கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 2000.12

Page 1
நிவே
பால்நிலை கற்கை
இதழ் 7
LOGlusi 2
பெண்கள் கல்வி ஆ

தினி
நெறிச் சஞ்சிகை
மார்கழி 2OOO
ஆய்வு நிறுவனம்

Page 2
எமது குறிக்கோள்களில் சில
பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இனப் பெண்களின்
முன்னேற்றத்திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புக்களின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் தூண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் நல்கல் ஆகியன எமது நிறுவனத்தின் குறிக்கோள்களில் சிலவாகும்.
(e) பெண்கள் கல்வி, ஆய்வுநிறுவனம்
WERC

உள்ளடக்கம்
பக்கம்
பாலியல் உணர்வு, பாலியல் ஒழுக்கம், பாலியல் கல்வி 4 அ. பவானி
பெண்ணியம் சில கேள்விகள் 7
ஆறாம் திணை
ஆண்மையக் கருத்துக்களிற்கெதிரான “களைதல்” 3 ஆகர்னியா
பெரும் போக்கு வாதங்களின் போதாமைகளும்
ஒரு சாராரின் மறுப்புக்களும் 6
செல்வி திருச்சந்திரன்
விஸ்வரூபம் 22
மண்டூர் அருணா
ஆண்களும் பெண்களும் இரு வேறுபட்ட வரையறைகளா? 23 நரதாயினி
ஆதலினால் நாம் 28 சுமதி ரூபன்
காத்தலும் தகர்த்தலும் 39
ஏஞ்சோ
நகர-கிராம சித்திரிப்புகளினூடாக பெண்களும் பால்நிலையும் 40
ஜி. ரி. கேதாரநாதன்
பெண் பிரஜை 48 அ. ரஜீவன்

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறுபிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
பணிப்பாளர் குழு
கலாநிதி குமாரி ஜயவர்த்தனா v
கலாநிதி ராதிகா குமாரசாமி
பேர்னடீன் சில்வா
கலாநிதி செல்வி திருச்சந்திரன்
அன்பேரியா ஹனிபா
இவ் இதழாசிரியர்கள் தேவகெளரி
சூரியகுமாரி
58, தர்மராம வீதி, கொழும்பு - 06, இலங்கை.
7:596826/595296
Fax No. 596313
ISSN: 1391 - 0353
 
 
 
 

A62622/6227
எவ்வளவுதான் நாம் பெண் உரிமை,பெண் சமத்துவம் பற்றிப்பேசினாலும் தம் இருத்தலின் செளகரியங்களை இலகுவில் இழந்துபோக விரும்பாதவர்கள் இதற்கு எதிர்க்குரல் கொடுத்த வண்ணம்தான் இருப்பர்.
பெண்ணானவள் தன் சுயம் சார்ந்து சிந்தித்து வாழத் தலைப்படுதலை எமது குடும்ப சமூக அலகுகள், கலாசார சூழலைக் காரணம் காட்டி மறுத்துரைக்கின்றன. இதனால் பெண்கள் படும் துயரங்களைச் சொல்லிச் சொல்லி விளங்க வைக்க முயன்ற காலங்கள்தான் அதிகம். ஆனால் இன்று இவற்றையெல்லாம் தாண்டி பெண் சுயமாகவும், தனித்துவமாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டியவள் என்பதை எடுத்துக் காட்ட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையிலேயே பெண் ஆனவள் எவ்விதம் தனது இருத்தலை உறுதி செய்து வாழ முடியும் என்பது தொடர்பான சில வாழ்தலுக்கான அடிப்படைகளை அறிமுகம் செய்ய முனைந்தோம்.
உங்கள் கைகளை வந்தடைந்துள்ள நிவேதினியில் தன்னை உணர முயலும் சின்னப் பெண்ணும், வாழ்க்கைச் சிக்கலை உணர்ந்து முடிவெடுக்கும் அனுபவப் பெண்ணும், தனது இருத்தலை உறுதி செய்ய முனையும் ஆய்வும் பெண்ணும் வலம் வருகிறார்கள்.
இனிநீங்கள் படியுங்கள்
விமர்சனங்களை முன் வையுங்கள்
ஆக்கங்களை எழுதுங்கள்.
ஆசிரியர்கள் சூரியகுமாரி தேவகெளரி

Page 4
பாலியல் உணர்வு
பாலியல் ஒழுக்கம்
பாலியல் கல்வி
அ. பவானி
பாலியல், பாலியற் கல்வி, அதன் அவசியம்பற்றிய குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கும் தருணம் இது. எனினும் பாலியல் என்பது ஒரு பேசாத, பேசமுடியாத, பேசத்தகாத ஒன்றாகவே இன்னமும் கருதப்பட்டு வருகின்றது.
இக்கருத்தாக்க உருவாக்கத்தில் அரசும், அதனுடனிணைந்த மத, கலாசார, குடும்ப நிறுவனங்களுமே முக்கிய பங்காற்றுகின்றன. மனித பாலியல் நடவடிக்கைகளை வரையறைப்படுத்துவதன் மூலமும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளல் அரசுக்குச் சாத்தியமாகிறது. அதாவது மனித இருப்புப் பற்றிய பயமுறுத்தல்களை உருவாக்கி அதன் மூலம் மறு உற்பத்தி' எனும் தேவையை அவசியமானதாக்கி அதற்குரிய சட்டபூர்வத்தைத் தான் கையிலெடுப்பதன் மூலம் மனிதனின் பாலியல் நடவடிக்கைகள் அரசினால் ஒடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வரசின் பிரசார களங்களாக கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்ற கருத்தாக்கங்களும், மதம், குடும்பம் போன்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன.
ஒழுக்கம் என்று வரையறுக்கப்படுவது முக்கியமாகப் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது ஒழுங்காக்குகின்ற நடவடிக்கையாகவும், அதே போலக் கலாசாரம் என்பதும் பாலியல் ஒழுக்கம் பேணுகின்ற தன்மை என்பதாகவுமே கருதப்பட்டு வருகின்றன.
மதங்களோவெனில், பாலியல் நடவடிக்கை என்பதே தகாத செயல் எனவும் சைத்தான்களின் வேலையே அது எனவும் கூறிப் பாலியல் செயற்பாட்டு உந்துதல்களை மழுங்கடித்து வருகின்றன. (இவற்றின் நீட்சியாகவே ஆணாதிக்க மதவாதிகள் தம் பாலியல் விருப்பை நிறைவேற்ற இயலாதபோது பெண்களை மாயப்பிசாசுகள் என்றும் மோகினிகள் என்றும் வர்ணிக்கத் தலைப்பட்டனர் எனக் கருத இடமுண்டு).

அரசின் மிகவும் திறன் வாய்ந்த செயற்பாட்டு அலகான குடும்பமே பாலியல் பற்றிய இறுக்கத்தைச் செயலாற்றும் முக்கிய நிறுவனம் என்பது யாவரும் அறிந்ததே. குடும்ப அரசியலில் மிகவும் முக்கிய பாகமான பாலியல் அத்தியாயமானது, பெரும்பாலான இடங்களில் வன்முறை நிறைந்ததாகவும் ஒருபாலாரின் திருப்தியையே மையம் கொண்டதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
பொதுவாகப் பாலியல் அதிகாரமானது அரசின் அங்கமாகத் திகழும் ஆணாதிக்கச் சித்தாந்தப் பிடிக்குட்பட்டவர்களின் கைகளிலேயே இருப்பதனால் பாலியல் அசமத்துவம் மேலும் மேலும் நீடித்துவருவதாகிறது. எனினும், ஆணாதிக்கம் கற்பிக்கும் கற்பு, பொறுமை, பணிவு, இரக்கம் காரணமாகப் பெண்கள் இவ் அசமத்துவத்தைக் குடும்ப எல்லைகளினுள்ளேயே சமப்படுத்திச் சரி செய்து கொள்கிறார்கள். மீறி, வெளிப்படுத்த முனைபவள் வெறுமனே முத்திரை குத்தப்படுகிறாள். இவ்வச்சங்களே பாலியல் நடவடிக்கைகளின் அசமத்துவம் மேலும் ஆழமாயிருக்கக் காரணமாயின எனலாம். பாலியலுணர்வு என்பது எவ் உயிருக்கும் இயற்கையானது. இயல்பானது என்பது ஆய்வாளர் கருத்து. இவ்வுணர்வானது முதலில் நசுக்கப்படும் இடம் குடும்பமாகும். பாலியலுணர்வு பற்றி எந்தவொரு சந்தேகம் சிறுவர் மனதில் தோன்றினாலும் அது தகாததென்ற எண்ணம் சிறுவர் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. தொடர்ந்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிலிடங்கள் யாவுமே பாலியல் என்பது ரகசியமாக்கப்பட வேண்டிய ஒன்றாகவே கற்பிதம் செய்விக்கின்றன. இவ்விதம் பலவழிகளில் பாலியல் பற்றிய அறிவு மூடிமறைக்கப்படும் போது, இயல்பாகவே அது பற்றி அறியும் ஆர்வம் நம்மிடையே மேன்மேலும் கொழுந்து விட்டெரிகிறது. இதுவே பாலியல், பாலியல் செயற்பாடுகள் பற்றிய பிழையான கண்ணோட்டங்களிற்கும் பிழையான நடத்தைகளிற்கும் வழி கோலுகின்றன.
இவற்றினூடாகச் சிறுவயது முதலான பாலியல் கல்வியின் அவசியத்தை நாம் சீர்தூக்கிப் பார்க்க முடியும். எனினும், பாலியல் கல்வி என்பது வக்கிரமான பாலியல் நோக்கை உருவாக்கும் கல்வியாக அமையாதிருக்க வேண்டுமென்பதே இங்கு அவசியமாகிறது. பொதுவாக சமூகத்தின் சகல நிறுவனங்களும் ஆணாதிக்கச் சித்தாந்தங்களாக நிரப்பப்பட்ட அமைப்புகளாகவே இயங்கி வருவதை நாம் அடையாளம் காணமுடியும். ஆண் நோக்கே பொதுநோக்காகக் காணப்படும் இந்நிலையில், பாலியல் கல்வி என்பதும் ஒரு வகையில் ஆணாதிக்கர்கள் நலன் பேணும் ஒரு பக்க நலன்களை முதன்மைப்படுத்தும் கல்வியாகவே அமையுமென்பது தெளிவு.

Page 5
இன்னொரு வகையில் பார்த்தால் நாம் பாலியல் கல்வியைப் பெற்றுக்கொண்டு தானிருக்கிறோம். அது பற்றிப் பேசாத், அறியாத, அறிவுறுத்தப்படாத நாள் இல்லை எனலாம். அதாவது பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும் திரைப்படங்கள் மூலமும் பாலியல் பற்றி வெளிப்படையாக அறிந்து கொண்டும் இரகசியமாகப் பேசிக்கொண்டும்தான் இருக்கின்றோம். ஆனால் அவை உண்மையில் பாலியல் பற்றிய நேர் அறிவை எமக்குப் புகட்டாமல் வக்கிரப் பார்வைகளை நம்மிடையே தோற்றுவித்தலிலேயே முக்கிய பங்காற்றுகின்றன. முக்கியமாகப் பெண்கள் இங்கு உபயோகக் கருவிகளாகவும் ஆணின் தேவைகளிற்குப் பயன்படும் பண்டமாகவுமே சித்திரிக்கப்படுகிறார்கள். பெண்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படலே பாலியல் நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாகக் காட்டப்படுகின்றன. அத்துடன் பெண்களின் உறுப்புக்களை, அங்கங்களைப் பெரிதாக்கி ரசித்தல், பகுதி பகுதியாக ரசித்தல், அவளை உறுப்புக்களிற்குள் குறுக்கிவிடல் போன்றனவே பாலியல் தூண்டலின் அடிப்படை என வலியுறுத்தப்படுகின்றன. இவ்வறிவுறுத்தல்கள் பாலியல் பற்றிய ஆர்வம்கொண்ட இளவயதினரிடையே ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. இவையே பெண்கள் மீதான கேலிகள், பார்வைகள், வன்முறைகள் (தனிப்பட்ட பாலியல் நடவடிக்கைகளில், பொது இடங்களில் ) என்பவற்றிக்கு அடித்தளமிட்டு வருகின்றன. எனவே பாலியல் கல்வி என்பது அர்த்தத் தளத்தில் ஆரோக்கியமான ஒன்றாகத் தெரிந்தாலும். அது கற்பிக்கப்படுமிடத்து அது சமத்துவப் பாலியல் பற்றிய கருத்தாக்கமாக இராது என்பது தெளிவு.
அதாவது ஆணாதிக்கம் நுண்மையாக வேர் ஊன்றியுள்ள பாலியல் அறிவியல் பற்றிய கற்பித்தல் என்பது, ஆரோக்கியமான பாலியல் பற்றிய புரிந்துணர்வைத் தோற்றுவிக்கும் என நம்புவதற்கில்லை. எனவே பாலியல் கல்வி, அதன் தேவை, அவசியம் பற்றிக் கருதும் அதே வேளை, அது பரவலாக்கப் போகும் பாலியல் சமத்துவமின்மைக் கருத்தாக்கம் பற்றியும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
எனவே சமூகத்தில் வேரோடியுள்ள பாலியல் அசமத்துவங்களைக் களைந்தெறியும் கல்வியமைப்பாக பாலியல் கல்வி அமைக்கப்படல் வேண்டும். இதில் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள யாவரினதும் பங்களிப்பு அவசியமானதாகும். صبر

பெண்ணியம் சில கேள்விகள்
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கிற-போராடுகிறஅக்கறையுள்ள பலரும் தம்மைப் 'பெண்ணியவாதி' என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. இது ஏன்?
பெரும்பாலும் ஆண்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல்லது ஆணாதிக்கச் சிந்தனையின் மடியில் உள்ள தொடர்பு சாதனங்கள் பெண்ணியவாதி என்றால் மேலைநாடுகளில் பிராக்களைத் தீயிட்டுக் கொளுத்துபவர்களையும், ஆண் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும், குடும்பங்களைத் தகர்த்தெறிய வேண்டும் என்று பேசுபவர்களையும் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இந்த வலுவான பிரசாரத்தினால் இந்தியாவில் பெண்நிலைவாதம் பேசுகிறவர்களையெல்லாம் உயர், மத்தியதர வர்க்க ஃபேஷன்வாதிகள், மேலை நாடுகளைக் காப்பியடிக்கிறவர்கள் என முத்திரை குத்திப் புறந்தள்ளிவிடுகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன? இந்தியப் பெண்ணியவாதிகள் ஒரு போதும் சிம்பாலிக் காகக் கூட பிரா எரிப்புப் போராட்டம் நடத்தியதில்லை. எல்லாரையும் போலத் திருமணம் செய்து, குழந்தை பெற்று பிறரைப் போல குப்பை கொட்டிக் கொண்டு அதோடு கூடவே பெண் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்ணியம் என்று அவர்கள் பேசுவது என்ன என்று முழுக்கச் செவிமடுக்காமலேயே பெண்ணியவாதிகள் மீது அசூயையும் வெறுப்பும் கொண்டு விடுகிறார்கள்.
சரி பெண்ணியம் என்பதுதான் என்ன?
கி. பி. 17 ஆம் நூற்றாண்டில்தான் இந்த வார்த்தை (Feminism) முதன்முறையாகப் புழக்கத்தில் வந்தது. மற்ற இசங்களைப் போல இதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் பின்புலம் இல்லை. எனவே, பெண்ணியம் என்பதற்கான வரையறை மாற்றக்கூடிய தன்மை உடையது. ஏனெனில், சரித்திர ரீதியான அந்த யதார்த்தங்கள் குறித்த தன்னுணர்வு கருத்தாக்கம் மற்றும் நடவடிக்கைகள் மீதும்
Based on 'Some questions on feminism and its relevance in
Asia" by Kamala Bhasin and Nighat Said Kharn)
&.
நன்றி ஆறாம் திணை)
7

Page 6
தான் பெண்ணியம் காலூன்றி நிற்கிறது. எனவே 17ம் நூற்றாண்டின் பெண்ணியம் வேறு, இன்றைய பெண்ணியம் வேறு, ஐரோப்பாவின் பெண்ணியம் வேறு, இந்தியாவின் பெண்ணியம் வேறு. ஒரு நாட்டுக்குள்ளேயும் கால வேறுபாடுகள், கலாசார மாற்றங்கள் பெண்ணியத்தின் பொருளை மாற்றுகின்றன.
எனினும், ஒரு பொதுவான வரையறைக்கு வரவேண்டுமல்லவா? சமீபத்தில் நடைபெற்ற ஒரு தென்கிழக்காசியப் பெண்கள் பட்டறையில் கீழ்க்கண்ட வரையறை பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
சமூகத்திலும் வேலைத்தலங்களிலும் குடும்பங்களுக்கு உள்ளேயும் பெண்கள் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் (பாலியல் காரணங்களுக்காக) ஆளாகிறார்கள் என்கிற பிரக்ஞையும், அதை மாற்றுவதற்காகப் பெண்களும் ஆண்களும் எடுக்கும் பிரக்ஞைபூர்வமான நடவடிக்கைகளுமே பெண்ணியம் ஆகும்.
எனவே, வெறும் உணர்ந்து கொள்ளல் மட்டும்போதாது. நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும். பெண்கள் வெளியே வரக்கூடாது என்று சொல்கிற ஒரு சமூகத்தில் துணிந்து வெளியே வருவது, பள்ளிக்குப்போவது, வேலைக்குப்போவது - பெண்ணியம். பர்தா போடாமல் இருப்பது பெண்ணியம்.
எனவே, ஏதாவது ஒரு பெண்நிலை வாதக் குழுவில் நீங்கள் உறுப்பினராகச் சேர வேண்டும் என்பது கட்டாயமல்ல (சேர்வது நலமே என்றாலும்) பெண் விடுதலைக்கான ஏதாவது நடவடிக்கையில் (பிரக்ஞைபூர்வமாக) நீங்கள் ஈடுபட்டாலே நீங்கள் (Feminism) பெண்ணிய வாதிதான்.
பெண்மை’ என்பதை முற்றுமுழுதாகப் பெண்களுக்குரியதாகவும், "ஆண்மை’ என்பதை ஆண்களுக்கே உரிய தன்மையாகவும் சித்திரிப்பதைப் பெண்ணியம் எதிர்க்கிறது. ஆணாதிக்கத்துக்கு எதிராக மட்டுமன்றி சம கூலிக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும், ஒட்டுமொத்த மனித குல விடுதலைக்காகவும் போராடுவதே பெண்ணியம்.
ஏற்கனவே, வறுமையில் வாடும் ஒரு விவசாய வீட்டுப் பெண் கொடும் சுரண்டலுக்கும் ஏமாற்றுக்கும் ஆட்பட்டுள்ள அந்தஸ்தை மட்டும் கோரிப் போராடுவதில் என்ன பயன் இருக்க முடியும்? எனவே மனிதகுல விடுதலை என்பது பெண்ணியத்தின் பிரிக்க முடியாத உள்ளுறையாகும்.
8

