கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1997.12

Page 1
டிசம்பர் 19970 இதழ் 15 0
för go Ff GOOI
GIT JAG
G
 

പ്പ് * 8=
鼻 Οι 60 (ΦΙΤοΟ ISSN 1891-0914 0 விலை ரூபா 20= மக்கான இலங்கைச் சஞ்சிகை

Page 2
G III C6 is 95 d
முதல் பயிர்ச் செய்கையாளர் சக்தி திரண்டால். தொழில்நுட்பத்தின் உதயம் தொழில்நுட்ப விருத்தியை மேம்படுத்தல்
O
இலங்கையின் உலர்வலயப் பகுதியில் பெண் விவசாயிகள் முதன்மை பெறுகின்றனர் 0 தேசத்திற்கு உணவளித்தல் 0 பெண்கள் - கிராம
அபிவிருத்தியின் ஆணிவேர் எமது நாடும், எயிட்ஸ்' நோயும்
மலையக நாவல்களில் பெண்கள்
கிராமப் பெண்களின் அதிகரித்த வேலைப்பளுவும், அவற்றின் குறைந்த மதிப்பீடும்
0 ஆசிரியர்
பத்மா சோமகாந்தன்
0 முகப்புச்சித்திரம்:
எஸ்.டி.சாமி
0 அச்சுப்பதிவு:
ஹைடெக் பிரின்ட்ஸ்
0 வெளியீடு:
பெண்ணின் குரல் Voice of lWomen 2 1/25, Polhengoda Gardens, Colombo - 05, Sri Lanka.
ராதன காலந்த்ெ வருகின்றனர். அன் விட, வீட்டையும் விவசாய சமுத தொழில்களை ஆ களையெடுத்தல் செய்தல், சூடு அடி தொழில்களைப் ெ
பெருந்தோட்டத்து களில் பாதிக்கு ( மலைச்சரிவுகளில் தேயிலைத் தோட் முதலிய பணிகள் எடுப்பது, எடுத்த ஆகியவற்றைப் ெ
தெங்குத்துறையில் கயிறு பின்னும் ஈடுபடுத்தப்படுகிே
அடிப்படை வாழ் வேலைகளை செ சமையல், குழந்ை பெண் சுமக்க வே
செய்யும் தொழி: கிடைப்பதில்லை. செய்கின்ற போது மட்டுமல்ல, இந் நாடுகளிலும் நில6
பெண்களை முன்! முன்னணி இது ெ அழுத்திக் கூற விரு
"உலகின் அநேக இ உணவு, விவசாயஅ படும் பாதுகாத்தல், 8 கட்டங்களிலும் பங்ெ விவசாயத்தை அடிப் கணிக்கப்பெற்று,அ;
|-
 
 
 
 
 
 

கமத்தொழிலில் பெண்களின் உழைப்பு
தாட்டே பெண்கள் கமத்தொழிலுக்குப் பெரும் பங்களித்து ாறு வேட்டைத் தொழிலுக்கு ஆண்கள் காட்டுக்குச் சென்று பார்த்து, விவசாயத்தையும் கவனித்தவர்கள் பெண்கள். ாயத்தில் வயலை உழுவது, கொத்துவது போன்ற ண்கள் செய்கின்ற போதிலும், நெற்பயிர்களை நடுதல், பயிரைப் பாதுகாத்தல், பசளையிடுதல், அறுவடை டித்தல், சேகரித்தல், கால்நடையை பராமரித்தல் போன்ற )பண்களே கவனிக்கின்றனர்.
துறையான தேயிலை, ரப்பர். தெங்குப்பயிர்ச் செய்கை மேற்பட்ட வேலைகளைப் பெண்களே புரிகின்றனர். ஏறி, இறங்கி, கால்களில் அட்டையும், பூச்சியும் கடிக்க படங்களில் கொழுந்து கொய்தல், சுமைகளைக் காவுதல் ர் பெண்களுக்குரியன. ரப்பர் தோட்டங்களில் பால் பாலைப் பாரமான பாத்திரங்களில் காவிச் செல்வது )பண்கள் செய்ய வேண்டியுள்ளது.
ல் கொப்பரா உற்பத்தி, மட்டைகள் ஊறவிட்டு, நார்பிரித்து தொழில் முதலியவற்றில் பெரும்பாலும் பெண்களே ன்றனர்.
க்கை வசதியில்லாத சூழலில், வேளையோடு வீட்டு ய்து விட்டு, தொழிலுக்குப் போய், மாலையில் வந்து தகள் கவனிப்பு போன்ற கூடுதல் வேலைச் சுமையையும் ண்டியுள்ளது.
லுக்கு ஆணைப்போன்று, சமமான சம்பளம் அவளுக்கு அவள் இத்தொழில் துறைகளுக்கு பெரும் பங்களிப்புச் திலும், அது பெரிதாகக் கணிக்கப்படுவதில்லை. இங்கு தப் பாரபட்ச மனப்பான்மை உலகின் மற்றும் பல புகின்றது.
னேற்றுவதற்கான மூலோபாயங்களை தேடும் நைரோபி தாடர்பாக 1985ல் செய்த பிரகடனத்தை இவ்வேளையில் நம்புகிறோம்.
டங்களில் முக்கிய உற்பத்தியாளர்களாக விளங்கும் பெண்கள் பிவிருத்தியில்முக்கியபங்கு வகிப்பதோடு, உற்பத்திசுழற்சியெனப் களஞ்சியப்படுத்தல், பண்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகிய dass கேற்கின்றனர். ஆகவே, பொருளாதார அபிவிருத்திக்கு, குறிப்பாக படையாகக் கொண்ட பொருளாதாரங்களுக்கு பெண்கள் உதவுவது தற்குரிய சன்மானம் வழங்கப்பட வேண்டும்."
- ஆசிரியர் -

Page 3
UIỨủề}
வரலாற்று ஓட்டத்தில் ‘பெண்கள் தமது உடலி ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு, அவதானிப்பு, பரிசோத6ை என்பனவற்றின் மூலம் மாதவிடாயின் சீரியக்கம், கர்ப்பம் தரிப் பிள்ளைப்பேறு போன்ற உடல் இயக்கம் பற்றிய மிக அதிகளவிலா6 அனுபவ அறிவு பெற்றனர். இத்தகைய தமது உடல்ரீதியா6 அவர்களது கவனிப்பானது, புறரீதியான இயற்கை, தாவரங்கள் மிருகங்கள், நிலம், நீர், காற்று என்பனவற்றின் உற்பத்திச் சக் பற்றிய அறிவுக் கிரகிப்போடு சம்பந்தப்பட்டதாக இருந்தது.
பெண்கள் வெறுமனே ஆடு, மாடுகள் போ பிள்ளைகளைப் பெறவில்லை. மாறாக தமது உற்பத்தி விருத்தி சக்தியை தமக்குரிய முறையில் பாவித்தனர். அவர்கள் தம முன்னைய சொந்த அனுபவங்கள் பற்றி ஆய்ந்து, சிந்தித்து தம மகள்மாருக்கு அவற்றைக் கடத்தினர்.
தந்தைவழி சமுதாயத்திற்கு முந்திய சமுதாயங்களி வாழ்ந்த பெண்கள், எப்படித் தமக்கு தேவையான பிள்ளைப் பேற்ை கட்டுப்படுத்தவும், பிள்ளைப்பேற்று கால இடைவெளியை தீர்மானிக்கவும் இன்றைய நவீன பெண்களைவிட அறிந்திருந்தன என்பதற்குரிய ஆதாரங்கள் இன்று நமக்குப் போதுமான அள கிடைத்துள்ளன. இதை இவர்கள் இன்றைய ஆணாதிக் நாகரீகத்தின் கீழ் அடக்கப்பட்டதால் மறந்து போயினர்.
வேடுவ இனமாக வாழும் ஆதிவாசிகளின் மத்தியி அன்றும், இன்றும் பிள்ளைப் பேற்றையும், பிள்ளைகளில் தொகையையும் கட்டுப்படுத்தும் முறை இடம்பெற்றுள்ளது இடம்பெறுகிறது. ஆதிகாலத்தில் நிலவி வந்த சிசுக்கொை
 

иол Ли III IDи 7siv
ல்
T
s
so
il
முறையைத் (Fisher 1978) தவிர்த்துப் பார்த்தால், அனேக சமூகங்களில் பெண்கள் பலவித மூலிகைகளை கர்ப்பத்தடைக்கும், கர்ப்பச்சிதைவுக்குமாகப் பாவித்துள்ளமை தெரியவரும்.
பழைய வேடுவச் சமூகங்களிடையே தற்போதும் நடைபெறும் பிள்ளைப்பேற்றைத் தவிர்க்கும் உபாயமாக பிள்ளைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பாலூட்டல் இடம் பெறுகிறது.
பெண்களின் புதிய வாழ்க்கையின் உற்பத்தி என்பதுஅதாவது புதிய ஆண்களின், பெண்களின்-புதிய வாழ்க்கைக்கான ஜீவனோபாய வழிவகை உற்பத்தியிலேயே பிரிக்க முடியாதளவு தொடர்புபட்டுள்ளது. பிள்ளைகளைப் பிரசவித்து, பாலூட்டும் தாய்மார் தமக்கும், தம் பிள்ளைகளுக்கும் கட்டாயம் உணவளிக்க வேண்டியவளாய் உள்ளாள். இதனால் பெண்கள் தமது வளத்தையே இதற்கென ஒதுக்கி, அதன் கொழுப்புச்சத்தால் பிள்ளைகளையும், அவர்களுக்கு பாலையும் கொடுப்பதன் மூலம் முதலாவது உணவு வழங்குவோராகவும் அடுத்து இயற்கையில் காணப்படும் தாவரங்கள், சிறுமிருகங்கள், மீன் போன்றவற்றை சேகரித்து தரும் சேகரிப்பாளர்களாகவோ, விவசாயிகளாகவோ இருக்கின்றனர். முதலாவது வேலைப் பிரிவென்பது பால்ரீதியானதாக, ஆண்கள் வேட்டையாடலில் ஈடுபட, பெண்கள் ஜீவனோபாயத்திற்காக தாவரங்கள், கிழங்குகள், பழங்கள், காளான்கள், விதைகள் என்பவற்றைச் சேகரிக்கும் பொறுப்பிலிருந்து ஆரம்பிக்கிறது.
நாளாந்த சாப்பாட்டுக்கு உணவு பெறவேண்டியதன் அவசியமும் தாவரங்களோடும், தாவர வாழ்க்கையோடும் கொண்டிருந்த அறிவும் தானியம், கிழங்கு போன்றவை பயிர் செய்யும்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 4
விவசாயத்தில் அவர்களை ஈடுபடச் செய்தது. கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்பவரின் கருத்துப்படி, சிறந்த பயிர்ச்செய்கை கண்டுபிடிப்பானது, நவீன கற்காலத்தில் யுறேசியாவில் ஏற்பட்டது. அங்கே காட்டுத்தானிய வகைகள் முதன் முதலாகப் பயிரிடப்பட்டன. சைல்ட்டும், இன்னும் பல ஆய்வாளர்களும் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்தியவர் பெண்கள் எனக் கூறுகின்றனர். அத்தோடு இந்த வகை பயிர்ச்செய்கைக்கு நிலத்தைக் கிண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் அவர்களே கண்டுபிடித்தனர். கிண்டுகின்றதடி, மண்வெட்டி இவை ஏற்கனவே காட்டு வேர்கள், கிழங்குகள் கிண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டவையாகும் (சைல்ட் 1976, றீட் 1975, போர்மன் 1975, தொம்சன் 1960, சட்டோபத்தாய 1973, எஹெறன்பில்ஸ் 1941 பிறிபோல்ட் 1952).
தானியங்கள், கிழங்குவகை போன்றவற்றின் ஒழுங்கான பயிர்ச்செய்கையானது, புதிய கால கட்டத்தை அறிவித்ததோடு பெண்கள் உழைப்பினால் உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் முன்னேற்றத்தையும் காட்டிற்று. இது பல ஆய்வாளரின் கருத்துப்படி வரலாற்றில் முதன் முதலாக மேலதிக உற்பத்தியைச் சாத்தியமாக்கிற்று. இம்மாற்றத்தை சைல்ட் என்பவர் ‘நவீன கற்காலப்புரட்சி என வர்ணிக்கிறார். அண்மையில் துருக்கியிலும், ஈரானிலும் கிடைத்த அகழ்வாராய்ச்சி சான்றுகளின்படி, சேகரிப்புக்காலத்திலேயே (Gathering Stage) தானியங்கள், விதைகள் பயிர்ச் செய்கையில் மேலதிக லாபம் பெற மக்கள் தொடங்கிவிட்டனர் என எலிசபெத் ஃபிஷர் குறிப்பிடுகிறார். மேலதிக உற்பத்தியைச் சேகரித்து வைப்பதற்கு தொழில்நுட்பரீதியாக முற்தேவையாக இருந்தது அவற்றை பேணி வைப்பதற்குரிய பாத்திரங்கள், கூடைகள், ஜாடிகள் போன்றவையே. இதிலிருந்து மேலதிகத்தை பேணிவைப் பதற்கான தொழில்நுட்பமானது, புதிய விவசாயத்திற்கான தொழில்நுட்பத்திற்கு முந்தியது என அறிகிறோம்.
இவ்விரண்டு உற்பத்தி முறைக்குமிடைய்ே வித்தியாசத்தை ஏற்படுத்துவது, மேலதிக உற்பத்தியல்ல. மாறாக பெண்கள்தான் முதன் முதலாக உண்மையான உற்பத்தி மூலம் இயற்கையோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர் என்பதே. இக்காலத்திலும் சேகரிப்பாளர்கள் இருக்கவே செய்தனர். ஆனால், தாவர பயிர்ச்செய்கையின் பின்னரே நாம் முதன் முதலாக உற்பத்தி சமுதாயம் பற்றிப் பேசுகிறோம் ( சோஹன் - றெதெல் 1970) . பெண்கள் நிலத்தில் வளர்ந்ததை சேகரித்து சாப்பிடுபவர்களாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் நிலத்தில் பயிரிட்டு வளர்க்கவும் செய்தனர்.
பெண்கள் நிலத்தோடு வைத்திருந்த தொடர்பு நோக்கானது உற்பத்தி சம்பந்தமானது மட்டுமல்ல, அது ஆரம்பத்திலிருந்தே, சமூக உற்பத்தியாகவும் இருந்திருக்கிறது. வயதான ஆண்களில் இருந்து பெண்கள் வித்தியாசப்பட்டனர். ஆண்கள் வேட்டையாடியதும், சேகரித்ததும் தமக்காகவே செய்தனர். பெண்களோ தங்கள் உற்பத்தியை பங்குபோடவேண்டிய நிலையில் இருந்தனர். கடைசி தமது பிள்ளைகளுக்காவது

