கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1984 (7)

Page 1
பெண்களின் உரிமைக்க
墨
இல, 7 - 1984
 

5ான ஒரே சஞ்சிகை

Page 2
பெண்கள் தொடர்பான பிரச்சினைக உடன்பாடு காணக்கூடிய விடயங்களில் குழுவாக, 1978 செப்தம்பர் மாதத்தில் அமைப்பு உருவாக்கப்பட்டது.
எமது நோக்கங்களையும் குறிக்கோள்களைய
1. பெண்களின் சமூக பொருளாதா காகவும் இலங்கையின் அபிவிருத்தியில் செய்வதற்காகவும் உழைத்தல்.
2. அரசாங்கக் கொள்கைகள் பெண்க பிடுவதற்கு அக்கொள்கைகளை பிரிசீலனை ( களின் பொருளாதாரம், வெகுஜனத் ே எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பை யிட்டு எச்சரிக்கையோடும் விழிப்போடும் ளில் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
3. பெண்களின் பிரச்சினைகள் சம்பந் கலந்துரையாடல்களையும் ஒழுங்கு செய்த பெண்களின் குழுக்களுக்கும், இயக்கங்களு
4. பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு களை - நகர - கிராம - தோட்டப்புற மற்று
5. பெண்களினது பிரச்சினைகளைப் பற் வை உயர்த்துவதற்காக புத்தகங்களையும் மொழிபெயர்ப்புகளைச் செய்தல், வெகுஜ யும் கருத்துக்களையும் வழங்கல்.
6. மனிதர்களின் பிரச்சினைகளைப் பற் துக்களைப் பெண்களின் பரந்த அணியின. கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தொடர்
மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்கை ளுக்கு எமது அங்கத்துவம் உரித்தாகும்.
 
 

جھیل
ண்ணின் குரல்"
பின் குறிக்கோள்கள் W
ளை அடிக்கடி கூடிக் கலந்துரையாடி, பொது கூட்டு நடவடிக்கை எடுக்கும் பெண்கள் **பெண்ணின் குரல்" (காந்தா ஹண்ட)
|ம் சுருக்கமாகக் கீழே தருகின்ருேம் :
ர, அரசியல் சட்டரீதியான உரிமைகளுக் பெண்களை முழுமையாகப் பங்கு கொள்ளச்
ளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப் செய்தல், அரசாங்க மற்றும் தனியார் துறை தொடர்பு சாதனங்கள் என்பன பெண்களை த மதிப்பிட்டு அவற்றின் கண்ணுேட்டங்களை
இருப்பதோடு, அவசியமான சந்தர்ப்பங்க
தமாக நாடு முழுவதும் கூட்டங்களையும், ல், மேற்படி உரையாடல்களை நடத்துதற்கு நக்கும் பேச்சாளர்களை அனுப்பி உதவுதல்.
களை, மேற்கொண்டு அவற்றின் பெறுபேறு ம் பெண்கள் அமைப்புகளுக்கும் விரிவாக்கல்.
]றி பெண்களதும் ஆண்களதும் விழிப்புணர் பிரசுரங்களையும் வெளியிடுதல், அவசியமான }ன தொடர்பு சாதனங்களுக்கு கட்டுரைகளை
றிய "பெண்ணின் குரல்" அமைப்பின் கருத் ர் மத்தியில் விதத்தில் சிங்களம், தமிழ், ஆங் ர்ச்சியாக சஞ்சிகையொன்றை பிரசுரித்தல்.
ளயும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்பவர்க அங்கத்துவ சந்தா வருடம் பத்து ரூபாவாகும்.
விபரங்களுக்கு :
“பெண்ணின் குரல்" (காந்தா ஹண்ட)
1, ஜயகொந்தா ஒழுங்கை, கிருல வீதி, கொழும்பு-5.

Page 3
எமது கருத்து
பெண்ணின் குரலின் இந்த இதழ் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் பற்றி விசேட கவனம் செலுத்துகின்றது. பெண்கள் அன்ருடம் பலவிதமான வன்முறைகளுக்கும் உள்ளாகின்றனர். வீதிகளிலும் வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களின் சேட்டைகளுக்கு ஆளாவதையும் வீட்டில் கணவனுடைய அல்லது தந்தையுடைய ஏச்சுக்கும். துன்புறுத்தல்களுக்கும் உள்ளாவதையும் சமூகத்தில் வேறு வகையான வன்முறைகட்கும் கற்பழிப்புக்கும் உள்ளாவதையும் இன்று சர்வசாதாரணமாகக் காணலாம். இன, மொழி, வர்க்க வேறுபாடின்றி பெண்களுக்கு எதிரான இவ் வன்முறைகள் இன்று உக்கிரமடைந்து வருகின்றன.
பெண்களுக்கு எதிரான பல வகை வன்முறைகள் பற்றியும், சமீப காலமாகப் பெண்கள் இயக்கங்கள் அதிக அக்கறை காட்டி வருகின்றன, வன்செயல்களுக்கு இரையாகும் பெண்களைப் பற்றி எமது தேசியப் பத்திரிகைகள் அதிகளவு செய்திகளையும் பிரசுரித்து வருகின்றன. இவற். றை நோக்கும் போது, பெண்கருக்கு எதிரான வன்செயல். கள் சமீபகாலமாகவே இடம்பெறுகின்றன என்று எண்ணத் தோன்றலாம். பலர் இத்தகைய கருத்தையே கொண்டுள்க ளனர். "தற்காலத்தில்தான் நிலைமை மோசமாகியுள்ளது: ஒழுக்கச் சீர்கேடு மலிந்துள்ளது; கலியுகத்தின் இயல்பு" என்று பலர் கூறுகின்றனர். ஆனல் உண்மை வேறு. பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் காலம் காலமாக எமது சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருகின்றன. எமது புராணங்களும் காவியங்களும் இதற்குச் சான்று கூறுகின்றன. சீதையை அவளது விருப்பத்திற்கு மாருக இராவணன் தூக்கிச் சென்றதும், திரெளபதியை ஆண்கள் சூழ்ந்திருந்த அரசபையின் நடுவில் துகிலுரிய முயன்றதும் அகலியைக் கல்லாக்கியதும் பெண்களுக்கு எதிரான வன்முறை மனுேபாவத்தின் அடையாளங்கள் ஆகும். சீதையும், திரெளபதியும், அகலிகையும் இலக்கியத்தில், இடம்பெற்றர்ை, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என நாம் கூறுகிருேம். ஆனல் அறியப்படாமலே எத்தனையோ சீதைகள். பேதைகள்.
இவ்விடத்தில் முக்கியம் என நாம் கருதும் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிருேம். “பெண்களைத் துன்புறுத்துவதும், அவர்களுக்கு எதிராக வன்செயல்

களை மேற் கொள்வதும் நாகரீகச் சீரழிவு நிலவும்மேற்கு நாடுகளிலே தாம் இடம் பெறுகின்றன. எமது நாடோ தர்மம் குடி கொண்ட நாடு. அகிம்சையைக் கடைப் பிடிக்கும் நாடு. எமது சமூகமோ பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடுவது. எனவே எம்மத்தியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் காணுதல் முடியாது’ என்று பலரும் கூறுகின்றனர். ஆளுல் உண்மையான விபரங்கள் எமக்குத் துயரத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றன. பெண் என்ற ஒரே காரணத்திற்காக, பெண் அனுபவிக்கும் துன்பங்களும், கொடுமைகளும் அளப்பரியவை. இவற்றை எவரும் கவனிப்பதில்லை. இவை இயல்பானவை என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால், அவள் அவமானத்துக்கு உள்ளாகிருள். அவளைச் சமூகம் புறக்கணிக்கிறது, அவள் தீண்டத்தகா. தவள் ஆகிருள். ஆனல் குற்றம் புரிந்தஆணை எவரும் குறைகூறுவதில்லை. எமது சட்டங்களும் ஆணுக்குப் போதுமான தண்டனை கொடுப்பதில்லை, "பெண்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்", "ஆம்பிளை சேறுகண்ட இடத்தில்மிதித்து, தண்ணி கண்ட இடத்தில் கழுவுவான்’ என்று சாதாரண மக்களிடையே வழங்கும் பழமொழியும் இது பற்றிய சமுகக் கருத்தோட்டத்தை எமக்கு உணர்த்து. கிறது. இத்தகைய கண்ணுேட்டம் கண்டிக்கத்தக்கது: இது நீங்க வேண்டும் என்று பெண்ணின் குரல் கருதுகிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் இந்த அநீதிகள் பற்றிய விழிப்புணர்வைச் சமூகத்தில் தோற்றுவிப்பதற்கு எம்முடன் இணையும்படி, அக்கறையுள்ளவர்களைக் கேட்டுக் கொள்கிழுேம்.
பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் சமூகக்தில் அதிகரித்து வரும் வன்செயல்களுடன் தொடர்பு கொண் டவை. அகிம்சையின் தத்துவங்களைப் பற்றி அடிக்கடி எமது நாட்டில் பேசப்பட்ட போதும், நாம் வன்முறைகள் மலிந்த சமூகத்தில் வாழ்கிருேம் என்பதே இன்றைய உண்மை. அரச வன்முறையில் இருந்து தனிப்பட்ட வன்முறை வரை இவை பல் வேறு வகைப்பட்டவை. 1983ம் ஆண்டு ஜூலையின் இன வன்செயல்களில் இருந்து இன்றுவரை நாட்டில்தொடரும் வன்செயல்கள் இன்றைய சமூக நிலைமையை வெளிப்படுத்துவன ஆகும். இராணுவத்தினராலும், பொலிசாராலும், வேறு அரசநிறுவனங்களா. லும் மேற் கொள்ளப்படும் வன் முறைகள் அதிகரித்து வரும் அரச வன்முறையின் உதாரணங்கள் ஆகும்.
பொதுவான இந்நிலைக்குப் பெண்கள் பலியாவது இன்று சகஜமாகிவிட்டது. இனவன்செயல்களின் இரையாகவும் மறியல், வேலை நிறுத்தம், அமைதியான ஊர்வலம் ஆகியவற்றில் ஈடுபடும்போது தாக்கப்படுவதையும் காணலாம், ஒரு உதாரணம்; கடந்தவருடம் மார்ச் 8ம் திகதி கொழும்பில் அமைதியான ஊர்வலம் ஒன்றை நடத்த முயன்ற போது பாராளுமன்ற முன்னுள் பிரதிநிதி யான திருமதி விவியன் குணவர்த்தினு உட்படப் பல பெண்கள் பொலிஸாரினல் தாக்கப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் தடுத்தும் வைக்கப்பட்டனர். இவற்றுக்கும் மேலாக நாட்டின் வடபகுதியில் இடம்பெறும் செயல்களுக்குப்

Page 4
2
பெண்களும் ஆளாகின்றனர், சமீபத்தில் பூவரசங்குளம் பஸ் படுகொலையின் போது பெண் பிரயாணிகள் இம்சிக்கப்பட்டனர், கரணவாய் கிராமத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது கர்ப்பிணிப் பெண் கலாவதி தனது குடிசையில் நித்திரை செய்யும் போது குண்டுதாக்கி மரணமானர்; நாட்டில் அதிகரிக்கும் வன்முறைச் சூழலில் பெண்கள் சிக்குண்டு பலியாவது குறித்து எமது நாட்டுப் பெண்கள் இயக்கங்கள் எச்சரிக்கை அடைய வேண்டுமென்பதை இச்சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
சட்டத்தை நிலைநாட்டுவோர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி, குறிப்பாகக் கற்பழிப்பு பற்றி அதிகம் கருத்தச் செலுத்துவதில்லை. இதையிட்டு நாம் மிகுந்த விசனமடைகிருேம். டெனகம கற்பழிப்பு கொலைவழக்கில் பிரதான சந்தேகநபர் பிணையில் விடப்பட்டதும், இன்னேர் கற்பழிப்பு வழக்கில் பாராளுமன்றப் பிரதிநிதி ஒருவர் பிணையில் விடப்பட்டதும், பெண்கள் குழுக்கள் இவ்விடயத்தில். அக்கறை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மேலும் இத்தகைய வழக்குகளைத் தொடர்ந்து கவனிப்பதும், இது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை வலியுறுத்தலும் அவசியமாகும்.
இத்தகைய வன்செயல்களுக்கு எல்லாம் மேலாகப் பெண்கள் உள்ளாகும் வன்முறை வீட்டில் இடம் பெறுவது ஆகும். எத்தனையோ பெண்கள் நாளாந்தம் கணவனு டைய ஏச்சுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகிருர்கள். சில சமயங்களில் தந்தை, மூத்தசகோதரர்கள், ஆண்உறவினர் களும் இதில் பங்கெடுக்கின்றனர் இதில் பரிதாபகரமான
ஜூலை 1983 இன வன்செயல் பெ
பெண்ணின் குரல் (காந்தா ஹண்ட) இயக்கத்தின் சம்பவங்களினல் ஆழ்ந்த வேதனையடைந்துள்ளோம். வேறு பகுதிகளிலும் தமிழருக்கெதிராக நடைபெற்ற தா வன்செயல்கள் ஆகியவற்றை நாம் வன்மையாகக் கண்டி கும் முற்ருகச் செயலிழந்தமை, சிறையில் தமிழ் அரசியற் கைகளில் எடுத்துக்கொண்டபோது நடைபெற்ற படு போன்ருேருக்கு மிகவும் அச்சத்தையும் வேதனையையு
சமீபத்தைய வன்செயலின் போது தமது சீவனுேபா எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிருேம். சிறு ஏக்கம் குறித்தும் நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.
எனினும் இந்நாட்டின் இருள்மிகுந்த அந்த நாட்களி
ளுக்குப் புகலிடம் கொடுத்தமையை இட்டும் நாம் மகிழ்
யும் எதிர்க்க சகல இனத்தினரும் எடுத்த கூட்டு முய மகிழ்ச்சியளிக்கிறது.
இனமேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண் முறை ஆயகிவற்றுடனும் இணைந்திருப்பதால், எமது சமூ கவலையளிக்கிறது. இம் மேலாதிக்கம் (குறிப்பாகப் பென ஜனநாயக உரிமைகளுக்குப் பங்கம் விளைத்து, தொழில களின் உரிமைகளை நசுக்கும் ஆட்சியாதிக்கக் கொள்கை பெண்கள் என்ற வகையில் எமது அடிப்படை உரிமைகை ஆகியவற்றிலுள்ள எமது உரிமைகளை நாம் கெளரவிக்கி கட்டுமானங்களையும் மாத்திரமன்றி நாகரிகமுள்ள நாடு கிறது.
ஆகவே எம்மை எதிர்நோக்கும் இந்நெருக்கடியைத் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்கும்படி இலங்கை தமது குடும்பங்களிலும் சமூகங்களிலும் நிலவும் இனவ சார்ந்த பெண்களிடையே பலம்வாய்ந்த நட்புறவையும் கையில் உண்மையான, நீதியுள்ள, ஜனநாயக சமூகத்.ை றுத்திக்கொள்கிருேம்.

விடயம் என்னவெனில் தாம் வன்முறைகளுக்கு உள்ளாகிருேம் என்பதைப் பெண்களே உணர்வதில்லை. இது மாத்திரமன்றி, வீட்டில் நிகழும் வன்முறை குறித்து எவரும் வெளிப்படையாகக் கதைப்பதும் இல்லை இவை இயல்பான வையாக, பெண்ணினத்தின் தலைவிதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. இவை குறித்து நாம் ஆழ்ந்த அக்கறை செலுத்த வேண்டும். நாளாந்தம் வீட்டில் துன்புறுத் தல்களுக்கு உள்ளாகி உணர்வு மரத்துப் போன பெண்கள் எம்மில் அநேகர். எவரும் எவரையும் எவ்வகையிலும் துன்புறுத்த எந்தச் சட்டமும் இடம்கொடுக்கவில்லை. அன்ருடம் தாம் அனுபவிக்கும் இத்தகைய இன்னல்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என நாம் கருதுகிருேம்.
பெண்ணின் குரல் அமைப்பு, இவ்வருடம் பெப்ருவரிமாதம் பெண்களும் வன்முறையும் என்றதலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. ஆகஸ்ட் மாதம் கற்பழிப்புத் தொடர்பானசட்டங்கள் பற்றி இன்னுேர் கருத்தரங்கை நடத்தியது. பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் பற்றிய பிரச்சனைகளை வெளியுலதிற்குத் தெரியப்படுத்தலே இக்கருத்தரங்குகளின் நோக்கமாக் அமைந்தது.
இந்த இதழில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் என்ற கருத்துப்பற்றி சிந்திப்பதற்கு இடம் அளிப்பதன் மூலம் இப்பிரச்சனை தொடர்பான பிரசாரத்தை ஆரம்பிக் கலாம் எனக் கருதுகிருேம். இம்முயற்சியில் எமக்கு ஆதரவு வழங்கும்படி எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறுேம்.
ண்ணின் குரல் வருந்துகின்றது
செயற்குழுவினராகிய நாம் 1983ல் ஜூலையின் துக்ககரமான பெருந் தோட்டப் பகுதிகள் உட்பட இலங்கையின் பல் க் குதல்கள், கொள்ளைகள், தீ வைப்பு, கண்மூடித்தனமான டிக்கிருேம். குழப்பம் நிகழ்ந்த நாட்களில் சட்டமும் ஒழுங் கைதிகள் கொலை, குண்டர் கும்பல் சட்டத்தைத் தமது கொலைகள், ஆகியன சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் எம் ம் அளித்துள்ளது.
பம், உடமைகள், நண்பர்கள், உறவினர்களை இழந்தோருக்கு பான்மை சமூகங்களிடையே தொடர்ந்து நிலவும் அச்சம்,
ல் தமிழர்களைப் பலர் காப்பாற்றியது மாத்திரமன்றி, அவர்க *சி யடைகின்ருேம். வன்செயல்களையும் காடைத்தனங்களை ற்சிகள் பல தடவைகளில் வெற்றிபெற்றமையும் எமக்கு
ட கோட்பாடுகள் பெண்ணடிமை, பெண் ஒடுக்கு கத்தில் வளர்ந்து வரும் இனவாதம், பெண்களாகிய எமக்கு ா களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான மேலாதிக்கம்) ாளர்களின் சகல பிரிவுகளையும் ஒடுக்கும், குறிப்பாகப் பெண் டைய அரசாங்கத்திற்கு வழியமைக்கும் அபாயமுடையது. r வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், அரசியற் சுதந்திரம் ருேம். தற்போதைய நெருக்கடி எமது சமூகத்தின் சகல 1ள் மதிக்கும் உரிமைகளையும் விழுமியங்களையும் அச்சுறுத்து
தீர்ப்பதற்கான ஒரு அரசியல் தீர்வை உருவாக்குவற்காக ப் பெண்கள் அனைவரையும் நாம் அறைகூவி அழைக்கிருேம். rதத்தை முறியடித்து ஒழித்து, வெவ்வேறு இனங்களைச் தோழமையையும் உருவாக்குவதற்கு உதவும் படியும்,இலங் நிலைநிறுத்த உதவும்படியும் பெண்கள் அனைவரையும் வற்பு

