கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 2001.06

Page 1
நிவே
பால் நிலைக் கற்ை
இதழ் 8
O5) i 1
GILGOTEGGIT 566

தினரி
க நெறிச் சஞ்சிகை
2001
ஆய்வு நிறுவனம்

Page 2
எமது குறிக்கோள்களில் சில
பெண்கள் கல்வி, ஆய்வுநிறுவனம் ஒரு அரசாங்கச் சார்பற்ற பெண்களுக்கான ஸ்தாபனம். சமூகங்களிடையே ஒற்றுமை, சமூக மாற்றங்கள், ஜனநாயகப் பண்புகளை நிலைநாட்டுதல் போன்ற குறிக்கோள்களைக் கொண்ட இந்நிறுவனம், சகல இனப் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க முற்பட்டுள்ளது.
இலங்கையில் பெண்கள் நிலை பற்றிய பல்வேறு அம்சங்களையும் நன்கு கற்று ஆய்வு செய்தல் இதன் முக்கிய நோக்கம். இலங்கையில் பெண்கள் சம்பந்தமான ஆவணங்கள், வளங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கும் இந்நிறுவனம், மூன்றாம் உலகிலே பெண்களின் நிலைபற்றி ஆய்வு செய்யும் அமைப்புக்களின் ஒரு பகுதியாக இருக்கும்.
பால் வேறுபாடு காரணமாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி இந்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல்.
பெண்கள் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பரப்புதலும், பெண்நலம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அக்கறையைத் தூண்டுதலும்.
இலங்கையிலுள்ள ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட குழுக்களுக்கான (அகதிகள், வேலையற்றோர், சேரிவாசிகள்) மீளக்குடியமர்வு முயற்சிகளில் ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் நல்கல் ஆகியன எமது நிறுவனத்தின் குறிக்கோள்களில் சிலவாகும்.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
WERC

0.
II.
2.
(i)
(ii)
பொருளடக்கம்
பக்கம்
ஆசிரியருரை 0.
பெண் நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தில் மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம் 09
செல்வி திருச்சந்திரன் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களும் இனத்தவமும் 20
கமலினி கணேசன்
சுயத்தைத் தேடி 40
அம்பை
பெண்நிலை வாதத்தின் தமிழ் நிலை நின்ற சிந்திப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்தக்களும் 46
பத்மா சோமகாந்தன்
சுன்னாகத்தம்மா - மொழிபெயர்ப்பு ~ (இந்த சாதனம்) 62
சுன்னாகம் செல்லாச்சியம்மா bך
ச. அம்பிகைபாகன்
பெண் உலகம் 1ך
செல்வ நாச்சியார் பெரிசுந்தரம்
எழுத்தாளும் பெண்கள் : சில முக்கிய வினாக்கள் 74
எஸ். மாரிமுத்த நமது வருங்காலச் சந்ததியினரை - "அச்சமில்லை" என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம் ךך
செல்வ நாச்சியார் பெரிசுந்தரம்
பெண்மை தொடர்பான கருத்தியலில் பெண்ணின் பாலுணர்ச்சி 79
செல்வி திருச்சந்திரன்
நால் விமர்சனம் : வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண்நிலை நோக்கு
அ. பாண்டுரங்கன் உயிர்வெளி : பெண்களின் காதல் கவிதைகள் 8
எஸ். சந்திரசேகரம்

Page 3
இச்சஞ்சிகையில் பிரசுரமாகும் கட்டுரைகளை ஆசிரியரின் அனுமதியுடன் மட்டுமே மறு பிரசுரம் செய்யலாம். கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பிரதிபலிக்கும் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களின் சொந்தக் கருத்துக்களே, இதழாசிரியருடையவை அல்ல.
பணிப்பாளர்குழு
கலாநிதி குமாரி ஜயவர்த்தனா கலாநிதி ராதிகா குமாரசாமி
பேர்னடின் சில்வா
கலாநிதி செல்வி திருச்சந்திரன் அன்பேரியா ஹனிபா
இவ்விதழாசிரியர் செல்வி திருச்சந்திரன்
58, தர்மராம வீதி, கொழும்பு - 06,
இலங்கை.
@ : 596826 / 595296
Fax No. 596313
ISSN: 1391 - 0.353
 
 
 
 
 
 
 
 
 

ஆசிரியருரை
மாற்றக் கருத்தியலும் அவற்றை உள்ளடக்கிய இயக்கங்களும் சில குறிப்புகள்
Dனிடம் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து கண்டு வந்தது என்று ஒன்றிருந்தால் அதுதான் கொடுமைகள். இந்தக் கொடுமைகள், வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டவை. கருத்து வேறுபாடு, கலாசார வேறுபாடு, சமூக அமைப்புகளின் வேறுபாடு, சமயம், மதம், வர்க்கம், சாதி போன்றவற்றின் தோற்றங்களும், அவற்றை அண்டிய வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் பல கொடுமைகளுக்கு வித்திட்டன. பால்நிலை வேறுபாடு உடல் ரீதியில் இயற்கையாய் அமைந்தது என்றாலும் சமூகக் கருத்தியல் ஒன்றினால், அப்பால்நிலைக்கு ஏற்றத்தாழ்வுகள் தோற்றுவிக்கப்பட்டன.
இந்த வேறுபாடுகளும் வித்தியாசங்களும் உரிமைகளை ஒருவரிடமிருந்து பறிக்க முற்பட்டபோது நிகழ்ந்த கொடுமைகளாலும் வக்கிரங்களாலும் வன்முறைக்கு வித்திட்டன. ஆங்காங்கு தோன்றிய சமூகப்பிரக்ஞை உள்ள மகான்கள் இக்கொடுமைகளுக்கு நிவாரணம் தேடப் பல வழிவகைகளைக் கூறிச் சென்றார்கள். மதங்கள் அவற்றுள் ஒரு வழி. ஆனால் அம்மதங்களின் பேரால் நடந்த கொடுமைகளுக்குப் பலியான மானிடர்கள் தொகை இன்று மிகவும் கூடிய தொகையாக இருக்கிறது என்பது துன்பகரமான உண்மை. ஆன்மீகவாதிகள் "துறவறத்தை நாடு. லெளகிகம் துன்பகரமானது” என்று கொடுமைகளிலிருந்து தப்பி ஓட வழி கூறினார்களே ஒழிய, பிரச்சினைகளைத் தீர்க்க வழி வகுக்கவில்லை.
கார்ல் மாக்ஸ் வர்க்கரீதியில் மட்டுமே பிரச்சினைகளை அணுகினாலும் உலகை மாற்றியமைக்க வழி கூறினார். அதை பிரதிக்ஞையாக எடுத்துக்கொண்டார். ஆனால் வர்க்கப்போராட்டம் முடிவடைந்தாலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் உரிமை மறுப்புகளும் கொடுமைகளும் தீராது. ஆகையால் பால்நிலை அடிப்படையில் நிகழும்

Page 4
கொடுமைகளுக்கும் விடிவு காணவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து விட்டது. மதம், அரசு போன்றவற்றினால் நம்பிக்கை இழந்த மானிடம், மாற்றுவழி தேடித் தன் வழி மாற்றுக் கருத்துக்களை அமைத்துக் கொண்டது. மாற்று அரசியல், மாற்றுக் கலாச்சாரம், மானிடநேயம், மதம் போன்ற பல கருத்தியல்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்கள் தோன்றத் தொடங்கின. சில சாத்வீகப் போராட்டங்களாகவும் சில வன்முறைப் போராட்டங்களாகவும் கிளைவிட்டன. இந்தக் குழுக்கள் மதம் சார்ந்தவையாகவும், மதச்சார்பற்றவையாகவும், அரசு இழைக்கத் தவறிய சமூகச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பவையாகவும், அரசும் மதமும் இழைக்கும் கொடுமைகளுக்கு நிவாரணம் தேடுபவைகளாகவும், சமூகப் பொருளாதார அமைப்பு முறைகள் இழைக்கும் கொடுமைகளுக்கு நிவாரணம் தேடுபவையாகவும் தங்களது குறிக்கோள்களை நிறுவின. இக்குறிக்கோள்களை அடைவதற்கு விதிகள், வழிமுறைகள், ஆவணங்கள் என்று பல அமைப்பு முறைகள் தேவைப்பட்டன. மக்கள் குழு, மக்கள் தொண்டு, மக்கள் சேவகம் என்ற கருத்துக்கள் ஒரு போலிக் கோஷங்களாகத் தோன்றத் தொடங்க (இவை ஆன்மீகத்தையும் மதத்தையும் அடிப்படையாகக் கொண்டவை.) அவற்றின் போதாமைகளும் அவற்றின் போலித்தன்மைகளும் அதனால் நடைபெற்ற ஊழல்களும் பலரை சில மாற்றங்களைத் தேட வைத்தது. அதிகாரம் பரவலாக்கப்பட்ட படிமுறை நிலை அற்ற குழுக்கள், செயற்குழுக்கள், சட்டதிட்டங்கள், வழிமுறைகள், விதிகள் என்ற ரீதியில் கோட்பாடுகளுக்கிணங்க இந்த அமைப்புக்கள் இயங்கத் தொடங்கின. இவை பெரும்பாலும் அரசுக்கெதிரான ஒரு நிலையைக் கொண் டுள்ளதாகக் காலக் கிரமத்தில் தங்களை இனம்காட்டத் தொடங்கின. அரசியலை வெளிப்படையாக வெறுத்தாலும் அரசியலை எந்த ஒரு சமூகப் பாங்கினின்றும் பிரிக்கமுடியாது என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
அரசியலைக் கண்டிக்கவும், ஆமோதிக்கவும், ஆலோசனை
வழங்கவும் இவர்கள் பின்நிற்கவில்லை. இவை தற்போது ஒரு மாபெரும்
சக்தியாக வளர்ந்துவிட்டது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர், அகதிகள்
என்ற பல்வகைப்பட்ட ஒடுக்கப்பட்ட குழுமத்திற்கு இவர்கள் ஒரு
வரப்பிரசாதமாக அமைந்து விட்டனர். மதங்கள் செய்யும், பிச்சைபோடும்
சேவையிலிருந்து மக்களுக்கு வேறுபட்ட ஒரு சேவையே இவர்களது
2

முக்கிய கருத்தியல் ரீதியாக்கப்பட்ட ஒரு குறிக்கோள் Consciousness raising என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பிரக்ஞை நிலை உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, தங்களது இழி நிலைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஏதுவாக இருக்கும் காரணகாரியத் தொடர்புகளை வெட்டவெளிச்சமாக்குதல் என்பதே இதன் சரியான விளக்கம். தொழிலாளர்கள் தங்களது தொழிலை, தொழில் நுணுக்கங்களை முதலாளிமாருக்குக் குறைந்த ஊழியத்திற்கு தாரைவார்த்துக் கொடுத்து, அவர்கள் கொழுத்த முதலாளிகளாக வர, இவர்கள் பலம் குன்றி என்றும் ஏழைகளாக இருந்தார்கள். தங்களது தொழிலின் மகிமையை அறியாத மூடர்களாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தார்கள். அந்தக் கொடுமையைப் பிட்டு பிட்டு கோட்பாட்டு ரீதியில் விளங்க வைத்த மாக்ஸிச சித்தாந்தத்தின் ஒரு பெறுபேறே இந்த Consciousness raising என்பது. புரட்சிக்கு இதுதான் வித்து. இந்த வழிமுறையையே மாற்று வழி வேண்டும் அமைப்புக்களும் கையாளுகின்றன.
இவ்வமைப்புகள் பல நற்காரியங்களைச் செய்து வருகின்றன. என்றாலும் இவ்வமைப்புக்கள் பல கண்டனங்களுக்கும் உள்ளாகின்றன. இக்கண்டனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:
1. இவ்வமைப்புகளில் பல ஊழல்கள் நடக்கின்றன. (பணமோசடி) ஒரு சில ஸ்தாபகர்கள் தங்களது சுக போக வாழ்வுக்குப் பணத்தை உபயோகிக்கிறார்கள்.
2. பெரும்பாலும் மேலைத்தேய நாடுகளிலிருந்து இவ்வமைப்புக்கள் பணம் பெறுவதால், கனடா நாட்டைச் சேர்ந்த CIDA, நோர்வே நாட்டைச் சேர்ந்த NORAD, பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த OXFORM, ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த CORDAID, அமெரிக்காவிலுள்ள UNIFEM போன்ற இவ்வமைப்பினர் ஏகாதிபத்தியத்திற்குத் துணைபோகிறார்கள். அவர்களது கொள்கைகளைப் பரப்புவர்களாக இருக்கிறார்கள்.
3. ஏழை எளிய மக்களுக்கு "பிச்சை போட்டு" அவர்களது புரட்சி
மனப்பான்மையை மழுங்கச் செய்கிறார்கள்.
3

Page 5
இக்குற்றச் சாட்டுக்களை முன்வைப்போரில் பலர் உண்மை நிலை அறியாதவர்களாகவே இருப்பார்கள். ஒரு விதமான Arm-chair Philosophyக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு மண்ணுக்குள் முகம் புதைத்து யதார்த்தத்தை மறுப்போராகவும் இவர்கள் இருக்கிறார்கள்.
ஊழல் எங்குதான் இல்லை? எந்தவித உன்னத இலட்சியங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள், அரசுகள், மத ஸ்தாபனங்கள், பாடசாலைகள் எல்லாம் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சில அமைப்புகளும் ஸ்தாபனங்களுக்குள் ஊழல் நடைபெற்றால் அதற்காக ஒட்டுமொத்தமாக எல்லா அமைப்புக்களும் அப்படித்தான் என்ற வாதத்திற்கு எம்மை ஆளாக்குகிறோம் என்றால், சித்தம் போக்கு சிவன் போக்கு, எல்லாம் மாயை, நடப்பது நடந்தே தீரும், கர்மபலன் என்று "சும்மா இருக்கும்’ நியதிக்குத் தம்மைத் தாமே தள்ளிவிடலாம். அதற்காக ஊழல்கள் நிறைந்த அமைப்புக்களைப் பொது மக்களோ அரசோ கண்டிக்கக்கூடாது என்பது அல்ல எம் வாதம். கண்டிக்கப் படவேண்டும் அல்லது மூடப்படவேண்டும்.
இரண்டாவது குற்றச்சாட்டு ஏகாதிபத்தியமும் ஏகாதிபத்தியக் கருத்தியலுக்கு அடிபணிதலும். அரசுகள், கடன் என்றும் உதவி என்றும் பணம் பெறுகின்றன. எமது றோட்டுக்கள், விதிகள், சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகள், பாலங்கள் என்று பல கட்டிட நிறுமானங்களும், பயிற்சிகள், புலமைப் பரிசில்கள் (Scholarship) என்று முன்னைய காலனித்துவ நாடுகள் ஏராளமான தொகையை எமக்கு அளிக்கின்றன. அவற்றின் பெறுபேறுகளை, சுகபோகங்களை முணுமுணுக்காமல் அனுபவிக்கிறோம், பயன்பெறுகிறோம். பல்கலைக் கழகங்களும் ஏராளமாகப் பல வசதிகளைப் பெறுகின்றன. அதனால் மாணவிகளும் பொதுமக்களும் பயன் பெறுகிறார்கள். ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கும் குழுக்களுக்கும் வறுமையின் பிடியிலும் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் சலுகைகள், உரிமைகள் மறுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கப்பட்டால் மாத்திரம் அது ஏன் வேறு ஒரு கணிப்புக்குள்ளாகிறது? இப்படிப் பணம் பெறும் அமைப்புக்களைக் கண்டிப்போர் தாங்கள் வெளிநாட்டுப் பணத்தினால் வரும் சலுகைகளையும், சுகபோக வாழ்க்கை நிலைகளையும் நிராகரிக்கிறார்களா? அவர்கள் அனுபவிக்கும் அந்தப் பணமும் அந்நாட்டு அரசின் பங்களிப்புகளே. NGOக்கள் அந்தப் பணத்தைப் பெற்று அதை
4

ஒரு தேவைப்பட்ட மக்களுக்கு அமைப்பு ரீதியில், அதன் பெறுபேறுகளைப் பகிர்ந்தளித்தால் மட்டும் அது ஏகாதிபத்தியத்திற்கு துணைபோவது போல் ஆகிவிடுமா?
பெரும்பாலான மேலைத்தேய நாட்டு NGOக்கள் எழுபது வீதம் பணத்தைத் தங்கள் அரசிடமிருந்து பெறுகிறார்கள். இரண்டாவதாக, அப்படிப் பணமளிக்கும் மேலைத்தேய நிறுவனங்கள் தங்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய மூன்றாம் நாட்டு அமைப்புக்களை உபயோகிக்கின்றன என்பதும் இதனுடான இன்னுமொரு குற்றச்சாட்டு. எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது அமைப்புக்களின் குறிக்கோள்கள், செயற்திட்டங்கள் போன்றவற்றை மதித்து அமைப்புக்களின் சுயாதீனத்திற்கும் சட்ட திட்டங்களிற்கும் பங்கம் நேராமல் ஒரு சம அந்தஸ்தை பேணுபவையாகவே நடந்து கொள்கின்றன. அவர்களது திணிப்பை அப்படி ஒன்றிருந்தால் அதை நிராகரித்து தங்களது சுதந்திரத்தையும் அபிலாஷைகளையும் பேணும் உரிமை இந்த அமைப்புக்களுக்குப் பூரணமாக உண்டு. இந்த அமைப்புக்களைக் கொச்சைப்படுத்துவோர் பெரும்பாலும் உண்மை நிலை அறியாத ஒரு அஞ்ஞானப் போக்கில் தங்களது தீவிரப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இப்படியான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
‘நாய் விற்ற காசு குரைக்காது” என்பது பழமொழியானாலும், நாய் விற்ற காசும் மானிடம் பயன்பெற குரைக்க வைப்பதில் ஒரு பிழையுமில்லை. எனக்கு இங்கு உண்மைக் கதை ஒன்றைக் கூறவேண்டும் போல் தோன்றுகிறது. பல வருடங்களுக்கு முன் நான் மாணவியாக இருந்தபொழுது ஒரு வறிய கல்லுாரியின் அதிபர் கட்டடத்திற்காக, கல்வியை அந்தக் கிராம மக்கள் கிரமமாக ஒரு கூரைக்குக் கீழும், வாங்கு, மேசை, கரும்பலகை வசதியுடனும் பெறவேண்டும் என்பதற்காக காசு திரட்டும் ஒரு திட்டத்தை தன் சக ஆசிரியர்களுடன் தொடக்கினார். இடது சாரிக் கொள்கையுடைய இந்த அதிபரை எள்ளி நகையாட எத்தனித்த ஒரு வலதுசாரிக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் அந்த அதிபரை நோக்கி, “என்ன சேர்! முதலாளிகளையும் முதலாளித்துவத்தையும் விரும்பாத நீங்கள் முதலாளிகளின் படியேறி வீடு வீடாகப் பணம் சேர்க்கின்றீர்களே, இங்கு மாத்திரம் முதலாளிகளின் உதவி உங்களுக்குத் தேவைப்படுகின்றதா?” எனறு மிகவும் பவ்வியமாக, விநயமாக மரியாதையுடனேயே அவர் இக்கேள்வியைக் கேட்டார்.
5

Page 6
இடதுசாரிக் கொள்கைகளைத் தகர்த்து விட்டதாகவும் ஒரு பெருமிதம் அவரது தொனியில். இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, அந்த அதிபரை அவமரியாதைப்படுத்தி விட்டாரே என்று விசனமும் கோபமும் ஏற்பட்டது. "ஆமாம் கொள்ளையடித்துச் சேர்த்து வைத்திருக்கும் முதலாளிகளின் பணத்தை நல்ல காரியத்திற்கு, பிள்ளைகளின் படிப்பிற்கு, உபயோகப்படுத்துவதன் மூலம் அவர்களது பாவத்தையும் நான் கரைக்க முற்படுகிறேன். பாவம், அவர்கள் அந்தப் பாவத்தை முற்றாக அனுபவிக்க வேண்டாமே” என்று ஒரு பதில் அவரிடமிருந்து வந்தது.
திருநீற்றுப் பொலிவுடன் நின்ற அந்தச் சைவ சித்தாந்தப்பழம் ஒரு அசட்டுச் சிரிப்புடன் அகன்றது. மூன்று மாடி கட்டடத்துடன், அப்பாடசாலை அக்கிராம மக்களுக்கு நல்லறிவு போதித்துக் கொண்டிருப்பது ஒரு அழகான நிஜம். இதை நான் இங்கு கூறுவதற்குக் காரணம், ஒரு சமூகப்புரட்சி தோன்றி சமத்துவம் காணும் இடைக்கால வேளையில், இந்தக் கீழ்வர்க்க கீழ்நிலை மக்களின் வாழ்வும் வசதிகளும் கீழ்நிலை காரணமாகப் பிறிபோக மேல்நிலை மக்களும் மத்தியதர LDis356 bib Arm Chair Philosophy (Sudais GasT606v19(bsiss6)TLDIT?
அவர்களது புரட்சித் தீக்குப் புடம்போட இரண்டு தலைமுறை களைப் பலியிட வேண்டுமா? மத்தியதர, மேல்வர்க்க மக்கள் புரட்சி பேசி, புரட்சியை எதிர்நோக்கியிருக்க இந்நிலை மக்களின் புரட்சி மனப்பான்மையை வளர்ப்பதற்கு நாம் வாளாதிருக்க வேண்டுமா? இது என்ன விசித்திர வக்கிர மனப்போக்கு? “பசியால் வருந்துவோனை வருந்த விடு அவனது துன்பம் அதிகரிக்கட்டும்” புரட்சிக் கனல் ஓங்கட்டும். நீ மூன்று வேளையும் சாப்பிட்டு, அந்தப் புரட்சிகளுக்கு நீரூற்றிக்கொண்டிரு என்று கூறுவது போலத்தான் இருக்கிறது. NGO க்களே! வறுமைப்பட்டவர்களது புரட்சி மனப்பான்மையையே குறைக்கிறீர்கள் என்று கூறுகிறது. இப்படி அமைப்புக்களை குறை கூறுபவர்கள் களத்திலிறங்கி அவர்களை நெறிமுறைப்படுத்தி புரட்சிக்குத் தயார்ப்படுத்த முற்பட்டால் அதில் ஒரு அர்த்தமும் உண்டு. அதைச் செய்வார்களா? வர்க்க ஒடுக்கம், சாதி ஒடுக்கம், இன ஒடுக்கம், பால்நிலை ஒடுக்கம் இப்படிப்பட்ட அநேக கொடுமைகளையும்
6

ஒருங்கிணைத்து ஒரு புரட்சி நடத்திவிட முடியுமா? இவற்றிற்குத் தனித்தனி இயக்கங்கள் தேவையா? ஒரு குடைக்கீழ் இவையனைத்துக் கொடுமைகளும் ஒருங்கே தீர்க்கப்படுமா?
இந்த ஒடுக்குமுறைகள் பற்றிய பிரக்ஞைகளைத் தட்டி எழுப்புவதைத்தான் இந்த NGO அமைப்புகள் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவற்றை ஏன் ஏனையோர் மறுதலிக்க வேண்டும்? அவர்களது தேவைகளை இனங்கண்டு அவர்களது நிலையில் அவர்களுடன் ஒன்றுபட்டு அவர்களை முன்னேற்றுவதே இவ் அமைப்புக்களின் செயல்திட்டம் என்றால் அதில் குற்றம் குறை காணுவது
தவறு.
மாற்று வழிகளில் கடந்த சகாப்தத்தில் Mainstream என்று அழைக்கப்படும் சாமான்ய தளங்களிலிருந்து வேறுபட்ட மாற்றுமுறைப் பயிற்சிகளும் ஆய்வுகளும் இந்நாட்டிலும் வேறு பலநாடுகளிலும் தோன்றியுள்ளன. இது இப்படிப்பட்ட மாற்றுக் கருத்தியலைக் கடைப்பிடிக்கும் அமைப்புக்களின் முயற்சிகளே. மாக்ஸிச நோக்கில் புதிய அணுகுமுறைகள், தலித்தியம், பெண்நிலைவாதம் போன்றவற்றை உள்ளடக்கிய பல கற்கைநெறிகளை அடிப்படையாகக் கொண்ட பலதரமான நூல்களையும், பத்திரிகைகளையும், செய்தி மடல்களையும் இவ்வியக்கஞ்சார்ந்த அமைப்புக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன. வெளிக் கொண்டு வருகின்றன.
சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SSA), (CENWOR) பெண்களுக்கான கல்வி ஆய்வு நிலையம், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) சூரியா CSR (சமூக சமய நிலையம்) சர்வதேச இனத்துவ ஆய்வுக்கான நிலையம் (ICES), விபவி, சரிநிகர் போன்றவற்றை எம் நாட்டு உதாரணங்களாகக் கொள்ளலாம். இவற்றில் சில நீண்ட அரசியல் சர்ச்சைகளையும் தோற்றுவித்தன. அரசுக்குப் பெரிய தலையிடியையும் கொடுத்தன. அராஜகங்களையும், அநீதிகளையும், கொடுமைகளையும் தட்டிக் கேட்பவைகளாகவும் மாற்றுவழி கூறுபவைகளாகவும் இவை இருந்தன. பல்கலைக் கழகங்களும், ஏனைய நிறுவனங்களும் செய்யாதவற்றைச் செய்ய முடியாதவற்றை இவை செய்தன. துணிவுடனும் தீவிரத்துடனும் பல கசப்பான உண்மைகளை முன்வைத்தன. உதாரணமாக இலங்கையின்
7

Page 7
இனத்துவ முரண் பாடுகளையும் அரச நடவடிக்கைகளையும் மறுதலிப்புக்களையும் மீறி வெளி உலகிற்கு வெளிப்படுத்தி முன்நிற்பவை இவ்வமைப்புக்கள்.
இவ்வமைப்புக்களின் பங்கும் துணிவும் பாராட்டப்படவேண்டும். உள்ளதை உள்ளபடி அஞ்சா நெஞ்சத்துடன் கூறுவதில் இவ்வமைப்புக்களின் அங்கத்தவர்கள் சில சமயங்களில் அரசியல் நெருக்கடிகளுக்கும், பயமுறுத்தல்களுக்கும் கூட உட்பட நேர்ந்தது. அரசியல் கட்சிகள் செய்யாத அரசியலையும் இவர்கள் செய்தார்கள். இவர்கள் நடாத்தும் ஆய்வுக் கருத்தரங்குகள், பயிற்சிக் களங்களும் சமூகத்திற்குப் பெரிதும் உதவுவனவாகவுள்ளன. மறுக்கப்பட்ட உண்மைகளும், மறைக்கப்பட்ட கொடுமைகளும் ஆதார பூர்வமாக, ஆணித்தரமாக ஆவணப்படுத்துவதற்கு இவை முன்னோடியாக அமைகின்றன. புதைக்கப்பட்ட பல உண்மைகள் ஆய்வு முறைப்படி வெளிக் கொணரப்பட்டன. தரவுகளும், பதிவுகளும் தேடித் தேடிப் பெறப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட்டன. துட்டகைமுனுவிற்கும் பெளத்த மதத்திற்கும் மகாவம்சமும், கஜமன்னோனாவும், ஆண்டாளும் புதிய பரிணாமங்களில் பார்க்கப்பட்டனர். பாடப்புத்தகங்கள் தந்த வரலாறுகள் மறுவாசிப்பு செய்யப்பட்டு பல கருத்துக்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டன.
பிரித்துப் பிரித்துப் பேதம் பாராட்டி முற்போக்குவாதிகள் பிரிவினை பேசப் பேசப் பிற்போக்கு வாதங்கள் மலியத் தொடங்குகின்றன. இது இந்நூற்றாண்டின் ஒரு பயங்கரப் போக்கு. எப்போது நாம் பாடம் படிக்கப்போகிறோம்? எப்போது நன்மனங்களை மதிக்கக் கற்கப்போகிறோம்? இரண்டு கேள்விகளுடன் இக்குறிப்பை முடிக்கிறேன்.
இப்படிப்பட்ட அரிய வாய்ப்புக்களை சமூகத்திற்களித்து மாற்றுக் கருத்தியல் அமைப்புக்களைக் கொச்சைப்படுத்துவது சரிதானா என்பது அடுத்த கேள்வி.
★ ★ ★ ★ ★
k yk k

பெணி நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தில் மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம்
- ஒரு மீள் பார்வை
செல்வி திருச்சந்திரன்
சிமூகவியல், மானிடவியல், மனோதத்துவம் போன்றவற்றால் முன்வைக்கப்பட்ட பல கோட்பாடுகளைக், கேள்விக்குள்ளாக்கிய பெண்நிலைவாதம், இலக்கிய விமர்சனத்துறையிலும் பல புதிய கோணங்களைப் புகுத்த முற்பட்டுள்ளது. இவை ஆங்கில மொழயில் பல வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. பெண் அடிமைத்தனத்தைப் புரிந்துகொள்ள, விளங்கிக்கொள்ள, முன் வைக்கப்பட்ட காரணங்களைப் போல, அக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் கொள்ளாமலும் பெண் என்ற நிலையை, அதில் ஏற்பட்ட இயல்பை, தன்மையை முன்வைத்து பல வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவை முன்னெடுத்துச் செல்லும் வாதங்களின் மையம் என்று ஒன்றை நாம் இனம் காணலாம். பெண்ணின் எழுத்துக்கள், படைப்புக்கள், ஆண்களின் எழுத்துக்கள், படைப்புக்களிலிருந்து கதைப்பொருள், உரு, உருவகிக்கப்பட்ட தன்மை, மொழி, அதைக் கையாளும் விதம், உணர்ச்சிகளின் வெளிப்பாடு, கதைப்புலம் போன்றவற்றிலிருந்து வேறுபடுகின்றதா? என்ற கேள்வியே அந்த மையம். விடை ஆம் என்று கொடுக்கப்பட்டு, அதற்குரிய காரண காரியத் தொடர்புகளை அவர்கள் முன்வைக்கின்றனர்.
6T6oo6o6öIT G6NşT6 JT6ùippij (Elain Showalter), SÐ6ð6můSuJT 696mùäitabij (Alicia Ostriker), 8.T6öprTä6)Gul' (Sandragilbert), 85Tug5älj 6möLilouTäs (Gayatri Spivak) போன்றோர் இவ்விவாதங்களுக்குப் பெரும் பங்களித்துள்ளனர். வித்தியாசமான படிமங்கள், வித்தியாசமான ரசானுபவம் என்ற ரீதியில், வித்தியாசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தின் பிரதிபலிப்பாக, பெண்களின் எழுத்துக்களும் வித்தியாசமானவை என்று விவாதிப்பதில் அவர்களுக்கு ஏதும் கஷ்டமிருப்பதாகத் தெரியவில்லை.
9

Page 8
இலக்கியம் வர்க்க ரீதியில், சாதித்துவ ரீதியில் வித்தியாசப்படும். அவை பிரதிநிதித்துவப்படுத்துவதும் குறியீட்டுணர்தல்களும் வெவ்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். இதற்கு முக்கிய அடித்தளம் அவரது வேறுபட்ட வித்தியாசமான அனுபவங்களே. இங்கு அனுபவங்கள் என்பது ஒரு மிக முக்கிய அடிமட்ட அடித்தளக் காரணியாகின்றது. இதுவே இப்பொழுது தலித்தியம். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டோர் பற்றிய guish E6ir My Fair ladyuisi) 6T606). FIT (66Slips 66 (Eliza Dolittle) உணர்ச்சியனுபவங்களின் வெளிப்பாடு, அதன் மொழிப்பிரயோகம், பாடும் அத்தொனி இவற்றிற்கு ஒரு சிறு உதாரணம்.
QugOiqboodoo6 Ingbi, Efib605Gybi (Acadmic Women's Studies) பல்கலைக் கழகங்களில் வேறு அறிவுபூர்வ இயக்கங்களுடனும் தொடர்பு கொண்ட காலத்தில் தோன்றாத இவ்விலக்கிய கோட்பாடுகளும் 6lLDj560Trélab(Gibb (liteary theory, Literary Criticisms) Llső60Tj5Tör தோன்றின.
ஆண் சார்ந்த கருத்துக்களும், கருத்தியலும் ஆண்களது இலக்கியத்தில் மட்டும்தான் தோன்றும், வெளிவரும் என்பது சரியல்ல. அவற்றை உள்வாங்கிய பெண்களும் கூட சமூக ஏற்புடைத்துக்காகவும் அவற்றை நம்பி, அவை சரி என்ற ரீதியிலும் இலக்கியம் படைக்கலாம். அவர்களது கற்பனையிலும்கூட ஆண் முதன்மை மேலாதிக்கங்கள் தான் உருவாகலாம். ஆனால் அவற்றை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது அவை மரபிலக்கியங்களாகவே இருக்கும். அப்படி ஒரு சமூக ஏற்பிற்காக எழுத முற்படாத பெண்கள் புனைபெயரிலும் ஆண்களது பெயரிலும் எழுதுகிறார்கள். ஒரு சிலரே துணிவுடன் மரபு வழிக் கருத்தியல்களை நிராகரித்து ஆணாதிக்க நிலைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்.
இங்கு Showalter கூறும் ஒரு கருத்தை நாம் ஆராய முற்படலாம். பெண்களது எழுத்துக்கள் அவர்களது பால்நிலையின் தன்மைகளை வெளிப்படுத்துகின்றன என்பது அவர் வாதம். இதை வலியுறுத்தும் Gilbert இதற்கும் அப்பால் சென்று இலக்கிய வடிவமும், பாத்திரப்படைப்பின் பாங்கும், பெண்நிலையின் பிரதிபலிப்புக்களே என்கிறார். பெண்ணை, அவளது பால்நிலையை மையமாக வைத்துச் செய்யப்படும் விமர்சனத்தைக் Gyno Criticism என்று கூறுவர் இதை
O

விளக்கப் பெண்களது உடல்நிலை (Biological) மொழியின் தன்மை (Linguisics) உளவியல் பாங்கு (உள்ளம் சென்ற வழியே மொழியும் சென்று பிறக்குமாகையால்) போன்ற மூன்றையும் கூறி, இவற்றின் வெளிப்பாடு எப்படி கலாசாரத்தை மையமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் முன்வைத்து, பெண்ணை மேற்கூறியவற்றால் உருவாக்கப்பட்ட பெண்ணை மையமாக வைத்து எழுந்த விமர்சனக் கோட்பாடுதான் பெண்மையை விமர்சனம் என்று கூறுகிறார். இது பெண்ணிலைவாத விமர்சனத்திலிருந்து வேறுபட்டது. (Feminist Criticism) ஆண் பெண் இருபாலாரது இலக்கியங்களில் தெறிக்கும், தொனிக்கும் ஆணாதிக்கச் சிந்தனைப் போக்குகள், பதங்கள் போன்றவற்றை இனங்காணுவதுதான் பெண்நிலை விமர்சனம். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பிரான்ஸ் நாட்டு பெண்நிலைவாதிகள் லுாயிஸ் SjabTý (Louis lirigary) god 6óluum ŝpól6möC3gp6JT (Julia Kristeva) போன்றோர் மொழிக்களித்த முக்கியத்துவம், அதிகாரம், ஆண் ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் போன்ற எல்லா அதிகாரங்களின் பிரதிபலிப்பாகவும் அவற்றை நியாயப்படுத்துபவையாகவும் இருப்பது, மொழியின் மாயா ஜாலமே என்பது ஒரு முக்கியமான வாதம். இவர்களால் மொழிக்கு அளிக்கப்பட்ட அதி உன்னதமான நிலை, அமெரிக்க ஆங்கில பெண்நிலைவாதிகளால் ஓரளவே ஏற்கப்பட்டுள்ளது. இவ் விவாதங்கள் வேண்டாத அளவிற்கு நீண்டும் போயின.
இந்த விவாதங்களின் தார்ப்பரியங்களை முற்றாக நிராகரிக்காமல், இதில் சிலவற்றில் உண்மை உள்ளது என்பதே எனது வாதம் Subjectivity என்று ஆங்கிலத்தில் கூறப்படும் உள்ளார்ந்த தன் நிலை நோக்கு, பெண்களின் ஆக்கங்களில் ஓர் இலக்கியப் பண்பாக ஏன் மரபாகக்கூடத் தோன்றுகிறது என்பது ஓரளவிற்கு உண்மையே. இந்த உள்ளார்ந்த தன்நிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளுக்கு ஒரு மதிப்பிற் குறைந்தது என்ற ஒரு அர்த்தப்பாடுமுண்டு. தர்க்கரீதியில் நியாயப்படுத்தப்படாதது, மாயையைப் போன்றது. வெளி உலக நடப்புகளுடன் தொடர்பற்றது. உணரலாமே ஒழிய பரீட்சித்து நிரூபிக்க முடியாது. அனுபவிப்போரின் மனது மட்டுமே அறியக்கூடியது என்று பல கோணங்களில் அது விமர்சிக்கப்படுவது மரபாகி இருந்தது. தன் நிலை நோக்கு உணர்ச்சிகள் புற நிலைப்பாடுகள் என்ற பிரிவுகள் இயல்பாக ஆண் பெண் என்ற பால் நிலைப் பிரிவுக்குள், அடங்கி ஒன்று மற்றதன் மேலானது. ஆண் தர்க்க ரீதியாகப் பேசுபவன்,

Page 9
பெண் உணர்ச்சி ரீதியாக அழுது புலம்புபவள் என்ற கோட்பாட்டையும் உருவாக்கி உள்ளது. இதில் ஆணைப்போல பெண்ணும் தர்க்கரீதியாக வெளிப்பாடு சொல்பவள் என்று விவாதிப்பதில் அர்த்தமில்லை. இந்த உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மகத்துவம் கொடுக்க வேண்டும். மதிப்பளிக்க வேண்டும். பெண்ணின் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். அதுவே சில வேளைகளில் எதிர்ப்புக் கலாசாரத்தை வேண்டுவதாக, எதிர்ப்புக்குரலாகவும் வெளிப்படலாம். ஆண்டாள் காரைக்கால் அம்மையார், மீரா, அக்கா மகாதேவி போன்றோரின் படைப்புக்களில் தன்நிலை உணர்ச்சிகள் கரை புரண்டோடுவதும், உள்ளார்ந்த எதிர்ப்புக்களையும் அவை கொண்டிருந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவர்களது அனுபவங்கள் அப்படிப்பட்டன.
அதே போன்று, தஸ்லிமா நஸ்ரீன், கமலாதாஸ் போன்றோரின் அதி தீவிர மறுப்பு ஒலிகளையும் அவ்வாறே நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அடக்குமுறைக்கும் ஒடுக்கப்பட்ட கலாச்சாரத்துக்கும் உட்படாத ஒளவையாரின் குரல் வேறானதாக இருக்கிறது. அரசியலையும், காதலையும், ஆண்மையையும், வீரத்தையும், சுதந்திரக்காதலையும், வெளிப்படுத்தும் ஒளவை வித்தியாசமானவர். ஆண்களின் தோழமையைக் கொண்டு, ஆனால் திருமண பந்தத்திலீடுபடாத அவளது அனுபவங்கள் வித்தியாசமானவை. இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒற்றுமை இவர்கள் தனிமனிஷிகளாக இருந்து இருப்பது என்பதும் ஒரு முக்கிய விடயம். கணவனின் அதிகாரம், பிள்ளைகளின் அலைக்கழிப்பு இல்லாத சுதந்திரமான போக்கு அவர்களை வித்தியாசமானதாக்கியது. இன்றுங்கூட மணமாகிய பின் ‘சர்வமங்களங்கள்” பொருந்திய பெண் எழுத்தாளர், எழுதுவதை விடுத்து வீட்டு வேலைகளின் தர்மங்களை ஏற்கத் தொடங்கி விட்டனர் என்பது பிரத்தியட்சமான உண்மை.
போர்க் காலங்களின் வன்முறைகளையும், நீதிமறுப்புக்களையும், கொடுரங்களையும் எழுத்தில் வடித்த சிவரமணி, செல்வி, ஒளவை போன்றோரின் கவிதைகள் சம கால ஆண்களின் கவிதைகளிலும் வித்தியாசமானவை. இங்கு பெண்களின் உணர்ச்சி அலைகள் பாசத்தைக் கொட்டமட்டும் வெளிப்படவில்லை. நீதி கேட்டு, அராஜகங்களைத் தட்டிக்கேட்டு மானிட நியாயங்களைக் குழி தோண்டிப் புதைத்தவர்களைச்
2

சாடி நிற்கின்றன. இங்கு தன்னிலை உணர்ச்சி புறநிலைப்பாடு என்ற ரீதியில் உணர்ச்சிகளைப் பிரித்து பங்கு போட்டு வாதாடுவது எவ்வளவிற்குச் சரியானது என்ற கேள்வி எழும்புகிறது. ஆனாலும் அனுபவ வெளிப்பாடுகளை உள்ளுணர்ச்சிகளினுாடாக வெளிப்படுத்துவதில் பெண்களது இலக்கியத்தில் வேறுபாடுகளைக் காணலாமோ என்பதே கேள்வியாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக பெருமிலக்கியங்களில் கூட தடுக்கமுடியாமல் பெண்நிலைச் சிந்தனைக் கோடுகள் அடங்கிய கதாபாத்திரப் படைப்புக்கள் மரபு வழிக்கதைகளின் எச்ச சொச்சங்களாகப் புகுந்து விட்டன. அவற்றிற்கு போதிய முக்கியத்துவம் இலக்கிய விமர்சகர்களால் கொடுக்கப்படவில்லை. அல்லிராணியின் சுதந்திரம் அடங்காப் பிடாரித்தனமாக விமர்சிக்கப்பட்டது. அம்பிகை அம்பாலிகை கதையும் இப்படியே. மகாபாரதத்தில் சிகண்டியாக மாறி பீஷ்மரைப் பெண் கடத்தியதற்காகப் பழி வாங்கி அவளைக் கொல்லுதல் போன்ற இடைக்கதைகள் இவற்றுக்குச் சான்று. இவை முக்கியத்துவம் பெறவில்லை. இவை எதிர்க் கலாசார பெண் நிலைவாதச் சிந்தனைப்பாற்படும். இது பெண்நிலைவாத விமர்சனத்தில் அடங்கும். பீஷ்மரின் பெண்கடத்தல் அக்கால ராஜதர்மம் என்று விளக்கப்பட்டது. அப்படியாயின் சிகண்டியின் உருவாக்கம் ஏன் தோன்றியது? அது ராஜதர்மத்திற்கு எதிரானதா?
(6696hT 96thiopij (Showalter) Female Canon 616örgl 3in pub பெண்ணிலக்கியப் பகுப்பு ஒன்றை நாம் உருவாக்கலாமா? என்பது என்னைப் பொறுத்தவரையில் கேள்விக்குறியே. வர்க்க, சாதிய, இனத்துவ ரீதியில் பிரிவுபட்டிருக்கும் பெண்களது இலக்கியப் படைப்புக்கள் பாடல்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டிருக்கும். அவை அவ்வக் குழு ஆண்களின் இலக்கியத்தையும் அனுபவ ரீதியில் ஒத்திருக்கும். அதே நேரம் குழு இருப்பு நிலைகளைத் தாண்டிய பால்நிலைக் குறியீடுகளையும் அர்த்தப்பாடுகளையும் அவை கொண்டிருக்கலாம்.
மேலே கூறிய எனது கருத்துக்களை வைத்து இலங்கையில் முதலாவது பெண் நாவலாசிரியரின் நொறுங்குண்ட இதயம் என்ற நாவலை ஒரு மதிப்பீடு செய்ய முற்படுகிறேன். இங்கு முதலில் இரு விடயங்களைக் கூற வேண்டும். முறைசார் பெண்கல்வி தமிழ்ச்
3.

