கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1986 (8)

Page 1


Page 2
பெண்ணி
அமைப்பின்
பெண்கள் தொடர்பான பிரச்சிளேகளே உடன்பாடு கானக்கூடி விடயங்களில்
குழுவாக 478 செப்டம்பர் புரதத்தில்
உருவாக்கப்பட்டது.
lia TL Paĝoj நோக்கங்களேயும் குறிக்கோள்களேயும்
பெண்களின் சமூக பொருளாதார விகவும் இலங்கையின் அபிவிருத்தியில் டெ செய்வதற்கா கவும் உழை கல்.
一。、了于中 கொள்கைகள் பெண்க: பிடுவதற்கு அக்கொள்கைகளே பரிசிஃ செt
| aih எவ்வளவு தூரம் பாதிக்கின்றன என்பதை யிட்டு எச்சரிக்கையோடும் விரிப்டோடும் இரு நடவடிக்கைகனே மேற்கொள் .
பெண்களின் பிரச்சிகள் +ம்பந்த
f ந்துரையாடல்களே பும் கீழ்ங்கு செய்தல், பெண்களின் लJF , ாளுக்குழ் பக்கங்ளுக்கு
+ பெண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் கன்-நகர-கிராப-நேட்டப்புற படம் பெ5
பெண்களின் ।
புணர்வை உயர்த்துவ கற்ா த்ங்களே பு
மான மொழிபெயர்ப்புகாேர் சேய் நல், வெகு காபும் கருத்து । ।।।।
6. பெண்களின் பிரச்சி ாேப் பற்றிய துக்கஃப் பெண்களின் பத்து அணியினர் ம ஆங்கிலம் ஆகிய மும்மொழி னிலும் தொடர்ச்
மேலே குறிப்பிட்டுள்ள நாக்கங்களேயு. களுக்கு எமது அங்கத்துவம் உரிக் குர் அங்
 
 
 
 

ன் குரல் றிக்கோள்கள்
அடிக்கடி டபுக் கலந்துரையாடி, பொது + " (5) 占1 எடுக்கும் பெண்கள் பெண்ணின் ருல்' காந்தா ஹண்ட )
சுருக்கமாகக் கீழ்ே தருகின்றுேம்
, । । ।।।।
II முழுமையாகப் ।
in =1&մall II ), பாதிக்கின் ப்தல் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ਸੰ என்பன பெண்களே
மதிப்பிட்டு அவற்றின் கண்ணுேட்டங்களே ப்பதோடு ਜੀ
|L நாடு L । ட்டங்களேயும், மேற்படி டிஸ்ரயாடல் கடத்துவதிதே ம் பேச்சாளர்களே அனுப்பி உதவுதல்
ளே மேற்கொண்டு அவற் பெறுபேறு
। । ।।।।
பெண்களிது தும் ஆண்களின் தும் விழிப்
। । । ஜன தொடர்பு சாதனங்களுக்கு ஆட்டுரை
பெண்ணின் குTள் அமேட ந்தியில் பரப்பு விந்து 'ஸ் சிங்கரீம் தமிழ்
॥ சஞ்சிகை "iy I. J.ʻir-32, TJ ? திரித்தல்
ம் நிக்கோள் புேம் ஏற்றுக்கொள்பவர் தத்துவ சந்தT մմ 51-ւն- T
li l
ଜର୍ଡିଂ || 15 ஆபது
பெண்ணின் குரல்
蚤 ബ്
|-

Page 3
எமது கருத்து
ஐக்கிய நாடுகள் சபையால்பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேசப் பெண்களுக்கான பத்தாண்டு 1975 - 1985 சென்ற வருடத்துடன் முடிவடைந்தது. இதன் நிறை வைக் குறிக்குமுகமாகச் சென்ற வருடம் ஜூலை மாதம் நைரோபி நகரில் உலகப் பெண்களின் மகா நாடொன்றும் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் இம்மகாநாட்டிற் பங்குபற்றியிருந்தனர்.
இப் பத்து வருடங்களாகவே பெண்களது முன் னேற்றத்துக்காகப் பிரசாரங்கள் செய்யப்பட்டன. பெண்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங் கள் செயற்படுத்தப்பட்டன. நூல்களும், இலக்கியங் களும், திரைப்படங்களும் வெளிவந்தன.
இவை உலகெங்கிலும் பரவலாகப் பெண்கள் மத் தியில் விழிப்புணர்வை உருவாக்குவதிலும், உலகின் கவனத்தைப் பெண்களது பிரச்சனைகளின்பால் ஈர்ப்ப திலும் கணிசமான அளவு வெற்றியீட்டியுள்ளன. எனினும் எமது விடுதலையை அடைவதற்கான பாதை யில் இன்னும் நீண்ட தூரம் நடக்கவேண்டியுள்ளது. எனினும் இப்பத்து வருடங்களில் உருவாக்கப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் நீதிக்கும், சமத்துவத்திற்கு மான எமது போராட்டத்தில் மேலும் தீவிரமாக ஈடு படுவதற்கு உறுதுணையாகும்.
இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைகளுக்கு எதிராக இந்நூற்றண்டின் பெரும் சவாலாகப் பெண்நிலைவாதம் எழுச்சியடைந்துள்ளது. இது சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அடிப்படை யாகக் கொண்ட சமூக அமைப்புப்பற்றிய விணக்களை எழுப்பியுள்ளது. ஆணுதிக்கம் மிகுந்த உலகில் காலாதி காலமாக நிலவி வரும் கோட்பாடு களையும், ஐதீகங்களையும் ஆட்டங்காணச் செய்துள் ளது. எனினும் இன்னும் சில துறைகளில் குறிப் பாக உயிரியல், பெளதிகவியல், வைத்தியம் போன்ற துறைகளில் காணப்படும் ஆணுதிக்க நோக்குநிலையும், கருத்துகளும் போதிய அளவு இனங்காணப்படவில்லை. இவை பற்றிய விமர்சனங்களை எதிர்காலத்தில் பெண் நிலைவாதிகள் முன்வைப்பதுடன் இத்துறைகளில் புதிய பங்களிப்புகளைச் செய்யவும் வேண்டும்.
மூன்ரும் உலகப் பெண்கள் என்ற வகையில் எம் மீதான ஒடுக்குமுறை குறித்து நாம் தெளிவாகவே உணருகிருேம். எம்மிற் பெரும்பாலோர் அரசாங்கங் களின் ஒடுக்கு முறைகளுக்கு உட்படுகிருேம். பொரு

ளாதார ரீதியாக எமது நிலை மிகவும் மோசமடைந் துள்ளது. வாழ்க்கைத்தரம் முன்னெப்போதும் இல் லாதவாறு தாழ்ந்துள்ளது. சமூகத்தின் வறிய மக்க விடையே ஆண்களுக்கும், பெண்களுக்கும் இந்நிலைமை கள் பொதுவானவையாகும். எனினும் குழந்தைகளை வளர்ப்போர், குடும்பத்தைப் பராமரிப்போர் என்ற வகையில் பெண்களே ஏனையோரைவிட இந்நிலைமை களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாகப் பாரம்பரிய பொருளாதார முறைகள் அழிக்கப்பட்ட பண அடிப்படையும் முதலாளித்துவச் சந்தையும் கொண்ட 'திறந்த பொருளாதார முறையுடைய நாடுகளில் பெண்கள் மிக மோசமாகப் பாதிப்புற்றுள்ள னர். இத்தகைய நாடுகளில் பெண்கள் வெறுமனே கூலித்தொழிலாளிகளாக மாறியுள்ளனர். அவர்களது உழைப்புக்குக் குறைவான கூலியே கிடைக்கிறது. உத் தியோக பூர்வமான அறிக்கைகளிலோ, ஆவணங்க ளிலோ இந்த உழைப்புக்கு எத்தகைய அங்கீகாரமும் இல்லை. எனவே மூலவளங்களையும், தொழிற் திறன் களையும் அடையவேண்டியது பெண்களின் உடனடித் தேவையாகும். இது மாத்திரமன்றி ஆண் பெண் ணுக்கிடையிலான மரபுரீதியான, வேலைப் பிரிவினையில் மாற்றமும் தேவையாகும்.
இலங்கைச் சமூகத்தில் பெண்களின் இரண்டாம்பட்ச நிலையானது எமது சமூகநிறுவனங்கள் யாவற்றிலும் வேர் விட்டுப் பிணைந்துள்ளது. நாளாந்த வாழ்க்கையி லும் நடைமுறையிலும் இதனை நாம் காண்கிழுேம். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் கடந்த பத்தாண்டுகளில் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். இவைபற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனல் இது பெண்களது நிலையில் எத் தகைய அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தவில்ஜ. அவர்கள் தொடர்ந்து வாய்பேசாத, கீழ்ப்படிவுள்ள மனைவியராகவும், புதல்வியராகவும், சகோதரிகளாகவும் வாழ்கின்றனர். சுரண்டப்படும் தொழிலாளராகவும், குறைந்த கூலி பெறுவோராகவும் அல்லற்படுகின்றனர்.
மத்தியகிழக்கில் தொழில்புரியும் எமது நாட்டுப் பெண்கள் இப்பொருளாதாரச் சுரண்டலுக்குச் சிறந்த உதாரணமாவர். தொழில் பெற்றுக் கொடுக்கும் கம்பணிகளாலும், தொழில் வழங்குவோராலும், கண வன்மாராலும் அவர்களது ஊதியம் மிக மோசமான முறையில் உறிஞ்சப்படுகின்றது. அவர்களது கண வன்மார் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் பணத்தைக் குடியிலும், சூதாட்டத்திலும், தேவையற்ற ஆடம்

Page 4
பரங்களிலும் செலவழிக்கின்றனர். இதனைவிட வேலை தேடி வெளிநாட்டுக்குச் செல்லும் பெண்களைச் சமூகம் மிகவும் கீழ்த்தரமாகவே எண்ணுகிறது. ஒழுக்கம் கெட்டவர்களாகவும், மரியாதைக்கு அருகதையற்ற வர்களாகவும் கருதுகிறது. இவற்றைவிட இப்பெண் கள் வேலை செய்யுமிடங்களில் வேலைப்பழு பற்றியும், பாலியற் தொந்தரவுகள் பற்றியும் முறையிடுகின்றனர்.
பல்தேசியக் கம்பனிகளும், சுதந்திர வர்த்தக வல யமும் எமது பெண்களை மலிவான உழைப்புச் சக்தி யாகப் பயன்படுத்துகின்றன. குறைவான கூலியுள்ள தொழில்களை ஏற்றுக்கொள்ளும்படி இப்பெண்கள் ஏழ்மை காரணமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சுதந் திர வர்த்தக வலயத்தில் தொழிற்சங்கம் நிறுவுவது அனுமதிக்கப்படவில்லை. இதனுல் இவர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடமுடியாதுள் ளது. வேலை செய்யுமிடங்களில் இப்பெண்கள் ஆண் மேற்பார்வையாளர்களால் தொந்தரவுக்கு உள்ளா கின்றனர். இரவுநேர வேலை கட்டாயமாக்கப்பட்ட தால் வேலைக்குப் போகும்போதும், வேலை முடிந்து திரும்பும் போதும் தெருக்களில் பலவகையான வன் முறைகளுக்கும், பலாத்காரத்திற்கும் உள்ளாகின்றனர்.
இன்று இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உச்சத்தை அடைந்துள்ளன. எமது சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு எதிராக நடைபெறும் போரினல் அவை மேலும் தூண்டப்பட்டுள்ளன. வடக் கிலும், கிழக்கிலும் உள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரவாதத்தை யும், ஆயுதப்படையினர் பெண்களைப் பலாத்காரம் செய்வதையும் நாம் மிக வன்மையாகக் கண்டிக்கி ருேம். -
பெண்ணினுடைய உண்மையான இயல்பி உருச்சிதைத்த காரணிகளைக் கண்டறிந்து வெளிக் உளவியல், மனவியல், பண்புகளுக்குள் ஊடுருவும் புதிய விழுமியங்களை உருவாக்குதல் ஆகியவற்றைச் லும் வளர்ச்சியடைந்த பெண் விடுதலை இயக்கம் த யின் இரு கூறுகளை முழுமையடையச் செய்யும் ஆண் பற்றிய புதிய அறிவியலின் தோற்றத்திற்கும் இது இதுவரை காலமும் அடக்குமுறை, ஒரு பக்கச்சார்ட வழி, வர்க்க சமூகத்துக்குச் சேவையாற்றுவதாய் பு வற்றில் புதிய சிந்தனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

2
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அரசு எமது சமூகத்தை இராணுவமயமாக்குதல் மக்களது ஜனநா யக உரிமைகளை மறுப்பது மட்டுமல்லாமல் ஒரு சிலரது அரசியல் பொருளாதார நலன்களைக் கட்டிக் காப்பது மாகும். வடபகுதியினராணுல் என்ன தென்பகுதியின ரானுல் என்ன இந்த வன்முறைகளின் போது தமது புதல்வரையும், புதல்விகளையும் இழந்த அன்னையரின் துன்பங்களில் பெண்கள் என்ற வகையிலும், அன்னை யர் என்ற வகையிலும் நாமும் பங்கு கொள்கிருேம், இனப்பிரச்சனைக்கு ஒரேயொரு தீர்வு என்ற ரீதியில் அரசு நடத்திவரும் இப்போரினை வன்மையாக எதிர்க் கிருேம். இப்போர் பல்நூறு உயிர்களைப் பலியெடுத் துள்ளது. மிகுந்த வரையறையுள்ள எமது நாட்டு மூலவளங்களையும் வரண்டுபோகச் செய்துள்ளது. எனவே பெண்களாகிய நாம் ஒன்று சேர்ந்து அர்த்த மற்ற இப்போரை நிறுத்துமாறு எமது குரல்களை உயர்த்துவோம். எமது பின்ன்கள் பாதுகாப்புட னும், அமைதியுடனும், இணக்கத்துடனும் வாழட்டும் என விரும்புவோம்.
இறுதியாகக் கடந்த பத்தாண்டுகளும் இதுவரை காலம் உணரப்படாதிருந்த எமது பலத்தை எமக்கு உணர்த்தியுள்ளது. ஒடுக்கு முறையும், வன்முறை யும் நிறைந்த ஆணுதிக்க உலகின் நிறுவனங்களுக்கு மாற்றீடான வழிகளை ஆக்குவதற்குப் பெண்களுக்குத் திறன் உண்டு என்பதைக் காட்டியுள்ளது. சகலவித மான ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைவதற் கான பெண்களின் போராட்டத்தை இது மேலும் உறுதிப்படுத்தும்.
AV
ாதும் வாழ்வினதும் சகல அம்சங்களையும் பாதித்து கொணர்த்தல், பெண்ணினது உண்மையான உடலியல்.
பெண் பற்றிய புதிய விஞ்ஞானத்தின் அடிப்படையில்
சமீப வருடங்களில் வலுவிலும் அளவிலும் முதிர்வி னது பணிகளாகக் கொண்டுள்ளது. பனித வாழ்க்கை ா, பெண் ஆகியோரின் இயல்பு, தன்மை ஆகியவை தவிர்க்கமுடியாதவாறு வழி சமைத்தது. மேலும்" ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்து தந்தை அமைந்த கல்வி, பிள்ளை வளர்ப்பு முறைகள் ஆகிய
- நவால் எல். சாடவி

Page 5
இலங்கையில் பெண்நிலைவா கடந்த பத்தாண்டுகள் 197!
'இது என்ன, பெண் விடுதலை பற்றி இத்தனை
ஆர்ப்பரிப்புகள்?"
1984ஆம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் தின மாகிய மார்ச் எட்டாம் திகதி ஐலண்ட் பத்திரிகை தனது ஆசிரியத் தலையங்கத்தில் மேற்கண்டவாறு கேட்டெழுதியிருந்தது. ஆனல் அன்றுதான் சமாதா னத்திற்காகவும், அமைதிக்காகவும் ஊர்வலம் சென்ற பெண்களைப் பொலிஸார் தாக்கியதுடன் கைதும் செய் தனர்.
இலங்கையில் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கிறது. அப்படியிருக்க பெண்நிலை வாத இயக்கங்கள் ஏன்? பெண்விடுதலை பற்றி இத் தகைய ஆர்ப்பரிப்புகள் ஏன்? என்று பலர் ஆச்சரிய மடையவும் கூடும். எழுத வாசிக்கத் தெரிந்த பெண் கள் 83வீதம் ஆகவும் பெண்களது இறக்கும் வய தெல்லை 67 வருடங்கள் ஆகவும், பிரசவத்தின்போது பெண்களின் இறப்பு 1000க்கு 1.2 ஆகவும் இருந்தா லும் கூட இன்னும் சமூகத்திலும், வீட்டிலும், வேலை செய்யுமிடங்களிலும் பெண்கள் இரண்டாந்தரமான வர்களாகவும், ஆண்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக வுமே உள்ளனர் என்பதைப் பெண்நிலைவாதிகள் உணர்ந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளிலும் பெண் களின் நிலை பற்றி அதிகளவான சர்ச்சைகள் இடம் பெற்றதுடன் இலங்கையில் பெண்நிலைவாதம்பற்றிய உணர்வு குறிப்பிடத்தக்களவு முன்னேறியும் உள்ளது.
கடந்த பத்தாண்டுகளிலும் இலங்கையில் முக்கி யமான அரசியல், சமூக, பொருளாதார மாற்றங் கள் நிகழ்ந்துள்ளன. உலகிலேயே முதலாவது பெண் பிரதமராகிய சிறிமாவோ பண்டாரநாயகாவை 1977இல் ஜே. ஆர். ஜெயவர்த்தணுவைத் தலைவரா கக் கொண்ட கட்சி தோற்கடித்து அரசாங்கத்தைக் கைப்பற்றியது. வெஸ்ட்மினிஸ்டர் மாதிரியிலிருந்து ஜனதிபதி முறைக்கு 1978-ல் அரசியல் uuToo மாற்றியமை, 1989ஆம் ஆண்டுவரை தேர்தலை ஒத்தி வைப்பதற்காக 1982ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வ

ாதம்: 5-1985
குமாரி ஜெயவர்த்தணு
சன வாக்கெடுப்பு (இது ஆட்சி அதிகாரமயமாதலுக்கு ஒரு அடையாளமாகும்) ஆகியவை இக்காலகட்டத் தில் நிகழ்ந்த வேறு முக்கிய நிகழ்வுகளாகும். திறந்த பொருளாதாரக் கொள்கை, இறக்குமதியைத் தாரா ளமாக அனுமதித்தமை, நாணய மதிப்பிறக்கம், சுதத் திர வர்த்தக வலயம் நிறுவியமை, உள்நாட்டு வெளி நாட்டுத் தனியார் முதலீடுகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கம் முதலியவை 1977ஆம் ஆண்டின் பின் பொரு ளாதாரத் துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்க ளாகும். திறந்த பொருளாதாரக் கொள்கையின் முக்கிய விளைவுகளில் ஒன்று பெண்களை மலிவான
உழைப்புச் சக்தியாகப் பயன்படுத்துவதாகும். இப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட இன்னுேர் நெருக்கடி இனப் பிரச்சனையாகும். 1977இலும் பின்னர் 81,83
இலும் இது தமிழருக்கு எதிரான இனப்படுகொலையாக வளர்ந்தது. தொடர்ந்து இருபக்கங்களிலும் இரத் தக்களரியைப் பெருக்கும் சம்பவங்களுக்கு இது வாய்ப் பளித்தது.
தொடர்ச்சியாகப் பிணக்குகளும், அரசியல் சமூக நிலைமாறுதலும் நிகழ்ந்த இக்காலகட்டத்தில் பெண் களது பிரச்சனைகள் முன்னணிக்கு வந்தமை ஆச்சரிய மன்று. எமது தேசிய அரசியற் செயற்பாட்டின் ஒரு அங்கமாகப் பெண்கள் இயக்கம் வளர்ந்துள்ளதை இன்று எவரும் மறுக்க முடியாது. சர்வதேசப் பெண் கள் தினமான மார்ச் எட்டாம் திகதியில் பெண்நிலை வாதிகளுக்கு எதிரான அரச வன்செயல் ஒரு சடங்கு போல ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப நிகழ் வது இதற்கு ஒரு சான்றகும். 84ஆம், 185ஆம் ஆண்டுகளில் சர்வதேசப் பெண்கள் தினத்தில் ஊர் வலம் சென்ற பெண்கள் கண்ணிர்ப் புகைத் தாக்குத லுக்கு உள்ளாகினர் தடியடிபட்டனர் கைது செய் யவும் பட்டனர். 1983ஆம் ஆண்டு சமாதான ஊர்வலம் சென்ற விவியன் குணவர்த்தணுவும் வேறு பெண்களும் பொலிஸ் நிலையத்தில் தாக்கப்பட்டனர்,

Page 6
இலங்கையில் பெண்கள் இயக்கமும், பெண்நிலை வாதச் சிந்தனையும் ஐக்கியநாடுகள் சடையாலோ, மேற்குநாட்டுப் பெண்நிலைவாதிகளாலோ திணிக்கப் பட்டவை அல்ல. இலங்கையில் பெண்கள் இயக் கத்திற்குத் தனிப்பட்ட வரலாறு உண்டு. 1880-1910 காலப் பகுதியில் நடைபெற்ற கலாசாரப் புனருத்தார ணத்தில் பெண்கள் பங்குபற்றினர். கல்வி கற்றுத் தொழில் புரியத் தொடங்கினர். (இலங்கையின் முத லாவது பெண்வைத்தியர் 1899-ல் பட்டம் பெற்ருர்) பெண்களது வாக்குரிமைக்கான இயக்கம் 1920களில் ஆரம்பித்தது. இதன்பயணுக 1931இல் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் அகில இலங்கைப் பெண்கள் சங்கம் உட்படப் பல அமைப்புகள் சம உரிமைகளுக்காகப் போராடின. 1920களில் பெண் கள் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் உற்சாகத்து டன் பங்குபற்றினர். 1930களில் இலங்கையின் முத லாவது இடதுசாரிக்கட்சியில் அங்கம் வகித்ததுடன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமா கப் பங்குபற்றினர். இலங்கையில் முதன்முதற் தோன்றிய அரசியற் கட்சிச் சார்பற்ற பெண்கள் அமைப்பு எக்சத்காந்தா பெரமுன (பெண்கள் ஐக்கிய முன்னணி) ஆகும். இது 1948இல் ஆரம்பிக்கப்பட்டு இடதுசாரிக்கட்சிகளைச் சார்ந்த பெண்களால் தலைமை தாங்கப் பெற்றது. 1975ஆம் ஆண்டளவில் பெண் கள் அரசியல் உரிமைகளைப் பெறுவதில் மாத்திரமல்ல கல்வி, தொழில், சுகாதாரம் ஆகிய துறைகளிலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றங்களை அடைந்திருந்த
Ge.
1975ஆம் ஆண்டு ஐக்கியநாடுகள் சபையால் பிர கடனப்படுத்தப்பட்ட பெண்களுக்கான ஆண்டு பெண் களின் பிரச்ந்னையை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்தது. பெரும்பாலும் சகல அரசியற்கட்சிகளும், தோழிற்சங்கங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இதனைக் கொண்டாடின. பெண்நிலைவாதிகள் இலங் கையின் பல பாகங்களுக்கும் சென்றனர்; கூட்டிங் களும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன; சகலவர்க்கத் துப் பெண்களும் இவற்றை வரவேற்றனர். வெளி நாடுகளைச் சேர்ந்த பெண்நிலைவாத இலக்கியங்களும் நூல்களும் பல உள்ளூர்ப் பெண்களைப் பாதித்தன. அவர்கள் அவற்றை மொழிபெயர்க்கவும், தாமாகவே எழுதவும் முனைந்தனர். பெண்நிலைவாதத்தின் வெவ் வேறு சாயைகளைப் பிரதிபலிக்கும் புதிய அமைப் புகள் தோற்றம் பெற்றன. வெளிநாடுகளில் உள்ள நிதிஉதவி நிறுவனங்கள் அங்குள்ள பெண்நிலைவாத இயக்கங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு இங்குள்ள பெண் க்ள் இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கின. இதனல் சர்வதேச ரீதியாகக் குறிப்பாக ஆசிய, இந் திய பெண்கள் குழுக்களுடன் இணைப்புகள் ஏற்பட்
6.
கடந்த பத்தாண்டுகளின்போது இலங்கையில் எழுச்சியுற்ற வெவ்வேறுவகையான பெண்நிலைவாதக் கருத்துக்களை விளங்கிக் கொள்வதற்குப் பாரம்பரிய