Page 5
பெண்களுக்கு
எதி
பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் பெண்ணின் குரல் இயக்கம் 10-2-1984ல் எதிராக இன்று அதிகரித்து வரும் வன்செய பற்றியும் ஆராயும் அதேசமயம் இவ் வன் உணர்வைத் தூண்டுவது இக்கருத்தரங்கின் எதிரான வன்செயல்கள் எதிர்க்கப்பட ே என்ற உணர்வு தோன்றத் தொட்ங்கியிரு ஆழமாக்க முனைந்தது இக் கருத்தரங்கு, க( தமிழாக்கத்தைக் கீழே தருகிருேம்.
தனி நபர்களாகவோ, g60TLDIT கவோ, சமயக் குழுவாகவோ நாடா கவோ எம்மை நாம் வெளியுலகுக்குக் காட்டும் தோற்றம், நாகரீகமடைந்த சமூகத்தின் பண்புகள் கொண்டதாக பகுத்தறிவு வாய்ந்ததாக, கட்டுப்பா டுள்ளதாக, வன்செயல்களில் ஈடுபடா ததாக இருக்கவேண்டும் என விரும்புகி ருேம், குடியேற்ற ஆட்சியாளர்கள் இலங்கையை இராசதுரோகம், புரட்சி, ஆட்சிக்கெதிரான வன்செயல்கள் ஒன் றும் இடம்பெருத ஒரு அமைதியான நாடென வருணித்தனர். ஆனல் இது உண்மைக்குப் புறம்பானதாகும். எமது வரலாற்றில் இக் காலப்பகுதி போர் கள், கிளர்ச்சிகள், விவசாயிகளின் எதிர்ப்புகள், வேலை நிறுத்தம், கைத் தொழில் அமைதியின்மை, இனவன் செயல்கள் நிறைந்ததாக உள்ளது.
அதேபோல, குடியேற்ற ஆட்சிக் குப்பின் வந்த இலங்கை ஆட்சியாள ரும் புத்தர் வழியில் வரும் அகிம்சையை வற்புறுத்தியும் நாட்டின் திடமான நிலைமையையும் மக்களின் அமைதியை விரும்பும் தன்மையையும் விளம்பரப்ப டுத்தி வந்தனர். நாட்டினது தேசிய விமான சேவையான "எயர் லங்கா' தனது விளம்பரத்தில் இலங்கையை *சொர்க்கலோகமாகவும் அதன் மக்களை "நட்பும் இதமும் கொண்டவர்கள்' என்றும் கூறுகிறது. ஜாலை 1983ல் இடம்பெற்ற திட்டமிட்ட இனப்படு கொலைகள் இந்த மயக்கங்களையும் போலித்தோற்றத்தையும் கிழித்தெ
றிந்து விட்டன. டித்துத் திங்கள் ே வெறுக்கத்தக்க ய பலித்தது. நாம் ச சாவாதிசுள் என்று பியபோதும் எமது சமான ஒரு சித்தி காட்டுசிறது உ
குமாரி ே
செயல்கள் விகிதா நாடுகளில் ஒன்றுக ளது. வன்செ81ல் யான சமூகம் என் தில் இந்த வன்செ பாடே!
பெண்கள் வி
மனப்பான்மையை லும், பெண்கள் மி னும், கருணையுட முர்கள் என்றும், ே கப் பிரச்சனைகளா தல், முறை தகாட் யரை இம்சைப் இலங்கையில் சமூ இல்லை என்றும் ச ருேம் பெண்களு செயல்கள் (எமது றும் புதிதல்ல) இடம்பெறுகிறதெ

ரான வன்செயல்கள்
என்ற தலைப்பில்
கொழும்பில் நடத்தியது.
கருத்தரங்கொன்றின பெண்களுக்கு
பல்கள் பற்றியும், அவற்றுக்கான காரணங்கள் செயல்சள் தண்டிக்கப்படவேண்டியவை என்ற முக்கிய நோக்கமாக இருந்தது பெண்களுக்கு வண்டியவை இவற்றுக்குப். பரிகாரம் தேவை க்கும் இந்நேரத்தில் மேலும் இந்த உணர்வை ருத்தரங்கில் படிக்கப்பட்ட ஒரு கட்டுரையின்
ஞாயிறு சில் அனுஷ் கொலைகள் செய்தல்" தார்த்தத்தைப் பிரதி "மாதானமான அகிம் எம்மைப்பற்றி நம் து வரலாறு வித்தியா ரத்தையே வெளிக் லகில் அதிக குற்றச்
ஜெயவர்தை
சாரத்தைக்கொண்ட இலங்கையும் உள் களில்லாத அமைதி று கூறப்படும் சமூகத் யல்கள் ஒரு முரண்
ஷயத்திலும் எங்கள் எடுத்துக்கொண்டா கவும் மரியாதையுட னும் நடத்தப்படுகி வேறு நாடுகளில் சமூ க உள்ள கற்பழித் ப்புணாச்சி, மனைவி படுத்துதல் என்பன முகப் பிரச்சனைகளாக கூறுவதைக் கேட்கி ருக்கெதிரான வன் சமூகத்தில் இது ஒன்
நமது சமூகத்தில் ன்று இப்பொழுது
அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவ துடன் பெண்கள் இயக்கங்களும் இத னைப்பற்றிச் சர்ச்சை செய்து வருகின் றன. இப்பொழுது இது அவசரம்ாகக்
கவனிச்கப்படவேண்டிய ஒரு சமூகப்பி ரச்சனையாகும். இதனைப் பெண்கள் இயக்கங்களும மிகுந்த கவனத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இலங்கையில் இடம்பெறும் வன் செயல்கள் பலவகைப்பட்டன. அவற் றில் அச்சமூட்டும் புதிய போக்கானது அதிகரித்துவரும் அரச வன்செயலாகும். இவை மாணவர்கள், தொழிலாளர், கமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், பெண்கள் என்பவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அரசி னல் கட்டுப்படுத்த முடியாத காடைத் தனத்தை எங்கள் அன்ருட வாழ்க்கை யில் காணக்கூடியதாக இருக்சிறது. அர சியல் வாதிகள் காடையரைப் பயன்ப டுத்தினர். இப்பொழுது பல காடைய ர்கள் அரசியல்வாதிகளாக ஆகியுள்ள னர். அண்மைக்கால சமூகவியல் ஆரா ய்ச்சிகள் கிராம மட்டத்திலும் நகரங்க விலும் அவ்வப்பகுதிக் 95 İTGO) Luri“ களே அப்பகுதித் தலைவர்களாக உள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. சமுதாயத்தில் வன்செயல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும் நோயாக ஆகிவிட் டன. தொலைக்காட்சி, திரைப்படங் கள், பத்திரிகைகள் போன்றவற்றில் காணப்படும் வன்செயல்களும், திறந்த பொருளாதாரத்துடன் தொடர் பு கொண்ட கழுத்தறுப்புப் போட்டிக ளும் இவற்றை ஊக்குவிக்கின்றன.

Page 6
4.
வர்க்கம், சாதி, பால், வயது முதலி யவை காரணமாக சில தனி நபர்கள் மற்றவர்கள் மீது வெவ்வேறு வகை யான அதிகாரம் செலுத்தும் படிநிலை அடுக்குக்கொண்ட சமூகங்களில் அதி காரத்தையும் ஆட்சி உரிமையையும் நிலைநாட்ட வன்செயல் பயன்படுகிறது. ஆளும் வர்க்கம் ஏழைகள் மேலும், உயர்சாதியினர் தாழ்ந்த சாதியினர் மேலும் ஆண்கள் பெண்கள் மேலும் செலுத்தும் ஆதிக்கமானது சட்டரீதி யாக ஏற்றுக்கொள்ளப்படாவிடினும் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாக வும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய சமூகங்கள் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளை யும் நடைமுறையில் இருப்பவை என்று ஏற்றுக்கொள்கின்றன. மேல்வர்க்கத் தைச் சார்ந்தோர் ஏனையோருக்கெதிரா கவோ பிராமணர், அரிசனங்களுக்கெ திராகவோ செய்யும் உடல் தீங்கு பொதுவாகச் சட்டத்துக்கு எதிரான தாக, குற்றச்சாட்டாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடியதாய் உள்ளது. ஆனல் மனைவியருக்கெதிரான ஆண்க ளின் வன்செயல்கள் தனிப்பட்ட விடய மாகக் கருதப்படுதல் னது.
வேடிக்கையா
தெருக்களில் சண்டித்தனம், மக் களை வருத்துதல் போன்ற வன்செ பல்கள் மிகப் பாரதூரமான குற்றங் களாகக் கருதப்படுவன. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் குற்றத்திற் குப் பதினைந்து ஆண்டுகள் வரையி லான தண்டனை கிடைக்கும். வன் செயலுக்கு இலக்கானேர் பொலிசா ரின் ஒத்துழைப்பையும் பெறுகின்ற னர். செய்திப் பத்திரிகைகள் இச் செய்திகளை முன்பக்கத்தில் பிரசுரிக் கின்றன. சர்வதேச ரீதியாக துன்பு றுத் த ல் நிராகரிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் இது நடப்பின் அலட்சி யம்படுத்தப் படுகிறது. (எரிம் பிரி ஸ்ஸி-மெதுவாக அலறு; அல்லது அய லவ்ர்கட்குக் கேட்கும்- (Sueam quietly or the neighbours will hear.)
பெண்களுக்கெதிரான வன்செயல் களை அலட்சியப்படுத்துதல் வெவ்வேறு காலப் பகுதிகளில் வெவ்வேறு பண் பாட்டுக் S. குழுக்களிடையே இடம் பெற்று வந்திருக்கிறது. ஒரு உதார
ணம் கூறுவ்தானுல் 19ம் நூற்ருண்டின் நீதிபதி இத்தன "திரையை இழுத்து தை வற்புறுத்தி ே
*நிரந்தரமான தீங்கு தரும் வன் அல்லது கணவஞ படாவிடின் திை பொதுமக்களின் த்து சம்பந்தப்ப மன்னிக்கவும் கொடுங்கள்" (ே 1982:4).
1962Lb sgaoit. untaai), மாருனது இல்ல யும் இசைவையு என்பதால் ஒரு ெ வன் தீங்கிழைத்த குத் தொடர அ டாள். (நீ காட்ை ருண்டுப் பிரித்தா தின்படி, மனைவி ஆகையால், கண6 “நியாயமான ஆ தண்டனை கொ( பிரித்தானிய தத் எஸ். மில் 1869ல் நிலை பற்றி எழு மாறு குறிப்பிட்ட
*சட்ட
"மிருகங்களை வான ஆண்களி வளவு பெரியது கள் திருமண 6 இரையைப் ே இது ஒருபே கொலை மாத்தி னுடைய எத்த கும் இலக்காகச் பெண். இழி கட்டுப்பட்டுள் யைக்கூட அவ6
தமின்றிச் செய்
ஆணுதிக்கமு ரான வன்செய குடும்ப 9|alf இணைந்துள்ளன, Ggmrpair" - dřJřář

வடகரோலினவில் பிற்பகுதியில் ஒரு கைய வழக்குகளில் து மூடும்படி சமூகத் வண்டினர்.
காயங்கள் அல்லது முறை இல்லாவிடின் ல்ை வன்மம் காட்டப் ரையை இழுத்து மூடி
பார்வையை மறை பட்ட பகுதியினருக்கு
மறக்கவும் இடம் மேற்கோள்-நீ காட்னி
டில்கூட கலிபோர்னி த்தின் கொள்கைக்கு பத்தின் அமைதியை ம் அழித்துவிடுவது" பண் அவளுக்குக் கண மைக்கு எதிராக வழக் னுமதி மறுக்கப்பட் ரி-மேலது) 19ம் நூற் னிய பொதுச் சட்டத் கணவனின் சொத்து வன் தனது மனைவியை யுதம் எதனுலாவது" டுக்க இடமிருந்தது. ந்துவவாதியான ஜே. பெண்களின் அடிமை தியபோது பின்வரு
fTT .
விடச் சிறிது உயர் ன் எண்ணிக்கை எவ் . மேலும். இவர் விதிகளின் மூலம் ஒரு பெற்றுக் கொள்வதை ாதும் தடுப்பதில்லை. ரம் தவிர்த்து ஆணி கைய அட்டூழியத்துக் கூடிய, இரங்கத்தக்க $த குற்றவாளியுடன் ாாள். . . கொலை அதிக சட்ட அபரா
ய முடியும்'.
ம் பெண்களுக்கெதி
லும் இன்று நிலவும்
ப்பில் நெருக்கமாக (இலங்கை யில் Fட்டத்தின்படி) குடும்
பத்தின் தலைவன் ஆண். அவனே தீர்மா னம் செய்பவனுகவும். அதனை நடை முறைப்படுத்துபவனுகவும் பெண்களுக்கும் பிள்ளைகட்கும் தண்டனை விதிப்பவனுகவும் உள் ளான். இது குடும்பத்தின் ஜனநாயகத்தை மறுத்து பெண்களின் உரிமையைப் பறித்து அடிமை நிலைக்கு ஆளாக்கியது. இது முடியாட்சியில் எல்லா அதிகாரங் களும் (சட்ட, நிர்வாக, நீதி) குடும் பத்தின் தலைவனிடமே குவிந்திருப்ப தைப் போன்றது.
பெண்களுக்குத் தண்டனை அளித் தலும் குடும்பப் பிரச்சனைகளை வன்முறை மூலம் தீர்ப்பதும் சகல தந்தை வழி கலாசார சமூகங்களிடையேயும் நிலவுவ தாகும். எத்தகைய அளவு வன்முறை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்பதுபற் றிய சமூக, சட்ட அங்கீகாரங்களி லேயே இச் சமூகங்களுக்கிடையே வேறு பாடு காணப்படுகிறது. பல நாடுகளில் நிலவும் பழமொழிகள் இவ் வன்முறை கலாசாரத்தின் செல்வாக்கைப் பிரதிப விக்கின்றன. "மேளமும், முட்டா ளும், மிருகங்களும், தீண்டத்தகாதோ ரும், பெண்களும் அடித்துக் கையாளப் படவேண்டியவை" என்று ஒரு நேபா ளப் பழமொழி கூறுகிறது. "எவ்வளவு அதிகம் அடிக்கிருேமோ அவ்வளவிற்கு பெண்ணும், நாயும், வால்நட் மர மும் நன்ருகும்’ என்று ஒரு பழைய ஆங்கிலப் பழமொழியும் உண்டு. ரஷ் யப் பழமொழிய்ொன்று "காலை உண வுக்கு உனது மனைவியை அடி இரவு உணவுக்கும் கூட" என்று கூறுகிறது.
இதுவரை காலம் ‘மறைக்கப்பட் டிருந்த விடயங்களுள் ஒன்ருன பெண் களுக்கெதிரான வன்செயல் பற்றிய பிரச்சனை சமீப வருடங்களில் கோட் பாட்டு ரீதியான விவாதங்களுக்கு உட் பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான எத்தகைய வன்முறைக்கும் பெண்ணே காரணம் என மரபுரீதியான கருத் தோட்டம் அழுத்திக் கூறியது. கற்ப ழிப்பு என்ருல் தமது தூண்டும் நடத் தைகளாலோ, மனைவியை அடித்தல் என்ருல் தமது வலுச்சண்டைத் தனத் தாலோ பெண்களே இவற்றைக் "கேட் டுப் பெறுகின்றனர்" எனக் குற்றம் சாட் டப்படுகிறது. இவ்விரு அம்சங்களி லும் தண்டனைக்குப் பெண்கள் உரிய வர்கள் என்று கூறப்படுகிறது. இங்கு

Page 7
குற்றத்துக்கு இலக்கானவரே குற்ற
வாளி ஆகிருர்,
1970களில் பெண் நிலைவாதத்தின் எழுச்சியுடன் தொடர்புபட்டே பெண் களுக்கெதிரான வன்முறை பற்றிய புதிய ஆர்வம் உண்டாயிற்று. பல்வே முகத் தீங்கு செய்து தொல்லை கொடுப்ப திலிருந்து கற்பழிப்பு வரையிலான, தாம் உள்ளாகியிருக்கும் பல்வேறு வகையான வன்முறைகள் பற்றிப் பெண்கள் மிக அக்கறையுடன் கேள்வி கள் எழுப்பத் தொடங்கினர். கைத் தொழில் ரீதியாக முன்னேறிய நாடுக ளிற்கூட பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகளுக் கான காரணங்களை அறியும் ஆர்வ த்தை வன்முறைபற்றிய விவரண ரீதி யான புள்ளிவிபரத் தொகுதி உண்டா க்கியது. (பெண்களுக்கு எதிரான வன் முறை பெரும்பாலும் பின்தங்கிய சமூ கங்களிலும், புராதன மக்களிடமும் கறுப்புச் சிறுபான்மையினரிடமும் வள ர்ச்சி குன்றிய நாட்டு ஏழை மக்களிட மும் நிலவுவதாகவே பொதுவாக ஊகிக் கப்பட்டது.) ஆணுல் பெண்களுக்கு எதிரான வன்முறை, சகல தந்தை வழிச் சமூகங்களிலும், அவற்றின் பொருளாதார வளர்ச்சி மட்டம் எவ் வாறிருந்த போதிலும் இடம்பெறுகின் றது. இத்தன்மையின் செல்வாக்கை விளக்கமுயல்தல் அத்தியாவசியமாகும். எவ்வாருயினும் பெண்களுக்கு எதி ரான வன்முறை பற்றிய ஆய்வு, மரபு ரீதியான, நடுநிலையான, புறநிலையான நோக்குடன் செய்யப்பட முடியாது. பெண்நிலைவாதத்தின் அறைகூவலுக் கும், பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய பிரச்சனையின் அரசியல் மயப்ப டுத்தலுக்கும் ஆய்வாளர்கள் இணக்கம் காட்டியுள்ளனர் என்பது இவ்விடத் தில் குறிப்பிடத்தகுந்தது.
பெண்களுக்கு எதிராக வன்முறை யில் ஈடுபடும் ஆண்களின் விபரங்களை ஆராய்ந்து இப் பிரச்சனையின் உளவி யல் அம்சங்களை ஒரு கருத்தோட்டக் குழுவினர் வற்புறுத்துகின்றனர். இதில் தொடர்பு கொண்ட ஆணினது மட்டு மல்ல, குற்றத்துக்கு இலக்கானேரின் உளநோய் ஆய்விலும் கவனம் செலுத் தப்பட்டது. பெண்கள் சட்டம், ஏழ்மை, தங்கி வாழும் பிள்ளைகள்,
குழந்தை பராமரிப் ஆகிய கூடுகளிலடை போன்றவர்கள் என கிறது. தாம் அடி தடுக்காத இவர்கள் மீற முடியாதெனவு தைத் தவிர்க்க முடி ணுகிருர்கள். இத் கெளரவம் பற்றி ர்வை" வளர்த்துக் (லெனேர் வாக்கர், பெண்கள், 1979, ந
எனினும் ெ வன்முறை "கெட் அல்லது மனநோய் ளுடைய தனிப்பட் அல்ல என்பதைப் நிரூபித்துள்ளனர். ப்புடனும் இது ெ கொண்டது. வன்மு பெண்கள் இரட்ை இலக்காதல் முக்கி பாகும். குறிப்பிட் மிப்பாளரால் தீங்கு திரமல்ல, "சமூகக் ணிகள்’ இவ் வழ: புள்ள உதவும் தொ பவற்ருலும் தீங்குறு ஆஸ்பத்திரி வேலைய கர்கள். பொலிசா யோர் வன்முறை அமைப்புக்கே தி இவர்களை நிர்ப்பந் கைய பெண்களுக் வுமற்ற நிலையுடை பட பல நாடுகள் இவையாகும். ச பட்ட பெண்களு முறை பற்றிய ஒன்று எவ்வாறு ளர், காயங்களுக் அன்றி காயங்களு உதவிக்கான வேை செய்தனர்: அறிகு, ற்றைத் தீர்க்க முய ணங்களைக் கண்டற கவனமும் அற்று வெளிப்படுத்துகிற நோயுடன் நோய காரணத்தைக் கை அக்கறை (ஸ்டாக், பிளிட்சி