கொடுக்கவேண்டிய நிலையிலேயே அவர்கள் இருந்தனர். பெண்களின் இயற்கையை நோக்கிய வெளிப்படைத் தொடர்பென்பது, குறிப்பாக வேறுவார்த்தைகளில் சொல்வதானால், வளர விடுவதும் அதில் பயிரிடுவதுமே. இது அவர்களை முதல் சமூக உறவுமுறையின்-அதாவது தாய்மாருக்கும், பிள்ளைகளுக் கிடையிலுமான-கண்டுபிடிப்பாளர்களாக்கியது.
அனேக ஆய்வாளர்களின் முடிவின்படி தாய்-பிள்ளைகள் கூட்டமே முதல் சமூக அலகாகும். இந்த அலகானது நுகர்வது மட்டும் செய்யாமல் உற்பத்தியின் அலகாகவும் இருக்கிறது. தாய்மாரும், பிள்ளைகளும் ஆரம்பகால சேகரிப்பாளர்களாகவும், மண்ணைக்கிண்டிய கமக்காரர்களாகவும் நன்றாக வேலை செய்தனர். மேற்கூறப்பட்ட ஆய்வாளர்களின் கருத்துப்படி, வயது வந்த ஆண்கள் என்பவர் இந்த தாய்வழிப்பட்ட அலகினுள் தற்காலிகமாகவோ, மேற்படையாகவோ இணைக்கப்பட்டவராகவே இருந்தனர் (பிறிஃபொல்ட் 1952, றீட் 1975, தொம்சன் 1960).
Lortfly 60 b, gyrission"h (Martin and Voorhies) Ji, Oh கருத்துப்படி, தாய்வழி மைய அலகும், ஆரம்பதாவர உணவுக்கால மனிதப் பரிணாமமும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டிருந்ததாகக் கொள்ளப்படுகிறது. வயதுவந்த ஆணின் சேர்க்கையென்பது தாய்பிள்ளை அலகோடு எந்தவித நிரந்தர தொடர்பும் பெற்றிருக்கவில்லை. பிள்ளை பேறென்னும் ஓர் சிறுகால அலகாகவே அவர்கள் தொடர்பிருந்தது (மார்டின், வூர்ஹீஸ் 19751974). ஆண்கள் இவர்களோடு நிரந்தர இணைவுகொள்வதென்பது சமூக வரலாற்றின் பெறுபேறாய் ஏற்படுகிறது. இந்த ஆரம்ப சமூக அலகில் ஏற்பட்ட உற்பத்திச் சக்தி என்பது தொழில்நுட்பத்தன்மை வாய்ந்ததாய் மட்டும் இருக்கவில்லை. கூடவே மனிதக் கூட்டுறவுக்கான கொள்ளளவைக் கூட்டுவதாயும் அமைந்தது. நாளைக்கெனத் திட்டமிடும் திறமை என்பது, எதிர்காலத்தை எதிர்பார்த்து, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்று, இந்த அறிவை ஒரு பரம்பரையிலிருந்து அடுத்த பரம்பரைக்கு கையளித்து, கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றறிந்து (வேறு வார்த்தைகளில் சொல்வதானால்), வரலாற்றுக்கு அடியிடுவதாகும்.
இயற்கையோடு பெண்கள் கொண்டிருந்த வெளிப்படையான தொடர்பு கால வளர்ச்சியில் பின்வருமாறு அமைகிறது:
(1) அவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த ஊடாட்டம், அதாவது தம்மியல்புக்கும், வெளிச் சூழலுக்கும் இடையே நிலவிய தொடர்பானது பரஸ்பரம் மிக்கதாய் இருந்தது. தமது உடலை அவர்கள் எவ்வாறு உற்பத்திக்குரிய தெனக் கண்டார்களோ அவ்வாறே அவர்கள் வெளி இயற்கையையும் உற்பத்திக்குரியதாய்
556L6.
(2) அவர்கள் இயற்கையைப் பயன்படுத்தினாலும் அந்தப் பயன்படுத்தலானது அதன்மேல் ஒரு ஆக்கிரமிப்பாகவோ, அதை ஒரு சொத்தாகவோ கொள்ளவில்லை. பெண்கள் தம் உடலுக்கோ, பூமிக்கோ சொந்தக்காரர்கள் அல்லர். ஆனால், அவர்கள் தமது உடலோடும், பூமியோடும் உற்பத்தி வளரவும் உற்பத்தியை வளர்க்கவும் ஒத்துழைக்கின்றனர்.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 5
(3) புது வாழ்க்கையின் (உயிரின்) உற்பத்தியாளர்களாய் இருக்கும் இவர்களே ஜீவனோபாயத்திற்கான முதல் உற்பத்தியாளராகவும், முதல் உற்பத்திப் பொருளாதாரத்தின் கண்டுபிடிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ਪੁਲ உற்பத்தியாளர்களாகவும், சமூக உறவின் சிருஷ்டியாளர்களாகவும் அதாவது சமூக வரலாற்றின் சிருஷ்டியாளர்களாகவும் இருக்கிறார்கள்.
வேட்டைக்காரன் - மனிதன் பற்றிய தொன்மம்
எல்லாவித மனித உற்பத்திக்கும் முற்தேவையாய் இருப்பது பெண்களின் உற்பத்தியாகும். அதாவது அவர்கள் புதிய ஆண்கள், பெண்களை உருவாக்குகிறார்கள் என்ற கருத்தில் மட்டும் இல்லாமல் அவர்களே, பெண் சேகரிப்பாளர்கள்- (பின்னர் விவசாயிகள்) - ஆண் வேட்டைக்காரர் என்ற முதன் முதல் சமூக தொழில் பிரிவுக்குக் காரணமாய் இருக்கிறார்கள். இந்தச் சமூகத் தொழில் பிரிவானது பெண்பாலரின் அபிவிருத்தி பெற்ற உற்பத்திச் சக்தியிலேயே தங்கியுள்ளது.
பெண்களின் உற்பத்திச் சக்தி, எல்லாவற்றையும்விட தம்மினத்தின் கூட்டத்தின் நாளாந்த சாப்பாட்டுக்கு வழிவகுத்தல், வாழ்வை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கொண்டிருந்தது. தமக்குரிய நாளாந்தச் சாப்பாட்டை மட்டுமே பெண்கள் தேடுவதாய் இல்லாமல் பிள்ளைகளுக்கும், சிலவேளை வேட்டைக்குப்போன ஆண்கள் எதுவும் வேட்டையாட முடியாது(அதிர்ஷ்டமின்றி) வந்தால் அவர்களுக்கும் உணவளிக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள். ஏனெனில் வேட்டையாடுதல் என்பது 'ஆபத்து நிறைந்த பொருளாதாரமாகும்.
மனித இனம் வாழ்வதற்கான முக்கிய காரணமாய் இருந்தவன் வேட்டை தொழில்புரிந்த மனிதனல்ல, சேகரிப்பாளராக இருந்த பெண்ணே’என பெண்ணிலை ஆய்வாளர்களின் ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன. இது அன்றும், இன்றும் போதனை செய்துவரும் டார்வீனிய சமூகவியலாளரின் கருத்துக்கு மாறானதாகும். இன்று வாழும் வேட்டையாடுவோர் சேகரிப்பாளர் மத்தியில்கூட பெண்களே நாளாந்த உணவுக்கு 80 வீத பங்களிப்புச் செய்கின்றனர். அதேவேளை ஆண்கள் மிக குறைந்தளவு பங்களிப்பே செய்கின்றனர் (லீயும், டிவோரும் 1976 : மேற்கோள்காட்டுவது &LS69 if 1979-48) (Eupitéfair (Murdick's Ethnographic Atlas) இனம் சம்பந்தப்பட்ட விளக்க நூல் ஆய்வில், இச்சமூகங்களின் 58 வீதமான உணவுத்தேவை சேகரிப்பால் பூர்த்தியாவதாகவும் 25 வீதம் வேட்டையாலும், மிகுதியானவை வேட்டையாலும், சேகரிப்பாலும் பூர்த்தியாவதாகவும் மார்டினும் வூர்ஹீஸும் நிரூபித்துள்ளனர் (1975 - 181). வேட்டையாடு வோராகவும், சேகரிப்பாளராகவும் அவுஸ்திரேலியாவில் வாழும் ரிவி (Tiwi ) பெண்கள் 50 வீதமான தமது உணவை சேகரிப்பின் மூலமும், 30 வீத உணவை வேட்டை மூலமும், 20 வீதம் மீன்பிடித்தல் மூலமும் பெறுகின்றனர்.ரிவிபெண்களைப் பற்றி ஆய்வுசெய்த ஜேன்குடேல் (Jame Goodale) பற்றைகளையண்டி வேட்டையாடல், சேகரித்தல்