ஆனால் துவக்கத்தில் பெண்களின் சமத்துவத்துக்காகவும் கெளரவத்துக்காகவும் பெண் தன் வாழ்வின் மீதும் தன் சொந்த உடம்பின் மீதும் முழு உரிமை உடையவளாகவும் தேர்வு செய்யும் உரிமை பெற்றவளாகவும் (வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும்) உயரப் போராடுவதே இன்றைய பெண்ணியத்தின் சாரமாக
மேற்கத்தியச் சிந்தனை தானே?
Feminism என்ற வார்த்தைக்கான கருத்தாக்கம் மேற்கிலிருந்து வந்ததாக இருக்கலாம். ஆனால் பெண் கல்வி குறித்து பெண்ணின் இடம், உரிமை குறித்து எல்லா நாடுகளிலும் பல நூற்றாண்டு காலமாகவே பேசப்பட்டுத்தான் வந்துள்ளது.
புத்த மடத்தில் பெண்களுக்கு இடம் அளிப்பது குறித்து கி. மு. 6ஆம் நூற்றாண்டிலேயே புத்தராலும் அவரது சீடர்களாலும் விவாதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் கால்கள் சிறியவையாக, அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சீனப் பெண் குழந்தைகள் பிறந்தது முதல் சில ஆண்டுகளுக்குக் கால்களைத் துணியால் இறுகக் கட்டும் பழக்கம் இருந்தது. அதை எதிர்த்துச் சீன அறிஞர் காங் யூ வெய் (Kang yu-Wei )அன்றே போர்க்குரல் எழுப்பினார். எகிப்து நாட்டின் 9j9mpLoĝă umTri 6iu 6Tio 6rôluo ĝuurrës (Ahmed Faras El Shidyak) 18 g, úñ நூற்றாண்டிலேயே பெண் விடுதலைக் குரல் கொடுத்து 'ஒரு காலின் மேல் gait G60TTC, SITso' (The leg crossed over the other) 6T6öTD BIT606) 6Tg560TITsi. ஈரானில் பல தார மணமுறைக்கு எதிராக 1880-90களில் அறிஞர்கள் போராடியுள்ளனர். இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் காலத்துச் சாதிக் கொடுமையை எதிர்த்துப் போராட்டம் துவங்கி வித்யாசாகர், ராமகிருஷ்ணர், தாகூர், காந்தி, நேரு, சையத் அஸமத் என எத்தனை பேர் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளனர். இதெல்லாம் பெண்ணியம் அல்லாமல் வேறென்ன? இவர்கள் யாரும் மேற்குலகைச் சார்ந்தவர்கள் இல்லையே. எனவே பெண்ணியம் மேற்கத்திய சிந்தனைமட்டுமல்ல.
பெண் விடுதலை என்பதே அலர்ஜியாகி விட்ட சிலரின் வெற்றுப் பிதற்றல்தான் மேற்கத்திய சிந்தனை என்பதெல்லாம். நாம் போடுகிற சட்டை, பேண்ட் மேற்கத்தியதாக இருக்கலாம்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மேற்கிலிருந்து வரலாம். சிந்தனை மட்டும் வரக் கூடாதா? (அது ஒன்றும் மேற்கத்தியக் கண்டுபிடிப்பு அல்ல என்பதுதான் உண்மை என்பது வேறு விஷயம்).

Page 7
அன்று பெண்கள் ஒடுக்கப்பட்டதால் பெண்ணியம் தேவைப் பட்டது. இன்று தேவையா?
யாரோ ஒரு இந்திரா காந்தி, ஒரு ஜெயலலிதா, ஒரு சந்திரிகா என்று சில பெண்கள் அரசியல் அரங்கில் முன்வந்திருப்பதும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் படித்து வேலைக்கு வந்திருப்பதும் வரவேற்கத்தக்க வளர்ச்சிதான். ஆனால், இதனால் எல்லாப் பெண்களின் மீதான ஒடுக்குமுறை இன்று ஒழிந்துவிட்டது என்ற முடிவுக்கு வர முடியுமா? தினசரிப் பத்திரிகைகள் அன்றாடம் பெண்களின் மீதான வன்முறையைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. எப்போதுமே வெளி வராதவைதானே அதிகம்.
எனவே பெண்களின் வாக்குரிமைக்காகவும் கல்விக்காகவும் போராடிய பெண்ணியம், இன்று பெற்ற உரிமைகளைப் பேணவும் மேலும் விஸ்தரிக்கவும் இன்னும் அழுத்துகிற ஆணாதிக்க நுகத்தடிகளைக் கழற்றி எறியவும் நாளும் போராடியே தீர வேண்டும்.
வெறும் வீட்டுப் பெண்கள் (House Wives) பெண்ணியவாதி ஆக (ւpւգ-պԼOT?
இந்த வெறும் என்ற வார்த்தையை முதலில் கண்டிக்கிறோம். வீட்டுப்பெண் என்றால் எவ்வளவு பணிகள்? எவ்வளவு சுமைகள்? வீட்டு வேலையை ஒரு வேலையாக அங்கீகரித்து அதை மதிப்பிட வேண்டும் என்றுதானே தொடர்ந்து கோருகிறோம். வீட்டு வேலைகளில் சமையல், வீடு பெருக்குவது, சாணி கரைத்து வாசலில் தெளிப்பது, வீடு மெழுகிக் கோலம் போடுவது, சாக்கடை, கழிவறை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, மாவாட்டுவது போன்றவற்றுக்கு எந்த மரியாதையும் இன்று சமூகத்தில் இல்லை. இந்த வேலைகளுக்கெல்லாம் ஒரு மரியாதையும் மற்ற உத்தியோகம் போல ஒரு கணக்கீடும் தேவை. மதிப்பும் அங்கீகாரமும் சமூகத்தில் வந்தால்தான் ஆண்கள் இந்த வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள்.
பெண்ணியம் வீட்டு வேலையை மதிக்கிறது. பெண்ணியவாதி என்றாலே வீட்டுக்கு வெளியில் வேலை செய்ய வேண்டும் என்று ஒருபோதும் பெண்ணியம் கூறுவதில்லை.
வீட்டு வேலையைத் தன் வாழ்வாகத் தேர்வு செய்த பெண்ணும் தன்னுடைய தனித் தன்மைகளும் திறன்களும் அதில் முழுமையாகக் காக்கப்பட்டுப் பயன்படும் போது - பெண்ணிய வாதியாகத் திகழ முடியும்.
0

ஆனால் வீட்டு வேலைகள் என்பது இன்று பெண் விரும்பித் தேர்வுசெய்யும் விஷயமாக இல்லையே. அதுதானே அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கிற சூது. 10 வயது ஆனது முதல் பெண் குழந்தைகள் நல்ல சமையல்காரிகளாகவும் துப்புரவுக் காரிகளாகவும்தானே பயிற்சியளித்துத் தயார் செய்யப்படுகிறார்கள் ?
பெண்கள் படித்தாலும் அவர்களுக்கு லாயக்கான வேலைகள் என்று சில வேலைகள் (ரிசப்ஷனிஸ்ட், டெலிபோன் ஒப்பரேட்டர், ரைப்பிஸ்ட், ஆரம்பப்பள்ளி ஆசிரியை போல) எழுதப்படாத சட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று பெண்ணியம் கூறவில்லை. எப்படி வாழ வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு வேண்டும். நிர்ப்பந்தம் இருக்கக்கூடாது என்றுதான் பெண்ணியம் கூறுகிறது.
நல்ல குடும்பங்களின் அமைதியைப் பெண்ணியம் புகுந்து சீர்குலைத்து விடுகிறதே?
கூலி போதாது என்று குரல் எழுப்பி வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளி தொழில் அமைதியைச் சீர்குலைப்பதாகத்தான் முதலாளியால் கூறப்படுகின்றான். இதற்கு மேலும் என்னால் மலம் சுமக்க முடியாது என்று மறுக்கிற தாழ்த்தப்பட்ட சகோதரன்,நிலவும் சமூக அமைதியைச் சீர்குலைப்பதாகத்தான் உயர் சாதியினரால் கூறப்படுகின்றான்.
தொழில் அமைதி' 'சமூக அமைதி போலத்தான் இந்தக் குடும்ப அமைதியும் குலைக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
அதிகாலை வாசலில் தெளிக்கச் சாணியைக் கரைக்கும் பெண். இரவு பாலுக்கு உறை ஊற்றி மூடி விட்டு விளக்கணைப்பது வரை எத்தனை வேலை செய்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவளுடைய தினசரி வாழ்க்கையில் எந்த விதமான மாற்றமும் இல்லை. தேதி,கிழமை, மாதம், வருடம் என்கிற எந்த வித்தியாசமும் இன்றி அதே வேலைகள், அதே அடுப்படி, அதே குப்பைகள், அதே விளக்குமாறுகள், இடுப்பொடிக்கும் இந்தச் சலிப்பூட்டும் வேலையிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும் என்று அவள் கேட்டால் அது அமைதியைச் சீர்குலைக்கும் செயல்தானே?
பெண் சிசுக் கொலையில் தொடங்கி வரதட்சிணைக் கொலைகள் வரை கொலைகள் நடக்கும் நமது குடும்பங்கள் அமைதிப் பூங்காக்கள் என்று சொன்னால் நாம் ஏற்க முடியுமா?

Page 8
வெளியே ஜனநாயகம் தழைக்க வேண்டும். ஆனால், வீட்டுக்குள் மட்டும் ஆண் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்க வேண்டும். ஜனநாயகம் உண்மையிலேயே மலர வேண்டுமானால் அது முதலில் குடும்பங்களில் மலரவேண்டும்.
பெண்ணியம் பெண்கள் தாய்மை அடைவதை எதிர்க்கிறதா?
இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால் தன் வயிற்றில் ஒரு கரு எப்போது உருவாக அனுமதிக்கலாம் என்கிற முடிவை எடுக்கிற உரிமை அந்தப் பெண்ணிடம் தான் இருக்க வேண்டும் என்கிறோம். ஏனெனில், அந்த உடம்பு அவளுடையதாச்சே, இன்று தன் உடம்பு தன் புருசனுக்கு உரியது என்ற கருத்தாக்கம் அல்லவா நிலவுகிறது. இது எவ்வளவு கேவலமான அராஜகம்.
இன்னொரு விஷயம் - குழந்தை வளர்ப்பு, தாய்மை என்பது கணவன் - மனைவி இருவரும் கூட்டாகச் செயல்படுத்த வேண்டிய ஒன்று. அப்போதுதான் அது பெண்ணின் சுமையாக இல்லாமல் குடும்பத்தின் சந்தோஷமாக - குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.
ஆகவே, பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதோ, தாய்மைக்கு எதிரானதோ, குடும்ப அமைதிக்கு எதிரானதோ, உழைப்பாளி வர்க்கத்துக்கு எதிரானதோ அல்ல. மாறாக, மேலோட்டமாகப் பிரச்சினைகளைப் பார்க்காமல் புறவய யதார்த்தத்தை மட்டும் விரிவாகப் பார்த்துவிட்டு அகவய மற்றும் தனிப்பட்ட விடயங்களைப் பார்க்க மறந்து விட்டுவிடாமல் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று கோருகிறது. கொஞ்சம் வேலைப்பளுவைத் தாமும் ஏற்கவேண்டும் என்பதாலும், தாங்கள் அந்தஸ்தைப் பங்கிட்டுத் தர வேண்டுமே என்பதாலும்தான் ஆண்கள் இன்று பெண்ணியத்தை எதிர்க்கிறார்கள்.
ஆனால், ஆணாதிக்கத்தை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் பெண் ஆதிக்கத்தை நிறுவுவது அல்ல எங்கள் நோக்கம். மாறாக, சமூகத்தின் சகல பகுதியையும் சகல ஏற்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி மறு சீரமைப்புக்கு உட்படுத்த வேண்டு என்கிறோம். சமூகத்தின் சாரத்தையே மாற்ற வேண்டு மென்கிறோம்.
எனவே பெண்ணியம் குறித்து அசூயையும் அச்சமும் கொள்ளவேண்டாம். உடன் சேருங்கள். சேர்ந்து போராட வாருங்கள்.
2

ஆண்மையக் கருத்துக்களிற்கெதிரான *களைதல்”
ஆகர்ஷியா
சாதாரண ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பிற்குள் பிறந்து வளர்ந்தவள் நான். நான் மட்டுமல்ல இப்போதுள்ள எந்தப் பெண்ணும் இக்கூற்றிற்கு உட்பட்டவளாக இருப்பாள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் ஆணாதிக்கம் அறவேயில்லாத ஒரு சமூகம் அண்மைக் காலம்வரை எங்கும் எழுச்சி பெறவில்லை. ஆனால் இவ்வெழுச்சி நோக்கிய பயணம் நடைபெற்று வருதலைக் குறிப்பிட முடியும். இப்பயணம் அண்மைக் காலமாகத் திடீரெனத் தோன்றிய எழுச்சியுமல்ல. அது நீண்ட வரலாற்றுப் பின்னணி உடையது.
இவ்வெழுச்சிக்கான தூண்டுகோல் என்ன? இதை நான் ஒரு இலகுவான கேள்வியாகக் கருதவில்லை. எனினும் புரிதலுக்கும் பொதுமைத் தன்மைக்கும் உட்படுத்தி இவ்வாறு நான் விடைகூற முற்படுகிறேன். என் தலை மீது சுமக்கத் திராணியற்ற சுமைகளை உணரும் போதும். என் நகர்வுத் தன்மை எல்லையிடப்பட்டிருக்கும்போதும் அதற்கெதிரான மன உந்துதல்கள் என்னில் உதிக்கின்றன. இத்துன்பம் யாரால், எதற்காக, எப்படி என்மீது பிரயோகிக்கப்படுகின்றது? என நான் சிந்திக்கத் தலைப்படுகிறேன். இதற்கான காரணகர்த்தாக்கள், கைகட்டிக் காவலிருக்கும் கருத்தியல்கள் எவையென அடையாளம் காண முற்படுகிறேன். அடையாளம் காணலில் வெற்றி பெற்ற நான் அவற்றிற்கெதிராகத் தோன்றும் பிரதிபலிப்புக்களைப் பல்வேறு விதமாக வெளிப்படுத்துகிறேன். அப்பிரதிபலிப்புக்கள் அடிமை என்கிற ரீதியில் ஆளும் வர்க்கத்திற்கு, மேலாதிக்க இனத்திற்கு எதிரான எழுச்சியாகவும் பெண் என்கிற ரீதியில் பெண்ணிய எழுச்சி பற்றிப் புரிந்துணர்வு பெற்ற ஆண்களாலும் நடத்திச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.
அண்மைக் காலமாக இவ் எழுச்சி நோக்கி இணையும் கரங்கள் ஏராளமாகப் பெருகி வருகின்றன. அத்துடன் பெண்ணியம் பற்றிய புரிதல்களுக்கான விவாதங்களும் இடம்பெற்றுவருகின்றன. ஆனால், இங்ங்ணம் பெண்ணியலாளர்கள் எனத் தம்மை அடையாளம் காட்டும் ஒவ்வொருவரும் முற்றுமுழுதாக ஆண்மைக் கருத்துக்களைத் தம்மிலிருந்து களைந்துள்ளார்களா? இக்கேள்வியை நாம் அலட்சியப்படுத்துவதற்கில்லை.
3

Page 9
தனி மனித இணைவே சமூகமாகிறது என்பது போல, தனி மனிதர்கள் பேணிவருகின்ற ஆணாதிக்கக் கருத்துக்களே சமூகத் தரத்தில் இணைந்து வலுவும் உறுதியும் பெறுகின்றன. எனவே தனி மனித ஆண்மையக் கருத்துக்களிற் கெதிரான "களைதல்” இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இங்ங்ணம் ஆண்மையக் கருத்துக்களை இனங்கண்டு அவற்றின் வேர்களை நம்மிலிருந்து பிடுங்கி எறியாத வரை, அவை தம்பாட்டில் நம்முள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். அவையே இறுதியில் இடைக்காலத் தீர்வுகளிற்கும் முழுமையற்ற தீர்வுகளிற்கும் இணக்கம் காட்டி சமரசத் தன்மையை நம்மில் தோற்றுவித்துவிடும்.
அதாவது பெண்ணிய எழுச்சியின் (இன எழுச்சி, வர்க்க எழுச்சி) இலக்கு எட்டி விட்டதான அல்லது அத்தகு எழுச்சி அவசியமற்றுப் போனதான மாயையை நம்மிடம் தோற்றுவித்து விடும். எனவே இம்மாயை களைதலின் பொருட்டுச் சுயபரிசீலனைக் களத்திலிறங்க, நம்முள் வேரோடியுள்ள ஆண்மையக் கருத்துக்களைக் கண்டறிதல் அவசியமாகிறது.
இக்களைதல்களைப் பன்முகப்படுத்த 'பெண்ணியப் பார்வை எமக்குத் தேவைப்படுகிறது. பொதுவாக நாம் 'பெண்ணியப் பார்வை' என்பதைப் பறித்து ஒதுக்கி குறித்த எல்லைகளிடையே வரையறுத்துவிடுகிறோம்.
'பெண்ணியப் பார்வை' என்பது ஆண்மையக் கருத்துக்களை உடைத்தெறிய முற்படும் வாழ்வின் பிரிக்கமுடியாத அம்சம் என்பதை நாம் பலர் மறந்து விடுகிறோம். பெண்ணியம் பேசல் வேறு - சாதாரண வாழ்வு வேறு என்ற இருமைத்தன்மை நம்மில் நிறையப் பேரிடம் உண்டு. இங்கு ஒரு புறம் ஆண்மையக் கருத்துக்களைக் கட்டிக்கொண்டும் வளர்த்துக் கொண்டும் இன்னொருபுறம் அதற்கெதிரான கொடியுயர்த்தலும் நடைபெறுகிறது.
அதாவது போலிக் கலாசாரம் மூலம் நம்மை வெளிப்படுத்துகிறோமேயன்றி செயலாக்கங்களினாலல்ல. இத்தன்மை ஆரோக்கியமான பெண்ணிய எழுச்சியை நடாத்திச் செல்லும் என நம்புதற்கில்லை. எனவே இவ்விருமைத் தன்மைகளைக் களைய முன்னே கூறிய சுயபரிசீலனை’ என்பது வலியுறுத்துவதாகிறது. இக்களைதலில் நம்மை ஈடுபடுத்தல் மூலமே அற்பங்களும் அரசியல் முக்கியத்துவம் பெறுதலை நாம் அவதானிக்க முடியும்.
உதாரணத்திற்கு சிலவற்றைச் சொல்லப் போனால், திருமண இணைவுகளின் போது ஆணைவிடப்பெண் சற்று உயரம் குறைவாக இருத்தலையே விரும்புகிறோம், வலியுறுத்துகிறோம். மாறி அமைந்தால் அதுவே பாரிய பிரச்சினைகள் எழும்பக் காரணமாக அமைகின்றது. அதாவது உயர ரீதியிலும்
4

