்தாலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஏற்கனவே சொன்னபடி ஒட்டுரிமை எதிர்பார்த்த அளவிற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடவில்லை. குறிப்பாகப் பாட்டாளி வர்க்கம், கறுப்பர், பெண்கள் நடுத்தரவர்க்கம் போன்ற பின்னணியில் உள்ளோர் இதனால் எந்தப் பயனும் அடையவில்லை.
இந்த நிலைமைக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. பெண்களினால் மட்டுமே பிரதிபலிக்கும் அரசியல் கட்சி
இல்லை.
2. தங்களின் பிரச்சனைக்கென அவர்கள் ஓட்டுப் போட
முடியவில்லை.
90

3. குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அரசியலில் பெண்கள்
ஈடுபடவில்லை.
பின்பு 1920களுக்குப் பின் ஒட்டுரிமை கோரும் இயக்கங்கள் நான்கு குழுக்களாய்ப் பிரிந்து இயங்கின. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதனடிப் படையில் இயங்கியது. இப்படிப் பிரிந்த இந்த நான்கு குழுக்களில் சோசலிசக் குழுதான் மிகப்பெரிது. இந்தக்குழு வானது பெண் வாக்காளர்கள் குழு என்ற பெயரில் செயல் பட்டது. பெண்களை ஆண்களில் இருந்து வேறுபடுத்தும் சட்டநிலையை நீக்கக் கோரி அதனடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப் போராடியது. மேலும் இந்த அமைப்பு பெண்களின் நலன், அரசியல் பங்கு, அதிக வேலைவாய்ப்பு, கல்வியில் அதிக வாய்ப்பு, கருச்சிதைவு உரிமை, குழந்தைப் பராமரிப்பு இவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தியது.
இதன் பயனாக அமெரிக்கப் பாராளுமன்றத்தில் அதிகளவு, பெண்கள் நலன் பற்றிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வமைப்பு விவகாரத்தைச் சட்டமாக்கியது.
இரண்டாவது குழுவானது அமைதி இயக்கமாக இயங்கியது. அமைதி மற்றும் விடுதலைக்கான அனைத்துலக பெண்கள் குழு என்பது இந்த இயக்கத்திற்கான பெயர். இக்குழு போராயுதங்கள் ஒழிப்புப் பற்றியும் சமாதானம் பற்றியும் தொடர்ந்து மாநாடுகள் நடத்தியது. இம்மாநாடுகள் போரிடுதல் என்பது ஆணின் குணம் என்றும் பெண்கள் விடுதலையையும் சமாதானத்தையும் விரும்புவார்கள் என்று வற்புறுத்தின.
மூன்றாவது குழு "தேசிய வணிக ஒருங்கிணைப்பு, என்றும், வேலை பார்க்கும் பெண்கள் சங்கம் என்றும் சிறுசிறு குழுக்களைத் தொடங்கி பெண்களுக்கான சமூக வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி வந்தன. நான்காவது குழு தீவிரவாத இயக்கமாக மாறியது. ஆலிஸ்பால் என்பவரது முயற்சியால்
9

Page 49
‘தேசிய பெண்கள் கட்சி தொடங்கப்பட்டது. இக்கட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. இக்கட்சியின் முதல் கொள்கை சம உரிமை மசோதாவைத் தாக்கல் செய்தது.
சம ஊதிய மசோதா திருத்தம்
1920களில் தொடங்கி அமெரிக்காவில் பெண்களுக்கிடையே மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இளம் பெண்களிடம் சோசலிச உணர்வு தலை தூக்கியது. இதன் விளைவாக அவர்களிடம் தோற்றத்தில், உடையில் மாற்றம், நவீன சிகை அலங்காரம் , புகைபிடிக்கும் பழக்கம் போன்றவை ஏற்பட்டன. சூசன்லா!
66
ஃபால்ட்எழுதிய பெண்கள் சம்பந்தப்பட்ட" என்ற நூலும் வெர்ஜினியா வுல்ப் எழுதிய “ஒருவரின் சொந்த அறை" என்ற நூலும் அமெரிக்கப் பெண்களிடையே அதிகதாக்கத்தை ஏற்படுத்தி அத்தகைய மாற்றத்திற்கு ஓர் முடுக்கியாக அமைந்தன. 80களில் அமெரிக்காவில் சீர்குலைவு ஏற்பட்டது. அதை சீர் செய்ய வேலையில் இருந்த மணமான பெண்களை நீக்கிவிட்டு, பதிலாக ஆண்களை வேலைக்கு அமர்த்தினால் தான் முடியும் என்ற எண்ணம் அனேக முதலாளிகளுக்கு ஏற்பட்டது. இதனடிப்படையில் செயல்படவும் துவங்கினர். இப்படி முதலாளிகள் எடுத்த இந்நடவடிக்கைகள் பல பெண்களின் பொருளாதார நிலையை சீர்குலைத்தது.
1920 களிலிருந்து 1960 வரையிலான கால கட்டத்தில் அமெரிக்காவில் பெண்களுக்கான சமூகநிலை ஆதாயங்கள் பல இருந்தும் பெண்ணுரிமைக்காகச் செயல்படும் சமூக இயக்கங்கள் குறைந்து விட்டன.மேலும் தனிப்பட்ட பெண்களின் நலம் நாடும் அமெரிக்கப் பல்கலைக்கழக பெண்கள் சங்கம், தேசிய கத்தோலிக்கச் சங்கம் போன்ற அமைப்புக்கள் தான் இக்கால கட்டத்தில் உச்சத்தில் இருந்தன.
1960களில் பெண்ணியத்தின் இரண்டாவது அலை எழுச்சி பெற்றது. இக்கால கட்டத்தில் புதிய பெண்ணிய இயக்கத்தின்
92

விளக்கங்களும் செயல்பாடுகளும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இதனால் பெண்கள் பலர் ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட முன் வந்தனர். 1961 டிசம்பர் 14ம் தேதி அன்று ஜனாதிபதி ஜான். எப் கென்னடி பெண்களின் தகுதி பற்றி ஆராய ஒரு குழுவை அமைத்தார். இக்குழு பெண்களின் நலன், வேலை மற்றும் முழு உரிமை இவற்றைப்பற்றி ஆராய்ந்தது. 5 வது சட்டத் திருத்தத்தின்படியும், பெண்கள் தக்க வசதிகளையும் தகுந்த பாதுகாப்பையும், வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதாக இக்குழுவின் ஆய்வறிக்கை கூறியது. 1963ல் ஜான் எப், கென்னடி சம ஊதிய மசோதாவில் கையொழுத்திட்டது அமெரிக்கப் பெண்கள் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
பெண்ணியல், புதிர்நிலை
1963ல் பெட்டி ப்ரைடன் எழுதிய “பெண்ணியல் / புதிர் நிலை" என்ற அமெரிக்காவின் புறநகர் பகுதியில் வாழும் சாதாரண பெண்மணிகளின் சாதாரண கனவுகளைப் பற்றி வெளிப்படை யாகப் டேசியது. மேலும் சமுதாயக்கட்டுப்பாடு அமெரிக்கப் பெண் களை எவ்வளவு துTரம் முன்னேற விடாமல் தடுத்திருக்கிறது என்பதை இந்நூல் பேசுகிறது. பெண்கள் பற்றிப் பலரும் சொல்லத் தயங்கிய, பயந்த பல புரட்சிகரமான கேள்விகளை இந்நூல் துணிந்து கேட்டது. அமெரிக்க ஆண்களிடையே பெருஞ்சலசலப்பை உண்டாக்கியது. அடிமை வேலை செய்வதை விட்டு குடும்பத்தில் ஓர் உயர்நிலையைத் தாங்கள் அடைய வேண்டும் என்ற எண் ணத் தைப் பெண்களிடையே ஏற்படுத்தியது இந்நூல். மேலும் இந்நூல் சமூகத்தில் பர்லியல் என்பதையும் ப்ராய்டின் மனோதத்து வத்தையும் , அமெரிக்க விளம்பரத்தையும் கடுமையாக விமர்சித்தள்ளது.
93

Page 50
ஒரு துணிவான புதுமைக்கருத்து
‘டெட்டாலஸ்" என்ற இதழில் 1964ம் வருடம் ஆலிஸ்ரோசி என்பவரின் கட்டுரை “இருபாலாரிடையே சமநிலை ஒரு தணிவான புதுமைக் கருத்து" என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் பாலியல் வேறுபாட் டி ல் மாறுதல் வரவேண்டுமென்றால் பெண் சமுதாயத்தில் கிழக்கண்ட மூன்று மாற் றங்கள் ஏற்பட வேண்டும் என்று அக் கட்டுரை பரிந்துரைத்தது.
1. போதுமான அளவு பாதுகாப்பும், பராமரிப்பும் பெண்
குழந்தைகளுக்கு கொடுத்தல்.
2. குடும்ப அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு, அதன் மூலம் பள்ளிகளுக்கும் ஆலைகளுக்கும்பெண்கள் செல்லவாய்ப் பளித்தல் மேலும் புறநகர்ப் பகுதிகளில் ஆலைகளையும் பள்ளிகளையும் அமைத்தல்.
3. பெண்கள் சமமாக சமுதாயத்தில் அனைத்து செயல்பாடு
களிலும் பங்கேற்க முனைதல்.
பெண் உரிமை மசோதா.
1964 முதல் 1968 வரையிலான ஆண்டுகளில் பெண்ணிய இயக்கம் (1) மிதவாத அல்லது தாராளப் பெண்ணியம், (2) சோசலிசப் பெண்ணியம் (3) தீவிரவாதப் பெண்ணியம் என முப்பெரும் பிரிவாகக் செயல்படத் துவங்கியது. 1966ல்
அக்டோபரில் சுமார் 300 உறுப்பினர்களைக் கொண்ட தேசியப்
பெண்கள் அமைப்பு ‘நெள' என்ற சுருக்கப் பெயருடன் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் பெட்டி பிரைடன் இவ்வமைப்பு பெண் குடியுரிமையையும்
சமூகச் சீரமைப்பையும் வலியுறுத்தித் தன் செயல்பாட்டை துவங்கியது. இது பெண்களால் ஆன அமைப்பு என்று சொல்வதைவிட பெண்களுக்கான அமைப்பு என்று சொல்லிக் கொள்வதிலே பெருமையடைந்தது. இந்த அமைப்பில் 10
94

விழுக்காடு ஆண் உறுப்பினர்களும் இருந்தனர்.
1967ல் இவ்வமைப்பின் அழுத்தத்தினால் அமெரிக்க ஜனாதிபதி ஜான்சன் அரசாங்கத்திற்குப் பாலியல் வேறுபாடு கூடாது என்று ஒரு ஆணையை பிறப்பித்தார். இந்த உத்தரவின் காரணமாக வேலைவாய்ப்பு விளம்பரங்களில் ஆண், பெண் என்று தனிப்பட்டு குறிப்பிடுவது தடை செய்யப்பட்டது. மேலும் இந்த நெள' என்ற அமைப்பு 1967ல் 'பெண்ணுரிமை மசோதா கொண்டு வந்து அதன் மூலம் கருக்கலைப்பு உரிமைக்கான சட்டத்தைக் கொண்டு வர அரசை முதன் முதலில் வற்புறுத்தியது. 300 உறுபப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய இயக்கமாத்திகழ்கிறது.
உள்ளாடை எரிப்பு
1967 சிகாகோவில் தேசிய மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேச முனைந்த 'ஜோப்மேன் சுலாமித் பயர்ஸ்டோன் என்ற இரு பெண்களுக்கும் பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ப்ரீமேன் சிகாகோவிலேயே சிகாகோ வெஸ்ட்சைட் குரூப் என்ற ஒரு அமைப்பாகத் தொடங்கினர். பயர்ஸ்டோன் நியூயார்க்கில் தீவிரவாதப் பெண் அமைப்பு என்ற ஓர் இயக்கத்தை துவங்கினார். இதற்குப் பின் சிறு சிறு தீவிரவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 1968 ஜனவரி 15ல் வாசிங்டனில் ஓர் அணி வகுப்பு நடத்தினர் இதில் மரபு வழிவந்த பெண்மையைக் குழி தோண்டிப் புதைப்போம் என்ற கருத்தை வீதி நாடகமாக நடத்தி காட்டினர்.
1968 செப்டம்பரில் அமெரிக்காவில் அட்லாண்டா சிட்டியில் உள்ள நியூஜெர்ஸ்ரியில் "மிஸ் அமெரிக்கா போட்டி நடத்தப்பட்டது. தீவிரவாதப் பெண் இயக்கம் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவ்வியக்க உறுப்பினர் ராபின் மார்கள் என்பவர் தலைமையில் அழகுப்போட்டி நடக்கும் இடத்திற்கு
95

Page 51
வெளியே பெண்களின் உள்ளாடைகள், ஒப்பனைப்பொருட்கள், பெண்களை மரபுகளிலேயே வைத்துப் பார்க்கும் பெண்கள் இதழ்கள், கட்டுரைகள் ஆகியவற்றை குவித்து எரித்தனர். கற்பனை மிகுந்த ஒரு நிருபர் இந்நிகழ்ச்சியை "உள்ளாடை எரிப் என கூறினர்.
கருக்கலைப்புச் சட்ட சீர்திருத்த மசோதா
நகரத்தைச் சார்ந்த அனைத்துலகப் பெண்கள் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 68-69 களில் நூதனமாக போராட்டங்களை நடத்தினர். இதற்கு எதிர்ப்புச் செயற்பாடு என்று அழைத்தனர். பால் வேறுபாடற்ற நிலையை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்பூட்டும் செயலில் ஈடுபட்ட இவர்கள் தங்கள்செயல்களை வித்தியாசமாக மக்கள் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் செய்தனர். 1968ல் நடந்த அழகுப் போட்டியின் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஆட்டி ற்கு மகுடம் சூட்டி ஊர்வலம் நடத்தினர். மேலும் இவர்கள் 1970 மார்ச்சில் சுய கருக்கலைப்பினால் இறந்துபோன பெண்களுக்காக மெளன இறுதி ஊர்வலம் நடத்த, இதனால் தூண்டப்பட்ட மெச்சிகன் சட்டசபையினர் கருக்கலைப்புச் சட்ட சபையினர் கருக்கலைப்புச் சட்ட சீர்திருத்த மசோதாவைக் கொண்டு வந்தனர். நியூ இயக்கத்தின் முன்னாள் தலைவி டைகிரேஸ் அடகின்சன் என்ற அம்மையார் அக்டோபர் 17ல் இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். இவ்வியக்கத்தினர் தீவிரமாகப் பிரிவினையியம் பேசினர். அதாவது ஆண் மேலாதிக்கத்திலிருந்து விலகி வாழ்வதிலும், தாங்கள் தனிப் பட்டவர்கள் என்று காண்பிப் பதிலும் ஆர்வம் கொண்டிருந்தனர்.
தேசிய மகளிர் போராட்டம்.
1969ல் நியூயார்க் தீவிரவாதப் பெண்ணிய இயக்கம் தங்களை சிவப் காலுறையாளர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.
96

சுலாமித் பயர்ஸ்டோன் இக்குழுவை தோற்றுவித்தவர். அவர்கள் பெண் களிடையே வரிழிப் பை ஏற்படுத் துவதிலும் , சகோதரத்துவத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டி ருந்தனர். 1969ல் அமெரிக்காவில் எல்லா மாகாணங்களிலும் சுமார் 5000தீவிரவாதக் குழுக்கள் தோற்று விக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்திலும் ஆங்காங்கே உள்ள குழுக்கள் உள்ளூர் அரசியலிலும் பெண்களைப் பற்றிய பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர். குறிப்பாகப் பல்கலைக்கழகங்களில் தங்களுடைய முன்னேற்றம் பற்றி துண்டுப் பிரசுரங்கள் இதழ்களை வெளியிட்டுப் பணியாற்றினர்.
1969ல் நவம்பர் 24ல் நியூயார்க்கில் அனைத்து குழுக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இதில் 'நெள' இயக்கத்தின் சார்பாக 10 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. சம வேலைவாய்ப் / சம கல்விவாய்ப் , கருக்கலைப்பு உரிமை தொடர்பு சாதனங்களில் பெண்களுக்கு முன்னுரிமை, பெண் விடுதலை என்பன மற்றும் 24 மணி நேரக் குழந்தை பராமரிப்பு மையங்கள் நாடெங் கிலும் நிறுவப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் இம் மாநாட்டில் வைக்கப்பட்டன. அமெரிக்காவைப் பொறுத்த வரை 1960 முதல் 1970 வரையிலான காலகட்டம் தீவிரவாதப் பத்தாண்டாகக் கணக்கிடப்படுகிறது.
அமெரிக்காவில் 1970 ஆகஸ்டு 26ல் பெண்கள் ஒட்டுரிமை பெற்ற 50ம் ஆண்டு நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் 'நெள’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சமத்துவம் வேண்டி தேசிய அளவிலான போராட்டம் ஒன்றை நடத்தினர். இது தேசிய மகளிர் போராட்டம் என்றழைக்கப்பட்டது.
தேசிய மகளிர் அரசியல் குழு
1971ல் பெட்டி பிரைடன், பெல்லா அட்சக் ஷெர்லிசிஸ்ஸோம் மற்றும் பலரும் தேசிய மகளிர் அரசியல் குழு என்ற
97