Page 10
சமுதாயத்தில் கிறிஸ்தவத்துடன்தான் தொடங்கியது. அமெரிக்கன் மிசனரிமாரின் மதமாற்றத்திற்குத் தேவைப்பட்ட கல்வியறிவு ஆணையும் பெண்ணையும் வெவ்வேறாக மதிக்கவில்லை.
மங்களம்மா ஒரு கிறிஸ்தவப் பெண். இரண்டாவதாக அவர் பாடசாலை சென்று கல்வி கற்றதற்கான சான்றுகள் இல்லை. பெரும்பாலும் வீட்டிலேயே தன் கல்வியைக் கற்றுள்ளார். அவரது வர்க்கநிலை இங்கு முக்கியத்துவப்படுத்தப்பட வேண்டும். அவர் கலாநிதி ஐசாக் தம்பையாவின் மனைவியாகவும, ஜே. டபிள்யு. பார்குமாரகுல சிங்க முதலியாரின் மகளாகவுமிருந்து ஏனைய பல சமுதாயச் சலுகைகளை அவருக்கு அளித்தது. இவற்றின் பரிணாமங்கள் எவ்வாறு முக்கியமானதோ அவ்வளவுக்கு அவை அவரது நாவல்களிலும் பரிமளித்துள்ளது.
1914ம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நாவல்களுக்குப் பின் 1938ம் ஆண்டு அரியமலர் என்றொரு நாவலை இவர் உதய தாரகை என்னும் இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனாலும் அது தொடர்ந்து எழுதப்பட்டு முடிவு பெறவில்லை. இவர் அனுபவக் களஞ்சியம் என்ற ஒரு தொகுத்த கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டதாகத் தெரிகிறது. இதுவும் எனக்கு கிடைக்கவில்லை. நொறுங்குண்ட இதயம் என்பது விவிலிய வேதத்தில் எடுத்தாளப்பட்ட ஒரு சொற்பதம் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இலங்கையில் பெண்களால் எழுதப்பட்ட நாவல்களில் இது முதலாவது நாவலாக இருக்கும் என்பது எனது எண்ணம். சிங்களப் பெண்ணால் எழுதப்பட்ட முதல் நாவல் 1922ம் ஆண்டிற்குரியது.
வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றைத் தந்து செல்லும் இந்நாவல் ஆசிரியரின் சமுதாய விழிப்புணர்ச்சியை ஆங்காங்கே காட்டிச் செல்கின்றது. கதாநாயகியின் தகப்பன் காலனித்துவ ஆட்சி வரம்புகளுக்கு இணங்க மறுத்ததால் அரசாங்க சேவையிலிருந்து நீக்கப்படல், கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பட்டமை, யாழ்ப்பான மத்திய தரவர்க்கம், ஆங்கிலத்தை தங்களுடைய சமூக மேம்பாட்டிற்கும் ஏற்றத்திற்கும் ஒரு காரணியாக இனங்கண்டு, அதைத் தீவிரமாகக் கற்பதற்குக் கடல் கடந்து கல்கத்தா நகரத்திற்குச் சென்றமை, அசைவியக்கமற்ற யாழ்ப்பாணத்துக் கமத்தொழிலில் தங்கி உள்ள
4

பொருளாதாரம், கேரளத்து புகையிலை வியாபாரிகளில் தங்கி நின்ற புகையிலை வியாபாரம், சாதிக்குள்ளேயே நடக்கும் திருமணம், சீதன வழக்கம், சொத்துரிமை போன்ற செய்திகள் வரலாற்றுப் பாங்கு ள்ளனவாக ஆங்காங்கே தெறிக்கின்றன. இவை ஆசிரியர் சமூகப் பாங்குகளைத் தீவிரமாக அவதானித்துள்ளார் என்பதற்குச் சான்று பகர்கின்றது. வெளி நடப்புக்களில் அவருக்குள்ள ஈடுபாடும் இதனால் வெளி வருகிறது. குடும்பம், கணவன், குழந்தை, குட்டி, மனையியல் என்ற வட்டத்துக்குள் இவர் முடங்கியிருந்த தன் நிலை உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளல்ல இவை.
ஆண் நிலைச் சிந்தனைக் கூறுகள் சிலவற்றை ஆண் தலைமைத்துவ முறைமையின் வெளிப்பாடுகளாக ஆசிரியர் கூறிச் செல்கிறார். இவை பழமொழிகளாக சில இடங்களில் வெளிவருகின்றன. ஆண் கதாபாத்திரங்களே இதைக் கூறுகிறார்கள். தனது மகனின் காதலை நிராகரிக்கும் தந்தை, பெண்களுக்குச் சுதந்திரம் உண்டா? என்ற கேள்வியை எழுப்பி சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று விடை பகர்கின்றார்.
ஆடு நனைத்த இடத்திலா பட்டியடைக்கிறது என்கிறார். பெண்ணுக்குமொருமூச்சா? வெட்கமான வார்த்தையை வெளியில் விடாதேயும். பெண்புத்தி கேட்பாரிற் பேதையரில்லை.
என்கிறார். இங்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன். இது ஆண் கதாபாத்திரப் படைப்புக்கு ஏதுவாக, உகந்ததாக, அவர்களின் குணச்சித்திரத்தை வெளிப்படுத்தும் முகமாக கூறப்படுகின்றன என்றே நாம் கொள்ள வேண்டும். பெண்கள் வாயிலாக இவை இந்நாவலில் வெளிப்படவில்லை. ஆசிரியரின் அடிமட்ட அடித்தளக்கருவும் பெண் கதாபாத்திரப் படைப்புக்களும் இப் பழமொழிகள் இயம்பும் கருத்தியலிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகவில்லை என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
பொன்மணியின் கதாபாத்திரப் படைப்பு சமூக வரையறைகளை மீறியதாகவும் பெண்களுக்கென வகுக்கப்பட்ட குணாதிசயங்களை மீறியதாகவும் இருப்பது சற்றே வியப்பைத் தருவதாகவுமிருக்கிறது. ஆளுமை, தன்னம்பிக்கை, கருத்துச் சுதந்திரம், மற்றயோரில் தங்கி
5

Page 11
நில்லாமை, நேர்மை, தனக்குச் சரி என்று பட்டதைச் செயற்படுத்தும் திண்மை போன்ற பாரதியின் புதுமைப்பெண் இலக்கணத்துக்குள் இவை அடங்குவதாக இருக்கிறது. பெற்றோரிடம், தனக்கு என்று தான் தெரிவு செய்த மணாளனையே வரிக்க வேண்டும் என்று வாதிடும் பொழுதும் உண்மைக்கும் சத்தியத்திற்குமே நான் கட்டுப்படுவேன், காதலனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் கட்டாயமாக உங்களுக்காக மீறமாட்டேன் என்று கூறும் பொழுதும் தற்கால சினிமாக் கதாநாயகிகளைப் போல அழுது கண்ணிர் வடித்துக் கதறவில்லை. அவள் அவளது அபிலாசைகளை மீறி அவளுக்கென்று ஒரு கணவனைப் பெற்றோர் தேடிய பொழுது அவள் வீட்டை விட்டுப் பெற்றோரை விட்டு விலகி தன் காதலனுடன் சென்று விடுகிறாள். இங்கு காதல் உணர்ச்சிகளுக்கும் அப்பால் அவள் சத்தியத்தையே கடைப்பிடிக்கிறாள் என்ற அர்த்தம் தொனிக்க கதாசிரியர் தன் பெண் கதாபாத்திரத்தை படைத்திருப்பது கவனிக்கத்தக்கது. காதலனுடன் அவளது உறவிலும் வாழ்க்கை முறையிலும் கூட தன் உணர்வுமிக்க தன் இருப்பையும் தனக்கென்று ஆசைகளும் குறிக்கோள்களும் உண்டு என்று அவள் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறாள். அறிவு, திண்மை, நேர்மை போன்ற ஞானச் செருக்குடன் தன்னை இனங்காண வைக்கிறாள். அவள் காதலனுக்கெழுதும் கடிதத்தில், தானே சில விடயங்களை முடிவு செய்கிறாள். அதன் மொழி தர்க்கத்துடன் நியாயத்துடன் மிளிர்கிறது. அவற்றைச் சரி என்று காதலனும் ஏற்றுக்கொள் கிறான். அநேகமாக இங்கு உணர்ச்சிக்குழப்பங்கள் அறியாமை பேதமை போன்றன இல்லை. மத்தியதர தமிழ் கலாசார சூழலில் இப்படி ஒரு பெண் கதாபாத்திரப் படைப்பு எப்படித் தோன்றுகிறது?
பொன்மணியின் குணஇயல்பிற்கு ஒரு உதாரணம்.
உலகம் என்னைப்பற்றி நன்மையாகப் பேசிக்கொள்ளுமென்பது ஐயமானகாரியம். சிலருக்கு எனது செய்கை மிகவும் கூடாததாகத் தோன்றக்கூடும் ஆனால் நான் என்னுடைய மனதிற்கு நீதியென்று கண்டதைச்செய்தேன். -------------------
கணவனால் துன்புறுத்தப்படும் தன் தோழி கண்மணியை தன் துன்ப வாழ்வை விடுத்துக் கணவனை விட்டு விலகி அவளது பெற்றோரைச் சென்றடையும்படி ஆலோசனை கூறிப் பின்
6

வற்புறுத்துகிறாள். இவளைப்போல ஆளுமையும் செயற்பாட்டுத்திறனும் இல்லாது ஊசலாடும் கண்மணிக்கு இத்தகைய வற்புறுத்தல் தேவைப்படுகிறது.
வீடு, குடும்பம், மணவாழ்வு போன்ற புனிதங்கள் இவ்விரு பெண்களாலும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டன. 1914ம் ஆண்டில் இது நடந்தது என்பதை நாம் சற்று ஆழமாக அவதானிக்க வேண்டும்.
அன்பாக, பண்பாக, கீழ்ப்படிவாக, வாய்பேசாது தன் சுதந்திர உணர்வுகளை அடைவு வைத்து, கணவனுக்காக குடும்பத்துக்காக தன்னைத் தாரைவார்த்துக்கொண்டிருக்கும் கண்மணி என்ற கதாபாத்திரம் கூட குடும்பம் கணவன் என்ற பந்தத்திலிருந்தும் வன்முறையிலிருந்தும் பொருந்தாத திருமணத்திலிருந்தும் விலகுகிறது. குட்டக்குட்ட குனிய மறுக்கிறாள். தன் தாய் தந்தையரிடம் தன் குழந்தைகளைக் கூட விட்டு விட்டுச் சென்று விடுகிறாள். முன்னையவளைப்போல அதிகம் கதைக்காமல் ஆரவாரமில்லாமல் திடமான முடிவுடன் தன்னுடைய பிரயாணத்தை இரகசியமாக நிறைவேற்றுகிறாள். அவள் குழந்தைகளை விட்டுச்செல்வதுங்கூட ஒரு செய்தியைத் தருகிறது. குழந்தைகள் தாய்மைக்கு மட்டும்தான் பொறுப்புக்கள் அல்ல. அவளது இரகசியமான வெளியேற்றத்திட்டத்திற்கு குழந்தைகள் இடையூறாக இருக்கலாம். அவளது பெற்றோரும் அண்ணனும் அவளைத் தங்கள் வீட்டில் வரவேற்கிறார்கள். அன்புடன் உபசரிக்கிறார்கள். கணவனை விட்டு விலகியதற்கும் குழந்தைகளை விட்டு வந்ததற்கும் அவளுக்கு, கணவன், தாய்மை, வீடு, குடும்பம் என்பவற்றின் மேன்மை பற்றி உபதேசம் செய்ய யாரும் முன்வரவில்லை.
இந் நாவலின் ஏனைய பெண் கதாபாத்திரப் படைப்புக்கள் கூடச் சற்று வித்தியாசமானவை. கண்மணியின் கணவன் வீட்டுப் பெண்கள், அவள் கணவனிடங் குற்றங் கண்டு, கண்மணிக்கு ஆறுதல் கூறி ஆலோசனை நல்குபவர்களாக இருக்கிறார்கள். கணவனின் தாய் மிகவும் மனம் நொந்து, தனது மகனைக் கண்டித்து மருமகளை அணைப்பவளாக இருக்கிறாள். கண்மணிக்கு கணவன் அடிக்கும் பொழுது, கண்மணிக்கு ஆறுதல் மட்டுமே அவளால் கூறக் கூடியதாக இருக்கிறது. ஆனால் வயதில் குறைந்த, கணவனின், ஒன்றுவிட்ட சகோதரியான தங்கம்மா, கண்மணிக்கு சகல உதவிகளையும்
17

Page 12
செய்பவளாகவும் இறுதியில் கண்மணி வீட்டை விட்டு வெளியேறித் தனது பெற்றோரிடம் செல்லும்படி ஆலோசனை நல்கி, சகல ஆயத்தங்களையும் செய்கிறாள். அவளின் கூற்றாக ஒரு அபூர்வ வாசகம்.
“கண்மணி நீ எதுக் காயப் இவ்வளவு பாடுகளையும் இக்கட்டுகளையும் அனுபவித்துக் கொண்டு இங்கேயிருக்கிறாயென்று தெரியவில்லை. உனது புருஷன் உன்னை எப்போதாவது வீட்டுக்குப்போக உத்தரவளிப்பாரென்று நீ எண்ணியிருப்பது வீண். இந்த வாழ்வு இனிப்போதுமென்று வெறுத்துத்தள்ளி, உன் சீவன் தப்ப, கோட்டு மூலமாய்ப் பிரிந்து உன் தாய் சகோதரரிடம் ஒடிப்போ இங்கிலீசு இராச்சியம் என்னத்திற்கு இருக்கிறது? நீதியைச் செலுத்தவல்லவா? தெய்வ கட்டளைக்கமைந்து அவர் வழிகாட்டும் வரைக்கும் பொறுமையாய்ச் சகிப்பேனென்று சொல்லுவது புத்தியினம். கோட்டு மூலமாய்ப் பிரிந்து கொள்வதுதான், உனக்கு விருப்பமில்லையா? நீ சம்மதங் கொடுக்கக்கூடுமானால், இந்த நிமிஷம் உன் தமையனால் அதற்கேற்ற ஒழுங்குகள் செய்து உன்னை மீட்டுக்கொள்ளுவார்.
“கண்மணி நீ நிற்கும் நிலை மிகப் புத்தியீனமானதென்று ஆர்தான் சொல்வார்கள். புருஷனுக்கிடையிலும் மனைவிக்கிடையிலுஞ் சிலவேளைகளிற் பின்னி தங்கள், பேதம், முரண்பாடு உண்டாகும் வழக்கமுண்டு. ஆனால் உனக்குக் கிடைத்த நிலைபரத்தைப் போலொன்றை நான் இதுவரைக்குங் காணவில்லை. இப்படி மோசமாய் புருஷனால் வேண்டா வெறுப்பாய் நடத்தப்பட்டு தாங்கக் கூடாத துயரத்தை அனுபவிக்கும் பெண்ணை நான் கண்டதுமில்லை. உன்னைப்போல் மடைத்தனமாய் தன்னைப் புருஷனுக்கொப்படைத்தவள் எங்கேயினுமுண்டா?”
மங்களநாயகம் தம்பையாவின் பெண் கதாபாத்திரப் படைப்பு வித்தியாசமானவை. தர்க்கரீதியாகப் பிரச்சினைகளை எதிர் கொள்ளும் திண்மை உடையவர்களாக இருப்பது பெண்கள் உணர்ச்சி ரீதியில் எண்ணுபவர்கள் செயலாற்றுபவர்கள் என்ற கருதுகோளை உடைக்கிறது. அடுத்ததாக ஒரு மத்தியதர யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூக விழுமியங்கள் என்று கருதப்பட்ட குடும்பம், வீடு, தாம்பத்தியம், கணவன், குழந்தை பராமரிப்பு, தாய்மை போன்றன சில கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
8

இவை காலத்தை வென்ற கருத்துக்கள். இந்த விழுமியங்கள் பெண்ணுக்கு எதிராகச் செயற்படும் பொழுது அவற்றை நாம் நிராகரிக்கலாம். அவற்றுக்குள்ளேயே அமுங்கி, பெண்ணின் சுய இருப்பை, தன் மானத்தை இழக்கத்தேவையில்லை என்பது கதாசிரியரின் ஆணித்தரமான கருத்து.
இவ் விமர்சனத்தில், இறுதியில் நாம் எழுப்பும் கேள்வி, இது ஒரு பிரசார நாவலா என்பதே கதாநாயகியும் கணவனதும் குடும்பத்தவர் அனைவரும் இறுதியில் கிறிஸ்தவ மதத்தவராகிறார்கள். பாதிரியாரின் வருகை, அவரது போதனை, துக்கம் களைதல் போன்றன இந்து சமயப் போதாமைகளைச் சொல்லாமல் சொல்லி கிறிஸ்தவ மதத்தின் மேன்மையை எடுத்துச் சொல்கிறதா ? அப்படிச் செய்வது பெருங் குற்றமா? இதனால் நாவலின் தரம் குறைத்து மதிப்பிடப்பட வேண்டுமா? இவைகளைக் கேள்விகளாகவே நிறுத்திக் கொள்கிறேன்.
உசாத்துணை நூல்கள்.
Gilbert Sandra 1979 "The Mad women in the Attic' Susan Gilbert and Susan (jubar Yale University press, New Haven.
ilbert Sandra, 1986.”Feminist Criticism in the University” in an Interview in (icrald Graff Criticism in the University. North Western University press
Evanston.
Ostriker Alicia, 1986. Stealing the Language, Beacon Press Boston.
Showalter Elain 1979. “Towards a Feminist poetics' in Women Writing about Women Ed. M. Jacobus Croom Helm London.
Showalter Elain 1981 Feminist Criticism in the Wilderness Critical Iinquiry WintCr. Showalter Elain 1981"Feminist Criticism in the Wilderness' Critical inquiry, Winter.
Showalter Elain, 1992. "Feminism and Iiterature Literary Theory today.” Ed by Peter Collier and Helga Geyer Ryan.
9

Page 13
மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களும் இனத்தவமும்.
கமலினி கணேசன்
Dலையக மக்களுடைய சமூக மாற்றத்தினை விளங்கிக்
கொள்வதும் அவ்விளக்கத்தினுடாகப் பெண்களுடைய பங்களிப்பினை அவதானிப்பதும் இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். அவற்றின் பரிமாணங்களை இனங்காணுவது முக்கியமானது.
சமூக மாற்றமானது தானே நிகழ்வது எனும் கருத்தினை ஆரம்பகால சமூகவியலாளர்கள் முன்வைத்தனர். சமூக வகைகள் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுகின்றன என்ற சிந்தனை 18ம் நூற்றாண்டில் சமூக விஞ்ஞான வானில் நிலவியது. இச்சிந்தனை இயற்கை விஞ்ஞானங்களிலிருந்து குறிப்பாக உயிரியல் விஞ்ஞானங்களிலிருந்து ஆரம்பத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் சமூகவியலின் அணி மைக் காலச் சிந்தனைகளையும் கருத்துக் களையும் நோக்குகின்றபோது, சமூக மாற்றமானது மனிதர்களினாலும் மனிதக் குழுக்களினாலும் அவர்களுடைய செயற்பாடுகளினூடாகப் பிரக்ஞை பூர்வமாக இடம்பெறுகின்றது என்று வலியுறுத்தப்படுகின்றது.
மலையக மக்களுடைய சமூக மாற்றத்தில் இனத்துவம் பற்றிய சிந்தனை அல்லது குழுமத்தின் தனித்துவம் பற்றிய சிந்தனை இன்றைய பிரதான இடத்தை வகிக்கின்றது. இச்சிந்தனை, இலங்கையின் அரசியலிலும் பொருளியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றதெனவும் கூறலாம். இத்தகையதொரு சமூகமாற்றத்தில், பால்நிலை எத்தகைய இடத்தை வகிக்கின்றது என்ற கேள்வி இக்கட்டுரையின் பின்னாலுள்ள தேடலாகும். இன்னொரு விதமாகக் கூறின், சமூக மாற்றத்தின் கர்த்தாக்களாகப் பெண்களும் திகழ வேண்டும் என்ற பால்நிலை சார்ந்த ஆர்வம் வழிப்பட்டதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இக்கட்டுரையை நான்கு பிரதான பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது பகுதி, மலையக மக்களுடைய இனத்துவம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றியது. இரண்டாவது பகுதி இனத்துவம் எனும் பதத்திற்கான வரைவிலக்கணத்தைத் தேடும் முயற்சியை மையமாகக்
20

கொண்டது. மூன்றாவது பகுதி, பெண்களும் இனத்துவமும் பற்றிய கோட்பாட்டு ரீதியான சிந்தனையையும் மலையகத்தில் தோட்டப்புறங்களில் வாழும் பெண்களின் பிரச்சினைகளையும் ஆராய்கிறது. நான்காவது பகுதியில் மாற்றம் பற்றிய சிந்தனை மலையகத்தை மையப்படுத்தியதாக முன்வைக்கப்படுகின்றது.
பெண்களின் சுயாதீனமான இயக்கமும் அதுசார்ந்த செயற்பாடுகளும், பெண்களின் பிரச்சினைகளை அணுகத்தக்க வகையில் தோற்றம் பெறாதவரை, பெண்களின் பிரச்சினைகள் முழுமையாக அணுகப்படமாட்டாது என்ற வாதத்தையும், அங்கு பெண்கள் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படுவர் என்ற முடிவையும் இக்கட்டுரை முன்வைக்கின்றது.
மலையகமக்களும் இனத்துவமும்
இலங்கை அரசியலிலும் இலங்கைச் சமூகத்திலும் மலையக மக்களை தனித்த இனக்குழுவாக ஏற்க வேண்டிய தேவை பின்வரும் காரணங்களினால் ஏற்படுகின்றது.
இலங்கைச் சமூகம் இனத்துவ அரசியலினால் குணாம்சப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இவ்வினத்துவ அரசியலி, காலனித்துவ காலங்களிலிருந்து ஆரம்பமாகியது. இவ்வினத்துவ அரசியல் மலையக மக்களின் சமூகப் பொருளாதார இருப்பை பாதிப்பதாகத் தொழிற்படுகின்றது. அவ்வகையில் தமிழர் எனும் வகைப்பாட்டில் மலையகத் தமிழரை அடக்குகின்றபோது, அவர்களின் பிரச்சினைகள் முழு அளவிலே பிரதிபலிப்பதற்கான வாய்ப்புகள் அரிதாக உள்ளன.
இலங்கை வரலாற்றில் சிங்களவரைப் பெரும்பான்மையினர் எனவும் தமிழரை சிறுபான்மையினர் எனவும் குறிப்பிடும் போக்கு மேலோங்கியதாக உள்ளது. அவ்வகையில் மலையக மக்கள், முஸ்லீம்கள், பறங்கியர், வேடர் போன்ற குழுக்களின் தனித்துவங்கள் புறந்தள்ளப்படுவதுடன் உரிமைகள் மறுக்கப்பட்டும் வருகின்றன.
பெருந்தோட்ட முறைமையின் தன்மை, சமூகப் பண்பாட்டுக் காரணிகள், பிரஜாவுரிமைப் பிரச்சினை என்பவை, இலங்கையிலுள்ள ஏனைய இனக் குழுக்களிடமிருந்து பிரிந்த ஒரு குழுவாக மலையக மக்களை உருவாக்கியிருக்கின்றன.
2

Page 14
இனத்துவ அரசியலின் வரலாற்றை எடுத்து நோக்குகின்ற போதும் இலங்கையின் இனத்துவ உறவுகளை ஆராய்கின்ற போதும் மலையக மக்கள் பின்தள்ளப்பட்ட நிலையில் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. மலையகத் தமிழர் அன்னியர் எனும் மனப்போக்கும், அவர்கள் தொழிலாளர்கள் அதனால் நமக்குச் சமமானவர் அல்லர் என்ற மத்தியதர வர்க்கச் சிந்தனையும் இலங்கையின் ஏனைய குழுக்களிடமிருந்து வருகின்றது. இந்த மனப்போக்கு கொள்கை உருவாக்கல், நிர்வாக நடைமுறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அரசியலில் பிரதிபலித்தது.
இலங்கையில் வாழும் ஏனைய சமூகத்தவர்கள் அரசினுடாகப் பெற்று அனுபவிக்கின்ற வசதிகள், நன்மைகள், சமூகநலன்கள் தோட்டப்புறங்களிற்கும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. அடிப்படை உரிமை மீறல்கள் பல தோட்டப் புறங்களில் இடம்பெறுகின்றன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரவசதி எனப்பல விடயங்களில் இலங்கை முழுவதிலும் உள்ள முறைமைகளிற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
மலையக மக்களிற் பெரும்பான்மையானோர் தொழிலாளர்களாக இருக்கின்றனர். வரலாற்று ரீதியாகவும் இன்றைக்கும் இலங்கைக்குப் பெருந்தொகையான வருமானத்தை அவர்களே ஈட்டிக் கொடுக்கின்றனர். அத்தகைய நேர்நிலையான பங்களிப்பை ஆற்றுபவர்கள் அடிப்படை வசதிகளைப் பெறுவதில்லை. சுரண்டலுக்கு உட்படுகின்றனர். கீழ்நிலையில் உள்ளனர். இந்த முரண்பட்ட நிலைமை, பிரச்சினையை மிகவும் காத்திரத்தன்மையுடையதாக்குகின்றது.
மலையகத்தில் ஆய்வறிவாளர்கள், உயர்குழாத்தினர், மத்தியதரவர்க்கத்தினர், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை உள்ளடக்கிய ஒரு பகுதியினர் மலையக மக்களின் தனித்துவம், உரிமைகள், இனத்துவ இருப்பு போன்ற விடயங்கள் பற்றிய சிந்தனையில் ஈடுபடுவதனையும் அச்சிந்தனையை ஒட்டியதான கலந்துரையாடல்களை நடாத்துவதனையும் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது. மலையக மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள், கட்டுரைகள் போன்றவை நூல்களாகவும் பத்திரிகைகளிலும் வெளிவருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
22

மேற்கூறியவற்றினுடாக இனத்துவம் என்பது ஒரு செயற்பாடாக மலையக மக்களினால் முன்வைக்கப்படுகின்றமை புலப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட குழுமம், தங்களது அடையாளத்தினைத்தாமே தேடிக்கொள்கின்ற, வெளிப்படுத்துகின்ற செயற்பாடாக இதனை நோக்கலாம். இவ்வாறான சுயவிழிப்புணர்வென்பது மலையக மக்களுடைய இனத்துவ இருப்பினை ஸ்திரப்படுத்துவதாக உள்ளது. எழுபதுகளிற்குப் பின்னரே மலையகத்தில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்து, இலங்கையில் மலைநாடு தவிர ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழர்களும் இக்குழுமத்தில் அடங்குவர் என்பது இத்தகைய இனத்துவ எழுச்சியில் முன்வைக்கப்படும் வாதமாக உள்ளது.
இப்போக்கு இதுவரை காலமும் இருந்துவந்த வர்க்கச் சிந்தனையிலிருந்து மாறுபட்ட ஒன்றாக அமைகின்றது.
இனத்துவம் எனும் பதத்திற்கான வரைவிலக்கணம்.
இனத்துவம் என்பது வர்க்கம், சாதி, பால்நிலை போன்ற ஒரு சமூகக் குணாம்சமாகவே சமூக விஞ்ஞானங்களில் விளங்கிக் கொள்ளப்படுகின்றது. சமூக நிலைமைகளை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் எண்ணக்கருவாக அதனைக் கொள்ளலாம். இவ்வெண்ணக்கரு எவ்வகையிலும் முரண்பாட்டை வளர்த்தெடுக்கும் அல்லது ஆதிக்க நிலையை வளர்த்தெடுக்கும் ஒன்றாக அமையாது. சமத்துவத்திற்கான தேடலின் மையமாக இப்பதத்தை நாங்கள் பிரயோகிக்கலாம். இனத்துவம் சார்ந்த ஒரு சிந்தனையும் செயற்பாடும், இவைகளிற்கிடையேயான சமத்துவத்தையும் ஒரு இனக்குழுவிற்குள் உள்ள அங்கத்தவர்களின் சம உரிமையையும் வலியுறுத்துவதாகும்.
இனத்துவம் எனும் பதம் இனவாதம் எனும் பதத்திலிருந்து பிரித்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும். இனவாதமானது அசமத்துவத்தையும் மேலாதிக்க நிலைமையையும் சுட்டி நிற்கும்.
இனத்துவத்தை ஒரு இலக்கு சார்ந்த செயற்பாடாகவும் கொள்ளலாம். இனக்குழு என்பது பண்பாட்டு ரீதியில் வித்தியாசமானதும் தனித்துவமானதுமான ஒரு குழுவாகும். இக்குழு அங்கத்தவர்கள் எல்லோராலும் பகிரப்படுகின்ற பண்பாட்டியல்களையும் அவை சார்ந்த
23

Page 15
சமூக நிறுவனங்களையும் குறித்து நிற்பதாக இனத்துவத்தை கொள்ளலாம். இதை ஒரு ஆரம்ப வரைவிலக்கணமாக இவ்விடத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு இனக்குழுவினை அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடியதும் ஆர்வங்களை வெளிப்படுத்தக் கூடியதுமான சுயபிரக்ஞை அடைகின்ற ஒரு செயற்பாடாக இனத்துவத்தைக் கொள்ளலாம்.
இனத்துவம் என்பது அரசியலுடன் இணைந்த ஒரு விடயமாகும். இனக்குழுக்களாவன ஏற்கனவே உருவாக்கப்பட்ட முறைமை சார்ந்த கட்டமைப்பில் அதிகாரத்திற்காகப் போராடுகின்ற குழுக்களாகும். பெரும்பாலும் அரசியல் தனித்துவத்திற்கான கோரிக்கையை சிறுபான்மையினர் முன்வைக்கின்ற போது பிரதானப்படும் ஒரு பதமாக இருப்பதால் அது பிரதிநிதித்துவத்தின் அரசியலையும் சுட்டி நிற்கும். பிரதிநிதித்துவம் என்பது ஏனைய இனங்கள் சார்ந்து எழும் மேலாதிக்க நிலைமைகளிற்கு முகம் கொடுப்பதுடன் குறிப்பிட்ட இனத்தினுள் எழும் மேலாதிக்க நிலைமைகளையும் அணுகுவதாக அமையும்.
இனத்துவம் என்பது ஒரு அடிப்படை அடையாளமாகவும் உள்ளது. ஒரு ஆளின் அடிப்படைக் குழு அடையாளத்தினைத் தீர்மானிப்பதாக இனத்துவம் அமைகின்றது. குறிப்பிட்ட அடையாளத்தினை எடுத்துக் கொள்பவருக்கு எதிராக அல்லது அதனை உறுதிப்படுத்துபவரிற்கு எதிராக சமூக பொருளாதார விடயங்கள் மாறிச்செல்கையில் இவ்வடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்.
சமூக விஞ்ஞானிகள் இன உணர்வை ஒரு உணர்வுபூர்வமான மாறியாகக் கொள்வர். இன உணர்வின் தீவிரமும் முக்கியத்துவமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் நிர்ணயிக்கப்படுவதாக உள்ளன. அடையாளங்கள் சிக்கலானவை. அவை பல்தன்மையுடையவை. அவை வரலாற்றினுடாகத் தோற்றம் பெறுகின்றன. இவ்வரலாறானது அரசியல், பண்பாடு, பொருளாதாரம் போன்ற சமூகக் காரணிகளினால்த் தீர்மானிக்கப்படுகின்றன. அவ்வகையில் இனத்துவம் எனும் பதம், அது முக்கியத்துவம் பெறும் சூழ்நிலைசார்ந்து அர்த்தத்தைப் பெறுகின்றது. மேற்கூறியவாறு இனத்துவம் எனும் பதம் தனிமையில் விளங்கிக் கொள்ளப்பட முடியாத ஒரு மாறியாகும். இனத்துவமானது ஒரு செயற்பாடாக ஏனைய சமூகக் குணாம்சங்கள் சார்ந்ததாக சித்தரிக்கப்படக் கூடியதாகும். அவ்வாறு ஏனைய குணாம்சங்களாக வர்க்கம், சாதி, பால்நிலை போன்றன அமைகின்றன. இனத்துவத்தினை ஒரு சமூகச் செயற்பாடாக வரைவிலக்கணஞ் செய்யும்போது ஏனைய
24

சமூகக் குணாம்சங்கள் சார்ந்த செயற்பாடுகள், இக்குறிப்பிட்ட செயற்பாட்டினை எவ்வாறு ஊடறுக்கின்றன என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். அவ்வகையிலே தான், நாங்கள் பால்நிலை பற்றி இச் சூழ்நிலையில் சித்தரிக்கின்றோம்.
இனத்துவம் எனும் காரணியின் வரையறைகளும் பிரச்சினைகளும்
இனத்துவம் எனும் எண்ணக்கரு, அது சார்ந்த செயற்பாடுகளுடன் இணைத்துச் சிந்திக்கின்றபோது பிரச்சினைக்குரிய தொன்றாகவும் விளங்கிக் கொள்ளப்படும். நிலவுகின்ற சமூக அமைப்புக்களில் இனத்துவம் சார்ந்ததாக முனைப்புப்பெறும் சமூகநிலைமைகளையும், சமூக இயக்கங்களையும் ஆராய்ந்து பார்த்தால், இனத்துவமானது பிரச்சினைக்குரிய மாறியாகத் தொழிற்படுவதை அவதானிக்கலாம். இனத்துவ முனைப்புப் பெற்ற போராட்டங்கள், ஒரேமாதிரியாகக் கலை அடிப்படையாக் கொண்டு செயற் படுகின்றன. அதாவது இனத்துவக் குழுவிற்குள் இருக்கும் ஏனைய காரணிகள் சார்ந்த பிரச்சினைகளை இனத்துவப் பிரச்சினைபோல ஆக்கிக் கொள்தலை ஒரே மாதிரியாக்கல் என்கிறோம். இதனால் இனத்துவக் குழுவிற்குள் எழும் ஏனைய சமூகக் குணாம்சங்கள் சார்ந்த பிரச்சினைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அவற்றிற்கு இரண்டாவது இடத்தைக் கொடுப்பதாகவுமே அநேக இனத்துவம் சார்ந்த இயக்கங்கள் இயங்கி வருகின்றன. அவ்வகையில் ஒரு இனத்துவக் குழுவிற்கு உள்ளே எழும் முரண்பாடுகள் இன்று முனைப்புப் பெறுவனவாக உள்ளன.
யார் இந்த இனத்துவப் போராட்டங்களின் அரசியலை வழிநடத்திச் செல்கின்றனர்? இவ்வியக்கங்கள் வழிநடத்தப்படுகின்ற வடிவம் என்ன? என்பன பிரதான கேள்விகளாக இவ்விடயத்தில் கேட்கப்படுகின்றன. இத்தகைய சிக்கலை மையப்படுத்தியதாகவே பெண்களும் இனத்துவமும் எனும் தலைப்பிலானதொரு விடயம் ஆரம்பமாகின்றது.
பெண்களும் இனத்துவமும்.
இனத்துவமும் பாலி நிலையும் சமூகத்தின் இரு
குணாம்சங்களாகும். இவ்விரு குணாம்சங்களும் குழுக்களினதும்
தனிமனிதர்களினதும் அடையாளங்களைத் தீர்மானிப்பவையாக உள்ளன.
இவை சமூக இயக்கங்களின் பின் நின்று தொழிற்படும் காரணிகளாக 25

Page 16
அமைகின்றன. இக்காரணிகளின் முனைப்பு, அவை ஒன்றை ஒன்று ஊடறுக்கும் தன்மை, அவை சார்ந்த பிரச்சினைகள் எனக்குறிப்பிட்ட சமூக சூழ்நிலை சார்ந்ததாக இவையிரண்டினதும் தொடர்பு ஏற்படுத்தப்படுகின்றது.
பெண்களை இரண்டாம் பட்ச ஆட்களாகக் கருதும் செயற்பாடு காலாகாலமாக இருந்துவரினும் பெண்களுடைய கல்வியறிவு, பெண்கள் வேலைக்குச் செல்லுதல், சர்வதேச ரீதியில் நடைபெற்றுவரும் பெண்நிலைவாத செயற்பாடுகளின் தொடர்பு ஏற்படுதல் பெண்கள் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வடைதல், அணிதிரள்தல் போன்ற காரணிகளினால் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பெண்களின் போராட்டங்களும் இயக்கங்களும் தோற்றம் பெறுகின்றன.
மரபு ரீதியாகப் பல சமூகங்களில் பெண்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள போராடி வந்துள்ளனர. எனினும் காலப்போக்கில் அவை பால்நிலை சார்ந்த இயக்கங்களாக நவீன அர்த்தத்தில் மாற்றமடைந்து முறைமையான போராட்டங்களாக உருவெடுக்கின்றன. சில சமூகங்களில் இம்மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. ஏனைய சமூகங்களில் அவை மெதுவாக நடைபெறுகின்றன. பொதுவாகக் கீழைத்தேய சமூகங்களில் பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு சார்ந்த இயக்கங்கள் மெதுவான வளர்ச்சியையே உடையன. பெண்நிலை இயக்கங்களைச் சமூகத்தில் எல்லோரும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. ஏற்கனவே காலங் காலமாக இருந்து வருகின்ற இரண்டாம்பட்ச நிலைமையின் தாக்கமாகவே இத்தோற்றப்பாடு அமைகிறது. மாறாக, சமூகத்தில் ஆண்களால் முன்னெடுக்கப்படும் இயக்கங்கள் துரிதமாகவும் பரவலாகவும் தீவிரமடைகின்றன. ஆண் முனைப்புச் சமூகத்தில், பெண்கள் உயர்ச்சியடைவதற்கான பக்கபலமான முறைகள் இல்லாதிருப்பது இதற்குக் காரணமாகும்.
பெண் எனும் அடையாளத்தினை மையப்படுத்தியதான போராட்டங்கள் அல்லது இயக்கங்கள் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்டதாக இருப்பினும், ஒரு நாட்டிற்குள் இருக்கும் வெவ்வேறு பெண்நிலை இயக்கங்களிடையே தொடர்புகள் இருக்கும். பெண்களை இரண்டாம் பட்சமாக்கல் எனும் செயற்பாடு உலகம் முழுவதும் (வெவ்வேறு வடிவங்களையும் அளவுகளையும் கொண்டிருப்பினும்) காணப்படுவதால் இத் தொடர்புகள் அவசியமானவையாக இருக்கின்றன.
26

அவ்வகையில் ஒரு சமூகத்தில் பெண்களின் பிரச்சினைகள் போராட்டமாக முனைப்புப் பெறுவது இனத்துவப் போராட்டங்களுடன் ஒப்பிடும்போது பொதுவானதாக அமையினும் அவை இனத்துவ எல்லைகளைச் சுரண்டிப் பார்ப்பனவாகவும் அமைகின்றன. இனத்துவப் போராட்டங்கள் பொதுவாக ஆண்களாலேயே முன்னெடுக்கப்படுகின்றன. பின்னர் நீண்ட காலப்போக்கில் பெண்கள் பகுதி ஒன்று அதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றது. இப் போராட்டங்களில் பெண்கள் தலைவிகளாக இருப்பதோ அல்லது பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வுடன் பிரதான வழிநடத்துனர்களாகப் பெண்கள் இருப்பதோ அரிதாக உள்ளது.
மேலும் இனத்துவம் என்பது இனத்துவப் போராட்டங்களில் முதன்மைப்படுத்தப்படும் அடையாளமாக உள்ளது. அவ்வகையில் இனத்துவ அடையாளத்தினை வலியுறுத்தும் இயக்கம் ஒன்றிற்கு ஏனைய அடையாளங்கள் இரண்டாம் பட்சமானவை. அவ்வகையில் பால்நிலை அடையாளமும் இனத்துவ முனைப்புப் பெற்ற போராட்டம் ஒன்றில் இரண்டாம் பட்ச இடத்தைப் பெற வாய்ப்புண்டு. பெண்களை இனத்துவம் தொடர்பான பிரச்சினைகள் தாக்குவதில்லை என நாம் கொள்ள முடியாது. ஆனால் இனத்துவம் தொடர்பாக அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுடன் ஆண் தலைமைத்துவச் சமூகம் தொடர்பான பிரச்சினைகளையும் அவர்கள் தமது சமூகத்திலும் பரந்த சமூகத்திலும் எதிர் கொள்கின்றனர். இரண்டு பிரச்சினைகளுமே பெண்களிற்கு முக்கியமானவை. அவர்கள் ஒன்றை விடுத்து மற்றதை வலியுறுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
பொதுவாக இனத்துவ அடையாளத்தை வலியுறுத்த முயல் கின்றபோது அவ்வினத்துவத்திற்கான பணி பாட்டு அடையாளங்களை வலியுறுத்துவது இனத்துவ இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்பாடாகும். பண்பாட்டுச் சின்னங்களின் சுமைதாங்கிகளாக அநேக சந்தர்ப்பங்களில் பெண்கள் இயங்கி வருகின்றனர். பண்பாட்டின் கூறுகள் பல பெண்களிற்குப் பாதகமாக அமையினும் அவை பற்றிய விமர்சனங்கள் இன்றி அவற்றின் தொடர்ச்சி வலியுறுத்தப்படுகின்றது.
மேலும் போராட்டம் வலுவடைந்து ஆயுதப் போராட்டமாக உருவம் எடுக்கின்றபோது போருக்கு ஆட் சேர்த்தல், சனத்தொகையை அதிகரித்துக் கொள்ளல் போன்றவற்றிற்குப் பெண்களின் மீள் உற்பத்திச்
27

Page 17
செயற்பாடு அவசியமாகின்றது. மறுபுறத்தில் ஆதிக்கம் செலுத்தும் இனத்தின் செயற்பாடுகள் வேண்டும் என்றே சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நினைப்பதால் தமது தீர்மானங்களை பெண்கள் மீது சுமத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்களின் பிரச்சினைகள் இனத்துவம் சார்ந்தவையாகத் தீவிரமடைகின்றன.
இனத்துவ அடையாளமா? பால்நிலை அடையாளமா? குறிப்பிட்ட நிலைமையில் முனைப்புப் பெறுகின்றது என்ற கேள்வி மிகவும் சிக்கலானதாகும். பொதுவாக இனத்துவ இயக்கங்கள் பால்நிலை அடையாளத்தினை இனத்துவ அடையாளத்துள் அடங்கும் பல அடையாளங்களுள் ஒன்றுதான் என்ற வாதத்தை முன் வைப்பர். இது மிகவும் கவனமாக அணுகப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் பெண்களைத் தனிநபர்களாக எடுத்துக்கொள்ளும் போது, இனத்துவம் சார்ந்த மேலாதிக்க நிலைமைகளுக்கு அவர்கள் எவ்வகையில் முகம் கொடுக்கின்றனர்? இந்த இரண்டினையும் எவ்வாறு இணைத்துக் கொள்கின்றனர்? போன்ற கேள்விகள் சிக்கலானவையே. குறிப்பிட்ட சமூக சூழ்நிலைக்கு ஏற்ப மேலாதிக்க நிலைமைகளின் தன்மைகளிற்கமைய இவை மாறுபட்டு அமைகின்றன.
பெண்களின் பிரச்சினைகளையும் இனத்துவத்தையும் இணைத்துச் சிந்திக்கின்றபோது பல இனத்துவப் போராட்டங்களில் பெண்களின் பிரச்சினைகள் பின்தள்ளப்படுகின்றன என்பதைப் பல பெண்நிலை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். உதாரணமாக, தேசியவாதச் சூழ்நிலைகளில் பெண்களைப் போராடத் துாண்டியவர்கள் கூடுதலான சவால்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
மலையகத் தோட்டப் புறங்களில் வாழும் பெண்களின் நிலைமையும் பிரச்சினைகளும்.
மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்கள் எனும் பொருள் வகுப்பினை எடுத்துக் கொண்டால் சில விசேட குணாம்சங்களை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உலகின் பெருந்தோட்டங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் காணமுடியாத வகையில் மொத்த வேலைச் சக்தியில் 50% பெண்களாகக் காணப்படுதல் பிரதான குணாம்சம். மேலும் தோட்டங்களில் வாழும் 90% மாணவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். வீட்டிற்குக் கூடுதலான வருவாயை ஈட்டித் தருபவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர்.
28

பெருந்தோட்டத் துறையானது முற்று முழுதாக ஏற்றுமதியுடன் சம்பந்தப்பட்ட ஒரு துறையாக இருக்கின்றது. இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தருகின்ற ஒரு உற்பத்தித் துறையாகத் தேயிலை உற்பத்தி இருக்கின்றது. தொழிலாளர்களின் பங்களிப்புத் தேயிலை உற்பத்தித் துறையில் பிரதானமானதாகும். அவ்வகையில் இலங்கை அரசியற் பொருளாதாரத்தினை, உலக முறைமையுடன் இணைக்கின்ற பங்கினைப் பெண் தொழிலாளர்கள் ஆற்றி வருகின்றனர்.
மலையக அரசியல் தொழிற் சங்கங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலான தொழிற் சங்கங்கள் அரசியற் கட்சிகளாகவும் தொழிற்படுகின்றன. பெண்களிற் கூடுதலானவர்கள் தொழிலாளர்களாக இருப்பதனால் அவர்கள் தொழிற்சங்க அங்கத்தவர்களாக இருக்கின்றனர். அதனால் தொழிற்சங்கத்திற்குச் சந்தா செலுத்துபவர்களாகவும் தமது வாக்குகளைக் குறிப்பிட்ட அரசியற் கட்சிகளிற்கு வழங்குபவர்களாகவும் இருக்கின்றனர். அவ்வகையில் பெண்கள், தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்களாக இருப்பது கட்சிகளின் இருப்பிற்கு அவசியமானதாகும்.
பெண்கள் தொழிலாளர்களாக இருக்கும் அதே சந்தர்ப்பத்தில் வீடுகளில் மனையாள் என்கின்ற செயற்பாட்டையும் ஆற்றுகின்றனர். பெண்களுடைய உற்பத்தி மீள் உற்பத்திச் செயற்பாடு என்பது பெருந் தோட்டங்களைத் தொடர்ந்து தக்கவைப்பதாக அமைகின்றது.
மேற்குறிப்பிட்ட நேர்நிலையான பங்களிப்புக்களை ஆற்றுகின்ற பெண்களுடைய அந்தஸ்து தாழ்ந்த நிலையில் உள்ளதென்பது ஒரு முரண்பாடுடைய உண்மையாகும். அவ்வாறான முரண்பட்ட சூழ்நிலை பற்றியும் அதன் பின்னாலுள்ள கருத்தியலையும் ஆராய வேண்டியுள்ளது. இவ்விதத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்திற்குரியனவாகும்.
பெண்கள் மேற்குறிப்பிட்ட உற்பத்தி , மீள் உற்பத்திச் செயற்பாட்டினைத் தொடர்ந்து ஆற்றுவதால், அவர்கள் இரட்டைச் சுமையை எதிர் நோக்குபவர்களாக இருக்கின்றனர். அத்துடன் பால்ரீதியான தொழிற்பிரிப்பு என்பது வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டு தொழிற்படுகின்றமையால், பெண்களின் வேலைப்பளு, அதிகரித்த வகையில் இருக்கின்றது. மேலும் ஆண்களினதும் பெண்களினதும் ஓய்வுநேரம், சுகநலன், புறக்கிருத்தியச் செயற்பாடுகள் என்பவற்றை பால்ரீதியான தொழிற்பிரிப்பு, சமனற்றதாக ஆக்குகின்றது.
29

Page 18
சமசம்பள முறைமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் ஆண்களின் தொழிலின் தன்மையிலும் பெண்களின் தொழிலின் தன்மையிலும் வேலை நேரத்திலும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் பொதுவாகவே தோட்டங்களில் சுரண்டலுக்குட்படுகின்றனர். இலங்கையின் ஏனைய தொழிற்துறைகளைப் போல் மாதச்சம்பள முறைமை அறிமுகப்படுத்தப்படாமை, மோசமான வேலைச் சூழ்நிலை, மோசமான வசிப்பிட சூழ்நிலை என்பன சுரண்டலை எடுத்துக்காட்டும் உதாரணங்களாகும். இத்தகைய சூழ்நிலை ஆண்களையும் பெண்களையும் ஒரேமாதிரிப் பாதிப்பதில்லை. பெண்களை இத்தகைய சூழ்நிலை மோசமானதாகப் பாதிக்கின்றது.
குடும்பத்தின் பண்பாடு சார்ந்த ஒரு விடயமாக நோக்குவோம் ஆயின், மலையகத்திலும் ஆண்முனைப்பு நோக்கை வெளிப்படுத்தும் குடும்ப அமைப்பு முறையைக் காணக்கூடியதாக உள்ளது. ஆண்கள் குடும்ப அமைப்பின் தலைவர்களாகக் கருதப்படுதல், ஆண்களின் வழியில் சொத்துக் கைமாறுதல் (விதி விலக்குகள் இருப்பினும் போன்றன இதற்கு உதாரணங்களாகும். கூடுதலான சந்தர்ப்பங்களில் குடும்பமானது வன்முறைக்குரிய ஒரு தளமாகக் காணப்படுவதையும் தோட்டப் புறங்களில் அவதானிக்கலாம். அந்த மதுபாவனையின் விளைவுகள் இவற்றுடன் தொடர்புடையன. தகாத பாலியல் உறவுச் சம்பவங்களும் தோட்டப்புறங்களில் நிகழ்கின்றன. இவற்றினால் பெண்களும் குழந்தைகளும் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர்.
தோட்டப் புறங்களில் வேலை, குடும்பம், அரசியல் என்ற எந்தத் தளத்தை எடுத்துக் கொண்டாலும் படிமுறை அமைப்பில் பெண்கள் கீழ்மட்டத்தில் உள்ளனர். கணவன், சகோதரர்கள், கங்காணிகள், அலுவலர்கள், தொழிற் சங்கத்தலைவர் என எல்லா மட்டத்திலும் ஆண்களே உயர் பதவிகளை வகிக்கின்றனர். பெண்கள் எப்பொழுதும் ஆண்களுடைய தீவிர கண்காணிப்பிலும் அவர்களுடைய கட்டுப்பாட்டிலும் இருக்கின்றனர்.
பெருந் தோட்டங்களில் நிலவும் சட்டங்கள் சார்ந்ததும் கொள்கைகள் சார்ந்ததுமான நடைமுறைகள் தெளிவற்றனவாக இருக்கின்றன. ஊதிய முறை,மேலாதிக்க கொடுப்பனவு, லீவு எடுத்தல், வேலையால் விரட்டப்படுதல், பிரசவ விடுமுறை, பிரசவக் கொடுப்பனவு, ஓய்வுபெறுதல், சேமலாபநிதியைப் பெறுதல் போன்றவை தொடர்பாக பல பிரச்சினைகள் இருக்கின்றன. இன்னது இன்ன முறையில்
30

நடைபெறுகின்றது என்ற கொள்கைகள் சார்ந்ததும் அவற்றின் நடைமுறைகள் சார்ந்ததுமான முறைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நடைபெறுவதில்லை. அத்துடன் காலத்தினடிப்படையிலும் இடத்தினடிப்படையிலும் இவற்றை அமுல்படுத்துவதில் முரண்பட்ட தன்மை காணப்படுகின்றது.
தொழிற்சங்கங்களில் பெண்கள் பெருந்தொகையான அளவில் அங்கத்தவர்களாக இருந்தும் பெண்களின் பிரச்சினைகள் தொழிற் சங்க நடவடிக்கைகளில் போதியளவு பிரதிபலிப்பதில்லை. பெண்கள தொழிற்சங்கங்களில் உயர் பதவிகளை வகிப்பதில்லை. சங்கங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் மாதர் சங்கங்கள் எனும் பிரிவு ஆண்களின் கட்டுப்பாட்டிற்குக் கீழ்ப்பட்ட ஒரு பகுதியாகும். தோட்ட மட்டத்தில் மாதர் சங்கத் தலைவிகள் எப்பொழுதும் சங்கத் தலைவர்களிற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கின்றனர். மாதர் சங்கத் தலைவிகளின் செயற்பாடுகள், பெண்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் செய்யும் கடமைகளைப் போன்ற பால்நிலைவகி பங்கை வலியுறுத்துவனவாக அமைகின்றன.
மேற் கூறியவாறு பெண்கள் ஏன் கீழ் நிலைக் குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனப்பார்க்கின்ற போது சமூகத்தில் நிலவும் பால்நிலைக் கருத்தியலின் வரலாற்று ரீதியான நிகழ்வுகளால்த்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதைக் காணலாம். இவை மலையக சமூகத்தினர் பண்பாடு சார்ந்ததாகவும், முதலாளித்துவ முறைமை சார்ந்ததாகவும் அமைகின்றன. இவை இரண்டுடனும் சாதி, இனத்துவம் போன்ற காரணிகள் இணைந்து செயற்படுவதால் இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாவற்றினதும் முழுமையாகத்தான் பால்நிலைக் கருத்தியல் ஸ்தாபனப்படுத்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாகத்தான் இக் கீழ் நிலை உருவாகியது
தோட்டத்துறை சார்ந்த பெண்களும் மாற்றம் பற்றிய சிந்தனையும்
தோட்டங்கள் மூடிய முறைமையாக இருக்கின்றனவா, இல்லையா எனும் விவாதம் பெருந்தோட்டங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்பவரிடையே இருந்து வருகின்றது. எவ்வளவிற்கெவ்வளவு தோட்டங்கள் திறந்த முறைமையாகின்றனவோ அவ்வளவிற்கல்வளவு பெண்களின் வாழ்க்கை நிலைமைகளிலும் மாற்றங்கள் ஏற்படவாய்ப்புன்டு.
3.