ஆண்கள் மேலானவர்களாக இருத்தல் கண்காணிக்கப்படுகிறது. இங்ங்னம் வெட்கமுறும் ஆண்களை ‘பெட்டை' என விளக்கவும், அழும் ஆண்களை'பெண்பிள்ளை'போல அழுகிறான் எனக் கூறவும் முற்படுகிறோம். வெட்கம், அழுகை எதுவும் ஆண், பெண் வேறுபாடு பார்த்துத் தோன்றுவதில்லை. ஆனால், ஆண்மையக் கருத்துக்களின்படி அவை பெண்பாலுக்கு உரியன வாகின்றன. அவையே பெண்மைக் குணங்களாகச் சித்திரிக்கப்படுகின்றன.
பெண்ணியம் பேசுபவர்களே, துணிவுள்ளவனே'ஆண்மை உள்ளவன் என்றும் ஆண்பிள்ளை பயப்படலாமா? என்றும் கூறுகின்றனர். இவ்வெளிப்பாடுகளால் பெண்கள் பலம் குறைந்த, துணிவற்ற கோழைகளாக, தன்னம்பிக்கை அற்றவர்களாக வளர்க்கப்படுகிறார்கள். அல்லது அங்ங்ணம் கருதப்படுகிறார்கள். இங்ங்ணம் பெண்ணியம் பேசுபவர்களே பாரபட்சமாகக் குழந்தை வளர்த்தலில் ஈடுபடல், பெண்பிள்ளைகளை பாடசாலைகளிற் செயற்படும் சமூக சேவைக் குழுக்களில் அங்கம் வகிக்கத் தடை விதித்தல், களவேலைகளுக்குச் செல்ல அனுமதி அளிக்காமை, அதிகநேரம் வெளியே எங்கும் செல்ல விடாமை, தனித்துச் செயற்பட, பயணிக்க அனுமதியளிக்காமை, நன்றாகச் சிரித்துப் பேசும் பெண் பிள்ளைகளைப் பிழையான நோக்கில் பார்த்தல், அவர்கள் பற்றிப் பிழையான கருதுகோள்களை எடுத்தல், கலாசாரம் என்கிற ரீதியல், பெண்களில் மட்டுமே கலாசாரத்தைத் திணித்துச் சேலை, பொட்டு, பூ, தாலி, மெட்டி போன்றவற்றை அணிய வற்புறுத்தல், அல்லது பெண்கள் அவற்றை அணியவேண்டுமென்று உள்ளுரவேனும் விருப்பப்படல், மங்கள காரியங்களில் கணவனை இழந்த பெண்களை வேறுகோணத்தில் நோக்கல்,பாலியல் பலாத்காரத்திற்குட்பட்ட பெண்களை அனுதாபத் தளத்தில் வைத்து நோக்கல், பெண்ணின் சமூக மறுஉற்பத்தியை அவளது மூன்றாவது சுமையாக, உடலுழைப்பாகக் கருதாமல் அது இயல்பு, இயற்கையின் விளைவெனக் கருதுதல் என இப்படியே பலவற்றை அற்ப விடயங்கள் எனக் கூறி மறைக்கப்பட்டு விடுகின்ற பல விடயங்களில்
உண்மையில் இதற்கேற்ப விடயங்களின் பின்புலத்தில் பாரிய ஆண்மையக் கருத்துக்கள் நம்முன் தோன்றாத தன்மை நிற்பதைக் காணலாம். இவை அவ்வப்போது அற்பங்களாகத் தொழிற்பட்டபோதும், சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது அவை தம் சுயரூபத்தைக் காட்டத் தவறுவதில்லை. எனவே பெண்ணிய எழுச்சிக்கான பாதையில் நடை பயில்கின்ற நாம் ஒவ்வொருவரும் இவ்வற்ப வேர்களையும் விட்டுவைக்கக் கூடாது. அவைகளைக் களைதலின் மூலம் அதாவது நம் இருமைத்தன்மைகளைக் களைதலின் மூலம் பெண்ணிய எழுச்சிக்கு வலுவூட்ட முடியும்.
இத்தன்மையில் வெற்றிகாண்பது அவ்வளவு இலகுவானதல்ல. எனினும் ஆரோக்கியமான பெண்ணிய எழுச்சியை இதன் மூலம் ஊக்குவிக்கமுடியும் என நம்பலாம்.
5

Page 10
பெரும்போக்கு வாதங்களின் போதாமைகளும் ஒரு சாராரின் மறுப்புக்களும்
செல்வி திருச்சந்திரன்
இங்கு நான் ஒரு சாரார் என்று கூறுவது பெண்களை. சாதி, வர்க்க, தேசிய எல்லைகளைக் கடந்த ஒரு பொதுமை நிலையில் உள்ள பெண்கள் எல்லோருமே இப்பகுப்புக்குள் அடங்குவர். சாதியத்தை, வர்க்கத்தை, தேசியத்தை விளக்குவதற்கு முன்வைக்கப்பட்ட வாதங்களும் விளக்கங்களும் இப்பொதுமையை பெண்கள் என்று உடல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட ஒரு சாராரின் உரிமை மறுப்புக்களின் பொதுமையை உண்மையை அவர்களின் அந்தஸ்தின் கீழ் நிலையையும் இனங் கண்டதாகத் தெரியவில்லை. அதை விட இந்த உரிமை மறுப்புக்கள் சமூக, சட்ட, சமய, இலக்கிய, கலாசார அங்கீகரிப்புக்களையும் ஒருங்கே கொண்டிருப்பதையும், அவ்வுரிமை மீறல்கள் இவற்றின் பேரில் காலங்காலமாக நடத்த நியாயப்படுத்தப்பட்டு வந்தமையும் ஒரு விசித்திரமென்றோ, அலங்கோலம் என்றோ அவற்றைப் பிரகடனப்படுத்தியவர்களுக்குத் தெரியவில்லை. அவை மிகச் சாதாரணமானவையாக சமுதாயத்தை நிலைப்படுத்த அதற்குத் தேவையான மேம்பாடுகளாகவும் அவர்களுக்குத் தெரிந்தது. தமிழர்களில் கீழ்சாதிப் பெண் என்று கணிக்கப்பட்ட பொன்னிக்கும், மேற்குலப் பெண்ணான கிருஷாந்திக்கும், சிங்களப் பெண்ணான மன்னம்பெரிக்கும், இந்தியப் பெண்ணான மதுராவிற்கும், ருப்கன்வாருக்கும் காலில் இரும்புக்கவசம் அணியப்பட்ட சீனப் பெண்ணுக்கும் Chasti Belt அணியப்பட்ட ஐரோப்பிய பெண்ணுக்கும் கால தேச இட சாதிய வர்க்க நிலைகளைக் கடந்த ஒரு பொதுமை உண்டு. இந்தப் பொதுமை கருவளம் படைத்த பெண் என்றபடியால்தான் உண்டானதா? அதனால்தான் Shalaimyth FiveStone பெரியாரும் பெண்ணே உனது கருப்பையை அகற்றிவிடு என்று கூற முன்வந்தார்களா? கருப்பையை அகற்றிவிட்டால் பெண்ணுக்கு என்று வகுக்கப்பட்ட அடக்குமுறைகள் அகன்று விடுமா? பெண்ணுக்கிழைக்கப்பட்ட அநீதிகளை நாம் ஓரளவே உடல்ரீதியான விளக்கத்தை வைத்து விளங்கிக் கொள்ளலாம்.
பெண்ணுக்கே சிறப்பாக இருக்கும் உடல் உறுப்புக்கள், கருத்தரிக்கும் இயல்பு (தாய்) பால் ஊட்டும் வளமுடைய அவய உறுப்புக்களைக் கொண்ட அவளது உடற்கூறும் அவளைக் குழந்தைகளைப் பெறவும் உணவு ஊட்டவும் என அவளை மனைக்குள்ளேயே முடக்கி விட, தன்னால் உலகுக்கழிக்கப்பட்ட கையறுநிலையில் உள்ள சிசுக்களை, குழந்தைகளைச் சீராட்ட, பாராட்ட, தாலாட்ட என்று அவளது
6

தொழில்கள் கூடிக்கொண்டேபோக அவை பளுவாக அவளது ஏகபோகக் கடமைகளாக மாறிவிட அந்தக் கணவன் ‘மனைஞனாக'துணைவனாக இருக்கவிரும்பவில்லை. அவன் படிப்படியாக ஸ்வாமியாக, தலைவனாக, கடவுளாக மாறிவிட மனைவி கீழ்ப்படிபவளாக மாற்றப்பட்டு விட்டாள். அவளது உடல்வாகு ஒரு சில உறுப்புக்களைக் கொண்டபடியால் இன்ப உறவுகளுக்கு மாத்திரமல்லாமல், வல்லுறவுக்கும் பலாத்காரத்துடன் கூடிய வன்முறைக்கும் அது உட்படுத்தப் பட்டுள்ளது. ஆணின் வல்லுறவு ஆட்சிக்கு அவள் அடிமைப்படுத்தப்பட்டாள். கணவனுக்கு அவள் மனைச்சுகம், சமையல், சாப்பாடு, உடலின்பம் போன்றவற்றை மனைவியான பெண்ணாக நல்குவது அவள் கடமையாகவும் ஏன் சட்டமாகக்கூட மாறிவிட்டது. ஆனால் வல்லுறவு, பலாத்காரம் தண்டிக்கப்படவேண்டிய குற்றமாகச் சட்டமியற்றப்பட்ட பொழுது அவ்வல்லுறவிற்கு சாட்சி, காரணங்கள், அவள் ஏன் அங்கு அவ்வேளையில் சென்றாள் போன்ற கேள்விகள் எழுப்பி பலாத்காரம் என்பது இணக்கம், அவளது விருப்பம் என்று திரித்துக் கூறப்பட சட்டம்கூட அப்பெண்ணை உடல் உறுப்பு மைய நோக்கில், ஆண் நோக்கில்தான் பார்க்க முற்பட்டது.
பெண்ணின் இரண்டாம் பட்சநிலைக்கு அவளது உடல் உறுப்புநிலைதான் காரணமா? அப்படி என்றால் அவளுக்கு விமோசனம் கிட்டாது. உடல் உறுப்புக்களை மையமாக அவளைச் சுற்றிக்கட்டி எழுப்பப்பட்ட சமூக நோக்கங்களும், பிரமாணங்களும், சட்டங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளுமேதான் இவற்றிற்குக் காரணம். இவை களைந்தெறியப்பட பெண்ணின் நிலை மாறும். அவளது உடல்வாகு, கற்பு என்னும் பழம்பெரும் கோட்பாட்டை உருவாக்கியது. உடலைத் தொடுவதும் அனுபவிப்பதும் கற்பின் பெருங் கோட்பாட்டுக்கு வழி வகுக்க அது “சிறைகாக்கும் காப்பென் செய்யும்?” என்ற கேள்வியை எழுப்பி மனநிலைக் கற்பு மனதின் புனிதம் கூடப் பேணப்பட வேண்டும் என்று ஒரு இரு நிலைக் கற்பின் கோட்பாடு உருவாகியது. கைக்கிளை, பெருந்திணை, பலாத்காரமணம், வைப்பாட்டி உறவு, பலதாரமணம் போன்றவை கற்பின் கோட்பாடுகளிலிருந்து ஆண்களை விலக்க, சிறு குழந்தை மணம், விதவை மறுமண மறுப்பு போன்ற சட்டத்தோடு ஒட்டிய கலாசார கோலங்கள் வெளிப்படத் தொடங்கின.
இவை ஒரு தலைப்பட்சமான சமூக உருவாக்கங்கள். பின் அவை சட்டமாகக்கூட ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இந்தச் சமூக உருவாக் கங்களுக்குக் கலாசாரம், பாரம்பரியம், சமுதாய விழுமியங்கள், பழம்பெருமை, நாகரிகத்தின் சின்னங்கள் என்ற இனிய நாமகரணங்கள் சூட்டப்பட்டுவிட, பழம்
7

Page 11
வாதங்களை எழுப்ப பெண் நிலைக் கோரிக்கைகள் அபஸ்வரமாக கலாசார அழிவுக்கு வித்திடுவனவாக மேலை நாட்டுக் கலாசார வடிவங்களாக அபத்தமாக ஒலிக்கின்றன.
சமுதாய உருவாக்கங்கள், தேசியத்தின், வர்க்கத்தின், சாதீயத்தின் எல்லைக்குள்ளும் ஒரு பெண்ணை உருவாக்கிவிட்டன. தேசியத்தின் பெண் இத் தேசத்தின் பழம் பெரும் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டிருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப் பெண்ணேகூட தேசியத்தின் சின்னமாகக் கொள்ளப்பட்டுவிட்டாள். தமிழ் அன்னை, தமிழ்த்தாய், கன்னித்தமிழ், வந்தேமாதரம் போன்ற உருவாக்கங்கள் பெண்ணின் தூய்மை, மென்மை போன்ற குணங்களை
அடிப்படையாகக் கொண்ட கற்பிதங்களே.
“எம்முடைய பெண்’ எனத் தேசியத்தில் உள்ளடக்கப்பட்ட பெண், பாதுகாப்புக்குரியவள், ஆனால் அந்நிய தேசத்துக்குரியவள், மாற்றாள், அவள் அழிக்கப்படலாம். அவளை வல்லுறவுக்குட்படுத்தினால் அவளது தேசத்தின் கண்ணியத்தைச் சின்னாபின்னமாக்கியதை அச்செயல் ஒக்கும். அவள் அந்நிய நாட்டு எதிர் தேசத்தின் சின்னம், உடமை, வர்க்க நிலையில், உயர்வர்க்க நிலைப்பெண்ணுக்குரிய சில நிலைப்பாடுகள் உண்டு. அவள் தனியே போகலாம். அதிகாரவர்க்கத்தின் சலுகைகள் சில அவளை அடையலாம். அவள் சமூகக் கண்காணிப்பிலிருந்து ஒருவேளை தப்பலாம். சில கட்டுப்பாடுகளை அவள் ஒதுக்கி, சுதந்திரத்தை நாடலாம். உயர் வர்க்கநிலை அவளுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் வீட்டிற்குள்ளேயே அவள் பதுமை நிலை அடைய வேண்டும். அங்கு அவளது வர்க்க நிலையையும் மீறிய கணவனது அதிகாரம் அவளைக் கட்டுப்படுத்தும். மத்திய தர வர்க்கப் பெண்ணுக்குச் சமூகக் கண்காணிப்பும் வீட்டின் கண்காணிப்பும் அலைக்கழிக்கும் ஒரு இரண்டும் கெட்டான் நிலை. வரம்புகளைக் கடக்க முடியும், கடக்க முடியாது என்ற இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. கீழ்வர்க்க, கீழ்சாதி நிலையில் தள்ளப்பட்ட பெண்ணுக்குக் கலாசாரக் கட்டுப்பாடுகள் அருகிய குறைந்த நிலை என்றாலும் அவள் தரங்குறைந்த பெண்ணாகவும் மதிக்கப்படலாம். கலாசார விழுமியங்களில் இருந்து வழுவிய பெண்ணாக அவள் கருதப்பட்டு "இழிகுலப்”பெண்ணாகி விடுகிறாள். உயர்த்திக் கட்டிய சேலை, பொட்டு, பூவைக்க நேரமில்லாத பெண் உடல், உரத்த பேச்சு, சிரிப்பு வீட்டுக்கு வெளியே தள்ளப்பட்டு வருவாய் தேடவேண்டிய நிலையில் அரக்கப் பரக்கத் திரியும் அவள் பெண்களுக்கென்று கலாசார ரீதியில் விதிக்கப்பட்ட சமூக,
8

கலாசார விழுமியங்களைத் துறந்து விடுகிறாள். உயர் குலப் பெண் பொட்டு, பூ நகை, பட்டணிந்து குனிந்து வேலை செய்து, மெல்ல நடந்து புன்சிரிப்பை மட்டும் சிந்தும் காவியக் கதாநாயகியாகத் தமிழ்த் திரைப்பட வடிவங்களுக்கிணங்கத் தன்னைப் பாவித்துக் 856) TFrty சின்னமாக விளங்கவேண்டி நிர்ப்பந்திக்கப்படுவாள். எதிர்பார்க்கப்படுவாள். இந்த உயர்குல, உயர்வர்க்கப் பிம்பங்களும் வடிவங்களுமே தேசியத்தின் உருவாக்கங்களாக மாறுகின்றன.
இந்த வரையறைகள் எழுதாச் சட்டங்களாக சட்டத்தின் மாண்பினையும் மதிப்புக்களையும் பெற்று அவற்றை மீறுவது சமுதாயக் குற்றமாகப் பார்க்கப்படும் நிலைமையை எய்தி உள்ளன. இவ்வரையறைகளை மாற்ற வேண்டும் என்ற கருத்தியலை பெண் நிலைவாதிகள் வைத்துக் கொண்டிருந்தால் அவற்றை மாற்றிக் காட்டுவதை நடைமுறைச் சாதனங்களாகக் கொண்டுள்ளன. அந்த மாற்ற முறைகளைச் சட்டங்களாகவும் மாற்ற வேண்டும் என்பது அவர்களது அபிலாஷை. JeanS அணிதல், தலைமுடியை வெட்டுதல், பொட்டை, தாலியை அகற்றுதல் போன்ற செயல்களைக் கிரமமாக உள்ளுணர்ச்சியுடன் செய்யும் பெண்களையும் நாம் காணலாம். இந்திய தேசிய வாதிகள் கதர் உடுப்பதையும் மகாத்மா காந்தியை half-maked Fakir என்று வின்சன்ட் சார்ச்சிலால் அழைக்கப்பட்டதும் வரலாற்றில் தேசியத்தின் கதையாக இன்று விளங்கப்படுகிறது. மாக்சிஸ் மற்றும் ஏனைய தீவிரவாதிகள் தாடி வளர்ப்பதும் நடை உடை பாவனைகளில் சின்னங்களைத் தேர்ந்தெடுப்பதை ஒக்கும் செயலாகத்தான் நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இந்தத் தாலியும், பொட்டும், பூவும் பெண்ணின் உடல் பொருள் ஆவி அத்தனையும் இன்னொருவனுக்கு ஏகபோக உரிமையாக அளிக்கும் தன்மையை மங்களகரமான ஒரு இலட்சிய நோக்கமாகவும் சமய அனுக்கிரகங்களுடன் ஒட்டியவையாகவும் இருப்பதினால் அவற்றை அகற்றுவதும் கலாசார அழிவுகளாகக் கருதப்படுகின்றன. ஆனால் கணவன் என்ற சின்னம் இவ்வுலகில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற சம்பிரதாயம் பெண்ணின் விருப்பு வெறுப்புகளை உதாசீனப்படுத்துகின்றது. இங்கு பெண் ஜடப்பொருளாக, உணர்ச்சிகளைத் துறந்தவளாக, சுதந்திரமற்றவளாகக் கொள்ளப்படுகிறாள். இது சம்பிர தாயங்களுக்குப் புலப்படுவதில்லை.
அடக்கல், ஒடுக்கல், ஒரங்கட்டல், உதாசீனப்படுத்தல், கீழ் நிலைப்படுத்தல், வன்முறைக்குட்படுத்தல்,உடமையாக கருதப்படுதல், உரிமைகள் மறுக்கப்படுதல் போன்ற இரண்டாம் பட்ச நிலைகளின் பெறுபேறுகளும்
9