மாகப் பெண்களுக்கு எதிராக இன்றும் தொடர்ந்து நிலவுகின்ற கருத்துகளை இனங்காணுதல் வேண்டும். இவற்றை நாம் பிராமணக் (வைதீக) கோட்பாடு என அழைக்கலாம். சிங்களவர் மத்தியில் பிராமணர் என்ற பிரிவு இல்லை; தமிழரிடையே உள்ள பிராம ணரோ கோயிற்சடங்குகளை மாத்திரம் ஆற்றுபவர். எனினும் சாதாரணமாக இந்த பிராமணக் கோட்பாடு என்ற கருத்து விளங்கிக்கொள்ளக் கூடியதொன்ருகும்.
பண்டைய, இடைக்கால உயர்மட்ட இலக்கியங் களில் உயர்வர்க்கத்தையும், உயர்சாதியையும் சேர்ந்த பெண்ணினது நன்னடத்தைபற்றிய உபதேசங்கள் இடம் பெறுகின்றன. குறிப்பாக 15ஆம் நூற்ருண்டு காவ்ய சேகரய என்ற நூலில் ஒரு பிராமணன் தனது புதல் விக்குச் செய்யும் உபதேசத்தைக் குறிப்பிடலாம். சுய தியாகம், கற்புடமை, பணிவு, வீட்டில் அடங்கியிருத் தல், குழந்தைகள், கணவன், கணவனது நண்பர், உறவினர்களைப் பராமரித்தல் ஆகியவை பெண் செய்ய வேண்டிய செயல்களாகவும், பலத்துப் பேசுதல், சிரித் தல், ஓடுதல், சோம்பியிருத்தல்,சுதந்திரமான (கெட்ட) பெண்களுடன் நட்பாயிருத்தல் செய்யக்கூடாதவை யாகவும் கூறப்படுகின்றன.
தமிழ், சிங்களக் கலாசாரங்களில் இவ் வைதீ கக் கோட்பாட்டின் சாராம்சம் தாய், மனைவி ஆகிய இரு பாத்திரங்களில் பெண்ணை அடக்கிவிடுவதாகும். அத்துடன் பெண்ணுக்கு எத்தகைய மதிநுட்பமும் இல்லை; அவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள்; தந் திரகாரர்; ஆண்களின் வீழ்ச்சிக்குக் காரணமானேர் என்பதாம். பெண்களது மிகப் பெரிய கடமை அவர் கள் அழகாகத் தோற்றமளிப்பதாகும் எனவும் இக் கோட்பாடு கருதுகிறது. எனவே இதன்படி பெண் தியாகசிந்தையுள்ள தாய், ஒரு அழகுராணி, ஒரு மாயப்பிசாசம், முட்டாள்தனமுடைய மனைவி ஆகிய சித்திரங்களாகவே தீட்டப்பட்டுள்ளாள்.
பெண்களது அழகு பற்றியும், நன்னடத்தை பற்றியும் பாரம்பரியக் கோட்பாடுகள் அழுத்திக் கூறு கின்றன. உயர் இலக்கியங்களிலிருந்து இவற்றுக்குச் சில உதாரணங்கள் கூறலாம். அழகுபற்றிய கருத்து சிங்கள இலக்கியங்களில் பஞ்சகல்யாணி என்று கூறப் படுவது; தலைமயிர், பல், சருமம், இளமையான தோற்றம் ஆகியவற்றை இவை குறிக்கும். தமிழ் இலக்கியங்கள் பெண் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு எனப்படும் நாற்குணங்கள் உடையவளாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றன.
இன்று பல சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட இவ்வைதீக மனப்பான்மை தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். அரசியல்வா திகள், சமயத்தலைவர்கள், அதிகாரமுள்ள ஆண்கள் ஆகியோர் பெண்களது நடத்தை எவ்வாறுஅமைய வேண்டும், அவர்கள் எவ்வாறு உடுக்க வேண்டும், எத்தனை குழந்தைகள் பெற வேண்டும் என்பது குறித்

Page 7
துப் பிரசங்கம் செய்கின்றனர். அழகின் ஐந்து அம் சங்கள் பற்றியும், நாற்குணங்கள் பற்றியும் நம்பிக்கை இன்னும் எமது சமூகத்தில் தொடர்ந்து நிலவுகின்றது.
இத்தகைய பெண்விரோதக் கருத்துகள் தொடர் ந்தும் இடம் பெறுவதை தாராண்மைவாத, சோச லிஸ் பத்திரிகைகள், சஞ்சிகைகள் எனக் கூறப்படுப வற்றின் சமீபகால ஆசிரியத் தலையங்கங்களிற் கூடக் காணமுடிகிறது. ஆங்கிலத் தினசரிகளுள் ஒன்ருகிய "ஐலண்ட் பெண்விடுதலை எனத் தலைப்பிட்ட ஆசிரி யத் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தது. (மார்ச் 1984)
'இன்று காணப்படும் பெண்நிலைவாதக் கருத் தோட்டம் சமீபகாலத்தில் மேற்குலகிலிருந்து கடன் வாங்கப்பட்ட கருத்தமைதிப் பொதிகளில் ஒன்ருகும். பாரம்பரிய சமூகத்தில் இன்றைய பெண்விடுதலையா ளர் ஆர்வத்துடன் எதிர்க்கும் மனைவி, தாய் என்ற பதவிகளிற் பெண் உயர் இடத்தையே வகிக்கிருள். வீட்டில் தாயே உண்மையாக அதிகாரமுடையவள். குடும்பம் தொடர்பான தீர்மானங்களில் அவள் மறை முகமாக ஆதிக்கம் செலுத்துகிருள்."
'எனவே பெண் விடுதலை பற்றி ஏன் இத்தனை ஆர்ப்பரிப்புகள்? சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப் போன எமது உயர்குழாத்தினர் மண்டியிட்டு வணங் கியதுபோன்ற இன்னுெரு மேற்குலக கிறுக்குத்தனமே இதுவாகும். கைத்தொழிற்புரட்சியின் பிற்பாடு மேற்கில் தோன்றிய பிரச்சனைகளில் இது ஒன்ருகும்.'
“எமது உயர்வர்க்கப் பெண்கள் ஈடுபடும்இந் தப் பெண்விடுதலை நடவடிக்கைகள் இலங்கையின் பெருந்தொகையான பெண்களுக்கு எத்தகைய அர்த் தமும் உடையதாக இல்லை."
மேற்கூறியதைவிட ஆச்சரியம் தருவது புரட்சி கர இடதுசாரிக் கட்சியொன்றின் குறிப்புரையாகும். 1984-ம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி நவ லங்கா சமசமாஜக் கட்சியின் சிங்களப் பத்திரிகை யான கம்கறு வித்தி (தொழிலாளர் செய்தி) பெண் கள் இயக்கத்தை வன்மத்துடன் கண்டித்தது. 'பெண்களது ஒடுக்குமுறைக்குக் காரணம் ஆண்களு டைய இயல்பான மிருகத்தனமான குணும்சங்களே எனக்கருதும் மத்தியதர வர்க்கத்தினர்' எனப் பெண் நிலைவாதிகளைத் தாக்கி எழுதியது. "ஆண்கள் குசி னியில் தேங்காய் துருவுவதற்கு உதவினுல் சமத்துவம் ஏற்பட்டுவிடும் எனவும் இவர்கள் கருதுகிறர்கள்' எனவும் இக் குறிப்புரையில் இது கூறியது. இன்று பெண்நிலைவாதிகள் முக்கியத்துவம் அளிக்கும் பெண் களுக்கு எதிரான வன்முறை குறித்தும் இப்பத்திரிகை பின்வருமாறு கூறியது:
“பெண்ணுக்கும் ஆணுககும் இடையிலான உறவு பன்முகப்பட்டதாகும். இதற்கு இலகுவான தீர்வு இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை அடிப்பது போலவும், தொந்தரவு செய்வது போலவும் வெளி

5
யாருக்குத் தென்படுவது நெருங்கிப் பார்த்தால் கண வனுக்கும், மனைவிக்குமிடையே நடைபெறும் வேடிக் கையாகவும், விளையாட்டாகவும் இருப்பதைக் காண Guгтшћ" ".
பெண்ணின் இரண்டாம் பட்ச நிலைமை பற்றிய பாரம் பரியக் கருத்தோட்டங்சள் பெண்கள் அமைப்புகளிடம் கூட இடம்பெற்றிருப்பதைக் காணலாம். பாரம்பரியசித் தாத்தங்களையுடைய பெண்கள் அமைப்புகள் நாடு முழுக்கப் பரந்துள்ளன. சமய விழாக்களை ஒழுங்கு செய்வது, அநாதை இல்லங்களை நடத்துவது, (தவறிப் போன) பெண்களுக்கு உதவுவது ஆகியவை இத்தகைய அமைப்புகளின் பணியாகும். இவையும் நாம் மேலே பார்த்த வைதீகக் கருத்தோட்ட எல்லைக்குள்ளேயே அமைவன. இவ்வமைப்புகள் இன்றுள்ள சமூக ஒழுங்கை நியதியானதாக ஏற்றுக் கொள்பவை. பெண்களது எத்தகைய சுதந்திரமான செயலும் சமூக ஒழுங்குக்கு மாருனது எனக் கருதுபவை. பாரம்பரியம், கலா கிாரம் என்ற பெயரில் பெண்களது இரண்டாந்தர நிலையைப் பேணும் வகையிலேயே இந்த அமைப்பு களின் நடவடிக்கைகள் உள்ளன.
இத்தகைய பாரம்பரியக் கருத்தோட்டம் வலு வுடன் தொடர்ந்து நிலவும்போது கடந்த பத்தாண்டு களில் ஏற்பட்ட பொருளாதார மாற்றமானது பெண் களைப்பற்றிய புதிய நோக்கு ஒன்றையும் உருவாக் கிற்று. இது பெண்ணை மனைவியாகவும், தாயாகவும் மாத்திரமன்றி. உற்பத்தித் தொழிலாளியாகவும் நோக்கிற்று. விவசாயத்தைப் பிரதான தொழிலா கக் கொண்ட எமது நாட்டில் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து வெவ்வேறு விதமான விவசாயத் தொழில் களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தோட்டத்துறைத் தொழிலாளரில் பெண்கள் எப்போதும் பெரும்பங்கு வகித்து வந்துள்ளனர். ஆனல் விரிவடைந்து வரும் நவீன துறையில் அதிகளவு உழைப்புச் சக்தி தேவைப் பட்டபோது அபிவிருத்தியில் பெண்கள் பங்குபற்றல் என்ற ஒரு புதிய கருத்தமைவு தோன்றியது.
தாராண்மைவாதப் பெண்நிலைவாதமும் பெண்களுக் கான திட்டங்களும்
இன்று அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் அரச ஆதரவைப் பெறுவதும் வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்களின் ஊக்குவிப்பைப் பெறுவதும் 'அபிவி ருத்தியில் பெண்கள்’ என்ற கருத்தமைவு ஆகும். இது பின்வரும் நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.
1. பெண்கள் விடுதலை அடைய வேண்டும். கல்வி வாய்ப்பு, தொழில்வாய்ப்பு, அரசியலிற் தீர்மா னமெடுத்தல் உட்பட அரசியல், சட்ட, பொரு ளாதாரத் துறைகளில் சம உரிமை பெற வேண் டும்.
2. புதிய தொழில் வாய்ப்புக்களையும், வருமானம் தரும் திட்டங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரர வளர்ச்சியில் பங்கேற்

Page 8
கும்படியாகப் பெண்களை அபிவிருத்தித் திட்டத் தில் இணைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோர் பொதுவாகத்தற்போதுள்ள பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்பவர்கள். untgrib uniu u சமூகங்க ளுக்குப் போதுமான அளவு முதலீடும், தொழில்நுட்ப வசதிகளும் கிடைக்கும் என்ற எடுகோளில் சகலநாடு களும் மேற்குநாட்டு முதலாளித்துவ வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ச்சியடையும் எனவும் கருதுபவர்கள். மேலும் இவர்கள் இன்று வரைக்கும் ஏற்பட்ட அபி விருத்தித் திட்டங்கள் ஆண்களுக்கே நன்மை செய் துள்ளன என்றும், எனவே பெண்கள் வளர்ச்சியடை யும் பொருட்டு சிறப்பான திட்டங்களை வகுத்து அவர்களை அபிவிருத்தியில் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் மேற்கூறிய கருத்தோட் டம் இலங்கையிற் பிரபலமாகியுள்ளது. பெண்கள் பணியகம் நிறுவப்பட்டமை (1978), மெக்ஸிகோ (1975) கொபன்ஹேகன் (1980) நைரோபி (1985) மகாநாடுகளிற் கலந்து கொண்டமை, பெண்கள் அலு வல்களுக்கென அமைச்சு நிறுவியமை (1983) பெண் களுக்கான திட்டங்களின் அதிகரிப்பு ஆகியவற்றில் இது புலனுகிறது. அரச நிறுவனங்களாலும், அரசு சார்பற்ற நிறுவனங்களாலும் வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்களின் உதவியுடன் நடாத்தப்பெறும் இத் திட்டங்கள் அந் நிதிஉதவி நிறுவனங்களின் கருத்த மைதிக்கு ஏற்றவாறே அமைந்துள்ளன.
1. அபிவிருத்தித் திட்டங்களுக்கான பணம் பெண் களுக்குக் குறிப்பாக வறிய பெண்களுக்காகப் பயன்படுத்தப்படல் வேண்டும்.
2. இத்திட்டங்கள் வருமானத்தைத் தரத்தக்கன வாய் மாத்திரம் அல்லாமல் சமூகத்தின் அடி மட்டத்தைச் சார்ந்த பெண்களுக்கானவையாக வும் செயல் அடிப்படை கொண்டனவாகவும் அமைதல் வேண்டும்.
பெண்களுக்கான பல திட்டங்கள் தையல் வகுப் புகள் போன்ற பாரம்பரியமான செயற்பாடுகளா கவே அமைகின்றன. இதனைவிடச் சற்று முன்னேறி யவையாயின் கோழிவளர்ப்பு, மரக்கறித்தோட்டம், பட்டிக் கைப்பணி, தேனிவளர்ப்பு ஆகியவையாக அமையும். இவற்றைவிடத் துணிகரமானவையா யின் மின்சாரக்கருவி பழுதுபார்த்தல் பயிற்சியாக
goly 60)LOLL. L.D.
பெண்கள் தமக்கு வருமானம் தரும் தொழில் களில் ஈடுபடுவதை எவரும் எதிர்ப்பதில்லை. ஆனல் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்களின் எல்லைகள் குறுகியவை என்பதையே உணர வேண்டும். முதலில்
பெண்கள் இத்திட்டங்களால் எவ்வளவு வருமானம் பெறுகிருர்கள் என்ற வின எழுகிறது. இரண்டாவ

தாக இம்மேலதிக வருமானத்தால் நன்மை பெறுவது மூன்ருவது பெண்களது இரண்டாந்தர நிலை ? חזחו ש யில் இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
பெண்கள் சுதந்திரமாக உழைக்கும் வாய்ப்பைப் பெறுவதன் மூலம் தமது நிலையை முன்னேற்றிக் கொள்ளலாம் என்பதும் அபிவிருத்திக் கோட்பாட்டா ளரின் ஒரு எடுகோளாகும். சுயதொழில் அடிப்படை யில் வருமானம் தரும் திட்டங்கள் தவிர பெண்களை உழைக்கும் மக்கள் படையில் சேர்ப்பது பற்றியும் கருத் துக் கூறப்படுகிறது. உதாரணமாக உல்லாசப் பயணத் துறை, சுதந்திர வர்த்தக வலயம், மத்தியகிழக்கு நாடுகள் ஆகியவற்றில் பணி செய்வதாகும். எனி னும் பாரம்பரியமாகத் தொடர்ந்துவரும் தந்தைவழிச் சமூக முறைமை பற்றி எவரும் விஞ எழுப்புவதில்லை. எனவே முன்னரிலும் விடத் தற்போது "பொருளா தார சுதந்திரம் அடைந்திருப்பதானது அவளது விடு தலைக்கு எவ்விதத்திலும் உதவாது என்பது புலப்படும். பெண் இரு வகையில் ஒடுக்குதலுக்கும், சுரண்டுதலுக் கும் ஆளாகிருள். சம்பளம் பெறும் கூலி வேலையின தும், சம்பளமற்ற வீட்டூழியத்திலும் இரட்டைச்சுமை அவளை அழுத்துகிறது. எனவே இந்த அபிவிருத்திக் கோட்பாடு பெண்ணை மேலும் அவளது தாழ்ந்த நிலை யிலேயே வலுவாகப் பிணைப்பதற்கு உதவுவதாகும். ஆணுதிக்கம் மிக்கதும் அதனல் சுரண்டலும் ஒடுக்கு முறையும் கொண்டதுமான அபிவிருத்திப் போக்கில் பெண்கள் இணைக்கப்படுகின்றனர். திறந்த பொரு ளாதாரக் கொள்கையின் பயணுக முன்னேறிய (Մ05 லாளித்துவ நாடுகளின் கலாசார, கருத்துநிலை அம்சங் கள் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவை எதிர்மறையானவையாகவும் அமைகின்றன. ஒரு பக்கத்தில் வர்த்தகமயமாதலும், நுகர்வுப்போக்கும் அதிகரித்துள்ளன. மேற்குநாடுகளின் பாவனைப் பொருட்கள் மேற்குநாட்டு முறையைப் பின்பற்றியே தொலைக்காட்சி மூலம் விளம்பரஞ் செய்யப்படுகின் றன. இது எம்மை சர்வதேசச் சந்தையின் அங்க ாக ஆக்குகிறது. இத்தகைய பிரசாரங்களில் தாயா கவும், மனைவியாகவும் பெண்பாத்திரமேற்றுப் பெரும் பங்கு வகிக்கிருள். தனது சுத்தமான குளியலறையை விளம்பரம் செய்யும் பெண்ணிலிருந்து குறிப்பிட்ட ஒருவகைப் பால்மாவின் மேன்மைகளைப் பிரசாரம் செய்யும் அழகுராணிவரை பல பெண்களை இந்த விளம்பரங்களிற் காணலாம். கார் தொடக்கம் ஒடி கொலோன் வரை வெவ்வேறு பொருட்களை விளம் பரம் செய்வதற்குப் பெண்கள் பாலியற் குறியீடுக ளாகவும் பயன்படுகின்றனர். மறுபக்கத்தில் அரசி யல், வணிகம், போர் ஆகியவற்றில் ஆணுக்குச் சம னமாகப் பெண்ணைச் சித்திரிக்கும் திரைப்படங்கள் உள்ளன. எவ்வாருயினும் எமது கலாசாரத்தில் மேற்குலகத் தாக்கமானது இங்கு பெண்நிலைவாத உணர்வை உருவாக்குவதிலோ, மாற்றுவதிலோ பங்கு வகிக்கிறது.
அபிவிருத்திக் கோட்பாடு பெண்கள் சகல துறை களிலும் இடம் பெறுவதற்கு ஆதரவு வழங்கினும்

Page 9
வைதீகக் கருத்துகளின் எச்சங்களையும் காணமுடிகிறது. குறிப்பாகப் பெண்கள் ஒரே நேரத்தில் குழந்தைகளை உற்பத்தி செய்வோராகவும், அழகு ராணிகளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. உதாரண மாக சண் பத்திரிகை (26-2-85) பெண்மையின் சிறப் புகள் என்ற பொருளில் எழுதிய தலையங்கத்தில் பல் கலைக்கழகப் பெண்கள் சங்கத்தில் ராஜாங்க அமைச்சர் ஆனந்த திஸ்ஸ.டி.அல்விஸ் ஆற்றிய உரையைக் குறிப் பிட்டு தொழில் செய்யும் பெண்கள் தமது பெண் மைக் குணத்தை இழக்கக்கூடாது எனக் குறிப்பிட் ;மேலும் பின்வருமாறு அது கூறியது ه از سا
“பெண்மை இயல்புகளை இழத்தல்பற்றி அமைச் சர் குறிப்பிட்டபோது அவர் எந்தக் கற்பனையையும் செய்யவில்லை. பெண்மை தாய்மையின் மகத்துவத் துடன் தொடர்பு கொண்டது. மார்புக் கச்சையை எரித்து சுதந்திரத்தை நாடுவார், தொழில் செய்வோர் என்னதான் கூறினும் பெண்மையின் மேன்மை வாய்ந்த பாத்திரம் தாய்மையின் அழகிலேயே தங்கி யுள்ளது'.
**பெண்ணினது நங்கூரம் குடும்பமாக இருக்கும் வரை அவள் நட்சத்திரங்களைக் கூடச் சென்றடையலாம். ஏனைய அத்திவாரங்கள் எத்தனை புதுமையானவையாக இருப்பினும் அவை வலுவற்றவைகளாகவே இருக்கும்’
அபிவிருத்தியாளரது கோட்பாடுகளுக்குப் பெண் கள் பணியகத்தாலும், ஏனைய அரசு சார்பற்ற நிறு வனங்களாலும் செயலுருவம் கொடுக்கப்பட்டது. பெண்கள் உற்பத்தியாளராவதற்கு இவை கற்பித்தன. நகரப் பகுதிகளிலும் தொழில் செய்யும் பெண்களின் அமைப்புகள் உள்ளன. வணிகத் துறைசார்ந்த லயன், ரோட்டரிச் சங்கங்களில் ஆண்களுடன் பெண் களும் அங்கம் வகிக்கின்றனர். எனினும் இவை யாவும் குறிப்பிட்ட எல்லைகளை உடையனவே. இந்த எல்லை அவர்களது கருத்தமைவாலேயே வரையறுக்கப் படுகிறது. சமூக, கல்வி, சட்ட, பொருளாதாரத் துறைகளில் அவர்களுக்கு ஒருவகைச் சமத்துவம் கிடைத்திருப்பதாகத் தோன்றலாம். ஆனல் தந்தை வழிச் சமூக அமைப்புகள் தொடர்ந்து நிலவும்வரை இச்சமத்துவம் கட்டுப்பாடுகளிலிருந்து அவர்களை எவ் வகையிலும் விடுவிக்காது.
அரசியற் கட்சிகளின் பெண்கள் அமைப்புகளும் தோன்றியுள்ளன. இடதுசாரிக் கட்சிகளுடைய பெண்கள் அமைப்புகளும் ஏனைய கட்சிகளின் பெண் கள் அமைப்புகளும் தேர்தல் காலங்களிலேயே முடுக்கி விடப்படுவன. சமீபகாலத்தில் இந்தோனேசிய முறையை முன்மாதிரியாகக் கொண்ட சேவவனிதா இயக்கம் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. பல் வேறு அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் மனை வியர் இதில் அங்கம் வகிக்கின்றனர். உத்தியோகத்த ரின் அந்தஸ்துக்கு ஏற்ப மனைவியரின் அந்தஸ்தும் அமையும். உதாரணமாக அமைச்சரின் மனைவி அவ் வமைச்சின் சேவவனிதாவின் தலைவியாக இருப்பார். இவர்கள் அரசாங்கக் கொள்கைகளை நடைமுறைப்