Page 19
மார்க்சிச அடிப்படையிலான இலாபம் தொடர்பான கருத்து இன்றைக்கும் பெருந்தோட்டங்களுக்குப் பொருந்துவனவாக உள்ளன. அதாவது எவ்வளவிற்கெவ்வளவு தொழிலாளர் சுரண்டப்படுகின்றனரோ அவ்வளவிற்கல்வளவு முதலாளிகள் இலாபம் உழைக்கின்றனர் என்ற கருத்து இன்றைக்கும் பொருத்தமானதாக உள்ளது. அவ்வகையில் மூடிய முறைமை சுரண்டலைத் தக்கவைக்கும் எனும் கருத்தை நாங்கள் மலையகச் சூழலில் அறிமுகப்படுத்தலாம். மூடிய முறைமையில் பால்நிலைப் பாரபட்சம் இலகுவாகப் பேணப்படுவதையும் நாம் அவதானிக்கலாம்.
தோட்டங்களில் இன்றைக்குப் பாரியமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன எனவும் மலையக சமூகம் மாற்றத்திற்குட்பட்டு வருகின்றது எனவும் கூறப்படும் கருத்துக்கள் மிகவும் அர்த்தமுடையனவாகும். குறிப்பாக மலையக மக்கள் வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டமை (இன்னமும் வாக்குரிமை தொடர்பான பிரச்சினைகள் இருப்பினும்) இத்தகைய மாற்றங்களிற்குப் பிரதான காரணமாகும். வாக்குரிமையூடாகத் தொழிற்சங்கங்கள் பலம் பெற்றமை, கட்சிகள் பலம் பெற்றமை, அவற்றினுாடாக அரசியலில் மலையக மக்களின் இனத்துவம் பற்றிய சிந்தனை தோற்றம் பெற்றமை எனப்பல மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின, தவிர தோட்டங்களின் நிர்வாக முறைமையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வைப் பாதிப்பனவாக உள்ளன. கல்வி நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதனால், மத்தியதர வர்க்கம் ஒன்று மலையகத்தில் உருவாகி வருகின்றது. எனினும் அத்தகையதொரு மாற்றம் நகரங்களிலேயே கூடுதலாக ஏற்படுகின்றது, கட்டமைப்பு ரீதியான பாரியமாற்றங்கள் தோட்டங்களில் ஏற்படவில்லை. அவ்வகையில் இன்னமும் மூடிய முறைமை எனும் பதப்பிரயோகம் தோட்டங்களிற்குப் பொருத்தமானதாக உள்ளது. மூடிய முறைமை ஒரு குறிய மட்டத்திற் செயற்படுகின்றதாயினும் தொழிலாளரின் அன்றாடவாழ்வைப் பாதிக்கும் ஒன்றாக அமைகின்றது. மறுபுறத்தில் பரந்தமட்டத்தில் தேயிலை ஏற்றுமதியுடன் தொழிலாளர் உலகமுறைமையுடன் பிணைக்கப் பட்டுள்ளனர். தேசிய வருமானத்தில் பெரும்பங்களிப்பவர்கள் எனும் வகையிலும், வாக்களிப்பவர்கள் எனும் வகையிலும் தேசத்துடன் இணைந்துள்ளனர். இப்பரந்த நோக்கு, தொழிலாளரின் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளைக் கருத்திற் கொள்கின்றபோது வலுவற்றதாகின்றது. ஏனெனில் மூடிய முறைமையின் தாக்கம் தொழிலாளரின் அன்றாட வாழ்வில் மிகப் பெரிதாக உள்ளது. பரந்த அளவில் தொழிலாளர் கொண்டுள்ள இணைப்புகளையும்
32

உறவுகளையும் மூடிய முறைமையானது வெளித்தெரிய விடாமல் மறைத்து வைத்துள்ளது. கட்டமைப்பு ரீதியாகப் பாரிய மாற்றங்கள் தோட்டத்தவர்களுக்குள்ளே பாரிய அளவில் ஏற்படாமைக்கு இனரீதியான காரியங்களும் பங்களிப்புச் செய்கின்றன. தோட்டங்களிற்கு வெளியே சென்று தொழிலாளர் வசிப்பதற்கு அச்சப்படுவதை உதாரணமாக இவ்விடத்தில் கொள்ளலாம்.
மாற்றங்கள் பெண்களின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிதல் இங்கு அவசியமானதாகும். தோட்டத் தொழில் செய்யும் பெண்களைப் பொறுத்தவரை மாற்றங்களைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
முன்னைய காலங்களை விட ஒப்பீட்டளவில் கூடுதலான பெண்கள் 10ம் ஆண்டு 11ம் ஆண்டு வரைக்கும் கல்வி கற்கின்றனர். 11ம் ஆண்டு சித்தியடைந்தவர்களில் ஒரு சிலர் உயர்தரம் படிக்கின்றனர். உயர்தரம் படிக்க விரும்பாதவர்கள் தோட்டப் பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுகின்றனர். உயர்தரம் சித்தியடைந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஓரளவிற்கு நல்ல பெறுபேறுகளுடன் உயர்தரம் சித்தியடையவர்கள் மரீபாதக் கல்லூரியில் கல்வி பயில்கின்றனர். இந்நிலைமை ஓரளவிற்குக் கல்வி வாய்ப்புள்ள தோட்டங்களில் மட்டும்தான் நிலவுகின்றது. 10ம் ஆண்டு, 11ம் ஆண்டு வரைக் கல்விகற்ற பெண்கள் தோட்ட வேலைக்குச் செல்வதை விரும்பவில்லை. அவர்களிற்கு ஏற்ற தொழில் வாய்ப்பு தோட்ட மட்டத்திலோ அல்லது தோட்டங்களை அண்மித்த இடங்களிலோ கிடைப்பதில்லை. அதனால் அவர்களிற் கூடுதலானவர்கள் தொழில் எதுவும் செய்யாமல் வீட்டில் இருக்கின்றனர். இவ்வாறு ஓரளவிற்கு படித்தவர்களிற் சிலர் வெளிநாட்டிற்குப் பணிப்பெண்களாகச் செல்வதுண்டு. இன்னும் சிலர் ஆடைத் தொழிற்சாலைகளில் வேலைக்கு போவதுண்டு.
மத்திய கிழக்கு நாடுகளிற்குப் பணிப்பெண்களாகச் செல்பவர்களில் ஒரு சிலர் தமது வாழ்க்கை நிலைமையை உயர்த்திக் கொள்கின்றனர். சிலர் போகும் இடத்தில் வன்முறை பாலியல்த் தொல்லை, மோசடி போன்ற பிரச்சினைகளிற்கு ஆளாகின்றனர். இன்னும் சிலர் வெளிநாட்டிற்குப் போனதன் பின்னர் உழைத்து அனுப்பும் பணத்தை கணவர், குடும்ப அங்கத்தவர்கள் விரயமாக்கல், கணவன் வேறு பெண்ணை எடுத்தல் போன்ற குடும்ப பிரச்சினைகளிற்கு ஆளாகின்றனர்.
33

Page 20
கல்யாணமாகாத இளம் பெண்கள் வெளிநாட்டிற்கு போய்வந்தால் அவர்களின் மீது வீண் சந்தேகம் கொண்டு இளைஞர்கள் அவர்களைத் திருமணம் செய்ய விரும்புவதில்லை. வெளிநாடு போனவர்களில் ஒரு சிலர் மட்டும் நீண்ட காலம் தொடர்ச்சியாக வேலைசெய்துள்ளனர். ஏனையோர் நோய், மோசடி போன்ற காரணங்களினால்த் திரும்பி வந்து விடுகின்றனர். திரும்ப வருபவர்கள் தோட்டத்தில் வேலை செய்ய விரும்பாமல் வீட்டில் இருந்து விடுகின்றனர்.
ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை தேடிப்போகும் பெண்கள் குறுகிய காலத்திற்கு அங்கு வேலை செய்கின்றனர். ஓரளவு பணத்தினைச் சம்பாதித்ததன் பின்னர் திருமணத்தின் நிமித்தம் வேலையை விட்டு வந்து விடுகின்றனர். இவர்கள் திருமணத்தின் பின்னர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்து விடுகின்றனர். இப்படியானவர்களைத் திருமணம் முடிக்கவும் ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் போது தோட்டங்களில் வாழும் பெண்கள் பல வழிகளிலும் தம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர் என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது. எனினும் பல்வேறுபட்ட வெளிக் காரணிகள் காரணமாக அவர்களிற் பெரும்பான்மையானோர் மீண்டும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அவற்றுள் சமூகத்திலிருக்கும் பால்நிலைக் கருத்தியல் பிரதானமானது. பெண்களுக்கிருக்கக் கூடிய வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை ஊக்குவிப்பதற்கும் கல்வித்தகைமையைப் பெற்றுக் கொள்வதற்குமென முயற்சிகள் தோட்டப் புறங்களில் அரிதாகவே காணப்படுகின்றது. தோட்ட வேலை பெண்களிற்கு வழங்கும் தாழ்ந்த அந்தஸ்துக் காரணமாக பெண்கள் தோட்ட வேலை எனும் கட்டிலிருந்து விட்டு விடுதலையாக விரும்புவதைக் காணக் கூடியதாக உள்ளது. துார இடங்களிற்குச் சென்று வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்கு இனரீதியான பய உணர்வும் காணப்படுவதை அவதானிக்கலாம்.
ஒரு புறத்தில் தோட்டங்கள் பாரிய மாற்றங்களிற்குட்படுகின்றன எனக் கொண்டாலும் மறு புறத்தில் பெண்களுடைய வாழ்வில் அவை ஏற்படுத்தும் மாற்றங்களைப் பகுப்பாய்வு செய்யும் போது பல சிக்கலான நிலைமைகள் புலப்படுகின்றன.
34

தோட்டங்களில் பெண்நிலைச் சிந்தனையும் செயற்பாடுகளும்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளிற்கு அவர்கள் எவ்வாறு முகம் கொடுக்கின்றனர்? எனப்பார்த்தல் இங்கு தேவையானதாகும்.
பண்பாட்டு ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், இனத்துவ ரீதியாகவும் இவை போன்ற ஏனைய காரணிகள் சார்ந்ததாகவும் தோட்டப்புறங்களில் பெண்கள் மோசமான சூழ்நிலையை அனுபவிக்கின்றனர். தங்களுடைய மோசமான சூழ்நிலை தொடர்பாகவும் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்கள் பிரக்ஞை உடையவர்களாக இருக்கின்றனர். ஆங்காங்கே மறைமுக எதிர்ப்புக்களைப் பெண்கள் காட்டி வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதாவது மோசமான சூழ்நிலையை அவர்கள் சமாளித்து வருகின்றனர் எனக் கூறலாம். எனினும் பெண்கள் தனித்தவர்களாக ஆங்காங்கே இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளாக இவை இடம் பெறுவதால் பெண்கள் பாரியளவில் வெற்றியடைய முடியாதுள்ளது. இவற்றை இணைத்து, பரவலான செயற்பாடாக நோக்குவதற்குத் தேவையான பக்க பலமான முறைகள் தோட்டங்களில் இல்லை. மாற்றங்களும் கட்டமைப்பு ரீதியானவையாக பாரிய மாற்றங்களாக நிகழவில்லை. அவ்வகையில் மலையகத்தில் எது மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்றதெனில், பெண்நிலைச் சிந்தனையின் அறிமுகமும் செயற்பாடுகளுமாகும். இவை ஏற்கனவே ஓரளவிற்கு இருக்கின்றன எனினும் மிகவும் மெதுவாகவே நிகழ்கின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் பால்நிலை நிகழ்ச்சித் திட்டங்கள், பெண் நிலைச் சிந்தனையை அறிமுகப்படுத்தும் பிரதான காரணியாக அமைகின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களில் பொதுவாகப் பால் நிலைப் பிரிவு ஒன்று காணப்படுகின்றது. பால்நிலைப் பிரிவு இல்லாத நிறுவனங்கள், பால்நிலை நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றன. வருமான அதிகரிப்புத் திட்டங்கள், சேமிப்புத் திட்டங்கள், விழிப்புணர்வுப் பட்டறைகள், சுகாதாரத் திட்டங்கள் போன்றவையாக இத்திட்டங்கள் அமைகின்றன. பெரும்பாலான திட்டங்கள் அடிப்படைத் தேவைகளை மையப்படுத்தியனவாக அமைகின்றன. ஹற்றணில் இயங்கி வருகின்ற, பெண் விமோசன ஞானோதய, எனும் நிறுவனம் மட்டும் பெண்களை மையப்படுத்திய நிறுவனமாக உள்ளது. பெண்களை
35

Page 21
மையப்படுத்தாத நிறுவனங்களில், பெண்கள் பிரிவில் பெண்களை நோக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதிலும், நடாத்துவதிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய திட்டங்களை விட குறைந்த முக்கியத்துவம் கொடுத்தல், பெண்நிலை நோக்கில் திட்டங்களை அமுல்படுத்தாமை போதிய வழி நடத்துதல் இல்லாமை, பொருத்தமான ஆளணி இல்லாமை என்பன ஒரு சில பிரச்சனைகளாகும்.
அரசாங்கமும், மகளிர் விவகார அமைச்சினுடாக சில திட்டங்களைத் தோட்டப் புறங்களை முன்வைத்து அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. இவையும் அடிப்படைத் திட்டங்களை நோக்கியதாகவே இருந்தன.
மலையகத் தோட்டப் புறங்களிற் பெண்கள் தோட்டத் துறைமூலம் வருமானம் தேடுபவர்களாக இருக்கின்றனர். பெண் தொழிலாளரின் வருமானம் கூடுதலாக உள்ளது. அவர்களின் வேலை நேரமும் கூடுதலாக உள்ளது. அதனால் வருமானத்தை அதிகரிக்கும் ஏனைய திட்டங்களில் அவர்களை ஈடுபடுத்தல் என்பது, அவர்கள் மேல் சுமையை மேலும் சுமத்துவதாக அமையும் எனப்பல ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். ஒப்பீட்டளவில் கூடுதலான வருமானத்தை அவர்கள் பெற்றுக் கொண்டாலும் வீட்டில் அவ் வருமானத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்கள் ஒரு சிலரே ஆகும். அதனால் பெண்களை வருமானந்தேடும் முயற்சிகளில் ஈடுபடுத்தும் போது, அவர்களின் இரண்டாம் பட்ச நிலை மாறும் எனும் பெண் நிலைவாதிகளின் கருத்து மலையகச் சமூகத்தில் பிழைத்துப் (SUTE6örpg. 66ires 3,600TLugbilisiré06T, 560Tg5) A Decade of change in the plantation (தோட்டங்களில் ஒரு தசாப்தத்தில் நடந்த மாற்றங்கள்) 1992 எனும் நூலில் இவ் விடயம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவ்வகையில், பண்பாடு சார்ந்த தடைகள் பெண்களின் உயர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் பால்நிலைக் கருத்தியலை மாற்றியமைக்கக் கூடிய செயற்பாடுகள் அவசியமானவை.
பெண்கள் ஒன்றாகச் சேர்தல், அணியாதல், கூட்டமைப்புக்களை உருவாக்கல், பக்க பலமாகத் தொழிற்படக்கூடிய நிலைமைகளை உருவாக்கல் போன்ற செயற்பாடுகள் அவசியமானவையாக
36

இருக்கின்றன. அத்துடன் மோசமான பாரபட்ச நிலைமைகளை ஒழிக்கும் வகையில் சட்டங்களையும் கொள்கைகளையும் அமுல்படுத்தல் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் ‘போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தற்போதைய தேவையாகும்.
மேற்கூறியவற்றை நிறைவேற்ற முழு அளவில் பெண்நிலைச் சிந்தனையை மையப்படுத்திய நிறுவனமும் செயற்பாட்டாளரும் மலையகத்தில் தோற்றம் பெறுவது அவசியம்.
கருத்தியலை மாற்றியமைக்கும் வகையில் பண்பாட்டுச் செயல் வாதத்தில் ஈடுபடவேண்டிய தேவை பெண்நிலைச் சிந்தனையாளருக்கும் செயற்பாட்டாளருக்கும் பொருத்தமாக இருக்கும். பண்பாட்டுச் செயல் வாதம் என்பது ஒவியங்கள், நாடகங்கள், கவிதைகள், சுவரொட்டிகள், தெருக்கூத்துகள் போன்றவற்றினுாடாக நிலவுகின்ற ஆதிக்கக் கருத்தியலை செயல் மூலம் மாற்றுகின்றதொரு பரந்துபட்ட திட்டமாக Əgəq6öDLDuyub.
பால்நிலைக் கருத்தியலும் மாற்றம் பற்றிய சிந்தனையும்
பெண்களுடைய தாழ்ந்த நிலையை மாற்ற முடியாது எனும் கருத்து பால்நிலைக் கருத்தியலின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அது வெற்றிகரமாகப் பரப்பப்பட்டு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. கருத்தியல் என்பது மாற்ற முடியாத ஒன்றல்ல. அது தொடர்ச்சியான போராட்டத்தினுடாக மாற்றப்படவேண்டிய ஒன்றே. பெண்களுடைய தாழ்ந்த நிலையும் அதன் பின்னால் தொழிற்படும் கருத்தியலும் வரலாற்றினதும் சமூக நிலைமையினதும் உருவாக்கமே. அவை இயற்கையில் விளைந்தவை அல்ல.
இந்து சமூகத்தின் கர்மம் பற்றிய சிந்தனையும் சமூகத்தின் சமனற்ற தன்மையைப் பேணுவதாகவே உள்ளது. அதாவது பெண்கள் முற்பிறப்பில் முன்னர் செய்த கர்மத்தின் விளைவாகவே தாழ்ந்த நிலையை அனுபவிக்கின்றனர் எனும் கருத்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச் சிந்தனை பழமொழிக்கூடாக, பாடல்களுடாக, சினிமாவினுடாக எனப பல வழிகளில் மீண்டும் மீண்டும் புது வடிவம் பெற்றுப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்தியலை எதிர் கொள்ள வேண்டிய தேவை, மாற்றம் தொடர்பாகச் சிந்திப்பவர்களுக்கு அவசியமானது.
37

Page 22
கருத்தியல் என்பது நிலையானதல்ல, மாற்றம் பெறக்கூடியது என்பதால் பெண்நிலைச் சிந்தனையாளரும் பெண்கள் தொடர்பான திட்டங்களை முன்வைப்பவர்களும் பெண்நிலை சார்ந்த மாற்றுக் கருத்தியல் பற்றிச் சிந்திக்கின்றனர். இவ்விடயம் சார்ந்து செயற்படுவதற்குப் பண்பாட்டுச் செயல்வாதம் அவசியமாகின்றது.
மரபுரீதியாகவே தமது முன்னேற்றம் தொடர்பாகச் சிந்திக்கும் செயற்படும் பெண்கள் பலர் தோட்டப் புறங்களில் இருக்கின்றனர். ஆற்றலுடைய செயற்பாடுடைய பல பெண்கள் இருக்கின்றனர். அவர்கள் தமது பிரச்சினைகளை அறிந்தவர்களாகவும் வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களை இனங்காணல், ஒன்று சேர்த்தல், பக்கபலமான முறைகள் பற்றிச் சிந்திக்கச்செய்ய அவர்களை அணியாக்குதல் மூலமாகத் தமது சமூகத்தில் இருக்கும் தடைகளை எதிர்கொள்ளவும், பரந்த சமூகத்தில் இருக்கும் தடைகளை எதிர்கொள்ளவும், பரந்த சமூகத்தில் வர்க்கம் தொடர்பாகவும் இனத்துவம் தொடர்பாகவும் இருக்கும் தடைகளை அகற்றவும் வாய்ப்புக்கள் உருவாக்க வேண்டியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகளை முன்வைக்கக்கூடிய பெண்நிலை நிறுவனங்களின் தொழிற்பாடு மலையகத்தில் அவசியமாக உள்ளது.
நகரங்களில் தோற்றம் ப்ெற்றுவரும் இனத்துவ சிந்தனையும் தோட்டங்களில் பெண்களின் நிலையும்.
இனத்துவம் தொடர்பான பிரச்சினைகள் உள்ள ஒரு சமூகத்தில் பெண்களுடைய பிரச்சினைகள் இனத்துவம் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து முற்றுமுழுதாகப் பிரித்து நோக்க முடியாதவையாகும். அவ்வாறானதொரு சூழ்நிலைக்குரியதாகவே மலையகப் பெண்களுடைய பிரச்சினைகள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
மலையக மக்களின் இனத்துவச் சிந்தனை சார்ந்த எழுச்சி, பெரிதும் நகர்ப்புறங்களை மையப்படுத்தியதாகவே காணப்படுகிறது. இதனைக் கூடுதலாக ஆண்களே முன் வைக்கின்றார்கள். இச்சிந்தனையின் பரவலாக்கம் தோட்டங்களில் இன்னமும் போதியளவு இடம் பெறவில்லை. இத்தகைய இனத்துவ எழுச்சி சார்ந்த சிந்தனை பெண்களுடைய பிரச்சினைகளைச் சம அளவில் முக்கியப்படுத்தப்படத் தொடங்கவில்லை.
38

மேற்குறிப்பிட்ட வகையில் பெண்களுடைய நிலைமை மோசமானதாகக் கீழ்நிலையில் இருக்கின்றபோது, பெண்கள் இயக்கம் ஒன்றின் தோற்றம் இடம் பெறாமையால் நீண்ட காலத்தில் பெண்கள் இத்தகைய செயற்பாடுகளின் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு. மேலும் இனத்துவம் சார்ந்த சிந்தனையிலும் செயற்பாட்டிலும் மத்திய தரவர்க்கத்தினரின் பங்களிப்பு கூடுதலாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப் படுவதனால் பெண் தொழிலாளரின் வர்க்க நிலைமைகள் புறக்கணிக்கப்பட வாய்ப்புண்டு.
இந்நிலையில் பெண்களின் நிலைமை, பிரச்சினைகள், இருப்பு என்பவற்றின் தொகுப்பாக அவர்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்
வகையில் பெண்நிலை சார்ந்த செயற்பாடுகள் முழு அளவில் மலையகத்தில் இடம் பெறுவது அவசியமாகிறது.
குறிப்பு ,
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட, ஆய்வின் அனுபவத்தினடிப்படையில் எழுதப்பட்ட இக்கட்டுரை, 06.08.98 அன்று பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினால் “பால் நிலையும் சமூகக் கோட்பாடுகளும்" எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.
女★大女女
女女★
★ ★
39

Page 23
சுயத்தைத் தேடி.
அம்பை
ஒள வையாருக்குப் பிறகு தமிழில் பெண் கவிஞர்களே இல்லை என்று சில ஆண் கவிஞர்கள் கூறி வருகிறார்கள். அநேகப் பெண் கவிஞர்கள் கவிதை மொழியின் எல்லைகளை விஸ்தரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. இவற்றிடையே வெளிவந்துள்ளன மூன்று பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள், அக்டோபர் மாதம் 1999 இல் வெளிவந்தது. சே. பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல்கள். பிறகு மார்ச்மாதம் 2000 இல் வெளியிடப்பட்டது வத்ஸலாவின் சுயம். அதே ஆண்டு ஆகஸ்டில் சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் வெளிவந்தது.
முதல் இரண்டு தொகுதிகளுக்கும் முன்னுரை, புகழுரை எழுதியிருப்பது கவிஞர் ஞானக்கூத்தன். ஞானக்கூத்தன் பாஸ் மார்க்ஸ் போட்டால்த்தான் பெண் கவிஞர்கள் பரீட்சையில் தேற முடியும் போலும் ஞானக்கூத்தன், அவர் பங்கிற்கு பெண் வாழ்க்கை, பெண் உலகம் என்று சொல்லிக் கொண்டு போகிறார். ஏதோ ஆண்வாழ்க்கை, ஆண் உலகம் என்பது மிகப்பெரியது போலவும், பெண் உலகம் என்பது ஒரு தெரு, ஒரு சாக்கடை ஒரு மரம் ஒரு அடுப்பு என்று தனியே சுழலும் ஒரு உலகம் போலவும் இருக்கிறது அவர் கூற்று. எப்போதும் இது இப்படித்தான் இருந்து வருகிறது இலக்கிய உலகில். ஆண்களின் பார்வை உலகளந்த பார்வை. அவர்கள் தங்கள் குறிகளைப்பற்றி எழுதினால் கூட அது உலகத்தையே வியாபிக்கும் மொழியாகி விடும். ஆனால் பெண்கள் எதை எழுதினாலும், அது குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்லும் குறுகிய பார்வையாகி விடும். ஞானக்கூத்தன் போன்றவர்களையும் பரவசம் கொள்ளச் செய்யாமல் பெண் கவிஞர்கள் புத்தகங்கள் வெளியிடக் கூடாதா? என்று தோன்றியது. முதுகைத் தட்ட உயரும் அவர் கைகூட ஏதோ சாபமிட வரும் கை போலத் தோற்றமளிக்கிறது.
யார் எழுதினாலும் அது தன்னைப்பற்றியும், தனக்கும் வாழ்க்கைக்கும் உள்ள உறவை பற்றியதாகத்தான் அது இருக்க முடியும். ஒவ்வொரு நபருக்குள்ளும் ஒரு உலகம் இருக்கிறது. அந்த உலகம் புற உலகத்துடன் கொள்ளும் தொடர்பு பற்றியதுதான்
40

இலக்கியம். ஒற்றைப்புள்ளியையே சுற்றிச் சுற்றி வந்தாலும் அது பிரபஞ்சத்தையே வியாபித்து நிற்க முடியும். தனிப்பட்ட நபரின் தன்னுணர்வாக மட்டுமே அது நின்று விடாது. அப்படி நிற்கும் ஒன்றாக அதைக் கருதவும் கூடாது. இந்த உலகம் அந்த உலகம் என்று எந்தவிதக் குப்பியிலும் அதை அடைக்க முயலக்கூடாது.
இந்த மூன்று கவிஞர்களும் பெண் என்ற நிலையில் வாழ்பவர்கள். பல கவிதைகள் அந்நிலையின் சங்கடங்கள், குத்தல்கள், குடைச்சல்கள், உளைச்சல்கள் பற்றியவை. ஆனால் அவை பற்றியவை மட்டுமே அல்ல. அது ஊற்றுக்கண்ணாக இருந்தாலும் கவிதைகள் எங்கெங்கோ தாவிப்போகின்றன. மரம், மலை, பட்டுப்பூச்சி, வீதி, வாகனம், மழை என்று பலவற்றில் சஞ்சாரம் செய்கின்றன. மீண்டும் மீண்டும் கதவுகளிலும், நிலைகளிலும், சுவர்களிலும், சன்னல்களிலும், மெத்தைகளிலும் மோதி மோதி வீழ்பவைகூட பலதரப்பட்ட சலனங்களையும், சங்கடங்களையும் உண்டாக்குபவை. அப்படிச் செய்வதன் மூலம் கவிதைகளை எட்டும் வழியைக் காட்டுபவை.
சின்னச் சின்ன விடயங்களைக்கூடக் கவிதையால் தொட்டு விடுகிறார் சே. பிருந்தா. சிலசமயம் அவை ஊசிக்குத்துப் போல் சிறு வலியையும் சில சமயம் கோமாளிக் கூத்துக்கள் உண்டாக்கும் சிறு நகைப்பையும் ஏற்படுத்துகின்றன. சிறு வியப்புக்களும் உண்டு திடீர் மழை போல்,
தொடர்ந்து வற்புறுத்துகின்றன உற்சாகமாக இருக்கச்சொல்லி உனது கடிதங்கள்
ஒரு தடவையேனும்
உன்னை பயணிக்கச் செய்ய வேணும்
நகரப் பேரூந்தில்
பெண்ணாய். என்கிறது ஒரு கவிதையின் பகுதி. இன்னொரு கவிதை இப்படிப் போகிறது.
4

Page 24
இருவருக்கும் போதுமானதாக இல்லை அந்தக் குடை
இடிக்காமலும் நடக்க வேண்டும்
கட்டுப்பாடுகள் கோட்பாடுகள்
(560L
எல்லாற்றையும் விடுத்து வெளிவந்தேன் மழை அரவணைத்தது
நானும் அவர்களும் என்று தலைப்பிட்ட கவிதை நறுக்கென்று சொல்கிறது:
ஆழ ஆழப் போவதாக எண்ணிக் கொண்டிருக்கையில் அமிழ்ந்து கொண்டிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள் தேவதைக் கதைகளின் அற்புதங்கள் கலந்த ஒரு கவிதை
எத்தனை தேய்த்தும் வெளிவராமல் விளக்கு பூதம்
பாத்திரத் தீசலுள்
முற்றிலும் வேறான பரிணாமத்திலிருந்து வருபவை சல்மாவின் கவிதைகள். கவிதைகளின் மையப்பொருள் தனிமை மற்றும் “அடி வாங்கிக் கொள்கிறேன்” என்ற ஏற்பு நிலை. மரணம்தான் விடுதலை என்று தொனிக்கும் குரல் பலரைக் கோபமூட்டலாம். “வெளியே வந்து தொலையேன்” என்று கூவவைக்கலாம். அப்படிக் கூவுவது வெகு சுலபம். அப்படிக் கூவவேண்டும் என்று நினைக்க வைப்பதுதான்
42

கவிதையின் வெற்றி. ஏனென்றால் இது கவிஞரின் தனிமை மட்டுமல்ல. பல வீடுகளில், பலதரப்பட்ட நிலைமைகளில் முடக்கப்பட்ட பெண்களின் தனிமை மீண்டும் மீண்டும் வீடு என்ற ஒரு அதிகாரத்திற்கு ஆட்பட்டுத் திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம்.
தொலைதுாரப் பயணத்திலிருந்து வீடு திரும்புவேனென்பதில் இல்லை ஏதொரு சந்தேகமும் தவறாது துணை வந்து சேர்க்கும் என் துர்தேவதைகள் என்று இது பற்றிக் கூறுகிறது ஒரு கவிதை.
பக்கத்து அறைகளில் பக்கத்து வீடுகளில் பக்கத்து ஊர்களில் தொலைந்து போகும் அபாயமிருக்க இன்று நினைப்பதற்கில்லை தொலை துாரப் பயணங்களை என்றும் நீங்குதல் என்ற தலைப்பிடப்பட்டு
இந்த மரங்கள்
என்றைக்கேனும்
இங்கிருந்து செல்லக்கூடும்
இனித்
திரும்புவதில்லையெனும்
வைராக்கியத்தோடு என்றும் எழுதப்பட்ட கவிதைகள் இந் நிலையை மேலும் வலியுறுத்துகின்றன. விதி என்று தலைப்பிட்ட கவிதை இதை வேறு மாதிரிக் கூறுகிறது.
மலை முகடு தொட்டுப் பறந்தாலும்
கூடடைகிறது
இந்தப் பறவையும் மனைவி - - கணவன் எனும் உறவில் நேரும் ஒப்பந்தங்கள் பற்றி ஒரு கவிதை.
43

Page 25
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது உன்னிடமிருந்து கலங்கலானதே எனினும் சிறிது அன்பைப் பெற உனது குழந்தையின் தாய் எனும் பொறுப்பை
நிறைவேற்ற
வெளியுலகிலிருந்து சானிட்டரி நாப்கின்களையும் கருத்தடை சாதனங்களையும் பெற இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி முடியுமானால் உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள எல்லா அறிதல்களுடனும் விரிகிறதென் யோனி.
இக்கவிதையில் புணர்ச்சி பற்றி எந்த வித மாயப் பரவசமோ அதீதமோ இல்லை. அது ஒரு வெறும் இயக்கம். தந்திரங்களுடன் உள்ள இயக்கம். இவ் வாழ்க்கையில் உறவு பற்றி ஏற்பட்டுப்போகும் நம்பிக்கையின்மை பற்றி ஒரு கவிதையின் சில வரிகள்:
மின்சாரக் கம்பத்துடன் சம்பாவழிக்கும் ஒற்றைப் பறவையின் நம்பிக்கையோடு
என்று விளக்குகின்றன.
கவிஞராக அல்ல, பெண்ணாக அல்ல, பெண் கவிஞராக
அல்ல, பெண்ணின் வலியின் அவள் வலுவின் ஒரு சில இழைகளைச் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு நபராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறார் வத்ஸலா தன்னைப்பற்றிய சில குறிப்பில். பூடகங்ள்
44,

இல்லாக் கவிதைகள் வத்ஸலாவுடையது. ரகசியங்கள் அற்று சீறிப் பொங்குபவை. முதல் கவிதையே அப்படிப்பட்டதுதான்.
இது நானா?
எனக்குள்ளேயா இச்சக்தி ?
என் மூச்சா இந்தச் சூறாவளி !
என் மனத்திலா இவ்வானந்தம் !
எனக்கா இத்தனை பயமின்மை!
என் .
மறவேன் இனி ஒருபோதும்
நான் மானுடம்
நான் தனி
நான் மட்டுமே நான்
என் கால்களா ஊன்றிக்கொண்டன?
எனக்கா இந்தச் சிறகுகள்? இப்படிச் சூளுரைக்கும் தொனியில் பல கவிதைகள். வேறு வகைக் கவிதைகள் எழுத இவ்வகைக் கவிதைகளையும் எழுதிக் கடக்க வேண்டியிருக்கிறது. இதன் தாபமும், அது தரும் கோபமும் சில கவிதைகளில். ஒரு பெண், கவிஞராக முடியாமல் போனது பற்றிக் கூறுகிறது ஒரு கவிதை:
தோண்டிப் பார்த்தால்
எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை
நான் கவிஞரில்லை என்பதற்கு.
உங்களை ஒன்று கேட்க வேண்டும்
செத்துப்போன கவிதைகள் கணக்கில் சேருமா ?
கருவிலேயே கரைந்து போனதால்
அவற்றை உருவகப்படுத்த முடியவில்லை
அவை உதித்ததை அப்பொழுது அறியாததால்
உதய நேரங்களைக் குறித்து வைக்கவில்லை . எழும்பி வா, உடைத்து வா, சுயத்தை அறி என்ற “நம்பிக்கை” கவிதைகளும் உண்டு. ஆயினும் தன் இயலாமை, சீற்றம் இவற்றை ஆத்திரத்துடனும் அங்கத தொனியுடனும் கூறும் இக்கவிதைகளில் கவிதை நயம் குறைவு. இருந்தாலும் இவை ஒரு வகையில் எழுதித் தீர்க்க வேண்டியவை. பிரசுரிக்க வேண்டியவையா? என்பது வேறு விஷயம். சில சமயம் அச்சுமை தொட்டுச் சென்ற பிறகுதான் சிலவற்றிலிருந்து மீள முடிகிறது.
45

Page 26
பெண் நிலை வாதத்தின் தமிழ்நிலை நின்ற சிந்திப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்தக்களும்
பத்மா சோமகாந்தன்
“பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை”
பாரதி. இவ்வுலகில் பிறப்பெடுக்கும் எந்த உயிரினமும் வாழ்தலையே நோக்கமாகக் கொண்டு தோன்றுகிறது. மானிடப் பெண்ணாகப் பிறப்பெடுக்கும் உயிருக்கு முற்று முழுதான விடுதலையுண்டோ? இல்லையெனில், வாழ்வே இல்லையென்றாகிறது. பெண்ணினத்தைச் சகல உரிமைகளோடும் ஆணுக்குச் சமமாக வாழ வைத்துச் சமூகத்தை மேம்பாடடையச் செய்வதற்காகவே பெண்ணிலைவாதம், பெண்ணியம் என்ற சிந்தனைகள் தலைதுாக்கின.
“பெண்கள் சமூகத்திலும் அலுவலகங்களிலும் வீட்டினுள்ளேயும் நசுக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்ச்சியும், அந்நிலையை மாற்றியமைக்க ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயற்படும் முயற்சிகளும்”
என்றொரு விளக்கத்தைப் பெண்ணிலைவாதம் என்ற சொற்றொடருக்குத் தெற்காசிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்று கூறலாம்."
“பெண்களின் தாழ்நிலையை ஆராய்ந்து அதை மாற்ற மேற்கொள்ளப்படும் வழி முறைகளே பெண்ணியம்” என கார்டன் என்பவரும்
“பெண்கள் ஒருவரோடொருவர் இணைந்து ஒரு ஆற்றலை உருவாக்கி, பெண்மை அதன் தன்மையில் ஆண்களோடு மாறுபட்டிருப்பினும் அது ஆண்மைக்கு நிகரானது என்பதை ஏற்றுக் கொள்ள வைப்பது” என ஜெயின் என்பவரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
46

பெண்ணிலை வாதத்தின் கருத்துக்கள் யாவற்றையும் ஒப்பு நோக்கின் அதன் சாராம்சம் “பெண்” அவள் பெண்ணென்ற ஒரே காரணத்திற்காக அடக்கியொடுக்கப்பட்டு தாழ்நிலைக்குத் தள்ளப்படுவதோடு உயிரியல் ரீதியாகப் பால்நிலையில் பலவீனமும் குறைபாடுமுடையவளாக கருதப்படுவதால், இந்நிலையை மாற்றியமைக்கப் பெண்கள் யாவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
பெண்ணுரிமை, பெண்ணியம், பெண்ணிலைவாதம் என்பன பெண்ணுரிமைகளையும் பாலினச் சமத்துவக் கோட்பாடுகளையும் கொண்ட இயக்கமாகச் செயற்படினும் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சமுதாயங்களுக்கும் எக்காலமும் பொருந்தக் கூடியதான ஒரு விளக்கத்தைக் கொடுத்தல் மிகக் கடினம். ஏனெனில் ஒவ்வொரு நாட்டின் நிலையும் அதன் வரலாறு, கலாசாரம், கல்வி, பண்பாடு என்பவற்றிக்கிணைய நடவடிக்கைகளும் விளக்கங்களும் மாறுபடவே செய்யும். ஒரு நாட்டின் ஆட்சி அமைப்பிலுள்ளது போன்ற சம நிலையில் ஏனைய நாடுகளின் இயல்பும் சமமாயிருக்குமென எதிர்பார்க்க முடியாது. நாட்டிற்கு நாடு பெண்களின் நிலை வேறுபடலாம். பெண் என்ற பொதுமைக்கருத்தில் அந்தந்த நாட்டின் பாரம்பரியம் கல்வி கலாசார விழிப்புணர்விற்கேற்ப சில கருத்துக்கள் முனைப்புப் பெற்றும் சில சாதாரண நிலையிலும் சில உரத்த சிந்தனை நோக்கிலும் அமைந்திருக்கும்.
எமது அயல் நாடான இந்தியாவுக்கும் நமக்குமிடையில் மொழி, சமயம், கலாசாரம் என்பன பெரிதளவு ஒத்திருந்தும் கூட உடன் கட்டை ஏறுதல், சிசுக்கொலை, காஸ் அடுப்பு வெடித்து மரணமாதல் என்பன நம் நாட்டின் எப்பகுதியிலுமே நிகழ்ந்ததாக நாம் அறியவில்லை. இலங்கையில் கல்வியறிவுபெற்ற பெண்களின் நிலை கூடுதலாக இருந்தும்கூட பெண்விடுதலை போன்ற இயக்கங்களுடன் இணைந்து செயற்பட, புரட்சிகரமான போராட்டங்களுக்குத் தம்மை அர்ப்பணிக்கத் தயங்குவோரே பலர் எனலாம்.
சமதர்ம சமூகத்தை உருவாக்கச் செயற்படும் பெண்ணிலை வாதக் கருதுகோள்களில், தமிழ்ப் பண்பாடு, கலாசார சமூக வரலாற்று மரபு நிலைகளில் ராஜம் கிருஷ்ணனுடைய எழுத்துக்களின் தாக்கங்கள், அழுத்தங்கள், நோக்கங்கள், சிந்தனைகள், உணர்வுகள் என்பன பற்றி இக்கட்டுரை கூறமுயலுகிறது.
47

