கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1983.05

Page 1
ஓ பெண்ெ
பெண்களின் உ
பச்சிளம் குழந்தையை தோளில் சுமக்க மு சோம்பேறிகள் வயிற்றிலே சுமக்கும் வல்லிகள் என்றும் ே வர்ணனே செய்கிருர் புரோகித வர்க்கமே! பூங்கொடிகளல்ல ந போர்க் கொடிகள், கவிஞர்
மாதர் தம்மை இழிவு செய்யும்
1983 மே
 
 
 
 

லின் குரல் 5
ரிமைக்கான ஒரே சஞ்சிகை
பப் பத்து நிமிஷம் டியாத
எங்களே மெல்லியர் என்றும்
புலவர் கூட்டமே! "ங்கள்.
ஏ. தே. சுப்பையன்
மடமையைக் கொளுத்துவோம்
விலை ரூபா 5

Page 2
ಟ್ಗ$೫೫೫೫೫೫ರು.
சனுதிபதி தேர்தலில் போட் 沁 * பெண்ணின் குரல் விடு
兴 烹※院、
தீர்வு காணவேண்டிய பெண்கள் பிரச்சனைகள் பல எம்மிடம் உண்டு. சமுதாய ரீதியில் உள்ள பிரச்சனை கள் பெண் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் அநீதி திகள் உத்தியோகம் தேடி வெளிநாடு செல்லும் நம் பெண்கள் படும் அல்லல்கள் என்று பல்முனைப்பட்டு நிற்கின்றன. பெண்களது இன்றைய பிரச்சனைகள். சில குறிப்பிட்ட பிரச்சனைகள் என்று எழுதப்படும்போது மட்டும் தீர்வுகாணப்படுவது அன்றி இவை யாவற்றிற் கும் பொதுவாக அடிமட்டத்தில் அரசியல் ரீதியாக ஒரு கொள்கை ஒரு திட்டம் என்று இருக்க வேண்டியது. மிக அவசியம்.
உதிரிப்பிரச்சனைகளைத் தீர்வுகாணுவதற்கு அந்தந்த துறையில் அலுவலகங்கள் உண்டு. ஆனல் பெண்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கொள்கை யளவில் என்னதான் செய்யப்போகின்றதோ என்று அறிய ஆவலாய் இருந்த பெண்ணின் குரலுக்கு ஜனதிபதி அபேட்சகர் எவரும் இதற்கு ஒரு கொள்கை விளக்கம் கொடுக்காதது ஏமாற்றமாய்த் தான் இருந்தது. ஆகவே பெண்ணின் குரல் அவ் அபேட்சகர்களுக்கு பெண்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படவேண்டும் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தது. அதை நாம் கீழேபிரசுரிக் கிருேம்.
நாகரீகமடைந்த நகரப் புறங்களிலும், கிராமப் பறங்களிலும், தோட்டங்களிலும் வசிக்கும் எல்லாப் பிரிவுப் பெண்களையும் உள்ளடக்குமுகமாக;
1. அ. இன்று தொழில் ரீதியாக சம சம்பளம் வழங்கப் படாதிருப்பதன் காரணமாக சம வேலைக்கு சம சம்பளம் வழங்கப்படவேண்டும்.
ஆ. இன்று பெண்கள் தொடர்ந்து தொழிற் பயிற்சி அளிக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆதலால் தொழிலாளப் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் அவர்களுக்கா8 தர உயர்வுகளை Այth : முன்னேற்றத்திற்கான வழிமுறை களையும் வேலைத் துறையில் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
இ. இப்பொழுது கிடைக்கப் பெறுகின்ற பிரசவ லீவும், மாதலீவும் தாய், சேய் உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமையாதிருக்கும் காரணத்தால் அதிகரிக்கப்பட்ட லீவு, வசதிகளைச் செய்து கொடுத்தல்.
ஈ. தொழிலாளப் பெண்கள் வேலைப்பாதுகாப்பு
உ. சேய் நல நிலையம்
ஊ. உணவு விடுதி
எ. சுத்தத்தைப் பேணுவதற்கான பொது சேவை
நிலையங்கள்

$೫೫೫೫೫೫೫೫೫ಜ್ಞ
டியிடும் அபேட்சகர்களுக்கு த்த வேண்டுகோள் ※
怒※※※※※※※※※※
羲
岁
ஏ. உத்தியோக பூர்வமற்ற பெண் தொழிலாளர்
1.
2.
3.
களின் உரிமைகளைப் பாதுகாத்தல்.
கல்வி வசதி, "முக்கியமாக தோட்டப் பெண் களுக்கு
1. தேசிய ரீதியாக சுரண்டல்களுக்கு உட் படுத்தப்படுகின்ற சுதந்திர வர்த்தக வலயத்
ல் வேலைசெய்யும் பெண்களுக்கு சகல தொழில் உரிமைகளை, மனித உரிமை உடன் படிக்கையின் அடிப்படையில் பெற்றுக்கொடுத் தல .
11. இரவு நேரங்களில் பெண்களை வேலையிலீடு படுத்த ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேம். குடும்பப் பெண்கள், தொழிலா ளர்களாக இரவு நேர வேலைகளிலீடுபடுத்தப்பட் டிருப்பது அவர்களுக்கு விசாலமானமுறையில் நிர்ப்பந்தங்களையும், தாக்கங்களையும் உண்டு பண்ணுகிறது. இந்நிலையை நீடிக்க விடாது தடுத்தல்.
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மத்
திய கிழக்கு நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் அவமதிப்புக்களையும், நிர்பந்தங்களையும், தீர்க்கின்ற முறையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அது சம்பந்தமாக அரசு'தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
. இன்று காணப்படும் பொருளாதாரஅமைப்பின்
கீழ் உச்ச லாபமே கருத்தில் கொள்ளப்படுவதி லுைம் உல்லாசத்துறைபோன்றவற்றின் வளர்ச் சியினுலும் ஏனைய பொருளாதார சமூக கார ணங்களிலுைம் நாட்டில் விபச்சாரம் தலைவிரித் தாடும் நிலையிலிருக்கிறது. இதை அழித்தொழிப் பதற்கு நீண்ட காலத்திட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
விவாகத்தை ஒரு வியாபார கொடுக்கல் வாங்க
லாக ஆக்குகின்ற சீதன முறையை ஒழித்தல்
. சமூக கலாச்சார ரீதியாக தாய்க்குலமென்று
கருதப்படுகின்ற பெண்களுக்கு எல்லா இடங்
களிலும் சமமான அந்தஸ்தை அளிப்பதுடன்
அவர்களுக்கு ஏற்படுகின்ற ஏனைய நிபந்தனை
களிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்ப" துடன், சாதாரண அடிப்படை மனித உரிமை
யில் மற்ருேருக்கு நிகராக டெண்களை தேசிய
ரீதியாக முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய
முறையில் தீர்க்கமான சமூக பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளசு
வேண்டும்.

Page 3
யாழ்ப்பாணச் சமுதா
பாரதியாரும் ெ
பாரதி கண்ட கனவு நனவாகிவிட்டது என்று எழு தாத பத்திரிகை இன்று இல்லை. “பாரதியார் தற்கால சமூக நல உரிமைகள் பலவற்றைக் குறிக்கோ ளாகக்கொண்டே கவி புனேந்திடுக்கின்ருர்","இவர்பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார்" என்று பலர் பாராட் டியிருக்கின்றனர். எனினும், இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் பெண்களின் அந்தஸ்த்தைப் பற்றிப் பாரதியாருக்கு விழா எடுத்த பெரியோர் சிந்தித் துள்ளனரா?
பெண்களின் தசாப்தமாக 1976 தொடக்கம் 1985 ஆண்டு வரையிலான ஆண்டுகள் பிரகடனம் செய்யப் புட்டுள்ளன. 1978ஆம் ஆண்டு பெண்சளின்நலன்கருதி இலங்கை மகளிர் பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது. இப் 2ணியகம், ஆண்களுடன் பெண்கள் எந்த அளவுச்குப் சமத்துவம் பெற்றிருக்கீன்ருர்கள்என்டதைப் பரிசீலனை செய்து வருகின்றது, இப்பணியகம் பெண்கள் தசாப் தத்தின் பெண்களுக்காகப் பல அரிய பணிகளை செய்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டின்சனத் தொகையில் 75 சதவீதமானவர்கள் குழந்தைபெறும் வயதுடைய பெண்களும் அவர்களின் குழந்தைகளுமே யாவர். ஆகவே, யாழ்ப்பாணக் குடாநாட்டுக் கிராமி யப்பெண்களின் பொருளாதார நிலே உயர வேண்டும் என்றும், வருவாய் தரும் முயற்சிகளில் பெண்கள் ஈமி படவேண்டும் என்றும் பெண்கள் பணியகம் கருதுகின் Dgii - .
வருவாய்தரும் முயற்சிகளில் ஈடுபடும் அதே சர் தர்ப்பத்தில் யாழ்ப்பாணத்தில் வாழும் பெண்களைட் பற்றி யாரும் சிந்தித்துப் பார்த்தனரா? பாரதி 'ஆண் களோடு டெண் களும் ச#திகா சமானமாக வாழ்வி மிந்த நாட்டிலே’ என்று கூறிஞரர். அத்துடன் ‘மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையைக் கொழுத்துவோம்'என் ருர்
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆண்களுடன் பெண் கள் சமமாக வாழ்கின்றனரா? வாழ்ந்தால் சீதனட் பேய் இவ்விதம் தலவிரித்தாடுமா? சந்தையில் ஆடு மாடுகளை விற்கின்றதைப் போலல்லவா "கல்யாண தரகர் டெண்களுக்கு விலை பேசுகின்றனர், யாழ்ப்பா ணத்தில்.
அரசியல் விடுதலையையும் பிற விடுதலைகளையும் பற்றிக் கூறும் எமது தமிழ்ப் பெரியோர் இவ்விதட யாழ்ப்பாணத்தில் கண்ணிர் வடித்தேங்கித் தவிக்குட யுவதிகள் நிலை கண்டு சிந்தித்துப் பார்த்தனரா? இரா கிஞர்களா? இல்லவே இல்லை. இத்தமிழ்ப் பெரியோ ரைட் பார்த்தல்லவா பாரதியார்.

பெண்ணின் குரல்
யத்தின் பின்னணியில்
பண் விடுதலையும்
- சிரோன்மணி இராஜரத்தினம்
'விண்ணுக்குப் பறப்பது போல் கதைகள் சொல்வீர் விடுதலே யென்பீர், கருணைவெள்ளமென்பீர் பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை பென்ருல் பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை"
என்று கிண்டல் செய்தும், மண்டையிலடித்தும் இப்பெரியார்களது மயக்கத்தைத் தெளிவிக்கின்றர். யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்றத்துக் குத் தெரிவுசெய்யப்பட்ட பல பெரியார்கள் சட்ட நிபு ணர்களாம். ஆகையால் சட்டத்தைத் தெரிந்த இவர் களும் தேசவழமைச் சட்டத்திலே தமிழ் இல்லத்தரசி கள் எவ்விதம் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்பதைச் சிந்தித்துப் பார்த்தனரா? இச்சட்டம் அமு லில் இருக்கும் பிரதேசங்களில் மனைவி கணவனுடைய அனுமதியின்றித் தனது உடைமைகளை விற்கவோ, ஒப் பந்தங்கள் செய்யவோ முடியாத வள் ஆகின்ருள். ஆகவே இச்சட்டத்தின் கீழ் யாழ்ப்ப7 னக் குடாநாட் டைச் சேர்ந்த பெண் தனது தென்னிலங்கை சகோதரி யைவிட சமுதாயத்தில் மட்டுமன்றி சட்டத்தாலும் அந்தஸ்தில் குறைந்தவள் என்பதை உணர்கின்ருள் ஆண்களுடன் சம கல்வி பெற்ற பெண்கள் வங்கிக் கடன் போன்றவற்றைப் பெறமுடியாமல் வங்கிக்குமுன் நின்று அவஸ்தைப்படுவதைக் காணலாம். இத்தேசவழ மைச் சட்டத்தின் கீழ் நாம் எமது பெண்களுக்குப் பாது காப்பளிக்கின்ருேம் என்று கூருத ஆண்களே இல்லை.
இவர்களைப் பார்த்தல்லவா பாரதியார் “பெண் டாட்டிதனை யடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுதடிமைப்படுத்தலாமோ" என்று யாழ்ப்பாண
ஆண் மகன் ஒவ்வொருவனுக்கும் செவியில் பாயும்படி ஒரு கேள்வியைப் போட்டு, மேலும் "ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தாயினத்திற்கு நாம் தன்னலத்தால் அநீதி புரிந்தோம் ? என்று தம்மைத்தாமே சபித்துக் கெர்ள்ளவும் செய்கின்றர். சுத்தானந்த பாரதியார் கூறியதுபோல பாரதியின் புதுமைப் பெண் யாழ்ப்பாண மாதர்க்கு'விடுதலை கொண்டு வருகிருர்" அச்சொல்லே கவியின் காதில் இன்புறப்பாய்கின்றது. “மாதர்க்குண்டு சுதந்திரமென்று நின்வண்ணமலர்த் திருவாயில் மொழிந்தசொல் நாதந்தானது நாரதர் வீணையோ? நம் பிரான் கண்ணன் வேய்ங்குழலின்பமோ' என்கிருர் அத் துடன் நிமிர்ந்த நேர் நடையும், உலகில் அஞ்சா நெறி களும், ஞானச் செருக்கும் இருப்பதாதல் செம்மையி யினின்று திறம்புவதில்லை எனவும் உணர்த்தியுள்ளார். ஆகவேதான் பாரதியார் புதுமைப் பெண்ணைக்கண்டு அவளை அழைத்து வந்து, தமிழர்களிடையில் துன்பம் நீக்கும் சுதந்திரப் பேரிகை முழக்கச் செய்கிறர்.

Page 4
பெண்ணின் குரல்
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும்’ என்கின்ருர், பாரதியார். இன்று பல பெண்கள் யாழ்ப்பணக் குடா நாட்டில் வருவாய் தரும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனல் இவர்கள் ஆண்களைப் போலல்லாது இரு தொழி லையும் புரிகின்றனர். கணவனையும், பிள்ளைகளையும்,வீட் டையும் பராமரிக்கின்றனர். 20 மணித்தியால வேலை செய்யும் இப்பெண்களுக்கு வீட்டில் கணவன்மாரும் ஒத்தாசையளிக்கவேண்டும். தொழிற் சங்க வசதிகளும், சேவை நல உரிமை போன்றவற்றிலும் கரிசனை காட்ட வேண்டும். "சூரப் பிள்ளைகள் தாயால் வருவன,வலிமை சேர்ப்பது தாயின் பால்’’ என்று சுத்தானந்த பாரதி யார் கூறியதுபோல நாமும் கூறுவோம்,
யாழ்ப்பாண சமுதாயத்தைப்பற்றிச் சிந்தித்தநாம் இன்று இலங்கையில் உள்ள பெண்களின் வேலைவாய்ப்பு களையும் வசதிகளையும் நோக்குவோம். பல்கலைக்கழகப் பெண்கள் சம்மேளனம் 1978 ஆம் ஆண்டில் வேலையற்ற கலைப்பட்டதாரிகளைப் பற்றி ஒர் ஆய்வை மேற்கொண் டது. இந்த ஆய்வு ‘பல தனியார் நிறுவனங்கள் கலைப் பட்டதாரிப் பெண்களை விட பொதுத் தராதப்பத்திர உயர்நிலையில் சித்தியடைந்த ஆண்களேயே வேலையில் அமர்த்தினர்' என்ற உண்மையை வெளிப்படுத்தியது. பேச்சினல் மட்டுமன்றி செயலிலும் வருங்காலத்திலா வது ஆண்களும் பெண்களும் அனைத்திலும் சமமாகவே வீர அழகுடன் கூடி இலங்கையில் வாழவேண்டும் எனப் பிரார்த்திக்கிருேம்.
பாஞ்சாலி சபதம் பெண்ணுரிமைக்கு ஒரு வீரச் செங்கோல் போன்றது. பெண்ணுக்குப் பிழை செய்ததாலன்ருே துரியோதனனும் துச்சாதனனும்அவ் வாறு மடிந்தனர். பாரதியார் ஆண் பெண் சமத்து வமே அறமென்று கண்டார். அத்துடன்,
‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம். எட்டும் அறிவி னில் ஆணுக்கிங்கு பெண் இனைப்பில்லை காண் என்ருர்’ இத்தகைய பெண்ணைப் பொருள் வியாபாரத்தில் ஒரு விளம்பரப் பொருளாகக் கொள்வதா? விற்பனை செய் யவிருக்கும் மோட்டார் காரை விளம்பரம் செய்வதற் காக பெண்ணின் உருவம் அரை நிர்வாணமாகப் புதி னப் பத்திரிகைகளில் காட்சியளிக்கலாமா? இத்நிலை -யைப் பார்த்த பெண்கள் சமுதாயம் தலைகவிழ்த்து நிற்
கத்தான் வேண்டுமா?
தொழிலாளி என்னும்போது, இயந்திரத் தெழுமி லாளி, விவசாயி, படிப்பாளி மூவரையும் ஒரே தட்டில் வைத்தே எடை போடுகிருஜர், பாரதி.
** இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவோரையும் யந்தி ரங்கள் செய்திடுவோரையும்.உண்ணக் காய் கணிதத்திடு வோன்ரயும், உழுது நன் செய்ப் பயிரிடுவோ ரையும் காட்டும் வையப் பொருள்களின் உண்மை கண்டு சாத்திரம் சேர்த்திடுவோரையும் பாரதிவணங் கும் காட்சி சிந்திக்கத் சிந்திக்கத் தெவிட்டாத இன் பத்தை அளிக்கின்றது. 1950ஆம் ஆண்டுக்குப்பின்னரே,

3.
அதிலும் சென்ற இரு வருடங்களாகவே பெண்கள் தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியம் பெறும் வேலை களைச் செய்கின்றனர். இந்தகைய தொழிற்சாலைகளில் பெண்களின் நிலை என்ன என்பதைச் சற்று ஆராய் வோம். சூழல் சுகாதாரம் சம்பந்தமாக பொன்னம் பலம், அவர்கள் ஒர் ஆய்வினைச் செய்தார். நெசவு சாலை யில் வே&ல செய்யும் பெண்களின் நிலையைப் பற்றி அவர் கண்டுள்ள சில விடயங்கள் இங்கே கூறப்பட்டுள் ளன. இந்நெசவு சாலைகளில் வேலை செய்யும் 20-40 வயதுக்குட்பட்ட 423 பெண்களைப் பற்றி சில உண்மை களை இவர் வெளிப்படுத்திஞர்.
இவர்கள் பெரும்பாலும் நின்றுகொண்டே வேல் செய்கின்றனர். கடந்த 10 வருட காலங்களில் 208 குழந்தைகளுக்குக் தாய்மார்கள் ஆகியிருக்கின்றனர். 21 குழந்தைகள் குறைப்பிரசவம் உற்றுப் பிறந்திருக்கின்ற னர். இவ்வியந்திரசாலைகளில் வேலை செய்யும்பொழுது சத்தம் மிகுதியால் பலர் படிப்படியாகச் செவிடாகி வருகின்றனர். நெசவு இயந்திரத்திலுள்ள பறக்கும் நூனுளி வீசப்படுவதால் பலர் காயமுற்றிருக்கின் றனர்.
பீஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் நாளெல்லாம் வேலை செய்த பாரதப்பெண்ணைக்கண்டுகண்ணிர்வடித்த பாரதியார் இலங்கையிலும், கருவுற்ற மாதர் கைகால் சோர்ந்து மெய் சுருங்கி செவிடாகும் வரை நின்று கொண்டு உழைத்து வருவதைக் கண்டால் மனம் வகுத் தாரோ? பெண் என்ருல் பேயுமிரங்கும் என்று எண்ணி ளுேமே? இவ் ஏழைப் பெண்கள் உகுத்த கண்ணிர் வெறும் மண்ணில் அற்று விடுமோ?
தாயானவள் தொழிற்சாலைக்குப்போகும் போது அவள் குழந்தையைப் பராமரிப்பதற்கு இலங்கையில் தொழிற்சாலைகள் தோறும் பராமரிப்பு வசதிகள் உண்டா? சோவியத் ருசியா போன்ற நாடுகளில் தொழிற்சாலைகளுக்குச் சமீபமாக இப்பராமரிப்பு நிை பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பால்குடிக்கத் துடிக்கும் சேயை வீட்டில் தவிக்கவிட்டு ஏற்ற பாதுகாப்பின்றி இலங்கையில் தாய் வேலைக்குச் செல்கின்றுள். ஆகை யால் தொழிற்சாலைகளுக்கு அண்மையில் வசதியுள்ள காற்ருேட்டமுள்ள பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப் பட்டால்தான் அன்னையர் மணிக்குழந்தைகளை வளர்க்க முடியும்.
'பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே அள்ளி அனைத்திடவே என் முன்னே ஆடி வருந்தேனே' என்றும் ஒடி விளையாடு பாப்பா நீ = ஒய்ந்திருக்கலாகாது
பTபடா என்று சொல்லியும் பிரயோசனமில்லை. தொழிற்துறை யில் ஈடுபடும் பெண்களுக்கேற்ற பிள்ளைப் பராமரிப்பு வசதிகளும் ஏற்ற அளவு மகப்பேற்று விடுதியும். கொடுத்தே தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் *போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டலாம்
போற்றி தாய் என்று போர்க் குழலூ தலாம்.*

Page 5
பெண்கள் விடுதலை பற
(சென்ற இதழ்
ஆதிகால சமுதாயம்
பெண் விடுதலை இயக்கம் வேண்டி நிற்கும் ஒருமறு மலர்ச்சிச் சமுதாயம் முற்றிலும் ஒரு புதிய கோட் பாடன்று. ஆதிகால சமுதாயப் பண்புகளை ஆராய்ந்த சரித்திர சமுகவியலாளர், அக்காலப்பகுதியின் பெண்கள் சரிநிகர் சமமாக வாழ்ந்ததற்கு அறிகுறிகள் பல a 6TGS என்று கூறுகின்றனர். பூர்வீக குடிமக்கள் கூட்டம்கூட் டமாக வாழ்ந்த பொழுது பெண்களுக்கும் ஆண்களுக் கும் கடமைகளும் உரிமைகளும் இருந்தன. இவற்றை சமஅந்தஸ்துடன் இருபாலரும் நிறைவேற்றி வந்தனர். இதற்குப் பிற்பட்ட காலத்தில் தாய்வழிச்சொத்துரிமை, சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. நிலப்பிர புத்துவத்தின் தொடக்க காலத்தில் புதிய மாற்றங்கள் புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தோற்று வித்தன. கூட்டு வாழ்க்கையில் இருந்து நான் எனது நிலம், எனது மனைவி, எனது மக்கள், எனது சொத்து இச் சொத்துக்கு ஒரு உரிமை (மகன்) என்ற ரீதியில் பிளவுபட்ட மக்கட்குழுக்கள் பெண்களை உடைமைட் பொருளாகக் கருதத் தொடங்கின. சொத்துகளுக்கு வாரிசு வேண்டி, அவ்வாரிசு, தனது உதிரத்தில்உதித் தன் மனைவிக்கு மாத்திரமே பிறந்ததாக இருக்கவேண் டும் என்று கருதத் தொடங்கிய ஆண்மகன் மனைவியின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தி தனது உரிமையை அவள் மீது செலுத்தத்தொடங்குகிருன். இவ்வுரிமைகளும் கட் டுப்பாடுகளும் ந:ளடைவில் இறுக்கம் பெற்று பெண் தனது சகல உரிமைகளையும் இழந்து ஆணின் உடமைட பொருளாக மாறிவிட்டாள். சமுதாயம் வளர வள, டெண் வீட்டுக் குரியவள் என்ற அடிப்படையில் அை ளது கடமைகள் வரையறுக்கப்பட்டன. சமையற்கை விருத்தியடைந்தது. உணவு பக்குவமாக சமைக்கட் பட்டு பதனப்படுத்த வேண்டிஇருந்தது. குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு வீட்டில் இருந்து சமையல் செய்யும் பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது, உணவு தேடல் வேட்டையாடுதல் போன்ற வெளி வேலைகை ஆண் எடுத்துக்கொண்டான். இவ்வேலேப் பாகுபாடு பெண்களை ஜென் மாந்திர, ஜென் மாந்திரமாக வீட டுக்குள் அடைத்து வைப்பதற்கு காரணமாயிருந்தது மேலும்பெண் வீட்டு வேலைக்கே உரியவள் ஏனைய வேை களுக்கு அவள் லாயக்கற்றவள், பயந்த சுவாபம்உடை வள் மந்த பத்தி உடையவள் கல்வி அரசியல் போன்ற துறைகளில் அவள் பங்குகொள்ளத்தகுதியற்றவள்தீர்ம னிக்கும் உரிமை அவளுக்குத் தேவையில்லை தந்தை, கன வர் சகோதரம் மகன் என்று ஆண்மகளின் அதிகார, துக்கு பல்வேறு கட்டத்தில் அவள் அடங்கி இருக்கவேண்

