கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிவேதினி 2003.06

Page 1
நிவே
பால் நிலைக் கற்ை
இதழ் 9, மலர் 1
பெண்கள் கல்வி

திணி
க நெறிச் சஞ்சிகை
ஆனி 2003
ஆய்வு நிறுவனம்

Page 2

நிவேதினி
பால் நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை
பண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

Page 3
நூல்
தொகுப்பு
நூற்பதிப்பு
பதிப்புரிமை
பிரதிகள்
அளவு
அச்சு
பக்கங்கள்
கடதாசி
வெளியீடு
அச்சுப்பதிப்பு
விலை
ISBN
நூற்பதிப்புத் தரவுகள்
நிவேதினி
செல்வி திருச்சந்திரன்
2003
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
200
1/8
ஒவ்செற்
vi + 102
70 கிராம் வெள்ளைத் தாள்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட், 48பி, புளுமெண்டால் வீதி, கொழும்பு 13.
eum - 75/–
1391- 0353

இந்த இதழ் பற்றியும் வேறு சிலவும்
நிவேதினியின் கிரம வளர்ச்சிப் படியில் பல இடையூறுகள் இதழை ஆக்குவதற்கும் தொகுப்பதற்கும் தேவையான ஒரு இதழ் ஆக்கியும் அது வெளிவருவதற்குத் தேவையான பணவருவாயுமிருந்தும் இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதில் தாமதம். இதழுக்குத் தகுந்தவாறு கட்டுரைகளை எழுதுவோர் ஒரு சிலராக இருப்பதே இதற்குள்ள ஒரே காரணம். அது ஒரு சிலரும் வேலைப்பழுவால் தொடர்ந்து எமக்குக் கட்டுரைகளை அளிக்க முடியவில்லை. எத்தனையோ விடயங்கள் ஆய்வு செய்யப்படலாம். எத்தனையோ நூல்கள் விமர்சிக்கப்படலாம். எத்தனையோ கவிதைகள் கட்டவிழ்க்கப்படலாம். ஆனாலும் ஆய்வறிவு நோக்கில் பல்துறை அணுகுமுறையில் அவற்றைப் பார்ப்பதற்கு எமக்குள்ளே ஒரே தயக்கம்.
ஆனாலும் ஒரு சந்தோஷம் எங்களது நிறுவனத்துடன் அதன் ஆக்கங்களுடனும் பணிகளிலும் ஒரு சில ஆண்கள் தொடர்ந்து ஈடுபாடு காட்டுவது ஒரு ஆரோக்கியமான செய்தி. நாம் தனித்தவில் அடிக்கவில்லை எங்களைப் புரிந்து கொள்ளவும் ஊக்குவிக்கவும் எங்களுடன் சேர்ந்து முனைப்பாக இயங்கவும் எப்போதும் ஒரு சில ஆண் “முற்போக்கு”வாதிகள் உள்ளனர். இந்த இதழில் கூட மூன்று ஆண் அறிவாளர் தங்களது நான்கு கட்டுரைகள் மூலம் பங்களிப்பைச் செய்துள்ளனர். இது பெண் இயக்க வரலாற்றில் ஒரு சிறுபான்மை நிகழ்வு. அநேக பெண்நிலைவாத சஞ்சிகைகளில் பெண்களே பெரும்பாலும் கட்டுரைகளை எழுதுபவர்களாக இருப்பார்கள். இது எமது அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி என்று கொள்ளலாம்.
யோகராசா தனது இரு கட்டுரைகளிலும் இலக்கிய கதாபாத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டு தனது ஆய்வை முன்வைத்துள்ளார். இதிகாசங்களும் காவியங்களும் முன்வைத்த மாதிரிப் படிவங்கள் பல பெண்களை ஒரு சில கருத்தியல்களில் அடக்கிவிட்டன. இந்தப் படிவங்கள் கருத்தியல் தொடர்ச்சி ஒன்றைத் தோற்றுவித்துப் பின் வந்த இலக்கியக் கர்த்தாக்களையும் சினிமாப்படக் கதை ஆசிரியர்களையும் பெரிதும் அலைக்கழித்துவிட்டன. இதையும் துகிலுரிதலையும் திரும்பவும் திரும்பவும் கேட்கவும் பார்க்கவும் எம்மால் முடிகிறது.

Page 4
சித்திரலேகா மெளனகுரு, ஒளவை ஒளவையாராகிய இரு படிமங்கள் தோன்றியதின் காரணங்களை இனங்காணுகிறார். மங்கையின் ஒளவை நாடகமும் எமக்கு இதை இன்னொரு கோணத்தில் விளக்கியது.
இதன் தொடர்ச்சியாகவே அகலிகை பற்றிய ஒரு சிறு கட்டுரையும் மறு பிரசுரம் செய்கிறோம். மண்டூர் அசோகாவின் சிறுகதைத் தொகுதி பெரும் விமர்சனத்துக்குள்ளாகிறது. சிவகுமார் மிகுந்த ஈடுபாட்டுடன் தன்கருத்துக்களை விளக்குகிறார். கடந்துபோன போர்க்கால நிகழ்வுகளை அடிப்படையாக்கி பெண் நிகழ்வுகளை மண்டூர் அசோகா விபரிப்பதை இவர் விமர்சித்துள்ளார்.
குடும்பம் என்பது ஒரு சிக்கலான நிறுவனம். அது புனிதமானது என்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்றும் ஒரு வாக்கு கடைப்பிடிக்கப்படுகிறது. விவாகரத்துக்கோரும் ஒரு பெண் குடும்பம் என்ற கோயிலுக்கு ஒரு தீட்டு அம்சம் என்றும் விமர்சிக்கப்படுவாள். அதன் புனிதம் கெடாமல் இருப்பதற்குப் பல அணுகுமுறைகள் எதிர்பார்ப்புகள் அனுசரணைகள், மானிடநேயம், பெண்ணை மதிக்கும் தன்மை, சமத்துவ நோக்கு போன்றன தேவை என்பதே பெண்நிலைவாதிகள் முன்வைக்கும் வாதங்கள் இவையேதுமில்லாத ஒரு காட்டுமிராண்டி நிறுவனம் குலைக்கப்படலாம் என்பதைக் கூறுவதிலும் அவள் தயக்கம் காட்டமாட்டாள். இந்த ஒரு கூற்று அவள் வாயால் வருவது பெரும்பாலும் அவலங்கள் தந்த அனுபவத்தால்ேயே. தேவகெளரி பெண்நிலைமைய எதிர்
பார்ப்புக்களை இனங்காணுகிறார்.
போர்க்காலங்கள் பெண்ணை எப்படி ஒரு பிரத்தியேக பாணியில் உருவாக்குகிறது. ஆண்களிலிருந்து வேறுபட்ட ஒரு பிராணியாக அவள் மாற்றப்படுகிறாள் என்பதைத் தனலஷ்மி எமக்குக் காட்டுகிறார். கட்டுரைகள் காணாது விடயங்கள் இன்னும் பல சேர்க்கப்படவேண்டும் என்பது எமது எண்ணம். எதிர்பார்ப்புகளே எமது வாழ்க்கையின் அத்திவாரம். அடுத்த இதழ் இன்னும் பல விடயங்களைத் தாங்கி வரும் என்று நம்புகிறோம்.
செல்வி திருச்சந்திரன்

இந்த இதழில்.
இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்
- செ. யோகராசா
மண்டூர் அசோகவின் உறவைத்தேடி ஒரு விமர்சனம்
- சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
அதோ அந்த நான்கு சுவரினுள்ளே
- விஜித்சிங்
வழக்குரைக் கண்ணகி ஒரு நோக்கு
- செ. யோகராசா
போரும் பெண்களும்
- செல்வி ஜெனிற்றா தனலஷ்மி கறுப்பையா
. இங்கேயும் அகலிகைகள்
- மலையமான் தேவி
. நிகழ் காலத்தில் கடந்தகால எதிர்கால
பெண்ணிலைமைய எதிர்பார்ப்புகள்
- தேவகெளரி
. தமிழ் இலக்கிய மரபில் ஒளவையும் ஒளவையாரும்
- மெள. சித்திரலேகா
பக்கம்
01
21.
37
53
59
76
82
90

Page 5

இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் லிபண் பாத்திரங்கள்
- 6ീക്ഷ, മഗ്മഗ്ര
பேராசிரியர் கைலாசபதி தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டவாறு, “பழைய கதைகளையும் (Thems) ஐதீகங்களையும் கையாண்டு தத்தம் காலத்தேவைக்கு ஏற்ப இலக்கியம் படைப்பது எல்லாக்காலங்களிலும் புலவர்களது முயற்சியாக இருந்துவந்துள்ளது'. இக்காலத்தில், சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவரும் படைப்பாளிகளும் இத்தகைய போக்கிற்கு விதிவிலக்கானவர்களல்லர். ஆயினும், முற்காலத்தவரது இத்தகைய படைப்புகளில் முன்னைய காலச் செய்திகளே முக்கியத்துவம் பெற்றிருக்க, இக்காலத்தவரது படைப்புகளில் சமகாலப்பிரதிபலிப்பு முனைப்புற்றிருக்கும் என்பது கவனத்திற்குரியது.
மேற்கூறப்பட்ட தமிழ்ப்படைப்பாளிகள் பலருக்கும் பழையநூல்களுள் இராமாயணம், மகாபாரதம் ஆகியன அமுதசுரபிகளாக விளங்கிவருகின்றன. இவர்களது படைப்புகளில் இடம்பெற்றுள்ள இதிகாசக்கதைகளையும் பாத்திரங்களையும் அவைபெற்றுள்ள மாற்றங்களையும் இன்று செல்வாக்குப் பெற்றுள்ள பெண்நிலைவாத நோக்கிலே அணுகுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
பண்டைய இதிகாசப் பாத்திரங்களுள் பல உளவேனும் அகல்யை, சீதை, நளாயினி ஆகிய பாத்திரங்களோடு தொடர்புபட்டுள்ள படைப்புகளை இங்கு கவனத்திற் கொள்ளப்படுகின்றன. இவ்விதத்தில் 24 படைப்புகள் ஆய்விற்கு எடுக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய மூன்று பாத்திரங்களும் இந்திய/தமிழ்ப்பாரம்பரியத்தில் கற்பிற்கு சிறந்த உதாரணங்களாகப் போற்றப்பட்டு வருபவர்களாகவர். ஆதலின், இவ்வாய்வுக்கு அனுசரணையாக, குறிப்பாக, தமிழ்ப்பாரம்பரியத்தில் பெண்களது கற்பு பற்றியும் எத்தகைய கண்ணோட்டம் நிலவி வந்துள்ளதென்பது பற்றிச் சுருக்கமாக முதலிற் கவனிப்பது அவசியமானது.
1.

Page 6
இந்தியப் பாரம்பரியத்தில் கற்பு
சங்க காலத்தில் கற்பு என்பது திருமணமான பெண்ணிற்குரிய ஒழுக்கமாகக் கருதப்பட்டது. சங்கமருவிய காலத்தில் கற்புநெறியைப் பின்பற்றும் பெண் பத்தினி நிலைக்கு உயர்த்தப்பட்டமையைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. மணிமேகலையில் கற்பு நெறி கன்னிமையுடன் (Chastity) தொடர்புபடுத்தப்படுகின்றது. சோழர் காலத்தில், கம்பராமாயணம் கற்பு நெறியைத் தெய்வீகத்தன்மையுடன் தொடர்புபடுத்துகின்றது. பெரியபுராணம் காட்டும் கற்புநெறியில் மூடத்தன்மையும் கலந்துள்ளது. (எ-டு: இயற்பகை நாயன்மார் கதை) வடமொழியில், முதன் நூலான வேதம் பெண் பிறப்பினையே அபசகுணமுடையதாகக் கருதி, பெண்ணிற்குச் சமயச்சடங்குகளில் ஈடுபடுவது தொடர்பான பல தடைகளை விதிக்கின்றது. அவர்களை போதையூட்டுபவர்களாகவும் அடிமைகளாகவும் காண்கின்றது. வடமொழி இராமாயணமும் மகாபாரதமும் பெண்ணின் பதிவிரதா தர்மத்தைப் போற்றுகின்றன. வடமொழி ஸ்மிருதிகள் (எ-டு: மனுதர்மசாஸ்திரம்) பெண்ணிற்கு எதிரான பல சட்டங்களை இயற்றுகின்றன. வடமொழிப் புராணங்கள் (அவற்றின் தழுவல்களான தமிழ்ப்புராணங்களும்) கற்புநெறியை அச்சமதிப்பிற்குரியதாகவும் சமயத்துடன் தொடர்புபடுத்தியும் கண்டுகொள்கின்றன. மேற்கூறப்பட்ட பாரம்பரியப் பின்புலத்தில் கற்பிற்கு முன்மாதிரிகளாகப் போற்றப்பட்ட பாத்திரங்களான அகல்யை, சீதை, நளாயினி ஆகியோருள் அகல்யை இன்றைய படைப்பாளிகளாக எவ்வாறு பார்க்கப்படுகின்றாள் என்பதனைக்கவனிப்போம் இதற்கு முன், அகல்யையை இராமாயணம் முதலான வடமொழி நூல்களும் தமிழ் நூல்களும் எவ்வாறு படைத்துள்ளன என்பதனை அவதானிப்பது பொருத்தமானது.
இதிகாசங்களில் அகல்யை
வடமொழி நூல்களுள் அகல்யைபற்றிக்கூறும் முதல் நூல்களான வான்மீகி இராமாயணம் அகல்யை பற்றிக் கூறிச் செல்கின்றபோது ஒரிடத்தில் “கெளதம வேடம் பூண்டுவந்தவன் இந்திரன் என அறிந்தேன் அந்தத் தூர்ப்புத்தியுடையவள், தேவர்களின் அரசனே தன்னை விரும்பிவந்துள்ளான் என்று பெருமிதம் எய்தியவளாய் அவன் விருப்பத்திற்கு ஆட்பட்டாள்” என்று குறிப்பிடுகின்றது.
வான்மீகி இராமாயணத்தில் வரும் (நேரடிமொழிபெயர்ப்பாகவுள்ள) மேலுள்ள பகுதி வான்மீகி நோக்கி அகல்யையின் குணஇயல்புகள் பற்றிய சித்திரிப்பு எவ்வாறுள்ளதென்பதனை பெண்பற்றிய ஆணின் பார்வை எத்தகையதென்பதனை உணர்த்தி நிற்கின்றது! இவ்வாறே, இந்திரன் செலவு பற்றிக்கூறும்போது கெளதமர் வடிவிலே இந்திரன் சென்றானென்றும், இந்திரன் சாபம் பற்றிக்கூறும்போது அவன்
2

ஆண்மைத்தன்மையை இழக்கநேரிட்டானென்றும் வான்மீகி இராமாயணம் எடுத்துரைக்கிறது. பெளத்த, சைன இராமாயணங்கள் அகல்யை பற்றி எதுவும் கூறவில்லை. அகல்யை கதை ஒழுக்கம் தவறியமை பற்றிய வரலாறு எனக்கருதி, அது பற்றிக் கூறாது விட்டிருக்கலாம். அதேவேளையில் ஒழுக்கந்தவறிய ஆண்கள் பற்றிய கதைகள் இவ்விதிகாசங்களில் இடம்பெற்றுள்ளன. என்பதையும் நினைவு கூரவேண்டும். தெலுங்கு இராமாயணங்கள் மூன்று வான்மீகி இராமாயணம் போன்றே அகல்யை பற்றி வந்திருந்தவன் இந்திரன் என்றறிந்து மகிழ்ச்சியுற்றாள்' என்று குறிப்பிடுகின்றன. கன்னட இராமாயணங்கள் மூன்றினுள் ஒன்று அகல்யை கதைபற்றி எதுவும் குறிப்பிடவில்லை; மற்றொன்று, சாபவிமோசனம் பற்றி மட்டுமே கூறும் பிறிதொன்று அகல்யை பற்றிச் சுருக்கமாக கூறுவதிலிருந்து,'வந்திருந்தவன் இந்திரன் என்றறிந்து மகிழ்ச்சியுற்றாள்' என்று கூற முற்படுவதனை ஊகிக்கமுடிகின்றது.
இனி, தமிழில் வெளியான கம்பராமாயணம் அகல்யைபற்றிக் கூறுவதைக் கவனிப்போம் இவ்விதத்தில் இந்திரன் அகல்யை உறவுபற்றி கம்பராமாயணம் கூறுவதிலிருந்து அகலியை, முதலில் வந்திருப்பவன் இந்திரன் என்று அறியாமல், அதாவது கெளதமன் என்றே கருதி கூடினாள் என்பதும் பின்னர் அதாவது அறிந்த பின்பு, அச்செயல் தக்கதன்று என ஆராய்ந்து விலக்கக்கூடிய அறிவுத்திறனைப் பெறாதவளாய், அச்செயலுக்கு உடன்பட்டாள் என்றும் தெரியவருகின்றது. (பின்னர், இராமர், அகல்யைபற்றி கெளதமருக்கு எடுத்துரைக்கும்போது 'நெஞ்சினாற் பிழைப்பிலாள் என்று குறிப்பிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.) இவ்வாறே இந்திரன் செலவு பற்றிக் கூறும் போது பூனைவடிவிலே சென்றானென்றும், இந்திரன் சாபம் பற்றிக் கூறும்போது அவன் ஆயிரம்யோனி பெற்றுக்கொண்டானென்றும் கம்பராமாயணம் கூறுகிறது. அகல்யை பெற்ற சாபம் பற்றி சுருக்கமாக பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
"விலைமகள் அனைய நீயும் கல்இயல்ஆதி”
இருபதாம் நூற்றாண்டில். on a தமிழகப் படைப்புகளில். e.
இனி, இருபதாம் நூற்றாண்டுப்படைப்பாளிகளிடம் வருவோம். இவ்விதத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணியமுதலியார் தொடக்கம். அம்பை வரையிலான தமிழகப் படைப்பாளிகளை அவதானிக்கின்றபோது இவர்களது நவீன நோக்கின் பின்புலத்தில் எத்தகைய காரணிகள்/இயக்கங்கள்/கருத்துநிலைகள் செல்வாக்குச் செலுத்திவந்துள்ளன. என்பதனைக் கவனிப்பது அவசியமாகின்றது. ஏனெனில்
3

Page 7
இவற்றிற்கமைவாகவே இதிகாசக் கதைகளும் சம்பவங்களும் பாத்திரங்களின் செயற்பாடுகளும் மாற்றங்கள் பெற்றுள்ளன. என்பதனை மனங்கொள்வது அவசியமாகின்றது.
இந்திய விடுதலை இயக்கமும் அகல்யையும்:
மேற்குறிப்பிட்ட வெள்ளைக்கால் சுப்பிரமணியமுதலியார் அவரைத்தொடர்ந்து வந்த சு. து. யோகியார், வ. ரா. ஆகியார் தமது எழுத்து முயற்சிகளில் ஈடுபட்ட வேளையில் இந்திய விடுதலை இயக்கங்கள் தீவிரமாகச் செயற்பட்ட காலமாகும். இவற்றின் முக்கிய வெளிப்பாக பெண்முன்னேற்றம், பெண்ணுரிமை என்பனபற்றிய சிந்தனைகளும், அதற்காகக் குரல் கொடுப்பதும் இடம்பெற்றன. இத்தகைய சூழலில் மேற்கூறிய படைப்பாளர்கள் இந்நோக்கிற்கமைவாக இதிகாசக்கதைகளை குறிப்பாக அகலிகை கதையை அணுகியுள்ளனர்.
அகலியை கதையை நவீன நோக்கில் முதன்முதல் அணுகியவரான முதலியார் தாம் இயற்றிய 'அகல்யை வெண்பாவில் இந்திரனைக் காமநோய் மிக்கவனாகக் காட்டுகின்றார். (இயற்கைச் சூழலும் அதற்குத் துணைபுரிவதான விதத்தில் வர்ணிக்கப்படுகிறது) இத்தகையனான இந்திரன் அகலியையிடம் வந்து தவறாக நடக்க முயல்கின்றான் அகலியை சாகத்துணிகின்றாள். அம்முயற்சி கைகூடாதநிலையில் இந்திரனுக்கு அறிவுரை கூறுகின்றாள். இந்திரன் பல்வேறு போலி நியாயங்கள் கூறி வலிந்து தன் கருத்தினை நிறைவேற்ற முற்படும் போது அகலியை மூர்ச்சையடைகின்றாள். *
திரும்பிவந்த கெளதமர் மூர்ச்சை தெளிவிக்கின்றார் மூர்ச்சையுற்றிருந்த நிலையிலே தான் கற்பிழந்ததையுணர்ந்த அகல்யை மறுபடி மூர்ச்சிக்க, கெளதமரும் மறுபடி மூர்ச்சை தெளிவித்து சாபமிடுகின்றார். ஆக, அகல்யை செய்தது அறியாமல் செய்த குற்றம் என்று கருதுகின்ற கெளதமர்; (எனினும் அவரிடுகின்ற சாபம் - 'உன்னிஉனித் துன்புறல், கல்லாதல்-கொடியதே) ஆயினும், அகல்யை, “தெளியாத தவறு எனினும் தீயேன் தவறே” என்று கருதுகின்றாள்; தன்பிழையும் கௌதமர் பொறுமையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் கெளதமரைச் சரணடைகின்றாள். கெளதமரோ நெஞ்சம் நினைவு இழந்த பின் நிகழ்ந்த செயல்' என்று 'உன்னை இகழ்தல் ஏன்? என்றும் கல்லுரு நீங்கிய பின் அவள் தன் மனைவியாவாள் என்றும் கூறிக்கொள்கின்றாள்.
மேற்கூறியவற்றை நோக்கும்போது முதலியார் நவீன உளவியல்
நோக்கிற்கமைவாக அகல்யை கதை அணுகியுள்ளமை தெரியவருகின்றது. இது
தவிர, அகல்யைக் கற்பு கெளதமரின் தண்டனை முதலியன பற்றி அவர் எத்தகைய
4

பிரச்சினையையும் கிளப்பவில்லை. மாறாக, மணிக்கொடி எழுத்தாளர்களுள் மற்றொருவரான 'வ, ரா, பெண்ணுரிமை தொடர்பாக மிகுந்த ஆர்வங்கொண்டு உழைத்தவர். இவர் தாம் எழுதிய கோதைத்தீவு என்ற நாவலில் ஒரு பாத்திரமாக அகல்யையும் உலாவவிட்டுள்ளார். சீதை, விதுரன், மேரி மகதலேனா ஆகிய யூரிகள் முன்னிலையில் இடம்பெறுகின்றது. விசாரணையின் போது அகலியை தான் பெண் ஜன்மமாக இருப்பதைவிட கல்லாக இருப்பது நல்லது என்றும் இராமனின் பாதம்பட்டுப் பெண்ணாக மாற விரும்பவில்லையென்றும் தெரிவிக்கிறாள். மேலும் கெளதமன், இந்திரன் தனது தகப்பன் ஆகியோருள் யாருடனும் தான் இனி வாழ முடியாதென்றும் தான் மறுபடி பெண்ணாக வேண்டியதில்லை என்றும் கூறுகின்றாள். யூரிகள் முடிவில் கெளதமரைக் குற்றவாளியாகக் காண்கின்றனர் ஆக, இதிகாச அகலியைவிட வ. ரா. வின் அகலியை பலவிதங்களில் மாறுபட்டுள்ளவள் என்பது குறிப்பிடத்தக்கது.
சு. து. யோகியார் படைத்த அகல்யா வில் அகல்யையின் உணர்வுகள் வெகுநுட்பமாகவும் தீவிரமாகவும் வெளிப்படுகின்றன. இதில் வரும் அகல்யை உடல் உளக் குற்றங்களற்றவள். இத்தகைய நோக்குடன் செயற்பட்டதனாற் போதும் கவிஞர் பெண் உரிமை தொடர்பாகப் பல விடயங்களைக் கூறுதற்கேற்ற விதமாக அகலியையின் வரலாற்றை (முற்பட்ட காதல் தொடக்கம்) மிகவிரிவாக எடுத்துரைக்கின்றார். கெளதமரின் புலமையும் தர்க்கரீதியான சிந்தனையும் கலந்து அன்றைய ஆணாதிக்கத்தின் ஆழமான உணர்வுகள் இவற்றினூடாகத் தத்ரூபமாக வெளிப்படுவதனை அறிய முடிகின்றது. ஆக, இப்பகுதியில் இடம்பெறுவனவும் ஆரம்பத்தில் சு. து. யோகியார் பற்றி கூறியவையும் அவர் அகல்யையை ஒரு பெண்ணாகப் பார்க்க முற்பட்டதை உணர்த்தி நிற்கின்றது.
மேலும், மேலே கெளதமர் எழுப்புகின்ற ஒவ்வொரு வினாவிற்கும் ஏற்றதான விடையினை இராமரூடாக கவிஞர் முன்வைப்பதும் அவசியம் கருதி, மனங்கொள்ளத்தக்கது.
இனி, மீண்டும் மணிக்கொடிக் குழுவினர் பார்வைக்குட்பட்ட அகலியையைக் கவனிப்போம். இவ்வழி, புதுமைப்பித்தன், கு. ப. எம். வி. வெங்கட்ராம், பெ. கோ. சுந்தரராஜன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர் கவனத்திற்குரியவர்களாவர்.
அகலியை பற்றி இரு படைப்புக்கள் தந்துள்ளவரான புதுமைப்பித்தனின் அகல்யை என்ற சிறுகதை உளவியல் நோக்குடன் இதிகாசப் பாத்திரங்களை இயங்கவைப்பது. சதாரணமானதொரு பெண்ணிற்குரிய உடலுணர்வு கொண்டவள் அகல்யை. எப்போதுமே வேத ஆராய்ச்சியில் ஈடுபடுபவர் கெளதமர். நீண்ட காலமாகவே அகல்யை மேல் கண்வைத்திருப்பவன் இந்திரன் இவர்களது இத்தியாதி
5

Page 8
இயல்புகள் வெகு நுட்பமாக கலைத்துவத்துடன் புதுமைப்பித்தனால் வெளிப்படுத்தப்படுகின்றன. கற்பு பற்றிய அவரது கருத்தும் வெளிப்படுத்துகின்றது. “மனத்தூய்மையில் தான் கற்பு சந்தர்ப்ப வசத்தால் உடல்களங்கமானால் அவளை என்ன செய்யமுடியும்”?
முழுமையாக அகல்யையை வாசிக்கும்போது பின்வரும் விடயங்கள் கவனத்திற்குரியனவாக அமையும். கற்பு பற்றிய நவீன கால விளக்கம் (உடல் களங்கத்தை விட உளத்தூய்மையே முக்கியம் என்பது) இயல்பான உணர்ச்சிகளுக்கு முதன்மை. கெளதமரை மனிதாபிமானியாகக் காணுதல். இயற்கை இந்த நிகழ்ச்சிகளை நீக்கி யதார்த்தமாய்ப் பார்த்தல் பெளராணிகச் சூழலிலிருந்து விடுபடல் முதலான பண்புகள் வெளிப்படுகின்றன.
புதுமைப்பித்தனின் மற்றொரு படைப்பான சாபவிமோசனம், சாபம் பெற்ற பின்பும் சாபத்திலிருந்து நீங்கிய பின்னும் ஆன சம்பவங்களை முதன்மைப்படுத்தி பாத்திர இயக்கங்களுக்கு மனித உணர்ச்சிரீதியில் மன உணர்ச்சி ரீதியில் - விளக்கமளிப்பது.
இறுதியாக கதை முடிவுறும் பகுதி எமது கவனத்திற்குரியது:"
"அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்து விட்டாள். அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்? என்று கேட்டாள். அவர் கேட்டார். நான் செய்தேன். என்றார் சீதை அமைதியாக, அவன் கேட்டானா என்று கத்தினாள் அகலிகை அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி அவளுக்கொரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? கைலயங்கிரியை நாடி ஒற்றை மனித உருவம் பனிப்பாலை வனத்தின் வழியாக விரைந்து கொண்டிருந்தது. அதன் குதிக்காலில் விரக்தி வைரம்பாய்ந்து கிடந்தது. அவன் தான் கௌதமன் அவன் துறவியானான்”
மேலே சாபவிமோசனம் கதையிலிருந்து தரப்பட்டுள்ள பகுதிகளுடன் ஒட்டுமொத்தமாக முழுக்கதையையும் வாசிக்குமொருவர் இக்கதையிலிருந்து பாரம்பரிய இந்திய தர்மத்தின் முரண்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படுதல். கதையின் பிற்பகுதி முற்பகுதியின் விமர்சனமாக அமைவதாலும் அவ்வடிப்படையில் எழுகின்ற எழுப்பப்படுகின்ற சிக்கல்களும் பாத்திர நடத்தைகளை இயல்பானவை என்று அமைதிகாணாமல் சூழலுடன் தொடர்புபடுத்திப் பார்த்தல். சீதையின் கதையூடாக கணவன் மனைவி உறவுநிலை கேள்விக்குள்ளாதல் (அதாவது குடும்பத்தில் நிலவவேண்டிய பரஸ்பர நம்பிக்கையும் அது இராமனிடம் இல்லாமையும்)
6

என்பன பற்றி உணர முடிகிறது. ஆக அகல்யை பற்றி நவீன கதைகளுள் சாபவிமோசனம் முக்கியமானதொரு படைப்பு என்றே கூறவேண்டும். இக்கதை தொடர்பாக ராஜ் கெளதமன் பின்வருமாறு கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.*
“சாபவிமோசனம் பெருகிறவரை அகலிகை ஒரு பெளராணிகப்பெண், அதன் பிறகு அவள் ஒரு இருபதாம் நூற்றாண்டுப்பெண். இன்றைய இந்துசமுதாயத்தில் மெளனமாய் அரற்றுகின்ற பெண்களில் ஒருத்தி இப்பரிமாணம் மூல இராமாயணத்தில் இல்லாதது. புதுமைப்பித்தனின் சிந்தனை கற்பனையின் அற்புதப் படைப்பு மனதுள் கொதிப்பைச் சினந்து குமுறும் பெண்களின் பிரதிநிதியாக அகலிகை காணப்படுகிறாள்.”
மணிக்கொடி எழுத்தாளருள் பெண்ணின் உணர்வுகளை வெகுநுட்பமாக வெளிப்படுத்தியவர் என்ற சிறப்புக்குரியவர் கு.ப.ரா. இவரது 'அகலியை நாடகமும் இதற்கு விதிவிலக்கன்று. பெண்ணின் உணர்வுகளை பெண்ணின் உரிமைகளை நன்கு எடுத்துரைப்பதற்கு வாய்ப்பாக அகலியை வரலாற்றோடு தொடர்புபட்ட பிற எழுத்தாளர் குறிப்பிடாத சில சம்பவங்களைக் கையாள்கின்றார். கு. ப. ரா. உதாரணமாக கெளதமர் அகல்யை குடும்பவாழ்க்கையைச் சித்தரிப்பதனூடாக குடும்பத்தில் பெண்களுக்குரிய இடத்தினை ஆண்கள் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தினைச் சுட்டிக் காட்டுகின்றார். அகல்யையின் ஆச்சிரமவாழ்க்கையின் அர்த்தமற்ற நிலையினை தோழியான சாந்தையூடாக, அகல்யைக்கு உணரவைக்கின்றார். தேவலோகப் பெண்களின் உணர்வுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. இயற்கையின் மாற்றங்கள் அகல்யையிடத்து விரகவேததனையை மிகுவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அகல்யையின் உணர்வுகளும் செயற்பாடுகளும் நுணுக்கமாக விவரிக்கப்படுகின்றன."
எம். வி. வெங்கட்ராமின் அகலியையில் சிரகாரி முக்கிய இடம் பெறுகின்றான். கெளதமர் சிரகாரி, அகல்யை - சிரகாரி உரையாடல்களூடாக மனப்போராட்டங்களூடாகவும் கெளதமர் அகல்யை ஆகிய இருவரதும் மனஉணர்வுகள் ஆழமாக வெளிப்படுத்தப்படுகின்றன. கதை இவ்வாறு முடிவு பெறுகின்றது.*
“அகலிகை நீ மனமறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை. நான் ஆத்திரப்பட்டு உன்னை வெட்டச் சொல்லிவிட்டேன். உன் களங்கம் அகலும் வரையில், நான் தீர்த்தயாத்திரை போய் வருகின்றேன் வரட்டுமா? அகலிகை, குனிந்து தலை நிமிரவில்லை, வாய் திறந்து பேசவும் இல்லை. அவள் வெட்கிவிட்டாள். தர்மத்தை நினைத்து வெட்கினாள். மனிதப்பிறவியாக இருக்க நேர்ந்த கொடுமையை எண்ணி
7

Page 9
வெட்கினாள். மகாதபஸ்வியான கணவரின் உணர்ச்சி அறிவற்றதைக் கண்டு வெட்கினாள் மகாஞானியான சிரகாரியின் அறிவு ஏழுநாட்கள் உணர்ச்சி அற்றதற்காக வெட்கினாள். வெட்கம் அவள் உணர்ச்சியை வெட்டியது. வெட்கம் அவள் அறிவை வெட்டியது. வெட்கம் அவள் சிந்தையை வெட்டியது. அபலை அபலை சிலையெனவே நின்றுவிட்டாள்.
99.
மேற்கூறிய பகுதியை அவதானிக்கும்போது (புதுமைப்பித்தனது) சாபவிமோசன அகல்யையைவிட(வெங்கட்ராம்படைத்த) இவ் அகலியை பாரம்பரியு இந்து (கீட்கோடிட்டபகுதி இதற்கு சான்றாகின்றது)
மற்றொன்று மணிக்கொடி எழுத்தாளரான பெ. கோ. சுந்தரராசன் (சிட்டி) எழுதிய, மாசறு கற்பினள்’ சிறுகதையில் வரும் அகல்யை கெளதமரும் முரண்நிலையில் ஒன்றுபடுகின்றனர்.அதாவது இருவரும் தங்களது உடல் உள உணர்ச்சியை நாசூக்காக மறைத்துக் கொள்கின்றனர். ஞானி கெளதமன் அகல்யையின் அழகினால் மனந்தடுமாறுபவனாகவும் அதேவேளையில் அவளது உள்ளக்கிடக்கையை அறிய முற்படுபவனாகவும் நடக்க அகல்யை தன் உடல் உணர்ச்சியை வெளிப்படுத்தாமல், கெளதமனின் தவ நாட்டத்திற்கு உரமூட்டுகின்றாள். எனினும் ஒரு கட்டத்தில் இருவரும் இயல்பான உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தினாலும் மீண்டும் கட்டுப்படுத்த முற்படுகின்றனர். இத்தகைய சந்தர்ப்பத்திலேயே இந்திரன் வரவும் செயலும் நிகழ்கின்றன. தொடர்ந்து கதை இவ்வாறு செல்கின்றது".
அட, சண்டாளா! கெளதமன் கோபக்குரல் துரத்த இந்திரன் ஒடி மறைந்தான். புத்தியும் பொறியும் கலங்கிப்போன அகல்யாஅப்போதுதான் உணர்ந்தாள். தன் கணவனை நோக்கிப் பாய்ந்தாள்.
ஸ்வாமி “சீ, துரோகி உன் பசப்பு வார்த்தைகளில் மயங்கிய நான் அல்லவா மூடன்? எவ்வளவு சாதுர்யமாய் என் காமத்தைக் கொண்டே என்னை விலக்கிவைத்து விட்டாய் இவ்வார்த்தையின் துன்பம் அவளைப்பாதிக்கவில்லை. அந்த அபாண்டத்தில் அவள் உணர்விழந்து ஸ்தம்பித்துவிட்டாள். கோபம் முழுவதையும் வசையில் பொழிந்து கெளதமன் அவள் தன்னையே நோக்கியவாறு நிற்பதைக் கண்டான். கற்சிலை போன்று அவள் கண்கள் அவனைப் பழித்தன. “இவ்வளவுதானா உன் ஞானம்’ இதுதானா நீ கண்ட திருஷ்டி? அட
8

அறிவிலி இதற்காக இவ்வளவு பாடுபட்டு எல்லாவற்றையும் துறந்து என் வாழ்வையும் பாழாக்கினாய்? என்று அலறுவனபோல் இருந்தன அவள் கண்கள் கோபம் தணிந்து நடந்ததை, நடக்காததை அறிந்து கௌதமனுக்குப் பிரமை பிடித்துவிடும் போல் இருந்தது. அவனுடைய ஞானம் மடிந்து திருஷ்டி மங்கிவிட்டது. பைத்தியம் பிடித்தவனைப்போல் தள்ளாடிக்கொண்டு வெளியில் சென்றான்”
இதன் பின்னர், கற்சிலைபோல் அகல்யை வாழ்வதும் சிலவருடங்களின் பின் இராமன் வருவரும் அகல்யையை பாராட்டி அவளை ஏற்கும் படி கெளதமரிடம் கூறுவதும், கெளதமர் தன் தவறை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதும், அகல்யையை ஏற்பதும் இடம்பெறுகின்றன. ஆக, பெ. கோ. சுந்தராஜனின் படைப்பு புதியதொரு தடத்தில் தன்கதையை நடத்தியுள்ளார் எனலாம். தடத்தின் முடிவில் கெளதமர் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாவதும், உள, உடல் தண்டனைக்குள்ளாவதும் கண்கூடு.
‘மணிக்கொடி எழுத்தாளர்களுள் மற்றொருவரான ந. பிச்சமூர்த்தியின் படைப்பான உயிர்மகள் கவிதை பற்றி அதிகம் கூறுவதற்கொன்றுமில்லை. ஏனெனில், அக்கவிதை சமயஞ்சார்ந்த தத்துவ நோக்கின் வழியே வெளிப்பட்டுள்ளது. அகலிகை, இந்திரன், கெளதமர் ஆகியோரை முறையே ஆன்மா, புலன், மனம் என்பவற்றை உருவகப்படுத்தி நிற்கும் படிமங்களாகவே விளங்கிக்கொள்ள முடிகின்றது.
திராவிட இயக்கமும் நளாயினியும்
இனி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ற விதத்தில் மு. கருணாநிதி. எழுதிய நளாயினி பற்றிய சிறுகதை நம் கவனத்திற்குரியது. குஷ்டரோகியான தனது கணவனை அவனது விருப்பிற்கமைய, தாசிவீட்டிற்குத் தலையிலே தூக்கிச் சென்றவளான நளாயினி, இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கரசிகளுள் ஒருத்தியாகக் கருதப்பட்டு வருபவள். ஆயினும், மு. க. வின் பார்வை முற்றிலும் வேறுபட்டது. கணவனை விட்டுவிட்டுத் திரும்பிவரும் நிலையில் இயற்கைச் சூழலும், தோழி உலகாவின் காதல் செயலும் நளாயினியிடம் விரகவேதனையை ஏற்படுத்துகின்றன. உலகா-நளாயினி இருவரதும் நீண்ட உரையாடலூடாக, நளாயினி அவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணம் வெளிப்படுகின்றது."