7
படுத்த உதவுவதுடன் சமூக சேவைகளையும் மேற் கொள்வர். எனவே இவை நேரடியாக அரச அதி கார அமைப்புடன் தொடர்புபட்டவையே தவிரப் பெண்களின் இரண்டாம்பட்ச நிலை தொடர்பாக எத் தகைய நடவடிக்கையும் எடுப்பவையல்ல.
சோசலிஸப் பெண்நிலைவாதிகள்
பெண்நிலைவாதம் இன்று சமஉரிமையை மட்டும் அடைவதற்கான தத்துவம் அல்ல. வீட்டிலும், குடும் பத்திலும் காணப்படும் ஆண்மேலாதிக்கம், ஆண் பெண் அசமத்துவ உறவு, தொழில் உற்பத்தியிலும் சந்ததி உற்பத்தியிலும் ஈடுபடுவதால் ஏற்படும் இரட்டைச் சுமை, பெண்களது பாலியலை ஆண்கள் கட்டுப்படுத்தல், கூலியற்ற வீட்டுழைப்பு, நாட்டின் கலாசாரத்தில் (சமயம்) பெண் குறைந்த ஸ்தா னத்தை வகித்தல் உட்படத் தந்தைவழிச் சமூகத்தின் சகல அம்சங்களுக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதாகவே பெண்நிலைவாதம் அமைகிறது. இத்தகைய உணர்வே தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. இத்தகைய கருத்து, பொருளா தாரம், சமூகம் ஆகியவற்றைச் சுரண்டலற்ற சோச லிஸ தன்மையுள்ளதாக மாற்றியமைக்கும் கருத்துடன் தொடர்பு கொண்டது.
இலங்கையில் முதலாவது சோசலிஸ பெண்நிலை வாத அமைப்பு 1978ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெண்ணின் குரல் அமைப்பாகும். மும்மொழிகளி லும் பெண்கள் விடுதலைக்காகச் சஞ்சிகை Går påvi பிரசுரிக்கும் இக்குழு சமசம்பளம் போன்ற பிரச்சனை தொடக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறை வரை பல்வேறு பிரச்சினைகளைக் குறித்தும் குரல் எழுப்பி யுள்ளது. இதன் பின்னரும் சோசலிஸ பெண்நிலை வாத அமைப்புகள் சில தோன்றின. ஜா-எலவைச் சேர்ந்த பெண் விடுதலை அமைப்பு, இப்கமுவ (pů போக்குப் பெண்கள் அணி ஆகியவையும் மேலும் பல சிறிய பெண்கள் அமைப்புகளும் இதிலடங்கும். இத் தகைய சோசலிஸப் பெண்நிலைவாத அமைப்புகள் பெண்கள் செயற் கமிட்டி என்ற ஒரு கூட்டமைப்பா கச் சேர்ந்துள்ளன. இக்கமிட்டி சர்வதேசப் பெண் கள் தினத்தையொட்டி ஒவ்வொரு வருஷமும் நிகழ்ச் சிகள் நடத்துவதுடன் குறிப்பிட்ட பிரச்சினைகள் ւյbմ0 நடவடிக்கைகளும் எடுப்பதாகும். பெண்களுக்கெ னத் தனியான அணிகளைக் கொண்ட இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பெண்களது சமூக, பொருளாதார ஒடுக்குமுறை பற்றித் தொடர்ச்சியாகக் குறிப்பிட்டு வந்துள்ளன.
பெண் தொழிலாளர் சுரண்டப்படுவது பற்றி சோசலிஸப் பெண்நிலைவாதிகள் அதிக அக்கறை காட் டியுள்ளனர். சுதந்திர வர்த்தக வலயம், தோட்டத் துறை, விவசாயம் ஆகியவற்றில் அவர்களது சம்ப ளம், வேலைத்தலத்தில் அவர்களது வசதிகள் ஆகியவை தொடர்பாக இவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். மேற்காசிய நாடுகளுக்குப் பெண்களை ஏற்றுமதி செப்

Page 10
8
வது, பெண்களை உல்லாசப் பயணத்துறையில் ஈடு படுத்துவது, தனிப்பட்ட, ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் தொழில் செய்வதற்குப் பெண்களை ஊக் கப்படுத்துவது ஆகியவை யாவும் பெண்களே ஒடுக்கு வதிலும், சுரண்டுவதிலும் புதிய முறைகள் தோன்றி யுள்ளதைக் குறிக்கின்றன. பெண்களை இரவுநேரங்க ளில் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திப்பதற்கு எதிரான போராட்டமும் கடந்த சில வருடங்களாகப் பெண் நிலைவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது.
பெண்நிலைவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட இன்னேர் போராட்டம் அழகிப் போட்டிகளுக்கு எதி ரானதாகும். திறந்த பொருளாதாரத்தின் விளை வாக அதிகரித்து வரும் வர்த்தகமயமாதல், நுகர்வுப் பெருக்கு என்பன அழகிப் போட்டிகளும், பாஷன் ஷோக்களும் பெருகுவதற்கு வழிசமைத்துள்ளன. இவை, பொருட்களை விற்பனை செய்வதற்கும், விளம் பரப்படுத்துவதற்கும் பெண்ணின் உடலைப் பயன்படுத் தும் மோசமான நடவடிக்கைகளாகும். இலங்கை யின் பெண்நிலைவாதிகள் நடத்திய ஆரம்பகாலப் போராட்டம் விளம்பரங்கள், அழகிப் போட்டிகள் தொடர்பானவையே. இப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுகின்ற போதிலும் பெண்நிலைவாதிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆண்கள், பெண்கள் மத்தி யில் சிறிதளவு விழிப்புணர்வு ஏற்பட வழி வகுத்தன. இது புதினப் பத்திரிகைகளின் குறிப்புகளிலும் ஆங் காங்கு நிகழும் கலந்துரையாடல்களிலும் வெளித்தெரி இறது. பி.பி.ஸி தொலைக்காட்சியில் அழகிப் போட் டிக் காட்சிகளைத் தடை செய்தமை பற்றி ஐலண்ட் பத்திரிகை (23-6-85) குறிப்பிட்டெழுதியது. ஆணுல் இலங்கைப் பெண்நிலைவாதிகளை அழகுணர்ச்சி இல்லா தோர் என்று கண்டித்தது.
பெண்களுடைய போராட்டங்கள்
சோசலிஸப் பெண்நிலைவாதிகள் தாராண்மை வாத அபிவிருத்திக்கோட்பாட்டாளர்களைவிட ஆழமான முறையில் விடயங்களை நோக்குகின்றனர். இதனல் அவர்களது போராட்டங்கள் விடுதலையை இலக்காகக் கொண்டவை. தற்போதுள்ள சமூக அமைப்பை அப் படியே ஏற்றுக்கொள்ளும் அபிவிருத்திக் கோட்பாட் டாளர் போலல்லாது சோசலிஸப் பெண்நிலைவாதிகள் சமூக அமைப்பை மாற்றப் போராடுபவர்கள். ஒடுக்கு முறையும், சுரண்டலும் சட்டத்தால் நீக்கக்கூடிய சமூகத் தீமைகள் என அவர்கள் கருதுவதில்லை. மாருக இவை ஆண்கள், பெண்கள் யாவரையும் ஒடுக்கி அடக் கும், சுரண்டும் சமூக பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியே எனக் கருதுகின்றனர். எனவே பெண்கள் இயக்கமானது சம உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் மாத்திரமல்ல; தீவிரமான சமூக மாற் றத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியே என நம்புகின்றனர்.
இந்த அடிப்படையிலேயே நாளாந்த வாழ்க்கை யில் வீட்டிலும், வேலைத்தலத்திலும் பெண்களின் போராட்டங்களுக்கு சோசலிஸப் பெண்நிலைவாதிகள் ஆதரவு அளிக்கின்றனர். எக்கலவில் உள்ள பொலி

ரெக்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் நடத்திய வேலை நிறுத்தம் இதற்கு உதாரணமாகும். பொலி ரெக்ஸ் தொழிலாளர்களுக்கு ஜா-எலவிலுள்ள பெண் கள் விடுதலை இயக்கம் ஆதரவு வழங்கியது. ஏனைய பெண்நிலைவாத அமைப்புகள் மறியல் செய்தல், துண் டுப் பிரசுர விநியோகம், சுவரொட்டி வெளியிடுதல், நிதிசேகரிப்பு, வெளிநாட்டுப் பெண்கள் அமைப்பு களுக்கு இப்போராட்டம் பற்றி அறிவித்தல் முத லிய முறைகளில் உதவின.
GFIrfaan), பெண்நிலைவாதிகளிடையேயும் உள்ள இரு போக்குகள் பற்றிக் குறிப்பிடுவது அவசி யம். சோசலிஸ் சமூகமே பெண்கள் விடுதலைக்கு வழி கோலும் என்ற நம்பும் ஒரு பகுதியினர் தற்போதுள்ள சமூக பொருளாதார அமைப்பை மாற்றுவதற்கு முதன்மை அளிப்பர். மற்றப் பகுதியினர் தொடர் ந்து எதிர்க்கப்படாவிடின் சோசலிஸ் உற்பத்தி முறை மையில் கூட தந்தை வழிச் சமூக அமைப்பு தொடர்ந் திருக்கும் என நம்புவதால் இதற்கு எதிரான போராட் டங்களில் அதிக அக்கறை காட்டுவர்.
இவ்விரண்டாவது பிரிவினரே சமத்துவமற்ற சமூ கத்தில் சமத்துவ உரிமைகளுக்காகப் போராடுவதுடன் தமது போராட்டத்தைக் குறுக்கிக் கொள்வதில்லை. சம உரிமைகளுக்கும் அப்பால் பெண் ஒடுக்கு முறை யின் பல்வேறு பகுதிகளையும் பற்றி, குறிப்பாகத் திரு மணம், குடும்பம் ஆகிய நிறுவனங்கள் பெண்களை ஒடுக்குவதுபற்றிக் குரலெழுப்பியுள்ளனர். இப்பெண் நிலைவாதிகள் குடும்பம், சமூகம், அரசியல், சமயம் கருத்தமைவு ஆகியவற்றில் ஆண்மேலாதிக்கம்பற்றி வின எழுப்பியுள்ளனர். சுருக்கமாகக் கூறினல் வாழ் வின் சகல பகுதிகளிலும் காணப்படும் தந்தைவழிச் சமூக ஆதிக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள் ளனர். கல்வி, சுகாதாரம், போன்றவற்றில் முன் னேற்றம் அடைந்தபோதும் தந்தைவழிச் சமூக அமைப்புத் தொடர்ந்து இலங்கையில் நிலவினல் பெண் கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என் பதை இவர்கள் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய பிரச்சனை யையும் முன்னெடுத்துள்ளனர். பஸ்களிலும், தெருக் களிலும் பெண்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து மனைவியை அடித்தல் வரைக்கும், குறிப்பாக இன வன்செயல்களின்போது சிறுபான்மை இனப் பெண் களைப் பலாத்காரம் செய்வதுவரை பல்வேறு வன் செயல்களையும் கண்டித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய உணர்வு அதிகரித்ததால் செய்திப் பத்திரிகைகள் கூட இவைபற்றி அதிகம் செய் திகளை வெளியிடுகின்றன. இதுவரை மறைவான விடயமாக இருந்த இந்த வன்முறை பற்றி இப்போது வெளிப்படையாக விவாதிக்கப்படுகிறது. இது பற் றிக் கருத்தரங்குகளும் அதிகம் நடைபெற்றுள்ளன.
பெண் தனது உடலைத் தானே கட்டுப்படுத்தும் உரிமை, குழந்தைப் பேறு பற்றித் தானே தீர்மானித் தல் ஆகியவையும் பெண்நிலைவாதிகளால் முன்வைக் கப்பட்ட பிரச்சனைகளாகும். கருச்சிதைவு பற்றிய

Page 11
பழைய சட்டத்தை மாற்றியமைப்பதற்கான கோரிக் கையும் இவற்றிலடங்கும். இலங்கையில் சகல இனங் களையும் சேர்ந்த பெண்களுக்குப் பொதுவான சட்ட முறைமை ஒன்றை அமைப்பது பற்றியும் இப்போது விவாதங்கள் நடைபெறுகின்றன. பாரம்பரிய சட் டங்களைக் கெளரவிப்பது என்ற போர்வையில் தமிழ் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டு வது இதனல் அகற்றப்படும் என்று பெண்நிலைவாதி கள் கருதுகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் வளர்ச்சியடைந்த பெண்நிலைவாத உணர்வினல் பெண் கள்பற்றிய ஆய்வின் முக்கியத்துவம் உணரப்பட்டுள் ளது. பெண்கள் கல்விநிலையமும், சமயத்துக்கும், சமூகத்துக்குமான நிலையமும் பெண்கள்பற்றிய ஆராய் ச்சித் திட்டங்களைச் சோசலிஸப் பெண்நிலைவாத நோக்கின் அடிப்படையில் ஆரம்பித்துள்ளன.
பெண்களும் இனப்பிரச்சனையும்
1983ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையிலான இனப் பகைமை உச்ச மடைந்தமை பெண்நிலைவாத உணர்விலும் குறிப் பிட்டளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியற் சார்புகளையும்கூட இனத்துவம் கடந்துள்ளது.மேலா திக்க மனுேபாவம் வைதீகக் கோட்பாடுள்ளவர்களி டம் மாத்திரம் அல்லாது ஏனையோரிடமும் காணப் படுகிறது. எவ்வாருயினும் முக்கியமானது யாதெ னில் நீதியான சமாதானமான தீர்வுக்கும், வன்முறை களை நிறுத்துவதற்கும் பெண்களிடையே வளர்கின்ற ஆவலாகும். இது வடக்கிலும், தெற்கிலும் பெண் களிடையே சமாதான இயக்கங்கள் தோன்ற வழி வகுத்தது. இது ஒரு முக்கியமான விருத்தியாகும். இவ்விடயத்தில் நாட்டில் உள்ள ஏனைய குழுக்களை விட பெண்நிலைவாதிகள் முன்னிலையில் உள்ளனர்.
வடக்கில் இடம்பெற்ற கைதுகள், பலாத்காரம், கொலைகள் போன்ற வன்முறைகள் இவற்றுக்கு எதி ராக மக்களை அணிதிரட்டும் அரசியற்கட்சிச் சார்பற்ற பல அமைப்புகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தன.
பெண்நிலைவாதம் பெண்களது விடுதலையுட இணைந்த ஒரு தத்துவமாகும். சகலவிதமான ஒடுக் போராட்டங்களுடன் அது இணைந்துள்ளது தமது ச வேண்டிய பெண்கள் தமக்கெனத் தனியான அமைப் முற்போக்குச் சக்திகளுடனுன தொடர்புகளையும் வலு

9
இவ்வகையில் பிரஜைகள் குழுக்களைவிட அன்னையர் முன்னணி என்னும் பெண்களின் அமைப்பும் உருவா னது. தெற்கில் சமாதானத்துக்காகப் பெண்கள் என்ற அமைப்பு உருவானது. இதில் சகல இனங் களையும் சேர்ந்த பெண்கள் அங்கம் வகித்தனர். வன் முறைகளைக் கண்டித்த இந்த அமைப்பு சமாதானத் தைக் கோரி இலங்கை முழுவதிலும் ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. இனவாதத்துக்கு எதிரான பிரசுரங்களை மும்மொழிகளிலும் வெளியிட்டது. இப் பிரசுரங்கள் பாடசாலைகள், வேலைத்தலங்கள், பொதுக் கூட்டங்களில் வினியோகிக்கப்பட்டன.
இத் தசாப்தத்தின் ஆரம்பத்தில் “விழிப்பு ணர்வை ஏற்படுத்தல்' பற்றி அதிகம் பேசவும் எழுத வும் பட்டது. ஆனல் தொடர்ந்துவந்த வருடங்களில் இத்தகைய உணர்வு ஏற்படுத்தலின்றி பெண்களுக் கான 'திட்டங்களை’ ஏற்படுத்தும் போக்கே காணப் பட்டது. இன்று நீண்ட ஆயுட் காலத்தையோ, சுகாதார வசதிகளையோ கொண்டிருந்தபோதும் பெண்கள் கீழ்ப்பட்ட நிலையில் உள்ளனர் என்பது பற் றிய உணர்வை ஆண்கள், பெண்கள் மத்தியில் ஏற் படுத்த மிகவும் வலிமையான, ஒழுங்கான பிரசாரம் தேவை எனப் பெண்நிலைவாதிகள் உணர்ந்துள்ளனர். அடுத்த பத்தாண்டுகளில் இந்த விழிப்புணர்வு வயல் களிலும், தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும், வேலை செய்யும் பெண்கள் திரளினரிடையே ஏற்படுத் தப்பட வேண்டும். சம சம்பளத்தாலோ, திட்டங் களாலோ பெண்களை விலைக்கு வாங்கிவிடுதல் தொடர முடியாது. கடந்த பத்தாண்டுகளில் தமது உரிமை களுக்காகப் பெண்கள் போராடியுள்ள்னர். வைதீகர் களின் மூடக்கொள்கைகட்கும், ஐதீகங்களுக்கும் சவால் விடுத்துள்ளனர். எனவே இன்று, பெண்க ளுக்கு உண்மையாக அக்கறையுள்ள ஒரேயொரு திட்ட மான பெண்விடுதலையில் மேலும் மிேலும் பெருந்திர ளான பெண்களை ஒன்றுசேர்த்து ஒழுங்கமைப்பதே
அத்தியாவசியமானதாகும்.
தமிழில் : சித்ரா
ன் மாத்திரமல்லாது மனிதகுல விடுதலையுடனும் குமுறை அம்சங்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தந்திரம் பற்றிய அயராத உணர்வுடன் செயற்பட புகளை உருவாக்கிக் கொள்வதுடன் சமூகத்தின் ஏனைய வாகப் பேணுதல் வேண்டும்.

Page 12
இன்னும் பலருளர்
எம்மைப் போல
அன்புள்ள மெனிக்கே இன்று போல் இருக்கிறது எனக்கு, அன்று
பல்கலைக்கழகத்தில் ராக்கிங் சமயத்தில் "சிந்து கியண்ட, சிந்து கியண்ட என சீனியர்ஸ் என்னையும் உன்னையும் உறுமிக் கேட்டதும்
நீயும் நானும் பயத்தில் விழித்ததும்.
எனக்கோ சிங்களம் என்ருல் 'அ' வும் தெரியாது விரிவுரை முடிந்து
நான் வீடு செல்கையில் “பொட்டக் இன்ட மங் எனவா? என்று நீ
எனக்குச் சொல்லியபோது ஏதோ புரிந்து காத்து நின்றேன் நட்பின் முன்னல் மொழி எது செய்யும்?
இன்றே
நீயும் நானும் இரண்டு திசையில். ஆட்சியின் வேர்கள் சிதைந்து விட்டன ஆனல் 8
உனது சுமையும எனது சுமையும் ஒன்றே.
நீயோ
எங்கோ ராஜ - எலவின் பள்ளி ஒன்றில் படிப்பித்துக் கொண்டு. நானும் இங்கு யாழ்ப்பாணத்தில் உன் முன்னுலும் என் முன்னுலும் நிறையக் குழந்தைகள் ஊரார் குழந்தைகள்
வீட்டில்
உனது குழந்தைகள், கணவன், தாத்தா, அம்மே நங்கி மல்லி...
எனக்கோ எனது குழந்தைகள், கணவன், ஐயா, அம்மா தம்பிமார். . . .

உனக்கும் எனக்கும் வெள்ளாப்பிலேயே நித்திரை முழிப்பு முகங் கழுவல் தேனீர் வைத்தல் குழந்தையை எழுப்பல் முகங் கழுவுவித்தல், மற்றும் கடமைகள் சமையல்
பிட்டோ, அப்பமோ
இல்லாவிட்டால்
பாணுே சம்பலோ மத்தியானத்துக்கும் புறம்பாய் சோறும் கறியும் தேங்காய் துருவக்கூட யாரும் இருக்கார் பின்னல் நின்று சுனிலும் செல்வனும் மயிரைப் பிடித்து இழுக்கக்கூடும் நிலத்தில் மூத்திரம் பெய்யக்கூடும் தேங்காய்ச் சட்டியைக் கவிழ்க்கக்கூடும் அடுப்பில் சோறு பொங்கக்கூடும் கரண்ட் நின்று கழுத்தை அறுக்கக்கூடும்.
எல்லாம் முடிந்து
சாப்பாடும் கொடுத்து நேரம் பார்ப்போம்
7.40
அவசரமாக
காக்காய்க் குளியல்
உடுத்தல்... பையைத் தூக்கிப் பள்ளி செல்வோம் சர்ப்பாடின்றி. உனக்கும் எனக்கும் இதுதான் வழக்கம்.
நீயும் நானும் மட்டும் அல்ல இன்னும் பலருளர்
எம்மைப் போல
ஆனல்
நீயும் நானும் எமது நிலையை நினைக்கவும் மறந்தோம். நினைப்பதற்கும் நேரம் இன்றி மீண்டும் தொடரும்.

Page 13
எங்கள் சமூகமும் பெண்களும்
**பெண் விடுதலை; பெண்களுக்கு விடுதலை’ என்று குரலெழுப்புபவர்களின் தொகை இன்னும் குறையாமல் கூடிக்கொண்டேதான் செல்கின்றது. ஆனல் எதற்கு விடுதலை, எதிலிருந்து விடுதலை என்பது தான் இன்னும் சரியாகத் திட்டவட்டமாக மக்கள் மத்தியில் எடுத்துக்கூறப்படவில்லை. பெண்களாகிய நாங்கள் இன்று விடுதலை கேட்கின்ருேம் என்ருல் நாங் கள் வாழுகின்ற இந்தச் சமுதாயத்தில் எமக்கு உரித் தான எமது ஆற்றல்களுக்கு ஏற்ற பாத்திரத்தை வகிப்பதற்கான உரிமையைத்தான் கேட்கின்ருேம். இதில் ஆண் பெண் என்ற எந்த வித்தியாசமும் இன்றி மனிதர்கள் என்ற நோக்கின் அடிப்படையில்தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
இந்த சமுதாய அமைப்பில் இருந்து எமக்கு விடு தலை வேண்டுமேயானுல் நாம் வாழுகின்ற இந்தச் சமு தாயம் அநீதியானது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு அத்த அநீதிகளை ஆராய்ந்து அதை ஒழிப்பதன் மூலம் தான் நாம் அதிலிருந்து விடுபடமுடியும். இத்தகைய அநீதிகள் திடீரென்று எம்மீது பொறிக்கப்பட்டவை அல்ல. வரலாற்று ரீதியாக ஏற்பட்ட பொருளா தார, கலாச்சார, அரசியல், சமூக மாற்றங்களின் விளைவே இன்று நாம் அனுபவிக்கின்ற ஒடுக்குமுறை.
‘இன்று பெண்கள் ஆண்களைப் போன்று கல்வி கற்கச்செல்கின்றர்கள்; ஆண்களோடு சேர்ந்து வேலை பார்க்கின்ருர்கள்; அதையும்விட சைக்கிளில் வேறு வீதியால் செல்கின்றனர்; இவற்றைவிட வேறு என்ன விடுதலை வேண்டும்?' என்று கேட்பவர்கள் பலரை நாம் அன்ருடம் சந்திக்கின்ருேம். இவர்களில் பல ரும் பெண்களின் உண்மையான நிலையை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களாயும், சமூகத்தில் நிலவும் ஆண்களின் மேலாதிக்கத்திற்கு எதிர்ப்புக் கூற மறுப் பதோடு அதையே நீதியாக்கி நிலைநிறுத்த சாட்சிகளை யும் தேடுகின்றர்கள்.
எங்கள் சமூகத்தில் பெண்களிற்கு இழைக்கப் படும் அநீதிகள் வெட்ட வெளிச்சமானவை. ஆணு லும் கூட அவற்றை ஒவ்வொன்முக Glafj55 DIT 95