போன்றவையே அவர்களின் முக்கிய உற்பத்திச் செயல்பாடு என்கிறார்.
இவர்களால் நாளாந்தம் உணவு வழங்குதல் சாத்தியமாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் நாளாந்தம் பல்வகையான உணவுகளை தமது முகாமில் வாழ்ந்த அங்கத்தவர்களுக்கு வழங்கினர். ஆண்கள் மேற்கொண்ட வேட்டையாடலுக்கு திறமையும், பலமும் தேவைப்பட்டன. ஆனால், பறவைகள், வெளவால்கள், மீன், முதலைகள், ஆமைகள் என்பவை பிரதான உணவு என்பதைவிட செல்வப் பொருட்களாகவே அவர்கள் குடும்பத்திற்கிருந்தன (Goodale1971:169).
இதிலிருந்து நாம் ஒன்றை அறிகிறோம். ஆண்கள் ஈடுபட்ட வேட்டையாடல் என்பது, அதற்கு வழமையாக கொடுக்கப்பட்டு வந்த பொருளாதார ரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதே அது. பெண்கள்தான் குடும்பத்துக்குத் தேவைப்பட்ட பிரதான உணவு வழங்கலைச்செய்து வந்தனர். மேலும் காடுகளுக்கு வேட்டைக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் வழங்கும் உணவிலேயே தங்கியிருந்தனர். பெண்களின் உணவு வழங்கல் இடம்பெறாத சமயங்களில் வேட்டையாடலை ஆண்களால் செய்ய முடியாதிருந்தது. இதன் காரணத்தால் தான் இறோகிஸ் இனப்பெண்கள் (Iroquois) யுத்தம், வேட்டையாடல் போன்ற ஆண்களால் மேற்கொள்ளப்படும் விஷயங்களில் தீர்வெடுக்கும் உரிமை பெற்றவராய் இருந்தனர். இத்தகைய ஆண்களின் வீரதீரச் செயல்களுக்கு பெண்களின் உணவு வழங்கல் ஆதரவு கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஆண்கள் வீட்டிலேயே g5ở535G6J6ữoTty gsbgbg ( Leacock 1978- 19, Brown 1970) தென்பகுதி, மத்திய வலயங்களில் வேட்டையில் ஈடுபடுவோருக்கு பெண்களே உணவளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என எலிஸபெத் ஃபிஷர் மேலும் சில உதாரணங்கள் தருகிறார். அவர் கூற்றுப்படி வேட்டையாடு தலைவிட மரக்கறி வகை உணவு சேகரித்தலே எமது முதாதையரால் முக்கியமாகக் கொள்ளப்பட்டது. மேலும் அவர் உயிரினப் படிவு வகை (Fossile) ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டு விளக்குகையில் 200,000 வருடங்களுக்கு முன்னர் ஃபிறென்ச் றிவேய்றா(French Riviera) பகுதியில் வாழ்ந்த மக்கள் மட்டி சங்கு உணவுகளையும், தானியங்களையுமே உண்டு வாழ்ந்தனரே ஒழிய இறைச்சி வகையை உண்டு வாழவில்லை என்று கூறுகிறார். மெக்சிக்கோவில் கிடைத்த தடயங்களின்படி 12,000 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு சிறுதானிய வகைகளே உணவாக இருந்ததாகக் கருதப்படுகிறது (ஃபிஷர் 1979:57-58).
இவற்றிலிருந்து வேட்டையாடலில் மனித இனம் தங்கியிருந்தால் எப்பவோ அது அழிந்தொழிந்து போயிருக்கும் என்பது தெளிவு. ஆயினும், இன்றைய ஜனரஞ்ச இலக்கியங்கள், கலை, சினிமா போன்றவற்றில் மட்டுமல்லாது, சமூக விஞ்ஞானிகள் மார்க்சீய ஆய்வாளர்கள் மத்தியிலும் வேட்டையாடிய மனிதனே முதல் ஆயுதங்களைக் கண்டுபிடித்தோனாகவும், உணவு வழங்கியோனாகவும் மனித சமூகத்தை உருவாக்கி, பாதுகாத்தோனாகவும் கொள்ளப்படுகிறது.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 6
வேட்டையாடும் தொழிலைக் கொண்ட மனித ஆதிவாசிகளின் முக்கிய கலாசார சாதனையாக இருப்பது, அவர்கள் பாலியல் வல்லுறவு நிலையிலிருந்து பெண்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு வந்ததே. சுரண்டல் ஆதிக்கம் உள்ள ஆண் பெண் உறவு முறையானது வேட்டையாடும் பழக்கத்தின் 'உயிரியல் அடிப்படையாக உள்வாங்கப்பட்டுள்ளது. புலால் தின்ன ஆசைப்பட்ட பெண்களுக்கு ஆண்களே இறைச்சி வழங்கினர். அதனால் வேட்டைக்காரரான ஆண்கள், பெண்களை நிரந்தர போகப் பொருட்களாகவும், வேலையாட்களாகவும் தமக்குக் கீழ் வைத்திருந்தனர். பெண்கள் மேல் இத்தகைய பாரிய ஆதிக்கம் செலுத்த வேட்டைக்காரரான ஆண்களுக்கு அனுகூலமாக இருந்தது என்ன என்ற கேள்விக்கு, கூட்டம் கூட்டமாக வேட்டையாடுதலில் ஈடுபடுவதால் ஏற்பட்ட இணைக்கும் கோட்பாடே என இதுபற்றி எழுதும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வியட்நாமை அமெரிக்கா வேட்டையாடிக் கொண்டிருந்த போது, ரைகர் என்பார் 1969 ல் கூட்டமாக ஆண்கள்’ (Men in Groups) என்னும் தனது நூலில் ஆண் இணைப்புக் கோட்பாடே ஆண் மேலாதிக்கத்தின் மூலகாரணியாக உள்ளது என்கிறார். எவ்லின் ஹீட் (Evelyn Reed) சுட்டிக்காட்டுவதுபோல், புலால் உண்ணுதல் மனிதக் குரங்குகளிடம் மிகக் குறைவாகவே காணப்பட்டது என்பதை ரைகர் என்பார் அறிந்திருந்த போதும், வேட்டையாடுதலும், புலால் உண்ணுதலுமே மனிதனுக்கு முந்திய ஆதி பரிணாம வளர்ச்சியின் மூலகாரணியாக இருந்ததென்றும், இதை ஆண் இணைப்பு வகையாய் பிரதிபலிப்பதோடு, வேட்டையாடு வோனாக மனிதனை காணும் வரலாற்றில் இருந்து இது மேலெழுகிறதென்றும் கூறுகிறார். ஆகவே, வேட்டையாடும் நிலையில் ஆண்-ஆண் என்னும் வேட்டையாடும் கூட்டமே முழு உற்பத்திக்கான சமூகத்தின் உயிர் வாழ்தலை உறுதிப்படுத்திற்று என்று கூறப்படுகிறது. ஆகவே, உற்பத்தி காரணிகளுக்கு எவ்வாறு ஆண்-பெண் உறவு முக்கியமாக இருந்ததோ, அவ்வாறே வேட்டையாடுதலுக்கு ஆண்-ஆண் இணைப்பு அவசியமாயிற்று. இதுவே பால்நிலைப்பட்ட தொழில் பிரிவுக்கு அடிப்படையாக 96irGTg)(Tiger 1969L: 122, 126).
மனித பரிணாம வளர்ச்சியும், அபிவிருத்தியும் சம்பந்தப்பட்ட பல வித விஞ்ஞான ஆய்வுகளுக் கெல்லாம் எடுத்துக்காட்டாகக் கொள்ளப் பட்டு பிரபலப்படுத்தப்படும் ஒரே அடையாளம் வேட்டையாடும் மனிதனே. இன்றுவரை இந்நோக்கே லட்சோப லட்சம் மக்களின் சிந்தனைகளைப் பாதித்துள்ளதோடு, சமூக சமத்துவமின்மைக்குரிய காரணங்களாகவும் தரப்படுகிறது. இத்தகைய பெண் களைக் கீழாக நோக்க வைக்கும் ஆண் இணைப்பு புலால் உண்ணல் போன்ற வற்றுக்கு முக்கியத்துவ மளிக்கும் கோட்பாடுகளை யெல்லாம் பெண்ணிலைவாத ஆய்வாளர்கள் ஆதார மற்றவையாக அம்பலப்படுத்தியுள்ளதோடு, இது முதலாளித்துவ ஏகாதிபத்திய நோக்குகளை வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களுக்குள் திணிப்பதாகவும் விளக்கியுள்ளனர். இக்கோட்பாடு தற்போது ஆணுக்கும், பெண்ணுக்கும், மக்களுக்கும் இடையில் உள்ள சுரண்டல் அமைப்புக்கு முக்கியத்துவமும்,

ஸ்தாபிதமும், எக்காலத்துக்கும் உரியதெனும் கற்பிதமும் கொடுக்கும் முயற்சியுமாகும். எவ்லின் றீட் இக்கோட்பாட்டுக்குப் பின்னால் பாஸிசக் கருத்துக்கள் புரையோடியுள்ளதாகவும், குறிப்பாக போருக்கு மகத்துவம் அளிக்கும் ரைகளின் எழுத்துக்களில் இது காணப்படுவதாகவும் கூறுகிறார் (Reed, 1978).
இவ்வாறான வேட்டையாடும் மனிதன் பற்றிய மகோன்னதங்களை நாம் கிழித்தெறியக் கூடியதாக இருந்தும் பெண்களின் உணவு வழங்கல் இல்லையென்றால் பெரும் வேட்டைக்காரர் எனப்பட்டோர் வாழ்ந்திருக்க முடியா தென்பதனைத் தெரிந்திருந்தும் நாம் இன்னோர் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியவர்களாய் உள்ளோம். பெண்களின் கையிலேயே பெரும் பொருளாதார உற்பத்தி திறனான சேகரித்தல், விவசாயம் போன்றவை இருந்தும் அவர்களால் ஏன் இத்தகைய பால்நிலைப்பட்ட சுரண்டல் அடுக்கு அமைப்புகளைத் தடுக்கமுடியாமல் போய்விட்டது?
மிகப் பழமையான ஆயுதங்களான கற்கோடாரிகள், துருவுகோல்கள் போன்றவை ஒரே வேலைக்குரியவையாக இல்லாது தானியங்களை அரைக்கவும், இடிக்கவும், சிறு மிருகங்களை வேட்டையாடவும் ஆண்-பெண் இருபாலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. மண்ணைக் கிண்டும் தடியும் மண்வெட்டியுமே உணவு சேகரிப்பாளர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்த பெண்களின் ஆயுதங்களாகத் தொடர்ந்திருந்தன. இக்காலங்களில் ஆண்கள் சில விசேட வேட்டையாடும் ஆயுதங்களை கண்டுபிடித்தனர்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. பெண்கள் கையாண்ட ஆயுதத் தொழில்நுட்பம் ஆக்க ரீதியானதாக உணவுற்பத்திக்குரியதாக இருந்தது. ஆண்களிடம் இருந்த வேட்டையாடும் ஆயுதங்களான அம்பும் வில்லும் உற்பத்திச் சக்திக்குரியதாக இல்லாது அழிப்பு வேலைக்குரியதாகவே இருந்தது. அம்பினதும், வில்லினதும் முக்கியத்துவம் என்னவெனில் அவை மிருகங்களைக் கொல்ல மட்டும் பாவிக்கப் படவில்லை. மனிதரைக் கொல்லவும் பாவிக்கப்பட்டன. இந்தப் பண்பானதுதான் ஆண்களின் உற்பத்தி மேல் ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக் கும் காலாய் இருந்தது. உண்மையில் புலால் உணவு வழங்கியவர்களாக கூறப்படும் இந்த வேட்டைக்காரர் தமது சமூகத்தின் போஷாக்குத் தரத்தை உயர்த்தியோராகக் கொள்வதைவிட சுரண்டல் காராகவே உள்ளனர்.
ஆகவே, விசேடமான வேட்டையாடும் ஆயுதங்களின் வருகை ஆதிக்க சுரண்டல் உறவுமுறையைச் சாத்திய மாக்கிற்று. பெண்களின் கையை எதிர்பார்த்து நடத்தும் சேகரிப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரப் பின்னணியில் - வேட்டையாடலில் ஆண்கள் தமது சுரண்டலுக்கான சாத்தியப் பாடுகளை உணர முடியவில்லை.
ஆடு, மாடுகளையும், பெண்களையும் தமக்குரிய தாக்கி, அலைந்து திரிந்த இடையர்கள் விவசாயச் சமூகத்தை ஆக்கிரமித்தபோது, வேட்டையாடுவோரின் உற்பத்திச் சக்தி வெளியாயிற்று வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அத்தகைய ஆரம்ப உற்பத்தி ஆற்றல் பற்றிய புரிதலானது உண்மையான
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 7
வேறுவகை உற்பத்தி பற்றி அனுமானிக்க வைத்தது. அதாவது விவசாயம் போன்ற உற்பத்திகளாக.
ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான தந்தை வழி உறவுமுறை என்பது, மனிதர் தங்கள் உற்பத்தி ஆற்றலை கண்டு கொண்டதன் பின்னரே ஸ்தாபிக்கப்பட்டது என்று எலிஸபெத் ஃபிஷர் கூறுகிறார். அவருடைய கருத்துப்படி இக்கண்டுபிடிப்பும், புதிய உற்பத்தி முறையாக மிருகங்களை வளர்த்தலும் ஒத்து நிகழ்கின்றன. அவர்கள் ஒரு எருதின் மூலம் ஏனைய பசுக்களைச் சினைகொள்ளச் செய்யலாம் என்றிருந்ததன் மூலம் பலவீனமான மிருகங்கள் நலமெடுக்கப்பட்டதோடு, அப்புறப்படுத்தவும் பட்டன. உரிய காலங்களில் இதற்கென வளர்க்கப்பட்ட எருதினைக் கொண்டு பசுக்கள் சினைகொள்ளச் செய்யப்பட்டன. பெண் மிருகங்கள் யாவும் புணர்வுக்கு. பலாத்காரப்படுத்தப்பட்டன. கால்நடை வளர்ப்பை அதிகரிக்கும் முகமாக அவைகள் பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்தலுக்குள்ளாகின. அவற்றின் சுதந்திரமான பாலியல் சேர்க்கைகள் இல்லாது போயின. இதிலிருந்தே பெண்களைக் கடத்துதல், பலாத்காரப்படுத்தல் என்றும் தந்தை வழி வம்ச விருத்தி, சொத்துப் பெறுபேறு போன்ற ஸ்தாபிதங்கள் போன்றவையும் இப்புதிய உற்பத்தி வகையின் அங்கமாக வெளிக்காட்டப்பட்டன. இந்த தொழில்முறையின் தர்க்க முறைக்கேற்ப பெண் என்பவளும் ஆடு, மாடுகள் போல் அசையும் சொத்தாகக் கொள்ளப்பட்டாள். -
இந்நிலையானது இயற்கையோடிருந்த தொடர்பிலும் பாலியல் நிலைப்பட்ட தொழில் பிரிவிலும் மாற்றங்களை ஏற்படுத்தின. வேட்டையாடுவோர் மத்தியில் உணவு சேகரிப்பாளராகவும், உற்பத்தியாளராகவும் பெண்கள் வகித்த முக்கியபாத்திரத்தை இடையர்களாய் அலைந்து திரிந்த இனத்தோர் மத்தியில் இழந்தனர். இவர்கள் மத்தியில் பெண்கள் பிள்ளைகளை பெறுவோராக, குறிப்பாக ஆண் பிள்ளைகளை பெறுவோராக மாத்திரம் இருந்தனர். அவர்கள் உற்பத்தி என்பது ஆண்களால் ஆளப்பட்ட கருத்தரிக்கும் வளத்தை குறிப்பதாகக் குறுகியது (Fisher 1979:248).
நிலத்திலிருந்து கிடைத்ததை தமதாக்கிக் கொண்ட வேட்டையாடல், சேகரித்தல் என்ற பொருளாதாரத்திலிருந்து. அலைந்து திரியும் இடையர் இனத்தவரது ‘உற்பத்திப் பொருளாதாரம் வேறுபட்டது (Sohn - Rethe). எவ்வாறாயினும் இத்தகைய உற்பத்தி முறைக்கு தேவைப்படும் மிருகங்கள், மனிதர்கள், இடப்பரப்பு போன்றவை செயல்படுத்தப்படுவதற்குரிய வழிமுறைகளும் தேவைப்பட்டன என்பது கண்கூடு.
விவசாயிகள்
இதிலிருந்து தெரியவருவதாவது, அலைந்து திரிந்த இடையர் வகுப்பினரே பெண்கள் மேல் ஆண்கள் கொள்ளும் மேலாதிக்கம் போன்ற சகலவித மேலாதிக்கங்களுக்கும் காரணமாய் இருந்துள்ளனர் என்பதே. ஆனால், அதே நேரத்தில் பெண்களை