Page 52
அமைப்பை நிறுவி அதன் மூலம் தேர்தலில் பெண்களின் பங்கை வலியுறுத்தினர். 1979ல் எல்லா மாநிலங்களிலும் இதன்கிளைகள் தொடங்கப்பட்டன.இவ்வமைப்பு அரசியலில் பால் இடைவெளி கூடாது என்று இடைவிடாது வற்புறுத்தி அரசியலில் பெண்கள் பங்கை 13 விழுக்காட்டிலிருந்து 39 விழுக்காடாக உயர்த்திச் சாதனை செய்தது. 1972ல் வயதான பெண்களுக்கான விடுதலை அமைப்பு என்ற ஒன்றை நிறுவி அதன் மூலம் கறுப்பர் இனப் பெண்களுக்காகப் போராடினர். 1973ல் தேசிய பெண்கள் கருக்கலைப்பு செயல்பாட்டுக்கழகம் என்பதை நிறுவி அதிலும் வெற்றிகண்டனர் ஆக இவ்வமைப்புகள் மூலம் பெண்கள் பெரும்பான்மையான தங் களின் கோரிக் கைகளை அர சரிய ல ரீதியரில் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.
பெண்ணிய இதழ்கள
அமெரிக்காவில் எழுபதுகளில் பெண்ணிய இதழ்கள் அதிகம் தோற்றம் பெற்றன. 1968ல் பெண் விடுதலை இயக்கத்தின் குரலும் 1969ல் "பெண்கள்" என்ற இதழும் பின் "முதுகுக்குப் பின்னால்", "நான் ஒரு பெண் இல்லையா"P "நான் ஒரு பெண், குழந்தை அல்ல" "மிஸ்" , "தேடல் பத்திரிகைகளும் 1975ல் வெளியான "அடையாளம்" போன்ற 30 பத்திரிகைகள் பெண் விடுதலை, பெண்ணியம், பெண்கள் பிரச்சனை போன்றவற்றை வெளியிட்டன.
சமூகப்பாதுகாப்பும்" வீட்டு வேலைக்கான சம்பளமும்" என்று பெயர் பெற்ற அப்போராட்டமும் வெற்றி பெற்றது. அமெரிக்காவில் நடந்த கருக்கலைப்புப் பற்றித் தங்களுக்கென சட்ட திட்டங்களைத் தனித்தனியாக நிர்ணயித்துக்கொண்டன. 1972ல் "மிஸ்" என்ற பத்திரிகையில் 52 முக்கிய பெண் பிரமுகர்கள் சுகந்திரக் கருக்கலைப்பை வற்புறுத்தி ஒரு விண்ணப்பத்தை வெளியிட்டனர். 1973ல் தேசிய கருக்கலைப்பு உரிமைச்செயல்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது. 70 களிலேயே
98

ஹவாய் மற்றும் அலாஸ்கா தீவுகளும் மற்றும் 17 மாநிலங்களும் கருக்கலைப்புச் சட்டங்களைத் தளர்த்தி விட்டன. முடிவாக இவ்வாண்டு இறுதியில் அமெரிக்க உச்சநீதிமன்றம் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது. தன்விருப்பகருக்கலைப்பு மற்றும் கருக்கலைப்புச் சாதனங்களின் முன்னேற்றத்தினால் பெண்கள் பாலியல் ஈடுபாட்டில் அதிக உரிமை பெற்றனர்.
பெண்கள் பத்து ஆண்டுகள்
1975ம் ஆண்டை அமெரிக்கா பெண்கள் ஆண்டாக அறிவித்தது அதோடு அடுத்துவரும் 10 ஆண்டுகளையும் 'பெண்கள் பத்தாண்டுகள்’ எனப் பிரகடனப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மெக்சிகோ நகரில் நடந்த உலக மகளிர் மாநாட்டில் 5000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அம்மாநாட்டில் தீவிரப் பெண்ணியவாதிகளும், பெண் ஓரினச் சேர்க்கையாளர்களும், சோசலிசப் பெண்ணியவாதிகளும் தாங்கள் ஒதுக்கப்பட்டதாகப் பயந்தனர். பொலினில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டிலும் மேற்கூறியவர்கள் இதே உணர்வை அடைந்தனர். இதற்கிடையில் 1975ல் பிலடெல்பியாவில் நடந்த "நெள மாநாட்டில் அதற்குள்ளேயே 'நெள தலைவர்களைக் குற்றம் சாட்டியது. அம் மாநாடு தோல்வி கண்டது. பெட்டி பிரைடன் நெள ன் தீவிரச் செயல்பாட்டிலிருந்து விலகிக்கொண்டார். இவர் இவ்வமைப் பிற்கு நிகழப்போகும் அவலத்தையும் பின் விளைவு களையும் பற்றி எச்சரித்தார். ஆக மொத்தத்தில் 1975 முடிவில் அமெரிக்கபெண்ணிய இயக்கங்கள் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக் கொண்டு போகும் திசை தெரியாது திண்டாடின.
பெண் கொடுமையை எதிர்க்கும் குழு
1975ல் பெண்ணிய இயக்கத்தில் தீவிர வாதிகளின் கை ஓங்கியது. குறிப்பாக அமெரிக்காவில் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள் செல்வாக்குப் பெற்றனர். இவர்கள்
99

Page 53
'பிரிவினையியம்' என்ற கொள்கையை வளர்த்தனர். இதன் வழி ஆண்களிடமிருந்து விடுதலை வேண்டும் என்ற கருத்தைப் பரப்பினர். 1977ல் பிரிவினை வாதத்தோடு தொடர்புடைய கொள்கைகளைக் கொண்டு புரட்சிப்பெண்ணியம் என்ற ஒன்று துவக்கப்பட்டது. இது ஆணை எதிரியாகக் கருதி, அவர்களிட மிருந்து முற்றிலுமாக நீங்கி வாழ்வது என்பதை கொள்கையாகக் கொண்டு அதற்கு வித்திடும் திருமண முறையை ஒதுக்கியது. தீவிரவாதிகள், தாங்கள் வலிமையாகக் காலூன்றி நின்று பின் தாராள வாதிகளை குறை கூறத் தொடங்கினர். பிலபல மடைந்த மித வாதிகளின் பெயரை ஒடுக்குவது தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்தது. "மிஸ்" பத்திரிக்கையின் ஆசிரியர் "குளோரியா” ஸ்டைனும் பெட்டி பிரைடனும் சக்தி வாய்ந்த மிதவாதப் பெண்ணியவாதிகளாவர். தீவிரப் பெண்ணிய வாதிகளின் நோக்கம் குறிப்பாக இவர்களைக் குறை கூறுவதாகும்.
1975ல் சிவப்பு காலுறையாளர்கள் குளோரியாஸ்டைன், சி.ஐ.ஏ, உளவுத்துறையுடன் கொண்டிருந்த தொடர்பை வன்மையாகக் கண்டித்தார். குளோரியா தான் இணைந்திருந்த பெண்ணிய இயக்கத்தின் மூலமாக அதற்குப் பதில் கொடுத்தார். அமெரிக்காவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்களில் சில பெண்ணியக் குழுக்கள் ஈடுபட்டன. 1977ல் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததை, இக்குழுக்கள் எதிர்த்து குரல் கொடுத்தன. ஆபாச இலக்கியம் மற்றும் திரைப்படங்களை எதிர்த்து அமெரிக்கப் பெண்ணியக் குழுக்களும் பல போராட்டங்கள் நடத்தின ஆபாசத்திற்கு எதிரான பெண் கள் குழு ஒன்றும் பெண் களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்க்கும் பெண்கள் குழு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது.
உலகப் பெண்கள் தினம் வந்தவிதம்
கடந்த 1908 ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி அன்று நியூயார்க்
100

நகரில் நெசவுத் தொழில் பணி புரிந்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் 16 மணி நேரமாயிருந்த வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன் வைத்துப் போராட ஆரம்பித்தனர். வேலை பார்க்குமிட த்திலுள்ள சுகாதாரமற்ற சுற்றுச் சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர். இதற்கு முன்னுள்ள 19ம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலேயே உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் போராடத்துவங்கியிருந்தனர்.
பிரிட்டனில் ரொட்டிமாவின் விலை ஏற்றப்பட்ட போதெல்லாம் பெண்கள் கிளர்ச்சி செய்தனர் வேலை நேரத்தைக் குறைக்கப் பல ஆண்டுகள் போராடிய பிறகு பிரிட்டனில் 1847ல் வேலை நேரம் 10 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. 1830 களிலேயே அமெரிக்காவில் லாண்டரி, டெய்லரிங், அச்சுத்தொழில் போன்ற பல்வேறு தொழில் புரிந்த பெண்கள் தங்கள் பிரச்சனை களுக்காகப் போராடத் தொடங்கினர். பாரிஸ் கம்யூன் பிறந்தது அதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றனர். விதவை மனைவிக்கு பென்சன் கொடுத்தல், குழந்தைகளுக்கான கல்வித்திட்டங்கள், குழந்தைகளுக்கான காப்பகங்கள் என பல திட்டங்களை கம்யூன் வகுத்தது.
1899ல் டென் காக் நகரில் யுத்தத்திற்கு எதிராக முதலாவது சர்வதேச பெண்கள் மாநாடு நடந்தது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து தான் தொழிற்சாலைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது ரஷ்யாவில் 1905 லிருந்து 1907 வரை நடந்த புரட்சிக்கான வேலை நிறுத்தங்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இன்றைக்கு அலுவலகங்களிலும் ஆலைகளிலும் வேலை நேரம், சம்பளம் எல்லாம் சீரமைக்கப்பட்டிருப்பது சாதாரண விசயமாக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொன்றும் போராடிப் பெற்றவைதான்.
10

Page 54
கோபன் கேகனில் 1910 ல் சோலிசப் பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாடு "கிளாரா ஜெட் கின் தலைமையில் கூட்டப்பட்டது.இந்த மாநாடு சனநாயக உரிமைகள் சமாதானம், தேசிய சுதந்திரம் ஆகியவற்றுக்கான உழைக்கும் பெண்கள் தினமொன்றை அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்றிலிருந்து மார்ச் 8ந் திகதி அகில உலக உழைக்கும் பெண்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
பெண்ணியல் கல்வி
உலகெங்கிலும் கல்வி மற்றும் அதனைச் சார்ந்த அனைத்துத் துறைகளும், ஆண் பார்வையினதாக, ஆணாதிக்கத்தை மைய மிட்டதாக அமைந்திருந்திருந்தன. இருக்கின்றன அமெரிக்காவில் அறுபதுகளில் தொடக்கத்தில் பெண்ணிய இயக்கங்களின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட பேரழுச்சியினால் பெண்களிடையே தங்களைப் பற்றியும் தங்கள் பெண்ணினம் பற்றியும் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக, பெண் கல்வியாளர்கள் மற்றும் மாணவியர் மத்தியில் ஆணை மையமிட்ட அல்லது ஆணின் பார்வையில் மட்டுமே பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் அமைந்திருப்பது குறித்து வாதங்கள் வலுப்பட்டன.
வரலாற்றுச் சாலையில் பெண்களின் பங்கு மறைக்கப் பட்டிருந்தது. சமூக வாழ்வில் பெண்கள் இரண்டாந்தரக் குடிகளாக, ஆண் சார்புடையவர்களாக, தனித்து இயங்க இயலாதவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இலக்கியங்களில் பெண் வர்ணனைக்குரியவளாக, அழகியாக, நுகர்வுப் பொருளாக, வாழ்க்கைத் துணையாக என்று இப்படி ஏறக்குறைய ஒரே கோணத்திலேயே படைக்கப்பட்டிருக்கிறாள். உளவியல் பெண்களைப் பலவீனமானவர்களாக, திடமற்றவர் களாகக் காட்டியது. இப்படி பெண்கள் ஒட்டு மொத்தமாக அனைத்துத் துறைகளிலும் |றக்கணிக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்த போது "பெண்ணியல் கல்வி" என்ற
102

ஒன்றை உருவாகக்வேண்டிய தேவை உணர்ந்தது.
இந்த பெண்ணியல் கல்வியானது அமெரிக்காவில் தோற்றம் பெற்று இன்று உலகெங்கிலும் பரவி வரும் கல்வித் துறையாகும். இது உலகளவில் பெண்களால் பெண்களை மையப்படுத்தி அனைத்துத் துறைகளையும் ஆராய்கின்றது. 1934ல் மேரி ரிட்டர் பேர்டு என்ற அம்மையார் 'மகளிரியல்" என்ற ஒரு புதிய கருத்தாக்கத்தை உருவாக்கித்தந்தார். இவர் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மகளிரியல் கல்வி பாடத்திட்டத்தை உருவாக்கினார். இது நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது.
l. அமெரிக்கப் பெண்களின் மதிப்பு பற்றிய உண்மை
நிலையைக் கண்டறிதல். பெண்ணியக் கொள்கைகளை அறிதல்.
3. தேசிய அளவில் அக்கொள்கைகள் ஏற்படுத்திய
பாதிப்பை அறிதல்.
4. பெண்களுக்கான மரபு வழிப்பட்ட கருத்தாக்கங்களின்
தாக்கங்களைக் கண்டறிதல்.
56 பக்கங்களைக் கொண்ட இப்பாடத்தின் தலைப்பு "அரசியல் பொருளாதார மாற்றமும் அதனடிப்படையிலான பெண்களின் பாதிப்பும்" என்பதாகும் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பெண்களின் கூட்டமைப்புச் சார்பாக இதை வெளியிட்டார். இது நடைமுறைக்கு வராவிட்டாலும் மகளிரியல் கல்விக்கு அடிகோலியது.
மகளிரியல் கல்வி
மகளிரியல் கல்வி என்பது பிற கல்வி துறைகளைப் போன்றதே. ஆனால் பெண்ணை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. மாறாக பெண்கள் மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ளது, மகளிரியல் கல்வி ஆண்மைய வாதத்தில் அமைந்த
103

Page 55
அனைத்தையும், பெண்மைய வாத போக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறது.அதைக் கருத்தில் கொண்டே டேல்ஸ்பெண்டர்’ என்ற பெண் இக்கல்வி முறையை ஆண்மையைக் கல்வியை உருமாற்றுதல் என்று விளக்கியுள்ளார். 1970களில் இருந்து 1990 வரையிலான காலகட்டத்தில் மகளிரியல் கல்வியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டது. 1983ல் " சார்லட் பன்சும்” சான்ரோபோலக்கும் மகளிரியல் கல்வியை ஒன்றுக் கொன்று தொடர்புடைய மூன்று பரிாரிவுகளாக அடையாளம் காட்டியுள்ளனர்.
l. நடைமுறையில் உள்ள பண்பாட்டில் பெண்கள் எப்படி
வாழ வேண்டும் என்ற வழிமுறையைக் கற்றுக் கொடுத்தல்
2. பெண்ணியக் கொள்கைகளை எடுத்துரைப்பதின் மூலம்
பெண்களிடையே விழிப்பூட்டுதல். 3. பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களின் சொந்தக் கருத்து, கலை, கொள்கை ஆராய்ச்சி போன்றவற்றை ஊக்குவித்தல்.
இரு முக்கிய போக்குகள் நோக்குகள்
இதற்கு பின் வந்த ஆண்டுகளில் அமெரிக்காவில் மகளிரியல்
கல்வியில் இரு முக்கிய போக்குகள், எழுச்சி பெற்றுள்ளன. இவை
I
கறுப்பர் இன மகளிர் பற்றிய ஆய்வு 2. மகளிர் ஒரினச் சேர்க்கையாளர் பற்றிய ஆய்வு
'கேதரின் ஸ்டிம்ப்சன்" என்பவர் 'மகளிரியில் கல்வியின் நோக்கங்களைக் கீழ்க் கண்டவாறு மிகத் தெளிவாக வரையறுத்துள்ளார்.
l. நடைமுறையைச் சீர்திருத்தல் 2. பெண்கள் பற்றிச் சமுதாயத்தில் நிலவி வரும் தவறான
104

கருத்துக்களையும் வாதங்களையும் நீக்குதல் பெண்களைப் பற்றிய புதிய கருத்துக்களையும் கொள்கைகளையும் வடிவமைத்தல்
தேசியமகளிரியல் கல்விக் கழகம்
மகளிரியல் கல்வியும் அதனடிப்படையிலான ஆய்வும் நல்ல பயன்பாடுகளைத் தந்து வருகின்றன. குறிப்பாக மேலை நாடுகளில் இம்மாற்றம் எளிதில் அடையாளம் காணக்கூடிய அளவில் நிகழ்ந்துள்ளது. மகளிரைப் பற்றி இருந்து வந்த சார்புக் கண்ணோட்டத்தை நீக்கி மனித நலக் கோட்பாட்டை முன்னேற வைத்துள்ளது. புழக்கத்தில் இருந்து வரும் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகள் எந்த அளவு சரியானது என்று சிந்திக்கத்துரண்டியுள்ளது மகளிரியல் கல்வி 'ஆண் மையம்" என்று இருப்பதை அனைத்து நிலையிலும், துறையிலும் மாற்றி 'மனிதமையம் என்ற கருத்தாக்கத்தை மெல்ல மெல்ல எழுச்சிபெறவைத்து வருகிறது. அதுபோன்றே பால்வேறுபாடு என்பதை அனைத்து நிலையிலும் ஒழித்து வருகிறது. நடுத்தர வகுப்புப் பெண்கள் அடித்தட்டுப் பெண்கள் கிராமப்புற பெண்கள், தொழில் புரியும் பெண்கள், படிப்பறிவில்லாத பெண்கள், சமுதாய கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பெண்கள், அனாதரவான பெண்கள் என்ற இவர்கள் அனைவரையும் ஒரு பொருட்டாக மதிக்கும் பண்பாட்டு முன்னேற்றமும் அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் செயற் பாடுகளும் மகளிரியல் கல்வி காரணமாக விரைவு படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மகளிரியல் கல்வியின் பயனாகப் பெண்களைப் பற்றி பெருமளவு செய்திகள் கருத்துக்கள் கிடைத்து வருகின்றன. கோட்பாடுகள் உருவாகி வருகினர் றன. பெண் ணிய இயக்கத்தைப் பொறுத்தவரை மகளிரியல் கல்வி ஒரு பேராயுதமாகவும் , மிகப் பெரிய துTண்டுகோலாகவும் அமைந்துள்ளது. பெண்ணியக் கல்வியாளர்கள், மகளிருடைய
105