Page 10
“குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக்கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கின்றான். அணைக்கவோ கைநடுங்கிறது. ஆகவே தான் அவனைத் தாசி வீட்டிற்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரி என்று எண்ணினேன்.”
தொடர்ந்து, கணவனை கூடையிலே வைத்து தலையிலே தூக்கிக்கொண்டு சென்றமைக்கும் கணவன் கடுமொழி கூறியபோது எதிர்த்து கூறாமைக்கும் (மேற்கூறியது போன்றே) காரணங்கள் கூறுகின்றாள் நளாயினி புராணக்கதையின் படி, நளாயினி அடுத்த பிறப்பில் திரெளபதியாகப் பிறந்தவள். அடுத்த பிறப்பிலே திரெளபதி ஐவரோடு குடும்பவாழ்வு நடத்துவதற்குக் காரணம் முற்பிறப்பிலே அவள் தன் கணவனோடு சுகவாழ்வு வாழமுடியாத நிலையே என்று நளாயினி - இதயா உரையாடல் ஊடாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கதே. ஆக, கருணாநிதியின் படைப்பு, திராவிட கழக எழுத்தாளரது படைப்புகள் போன்று பகுத்தறிவு ரீதியில் வெளிப்படுவது இயல்பானதே.
மார்க்சியமும் அகலிகையும்
மார்க்சிய அணிசார்ந்த படைப்பாளிகளுள் கவனத்திற்குரியவர் ஞானி’ இவரெழுதிய கல்லிகை என்ற நெடுங்கவிதை ந.பிச்சமூர்த்தியின் படைப்புப்போன்று உருவகப் பண்புடையது. வேதகாலந் தொடக்கமாக உழைப்போர் - உறிஞ்சிவோர், ஆதிக்கம் - அடிமைநிலை, உடல் - உள்ளம், ஆண் - பெண் என்று பிளவுபட்டு நிற்கின்ற இருவேறு உலகங்களுக்கிடையிலே இடர்பட்டு நிற்பவன் மனிதன். இத்தகைய மனிதனாக அகலிகை உருவகிக்கப்படுகின்றாள். (இராமன் ‘பொதுவுடைமையாளனாகின்றான்) அகலிகை கூற்றாக வெளிப்படும் இந்நெடுங்கவிதையில் உரிய சந்தர்ப்பங்களில் அகலிகையின் உணர்வுகள் வெளிப்பட்டபோதும் கவிஞரது நோக்கு மார்க்சியம் சார்ந்து அமைந்திருப்பதால் அகலிகை என்ற பெண்ணை இனங்காண்பது அரிதாகவேயுள்ளது.
பெண் நிலைவாத இயக்கமும் இதிகாசப்பாத்திரங்களும்
நவீன தமிழிலக்கிய வளர்ச்சிப் போக்கில் எண்பதுகளளவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களுளொன்று பெண்நிலைவாத நோக்கிலான படைப்புகளின் முகிழ்ப்பாகும். இந்நோக்கிற்கமைவாகவே இதிகாசப் பெண்பாத்திரச் சித்திரிப்புகள் இடம்பெறுவதனை அவதானிக்கமுடியும். இவ்விதத்தில் பிரஞ்சன், அம்மை ஆகிய இரு எழுத்தாளர்களும் கவனத்திற்குரியவர்கள்.
10

மேற்கூறிய இருவருள் பிரபஞ்சன் பெண்நிலைவாத நோக்குடன்
குறிப்பிடத்தக்க சிறுகதை, நாவல், கதை சிலவற்றைத் தந்துள்ளவர். இவற்றுள் பெண்’ என்ற தலைப்பிலான தொகுப்பு முக்கியமானது.
இத்தொகுப்பிலுள்ள கதைகளுள் அகலிகை, சீதை, நளாயினி ஆகிய மூன்றும் இங்கு கவனத்திற்குட்படுகின்றன. அகலிகையில் கதை முடிவில் அகலிகைக்கும் இராமன் விசுவாமித்திரன் ஆகியோருக்குமிடையிலே நிகழும் உரையாடல் மிக முக்கியமானது. அது பயன் கருதி அவ்வாறே இங்கு தரப்படுகின்றது."
அம்மா, நான் தசரத ராஜகுமாரன் கோசலை மைந்தன் என்று சொல்வேன்! தாங்கள்பாவம் இழைத்தீர்களாமே
அல்யா பல ஆண்டுகளுக்குப் பிறகு சிரித்தாள். விஸ்வாமித்திரனைக் கண்டு அவனுக்குப்பின்னால் இருந்த அத்தனைபேரின் முகத்தையும் பார்த்துச் சிரித்தாள். தான் பாவம் செய்தேனா? என் தந்தை பிரம்மன் எனக்குச் செய்த பாவத்தைவிட என்னை மணந்த கெளதமன் எனக்கு இழைத்த பவாத்தை விடவா? இந்த அரண்யத்து ரிஷிகள், அவர்களின் பத்தினிகள் இப்போது புறம்பேசுவதால் செய்கிற பாவத்தை விடவா, நான் செய்து விட்டேன். விஸ்வாமித்திரன் கண்களில் நெருப்பவிழச் சொன்னான். பெண்ணே மணாளன் இருக்கையிலே நீவேறு ஒருத்தனை மருவியது குற்றம். எவன் எனக்கு மணாளன்? எனக்கு மாலை சூடிய ஒரு காரியத்தாலேயே, நான் அவனை ஏற்க வேண்டுமா? கேவலம் கிழங்குகளைத் தோண்டி கனிகள் பறிக்கவும், யக்ளுங்களுக்கத் தர்ப்பைப்புல் கொய்து வைக்க சிஷ்யன் போதுமே! இந்தக் கெளதமனுக்கு மனைவி எதற்கு? தட்டித் திறந்த முதல் ஆண், எனது இந்திரனே! அவன் பெளருஷத்தைத் சீண்டி அவன் புருஷனை அவனுக்கு உணர்த்தியவளும் நானே! இந்திரனா என்னைத் தேடிவந்தது? இல்லை நானே அவனை அழைத்தேன். என்னைக்கிழி என்னைப்புசி? என்னில் பசியாற்றுபசியாறு என்று ஒலை வைத்து அழைத்ததே நான்தானே.
11

Page 11
விஸ்வாமித்திரா! உன் மனைவி இன்னொருவனுடன் உறவு கொள்ளக் கூடாதே என்கின் அச்சத்தில் அழுந்தி, ஊர்ப்பெண்களுக்கு நீதி உரைக்காதே நான் இந்திரன் பத்தினி இந்திரனே என் புருஷன் கெளதமன் நயவஞ்சகத்தால் என்னைக் கையாண்ட கள்ளவழி என்மேனியை கெளதமன் நாசி ஒருபோதும் நுகர்ந்தது உண்டா? என் இதழின் கற்பூரச் சுவையை அந்த மெழுகு அறிந்திருக்குமா என் மேனியின் நுட்பங்களை அந்த அந்தகன் கண்டிருப்பானா? வாழ்வில் ஒருமுறை? என் தேகத்தின் சங்கீதத்தை அவன் காதுகள் கேட்டதோ ஒருமுறையேனும்? என் சிறகுகளை அரிந்தவனே கௌதமன் பசுவுக்கு எதற்கு முழுத்தேங்காய்?”
ராமன் தனக்குள் மகிழ்ந்து கொண்டான். தாடாகையை நியாயமற்றுக் கொல்லச் சொன்ன விஸ்வாமித்திரன் அகல்யாவுக்கு முன் தலை கவிழ்த்து நிற்பது அவனுக்கு நியாயமாகத் தோன்றியது.
மேற்கூறியவாறாக, பெண்நிலைவாத நோக்கில் பிரபஞ்சன் கண்ட அகல்யை முற்கூறப்பட்ட கதைகளில் வரும் அகல்யைகளைவிட தனது மன உணர்வுகளை வெளிப்படையாகவும் ஆக்ரோஷத்துடனும் வெளிப்படுத்துவதை அவதானிக்கின்றோம்.
இவ்வாறே பிரபஞ்சகன் கண்ட 'சீதையும் இரு சந்தப்பங்களில் நெருப்பாகத் திகழ்கின்றான் படைவர்களுக்கு மத்தியில் சீதையை இழிவுபடுத்திய இராமன் அக்கினிப்பிரவேசம் செய்யும்படி கட்டளையிடுகின்றான். அவ்வேளை நடைபெறும் நிகழ்ச்சியும் உரையாடலும், பின்வருன."
“ராமா. நான் அக்னிப் பிரவேசம் செய்தே ஆக வேண்டுமா?” “ஆம் . என்னை விட்டு நீங்கிய பிறகு, ராவணன் அரண்மனையில் நீ சுத்தமாகத்தான் இருந்தாய் என்பதை நிரூபிக்கவேண்டும்.”
நல்லது நான் நிரூபிக்கிறேன். அதே போல் என்னை விட்டுப்பிரிந்து இருந்த
காலத்தில், நீ தூய்மையாகத்தான் இருந்தாய் என்பதை எப்படி நிரூபிக்கப் போகின்றாய்?
என்ன? அதிர்ச்சியில் காலம் உறைந்தது சுற்றி நின்ற ஆண்களின் முகம் இறுகியது. சீதாசாவதானமாக லட்சுமணனிடம் சொன்னாள்.
12

லட்சுமணா, அண்ணனின் உண்மைத்தம்பியே, இன்னொரு தீயை வளர்த்து . எதற்கு அண்ணி ராமன் அவனுடைய தூய்மையை, அக்கினிப் பிரவேசம் செய்து நிரூபணம் செய்ய"
எனினும் இராமனது சந்தேகசுபாவமும் சந்தோஷமற்ற நிலையும் பின்பும் தொடர்ந்தன. ஓரிரவு அவன் தாங்காத நிலையில் கதை முடிவில் பின்வரும் சந்தேகம் நிகழ்கின்றது. "ராமா. ஏன் உறங்கவில்லை. என்ன நேர்ந்தது. உனக்கு? மண் விசாரம் சக்கரவர்த்தி ராமனுக்கு விசாரம் ஏன்? உலகம், என்மன் என்னைப் புகழ்கின்றது. என் பின்னால் இகழ்கிறது. கேவலமாகச் சிரித்துப் பேசுகின்றது. ஏன் உன்னை இகழவேண்டும்? மாற்றான் மனையில் பத்துமாதங்கள் இருந்தவளைச் சேர்த்துக் கொண்டானே என்று ஜனங்கள் பேசுகின்றார்களாம். இந்தக் குழந்தைகள் என் குழந்தைகள் எனவென்றும் சொல்கிறார்களாம். சீதா ராமனின் முகத்தை பார்த்தாள். புழு ஒரு புழு அங்கு ஊர்ந்தது. சீதாவுக்கு அருவருப்பால் உடம்பெல்லாம் நடுங்கியது. அவன் தொட்ட இடம் எல்லாம் அவன் படர்ந்த இடம் எல்லாம் எரிந்தது அவளுக்கு. இவனா எனக்குத் துணை? இவனா என் புருஷன்? இவனா என் ஆண்? உடம்பெல்லாம் கூசியது சீதாவுக்கு. சீதா என்ன யோசிக்கின்றாய்? இனியும் புழுதியில் புரண்டு சாக்கடையில் நீராட வேண்டுமா என்று யோசிக்கின்றேன். அன்று இரவே, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறாள் சீதை”
பிரபஞ்சனின் நளாயினி' கதையிலே மேற்கூறிய பாத்திரங்கள் போன்று மன உணர்வுகள் சிறப்பாக வெளிப்படுத்தப்படவில்லையாயினும், கதையின் முடிவு அக்குறையை ஒரளவு ஈடுசெய்துள்ளது. அது இதுதான்*
“பெண்ணே, நீ உத்தமி. பதிவிரதா சிரோன்மணி பத்தினிகளுக் கெல்லாம் நீயே தலைவி நீயே வாழும் பெண்களுக்கெல்லாம் வழிகாட்டி, தெய்வமாகும் தகுதி உனக்கே உண்டு. போகிறது. நளாயினி நீயே கற்பரசி எனக்குச் சிரிப்புத்தான் வந்தது ஏன் சிரிக்கிறாய்? “உன் பாராட்டுக்களால் என் இழப்பை
இட்டு நிரப்ப முடியுமா?
உன் இழப்புத்தான் என்ன?
வாழ்க்கை சகோதரி வாழ்க்கை
என்றேன் நான்”
13

Page 12
தமிழில் பிரக்ஞைபூர்வமாக பெண்நிலைவாத நோக்குடன் எழுதிய பெண் எழுத்தாளர்களுள் முதலிடம் பெறுபவரான அம்பை, அத்தகைய படைப்புகளை கலையழகுடன் எழுதியவரென்ற பெருமைக்குமரியவர் அம்பை எழுதிய சிறுகதையான 'அடவி'யில் சீதை முற்றிலும் புதியதொரு கோணத்தில் மறுவாசிப்பிற்குட்படுகின்றாள். அடவியில் நிகழ்காலத்தில் நிகழ்கின்ற கதைக்குள் கதையாக சீதை வரலாறு ஒரு பெண்ணால் எழுதப்படுகின்றது. (பிரஞ்சன் கதையில் வருவது போன்று) சந்தேகம் மிகுந்தவனாக இராமனதும் உறவினரதும் செயற்பாடுகள் சீதையை நீண்ட நடைப்பயணத்திற்குத் தூண்டுகின்றன. வழியில் அவள் இராவணனைச் சந்திக்கிறாள். கதை இவ்வாறு முடிவுறுகின்றது"
“இன்னுமா என்மேல் மோகம்? எத்தனையோ சோகங்களை அனுபவித்துவிட்டேன். பகடைக்காய் வாழ்க்கை வாழ்ந்து விட்டேன் சோர்ந்து விட்டேன். தளர்ந்து விட்டேன். நாற்பது வயதைக் கடந்துவிட்டேன். இப்போதுதான் ஒரு பெண்ணுக்கு நண்பன் தேவை உடல் மாற்றங்களால் அல்லலுறும் அவசரத்தாங்கள் அவளுக்குச் சேவகம் செய்ய உற்சாகமூட்ட தூரத்தில் நின்று அவளை ஊக்கப்படுத்த சீதை கீழே அமர்ந்தாள். “எந்தத் தருணத்திலும் நான் நட்பை மறுத்ததில்லை. போருக்கு முன் பூசை செய்யவிரும்பினான் ராமன். இருவர்தான் பூசையை நடத்தித்தர முடியும். ஒன்று வாலி இன்னொன்று நான் வாலியைத் தன் கையாலேயே கொண்றாகிவிட்டது. எஞ்சியது. தான் எனக்கு அழைப்பு விடுத்தான். நான் சென்றேன். அவன் விரும்பி வாழ்த்தினான்.” என்றான். சீதை முதல் முறையாக அவனைப் பெயரிட்டு விளித்தாள். இராவணா, சொற்கள் என்னைச் சோரவைக்கின்றன. மொழி என்னை முடக்கிப் போடுகின்றது. உடலால் பிணைக்கப்பட்டு இருக்கிறேன்.
ராவணன் சிரித்தான். “உடல்தான் சிறை உடல்தான் விடுதலை” என்றான். பார் என்று தன் ருத்ரவீணையைக்காட்டினான். பார்வதி மல்லாந்து படுத்திருந்தபோது அவள் இரு கொங்கைகளைக் குடங்களாக்கி அவற்றின் முதடுகளைத் தந்திகளால் இணைத்தால் ஒரு அபூர்வ வாத்தியம் அமையுமே என்று எழுந்த கற்பனையில் தோன்றிய இசைக்கருவி இது தேவியின் உடம்பின் நீட்டி சிவனின் வில்லையே ஒரு கையால் தூக்கியவன் நீ. இந்த வீணையை நீ எளிதாக ஆள முடியும் முயல்வாயா?
14

எனக்குக் கற்றுத்தர முடியுமா? உனக்காகப் போர் செய்து தோற்றவன் இசையையா தர மறுப்பேன்? நிதமும் பயிற்சி தருகிறேன் உன்குரவாக இருந்து. இந்த வனமெங்கும் அந்த இசையின் ஒலி உடைப்பெடுத்துப் பாயட்டும். இதைச் சாதாரண வாத்தியமாக நினைத்து விடாதே. இதை உன் வாழ்க்கையாக எண்ணி இதை வாசி. இந்தாருத்ர வீணையை தன் மடியிலிருந்து எடுத்து அவள் பக்கம் நீட்டினான். அது கீழே தலையிலேயே இருகட்டும் என்றாள் சீை
y sir? அது என் வாழ்க்கை இல்லையா? பல கைகள் பந்தாடிய வாழ்க்கை அதை நானாகவே என் கையில் எடுத்துக் கொள்கின்றேன்” என்று விட்டு ருத்ரவீணையை தன் மடியில் வைத்துக்கொண்டாள் சீதை,”
ஆக, தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு பெண்எழுத்தாளர் பெண் என்ற நிலை நின்று (நானறிந்த வரையில் முதன்முதலாக இதிகாசபாத்திரங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்திகின்றநிலையில் பெண்ணொருத்தியின் சீதையின் மன உணர்வுகள் உன்னதமான முறையில் வெளிப்படுவதனை மேலுள்ள பகுதி நன்கு புலப்படுத்துகின்றதென்பதில் ஐயத்திற்கிடமில்லை. (இவ்விதத்தில் இதுவரை கவனித்த படைப்புகளுடன் இப்படைப்பினை ஒப்பிட்டு நோக்குவதும் சுவையானது: பயன்மிக்கது)
ஈழத்துப் படைப்புகளில்
இனி, ஈழத்துப் படைப்பாளர்கள் பற்றிக் கவனிப்போமாயின் இங்கு இதிகாசங்கள் நவீன நோக்கிலே பார்க்கின்றபோக்கு முக்கியத்துவமற்ற தொன்றாக உள்ளமையை முதலில் நினைவுகூரவேண்டியேற்படும். (இதற்குரிய காரணங்கள் பற்றிச் சிந்திப்பதற்கு ஏற்ற இடம் இதுவன்று). ஆயினும் இதிகாசப் பாத்திரங்களுள் அகல்யை சில படைப்பாளர்களை ஈர்த்துள்ளமை கண்கூடு. இத்தகையோருள் கணிசமான தமிழ் நாட்டுப்படைப்பாளர்போல் பல்வேறு காரணங்களாலன்றி நவீன இலக்கியப் பிரக்ஞை காரணமாக மட்டுமே இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பது முதலிற் கவனத்திற்குரியது.
மேற்கூறியோருள் முதலில் மு. தளையசிங்கம் எழுதிய சிறுகதையான
உள்ளும் புறமும் கவனிக்கப்பட வேண்டியது. இது சாபவிமோசனத்துக்குப்பின்
அகலிகைக்கு இருக்க வேண்டிய மனப்போராட்டங்களை உடல்சார்ந்த, உளஞ்சார்ந்த
போராட்டங்களை உளவியல் நோக்கில் சிறப்புற வெளிப்படுத்துகிறது. அகல்யை
மட்டுமன்றி கெளதமரும் அவ்வாறேதான் அணு கப்படுகின்றார். ஆயினும், ஏனைய 15

Page 13
எந்தப் படைப்பாளிகளிலிருந்தும் வேறுபட்டு வேதாந்த நோக்கிலும் அகல்யை கெளதமரது செயற்பாடுகளை எடுத்தாளர் அணுகுகின்றபோது அதுகதையின் பலமாகவும் பலவீனமாகவும் அமைந்துவிடுவதை அவதானிக்கலாம்."
சில்லையூர் செல்வராசனின் அகலிகை சாபம் (கவிதைநாடகம்) இன்னொரு தளத்தில் இயங்குகின்றது? சாபவிமோசனம் பெற்ற பின்பும் இந்திரன் பற்றிய பயம் அவளைவிட்டு அகலவில்லை. தன்னை நாடிவரும் கெளதமரை இந்திரனாக நினைப்பதும் அத்தகைய நினைவுஎழுதுவதை கெளதமராலோ அவளாலோமாற்றமுடியாதிருப்பதும் பெருந்துயரமாகின்றது. இறுதியில் அஃது சாபமிடுகின்ற நிலையை உருவாக்கிவிடுகின்றது.
இ. இரத்தினம் எழுதிய பாவவிமோசனம்' என்ற (வானொலி நாடகம்) அகல்யை பற்றிய படைப்பு வ. ரா. வின் படைப்புப்போன்றே சுவாரஸ்யமானது. நீதிமன்றமொன்றிலே இந்திரன், கெளதமர், அகலிகை ஆகியோர் விசாரிக்கப்படுகின்றனர். வான்மீகி, கம்பர்,வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் சாட்சியம் சொல்கின்றனர். காட்சியங்களுள் எதை நம்புவது என்று சபையோருக்குத் தெரியவில்லை பெண்ணுக்கிழைக்கப்பட்ட அநீதி பெண்ணொருத்தியூடாக நாடகத்தின் பிற்பகுதியிலே கூறுப்படுகின்றது. ஆயினும் நாடகத்தின் அடிப்படைக்கருத்து உண்மையை அறிய இயலாது என்பதே.*
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவரான சம்பந்தன் அகல்யை தெய்வீக நோக்கிலேயே அணுகப்பட்டுள்ளனர். இவ்விதத்தில் சம்பந்தன் இந்தியப் பாரம்பரிய நோக்கினை மீள வற்புறுத்துகின்றவராகக் காட்சிதருகின்றார்.
அண்மைக்காலத்தில் ஈழத்தில் வெளிவந்த அகல்யை தொடர்பாக படைப்புகளுள் இரண்டு கவனத்திற்குரியன இவற்றுள் தேனூரானின் அகலிகை (நாட்டுக்கூத்து) கெளதமர் இந்திரன் சந்திப்பை உருவாக்கி அவ்விருவருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதத்தை இடம்பெறச் செய்வது பாராட்டிற்குரியதேனும் இறுதியில் இந்திரன், கெளதமரிடம் மூவுலகிற்கும் அகலியின் சிறப்பை கூறுகின்றபோது அப்படைப்பின் முக்கியத்துவம் இழந்து விடுகின்றது.*
மற்றொன்று, ந. பார்த்திபன் என்பவரெழுதிய அகலிகை என்ற சிறுகதை இக்கதையில் வரும் அகலிகை தான் பெற்றவேளையில், கெளதமருக்கு அவரது தவறைச் (சாமக்கோழி கூவியதனை அறியாமல் சென்று, இந்திரனுக்கு வாய்ப்பளித்தமை) சுட்டிக்காட்டுகின்றாள் இதனால் தன்தவறை உணர்ந்த கெளதமர், அகலிகையின் தூய்மையை உணர்ந்தமை காரணமாக சேர்ந்து வாழும் முடிவிற்கு வருகின்றார்.*
16

அதேவேளையில் மிக அண்மையில் தமிழ் நாட்டில் வெளிவந்த டிங்கர கப்பிரமணியனின் அகல்யை பற்றிய கதை கவனத்திற்குரியது. படிசிறப்புகள் கொண்ட அக்கதையின் இறுதிப்பகுதியை மட்டும் நோக்குவோம்."
"உனக்கு என்ன தெரியும்? ஏன் குடிலில், எனக் கருகில் எவனோடோ புரண்ட உனக்கு என்னதெரியும்? அகலிகை மரத்துப்போனாள் அசைவற்ற மரப்பட்டை போன்ற தோற்றம் மார்பு விம்மி முறுங்கியது.
'எனக்குத்தெரியும். பசும் புதர்களிடையே அண்டியவாறு வேட்டுவச்சியின் திறந்த மார்பைப் புணர்ந்த உங்கள் வழிகளைத்தெரியும் என்ன சொல்கிறாய். நான் கௌதமன் ரிஷி அனைத்தும் அறிந்தவன். சகல உலகமும் கரைத்துக் குடித்தவன். நான் நான் நான் நீங்கள் என்னுடைய வெறும் புருஷன் நிறுத்து அகலிகை வேண்டாம். போ, முடிவில்லாத தொலைவுக்கு அப்பால்போ பேசாதே சகிக்க இயலாதவளாய் இருக்கிறாய். தயை கூர்ந்து என்றைக்குமாக போய்விடு. உஷ்ணத்தின் உச்சம் நாக்கின் தாண்டவனம் சாபம் கல்லாய்போ அவர் கரம்வாயை அடைப்பதற்குள் விழுந்து விட்டது. வெறும் வாயை பொத்தி நின்றார். பொத்திய கை இறங்கவில்லை. 'என் அருமை அகலிகையே என முணுமுணுத்தார். மெல்லக் கல்லானாள். கால், இடுப்பு, தோல் எல்லாம் முடிந்து முகம் மட்டும். என் பிரிய அகலிகையே நான் சொல்லவில்லை என்னம் ஏந்தினார் விரலிடுக்குகளில் சதை அமுங்கியது. பேசு அகலிகை ஏதாவது சொல்லிவிடு. வெறுமையான முகத்தில் ஒரு சிரிப்பு ஓடியது. உதட்டில் சின்னச் சுழிப்பு தெரிந்தது. விரலிடுக்கில் சொரசொரப்பான கல் சொருகியது. கை பிரித்தார். நீருள் விழுந்தது. உருண்டையான கல் இரண்டு மூன்று நீர்வட்டம் அந்தச் சிரிப்பு அதன் பொருள் அந்தச் சுழிப்பின் நேர்த்தி என்ன அது ஆற்றின் தலையில் கல் உருண்டுபோக அடி நீச்சல், கெளதமன் இயங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு கல்லாய் அகற்றி அகற்றி இதில் ஏது அவள் ஏது என்னுடைய பிரியமான அவள் . தீராத நீச்சல் மேலே நட்சத்திரம் கொழுத்த ஆகாயம் கீழே நட்சத்திரம் கொழுத்த ஆறு”
17

Page 14
[ւրt գճlկնճiՍ
இறுதியாக இதுவரை அவதானித்தவற்றை தொகுத்து சுருக்கமாக
நினைவுகூருவது பயனுடையது. இவ்விதத்தில் பின்வரும் விடயங்கள்
முதன்மையுறுகின்றன:
(i)
(i)
(iii)
(iv) (v)
(vi)
(vii) (vii)
(ix)
(x)
(xi)
எமது கவனத்திற்குட்பட்ட படைப்பாளருள் இருவர் தவிர (ந. பிச்சமூர்த்தி, சம்பந்தன்) ஏனையோர் தத்தம் காலங்களில் முனைப்புற்றிருந்த பின்வரும் இயக்கங்களின் செல்வாக்கிற்குட்பட்டவர்களாய் காணப்படுகின்றமை. (அ) சமூகச் சீர்திருத்த/இந்தியவிடுதலை சார்ந்த இயக்கங்கள் (ஆ) திராவிட திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் (இ) மார்க்சிய இயக்கம்
(ஈ) பெண்நிலைவாத இயக்கம் அடிப்படையில் பெரும்பாலான படைப்புகளில் நவீன உளவியற்சிந்தனையின் செல்வாக்கு வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றமை அவ்விதத்தில் பாத்திரங்களின் செயற்பாடுகள், உணர்வுகள் முக்கியம் பெறுதல்.
அவைமுக்கியம் பெற்றளவு சமூக உணர்வு முக்கியம் பெறாமை, பாத்திரங்கள் என்று கவனிக்கின்றபோது குறிப்பாக, அகல்யை கதையில், அகல்யை கெளதமர் பெற்ற முக்கியத்துவத்தினை இந்திரன் பெருமை அகல்யை - கெளதமர் உறவுநிலை விமர்சனத்திற்குட்பட்டளவு கற்பு ஒழுக்கம் சார்ந்த விடயங்கள் விமர்சிக்கப்பட்டமை. கற்பு பற்றிய நவீன காலத்திற்கேற்ற கண்ணோட்டம் பல படைப்புகளில் வெளிப்பட்டமை. பெண் உரிமைக்குரல்கள் பெரும்பாலான கதைகளில் மனத்துள்
மனக்குமுறளவில் இடம்பெறுதல்.
பெண்நிலைவாதச்சிந்தனை பரவியபின் வெளிவரும் படைப்புகளின்
உணர்வு வெளிப்பாடு நயமுற இடம்பெறுதல். இதிகாசக்கதைகளை மறுவாசிப்புச் செய்கின்ற முயற்சியில் பெண் எழுத்தாளர்கள் அபூர்வமாக ஈடுபடுதல். ஈழத்து எழுத்தாளர்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது ஒப்பீட்டுரீதியில் மிகக் குறைவாக உள்ளமை.
மேற்கூறிய விடயங்களுள் பல விரிவான தொடர்ச்சியான ஆய்விற்குரியவை.
அவற்றுள் சில, (எ-டு: Vi, Vii, X, Xi) சுவையான விவாதங்களுக்கு எம்மை
அழைத்துச் செல்பவை
18

அடிக்குறிப்புகள்
(),
()?
03.
ாகலாசபதி, க, அடியும் முடியும், குமரன் வெளியீடு, சென்னை, 1996, பக். 114 -195, அகலிகையும் கற்புநெறியும் என்ற தலைப்பிலே முக்கியமானதொரு ஆய்வினை கைலாசபதி நிகழ்த்தியுள்ளமை இலக்கிய ஆர்வலர் அறிந்த விடயமே. இக்கட்டுரையிலும் சில கருத்துகள் இவ்வாய்விற்குப் பயன்பட்டுள்ள அதேவேளையில் அதிலிடம்பெறாத புதிய கருத்துக்கள் புதிய பல தகவல்களும் இவ்வாய்விலே இடம்பெற்றுள்ளமை
கலகணத்திற்குரியது. தலைப்பு
அகலிகை வெண்பா {
அகலியா அகல்யை சாப விமோசனம் அகலிகைக் கதை கோதைத் தீவு அகல்யை அகல்யை மாசறு கற்பினள்
nusi Loass6T கல்லியை நளாயினி அகல்யை
சீதை
நளாயினி
அடவி உள்ளும் புறமும் பாவ விமோசனம் அகல்யை சாபம் அகல்யை 956.6DLU அகல்யை அகல்யை நட்சத்திரம் கொளுத்த ஆகாயம்
எழுத்தாளர்
சுப்பிரமணியமுதலியார் சு. து. யோகியார் புதுமைப்பித்தன் புதுமைப்பித்தன் ராஜாஜி
6. Tf
(e5. J. JIT எம். வி. வெங்கட்ராம் பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) ந.பிச்சமூர்த்தி
ஞானி
மு. கருணாநிதி பிரபஞ்சன்
பிரபஞ்சன்
பிரபஞ்சன்
9th60)u மு. தளையசிங்கம் இ. இரத்தினம் சில்லையூர் செல்வராஜன் மஹாகவி
சம்பந்தன்
தேனுரான் ந. பார்த்திபன் சங்கர சுப்பிரமணியன்
வெள்ளைக்கால் }
இலக்கிய வடிவம்
கவிதை
கவிதை
சிறுகதை சிறுகதை சிறுகதை
நாவல்
நாடகம்
சிறுகதை சிறுகதை புதுக் கவிதை புதுக் கவிதை சிறுகதை சிறுகதை சிறுகதை சிறுகதை சிறுகதை சிறுகதை வானொலி நாடகம் வானொலி நாடகம் கவிதை
சிறுகதை
கூத்து
சிறுகதை சிறுகதை அகல்யை
க. இரகுபரன் (அகலிகை பற்றி அமைந்த ஆக்கங்களின் தொகுப்பு) அகில இலங்கை கம்பன் கழகம், யாழ்ப்பாணம், 1994 பக், 197, அகலிகை தொடர்பான படைப்புகள் பலவற்றையும் கொண்ட இத் தொகுப்பு நூல் சில வருடங்கள் முன்னர் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நூலிலே அகல்யை பற்றிய ஒன்பது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பிலே இடம்பெறும் படைப்புகள் தவிர, மேலும்
பதினொரு படைப்புகள் இவ்வாய்வாளருக்கு கிடைத்துள்ளன.
19

Page 15
04.
05.
06.
O7.
08.
09. மே. கு. நூ, பக். 74 - 17. 10. மே. கு. நூ. பக். 130. 11 மே, கு. நூ. பக். 150. 12. ராஜ்கௌதமன், புதுமைப்பித்தன் என்னும் பிரமராசஷஸ், தமிழினி, சென்னை, 2000,பக்.71 13. கு.ப.ரா, ஆத்மசிந்தனை, அல்பொன்ஸ் கம்பனி, சென்னை, மு. ப. 1986, பக். 29-30. 14. எம். வி. வெங்கட்ராமன், வியாசர்படைத்த பெண்மணிகள், தமிழ்ப் புத்தகாலயம்,
சென்னை, மு. ப. 1986, பக். 56. 15. பே. கோ. சுந்தராசன் (சிட்டி), தாழையூத்தது அன்னம் (பி)லிமிட், சிவகங்கை, மு.ப.பக்-137. 16. மு.கருணாநிதி, கருணாநிதி கதைகள், பூம்புகார் பிரசுரம், சென்னை, மு.ப. 1978,பக். 47 17. பிரபஞ்சன், பெண், தமிழ்ச்சங்கம், சென்னை, மு. ப. 1997, பக். 30-37. 18. மே. கு. நூ. பக். 30 - 37
(அ) மே. கு. நூ. பக். 103 - 107 19. அம்பை, காட்டில் ஒரு மான், காலச்சுவடு பதிப்பகம், மு. ப. 2000,பக். 136 - 168. 20. க. இரகுபரன் மு. கு. நூ. பக். 153 - 187. 21 செல்வராசன், சில்லையூர், சில்லையூர் செல்வராசன் கவிதைகள், மு.ப.1997,பக்.107-113. 22. க. கைலாசபதி, மு. கு. நூ. 23. தேனூரன், தேனூரானின் அகலிகை, களுதாவளை, மு. ப. 1996, பக். 11 24. ந. பார்த்திபன், அகல்யை, தடாகம் (சஞ்சிகை) ஜன, பெப்.2000, கண்டி, பக் 25-28. 25. சங்கரசுப்பிரமணியம், நட்சத்திரம் கொளுத்த ஆகாயம், சொல்-4,ஏப்யூன் 2000,பக்.72-76 உசாத்துணைநூல்கள் 01. அம்பை (2000), காட்டில் ஒருமான், காலசுவடு பதிப்பகம் 02. க.இரகுபரன்,(1999) தொகுப்பாசிரியர் அகலிகை, அகில இலங்கைக் கம்பன் யாழ்ப்பாணம். 03. மு.கருணாநிதி (1978) கருணாநிதி கதைகள் பூம்புகார்பிரசுரம் சென்னை. 04. குடந்தையான், கவிஞர் (1996), கற்பெனும்கிறையினிலே, நியூசெஞ்சரி புக்ஹவுஸ்
(பி)லிமிட், சென்னை. 05. கு. ப. ரா (1986), ஆத்மசிந்தனை, அல்பொன்ஸ் கம்பனி, சென்னை. 06. க. கைலாசபதி (1970), அடியும் முடியும், பாதரிநிலையம், சென்னை. 07. சங்கரசுப்பிரமணியன் (2000), கணையாழி (ஏப்பிரல் - ஜூன்), சென்னை. 08. சம்பந்தன் (1997), தர்மவதிகள், வெளியீட்டாளர்: க. இராஜநாயகம், தெகிவளை. 09. பெ. கோ. சுந்தரராசன், (சிட்டி) (1991), தாழையூத்தது, அன்னம் (பி)லிமிட், சிவகங்கை. 10. செல்வராசன், சில்லையூர், (1997) சில்லையூர் செல்வராசன் கவிதைகள், கொழும்பு 11 தேனூரான், (1996) தேனூரனின் அகலிகை, களுதாவளை. 12. பார்த்திபன். ந. (2000) தடாகம் (ஜனவரி - பெப்ரவரி), கண்டி, 13. பிரபஞ்சமன, (1997) பெண், தமிழ்ச்சங்கம், சென்னை. 14. டாக்டர். இரா. பிரேமா, (1998) கற்பு - கலாசாரம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. 15. ராஜ்கெளதமன், (2000) புதுமைப்பித்தன் என்னும் பிரம்மாராஷஸ், தமிழினி, சென்னை. 16. வெங்கட்ராம்.எம்.வி.(1966)வியாசர்படைத்தபெண்மணிகள்,தமிழ்ப்புத்தகாலயம்,சென்னை.
க. இரகுபரன், மே. கு. நூ. பக். 198.
க. இரகுபரன், மு. கு. நூ. பக். 206. கம்பராமாயணம், பாலகாண்டம், வை.மு.கோ.வரை, சென்னை (ஏழாம்பதிப்பு)1996,பக். 398. க. இரகுபரன், மு. கு. நூ. பக். 13-59 மே. கு. நூ, பக். 61 - 73.
20

முண்டுர் அசோகாவின்
உறவைத்தேழு. ஒருவிமர்சனம்
- ക്രമഗ്രിബ്ബണു് ക്രഖക്രമന്ന്
10ணித மூளையை வினோதமானது எனச் சொல்கிறார்கள். ஒருவன் அல்லது ஒருத்தி பிறந்த உடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகிறது. ஆனால், அவன் அல்லது அவள் எப்போது இதுமாதிரி பொதுக் கூட்டங்களில் பேச ஆரம்பிக்கிறாரோ, அப்போது-வேலை செய்வதை நிறுத்தி விடுகிறது என்கிறார்கள். அதனால் எப்போதும் நான் இப்படி உரையாற்ற நேரிடுகிற சமயங்களில் அதாவது இந்த நேரத்தில் சிந்திக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை. ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்ததை மட்டுமே பேசுவது என்பதில் தீர்மானமாக இருக்கிறேன்.
இப்படி எழுதியதை வாசிப்பதில் உங்களுக்கு நேரப்போகும் சலிப்பிற்காக முதலில் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த 10 கதைகளையும் பற்றி மட்டும்தான் பேசப் போகிறேன் என்பது உங்களுக்குக் கிடைக்கப் போகும் சின்ன ஆசுவாசமாக இருக்கலாம். ஏனெனில் அட்டை அமைப்பின் அழகைப் பற்றியோ பிழைகளற்ற அச்சு நேர்த்தி பற்றியோ, முன்னுரையின் முக்கால் வாசிப் பகுதியைத் திரும்பச் சொல்லி விவாதித்தோ இந்த உரையினை ஒப்பேற்றிவிடும் கொடுப்பினை எனக்கு வழங்கப்படவில்லை. Proof க்கு திருத்தத்திற்கு அனுப்பட்ட தாள்களிலிருந்தே 10 கதைகளையும் நான் படித்தேன். எனவே கதைகளைப் பற்றியே நான் பேசமுடியும்.
இந்தக் கதைகள் தவிர்ந்து, இதற்கு முன்னரான ஆசிரியரின் எழுத்துக்களையும் படித்துப்பார்க்க விருப்பம் கொண்டு கேட்டேன். 93ல் வெளியான சிறகொடிந்த பறவைகள் தொகுப்பு இரத்தின வேலோன் அவர்களிடமிருந்து கிடைத்தது. என் பள்ளிக்கூடக் காலத்தில் அந்தக் கதைகளில் சிலதை வாசித்திருக்கிறேன். இருந்தாலும், கதை சொல்லும் எல்லாச் செய்திகளையும் புரிந்து கொள்ள முடியாத, வெறும் கதைச் சுவாரசியத்திற்காகவே படித்து மறந்த காலம் அது. என்பதால் இப்போது கட்டாயம் மீண்டும் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். தவிரவும், எல்லா விஷயங்களும் எல்லாக் காலத்திலும் ஒரே முக்கியத்துவ முடையவையாய் அமைந்து விடுவதுமில்லை.
2