Page 12
அனுபவங்களும் பெண்ணை விழிப்படையச் செய்து விட்டன. கருத்தியல் ரீதியில், கோட்பாட்டு ரீதியில் அந்த விழிப்புணர்ச்சி இயங்கத் தொடங்கப் பெண்ணுரிமை இயக்கம், பெண்நிலைவாதம் போன்றவற்றுடன் செயல் திட்டங்களும் லிபரலிசம், மாக்சிஸம் போன்ற இசங்களுடன் பெண்நிலைவாதம் என்று அழைக்கப்படும் Feminism மும் தோன்றியது முதலாவதாக கருத்தியல் ரீதியில் என்னதான் இது என்று பார்ப்போம்.
Feminism எனப்படும் பெண்நிலைவாதம் தற்போது ஒரு பாரிய கோட்பாடாக, கொள்கைத்தளமாக வளர்ந்துள்ளது. மானிட சமூகவியல் ஆய்வாளர்களின் கோட்பாடுகளும் Plato போன்ற அரசியல் சிந்தனா வாதிகளினதும் Freud போன்றவர்களின் மனோதத்துவ வாதங்களையும் கம்பர், வள்ளுவர், சேக்ஷ்பியர், காளிதாசன் போன்ற இலக்கியப் படைப்பாளிகளினது கதை மாந்தர்களையும் கலாயோகி ஆனந்த குமாரசாமி போன்ற கலாசார அறிவு விற்பன்னர்களின் வாதங்களும் நம் நாட்டுச் சேரன், ஜெயபாலன் போன்றோரது கவிதையில் இடம் பெறும் ஆண்நிலை நோக்கையும் உலகின் மாபெரும் சிந்தனாவாதியான மாக்ஸ், ஏங்கல்ஸ் போன்ற இடதுசாரிகளது சிந்தனைகளில் இருந்து தொனிக்கும் பாரபட்சங்களும், பெரும்போக்கு, சிறுபோக்கு என்ற கலாசார மரபுகளில் சமயாசாரங்கள், அனுட்டானங்களில், கிரியைகளில், பல மட்டங்களில் உள்ள 2000 ஆண்டு கற்பிதங்களைக் கட்டவிழ்க்கும் பெண்நிலைவாதம் ஒரு அறிவுசார் கற்கை நெறியாகவும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந் நிகழ்வு பெண்களது விழிப்புணர்ச்சியைத் தூண்டிய ஒரு ஆய்வறிவாகப் பரிணமித்துள்ளது. இது பலருக்குத் திடுக்கிடும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. 2000 ஆண்டின் வரலாற்றை அந்தத் தளத்தில் வேரூன்றி நின்ற மரபுவாதிகளையும் பண்டிதர்களையும் மட்டுமன்றி மாக்சிஸ்
பெண்நிலைவாதம் சாடி நிற்கிறது. இவ்வாதங்களை ஜீரணித்து ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையையும் பெண்நிலைவாதம் அவர்களிடம் உண்டாக்கி உள்ளது. ஏன் இது பல பெண்களையும் இதே ரீதியில் தாக்கி உள்ளது. மரபுகளைக் களைந்தெறிவதிலும் வேண்டாத கணவனை விலக்கும் பொழுதும் குடும்பத்தை உடைக்கிறோம். சமூகத்தின் ஆணிவேரைத் தகர்க்கிறோம் என்றும் குழந்தைகளைத் தகப்பன்மாரிலிருந்து பிரிக்கிறோம் என்றும் வேலைக்குச் செல்லும் பொழுதும் அந்திமாலைகளில் கூட்டம், கருத்தரங்கு என்று செல்லும் பொழுதும் பிள்ளைப் பராமரிப்பு போன்றவற்றிலிருந்து வழுவுகிறோம் என்ற குற்றஉணர்வு பல பெண்களை அலைக்கழிக்கிறது என்பதும் உண்மையே. இவை யாவும் சரிபாதி
20

உண்மைகளும் உரிமைகளும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டதின் உணர்ச்சி ரீதியாகவும் நடைமுறை ரீதியிலும் அவை உரிமைகளாகக் கொள்ளப்படாததின் விளைவே. அவை வெளிச்சத்துக்கு வரும் பொழுது அவற்றை மனங்கொள்ள, விளங்கிக் கொள்ள, ஏற்றுக்கொள்ள ஒரு பயம் ஆண்களுக்கும் இப்பயம் எல்லாமே உண்டு. உடைத்தெறியப்படுகிறது என்ற பயமும் அதை விட தாங்கள் காலங்காலமாக அனுபவித்து வந்த உரிமைகள் எனப்பட்ட சலுகைகள் அளிக்கைகள் ஆதிக்கம், அதிகாரம் போன்றன கேள்விக்குள்ளாக்கப்பட்டு மறுக்கப்பட்டு தங்களது இருப்பே நிலைகுலைந்து விட்டதை ஏற்றுக் கொள்வது சற்று சிரமமாக இருக்கிறது. தங்களை வாய்கூசாமல் ஆதிக்க வெறியர், அதிகாரம் தலைக்கேறியவர்கள், வன்முறையாளர், ஏனையோரது உரிமைகளைப் பறித்தோர் என்று பெண்நிலைவாதிகள் கூறாமற் கூறுவதை அவர்களால் ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தர்மசங்கட நிலையில் பல ஆண்களும், பாரம்பரியங்கள் பறிபோகின்றனவே என்ற பண்டிதர் கூட்டமும், மானிடவியல், சமூகவியல், மனோதத்துவ வாதிகளும், மாக்ஸிசவாதிகளும் தங்களது வாதங்களின் போதாமையை ஏற்றுக்கொள்ளாமல் அவ்வாதங்களை அழுங்குப்பிடியாகப் பிடித்துக்கொண்டு எப்படி பெண்நிலைவாதிகள் எம் வாதங்களில் குறைகாணலாம் என்று பெண்நிலை வாதங்களைத் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள மறுத்து பெண்நிலைவாதிகளைக் கண்டித்தும் கொச்சைப்படுத்தியும் உள்ளார்கள். மாக்ஸிசவாதிகள் வர்க்கநிலைக்குத் தந்த கோட்பாட்டு விளக்கம் சாதீயத்தை சமூகவியலாளர் விளங்கிக் கொண்ட விதம் லிபரல் முற்போக்கு வாதிகள் மேற்கொண்ட வாதப் பிரதி வாதங்கள் என்பது பல தளங்களில் ஆண் நோக்குப் பரவலாக இருப்பதை பெண்நிலைவாதிகள் இனங்கண்டு விண் டுரைத் திருக்கிறார்கள். அவர்களது வாதங்களைத் தற்போது பல ஆய்வறிவாளர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தாலும் சில விதண்டாவாதங்களையும் அடிக்கடி கேட்கிறோம். கருத்தரங்குக்குத் தலைமை வகிக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து ஆண்களில் Chair Person என்று அழைக்கும் போது மொழி வளர்ச்சியில் இருந்த இந்த ஆண்நிலை நோக்கு மாறி விட்டது என்று நாம் கொள்ள முடியாவிட்டாலும் சில அறிகுறிகள் தோன்றுகின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
★ ★ 女
2

Page 13
விஸ்வரூபம்
மண்டூர் அருணா
அப்பாவிடம் - அம்மாவைப் போல் என் உணர்வுகள் தரவைபட்ட ஒவ்வொரு கணங்களிலும் ஏதோ ஒன்று என்னுள்ளே நெஞ்சைத் தரக்கி நிறுத்திக்கொண்டிருந்தது ! ஆனாலும்
என் முன்னே நீண்டு பரந்த முட்கம்பித் தடை வேலிகள்.
ஜமனையே என்முன் சுட்டுவிரலால் நேற்றுத் தோற்கடித்த அவன் அம்மாவின் அதே முலைப்பாலில் முளையிட்ட என் ஜடத்தை வதைமுகமாக்கிய போது உங்களால் நிராயுதபாணியாக்கப்பட்ட என்னுள்ளிருந்தது எதோ ஒன்று முன்தோன்றித் தன் உடைவாளை எனக்காக்கியது. "உன்னுள்ளிருக்கும் விருட்சத்தை அதன் நிஜத்தை ஏதோவொன்றைப் புரியாத இவனிடம் இன்னுமேன் நாணிக் குறுக வேண்டும்" என்றது.
என்கண்கள் சிவந்தன நரம்புகள் புடைத்தன என்முன்னே வேலிகள் பொடியாயின. நான் நானானேன்.
22

ஆண்களும் பெண்களும் இரு வேறுபட்ட வரையறைகளா?
நரதாயினி
மனிதன் என்ற விலங்கின் இரு பாலியல் குறியீடுகள்தான் ஆணும் பெண்ணும். ஆண் இனமும் பெண் இனமும் இரு வேறுபட்ட வரையறைகளாக இருக்கக் காரணம், இனப்பெருக்கவலு ஒன்றாயிருப்பதுதான். ஆயினும் சந்ததி ஆக்கத்தில் பெண் மட்டும் பொறுப்பாக இருக்க ஆண் பொறுப்பற்றுப் போனதே ஆண் பெண் அசமத்துவ நிலைக்கு அடிப்படைக் காரணியாக அமைந்தது.
வரலாற்றுக் காலத்திற்கு முன்னிருந்தே ஆண் வேட்டையாடவும், பெண் பழவகைகளைப் பொறுக்குவதற்குமே பொருத்தமானவர்கள் எனக் கருதப்பட்டது. பெண்பிள்ளை வெறும் இயந்திரமாகவும் பிள்ளைகளைப் பராமரிக்கும் தாதியாவும் கணிக்கப்பட்டாள். இன்றுவரை அவ்வாறே கணிக்கப்பட்டும் வருகிறாள்.
கணவனுக்கு அடங்கி ஒடுங்கி வீட்டோடு இருக்கும் பொம்மையாகப் பெண் இருப்பதனையே ஆண்கள் விரும்பினர். பெண்ணினது விருப்போ, வெறுப்போ கருத்திற்கு எடுக்கப்படவில்லை. மகளிரின் உயர்வும் மேம்பாடும் இல்லக் கடமைதான் என்று சமூகம் எண்ணியது. ஆதலால்தான் தமிழில் ஆளுகை என்பதிலிருந்து ஆணும், பேணுகை என்பதிலிருந்து பெண்ணும் வந்ததாகப் பொருள் கொள்ளப்படுகிறது.
ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டாலே, அக்குழந்தையை நீ பெண் குழந்தை; இப்படித்தான் வளரவேண்டுமெனக் கூறிச் சிறுமியைக் கட்டுப்பாட்டு வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கப் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இதன் காரணமாகப் பெற்றோரின் சொற்படி நடப்பதால் தன் கற்பினைப் பேணிக்கொள்வாள் என்றும், பெற்றோர் பார்த்து முடித்த திருமணப் பந்தம் இனிய நல்லறமாகத் திகழும் என்றும் கற்பிக்கப்படுகிறாள்.
இல்லற வாழ்விற்குள் நுழைகின்ற ஒரு பெண்ணுக்குத் தென்றலும் வீசலாம்! அதே வேளை புயலும் வீசலாம்! ஆனால் நடைமுறை வாழ்வில் ஒரு பெண்ணைப்புகுந்தவீடு என்ற பிறந்த வீட்டிலிருந்து அந்நியப்படுத்தி ஒரு பயங்கரச் சூழலுக்குள் தள்ளி மாமியாருடன் மல்லுக்கட்டவைத்து, பெரும்பலப்பரீட்சைகளுக்கு மத்தியில் நல்ல மருமகள் எனப் பெயரெடுத்து, அங்கு தாயாகிப் பின் தானும் ஒரு
23

Page 14
மாமியாகி, பேத்தியாகி, பாட்டியாகிப், பல பரிமாணங்களைப் பெறும் அவள், பெண்ணாகப் பிறக்க மாதவம் செய்திட வேண்டுமா? இல்லை மகா பாவம் செய்திருக்க வேண்டுமா?
பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களுக்கு உரித்துடையவள்.
வீரம், தன்னம்பிக்கை, துணிவு, காரியமாற்றும் திறன்,தலைமை அதிகாரம், தீர்மானம் எடுத்தல், உழைப்பு, உரிமை என்பவை ஆணின் அம்சங்கள் எனக் கூறப்படுகிறது.
பெண்ணைப் பொறுத்த வரையில் நாணம், பொறுமை, பயம், கற்பு, பெண்மை, இரக்கம், அழகு, புரிந்துணர்வு, அதிகாரமின்மை, தாய்மை, பின்னுக்கு நிற்றல், வீட்டுவேலை, சீதனம் ஆகிய குணாம்சங்கள் அவளுக்குரியனவாகின்றன.
ஆண் எதிர் பெண் பண்பாட்டுக் கோலத்துடன் பட்டுடுத்தி அடக்கமாகச் செல்லும் பெண்ணைப் பார்த்தால் கையெடுத்துக் கும்பிடத்தோன்றும். இது ஆண்கள் வாதம்
பண்பாடு என்ற போர்வையில் பட்டிக்காடு போலப் பவனிவர இக்காலப் பெண்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளல்ல இது பெண்களின் வாதம்
அட்டகாசமாக அலங்கரித்துவரும் பெண் ஆண்களைக் கவரத்தானே! அவளைக் கேலி, கிண்டல், ரீஸ் பண்ணுவதெல்லாம் அன்புத்தொல்லை
இது ஆண்களின் வாதம்
ஐந்து வயதுப் பெண்ணும் அலங்காரத்தில் நாட்டம் கொள்கிறாள். ஐம்பது வயதுப் பெண்ணும் அலங்காரத்தில் நாட்டம் கொள்கிறாள். அலங்கரித்தல், அழகுசெய்வது எல்லாம் மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தும் ஒரு குணாம்சம். இதில் தவறு ஒன்றும் இல்லையே!
இது பெண்களின் வாதம்
சாதாரண சோப் முதல் விலை உயர்ந்த சாரி வரையான விளம்பரத்தில் பெண்களின் குரல், பெண்களின் சித்திரம், பெண்களின் தோற்றம் (போஸ்), பெண்களின் நடமாட்டம் எத்தகைய உயிரோட்டத்தைத் தரும்? இவையெல்லாம் ஆண் நுகர்வோரைத் திருப்திப்படுத்தச் செய்யும் மூன்றாம் தரவேலைகள்!
இது பெண்களின் வாதம்
24

அழகுணர்சி உங்களிடம் தானே இருக்கிறது. பூவோடு சேர்ந்த நாரும் நறுமணம் பெறுவது போல உங்களோடு சேர்ந்த அந்தப் பொருட்களும் மேன்மை பெறட்டும்.
இது ஆண்களின் வாதம்
பெண்கள் சம்பந்தப்படாத ஷேவிங் லோஷன், சவரஅலகு, ஆண்கள் சோப், ஆண்மை மிகு லேகியம் போன்ற பொருட்களின் விற்பனை விளம்பரங்களிலெல்லாம் பெண்கள் தலை காட்டுமாறு ஏன் செய்கிறார்கள்?
இது பெண்களின் வாதம்
இத்தகைய ஆண்களின் பொருட்களைப் பாவித்த ஆண்களையே பெண்கள் பெரிதும் விரும்புவதாக ஆண்கள் நினைக்கிறார்கள்.
இது ஆண்களின் வாதம்
சம வயது அல்லது சற்று வயது குறைவான அல்லது சற்று வயது கூடிய பெண்களை ஆண்கள் திருமணம் செய்தால் என்ன?
இது பெண்களின் வாதம்
அதிகாரம் செலுத்தவும் பாலியல் திருப்தி பெறவும் வயதான காலத்தில் பராமரிக்கப்படவுமே ஆண்கள் வயதில் குறைந்த பெண்களைத் தேடுகின்றனர். இது ஆண்களின் வாதம்
பெண்ணைப் பாலியல் ரீதியாக நோக்க வேண்டாம். அவர்கள் காமப்பண்டமல்ல.
இது பெண்களின் வாதம்
பெண்களை வேறு எந்த ரீதியில் நோக்குவது? வாழ்வின் அடித்தளமே பாலியல் தான்! ஆணுக்குப் பெண் பாலியல் பண்டம் பெண்ணுக்கு ஆண் பாலியில்
பண்டம்.
இது ஆண்களின் வாதம்
25