பெண்ணின் குரல்
ற்றிய ஒரு கண்ணுேட்டம்
ம் தொடர்ச்சி)
--செல்வி திருச்சந்திரன்
டும் என்பன போன்ற பல கருத்துக்களை தோற்றுவிப்ப தற்கு காரணமாயிருந்தது. பெண்கள் உணராதவகையில் அடிமைத் தனம் படிப் படியாக அவர்களின் மீது ஏற்றப் பட்டது. பெண்கள் இவையாவும் தங்கள் கடமைகள், இவையாவும் நமது உன்னத குறிக்கோள்கள், இவற்றை, நிறைவேற்றவே நாம் பிறவி எடுத்தோம், என்று எண்: ணத் தொடங்கிவிட்டார்கள், சமுதாயத்தை பொறுத்த வரை இது ஒரு சுலபமான பிணக்கில்லாத நடைமுறை. சமுதாயத்தின் பல்வேறு தொழில்களும் இனிது நடை பெற உதவும் ஒரு திட்டம். இதனுல் பெண்கள் அல் லற் படுகிருர்கள், பெண்களது உரிமைகள் நசுக்கப்படு கின்றன. மனித ஜாதியின் உயரிய தத்துவமும், சுயமரி யாதையும் மதிக்கப்படவில்லை, என்பன போன்ற வாதங்களை ஆண்கள் எண்ணிப் பார்க்கவில்லை. பெண் களும் இதை உணரவில்லை.
மதக் கோட்பாடுகளும் பெண்களும்
இந்நிலையில் மதங்களும் மதக்கோட்பாடுகளும் இந்நிலையை வலியுறுத்தத் தொடங்கின. இச் சமுதாய உடன்படிக்கையை பெண்களின் பின் தள்ளப்பட்ட நிலையை, மதங்கள் ஏற்றுக்கொண்டதுமன்றி, தங்களது மதக் கொள்கைகளிலும் பிரசங்கங்களிலும் வற்புறுத்தி. ஒருமத‘அந்தஸ்தும்’கொடுத்துவிட்டன. மதங்கள்பெண் களது கடமைகள் தர்மம் ஆக்கப்பட்டுவிட்டது. பெண்; களது தர்மம் கணவன் இல்லம் குழந்தைகள் என்றும் முன்னத் தத்துவத்தில் அடங்கிவிட வேண்டும் என்று இறுதியாக வரைவிலக்கணம் வரைந்து விட்டன.
இதற்கு முன்னையகால மதக் கோட்பாடுகளில் பெண் களின் நிலை மிக உன்னதமாக இருந்தது. வேதகாலத் தில் பெண்கள் கல்வி கற்றவர்களாக சிறந்த பேச்சாள ராக வேத சூத்திரங்களே இயற்றியவர்களாக தத்துவ, ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களாக இருந்தனர். இதற்கு வேதமே சான்று. கார்க்கி என்னும் பெண் ஞானி யக்ன வல்கீயர், என்னும் தத்துவ ஞானியை வாதத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தாள். ஏறக்குறைய 27 பெண் ரிஷிகள் பிரம்மவாதினி என்னும் பெயர் பெற்று இருக்கும் வேத சூத்திரங்கள் இயற்றி உள்ளார்கள்.
இத்தகைய பெண்மேதாவிகள்சமுதாயத்தில்தோன்றி யதற்கு ஏற்ற சந்தர்ப்ப சூழ் நிலைகள் சம அந்தஸ்து நிலைமை, கல்விகற்கும் ஆர்வம் ஆண்களுடன் சரி நிகர் சமானமாக பழகும் மனப்பான்மை போன்ற பல்வேறு அம்சங்கள் பிரத்தியட்சமாய் நிலவி இருக்க வேண்டும். பிரம்மவாதினிகள் சர்ச்சைகளில் ஈடுபடுவதும்ஆண்களை வாதத்துக்கு அழைப்பதும் பெண்விடுதலையின் பூரண தத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

Page 6
பெண்ணின் குரல்
புராண இதிகாச காலங்களில் பெண் தனதுசகலஉரி மைகளையும் இழந்து ஒடுக்கப்பட்டு அடிமைப் படுத்தப் பட்டுவிட்டாள்.
இக்கால கட்டத்தில் பெண் தனது கணவனை கட வுள் ஸ்தானத்துக்கு உயர்த்தி பூசை செய்யவேண்டும், என்ற கொள்கை அவள் மீது திணிக்கப்பட்டது. கன் வனே கண்கண்ட தெய்வம், கல்லானும் கணவன் புல் லானலும் புருஷன் என்பன போன்ற பழமொழிகள் இத்தத்துவத்தை வலுயுறுத்துகின்றன. கற்புவழி நிம் பது பெண்ணுக்குரிய ஒரு பண்பாக வளர்ந்து விவிே தையும் நாம் காணலாம். ஆண், பெண் கூட்டுச்சேர்ந்து வாழும் ஒரு குடும்பத்தில் பெண்ணுெருத்தி மட்டும்ஏன் கற்புவழி நிற்கவேண்டும். ஆண்மகன் கற்புள்வனக இருக்கத் தவறிஞல் அது எத்தனை பெண்கள் கற்புநெறி யிலிருந்து தவறுவதற்கு காரணமாக இருக்கிறது என்ற உண்மை ஏன் எவர்க்கும் தெரியாமல் போய்விட்டது: தனது தாய் தனது மனைவி தனது தங்கை இவர்களின் கற்புக்கும் பங்கம் அந்த ஆண்மகன் விளைவிக்க லாம் என்ற கசக்கும் உண்மை பரந்து விரிந்த ஆணின் கண்ணுேட்டத்தில் ஏன்படவில்லை.தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளபடத் தக்க ஒரு சமுதாயச்சட்டமில்லையே. இது தர்ம பத்தினிகளும் பதிவிரதைகளும் புராண இதிகாசங் களில் புகழப்படுகிருர். பூசிக்கப்படுகின்றனர். ஆணுல் ஏக பத்தினி விரதம் இருந்தவன் இராமன் ஒருவனே. இதனல் பெண்கள் எல்லாம் கற்பைப் பேண வேண் டியதல்ல என்பதல்ல வாதம். ஆணுக்கும் கற்பு நெறி வற்புறுத்தப்படவேண்டும் அன்றி ஆணைப்போல சப லங்களுக்கு இடங்கொடுத்த ஒரு சில பெண்களையும் அதே அளவு கோலால் அளந்து மன்னித்து சமுதாய பிரஷ்டம் செய்யாமல் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையுங் கற்பழிந்திடாதோ நாணற்ற வார்த்தை யன்ருே’ 'கற்பு நிலை யென்று சொல்லவந்தாரிரு கட்சிக்கு மஃது பொதுவில் வைப்போம்"
என்று பாரதி பாஷையில் மிக ஆணித்தரமாகக் கூறலாம்.
"ஒரு கணவர் நற்பண்புகளும், நற்குணங்களும் இல்லாதவனக இருந்தாலும் வேறிடத்திற்கு இன்பம் நாடிச் செல்கிறவஞயிருந்தாலும் மனைவி அவனை எப் போதும் கடவுள் போன்று துதித்து வணங்க வேண்டும். இது மகா பாரதத்தில் வரும் ஒரு சுலோகம். இரு வேறு கால கட்டத்தில் எழுந்த இந்த எண்ணக் கருத்துக்களை ஒப்பிட்டு எந்தக் கருத்து சமுதாயத்தினுல் பெருமளவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் ஒரு உண்மைபுலப்படும்.கதைஆசிரியர்கள் பத்திரிகைஆசிரியர் கள் தமிழ் படஆசிரியர்கள் ஆகிய பலரும் மகா பாரதப் பெண்ணின் உருவையே வற்புறுத்திவருவதை நாம்காண லாம்.சமுதாயத்தின் எண்ணக்கருத்துக்களை உருவாக்குவ

5.
திலும் அதே சமயத்திலும் அவற்றைப் படம்பிடித்து காட்டுவனவாகவும் இருக்கும். இவ்வெகுசனத் தொடர் புச் சாதனங்கள் ஒரு தரப்பட்ட கருத்துக்களையே வலி யுறுத்தி பெண்களுக்கு அநீதிவிளைவிக்கின்றன. தவறும் ஆண் பெரும்பாலும் மன்னிக்கப்பட்டு சமுக அங்கீகாரம் பெறுகிருர் ஆணுக்குரிய சபலம் அவனை அலைக்கழிக் கிறது. என்று கதை கூறும் ஆசிரியர் அவனது மனைவி <3!! &#dftiřo, LO !, - iii. , 5oo! Sy3f ti», பயிர்ப்புடைய லட்சியப் பெண்ணுக அவனே மன்னித்து ஏற்றுக்கொள்கிறள் என்றே இறுதியில் கதையை முடிக்கிருன். இப்படி பெண்கள் இருக்கும் வரை ஆண்களும் தவறுகளைச் செய்துகொண்டே போகலாம். தட்டிக்கேட்டுத் துரோ கத்தைத் தண்டித்து பெண்கள் செயல்படவேண்டும்.
கணவனைக் கூடையில் சுமந்து தாசி வீட்டுக்கும் கொண்டு செல்லவேண்டும் என்று கற்பிற்கும் வரை விலக்கணம் கூறும் புராதன புராணக் கதைகள் இன் னும் எம்மைவிட்டு அகலவில்லை. இவை சமுதாயத்தில் சம அந்தஸ்து வகிக்க வேண்டிய பெண்ணுக்கு இழைக் கும் கொடுமை.
இவற்றை மாற்றியமைக்க நாம் யாது செய்ய வேண்டும்.? பெண்களே முதலில் இந்த அர்த்தமற்ற பண்பாட்டுக் கதைகளைக் கண்டிக்க வேண்டும்.பண்பாடு கலாச்சாரம் என்ற போலிப் போர்வையில் பெண் களைப் பதுமையாக வாய்பேசாத மடன்ம பொருந்திய உயிரினங்களாக கருதப்படுவதை நாம் ஆதரிக்க கூடாது. எதையும் தர்க்கரீதியாக பாரபட்சமின்றி, அறிவு ஜீவி களின் கருத்தோட்டத்தில் அலசி ஆராயவேண்டும்.
இலக்கியம் இப்படி இயம்புகிறது. புராணங்கள் இப் படிப் புத்தி கூறுகின்றன. இந்துக்களின் அல்லது தமி ழர்களின் பண்பாடு இப்படிப் போதிக்கின்றன என்று உணர்ச்சி பூர்வமாக நாம் பிரச்சினைகளை அணுகக் கூடாது. உண்மை வழிகண்டு, நேர்மை வழி நடக்க
வேண்டும்.
பெண்களின் நிலை
பெண்களின் அன்ருட வாழ்க்கையில் பிரச்சனைகள் ாளம். விதவைகள் விவாகரத்துச் செய்யப்பட்டவர் கள் குழந்தைகள் இல்லாதவர்கள் என்ற பல வகைப் பெண்கள் சமுதாயத்தில் நிலவுகிறர்கள். மனைவி இழந்த கணவன் தன் அந்தஸ்துக்களை இழக்கவே ாட்டான். ஆறுமாதத்தில் மறு மணமும் புரிகிருன்அவதூறு இழுக்கு ஒன்றுக்கும் அவன் ஆளாக மாட் டான். இதே சமுதாயம் கணவனே இழந்த மனைவியை எப்படி நடத்துகிறது. இறைவன் சிருஷ்டியில் பெண் ணுக்கு ஏன் இந்த வித்தியாசம்? அவள் மறுமணம்

Page 7
6
செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு கூற, எள்ளி நகையாட ஆயிரம்பேர் வருவர்கள், ஏன் இந்த வக்கிர சிந்தனை? உணர்ச்சிகளும், ஆசாபாசங்களும் பெண் ணுக்கு ஏன் இருக்கக்கூடாது? தன் சுயமரியாதையை இழந்து தாய் தகப்பன் அல்லது அண்ணன் தம்பிமார் களின் பராமரிப்பில் அவர்களுக்கும், அவர்களது குடும் பத்தாருக்கும் ஏவல் வேலை செய்து ஏன் அவள் சீரழிய வேண்டும்? இறைவனுக்குச் செய்யும் மதச் சடங்கு களுக்கும், கணவன் இல்லாத பெண்ணுக்கும், என்ன காரணகாரியத் தொடர்புண்டு.? இந்து சமயக் கிரிகை கள் மாத்திரம் ஏன் விதவையை ஒதுக்கிறது. ? இப் பெண் மாத்திரம் ஏன் பொட்டை அழிக்க வேண்டும்.? அவளிடமிருந்து ஏன்பூவைப் பறிக்கவேண்டும். வெள்ளை யுடுத்து அவள் ஏன் விலகி நிற்க வேண்டும் குடும்ப வாழ்வில் அவளுக்கு சகல செளபாக்கியங்களையும் கொடுத்தவர் கணவன் என்றல், அதே குடும்ப வாழ்க் கையில் தன்னையே திரியாக எரிக்கும் அன்பும், பண் பும் கொண்டு பல வகைத் தியாகங்களும்,சேவைகளும் , செய்யும் மனைவி இறந்தபின் கணவனும் வெள்ளை உடுக்க வேண்டும். அழகு சாதனங்களைத் துறக்க வேண்டும், என்று யாரும் வற்புறுத்துவதில்லையே! ஒரு பெண் தன்னிஷ்டப்படி விட்டால் எப்பொழுதும் அழ காகவே இருக்க விரும்புவாள். துக்கத்திலும், துன்பத் திலும் தன் சொந்த விருப்பத்தினுல் அவள் சில நாட் கிளுக்கு தன் நடை உடைபாவனைகளில் கவனம் செலுத் தாமல் இருக்கலாம். காலம் செல்லச் செல்ல அவள் துக்கம் ஆறுகிறது. எத்தனையோ விதைவைகள் இன்று கறுத்தப் பொட்டும், பலவத நிறச் சேலைகளும் உடுக்கி கிருர் 3ள். இது அவர்களது சொந்த விஷயங்கள். இதை எள்ளி நகை யாடுவதோ, குறைகூறுவதோ, விமர்சிப் பதோ, பண்பாடு குலேந்துவிட்டது என்று கூக்குரலிடு வதோ, அநாகரீகம். மனித குலத்திற்கே இழுக்கு.
விவாகரத்துரிமை
உலகெங்கும் சட்டத்தளவில் பெண்களுக்கு அளிக் கப்பட்ட உரிமை இது. ஆணும் பெண்ணும் நடத்தும் கூட்டு வாழ்க்கையில் ஓரள வேனும் ஒற்றுமையும், சுமூக நிலையும் நிலவவேண்டும். சந்தோஷமான ஒரு வாழ்க் கையை விரும்புவது மனித குலத்தில் ஒரு நியாயமான உரிமை. விருப்பமில்லாத ஒரு வாழ்க்கையை வேறுபல முக்கியமல்லாத காரணங்களுக்காக தொடர்ந்து தடத்த வேண்டும் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிணக்குகளும் பிளவுகளும் ஏற்படுவதற்கு கார *னங்கள் அதிகம் ஒரு கணவன் மனைவியை அல்லது மனைவி கணவனை உடல் ரீதியாகவும், மனரீதி

பெண் ரிைன் குரல்
யாகவும், துன்புறுத்தலாம். விவாகரத்துச் செய்யும் உரிமை பெரும்பாலும் ஒரு கணவனுக்கே நடைமுறை யில் அளிக்கப்படுகிறது. பெண் ஒருத்தி விவாகரத்தை வேண்டி நின்ருல் உற்ருர், உறவினர், நண்பர் என்ற உறவு முறைகளில் சமுதாயம் அவளை அதற்குவிடமாட் டாது. பெண்கள் பொறுமையாய் இருக்க வேண்டும். பெண் வாழ்க்கையில் ஒரு போதும் தன் சந்தோஷத்தை நாடக்கூடாது. அவளது சந்தோஷம் எப்போதும் கண வனைச் சார்ந்திருக்க வேண்டும். அல்லது பிள்ளைகளைச் சார்ந்திருக்க வேண்டும். விவாகரத்துச் செய்தால் உனக் குச் சமுதாயத்தில் அந்தஸ்த்து குறைந்து விடும்என்ற பல வேறு காரணங்களைக் காட்டி அவளே அவ்வல்லல் வாழ்க்கையைத் தொடரச்செய்கிறது. தன் உணர்ச்சி களை உள்ளடக்கி தன்மானமின்றி இப்பெண் வாழ்நாள் எல்லாம்கஸ்டப்படுகிரு?ள். இவ்விழப்புகள் ஒரு ஆணுக் கில்லை. விவாக ரத்துச் செய்து கொண்டஒரு பெண்ணை யும், ஆணேயும் சமுதாயம்வெவ்வேறு கண்ணுேட்டத்தில் பார்க்கிறது. மதிக்கிறது.விமர்சிக்கிறது. விதவைகளும், விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களும்' வாழாவெட் டிகளாக" "வாழ்வு இழந்தவர்களாக" கணிக்கப்பே வதை இப்படி அவர்களுக்கு பட்டமளிப்பதை அவர் களது வாழ்க்கை உரிமைகளைப் பறிப்பதை சமுதாய ரீதியாக பெண்கள் கண்டிக்க வேண்டும். இயற்கைக் காரணங்களினல் ஒரு பெண் இறக்கும் வரை அவளை வாழவிட வேண்டும். அதற்குரிய சூழ்நிலைகளும் சமு தாய மனமாற்றம் என்ற ரீதியில் அவளுக்குக் கிட்ட வேண்டும். இதற்கும் பெண்களும் பெருமளவில் முன் னுக்கு வரவேண்டும் இத்தகைய பெண்களை ஒதுக்கி வைக்காமல், விலக்கி வைக்காமல், அவர்களுக்கும் உற் சாக மூட்ட வேண்டும். அதே சமயம் அந்நிலை தங்க ளுக்கு வந்தால் நெஞ்சத்துணிவும், "நிமிர்ந்த நன்னடை யும் கொண்டு செயலாற்ற முன்வர வேண்டும். ஊர் வாயை முதலில் உதாசீனப்படுத்தினுல் அந்த ஊர் வாயும் இறுதியில் மூடிவிடும். தாம் செய்வதில் யாதும் பிழையில்லை என்ற திண்மையான மன உறுதி உண்டெ டெனில் யாரும், யாருக்கும் பயப்படத் தேவையில்லை
பிள்ளைப் பேறின்மை
குழந்தைகள் குடும்பத்தின் பொதுச் சொத்து மழ லைச் செல்லம், வேறெந்தச் செல்லத்திற்கும் ஈடாகாது. கணவன் மனைவியின் இல்வாழ்க்கையின் இன்றியமை யாத ஒரு பெரு வளம்- இவ்வின்பம். இல்லாதது ஒரு பெரிய குறை- கணவன்மனைவிஇருவரும் இக் குறையால் பாதிக்கப்படுகின்றனர். ஆனல் இக்குறை எங்கள் சமு தாயத்தில் பெரும்பாலும் பெண்களையே அதிகம் பாதிக் கிறது. பெண்மையின் பெருங்குறை இது என்று அவள் மனதில் ஆழப்பதிய வைக்கப்படுகிறது. குத்திக் காட் டப்படுகிறது. சந்தர்ப்பங் கிடைக்கும் பொழுதெல் லாம் அவளுக்கு அக்குறை உணர்த்தப்படுகிறது. மங்

Page 8
பெண்ணின் குரல்
கல காரியங்களிலிருந்து அவள் நாகுக்காக விலக்கப் படுகிருள். அவளுக்குக் குழந்தை பிறக்காததற்கு கார ணங்கள் பலவகை இருக்கலாம். அவள் கணவனே கார ணமாகவும் இருக்கலாம். ஆளுல் அறிவு பூர்வமாக தை நாம் அணுகிஞல் இக்குறையை யார்மீதும் சுமத்தி அதரூல் யாரையும் புறக்கணித்து ஒதுக்கத் தேவையில்லை. இது இயற்கையின் ஒரு குறைபாடு. இதற்கு யாரும் பொறுப்பேற்க முடியாது. இக்குறை யால் ஒரு பெண்ணை எடைபோட்டு மதித்து, குறைகூறி புறக்கணிப்பது வளர்ச்சியடையாத ஒரு பண்பாட்டின் குறைபாடு. இது போன்ற ஆதாரமற்ற சமூகக் குறை பாடுகள் பல நம்மை காரண காரியத் தொடர்பேதும் இன்றி நம்மை அலைக்கழிக்க நாம் விடக்கூடாது. பத் தாம் பசலித்தனங்கள், அர்த்தமற்ற பழமை வாதங்கள் முதலியவற்றிலிருந்து நாம் விடுபடவேண்டும்.
விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் இயற் கையின் பெரும் ரகசியங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவு வளராத காலத்தில் சமுதாயங்கள் ஒரு சில கோட்பாடுகளால் வகுக்கப்பட்டு ஒரு சில கட்டுப்பாடு களையும் கொள்கைகளையும் வாதங்களையும் தோற்று வித்து சிக்கல் இல்லாத வாழ்க்கை முறை ஒன்றை அமைத்துக் கொண்டன. இக்காலப் பகுதியில் இவற் றில் சில வேண்டப்பட்டன. சில இன்றியமையாதன வாக இருந்தன. ஆளுல் அதே கொள்கைகளும் வாதங் களும் பண்பாடு என்ற போர்வையில் என்றும் எப்பொ ழுதும் கடைப்பிடிக்கப்படவேண்டியன என்று கூறுவது பொருத்தாவாதம்.
ஒரு பெண்பற்றி மனப்பான்மை
ஒரு மனித ஜன்மம் என்ற ரீதியிலோ புத்தி கூர்மை அறிவு நுட்பம் அன்றி பாலியல் தன்ைைமகளிலேயோ ஆணுக்கும், பெண்ணுக்கும் விஞ்ஞான ரீதியில் பாகு பாட்டுக் கொள்கைகள் எடுத்தியம்பப்படவில்லை, ஆனல் பெண்களைப் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் ஒரு தலைப் பட்சமாக இருக்கின்றன.
பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஐயோ பெண்ணு இதுவும் பெண்ணு என்பன போன்ற ஏமாற்றக் குரல் களைக் கேட்கிருேம். பெண்பிறந்தால் சர்க்கரை கொடுக் கிருேம். ஆண் பிறந்தால் கற்கண்டு கொடுக்கிருேம். தாய் தந்தையர் ஏன் இப்படி பாரபட்சமாக நடக்க வேண்டும்? யாழும் குழலும் கொஞ்சுவது ஆண்குழந் தையின் மழலையில் மட்டும்தான? w
பெண்ணுக்கு பத்துப் பன்னிரண்டு வயதினில் பெரும்பாலும் விளையாடுவதற்கும் பாடி ஆடுவதற்கும் சுதந்திரம் கிடைப்பதில்லை. அதே வயதினில் ஆண் வெளியே சென்று விளையாடி ஆடிப்பாடிக் களைத்து வீடு திரும்பும் பொழுது பெண், தாய் தந்தை மார்க்கும் பெரிய அண்ணன்மாருக்கும் சிற்றேவல்கள் புரிந்து கொண்டு வீட்டில் அடுப்பங்கரையில் உலவிவருகிறள்" வயதில் ஆண்பிள்ளைகளுக்குக் குறைந்தவளாயிருந்தா லும் தாய்க்கு அடுத்தவள் என்ற ரீதியில் பொறுப்புகள் பல அவளுக்கு அளிக்கப்படுகிறது. அழுது நச்சரிக்கும் கைக் குழந்தைகளை பராபரிக்கும் சுமையும் அவளின் தலையில் விழுகிறது.