சுமங்களா - சிவரமணி
ஆராய்வோமேயானல் எமக்கு இழைக்கப்படும் அநீதி களை இன்னும் நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடியும். ஒரு சமூகத்தில் குடும்பம் வகிக்கும் பங்கு மிக வும் முக்கியமானது. ஒரு மனிதனின் பிறப்பிடமாக வும் இது விளங்குவதால் ஒரு பெண்ணின் வாழ்க் கையைக் கட்டுப்படுத்தும் சக்திகளில் முதன்மைய்ான தாகக் குடும்பம் விளங்குகின்றது. குடும்பங்களில் நிலவும் பிற்போக்குத்தனமான கருத்துக்களும், செயற் பாடுகளுமே ஒரு பெண் தன்னிச்சையாக உறுதியோடு செயல்படுவதைத் தடுக்கின்றது. இத்தகைய கருத் துக்கள் காலம் காலமாக இருந்து வருபவையானலும் அவற்றை மாற்றி அமைக்க வேண்டிய சமூக நிர்ப் பந்தம் எமக்கு இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
பெண்ணுனவள் பிறந்தது முதல் இறப்பதுவரை தந்தை, தமையன், கணவன், தனயன் என்று யாரை யாவது சார்ந்து வாழும் நிலைக்கே தள்ளப்படுகின்ருள். இதுவே பெண்கள் தமது தனித்தன்மையை இழக்கக் காரணமாகிறது. இத்தகைய அடிமை வாழ்க்கை முறைக்குப் பெண்கள் சிறு பிராயம் தொட்டே பழக்கப்படுத்தவும்படுகின்ருர்கள்.
‘'நீ செய்த பாவங்களின் பயணுக நீ பெண்ணுகப் பிறக்கின்ருய், அல்லது உன் பெற்றேர்கள் செய்த பாவத்தின் காரணமாக அவர்களுக்குப் பெண் குழந் தைகள் பிறக்கின்ருர்கள்’. எங்கள் சமூகத்தில் சாதாரணமாகப் பெண்களின் பிறப்புப்பற்றிய கருத்து இதுதான் என்பது நாங்கள் எல்லோரும் அறிந்த ஒரு விடயமேயாகும். இவ்வாறு பெண்ணின் பிறப்பே எங்கள் சமூகத்தில் ஒரு சாபக்கேடாகக் கருதப்படு கின்றபோது அவளின் வாழ்க்கை நிலைபற்றி நாம் எதையுமே. இந்த சமூகத்தில் இருந்து அதிகமாக எதிர் பார்க்க முடியாது. தலைப்பிள்ளையாக ஆண்பிள்ளை கள் இருப்பதைத்தான் பெற்றேர்கள் விரும்புகின்ருர் கள். சாண்பிள்ளை என்ருலும் ஆண்பிள்ளையாக இருந்தால்தான் குடும்பச் சுமைகளை ஏற்க முடியும் என்று நம்புகின்றர்கள். எல்லாவற்றையும் விடத் தங்கள் வாரிசாக விளங்கும் தகுதி அதாவது குலப் பெருமை, பரம்பரைச் சிறப்புப் போன்ற பிற்போக்

Page 14
12
குத் தனமான அம்சங்களைக் காக்கும் தகுதி ஆண்க ளுக்கே உரித்தானதாகவும் கருதப்படுகின்றது. இதற்கு அப்பாலும் ஒருவன் ஆண்பிள்ளையால் இறுதிச்சடங்கு செய்யப்பட்டால்தான் அவனுக்கு மோட்சம் கிடைக் கின்றது என்று நம்பப்படுகின்றது. இவ்வாறு பெண் பிறப்பு குடும்பத்திற்கு ஏற்படும் அணுவசியச் சுமை யாகவே இன்றும் பரவலாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறு சமூகத்தில் வேர் ஊன்றிவிட்ட பண்பு களாலும், கருத்துக்களாலும் பெண்கள் பிறப்பது எவ் வளவு வேண்டப்படாத செயலாக இருக்கின்றபோதும் இயற்கையின் நியதி, பெண்கள் பிறக்கவே செய்கின் ருர்கள். அவ்வாறு பிறந்துவிடும் பெண்கள் சமூகத் தின் எல்லா வர்க்கங்களிலும் ஆண்களால் கட்டுப் படுத்தப்படுகின்ருர்கள். ஆனல் அடக்கப்படும் அள வுகளிலும், தன்மைகளிலும் தான் வர்க்கங்களிற்கு வர்க்கம் வேறுபாடு காணப்படுகின்றது.
எங்கள் சிறு பிராயங்களைச் சற்று நோக்குவோம். எங்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளையும் புகட்டப் படும் பழக்கங்களையும் நோக்குவோம். எங்கள் பெற் ருேர்கள் ஆண்பிள்ளைகளுக்குச் சைக்கிள் ஒட்டப் பழக் கும்போது பெண்பிள்ளைகளுக்குச் சமையல் அறை மூலையில் வெங்காயம் வெட்டப் பழக்குகின்றர்கள். இத்தகைய போதனைகள்தான் எதிர்காலத்திலும் பிள் ளைகளின் வாழ்க்கையைப் பாதிக்கின்றது. உண்மை யைக் கூறுவதானுல் சிறு வயது முதலே பெண் குழந் தைகள் தங்களை இழந்து, தாலிகட்டிய கணவன் கல் லானலும், புல்லானுலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து பதிவிரதா சிரோன்மணிகளாய் வருங்காலத்தில் வாழ் வதற்குச் சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
கல்விவசதி இன்று இரு பாலாருக்கும் கிடைக் கின்றபோதும் அதைக் கற்றுத் தேறுவதற்கான ஊக் கம் குடும்பங்களில் பெண்களைவிட ஆண்களுக்கே கூடு தலாகக் கிடைக்கின்றது. அவ என்ன படித்துக் கிழிக்கப் போரு, கட்டித் தொலைக்கிறதுதானே என் கிற மனப்போக்கு பெற்றேரிடம் காணப்படுகின்றது. பெண்ணின் வாழ்க்கையானது கல்யாணம் செய்வ தோடு முடிந்து விடுகின்றது என்ற எண்ணத்தின் வெளிப்பாடே பெண்கள் கல்வியில் பெற்ருே?ருக்குக் காணட்படுகின்ற அசட்டை மனப்போக்கு ஆகும்.
இத்தகையவற்றைவிட உணவு விடயத்திலும் கூடப் பெற்றேர்கள் பாரபட்சமாக இருப்பதை நாங் கள் அறிய முடிகின்றது. சில விசேட கணிப்புக்களின் வாயிலாகக் குழந்தைகளில் போசாக்குக் குறைந்தவர் களாக ஆண்களைவிடப் பெண்களே இருக்கின்றனர். ஒரே குடும்பங்களிலேயே நாம் இந்த நிலையை அவ தானிக்க முடிகின்றது. வளர்ந்து திருமணமான பின்பு கூட அனேகமான பெண்களின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை. தாங்களே சமைக்கின்ற போதும் கணவன் பிள்ளைகள் உண்டபின்பே மனைவி உண்கின்ருள். இவையெல்லாம் காலங்காலமாகப் பெண்களின் மனங்களில் ஊறிவிடச் செய்யப்பட்ட கருத்துக்களின் பலனே.

மகிழ்ச்சியும், இளமையும் கூடிய இளம் பருவம் கூட பெண்களைப் பொறுத்தவரை எந்தவிதமான இன்பங்களையும், மகிழ்ச்சியையும் காணுத பருவமா கவே இருக்கின்றது. இந்தப் பருவத்தில் பெண்களி டம் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் ஏதாவது இருந் தால் அவை அழகும், அடக்கமும் என்றே கூறுதல் வேண்டும்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்கள் இருப்பதுதான் பெண்களுக்கு அழ காகக் கருதப்படுகின்றது. பொம்பிளை Griffl.jëg: IT போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு. இந்த வாக்கி யமும் இதன் உண்மையான பொருளும் சமூகத்தில் காணப்படும் அநீதியைத் தெளிவாக எடுத்துக் காட்டு கின்றது. ஒருத்தி மனந்திறந்து மகிழ்ச்சியாகச் சிரிப்பது கூடப் பாவமாகக், குற்றமாகக் கருதப்படுமேயானல் அது எத்தகையகொடுமைவாய்ந்த சமுதாயம் என்பதை நாம் தெளிவாகக் கண்டுகொள்ளலாம்.
காதல் செய்யும் உரிமை ஆண், பெண் இரு வருக்குமே உரிய ஒன்ருகும். ஆனல் இன்றைய குடும் பங்களில் காணப்படும் ஒடுக்குமுறை இந்த உரிமை யைக் கொடுக்க மறுக்கிறது. இந்த விடயத்தில் குடும்பங்கள் ஆண்களையும் கட்டுப்படுத்துகின்றபோ தும் பெண்களோடு பார்க்கும்போது அவர்கள் கூடுத லாகவே இவ் உரிமையை அனுபவிக்கின்ருர்கள். காத லிப்பதால் ஏற்படும் விளைவுகள் பெண்களை மட்டுமே பாதிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருத்தி ஒருவனைக் காதலித்து அதன் பின் முறிவு ஏற்பட்டால் அந்தப் பெண்ணின் எதிர் காலமே இருள் நிறைந்ததாகின்றது. ஆனல் ஆண் களைப் பொறுத்தவரை இந்த நிலைமை இல்லை. அவர் கள் எத்தனை பெண்களைக் காதலித்து ஏமாற்றி இருந் தாலும் கூட அடுத்த நாளே அவர்கள் திருமணம் செய்துகொண்டு விடலாம். காதல், காதல், காதல் காதல் இன்றேல் சாதல் என்று பாடிச் சென்ருர் பாரதி. ஆனல் காதலித்த பெரும் பாவத்திற்காகச் சாகின்ற பேதைகளைத்தான் நாங்கள் எங்கள் சமூகத் திலே காண்கின்ருேம்.
திருமணம் என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒருவித அடக்குமுறையில் இருந்து இன்னேர் விதமான அடக்குமுறைக்குச் செல்கின்ற வாசலாகவே விளங்கு கின்றபோதும் திருமணம் செய்ய வேண்டும் என்கிற நிலை காணப்படுகின்றது. எதில், யாரை, எதற்காக என்ற கேள்வியை எழுப்பும் உரிமை பெண்களுக்குக் கிடையவே கிடையாது. அவர்கள் தாலிக் கயிற்றைக் கழுத்தில் தொங்கவிட வேண்டும். அது ஒன்றுதான் பெண்களுக்கும், திருமணத்திற்கும் இருக்கின்ற தொடர்பு. பெண் தேவை என்ற விளம்பரம் என்ன சொல்கிறது?
**இந்து வேளாளர் மரபில் பிறந்த பதினெட்டு வயதிற்கும், இருபத்திமூன்று வயதிற்கும் இடைப் பட்ட பெண் தேவை. நல்ல பண்பும், பழக்கவழக்க மும் கொண்ட பெண்ணுக இருப்பதோடு நல்ல உய

Page 15
ரமும், நிறமுமாக இருந்தால் விரும்பப்படும். அத் தோடு க.பொ.த. உயர்தரத்தில் சித்தி அடைந்தவர் ஆகவும், பாடக்கூடியவராக இருப்பதோடு வாத்தியங் கள் வாசிக்கத் தெரிந்தால் நன்று. மாப்பிள்ளை இங்கி லாந்தில் பொறியியல் துறையில் கல்வி கற்கின்ருர். பெண்களின் உறவினர் இங்கிலாந்தில் இருந்தால் நன்று. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி;’’
நாவல்களும், கதைகளும் போற்றும் பெருமை மிக்க பெண்ணினம் கல்யாணச் சந்தையில் விளம்பரப் படுத்தி தெரியப்படும் முறை இதுதான். ஆனல் முக்கியமான கேள்வி இதுவல்ல. பெண்ணைத் தெரி யும்போது கேட்கப்படும் தகமைகள் இவை மட்டும் தானு என்று பார்த்தால் இல்லை. கோரிக்கையின் ஒரு சொற்ப பகுதிதான் இது. உண்மையான கோரிக்கை ஒரு வீடு, ஒன்றரை இலட்சம் காசு, ஐம் பதாயிரம் டொனேஷன், 25 பவுணில் தங்க நகை கள். பெண்ணிடம் இருந்து சராசரியாக எதிர்பார்க்கப் படுவது இவைதான். ஆனலும் சமூகத்தால் நிர்ண யிக்கப்பட்டிருக்கும் ஆண்களுக்கான இந்த விலைகள் அவர்களின் தகுதிக்கேற்ப மாறுபடும். ஆகவே பெண் னின் பெற்றேர் இந்த விலையைச் செலுத்த வாழ்க்கை முழுவதும் பாடுபட்டுத் தங்கள் பெண்களின் கழுத் திற்கு ஒரு மஞ்சள் கயிற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுதான் பெண்களின் பிறப்பைப் பெற் ழுேர்கள் சுமையாகக் கருதக் காரணம் ஆகின்றது.
இதைவிட இத்தனை விலைகொடுத்து வாங்கும் ஆண்பிள்ளையோடு பெண்களின் வாழ்க்கை இன்பமா னதாய் விளங்குகின்றதா? அவளுக்கு முன்பின் தெரியாத ஒருவன் ஜாதகப் பொருத்தம் என்ற ஒன்றே ஒன்றை வைத்துக் கொண்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகின்றன். தாலி கட்டிவிட் டாலோ அவளுக்கு அவன் எஜமானன் ஆகிவிடுகின் ருன். அவளோ அவனின் அடிமையைப் போன்று தனது வாழ்க்கையை இன்னுமொருவனின்கீழ் நடத்த ஆரம்பிக்கின்ருள்.
ஒரு பெண்ணினது தகுதிக்கு ஏற்ற கணவன் அவ ளுக்கு அனேகமாகக் கிடைப்பதில்லை. அவளின் தந் தையிடம்இருக்கும்பணத்திற்கு ஏற்பதான் அவளுக்குக் கணவன் கிடைக்கின்றன். மனம் ஒத்த இருவரின் தாம்பத்திய வாழ்வு என்பது இன்னமும் வெறும் கன வாகவே விளங்குகின்றது. இவ்வாறு திருமணம் மனம் ஒத்தோரின் வாழ்வு என்பதைவிடப் பணம் ஒத் தோரின் வாழ்வாகவே விளங்குகின்றது.
ஒரு பெண்ணினது ஆற்றல்களிற்கும், திறமை களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் சம்பவமாகவே இன்று திருமணம் விளங்குகின்றது. எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தாலும் அதைச் சமூகத்திற்குப் பயன் முடியாத வண்ணம் பெண்கள் தடை செய்யப் படுகின்ருர்கள். சமூகத்தின் மேல் மட்டத்தில்
ಅಜ್ಜೈ ¶? பொருளாதார சமத்துவத்தைப் பெற்றுவிட்டால் தன்னிச்சையாகச் செயல்படும் நிலையைப் பெற்று விடு

13
வார்களோ என்கின்ற பயம் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும் இன்றைய நெருக்கடியான பொருளாதார நிலைமை பெண்கள் தொழில் பார்க் கச் செல்வதைக் கட்டாயப்படுத்தி இருக்கின்றபோதும் ஊதியம் பெறும் தொழிலைக் கவனிப்பதோடு மட்டும் அன்றி ஊதியம் பெருத வீட்டுத் தொழிலையும் வழக் கம் போலவே பெண்கள் தலையில்தான் சுமத்தி விடு கின்றது. ஆகவே ஒட்டுமொத்தமாகப் பெண், பொதி சுமக்கும் கழுதையாக மாறுகின்ருள்.
ஆகவே இன்றைய குடும்ப வாழ்க்கையானது சிறுபிள்ளை முதல் பெரியவள் ஆகும் வரை ஒவ்வொரு விதமான ஒடுக்குமுறைக்குப் பெண்களை உட்படுத்தியே வருகின்றது. இது ஒரு நச்சுவட்டம் போன்று பெண் களின் வாழ்க்கையை, ஆற்றல்களைப் பாழ்படுத்து கின்றது.
ஒரு பெண்ணின் வாழ்க்கையானது அவளது கணவன் இறப்பதோடு முடிவடைவதாகக் கருதப்படு கின்றது. எந்தச் சுப காரியங்களிலும் பங்குபற்றும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகின்றது. இதுவே அவள் ஒரு தனியான மானிடப் பிறப்பு என்பதைச் சமூகம் அங்கீகரிக்காததைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இந் நிலைமையானது பொருளாதார காரணங்களால் ஏற்பட்டது. எனினும் அவர்களும் பொருளாதார நிலைமையைச் சமத்துவமாய்ப் பெற் றிருக்கின்ற வேளையிலும், இந்தக் கருத்துக்களின் எச்சசொச்சங்கள் பெண்களைப் பாதிக்கவே செய்கின் றன.
மறுமணம், விவாகரத்துப் போன்றவற்றில் பெண்களிற்கு ஓரளவு சமமான உரிமை சட்டப் புத்த கங்களில கொடுக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அதை நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக நிலைமைகள் அரிதா கவே உள்ளன. மறுமணம் செய்கின்ற மனைவியை இழந்த ஆண்களின் தொகை விதவைகளின் தொகை யைவிடக் கூடுதலாக உள்ளது. அதேபோன்று எங் கள் சமூகத்தில் விவாகரத்து எடுத்துவிட்டு மறுமணம் செய்கின்ற பெண்களின் தொகையும் மிகவும் சொற்ப மாகவே இருக்கின்றது. இவையெல்லாம் சமூகத்தில் பெண்களிற்கு இழைக்கப்படும் அநீதிகளையே தெட்டத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
மிக நெருக்கடியான காலகட்டத்தில் நாம் இன்று வாழ்கின்ருேம். அரசியல் மாற்றங்களும் போராட்டங்களும் எமது வாழ்க்கையை முற்றுமுழு தாகப் பாதிக்கின்றன. இந்த நிலைமையில் அரசியல் போராட்டங்களில் பெண்களிற்கான பங்களிப்பு என்ன என்கின்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகின்றது. நேற்றைய சமூகத்தில் பெண்களின் அரசியல் உரிமை அரசியல் பங்களிப்பு என்பதெல்லாம் வாக்குச் சாவ டிக்குச் சென்று வாக்களிப்பது என்பதைத்தான் குறித் தது. அரசியலில் பெண்களின் பரவலான ஈடுபாடு காணப்படவில்லை. மிக மிகச் சொற்பமான அளவில் தான் பெண்கள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார்
G

Page 16
14
எனினும் இன்று காலம் மாறிவிட்டது. அரசி யல் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், போராட் டங்களின் உக்கிரமான நிலை மேலும் மேலும் பெண் களை அரசியல் போராட்டங்களில் பங்குபற்றும் நிலை மைக்கு ஆளாக்குகின்றது. வரலாற்றில் எந்த ஒரு அரசியல் போராட்டங்களிலும் பெண்களின் பங்க ளிப்பு கணிசமான அளவு காணப்படுகின்றபோதும் போராட்டங்களின் முடிவிற்குப் பின்னர் பெண்களின் நிலைமைகளில் எந்த மாற்றமும் ஏற்படாமல் அவர்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே வாழ் வதைக் காணலாம். ஆகவே வரலாறு கற்பிக்கும் பாடங்களை மனத்தில் கொண்டு அரசியல் போராட் டங்களோடு கூடவே எமது சமூகத்தில் பெண்கள் பற் றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இன்றைய அரசியல் போராட்டங்களிலும் குறிப் பிடத்தக்க அளவு பெண்கள் பங்குபற்றவில்லையாயினும் சிறுதொகையினராவது பங்குபற்றவே செய்கின்றனர். ஆனல் பிற்போக்குத்தனமான கருத்துக்களில் ஊறிப் போன எங்கள் சமுதாயம் இதைக் கண்டிப்பது எள்ள ளவும் வியப்புக்குரியதன்று. ஆனல் அரசியல் போராட்டங்களில் ஈடுபடும் பெண்கள் சரியான வழி களில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியமானது.
யாழ்ப்பாண பிரதேசத்திற்கே பிரத்தியேகமான தேசவழமைச் சட்டமானது பெண்களது பொருளா தார ரீதியான சுதந்திரத்தைப் பெரிதும் கட்டுப்படுத் துவதாகவே அமைகிறது. பெண்கள் மீதான பொரு ளாதார ரீதியான அடக்குமுறை அவர்களை ஆண்க ளுக்கு அடிபணிய வைக்கக்கூடிய ஒரு உபாயமாகத் தேசவழமைச் சட்டத்தில் கையாளப்பட்டுள்ளது. பெண் விடுதலை தொடர்பாகப் பெரிதும் பேசப்படு கின்ற போதும் இத்தேசவழமைச் சட்டத்தில் பெண் களது சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டங்களை மாற்றி யமைப்பது தொடர்பாக எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமை பெண்விடுதலை பற்றிய கருத்து நம்மவர் மத்தியில் எவ்வளவு தூரம் வளர்ச்சியடைந் துள்ளது என்பதுபற்றி ஒரளவு அறியக்கூடியதாக உளளது.
ஒரு பெண் தான் திருமணம் செய்யும்போது தனது பெற்றேரால் வழங்கப்படும் சொத்தினைப் பெற்றுக்கொள்வதற்குக் கூடக் கணவனின் சம்மதம் தேவைப்படுகிறது. பெற்றேரால் வழங்கப்படும் சொத்தினை ஏற்கும்போது “இச்சீதன ஆதனத்தை மகிழ்ச்சியுடனும், நன்றியறிதலுடனும் என் நாயக னின் சம்மதத்துடனும் ஏற்றுக் கொள்கின்றேன்’ என கணவனின் கையொப்பத்துடன் கூடிய சம்மதத்துட னேயே ஏற்றுக் கொள்ளலாம். ஆனல் கணவன் சொத்துக்களை ஏற்றுக்கொள்ளும்போது மனைவியிடம் இருந்து எவ்வித சம்மதமும் வேண்டப்படுவது இல்லை
ஒரு பெண் தனது பெயரில் பெற்றுக்கொண்ட சொத்து சட்டப்படி அவளுக்கே உரிமையுடையதாயி னும் அச் சொத்தினைக் கணவனின் சம்மதமின்றி விற்

கவோ, ஈடுவைக்கவோ, நன்கொடையாகக் கொடுக் கவோ அல்லது வேறு எவ்விதமாகக் கையளிக்கவேய உரிமையற்றவள். எனவே பெயரளவிலேயே அவள் உரிமையுடையவளாக இருக்கின்ருள். ஆனல் கணவனே தனது பெயரில் இருக்கும் சொத்தினை மனைவியின் சம் மதம் இன்றி விற்கவோ, ஈடுவைக்கவோ, நன்கொடை யாகக் கொடுக்கவோ அல்லது வேறு எவ்விதமாக கையளிக்கவோ உரிமையுடையவன். எனவே ஒரு பெண் எவ்வளவு சொத்துக்கள் வைத்திருந்தாலும் கணவனின் சம்மதம் இன்றி அவற்றைக் கையளிக்க முடியாது. ஆகையால் பொருளாதார ரீதியில் மிக வும் பலவீனமான நிலைக்கே தள்ளப்படுகிருள். இக் காலத்தில் கலியாணம் பேசும்போது ஆண் வீட்டுக் காரர் பெண் வீட்டுக்காரரிடம் 'உங்களுடைய மக ளுக்குத்தானே கொடுக்கச் சொல்லிறம், கொடுக்கிற தையேல்லாம் கொடுங்கள்’’ எனக் கூறுவதைச் சீதனப் பேச்சுவார்த்தைகளில் கேட்டிருக்கிருேம். பொரு ளாதார சுதந்திரத்தைத் தமது மகளுக்கு வழங்கும் என எண்ணி சீதனம் வழங்கப்பட்டாலும் இக்கட் டான நிலையில் இது உண்மையன்று என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாகக் கணவன் தனது மனைவியை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டால் வேலை பார்க்காத பெண்ணுயின் எவ்வித பண வருமா னமும் அற்றவளாக இருப்பாள். இந்நிலையில் தனது சொத்துக்களை விற்ருவது பிழைக்கக்கூடிய நிலையில்
அவள் இல்லை. ஏனெனில் கணவனின் சம்மதம் இன்றிச் சொத்துக்களை விற்கவோ அல்லது ஈடு வைக் கவோ அவளுக்கு உரிமையேதுமில்லை. எனவே
சொத்துக்கள் இருந்தும் அவை அவளுக்குப் பொருளா தார ரீதியில் உதவுவதாக இல்லை. இன்னுமொரு சம் பவத்தில் கணவன் ஒரு குடிகாரணுகக் குடும்பத்திற்குப் பெரும் கஷ்டம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். மக ளுக்குக் கல்யாணப் பேச்சு முற்ருகியபோது அக் குடி காரணுன கணவன் தனது மனைவி அவளது சொத்தை தன் கலியாணமாகவிருக்கும் மகளுக்குக் கையளிப்ப தற்குச் சம்மதம் கொடுக்கப் போவதில்லை எனக் கூறி விட்டான். பின்னர் 5,000 ரூபா கொடுத்தால் தான் சம்மதித்துக் கையொப்பம் இடுவதாகக் கூறினன். எனவே இங்கு ஒரு பெண் தனது பெயரில் உள்ள தனது சொத்தைத் தனது மகளுக்குக் கைய ளிப்பதற்குக் கணவனுக்கு 5,000ரூபா கொடுத்துச் சம்மதம் வாங்கவேண்டிய நிலைக்கு நமது தேசவழ மைச் சட்டம் இடங்கொடுத்துள்ளது.
மேலும் திருமணம்ான பெண் கணவனின் சம் மதம் இன்றி எவ்வகையான ஒப்பந்தங்களிலும் கைச் சாத்திட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. ஆனல் ஆண்களோ மனைவியின் சம்மதம் இன்றி எவ்வகை யான ஒப்பந்தங்களிலும் ஈடுபடலாம் எனக் கூறப்பட் டுள்ளது.
கற்பழிப்பு - இதைப்பற்றிப் பேசுவதே எங்கள் புனிதமான சமூகத்தைப் பொறுத்தவரை பாவமாகக் கருதப்படுகின்றது. கற்பழிப்பு என்பது பெண்களின் மேல் பிரயோகிக்கப்படும் ஒரு வன்முறையே. இதை