Page 15
இவ்வாறு ஆண்களும் பெண்களும் முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
பெண் தன்னைப் பற்றிய முடிவுகளைத் தானே சுயமாக எடுக்கக்கூடிய சுதந்திரம் இன்னும் எமது சமூகத்தில் இல்லை. குறிப்பாக ஆணுக்குள்ளது என்பதை விட சகலருக்கும் உள்ள உரிமையைப் பெண்கள் அனுபவிக்க வேண்டும். பெயரளவில் மாத்திரம்பிரஜைஎன வரையறுக்காது, செயற்பாட்டளவிலும் பெண்கள் தமது உரிமைகளைப் பூரணமாக அனுபவிக்க உரித்துடையவர்கள் என்பதனை எமது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் தமக்கு விருப்பமான தொழிலைப் புரியவும், விவாகம் செய்தோ செய்யாமலோ, குழந்தை பெற்றோ பெறாமலோ வாழ்வதற்கான உரிமைகள் அவளது தனிப்பட்ட அபிலாசைகளைப் பொறுத்தது.
வேலைக்குப் போகும் பெண்களின் இரட்டைச் சுமை குறித்து ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டுவதுடன் பெண் சுயமாக இயங்கவும் வெறுமனே பெண்ணானவள் பொம்மையாக அல்லது அவள் ஒரு மனித ஜிவி என்பதையும் உணர்ந்து பெண்கள் வாழ்வதற்கு ஆண்கள் தடை விதிக்கக்கூடாது.
எமது சமூக அமைப்பு மிகவும் வேறுபட்டது. பெண்கள் சிறுவயதில் தந்தையின் கட்டுப்பாட்டிலும், திருமணமானதன் பின் கணவனின் கீழும், பிற்காலத்தில் ஆண் மகனாலும் பராமரிக்கப்படவேண்டியவள் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
எமது கலாசாரக் கட்டமைப்பானது பெண்கள் மீது பாரபட்சமான முறையில் சுமைகளை அழுத்திய போதும், இன்றைய பெண்கள் படிப்படியாகத் தம்மீது திணிக்கப்படும் பளுக்களை அறுத்தெறிய, சுதந்திரமாகவே வாழ முற்படுகின்றனர். எனினும் இத்தகைய கட்டுக்களை உடைத்துக் கொண்டு வெளியேவரும் பெண்கள் வேறு வடிவத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
உலக யதார்த்தங்களுக்குப் புறம்பான வகையில் பெண்களை வளர்த்து வயது வந்ததும் திருமணம்செய்து கொடுத்து விடுவதால், பெண்கள் நமது சமுதாயத்தில் ஒரு ஊனப்பிறவிகள் போலவே கருதப்படுகின்றனர். பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது காலமெல்லாம் அவளை வைத்துக்
26

காப்பாற்றுவதற்கெனச் சீதனமாகப் பணமும் பொருளும் கொடுக்கின்றனர். இரு இளம் தம்பதியினர் வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்குப் பொருள் உதவி அவசியப்படும். ஆனால் அது என் பெண் வீட்டாரிடம் மட்டும் வாங்கப்படவேண்டும்? மாறிவரும் உலகில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஆண்-பெண் இருவரும் சக புரிந்துணர்வுடன் பொருள் ஈட்டிக் கொள்தலே நீதியானது.
பெண் இனத்தின் இயற்கை அமைப்பையும், இயல்பான தன்மைகளையும் உடற்கூற்றடிப்படையையும் வைத்து மாறுபட்ட கருத்தோட்டத்திலும், வேறுபட்ட கண்ணோட்டத்திலும் சிந்திக்கும் உளப்பாங்கு வளர்ந்து விட்டது. உடற் பலத்தின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் பாகுபாடு செய்யப்பட்டு தொழில் ரீதியான பகுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகப் பெண்களது உடற்கூற்றில் அவர்களது உடல் ஆணுக்காகவே படைக்கப்பட்டது என்ற எண்ணம் ஆழவேரூன்றி அவளை அவளது உடலில் இருந்து அந்நியப்படுத்தி விடுகின்றனர். இதனால் பெண் தன் பிறப்புறுப்புப் பற்றிக் கதைக்கவோ அறிந்து கொள்ளவோ முடிவதில்லை. தவறான அறிதல்களால் அது பற்றிய வெட்கமும், பதற்றமும், குற்றஉணர்வும், மர்மமும் தவறான வெறுப்புணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்தக் கருத்தியல்புகளின் அடிப்படையில்தான் ஆண்களும் பெண்களும் வளர்க்கப்படுகின்றனர். இத்தகைய குணவியல்புகளுக்கு உடலின் ஒமோன் சுரப்பிகளும் காரணமாகி விடுகின்றன. எனவேதான் பெண்ணையும் ஒரு மனித ஜிவியாக மதியுங்கள் எனப் பெண்ணிலைவாதிகள் கேட்கின்றனர்.
மானிட இன விருத்தியின் அடிப்படையாகவும் அத்திபாரமாகவும் கருதப்படும் பெண்ணைக் காமப்பண்டமாகக் கருதுவது குருட்டுத்தனமானது. ஆண்-பெண் உறவில் சமத்துவம் என்பது ஒரு நாகரிக வடிவமாகும்.
தற்கால சமுதாயக் கட்டமைப்பில், தலைமைதாங்கும் பொறுப்பு ஆணிடம் இருப்பதும், ஆண்கள் பெண்களின் உடலைக் கட்டுப்படுத்தி அவர்களைத் தாய்மை நிலைக்குத் தள்ளும் பாலியல் அடிமைத்தனமும் நிலவுகிறது. ஆனாலும் குழந்தைப்பேறு என்பது சமூகத்தின் அடிப்படைக் கடமையாகவும் அதேவேளை ஒரு சமூகத்தின் தோற்றத்திற்குக் காரணமாகவும் அமைவதால் ஆண்-பெண் இருவரதும் இணக்கப்பாட்டுடனும் புரிந்துணர்வுடனுமே நாட்டின் பிரஜையான குழந்தை உருவாக்கப்படல் வேண்டும்.
27

Page 16
ஆதலினால் நாம் சிறுகதை
சுமதி ரூபன்
மெல்லிய தூவானம் மனதுக்கு இதம் தந்தது. தலையை வடுகி எடுத்தாற் போல் கறுப்பு இரு பக்கமும் விலக, பெருஞ்சாலை வெளிச்சமானது.
இப்போது மெல்லிய காற்று நான் உணர கைகளில் goose bumbS. தடவிக் கொள்கிறேன்.
அந்த ஜோடிப்புறாக்கள் மீண்டும் ஒருமுறை வட்டமடித்து விட்டு இரும்புக் கம்பியில் வந்து அமர்கின்றன. பெண் புறாவிற்குக் குளிருகிறதோ. ஆணின் இறக்கைக்குள் அது புகுந்ததால் என்னுள் கேள்வி. ஆண் புறா ஆதரவாகத் தனது ஜோடியை அணைத்துக் கொண்டது. எனக்குள் ஆர்வம் கூடியது. கண்களை அகற்றாது புறாக்களின் மேல் வைக்கின்றேன். இப்பொழுது அலகுகளைப்
கண்களைச் செருகிக் கொண்டது. ஒ இது காதல் முத்தமா?அடுத்த கேள்வி எனக்குள் புறாக்களின் அலகில் உணர்வு இருக்குமா?
மனிதனின் இதழ்கள் முட்டும் போது எழும் சுகம் அந்தக் கடினமான அலகிற்கு உண்டா?
முத்தம் ஈரம் தருமோ..?
ஐயோ அறிய ஆசையாக இருக்கு யாரிடம் கேட்பது? செருப்படி விழும். சிரித்துக் கொள்கிறேன்.
புறாக்கள் மீண்டும் பறந்துவிட எனது பார்வையும் திரும்புகிறது. “You are in the right place" gung) assigrfusair flip GOU Screen savergi) 6Tegg நகர்த்திக் கொண்டு இருந்தார்கள். Library க்குப் போனால் புறாக்கள் பற்றிப் புத்தகம் கிடைக்கும். ஐயோ விசரி இருக்கிற வேலை காணாதெண்டு புதுசா ஒண்டா. என்னை நானே கடிந்து கொண்டேன். ஆனால் புறாக்களின் முத்தம் பற்றி அறிய ஆவலாக இருந்தது. என்ன செய்வதும். Internet களவு செய்ய எண்ணிவிட்டேன்.
28

பரவாயில்லை. இதுதான் கடைசித்தரம். இப்படிப் பல கடைசித் தரம் Guigj Gurti Shills. Mouse ag GLogij6JT6, 6T G.5g Netscape goi) click பண்ணுகிறேன். எத்தனை முறை Warn பண்ணி விட்டார்கள் Study time இல் internet ல் insert உபயோகிக்கக்கூடாதென்று. இன்றுதான் கடைசி மனதிற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு pigeons type பண்ணுகிறேன்.
"ஐயோ அக்காஒண்டையும் காணேல்லை. என்ர மூண்டு நாள் வேலை. எல்லாம். அழிஞ்சிட்டுது” மாது தோள்களைச் சுரண்டினாள் அழாத குறையாக,
‘ச்சீ கையை எடும் இப்படித் தோளைச் சுரண்டாதையும் வேறு யாராக இருந்தாலும் எரிந்து விழுந்திருப்பேன். ஆனால் முடியவில்லை. மாதுவின் முகம் பார்த்துச் சீற என்னால் முடியவில்லை.
“என்ன?’ என்றேன்.
அக்கா Please எனக்கு help பண்ணுங்கோ, என்ர Project அழிஞ்சு போச்சு விசும்பினாள்.
என்ன துப்பல் போட்டே அழிச்சனீர்? வாய்வரை வந்ததை அடக்கிக் கொண்டேன்.
என்ர கடி jokeS ஒரு நாளும் அவளுக்குப் புரிந்ததில்லை. எனக்குச் சிரிப்பாக வந்தது. இவளுக்கு ஏனிந்தப்பதற்றம்? ஆர்வம் நிறையவே இருக்கிறது. ஒரு நிமிடம் வீணடிக்காமல் படிப்பு படிப்பு எனறு படிக்கிறாள். ஆனால் எப்போதும் எதிலும் ஒரு பதற்றம். பயம்.
திடம் அவளிடம் இப்போது இல்லை. பதறுகிறாள் நான் போகவேண்டும். உதவி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
என்னை விட மூன்று வயதுதான் சின்னவள். அக்கா, அக்கா என்று என்னைக் கிழவியாக்கும்போது எனக்குக் கோபம் வரும். சொல்லிப்பார்த்தேன் கேட்பதாய் இல்லை. விட்டுவிட்டேன். என்னை எப்போதும் ஒரு அறிவு ஜிவிபோல் உபயோகப்படுத்துகிறாள். எனக்கும் பிடித்திருந்தது.
29

Page 17
“சரி வாரும்”
போனோம் தேடினேன். அழியவில்லை. இடம் மாற்றப்பட்டிருந்தது. எனக்குச் சிரிப்பு வந்தது. சிரிக்கவில்லை. பாவம், காயப்படுவாள். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவள் என்பாள். உங்களைப் போல் கெட்டித்தனம் எனக்கில்லை என்பாள்.
“ஒரு சின்ன break எடுப்பமா?” கேட்டேன்
படித்து முடித்த களைப்புப் போல், மாது தயங்கினாள். 'project இண்டைக்குக் கொடுக்க வேணும்” என்றாள்.
பிறகு சம்மதித்தாள்.
“ஏதாவது வாங்கிச் சாப்பிடுவமா?” என்றேன் வழமை போல்.
"ஏன் காசை வீணாக்கிறீங்கள்?”இப்படிக் கடிந்தவள் தான்புட்டும் இறால் பொரியலும் எனக்கும் சேர்த்துக் கொண்டு வந்திருப்பதாகக் கூறினாள். எனக்கு வாயில் நீர் சுரந்தது.
“எப்ப செய்தனீர்?" நான் வியந்தேன்.
“காலமை. அவருக்கு நல்ல விருப்பம்”அழுத்திச் சொன்னாள் ஏனென்று புரியவில்லை.
"ஏன் உமக்கு விருப்பமில்லையோ இறால் பொரியல்?” என் நாக்கில் இறால் ருசித்தது.
“என்னிலும் பார்க்க அவருக்கு நல்ல விருப்பம்’ என்று மென்று விழுங்கினாள்.
இரண்டு டொலரைப் போட்டு இரண்டு coke எடுத்து, அவள் முன்னால் ஒன்றைத் தள்ளினேன்.
"அக்கா, நீங்கள் ஆகத்தான் காசு சிலவழிக்கிறீங்கள்’கடைக்குப் போனால் மூண்டு டொலருக்குப் பன்னிரெண்டு can வாங்கலாம் தெரியுமே?
“ம். இனிக் காவிக் கொண்டு வாருமன்” என்றேன் திமிராக,
30

R
உங்களிட்டக் காசு கூடீற்றுது. அதுதான் இப்படிச் சிலவழிக்கிறீங்கள்” கோபித்துக்கொண்டாள் முகம் சிறிது சிவந்தது. அழகாக இருந்தாள்.
“ராத்திரிப் பிரவீண் சரியா இருமினவன். இப்ப எப்படி இருக்கோ தெரியேல்லை?” மாதுவின் முகம் சுருங்கிப் போனது. சிறிது நேரம் மெளனமாக வேறு உலகிற்கு அவள் போய் விட்டது போல் எனக்குப் பட்டது.
பொறுத்திருந்தேன். என் முகம் பார்த்தாள். மெல்லிய ஒரு புன்னகை செய்தாள்.
"அப்ப, அக்கா இந்த course முடிய உங்களுக்கு வேலையில promotion கிடைக்குமே" ஆவலாகக் கேட்டாள்.
“ம்.” என்றேன். என் படிப்புப் பற்றிக் கதைக்கும் சுவாரசியமும் இன்றி.
"அப்ப இவ்வளவு நாளும் என்ன செய்தனீர் ?”
“உங்கட படிப்புச் சரியான கஷ்டமேக்கா?”
அவளை உற்றுப்பார்த்தேன்.
"ஏன் நீரும் படிக்கப் போறிரே?” கேட்டவுடன் சிரித்தாள்.
“உங்களை மாதிரி நான் கெட்டிக்காரி இல்லையக்கா. அது சரியான கஷ்டம் எனக்கு தெரியும்"
நான் சிரித்தேன்.
“மாது நீர் கனடாவுக்கு வந்து எவ்வளவு காலம்?”
மாதுவைத் தெரியும் இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பு இந்த College இற்கு வந்து சேர்ந்த போது தமிழ் என்பதால் ஒட்டிக்கொண்டோம். ஆனால் அவள் தனிப்பட்ட விபரம் அதிகம் தெரியாது. திருமணமானவள். பிரவீண் என்று ஒரு மகன். நான் கேட்கவில்லை. அவள் புலம்பும் போதுகாதில் விழுந்தவை. என்னைப் பற்றி அவள் கேட்கவில்லை. அதனால் நானும் சொல்லவில்லை. ஒரு வேளை தெரிந்தால் விலகிக் கொள்ளலாம். தான் ஒரு நல்ல தமிழச்சி என்று நிரூபிக்க.
3.

Page 18
இல்லாவிட்டால் பரிதாபமாகப் பார்க்கலாம். இதுதான் நிறைவான வாழ்க்கை என்று தனக்குத் தெரிந்தது போல. ஆனால் எனக்கு எனோ மாது இந்த இரண்டு வகையும் இல்லை என்றே பட்டது.
என்னிடம் எத்தனை பவுண் நகை இருக்கென்று இந்த இரண்டு மாதங்களில் அவள் கேட்டது இல்லை.
வீட்டில் இருக்கும் தளபாடம் பற்றி அவள் அக்கறைப்படவில்லை. என் கார் ஒட்டம் கண்டு வியந்தாள். நான் படிக்காமல் நேரம் வீணாக்க உரிமையோடு கடிந்தாள். எனக்கு மாதுவை நிறையவே பிடித்திருந்தது.
“எட்டு வருஷம் ஆகுது அக்கா ’ நான் முகம் சுளித்தேன், அவள் சிரித்தாள்.
என் கேள்வியால் தாக்குப்பட்டவள் போல் தடுமாறிவிட்டு, “பிள்ளை வளரட்டும் எண்டு வீட்டிலைதான் இருந்தனான். இவருக்குப்பிரவீணை day care இல் விடுகிறது விருப்பமில்லை".
என் கண்களின் ஊடுருவல் தாங்காது முகம் தாழ்த்தினாள். என் அடிவயிறு கலங்கியது. பெண்ணே ! அப்போ உன் குழந்தையை day care இல் விட்டு விட்டு வேலைக்குப்போக உனக்குச் சம்மதம் தானே! எனக்குள் படபடப்பு.
இவள் நானா? இவள் என் பிம்பமா? பத்து வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன அதே பதில்,
வேலைக்குப் போய் வரும் பல பெண்களைப் பார்த்து எழும் ஏக்கம். ஆணை எதிர்க்கும் துணிவின்மை. முடிவில் என் கோழைத்தனம் வெளியில் காட்ட விரும்பாத எவருக்கும் இல்லாத குழந்தைப் பாசம் எனக்கு மட்டும் என்பது போலொரு நடிப்பு.
“மாது நீயும் நடிக்கிறாயா? கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம்
நாகரீகமில்லை".
என் மனம் நொந்தது. இங்கே எத்தனை நாட்கள் இருக்கிறார்கள்.
“கடவுளே' சொல்லிவிட்டுச் சிரித்தேன். எப்போதிலிருந்து இந்தக் கடவுள்?
32

மாது என்னை வினோதமாகப் பார்த்தாள்.
ee 9. 8
போகலாமா?’ என்றாள்.
ee O a 3 நீர் போம் நான் பிறகு வாறன்
மாது மறைந்தாள். நான் கேள்விக் குறியானேன். இன்னும் மூன்று நாட்களில் எனக்கு Exam. Project உம் முடிந்தபாடில்லை. ஆனால் நான் கவலைப்படவில்லை. எனக்கு என்னைத் தெரியும். கடைசி இரண்டு நாட்களும் கண் விழித்துப் படித்து, தலையிடியுடன் மருந்து போட்டுப் பரீட்சை எழுதி A+ வாங்கும் ரகம் நான்.
ஏன் ஒரு ஒழுங்கில்லாமல் இருக்கிறேன்? எது ஒழுங்கு? ஏன் என்னை நானே ஒழுங்கில்லை என்கிறேன்?
கை நிறையக் காசு. இருக்க ஒரு வீடு. ஒடுவதற்கு ஒரு கார். படு சுட்டியான இரண்டு குழந்தைகள். வேறு என்ன வேணும். தலை முழுகி சுமங்கலி விரதம் பிடித்து மூன்று வேளையும் வீட்டுச் சமையல் சாப்பிட்டு, சனிக்கிழமை ஜோடியாகத் தமிழ்ப் படம் போய்ப் பார்த்து. இதுதான் சந்தோஷமா? அப்படி ஒரு காலம் நான் இருந்தது நினைவில் வர சிரிப்பு வந்தது. நான் அப்போது சந்தோஷமாகவா இருந்தேன்? இல்லை. இதுதான் வாழ்க்கையோ? என்ற பயத்தில் நடித்தேன். ஐயோ! எனக்கு இதெல்லாம் தாங்காது என்ற போது விலகிக் கொண்டேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்.
ஏய் ஏய் உனக்கு கவலையில்லை. உன் மனதுக்குள் ஏக்கமில்லை. இப்போதும் நீ நடிக்கிறாய்.
நான் தடுமாறிப்போனேன். நான் சந்தோஷமாக இல்லையா? சுதந்திரப் பறவையாய் சுத்தித் திரிகிறேன். விதம் விதமாய் உடுத்துகிறேன். விரும்பினால் மட்டும் சமைப்பது. இல்லாவிட்டால் வெளியில் ஏனென்று மிரட்ட ஒருத்தரும் இல்லை. (இல்லாவிட்டால் கேட்பதற்கு நாதியற்றுப் போய் விட்டேனா?) நான் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்.
இருக்கிறேனா?
கேள்விக் குறியைப் பெரிதாக்கி உள்ளே செலுத்துகிறேன். சிறிது தெளிவு வரத் தடுமாற்றத்துடன் கூடிய நெஞ்சுப் பிசைவு.
33