Page 27
திருச்சி முசிறியில் பிறந்த திருமதி ராஜம் கிருஷ்ணன் 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற முதிர்ந்த சிந்தனையாளர். பல மொழிப்புலவர். குடும்பப் பெண்கள், விதவைகள், கன்னிகள் எனப்பல்வேறு நிலைகளிலுமுள்ள பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சிக்கல்கள், பிரச்சினைகள், முரண்பாடுகள், அடக்குமுறைகள், பாலினத் தொல்லைகள், பொருளாதாரச் சீர்கேடுகள் போன்றவற்றையெல்லாம் மையமாக வைத்து தன் பேனாவை அறிவு பூர்வமாக ஆதாரத்துடன் துல்லியமான கருத்துக்களையும் புரட்சிகரமான தீர்வுகளையும் மனித நேயத்துடனும் சமூகப் பொறுப்புடனும் சுட்டிக்காட்டி உணர்த்துவதில் ஆற்றலும் திறமையும் கொண்டவர். பெண்ணின் வாழ்வு என்ற தேரை அழகு ததும்பவும், காத்திரமானதாகவும், சமூகத்திற்குப் பயன்படக் கூடியதாகவும் சுதந்திரமாக வீதியில் வலம்வரக் கூடிய விதத்தில் தடைகளை வெட்டித் தகர்த்துள்ளார். பெண்களின் மேம்பாட்டுத் தரத்திற்கான இவரது சிந்தனைகள், எழுத்துக்கள், சேவைகள் என்பன பலராலும் அவதானிக்கப்பட்டுப் பெரும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் இவர் முன் குவித்துள்ளனர்.
பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகள் அந்தந்தப் பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களோடு மக்களாக வாழ்ந்து பழகி, அவர்களது மொழி, உடை, நடை, வாழ்வியல் பண்புகள், இன்ப துன்பங்கள், கஷடநஷடங்கள், நம்பிக்கைகள் என்பவற்றின் உன்னதங்களை வெகு நுட்பமாக அவதானித்து உள்வாங்கிச் சிந்தித்து அவற்றை நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தித் தன் படைப்புத் திறனையும் சிந்தனைச் செறிவையும் இழையோட விட்டு பெண்ணிய எழுத்தாளர் மத்தியில் மிக உயர்ந்து நிற்கிறார்.
பெண்களுடைய அனுபவ வட்டம் சிறியது. அதனால் அவர்கள் அடக்கியொடுக்கப்படும் மரபு சார்ந்த குடும்பச்சூழல், பாலியல் உணர்வுத் தாக்கங்கள், தாய்மைப் பண்பின் தனித்துவங்கள் பற்றியே மாறிமாறித் தம்மை வெளிக் கொணர்வர் என்ற நிலையிலிருந்தும் மாறுபட்டுச் சமூக சிந்தனையைத்துாண்டும் விதத்தில் ராஜம் கிருஷ்ணனுடைய களம் விரிவடைந்துள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
48

“வாழ்வின் நோக்குகளையும் சமூகச் சார்புகளையும் கணித்து நிகழ்காலப் பிரச்சினைகள் பற்றிச் சிந்திப்பதும் ஆக்க பூர்வமான முடிவுகளை ஆராய்வதுமே எனது இலக்கிய நோக்கம்.” என்று இவர் கூறுவதற்கமைய இவர் தமது படைப்புக்களில் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அதற்கான தீர்வையும் ஒப்பிப்பது மிகவும் வரவேற்கக்
ՑռlԶեւ 15l.
"இலக்கியம் படைப்பவர் சாமானிய மனிதனை விட்டு விலகி நிற்கும் போது அங்கு கலை மலர்வதில்லை”.* தமிழினத்தின் சாமானியரிலும் சாமானியராக இருப்போர் பெண்களேயாவர். அச்சாமானியரின் பிரச்சினைகளை அவ்வினத்திலிருந்து முகிழ்த்தவர் என்னும் நிலையில் அவர் நுட்பமாகவும் உணர்ச்சித் திறனுடனும் கையாளுவதில் வியப்பென்ன இருக்க முடியும்” என பிரபல விமர்சகர் திரு. மா. இராமலிங்கம் இவருடைய படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். “தமிழ்ப் புதின உலகில் இவர் ஒரு விதி விலக்கு. உண்மையான அறிவு ஜீவி” என டாக்டர் நளினி ராஜம்கிருஷ்ணன் புதினங்களில் சமுதாயமாற்றம் என்ற தன் ஆய்வில் கூறுகிறார்.
பாதையில் பதிந்த அடிகள் என்ற நாவல், மணியம்மாள் என்ற விதவைப் பெண்ணின் உண்மையான வாழ்வை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து எழுதப்பட்ட நாவலாகும். மணியம்மாள் விதவையென்பதால் இச்சமூகம் அவளுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொண்டு சமூகத்தின் முற்போக்கான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்குமாக தனி யொருத்தியாக நின்று கஷ்டப்பட்டு உழைத்தவள். அப் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை வைத்துப் புனையப்பட்டதே இந்நாவல்.
மணியம்மை என்பவள் ஒரு விதவை. கூட்டுக்குள்ளே இருக்கும் புழுவைப்போல் எதிர்ப்புச் சக்தியின் உயிர்ப்பில் உள்ளூர இயங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவள் தன் வீட்டு விறாந்தையில் இருக்கிறாள். தெருக்கோடியிலே பாகவதர் கதாகாலட்சேபம் பண்ணுகிறார்.
“இந்த எல்லாப் பெரிய காவியங்களிலும் இதிகாசங்களிலும் முக்கியமாக நிற்கிறது ஸ்திரீயின் குணாம்சம்தான். பொண்டுகள் சிரிப்பு கலகல வென்று வரப்படாது. அவா உணர்ச்சிகள் வெளியில்
49

Page 28
தெரியப்படாது. அதுதான் அவா அழகு. புருஷன் போஜனம் பண்ண எலேல உட்கார்ந்து சாப்பிடணும். அப்பளம் நொருங்குகிறது கூடக் கேட்கப்படாது எங்கிறது சாத்திரம். கைகேயி சம்பராசு யுத்தத்திலே ஸ்திரின்னு இருக்கிற தர்மம் மீறி புருஷனுக்கு தேரோட்டினாள். தசரதர் வரம்தரேன்னு வாக்குக் குடுத்திட்டார். ஸ்திரீ தர்மத்தை மீறின ஒரு செயலாலே பின்னாடி எத்தனை விபரீதங்க விளையுறது. 96. புருஷன் உயிரையே குடிக்கிறது. ஸ்திரியாகப் பிறந்துட்டா அவாளுக்கென்று ஒரு தர்மம் இருக்கு. அதைக் கடைப்பிடித்தால்த்தான் லோகதர்மம் நிலைக்கும். அதனால்த்தான் கன்னிகைகளை ருதுவாகும் முன்ன மகாவிஷ்ணுஸ்வரூபமான பிரம்மசாரிக்கு தானம் பண்ணிடனும். ஜலம் எப்படி ஒரு உத்தரணில அல்லது சமுத்திரத்தில இருந்தாலும் அதன் மகிமை, ரூபம் வைதவங்யங்கிற துர்ப்பாக்கியத்தில் போயிட்டா, அவா பர்த்தாவின் நாமத்தை எப்போதும் ஸ்பரிச்சுண்டு தன்னை ஒடுக்கிண்டு பிராணனை விடும் வரையிலும் இருப்பதுதான் தர்மம்.
பாகவதர் பெண் விதவையானதும் அடைய வேண்டிய ஒடுக்கு முறைகளைச் சாத்திரங்களையும் இதிகாசங்களையும் சான்று காட்டி பெண்ணின் உணர்வுகளை, சிந்தனைகளை மழுங்கடிக்கிறார். இதனைச் செவியுற்றிருக்கும் மணிக்கு மனதில் ஒரு புழுக்கம். புழுக்கமா இது? இவளுள் பிரளயம் போன்றதொரு புயல்! மணியம்மாள் ஒரு புரட்சிக்காரி.’
இந் நாவலின் கதாநாயகி சமூக வரையறைகளை மீறிப் பெரும் புரட்சிகரமான உணர்வுகள் சிந்தனைகளென அகத்தில் மட்டுமன்றி புறத்தோற்றத்திலும் சுமப்பவள். அவளுடைய தோற்றத்தைப் பின்வருமாறு காண்பிக்கிறார்.
“தலை கிராப்பு. ஆண்களைப் போன்ற உடை. வேட்டி கதர் ஜிப்பா துண்டு அணிந்து புரட்சிகரமான கொள்கைகளை மனதில் சுமந்து கீழ் நிலையில் கிடந்து சுழலும் மக்கள் வாழ்வை மேம்படுத்த அவர்களின் அறியாமை வறுமையைப் போக்க, கல்வி சுகாதாரம் ஆகியவற்றைப் போதித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற உழைக்கிறாள். பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட கலாசார விழுமியங்களைக் கட்டுப் பெட்டிபோல் ஏற்று வந்தனை செய்யாமல், மரபைமீறி பெண்களும் சிலம்பம் ஆடி, கல்லாக்கட்டைச் சுழற்றித் தம் உடல் வலிமையையும் வீரத்தையும் பேண வழி காட்டுகிறாள்.
50

இப்புரட்சிகரமான செயற்பாடுகளைக் கொண்ட மணியம்மாளை நம் கண்முன் நிறுத்தி, விதவையென்றால் வெள்ளையுடுத்தி தலை முடி களைந்து வாழ்வை வெறுத்து சிவனே என மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்த வழி காட்டும் பாகவதருடைய காலட்சேபத்திலிருந்து விலகி கலாசார விழுமியங்களை எதிர்த்து விதவைப்பெண் எப்படி வாழவேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டான பாத்திரத்தைப் படைத்துப் பெண்ணினத்தையே சில படிகளில் நிமிர்ந்து செல்ல வழிகாட்டுகிறார்.
பல நுாற்றாண்டுகளாகப் பெண் சனாதன சமயக் கொடுமைகளுக்கும், சமூகப் புறக்கணிப்புக்கும் உள்ளாகி ஒடுக்கப்பட்டிருப்பதால் அவற்றை மீறுவதற்குப் பெரும் போராட்டத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகு தடைகளை மீறி ஒரு முள் நிறைந்த பற்றைக் காட்டுப் பாதையில் குடும்ப உறவுகள் சமூகத் தொடர்புகள் யாவும் எதிர்ப்பாக மாறிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் ஆணாதிக்கத்தை எதிர்த்து ஒரு பெண் தேசியவாதியாக, சமுதாயவாதியாக, நின்று தாழ்த்தப்பட்ட பண்ணை பட்டடிமைகளுக்கும் உழைப்பாளருக்கும் நீதி கோரிப் போராடி இறுதியில் ஒரு தியாகியாகித் தன் இன்னுயிரை நீத்த வரலாறு கூறும் இந்நாவலிலே பெண்ணின் அறிவு பூர்வமான உணர்வுகள் சமுதாயம் பற்றிய சிந்தனை விரிவு என்பன துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
ஆண்களைப்போல வேட்டியணிந்து, சைக்கிளில் திரிந்து சமூகப்பணி செய்தவர், வீதிப்பள்ளத்தை நிரவ இடிந்து கிடந்த வீடொன்றிலிருந்து இரு கூடை மண்ணை எடுத்துச் சிறுவனை களவு எடுத்ததாகக்கூறி ஒருவன் அடிக்கப் போனான். அவனைத் துரத்தி ஓடி, அரிவாளை அவன்மீது வீசி காயத்தை ஏற்படுத்தியதால் பொலிசில் அடைபட்டு விடுதலையானார். இப்படிப் பல அசாதாரண துணிச்சலான செயல்களை நிகழ்த்திய புரட்சிகளின் சொந்தக்காரியாக இவர் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
பெண்ணென்றால், பருவமடைந்ததும் திருமணம் செய்தல்,
குடும்பவாழ்வு, குழந்தை பெறல் என்ற சமூகப் போக்கிலிருந்து விடுபட்டு, விதவையானாலும் சமூக சிந்தனையோடு எப்படிச் சேவை செய்யலாம், சமூகத்தை முன்னெடுத்துச் செல்லலாமென்ற ஊக்கத்தோடு தொழிற்பட்ட மணியம்மை சமூக விழுமியங்களைக் கடந்து ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறாள்.
5

Page 29
இன்று கல்வி, பொருளாதார சுதந்திரம் உரிமையெல்லாம் உண்டெனக் கொண்டாலும் புதுப்புது விதமாகப் பாலியல் வன்முறைகளும், சமூகக் கொடுமைகளும் வளர்ந்து கொண்டே வருகின்றன. கருவிலே அவளை அழிக்கும் கொடுமைகூட நியாயப்படுத்தப்படுகின்றது. இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் எமக்குப் போராட்ட உணர்வும் துணிவும் ஏற்படவில்லையேயென ஆதங்கமுறும் ராஜம்கிருஷ்ணன், அதன் வடிகால்ப் பாதையில் பதிந்த அடிகளை எம் முன் கொணர்ந்துள்ளார்.
“தோட்டக்காரி" என்பது இன்னொரு அற்புதமான நாவல். கதாநாயகி சரயு சாதாரண மத்திய தரக்குடும்பப் பெண். தமிழ்ப் பண்பாட்டு நிலையில் காலாதி காலமாகப் பெண்ணே வீட்டில் குசினியில் அடைந்து கிடந்து சமையல், குழந்தை, கணவன்பராமரிப்பு என்ற மட்டத்தோடு அவள் ஆளுமை மழுங்கடிக்கப்படுகிறது. ஆனால் இப்பெண் சரயு வயது ஐம்பத்திரண்டு. பெண்கள் மேம்பாடு சம்பந்தமாக ஆய்வு செய்ய ஒரு வருட காலம் வீட்டைவிட்டு வெளியேறி வெகு உற்சாகத்துடன் இப்பணியில் ஈடுபடுகிறாள். அவளுடைய இப்பணிக்குக் கணவன் அனுசரணையாக இருந்தாலும் ஏனைய குடும்ப அங்கத்தினரும் உறவினரும் ஏற்படுத்தும்.தொல்லைகள், நையாண்டிகள், நெருக்கடிகள் சொல்ல முடியாது.
“படித்துப் பொருளாதாரம் சார்ந்து உரிமை பெற்றாலும் நாம் இன்னும் பெண் என்ற இரண்டாந்தர உணர்விலிருந்து மனித மதிப்புக்கு
95 5
ஏற்றம் பெறவில்லை”.
இன்றைய பெண்கள் கல்வி கற்று, அறிவு பெற்று, சமூகப் பணிகளில் தம் மைக் கரைத்துக் கொண்டாலும் “வீட்டு வேலைக்கேயுரியவள்.” என்ற கட்டுக்குள் அடக்கி வைக்கவே சமூகம் பாடுபடுகிறது.
சரயு இந்த ஆய்வினை நிகழ்த்திச் செல்வதையும், அவளது அறிவை மட்டுப்படுத்தி பரிகசிக்கும் அவளது மருமகன், மகள் உறவினரையும் இந்நாவலில் நாம் சந்திக்கலாம்.
52.

குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் சரயு எப்படித் தன் பேரப் பிள்ளைகளைச் சுத்தமாகவும் , சுகாதாரமாகவும் வளர்க்கிறாளென்பதையும், கல்வியறிவற்ற, படிப்பையே விரும்பாத மிகப் பிற்போக்கான அவள் சம்பந்தி குழந்தைகளை நாசமாக்கும் பழக்க வழக்கங்களையும் கருத்து மோதல்களையும் கூடத்தெளிவாக இந்நாவலில் சித்திரித்துள்ளார். பெண்கல்வி, சுதந்திரம், பலரோடு சேர்ந்து பழகும் அனுபவம் இப்படிப் பல நல்ல விஷயங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெளிய வைக்கும்.
பெண்ணென்பவள் திருமணமானதும் குடும்பம் வீடு என்று சுற்றிச் சுழல வேண்டுமேயொழிய, இக்கோட்பாட்டை மீறி பெண்கள் முன்னேற்றம் சம்பந்தமானதாக இருந்தாலும், அத்துறையில் பளிச்சிடும் அறிவு வளர்ச்சி அவளுக்குக் கைவரப் பெற்றிருந்தாலும்கூட அவற்றையெல்லாம் மறந்து சமூக வரையறை என்ற குழிக்குள் பதுங்கிக் கொள்வதையே சமூகம் எதிர்பார்க்கிறது. இந்நிலையை மீறி, ஆற்றலுள்ள பெண்கள் சமூக நலத்திற்காகத் தன் இனத்துக்காகச் சிந்தித்து செயற்படவிழையும் சரயு, ராஜம் கிருஷ்ணனின் சிந்தனையில் வந்துதித்த முற்போக்கு எண்ணங் கொண்ட அருமையான பாத்திரம்.
தற்கால வாழ்வு முறையில் பெண் புதிய பொறுப்புக்களை ஏற்றுப் புதுப்புதுப் பரிமாணங்களுக்கு ஆளாகிறாள். அவளுடைய சுமைகளை ஆணும் பகிர்ந்து கொள்ளலாமென்று அவளே நினைப்பதில்லை. காலங்காலமாகப் பெண் என்பவள் தியாகம் செய்யவேண்டியவள், சுமக்க வேண்டியவள் என்ற நினைவில் ஊறியிருக்கிறாள். குடும்பம் என்பது ஓர் ஆணின் சுகபோகத்திற்கான அமைப்பு என்ற கருத்தே இறுக்கமாகியுள்ளது.
"ஆண் குழந்தைதான் மோட்சமெய்தக் காரணமானது என்ற மனோபாவம் இன்னும் மாறவில்லை. இதனாலேதான் பிரச்சினைகள்" என மாதர் மத்தியில் பேசுகிறாள். “எங்க போறத்தில் ஆண்களுக்கும் இடமுண்டு. அவங்களாலும் எந்தக் கொடுமையும் போகாது.”.
“தாய்வழிச் சமுதாயமாக இருந்த காலத்தில் பெண் புருஷன் வீட்டுக்குச் சென்றதில்லை. மக்கள் அவளால் அறியப்பட்டனர். சொத்து அவளுடையதாக இருந்தது. அந்த முதன்மையை வீழ்த்தி அவளை இரண்டாந்தரப் பிரஜையாக மனித மதிப்பிலிருந்து தாழ்த்தும்
53

Page 30
நடவடிக்கைகள் தந்தைவழிச் சமுதாயமாக மாறியதோடு, கற்புநெறி என்ற கடிவாளம் அவளுக்குப் பிணிக்கப்பட்டுக் கல்வியும் ஆளுமை மலர்ச்சியும் மறுக்கப்பட்டது. சரயு இப்படித்தான் கருத்தை வெளிப்படுத்தினார்.
சரயுவின் கூற்றாக தாய்வழிச் சமூக அமைப்பை விளக்கி, பெண் கற்பு நெறியை முன்வைத்து எப்படி அடக்கியொடுக்கப்படுகிறாள் என்ற உண்மையை தெளிவாக்குகின்றார். பெண் ஏன் கீழ் நிலைக்குத் தாழ்ந்தாள் என்ற காரணங்களை விளங்கிக் கொண்டால் தாழ்வை நிமிர்த்தி உயரமுடியும் என்ற கருத்தையும் இங்கு வலியூட்டுகிறார் ஆசிரியர்.
“ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தைப்படிக்கத் தொடங்குகின்ற ஒருவன், அதன் கடைசிப் பக்கத்தை படித்து முடித்து மூடும்போது முன்னிலும் சிறந்த ஒருவனாக மாறியிருக்க வேண்டும். அவனறியாமல் அவனுள் நிகழும் மாற்றமாக இருப்பினும் இவ்வாறு மாற்றும் சக்தி இலக்கியத்திற்குண்டு” என்ற ரொபின் மேஹெட் என்பவரின் கூற்றுக்கு இலக்கியமாகவே ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் விளங்குகின்றன.
இவரின் இன்னொரு படைப்பான “புதிய சிறகுகள்” மகன் குடிகாரனாயிருந்தும் தாய் அவன் மீது இரக்கம் கொள்கிறாள். மருமகள் அவனைத் திருத்த முயற்சிக்கிறாள். குடும்ப நலனைக் காக்க தானே கற்று முன்னேறுகிறாள்.
“எப்பவும் ஒரு பொண்ணை இன்னமும் சமூகத்தில அவ புருஷனை வைச்சுத்தான் மதிக்கிறா?”
இப்படி வழிவழியாக வரும் ஒரு தலைப்பட்சமான கோட்பாடுகள், கலாசாரமென்ற பெயரில் ஆணாதிக்கம் சார்ந்து நிற்கும் சமயச்சடங்குகள், கறைபிடித்த பழைய சம்பிரதாயங்கள் தகர்ந்துபோகப் பெண்ணினமே பெண்ணினத்தைச் சேர்ந்து போராட வேண்டியுள்ளது என பெண்ணினத்தின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
பத்மறி பட்டமெல்லாம் கூடப் பெற்ற முதியமாது ஒருத்தி ஒரு பேட்டியில்,
54

“இளைய பெண்கள் எல்லாரும் நல்ல கலாசாரப் பண்பாடுகளை விட்டு போயிட்டிருக்காங்க. இது ரொம்ப வேதனைக்குரியது. நம்ம நாட்டுக்கென்று தனியா கலாசாரம், பண்பாடு இருக்கு. அதைப் பெண்கள்தான் காப்பாத்தணும்---------- و
கலாசாரம், பண்பாடு என்றால் என்ன? அதைக் காப்பாற்றுவதற்கு மாத்திரம் பெண்களை மட்டும் எப்படிப் பொறுப்பாளர்களாக்க முடியும்? என்ற கேள்வியை அபிராமி என்ற பாத்திரம் மூலம் எழுப்பிச் சிந்திக்க வைக்கிறார்.
கலியாணமென்பது தாலிச்சரட்டில்த்தான் தங்கியுள்ளது. அது சகல விதத்திலும் பெண்ணை உறிஞ்சுவதற்கு ஓராணுக்குக் கொடுக்கப்படும் உரிமை லைசென்ஸ் அல்ல என்ற கருத்தை வற்புறுத்துவதோடு, ஆணைச் சார்ந்து வாழ்வதே பெண்ணின் விதி என்ற இறுகிய மரபு நிலையைத்தளர்த்தி, பெண் தனித்து நின்று மாறிவரும் சமுதாயத்தின் புதிய பரிணாமத்திற்கேற்றாற்போல் வாழ்வில் பங்கேற்றுச் சமூகப் படிநிலையை மாற்ற முயற்சிக்கும் வலிமை மிக்க சிந்தனை இப்பாத்திரத்தின் மூலம் முனைப்புக் கொள்கிறது.
ஒவ்வொரு நாவலின் முன்னுரையிலும் தனது குறிப்பிட்ட படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்தும் இந்நாவலாசிரியர் இந்நூலின் முன்னுரையில் "ஆணுக்கு இருக்கும் தனித்தன்மையைப் போலத் தனிமதிப்பைப் பெற்று குடும்ப உறவுகளின் சமமான பொறுப்பும் உரிமையும் பங்கும் உடையவர்களாய்ப் பெண் ஏற்றம் காணும போதுதான், அவர்கள் கற்ற கல்வி பொருளாதாரச் சுதந்திரம் ஆகிய, சலுகைகள் உண்மையிலேயே பயனுடைய உரிமைகளாக அவர்கள் சமுதாய உணர்வை உயர்த்த முடியும்.” என்கிறார்.
“காலந்தோறும் பெண்” என்ற கட்டுரை நூலிலே விஞ்ஞான வளர்ச்சி பெறாத நிலையில் பெண்ணின் ஆற்றல் தாய் என்ற வடிவில் போற்றப்பட்டது. ஆதிவாசிகளின் ஒவியங்களில் பெண்ணின் மார்பகமும், இடுப்புப் பகுதியுமே போற்றப்பட்டு மங்கலச் சின்னங்களாக விளங்கின. பல பழக்க வழக்கங்கள் குறிப்பிடக் கூடியதாக நிறைகுடம், பூரணகும்பம், நிறைநாழி ஆகியவை வறுமையின் சின்னங்களே. நிறைகுடம் அல்லது பூரணகும்பம் பெண்ணின் கருப்பையைக் குறிப்பதாகும். குடத்துடன்
55

Page 31
பெண் எதிரே வந்தால் மங்கலம், நல்லசகுனம். நீர் வன்மை, மழைவன்மை இனப்பெருக்கத்துக்கான சாதனையை ஏற்று நிறைவேற்றுபவள் பெண் தாய் என்ற நிலைப்பாட்டில் அந்தத் தாய்மையை அளிப்பவன் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டாள்.”
என தாய்வழிச்சமூகத்தின் சிறப்பையும் ஆணாதிக்கக் கொடுமையால் பெண்ணின் நிலை எப்படித் தாழ்த்தப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை இந்நூலில் பல எடுத்துக் காட்டுகளைக் காண்பித்து நிறுவியுள்ளார்.
தாயாண்மைச் சமூகத்தின் எச்சங்களாகப் பழங்குடிமக்கள் வழிபடும் கொற்றவை, மாரிமகமாயி, வீரி ஆகிய “ தாய்த் தலைமைகளைத் தந்தையாண் குடிமரபினர் வீழ்த்திய வரலாற்றுச் சின்னங்களாக அத்தெய்வ வடிவங்களைக் கொள்ளலாம்” என்பதும்,
“ஓர் ஆண் தன் உடல் சார்ந்த உற்பத்திச் சக்தியைச் சேமித்து அதை உள்முகமாக்கி, ஒளிபெற்றுத் திகழலாம் என்பதைத் தவயோகிகளின் வரலாறுகள் உணர்த்துகின்றன. ஆனால் அதே விதி பெண்ணுக்கு உரியதாக்கப்படவில்லை. அவள் பிறப்பின் குறிக்கோளே ஓர் ஆணின் சார்புதான்! எனவே உடல் சார்பான ஓர் அடிமைத்தனமே அறிவு, உணர்வு ஆன்ம பூர்வமான நிறைவுக்குக் கொண்டுசெல்ல வல்லது என்ற மாயை நிர்ணயிக்கப்பட்டுள்ளது." எனப் பெண்ணின் ஆன்மாவுக்கே ஈடற்ற நிலை சுட்டப்படுகிறது என்ற பேதத்தை விவரிக்கிறார்.
பெண்ணின் மீது பாசியாகப்பற்றித் தொடரும் கலாசார விழுமியங்களின் இறுக்கம், பாலியல்த் தன்மையின் அடக்குமுறை எப்படிச்சமூக வரையறைகளாகப் பேணப்பட்டுப் பெண்ணை அடக்கி வைத்துள்ளன என்பது பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறார்.
“மரபுகளை உடைப்பது மட்டும் புதுமையல்ல. ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் வழக்கங்களைத் தடங்கல்கள் என உடைக்க வேண்டுமானால், அதைக் காட்டிலும் ஓர் அழகை, நன்மையை, மேன்மையை காட்டினால்த்தான் மரபுகளை உடைத்த பலன் முழுமையாகக் கிடைக்கின்றது.” என்று விலங்குகள் என்ற
56

நாவலின் முன்னுரையில் பழமையை உடைத்துப் புதுமையை எப்படிப் புகுத்த வேண்டுமென்ற அறிவுரையை மிக நிதானமாகத் தெளிவோடு முன்வைக்கிறார்.
இன்றைய தமிழ்ச் சமூக அமைப்பில் பெண்களுக்கு விடுமட்டுமல்ல வெளியுலகமும் எப்படி விலங்குபூட்டி அழகு பார்க்கிறது என்ற கொடுமையைக் குறிப்பிடுவதுதான் விலங்கு எனும் நாவல்.
“பெண் மெல்லியள், விடே அவளுக்குரிய பாதுகாப்பான இடம் என்ற காப்பை, கண்ணுக்குத் தெரியாத விலங்கைப்போல் பூட்டி விடுகிறார்கள். அந்த விலங்கை உடைத்தெறியத் துணிவின்றி வெளியே செல்லும்போதும் அதன் சுமையில் அஞ்சிச் சாகின்றாள் அவள். அதை உடைத்துக் கொண்டு வெளியே வண்ண வண்ணப் படைதிரண்டாற்போல் வருபவர்களோ பல மாயக்கவர்ச்சிக்கு அடிமையாகிறார்கள்.”
“நெறிகளை உடைக்கத் துணிவு இருப்பவர் நெறிகள் வெறும் விலங்காயிருந்ததுன்னு நிரூபிக்கணும். அதை உடைச்சால்த்தான் வாழ்க்கையை மேன்மையாக்கிட்டேன்னு நிரூபிக்கணும்.”*
இத்தனை அழுத்தமாகப் பாத்திரங்களைப் பேசவைத்து மரபுநெறியை சரியான முறையில் உடைக்க உந்துதலாக விளங்கும் இவருடைய எழுத்துக்கள் எத்தனை சத்தியமானவை.
இம்மண்ணுலகில் பூந்துளிர்களாக மலர்கின்ற குழந்தைகளில், பெண் குழந்தையாகப் பிறந்துவிடின் அதனை வளர்த்து ஆளாக்கி உயிருடன் உலாவவிடாமல் பிஞ்சிலேயே நசிச்சுக்கொல்லும்பெண்ணினத்தின் அரும்புக்கு ஏற்படும் கொடுமையைச் சித்திரிப்பது “ மண்ணகத்துப் பூந்துளிகள்” என்ற மானிட நேயத்தை மழுங்கடிக்கும் நாவல், சிறந்த படைப்பு. பெண் குழந்தைகள் பெற்றதாயை, மாப்பிள்ளைகள் அவள் தாய்வீட்டிற்கு அனுப்பி வைப்பதும், பிறக்கப்போகும் பிள்ளை பெண்ணாகிவிட்டால் “என் வீட்டுக்கு வராதே’. என அப்பிறப்பில் தனக்கொரு பொறுப்புமில்லாதவன் போல் நடந்து கொள்ளும் கணவனையும் விஸ்தரிக்கும் அருமையான படைப்பு இந்நாவல்.
57

Page 32
குழந்தை பிறந்ததும் பாலகி என்பதால் கள்ளிப் பாலைப்பருக்கிச் சாகடிக்கக் காத்திருக்கிறாள் ஒரு வயோதிபமாது. பச்சைச்சிசுவை மடியில் கிடத்தி சங்கில் உள்ள எருக்கம்பாலை அது “கக் கக்” என்று சத்தம் வர விழுங்கப் புகட்டுகிறாள்.
“நீ வாணாம்மா. நீ போயிட்டு உன் ஆத்தாக்கு ஒரு ஆம்புளப்புள்ளயாகத் திரும்பி வா” என்கிறாள். தெய்வங்களா! பொம்பிளைப்புள்ளயை அனுப்பாதீங்க தாயே -------- !-------- ஒலகம் முச்சூடும் பொட்டப்புள்ளன்னா வாணான்னாச்சி. பூமித்தாய் பச்சினு சிரிச்சகாலம் போலை மனிசங்க அம்புட்டுப் பேருக்கும் பணம், பவுனென்னு வெறியாய்ப்போச்சு. ஆயி, அப்ப, பொஞ்சாதி, புள்ளங்கிற ஈரம் கூடப் போயிரிச்சு --------- S
பெண் என்ற உயிரினமே, அதற்கு தேவையானதாகக் கொள்ளப்படும் நகைகள், சீதனம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எவ்வளவு துாரம் வெறுக்கப்படுகின்றது, ஒதுக்கப்படுகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நாவல் அமைந்துள்ளது.
உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண் டெழுதப்பட்டதென ஆசிரியரால் குறிப்பிடப்படும் இன்னொரு உன்னத நாவலாக “மாறிமாறிப் பின்னும்" என்ற நாவல் ஏனைய படைப்புகளை விட மிக வித்தியாசமான முறையில் புனையப்பட்டுள்ளது.
“இதில் பிரதான பாத்திரமான ரேவதி, குடும்ப வாழ்க்கையின் கொடுரங்களுக்கு ஆட்பட்டு விடுதலைக்குத் துடிக்கும் பெண். இவளுடைய அருந்தல்கள், பாடுகள்தான் நாவலின் தளம். ஏன் இந்தப்பெண் இவ்வளவு கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும் என மற்றவர்கள் கேட்குமளவிற்குத் துன்பங்களைத் தாங்கிக் கொள்கிறாள். இந்நாவல் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு முக்கிய சமூகவியல் உண்மையை வலிவுடன் எடுத்துக் காட்டுகிறது.”* பெண்ணினமே தலை தூக்கவிடாமல் அழித்தொழிக்கப் பாடுபடும் ஆணாதிக்கப் போக்கின் கொடுரங்களைச் சித்தரிக்கும் இந்நாவலின் போக்கை மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
குடும்பம் என்ற கட்டுள் கிடந்து பெண் உழலும் ஒலங்கள்,
அக்கூட்டிலிருந்து அவள் தன்னை விடுவித்துக் கொள்ளப்படும் சிரமங்கள்,
சிக்கல்கள் உருக்கமாகக் கூறப்பட்டிருப்பது உள்ளத்தைத் தொடுகிறது.
58

“பெண் வெறும் உடலில்லை. அவள் மகாசக்தி. ஒவ்வொரு பெண் உடலிலும் அந்தந்த உயிர்ச்சக்தி இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவள் தன்னை ஒடுக்கும் ஓர் இனத்தை ஒவ்வொரு கணமும் வயிற்றில் வைத்துக் காத்துப்பேணி உயிரையும் துரும்பாக்கி வளர்த்தெடுக்கிறாள்." என்ற ஆசிரியரின் கூற்று (முன்னுரையில்) ஆணித்தரமாகப் பெண்ணின் உயர்வை பறைசாற்றுகிறது.
வீடு என்ற நாவல் விசேடமாக் குறிப்பிட வேண்டியது.
காலங் காலமாக வீட்டுக்குரியவளே பெண் என்றும் மனையாள், இல்லக்கிழத்தி, வீட்டுக்காரி என்றெல்லாம் பெண்ணை வீட்டோடு நெருக்கமாக இணைத்தே குறிப்பிடுவர். அவளும் சமைப்பதும், தோய்ப்பதும், விடுசுத்தப்படுத்துவதும், பிள்ளைப் பெற்று வளர்ப்பதுமே தனது வாழ்வு என ஏற்றுக்கொள்வாள். இத்தகைய ஒரு பெண்ணே “விடு” நாவலின் கதாநாயகி. எவ்வளவோ கஷ்டப்பட்டு வீட்டுக்காக மாடாக உழைத்தும் கணவனோ, பிள்ளைகளோ அவள்மீது அன்பு காட்டவில்லை. மதிப்பதோ, மனித உயிராக ஏற்றுக்கொள்வதோ கூட இல்லை. ரமணம்மா என இன்னொரு பாத்திரம். அவள் திருமணமாகி, அதன் பொருள் புரியுமுன்பே விதவையாகி, பின் கல்விகற்றுச் சமூக சேவை செய்கிறாள். பெண்ணுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும், சமூக வரையறைகளைத் துாக்கியெறிந்து வெளிக்கிளம்பும் போது பல பிரச்சினைகள் அவளை நெருக்கி யடிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில்,
"அப்பெண்ணுக்குக் குடும்பம் முக்கியமா? பலதுறைகளிலும் ஈடுபட்டு வெளியே தன் தனித்தன்மையைத் தேடுவது முக்கியமா? குடும்ப அமைப்பை உடைத்து வெளியேறுகையில் சமுதாய ஆரோக்கிய அங்கங்களான குடும்பங்கள் பாதிப்படையாதா?" பெண் விடுதலை இந்நாவலிலே பளிச்சிடுகிறது.
பெண் நிலைவாதத்தின் தமிழ்நிலை நின்ற சிந்திப்புக்களிலே ராஜம் கிருஷ்ணன் பெண்விடுதலை என்ற கருத்துப் படிவத்தை அதன் ஆழ அகலங்களோடும், முழுப்பரிணாமத்தோடும் தமிழ் வாசக உலகிற்குக் காட்டவிழைகிறார். வெளியேற்றம் என்பதை மட்டும்
59

Page 33
வற்புறுத்தி வாழ விடாமல் முடிவெடுப்போரின் தொடரியக்கம் எவ்வாறு இருத்தல் வேண்டும்? அவர்கள் அடைய வேண்டிய இலக்கு எது என்பதையும் தளைநீக்கம், வெளியேற்றம், முடிவெடுத்தல், தொடரியக்கம் இவையே அவரின் இலக்கு என பிரபல விமர்சகர் யா. இராமலிங்கம் குறிப்பிட்டிருப்பதையே நானும் அழுத்திக் கூற விரும்புகிறேன்.
பெண்களின் நிகழ்காலப் பிரச்சனைகளைச் சிந்தித்து அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவைச் சமூகப் பொறுப்போடு சிந்தித்துப் பெண்ணினம் மேன்மையுறத் தன் பேனாவை அர்ப்பணிக்கும் பெருமைக்குரிய ராஜம் கிருஷ்ணனின் சேவையைப் பெண்ணினம் மட்டுமல்ல, ஆண்களுமே பெருமையோடு பாராட்ட வேண்டும்.
துணை நுாற் பட்டியல்
1. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் - டாக்டர். முத்துசிதம்பரம். (பக் 10) 1ம் பதிப்பு 1995, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
2. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் டாக்டர். முத்துசிதம்பரம். (பக் 11) 1ம் பதிப்பு 1995. தமிழ்ப் புத்தகாலயம, சென்னை.
3. பாரத குமாரிகள் ராஜம் கிருஷ்ணனின் முன்னுரை ( 4 ம் பக்)
1ம் பதிப்பு 1984. பாரி புத்தகப்பண்ணை வெளியீடு, சென்னை.
4. ராஜம் கிருஷ்ணன் நாவல்கள்:- கட்டுரை மா. இராமலிங்கம்,
2ம்பக். பெண்கள் படைப்பில் பெண்கள்.
5. பாதையில் பதிந்த அடிகள்(பக் 23)
ராஜம் கிருஷ்ணன் . தாகம் வெளியீடு . சென்னை. 1ம் பதிப்பு 91.
6. சவு பக். 25
7. தோட்டக்காரி. ராஜம் கிருஷ்ணன் 2ம் பதிப்பு 92. (பக்கம் 30)
தாகம் வெளியீடு. சென்னை.
60

10.
11.
12.
13.
14.
15.
16.
7.
18.
19.
தோட்டக்காரி. ராஜம் கிருஷ்ணன் 2ம் பதிப்பு 92. (பக. 31) தாகம் வெளியீடு. சென்னை.
இரா. தண்டாயுதம் ஓர் இலக்கிய ஆய்வு, டிச. 85. தமிழ்ப்
புத்தகாலயம் சென்னை.
புதிய சிறகுகள். ராஜம்கிருஷ்ணன் 1ம் பதிப்பு 1985 பாரி புத்தக நிலையம் சென்னை.
புதிய சிறகுகள் ராஜம் கிருஷ்ணன் 85. 1ம் பதிப்பு, பாரி புத்தக நிலையம் சென்னை. காலந்தோறும் பெண்மை, தாகம் வெளியீடு சென்னை. 1ம் பதிப்பு 1990 ( 15 பக்) ராஜம் கிருஷ்ணன்.
காலந்தோறும் பெண்மை. ராஜம் கிருஷ்ணன், தாகம் வெளியீடு சென்னை, 1ம் பதிப்பு 90.
விலங்குகள் ராஜம் கிருஷ்ணன் 4ம் பதிப்பு 1992. தாகம் வெளியீடு, சென்னை.
விலங்குகள். ராஜம் கிருஷ்ணன் 4ம் பதிப்பு 1992. தாகம் வெளியீடு, சென்னை.
மண்ணகத்துப் பூந்தினிகள், ராஜம் கிருஷ்ணன். தாகம் வெளியீடு, 92. சென்னை.
பெண் தொகுதி 2. இலக்: 2 சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு.
மாறி மாறிப்பின்னும்:- ராஜம்கிருஷ்ணன், தாகம் வெளியீடு. சென்னை.
மா. இராமலிங்கம் கட்டுரை. பெண்கள் படைப்பில் பெண்கள்.
பெண்ணின் கதை. செ. கணேசலிங்கம் முன்னுரையில். குமரன் வெளியீடு, வட பழனி, சென்னை.
6

Page 34
சுன்னாகத்தம்மா
மொழிபெயர்ப்பு - (இந்துசாதனம்
1929b ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை பகற் பொழுதில் சுன்னாகத்திலே யாவரினதும் மதிப்புக்குரிய புனிதவதியாக வாழ்ந்த அம்மையார் ஒருவர் எம்மை விட்டுப் பிரிந்தார். பலராலும் சுன்னாகத்தம்மா என்று வாஞ்சையுடன் அழைக்கப்பெற்ற செல்லாச்சியம்மா பக்தசீலியாகவும் ஆத்மார்த்த விடயங்களில் அருள்பெற்றவராகவும் வாழ்ந்து வந்தார். அவரின் பிரிவால் அவரின் எண்ணற்ற அபிமானிகளும் பக்தர்களும் ஆறாத் துயரில் மூழ்கியுள்ளார்கள். ஆன்மீக விடயங்களில் அண்மைக் காலத்தில் இந்த அம்மையாரின் சாதனைகள் அளப்பரியன. அன்னாரின் போதனைகள் அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களை ஆட்கொண்டன. எதிர்காலத்திலும் அவை பலருக்கு ஆதர்சமாயும் வழிகாட்டியாயும் அமையும் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்தில் இத்தகைய அருட்கடாட்சம் பெற்ற ஓர் அம்மையார் தோன்றியமை யாழ்ப்பாணத்திற்கு மட்டுமன்றி இந்து இலங்கை முழுவதுக்குமே பெருமை சேர்க்கும் விடயமாகும்.
1905 யூலை மாதம் பெளர்ணமி தினத்தன்று மாவிட்டபுரத் தேர்த்திருவிழா முடிவடைந்த வேளையிலே அவரின் கணவர் முதலியார் தம்பு அவர்களின் ஆவி பிரிந்தது. அந்தக்கணமே அவ்வம்மையார் தம் அந்திம காலம் நெருங்கிவிட்டதென்ற உண்மையை உணரலானார். தம் கணவனின் இறுதிக் கிரியைகள் அனைத்தையும் மிகுந்த பக்திச் சிரத்தையுடன் செய்வித்து முடித்தார். அன்றைய தினமே தம் நகை நட்டுக்கள் யாவற்றையும் களைந்து விதவைக் கோலம் பூண்டார். தம் எஞ்சியுள்ள வாழ்நாளைச் செப தபங்களில் கழிக்கத் தொடங்கினார். உணவை மறந்து மணித்தியாலக் கணக்கில் சிவ பூசையில் ஈடுபட்டார். பக்தர்களின் கருத்துப்படி அவர் தொழுத சிவலிங்கம் கூட மாயமான முறையில் அவருக்குக் கிட்டியதாக நம்பப்படுகிறது. சிவபெருமானே நேரில் தோன்றிப் பக்தி மார்க்கத்தின் நுட்பங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார் எனவும் நம்பப்படுகிறது. அது எவ்வாறிருப்பினும் அவர் ஒரு போதும் தம் மனையை விட்டு வெளியேறவில்லை. திருத்தலங்கள் எவற்றையும் தரிசிக்கவில்லை. எவரின் உதவியையும் நாடவில்லை.
62,

பிற்காலத்தில் தம் சிஷயர்களுக்கு அவர் போதித்த சத்திய வசனங்கள் யாவும் தம் சொந்த உள்ளொளியால் உய்த்துணர்ந்தனவே என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
செல்லாச்சியம்மா மயிலிட்டியில் உயர்குடி வெள்ளாளராக விளங்கிய காலஞ்சென்ற ரீ. முத்துகுமாரு அவர்களின் மூத்த புதல்வியாவர். முத்துக்குமாரு அவர்கள் நெடுங்காலமாக அரசாங்கத்தில் இறைவரி உத்தியோகத்தராகப் பணியாற்றி, கணக்காளர் எனப் பெயர் பெற்றார். செல்லாச்சியம்மா 1868ம் ஆண்டளவில் சுன்னாகத்தில் பிறந்தார். அவருக்கு மூன்று தம்பிமாரும் தந்தையும் இருந்தனர். சுன்னாகத்தில் பொலிஸ் விதானையாகப் பணியாற்றிய காலஞ்சென்ற திருவம்பலம் அவர்களைத் தவிர ஏனையோர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஆசாரசீலமிக்க சைவக் குடும்பத்திலே பிறந்த செல்லாச்சியம்மா சிறு பிராயத்திலிருந்தே சைவ ஆசார அனுட்டானங்களில் ஊறித் திழைத்தார். பிற்காலத்தில் ஒரு சைவப்பழமாக அவர் திகழ்வதற்கு இந்த இளம் பருவப்பயிற்சி ஆதாரமாக அமைந்ததெனலாம். அன்றைய நாள்களிலே கெளரவமான இந்தக் குடும்பத் தலைவர்கள் பெண்பிள்ளைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பித்தார்கள். தமிழ் இலக்கியம்மட்டுமல்லாமல் தாய்மொழியில் வெளியாகியிருந்த புராணங்கள் இதிகாசங்கள் யாவும் இவ்வாறு அவர்களுக்குப் புகட்டப்பட்டன. மூத்த பிள்ளை என்ற படியால் வீட்டுக் கருமங்களைக் கவனிக்கும் பொறுப்பும் இப் புனிதவதியைச் சார்ந்தது.
இவ்வாறு அவர் மீது சுமத்தப்பட்ட புதிய கடமைகள் அவரது பயிற்சிக்கு உதவின. பிற்காலத்தில் அவரைத் தேடி வந்த பல இளம் பெண்களுக்குப் புத்திமதி புகட்டுதற்கேற்ற பல படிப்பினைகளை எழுத்துப் பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்டார்.
இலங்கை அரசாங்கத்தின் வைத்திய சேவையில் அப்போத்திக்கரியாகப் பணியாற்றிவந்த முதலியார் தம்பு அவர்களுக்கு செல்லாச்சியம்மா மனைவியானார். அவர்களுக்கு ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தனர். இருவரும் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். மகன் தம்புமுதலியார் சனிற்றரி டிபார்ட்மென்ற் என்னும் இலாகாவில் உத்தியோகம் பார்க்கிறார். செல்லாச்சியம்மா தன் கணவனுக்கு உகந்த மனைவியாகவும் பிள்ளைகளுக்கு அன்புத் தாயாகவும் விளங்கினார்.
63