Page 17
யும் வன்செயலோ, பலாத்காரமோ என்று கூறுதல் தான் சாலப் பொருந்தும். எங்கள் சமூகத்தில் ஒரு பெண் பலாத்காரப்படுத்தப்பட்டாள் என்ருல் எங் கள் சமூகம் பலாத்காரப்படுத்தியவனைத் தேடிக் கண்டு பிடித்து சாட்சிகூறி தண்டிப்பதை விடுத்துத் தங்கள் மனப்பூர்வமான வசைகளை அந்தப் பெண்ணின்மீது சுமத்துகின்றர்கள். இதனுல்தான் பலாத்காரத்திற்கு உட்பட்ட பெண் தன்னைப் பலாத்காரப்படுத்திய வனைச் சமூகத்திற்கு அடையாளம் காட்ட முடியாமல் உள்ளது. பெற்றேர்கள் கூட தங்கள் பெண்ணிற்கு ஏற்பட்ட இந்த நிலையை இயன்றவரை மறைக்க முயல் கின்றனர். இதனுல் பலாத்காரம் செய்த நபர்க ளுக்கு வேண்டிய பாதுகாப்பையும், மறைவையும் தாங்களே ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சட்டம் கூட பலாத்காரத்திற்குச் சாட்சியங்கள் கேட்கிறது.
O உலகின் வேலைநேரத்தின் மூன்றில் இரண்டு பகுதி உலகின் மொத்த வருமானத்தில் பத்தில் ஒன்ை
O ஐக்கிய அமெரிக்காவில் ஆணுக்கு ஒரு டொலர்
கிறது. O இங்கிலாந்தில் ஆண்களை விடப் பெண்களுக்கு 25 O தென் கொரியாவில் ஒரு மாதத்திற்கு 42 டொல
வீதமானேர் பெண்களே. இவர்களில் அரைவாசி யாலங்களும் மூன்றில் ஒரு பகுதியினர் 15 மணி
O இலங்கையின் நெல் உற்பத்தி மாவட்டங்களில்
38% குறைவாகவே பெண் கள் சம்பளம் பெறுகி

15
பலாத்காரம் செய்பவன் தனக்கு எதிரான சாட்சியங் களை வைத்திருப்பானு? எவ்வளவு வேடிக்கை எமது சமூகத்தில் இவையெல்லாம் ஆண்வர்க்கம் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்படுத்திய சட்டங்களே யாகும்.
இவ்வாறு எமது சமூகத்தில் பல வழிகளிலும் வஞ்சிக்கப்படும் பெண்கள் தங்களை இனிமேலாவது இவ் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுவிக்க விரும்பினல் இவற்றுக்கு எதிராகக் கிளர்ந்து எழுதல் வேண்டும். சமூகம் முழுவதிலும் பெண்களின் நிலைபற்றிய விழிப்பு ணர்ச்சி ஏற்படுத்தப்படுதல் வேண்டும். பெண்களின் முழுமையான விடுதலை மூலமுந்தான் சமூகம் முழுமை யான விடுதலையைப் பெற முடியும்.
தி நேரம் பெண்கள் வேலை செய்கின்றனர். ஆனல் றயே பெறுகின்றனர்.
சம்பளமாயின் பெண்ணுக்கு அறுபது சதமே கிடைக்
% குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது.
ருக்குக் குறைவாகச் சம்பளம் பெறுபவர்களில் எண்பது க்கு மேற்பட்டோர் ஒரு நாளைக்கு 8 - 10 மணித்தி த்தியாலங்களும் வேலை செய்கின்றனர்.
விவசாய வேலைகட்கு ஆண்கள் பெறும் சம்பளத்திலும்
ன்றனர்.

Page 18
நிஜங்கள்
அவள் நகத்தைக் கடித்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சாம்பிய வதனம் அவள் மனக் குழப்பத்தைப் பிரதிபலித்தது. பக்கத்தில் படுத் திருந்த அவன் ஒரு பத்திரிகையில் ஆழ்ந்திருந்தான். முதல் நாள் இரவு நடந்த விடயம் இருவர் மனதை யுமே பாதித்திருந்தது.
அவன் லண்டனில் விஞ்ஞானப்பட்டம் பெற்ற வன். தனியார் வங்கி ஒன்றில் முகாமையாளர் பதவி வகிக்கின்றன். இவள் வசதியான பெற்றே ருக்குக் கடைசி மகள். கலைப்பட்டதாரி, நடனத்தை விசேட பாடமாகக் கற்றவள். ஆசிரியை, அழகி; அவர்களுக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. அவனது அழகிலும், கம்பீரத்திலும், சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறமையிலும் இவள் மனதைத் தோற்றுப் போனள். திருமணமும் நடந்தேறியது.
ஒரு சராசரிப் பெண்ணின் எதிர்பார்ப்புகளுடன் இவளது வாழ்க்கை ஆரம்பமாயிற்று. கல்யாண ரகளை ஒயுமுன்பே அவன் சொன்னன் *நீர் உமது அலங்காரத்தில் கூடிய கவனம் எடுக்க வேண்டும். நான் லண்டனில் படித்த படியால் அந்தப் பெண்க ஆளப்ப்ோல் எனது மனைவியும் அழகாக இருக்க வேண் டும் என்று விரும்புகிறேன்’’.
இவள் மனதில் ஏதோ உறுத்தியது. இவள் ரம்மியமாக உடையணிபவள் என்று கல்லூரித் தோழி யரிடையே பிரசித்தமானவள். “மிகவும் அழகான டுபண்ணத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினிர்கள் போலும்’ என்று தயங்கியபடியே கேட்டாள். “ஓமோம், எனக்கு ஒரு அழகுராணி யைக் கட்ட வேணும் என்றுதான் ஆசை. உம்மைப் பொம்பிளை பார்த்த அன்று பிடித்திருந்தது. ஓம் என்று சொல்லிவிட்டேன். ஆனல் வீட்டுக்குப் போன்பின்பு உம்மிலும் பார்க்கக் கூடிய வடிவான பொம்பிளை எடுக்கலாமே என்ற யோசனை வந்தது. வீட்டில் எனது அப்பா இந்தப் பொம்பிளையில் என்ன குறை கண்டனி என்று கேட்டார்’
அவள் முகத்தில் ஏமாற்றம் நிழலாகக் கவிவ
தைக் கண்ட அவன் "அதைப்பற்றி இப்ப என்ன? கலியாணம்தான் முடிந்து விட்டதே. நாங்கள் சந்

ரேணுகா தனஷ்கந்தா
தோஷமாகத்தானே இருக்கிருேம். சரி படத்துக்கு வெளிக்கிடும்' என்றவாறே குளியலறைக்குள் சென் முன்.
இவளால் திரைப்படத்துடன் ஒன்ற முடியவில்லை வெண்திரையில் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த பொழுது இவள் மனமும் பல திசைகளில் ஒடிக்கொண் டிருந்தது. அவன் இவளை அழகியாகக் கருதவில்லை என்னும் உணர்வு இவள் தன்னம்பிக்கையைச் சிதற அடித்து ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்தது. இன்னெரு கோணத்தில் சிந்தித்தபொழுது இவளின் குடும்ப அந்தஸ்துக்கு அவனைவிட உயர்ந்த மாப்பிள் ளையைக் கட்டியிருக்கலாம். மேலும் அவன் ‘திரு பூரீலங்கா’ பட்டம் பெறுமளவிற்கு அழகனல்ல. இவ ளுக்கு அவனை எதிர்த்து “எனது அப்பா என் மகளைக் கட்டுங்கள் என்று உங்கள் காலில் விழுந்து கெஞ்சி ஞரா? அல்லது நீங்கள் என்னைச் சும்மா கட்டினிர் களா?' என்று கேட்கத் தோன்றியது. ஆனல் அவ ளால் கதைக்க முடியவில்லை. அவள் படிப்பு, குணம், அழகு ஒன்றும் அவன் கண்களுக்குத் தெரியவில்லையே. கண் இழந்த மனிதர் முன் வைத்த ஓவியமா நான் என்று மனதினுள்ளே குமைந்து கொண்டாள்.
இரவு இவள் விழியோரங்கள் பனித்திருந்ததைக் கண்ட் அவன் இவளை அணைத்துக்கொண்டே ‘நான் இவற்றை உமக்குச் சொல்லியிருக்கக் கூடாது. இதைப் பெரிதுபடுத்தி மனவருத்தப்பட வேண்டாம்’ என் முன். அவன் அணைப்பில் அவள் குழந்தையாய் துரங் கிப் போனள்.
இவள் சமய அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்டவள். அவன் இவற்றை மூட நம்பிக்கைகள் எனக் கருதியதுடன் மேல் நாட்டு தம்பதிகள் போல் தாம் இருவரும் நடையுடை பாவனைகளில் விளங்க வேண்டும் என எதிர்பார்த்தான். வருடங்கள் இரண் டானெ. இவள் அவனை, அவன் குடும்பத்தாரை மதித்து நடக்கும் பாங்கை ஒரு நாள் அவன் வெகுவா கப் புகழ்ந்தான். ஆனல் அவன் குடும்பத்தினர் இவ ளின் எளிமையான நடத்தையை அங்கீகரிக்காமல் தம் மிலும் தாழ்ந்தவள் என்று கருதுவதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. வருடங்கள் இரண்டாகி

Page 19
பும் அவனது மனதில் தனது குடும்பத்தினருக்குப் பின்பே மனைவி இடம் பெற்ருள். அதை இவள் தோல்வியாகக் கருதினுள். V
இவர்களது முதல் ஆண் குழந்தை பிறந்தது. இவளுக்கோ கண்ணனின் அல்லது முருகனின் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை. அவனே வடநாட் டுப் பெயரான ‘தீபக்' என்ற பெயரை வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபொழுது இவ ளது மனதில் மீண்டும் ஏமாற்ற மேகங்கள் சூழ்ந்தன. ஆனல் குழந்தையின் தந்தையின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தன்னைத் தேற்றிக்
கொண்டாள்.
சிந்தித்துப் பார்த்த பொழுது அவன் அவளுக்கு வெளிப்படையாக ஒரு குறையுமே வைக்கவில்லை. அவ ளைப் பண்பாக நடத்தினன். இவள் பிரியப்பட்ட வற்றை மனம் கோணுமல் வாங்கிக் கொடுத்தான். அவனது மனதில் நல்ல வாங்கிக் கூடியவரையில் இருக்க வேண்டும் என்ற உணர்ச்சி விரவியிருந்ததை இவள் உணர்ந்தாள். ஆயினும் சிறு கோப தாபங் களையேனும் தாங்க முடியாத மென்மையான மனம் இவளுக்கு. அவன் மீது ஆழ்ந்த அன்பு, பக்தி இவ ளுக்கிருந்ததனுல் வாழ்க்கை சலனமில்லாமல் ஒடிக் கொண்டிருந்தது.
நேற்றைய சம்பவம். அவள் கண்களில் கண் ணிர். இவள் வேலைக்குச் செல்வதனல் மகனைப் பார்த் துக்கொள்ள ஒரு பறங்கிப் பெண்ணை அவன் வேலை க்கு அமர்த்தியிருந்தாள். இரண்டரை வயதுக் குழந் தையாயினும் அவனுக்குத் தேவாரங்கள் பயிற்றுவித்து இறைநம்பிக்கையுள்ளவனுக வளர்க்கவே இவள் விரும் பினுள். இவள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் குழந்தை தாத்தா, பாட்டியுடன் வளர வேண்டும் என்ற இவளது விருப்பத்தைஅவன் நிராகரித்து விட் டான். பிள்ளையின் கல்வி குறித்து அவர்களுக்குள் விவாதம் மூண்டது. வழக்கம் போல் அவனது விருப் பமே நிறைவேறியது. குழம்பிய மனதுடன் இவள் கல் லூரிக்குச் சென்ருள். நேற்று இவள் கல்லூரி மாணவிகள் உல்லாசப் பயணம் போனர்கள். இவ%ள யும் மற்ற ஆசிரியைகள் வலிந்து கூப்பிடவே, இவள்
ஒரு தோழியின் குரல் தோழி
எழுந்து வா இன்னும் என்னடி இருட்டினில் வேலை? மீண்டும் மீண்டும் அடுப்படி தஞ்சமாய் அடிமை வாழ்வே தலை எழுத்தாக எத்தனை நாள்தான் இந்த வாழ்வு? மானுக மருளாதே அன்னம் போல் அசையாதே வீது கொண்டு எழு எமது உரிமைகளை வென்றெடுப்போம்

17
கணவனின் அனுமதி பெறவில்லை என்று தயங்கினுள். பாடசாலை மூடமுன்பு வந்து விடுவோம் என்று அவர் கள் உறுதி அளிக்கவே ஏதோ ஒரு பலவீனத்தில் அவ ளும் அவர்களுடன் சென்ருள். வீடு வந்து சேர நேர மாகி விட்டது. அவன் வந்த பொழுது இவள் வீட் டில் இல்லை. தான் உல்லாசப் பிரயாணம் சென்று வந்த கதையை அவனுக்குச் சொன்னுள். இருவரும் இரவு உணவு அருந்தும் பொழுது அவன் திடீரென
'நீர் எனது அனுமதி இல்லாமல எங்காவது போவது எனக்கு விருப்பமில்லை" என்று சொன்னன் .
இவளுக்கு ஏனே திடீரெனக் கோபம் வந்தது. “உங்களுக்கு மதிப்பளிக்காது நான் நடந்துள்ளேன? எனக்கென்று சில ஆசைகள் உண்டு. ஒவ்வொரு சிறு விஷயத்திலும் நீங்கள் என்னைக் கட்டுப்படுத்த முடி யாது’’.
அவளுக்குள் அடங்கியிருந்த சுதந்திர வேட்கை திமிறிக்கொண்டு வெளிப்பட்ட வேளையிலே அவனுக் கும் கோபம் வந்தது. ‘நீர் இப்படி அகங்காரமாகக் கதைத்தால் நான் எல்லாத்துக்கும் சட்டங்கள் வைப் பேன். மற்ற இடங்களில் புருசன்மார் எப்படி ம்ணிசி மார்களை அடக்கி வைக்கிருர்கள்’ கோபத்தில் அவ லட்சணமாக அவனது முகம் மாறியது.
இவளுக்குள் ஏதோ விழுந்து இனி செப்பனி டவே முடியாதபடி பொடிப் பொடியாக நொருங்கி யது. பெண் என்பவள் எப்போதுமே அடிமைதானு? அவன் வாங்கிக் கொடுத்த பரிசுகள் எலலாம் அடிமை யின் சன்மானங்கள் தானே? தோற்றத்தில் நவீனமா கவும், உரிமைகளில் கட்டுப்பெட்டியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நாகரீகமா? முகத்திரை வில கிய கணவனின் முகம் அன்னியனை ஒத்திருந்தது. "இப்சனின் கதாநாயகியாகிய "நோரா'வையும் தன் னையும் ஒப்பிட்டு நோக்கினுள். நோரா கணவனின் குறுகிய மனப்பான்மையை உணர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினுள். இவளுக்கு உத்தியோகம் பார்க்கும் போதிலும் அத்தகைய மனுேவலிமை கிடை யாது. புரட்சி கதைகளில் மட்டும்தான். அவமா னத்திலும், ஏமாற்றத்திலும் கண்களில் பொங்கிய
உருணடது.
அன்று தலையைக் குனிவது அழகென்று சொல்லி உலகையே பார்க்காமல் உன்னைத் தடுத்தனர் உலகையே பார்க்காமல் எத்தனை நாள்தான் இந்த வாழ்வு? இன்றும் -9յւյւսւգաn ? உன்னைச் சுற்றிக் கிடுகுவேலிகள் இனியும் இருப்பதை அனுமதிக்காதே இன்னும் என்னடி இருட்டினில் வேலை? தலையை நிமிர்த்து
எழுந்து வா
உலகைப் பார்!

Page 20
நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள்.
1975-ஆம் ஆண்டிலிருந்து, “பெண் விடுதலை இயக்கம்’ என்ற பெயரில் நிகழ்ந்து வரும் கிளர்ச்சியில் எனக்குப் பங்கு உண்டு. அதற்கு முன்பே சில ஆண் டுகள், நடுத்தரக் குடும்பத்து வாழ்வைப்பற்றிய என் சொந்த அநுபவங்களைக் கொண்டும், உடன் வாழ்ந்த பிறரின் அநுபவங்களைக் கொண்டும் சில கருத்துக்கள் கொண்டிருந்தேன். இந்த அநுபவங்கள் யாவும் முச் கியமாக மத்தியதரக் குடும்பத்தைச் சார்ந்தனவே, காரணம், என் பிறப்பும் குடும்பச் சூழ்நிலையும் நடுத் தரக் குடும்பத்தையே ஒட்டியவை. தவிர, நான் ஏற் றுக் கொண்ட தொழிலும் - மங்கையர் மாதப் பத்திரி கையின் ஆசிரியைப் பொறுப்பும் - பெரும்பாலும் நடுத்தரக் குடும்பத்துப் பெண் வாசகர்களுடனேயே தொடர்புள்ளது. ஆதலால், சொந்த வாழ்வு தொழில் வாழ்வு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் வாழ்க்கையைப் பெண் விடுதலை இயக்கத்துடன் பொருத்தி ஆராய்ந்த பொழுது, எனக்குச் சில நம்பிக்கைகள் தோன்றின. அவற்றை முடிந்த முடிபான கொள்கை என்று கூற முடியுமா என்று எனக்குத் தெரியாது. எனவே எனது அநுபவங்களைப்பற்றிச் சிந்தித்தபொழுது எனச் குத் தோன்றிய முடிவை மட்டும் இங்கே குறிப்பிடுகி றேன்.
நான் வளர்ந்த நடுத்தரக் குடும்பத்தில், நல்ல பண்பாடுகளைவிட, உயர்ந்த சொற்களும் உன்னத மான எண்ணங்களுமே பெரிதும் வழங்கி வந்தன பயனைக் கருதாத செயல், பிறருக்கு உதவுதல் கடமை, தியாகம், அன்பு, பரிவு முதலிய சொற்களே தினமும் சாம்பார் சாதம் போல வழக்கில் இருந்தன எனவே, நீந்தத் தெரிவதற்கும், நீரின் அடித்தளத்தில் சென்று எதையாவது ஆராய்வதற்குமிடையிலுள்ள வேறுபாடு, பெரிதும் எப்போதும் புலப்படவில்லை நீந்தத் தெரியும் என்பதிலேயே ஒரு திருப்தி இருந்தது இந்தச் சூழ்நிலை காரணமாக, நமது குடும்பத்துக்கு அப்பாலுள்ள மாந்தர், சமூகம் ஆகியவை பற்றிய பார்வையே செல்ல இடமில்லாதிருந்தது. உயர்ந்த எண்ணங்களையும், சிந்தனைகளையும் பற்றிய பேச்சு ஆனல் உண்மை வாழ்க்கையில் அவை இல்லை! ந

விதயா பாள்
குடும்ப வாழ்வே உயர்ந்தது என்ற கொள்கையிலுள்ள போலித்தன்மையை நீண்ட நாள் நான் அறியவில்லை. எனவே, மாத இதழின் ஆசிரியைக் குறிப்புக்களில் நான் சிறிது முற்போக்கான, ஆனல் வழிவழியாக வந்துள்ள உன்னதக் கருத்துக்களையே தாங்கி எழுதி வந்தேன். ஆனல், நாளடைவில் இந்த நடுத்தரக் குடும்பங்களிலுள்ள வேதனைகள் எனக்குத் தெரிய வந் தன. நாம் பிறந்து வளர்ந்து வாழும் வீடுகளிலும் சமூகத்திலும், பெண்ணின் வாழ்வில் கொடுத்துள்ள வண்ணக் காகிதத்தில் சுற்றிக் கொடுத்துள்ள பெண் மை எவ்வளவு வெறுமையானது, பயனற்றது என் பது தெரிந்தது. ஒருபுறத்தில் என் பழைய மயக்கம் நீங்கி மறுபுறம் சமூகத்திலுள்ள இந்த மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது என்பதில் விழிப்படைந்தேன்.
வளர்ந்துவரும் நாடான பாரத தேசத்தில், நடுத்தரக் குடும்பங்களுக்கு வாய்த்துள்ள பெரும் பொறுப்பை நான் உணர்ந்தேன். இந்த நாட்டில் செல்வர்கள் மிகவும் குறைவு; வறுமையோ அபாரம்! செல்வரிடம் எதைப்பற்றியும் மதிப்பில்லாத அள வற்ற பணம்; வறியவரிடமோ திறந்த வெளிக்காற் றில் மூச்சு விடுவது, ஒரு சிறங்கைத் தண்ணிர்,-ஒரு வாய்ச் சோறு, உடுக்க ஒரு துண்டு-இவற்றில் ஒவ் வொன்றும் ஒரு லட்சம் கிடைத்தாற் போல! இந்த இரண்டு வகுப்பினருக்கும் நடுவில் இருப்பது மத்திய தரக் குடும்பம். ஆணுல், அதுவும் வறுமையை மறந்து, செல்வ ஏணியில் முன்னேற முயலுகிறது. சமூகத்திலுள்ள வாழ்க்கை மதிப்புக்களையும், சிந்தனை களையும் பெருநிதியாகக் காப்பதும் இந்த நடுத்தர வர்க்கமே என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மொத்தச் சமூகத்தின் பரப்பைப் பார்க்கும் போது, நடுத்தரச் சமூகம் சிறியது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனல், இந்தச் சமூகத்தில்தான் கல்வியறிவு மிகுதியாக உள்ளது. பண்பாடு, கலை, நீதிநெறி பற்றி இந்த நடுத்தரச் சமூகம் கொண்டுள்ள கொள்கைகளுக்கு நாட்டில் பெருமதிப்பு இருக்கிறது. சமூகத்தில் சிறந்த வாழ்க்கை மதிப்புக்களுக்கு, நடுத்