ஆண் சுரண்டும் உறவுமுறையானது விவசாய வகுப்பினருள்ளும் இருந்துள்ளது என்பதற்குரிய ஆதாரங்கள் உள்ளன. இந்தச் சுரண்டல் முறை,எஸ்தர் போஸர்ப் (Esther BOSerup) நம்புவது போல் உழுவதற்கு கலப்பை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏற்படவில்லை. மாறாக இது மண்வெட்டியைப் பயன்படுத்திய ஆபிரிக்க விவசாயிகள் மத்தியிலும் இருந்திருக்கிறது. இங்கே விவசாயமானது பிரதானமாகப் பெண்களாலேயே செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக மெய்லாசோ (MeilaSSoux 1:1975) என்பார் குறிப்பிடுகை யில் இத்தகைய சமூகங்களில் இளம் பெண்கள், ஆண்கள் மேல் வயதுமுதிர்ந்த ஆண்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்றும், இதன் மூலம் அவர்கள் அதிக மனைவிமாரையும், ஆட்களையும் தமக்கு வேலைசெய்யப் பெற்றனர் என்றும் குறிப்பிடுகிறார். விவாகம் மூலமே அவர்கள் தமக்குப் பெண்களையும், செல்வத்தையும் சேகரித்தனர். இதுவே ஒன்றோடொன்று தொடர்புபட்டிருந்தது.
ஒருதன்மீன்(திருமணவாழ்த்து
- எஸ் ரகுபதி - பெண்ணே! மரபும் மனமும் புதுக்கப் பூக்க மானுடம் எங்கும் விரிக உன் கைகள்
எண்ணக் கருவெடுத்து எழுத்தின் துணை கொண்டு ஏட்டில் வடித்தெடுத்த வண்ணச் சிலையெல்லாம்
துள்ளிக் குதித்தெழுந்து செல்ல முத்தம் தாராதோ
மையினில் ஊறிய நின் வளைக்கரங்கள் இசைக் கரமிணைத்து கலைக்கரம் படிக்க காதல் சுனைபுகுந்தும் ஈரமுலர்த்தி இலக்கியச் சிறகசைத்து மெள்ளத் தளைநீவி அடுக்களைக்கு அப்பாலும் உன் உள்ளப் பெண்ணுரிமைக் கவிமொட்டு மெல்லிதழை விரிக்கட்டும்
(நன்றி விடிவு)
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 8
ஆபரணம் பல தடவைகள் புரண்டு புரண்டு படுத்தாள்
நித்திரை வருவதாக இல்லை
அன்று சிறு சுள்ளி விறகுகள் கிடைக்கவில்லை. பட்டுப்போன பெரிய மரக்கட்டையொன்று கண்ணில் பட்டது. அதைச் சுமந்து வந்தாள். கொத்தி விறகாக்கி எரித்தாள். கனத்த குற்றியைத் தோளில் வைத்துக் காவியதனால் தோள் பட்டை விண், விண்ணென்று வலித்தது.
கறுப்பன் அவள் கணவன்; பெயரளவில்தான். அவளை மனைவியாகக் கொண்டவன் போல.
இன்னமும் விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருக்கிறான். குடும்பம் என்ற பொறுப்பு, வரவு செலவு என்ற எண்ணம் இல்லை. பாடுபட்டு உழைப்பதும், கிடைத்த பணத்தைக் குடிப்பதுமாக.
மனைவி என்றொருத்தி பகலில் கூலிவேலை , செய்துவிட்டு வந்து குடிசையைக் கூட்டிப் பெருக்கவும், அடுப்பிலை ஏற்றி இறக்கவும், இவனுடைய பாடுகளைப் பார்க்கவும் இருக்கிறாள்.
அப்படியொருத்தி இருக்கிறாளே என்ற உணர்வுகூட அவனுக்கிருப்பதாக இல்லை. கலியாணத்துக்கு முந்தி எப்படியோ அப்படியே பின்னும் இருக்கிறான்.
பழைய மாதிரியே கூலிக்குப் போவதும், குடித்துவிட்டு வெறியில் தள்ளாடித் தள்ளாடி விழுந்தெழும்பி வருவதும் தான் அவனுடைய வாழ்க்கையின் நாட்கலண்டர்கள்.
நித்திரை வராமல் தரையில் தாவணிச் சேலையை விரித்து படுத்துக்கிடந்த ஆபரணம் தலைமயிரை தட்டிச் சொருகி முடிந்து கொண்டாள், தலைக்குள் சுரு.சுருவென்று பல நினைவோட்டங்கள்.
சக்கர வாணம் சுற்றிச் சுழல்வது போல் பல நினைவுகள்.
 

தெருவிளக்கு வெளிச்சத்தின் ஒளிக் கீறல் திறந்து கிடந்த கதவின் இடுக்கின் ஊடாக உள் நுழைந்து அவளைத்
தடவியது.
அந்த வெளிச்சத்தின் ஒளியில் தனது கரங்களைப் புரட்டிப் பார்த்தாள் ஆபரணம். கண்டல் கறுப்பாக கையில் தடித்துப் போயிருந்த காயத்தை விரல்களால் வருடினாள். மார்பின் கீழே சில கீறல்கள்.
காயங்கள் வலிப்பெடுத்தன.
குடிவெறியில் கறுப்பன் கடித்த கடி இன்னும் வலித்தபடியே இருந்தது.ம்.ஹம்ம்..!! துயரம் தோய்ந்த பெருமூச்சுகள்!
இந்தக் குடிக்கும் பழக்கத்தை எப்படி மறக்கடிப்பது? -- திருத்துவது?
கூடவே அவளோடு ஒரு வீட்டுக்குத் துணி கழுவ வந்த அந்தோனி அம்மாளும் தனது கணவனின்
குடிப்பழக்கத்தையும், அடித்து உதைப்பதையும், கேடுகெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும் சொல்லி அழுதாளே!
இப்படி எத்தனை பெண்கள் இடர்ப்படுகிறார்கள்.
கறுப்பன் குடிப்பது இன்று நேற்றல்ல.
கலியாணமாகி ஆறேழு மாதங்களாகவே இப்படிக் குடித்துவிட்டுவருவதும், கெடுபிடியும்தான்.
ஆபரணமும் தன்னால் முடிந்தளவு புத்தி சொன்னாள்; சத்தியங் கேட்டாள்; உறுதி வார்த்தைகளை நம்பினாள்; அவன் இன்று திருந்துவான்; நாளை சரிவருவான்; எனத்தினமும் எதிர்பார்த்தாள்.
தானே கையடித்துப் பெற்ற பணத்தில் சோறு பொங்கிப் படைத்தாள்.
வெறி முறிந்து சாதாரணமாயிருக்கும் வேளைகளில்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 9
அவன் அமைதியான பசு. ஒருவகையான சோலியோ, சுரட்டே இல்லை. அடித்துப்போட்ட சாரைப்பாம்பு போலச் சுருண்டுகிடப்பான். 'சத்தியமா மச்சான்! இந்தக்குடியை இனிவிட்டுவிடு. எத்தனை நாளா மச்சான் இப்பிடிக் குடித்துத் துலைக்கிறாய்? கூலிக்குப் போன சல்லி எங்கே? ஒழுங்காக நேரத்துக்கு வீட்டை வாறியோ? ஒழுங்காய் வேளைக்குச் சாப்பிடுறியோ? கலியாணங்கட்டி அம்மன் குழுத்தித் திருவிழாவோடை எட்டு மாசமுங் கழிஞ்சு போச்சு. இத்தினை நாளேக்கை ஒரு துட்டுப் பணமாவது என்ரை கண்ணிலை காட்டினியோ? என்ன மச்சான்! தாலி கட்டின அன்று கட்டிச் கரும்பே தேனே! சினிமா ஸ்டாரே! நான் குடிப்பக்கபே தலைகாட்டலை, குடிக்கவே மாட்டன். கள் கொட்டில் பக்கம் போகமாட்டன் என்றெல்லாம் எத்தனை விதமாக இனிப்புக் காட்டிப் பேசினான்.
அவனும் இண்டைக்குத் திருந்துவான். நாளை சரி வந்துவிடுவான் என அவளும் நம்பினாள்.
குடித்துவிட்டு சும்மா கிடக்கிறானா? கண்மண் தெரியாமல் அவள் உடம்பையெல்லோ பதம் பார்க்கிறான். அடியும். உதையுமே அவளுக்கு வாழ்வாகிவிட்டது.
அவனிடம் கெஞ்சினாள், பணிந்தாள். அன்பாகப் புத்தி சொன்னாள். சொல்லும் போதெல்லாம் ஆமா, ஆமா என அமைதியாகக் கேட்பான். ஆனால், நாள் முடிவில் முழுவெறியில் வீடு திரும்புவான்.
யோசித்து யோசித்து நரம்புகள் முறுகிச் சோர்ந்து தளர்ந்த பின் ஆபரணம் நித்திரையில் ஆழ்ந்துவிடுவாள்.
வசந்தத்தைக் காண விழைந்த அவள் வாழ்வு கசந்தது.
யாருக்குமே சொல்லாமல் ஆத்தா வீட்டிற்கு ஓடிவிடுவோமா..? அங்கே போய் என்ன பண்ணுவது..? நோய்கார அப்பனை வைத்துக்கொண்டு ஆத்தாளும் படாதபாடுபடுகிறாளே! அவளுக்குச் சுமையாவதா..?
கன்னிப் பெண்ணாயிருந்த போது கல்யாணத்தைப் பற்றிய கனவுகள் எத்தனை எத்தனை 'எனக்கு ஒருத்தன் மூண்டு முடிச்சுப் போட்டுவிட்டால்.பூவும் பொட்டுமாக. பளிச்சென்று. தினமும் நான் சுற்றித்திரியலாமே! மச்சான் கையைப் பிடிச்சுக் கொண்டு கோயிலென்றும், குளமென்றும், தினசரி தியேட்டரிலை சினிமாவும் பார்க்கலாம் பட்டுச்சீலை உடுத்தலாம். டவுண் பஸ்ஸில ஏறிப்போய்ப் படம் பார்க்கலாம்.