7
இப்பாரிய பொறுப்புக்களை சின்னஞ் சிறு பெண் குழந்தைகளின் தலையில் மட்டும் சுமத்தாது வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும் தாய் தந்தை ஏனைய ஆண் குழந்தைகள் உட்பட ஏன் எல்லோரும் சேர்ந்து செய்யக்கூடாது. அழும் குழந்தையைத் தகப்பஞே அல் லது தமையன்மாரோ தூக்கி தாலாட்டுவதில் ஏதும் கெளரவ பிரச்சினை ஏற்படுமா - தன்உதிரத்து சிறு குழந் தையைக் கொஞ்சிக் குலாவித் தாலாட்டினுல் தாய்க் கும் வேலைப்பழு குறைகிறது. குடும்பத்தில் எல்லோ ருக்கும் பொறுப்புணர்ச்சியும் அந்நியோன்னிய மனப் பான்மையும் உண்டாகிறது. அன்றி அதை ஏன் பெட் டைச்சி வேலு என்ருே, அதை ஆண்கள் செய்வது இழுக்கென்ருே. நாம் கருதவேண்டும்? இவ்வேலைகளைச் செய்யும் ஆண்மகன் ஒருவன் எள்ளி நகையாடப் படு வதும் உண்டு. இவன் 'பெண்டாட்டி தாசன்' 'பெண் பிள்ளை” என்று பலரால் நாமம் சூட்டப்படுகிறன் குடும்பத்தில் குழந்தைகள் பராபரிப்பு உட்பட சகல பொறுப்புக்களையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளவேண் டும். இளம் வயதிலிருந்தே பூரண சமத்துவம் என்ற அடிப்படையில் குழந்தைகள் வளர்க்கப்படவேண்டும். பெண்களுக்கும் ஆண்களுக்கும் கொடுக்கப்படும் சகல
சலுகைகளும் உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும். தாய் தந்தையர் இதில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவேண்டும்.
பெண் கல்வி
பெண்களது கல்வி ஆர்வம் பெரும்பாலும் தடைப் படுத்தப் படுகிறது. பெண்படித்து என்ன செய்யப் போகிருள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ஆண்களுக்கே வேலை இல்லை, பெண்களும் படித்து ஏன் பிரச்சனைகளைக் கூட்ட வேண்டும், என்பனபோன்ற பெண் அடிமைக் கருத்துக்களை நாம் இப்பொழுதும் கேட்கிருேம். இவையாவும் அர்த்தமற்ற கூப்பாடுகள் கல்விக்கு இணையாக அறிவுக்கு ஒத்ததாக இப்பூமி தனில் யாதொன்றுமில்லை. ஒரு மனிதன் அறிவினுல் மட்டுமே பூரணத்துவம் அடைகிறன். இது மானிட வர்க்கத்திலேயே சம பங்கு வகிக்கும் பெண் குலத்திற்கு மறுக்கப்படுதல் மனித சமுதாயத்துக்கு நாம் இழைக் கும் அநீதி. மனேவிசுவாசம்,பகுத்தறிவுவளர்ச்சி,பெருகி வரும் விஞ்ஞான அறிவு ஆகிய பலதுறைகளை நாம் பெண்களிடம் இருந்து விலக்கி அவர்களைக் கிணற்றுத் தவளைகளாக வைத்திருந்தால் நாம் முன்னேற்றப் பாதையில் பல கட்டங்களைப் பின்னுக்குத் தள்ளுவோரி களாவோம். ஒரு நாட்டின் வளர்ச்சியோ, சமுதாயத் தின் வளர்ச்சியோ ஆணினத்தின் வளர்ச்சியில் மட் டுமே கணிக்கப்படுவதில்லை. ஆகவே ஆசிரியர்களும், பெற்றேர்களும் பெண் கல்வியில் ஊக்கம் எடுத்து பழமை வாதங்களை விடுத்து இரு பாலார்க்கும் சம சந் தர்ப்பம் அளிக்க முன்வர வேண்டும். வாழ்வின் அன் ருட பிரச்சினைகளை நாம் அறிவு பூர்வமாக அணுக வேண்டும்.

Page 9
“பெண் புத்தி பின்புத்தி' என்ற பழமொழியில் ஆதார பூர்வ80ான அறிவுக் கொள்கை எதுவும் இல்லை. ஆண் புத்தியும், பெண் புத்தியும் எப்படி வளர்க்கப்படு கிறது? எப்படி உபயோகிக்கப்படுகிறது. எப்படி வர வேற்கப்படுகிறது. என்பதிலேயே அதன்முன் நிலைமை யும், பின்நிலைமையும் புலப்படும் அன்றி அது பெண் புத்தியாயிருப்பதால் பின்புத்தியாயிருக்காது. பெண் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் அவள் புத்தியும் உபயோகிக்கப்படாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இதேபோல் கோழி கூவி விடியாது என்கிறது பழமை வாதம். சேவல் கூவாவிட்டாலும் பொழுது விடிந்து விடும். சேவல் கூவித்தான் பொழுது விடிகிறது என்று பாமர மக்கள் கூட்டம் எண்ணியிருந்த காலத்தில் எழுந்த ஒரு ஆதிகாலப் பழமொழி. இதை இன்னும் நாம் உதாரணமாக எடுப்பது எம் பாமரத்தனத்தையே sitt (5th.
எத்தனையோ குடும்பங்களில் பெட்டைக்கோழி கூவிக் கொண்டே இருக்கின்றன. அக்குடும்பங்களில் பெண்களே வேலைக்குப்போய் தாய் தகப்பன் தம்பி தங்கைகளைக் காப்பாற்றுகிருர்கள். இங்கு பெண் தனது குடும்பத்தில் ஏனேயோருக்குப் படியளக்க நிர்ப்பந்திக் கப்படுகிருள். எவ்வித கட்டாயங்களும் இன்றித் தன் சுய விருப்பப்படி தனக்குப் பொருத்தமானதாகவும் தனக்கு ஏற்றதானதுமான கல்விப் பிரிவையோ தேர்ச் சியையோ ஒரு பெண் தன் சுய அபிலாசைகளைப்பூர்த்தி செய்வதன் பொருட்டே தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலை அமைக்கப்பட வேண்டும். இலங்கையின் அர சச் சட்டத்தில் இதற்கொரு தடையுமில்லே. ஆணுல் சட்டங்களினுல் மாத்திரம் ஒரு சமுதாயத்தின் பழமை வாதங்களை அகற்றிவிட முடியாது. சமுதாய அங்கீ காரமே ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொள்ள உதவி, இறுதியில் அதைச் சமுதாய வழக்காக மாற்றுகிறது. சீர்திருத்தக் கொள்கை மனப்பான்மையுடையோரும், அறிவு ஜீவிகளும் மாத்திரம் இக்கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் போதாது. இதன் தாக்கம் ஆண், பெண் சட்டம் ஆக்குவோர், ஆசிரியர், பெற்றேர், அரசியல் வாதிகள் என்ற பல்வேறு முனைகளையும் அடையவேண் டும்.இந்த முக்கியகாரணத்தை மனதில்கொண்டேநாம் (நமது கொள்கைகளை ஏனயோரும் ஏற்றுக்கொள்வன வேண்டும்) இதில் அக்கறை கொண்டோர் எல்லோ ரையும் தங்கள் கருத்துக்களை எங்கெங்கு முடியுமோ அங்கங்கே எடுத்துரையுங்கள் என்று கேட்டுக்கொள் கிருேம். (தொடரும்)

பெண்ணின் குரல்
இவையாவும் உ ண்  ைம தா னு
ஆகஸ்து மாதம் 22ம் திகதி தினகரனில் இருந்தது
பெண்கள் பற்றி உலகநாடுகள்
அழகான பெண் கண்டதைப் பறிக்கும் கண்ணுக்குத் தான் சுகம் தரும் சொர்க்கம் பணப்பைக்கு நெருங்க முடியாத சனியன் ஆன்மாவுக்குத் தூர விலக வேண்டிய நரகம்
ஆயிரம் ஆண்கள் சந்தோஷமாக இணைந்து நெடுங் காலம் வாழலாம் இரு பெண்கள் வாழமுடியாது. அவர் களுக்கிடையில் சகோதர பாச உறவு இருந்தாலும் சரியே
ஒரு பெண்ணைப்பற்றி அறிய முயலின் நெடுக அவள் தாயைச் சிறப்பாக அறிய வேண்டும். மேலும் அறிய வேண்டி ஏற்படின் அவள் தாய் வழிப்பாட்டி யைப் பற்றியும் ஆராய்ந்து அறிய வேண்டியதுதாள்
-பாத்திமா ஷானுய் (மாத்தளை)
பெண்களுக்கு பெண்களே எதிரிகளா? மாத் தளைப் பாத்திமா ஷாஞஸ் இதை ஏற்றுக்கொள் கிருரா? அர்த்தமற்ற வீண்வாதப் பிரதிவாதங் களை நாம் கண்டு கொள்ளக் கூடாது, என்பதே நமது கொள்கை. எழுத்துச் சுதந்திரம் இருக்கும் வரை யாரும் எழுதலாம். பத்திரிகை சுதந்திரம் இருக்கும்வரை யாரும் இவை போன்றவற்றைப் பிரசுரிக்கலாம். ஆணுலும் பாத்திமாவுக்கும் தின கரனுக்கும் இக் கூற்றுக்களின் விதண்டாவாதம் புரியாதிருப்பது எமக்கு புதிராகவே இருக்கிறது. விஞ்ஞான நூற்ருண்டில் இப்படியான அறிவு பூர்வ மில்லாத வாதங்களை எடுத்துக் கூறுவது மேற்கோள் காட்டுவது வரவேற்கத்தக்கதல்ல. அன்றியும் நகைச் சுவை என்று இதை எடுத்துக் கொண்டால் என்னே பரிதாபம். ஒரு குறிப் பிட்ட இனத்தையோ சாதியையோ குழுக் களையோ தேசத்தவரையோ உள்ளடக்கி சாதிப் புத்தி என்ற ரீதியில் நகைச் சுவைக் கூற்றமைப் பது பண்பட்ட ஒரு மனதில் பிரதிபலிப்பல்லவே. பெண் உரிமை என்ற ரீதியில் அல்ல நாம் இதை எதிர்ப்பது. அறிவியல் துறைக்கு புறம்பான அறிவு ஜீவிகளால் ஏற்றுக்கொள்ளப் படாத தர்க்க ரீதியில் அமையாத வாதங்கள் என்றே நாம் இவற்றை எதிர்க்கி?ேம்.

Page 10
பெண்ணின் குரல்
பெண்களும்
www.
s
பொதுவாகப் பெண்கள் மாலையிலும் இரவிலும் வீட்டு வேலை செய்வார்கள். இரவு உணவு தயாரித்தல், மா இடித்தல், மா அரைத்தல், சட்டி பானை கழுவுதல், நள்ளிரவில் பசியால் அழும் குழந்தைகளுக்கு பால் கரைத்து ஊட்டுதல் போன்ற வேலைகள் பெண்களா லேயே ஆதிகாலந்தொட்டு செய்யப்பட்டு வந்தன. இவ்வேலைகளுக்கு நேரகாலம் வரையறுக்கப்படவில்லை. ஊதியம் பேசப்பட்டு கூட்டிக் குறைத்துக் கொடுக்கப் படவில்லை- ஏன் இதைப்பற்றி யாரும் ஒரு பிரச்சனை என்ற கண்ணுேட்டத்தில் அலசி ஆராயவில்லை. ஆனல் இப்பொழுது பெண்களும் இரவு நேர வேலையும் என்று சமுதாயத்தில் அரசாங்க ரீதியாகவும், சர்வதேச ரீதி யாகவும் பல வாதப் பிரதிவாதங்கள் எடுத்தியம்பப் படுகின்றன. சட்டங்களும் அபிப்பிராயங்களும் அலசி ஆராயப்படுகின்றன. பெண்கள் விடுதலை இயக்கங்கள். தொழிலாள இயக்கங்கள், பெண்கள் செய்தியகம் என்று பல மட்டங்களில் இப் பிரச்சனை வாதத்திற் குள்ளாகி இருக்கிறது.
சர்வதேச தொழிலாள சம்மேளனம் பெண்களை யும் சிறு குழந்தைகளையும் இரவு பத்து மணிக்குப் பின் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று பெண்கள் பாது காப்பைமுன்னிட்டு ஒரு சட்டத்தை இயற்றியது.இதை இலங்கை உட்பட பல நாடுகள் ஆதரித்து கைச்சாத்திட் டன. முஸ்லீகளும், கத்தோலிக்கரும் பெரும்பான்மை யாயிருக்கும் நாடுகள் பல இதனை ஆதரித்தமையும் இங்கிலாந்து, ருஷ்யா, அமெரிக்கா, மேற்கு ஜேர்மனி, யப்பான், சிங்கப்பூர் போன்ற கைத்தொழில் அபிவிருத் தியில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் இதை ஆதரிக்காமை யும் இதன் தாற்பரியத்தை விளக்குகிறது. குறைந்த சம்பளத்தில் பெண்களை வேலைக்கமர்த்தல், இயந்திர ரீதியாக தொழிற்படும் தொழிற்சாலைகளில் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
எனினும் பெண்களுக்கு பாதுகாப்பு, என்ற நோக் கத்துடன் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் பெண் களுக்கு சம உரிமையும் சம சந்தர்ப்பமும் கோரும் பெண் விடுதலை இயக்கங்களினல் கண்டிக்கப்படுகிறது. இது பெண்களைப் பேதப்படுத்தி விலக்குகிறது என்பது அவர்களது வாதம், திறமை, பதவி உயர்வு, மேலதிக ஊதியம் போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் இதனுல் பாதிக்கப்படுகின்றனர் என்பது அவர்களது கருத்து.
இலங்கையிலும் நாம் இந்தக் குரலை இப்பொழுது கேட்கிருேம். தற்போதைய அரசாங்கத்தின் சுதந் திர வர்த்தக வலயம் பிறநாட்டு மூலதனம் முதலிடப் படுவதன் மூலம் பல தெரழிற்சாலைகள் அமைத்தல்

9.
ரவு வேலையும்
போன்ற அபிவிருத்தித்திட்டங்கள் பெருமளவில்தொழி லாளரை அதுவும் மிகக் கூடிய நேர அட்டவணையில் குறைந்த சம்பளத்தில் தொழில் புரியக் கூடிய தொழி: லாள வகுப்பு முறை ஒன்றைப் பெரிதும் வேண்டி நின் றது. இதனுல் பெண்கள் இரவு வேலையில் ஈடுபடுவதை இன்றைய அரசாங்கமும் ஆதரிக்கிறது.
ஆயினும் ஒரு ஆய்வுமுறை ஒன்றைத் தழுவிபெண் தொழிலாளர்கள் இச்சட்டத்தை ரத்துச் செய்வதை விரும்புகிறர்களா என்பதை ஆராய பெண்கள் செய்திய கமும்தொழில் அமைச்சும் முன்வந்தன. தொழிலமைச்சு ஆய்வு 95% வீதம் பெண்கள் இரவு வேலையை விரும்ப வில்லை என்கிறது. இதை அப்படியே ஏற்றுக்கொள் வதற்கல்ல. அவர்கள் ஏன் அதை விரும்டவில்லை? இன்ன இன்ன வசதிகள் தொழிற்சாலைகளிலிருந்தால் போய்வர போக்குவரத்துச் சாதன வசதிகள் சரிவர அமைக்கப்பட்டால் இரவு வேலையை அவர்கள் செய் வார்களா என்பனபோன்ற தர்க்கரீதியான ஆழமான அறிவு பூர்வமான கேள்விக் கொத்தை அவர் களுக்கு கொடுத்திருந்தால் ஒருவேளை இவ்விகிதாசாரம் பெருமளவில் குறைந்திருக்கும். பெண்கள் செய்தியகம் நடத்திய ஆய்வின் முடிவு வேறு விதமாக இருப்பதும் மேற்கூறிய வாதத்தை உறுதிப்படுத்துகிறது. பெண்கள் செய்தியகம் நடத்திய ஆய்வு 90 % சதவீதம் பெண்கள் இரவு வேலை செய்வதை விரும்புகிறது என்று திட்டவட் டமாகக் கூறுகிறது. இரவு 8 மணித்தியால வேல்ைசெய் வது என்றதில் மாத்திரம் இப்பிரச்சனையின் முழுத் தாத்பரியமும் அடங்கிவிடவில்லை. இது பல அம்சங் களும், பல சமூக பொருளாதார பரிமாணங்களும் உள்ள ஒரு பிரச்சனை. பெண் வேலைக்குப் போவது என் பதே சமுதாய மட்டத்தில் இன்று முழுமையாக ஏற் றுக்கொள்ளப்படவில்லை. பெண்கள் வேலைக்குப் போவ தால் அவர்கள் படும் கஷ்டங்களும், இல்லாள் வீட் டில் இல்லாததால் கஷ்டப்படும் கணவனும், சிறுகுழந் தைகளும், வயதானுேரும் என்று பல பிரச்சனைகளை இது கிளப்பிவிட்டிருக்கிறது. குழந்தைகள் பராமரிப்பு இதனல் பாதிக்கப்படுகிறது. வீட்டில் நிலைமை அமைதி யாக இல்லை என்பன போன்ற பிரச்சினைகளுக்கே நாம் இன்றும் விடை காணவில்லை. ஏனைய நாடுகளிற் போல இலகுவாக்கப்பட சமையற் பொறுப்பு- சத்துனாவை பொட்டலங்கட்டி விற்கும் உணவு நிலையங்கள், குழ ந்தை பராமரிப்பு நிலையங்கள் என்பன போன்ற சாதனங்கள் எம்மிடை அருகியே காணப்படுகின்றன" இந்நிலையில் இரவு வேலைக்கும் பெண்கள் அனுமதிக் கப்படல் வேண்டும் என்று 90% சத பெண்களே விரும் பினுல் அவ்விருப்பத்தைத் துண்டுவதற்கு அடிப்படை யாக ஒருமுக்கிய காரணமிருக்கவேண்டு.

Page 11
O
பெண்கள் செய்தியகம் நடத்திய ஆய்வு 76.5 வீ: மானேர் போக்குவரத்து சாதனங்கள் இரவு வேலைக்கு செல்வதற்கு சாதகமாக இல்லை என்று கூறினர் நூ, றுக்கு 70 வீதம் பெண்கள் இரவு வேலே செய்யு பெண்களை ஒரு தனிப்பட்ட தொழிலாள வர்க்கமாக, கணித்து அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்க பட வேண்டும் என்று கூறினர். தனிப்பட்ட போக்( வரத்துச் சாதனம், இலகுவான வேலை, லீவு நாட்க% அதிகரித்தல், மலசல கூட வசதிகள், சம அளவுஊதியம் பதவியேற்ற வாய்ப்புகள் போன்ற சலுகைகளும், உ. மைகளும் வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ள 6Շ} Fr :
பல தொழிற் சங்கங்கள் பெண்கள் செய்தியகத்தில் விகிதாசாரத்தை அதன் முடிவுகளை அப்படியே ஏற்று கொள்ளவில்லை. பெண் தொழிலாளர் பலர் தொழி சங்கங்களிலும் ஏனைய அரசாங்க தனியார் சங்கங்கள் லும், குழுக்களிலும் அங்கத்துவம் வகிக்கவில்லை. இ முடிவு பெண் தொழிலாளியின் எண்ணக் கிடக்கைகஃ சரியான முறையில்பிரதிபலிக்கவில்லை. ஆடை உற்பத்! ஆலைகளிலாவது சுதந்திரவர்த்தக வலயத்தில் பணிபு யும் ஏராளமான பெண்களையாவது இம்முடிவு உட படுத்தவில்லை. சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபு யும் தொழிலாளிக்கு தொழிற் சங்க உரிமைகள் வழ! கப்படவில்லை. ஆகவே பெண் தொழிலாளர் பங் பற்ருத ஒரு முடிவு இது என்பது அவர்கள் வாதம்.
மேலும் பெண் விடுதலை கோரும் ஏனைய பெண் சங்கங்களில் பெரும்பாலான பெண்கள் மத்தியவர் கத்தைச் சேர்ந்தவர்கள். இச்சங்கங்கள், பெண்களுக் எத்துறையிலும் சம சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டு என்ற ஒரே குறிக்கோளை வைத்தே இச்சரத்து அகற்ற படவேண்டும் என்று கூறுகின்றன. பெண் தொழிலா? ருக்கு இதஞல் ஏற்படும் அல்லல்களும் ஏனைய ப பிரச்சனைகளும் இவர்களுக்குத் தெரிந்திருக்க நியா மில்லை. ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் இச்சங்க களில் அங்கத்துவம் வகிக்கவில்லை.
எப் பெண் தான் இரவு வேலை செய்யமுன் வ வாள்? தனது ஊதியத்தால் மட்டுமே ஏனையோரு கும் தனக்கும் ஒரு வேளை சோறு கிடைக்கும் என்றநி3 யில் உள்ள ஒரு பெண் இரவு வேலைக்குச் செல்ல சம் திக்கிருள். கணவனும் தானும் உழைத்தும் சாதாரண தேவைகளையே பூாத்தி செய்ய முடியாமல் இருக்கிறது ஆகவே இரவு வேலைக்குச் செல்வதால் கூடிய ஊதிய கிடைக்கும் என்று நினைக்கிற பெண்ணும் வேலைசெ கிருள். பெண்களுக்குச் சம சந்தர்ப்பம் இல்லை. பெல என்றபடியால் இரவு வேலை அனுமதிக்கப்படவில் என்று கூறி எப்பெண்ணும் இரவில் வேலை செய்ய போகமாட்டாள். கொள்கையளவில் ஒரு வாதத்திற் இதைக் காரணமாகக் கொள்ளலாமே தவிர இதன நான் வேலைக்குப் போகிறேன் எனக் கூறி ஒரு பெண் ணும் இரவில் ஒரு தொழிலுக்குச் செல்லமாட்டால்

i
:
பெண்ணின் குரல்
அன்றியும் இரவு வேலைசெய்ய மறுக்கும் ஒருபெண் முதலாளியால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட் டாள். வேலையைத் தேடுவதற்கு. கிடைத்த வேலையை இழக்காமலிருப்பதற்கு, பதவியேற்றம் பெற்று கூடிய ஊதியத்தைப் பெறுவதற்கு என்று இப்படிப்பட்ட காரணத்துக்காகவும் இரவு நேர வேலைக்கு பெண்ஒத்துக் கொள்கிருள். ஆகவே இப்பிரச்சினை முழுக்க முழுக்க ஒரு பொருளாதாரப் பிரச்சினையே அன்றி உரிமைப் பிரச்சனை அல்ல. இப்படி அவள் தனது பொருளாதாரப் பிரச்சனைக்கு விடைகாண முடியும் என்ருல் அரசாங் கமோ சர்வதேச தொழிலாளர் சம்மேளனமோ தடை யாக இருக்கக் கூடாது. ஆனல் அதற்கு ஏற்ற வசதி களைச் செய்து கொடுக்க வேண்டும். சமையல் வேலை. குழந்தைப் பராமரிப்புபோன்ற வீட்டு வேலைப் பழுவைப் பெண்களிடமிருந்து குறைக்க வேண்டும். குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் போதிய அளவு நிர்மாணிக்கப் படவேண்டும். ஆலைகளிலும், வேலைத்தளங்களிலும் இரவு நேர உணவுச் சாலைகள் தரமான பாதுகாப்பு போன்ற மேலதிகச் சலுகைகள் பல, அவர்களுக்கு கிடைக்க வேண்டு ம்.
ஆவணி எட்டு ஞாயிறு ஒப்சேவர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி இப்பிரச்சினேயில் பரிமாணத் தின் ஒரு பகுதியை விளக்குகிறது. இரத்மலானை ஆலை யொன்றில் இரவு நேர வேலையை முடித்துவிட்டு 22 வயது பெண் ஒருத்தி 10.30க்கு வீடு செல்வதற்கு இலங்கை பஸ்சேவையின் ஒரு வண்டியில் ஏறி இருக் கிருள். வண்டிச் சாரதி வண்டியின் விளக்கை அனைத் ததும் பயந்த அவள் வண்டியை நிறுத்தி தப்புவதற்கு மணியை அடித்திருக்கிருள் வண்டிச் சாரதி வண்டியை நிறுத்தாமல் மிகு விரைவாக ஒட்டிச் சென்(ரன். வண் டியிலிருந்த கண்டக்டர் அவளை நெருங்கிச் சேட்டைகள் செய்தபொழுது அதனைத் தாங்கமாட்டாத அவள் வண்டியில் இருந்து கீழே குதித்திருக்கிருள். காயப்பட்டு மயக்கமடைந்திருந்த அவள் இரத்தம் வழிய வீடு சென்ருள். காலையில் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட் டாள். இத்தகைய ஒரு நிலைமை எவ்வளவு கேவல மானது?
பொதுவாக இரவுநேர வேலை எவருக்குமே அவ் வளவு நல்லதல்ல. இயற்கை நியதிப்படி இரவுநேர நித்திரை மானிடருக்கு அத்தியாவசியம். இரவில் இழந்த நித்திரையை பகலில் பெறமுடியாது. பகல் நித்திரை அவ்விழப்பை ஈடுசெய்வதில்லை. சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சில வருடங்களுக்கு முன் தொழில்புரிவோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்து முகமாக ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஜெனிவாவில் உள்ள இச்சம்மேளனம் இரு மேதைகளைப் பொறுக்கி எடுத்து சமூகரீதி, புனுேதத்துவ ரீதி, உடற்கூற்று ரீதி, குடும்ப வாழ்க்கை ரீதி ஆகிய பல மட்டங்களில் இரவு வேலை எப்படி மக்களைத் தாக்குகிறது. என்பதை ஆரா யக் கேட்டது. இவ்விருமேதைகளும் (ஜேம்ஸ் காபஸ்டி யர், பிதி சேமியன்) தங்கள் கருத்துக்களை மிகத்திட்ட