Page 21
தரச் சமூக வாழ்வே அளவு கோலாக அமைந் துள்ளது. “உயர்வர்க்கத்திய அந்தணப் பண்பாட்டி விருந்து கீழே இறங்கி வரும் நிலைக்கு அடித்தளம் நாட்டியது நடுத்தர வர்க்கமே என்று, சமூக இயல் அறிஞரான டாக்டர் பூரீநிவாஸ் குறிப்பிடுகிருர், நம் நாட்டு ஜனத்தொகையில், வறியவரான மிகத் தாழ்த் தப்பட்டோருடைய மதிப்பின்படி, செல்வர்களுக்கு முன்னுல் இடம் பெறுவது நடுத்தர வர்க்கமேயாம்; ஏனெனில், அதுதான் அவர்களுக்கு அடுத்தபடி அரு கில் உள்ளது. சாப்பாடு, துணிமணி, வாழ்க்கை பற்றிய மதிப்பு ஆகியவற்றை நடுத்தரக் குடும்பங்க விலிருந்தே மற்றவர் பற்றுகின்றனர். ஆகவே, இந்த தடுத்தர வர்க்கத்தில் பரவியுள்ள விஷவாயுவை நீக்கு வது மிகவும் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது. சமூகத்துக்கு உரிய கடமை என்பதை நீதிப் பாடல் களில் உறைய வைத்திருக்கும் இந்த நடுத்தரக் குடும் பத்தினர், தங்கள் மூடிய வீட்டுக்கு வெளியே உள்ள உலகத்தைக் காண விரும்ப வேண்டும்; தமது காலின் கீழேயே பெருந்தீ எரிவதை அவர்கள் உணர வேண்டும்.
நடுத்தரக் குடும்பம் என்று சொல்லும்போது, பலர் உயர்சாதியினரைப்பற்றியே எண்ணுகிருர்கள்: இது தவறு. கடந்த அறுபது எழுபது ஆண்டுக் காலத்தில் உயர்சாதியினர் மட்டுமின்றிப் பல வர்க் கத்தினருங்கூட நடுத்தரக் குடும்பத்தில் கலந்திருக்கி முர்கள். எனவே, மத்தியதரக் குடும்பம் மேன்மே லும் வரவர வளர்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நடுத்தரக் குடும்பத்தில் பெண்களின் நிலை என்ன அது ஏன் அப்படி இருக்கிறது?’ என்பது பற்றி ஆராயும்போது, ஆணின் முதன்மையும், தொழிற் புரட்சிக்குப் பிறகு தோன்றிய நடுத்தர வர்க்கமுமே இதற்குக் காரணம் என்று தெரிகிறது. தொழிற் புரட்சிக்குப் பிறகு, வீடுகளில் நிகழ்ந்து வந்த தொழிற் பெருக்கம் ஆலைகளுக்குச் சென்றது. வீட்டில் இருந்த ஆண்கள் ஆலைகளில் வேலைக்குச் சென்றனர். கல்வி பறிவுள்ளவர்களுக்கு ஆலைகளில் கிடைத்த ஊதியம் குடும்பத்துக்குப் போதுமானதாக இருந்தது. அதிலி ருந்து நடுத்தரக் குடும்பத்திய ஆண் தன் சம்பாத்தி யத்தில் பெருமை கொண்டு, ‘என் மனைவி வயிற்றை வளர்க்க வெளியே வேலை செய்வது கெளரவக் குறைவு; நான் நிறையச் சம்பாதித்து அவளைச் சுகமாக வைத் துக் கொள்கிறேன்’ என்று நினைக்கலாஞன். எனவே, நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்குச் சொகுசான இளைப்பாறும் வாழ்வில் உரிமையும், பெருமையும், "பெண்ணின் வேலை வீட்டிலே; ஆணின் வேலை வீட் டுக்கு வெளியே” என்ற கொள்கையும் தெளிவாக உறுதியாயின.
"ஆணினலே பெருமை” என்பது பெண்வாழ்வின் தாரகமந்திரம் ஆயிற்று. மணமானவள், செளபாக் கியவதி, மக்களைப் பெற்றவள் என்பவை பெண் னின் பெருமதிப்பை விளக்கின. தன் செயல் திற மையைவிட, கணவனின் செயல் திறத்தினல் கிடைம

19
கும் பெருமையையே தன் பெருமையாக அவள் கருதி ஞள். 'தான் ஒருத்தி’ என்பதற்கும், "ஒருவனுடைய ஒருத்தி’ என்பதற்குமிடையே உள்ள வேறுபாட்டை அவள் மறந்தாள். முழுமையாகத் தன்னைக் காணிக் கையாக்கி, பிறரைச் சார்ந்திருப்பதையே அவள் மேன் மையாக எண்ணினுள். இதில் ஆணுக்குச் செளகரி யம் இருந்தது. மனிதத் தன்மை குறைந்துள்ள ஆணுக்குத் தன் குற்றம் புலப்படாதது இயல்பே. இந் தத் திட்டம் ஆணின் வசதிக்காகப் பெண்ணைப் பிணைய வைத்தது. மனிதத் தன்மை குறைந்த பெண் களும் இதில் பெருமைப்பட்டு மயங்கினர்கள். தனக் குப் பாதுகாப்பு இருக்கும் வசதியை அவர்களும் விரும் பினர்கள். மேலும், இந்தப் பெண்களைக் காப்பதற் குப் பெண்களையே காவலாக வைத்தார்கள். எனவே இந்தத் தளையை உடைத்துச் செல்ல முயன்ற பெண் களை, பெண்களே பின்னுக்கு இழுத்தார்கள். இந்தச் சிக்கலான திட்டம், சிக்கிய கூண்டு, ‘குடும்பப் பெருமை’ என்ற பெயரில் புகழ்பெற்றது . அரசிய லில் அரசர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்பவை தீயவை என்று முடிவுகட்டி, ஜனநாயகம் வரையில் பயணம் நிகழ்ந்திருந்தும், குடும்பத்தில் குடும்பத் தலை வனது ஆதிக்கம், அவனுக்குப் பிறர் மதிப்புக் கொடு த்து நடப்பது, உறவினர் முதியோர் பேச்சுக்கு மதிப்பு ஆகியவை அப்படியே நிலைத்திருந்து, ‘குடும்பத்தில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தாங்குகிறவள் மனைவி என்று அலங்காரமாகப் பேசி அவளது பார் வையை மலர விடாமல் பார்த்துக் கொண்டார்கள்.
“கல்லானுலும் கணவன், புல்லானுலும் புருசன்', 'கணவனே மனைவிக்கு எல்லாம்" என்பதே நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணின் வாழ்வு மந்திரம் ஆயிற்று. திருமணம், குடும்பம், பிள்ளை குட்டிகள், பண்பாடு, பண்பாட்டைக் காப்பது -- இவற்றுக்காகவே பெண் ணின் பிறப்பு என்ற சிந்தனை எங்கும் பரவி நிலைத்து இதுவே இலட்சியமாயிற்று. கீழ்த்தர வர்க்கத்தினரி டையேயும் இந்தக் கொள்கை இடம் கொண்டது. உண்மையில் இவ்வாறு வாழ்வது சிரமமே என்ருலும், இதுவே சிறந்த கொள்கையாக, இலட்சியமாக விளங் கியது. தங்கள் குடும்பத்திலேயே உலகத்தைக் கண்ட பெண்கள், பரந்த சமூகப் பிரச்சனைகளைப் பற்றிக் குருடர்களாகவும், செவிடாகவுமே இருந்தனர். பெண் என்ற முறையில் தானும் ஒரு மனுஷி என்பதை நினைக் காமலும், நடுத்தரக் குடும்பத்தைத் தவிர, இன்னும் கேட்டால் தன் உறவு ஒட்டைத் தவிர, மற்றது பற் றிச் சிந்திக்காமலுமே அவர்கள் இருந்தனர். தான் பிறரை அண்டி வாழ்வதையும், ஆணையே புகலாகக் கொண்டிருப்பதையும் அறியாமையால், பரந்த சமூ கப் பிரச்சனைகளைப் பற்றி அவர்கள் பிரக்ஞையற்று இருந்தனர். இன்று, அவர்களுடைய நிலைமையை விளக்கிக் கூறி அவர்களது திறமையை வெளிப்படுத் தினல், நடுத்தரக் குடும்பத்துக்கு வெளியே உள்ள பெண்களின் பிரச்சனைகளையும் அவர்கள் தீர்க்க முடி யும் என்பது எனது நம்பிக்கை. ஏனென்ருல், சம யம், இனம், கல்வி, செல்வம் முதலியவற்றினல் பெண்களிடையே வேறுபாடு இருந்தாலும், ஆண்

Page 22
20
பெண்களுக்கு இடையேயுள்ள தொடர்பு பற்றிய முக் கிய சிக்கல்களைப் பற்றி யாவரும் ஆராய முடியும். இந்த ஆராய்ச்சி, நடுத்தரக் குடும்பத்துப் பெண்க ளைச் சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ள பெண் களுடன் இணைக்கும் என்பதே என் துணிபு.
‘எங்கள் மாதப் பத்திரிகையின் வாசகர்களே இதற்குச் சான்று. இந்த வாசகர்கள் ஒரு குறிப் பிட்ட மட்டத்தில் இருப்பவர்கள் என்பது உண்மை. ஆயினும், சுமார் நான்கு லட்சம் வாசகர்கள் கொண்ட இந்தப் பத்திரிகையின் ஆசிரியை என்ற முறையில், என் அநுபவம் மிகவும் முக்கியமானது. இந்த வாசகப் பெண்கள் எனக்குத் தெரிவிக்கும் கருத்துகளிலிருந்து, நடுத்தரக் குடும்பத்துப் பெண்க ளிடையே தோன்றியுள்ள விழிப்பையும், பிறரைச் சாராமல் சமமாக வாழ வேண்டும் என்ற துடிப்பை யும் நான் அறிகிறேன்; அவர்களது வேதனைகளையும் உணருகிறேன்.
உதாரணமாக, இதோ சில கடிதங்கள் - பம்பாய், முலுண்டிலிருந்து ஒரு பெண்மணி எழுது கிருள்- "நான் நடுத்தரக் குடும்பத்திய, கல்லூரி யில் பயின்ற, 45 வயதான, சாதாரண இந்துப் பெண். ஒரளவு படித்த, அழகில் குறைந்த, பண பலம் இல்லாத, நடுத்தரக் குடும்பத்துப் பெண்களின் துயரத்தை நான் அறிவேன். நிற்கும் போதும் உட் காரும்போதும் பெண் என்பதனல் ஏற்படும் இழி வைத் தாங்க முடிவதில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் ஆணுடன் ஒத்துப் பழக வேண்டிய கட்டுப் பாடு. வீட்டுச் செலவுக்குத் தவிர, நமக்கு எது வேண்டுமாயினும் இவரிடம் அநுமதி பெற வேண்டும். இவருக்குப் பிடித்த புடைவை ரவிக்கைகளையே நாம் அணிய வேண்டும். இவருக்கு விக்கல் என்ருல் மின் னல் வேகத்தில் ஒடித் தண்ணிர் கொண்டு கொடுக்க வேண்டும். நான் ஜுரத்தில் கொதித்தால் ஒரு வாய் டீ கொடுப்பார் இல்லை. வெளியே நான் வேலை செய்து களைத்து வந்தாலும், உடனே இவருக்கு டீ போட்டுக் கொடுக்க வேண்டும். எங்கள் இரத் தத்தில் ஊறிய பெண்மையினல் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிருேம். கதாநாயகிகளைப் போலவோ, சினிமாவில் வரும் நடிகையரைப் போல -வோ வீட்டை விட்டு ஒடும் துணிச்சல் எங்களுக்கு இல்லை.”*
நடியாத் என்ற ஊரிலிருந்து ஒரு பெண்மணி'திருமணத்துக்கு முன்பு நான் மிருணுல் கோரே அவர்களுடன் சமூகசேவை செய்திருக்கிறேன். ஆனல் இப்போது வீட்டுப் படியை விட்டுத் தாண்டுவதற்குத் தடை, கூண்டில் அடைபட்டிருக்கிறேன்; இறக்கை இல்லாமையால் பறக்க முடியாது.
கெமிகல் எஞ்சினியரிங்கில் கடைசி ஆண்டு பயி லும் பெண் எழுதுகிருள் - ‘நாம் ஏன் வாழ்கி ருேம்? எதற்காக வாழ்கிருேம்? சாக முடியாது என்பதனலா? துடித்துத் துடித்து, மனத்தைக் கல் லாக்கிக் கொண்டு, போலியான முகமூடி அணிந்து

துயரத்தை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ் வதா? ஏமாற்றத்தாலும், தோல்வியினலும் வாழ்வில் போராடும் வல்லமையை இழந்தவர்கள், சூழ்நிலையி ஞல் பறக்கும் சிறகு வெட்டுப்பட்டவர்கள், நல்ல பண்புகளும் உயர்ந்த அறிவும் இருந்தும் வாழ்வில் கர்ணனைப் போல உள்ளத்தில் வேதனையே நிறைந்த வர்கள்-இத்தகையவர்களின் துயரங்களுக்கு நீங்கள் வடிவம் கொடுப்பீர்களா?"
இந்தோரிலிருந்து ஒரு பெண்மணி -
“பெண்ணின் துயரங்களுக்கு இன்று முடிவுதேவை. வெறுமனே வீட்டிலிருந்து அலுவலகத்தில் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் சுதந்திரமோ, மேடையில் நின்று தொண்டை வறளப் பேசுவதோ நாம் விரும் பக்கூடிய பெண் விடுதலை அல்ல. "நம் நாட்டில் பெண்களுக்குச் சம உரிமை ஏற்கனவே உண்டு. அவர் கள் பெண் தெய்வங்கள்’ என்றும், “பெண் விடுதலை இயக்கம் என்பது ஒரு பாஷன், பித்து, பொழுது போக்கு’ என்றும் பலர் சொல்கிருர்கள். ஆனல், மிக்க கல்வியறிவுள்ள, சிறந்த பண்பாட்டைப்பற்றிப் பேசும் நமது சமூகத்தில் இன்று பெண்களுக்குப் பாது காப்பு இல்லை; எப்போதும் மனத்தில் பீதியும் வேத னையுமே நிறைந்துள்ளன. எங்கும் விஷ முட்கள் பரவியுள்ளன. இந்த நிலையில் நாங்கள் கிளர்ச்சி செய்து சமூகத்தை எதிர்க்காமல் எப்படி இருக்க முடி யும்? என் தலைமுறைக்கு முந்திய பெண்களை இந்த முட்கள் வருத்தாமல் இருந்திருக்கலாம்; அது எனக் குத் தெரியாது. ஆனல் இன்று ஆணிடம் உள்ள மிருகத்தன்மை நாளுக்கு நாள் தலைநீட்டி வளர்ந்து வருகிறது. இந்த உலகில் தெய்வம் படைத்த இரண்டு கால் விலங்கு இது முள்ளினுல்தான் முள்ளை நீக்க முடியும்; எனவே தலைநீட்டும் இடத்தில் அதன் மண்டையைப் பிளப்போம்!"
சமூகத்தில் நடைபெறும் ஊமையான, வெளி வராத அநீதியின், வேதனையின் குரல் இது. வீட்டுக்கு வீடு இது நடைபெறுகிறது என்பதில்லை; ஆனல் இது நடக்கும் இடத்தில் நேரும் உள்ளக் குமுறலை நாம் அலட்சியப்படுத்த முடியாது.
பாரத நாட்டு முழுச் சமூகத்தில் நடுத்தர வர்க் கம் என்பது ஒரு மூலையில் அடங்கியதுதான் என்பது உண்மை. ஆனல் , சமூகத் தொண்டு செய்பவர்கள் எப்போதுமே எண்ணிக்கையில் குறைவுதான்; அவர் களுக்கு உதவும் மக்கள் கூட்டம் பெரியது. இந்தத் தொண்டர்களின் வலிமையை வளர்ப்பதற்கு, நடுத் தர வர்க்கம் பெரிதும் உதவ இயலும்.
நடுத்தரப் பெண்கள் சேர்ந்த மாதர் சங்கங் கள் இந்த வகையில் பெருஞ் செயலாற்ற முடியும். குடும்பக் கட்டுப்பாட்டுக் கருவிகளின் பயன், விஞ் ஞான ஆராய்ச்சியினல் வளர்ந்துள்ள ஆயுள் பெருக் கம், வீட்டு வேலைகளுக்கு உதவும் யந்திரங்களின் புழக் கம், வளரும் கல்வியறிவு ஆகியவற்றினல் வருங் காலத்தில் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த நேரமும் வசதியும் கிடைக்க வாய்ப்பு இருக்

Page 23
கிறது. நாளடைவில் இவர்கள் தங்கள் தனித்தன் மையை வளர்த்துக்கொண்டு, பெண்களின் வாழ்வைப் பயனுள்ளதாக மாற்றியமைக்க முடியும். அப்பொ ழுது சமூகத்திலுள்ள குருட்டு நம்பிக்கையும், எல்லாம் விதி என்ற எண்ணமும், ஏமாற்றமும் தாமே தொலை வில் ஒடி மறையும்.
இன்றைக்கு இந்தத் துறையில் நடுத்தரக் குடும் பத்துப் பெண்களின் பங்கு மிகக் குறைவுதான்; ஆயினும் அங்கங்கே முயற்சி தொடங்கியிருக்கிறது என்பதனல், நம்பிக்கையும் வலுத்திருக்கிறது. தனது
முஸ்லிம் பெண்களின் லாகூர் மகா
முஸ்லிம் நாடுகளையும் முஸ்லிம் இன மக்கள் பிரதான சிறுபான்மையினராக உள்ள நாடுகளையும் சேர்ந்த பெண்கள் இவ்வருடம் பெப்ருவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை லாகூரில் ஒரு மகாநாட்டை நடத்தினர், இஸ்லாமிய சூழலில் பெண் விடுதலை பற்றி ஆராய்வதற்காக இம் மகாநாடு நடத்தப்பட்டது.
இம் மகாநாட்டில் மலேசியா முதல் அல்ஜீரியா வரையுள்ள பல்வேறு நாட்டு முஸ்லிம் பெண்களின் அனுபவங்கள் பற்றி கலத்துரையாடப்பட்டது. இஸ் வாழும் இஸ்லாமிய கலாசாரமும் ஒரு சிக்கலான யதார்த்தம் என்பது இக்கலந்துரையாடலின் பயணுகப் பெறப்பட்டது.
இஸ்லாம் சமய நடைமுறைகள் அவ்வச் சமூக யதார்த்தத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. உதாரண மாகச் சீதன வழக்கம், ஹிஜாப் முறை போன்றவை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வகையாகக் காணப் படுகிள்றன. இத்தகைய நடைமுறைகள் இஸ்லாத் திற்குச் சர்வதேச நடைமுறை ஒன்று உள்ளது என்ற கருத்தை மறுத்துரைக்கின்றன. இஸ்லாம் மதம் அது வழங்கும் நாடுகளின் வரலாற்று, சமூகவியல், சூழல்களுக்கு ஏற்பவே வரையறுக்கப்படுகிறது.
முஸ்லிம் நாடுகளில் பெண்கள் மீதான ஒடுக்கு முறை நான்கு அம்சங்களில் தங்கியுள்ளது என இம் மகாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. முதலாவது நேரடியான காலனித்துவ ஆட்சியாக அமையும் ஏகாதிபத்தியம். இரண்டாவது ஏகாதிபத்தியத்துடன் தொடர்புள்ள முதலாளித்துவம் ஏகாதிபத்தியமும் மதலாளித்துவமும் தமது நலன்களை முதன்மையாகக் கொண்டே பெண் விடுதலையை நோக்குகின்றன. தமக்கு இலாபமும் பயனும் அளிக்கக் கூடிய வகையி லேயே பெண்விடுதலை யை வரையறுக்கின்றன. மூன்ரு வது முஸ்லிம் நாடுகளில் தலை தூக்கிவரும் பழமைக்

2.
குடும்பத்திலிருந்து ஆரம்பித்து, சமூகத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் வரையில் மறு மாற் றம் விளைவிக்கும் சிறந்த நீண்ட யாத்திரை இது. நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் இந்தப் பயணத்தில் பங்கு கொண்டு வெற்றிகாண முடியும் என்பதே எனது துணிபு.
(இந்தியாவிலிருந்து வெளிவரும் "ஸ்த்ரீ" என்ற மராட்டி மாதப் பத்திரிகையில் அதன் ஆசிரியை எழுதியது)
நாடு
குத் திரும்புதல் என்னும் கோட்பாடாகும். இது முற் கூறிய ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகிய அம் சங்களுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையது. தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பழமைக்குத் திரும்புதல் என்னும் இக் கோட்பாடு செயற்படுகிறது. நான்காவது அம்சம் தந்தை வழிமுறையாகும். வரலாற்று, சமூக, அரசி யல் நிலைமைகள் வேறுபட்டிருப்பினும், இவ்வேறுபாடு களையும் கடந்து தந்தை வழி முறை எல்லா நாடு களிலும் சாத்தியமான சகல வடிவங்களிலும் செயற்படு கின்றது.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் ஒரு சமயமாகவும் அதே நேரம் கலாசாரமாகவும் உள்ளது எனவும் இஸ்லாமிய கலாசாரம் என்ற யதார்த்தத்தின் பின்னணியில் பெண் விடுதலையை நோக்கவேண்டும் எனவும் இம் மகாநாட்டில்முடிவு செய்யப்பட்டது. எனவே பெண்நிலைவாதிகளின் போராட்டங்களும் இந்த யதார்த்தத்தைக் கணக்கிலெடுத்தே வகுக்கப்பட வேண்டியவையாகும். பெண்நிலைவாதிகள் என்ற வ  ைகயி ல் தந்தை வழி மு  ைற யற் றதும் நீதி நிவவுவதும், எமது கலகசாரத்தில் வேர் கொண் டதும் எமது வாலாற்றுடன் தொடர்ச்சி கொண்டது மான சமூகத்தை அமைக்கவே நாம் போராடுகிருேம் என்று இம் மகாநாட்டில் பங்குபற்றியோர் ஒரே முக மாகக் கூறினர்.
இத்த மகாநாட்டின் பின்னர் லாகூரில் ஆண்களும் பெண்களும் பங்குற்றிய பொதுக் கூட்டமொன்றில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'அல்ஜீரியா, பங்காளதேஷ், கனடா, இந்த யா, ரியூனிசியா, மலேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பெண் களாகிய நாம், விவாகரத்துப் பெற்றதனுல் தமது

Page 24
22
பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்பட்ட பெண்களின் நி: குறித்து அக்கறை காட்டுமாறு சகல முஸ்லிம் நாட் அரசாங்கங்களையும் கோருகிருேம்.
இத்தகைய சமூகங்களில் தந்தை வழிச் சமூ முறைச் சட்டங்களால் ஆளப்படும் முஸ்லிம் பெண்கள் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து அவர்களிடம் தமக்குள்ள உரிமை மறுக்கப்ப கின்றனர்.
இந்நாடுகளின் அரசாங்கங்கள் முற்போக்கானது மனிதாபிமானத் தன்மை கொண்டவையுமான சட்ட களை அறிமுகப்படுத்தி பெண்களுக்கு இழைக்கப்படு பாரபட்சத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென நா கோருகிருேம்.
சமீபத்தில் இந்தியப் பாராளுமன்றத்தில் கிறி னல் சட்டக் கோர்வையின் 125 ஆவது பிரிவி இருந்து முஸ்லிம்களுக்கு விதி விலக்கு அளிக்கும் சட்
பெண்கள் சீதனத்தை எதிர்க்க (
சீதன வழக்கம் பெருங்கேடு தரும் முை கேடான வழக்கம் எனினும் இலங்கையில் இதற் இன்னும் பெரியளவில் எதிர்ப்புக் காட்டப்படவில்லை ஒரு மணப்பெண் எரிக்கப்படும் வரைக்கும் அல்ல ஒரு மருமகள் கொல்லப்படும் வரைக்கும் இதன் தீை களைப் பற்றி எவரும் ஆழ்ந்து சிந்திக்கமாட்டா என்றே தோன்றுகிறது. சிலர் இச் சீதன முை பெண்ணுக்குச் சாதகமானது என்பர். திருமணமான பெண் விதவையானுலோ கணவனுல் கைவிடப்ப டாலோ சீதனம் பொருளாதார பாதுகாப்பு அளிக்கு என்பர். ஆணுல் இன்றுள்ள நடைமுறையில் இ கருத்து பொருத்தமற்றது.
பெண்களைத் திருமணம் செய்வதற்காகக் கொடு கப்படும் விலையே சீதனமாகும். திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் அக் கணத்திலேயே பொருள தார உயர்ச்சியை ஒரு ஆண் - அவன் ஆணுயிருக்கு காரணத்தால் மாத்திரம் பெறுவதற்கு இச் சீத முறை இடமளிக்கிறது.
ஒரு பெண்ணுடைய இனத்தைப் பொறுத்து வர்க்கத்தைப் பொறுத்தும் சீதனத்தின் பாதிப் அமையும். இவ்வகையில் கீழ் மத்தியதர வர்க்க தைச் சேர்ந்த திருமணமாகாத தமிழ்ப் பெண் அ களவு பாதிப்பைப் பெறுகிருள். அவளுக்குச் சீதன

:
மூலம் கொண்டுவரப்பட்டது. இதனை நாம் வன்மை யாகக் கண்டிக்கிருேம், இச் சட்டமூலம் நிறைவேற் றப்பட்டால் இது விவாகரத்துப்பெறும் பெண்களின் தாபரிப்பு உரிமையை இல்லாமற் செய்துவிடும்.
இறைவனுக்கு முன்னுல் சகல மனிதருக்கும் சமத் துவமும் நியாயமும் வழங்கும் இஸ்லாத்தின் விதிக களுக்கு இச்சட்ட மூலம் முரணுனதாகும். பெண்களை நீதியாக நடத்துமாறு இஸ்லாம் சமயம் கோருகிறது. திருக்குர் ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 241 ஆம் செய்யுள் பின்வருமாறு கூறியுள்ளது. விவாகரத்துப் பெற்ற பெண்களுக்கு நியாயமான முறையில் தாபரிப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இது தருமவான்களின் கடமையாகும்.
எனவே இச்சட்டமூலத்தை நிராகரிக்குமாறு இந்தியப் பாராளுமன்றத்தை கோருகிருேம்.
வேண்டியது ஏன்?
:
கொடுப்பது பற்றிய கவலை ஒயாது அவள் பெற் ருேரை வருத்தும். இதனுல் அவள் பெற்ருேருக்குப் பெருஞ் சுமையாகிருள். சகல சமூகங்களிலும் பேசிச் செய்யப்படும் கலியாணங்களில் சீதனம் முக்கிய இடம் பெறுகிறது.
பெண்களாகிய நாம் இரு அடிப்படைக் காரணங் களுக்காக சீதனத்தை எதிர்க்கிருேம். முதலாவது திரு மணத்தில், பெண் ஒரு மனித ஜிவி என்ற வகையி லன்றி, அவளது பொருளாதார நிலையை முதன்மைப் படுத்துவது; இது அவளுக்குத் தாழ்ந்த அந்தஸ்தை வழங்குவதுடன், திருமண உறவில் அவள் சமமான பங்காளியாக அன்றி சீதனச் சொத்தின் ஒரு பகுதி யாக, பண்டமாகக் கருதப்பட வழி கோலுகிறது. இரண்டாவது - இச் சீதன முறை அதிக புதல்விய ருள்ள குடும்பங்களை ஏழ்மை நிலைக்குத் தள்ளுகிறது. இச் சுமை பற்றிய உணர்வு குடும்ப அங்கத்தவரின் பொருளாதார, சமூகரீதியான தீர்மானங்களை வழி நடத்துகிறது. சமூகத்தில் பெண்கள் பற்றிய, எதிர் மறையான கருத்துகள் உறுதிப்படவும் உதவுகிறது.
இலங்கையில் சீதனத்தைத் தடைசெய்யும் சட்டிங் களை இயற்றுமாறு வற்புறுத்துவதற்கு இது நல்ல நேரமாகும்.