Page 35
குடும்பம் எப்போதும் செல்வச் செழிப்புடையதாக விளங்கியமையால் அதன் அங்கத்தினர்களுக்கு வறுமையின் நிழல் கூடப் படியவில்லை. ஆயினும் செல்லாச்சியம்மாவிடம் ஒரு விஷேட குணாதிசயம் காணப்பட்டது. இடாம்பீக வாழ்வைப் புறக்கணித்து மிக எளிமையாகவும் சிக்கனமாகவும் தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்த வகையிலும் வேறு பல வழிகளிலும் அவர் எம் முற்காலப் பெண்களை ஒத்திருந்தார்.
அவர் கூறிய நிலையைக் கடந்த கட்டத்திலே தான் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றலுடையவர் என்ற கீர்த்தி நான்கு திசையிலும் பரவியது. யாழ் குடாநாட்டின் சகல பாகங்களிலிருந்தும் மக்கள் அவரைத் தரிசிக்க மொய்த்தனர். அற்புதங்கள் நிகழ்த்துவதால் ஒருவர் ஆத்மார்த்தத் துறையில் அதியுன்னத நிலையை எய்தியவராவர் என நிலைநாட்டுதல் எம் நோக்கமன்று. தெய்வ கடாட்சம் பெற்றவரென்றால் அற்புதங்கள் நிகழ்த்த வேண்டுமென்பதும் நியதியன்று. அத்தகைய நிகழ்ச்சிகளை அதீத சம்பவங்களாகவும் நாம் கருதுவதில்லை. இயற்கையில் எத்தனையோ மர்மங்கள் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலுள்ளன. ஆயினும் இந்துக்களாகிய நாம் இறைவன் தெய்வீக அருளை தன் பக்தர்கள் மூலம் வெளிப்படுத்துகிறான் என நம்புகிறோம். இவ்வாறு தெய்வ கடாட்சம் அருளும் பக்த்தர்கள் தம் வல்லமையைத் தாம் அறிவதில்லை. இவ்வாறுதான் செல்லாச்சியம்மாவும் தம்மை நாடி வந்த அனைவருக்கும் தம்மையறியாமலே வேண்டிய வரங்களையெல்லாம் அருளினார். அநேக சந்தர்ப்பங்களில் ஒரு சிட்டி கையளவு திருநீறு, கையின் ஸ்பரிசம், ஒரு சொல், அவர் கிணற்றில் அள்ளிய நீரில் ஒரு சிறிதளவு, இவற்றில் ஏதாவதொன்று மட்டுமே அவர் வழங்கும் பரிகாரமாக அமைந்ததுண்டு. இந்தப் பருவத்தில் அவர் திபிரென்று சமாதி நிலையடைவார். அவ் வேளைகளில் அவரைக் கவனமாகக் கண்காணிக்க நேரும். இதன் நிமித்தம் கற்றறிந்தவரும் பக்திமானுமான ஒரு வயோதிபர் அவருக்குப் பணிவிடை புரியவென்று அமர்த்தப்பட்டார். அவர் அல்லும் பகலும் இப் புனிதவதிக்குச் சேவை செய்து வந்தார். சில ஆண்டுகளின் பின்னர் அம்மையார் இந்த நிலையைக் கடந்து அடிக்கடி சமாதி நிலையடையலானார். யாத்திரிகர்கள் தொடர்ந்தும் அவரைத் தரிசிக்க வந்தார்கள். காலக்கிரமத்தில் மெய்யடியார் குழுவொன்று அவரைச் சூழ்ந்து கொள்ளவே தாம் கண்டறிந்த உண்மைகளை அவர்களுக்குப் போதிக்கலானார்.
64

என்றாலும் பல்வேறு பணியாளர்கள் அவரை நாடி வந்து கொண்டே இருந்தார்கள். இதன் காரணமாக அவரின் மெலிந்த உடலில் சிற் சில கோளாறுகள் தோன்ற ஆரம்பித்தன. அவரின் நலம் விரும்பிய பக்தர்கள், சரீர நோய்களைக் குணப்படுத்தும் பொருட்டு வந்து குவியும் நோயாளிகளைத் தடுத்து நிறுத்திப் பரிகாரம் கேட்க முற்பட்டனர். அவரோ அந்த வல்லமை தமக்குக் கிடையாது என்று சொல்லிப் புன்னகை புரிவார். சத்திய தரிசனம் கண்டவர்கள் ஈன உடலைப் பேண முயலுதல் வியர்த்த மென்றார். தாம் தம்மை மீறிய ஒரு சக்தியால் வழி நடத்தப் படுவதாகவும் தம்மால் எதுவும் நடைபெறுவதில்லை என்றும் அவர் எப்போதும் சொல்லி வந்தார்.
காலஞ் செல்லச் செல்ல அவரின் உடம்பெங்கும் தீப்பற்றியது போன்ற ஓர் எரிச்சல் உண்டாகி அவரை வாட்டத் தொடங்கியது. பிறரின் பாவக்கிரிகைகள் அவரின் உடலை ஊடறுத்துச்சென்றது போலத் தோன்றியது. ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியைத் தூரத்தில் இருந்துகூட அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. திண்ம ஆகாரங்களை ஒறுத்து நீராகாரத்தை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கினார். ஒரு மாதத்திற்கு முன் அதையும் கைவிட்டார். அவரின் பக்தர்கள் அவர் வெகு விரைவில் தம்மை விட்டுப் பிரிந்து விடுவார் என்று கவன்றனர். அவர் மீதிருந்த அளவற்ற அன்பின் நிமித்தம் வைத்திய உதவியை நாடும்படி அவரை வேண்டினர். அவரோ தமக்கு எவ்வித நோயும் இல்லை என்று மறுத்தார். ஆயினும் ஏனையோர் கண்ணில் அவர் நோயாளியாகவே காட்சியளித்தார். அவரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர் இறந்த தினமாகிய வெள்ளிக்கிழமையன்று அவரின் நெருங்கிய உறவினர்களில் சிலர் அவரை அணுகி, களுத்துறையில் உள்ள ஒரே மகனை அழைக்க வேண்டுமா என்று வினாவினர். அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் தாம் சுகமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் பிறகு அவர் தம் பார்வையை மேலே செலுத்தி தியானத்தில் ஈடுபட்டார். பிற்பகல் ஒரு மணியளவில் அருகில் நின்றவர்கள் அவரின் உடம்பைத் தொட்டுப் பார்த்தபோது உயிர் பிரிந்திருப்பதை கண்டனர். ஆயினும் உடம்பில் விறைப்பு ஏற்படவில்லை. அவர் மரணமான செய்தி காட்டுத் தீ போல எங்கும் பரவவே நாலா திசையிலிருந்தும் பக்தர்களும் அபிமானிகளும் வந்து சேர்ந்தனர். எவரும் அழுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. முழு இரவும் பிரார்த்தனையிலும் தியானத்திலும் கழிந்தது. மறுநாட் காலை அவரின் மகன் வந்து சேர்ந்தார். பக்தர்களிற்
65

Page 36
சிலர் அவரின் பூதவுடலைப் பேணி வைக்க வேண்டுமென்ற விருப்பைத் தெரிவித்தனர். ஆயினும் அம்மையார் அத்தகைய விருப்பு எதனையும் தெரிவித்திருக்கவில்லை என்பதால் பூதவுடலைத் தகனஞ் செய்வதென்று முடிவாயிற்று. அவரின் சிஷ்யைகள் பூதவுடல் மீது அபிஷேகம் செய்து அரோகரா என்னும் கோஷத்துடன் மேள தாளம் சங்கொலி பக்திப் பாடல்கள் ஆகியவற்றுடனும் கொண்டு சென்று சந்தனக் கட்டைகள் மீது கற்பூரம் பரப்பிய சிதை மீது வைத்து இறுதிக் கிரியைகளை நிறைவேற்றினர். அவரின் மகன் பூதவுடலுக்குக் கொள்ளி வைத்து தீ மூட்டினார்.
இதுவே யாழ்ப்பாணம் ஈன்றெடுத்த மாபெரும் புனிதவதியின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு. அன்னாரின் போதனைகளையும், யாழ்ப்பாணப் பெண்களுக்கு அவர் விட்டுச் சென்ற செய்திகளையும், இடவசதியின்மையால் இங்கு குறிப்பிடாது விடுகிறோம். அந்தப் பணியை அன்னாரைப் பற்றிய கட்டுரைத் தொடரொன்றை எழுத வாக்களித்துள்ள பக்தர் ஒருவரிடம் விட்டுள்ளோம். இப் புனிதவதி போன்ற பெண்மணிகள் தோன்றுதல் அரிது. எனவே இந்து மகளிருக்குச் சிறப்பாகவும் ஏனைய பெண்மணிகளுக்குப் பொதுவாகவும் நாம் ஆற்றக் கூடிய பணி இப் புனிதவதியின் வாழ்க்கை பற்றிய விரிவான நூலொன்றை வெளியிடுதலே. இப் பணியை யாழ்ப்பாணத்து இந்து மக்கள் நிறைவேற்றுவார்கள் என எதிர் பார்க்கிறோம்.
(1929ம் ஆண்டு தை மாதம் 2ith திகதி இந்து சாதனப்
பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியிட்டதை இங்கே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறோம்)
女 ★ 大 ★ ★
女 ★ ★
66

சுன்னாகம் செல்லாச்சியம்மா
ச. அம்பிகைபாகன்
இந்துக்கள் செய்த தவப்பயனாகத் காலத்துக்குக் காலம் பெரியார்கள் தோன்றிச் சமய உண்மைகளை நிலைநாட்டி வருகின்றனர். மேல் நாட்டிற் சமய உண்மைகளில் நம்பிக்கை குறைவதற்கு முக்கிய காரணம் சமய உண்மைகளைத் தங்கள் வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டக் கூடிய பெரியார்கள் காலத்துக்குக் காலம் அங்கு தோன்றாமையே.
நாம் இங்கு குறிப்பிடும் அம்மையார் 1929 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இறைவனடி எய்தினார். ஆனபடியால் இவரை யறிந்தார் பலர் நம் மத்தியில் இப்பொழுதும் இருக்கின்றனர். சிவநெறிப் பற்றுமிக்க இவ் அம்மையார் பிற்காலத்திற் சுன்னாகத்தம்மா என அழைக்கப்படலாயினர். இவர் சுன்னாகத்திலுள்ள ஒரு பிரபல வேளாளன் குடும்பத்தில் தோன்றியவர். இவ்வம்மையாரின் தந்தையார் சுன்னாகம் முத்துக்குமாரக் கவிராயரின் தெளகித்திரனாவார். தெளகித்திரன் புத்திரியின் மகன் இவருடைய தம்பியார் திரு. திருவம்பலம். சுன்னாகம் கிராமத் தலைவராய் விளங்கியவர்.
இல் வாழ்க்கை
அம்மையார் வைத்தியப் பகுதியிற் கடமையாற்றிய திரு. தம்பு என்பவரை விவாகஞ் செய்து சில காலம் இல் வாழ்க்கை நடத்தினார். இவ் இல்வாழ்க்கையின் பயனாக ஒரு மகனும் ஒரு மகளும் தோன்றினர். இவ்விருவரும் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அம்மையார் மகளின் மகளே இவர் அருமையாக வளர்த்துவந்த குழந்தை.
குடும்ப வாழ்க்கையில் இருந்த காலத்திலே குடும்பக் கடமைகளோடு சிவ தொண்டு புரிவதிலும் ஈடுபட்டு வந்தார். பிரதான விரதங்களையெல்லாம் அநுட்டித்துவந்தார். ஆலயங்களில் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல் முதலிய தொண்டுகளைப் புரிந்து வந்தார். இவர் பிரதானமாக வழிபாடு செய்துவந்த ஆலயம் சுன்னாகம் பிள்ளையார் கோயிலாகும். இவரது இந்தக் காலத்து வாழ்க்கையை நோக்கும் போது இவர் சரியை மார்க்கத்தை கைக்கொண்டாரென்று கூறுவது பொருந்தும் கடைசிக் காலம் வரையும் அம்மையார் புனிதத்தில்
67

Page 37
நாட்டமுடையவராய் தாம் வசித்த வீட்டையும் வளவையும் புனிதமாக வைத்திருந்ததை அன்பர்கள் அறிவார்கள். வீடு மாத்திரமல்ல வளவிற் பெரும் பகுதியும் மெழுகிடப்பட்டிருக்கும். அங்குள்ள கிணறு காலத்திற்கு காலம் இறைக்கப்பட்டு நீர் பளிங்கு போலிருக்கும். இறைவன் சான்னித்தியம் எங்கும் பிரகாசிக்கும்.
கைம்மை நிலை
இவருக்கு நாற்பதாவது வயதிற் கணவனிறந்தார். இதோடு இவர் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் ஏற்பட்டது. அணிகலன்கள் சகலதையும் துறந்து வெளளையுடை தரித்து உண்டியைச் சுருக்கி கைம்மை நோன்பு மேற்கொண்டார். காரைக்காலம்மையார், கணவன் தம்மைத் துறந்தபின் பேயுருவங் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்து தர்மத்தின்படி பெண்கள் தங்கள் உடம்பைப் பேணுவதும் தங்களை அழகு செய்வதும் கணவனின் பொருட்டே இந்து தர்மத்தின்படி வாழ்ந்த அம்மையார் கணவனிறந்ததும் துறவு நிலையை மேற்கொண்டது ஆச்சரியமல்ல.
இக் காலத்தில் அம்மையார் தினந்தோறும் ஸ்நானஞ் செய்து கடவுள் வழிபாடு செய்த பின்னர், ஒரு வேளை உணவையே உட்கொண்டு வந்தார். தேவார திருவாசகங்களை இடையறாது ஒதிவந்தார். திருமுறைகளை இடைவிடாது ஒதியதனால்த்தான் தமக்குத் திருவருள் கைகூடியதாகப் பிற்காலத்திற் கூறுவர்.
ஞான வாழ்க்கை
இப்படி இவர் வழிபாடு செய்துவருங் காலத்தில் எப்படியோ ஒரு சிவலிங்கம் இவர் கைக்குக் கிட்டியது. இதில் அதிசயமென்ன வென்றால் அம்மையார் கணவனிறந்த பின் வீட்டை விட்டு வெளியே போனது கிடையாது. இறைவனருளால் இவ்விலிங்கம் தம்மிடம் வந்து சேர்ந்ததாக அம்மையார் நம்பினார். இந்த இலிங்கத்துக்கு முறையாக வழிபாடு செய்து வந்தனர்.
இப்படி வழிபாடு செய்து வருங் காலத்தில் அம்மையாருக்கு மனவொருமை ஏற்பட்டு அவர் நெடு நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பர். இந்நேரங்களிற் கருவி கரணங்களெல்லாம் ஒடுங்கி விடும். சிறிது காலஞ் செல்லத் தியான நிலை முதிர்ந்து சமாதி நிலை
68

கைவரப்பெற்றார். இந்தக் காலங்களில் இறைவன் தமக்குக் கொடுத்த பெரும்பேற்றை எண்ணியெண்ணிப் பரவசப்படுவர். இந்தநிலை எய்திய பின்னர் உறங்கினவன் கைப்பொருள் போல சகல கிரியைகளையும் கைவிட்டனர். குளித்தல், மயிர் கோதுதல், பல் துலக்கல் முதலிய உடல் சம்பந்தமான செயல்களைத் துறந்தனர். மயிர் சடை பின்னி வளரத் தொடங்கி அம்மையார் நின்றால் நிலத்தை தொடுமளவிற்கு வளர்ந்தது. இவர் இக்காலந் தொடங்கி வாழ்ந்த வாழ்க்கை சிவஞான சித்தியாரிற் சீவன் முக்தர் வாழ்க்கையைப் பற்றிக் கூறியதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இது பற்றிய சிவஞானசித்தியார் பாட்டைக் கீழே காண்க.
ஞாலமதின் ஞானநிட்டை யுடையோருக்கு
நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச்
செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை
குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப்
பாடலினொடாடலிவை பயின்றிடினும்பயில்வர்.
அம்மையார் இவ்வளவு உயர்நிலையடைந்தாரே இவருக்கு வழிகாட்டிய குரு யார்? என்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இவருக்கு மற்றையவருக்குப் போல் ஒரு குரு இருந்திருக்கவில்லை என்பதே விடை. இறைவனே அறிவுக்கறிவாயிருந்து இவருக்கு வழி காட்டினார் என்று கூறுவதே பொருந்தும். இது சம்பந்தமாக நடந்த சம்பவத்தை இங்கே கூறுவது பொருத்தமாயிருக்கும். அம்மையாரைப்பற்றிக் கேள்விப்பட்ட ஒரு சுவாமியார் இவருக்குக் குருவில்லாதபடியாற் பூரண நிலை அடைந்திருக்க முடியாதென்று இவருக்கு உபதேசஞ் செய்யும் பொருட்டு இவர் வீட்டுக்குப் போனார். இந்தச் சுவாமியார் வந்த நோக்கத்தைத் தமது ஞான திருஷ்டியால் அறிந்த அம்மையார் “யாருக்கு உபதேசம் செய்ய வந்தாய்’ போ வெளியே! என்று அதட்டித் துரத்தினார். இப்படி வருபவரின் நோக்கத்தையும் தன்மையையும் தாமாகவே அறியுந் தன்மை அம்மையாருக்கு இருந்தது.
தமிழ்த் துறையிலும் விஞ்ஞானத் துறையிலும் பாண்டித்தியம்
பெற்ற ஒருவர் அம்மையாரிடம் அடிக்கடி வருவார். அவருக்குத் துறவு வாழ்க்கையில் நாட்டமிருந்த போதிலும் அவருள்ளத்திற் கல்விக்கும்
69

Page 38
அதனால் ஏற்படும் புகழுக்குமே முதலிடம் கொடுத்திருந்தார். ஒரு நாள் அவர் வந்ததும் அம்மையார், “கல்வியே பெரிதென்று கதறித் திரிவர் கயவர்” என்று கூறினர். அப்பெரியாரை அறிந்தவர் அம்மையார். அவரைப் பற்றிக் கூறியது உண்மை என்பதை உணர்வர். அவர் கடைசி வரைக்கும் கல்வியென்னும் பல் கடலில் இருந்து பிழைக்கவில்லை.
அடியார் வருகை
அம்மையாரின் ஞான வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட சில பெரியார்களைப்பற்றி இங்கு குறிப்பிடுதல் அவசியம். இவர்களுள் முதலிடம் யோகர் சுவாமிகளுக்கேயுரியது. அம்மையாருக்கும் சுவாமிகளுக்குமிருந்த ஆத்மீகத் தொடர்பை வர்ணிப்பதற்கு ஒரு சேக்கிழார் வேண்டும். ஒருவர் நினைக்க மற்றவர் செயலாற்றுவர். இருவரையும் ஒருமித்துக் கண்டவர் அந்தக் காட்சியை இலகுவில் மறக்கமாட்டார். இதற்கு மேல் இவ் விஷயத்தைப்பற்றி இப்பொழுது எழுத அஞ்சி விடுகின்றேன். காரணத்தை அன்பர் அறிவர்.
அம்மையாருக்குப் பல விதத்தில் தொண்டாற்றிய ஒரு பெரியார் பூசாரிக் கிழவனார் என்பவர். இவர் ஏழாலை வாசி. மிகவும் எளிய வாழ்க்கையை மேற்கொண்டவர். தாமாகத் தயாரித்த ஒரு வேளை உணவை உட்கொள்ளும் நியதியுடையவர். மாலையில் அரிசியுடன் இலை குழை காய் கறி முதலியவற்றை வேகவைத்து உண்பர்.
செல்லாச்சி அம்மாவைப்பற்றி ஒரு சிறு புத்தகமும் அம்பிகைபாகனால் எழுதப்பட்டது. அப்புத்தகத்தைப் பெறும் முயற்சி கைகூடவில்லை. இவரைப்பற்றிய விடயங்களில் எது உண்மை எது கட்டுக்கதை என்று தெரியாவிட்டாலும் தனிப்பெண் ஒருத்தர் அதுவும் கணவனை இழந்த ஒருத்தி ஆண் அடியார்களைக் கொண்டிருந்தார் என்பது சுவாரஸ்யமான செய்தி. குருவிலா ஞானியாகிவிட்ட செல்லாச்சி அம்மையாரின் ஆளுமை வியக்கத்தக்கதுதான். இந்த இரு கட்டுரைகளும்தான் எமக்கு இவரைப்பற்றி தெரிய உதவின.
ஈழகேசரி வெள்ளிவிழா மலர்
70

பெண் உலகம்
செல்வநாச்சியார் பெரிசுந்தரம்
பெண்களின் அறிவு வளர்ச்சிக்குக் கல்வி அத்தியா வசியமானது. கற்பதைவிடக் கேட்பதே மேலானது என்று நமது நூல்கள் கூறுகின்றன. பெண்ணினம் கற்றோ கேட்டோ தமது அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டியது அவர்களின் இன்றியமையாத கடமையாகும்.
நமது குழந்தைகளைப் பள்ளிக்கனுப்புகிறோம். அவர்கள் பரீட்சைக்கு வேண்டிய பாடங்களைத் திருப்பித் திருப்பிப் படிக்கிறார்கள். பொது அறிவு விருத்தியாவது இல்லை. பத்திரிகைகளையும் பொது நுால்களையும் அவர்கள் படிப்பதில்லை. இதனால் அவர்களின் அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டதாய் வருகிறது. பாடசாலையில் படித்துவந்த பெண்கள் அந்த அறிவோடு குடும்ப பாரத்தை நடத்த வரும்போதுதான் தங்கள் குறைகளை உணருகிறார்கள்.
எனவே பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்புடன் பத்திரிகைப் படிப்பிலும் ஈடுபட வேண்டும். உலக அனுபவத்தைத் தெரிந்துகொள்ள பத்திரிகையைவிட வேறு சிறந்த சாதனமெதுவுமில்லை. பத்திரிகையைக் கிரமமாகத் தொடர்ந்து படித்து வந்தால் உலக அனுபவத்தைச் சடுதியில் தெரிந்து கொள்ளலாம். உலகப் பொதுவிஷயங்கள், அரசியல் விவகாரம், வர்த்தக நடப்பு முதலிய பல விஷயங்களை பத்திரிகைகள் நமக்குத் திரட்டித் தருகின்றன. நாம் கஷ்டப்பட்டுப் பிரயாணம் செய்தும் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களைப் பத்திரிகைகள் தருகின்றன. சரித்திர காலத்தில் நடவாத பெரிய யுத்தத்தையும் அதில் நடக்கும் ஒவ்வொரு அதிசயங்களையும் அரசியல் மாறுதல்களையும் பத்திரிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். இன்னும் கற்றறிந்த பெரியார்களின் கட்டுரை, சொற்பொழிவு முதலியவைகளைப் பத்திரிகைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். எத்தனையோ அறிஞர்கள் பத்திரிகைப் படிப்பால் முன்னிலை அடைந்திருக்கிறார்கள்.
ஆனால் இன்னும் நமது பெண் இனம் பத்திரிகைப் படிப்பைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளவில்லை. இதில் அவர்கள் காட்டும் அலட்சிய புத்தி பாராட்டத் தக்கதல்ல. கட்டுக்கணக்காகப் பத்திரிகைகள் தங்கள்
7

Page 39
விட்டுக்கு வந்தாலும் சில பெண்கள் படிப்பதில்லை. அப்படியே சிலர் படித்தாலும் படித்ததன் பொருளை உணர்வதில்லை. வேறு பலர் குடும்பத் தொல்லை காரணமாக பத்திரிகைகளை ஏறிட்டும் பார்ப்பதில்லை. இந்த வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளியை வைத்து விட வேண்டும்.
பெண்கள் பத்திரிகைகளை வாசித்தால்த்தான் பிள்ளைகளுக்கும் பத்திரிகைகளை வாசிக்க ஒரு உணர்ச்சி ஏற்படும். சுடர் விட்டு எரிகின்ற விளக்கானாலும் தூண்டு கோலொன்று வேண்டுமல்லவா? வருங்காலப் பிரஜைகளான குழந்தைகளுக்குப் பத்திரிகை படிக்கும் பழக்கத்தைத் துாண்டிவிட வேண்டுவது பெண்களின் தீராத கடமை. எனவே இதை உத்தேசித்தாவது பெண்கள் பத்திரிகைகளைப் படிப்பார்களானால் அவர்களின் பொது அறிவு விருத்தியாவதுடன் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருப்பார்கள்.
இத்துடன் நின்று விடலாகாது. படித்தவற்றைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் வேறு பலருக்குச் சொல்வார்கள். இது நடமாடும் பத்திரிகையாய் விடும். இதனால் அறிவும் விருத்தியாகும். சங்கங்கள் கூடி ஆங்காங்கு நுால் நிலையங்களை நிறுவ வேண்டுவது பெண்களின் அறிவு விருத்திக்கு மற்றொரு சாதனமாகும். அங்கே அடிக்கடி பல பெரியார்களின் சொற்பொழிவுகளுக்கு வழி செய்ய வேண்டும். படிக்கத் தெரியாதவர் கேள்வி மூலம் அறிவைப் பெருக்க இது உபயோகப்படலாம். இவ்வாறு சிறுகச் சிறுக உலக ஞானத்தை மாதருக்கு ஊட்டினால் பின்னால் அவர்களே யாதொரு துாண்டுதலுமின்றி பத்திரிகைகளை வாசிக்கத் தலைப்படுவர். இனியாவது மாதர் நாட்டுப் பத்திரிகைகளை நன்கு ஆதரித்து அதன் பலனை நாமும் பிறரும் அடைவதற்கேற்ற முறையில் பாடுபடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.
பெண்கள் சமூகத்தை இருள் சூழ்ந்த காலம், இப்போது மலையேறி விட்டது. பெண்களுக்குக் கல்வி கூடாது. பெண்கள் ஆண்களைப் போல் வெளியே உலவலாகாது. பெண்கள் பெரும் நுால்களைப் படித்தலாகாது என்று கட்டுப்படுத்திப் பெண்களை வீட்டுக்குள் போட்டுப் பூட்டிய காலம் செல்லாக்காசாய் விட்டது.
கவியரசர் பாரதியின் வீரமொழிகள் மாதர் சமூகத்திற்கு ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விட்டன. பெண்களின் ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாவிடில் ஆண்கள் எந்தக் காரியத்தையும் இலகுவில் செய்யமுடியாது என்பதை அறிஞர்கள் பல முறைகள் எடுத்துக்
72

காட்டியிருக்கிறார்கள். இந்த முன்னேற்றத்தின் காரணமாக இன்று நாம் காண்பதென்ன? நாட்டில் பெண் கல்வி சிறிது சிறிதாக அபிவிருத்தியடைந்து வருகிறது. சில பெண்கள் பதவிகளை வகிக்கிறார்கள். சில மாதர்கள் தேசத் தொண்டில் சிறந்து விளங்குகிறார்கள். வேறு சில காரிகைகள் மதத் தொண்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் பலர் யார் எப்படி போனால் என்ன? என்ற மனோபாவத்தைக் காட்டுகிறார்கள். இவர்கள் பெண் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் சில ஸ்திரீ ரத்தினங்களைக் குறை கூறவும் முற்பட்டு விடுகிறார்கள். பெண் சமூகத்தைப் பெண்களே குறைவுபடுத்தினால் அதற்கு நிவர்த்தி யாது? இந்தப் பேதமைப் புத்தி படைத்தவர்களைத் திருத்துவது சமூக சீர்திருத்தத்தைக் காட்டிலும் அத்தியாவசியமானதாகும்.
பெண்கள் இயற்கை வனப்பும் ஆற்றலும் பெற்றவர்கள். அவர்கள் எதையும் ஊகித்துச் செய்யும் சக்தி வாய்ந்தவர்கள் என்று பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். இவற்றை லட்சிய பூர்வமாக நிதர்சித்துக் காட்டிய பெண் திலகங்கள் எத்தனையோ பேர் நம் நாட்டில் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் அறத்தை அரண்கட்டி வளர்த்தார்கள். வீர புருஷர்களை ஈன்று அளித்தார்கள். தியாகமூர்த்திகளைப் பெற்றுத் தந்தார்கள். சரித்திரம் இதற்குச் சான்றளிக்கும்.
வெள்ளம் பெருகிய பின் அணை கட்டுவாருண்டா? எனவே பெருமை வாய்ந்த பெண் சமூகத்தைப் பெண்களே தாழ்த்தி விடாமல் ஒரு புறம் நின்று காக்க இப்போதே முயல வேண்டும். பலவாறு கஷ்டமுறும் நமது சோதரிகளைத் தட்டி எழுப்பி அவர்களின் துன்பம் நீங்க உபாயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண் சமூகத்தை உயர்த்தப் பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கியமானவற்றில் எளிய சோதரிகளின் துயரைத் துடைத்தல் ஒன்றாகும். மற்றொன்று பெண் சமூகத்தில் தீண்டாமைக்கு இடந்தரலாகாது. இந்தத் தீண்டாமை சமயக் கட்டுப்பாடாக இருப்பினும் புரட்சி மனப்பான்னையுடன் அதற்குக் கல்தா கொடுத்துவிட வேண்டும். தீண்டாமை மாதர் விடுதலைக்கு விரோதமான ஒரு பொல்லாத விலங்காகும். இந்த விஷயத்தில் மனோதிடத்தைக் காட்டினால் மாதர் உலகில் பிரிவினையின்றி ஐக்கியமுதயமாகும். ஐக்கியமுண்டானால் எதையும் எளிதில் நம்மால் சாதிக்க முடியும்.
(இச்சிறு கட்டுரை 11.02.1941 வீரகேசரியிலிருந்து எடுக்கப்பட்டது. இதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி மறு பிரசுரம் செய்யப்படுகிறது)
73

Page 40
எழுத்தாளும் பெண்கள் சில முக்கிய வினாக்கள்
எஸ். மாரிமுத்து
அண்மையில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இரண்டு எனக்குக் கிடைத்தது. இந்த நுால்களில் பெரும்பாலானவை ஆண்கள் எழுதியவை. இந்த வைபவங்களில் உரையாற்றுவோர் நுாலாசிரியர்களுக்கு அவர்களின் மனைவிமார் உறுதுணையாக - விளங்கியமை பற்றிக்குறிப்பிடுதல் மாமூலான வழக்கமாகும். நான் கடைசியாகக் கலந்து கொண்ட வைபவத்திலும் பல பேச்சாளர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டனர்.
இப் பேச்சாளர்களில் ஒருவர், மனைவிமார் இலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள தம் கணவன்மாருக்குப் பக்கபலமாக இருப்பதன் மூலம் இலக்கியத்துக்கு ஆற்றும்பணி பற்றி ஆராய்ந்தார். சபையோருக்கும் பேச்சாளருக்கும் அந்த விடயம் நகைப்புக்குரியதொன்றாகக் காணப்பட்டது. எனக்கோ அது காத்திரமானதொன்றாக விளங்கிற்று.
பெண்கள் எழுத்தாளக் கணவன்மாருக்குத் தொல்லை கொடுக்காமல் இருப்பது கூட ஆக்கபூர்வமான இலக்கியத் தொண்டு என்று ஒருவர் குறிப்பிட்டார். தொல்லை என்ற சொல்லை அவர் விளங்கவில்லை. (நியாயமான ஒரு தேவை பற்றி உரையாடுதல் தொல்லையாகுமா?) எழுத்தாளர்கள் குடும்பத்திற்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களுக்குப் பதிலாக புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வீட்டுக்குக் கொண்டு செல்வதால் மனைவிமாரிடம் நல்ல பெயர் எடுக்கத் தவறி விடுகிறார்கள் என்று அந்தப் பேச்சாளர் தொடர்ந்து சொன்னார். அப்படியானால் எழுத்தாளர்களுக்குப் பக்கபலமாக விளங்கும் பெண்கள் இவ்வாறான நடத்தையைச் சகித்துக் கொள்கிறார்கள் என நாம் கொள்ளலாமா?
இந்த வகையான கருத்து இலக்கியவாதிகளின் அறியாமையையே புலப்படுத்துகிறது. முதலாவதாக பெரும்பாலான பெண்கள் வாசிக்கும் பழக்கமுடையவர்கள். கணவன்மார் பத்திரிகைகள்
74

புத்தகங்கள் ஆகியவற்றை வீட்டுக்குக் கொண்டு வரும்போது அவர்கள் ஆட்சேபிக்க அவசியமில்லை. பெண்கள் படிப்பறிவற்றவர்கள். வாசிக்க விரும் பாதவர்கள் என்னும் கருத்தை அவர்கள் கூற்று வெளிப்படுத்துகிறது. மேலும் ஒரு கலைஞன் அல்லது எழுத்தாளன் தன் குடும்பத்தின் தேவைகளை உதாசீனம் செய்யும் சுதந்திரம் உடையவன் என்னும் கருத்தையும் இக் கூற்று முன்வைக்கிறது. எந்த எழுத்தாளனும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை மறந்து வாழ்க்கை நடத்த முடியுமா?. அத்தகைய கணவனை எந்த மனைவி சகித்துக் கொள்வாள்? அவ்வாறான நடத்தை மனைவி மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இந்த எழுத்தாளர்கள் தம் குடும்பக் கடமைகளைப் புறக்கணித்துவிட்டு இலக்கிய உலகுக்கோ சமுதாயத்திற்கோ பெரிதாக எதையும் சாதிக்கிறார்களா? என்பதிலும் எனக்குச் சந்தேகம் வெளியிடப்படும் நூல்களில் ஒரு சில ஆராய்ச்சியின் பயனாகப் பெறப்பட்ட மூல நூல்களெனக் கொள்ளலாமாயினும் பெரும்பாலானவை அரைத்த மாவை அரைக்கும் நடவடிக்கையாகவே அமைந்து விடுகின்றன.
எழுத்தாளும் பெண்களின் பரிதாபநிலை பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எழுத்துத்துறையில் பணியாற்றும் பெண்களைப் பற்றியும் அவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஒரு பிரபல எழுத்தாளனிடம் கேட்டறிய முயன்றேன். பெண்கள் திருமணத்தின் பின்னர் எழுதுவது அரிது என்று அவர் பதிலளித்தார். இது முற்றிலும் உண்மையன்று. ஆயினும் இது தொடர்பாகப் பெண்களிடமே விசாரித்தபோது பல்வேறு காரணங்களின் நிமித்தம் எழுத்துத் துறையில் தொடர்ந்து பணியாற்றுதல் சிரமமாயிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். முக்கியமான காரணம் கணவரின் ஆதரவின்மையென்றும் சொன்னார்கள். வீட்டுப்பணிகள் அனைத்தையும் பெண்களே செய்ய வேண்டுமெனக் கணவன்மார் எதிர்பார்க்கிறார்கள். அத்துடன் அவர்கள் நல்ல மனைவியராய் ஒழுகவேண்டுமெனவும் சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. எழுதும் வல்லமையுள்ள பெண்களில் அநேகர் தொழில்புரிவோராவர். வீட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உதவி கிடைக்காத நிலையில் அவர்களின் படைப்பாற்றல் மழுங்கி விடுகிறது. இவற்றையும் மீறி எழுத்துத் துறையில் ஈடுபடும் பெண்கள் உண்மையில் மாமகளிரே. நம்முடைய துர்ப்பாக்கியம் மாமனிதரைப் போல மாமகளிரும் ஆபூர்வம்,
75

Page 41
எழுத்தாளும் பெண் ஒருவரின் நுால் அரங்கேற்றம் ஒன்றிலும் கலந்து கொண்டேன். அவரின் குழந்தை சுகவீனமுற்றிருந்தமையால் அந்தப் பெண் வைபவத்திற் பங்குகொள்ள முடியாது போயிற்று. திருமணத்திற்கு முன் மாணவியாக இருந்த பருவத்தில் எழுதப்பெற்ற அந்த நுால் நல்ல முறையில் அமைந்திருந்தது. அவர் தொடர்ந்தும் எழுதுவாரா? அவரின் கணவன் எந்த அளவுக்கு அவருக்கு ஊக்கமளிப்பார்.?
மனைவிக்குரிய கடமைகளை நிறைவேற்றும்படி நச்சரித்து அந்தப் பெண்ணுக்குத் தொல்லை கொடாதிருப்பாரா? சில நல்ல கணவன்மாரும் உளர் என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அவர்கள் தம் மனைவியரை நச்சரித்துத் தொல்லை கொடுப்பதில்லை. எழுத்தாளர் முன்னணியில் திகழ்வதற்கு மனைவி பக்கபலமாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுவதைப்போல கணவன்மாரும் எழுத்தாளும் மனைவியருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறார்களா? மாமகளிரே எழுத்தாளும் பெண்களாய்த் துலங்கமுடியுமா? எழுத்துத் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாப் பெண்களுக்குமே இவை முக்கியமான கேள்விகள்.
(1004. 1999 Daily News 6760ig/Lib ag/issil Leafloatus) Longfupég/ என்பவர் ஆங்கிலத்தில் எழுதியதை இங்கு மொழிபெயர்த்திருக்கிறோம் அவர் எழுப்பும் கேள்விகள் மிகவும் முக்கியமானவை என்பதனால் அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்)
大 ★ ★ 大 ★
★ ★ ★
76

நமத வருங்காலச் சந்ததியினரை *அச்சமில்லை” என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம்.
ழரீமதி செல்வநாச்சியார் பெரிசுந்தரம்
5ந்தி மகாத்மாவின் ஆசீர்வாதத்தோடு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் நலன் பாதுகாப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸின் மாதர் பகுதியை, இலங்கை இந்திய மாதர் காங்கிரஸ் என்ற பெயரோடு 1945ம் ஆண்டு நவம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை வத்துகாமம் பன்விலையில்
ரீமதி செல்வநாச்சியார் பெரிசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளைக் கீழே தருகின்றோம்.
இம் மகாநாடு இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களின் சரித்திரத்தில் ஓர் புதிய தசாப்தமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் வாழும் மொத்த ஜனத்தொகை அறுபது லட்சமாகும். இவர்களில் எட்டு லட்சம் பேர் இந்திய வம்சாவழியினர். இதில், தேயிலை றப்பர் தோட்டங்களில் அமர்ந்து தொழில் புரியும் தமிழ் மக்களின் தொகை ஆறரை லட்சம். அவர்களில் சரிபாதி பெண்கள். இப்பெரும் மாதர் சமுதாயத்திற்குத் தொண்டு செய்யவே இந்த மாதர் ஸ்தாபனம்
இந்த ஆறரை லட்சம் பேர்கள், சுமார் 2000 தோட்டங்களில் வேலை புது குடித்தனம் ர்கள். ஐந்தரை லட்சம் ஏக்கர்கள்
ఫిన్క ே o றார ஐநதை ஏக்கர்கள் ärf றப்பர் தோட்டங்களிலும் வேலை செய்யும் தமிழ்த் தொழிலாளர்களில் முக்கால்வாசிக்கு மேற்பட்டவர்கள் இலங்கையில் பிறந்த நிரந்தரவாசிகள்.
1915ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் கண்டி ராஜ்யத்தைக் கைப்பற்றியபின் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்க முற்பட்டார்கள். அவர்களுக்கு விவசாயத்தில் உதவ இந்த நாட்டில் யாரும் முன்வராததால் தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்களை தொழிலாளர்களாக அழைத்து வந்தார்கள். அப்பொழுது அந்தத் தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் தொண்டைமனாரில் இறங்கி கரடி புலி யானைகள் நடமாடும் காட்டு வழியாக, கால் நடையாகவே நடந்து பன்னாகமம் என்னும் மாத்தளை ஊரில் வந்து கூடாரம் போடுவார்கள். தொண்டைமனாரிலிருந்து பசியாலும் பிணியாலும் விலங்குகளுக்கு இரையாகியும் மடிபவர்கள் அநேகர். தப்பிப் பிழைத்தவர்கள் தான் பன்னாகமத்திலிருந்து பல மலைப்பகுதிகளுக்கு,
77

Page 42
தோட்டங்கள் உண்டாக்க பகுதி பகுதியாகச் செல்வார்கள். ரயில் வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் எங்கும் நடந்தே சென்று தேயிலையையும் ரப்பரையும் உண்டு பண்ணினார்கள்.
ந்தக் காலத்தில் w த்தில் கடும் பஞ்சத்தில் இந்த தொழிலாளருக்கு ஒரு வருடம் வரை சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் இவர்கள் க்கச் சாப்பிட்டே காலங்
த்தி இ 呼 அ5 ಕ್ಲಿ றிப்பிட்டுள்ளார்
இப்படிப் பாடுபட்டு இலங்கை மண்ணுக்கு இரையானவர்கள் இலட்சோப லட்சம் பேர்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பயனாகத்தான் இலங்கை இவ்வளவு செழிப்பும் சுபீட்சமும் பெற்றிருக்கிறது என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.
தொழிலாளரின் குடியிருப்பு. ஆகவே உட்காரும் அறை, உடுக்கும் அறை, படுக்கும் அறை, சமையல் அறை, பண்டசாலை எல்லாம் அதுவே. அந்த அறைக்கு ஒரே வாசல். ஒரே ஜன்னல். ஒரே தாழ்ப்பாள். இந்தப் பன்னிரண்டடி மாளிகைக்குள் புருசன், மனைவி, வாலிபப் பெண், பையன்கள், குழந்தைகள் எல்லோரும் கும்பலாகக் கூடி வாழ்ந்தார்கள். இந்தப் பரிதாப நிலையே ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக நீடித்து வருகிறது.
2300 தோட்டங்களில் அரசின் அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 919 தான் உண்டு. பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கு கல்வி கட்டாயமாக இருந்தும், பத்துக்கு ஐந்து பிள்ளைகளே பள்ளி செல்கின்றனர். 100க்கு 60க்கும் அதிகமானோர் இரண்டாம் வகுப்புக்குமேல் படிக்காதவர்கள். 100க்கு 3 பேர் கூட ஐந்த்ாம் வகுப்பில் படிக்கவில்லை.
அன்றும் இன்றும் நெற்றி வியர்வை நிலத்தில் விழ, உண்மையாய் உழைக்கும் பாட்டாளிகளுக்கு தங்கள் சொந்தப் பலமே வீரசக்தி பெண்மக்கள் பொறுமைக்கு உறைவிடமாய் இருப்பினும், எமது வீரம் ஆடவர்களிலிருந்து குறைந்ததல்ல. மண்டோதரி சாவித்திரி, மங்கம்மா, கஸ்துாரிபாய் காந்தி, கமலா நேரு ஆகியவர்களின் நாமம் நமக்கு முன்மாதிரியாயிருக்கின்றன. நமது வருங்காலச் சந்ததியினரை நாம் வீரமிக்கவர்களாய் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போமாக!.
இன்று இங்கு பூரீமதி தொண்டமான் அவர்களால் உயர்த்திய கொடி, பட்டொளி வீசிப்பறப்பதைப் பாருங்கள். அவ்வம்மையாருக்கு எனது வந்தனம். இந்திய வம்சாவழி மாதர்களை, சலியாது தட்டி எழுப்பிய பெருமை செல்வி சிவபாக்கியம் பழனிச்சாமிக்கே உரியது. வரவேற்புக் கமிட்டித் தலைவியென்ற முறையில் ஊக்கத்தோடு தொண்டு புரிந்த டாக்டர் பூரீமதி சரோஜினி ராமானுஜம் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. (15.05.1958 இல் காங்கிரஸ் பத்திரிகையில் பிரசுரித்த கட்டுரையை மறுபிரசுரம் செய்துள்ளோம்)
78

பெண்மை தொடர்பான கருத்தியலில் பெண்ணின் பாலுணர்ச்சி
செல்வி திருச்சந்திரன் பெண்ணியற்துறைக் கல்விமான்கள் பெண்ணின் பாலுணர்ச்சி பற்றி நெடுங்காலமாக ஆராய்ந்து வந்துள்ளனர். ஃபிராயிட் என்பாரின் ஆராய்ச்சி முடிவுகள், மற்றும் ஏனைய உளப்பகுப்பாய்வு தொடர்பான கருத்துகள் ஒரு புறமாக ஆராயப்பட்டன. மறுபுறத்தில் அனுபவபூர்வமாகவும் கோட்பாட்டியலின் அடிப்படையிலும் ஆய்வுக்குரிய விடயமாகவும் ஆராயப்பட்டன. இது விடயத்தில் 'வூகோ (F0cault), விக்ஸ் (Weeks) ஆகியோரின் சிந்தனைகளும் கருத்திற் கொள்ளப்பட்டன. பெண்ணியம் பகுப்பாய்வானது ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு விடயங்களை வெகு நுணுக்கமாக நோக்கியுள்ளது. வரலாற்று அடிப்படையில் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் கருத்தின்படியும் ஆண் பெண் இருபாலாரினதும் பாலுணர்ச்சியில் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளாய் விளங்கும் பெண்கள் இந்தக் கருத்தியலை உடைத்து பெண்ணின் பாலுணர்ச்சி தொடர்பான பிரச்சினைக்குப் புதியதொரு பரிமாணத்தைச் சேர்ப்பதற்கு வழி வகுத்துள்ளார்கள்.
இங்கு நாம் கலாசார சமூக மரபுகளின் காரணமாகப் பெண்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை விளக்க முற்படுகிறோம். தனிப்பட்ட முறையிலும் அரசியற் காரணங்களுக்காகவும் மறுமணஞ் செய்தல் கைம்பெண்ணின் அவலமும் அதனையொட்டிய உளவியல் பிரச்சினைகளும் கன்னி கழியாத பெண்ணினால் ஏற்படும் பழு, பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் இம்சைகள் ஆகிய விடயங்கள் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பெண்கள் என்னும் வகையில் - துணையற்ற பெண்கள் என்னும் வகையில் - குடும்பத் தலைவிகள் என்னும் வகையில் எதிர்கொள்ளும் முப்பரிமாண அனுபவங்கள், பெண்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், எவ்வாறு தம் வாழ்க்கையை கொண்டு நடத்துகிறார்கள், ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் போன்ற விடயங்கள் இங்கு ஆராயப்படுகின்றன. இவை பெண்களின் உளவியல், சமூக, ஒழுக்க நெறிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருளாதார வேறுபாடுகள், உணவு, உறையுள், உடை முதலியன பெண்களின் உளவியல் சமூக பொருளாதார வேறுபாடுகளுடன் துலாம்பரமான தொடர்புடையன. ஒன்றின் இழப்பை மற்றொன்று மேம்படுத்துகிறது; அல்லது பிறிதொன்றின் இழப்புக்கு ஏதுவாகிறது. ஆணை மையப்படுத்திய கலாசாரக் குவியலில் அச்சம்,
79