Page 12
பெண்ணின் குரல்
வட்டமாக எடுத்துக் கூறியிருக்கிறர்கள். என்னதான் பொருளாதார கண்ணுேட்டத்தில் இது ஏற்கப்பட்டா லும் இரவு வேலையை எங்கெங்கு, எவ்வளவுக்கெவ் வளவு குறைக்கப்படலாமோ அங்கங்கே குறைக்கப்பட வேண்டும். இரவு நேர வேலையால் மனிதன் அசதி, தூக்கம், மந்தபுத்தி போன்றவற்றைப் பெறுகிருன். இரவில் உணவு,உண்பதுசெமியாக்குணம்அல்சர்போன்ற வற்றைத் தோற்றுவிக்கிறது. பகலில் இயற்கையாக தூங்க முடிவதில்லை. பகல் நேரச் சத்தம், சஞ்சலம் போன்றன அந்நித்திரைக்குத் தடையாக இருக்கிறன. இதனுல் நித்திரை செய்வதற்கு செயற்கை முறைகளை நாட வேண்டியுள்ளது. நித்திரை வில்லைகளுக்கு அடிமை யாகிருன் பகல் நித்திரை வேண்டிய அளவு பெற முடி யாது. பசியும் அந்நித்திரையைக் குளப்புகிறது. இதனல் பலர் மனே வியாதிக்குள்ளாகிறர்கள். பெண்கள் பகல் நேரத்தில் வீட்டு வேலையில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந் தத்திற்குள்ளாகிறர்கள். சுமுகமான ஒரு குடும்பவாழ்க்
பெண்ணடிமையின் சில அதன் பெறு
(1) பெண் பயந்த சுபாவம் உள்ளவள் மந்த புத்தி உள்ளவள் இலகுவில்உணர்ச்சிவசப்படுபவள் ஆகவே பின்னிற்க வேண்டும். இதனுல் தந்தை கணவன் சகோதரன் என்ற ஆண் மகனின் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் பல்வேறு கட்டங்களில் அவள் வளர்க்கப்பட்டு அவர்களது அதிகாரத்துக்கு அடிபணிகிருள். இதனுல் அவளது:-
திறமை வெளிப்படுவதில்லை தீர்மானிக்கும் உரிமையில்லை பொருளாதார ஆதிக்கமின்மை
(2) வீட்டு வேலைக்கும் பிள்ளைப்பராமரிப்புக்கும் ஏற்றவள் இவள் என்று ஒதுக்கி வைக்கப்படும் மனப்பான்மை. இதனல்:-
கல்வியில் சமசந்தர்ப்பமின்மை அரசியலில் வாய்பளிக்கப்படாமை உயர்ந்த உத்தியோகவாய்ப்பின்மை தொழில்நுட்ப வளர்ச்சியின்மை குறைந்த சம்பளம்

11
கைக்கு இது ஒரு முட்டுக்கட்டையாயுள்ளது என்பன இவர்களது ஆணித்தரமான கருத்துக்கள்.
இவற்றை நாம் மிகவும் ஆழமாக சிந்திக்கவேண் டும். இவ்வளவு பாரதூரமான விளைவுகளைக்கொண்ட ஒரு திட்டத்தை நாம் ஏன் அனுசரிக்க வேண்டும்?ஆண், பெண் என்ற ரீதியில் அன்றி மானிட வர்க்கத்தை ஒரு மித்து இது தாக்குகிறது.
ஆகையால் பொருளாதார அபிவிருத்தி என்ற கார ணத்தை மட்டுமே கொண்டு நாம் செயல்படாது அத ஞல் வரும் பாரதூரமான சமுதாயத்தையே நோயாளி யாக்கக் கூடிய இவ்விரவு நேர வேலையை நாம் கூடியமட்டும் தவிர்க்கவேண்டும். கட்டாயச் சேவைகள் என்ற ஒருசில துறைகளில் உதாரணமாக நோயாளிகளைப் பராமரிக் கும் வைத்தியர்கள், தாதிகள், விமான கப்பற் சேவை கள், நகர காவற்துறையினர் போன்ருேர் கட்டாயமாக இரவு வேலைக்குத் தேவைப்படுவர். இது நாம் தவிர்க்க முடியாத ஒன்று.
தர்க்க நியாயங்களும் துபேறுகளும்
(3) காமப் பொருளாக கேளிக்கைக்குரியவள் என்று
கருதப்படும் மனப்பான்மை.
இதனுல் கற்பழித்தல் பலதாரமணம் மனைவி இருக்கப் பிறபெண்ணை நாடல் (4) வானெலி பத்திரிகை இலக்கியம் பாடத்திட்டம் போன்றவை வழிவந்த கோட்பாடுகளைப் பேணி பெண்ணடிமையை நியாயப்படுத்தல். இதனல் உரிமைப் போராட்டம் தடைப்படுதல்.
(5) பெண் என்ற ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் சீதன வழக்கம்:- (பலர் கன்னியராய் இருத்தல் விதவைகளின் கஷ்டம்)
கன்னிப் பெண், விதவை, விவாகரத்து செய்யப் பட்டவள் போன்ருேருக்கு சமுதாயத்தில் இருக்கும் அந்தஸ்து குறைக்கப்பட்டு அநுதாபத்திற்குரிய வராகக் கொள்ளப்படல்
(6) தொழில் முறையில் பாரபட்சம் உல்லாசப்பயணம் வர்த்தக வலயம் போன்ற துறைகளில் பெண்கள் தொழிலாள வர்க்கத்திலேயே கீழ் மட்டத்தினராக கணிக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின் றனர். குறைந்த சம்பளம். கூடிய நேர வேலை தொழிற் சங்க உரிமைகள் மறுக்கப்படுதல்

Page 13
12
பெண்
பெண்களை எதிர்நோக்கி நிற்கும் பிரச்சனைகள் ட என்ற பல துறைகளில் பெண்கள் பிரச்சனைகள் எ களும் எடுக்கப்படும் காலம் இது. பெண்கள் பணிய கங்கள் ஐக்கிய நாடு சர்வதேச பெண் கழகங்கள் எ6 சம சந்தர்ப்பமும் இருக்கவேண்டும் என்று தீவிரமாக என்று நாம் மிகவும் துக்கம் அடைகிருேம். பெண்கே எனறு அழித்தொழிப்பதா என்னே பயங்கரம்இவர்க சமுதாயம் பெண்களை ஒரு பாரமாக வேண்டப்பட புரையோடிப் போயிருக்கிறதா இந்தியச்சமுதாயம்
நிTங்கள் இங்கே கூடியிருப்பது மற்ற மாதர் சங்
கங்களைப் போல ஊறுகாய் போடுவதைப் பற்றி விவா திக்கவோ அல்லது புது மாதிரியான பெங்காலி ஸ்வீட் டைப்பற்றி ஆராயவோ அல்ல. பெண்களின் மிகப் புதிய பிரச்சினையான “பெண் கருவை' அழிக்கும் கொடுமையைக் குறித்துப் பெண்களாகிய நாங்களே அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதற்காகத்தான் கூடியிருக் கிருேம்."
இப்படி ஆந்திர ஆவக்காய் ஊறுகாயின் காரத் தோடு "ஜனநாயகப் பெண்கள் முன்னணியின் கருத்தரங் கம் தொடங்கியது.
"கருப்பையிலிருப்பது ஆண் கருவா, பெண்கருவா என்று கண்டு பிடிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சி சாதனை யின் விளைவாக ஏற்பட்ட பிரச்சினை இது. கேட்டால், பெண் பிறந்தால் வரதட்சிணை, போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன என்கிருர்கள். புரையோடிப் போய்க் கிடக்கும் வரதட்சினைக் கொடுமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, அதனை ஒழிக்கத் துணிவில்லாமல் சமூகத்தின் பிறப்பிற்கே காரணமான பெண்குலத் தைக் கருவிலேயே அழிப்பதில் என்ன நியாயமிருக் கிறது. ? என்ன உரிமை இருக்கிறது. ? இதைத் தட் டிக்கேட்க வேண்டாமா " என்று ஆவேசத்துடன்பேசி ஞர் தலைமையேற்ற திருமதி கமலா- ஜனநாயகப் பெண் கள் முன்னணியினரில் ஒருவர்!
W "பெண்கள் மட்டுமே இப்பிரச்சினை குறித்துப் பேசி ஞல் எடுபடாமல் போகுமோ' என்கிற நியாயமான பயம் ஜனநாயகப் பெண்கள் முன்னணிக்கு.
அதஞல்தானே என்னவோ,இப்பிரச்சினை குறித்துக் குரல் எழுப்புவதற்கு டாக்டர் பி. பழநியப்பனைக் கருத் தரங்கில் கலந்து கொள்ளச் செய்திருந்தார்கள்.

பெண்ணின் "குரல்
சிசு வதம்
பல உண்டு. கலாச்சாரம் பொருளாதார அரசியல் சமூகம் டுத்தாளப்பட்டு பிரேரணைகளும் திட்டங்களும் முடிவு கம் மாதர் சங்கங்கள் பெண்ணுரிமை இயக்கங்கள் அரசாங் ன்று பல பல. நிறுவனங்கள் பெண்களுக்கு சம உரிமையும் நடவடிக்கை எடுத்துவரும்போது இப்படியும் ஒரு அவலமா ளே பெண்குழந்தைகளை ஒதுக்கித்தள்ளுவதா? வேண்டாம் 5ளை இப்படி இழி செயலுக்குத் தூண்டுவதற்கு காரணமாக ாத மானிட ஜன்மங்களாக கருதுகிறதா? அந்த அளவுக்கு )? மேலே வாசி புங்கள்
வெளிநாடுகளில் பல மருந்துகளைத் தயாரிக்கும் சர்வதேசக் கம்பெனிகள் தடை செய்யப்பட்ட கருச் சிதைவு மருந்துகளின் பெயர்களை மாற்றி இந்தியத் தாய்மார்களின் தலையில் கட்டுகின்றன. கிட்டத்தட்ட பதினைந்து மில்லியன் டாலர் விற்பனை இந்தியாவில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனல், இந்திய அரசு இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டிக் கத்தக்கது" என்று பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் பி. பழநி யப்பன், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் மகப்
பேற்றியல் பேராசிரியர் இவர்.
'Hormonai withdrawal test' epaulbositG islil Gib மருந்துகள் சாதாரணமாக மாதவிலக்கு தாமதமானல் அதைச் சீராக்க மட்டுமே பயன்படக்கூடியவை.
"இவற்றைக் கருச்சிதைவுக்காகப் பயன்படுத்தினுல் அநேகமாக ஊனமுற்ற குழந்தைகளே பிறக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
“இம்மாதிரி மருந்துகள் இங்கிலாந்து, ஜப்பான், பங்களாதேஷ், சிங்கப்பூா, ஆஸ்திரேலியா போன்றநாடு களிலெல்லாம் தடைசெய்யப்பட்டுவிட்டன.
“இவ்வாறிருக்க இவற்றை இந்தியாவில் மட்டும்
தடை செய்யாமல் விற்பனை செய்ய அனுமதிப்பது
என்ன நியாயம் என்று பல முறை குரல் எழுப்பியும்
இந்திய அரசு 1983 ஜூன் மாதத்திற்குப் பின்னர்தடை
செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. தடுக்கப்படு வதில் கூட என்ன தவணை முறை..?
*கருச்சிதைவைச் சட்டமாக்கியுள்ளது அரசாங்கம், கருச்சிதைவுக்கு மிகச் சரியான வழி டி. என். ஸி.செய்து கொள்வது ஒன்றுதான். கடையில் வாங்கும் மாத்திரை களால் எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.

Page 14
பெண்ணின் குரல்
ஏனென்முல், இதற்கான மிகச் சரியான சக்திமிக்க மாத்திரைபோ, மருந்தோ உலகத்தில் இன்னும் கண்டு பிடிக்கப்படவேயில்லை!"
ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சியுரையைக் கேட்டது மாதிரி இருந்தது டாக்டர் பழநியப்பனின் பேச்சு.
"கருவிலிருப்பது ஆண் குழந்தையா. பெண் குழந் தையா என்று முன்கூட்டி அறிந்துகொள்ள உதவும் முறைதான் 'அமினேசென்டிசிஸ்" (Amenocentesis)
தற்போதுள்ள சமூகப் பின்னணி, பெண் குழந்தை யென்முல் கருவை அழித்து விடுவது என்ற அவலமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இம்முறைக்கு மருத்துவ அறிஞர்கள், டாக்டர்கள் ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்கள் ஆதரவளிப்பதை
நிறுத்திக்கொள்வது நலம்.
பிறக்கப் போகும் குழந்தை ஆணு,பெண்ணு என்று முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவும் இம் முறை, விஞ்ஞானத்தைத் தவருகப் பயன்படுத்தி மனிதகுல தார்மீக நெறிகளுக்கு விரோதமாகச் செயல்படக் கூடியதாக இருக்கிறது.
ஜனநாயகப் பெண்கள் முன்னணியினரின் ஆதங்க மெல்லாம் இவைதான்.
ஜனநாயகப் பெண்கள் முன்னணியின் கவலையெல் லாம் பெண்களுகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் போதாதென்றும் இது ஒன்று புதிதாகத் தேவையா என்பதுதான்.
பெண் கருவைக் கண்டுபிடித்து அழித்து விடுவதால் எதிர்காலதில் பெண்ணினமே குறைந்து அழிந்து போக லாம்.
இப்போதுள்ளவர்கள் பெண்களின் வரதட்சினை, திருமணம், சீா செனத்திகள் ஆகியவற்றுக்குப் பயந்து பெண் கருவை அழித்து விடுவது என்ற முடிவுக்கு வத் தால் வருங்கடலத்தில் என்னென்ன சோதனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமோ..?
பெண்களின் பிறப்பு விகிதம் 1901ல் ஆயிரம் ஆண் களுக்கு 972 பெண்கள் என்றிருந்தது 1971ல் ஆயிரம் ஆண்களுக்கு 930 பெண்கள் என்று மேலும் சரிந்திருக் கிறது. பற்ருக்குறை அதிகமாகும்போது போட்டிகள் ஏற்படலாம். போட்டிகள் மூலமாக வன்முறைகள், கற் பழிப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் சர்வ சகஜமாகலாம்.
-சீதாபாரதி
நன்றி: ஆனந்த விகடன்.

数3
பெண்ணின் குரலின் பேரிழப்பு
பேராசிரியர் கைலாசபதியின் அகால மர ணம் பலபேரை பல வகையில் தாக்கியுள்ளது. 圈 இலங்கையின் ஒரு முற்போக்குவாதி என்றும் பல நவீன நன்மை பயக்கும் கொள்கை வாதங்களின் முன்னேடி என்றும் சாதி சமய இன வேறுபாடு களைக் கடந்து, இலங்கை வாழ்மக்கள் அனை வரையும் இவ்விழப்பு பாதிக்கத்தான் செய்தது.
அதே சமயம் தமிழ் இலக்கியத்தில் புதிய முரண்பட்ட வாதக் கருத்துக்களையும் புகுத்தி, புதிய வழி ஒன்று அமைத்துக் கொடுத்து, விமர் சனம், திறனய்வு, கவிதைநயம் போன்ற துறை களில் தனிவழி ஒன்று தொடக்கி வைத்து, வளரும் சர்ச்சைக்கு அடிகோலி, சிஷ்யக் குழுக்கள், இலக்கிய சகாக்கள், பத்திரிகை ஆசி ரியர்கள், இலக்கிய கர்த்தாக்கள் என்று பல முனைப்பட்டு நிற்கும் அறிவுஜீவிகளுக்கு இது ஒரு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பு.
மண் வாசனையின் முக்கியத்துவம் வலி யுறுத்தப்பட்ட ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் இவரது பங்கு, தமிழ் இலக்கிய வளர்ச்சியில் இவ ரது பாதிப்பு என்று இவ்விருதுறைகளிலும் ஒன் றிக் கலந்து நிற்கும் இவரது இலக்கியப் பணியின் அந்தஸ்தையும் முக்கியத்துவத்தையும் தராதரத் தையும் காலம் நிச்சயமாக நிாணயிக்கும்.
பெண்ணின் குரலின் பெண் விடுதலைத் தத்து வத்தை ஒரு சீர் திருத்த வாதி என்ற ரீதியில் ஆத ரித்து ஊக்குவித்து பெருநண்பனக இருந்த பேரா சிரியர் கைலாசபதியின் மறைவிற்கு நாமும் எமது அஞ்சலியைச் செலுத்துகிருேம்.
.. ஆசிரியர்

Page 15
14
ஆசிரியர்
பெண்ணின் குரல்
o வருடத்தில் நாலுமுறை ஒலிக்கும். ஆனலும் குறிப் பிட்ட நேரத்தில் வெளிக்கொண்டு வரமுடியாத பல கஸ் டங்கள் உண்டு.
0 பெண்களால் நடப்படும் ஒரு பெண் பத்திரிகை
O சாதாரண மாதர் பத்திரிகையில் இருந்து வேறுபட்
!-து.
o ஆராய்ச்சியை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுரை களும் அறிவு பூர்வமான எண்ணக் கருத்துக்களும் கொண்டது
o இலாபம் கருதி இலகுவில் விற்கப்படக்கூடிய ஜன ரஞ்சமான விடயங்களை நாம் வெளியிடுவதில்லை.
0 பெண்ணின் குரலில் வெளிவரும் கருத்துக்களுக்கும் கதை கட்டுரைகளுக்கும் அவற்றை எழுதியவர்களே பொறுப்பு. பெண்ணின் குரல் ஆசிரியை அல்ல.
0 ஆசிரியையின் அனுமதியுடன் இவற்றை மறுபிரசுரப்
செய்யலாம்
அறிவுசால் நூல்கள்
o பெண்ணின் குரல் அலுவலகம் 18/9 சிதராஒழுங்கை
கொழும்பு-5 என்னும் இடத்தில் உள்ளது.
O இங்கு பல வெளிநாட்டுச் சஞ்சிகைகளும் படி ஆராய்ச்சி நூல்கள் வெளி நாட்டு உள்நாட்டு கரு, தரங்குகளில் வாசிக்கப்பட்ட பல கட்டுரைகளு உண்டு. இவற்றை உபயோகித்து பயன்பெ விரும்புவோர் காலை எட்டு மணிமுதல் பிற்பக 1.30 மணிவரை இவ்வலு கலகத்துக்கு வந்து பெ றுக்கொள்ளலாம்.
o சமுதாய ரீதியாகவோ அரசியல் ரீதியாகவே தொழில் சம்பந்தப்பட்டதாகவோ பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கலாம். இவற்றை அவ கள் எங்களுடன் வந்து கலந்தாலோசிக்கலாம் எ ளால் முடிந்த அளவுக்கு நாம் அப்பிரச்சனைகளை பெண்ணின் குரலில் பிரசுரித்து வேண்டியவ களின் கவனத்திற்கு கொண்டு வருவோம்.