பு வசதிகளின்மை க்கப்பட்ட நாய்கள் * ஒரு ஆய்வு காட்டு படுவதைச் சிறிதும் , தமது விதியை ம், தாம் அடிபடுவ யாது எனவும் எண் தஞல் தமது ‘சுய உருத்திரிந்த உண கொள்கின்றனர். துன்புறுத்தப்பட்ட தியூயார்க்)
பண்களுக்கெதிரான ட ஆண்களுடைய
கொண்ட ஆண்க ட நடவடிக்கைகள் பல ஆய்வாளர்கள் முழுச் சமூக அமை நருங்கிய தொடர்பு முறைக்கு இலக்கான டக் குற்றத்துக்கு யமான கண்டுபிடிப் ட, தனித்த ஆக்கிர 1றுத்தப்படுவதுமாத் கட்டுப்பாட்டுக்கார க்குகளில் தொடர் ாழிலர்தொகுதி என் றுத்தப்படுகின்றனர், பாட்கள், சமூக சேவ ர், நீதிபதிகள் முதலி விளைவித்த குடும்ப ரும்பிச் செல்லும்படி திக்கின்றனர். இத்த கு மாற்றீடாக எது ய, இலங்கை உட் ரின் அனுபவங்கள் மீபத்தில் செய்யப் ருக்கெதிரான வன் ஐரோப்பிய ஆய்வு மருத்துவ சேவையா கு மருந்திட்டனரே க்கு இலக்கானவரின் ண்டுதலை அலட்சியம் றிகளைக் கண்டு அவ பன்றனர் அன்றி கார றிவதில் எத்தகைய இருந்தனர் என்பதை gid. வேறு ஏதாவது பாளி வந்திருப்பின் ண்டறிவதில் மிகுந்த Tட்டப்பட்டிருக்கும்.
9Gs stri
கிராவ்ட்,
5
"மருத்துவமும் தந்தை வழி வன்முறை upth' int. Journal of Health Services, 9, No. 3, 1979.)
தந்தை வழிச் சமூகங்களும் அவற் றின் நிறுவனங்களும் அடிப்படையில் பால்வேறுபாடு காட்டுபவை: பொருளா தார, சமூகரீதியாக எல்லா அம்சங்களி லும் ஆண் பெண்ணிலும் உயர்ந்தவன் என்று கருதுபவை; வன்முறைக்கு இறு தி ஒப்புதல் அளிக்கும் உடற்பலம்,ஆதிக் கம் ஆகியவை ஆணுக்கே உரியன எனக் கருதுபவை, என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, இந்தப் பிரச்சனை பற்றிய பெண்நிலைவாதிகளின் நோக்கு அமைந்துள்ளது.
சூசன் பிறவுண்மில்லர் 1975ல் “எமது இச்சைக்கு எதிராக (Against our Wil) என்ற, கற்பழிப்பு பற்றிய ஆய்வில், சமூகத்தில் கற்பழிப்பு பரவி
யுள்ளமைக்கு ஆண்களே காரணம் என்று குற்றம் சாட்டுகிருர், சகல பெண்களையும் சகல ஆண்களும் என்
றும் ஒரு அச்சநிலையிலேயே வைத்திருக் கும், உணர்வு பூர்வமான அச்சுறுத்தும் செயற்பாடே பால்ரீதியான குற்றம் செய்தல் என்று இவ்ஆய்வாளர் கூறுகி ருர், தமது சலுகைகளை வலியுறுத்த, பெண்களில் தமது பலத்தைப் பிரயோ கிக்கும் அதிகார உறவுப் பிரச்சனையாக வே கற்பழிப்பு, மனைவியை அடித்தல் ஆகியவை காணப்படுகின்றன. எனவே ஆண் ஆதிக்கம் தனிப்பட்ட ஆண்க ளின் வன்முறையல்ல. அதற்கு மேலாக பெண்ணைக் கீழ்நிலையில் வைத்திருக்கும் ‘அமைப்புகளின் முறைப்படுத்தப்பட்ட தொகுதி, R. Emerson & Russel Dobash. மனைவியருக்கு எதிரான
வன்முறை N. Y. 1978)
மேலும், பெண்களுக்கெதிரான வன்முறையை பல்வேறு காரணிகளால் விளக்கமுடியும் என்ற அபிப்பிராயமும் உண்டு. வர்க்கவேறுபாடுகளும், ஏனைய வேறுபாடுகளுமுள்ள சமூகத்தில் "இவ் வேறுபாடுகள், நெருங்கிய உறவு நிலைக ளிலே நடைமுறைப்படுத்தப்படுகின் றன: குறிப்பாக, உளவியல் ரீதியா கவோ, உடல் ரீதியாகவோ ஒரு அங்கத் தவர் மற்றவரை தாக்குவதை சீ9° திக்கும் அல்லது சில சமயங்களில் இத னைத் தூண்டும் ஒரு நிறுவனமாகக

Page 8
6
குடும்பம் உள்ளது. வேறு வேறு குடும்ப அங்கத்தவர்களுக்கு சமூகத்திலுள்ள பலத்தை அல்லது பலக்குறைவை பிரதி பலிக்கும் கண்ணடி போன்று, அடிக் கடி ஒருவர் மற்றவரைத் தாக்கும் முறைகள் அமைந்துள்ளன. (Linda Gordon & Wini Breines, Review Essay 'குடும்ப வன்முறையில் புதிய ஆய்வு." signs. 1983, Vol. 8. No. 3.)
பெண்களுக்கெதிரான வன்முறை யைச் சமூக, உளவியல் ரீதியான கார ணிகளால் விளக்க முற்படும் போது கோர்டனும் பிறீன்சும் சரியாக இருக்கி மூர்கள். ஏனெனில் அவர்கள் கூறுவது போல வன்முறை செயல்கள், தனிநபர் களின் செயல்களை விடவும் அதிகமாக வும் அவை "ஆழமான கலாசார, உளவி யல் ரீதியான அர்த்தங்களையும் கொண்
டுள்ளன, ஆணுல் ம றைச் செயல்கள் ச ளிற்குரிய கருத்து ரீ டுகள் மட்டுமன்றி. சொந்தச் செயற்பா றன. எனவே, ெ இருபாலாரின் மீதும் யும், சமூகத்திலுள்ள இவ்வகையான சம் ளையும் இப்பிரச்சை நாம் என்ன செய்ய யும் ஆராய்வது கும்,
இலங்கையிலுள் திரான வன்முறைட போது இது தற் வாழ்க்கையின் ஒரு தியாக இருந்து வரு
 

றுபக்கத்தில் வன்மு சமூகப் பிரச்சனைக தியான வெளிப்பா
தனி நபருக்குரிய டாகவும் அமைகின் பண்கள், ஆண்கள் மான ஆக்கிரமிப்பை ா ஆக்கிரமிப்பையும் பவங்களின் மூலங்க னக்குரிய தீர்வாக முடியும் என்பதை இன்றியமையாததா
ாள பெண்களுக்கெ பற்றி விவாதிக்கும் பொழுதும் எமது மறைக்கப்பட்ட பகு வதை அழுத்தமாக
கூறவேண்டும். இவ்வன்முறை குற்றச் செயல்களைப் புரிபவர்களும் பாதிக்கப் பட்டவர்களும், சமூகக்கட்டுக்கோப்பு களும் இப்பிரச்சினையை மறைத்து வைததிருப்பதில் ஒன்று சேர்கின்றன. இவை எல்லாம் 'குடும்ப வாழ்வின் புனி தத்தன்மை"யை பேணுவது என்ற பெயரில் செய்யப்படுகின்றன. மேற்கி லும் கூட பெண்களின் இயக்கங்களின் வளர்ச்சியுடனேயே இவ்விடயம் மிகத் தீவிரமாக ஆராயப்பட்டது. பெண்க ளுக்கு எதிரான வன்முறைபற்றி முழு அளவிலான ஆராய்ச்சிகளை ஆரம்பிப் பது இலங்கைப் பெண் நிலைவாதிகளின் கடமையாக உள்ளது. இக்கருத்தரங்கு இப் பிரச்சனையை வெளிப்படுத்துவதற் சான முக்கிய முதற்படியாகவும் அமை கிறது.
தமிழில்:- சித்ரா

Page 9
ஐதீகங்ஸ் தகர்ச்
பெண்கள் உதவி நிறுவனம் (Women's A
அது அந்த நாட்டில் நிலவும் சில கரு
மலேசியாவில் 'மனைவியரை அடித் தல்" அதிகம் இடம்பெறுவதில்லை.
பெண்கள் உதவி நிறுவனம், பெண் கள் தமது வீட்டைவிட்டு வெளியேறுவ தற்கு உதவி குடும்பங்களைக் குலேக்கிறது.
கல்வி அறிவு அற்ற ஏழைகளான கணவர்களே தம் மனைவியரை அடிக்கின் றனர்.
அடிக்கடி கணவரிடம் அடிவாங்கும் பெண்கள் அதற்கு உரியவர்களே.
கணவர்கள் தமது மனைவியரை எது வும் செய்யலாம். அவர்களுக்கு அதற்கு உரிமையும் உண்டு.
பெண்கள் உதவி நிறுவனம் தேவை யற்ற ஒன்றகும். குடும்பப் பிரச்சனைகள் எவரது தலையீடும் இன்றி, முறையில் தீர்க்கப்படவேண்டியவை.
தனிப்பட்ட
ஓடி
பெண்கள் 2 வருடமே 57 ெ னர். மேலும் யுள்ளன்ர்.
நாம், மகிழ்ச் மைகளை அளிப்ட கின்றனர். பெண் சட்ட உதவிகளுட குடும்பங்களைச் ச
at Logit sgig) L சகல இனங்களிலு பயன்படுத்திய ெ தனர்.
ஒரு திருமண வரை அடிப்பதை பெண்களே, தம.
நாம் வாழ்வ நாடும் சமூகத்திே ருந்த போதிலும் வில்லை.
மலேசியாவி டம் புகலிடமும் பப் பிரச்சனை தி எனவே பெண்கள்

க்கப்படுகின்றன !
id Organization) மலேசியாவில் உள்ளது.
நத்துகள் பற்றித் தரும் தகவல்கள்:
ரஷஷர்"ஈ9டி
உதவி நிறுவனம் மலேசியாவில் தொடங்கிய முதலாவது பண்களும் 75 பிள்ளைகளும் இந்நிலையத்தில் புகலிடம் தேடி மலேசியா முழுவதிலுமிருந்து 200 பெண்கள் உதவி கோரி
#சி அற்ற, வன்முறை நிலவும் குடும்பங்களுக்கு மாற்று நிலை தாலேயே அடிவாங்கித் துன்புறும் பெண்கள் எம்மிடம் வரு னகள் உதவி நிறுவனம் இவர்களுக்கு புகலிடமும் மருத்துவ ம் அளிக்கிறது. உண்மையில் ஏற்கனவே உடைந்துபோன ார்ந்த பெண்களே எம்மிடம் உதவி வேண்டுகின்றனர்.
பவத்தில், மனைவியரை அடிக்கும் வழக்கம் மலேசியாவில் தும் வர்க்கங்களிலும் இடம் பெறுகிறது. எமது நிலையத்தை பண்களில் 60% மேற்பட்டோர் நடுத்தரக் கல்வி கற்றிருந்
த்தில் எத்தகைய கஷ்டங்கள் ஏற்பட்ட போதிலும், ஒரு i எவ்வாறும் நியாயப்படுத்த முடியாது. துன்புறுத்தப்படும் து துன்பங்களுக்கான காரணம் என்பது உண்மையே அல்ல.
து அடிமைச் சமுதாயம் அல்ல. நீதியையும் ஒழுங்கையும் ல நாம் வாழ்கிருேம். சட்ட ரீதியான உறவுகள் எவ்வாறி திருமணம் எவரையும் எவரும் துன்புறுத்த உரிமை அளிக்க
ன் சகல பகுதிகளிலும் இருந்து பெண்கள் உதவி நிறுவனத்தி உதவியும் கேட்கும் பெண்கள், தனிப்பட்ட முறையில் குடும் ர்ப்பதில் பாரதூரமான பிழை உள்ளதைக் காட்டுகிறது. r உதவி நிறுவனம் அவசியமான ஒன்ருகும்,

Page 10
குடும்பங்களே இல்லாமல் இருப்பதை விட மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் இருப்பது மேலானது.
துன்புறுத்தப்படும்பெண்கள் மகிழ்ச் யற்ற குடும்பங்களை விட்டு வெளியேறுவதை எதுவும் தடுக்க முடியாது.
மகிழ்ச்சியற் உளவியல் பாதி கள் மேலும் அள
பெண்கள்
உண்மை என்ன
1. அதிகம லேயே தங்கி உ
2. குடும்ப விலகினர். மறுப
3. பிள்ளை, பெறுவது கடின
4, பெண்க டைவிட்டு வெளி கின்றனர்.
5. திருமண கவும் இருந்த ே ஏற்படும் அவமா
 

ற குடும்பங்கள் பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் அளவற்ற ப்பை ஏற்படுத்துகின்றன. வன்செயல்கள் நிகழும் குடும்பங் ாவிடமுடியாத பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பலரும் இவ்வசதியை மிகவும் விரும்புகின்றனர். ஆனல் வெனில்:-
ான பெண்கள் தமது வாழ்க்கையை நடத்துவதற்கு கணவரி ள்ளனர்,
த்தை கவனிப்பதற்காக பல பெண்கள் தமது வேலையிலிருந்து டியும் வேலை பெறுதல் கடினமான ஒன்ருகும்.
களைப் பராமரிக்கப் போதுமான வருமானம் தரும் தொழில் ம்.
ள் தமது சட்ட உரிமைகள் பற்றி அறியாதிருப்பதால், வீட் ரியேறுதல் மூலம் பிள்ளைகளை இழந்து விடுவோமோ என அஞ்சு
எம் எவ்வளவுதான் மகிழ்ச்சியற்றதாகவும், விருப்பமற்றதாக பாதிலும் வீட்டை விட்டு வெளியேறுவதால் பெண்களுக்கு rணம் மிக மோசமானது

Page 11
இருட்டில் சில கறுப்பு மலர்கள்
முல்லேயூரான்
இவள் ஒரு நவீன நல்ல
இவளும் மாட்டுத் ெ ஆளுல் இயேசுவாக முடியவில் தற்கொலை செய்ய மு. இவள் ஒரு கறுப்பு ம இருட்டில் இருக்கும் ச இவள் ஒரு பள்ளி மா பள்ளி முடியுமுன்பே கொள்ளி வைக்கப்பட்
இவள் ஒரு செவ்வாை பாத்தி கட்ட யாருமி பாதி வழியில் பயணத் அவள் ஒரு அணுதை நாங்களெல்லாம் இருக அவளின் கதை முடிந்: என்ருலும் என் கவிதையில் அழு அவள் இருந்த ஆச்சிர அவளிருப்பை சிரமப்ப அவள் படிக்கும் பள்ளி 'இல்லை" என்ருள், 'இல்லைத்தா” என்றன நெருக்கடியின் முடிவு சமாந்தரத் தண்டவா அவளிடம் கொடுக்க ஆளுல் அவள் கண்ண இறக்கும் போதும் - அத்தண்டவாளத்தில் அந்த பழைய நல்ல தங்கால்ை கிணற்றில் விழுந்திருக் இப்பாவபூமியின் - நீ அவள் விரும்ப வில்லை அவள் இறந்தே விட்

தங்காள்
நாட்டிலில்தான் விடப்பட்டாள்
டிந்தது லர் - அதுவும் sறுப்பு மலர். ானவி
டவள்
եք
ல்லாமல்
$தை முடித்துக் கொண்டவள்
க்க
துவிட்டது.
துகொண்டே இருக்கிருள்.
மும்,
டுத்தியதாம்,
- வசதிக் கட்டணம் கேட்டதாம்,
可r计。
- அவளை ளத்தில் கைகூப்புவைத்தது. இருந்தது கற்புத்தான் கியை நினைத்து விட்டாள். சமாந்தரத்தையே விரும்பியவளுடல் பிளந்து கிடந்தது.
ாப் போலவளும்
கலாம்
ரைக்கூட ப்போலும், -froit.
-போர்க்காற்று தொகுப்பிலிருந்து