மாரி அம்மன் கோயில் ஐயருடைய குழந்தை ஹரிகிருஷ்ணனைத் தூக்கித் துள்ளி விளையாடலாம். நான் பாத்த படக்கதை கேட்கப் பக்கத்து வீட்டுப் பெண்கள் என்னிடம் ஒடி வருவார்கள். படத்தில் கதாநாயகன் நாயகி பாடி, ஒடித் துள்ளிக் குதித்து விளையாடுவதை மச்சானோடு சேர்ந்து ரசிக்க. அவர் மகிழ்ச்சியில் கிளுகிளுப்பில் என்
கன்னத்தைக் கிள்ள. என்ன மச்சான் சும்மா இருங்க என நான் கன்னம் சிவப்பேறி நாணித் தலை கவிழ. வெட்கம்.மகிழ்ச்சி. .இப்படி எத்தனை கனவுகள்.
ஆனால், இப்போ அவள் கணவனாக வந்த கறுப்பனை கள்ளும், கசிப்பும் மூழ்கடிக்கின்றனவே!
கையில் வீங்கிய காயம் சுள்ளென்று வலித்தது.
ஆபரணத்தின் சிந்தனையிலும் சுள் ளென்று ஒரு பொறி தட்டியது.
அங்கே ஒரு கூட்டம்
தோட்டத்தில் வேலைசெய்யும் பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் குழுமினர்.
"ஆண்டாண்டு காலமாக தோட்டத்து மக்கள் அடிமட்ட வாழ்க்கையிலேயே அமிழ்ந்துள்ளனர். அவலமான துன்ப வாழ்வு. இதிலிருந்து வெளியேற கல்வி முக்கியம். கல்வி, சுகாதாரம், சமூக வியல் என்ற அறிவு நன்கு பரப்பப்பட வேண்டும். தியாகத்தோடு தொண்டர்கள் இவர்களை பொறுப்பேற்று வழிநடத்த முன்வரவேண்டும். விழிப்புணர்வை உண்டாக்கவேண்டும். இந்தfதியிலே பெண் அமைப்புகள் பெரும்பணியாற்றலாம். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன மக்கள் மத்தியில் புகுத்தப்படவேண்டும். இவற்றை ஒழுங்கமைத்துச் செயல்படுத்த எமது மாதர் அமைப்பு முன்வரவேண்டும்." தலைமை வகித்துப் பேசியவர் கூறிமுடித்தார்.
மாரியாத்தா கோவிலில் எழுந்தருளியை இறக்கி வைத்து விட்டு மகிழ்ச்சியில் கைதட்டுவது போலக் கரகோஷமெழுந்தது. ‘கசமசவென்று கதைப்பதும் சலசலப்பதுமாக சபை இருந்தது.
"ஏன்.? எதற்காகச் சத்தம்.? உங்கள் பிரச்சினைகள் என்ன? தெரிவியுங்கள். இயலுமானவரை நாம்
உதவுவோம்." பெண்கள் சிலரின் முணுமுணுப்பு பேச்சுகளைக்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 10
காதில் வாங்கிய திலகா அக்கறையோடு கேட்டாள்.
பறக்கும் முடியைச் சரிசெய்து, சேலையை ஒதுக்கிக் கட்டி கையை மடித்துக் கட்டிக் கொண்டு,
"என்னத்தைச் சொல்லுறதம்மா. நம்ம தோட்டத் தின்ரை கேவலத்தை. நீங்கள் நேரில் வந்துதான் பாக்கணும். நாம பெண்பிறப்புக்கள். என்னத்தைச் சொல்ல.என்னத்தைச் செய்ய.?" மாரியம்மா பயந்து பயந்து நலிந்தகுரலில் அனுங்கினாள்.
"சரி சரி, பெண்ணாப் பிறந்தா என்ன குறைச்சல்? அவளும் மனுஷப் பிறப்புத்தானே!" - திலகா "
"நம்ம சின்னூண்டுக் குட்டியளெல்லாம் முந்தநாள் முளைத்ததுபளெல்லாம்.கூடக் குடிக்கப் பழகிட்டாங்க. ஒரே குடியம்மா- அப்புறம் அடி. சும்மா சொல்லப்புடாது நம்ப ஆம்பிள்ளைங்களெல்லாம் கூலிக்குப் போயி விறவு வெட்டி, பாதை திருத்தி, பசளைபோட்டு, கவ்வாத்துப் பண்ணி அப்படியிப்படியுமா ஏதோ ரெண்டு பணமாவது தேடிப்புடுதுகள்."
"பணம் கிடைச்சா நல்லாச் சாப்பிடலாம் தானே! சந்தோஸம் தானே!"
"ஐயையோ! அம்மா விளக்கமா விளங்கிக்கீங்க சல்லிக்காசோடை நேராக் கள்ளுக் கொட்டிலுக்குள்ள பூந்திடுறாங்களே! திரும்பி வரேக்கை கண்மண் தெரியாத வெறி. தினமும் ஒரே குடி, அந்த நாசமாப் போறானுகளும் பிடிச்சுப் பருக்கிப் போட்டல்லோ அனுப்புறானுக . சல்லிக்காசு čohn L. கையில இல்லாமே தள்ளாடித்தள்ளாடியெல்லோ வீட்டுக்கு வாறானுக." மாரியம்மா சொல்லிமுடிக்கவும் ஆமா, ஆமாம்மா என்று கோரஸாக மற்றைய பெண்கள் ஆமோதித்தனர்.
அந்தப் பெண்கள் மத்தியிலிருந்து ஒரு இளம் பெண் எழுந்து சொன்னாள். "நாமே உழைச்சு பாடுபட்டுத்தான் சாப்பிடணும். நாமளும் பவல் முழுதும் நாயா அலஞ்சு உழைச்சு குழந்தைகுட்டியைக் காப்பாத்தனும்." சொல்லி முடித்ததும் பெரும் பாரத்தை இறக்கிவைத்தது போலிருந்தது.
இன்னொருத்தி, பின்னிருப்போரைத் தள்ளி விலத்திவிட்டு முன்னுக்கு வந்து, "ஒருத்தன் மட்டுமா கொட்டிலுக்குப் போறான்? ஒண்ணாக் கூடியல்லோ போறாங்க. குடிச்சிட்டு வந்து சும்மா கிடப்பாங்களா? அடியே

புடியே எண்டு வீறான வார்த்தைகள். அடி, உதை, சண்டை, பண்டம் பாத்திரத்தை நொருக்குவானுங்க. உடைச்சு வீசுறாங்க. இந்தக் கொடுமைக்கு ஒரு வழிபார்த்துக் குடுங்கம்மா" என்று கெஞ்சினாள்.
"முந்தாநாத்துக்கூட நம்ம அக்காவும், மவளும் அவங்க வீட்டுக்காரங்க குடிச்சிட்டு வந்து அடிச்சுப் புரளி பண்ணாங்களேன்னு லயக்காம்பராவைவிட்டிட்டு, ஒடிப்போய்த் தேயிலைச் செடிக்குள்ள ஒழிச்சிருக்குதுகள். இது தேவையா அம்மா?"
"நம்மாட்கள் திருந்தவே மாட்டானுக. இதுக்கு ஒரு வழி சொல்லுங்கம்மா."
அங்கு கூடியிருந்த பெண்களின் அவலங்கள் பெண்கள் மேம்பாட்டுச் சங்கத் தலைவி திலகாவின் காதுகளில் நாராசமாக ஏறியது. அவர்களது நிலைமையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
சில நிமிடங்கள் சிந்தித்தாள்.
"குடி குடியையே கெடுக்கும். கூடியளவு நாம் குடிக்கு எதிராகப் பிரசாரம் செய்வோம். குடியில் மூழ்குவோருக்கும் அறிவுரை கொடுப்போம். அதே வேளையில், இந்தக் கள்ளுக் கசிப்பு இவற்றை விற்பனை செய்வோர் யார்? அவரையும் சந்தித்து பிரச்சினையைத் தீர்க்க வழிகளை கையாள வேண்டும். அதற்கு நீங்கள் யாவரும் ஒற்றுமையுடன் ஒன்று சேரவேண்டும். குடியின் கேட்டினை முதலில் விளக்குவோம்" என உறுதியாகக் கூறினாள்.
பல பிரசுரங்கள் கிளம்பின. ஒழிப்புக் கூட்டங்கள் நிகழ்ந்தன.
ஊற்றிய நீர் குடத்தினுள்ளே சேரவில்லை. வெளியே வடிந்து வீணாகின. s
மற்றொருநாள் நடைபெற்ற மாதர் மேம்பாட்டுச் சங்கக் கூட்டத்தில், உறுதியூட்டும் வகையில் கருத்துத் தெறித்தது.
"பெண்ணால் முடியாதது ஒன்றுமில்லை. ஆவதும் பெண்ணால், தீமை அழிவதும் பெண்ணாலே தான். எல்லாப் பெண்களுமே மன உறுதியோடு திடசங்கற்பம் கொண்டால் குடியை மட்டுமல்ல, எந்தத் தீய காரியத்தையும் அழித்தொழிக்கமுடியும். இதற்கு உங்களிடம் உறுதியும், ஒற்றுமையும் அவசியம்." இந்தக் குரல் எல்லாருடைய மனதிலும்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 11
அழுத்தமாகப் பதிந்தது.
இச் சொற்கள் ஆபரணத்தின் மனதில் ஒரு தடவையல்ல, ' கிராமபோன்' தட்டில் பதிந்த பாடல்களைப் போல பல தடவைகள் சுற்றிச் சுற்றி நினைவில் பதிந்துகொண்டது.
நரம்புகளில் ஒரு துருதுருப்பு, ஒரு வேகம் முனைந்து நின்றது. இமைகள் பாரமாகிக் கனத்தன.
மாதர் சங்கக் கூட்டத்தில் திலகாவின் முழக்கம் ஆபரணத்தை மாத்திரமல்ல, பூரணம், கோமதி, லெச்சுமி, சுப்பம்மா எல்லோரையுமே தட்டிவிட்ட குதிரை மாதிரி வேகங் கொள்ளச் செய்தது; நிமிர்ந்தெழப்பண்ணியது.
எமது உடனடிப் பிரச்சினை என்ன?
குடி, குடித்துவிட்டு வரும் ஆண்களினால் படும் கொடுமை.
இதனை ஒழிப்பதே நமது கடமை. தொடர்ந்தும் பல கூட்டங்கள், சந்திப்புக்கள், தீர்மானங்கள், திட்டங்கள், செயலாக்கங்கள்.
ஆபரணம் தலைமையில் பெரும் புரட்சியை நோக்கித் திட்டம் உருவானது.
ஒவ்வொருவர் உள்ளத்திலும் வைராக்கியம் உறுதி இறுகியது.
சில நாட்களின் பின்.
கொட்டையெழுத்தில் வெளியான பத்திரிகைச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"கந்தசுவாமி மலைத் தோட்டத்தில் இருந்த கள்ளுக் கொட்டில்கள் தீயினால் எரிந்தன."
இனந்தெரியாதோரின் இச்செயலை அடுத்து, இனிமேல் கள்ளு இங்கே விற்கக்கூடாது என அந்தத் தோட்டப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருப்பதாக பத்திரிகையில் செய்தி பரபரப்பாக வெளியாகி இருந்தது.
米米米米米

போலிச் சிரிப்புகள்,
இவற்றுடன் பிறர், இன்பத்துடன், ஒற்றுமையுடன், ஒழுக்காமையுடன்.
உண்மையை உணர்ந்து உணர்ச்சி வசப்படுகிறேன்- நான்.
உலகத்தை எண்ணாது 2.695
நங்கியி '4::
காத்திருக்கிறேன். உணர்வுப் போராட்டத்தின்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 12
ந்ெதச் சமூகத்திலும் உணவு தேடுதலே பிரதானமானதாய் இருந்து வந்துள்ளது. மக்களுக்கு உணவு அளிக்கப்படாவிடின் வேறு கடும் உழைப்பு சம்பந்தப்பட்ட முயற்சிகள் செயற்படாது போய்விடும். மிருகங்கள் நாளாந்தம் உணவு தேடுதலையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மனிதனும் உணவு வழங்கலைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்காவிடில் முன்னேற முடியாது. உணவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்பது இன்றைய தேவையோடு நாளைய தேவைக்கும் உதவும் மேலதிக உணவைச் சேர்த்து வைப்பதாக இருக்கவேண்டும்.
இதிலிருந்து மனித வரலாறு இரண்டு சகாப்தங்களை உள்ளடக்கியிருப்பதை பார்க்கக் கூடியதாய் உள்ளது. முதலாவது பன்னூறாயிரம் வருடங்களை உள்ளடக்கிய உணவு சேகரிப்பு சகாப்தமாகவும், இரண்டாவது 8000 வருடங்களுக்கு முற்பட்ட உணவு உற்பத்திச் சகாப்தமாகவும் விளங்குகின்றன.
உணவுச் சேகரிப்பு காலம் பால்நிலைப்பட்ட வேலைப்பிரிவை உள்ளடக்கிய எளிமையான காலம். ஆண்கள் வேட்டையாடலில் ஈடுபட, பெண்கள் தாம் வாழும் இடத்தை சூழவுள்ள மரக்கறிவகை உணவுகளைச் சேகரிப்போராய் இருந்தனர்.
sfaho joirj6öT GLos Git (Otis Tufton Mason) அவர்கள் கூறுவது போல் மிக நம்பகமான உணவு விநியோகம் என்பது ஆண்கள் தரும் வேட்டையாடப்பட்ட மிருகங்களால் ஏற்பட்டது அல்ல. மாறாக பெண்களின் சேகரிப்பினால் பெறப்பட்ட மரக்கறி உணவு வகைகளே எனலாம். அலெக்சாண்டர் கோல்டன் வேய்செர் (Alexander GoldenWeiser) என்பாரும் அக்கருத்தையே அழுத்துகிறார். ஆண்கள் வேட்டையாடப் போய் எதுவுமின்றி வெறுங்கை யோடு வரும் போது, பெண்களால் சேகரிக்கப்பட்ட மரக்கறி உணவுவகையே அவர்கள் பசியைத் தீர்ப்பதற்கும், முழுக் குடும்பத்திற்கும் உணவாக அமைகிறது.
ஆகவே, நம்பகமான உணவு விநியோகம் என்பது வேட்டையாடும் ஆண்களால் அல்ல, சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களாலேயே நிறைவேறியது.
1
 