பெண்ணின் குரல்
றிப்பு
பெண்ணின் குரல் ஐந்தாவது தடவையாக ஒலிக்க முன் வந்துள்ளது. கட்டுரைகள் கவிதைகள் சிறு கதைகள் கடிதங்கள் எனப் பல வகைப் பிரிவு களை உள்ளடக்கி சஞ்சிகையை வெளியிட எமக்கு பேரவா. ஆனல் எமக்கு பல இடையூறுகள் உண்டு. பெண்ணினத்தில் பல கஸ்டங்களையும் உரிமைப் பிரச் சனைகளையும் சமூகபொருளாதார அரசியல் நோக்கில் பரிசீலனை செய்வதே நமது குறிக்கோள். பாரதி கண்ட ஒரு சமரச சமுதாயம் அமைப்பதற்கு பண்பாடு மதக் கொள்கைகள் கலாச்சார ரீதியாக வலுவடைந்தகொள் கைகள் கோட்பாடுகள் எனப் பல துறைகளை நாம் கடக்கவேண்டி உள்ளது. இவற்றை அறிவுபூர்வமாக தர்க்கரீதியான ஆதாரங்களுடன் அணுக வேண்டும். சமு தாயத்தில் மேலதிகமாக நிலவும் ஒரு கோட்பாட்டை ஒரேயடியாகத் தாக்கி புரட்சி செய்ய முடியாது. பெண் களுக்காக எடுத்துக்கொண்ட ஒரு யுத்தம் பெண்களே வெறுத்து ஒதுக்கவும் காரணமாக அமையலாம். பெண் உரிமை பெண்ணுக்கு சம சந்தர்ப்பம் என்பன போன்ற தத்துவங்களில் பல விடயங்கள் அடங்கியுள் ளன. சமுதாயத்தில் பல வேறு அம்சங்கள் இதில் தொக்கிஉள்ளன. பெண்ஒருத்தியைமட்டும் தாக்கும்ஒரு பிரச்சனை இல்லைஇது. அவளைச் சார்ந்துநிற்கும் குழந்தை கள், வளர்ந்த பிள்ளைகள், கணவன், அன்ணன், தம்பி, தாய், தந்தையர், என்ற "உறவு முறைகள் பல" இதில் உள்ளடங்கி உள்ளன. இவை யாவும் அவ்வக்கோணங் களில் அந்த அந்த பரிமாணங்களில் அலசி ஆராயப்பட வேண்டும். இவ்வுறவு முறைகளை முற்றிலும் எதிர்த் துப் போராடி ஒரு பெண் சமத்துவ நிலையை அடைய முடியாது. சமுதாயத்தில் தனித்து நின்று இயங்கி தனி வழி நடப்பதற்கல்ல அவள் இச் சுதந்திரத்தை வேண்டி நிற்பது. பல பெண்களுக்கு எப்படித் தாங்கள் அடிமைப் பட்டு விட்டோம் என்பது தெரிய வில்லையோ, அதே போல பல ஆண்களுக்கும் தாங்கள் அவர்களை அடிமைப் படுத்துகிருேம் என்பது தெரியவில்லை. பண்பாடு, வழி வழி வந்த பரம்பரைக் கோட்பாடுகள் என்ற போர்வை யில் இவ்வடிமை ஆண்டான் நிலே தொடருகிறது. இதனல் ஆண் வர்க்கத்திற்கு சலுகைகள் அதிகம். ஆம் அதிகம் தட்டிக் கேட்க ஆளின்றி இச்சமுதாயக் கோப்பு தொடருகிறது. ஆகவே எப்படி பெண்ணினத்தைத் தட்டி எழுப்பி அவர்களின் துன்பகரமான வாழ்க்கை முறைகளே அவர்களுக்கு உணர்த்த நாம் முன்வந்து

Page 16
பெண்ணின் குரல்
இருக்கிருேமோ அதே அளவில் ஆண் மக்களை கூவி அழைத்து ஏன் இந்த அநியாயம் ஏன் இந்த அடக்கு முறை ஏன் இந்த பாராமுகம் என்று கேட்கப்போகி ருேம்.
சிங்கள ஆங்கில மொழிகளில் காந்தாஹண்ட Voice of Women என்ற தலைப்பில் வெளிவரும் பெண் ணின் குரலுக்கு அதிக ஆதரவு உண்டு ஆங்கில பத் திரிகைகள், பலதரமாக அதன் கட்டுரைகளையும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் ஆதரித்தும் மெச்சியும் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளன. எமது முயற்சியை பாராட்டி நம்முன்னேற்றக் கொள்கைகளை வரவேற்றுள்ளன. உலகெங்கும் பெண்விடுதலைக் குரல் கள் எழுப்பி உள்ளநேரத்தில் கீழைத்தேய நாடுகளா கிய பிலிப்பின், தாய்லாந்து, பங்காளதேசம், இந்தியா போன்ற நாடுகளில் மிகத்தீவிர பெண் விடுதலைப் பத் திரிகைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் வெளிவருகின்றன.
இலங்கையில் மட்டும் அதன் தாக்கம் தெரிய வில்லை. அதன் தாத்பரியம் விளங்கவில்லை. **பெண் ணின் குரல்’ஸ்தாபனத்தாரே இலங்கையில் இக்கொள் கையின் முன்னுேடிகள்.
சிங்கள மக்களிடையும் இக்கொள்கைகளும் ஆத ரவு அருகியே உள்ளது. பெண்ணின்குரலப் படித்து விட்டு சகோதசிகளே உங்கள் எண்ணக் கருத்துக்களை எமக்கு எழுதுங்கள். எவ்வளவுக்கு நீங்கள் எம் கொள் கைகளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை அறிய உங்க களது கடிதங்கள் கட்டுரைகள் கண்டனங்கள் விமர்ச னங்கள் என்பன இன்றியமையாதன அவையே எமது
அளவுகோல்,
அன்றியும் பெண்களுக்காக வெளிவரும் இப்பத் திரிகையை உங்கள் ஆலோசனையுடன் நாம் மேலும் செம்மைப் படுத்தலாம். கட்டுரைகளையும் நாம் வர வேற்கிருேம்.
யாழ்ப்பாணத்திலும் ஏனையபகுதிகளிலும் தமிழ்ப் பெண்களுக்கு பெண்ணின் குரல் இலகுவில் கிடைப்ப தற்கு நாம்வழிவகை செய்யவேண்டும். பெண்ணின்குரல் Woice of Women ஆகிய சஞ்சிகைகளை பெற விரும்பும் சகோதரிகளை எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு
வேண்டுகின்ருேம்.

15
எமது குறிக்கோள் என்ன என்பதை இவ் இதழில் பிரசுரித் திருக்கிறேம் அக்குறிக்கோள்களை ஏற்றுகொள் வோர் பெண்விடுதலையில் நாட்டம். உடையவர்கள் எமது ஸ்தாபனத்தில் அங்கத்துவம் வகிக்கலாம். அதற் கும் உரிய விண்ணப்பப் பத்திரங்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். எமது அடுத்த இதழைப் பாரதி யார் நூற்ருண்டு விழாவையொட்டி பாரதியாருக்கு சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம் பொதுவாக பாரதியார் பெண்விடுதலையைப் பாடிஞ்றர் என்றுகூறி நிறுத்தி விடும் நாம் அவ்வாதங்களைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறி விடுகிருேம்.
பல்வேறு கண்ணேட்டங்களில் பாரதியை அணுகும் இவ்வேளையில் பெண்ணின்குரல் பாரதியின்வாதங்களைக் கருத்திற்கொண்டு அவற்றை உள்ளடக்கிய சிறுகதை களை அல்லது கவிதைகளை சிருஷ்டித்து எமக்கு அனுப்பி வைத்தால் பெண்ணின் குரல் அவற்றை மகிழ்ச்சியுடன்
வரவேற்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல நாம் முன்வைக்கும் இவ்வுரிமையைப் பிரச்சனை ஆண் களுக்கு எதிரானது அல்ல என்பதை வலியுறுத்து கிருேம். அதே நேரத்தில் ஆண்குரலையும் பெண்ணின் குரலில் கேட்க விரும்புகிருேம். கூறப்படும் விடயம்
முக்கியமேயன்றி யார்கூறுவது என்பது முக்கியம் அல்ல.
பிரச்சனைகளை ஆக்க பூர்வமாக அணுகும் எமது கொள்கையின் பிரதிபலிப்பாக டெண்ணின் குரல் சுதந் திர வர்த்தக வலயமும் பெண் தொழிலாளரும் என்ற ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பை வெளி யிட்டு உள்ளது. சுதந்திர வர்த்தக வலயத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இவ்வுரை பெண்தொழிலா ளரின் அவலநிலையை மிகத் தெளிவாக விளக்குகிறது பல பெண் தொழிலாளரை பேட்டிகண்டு சலந்து உரை யாடி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரை இது. பெண்ணின் குரல் அமைப்பு ஒன்பது மாதங்களாக இதில் ஈடுபட் டது.ஆங்கிலத்தில் எழுதப்பட்டஇக்கட்டுரைத் தொகுப் பின் விலை 30/- ரூபாயாகும்.
இன்நூலின் சிங்கள, தமிழ் மொழிப் பெயர்ப்புகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்.
- ஆசிரியர்

Page 17
பெண்களுக்கு
ஒரு அலுவலகத்தில் வேலை பார்கிற திருமணமான ஆண்களும்- திருமணமாகாத பெண்களும் தான் கடுமை யாக உழைத்து முன்னுக்கு வருகிறர்கள். மாலை நேரத் தில் மேலதிக நேர வேலை செய்பவர்களும் இவர்களே. திருமணமான பிறகு பெண்களுக்கு வேலையில் ஆர்வம் போய்விடுகிறது வீட்டுக்குச் சீக்கிரம் போகத்துடிக்கி முர்கள்'
பிரான்ஸில் ஸிங்லி என்னும் சமூகவியல் ஆராய் சியாளர் நூற்றுக்கணக்கான ஆண்களையும் அங்கே பணிபுரியும் 34843 வேலையாட்களின் பதிவேடுகளையும் ஆராய்ந்து மேற் கண்டவாறு கூறுகிருர்’
ஆதாரம்-டைம்.
இது ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு உண்மைதான். ஆனல் இதில் பொதிந்திருக்கும் உண்மைகள் பல.
ஒரு திருமணமாகாத பெண்ணுக்கும் திருமண மான ஆணுக்கும் திறமை வேலைசெய்யும் நேர அளவு வேலையிற் கவனம், ஆகிய பல்வேறு திறமைப் பண்பு களில் வித்தியாசமில்லை, என்பது ஒத்துக்கொள்ளப் படுகிறது. அதே சமயம் இந்த அளவு திறமை ஒரு ஆணுக்கு திருமணமாகுமுன் இருக்கவில்லை என்பது பெறப்படுகிறது. திருமணமாகுமுன் ஆண் விளையாட்டுப் பிள்ளையாக சபல புத்தியுடன் சஞ்சலப்படுகிருன? இதே ஆண் திருமணமான பின் திறமையுடன் பணிபுரிகிறன் என்ருல் அதற்குக் காரணம் மனைவிதானே? தேவை யான அமைதியையும் பண்பட்ட ஒரு சூழ் நிலையை யும் அவள் அமைத்துக் கொடுப்பதால் வேலைத்திறமை பெருகிவிட்டதா? இதற்குரிய அங்கீகாரத்தையும் மதிப் பையும் பெண்குலத்துக்கு ஆண் மக்கள் கொடுக்கிருர் களா? இதை அவர்கள் உணர்ந்திருக்கிரு:ர்களா, அது பெண்ணின் கடமை என்று தட்டிக்கழிக்கிருர்கள். அது மணவாழ்க்கையில் தாம்பத்தியத்தின் எதிர்பார்ப்பு களாகி விடுகின்றன. இக்கடமைகளும் எதிர்பார்ப்புக்
களும் ஒரு பக்கத்தாயதாகவே இருக்கின்றன.
திருமணமாகாத பெண் திருமணமானபின், பின் தங்க நேரிடுகிறது. வேலை உயர்வுகளும் ஊதிய உயர்வு களும் பெரும்பாலும் அவளுக்கு கிட்டுவதில்லை. குடும் பச் சுமை அவளைத் தாக்கிறது. பிள்ளைவளர்ப்பு, வீட்டு

JD J jibbil li
வேலை கணவன் பராமரிப்பு என்ற முன்முனைப்போராட் டத்துடன் வெளிஉலக அலுவலக பணியையும் சமதிற மையுடன் அவளால் நடத்த இயலாது. இதனல் பாதிக் கப்படுவது அலுவலகத்திறமை. பெண்குடும்ப வட்டத் திற்கே முதிலிடம் கொடுக்கவேண்டும் என்பதே பண் பாடு அவளுக்கு கற்பூ, க் கொடுத்த முதற்பாடம். அம் முதற்பாடம் அவளது கணிப்பிலும் சமுதாயக் கணிப் பிலும் முக்கிய பாடமாகியும் விட்டது. குழந்தை வளர்ப்பும் வீட்டுவேலையும் அவளது சிந்தையை ஆக்கிர
மித்துக்கொள்ள விடுபடமுடியாத ஒரு ஆன்மீகச் சிக்க
லாகத் தோன்ற அதற்குள் அவள் அமிழ்ந்து விடு
கிருள். குடும்பம் என்ற கோயிலில் சட்டிபானைகளும்
வீடு கூட்டும் விளக்குமாறுகளும் பூசைக்குரிய பொருட்
களின் அந்தஸ்தைப் பெறுகின்றன. இப்பூஜை-பெண்
ணினல் மட்டுமே செய்ய வேண்டும் என ஆண் மகன்
என்ற ஆசான் கட்டளையிட்டு விட்டார். இதனல்
அவளால் அலுவலக வேலைகளை முன்னைய திறமையுடன்
கடைப்பிடிக்க முடியவில்லை. தாய்மை என்ற விடுபட
முடியாத சூழலில்- அவள் மெய்மறந்து தன்னை அமுக்கி
விட்டாள். தாய் தகப்பன் கூட்டுறவால் பிறந்த பிள்ளை
களைத் தகப்பன் தாயிடமே தள்ளி விடுகிருன். தாய்ப்
பால் கொடுத்தல் ஒன்றைத் தவிர ஏனைய பிள்ளை பரா
மரிப்புகளை தகப்பனும் ஏன் சேர்ந்து செய்யக்கூடாது?
குளிக்க வார்த்தல் உணவு கொடுத்தல் படுக்க வைத்
தல் போன்றவற்றை தகப்பனும் செய்யலாம். இதனல்
பெண்ணின் வேலைச் சுமை குறையும்- குடும்பம்
என்ற கோயிலில் கணவனும் மனைவியும் அர்த்த
நாரீஸ்வரராகஇருந்தால் பரஸ்பர அன்புகுழந்தைகளின்
மனுேதிடம் செல்வச் செழிப்பு என்ற பல நன்மைகளைப் பெறலாம். பெண்குலம்அடக்கி ஒடுக்கப்பட மாட்டாது.
பெண்ணுரிமை பேணப்பட்டு ஒரு நாகரீக சமுதாயம்
தோன்றும். சம உரிமைகளும் சம சந்தர்ப்பங்களும்
மனிதனை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்
பெண்களுக்கு வீட்டுவேலைப் பளு குறைந்தால் அவர்
களும் ஆண்களுடன் அதே திறமையுடன் பணிபுரிய லாம். உத்தியோக உயர்வு கிடைக்கலாம் அதிக ஊதி யம் பெறலாம் அதே வேளையில் ஆண்களும் குடும்பப்
பொறுப்பில் சமபங்கைப் பெற்ருல் குடும்பம் சீர்குலை
யாது. பிள்ளைகள் மனுேபலமும் சுக சீவியமும் உடைய வர்களாக வளர்க்கப்படுவர்.

Page 18
பெண்ணின் குரல்
பெண் உரிமைய பெட்ெ
-Tilti (திருமதி) புரொமில்லா கபூர் என்னும் புகழ்பெற்ற சோஷியாலிஜிஸ்ட் * மனைவிகளைப்போட்டு அடிக்கும் கணவர்களை சட்டப்படி தண்டிக்கவேண்டும்; அவர்களுக்கு எதிராக சட்டமியற்ற வேண்டும்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிருர், 'மனைவியைஅடிப் பதை வயலன்ஸ் என்று மட்டும் சொல்ல முடியாது. அவளை அடிமையாக நடத்தி அவமானப்படுத்தும் செயல் இது!’ என்கிருர் இவர். நியாயமான கருத்து தான். அதே சமயம் தினமும் கணவனைத் தொண தொணவென்று நச்சரிக்கும்- கணவன்மீது பாத்திரங் களை வீசும்- கணவனை மாவரைக்க, துணி துவைக்கச் சொல்லித் துன்புறுத்தும் மனைவிகளை அடக்கவும் சட் டம் தேவை” என்கிழுர் தினமும் “பெட்டைக்கோழி யால் குத்தப்படும் ஒரு பரிதாபக் கணவர்
- ஸெலினி
மேலே காணப்படும் செய்தி சென்னையில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடனில் காணப்பட்டது(ஜூன் 1982) இது என் கண்ணைக் கவர்ந்த அதே சமயம் என் சிந்தனைய்ையும் துண்டிவிட்டது கணவனல் அடித்து துன்புறுத்தப்பட்டு இம்சைக்குள்ளாகும் ஒரு மனைவி யின் பரிதாப நிலைக்கு அனுதாபப்படும் ஒரு கருத்து வெளிப்பாடுஇது. இதுஒரு முக்கியஅம்சம் பெண்கள்விடு தலை வாதத்தில் பின்னிப் பிணைந்த ஒரு சமுதாய அவ லம். இக்கருத்தின் ஆசிரியர் இதற்குத் தேவையான முக்கியத்துவம் கொடுத்து அதை சீர்தூக்கி தீவிரமாக கண்டிக்கிருர், அத்தீவிரவாதத்தை எடுத்துக் கூறிய அதே வேளையில் அதற்கு விமர்சனம்கூற முற்பட்ட ஒர் ஆண் 'தினமும் கணவனைத் தொன தொணவென்று தச்சரிக்கும், கணவன் மீது பாத்திரங்களை வீசும், கண வனே மாவரைக்க, துணிதுவைக்கச் சொல்லி துன்புறுத் தும் மனைவிகளை அடக்கவும் சட்டம் தேவை என்கிருர். பெண்விடுதலை பெண்கள் உரிமை பெண் நலம் ஆகியவற்றில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஒருவர்போல அதை வெளியிட்டுவிட்டு அதே சமயம் தற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல்

f டைக் கோழியும்
அக்கோட்பாட்டைக் சிதைக்க முயல்கிருர், பின்னவர் Henpecked என்றஆங்கிலப் பலத்தைஎடுத்து ஆள்கிருர், ஒரு கேலி மனப்பான்மையுடன் இப்பிரச்சனையை எள்ளி நகையாடுகிருர், கணவனுல் துன்புறுத்தப்பட்டு அடித்து உதைத்து வீட்டைவிட்டு விரட்டப்படும் பெண்களின் தொகை எத்தனை? பெண்ணினல் அல்லது மனைவியால் துன்புறுத்தப்படும் கணவர் இருக்கிருரா என்பதே கேள்விக்குரியது!
இந்நிலையில் அதற்கும் ஒரு சட்டம் வேண்டும் என்கிருர். ஒன்றில் இவருக்கு பிரச்சனையின் தீவிரம் விளங்காமல் இருக்கவேண்டும். அல்லது விளங்கி அதனல் தாக்கப்பட்டு அத் தாக்கத்தின் பயணுக எழுந்த ஒரு தாழ்வு மனப்பான்மையால் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முயற்ச்சியாயு மிருக்கலாம். மாவரைப்பதும் துணிதுவைப்பதும் வீட்டில் மட்டும் ஏன் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்.? ஹோட்டல்களிலும் கடைகளிலும் சம்பாத்தியத்திற்கு ஆண் மக்கள் மாவரைப்பதில்லையா.? துணி துவைப்ப தில்லையா ? வண்ணுத்தியுடன் கூட வண்ணுனும் துணி துவைக்கிருன் மா அரைப்பதும் துணி துவைப்பதிலும் பயன் பெறுவது பெண்கள் மட்டும் தான? உருசியான இட்டலி, தோசை, உண்பதற்கும் தூய உடை அணிந்து சுகாதாரமாக இருப்பதற்கும் ஆண்மகன் மாவரைப்பதும் துணிதுவைப்பதிலும் ஏன் இழிவான செயலாக கருதப்படவேண்டும்? இதில் என்ன கெளரவ பிரச்சனை அடங்கியுள்ளது.? ஒயாது அல்லற் படும் காதல் துணைவிக்கு மாவரைத்தால் துணி துவைத் துக் கொடுத்தால் இல்லத்தில் வசந்தம் வீசாதா வாழ்வின் பெருஞ் சுமைகளைச் சேர்ந்து தூக்கிகினல் சந்தோஷம் மிளிராதா? பாரம் குறையாதா? ஆகபெண் விடுதலைத் தத்துவத்தின் ஒரு அம்சத்தை எடுத்துக்கூற முற்பட்ட ஒரு பத்திரிகையில் எவ்வாறு அதன் தாத் பரியத்தை குறைப்பதற்கும் கெடுப்பதற்கும் ஒரு விமர் சகர் முயலுகிருர் என்பதற்கு இது ஒரு சிறந்த உதார ணம். சிந்தனைக்காக இப்போது மக்கள் முன்வைக்கப் படும் பெண்கள் பிரச்சனைகள் எப்படி சின்ஞபின்ன மாக்கப்பட்டு அதே தாத்பரியத்துடன் அக் கொள் கைகள் (வலியுறுத்தப்படாமல்) அவர்களை போய்ச்சேரு வதில்லை என்பதற்கும் இது ஒரு சிறந்த உதாரணம்.

Page 19
18
எங்கே ெ
எங்கே செல்கின்றீர் என்னருமைச் சகோதரிகாள்!
எங்கே செல்கின்றீர்.
கொழும்பில். விடியமுன்னர் கிளம்பி எங்கே செல்கின்றீர் உதயப் பணிப் பொழுதில் ஊர்வலங்கள்
செல்வதுபோல் எங்கே செல்கின்றீர் என்னருமைச் சோதரிகாள்.
நில்லுங்கள்! கொஞ்சம்; நின்றெனது கேள்விக்கு சொல்லுங்கள் பதிலை, சொல்லிவிட்டுச் செல்லுங்கள் பாணந்துறை ரத்மலான பஸ்களிலே நின்று கொண்டும் தொங்கி வழிந்து கொண்டும் சோர்வுடனே தினமும் நீர்.
எங்கே செல்கின்றீர்? என்னருமைச் சோதரிகாள் எங்கே செல்கின்றீர்?
ஊருக்கு விடிவதின் முன் உங்களுக்கு விடிகிறதா?
இல்லாது விட்டால் இரவெல்லாம் தூக்கமின்றி 'கட்டுநாயக்கா" கம்பனிக்குள் வேலையெனக் கொட்டிக் கொடுத்து விட்டு கேட்பதற்கு நாதியற்று
எங்கே செல்கின்றீர்?
வேலைக்கா செல்கின்றீர்? வெளிநாட்டுக் கம்பனியில் வேலைகளைச் செய்வதற்கும் சேட்டுகளைத்
தைப்பதற்கும் கூலிக்கு உடலுப்பைக் கொடுப்பதற்கும் செல்கின்றீர்.
மாடாய் உழைக்கின்றீர். மறுபேச்சு எதுவுமின்றி. ஓடாகாத் தேய்ந்து உருக்குலைந்து போகின்றீர் காலை; கடுமுச்சி; கங்குல்
என நீங்கள் வேலையெனச் சென்று வியர்வை நீர் பாச்சுகிறீர். மாதமுடிவில் மடிகணக்கும்;
மறுநாளோ
ஏதும் இருக்காது. இப்படியாய் மாளுகிறீர். "கட்டுநாயக்கா" கம்பனிகள் போட்டிருக்கும் திட்டங்கள் தெரியாமல் சிரிக்கின்ற தங்கைகளே! நீதிக்கு வழக்குரைக்க நிச்சயமாய் முடியாது. வாதிடவே எண்ணி வாய்திறக்க முடியாது. வேலை நிறுத்தங்கள் வெளிநாட்டுக் கம்பனிக்குள் காலைவிடமுடியாது, கடும்சட்டம் காக்கிறது.