Page 12
O
அனுரதபுரம் சிறைச்சா
மனிதாபிமானத்திலும் மனித உரிை அதிர்ச்சியும் வெட்கமும் தரக்கூடிய திரிகையில் வெளியானது. அனுர மிருகங்கள் போலக் கொடூரமாக ந சில நாட்கள் நிமாண்டில் வைக்கப்பட மனித நாகரிகத்தைத் தலைகுணிய வை செயல்களினதும், அடக்கு முறையின: ஐலண்ட் பத்திரிகைக்கு அப் பெண்
"நான் சிறைச்சாலைக்குக் கொண்டு போகப்பட்டு, பெண் காவலாளிகளிடம் கையளிக்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள் பல காவலாளிகளால் சூழப்பட்டேன். 'உண்மையைச் சொல் என்ன நடந்ததென்று' என்று அவர்கள் என்னைக் கேட்டனர். நான் நடந்தவற்றை அவர் களுக்கு எடுத்துரைத்தபோது "பொய் சொல்சிருய், வேசை என்று சத்தம் போட்டார்கள்!'
**சில பெண் காவலாளிகள் என்னை அறைந்து உதைத் தார்கள். என் வாயில் விழுந்த ஒரு அடி, என்முன் பல்லில் இருந்த பிளாஸ்டிக் நிரவலை விழச் செய்தது. நான் என் காதுகளையும் முகத்தையும் என் கைகளால் மூடிக்கொண்டு என்னை அடிக்க வேண்டாமென்று மன்ருடினேன். ஆனல் அவர்கள் தொடர்ந்து என் கால்களில் உதைத்துக் கொண்டு இருந்தனர். '
"நான் அதிகம் பயந்து போயிருந்ததால், என்னுல் சத்தம் போடவோ அழவோ முடியயில்லை. பின்னர் என் கணவர் என்னைப் பார்க்க வந்தபோது, எப்படி எனக்கு இந் தக் காயங்கள் ஏற்பட்டன என்று கேட்டபோதும்கூட அவ ரிடம் நடந்ததைச் சொல்லப் பயமாக இருந்தது. நான் யாரிடமாவது முறையிட்டால் என்னைக் கொன்று விடுவ தாகப் பெண் காவலாளிகள் கூறியிருந்தனர். இது மிகவும் இலகுவானதென்றும், நான் அவர்களைத் தாக்கிய போது, அவர்கள் என்னை அடக்கப் பலாத்காரம் உபயோகிக்க நேர் ந்தது என்றும் கூறிவிடலாம் என்றும் கூறினர். அவர்க ளுடைய தடிகளையும், பிரம்புகளையும் என் முகத்தின் முன்னே சுழற்றினர்கள். பின்னர் ஒரு தமிழ்ப் பெண்ணை அவர்கள் அடித்து, மலசலக் குழிக்குள் தள்ளிவிட்டதையும் பார்த்தேன்."
கேள்வி: மலசலக்குழி என்ருல் என்ன
பதில்: மலசலக்கூடத்தில் இருந்து வெளியாகும் மலசலம் போய் விழும் ஒரு திறந்த குழி. எங்களை’ முக்கி யமாகத் தமிழ்ப் பெண்கைதிகளைக் கொண்டு தினமும் வாளிகளால் இக் குழியில் இருக்கும் மலசலத்தை

லையில் பெண் கைதிகள்
மகளிலும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு
தகவல் ஒன்று 12-6-84 ஐலண்ட் பத் தபுரம் சிறைச்சாலையில் பெண்கைதிகள் டத்தப்படுவதுபற்றி, அச் சிறைசாலையில் ட்டிருந்த இளம் பெண் கூறிய விபரங்கள் பப்பவை. பெண்களுக்கு எதிரான வன் தும் மிக உக்கிரமான வடிவங்கள் இவை.
அளித்த டேட்டியை இங்கே தருகிருேம்.
-ஆசிரியர்.
அள்ளி ஒரு வாய்க்காலில் ஊற்றவைப்பார்கள். கைதி ளுக்கு "மலசலக்குழி சிகிச்கை" என்று கூறப்படுவதை செய்வார்கள். தான் அந்த நரகத்தில் இருந்த இரண்டு மாதங்களில், நல்ல காலம் எனக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லை. ஆஞல், பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ஒரு திடகாத்திரமான இளம் பெண், பெண்காவலாளி கள் மோசமான மொழியில் பேசியதற்கு ஆட்சேபனை தெரிவித்த போது, அவளேக் கடுமையாக அடித்து மல சலக் குழிக்குள் தள்ளிவிட்டனர். இது மூன்று அல்லது நாலடி ஆழமானது. பதினைந்து நிமிடங்கள் மலசலக் குழிக்குள் நின்றபின்னர் அவளை வெளியே வரும்படி கூறி, அந்த அழுக்கு எல்லாம் உடலில காயும் வரை அவளை வெய்யிலில் நிறுத்தினர். இதன் பின்னர் அவள் அதிகம் பேசாது அமைதியாக இருந்தாள்.
கேள்வி; பெரும்பாலான கைதிகளின் நிலை என்ன?
பதில்: அவர்கள், முக்கியமாக பெருந் தோட்டங்களைச்
சேர்ந்த தமிழ்ப் பெண்கள் மிகவும் அழுக்கடைந்த கிழிந்த துணிகளை அணிந்திருப்பார்கள். சிலர் இரண்டு வருடங்களாக இந்தக் கிழிசல்களை அணிந்திருக்கின்ற னர். அவர்களுடைய தலை நிறையப் பேன் இருப்பது டன் உடலில் தெள்ளும் காணப்படும். சிலசமயம் அவர்கள் சண்டையிடும்பொழுது ஒருவருடைய ஆடை களையும் மயிரையும் மற்றவர்கள் பிய்த்துக் கொள்கின் றனர். மாதவிடாய் வரும் பொழுது உபயோகிப்ப தற்காக துணியை, ஒருத்தி தூங்கும் பொழுது மற்ற வள் கிழித்து விடுகிருள். இளம் பெண்கள் மாதவிடாய் வரும் பொழுது இரத்தம் கால்வழியே ஒழுகுவதை யும் பொருட்படுத்தாது நிற்பதை சகஜமாகக் காண லாம். அவர்களுக்கு மாற்று ஆடைகளும் இருக்காது, தாங்கள் மனிதரைப் போல் வாழ்வோம் என்ற நம்பிக் கையை இழந்து விட்டதாகப் பலர் எனக்குக் கூறினர்.
கேள்வி: உணவு எப்படி இருந்தது?
பதில்: நல்லது. காலையில் அரை இருத்தல் பாண், சம்பல்

Page 13
வெறும் தேநீர், ஒரு துண்டு பனங்கட்டி, மத்தியானம் சோறு, மாட்டு இறைச்சி அல்லது மீன் அல்லது முட் டையும் வேறு இரு கறிகளும் கிடைக்கும். இரவும் அவ் விதமே. மீன், இறைச்சி இல்லாதபோது பருப்புக்கறி கிடைக்கும். என் கணவர் எனக்கு உணவு கொண்டு வரமுடியாத வேளைகளில் சிறைச்சாலை உணவைச் சாப்பிடுவேன். சாப்பாட்டில் பெரும் பகுதி. முக்கிய மாகச் சோறும் மாட்டிறைச்சியும் சில பெண் கைதிக ளால் காவலாளிகளின் அறைக்கு எடுத்துச் செல்லப்ப டும். இப் பெண்கைதிகள், மற்றவர்களையும் தம் உண வின் பெரும் பங்கைத் தமக்குக் கொடுக்கும்படி பயமு றுத்துவர். சில பெண் காவலாளிகள் அங்கு உணவு உண்பதுடன் தங்கள் பிள்ளைகளுக்கும் கட்டி எடுத்துச் செல்வர்.
கேள்வி: பெண் காவலாளிகளை மேற்பார்வை செய்ய
மேற்றன்கள் ஒருவரும் இல்லையா?
பதில்: இரு மேற்றன்மார் ஷிவ்ட் முறையில் வேலை செய் தனர். அவர்கள் நல்ல பெண்களாக இருந்தாலும் ஆறு அல்லது எட்டுக் காவலாளிகள் ஒரே சமயத்தில் வேலை செய்வதால் அவர்களுக்குப் பயப்பட்டனர். காவலாளி கள் கைதிகளைத் தாக்கும் பொழுது அவர்கள் வேறுபக் கம் பார்த்தனர். ஒரு சமயம் நான் தாக்கப்படும் பொழுது ஒரு காவலாளி "போதும்" என்ருள், அப் போது மற்றவர்கள் அவளை ‘பெட்டை நாய்க்குப் பயந்த வேசை என்று திட்டினர்கள்.
கேள்வி: எத்தனை முறை கண்காணிப்பாளரும் ஜெயிலரும்
சோதனைக்கு வருவார்கள்?
பதில்: தினமும் வருவார்கள். ஆனல் அவர்களுக்கு முறை யிட ஒருவருக்கும் துணிவு வராது. ஒரு முறை நான் கண்காணிப்பாளருக்குப் பதில் அளிக்கையில், பயத் தின் காரணமாக, இங்கு எல்லாம் திருப்திகரமாக இருக்கிறதென்று கூறினேன். அப்படியிருந்தும் இரு பெண் காவலாளிகள் அவர்களுக்கெதிராக ஏதும் கூறி னல் என்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினர்.
கேள்வி: நீர் விடுதலை அடைந்தபின் உம் கணவர் முறையி
LaSaipahuit?
பதில்: முறையிட்டார். ஆனல் அவர் முறையிடப் பிந்தி விட்டார் என்று கூறப்பட்டது. நான் சிறைச்சாலை யில் இருந்தபோது முறையிட்டிருந்தால் விசாரணை நடந்திருக்குமாம். நான் சிறைச்சாலை சென்ற மூன் மும் நாள், என் உடலில் உள்ள அடையாளக் குறிகளை ' தேடும் பரிசோதனையின் போது என்முழங்காலுக்குக் கீழிருந்த கண்டிப் G3. urtGOT காயத்தைப் பார்த்துவிட்டார்கள். அப்பொ

11
ழுது ஒரு பெண் காவலாளி என்னை முறைத்துப் பார்த் தாள், நான் நெருப்புச் சுட்ட அடையாளம் என்று பொய்சொள்னேன். அப்பொழுது அங்கு நின்ற ஆண் காவலாளி நான் பொய் சொல்வதாகக் கூறி என்னை அடிக்கத் தயாரானன். உடனே பெண் காவ லாளி அவனுடைய காதில் ஏதோ சொல்ல, அவர்கள் என்னைப் போக அனுமதித்தனர்.
கேள்வி: வைத்திய அதிகாரி வருவதில்லையா?
பதில்: பெண்கள் பகுதிக்கு வைத்திய அதிகாரி எப்போதா வதுதான் வருவார். ஒரு ஆண் நேர்ஸ்தான் எங்களுக் குச் சிகிச்சை செய்வார். வயிற்றேட்டம், காய்ச்சல், தமமல், இருமல், கண்நோய், சொறி, புண் எதுவந்தா லும் அவர் உயிர்ச்சத்து சி, பி மாத்திரைகள் தரு வார். பெருந்தோட்டப் பகுதியில் இருந்து வந்த பெண்கள் பெரும்பாலானேர் கண் நோயினல் அவதியு றுகிறர்கள். எனக்கும் கண் நோய் வந்தபோது என் கணவர் கண் மருந்து கொண்டு வந்து கொடுத்தார். மற்றையப் பெண்கள் தங்களுக்கும் கொஞ்சம் தரும் படி முழங்காலில் மண்டியிட்டுக்கூட கெஞ்சினர்கள்.
கேள்வி: சமய வழிபாடுகள் எப்படி?
பதில்: சாமி அறை இருந்தாலும் சில கைதிகளே அங்கு செல்வர். ஆனல் மிகவும் கொடுமை செய்யும் பெண் காவலாளிகளே அதிக சமய நோக்குடன் புத்தரைத் தினமும் தொழுவர். முக்கால்வாசி பெண் காவலா ளிகளுக்கும் எந்த விதமான பெண்மையான குணங்க ளும் இல்லை."
இவ் விளம்பெண், முன்பு "ஐலண்ட்" பத்திரிகையில் எந்த கதையைப் படித்ததாகவும், தானும், இந்த "சிறிய பெல்சன்’ போன்ற அனுராதபுரம் சிறைச்சாலை யில் இருக்கும் துர்பாக்கியசாலிகளான கைதிகளின் துன்பத்தைக் குறைக்கத் தன்னுடைய பங்கைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது, என்றும் கூறி ஞள்.
“ஐலண்ட்' பத்திரிகை செய்த சுதந்திரமான விசார னையின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமும் பெண்கள் பகுதிக்கு அடிக்கடி செல்லும் வருகையாளரி டமும் இருந்து பெற்ற தகவல்களிவிருந்து எந்த மணி தப் பிறவியும் பயப்படும் அளவில் சிறைச்சாலையின் நிலைமை இருக்கிறதென்று அறிந்தோம் இதில் வேதனை தரும் விஷயமென்னவென்ருல் இச் சிறைச்சாலை பூரீ மகாபோதி, ரூவான்வலிசெயா, தூபராம மற் றும் ஏனைய பெளத்த கோயில்களில் இருந்து, சில நூறு யார் தூரத்தில் இருக்கிறது என்பதாகும்.

Page 14
12
சடப்பொருள் என்று நினை
மாலை ஐந்து மணியாகியும் வெயில் கனல் வீசிற்று. பங்குனிக் காய்ச்சல் சுள்ளென்று உடலில் சுட்டது.
பத்துநாள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்த நாய்க்கூட்டத்தின் முன்னுல் சாப்பாட்டுப் பார்சலை எறிந்தது போல. அந்த "மினிபஸ்ஸை"க் கண்டதும் சனங்கள் பாய்ந்து ஏறிய காட்சிக்குப் பொருத்தமான உதாரணமாய் அவளுக்கு அதுவே தோன்றியது.
‘எந்த நேரத்தில் எது நடக்குமோ? எப்போது போக்குவரத்து எல்லாம் திடீரென ஸ்தம்பித்துப் போய்விடுமோ? என்ற பதட்டத்தில் மக்கள் பாய்ந்தார்கள். அவர்களிலும் பிழையில்லைத்தான் !
ஆணுலும் அவர்கள் நாயாக வில்லை.
அவளுக்குத் தெரியும். கிரிசாம்பாள் மாதிரிக் கடைசிவரையில் நின்முலும் "மினிபஸ்ஸின் மினிப் பெடியன்' விட்டுவிட்டுப் போகமாட்டான். பாய் ந்தோடிப் கும்பலுக்குள் சேர்ந்து நசுக்குக் படாமல் இறுதியாகத் தனித்து நின்ற அவளை, மினிப் பெடியன் இராஜ உபசாரம் செய்து வரவேற்றன்.
"அக்கா, இடமிருக்கு வாங்கோ, உதிலை அடுத்த சந்தியிலே கனபேர் இறங்குவினம், இருக்கிறதுக்கு சீற் கிடைக்கும் வாங்கோ'
அவன் உபசாரம் செய்யாமல் இருந்திருந்தாலும் அவள் ஏறித்தான் இருப்பாள். "நெருக்கடி என்று இதை விட்டுவிட்டு அடுத்ததற்குக் காத்திருப்பதில் பயனில்லை. அடுத்ததும் இப்படி அல்லது இதைவிட மோசமான நிலையில்தான் வரக்கூடும்.
மேலே நீல நிற மேகத்தில் வெண்பஞ்சு முகில்கள் தலை தெறிக்க ஒடிக்கொண்டிருந்தன.
"அக்கா மேலே ஏறுங்கோ இதி.ை நிண்டா விழுந்திடுவியள். உள்ளுக்குப் போங்கோ’.
அவள் மேலே பார்த்தாள். "புற் ( கால் துரங்களில் ஏ
முகத்தை எந் ப்பினுலும் மூக்குக் துவிடும் போல { கிலிருந்து புறப்படு டியைக் கழற்றி வைத்துக் கொள்ள தனக்குள்ளாகவே டாள். ஒற்றைக் க த்துக் காலால் நசித் முகத்தைச் சுளித் "நசிபடும் இனத் பிரதிநிதி என்று சிரித்துக் கொண்ட
'அண்ணை, கா கால் சம்பலாப் டே
ஒ ஐஆட யாமல் மிதிச்சிட்ட
முன்னுல் நிை கிழவர் வாயெல்ல காசம் செய்து அ கேட்டுக் கொண்ட
ஆண்களின் வி ளைச் சுற்றிலும் அல சீ. உடலெங்கு
வது போல ஒரே பொம்பிளை வேலை டால், தனிக் கா ஒட்டிக் கொண்டு வேணும். அல்லது கூடிய அளவு துரர வேணும். இர6 வேலைக்குப் போக
அவளைவிடக்
குறைந்த சம்ப ப்பிஸ்ட் கிளார்க்' சுகந்தங்களையும்
'பாங்க் கிற்கு 6 அவளுக்குப் பெரி என்ன செய்வது? வும் ஊரை ஏமாத் காக லட்சம்,

ாத்தாயோ
ஏறியபின் திரும்பிப் போட்டில் ஒற்றைக் ழுபேர்,
தத் 'திசையில் திரு
கண்ணுடி உடைந்இருந்தது. 'பாங்க்' ம் போதே கண்ணு"ஹாண்ட்பாக் கில் ாத தன் மறதியைத்
நொந்து கொண்ாலை யாரோ சப்பாந்தார்கள். வலியினல் துக் கொண்டவள் தில் நானும் ஒரு நினைத்து உடனேயே -IT6ir,
ல எடுங்கோ. என்ரை பாச்சு
ம் சொறி
ଉର୍ଦt '
தெரி
ன்ற அரை நரைக் ாம் பல்லாக மந்தவளிடம் மன்னிப்புக்
froi :
பியர்வை நெடி அவால் காற்ருய் வீசியது. நய் புழுக்கள் நெளி
அரியண்டம். ஒரு க்குப் போறதெண் * எடுத்து வைச்சு
போற வசதியிருக்க து நடந்து போகக் த்திலை வீடு இருக்க ண்டும் இல்லாட்டி ப்படாது.
குறைந்த வயதுளம்-அந்த டைசத்தியா, சுகந்தரும்
பூசிக் கொண்டு வருவதைப் பார்க்க ப அகுயை கிளம்பும். அப்பாவும், தாத்தாதிச் சேர்த்து வைச்ச லட்சமாய் இருக்க
? - கோகிலா மகேந்திரன் -
வேணும் கார் வாங்க? ம் . மூச்சு ஒன்று பெரிதாய்க் வெளிச் சுவாசமாய்முடிவடைவதற்கிடையில்
மினிபஸ் "பிரேக்" போட்ட தைச் சாட்டாக வைத்துக் கொண்டு பின்னூல் நின்று தன் முழுஉடலும் அவள் மேல்படும்படி அவளுக்கு மேல் சாய்" ந்தான் ஒரு கூலிங் கிளாஸ்"
அது எதிர்பாராத சாய்வு அல்ல, திட்டமிட்ட சாய்வு என்பதை அவள் இலகுவில் புரிந்து கொண்டாள். ஆணுலும் உடனடியாகஒன்றும் செய்ய முடியாத நிலை. வாயுள் கசந்த எச்சிலை வெளியே எட்டித் துப்பினுள். அவன் மீது விழுந்திருக்க வேண்டியது பாதையோரத்தில் சங்க மமாகியது.
இரண்டாவது முறையாக அவன் அவளது இடுப்புப் பகுதியில் கைபடும்படி நெரித்தபோது ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் நின்ற அவனது உள்நோக்கம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாதிருந்தது அவளால். அவன் காதருகில் குனிந்து மிக மெலிதாகவும் அமைதியாகவும் yenuesit சொன்னுள்.
'தம்பி, நாங்கள் கலியாணம் கட்டிப் பிள்ளையும் பெத்த ஆக்கள்’
பக்கத்தில் வேறு யாருக்கும் கேட்டிருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை ஆனல் அவனுக்குக் கட்டாயம் கேட்டது என்பது. அவன் 'இறக்கம், இறக்கம்' என்று கத்திக் கொண்டு விழி பிதுங்கியபடி பாய்ந்து இறங்கிய வேகத்தில் தெரிந்தது.
உன்மையாகவே திருமணம் செய்வதற்கு முன்னுல் கூட. இப்படியானவர்களுக்கு இப்படியாகவும் இப்படி அமைதியாகச் சொல்லியிருக்கலாம் என்று இப்போது அவளுக்குத் தோன். றியது. ஆணுல் அப்போது அப்படி முடியவில்லையே!