Page 19
அன்று அந்த ஜோடியை எதற்காகக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களை எதற்காக அப்படி ஆராய வேண்டும்?
அவள்; சுருக்கு வைத்த கறுப்புப் பாவாடை, கால்களில் வெள்ளை socks, கறுப்பு shoe (சின்னதாக ஒரு குதி அதற்கு), பாவாடை, SockS இற்கு இடையே கறுப்பாக வழிக்கப்படாதபொருக்கு விழுந்த கால்கள். சிவப்பு நிறத்தில் பெரிய பட்டன் வைத்த blouse, கவனிக்கப்படாத தலைமயிர் விரிக்கப்பட்டிருந்தது. நெற்றியில் குங்குமம். கழுத்தில் தாலிக்கொடி. கைகளில் இரு சோடிக் காப்பு.
அவன்; வெட்டப்படாத தலைமுடி, ஒரு பக்கம் சரிந்து படுத்ததால் சாய்ந்த கோபுரம் போல் காட்சி தந்தது. சிறிது மினுங்கல் கூடிய கறுப்பு நிறப் pants. வெள்ளை நிறத்தில் கோடு போட்ட Shirt. நெற்றியில் விபூதி, கழுத்தில் தடித்த affilósó). Gajgir 6061T sports shoe.
இவர்களை எங்கோ ஒரு கிராமத்திலிருந்து நேராக கனடாவிற்குக் கொண்டு வந்து இறக்கியிருப்பது போலப்பட்டது எனக்கு. ஏய் ஏய். இது என்ர நக்கல் குணம் தானே! மற்றவர்களின் தோற்றம் பார்த்து நக்கலடித்து என்ன சுகம் கண்டாய். எங்கே அந்த ஜோடியின் முகத்தில் தெரியும் பூரிப்பை உன் முகத்தில் காட்டு பாாக்கலாம். உன்னால் முடியாது. அவர்கள் சந்தோஷமான ஜோடி. அவர்கள் சந்தோஷம் உனக்கு எரிச்சலைத் தருகிறது. உனக்குப் பொறாமை. அதுதான் அவர்களில் குறை கண்டு பிடித்து வக்கிரமாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறாய். அவள் சுமங்கலி விரதம் பிடித்து, தாலியைக் கண்ணில் ஒற்றிக் கொண்டால் உனக்கென்ன. அவளுக்கு உலகம் தெரியாது இருக்கலாம். அவள் உலகம் குறுகியது. அதற்குள் அவள் சந்தோஷம்
உன்னிடம் இல்லாத ஒன்று சந்தோஷம் அவர்களிடம் நிறையவே இருக்கிறது. வெளியாடைக்கே பொருத்தமாகக் கவனமாக உள்ளாடை தேர்ந்தெடுக்கும் நீ உன் துணையைத் தேடுவதில் தவறிவிட்டாய் என்ற அங்கலாய்ப்பு அதுதான் மற்றவர்களில் நீ தேடும் குறைகள் பரவாயில்லை. ஒன்றாக இருந்து அழுந்திச் சாகாமல், நீ படித்திருப்பதால் அவனைத் தூக்கி எறிந்து விட்டுக் குழந்தைகளுடன் வசதியாக இருக்கிறாய் .
பெண்கள் சிந்திக்கக் கூடாது. கதைநேரம்பாலு மகேந்திராவின் வரிகள் நினைவிற்கு வந்தன. சிந்திக்கிறேன், நிறையவே சிந்திக்கிறேன், எப்போதும் ஏனென்ற கேள்வி எனக்குள். சிந்தித்துச் சிந்தித்துக் கேள்வி எழுப்பிப் பதில் கிடைக்காத போது கோபம் வருகிறது. அவநம்பிக்கை வருகிறது.
34

"உம்மோடை கதைக்கேலாது உமக்கு விசர்"பலர் சலிப்படைந்து விலகிக் கொண்டு விட்டார்கள். ஏனென்ற போது உமக்கு விசர். அடங்காப்பிடாரி. நீயும் ஒரு பெண்ணா? பாணியில் வசனங்கள்.
முகத்தில் அறை விழுந்தது! அறை விழ, அறை விழ, ஏன் என்ற கேள்வி கூடிக்கொண்டு போனதே தவிரக் குறையவில்லை. பெண் சிந்திக்கக் கூடாது என்பதன் கருத்து மட்டும் புரிந்தது. ஐயோ! நான் ஏன் சிந்திக்கும் பெண்ணாகிப் போனேன். விரதம் பிடித்து, வகை வகையாய் சமைத்து, சீலை நகை வாங்கி, அவருடன் படத்துக்குப் போய். எவ்வளவு சுகம் . எவ்வளவு சந்தோஷம்
பெண் சிந்தித்தால் கஷ்டப்படுவாள். நான் கஷ்டப்படுகிறேன். உடலால் இல்லாவிட்டாலும் மனதால் நிறையவே கஷ்டப்படுகிறேன். நான் சந்தோஷமாக இல்லை. நான் சந்தோஷமாக இல்லை.
சந்தோஷம் என்று நீகூறுவது எல்லாம் உனக்கும் இருந்ததுதானே! அப்ப எதற்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாய்.
குழப்பம். புரியவில்லை. எது சந்தோஷம். எனக்கு எது இப்போது இல்லை. எதற்காக இந்த ஏக்கம். செக்ஸ் புரிந்தது.
தனியாக வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன! ஐயோ பாவம் என்று இரங்கி விடாதீர்கள்.
பல்லிளிக்கும் பரதேசிகளை எனக்குப் பிடிப்பதில்லை. இல்லை இல்லை. இனிமேல் ஆண் வர்க்கம் மீதே எனது பார்வை விழுமா? என்ற சந்தேகம் எனக்குள். அந்த அளவுக்குப்பட்டு விட்டேன். ஆணின் நெருக்கம்,உடல் சிலிர்க்க வைப்பதற்குப் பதில் அருவருக்கத் தொடங்கி விட்டது.
"உன்ர மனுஷன் அப்பிடி எண்டதுக்காக” Advice வேண்டாம் please விட்டு விடுங்கள். உண்மையிலேயே எனக்குப் பிடிக்கவில்லை. இரண்டாம் முறை முயன்று பார்க்கப் பயப்படுகிறேனா?. முயன்று பார்ப்பதா? ச்சீ. வேண்டவே வேண்டாம்.
மாதுவைக் காணவில்லை. வரவில்லைப் போலும், உம் என்னிடம் இல்லை. விட்டுவிட்டேன். வரும் போது வரட்டும். ஆனால் மனம் ஏனோ தவித்தது. அவளின் சிரித்த முகம் அடிக்கடி வந்து போனது. மனதை ஒரு நிலைப்படுத்திப் படிக்கத் தொடங்கினேன்.
35

Page 20
படிப்பது பிடிக்காது. ஆனால் படிக்கத் தொடங்கக் கவனம் முழுவதும் ஒன்றாகி ஆர்வம் வந்தது. மூன்று நாட்கள் ஆகிவிட்டது. நல்ல பிள்ளையாகிப் படிப்பதில் கவனம் செலுத்தினேன். கொஞ்சம் திட்டமும் போட்டேன். எத்தனை நாளைக்கு அதையும் பார்ப்போமே!
நான்காம் நாள் மாது வந்தாள். முகம் வாடியிருந்தது. தனக்குக் காய்ச்சல் என்றாள். Phone Number வாங்கி வைக்காததற்கு வருந்தினாள் மாற்றிக்
கொண்டோம்.
சாப்பிடும் போது மெதுவாக மென்றாள். கவனித்தேன். கைகழுவும் போது சட்டைக் கையை உயர்த்த பெரிய தழும்பு தெரிந்தது. அவசரமாக மறைத்தாள். கவனித்தேன். காதடியிலும் பெரிய தழும்பு தெரிந்தது. மாதுவின் முகம் பார்த்தேன். தாழ்த்திக் கொண்டாள்.
இவள் இன்னுமொரு நான், பத்து வருடங்கள் முன்பிருந்த நான் தெளிவாகியது. இவளுக்கு இன்னும் பத்து வருடங்கள் இருக்கிறது. இப்போதைய நானாக வேண்டாம் பாவம். இரக்கம் வந்தது.
பத்து வருடங்கள் மிகமிகக் கூடிவிட்டது. குறைந்தது ஒரு வருடத்திலாவது இவளை நானாக்க வேண்டும். முடியுமா? நாலு மணிக்கு எழும்பி, அவருக்குப்புட்டும் இறால் பொரியலும் பிடிக்கும் என்று செய்து கொடுப்பவள். ஒரு வருடத்தில் நானாகுவாளா? கேட்டு விடுவோமா? நாகரீகம் தடுத்தது. இரண்டு மாதச் சினேகிதம். ஒன்றும் நெருங்கிய நண்பி இல்லையே? பேசாமல் 6S'G6SG(86)JITLDIT?
ராட்சசி என்னை நானே திட்டிக்கொண்டேன். துரோகி, கண்ணுக்கு முன்னே பாவம் நடக்கிறது. கண்டும் காணாமல். எனக்குத் தெரியாதா பத்து வருடத்திற்கு முன்பிருந்த என்னை.
அது Washroom இல் தடக்கி விழுந்து விட்டேன். அதால கை, காது, தாட்ை எல்லாம் இடமும் அடி. பொருந்தாத பொய் வரும். மாது பொய் கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் ராட்சசியில்லை. நண்பியாக ஏற்றுக்கொண்டால் அவளே சொல்லட்டும்.
36

படிப்புத் தொடர்ந்தது. உடலில் அங்கும் இங்கும் காயங்களுடன் மெளனமாகப் படிப்பைத் தொடர்ந்தாள் மாது. நானும் புறா ஆராய்ச்சி முடிந்தது. பக்கத்திலிருந்து என்னைப் பார்த்து Sight அடிக்கும் பாகிஸ்தானிய இளைஞனுடன் கொஞ்சம் தனகிப் பார்த்தேன். மாது கவனித்தால் கோபிப்பாள்.
"அக்கா ஆனாலும் நீங்கள் ஆகத்தான் மோசம்” என்பாள். தவறாக எண்ண அவளுக்குத் தெரியவில்லை. எனக்கு மாதுவைப் பிடித்துவிட்டது.
ஒரு நாள் இரவு படிக்கலாம் என்று நினைத்தபோது தொலைபேசி அழைத்தது. மறுமுனையில் மாது விக்கி விக்கி அழுதாள். Display இல் பாாத்தேன்
pay phone 6T6öTop Gigsfjiggi.
நிற்கும் இடத்தை மட்டும் கேட்டுவிட்டுப் போய் அவளையும் ஒட்டிக்கொண்டு நின்ற மகனையும் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்தேன். கண்கள் வீங்கியிருந்தன. வாய் உடைந்து சிவந்திருந்தது. குழந்தை மிரண்டு போயிருந்தது. எனக்குள் பல flash back, பிரவீணை சாப்பிட வைத்து என் மகனுடன் படுக்க வைத்தேன். மாதுவின் முகத்திற்கு ice வைத்தபடியே கேட்டேன். Police ஐ அழைக்கவா என்று. வேண்டாம் என்றாள். நான் மெளனமானேன்.
மாது என் கை பற்றினாள். “அக்கா என்னால் இனிமேலும் அவரோடை இருக்கேலாது. என்னை உங்களோட கொஞ்ச நாளைக்கு இருக்க விடுங்கோ! எப்பிடியும் கெதியா ஒரு வேலை எடுத்துப் போட்டு, ஒரு இடம் பார்த்துக் கொண்டு போயிடுவன்’
மாதுவிற்கு பத்து வருடங்கள் தேவைப்படவில்லை. பெருமையாக இருந்தது. என் கோழைத்தனம் புரிந்தது. சும்மா கிடந்த ஒரு அறை மாதுவிற்கானது. இருந்தும் ஒவ்வொரு நாளும் மனம் மாறிப் போய்விடுவாள். நினைத்துக் கொண்டேன்.
மாது அசையவில்லை! ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து பொருட்கள் எடுத்துவந்தோம். அறிந்தபோது வீடுவரை வந்து, கெட்ட வார்த்தையில் பேசிவிட்டுப்போனான். "படிப்பை முடி. பிறகு வேலை தேடலாம்” என் கட்டளைக்குப் பணிந்தாள்.
வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.
37.

Page 21
என் பிள்ளைகள் அவளை வினோதமாகப் பார்த்தன. அம்மா படுகள்ளி, புரிந்து கொண்டிருக்கும். புட்டும் இறால் பொரியலும் அடிக்கடி கிடைத்தது. அடிபட்டுச் சாப்பிட்டார்கள். எனக்குள் சிறிது குற்ற உணர்வு ஏற்பட்டது. எல்லோரும் ஒன்றாக குதூகலமாகச் சந்தோஷித்திருந்தோம். இழந்துவிட்ட எதுவோ கிடைத்துவிட்ட சந்தோஷம் எனக்குள். ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. புரிந்து விடுமோ என்று பயப்பட்டேனோ.
மழையில் நனைந்து காய்ச்சலை வரவழைத்துக் கொண்டபோது உரிமையுடன் கடிந்து கொண்டாள் மாது. நெற்றிக்குத் தைலம் தடவி, குடிப்பதற்கு கைச்சலாக எதுவோ காய்ச்சித் தந்தாள். பக்கத்திலிருந்து மாய்ந்து மாய்ந்து கவனித்தது என்னை என்னவோ செய்தது.
படிப்பு முடியப் பதவி உயர்வோடு மீண்டும் வேலை தொடர்ந்தேன். மாதுவும் ஒரு வேலை தேடிக் கொண்டாள். ஒரு குடும்பம் உருவானது. எனக்குள் சின்னச் சின்ன மாற்றங்கள். விடை தெரியாது தடுமாறினேன். மாது வேலையால் வரப் பிந்தினால் தவித்தேன். நான் தடக்கி விழ, அவள் பதறிப் போவது தெரிந்தது.
இருவரும் முகம் பார்த்துக் கதைப்பதைத் தவிர்த்துக் கொண்டோம்.
தற்செயலாக மோதிக் கொண்டால் முகம் சிவக்க Sorry சொன்னோம். மாதுவின் காது மடலின் சிவப்புக் கண்டு நான் கிறங்கிப் போனேன். அதிகம் பேச்சின்றி பல நாட்கள் 85L-556OT...... "Pokemon” Movie unfé,566) 6TGh. பிள்ளைகள் அடம்பிடித்தார்கள். அழைத்துச் சென்றோம். அருகருகில் இருந்து படம் பார்க்க, உணர்வுகளின் உத்வேகம் கூடிற்று. நான் அவள் முகம் பார்க்க, என் தோளில் சாய்ந்து கொண்டாள். எனக்குள் தெளிவு பிறந்தது. இனிமேல் பதிலின்றித் தடுமாறப் போவதில்லை. நான் என் கைகளை அவள் கையுடன் பிணைத்துக் கொண்டேன்.
99.
"சாறு. முதல் முதலாய் என்னைப் பெயர் சொல்லி அழைத்தாள் மாது.
நன்றி உயிர்நிழல்
Lommáj- éTLJT6lj 2000
38

காத்தலும் தகர்த்தலும்
-ஏஞ்சோ
Co, ) C + O.
பேச்சுக்கால் / காதல் (ஆண்பாலியல் + (பெண்களின் பொருளாதாரம் RX வக்கிரம்) ஆக்கிரமிப்பு
+ பலவீனம்)
பிழைக்கலாம் அல்லது f சரியானால்
சரியாகலாம் X
திருமணம் RX (சீதனம் + கற்பு) ஒழுங்கா)
(வேலைக்காரி + தாதி + 呼
குடும்பம் H) விலைமகள்)
தகப்பன் + ஆண் சகோதரர்க
( பெண் பிள்ளைகள் Ex + ஆச்சாரங்கள்) (ஆதிக்கம்)
(சேஷ்டை + மொழிப்
கல்வி பிரயோகம்) பாலியல்
வேலை / (சேஷ்டை + மொழிப் வேலை இன்றி RX பிரயோகம் + அடிமை)
இருத்தல் 2 (பாலியல்)
Y ஆண் கட்டுமானம் /*
39

Page 22
நகர-கிராம சித்திரிப்புகளினூடாக பெண்களும் பால்நிலையும் சிங்களத் திரைப்பட நெறியாளர்கள் எதிர்நோக்கும் சவால் (Women, sexuality, the city and the village - Cinema) ஆங்கில மூலம் : சுனிலா அபயசேகர தமிழில் : ஜி. ரி. கேதாரநாதன்
சுனிலா அபயசேகர இலங்கையின் பெண்ணிலை வாதிகளுள் முக்கியமானவர். அவர் அரசியல், சினிமா, சமூகவியல் போன்ற அம்சங்களில் முனைப்புடன் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் எழுதிவருவதாலும் அவரைப் பற்றிய அறிமுகம்தமிழ் வாசகர்பரப்பில் அருந்தலாகவே(இருப்பதாலும் சினிமாCinemaya, என்ற ஆங்கில சினிமா இதழில் வெளியாகிய இக் கட்டுரை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்படுகின்றது.
சமகால சிங்கள சினிமாவில் பெண்கள், பால்நிலை (sexuality) நகரம் மற்றும் கிராமம் என்பன தொடர்பில், அவை குறித்த மனப்பாங்குகளோ, முறைமைகளோ எத்தகையவாறு சித்திரிப்புகளுக்குள்ளாகி வெளிப்படுத்தப் பட்டுள்ளன என்பதை விமர்சனப்பாங்கான பகுப்பாய்வு நோக்கில் ஆராய்வதே இக் கட்டுரையின் பிரதான அம்சமெனலாம். இதற்கு 1995 ஆம் ஆண்டின் முற்கூறில் வெளியான “மீஹறக்கா” (எருமைமாடு), "சீலெம”(நகரம்), “மாருகய”(புயல்) ஆகிய மூன்று திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
ஒரு வகையில் இப்படங்கள் விமர்சனங்களதும் வெகுஜன சினிமாப் பார்வையாளர்களதும் கவனிப்புக்குள்ளானவை என்பது குறிப்பிடத்தக்கது. இம் மூன்று திரைப்படங்களிலும் சில படிமங்கள் மற்றும் உள்ளார்ந்த பெறுமான கட்டமைவுகள் போன்றவை 50, 60 களில் வெளியான ஆரம்பகால சிங்கள சினிமாவில் வெளிப்பட்டனவற்றை ஒத்தனவாக எனக்கு அவற்றை ஏதோ விதத்தில் ஞாபகமூட்டுவனவாகத் தோற்றமளித்தன.
சிங்கள சினிமா பற்றி லலின் ஜெயமானே எழுதியிருக்கும் விபரமான கட்டுரையொன்றில் 50 களில்தான் முதல் முதலாக சிங்கள சினிமாவில் மானுட கட்டமைப்பு சமூக நிறுவனமான கிராமம், நகரம் என்ற தொடர்பில் அவற்றை மையமாகக் கொண்ட கருத்துருவாக்கம் ஒரளவு நிகழ்ந்ததாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
40