பெண்ணின் குரல்
O O o சல்கின்றீர்?
* புதுவை இரத்தினதுரை
“பல்தேச நிறுவனங்கள்" பங்கு வைத்து இந்நாட்டின்
செல்வருடன் சேர்ந்து சிக்கவைக்கும் பொறிக் கிடங்கில் வீழ்ந்ததறியாமல் வீதிகளில் சிரிக்கின்றீர்
உங்கள் உழைப்பெங்கள் ஊர்மனையில் சுவறவில்லை. எங்கிருந்தோ வந்த எவனெவனே தின்னுகிருன். சிலந்தி வலையினிலே. சிக்குண்டு போவதையே விளங்க முடியாமல். விடிபொழுதில் செல்லுகிறீர்.
"யப்பான் பருந்துகளும்' “அமெரிக்க கழுகுகளும்" இப்போது வந்தெங்கள் இலுப்பையிலே இருக்கிறது. எங்கள் 'வெளவால்கள்" இவைகளுடன் சேர்ந்து கொண்டு உங்களையும் இரையாக்கி . ஊர்மனையைப் பாழாக்கி. தங்கள் பெருவயிற்றின் தாகத்தைத் தீர்க்கிறது. எங்கே போகின்றீர் என்னருமைச் சோதரிகாள்.
நன்றி : குமரன்
次、鲨
ஒடத்துரத்துவோமே! மேடையிற் பெண்மையை போற்றிடும் பித்தரே விளம்பரப் பலகையில் களங்கமேன் பெண்மை? கவரிமானைக் காட்டிய நீங்கள் காசால் பெண்மையைக் கெடுப்பதென்ன? அச்சடித்த புத்தகத்தின் உச்சலாபம் மனதைத் தூண்ட இச்சையான கோலங்களில் பச்சையாகப் பெண்ணை விற்கும் அச்சமில்லா நெஞ்சுடையீர்! துகிலுரிந்து தசை காட்டி தேட்டம் தேடும் துச்சாதனர்களே! வலுப்பெற்ற உங்கள் வர்க்கப்போர்வையையுரிந்து வையம் வாழ்வு பெறுவதற்கு பெண்மையை உயர்த்தும் மக்கள் தொடுக்கும் போரில் உம்மை ஓட ஓடத்துரத்துவோமே.
உரும்பிராய் ஞானி ஜேகன்

Page 20
பெண்ணின் குரல்
"பெண்ணின் குர
பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அடிக்கடி கூடிக் கலந்துரையாடி, பொது உடன்பாடு காணக்கூடிய விடயங்களில் கூட்டு நடவடிக்கை எடுக்கும் மாதர் களின் குழுவாக, 1978 செப்தம்பர் மாத்தில் 'பெண் ணின் குரல்" (காந்தா ஹண்ட) அமைப்பு உருவாக்கப் ull-gil.
எமது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் சுருக்க மாகக் கீழே தருகின்ருேம்.
1. பெண்களின் சமூகப் பொருளாதார-அரசியல்சட்டரீதியான உரிமைகளுக்காகவும், இலங்கையின் அபிவிருத்தியில் பெண்களை முழுமையாகப் பங்குகொள் ளச் செய்வதற்கும் ஆர்ப்பாட்டஞ் செய்தல்.
2. அரசாங்கக் கொள்கைகள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு அக்கொள் கைகளை பரிசீலனை செய்தல், அரசாங்க மற்றும் தனி யார் துறைகளில் பொருளாதாரம், வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் என்பன பெண்களை எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை மதிப்பிட்டு அவற்றின் கண்ணுேட்டங்களயிட்டு எச்சரிக்கையோடும் விழிப் போடும் இருப்பதோடு, அவசியமான சந்தர்ப்பங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
3. பெண்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக நாடு முழுவதும் கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் ஒழுங்கு செய்தல், மேற்படி உரையாடல்களை நடத்து வதற்கு பெண்களின் குழுக்களுக்கும்- இயக்கங்களுக்கும் பேச்சாளர்களை அனுப்பி உதவுதல்.
4. பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளையும் கற்கைகளையும் மேற்கொண்டு அவற்றின் பெறுபேறுகளை நகர- கிராம- தோட்டப்புற மற்றும் பெண்கள் அமைப் புக்களுக்களுக்கும் விரிவாக்கல்.
5. பெண்களினது பிரச்சினைகளைப் பற்றி மாதர் களினதும் ஆண்களினதும் விழிப்புணர்வை உயர்த்து வதற்காக புத்தகங்களையும் பிரசுரங்களையும் வெளி யிடுதல், அவசியமான மொழிபெயர்ப்புக்களைச் செய் தல், வெகுஜனத் தொடர்பு சாதனங்களுக்கு கட்டுரை களையும் கருத்துக்களையும் வழங்கல்.
6. மாதர்கள் பிரச்சினைகளைப் பற்றிய “பெண் ணின் குரல்" அமைப்பின் கருத்துக்களை பெண்களின் பரந்த அணியினர் மத்தியில் கிடைக்கக்கூடிய விதத்தில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தொடர்ச்சியாக சஞ்சிகையொன்றை பிரசுரித்தல்.
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களையும் குறிக் கோள்களையும் ஏற்றுக்கொள்பவர்களுக்கு எமது அங் கத்துவம் உரித்தாகும். அங்கத்துவ சந்தா வருடம் பத்து ரூபாவாகும்.
விபரங்களுக்கு
பெண்ணின் குரல் (காந்தா ஹண்ட)
18/9, சித்ரா ஒழுங்கை, கொழும்பு-5

9
ல்" அமைப்பின்
தளை நூல் அறுந்த பட்டம்
பட்டங்கள் ஆண்டோம் சட்டங்கள் செய்தோம் பாரதி சொன்ன பெண்ணுனுேம்! - வரும் நட்டத்தில் அழுதோம் லாபத்தில் சிரித்தோம் நாயகர் வாழ்வில் பங்கானுேம்!- அவர் முட்டிட மெலிந்தோம் முறைத்திட நலிந்தோம் முன்றின் றெதிர்த்திடச் சட்டமெது?- எம்மை தட்டியே கழித்தார் எட்டியே உதைத்தார். i தளை நூல் அறுந்திட்ட பட்ட மிது
இ. விக்னேஸ்வரன் கவிதைத் தலைப்பு கவிதை ஆசிரியரதல்ல
ஐப்பசி 1982 சுடர் இதழில் மேற்கண்டசிறு கவிதை என்மனதை கவர்ந்தற்கு ஒரு காரணம் ‘தளே நூல்அறுத் திடாத பட்டமா கப் பெண்கள் தங்களை எப்படி காக்கவேண்டும் என்ற பெரிய ஒரு கேள்விக்கு நாம் விடைகாண முயன்ருல் எம் பிரச்சனைகள் பல அகல வழியுண்டு என்பதே- “தளைநூல் அறிந்திட்ட பட்ட மா' வதற்கு காரணங்கள் யாது அக் காரணங்களை இனங்கண்டு கொண்டால் அவற்றிற்குரிய விடைகளை யும் நாம் தெளிவாக்கிக்கொள்ளலாம். இக்கேள்விக்கு விடையை நான் பெண்ணின் குரல் வாசர்களுக்குவிட்டு விடுகிறேன். சிறந்தகட்டுரை அடுத்தபெண்ணின் குரவில் பிரசுரிக்கப்படும்.
-ஆசிரியர்
வானிலே பறந்திடும்
வானிலே பறந்திடும் பறவைகள் போலவே விடுதலைப் பெறவே பெண்களே ஒன்ருய்
கூட்டுங்கள் (2 (l) பெண்ணினத்தை இழிவாய் எண்ணி பேசுதல்
முறையோ (2) பிள்ளைப் பெறும் கருவியாக எண்ணுதல் முறையோ(2) பெண்கள் விடுதலை வேண்டி ஒன்று கூடுங்கள் பேரியக்கம் ஒன்றையே நடத்திக் காட்டுவோம் பெண்கள் உரிமையைத் தேடி சம உரிமையை நாடி பெண்கள் அணியமைத்தே கூலி சங்கத்தில்
சேர்ந்திடுவோம் (2) ஆண்கள் பெண்கள் இரண்டு பேரும் மனிதர்தானடி (2) ஆணுக்கு நிகராக உழைக்கின்ருேமடி, தறைந்த கூலி கொடுப்பது நியாயமாகுமோ கூலி உயர்வைக் கேட்கவே கூடுவோமடி (2) பெண்கள் உரிமையைத் தேடி சம உரிமையை நாடி பெண்கள் அணியமைத்தே கூலி சங்கத்தில்
சேர்ந்திடுவோம். நன்றி, கிராம கல்வி வளர்ச்சி முன்னேற்ற சங்கம் , அரக்கோணம், தமிழ்நாடு மதராஸ்.

Page 21
2●
புதிய விழிப்
சிகந்யா பஸ்ஹோல்ட்டை நோக்கி வேகமாக ஓடி ஞள்.
நீண்டநேர அலைச்சலில் கால்கள் வலித்தன. கை நிறையச் சாமான்கள் வேறு.மனத்திலோ இன்னெருவித
LL) fróðf 9-6ð){D
நாளை அவளைப் பெண்பார்க்க வரப் போகிருர் களாம்.
இன்று பகல் ஒபீஸ் அறையிலை மத்தியானச் சாப் பாட்டை முடிப்பதற்கு முதல் இந்தச் செய்தி அவளுக்கு இனிப்பாகத்தான் இருந்தது. ஆனல் இப்போது மிகப் பெரிய தொரு போராட்டத்துக்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். மிஸ்டர் கண்ணபிரான் சொன்னவார்த்தைகள் அவள் இதயத்தில் அறிவில் பலத்த தாக்கத்தை உண்டு பண்ணிவிட்டிருந்தது.
நாளைக்கு மாப்பிள்ளைவீட்டாருக்கு பரிமாறவேண் டியஇனிப்புவகைகள். சில உடுப்புவகைகள், சில உடுப்பு வகைகள், அலங்காரப் பொருட்கள் முதலியவற்றை வாங்கிவரும்படி அம்மா கட்டளையிட்டிருந்தாள்.
சுகந்யாவுக்கு மூத்தவளாகவோ, இளையவளாகவே பெண் சகோதரிகள் இல்லை. ஆண் சகோதரர்கள் இரு வரும் தற்சமயம் வெளிநாடுகளில். அப்பாவுக்கு இட போது முன்போல் எதையும் ஒடியாடிச் செய்ய முடி யாது. அம்மாவுக்கோ வெளியே தனியே சென்று “ஷொப்பிங்' செய்து பழக்கமில்லை.
அம்மாவின் கட்டளையில் நியாயமிருப்பதை உணர்ந்து சாமான்கள் வாங்கும் பொறுப்பை ஏற்று கொண்டாள். இதற்காக ஒபீஸில் அரைநாள் லீவுட் பெற்றுக்கொண்டாள்.
*கொள்வனவு' வேலைகள் ஒருவாறு முடிந்தபோது மாலை ஐந்து மணியை நெருங்கியது. பஸ்ஸைப்பிடித்து வீடு வந்து சேர மேலும் ஒரு டணி நேரம் கடந்தது.
வீட்டு வாசலில் அம்மாவும் அப்பாவும் பதறி கொண்டிருந்தார்கள்.
“என்னடி இவ்வளவுநேரம், ஒரு கொஞ்சச் சாமா வாங்கிறதுக்கு மத்தியானத்திலயிருந்து ரோட்டை சுத்திக்கொண்டு இருந்த நீங்களா?*
“போங்கம்மா, நீங்க ஒன்று. நாலு கடைக்குள் ஏறி இறங்கினுத் தானே நல்ல சாமால்னத் தெரி{ செடுக்க ஏலும்.'
"எண்டாலும், உப்பிடியா நேர காலமில்லாம கை
யில் ஏறியிறங்கிறது. நாளைக்குப் பொம்பிள பார்க் வரப்போகினம். தற்செயலா மாப்பிள பகுதியிலயிருந்:

பெண்ணின் குரல்
- விஜயா இளங்கோவன் —
யாரும், உன்னை ருேட்டில் கண்டிருந்தா என்ன நினேப் பினம்.”*
*அவங்கள் என்னவாவது நினைச்சிட்டுப் போகட் டும். நாளைக்கு ஆகப்போற காரியத்தைப் பாருங்க சுகந்யா வெடுக்கென உள்ளே நுழைந்தாள்.
ஏனே அவளுக்கு இப்போது இந்தப் பெண் பார்க் கும் விஷயம் பிடிக்கவில்லை.
மாப்பிள்ளை வீட்டார் ஐம்பதாயிரம் ரூபா ரொக் கமும் கொழும்பில் ஒரு வீடும் இருபது பவுணுக்குக் குறையாத நகைகளும் போதாக் குறைக்கு இருபத் தைஞ்சு ஆயிரம் ரூபா டொனேஷனும்கேட்கிருர்களாம்.
மாப்பிள்ளைக்கு என்ன தகுதி இருந்தென்ன. எது வும் சுகந்யப்ாவுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.
மத்தியானம் கண்ணபிரான் சொன்ன வார்த்தை கள் இப்போதும் அவள் நினைவுக்கு வந்து போயின. இரவும் இதே நிலை தான். தூக்கமின்றித் தவித்தாள். கண்ணபிரானும் வனிதாவும் ஜொசப்பினும் நர்ம தாவும் சியாமாளவும் கண்முன் வந்துபோனர்கள் அவர் கள் பேசிக்கொண்ட கருத்துக்கள் அவளது சிந்தனை யைத் தூண்டிவிட்டன. அன்றுபகல் சாப்பாட்டுஅறை யில் எல்லாரும் அவரவர் சாப்பாட்டுப் பார்சலைப் பிரித் துக் கொண்டிருந்தார்கள்.
கண்ணபிரான் தன்னுடைய சாப்பாட்டுத் தட்டி லிருந்த காய்கறி வகைகளை ஐந்து பெண்களுக்கும் ‘நுள்ளி நுள்ளி வைத்துக் கொண்டிருந்தார்.
கொண்டு வந்திருக்கும் சாப்பாடு அவருக்குப் போதுமோ இல்லையோ, அப்படி நுள்ளி வைத்துச் சாப்பிடுவதிலே அவருக்குத் திருப்தி.
மற்றவர்களுக்கும் அப்படி அவரிடமிருந்து வாங்கிச் சாப்பிடாவிட்டால் "பத்தியமிராது"
சாப்பாடு மட்டுமல்ல அந்த நேரத்தில் அவர்சொல் லும் பல 'விஷயங்கள்" "ரொம்பப் பிரயோசனமுள்ள" தாயும் இருக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடன் அந்நி யோன்யமாக கல்மிசமில்லாத மனத்துடன் பழகும் பாங்கும், உள்ளார்ந்த வாத்ஸல்யமும் அனேவருக்கும் பிடிக்கும்.
அதனல் தான். எவ்வளவு நேரம் ஆனலும் அவர் சாப்பாட்டு மேசைக்கு வரும் வரை மற்றவர்கள் தங்க ளுடைய 'பார்சல்' களைத் திறப்பதுகூட இல்லை.
உணவு ‘பரிமாற்றல் வேலைகள் முடிந்ததும் அவர வர்கள் தங்களுடைய சாப்பாட்டைச் சுவைக்கத் தொடங்கிஞர்கள்.

Page 22
பெண்ணின் குரல்
பேச்சு எங்கெங்கேயோ சுற்றி, திருமணம், சீத னம் ஆகிய விஷயங்களிலே வந்து நின்றது.
“சீதனப் பிரச்சினையால் எத்தனை பெண்களுடைய வாழ்க்கை பாழாகிறது சீ . இந்தச் சீதன முறைகள் எப்பதான் ஒழியுமோ நர்மதா அலுத்துக் கொண்டாள்.
"உண்மை தான் அதுவும், இந்தத் தமிழ்-இந்துக் களுக்குள்ள இந்தப் பிரச்சினை ரொம்பக்கொடூரமாகவே இருக்கு இல்லையா' ஜொஸப்பின் இப்படிக் கேட்டாள். ஒருவேளை அவர்களுடைய சமூகத்தில் சீதனமுறை ஒரு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்த வில்லையோ என் னவோ.
"அப்படிச்சொல்ல முடியாது. சீதனம் என்ற பெயரில் எவ்வளவு பெரிய ரொக்கத்தையும், நகைகளை பும் கொண்டு போறமோ அவ்வளவுக்கு எங்களுக்குப் பாதுகாப்புத் Tான். அதுமட்டுமல்லாமல் எங்களுக்கு அதுதான் கெளரவமும் கூட.
கொழுத்த சீதனத்தைக் கொடுத்து வீட்டில்ஆட்சி அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கும் சியாமளா சொன்
ஞள.
சுகந்யாவுக்கு இந்தக் கருத்து ஓரளவு பிடித்தது தான் என்ருலும் தன்னுடைய அம்மாவைச் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள். அவள் கல்யாணம் கட்டிவரும் போது “நிறையச் சீதனம்" கொண்டு வந்தாவாம். எல்லாம் அப்பாவின் அக்கா தங்கைக்குத் தான் உத விணவே அல்லாமல் அவளுடைய சொந்தக் குடும்பம் எந்த நன்மையையும் அடையவில்லை. இதைச் சற்று நினைத்துப் பார்த்தபோது அம்மாவின் மேல் சுகந்யா வுக்கு இரக்கமே மேலிட்டது.
திருமணத்தை வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமாக - தேவையாக கருதுகின்ற சமூகம் அல்லவா நம்முடையது? அதனல் தான் எவ்வளவு பெரிய கஷ் டங்களையும் அனுபவித்துக்கொண்டு, பெண்ணை மாப் பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் அக்கறைகொண் டிருந்தது. இந்த எண்ணம், இப்போதும் நம்முடைய சமூக மக்களின் குருதியோடு குருதியாய் ஒடிக்கொண்டு தானே இருக்கிறது. வனிதா இப்படிச் சொன்னர். அவர் தான் அங்குள்ள மற்ற எல்லாப் பெண்களையும் விட மூத்தவர், வயதில் மட்டுமல்ல, உத்தியோகத்திலும்,
இப்போது கண்ணபிரான் வாயைத் திறந்தார்’ “எனக்கு ஆண்பிள்ளைகள் தான் இருக்கிருர்கள். அவர் களுக்குத் திருமாண வயதுவரும்போது சீதனம்கொடுக்க முடியாது என்று தைரியமாகச்சொல்லும் பெண்களைத் தான் மருமகளாக ஏற்றுக்கொள்வேன்.
அதுமட்டுமா? இப்போது நான் ஒரு பெண் பிள்ளை யைச் சுவீகாரமெடுத்து வளர்க்கப் போகிறேன். ஏன் தெரியுமா? அந்தப் பெண்பிள்ளை சீக்கிரம் பெரியவளாகி ஒருவனேக் காதலிக்க வேணும். அப்படி அவள் காத வித்துக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்.

21
கடைசி நேரத்தில் சீதனமாகப் பணம் கொண்டுவா என்று சொன்னன் என்றல், உடனே அவள் தன்னு டைய காலில் இருக்கும் செருப்பால் அடித்துவிட்டு வரவேண்டும். அதன் பிறகு வேண்டுமென்ருல், அவ ளுக்கு நான் என்னல் முடிந்த என் சக்திக்குட்பட்ட அனைத்துப்பொருளையும் அன்பளிப்பாககக் கொடுப்பேன் ஆனல் சீதனமாக அல்ல.
திரு. கண்ணபிரான் இந்த இடத்தில் நிறுத்தினர். எல்லாரும் அவரை ஆச்சரியமாப் பார்த்தார்கள்.
என்ன, இப்படி ஆச்சரியமாய்ப் பார்க்கிறீர்கள். நீங்கள் அதாவது உங்கள் வர்க்கம் அந்தக் காலத்திலே கொஞ்சம் தைரியமாக இருந்திருந்தால் இன்று இந்தப் பிரச்சினை இப்படி வானளவு உயரத்துக்கு ஓங்கியிருக் காதே.
நியாயங்கள் பேசிய கண்ணபிரான் திரும்பவும் அதே இடத்திலேயே வந்து நின்ருர்,
இந்த வார்த்தைகள் சுகந்யாவைத் துள்ளச் செய் தன. சீ.திரு. கண்ணபிரானின் வார்த்தைகளில் தான் எவ்வளவு கருத்தோட்டம், நியாயங்கள் இருக் கின்றன. அவள் மிஸ்டர் கண்ணபிரனேயே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அந்தக் காலத்திலே பெண்ணைப் பெற்றவர். ஒரு ஆணுக்கு அவளைக்கன்னிகாதானம் செய்துவைக்கையில் பெண்ணுடன் ஒரு கால் பணத்தையும் சேர்த்துவைத்து அந்த மாப்பிள்ளையின் கையிலே தாரை வார்ப்பாராம்" அந்தக் கால்பணதானம் தான். இன்று சீதனம் என்ற பெயரில் பெண்களையும். அவர்களைப் பெற்றவர்களையும் சீரழிக்கின்றது.
இன்றைக்கிருக்கிற பெண்களாவது அறிவு பூர்வ மான சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொஞ்சம் தைரியமாக 'மாப்பிள்ளைகளையும் அவர் களைப் பெற்றவர்களையும் எதிர்த்துப் போராட வேண் டும்.
ஒரு பெண்ணுக்குத் திருமணம் அவசியம் என்ருல், ஆணுக்கு மட்டும் அது அவசியமில்லையா? சீதனத்தைக் கொடுத்தாவது திருமணத்தை முடிக்கவேண்டியதுசிவ சியம் என்ருல், சீதனம் வாங்காமலே அவனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டியது அவசியம் தான். பெண்கள் திருமணத்துக்கு முக்கியத்துவம்: கொடுக்கவில்லை என்ருல் ஆண்கள் நிச்சயமாக சீத *த்துக்கு முக்கியத்துவம், கொடுக்கமாட்டார்கள்.
ஏனென்ருல் தனக்குத் தேவை ஏற்படுகின்ற போதெல்லாம் விபசாரிகளிடம் போவதற்கும் வாழ் சிTள் முழுவதும் தனக்குப் பணிவிடைகள் செய்வதற் குத் தாதிப் பெண்களை நியமிப்பதற்கும் இந்தக்காலத் திலை அவனுடைய வருமானம் இடம் கொடுக்காது.
அவனது 'இரண்டு விதமான’ தேவைகளுக்கும் நிரந்தரமான ஒரு "சேவகியை" அவன் நிச்சயமாக

Page 23
22
எதிர்பார்க்கவே செய்வான் அப்போது அவன் தான் எதிர்பார்க்கின்ற அத்தகைய சேவகியிடம் "பணப்பெறு மதி' எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்குப்பார்க்க மாட்டான் அல்லவா?
கண்ணபிரான் சொல்லிக்கொண்டேபோஞர்.அவர வர்களுடைய பார்சல்களிலே இருந்த சாப்பாடு முழு வதும் தீர்ந்து விட்டிருந்தது.
சுகந்யாவுக்குள்ளே ஒரு "முனைப்பு" தான் ஒரு புத்தி ஜீவி செயல்வாதி என்பதைக் காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற வேகம் எழுந்தது.
இப்போது இந்த நடுஇரவில் சுகந்யா மத்தியானச் சம்பவங்களை அசை போட்டுக்கொண்டு இருந்தாள்
கேள்விகள் அவளைத் துளைத்தன. யார் இதற்குத் தீர்வு காட்ட வேண்டும்,
நாங்கள்- பெண்கள்- ஒரு தீர்மானமான முடிவை எடுக்காதவரை இந்தப் பிரச்சினைக்கு முடிவே இருக் காது. vn
ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய் சுகந்யா நிம்பதியாய் படுக்கைக்குச் சென்ருள்.
சனிக்கிழமை மாலை. பெண்பார்க்கும் படலம் சம் பிரதாயம் மீருமல் முடிவுற்றது.
"பெண்ணைப் பிடிச்சிட்டுது: சீதன விஷயங்களைப் பேசி முடிச்சால் கல்யாணத்துக்கு டேற் குறிக்கலாம்"
மாப்பிள்ளையின் அப்பா நேரடியாக விஷயத்தில் இறங்கினர்.
புரோக்கர் கந்தையா குறுக்கிட்டார்.
“நீங்க தான்கொஞ்சம் இறங்கிவர வேணும் எண்டு இவங்கள் அபிப்பிராயப்படுகிருங்கள்"
“இப்ப இருக்கிற வீட்டில் ஒரு பகுதியை தாய் தகப்பன் இரண்டு பேரும் வைச்சுகொண்டு மற்ற எல் லாப் பகுதிகளையும் பெண்ணிடபேரில் எழுதிப்போடு வாங்கள். நகை பதினைந்து பவுணும், ரொக்கமாக ஐம் பதிஞயிரமும் தருவாங்கலாம். டொனேஷன் எல்லாம் குடுக்கிறதுக்கு இப்பவசதியில்லை" புரோக்கர் கந்தையா மெதுவாக இழுத்தார்.
*மிஸ்டர் கந்தையா, நான் தீர்மானமாய்ச் சொல் லிப் போட்டுத்தான் உங்களிட்ட இந்தக் கலியாணத் தைப் பேசச் சொன்னனன். நான் சொன்னதில் ஒரு ரூபாவும் சரி, ஒரு பவுணும் சரி குறையக் கூடாது. அது மட்டுமல்ல வீடு முழுதுமே பெண்ணிட பேரில் தான் எழுதப்படவேண்டும். ܗܝ
மாப்பிள்ளையின் அப்பா கொஞ்சமும் ‘இரங்குகிற பேர் வழியாய்த் தெரியவில்லை. அவர் எப்படி இறங்கி வருவார்?