Page 15
அம்பனை முதல் மாசியப்பிட்டி வரை அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கிழவி மாசியப்பிட்டிச் சந்தியில் கடகத்தையும் தூக்கிக் கொண்டு இறங்கி யதுடன் பின்னல் அமர்ந்திருந்த ஒரு "சதுர மூஞ்சி திடீரெனப் பாய்ந்து வந்து அவளுக்குப் பக்கத்தில் இருந்த போதே சிறிது சந்தேகம் இருந்தது.
'இது ஏதோ கொழுவலுக்குத்தான் ஆள் வந்திருக்கு. "பிக்பொக்கற் ஆகவும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவள் தனது "ஹாண்ட் பாக்கை' எடுத்து. அவன் இருந்த பக்கத்திற்கு மறுபக்கம்மிக அவதானமாய் வைத் துக் கொண்டாள்.
அவன் தள்ளத் தள்ள, அவளும் தள்ளித் தள்ளி, இனிமேல் தள்ள முடியாத அளவுக்கு ஒதுங்கியிருந்த போது,
அவன் மார்பில் குறுக்காகக் கட்டியிருந்த கையை அவள்பக்கம் நீட்டி, அவள் மார்பில் படும்படி திருப்பியபோது
அந்த ஒரு கணத்தில்
அவள், பின்னர் நடப்பது, சூழல், எதையும் நினைத்தப் பார்க்காமல் திடீரென எழுந்து. அவனது கன்னத்தில்
பளீர் பளீர் என்று திவலை பறக்க அறைந்த நிகழ்ச்சி
சனியன். அம்மாசிப் பீடை"
அப்போது அவளால் நிதானமாக
இருக்க முடியவில் லை. இதோ இப்போது பிதுங்கிக் கொண்டு ஒடு கிரு னே! இவனைப் போல.
த்தான் அவனும் அன்று அடுத்த தரிப்பில் பாய்ந்து விழுந்து இறங்கிக் கொண்டான். அதன் பின்னர்தான் இவளுக்குச் சல கண்டமாய் வியர்த்துக் கொட்டிற்று. டஸ்ஸில் இருந்த மற்றவர்கள்.
"என்ன பிள்ளை? என்ன பிரச்சினை? என்ன நடந்தது?’ என்று கேட்க, இவள் பதில் ஒன்றும் சொல்லாமல் மெளன மாகக் கண்ணிர் வடித்தாள்.
இதென்ன கேள்வி? ஒரு குமர்ப்பிள்ளை, ஒரு பெடியனுக் குக் கைநீட்டி
அடிக்கிறதெண்டா? எண்டு கேட்க வேணு தது எண்டு அந்தப் சொல்ல வேணுமே? வக்காலத்து வாங்க மெளன மாய் இரு னும் பசுமையாய்
கிறது.
ஒரு நாள் மட்டு ஒருவனுக்கு ஒ( தல்! இன்னுெருவ நாள் பிளேட் கீறல்
*உன்ரை வறட் நாளைக்கு எக்கச் சக் ப்படப் போருய்' என கிருள்.
இப்படி எத்த சமாளிப்பது?
இவங்களெல்ல
சொறியிறதக்கு, நா
தகவென்று சொர்ை இருக்கிறது மாத்தி நான் நடக்கும்ே மலர்ந்த புஷ்பங்கள் போலத் தோன்றுகி ணமில்லை. என்ரைக கொடி இல்லாமல் காரணம் என்று
நாட்களில்தான் அ பேசப்பட்டு வந்த தி லாம் தட்டிக் கழித் ரெனத் திருமணத்தி
இன்னும் ஏழு ஐந்து, நாலு, மூல நாள்கள் வேகமாய் பறந்தன. இப்பே கொடி ஏறிவிட்டது
கொடியோடு போது ஒரு ஆறுதல் மேல் இந்தக் குர விடாதுகள்" உண்ை
அவள் எதி மாதங்களாய் அவ சொறியவில்லை. ஒரு "சீற்" வெறுபை
கூடச் சில F

ல் எண்ன நடந்தது ணுமே? என்ன நடந் பிள்ளை வாயால் ' என்று இவளுக்கு i, இவள் அதற்கும் ந்த நிகழ்ச்சி இன் மனதில் நிழலாடு
Lort? ருநாள் ஊசிக் குத்னுக்கு இன்னெரு. t
டுருங்கியாலைநீ ஒரு க மாய்ப் பிரச்சினை - ன்று அம்மா சொல்
ன நாள்கள் தான்
பாம் என் னுேடை ான் வடிவாய்த் தக ைவிக்கிரகம் மாதிரி ரம் காரணமில்லை. பாது பார்த்தால் இரண்டு தத்துவது கிறது மட்டும் கார5ழுத்தில் ஒரு தாலிக்
இருக்கிறதும் ஒரு
அவள் உணர்ந்த து வரை வீட்டில் ருெமணங்களையெல்து வந்தவள், திடீகுச் சம்மதித்தாள்.
9 நாள்கள்! ஆறு, ன்று. இரண்டு. க் கொடி கட்டிப்ாது அவள் கழுத்தில் |
பஸ்ஸில் ஏறும் }! "அப்பாடா இனி"ங்குகள் சேட்டை மை தான்!
ர்பார்த்தபடி சில ளோடு ஒரு வரும் அவளுக்கு அருகில் Dயாக இருந்தாலும் மயங்களில் நின்று
3
கொண்டிருக்கும் சாரங்களும், வேட்டி. களும் காற்சட்டைகளும் அதில் அமர விரும்பாதவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு மாதமும் இந்த மூன்று நாளும் வேலைக்குப் போவது, அது பெண்களுக் கென்றே விதிக்கப்பட்ட தண்டனை அவளால் நடக்கவே முடிய வில்லை! தேகமெல்லாம் ஒரே அலுப்பு! 'பாங்க்' கிலிருந்து பிரதான பஸ் நிலை யத்திற்கு நடந்து வரச் சோம்பல்பட்டுக் கொண்டு அவள் பாங்கிற்கு முன்னல் இருந்த ஹால்ற் டிலே நின்று கொண்டிருந்தாள். வீதி யில் ஜன நடமாட்டம் குறைவு தான். இப்தோது யார்தான் தேவையில்லாமல் வீதிக்கு வருகிருர்கள்? ஹாண்ட்பாக்கிலிருந்த 'ரீடர்ஸ் டைஜஸ்டை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தார்.
யாரோ இருவர் சைக்கிளில் வந்தமாதிரி இருந்தது. அவள் கவனிக்கவில்லை.
கழுத்தில் ஏதோ அட்டை ஊர்ந்தது போல என்ன இது? அவள் சிந்தனை புத்தகத்தைவிட்டு மீண்டபோது அந்த வெழுத்த வெள்ளைச் சாரங்கள் இரண்டும் தூரத்தில் பறந்து கொண்டிருந்தன.
"ஐயோ என்ரை தாலிக் கொடி , கள்ளள். கள்ளன்' அவள் பலமாகக் குழறிக்கொண்டிருந்தபோது நல்ல காலமாக அவ்விடத்தில் வந்த பாங்க் மனேஜரின் கார் அவர்களைப்பிடித்துத் தாலிக்கொடியை மீட் டெடுத்தது.
அடுத்த நாள் அவளது கணவரே சொல்லிவிட்டார், 'நீர் கொடியை வைச்சிட்டு ஒரு மாலையைப் போட்டுக் கொண்டு போம் . பளபளவென்று மின்னுற உந்தக் கொடியாலை உம் மடை உயிருக்கே ஆபத்து"
கொடியினுல் உயிருக்கு ஆபத்து உண்மைதான். கொடி இல்லாவிட்டால் சுய கெளரவத்திற்கும் மரியாதைக்கும் ஆபத்து. இதை எப்படி இவரிடம் சொல் வது?
பழைய நிகழ்வுகளின் கனம் இவருக்கு என்னதெரியும்? நீரில் ஊறிய சாக்குப் போல அவளுக்குள்ளே இதயம் கனத்தது.

Page 16
4
இப்போது அவள் மீண்டும் கன்னி போலத் தோற்றமளிக்கிருள். மீண் டும் பிரச்சினை,
இன்று அந்தக் கூ லிங் கிளா சு டன் ஏற்பட்ட பிரச்சினையில் க லங்கிய கண் களை மறைத்துக் கொள்ள, அவள் ஹாண்ட்டாக்கிலி ருந்த பத்திரிகையைத் தூக்கிப் பார் த்துக் கொண்டாள். -
* சும் மா ( பத்திரிகையிலை ஏ திருங்கள், இை வகையான பெ
பற்றி o jį 35 6 எழுத வேனும்.'
இந்த நினை கிப் போனவள் வே லை க் குப் பு
கிறீன்ஹம் கொமன்
இங்கிலாந்தில் லண்டனுக்கு மே கொமன் என்னும் இடம் உள்ளது. இ இருக்கிறது. அண்மைக்காலத்தில் இங்கு வந்து குவித்து வருகின்றனர்.
அணுவாயுத யுத்தத்தின் அபாய புத் தெரிவிக்கும் முகமாக இவ்விராணுவ ( அமைத்துள்ளனர். 1981 ம் ஆண்டு முத ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகி யாயர்கள், வேலை இழந்தவர்கள், மாண6 முகாமில் பங்குபற்றி, நாட்டின் யுத்தக் ெ பைத் தெரிவித்து வருகின்றனர், மழைே காற்ருே, எந்நேரமும் பெண்களாவது இருப்பார்கள். நாட்டின் இந்த முகாமில் தங்கி இங்குள்ளவர்களுக்
அந்த இராணுவ
இப்பெண்கள், இராணுவ முகாமு காவல் காக்கப்படுகிறது. சில சமயங்கள் கொண்ட காவல் படையினர் காவல்வே சுற்றளவு கொண்ட இவ்விராணுவ முகாட களாலும் ஆனதாகும். னர் மூன்று பெண்கள் இராணுவ முகாழு இம்முகாமுக்குள் புகுந்தனர் என்று இ அதிர்ச்சியும் அடைந்தனர்.
இப்படியான கெ

நாஞ மாணு எண்டு தோ எல்லாம் எழு தப்பற்றி. இந்த ண்களின் பிரச்சினை * கு ர ல் பகுதிக்கு
வுடனேயே உ ற ங் அ டு த் த நாள் 1றப்பட்ட போது ,
ஹா ன் ட் பாக் கில் ஊசி, பிளேட் ஆகியவற்றுடன் நினைவாக ஒரு "காஞ் சோண்டி மரக் கொப்பையும் எடு த்து வைத்துக் கொண்டாள்.
*சொறியிறவன் ஒரேயடியாகச் சொறிஞ்சு கொண்டு இருக்கட்டும்!"
நன்றி - மல்லிகை - ஜீன்.
ன் சமாதான முகாம்
ற்கிலே ஜம்டது மைல் தூரத்தில் கிறீன்ஹம் ங்கு ஒரு பெரிய ஆங்கில இராணுவ முகாம் அமெரிக்கர் அணுவாயுதங்களைக் கொண்டு
ங்களே உணர்ந்த பெண்கள், இதற்கு எதிர்ப் முகாமுக்கு வெளியே ஒரு சமாதான முகாமை ல் இச்சமாதான பெண்கள் முகாம், மூன்று ன்றது. தாய்மார், பாட்டிமார், உபாத்தி விகள் இப்படிப் பலதரப்பட்ட பெண்கள் இம் கொள்கைக்குத் தங்களது அமைதியான எதிர்ப் யா, வெய்யிலோ , பனிக்குளிரோ, புயல் முகாமுக்கு வெளியே, குறைந்தது ஐம்பது பல பகுதிகளிலும் இருந்து பெண்கள் வந்து கு உற்சாகம் கொடுப்பார்கள்.
மக்கு உள்ளே வந்து விடாதபடி கடுமையாகக்
இருநூறு பேர் முதல் அறுநூறு பேர் வரை லை செய்து வருகின்றனர். ஒன்பது மைல் மின் வேலி மிக உயரமாகவும் இரும்புக் கம்பி டுபிடிகள் இருந்தும், சில மாதங்களுக்கு முன் மக்குள் புகுந்துவிட்டனர். இவர்கள் எப்படி ராணுவப் பாதுகாவலர் பெருங்குழப்பமும்

Page 17
சிதனம் - பெண்ணி
22c2a2a222222
இந்தியப் பத்திரிகைகளில் பெண்களின் விபத்து மர ணங்கள் பற்றி ஒவ்வொரு நாளும் செய்திகள் இடம் பெறு கின்றன, பெரும்பாலும் சமைக்கும் போது நெருப்புப் பிடித்து இறப்பதாக இச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாலைக் காய்ச்சும் போதோ, சோறு ஆக்கும் போதோ சேலையில் தீப்பிடித்துப் பெண்கள் இறந்து போவது சர்வ சாதாரணமாகப் பத்திரிகைகளில் இடம் பெறுகின்றன.
சாதாரண விபத்துகள் போன்று தென்படும் இந்த மர னங்களை இந்தியாவின் பெண்ணுரிமை இயக்கங்கள் சீதனச் சாவுகள் என்று குறிப்பிடுகின்றன. பெண்களுக்கு எதிரான வன் முறைகளின் மிகத் தீவிரமான வடிவமே இத்தகைய மரணங்கள் எனப் பெண்ணுரிமை வாதிகள் கூறுகின்றனர். விபத்து போலக் காணப்படினும் இம் மரணங்கள் கவன த்தை ஈர்ப்பவை: ஏன் இத்தகைய மரணங்கள்? என்ற ஆராய்ச்சியைத் தூண்டுபவை.
இத்தகைய மரணங்களின் எண்ணிக்கையும், அவற்றின் விபரங்களும் திகிலூட்டுபவையாகும். 1983ம் ஆண்டு டெல்லி நகரில் 690 பெண்கள் தீக் காயங்களால் இறந்துள் ளனர். இவர்களுள் 270 பெண்கள் 18-25 வயதுக்கு உட் பட்டவர்கள். திருமணம செய்தவர்கள். ஆளுல் இம் மர ணங்களில் மிகச் சிலவற்றைத் தவிர ஏனையவை "விபத்து கள்’ என்றே தீர்ப்பளிக்கப் பெற்றுள்ளன. ஆணுல் இப் பெண்கள் திருமணமானவர்களாகவும், வயதால் இளையவர் களாகவும் இருப்பதும், கணவன் வீட்டிலேயே அவர்களுக் குத் தீக் காயங்கள் ஏற்படுவதும் பலரது கவனத்தையும் தூண்டின? உண்மையில் இவ் விபத்துகள்" எவ்வாறு ஏற் படுகின்றன என்பதை அறியத் தூண்டின. இம் மரணங் கள் பற்றிய விழிப்புணர்வும், எச்சரிக்கையும், அக்கறையும் பெண்கள் இயக்கங்கள் மத்தியில் ஏற்பட்டதன் பயனக பல உண்மைகள் தெரியவந்தன!
பெண்ணைத் திருமணம் செய்வதற்காகக் கேட்கும் சீத னத்தின் தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் இந்நாட் களில் திருமணம் செய்த இளம் பெண்கள் தமது கணவர் வீட்டில் தீ விபத்தினுல் இறப்பதும் அதிகரித்து வருவது தற்செயலானது அல்ல. பெண்கள் குழு ஒன்றினுல் திரட் டப்பட்ட விபரங்களில் இருந்து டெல்லியில் 1982ம் ஆண்டு இறந்த 109 பெண்களில் 85 பெண்கள் திருமணம் செய்த வர்கள். அவர்களது சராசரி வயது 26. இவர்களில் எவ ருமே விதவைகள் அல்ல. திருமணம் செய்யாத, வயது முதிர்ந்த பெண்களின் தீ விபத்து மரணங்களை விட திரு மணமான, இளம் பெண்களின் மரணங்கள் தொகையில் அதிகமாகும்.

Eன் மரணவாசல்
இம் மரணங்களைப் பொலிஸார் போதுமான அளவு விசாரிப்பதில்லை. இது மட்டுமல்லாமல், சில சமயங்களில் மரணமான பெண்ணுடைய கணவர் அல்லது ஆண் உறவி னரின் வேண்டுதலின் பேரில் மரண விசாரனை, போஸ்ட்மோ ற்றம் ஆகியவை நடத்தாமல் விடப்பட்டுள்ளன. இந்த மர ணங்கள் பற்றி பொலிசார் அதிக அக்கறை எடுப்பதில்லை. இவை தற்கொலைகள் எனவும் விபத்துகள் எனவும் இலகு வாகத் தீர்ப்பளிக்கப்படுகின்றன. நடுநிலை வாய்ந்த விசா ரணைகள் எப்போதும் நடைபெறுவதில்லை. மேலே பார்த்த 109 மரணங்களிலும் 72 விபத்துகள் என்றும் 34 தற்கொ லைகள் என்றும் பொலிஸார் தீர்ப்பளித்தனர். 3 மரணங் களே பொலிசாரினல் கொலைகள் என்று கூறப்பட்டன.
"விபத்துக்கு உள்ளான பெண்கள் தமது மரணப்படுக் கையில் அளிக்கும் வாக்கு மூலங்களும். நம்பகமானவை யாக இல்லை. ஏனெனில் இவ் வாக்குமூலங்கள் பெண்ணு டைய கணவர். உறவினர்கள் முன்னிலையிலேயே பதியப்படு கிறது. இந்த நிலையில் பெண் தனது உண்மையான நிலை யைக் கூறமுடியுமா? கணவருடைய மாமன், மாமியுடைய கொடுமைகளுக்கும், சித்திரவதைக்கும் ஆளாகும் போதே வாய் திறவாத பெண்கள் தமது மரணப் படுக்கையில் எவ் வாறு உண்மையைக் கூறுதல் முடியும்?
இம் மரணங்கள் பற்றிய, பெண் இயக்கங்களின் தொடர்ந்த விசாரணைகள், இவற்றிற் பல கொலைகளே என்ற உண்மையைத் தெரிவித்துள்ளன. சீதனம் அதிகம் கொண்டுவரவில்லை என்றும், மேலும் சீதனம் தரும்படியும் கேட்டுக் கணவனும், கணவனது பெற்றேரும் பெண்களைக் கட்டாயப் படுத்துவதன் விளைவுதான் இம் மரணங்கள். தமது மனைவியர் மேல் மண்ணெய் ஊற்றி நெருப்புவைத்து விட்டு, சமைக்கும் போது நெருப்புப் பற்றி இறந்தாள் என்று பொலிசாரிடம் கூறிய எத்தனையோ கணவர்கள் பற்றி இப்போது தெரியவந்துள்ளது.
பெண்ணைத் தெய்வமாகவும், சக்தியாகவும் மதிக்கும் வழக்கம் உள்ள நாட்டில் நாளாந்தம் நடக்கும் இச் “சீதனச் சாவுகள்" பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். சமீப காலமாகவே இவை இடம் பெறுகின்றன என்றும் தோன்ற லாம். ஆனல் இவை வழக்கமாகவே இடம்பெற்றன என் பதும், இப்போது தான் வெளி உலகிற்குத் தெரியப்படுத் தப்பட்டன என்பதும் தான் உண்மை.
ஆதாரம்:- சகலி. டெல்லி.