Page 56
சாதனைகளும் அனுபவங்களும் கல்விநூல்களில் இடம்பெற வேண்டும் என்று, பழங்கால மகளிர் வரலாறு, பண்பாடு போன்றவற்றை வெளிப் படுத்தும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்றும் அமெரிக்கப்பல்கலைக் கழகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. 1969ல் இத்துறையில் 16 வேறுபட்ட பயிற்சி முறைகள் தொடங்கப்பட்டு இன்று 30,000மேற்பட்ட வெவ்வேறு பயிற்சி முறைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 1977ல் தேசிய மகளிரியல் கல்விக் கழகம் தொடங் கப் பட்டது. இது மகளிரியல் கல் வரியை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இப்படியாக அமெரிக் காவில் பெண் ணியம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அதனுடைய பதியங்களை தொடர்ந்து போட்டு வருகின்றன.
106

நவீனத்துவப் பின்னயத்தை விளங்கிக்கொள்ள
செல்வி திருச்சந்திரன்
Post-Modernismஎன்ற பதம் பின் நவீனத்துவம் என்று மொழிபெயர்க்கப்பட்டு பிரயோகத்திலிருக்கிறது. இம் மொழிபெயர்ப்புச்சரி போல எனக்குத் தோன்ற வில்லை. POSt என்ற ஆங்கிலச் சொல் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. காலத்தால் பிந்தியது-அப்படி ஒரு காலம் குறிக்கப்படும் பொழுது Pre என்ற பதத்திற்குரிய அர்த்தம் காலத்தால் முந்தியது என்பதையும் உள்ளடக்க வேண்டும் Colonial என்று ஒரு வரலாற்றுக் காலத்தை வைத்து Pre Colonial, Post - colonial என்ற காலத்தைச் சுட்டும் பதங்களை பிரயோகிப்போம். காலனித்துவத்திற்கு முன்னைய பின்னைய காலம் என்பது அதன் அர்த்தம். நவீனத்துவம் என்று ஒன்றிருந்தது. அதற்குப் பின், காலத்தால் பிந்திய ஒரு கோட்பாட்டை, ஒரு கொள்கையை குறிப்பதற்கு நவீனத்துவப் டபின்னயம் என முருகையனால் எடுத்தாளப்பட்ட பதம் சரியானதாக எனக்குத் தோன்றுகிறது. பின் காலனித்துவம் என்று கூறமாட்டோம். அப்படிக் கூறும் பொழுது முன் காலனித்துவம் ஒன்று இருந்தது என்று பெறப்படும் piepOSt க்கு முன்பின் என்ற மொழிபெயர்ப்புச் சரியல்லகாலத்தைக்குறிக்கும் அர்த்தம் இதில் தொக்கி நிற்பது கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
முதலில் நாம் இக்கோட்பாடு எதைச் சொல்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முயல்வோம். இப்பதமும் இக் கோட்பாடும் மயக்கம், விளக்கமின்மை குழப்பம் போன்றவற்றையும் பல வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்திருக்கிறது. இது நவீனத்துவப்பின்னயம் என்ற கோட்பாட்டின் கோளாறு தான் என்பதைத் திட்டவட்டமாகக் கூறி விடலாம். மானிடத்தின் அடித்தளக்கோட்பாடுகளான முற்போக்குவாதம், புரட்சிவாதம், சமத்துவம், மனிதம் ஜனநாயம், தர்க்கம் பகுத்தறிவுவாதம்,

Page 57
போன்றவை கூறுவதை அல்லது முன்வைக்கும் கருத்துக்களுக்கு பொறுப்பு அதில் புதைத்திருக்கும் சத்தியம், உண்மை போன்றவற்றில் நம்பிக்கையை வேண்டி நிற்கிறது. சத்தியமி, உண்மைநிலை என்று ஒன்று திட்டத் திண்ணமாக கால வரையறைகளைக் கடந்து சா சுவதமாக நிலைத் து நிற்கமாட்டாது, நிற்க முடியாது என்று நவீனத்துபின்னயம் வாதிடுகிறது. -
இக்கோட்பாட்டை என்னுடைய கொள்கையாக நான் இங்கு முன்வைக்கவில்லை நவீனத்துவ பின்னையக் கோட்பாட்டாளர் கூறுவதையே இங்கு நான் கூறவிழைகிறேன். இக்கூற்றுக் கூட நவீனத்துவபின்னய வாதத்தில் பிழையானதாகி விடலாம். ஏனென்றால் என் எண்ணங்களையோ தப்பெண்ணங்களையோ தவிர்த்து முழுமுற்றாக விலக்கி ஒரு விடயத்தைப் பற்றி நான் கூற முடியாது என்று நவீனத்து பின்டனயம் கூறுகிறது.
நவீனத்துவப் பின்னைய கோட்பாட்டாளர்களில் தவிர்க்க முடியாதவர் சிலரை நாம் இனங்காணலாம் அவர்களில், Derrida – (1981) (9) If IT
Lyotard - (1988) லொய்டாட்
Fish - (1989) foil 194
Bernstein (1986) (36öToivo 6T 188 Foucolt (1980) @j;G5IT 195
Baudridard (1983) Lisfja)/TL' Ashley & Walker (1988) 215 9/Giasulo 6 IT3,505 to Agger -போன்றோர் முக்கியமானவர்கள் 188 அக்கர்
நவீனத்துவபின்னயம் ஏற்றுக்கொள்ளலாமா அல்லது அதை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடலாமா என்பது பற்றி வாத பிரதிவாதங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இத்தகையன இன்னும் தமிழில் தெளிவாக வெளிவரவில்லை. ஆனால் இதை ஏற்றுக் கொண்டோர் பலர். அவ்வாதங்களை தங்களின் கட்டுரைகளில்
108

பிரயோகப்படுத்தி உள்ளனர். அண்மையில் அமெரிக்காவில் டெக்ஸஸ் (Texas) பல்லைக்கழகத்திலிருந்து டக்ளஸ் கெல்னர் (Dougles Kellner) என்ற ஆசிரியர் நவீனத் ததுவத்துவ பின்னயத்தின் கூறுகளையும் வாதங்களையும் விளக்கி அவற்றின் உள்ள முரண்பாடுகளையும் தெளிவாக்கி உள்ளார். இது ஒரு பெரிய சாதனை எனப் பலரது அங்கீகாரங்களையும் Gulfp/git 67 g). (The Post modern turn: Positions Problems and Prospects) Modernism என்பதை நவீனத்துவ காலம் என்றும் Post modernism என்பதனை , காலவரையறையை விளக்க அதாவது நவீனத்துவ காலத்திற்குப் பிந்திய ஒரு காலமாகவும் நாம் விளங்கிக்கொள்ளலாம். நவீனத்துவ காலத்தை விளக்க மாக்ஸ் வெப்பர் (Weber) போன்றோர் வைத்த கோட்பாடுகள் நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து நவீனத்துவகாலம் வேறுபட்டது என்பதைத் திண்ணமாக விளக்கி உள்ளன. நவீனத்துவகாலத்தில் மரபுகள் கேள்விக்குள்ளாக்கப் பட்டு புதுமை, அசைவியக்கம், நவீனங்கள் என்பன போன்றன வரவேற்கப்பட்டன. Industrial capitalism என்று கூறப்பட்ட முதலாளித்துவ காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் காலத்தை ஒட்டியே நிகழ்ந்தன. கலை இலக்கிய உலகில் இந்த நவீனத்துவ காலம் கலை கலைக்காகவே AVant - Garde (நவவேட்டை வாதம்) Expressionism.(வெளிப்பாட்டுவாதம்) Sureicolism (மிகையதார்தம்) போன்றவை அரங்கேறிய காலமாக இருந்தது. Post என்ற பதம் பெரும்பாலும் நவீனத்துவ காலத்திற்கு காலத்தால் பிந்தி வந்த காலங்கள் என்பதைக் குறிக்கும்.
இவ்விரண்டு காலங்களையும் முறித்து இரண்டாகப் பிரித்த ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது நவீனத்துவ பின்னயம். ஆகவே காலத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று வேறுபாடுகளை மூலதனமாக வைத்து எழுந்த பல பெறுமானங்களை நவீனத்துவ பின்னயம் தன்னகத்தே கொண்டுள்ளது. நவீனத்துவ பின்னயம் என்ற பதத்திற்கு இன்னுமொரு விளக்கமும் வாசிப்பும் உண்டு. எதிர்மறைப்
109

Page 58
பொருளாக நவீனத்துவத்திற்கு எதிரான யாவையும், மரபு சார்ந்து அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவற்றிலிருந்து விடுபடும் போக்கு ஒன்று என்றும் 1/தியன, புதிய நிலைப்பாடுகள் புதிய கருத்தோட்டங்கள் போன்றவற்றை ஏற்கும் ஒரு பண்பு ஒன்றும் அதற்குள் இருக்கிறது என்றும் நவீனத்துவ பின்னயத்தை விளக்குவாருமுளர்,டொயினபி (Toynbee 1954) மரபுசார் விழுமியங்கள், உண்மைகள், ஸ்திர நிலைப்பாடுகள் போன்றவற்றை நவீனத்துவபின்னயம் தொலைத்து விடும் என்று கூறியது இதற்கு எதிர்மாறான கருத்தாக உள்ளது
நவீனத்துவ பின்னயக் கோட்பாடுகளை முன்வைத்தவர்கள் பல ஜால வித்தைகளை மொழிப்பதங்களில் ஏற்றி நம்மை மயக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மையே அவர்கள் எடுத்தாண்ட மொழிப் பதங்கள் அவற்றில் சில புதிய ஆக்கங்களாகவும் பல புதிய அர்த்தங்களிலும் வேறு சில பழைய அர்த்தங்களிலும் உபயோகிக்கப்பட்டுள்ளன. அவர்களது கோட்பாடுகளை விளங்கிக்கொள்ள இந்தப் பதங்களை நாம் முதலில் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் மூலமே நான் நவீனத்துவ பின்னயத்தை விளக்க முற்படலாம் என நினைக்கிறேன்.
நவீனத்துவ பின்னயம் கிட்டத்தட்ட 30 வருட சமூக விஞ்ஞான கோட்பாடுகளையும் கலை இலக்கிய கோட்பாடுகளையும் அந்தத் தளங்களில் அவற்றை அடியோடு பிரட்டி எடுத்து அவற்றைக் கேள்விக் குறிக்குள் அடக்குகிறது. அமைப்பியல் பின்னயத்துடன் (Post-Structuralism) பல வகையில் ஒத்த தன்மைகளையுடையது நவீனத்துவ பின்னயம் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. முன்னயது பின்னயதை வழிநடத்தியுள்ளது. நவீனத்துவ பின்னயம் ஒரு இயக்கமாக மாறி நூல்கள் கருத்தரங்குகள், பல்கலைக்கழகத்துத் துறைகள் (Facultics). சஞ்சிகைகள் . அறிவியலாளர் என்று பல வகையில் முன்னேறி உட்புகுந்து வளர்ச்சியடைந்துள்ளது. மானிடவியல் , சட்டவியல் , பெண்கள் கற்கைநெறி (Women's Studies) நகரம் பற்றிய
110

கற் கைநெறி (Urban Studies) புவரியரியல் சமூக வரியல் அரசியல்கற்கைநெறி (Political Science). போன்ற துறைகளைப் பலமாகத் தாக்கியுள்ளது. நவீனத்துவ பின்னயம் பொருளியல். உளவியல், போன்ற துறைகளை அதிகமாகத் தாக்கியதாகத் தெரியவில்லை. ஒரு புரட்சி பூர்வமாக இயங்கும் நவீனத்துவப் பின்னயம் ஒரு தளத்தில் சமூக விஞ்ானத்தை மறுவாசிப்புக் குட்படுத்தும் போக்கும் ஒரு தளத்தில் எல்லாவற்றையும் தூக்கி எறியும் போக்கும் என இரு வகைப்பட்டுள்ளது. நவீனத்துவம் என்பது மானிடத்தை விமோசனமடையச் செய்வதற்கு அறிவையும பகுத்தறிவோடு ஒட்டியதான நியமங்களை, முன்வைத்தது அறிவொளி (Enlightenment School of thought) இயக்கம் இதன் தொடக்கமாக இருந்தது.
இந்த விமோசனம் கிட்டியதா? - கிட்டவே கிட்டாது ஏனெனில் அறிவும் பொய். தர்க்க நியாயங்கள் என்பனவும் சார் /த்தண்மை உடையன. என்கிறது நவீனத்துவப் பின்னயம் உலக மகாயுத்தங்களும் ஹிட்லரின் தோற்றமும், (Concentration Camps), ஹரோஷிமா, வியட்னாம், கம்போடியா, இல்லாருக்கும் இருப்போருக்கும் மிக அகண்டு கொண்டே செல்லும் இடைவெளிகள் போன்றன நவீனத்துவத்தின் பின் தானே தோன்றியுள்ளன. நவீனத்துவம் நம்மை ஏமாற்றமடையச் செய்து விட்டது. ஆய்வாளர்களையும், அறிவாளிகள் சிலரையும் இந்த ஏமாற்றம் நவீனத்துவப்பின்னயத்துக்கு இட்டுச்சென்றுவிட்டது, தள்ளிவிட்டது.
ஆகவே நவீனத்துவப் பின்னயம் பெருங்கோட்பாடுகளை முற்றிலும் நிராகரிக்கிறது. அவற்றின் தாற்பரியங்களை, அர்த்தங்களைக் குறைத்து மதிப்பிடுகிறது. அதே சமயம் அவற்றில் சிலவற்றைச் துரக்கி எறிகிறது. மாக்ஸரிசம், கிறிஸ்தவம், பாசிசம், ஸ்டாலினிசம், முதலாளித்துவம், ஐனநாயகம், பெண்நிலைவாதம், இஸ்லாம் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்து இவற்றினால் மானிடருக்கும் பயன் ஏதும் கிட்டாது எனக் கூறுகிறது.இவையெல்லாம் அறிவுத்தளம்
11

Page 59
அற்ற அபத்தங்கள் என்று வாய் கூசாமல் கூறுகிறது நவீனத்துவப்பின்னயம். ஆனாலும் இதில் கேலிக் கூத்தாக இருப்பது என்னவென் றால் இக் கோட்பாடுகளுக்கு நிலைப் பாடுகளுக்கும் மாற் றாக எதையும் அவர்கள் முன்வைக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்று தான் கூறவேண்டும்.
அதுவும் இதுவும் சரியில்லை, அவர்களும் சான்றோர்கள் அல்லர், இவர்களும் போலிவாதம் பேசுவோர் ஆனால் சரியென்று எதையும் நான் கூறவில்லை, கூறமுடியாது என்பது தான் அவர்களது வாதம். இது என்ன அபத்தவாதம் என்கிறார்கள் சில சமூகவிஞ்ஞானிகளும் சோஷலிசவாதிகளும் பெண்நிலைவாதிகளும். இப்படிக்கூறும் அவர்களது பூர்விகம் ஸ் வாரஸ்யமானது பூக்கோ (Michel Foucauct) என்பவர் நவீனத்துவப்பின்னயவாதியாக வருவதற்கு முன் தத்துவ வாதியான வரலாற்றுத்துறைப் பேராசிரியராக சமூகவியற் (35/T L.L. 117 L ! - IT6T ET ET J5 (Social theorist) -9 DJ évoluy cü éJ, sió 60) é95 Gibfriu (T6T Jr J, (Political Scientist) இருந்தவர். பேரறிஞர் வரிசையில் இலகுாக இடம் பிடித்தவர் டெரிடா (Derrida) என்பவர் கூட தத்துவவாதியாக கலை இலக்கிய விமர்சகராக கட்டடக்கலை நிபுணராக இருந்தவர்.
நவீனத்துவ பின்னயம் வேறுபட்ட ஒரு விசித்திரமான போக்கையும் நெறிமுறையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அது விலக்கப்பட்டதை, எதிர்ப்புக்களையுடையவற்றை, மறந்தவற்றை, தர்க்க நியாய மற்றவையை, முக்கியமற்றவையை, அடக்கப்பட்டதை, ஒடுக்கப்பட்டதை கரையில் உளள்ளதை, ஏற்றுக்கொள்ள வேண்டுமென்கிறது. மரபு வழிவந்தவற்றை மடமையை ஒளித்துநிற்பவையை, நிராகரிக்கப்பட்டவையை, முதன்மையற்றவையை, ஓரங்கட்டப்பட்டவையை, தவிர்க்கப்பட்ட வற்றை , மெளனிக் கப்பட்டவற்றை தற்செயலானதை கலைக்கப்பட்டதை, முறிக்கப்பட்டதை அந்தஸ்திழந்ததை முன்னுக்குத்தள்ளி அவற்றையும் கருப்பொருளாக்க வேண்டும்
12