பெண்ணின் குரல்
சுகந்யாவின் அம்மாவும் உள்ளே கிசுகிசுத்து விட் டுத் திரும்பவும் வெளிப்பக்கம் சென்று அமர்ந்து வேணுமென்ருல் பதினேழுபவுண் நகைதாறம். வீட்டை முழுதும் பெண்ணிட பேரிலேயே எழுதிப் போடுறம் அதோட.
சுகந்யாவின் அப்பா வார்த்தைகளை முடிக்கவில்லை. ‘அப்பா" என்று கத்தினுள் சுகந்யா.
அதிர்ச்சியால் வாயடைத்து நின்ற அவர் திரும்பிப் பார்க்கையில்,
உள்ளேயிருந்த சுகந்யா வெளியே அறையில் இவர் கள் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த அறையில் வந்து நின்ருள்.
அம்மா, இந்தக் கலியாணத்தில் எனக்கு இஷ்ட மில்லை.""
‘ஏண்டி.." அம்மா அந்த இடத்திலேயே அவனை அதட்டினள்.
அம்மா, இப்ப எனக்குக் கல்யாணம் அவ சியமில்ல. ஏதாவது ஒரு அவசியமும் அவசரமும் இருந் தாத்தானே அவங்க கேக்கிற அநியாயத் தொகையை வீசியெறிஞ்சிட்டு அவங்களிட்ட இருக்கிற பொருளே நாங்கள் விலைக்கு வாங்க வேணும்.
மாப்பிள்ளையின் அப்பாவுக்குக் கோபத்தால் கண் கள் சிவந்தன. மாப்பிள்ளைக்காரன் தலையைக் கனிந்து கொண்டான்.
‘'நீ என்ன சுகந்யா சொல்லுருய்." அப்பா சுரத்தில் லாமல் கேட்டார்.
'பிறகென்னஅப்பா, இவ்வளவு பெரியதொகையை இவங்கள் சீதனமென்றபேரில் கொள்ளையடிக்க முயற்சிக் கிருங்களே. இந்த அளவுக்கு அவங்களிட்ட என்ன அந்தஸ்து இருக்கு! இல்ல. நான் தான் அவங்கள விட எந்த விதத்தில் குறைஞ்சிட்டன்."
மாப்பிள்ளை படிச்சிருக்கிற அளவுக்கு நானும்தான் படிச்சிருக்கிறன். அவர் ஒரு உத்தியோகம் பார்க்கிறது போல நானும் ஒரு கெளரவமான அந்தஸ்தான உத்தி யோகம் பார்க்கத் தான் செய்யிறன். அவருடைய வரு மானமும் என்னுடைய வருமானமும், அநேகமாய் ஒன் ருய்த்தான் இருக்கும் என்று நினைக்கிறன்.
கலியாணம் முடிச்சால் இரண்டு பேரும் சேர்ந்து தான் குடும்பம் நடத்தப் போறம்,
என்னுடைய குடும்பத்தின் நன்மை தீமைகளில் அவர் கலந்து கொள்கிருரோ இல்லையோ. நான் அவரு டைய கஷ்ட நஷ்டம் எல்லாத்திலயும் பங்கெடுக்கத் தான் போறன்.

Page 24
பெண்ணின் குரல்
அப்படியிருக்க நான் மட்டும் எதுக்கு ஒரு விலையை அவருக்குக் கொடுக்க வேண்டும். அந்த விலை இவ்வளவு தான் என்று அவங்கள் ஏன் நிர்ணயம் செய்யவேண் டும்.
நான் கல்யாணம் கட்டிப் போகும் போதும் ஒரு பெரிய தொகையோடுதான் போகவேணும். கல்யாணம் ஆனபிறகும் நான் உழைக்கிற உழைப்பு அவங்களுக்குத் சொந்தம் ஆகவேணும்.
ஏனம்மா இந்த அநியாயம்.
அந்தக் காலத்தில பெண்கள் ஆண்களில, தான் தங்கியிருந்தாங்க. அது மட்டுமல்லாமல், அவங்கள் தங்களைத் தாங்களாகவே பலவீனர்களாக நினைத்திருந் தாங்கள். இதனுல் தங்களுக்கு ஒரு ஆண் துணைவேண் டும். அதுக்கு தாங்கள் அவசியம் கல்யாணம் கட்டித் தான் ஆகவேண்டும் என்ற நினைச்சாங்கள். அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது. இப்ப நிலைமை மாறிட்டுது.
உதாரணமா என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உழைக்கிறன், மற்ற சில "பயங்கரச் சக்திகளிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்கிற தைரியமும், கட்டுப் பாடுடைய மனுேபக்குவமும் எனக்கு இருக்கு.
என்னுடைய இந்தத் தகுதிகளைச் சரியாக எடை போட்டு அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் வருகின்ற காலம் வரை காத்திருக்கவும். அப் படிப்பட்ட ஒரு காலம் வராதவரை அதுக்காக ஏக்க மடையாமல், வாழ்க்கையை நீரோட்டமாக அமைத் துக்கொள்ளவும். எனக்குச் சக்தியிருக்கு. எனக்குமட்டு மில்ல, என்னைப் போல பல இளம் பெண்கள் இப்ப இப்படித்தான் சிந்திக்கத் தொடங்கி, செயற்படுத்து கிற முடிவிலயும், இறங்கிட்டாங்கள் என்றவள். மாப் பிள்ளையின் அப்பாவைப் பார்த்து "குட்பை" நீங்கபோ யிட்டு வாங்க என்ருள்.
“மிஸ்டர் கந்தையா எங்கள அவமானப் படுத்துற துக்கென்றே இங்க கூட்டிக்கொண்டு வந்தியளோ, ஒ. நான் பிறகு கவனிச்சுக் கொள்ளுறன். வாடா. போக லாம்" தோளில் கிடந்த துண்டை உதறிய வண்ணம் வெளியேறினர் மாப்பிள்ளையின் அப்பா,
"ஐயோ! இதைப்போல எல்லாப் பெண்களும் செய்து முடிக்கத் துவங்கிட்டால், என்னைப் போலபணப் பேராசை பிடிச்சு தாய் தகப்பன்மார எதிர்க்கத் தைரியம் இல்லாது. இளைஞர்களுடைய கதி என்ன ஆகுமோ. ஹ"ம்."
வீட்டுக்கு வந்ததிலிருந்தே சுகந்யாவைத் தன்மனை வியாய் வரித்துக்கொண்டு, சில மணி நேரங்களில் அவ ளுடன் மனத்துக்குள் குடும்பம் நடத்திப் பார்த்த மாப் பிள்ளைக்காரன், அப்பாவையும் எதிர்க்க முடியாமல், சுகந்யாவின் ஆழமான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாமல், வெளியேறினுன்.

23
சுகந்யாவின் அப்பா உடலால் தளர்ந்து போயிருந் தாலும், மகளிடம் காணப்படுகின்ற மனேதைரியம் அவளைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் மன உறுதி கொண்டவராய் சுகந்யாவின் கரங்களைப் பிடித்து முத்த மிட்டார்.
சுகந்யாவின் அம்மா?
“அஹா. இந்தத் தைரியம் அந்தக் காலத்தில் எனக்கு வந்திருந்தால் என் அப்பா இரத்தம் சிந்தி உழைத்த உழைப்பையெல்லாம் இப்படி நாசம் பண் ணிையிருப்பேன.
"அப்பா எனக்கு அந்தக் காலத்திலேயே முப்பதா பிர ரூபா சீதனம் கொடுத்தார். கூறைக்கும் தாலிக் கும் இருபதாயிரம், ரெஜிஸ்ற்ரேசன் செலவு கலியாணச் செலவு எட்டாயிரம். மிச்சமிருக்கிற ரெண்டாயிரத் தையும் வைச்சுத் தனிக் குடித்தனம் நடத்துங்கோ. நகைகளையும், காணியையும் இவள். சரஸுக்குச் சீதன மாகக் குடுக்கத் தாருங்கோ எண்டு கழற்றினர் மாம ஞர். அப்பாவை எதிர்க்கத் தெரியாத பிள்ளையாய் ‘இவரும்" நிண்டார்.
நல்லவேலை மகள் தைரிய சாலியாய் மனதாலும் உடலாலும் வளந்திட்டா.
அந்தத் தாயுள்ளம் மகளின் முடிவுக்குக் கொடி பிடித்தது.
நன்றி வீரகேசரி.
ஆண்வழிச் சொத்துரிமை என சட்டரீதியாகப் பெண்கள் ஒதுக்கப்படுகின்றனர்; குடும்பத்தின் தேவைகளைச் சமாளிப்பவர் குடும்பம் என்பது உற் பத்தி, நுகர்வின் அமைப்பு எனக் கூறிப் பொரு ளாதார ரீதியாக அடக்கப்படுகின்றனர். சமூக அரசியல் வாழ்வில் பங்கு பற்றுவதைத் தடை செய்வது போல வீட்டுக்குரியவள் என தனிச் சொத்தாகப் புறக்கணிக்கப்பட்டு சமூகரீதியாக வும் பெண் ஒதுக்கப்படுகிருள் - எல் சல்வடோர் மாதர் சங்க அறிகையிலிருந்து,

Page 25
24
இலங்கைப் பெண்களின்
ஒரு புதிய
உணர்ச்சி பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் கட் டப்பட்டு தடுக்கப்பட்டுக் கிடந்த பெண்ணினம் தற் போது வீறு கொண்டு தம் உரிமைக்கு போராட முன் வந்தது எமது வரலாற்றின் ஒரு புது அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளது. ஜாஎலவில் பொலிடெக்ஸ் தொழிற்சாலையில் 800 பெண்தொழிலாளர்கள்தொழிற் சங்கரீதியாக ஒற்றுமையுடனும் மனத்திண்மையுடன் தமது கோரிக்கைகளே முன் வைத்து முதலாளி வர்க் கத்துடன் தொடுத்த உரிமைப் போர் வெற்றியடைந் தது நடக்கப்போகும் ஏனைய பல போராட்டங்களுக்கு ஒரு முன்னுேடியாகவும் உதாரணமாகவும் அமைந்துள் ளது. இச்செய்தியின் வரலாற்று முக்கியத்துவம் பல தாற்பரியங்களை உள்ளடக்கி உள்ளது என்பதும். குவிப்பிடத்தக்கது. பெண்ணுனவள் குட்டக் குட்டக் குனி1ைாள் அடக்கி ஆளலாம் தன் உரிமைகளை பற்றி ஒரு போதும் வாய் திறக்கமாட்டாள் தன் (தொழில்) கடமைகளைப் பற்றியே கண்ணும் கருத்துமாக இருப் பாள் தொழில் சங்கங்களில் அங்கத்துவம் வகிக்க மாட்டாள் முதலாளிகள் கைப்பொம்மையாக வாய் மூடி மெளனியாக இருப்பாள் என்ற பல காரணங்களை முன்வைத்து சுதந்திர வர்த்தக வலைய பண முதலீட்டு முதலாளிகள் பெண்களையே தங்கள் கொம்பனிகளிலும் ஆலைகளிலும் வேலைக்கமர்த்தியிருக்கிறர்கள்.அவர்களது கணிப்பு தவறனது பிழையானது. தொழிலாள வர்க்கம் ஆணுலும் பெண்ணுலும் ஒடுக்கப்பட்டால் அடக்கப் பட்டால் அநீதி இழைக்கப்பட்டால் உரிமைகள் பறிக் கப்பட்டால் ஒன்றுபட்டு தன் உரிமைப் போராட்
 

பெண்ணின் குரல் தொழிற்சங்க ஈடுபாடு
அத்தியாயம் --செல்வி திருச்சந்திரன்
டத்தை தொடங்கியே தீரும். மனித உணர்ச்சிகளை ட்லகாலம் ஒடுக்கமுடியாது. வரலாற்றில் நடந்தபெரும் புரட்சிகள் இதற்குச் சான்று. பெண்ணினத்தையும்கூட இனி அடக்கி ஒடுக்கி அநீதி இழைக்க முடியாது என்ப தற்கு வட இலங்கை நடப்புகளும் சான்று தருகின்றன.
புன்னலைக் கட்டுவன் மத்தளோடை கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் 20-4-83ல் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்திலும் ஆர்ப்பாட்ட ஊர் வலத்திலும் ஈடுபட்டார்கள்.
நாட் கூலியாக வழங்கப்படும் ரூபா 12ஐ ரூபா 15 ஆக உயர்த்த வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. வானளவு உயரும் வாழ்க்கைச் செலவை நோக்கும்போது இதுஒரு நியாயமான கோரிக்கை. கிரா மிய உழைப்பாளர் சங்கம் (Rural Libourcrs Union இந்த போராட்டத்தை நடத்தியது.
"எமது நியாயமான போராட்டம் பணவெறியும் சாதித்திமிரும் கொண்ட ஒரு சிலரின் உள்ளத்திலே நெருப்பைக்கொட்டியது. அடங்கி ஒடுங்கி அடி : மகளாக வாழ்ந்த நாங்கள் துன்புறுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் இதுவரை காலமும் வாழ்ந்து வந்த நாங்கள் இனியும் இந்த இழிநிலை எமக்குவேண்டாம். நாமும் மானம் உள்ள மனிதர்களைபோல தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற உணர்வை பெற்று ஒர் அணியில் திரண்டுநிற்கும் காட்சியை எம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துட வர்கள் பொறுத்துக்கொள்ள முடியவில்லை' என்று அவர்கள் கூறுவது நியாயமான உள்ள க் கிடக்கை மூன்றே ரூபாய் உயர்த்துங்கள் என்று கேட்பதற்கு கூடவா போராட்டம் தேவை? வேலைநிறுத்தம் தேவை? ஊர்வலம் தேவை? என்னே இழி நிலை! மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமக்குள்ளே இக்கேள்வியை எழுப்பிச் சிந்தனையைத் தூண்டவேண்டும்.ஆண்டாண்டு தோறும் உழைப்பை நல்கி மண்ணை செழிப்பாக்கி பயிரை செழிப்பாக வளரச் செய்து பணப் பையைக் கொழுக்கச் செய்த இவ் அப்பாவி மக்களுக்கு வாழ்க் கைச் செலவு உயர்வை முன்னிட்டு 3 ரூபாய் கூட்டிக் கொடுக்க மனம் வரவில்லையே! நிலம் அற்று நல்ல வீட்டு வசதியற்று வாழ்க்கைக்கு தேவையான அத்தியா வசிய தேவைகள் நிராகரிக்கப்பட்டு அடிமைகளாக கேவலமான வாழ்க்கை வாழ்ந்து வரும் இத்தொழிலா ளப் பெண்களுக்கு இக்குறைந்த சம்பள உயர்வைவழங்கு
(27 ஆம் பக்கம் பார்க்க)

Page 26
பெண்ணின் குரல்
ராஜம் கிரு பெண் விடுத
அண்மையில் இலங்கையில் நடந்த பாரதி நூற் இங்கு வந்த ராஜம் கிருஷ்ணனுடன் பெண் விடுதலை6 பெண் விடுதலையின் பல பரிமாணங்களையும் அதன் பூர னிடமிருந்தும் இவ்வளவு தர்க்க ரீதியான விளக்கங்களு
திரிபு மயக்க பேதமின்றி தெளிவான கருத்துக்க நாவல்களிலும் பெண் விடுதலைக்கு முக்கியத்துவம் ெ பெண்ணின் பேதமையையும் கண்டிக்கிருர், அவரது யிடுவதில் பெருமையடைகிறது.
லகெங்கும் பெண்களுக்கான சிறப்பாண்டு கொண்டாடப் பெற்றது.
இந்நிலையில் பெண்விடுதலை, முன்னேற்றக்கிளர்ச்சி என்ற குரல்கள் நம்மிடையே ஒலித்தாலும், பெண் னின் மேன்மை, கொண்ட ஆணின் காலடிகளையோ, காலணிகளையோ சந்நிதானமாகப் பாவிப்பதில்தான் இருக்கிறது என்ற மாதிரியான வசனங்களையும் கருத் துக்களேயும் கொண்ட தமிழ்நாடகங்களும், கதைகளும் வெற்றிகரமாகவே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின் நன! தமிழ் நாட்டின் விசித்திரம் இதுதான்.
சில வருடங்கட்கு முன் தமிழிலக்கியத் துறையில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதாகக் கூறிக்கொண்டு ஒரு இளம் இலக்கிய ஆசிரியை என்னிடம் வந்தாள். கடந்த கால் (அல்லது அரை?) நூற்ருண்டு காலத்தில் தமிழ்ப் பெண் எழுத்தாளரின் கருத்து முன்னேற்றம் எந்த அளவில் வளர்ச்சி பெற்றிருக்கிறதென்று ஆராய் வதாக அவள் கூறினுள். படைப்பிலக்கியத் துறையில் மரபுகளைத் தகர்த்துக்கொண்டு புதுமை புரிய வேண் டும் என்ற தீவிரத்துடன் முன்னணியில் நிற்கும் அந் தப் பெண்ணுடன் உரையாடியதில் எனக்கு ஒரு சிறிது அவளுடைய நோக்கம் புரிந்தது. பெண்கள் பெரும்பா லும் குடும்ப வாழ்வைச் சார்ந்தே இலக்கியம் படைக் கின்றனர். இவர்கள் தொன்றுதொட்டு வந்த குடும்ட மரபுகளைத் தகர்க்கும் வண்ணம் ஏதேனும் எழுதியிருக் கின்றனரா. பெண் ஆணுக்கு நிகராக உணச் சி வரம்பு களை மீறும் சலுகைகளை, வாழ்வில் பெறுவதற்கு உரிமை வேண்டி எழுத்தில் குரல் கொடுத்திருக்கின்ற னரா என்ற நோக்கில் தான் ஆராய்ச்சி செய்கிருளோ

25
ஷ்ணனின்
ருண்டு விழாவில் பங்குகொள்ள இந்தியாவில் இருந்து யைப் பற்றி பல கருத்துப் பரிமாறல்களை நடத்தினேன் ண விளக்கங்களையும் நான் வேறு எந்த தமிழ்ப் பெண் ருடன் கேட்கவில்லை.
களை மிக ஆணித்தரமாக எடுத்துக் கூறிய அவர் தனது
காடுத்து கதாபாத்திரங்களை உலவ விட்டிருக்கிருர் .
கருத்துக்கள் சிலவற்றைப் பெண்ணின் குரல் வெளி
- ஆசிரியர்
அதைத்தான் கருத்து முன்னேற்றம் என்று கருது கிருளோ என்று ஐயுற்றேன். உண்மையில் ஒரு பெண் கணவன் என்ற மரபை, அநியாயங்களுக்காகவும் பொறுக்காமல் உடைத்தெறிய வாழ்வில் தயாராக இருக்கும்போது. எழுத்தில் மட்டும் கட்டுபாடற்ற வாழ்க்கையை ஏன் எழுதக் கூடாது என்று கேட்டாள்.
மரபுகளை உடைத்தெறிய வேண்டும் என்ற கிளார்ச்சியும், கிளர்ச்சி வசப்பட்டுச் செயலாக்குவதும் விளைவைப் பற்றிக் கருத இடம் கொடுப்பதில்லை. எந்தப் பெண்ணும். எந்த ஆணும், வாலிபப் பருவத்தில் கிளர்ச்சி வசப்படுவது இயற்கை. ஆனல், பொறுப்பு ணர்வை இழந்துவிடுவதனல், வெறும் ஆவேசமும் நெறி மீறலும் எந்த அழகையும் சமைத்துவிட முடி யாது. மரபுகளை உடைப்பது மட்டும் புதுமையல்ல ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் வழக்கங் களைத் தடங்கல்கள் என்று உடைக்கவேண்டுமானல், அதைக் காட்டிலும் ஓர் அழகை, நன்மையை, மேன் மையாக் காட்டினுல்தான் மரபுகளை உடைத்த பலன் முழுமையாகக் கிடைக்கிறது. இன்று அரசியலிலிருந்து சமுதாயம்வரை, கிளர்ச்சிக் குரல் ஆங்காங்கு ஒலிக் கிறது. “பெண் விடுதலை" என்பது ஒரு சிக்கலான பிரச்னை, மேலை நாடுகளில் எழுப்பியுள்ள இயக்கத்தைக் குறிப்பிட்டு என்னிடம் பலர் கருத்து வேண்டியதுண்டு.
இந்த விடுதலை, இலக்கிய ஆசிரியையான என்னு டைய இளம் தோழி கருதுவதைப்போல் பெண் ஆணைப் போன்று வாழ உரிமை கேட்பதில்தான் அடங்கியிருப் பதாக உணர்த்தப்படுகிறது. அங்கே பெண்ணுக்குத் தனித்தன்மை பெயரளவில் கூட அளிக்கப்படவில்லை! உடலழகுக்கும், கவர்ச்சிக்குமே ஒரு பெண் அங்கு சிறப்

Page 27
26
பிக்கப் பெறுகிருள். இந்நாட்டில் பெண்ணைத் தாய் என்றே சிறப்பித்து வந்திருக்கின்றனர். ஆனல், இன்று! உடலின்பத்தை நோக்கமாகக் கருதி உடைமைப் பொருள்களாகக்கொள்ளும் செல்வரை அண்டி வாழ்ந்த மகளிரைத் தாழ்ந்தவராக மதித்த சமுதாயப் பண்பு மாறிவிட்டது. குல மகளிரே இன்பத்துக்காக வாழ லாம் என்ற அளவில் மதிப்பீடுகள் மாறிவிட்டன. எங் கெங்கோ எப்படியெல்லாமோ இலை மறைவு காய்மறை வாக இருந்த பாலுறவுக் கருத்துக்களை, போர்வைகளை நீக்கி விட்டுப் பச்சை நிறத்தைக் காட்சிக்கு வைப்பது போல் எழுத்தோவியங்களும் படங்களும்வெளியாகின் றன.
வாழ்விலும் கலையிலும் இது கூச்சங்களில்லாத உண்மை. விடுதலை என்ற புதுக்கருத்தைத் தோற்று விக்கின்றனர். இவ்வகையில் பெண்மையின் ஆற்றல் பெருமளவில் வெறும் விளம்பரக் கவர்ச்சிக்காகப் பயன் படுத்தப் பெறுவது வருந்தத்தக்கஉண்மையாகும்
ஆண்டாண்டுக் காலமாக அடுக்களையோடு முடங் கிக் கிடந்த பெண் புத்துணர்வு பெற விழித்தது உண் மையே ஆனல் பொருளாதார சமத்துவமும், உயர் கல்வியும் பெற்ற பெண்சமுதாயத்தில் உண்மையிலேயே ஏற்றம் கண்டிருக்கிருளா ? இல்லை என்றே கூறவேண் டும். ஒரே இலக்கில் குவியும் இரசனையும், அதற்குத் தீனிபோடும் நடப்புக்களும் பெண்ணின் மேலாம் செல் வத்தை அற்பங்களுக்கெல்லாம் கூட விலையாகக்கேட் கும் அளவுக்கு சமுதாயத்தில் இழிநிலையைத் தோற்று வித்திருக்கிறது. வரம்பற்ற வாழ்வே விடுதலை என்று
N
S. W
 