ஈவ்லின் ரீட்
இன்னொரு முக்கியமான அம்சம் என்னவெனில், பெண்கள் கிழங்குகள் கிண்டி, வேர்களைக் கல்லி மரக்கறி உணவுவகை தேடியதோடு நிற்காமல் சிறுவேட்டையாடலிலும் ஈடுபட்டார்கள். இதன் விளைவாய் முயல், ஒணான் போன்ற சிறு மிருகங்கள் உணவுக்கு முக்கிய பொருட்களாய் அமைந்ததோடு, இத்தகைய மிருகங்கள் உயிரோடும் கொண்டுவரப்பட்டு வீட்டுபிராணிகளாய் வளர்க்கப்படும் புது விதப் பரிசோதனைகளையும் பெண்களே ஆரம்பித்து வைத்தனர். மேசன் என்பார் இது பற்றிக் கூறும்போது சிறு ஆட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி போன்றவை வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவற்றுக்கு பாலூட்டி, பராமரிப்பது பெண்களாலும் அவர்களின், பிள்ளைகளாலுமே நடைபெற்றன என்கிறார்.
அடுத்த முக்கிய அம்சம் என்னவெனில் பெண்களின் உணவு சேகரிப்பானது மிருகங்களை வளர்க்கும் தொழிலில் ஈடுபடவைத்ததோடு, விவசாயத்திலும் ஈடுபடவழியமைத்தது. நிலத்தை கிண்டி இவர்கள் கிழங்கு வகைகளை பெறுவதற்கு கூரான தடியைப் பாவித்தனர். பெண்ணொருத்திக்கு அவள் பாவித்த கூரான தடி அவளது பிள்ளை போலவே என்றும் பிரிக்க முடியாது அவளோடு இருந்து வந்தது. நெவாடாவிலும், 606) (SLLJITL6ril>h (Nevada and Wyoming) 6) Typigs இந்தியர்கள் கிண்டுவோர்கள்’ (Diggers) என்றே வெள்ளைக்காரர்களால் அழைக்கப்பட்டனர்.
இத்தகைய கிண்டும் கோலினாலேயே பெண்களான வர்கள் இறுதியில் விவசாயத்தைக் கண்டுபிடித்தனர். சேர் (Eggh 6io &SCO6nofi (Sir James Frazer) 6T6öTurti அவுஸ்திரேலியாவிலுள்ள மத்திய விக்ரோறியா பூர்வகுடிகளை உதாரணமாகக் கொண்டு இதை நன்கு விளக்குகிறார்.
"வேர்களைக் கிண்டுவதற்கு இவர்கள் பாவித்த கோலானது ஏழு, அல்லது எட்டடி உடையதாய் இருந்தது. நெருப்பில் சுடப்பட்டு வைரம் பாய்ந்த இத்தடி, கூராக்கப்பட்டதாய் இருந்தது. இத்தடியானது அவர்களுக்கு தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய கருவியாக இருந்ததோடு இதிலிருந்தே அவர்கள் விவசாயத்தின் முதற்படியையும் அறிந்து கொண்டனர்." •
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 13
"இந்த நீண்ட தடியானது பலமாக நிலத்தி பாய்ச்சக்கூடியதாகவும் அதனால் நிலத்தை இள வைக்கக்கூடியதாகவும் இருந்தது. கிழங்குகளைய வேர்களையும் தேடி நிலத்தைக் கிண்டிய செயல் நிலத்ை வளப்படுத்திற்று. அதனால் கிழங்குகளையும், மூலின களையும், வேர்களையும் தரும் செடிகள் வளரலாயின. மேலு தடியினால் நிலம் கிண்டப்படும் போது விதைகளும் இதனா விதைக்கப்படலாயின. காற்றால் தூவப்பட்ட விதைகளு முளைத்து இதனால் பயன்தரலாயின."
நாளடைவில் பெண்கள் இதிலிருந்து எவ்வா தேவையற்ற களைகளைக் களைந்து, தேவையா பயிர்களைப் பேணுவது பற்றியும், பயிரிடுவது பற்றிய அறிந்தனர்.
& Tsui), air (Chappel and Coon) 95Gu "தேர்வு என்பது விவசாயத்திலும் புதிய மாற்றங்கை ஏற்படுத்திற்று. புதிய தாவரங்களும் மரக்கறிகளு பயிரிடப்படலாயின. மலென்ஸியா (Melanesia) மக்கள் ஆ அடி நீளமானதும், ஓரடி அகல மானதுமான கிழங்எ
t
பயிரிட்டனர்" என்கிறார்கள்.
மேசன் என்பார் பின்வருமாறு விவசாயத்ை நோக்கியு முன்னேற்றத்தை சுருக்கிக் கூறுகிறார்: "ஆர விவசாயம் என்பது மரக்கறி வகையைத் தேடிச்சென் அவற்றை பெற்று, பின்னர் விதைகளை விதைத்து, அவற் கைகளால் பயிரிட்டு, இறுதியில் மிருகங்களை இவற்று
 

பயன்படுத்துவதில் முடிந்தது."
கோர்டோன் சைல்லட் (Gordon Childe) என்பார் "முக்கியமான ஒவ்வொரு தாவரமும், இன்னும் பருத்தி போன்ற இத்தகைய தாவரங்களும் பெண் களினாலேயே கண்டுபிடிக்கப்பட்டன" என்கிறார்.
பயிர்ச்செய்கையைக் கண்டுபிடித்ததும், விலங்கு களை வளர்க்கத்தொடங்கியதும் மனிதனை சேகரிப்பு உணவு சகாப்தத்திலிருந்து உணவு உற்பத்தி சகாப்தத்திற்கு
முன்னேறச் செய்தது. இச்செய்கையானது உணவ உற்பத்தியை மனிதனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரச் செய்தது. இது பெண்ணாலேயே சாத்தியமானது. இப்பாரிய விவசாயப் புரட்சியானது விலங்குகளுக்கும், மனிதருக்கும் உணவு வழங்கியது. இப்பாரிய புரட்சியானது பெண்களின் குழிதோண்டும் கோலால் ஏற்பட்ட மகத்தான சாதனையாகும்.
இத்தகைய உணவு விநியோகமானது, வெறுமனே மண்ணை நம்பியதால் ஏற்படவில்லை. பெண் தனது கடும் உழைப்பினை நம்பியதால் ஏற்பட்ட மாற்றமே இது. ஒவ்வொரு செயலிலும் அவள் புதியவற்றை அறிந்து, கண்டுபிடிப்புச் செய்கிறாள். ஒவ்வொருவிதமான பயிர்களுக்கேற்ப அவள் அவற்றைப் பயன்படுத்தும் முறையும், கண்டுபிடிப்பும் மாற்றமடைகின்றன. சூடுமிதித்தல், தூற்றுதல், இடித்தல் என்று ஒவ்வொரு வகையான தொழில்நுட்ப முறைகளையும், அவற்றுக்கான கருவிகளையும் பெண்ணே கண்டுபிடிக்கிறாள்.
வேறுவார்த்தைகளில் சொல்வதானால், மேசன்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 14
அவர்கள் குறிப்பிடுவது போல் "பெண்ணின் தொழில் சம்பந்தப்பட்ட முழுவாழ்க்கையே உணவு விநியோகத்தை சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கால்நடையாக உணவு தேடும் மூலப்பொருட்களுக்காக அலைந்ததிலிருந்து, உணவு பரிமாறப்பட்டு சாப்பிடும் வரை, ஒரு தொடரோட்டமாக இடம்பெறும் இத்தன்மையானது சூழலைச் சுற்றியே இடம் பெறுகிறது" என அறியமுடிகிறது.
ஆரம்பத்தில் இடம்பெற்ற பால்நிலைப்பட்ட தொழில் பிரிவானது அனேகமாக தவறான தரவுகளைக் கொண்டதாக எளிமைப்படுத்தப்பட்டுக் கூறப்படுகிறது. ஆண்களே வேட்டைக்குச் சென்று பொருள்தேடுவோராகவும், பெண்கள் வீட்டுவேலைகளையும் பிள்ளைகளையும் கவனிப்போராகவும் இருந்தனர் என்ற ரீதியில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபரிப்பானது ஆதிக் குடும்ப வாழ்க்கை என்பது இன்றைய நவீன குடும்பவாழ்க்கையின் மறுபிரதி போல காட்ட முயல்கிறது. அதாவது ஆண் எல்லாத் தேவைகளையும் வழங்க, பெண் சமையல் வேலைகளையும், பிள்ளைகளைப் பராமரிப்பு வேலைகளையும் கவனிக்கின்றாள்
என்ற போக்காகும். இது முழுப்பிழையான திருகப்பட்ட
தகவல்களைத் தருகிறது.
உணவு தேடுதலில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்த வித்தியாசத்தைத் தவிர, உயர் தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்தப் பிரிவும் இருக்கவில்லை. காரணம் ஆதியில் இடம்பெற்ற தொழில் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க பெண்ணின் கையிலேயே இருந்தது. சமையல் என்பதுகூட இன்று நாம் காணும் சமையல் போல் இருக்கவில்லை. சமையல் என்பது நெருப்பையும், அதைக் கையாளுவதையும் கண்டுபிடித்த பின்னர், நிருவாகத் தொழில்நுட்பமாகவே பெண்ணிடம் செயற்பட்டது.
மிருகங்கள் நெருப்புக்கு பயந்து ஓடின. இருந்தும், மனிதன் முழுமனிதனாகத் தோற்றம் பெறுவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட நெருப்பை மிக ஆளுமையோடு தன்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தான். இயற்கையின் இப்பெரும் சக்தியை எரித்தும், அணைத்தும், அதை வேறு இடங்களுக்கு கடத்திச் சென்றும் மனிதன் மிருகங்களிலிருந்து வேறுபட்டு ஒரு பெரும் புரட்சியைச் செய்தான் என்று கோர்டன் சைல்ட் கூறுகிறார்.
நெருப்பின் மூலம் பெறப்பட்ட சமையல் தொழில் நுட்பமானது - அவித்தல், வாட்டுதல், வேகவைத்தல் - பெண்களாலேயே அபிவிருத்தி செய்யப்பட்டது. இத்தொழில்
13

ட்பத்தின் மூலமாகவே உணவைப் பாதுகாக்கவும், திர்காலத்திற்குப் பேணி வைக்கவும் பெண்ணால் முடிந்தது.
இதையும் விட நெருப்பு இன்னொரு முக்கியமான ங்கையும் வகிக்கிறது. இது ஒரு கருவியாகவும் ஆதிச் மூகத்தவரால் பாவிக்கப்பட்டது. இன்றைய நவீன யுகத்தில் lன்சாரத்தையோ, அனல் மின்சாரத்தையோ பாவிப்பதும், ட்டுப்படுத்துவதும் போலவே, ஆதிமனிதன் நெருப்பைப் யன்படுத்தியதும் முக்கியமானதாகும். இதன் தொழில் நுட்பங்களை பெண்ணே அறியக் காரணமானாள்.
முதல் தொழில் சம்பந்தப்பட்ட வேலை என்பது பண்ணைச் சுற்றி நடைபெற்ற உணவு விநியோகமாக அமைந்தது. அதன் பின்னர் அவற்றைப் பாதுகாப்பதும், அப்படிப் பாதுகாப்பதற்கான பொருட்களைத் தேடுவதும் அவளைச் சுற்றியே இடம் பெற்றது. உணவுத்தானியங்களைப் பேணுவதற்கான பெரும் களஞ்சிய அறைகளையே பெண்ணே ரற்படுத்தினாள். ஈரலிப்பான இடங்களில் நிலத்திற்கு மேலாக நடிகளைக் கொண்டு இத்தகைய களஞ்சியங்களை அவர்கள் ரற்படுத்தினர். இவர்கள் களஞ்சியப்படுத்திய தானியங்களை அழித்த எலி போன்ற பிராணிகளைக் கொல்வதற்கு பூனைகளையும் இவர்களே வளர்த்தனர். இதுபற்றி மேசன் பெண்களை பாராட்டுகிறார். "இவ்வாறு களஞ்சியங்களை ஏற்படுத்தி, அவற்றை எலி போன்ற பிராணிகளிலிருந்து காப்பற்றியமைக்கு பெண்களுக்கு உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது" என்று அவர் கூறுகிறார்
மேலும் உணவில் இருந்த ஆபத்தான, நச்சுத்தன்மை கொண்டிருந்த பொருட்களையும் பெண்ணே அகற்றுவதற் குரிய வழிகளைக் கண்டாள். இயல்பான நிலையில் நச்சுத்தன்மையானவற்றை நெருப்பின் மூலம் சூடாக்குவ தனால் அவற்றை இல்லாமல் செய்தாள். இவற்றைப் பற்றியும் மேசன் குறிப்பிடுகிறார்.
உதாரணமாக மரவள்ளிக் கிழங்கு நச்சுத்தன்மை கொண்ட இயல்புடையதாய் இருந்த போதும், அதை நெருப்பில் வாட்டுவதன் மூலம் அதன் நச்சுத்தன்மை போக்கப்படுகிறது.
சாப்பிடுவதற்கு உகந்ததற்ற பல்வகையான தாவரங்களும், பொருட்களும் பெண்களின் தொழில்நுட்ப ஆற்றலால் பாவனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. டாக்டர் டான் மக்னீஸ் (Dr. Dan McKenzie) என்பவர் பல்வகையான நாட்டு வைத்திய முறைகள் ஆதிகாலத்துப் பெண்களால் அறியப்பட்டிருந்தமை பற்றிக் குறிப்பிடுகிறார். இவை இன்னும் மாற்றமின்றிப் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிறிதளவு
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 15
அபிவிருத்தி செய்யப்பட்டு பயன்படுவதாகவும் குறிப்பிடுகிறார். அனேகமான மூலிகை வகைகள் பெண்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதுடன், தொழுநோய் போன்றவற்றுக்கும் இவர்கள் கண்டுபிடித்த மூலிகை எண்ணெய் வகைகள் உதவியுள்ளன எனக் கூறப்படுகிறது.
இன்னும் பாம்புக் கடி போன்றவற்றுக்கும் இவர்கள் பாம்பு நச்சையே விஷமுறிப்பு பொருளாய் பாவித்துள்ளனர். மேலும் உணவு விநியோகத்திற்குத் தேவைப்பட்ட பாத்திரங்கள், கொள்கலன்கள், சமையலுக்கான பாத்திரங்கள் என்று இவர்களாலேயே பலவும் உற்பத்தி செய்யப்பட்டன. இவையும் சுற்றுச் சூழலுக்கேற்ப அங்கு கிடைத்த மரம், மரப்பட்டை தோல், தும்பு போன்றவற்றால் செய்யப்பட்டன. இறுதியாக பெண்களே களிமண்ணிலிருந்து பானை வனைதலையும் கண்டுபிடித்தனர்.
இத்தகைய பொருட்களைச் செய்வதற்கு நெருப்பு ஒருகருவியாக இயங்கிற்று. இது பற்றி மேசன் அவர்கள் குறிப்பிடுகையில் "இந்தச் செய்கை முறையைக் கொண்டே, தோணிகளும் கடல் பிரயாணத்திற்கான ஏனைய கப்பல்களும் செய்யப்பட்டன" என்கிறார்.
"நெருப்பை அளவாக எரியூட்டி, மரங்களின் உட்பகுதி கோதி எடுக்கப்பட்டு, அவை பின்னர் கூரான கற்களால் செதுக்கப்பட்டு நல்வடிவமாக்கப்பட்டன. இவ்வாறே பாத்திரங்களும் செய்யப்பட்டன. அப்பாத்திரங்களை வெப்பமூட்டப்பட்ட கற்கள் மேல் வைத்து உணவை வேகவைக்கவும் அவர்கள் செய்தனர்" என்று மேசன் குறிப்பிடுகிறார். இத்தகைய அபாரமான மாற்றத்தின் மூலம் நெருப்பால் எரிக்கப்படக்கூடிய ஒரு மரப்பலகையானது, உணவைத் தயாரிக்க உதவும் பாத்திரமாக மாறிற்று.
இவ்வாறு பெண்கள் உணவுற்பத்தியில் ஈடுபட்டதன் மூலம் ஏற்பட்ட தொழில்வளர்ச்சி, ஒன்றையொன்று தொட்டு ஓர் சூழல் முறையில் மேலோங்கிற்று. புதிய தேவைகள் புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்தின. இதனால் பெண்ணே எதிர்வரவிருந்த உயர் கலாசாரத்திற்கு அடிகோலிய வளாகிறாள்.
இவ்வாறே பெண்களின் தொழில் சம்பந்தப்பட்ட வளர்ச்சியோடு விஞ்ஞானமும் எழுச்சிபெற்றது. இது பற்றி கோர்டன் சைல்ட் என்பார் விபரிக்கிறார். "வெறும் மாவிலிருந்து பாண் (Bread) தயாரிப்பதற்கான இடைவெளிக்குள் நிகழ்த்தப்படும் கண்டுபிடிப்புகள், உயிரியல்