Page 43
வன்செயல் ஆகியவற்றின் மத்தியிலே ஆண்களுக்குச் சார்புடைய தந்தை வழி மேலாதிக்கத்துக்கு அடங்கி வாழும் பெண்களின் அனுபவங்கள் முழுமையாக ஆராயப்படவேண்டியன.
சமூகவியலாளர்கள் குடும்பமென்னும் வரையறைக்குட்பட்ட செயற்பாடுகளில் பிள்ளைகளைச் சமூக மயப்படுத்துதல் ஒன்றென இனங்கண்டுள்ளார்கள். இந்தச் செயற்பாட்டின் முதற்படியாக இன விருத்தியும் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பாலுணர்ச்சியின் இறுதி இலக்கான சந்தான விருத்தியை வரைமுறைப்படுத்தும் நடைமுறை குடும்பத்தைச் சார்ந்ததாகிறது. ஒரு தார மணவினை அமைப்பு அரசு, சமயம் இரண்டினாலும் நெறிப்படுத்தப்பட்டது. ஆண் என்பவன் திருமண பந்தத்தின் வாயிலாகப் பெண்ணின் பாலுணர்ச்சிக்கு உரித்துடையவனாகி அவளின் உடம்புக்குச் சொந்தம் பாராட்டும் ஒருவனாகிறான் என்று எல்லாச் சமயச் சடங்குகளும் வலியுறுத்தின. இதனை எவ்வகையிலேனும் மீறும் போது சமுதாயமும் சட்டமும் தண்டிக்கின்றன. பெண்ணின் உரிமையாளனாகிய ஆண் வன்முறையால் அகற்றப்படும்போது பெண் அபலையாகி விடுகிறாள். அவளின் பாலுணரச்சி பொது விவகாரமாகிறது. அவள் பாதுகாப்பற்றிருக்கிறாள் என்னும் செய்தி ஊரின் மூலை முடக்கெல்லாம் பரவுகிறது. அவள் ஒற்றை மரமாகி விட்டாள் என்பதை தெருவோரத்துத் தென்னைமரம் எனப் பிறர் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். மறு மணத்திற்கோ தோழமைக்கோ உகந்தவள் என அப் பெண்ணை எவரும் நோக்குவதில்லை. போகப் பொருளாக அவள் இருக்கிறாள் என்னும் செய்தி பரவி விடுகிறது. சாதாரண நிலைமையில் அல்லது அமைதி நிலவுங் காலங்களில் துணையற்ற பெண்கள் சமூகவாரியான கூட்டுக் குடும்ப அமைப்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது வயோதிப அயலவர்களின் பாதுகாப்பைப் பெறுகின்றனர். இந்தப் பாதுகாப்பானது ஆண்களின் அநாவசியச் சேட்டைகளுக்கு வேலியாக விளங்கியது. இன்றைய நிலைமையில் இந்த வேலி விழுந்து விட்டது. பெண்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உறவினர்களும் ஏனையோரும் அவர்களால் தம் நிதிப் பழு அதிகரித்து விடுமென அஞ்சி விலகிக் கொள்கிறார்கள்.
அம்பாறை மாவட்டத்தை ஆராய்ந்தோமானால் அங்குள்ள ஆண் iற பெண்களின் நி ம சிக்கல் நிறைந்து காணப்பட்டாலும் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் தன்மையை ஒத்ததாகவே ஆராயப்படும். ஆயினும் திருகோணமலையிற் போலன்றி அம்பாறையில் பாதிப்புக்குள்ளான தமிழ்ப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் ஆகிய இரு சாராரும் சமமாகப் பெருந்தொகையினராய்க் காணப்படுகின்றனர். இதன்
80

விளைவாக ஆய்வுப் பணியை இரண்டு மட்டத்தில் மேற்கொள்ள நேர்ந்தது. ஆண் துணையற்ற பெண்களின் அனுபவங்களும், பொதுப்பண்புகள் பலவற்றைக் கொண்டிருந்தன வாயினும் அவர்களின் இனம், கலாசார வேறுபாடுகள், அரசியற் களரியில் அவர்களுக்குரிய இடம் ஆகியவற்றினால் நிர்ணயிக்கப்பட்டன; உருவம் பெற்றன.
அம்பாறையிலும் பல காரணங்களினால் மரணங்கள் சம்பவித்துள்ளன. இவற்றால் பெண்களுக்கு ஏற்பட்ட முக்கியமான பாதிப்பு, குடும்பத்தைப் போஷித்த ஆணை இழந்தமையால் உண்டான பொருளாதார வீழ்ச்சியாயினும் பல சந்தர்ப்பங்களிலே அந்தப் பாதிப்பு பொருளாதார சீரழிவையும் மீறியனவாகக் காணப்பட்டன. இனக்கலவரங்களில் முஸ்லிம்கள் தமிழராலும் தமிழர்கள் முஸ்லிம்களாலும் கொல்லப்பட்டனர்.
பொதுவாகச் சொல்வதானால் திருகோணமலையிலும் இவ்வாறான போக்குகளே காணப்பட்டன. பெண்களை ஆதரிப்பார் எவருமிலர். அவர்களின் நிலையும் மிக மோசமாயுள்ளது. ஒரு சில பெண்களே அயலவர்கள் தம்மை ஓரளவிற்குத் தாபரித்தனர் என்றார்கள். மற்றும் படி பெண்களின் துன்பங்களை அயலவர்கள் கண்டும் காணாதவர்களாய் நடந்து கொண்டனர். உறவினர்கள் கதையும் இதுவே. ஒரு சிலர் மட்டும் அவ்வப்போது உதவினர். கணவன்மாரின் பெற்றோர்கள் அவர்களைக் கவனித்தாரிலர். தம் மகன் கொல்லப்பட்டதும் பெற்றோர் தன்னையும் பிள்ளைகளையும் அநாதரவாக விட்டுவிட்டு வேறோர் இடத்துக்குக் குடிபெயர்ந்தனர் என்று ஒரு பெண் முறையிட்டாள். திருகோணமலையிற் போலன்றி இங்கு தாய்வழி உறவினர்கள் கூட நெருக்கடி வேளையில் கைகொடுத்து உதவ முன்வரவில்லை. சில சமயங்களிலே இந்தப் பெண்கள் வயோதிபப் பெற்றோரையும் பிள்ளைகளையும் அநாதரவாக விட்டு விட்டு வேறோர் இடத்திற்குக் குடிபெயர்ந்தனர் என்று ஒரு பெண் முறையிட்டாள். திருகோணமலையிற் போலன்றி இங்கு தாய்வழி உறவினர்கள் கூட நெருக்கடி வேளையில் கைகொடுத்து உதவ முன்வரவில்லை. சில சமயங்களிலே இந்தப் பெண்கள் வயோதிபப் பெற்றோரையும் தங்கைமாரையும் பராமரிக்க வேண்டி ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்களும் போர் அல்லது வறுமையின் நிமித்தம் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பர். திருகோணமலைப் பெண்களைப் போலல்லாமல் இவர்கள் உறவினர்களின் உதாசீனத்தையிட்டுக் கோபமோ விரக்தியோ கொள்ளாமல், இயற்கைச் சம்பவங்களாய் அல்லது சமூக நிதர்சனத்தின் ஓர் அங்கமாய் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனை அவர்கள்
8

Page 44
திட்டவட்டமாகப் புலப்படுத்தாத போதிலும் பிற சந்தர்ப்பங்களில் தம் துயரத்தையும் சஞ்சலத்தையும் மிக வன்மையாக வெளிப்படுத்துதற்கு இந்த மனப்போக்கு ஒரு காரணமாய் அமையலாம்.
கணவன் இறந்த பின் அவரின் பெற்றோர் கணவனின் பொருள் பண்டங்களைத் தமக்குத் தருமாறு கேட்ட ஒரு சம்பவம் திருகோணமலைப் பெண் ஒருவரின் அனுபவத்தை ஒத்ததாக விளங்குகிறது. இன்னொரு பெண் தன் கணவன் இறந்த மாதத்தில் அவருக்குச் சேரவேண்டி இருந்த சீட்டுப் பணத்தைத் தரும்படி மாமனார் கேட்டதாகச் சொன்னார்.
தெருவில் என்னைக் கண்டால் அவர்கள் மறு பக்கம் பார்த்துக்கொண்டு போகிறார்கள். (இங்கு அவர்கள் கணவரின் பெற்றோரையும் சகோதரனையும் குறிக்கிறது.) இந்த அனுபவங்களைச் சொன்ன வேளையிலே, அவள் குரலிலும், சொன்ன முறையிலும் ஏளனம், கசப்புணர்வு என்பன வெளிப்பட்டன.
ஆண்கள் பெண்களைப் பாலியல் இம்சைக்கு உட்படுத்துதல் குறிப்பிட்ட ஒரு வகைப் பெண்களுக்கு மட்டுமே நிகழ்வதில்லை. ஆயினும் இந்த ஆய்வுக்கு உட்பட்ட பெண்களின் அநாதரவான, தனிமரம் போன்ற நிலை அவர்களின் அனுபவங்களுக்கு விசேட அர்த்தங்களைக் கொடுக்கின்றன.
ஆண் துணையற்ற பெண்கள் வீட்டிலும் சரி வேலைத் தலங்களிலும் சரி ஆண்களின் உடல் வாரியான உபத்திரவங்களைச் சமாளிக்க வேண்டியுள்ளது. இந்த வகையான இம்சைகளை இளைஞர், வயோதிபர், திருமணமானோர் ஆகிய சகல ஆண்களும் புரிகின்றனர். நாம் சந்தித்த பெண்கள் இந்த வகையான இன்னல்களைப் பற்றி பேசவே சிரமப்பட்டனர். அவற்றைப் பற்றிப் பேசுவதை விடப் பேசாதிருப்பதே மேல் என்று கருதினர். பேச முற்பட்டால் அத்தகையோருடன் ஒத்துழைத்தவர்கள் என்னும் அவச் சொல்லுக்குப் பலியாக நேருமென்றும் அஞ்சினர். அவ்வாறு துணைபோகும் பெண்களைச் சமுதாயத்தினர் விலக்கி வைப்பர். அவர்களின் சீவனோபாயத்திற்கான வழிவகைகளும் வற்றிவிடும். ஆகவே அத்தகைய தனிப்பட்ட அந்தரங்க விடயங்களைப் பகுத்தறிவின் பாற்பட்ட ஆய்வுகளிற் சேர்த்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. ஐந்து பெண்கள் தம் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ள் முன்வந்தனர். சுமார் 30 பேர் மறுப்புத் தெரிவித்தனர். அவை பற்றிப் பேசுதல் வெட்கங்கெட்ட செயல் என்று கருதினர்.
82

வேறு சில பெண்கள் அவ்வாறான மரியாதை கேடான அனுபவங்களை எதிர் கொண்டதன் பயனாக "கவனமாக நடந்து கொள்ளப் பழகிக் கொண்டனர்".
“எனக்கு எப்போதும் கரைச்சல். வேலைக்குப் போனாலும் கடைக்குப் போனாலும் வீட்டிலே தனிமையாக இருந்தாலும் ஒரே கரைச்சல். இப்போதெல்லாம் நான் தனியாக இருப்பதையோ தனியாகப் போவதையோ தவிர்த்துக் கொள்கிறேன். என் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது அவர் வெகுமதிகள் கொடுப்பார். விஸ்கோத்து, இனிப்பு எல்லாம் இருக்கும். நான் வேலை முடிந்து வீடு திரும்ப முன்னம் பிள்ளைகள் அவற்றைத் தின்றுவிடுவார்கள். நான் கோபித்து அவர்களைத் திட்டுவேன். காசிருந்தால் எல்லாவற்றையும் அந்தக் கேடுகெட்ட மனிதனிடம் வீசிவிடுவேன். என்னிடமோ காசில்லை. நாள் முழுதும் அழுதேன். ஒன்றும் சமைக்கவில்லை. பிள்ளைகளைத் திட்டித் தீர்த்தேன். மறுநாள் அவனுடைய சகோதரியிடம் போய் அழுது முறையிட்டேன். பிள்ளைகளைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தினேன். அதனால் பயன் கிடைத்தது. எனக்குக் கரைச்சல் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான். ஆனாலும் விஷயம் அவ்வளவோடு முடிந்துவிடவில்லை என்று எனக்குத் தெரியும். வேறு ஆண்கள் வருவார்கள். பாழ்பட்ட நாங்கள் இந்தக் காவாலி களிசடைகளுடைய சேட்டைகளைச் சகிக்க வேண்டி இருக்கு”.
“எனக்கு எந்த நாளும் கரைச்சல், நான் இப்போ வேறு வீடுகளில் படுக்கிறேன். அந்த மனிசன் குடிகாரன். வெறி வந்தால் அவனுக்குப் பெண் வேணும். இரவிலே மட்டும் வருவான். ராத்திரி வீட்டிலே தங்காமல் விடுவதால் அவனிடமிருந்து தப்பி வருகிறேன்"
“ஒரு பெண் ஆண் துணையற்று தனித்து வாழ்ந்தால் அவளை எளிதில் அடைந்து விடலாம் எனப் பலரும் எண்ணுகிறார்கள்.
ஆண்கள் இரவில் குடித்துவிட்டு வந்து என்னைக் கூப்பிடுவார்கள். நான் காமவெறி பிடித்து அலைகிறேன் என்றும் அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறேன் என்றும் நினைக்கிறார்கள். நான் சத்தம் போட்டு அவர்களைத் துரத்துவேன். ஆனாலும் அவர்கள் திரும்பவும் வருவார்கள். நான் கசிப்பு நிலையத்துக்குக் கிட்டச் சீவிக்கிறேன். ஆகவே இந்தப் படலையைச் செய்து வைத்திருக்கிறேன்’.
இந்தப் பெண்ணும் தன் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளத் தயங்கினார். ஆனால் நாங்கள் விசித்திரமான ஒரு படலையைத் திறந்து கொண்டு அவர் வீட்டில் நுழைந்தோம். நான்
83

Page 45
அந்தப் படலையைப் பற்றி விசாரித்தேன். அவள் பதில் சொல்லாமல் புன்னகை செய்தாள். மரத்தாற் செய்யப்பட்ட அந்தப் படலையில் முட்கம்பி துருத்திக் கொண்டு நின்றது. வழக்கத்திற்கு மாறான படலை அது. அவர் பின்னர் அதைப்பற்றி விபரமாகச் சொன்னார்.
“குடிகாரருக்கும் காவாலிகளுக்கும் புத் தி வரச் செய்வதற்காகத்தான் படலைக்கு முள்ளுக்கம்பி அடித்திருக்கிறேன். அவர்கள் குடித்துவிட்டு படலையைத் திறந்து உள்ளே வர எத்தனிக்கும் போது முள்ளுக்கம்பி முகத்தில் காயமுண்டாக்கும். முகத்திலே இரத்தம் ஒடும். அதனால் அவர்கள் கத்துவார்கள். அப்போது நான் உஷாராகி விடுவேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் உஷாராகி விடுவார்கள்”.
மற்றொரு பெண்ணின் அனுபவம் வேறொரு பரிமாணத்தைப் புலப்படுத்தியது.
“நான் வேலைக்கோ கடைக்கோ போகும்போது அவன் என் பின்னால் வந்து என்னோடு கதைக்க முயற்சி செய்வான். நான் அவனைக் காணாதவன் போலப் போவேன். ஏனென்றால் எனக்கு எரிச்சல் வரும். அவன் ஏதும் சொன்னால் நான் பேசாமல் போய்விடுவேன். ஒரு நாள் ஆத்திரத்தில் அவனைத் திட்டினேன். அதை அடுத்து ஒரு நாள் இரவில் அவன் என் வீட்டில் நுழைந்தான். நான் எழும்பிச் சத்தம் போட்டேன். அயல் அட்டத்தில் உள்ளவர்களும் எழும்பிக் கொண்டனர். அவர்களுக்கு அவன் யார் என்பதைச் சொல்லவில்லை. முன் பின் தெரியாத ஒருவன் என்றே சொன்னேன். யாராக இருக்கலாம் என்று அவர்கள் ஊகிக்க முடியவில்லை. இருட்டாக இருந்தபடியால் அவன் ஒடித்தப்பித்துக் கொண்டான். ஊர்வாய்க்குப் பயந்து நான் பேசாமல் இருந்துவிட்டேன். அல்லாவிட்டால் நான் தான் அவனை வரச் சொன்னதாக அவர்கள் கதை கட்டி விடுவார்கள்’.
இந்தச் சம்பவங்கள் ஆணாதிக்கம் எவ்வாறு செயற்படுகிற தென்பதற்கு உதாரணங்களாய் விளங்குகின்றன. மனித உரிமைகள் மீறப்படும் வேளைகளிற் கூட அதிகாரம் ஆண் வர்க்கத்துக்குச் சார்பாகப் பிரயோகமாகிறது. நீதி நியாயம் என்பன பெண்ணுக்குச் சார்புடையனவாய் இருப்பினும் கூட பெண் பணிந்தும் குனிந்தும் நடக்க வேண்டி ஏற்படுகிறது.
லீலாவின் விடயத்தில் (இது கற்பனைப் பெயரே) இது வித்தியாசமாயுள்ளது. அவரின் துணையற்ற நிலையை பழி பாவத்திற்கு அஞ்சாத ஒருவன் பயன்படுத்தி அந்த அபலையை ஏமாற்றினான்.
84

அநதப் பெண் தனக்கு நேர்ந்த கதியை வரிசைக் கிரமமாக எமக்குச் சொல்லவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவள் தெரிவித்த விவரங்களை வைத்து இந்தக் கதையை நாம் புனைந்துள்ளோம்.
அவளுடைய கணவன் காணாமற் போனபோது, லீலா அதிர்ச்சி அடைந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்று இரண்டரை வயதுக் குழந்தை. மற்றொன்றின் வயது ஒன்றரை. அவளின் பெற்றோரும் 1990 ஆம் ஆண்டுப் படுகொலைகளின்போது இடம் பெயர்ந்து இராணுவத்தினருக்கு அஞ்சிப் படகில் இந்தியா சென்றிருந்தனர்.
அவளின் அக்காவும் வெளிநாட்டில் வசித்து வந்தாள். அவளின் கணவரின் நண்பன் நல்ல சமாரித்தனாக நடிக்க முயன்று எல்லாப்
வைத்தான். அந்த ஆள் காணாமற்போன கணவனைக் கண்டுபிடித்துக் கொடுக்க இசைந்தான். ஆனால் ஒரு நிபந்தனை. கணவனை அடையாளம் காட்டும் பொருட்டு அந்தப் பெண் தன்னோடு கொழும்புக்கு வர வேண்டும் என்றான். அந்தப் பெண் தன் பிள்ளைகளோடு கொழும்புக்குப் பயணமானார். அவன் அவர்களை ஒரு லொட்ஜில் தங்க வைத்தான். நகை நட்டுகளை எல்லாம் அவளிடமிருந்து பெற்று விற்றான். சிறிது காலத்தின் பின்னர் பணமெல்லாம் முடிந்து விட்டதென்று சொல்லி அவர்களை மட்டக்களப்புக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் தங்க வைத்தான். உண்மையில் அங்கு அவர்கள் சிறைக்கைதிகள் போலவே நடாத்தப்பட்டனர். அவன் வெளியே போகும் போதெல்லாம் அவர்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டுச் செல்வான். உடல் வாரியாகவும் மனைவியாகவும் பல இம்சைகளை அப்பெண் அனுபவிக்க நேர்ந்தது. இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றாள். தன் பரிதாப நிலையை அயலவரிடம் சொன்னாள். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நிலைமை மோசமடைந்தபோது பாராளுமன்ற உறுப்பினரையோ கிராம சேவகரையோ நாடினார். (இது பற்றி அவர் தெளிவாகச் சொல்லவில்லை) விடயம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்வாக்குடைய அரசியல்வாதி ஒருவர் அந்தப்
வசிப்பதாக அறிந்தார். அக்கா அவளைக் காப்பாற்றினார். அதன் பின் இந்தியாவில் வசித்து வந்த பெற்றோருக்குக் கடிதம் எழுதினார். அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.
அவளுடைய கதையில் சில இடைவெளிகள் காணப்பட்டன. அந்தப் பெண் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். எதையும் விளக்கமாகச் சொல்ல அவருக்கு இயலவில்லை. அவர் சொல்ல விரும்பாத விடயங்களைத் துருவித் துருவிக் கேட்டறிய நாம்
85

Page 46
முற்படவில்லை. சில விடயங்களைச் சொல்ல விரும்பினார். வேறு சில விடயங்களை மறைக்க விரும்பினார். தன்னை ஏமாற்றி மோசஞ் செய்தார்கள் என்பதை மட்டும் வலியுறுத்திச் சொன்னார்.
எம் கருத்தின் படி லீலாவுக்கு உளவியல் வாரியான சிகிச்சை ஆலோசனை அவசியம். அப்பெண் புத்தியில்லாமல் அவசரப்பட்டுக் காரியத்தில் இறங்கிவிட்டாள் என்று சமூகம் அவளுக்குத் தீர்ப்பளித்தது. உதவி செய்வதாகச் சொன்னவனை நம்பியது அசட்டுத்தனம் என்றார்கள்.
இந்தக் கதை சொல்லும் படிப்பினை அதுவாக இருக்கலாம். பெண் என்பதாலேயே இவ்வளவும் நடந்ததென்பதையும் இங்கு நாம் மனங் கொள்ளல் வேண்டும். தன் கணவன் இன்னமும் உயிரோடிருக்கிறான் என லீலா நம்புகிறாள் என்பதும் முக்கியமான ஓர் அம்சம். அவனைத் திரும்பவும் அடையவேண்டும் என்ற ஆர்வமே அப் பெண்ணை இவ்வளவு துன்பத்துக்கும் ஆளாக்கிற்று.
பாலியல் இம்சை தொடர்பான வேறு சிறு சிறு சம்பவங்களும் உள. ஆயினும் இவற்றிற் பெரும்பாலானவை எம்மிடமிருந்து மறைக்கப்பட்டன. அவர்களின் அந்தரங்கத்தை நாம் துருவி ஆராய விரும்பவில்லை. எமக்கென வகுத்துக்கொண்ட அறநெறிக் கோட்பாட்டிலிருந்து விலகிச் செல்லவும் நாம் பிரியப்படவில்லை. அகதி முகாமிலிருந்த பெண்கள் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றதாகச் சொன்னார்கள். ஆனாலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் நம்பிக்கைக்குத் துரோகமிழைக்க விரும்பாத காரணத்தால் நாமும் அவரின் அந்தரங்கத்தை மதித்து வாளாவிருந்தோம். இத்தகைய சம்பவங்கள் தனிப்பட்ட பிரத்தியேக நிகழ்ச்சிகளாக நிலைபெற்று விடுகின்றன. சமுதாயப்பாங்கான ஆய்வு, இவ்வாறான நிலைமையைக் கவனத்திற் கொள்வதுடன் அமைந்து விடுகிறது. நுட்ப நுணுக்கமான விவரங்களை விலக்கி விடுகிறது.
அம்பாறையிலும் முஸ்லிம் பெண்கள், தமிழ்ப் பெண்கள் ஆகிய இரு சாராரும் பாலியல் இம்சைகளை அனுபவித்தனர். ஆயினும் இங்கு தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தச் சம்பவங்கள் பெண்களின் மனதில் அச்ச உணர்வை ஊட்டியுள்ளன. தெருவில் தனியாகச் செல்வதற்கோ வீட்டிலே இரவில் தனியாகத் தூங்குவதற்கோ அவர்கள் அஞ்சுகிறார்கள். அவற்றை இங்கு நாம் விவரிக்கவில்லை. ஆண்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தம்மை அடைய முற்பட்ட வேளைகளில் பெண்கள் எச்சரிக்கையுடன் விவேகமான முறைகளில் தம்மைக் காத்துக் கொண்ட பல சம்பவங்களும் உள. பெண்கள் கடை கண்ணிகளுக்குச் செல்லும்போது இந்த ஆண்கள் அவர்களைத்
86

தொடர்ந்து செல்வார்கள். வாய் வார்த்தையால் எச்சரித்தால் அல்லது அவர்களைப்பற்றி முறைப்பாடு செய்தால் பிரச்சினை தீர்ந்து விடுவதுண்டு. என்றாலும் சில ஆண்கள் ஓயாத தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பர். கணவன்மாருடன் வாழும் பெண்களுக்குக் கிராமப் பகுதிகளில் இவ்வாறான இம்சைகள் ஏற்படுவதில்லை என்பதை எல்லாப் பெண்களும் ஒப்புக்கொண்டனர். அவ்வாறு நடந்தால் கணவன்மார் தலையிட்டுத் தட்டிக் கேட்பார்கள் என்னும் அச்சம் அத்து மீறுவோரைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் ஆண் துணையற்ற பெண்கள், கேட்க ஆள் இல்லை என்ற நிலையில் இம்சைகளுக்கு உள்ளாகிறார்கள்.
ஒரு முஸ்லிம் தாய் கன்னிப் பருவமடைந்த தன் மகளை அயல் வீட்டுப் பையன் கெடுத்து விட்டதாக முறைப்பாடு செய்தார். தான் வேலைக்குச் சென்ற சமயங்களில் வீட்டிலே தன் மகள் தனியாக இருந்ததால் அந்தப் பையன் நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டான் என்றார். அந்த இளம் பெண் கர்ப்பிணியானாள். பையன் குழந்தையைப் பொறுப்பேற்க மறுத்தான். “வீட்டிலே ஆண்பிள்ளை இல்லாத காரணத்தாலேதான்’ இவ்வாறு நடந்ததென்றும், அந்தப் பையன்தான் தன் குழந்தைக்குத் தகப்பன் என்று ஒப்புக்கொள்ள மறுத்தான் என்றும் அந்தத் தாய் மூன்று தடவை திரும்பத் திரும்பச் சொன்னார்.
திருமணமாகாமலே தாயாகிவிட்ட அவமானம் ஒருபுறம், பதினாறு வயதிலேயே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பு மறுபுறம் என்னும் நிலையில் அந்த மகளையும் தாயையும் சமூகம் ஒதுக்கி விலக்கி வைத்துள்ளது. “நாங்கள் பாவப்பட்ட சென்மங்கள்” என்று அந்தத் தாய் தன் நிலைமையை வர்ணித்தார். இத்தகைய சம்பவம் இடம் பெற்றால் தகப்பன்மார், சகோதரர்கள் அல்லது மாமன்மார் சம்மந்தப்பட்ட இளைஞனையும் அவன் பெற்றோரையும் கண்டித்து குழந்தைக்குத் தானே தகப்பன் என்பதை அவன் ஏற்றுக்கொள்ளச்செய்து இருவருக்கும் மணஞ்செய்து வைப்பார்கள். இது வழக்கம். அத்துடன் ஊர் வம்புக்கு இடமில்லாது போய்விடும். இவ்வாறு நடைபெறவில்லை என்பதுதான் அந்தத் தாயின் பரிதாபம். மகளும் தன்னைப்போல ஆண் துணையற்றவளாகி விட்டாள். போதாக் குறைக்கு “வம்பிலே பிறந்த பிள்ளையை" வளர்க்கிறாள் என்னும் அவச்சொல்லுடன் வாழ்கிறாள். கடைசியாகப் பார்த்தால் சமூகம் தன்னையே பழி சொல்கிறது என்று அந்தத் தாய் கண்ணிர் மல்கப் புலம்பினாள். மகளின் நடத்தைக்குக் காரணம், கைம்பெண் பிள்ளையைச் சரியான முறையில் வளர்க்காமையே என்று கற்பித்தனர். புருசன் இல்லாதவளின் வளர்ப்பினாலேதான் மகளுக்கு அந்தக் கதி நேர்ந்ததென்று மக்கள்
87

Page 47
பேசிக்கொண்டார்கள். இதன் பொருள் பிள்ளைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதற்கு ஓர் ஆண், அதாவது தகப்பன் அவசியம் என்பதாகும். ஒரு பெண் அதாவது புருசன் இல்லாதவளின் வாழ்க்கை பூரணமடைவதில்லை என்பதையும் இது சுட்டிக் காட்டுகிறது.
தாய் என்ற முறையில் தன் மகளுக்குப் பாதுகாப்பளிக்கத் தான் தவறி விட்டதாக அந்தப் பெண் நம்பினார். அதனால் தன் மகள் திருமணம் செய்யும் வாய்ப்பு அற்றுப் போய் விட்டதாகவும் வருந்தினார். “அவளை இனி ஆர் கலியாணம் செய்வார்கள்” என்று பரிதாபமாக என்னைக் கேட்டார். ஓர் இளம் பெண்ணுக்குத் திருமணமே இறுதி இலட்சியம். அந்த இலட்சியம் நிறைவேற இனி வாய்ப்பில்லாமல் போய்விட்டதென்பதே அந்தத் தாயின் கவலை.
சீருடை அணிந்த அரசாங்க உத்தியோகத்தர்கள் செய்யும் இம்சைகள் இந்தப் பிரச்சினையின் மற்றொரு பரிமாணத்தைப் புலப்படுத்துகிறது. சேவை செய்யும் நல்ல மனிதனாகவே அவர் தோன்றுவார். கணவனின் மரணச் சான்றிதழ் பெறுவதற்கு அந்தக் கைம்பெண்ணுக்கு அவர் உதவினார். இந்தத் தொடர்பு படிப்படியாக குடும்பத்தவர்களுடன் நட்புக்கொள்ள உதவியது. அவர் அடிக்கடி அந்த வீட்டுக்குவரத் தொடங்கினார். கைம்பெண்ணின் தாயாருக்கு, ஆபத்து வரப்போகிறது என்ற உணர்வு ஏற்பட்டதும் அவரை அங்கு வரவேண்டாம் என்றார். அந்தச் சந்தர்ப்பத்திலேதான் அவர் அப்பெண்ணை மணம் செய்யத் தயார் என்று சொன்னார். ஆனால் மகளுக்கு அதில் நாட்டமில்லை. அது தவிரவும் அவர் ஏற்கனவே மணமாகி பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்து வந்தார். அவரால் செய்யக்கூடிய தெல்லாம் அம்பாறையில் சேவையாற்றும் காலம்வரை அந்தப் பெண்ணை தன் வைப்பாட்டியாக வைத்திருப்பதே. அவர் தொடர்ந்து அவர்களுக்குக் கரைச்சல் கொடுத்து வந்தார். மேலிடத்திற்கு முறைப்பாடு செய்தும் ஒரு பயனும் கிட்டவில்லை. அரச சார்பற்ற அமைப்பொன்று தலையிட்டு அவரை அம்பாறைக்கு வெளியே இடமாற்றம் செய்வித்தது. ஆயினும் அவர் தொடர்ந்தும் வந்து கொண்டே இருந்தார். அதனால் அப்பெண்ணின் தாயார் மகளைத் தன் உறவினர் ஒருவரின் விட்டுக்கு அனுப்பி வைத்தார்.
மற்றுமோர் இளம் கைம்பெண், பெற்றோர் இறந்த பின் தன் சகோதரியையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியதாயிற்று.
“என் சகோதரியை இராணுவத்தினர் ஒரு ஜிப்பிலே அழைத்துச்
சென்றார்கள். அவள் இந்தச் சம்பவத்தால் வெட்கமடைந்து பாடசாலைக்குச்
செல்வதை நிறுத்திக் கொண்டாள். அதன் பின் மனத்தளர்ச்சியும் ஏக்கமும்
88

அவளைப் பீடித்துக் கொண்டன. அதிகம் பேசமாட்டாள். அந்தச் சம்பவத்தையிட்டு எதுவும் சொல்லாள் என்ன நடந்ததென்று எங்களுக்குத் தெரியாது. அதைப்பற்றிச் சொல்லும்படி அவளை வற்புறுத்தவும் நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இன்று அவள் தன் கணிப்பின் படியும் பொதுமக்களின் கணிப்பின் படியும் வேண்டாத பொருளாகி விட்டாள். எம் சமுதாயம் பெண்ணினத்தை இப்படித்தான் மதிக்கிறது. இந்த மலையளவு ஊர் வாய்க்கு எதிராக நாம் என்ன செய்யலாம்?
அரசாங்கத்தை எதிர்க்கும் வல்லமை அவர்களுக்கு இல்லை. வெவ்வேறு மட்டங்களிலே செயற்படுவதான அதிகாரக் கட்டுக்கோப்பிலே அவர்களின் இனம், வர்க்கம், பால் ஆகியவற்றிற்குப் பல்வேறு பரிமாணங்கள் உள. இவற்றைச் சாடவோ தட்டிக் கேட்கவோ வலு இல்லாமையால் அவர்கள் தம் மனச்சாட்சியை மெளனிக்கச் செய்துள்ளனர். மேற்குறித்த இளம் பெண் தன் சகோதரியின் சார்பில் பேசினார். பாதிக்கப்பட்ட மங்கை மெளனமாக நின்றார். அக்கா சொல்வதற்கு அவ்வப்போது தலையாட்டி தன் ஒப்புதலைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஒரு கேள்விக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. அதாவது இந்த அபலைப் பெண்கள் ஆண்களின் அடாவடித்தனத்தையும் குடிப்பழக்கத்தையும் பெரிதுபடுத்தி அநாவசியமாக அவர்களைச் சந்தேகித்தமையால் தமக்குத் துணைவர்களாகவும் வாழ்வளிப்போராயும் விளங்கக்கூடிய நல்லவர்களையும் விரட்டித் துரத்தி விட்டார்களா?
பெண்கள், குறிப்பாக ஆண் துணையற்ற பெண்கள், பாலுணர்ச்சியைப் பொறுத்த மட்டில் குரூரமான முறையில் சமுதாயத்தினால் நோக்கப்படுகிறார்கள். பாலுணர்ச்சி அவர்களிடமிருந்து விலக்கப்பட்டதொன்றாக அவர்கள் விரும்பத்தகாததாகக் கருதப் படுகின்றது. உடலுறவு மூலம் இன்பம் பெறுவதென்பது அவர்களின் அன்றாட உரையாடல்களில் இடம் பெறுவதில்லை. இரகசியமாகத் தமக்குள் பேசிக்கொள்ளும் விடயமாகக் கருதப்படுகிறது.
பாலுணர்ச்சி என்பது பாவச் செயல் என்னும் எண்ணம் இந்தப் பெண்களுக்குச் சிறு பிராயமுதலே ஊட்டப்படுகிறது. ஆனால் விவாக பந்தத்தில் நெறிப்படுத்தப்படும் போது அதே பாலுணர்ச்சி ஏற்புடையதாகிறது. இந்த இரு கருத்துக்கும் மிகுந்த வேறுபாடுகள் உள. ஒன்று விலக்கப்பட்ட செயல். மற்றொன்றோ மனைவி கணவனுக்கு ஆற்றும் பணியாகிறது. கணவன் இல்லாதவிடத்து அது பாவச் செயலாகிறது.
89

Page 48
பின்னர் கணவனாக மாறக்கூடிய ஒருவனுடன் உடலுறவு கொள்வதும் பாவச்செயல் எனப் பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். மறுமணம் தொடர்பாக நம் சமுதாயத்தில் பல் வேறு கருத்துகள் நிலவுகின்றன. இவை பெண்களை விசித்திரமான முறைகளில் பாதிக்கின்றன. இந்த ஆய்வுக்குட்பட்ட கைம்பெண்களில் பெரும்பான்மையானோர் 40 வயதினராயினும் 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களைச் சேர்த்துள்ளோம். மிகக் குறைந்த வயதினர் பதினெட்டு பத்தொன்பது வயதுடையவர்கள். முப்பது வயதுக்குக் குறைந்தவர்கள் இருப்பத்தியாறு பேராவர்.
இந்தப் பெண்கள் முறையாக உணவு கொள்ளாதவர்களாய் போசாக்குக் குன்றியவர்களாய் தம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோற்றத்திலும் சிரத்தையற்றவர்களாய்க் காணப்பட்டனர். துறவு நிலைக்கு ஒப்பான விதத்தில் தமது சந்தோசம், திருப்தி, சுயபராமரிப்பு ஆகியவற்றை ஒதுக்கி விட்டு வாழ்வது போன்ற தோற்றத்தை நாம் கண்டோம். சில சமயங்களில் இது மணமறிந்த செயலாகவும், சில சமயங்களில் அவர்களை அறியாமலே வெளிப்பட்ட தோற்றமாகவும் எமக்குப் புலப்பட்டது. ஐந்தே ஐந்து பேரைத் தவிர ஏனைய பெண்கள் அனைவரும் மறுமணத்தை வன்மையாக எதிர்த்தனர். பதினைந்து பெண்களின் கணவன்மார் மனைவியைக் கைவிட்டோ தற்கொலை புரிந்தோ மறைந்தனர். இந்தப் பெண்கள் தாம் மீண்டும் மணம் செய்து கொள்ளாதிருப்பதற்கு தகுந்த காரணங்கள் உள. சூடு கண்ட பூனை அடுப்படியை நாடாது என்றபடி ஒரு முறை பட்டபாடு போதும் என்று அச்சம் தெரிவித்தார்கள். தம்மைத் துன்புறுத்தித் தொல்லைப்படுத்தி கடைசியில் விட்டுப்பிரிந்த கணவன்மாரினால் மணவாழ்க்கையையே இப்பெண்கள் வெறுத்தார்கள். ஆனால் எஞ்சியவர்கள் தமக்கென வகுத்துள்ள கலாசார மரபுக்கு அமைய வாழ்வதென முடிவு செய்துள்ளனர். இலங்கைத் தமிழரின் கலாசார மரபில் மறுமணம் விலக்கப்படவில்லை. சமூக வாரியாகவோ சட்ட வாரியாகவோ கைம் பெண்கள் மறுமணஞ் செய்தலென்ற வரையறை ஏதும் இல்லை. ஆயினும் மறுமணம் புரியக்கூடிய வயதினராகிய 18-40 வயதுப் பெண்கள் தாம் கைம்பெண்களாகவே இருக்கப் போவதாகத் தெரிவித்தனர். இந்த மறுப்புக்கு அவர்கள் தம் பிள்ளைகளைக் காரணம் காட்டினர். புதிய கணவன் முதல் தாரத்துப் பிள்ளைகளை ஏற்கமாட்டார் எனவும் தமக்குப் புதிதாகப் பிள்ளைகள் பிறந்தால் முன்னைய பிள்ளைகள் மீது பாகுபாடு காட்ட நேரலாம் எனவும் குறிப்பிட்டார்கள். அவர்களின் பகுத்தறிவு அவ்வாறு சொல்ல வைத்தது. ஆயினும் சமுதாய நியதி இதனை ஏற்றுக்கொள்ளுமென நம்பவியலாது.
90

மேற்சொன்ன காரணம் இரண்டாம் பட்சமானதாகக் காணப்பட்ட போதிலும், இப் பெண்கள் மீண்டும் ஓர் ஆணைத் தம் வாழ்க்கையில் இணைத்துக்கொள்ளாதிருப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் உண்டு. “இன்னுமொரு கணவனைப்பற்றி நினைக்கவோ வேறொரு மனிதனோடு வாழவோ மனம் இடம் கொடுக்கவில்லை. என் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கே இடமுண்டு. அவரோடு வாழ்ந்தது போதும்” என வாதாடுகிறார்கள்.
இந்தப் பெண்கள் தமிழர்களின் கற்பு நெறிக்கு அமைய, ஒருத்திக்கு ஒருவனே என்னும் கோட்பாட்டினைப் பின்பற்றுகிறார்கள். இன்னொரு மனிதனை மணம் புரிதல் கற்பு நெறிக்கு மாறானதென எண்ணுகிறார்கள். இலங்கைத் தமிழர் மத்தியிலே கற்பு, மறுமணத்தைத் தடைசெய்வதில்லை. ஆனால் திருமண அமைப்பினுள் பெண் உடலாலும் உள்ளத்தாலும் ஒருவனுக்கு விசுவாசமாயிருத்தல் வேண்டும். எனினும் இங்குள்ள பெண்கள் இந்திய பிராமணிய கற்பு நெறியைக் கடைப் பிடிக்கிறார்கள். கற்பு எனப்படுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாயிருத்தல் வேண்டுமென நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்போது வாதாடப்படுகிறது. இந்தக் கருத்தை அவர்கள் எமக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்தினருக்கும் பரப்பி வருகிறார்கள். கற்புத் தொடர்பாக இலட்சிய பூர்வமான கோட்பாட்டுக்கும் நிதர்சன வாழ்க்கைக்கும் இடையே மறுமணம் விலக்கப்படாத சந்தர்ப்பங்களிலே இப் பெண்கள் இலட்சிய வாழ்க்கையைத் தேர்ந்து கொள்கிறார்கள்.
தமிழர்கள் மத்தியிலே இல்லறம் என்பது இல்லத்தை விட அறத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இந்த அறமானது ஆணைப் பார்க்கிலும் பெண்ணுக்கே முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆண்கள் இல்லற விதிமுறைகளை மீறினால் பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார்கள். பெரிதுபடுத்தாது மன்னித்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள் விடயத்தில் அவ்வாறு நிகழ்வதில்லை. அவர்கள் கண்ணும் கருத்துமாய் கண்காணிக்கப்படுகிறார்கள். தள்ளி வைக்கப் படுகிறார்கள். நிந்தனைக்குள்ளாகிறார்கள். தண்டிக்கப்படுவதும் உண்டு.
பெண்கள் அறநெறிக்கமைய வாழுதல் அவசியம் எனக் கருதுகிறார்கள். சுய திருப்தியை விட மானம் பிரதானமென வாழ்கிறார்கள். எனினும் ஐந்து பெண்கள் மறுமணம் செய்யுமாறு எவரும் தம்மைக் கேட்கவில்லை என்றனர். மறுமணம் பற்றிப் பேச்செடுக்க எவரும் முன்வரவில்லை. இதனை அவர்கள் ஒரு முறைப்பாடு போன்ற தொனியில் தெரிவித்தார்கள். தம் கருத்தினை வெளியிடுவதற்கு இப்பெண்கள் இடக்கடரக்கரான சொற்களைப் பயன்படுத்தினர்.
9.