 
 

பெண்ணின் குரல்
மேல்நாட்டு நாகரிகமாக இறக்குமதியான கருத்து. பெண்ணை இன்னமும் பந்தங்களால் பிணித்து அவளு டைய உள்ளொளியைச் சூறையாடக் கூடும் என்ற முன்னுணர்வைக்கூடப் பொருட்படுத்தாமல் வலுவடை கிறது. இதற்கேற்ப சமுதாயத்தின் சாபக்கேடுகளாய் “வரதட்சிணை போன்ற கொடிய பழக்கங்கள் நிலை மையை அவலமாக்கத் துணைசெய்கின்றன. விலைவாசி விஷமாக ஏறும் இந்நாட்களில் மாப்பிள்ளைகளுக்கும் கருஞ்சந்தை கிராக்கிகள் இருக்கின்றன.
தடுப்புகள் இல்லாத அலுவலகச் சந்தைகளில் வாழ் வுக்கு வேண்டிய பொருள் வரம்பை எட்ட வேலைக்கு வரும் பெண்கள், பொருள் வரம்பை எட்டுமுன்கிளர்ச் சிக்கு இரையாகும் வாய்ப்புக்கள் எண்ணற்றவை. இவ் வகையில் பெண்ணுக்கு இயற்கையும் சமுதாயமும் தண்டனை அளிக்கின்றன. இந்நாளைய இளைஞர்கள் பொறுப்பற்ற வாழ்க்கை நடத்துவதற்கும் இதுவே துணையாகிறது.
பெண் உண்மையான விழிப்பெய்தவேண்டுமானல், தான் வெறும் போகத்துக்கான சின்னமல்ல என்று னர்ந்து உறுதியுடன் செயல்படவேண்டும், பெண் னின் விடுதலையும் சிறப்பும் தன் உடற்கவர்ச்சிக்கப் பால்தான் இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண் ணும் உணரவேண்டும். அப்படி உணர்ந்தால் தான் எய்தியிருப்பது மேன்மையா, இழிநிலையா என்று புலப் படும்.
மிக அதிகமாகப்பேசப்படும் ஒரு சமுதாயம் சார்ந்த கருத்து, "பெண் விடுதலை" என்ருல் தவறில்லை பெண் கல்வி பயில வேண்டும், பொருளாதார சுதந் தரம் பெற வேண்டும் என்ற குரல் ஐம். தாண்டுகளுக்கு முன்பிருந்தே ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தாய்க்குலம், அன்னே" தேவி, என்று அவன் இயல்பைக் குறியாக்கிச் செய்யும் "பூசனை'களும் சமயம் சார்ந்து உரத்த குரலில் முழங்கப்பெறுகிறது. இதே குரலோடு அன்ருட வாழ்வில் மோதும் பிரச் னைகளுக்குத் தீனியாக, பிறப் பைக் குறையுங்கள்! தாய்மை வேண்டாம்; 26یت( லது தள்ளிப் போடுங்கள்! உங்களை நன்ருக அழகு செய்துகொள்ளுங்கள்! கண்கவர் வண்ணங்கள். அச்சுக்கள், பூவேலைகள் அமை ந்த உடைகளைப் பாருங்கள்! எந்த நேரத் திலும் எந்த இடத்திலும் எந்தப் பருவத்தி லும் உல்லாசமாகக் களிக்கலாம் என்று கவர்ச்சிகளை வாரி இறைத்துச் சக்தி வாய்ந்த சாதனங்களை ஒரே முகமாகத் திருப்பிவிடும்
நடப்புக்கள். அவசியமான கட்டுப்பாடுகள்.
ஆணுக்குச் சகல வாய்ப்புக்களையும் அளிக் கும் சலுசைசளாக உதவி புரிகின்றன,

Page 28
பெண்ணின் குரல்
இளமையில் தந்தை; பின்னர் கொண்டவன்; முது மையில் மகன் என்ற மரபு அப்படியே பாதுகாக்கப் படும் வகையில் பெண் மனம் போற்றி வளர்க்கப்படு கிறது. ஆனல், போற்றக் கடமைப்பட்டவளை எந்த விதத்திலும் அந்த மரபு பாதிப்பதில்லை. அவள் ஏழ ரைமணிக்குள் சமைத்து முடித்து. பிள்ளைகளையும் கொண்டவனையும் பேணி, போக்குவரத்து நெரிசலில் "கற்பெனும் மரபுக்குப் பங்கம் வராமல் தப்பி, அலு வலகத்தில் இன்னெரு அல்லது பல மேலாளர்களிடம் அடிமை வேலை செய்து பொருளிட்டி வந்து, வீட்டுமேலா ளரிடம் கொடுப்பதில் எந்தப் பண்புக்குறைவும் ஆணை ஒட்டுவதில்லை. கல்லானலும் கணவன் புல்லானலும். புருஷன் என்ற மாதிரியான பழமொழிகள் எந்தச் சந்தர்ப்பத்திலும்அவன் உரிமையை நிலைநாட்டுகின்றன
உண்மையில் "பெண் விடுதலை" என்று ஒன்று சாத் தியமா? சாத்தியமானல் அது எவ்வாறு சாத்தியமா கக்கடும்?
“ஒரு பெண்ணின் உடற்கூறியலே அவளுக்குமுதல் பகையாகிறது. அவள் விடுதலை பெற முடியாதென்ப தற்கு அதுவே காரணம் என்று எங்கோ கேள்விபட்ட மொழிகள் சிந்தையைத் தட்டுகின்றன. தாயைப் போற்று" "பராசக்தியே லோகமாதா” என்ற போற்று தல் எவ்வாறு எழுந்திருக்கும்?
உலகில் மக்கட்குலம் அதிகமாகப் பெருக வேண்டும் என்ற நிலை இருந்த காலத்தில் பெண்ணே மக்களைப் பெற்று சமுதாயத்துக்கு அளிக்கக் கூடிய சிறப்பைப் பெற்றிருப்பதை உணர்ந்து தோற்றுவிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது. அவளுடைய சிறப்பியல்புகளனைத்தும் இந்த உடற்கூறியச் சார்ந்தே அமைந்திருக்கின்றன என்ருல் தவறில்லை. இதனுலே பெண்ணைப்போற்றினர் கள் அவளைப் புகழ்ந்தார்கள் உயிர்க்குலத்துக்கு உண வளிக்கும் மண்ணையும் நீரையும்கூடப் பெண்ணுக்கிச் சிறப்பித்தார்கள். அந்நாளில் பெண் ஒருத்தனுக்கு மட் டுமே இன்பமளிக்கும் உடமைப் பொருளாக இருந்தி ருக்கவில்லை என்றறிகிருேம்,
பின்னர், மண்ணை உடமையாக்கிக் கொண்டாற் போல், மக்கள் சமுதாயம் ஒரு குறிப்பிட்ட இனம், வமிசம் என்றுதான் பெருக வேண்டும் என்ற பாகு பாடுகள் வந்த பிறகு, பெண் வேருெரு வமிசத்தானின் சத்ததிகளைப் பெருக்கி விடுவாள் என்ற அச்சத்தில்அவளை அடக்கி ஒடுக்கப் பல தடைகளை நிலை நிறுத்தினர்கள். சதி, கைம்பெண், குழந்தை மணம் எல்லாம் இதன் விளைவுகளே என்று கொள்ளலாம். பெண்கள் போகக் கருவிகளாகப் பெருமளவுக்குக் கருதப்படவும் வாய்ப் புக்கள் வந்துவிட்டன. அதற்கென்று தனிச் சமுதா யமே அனுமதிக்கப்பட்டது. மனித ஒழுக்கத்தை அறி வுறுத்தும் சமயங்களும் இதை ஆமோதிக்கின்றன.
இந்த அம்சங்களில் ஒன்றையேனும் கூட வேரனுக் காமல், பெண் விடுதலையைப்பற்றித் தம்பட்டம் கொட்டி வருவதையே இந்நாளில் பார்க்கிருேம். குடும் பத்தை உடைக்க வேண்டும் என்று சொல்லி அதீத விடுதலையைக் கனவுகாணும் பெண்களும், குடும்ப வாழ்வு சாத்தியமில்லாமல் வறுமையில் உழலும் பெண் களும் பாதுகாப்பற்று, பயங்கர விளைவுகளில் முடி வதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. பட்டங்களும் சட்டங்களும் ஒரு பெண்ணுக்கு எந்தப்பாதுகாப்பையும்

27
அளித்துவிடவில்லை. திருமணம் செய்து கொள்வதை அவள் விருப்பப்படி அன்றி ஒரு சமுதாயப் பாதுகாப் பின் நிர்ப்பந்தமாக ஏற்கவேண்டியிருக்கிறது. அவள் தாய்மைப் பொறுப்பை ஏற்பது பற்றிய சுதந்திரம் அவளுக்கு இல்லை. திருமணம் என்ற பெயரிலும் ‘கற் பழிப்பு நிகழ்வதாகவே சொல்லலாம். அவள் சுமப்ப தையும், குடும்பக்கட்டுக்காகச் சுமையை நிறுத்திக் கொள்வதையும் பற்றித் தீர்மானிக்க அவளுக்கு உரிமை இல்லை திருமண அமைப்புக்குள்ளேயே சுதந்திரம் இந்த வகையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போது, அந்த அமைப்புக்குள் வராமலே அவள் சுமை சுமக்க நேரும் போது அந்த அவலத்தை விவரிக்கத் தேவையில்லை. இத்தகைய பொத்தல்களை வைத்துக்கொண்டு எல் லோரும் பெண்விடுதலை பற்றித் தம்பட்டம் அடிப்ப தையே பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கிருேம்.
அன்றைய நிலையிலிருந்து முற்றிலும் மாறிவிட்ட சமுதாயப் பொருளாதார நெருக்கடிகளில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிழுேம். பெண்விடுதலை அவளு டைய உடற்கூறியல், தாய்மை இயல்புகளை முக்கியத்து வமாகக் கொண்டிருப்பதை உணர்ந்து ஏற்று அது சமு தாயத்தின் ஆணிவேரான பந்தம் போன்றது என்பதை வலியுறுத்தி, சட்டங்களும் நியதிகளும் மாற்றப்பட வேண்டும் இது ஆணின் ஏகபோக உரிமைப்ாேக்கட்டுப் படுத்தும். சமய ஒப்புதலோடு வேரூன்றிவிட்ட வழக் கங்களைக் கெல்லி எறிவதாக இருக்கும்.
இலங்கைப் பெண்களின் . . . . (24ஆம் பக்கத் தொடர்)
வதால் பணக்கார விவசாயிகளுக்கு என்னதான் குறைந்து விடப்போகிறது?
மு ற் போ க் குச் சக்திகள் பல தங்கள் ஒத்துழைப்பை வழங்க முன்வந்தது வரவேற்க தக்கது. இனங்களுக்கிடேயிலான நீதிக்கும் சமத்துவத் துக்குமான இயக்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, (இடது) தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி, ஈழமக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி, மனித முன் னேற்ற நிலையம் போன்றன, பூரண ஒத்துழைப்பை நல்கிப் பல கூட்டுத்தீர்மானங்களை எடுத்தன. வேறு பல இயக்கங்களையும் சேர்த்து பத்திரிகை அறிக்கைகள்விட்டு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அரசியல் ஸ்தாபனங்களையும் தொழிற்சங்கங்களையும் உள்ளடக் கிய பாரிய மகா நாடொன்றைக் கூட்டி சமாதான முறையில் கருத்தரங்குகள் நடத்தி இப்போரட்டத்தை சுமுகமாகத் தீர்த் து வைப்பதே இத்தீர்மானங்களின் சாராம்சம். இவையாவும் பயனற்றுப்போயின் சத்தியாக் கிரகம் நடத்துதல் எனத் தீர்மானிக்கப்பட்டது பெண் ணின் குரல் இப்பெண்களின் உரிமை போராட்ட த்துக்கு பேராதரவு நல்கி இப்போராட்டம் தொழிலாள உரிமை கள் கோருவது என்ற கோணத்திலேயே பரிசீலிக்கப்பட வேண்டுமேயன்றி தேவையற்ற சாதிப்பிரிவுக்கிடை யிலான போராட்டமாக மாற்றி அடிதடி கொலைஎன்ற ரீதியில் போய் அவல நிலையை அடையக் கூடாது. என்று வற்புறுத்துகிறது அவர்கள் கோரி நிற்கும் சம்பள உயர்வு அவர்களுக்கு கிட்டவேண்டும் என்று நல்லாசியும் நல்வாழ்த்தும் நல்கும் பெண்ணின் குரல் வேண்டிய உதவியும் செய்ய முன்வருகிறது.

Page 29
28
கலை, இலக்கியத்துறை சார்ந்த பெண்களுக்கென
ஒர் அமைப்பு
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைை கொளுத்துவோம், என குரல்எழுப்பி பெண் விடுதலை சமுதாயத்தில் வித்திடவேண்டும் என்ற மகாகவி ப தியின் நூற்றுண்டு விழாவின் மூன்ரும் கட்ட நிகழ் களை நடத்திய இலங்கை முற்போக்கு எழுத்தா6 சங்கம், பாரதி யின் மேற்குறித்த சிந்தனைகளு ஸ்தாபனரீதியில் வடிவம் கொடுக்கவென தலைநக! கலை இலக்கிய மாதர் குழுவொன்றை அங்குரா பணம் செய்து வைத்துள்ளது.
இலங்கையில், தற்பொழுது கலை இலக்கி துறையில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு காத் மான பங்களிப்பை நல்கி வருவதை அறிகிருே புனைகதையாளர், விமர்சகர்கள், நடனக்கலைஞர்: மற்றும் புதுக் கவிதை கவிஞர்கள் பலர் பெண்க மத்தியில் உருவாவது ஆரோக்கியமான வளர்ச்சிஎன் சொல்ல வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் இ. மு. எ. ச. மாதர்களுக்கெ அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ள கலை இலக்கி குழு பின்வரும் நோக்கங்களை முன்வைத்து பரவல சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்திருப்பத அறிகிருேம்,
இவைதான் குறித்த நோக்கங்கள்:- (அ) பெண்களுடைய கலை, இலக்கியமுயற்சிகளு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது.
(ஆ) பொதுவாக மாதர்களைப் பாதிக்கும்பிரச்சி களுக்குத் தீர்வுகாண முயற்சிப்பது
(இ) பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை : படுத்துவது.
(ஈ) பெண்களது உயந்த கலை இலக்கிய ரசனை வளர்ப்பதற்கு ஊக்கப்படுத்துவதோடு மட்டரகமா படைப்புகளுக்கு எதிராகச் செயலாற்றல்.
(உ) பெண்களின் சமத்துவத்தையும் உரிமை யும் முன்னேற்றத்தையும் ஈட்டுவதற்கான முய களில் ஈடுபடுதல்.
இக்குழுவில் கலை, இலக்கிய, பத்திரிகை, வாஞெ முதலிய துறைகளில் ஈடுபாடுள்ள குறித்த துறைகள் பணியாற்றும் சிலர் அங்கம் வகிக்கின்றனர்.
மாதர்களுக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள இ மைப்பு தனதுநோக்கங்களை முன்னெடுத்துச்செல்வத ஏற்றவாறு திட்டங்களை வகுத்து செயல்படவேண் என்று வாழ்த்தும் அதே சமயம் இலங்கையில் உ6 இத்துறைகள் சார்ந்த பெண்கள இவ்வமைப்ட வளர்ச்சிக்கு தம்மாலான பங்களிப்பை நல்குவத தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்க விரும்புகிருேம்.
தொடர்பு முகவரி;- கலை, இலக்கிய மாதர் கு இ. மு. எ. ச. 215, ஜி 1/1, பார்க்ரோட், கொழும்பு-5

tid
| IS
க்கு
ટફ્રor.
ஏற்:
f69r
ற்சி
fiaiv
ய்வ ற்கு டும்
ᎢᎧnt ன் ற்கு பும்
பெண்ணின் குரல்
வவுனியாவில் பெண் எழுச்சி
பெண்ணின் குரல் தனித்து ஒலித்துக்கொண்டுஇருந் தது. சென்ற மாதம் பெண் எழுச்சியும் சேர்ந்துகொண் டது இதை நாம் வரவேற்கிருேம். பெண் குலத்தின் இன்னல்களையும் பொருளாதார அரசியல் மட்டங்களில் அலசி ஆராய்வதும் அதே சமயம் பிரச்சனைகளை உணர்ச்சி பூர்வமாக அணுகாமல் தீர்த்து வைக்கும் எண்ணத்தை குறிக்கோளாகக்கொண்டு பெண்ணின் குரல் கடந்த சில காலமாக தனிக்கொடி நாட்டிநின் றது. வவுனியாவில் இருந்து சென்றமாதம் வெளியான பெண் எழுச்சியின் இரண்டு பிரதிகளிலேயே பெண்ணி னத்தை ஆட்டிப் படைக்கும் ஆணினத்தின் அதிகார வெறியினல் அல்லற்பட்டு சுயமரியாதை இழந்து ஆவி
துடித்து நிற்கும் பெண்ணின் பிரச்சனைகளை இனங்
கண்டு விட்டார்கள் என்று துணிந்து கூறிவிடலாம்.
'விளம்பரத்தில் பெண் வியாபாரத்தில் பெண் விலை போவதிலே பெண் அனைத்து ஏமாற்று நடவடிக்கை களிலும் பெண்களைப் பயன்படுத்தி உழைக்கின்றது ஒரு
கூட்டம் "சீதனம் கேட்டுக் கணவன் தாக்கிருர் இளம்
பெண் தற்கொலை கணவன் கைவிட்டதினுல் தானும் தனது குழந்தைகளும் வறுமையிலே வாழமுடியாது இளம் பெண் தற்கொலை காதலித்தவன் ஏமாற்றிய தால் இளம் பெண் தற்கொலை பெண் தனித்து இயங்க முடியாத நிலை" என்று கூறி சமூகத்தில் எங்கே நாக ரீகம்? என்று நியாயமான கேள்விகளை எழுப்பு: பெண் எழுச்சி இதற்கு நாம் யாது செய்யவேண்டும் என்றும் திட்டமிடவேண்டும்.
கோழைகள் போல ஏன் இப்பெண்மணிகள் தற் கொலையை நாடவேண்டும்? அடித்து உதைக்கும் கன வனையும் கைவிட்ட காதலனையும் எண்ணிக் கலங்கி ஏன் உயிரை விடவேண்டும். முதலில் பெண்கள் இக் கையா லாகாத மனப்பான்மையிலிருந்து, விடுபடவேண்டும். தன புராணக் கருத்துக்களில் இருந்து விடுபட்டு தர்க்க ரீதியாக மானிட வர்க்கத்துக்கே உரிய உரிமைகளைத் தட்டி பறிக்கும் மூட ஜன்மங்களை எட்டி உதைத்து தள்ளிவிட்டு நேர்மை நன்னெஞ்சுடன் வாழ்வில் முன் னேக்கி ஏறு நடைபோட தங்களைத் தாங்களே பழகிக் கொள்ளவேண்டும். முதலில் இந்த ம ன ப் பான்மை தோன்றவேண்டும் அடுத்த படியாகப் பொருளாதாரச் சுதந்திரம் தேவை.
பொருளாதாரச் சுதந்திரம் நமக்கு ஒருபோதும் கிடையாது என்ற மனப்போக்கினலேயே பெண் தற் கொலையை நாடுகிருள். இப்பொருளாதாரச் சுதந்தி ரத்திற்கு தேவையான அத்தியாவசிய பயிற்சியையும் பண உதவியையும் எம் போன்ற பெண்ணியக்கங்கள் அமைத்துத்தர வேண்டும்.
இதற்கு பெண் எழுச்சியும் பெண்ணின்குரலும் ஆவன செய்ய வேண்டும். இது போன்ற அபலைப் பெண்களை எம்முடன் தொடர்பு கொள்ளச் செய்தல் வேண்டும்.

Page 30
பெண்ணின் குரல் 5 tes 禹 189 சித்திரா ஒழுங்கை
N கிருல்ல வீதி ஊடாக
கொழும்பு-5.
雕 P_6T5TL, SID
பக்கம் சஞதிபதித் தேர்தல் அபேட்சகர்களுக்கு பெண்ணின் குரல் விடுத்த கோரிக்கைகள் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பின்னணியில் பாரதியாரும் பெண் விடுதலேயும்
- சிரோன்மணி இராஜரத்தினம்
பெண்கள் விடுதலே பற்றிய ိို கண்ணுேட்டம் - செல்வி திருச்சந்திரன் d
o இவையாவும் உண்மைதானு? 岛
0 பெண்களும் இரவு வேலேயும் - வன்னி
நியாயங்களும் அதன் பெறுபேறுகளும்
g பெண் சிசு வதம் - சீதாபாரதி E. 0 ஆசிரியர் குறிப்பு
0 பெண்களுக்கு சம சந்தர்ப்பம் IË
பெண்ணுரிமையும் பெட்டைக்கோழியும்
எங்கே செல்கின்றீர்?
- புதுவை இரத்தினதுரை I
ஒட துரத்துவோமே (கவிதை) -ஜெகன் IE
பெண்ணின் குரல் அமைப்பின் குறிக்கோள்கள் 1E}
0 வானிலே பறந்திடும் (கவிதை) Iք 0 புதிய விழிப்பு - விஜயா இளங்கோவன் 3.
இலங்கைப் பெண்களின் தொழிற்சங்க
ஈடுபாடு - ஒரு புதிய அத்தியாயம்
- செல்வி திருச்சந்திரன் :
3 பெண்விடுதலே விளக்கம்-ராஜம் கிருஷ்ணன் 25
0 வவுனியாவில் பெண் எழுச்சி
அச்சு குமரன் அச்சகம், டாம் வீதி, கொழும்பு-12,

பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிலேமையை எடுத்து விளக்கும் பெண்களின் பிரச்சினேகிளேப் பற்றி பகுத்தறிவுக் கோட்பாட்டுடன் போராடும் பெண்களால், பெண்களுக்காக
மும் மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண்களின் உரிமைக்கான ஒரே சஞ்சிகை.
කාන්තා හඩ
(காந்தா ஹண்ட)
பெண்ணின் குரல்
Voice of Women (வொய்ஸ் ஒப் விமன்)
o Jose, tj.
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு) ே இலக்கம் 2 - விலே 3 ரூபா 50 சதம் இலக்கம் 3 - விலே 3 ரூபா தபாற் செலவு ரூபா 1
பெண்ணின் குரல்
(ஒரு சில பிரதிகள் விற்பனேக்கு உண்டு) இலக்கம் 1 - விலே 3 ரூபா 50 சதம் தபாற் செலவு ரூபா 1.
WOICE OF WOMEN
இலக்கம் 1 - விலே ரூபா இலக்கம் 3 - வில் 4 ரூபா இலக்கம் 3 - விலே 5 ரூபா தபாற் செலவு ரூபா 1
சந்தா:
23:33 : 4 இதழ்களுக்கு ரூபா 20:00 பெண்ணின் குரல் LT 2D, DD WOICE OF WOMEN ey LT 2.0, 00
(தபாற் செலவு உட்பட)
ஆசிரியர்
செல்வி திருச்சந்திரன்
SS