ரசாயனம் என்பவை அனேகம். பெண்களே பானை தயாரிக்கும் ரசாயன வித்தையிலிருந்து நூல்நெய்தலுக்கான பெளதீக வித்தைக்கெல்லாம் காரணமாக இருக்கிறார்கள்."
துணி நெய்தல், மரப்பட்டை, புல் போன்றவற்றிலிருந்து தும்புதிரித்தல் யாவும் பெண்களின் அபரித ஆற்றலைக் காட்டுவதாகவும், இது இன்றுள்ள ஆண்களால் தொழில் நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தியும், பின்பற்றமுடியாத ஒன்றாகவும் இருக்கிறது.
பெண்கள் செய்நேர்த்திமிக்க தொழிலாளராக மட்டும் இருக்கவில்லை. பொருட்களையும்,தளபாடங்களையும் காவிச் செல்வோராகவும் இருந்தனர். மிருகங்களைப் பயன்படுத்தும் முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஆதிகாலத்தில் பொருட்களைக் காவிச் செல்வோராகவும் பெண்கள் இருந்தனர். அவர்கள் தமது தொழிலுக்கான மூலப் பொருட்களை மட்டும் காவிச் செல்லவில்லை. ஒரு குடும்பத்திற்குத் தேவையான முழுப் பொருட்களையும் ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பெண்கள் தமது தொழிலில் ஈடுபடத் தொடங்கிய போது அவர்களுக்கு அதைக் கற்றுதர எவரும் இருக்கவில்லை. அவர்களது இடையறாத முயற்சியாலும், மனோபலத்தாலும் இயற்கையிலிருந்தே தாம் கற்றுக் கொண்டதன் மூலமும் அவர்கள் இவற்றை செயற்படுத்தினர்.
ஆதிகாலத்தில் பெண்கள் தமது வேலையை எளிமையான முறையில் செய்து வந்ததால் வரலாற்று ஆசிரியர்கள், அவர்கள் ஆற்றிவந்த தொழில் அனைத்தையும் குடும்பத்திற்குரிய கைப்பணிவேலைகளாக ஒதுக்கினர். உண்மையில் யந்திரங்கள் போன்றவை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் கைப்பணிவேலையைத் தவிர, வேறு பிரத்தியேக வேலைகள் இருக்கவில்லை. நகரங்களில் பெருந்தொழிற்சாலைகள் ஏற்படுவதற்கு முன்னர், நடைமுறையில் இருந்த தொழிற்சாலைகள் என்பவை இந்த 'குடும்பத்தை ஒட்டியவையாகவே இருந்தன. இவையில்லா விட்டால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் தோன்றியிருந்ததொழிற்கூட்டுக்கள்'(Guilds) ஏற்பட்டிருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இன்றைய நவீன யந்திர உலகே ஏற்பட்டிருக்க முடியாது.
பெண் தொழிலில் ஈடுபடத்தொடங்கியதுமே, மிருக நிலையிலிருந்து மனித இனம் மேலெழுகிறது. அவர்களே தொழிலினதும், தொழிற்சபையினதும் ஆரம்பகர்த்தாக் களாகவும் முன்னோடிகளாகவும் உள்ளனர். இதனால் குரங்கு
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 16
நிலையிலிருந்து மனித இனம் மீட்கப்பட்டதோடு மொழியும் அங்கே தோன்றுவதாயிற்று. ஏங்கல்ஸ் (Engels) சொல்வது போல், தொழிலானது ஒரு சமூகத்தின் மக்களை ஒன்றிணைய வைக்கிறது. இந்த ஒன்று கூடல் மொழியின் விருத்திக்கும் காரணமாகிறது.
ஆண்கள் தமது வேட்டைத் தொழிலின் காரணத்தால் அதற்குரிய சொற்களை விருத்தி செய்திருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், மொழியின் உண்மையான தோற்றம் பெண்கள் தொழிலில் ஈடுபட்ட செயல்மூலமாகவே எழுகிறது.
மொழி விருத்தி பற்றி மேசன் கூறும் போது, "பெண்கள் சதா தமது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களையே மனதில் உருப்போட்டதால் அதற்குரிய சொற்களை அவர்களே கண்டுபிடித்தனர்" என்கிறார். இது பற்றி டாக்டர் பிறின்ரன் (Brinton) என்பவர் கூறுகையில் "ஆதி மொழிகளின் விவரணமுறை அனேகமானவை பெண்களுடையனவாக மட்டும் இருக்கவில்லை. பெண்களுக்கு வேறானவை, ஆண்களுக்கு வேறானவை என்ற ரீதியிலும் அமைந்திருந்தன. இன்னும் ஆதி மனிதர்களான வேட்டையாடுதலிலும், மீன்பிடித்தலிலும் ஈடுபட்ட ஆண்கள் தனிமைப்பட்டவர்களாக, கதைத் தொடர்பு அற்றவர்களாக இருந்தனர். ஆனால், ஒன்றுகூடியிருந்த பெண்கள் நாள்பூராவும் கதைப்பவர்களாகவும், கலாசாரத்தின் மையமாகவும் இருந்ததோடு இன்றும் சிறந்த அகராதியாகவும், கதைப்போராகவும், கடிதம் எழுதுவோராகவும் உள்ளனர்" என்கிறார்.
மனிதப் பேச்சும், தொழிலும் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதக் கூட்டுத்தன்மையை பிரதிநிதித்துவப் படுத்தின. மிருகங்களும் இயற்கையின் சட்டதிட்டங்களுக் கமைய செயற்பட்டதால் தமக்குள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டன. ஆனால், பெண்கள் தமது தொழில் செயற்பாட்டின் மூலம் இயற்கையோடிருந்த தொடர்பை நீக்கி, புதிய மனிதக் கூட்டு உறவை ஏற்படுத்தினர். இத்தகைய செயல் மூலம் பெண்கள் மனிதனை மிருக நிலையிலிருந்து விடுவித்து மனித நிலைக்கு உயர்த்தியதோடு, சமூகமயப்பட்ட தன்மையையும் ஏற்படுத்துகிறார்கள்.
இதன் மூலம் பெண்களே முதல் தொழிலாளராகவும், விவசாயிகளாகவும், முதல் விஞ்ஞானிகளாகவும், முதல் மருத்துவர்களாகவும், தாதிகளாகவும், கலைஞர்களாகவும், வரலாற்றாசிரியர்களாகவும், சமூக கலாசார பராம்பரியங் களைக் கடத்துவோராகவும் மாறினர். அவர்கள் ஆளுமைக்குட்

பட்டிருந்த குடும்பம் என்பது சாதாரண வீட்டு சமையலறையாக மட்டும் இருக்கவில்லை. அவையே தொழிற்சாலைகளாகவும், விஞ்ஞான கூடங்களாகவும் மருத்துவ நிலையங்களாகவும், பள்ளிக்கூடங்களாகவும், சனசமூக நிலையங்களாகவும் இருந்தன.
பெண்களால் கண்டுபிடிக்கப்பட்ட பயிர்ச்செய்கையும் மிருக வளர்ப்பும் ஆண்களை அவர்களது வேட்டையாடும் அலைச்சலிலிருந்து விடுவித்தது. வேட்டையாடல் பின்னர் பொழுதுபோக்கும் விளையாட்டாக மாறியது. அதனால் ஆண்கள் கல்வி கற்பதற்கும், தொழிலிலும், கலாசார வாழ்விலும் பங்குபற்றுவதற்கும் வழிவகுத்தது. உணவு உற்பத்தி அதிகரிப்பினால் ஜனத்தொகை கூடிற்று. நாடோடிகளின் முகாம்களாக இருந்த இடங்கள் நிலையான கிராம வாழ்வுக்கும், பட்டின, நகர உருவாக்கத்திற்கும் வழிவகுத்தன.
ஆனால் பெண்கள் போலல்லாது ஆண்கள் எதையும் ஆரம்பத்திலிருந்தே கற்கவேண்டியிருக்கவில்லை. அவர்கள் வெகுசீக்கிரத்திலேயே பெண்கள் திறன் பெற்றிருந்த சகல வேலைகளையும் பயின்றதோடு, அவற்றை மேலும் திருத்தி முன்னேற்றியதோடு புதிய கண்டு பிடிப்புகளையும் செய்தனர். பயிர்ச் செய்கையானது கலப்பையை கண்டுபிடித்ததோடும் மிருகங்களை வளர்க்கத் தொடங்கியதோடும் பெரும் பாய்ச்சலோடு முன்னேறியது.
பெண்களால் கொண்டுவரப்பட்ட பயிர்ச்செய்கைப் புரட்சியானது உணவுச் சேகரிப்பு சகாப்தத்திலிருந்து, உணவு உற்பத்தி சகாப்தத்தை வேறுபடுத்திக் காட்டுவதாய் அமைகிறது. அதே போலவே இது காட்டுமிராண்டி வாழ்விலிருந்து மனித நாகரீக வாழ்வில் புகுந்தமையையும் வேறுபடுத்துவதாய் உள்ளது. அத்தோடு இது புதிய சமூக அமைப்பைக் காட்டுவதோடு பால்நிலைப்பட்ட பிரிவில் இருந்த பொருளாதார சமூக தலைமைத்துவ போக்கில் ஒரு பின்தள்ளப்பட்ட மாற்றத்தையும் ஏற்படுத்திற்று.
இப்புது நிலைமை - உணவுற்பத்தி அதிகரிப்பினால் ஏற்பட்ட இப்புது நிலைமை - ஒர் புதிய உற்பத்திச் சக்தியை வெளிப்படுத்திற்று. அதோடு புதிய உற்பத்தி உறவு முறையினரையும் தந்தது. பழைய பால்நிலைப்பட்ட வேலைப்பிரிவு நீங்கி, புதுவித தொடர் சமூக வேலைப்பிரிவு ஏற்படலாயிற்று. விவசாயதொழிலானது, தொழிற்சாலைத் தொழிலிலிருந்து வேறுபடுத்தப்பட்டது. செய்திறன் வேலையிலிருந்து திறனற்ற வேலை வேறுபடுத்தப்பட்டது. படிப்படியாக பெண்களின் வேலை ஆண்களால் சுவீகரிக்கப்பட்டது.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 17
தொழில்நுட்பவிருத்
இலங்கையில் கமத்தொழிலில் பெண்களின் பங்களிப்பு எப்பொழுதும் உயர்வாகவே விளங்கி வந்தது. ஆனால், அண்மை வரை "ஆண்களின் வேலைகளில் அவர்களுக்கு உதவுகிறார்கள்" என்ற காரணம் கற்பிக்கப்பட்டு பெண்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டது. எனவே, வயல்களில் பெண்களின் வேலை அவர்களது குடும்பக் கடமைகளின் விஸ்தரிப்பாகவே நோக்கப்பட்டது.
"ஒரு பெண் தேநீரை, அல்லது மதிய உணவை தனது கணவனுக்குக் கொண்டு செல்கிறாள். அவன் இளைப்பாறும் வேளை, அவள் வயலில் வேலை செய்கிறாள். அறுவடை வேலையை பெண்களே மேற்கொள்கின்றார்கள். ஆனால், இது அவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய வேலையாகும். இவ்வாறே சமூகம் அவர்களை நோக்குகின்றது. எப்படியாவது வீட்டுக்குரிய நீரை மொண்டு வருகிறார்கள். அவர்கள் மரக்கறி பாத்திகளுக்கும் நீரை ஊற்றுவார்கள்." இவ்வகையான அபிப்பிராயங்கள் கமத்தொழில் =இ துறையில் பெண்களின் பங்கினை -— - உதாசீனம் செய்கின்றன.
கமத்தொழில் உற்பத்தியைப் பதப்படுத்துவதன் மூலம் அவர்களால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு கூட குறைத்து மதிக்கப்படுகின்றது. பெருமளவு பயிர்களைப் பொறுத் தளவில், பதப்படுத்தவில் ஓர் அம்சமானது பெரும்பாலும் பெண் களினாலேயே மேற்கொள்ளப் படுகின்றது. பாசிப் பயறு விதைகளை உலர வைத்தல், முந்திரிக் கொட்டையின் கோதை அகற்றுதல், அடுத்த செய்கைக்காக விதைகளைத் தயார்ப்படுத்தி, களஞ்சியப்படுத்தல், பெருமளவு மேட்டுநிலப் பயிர்களை நாட்டுதல் ஆகியன பெண்கள் மேற்கொள்ளும் பணிகளுக்குச் சில உதாரணங்களாகும்.
கடந்த சில வருடங்களில் கமத்தொழில் தொடர்பான வேலையில் பெண்கள் செலவழிக்கும் நேரத்தின் புரிந்துணர்வும், அவர்களால் மேற்கொள்ளும் வேலையும்
南
 