என்று வாதிடுகிறது. பூரண அறிவு என்று ஒன்றில்லை என்கிறது. ஆனால் இவற்றின் அர்த்தங்களைக் கண்டு பிடிப்பதில் நவீனத்துவ பின்னய வாதிகள் அக்கறை காட்டவில்லை. அது எங்கே இருக்கிறது என்று அறிய முற்படுகிறது. அது முடியாத தேடலாகவே இருக்கும் போலத் தெரிகிறது. ஆனால் தீர்ப்பு வழங்குவதைத் தவிர்த்து முடிவான முடிவு ஒன்றை முன்வைப்பதைத் தவிர்த்துவிட்டு அதில் ஈடுபாடு உண்டென்று விவாதிக்கிறது. பல வாசிப்புகள் பல அர்த்தப்படுத்தல்கள் உண்டு. அதுவாகவும் இருக்கலாம், இதுவாகவும் இருக்கலாம் ஆனால், ஒரு சிலதை முன்வைக்க முடியாது.இன்றைய வாதம் நாளைக்கு அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே அது பொய்மை நிலையையே அறிவுறுத்துகிறது.
நவீனத்துவ இன்றைய வாதம் நாளைக்கு அர்த்தமற்றதாகிவிடும். ஆகவே அது பொய்மை நியாயத்தையே அறிவுறுத்துகிறது. சமூகவிஞ்ஞானிகள் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்து விளக்கி இலகுவாக்க முற்பட்டால் நவீனத்துவப்பின்னயம் முரண் பாடுகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வையோ சிக்கல்களுடன் பல்வேறுபட்ட அம்சங்களையோ ஒருங்கே இணைத்து பல வாசிப்புச் செய்யச் சொல்கிறது. பல விசேஷங்களை ஒருங்கிணைக்க முற்பட்டு, சிக்கல்களை சிலாகித்துப் பேசுகிறது. தொடர்ச்சிகளையும் அவற்றின் உள்ளடக்க விசேஷங்களை ஒருங்கே காணமுற்படுகிறது. சிக்கல்கள் வேறுபாடுகள் தொடர்ச்சிகள் விசேஷங்கள் நிறைந்த ஒரு விடயத்தில் ஒன்றுக்கு முக்கியம் கொடுப்பதை நவீனத்துவப்பின்னயம் மறுக்கிறது. அவற்றிற்கு அடிப்படை உண்மை என்று ஒன்றில்லை அதன் முக்கியத்துவம் மாறிக்கொண்டே இருக்கும் என்று வாதிடுகிறது.
நவீனத்துவப்பின்னயம் மொழியில் வித்தை காட்டுவதை ஒரு கலையாகவே கொண்டுள்ளது. சொற்களையும் பதங்களையும் அங்கும் இங்குமாகப் பிரட்டி புது அர்த்தங்களைப் பிறப்பித்த நவீனத்துவபின்னயத்திற்கு அதற்கென்றே ஒருகலைச்சொல் ஆக்கம் உண்டு. அம்மரபைப் பேண அது எத்தனிக்கிறது.
13

Page 60
அவற்றைக் கோட்பாட்டு ரீதியில் விளங்கிக்கொள்ள வேண்டும். அத்தகைய சொல்லாக்கங்களைப் புதிய அர்த்த வெளிப்பபாடு களைத் தருவதன் மூலம் நவீனத்துவபின்னயத்தின் அடித்தளக் கோட்பாட்டை விளக்கிங்கொள்ளலாம். அதன் 1/திர் ஒரு வேளை விளக்கம் பெறலாம். ஆனால் அதன் பொருள் மயக்கமும் பெருகலாம். அந்த மயக்கத்தை நவீனத்துவபின்னயம் வரவேற்கிறது. இம் மொழிப்பதங்களை மொழி ஆக்கங்களை மூல ஆங்கிலத்தில் தந்து அதற்குரிய வியாக்கியானத்தையும் தருகிறேன் பிரான்சு மொழிகளிலேயே இவற்றின் பல அடிச்சொற்கள் இருக்கின்றன.
கால ரீதியில் தான் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்,
விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நவீனத்துவபின்னயம்
மறுக்கிறது. வரலாறும் அதன் காலவரன்முறை நிகழ்வுகளும்
கட்டாயமாக ஒரு விளக்கந்தரா. முன்னுக்குப் பின் நடந்த வரலாற்று நிகழ்வுகளில் தொடர் நிலை இருக்கலாம்.
முரண்பாடுகளே அதில் தொடர்ச்சி நிலையாக இருக்கலாம்.
இதை ஆங்கிலத்தில் antichronophonism என்ற பதத்தின் மூலம்
அறியலாம்.
Q9) g5 6ör G)ğ5 fT L fi Lu fT 55 Counter memorialing analysis 6ʻT 6ör p சொற்றொடரை எடுத்துக்கொள்ளலாம். ஒரு பொருளை சமூக யதார்த்தமாய் வைத்து அதனை ஒட்டியோ சார்ந்தோ இன்னொன்றை விளக்க முற்படுதலை நிராகரித்தல் என இதை விளக்கலாம், மூலங்கள் முதற்பொருள்களில் அக்கறை காட்டுவதிலும் பெரும்போக்கு வாதங்களை நிராகரித்தலிலும் (Grand Narratives)நவீனத்து வத்தின் பின்னயத்தின் மையக் கோட்பாடுகள் தங்கி உள்ளன. இந்த பெரும்போக்கு வாதங்களில் (முழுமுதற்பொருள் அல்ல.) லிபரலிசம் , முற்போக்குவாதங்கள், மாக்சிசம், மதவியாக்கியானங்கள் அனைத் தும் அடங்கும் மையத்தில் உள்ள வற்றை மையத்திலிருந்து அகற்றல் (De-Centering) என்ற கோட்பாட்டில் அதிக கவனம் செலுத்தும் நவீனத்துவப் பின்னயவாதிகள்
114

இதையே ஒரு பெருங்கோட்பாடு என்று நம்புகின்றனர். அப்பொழுது அவர்களது இக்கோட்பாடு மையத்திலிருப்பதாக அமையாதா என்று நாம் கேள்வி கேட்கக்கூடாதா? கூடாது என்பதே அவர்கள் விவாதமாக இருக்கும் போலும். எதையும் மையமாக வைக்க முடியாது. எல்லாம் கடந்த உண்மை என்று ஒன்றில்லை. விளிம்புகள், கரை தட்டியவை போன்றவற்றையும் அதே நோக்கில் - மைய நோக்கில் நோக்க வேண்டும்.
மூட்டைகளாக பொதிகளாக இருப்பவற்றின் கட்டுக்களை அவிழ்க்க வேண்டும் - பிய்த்துப் பிடுங்க வேண்டும், யாருக்கும் அவற்றை ஒன்றாக்கி ஒருமைப் பொருளாக்க உரிமையில்லை. அந்த உரிமை அதிகாரத்தின் பாற்படும். அது யாருக்கும் கொடுக்கப்படாது.முரண்பாடுகளை வெளிக்கொணர வேண்டும். உண்மைகள் என்று கண்டவற்றின் (அப்படியாரானாலும் போதிக்கப்பட்டவைகளை) போதாமைகளை இனங்காணல் வேண்டும் (De - Construction). ஆனாலும் இந்தப் பிய்த்துப் பிடுங்கல் இன்னுமொரு உண்மையையோ பொருளையோ வாதத்தை முன்வைக்காது.வெளிச்சம் காட்டிய பின் அம்முயற்சி மறைந்துவிடும் (இது என்ன பித்தலாட்டம் என்று தயவு செய்து என்னைக் கேட்காதீர்கள்).
Derida என்பவர் Differance என்ற ஆங்கிலப்பதம் மூலம் விளக்க முற்படுவதும் இது தான். முக்கியமான ஒரு விடயம் ஒன்றினது வரை வரிலக் கணம் , வரிளக்கம் , எ ப் பொருளுக்கு நாம் வரைவிலக்கணம், விளக்கம்கூற முற்படுகின்றோமோ அதில் தங்கவில்லை. அதனோடு தொடர்புடைய தொடர்பல்லாத ஏனையவற்றின்,மற்றயதின் அர்த்தப்பாடுடைய அர்த்தபபாடற்ற விளக்கங்களிலே அப்பொருளின் விளக்கம் தங்கியுள்ளது. ஒன்றின் அர்த்தம் பல துறை சார்ந்து பல பொருள் சார்ந்து பல விளக்கங்கள் சார்ந்து, இருக்கும். அர்த்தங்கள் காலத்திற்குக் காலம் வேறுபடும். அவை நிரந்தரமற்ற தன்மையுடையன அல்ல. ஆகவே அர்த்தப்படுத்தலை பின் தள்ளிக் கொண்டே போக வேண்டும் கால வரையறையின்றி
15

Page 61
இது தொடர்ந்து கொண்டே இருக்கும் (1972; 1981: 39-40) எழுதப்பட்டவை கூறப்பட்டவை எல்லாமே வாதப்பிரதிவாதங்
களுக்குரியவை.
Tyler இன் (1984:129 :30) வாதம் நவீனத்துவப்பின்னயத்தை ஒரு உள்னத மயக்க நிலைக்குக் கொண்டு போகக் கூடியது.Evoking என்ற சொல்லாட்சியின் மூலம் அவர் விளக்குவது இது தான். ஒருவருடைய கூற்று முடிவுகளை, உண்மைகளை, உண்மைக்கு அடிகோலும் வாதங்களை உண்மையை நிலவும் முயற்சிகளை விளக்கங்களை நிரூபிக்க முயலும் முயற்சிகளை முற்றாக விடுவிக்க வேண்டும். இவற்றைத் துறக்க வேண்டும். ஒன்றை ஒன்று பிரதிபலிக்க முடியாமைக்கு மாற்றாக இச்சொல்லாட்சி எடுத்தாளப்பட்டி ருக்கிறது. நவீனத்துவ சமூகவிஞ்ஞானிகள் பெரும்பாலும் தங்கள் விசாரணைகளையும், விளக்கங்களையும், நம்பிக்கைகள் அனுமானங்கள், தீர்க்கமாக ஆய்வு செய்யப்படாத விடயங்கள் போன்றதை எங்களுக்குத் தய மாட்டார்கள். ஒன்றில் தீவிரமாக ஈடுபட்டு பலதை விளக்கி ஒரு சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதை அடி அத்திவாரமாக்குவார்கள், என்று அவர்களை நவீனத்துவ பின்னயம் விமர்சிக்கின்றது.
நவீனத்துவபின்னயை வாதிகளுக்கு இதில் உடன்பாடில்லை. முழுமுற்றாக நிறுவப்பட்ட உண்மைகளோ தத்துவங்களோ கோட்பாடுகளோ நிரூபனங்களோ தெளிவுகளோ இல்லை. அப்படி எவற்றிக்கும் நாம் உரிமை கோர முடியாது. அவற்றைக் கேள்விகளாகவோ அவற்றிக்குப் பதில்களாகவோ எதையும் முன்வைக்க முடியாது. இதனால் பெறப்டுவது யாதெனில் விலக்கப்பட்டவையும் நிரூபிக்கப்படாதவையும் கூட முக்கியமானதாக மாறலாம் ஆனால் அவை தற்போது முக்கிய மாளவையாக இருக்கமாட்டாது என்பது தான் அவர் களது வாதம் இதை antifoundationalism என்று நவீனத்துவபின்னயம் நிறுவி உள்ளது.
6

இதன் தொடர்ச்சியாக வூக்கோ (1980:83) அவர்களது வாதத்தையும் நாம் முன் வைக் கலாம் . வரலாற்றை அடிப்படையாகக் வைத்து மேற்கிழம்பிய ஒரே தன்மைத்தான கோட்பாடு ஒரு அறிவுசால் மையம் ஒன்றைக் கொண்டிருக்கும் என்பதை வூக்கோ மறுக்கிறார். -உதிரிகளாக, தொடர்புகள் அற்றது போல் காட்சியளிக்கும் அறுந்த, பெரும்போக்கிலிருந்து அகற்றப்பட்ட அறிவு நிலைகள் பல உண்டு. அவற்றை இனங்கண்டு நாம் அங்கீகரிக்க வேண்டும். ஒரு பெரு அறிவு பரம்பொருள் என்பது நிராகரிக்கப்பட்டு ஒரு விடயத்தை பற்றிய பல "அறிவுகள்" உண்டு என்பதே அவரது வாதம்.
தற்கால சமூக விஞ்ஞானம் தலைவனை கதாநாயகனை உருவாக்குகிறது, வழிபடுகிறது, ஒரு நிகழ்வை ஏனையதை விடப் பெரியது என்று முக்கிய அந்தஸ்து ஒன்றை அதற்கு நல்குகிறது. கதாநாயகனை நிகழ்வின் சூத்திரதாரி என்று விளங்கிக் கொள்கிறார்கள் நவீனத்துவப்பின்னயம் அதை மறுத்து நிகழ்வுகள் உதிரியாக முக்கியத்துவம் பெற வேண்டும். தனி மனிதன் தனித்து நின்று சாதிப்பது யாதுமில்லை. இதை மிகவும் ஆக்ரோவுத்துடனும் துணிவுடனும் கருத்தாவின் மரணம், g(Ibgig5,667 LDT 6007th (Deaths of author, & death of the subject) 6T657n); கூறிவிட்டார்கள்.
இட நிலை (Space) என்று ஒன்றை நாம் வகுக்க முடியாது இது இவ்விடத்திற்குரியது என்று நாம் கூற முடியாது. அது எங் களது கருத்துக்கேற்றவாறு அமையாது. இது இந்நிலைக்குரியது என்று கூறுவதற்கு உடைய வரம்புகள் உடைக்கப்பட்டுவிடும், அழிந்து விடும். எப்பொருளும் எப்போதும் ஆடி அசைந்து கொண்டே இருக்கும். பொருளின் அர்த்தம் நிரந்தரமானதல்ல இவ்வாதம் நவீன பின்னயத்திற்கு முக்கியமானதொருதளம்.
இடநிலைக்கு அடுத்ததாக நவீனத்துவபின்னயம் அதன் தொடர்நிலையாகக் கூறுவது ஒரு பொருளின் அர்த்தம்
7

Page 62
பற்றியது ஒரு பொருள் நிலையின் அர்த்தம் தனக்குள்ளேயே வெடித்து உடைந்து போகும். அது தன்னையும் அழித்து அதைப்பற்றிய தன் எண்ணங்களையும் அழித்து விடுகிறது. அர்த்தம் என்று நாம் எண்ணி இருந்தது மறைந்து போகும் என்பது போடி றிலாடி ன் ( Baudrichard 1983: 57) வாதமாக இருக்கிறது.
ஒன்றின் நிலையோ பொருளோ அர்த்தமோ எப்பொழுதும் சிக்கல் நிறைந்து இன்னொன்றுடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்து இருக்கும் அது எப்பொழுதும் முடிவில்லாத தொடர்நிலையாகவே சங்கிலிப் பிணைப்புடன் இருக்கும்.
நாம் இது வரை காலமும் ஒன்றைக் காலம் கடந்த உண்மையாக நிறுவிவிட்டு, அதை ஒட்டிய அனுமானங்களாக ஏனையவற்றை நிறுவமுற்படுவோம்.இதுகேலிக்கூத்து என்கிறது நவினத்துவப் பின்னயம். நாம் உண்மை என்று நிறுவியது எங்களது எண்ணக்கருத்தின் அடிப்படையில் தோன்றிய உண்மை என்ற எங்களது கணிப்பே.
நவீனத்துவபின்னய வாதிகள் ஒன்றை நிறுவுவதற்கு பிற அன்னிய காரணிகளை ஏற்க முடியாது என்கின்றனர். அவற்றை வைத்துப் பிறிதொன்றை நிறுவ முற்படுவது பேதமை நிறைந்த செயல் என்கிறது. இவ்வளவு காலங்களாக இயற்றப்பட்டவை உருவாக்கப்பட்டவை எல்லாம் சரியானது எனக் கொள்ள முடியாது. அவற்றைப் பொதுவாக narrativeS என்று அழைத்து அவற்றை உலகநோக்கு பெரும்போக்கு வாதங்கள் (meta narratives) கட்டளைகள், ஆவணங்கள் , சான்றுகள் சமய நெறிகள், ஆசாரங்கள் என்று பிரித்து இவையாவும் தங்களது வாதங்களே சரியெனக்கொள்ளப்படுகிற படியால் மட்டும் அவை உண்மைகளாகி விடாது ஆனால் இது தான் உண்மை என்றும் நவீனத்தவபின்னயம் கூற மறுக்கிறது.
18

சிற்றறிவு விடயங்களும் பல உள அவை பாரம்பரியங்கள் ஐதீகங்கள் வட்டார மொழிகளில் உள்ளவை. குறிச்சி வட்டார நிகழ்ச்சிகளை ஒட்டி எழுந்த வழக்குகள் என இவை பல வகைப்படும். இதன் முக்கியத்துவம் எங்கு தங்கியுள்ளதென்றால் இதைக் கூறியவர்களும் எழுதியவர்களும் இது தான் உண்மை, இது காலம் கடந்து நிற்கும், முழுமுதற்பொருள், என்று வற்புறுத்தவில்லை. போகிறபோக்கில் சொல்லிப் போந்தார்கள் அவை யாவும் கவனிக்கப்பட வேண்டியவை.
இந்த ரீதியில் மொழியின் ஆதிக்கத்தையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு விடயங்கள் தெரிந்தவை எமக்குத் தெரியாதவை எத்தனை கோடி விடயங்கள்? இவற்றை எல்லாம் நிர்ணயிப்பது மொழிதான். மொழியின் பிரயோசனம் தான் தெரிந்தவற்றையும் தெரியாதவற்றையும் நிர்ணயிக்கிறது. இது மொழியின் ஆதிக்கத்தின் பாற்பட்டது என்று லொய்டோ கூறுகிறார். (Lytord 1984:60). தெரிந்தவை, தெரியாதவை. பிழையானவை என்று கருதப்பட்டவை எல்லாம் மொழியை மாயாஜால வகைகளில் கையாளப்பட்டதன் விளைவாக உண்டானவையாக இருக்கலாம். எங்களுக்கு எவை எவ்வளவு அறிபொருளாக இருக்கிறது என்பதை மொழியில் லாகவமான கையாடல் தான் நிர்ணயிக்கிறது.
கருத்துக்கள் நவீனத்துவபின்னயவாதிகளுக்கு நிலையானவை அல்ல. அவை அங்கும் இங்கும் அலைந்து திரிபவை. ஓடி ஒழிந்தும் இருக்கும். கட்டுக்கள் அறுந்து போகும் வண்ணம் உலவித்திரியும். இவை முரண்பாடுகள், விளக்கமற்ற நிலைகள் போன்றவற்றை உள்ளடக்கும். ஆகையால் நவீனத்துவ பின்னயவாதிகள் ஒழுங்கு, தர்க்கம், நியாயங்கள் போன்றவற்றை நிராகரித்து முரண்பாடுகளையும் ஒழுங்கின்மையையும் அறுந்த நிலைகளையும் வரவேற்றுப் போற்றுவார்கள் . மனித இயக்கத்தில் கெட்டிக்காரத்தனம், கட்டுப்பாடு, செய்திறன், வரன்முறைக் காரியசித்தி போன்றவற்றில் நம்பிக்கை வைக்காத
119