Page 25
சொல்லாத சேதிகள்-நூல் அ
(பத்துப் பெண் கவிஞர்களின்
இருபத்தி நான்கு கவிதைகள் )
ஆண்களால் அடக்கப்பட்டும், கேவலமாக விலை பேசப்பட்டும், மோசமான நிலையில் பெண்கள் கண்ணி கில் வாழ்ந்ததும், வாழ்வதும் கீழைத் தேச நாடு களின் மிகப்பெரிய துரதிஷ்டம். சுதந்திரகாலச் சிந் தனகளுடன் பெண்ணின் அடிமை விலங்கை உடைத் தெறிய முற்பட்ட கருத்துகள் நாளடைவில காலா வதியாகப் போனது இந்திய நாட்டின் பெரிய சோகம், பெண் படிக்கவும், பட்டம் பெறவும், பதவி வகிக்கவும் அனுமதிக்கப்பட்டபோதும் அவளை அடி மைப் படுத்தும் ஆண் மேலாதிக்கம் மாறவேயில்லை. ஆணுக்கு வாழ்நாள் முழுவதும் உடலால் உழைத்தது போக, பொருளாய் உழைத்துபோடவேண்டிய துர திஷ்டத்திற்கும் அவள் ஆளாணுள். உலகம் முழுவதும் பல்வேறு விஷயங்களிலும் கணக்கற்ற நவீன சிந்தனை கள் பொங்கிப்பிரவாகித்தபோதும் பெண்ணைப் பற்றிய ஆணின் சிந்தனைப் போக்கும், அவளைப் போகப்பொரு ளாகக் கருதும் எண்ணமும் மாறவில்லை. காலம் காலமாகப் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி கனேச் சாதாரணமாக ஏற்றுவந்த பெண்கள் பலர் இவறு விழிப்பு ர்ச்சி பெற்று இவ்வடக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பதையும், போராட்டத்திற் குத் தயாராவதையும் நிதர்சனமாகக் காணமுடிகின் றது. அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தின் ஒரு வகை வெளிப்பாடே இக்கவிதைத் தொகுதி.
பத்துப் பெண் கவிஞர்களின் இருபத்து த f ன் கு க வி ைத களை உள் ள டக் கி ய சொல்லாத சேதிகள்’ என்ற தலைப்பில் அமைந்த இக் கையடக்கமான கவிதைத் தொகுதி பெண்நிலைவாத நோக்கு கூர்மையடைகின்றது என்பதைச் சொல்லா மற் சொல்கிறது. காலங் காலமாக ஆண்களால் அடிமைப்படுத்தப்பட்டும், தெய்வம் என்றும் கற்புக் கரசி என்றும் புகழும் மாயவலையில் சிக்கவைத்து மிசு மோசமாக ஏமாற்றப்பட்டும் வந்த பெண்மை விழித்தெழவும், அடக்குமுறையை எதிர்க்கவும், மாய வலையைக் கிழித்தெறியவும் தயாராகிவிட்டது என்ப தற்கு இக் கவிதைத் தொகுப் சிறந்த எடுத்துக்காட் டாகும் பெண்ணை அடக்கியாளும் ஆணின் மேலாதிக் கம் என்ற போலித் திரையைக் கிழித்தெறியும் ஆவேசம் இப் பெண் கவிஞர்களிடம் சீறி வந்துள் ளமை இக் கவிதைகளின் ஊடே வெளிப்படுகின்றது. கொடுமைக்கெதிராகப் பொங்கியெழும் தார்மீகக் கோபம் இத் தொகுப்பு முழுமையும் கலந்து செறிந்

றிமுகம்
சந்திரலேகா வாமதேவா
துள்ளது. அவர்களது உள்ளத்தில் கொந்தளிக்கும் ஆவேசம் வார்த்தைகளின் வீச்சில் புலனுகிறது. கோபத்தைக் கொட்டும் வார்த்தைகள் சிலவேளைகளில் நேரடியாகவும், சில வேளைகளில் கேலியைப் பூசிக் கொண்டும் வந்து அடுக்கடுக்காக விழுந்துள்ளன. முகப் புப் படத்தில் அடக்குமுறை என்ற முள்வேலியின் பின்னுல் ஆழ்ந்த சோகத்தைப் பூசிக்கொண்டிருக்கும் முகங்களுக்குப் பொருத்தமாக உள்ளே கவிதை களிலும் ஆவேசத்திற்கும் கோபத்திற்கும் அடிப்படை யில் மண்டிக்கிடக்கும் ஆழ்ந்த சோகம் இதனைப் படிப்பவர் நெஞ்சைத் தொடுகின்றது.
இப் பெண் கவிஞர்களின் அடிமளதைப் பாதித் துள்ள இரண்டு அட் க்குமுறைகள் இங்கு கண்டனத் துக்குள்ளாகியுளளன. ஒன்று ஆணின் அடக்குமுறை; மற்றது அரசியல் அடக்குமுறை. இவ்விரு அடக்குமுறை களும் அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை இங்கு கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளனர். அ. சங் கரியின் சொற்பிரயோகமும் அவற்றின் வீச்சும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் அவரைச் சிறந்த பெண் கவிஞராக இனம் காட்டுகின்றன. சி. சிவரமணியின் * எமது விடுதலை" இரண்டு போராட்டங்களையும் இணைத்து பெண் விடுதலையின் அவசியத்தை வற்புறுத்து கின்றது. அவர் தெரிவு செய்துள்ள சொற்கள் நெஞ் சைச் சுடுகின்றன. சன்மார்க்காவின் "ஒரு தாயின் புலம்பல்" விடுதலைப் போரில் மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் மனக் குமுறலை அழகுடன் வர்ணிக்கின் றது. ரங்காவின் "உண்மையிலும் உண்மையாக" ஒளவையின் "ஒரு தோழியின் குரல்". செல்வியின் "மீளாத பொழுதுகள்’, மகுரு ஏ. மஜிட்டின் "நீறு பூத்த தணல், பிரேமியின் "அன்றும் இன்றும்" ரேணுகா நவரட்ணத்தின் அந்தநாளை எண்ணி, மைத் திரேயியின் "பெண் இனமே", ஊர்வசியின் "எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும்" ஆகிய கவிதைகள் இப் பெண் கவிஞர்களின் கைதேர்ந்த கவித்துவத்தை யும் காட்டி நிற்கின்றன.
*சொல்லாத சேதிகள்" என்ற இக் கவிதைத் தொகுதி பத்துப் பெண் கவிஞர்களை இலக்கிய உல குக்கு இனங்காட்டி நிற்பதுடன், ஆண் மேலாதிக்கத் திற்குச் சவால் விடும் பத்து இளம் பெண்களையும் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துகின்றது என்று கூறுவதில் தவறில்லை.

Page 26
பெண்களுக்கான திரைப்
சமீப காலங்களில் உலசுெங்கிலும் வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் பெண்கள் இயக்கங்களினதும், பெண்நிலைவாத உணர்வினதும் விளைவாகப் பெண்களுக் கான கலை இலக்சியங்களின் தேவை பற்றிய உணர்வு Tau GunTés எழுந்துள்ளது. பெண்களது பிரச்சனைகளை வுகளையும், எண்ணங்களையும் யதார்த்தமாக வும் திரிவு படுத்தாமலும் பெண்களது நோக்கிலிருந்து காட்டுகின்ற கலே இலக்கியங்கள் ஆக்கப்படவேண்டு மென்பதைப் பெண்கள் இயக்கங்கள் உணர்ந்துள்ளன. மேற்கு நாடுகளில் இது தொடர்பாகப் பல தீவிர முயற்சிகளும் நடைபெற்றுள்ளன. பல பெண் எழுத் தாளர்கள் பெண்நிலைவாத நோக்கில் நாவல், சிறு கதை, கவிதைகளை எழுதியுள்ளனர். குறிப்பாகக் கடந்த பத்தாண்டுகளில் இவை முன்னெப்போதிலும் விட அதிகளவில் வெளிவந்துள்ளன. இத்தகைய இலக் இயங்களை வெளியிட பெண்களாலேயே அமைக்கப் பட்ட பிரசுர நிறுவனங்களும் தோன்றியுள்ளன. இத்தி யாவில் டெல்லியில் அமைந்துள்ள காளி, பங்களூரில் அமைந்துள்ள ஸ்திரிலேகா போன்ற பெண்களுக்கான பிரசுர நிறுவனங்கள் நாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கவை.
պւք, உணர்
ஆக்க இலக்கியங்களில் மாத்திரமல்லாது வெகு இனத் தொடர்புச் சாதனங்களான சினிமா, வீடி யோப் படங்கள் போன்றவற்றிலும் பெண்களுடைய ஈடுபாடு தற்போது அதிகரித்து வருகிறது. சினிமாப் படங்களையும் வீடியோப் படங்களையும் தயாரிப்பதில் பெண்கள் இயக்கங்கள் அக்கறை காட்டுகின்றன. அத்தகைய தொடர்புச் சாதனங்கள் மூலம் பரந்து LILL- பெண்களை அணுகுவதும் அவர்களுடன் தொடர்பு கொள்வதும் இலகுவானதாகும். இதனல் இத்துறையில் சிறிய அளவிலாயினும் தீவிர முயற்சிகள் இடம் பெறுகின்றன.
பெண்களது பிரச்சனைகளைக் கையாளும் பெண்க களால் ஆக்கப்படும் கலைவடிவங்களைப் பெண்கள் இயக் கங்கள் ஊக்குவிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று பெண்களது ஆக்கத் திறமையை ஊக்குவிப்

படம்
பது, இதுவரை காலமும் பெண்களது ஆக்கத் திறமை களுக்கோ படைப்புகளுக்கோ அதிக உந்துதல் அளிக் கப்படவில்லை. அவை வளர்த்தெடுக்கப்படவில்லை. பெரும்பாலானேரின் ஆர்வமும் ஆற்றலும் வளராமல் இடையிலே முடங்கிப் போவதுதான் வழக்கமான கதையாகும். விரல் விட்டு எண்ணக் கூடிய பெண் களே இலக்கிய கர்த்தாக்களாகவோ, கலைஞராகவோ வளர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் பெண்கள் தமது உணர்வுகளையும், எண்ணங்களையும், கருத்து களையும் இயல்பாக வெளியிடுவதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தனிப்பட்ட முயற்சிகள் வேண்டும்; இவை உணர்வுபூர்வமாகவும் தொடர்ச்சி யாகவும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் எனப் பெண் கள் இயக்கங்கள் உணர்ந்துள்ளன.
இரண்டாவது - இன்றுள்ள தந்தை வழி வர்க்க சமூகத்தில் பெண் பற்றிய நோக்கு திரிபு பட்டதா கவே உள்ளது. ஆணுதிக்க மனுேபாவமும், தந்தை வழிச் சமூக அமைப்பின் மதிப்பீடுகளும் கலை, இலக் கியங்களையும் பாதித்துள்ளன. இதனுல் இன்று பெண் 63g)/66)L.—41 யதார்த்த நிலை கலை இலக்கியங்களில் காட் டப்படுவதில்லை. பெண் பாலியற் பண்டமாகவும் சந்ததி உற்பத்திச் சாதனமாகவுமே நோக்கப்படுகிருள். பெண்களுடைய மாறிவரும் சமூக யதார்த்தமோ, பெண்களது போராட்டங்களோ, பெண்களது உழைப் புத் திறன்களோ இவற்றில் பேசப்படுவதில்லை. எனவே கலைவடிவங்களை பெண் என்ற உணர்வுடன் "பெண்கள் கையாளும்போது அங்கு பெண்களது உண்மையான சித்திரம் தீட்டப்பட அதிக சாத்தியமுண்டு.
ஆணுதிக்கம் நிலவும் சமூகத்தில் ஆண்கள் பெண் களை நோக்குவதற்கும், பெண்கள் பெண்களையும் அவர் களது பிரச்சனைகளையும் நோக்குவதற்குமிடையே வேறு பாடு உண்டு. உதாரணமாகச் சினிமாவில் ஆண்படப் பிடிப்பாளர் தனது நோக்கிலேயே, தனது கோணத்தி லேயே பெண்களைக் காண்கிருர், 'இவை அவலட் சணமான கோணங்கள்" என்று ஒரு பெண் படப் பிடிப்பாளர் குறிப்பிட்டார்.

Page 27
சினிமாவின் தொழினுட்பத்ற்ைப் பெண்கள் கற்க வேண்டும்; அக்கலை வடிவத்தை அவர்கள் கையாள வேண்டும்; இவை மூலம் பெண்களது செய்திகள் உல கிற்குத தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத் தின் வெளிப்பாட்டை சென்றவருடம் கைரோபியில் நடந்த பெண்கள் மகாநாட்டில் காணமுடிந்தது. சர்வதேசப் பெண்கள் பத்தாண்டின் நிறைவைக் குறிக்குமுகமாக நைரோபி நகரில் நடைபெற்ற மகா நாட்டில் பெண்களால் ஆக்கப்பட்ட பெண்கள் பற்றிய சினிமாப்படங்கள் திரையிடப்பட்டன.
35 மி. மீற்றர் திரைப்படங்கள், 15 மி. மீற்றர் திரைப்படங்கள், வீடியோ படங்கள் ஆகிய வகைகளில் இவை அமைந்திருந்தன. லெபனன், கெளதமாலா, பெரு, ஆசனகல், எகிப்து, இலங்கை, இந்தியா போன்ற மூன்ரும் உலகநாடுகளைச் சேர்ந்த படங் களும், ஜேர்மனி, கனடா, போன்ற நாடுசளேச் சேர்ந்த படங்களும் திரையிடப்பட்டன. மூன்ரும் உலக நாடு களின் தேசிய விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பங்குபற்றுவது பற்றியும், பெண்கள் மீதான ஒடுக்கு முறை, போராட்டங்கள், அவர்கள் தம்மை ஸ்தாப னங்களாக அமைத்துக் கொள்வதில் ஏற்படும் சிக்கல் கள் போன்றவை பற்றியும் எடுத்துக் கூறின.
பல குறுந் திரைப்படங்கள் விவரணப் படங் களாக அமைந்தன. அத்துடன் இவை பெண்களது நாளாந்த வாழ்க்கை, அவர்களது வேலைப்பளு ஆகிய வற்றை எடுத்துக் காட்டுவனவாகவும் அமைந்திருந்தன. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பெண்களது வாழ்க் கைக்கிடையே காணப்படும் ஒற்றுமையான அ. சங் களையும் அனுபவங்களையும், இப்படங்கள் ஆச்சரியப் படத் தக்க விதத்தில் வெளிக்காட்டின. நெல் குற்றுதல். மா இடித்தல், விறகு சேகரித்தல் தண்ணீர் அள்ளுதல், குழந்தைகளைப் பாாமரித்தல், சமைத்தல், நச்சரிக்கும் கணவனைச் சமாளித்தல் போன்ற முதுகெலும்பை முறிக்கும் பல்வேறு வேலைகளையும் இவை படம் பிடித்திருந்தன.
இலங்கையைச் சேர்ந்த இரு வீடியோப் படங் களும் இங்கு திரையிடப்பட்டன. இவற்றில் முக்கிய மான ஒன்று சென்ற வருடம் இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையத்தால் தயாரிச்கப்பட்டது. இயன் லால் என்ற முஸ்லிம் பெண்மணி இதனை இயக்கியிருந்தார். கணவனல் கைவிடப்பட்ட குழந்தைகளையுடைய நான்கு பண்களின் வாழ்க்கையையும் அவர்களது வாழ்க்கை நோக்கையும் இது விவரணப் பாணியில் சித்தரிப்பது, நேரடியான பேட்டி முறையில் அமைந் தது. நான்கு பெண்களும் இலங்கையிள் வெவ்வேறு இனங்களைச் சார்ந்தோர். முஸ்லிம், தமிழ், சிங்கள. பெளத்த, சிங்களக் கத்தோலிக்கப் பெண்கள்.
முஸ்லிம் பெண் வீட்டுப் பணிப்பெண்ணுக மத்திய கிழக்கிற்குச் சென்றவள்; திருமணமானவள், இரு பிள்ளைகளின் தாய்: பணிப்பெண்ணுக வேலை செய்யும் போது இன்னெரு குழந்தைக்குத் தாயாகிருள். பின் ೧೯ಕ್ಕೆ குழந்தையை அங்குவிட்டு இலங்கை திரும்பி

25
மீண்டும் வறுமையில் உழல்கிருள். தமிழ்ப் பெண் கணவனல் கைவிடப்பட்டவள். அவன் அவளுக்குத் தாபரிப்புப் பணம் கட்ட வேண்டும். ஆனல் அவ்வாறு செய்வதில்லை. தனியே வாழ்ங்கையில் போராடுகிருள். சிங்களப் பெண்களும் அவ்வாறே. இவர்களது கதை கூறப்பட்டபின் இலங்கையின் பிரபலமான ஆண், பெண் வழக்கறிஞர்கள், பிரமுகர்கள் ஆகியோரிடம் இப் பெண்களைப்பற்றிய கருத்துக்களைக் கேட்பதாய்ப் படம் நகர்கிறது. -
இந்த நான்கு பெண்களும், அவர்களது குழந்தை களின் தந்தையர் தமது பொறுப்புகளைக் கைவிட்டுச் சென்றமை பற்றியும் குழந்தைகளைப் பற்றி எத்தகைய அக்கறை காட்டாமல் விலகியது பற்றியும் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றனர். இந்த யதார்த்தம், எம் மைத் திகைக்கவைக்கிறது. இதனைப் பார்த்தபின்னர் "குடும்பத்தின் புனிதம்' பற்றியும், ஆணைக் குடும்பத் தின் காவலனுகக் கொள்வது பற்றியும் சந்தேகம் எவ ருக்கும் எழவே செய்யும்.
இப் பெண்களைப் பற்றி இப்படத்தில் ஆண்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பொதுவான ஆணுலக நோக்கைக் காட்டுவன. ஒருவர் கூறுகிறர். "பல பெண்களைச் சேருதல் ஆண்கள்து இயற்கையாகும். ஆனல் பெண் கற்புள்ளவளாய் இருக்கவேண்டும்." இன்னெருவர் 'கணவன் அவளைக் கைவிடுவதற்கு அவள் ஏதோ பிழை விட்டிருக்க வேண்டும்” :ன்கிறர். இந்தப் பெண்கள் பொதுவான நடைமுறிை யிலிருந்து விலகிய சிறுபான்மையினர் என்றே இந்த ஆண்கள் கூறி அமைதியடைகின்றளர்.
ஆல்ை இந்தப் பெண்களது வாழ்க்கையும், அவர் களுக்கு வாழ்க்கை மேலுள்ள பிடிப்பும் இதுவரை கால மும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக ஒழுங்கிற்கும், ஒழுக்க நோக்கிற்கும் சவாலாக அமைகின்றன. இவை இதயமற்ற, இருமுகங்கள் உள்ள, அதிகாரத்தன்மை கொண்ட சமூகத்தை நோக்கி வெளிப்படையான, உக்கிரமமான விஞக்களை எறிகின்றன. குழந்தைகள் நாட்டில் செல்வங்கள் என எமது நாட்டுப் பிரமுகர் களும் அரசியல்வாதிகளும் கூறி வருகின்றனர். ஆனல் எமது நாட்டுச் சட்டமோ திருமண உறவில் பிறந்த குழந்தைகளுக்கும் அவ்வாறு பிறவாத குழந்தைகளுக் கும் இடையே பெரிய வேதுபாடு காட்டுகிறது. அவர் கள் சட்ட பூர்வமற்ற குழந்தைகள் என்கிறது. படத் தின் தலைப்பும் இதுதான். இவ் வகையில் இப்படம் குடும்பவாழ்க்கை, ஆண் பெண் உறவு, தந்தைமை ஆகி யவை பற்றி நிலவும் ஐதீகங்களை ஈவிரக்கவின்றி அலசுகிறது.
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிய பெண்நிலை நோக்கிற்கு இப்படம் ஒரு சிறந்த உதார ணம். சமீப காலங்களில் இலங்கையில் பெண்ணிலை நோக்குடைய கலை இலக்கியப் படைப்புகள் தமிழ், சிங்கள மொழிகளில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவற்றில் முக்கிய ஒரு படைப்பாக இவ் வீடியோ படம் விளங்குகின்றது.