Page 16
முன்னைய தொகுதியிலுள்ள கதைகள் பெண்நோக்கிலான சமூகப் பிரச்சினைகளைச் சொல்வதாக இருக்க, இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் போர்க்காலச் சூழலில் உள்ள அவலங்களைப் பேசுகின்றன.
சிறகொடிந்த பறவைகள் தொகுதித் தலைப்பை, பிரபல பெண்ணிய எழுத்தாளரான அம்பையின் 'சிறகுகள் முறியும் என்ற தலைப்போடு சேர்த்துப் பார்த்துக் கொள்ள முடியும். சிறகொடிந்த பறவைகள் தொகுதியில் உள்ள கதைகளைப் படித்தபோதே என்னைக் கவர்ந்த அம்சம் பெண்களுக்கு சமூகம் தரும் நெருக்குதல்களை அவலங்களை மட்டும் சொல்வதோடு நின்றுவிடாது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூக நிர்பந்தங்களைப் புறங்கண்டு, பெண் எடுக்க வேண்டிய முடிவுகளைத் தன் பாத்திரங்களின் - வாழ்க்கையின்இயல்பாகக் காட்டிவிடும் தன்மை. அதாவது, அது நமக்கு அந்நியமான நியாயத்தால் மனதுக்குச் சம்மதமாக இருத்தல்.
இத்தகைய வாசகமனச் சம்மதம்,தன் மெளன இயக்கத்தின் மூலமே மொத்த சமூகத்தின் அடிமனத்தையும் புரட்டக்கூடும் என்று நான் நம்புகிறேன். புரண்ட மனங்கள் சமூக விவாதங்களை உருவாக்கும். அதிலிருந்துதான் சமூகம் முன் நகரும்.
இன்றைய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துத் தாங்க முடியாத எரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கெல்லாம், சிறகொடிந்த பறவைகள் தொகுதியிலுள்ள கதைகளைப் படிப்பது, எவ்வளவோ ஆசுவாசமாக இருக்கும் என்பதையும் ஒரு நற்பிரசாரமாகச் சொல்லி வைக்க விரும்புகிறேன். பெண்ணைக் கசக்கிப் பிழிந்து சோகக் கடலில் தத்தளிக்கவிடும் சின்னத்திரைச் சித்திரவதைகளை அனுபவித்த பிறகு சிறகொடிந்த பறவைகளிலுள்ள கதைகளைப் படித்தது, எனக்குப் பெரிதாய் ஆறுதல் தந்த அனுபவம் எனலாம்.
விளம்பரங்களிலும், மாநாடுகளில் குத்துவிளக்கேற்ற உதவி செய்யவும், பரிசளிப்பு விழாக்களில் பரிசுப்பொருள் எடுத்துக் கொடுக்கவும் என்று மட்டுமல்லாது அவற்றையெல்லாம் விடப் பெரிய வியாபாரப் பொருளாகத் தொடர் நாடகக் கதைகளில் பெண் பயன்படுத்தப்படுவது பாதிச் சமூகத்திற்காவது இன்னும் ஏன் எரிச்சல் ஏற்படுத்தவில்லை? பொறுமையின் சிகரமாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக சோகத்திலேயே பெண் தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் கதை எழுதுவதற்கு சோகங்களின்றிப் போய்விடுமோ என்ற பயத்தில், அதையெல்லாம் தாண்டுவதற்குச் சிந்திக்கவே கூடாதென்று சோகரசத்தைப் பிழிந்துற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
22

மாமியாரால், கணவனால் குரூர சித்திரவதைக்குள்ளாகும் பெண் என்ன மாதிரி முடிவெடுப்பாள்? “என்னை இன்னுமின்னும் சித்திரவதை செய்யுங்கள்” அப்போது தான் மேலும் மேலும் என் பொறுமையைக் காண்பித்து, பெண்ணின் பெருமையை இவ்வுலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று விரும்பிக் கேட்டுக் கொள்வதைப் போலத் தொடர்கள் கதை சொல்லுகின்றன.
இதுதான் பெண்கள் விரும்பும் நாடகங்கள் என்று யார் யாரெல்லாம் முடிவு செய்கிறார்கள்? இந்த மாதிரித் தொடர்களை எடுப்பவர்களில் பாதிக்குப் பாதிப் பெண் தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள் என்பது வேறு பயமூட்டுவதாக இருக்கிறது. ‘உறவைத்தேடி தொகுப்பில் ஒரு கதையைத் தவிர ஏனைய ஒன்பது கதைகளுமே 90 களுக்குப் பிறகு எழுதப்பட்டவை. முந்திய தொகுதியிலுள்ள கதைகளிலிருந்து அல்லது 70 களில் ஆசிரியர் எழுதியிருக்கும் கதைகளிலிருந்து 90 களில் எழுதியுள்ள கதைகளில், கதைசொல்லும் முறையில் மாற்றங்கள் கூடி வந்திருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஏ சமூகமே!’ என்று விளித்தோ, விளியாமலோ கதை நடுவே குற்றப்பத்திரம், நீதி வியாக்கியானம் அல்லது கேள்விகளையோ வீச விரும்பும் முறையிலிருந்து கடந்து வந்துவிட்டிருக்கிறார்.
படைப்பின் விதை, கலைஞன் வாழ்க்கையின் மீது கொள்ளும் விமர்சனத்திலிருந்தே முளை விடுகிறது. அந்த வகையில், பிற்காலக் கதைகள் போர்க்காலச் சூழலின் பிரதிபலிப்புக்களாய் அமைவதில் வியப்பில்லை ஆனால், வெறும் பிரதிபலிப்போடு கலை வெற்றியடைவதில்லை. அனுபவமானது கலைஞனுடைய ஆளுமையின் பாதிப்பைப் பெற்றே கலையாகிறது. பிறப்பு, வாழ்ந்த காலம், இடம், நம்பிக்கைகள், சார்ந்து நின்ற கோட்பாடு. எல்லாம் அவரது ஆளுமையின் பாகங்கள் ஆகும்.
இலக்கிய வாதிக்கும் மக்களுக்கும் பொதுவான வாழ்க்கை உள்ளது. அந்த வாழ்க்கையைப் பற்றி மக்களுக்குத் திருப்தி இல்லை. குறைகள் கொண்ட இந்த வாழ்வை இலக்கியவாதி அம்பலப்பபடுத்துகிறார்; விமர்ச்சிக்கிறார்; இதிலிருந்து மீள - மேலான எண்ணங்களை உருவாக்க முயல்கிறார். இதனால் வாசகர்களுக்கு எழுத்தாளர் மீது அக்கறை உண்டாகிறது. அவர் சொல்வதினூடாகவும் தங்கள் வாழ்க்கையைப் பரிசோதிக்க முனைகிறார்கள்.
மனிதர்கள் மீது அவர்களுக்கு அந்நியமான வாழ்வினைச் சுமத்தாமல் அவர்களை வேரோடும் வேரடிமண்ணோடும் படைப்புலகிற்குள் கொண்டு வந்திருப்பதையும் இந்தக் கதைகள் சாதித்திருக்கின்றன. இது உண்மையில் அந்த மனிதர்களுக்கும் படைப்புக்கும் செய்யப்படும் நியாயம் எனச் சொல்ல வேண்டும்.
23

Page 17
வாழ்தலின் துக்கம் பொறுக்க முடியாத, துக்க நிவர்த்தி தெரியாத மனிதர்களின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளன கதைகள்.
மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நேரடியாக உபதேசிக்கும் நோக்கமோ அல்லது அவ்வாறு இல்லாமல், போனானே என்கிற நேரடி விமர்சனமோ இல்லாமல், இந்த மனிதர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்; இவர்கள் வாழ்க்கை இப்படி இருக்கிறது என்று காட்டுவதே இவர் நோக்கமாக இருக்கிறது.
இருப்பின் அவலத்தை அறிந்து கொள்ளவே கூசிக்கொண்டு விலகி ஒடுபவர்களுக்கு, இந்த மக்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது; இந்த மனிதர்களின் தினசரி இப்படித் தான் கழிகிறது என்பதைத் திரும்பத் திரும்ப அவர்கள் பார்வையில் விடாப்பிடியாகப் படும்படி செய்துகொண்டிருப்பதன் மூலம், இவை மாறுவதற்கான திசையில் சிலரையேனும் சிந்திக்க வைத்துவிட முடியும் என்பதைக் கதாசிரியரின் நம்பிக்கையாக நாம் புரிந்து கொள்ள முடியும்.
சொல்லப் போனால் நாம் எல்லோருமே செக்குமாடுகளாக இருப்பதில் சுகத்தைக் காண விரும்புகிறவர்கள்தான். இந்த செக்குமாட்டுத் தனத்தால் நிரந்தரமாக மரத்துப்போய் விடாமலிருக்க, உறைக்கும்படியாகக் கிள்ளிப் போவது தான் இத்தகைய எழுத்துக்களும், அதன் பயனும் இந்தக் கிள்ளல் மரத்த மனதுகளுக்குச் சுரணையாக வேண்டும் என்பது அந்த நம்பிக்கை கண்மூடித்தனமான ஒன்றைப்பின்பற்றுவதில் ஆசுவாசம் தேடிக்கொள்ளும் சோம்பல் மனங்களைக் குத்திப் பார்க்க வேண்டாமா?
முதல்க் கதை - மண்கோட்டை
(Proof Copy யில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கிலேயே நான் கதைகளைப் படித்தேன். அந்த வரிசையிலேயே கதைகளைப் பற்றிச் சொல்கிறேன்.)
பூப்பெய்திய சிறு பெண்ணின் கண்ணோட்டத்தில் நடப்பு யுத்த அவலத்தைச் சொல்லும் கதை. அவளுடைய சிநேகிதிகளுக்கு நடந்தது மாதிரி விமர்சையாக சடங்கு நடக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு, அகதிமுகாமுக்குள் என்ன செய்ய முடியும் என்ற கவலையில், அந்த நிகழ்வில் சந்தோஷமடையாத அம்மா. Red Cross உடன் வெள்ளாமையைப் பார்த்துவரப் போன அப்பாவும் வெள்ளாமை அழிந்துபோன செய்தியோடு வருகிறார். அவளது கற்பனைக் கோட்டைகள் சரிய ஊமையாய் அழுகிறாள்.
24

இந்த அவளுக்கு ஒரு பெயரைக் குறிப்பிடாமல் ஆசிரியர் தவிர்த்திருக்கிறார். சீலைத் தடுப்புக்கப்பால் எட்டிப் பார்க்கும் சிநேகிதனை "ஏய் குரு, என்னடா செய்கிறாய்?” என்று இவள் அவனது பெயரைக் குறிப்பிட்டே பேசும் போதும் அவன் இவள் பெயரைக் குறிப்பதில்லை. இந்த “அவளை”பொதுமைப்படுத்தும் ஆசிரியரின் உத்தியாகப் புரிந்து கொள்ள முடியும்.
கலையின் அடிப்படை வாழ்வுதான். நடைமுறை வாழ்க்கை மனிதர்களின் மற்றொரு வடிவாகவே கதை மாந்தர்கள் இயங்குகின்றனர். இந்த இயக்கம் அந்த மனிதர்களின் இயல்புக்கேற்றவாறே படைப்பிலும் இயங்கும்போது, அவர்களை உருவாக்கப்பட்டவர்களாகக் கொள்ளாமல், இனங்காணப்பட்டவர்கள் என்று கொள்வதே பொருத்தமானது. அவ்வாறு சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட மனிதர்களைக் கொண்டியங்குவதை இந்தக் கதையின் சிறப்பாகவும் சொல்ல முடியும்
இரண்டாவது கதை - அப்பா
(சிறுவன் மாணிக்கத்தின் பார்வையில் சொல்லப்படும் கதை.)
போடியாரின் வயலில் கூலி வேலைக்குப் போன தந்தையை, சிதைந்த உடலாக இராணுவ முகாமிலிருந்து அவர் சடலத்தைப் பெற்று வருகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னரும், விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவர்களை சீருடைக்காரர் சந்தேகத்தின் பேரில் பிடித்து அடைத்து வைத்து அடி அடியென்று அடித்து விடுவித்திருக்கிறார்கள். இதனால் அவன் தந்தையும் ராணுவத் தினரால்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.
இதிலும் தந்தைக்குப் பெயரில்லை. திறமையிருந்தும் படிக்க வசதிகள் இல்லாமல் போனதால், வெயிலில் காய்ந்து கூலி வேலை செய்து வாழ்வதற்கென்று நிர்பந்திக்கப்பட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்களுள் ஒருவனாக ரத்தம் வடியவடிய ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் செல்லுகையில் இறந்த ராகவனின் அப்பாவைப் போல - இன்னும் ஆயிரமாயிரம் அப்பாக்களுள் ஒருவராகவே மாணிக்கத்தின் தந்தையும் அடையாளமாகிறார்.
முழுக்கதைகளையும் வாசித்த பிறகு, மீண்டுமொருமுறை இந்தக் கதையை வாசித்துப் பார்க்கையில் சில கேள்விகள் எழுந்ததை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டும். சாதாரண மக்களின் அவலங்கள், வலிமையுள்ள தரப்புக்களால் அவர்கள் பந்தாடப்படுதல், இயல்பு வாழ்க்கையைக் குரூரமான முறையில் எவரெவரோ பறித்து விட்டிருத்தல் பற்றியதாகவே பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. இந்தத்
25

Page 18
தொகுதியில் என்று மட்டும் இல்லை. இன்று எழுதப்படுகின்ற நம் கதைகள் பெரும்பாலானவற்றில் இதைக் காணமுடியும். இந்த அவலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியதும், எதிர்கால சந்ததிக்கு இவற்றை ஆவணமாகக் கிடைக்கச் செய்ய வேண்டியதும் அவசியமானவை. இதை வேண்டாத செயல் என்று யாரும் சொல்ல (Uplgungl.
ஆனால் எதிர்கால சந்ததிக்கு எமது துயரங்களைக் கூறி வைப்பதோடு எழுத்துக் கடமையை நாம் முடித்துக் கொள்ள முடியுமா? இன்றைய நம் அரசியலின் விளைவுகளுக்கு அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் மட்டும்தான் காரணமா? பொதுமக்களுக்கு இதில் பங்கெதுவும் கிடையாதா? அவர்களது மெளனப் பதில்களும், மனச்சாய்வுகளும் இந்த அவலச் சூழ்நிலையை உருவாக்குவதில் பங்குபெறவில்லையா?
இந்த அவலங்களுக்கு எதிராக வெறுமனே புலம்புவதும், ஏதுமறியாதவர்களுக்கு நிகழும் கொடுமையைப் பாரீர்” என அனுதாபம் வேண்டி அரற்றுவதும்தான் மக்களால் செய்யக் கூடியதா? அல்லது அந்த அனுதாபப் புலம்பல்களைப் பதிவு செய்வதுடன் நம் இலக்கியக் கடமை முடிந்து விடுகிறதா? இந்த நிகழ்வுகளின் பங்காளர்களாகவும் உள்ள மக்கள் அல்லது இந்த அவலங்களுக்கு எதிரான அவர்களது செயற்பாட்டை முன்வைக்கும் எழுத்துக்கள் ஏன் இன்னும் இல்லை? அவர்களிடையே இது குறித்து நிகழும் விவாதங்கள் சரிவர எழுத்துருவாக முடியாமல் இருப்பதேன்?
நமக்குத் துக்கத்தைத் தரும் நேர்க் காரணிகளையும், துக்கங்களையும் பற்றி யோசிக்கிறோமே தவிர, நம்முடைய எந்தத் தன்மை இப்படித் துக்கத்திற்கு வழிவகுக்கிறது என்று யோசித்துப் பார்க்கிறோமா?
பிரச்சினைகளின் சமூக முக்கியத்துவம், அந்தப் பிரதிபலிப்புகளைப் படைப்பாக்கிவிடும் என்று எதிர்பார்ப்பது சரியா? நானும் என்னைச் சுற்றியிருக்கிறவர்களும் சோகமாக இருக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொண்டிருப்பதுடன் படைப்பாளி திருப்திப்பட்டுவிட முடியுமா?
எல்லாவற்றையும் சொல்லிவிட இயலவில்லை; சொல்ல முடிந்தவைகளையேனும் கலையாக வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற மன அவசத்தில், வாழ்வை ஒரு எல்லைக்குள் சுருக்கிவிட நேர்கிறது நம் படைப்பாளிகளுக்கு. முழு வாழ்வையும் எதிர்நின்று தழுவமுடியாமலிருப்பது நம் கால ஆபத்தான அரசியற் சூழலின் அவலம் என்று தோன்றுகிறது.
26

மக்களின் நினைப்பை, செயல்பாடுகளை மூடுமந்திரமாக்குவதன் மூலம் மக்கள் அருவப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
சினிமா, தொலைக்காட்சி என்பவையும் இதைச் செய்துவருகின்றன. இசையை அனுபவிப்பதென்பது இசைப்பதோ பாடுவதோ அல்ல என்றாகிவிட்டது. விளையாட்டை அனுபவிப்பதென்பது விளையாடுவதல்ல என்றாகிவிட்டது. தொலைக்காட்சியில், திரைப்படத்தில், இன்டெர் நெற்றில் இவற்றைப் பார்ப்பதன் மூலமே இவற்றை ரசிப்பது என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
மக்களின் செல்பாடு பல நிலைகளிலும் குறைக்கப்பட்டு வருகிறது. இந்த மக்கள் உண்மையைத் தேடிச் செல்வதையும், செயல்படுவதையும் தூண்டுவதாக இலக்கியமும், எழுத்துக்களும் பங்காற்ற முடியும் என்று நம்புகிறோம். அதனால் அவை வெறுமனே சோகத்தைச் சொல்லி அரற்றிக் கொண்டிருப்பதோடு நின்று விடக்கூடாது என்று எதிர் பார்க்கிறோம். ஆனால் நமது படைப்பாளிகளின் எழுத்துக்கள் சுயதணிக்கை முறையிலேயே எல்லைப் படுத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. மன்னர்கள் காலத்திலிருந்து, எப்படித் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்யப்பட்ட செய்திகள் நமக்கு வரலாறாய் அமைந்ததோ, அதுபோலவே இன்றைய நம் தெரிவுகளே எதிர்கால சரித்திரத்தின் ஆவணங்கள்! எனின், இந்த நிகழ்கால விடுபடுதல்கள் தெரிந்தே நடைபெறுகிற நேர்மையீனம் இல்லையா?
இனி, மூன்றாவது கதை - பழி
துறையைக் கடக்கத் தோனியோட்டிச், சில்லறை சம்பாதிக்கும் நல்லதம்பி. நாலு பிள்ளைகள். அஞ்சாவது பிறக்கப்போகும் பிரசவ நாளில் பிள்ளைகளுக்கும் தாய்க்கும் நல்ல கறிவாங்கிப் போக வேண்டும்;பிரசவச் செலவுக்கும் காசு வேண்டும் மன உளைச்சல்களுடனேயே அக்கரைக்கும் இக்கரைக்குமாக தோணி யோட்டுகிறான். மாலை, வேலை முடிந்து விரைவாக வீட்டுக்குப் போய்விடும் ஆவலில் நடக்கிறான். அதற்கிடையில், மாடுமுட்டிப் படுகாயத்துடன் உயிருக்குப் போராடும் தம்பிராசாவை அக்கரையில் உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் விடுவதற்கு அவனே மீண்டும் தோணியை அவிழ்க்க வேண்டும். அவர்களை அக்கரையில் விட்டுத் திரும்புகிறான். எங்கிருந்தோ சீறி வந்த துப்பாக்கி ரவைகள் அவன் மார்பைத் துளைக்கின்றன. நாளாந்தம் அவனது வெற்றிலைச் சாறால் சிவக்கும் ஆற்றுத் தண்ணிர், அவனது குருதியால் சிவந்து பரவுகிறது. பழி மீண்டும் யுத்தத்தின் பேரில்தான்.
27

Page 19
பெரிய புள்ளிவிபரம் ஒன்றுக்குள் அடங்கிப் போய்விடும் சாவுகளில் ஒன்று, தெரிந்தெடுக்கப்பட்டு நம் கவனத்திற்கு வைக்கப்படும்போது, அந்தச் சாவுகளின் பரிமாணம் பெரிதாகி உலுக்குகிறது. படைப்பாளியின் நோக்கம் அதுதானே! நம் பார்வை ஊன்றாத இடங்களைப்படம்பிடித்துக் காட்டி, உறைக்கும் படியாகச் செய்தல். நாலு பிள்ளைகள், ஐந்தாவது குழந்தையையும் ஈன்றிருக்கும் தாய். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்ன ஆவார்கள்? என்று யோசிக்க. நமக்குள்ளேயே அந்தச் சாவு நுரைத்துப் பொங்குகிறது. கதையில் வந்தபிறகு, அது எங்கோ நடந்த ஒரு சாவு என்றில்லாது, அந்தச் சாவுகள் நடக்கும் வாழ்வின் கூர்முனைக்கு நாம் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறோம். “கூடு கலைந்த குருவிகள்”கதையில் சூசைக் கிழவன் சாகும் போதும், நாம் அவனது இரு பேரக்குழந்தைகளுடனும் நிராதரவாக விடப்படுகிறோம். இங்கு அனுபவத்தின் மெய்த் தன்மை படைப்பில் கூடி வந்ததால் வாசகரின் நம்பிக்கையைப் பெறுகிறது. இந்த நம்பிக்கைதான் வாசகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான பிரதான நிபந்தனை. இதுதான் இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவின் அடிப்படையாகவும் இருக்கிறது. இலக்கியம் தனி மனிதனிடத்திலும், அவன் வழியாகச் சமூகத்திலும் பாதிப்புகள் ஏற்படுத்தக் காலாகிறது.
தலைப்புக் கதை - உறவைத் தேடி
புத்தளம் பகுதியிலிருந்து இடமாற்றம் பெற்று மட்டக்களப்புக்குச் செல்லும் ராணுவ வீரன் திலக். அவர் தந்தையால் புத்தபகவானின் கருணையும் நற் போதனைகளும் ஊட்டி வளர்க்கப்பட்ட மனிதாபிமானம் நிரம்பிய படைவீரன். தன்னுள்ளே பூத்திருக்கும் பசுஞ்சோலையை வலிந்து மிதித்துத் துவம்சம் பண்ணிவிட்டு, வாழத்தேவையான சம்பளப் பணத்திற்காக அங்கே ஒரு பாறையின் இறுக்கத்தை உருவாக்கிக் கொள்பவன்.
எழுபத்தைந்துக்கு முன் அவனது தந்தை கருணாசேன, மட்டக்களப்பில் வேலை செய்தபோது, மனோன்மணி என்ற தமிழ்ப் பெண்ணைக் காதலித்து, கெளதமன் என்ற பிள்ளையும் பிறக்கிறது. பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தால் கருணாசேன சொந்த ஊர்திரும்பி, தனது இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும்படியாகிறது. அவர்களுக்கு பிறக்கும் நான்கு பிள்ளைகளில் மூத்தவன் திலக்கிடம், மனோன்மணிக்குப் பிறந்த மூத்த சகோதரன் கெளதமனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு கடிதத்தைச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார். 'மகனே கௌதமன். என்னை மன்னித்துவிடு! உங்களுக்குத் துரோகம் செய்யக் காரணமாக இருந்த இனக் குரோதச் சுவரை உடைத்து, என் மகன் திலக் என்றோ ஒரு நாள் உன் தம்பியாக உன்னுடன் கைகுலுக்குவான்” என்பதாக எழுதியிருக்கிறார்.
28

நீண்ட தேடலின் பிறகு, ராணுவ வீரரான திலக், மட்டக்களப்பில் சுற்றி வளைப்பில் பிடித்து வரப்பட்டவர்களில் ஒருவனாக கெளதமனை கண்டுபிடித்து நெருங்கும் வேளை, சக ராணுவத்தினர் அவனை அடித்தே கொன்றுவிட்டதை அறிகிறான். அடையாளங்களை முன்னிறுத்திப் பெருமை பேசிக் கொள்வதையும், அடித்துக் கொள்வதையும் எவ்வளவு அபத்தம் என்பதாக உணர்த்தும் கதை.
அடையாளத்தின் அடிப்படையில் மனிதர்களை ஒன்றுதிரட்டியும், அதே அடிப்படையிலேயே மனிதர்களை விலக்கி வைத்தும், அரசியல் சமூகமாக ஒருங்கிணைக்கப்பட்டவர்களின் தோற்றம், காலம், இடம் என்பவற்றை ஆராய்ந்து, யார் அதன் ஆரம்ப (Original) வம்சாவளியாகக் கருதப்பட வேண்டியவர்கள் என்று வகுத்து, இவ்வாறு வகுக்கப்பட்டவர்களுக்கு பொதுவான குறிக்கோள்களும், பொதுவான நலன்களும் இருப்பதாகச் சொல்லி, மற்றவர்களை இந்தப் பெருமைக்குள் அடங்காதவர்களாய் இழிவுபடுத்தி, அதாவது இரண்டாம் நிலைக் குடிகளாய் உணரச் செய்து, அழித் தொழிக்கலாம் என்பதாகவோ அல்லது வெளியேற்றலாம் என்பதாகவோ நியாயப்படுத்தி மேற்கொள்ளப்படும் எண்ணற்ற வன்முறைகளையும், கொன்று குவிக்கப்படும் மனித உயிர்களையும் பற்றி நாமறிவோம்.
இவையெல்லாம் எத்தனை பொருளற்ற, மனிதனின் ஆர்ப்பாட்டங்கள் என்பதை இந்தக் கதை முடிவில் எல்லோரும் எண்ணிப் பார்த்துக் கொள்ள முடியும்.
அடுத்த கதை-வழி தவறிப்போகின்ற வழிகாட்டிகள்
பதினான்கு வயதுச் சிறுவன் சந்திரன், தனது குடிகாரத் தந்தையால் தாய் படும் கொடுமைகளையும், பட்டினி கிடந்து தன்னைப் படிக்க வைப்பதையும் தெரிந்து கொள்கிறான். பள்ளிக்கூடப் புத்தகங்களை வீசிவிட்டு, உழைத்துத் தாயை நல்ல படியாகக் கவனித்துக் கொள்ளப் போவதாகக் கூறுகிறான். "நீயும் என்னை ஏமாத்தப் போறாயாடா?” என்று அடிக்கிறாள் தாய். அத்தனை துன்பங்களையும் தாங்கித் தங்களை வளர்க்கும் தாய்க்குக் கிடைக்கப் போகும் ஒரே மகிழ்ச்சி, தான் படித்து நன்றாக வருவதுதான் என்று உணர்ந்து கொள்கிறான் சந்திரன். புத்தகங்களைக் கையில் மீண்டும் எடுத்துக் கொள்கிறான்.
தொகுப்பிலுள்ள கதைகளில் காலத்தால் முந்திய கதை. 1985ல் வெளியானது. தொகுப்பில்-இந்தக் கதையும் மற்றும் “நினைப்பதெல்லாம்”, “ரொமி” ஆகிய கதைகளும்தான் போர்ச் சூழலுக்குள் இருந்து விலகியிருப்பவை.
29

Page 20
அனுபவ வாழ்வை வலிந்து திணிக்காமல், உறுத்தலில்லாமல் உணரும்படியாகச் செய்யும் எழுத்து நேர்த்தியும், கதை சொல்பவரின் வெளிப்படையான கோபம், குறுக்கீடு ஏதுமின்றி, அனுபவம் கரைந்து படைப்பாகியிருப்பது போன்ற ஆக்க நேர்த்தியையும் பாராட்டுக்குரியவை.
அடுத்தது - தொடர்கதைகள்
12 வயதிலும், 10 வயதிலும் இரு பெண் குழந்தைகளைக் கொண்ட தாய். நகரத்திலிருந்து மூவரும் சொந்தக் கிராமத்திற்கு பஸ்ஸில் செல்கிறார்கள். இடையில், சென்றி இடத்தை மாற்றுகிற ராணுவத்தினர் இவர்களது பஸ்ஸை மறித்து ஏறிக் கொள்கிறார்கள். சரமாரியான வேட்டுக்கள், திகிலூட்டும் பயங்கரத்திற் கிடையில் உயிர் பிழைத்து ஊர் போய்ச் சேர்கிறார்கள். சொந்த ஊருக்கு வந்து சுதந்திரமாகப் பறந்து, நகர நெரிசல் வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆர்வக்கனா சிதைந்து விடுகிறது. எதிர்பார்ப்பும் ஆவலுமாக ஊருக்கு வந்த பிள்ளைகள் “இனி இந்தப் பயணம் வேண்டாம்” என்கிறார்கள். ஆனால் தாய்க்குத் தெரிகிறது. இது தற்காலிகம்தான். நகர வாழ்க்கையின் நெருக்கடி மீண்டும் அவர்களை,“எப்பம்மா எங்கள ஊருக்குக் கூட்டிப் போகப் போறியள்?’ என்று கேட்க வைக்கும். மனம் நடுங்க அச்சமூட்டுகிற மரண பயத்தினூடாகவும் சின்னச் சின்ன சந்தோஷங்களுக்காக மனம் துணியும் இந்த வாழ்க்கை நமக்குப் பழக்கமாகி விட்டதைச் சொல்கிறார் கதாசிரியர்.
என்ன செய்ய? நமது பிறப்பைத் தடுத்திருக்கக் கூடிய அதிகாரமோ
வாய்ப்போ நமக்கு வழங்கப்படவில்லை. இருந்திருந்தால் இந்தத் திகிலூட்டும் வாழ்க்கையை நாம் ஏன் தேர்ந்தெடுத்திருக்கப் போகிறோம்?
ந. பிச்சமூர்த்தியின் ஒருநாள் கதையில் வருகிற ஒரு குறிப்பை இந்தக் கதைக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
“யேசுவைச் சிலுவையில் அடித்து அறைந்தது போல்தான் இருக்கிறது நம் பிழைப்பு. காலிலே ஆணி அடித்திருக்கிறது; கையிலே அடித்திருக்கிறது; தலையில் முள்முடி குத்தி ரத்தம் வழிகிறது. இவற்றோடுதான் மணி பார்த்து இரைதேட இறங்கியபடி, இன்ப லோகத்தில் திளைத்த படியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” “உளதாகும் சாக்காடு” என்று வள்ளுவர் சொல்வதும் போலத்தான்! முன்பெல்லாம் அரசனின் கடமைகளுள் ஒன்றாக இருந்தது காட்டு விலங்குகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது; இப்பொழுது அரசின் கடமைகளுள் முக்கியமானதாக
30

இருப்பது மக்களிடமிருந்து காட்டு விலங்குகளைக் காப்பதுதான் என்று சொல்வார்கள். ஆனால் நாங்கள் அரசிடமிருந்து மக்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவலச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அடுத்த கதை - கனவுகளேயாகி.
இதிலும் ஒரு குடிகாரக் கணவன். தேத்தண்ணிக் கடைக்கு மாவிடித்துக் கொடுத்துப் பிள்ளைகளைக் காப்பாற்றும் தாய். மூத்த மகன் இயக்கத்துக்குப் போய்விட, (அதாவது தாயின் புலம்பலில்:"ஒண்டையும் யோசியாம எங்கேயோ ஒடிப் போய்விட்டவன்") இரண்டு பெண்பிள்ளைகளும், இரண்டு ஆண் பிள்ளைகளும் அவள் பராமரிப்பில் கடைக்குட்டிச் சிறுவனின் எண்ணங்களாக விரியும் கதை.
அவன் அம்மா இறந்து வளத்தி வைத்திருக்கும் போது அவன் நினைவுகள் சிதறுகின்றன. “அவனுடைய அம்மா இப்படி அழகாய் இருந்ததை அவன் ஒருநாளும் கண்டதே இல்லை" என்று ஆரம்ப வரியிலேயே இறந்த தாயின் அவல வாழ்க்கை நமக்குச் சித்திரமாகி விடுகிறது. வாழ்ந்த காலத்தில் அவள் புதுச் சேலை உடுத்தியோ, நகைகள் அணிந்தோ அலங்கரித்தோ அந்தச் சிறுவன் பார்த்ததில்லை. அவள் காய்ச்சலாய்ப்படுத்திருந்த இரவு அவளை வண்டிலில் ஏற்றி ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும் வழியில் துவக்குச் சூட்டுக்கு இலக்காகி இறந்து போகிறாள். அதிகாலையில் போய்ப் பார்த்து வந்தவர்கள், தாயுடன் கூடச் சென்ற தந்தையை ராணுவத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சேர்த்ததாக கூறுகின்றனர். அதுமட்டுமல்ல, 'பிள்ளையையும் கிள்ளித் தொட்டியையும் ஆட்டின மாதிர்த்தான்” என்றும் சொல்கின்றனர். சுட்டவர்கள் ராணுவத்தினர்தான் என்று நமக்குத் தெளிவுபடுத்தப் படுகிறது. அந்தச் சிறுவனின் இழப்பும் சோகமும் எம் நெஞ்சிலும் ஏற்படுகிறது.
யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்டாமல், ஒரு சிறுவனுக்குத் தெரிந்திருக்கூடிய தகவல்களோடு, அவன் சிந்தைக்குள் கதாசிரியர் புகுந்து கொண்டு எதையும் திணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல், ஆனால் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது கதை.
என்னைப் பாதித்த கதைகளுள் ஒன்றாக இதைச் சொல்வேன். நல்ல கதை - கூடாத கதை என்று நான் தீர்ப்புச் சொல்லிக் கொண்டு போக முடியாது. என்னை இதுபாதித்தா இல்லையா என்றுதான் சொல்ல முடியும். இதுதான் நல்லகதை,
31

Page 21
இதுதான் நல்ல இலக்கியம் என்று எல்லோருக்கும் பொதுவானதாக ஒன்றை
அடித்துச் சொல்ல முடியவில்லை. அது ஒரு வன்முறையாகக் கூடத் தோன்றுகிறது. பல பேரைக் காயப்படுத்திவிடக் கூடிய வன்முறை.
மனிதனைக் காயப்படுத்தாத, இழிவுபடுத்தாத, துவேசம் பாராட்டாத, அவனை மேலெடுத்துச் செல்லக்கூடிய. இவ்வாறெல்லாம்தான் சொல்ல முடிகிறது. அனேகமாக எல்லா எழுத்துக்களுமே, படைப்புக்களுமே இந்த வரையறைக்குள் வந்துவிடலாம். நான் சொல்வதெல்லாம்தான் இலக்கியம், என்று யாராவது வாதிடுவார்களா தெரியவில்லை.
ஒலைகளில் பதித்து வைத்தவையோ, அச்சில் அடித்து வைத்தவையோதான் இலக்கியம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். தெருச் சுவர்களில் முன்னோர் கிறுக்கிவிட்டுப் போன கிறுக்காமல் விட்டுப்போன எத்தனையோ கவிதைகளை நாம் இலக்கியம் என்று அறியாமலே இழந்திருக்கிறோம். இன்றைக்கும், நான் ஒரு கவிதை எழுதுவதற்கு எடுத்துக் கொள்வதைவிட அதிகமாகப் பிரயாசை எடுத்துக்கொண்டு அம்மா எழுதும் கடித வரிகளை இலக்கியம் இல்லை என்று யாரும் சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
நல்லது - கெட்டதைப் பாகுபடுத்துவது யார் என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு பிரித்து நிர்ணயிப்பதன் மூலம் திணிக்கப்படுகிற வன்முறை மேலும் கொடுமையானதாயிருக்கிறது. சமூகம் ஏற்றுக் கொள்கிற நல்லவர் யாரென்று பார்த்தால் நடப்பிலுள்ள அநியாயங்களைக் கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டுள்ன்று எதிலும் சம்பந்தப்பட்டுக் கொள்ளாமல் போகிறவரே "நல்லவர்” என்று அழைக்கப்படுகிறார்.
இந்த “நல்லவர்” என்பதன் மூலம் நம் ஒவ்வொருவருக்குமே ஒரு செய்தி விடுக்கப்படுகிறது. “நல்லவன்’ என்ற பட்டத்தைப் பெறவேண்டுமர்னால், அநீதிகளை எதிர்த்துக் கலகம் செய்யாமல், சந்தேகங்களைத் தெரிவிக்காமல் சகித்துக் கொண்டு போகிறவனாக இரு சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொள்ளாமல், மெளனம் காத்து, நாம் ஒரு பாவமுமறியாதவர்கள் என்பதாக, நடக்கும் அநியாயங்களில் நமக்கு யாதொரு சம்பந்தமுமில்லை என்று வாளாவிருப்பவர்களால் இங்கு வளர்ந்து கிளைபரப்பிவிட்ட தீங்குகள் உண்டு.
ஒரு கொடிய செயலைச் செய்தவனின் மனதில் ஏற்படுவதைவிட, அதைச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பவனின் மனதில் அதிகளவு மனவேதனை உண்டாக்கும் குற்றங்கள் இங்கே இருக்கின்றன. அதேபோல, சும்மா இருப்பவனால், அவன் சார்பாக அதிகரித்துக் கொண்டே போகிற குற்றங்கள் உண்டு.
32