Page 63
லியோடாட் (1984) இவை நவீனத்துவத்தின் தர்க்க முறையின்பாற்படும் என்று வாதாடுகிறார். இந் நிராகரிப்புக்கு அவர் தரும் காரணமும் ஏற்புடைத்து போலத் தெரியும் வண்ணம் அவர் வாதாடுகிறார். அவை பல்வேறுபாடுகள், சுதந்திர சுயாதீன மனப்போக்கு கட்டுப்பாடற்று வெறுமன போக்கு "சும்மா” இருத்தலை இது ஒக்குமா? இயைந்து கொடுக்கும் தன்மை போன்றவற்றை அழித்து விடும் என்று கூறுகிறார். டெரிடா என்பவர் வாய்மொழிப்பேச்சுக்கு அந்தஸ்து வழங்க மறுக்கிறார். எழுத்து வயப்பட்டவை வாய்மொழிப் பேச்சிலும் விட முக்கியமானது என்கிறார் இவர்.
ஒருவரது வாதம் , தனிமனித நிகழ்ச்சி, ஒரு நூல் போன்றவற்றிற்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுவதை பநவீனத்துவ பின்னயவாதிகள் தவிர்த்து விடுவர். அதி விசேடமான தென்று ஒன்றுமில்லை என்பதே அதன் தாற்பரியம். திட்டமிடப்பட்ட உபாயங்கள், வழிமுறை, செய்முறை, குறிக்கோள்களை அடக்கிய திட்டங்கள் (Project) போன்றவற்றை வன்மையாகக் கண்டி க்கும் நவீனத்துவ பின்னயவாதிகளை anachists என்று அழைக்கலாமா? ஆனாலும் அவர்களது நம்பிக்கை யின்மைக்குக்காரணம் அனேகமாக ஒன்றுமே பூரணத்துவ நிறைவேற்றம் காணுவதில்லை. அப்படி நிறைவேற்றவும் முடியாது. ஆகையால் ஏன் அப்படிப்பட்ட குறிக்கோன்களை வீணாக ஏற்படுத்த வேண்டும். போகிற போக்கில் செய்து கொண்டு போகலாமே,திட்டம் தேவையில்லை.
நாளாந்தவாழ்க்கை முறையை மையப்படுத்தி அதைக் கணக்கில் எடுத்து அதை ஆய்வுப் பொருளாக எடுத்தலை அங்கீகரிக்கும் நவீனத்துவபின்னயவாதிகள் உலகளாவிய மட்டத்தில் நிறுவப்பட்ட கோட்பாடுகளை நிராகரித்துள்ளனர். (GlobalTheory) நூலாசிரியனுக்கு மதிப்பும் கெளரவமும் அழிக்கத் தேவையில்லை. வாசிப்போனே முக்கியமானவர் அவர் கொடுக்கும், எடுக்கும் விளக்கமும் புரிதலுமே முக்கியமானது என்று கூறும் நவீனத்துபின்னய வாதிகள் நூல்களைக் கீழிறக்கி விடுகிறார்கள்.
120

வாசித்தல் (reading) என்ற சொல்லுக்கு நவீனத்துவபின்னய வாதிகள் உணர்தல் விளங்குதல் என்று பொருள் காணுவர். இங்கு என்னுடைய விளக்கம் உன்னுடைய விளக்கம் என்ற கருத்துக்கு இடமுண்டு. அந்த விளக்கம் சரியா, போதுமானதா, ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதா என்பதில் அவர்களுக்கு அக்கைறயில்லை. அதாவது ஒன்றை இன்னொன்றில் காணுதல் , உணர்தல் அல்லது ஒன்றின் இடத்தில் இன்னொன்றை வைத்து முன்னையதை விளங்கிக் கொள்ளல் என்பது இயலாதகாரியம். அம்முயற்சியில் அர்த்தம் உணர்வு வடிவம் எல்லாமே முழுமையாக இருக்காது. அவை குறைக்கப்பட்டு ஏன் அழிக்கப்பட்டும் விடலாம்.
ஒரு விடயத்தின் இட எல்லைகளை நிச்சயமாக முடிவு செய்ய முடியாது. அதன் இருப்புநிலை எங்குண்டு என்று கண்டு பிடிக்க முடியாது(Site and Space), நவீனத்துவ சமூகவிஞ்ஞானம் ஒருவரது உள்ளுணர்ச்சி சார்ந்தவை (Subjective) அல்லது
வெளிக் காரணங் களால் ஆன தர்க்க நியாயங்களை
அடிப்படையாகக் கொண்டவை (objective) என்ற ரீதியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் . இவை இரண்டையும் நவீனத்துவபின்னயம் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொள்ள வில்லை என்பதற்கு அவர்கள் தரும் காரணங்கள் (Baoudrillard 1983 : 1978 koucanet 1970 : 261 - 62) (3. JfTL)_ffla\fTL G)Lrfil (T, வூக்கோ) பல. ஒரு பிரகிருதியை-மானிடப்பிறப்பை மையமாக முக்கியமாக எதற்கும் எடுகோளாக வைக்க முடியாது. அவனை/ள வைத்து ஒரு தேடலை, ஆய்வை, வைத்து நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் மானிடப்பிறப்பு என்பது எப்போதும் ஒரு தன் மைத்தான ஒட்டுமொத்தமான குணாதிசயங்களை எப்போதும் கொண்டிருக்காது. அது சாத்திய மல்ல. அது பொய் யான முகமூடிய னிந்த உண்டாக்கப்பட்ட ஒரு உருவம். ஒரு பாத்திரம். அது அதிகாரத்தைக் கைப்பற்றும், ஒன்றுக்கு தற்காலிக அர்த்தம் கொடுக்கும். அது அடங்கும், அடக்கும். இது நவீனத்தின் கண்டுபிடிப்பேயல்லாமல் அர்த்தம் தெரியாத ஒரு வஸ்து.
12

Page 64
இதை உணர எப்போதும் சட்டை உரிக்க வேண்டும் என்கிறார்களா? இது என்று அவளை/அவனை அஃறினைப் பொருளாக்கி விட்டார்களா? இன்னும் சற்று மேலே போய் இது மொழியினால் உருவாக்கப் பட்டதே அன்றி வேறொன்றுமில்லை என்றும் கூறுகிறார்கள். (ALinguistic convention, Schwartz 1990 - 38) எல்லாம் மாயை தானா என்று
கேட்கத் தோன்றுகிறதா?
Text என்ற சொல்லை வைத்தும் நவீனத்துவபின்னயவாதிகள் மாயாஜாலம் காட்டுவர் எல்லாமே நூல் போன்றன, நூல்களே தான். அதாவது வாசித்து வாசித்து மறுவாசிப் செய்ய வேண்டியவை. காட்சிகளை, எண்ணங்களை, நிகழ்வுகளை (all phenemenon) J5 || - |61 g56it 1 1 (35g57 561 17 jg). J) J j)gj5g| உணரவேண்டும் என்பதைப் பல நவீனத்துவபின்னய வாதிகள் வற் 11றுத் துவர் . பூரணத்துவம் என்று ஒன்றையும் நவீனத்துவபின்னயம் ஏற்காது. அப்படி ஒன்றில்லை. ஒன்றைப் பூரணத்துவமாக்கினால் (பூரணத்துவம் என்று ஒன்றை ஏற்றுக் கொண்டால்) ஏனையவற்றை விலக்க வேண்டி வந்துவிடும் எதையும் விலக்கித்தள்ளுவதில் நவீனத்துவபின்னயத்திற்கு உடன்பாடில்லை.
மேற்கூறிய்வை தான் நவீனத்துபின் கோட்பாடுகள் என்று சொல்வதற்கில்லை. நவீனத்து பினனய பரிபாஷையில் பூரணத்துவமில்லை என்பது போல இது பூரண விளக்கம் என்று நான் கூறமாட்டேன். பெரும்பாலும் நவீனத்துவ பின்னயத்தை ஓரளவு புரிந்து கொள்ள நான் கூறியவை உதவலாம் நவீனத்துவபின்னயவாதிகளிடையே பிரிவுகளும் முரண்பாடு களுண்டு அதை ஒரு இயக்கமாக ஆக்கி வாதப் பிரதிவாதங்களை ஏற்றுக் கொண்டு தங்களது கட்டுரைகளில் அவற்றை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். காயத்திரி ஸ்பிவாக் ( Gayatri Spivak) என்றும் பெண்மணி அவர்களில் ஒருவர். அவரது கடினமான ஆங்கில நடையைப் புரிந்தது கொண்டு அவரது வாதங்களை விளக்கிக்
122

கொள்வதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும் இந்த வார்த்தை மாயாஜாலமும் நவீனத்துவபரின் னயத்தின் ஒருகோளாறு.
ஆனாலும் சில கருத்துக் களை மறுக் க முடி யாது போலுமிருக்கும். ஒரு தத்துவ வாசனை அடிக்கடி மேலோங்கு வதையும் பார்க்கலாம் . ஒன்றிலும் நம்பிக்கையற்ற மனப் போக்கும் வந்து போகும். ஆய் றிவாளர் களரின் ஏமாற்றங்களும் நம்பிக்கையீனமும் நவீனத்துவ பின்னயத்தில் பிரதிபலிக்கப்படுகிதா? ஆம் என்று தான் சொல்ல வேண்டும் மானிட தர்மத்தின் வீழ்ச்சி, முற்போக்குவாதம் (மாக்கிசம், லிபரலிசம், ஜனநாயகம்) கொடுத்த நம்பிக்கைகள் அழிந்து போனதின் தாக்கம், அழிவுகள், நாசகாரவேலைகள் - மத அடிப்படை வாதத்தின் வன்முறைகள் மேலாதிக்க சக்திகளின் சுயநல வேட்கை , போன் றன ஆய் வறிவாளர் களை மனக்கிலேசத்துக்குள்ளாக்கி எதிலும், எவற்றிலும் நம்பிக்கை இல்லை. எல்லாமே உண்மையற்ற அர்த்தமற்ற சுழற்சி என்று சொல்ல வைத்திருக்கிறது.பொதுவாக நவீனத்துவபின்னயம் இளந்தலைமுறை ஆய்வாளர்களையும் பட்டதாரிகளையும் ஆகர்ஷ்த் திருக்கின்றதைப் பார் க்கும் பொழுது இது இளந்தலைமுறையில் புரட்சி வெளிப்படா என்று கூடத் தோன்றுகிறது. கட்டிறுக்கமான கட்டமைப்புக்களைத் தகர்க்கும் ஒரு உள்நோக்கம் இதற்கு உண்டா? (anti establishment). அது தான் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கும் உள்ளவற்றிக்கும் நவீனத்துவபின்னயம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதா?
இறுதியில் முடிவுரையாக ஒன்றைக்கூறி இக்கட்டுரை ஒரு முதல் முயற்சி இதற்குத் தொடராக இன்னும் வரும் எனக்கூறி ஒரு கருத்தை வலியுறுத்த விரும் /கிறேன். நவீனத்துவபின்னயம் தனது வாதத்தில் சமூகத்தில் நிகழும் அட்டூழியங்களை நியாயப்படுத்தி விடுமோ என்ற பயம் எனக்குண்டு. எதிலும் நம்பிக்கை அற்று எல்லாவற்றையும் அதன் அதன் நியதிப்பபடி ஏற்று உலகத்தின் அதிகார, அட்டூழிய, சுரண்டல்
23

Page 65
அடக்கல் ஆணாதிக்க கொடுமைகளை ஏற்று வெறுமனே "சும்மா” இருக்கலாமா?
சமூகப்பிரக்ஞை உள்ளவர்கள் சமூகத்தை மாற்ற வேண்டும். அதற்கு நவீனத்துவபின்னயம் கைகொடுக்காது என்றும் அடுத்த கட்டுரையில் மானிடம் ஏன் நடவடிக்கைகள் எடுக்கேவண்டும் அதற்கு மாக்ஸிச பெண்நிலைவாத தேசிய வழிமுறைகள் எப்படிப்பயன் அளிக் முடியும் என்பதைக் கூறுவதன் மூலம் நவீனத்துவபின்னய மாயையிலிருந்து நாம் ஏன் விடுபட வேண்டும் என்று கூற முயற்சிக்கின்றேன்.
124

References
Baudrillard, J. 1983 In the Shadow of the sient majorities) New York :
Semiotext (e).
1983c Simulations. New York : Semiotext (e)
Derrida, Jacques, 1978. Writing and Difference. London; Routledge and
Kegan Paul. 1972 Marges. Paris: Editions de Minut. 1981 Positions. Chicago: University of Chicago press.
Foucault,Michel. 1970 The Order of Things : An Archeology of the Hu man Sciences. New York: Vintage. 1980. Power/Knowledge . Ed. C. Gordon:trans.
C.Gordon, L.Marshall. J.Mepham. and K.Soper. New york : ... Pantheon
Books.
Lyotard, Jean-Francois. 1984. The Postmodern Condition: A Report in
Knowledge, trans. Geoff Beninington Brian Massouri. Minneapolis : University of Minnesota Press.
Schwartz, Joel 1990 "Antihumanism in the Humanities. "Yhe Public In
terest 99 (Spring): 29-44
Toyanbee Arnold. 1954. A Study of History voli-Xi London: Oxford
University Press.
Tyler, Stephen. 1984. "The Poetic Turn in Postmodern Anthropology,
The Poetry of Paul Friedrich"American Anthropologis 86: 328-36.
125

Page 66
பெண்மக்கள் விலங்கு
த வேதநாயகி
இக்கட்டுரை 1938ம் ஆண்டு தொகுக்கப்பட்ட ஈழகேசரி ஆண்டுமடலில் இருந்து எடுக்கப்பட்டது. பல பெண்நிலைவாத கருத்துக்களை தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் கூறும் வேதநாயகி பெண்நிலைவாத முன்னோடிகளில் ஒருவர் என ந7ம்கொள்ள7ல7ம். 20ம் நூற்ற7ண்டில் ந7ம் பேசும் பெண்நிலைவாத பிரதி வாதங்கள் இங்கு தெளிவாக எடுத்த7ள7ப்பட்டுள்ளன.
கொமுனிசப் பிரகடனம் போல (Communist Manifesto) இதைப்
பெண்நிலைவாத பிரகடனம் என்று ந7ம் அழைக்கலாம்.
ஆராய்ச்சியாளர்கள் நாம் வியப்படையத்தக்க அரிய பல உண்மைகளை கண்டுபிடிக்குங்காலம் இது. நெடுங்காலமாக நாம் நம்பிவந்த பல கொள்கைகளும் பழகிவந்த பல பழக்கவழக்கங்களும் இன்று பிழையானவை யென்று நீரூபிக்கப்படுகின்றன. வேதகாலத்திலே இல்லாததும் வேதாகமங்களிலே விதிக்கப்படாததுமான தீண்டாமை என்னும் ஒரு கொடிய நோய் பாரதநாட்டிலே இடைக்காலத்திலே முளைப்பதாயிற்று. நாட்டுமக்களில் ஒரு பகுதியினர் அதற்கு ஆளாகித் துடித்தனர். அவர்கள் வடித்த கண்ணிர் மாதாவின் மடியை நனைத்து அவள் வலிமையைக் குறைத்தது. அதனால் அவள் அயலாருக்கு அடிமைப்பட்டுச் சிறுமையை டந்து கண்ணிர் விடலானாள். உலகப் பெரியாரான மகாத்மாஜி அந்நோயை ஒழிப்தையே தம் வாழ்வின் பெருநோக்காகக் கொண்டிருக்கிறார். அவர் வேலை இன்று மகத்தான பயனை அளித்துக்கொண்டிருப்பதை உலகமறியும்.
ஆனால், அத்தீண்டாமையைப்போல இடைக்காலத்திலெழுந்த
மற்றெரு பெரிய விடநோய் நாடு முழுவதிலும் பரந்திருக்கிறது. தீண்டாமையை விட இது நேர்முகமாக எல்லோரையும்
126

கெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் இந் நோயாளிகள் மனமுடைந்து கண் ணிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நோய் எது? பெண்கட்டுப்பாடு, பஞ்சமர்களைப் போலவே -ஏன் இன்னுங் கொடுமையாகப் பெண் கள் தாழ்த்தப் பட்டிருக்கிறார்கள் . ஒரு தாய் பிள்ளைகளுடன் ஒவ்வொருவருக் கொவ்வொரு நீதி. அண்ணன் உயர்குலம், அவனுக்குச் சுதந்திரம்! தங்கை இழிகுலம், அவளுக்கு அடக்குமுறை, அக்காவுக்கொருநீதி, தம்பிக்கொருநீதி.
தாழ்த்தப்பட்ட வகுப்பினராய பெண்களிடத்தே தான் நாட்டின் ஒவ்வொரு குழந்தைகளும் பிறந்து வளர்கின்றன. பஞ்சமரிலும் தாழ்த்தப்பட்டவராய பெண்கள் தொகை எவ்வளவு அதிகம்! உயர்ந்துகொண்ட வகுப்பாரோடு பெண் வகுப்பார் எவ்வளவு துாரம் கலந்தொழுகிறார்கள்! இவர்கள் தாழ்வு பஞ்சமர் தாழ்விலும் நாட்டுமக்களைப் பன்மடங்கு தாக்குகிறது. காந்திஜி இதை அறியவில்லையா? அறிந்தார். பாரதநாட்டுப் பெண்கள் விழித்துக்கொண்டார்கள். அங்கே பாரத மாதாவின் விலங்கோடு அவள் பெண்மக்களின் விலங்கும் படாரென்று அறுபட்டுக் கொண்டிருக்கிறது. அதிக வேலைக்கு இடமிருப்பது தீண்டாவகுப்பிலேதான். ஆனால் காந்திஜி அவ்வகுப்பார் பொருட்டே மிக உழைக்கிறார். ஆனால் நம் இலங்கைத் தமிழ் மகளிர் நிலை அவ்வாறில்லை. அநீதியிலே தோய் த தெ ழுதிய சட்டங் களொன் றும் எங் களை விட்டபாடில்லை. முன்னேற்றத்துக்குரிய அறிகுறிகளென்றும் இங்கே காணப்படவில்லை.
நம் ஆண் மக்கள், கல்வியையும் அரசியலையும் ஏன் சமயத்தையும்தான் தம்மிடமே வைத்துக்கொண்டு நம்மைத் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். அதன்மேலும் பெண்களால் இவையெல்லாம் ஆகாது என்றுங் கூறுகிறார்கள். பிறநாட்டுப் பெண்களுக்கு ஒவ்வொரு துறையிலும் நாம் தலைகுனிந்து நிற்கிறோம். அவர்கள் தம் ஆண்மக்களுக்கு எவ்வழியிலும் பின்னிற்பதில்லை. நம் முன்னோராய பெண்கள் அறிவிலும்
127