Page 18
16
பெண் விடுதலை
மாசிலாமணி
வ்வருடம் மாசிலாமணி மங்களம்மா தமிழ்ப் பெண்கள் மத்தியில் முதன்மு துகளைப் பத்திரிகை மூலம் எடுத்துக் யற் சுதந்திரம் பற்றியும், சீதனவழி பெண்களுக்காக வெளியிட்ட தமிழ்ம
வந்தார்.
இலங்கையில் அந்நியர் ஆட்சிக் காலத்தில் பாரம்பரியமும் மரபு ம் பேணி வீடுகளிலே தனி ஆசிரியர்களி டம் கல்வி கற்று வாழ்ந்த ஒரு சிலர் ஒரு பக்கமும் அந்நிய மதப் பாடசாலை களில், மேலைத் தேசப் பெண்களிடம் கல்வி கற்று, வெவ்வேறு மதி: பண் பாட்டு அம்சங்களிடையே சிக் கித் திணறி உயர்கல்வி கற்று உத்தியோகம் வகித்த சிலர் ஒரு பக்கமுமாக பெண் கல்வி நிகழ்ந்து கொண்டிருந்த காலத் தில் புதியதொரு வீச்சினை நிஅமுகப் படுத்தியவர் மாசிலாமணி மங்கம்மாள் (1884 - 1971) ஆவர்.
இவர் யாழ்ப்பாணம் வண்ணுர் பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் கதிரவேற்பிள்ளையின் புதல்வி. குடும்ப பின்னணி காரணமாக இந்தியத் தொ டர்புகள் வாய்க்கப் பெற்றிருந்தார்
 ேத சி ய விழிப்புணர்ச்சியும்,
போராட்டமும் இந்திய வில் வீறு
கொண்டெழுந்த காலத்தில் இலங்கை யில் சமயத்தைப் பாதுகாக்கும் பணி மாத்திரம் தொடங்கப்பட்டிருந்தது. அரசியலைப் பற்றிய சிந்தனையோ சுதந் திர விருப்போ செல்வாக்குப் பெற வில்லை. இந்தியச் செய்திகளைக் கேள்வி யுற்றும் பார்த்தும் சிறு சலசலப்புகள் தோன்றின. அவற்றைப் பிற்காலத் தில் பூதக் கண்ணுடியில் பார்த்து மகி
"நாம் ஆர்க்கும் குடியல் இலட்சிய வாசகம் ,
ழக்கூடிய ஒரு நி: தது. ஆனல் இ நேரடியாகக் கல யொரு இலங்
மங்களம்மாள் ஒ( சொல்லவேண்டும் பிறந்த இவர் உ எனக் கூறுவதற்கி இவருக்கு இந்திய டங்கள் பற்றிய களும் நிறையவே
சமூக சே திருத்த வேண்டு. கொண்டிருந்த இ டாவது வயதில் சங்கம்' எனும் ணுர் பண்ணை நாமறிந்த அளவி உணர்வு பெற்ற களின் முதலாவ, 1902 ம் ஆண்டின் சங்கம் இருந்ததா இச் சங்கம் "மதி மகளிருக்குப் புதி னம்பிக்கையும் அமைக்கப்பட்ட யை நோக்கிய என வும் கொ தான் இந்தியா தில் நின்று விட கூறியுள்ளார்.

ஸ்க்கு உழைத்த
மங்களம் மாள்
- வள்ளிநாயகி இராமலிங்கம்
"ளின் நூற்ருண்டு ஆகும். இலங்கையில் தல் பெண்விடுதலை தொடர்பான கருத் கூறியவர் இவர். பெண்களின் அரசி
முக்கத்தை ஒழித்தல்
கள் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி ஸ்லோம்' என்பது இப் பத்திரிகையின்
பற்றியும் தாம்
ல மாத்திரம் இருந் ந்திய அரசியலோடு }ந்துகொண்ட ஒரே  ைக ப் பெண்மணி ருத்தி தான் என்றே . 1884 ம் ஆண்டு யர்கல்வி பெற்ரு ர் ல்லை ஒரளவு கல்வி சுதந்திரப் போராட் நூல்களும் பத்திரிகை
கிடைத்தன.
வையினல் மக்களைத் ம் எ ன் ற கருத்துக் வர் தமது பதினெட் * பெண்கள் சேவா ஒரு நிலையத்தை வண் பிற் தொடங்கினர். ல் இச் கங்கமே தேசிய இலங்கைப் பெண் து சங்கம் எனலாம் முன் இத்தகைய ஒரு க அறிய முடியவில்லை சார்பற்றதாய் தமிழ் ய அறிவையும் தன் ஊட்ட வல்லதாய்" நால் பெண் விடுதலை முதலாவது சங்கம் ள்ளலாம். இச்சங்கம் போய் வாழ்ந்த காலத் டதாக அம்மையார்
இவரது கணவர் மாசிலாமணி இந்தியாவில் கல்வி கற்று முற்போக்கு வாதியாக விளங்கியவர். இவர் பல சீர் திருத்தங்களைக் யாழ்ப்பாணத்தில் 1 தேசாபிமானி '
கொண்டுவந்ததோடு
(1915) எனும் பத்திரிகையையும் நடத்தி வந்தார். தமது மனைவி சுற்றத்தவர்களை யும் மாற்ற விழைந்தார். “பீபிஸ் மகசீன்” எனும் ஆங்கில வாரப் பத்திரிகையையும் நடத்தி வந்தார்.
தீவிரப் போக்குடையவர்களாக
forráFavrr perf?
மாசிலாமணியின் தூண்டுகோ லால் மங்களம்மாள் 1923 ம் ஆண்டு * தமிழ் மகள் ' எனும் பத்திரிகை ஒன்றைத் தொடக்கினர். இது வே அகில இலங்கையிலும் பெண்களுக்கா கத் தோன்றிய முதலாவது பத்திரிகை எனத் திட்டவட்டமாகக் கூறலாம். மங்களம்மாளே முதலாவது பெண் பத் திரிகையாளர் எனவும் கூறலாம். இப் பத்திரிகை யாழ்ப்பாணத்திலும் சென் னையிலுமாகத் தொடர்ந்து 20 ஆண்டு கள் மாத இதழாக வெளிவந்ததாகப் பிற்காலப் பத்திரிகையொன்று கூறு கின்றது. பின்னர் நிதிக் கஷ்டத்தினுல் ஒழுங்கு குறைந்து ஈற்றில் வருடாந்த இதழாக 1971 ம் ஆண்டுவரை நிலை பெற்று அம்மையாரின் மறைவோடு மறைந்துவிட்டது.

Page 19
17
"நாமார்க்கும் குடியல்லோம்" எனும் இலட்சிய வாசகமும் பெண்களிற் சகல துறை முன்னேற்றம் பற்றிய நோக்க மும் கொண்ட இப்பத்திரிகை பெண் விடுதலை பெண்சமத்துவம் பெண்மை நலம் பேணுதல், தீண்டாமை, சீதனக் கொடுமை போன்ற பல புதிய நோக்குக ளுக்கான கட்டு  ைரக ளை த் தாங்கி வந்தது.
மங்களம்மாள் விவாகத்தின் பின் சிலகாலம் கணவரோடு இந்தியா வில் வாசம் செய்தார். அக்காலத்தில் இந்தியக் காங்கிரஸ் இயக்கத்தில் சேர் ந்து காங்கிரஸின் முக்கிய தொண்டர் களுள் ஒருவரானர். 1924 ஆம் ஆண்டு கோவில்பட்டி எனும் ஊரில் நடந்த காங்கிரஸ் பெண்கள் மகாநாட்டுக்குத் தலைமை தாங்கி பேருரை நடாத்தும் அளவுக்கு அவருக்குச் செல்வாக்குப் பெரு கி யிருந்தது. அக்காலத்தில் இந்தியாவிலேயே பெண்கள் பொதுப் பணிகள் ஆற்றுவது மிகக் குறைவு. 1927 ஆம் ஆண்டு சென்னையில் அகில இந்தியக் காங்கிரஸ் மகாநாடு நடந்த போது மகாத்மாகாந்தி வருகை தந் தார். அம் மகாநாட்டில் வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்து பற்பல பிரதே சங்களிலிருந்தும் வருகைதந்த பெருந் தலைவர்களின் பாராட்டுக்களை பெறும ளவிற்குச் சிறந்த தொண்டுகள் புரிந்த தோடு பெண்கள் அரங்கில் வரவேற்பு ரையும் நிகழ்த்தினர்.
மங்களம்மாள் 1926 இல் இலங் கை வந்தார். பெண்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டி *தமிழ் பெண்களின் தற்கால நிலைமை” எனும் பொருள் பற்றிப் பேசினர். இவரது உரைகள் பலரையும் சிந்திக்க வைத்தன. 1926 இல் இந்திய அரசு "பெண்கள் அரசாங் கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது' எனும் தடையை நீக்கியது. இதனை முதன் முதற் பயன்படுத்தியது சென் னை, பம் பாய் இரு மாகாணங்களுமே. எனவே 1927இல் மாநகரசபைத் தேர்த லுக்குச் சில பெண்களையும் நிறுத் த வேண்டுமெனக் காங்கிரஸ் கட்சி தீர் மானித்தது. மங்களம்மாள் எழும்பூர் தொகுதியில் காங்கிரஸ்கட்சி சார்பில் தேர்தலுக்கு நின்றர். மிகப் பிரபல் யம் வாய்ந்த ஜஸ்டிஸ்கட்சி நாயுடு ஒரு வரை எதிர்த்துப் போட்டியிட நின்ற
போதும் பலரது யவராக மிகச்சி அவர் தோல் இலங்கைப் பெ தகைய சிறப்பிட மைக்குரியதே.
LD Iš 95 GMT வாழ்ந்தாலும் இ ஒருகண் வைத்ே glauri g) லங்ை எழுதிய கடிதங்க டொனமூர் அர! வந்து அரசியல் வதாக இருந்தது ளோர் த த் த மனுக்களாக எழு வைத்தனர். அ4 பின்னரே குழு ே இங்கே வருவத் நேரத்தில் மெள கைப் பெண்கள் கோபம் அவருக்கு
glögl &FNT ஆங்கிலத்திலும், தங்கள் எழுதினா எழுதிய கடிதத்தி வருடங்களின் மு அனுப்பிய மனுக் மைகள் பற்றி ஏ, 6TIrtig5GITIT? gyouri கள் பற்றி அனுப் இலங்கைப் பெண் யார் தெரிவிப்பது குழுவில் இலங்கை என்ன? எனக் ே சாட்டையடிகளா கப்பெண்கள் விழ இந்தியப் பெண்க மட்டுமல்ல sol proff வகிக்க முற்பட்டு பதையும் எடுத்து கள் கேட்டார்க உரிமை கிடைத்த எமக்கு உரிமைகள் எனக் கனல் கக்க
**. சி வெட் லைத்தானும் கித் திருப்பவி பெண்கள் பாடு எவ்வித தாக்க வில்லை. எமது

ஆச்சரியத்துக்கும் உரி ய வாக்குகளாலேயே பியுற்ருர், எ னினும் ண்ணுெருத்திக்கு இத் ம் கிடைத்தமை பெரு
மாள் இந்தியாவில் }லங்கை அரசியலிலும் த இருந்தார் என்பது ப் பத்திரிகைகளுக்கு ளிலிருந்து தெரிகிறது. சியல் குழு இலங்கை Fமூகநிலைகளை ஆராய் அந்நேரம் இங்குள் ம் அபிப்பிராயங்களை தி அங்கே அனுப்பி வற்றை ஆராய்ந்த நரடிச் சாட்சியம் பெற 3ாக இருந்தது. அந் னமாயிருக்கும் இலங் பற்றிய அசாத்தியக் う。
தனப் பத்திரிகைக்கு தமிழிலும் அவர் கடி ர். 26 - 10 - 1927 இல் தில் (இற்றைக்கு 57 ன்) ஆண்கள் தாம் களில் பெண்கள் உரி தாவது குறிப்பிட்டுள் *கள் தங்கள் கருத்துக் பியிருந்தார்களாயின் ாகளின் கருத்துக்களை து? இந்த அரசியற் ப் பெண்களின் பங்கு கள்விகள் பலவற்றை க எழுப்பினர். உல ழித்து விட்டதையும்,
iள் வாக்கு உரிமை
ாங்கத்திலும் அங்கம் விட்டார்கள் என் க் கூறினர். “அவர் ள் போராடிஞர்கள் து நாம் கேளாமல் தரப்படமாட்டா'
எழுதினர்.
கம், ஒரு சின்ன விர நாம் அரசியலை நோக் வில்லை. வெளிநாட்டுப் படுவது கூட எம்மிடம் கத்தையும் ஏற்படுத்த து பிறப்புரிமைக்காகப்
போராடாத எம்மைப் பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள். “எமது ஆண் சகோதரர்கள் எமது சீதனத்தினுல் வாக்குரிமையைப் பெற்றதோடு பலர் பிரதிநிதித்துவ அமைப்பில் அமர்ந்து கொண்டு நம்மைப் பற்றி ஒரு சொல் தானும் தமது மனுக்களில் கூறவில் லையே சகோதரிகளே
எனக் குமுறும் அவரது குரலில் பெண்ணுரிமைக்கான குரல் மாத்திர மல்ல பெண்களைத் தமது சொத்துக்க ளாக மட்டும் மதித்து அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடு க் காத ஆண்கள் வர்க்கத்தையும், ஆண்கள் பெற்ற உரிமையையும் கூட அவர்க ளால் பயன்படுத்தப்பட்ட சீதனக்கொ டுமையின் விளைவே என்பதையும் சுட் டிக் காட்டும் கோபக் குரலையும் கேட்கி ருேம். (அக்காலத்தில் சொத்துரிமை யுடையோர் வாக்குரிமை பெற்றனர்.)
டொனமூர் அரசியற்குழு வந்து 15 நாட்களின் பின் 7, 12, 27இல் கொ ழும்பு வாழ் சிங்களதமிழ்ப் பெண்கள் சிலர் சட்டசபைப் பிரதிநிதி ஆர். தம் பிமுத்து அவர்களின் தூண்டுதலின் பே ரில் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் ஒன்றை அவசரம் அவசரமாக அமை த்து 9ம் திகதி கூட்டங்கூடி அதன் பின் னரே மனு அனுப்பியுள்ளார்கள் சேர். பொன் இராமநாதனலேயே எள்ளி நகையாடப்பட்ட செய்கை இது. எனி னும் மங்களம்மாள் கடிதம் சரியான இடத்தில் தைத்து வேலைசெய்து இலங் கைப்பெண்களைத் தட்டி எழுப்பி சாட் சியங்கள் கூறச்செய்து ஈற்றில் சர்வ ஜன வாக்குரிமை மூலம் உரிமையைப் பெற்றுக் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ள தென்பதை நாம் மறக்க Gplg luftësi.
அம்மையார் 1932இல் வண்ணுர் பண்ணையில் "மகளிர் தேசிய சேவைக் சங்கம்” எனும் மன்றத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக இயற்றியுள்ளார். மே லும்'தமிழ் மகளிர் சங்கம்' என்பதொன் றும் இயங்கியுள்ளதாகத் தெரிகிறது. பெண்களுக்கு விவாகம் ஒன்றே முடிந்த முடிபு எனக் கருதக் கூடாது எனவும், கன்னிகளாக இருந்து கடவுட் பணியோ, சமுதாய சேவையோ செய்ய முடியும் எனவும் ஆணித்தரமாகத் 'தமிழ்மகள்" மூலம் வெளியிட்டார்.

Page 20
மங்கள ம் மாள் சந்தர்ப்பம் தின. அடக்க ஒடு கிடைத்த போதெல்லாம் பெண்ணுரி மத்தியில் சமயம் மைக்காக வாதாடிப் பேசியிருக்கிருர். விடயமும் "அவமா ஆனல் ஆண்களே விழிப்படையாத கணிக்கப்பட்டது. அக்காலத்தில் அவ்வளவு தூரம் அவர் வாக்கு இருந்தது. கருத்துக்கள் செல்வாச்குப் பெறவில்லை. வதற்கு இன்று ே பெண்ணுரிமைக் கருத்துக்கள், “ஏதோ மன்றங்கள் செயற் கத்துவது' என்ற ஒரு அலட்சியத் த்த பெண்களேயும் தையே ஆண்கள் மத்தியில் ஏற்படுத் கவர்ந்து கொண்டி
ஒரு பெண் தனது கற்பை ஒரு ஆ னி ஞ 6 அறிவர். ஆனல் பெண்ணை மட்டுமே யாவு மணந்து அவளது பெயரைக் கெடுத்த ஆஃ பழித்து அவளது மரணத்திற்குக் காரணமா சாதிப்பார்கள். ஆண்கள் பெண்களை விட ளுக்குத் தண் டனை வழங்குவதைவிட, இலகுவானது போலும் !
.T;66چIrgر سنس--
நம்மிடையே
'வீட்டிலிருந்து என்னை இழுத்துச் சென்றபோது நான் கதறினேன்.” வல்வெட்டித்துரை பெண்கடத்தல் வழக் கில் சாட்சியம் - தினகரன் 2 - 1 84.
"கற்பழிப்பு, கொள்ளை சம்பந்தமாக நான்கு சந்தேக நபர்கள் முருகண்டியில் கைது" - தினகரன் 5-3-84.
*பதினுெரு வயதுச் சிறுமியைக் கற்பழித்த இளைஞன் கைது** {வவுனியா) - தினகரன் 5 - 3 - 84.
பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியின் சடலம் பாழ டைந்த கிணற்றில். (அத்துருகிரிய) தினகரன் 4-1-84.
'கணவன் மனைவியை விபசாரத்தில் ஈடுபடச் செய்த கொடுமை. (திருமலை) தினகரன் 5 - 4 - 84.
கள்ளிக்குளம் இளம் பெண் மரணம், கணவன் கைது.
தினகரன் - 7 - 3 - 84.
மண்வெட்டித் தாக்குதலுக்கு 50 வயது மனைவி பலி. (மஸ்கெலிய) தினகரன் 9-3-84.
தெருவில் சென்ற பெண்ணை பலவந்தமாக வீட்டினுள் இழுத்துச் சென்று கெடுக்க முயன்ருர் ஒரு அரச ஊழியர். (தலைமன்னுர்) r- தினகரன் 31 - 3 - 84.