Page 28
மாறும் சமூகங்களில் பெ
நவால் எல் சாடவி எகிப்து நாட்டைச் சேர்ந்த எழுத் தாளர். இவர் ஒரு மருத்துவரும்கூட. பெண்நிலைவாதி யான இவரது ஆறு நாவல்களுt ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் பெண்கள் பற்றியே பேசுவன. இவை தவிர ஏவாளின் மறைக்கப்பட்ட முகம் - அரபு உல s' Gussorssir (Hidden Face of the Eve- Women in the Arab World) 6Tsiro br2s)ub 6TQg5uisit ளார். மாறும் சமூகங்களில் பெண் கலைஞர்கள் என்ற அவரது கட்டுரையொன்றன் சுருக்கத்தினை இங்கு தருகிறேம். பெண்நிலைவாதிகளாயும் கலே ஞர்களாயும் எம்மிடையே வளரும் மெண்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில். விஞ்ஞானம்-கலை, அறிவு-உணர்ச்சி, மூளை உடல் ஆகியவற்றுக்கிடையே எழுந்தமானமாகக் கற்பிக்கப் பட்ட பிரிவினையால் மனித சமூகம் இன்றும்கூட பாதிக் கப்பட்டே உள்ளது. குறிப்பாகப் பெண்கள் பல்வேறு காரணங்களால் இந்த இருமை நிலைக்கு இரையாகி யுள்ளனர். சமயம் கூட இதற்கு உடந்தையாக உள் ளது. ஏவாள் உடலின் குறியீடாகவும் ஆதாம் மூளையின் குறியீடாகவும் கொள்ளப் படுதல் இதற்கு ஒரு உதாரணமாகும்.
மனித ஜீவியை மூளை எனவும் உடல் எனவும். உணர்ச்சி எனவும், அறிவு எனவும் பிளவுபடுத்தும் கருத்து இயற்கையுடன் முரண் பட்டது என்பதையும், அதிகாரம், சட்டம், ஆயுதம் ஆகியவற்றின் வலிமை யால் சமூகத்தில் திணக்கப்பட்ட து என்பதையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் கருத்துக்களையும் மீறும் உரம் கொண்ட பெண் கலைஞர்கள் இலகுவில் புரிந்து கொள்கிருர்கள். இதுவே விஞ்ஞானம் மூளையால் உற் பத்தி செய்யப்பட்டது; கலை உணர்ச்சியால் உருவா வது என்ற கருத்தையும் தோற்றுவித்தது என்பதை யும் இவர்கள் விளங்கிக் கொள்கின்றனர், ஆணுே பெண்ணுே ஆக்கத் திறனுள்ள கலைஞர்கள் இத்தகைய செயற்கையான பிளவுகளையும், மனித வாழ்க்கையை வெவ்வேறு துண்டங்களாக்கும் சுவர்களையும் கடந்து விடுகின்றனர். அவர்கள் மனித ஜீவியை - உடல் மூளை, உணர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட முழுமையைஆக்குவதற்கு அத்தியாவசியமான ஒருமையை மீள உருவாக்கின்றனர்.
எல்னைப் பொறுத்தவரை எனது இலக்கிய முயற்சி களுக்கும் மருத்துவத் தொழிலுக்கும் இடையே எந்த

ண் கலைஞர்கள்
நவால் எல் சாடவி
அடிப்படையான முரண்பாட்டையும் நான்காணவில்லை. உண்மையில் அவை ஒன்றுக்கொன்று வளம் சேர்ந் துள்ளன. மருத்துவ விஞ்ஞான அறிவு, கிராமப்பகுதி களில் எனது பணி, ஆண். பெண் நோயாளர்களுட னை உறவு ஆகியவை எனது எழுத்துக்கு ஆழமான வளமான அனுபவ அடிப்படைகளை அளித்தன. நான் வாழும் சமூக யதார்த்தத்தை உணர்த்தின. இதே போல எழுத்தில் நான் கொண்ட அபிமானமும் கலை களில் உள்ள விருப்பும் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதும் மனிதரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவின; இவை எனது மருத்துவத் தொழிலில் உதவி யதுடன் எனது தொழிலின் குறைபாடுகளையும் சமூகத் தினதும் மக்களதும் அடிப்படைப் பிரச்கனைகளுடன் இத் தொழில் ஈடுகொடுக்க முடியாமல் இருந்தமை யையும் உணர்வதற்கு லழி சமைத்தன.
மருத்துவம், உண்மைகளையும், அறிவையும், வாழ்க்கையனுபவங்களையும் நான் பெறுவதற்கு உதவி யது. கலையானது எனக்குத் தூரநோக்கையும் தெளி வையும் நீதியிலும் சுதந்திரத்திலும் விருப்பையும் அளித்ததுடன் மனிதரது ஒடுக்கு முறைக்கு எதிராக வெறுப்பையும் கூட்டியது. எவ்வாருயினும் ஒரே சமயத் தில் மருத்துவத்திலும் கலையிலும் ஈடுபட்டமை சில சமயம் கஷ்டத்தை அளித்தாலும் தொடர்ந்து நான் அவ்வாறு ஈடுபட்டமையால் கலை-விஞ்ஞானம், மூளை. உடல், ஆண்-பெண், மளிதர்-கடவுள் ஆகியவற்றின் இணேப்பை மூலாதாரமாகக் கொண்ட புதிய கருத்துக்களையும் உணர்வுகளையும் கண் டு பி டி க்க முடிந்தது. V
ஆக்கத்திறனுள்ள படைப்பாளியான ஒரு பெண் தவிர்க்கமுடியாதபடி அதிகாரத்திற்கும் தனக்கும், சமூ கத்தில் மேலாதிக்சம் வகிக்கும் அமைப்புக்கும் தனக்கும் இடையில் ஏற்படும் முரண்பாட்டிற்கு முகங் கொடுக் 8 வேண்டியவளாகிருள். பெண்ணின் நடவடிக்கைகளைப் பொறுத்து இம் முரண்பாட்டின் தீவிரம் அமையும். அவளுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதங்களும் அணுகு முறைகளும் அவள் வாழும் சமூகத்தின் வகைக் கும் சமூகச் சூழலுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன. அவ ளது போராட்டம் தோல்வி அடைவது தான் அதிகமாக நடப்பதாகும். பல காரணிகள் இத் தோல்வியை ஏற் படுத்துகின்றன, இவற்றுள் முக்கியமானவை ஒடுக்கு முறைக் கருவிகளான பொலிஸ், தணிக்கை. செய்திப் பத்திரிகைகள், தொடர்புசாதனங்கள். ஆகியவையும் சமய கலாசார நிறுவனங்களுமாகும்.

Page 29
எனவே சமூக அமைப்புக்கு எதிராகக் கலகம் செய் யும் எந்தத் தனி மனிதரையும் - அவர்கள் மக்களது அரசியல் ஸ்தாபனங்களையும், வலிமையுடன் செயற் படக் கூடிய அமைப்புகளையும் கட்டுவதில் வெற்றி யடைந்தாலன்றி - அழித்துவிம்ே சக்தி சமூகத்திற்கு உண்டு. சுதந்திரம் பேச்சளவிலே காணப்படுகின்ற, ஒரு தனிநபரே நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக் கின்ற, மாற்று அபிப்பிராயத்திற்கு இடமற்ற நாட் டில் இத்தகைய ஸ்தாபனங்களைக் கட்டுதல் கடின மானது. இத்தகைய சூழலிற் தான் கலைஞர்கள். குறிப் பாக ஆக்கத்திறனுள்ள பெண்கள் தாம் தனிமைப்பட்டு விட்டதாகவும், தமது வாழ்வின் ஒல்வொரு கண் மும் அபாயத்தால் சூழப்பட்டதாகவும் உணருகின்றனர்.
எனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்கள்லும் இத்தகைய எதிர்ச் சக்திகளால் சூழப்பட்ட உணர்வு எனக்கு இருந்தது. எனக்கும் இந்த எதிர்ச் சக்திகளுக் கும் இடையே இந்த போராட்டம் நீண்டகாலமாக நடந்தது. காலப்போக்கில் நான் முதிர்ச்சி அடைந்தேன். எனக்கும் சமூக அமைப்புக்கும் இடையிலான போராட் டம் தொடர்ந்து மெளனமானதாகவோ மறைவான தாகவோ இருக்கவில்லை. அது வெளிப்படையான பிர கடனப்படுத்தப்பட்ட போராக மாறியது, அலட்சியம், நையாண்டி, அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு நான் உள்ளா னேன். இவற்ருல் 1972-78 வரை எனக்கு வேலை மறுக் கப்பட்டது. எனது எழுத்துக்கள் மீது கடுந் தணிக்கை அமுல் செய்யப்பட்டது. இதனுல் எனது நூல்களை எகிப் துக்கு வெளியே பிரசுரிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்
ill-gilo
பெண்களது ஆக்கரீதியிலான ஆற்றல்களுக்கோ அவர்களது சுயசிந்தனைக்கோ இடமளிப்பதற்கு சமூகம் இன்னும் பழக்கப்படவில்லை. இதனுல் இத்தகைய ஆற்றல்களுள்ள பெண் சக ஆண்களைக் காட்டிலும் அதிக உழைப்பிலும் முயற்சியிலும் ஈடுபட்டே தனக் கான அங்கீகாரத்தைப் பெறவேண்டியுள்ளது .
பல சமூகங்களிலும் குறிப்பிட்ட சில விடயங்கள் விவாதத்திற்கு அம்லது ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட வையாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் மதமும் பாலியல் விடயங்களும் முக்கியமானவை. ஒரு பெண் இவற்றைப் பற்றி விமர்சன ரீதியாகக் கதைக்கும்போது அல்லது தனது எழுத்துக்களிற் கையாளும் போது அவை அபாயகரமான பரிமா த்தைப் பெற நுவிடு கின்றன. அத் த டன் சமூக அமைப்புக்கு அபாயம் விளைவிக்கக் கூடியவை எனக் கருதி சில வகையான போராட்ட வடிலங்களை அங்கீகரிக்கவோ, அவற்றில் அக்கறை காட்டவோ ஆளும் வர்க்கம் மறுக்கிறது. வர்க்கப் போராட்டம் இதில் ஒன்ருகும். ஆனல் மதம், பாலியல், வர்க்சப் போராட்டம் ஆகிய மூன்று விட யங்களையும் தவிர்த்து விட்டு சுய சிந்தனையுள்ள ஒரு ஆ3ணு பெண்ணுே பெறுமதிமிக்க இலக்கியங்களைப் படைத்துவிடமுடியாது. ஆனல் இவ்விடயங்களைத் தொடத்துணியும் ஒரு பெண் இவற்றைக் கையாளும் ஒரு ஆணை விட அதிகளவு அபாயத்துக்கு உள்ளாகி (ாள். இதற்குக் காரணம் எமது சமூகத்தில் ஒழுக்கம் தொடர்பாகக் காணப்படும் இரட்டை அளவீடுகளாகும். ஒரு ஆண் பொதுவாக பாலியல், ஒழுக்கம், சமூக நடத்தை ஆகியவற்றில் அதிக சுதந்திரம் உடையவ

27
ணுக உள்ளான். ஆனல் பெண்ணுக்குக் கட்டுப்பாடு பாடுகளே அதிகம். பெண்ணுய் இருக்கின்ற ஒரேயொரு காரணத்தால் அவள் அதிக கட்டுப்பாடுகளுக்கும் சிக் கல்களுக்கும் உள்ளாவதுடன் சிந்தனையிலும் செயலி லும் சுதந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள அதிக விலை கொடுக்கவேண்டியுள்ளது.
ஒரு பெண் தனது காதல், பாலியல், தாய்மைத் தேவைகளை திருமணம் என்ற வரம்புக்குள்ளேயே பூர்த்தி செய்ய வேண்டிய நிலைமை இன்னும் உள்ளது: ஆணை அவனது மனைவியின் உடலின் காப்பாளனுகக் கொள்ளும் சட்டங்களாலும் பாரம்பரியங்களாலும் ஆளப்படும் திருமணமுறை நிலவும் அரபு நாடுகளில் இது ஒரு குறிப்பான அம்சமாகும். இத்தகைய சமூ கங்களில் ஆக்கத்திறனும் சுயசிந்தனையும் கொண்ட ஒரு பெண், அவளது காதல், தாய்மைத் தேவைகட் கும் ஆணின் ஆதிக்கத்தையும், பாரம்பரிய திருமண முறையின் இறுக்கமான வடிவத்தையும் ஏற்க மறுக்கும் உணர்வுக்குமிடையில் எழும் தவிர்க்கமுடியாத தொடர் முரண்பாடுகளின் மத்தியிலேயே வாழ்கிருள். அத்துடன் குடும்பம், கணவன், குழந்தைகள் பால் தாய், மனைவி ஆகிய பாத்திரங்களுச்குள்ள கடமை புனிதமானது என எமது சமூகம் கருதுகிறது. பெண்ணுடைய ஏனைய வேலைகள் யாவும் இரண்டாம் பட்சமானவையே சமூக மனுேபாவம் இதுதான்.
எனது வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களிலும், எனது தனிமையை வெல்லுவதற்காகவும் அதிகாரத் துடன் போராடுவதற்கான பலத்தைப் பெற்றுக் கொள் வதற்காகவும் சக பெண்களுடன் கூடி உழைப்பது பற்றிய தேவையை உணர்ந்தேன். சிறிய குடும்பத்திலும் கூட நான் எனது சகோநரிகளுடன் கூட்டாக முயற்சி செய்வதுண்டு. அப்போதுதான் நாம் அதிக உரிமை களைப் பெறமுடியும் என்பதால், பாடசாலையிலும் பல் கலைக்கழகத்திலும் இதே முறையைக் கடைப்பிடிக்கவே முயன்றேன். இதனலேயே ஒரு சந்தர்ப்பத்தில் எகிப் தியப் பெண் எழுத்தாளர் சங்கம் ஒன்றை நிறுவி அதனை சமூக சேவைகள் அமைச்சில் பதிவு செய்யவும் முயன்றேன். இச்சங்கம் சிலகாலம் உற்சாகமாக வேலை செய்தது. எனினும் இலக்கிய இயக்கத்தில் செல்வாக் குள்ளோரால் மெல்ல அமுச்கப்பட்டது. இதுபோலவே மருத்துவச் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வேலைசெய்யும் சக பெண் வைத்தியர்களை ஒன்றிணைச்க முயன்றேன். ஆனல் மருத்துவத்துறையில் அதிகாரத்திலுள்ளவர் களால் இதற்கு முட்டுக்கட்டையிடப்பட்டது. இக் காலத்திலேயே சுகாதார அமைச்சில் நான் செய்துவந்த வேலையையும் இழந்தேன்.
இன்று நிலவுகின்ற சமூக மு ை'மை குறைந்த அள வான பெண்ககளே தமது தொழிலில் வெற்றி பெறு வதற்கு இடமளிக்கின்றது. இன்னும் குறைந்த அள வான பெண்களே கலைகளிலும் ஆக்க புயற்சிகளிலும் ஈடுபட இடமளிக்கின்றது. மருத்துவத் தொழில் எழுத்துத்துறையைவிட மரபிறுக்க வாய்ந்தது. பெண் மருத்துவர்கள் பெண் எழுத்தாளர்களை விட அதிகம் மரபு பேணுவோராகவும் குறைந்த ஆக்கத்திறனுடை யோராகவும் இருப்பதை நான் அவதானித்துள்ளேன்.

Page 30
28
ஆக்கத்திறனுள்ள ஆணுே பெண்ணுே தாம் செய்யும் தொழிலின் தன்மைகளை மாற்ற முடியும். பெரும்பா லோரின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் அல்லது இம்மாற்றத்தை இலக்காகக் கொண்டு மற்றவர்களை ஒன்று திரட்டுவதன் மூலம் இம்மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆனல் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் பெண்கள் இன்று நடைமுறையில் உள்ள ஒழுக்கவியலை யும். மனுேபாவங்களையும் மாற்றமுடியாது. சில வேளை களில் அவற்றைப் பேணவே அவர்கள் உதவுகின்றனர். எனினும் பெண்கள் தொழிற் துறைகளில் அதிகம் ஈடுபடுவதால் - அவர்கள் முகத்திரை அணியும் பெண் களாக இருந்தாலும் கூட அலுவலகங்களில் புதிய ஒரு சூழல் ஏற்படுகிறது. பெண்கள் புதிய சமூக உறவு களைப் பெறுகின்றனர். இதனல் புதிய ஒழுக்க மரபு களும் மனுேபாவங்களும் உருவாகலாம்.
ஆக்கத்திறமையுள்ள ஒரு பெண் பலரது பொரு மைக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்ருள். ஆண்களை விடப் பெண்களே அதிகளவு பொருமை கொள்வதாய்த் தோன்றும். ஆனல் ஆண்களே தீவிரமான வெறுப்பை யும் ஆழமான பொருமையையும் கொண்டிருப்பதை நான் உணர்ந்துள்ளேன். ஆனல் அவர்கள் தமது உணர் வுகளை மறைக்கும் திறன் வாய்ந்தவர்கள். அவர்கள் ஆண்களாகவும் தந்தையராகவும் இருப்பதால் தந்தை வழிச் சமூக முறையின்பால் அதிகளவு அனுதாபமுடை யோராக உள்ளனர். ஆக்கத்திறனுள்ள ஒரு பெண், ஆணுக்கு என்றும் அச்சமூட்டுபவளாகவே இருப்பாள். அவன் ஒரு ஆணுக இருப்பதால் இந்நிலை ஏற்பட வில்லை. ஆணை இவ்வகை ஆணுக இருக்க இடமளிக்கும் சமூக முறைக்குப் பெண் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்நிலை ஏற்பட்டது. (இங்கு ஆண் என்ற சொல் போட்டி, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு ஆகிய ஆண்மைக் குணங்களையே குறிக்கிறது)
இன்றைய சமூகத்தில் பெண்ணுக்குள்ள பிரச்சனை களும் கஷ்டங்களும் ஒரு வர்க்கம் இன்னேர் வர்ச் கத்தை ஆட்சி செய்கின்ற வரலாற்று வளர்ச்சிகளால் ஏற்பட்டவையாகும். ஆக்கத்திறனுள்ள பெண்கள் பாராட்டையோ ஏற்புடைமையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த விளக்கம் பெண்ணை எதற்கும் தயா ராக்கி எதிரிகளுக்கு முகங் கொடுக்கவும், வெற்றி பெற வும் உதவுகிறது. எந்த ஒரு மனித உயிருச்கும் வெற்றி ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவம் என்ருலும் தோல்வி வியும் கூட பயனுள்ள அனுபவமாகவே அமையும் தோல்வியை அனுபவமாக்கி தைரியத்துடனும் நம்பி கையுடனும் முன்னேக்கி நடத்தல் வேண்டும்.
மனிதரது சுதந்திாம் அவர்களது அத்தியாவசிய மான பொருளாதாரத் தேவைகளால் எல்லைப்படுத்த! பட்டுள்ளது. ஆளும் வர்க்கங்கள் ஆக்கத் திறனுள்ளி பெண்களின் பொருளாதாரத் தேவைகளைத் தடுத்து அவர்களை அச்சுறுத்த முடியும். இதனல் இத்தகை பெண்சள் தமது பொருளாதாரத் தேவைகளை அத்! யாவசியத் தேவைகள் என்ற அளவில் குறுக்கிக்கொள்ள

நேரிடும். இதனுல் அவர்களது பொருளாதார சுதந்தி ரம் அதிகரிக்கும். இதே போல அவர்கள். தமது சமூக உளவியல் தேவைகளிலும் சுதந்திரமாக இருக்கப் பழக வேண்டும். இது எத்தகைய நிலைமைகளிலும் தனியே, சுதந்திரமாக, வாழ்வதற்கு உதவும்.
மக்களது இதயத்தை ஊடுருவி அவர்களிற் பாதிப்பை ஏற்படுத்த முடியுமாயிருப்பதே சுய சிந்தனை யும் ஆக்கத் திறனுழுள்ள ஒரு பெண்கலைஞரின் அடிப் படைப் பலமாகும். அவள் உண்மையிலேயே மக்களது வாழ்க்கையை வாழும் போதும் அவர்களது துன்பங் களையும் கஷ்டங்களையும், இலட்சியங்களையும் பகிர்ந்து கொள்ளும்போதுமே அவளது திறமை செயல் வடிவம் பெறுகிறது. தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் ஒருங்கமைக்கப்பட்ட கூட்டுச் செயற்பாடே இத்தகைய பெண்களுக்கு உண்மையில் ஆதரவாக அமையும். இத் தகைய ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்புகள் உள்நாட் டிலும் வெளிநாட்டிலும் அதிகளவு எண்ணிக்கையி லான பெண்களிடையே தொடர்பு கொள்வதற்குரிய சாதனங்களுமாகும்.
உண்மையான நெருக்கமான நட்போ அன்போ இன்றி ஆக்கத்திறனுள்ள எந்த மனிதனும் வாழமுடி யாது. ஆக்கச் செயல்களில் ஈடுபடுவதன் மூலமே இத்தகைய உறவுகளை உருவாக்க முடியும். தனது வாழ்நாளில் இத்தகைய உறவுகளைப் பெறும் பெண் அதிர்ஷ்டமுடையவள். இத்தகைய உறவுக்குரியவர்கள் மிகச் சிலர்தான். ஆனல் முன்னேற்றம், புரட்சி, சுதந் திரம் ஆகியவற்றிள் பாதையில் நாம் முன்செல்கை யில் இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தகைய ஆணையோ பெண்ணையோ சந்திக்கும்போது எனக்கு அளவிலா மகிழ்ச்கி உண்டாகும்.
இன்று நிலவுகின்ற சமூக அமைப்பில் தனது ஆற்றல் களைப் பாதுகாத்து வளர்ப்பது ஆக்கத் திறனுள்ள ஒரு பெண்ணுக்கு மிகவும் சிரமமான காரியம் என்ப தில் சந்தேகமில்லை. இதற்காக அவள் தனது தனிப் பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் அதிகவிலை கொடுக்கவேண்டியுள்ளது. அவள் விவாகரத்து பெற வேண்டி எற்படலாம். (நான் இருதடவைகள் விவாக ரத்துப் பெற்றேன் ) அல்லது வேலையிலிருந்து நீக்கப் படலாம் ( எனக்கு ஒரு தடவைக்கு மேல் அவ்வாறு நிகழ்ந்தது, அவளது கெளரவத்திற்கும், பொருளா தார, உள உடல் நலன்களுக்கும் அச்சுறுத்தல் அளிக்கும் மோசமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற் படலாம். (சில சமயங்களில் நான் தனி நபர்களது அல்
லது நிறுவனங்களது வன்முறைகளுக்கும் கொலை அச்
சுறுத்தல்களுக்கும் உள்ளானேன்) ஆழமாக வேருன்றி யிருக்கும் மதிப்பீடுகளையும் பலம் வாய்ந்த சாதனங் களையுங் கொண்ட நிலை நிறுத்தப்பட்ட சத்திகளுக்கு எதிராகவே தான் போராடுகிறேன் என்பதை ஆக்கத் திறன் வாய்ந்த பெண் உணரவேண்டும். இப்போராட் டத்தில் அவள் தனது பலமெல்லாவற்றையும் ஒருங்கு திரட்டுவதுடன் தனக்கு ஆதரவளிக்கக்கூடிய சக்தி களுடன் ஒன்றிணையவும் வேண்டும்.

Page 31
உள்ளே
0 எமது கருத்து
O இலங்கையில் பெண்நிலைவாதம் !
கடந்த பத்தாண்டுகள் 3.
O இன்னும் பலருளர் எம்மைப் போல O
0 எங்கள் சமூகமும் பெண்களும் 11
0 நிஜங்கள் 16
0 நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் 18
0 முஸ்லிம் பெண்களின் லாகூர் மகாநாடு 21
0 சொல்லாத சேதிகள் 23
- நூல் விமர்சனம்
0 பெண்களுக்கான திரைப்படம் 24
0 மாறும் சமூகங்களில்
பெண் கஃவஞர்கள் 26
நன்றி
அட்டை மூல ஒவியம் - விமோசரு பெண்கள் : பெண்ணின் குரலுக்கென அமைத்தவர் - நிரல் அச்சு - கத்தோலிக்க அச்சகம், 360 பிரதான

ரின் குரல்
1986
Prb- 7/- -
பெண்ணின் குரல் அமைப்பு
ஆங்கிலத்தில் Woice of Women தமிழில் பெண்ணின் குரல் சிங்காத்தில் காந்தா ஹண்ட ஆகிய சஞ்சிகைகளே வெளியிடுகிறது.
பெண்ணின் குரல்
Woice of Women
ஆகியவற்றின் முன்னேய இதழ்களின்
ஒருசில பிரதிகளே விற்பனைக்குண்டு.
விபரங்களுக்கு :
பெண்ணின் குரல் 25, கிருல வீதி. கொழும்பு
அமைப்பு, பெங்களூர் நசா சோதிராஜா வீதி, யாழ்ப்பாணம்