Page 49
பெரும்பாலான பெண்கள் வாழ்க்கையில் கிட்டும் வாய்ப்புகளைப் புறக்கணித்து மகிழ்ச்சியை ஒறுத்து ஒரு வகையான துறவு வாழ்க்கையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இலங்கையின் சமூக அமைப்பிலே வடக்கிலும் சரி கிழக்கிலும் சரி பெண்மை தொடர்பான பிராமணிய துறவுநிலை சார்ந்த வர்ணாஸ்ரம முறைமை அந் நியமானதாயினும் சில அம்சங்களிலே அதன் சாயலைக் காணமுடிகிறது.
துறவு வாழ்க்கையைப் பின்பற்றுவோர், வாழ்க்கையின் இன்பங்களைப் புறக்கணிக்கும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வீட்டிலும் கூட மனைவியானவள் தனக்கு மகிழ்ச்சியூட்டும் சில செயல்களை விலக்கி துறவு ஒத்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளன. இவ்வாறாக பெண்கள் தம் இல்லத்துள் துறவு வாழ்க்கையை நடத்துகின்றனர். கைம்பெண்களும் தம் உரையாடல்களில் கூட இந்த நடைமுறையைக் கைக்கொள்ள வேண்டுமென நம்புகின்றனர். கற்பைப் பேணிக்காத்தல் பெண்களின் அறம் எனப் போற்றப்படுகிறது. எமது உரையாடல்களில் இந்த உண்மை புலனாயிற்று. கற்பு நெறி தவறும் பெண்களால் குடும்ப வாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பெண்கள் சில கலாசாரப் பாரம்பரியங்கள் தமக்கு மட்டுமே உரியன என அனுமானித்து நிஜ வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடிக்க முயல்கின்றனர். அங்க அசைவுகள், பேசும் முறை, கருத்துக்களை வெளிப்படுத்தும் பான்மை
அழுத்தங்கள் அவர்களின் சிந்தனை வளர்ச்சியை மழுங்கச் செய்துள்ளன.
பெண்கள் மறுமணம் என்றால் பாலுணர்ச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு தம் வாழ்க்கைப் போக்கினை மறுபடியும் அமைத்துக்கொள்ள வேண்டுமென எண்ணுகிறார்கள். தாம் அநாதரவான நிலையில் தனித்து வாழும்போது ஒரு துணையாக ஆண் விளங்குவார் என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எனவே மறுதாரம் என்னும்போது புலனுணர்ச்சியைப் பூர்த்தி செய்யும் ஏற்பாடாகவே அதனை நோக்குகின்றனர். அத்துடன் பாலுணர்ச்சியை நிறைவேற்றும் செயல் பாவமாகக் கருதப்படுகிறது. பாலுணர்ச்சி தொடர்பான வரையறைகளும் விவாக பந்தத்தில் அதற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமும் மறுமணத்தைப் பாலுணர்ச்சியுடன் தொடர்புறுத்தும் மரபைத் தோற்றுவித்துள்ளன. பாலுணர்ச்சியை விளக்குதலும் அங்கீகரிப்பதும் உறவுநிலையில் ஏற்படும் அதிகார பலத்தில் தங்கியுள்ளன. இங்கு அந்த அதிகாரம் ஆணுக்குச் சார்புடையதாக விளங்குகிறது. இத்தகைய சூழலில் பெண்களின் பாலுணர்ச்சி மறைக்கப்படுவதுடன் அமையாது
92

விலக்கவும்படுகிறது. பாவச்செயலாக நோக்கப்படுகிறது. சமுதாயத்தின் இந்த வரையறைகளின் பகைப்புலத்தில் கைம்பெண்களின் மறுமணம் முக்கியமற்ற பிரச்சினை எனக் கருதப்படுகிறது.
கிராமப் பகுதிகளிலே, சூது வாதற்ற, பிராமணியச் செல்வாக்கற்ற சமுதாயத்திலே வாழும் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும், பாலுணர்ச்சியை நிறைவேற்றவும் சுதந்திரமுடையவளாகவும் தம் மனதிற்குப் பிடித்த துணைவர்களைத் தெரிவு செய்யும் உரிமை உடையவர்களெனவும் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த ஆய்வில் நாம் கண்ட உண்மைகள், அப் பெண்கள் அடக்கியும் ஒடுக்கியும் வாழ்கிறார்கள் என்பதைப் புலப்படுத்தின. “என் வாழ்வில் இன்னொரு மனிதனுக்கு இடமில்லை. மறுபடியும் இன்னொரு மனிதனை நினைத்துப் பார்க்க முடியாது” என்பது தென்னிந்திய தமிழ்ப் படங்களில் கதாநாயகிகள் தெரிவிக்கும் கருத்து. இந்தக் கருத்தே திருகோணமலைக் கிராமப் பகுதிகளில் பெண்கள் மத்தியில் வேரூன்றியிருக்கக் கண்டோம்.
மக்டொனோ, அபுரிசன் ஆகியோரின் கருத்தின்படி, தந்தை வழி ஆதிக்கம் இரண்டு வகையான வரையறையைக் கொண்டுள்ளது. முதலாவது வரையறையின்படி, ஒரே இணை துணையான மண வாழ்க்கை மூலம், பெண்களின் கருவளமும் பாலுணர்ச்சியும் கட்டுப்பாட்டுக்குள்ளாகின்றன. பால் அடிப்படையில் உழைப்பாற்றலைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், பெண்களைப் பொருளாதார அடிமைகளாக்குதல் இரண்டாவது வரையறையாகும். ஆயினும் ஒரு தார மணவினையில் ஆண் துணை மறைந்த பின்னரும் பெண்கள் அதே கட்டுக்கோப்பினுள் அடங்கி வாழ்கிறார்கள். அதனால் அவர்கள் ஆணாதிக்க நடைமுறைக்குத் தம் பாலுணர்ச்சியைப் பலியிடுகிறார்கள். அதாவது பெண்கள் ஆண்களின் பாலியல் மகிழ்வுக்குரிய சொத்தென்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். கற்பு நெறி வழுவாத பெண்மை போற்றிப் புகழப்படுகிறது. தந்தை வழி ஆதிக்கத்தில் பெண்மையை இவ்வாறு அடிமைப்படுத்துதல், பெண்ணியல் கோட்பாட்டிற்கு மேலும் சிக்கலை உண்டாக்குகிறது. பாட்டாளி வர்க்கத்தினிரிடையே இந்த நிலைமை வேறுபட்டதாகக் காணப்படுகிறதென்று எங்கெல்ஸ் வாதிட்டுள்ளார். சொத்துரிமை பாட்டாளி வர்க்கத்தினரிடம் காணப்படாமையால், ஒடுக்கு முறையான ஒரு தார மணவினை சார்ந்த கருத்து மறைந்து விட்டதாகவும், கணவன் மனைவியரிடையே தந்தை வழி ஆதிக்கத்துக்குப் புறம்பான சமத்துவநிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கருத்தும் சர்ச்சைக்குரியதே.
93

Page 50
சகல வர்க்கத்துப் பெண்களும் தந்தை வழி ஆதிக்கக் கோட்பாட்டுக்குள் இயங்குவோராகவே காணப்படுகின்றனர். இதனை விளங்கிக் கொள்வதற்கு ஒரு வழி, சமஸ்கிருத மயமாதல் என்னும் கருத்தியலைப் பிரயோகித்தலாகும். இந்தக் கருத்தியலானது சமஸ்கிருதக் கலாசார விழுமியங்களை உள்வாங்கும் நடைமுறை மூலமாக, பெண்கள் உயர்சாதியினர், சொத்துச் சுகமுடைய உயர்வர்க்கத்தினர் என்னும் பிரமையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்தாடல் கலாசாரத்தினை அடியொற்றிய சிந்தனை வழியாகக் பின்பற்றப்படும் ஒடுக்கு முறைக்கு எம்மை அழைத்துச் செல்கிறது. அதிகார பலமுடையவர்களின் செயற்பாடுகளுடன் பாலுணர்ச்சிக்கும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கும் தொடர்புண்டென ‘போகோல் வாதாடுகிறார். அதுவும் எம் கவனத்துக்குரியதே. ஒருத்திக்கு ஒருவனே எனவும் தாய்மை புனிதமானதெனவும் கற்பெனும் கோட்பாட்டை வலியுறுத்திப் பெண்கள் முன்வைக்கும் காரணங்கள் யாவும், சீதை, கண்ணகி போன்ற இதிகாசக் கற்பரசிகள் மூலம் வரலாற்று அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட காரணங்களே!
இவை தவிர, வேறு காரணங்களும் உள. தந்தை வழிச் சமுதாய அமைப்பிலே பெண்ணானவள் புலனடக்கமுடையவளாய் இருக்க வேண்டும். அவளின் பாலுணர்ச்சியும் வேட்கையும் செயலடங்கியன வெனக் கருதப்படுகின்றன. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டியவை. இதிலிருந்து பெறப்படுவதென்னவெனில், திருப்தி காணும் தேவை பெண்ணுக்கு இல்லை என்பதாகும்.
இவ்வாறு சமுதாயமும் வரலாறும் கட்டிக்காத்து வந்த அர்த்தங்கள் மக்களை ஆட்கொள்ளும் வல்லமையுடையன. அவை இலட்சிய பூர்வமாயும், பண்பாட்டு அடிப்படையிலும் சட்டநெறியாகும் போது, மக்கள் அவற்றின் வழி நின்று ஒழுகுகின்றனர். இவ்விதமாகவே பெண்ணின் ஒழுக்க நெறி உருவாக்கப்பட்டது. பாலுணர்ச்சியை ஒறுத்தல், மறுமணஞ் செய்யாது இருத்தல், தாய்மையே பாலுணர்ச்சியின் ஊற்று மூலமென வலியுறுத்துதல் போன்ற ஒழுக்க சீலங்கள் பெண் மீது சுமத்தப்பட்டன.
இதன் விளைவு பெண்கள் அடங்கி ஒடுங்கி வாழ்தலாகும். ஆனால் இந்த வாழ்க்கை அவர்களின் சமூகத்திலோ தனிப்பட்ட முறையிலோ குறிப்பிடப்படுவதில்லை. தம் பாலுணர்ச்சி பற்றி இந்தப் பெண்கள் மெளனம் சாதித்தமை உண்மை நிலையைப் பறை சாற்றுவதாக அமைந்தது. அதைப்பற்றிப் பேசுவதே குற்றச்செயலாக அவர்களுக்குத் தோன்றியது.
94

பெண்கள் தாமாகவே முன்வந்து தம் திருமணத்தைப் பற்றி ஏற்பாடு செய்தலும் சமூக கலாசாரக் கட்டுக்கோப்பில் விபரீதமாக நோக்கப்படுகிறது. எம் ஆய்வுக்குட்பட்டவர்களில் நால்வர் மட்டுமே தம் துணைவரைத் தாமாகத் தேடிக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஏனையோரின் திருமணத்தில் பெரியோர்கள், தரகர்கள், சோதிடர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர். அவர்களே இப்பெண்களின் எதிர்கால வாழ்வை ஏற்பாடு செய்தனர். இந்த விதமான ஏற்பாட்டைப் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்புடைய கைம்பெண் விடயத்தில் மேற்கொள்ளுதல் சாத்தியமன்று. இப் பெண்கள் தாமாகவே எதனையும் முடிவு செய்ய எத்தனித்தால், அம்முயற்சி பாலுணர்ச்சி மிக்க பெண்ணின் வெட்கக்கேடான செயலாகக் கருதப்படும்.
ஆயினும், வேறு சில பெண்கள் மறைமுகமாகத் தம் அனுபவங்களை வெளியிட்டனர். இவர்கள் ஆய்வாளரிடம் அந்தரங்கத்தை வெளியிடவில்லை. நேரில் அவர்களைச் சந்தித்த என்னிடம் சொன்னார்கள். பதினெட்டு வயதான ஒரு கைம்பெண், தான் மறுமணம் செய்ய விரும்பினாலும் பல இடையூறுகள் உண்டென்றார். அவற்றில் முக்கியமானது இப்போது நடைபெற்று வரும் யுத்தம் என்றார்.
“எனக் குப் பயம் . என் இரணி டாவது கணவரும் இராணுவத்தினரால் கொல்லப்படலாம் என அஞ்சுகிறேன். ஏனென்றால் அவர்கள் இளம் ஆண்களைத் தானே தேடித் திரிகிறார்கள்".
மற்றோர் இளம் விதவை தனக்கு மீண்டும் மணஞ்செய்ய விருப்பமிருந்தாலும் ஒருவரும் முன்வந்து கேட்கவில்லை என்றார். மேலும், ஒரு பெண் என்ற முறையிலே அதுவும் கைம்பெண்ணாக இருந்து கொண்டு தன் ஆசையை வெளியே சொன்னார். மற்றவர்கள் அதனை வெட்கக்கேடான செயல் எனத் தூற்றுவார்கள் என்றார்.
ஒரு விதவை மட்டுமே, தன் தாயார் தனக்கு மறுமணம் செய்து வைக்க விரும்புகிறார் என்றும், ஆனால் தனக்கு அதில் நாட்டமில்லை என்றும் சொன்னார். எட்டுப் பெண்களை ஆண்கள் நேரடியாக அணுகி தம்மை மணந்து கொள்ளும்படி கேட்டார்கள். ஆனால் அந்தப் பெண்கள், ஊரார் சொல்லுக்கு அஞ்சியும் தம் குடும்பத்தினர் தம்மைத் தாபரிக்க மாட்டார்கள் என்பதாலும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை என்றார்கள். வயது, அந்தஸ்து, குலம், குடும்பப் பின்னணி, குணம் ஆகிய விடயங்களில் பொருத்தமற்றவர்கள் என்ற அடிப்படையில் அந்த ஆண்கள் நிராகரிக்கப்பட்டனர்.
95

Page 51
மறுமணம் தொடர்பான கருத்து நிலை இரு வகைப்பட்டதாய்க் காணப்படுகிறது. ஒரு புறத்தில் பகுத்தறிவின்பாற்பட்ட விவேகமும், மறு புறத்தில் கலாசாரப் பின்னணியில் உருவான இலட்சியக் கோட்பாடும் பெண்களின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதாக அமைகிறது.
பாங்கும் அவர்களின் அந்தரங்க சுத்தியைப் புலப்படுத்தின. தம் கலாசாரத் திணிவுகளை அவர்கள் விசாரணைக்கு உட்படுத்துவதாகவும் பதில்களைக் கண்டறிய விழைவதாகவும் தோன்றியது.
“என் கணவர் நல்லவர். அவர் குடிகாரன்தான். என்னை அடித்தார்தான் என்றாலும் நான் மறுமணஞ் செய்து கொண்டால் ஊரார் என்ன சொல்வார்கள்? ஊர் வாயை மூடமுடியுமா? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரிக் கதைப்பர். அது தவிரவும் புதிதாக வரும் கணவர் மூலம் நான் குழந்தைகளைப் பெற்றால் அவர் என் முந்திய தாரத்துக் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவார் அல்லவா? அக்குழந்தைகள் “எங்கள் அம்மா இந்த மனிதனைக் கலியாணஞ் செய்தபடியால் நாங்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது” என்று அக் குழந்தைகள் குறை சொல்லக்கூடும். என் எண்ணம் பிழையாக இருக்கலாம். என்றாலும் வாழ்க்கையில் எனக்கும் ஆசாபாசங்கள் இல்லாமற் போகுமா?” என்றார் யோசனையுடன். அவர் பலமாக யோசித்தார்.
வேறோர் இளம் விதவையும் இதே கருத்தை வேறுவிதமாக வெளியிட்டார்.
“புதுக் கணவர் மூலம் நான் பிள்ளைகளைப் பெற்றால் என் முன்னைய பிள்ளைகளை அவர் அடித்துத் துன்புறுத்திப் பாகுபாடு காட்டக் கூடும். எதிர் காலத்தில் என்ன நடக்குமென்று சொல்ல முடியுமா? மேலும் அவர் என்னை வேறொருவன் கடித்த கனியாகக் கருதக் கூடும். வேறொருவன் ஆண்டு அனுபவித்த உடலும் உள்ளமும் கொண்டவள் என்று நினைக்கலாம் கொதிக்கும் எண்ணெய்க்குத் தப்பி, எரியும் அடுப்புக்குள் விழுந்த கதையாகப் போய்விடலாம். இப்படியாக நடக்காது என்று உத்தரவாதம் தந்தால் நான் கலியாணம் செய்து கொள்ளத் தயார்”
அந்தப் பெண் புன்முறுவலுடன் நிலம் நோக்கி நின்றாள். நேருக்கு நேர் என்னைப் பார்க்க நாணம் விடவில்லைப் போலும்.
கடைசியாக ஆராய்ந்து பார்த்தால், இந்தப் பெண்கள் இரண்டும் கெட்டான் நிலையில் பரிதவிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.
96

திருகோணமலையிற் போலவே அம்பாறையிலும் பெண்ணின் பாலுணர்ச்சியானது சமூகக் கட்டுப்பாடுகளின் நிமித்தம், பொது விடயமாக ஓரளவு மாற்றம் பெற்றுள்ளமையைக் காணமுடிகிறது. ஆயினும் திட்டவட்டமாக நோக்கிய வேளையிலே வேறுபாடுகளைக் கண்டோம். இந்த வேறுபாடுகள் பெரும்பாலும் இனச்சார்புடையனவாய்த் தோன்றின. இங்கு வன்செயல்களுக்கு இலக்கான முஸ்லிம் பெண்களைச் சந்தித்தோம். அத்துடன் திருகோணமலைத் தமிழ்ப் பெண்களுக்கும் இவர்களுக்குமிடையில் கலாச்சார அடிப்படையிலும் வேற்றுமைகளைக் கண்டோம். கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் தாய்வழிக் கலாசார மரபைப் பின்பற்றுவோர் என நம்பப்படுகிறது. இதனை ஆண் துணையற்ற பெண்களின் பேச்சு வார்த்தைகளிலும், போக்கு வாக்குகளிலும் காணலாம். உணர்வார்ந்த எண்ணப் போக்கிலே இந்த வேறுபாடு குறிப்பிடத்தக்கதாய் விளங்குகிறது.
அம்பாறையில் வாழும் பெண்கள் மிகவும் வறியவர்கள். மன அழுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். அதிக விரக்திக்குள்ளானவர்கள். கவலையில் மூழ்கியவர்கள். ஆயினும் குரோதமோ, புரட்சி மனப்பான்மையோ அற்றவர்கள் இப் பெண்கள். ஆண் துணையற்று வாழ விரும்புகிறார்கள். தமிழ்ப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் இரு சாராரும் இவ்வாறு தனித்து வாழ்வதற்குப் பல காரணங்கள் உள. இப்பெண்களிற் சிலர், மனைவிமாரை யுத்தத்திற்குப் பலிகொடுத்த தம் மைத்துனர்மாரும், தோழிகளின் நண்பர்கள் சிலரும் மறுமணம் செய்து கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனினும், மறுமணம் புரிந்து கொண்ட இரண்டு பெண்களைப் பற்றியே அவர்கள் நேரடியாக அறிந்திருந்தார்கள். சமுதாயம் தம்மீது பாகுபாடு காட்டுகிறதென்பதை அறிந்துள்ள இப்பெண்கள், அந்தப் பாகுபாட்டுக்குக் காரணங்களாய் அமையும் சமூக கலாசாரத் தடைகளைத் தகர்க்க இயலாதவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழ்ப் பெண்களில் ஒரு சிலர் தாம் மறுமணம் செய்ய விரும்பாமைக்கு கற்பு நெறியைக் காரணம் காட்டினர். இந்துமதக் கோட்பாட்டின்படி ஒரு பெண் தன் வாழ் நாளில் ஒருவனையே மணந்து கொள்ள வேண்டுமென்று சொல்கிறது. இது ஒரு விதவையின் வாதம். மற்றொரு பெண் 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்" என்றார். பெரும்பாலான பெண்கள் வேறுவிதமாக வாதிட்டனர்.
“என் மைத்துனர் என் பிள்ளைகளைப் பார்க்க வந்தால் கூட ஊரவர்கள் பல விதமாகக் கதை கட்டுகிறார்கள். இதைவிட யாரையாவது கலியாணம் செய்து கொள்வது மேல். தனியாக வாழ்ந்து இடையறாத
97

Page 52
அவதூறுக்கு ஆளாவதைப் பார்க்கிலும் அது மேல். ஆனால் வருகிறவர் நல்லவராக இருக்க வேண்டும். என் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாய் பேணி வளர்க்க வேண்டும். குடிகாரனாய் இருக்கக் கூடாது".
திருமணங்கள் திருப்திகரமாய் அமைவதில்லை. வாழ்க்கையில் அநாவசியமாய் ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டுமா? இவ்வாறான எண்ணங்கள் அவர்களின் மனதில் வேரூன்றியுள்ளன. இருபத்தொரு பெண்கள் மறுமணம் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். தம் பிள்ளைகள் கொடுமைக்கு உள்ளாவார்கள் என்பதே பலரும் தம் மறுப்புக்குக் காட்டிய காரணம். மூன்று பேர் பின்வருமாறு சொன்னார்கள்: "ஆண்கள் வேறொருவனுக்குப் பிறந்த பிள்ளைகளை விரும்புவதில்லை. அவர்களைத் துரத்தி விடுவார்கள்”.
ஏழு பெண்கள், ஏழு வயதிற்கும் பதின்னாங்கு வயதிற்கும் இடைப்பட்ட தம் பிள்ளைகள் வீட்டிலே வேறொரு தந்தை வந்து சேர்வதை விரும்பவில்லை என்று பலமுறை தெரிவித்ததாகச் சொன்னார்கள்.
“எனக்கு இன்னொரு அப்பா வேண்டாம். வேறொரு அப்பா வந்தால் அவனைக் கத்தியால் குத்துவேன். நீங்கள் கலியாணம் செய்ய வேண்டாம்".
மூன்று சந்தர்ப்பங்களிலே இந்த வெறுப்பு வன்செயலாக வெடித்தது. “நான் அவனைக் குத்திக் கொல்லுவேன் துரத்தி அடிப்பேன்".
அவர்கள் இவ்வாறு தம் கருத்தை வெளியிட்டார்கள். அவர்களின் யோசனையை எவரும் கேட்கவில்லை. வீட்டிலே மற்றவர்கள் அதைப்பற்றிப் பேசிய சமயத்தில் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
பத்துப் பெண்கள், தமக்கு வளர்ந்த பெண்பிள்ளைகள் உள்ள படியால் இரண்டாம் தாரத்தைப் பற்றிப் பேசுதல் சமூகமுறைப்படி பிழையானதென்ற கருத்தைத் தெரிவித்தார்கள். எட்டுப் பெண்கள், திருமணத்தைப்பற்றி யோசிக்கும் நிலையில் தாம் இல்லையென்றும் தாம் கவலைப்படுவதற்கு வேறு பல பிரச்சினைகள் உண்டென்றும், வாழ்க்கையில் சந்தோசமான விசயங்களைப் பற்றி நினைக்கும் எண்ணம் தமக்கு இல்லையென்றும் சொன்னார்கள். இரண்டு பெண்கள், தம்மை மணஞ் செய்து கொள்வதற்கு ஆண்கள் முன்வந்த போதிலும் முடிவு செய்ய இயலாதிருக்கிறதென்றார்கள். காரணம் சரியான யோசனை சொல்ல அவர்களுக்கு நெருங்கிய உறவினர் எவரும் இல்லை. எல்லோரும் கொல்லப்பட்டோ இடம்பெயர்ந்தோ பிரிந்து விட்டனர்.
98

அம்பாறைப் பெண்களின் பதில்களில் முக்கியமான அம்சம், கற்பு நெறி பற்றிப் பேசிய இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள், தாம் மறுமணஞ் செய்யாதிருப்பதற்கு நியாயபூர்வமான காரணங்களை முன்வைத்தனர் என்பதாகும். இதிலே மேலும் குறிப்பிடத்தக்க விடயம் பெரியவர்கள் அவர்களுக்கு மணஞ்செய்து வைக்க முன்வந்தார்கள் என்பதும் ஆண்கள் அவர்களை மணந்துகொள்ளத் தயாராய் இருந்தார்கள் என்பதுமாகும். இது திருகோணமலை நிலைமையிலும் மாறுபட்டதாகும். இந்த மாறுபாட்டிற்குக் கிழக்கு மாகாணத்தில் நிலவும் தாய்வழிப் பண்பாட்டு மரபு காரணமென நாம் கொள்ளலாம்.
கடுமையான மனச்சுமை, பாரதூரமான பொறுப்புகள், வறுமை, வாழ்க்கையின் நெருக்கடிகள் ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லையாயின் இப் பெண்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் மணஞ் செய்திருப்பார்கள் என நாம் ஊகிக்கலாம். யுத்த நிலைமை, பயங்கரவாதம், வன்செயல்கள், குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் பெண்கள் எதிர்நோக்கும் அவலம் என்பனவும் இந்தப் பிரச்சினைக்கு மற்றொரு பரிமாணத்தை வழங்குகிறது. இவை தொடர்பான ஆய்வு, பிள்ளைகள், பெண்கள் ஆகியோர் எதிர்நோக்கும் பல்வேறு தாக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன.
ஆயினும், மதச் சார்பான மங்கல வைபவங்களில் கைம் பெண்களை ஒதுக்கித் தள்ளி வைக்கும் விடயத்தைப் பொறுத்தவரையில் தமிழ்ப் பெண்களின் நிலைமையும், அனுபவங்களும் அம்பாறை, திருகோணமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் பெரிதும் ஒற்றுமையுடையதாகக் காணப்படுகிறது. இப் பெண்களை இழிவுபடுத்தும் வழக்கமும் உண்டு. விதவைகள் பூவும் பொட்டும் அணிந்தால் அத்தகைய பெண்கள் ஆண்களுக்குத் தம்மை விளம்பரப்படுத்துவதாகக் கணிக்கப்படுகின்றனர். ஒரு பெண்ணின் அனுபவம், மிகுந்த பரிதாபத்துக்குரியதாகத் தோன்றியது. வெளியே போய் வந்தமைக்காக அப்பெண் அவதூறுக்குள்ளானாள்.
“இந்த நேரத்தில் எங்கே போகிறாள்? அவள் நடக்கும் கம்பீரத்தைப் பார். ஆண்களோடு அவளுக்கு என்ன பேச்சு? அவளுக்கு ஆண்பிள்ளைகளில் ஆசை போலும் ஆம்பிள்ளைகளை மயக்கப் பார்க்கிறாளோ..? எனக்கு வெளியே திரிய மனமில்லை. இப்படியான அவதூறுகளை கேட்கும்போது பூமி பிளந்து என்னை விழுங்க மாட்டாதா? என்று நினைக்கிறேன்’.
99

Page 53
ஒரு சாபத்தோடு அந்தப் பெண் தன் கதையை முடித்தார்.
“நான் ஏன் துன்பப்பட வேண்டும். என்னை இப்படி வருத்துகிறவர்கள் கட்டாயம் கஷ்டப்படுவார்கள். நான் கடவுளிடம் மன்றாட முயற்சிக்கிறேன். அமைதியாக உட்கார்ந்து பிரார்த்தனை செய்தால் இப்படிச் சபிக்கும் எண்ணம் இல்லாமற் போகலாம். ஆனால் என் மனதில் அமைதியில்லை’.
ஆண் துணையற்ற தனிப்பெண் என்னும் வகையிலே அவளின் பேச்சு, செயல், நடத்தை யாவும் கண்காணிக்கப்படுகின்றன. பொது மக்களின் கண்ணும் கருத்தும் எந்நேரமும் அவள் மீது படிகின்றன. இவ்வாறு நடத்தப்படுவதால் அப்பெண்ணுக்கு ஏற்படும் மனத்துயர் அவளின் நடத்தையில் பொதுவாகவும் பிள்ளைகளை வளர்ப்பதில் குறிப்பாகவும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. தாம் கோபமாகவும் மனச் சஞ்சலத்துடனும் இருக்கும் வேளைகளில் பிள்ளைகளைத் திட்டித் தீர்ப்பதாக இப்பெண்கள் குறிப்பிட்டனர். தம் ஆத்திரத்தைப் பிள்ளைகள் மீது காட்டுவதே அவர்களுக்கு ஒரே வழி.
மறுமணம் தொடர்பான எண்ணப் போக்குகளை அதிகார அமைப்பின் பின்னணியில் வைத்து நோக்குதலும் வேண்டும். அத்துடன் சத்தியம், அறிவாற்றல் ஆகியன தொடர்பான உரையாடல்களுடன் அவற்றை இணைத்து நோக்கினால், அவை வல்லமையற்றோருக்குப் பாதகமாய் அமைந்திருப்பதைக் காணலாம்.
கலாசாரக் கோட்பாட்டினை முதன்மைப்படுத்தும் வகையிலே பெண்மை உருவகிக்கப்பட்டுள்ளமை, கருத்தொருமைப்பாடான சட்ட வரையறையினையும் ஒழுக்க விதிகளையும் பெண்களுக்கென வகுத்துள்ளன. பெண் தன் பாலுணர்ச்சியைக் கட்டுப்படுத்துதல் வேண்டுமென்பது இவ்வாறான கோட்பாட்டின் விளைவாகும். “என் வாழ்வில் ஒரு பெண்ணுக்கே இடமுண்டு” என ஆண் சொல்வதில்லை. இரண்டாந் தடவை, மூன்றாந் தடவை என அவன் மணஞ்செய்து கொள்ளலாம். அவனுக்கு அந்த அதிகாரமும் வல்லமையும் உண்டு. ஆண், வீரியம் மிக்கவன் என்பதால் அவனுடைய பாலுணர்ச்சி அடிக்கடி பூர்த்தியாகுதல் வேண்டும் என்னும் உண்மையின் அடிப்படையில் அவனுடைய ஒருதலைப்பட்சமான இச்செயல் இயல்பானதாகக் கொள்ளப்படுகிறது. பெண்ணோ சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெறும் பொருட்டு, தன் பெண்மையைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இவ்விதமாகக் கற்பின் பெருமையையும் "உண்மையான பெண்” என்னும் மாயையையும் அவள் நிலைநாட்டிக் கொள்கிறாள்.
00

திருகோணமலையைச் சேர்ந்த ஆறு சிங்களப் பெண்களும் அநேகமாக இத்தகைய கோட்பாட்டினை வெளிப்படுத்தினர். ஆயினும் அவர்கள் முன்வைத்த காரணங்களில் ஒரு வேறுபாட்டைக் கண்டோம். “பெண்ணின் வாழ்வில் ஒருவனுக்கே இடமுண்டு” என்று ஒருவரும் சொல்லவில்லை. மறுமணம் தொடர்பாக வெறுப்போ மறுப்போ அவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் வெளிப்படவில்லை.
அவர்களின் மனப்போக்குக்கு வயதும் (20, 49.42.40, 27, 29) ஒரு காரணமாய் அமைந்திருக்கலாம். நான்கு விதவையர் மறுமணம் பற்றிய எண்ணத்தை மறுத்தனர். தம் பிள்ளைகளின் நல்ல வாழ்வே தம் குறிக்கோள் என்றும், மறுமணம் பற்றிய சிந்தனையே தமக்குக் கிடையாதென்றும் சொன்னார்கள். ஐந்தாவது கைம்பெண்- அவளுக்கு வயது 40- தன் கருத்தை விவரமாகச் சொல்ல முன்வந்தார்.
“ஐந்து வருட காலமாகக் காதலித்து அவரை மணந்து கொண்டேன். பதினொரு வருடம் அவரோடு சந்தோசமாக வாழ்ந்தேன். நாம் இருவரும் ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டிருந்தோம். ஒருவரை ஒருவர் மதித்தோம். இப்போது மீண்டும் மணஞ்செய்ய வேண்டுமென எனக்குத் தோன்றவில்லை”. அவரின் தரித்திர நிலையும் அதனால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையும்கூட இவ்வாறான அக்கறை யின்மையைத் தோற்றுவித்திருக்கலாம்.
என்றாலும் பல விதத்தில் ஒரே வகையான கலாசார மரபுகளைப் பின்பற்றும் ஒரு சமுதாயத்தினை மதிப்பிடுதற்கு இந்த ஐந்து பெண்களின் கருத்துகள் போதுமானவையல்ல. சிங்கள மக்களின் கலாசார சமூகக் கருத்து நிலைகளை அடியொற்றிய பெண்ணிய சிந்தனையில், பிராமணியச் செல்வாக்கு இடம் பெறாமை அவர்களின் மாறுபட்ட மனப்போக்குக்கு ஏதுவாயிருக்கலாம். கற்பு நெறி பற்றி அவர்களில் எவரும் ஆணித்தரமாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
கைம்மை தொடர்பான, கருத்தியல் சமூக அடிப்படையில் பல்வேறு இழப்புகளுக்கு வழி வகுத்துள்ளது. பொருளாதார இழப்பு மற்றும் துணையும் தாபரிப்பும் அற்ற நிலைமை என்பன தவிர்ந்த ஏனைய துயரங்களையும் குடும்பத் தலைவிகளாக விளங்கும் கைம் பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். சமூகம் அவர்களை ஒதுக்கி வைப்பதன் காரணமாக சடங்குகள், கொண்டாட்டங்கள் போன்ற கலாசார வைபவங்களிற் பங்கு கொள்ளும் வாய்ப்பினை இழக்கிறார்கள். சமூகம் தங்களை ஒதுக்குகிறதென்ற எண்ணத்தில் இப்பெண்கள் தாங்களாகவே ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
O

Page 54
கைம்மை தொடர்பாகச் சமுதாயம் வகுத்துள்ள ஒழுக்கநெறி ஒரு வகையான துறவு நிலைக்கு ஒப்பானதென்பதை எமது ஆய்வு புலப்படுத்துகிறது. அதாவது கைம்மை அடைந்த பெண், தன் ஆசாபாசங்களை தன் புலணுணர்ச்சியை ஒறுத்து வாழ வேண்டுமெனச் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
“நான் கொண்டாட்டங்கள், சடங்குகள் ஆகியவற்றிற் கலந்து கொள்வதில்லை. என் அம்மாவை அனுப்புவேன்” அம்மா வயோதிப மாதாக இருந்தாலும் மாங்கல்ய பாக்கியத்தோடு வாழ்வதால், சமுதாயத்தில் அவருக்கு ஓர் அந்தஸ்த்து உண்டு.
“அமங்கலி என்று மற்றவர்கள் என்னை ஒதுக்கி வைப்பதால் நான் நல்ல காரியங்களில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறேன். இதையிட்டு எனக்குப் பெரிய கவலை".
இது சூடு கண்ட பூனை அடுப்படியை நாடாது என்ற கதை போல பட்டுத் தெளிந்த ஒருவரின் அனுபவம் என்றாலும் அந்தப் பெண் மிக மனமுடைந்தவராகக் காணப்பட்டார்.
இந்த நிலைமைக்குச் சமுதாயமே காரணமாகும்.
“சுப காரியங்களில் நான் கலந்து கொள்கிறேன். ஆனால் சுப வேளை கழிந்த பின்னரே போவேன். அப்படிப் போனால் மற்றவர்கள் என்னைக் கவனிக்க மாட்டார்கள்”.
“நான் புருசனை இழந்தவள் என்பதால் நல்ல காரியங்கள் நடக்கும்போது முன்னால் நிற்பதில்லை. நடந்து முடிந்த மறுநாளே அவ்விடங்களுக்குப் போவேன். தாலியை இழந்த நான் ஊரார் முன் நிற்பது அழகல்ல. இதையிட்டு எனக்குப் பெரிய துக்கம்"
“நான் சுப வேளைகளையும் சுப காரியங்களையும் தவிர்த்துக் கொள்கிறேன். பிந்தியே போவேன். மங்கல வைபவங்களை முற்றாக விலக்கிக் கொள்கிறேன். விதவையான என் சகோதரி இந்த மாதிரியான சமயங்களில் பட்ட அவமானத்தை நான் அறிவேன்".
02

விதவைகள் துர்ச்சகுனமெனவும் அதிஷ்டம் கெட்டவர்கள் எனவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் ஒற்றை மரமாய் இருப்பதால் மற்றவர்களுக்குத் துர்ப்பாக்கியம் ஏற்படுத்துவர் என எண்ணப்படுகிறது. தமிழர்கள் இயற்கை நிகழ்ச்சிகளை நல்லவை, கெட்டவை, மங்கலம், அமங்கலம் என வகுத்துள்ளனர். வீடு குடிபுகுதல், பூப்பெய்துதல், திருமணம் என்பன சுபகாரியங்கள். இன்று பிறந்தநாள் வைபவங்களும் இவற்றுடன் சேர்ந்துள்ளன. இந்த வைபவங்களில் விதவைகள் பிரசன்னமளித்தல் அமங்கலமெனவும், சுப காரியங்களை நடத்துவோருக்குக் கெடுதல் உண்டாகுமெனவும் நம்பப்படுகிறது. எனவே விதவைகள் நாசூக்காக ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களும் நிலைமையை உணர்ந்து தாமாக விலகிக் கொள்கிறார்கள். பார்க்கப் போனால் பாலுணர்ச்சி விடயத்தில் செயலற்றிருப்பதன் காரணமாக, விதவைகள் அமங்கலிகள் எனக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் மறுபுறமாகப் பார்த்தால் பாலுணர்ச்சிக்கு வசப்படுதலையும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதில்லை. தவிரவும் பெண்களே தமக்கெனச் சில நெறிகளைக் கற்பின் பெயராலும் மனவுறுதியின் பெயராலும் கட்டிக் காத்து வருகிறார்கள். ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்வே முழுமை பெற்றது. ஆணில்லாப் பெண் அமங்கலி எனக் கொள்ளும் சமூகம், பெண்ணையிழந்த ஆணை அதே கண்ணோட்டத்தில் நோக்குவதில்லை.
கைம்பெண்களுக்கெனச் சமுதாயம் வாற்படப்பாங்கான கருத்தியலைக் கொண்டிருக்கிறது. அவர்கள் தம் பாலுணர்ச்சியையும் ஏனைய இன்பங்களையும் துறத்தல் வேண்டும். இதனை அவர்கள் தம் நடத்தை, நடையுடை, பாவனை ஆகியன மூலம் வெளியுலகிற்குப் புலப்படுத்துதலும் வேண்டும். பாலுணர்ச்சியை அனுபவிக்க வாய்ப்பிழந்து வாழும் அவர்கள் ஒழுக்கமற்றவர்கள், கள்ளக் காதலில் ஈடுபடுவோர் என்றவாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாதலும் உண்டு. ஆகவே விதவையின் நடத்தை எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
இந்தப் பெண்கள் இரு மடங்கு அல்லது மும்மடங்கான பளுவைத் தம் மீது ஏற்றிக் கொள்வதன் காரணமாக சமுதாயத்தவர்களுடன் ஊடாடிக் கூடிப் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தல் அரிது. சமுதாயத்திலிருந்து ஒதுங்கி இருப்பதனால் உண்டாகும் இழப்புகள் உளவியற் பிரச்சினைகள்.
03

Page 55
நான் குறிப்பிடும் உளவியற் பிரச்சினைகள் இப் பெண்களின் பேச்சு, அங்க அசைவுகள், முகபாவத்தினாலும், பெருமூச்சுக்களினாலும் வெளிப்படுத்திய உணர்வுகளைக் கூர்ந்து அவதானித்ததன் பயனாக அறிந்து கொண்டனவாம். உண்மையில் அவர்களின் மெளனம்கூட பல உண்மைகளைப் புலப்படுத்தின. தம் வாழ்வில் ஏற்பட்ட துயரத்துக்குத் தாமே பொறுப்பாளிகள் என்னும் வகையில், சமுதாயம் தம் மீது பழி சுமத்துகிறது என்பதைப் பலர் உணர்ந்திருந்தார்கள். ஆயினும் தாமாகவும் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்குப் பணிந்தும் தம்மை வருத்திக் கொள்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.
இப் பெண்கள் தம் உணர்வுகளையும், சமுதாயம் பற்றித் தாம் கொண்டுள்ள கருத்துக்களையும் விளக்குதற்கு உபயோகிக்கும் சொற்றொடர்களும் நியாயங்களும் பெரும்பாலும் ஒரே தன்மை யுடையனவாக அமைவதைக் காணலாம். எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் சமுதாயம் என்பதாகும்.
பெண்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் சுமங்கலி, அமங்கலி என்பனவாயினும் அவர்களின் அனுபவங்களை நான்கு வகையாகப் பகுக்கலாம். தம் அமங்கலத் தன்மையை ஏற்றுக் கொள்ள மறுத்த இரு பெண்களையும் அதனைப் பற்றிப் பேசாதுவிட்ட பத்துப் பெண்களையும் தவிர ஏனையோர் அனைவரும் தம் உணர்வுகளை வெகு தெளிவாக வெளிப்படுத்தினர்.
கணவனை இழந்த பெண் சுப காரியங்களில் முன்னால் நிற்பது, அவற்றில் பங்கு கொள்ளும் மணப்பெண், மணவாளன், புதுமனை புகுவோர், பூப்படைந்த பெண் ஆகியோருக்கு அமங்கலமாய் அமைந்து விடலாம் என நம்பப்படுவதால், அத்தகைய சடங்குகளை நடத்துவோரும் பிறரும் தாலியும் பூவும் பொட்டும் சூடிய சுமங்கலிகளைத் தேடுதல் வழக்கம். அதாவது கணவனோடு வாழும் பெண்கள் சடங்கு செய்வோரின் நீடிய ஆயுளுக்கும் ஆனந்தத்திற்கும் சுப சகுனமாய் அமைவர் என நம்பப்படுகிறது. இந்தக் கெளரவம் கணவனை இழந்த பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. அத்துடன் அத்தகைய பெண்கள் சுபகாரியங்களில் பங்கு கொள்ளலாகாதென நாசூக்காகவும் சில சமயங்களில் கேவலமான முறையிலும் ஒதுக்கப்படுகின்றனர். சமய ஆசாரங்களும் சமூக நெறிகளும் இப் பெண்களை ஒதுக்கிவைப்பதன்
04

காரணமாக அவர்கள் சுப காரியங்கள் நடைபெறும் வேளைகளில் முன்னால் வராமல் ஒதுங்கிக் கொள்ளுதலை மரபாக்கியுள்ளனர். “நான் பின் வரிசையில் அமர்ந்து ஒதுங்கிக் கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ளேன்” என்று ஒரு பெண் வாய்விட்டுச் சொன்னார்.
ஒதுங்கிக் கொள்ளுதல் என்னும்போது மற்றவர்கள் தள்ளி இரு எனச் சொல்வதற்கு இடம் வையாது தானாகவே பின்வாங்குதலைக் குறிக்கிறது. அவர்களைப் பொறுத்த வரையில் இது அனுபவத்தால் கற்ற பாடமாகும்.
இந்தப் பெண்கள் வசைச் சொற்கள் பற்றியும் குறிப்பிட்டார்கள். கைம்பெண்கள் மீது கோபம் கொண்ட பிற பெண்கள் தம் வம்பு தும்புகளின் போதும் அவர்களுடன் சச்சரவுப்படும் போதும் கைம்மையை குத்திக்காட்டி அவமதிப்பார்கள்.
“நான் விதவையானதற்குக் காரணம் என்னுடைய அகங்காரமும் போட்டிக் குணமுமே" என்று என் அயல் வீட்டுப்பெண் சொன்னார். "அவர்கள் என்னைப் பச்சையாக, கைம்பெண் என்றும் அறுதலி என்றும் புருசனைத் தின்றவள் என்றும் குறிப்பார்கள்"
இவ்வாறு பதினெட்டு வயதுக் கைம்பெண் ஒருவர் தெரிவித்தார். எம் ஆய்வுக்குட்பட்டவர்களில் வயதில் இளையவர் இவரே. இந்த வசைச் சொற்கள் பேச்சு வழக்கிலே கையாளப்படுவன. அம்பு போல மனதைத் துளைக்க வல்லன. கைம்மை அடைந்தமைக்கு அப்பெண்ணே காரணம் என்று அச்சொற்கள் குறிக்கின்றன.
மற்றொரு பெண் மேற்குறித்த வார்த்தைகளைச் சொல்ல விரும்பவில்லை. சொன்னால் மரியாதைக் குறைவாக இருக்குமென்று கருதினார். தன் மனதைப் புண்படுத்தும் வகையில் கதைப்பார்கள் என்று மட்டும் சொன்னார். அதற்கு மேல் விவரிக்க விரும்பவில்லை. ஆயினும் அவரின் முக பாவம் எவ்வளவு தூரம் மனம் வெதும்பினார் என்பதைப் புலப்படுத்தியது. அவருடைய மெளனம் அதைவிட உரத்து அழுதது. அதிஷ்டம் கெட்ட உன்னால்தான் உன் புருஷன் செத்துப் போனான். உன் குணத்தை அறிந்துதான் உன் கணவன் காணாமல் போனான். தற்கொலை செய்து கொண்டான். கைவிட்டு விட்டுப் போனான். என்றவாறாக ஏனைய விதவைகள் பழி சுமத்தப்பட்டார்கள்.
05

Page 56
ஒரு முறை ஒரு கிழவன் என் காதில் விழும்படியாக “அது ஏன் முன்னால் போய் நிக்குது?" என்று கேட்டான்.
இவ்வாறாக கைம்பெண்னானவள் காலக்கிரமத்தில் ஒரு சடப்பொருளாக மாறிவிடுகிறாள்.
சொல்லாலும் செயலாலும் அவர்கள் என்னைத் தள்ளி வைக்கிறார்கள். வேண்டாத பொருள் போல ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் என்னை அழைத்தாலும் நான் போவதில்லை. எனக்கு அங்கே வரவேற்பு இருக்காதென்று தெரியும். போனபிறகு துக்கப்படுவேன். அவர்களின் பேச்சும் நடத்தையும் குரூரமானவை.
ஆடை விடயத்திலும் விதவைகள் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகுகிறார்கள். நடை, உடை, பாவனை ஆகிய மூன்று அம்சங்களில் அவர்கள் வேறுபட்டு நிற்க வேண்டும் என்பது மரபு. அது பற்றி அப்பெண்கள் குறிப்பிடுகையில்:
“மற்றப் பெண்கள் வண்ணச் சேலைகள் அணிகிறார்கள். இந்தக் கோலத்தில் நான் எங்காவது போக ஏலுமா? எனக்குப் பொட்டோ, பூவோ, தாலியோ இல்லை. நான் அலங்காரமாக உடுக்கக் கூடாது. இதை நினைத்தால் எனக்குத்துக்கம். நான் விரும்பினாலுங்கூட நன்றாக உடுப்பதில்லை. பேய்க் கோலத்தோடு திரிகிறேன்” என்றார்.
பேய்க் கோலம் என்னும் சொற்றொடர் மூலம் அப்பெண், சமூகக் கட்டுப்பாடுகள் மீது தனக்குள்ள வெறுப்பை வெளிக்காட்டினார். "பேய்க் கோலத்தில் என்னைப் பார்ப்பதில் உங்களுக்கு எல்லாம் திருப்திதானே?” என்று கேட்பது போலத் தோன்றியது.
விதவைகளின் நடத்தை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளும் பல. சமுதாயத்தில் சீரழிவு ஏற்படாது, அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு தம்முடையதெனக் கருதும் சிலருக்கு விதவைகளின் நடத்தையைக் கண்காணிப்பதே பொழுது போக்கு. இவர்கள் கைம்பெண்களின் போக்கு வாக்குகளை உன்னிப்பாகக் கண்காணிப்பர். கைம்பெண்கள் துறவிகள் போல ஆசாபாசங்களையெல்லாம் ஒறுத்து வாழுதல் வேண்டுமென்பது இவர்களின் கோட்பாடு. இது விடயத்தில் அவதூறு, ஊர்வம்பு என்பன
06