க்கமான பெண்கள் அல்லாத எந்த ஒரு னத்துக்குரியதாகக்" கிராமங்களில் செல்
ஆணுல் பயன்படு பால முன்பு அதிக பட்டதில்லை. படி மேல்நாட்டு மோகம் ருந்தமையால் சுதே
ஸ் தா ன் இழக்கிருள் என்பதை எல்லோரும் ரும் குற்றம் கூறுவார்கள். வி த  ைவ ைய ணப்பற்றியோ அல்லது ஒரு பெண்ணைக் கற் rயிருந்த கொடியவனைப் பற்றியோ மெளனம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதால் ஆண்க இறந்த பெண்களுக்குப் புக ழ் பா டு த ல்
8
சியக் கருத்துக்கள் அங்கே செல்வாக்குப் பெறவில்லை. சமத்துவம், பெண்களின் அரசியல் ஈ டு பா டு இன்றைய பல பெண்ணுரிமைக் கருத்துக்கள் அனைத் தையும் முதன்முதலாக அஞ்சாநெஞ் சுடன் கி டு கு வே லிச் சமுதாயத்தில் எடுத்துரைத்த, போராடிய, முன்னின் றுழைத்த முன்னேடிப் பெண் மாசிலா மணி மங்களம்மாள் அவர்களே.
நடப்பவை
"ஐயோ! ஜயோ !! என்று குழற எதிரிகள் என்னைத்
தூக்கிச் சென்றனர். நாரந்தனை கற்பழிப்பு வழக்கில் 17 வயதுப் பெண் சாட்சியம். தினகரன் 24 - 3 - 84.
** இரு மாணவிகளைத் தூ க் கி ச் சென்று கற்பழிப்பு.
தோடுகளும் அபேஸ். தங்காலையில் 6 பேர் கைது.
வீரகேசரி 18 - 4 - 84.
பெண்களுக்கு எதிரான வன் செயல் கள் காலம்
காலமாகத் தொடர்ந்து வருகின்றன. பெண்ணைத் துன் புறுத்தல் இயல்பான ஒன் ரு க ஏற்கப்பட்டுவிட்டது. தர்மத்தைப் பற்றியும், அகிம்சையைப் பற்றியும் எல்லா வற்றுக்கும் மேலாகப் பெண்ணின் பெருமையைப் பற்றி யும் பேசும் எமது நாட்டில் இவ்வன்செயல்கள் பல்வேறு வடிவங்களிலும் தொடர்ந்து இடம் பெறுகின்றன. எமது நாட்டில் சகல இனத்தவர் மத்தியிலும், பெண் அடக்கு முறையும், பெண்களுக்கு எதிரான வன் செயல்களும் காணப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் மிகச் சிலவே பத்திரிகைகளில் வெளியாகின்றன. வெளி உலகிற்குத் தெரிய வருகின்றன.

Page 21
பெண் களும்
எமது சமூகத்தில் தமக்கு இழைக்கப்பு கவோ திராணியற்ற பெண்கள் தற்கொ இருந்து இலகுவாக விடுபடுகின்றனர்.
தொடர்கின்றன. தனது விருப்பத்துக் வில் செல்வி சாவோ தற்கொலை செய் தருகிருேம். எமது பெண்கள் இதனைச்
ஒரு நபர் தற்கொலை செய்து கொள்வது சூழ்நிலை களிஞலே தீர்மானிக்கப்படுகிறது. செல்வி, சாவோ உண் மையில் மரணத்தை விரும்பினுளா? இல்லை;
இதற்கு மாருக வ்ாழ்க்கையை வேண்டுவதே அவ ளின் கருத்தாகும். ஆஞ ல் அதை விட்டு செ ல் வி , சாவோ மரணத்தைத் தேடியமை, சூழ்நிலைகள் அதற்கு அவளைத் தள்ளியமையிஞலேயே ஆகும். இச் சூழ்நிலை களாவன. 1. சீன சமூகம், 2. சாங்ஷாவில் நன்யாங் தெருவில் வசிக்கும் சாவோ குடும்பம், 3. சாங்ஷாவில் கான்சூயன் தெருவில் வசிக்கும் வூ குடும்பம் - இது செல்வி, சாவோ விரும்பியிராத கணவனின் குடும்பம். இந்த மூன்று காரணிகளும் மூன்று இரும்பு வலைகளாகி ஒரு முக்கோணக் கூட்டை அமைத்தன. இம் மூன்று வலைகளுக்குள்ளும் அகப்பட்டதால், அவள் தனக்கு இய ன்ற வழிகளில் வாழ்க்கையைத் தேடுதல் பயனற்றதா கவே இருந்தது. வாழ்வதற்கு எந்த வழியும் இருக்க வில்லை. வாழ்வுக்கு மறுதலை மர ண மா கும். எனவே செல்வி, சாவோ இறப்பதற்கு நிர்பந்திக்கப் பட்டாள். இம் மூன்று காரணிகளிலும் ஒன்ருவது இரும் பு வலை போன்று இல்லாவிடின் அல்லது இவ் வலைகளில் ஒன் ழுவது திறந்திருப்பின் செல்வி சா வோ நிச்சயமாக இறந்திருக்க மாட் டாள். 1. செல்வி சாவோவினு டைய பெற் ருே ர் அவளே நிர்ப்பந்திக்காமல் அவளது விருப்பத்திற்கு விட்டுக் கொடுத்திருப்பின் அவள் இறந் திருக்க மாட்டாள். 2. செல்வி, சாவோவின் பெற்றேர் அவளை வருங்காலக் கணவனுடைய குடும்பத்தாரிடம் அவளது கருத்தை விளக்குவதற்கு அனுமதித்திருப்பின், அவர்களும் அவளது தனிப்பட்ட சுதந்திரத்தைக் கெள ரவித்து அதனை ஏற்றிருப்பின் அவள் இறந்திருக்க மாட் டாள். 3. அவளது பெற்ருேரும் அவளது எதிர்காலக் கணவனின் குடும்பமும் அவளது சுய விருப்பத்தை மறுத் திருந்தாலும், சமூகத்தில் அவளுக்கு ஆதர வாக ப் பலமான பொது சன அபிப்பிராயம் இருந்து, தனது பெற்றேரின் வீட்டிலிருந்து விலகி இன்னேர் இடத்தில் புகலிடம் தேடுதல் தவருனதாகக் கருதப்படாமல் கெள ரவிக்கப் பட்டிருப்பின் செல்வி, சாவோ நிச்சயம் இறந்

19
தற்கொலேயும்
டும் கொடுமைகளைச் சகிக்கவோ, எதிர்க் லை செய்வதன் மூலம். இக்சுொடுமைகளில் ஆளுல் கொடுமைகள் அழிவதில்லை. அவை கு மாறன திருமணத்தை எதிர்த்து சீன த போது மா சே துங் எதுதியதை இங்கு
சிந்திப்பது பயன் தரும்.
திருக்க மாட்டாள். செல்வி, சாவோ இன்று இறந்தது இம் மூன்று இரும்பு வலைகளாலும் அவள் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்ததாலேயே ஆகும். (சமூகம், அவளது குடும்பம், அவளது வருங்கால கணவனின் குடும்பம்) அவள் வாழ்க் கை  ைய வேண் டி யது பயனற்ற தாகவே அவள் மரணத்தைத் தேடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
நேற்றைய நிகழ்ச்சி முக்கியமானது பேசிச் செய்யப் படும் வெட்கக்கேடான திருமண முறையால் இது நடந் தது. இருளடைந்த சமூக நடைமுறையால் இது நிகழ்ந் தது. தனி நபருடைய விருப்பத்தை மறுப்பதாலும் தனது சொந்தத் துணைவைத் தேர்ந்தெடுக்கச் சுதந்திரம் கிடைக்காததாலும் இது நிகழ்ந்தது. இவ்விடயத்தில் அக்கறையுடையவர்கள் இந்நிகழ்ச்சி பற்றிக் கருத்துத் தெரிவிப்பார்கள் என்றும், தனது கா த லை த் தேர்வதற் கான சுதந்திரத்திற்காக ஒரு தியாகியுடைய இறப் பை அடைந்த ஒரு பெண்ணைக் கெளரவிப்பார்கள் எனவும் நம்பப்பட்டது.
பெற்ருேர்களது குடும்பமும், எதிர்காலக் கணவனுடைய குடும்பமும் சமூகத்துடன் கட்டுண்டவை; அவை சமூகத் தின் அங்கமுமாகும். இவ்விரு குடும்பத்தினரும் ஒரு குற் றத்தைச் செய்தார்கள்; ஆனல் அக் குற்றத்திற்கு ஆதா ரம் சமூகம்தான் எ ன் ப ைத நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் குற்றத்தின் பெரும் பங்கு அவர்களுக்கு சமூகத்தால் கையளிக்கப்பட்டது ஆணுல் சமூகம் சிற ந்ததாக இருந்திருந்தால், அக் குடும்பத்தினர் இக் குற்ற த்தைப் புரிய விரும்பியிருப்பின் கூட அவர்களுக்கு அச் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.
செல்வி, சாவோவினுடைய இறப் புக்கு காரண மான பல அம்சங்கள் எ மது சமூகத்தில் இருப்பதால் எமது சமூகம் மிக அபாயகரமானது. இது செல்வி, சாவோவின் மரணத்துக்குப் பொறுப்பானது மாத்திரம் அல்ல; செல்வி, லீ, செல்வி, சன் போன்ருேரின் மரணத்துக் கும் பொறுப்பாகலாம். இதுமட்டுமல்ல, பெண்களைப் போ

Page 22
20
லவே ஆண்களையும் இச் சமூகம் கொல்ல வல்லது. இதற் குப் பலியாகக் கூடிய நாம் அனைவரும் எம் மீது இந்த மரணஅடி விழ முன்னர் எம்மைக் காத்துக் கொள்ள
நாம் இதனை ப் இன்னும் இறந்து போகாத மனிதர்களை எச்சரிக்க வேண்டும்
வேண்டும். பலமாக எதிர்க்கவேண்டும்.
எமது சமூகத்தில் காணப்படும் எண்ணரிய தீமைகளைக்
கண்டிக்க வேண்டும்.
திருமணச் சீர்திருத்தத்திற்காக நாம் பிரசாரம் செய்வ தாயிருப்பின், முதலில் திருமணம் பற்றிய மூட நம்பிக் கைகள் ஒழிக்கப்பட வேண்டும். எ ல் லா வற்றுக் கும் மேலாக, திருமணம் விதியினுல் முன்கூட்டியே நிர்ணயிக்கப் படுகிறது என்ற கருத்து நீக்கப்பட வேண்டும். இந்த நம் பிக்கைகள் ஒழிக் கப் படின் , இவற்றைச் சாட்டாகக் கொண்டு பெற்றேர் திருமணங்களை ஒழுங்குசெய்து மறைந் துவிடும். அதன் பின் 'கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நிலவும் ஒவ்வாமை" பற்றிய கருத்து சமூகத்தில் ஏற்படும், இக் கருத்தின் தோற்றத்துடன் குடும்பப் புரட்சியில் எண் ணிலடங்காதோர் பங்கு பற்றுவர். திருமண சுதந்திரம்.
காதற் சுதந்திரம் என்பவை. யெறியும்
எமது சீனு எங்கும் அலை
இன்னும் ஓர் ெ
*~. ** தோழி??
பெண்களைப் பற்றிய சிந்தனைகள் சமுதாயத்தைத் தொடாத நிலையிலே யே கடந்தகாலம் மறைந்துவிட்டது. இக் காலத்தில் பெண்களைப்பற்றிய சிந்தனைகள் அரும்பத் தொடங்கியுள் ளமை ஆரோக்கியமான எதிர்காலத் தைக் காட்டுகின்றது. எனினும் இன் றுகூட தம்மைத் தாமே அறியாத நிலை யில் எமது பெண்சமுதாயம் உள்ளது. இந்நிலையில் பெண்களைப்பற்றிய சிந்த னைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் மிக மிக அவசியமானவை. கருத்துத் தொடர்புச் சாதனங்கள் பல்கிப் பெரு கியுள்ள இக்காலத்தில் பெண்களைப் பற்றிய சிந்தனை சிறிதும் இன்றி அவை களும் வர்த்தக ரீதியில் செயற்படுகின் றன. இந்நிலையில் பெண்களுக்கு நல் வழி காட்டக் கூடிய ச ஞ் சி  ைக க ள் வெளிவருவது அவசியமாகும். அவற்றின் வெளிப்பாடானது பெண்ணினத்தின்
நல்வாழ்விற்கான அமையும்.
இவ்வகை களை வந்தடையு களை வெவ்வே சித்திரிக்கின்றன. வெளியிடப் படுட ரீதியான தர்ம ( கின்றன. வீ ட் பெண்ணை பதிவி அவஃ! நெறிப்ப பாக இந்தியாவி ரீதியில் இறக்குப சஞ்சிகைகளே றுக்கு உதாரண குறிப்பிடலாம். வெளியாகும் ெ தோழி போன்ற விடுதலை யை

தற்கொலையை நான் நிராகரிக்கிறேன் முதலில் மனிதனின் இலட்சியம் வாழ்க்கையை விரும்புவதாகும். இந்த மனித இயல்புக்கு மாருக சாவைத் தேடிப் போதல் தகாது. இரண்டாவது, சமூகம் மக்களுக்குச் சகல நம்பிக் கைகளையும் மறுப்பதன் விளைவாகவே தற்கொலை நிகழ்கிறது எனினும் இழந்த நம்பிக்கைகளைப் பெறுவதற்காக நாம் போராட வேண்டும் போராடியே இறக்க வேண்டும் மூன்ரு வதாக தமது வாழ்க்கைக்குத் தைரியமாக முடிவைத் தேடிக் கொண்டவர்களை மக்கள் மதித்தாலும், அவர் கள் தற்கொலையை மதிக்கவில்லை. ஆனல் தற்கொலை செய்வதற்கு உந்திய 'மிருகத்தனமான பலத்திற்கு எதிர் ப்பைக் காட்டிய' தைரி:த்தையே அவர்கள் கெளரவிக் கின்றனர்.
ஒருவர் தமது உயிரைத் தாமே மாய்ப்பதை விடப் போராட்டத்தில் இறப்பது மேலானது! போராட்டத் தின் இலட்சியம் மற்றவரால் கொல்லப்படுவது அல்ல; ஆனல் 'உண்மையான ஆருமையின் தோற்றத்தை விரும் புதல்' ஆகும். ஒருவர் முயற்சிகள் செய்தும் இதனை அடையாதிருப்பினும் மரணம் வரை போராடி தன்னைத் தியாகம் செய்யின் அவரே உலசில் மிகவும் வீரமுடைய வர். ஏனையோருடைய நெஞ்சத்தில் அவரது ம ரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
பண்கள் சஞ்சிகை
est
அத் தி வார மா க
பில் ஈழத்துப் பெண் ம் சஞ்சிகைகள் பெண் று கண்ணுேட்டத்தில் பெண்களுக்காக சஞ்சிகைகளும் மரபு பாதனைகளையே செய் டு க் கு உள்ளேயே ரதை என்ற நிலையில் த்ெதுகின்றன. குறிப் ல் இருந்து வர்த்தக தி செய்யப் படும் சில அவையாகும். )ாக மங்  ைக  ைய க் ஆனல் இலங்கையில் ண் ணி ன் கு ர ல் , சஞ்சிகைகள் பெண் யதார்த்தபூர்வமாக
அறிமுகம் -
- கஸ்தூரி -
அணுகுகின்றன அவற்றின் கண்ணுேட் டமும் மாறுபட்டதாகவே அமைந்துள் ளது. அம் மாறுபாடானது பெண்கள் நிலையின் நிஜத்தை எமக்குக் காட்டு கின்றது. இதனை நாம் தோழி பற்றிய மதிப்பீட்டில் காணமுடிகின்றது.
“என் இனிய தோழி! என அழைத்து ஈழத்துப் பெண்ணினத்திற் குத் தன்னை அறிமுகம் செய்யும் தோழி யின் அறிமுகம் நன்ருக அமைந்துள் ளது. அதில் தோழியின் நோ க் கும் போக்கும் ஒரளவு புலனுகின்றது. அடு த்துத் தோ ழி  ைய அவங்கரிக்கும் **பெண் இனமே" என்ற தலைப்பிலான புதுக்கவிதை பெண் க ள் நிலையை பழைய மரபை மீறி விளக்கிக் காட்டி ஞலும் பெண் விடுதலைக்கான பங்க ளிப்புப்பற்றிய தீர்வைக் கூருது வெறு மனே "நின் பங்களிப்பைச் செய்'

Page 23
என்று கூறுகின்றது ஆணுல் அடுத்து வந்த கவிதை பழைமைக்கும் புதுமைக் கும் இடையிலான இயக்கவியலைக்கூறு கின்றது. நிஜவாழ்க்கையைப் பிரதி பலிக்கின்றது. V
பெண்விடுதலை பற்றிப் பலரும் பல விதமான கருத்துக்களைக் கொண்டுள்ள இக்காலத்தில் அதுபற்றிய தெளிவான விளக்கத்தை வஜ்ரா கொடுத்துள்ளார் பெண்விடுதலையும் எமது சமூகம் என் னும் தலைப்பிலான இக் கட்டுரை எமது பெண்களுக்கு அவசியமானது. எடுத்த எடுப்பிலேயே பெண்விடுதலை என்று மேலோட்டமாகவும் ஆழ்ந்த சிந்தனை யின்றியும் நம்மவர்கள் பலர் பலவித கருத்துக்களைக் கூறுவதுண்டு. ந ம து சமுதாயத்தில் பெண்விடுதலை சம்பந்த மாக எழுந்துள்ள ஏழு வகையான கருத்துக்களையும் கூறி, தனது கருத்தை முடிவாகக் கூறுகின்ருர், பெண் விடு தலை என்பது மேலைநாட்டவரினல் புகுத்தப்பட்டது என்பன போன்ற பல முரண்பட்ட கருத்துக்கள் எமது சமூகத் தில் உள்ளன. சமூகமே யதார்த்தத் தின் பிரதிபலிப்பாக உள்ளது. எனவே பெண்விடுதலை பற்றி எமது கருத்துக் களை நாம் வகுத்துக் கொள்ளும் பொ ழுது இன்று இலங்கையிலு:ள்ள தமிழ்ப் பெண்களின் யதார்த்த நிலையை அடிப் படையாகக் கொள்ளுதல் வேண்டும். என்னும் கருத்தை ஆசிரியர் கட்டுரை யில் வலியுறுத்துகின்றர். இக் கட்
இந்தியாவில்
டுரை வாசகரிடை னையையும் ஏற்படு
அடுத்து, வி எழுதிய "வாழா சிறுகதை பெண்க யதார்த்தமாகக் பெண்ணே பெண் னையும் இதன் சார டுத்துகின்றது. ே டிமைக்கு உரமிட்( எமது சமுதாயத் இதனுல் பெண்கள் பொம்மைகளாக கண்கூடு. இதனை கதை அமைகின்ற எதிர்த்து வீட்டை மருமகளது நிலை முற்போக்கானதும ன்றது இவ்வா.ே எழுதிய “பிரதிப6 சிறு கதை யும் ( தெளிவாகப் படம் னும் தீர்வுக்கான டாது விட்டது ஒரு அடுத்துப் ே யும் என்னும் கவின் யை உள் ள வா ! அதன் எதிர்காலம் தையும் கூறுகின்ற
சிலுவைகள் இவள் ஒருந
பெண்கள்
ஒரு தேசிய
இவ்வருடம் ஏப்ரல் மாதம் 9ம் திகதியிலிருந்து 12ம் திகதிவரை பெண் கள் ஆய்வு தொடர்பான இரண்டா வது தேசிய மகாநாடு இந்தியாவில் திரு வனத்தபரத்தில் நடை பெற்றது . இம் ம க ரா நாடு பெண் க ள் ஆய்வுக்கான இந் தி ய சங்கத்தினுல் ஒ கு செய்யப்பட்டது. கேரளத்து அழகிய சிறிய தலைநகரான திருவனந்த
புரம் நான்கு நாட் ஜம்மு காஷ்மீரிலிருந் வரை இந்தியாவின் களிலிருந்து மகாநா பெண்களால் நிை டது. இலங்கையர நான்கு நாட்களும் மும் உற்சாகமும் உ அமைந்தன. புதிய