ஒரு மனிதனுடைய தர்மம், அல்லது சுபாவமான பழக்க வழக்கங்கள் கூட அவனையறியாமல் இன்னொரு மனிதனை இம்சைக்குள்ளாக்கும், வடுப்படுத்தும் சாதனங்களாகலாம். புராணங்களிலேயே உதாரணங்கள் உண்டு. ராமன் தன்னுடைய தர்மத்தைக் காப்பாற்ற முயலமுயல - லட்சுமணன், பரதன், ஊர்மிளை, சீதை, வாலி, ராவணன் முதலிய பலருடைய வாழ்க்கைகள் வெவ்வேறு விதங்களில் நிலை குலைந்து சிதறிப் போகின்றன என்று காண்கிறோம்.
எதையும் கறுப்பு - வெளுப்பாய் மட்டுமே பார்க்க முடியாது என்றறிகிறோம். ஆனால் எதையும் கறுப்பு - வெளுப்பாய் மட்டுமே பார்க்கிற சமூகமாகவும் நாம் இருக்கிறோம். புராதனமான நீண்ட வரலாறுடைய ஒரு பண்பாட்டைக் கொண்டவர்கள் இப்படிக் கறுப்பு - வெளுப்பாய்ப் பார்த்தே வளர்ந்து வந்தோம் என்பது ஆச்சரியத்துக் குரியதுதான். ஒன்றில் கண்மூடி எதிர்ப்பது அல்லது கண்மூடி ஆதரிப்பது என்று இரு நிலைப்பாடுகளுக்குள்ளேயே நம்மை இறக்கி வைத்துக் கொள்வது எப்படிச் சாத்தியமாக இருக்கிறது?
Angela's Ashes 6T6öTGpITIS SIT66). fig6.j6ör Frank glth96) sit 9 uT சொல்கிறார்: "நீ உன்னுடைய தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்”. அவனுடைய பள்ளிக்கூட ஆசிரியர் சொல்கிறார் “நீ உன்னுடைய மொழிக்காக உயிரைவிடத் தயாராயிருக்க வேண்டும்” மதகுரு, “நீ உன்னுடைய கத்தோலிக்க மதத்துக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்” என்று போதிக்கிறார். உயிரை வைத்து, வாழக்கூடச் செய்யலாம் என்ற சிறு உண்மையை அவனக்குச் சொல்லித்தர யாருமில்லை. குழம்பிப் போகிறான். குழப்பம் Frank 35(5 மட்டுமில்லை.
தொகுதியில், மாறுபட்ட மற்றுமொரு கதை - நினைப்பதெல்லாம். இன்னா செய்தவரை அவர் நாண நன்னயம் செய்துவிடும் கதை. முன்னாள் அதிபர் மயில்வாகனத்தார், Teacher ஆன தன்னுடைய மகளுக்கு இடமாற்றம் கேட்டு கல்விப் பணிப்பாளரிடம் செல்கிறார். அங்கு அவரது பாடசாலையில் படிப்பித்த ராஜகோபாலே கல்வி அதிகாரியாக இருப்பதை அறிகிறார். பவானி என்றTeacher உடன் காதல் தொடர்பிருப்பதாக நினைத்து, வாய்க்கு வந்தபடி பேசி, ராஜகோபாலே தூர இடத்துக்கு மாற்றியவர் அதிபர். ஆனால் அதற்குப் பழிவாங்குபவராக இல்லை ராஜகோபால். உண்மை தெரியாமல் அதிபர் நடந்து கொண்ட அந்த முறையினால்தான் ரோசமுண்டாகித்தான் இந்த நிலைக்கு உயர்ந்ததாக ராஜகோபால் சொல்கிறார். “ஒரு ஆணும் பெண்ணும் கதைச்சுப் பழகினால் அது
33

Page 22
லவ்வாகத்தான் இருக்க வேண்டுமா?” என்று லேசாகக் குறைபட்டுக் கொள்கிறார். தன் மகளின் இடமாற்ற விடயத்தில், ராஜகோபாலின் பெருந்தன்மையால் வெற்றிகண்ட மயில்வாகனத்தார், தன்னுடைய கடந்தகால அதிபர் பதவியில்தான் தோற்றுப்போனதை ஒப்புக்கொண்டவராகத் திரும்புகிறார்.
ரொமி - தலைப்பிலேயே, செல்ல நாயின் கதை என்பதைத் தெரிவித்து விடுகிறது. முடிவை நோக்கி நம்மை ஒட வைக்கும் கதை. ரொமி சாகப் போகிறது என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்துவிட முடிகிறது. அப்படியானால் அந்தப் பயங்கரக் கனவு என்ன என்பதே நம்மை விரட்டுகிறது.
தூய மனித நேயமே இலக்கியத்துக்கு ஆதாரம் என்ற வகையில், இந்தக் கதைகள் அனைத்தையும் மறுபேச்சின்றி 'நல்ல இலக்கியம் என்ற வகைமைக்குள் அடக்கிவிட முடியும். நிகழ்காலத்தின் தகிக்கும் பிரச்சினைகளோடு கலைமனம் கொள்ளும் உறவு கதைகளாயிருக்கிறது. இவை - வாழ்க்கைச் சுழிப்புக்களின் ஆழத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவில்லை; ஆசிரியரைப் படைப்புலகச் சிகரத்திற்கு உயர்த்தும் கதைகள் என்றும் சொல்ல முடியாது. ஆனால் வாழ்வின் மீது ஒரு கலைமனம் கொண்டிருக்கும் நேர்மையான உறவை உணர்த்த இந்தக் கதைகள் தவறவில்லை. வாழ்வு வஞ்சிக்கப்பட்ட மக்களினது நிலமை கண்டு கசிந்துருகும் இதயத்தையே அனைத்து கதைகளிலும் நாம் காண முடிகிறது.
கலைத்தன்மை என்பதுபற்றி எவரும், தீர்மானகரமான, பொதுவான ஒரு கருத்தைச் சொல்லிவிட முடியாது. ஒரு படைப்புக்குள், அந்தப் படைப்பாளிக்கும், அதை வாசிக்கும் வாசகன் அல்லது வாசகிக்குமிடையே ஏற்படுகிற ஒரு விசேடமான உறவு Inter relationship தான் கலைத் தன்மையைத் தீர்மானிக்கிறது.
ஆகவே, கதைக்கெனத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள் குறித்தே பேச முடியும். என் அபிப்பிராயமாக அல்லது சந்தேகங்களாக சிலவற்றைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். சமூக அவலங்களை, மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை கதைகளாய் எழுத வேண்டிய அவசியத்தையும், அதிலுள்ள நல்லெண்ணத்தையும் யாரும் குறைத்துப் பேச முடியாது. அது, தேவையான ஒரு இலக்கியப் பணியும் கூட. கொலைவெறி கொண்ட ராணுவம் கொடியது; குடித்துவிட்டு வந்து மனைவி பிள்ளைகளை அடிக்கும் கணவன் கொடியவன்; யுத்தம் தருகிற துன்பங்கள் கொடியவை;உறவுகள் சிதறி வாழ நேர்வது கொடுமை என்பதெல்லாம் உண்மையே ஆக இருந்தாலும் இவற்றைச் சொல்வதுடன் மட்டும் நின்றுவிடுவது போதவில்லை என்றெனக்குப்படுகிறது.
34

இந்தத் துக்கங்களின் மூலத்தை எட்டிப்பிடிக்கிற, அதன் கூர்முனைக்கு முன்னால் வாசகரைக் கொண்டு வந்து நிறுத்துகிற, அவர் பயணத்துக்கான ஒரு ஒளித்தெறிப்பைக் காட்டிவிடுகிற காரியத்தைக் கதைகள் செய்யுமானால் அதன் விசேடத் தன்மை அதிகரிக்கும் என்பது என் அபிப்பிராயம். இல்லையெனில், இந்த நடப்பு அவல, சமூக விமர்சனங்களெல்லாம் சூனியத்தில் வாளைச் சுழற்றும் வியர்த்தமாகி விடுகிறதோ என்று தோன்றுகிறது.
உதாரணத்துக்கு இப்படிப் பார்க்கலாம்:
நான் வன்முறையான ஒரு காரியத்தைச் செய்ய நடுங்குபவன்; கொலை செய்தலிலோ பழிவாங்குதலிலோ ஈடுபட்டதில்லை என்று திருப்தியடைபவன்; நானுண்டு என் வேலையுண்டு என்று வாழ்ந்து கொண்டிருப்பவன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு ஏன் அவலங்கள் சுமத்தப்படுகின்றன? இடம் விட்டு இடம் பெயர்த்து எறியப்படுகிறேன்; உறவினர்களை இழக்கிறேன்; உயிரைக் கையில் பிடித்து வாழ நிர்பந்திக்கப்படுகிறேன். இதெல்லாம் அநியாயமானவை என்பதில் எனக்குச் சந்தேகமிருப்பதில்லை. ஆனால் எனக்குப்பாதிப்பு நிகழ்ந்த போதெல்லாம், வேறுயாராலோ அவர்கள் பழிவாங்கப்பட்டதற்குத் திருப்தியடைந்திருக்கிறேன்; இன்னொரு மக்களுக்குத் துன்பம் நடக்கையில், அந்தக் கொலைகள் பற்றிய கேள்விகளை எனக்குள் புதைத்திருக்கிறேன்; அதைவிடப்பன்மடங்கு பாதிக்கப்பட்ட என்னவர்களின் துயரைச் சொல்லி, எனக்குள் அதை நியாயப்படுத்தி ஆசுவாசமடைந்திருக்கிறேன். அப்படியெல்லாம் நடப்பது சரி என்று நான் வாயால் சொல்லாவிட்டாலும், அப்படியெல்லாம் நடந்ததைப் பிரச்சினையாக்கியும் நான் வாய்திறந்ததில்லை.
நான் படும் அவலங்களை, எனக்கு நிகழ்த்தப்படும் கொடூரங்களை, உரத்த குரலெடுத்துச் சொல்லி அழுதுகொண்டிருப்பதிலேயே. அதெல்லாம் என் சார்பாக மற்றவர்களுக்குச் செய்யப்பட்ட போது எழும் குற்றவுணர்வை மறைவாய் அமுக்கிக் கொண்டிருக்கிறேன். அதெல்லாம் என் விருப்பத்தோடு நடப்பதல்ல என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்.
கேள்வி என்னவென்றால், நான் கறைபடாமலிருந்து, வேறு ஆட்களைப் பயன்படுத்தி, கொலைகள் வன்முறைகள் மூலம் என் எதிரியிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ள முயற்சித்தால், அந்தக் கொலைகள் வன்முறைகளை நான் செய்யவில்லை என்றாகுமா? பழிக்குப் பழி வாங்கியபடியே என் துயரங்களை எல்லோரும் செவிமடுக்க வேண்டும் என்று அழுதுகொண்டிருப்பதில் என் கறை கழுவப்பட்டு விடுமா?
35

Page 23
தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் இத்தகைய தர்மம் சார்ந்த பிரச்சினைகளுக்குள் போகாமல், என் துன்பங்களுக்கு நான் தீர்வு கண்டுவிட முடியுமா? வெகு நுட்பமான இந்த நியாய - அநியாயங்கள் எழுத்தில் கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று நாம் வாதிட முடியாது. ஆனால், இன்றிருக்கும் எதிர்ப்பான, மிருகத்தனமான நிலையிலிருந்து, மனிதத்தன்மைக்கு மாறக்கூடிய ஒரு சூழலை உருவாக்கும் சமூகக் கடமை தமக்கிருப்பதாகக் கருதும் படைப்பாளிகள், எளிமையான சித்திரிப்புகள், தீர்வுகளோடு நின்றுவிடாது நுட்பமான பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதில் தவறில்லை என்றே நம்புகிறேன்.
இது - இந்தக் கதைகளின் சிறப்பையோ, தொகுதியின் முக்கியத்துவத்தையே குறைத்துச் சொன்னதாக அர்த்தப்படாது. என் ஆதங்கம் வேறு என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, வாய்ப்புக்கு நன்றி சொல்லி முடிக்கிறேன்.
36

அதோ அந்த நான்கு சுவரினுள்ளே
- ഖിഴ്ച
“கூந்தல் ஒன்று முட்களிலே சிக்கித் தவிக்கின்றதே
யாருமில்லை கைநீட்ட . யாருமில்லை கைநீட்ட”
6. Uண்ணுக்கு எதிராக ஒருவன் முதல் தடவையாக வன்முறை புரியும் போது அவனை சமூகத்திலே சில வேளைகளில் நாங்கள் வில்லன் என்று சொல்லுகின்றோம். ஆனால் அவனே அல்லது அந்த ஆணே இன்னும் பல பெண்களை அதே வகையியல் வன்முறைக்கு உட்படுத்தும் போது அவனை நாங்கள் ஹீரோ என்று சொல்லுகின்றோம். சிகப்பு ரோஜாக்கள் போன்ற படங்களுக் கூடாகவும். போன்ற படங்களுக்கூடாகவும் சித்திரங்களுக்கூடாகவும் அவனை நாங்கள் சமூகத்திலே கதாநாயகனாக உருவாக்கியிருக்கிறோம். ஆனால் அதே நேரம் சமூகத்திற்குள்ளே போய்ப் பார்க்கும் போது விசேஷமாக நான் கொழும்பைச் சுற்றி வாழ்கின்றவன் என்றபடியால் எனக்கு காதுக்கெட்டிய செய்திகள் சிறுவயதாக இருந்த போதும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மனம்பேறி கொலை என்று 71ம் ஆண்டுகளில் நடந்தது. அதைவிட அண்மைக்காலங்களில் ஜோன் ரீற்றா படுகொலை, அதற்கும் கூடுதலாக போகந்தரையில் படுகொலைகள் இதைவிடவும் முகமும் இன்னும் பெயர்களும் தெரியாத தமிழ், சிங்கள, முஸ்லிம் பெண்களுக்கெதிராக நடாத்தப்படுகின்ற வன்முறைகளையும் நீங்களும் நாங்களும் கேள்விப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றோம். நான் இந்த அடிப்படையிலேயே பாலியல் அதிகாரம் என்ற பிரச்சினையை பற்றி கதைக்கலாம் என்று நினைக்கின்றேன். இதைப்பற்றி கதைக்கும் சமூகத்தை எவ்வாறு பிரித்துப் பார்க்கலாம் என்று பார்க்க வேண்டியதாக இருக்கும் வெவ்வேறு விதமான பள்ளிக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆண்டான் அடிமை என்கின்றார்கள் ஒரு சமூகத்தைப் பார்த்து அதற்குப் பிறகு நிலச்சுவான்தக் கூலித் தொழிலாளி என்கிறார்கள், முதலாளி தொழிலாளி என்கிறார்கள், மேல்வர்க்கம் கீழ் வர்க்கம் என்கிறார்கள். பெரும்பான்மை என்கிறார்கள், சிறுபான்மை என்கிறார்கள், தேசியம் என்கிறார்கள்,
37

Page 24
சிறுதேசியம் என்கிறார்கள் ஆதாயத் தேவைக்கு அதிகம் உழைப்பவர்கள், குறைவாக உழைப்பவர்கள் என்கின்றார்கள். சமைய நோக்கோடு அதைப் பின்பற்றுபவர்கள் இல்லாதவர்கள் என்கின்றார்கள். திறந்த, மூடிய பொருளாதாரம் என்கிறார்கள். இப்படி எங்கே பார்த்தாலும் இரு வகையான மக்கள் இருப்பதை நாம் காணுகின்றோம் ஒவ்வொரு கூட்டத்துக்குள்ளும் ஆண்களும் இருக்கின்றார்கள் பெண்களும் இருக்கின்றார்கள். ஆனால் இந்த எல்லாப் பக்கங்களிலும் இருக்கும் ஆண்களுக்கான ஒரு அதிகாரம் ஒன்று சமூகத்துக்குள்ளே இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன். அது தான் பாலியல் அதிகாரம் அந்தப் பாலியல் அதிகாரம் எந்தச் சமூக அமைப்பை எடுத்துக் கொண்டாலும். ஆண்கள் பக்கம் தான் அது தொக்கி நிற்கின்றது. அந்த ஆண்களை எடுக்கும் போது அது பெண்ணுக்கு எதிராகத்தான் ஒப்பிடப்படுவதாகவும் நான் கருதுகின்றேன். அந்தந்த சமூகக் கோட்பாடுகள் பெண்ணுக்காக சில சில தேவைகளை வைக்கின்றது. ஆனால் அந்த சமூக அமைப்பு சில வேளை மாற்றம் அடையும் போது அந்தப் பெண்ணுக்குரிய தேவைகளும் அல்லது கடமைகளும் சில வேளை மாற்றம் அடைந்து கொண்டு வரலாம் ஆனால் நாம் இந்த அமைப்பு முறைகளுக்கூடாக ஊடறுத்துப் பார்க்கும் போது பாலியல் அதிகாரம் தொக்கி நிற்கின்றது என்பது தொடர்ந்து எந்த சமூக அமைப்பிலும் அது ஒரு ஆண்களின் அதிகாரமாகத்தான் இருந்து வந்திருப்பதாக நான் கருதுகின்றேன். ஆனால் சிலவேளைகளில் இன்னொரு கருத்தும் இருக்கின்றது உதாரணமாக நாங்கள் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது கேள்விப்பட்டிருக்கின்றோம் நிலச்சுவாந்தர் ரீதியான அமைப்புமுறை பாரம்பரியங்களில் இருக்கும் பெண்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட மக்கள் மேல் சட்டை போடுவதை விடமாட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனாலும் நான் இங்கே கூற விளைவது இந்த இரண்டு பக்கத்திற்கும் இருக்கின்ற அதாவது அதிகாரமுடைய சமூகம் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகம் என்று இரண்டு பக்கமும் பெண்கள் இருக்கின்றார்கள் இந்தப் பெண்கள் ஏன் பாலியல் அதிகாரத்துக்கு உட்பட்டிருக்கின்றார்கள் அதற்கூடாக செயற்கையாக அவை எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. என்பதையும் இந்த முன்னுரையின் மூலம் பார்க்கலாம். இந்தப் பெண்ணை ஏன் நாங்கள் ஆண் என்கின்றோம் பெண் என்கின்றோம் என்று யோசித்துப் பார்க்கும் போது எனக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை. எனவே நான் எப்பொழுதும் சின்னப்பிள்ளைகளில் இருந்து சொல்லித் தருவது அகராதியை பாருங்கோ என்று. அகராதியை பார்த்தேன் அதில் Man என்று ஒரு சொல் வருகின்றது. Women என்று ஒரு சொல் வருகின்றது. Man என்றால் என்னவென்று பார்க்கும் பொழுது.
38

அதற்குப் பிறகும் இன்னொரு அடிப்படையிலும் நாம் பார்க்கின்ற பொழுது ஆண்களுக்கிருக்கின்ற உடல் அமைப்பு முறைகளிலும் பெண்களுக்கிருக்கின்ற உடல் அமைப்பு முறைகளிலும் வேறுபாடு இருப்பதாகவும் நாம் காண்கின்றோம். பெண்களுக்கு இயற்கையாகவே கருத்தரிப்புக்கு உள்ளாகும் ஒரு நிகழ்வும் அந்த நிகழ்வினால் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கின்றது. அதே போல் ஆண்களுக்கு உடல் கூற்றுவியல் ரீதியாக அப்படியொரு நிலைமை இல்லை என்பதையும் நான் உணரக்கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு நான் இங்கு இருக்கின்ற சில சில எங்களுக்குத் தெரிந்த அல்லது நாங்கள் காதுகளால் கேட்கின்ற சில சில விஷயங்களை வைத்துக் கொண்டு பெண் என்றால் என்னவென்று நான் யோசிக்கப் பார்த்தேன்.அப்போது இப்பொழுது நீங்கள் எல்லோரும் கேட்கின்ற மாதிரி சில படங்களிலும் அல்லது சில நிகழ்வுகளிலும் பெண் என்றால் இவள்தான் என்று சொல்லிச் செல்கிறார்கள். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி.
நாங்கள் எல்லோரும் பார்த்து காதுகளால் கேட்கின்ற இந்த படையப்பா என்றொரு படத்தில் பெண் என்றால் என்ன என்று சொல்கின்ற போது அவர் சொல்கின்றார்.
பொம்பளை என்றால் பொறுமை இருக்க வேண்டும் அவசரம் கூடாது அடக்கம் வேண்டும் ஆத்திரப்படக் கூடாது அமைதி வேணும், அதிகாரம் பண்ணக் கூடாது, கட்டுப்பாடு வேண்டும். கத்தக்கூடாது பயபக்தியாய் இருக்க வேண்டும். பஜார் தனம்பண்ணக் கூடாது மொத்தத்தில் பொம்பளையெண்டால் பொம்பளையாய் இருக்கணும் என்று சொல்கின்றார்கள். அதே மாதிரி தொலைக்காட்சியில் நான் ஒரு ஆங்கிலப் பாடலைக் கேட்டேன் அதை ஒரு பெண் பாடுகிறாள்.ஆங்கிலத்தில் 'நீ எனக்கு ஐ லவ் யு' என்று சொன்னால் என்னை நீ மேலே எறிந்து கீழே போடலாம் என்று. அதற்குப் பிறகும் சில வேறு கருத்துக்களை நாம் பார்க்கும் போது இப்பொழுது இன்னொரு பாடலை எல்லோரும் பாடிக்கொண்டு திரிகின்றார்கள். சிநேகிதனே சினேகிதனே ரகசிய. என்று அதிலும் பெண்கள் சம்பந்தமான சில விஷயங்களை அந்தப் பாட்டு சொல்கின்றது. நீ சொல்வதை பகலில் செய்வேன், சொல்லாததை இரவில் செய்வேன், நெட்டிகளை முறிப்பேன், உப்புமூட்டையாய் தூக்கிக்கொண்டு போவேன் என்று ஒரு பெண் பாடுவதாக இருக்கின்றது அப்பொழுது நான் ஒரு முடிவுக்கு வந்தேன் சமூகத்தில் இப்படியான சில விஷயங்களை வைத்து பெண்ணையும் ஆணையும் உருவாக்கியிருக்கின்றார்கள்.
39

Page 25
எனவே இந்தப் பெண்ணும் ஆணும் உருவாக்கப்பட்டிருப்பதென்பது அவரவருடைய கடமைகளுடனும் கடப்பாடுகளுடனும் உருவாக்கியது என்பது நாங்கள் பிறப்பதற்கு முன்பே வந்த ஒரு விடையமாகும்.
ஆனால் இப்பொழுது நடக்கின்ற சில விஷயங்களுக்கூடாக இது எப்படியிருக்கின்றது என்று நான் பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். தேசியக் கோட்பாடுகள் என்று நாங்கள் இப்பொழுது கன விஷயங்களை கேள்விப்படுகின்றோம். அதுகளுக்குள்ளான எப்படி இந்தப் பாலியல் அதிகாரம் என்பது ஒரு பக்கத்துக்கு தொக்கி நிற்கப்பட்டிருக்கின்றது. நான் பார்க்க முயற்சித்தேன்.
பெண்களையும் ஆண்களையும் அடிமைகளாக பிடிக்கின்ற விஷயம் இருந்தது ஆனால் அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்கள் விஷேசமாக பாலியல் அடிமைகளாகவே இருந்திருக்கின்றனர். அதே போல் முதலாளித்துவத்தில் நடைபெறுகின்ற போர் நிலைமைகளை எடுத்துப் பார்க்கும் போது நாங்கள் இப்பொழுது மிகவும் கேள்விப்படுகின்ற ஒரு விஷயமாக இருக்கின்றது. ஜப்பானில் அந்த காலத்தில் நடந்த போரில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த போர் வீரர்கள் விபச்சாரிகளை இந்த கொரியா, பெர்மியா பெண்களை அதுவும் போர் வீரர்களை திருப்திப்படுத்தும் பாலியல் அடிமைகளாகத்தான் பார்த்திருக்கின்றார்கள். எங்கு பார்த்தாலும் அப்படியான விஷயம் தொக்கி கொண்டு நிற்பதாக கருதக்கூடியதாக இருக்கின்றது. இதே நேரத்தில்'எனது கைகளுக்கு வந்த எனது காதுகளுக்கு கேட்ட கதை ஒன்றை இப்பொழுது இருக்கின்ற சூழலில் நான் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. அந்தக் கதையை எந்தப் பத்திரிகையிலும் போட முடியாது என தடைசெய்து விட்டார்கள். ஆனால் இந்தக் கதையில் இருக்கின்ற பலம் பல தரப்பட்ட தளங்களில் இந்தக் கதையை நாங்கள் பார்க்கலாம் என்றாலும் ஒரு முகப்பட்ட தளத்தில் அந்தக் கதையைப் பார்த்தால்.
அவர் சுத்தத் தமிழன் போடுவது வேட்டி சாப்பிடுவது சைவம் பொட்டு.சுத்த தமிழ்பேசுவது அவர்காலில் செருப்பில்லாமல் நடக்கார் ஏன் அந்நிய மண் காலில் பட்டுவிடும் அவருக்கு தேவை பாலியல் தேவை, அவருக்கு .எல்லா சந்து பொந்துகளிலும் இல்லை தமிழ் பெண்கள் எல்லாம் சிங்களப் பெண்கள். சீ எங்கையாவது தமிழ் இரத்தம் தமிழ் இரத்தம் எடுத்து பொட்டு வைத்தவர்கள். சிங்கள இரத்தத்துடன் கலந்தால் தமிழினம் என்னாவது குழுமியம் என்னாவது தமிழ் ஆண்கள் இருக்கிறார்களா ஆசையைத்தீர்க்க சீ இராது தமிழ் பெண்கள்
40

ஆண்கள், சிங்களவருடன் சீ இவர்களை மண்டையில் போடவேணும் சிங்கள பெண்களை தீர்க்கலாம் தான், ஆனால் அது. மனச்சாட்சிசொன்னது செய்வது விபச்சாரம் பிறகு என்ன தமிழ் சிங்களம் என்று, அவர் குண்டாகி, வெடிகுண்டாகி துடிக்கிறார், தமிழ் ஆசைதீர்க்க, நீர்வருவீரா, அதைதீர்க்க அதாவது ஆணுக்கு இருக்கின்ற சில விஷயங்கள் பாதுகாப்புமுறைகள் பெண்களுக்கு இல்லை. எனவே அங்கேயும் ஒரு பாலியல் அதிகாரத்துக்குள்ளான விடயமாகத்தான் அந்த விடயமும் இருப்பதாக நான் கருதுகின்றேன்.
அது மாதிரியாக மதத்தை எடுத்துக் கொள்வோம் அங்கும் கோட்பாடுகள் ரீதியாக உடலை மறைப்பது ஏன் உடலை மறைக்க வேண்டும் என்று சொன்னால் எதிர் பாலில் இருக்கின்ற சில விதமான உணர்ச்சிகளை கிளப்புகின்ற விடயமாகத்தான் இவ் உடைகள் இருக்கின்றன எனவே மத ரீதியாக இப்படியான விடயங்களைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. அதற்கும் மேலாக நீங்கள் பார்த்தாலும் கூட பாலியல் வல்லுறவு என்ற விடயங்களைப் பார்க்கும் போது கூட ஆனால் ஒத்துப் போதல் என்ற கருத்துச் சொல்லும் எங்களோடு இருக்கின்றது. எனவே திரும்பவும் இந்த அமைப்பு முறைகளில் மாற்றங்கள் நடந்து கொண்டு வருவதை நாம் பார்ப்போம். ஆண்டான், நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் நாங்கள் எங்களுக்கு கேள்விப்பட்ட அடிப்படையில் அமைப்புமுறைகளை மாற்றி இன்று நாங்கள் சொல்வோம் நிலப்பிரபுத்துவத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் எங்களுடைய சமூகம் இருக்கின்றது என்று ஆனாலும் நாங்கள் எடுத்துக் கொள்வோம் புற வன்முறை ஒன்றுமே இல்லை என்று நாங்கள் ஒரு எடுகோளாகக் கோட்பாட்டு அடிப்படையில் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் எந்தவிதமான புற வன்முறைகளும் இல்லை. என்று எடுத்துக் கொள்வோம் ஆனால் அப்படி இருக்கும் போதும் நாங்கள் சில வேளை யோசித்துப் பார்த்தால் பிள்ளைப் பெறுவதை யார் தீர்மானிப்பது அல்லது ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதை யார் தீர்மானிப்பது அல்லது ஒரு ஆணுக்கும் எந்தவிதமான வருத்தங்கள் இருந்தாலும் அந்த நிலையிலேயே உறவு கொள்வதைப் பெண்ணால் தடுக்க முடியுமா? அல்லது பிள்ளைகளை எந்தெந்த இடைவெளிகளில் நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். எதை எடுத்துப் பார்த்தாலும் நாங்கள் வெளியில் இருக்கின்ற வன்முறைகள் எல்லாவற்றையும் நாங்கள் எடுத்துக் கொள்வோம் அதற்குள்ளும் ஒரு பாலியல் அதிகாரம் என்பது நிச்சியமாக அது எந்த சமூக அமைப்பாக இருந்தால் என்ன அது இருந்து கொண்டே வருகின்றது. அதைத்தான் சில பேர் சொல்கின்றார்கள் எந்த சமூக அமைப்புமுறை மாறினாலும் திரும்பவும் ஒரு நிலைக்கு வந்து முன்னர் இருந்த கருதுகோள்களைத் திரும்பவும் சமூகத்திற்குள் புகுத்துகின்ற ஒரு விடயமாகத்தான் பாலியல் அதிகாரம்
41

Page 26
என்ற கருத்தியல் கோட்பாடு இருக்கின்றது என நான் கருதுகின்றேன். இப்பொழுது நாங்கள் சில வேளை பார்க்கின்ற போது இலட்சியங்களிலும் இந்த விஷயம் இருக்கின்றது. உதாரணமாக இப்பொழுது நடக்கின்ற இந்தப் போர்ச்சூழலை எடுத்துக் கொண்டாலும் போர்ச்சூழலில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள் என எடுத்துக் கொள்வோம். எடுத்துக் கொண்டால் இங்கு இருக்கின்ற இலக்கியங்களிலேயே எங்களுக்குள் முரண்பாடு வருகின்றது. ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை வைத்துக் கொள்ளக் கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் கருதுகின்றேன்.
அண்மையில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இலக்கியங்கள் என்றால் என்ன? நாங்கள் கதைக்கும் போது கூட சில சில முரண்பாடுகள் வருகின்றன. என்னிடம் சில பேர் கேட்கின்றார்கள். ஏன் இந்தப் பெண் இப்படிச் செய்யப்பட்டார் உதாரணமாக கிருஷாந்தி படுகொலையை எடுத்துக் கொள்வோம் அப்பொழுது இங்கு வைக்கப்படுகின்ற வாதம் என்னவென்றால் இவள் தமிழ் என்பதால்தான் கொல்லப்பட்டிருக்கிறாள். இன்னொரு பக்கம் எடுத்துக் கொண்டால் இவள் பெண் என்றபடியால் தான் இப்படிச் செய்யப்பட்டிருக்கிறாள் என்கின்ற வாதம் தொக்கி நிற்கின்றது. ஆனால் இதில் நாங்கள் இவ்விரண்டு பக்க கருத்துக்களிலும் அடிபட்டுக் கொண்டு இருக்கின்றோம். கிருஷாந்தி என்பவளை வைத்துக் கொண்டு இந்த இரண்டு பக்கம் இருப்பவர்களும் அதாவது தேசியம் சாந்த கோட்பாடுகளை வைத்திருப்பவர்களும் அதற்கு எதிரான கோட்பாடுகளை வைத்திருப்பவர்களும் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இதற்குள்ளே தொக்கி நிற்கின்ற இந்தப் பாலியல் அதிகாரத்தைப் பற்றி யாரும் கேள்விகேட்பதாக இல்லை என்பதைத்தான் நான் கருதுகின்றேன். இதில் நாங்கள் உண்மையாகப் பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கற்பு ரீதியான அந்தப் பாலியல் அதிகாரம் என்பது என்ன? அது எப்படி உருவாக்கப்பட்டது. அடுத்த கட்டமாக நான் அதைத்தான் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி அதைப் பார்க்கும்போது எங்களுக்கு எற்கனவே சொல்லப்பட்ட பல விதமான கோட்பாடுகள் இருக்கின்றன. மார்க்ஸிசம் என்றும் பின்நவீனத்துவம் என்றும், பின்நவீனத்துவப் பெண்ணியம் என்று இப்பொழுது கோட்பாடுகள் வந்திருக்கின்றன. நான் எதையும் பார்க்காமல் இந்த நிலைமைக்குப் பெண் ஏன் வரப்பட்டாள் என்பதைத்தான் நான் முக்கியமாகக் கருதுகின்றேன். ஏனென்றால் இன்று இருக்கின்ற முக்கிய கோட்பாடாகப் பெண்கள் பெண்களாக இருப்பதால்தான் இப்படியான நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இது எல்லாரிடத்திலும் இருக்கின்ற மாதிரியான ஒரு கோஷம்தான் நாங்கள் இன்னொரு பக்கம் பார்க்கும்
42

போது தமிழ் மக்கள் தமிழ் என்பதால்தான் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்கிறார்கள். இதே நேரம் சிங்கள மக்களின் மத்தியில் இருக்கின்ற சில அமைப்புக்கள் இப்பொழுது முன்னுக்கு கொண்டு வருகிறார்கள். சிங்களம் என்பதால்தான் இந்த நிலைமைக்குக் கொண்டு வருகிறார்கள். இதே மாதிரி பெண்கள் பெண்கள் என்பதால்தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள். ஆனபடியால் முக்கியமாக ஏன் இந்த நிலைமைக்கு வந்தது என்பதைத்தான் நான் பார்க்க விரும்புகின்றேன். இதற்காக நான் முதல் சொல்ல வருவது என்னவென்றால் கருத்து அதிகாரம். இந்த கருத்து அதிகாரம் என்பது நாங்கள் நடைமுறையில் பார்க்கும்போது பெண்களை ஏற்கப்பண்ணுதல் இந்தக் கருத்துக்களைப் பெண்களின் எதிர்ப்புக்கள் இருந்தாலும் அதிகாரத்திற்கு உட்படுத்தல். வழமையான பழக்க வழக்கங்கள் மாற்றப்படுதல் விருப்பு வெறுப்புக்கு அப்பால் இந்தக் கருத்துக்காக கருத்துக்குள் கட்டுப்படுத்தல் g56OTmái) (Systematic Behaviour Pattern) 6T60p feup8555,556ir உருவாக்குதல்.
இரண்டாவது ஒரு கட்டுமானத்தை எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்குதல். அக்கட்டுமானத்துக்காக ஒழுங்குமுறைகளை உருவாக்குதல். குறிப்பிட்ட ஒழுங்குமுறைகள் உடைக்கப்படும் போது திரும்பவும் கடினமான ஒழுங்குகளைச் சமூதாயத்திற்குள் உருவாக்குதல். இந்த ஒழுங்குகளை மீறும் போது தண்டித்தல் நடவடிக்கைக்கு வரும் போது திரும்பவும் அந்த ஒழுங்கு முறைகளைச் சட்டமாக்குதல். தொடரான முறையில் இப்படியான விஷயங்களை நாங்கள் திரும்பவும் கேள்விக்குள்ளாக்கி அவற்றை Renew பண்ணி அதாவது பெண் சம்பந்தமான விஷயங்களைத் தொடர்ச்சியாக Renewபண்ணி அதைத் திரும்பவும் கேள்விக்குள்ளாக்கி பழைய நிலைக்குக் கொண்டு வருதல், அதோடு Opinion Conduct உம் ஒன்றாகப் போகக் கூடிய விதமான ஒரு வழமையான நடைமுறையை ஏற்படுத்துதல். அதன்போது மனோவியல் ரீதியான தாக்கங்களை ஒரு சாராருக்கு ஏற்படுத்துதல். அதே மாதிரி Social Responsibility ஒன்றை உருவாக்குவதால். அதாவது சமுதாயத்துக்குள் இந்தக் கடமைகள்தான் இருக்கின்றது என்பதை தகமை ரீதியாக ஏற்கப்பண்ணுதல். அதன் பிறகு நான் ஏற்கனவே சொன்னது போன்று பழக்க வழங்கங்களை அந்த Social Responsibility யை அண்டிய வண்ணம் ஏற்படுத்துதல். அதே நேரம் இந்த Social Responsibility யை சமூகத்தில் இருக்கின்ற மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல். இப்படிச் செய்வதன் மூலம் ProceSS யை ஒரு முகப்படுத்தி அதை ஒரு திக்கில் விட்டுவிடுதல் அதாவது Decision Making ProceSS என்று நாம் சொல்லும் போது இதற்கு வேறு விதமான Decision Making Processயை சம்பந்தப்படுத்தப்படலாம். ஆனால் நான் சொல்ல
43

Page 27
வருவது இந்த Opinion Making ProceSS யை ஒரு திக்கில் கொண்டு போய் அதாவது ஆண்களுக்குச் சார்பான ஒரு திக்கில் திருப்பி விடுதல். குறிப்பிட்ட Role Model ஒன்றை உருவாக்குதல் அதே நேரம் Role Model க்கும் சமூகத்தில் இருக்கின்ற இன்னொரு Role Model க்கும் இருக்கின்ற ConflictS யை அப்படி வராமல் ஒரு சிரத்தையான Behaviour Pattern ஒன்றை உருவாக்குதல் அதே மாதிரி வேலைகளை வகைப்படுத்துதல். ஒவ்வொரு ஒவ்வொரு வேலைகளை வெவ்வேறு விதமாக வகைப்படுத்துதல் ஒரு குறிப்பிட்ட வேலையிலே ஒருவரை அதற்குள்ளே பாண்டித்தியம் பெறப்பண்ணுதல் அதற்கூடாக நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் பார்த்தீர்களானால் இந்த பாலியல் அதிகாரம் என்பது அதிலே வந்து தொக்கித் தொக்கி ஒவ்வொரு இடத்திலும் நிற்பதை நீங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அடுத்தது சமுதாயம் என்பது நான் நினைக்கின்றேன் ஆண்களையும் பெண்களையும் கொண்டதாகவே இருக்கும். நான் அதற்கு வெவ்வேறு பாகுபட்ட வேறுபாடுகளை ஏற்கனவே கூறியிருக்கின்றேன். ஆனால் நான் நினைக்கின்றேன் அது ஆண்களையும் பெண்களையும் கொண்ட ஒரு சமூகம் இந்த சமூகத்தினை நாங்கள் பார்க்கும் போது Resources மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றது. அது எந்தவொரு சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் Resources மித மிஞ்சிய வகையில் இல்லை. எனவே அந்து Resources க்கு ஏற்ற மாதிரி பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் வளங்களுக்கு ஏற்ற மாதிரி வேறுபாடுகளை ஏற்படுத்த வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்படுவர். ஏனென்றால் Decision Making proceSS லும் அப்படிப்பட்ட ஒரு நிலமை இருக்கிறதால் வளங்களை நாங்கள் பாவிக்கும் போதும் பெண்களை அப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு எடுத்துச் செல்லுதல். மற்றது இதனூடா Frame Work யை உருவாக்குதல் அந்த Frame Work குள் வரும் போது ஆணும் பெண்ணும் அந்த Frame Work க்கு ஏற்ற மாதிரி தான் தங்களது முடிவுகளை மாற்றக் கூடிய நிலைக்குக் கொண்டு வருவர். திரும்பவும் சமூகத்தில் இந்த Frame Work கிற்குள் வரும் போது ஊறிப்போன உறவு பழக்க முறைகளை வெளிப்படுத்துதல். ஒவ்வொரு அமைப்பு முறையும் நான் நினைக்கின்றேன் ஒரு சாராருக்கு அது இப்ப முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கென்று அப்படியில்லாமல் ஒவ்வொரு அமைப்பிலும் ஒவ்வொரு சமூக அமைப்புகளிலும் ஒரு சமூக அமைப்புக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று தான் நான் நினைக்கின்றேன். எனவே இப்படி உருவாகும் போது இந்த ஆண் பெண் சார்ந்த இந்த உறவு முறைகளை அவைகளையும் அந்த லாபத்துக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்தல். இறுதியாக நாங்கள் பார்க்கும் போது மனிதர்கள் என்பவர்கள் பொருட்களாக இப்பொழுது இந்த சமூகத்திலே இருக்கின்றார்கள். அவர்களை நாங்கள்
44