Page 67
தவத்திலும் அரசியலிலும் சுதந்திரத்திலும் உயர்வடைய ஆண்மக்களுக்குச் சிறிதும் தாழாத இடத்திலே இருந்தனர். நம்முடைய நிலை எது? தவம், அறிவு, உடல்நலம், உழைப்பு, தேசத்தொண்டு, சுதந்திரம், அரசியல், புகழ், இன்பம் என்ற ஒவ்வொன் றிலுந்தான் நம் ஆடவர் க்கும் பிறநாட்டுப் பெண்களுக்கும் நம் முன்னோராய பெண்களுக்கும் நாம் மிகத் தாழ்வாயிருக்கிறோம். சுயநல ஆசையை விடுவோம். பிறப்பின் நோக்கம் ஒருஆடவனுக்கும் சில குழந்தைகளுக்கும் அவசியமற்ற அல்லதுபொருத்தமற்ற சில உதவிகளைச் செய்வதேயல்ல. உலகத்துக்கு நல்லமுறையிலே தொண்டு செய்வதுதான் அறிவும் சுதந்திரமும் உடல் நலமில்லாமல் எவ்வாறு தொண்டு செய்யலாம்.
பாரதப் பெண் கள் யுத்தமுனையிலே ஆயுதமேந்தி வீரங்காட்டினர் தவமுடைய ராய் அறிவு கொழுத்தினர். வண்டிமுதலிய ஊர்திகளைச் செலுத்தினர். அரசர்க்கிடையிலே தூதுபோயினர்.அரசரோடு ஒக்க இருந்தனர். அயல் நாடு களுக்குத் தனியே போகவும் அவர்கள் பின்வாங்கவில்லை. அன்புடைய ஆடவேராடு அச்சமின்றிப் பழகி விளையாடி னார்கள். இசையிலுங் கூத்திலும் முதன்மை பெற்றிருந்தனர். ஆடவரில்லாதநேரத்து வீட்டுக்கு வந்தவர்களை முன்னறியாத வராயினும் உள்ளேயழைத்து வேண்டும் பொருள் கொடுத்து அனுப்பினர் இவையெல்லாம் ஆதாரமற்ற கூற்றுக்களில்லை. அப்பெண்களுடைய வழியிலே வந்த நாம் எந்நிலையிலி ருக்கின்றோம்?.
யந்திர நிபுணர்கள் , கவிகள , அரசியல் வாதிகள் , தேசத் தொண்டர்கள், கலைச்செல்வியர்கள், ஆராயச்சியாளராகப் பெண்கள் பிறநாடுகளிலும் பாரதநாட்டிலும் நிறைந்திருக் கிறார் கள் . பரிற நாடுகளிலன் றிப் பாரதநாட் டி லே மகாராஷ்டிரத்திலும் பெண்கள் தனியே பிரயாணஞ் செய்யும் உரிமையுடையவராயிருக்கின்றனர். நமது நிலை என்ன? அவ்விடங்களிலே ல் லாம் இளங் குழந்தைகள் கூடப்
28

பெரியவர்களைப் போல அரிய திறமையுடையவர்களாயிருப்பது தாய்மாரின் உயர்வாலன்றோ?
நாமேன் இவ்வாறு தாழ்ந்திருக்கிறோம்? பிறர் கலப்பின்மை, அடக்குமுறையின் கொடுமை, பிழையானகல்வி, சீதனவழக்கம், வெளியழகில் விருப்பம் வீட்டு வேலையிலும் குழந்தை வளர்ப்பிலுமுள்ள பிழைகள் , குடும்பத் தடை, பெண் பிரமச்சாரிகளுந் துறவிகளுமில்லாமை என்பனவே நம் தாழ்வுகக்குக் காரணமாகும்.
நாம் எப்போது எமக்குரிய நிலையை அடைந்தவராவோம்? கட்டாயக்கல்வியிலும் உயர்தரக் கல்வியிலும் நாம் ஆண்
மக்களுக்குத் தாழாமலிருக்கவேண்டும். ஆடவரிலே அறிவு
மிகுந்த துறவிகள் பிரமச்சாரிகளாயிருப்பது போல, நம்மிலும்
அவர் தொகைக்குச் சரியான அறிவு மிக்க துறவிகள்
பிரமச்சாரிகளாயிருக்க வேண்டும் பெண் பிரதிநிதிகள் தொகை ஆண் பிரதிநிதிகளின் தொகைக்குச் சமமாயிருக்க வேண்டும்.
பாவைகளை அலங் கரிப்பது போல ஆடைகளாலும்
ஆபரணங்களாலும் நம்முடலை அலங்களிப்பதுமுற்றாக ஒழிய
வேண்டும். ஒருவனை மணமகனாகத் தெரியும் போது
பொருளை எதிர்பாராமல் அவனுடைய அறிவு, உழைப்பு,
முயற்சி, ஒழுக்கம், ஆரோக்கியம், நன்மதிப்பு என்பவற்றையே
எதிர்பார்க்கிறோமென்றால் அவனுக்கு மனைவியாகும்
பெண்ணிடத்தும் சீதனத்தை எதிர்பாராமல் கணவனுடைய
தகுதிகளையே எதிர்பார்க்கவேண்டும். ஒரு ஆண்மகனைப்
போலே ஒரு பெண்ணும் தன்னையும்தன் குடும்பத்தையும்
ஒழுங்காக நடத்திக் கொண்டு தேசத்துக்குக் தொண்டு
செய்யக்கூடியவளாயிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் பெண்களின் தாழ்வு நீங்கினதாக எண்ணப்படலாம்.
நமக்கு வேண்டியது விடுதலை,விடுதைல என்பது என்ன? பிறரை வருத்தாமல் எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலை என்று ஒரு பெரியார் கூறுகிறார். ஆம் ஒருவனோ
129

Page 68
ஒருத்தியோ சன்மார்க்கத்துக்கு விரோதமில்லாமல் எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலையே விடுதலை. அதிகாரத் திமிர் பிடித்த வல்லரசுகள் ஆயுதபலத்தால் ஏழைநாடுகளின் இரத்தத்தைக் குடிப்பதைக் கேட்குந்தோறும், நம்மவர்க்கெல்லாம் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வருகிறது. ஆனால் "தாங்கள் எங்களை எவ்வாறு நடத்துகிறார்களென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நம் இந்தியப் பெண்களின் விலங்குகள் அறுபடும் ஓசையை நாம்ஒவ்வொருநாளுந்தான் கேட்கிறோம். பிறநாட்டுப் பெண்களின் குது கலமான சிரிப்பொலி கடல்கடந்து வந்து நம்மைக் குலுக்கிக்கொண்டி ருக்கிறது. உறுதியான உடம்போடும், கம்பீரமாய் மகிழ்ச்சி நிறைந்த முகத்தோடும், அறிவொளி பொருந்திய கண்களோடும் அவர்கள் நம் முன் நிற்கிறார்கள்.நாம் மாத்திரம் வைத்தியரையும் தேநீரையுந் தேடிக்கொண்டு தளர்ந்த உடலினராயிருக்கிறோம். ஒரே பரீட்சையிற் சித்தியெய்தியவருள் ஆடவரிலும் பார்க்கப் பெண்களாய நாம் குறைந்த தகுதியோடிருக்கிறோம். வெறும் புத்தகத்தைப் பாடஞ் செய்வதல்லாமல் அறிவுடையார் பலரோடோ அல்லது சிலேராடுதானேபழகமுடியாத நமக்கு அறிவு எவ்வாறு விசாலமடையும்? சகோதரிகளே! நாம்! இவ்வளவு குறைவாயிருக்கிறோ மென்பதே நம்மிற் பலருக்குத் தெரிவதில்லை ஏழைப்பெண்களுக்கிருக்குஞ் சுதந்திரந்தானும் நமக் கில் லையே! அவர்கள் எவ்வளவு சுறுசுறுப் போடு சந்தோஷமாக உழைக்கிறார்கள் குடும்பத்திலே அவர்கள் இட்டதுதான் சட்டம். ஏன் கைம்மை களுடைய நிலையுந்தான் நாம் ஆசைப்பட வேண்டியிருக்கிறது. கட்டுப்பாடுகள் அவ்வளவுதூரம் நம்மை நெருக்குகின்றன.
சீதனவழக்கத்தாலே பெற்றோர் தம்பெண்குழந்தைகளைப் பாவைகளாக வைத்திருந்து நகைகளைப் பூட்டிப் பொருளை அவர்கள் தலையிலே சுமத் தி கணவன் விட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். படித்தஅண்மக்களே தாம் ஆடம்பரமாய் வாழவோ,கடன்களை நீக்கவோ வேண்டிய பொருளோடு நமது எளிய தேவைகளை நிறைவேற்ற ஒரு மீளா அடிமையுங்
130

கிடைக்கிறதே என்பதனால் மேலான தகுதியுள்ள பெண்களைப் புறக்கணிக்கின்றார்கள். அதனால் சீதனமுள்ள பெண்களது வாழ்வுங்கெடுகிறது.தகுதியுள்ள பெண்களது வாழ்வும் கஷ்டமாக முடிகிறது. பெற்றோர் சீதனத்துக்கு வேண்டுமே என்பதனால் பெண்ணுக்கு அறிவு கொடுத்து அவளைத்திருத்து தற்குப் பொருளைச் செலவுசெய்யாது, வைத்திருந்து, விவாகஞ் செய்யாமலிருப்பது பாவமும் பழியுமென்றஞ்சிப்பொருளோடு பெண்ணையும் மூடனுக்குத் தானஞ் செய்கிறார்கள். அவனுடைய அதிகார வேட்டைக்கு ஆளாகி அப் பெண் அழிகிறாள். அதிக சீதனமிலுருந்தால் வேறு தகுதி தேவையில்லை. குறைந்த பொருளிருந்தால் அது சீதனத்துக்கு வேண்டும். பிறதகுதிகள் மாத்திரமிருந்தால் பொருத்தமான விவாகம் நிகழாது. இனி பொருளுந்தகுதியுமில்லாத பகுதி இவ்வாறாயின், நமது கதி 6T6öT60TP
நமக்கு வாக்குரிமை கிடைத்ததும் சமீபத்திலே தான் , அவ்வுரிமையைப் பயன்படுத்தவும் நமக்குச் சுதந்திரமில்லை. அவ்வாறாயின் நம்முள் அரசியல்வாதிகள் தோன்றுவதெப்படி? நமக்கு விடுதலை உண்டு. அதனை நமது நன்முயற்சியாலேயே பெறலாம் என்பதே பெண்களாய நம்முட் பலருக்குத் தெரியாது. உங்கள் மேலுள்ள அநியாயவிதிகளை மீறுவது பாவெமன்று அவர்கள் அஞ்சுகிறார்களென்றால், வீரசுதந்திரம் வேண்டு மென்று கேட்கவும் அதற்காக வேலை செய்யவும் நாம் புறப்படுவதெப்படி?
வாழ்நாள் முழுவதும் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு, செல்வ வாழ்வு நடத்தும் சில பெண்களும் இருக்கிறார்கள் தான் . ஏன் நாய்களுந் தான் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுச் சில இடங்களிலே அருமையாக வளர்க்கப்படு கின்றன. பேசும்படக்காட்சிகளை அடிக்கடி பார்க்கவும் கடற்கரைக்கு உலாவவும் போக நம்பெண்மணிகள் சிலர் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். உலகம். போற்றும் உத்தமரோடு பழகவோ நம்மைப் போன்ற
131

Page 69
பெண்களோடு பழகவோ நமக்குச்சுதந்திரமில்லையே! நம் எண்ணங்களை வெளியிடுதலிலேதானுங் கட்டுப்பாடு காந்திஜி முதலிய பெரியோர் நமது குறைகளைக் கற்பனையாற்கண்டு நம்பொருட்டு உழைப்பதல்லாமல் அவர்களுக்கே நமது குறைகளை வெளியடமுடியாது. இந்த வாழ்வு எதற்கு என்று நமக் குத் தோன் றவரில் லையா? நல் ல காற்றையும் வெளிச்சத்தையும் பெறமுடியாத நாம் ஆரோக்கியத்தையும் அழகையும் விரும்பியென்ன? ஆடவரது மிச்சிலை உண்பதே பெண்களுக்குரிய கடமைகளிலொன்று. நம்மை வெளியிலே அலங்கரிக்கமாட்டோமென்றால், அல்லது இதுபோன்ற தீயபழக்கங்களெவற்றையாவது விடுவோமென்றால் அவற்றை யெல்லாம் செய்யத்தான் வேண்டுமென்று வற்புறுத்தப்படு கிறோம். வஞ்சகமும் அதிகாரமுமில்லாத ஏழைப்பெண்களின் கற்புக்குங் கல்விக்கும் உடல்நலத்துக்கும் யார் நேர்நின்று தடை விளைத்தார்களோ, அவர்களே மற்றெருவேளையில் அப் பெண்களைக் கற்பு முதலியன இவரென்று பழிக்கிறார்கள். கெடுத்தவரையல்லாமல் கெட்டவரையே சமூகம் முழுவதும் இகழ்ந்தொதுக்குகிறது. ஒழுக்கத்தவறொன்று நிகழுமாயின் அதிலே குற்றத்தின் பெரும்பகுதியைச் செய்பவன் ஆடவர்ை. நட்டத்தின் பெரும்பகுதியை அடைப்வள் பெண் முன்னேற்ற மடையும் பெண்களுக்குத் தாழ்ந்தநிலையிலுள்ள ஆடவர் மகளிரல்லாமல் , முன்னேற்றமடையாத பெண்களுள்ள குடும்பத்தினரான தகுதியுடையாரென்றிருக்கும் ஆடவர் சிலரும் துன்பம் விளைவிக்கிறார்கள், பெண்களோடு போர்செய்து வெற்றிகொள்வது பிழை என்ற கொள்கையுடையவர் நம்முன்னேர். அவர்கள் வழியிலே வந்த நம்மவர் ஆண்கள் வெற்றிகொண்டு முன்னேறிவிடலாம். பெண்களை அவ்வாறு விடக்கூடாதென்றிருந்தால் என்ன செய்யலாம்?
பெண்களாய நங்கூரம் துன்பக் கடலின் அடித்தளத்திலே தாழ்ந்து கிடக்கும் போது, சமூகமாகிய மிதவை எவ்வாறுதன் வழியிலே சுதந்திரமாக மிதந்து செல்ல முடியும்? எவ்வளவு சிறந்த மாலுமியானாலும் நங்கூரத்தை மேலே எடுத்துக்
132

கொண்டுதான் போகமுடியும். நமக்கு சுதந்திரந் தராதவரையில் நாடு அடிமை நாடாகவே இருக்கவேண்டி யதுதான் . பெண் களை வருத்திக் கொண்டிருக்கும் அநியாயச் சட்டங்களுக்கு நாம் எப்போதாவது ஆளாகப் போகிறோமா என்று யாராவது நினைக்கலாம். ஆனால், பெண்களின் துன்ப நிலையை அறிந்து கொண்டும் அவர்களின் கண்ணிரைத் துடைக்க முற்படாதவர் பெண்களாயினும் ஆடவராயினும் அச்சட்டங்கள் அவர்களை எப்படியாயினும் வருத்தத்த வறமாட்டா. அடிமை வாழ்விலே கிடைக்கிற சுகம் ஏறக்குறைய விஷமாகவேயிருப்பதை அனுபவத்துணரலாம். சுதந்திர வாழ்விலே எவ்வளவு பெரிய துன்பங்களும் அனுபவிக்க மிக எளிதாகிவிடுகின்றன. எதுவரினும் எமக்கு விடுதைலயே வேண்டும்.
சமூகம் நமக்கு என்ன செய்ய வேண்டும்? எங்களுக்கும் பொதுக் கல்வியோடு சன்மார்க்கக்கல்வி, தொழிற்கல்வி, வீட்டுப்பணி என்பவற்றைத் தரக்கூடிய நிலையங்களை அமைக்கவேண்டும். அங்கே இழிதொழில் செய்து பிழைக்கும் ஏழைப்பெண்களுக்கும் வேறு ஆதாரமற்ற மகளிர்க்கும் பரிசுத்தமான தொழிலைக் கொடுத்து அவர்கள் நன்மதிப்போடு வாழும்படி அவர்களைப் பாதுகாக்கவேண்டும். குடும்பப் பொறுப்பற்ற, ஆற்றலமைந்த பெண்கள் அந்நிலையங்களை நடத்தச் செல்ல வேண்டும். நமக்கென்றே பத்திரிகைகள் அனுப்பவேண்டும். கல்விப்பகுதி சுகாதாரப்பகுதி என்பனபோலப் பெண்கள் பகுதியென்றும் ஒன்று அமைக்கவும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெண் பிரதிநிதிக்குக் குறையாமலிருக்கவுஞ் செய்ய வேண்டும் பெண்களைப் பிறநாடுகளுக்கு அனுப்பி உயர்தரக்கல்வி கொடுக்கவேண்டும். சிறிது காலத்துக்காயினும் ο μιή நிலையிலிருக்கும் ஆடவரிலும் பார்க்க அந்நிலையுடைய பெண்களுக்கு அதிக மதிப்பளிக்கவேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் மகளிர் கழகங்கள் இருக்வும் மகளிர் மாநாடுகள் நடைபெறவுஞ் செய்ய வேண்டும் . இவை யெ ல் லாம் சட்டமுறையாக வற்றுத்தப்படவேண்டும். உயர்தரக் கல்வி
133