இந்த அபலைகளைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்களாய் பயன்படுகின்றன. நாம் சந்தித்த பெண்கள் தம் உணர்வுகளை ஏமாற்றத்துடனும் அவநம்பிக்கையுடனும் தெரியப்படுத்தினார்கள்.
“நான் ஊர் வம்புக்கு அஞ்சி துறவி போல வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. நான் எவரோடும் அதிலும் விசேடமாக எந்த ஆணோடும் கிழவனோ, குமரனோ நெருங்கிப் பழக விரும்புவதில்லை".
“என் பெயருக்குக் களங்கம் ஏற்படாதவாறு என்னை நான் காத்துக்கொள்கிறேன். ஊர்வம்பு, அவதூறு ஆகியவற்றுக்கு நான் அஞ்சுகிறேன்"
விதவையின் காதில் எட்டத்தக்க கேள்விகளை ஒருவர் மற்றவரிடம் கேட்பதுண்டு. “அவளைப் பார்த்தால் கைம்பெண் மாதிரியா இருக்கு. அவளின் உடையென்ன நடையென்ன?”
“வீட்டில் முடங்கிக் கிடக்காமல் ஆட்டம் போட்டுத் திரியிறதைப் urtj”.
உடை தொடர்பான ஒழுக்கம் பற்றியும் அவர்களுக்கென வகுக் கப்பட்ட நடத்தை பற்றியும் கைம் பெணி ஓயாது நினைவூட்டப்படுகிறார். இந்தச் செய்தி மறைமுகமாக அவரின் செவியில் எட்டும்படி மூன்றாவது ஆளோடு நடத்தும் உரையாடல் வடிவத்தில் நினைவுறுத்தப்படுகிறது. விதவைப் பெண் அதனைக் கேட்காதிருத்தல் இயலாது.
நான் ஆண்களோடு பழகினால் அதற்கு அர்த்தம் கற்பிப்பார்கள். அது என்னைத் துன்புறுத்தும். நான் வீட்டில் இருந்து எனக்குள் குமுறி அழுவேன்.
நான் ஒருவருக்கு மனைவி போல வாழ ஆசைப்படுகிறேன்.
ஆனால் சனங்கள் என்னைப்பற்றி அவதூறு சொல்கிறார்கள். என்
நடத்தையைக் கண்காணிக்கிறார்கள். சிலவேளைகளில் எனக்கு
வில்லங்கம் ஏற்பட்டால் ஒருவர் ஒத்தாசை செய்ய வருவார். அதைப்பற்றி
இல்லாததும் பொல்லாததுமாக எவ்வளவோ கதைத்தார்கள். நான்
O7

Page 57
அவரை வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். கைம்பெண்களின் பரிதாப நிலைமை இதுதான். இப்போ எனக்கு உதவிக்கு எவருமில்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களிலே சமூகத்தினரின் கண்காணிப்பு ஊர் வம்பு மூலமாகத் தெரிவிக்கப்படும். கைம் பெண்ணுக்குரிய ஒழுக்க வரம்புகளை மீறி விட்டாள் என்னும் செய்தி அவளுக்கு எப்படியோ எட்டிவிடும். வீட்டிலே முடங்கிக் கிடக்காமை, வாய்ச்சொல்லால் இம்சித்தல், நடை உடை பாவனை தொடர்பான கண்டனம், அவதுாறு மூலம் சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு ஆகிய நான்கு அனுபவங்களும் ஒரு விதவையின் மனதை வெதும்பச் செய்கின்றன. வழக்கமான சூழலில் ஒரு பெண் கைம்பெண்ணானால் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவு கிடைக்கும். போர்ச் சூழலானது இத்தகைய நிலைமையைத் தலை கீழாக மாற்றியுள்ளது. ஆகவே இன்றைய பெண்கள் கைம்மைக்கு ஏற்பட்டுள்ள மேலதிக பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆயினும் இந்த நியதிக்கு விதி விலக்குகள் இல்லாமலில்லை. இரண்டு பெண்கள் மற்றவர்களின் கட்டுப்பாடுகளை உடைத்தெறியத் துணிந்தனர். அவர்களில் ஒரு பெண் “நான் பெண் என்பதால் மற்றவர்களிலும் தாழ்ந்தவளல்ல. என் வீட்டில் எல்லாப் பிள்ளைகளின் சுப காரியங்களையும் நான் முன் நின்று நடத்துகிறேன்” என்றார்.
மற்றொரு பெண் “சந்திரனை பார்த்து நாய்கள் குலைத்தால் சந்திரனுக்கு கெடுதல் வருமா?" என்றார்.
“எனக்கு ஆறு பிள்ளைகள். ஒரு பொடியன். ஐந்து பெண்கள். நான் குவைத்துக்குப் போய்ச் சம்பாதித்தேன். பிள்ளைகளை அம்மாவோடு விட்டு விட்டுப் போனேன். நான் பாடுபட்டு உழைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் வில்லங்கங்களுக்கு முகம் கொடுக்கத் தயாராயிருக்கிறேன். எனக்கு நிலமும் கிணறும் உண்டு. நிலத்தில் பயிர் செய்து என் சொந்தக் காலில் நிற்பேன்".
முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களின் நடத்தையில் வேறுபாட்டினைக் காணலாம். பெண்கள் ஒதுங்கி வாழுதல் அதிகமென்றாலும் தனித்துப் போன பெண் மறுமணஞ் செய்தல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பெற்றோர், சகோதரர்கள், மச்சான்மார்
08

ஆகியோர் தம் பெண்களுக்கு மறுமணஞ் செய்து வைப்பதில் தீவிரமாக ஈடுபடுவர். ஆயினும் இருவரைத் தவிர ஏனையோர் மணம் புரியவில்லை. இருவர் இரண்டாம் கணவன்மாரையும் போரில் இழந்துள்ளனர். இந்தப் பெண்கள் மறுமணம் பற்றிக் கூச்சமின்றி உரையாடினர். ஆண்கள் நேரடியாகத் தம்மிடம் மணம் பேசி வந்தார்கள் என்றும் சொன்னார்கள். சில பெண்கள், பிள்ளைகளே தம் கவலை என்றனர்.
உதாரணமாக ஒரு பெண் கீழ்க்கண்டவாறு சொன்னார்:
“எனக்கு இன்னமும் பிள்ளைகள் பிறந்தால் நான் மேலும்
வறியவள் ஆவேன். என் இரண்டாம் கணவனும் கொல்லப்படலாம்.
ஒன்றுமே நிச்சயமில்லாமல் இருக்கிறது".
மற்றொரு பெண் சொன்னார்:
“பிள்ளைகளை வைத்துக் கொண்டு நான் சந்தோசமாக மறு மணம் செய்ய இயலாது. எனக்குத் தாய் தகப்பன் இருந்தால் பிள்ளைகளை அவர்களோடு விடலாம். அப்போது நான் தயக்கமில்லாமல் கலியாணம் செய்யலாம்"
மூன்றாவது பெண் சொன்னார்:
“என் வாப்பா, புது மாப்பிள்ளை ஒருவரைக் கண்டு பிடித்தார். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை”.
இன்னொரு பெண்:
“என் சகோதரர் தன் நண்பனைக் கலியாணஞ் செய்யும்படி சொன்னார். ஆனால் அவர் வடிவில்லாதவர்"
மேலும் சிலர் சுகவீனம், உடல் மற்றும் உள ஊனங்களின் நிமித்தம் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றனர். இன்னும் சிலர் மறுமணம் செய்வதற்குத் தங்களுக்கு வயது போய்விட்டதென்றார்கள். மற்றும் இருவர் தங்கள் பிள்ளைகளின் எதிர்ப்புக் காரணமாக மறுமணம் செய்யவில்லை என்றனர். எல்லாவற்றிலும் சுவையான சம்பவம் முப்பத்தெட்டு வயதான கைம்பெண் ஒருவர் பற்றியதாகும். உரையாடலின்போது மறுமணம் பற்றிய பேச்சு எழுந்தது. அந்தப் பெண் தனக்கு அதில் ஆர்வமில்லை என்றார். ஆனால் ஆய்வாளர், அவர் வீட்டுப் படலையை அண்மித்த வேளையில், அந்தப் பெண்
09

Page 58
அவர் பின்னே சென்று, பிள்ளைகளின் முன்னிலையில் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் தனக்கு வயது ஆக முப்பத்தி எட்டு மட்டுமே என்றும் தெரிவித்தார். "நான் கலியாணம் செய்தால் என்ன? தனிமை உணர்வு என்னை வாட்டுகிறது” என்றும் சொன்னார்.
அவரை நாம் தேற்றினோம். மறுமணஞ் செய்தல் தவறல்ல என அவருக்கு ஆறுதல் கூறி மறுமணஞ் செய்து கொள்ளுமாறு தூண்டினோம்.
இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளன. பிள்ளைகளுக்கு முன் அவரிடம் பேசியிருக்கக் கூடாது. ஆனால் சிறு பிள்ளைகளை தாயிடமிருந்து பிரிப்பது சிரமமாயிற்று. இரண்டாவது பிரச்சினை: அவரின் தனிமை உணர்வும் துணையற்ற நிலைமையும், தனிமை தொடர்பான உணர்வுகளும் உண்மையில் பரிதாபத்துக்குரியனவே. தனி மரமாகிவிட்ட பெண் பல்வேறு முனைகளில் துன்பப்படுகிறார். அத்தகைய பெண்களின் உள்ளுணர் வுகளைத் தற்செயலாகவே நாம் அறிந்து கொண்டோம். இந்த உணர்வுகளை அவர்கள் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. அவற்றைத் தனிப்பட்ட சொந்த விடயங்களாய் நோக்குகிறார்கள். இரண்டு பெண்கள் தம் உணர்வுகளை வெவ்வேறு வகையில் வெளியிட்டனர். அவர்கள் உடலால் நோயுற்றும் உள்ளத்தால் துன்புற்றும் அவதிக்குள்ளாகி இருந்தமையால் மணவாழ்க்கை பற்றிய எண்ணமே எழவில்லை. இந்தப் பெண்கள் மத்தியிலே தமிழர், இந்துக்கள் ஆகிய இனத்தவர்களைப் போல, மறுமணம் என்பது சமூகத்தவர்களால் மறுக்கப்படவில்லை. மதத்தால் விலக்கப்படவில்லை. வேறு காரணங்களின் நிமித்தமே அவர்கள் மறுமணஞ் செய்யாதிருந்தனர். மற்றொரு விடயம் நம் கவனத்தைக் கவர்ந்தது. உறவினர்கள் அதிலும் குறிப்பாகப் பெற்றோர் இப் பெண்களைத் தாபரித்து வந்தனர். அவர்களின் ஆதரவு அப்பெண்களுக்குப் போதுமானதாயிற்று. பெற்றோர் உயிருடன் இருந்தால், பேரப்பிள்ளைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு மகள் சந்தோசமாக வாழ வழி செய்கிறார்கள். புதிய தந்தையின் அந்நிய உறவு தன் பிள்ளைகளைப் பாதிக்குமோ எனத்தாய் கவலைப்பட வேண்டியதில்லை. ஒரு பெண் பிறரின் ஆலோசனையைப் பெற்ற பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
O

முந்திய கணவன் மூலம் பெற்ற பிள்ளைகள் இருக்கவும் மறுமணம் செய்து கொண்ட பிற பெண்களை விசாரித்தபோது அவர்களின் அனுபவங்கள் பெருந் துயரூட்டுவனவாய் அமைந்தமையை அப்பெண் அறிந்து கொண்டார். மூன்று பெண்களை விசாரித்த போது மூவரும் தம் வாழ்க்கை மிகவும் கடினமானதென்றனர். முன்னைய கணவன் மூலம் பெற்ற பிள்ளைகளை இரண்டாவது கணவனும் பிள்ளைகளும் கொடுமைப்படுத்தினர். உணவு, உடுதுணி, விளையாட்டுப் பொருட்கள், கல்வி வசதிகள் ஆகியவற்றில் அப்பிள்ளைகள் வேற்று மனிதர்கள் போல ஒதுக்கப்பட்டனர். இதைக் கேள்வியுற்ற அந்தப் பெண் தான் இவ்வாறான துன்பத்திற் சிக்காதிருந்தமை விவேகமான செயல் என்று நினைத்தார். தன் பிள்ளைகள் இம்மியளவும் துன்பப்படக் கூடாதென்று அந்தத் தாய் விரும்பினார்.
தமிழர், முஸ்லிம்கள் ஆகிய ஈர் இன விதவைகளுக்கும் உறவினர்களிடமிருந்து கிடைத்து வந்த ஆதரவு சீர்குலைந்தமை பெரியதொரு பிரச்சினையாகும். அவர்கள் உள்ளத்தாலும் உடலாலும் வலுவிழந்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து மற்றோர் அம்சமும் முனைப்புப் பெற்றுள்ளது. இன்றைய நெருக்கடி நிலைமையிலே கூட்டுக் குடும்ப அமைப்பும் சீரழிந்துள்ளது.
ஆற்றாமையினாலும் வறுமையினாலும் உந்தப்பெற்ற பதினைந்து பெண்கள், தம் பெற்றோர் தாய்மார் மாமன் மாமிமார் வீடுகளில் தஞ்சம் தேடினர். இத்தகைய நடவடிக்கையையிட்டு அவர்கள் பிற்பாடு வருந்துதல் வழக்கம்.
“அம்மா வீட்டிலே என் பிள்ளைகள் குழப்படிகாரர் சத்தம் போடுவோர் என்று அம்மா நினைத்தார். வேறு இடம் பார்க்கும்படி சொன்னார்"
சற்று வயது முதிர்ந்து தனி மரமான பெண்கள், மணவாழ்க்கை
நடத்தும் தம் மகள்மாருடன் வாழச் சென்ற வேளைகளில், சொற்ப நாட்களில் மீண்டும் தம் சொந்த வீடுகளுக்குத் திரும்ப நேர்ந்தது.
தாய்மார் தங்களோடு வந்து சேர்ந்தால் செலவு அதிகமாகி விடும் என மகள்மார் நினைக்கிறார்கள். மருமகன்மாரும் மாமிமார் வரவால் ஏற்படும் மேலதிக செலவை ஏற்றுக்கொள்ளப் பின்

Page 59
வாங்குகிறார்கள். ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் கலியாணத்துக்கு முன்னர் தமக்கு ஒத்தாசையாக இருந்தார்கள் என்றும் கலியாணமானதும் நிலைமை முற்றாக மாறி விட்டதென்றும் பல தாய்மார் குறைப்பட்டார்கள். பிள்ளைகள், பெற்றோர் தமக்குப் பாரமெனக் கருதி அவர்களைப் புறக்கணிக்கிறார்கள். இவ்வாறான நிலைமை போரின் விளைவாக எல்லா இனத்தவர்களுக்குமிடையில் பொதுவானதொன்றாகக் காணப்படுகிறது.
கைம்மை என்னும் கருத்தியலினுள்ளே பெண்ணானவள் பாலுணர்ச்சியற்றவளாய் ஒழுகுதல் வேண்டும்- எனச் சமூகம் எதிர்பார்க்கிறது. இதனால் ஏற்படும் சிக்கல்கள் மற்றொரு பரிமாணத்தைப் புலப்படுத்துகின்றன. இப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு மதமோ சமூகமோ தடை விதிக்காத போதிலும் இவர்களும் பல்வேறு இம்சைகளைச் சகித்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும் இது விடயத்தில் தமிழ்ப் பெண்களுக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் வேறுபாடுகள் உள. தமிழ்ப் பெண்கள் அதிக துன்பங்களை அனுபவிக்கிறார்கள். இரண்டு குழுவினருக்கும் பொதுவான ஓர் அம்சம் பாலுணர்ச்சி சார்ந்த இன்பத்தில் ஈடுபடலாகாதென்பதாகும். அவதூறு, அதைச் சார்ந்த ஊர்வாய் என்பன பாலியல் இன்பம் துறந்த வாழ்வு தொடருதல் வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றன. முஸ்லிம் பெண்களின் முறைப்பாடு கீழ்க்கண்டவாறாய் அமைந்தது.
“அவன் ஏன் அடிக்கடி அவள் வீட்டுக்கு போய் வாறான்?” “ஆம்பிள்ளைகள் இல்லாத வீட்டில் அவனுக்கு என்ன அலுவல்?” “எந்த ஆணிடமிருந்தும் எந்த உதவியும் பெறமுடியாது. என் மூத்த மகனின் வயதுப் பையன்களைக்கூட எந்த உதவியும் செய்யும்படி நான் கேட்க முடியாது".
“அவள் கைம்பெண். அவள் என்ன செய்கிறாள் என்று ஆருக்குத் தெரியும்? யார் யார் அவளைச் சந்திக்கிறார்களோ?”
“அவள் இளம் விதவை, வடிவானவளும் கூட. தலையில் முக்காடு போட்டுக் கொண்டாலும் மனதில் என்ன இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்?” Ᏹ
2

கன்னிப் பெண் திருமணமாகாமல் வீட்டில் இருப்பதென்பது பெற்றோருக்குப் பெருந்துயர். இது விடயத்தில் தமிழர், முஸ்லிம்கள் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லாத் தாய்மாரும் வீட்டிலே குமர்ப் பெண்களை வைத்துக்கொண்டிருப்பது மடியிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்கள். பதின்நான்கு வயதைத் தாண்டிய கன்னிப்பெண் குமர் எனக் குறிக்கப்படுகிறாள். இந்தப் பருவத்தை எய்திய பெண் பாலுணர்ச்சி வசப்படும் இயல்பினள். எவரும் அந்த உணர்ச்சியைத் துஷப்பிரயோகம் செய்தல் கூடும். ஆகவே அப்பெண் கட்டுப்படுத்தப்பட வேண்டியவள். பாரம்பரிய மரபுகளும் சட்ட திட்டங்களும் வகுத்த வழியில் அப்பெண் வழி நடத்தப்படல் அவசியம்.
இத்தகைய பெண்களையிட்டு தாய்மார் சஞ்சலப்படுதல் உண்டு. “மூன்று குமர்ப் பெண்களைக் கரைசேர்க்க வேண்டும்".
“இரண்டு குமரை வீட்டிலே வைத்துக் கொண்டு நான் வயிற்றில் நெருப்பை வைத்திருக்கிறேன்"
“இரண்டு வளர்ந்த பெண்களை வைத்திருப்பதுதான் எனக்குப் பெருங்கவலை".
“பிச்சைக்காரருக்குக் கூட அவர்களைக் கட்டிக் கொடுக்க நான் தயார். ஆனால் அவர்கள்கூட வீடு வேணுமென்பார்களே”
ஆழ்ந்த கருத்துடைய பழமொழிகளையும் அறிவுரைகளையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதானது, இப் பெண்கள் பெண்ணின் பாலுணர்ச்சி பற்றிச் சமுதாயம் வரையறுத்துள்ள கட்டுப்பாடுகளுக்குப் பணிகிறார்கள் என்பதைப் புலப்படுத்தியது. பெண்ணின் உடற் தேவைகளை மட்டும் இந்த வரையறைகள் கட்டுப்படுத்துவதில்லை. இதனைத் தவிர வேறு அம்சங்களையும் துணையற்ற தாய்மார் வெளிப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பற்ற மகள், தகப்பனில்லாத மகள், கைம்பெண்ணின் மகள் இப்படிப் பல வகையில் தம் நிலையைத் தெளிவுபடுத்தினர். சமுதாயத்திலுள்ள நாய் பேய்களெல்லாம் கண்டபடி நுழையும் இடமாகக் கைம்பெண்களின் இருப்பிடம் கருதப்படுகிறது. எனவே குடும்பத்தில் ஆண் துணையில்லாத போது பெண்ணின் பாலுணர்ச்சி பிரச்சினைக்குரியதாகிறது.
3

Page 60
இராணுவத்தினர் பாடசாலை செல்லும் சகோதரியை கடத்திக் கொண்டு போய் பலாத்கார உடலுறவுக்கு உட்படுத்துவதைப் போல அல்லது பொலிசாரின் இம்சைகளைப் போல அழையா விருந்தாளிகளாய் நுழையும் ஆண்களின் வன்செயல்கள் ஒருபுறமிருக்க அன்பையும் பாசத்தையும் அள்ளி வழங்கும் அயல் வீட்டாரின் மகன் தன் காதலை மறுத்து, குழந்தைக்குத் தான் தந்தையல்ல எனப் பெண்ணைக் கைவிடும் போதும் பிரச்சினைகள் தலையெடுக்கின்றன.
மனைவிமார், மகள்மார், சில சமயங்களில் மச்சாள்மார் ஆகியோரின் பாலுணர்ச்சியைப் பாதுகாக்கும் வேலியாக, உடல்வலு, அதிகாரபலம் ஆகியன கொண்ட ஆண் விளங்குகிறான். தாய்மாராயும் மூத்த சகோதரிகளாயும் குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்தும் பெண்கள், தம் கன்னிப் பெண்கள் அல்லது தங்கைகளின் பாலுணர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஒழுக்கம் நிறைந்தவர்களாய்ப் பாதுகாக்கும் சமுதாயப் பொறுப்பினைச் சுமக்கிறார்கள். இந்தப் பொறுப்பு எல்லோருக்குமே பெரும் சுமை. இதற்கு அவர்களிடம் பரிகாரமும் இல்லை. இப் பெண்கள் தம் மகள்மாரினதும் ஏனையோரினதும் கற்புக்கு இரவு பகலாய் காவல் இருந்து சமூக மரபுகளும் கலாசார எல்லைகளும் மீறப்படாமல் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இங்கு எம் கேள்வி மகளானவள் ஆண்களோடு பழகி தனக்குத் தகுந்த துணையைத் தேடும் சுதந்திரத்தை வழங்கினால் என்ன? என்பதாகும். குமர்ப் பெண்களுக்கு மணமகனைத் தேடுவது போல கைம்பெண்களுக்கும் கல்யாண ஏற்பாடுகளை மேற்கொண்டால் என்ன?
நம் கலாசாரப் பாரம்பரியங்களை அறியாத அந்நியருக்கு மேற் சொன்ன கேள்விகள் நியாயமானவையாகத் தோன்றும். கலியான மாகாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களின் பிரச்சினைக்கான பதிலும் மேற்படி கேள்விகளில் தொக்கியுள்ளது. ஆயினும் இப் பெண்கள் அளிக்கும் பதிலும் நியாயமானவையாகவே காணப்படுகின்றன. அதிலும் ஆணாதிக்க சமுதாயப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அவர்கள் சொல்வது சரியாகவேபடுகிறது. ஆண்களோடு சமமாகப் பழகும்போது பெண்கள் ஆண்களின் இச்சையைப் பூர்த்தி செய்யும் பொருள்களாகப் பயன்படுத்தப்படும் பிரச்சினை எழுகிறது. சில சமயங்களில் கர்ப்பிணிகளாய்க் கைவிடப்படும் அபாயமும் உண்டு. இது நிலைமையை
4

மோசமாக்கிறது. இன்றைய சமுதாய அமைப்பிலே இத்தகைய பெண்கள் தீண்டத் தகாதோர் போல ஒதுக்கப்படுகிறார்கள். வம்பிலே பிள்ளைப் பெற்றவள் என்னும் அவச் சொல் தாய் மீதும், வம்பிலே பிறந்தவன் என்னும் அவமானம் பிள்ளை மீதும் படிகின்றன. இறுதியில் குமர்ப்பெண் வீட்டில் இருப்பது வெளியே ஆடவரோடு பழகுவதிலும் பார்க்க மேலானது எனத் தோன்றுகிறது. தமக்குப் பிடித்த ஆணைத் தேர்ந்தெடுக்க இடமளிக்கும் வகையில் இளம் பெண்களை ஆண்களோடு கூடிய் பழகச் சுதந்திரமளித்தல் ஆபத்தானதென இளம் பெண்களே நினைக்கிறார்கள். இந்த ஆபத்தை எதிர்நோக்க அவர்கள் விரும்புவதில்லை. ஆகவே கன்னிப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியதாகிறது. பேசிச் செய்யும் கல்யாணங்களால் ஏற்படும் மற்றொரு பிரச்சினை சீதனமாகும். அப்படியானால் தன் துணையைத் தானே தேடும் பெண்ணுக்குச் சீதனப் பிரச்சினை இல்லை என்று அர்த்தமாகாது. காதல் திருமணங்களில் பெண்ணின் பெற்றோர் ஓரளவிற்கு பேரம் பேச வாய்ப்புண்டு. காதல் வசப்பட்ட ஆண், சீதனத்தைப் பார்க்கிலும் காதலியே பெரிதென எண்ணி விட்டுக்கொடுக்க இணங்கலாம்.
பேசிச் செய்யும் திருமணங்களில் சீதன விடயம் வெட்டொன்று துண்டு இரண்டு என்ற வகையில் முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. இவ்வளவு ரொக்கம், இவ்வளவு காணி பூமி, இவ்வளவு நகை நட்டு என்று மாப்பிள்ளை வீட்டார் நிபந்தனை விதிக்கிறார்கள். வறியவர்கள் சீதனப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதில்லை. தொகை விகிதாசாரப்படி குறையலாமென்பதைத் தவிர சீதனம் கொடுத்தே ஆக வேண்டும். இரண்டு அல்லது மூன்று பெண்களைப் பெற்ற தாய்மார் இன்றைய சூழலில் தம் பெண்களுக்குச் சீதனம் கொடுப்பதைப் பற்றி நினைக்க முடியாதவர்களாய்த் திண்டாடுகிறார்கள்.
அவர்களின் அச்சத்துக்கும், கவலைக்கும், ஏக்கத்துக்கும், விரக்திக்கும் இவையே காரணம். வறுமை, ஆணாதிக்கக் கலாசாரம் ஆகிய பொறிகளில் சிக்கிய விதவைப் பெண்கள் தம் மீது சுமந்துள்ள பொறுப்புகளால் நசுங்கி நலிகிறார்கள்.
★ ★ ★
★大
5

Page 61
gច បាorFouTh
வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு
அ. பாண்டுரங்கன்
இலங்கையில் பெண்ணிய நோக்கு ஆய்வுகள் உலகத்தார் அனைவருடைய கவனத்தையும் கவருமாறு சிறப்பாக வளர்ந்துள்ளன. வரலாறு, மானிடவியல், சமூகவியல் என்னும் பல்வேறு துறைகளின் கூட்டிணைவாக பெண்ணிய நோக்கு ஆய்வு அங்கே வளர்ந்து வருகின்றது. மார்க்சிய விமர்சனப் பார்வைக்கு அப்பாலும் இலக்கியத்தை உட்படுத்திச் சமூகப் பரிணாமங்களைப் பொருளாதார அரசியல் உருவாக்கங்களின் ஊடாக அது பெண்ணின நோக்கு நிலையில் ஆராய்கிறது. இத்தகைய ஆய்வுகளின் விளைவாக உருவானதே செல்வி திருச்சந்திரனின் தழிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு என்னும் நூலாகும்.
மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் பெண்ணியம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் தமிழ் சமூக இலக்கிய மரபுகளிலிருந்து எடுத்து விளக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதியில் யாழ்ப்பாணத் தழிழ் சமூகத்தின் கூட்டமைப்பும் தேச வழமைச் சட்டத்தின் சமூகப் பரிமாணங்களும் துல்லியமாக அலசி ஆராயப்படுகின்றன. மூன்றாம் பகுதியில் பெண்ணியம் தொடர்பான பல்வேறு செய்திகள் பொதுநிலையில் விவாதிக்கப்படுகின்றன.
பக்தியின் மறுபக்கம் பெண்களின் மறுதலிப்பா? என்ற கட்டுரை காரைக்கால் அம்மையார் பற்றியும் ஆண்கள் பற்றியும் ஆராய்கிறது. இல்லற வாழ்க்கையில் தோல்வியைத்தழுவிய காரைக்காலம்மையார் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கான மூலத்தையும் ஆதரவையும் பலத்தையும் தேடி அலையும் குரலைத்தான் அம்மையார் பாடல்களிலிருந்து கேட்கிறோம் என்கிறார் ஆய்வாளர். நாச்சியார் திருமொழியும் புதிய கோணத்திலிருந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேவதாசிகள் என்னும் படிமத்தின் உருவாக்கத்தைத் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை படிப்படியாக விளக்கி காலந்தோறும் அதன் பரிணாமவளர்ச்சி எவ்வாறு இருந்தது என்று விளக்குகிறது. கோயிலோடு தொடர்புபடுத்தப்பட்ட தேவரடியாள் அரசியல் கலாசாரத்தின் காரணமாக தேவதாசிகள் ஆவது சான்றுகளுடன் மெய்ப்பிக்கப் படுகின்றது. தமிழ் இலக்கியத்தில் பெண் வெறுப்பு ஒரு விளக்கம் என்ற கட்டுரை பக்தி இலக்கியத்தில் தொடங்கி பாம்பாட்டிச் சித்தர் பட்டினத்தார் பாடல்கள் வழி எவ்வாறு பெண் படிப்படியாக
6

இழித்துரைக்கப்பட்டாள் என்பதை நிறுவுகிறது தமிழ் இலக்கியங்கள். ஒரு பக்கம் பெண்ணைக் கற்பின் சிகரமாகவும் தாய்மையின் இருப்பிடமாகவும் வருணித்துவிட்டு அதே மூச்சில் அவளை காமுகியாகவும் விலைமகளாகவும் கொச்சைபடுத்தியிருப்பதை ஆய்வாளர் நன்கு தெளிவுபடுத்துகின்றார். முற்போக்கு தேசிய பால்நிலை உருவாக்கங்களும் அவற்றின் முரன்பாடுகளும் என்னும் ஆய்வுக்கட்டுரை திராவிட இயக்கமும் தேசிய இயக்கமும் பெண்நிலைவாதக் கருத்தியலில் எவ்வாறு மாறுபட்டு நின்றன என்பதை விளக்குகின்றது.
பெண்மையின் எல்லா வகையான உரிமைகளுக்கும் பெரியார் தீவிரமாக வாதிட்ட அதே காலக்கட்டத்தில் தேசிய இயக்கத்தைச் சார்ந்த திரு. வி. க. வும் காந்தியடிகளும் பெண்மையின் மேன்மையைப் புனிதப்படுத்துவதில் ஈடுபட்டனர் என்று ஆய்வாளர் கூறுகின்றார். தேசியவாதிகள் நோக்கில் பெண்மை சீதை என்னும் இதிகாசப் பாத்திரத்தின் ஒரு பிம்பமாக விளக்கப்பட்டது. மெளனம், அகிம்சை, இன்னல், துன்பம் எல்லாம் சீதையின் அனுபவங்கள். இவையே பெண்மை எனப் போற்றப்பட்டதைத் தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட தேசியப் பெண்களும் ஏற்றுக் கொண்டனர் என்னும் உண்மை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத் தமிழ் சமூகத்தின் பெண்ணிய நோக்கு பற்றிய
யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற தேசவுடைமைச் சட்டம் மேல்சாதிப் பெண்களுக்குப் பல உரிமைகளை கொடுத்துள்ளது என்பதும் பிராமண ஆதிக்கமற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை தமிழ் நாட்டைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கிறது என்பதும் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேசவழமைச்சட்டத்தின்படி பெண்கள் மணவிலக்குப் பெறலாம். மணவிலக்குப் பெறும்போது அவள் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த சீதனம் அவளுக்குத் திருப்பி கொடுக்கப்படும்
அவளுடைய குடும்பமும் சமூகமும் ஏற்றுக் கொள்ளும். இருந்தாலும் இலங்கையின் தேசியத் தலைவர்களில் சிலர் பெண்களுக்கு வாக்குரிமையே தரக்கூடாது என்று வாதிட்டமை நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.
தமிழ்ச் சமூகத்தில் சமயம், சாதி வர்க்கம் என்னும் பிரிவுகளுக்கிடையிலான பண்பாட்டுக் கட்டுமானங்களை இனம் கண்டு அவை எவ்வாறு அரசியல் பொருளாதார உருவாக்கங்களுக்குத் துணை செய்கின்றன என்பதை இந்நூலில் உள்ள கட்டுரைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இந் நூல் தமிழில் வெளிவந்துள்ள தரமான பெண்ணிய ஆய்வு நுாலாகக் கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.
7

Page 62
உயிர்வெளி : பெண்களின் காதல் கவிதைகள்
எஸ். சந்திரசேகரம்
Tெண்பதுகளின் நடுப்பகுதியில் பெண்களது எழுத்துக்களைத் தொகுக்க வேண்டுமென்ற பிரக்ஞை குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் மேற்கிளம்பியதன் விளைவாக சொல்லாத சேதிகள் கவிதைத்தொகுதி வெளிவந்ததைத் தொடர்ந்து ஈழத்தில் பெண்களின் கவிதைத் தொகுதிகள் சில பிரசுரமாகத் தொடங்கின.
இத்தகைதொரு வரிசையில் உயிர்வெளி பெண்களின் காதல் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பு மற்றொரு முயற்சி மட்டுமல்ல புதிய பதிவுங்கூட. ஏனெனில் பெண் கவிஞர்களின் உணர்வுநிலை (காதல்) வெளிப்படுத்தலின் பாரம்பரிய நீட்சியை அது பதிவு செய்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியை சித்திரலேகா மெளனகுருவால் பதிப்பிக்கப்பட்டு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.
ஈழத்தில் பெண்நிலைவாத சிந்தனைகளை முனைப்பாக எடுத்துச் செல்லும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் முக்கியமானவரான பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு பெண்களின் ஆக்கங்களை வெளிக்கொணர்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். 1993 இல் சிவரமணி கவிதைகள் தொகுதியைப் பதிப்பித்த அவரின் இரண்டாவது கவிதைத் தொகுதிப் பதிப்பாக உயிர்வெளி வெளிவந்துள்ளது.
சங்ககாலம் முதல் சமகாலம் வரையான பெண் கவிஞர்கள் சிலரின் காதல் கவிதைகளின் தேர்வாக உள்ள இந்நூலில் எண்பது தொண்ணுறுகளில் எழுதப்பட்ட சமகாலக் கவிதைகள் 25 உடன் சங்கக் குறுந்தொகைநூலில், ஒளவையார் வெள்ளிவீதியார் நன்னாகையார் ஆகியோரின் பாடல்கள் ஆறும் மற்றும் ஆண்டாளின் பாடல்கள் சிலவும் தொகுக்கப்பட்டுள்ளன.
சமகாலக் கவிதைகளில் பல ஏற்கனவே வந்த
தொகுப்புக்களிலும் மற்றும் பத்திரிகை(கூடுதலாக சரிநிகர்) சஞ்சிகைகளில் வெளிவந்தவை. இவை பற்றிய விபரம் இறுதிப் பக்கத்தில்
8

நூலில் தரப்பட்டுள்ளது. சில கவிதைகள் முதற் தரமாக இத் தொகுப்பிலேயே பிரசுரமாகியுள்ளன.
பதிப்பாசிரியர் தன்னாற்றலினதும் உண்மையினதும் வெளிப்பாக காதல் கவிதைகள் என்ற தலைப்பில் வழங்கியுள்ள நீண்ட ஆய்வு முன்னுரை இந்நூலுக்கு பலம் சேர்க்குமோர் அம்சம். இதுவரை காலமும் இலக்கிய உலகில் பெண்களின் காதலுணர்வுகள் மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்துள்ளமையை ஆராயும் அவர், பெண்களின் காதல் கவிதைகள் ஆண்களின் காதல் கவிதைகளிலிருந்து வேறுபடும் புள்ளி அக்கவிதைகளின் தனியியல்பு என்பது பற்றி விளக்குவது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் காதல் கவிதைப் பாரம்பரியத்தையோ பெண்ணின்கால் உணர்வு பற்றியதான ஆண்களின் கவிதைகளையோ நோக்கும்போது அது பெரும் போக்காக பெண்ணின் துன்பியலே (பிரிவு) படிந்திருப்பதானது காதல் திருமண உறவில் செயற்படும் ஆணாதிக்க மனோபாவத்தினதும் கருத்தியலினதும் வன்முறை அதற்குத் தளமாக இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் இருந்து தோன்றிய ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் ஒடுக்கப்படும் பாலினர் என்ற வகையிலும் எதிர்த்துக் குரல் கொடுத்தல் என்ற இரு பெரும் போக்குகள் தலைகாட்டின. பெண்களின் சமகாலக் காதல் கவிதைகளின் இரண்டாவது குணாம்சம் பரவலாக எழுப்பப்படுவது தெரிகிறது.
தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தம் பற்றிய காத்திரமான விமர்சனத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர். தம் இருப்பு, சமூகநிலை என்பன பற்றிச் சொந்தக் கண்ணோட்டத்தில் உணர்வுகளைப் பதிவு செய்யுமிடத்து குடும்பம், மதம், கலாசாரம், ஆணாதிக்கம் என்ற நிறுவனங்கள் மண/காதல் வாழ்வில் பெண் மேல் திணித்துள்ள வன்முறை அடக்கு முறைகள் இக்கவிதைகளிலே நிதர்சனமாக கேள்விக்கு உட்பட்டுள்ளது.
கேட்பது நிதானமாகவே பெரும்பாலும் ஒலிக்கின்றது. அதோடு அத்தகைய குரல் இறுதியில் அடங்கிப்போகின்றது. அதாவது ஆதிக்க உணர்தல், அடங்கிப் போதல் என்ற முரண்நிலையிலே கூடுதலான கவிதைகள் இயங்குகின்றன. எனவே ஒரே சமயத்தில் உள்ளே இருப்பவர்களாகவும் வெளியே நிற்பவர்களாகவும் தங்களை உணர்கின்ற மனோபாவம் தெளிவாகின்றது. இதனை இரட்டை மனநிலையின் வெளிப்பாடு அல்லது இரட்டை மொழி பேசும் தன்மை என்பர்.
9

Page 63
இத்தகைய கவிதைகளிலே வெளித்தெரியும் மேலான சிந்தனாவோட்டம் பெண்கள் சுதந்திரம், சுயாதீனம், சுயஉணர்வு, அதன் பலம், தனித்துவம் பற்றிய பல கவிதைகள் பேசுகின்றன.
காதல் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பல கவிதைகளிலும் தெரிகின்றன. இன்னொருவனுக்கு எனும் கவிதை தன் கணவன் காதலனுடன் இருக்கையில் முன்பு நேசித்தவனின் நினைவுகளை நேசிப்பது உண்மையான உணர்வுத்தளத்தின் ஒழிவற்ற தன்மை மட்டுமன்றி ஒழுக்கவியல் மரபு மீறலாகவும் உள்ளது. புத்துயிர்த்தல் என்ற கவிதை ஆண் பெண் காதலுறவுக்குப் புறம்பாக இரு பெண்களுக்கிடையேயான பாச இணைப்பின் இயக்கத்தைப் பேசுவது. இவை காதலை விரிந்த தளத்தில் காணும் பெண்ணின் விசால நோக்கைப் பிரதிபலிக்கின்றன.
பெண்களின் காதல் பாடல் மரபில் ஆண்டாளின் பாசுரங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டமை ஒரு முக்கிய அம்சம். இதற்கான பொருத்தப்பாடு பற்றி இறை பக்திக்கும் ஆணின் மீதான காதலுக்கும் இடையிலுள்ள வேறுபாடு ஆண்டாளின் பாடல்களில் இல்லாமல் போகிறது. இதன் பலன் எத்தகைய பாவனைகளுமற்ற உண்மையான காதல் கவிதைகள் என்று பதிப்பாசிரியர் விளக்குகின்றார்.
பெண்ணின் மொழி என்பது இது வரை பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்டு பதிலாக ஆணின் மொழிக்கு அவர்கள் பழக்கப்பட்டிருந்த பழக்கப்பட்டிருக்கும் சூழலிலும் இன்றைய கவிதை வெளியீட்டுச் சூழலிலும் சுயமான பார்வையும் இயல்பான மொழிநடையும் இணைய கவிதைகள் உருக்கொண்டுள்ளமை ஆரோக்கியமான ஒரு விடயம்.
வாசகரைத் திணறடிக்கச் செய்யும் அந்நியப்படுத்தும் படிமங்களினாலான மிகவும் இறுகிப்போன இன்றைய கவிதை வடிவுக்கு மாறாக உரையாடல் தன்மையுடன் அல்லது விவாதத் தன்மை கொண்ட கவி மொழியையும் இக்கவிதைகள் வெளிக்காட்டுகின்றன.
இவை வசன நடையிலேயே வடிவம் பெற்றவை. அத்தோடு நான் என்ற நிலையில் நின்று ஆக்கப்பட்டுள்ளமை முக்கியமானதொரு அம்சம் தன்னுணர்வை வெளியிடுவதற்கான ஒரு முறையாக அது பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரிகிறது. இவ்வகையில் தமிழ்க் கவிதை மரபின் ஒரு புதிய வீச்சுக்கான ஆரம்பத்தை இத் தொகுதி குறிகாட்டி நிற்கிறது.
20

வருடாந்தச் சந்தா - நிவேதினி
North America : US $ 30
UK & Europe : US $ 20 India & S. Asia : US $ 10
Sri Lanka : SL Rs. 200
சந்தா விண்ணப்பம்
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்
பெயர்
விலாசம் :
திகதி
இத்துடன் காசோலை / மணிஓடரை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின்-பேரில் அனுப்பிவைக்கிறேன்.
Women's Education and Research Centre 58, Dharmarama Road Colombo - 06
Sri Lanka
2

Page 64

Our Recent - Publications
Feminine Speech Transmissions : An Exploration into the Lullabies and Dirges of Women
– Selvy Thiruchandran
Women's Writing in Sri Lanka: Subjectivities and Historicism
- Selvy Thiruchandran
Writing An inheritance : Women's Writing in Sri Lanka 1860-1948 Vol. 1 (in Print)
- Neloufer de Mel & Minoli Samarakkody
Code of Ethics for the Gender Representation in the Electronic Media (Sinhala and Tamil)
The Laws and Customs of the Tamils of Jaffna (New edition)
- H. W. Thamibiah
A Psychological Study of Blue Collar Female Workers
- Gameela Samarasinghe đ& Chandrika Ismail
Women, Narration and Nation Collective Images and Multiple laentities
Ed - Selvy Thiruchandran
23

Page 65

நிவேதிணிக்கு வேண்டப்படும் கட்டுரைகள்
பெண்கள் தொடர்பான ஆய்வுகள், நூல், சினிமா தொடர்பான விமர்சனங்கள், பால்நிலை தொடர்பான கருத்தியல் ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன.
0.
Х•
«Ο
X
«Ο
Х»
C
Х•
அவை அமையும் விதி ஆய்வுக் கட்டுரைகள் 20-25 பக்கங்களில் அமைதல் வேண்டும். விமர்சனங்கள் ஏறக்குறைய 500, 600 சொற்கள் அடங்குவது நன்று. கட்டுரைக்குப் பொருத்தமான வரைபடங்கள், புகைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் தட்டச்சில் - கணனி டிஸ்கற்றில் அமைதல் நன்று. வசதியில்லாவிடின் தாளுக்கு ஒரு பக்கம் என்ற அடிப்படையில் தெளிவான கையெழுத்தில் அமைதல் வேண்டும். 150 சொற்கள் கொண்ட கட்டுரைச் சுருக்கம் தனியாக இணைப்பது வரவேற்கப்படும்.
கட்டுரைகள் ஆசிரியர் பற்றிய தகவற் குறிப்பு ஒன்று தனியாக இணைக்கப்பட வேண்டும்.
கட்டுரை எழுதுவோருக்கு ஒரு சஞ்சிகை இலவசமாக அனுப்பி வைக்கப்படும். கடைசிப் பக்கத்தில் உசாத்துணை நூல்களை ஒரு கிரமமாகத் தொகுத்தல் வேண்டும். நிவேதிணிக்கு நாம் வேண்டும் அமைப்பு முறை கீழ்க் கண்டவாறு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆசிரியர் பெயர், வெளிவந்த வருடம், நூலின் தலைப்பு, பதிப்பகம், ஊர், இடம். ஆங்கில நூல்களை ஆங்கிலத்திலேயே எழுதப்பட வேண்டும். உதாரணமாக, - Singaravelu. 1966. Social Life of the Classical Period. Kuala Lumpur, Department of Indian Studies, University of Malaysia. (புத்தகம்) Singer, M. 1968. "Indian Joint Family in Modern Industry" in Structure and Charge in Indian Society. Milton Singer and Bernard, S. Cohn ed. Chicago. (5"G60).) விளக்கங்கள், சுருக்க உரைகள், ஆங்கில, சமஸ்கிருத, பிரான்சிய சொற்கள் பதங்களின் மொழிபெயர்ப்புகள், விளக்கங்கள் போன்றன உசாத்துணை நூல் குறிப்பிற்கு முதல் வரும் பக்கத்தில் எழுதப்பட வேண்டும்.

Page 66
மலையக மக்களுடைய இனத்துவ இ
சமூகக் கோட்பாட்டுத் தளத்தில் பா:
இன்னொரு நூற்றாண்டுக்காய்
தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்
பெண்களுக்கான சட்டவியல் விளக்
The Spectrum of Femininity (E
Stories of Survivors: Socio-P
Households in Post Terror Sout
The Other Wictims of War :
Households im Eastern Sri lank
Women, Narration and Nation Collective Images and Multiple
The Laws und CustoIIls of the T boy H. W. Thambiah (New Edi
A Psychological Study of Blue
ISSN 1391 - 0.353

இருப்பில் பால்நிலை
– EhlüsÜlsf EhläWTFT
ல்நிலை.
- செல்வி திருச்சந்திரன்
- சாரல் நாடன்
றில் ஒரு பெண் நிலைநோக்கு
- செல்வி திருச்சந்திரன்
கம் (I, II)
English)
Selvy Thiruchandran
litical Context of Female Headed hern Sri Lanka - Wol. II (English)
Sasanka Perera
Emergence of Female Headed
- Wol. II
Selwy. Thiruchandran
: Identities
Ed. Selvy Thiruchandran
Tamils of Jaffna. tion)
Collar Female Workers by
Gameela Samarasinghe & ChiaIdrika IsIImıil
R 75/=