மனிதர்கள் என்று சொல்லுவது சரிப்பட்டு வராது என்று தான் நான் நினைக்கின்றேன். அவர்கள் ஒரு சடப்பொருட்களாகத் தான் வாழ்கின்றார்கள். ஆனால் இந்த சடப்பொருட்களாக மாற்றும் போது நீங்கள் பாருங்கள் அதற்குள்ளும் பாலியல் அதிகாரம் என்பது தொக்கித்தான் நிற்கின்றது. சடப்பொருட்களாகப் பெண்கள் விற்கப்படுகிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அதற்குள்ளாகவும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இந்தப் பாலியல் அதிகாரம் என்பது தொக்கிக் கொண்டுதான் இருப்பதாகத் தான் நான் நினைக்கின்றேன். சமூகத்திலே இவற்றிற்கூடாக ஒரு சமநிலையை Social Equibrium உருவாக்குதல் நான் நினைக்கிறேன் இந்த நிலைமையில் இருந்து தான் நாங்கள் சொல்லுகின்றோம் பெண் என்பவள் இப்படி பாலியல் அதிகாரத்திற்கு உட்படுவது அவள் பெண் என்பதால்தான். ஏனென்றால் சமூகத்தில் சமூக சமநிலை என்ற நிலை ஒன்று வந்துவிட்டது. வந்ததன் பின் அதுதான் அந்த சமூகத்தில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த சமநிலைக்கூடாக நடப்பது என்னவென்றால் ஆளுக்குரிய பாலியல் அதிகாரம் ஒரு தொக்கில் போய் சமப்படுத்தல் நிலையில் போய் நிற்பதாக கருதுகின்றேன். இதை இவ்வாறு சொல்லுகின்றார்கள். ஆணுக்குரிய ஒரு சந்தோஷத்தை சமூகத்தில் ஏற்படுத்துகின்ற விதமான ஒரு விடயமாகத்தான் இறுதியிலே எந்த கோட்பாடுகளை எடுத்துக் கொண்டாலும் அது ஈற்றிலே வந்து தொக்கி நிற்கின்றது. இதனூடாக இன்னொரு விடயமும் நடக்கின்றது. அது தான் இந்த Communication System அது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இந்த Communication யை நாம் எடுத்துக் கொள்கின்ற போது அது சிறுபிள்ளைகளில் இருந்து வருகின்றது. உதாரணமான பாலகனுடைய நடவடிக்கையிலிருந்த வளர்ந்தோருக்கான நடவடிக்கைகள் அதற்குள்ளே கன விதமான கட்டங்களுக்குள்ளாள நாங்கள் சில சில விஷயங்களை நாங்கள் Communicate பண்ணிக்கொண்டு இருக்கிறோம். அது மட்டுமில்லாமல் நாங்கள் ஒருவரிடம் தங்கி நிற்கின்ற நிலையிலே இருந்து சுதந்திரமான நிலைக்கு போகும் போது கூட இப்படியான விஷயங்கள்.
அது மட்டுமில்லாமல் குறுந்துார நோக்கத்தில் இருந்து நெடுந்துார நோக்கம் வரைக்கும் இந்த சமூகத்திலே இருக்கின்ற இந்த Communication சம்பந்தமான வழிமுறைகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கின்றன. எனவே நாங்கள் இவைகளைப் பார்க்கும் போது இந்த கலை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துக் கொண்டாலும் இதற்குள்ளேயும் பணம், Profit maximization இப்படிப்பட்ட பல விஷயங்கள் அடங்கியிருப்பதாகத்தான் நான் நினைக்கின்றேன். என்றபடியால்
45

Page 28
அதற்குள்ளும் இதே இந்த அதிகாரம் தான் திரும்பவும் பல நடவடிக்கைகளிலே உள்ளுக்குள்ளால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே எமது சமூகத்திலே என்ன நடக்கின்றது என்று நாங்கள் பார்த்தோம் என்றால் சமூகத்திலே எங்களுக்கிருக்கின்ற அதிகாரத்தை தேவையான அதிகாரத்துக்காகவும் பல சலுகைகளுக்காகவும் சில Positions க்காகவும் எனவே இந்த நிலைமையில் பாலியல் அதிகாரம் என்பது இந்த வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றதென்று தான் நான் கருதுகின்றேன். எனவே இதற்குப் பிறகு சில அறிஞர்கள் சொல்லுகின்றார்கள் என்னவென்றால் இதன் மூலமாக பெண்கள் நியுரோஸிஸ் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார். இந்த நியுரோஸிஸ் என்ற நிலையில் இருப்பதால்தான் அவர்கள் திரும்பவும் முதற்கட்ட நிலைமைகளை பாவிக்க முடியாமல் அதற்குள்ளேயே ஊன்றிப்போய் அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். பெண் ஏன் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டாள் என்பதை நான் முதற் சொன்ன கோட்பாடுகளுக்கூடாக விளங்கிக் கொள்ளலாம் என நினைக்கின்றேன். அதற்குப் பிறகு இவர்கள் சொன்ன இந்த கருத்தை வைத்து நிகழ்காலத்தில் கடந்த காலம் எதிர்காலத்தில் பெண்ணியமைய எதிர்பார்ப்புகள் என்பன இந்த பாலியல் அதிகாரத்தை வைத்து நான் யோசித்த போது அது கடந்த காலமும் நிகழ்காலம் ஒரு வரைபை கீறிப் பார்த்தேன் அது அப்படியேதான் இருக்கின்றது. எந்தவித மாற்றமும் இல்லை. திரும்பவும் நான் அதை எதிர்காலத்திற்கு போட்டுப்பார்த்தேன் நான் நினைக்கவில்லை எந்தவிதமான மாற்றமடையாது என்றே கருத வேண்டியதாயிருந்தது. கலைப்படைப்புகளை பார்த்தோமானால் 99 வீதமானது இதையேதான் வெளிப்படுத்துகின்றது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நீங்கள் எந்தப்படத்தைப் பார்த்தாலும்பாலியல் அதிகாரம் என்கின்றன விஷயத்தை எடுத்துப் பார்த்தால் சில முன்னேற்றகரமான விஷயங்கள் இருக்கும் ஏனென்றால் சமூகம் Lot gjib Gurrgj Social Responsibilities origjib 95 LDIT gjith Gurgj பெண்களுக்கிருந்த சில சில விஷயங்கள் மாறிக்கொண்டு தான் வரும் அப்பொழுது ஆக்கள் என்ன சொல்கின்றார்கள் என்றால் நாங்கள் எல்லாத்தையும் கொடுத்து விட்டோம் எல்லாவற்றையும் பெண்கள் அடைந்து விட்டார்கள் என்று ஆனால் நீங்கள் எடுத்துப் பாருங்கள் இந்த பாலியல் அதிகாரத்தைப் பற்றி நான் சொன்ன விஷயங்களைப் பற்றி அது எந்த படத்தினை எடுத்துக் கொண்டாலும் எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் அவைகள் ஒரு இடத்தில் தொக்கி நிற்பதைப் பார்ப்பீர்கள். அது என்ன செய்கின்றது என்றால் நான் ஏற்கனவே சொன்னவைகளைத்தான் அது திரும்பவும் திரும்பவும் கொண்டு வருகின்றது. எனவே திரும்பவும் திரும்பவும் அதுகள் கொண்டு வருவதால் நாங்கள் வேறொரு.
46

நாங்கள் வைத்துக் கொண்டிருப்போம் பாலியல் அதிகாரம் என்பது இதுவென்றால் ஆனால் எங்களுடைய பக்கம் நிற்பதாக இல்லை ஏனென்றால் நாங்கள் கருத்து ரீதியாக மிகவும் களைத்துப் போனவர்களும் மிகவும் சிறுமைப்பட்டவர்களுமாகத்தான் இருக்கின்றோம். எனவே நாங்கள் திரும்பவும் மற்ற திக்கில் தான் போய் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். உதாரணமாக நீங்கள் பிக்காசோ படங்களை எடுத்துப் பாருங்கள் நாங்கள் எல்லோரும் சொல்கின்றோம் மிகவும் அருமையானது எவ்வளவு பிக்காசோ செய்திருக்கின்றார் என்று அந்த பிக்காசோவின் மிகவும் எல்லாராலும் போற்றப்படுகின்ற ஒவியங்களை வைத்துக் கொண்டு அதில் என்ன இருக்கின்றது பாலியல் அதிகாரம் அப்படியே தொக்கி நிற்கின்றது. பெண் உறுப்புகளைக் கொண்டு போய் எல்லோரும். தொக்கி நிற்கின்றார்கள். அந்தப் படங்களுக்குக் கீழே போட்டுள்ளார்கள் ஒவ்வொரு வரும் Interpret பண்ணலாம் என்று, ஆனால் சில படங்களில் கீழே விளக்கங்கள் போடப்பட்டுள்ளது. நீங்கள் எடுத்துப் பாருங்கள் கடைசியாய் அதில் நிற்கின்றது என்னவென்றால் அது பிக்காசோ ஒரு விபச்சார விடுதிக்குப் போய் விபச்சாரிகளோடு பழகித்தான் இந்த ஒவியத்தை போட்டிருக்கிறார். இதில் நீங்கள் பாருங்கள் இந்த பாலியல் அதிகாரம் என்பது எவ்வாறு தொக்கி நிற்கின்றது என்று அதற்குப் பிறகு நீங்கள் எடுத்துப் பாருங்கள் நாங்கள் எல்லோரும் டைடானிக் பார்த்திருக்கின்றோம் டைட்டாணிக்கையும் எடுத்துப் பார்த்தால் அதில் என்ன இருக்கின்றது. இரு அழகு காதல் என்பதற்கு அப்பால் நீங்கள் திரும்பவும் புகுந்து புகுந்து பார்த்தீர்கள் என்றால் அதற்குள் ஒரு பாலியல் அதிகாரம் என்பது தொக்கித்தான் நிற்கின்றது. அதைவிட நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வோம் நாங்கள் இப்போது பார்க்கிறோம் சரத்சந்திரா அந்த நாடகங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் சில வகையில் முன்னேற்றங்கள் இருந்தாலும்பாத்திரங்களில் பெண் பாத்திரங்கள் என்பது பாலியல் அதிகாரத்திற்கு தொக்குப்பட்டிருக்கின்ற ஆக்களாகத்தான் காட்டப்படுகின்றார்கள். ஏன் நாங்கள் எங்களுடைய தமிழ் இலக்கியம் முழுவதையுமே எடுத்துக் கொள்வோமே கம்பராமாயணத்தை எடுத்துக் கொண்டால் சீதையை கடத்திக் கொண்டு போகின்றார்கள். ஏனென்றால் அது ஒரு பாலியல் அதிகாரத்திற்கான பிரச்சினைதான். அதற்குப் பிறகு நாங்கள் எடுத்துக் கொள்வோம் மகாபாரதத்தை அதற்குள்ளும் ஒரு பெண்ணை வைத்து பாலியல் அதிகாரத்திற்காகத்தான் சூது பண்ணுகிறார்கள் அதற்குப் பிறகு எந்தக் கதையையும் எடுத்துப் பாருங்கள் நளன் தமயந்தி, எனவே இவைகளில் பாலியல் அதிகாரம் என்பது தொக்கிநிற்பதாகத்தான் இருக்கின்றது. அதே நேரம் தூ தூ என்று பெண்கள் ஆய்வு மன்றத்தோடு ஒரு
47

Page 29
நாடகத்தை செய்தோம் அதற்கு முதலும் நாங்கள் வளைவு என்று நாங்கள் இன்னொரு ஆள்கையைச் செய்தோம் அதுக்குள்ளால் நாங்கள் எங்கட மனதில் பட்ட சில விஷயங்களைச் செய்தோம். இதற்குள்ளால் நாங்கள் எவ்வாறான படிப்பினையை பெற்றுக்கொண்டோம் என்பதைப் பார்க்கும் போது நாங்கள் திரும்பவும் Social Behaviuor Pattern என்பது பாலியல் அதிகாரத்தில் தொக்கி நிற்கின்ற அந்த வடிவத்திலே எப்படி திரும்பவும் சமூகத்துக்குள் கொண்டு வருகின்றது என்பதைப் பற்றித்தான் நாங்கள் பார்ப்பதற்காக அதை எடுத்தோம் ஆனால் நீங்கள் தான் அதை Interprit பண்ண வேண்டும். அதில் ஒரு படத்தில் சாதாரண கருத்தை எடுத்துப் பார்த்தால் ஒரு சாதாரண இளைஞனை ஒரு சினிமாவாக எப்படி வடிவமைக்கின்றது என்று அதாவது ஒரு இளைஞனின் பழக்க வழக்கங்களை வடிவமைக்கின்றது என்பதை இரண்டாவது தூது என்று எடுத்ததில் சம்பிரதாயங்களை எப்படி திரும்பவும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் கலை நிகழ்வுகள் வந்து புகுத்துகின்றது என்பதையும் நாங்கள் பார்த்தோம். இதில் நாங்கள் பார்க்கும் போது ஏற்கனவே நீங்கள் சொல்வது மாதிரி கலைப்படைப்புகள் என்பது எப்பொழுதும் இருக்கின்ற நீரோட்டத்தில் தான் இருக்கும் எனவே அதற்கு சேவை செய்யக் கூடிய விதமாகத்தான் நாங்கள் இந்த கலைப்படைப்புகளை கொண்டு வர வேண்டும் அப்படி கலைப்படைப்புகளை கொண்டு வராமல் போய்விட்டால் நாங்கள் எப்படியும் அந்த கலைப்படைப்புகளை வெளியில் கொண்டு வரஇயலாது. ஏனென்றால் நாங்கள் ஈடுபட்டவர்கள் நாங்கள் இருக்கின்றோம் வளைவு என்ற ஒரு படத்தினை நாங்கள் 1993 முடித்து விட்டோம் முடித்து எல்லா இடமும் கெஞ்சிக் கேட்டோம் அவர்கள் ஏலாது என்று சொன்னார்கள். நீங்கள் விருப்பம் என்றால் இந்தியாவில் மணிரத்தினத்தினுடைய மனைவி செய்யிற மாதிரி எதுவும் பெண்கள் சம்பந்தமாக கொண்டு வந்தீர்கள் என்றால் எங்களுக்கு ஒரு மாக்கட் எடுக்கலாம்
இதில் மொழியும் இல்லை நாங்கள் மொழியும் போடவில்லை பிறகு நாங்கள்.
sTsarcou Profit Maxaimization Social Responsibilities 6T6öTu606) வேறுபட்ட நிலையில் இருக்கும் போது கலைப்படைப்புகள் Main Stream இல் கொண்டு வருவது சரியான கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் நாங்கள் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று Main Stream Media வில் போய் பெண்கள் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் என்றால் என்ன வேறு எந்த கருத்துகள் என்றால் என்ன நாங்கள் அதற்குள்ள இருந்தாற்போல் போய் ஒரு அதிர்ச்சி வைத்தியத்துக்குள்ள உள்ளாக்கி ஏற்கனவே நான் சொன்ன மாதிரி சமூக சமநிலையை குழப்பும் ஒரு விஷயத்தை நாங்கள் செய்யலாம் இப்ப இருக்கிறMain Stream Mediaவில் என்று
48

தான் கருதுகின்றேன். அதைவிட்டு நாங்கள் ஏற்கனவே சொன்னது போல் கங்களுடைய நோக்கங்களை நாங்கள் அடையப் போவது கொஞ்சம் கஷ்டமான காரியமாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். மற்றது அதே மாதிரி இந்த போர் சம்பந்தப்பட்ட பிரச்சினையும் முக்கியமான பிரச்சினை. மக்கள் கேட்கின்றார்கள் ஏன் இந்த பெண் சார்ந்த கலைப்படைப்புகள் வெளிக்கொண்டு வரும் போதுதான் இந்த இரண்டு தூ தூவிலும் பாலியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் முக்கியமாக வெளியில் வந்தது. அதன் போதும் சில பேர் கேட்கின்றார்கள் நீங்கள் ஏன் இவற்றை சொல்லப்போறிர்கள் வீட்டில் ஒரு பெண் வெளியில் அலுவலகத்துக்குப் போகும்போது அல்லது அவள் தனது பெயரில் ஒரு காரை வாங்கும் போது அதில் பிரச்சினைகளை காட்டும் போது அது அதிகமானவர்களுக்கு விளங்கும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்படியான விஷயங்களை நீங்கள் சொல்வது கூடாது என்றும் கருத்துக்களை வழங்குகின்றார்கள். எனவே ஏன் இந்தப் போர் சம்பந்தமான பிரச்சினைகள் கலைப்படைப்புகளில் முக்கியமான விடயங்களாக இருக்கின்றது. ஏன் நீங்கள் இலகுவாக கொடுப்பதில்லை என்று எல்லாரும் கேட்கின்றார்கள். உண்மையாக நான் சொல்லப் போவது என்னவென்றால் பெண் சம்பந்தமான எத்தனையோ கலைப்படைப்புகளை பார்க்கின்றோம் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் அடிச்சு முடிச்சு பெண் விடுதலை வந்துவிட்டது. நாங்கள் வீட்டுக்குப் போகும் போது உண்மையாக பெண் விடுதலை அடைந்த வர்களாகத்தான் போகின்றோம். ஆனால் நான் நினைக்கின்றேன் என்னவென்றால் பெண்விடுதலை என்பது அதாவது பாலியல் அதிகாரம் என்பது எவ்வாறு சமூகத்துக்குள் தொக்கிப் போய் நிற்கின்றதோ அவ்வளவு கஷ்டமானதுதான் அந்த பாலியல் அதிகாரத்தை ஒரு போக்குக்குள்ளாள் வெளியில் கொண்டு வருவது. அது மிகவும் கஷ்டமான விஷயம் அதற்குள்ளே எத்தனையோ conflict இருக்குது controdiction இருக்குது இதை வெளியில் கொண்டு வருவதும் கஷ்டமான விஷயம். எனவே போர் கஷ்டமாக இருக்கும் போதுதான் நாங்கள் எங்களுக்குரிய கடப்பாடுகளை உணரக்கூடியதாக இருப்போம் அதைவிட்டு நாங்கள் போரை மிகவும் இலகுவானதாக கொடுத்துவிட்டால் அது உண்மையாக பெண்களுடைய பாலியல் அதிகாரத்திற்கு எதிராகத்தான் வேலை செய்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம். அதாவது பாலியல் அதிகாரம் என்பதற்கு நாங்கள் சேவை செய்பவர்களாகத்தான் இருப்போம் அதை இன்னும் மெல்லிசாகத்தான் நாங்கள் கொடுப்போம் என்று அப்படி கொடுக்கவே முடியாது அவ்வளவு கஷ்டமான விஷயம் இந்த பாலியல் அதிகாரம் என்பது. எனவே கலைப்படைப்பு என்பதும் மிகவும் இலகுவாக அதை வெளியில் கொண்டு வர முடியாது. எனவே கடைசியாக இருக்கின்றது. இந்த பாலியல் அதிகாரத்திலிருந்து மீட்பது எப்படி என்பதைப் பார்த்தால் தான் கலைப்படைப்புகள்
49

Page 30
திரும்பவும் எப்படியான விடயங்களை செய்யக் கூடும் என்று நான் நினைக்கின்றேன். அப்பொழுது பெண்களுக்கிருக்கின்ற அடிப்படை ஏற்கனவே கூறியதுபோல பெண்களுக்கிருக்கின்ற ஒரு அடிப்படைப்பிரச்சினை உடல் கூற்றுவியல் ரீதியான பிரச்சினை. எனவே ஆண்களையும் கருவுறச் செய்யலாமா? அப்படியொரு சாத்தியப்பாடு இருக்குமானால், இருக்கின்ற சோஷல் றெஸ்போன்சும் அல்லது நான் ஏற்கனவே கூறிய விடயங்கள் எப்படி மாறும்? அப்படி நோக்கும் போது இது ஒரு அப்சேட் அப்சேட்டான ஒரு திங்கிங். இது அப்படி நடக்க முடியாது.
ஆண் ஆண் உறவுகளையும் பெண் பெண் உறவுகளையும் பலப்படுத்துதல் என்று. அதிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றது. இவையெல்லாவற்றையும் அப்சேட்டாக நாம் ஒரு புறமாக தள்ளிவைத்தாலும் இடைப்பட்ட காலத்தில் என்னவிதமான தீர்வுகள் சமூகத்தில் கொண்டுவரவேண்டும் என்றா நாங்கள் பார்க்கவேண்டும். ஒவ்வொரு கட்டமைப்பிலும். ஒவ்வொரு சமூக அமைப்பிலும் இருக்கின்ற மெக்கனிசம்ஸ் பற்றாதவையாகத்தான் இருக்கின்றது. . அரசாங்கம் இதற்கூடாக உட்புக வேண்டும் என்றால் இங்கிருக்கும் மெக்கானிஸங்கள் எல்லாம் பற்றாக்குறையாக இருப்பதால். எனவே அரசாங்கம் உள்ளுக்குள் வரவேண்டும் என்றால் எங்களிடம் இருக்கின்ற ஆட்டிக்கல் 12 அதவாது 12வது அத்தியாயம் இதை உணர்த்துகின்றது. பிறகு 12வது 2வது சொல்கிறது. அதாவது நாட்டில் இருக்கிற எந்தவொரு பிரஜையும் பாலியல்ரீதியாக வேறுபடுத்த முடியாது. இதில் உணர்த்தப்படுகின்ற முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் பிரஜைகளை மட்டும்தான் பாதுகாக்கின்றது. பிரஜைகள் அல்லாதவர்களை இது பாதுகாக்காது. 12வது சரத்திரல் 4வது மிகவும் முக்கியமானது. . அதாவது பெண்களை முன்னோக்கிக் கொண்டு போகிற விடயமாக சில விடயங்களை அரசாங்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. அனால் அதேநேரம் எங்களிடம் இருக்கின்ற சிலசில விடயங்களில் இன்னும் ஹென்விளிற் இருக்கின்றது. . பார்த்தீர்களானால் ஒரு பெண் றோட்டில் திரிபவளாக இருப்பவளானால் அவளை சட்டத்தின் கீழ் கொண்டுவரக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் அவளோடு திரிகின்ற ஆணை இதற்குள் கொண்டுவரமுடியாது. 1960 தான் பெண்கள் சொத்தை வைத்திருக்கும் சட்டம் கொண்டுவரப்படுகின்றது. அதே போல பாலியல் வல்லுறவையும் எடுத்துக்கொண்டால் அதிலிருக்கிற அடிப்படைப் பிரச்சினை . இல்லை
என்பதைப் பெண்தான் நிரூபிக்க வேண்டும். உ-ம் அண்மையில் . வழக்கை
50

எடுத்துக்கொண்டால் அவர்கள் விடுதலை பெற்றிருக்கின்றார்கள். அது கொன்சன்ரோட நடைபெற்ற பிரச்சினை. இதற்கு எதிராகக் கொண்டுவர . முன்மொழிவு றேப் ஒன்று நடைபெற்றிருக்கின்றது என்பதை நிரூபித்தால் . வரவேண்டும் . இல்லாமல்தான் இது நடந்ததென்று. இதில் ஆண்தான் . வோடதான் இது நடந்ததென்று. எனவே பின்நிரூபிக்கத் தேவையில்லை. ஆகவே பல விடயங்கள் வெளிவருவதற்கான சூழ்நிலை உருவாகின்றது.
நீண்ட நோக்கில் பார்த்தால், சமூக சமநிலையை மாற்றுவதற்கான வேலைகளில் நாம் ஈடுபடவேண்டும். அதை எவ்வாறு நாம் மேற்கொள்வதென்றால்? Social equibrium அதாவது இருக்கின்ற இப் பிரச்சினைகளை உடைத்து ஒரு ஆணையும் பெண்ணையும் முன்னுக்குக் கொண்டுவந்து இந்தச் சமூகத்திலே இரண்டு பேருமே ஒன்றாகச் செல்வதற்கு விடயங்கள் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். அதேநேரம் சமூகத்தில் இருக்கிற பாலியல் அதிகாரத்தை சமநிலைக்கு கொண்டுவர வேண்டும். அதேநேரம் ஏற்கனவே இருக்கின்ற இந்த சக்ஸர . அதாவது இந்த டிசிசன் மேக்கிங் புறோசருக்குள்ள இந்த ஆணையும் பெண்ணையும் கொண்டுவரவேண்டும். அதற்கான வேலைத்திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதில் முக்கியமான விடயம், . இவ்விருவரையும் அல்லது பெண்ணை இந்த ஜென்ட் டிசிசன் மேக்கிங்குள்ள கொண்டு வரும் பொழுது ஜென்ட பைனஸ நீங்கிப்போட்டுத்தான் இதற்குள் கொண்டுவர வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த நேரத்தில் கலைப் படைப்புக்கள் என்ன செய்யவேண்டும் என்றால், கலைப்படைப்புக்களுக்கு இருக்கின்ற நிலைமையில் அதிர்ச்சி வைத்தியம் செய்யிறது மட்டும்தான். எனவே செய்யவேண்டிய ஒரே விடயம் மெயின்ஸ்றீம் மீடியாவுக்குள் போய் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தைச் செய்கிறது. இதனூடாக சமநிலையைக் குலைக்கிறது. அப்படிச் செய்யும் போது பலவிதமான விமர்சனங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். இலாபத்தையோ அல்லது சோஷசல் பொசிசன்சையோ பார்க்காமல் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை ஏற்படுத்த நாங்கள் எங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். உ-ம் ஒரு திரைப்படத்தில் நடக்கும் பாலியல் வல்லுறவை எடுத்துக்கொண்டால் அது ஆணுக்குரிய சந்தோஷத்தை மிகப்படுத்துவதற்குரியதாக கருதுகிறார்கள். இது பிழை. ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளால் எவ்வளவு கஷ்டப்படுத்தப்படுகிறாள். அவளுடைய ஆத்மாவும், அவளும் சிதைக்கப்படுவதை காட்ட என்பதை காட்டுவதற்காகத்தான் அந்தக் காட்சியைக் கொண்டுவர வேண்டும். ஆனால் அது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இதற்குள்ளால் பாலியல் அதிகாரத்தை முனைப்பு பண்ணிக்
5

Page 31
கொண்டுவருகிற முயற்சி. அதே நேரம் பாலியல் சந்தோஷம் ஆணுக்குத்தான் இருக்கிறது என்பதை முழுக்கலைப் படைப்புகளையும் காணலாம். பெண்ணுக்கான பாலியல் சந்தோஷத்தை முன்னுக்குக் கொண்டுவருகிற எந்தப் படைப்புக்களும் இதுவரை இல்லை.
இன்னொன்றையும் குறிப்பிடலாம் சயன்ரிவிகல் Scientifical ரீதியான முன்னேற்றங்களையும் கலைப்படைப்புகள் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும். உ-மாக நீங்கள் பார்த்தீர்களானால் சயன்'டிவிக்கல் ரீதியான புறோசர் மேக்கிங்கிலகூட ஆண்கள்தான் இருக்கிறார்கள். உ-ம், சொந்தம் ஆண்களுக்குத்தான் இருக்கிறது. பெண்களுக்கு அல்ல. (உ+ம்) Condoms ஆண்களுக்கு பெண்களுக்கு இலது.
புதிய சட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். ஒரு நியு பிறேமைக் கொண்டுவர வேண்டும் அதற்குள் ஆணையும் பெண்ணையும் உள்ளடக்க வேண்டும்.
52

வழக்குறைக் கண்ணகி ஒரு நோக்கு
- 6ിക്ഷ. മഗ്മഗ്ഗ7ബ്
'கண்ணகி வழக்குரை' என்ற நூல், ஈழத்தில் எழுந்த, செந்நெறி இலக்கிய மரபிற்கும் நாட்டார் இலக்கிய மரபிற்கும் இடைப்பட்ட மரபினைச் சார்ந்த காவியங்களுள் முக்கியமானதொன்று. சகவீரன் என்பவரால் 15ம் நூற்றாண்டளவில் இது இயற்றப்பட்டதென்று கருதப்படுகின்றது. ஆய்வாளர் சிலர் இதனை மறுதலிப்பதுமுண்டு. அது எவ்வாறாயினும் மட்டக்களப்பு பிரதேசத்திலே செல்வாக்குப்பெற்று இன்றுவரை கோயில்களிலே படிக்கப்பட்டு வருகின்றது 'கண்ணகி வழக்குரை'. இன்றுவரை அதிகளவு ஆய்வுக்குட்படுத்தப்படாத இந்நூலில் இடம்பெறும் கண்ணகி பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.
கண்ணகி வழக்குரையில் மொத்தம் பதினொரு காதைகள் உள்ளன. இவற்றுள், வரம்பெறும் கதை (1. அம்மன் பிறந்த கதை), பொன்னுக்கு மதிப்புக் காதை (2. பொன்னுக்கு மதிப்பு), அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, (அம்மன் கனாக்கண்ட காலத, வழக்குரைத்த காதை, (அ.குளிர்ச்சி ஆ வழக்குரை காவியம்) என்பன கண்ணகி பற்றி அறிவதற்கு உதவுகின்றன.
இவற்றுள், 'அம்மன் பிறந்த கதையில் கண்ணகியின் பிறப்பு பற்றிக் கூறப்படுகின்றது. அது நமது கவனத்திற்குரியது. தெய்வப்பெண்ணான - பரராச முனிவரது மகளான - கண்ணகி மாங்கனி உருவில் பூவுலகில் வந்து பிறக்கின்றாள். கண்ணகியின் கற்பு முதலான நற்குணச்சிறப்புக்களை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிவன் கண்ணகியை இவ்வுலகிற்கு அனுப்புகிறார். பாண்டியனது செருககடக்கும் பொருட்டு உமையும் கண்ணகி அவதாரம் எடுப்பதன் அவசியம் பற்றி வற்புறுத்துகின்றாள். ஆக, கண்ணகியின் கற்பு முதலான நற்குணங்களை வெளிப்படுத்துவதும் அரசரது செருக்கடக்குவதும் கண்ணகி அவதாரத்தின் நோக்கங்களாகின்றன. இவ்விதத்தில் தெய்வப் பெண்ணான கண்ணகி மனிதப் பெண்ணாகின்றாள்!
53

Page 32
மனிதப் பெண்ணாகிவிட்ட கண்ணகியை, கண்ணகி வழக்குரையிலே தொடர்ந்து வரும் பகுதிகள் உயர்பண்புகள் பொருந்திய இலட்சியப் பெண்ணாகக்காட்ட முற்படுகின்றன.
கோவலன் பொருள் குன்றியநிலையில் (சித்ராபதியின் செயல் காரணமாக) மாதவியிடம் அவமானப்படுகின்றான். இந்நிலையில், பலபொருட்களைக் கொடுத்து தனது கணவனுக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தை அகற்ற முற்பட்ட கண்ணகி,
“ஆரவடம் மேல்வளையல் அம்புலி தளப்பமுடன்’ அற்ற கடைப்பீலி உற்ற முன் கைவளை பாரமுள்ள நேர்வளி பலமோ திரந்திரப்ப
பாளை செறி நுபுரம் சரப்பலி பிலட்சணை சிரணையும் சங்கிலி சரப்பலி பிலட்சணை
சிறந்த வரை ஞானுடன் நிறைந்தமணி கிண்கிணி கூரணையு விழியுடைய காதோலை கைக்காறை
கொண்டு சென்றே கொடுமென்று செப்பினாளே”
(பொன்னுக்கு மதிப்பு:பக் 210, செ.23)
மாதவியிடம் யாவற்றையும் இழந்து யாது செய்வது என்றறியா நிலையில் ஏங்கியிருந்த கோவலனுக்கு,
“பசித்தவர்கள் ஏது தின்னார் பகைத்தவர்கள் ஏது சொல்வார் கசிந்த சிந்தை மிகவுடைய காளையரே என் கணவா விஷத்தரவின் மணிச்சிலம்பபை விற்றுவாரும்”
(வழிநடை பக். 171)
என கண்ணகி ஆலோசனை சொல்கின்றாள். கோவலன் தான் அதனைப் பெற்றால் “அது மனைவியின் வீட்டுப்பொருள் எனப் பிறர் ஏசுவர்” என்று கூறி மறுதலித்தபோது பரிபுரம் விற்கும்படியும் அதனையும் அவன் ஏற்க மறுத்தபோது சிலம்பினை விற்கும்படியும் கண்ணகி கூறுகின்றாள். இவ்வாறு கோவலனுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கின்ற கண்ணகியை கண்ணகி வழக்குரையில் நாம் காண்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கோவலன்குறித்து ஆழமாகச் சிந்திப்பவளாக கண்ணகி காணப்படுகின்றாள். பெண்களைக் கண்டால் மதுரையிலிருந்து அவன் திரும்பிவரக் கூடுமென்று கண்ணகி கூறுவதும் அவன் அதனை மறுப்பதும் அதுவுமொரு காரணமாக, கண்ணகி,
54

“தண்டரள மணிமகுடந் தமிழ் மாறன் கூடலுக்குள் கொண்டேகும் என்னையும் நீர் கோவலரே நான்வருவேன்”
என்றுரைப்பதும் இதற்குச் சான்றுகளாகின்றன.
‘அடைக்கலக்காதை காட்டுகின்ற கண்ணகி விதந்துரைக்கப்பட வேண்டியவள். பாசத்துடன் கணவனுக்கு உணவு பரிமாறும் குடும்பப் பெண்ணாக இங்கே கண்ணகியைக் காண்கின்றோம்.
("ས་...ས་ இனியகறி சோறுதன்னைக் கோலம் பெறவே சமைத்து கோவலனார் தனையிருத்தி காலுங் கலமும் வைத்துக் கறிசோறு தான் படைத்து பாலுடனே நல்லடிசில் பண்பாக அமுது செய்தார்’ (பக். 280. சே. 28)
என்பார் ஆசிரியர்.
அத்துடன், 'அஞ்சாதீர்கள்’ என்று கோவலனை ஆற்றுப்படுத்தும் கண்ணகியையும் அனுபவ அறிவுமிக்க கண்ணகியையும் அடைக்கலக் காதையிலே காண்கின்றோம்.
அதுமட்டுமன்று கண்ணகி நுண்மதியும் விவாதிக்கும் ஆற்றலும் கொண்டவளாகவும் கண்ணகி வெளிப்படுகின்றாள். மதுரையில் பொதுமகளிர் ஒருவரிடமும் சொல்லேன் என்று ஆணையிடுகின்றான், கோவலன். இதற்கு பதிலாக
“ஆணையென்ற கோவலருக் காயிழையும் ஏதுரைப்பாள் சேணி மங்கை சங்கிலிக்குத் திருவொற்றியூர் தனிலே நாணமின்றிச் சுந்தர நாதர் திரு ஆணைசொல்லி வாணுதலிர் பரவையுடன் மகிழ்ந்திருந்து வாழ்ந்திலிரோ”
என்று கண்ணகி கூறுவது இதனை உறுதி செய்கின்றது.
பெருவணிகனாக விளங்கிய கோவலன் வறுமையுற்ற நிலையிலும் சிலம்பு விற்கச் செல்லத் தயங்குகின்றான். விற்பதுபற்றி ஏதுமே அறியாதவனாகக் காணப்படுகின்றான். மீண்டும் கண்ணகி மதிமிக்க மந்திரியாக மாறிவிடுகிறாள்.
55

Page 33
“கூறுங் குணமாகவே கொள்வாரைக் கண்டு வில்லும் நீறுதனை அணியுமரன் நிமலனருள் மறவாதே ஏறுமகம் அல்ாமல் ஏறாதே என்கணவா”
என்றவாறு அடுக்கடுக்கான ஆலோசனைகளை - சிலம்பு விற்கும் வழிவகை தொடக்கம் துர்ச்சகுணங்களைக் கண்டால் விலகுவதுவரை - முன்வைக்கிறாள். கோவலன் கொலைபற்றிக் கனவு கண்ட கண்ணகி ஆயர் சேரியை விட்டுப் புறப்படும்போது மிகுந்த துன்பமுற்றவேளையிற்கூட அவர்கள் செய்த உதவிகளை நினைவுகூர மறக்கவில்லை;
“கட்டழகு கோவலரைக் கண்டலது இங்குவரேன்
இட்டமுடன் வைத்திருந்த எனைக்காத்த ஆய்ச்சியம்மை
பட்டிதனைக் காத்திடுநீ பாலாறு பொங்கிடுநீ”
(பக். 337. சே. 208) என்கிறாள்)
அதுமட்டுமன்று; புறப்பட்டுச் செல்லும் போது, முன்யோசனை மிகுந்தவளாக, கைவசமிருந்த மற்றைய சிலம்பையும் கொண்டு செல்கின்றாள். அந்நிலைபற்றிய ஆசிரியரது சித்திரிப்பு கவனத்திற்குரியது:
“ஒரு கையிலே சூளை பிடித்து ஒருகையிலே சிலம்பெடுத்தாள்
வருகையிலே கண்ணகையை வந்துவந்து பார்த்தவர்கள்
இரு கையிலே கடவுள்தனை இமைக்கு முன்னே பிச்சாக்கி
திரிகையிலே முப்புரத்தை சிரித்தெரித்த தெய்வம் என்பர்”
(செ. 211)
“பார்க்கினிய மோகினியோ பத்திரமோ காளியரோ வார்க்கடலிற் பள்ளிகொள்ளுங் காகுந்தன் செழுந்திருவோ ஏர்க்கரம்பை யோஇரதி யிந்திராணி யருந்ததியோ ஆர்க்கறிய லாமோ, அம்மா இவளை என்றார்
(செ. 212)
இத்தகைய சித்திரிப்பு ஊடாக கண்ணகி விரைவிலே தெய்வப்பெண்ணாகப் போகிறாள் என்பதனையும் மதுரையை எரிக்கப் போகிறாள் என்பதையும் கவிஞர் முன்கூட்டியே உணர்த்திவிடுவதும் மனங்கொள்ளத்தக்கது.
உயிர்மீட்புக் காதையில், “காசற்ற படியால் வந்தே காணக் கடவதானோமோ”
56