Page 70
கொடுக்கும் பெண்பாடசாலைகளொவ்வொன்றிலும் எளிய வாழ்வு சட்டமாகவேண்டும்.
பெரியோர் கஷ்டப்பிறவிகள், கஷ்டத்தாலுயர்வடைந்தவர்கள். நாம் கஷ்டப்பிறவியளாயிருக்கிறோம். கஷ்டத்தின் பயனைப் பெறுகிறோமில்லை. சுதந்திரத்துக்காக எவ்வளவோ துன்பங் களையும் பழிகளையும் அடைய வேண்டியதுதான். இப்பொழு தென்ன துன்பமும் பழியுமில்லாமலா இருக்கிறோம?. அத்துன்பத்தையும் பழியையும் நாம் சுதந்திரத்துக்காக எய்துவது நல்லதே. அதற்காகச் சாவதுத் நல்லதுதான். கையிலே அழுக்குப் பிடிக்கும் என்பதற்காகப் பாத்திரத்தைக் கழுவாமல் உபயோகிப்பதா! கையைத் தான் பிறகு துTய்மைசெய்ய வேண்டும். மினுமினுப்பான சுகவாழ்க்கையை விரும்பினாலும் உலகின் வீண்பழிக்கு அஞ்சினாலும் நாம் முன்னேறமுடியாது. நில முழுதுங் கிடைத் தால் கடலையும் ஆளத் தான் மனிதப்பிறவிக்கு ஆசைவரும். நாம் எவ்வளவு குனிந்தாலும் அடக்குமுறை விதிகள் மேம் மேலும் நம்மை அமுக்கிக் கொண்டேயிருக்கும் அதிகாரவேட்கை பிடித்த இந்தச் சமூகத்தை நாம் திருப்தி செய்வதென்பது முடியாத காரியம். இவ்வளவு அடக்குமுறைக்கும் குனிந்து பெண்கள் பாவப்பிறவிகள் என்ற பழியையும்சுமந்துகொண்டாவாழவேண்டும்? இலக்கியங்களிலும் சாத்திரங்களிலும் இடையிலே/குந்த பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டன. நாம் இழிந்த பிறப்புக் களில் லை. பிறப்புக்களிலே உயர்ந்தது பெண் பிறப்பென்பார் காந்திஜி எப்பொழுதுP கற்புடைய ராய பொழுதென்பர் வள்ளுவர். எவ்வளவு உடல் வலியற்ற பெண்ணும் தன் கற்பைக் காக்கமுடியுமென்பது காந்திஜி முதல் மிருகப் பருவத் தினரிறுதியாகச் சொல்லுமுண்மை, சன்மார்க்கத்திலிருந்து தவறாமலிருக்கத்தக்க மன உறுதியைத் தரும்படி பகவானை மன்றாடிக் கேட்டுக்கொண்டு உயிரையுமளரிக்குந் துணிவோடு பெண்சமூகத்துக்குத் தொண்டு செய்யப் புறப்படுவோம். கற்பும் பிரமச்சரியமும் அநேகமாக ஒன்றுதான். பிரமச்சரியமே சன்மார்க்கத்தின் அடிநிலை. நாம் சன்மார்க்கம் வழுவாது
34

எக்காரியத்தைச் செய்யும் போது யார்துணை நிற்கிறார்களோ அவர்களே மனத்துள் நம்மை இகழுகிறார்கள் என்னு முண்மையை அறியும்போது தன்மதிப்புடைய எவரும் பிழைவிட
முடியாது.
நாம் வீட்டு வேலைகளிலே பலபிழைகள் விடுகின்றோம. உணவுப் பொருள்களைச் சமைப்பதாலே அவற்றிலுள்ள சத்துக்குறைகிறது. மிளகாய் முதலிய சரக்குகள் உடலையும் மனத்தையும் கெடுத்தே விடுகின்றன.அவைகளைக் கூட்டுவ தாலேயே சமையல் வேலை மிக்க கஷ் மாயிருக்கிறது. இவைகளை நாம் அறிந்தாலும் நாமும் நமது ஆண்மக்களும் நாவுக்கு அடிமைப் பட் டி ருப்பதால் அவற்றைவரிட முடிவதில்லை. நெருப்புக்கருகிலிருந்து சிற்றுாண்டிகள் தயாரிப்பதால் பெண்களுடைய மெல்லிய உடல் வெம்புகிறது. நெருப் பெரிவதனால் அடுக் களையிலுள்ள காற்றும் கெட்டுவிடுகிறது. அடுக்களை திறந்த வெளியாயிராவிடின் புகையும் நெருப்பும் நச்சுக்காற்றும் ஆகிய மூன்றும் நம்மை அழித்தேவிடுகின்றன. இதற்காகச் சமயல் வேலையைவிட வேண்டுமென்பதில்லை. சமைத்துண்ணும் பழக்கத்தை மிகக்குறைப்போம். அடுக்களை அதிக வெளிச்சமும் போதிய காற்றோட்டமுடையதாயிருக்கச் செய்வோம் முடிந்தமட்டும் வெளியிலேயே சமயலைச் செய்வோம். சிற்றுாண்டிகளை ஆக்கமறுத்து அதற்காககப் பழ உணவை அமைப்போம். தேநீர், காப்பி அமைக்கவும், புளி முதலியன கூட்டிச் சமையல் செய்யவும் மறுத்துவிடுவோம். இராப்போசனத்தை நிறுத்தவும் அல்லது மாலை ஏழுமணிக்கு முன்னரே அதனை முடிக்கவும், காலையிலே குளிர்ந்த பானங்களையே உணவாக அமைக்கவும் முயலுவோம். உடைகளையும் பாத்திரங்களையும் இவைபோன்ற பொருட்களையும் மிகக்குறை வாகவே உபயோகிப்போம். குழந்தையைச் செல்லமாக வளர்த்து அதன்பிற்கால வாழ்வைப் பழுதாக்கமாட்டோம். இவைபோன்ற திருத்தங்களாலே நாம் அதிக ஓய்வையும் ஆரோக்கியத்தையும் அடைவதோடு குடும்பமும் உயர்வடையும், வீட்டுப்பணியிலே நாம் படிக்க
135

Page 71
வேண்டியவை இத்தகைய விஷயங்களே.
தையல் வேலையில் மிகச் சாதாரணமான உடைகளைச் சாதாரணமான முறையில் தைக்கவும் பழுது பார்க்கவுந் தெரிந்துகொண்டாற் போதும், நாம் உஷ்ண தேசத்தில் வாழபவர்கள் ஆதலால் நமதுடைகளில் மிகச்சில மட்டுமே தையல் வேலைக் குரிய ன வாயிருத்தல் வேண் டும் . தையல்வேலையாேேலய வாழ்க்கை நடத்தேவண்டியவர்கள் சித்தரமான தையலிலே பொதுபோக்கலாம்.
சகோதரிகளே! கிளியும் மயிலும் புறாவும் அணிலும் அழகானவை. மலர்கள் அழகிற்சிறந்தவை. அவையெல்லாம் ஆடை ஆபரணங்களாலே அழகாயிருக்க வில்லை. குழந்தைகள் வெகு அழகு. ஆண் மக்கள் அழகானவர்கள் .நாமோ உலகிலேயே அழகிற் சிறந்தபிறப்பினர். நமக்கு அலங்காரம் வேண்டாம். சீ அலங்காரம் நம் உடற்குறைவைத் திருத்தி அழகில் அல்லது பிறவழிகளில் உயர்ந்த பெண்களுக்குச் சமமாக நம்மை வைக்குமா? நல்ல அழகிகள் சிரிக்கும் போது போலவே, அழும்போதும் அழகாயிருப்பார்கள். எந்நிலையிலும் அவர்கள் அழகிகளே. அலங்காரத்தால் நாம் ஒருபோதும் நிறமும் ஒழியமுடைய ஆடையணிகள் உடலொளியைக் குறைத்துக் காட்டுகின்றன. பவுடர் ஒளியை மறைக்கிறது. குளிர்ந்த நீாரிலே நீார டியவுடனே நாம் மிக அழகாயிருக்கிறோமல்லவா? உள்ளத்திலும் உடலின் உள்ளேயும் வெளியிலும் குளிர்ச்சியும் தூய்மையுமிருந்து, அவற்றோடு சுறுசுறுப்புமிருந்தால்மட்டுமே அழகு பொலியும். உள்ளத்தின் ஆழத்திலே புதைந்துகிடந்து இன்பஞ்செய்வது உள்ளழகாகிய நல்ல மன இயல்பேயல்லாமல் வெளியழகல்ல. வெளியழகும் அதனாற் கிடைக்கும் போலியன்/ம் விரைவிழிந்து போவன. வீணா அலங்காரம் எவ்வளவோ பொருளையும் பொழுதையும் கெடுத்து விடுகிறது. சிலேநரங்களில், போதிய அலங்காரமில்லாமையால் குறித்த இடங்களுக்குப் போகாமல் விடுகிறோம். அல்லது காலந் தாழ்த்திப் போகிறோம்.
136

ஏழைகளுடைய வயிற்றைக் சாயச் செய்து அவர்கள் முன்னிலையில் நாம் இவ்வளவு ஆடம்பரமாக நின்று அவர்கள் மன ங் கொதிக் கச் செய்வது தான் நம் மை அடக்கு முறைவிதிகளாக வந்து வருத்துகிறபோலும் நம்மையும் நமது குழந்தைகளையும் வீணாக அலங்கரிப்ப தில்லையென்று நீங்கள் ஒவ்வொருவரும் முடிவு செய்துவிடுங்கள். அதனால் வரும் இன்பத்தைப் பின்னர் காண்பீர்கள் கதைப் புத்தகங்களையும் புதினப்பத்திரிகைகளையும் எறிந்துவிட்டு மகாத்மாஜி முதலிய பெரியோரெழுதியனவும் அவர்கள் வாழ்க்கை வரலாறுகளுமான நூல்களை வாங்கிப்படிப்போம்.
நாம் ஒவ்வொருபோது மனமுடைந்துவிட்ட கண்ணிர்தான் நாட்டை அடிமைக்குழியிலே இழுத்துவிட்டது. நாம் நமது சகோதரர்களை மன்னிக்கலாம், ஆனால் நமது கண்ணிர்தான் மன்னிக்காதே. நாங்கள் உணர்ச்சியற்ற பிறவிகள் அல்ல, கட்டைபோலிருக்கிறோமல்ல, எங்கள் மனச்சாட்சி சட்டமறுப்பு நிகழ்த்தும்படி எங்களைத் துரண்டாமலில்லை. எங்களுக்கு உதவவேண்டிய அன்பு மிக்க தந்தையும் சகோதரனும் மகனும் கணவனும் குடும்பத்திலே மூத்த பெண்களும் எங்கள் தோழர்களும் வேறு பெரியோர்களுந்தான் உங்களுக்கு இதுவே விதி என்கிறார்கள். அப்போது பழிக்கு அஞ்சுகிற ஏழைகளாகிய நாங்கள் அழுவதையல்லாமல் வேறு என்ன செய்ய முடியும்? அநீதியிலே தோய்த்தெழுதிய சட்டங்களை எங்கள் கண்ணிர் இன்னுங்கலைதத்தபாடில்லை, என்றாலும், நமது பரிசுத்தமான உழைப்பிலே வடிக்கும் வெயர்வை நீராலே அதனை நாம் நிச்சயம் கலைப்போம். ஆண் மக்கள் நம் வேட்கையை நிறைவேற்றுவதற் பொருட்டே நம்மிடம் இவ்வளவு அன்பையுஞ் செலுத்துகிறார்களென்று அறியும்போது, நம் உள்ளம் எவ்வளவு வெறுப்பையுங் கொதிப்பையுமடைகிறது. இந்த வெறுப்பு நிகழாதிருத்தற்காகவே ஆண்மக்களைத் திருப்திசெய்வதே நங்கடமையென்று கற்பிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எவன் நமக்குப் பூரண சுதந்திரந்தர விருப்பமும் துணிவுமுடைய வனாய்ச் சேகாதர சகோதரி, தந்தை, மகள், தாய்பிள்ளை
137

Page 72
முறையான தூய அன்பையே செலுத்தக்கூடுமோ, அவனே நமது அன்பன் என்பதை நாம் ஒவ்வொருவரம் மனத்திலிருந்த வேண்டும்.
நல்ல வீணையும் யாழும் இசையெழுப்புவாரில்லாமல் உயிரற்ற மரந்தடியாகவே பையிலுள்ளே கிடக்கின்றன. நாமும் தான் அப்படிக் கிடக்கிறோம். எங்கள் சக்தியொன்றும் வெளியிடப்பட இடமில்லை. யந்திர அடுப்புக்களாகவும் நம்மாலுதவியில்லை. குறித்த வேலைக்கு மேற் செய்ய முடியாத ஒடுங்கின வலியுடைய யந்திரங்களாகவே நாம் இருக்கிறோம். நாம் பாதிப்பேர் ஒவ்வொருவீட்டிலும் நோயாளிகளாகவேயிருக்கி றோம். சகுனப்பிழையாயிருக்கிறோம். சகோதரிகளே! வாருங்கள் மகாத்மாஜி, ராஜாஜியிடம் யோசனை கேட்போம். நாட்டுப் பெரியோரையும் வீட்டுப் பெரியாரையும் சுகந்திரத்துக்கு மன்றாடுவோம். செல்வமகளிரிடம் பொருளிரப்போம். மூன்றையுங் கொண்டு வீட்டுக்கு நமது குழந்தைகளுக்கு- நாட்டுக்கு நன்மை செய்வோம். உதவிக்குப் பெண் குழந்தைகளைத் தட்டி எழுப்புவோம். கதரை யொழிய வேறு துணியின் பெயர் விசாரியாமல் பெரியோர் பெயரை விசாரிப்போம். நாமே மேலான பிறவியென்று தற்கால ராஜிரிஷி கூறிவட்டார். வீட்டிலே மாகாத்மாக்கள் நாமே தான் மகாத்மாக்களின் வேலை என்ன? தொண்டு அடிமையல்ல, நமக்கு இன்பம் வேண்டாம். அறிவில்லாத அன்பு விஷமேயாகும் நாச் சுவைக்காக நம்மவரது உடலையும் மனத்தையும் அநியாயமாய் அழிய விடமாட்டோம். அவர்களைச் சோம்பேறிகளாயிருக்க விட மாட்டோம் . இளைஞர் களிலே ஏ மாந்து அவர் கள் வாழ் வைப் பாழாக்கமாட்டோம். தாதிமார், ஆசாரியர், வைத்தியர் நாமே.
சுறுசுறுப்புடைய பெண் குழந்தைகளே! புறப் படுங்கள் உங்களுடைய நல்ல தொண்டுக்குத் தடைசெய்ய ஆருக்குத்தான் மனம் வரும் P துணிவு வரும் P நீங்கள் விளையாட்டுப் பிள்ளைகளல்ல. தேசத் தொண்டர்கள் பின்னலூசியையும் நிற நூல்களையும் எறிந்துவிட்டுக் காந்தியைப்போலத் தக்களியையும்
138

பஞ்சையும் எடுத்துக்கொள்ளுங்கள். தக்களியல் நூற்பது எளிதான வேலை, கீழ்வகுப்பிலேயே தொடங்கத்தக்கது, பட்டுடையும்,ஆபரணமும், பவுடரும் உங்களுக்கு வேண்டாம். தக்களியும் ராட்டையும் தமிழறிவுந்தான் உங்களுக்கு வேண்டும. வீட்டிலே உங்கள் தாய்மார் சுற்றுகிற ராட்டையின் ஓசை வீதியிலேயே நீங்கள் பாடுகிற தேசியப் பாட்டுக்கும், பெண் விடுதலைப் பாட்டுக்கும் ,சு தியாக அமையட்டும் . கை மெஷினுக்குப் பதிலாக ராட்டையையே வாங்குங்கள். பள்ளிக்குவர முடியாத உங்கள் தோழியேராடு உறவாடி அவர் களையும் இவ் வழியிலே கொண்டு வாருங்கள் . குழந்தைகளே! நாங்கள் உங்களை நம்பிருக்கிறோம். சுதந்திரநிலையிலிருக்கின்ற உங்களால் நாட்டுக்கும் பெண் சமூகத்துக்கும் எவ்வளவோ தொண்டாற்ற துடியும். பெண் கட்டுப்பாடுகள் உங்களை இன்னுங்கடிக்கவில்லை. அவை பொறுக்க முடியாத துன்பந் தருபவை. அந்தக் கொடிய விஷப்பாம்புகள் உங்களைக் கடிக்கக் காத்துக்கொண்டி ருக்கின்றன. அவைகளைக் கொல்ல இப்போதே வழிதேடுங்கள். வயதிலே சிறியவர்களென்றாலும் நீங்கள் பொறுப்பிலேயே பெரியவர்கள். இளைஞ்ர்களைப் போலவே தொண்டாற்ற உங்களால் முடியும். மாணவியர் சங்கங்களை அமையுங்கள். அவையல்லாமல் மகளிர் கழகங்களையே நீங்கள் நடத்தலாம். வீட்டிலே குத்துதல் நீரெடுத்தல் முதலான வேலைகளை வரிரை வரிலே செய்யுங் கள் பிறகு படி க்கமுடியாது போகலாமாதலால் எல்லாப் பாடங்களையும் இப்போதே கவனமாகப் படியுங்கள் ஆங்கிலமும் சிறிதே படித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளே! ஒழுக்கத்தில் அணுவளவும் தவறாதீர்கள். இவ்வளவு துாய்மையுடையவர்களை நாம் கண்டதில்லையென்று நெருங்கிப் பழகுகிற ஒவ்வொருவரும் நினைக்கக்கூடிய வாழ்க்கையும் உயர்தரக் கல்வியுந்தான் பெண்விடுதலைக்கு மிக உதவி செய்வன என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறே நீங்கள் இப்பொழுது நடக்காவிட்டால் பிறகு நிச்சயம் அழுவீர்கள். மகிழ்ச்சி விளைவிக்கும் நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டுமானால் ஒவ்வொரு
139