அன்றைய கால கட்டத்தில் நகரம், கிராமம் தொடர்பான வரையறைகளோ அல்லது எல்லைப்பாடுகளோ மிகவும் எளிமைப்பட்டனவாகவே, மேலோட்ட மானவையாகவே வெளிப்பட்டன. மனிதர்களிடத்தில் காணப்படும் சகல “நல்வியல்புகளின்” உறைவிடமாக அல்லது குறியீடாக கிராமம் சித்திரிக்கப்பட்ட அதே வேளை, நகரம் அதற்கு முற்றிலும் எதிர்மாறானதாக சகல தீய இயல்புகளின் அல்லது தீய குணாம்சங்களின் விளைநிலமாக, குறியீடாக சித்திரிக்கப்பட்டது. கிராமத்தவர் இந்த நிலையில் நேர்மையானவராகவும் கொள்கைப் பிடிப்புள்ளவராகவும் காட்டப்படுகிறார். ஆனால், நகரத்தவர் கபடத்தனமான வராகவும் நேர்மையீனமானவராகவும் காட்டப்படுகிறார். மேலும் கிராமம், சுயாதீனம், தேசியம், பற்றுறுதி போன்றவற்றின் சின்னமாகத் திகழ, நகரம் முற்றிலும் வேறுபட்டதாக, சுயநல மிக்க ஏவலாளர்களது உறைவிடமாக இருக்கிறது.
இலட்சியமனப்பாங்குடைய புனைவுகள், நிர்மாணங்களில் பெண் பிரதான பங்கினை வகிக்கின்றாள். கிராமத்துப் பெண், ஒழுக்கமும் தூய்மைப் பண்புள்ளவளாகிறாள். நகரத்துப் பெண் வஞ்சம் நிறைந்தவளாக எதற்கும் தயங்காத பேய் அணங்காகிறாள். கிராமத்துப் பெண் உண்மை, விசுவாசமுள்ளவள் என்பதுடன் அர்ப்பணிப்பும் நிறைந்தவள். நகரப் பெண் சஞ்சலமும் சபலமும் நிறைந்தவள். ஆதலால் விசுவாசமற்றவள். நகரத்துப்பெண்ணின் அந்நிய தேசிய அடையாளமற்ற மனப்பாங்கினை கூந்தலை குறுக்கமாக வெட்டிய தலைமயிர், அவள் அணியும் படோடோப மிக்க மேற்கத்திய ஆடையணிகள் போன்றவை பெளதிக மட்டத்திலேயே துலாம்பரமாக அவளை இனங்காட்டுவனவாய் உள்ளன. இதே வேளை கிராமத்துப் பெண் (முதாதையர் கூறியவாறு) சிங்கள கலாசார மரபுகளைப் பேணி “கொண்டை” அணிந்து சாரிகளையும் பாரம்பரிய முறைகளுக்கு ஏற்ப அடக்கமாக அணிகிறாள். பால்நிலை குறித்த நடத்தைகள், மனப்பாங்குகள் போன்றவற்றில்கூட ஏற்கனவே பட்டியலிட்ட கிராம, நகர வேறுபாடுகளுக்கியைந்த போக்குகள் முனைப்பாக்கத்துடன் வெளிப்படையாகவே அழுத்தம் பெறுவனவாயுமிருக்கிறது.
கிராமம் பாலியல்பு வேட்கை அற்றதாக, காமம் நீத்த ஒன்றாக இருக்கிறது. ஏதேனும் பாலியல்பு முனைப்பாகப் புலப்படுத்தப்படும்
நீங்கியதாகவே வெளிப்படுகின்றது. நகர சித்திரிப்பும் இவ்வாறே ஜீவனற்றதாக வெளிப்படுகிறது. நகரம் காமாந்தக்காரர்களும், பேராசையும் அவாவும் கொண்ட மனிதர்களின் வாழ்விடமாகிறது. இதே வேளை, கிராமத்தைச் சேர்ந்த பெண் அர்ப்பணிப்பும் தியாக சிந்தையும் கொண்டவளாகத் திகழ்கிறாள். நகரப் பெண் ஆண்களைச் சுண்டி இழுத்து, உணர்ச்சிகளைத் தூண்டுபவளாக இருக்கிறாள்.
4.

Page 23
கிராமப் பெண் தன்னளவில் பாலியல்பு முனைப்பு எதுவுமற்றவள். ஆணின் பாலியல்பு விருப்பு வேட்கையை சுயாதீனமாக வெளிப்படுத்தும் முனைப்புக் கொண்டவளாகிறாள். எவ்வாறாயினும் மேற்கூறிய வரையறைகளோ அல்லது கிராமம் நகர மாந்தர்களது குணாம்சங்களோ மிகக் குரூரமான பொதுமைப்பாடுகளின் தொகுப்பேயொழிய வேறொன்றுமில்லை. கிடையாது.
கடந்த அரை நூறாண்டு கால சிங்கள சினிமாவை அவதானித்தால், அவற்றில் பெரும்பாலும் ஒரு வகை அரசியல் சார்ந்த பண்பினடிப்படையில் நல்லது எதிர் - தீயது என்றுதான் பகைப்புலனொன்று இழையோடும் போக்கைக் காணலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததொரு நிலையில், பிரதான அரசியல் முரண்பாடுகளைத் தேசியம் தேசியமல்லாதது என்ற வரையறைக்குட்படுத்தும்போது, தேசிய அடையாளத்தின் பாத்திரமாக கிராமம் ஒரு மானுட சமூக கட்டமைப்புக் கூறாக அத்தகைய பகைப்புலனின் முன்னணிக்குத் தள்ளப்படுகிறது.
“குருளுபெத்தத” (பறவைகளின் சொர்க்கம் - 1961), “தீவறயோ' (மீனவர்கள்-1964) மற்றும் அக்கால கட்டத்தின் உன்னத சிருஷ்டியாகக் கொள்ளப்படும் “கம்பெரலியா’ (மாறிவரும் கிராமம் - 1963) ஆகிய திரைப்படங்களை நோக்குவோமாகில், ஒரு மாறும் காலகட்டத்தின் பிரதிபலிப்பான இத் திரைப்படங்களில் மேற்கூறிய சமூக பெறுமான கட்டமைப்பு மையவாக்கம் முதன்மை பெற்றிருப்பது கண்கூடு. இதனை அக்கால கட்டத்தின் அரசியல், சமூக தேவைகளினால் உருவப்பெற்றதொரு போக்காகவே உணரமுடியும்.
ஐ. என். ஹேவாவாசத்தின் “மீஹறக்கா” (எருமை மாடு) பிரதான திரைப்படத் தலைப்பில் சுட்டப்படும் எருமை மாடு பிரதான கதாபாத்திரமான கிராமத்து இளைஞனாக இருக்கவேண்டும். அவன் மனவளர்ச்சி குன்றிய ஒருவனா அல்லது கிராமத்து முட்டாளா என்ற கேள்விக்கான பதில் திரைப்படத்தில் தெளிவற்றதானதொரு புதிராகவே விடப்படுகிறது. கிராமத்தனத்தினை அல்லது அதற்குரிய வெகுளித்தன மனப்பாங்கினை வெளிப்படுத்தும் ஒரு குறியீடாகவும் இதனைக் கொள்ளலாம். பீறிட்டெழும்பாலியல் உணர்வுகள், உந்தல்களை எவ்வாறு அந்த இளைஞன் எதிர் கொள்ளவோ அல்லது தீர்க்கவோ முற்படுகின்றான் என்பதையும், இறுதியில் அவனுக்கு நேரும் பரிதாபகரமான, சோகமான முடிவினை இத்திரைப்படம் சித்திரிக்கின்றது.
42

(பாலியல் குணாம்சமற்றதொரு கிராமமாக) (A Sexual) இத்திரைப்படத்தில் வரும் கிராமத்திற்கு வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் பலவடிவங்களில் தாக்கங்கள் கிளம்புகின்றன. ஒரு வகையில் இவை கிராமத்திற்கு விடப்படும் சவால்களாகும். வெளியுலக நகரத்து நபர்கள் கிராமத்து இளைஞனை தீய வழிகளில் தூண்டுகின்றனர். மது, போதைவஸ்து மற்றும் ஆபாச சஞ்சிகைகள் போன்றன அவர்கள் மூலமாகவே அவன் கைக்குக் கிட்டுன்றன. இதே வேளை கிராமத்தில் அவன் மீது செல்வாக்கும் அதிகாரமும் செலுத்தக்கூடிய நபர்களாக அந்த வகையில் முதன்மை கொண்டவர்களாக இருவர் இருக்கின்றனர். ஒருவர் அவனது தகப்பனார். மற்றவர் பாடசாலை ஆசிரியர். தகப்பனார் புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக குடும்பத்தையே கைவிடுகிறார். பாடசாலை ஆசிரியர் உரையாடும்போது பாலியல் கலந்த தொனியில் உரையாடுகின்றார்.
முதன்மை நிலையிலிருக்கும் இந்த இரு நபர்களும் கிராமத்து இளைஞனான குணபால மீது ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். அவர்களது அதிகாரமும் ஆதிக்கமும் குணபாலாவை தளர்வடைய, எழுச்சி குன்றச் செய்து விடுகின்றது. அவனிடம் எஞ்சியிருப்பதெல்லாம் உள்ளே கனன்று அவனை அணு, அணுவாக எரித்துக்கொண்டிருக்கும் பாலியல் ஆசைகளே. கிராமத்துப் பாடசாலைக்கு ஆசிரியையாக இளம் பெண் ஒருத்தி வருகிறாள். இவள் நகரத்தில் பிறந்து வளர்ந்தவள். நகர வாழ்க்கை குணபாலாவுக்கு பரிச்சயமில்லாதது. ஒரு ஏக்கம் கலந்த மருட்சி நகரத்தின் மீது அவனுக்கிருக்கிறது. இத்தகையதொரு தன்மையேநகரப்பெண் மீதும் அவனுக்கு மேலும் அழுத்தமாகப் படர்கிறது. ஆபாச சஞ்சிகைப் பெண் மூலம் அவன் மனதில் கற்பனை பண்ணிக்கொண்ட “பெண்” பிம்பம் போன்றே அவன் நேரில் காணும் ஆசிரியையும் அவனை முற்றாகவே பரவசப்படுத்துபவளாயிருக்கிறாள். நடை, உடை, சிரிப்பு என்பவற்றுடன் அவள் மேனியிலிருந்து பரவும் வாசனை நெடி கலந்து அவளை ஒரு கனவுலக தேவதையாக அவனுக்குள் ஆக்கிவிடுகிறது. நேரில் காண நேர்ந்த போதிலும் அவனது கண்ணுக்குள் அகப்படாது நழுவும் ஒரு மாயத் தோற்றத்தை துரத்தும் பேதலிப்பு. அவனுக்குள் ஏற்பட்டு விடுகிறது. இறுதியில் பாலியல் முனைப்புடன் வல்லுறவு கொள்ளும் நோக்குடன் பலாத்காரமாக அப் பெண்ணைத் தாக்கி நெருங்கிய போதிலும் எதனையும் அவனால் நிறைவேற்றிக் கொள்ளமுடியவில்லை. பின் வாங்கிவிடுகிறான். பாலியல் முனைப்புடன் அவன் வளர்த்த கனவு உடைந்து நொருங்குகிறது.
43

Page 24
சிங்கள சினிமாவில் மனித பால் நிலைப் பண்புகளை வெளிப்படுத்த இத்திரைப்படத்தின் நெறியாளர் முற்பட்டிருக்கிறார். பாலியல் அடிப்படையில் கிளர்ந்தெழும் ஒருவனது இயல்புணர்ச்சிகளுக்கும் அவை அவ்வாறு உந்துதல் பெற்று வருவதற்குக் காரணமாகிய புறப்பொருளை அவன் அடையமுடியாமைக்குமிடையில் நிகழும் சிக்கல் அல்லது இடைவெளிக்கொணரப்படுகின்றது. பாலியல் வெளிப்பாடு ஆண்களின் மனப்பாங்கு நடத்தைகளுக்கு ஊடாக அவர்களை மையப்படுத்தி வெளிக் கொணரப்படுகின்றது. குணபால, அவனது தந்தை, ஆசிரியர் ஆகிய மூன்று கிராமத்து ஆண்களும் தத்தமது பாலியல் உணர்வுகளைத் தடையின்றி வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் பாலியல் ஆசைகளைத் தூண்டும் பெண் உருவத்தைச் சிருஷ்டிப்பதில் அல்லது வெளிக்கொணர்வதில் திரைப்படம் விழிப்புணர்வும் மென்மையும் கொண்ட ஒரு கலைச் சாதனமாக உயர முடியாது கீழிறங்கி விடுகிறது. இந்த வகையில் நேரடியான அதே வேளை ஒரு அகவயம் சார்ந்த அனுபவத்தை காட்சிப்படியங்கள் மூலம் தர மறுக்கின்றது எனலாம்.
“சீலேம்'(நகரம்) எச்.டி.பிரேமரத்னநெறியாளுகை செய்த திரைப்படமாகும். சமூகத்தில் ஆண்-பெண் உறவுகள், அதன் சிக்கல்கள் போன்றவற்றின் மீது பார்வை செலுத்தப்படுகிறது. நகர செல்வாக்கினால் அல்லது ஆதிக்கத்தினால் சிதைந்து போவதை எடுத்துக்காட்டுகிறது. மிகவும் பின்தங்கிய வறிய கிராமத்தில் வாழும் தம்பதியர் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அன்னியோன்யத்துடன் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். நகரத்திலிருந்து இக்கிராமத்திற்கு மரங்கள் ஏற்றிச் செல்ல வரும் லொறிச் சாரதியொருவனது ஆலோசனையால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிய கடையொன்றை அவர்கள் வீட்டில் ஆரம்பித்து அதன் மூலம் கூடிய வருமானம் ஈட்டலாமென்று அவன் ஆலோசனைகள் கூறுகிறான். இதனால் குடும்பத்திற்குள்ளும் கிராமத்திலும் புதிய நெருக்கடிகள், குழப்பங்கள் தோன்றுகின்றன. லொறிச்சாரதியும் அவனது நண்பர்களும் அடிக்கடி கிராமத்திற்கு வந்து போகின்றனர். இதன் போது போதைவஸ்துக்கள் மற்றும் மதுபானங்கள் போன்றவற்றையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்துகின்றனர். சில நகரத்தவர்களால் அப்பெண்ணுக்கும் பல தொல்லைகள் ஏற்படுகின்றன. இறுதியில் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டு விடுகிறான். எல்லாவற்றையும் பறிகொடுத்து ஆதரவற்றநிலையில் அவளுக்கு லொறிச் சாரதியின் உதவியினை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
“மீகறக்கா’ (எருமைமாடு) திரைப்படத்தில் போன்றே இத் திரைப் படத்தில் வரும் கிராமமும் யதார்த்தபூர்வமான ஒன்றாகச் சித்திரிக்கப்படவில்லை.
ஒரு கிராமத்தில் பொதுவாக நிகழும் கிராமத்து நடவடிக்கைகள் எவற்றையுமே
44

இங்கு காணமுடியவில்லை. கிராம ஊடாட்டம் எதனையும் காணவில்லை. கணவனுக்கும் மனைவிக்குமிடையே நிகழும் உரையாடல்கள் மூலமே அங்கு எத்தகையதான நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன என்பது ஒருவாறு புலப்படுத்தப்படுகின்றது. தம்பதியரிடையே நிகழும் பாலுறவுக் காட்சி. "அந்தரங்கம்” என மூடி மறைக்கப்படாது வெளிப்படுத்தப்படுகிறது. இது போலியற்ற ஒரு அம்சமெனினும், ஆணினது இச்சைகளைத் தீர்க்கும் போகப் பொருளாகவே பெண் சித்திரிக்கப்படுகிறாள். பாலியல் வெளிப்பாட்டில் பரஸ்பர மயக்கம் அகற்றப்பட்டு விடுகிறது.
புதிய கணவனான லொறிச் சாரதியுடன் வாழ்க்கையில் பலத்த ஏமாற்றங்களையே அவள் எதிர் கொள்ள நேரிடுகிறது. வாழ்க்கை அவளின் கட்டுப்பாட்டிலில்லை. உருட்டிவிடப்பட்ட “பகடைக்காயாக’ அலைக் கழிக்கப்படுகிறாள். இறுதியில் புதிய கணவனின் சேரிப்புற உலகத்தில் காலூன்ற பாலியல் தொழிலாளியாக மாறும் நோக்குடன் தெருவுக்கு வருகிறாள். ஏற்கனவே பரிச்சயமற்றவர்களுக்கு அத்தகையதொரு தொழில் கூட ஆபத்தானதாக மாறிவிடும் குரூரமிக்க இந்த உலகில், அவள் மீண்டும் பலியாகவே நேரிடுகிறது. தன்வயம் சார்ந்த சுய உணர்வுகள் எதுவுமற்றவளாக சோரம் போய் இறுதியில் பலியாகிறாள்.
“கொழும்பு சேரி” வாழ்க்கை ஒரு வகையில் யதார்த்தமாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்படுகிறது. “மனித முகங்கள்” கொண்டதாகச் சில கதாபாத்திரங்கள் வருகின்றன. "யம்போ” என்ற பாத்திரம் ஓரளவு சுயாதீனத்துடன் இயங்குகிறது. எனினும் இது கூட இறுதியில் குறைப்பிண்டமாகி” விடுகிறது.
“மாருதய’ (புயல்) வசந்த ஒபயசேகர நெறியாளுகை செய்த திரைப்படம். இத்திரைப்படம் மத்தியதர வர்க்கத்தினர் பற்றியதாகும். அத்தகையதொரு குடும்பப் பின்னணியைச் சுற்றியதாகும் கதை நகர்கிறது. திரைப்படத்தின் முற்பகுதியில் நிலப்பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த அல்லது அத்தகையதொரு குடும்பத்தின்
அவனுடைய தொகுதி வாக்காளரது நிராகரிப்பினையடுத்து செல்வாக்கிழந்து தரித்திரனாகவும் ஆகிறான். அவர்களுடைய வாழ்க்கை தகர்ந்து வீழ்ந்ததையடுத்து. மார்க்கமேது மின்றி பாலியல் ரீதியாக தமது உடலை விற்றுப்பிழைக்கும் தொழிலைத் தேர்ந்தெடுக்க நேர்கிறது. திரைப்படம் ஒரு வகையில் நடுத்தர வர்க்கத்தினரின் போலி முத்திரைகளையோ அல்லது அவர்களது பாசாங்குமிக்க ஒப்பனைகளையோ கலைக்க முற்படுகிறது. சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் பாலியல் தளங்களில் வாழ்வியல்
45