என ஒப்பாரி வைத்தழும்போது சாதாரண பெண்ணொருத்தியாக கண்ணகியைக் காண்கின்றோம். அதன் பின் ஆக்ரோஷமாக குமுறுகின்ற கண்ணகியை நீதியை நிலைநாட்டும் பொருட்டுப் புறப்பட்ட கண்ணகியை - தரிசிக்க முடிகின்றது; எ-டு:
“அருமையுடன் மாசாத்தார் அருள் வணிகர் கோவலனார் கருதியே சிலம்பு கொண்ட கள்வனென்று கொன்றிரோ வரியளிசேர் மன்னவனார் மண்டமும் மாளிகையும் எரிதழலை யான்கொளுத்தி எங்குந் தீமூட்டேனோ”
(பக். 340 செ. 225)
கூடவே கண்ணகியின் நாட்டுப்பற்றும் சுடர்விடுகின்றது. தனது நாட்டின் பெருமைகளை எடுத்துரைக்கின்றாள் அவள். இவ்வேளையின் நூலாசிரியரது கவிதா ஆற்றலும் தமிழ் இலக்கியப் புலமையும்கூடச் சுடர்விடுகின்றன. இதற்கு ஆதாரமாக, பின்வரும் பாடல் அமைகின்றது:
“பறிப்பதுவும் பனிமலரைப்பாடுவதும் பரமனையே தறிப்பதுவும் குலைசூழ்ந்த தாறுகொண்ட கதலியையே வெறுப்பதுநற் திருப்புயத்தார் வேல்வளவன் திருநாட்டில் மறிப்பதுங்கா வேரிதன்னை மற்றுமொரு மறிப்பிலையே
(பக். 369 செ. 84)
மேலும், நீதியை நிலைநாட்டும் வேளையிலே பலவித நெருக்கடிகளைக் கண்ணகி சந்திக்க நேரிடுகின்றது. இவ்விதத்தில் கண்ணகி முன் தட்டான் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதும் அவன் செய்யும் மாய்மாலங்களும் இங்கு நினைவுக்குவருகின்றன. கண்ணகியின் நீதிக்குமுன் அரசன் அறிவற்றவனாக விளங்குகின்றான்;
“ஒட்டிலுமி யதிற்கனக மொழிக்குந்தட்டான் உரைகேட்டாய்
மோட்டரசே.
(பக். 374. செ. 104)
என்று கண்ணகி விளிப்பது இதற்குச் சான்றாகிறது. சிலம்பினை உடைக்கவரும்போது அவளது நிலைபற்றிய சித்திரிப்பும் சிறப்பாகக் காணப்படுகின்றது.
57

Page 34
நகைத்த பின் முருக்கி இதழ் அகரத்தினை மடித்தாள் நச்சுலவு மைக்குழல் விழிக்கனலை இட்டாள் முகைக் கமல மொக்க முலையைத் திருகிவிட்டாள் முத்துநிகர் ஒத்த பல் இறுக்கி முன் நடந்தாள்”
(பக். 396. செ. 218)
சிலம்பு உடைபட மண்டபத்திலே மணி தெறித்து, தீப்பொறியாகிறது. அவ்வேளையிலே அவளைக் குளிரும்படி அனைவரும் வேண்டுகின்றனர். ஆயர் சேரியினர் பின்வருமாறு வேண்டுகின்றனர்.
“பத்தினியே பாண்டியர் முன் பாரதமாய் வழக்குரைத்த மெய்த் திடுமென் திருமயிலே மென்கனகத்தாளே ஏற்றாலே ஊரெரித்த ஒண்ணுதலே ஒவியமே நாற்றிசையில் நடந்தவளே நாச்சியே காத்தருள்வாய்”
(பக். 393. செ. 225)
ஆக, தெய்வப்பெண்ணாகிய கண்ணகி, மானிடப் பெண்ணாகி, மீண்டும் தெய்வப்பெண்ணாகிவிடுகின்றாள்!
இவ்வாறெல்லாம் நோக்கும்போது கண்ணகி வழக்குரைக் கண்ணகி
யாமறிந்த சிலப்பதிகாரக் கண்ணகியிலிருந்து பலவிதங்களில் வேறுபட்டு விளங்குவது புலப்படுகின்றது. இது மேலும் விரிவான ஆய்வின் நாடிநிற்கின்றது.!
58

போரும் பெண்களும்
- செவ்வி ஜெனிற்றாதனவஷ்மரிகறுப்பையா
தற்போது இலங்கையில் நிலவும் உள்நாட்டுப் போரினால், கடந்த இரு தசாப்தங்களாக மக்கள் பல்வேறு வகையான இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். இவை மக்களை உளரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெருமளவு பாதித்துள்ளன என்றால் மிகையாகாது.
விசேடமாகப் பெண்கள் வாழ்வில் போர் மேகங்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளன என்பதைச் சற்று ஆழமாக நோக்குவோமாயின் அவற்றினைப் பின்வரும் பிரிவுகளாக வகுத்து நோக்கலாம். போரினால் பெண்கள் தனித்தலமைப் பெண்களாதல், கல்வி நடவடிக்கை பாதிக்கப்படல், புலம் பெயர்தல், வறுமைக் கோட்டின்கீழ் பெண்கள் அல்லலுறுதல், போரினால், முதியோர்கள், சிறுவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படல், அங்கவீனராதல், பெண்களின் தொழில் பாதிக்கப்படல், கைது செய்தல், காணாமல் போதல், சித்திரவதைக்கு உட்படல், மனநோய்க்குட்படல், வெளிநாடுகளுக்குச் செல்லுதல், போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொள்ளுதல், சமய நம்பிக்கைகளில் தளர்வுறுதல், பாலியல் வல்லுறவுக்குட்படல் என்று பல்வேறு வகையாகப் பெண்களின் துயரங்களை வகுத்து நோக்குவோம். போரும் தனித்தலமைப் பெண்களும் இத்தகைய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நோக்குவோம் ஆயின் போரினால் பெண்கள் எதிர்கொள்ளும் பெரியதொரு பிரச்சினைதான் பெண்கள் தனித் தலமையாக்கப்படல். அவ்வாறு நோக்கும்போது யுத்தத்தினால் கணவன்மார் காணாமல் போதல், இறந்து போதல் இந்நிலமையினால் பெண்கள் விதவைகளாக்கப்படுகின்ற செயலானது பெண்களின் வாழ்வில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. காரணம் கணவன்மாரை இழந்த பெண்கள் தனித்தலமைப் பெண்களாக்கப்
எதிர்நோக்குகின்றனர். இத்தகைய போரினால் இன்று விதவைகளாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஏறக்குறையயாழ்மாவட்டத்தில் மாத்திரம்21000பேர் ஆவர்.
இத்தகைய விதவைகளைக் காப்பாற்றுவதற்கென யுத்தப் பிரதேசங்களில் "விதவைகள் சங்கம்” என்று பல சங்கங்கள் இடம்பெற்றபோதும் அவை முழுமையாக நன்மை அளிப்பனவாக இருப்பதில்லை குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் தடாகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு முக்கியம் பெறுகின்றது. இவ்வாறு
59

Page 35
ஆரம்பிக்கப்பட்ட சில அமைப்புக்கள் சிறப்பாகச் செயல்ப்படத் தவறிவிடுவதினால் தனித்தலமைப் பெண்கள் இதன்நிமித்தம் சோர்வடையும் நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.
போரும் பெண்களும் அடிப்படை வசதியின்மையும்
மற்றும் இன்று இடம்பெறும் போரினால் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் கைது செய்யப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வருவதால் அவர்களைப் பிரிந்த பெண்கள் வாழ வழியின்றி கஷ்டப்படுவதைக் காணமுடிகின்றது. மற்றும் போரினால் பெண்களின் அடிப்படை உரிமைகள் தேவைகள் பல மறுக்கப்பட்டு வருகின்றது. பொதுவாகப் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு,உடை, உறையுள் என்பன மறுக்கப்பட்ட போதிலும் மலசலசுடட வசதியின்மை, குளிக்கக் கழுவ தண்ணிர், வசதியின்மை, சுகாதாரம் அற்றநிலை, கர்ப்பிணிப் பெண்கள், மூப்படைந்த பெண்கள், தாய்மாரான பெண்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். மற்றும் குடியிருப்பு வசதியின்மை, சுகாதார வசதியின்றிப் பல்வேறு நெருக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
பொதுவாகக் கூறுவதாயின் பிள்ளைப்பேறும், உருவாகுதலும் இன்னும் மறைவாக நடாத்தப்படும் தமிழர் பண்பாட்டுச் சடங்குகளாகும். ஆனால் அவைகள் கூடச் சங்கடமாகவே அகதி முகாம்களில் அரங்கேற்றப்படுகின்றது.
போரும் பெண்களும் பாலியல் வல்லுறவும்
அடுத்துப் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை போரினால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படல் ஆகும். இலங்கையில் தொடர்கின்ற ஆயுதப் போராட்டமானது பல பெண்களின் வாழ்வில் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. இனப் பிரச்சினைக்கு வழியின்றி ஆயுதப் போராட்டமாக மாறிய காலப் பகுதியிலிருந்து தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறுதலும் எண்ணிலடங்காதவை. குறிப்பாக 1996ம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமாரசாமியின் (வயது 19) கொலை தொடங்கி மட்டக்களப்பு பெண் கோணேஸ்வரி (வயது 38) என அடுக்கிக் கொண்டே போகலாம்.
60

யுத்தம் தொடர்கின்ற மட்டக்களப்புப் பிரதேசத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால், பெயர்கள் குறிப்பிடப்படாத சில பெண்கள் படையினரால் கத்தி காட்டிப் பயமுறுத்தப்பட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பல சம்பவங்கள் பெண்கள் அமைப்புக்களால் கேட்டறியப்பட்டு அதற்குரிய சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் என்ற பேரில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கிராமம் கிராமமாகச் சென்ற இராணுவத்தினர் அவ்விடங்களில் முகாமிட்டுப் பாதுகாப்பு எனக்கூறி, வீதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் பாலியல் சேஷ்டைகள் புரிந்து வந்துள்ளனர். இதனால் பெண்கள் அந்த வீதியில் செல்வதையே தவிர்த்த சந்தர்ப்பங்களும் உண்டு. மற்றும் வீடுகளில் சோதனையிட வேண்டும் எனக் கூறி இரவு வேளைகளில் பெண்கள் தனியாக வாழும் வீடுகளைத் தட்டித் திறக்குமாறு அச்சுறுத்துதல், பல பெண்களை மிரட்டித் தங்களைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தல், பிள்ளைகளைப் பெற்றதும், அவர்களைக் கைவிட்டுச் செல்லுதல், ஊருக்குத் துரத்திவிடுதல் போன்ற செயல்களும் இடம் பெற்றதுண்டு. இதனால் பல பெண்கள் தமது வேலைகளை இழந்த நிலையிலும், சமூகக் கட்டமைப்புக்கேற்ப நடந்து கொள்ளாமையினால் சமூகத்தினரின் அவச் சொல்லைக் கேட்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அதுமட்டுமன்றிக் குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில், இராணுவத்தினர், வயோதிபர்களைக் கைது செய்து அவர்கள் மூலமாகப் பெண்கள் தனியாகத் தங்கியிருக்கும் இடத்தை அறிந்து இரவு நேரங்களில் அங்கு சென்று அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் அறிய முடிகின்றது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் துன்பப்படுத்தப்பட்ட நிலையும், கருச்சிதைவு ஏற்பட்ட நிலையும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிகழ்வுகள் பல குடும்பங்களிலும், தனியாகப் பெண்களின் வாழ்க்கையிலும், சீரழிவை ஏற்படுத்திவிட்ட நிகழ்வுகளும் உண்டு.
மற்றும் இந்தப் போரால் பல இளம்பெண்கள் பெற்றோரைப்பிரிந்த நிலையில் பாதுகாப்பிற்காகத் தமது சொந்தச் சகோதரிகளுடன் தங்கியிருந்தவேளை, சொந்தச் சகோதரியின் கணவனால் பாலியல் வன்முறைக்குட்பட்ட செயலும் உண்டு. நாட்டில் நிலவும் யுத்தம் காரணமாகப் பலர் தமது துணையை இழந்து தவிக்கின்ற நிலையும் இதனால் பிள்ளைகள் கவனிப்பாரற்று வளர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இப்படியாக நோக்கும்போது இராணுவத்தினரால் பல தமிழ் பெண்கள்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது உண்மையாகும். ஆனால் தமிழ் போராளிகளால் சிங்களப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகச்
61

Page 36
செய்திகள் அரிதாகவே உள்ளது. இத்தகைய பாலியல் வல்லுறவுகளைத் தடுத்து நிறுத்த படையினர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பாதுகாப்பு அமைச்சு போன்ற நிறுவனங்களினூடாக பல ஒழுக்க நெறிகளையும், பயிற்சி வகுப்புகளையும் சட்டங்களையும் புகட்டினாலும் மாறாகப் புதிய புதிய வடிவில் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் தவிர்க்க முடியாதுள்ளது.
போரினை மையமாக வைத்துப்படையினர், தவிர்ந்த பாடசாலை மட்டத்திலும், வேலைத் தலங்களிலும், வீதிகளிலும் இன்று பாலியல் வல்லுறவுகள் வயது அடிப்படையின்றிச் சிறுவர் தொடங்கி வயோதிபர், விதவைகள் இத்தகைய வன்முறைக்கு உட்படுவது பெரும் சீரழிவையும், மரணத்தையும், விசேடமாகப் பெண்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது, இதற்கு அன்றாட பத்திரிகையின் பக்கங்கள் பல சான்றுகளைக் குவிக்கின்றன.
போரும் கல்விப் பாதிப்பும்
போரினால் நமது சமுதாயம் பாரிய இழப்புக்களை எதிர்கொண்ட வண்ணமேயுள்ளது. அதில் பெரியதொரு பாதிப்புத்தான் கல்வி பாதிப்பு.
இன்று எமது நாட்டில் பாடசாலை செல்லும் மாணவர்களின் தொகையில் வீழ்ச்சி காணப்படுகின்றது. கற்றலை இடைநடுவில் கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மற்றும் ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் கல்வியின் நிலையும் வீழ்ச்சி அடைகின்றது. இத்தகைய நிலை எதிர்காலத்தில் ஒரு சமூகத்தின் வீழ்ச்சிக்கே காரணமாக அமையலாம்.
இத்தகைய கல்விப்பாதிப்பிற்காகக் காரணங்கள் என்று நோக்கும்போது பல மில்லியன் ரூபாய்கள் போருக்காகச் செலவிடப்படுகின்ற அதேவேளை கல்விக்காக வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளமை, பாடசாலையை அண்டிய பகுதிகளில் இராணுவமுகாம்கள் அமைக்கப்படுகின்றமை, அதனைக் கைவிட்டுச் செல்லும்போது எதுவிதப் பொறுப்பும் அற்றநிலையில் பாடசாலைக் கட்டிடங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படுகின்றமை, அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் பல பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் நடைபெறாமல் சுடுகாடுகளாகவே மாறிவிட்டன. பாடசாலை செல்லும் பிள்ளைகள் சோதனைக்குட்படுகின்றமை,
பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத முத்திரை
62

குத்தப்படுகின்றமை, பாடசாலைப் பிள்ளைகள் காணாமல் போதல், சுட்டுக் கொல்லப்படல், மாணவர்களின் போராட்டங்கள், பகிஸ்கரிப்புகள் போன்ற செயற்பாடுகளும் கல்வியைப் பாதிப்படையச் செய்கின்றன. இதற்குக் காரணம் இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் போரேயாகும். இதனால் போர் மேகங்களால் சூழப்பட்டிருக்கும் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த முடியாதுள்ளனர்.
அதற்கு மாறாகப் பெண் பிள்ளைகள் வெளிநாடு செல்வதிலும்,திருமணங்கள் செய்து வெளிநாடு செல்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். இன்றைய போரினால் போர் நடைபெறும் இடங்களில் உள்ள பெண்பிள்ளைகளைப் பெற்றோர் பாடசாலைக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களின் பாதுகாப்பையே காரணமாகக் கொண்டு கல்வியை இடைநடுவில் நிறுத்தி விடுகின்றனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தில் குறிப்பிட்டுக் கூறுவதாயின் முறக்கொட்டாஞ்சேனைக் கிராமத்தில் உள்ள கிராமப் பாடசாலை ஒன்று இராணுவ முகமாக மாற்றப்பட்டதால், அங்குள்ள 50% க்கு மேலான மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டனர். அதில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் நகர்ப்புறங்களுக்குச் சென்றும், விடுதிகளில் தங்கியும், உறவினர்களின் வீடுகளில் தங்கியும் கல்விகற்று வருகின்றனர். இது விடயமாகப் பிள்ளைகளின் பெற்றோரை அணுகிக் கேட்டபோது பெண் பிள்ளைகள் வீடுகளில் எமது கவனிப்பில் இருந்து கல்விகற்பது போல் வருமா? இதனால் எமக்குப் பணச் செலவுதான் ஏற்படுகின்றது என்று அங்கலாய்த்துக் கொண்டனர். மற்றும் போர் நடைபெறும் இடங்களில் மக்கள் புலப்பெயர்வு ஏற்படுவதால் முதலில் பாடசாலையே தமது தற்காலிகப் புகலிடமாகவும் அகதி முகாம்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக்கியமாகப் பாடசாலைகள் செயலிழந்துள்ளன. இதனைக் கவனியாமல் இருக்கும் அதிகாரிகளும் உள்ளனர். சில இடங்களில் (20.07.1997 - வீரகேசரி) அதிகாரிகளின் பெரும் முயற்சியினால் பாடசாலைகள் செயற்படுத்தப்பட்டும் உள்ளன. இத்தகைய இடர்பாடுகளினால் மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க முடியாத நிலையும் உருவாகியுள்ளன. முக்கியமாக க.பொ.த. சாதாரணப் பரீட்சை, க.பொ. த. உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் தோற்றமுடியாத நிலையும், தோன்றினாலும் பூரண சித்தியடைய முடியாத நிலையும் ஏற்படுகின்றது.
இப்படியாக நோக்கும்போது விசேடமாகக் கல்வி கற்கும் பெண்களின் எதிர்காலமே சூனியமாகப் போகின்ற நிலை எமது நாட்டில் இன்று நடைபெறும் போரினால் ஏற்படுகின்றது.
63

Page 37
போரும் புலப்பெயர்வும்
இலங்கையில் இனப்பிரச்சினை உருவானதுடன் ஆரம்பமானதுதான் புலப்பெயர்வு இது உள்நாட்டிற்குள்ளும் வெளிநாட்டிற்குமாக வரையறுக்கப்பட்டது. இதில் விஷேசம் என்னவெனில் இப்புலப்பெயர்வை தமிழர்கள்தான் நடத்தி வருகிறார்கள். காரணம் தமிழர் நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். என்பதுதான் உண்மை. இத்தகைய புலப்பெயர்வுகள் உயிர்பாதுகாப்பை மையமாக வைத்து, பொருளாதார விருத்தியை, மையமாக வைத்து இடம்பெற்று வருகின்றது. ஆனால் உற்நாட்டிற்குள் புலப்பெயர்வது என்பது உயிர்பாதுகாப்பை முன்னிட்டே ஆகும். இப்புலப்பெயர்வானது 1956, 1964, 1972,1983, என்று அடுக்கி கொண்டே போகலாம் உதாரணமாக நோக்கின் 1990 இல் கிழக்கு மகாணத்தில் ஆரம்பமாயிற்று. 1990 இல் வன்செயல் நேரம் அம்பாறை மாவட்டத்தில், உள்ள 11 கிராம தமிழ் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து குற்றுயிரும், குறையுயிருமாக உடுத்த உடையுடன் மூட்டை முடிச்சிகளுடன் காரைதீவு அகதிமுகாமில் தஞ்சமடைந்தது ஒன்றும் மறக்கக்கூடிய நிகழ்வு அல்ல, அன்றல்ல இத்தகைய, துக்கரமான சோக நிகழ்வு இந்த 2001ம் ஆண்டிலும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதுதான் வேதனையைத் தருகின்றது.
எமது உள்நாட்டுப் போரினால் புலம்பெயர்ந்து 15 இலட்சம் பேரில் 8 இலட்சம் பேர் உள்நாட்டிலும், அதாவது தங்கள், தங்கள் சொந்த வீடுகள் மற்றும் சொந்த பிரதேசங்களிலும், மிகுதி 7 இலட்சம்பேர் இந்தியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா, நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப்போரினால் கடந்த இரு தசாப்தங்களில் உள்நாட்டில் 8 இலட்சம் பேர் அகதிகளாகவும் 7 இலட்சம் பேர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கியநாட்டு அறிக்கைகள் மூலம் அறிய முடிகின்றது.
இவ் இடப்பெயர்வானது பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினர் முகாமிட்டு வாழும் இடங்களைவிட்டு மக்கள் வெளியேறுதல், தொழில் பாதிப்படைந்த நிலையில் மக்கள் வெளியேறுதல், குறிப்பாக மீன்பிடி, சிங்கள மக்களை பலாத்காரமாக குடியேற்றியதால் மக்கள் வெளியேறுதல், போர் இடம் பெறும் இடங்களில் இருந்து மக்கள் வெளியேறுதல், போன்ற காரணங்களைக் குறிப்பிடலாம்.
64

போரும் முதியோரும்
அடுத்து இன்று நடைபெறும் போரினால் எமது சமூகத்தின் புனிதமான சொத்துக்களான முதியோர்கள் கவனிக்கப்படாமை பெரியதோர் சமூக இழப்பையே காட்டுகிறது. அதாவது முதியோர் இல்லங்களிலும், கவனிப்பாரற்றும் இருக்கின்றனர். கடந்த இரு தசாப்தங்களாக நீடித்துவரும் யுத்த சூழல் காரணமாக அதனால் தம் பிள்ளைகளினாலும் முதியோர் பலர் தனித்து வாழும் நிலைக்குட்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தனித்து வாழும் நிலைக்குட்பட்டுள்ளனர். இவர்களில் சிலர், சமூகத் தொண்டர் அமைப்புகள் மூலம் நன்கு பாதுகாக்கப்பட்டுவந்தாலும், அவர்களுடன் உரையாடும்போது பிள்ளைகளைப் பிரிந்து சோகமும் ஏக்கமும் அவர்களுடன் குடி கொண்டுள்ளதைக் காணமுடிகிறது.
போர்ச் சூழலால் தாம் அந்நிய இடங்களில் கவனிப்பாரன்றிப்,
பூரணபாதுகாப்பின்றி, துக்கத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, எனக் கூறுகின்றனர். இவர்களைத் தனிமை பாதிப்பது மட்டும் அன்றி, உடல், உள, நோய்களுக்கும் உள்ளான நிலை காணப்படுகிறது. இவர்களை நோக்கும்போது இவர்களுக்கு எவ்வித வருமானமும் கிடைப்பதில்லை. முதியோர்களுக்கென வழங்கப்படும் பிச்சைச் சம்பளம் 100/- அதாவது பொதுசன உதவிப் பணத்திலேயே தமது வாழ்க்கையை செலுத்த வேண்டிய நிலையிலுள்ளனர். அத்துடன் பிறரில் தங்கிவாழ வேண்டிய நிலையே தமக்கு ஏற்பட்டுள்ளது. என்றும் முறையிட்டனர்.
இலங்கையைப் பொறுத்தவரை, வயோதிப இல்லங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. வயோதிபர்களைப் பொறுத்தவரை இவை அவர்களுக்குச் சிறைக் கூடம் போல் இருப்பதும் உண்டு. ஆனால் இன்று வெளிநாடு சென்ற பிள்ளைகளின் பெற்றோர் அநாதைகளாகத் தெருவில் அலைவதை அனுமதிக்காமல் அவர்களுக்கென ஒரு புகலிடமாக வயோதிப இல்லங்கள் உள்ளன. போர் இடம்பெறும் இடங்களைப் பொறுத்தவரை மட்டக்களப்புப் பிரதேசத்தில் ஓரிரண்டு வயோதிப இல்லங்கள் உள்ளன. சில இல்லங்களில் பணம் செலுத்தி இருக்க வேண்டிய நிலையும் உள்ளது.
போரும் பெண்களும் வறுமையும்
அடுத்ததாக இன்று நடைபெறும் போரினால் பெண்கள் வறுமைக் கோட்டின் கீழ் அல்லல்படுவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் இன்று இலங்கையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள், பொறுப்பு நிறைந்த கடன் சுமைகள், கைத் தொழில்
65

Page 38
நாடுகளின் பாதுகாப்பு வரிகள், இயற்கை அழிவுகள் என்பன காரணமாக அமைந்தாலும், வெளிப்படையாக நாட்டு யுத்தங்கள் சிவில் குழப்பங்கள் என்பன பெருமளவுதாக்கத்தை ஏற்படுத்துகிறது. போர் நடைபெறும் பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் 80 சதவீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் தான் வாழ்கின்றனர். இதன் காரணமாக மனித அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சி என்பன பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
அதே நேரம் இந்த வறுமையானது சமூகத்தில் பலவித ஒழுக்கச் சீர்கேடுகளை உருவாக்கி விடுகிறது. போரின் நிமித்தம் ஏற்படும் வறுமையால் குடும்ப சுமையை தாங்க முடியாத பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மற்றும் பெண்கள் விபச்சார வேலைகளில் ஈடுபடுதல், வடிசாராயம் காய்ச்சுதல், விற்றல், படக்கொட்டகைகள் அமைத்து படக் காட்சிகளைக் காண்பித்து வருமானம் தேடுதல், வெளிநாடுகளுக்குப் பெண்கள் செல்லல், அங்கு பலவிதமான துர்நடவடிக்கைகளில் ஈடுபடுதல், இதனால் குடும்பச் சீர்குலைவுகள் ஏற்படல் என்ற பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் எதிர் நோக்குகின்றனர். இதனால் பெண் சமூகம் இழிநிலைக்கே தள்ளப்படுகின்றது.
மற்றும் வறுமையின் கொடுமைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத இளம் பெண்கள் தமது பிள்ளைகளை வளர்ப்பதற்காக பிச்சையெடுத்தல், பிறர் வீடுகளில் பணிப்பெண்களாக இருத்தல், பாத்திரம் கழுவல் சமைக்க உதவுதல், போன்றநிலைக்கும் தள்ளப்பட்டனர். மற்றும் உணவுப்பண்டங்களை தயாரித்து விற்பதன் மூலம் வருமானத்தைப் பெற்றனர் இத்தகைய நிலமைகள் பெண்ணுக்கு வரக்காரணம் போர் ஆகும். ஏனெனில் கணவன்மாரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதால் தனிமையில் வாடிய இவர்கள் எந்த வேலையையும் செய்யமுற்பட்டனர். இதனால் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டனர்.
அதனைவிட போரினால் கணவனை இழந்த பெண்கள் வேறு ஆண்களோடு தகாத உறவுகள் வைத்துக்கொண்டும், பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டும், வாழ்தல் போன்ற நிகழ்வுகளும், இடம் பெற்றுக் கொண்டும், வாழ்தல் போன்ற நிகழ்வுகளும், இடம் பெற்றதுண்டு மற்றும் கணவன்மார் பயங்கரவாத குழுக்களுக்கு உதவுகின்றனர் என்பதால் முழுக் குடும்பமுமே பயங்கரவாதிகள் எனப் பெயர் சூட்டப்படல், துன்புறுத்தப்படல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றதுண்டு. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் சிலர் தொலைக் காட்சி மூலம் படக்காட்சிகளைக் காண்பித்தல் இதனால் பலதரப்பட்டோர் படம் பார்ப்பதற்காக வருதல் இதனால் பல்வேறுபாலியல் வன்முறைக்குட்பட்ட பிரச்சனைகள் ஏற்படல் போன்ற நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு.
66

அப்படியே போரினால் இருப்பிடங்கள் உடமைகளை இழந்த பெண்கள் அகதிகளாய் குடில்களிலும், தற்காலிக அகதி முகாம்களிலும், வாழும் நிலை ஏற்பட்டது. அதனாலும் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை எதிர் நோக்கினர். இப்போரானது பெண்களின் நலன்களுக்கு சவாலாகவே அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
போரும் சிறுவர்களும்
அடுத்து பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடரும் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் ஒரு பகுதியினராவர். பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஒருபுறம் போரினால் உடல் உள, பாதிப்பிற்குள்ளானோர் இன்னொருபுறம் என யுத்தமானது சிறுவர்களின் எதிர் காலத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டது.
கிளிநொச்சியில் 3422 மாணவர்கள் போர் அநாதையாகியுள்ளனர். என வீரகேசரி பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்தது. ஒரு பிரதேசத்தில் இத்தனை அநாதைகள் என்றால் போர் இடம் பெறும் இடங்களைநோக்கின் எத்தனை அநாதைகள் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சிறுவர்களுக்கே உரித்தான கல்வியுரிமை, வைத்தியவசதி, போசாக்கான உணவு வசதிகள், பாதுகாப்பான உறையுள், என்று அனைத்துமே மறுக்கப்படுகின்றன. அப்படி நோக்கின் மனித உரிமைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் அவை ஏட்டில் மட்டுமே எழுத்துக்களாக, சிறுவர்களுக்கு உரிமைகளாக, பதியப்பட்டுள்ளதே தவிர நிஜத்தில் அல்ல.
போரினால் பெற்றோர் எதிர் கொள்ளும் பொருளாதார கஷ்டத்தினால் பிள்ளைகளை தொழிலாளர்களாக அனுப்பும் நிலையும் ஏற்பட்டது. விசேடமாக நோக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு போர்க்கால சூழ்நிலையினால் சிறுவர்கள் வேலைக்குச் செல்லும் தொகை அதிகரிக்கின்றது. இதனால் குழந்தைகளை அடிமைகள் போல் நடத்தும் வர்க்கமும் உண்டு. இத்தகைய செயற்பாடுகள் எதிர் காலத்தில் பலவிதமான கலாச்சார சீர்கேடுகள் ஏற்பட அடி கோலுபவையாக உள்ளன.
போரும் பெண்களும் அங்கவீனமும்.
இலங்கையில் நடக்கும் போரானது எந்த நாட்டிலும் இல்லாதவாறு பல ஊனமுற்றோரை உருவாக்கி உள்ளது. நாளாந்தம் அங்கவீனர்களின் எண்ணிக்கை
67

Page 39
அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் உடல் ரீதியாக ஊனமுற்றவர்களாக இருப்பதால் நமது நாளாந்த கடமைகளை தாமே செய்துகொள்ளமுடியாமல் அணுவணுவாய் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
போரினால் ஏன் பெண்கள் அங்கவீனராக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நோக்கும்போது போராடும் தரப்பினர் மனிதர்களை தமது கேடயமாக பயன்படுத்தி சில இடங்களை கைப்பற்ற முனைந்த போது சில பெண்கள் தமது கால்களை இழந்துள்ளனர். சிலர் விடுகளில் வேலைகளை செய்து கொண்டு இருந்தபோது வீட்டைத் துளைத்துக் கொண்டு வந்த குண்டுகள், செல் (Shell) மூலம் தமது அவயவத்தை இழந்துள்ளனர்.
தாக்குதல்களை நடத்துவதினால் அப்பிரதேச பெண்கள் விசேடமாகப் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அங்கவீனராக்கப்பட்ட ஆண்களைவிட பெண்களே மிகுந்த பாதிப்பிற்குள்ளாகின்றனர். காரணம் திருமணம் என்று வந்தால் எந்த ஆண்களும் இவர்களை திருமணம் செய்து கொள்ள விரும்பபாட்டார்கள். ஆனால் சமூகத்தில் ஆண்களின் அங்கவீனம் பெரிதாக கணக்கில் எடுக்கப்படுவதில்லை. அதைவிட அங்கவீனராக்கப்பட்ட பெண்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. அவர்களின் பிள்ளைகளும் இதனால் பாதிப்புக் குள்ளாகின்றார்கள்.
போரும், பெண்களும் தொழில் பாதிப்பும்.
பொதுவாக போர்க்கால சூழ்நிலையில் பெண்களின் தொழில் பாதிக்கப்பட்டு விட்டதென்றால் மிகையாகா, காரணம் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், ஹர்த்தால், தொழில் செய்யும் இடத்தின் அமைவிடம் போக்குவரத்துச்சீர்கேடுகள் என்பவற்றைப் பொறுத்து தொழில் பாதிக்கப்படுகின்றன. அவற்றை விரிவாக நோக்குவோமேயாயின் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் பெண்கள் வீதிகளில் செல்வதற்கு பயப்படுவதனால் தமது வேலைகளை கைவிடல் இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிகளில் காரியாலயங்கள், வேலைத்தளங்கள் என்பன தீவிர சோதனைக்குட்படல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் பெண்களின் தொழில் பாதிப்படைகின்றது.
பெண்கள், பெற்றுக்கொள்ளும் வேலைவாய்ப்புகள் அவர்களின் வசதிக்கேற்றதாக இராமல் போர் இடம் பெறும் இடங்களில் கிடைக்கின்றமை தூர இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை, மற்றும் இரவு நேரங்களில் வேலை
68

செய்ய வேண்டியுள்ளமை, ஊதியத்திற்கு தகுந்த வேலை கிடைக்காமை, வேலைக்குச்செல்வதனால் பிள்ளைகளைப் பராமரிக்கமுடியாத நிலை, வேலைத்தளங்களில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள், பாலியல் வன்முறைகள் போன்றவற்றால் பெண்கள் பாதிக்கப்படுவதனால், அவர்களது தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
மற்றும் போர் இடம்பெறும் இடங்களில் இராணுவ முகாம்களை கடந்து வேலைக்குச் செல்ல வேண்டியநிலை, இதனால் அவர்கள் சோதனைக்கு உட்படவேண்டிய நிலை, போன்ற காரணங்களால் பெண்கள் தொழிலை விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மற்றும் பாடசாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் வேலை புரிவோர் தீவிர சோதனைக்குட்படுவதனால் பெண்கள் தமது தொழில்களில் தொடர்ந்து வேலைபுரிய முடியாமல் இடைநடுவில் வேலையை நிறுத்திவிடுகின்றனர். மற்றும் மீன்பிடி தொழிலை பாதுகாப்புக்கருதி அனுமதிக்காமை அவர்களை பட்டினிநிலைக்குத் தள்ளுவதும் பெரிய சமூகசீர்கேடுகளை உருவாக்குகின்றது.
மற்றும்அதைவிட வேலைத்தளங்கள் முகாமிற்கு அருகில் இருத்தல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மற்றும் வியாபார நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிலையங்களில் இராணுவத்தினர் கடனுக்குப் பொருட்கள் வாங்குகின்றனர் ஆனால் பணம் செலுத்துவதில்லை இதனால் வர்த்தகர்கள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். அதுமட்டுமன்றி முகாமிற்கு அருகில் ஏதும் மோதல்கள் நடைபெற்றதென்றால் அவ்விடத்தில் இருக்கும் மக்களும் வியாபார நிலையங்களுமே தாக்கப்படுகின்றன.
மற்றும் போர் காரணமாக பல பெண்கள் தமது வேலைகளை இழந்து நடுத்தெருவில் இருக்கின்றனர். பலஸ்தாபனங்கள், பெரிய கூட்டுஸ்தாபனங்கள், என்பன மூடப்பட்டு பலர் வேலையற்று இருக்கின்றனர். உதாரணமாக கூறுவதாயின் பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை சீமெந்துத் கூட்டுஸ்தாபனம், மட்டக்களப்பு பிரதேசத்தில், முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள அரிசி ஆலை என்பன போரினால் செயல் இழந்துபோனதால் பல இளைஞர்கள் வேலையற்றுத் திண்டாடினர். உதாரணமாக மட்டக்களப்பு பிரதேசஅரிசி ஆலையை எடுத்துக் கொண்டால் அது பலகோடி மதிப்பிடக் கூடிய ஒரு பெரிய அரிசி ஆலையாகும். அப்பிரதேசத்தில் இளைஞர், யுவதிகள் அதில் வேலை செய்துவந்தனர். போர் ஆரம்பமானதுடன் அந்தப்பிரதேசத்தைத் தமது பாதுகாப்புக் கருதி இராணுவத்தினர் பாதுகாப்பு அரணாக பாவித்தனர் அத்துடன் அங்குள்ள
69

Page 40
பெரிய பெரிய அரைக்கும் இயந்திரங்கள் எல்லாம் அழித் தொழிக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்றது. இதனால் அங்கு வேலைபுரிந்த எல்லோருமே வேலையற்று இருக்கின்றனர்.
போரும், பெண்களும் கைதுசெய்தல் காணாமல் போதல் சித்திரவதைக்குட்படல்
இலங்கையைப் பொறுத்தவரை தொடர்கின்ற போரோடு தொடர்வதுதான் கைது செய்தல், காணாமல் போதல், சித்திரவதைக்குட்படல், போன்ற சம்பவங்களாகும். இதற்கு காரணம் போரின் தாக்கத்தினால் சமூகத்தினரினதும், இராணுவத்தினரினதும் மனநிலை வன்செயல் நிறைந்ததாக மாறியுள்ளமைதான் மற்றும் சமூகத்தினரின் தேவைகள் சந்திக்கப்படாமை, ஒரு சாரார் இன்னொரு
சாரார் மீது வெறுப்பு ஏற்படல் போன்றகாரணங்களைக் குறிப்பிடலாம்.
போர், இடம்பெறும் நேரத்தில் இராணுவத்தினர் அக்கம், பக்கத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்தல் வழக்கமாகிவிட்டது அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை, தமது மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறும்வரை, அதாவது வாக்குமூலம் பெற்றுக் கொள்ள, அல்லது போர், சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள, பயமுறுத்தி யுத்த உத்திகளை அறிந்து கொள்ளும் பொருட்டு சித்திரவதைக்குட்படுத்துதல் மற்றும் போர் இடம் பெறும் இடங்களில் உள்ள பெண்கள், ஆண்கள், கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும், காணாமல் போதல் போன்ற நிகழ்வுகளும், இடம் பெறுகின்றன. இவை எமது இலங்கை யுத்தத்தைப் பொறுத்தவரை சர்வசாதாரண நிகழ்வுகளாகமாறிவிட்டன. போர் ஒயும்வரை இத்தகைய நிகழ்வுகள் ஓயாது என்றால் பொருந்தும்.
இத்தகைய கைதுகள் காணாமல்போதல், சித்திர வதைகள் என்பன நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவை பல்வேறு வடிவங்களில் இடம்பெறுகின்றது. ஒரு பெண் தன்னுடைய சித்திரவதையை இப்படி கூறுகின்றாள். இராணுவத்தினர் தன் மேலாடையை அகற்றும்படி கூறிவிட்டு கண்களை கட்டி மேசைமீது படுக்க வைத்தார்கள் பின்னர் மிளகாய் தூளில் தோய்த்து எடுத்த வாழைப்பொத்தியை தன் மர்ம ஸ்தானத்திற்குள் நுழைத்து எடுத்ததாக தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டாள் 14/12
70