Page 73
நிமிஷத்தையும் உழைப்பிலும் படிப்பிலேலுமே செலவு
செய்யுங்கள்.
சகோகரிகளே! உங்களைப் பிரிய எங்களுக்கு மனமில்லை. நாங்களும் உடன்வருகிறோம். உங்கள் எல்லாத் தொழில்களிலும் நாங்களும் பங்காக உழைக்கிறோம். உங்களோடு எல்லாத் துறைகளிலும் கலந்து எப்போதுமுடனிருந்து உங்களையும் மகிழ்வித்து நாங்களும் இன்புற விரும்புகிறோம். தடை செய்யாதிர்கள்.உங்கள் தோழர்களோடு நீங்கள் கலந்தொழுகு வதில் ஒரு பாதியாவது கலக்கும்தகுதி எங்களுக்கில்லாம லிருப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. வீட்டிலே மிகச் சிறிதுநேரம் சில தொழில்களிலே தானா நாங்கள் உடனிருந்து மகிழ்வது? உங்களிடத்திலே எங்களுக்கு கோபமில்லை. ஏன்? பெண் கட்டுப்பாடுகளால் நீங்களே சிலவேளைகளில் வருந்தியதை நீங்கள் மறந்துவிடவில்லை உடன்பிறப்பினரே! நாங்கள் சண்டைக்கு வரமாட்டோம். சமையலுஞ் செய்து மற்றவழிகளிலும் உதவுவோம். வேண்டுமானால் மகாத்மாஜி முதலியோரை நடுத் தீர்ப்புக்கு வைத்துக்கொள்வோம். பெரியாரோடு பழக எங்களுக்கு உதவிசெய்யுங்கள் உயர்ந்தகல்வி தாருங்கள் நாங்கள் வற்புறுத்திக் கேட்டாலும் ஆடம்பர வாழ்க்கைக்கு வேண்டிய பொருளொன்றையும் எங்களுக்குத் தராதீர்கள். ஐந்தாறு ரூபாய்க்குமேல் துணி எடுப்பதானால் கததே எடுத்துத் தாருங்கள் நாங்கள் உங்கள் அன்பை உலகத்திலே உயர்ந்த பொருளாக எண்ணுபவர்கள்.
அறிவும் ஆற்றலுமுடைய இளைய பெண் மணிகளே ! இளமைக்கென்று ஒரு தனிமையான மனேவிகாரமில்லை. நீங்கள் வீரமுடையவர்கள் பிழைபடமாட்டார்கள் கற்பும் பிரமசாரியமும் அநேகமாக ஒன்றுதானர். அழிந்துபோகிற அடாப்பழிகள் உங்களை அணுவளவுந் தாழ்த்தப்படமாட்டா. பிறநாடுகளிலே உயர்ந்த உண்மைப் பிரமசாரிகள் பெண்களிலே இருக்கிறார்கள். கணவனின் கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் தலைவன் மனைவி, துணைவி அவளுடைய
140

நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவளே தலைவி அவன்துணைவன் உங்கள் தேசத்தொண்டுக்கும் கல்விக்கும் பிறநலங்களுக்கும் குடும்பம் தடையாகுமானால் நீங்கள் துணிந்து பிரமச்சாரியத்தை மேற்கொண்டு தொண்டாற்றுங்கள்.
செல்வமும் அதிகாரமுள்ள குடும்பங்களிலே சுதந்தரம் பெற்றிருக்கும் பெண்மணிகளே! நீங்கள் அழைத்தால் பெண் தொண்டர் பலர் புறப்படுவோம். கொஞ்சம் பொருள் தாருங்கள் வேலை செய்ய இளம் பெண்களும் பெண் குழந்தைகளும் இருக்கிறோம். பெண் விடுதலைக்கு நீங்கள் முற்பட்டாலன்றி நடக்கப்போவதொன்றுமில்லை.
ஆங்கிலக் கல்வியாலும் பிற கல்வியாலும் உயர்ந்திருக்கும் பெண்மணிகளே! பிறநாட்டு நாகரிகத்தின் பெயரால்நீங்கள் சிறிதே சுதந்திரமாக வாழ்கிறீர்களென்பது மெய்யே உங்களுடைய தாய் மாரும் சகோதரிகளுமான நாங்கள் அடிமைசெய்யும் அதே இடத்தில் உங்கள் சுதந்திரம் நன்கு மதிக்கப்படுகிற உண்மைச் சதந்திரமாயிருக்க முடியுமோ? கண்ணிலே தோய்த்தெழுத வேண்டிய எங்கள் வாழ்க்கையைத் திருத்த உங்களுக்கு முன்னேயார் 1/றப்படக்கூடும்? பெண் விடுதலைக்குச் செய்யவேண்டியவற்றை அறியவல்லவர்கள் பெண்களுள் நீங்களேதான் எங்கள் கண்ணிரைத் துடைக்கவும் உங்கள் சுதந்திரத்தை உணமையாக்கவும் இன் றே வெளிப்படுங்கள்.
பிரதிநிதிகளே! தங்கள் வாக்குரிமையைத்தந்து உங்களைப் பிரதிநிதியாக்கியவருள் பெண்பாலாரும் ஒருவராவது நிச்சயம் இருந்திருப்பர். அடுத்த தேர்தலில் நீங்கள் பெண்களின் வோட்டை அதிகமாகப் பெறலாம் பெண்களுக்காகக் சட்டங்கள் செய்வது கடமை, லாபமுந்தான், சட்டமுறையாக உங்களுக்கு விரைவில் விடுதலை தரும்படி வேண்டுகிறோம்.
அம்மா, அப்பா எங்களுக்கு சீதனம்வேண்டாம் நகைகளும்
141

Page 74
வேண்டாம். அறிவும் ஆரோக்கியமும் நன்மதிப்புந்தான் எங்களுக்கு வேண்டும். நீங்கள் தேடிய பொருளை எங்கள் மனத்திலும் உடலிலும் பிரியாதபடி கலந்துவிடுங்கள். சீதனத்தை வேறாகத் தருவதால் பெரும்பயனடைபவர்கள் நாங்களல்ல பிறரே. எங்கள் அறிவு ஆரோக்கியம் சன்மார்க்கத்துக்கே உங்கள் பொருளைச் செலவு செய்வீர்களாயின், நாம் இப்பிறப்பிலே மேலான வாழ்வு நடத்துவோம். மறுபிறப்புக களிலும் இன்பமடைவோம். பிறந்தது பெண்குழந்தையென்று கேட்டவுடனேயே ஏன்- பெண்குழந்தைதான் பிறக்கப்போகிற தென்று நினைக்கும்போதே, வெறுப்புக்கொண்டு சலிப்படை கின்றீர்களே. நாங்கள் என்ன குற்றம் செய்கிறோம். மிருகங்களிடத்தே பிறந்தாலாவது அவைகள் இப்படி வேற்றுமை காட்டாமல் அன்புசெய்யுமே மன்னிக்கவேண்டும். கவலை மிகுதியாலேதான் சொல்லுகிறோம்.
நாட்டுப் பெரியோர்களே! பெரியாருட் பெரியதுறவிகளே வணக்கம் தங்களோடு பழகி உய்வடைய எங்களுக்கு மிக மிக ஆசையுண்டு.அதனை வெளிப்படுத்த முடியாதிருக்கிறோம். எங்கள் வாழ்விலேயுள்ள பெருங்குறை தங்களோடு பழக முடியாததுதான் தாங்கள் நாடுமுழுவதுமாகப் பாடுபடும்போது நாமுமொரு பங்கு பெறுகிறோமென்றாலும் அது போதிய தாயில்லை. எமக்காகவே வாழ்வு முழுவதையும் அர்ப்பணஞ் செய்து தங்களுட் சிலர் உழைத்தாலன்றி நாமுய்யமாட்டோம் கால்கை முதலெல்லா உறுப்புக்களுங் கட்டப்பட்டு அறிவுக் கண்ணும் மூடப்பட்டு இருட்டிலே கிடக்கின்றோம். தன்னல மறியாத தங்கள் பரிசுத்தமான தொண்டினால் எங்களை மீட்டுத் தங்களோ டெல் லாம் பழகி நாமுய் யம் படி செய்வீர்களென்று தங்கள் அருளைப் பெண்சமூகம் மிக எதிர்பார்க்கிறது. வணக்கம்.
இலங்கைத்தேவி, தாயே சுதந்திரமற்ற நவநாகரிகத்திலே மயங்கி வெளியுழகைத் தேடுவதிலேயே பொழுது போக்குகிறாயே, உன் பெண் குழந்தைகளாகிய நாங்கள் பசியால் வாடுகிறோம்.
142

உழைப்புமிகுதியால் அளைப்படைந்துவிட்டோம். அயலாரோடு உன் ஆண்குழந்தைகளும் எங்களை இகழுகிறார்கள். அதோ பாரம்மா! பெரியன்னை பாரதத்தாயின் புதல்வியர் மலர் முகத்தோடு நிற்கிறார்கள், நாங்கள் அவர்களோடுபோய் உழைத்து உண்டு விளையாடிவர உத்தரவு கொடு.
"விடுதலைக்கு மகளிரெல்லோரும் வேட்கை கொண்டனம் வெல்லுவமென்றே திடமனத்தின் மதுக்கிண்ணமீது சேர்ந்துநாம் பிரதிக்கினை செய்வோம். உடையவள்சக்தி ஆண்பெண்ணிரண்டும் ஒருநிகர் செய்துரிமை சமைத்தான் இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர் இதற்குநாமொருப்பட்டிருப்போமோ"
மகாத்மா காந்தியடிகள் பெண்களைப் பற்றிக் கூறுஞ் சில பகுதிகளைக் குறிப்பிடுவதோடு இக்கட்டுரை முடிவுறுகிறது.
மனிதனுடைய மனோவிகார ஆசைகளைத்திருப்தி செய்து கொடுக்கவா பெண்டிர் இருக்கின்றனர். இதற்கு இடங்கொடா திருந்து அவர்கள் தங்களுக்கு தாங்களே மரியாதை தேடிக்கொள்ள வேண்டும். அரசியல் விஷயங்களிலே பெண்கள் நன்றாகக்கலந்து கொள்ள வேண்டும். அதில் ஆபத்தும் சங்கடமும் நேர்ந்தாலும் அவற்றை அனுபவிக்க வேண்டும். அந்நிய ஆடைகளையும் ஆடம்பரத்தையும் அவர்கள் விட்டுவிடவேண்டும். ஆண்மக்களுக்குள்ள துக்கங்களையும் அவர்கள் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். எவ்விதத்திலும் ஆண்மக்களைப் விடப் பெண்மக்கள் பெருமை பெறலாம். ஆனால், அச்சம் அச்சமென்று அவர்கள் நடுங்கக்கூடாது மிகவும் பலமற்ற பெண்ணும் தனது கற்பையும் கெளர வத்தையுங் காத்துக்கொள்ளமுடியும். சாகத் தெரிந்துகொண்டாற் போதும், தங்களுடைய நிலையை உயர்த்திக்கொள்ளப் பெண்கள் தாங் களாகவே முயல வேண்டும் . பெண் வரிடுதலை ,
143

Page 75
ஆடவரைக்காட்டிலும் பெண்கள் கையிலேயே தான் அதிகமாக இருக்கிறது. நமது முன்னேற்ற இயக்கத்தில் தாசித்தொழில் என்றபாவம் இருச்சவே கூடாது. பெண்களைச் சக்தியற்ற வகுப்பினர் என யாரும் நினைக்க வேண்டாம். ஆண் பெண் ஆகிய இருவகுப்பினரும் பெண் வகுப்பே மிகவும் பெருமை உள்ளது. பல சமயங்களிலே பெண்களின் முன் யோசனை சிறந்ததாக இருந்திருக்கிறது. பெண்களைப் பரிசுத்தத்தின் நிலைக்களன்களாக ஆடவர் பாவிக்க வேண்டும். அவர்களைச் சுதந்திரமாக நடத்தும் விஷயம் ஆத்மார்த்தமானது. மனித இச்சையைத் திருப்தி செய்யவே மகளிர் பிறவி எடுத்திருக் கின்றனர் என்று நாம் நினைக்கும்படி ஒரு பெண்ணாவது இருக்குமளவும் நாமெல்லோரும் வெட் கித்தலைகுனிய வேண்டியதுதான்.ஆண்டவனாற் படைக்கப்பட்ட ஜிவராசிகளுள் மிகவும் உத்தமமானவள் பெண், நாம் மனிதத்தன்மையை விடொழித்து மிருகங்களாக மாறி அவளை நமது காம ஆசையின் கருவியாக எண்ணுவதைவிட ஆண் சமூகம் அழிந்துவிடுவதே மேல் என எனக்குத் தோன்றுகிறது. நாம இன்பம் நிறைந்த நவீன சொகுசான வாழ்வைவிட்டு ராட்டை அறிகுறியாகக் கொண்டிருக்கும் வாழ்வுக்குத் திரும் 1ம்படி ஆடவரக்கும் பெண்டிருக்கும் நான் உபதேசித்து வருகிறேன். பெண்களுக்கு நிறைய முழுச் சுதந்திரம் வேண்டுமென்பதில் என்னைவிடஅதிகமாக வெறிகொண்டிருப்பவர்கள் எவருமிரார். பெண்களுக்குக் கல்வியே போதிக்காமல் அவர்களை மடமையில் ஆழ்த்திவைத்து அதிக செல்வமுள்ளவர்களுக்கு விவாகஞ்செய்து கொடுப் பதற்காகவே அவர் களைப் பெற்றோர்கள் வளர்ப்பதைக் கண்டால் என்மனம் அவதிப்படுகிறது. வாழ்வின் முதலும் முடிவும் விவாகந் தானா? பெண்கள் தங்கள் உடலை அலங்கரிப்தைப் போல இழிவானது வேறெதுவுமில்லை. ஆடவனின் உள்ளத்தை மகிழ்விக்கவே பெண்கள் இங்கனம் அலங்கரித்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. ஆடவனின் காம ஆசையைத் தீர்க்கவே தாங்கள் பிறந்ததாகப் பெண்மணிகள் எண்ணுவதை விட்டொழிக்க வேண்டும். புருஷனின்மனத்தை மகிழ்விப்பதற்காகத் தன்னை அலங்கரித்துக் கொள்ள
144

முடியாதென ஒவ்வொருமனைவியும் சொல்விடவேண்டும். புருஷனும் மனைவியும் ஒருவருக்கொருவர் செய்துகொள்வது ஒரே மாதிரியாக இருப்பதே. அதவே உலகஒழுக்கு. ஒருவருக்கு ஒரு படிக்கல்லும்! இன்னொருவருக்கு வேறுபடிக்கல்லும் போட்டுநிறுக்கமுடியாது. பரந்தநோக்க முடைய பெண்களும் ஆடவர்களும் சாதாரண ஜனங்களைப் போலத் தனிப்பட்ட கோஷ்டியின் நலத்தைக்கருதி உழைப்பதென்பது முடியாது. தனிக்குடும்பத்தைக் கவனிப்பதற்கு அவர்களுக்குத் தனி நேரங்கிடைப்பதில்லை. சகோதர சகோதரி, தந்தை மகள் தாய்மகள் முறையான அன்பேயன்றி மனேவிகாரமான வேறு கவர்ச்சி ஆடவர் மகளிர்க்கிடையில் இயற்கையில் இல்லை.
145

Page 76
வருடாந்த சந்தா - நிவேதினி
North America : US $ 30
UK & Europc : US $ 20 India, S. Asia USS 10 Sri Lanka : SLR 200
சாந்தா விண்ணப்பம் 19.
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
பெயர் !.
விலாசம் .
திகதி . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
இத்துடன் காசோலை/ மணிஓடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Centre 58. Dharmarama Road, Colombo-06 Sri Lanka.


Page 77
எமது
வார்ப்கள்
இந்தியர்களது இலங்கை வி
தமிழ் வரலாற்றுப் படிமங் பெண்நிலை நோக்கு
பெண் நிவைச் சிந்தனைகள்
பெண்ணடிமையின் பரிமான விளக்கமும்,
சக்தி பிறக்குது (நாடகம்)
பெண்நிலைவாதமும் கோட்
சமூகவியல் நோக்கு
ISSN S-35
Firmited by Kuruturaire 8 5-CT1, Llod

வெளியீடுகள்
. . ;
ாழ்க்கை நிலைமை
மீனாட்சி அம்பான்
கள் சிலவற்றில் ஒரு
செல்வி திருச்சந்திரன்
சித்திர பெளன(துரு
3ணங்களும் பெண்ணுரிமையின்
- செல்வி திருச்சந்திரன்
சி. மெளனகுரு
பாட்டு முரண்பாடுகளும் ஒரு
செல்வி திருச்ரத்திரன்
விலை 15}