Page 25
முரண்பாடுகளுடன், நடுத்தர வர்க்கத்தினரின் குணாம்சங்கள், இயலாமைகள் என்பன வெளிக்கொணரப்படுகின்றது. இத்தகையதொரு கட்டமைப்புப் பின்புலத்தில், நடுத்தர வர்க்கத்தினரின் பலவீனங்களுக்கு ஊடாக அவர்களது பார்வை செலுத்தப்படுகிறது. பெண்கள் மையப்பட்ட பால்நிலை மற்றும் மரபுசார்ந்த சமூக இறுக்கங்கள், ஒழுக்க மதிப்பீடுகள் என்பன சாராம்சத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. இந்த வகையில், பெண்கள் பாலியல் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவது அல்லது சுரண்டப்படுவது குறித்து விசனம் வெளிப்படுத்தப்படுகின்றது. திரைப்படத்தில் வரும் கிராமம் வர்க்க மற்றும் சாதிப் பிரிவினைகள், முரண்பாடுகளைக் கொண்டதாய் இருக்கின்றது. சமூக அடுக்கில் நடுத்தர வர்க்கப் பிரிவினராக இருப்போர் எப்போதும் சமூக அங்கீகாரத்திற்கு இசைவான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுபவர்களாக அதற்கு ஏற்ற விதத்தில் போலி முகங்களை அணிபவர்களாக இருக்கின்றனர். அரசியல் வாதியின் மரணத்தின் பின்னர் விதவை மனைவிக்கும், வயது வந்த இரு பெண் பிள்ளைகளுக்கும் ஜீவனோபாயத்திற்கு வழியாக எதுவும் எஞ்சவில்லை. இதனாலேயே இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட நேர்ந்தது என்ற வகையில் பதிலளிப்பதற்கான “நியாயத்தளம்’ ஒன்று போலியாக உருவாக்கப்படுவது போல் திரைப்படத்தில் தெரிகின்றது. திரைப்படத்தில் இத்தகையதானதொரு சித்திரிப்பு மிக நேர்மை வாய்ந்ததாக, மெய்மை குன்றியதாகத் தொனிக்கின்றது. வர்க்க நலன்களைப் பேணும் வகையிலேயே தொழிற்சாலையொன்றிலோ அல்லது வேறு தொழில்களையோ அவர்கள் நாடாதது போன்று காட்டப்படுகின்றது. தாயார் பிள்ளைகளுக்காக வேறு தொழில்களுக்கான வாய்ப்புகளின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவது இயல்பானதாக இருக்கலாம். ஆனால் பெண் பிள்ளைகள் இருவருமே அதே தொழிலைத் தேர்ந்தெடுப்பது ஒரு வகையில் இயல்புக்கு முரணான "அதீத சினிமாத்தன்மை” சார்ந்த ஒன்றாக இருக்கிறது.
“மாருதீய’ திரைப்படத்தில் கிராம, நகர சித்திரிப்பு ஒரு வகையில் சமநிலை குன்றியதாக, போலித்தன்மை வாய்ந்தாகவே வெளிப்படுகின்றது. மேலும் அவற்றின் சம காலத்தன்மைக் கூறுகள் அழுத்தம் பெற்றனவாயுமிருக்கவில்லை. கடந்த 10, 15 வருடகாலமாக இலங்கையில் சமூக, அரசியல், கலாசார, பொருளாதாரத்தளங்களில் சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமகால சிங்களத் திரைப்படங்களில் அவற்றின் பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்படாதது ஏமாற்றமளிப்பதாயுள்ளது.
நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் கிராமப்புறங்கள் மாறுதல்களை அடைந்து வருகின்றன. உலகச் சந்தை நிலைவரமும் இதில் பாதிப்பை
ஏற்படுத்துவதாயிருக்கிறது. விவசாய நிலங்களின் சொந்தக்காரர்கள் அவற்றை
46

இழந்து கூலி விவசாயிகளாக மாறி வருகின்றார்கள். இதே வேளை நகரங்களிலும் மாற்றங்கள் பல நிகழ்கின்றன. நாசகார சக்திகள், வன்முறைகள், ஊழல்கள் ஆகியன நகரங்களில் வேகமாகப் பரவிவரும் அதே வேளை, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடிய சக்தி வாய்ந்த அரசியல், ஆன்மிக மற்றும் தத்துவார்த்த தலைமைகளுக்கும் சிந்தனைகளுக்கும் தோற்றுவாய் மையங்களாகத் தொடர்ந்தும் நகரங்களே இருந்து வருகின்றன.
மாறிவரும் உலகின் பெண்ணின் நடத்தைகள், குறிப்பாக பாலியல் நடத்தைகள், அவற்றின் தேவைகள் வகை மாதிரியாக மாறிலியாக இருந்து விடப்போவதில்லை. தொழில்களின் நிமித்தம் அவர்கள் வெளியுலகுக்கு வரவேண்டியவர்களாயிருக்கின்றனர். நாட்டை விட்டும் கூட வெளியேற வேண்டியவர்களாகவுள்ளனர். ஆணாதிக்க கட்டமைப்புகள் தளர்வடைய முழுமையான ஆளுமை விருத்திக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. உடன்பாடானது எதிர்மறையானதுமான பல்வேறு சவால்களை அவள் எதிர்கொள்ளவேண்டி நேரிடுகிறது.
நவீன சிங்கள சினிமாவை 50 வருடங்களுக்கும் மேற்பட்ட மரபுச் சுமையின் பாரம் அழுத்துவது போல் தோன்றுகின்றது. அதன் மரபார்ந்த "வகை மாதிரிகள்", பாணிகள் போன்றவற்றின் முற்சாய்வுகளிலிருந்து பூரணமாக அது இன்னும் தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.
எவ்வாறெனினும் இம் மூன்று திரைப்படங்களின் பின்னணியில் பார்க்கையில் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகவேயுள்ளது. இந்த வகையில் நவீன சினிமாவின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கியதொரு சினிமா வடிவம் எமக்கின்று அவசியமாகிறது.
என்னைப் பொறுத்த வரையில் சமகால சிங்கள சினிமா நெறியாளர்கள் தாம் வாழும் சமூகத்தின் வாழ்வியல் அம்சங்களையோ, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரம் சார்ந்த உட்கூறுகளையோ தரிசன வீச்சுடன் கிரகிக்காததுடன் எந்த விதத்திலும் அதனைக் கலாபூர்வமானதொரு சிருஷ்டி அனுபவமாகப் பகிரவோ அல்லது மெய்ம்மை குன்றாது பரிவர்த்தனை செய்யவோ தவறிவிட்டதாகவே கருதுகிறேன். இந்த வகையில் அவர்கள் முன்னிலையில்
(இக் கட்டுரையின் மொழிபெயர்ப்பாளர் வீரகேசரி நிறுவனத்தின் சிரேஷ்ட பத்திரிகையாளராகப் பணியாற்றுகிறார்)
47

Page 26
பெண் பிரஜை
ஆங்கில மூலம் : சுனிலா அபயசேகர தமிழில் : அ. ரஜீவன்
அரசியல் முறைமைக்குள்ளால் விளங்கிக் கொள்ளல்
தென்னாசியாவின் அரசாங்கங்கள், நலன்புரி அரசுகள் என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகின்றபோதிலும் அவை பெரும்பாலும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் நலன்களை மட்டுமே மையமாக வைத்துச் செயற்படும் தன்மை கொண்டனவாக உள்ளன.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குறித்து இவை அதிக கவனமெடுப்பதில்லை. எனினும் இந்த அரசாங்கங்கள் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்கும் வேட்கை கொண்டுள்ளமை காரணமாகச் சில வேளைகளில் சமூகத்தின் பின் தங்கிய பிரிவினருடன் தொடர்புகொள்ள வேண்டிய தேவையும், அவர்களுக்குச் சிறிதளவாவது நலன்புரிச் சேவைகளை வழங்க வேண்டிய தேவைகளும் நிர்ப்பந்தங்களும் ஏற்படுகின்றன. இவ்வாறான ஊடாட்டங்களின் போதே அரசாங்கங்கள் சில முற்போக்குச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டி நேரிடுகின்றது.
அவை கொடுக்கின்ற அழுத்தங்கள் காரணமாக அரசாங்கங்களின் நிலைப்பாடுகள், கொள்கைகள் மாற்றியமைக்கப்படுகின்றன. தென்னாசியாவின் தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக தொழிலாளர் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டது போன்று மகளிர் அமைப்புகளின் முயற்சி காரணமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அரசாங்கங்கள் கொண்டுள்ளன.
1975 இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச மகளிர் மாநாட்டின் பின்னர் தென்னாசியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் உள்ள மகளிர் விவகார அமைச்சு, ஆணைக்குழு போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்கின. அதன் பின்னரே அரசாங்கங்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கின.
அதன் தொடர்ச்சியாக வறுமை ஒழிப்புத் திட்டங்களில் மகளிருக்கு வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கும் வேலைவாய்ப்புத் திட்டங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. சட்டங்கள் மூலம் மகளிருக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை யாவற்றையும் நாம் முன்னேற்றகரமான ஒளிமயமான பாதையை நோக்கிச் செல்வதற்காக நம்பிக்கையூட்டக்கூடும்.
48

எனினும் உண்மை எதிர்மாறாக உள்ளது. சிறிய சிறிய மாற்றங்களில் கவனம் செலுத்திய நாம் தந்தை வழிச் சமூகத்தை முழுமையாக மாற்றுவது குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. அதன் காரணமாகத் துண்டங்களாக சிறு சிறு அளவினதாக மாத்திரமே நமக்கு வெற்றிகளும் நன்மைகளும் கிட்டியுள்ளன.
இது குறித்த சகல விதமான விவாதங்களுக்கும் நவீன சமூகத்தில் அரசாங்கங்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்வது அவசியம்.
சர்வதேச மயமாக்கல் அரசாங்கங்கள் மீது வகையான தாக்கங்களைச் செலுத்தியுள்ளது. மக்களிற்கு நலன்புரிச் சேவைகளை அளிப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்ற காலாதிகாலக் கோட்பாடுகளை அது கேள்விக் குறியாக்கியுள்ளது. மேலும் முன் எப்போதையும்விட சமூகத்தில் தீவிரவாதத் தன்மை கொண்ட சக்திகளினதும் வன்முறையினதும் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது.
சமூக, வர்க்க, இன, மொழி, மத அடிப்படையில் அதிகமாகப் பிளவுண்டு போவதையும் காணக்கூடியதாகவுள்ளது. கருத்துச் சுதந்திரத்திற்கும் பொது மக்களின் செயற்பாடுகளுக்குமான உரிமைகள் அதிகமாக மறுக்கப்படுகின்றன.
இவ்வாறான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்ற போதிலும் அரசாங்கங்களின் தந்தை வழிச் சமூக மனப்பாங்கில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. அவை இன்னமும் பெண்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்குவதற்குத் தயாராகவில்லை. மாறாகக் காலம் காலமாக மகளிருக்கு எனச் சொல்லப்பட்டு வருகின்ற கருத்தாக்கங்களை நியாயப்படுத்துவதிலும் அவற்றைக் கட்டிக் காப்பதிலுமே ஆர்வமாக உள்ளன.
அரசாங்கங்களின் இந்த மனோநிலையும் மாற்றங்களுக்குத் தயாராகாத தன்மையும் அவற்றின் செயற்பாடுகளில் பிரதிபலிக்கின்றன.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நாம் தத்தெடுத்துக் கொண்ட ஆட்சி முறை எண்ணிக்கைகளே முக்கியம் என்பதை நமக்குக் கற்றுத் தந்துள்ளன.
சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசாங்கங்களே ஆட்சிக்கு வருவதற்கு உதவியுள்ளது.
பெரும்பான்மை வாக்குகள் என்பது அதிகளவிலான அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உரிமை எனக் கருதப்பட்டதன் காரணமாக, இயல்பாகவே அரசியல் அதிகாரங்களே முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதற்கான உரிமை அற்ற சிறுபான்மைக் குழுக்களும் உருவாகின. மகளிரையும்
ஜனநாயகத்துடனான எங்களது பரிசோதனைகள் ஆரம்ப காலம் முதலாகவே பிழையான வழியைப் பின்பற்றுவதாக உள்ளது.
49

Page 27

இவ்வாறான விடயங்களில் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு மகளிருக்கு வாய்ப்புக்கள் குறைவாக உள்ளன. குறைந்தளவிலான சந்தர்ப்பங்களே அளிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக ஒரு தேசத்தின் பிரஜை என்ற வகையில் பெண்ணிற்கு அளிக்கப்படும் கெளரவம் குறித்துத் தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் பிரஜை எந்த வகையான பாகுபாட்டிற்கும் அப்பாற்பட்டவராக முழுமையாக சுதந்திரத்திற்கு உரித்தானவராக விளங்குகின்றார் எனத் தாராளவாத கோட்பாடுகள் முன்மொழிகின்ற போதிலும் எமது சமீபகால அனுபவங்கள் இதற்கு நேர்மாறானதாகவே உள்ளன.
பெண்களும், சிறுவர்களும், சிறுபான்மை இனத்தவர்களும் புறக்கணிக்கப் பட்டு அதிகாரமையத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளமையைத் தென்னாசிய நாடுகளில் காணக்கூடியதாகவுள்ளது.
இதன் காரணமாகப் பிரஜை ஒருவர் தனக்கான முழு உரிமைகளையும் அனுபவிக்க வழிவகுக்கக்கூடிய புதிய வகையான ஜனநாயகமொன்றினைக் கட்டியெழுப்புவது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் சகல பிரஜைகளினது கெளரவத்தையும் அங்கீகரிக்கக் கூடிய அரசாங்கமொன்றினை உருவாக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இத்துடன் தென்னாசியாவின் வேறு அரசியல் போக்குகள் குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.
இந்தியத் துணைக் கண்டம் யார் எந்த நட்பிற்குச் சொந்தமானவர் என்ற பிரச்சினையை அதிகமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழர்களையும் பூட்டானில் உள்ள நேபாள மக்களையும் இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இவர்கள் பலவாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பூட்டானில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த போதிலும் தற்போது அங்கிருந்து விரட்டப்பட்டு அகதிகளாகியுள்ள நேபாளியர்களின் அவலம் இதற்கோர் உதாரணம். இதை அதனை மையமாக வைத்து நோக்கும்போது தென்னாசியாவில் குடியுரிமை என்ற அந்தஸ்தை நிர்ணயிப்பதில் தேசிய நலன்களே முக்கியம் பெறுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.
இவை யாவற்றையும் அடிப்படையாக வைத்து நோக்கும்போது மகளிருக்கு உரிய அந்தஸ்தினை அளிக்கின்ற குடியுரிமையை உருவாக்குவதில் உள்ள சவால்கள் புரிய வரலாம். எனினும் முதல் முதலில் வெள்ளையினத்தவன் ஒருவனிற்கே சொந்தமாகவிருந்த வாக்குரிமை உலகின் சகல மக்களுக்கும் பொதுவான விடயமாக்கப்படாமை மிகவும் கடுமையான போராட்டங்களால் மாத்திரமே சாத்தியமாகியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
5

Page 28
வருடாந்த சந்தா - நிவேதினி
North America : US $ 30 UK de Europe : US $ 20 India, S. Asia : US $ 10 Sri Lanka SLR 200
சந்தா விண்ணப்பம் 20.
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்.
பெயர்
6ήιουτσιο :
திகதி
இத்துடன் காசோலை/மணி ஒடரைப் பெண்கள் கல்வி ஆய்வுநிறுவனத்தின் பேரில் அனுப்பிவைக்கிறேன்.
Women's Education and Research Centre 58, Dharmarama Road Colombo - 06 Sri Lanka
52

பெண்கள் தொடர்பான ஆய்வு, களநூல், சினிமா தொடர்பான விமர்சனங்கள்.
அவை அமையும் விதி
ஆய்வுக் கட்டுரைகள் 20-25 பக்கங்களில் அமைதல் வேண்டும்.
விமர்சனங்கள் ஏறக்குறைய 500 - 600 சொற்களுக்குள் அடங்குவது நன்று.
கட்டுரைக்குப் பொருத்தமான வரைபடங்கள், புகைப்படங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கட்டுரைகள் தட்டச்சில் - கணனி டிஸ்கட்றில் அமைதல் நன்று. வசதியில்லாவிடின் தாளுக்கு ஒரு பக்கம் என்ற அடிப்படையில் தெளிவான
கையெழுத்தில் அமைதல் வேண்டும்.
150 சொற்கள் கொண்ட கட்டுரைச் சுருக்கம் தனியாக இணைப்பது
வரவேற்கப்படும்.
கட்டுரைகள் ஆசிரியர் பற்றிய தகவற் குறிப்பு ஒன்று தனியாக இணைக்கப்பட
வேண்டும்.
கட்டுரை எழுதுவோருக்கு ஒரு சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

Page 29
மலையக மக்களுடைய இனத்து
சமூகக் கோட்பாட்டுத் தளத்தில்
இன்னொரு நூற்றாண்டுக்காய்
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சில ஒரு பெண் நிலை நோக்கு
பெண்களுக்கான சட்டவியல் விளக்
The Spectrum of Femininity
Stories of Survivals: SocioFemale Headed Households Sri Lanka - Wol. II (English)
The Other Wictims of WaT : E Households in Easte. In Sri L;
Women, Narration riu Natic Collective Images and Multi
The Laws and Customs of th Recised Education
A. Psychological Study of Bl by Gаппеela Sапагasiпghe a

ப இருப்பில் பால்நிலை.
- கமலினி கணேசன் பால்நிலை.
செல்வி திருச்சந்திரன்
- சாரல் நாடன் வற்றில்
- செல்வி திருச்சந்திரன் kEEuh (III)
(English)
Selwy Thiruchandran
- Political Context of in post Terror Southern
Sasanıka Perera
Emergence of Female Headed
Inka – Wol. III
Selwy. Thiruchandran
ple Identities
Ed. Selvy Thiruchandran
Ie Tamils of Jaffnaby
H. W. Thalbiah
ue Collar Female Workers nd Chandrika Ismail