இப்படியாக நோக்கும்போது இராணுவத்தினால் கைது செய்யப்படும் பெண்களில் பலர் விசாரணையின்றி இராணுவத்தினரின் சொந்த பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்திய பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இதற்கு காரணம் ஐ. நா பொதுச் சபையின் 39வது வருட வருடாந்த கூட்டத்தில் 10. 12. 1984 அன்று 39ம் சரத்தின் 46 ஆவது இலக்க தீர்மானத்தின்படி சித்திரவதை மற்றும் குரூர மனிதத்தன்மை அற்ற அல்லது இழிவு படுத்தும் அல்லது தண்டனை வழங்குவதற்கெதிரான சாசனம் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இச் சாசனத்தை இலங்கை உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பாராளுமன்றங்கள் சட்டங்களாக அங்கீகரித்துள்ளன. ஆனால் இவை மறக்கப்பட்டு பல்வேறு கோணத்தில் சித்திரவதைகள் தொடர்கின்றன.
மற்றும் போராளி குழுக்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவோர் கேவலமான முறையில் சித்திரவதைக் குட்படுத்தப்படுகின்றனர். ஒரு பெண் போராளி இரண்டு மார்பகங்களும் வெட்டப்பட்ட நிலையில் காட்சியளித்தமை, மற்றும் இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஒருவர் இன்னொருவர் மீதுள்ள குரோதத்தை வெளிப்படுத்துதல் காரணமின்றிக் காட்டிக் கொடுத்தல், இப்படியான சம்பவங்களும், இடம்பெறுகின்றது. இப்படியாக நோக்கும் போது காணமல் போதலும், துன்புறுத்தல்கள், கைதுசெய்தல், என்பன தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகிவிட்டன. ஆனால் அவை தவிர்க்கப்பட
வேண்டியவையே.
போரும் பெண்களும் மனநோயாளரும்
இலங்கையில் இடம் பெறும் உள்நாட்டு போரின் மிகுதியானதாக்கம் அவை மக்கள் மனங்களில் நோயை உருவாக்கியதுதான் மிச்சம் மக்கள் தமக்குரிய நிம்மதியான வாழ்வை இழந்து போர் தொடர்பான தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு இன்று மனநோயாளராக பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகா. இவர்கள் யாரும் அல்ல தமிழர்கள் அதிலும் விஷேடமாக பெண்கள்தான் இத்தகைய தாக்கத்திற்குட்பட்டிருக்கிறார்கள். காரணம் பெண்கள் பலர் பல்வேறுவிதமான குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல், அதிர்ச்சியினால் தாக்கப்படுதல் இவை காரணமாக நெஞ்சுவலி, ஆஸ்துமா அதிகரிப்பு, மாரடைப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மனநோயாளிகளாக மாறுகின்றனர்.
71

Page 41
பெண்களின் வாழ்வில் மனநோயானது மாற்றக்கூடிய ஒன்றாகும் அதற்குரிய சிகிச்சை முறைகளும் உண்டு. ஆனால் அவற்றை அணுகக் கூடிய வசதிகள் பெண்களிடம் இல்லாமை, மற்றும் பெண்களின் நலன் கருதி அவர்களை வழிநடத்தக்கூடிய ஸ்தாபனங்கள் இன்மை, என்பனவே பெண்களை நிரந்தர மனநோயாளிகளாக மாற்றி விடுகின்றன.
இன்றைய போரானது மென்மையான மனங்களைக் கொண்ட பெண்களின் வாழ்வில் வக்கிர உணர்வுகளையும், அழியாத வடுக்களையும் பதித்துவிட்டதனால் அத்தகைய உணர்வுகள் மனநோய்களின் அடித்தளமாகிவிட்டன. இவற்றினை சமய நம்பிக்கைகளும், ஆத்தும சாந்தி கருத்துக்களுமே மாற்றவல்லன.
போரும் பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும்
எமது நாட்டின் யுத்தமானது பல பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச்செல்வதற்கு காரணமாயிற்று திரைகடல் ஒடியும் திரவியம் தேடு என்ற தமிழரின் பண்பாட்டிற்கு இணங்க வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அதேநேரம் தமிழ்ப் பெண்களுக்கே உரித்தான கலாச்சாரங்களும் இதனால் மறுக்கப்படுகின்றன. இந்நிலைக்கு காரணம் நாட்டின் போரும் வறுமையுமே ஆகும்.
பெண்கள் இருபக்க சுமையால் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதாரத்தின் தாக்கம் ஒருபுறம், குடும்பசுமை மறுபுறம், இவ்விரண்டு அழுத்தங்களும் பெண்கள் வெளிநாடு சென்று உழைக்க காரணமாய் அமைந்துவிட்டது. அவர்களின் உழைப்பும் முழுமையாக அவர்களது குடும்பத்தை சென்றடையவில்லை. காரணம் முகவரி நிலையங்களின் குறைபாடுகளும், பெண்களின் கல்விக்குறைபாடும் ஆகும். மற்றும் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினைதேடிச் செல்வதனால் அவர்களது குடும்பங்களில் பெரும் சீரழிவுகளும் ஏற்படக் காரணமாக அமைகின்றது. காரணம் வீட்டைவிட்டுச் சென்ற மனைவியர் வெளிநாடுகளில் பல இன்னல்களை அநுபவிக்கின்ற அதே நேரம், இங்கு அவர்களின் கணவன்மார் ஒரு சிலர் வேறு திருமணங்களைப் புரிந்தும் பிள்ளைகளைக் கவனியாமலும் பிள்ளைகள் பிழையானவழிகளில் நடக்க ஏதுவான காரணங்களும் உண்டு. குடும்பத்தை சீராக நீர்வகிக்கக் கூடிய பெண் வேலைதேடி செல்வதனால் இவ்விதமாக பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகின்றது.
72

இப்படியாக நோக்கும் போது வெளிநாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பணிப்பெண்கள் தமது வேலைக்கேற்ப ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சிறைக்கைதிகள் போன்று நடத்தப் படுவதும் வேலை செய்யும் இயந்திரங்களாக மட்டும் பாவிக்கப்படுவதும், பாலியல்துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதும் உண்டு. ஆனால் இதனைப் பெண்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பொறுத்துக் கொண்டு தமது ஊதியத்திற்காக வேலை செய்து கொண்டு வந்துள்ளார்கள்.
தமது குடும்பத்தின் வறுமையைக் கருத்திற் கொண்டும் நீண்ட தூரம் பயணப்பட்டு வேலைக்காக வந்திருக்கின்றமையால் இவற்றை சகித்துக் கொள்கின்றனர். இப்படியாக நோக்கின் உள்நாட்டுப் போரினால் இப்படியாகவும் பெண்கள் இன்னல்களைத்தான் எதிர் நோக்குகின்றனர்.
[ւրւգhւկնճ) Մ
போரும் வன்செயலும் என்ற நோக்கில் நாம் இதுவரை பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை பல்வேறு தலைப்புகளில் நோக்கினோம் இவையாவும் பெண்கள் சமூகத்தின் குறைநிலைக்கு சிறந்த உதாரணங்களாகும். இவற்றிற்குக் காரணமே இலங்கையில் நடைபெறும் சமாதானத்திற்கான போரின் சமாதிகளாகும். “ஒரு பெண் நடு இராத்திரியில் தனியாகசெல்லமுடியுமானால் அவளுடைய நாடு சுதந்திரம் அடைந்த நாடு என்கிறார் காந்தி. அப்படியானால் நடு மதியமே எமது நாட்டில் பெண்கள் தனியாக போகமுடிவதில்லை. என்றால் சுதந்திர இலங்கையில் பெண்களின் நிலை மிகவும் மோசமானது என்பதை தெட்டத்தெளிவாக காணமுடிகின்றது. இலங்கை சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டிற்கு மேலாகியும் பெண்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை என்றால் இலங்கையின் பாதுகாப்பில் உள்ள குறைபாடும் பெண்கள் மீதான வன்முறையுமே அதற்கு காரணமாக,
முழு இலங்கையிலும் போரினால் வன் செயல்களையே எதிர் நோக்குகின்றனர். இவற்றைத் தொகுத்து நோக்கின் போரினால் கணவன்மாரை இழந்த பெண்கள் தனித்தலமை பெண்களாக சமூகத்தால் பேசா மடந்தைகளாக வாழ்கின்றனர். விஷேடமாக தமிழ் பெண்கள்தான் கூடுதலாக இவ்வாறான துன்பத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கான மறுவாழ்வு பற்றி சிந்திக்க எவருமில்லை. மாறாக தமிழ் சமூகம் அவர்களை பண்பாடு, கலாச்சாரம், என்று கூறி இன்னும் அவர்களை ஒரங்கட்டி வாழத் தகுதியற்றவர்கள் என்ற நிலைக்குத்
73

Page 42
தள்ளிவிடுகின்றது. இந்நிலை மாறவேண்டும். தனித்தலமைப் பெண்கள் சமூகத்தின் சொத்துக்களாக மதிக்கப்படவேண்டும் அவர்கள் விரும்பி மறுமணம் செய்யவும், சமூகநிகழ்வுகளில் பங்கெடுக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அப்படியானால் தான் போரின் தாக்கத்தினால் தனித்தலைமைப் பெண்களாக மாற்றப்பட்டவர்கள் தலைநிமிர முடியும். இதனை சமூகம் உணர வேண்டும். போரினால்தான் இத்தகைய நிலமை பெண்களுக்கு உருவானதே தவிர அவர்கள் விரும்பிப் பெற்றுக் கொண்டதல்ல.
அடுத்து போரினால் கல்விப்பாதிப்புப் பற்றி நோக்கின் பெண்கள் தலைநிமிர்ந்து நடக்கவழி வகுத்ததே கல்விதான் பண்டைய இலங்கையில் பெண்கள் கல்வி கற்பதில் அக்கறை செலுத்தப்படவில்லை ஆனால் காலப்போக்கில் பெண்கள் கல்வியில் திறமையைக் காட்டினார்கள். படித்தார்கள், பட்டம் பெற்றார்கள். தலைவிகளாகவும், சிறந்த ஆசான்களாகவும் சமூகத்தில் விளங்கினார்கள். ஆனால் போர் இடம்பெறும் இடங்களில் பெண் கல்வி பெறும் பாதிப்பை ஏற்படுத்தியது. அவை திரும்பவும் வளர வேண்டுமாயின் போர் ஒயவேண்டும். போர் இடம் பெறும் இடங்களில் பெண்கள் கல்விகற்க வாய்ப்புகள், வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இன்றேல் பெண்கல்வி மீண்டும் பாதிப்படையும்.
மேலும் ஒட்டு மொத்தமாக நோக்குவோமாயின், இன்று இடம் பெயரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தல், முதியோரின் பரிதாபநிலை குடும்பங்களில் வறுமை, சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படல், பாலியல்துஷ்பிரயோக செயல்களுக்கு உட்படல், ஊனமுற்ற நிலையினை அடைதல், கைது செய்தல், காணமல் போதல், சித்திரவதைக்குட்படுதல் சொந்த தேசத்தில் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலையிலும், தொழில் பாதிக்கப்பட்ட நிலையிலும், வெளிநாடுகளுக்குச் சென்று மற்றவர்களுக்கு அடிமைவேலை செய்யும், நிலைக்குத் தள்ளப்படல் அது மட்டும் அல்ல குடும்பம் எனும் அமைப்புமுறையில் பல சீர்கேடுகள் ஏற்படவும், பலர் மனநிலை பாதிப்பிற்குள்ளாதல் இத்தகைய நிலை அனைத்தும் போரினால்தான் பெண்களுக்கு உருவானது. பெண் நசுக்கப்படுகின்றாள் அவளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுகின்றது. சமூகரீதியாகவும், சமயரீதியாகவும், அவள் இன்னும் கீழ்நிலைக்கே தள்ளப்படுகின்றாள். 'பெண்கள் மீண்டும் உயிர் பெறவேண்டுமாயின் போர் முடிவுக்கு வரவேண்டும். சகல உரிமைகளையும் பெண்கள் தெளிவுற அறிவது மட்டுமல்லாமல் அவை வழங்கப்படவும் வேண்டும்
என்றால் மிகையாகாது.
74

உசாத்துணைகள்
女
மட்டக்களப்பு மாவட்டத்தில், 6 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி எடுக்கப்பட்ட
வெளிக்கள ஆய்வின் தரவுகள்.
தினக்குரல் பத்திரிகை 05.05.2001 தினக்குரல் பத்திரிகை 23.06.2001 தினக்குரல் பத்திரிகை 26.06.2001 தினக்குரல் பத்திரிகை 01.07.2001 தினக்குரல் பத்திரிகை 08:07, 2001 தினகரன் பத்திரிகை 12.09.1999
சுடர்ஒளி சுடர்ஒளி
பத்திரிகை 13.05. 2001 பத்திரிகை 27.07.2001
வீரகேசரி வீரகேசரி வீரகேசரி வீரகேசரி
பத்திரிகை 06.04.1997 பத்திரிகை 20, 07, 1997 பத்திரிகை 15.07. 2001 பத்திரிகை 22.08.1999
75
வீரகேசரி பத்திரிகை 26.11. 2001 வீரகேசரி பத்திரிகை 02.09.2001 வீரகேசரி பத்திரிகை 24.06.2001 வீரகேசரி பத்திரிகை 05.08, 2001 வீரகேசரி பத்திரிகை 15.07.2001 வீரகேசரி பத்திரிகை 29.04. 2001 வீரகேசரி பத்திரிகை 01.07. 2001 வீரகேசரி பத்திரிகை 11.02.2001 வீரகேசரி பத்திரிகை 11.03.2001 வீரகேசரி பத்திரிகை 08.04. 2001 வீரகேசரி பத்திரிகை 19.09.1999

Page 43
இங்கேயும்அகலிகைகள்
- மவையமான் தேவி
நிமது சமூக அமைப்பு மிகவும் இறுக்கமானது. சிலந்தி வலையைப்போன்ற பல பின்னல்களால் தம்மைத் தாமே இறுகப்பிடித்திருப்பது. இங்கே பெண் என்பவள் சில சமயங்களில் மிக முக்கியமான உயிரியாக நோக்கப்படுகின்றாள். சிலபோது அவள் இருப்பதே பொருட்படுத்தப்படுவதில்லை. ஏனோ தெரியவில்லை, நம் சமூகம் பெண்கள் விடயத்தில் மிக மிக இறுக்கமாகவே நடந்து கொள்கின்றது.
குடும்பத்தின் அல்லது நாட்டின் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான ஆலோசனை நடைபெறும் சமயங்களில், முடிவு எடுக்கப்படும் சமயங்களில் தம்மிடையே பெண்’ என்று ஒரு இனம் இருப்பதை நம் சமூகம் பொருட்படுத்து வதில்லை.
மனைவி உடனிருந்தால் மட்டுமே கலந்து கொள்ளக் கூடியதான மத நிகழ்வுகளின் போதும், இயல்பான உணர்வுத் தேவை எழுகின்ற வேளைகளிலும் மட்டுமே பெண் ஒரு முக்கிய உயிரியாகக் கருதப்படுகின்றாள்.
இவ்வாறு நம் சமூகத்திடையே பெண் என்பவள் தேவைப்பட்ட நேரங்களில் பயன்படுத்தப்படுவதும், தேவையற்ற நேரங்களில் அலட்சியப்படுத்தப்படுவதுமான நடைமுறையே அன்றிலிருந்து இன்றுவரை வழக்கிலிருந்து வருகின்றது. பெண்ணைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை எந்தச் சந்தர்ப்பத்திலுமே நம் சமூகத்திடையே இருந்ததாகத் தெரியவில்லை.
பெண்ணின் நலன்களைப்பற்றியும் அவளது அடிப்படை உரிமைகள் பற்றியும் ஒருவிதமான கவலையையோ அக்கறையையோ கொண்டிராத சமூகம், அவளது நடவடிக்கைகள் தனக்கு ஏற்புடையதல்லாமல் இருக்கின்றது என எண்ணினால், அல்லது பெண்ணை இப்படியே விட்டால் அவள் தம்மையே விஞ்சிவிடுவாள் என்ற அச்சம் ஏற்பட்டால், அப்பெண்ணைக் கடுமையாக விமரிசிக்கும், அந்த நேரங்களில் எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற ஒரு விந்தைப் பொருளாகப் பெண்
76

மாற்றமடைகின்றாள். பெண்ணின் பக்கமே நியாயம் இருந்தாலும், அவளுக்கே குற்றவாளி என்று பட்டம் சூட்டப்படும், சிற்சில சமயங்களில் வெகு அபூர்வமாக, யாரோ ஒரு சிலரால் அவள் பக்க நியாயம் ஏற்றுக்கொள்ளப்படும்.
நம் பெண்கள் ஒவ்வொருவரும் மனத்தளவில் அனுபவிக்கின்ற இதே துயரங்களை, துன்பங்களை, அகலியை என்ற ஒரு பாத்திரம் அனுபவித்தது. அகலிகையின் செயலின் சாதக, பாதக விளைவுகளை ஆழ்ந்து நோக்கி, அவள் பக்க நீதி அநீதிகளைக் கருத்தில் கொண்டு அவளைப் படைத்தவர்களும் இருக்கின்றார்கள். இவை எதையுமே கருத்தில் கொள்ளாது அகலிகையை ஒரு தலைப் பட்சமாகக் குற்றம் கூறியவர்களும் இருக்கின்றார்கள்.
வான்மீகியினது படைப்பில் அகலிகை திடமனமில்லாத, ஆசைக்கு லகவில் பணிர்க போகின்ற பெண்ணாகச் சிக்கிரிக்கப்பட்டாள்.
கு الملك 西gh D த
அழகே வடிவெடுத்து வந்த எண்ணிறந்ததேவ கன்னிகளுக்குத் தலைவனான தேவேந்திரன், அவர்களை அலட்சியம் செய்து, தன்னை மேலாக எண்ணி ஆசை வைத்ததால் கர்வமடைந்து, புத்தி மயங்கி அவனிடம் ஆசை வைத்தாள், பிறகு தன் இச்சை நிறைவேறியதால் மகிழ்ச்சியடைந்து இந்திரனைப் பார்த்தது.
“உன் நட்பால் மிகவும் ஆனந்தமடைந்தேன், மகா முனிவர் வருவதற்கு முன் இங்கிருந்து புறப்பட்டுப்போ, உனக்கும் எனக்கும் இதனால் யாதொரு கெடுதியும் நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.”
என்றாள்,
என்ற வண்ணம் அகலிகையை வான்மீகி படைத்தார் கம்பனுடைய அகலிகையோ, உறவின்போது இடையில், தன்னுடனிருப்பது கணவரல்ல, வேறொருவர் என்று தெரிந்து கொள்கின்றாள். ஆனாலும் அமைதியாக இருக்கின்றாள். கணவனல்லாத பிறனுடன் வாழ்வது தகாது என்று அவள் நினைக்கவில்லை.
முதலியார், அகலிகையைக் குற்றமுடையவளாகக் காட்டாவிடினும், அந்தச் சம்பவத்தின்பின் அவள் தனது தராதரத்தை நினைத்துப் பலவாறு மறுகுகிறாள். முதலியாருடைய அகலிகை தாழ்வு மனப்பாங்கு கொண்டவள்.
யோகியாரின் அகலிகை குற்றமற்றவள். இந்திரன் தன் இச்சையை அவளிடம் வெளியிட்டபோது அவனை இடித்துரைக்கும் நேர் நெஞ்சு கொண்டவள்.
77

Page 44
ஆனாலும் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்ற மூடக் கோட்பாட்டில் ஊறிப்போனவளாகச் சித்திரிக்கப்படுகின்றாள்.
கல்லாக இருந்த அகலிகை உயிர் பெற்றபின் கோதமன் அவளுடன் வாழ மறுக்கின்றான். சிறுவயதில் இந்திரனுடன் அகலிகை நட்பாக இருந்ததை இழித்துரைக்கின்றான். இந்திரனை அகலிகை அப்போது காதலித்ததாலேதான், பின்னர் இத்தகைய தவறு நேர்ந்தது என்று பொய்க் காரணம் கூறுகின்றான்.
ஆனாலும் இராமனின் கட்டளைப்படி அகலிகையிடம் கோதமன் மன்னிப்புக் கேட்பதற்காய் அவளின் பாதங்களில் வீழமுன், தான் கோதமனின் பாதங்களில் வீழ்கின்றாள். அவன் தன்னை அந்நியர் முன் இழிவுபடுத்திய பின்னும் அவனோடு வாழ இசைகின்றாள். ஏனென்றால் கோதமன் ஆண். அதிலும் அகலிகையின் கணவன் அல்லவா? அவன் அவளை என்ன செய்தாலும் அது சரி அல்லவா? (இதை எழுதியதும் ஒரு ஆண் என்பது இங்கு நோக்குதற்குரியது)
மகாகவியாரின் அகலிகை மிக்க மன வலிமை உடையவள். தன்னுடன் உறவு கொண்டவன் ஒரு அந்நியன் என்பதை அறிந்த அக்கணமே தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தன்னை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துவிடுகின்றாள். (கல்லாகின்றாள்)
ஒரு பெண், ஆணாதிக்க சமுதாய அமைப்பின் இறுக்கமான பிடியில் நசியுண்டு, தன் உணர்வுகளை வெளிக்காட்ட முடியாது வாழ்கின்றாள் என்ற விடயம், ஞானியின் அகலிகை தன் செய்தியில் கூறும் விடயங்களில் ஒன்று.
மானோடு ஒட, விரும்பிய என் கால்களில் மந்திரக் கயிறு பூட்டினான். காடெல்லாம் சுற்றிவர விரும்பிய என்னை குடிசைக் கொட்டிலில் கட்டிப் போட்டான்'
மதம் எவ்வாறு பெண்களை அடக்கியது என்பதையும் அவள் சொல்லுகின்றாள்.
'மனக் கொடி வீட்டைக் கட்டும்போது
வேதப் படையால் வெட்டிப் போட்டான்'
ஞானியின் அகலிகை சமூகத்தின் பல பிரச்சினைகளையும் பார்க்கின்றாள். ஒரு பெண்ணின் உள் மன உணர்வுகளை தன்மூலம் வெளிப்படுத்துகின்றாள்.
78

புதுமைப் பித்தனின் அகலிகை மேல் கெளதமர் அளவிறந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டவர். அத்தோடு அகலிகையும் அந்நிய ஆடவரை நாடுபவளல்ல, இருவரிடையேயும் ஆழமான புரிந்துணர்வு இருப்பதால், அகலிகை அறியாமல் இந்திரனுடன் உறவு கொண்டதை கெளதமர் பொருட்படுத்தவில்லை.
பிச்சமூர்த்தியின் உயிர்மகளில், ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஆணின் மனைவி (?) யாக மாறுகிறாள் அகலிகை. தன்னுடைய உணர்வுகளை கெளதமரிடம் வெளிப்படுத்தியும்கூட, கெளதமர் எதையுமே கருத்தில் எடுக்கவில்லை. ஆனால் அகலிகையைத் தன் மனைவியாகச் சரியான முறையில் பேனா கெளதமர். அவள் இந்திரனோ உறவு கொண்டதும் சீற்றமடைகின்றார். அவளை உணர்வுகளே இல்லாதவளாய், கல்லாய் மாறும்படி சாபமிட்டார். தன்னுடைய உடைமையாகத் தான் நினைத்த அகலிகையை இன்னொருவன் உடைமை கொள்ளக்கூடாது என்ற கெளதமரின் வக்கிர உணர்வுக்குப் பலியாகிய அகலிகை கல்லானாள். இங்கே கெளதமரில் ஆதிக்கத்தின் உச்சவெறி தெரிகிறது.
அகலிகை’ என்ற பாத்திரத்தைத் துன்பப்படுகின்ற, தன் துயர்களைப் பகிர்ந்து கொள்ள யாருமேயற்ற ஒரு பெண்ணுக்குரிய எடுகோளாக நாம் கொள்ளுவோம். அப்படிப் பார்க்கப்போனால் ஒவ்வொருவருடைய கோணத்திலும் அந்தப் பெண் என்ன பார்வையில் தெரிகிறாள் என்பது தெளிவாகும். தன் மனைவியுடன் அந்நியன் ஒருவன் உறவு கொண்டான் என்பதை அறியும்போது ஒவ்வொருவருடைய கெளதமர்களும் வெவ்வேறு விதமாக நடத்து கொள்கின்றனர். என்பதை அவதானிக்கலாம்.
வான்மீகியின் கெளதமர் ஒரு விதமான விசாரணையுமின்றி அகலிகையைத் கல்லாகுமாறு சபிக்கின்றனர். கம்பனின் கெளதமர் விலைமகள்' என்று அகலிகையைக் கூறுகின்றார். முதலியாரின் கெளதமர் 'உனக்கே தெரியாமல் நடந்த தவறை நினைத்து உனக்குள்ளேயே நீ வருந்தாமல் கல்லாவாய்' என்கிறார் இங்கே முதலியாரின் கெளதமர் தன் மனைவியின் மனவேதனையைத் தணிப்பதற்காகவே அவளைக் கல்லாக்கினார். யோகியாரின் கெளதமர், இல்லற ஒழுக்கத்தை அழித்த அகலிகை உடனேயே கல்லாக வேண்டும் என்கிறார். பிச்சமூர்த்தியின் கெளதமர் அகலிகை மானத்தை இழந்துவிட்டதாகவும் தன்னை ஏமாற்றியதாகவும் அவளுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள யாருமே இல்லாத வண்ணம் கல்லாகுமாறும் சபித்தார். புதுமைப்பித்தனின் இரு கெளதமர்களும் ஒருவர், மனத் தூய்மையில்தான் கற்பு, சந்தர்ப்பத்தால் உடல்களங்கமானாள் என்ன செய்யமுடியும்?, என்கிறார். மற்றைய கெளதமர். அன்பு அவளை விலைமகள் என்று ஏசியதையே எண்ணி எண்ணி மறுக்கின்றார்.
79

Page 45
புதுமைப்பித்தனின் அகலிகை சற்று வித்தியாசமானவள்
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிருபிக்க முடியுமா? நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகின்றதா? உள்ளத்தைத் தொடவில்லையானால்?”
என்று சீதையிடம், சீதையின் அக்கினிக் குளியலை விமர்சனம் செய்யும் தர்க்க வாதியாக அவள் தோன்றுகின்றாள்.
எழுதியவர்களின் மனநிலைக்கேற்ப அகலிகைகளும் கெளதமர்களும் தம் இயல்பில் வேறுபடுகின்றார்கள்.
தெரிந்தே தவறிய அகலிகையும்,
தெரியாத்தனமாகத் தவறுநேர்ந்த போதிலும் கணவனால் புரிந்து கொள்ளப்படாமல் சாபமிடப்பட்ட அகலிகையும்,
கணவன் தன் இச்சைகளை நிறைவேற்றாததால் தவற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட அகலிகையும்,
நடந்த சம்பவத்தைத் தீர விசாரிக்காது அல்லது விசாரிக்க விரும்பாது தன்மனைவியே குற்றம் சாட்டிய கெளதமர்களும்,
தவறுநடந்ததற்கான காரணம் தெரியாத போதும் மனைவியிடம் பரிவு கொண்டு அவளை ஆறுதல்படுத்திய கெளதமர்களும்,
ஒரு சமூகத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களது பலதரப்பட்ட மன உணர்வுகளை அகலிகைக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஒரு பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் தன்னிச்சைப்படி அவளை நடத்தும் ஆடவர்களும் வருகின்றார்கள். அவளைப் புரிந்துகொள்கின்ற, அவளின் நலனில் அக்கறை கொள்கின்ற ஆடவர்களும் வருகின்றனர்.
ஒரு பெண்ணின் நடவடிக்கைகள் சமூகத்தில் எப்படி நோக்கப்படுகின்றன, ஒரு பெண் எப்படி நோக்கப்படுகின்றாள் என்பதற்கு ஒரு சிறு உதாரணமாக அகலிகையைச் சுற்றி நடமாடுகின்ற பாத்திரங்களின் நடவடிக்கைகளைச் சொல்லலாம்.
80

இன்று எம்மிடையேகூடப் பல அகலிகைகள் (அவளை நாம் துன்பப்படுகின்ற ஒரு பெண்ணுக்கான எடுகோளாகத்தான் கருதுகின்றோம்) தம்மைத் தமக்குள்ளே வைத்துப் பூட்டியவாறு, உணர்வுகள் ஒடுக்கப்பட்ட நிலையில் கற்களாகச் சமைந்திருக்கின்றனர். இவர்களுக்கு எப்போது சாபமீட்சி கிடைக்கப்போகின்றது? (இலக்கியங்களில் வந்தது போன்று இங்கு இராம, இலட்சுமணர்கள் வரமாட்டார்கள். ஆகவே நாங்களேதான்.) புதுமைப்பித்தனின் சாபவிமோசனத்தில் வரும் அகலிகை போன்று யார் சற்று வித்தியாசமாகச் சிந்திக்கப்போகின்றார்கள்.
இந்த அகலிகைகளின் சாபம் தீர, அவர்களேதான் முயலவேண்டும் என்ற உண்மையை எல்லாப் பெண்களும் புரிந்துகொள்கின்றவரை, புரிந்து கொண்டு
எழுந்து கொள்கின்றவரை கற்களால் இருப்பதைத் தவிர இவர்களுக்கு வேறு வழியில்லை.
நன்றி சுதந்திரப் பறவைகள் 1994 ஆவணி
81

Page 46
நிகழ்காலத்தில் கடந்தகால எதிர்கால பெண்ணிலைமைய எதிர்பார்ப்புகள் குடும்பம் என்ற அலகில் பெண்கள்
- தேவகெளரி சிமூகத்தின் முக்கியமான ஒரு கூறாகவும் தனிமனிதனின்
அத்தியாவசியமான தேவைப்புள்ளியாகவும் குடும்பம்' என்ற அலகு இருந்து வருகிறது.
குடும்பம் என்ற அலகுபற்றி, செல்வி திருச்சந்திரன் “பெண்ணிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகளும் ஒரு சமூகவியல் நோக்கு என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'குடும்பம் என்பது இதயமற்ற உலகில் ஒரு சொர்க்கம் என்ற கருத்தும் அது பேணப்பட வேண்டும் என்பதும் பல வாதப் பிரதிவாதங்களை தற்போது
தோற்றுவித்துள்ளது. என்கிறார்.
குடும்பம் என்ற அலகு அதன் தோற்றத்தின்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்குமிடையில் நிறைய மாறுபாடுகள் அடைந்துள்ளது. அந்த வகையில் தற்போது எதிர்கால பெண்ணிலைமையை எதிர்பார்ப்புகளுக்கேற்ப நெகிழ்ச்சித்தன்மை கொண்டதாய் குடும்ப அலகு அமையவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
'குடும்பம்’ என்ற அலகு என்றைக்கும் நிலையான ஒரு வடிவத்தில் இயங்கவில்லை என்பதை மிக இலகுவாக பின்வருமாறு விளக்கிக் கொள்ளலாம்.
இதை மனித இனத்தின் வளர்ச்சி நிலையுடன் உணர்ந்து கொள்ளலாம்.
ஆரம்ப மனிதகுல வரலாற்றில் அவனது வாழ்வு இயற்கையுடன் இணைந்த ஒரு விலங்குத்தனமான வாழ்வு கூட்டாக வாழ்ந்து வந்தனர். பாலுறவில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. இதை இரத்த உறவுக் குடும்பங்கள் என்று கூறினர்.
82

அடுத்த கட்டம் உணவு சேகரிப்பு, விலங்கு வேளாண்மை காலகட்டம். இதில் பெண்களிடம் அதிகாரம் இருந்தது. குலங்களை அவர்கள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தந்தை பற்றிய எண்ணப்பாடு இல்லை. தாய் முக்கியமானாள். இந்த இனக்குழுமங்களுக்கிடையே பூசல்களும் ஏற்படத் தொடங்கின.
அடுத்த கட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து வேளாண்மையில் ஈடுபடும் நிலை உருவாகியது. உற்பத்திக்கருவிகள் உதயமாயின. உற்பத்தியில் உபரிகள் பெறப்பட்டன. உற்பத்திக் கருவிகளை வைத்திருந்த ஆண் உபரிகளுக்குச் சொந்தக்காரன் ஆகிறான். இவற்றை கையளிக்கத்தன் வாரிசை உருவாக்க முயல்கிறான். அதன் போது, தாயுரிமை தூக்கி எறியப்பட்டு ஒரு தாரக் குடும்பத்தை அமைத்தான். தனிப் பொருளாதார உறவாக குடும்பம் அமையத் தொடங்கிற்று. இங்கே பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவள் இல்லறத்திற் குரியவளாக்கப்படுகிறாள். இவை பற்றி 1884 இல் குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் ஏங்கல்ஸ்' விரிவாக எழுதியுள்ளார்.
இன்று நிலைபெற்றிருக்கும் தனிச் சொத்துடமைக் குடும்ப அமைப்பு பல சிக்கல்களை எதிர் கொண்டு இன்று குடும்பம் என்பது ஆண் - பெண் இணைந்து வாழல் மட்டுமல்ல பெண் - பெண், ஆண் - ஆண் இணைந்து வாழும் நிலைக்குள்ளும் வந்து, அதையும் மீறி ஆண் - குழந்தைகள், பெண் - குழந்தைகள் என்ற தனித்தனி குடும்ப அலகு நிலைக்கும் வந்துள்ளது. பரிசோதனைக்குழாய்க் குழந்தை, வாடகைத்தாய், படியாக்கல் இவையெல்லாம் இவற்றை சாதகமாக்கியுள்ளன.
இன்று எமது நாட்டில் குடும்ப அலகு பற்றி நோக்குவோமானால், ஆண் - பெண் குடும்ப அலகே முதன்மை பெற்றதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் போர்க்கால சூழ்நிலையால், பெண் - குழந்தைகள் என்ற குடும்ப அலகும் அதிகம் அமைந்துதான் உள்ளன. அதிகரித்த விதவைத்தாய்மார் தம் குழந்தைகளுடன் குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் குடும்ப அலகு பற்றி பார்க்கும்போது அதன் அமைவு இன்றும் பொருளாதார தளத்திலேயே நிர்ணயிக்கப்படுவதை அல்லது கட்டமைக்கப்
படுவதைக் காணலாம்.
83

Page 47
ஆனால், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப குடும்ப அலகு தாக்கத்திற்குட்பட்டு வருகிறது. காரணம் குடும்பம்' என்ற அலகின் தோற்றம் எந்தத் தேவை கருதி உருவாக்கப்பட்டதோ அல்லது அமைந்ததோ, அத்தேவைகளையும் மீறி இன்றும் தேவைகள் அதிகரித்து, வளர்ச்சிகள் ஏற்பட்டு சமுதாய அசைவியக்கம் வாழ்தலுக்கான வழிகளை அவாவி நிற்கிறது.
பேராசிரியர் சிவத்தம்பி சடங்கு என்ற செ. கணேசலிங்கத்தின் நாவலில் இவ்வாறு குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவச்சமுதாய மாற்ற காலங்களில் நிலப்பிரபுத்துவத்தின் கூட்டுக்குடும்ப அமைப்பிற்கு வேண்டிய முறையில் நடத்தப்பெற்ற இணைப்பு பின்னர், அக்குடும்பம் அதன் அமைப்பிற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இயங்கும் பொழுது இது முறியவே செய்யும். சில குடும்பங்கள் மாத்திரமே மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழும். பல குடும்பங்கள் மாற்றத்தாற் பாதிக்கப்படும். குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றனவெனின் குடும்பத்தின் அங்கங்களான கணவன் - மனைவி - பிள்ளைகள அனைவரும்
துன்புறுகின்றனர் என்பதே கருத்து.
இங்கே கூட்டுக் குடும்ப முறைமைக்கு ஏற்ப அமையப்பெற்ற அல்லது உருவாக்கப்பட்ட 'குடும்பம் எவ்வாறு அந்த சூழ்நிலை மாறும்போது அது சிதைவடைகிறது, என்பதை அதாவது குடும்பத்தினர் படும் துன்பங்களை பேராசிரியர் குறித்துள்ளார். இதே கருத்தில் இன்றைய குடும்ப அலகை வைத்துப் பாருங்கள். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் துன்பங்கள் மலிந்து விட்டன. ஆனாலும் பழைய அமைப்பிலேயே குடும்ப நிறுவனத்தை கேள்வி கேட்காமலே அதைப்பேண வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றோம்.
ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான். அவனது மரணச்சடங்கை முறைப்படி செய்து முடிப்பதில் காட்டும் ஆர்வம் அவர் இறப்பிற்கான காரணம், சமூகத்தாக்கம், உளவியல் போக்கு, மீண்டும் ஒருவர் இவ்வாறு இறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை எவரும் சிந்திப்பதில்லை. அதுபோல்த்தான் குடும்பம் புனிதமானது என வைத்துக்கொண்டு அதன் உள்ளார்ந்த அம்சங்களை யாரும் நோக்கமுயல்வதில்லை. ராஜம் கிருஷ்ணன் தன் வீடு என்ற நாவலில் இவ்வாறு கூறுகிறார். 'குடும்பம்’ என்ற அமைப்பு வெளிப்பார்வைக்கு ஆழமாகத் தெரியக்கூடிய இழுத்து மூடப்பட்டதொரு அலங்காரம். தனி மனிதன் சுதந்திரம்
84

வீட்டில் சமமாக வளர்ச்சி அடையவில்லை. ஆணுக்கு அதிகமாக உரிமையைத்தரும் அமைப்பு அது. பெண் அந்த அமைப்பில் ஒத்துப்போதல்’ என்ற அளவிலேயே உருவாக்கப்படுகிறாள்'.
எனவே குடும்ப அலகில் பெண்ணின் இயங்கு நிலை என்பது சகல விதத்திலும் ஒத்துப்போகும் நிலையில் தன்னை வைத்துக் கொள்வதில்த்தான் இருக்கிறது. இது '95 அடிமை நிலை. பாலுணர்வு தொடக்கம் அவளது சிந்தனைத் தேடல்கள் வரை அவள், அவனுடன் ஒத்துப் போகக்கூடியதாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டியவளாகின்றாள். மதம், கலாசாரம், தொடர்பூடகங்கள், கல்வி
சகலதும் இதையே வலியுறுத்தி நிற்பதைக் காணலாம்.
இதனால்த்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்களோ அதாவது இயக்கமில்லாத சார்ந்து நின்று எல்லாவற்றுக்கும் ஒத்துப்போகும் தன்மையை ஒரு மனித ஜிவி கொண்டிருக்கக்கூடிய சாத்தியக் கூறு உண்டா? இல்லையே ஆனால் அப்படியான பெண்தான் குடும்ப அலகிற்கு வேண்டும். அதனால்த்தான் அப்படியான மனைவி கிடைப்பதை இறைவனிடம்தான் அவர்கள் கேட்க முடியும். அதனால்த்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்களோ, பெண்ணுக்கு குழந்தைப்பேறே முழுமை என்பதை நன்றாகவே அவளுக்கு ஊட்டியுள்ளனர். இதனால் தாய்மையின்வலி, துன்பம் தன்னையே பணயம் வைத்தல், எல்லாவற்றையும் மீறி பெண் குழந்தைப்பேற்றிற்காக குடும்ப வாழ்வில் இணைவதுடன் சமுதாய அந்தஸ்து, பாதுகாப்பு என்ற கருத்துருவங்களும் பெண்ணை குடும்ப வாழ்வில் இணைக்கிறது.
இதன் அடிப்படையில் இன்று எங்கள் பெண்களின் நிலையைப்பாருங்கள். படித்துப்பட்டம் பெற்று ஆளுமையுடன் செயல்புரிந்து கொண்டிருக்கும் பல பெண்கள் திருமணத்திற்காக குடும்ப அமைதலுக்காக புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு, தனக்காக வாழ, ஒருத்தியை எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஆண்கள். அவர்களுக்கு குழந்தைகள்கூட இருக்கும். ஆனால் மரபுரீதியாக தாலிகட்டி குடும்பம் அமைப்பார்கள். ஏற்கனவே இருந்த தொடர்புகளும், குழந்தையும் எந்த அலகில் உள்ளடக்கப்படும்? நாம் யோசித்துப்பார்க்கலாம். குடும்ப உருவாக்கலில் ஆணின் எதிர்பார்ப்பு என்ன?
அழகான, மெலிந்த, குடும்பப்பாங்காக சமையல்தெரிந்த, அண்மையில் பெண்
85