யே தெளிவான சிந்த த்த வல்லது.
புருண் விஜய ராணி வெட்டி' என்னும் ள் பி ர ச் சினை யை காட் டு கின்றது ணரின் எதிரி என்பத rம் எமக்குப் புலப்ப பெண்ணே பெண்ண தி வளர்த்து வருவது தில் நிலவுகின்றது, பாதிக்கப்படுவதும் வாழ்ந்து மடிவதும் எதிர்ப்பதாக இக் து. மாமி யாரை டவிட்டுச் செல்லும் குறிப்பிடத்தக்கதும் ாகக் காட்டப்படுகி ற சி. நடனராணி, விப்பு' என்னும் பெண்ணடிமையைத் பிடிக்கின்றது ஆயி பாதையைக் காட் குறையாகவுள்ளது. பெண்ணும் சிலுவை தை பெண்கள் நிலை று விளக்குவதுடன் பற்றிய நிர்ணயத் 列·
சிதற ாள் எழுவாள்
21
வெள்ளைப் புழுக்களைத் தன்னிரு கைகளால் விடுவாள்'
என்பது ந ன் பி க் கை ஊட்டுவதாக உள்ளது. இறுதியில் தோழி யின் நோக்கிற்கும் போக்கிற்கும் சி க ரம் வைத்தாள் போல் 'பொதுவுடமைக் கொள்கையும் பெண்களும் என்னும் தலைப்பிலான கட்டுரை அமைந்துள் ளது. சுரண்டவற்ற சுதந்திரமான வாழ்க்கையைப் பெண்கள் அடைவ தானுல் அது பொதுவுடமை சமுதா யத்தில்தான் சாத்தியமாகும் எ ன க் கட்டுரை ஆசிரியர் விளக்குகின்றர். இறுதியில் எழுவாய் தோழி! என்னும் மிதிலாவின் புதுக்கவிதை உற்சாகம் ஊட்டுவதாயுள்ளது.
மொத்தத்தில் பெண்கள் பிரச் சினைகளை முனைப்பாகக் காட்டும் இப் பத்திரிகையின் படைப்புக்கள் ஒவ் வொன்றும் பெண்களும் மனிதப் பிற விகள் தாம் என்பதனை உணரவைக் கின்றன . கண்மூடித்தனமாகவோ கட்டுக்கடங்காமலோ பெண்விடுதலை கதைக்காது சமூக ப் பொருளாதார விடுதலையுடன் பெண் விடு த லை யும் இணைந்து செல்ல வேண்டும் என்பதனைத் தோழி உணர்த்துகின்றது. சுரண்ட லற்ற புதிய சமூகத்தைப் படைப்ப தற்கான சகல பணிகளிலும் தோழி யின் பங்கு காத்திரமானதாக அமை யலாம். அது அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது.
தொடர்பான ஆய்வு:
மகாநாடு
5ளும், வட க் கே து தெற்கே மதுரை பல்வேறு பிரதேசங் ட்டிற்கு வந்திருந்த 0 ந் து காணப்பட் “ன எமக்கோ இந் அளப்பரிய ஆர்வ னும் தருவனவாக பயன்பரும் தொட
- சித்ரா,
ர்புகளையும் தோழமைகளையும் பெறவும் முடிந்தது.
மகாநாட்டின் பொது வான S944 ĝis 35(5ë St Gender Justice -- GT Går பதாகும். மகாநாடு மூன்று பயிற்சிக் களங் க ளா க வகுக்கப்பட்டிருந்தது. பயிற்சிக் ஒவ்வொன்றும் நான்கு நடந்தன
களங்கள் தொடர்களாக

Page 24
22
பயிற்சிக்களங்கள் :-
1) பெண்களும் சட்டமும் சட் ட
ஆய்வுகளும். 2) பெண்களது வேலையும் தொழி
ஆலும்.
3) அரசியல் நடைமுறையில் பெண் கள் ஆகிய மூன்று தலைப்புகளில் இடம் பெற்றன.
முதலாவது பயிற்சிக்களத்தை லோதிகாசர்க்காரும் இரண்டாவதை தேவகிஜெயனும் மூன்ருவதை வீன மஜிம்தாரும் நெறிப்படுத்தினர். பேச் சாளர்களாகவும் பல்வேறு ஸ்தாபனங் களின் பிரதிநிதிகளாகவும் சுமார் 450 பேர் இம் மகாநாட்டில் கலந்து கொ ண்டனர். இவர்களிற் சில ஆண்களும் இருந்தனர்.
பயிற்சிக் களங்கள் மூன்றும் ஏக காலத்தில் நடந்தன. அரசியல் நடை முறையில் பெண்கள் என்ற பயிற்சிக் களத்திலேயே நான் முழுமையாகப் பங் குபற்றினேன். ஏனைய பயிற்சிக்களங் களின் போக்கினை அறிவதற்காக இடையிடை அவற்றுக்கும் சென்றேன். அரசியல் நடைமுறையில் பெண் கள் நான்கு தொடர்களாக - சு தந் தி ர இயக்கத்தில் பெண் கள் , விவசாய, தொழிலாள, குழுக்களைச் சமூக இயங்க ளிற் பெண்கள் சம்பரதாயமான அரசிய லிற் (Formal Politics) பங்குபற்றல் கருத் தோட்டங்கள் - என வகுக்கபட்டு கட் டுரைகள் படிக்கப்பட்டன. இக் கட்டு ரைகளிற் சில அரசியலிலோ வரலாற் றிலோ இதுவரை கற்கப்படாத, கவ னஞ் செலுத்தப்படாத பகுதிகளைத் தொட்டு ஆராய்ந்தன. கே. லலிதா என்பவரின் தெலுங்கான புரட்சியிற் பெண் கள் , மண்டாவாஃகினுடைய மகாராஷ்டிரப் போராட்டங்களிற் தா லித் பெண் கள், மீராவேலாயுகனின் சுலிப்போல் பெண்தொழிலாளர்களும், வர்க்கப் போராட்டங்களும், சா யா
தாதரின் பெண்கள் இயக்கமும் இடது
சாரி அரசியலும் போன்ற கட்டுரைகள் கவனத்தை மிகவும் கவர்ந்த கட்டுரைக ளாகும். இவை தவிர இப்பயிற்சிக் களத்தில் கலாசார இயக்கங்கள் என்ற ஒரு உபபிரிவில் சரோஜினி சின்திரிலின் வைஷ்ணவ இயக்கத்தில் பெண் கள், நீராதே சா யி ன் பக்தி இயக்கத்தின் பெண்கள் என்ற இரு கட்டுரைகளும் இடம்பெற்றன.
பெண்களும் ஆய்வுகளும் என் பெண்கள் வேலையு களும் குடும் ப மு பெண்கள் போரா உடலும் சட்டமுட டர்களாக அமைந் பெண்களும் குடும். மிகச் சுவையான களால் நிறைந்தது கம், திருமணம், 6 மனைவி கணவன், பாடுகள், குழந்ை சட் டங்கள் ே நிறைய விவாதங்க வார்ந்த, தீவிரமான விமர்சிக்கும் சிந்த காணமுடிந்தது.
மேற் குறிப் கள் தவிர வேறு சி நடை பெற்ற ன கேரளப் பெண்கள் திகதி கேரளப் ப மண்டபத்தில் நன ரங்கு கேரளத்துப் ( சற்று உயர்த்தி ! தான கருத்துகள் றன. இவை குறி கேரளப் பிரதிநிதி பையும் கேட்க மு
மகாநாட்டுக் ரைச் சிறுசிறு குழு சில சர்ச்சைகள் ஒ டன. அவற்றில் தொடர்பு சாதனங் இதனை டெல்லியை பாசின் முன்னின்று மகாநாட்டின் இறு உணவுக்குப் பின் நேரத்தில் இது ஒ டது. தத்தமது ெ திரும்புவதற்காக ஒ கொண்டிருந்த அ பல பெண்கள் உ கலந்து கொண்ட6 LD nr i Lu. Iš 35 Gir Lui, ரிகைகளையும், விள ரணம் காட்டி, பெ கைய மலினமான கள் வெளிபடுத்து உணர்ச்சியுடன் பே பெப்ருவரி மாதம்

சட்டமும் சட்ட பயிற்சிக் களம் ம் சட்டமும், பெண் p ம், சொத்துடைய ட்டம், பெண்களின் என நான்கு தொ தது. இவ ற் றில் மும் என்ற தொடர் பயனுள்ள சர்ச்சை குடும்ப உருவாக் த டு ம் ப உறவுகள், தாய் மகன் முரண் தகள் தொடர்பான பான்றவை குறித்து ள் நடந்தன. அறி ன, பாரம்பரியத்தை னைப் போக்குகளைக்
பிட்ட பயிற்சிக்களங் ல கருத்தரங்குகளும் அவற்றில் ஒன்று பற்றி ஏப்ரல் 11ம் ல்கலைக்கழக செனற் டைபெற்ற கருத்த பெண்கள் நிலையைச் மிகைப்படக் கூறுவ இதில் இடம்பெற் த்ெது மகாநாட்டில் களின் முணுமுணுப் டிந்தது.
$கு வந்திருந்தோ க்களாக சேர்த்தும் ஒழுங்கு செய்யப்பட் ஒன்று பெண்களும் களும் என்பதாகும். பச் சேர்ந்த கமலா ஒழுங்கு செய்தார் தி நாளன்று மதிய கிடைத்த சொற்ப ழுங்கு செய்யப்பட் சாந்த் ஊர்களுக்குத் ழுங்குகளைச் செய்து ந்த அவசரத்திலும் bசாகமாக இதில் ார். இந்திய சினி லவற்றையும். பத்தி ம்பரங்களையும் உதா ண்கள் பற்றி எத்த ஆபாசமான கருத்து ன்றன எனப் பலர் சினர். இவ்வருடம்
கோலாலம்பூரில்
ஆசிய பசிபிக் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற ஆசியப் பெண் ஆய்வா ளர்களது மகாநாட்டிலும் பெண்களும் தொடர்புச் சா தனங்களும் பற்றி ஆராய்வதற்கும் மாற் று வழிகளை மேற்கொள்ளவும் ஒரு ஆராய்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இம் மகாநாட்டை ஒட்டி கேர ளப் பல்கலைக்கழக நூ ல கத் தி ல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியும் முக்கியமானது, பெண் கள், பெண்கள் இயக்கங்கள் தொடர் பாக உலகின் பல பாகங்களிலும் இரு ந்து வெளிவந்துள்ள நூல்கள் பலவற் றை தேர்ந்து ஒழுங்குபடுத்தி இதனை அமைத்திருந்தனர். "பெண்கள் பற்றி ஆய்வு ?ம்." என்று அலட்சியமாக முகஞ்சுளிக்கும் யாழ்ப்பாணத்துப்புத்தி ஜீவிகள் இக் கண்காட்சியைப் பார்த் திருக்க வேண்டும். இன்றைய அறிவு லகின் முக்கிய பகுதியாக பெண்கள் ஆய்வு வள ரத் தொடங்கிவிட்டது. என்ற கருத்தை இக் கண் காட்சி மேலும் உறுதியாக்கிற்று. எமது நாட் டில் குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் இது எப்போ சாத்தியமாகும் என்ற அங்கலர்ய்ப்பும் கூடவே எழுந்தது.
இம் மகாநாட்டின் இன்னேர் முக்கியமான அம்சம்; பல்வேறு பிரதே சங்களையும் சார்ந்த பெண்கள் மொழி, இன வேறுபாடின்றி பெண்கள் என்ற பொதுத்தளத்தில் தோ ழ  ைம யு ட னும் புரிந்து கொள்ளலுடனும் ஒன்று கூடியமைதான். நிலைமைகளையும் பிரச் சனைகளையும் புரிந்து கொள்வதில் இவர் கள் அளவில்லாத அக்கறை காட்டினர். உண வு இடைவேளைகளிலும் இரவு நேரங்களிலும் தான் அதிகம் கலந்து கதைக்க முடிந்தது. பக்கத்தில் இருப் பவரிடம் 'நீங்கள் எங்கிருந்து" என்று தொடங்கும் உரையாடல் அடுத்த சில நிமிட ங் களி ல் நெருக்கமானதாக வு ம் ஆழ மா ன தாகவும் மாறி விடுவது பெ ரும் பாலும் நிகழ் ந்தது. இந்தச் சந்திப்புகள் தொடர் ந்து வேலை செய்வதற்குறிய உற்சாகத் தையும் நாம் தனித்துவிடவில்லை என்ற ஆறுசலேயும் அளித்தன. மிகுந்த தன் னம்பிக்கையையும், மன உறுதியையும் பெரும்பாலோரிடம் தோற்றுவித்தது மகாநாட்டின் வெற்றி க்கு ஒரு சான்ருகும்.

Page 25
அநீதிக்கு எதிராக அ
ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி யாழ்ப் புதியதொரு நிகழ்வுக்குச் சாண்று கூறியது வந்து சேர்ந்த சுமார் 2000 தாய்மார் அட்டைகளை ஏந்தியவாறு அமைதியாக * ஊனமுற்றவர்கள் உட்பட இளைஞர்களையுட செய்வதை எதிர்த்தும், கைது செய்த அட சுலோக அட்டைகளுடன் இவ்ஊர்வலத்தில் திருப்பித்தா!' 'ஊமைகளும் ஊனம் உற ஊற்றுபவரைக் கைது செய்யாதே' பே மொழிகளில் எழுதப்பட்ட சுலோக அட் அரசாங்க அதிபரின் செயலகத்தை நோக்கி விடுவிக்கக் கோரும் விண்ணப்பம் ஒன்றை யர் முன்னணி என்னும் அமைப்பு இந்த
இந்த தாய்மாருக்கு பெண்ணின் தெரிவிக்கிறது.

னிதிரண்ட அன்னையர்
பாண நகர் தனது வரலாற்றில் கண்டிராத யாழ்ப்பாணக் குடாநாடு எங்கிலுமிருந்து யாழ்ப்பாண நகரின் தெருக்களில் சுலோக அணிவகுத்துச் சென்றனர். நோயாளிகள், ம், சிறுவர்களையும் பாரபட்சமின்றிக் கைது ப்பாவிகளை விடுவிக்கவும் கோரி அன்னையர் ஸ் அணிதிரண்டனர். 'எமது பிள்ளைகளைத் ற்ருேரும் செய்த குற்றம் என்ன?’ ‘கஞ்சி ான்ற தமிழ், ஆங்கில, சிங்களம் ஆகிய டைகளைத் தாங்கி இவர்கள் யாழ்ப்பாண ச் சென்றனர். அங்கு தமது புதல்வர்களை அரச அதிபரிடம கையளித்தனர். அன்னை ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தது.
குரல் தனது ஆதரவையும் பாராட்டையும்

Page 26
PCNNIN KURAL - 7 (Voice of women in Tamil) 窗
E. பெண்ணின் குரல்-7 畿
R 1. ஜயகொந்தா ஒழுங்கை,
கிருல வீதி, கொழும்பு-5.
9) 6T6TL955 D
* எமது கருத்து * ஜூலை 1983 இன வன்செயல்
பெண்ணின் குரல் வருந்துகின்றது 2 * பெண்ணின் எதிரான வன்செயல்கள்
- குமாரி ஜெயவர்தன - தமிழில்: சித்ரா 3 * ஐதீகங்கள் தகர்க்கப்படுகின்றன 7 * இருட்டில் சில கருப்பு மலர்கள்
- முல்லையூரான் 9 * அனுராதபுரம் சிறைச்சாலையில்
பெண் கைதிகள் 10 * சடப்பொருள் என்று நினைத்தாயோ
- கோகிலா மகேந்திரன் 12 * கிறீன்ஹம் கொமன் சமாதான முகாம் 14 * சீதனம் - பெண்ணின் மரணவாசல்
- ஆதாரம்: 'சகலி உெல்லி. 15 * பெண் விடுதலைக்கு உழைத்த
மாசிலாமணி மங்களம்மாள்
- வள்ளிநாமசி இராமலிங்கம் 16 * நம்மிடையே நடப்பவை 18 * பெண்களும் தற்கொலையும் 19 * இன்னும் ஓர் பெண்கள் சஞ்சிகை
தோழி ஓர் அறிமுகம்’ - கஸ்தூரி 20 * இந்தியாவில் பெண்கள் தொடர்பான
ஆய்வு: ஒரு தேசிய மகாநாடு - சித்ரா 2
எமது நன்றி:
சுந்தர் பக்கேஜிங் இன்டஸ்ரீஸ் உரிமையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் எமது நன்றி.
அச்சு : சுந்தர் பக்கேஜிங் இண்டஸ்றிஸ், 74, ஹில் ஸ்ரீட்,

பெண்ணின் குரல்
பெண்களின் இன்றைய நிலைமையை எடுத்துக் விளக்கும் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றி பகுத்தறிவுக் கோட்பாட்டுடன் போராடும் பெண்களால், பெண்களுக்காக மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்படும் இலங்கைப் பெண்களின்
உரிமையான ஒரே சஞ்சிகை.
කානතා හඬ (காந்தா ஹண்ட) பெண்ணின் குரல் Voice of Women (வொயிஸ் ஒப் விமன்)
பெண்ணின் குரல்
(ஒரு சில பிரதிகள் விற்பனைக்கு உண்டு) இலக்கம் 1 - விலை 2 ரூபா 50 சதம் இலக்கம் 6 - விலை 5 ரூபா (தபால் செலவு ரூபா 1)
VOICE OF WOMEN
(பெண்ணின் குரல் ஆங்கிலத்தில்)
(ஒரு சில பிரதிகள் விற்பனைக்கு உண்டு) இலக்கம் 3 - விலை 5 ரூபா (தபாற் சிெலவு ரூபா 1)
சந்தா :
2ைலீ0ை லை 4 இதழ்களுக்கு ரூபா 2b-00 பெண்ணின் குரல் ரூபா 20.00 VOICE OF WOMEN 99 20-00
(தபாற் செலவு உட்பட)
விபரங்களுக்கு :-
ஆசிரியர், “பெண்ணின் குரல்" 1, ஜயகொந்தா ஒழுங்கை, கிருல வீதி, கொழும்பு-5.
தெஹிவளை.