Page 48
இருக்கவேண்டிய நிறையைக்கூட குறிப்பிட்டிருந்தார்கள். இதே நேரம் பெண்ணுக்கு எதிர்பார்ப்பு இருக்கமுடியாது. பெற்றோர் எதிர்பார்ப்பு, உழைக்கும் குடிப்பழக்கமற்ற ஒரு ஆண் என்று மட்டும் இருக்கும். இந்த முரண்பாடு உழைப்பும் ஊதியமும் ஒரு பக்கம் இருக்க சேவை மறுபக்கம் இருப்பதை தெளிவாகவே பறைசாற்றுகிறது. தற்போது சேவையுடன் பெண்கள் உழைப்பும் ஊதியமும் பெறத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் நடந்தது என்ன? இரட்டைச்சுமை தான் வந்தது. எத்தனையோ ஆண்கள் வீட்டுவேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இயல்பாகவே ஆண்களுக்குள்ளால் அது இருந்து வருகிறதா? இல்லை. பெண்ணுக்குரியதில் அவன் உதவி செய்கிறான். இதே நேரம் பொருளாதாரத்தில் அவனுக்கு நிகராக சில வேளை அவனிலும் கூடுதலாக பெண் ஊதியம் பெறுகிறாள். இத்தகைய ஜனநாயகமற்ற முறைமை குடும்ப அலகில் இருப்பதால் பெண்ணின் இயங்குநிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. அடிமைத்தனமும், ஆண்டான் நிலையும் இன்றும் குடும்ப அலகு நீடித்துக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. சுரண்டப்படுகின்ற பெண்களின் நிலை சோகங்களாக ஆக்கப்பட்டுள்ளன.
'குடும்ப அலகு சமூகப் பாதுகாப்பை பெண்ணுக்கு வழங்குகிறது என்ற கருத்தியலும் உண்டு. அது எவ்வாறெனில் பாலியல் வல்லுறவு, கீழ்த்தரமாக கதைத்தல் இவற்றில் இருந்து பாதுகாப்பு. ஆனால் இவை குடும்ப அலகிற்குள்ளேயே நடந்தேறுகின்ற அவலம் இவற்றை சகித்துக்கொண்டு வாழ்வை நடாத்தும் பெண்கள் உண்டு. ஆனால் இன்று குறைந்து வருகின்றனர். இதனால் குடும்ப விரிசல் ஏற்படுகிறது. ஆண் ஒரு உடமைப் பொருளாய் பெண்களைப் பார்ப்பது குடும்ப அலகினுள்ளும் உண்டு. இதனால் தன் விருப்பிற்கு ஏற்ப அவளைக் கட்டாயப்படுத்துகிறான். இதன் போது பல பெண்கள் ஏனோ தானோ என்று வாழ்வது மட்டுமல்ல குடும்ப உறவிலும் ஈடுபடுகின்றனர். பல குடும்பங்களில் உள்ள விடயம் இது. இதனால் மேலும் ஒரு பிரச்சனை உருவாகிறது. பெண் ஏனோ தானோ என்று இருப்பதால் ஆண் வேறிடம் தேடிச்செல்கிறான். இப்படி இடியப்பச் சிக்கலாகிறது குடும்ப அலகின் நடைமுறைத் தத்துவங்கள்.
இந்த குடும்ப அலகில் ப்ெண்களின் பாலுணர்வுகூட கணக்கில் எடுக்கப்படுவதில்லை என்பது இங்கே புலனாகிறது. ஏன் பெண்கூட அதை உணர்ந்து கொள்வதில்லை. தன்னை கொடுப்பதாகத்தான் அவள் எண்ணிக்கொள்கிறாள்.
86

இத்தகைய நிலைமைகளால், இன்றைய குடும்ப அலகில் உள்ள பல பெண்களிடம் சலிப்புத்தன்மைகளைக் காணமுடிகிறது. இதற்கு என்ன காரணம்? உ+ம் வீட்டுவேலையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் திரும்ப திரும்ப அதில் சலிப்படைந்து கொள்கின்றனர். வெளிவேலைகளில் ஈடுபடும் பெண்கள் இரட்டைச் சுமையால் அழுத்தப்படுகின்றனர். இதில் இன்னொரு விடயம் பெண் தனக்கு மனத் திருப்தி தரும் வேலைகள் செயல்கள் எதிலுமே ஈடுபடாத நிலை உண்டு. ஒத்துப்போக வேண்டிய தன்மைதான் இதை ஏற்படுத்துகிறது. இதனாலும் சலிப்புத்தன்மைக்கு பெண் விரைவில் ஆட்பட்டு விடுகிறாள். பிள்ளைகள் வந்துவிட்டார்கள். வாழ்ந்து முடிக்க வேண்டும் என்று வாழ்கிறோம் என்கின்றனர் பலர். அப்படியாயின் இந்த குடும்ப அலகு ஏன்? யார் நலன் காக்கிறது? யார் திருப்திப்படுகின்றனர்? இது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது மறு பக்கத்தில் ஆண்கள் பற்றி பார்க்கின்ற போது பிரபலியமான பல ஆண்கள், அதாவது தமது முழு மன ஈடுபாட்டுடன் சமூகத்தில் உழைத்தவர்கள் மனைவிகளால் அல்லல்பட்ட வரலாறு நம்முடையது. அதாவது அவர்களுக்கு நல்ல குடும்ப வாழ்வு அமையவில்லை என்றோ நல்ல மனைவி அமையவில்லையென்றோ சொல்லிக் கொள்கின்றனர். இது உண்மைதானா?
பாரதியாரை எடுத்துக்கொள்ளுங்கள். மகாகவிகுடும்பத்தில்பட்ட அல்லலோ ஏராளம். ஏன்? மனைவி வீட்டிலிருந்து மனத் திருப்தியில்லாத ஊதியமற்ற சேவை செய்கிறாள். பாரதியார் சமூகத்தில் மன திருப்தியோடு ஊதியமற்ற சேவை செய்கிறார். குடும்பம் எப்படி இயங்குவது? பொருளாதாரத்திற்கு வழி என்ன? எனவே சிக்கல் வருகிறது. குடும்பத்தில் சலிப்பு வருகிறது. (இருவருக்கும்) ஆளுமை பாதிக்கப்படுகிறது. எனவே இப்போது இருக்கின்ற குடும்ப அலகு தனி மனித ஆளுமையை கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதையும் மீறி குடும்ப அலகில் உள்ள ஒருவர் உச்சாணி கொப்பிற்கு ஏறுகிறார் என்றால் ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் நிற்பாள், என்ற சூத்திரம் கைகொடுக்க ஒரு பெண்ணின் இயங்கு நிலை ஒத்திசைவுடன் மட்டும் நின்றுவிட்டது என்பதை உணரலாம் ஆனால் இதனூடாக பெண் திருப்திப்படும் உளப்பாங்கையும் (ஆணின் வெற்றிக்குக் காரணமாக இருந்தபோதும்) நாம் நன்றே வளர்த்திருக்கிறோம். இதன் போதுகூட குடும்பத்தின் அசமத்துவப் போக்கை நாம் உணரவில்லை. (பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி என ஆண்கள் போற்றிக் கொண்டிருக்கும்போது, பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறவேண்டும் எனப் பெண்கள் தூற்றிக்கொண்டு சகித்துக்கொள்வதாகவே குடும்ப அலகு இயங்குகிறது.
87

Page 49
எனவே இந்த பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் குடும்ப அலகு மறுதலிக்கப்பட்டு இரு தனிமனித உளவியல்ரீதியான விருப்புடன் கட்டமைக்கப்படும் குடும்ப அலகில் சமத்துவத்தை நிலைநாட்டினால் மட்டுமே இனி வரும் காலத்தில் குடும்ப அலகின் வெற்றிகரமான முன்னெடுப்பு இருந்துகொண்டிருக்கும். சமத்துவம் இல்லாது போகும் பட்சத்தில் இணைந்து வாழலில் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் அல்லது தனித்து ஆண், பெண் என்ற நிலையில் குடும்ப அலகு உருவாகும். இது தவிர்க்க முடியாதது. இனிவரும் காலத்தில் உலகில் பெண் சவால்களை எதிர்கொள்ளமாட்டாள். பெண்ணே உலகிற்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறாள். கர்ப்பப்பையை கண்டுபிடிக்குமட்டும். ஏனெனில் எந்த வகையில் மறு உற்பத்தி செய்யப்பட்டாலும் படியாக்கம், பரிசோதனைக் குழாய் கர்ப்பப்பை தேவைப்படுகிறது. இதனால் பெண்தேவை, எனவே இன்றைய குளோனிங் முறை கூட ஆண் இனத்தை இல்லாதொழித்துவிடும் என்ற அச்சத்தைக்கூட கொடுக்கிறது. ஏனெனில் பெண்ணில் இருக்கும் கர்ப்பப்பையில்த்தான் குழந்தை வளர்க்க முடியும் என்ற நிலையில் ஆண் இல்லாது பெண் தன்னில் இருந்து உருவாக்கிய சிசுவை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் இது எங்கு போய் முடியும்?
இவை வருடக்கணக்கில் நடைபெறக்கூடிய விடயங்கள் அல்ல. இவை பல நூறு வருடங்களின் பின் நிகழலாம். அதற்கான வாய்ப்புக்கள் நகர்வுகள் இப்போது தென்படுகின்றன.
எனவே சமூக உற்பத்தியில் முழுமையாக பெண் பங்குபற்றும் போது, மறு உற்பத்தியை தாமாக தீர்மானிக்கும் போது ஆண் ஆதிக்க குடும்ப அமைப்பு வலுவிழந்து, செயலிழந்து போகும்.
மேற்கு நாடுகளில் இதன் தன்மைகளை ஒரளவு உணரலாம். குடும்பத்தின் எதிர்காலம் பற்றி செ. கணேசலிங்கன் கூறுகையில் 'பெண்ணினம் அமைக்கப்போகும் புதிய சமூக அமைப்பு பெண்ணாதிக்கம் கொண்டதாகவும் அமையலாம். மீண்டும் ஆண் - பெண் என்ற வர்க்க போராட்டம் அங்கு ஏற்படலாம். முரண்பாடுகளும், போராட்டங்களும் சமூகத்தில் நிரந்தரமானவை ஆயினும் இங்கு ஆணினத்தின் எதிர்காலம் பெண்ணினத்தின் கருவிலேயே உள்ளது என்பதை நாம் மறந்துவிட முடியாது. விஞ்ஞான முறையில் அறிந்து ஆணினத்தை அவர்கள்
88

கருச்சிதைவும் செய்துவிடலாம். ஃபிராயிடின் உளவியல் கோட்பாடு ஒன்றுதான் ஆணினத்திற்கு நம்பிக்கையூட்டுவதாக எஞ்சி நிற்கிறது என்கிறார். இத்தகைய அச்சங்கள் ஆட்கொள்ளாத வண்ணம் குடும்ப அலகை மறுவரையறை செய்யவேண்டியதன் அவசியம் யாவராலும் உணரப்படவேண்டும்.
குடும்பத்துள் ஜனநாயக முறைமை, அசமத்துவ போக்கை தகர்த்தல் போன்றன ஓரளவிற்கு இருக்கக்கூடிய குடும்ப அலகை நெறிப்படுத்தியதாக அமையலாம். இதற்கான பெண்ணினச் சிந்தனைகள் விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். பெண்ணினமானது ஆழமானது அறியமுடியாதது என்று கூறி தட்டிக்கழித்தலிலேயே நம்மவர்கள் மும்முரமாய் நிற்கின்றனர். தற்போதய சூழலில் வாழ்தலுக்கான தெரிவு குடும்ப அலகாக இருக்க வேண்டுமானால் அந்த அலகை, அது அமையும் முறைமையை அமைந்த பின் அதன் இயங்கு நிலையை சரிவர அமைத்துக் கொள்ள வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
செல்வி திருச்சந்திரன், பெண்ணிலைவாதமும் கோட்பாட்டு முரண்பாடுகள் செ. கணேசலிங்கம் பெண்ணடிமை
டாக்டர். இரா. பிரேமா, பெண்ணியம் அணுகுமுறைகள், தமிழ் புத்தகாலயம் சென்னை.
89

Page 50
அடையாள உருவாக்கம்:
தமிழ் இலக்கிய மரபில் ஒளவையும் ஒளவையாரும்
- மென. சித்திரவேகா திமிழ் இலக்கிய மரபு என்று குறிப்பிடப்படுவதும் தமிழ் இலக்கிய வரலாறு என்று குறிப்பிடப்படுவதும் அவற்றை உருவாக்கியவர்களின் பார்வையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் முயற்சியில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கிப் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தகைய வரலாற்று உருவாக்கமும், மரபு உருவாக்கமும், எழுத்து இலக்கியத்தை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. இத்தகைய வரலாற்று உருவாக்கம், வாய்மொழிப் பாரம்பரியம் பற்றிய எத்தகைய கவனமும் அக்கறையுமின்றி, எழுத்து வடிவில் நின்று நிலைபெற்றவையே இலக்கியம் என்ற கருதுகோளின் அடிப்படையில்
கட்டமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கட்டமைப்பானது பல இடைவெளிகள், புறக்கணிப்புக்கள், முன்தள்ளுதல்கள் ஆகியவற்றுடன் உருவாகி நிலைபெற்றுள்ளது. இத்தகைய LDITL(56) Töö, Sasp6 (SUTó,555 (Construction Process of Tradition) 6T6ü6urth தப்பிப் பிழைத்து இன்றுவரை தொடர்ந்து வருகின்ற இலக்கிய ஆளுமைகள் ஒன்று ஒளவை ஆகும்.
ஒளவை: சொற்பொருள்
தமிழ் இலக்கியத்துடன் தொடர்புடைய வெவ்வேறு ஒளவைகள் பற்றிய மரபு ஒன்று பலமாக உள்ளது. அறிவும், முதிர்ச்சியும் உள்ள பெண்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட ஒரு பொதுச் சொல்லாக ஒளவை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்படுகின்றது. இச்சொல் தாய், தமக்கை, வயதான பெண், பெண்முனிவர் என்று பல்வேறு பொருள்படும். கன்னட, தெலுங்கு, துளு மொழிகளிலும் இச்சொல் இதே பொருளுடன் வழங்குகிறது.
90

அத்துடன் தமிழ்ப் புலவர் அகராதி, தமிழ் நாவலர் சரிதை, தமிழ்ப் புலவர் சரித்திரம் ஆகிய நூல்களும் ஏனைய தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள் சிலவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒளவைகள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றன.
தமிழ்ப் புலவர் அகராதி எழுதிய ந. சி. கந்தையாப்பிள்ளை மூன்று வெவ்வேறு ஒளவைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அவ்வை, அவ்வையார், ஒளவை என மூன்று பெயர்கள் மூன்று இடங்களில் தமிழ்ப் புலவர் அகராதியில் பட்டியல்ப் படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கிய உலகில் ஒளவைக்கு அறிமுகம்
மேற்கூறிய வித்தியாசங்கள் ஒளவை பற்றி அவ்வப்போது அவதானிக்கப்பட்டிருப்பினும் தமிழ் இலக்கிய மரபிலும் பொதுவான நினைவாற்றலிலும் (Popular Memory) ஒளவை ஒருவர் என்பதே நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த ஒளவை “வயது முதிர்ந்த, கூன்விழுந்த ஒளவையாக, நித்திய முதுமகளாகவே” வடிவமைக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்குச் சிறுவயதிலிருந்தே ஒளவை பற்றிய இந்தப் பிம்பத்தை தமிழ் இலக்கியப் பாடநூல்களும், சைவ சமயப் பாடநூல்களும் ஊட்டி வைத்துள்ளன. பாடப்புத்தகங்களில் பிரபல்யப்படுத்தப்படும் ஒளவை அறநெறி பாடிய இடைக்கால ஒளவையாரே ஆவர். ஊதாரணமாக தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10, 11(1999) என்கிற (புதிய பாடத்திட்டம்) நூலில் நீதிப்பாடல்கள் ,நீதிப்பாடல்கள் I என வரும் இரு பாடல்களிலும் ஒளவையாரின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. “மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடமை’ எனத் தொடங்கும் நல்வழிச் செய்யுளும் மூதுரையிலிருந்து ஒன்பது செய்யுள்களும் முறையே இப்பாடல்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு தமிழ்மொழியும் இலக்கியமும் (1998) என்ற பாடநூலில் பல்சுவைப் பாடல்கள் என்ற பகுதியில் ஒளவையாரின் இரு தனிப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பழைய பாடத்திட்ட நூல்களிலும் ஒளவையார் கதைகள் இடம் பெற்றமை யாவரும் அறிந்ததாகும்.
நான்காம் ஆண்டுத் தமிழ்மொழிப் பாடநூல் (பழைய பாடத்திட்டம்) ஒளவையாரின் புலமை என்ற ஒரு பாடம் உள்ளது. அதில் ஒரு பகுதி பின்வருமாறு உள்ளது.
9.

Page 51
“ஒளவையார் சிறந்த தமிழ்ப்புலவர். அவர் ஏழைகளோடும் பழகினார். அறிவாளிகளோடும் பழகினார். அரசர்களோடும் பழகினார். ஏழைகள் அவரை அன்போடு ஒளவைப்பாட்டி என்று அழைத்தனர். அறிவாளிகளும், அரசர்களும் அவரை மரியாதையோடு ஒளவையார் என்று அழைத்தனர்”
ஆறாம் வகுப்பு தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற பாடநூலில் ஒளவையும் இடைச் சிறுவனும் என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப்பாடத்தில் இடம்பெறும் ஒளவை உருவம் தமிழ் நினைவாற்றலில் இடம் பெற்றுள்ள உருவமாகும். தடியூன்றிய, கூன்விழுந்த முதுமைத் தோற்றம் கொண்ட ஒளவையாரின் படமே இரு பாடங்களிலும் வரையப்பட்டுள்ளது.
சைவசமயப் பாடநூல்களும் இத்தகைய கருத்தையே வலியுறுத்துகின்றன.
நான்காம் வகுப்பு சைவநெறி என்ற பாடப்புத்தகத்தின் இறுதியில் "நல்வழி” என்ற தலைப்பிலான பாடம் உள்ளது. இப்பாடத்தினை இறுதியில் “ஒளவையார் காட்டிய நல்வழியில் நடப்போம்” என முத்தாய்ப்பு வைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் வகுப்பு சைவநெறியும் ஒளவையாரின் மூதுரைச் செய்யுட்களைக் கொண்டு
அமைந்துள்ளது.
இவையாவும் ஒளவையை அறநெறி கூறும் புலவராக வடிவமைப்பதற்குச் சில
உதாரணங்களாகும்.
இவை தவிர பாடநூல்களுக்குத் துணை நூல்களைத் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியாட்கள் ஆகியோர் வெளியிடுகின்ற நூல்களிலும் ஒளவையார் பற்றிய கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இவை யாவும் தமிழ் மரபில் ஒளவையார் பற்றிய ஒரு பார்வையையே பலமாக நிலைநிறுத்துகின்றன.
உதாரணமாக ஆனந்த - காரங்கா என்பவர்களால் எழுதப்பட்ட 3, 4, 5
ஆண்டுகளுக்குரிய மாணவர் கட்டுரைக் கதம்பத்தில் (1998) ஒளவையார் என்ற
பாடம் பின்வருமாறு உள்ளது.
92

ஒளவையார்
* ஒளவையார் சிறப்புத் தமிழ்ப் புலவர் ஆவார்
* இவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தார் * தெளிந்த அறிவுடன் தேனினுமினிய பாடல்கள் பலவற்றை இயற்றினார்
* ஆத்திசூடி, நல்வழி போன்றவை இதற்குச் சான்றாகும் * நன்றே வாழ வழிகூறும் கொன்றை வேந்தனும் இவரது ஆக்கமேயாகும்
* அவர் முருகக்கடவுளின் மீது மிகுந்த பக்தியுடையவர்
* தெள்ளு தமிழ் இவர் நாவில் துள்ளி விளையாடும் * இவர் கூறும் குறுகிய வரிகளும் பெருகிடும் கருத்தை உடையன * செவ்வை நெறிகள் பல சொன்ன ஒளவைப்பாட்டியை என்றும் போற்றுவோம் * ஒளவையின் அமுதமொழிகள் அகிலம் உள்ளவரை வாழும் என்பது திண்ணம்
ஆனால் இத்தகைய உருவாக்கங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வெவ்வேறான ஒளவைகளைக் கண்டுபிடிப்பதும் அவர்களைப் பிரபல்யப்படுத்துவதும் இன்று பெண்நிலை இலக்கிய ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய செயலாகும்.
இத்தகைய ஒளவைகளுள் எந்த ஒளவை பிரபல்யப்படுத்தப்பட்டாள்? எந்த ஒளவை முன்தள்ளப்பட்டாள்? என்ன காரணிகள்? இத்தகைய பிரபல்யப்படுத்தலுக்கும் முன்தள்ளுதல்களுக்கும் எவை பின்னணியாக அமைந்தன என்பது சுவையான ஆய்வாகும். அது மாத்திரமின்றி ஒரு மரபின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர இது உதாரணமாக அமையும் எனவும் எண்ணுகிறேன்.
இவ்வகையில் நோக்கும் போது தமிழ் இலக்கிய மரபின் மிகப் பழைய
கவிதைகளாக எமக்குக் கிடைப்பவற்றுள் ஒளவையின் கவிதைகளும் இடம் பெறுகின்றன.
93

Page 52
ஒளவையின் சங்கக் கவிதைகள்
ஒளவையின் பெயரில் 59 பாடல்கள் காணப்படுகின்றன. போரும் போர் சார்ந்ததுமான 33 பாடல்களும் காதல் உறவு சார்ந்து 26 பாடல்களும் அமைந்துள்ளன. இப்பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை முதலிய தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
சங்கப் பாடல்களில் குறுநில மன்னர்கள் பற்றி
ஒளவையினுடைய புறப் பாடல்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்களைப் பற்றியனவே. அதியமான் நெடுமான் அஞ்சி பற்றி 22 செய்யுட்கள். அவனது மகன் பொருட்டெழினி பற்றி 3 செய்யுட்களும் காணப்படுகின்றன. இவை தவிர நாஞ்சில் வள்ளுவன், தொண்டமான், இளந்திரையன், மூவேந்தர்கள் பற்றி ஒவ்வொரு பாடல்களும் பாடியுள்ளார்.
ஒளவையினுடைய புறப்பாடல்கள் பொதுவாக மன்னர்களது புகழ் பாடுவதாக அமையினும் அவற்றில் சில தனித்துவமான பண்புகளையும் காணமுடிகிறது. மன்னர்களின் கொடைச் சிறப்பும் போர்ச் சிறப்பும் மாத்திரமன்றி நட்புப் பற்றியும் குறிப்பாகக் காணப்படுகின்றன.
அதியமான் இறந்தபோது ஒளவையார் பாடிய பாடல் ஒரு பாடினிக்கும் அவளைப் போஷித்த ஒருவருக்கும் இடையிலான உறவின் நெருக்கத்தைப் புலப்படுத்துவதாகும்.
“சிறிய கட்பெறினே
எமக்கு ஈயும் மன்னே
பெரிய கட்பெறினே யாம் பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே.”
பாணர்களும் பாடினிகளும் மகிழத் தன்னிடம் இருந்த உணவைப் பங்கிட்டுண்ணும் ஒரு குறுநிலத் தலைவனை வியந்து போற்றும் ஒளவையாரின் குரல் இப்பாடலில் ஒலிக்கிறது.
நாத்தம் நாறும் தன்கையால் புலவுநாறும் என் தலை தைவரும் மன்னே அருந்தலை இரும்பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுறும் போஇப்

புரப்போர் புன்கண் பாவை சோர அரு சொல் நுணதேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று அவன் அருநிறத்து இயங்கிய வேலே ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ.”
சுகந்தம் கமழும் தன் கையால் ஒளவையினது புலவு நாறும் கூந்தல் தடவியும் தனக்குக் கிடைக்கும் உணவையெல்லாம் பகிர்ந்துண்டும் வாழ்ந்தவன் என்றும் கூறி அதியமானுடைய இறப்புக்கு இரங்கும் இப்பாடலில் ஒளவைக்கும் அதியமானுக்குமிடையே இருந்த இறுக்கமான நட்பும் உறவும் தெரிகிறது. பெண் பேச முடியாது எனத் தொல்காப்பியம் இலக்கணம் செய்தமைக்கு மாறாக இப்பாடலில் ஒளவை தனக்கும் அதியமானுக்கும் இடையிலான நட்பைத் தனது குரலில் - பெண் குரலில் வெளிப்படுத்துகின்றார்.
மேலும் ஒளவை அதியமான் இறந்தபோது தனது துயரத்தைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்.
“. பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை
என்று அதியமானின் கொடைத் திறம் பற்றியும் அதனால் புலவர்கள் ஆதரவற்றுப் போவது பற்றியும் கூறுகிறார்.
போரும் போர் சார்ந்த செய்திகளும்
குறுநிலத் தலைவர்களின் வீரம், அவர்கள் ஈடுபட்ட போர்கள். அவர்களது கொடை பற்றிப் பாடிய ஒளவை, போருக்குப் பின்னர் உள்ள நிலைமைகள் பற்றியும் பேசியுள்ளமை எமது அவதானத்திற்கு உரியதாகும். இவ்வகையில் புறநானூறு 295, 286 ஆவது பாடல்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவை போரில் இறந்த புதல்வர்கள் பற்றிய அன்னையர்களின் குரல்களாக அமைகின்றன இவற்றில் 286 வது பாடல் போரில் இறந்த ஒரு சிறுவன் பற்றியது அது பின்வருமாறு.
“வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் கால்வழி கட்டிலிற் கிடப்பித் தூவெள்ளறுவை போர்ப்பித்திலதே
95

Page 53
என் மகனுடன் ஒத்த ஏனைய சிறுவர்கள் வெள்ளாட்டுக் குட்டிகள் போல இருக்கவும், பலருடைய தலைகளுக்கு மேலாக குறுநிலத் தலைவன் நீட்டிய பானம் நிரம்பிய பாத்திரம் தான் எனது சிறுபிள்ளையை இவ்வாறு வெள்ளைத் துணி போர்த்துப் (பிணமாக) கட்டிலில் கிடத்தியுள்ளது என்பது பாடலின் கருத்து. ஏனெனில் போருக்குச் செல்லவேண்டியவரைத் தேர்ந்தெடுப்பதற்கு அடையாளமாக அரசன் ஒரு பாத்திரத்தில் பானம் கொடுப்பது ஒரு சடங்காக அக்காலத்தில் இருந்திருக்கிறது. இந்தச் செயல்தான் தனது புதல்வனது இறப்புக்குக் காரணம் எனத் தாய் கூறுவதுதான் பாடலின் பொருள். ஆனால் புறநானூற்றைப் பிற்காலத்தில் பதிப்பித்த ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோர் தனது மகனைத் தவைவன் போருக்குத் தேர்ந்தெடுத்தமை பற்றித் தாய் பெருமைப்படுகிறாள் என வியாக்கியானம் கூறியுள்ளார்.
ஆனால் பாடலை உரையாசிரியர் உதவியின்றி நேரே சுதந்திரமாகப் படிக்கும் போது புலப்படும் தொனியும் பொருளும் வேறாகத் தெரிகிறது அல்லவா?
இது போலத்தான் 295 ஆவது பாடலும், சங்ககாலப் பெண்களின் வீரத்தையும் துணிவையும் எடுத்துக் காட்டுவது எனவும் வீரத் தாய்மைக்கு உதாரணமாகவும் கொள்ளப்படுவது. வீரத்தாய்மார் என்ற தலைப்பில் ஆங்காங்கே பாடப் புத்தகங்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் இடம் பெறுவது. மேலும் பண்டைத் தமிழ்ப் பெண்களின் வீரத்தை எடுத்துக் காட்டி பொது மேடைகளில் உரையாற்றுவோரின் உரைகளில் இடம் பெறுவது. பாடலின் முக்கிய பகுதி பின்வருமாறு:
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி வாடுமுலை ஊறிச் சுரந்தன ஒடாப்பூக்கை விடலை தாய்க்கே”
போர்க்களத்தில் மகன் வெட்டுண்டு, உடல் சிதைந்து கிடப்பது கண்டு தாயின் வற்றிய முலைகள் மீண்டும் சுரந்தன என்பது இப்பாடலின் பொருளாகும். உரையாசிரியர்களும், பதிப்பாசிரியர்களும் தனது ஆண் நோக்கு நிலை நின்று தனது மகன் இறந்து கிடப்பதைக் கண்ட மகிழ்ச்சியால் பூரிப்படைந்ததால் தாயினது முலைகள் சுரந்தன என வியாக்கியானப்படுத்தியுள்ளனர்.
96

மேற்கூறிய இரு பாடல்களுமே போர்க்களத்தில் இறந்த புதல்வர்களைப் பற்றியனவே. இரண்டு பாடல்களும் அன்னையரின் வேதனை பற்றியதாகவே எனக்குத் தெரிகின்றன. தமது புதல்வர் இறந்துகிடப்பது கண்டும் “வாடுமுலை ஊறிச் சுரப்பது ஆனந்தக் களிப்பினால்” என்று வியாக்கியானப்படுத்துவது எனக்கு பிரச்சனையாக உள்ளது. அது போலவே ஏனைய சிறுவர்களுக்கிடையே எனது புதல்வனைப் போருக்காகத் தேர்ந்தெடுத்தமைதான் வெள்ளை துணிபோட்டுக் கட்டிலில் பிணமாக நீட்டிநிமிர்ந்து கிடக்கும் நிலையை ஏற்படுத்தியது என்ற கூற்றில் உள்ளுறைந்திருப்பது மாளாத் துயரமா அல்லது மட்டற்ற மகிழ்ச்சியா என்பதைத் தீர்மானிக்கும் திறன் அந்த அன்னையர்கள் போன்ற ஏனைய பெண்களுக்கும் இந்தப் பாடல்களை மொழி, சமூகவியல் பின்னணியில் விளக்கக்கூடிய தகுதி பெற்றோருக்குமே உண்டு எனக் கருதுகிறேன்.
காதல் பாடல்கள்:
சங்கப் பாடல்களில் ஒளவை இயற்றிய காதல் பாடல்கள் முக்கியமான அகநாநூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் காதலின் பல்வேறு சாயைகளையும் பரிமாணங்களையும் அவர் கையாண்டுள்ளார். காதல், காமம் என்ற எண்ணக்கருக்கள் ஒழுக்கவியல் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டதா, தார்தம்மியம் கற்பிக்கப்படாத சங்கச் சூழலில் ஒளவையின் பாடல்கள் உருவாகின. காதலனின் பிரிவினால் தான்படும் வேதனையை உணராமல் அமைதியாக துயிலும் ஊரைத் தாக்குவேன் என்றும் கூட ஒளவை கூறுகிறார். குறுந்தொகை 28வது பாடல் இக்கருத்தைக் கூறுகின்றது.
“முட்டுவேன் கொல் தாக்குவேன் செல் ஒரென், யாயினும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் எனக் கூவுவேன் கொல் ஆலமரம் அசைவளி அலைப்ப என் உயவு நோய் அறியது துஞ்கம் ஊர்க்கே”
காதலின் தாபத்தைப் புலப்படுத்தும் இன்னொரு பாடல் பின்வருமாறு அமைகின்றது.
“உள்ளின் உள்ளம் வேமெ உள்ளாது இருப்பின் எம் அளவைத் தன்றே வருத்தி வான் தோய்வற்றே காமம் சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே”
97

Page 54
காதலரை நினைத்தால் உள்ளம் சுடுகிறது. நினைக்காதிருப்பின் மேலும் துன்பம்; எனது காமம் வானம் அளவு பெரியது. நான் சேர்ந்தவர் நல்லவர் அல்லர் என இப்பாடலின் கருத்து அமைகிறது.
இவ்வாறு காதலையும் அதன் பல்வேறு சாயைகளையும்போரையும் நட்பையும் கொடைத்திறத்தையும் பாடிய சங்ககால ஒளவை அறக்கருத்துக்களைச் செய்யுளாக்கியமை மிகக் குறைவே.
இத்தகைய பாடல்களைக் கருத்தூன்றிப் படிக்கும்போது ஒளவையினுடைய உண்மையான வடிவம் எமக்குக் கிடைக்கிறது.
இந்தச் சங்ககால ஒளவை தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்குரலை வெளிப்படுத்துகிறாள். தாயின் துன்பத்தையும் காதலின் வேகத்தையும் இன்பத்தின் களிப்பையும் பாடியவளாக உள்ளாள். அச்சமும் நாணமும் மடமும் தவிர்த்தவையாக அவளது பாடல்கள் அமைந்துள்ளன.
இந்தக் கருத்துக்கள் யாவற்றையும் தொகுத்துக் கூறுவதுபோல அ. மார்க்கஸ் பின்வருமாறு கூறுகின்றார்.
“குறைந்த பட்சம் மூன்று ஒளவைகள் - அதியனிடம் நட்புக் கொண்ட சங்கத்து ஒளவை. திண்ணைப் பள்ளி மரபில் சமீப காலம் வரை முதன்மையான மனை நூற்களாக அமைந்திருந்த ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றைப் பாடிய ஒளவையார், விநாயகரகவல், ஞானக்கோவை முதலானவற்றை யாத்த சைவத் தமிழ் ஒளவையார் எனத் தமிழறிஞர்கள் சொல்வார்கள்’
இந்த மூன்று ஒளவைகளை விட நான்காவதாகவும் இன்னொரு ஒளவை இருந்திருக்கலாம். ஞானக்குறள், பந்தனந்தாதி, தரிசனபத்து, அருந்தவமாலை, அசதிக்கோவை பாடிய ஏனைய பிரபந்தங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நூல்கள் சித்தர் பாடல் மரபைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஊகங்கள் உள்ளன.
வித்தியாசங்களையுடைய ஒளவை மரபு
தெளிவான வித்தியாசங்களை புலப்படுத்தும் பல்வேறு ஒளவைகள் இருந்தும்
கூட அவர்களது எல்லாப் படிமங்களையும் ஒன்று திரட்டி ஒரு உருவில் அதிலும் தோல்
சுருங்கி கிழப்பருவம் எய்திய உருவில் படமெழுதி அறக்கருத்துக்களை போதிக்கும்
98

ஒருவராகவே தமிழ் இலக்கிய உலகம் கட்டமைத்துள்ளது. இந்த மூதாட்டி ஒளவையார் பெண் என்ற பாலியல் இயல்பைக் கடந்தவராகவே உருவாக்கப்பட்டுள்ளார்.
வெகுசன ஊடகங்களான நாடகமும் திரைப்படமும் இத்தகைய முதுமையான ஒளவை உருவாக்கத்திற்கு நிறையப் பங்களித்துள்ளன. எஸ். எஸ். வாசனின் திரைபபடம ஒளவை சண்முகத்தின் நாடகம் ஆகியவை அதில் பெரும் பங்கு வகித்துள்ளன. இவற்றுடன் சேர்த்து ஒளவையின் மூதாட்டி உருவை வடிவமைப்பதிலும் நிலை நிறுத்துவதிலும் தமிழ்ப் பாடநூல்கள். வகுப்பறை நூல்கள் பெரும்பங்கு வகித்துள்ளன. இந்த மூதாட்டி உருவம் பெண் என்ற பாலியல்பைக் கடந்த ஒருவராகவே ஒளவையை வடிவமைத்துள்ளது.
இத்தகைய வடிவமைப்பைக் கட்டுடைத்து, வளமான, வெவ்வேறு பண்புகளுடைய, வித்தியாசங்களைப் புலப்படுத்தும் ஒளவை மரபுகளை இனங்காண்பதிலும் முதுமைச் சிறைக்குள்ளும் இருந்து இம்மரபுகளை வெளிக் கொண்டு வருதல் இன்று பெண்கள் இலக்கியத்தைக் கற்போர்க்கு முன்னுள்ள கடமையாகும்.
பெண்நிலை இலக்கிய விமர்சன நெறி நிற்கும் பெண்நிலை நோக்கு நிலை
நின்றும் இதனைச் செய்ய முடியும், பெண்நிலைச் செயல்வாதத்தின் இன்னோர் படியாக அத்தகைய படிமங்களைக் கட்டவிழ்க்கும் முயற்சிகள் நடைபெற வேண்டும்.
99

Page 55
வருடாந்த சந்தா-நிவேதினி
North America : USS 15 UK & Europe : USS 10 India, S. Asia USS O5
Sri Lanka SLR 125/-
சந்தா விண்ணப்பம் 2003
நிவேதினி சஞ்சிகைக்கு சந்தா அனுப்பியுள்ளேன்
பெயர்
விலாசம்
திகதி
இத்துடன் காசோலை/மணிஓடரை மகளிர் கல்வி, ஆய்வு நிறுவனத்தின் பேரில் அனுப்பி வைக்கிறேன்.
Women's Education and Research Center 58, Dharmarama Road, Wellawatta, Colombo - 06, Sri Lanka.
100


Page 56
எமது விெ
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இல, 58 தர்மராம வீதி, கொழும்பு தொலைபேசி: 595296596826
().
பெண்கள் கல்வி ஆய்வு நி
மலையக மக்களுடைய இனத்துவ இரு கமலினி கணேசன்
சமூகக் கோட்பாட்டுத்தளத்தில் பால்நி
வர்த்தகம் சாதி பெண்நிலைப்பண்பாடு செல்வி திருச்சந்திரன்
பெண்நிலைச் சிந்தனைகள் சித்திரலேகா மெளனகுரு
பெண்களின் வாய்மொழி இலக்கியம் ஒப்பாரி தாலாட்டு பற்றிய சமூகவியல் ே - செவ்விதிருச்சந்திரன்
Gendered Subjects (English) Ed. By Selyy Thirшchandran
Subjectivities and Historicism By Selvy Thiruchandran
Feminine Speech Transmissic An Exploration into the Lulla By Selry. Thiruchandran
Writing an Inheritanể Wolen 1860 - 1948, Wol.1"
Celebrating Sri Lankan Wom Wolume II .
PRIPATED BY LA NIE APLITS PVTI

பளியீடுகள்
றுவன புத்தக வெளியீடுகள்
ப்பில் பால்நிலை
பற்றிய நோக்கு
நாக்கு
DS bies and Dirges of Women
's Writing in Sri Lanka
en's English Writing
LTDCCLCIO 12, TEL: 1395.