 

தீயை மேம்படுத்தல்
விசாகா ஹிதலகே கொள்கைப் பணிப்பாளர் இடைத்தர தொழில்நுட்பம், இலங்கை
ஆழமான ஆய்வுகள் ஊடாக முன்னேற்றத்தை அடைந்துள்ளன. கமத்தொழில் துறைக்கு பெண்களின் பங்களிப்பு மிகவும் உயர்வானதாகும் எனத் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்குச் சமாந்தரமாக கமத் தொழில்துறையில் தொழில்நுட்பத்தின் அபிவிருத்தி செல்கின்றது. அண்மை ITT கமத்தொழில் துறையானது LI FTIT LI LI flILLI தொழில்நுட்பத்திலேயே முற்று முழுதாகத் தங்கியிருந்தது. பெரும்பாலான பாரம்பரிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தும் தன்மையை 5L, நிருவகிக்கும் தன்மையின் அடிப்படையிலானவை என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். கிருமிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பறவைகளை உபயோகித்தல், நெல் வயல்களில் களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு நீர் மட்டங்களை உபயோகித்தல், கமத்தொழில் மீதங்களை உரமாக உபயோகித்தல் ஆகியன சில உதாரணங்களாகும். எனினும், கைத்தொழில் மயமாக்கலுடன் இயந்திரங்கள் கமத்தொழில் துறையினுள் ஊடுருவின. குறைந் தளவு நேரத்தில் அதிகளவு வேலையைக் கமக்காரர்கள் மேற் கொண்டு உற்பத்தித் திறனை உயர்த்துவதே பெருமளவு இயந்திரங் களின் பிரதான நோக்கமாகும்.
கடந்த சில வருடங்களில் பொருத்தமற்ற இயந்திரங்களை உபயோகிப்பதனால் ஏற்படும் மறுதலையான தாக்கங்களை மக்கள் உணரத் தலைப்பட்டுவிட்டனர். தற்போதைய பொருளாதாரத்தின் சந்தைக் கேள்விகளை நிறை வேற்றுவதற்கு கமக்காரர்களுக்கு = உதவும் பொருத்தமான இயந்திரங் களையும், தொழில்நுட்ப பதப்படுத்தல் கருவிகளையும் விருத்தி செய்வதற்கும், தமது வளங்களைச் சிறப்பாக நிருவகிப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்குமான அவசியம் குறித்து கமத்தொழில் துறையானது தற்போது அதிகளவு கரிசனையைக் கொண்டுள்ளது.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரப்

Page 18
கமத்தொழில் துறையின் ஒரு பிரிவில் நிலைத்திருத்தற் தொழில்நுட்ப அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பையும், இதில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்களையும் இலங்கை இடைத்தர தொழில்நுட்ப அபிவிருத்திக் குழாமின் கம - பதப்படுத்தல் திட்டத்தில் இருந்து இந்த விடய ஆய்வானது பரிசீலிக்கப்படுகின்றது.
சிறு அளவிலான முந்திரிக்கொட்டை பதப்படுத்து வோருடனான தொழில்நுட்ப அபிவிருத்தி வேலையில் இருந்து இந்த விடய ஆய்வு பெறப்பட்டுள்ளது.
கைத்தொழில்.
மரமுந்திரி ஒரு பருவகாலப் பயிராகும். இது மார்ச் - ஏப்ரலில் இருந்து ஆரம்பித்து ஜூன் - ஜூலை வரையிலான மூன்று, நான்கு மாதங்களுக்கு நீடிக்கின்றது. உலர் வலயத்தில் மரமுந்திரி பெருவாரியாக காணக் கிடைக்கின்றது. மரமுந்திரி விளைச்சல் அற்ற காலத்தின் போது, பாசிப்பயறு, கெளமீ, வெள்ளரி, மிளகாய், அவரை போன்ற ஏனைய வேறு
பணப்பயிர்கள் இதே நிலத்தில் பயிரிடப்படுகின்றன. ஆனால்,
வனாத்தவில்லு போன்ற பகுதிகளில் பெருமளவு குடும்பங்களின் பிரதான வருமானங்கள் மரமுந்திரி தொடர்பான வேலையாகவே விளங்குகின்றது.
இலங்கையில் முந்திரிக்கொட்டை பதப்படுத்தல் நுண்மட்ட குடிசைக் கைத்தொழிலாகவே பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. சுமார் தொண்ணுாற்றி ஒன்பது வீத முந்திரிக் கொட்டை பதப்படுத்துவோர் பெண்களாவர். அவர்கள் பாரம்பரிய பதப்படுத்தல் தொழில்நுட்பங்களை உபயோகிக்கின்றார்கள்.
இத்துறையில் இலங்கை இடைத்தர தொழில்நுட்ப அபிவிருத்திக் குழாம் தலையிட்டபோது கம்பஹா, வனாத்தவில்லு ஆகியவற்றில் (இவை கருத்திட்ட அமைவிடங்களாகும்) உள்ள பெரும்பாலான பெண்கள் சந்தையில் தொடர்புகளைக் கொண்டுள்ள இடைத்தரகர்களுக்காகவே வேலை செய்வதை அறிந்து, இவர்களில் ஐந்து வீதமானோர் சுயதொழிலாக முந்திரிக் கொட்டைப் பதப்படுத்தலை மேற்கொண்டனர். இவர்கள் இடைத்தரகர்களிடம் இருந்து முந்திரிக் கொட்டைகளைப் பெற்று, அவற்றின் கோதை நீக்கிவிட்டு, இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இச் சிறிய அளவிலான முந்திரிக் கொட்டை பதப்படுத்தும் பெண்களுடன் பணியாற்றிய மேற்படி குழாம் சிறிய அளவிலான முந்திரிக் கொட்டை பதப்படுத்தல் துறையைப் பாதிக்கும் முக்கிய அம்சங்களை அறிந்து கொண்டது. அவற்றில் சில வருமாறு.

முந்திரிக் கொட்டையின் கோதை நீக்குவதற்கு பெண்கள் பாரம்பரிய / அடிப்படை தொழில் நுட்பத்தையே உபயோகித்தனர்.
இதன் கருத்து என்னவெனில், சூரிய வெளிச்சத்தில் உலரவிட்டு, அதன் பின் கோதை நீக்குவதாகும். முந்திரிக் கொட்டையில் இருந்து வழியும் திரவம் சருமத்தில் அரிப்பினை ஏற்படுத்துகின்றது. இதில் இருந்து தமது கைகளைப் பாதுகாப்பதற்காகப் பெண்கள் தமது கைகளைச் சீலையால் சுற்றுகின்றனர். அவர்கள் கைகள் எப்பொழுதும் மண் நிறமாகவே தோற்றமளித்தன. இப்பதப்படுத்தலின் மூலம் ஏற்படும் அசெளகரியம் / சுகாதார கேட்டையிட்டு பெரும்பாலும் சகல பெண்களுமே சகித்துக் கொள்ள முடியாத போக்கினைக் கொண்டிருந்தார்கள். -
உயர்வான விலையைப் பெறுவதற்கு குறைந்த தரமான கருவிகளின் உபயோகம்.
சூரிய வெளிச்சத்தில் உலர வைக்கப்பட்டபின் முந்திரிக் கொட்டை நிலத்தில் அரைவாசி புதைந்திருக் கத்தக்கதாக பெரியதொரு கல்லில் வைக்கப்பட்டு, அதைத் திறக்கவைப்பதற்காக சிறிய கம்பி ஒன்றினால் அடிக்கப்படு கின்றது. இதை சரிவரக் கையாளாவிட்டால் உள்ளே உள்ள கொட்டை சிதைந்து விடும். இரண்டு, மூன்று துண்டுகளாகியும் விடும். முழுமையான கொட்டை உயர்வான விலையைப் பெறும். இதனால் உடைந்த கொட்டைகளை முழுமையாக்குவதற்கு அவற்றை ஒட்டும்படி இடைத்தரகர்கள் ஊக்கமளிக்கின்றார்கள். இதற்குப் பெண்கள் கோதுமை மா, சவ்வரிசி, அல்லது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் பசை, இரசாயனங்கள் ஆகியவற்றைக் கூட உபயோகிக்கிறார்கள். முந்திரிக் கொட்டையின் கோதை நீக்குவதை விட உடைந்த கொட்டைகளை ஒட்டவைப்பதில் சில பெண்கள் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர்.
சந்தையில் தமது பங்களிப்பை முந்திரிக் கொட்டை பதப்படுத்துவோர் தெரிந்திருக்க வில்லை.
தொண்ணுாற்றியொன்பது வீதத்திற்கு மேற்பட்ட சிறிய அளவிலான முந்திரிக் கொட்டை பதப்படுத்துவோர் பெண்களாவர். ஆனால், ஒரு குழுவாக தமது வலிமையைப் பெண்கள் அறிந்து வைத்திருக்கவில்லை. ஒவ்வொரு பெண்ணுமே தன்னை ஓர் ஆளாக நினைத்து, வாழ்க்கைக்காகப் போராட்டமே நடத்துகின்றாள். கூலிக்காக வேலை செய்த பெண்கள் கோது நீக்கப்பட்ட முந்திரிக் கொட்டையை விற்பது தமது ஆற்றல் அளவுக்கு அப்பாற்பட்டது டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 19
என நினைக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சாத்தியமான அளவு பெருமளவு கொட்டைகளின் கோதுகளை நீக்குவதே தமது பணி எனவும் அவர்கள் நினைக்கிறார்கள்.
சுயதொழிலாக முந்திரிக் கொட்டையின் கோதை நீக்கும் சில் பெண்கள் தமது குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர் ஒருவருக்கே அதை விற்பதற்கு பெரும்பாலும் கையளிக்கின்றார்கள். இந்த ஆண்கள் அவற்றை இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். சில இடங்களில் இவ்வாறு விற்பனையில் ஈடுபடும் மகன் விற்பனை அதிகரிக்கும்போது தனக்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்குகிறான். ஆனால், மணித்தியாலக் கணக்காக தனது உடல் உழைப்பை நல்கிய தாய்க்கு எவ்வித நன்மையுமே கிட்டுவதில்லை.
இக்கைத்தொழிலில் பெண்களின் தொழில்நுட்ப ஆற்றலளவு பெண்களாலும், கைத்தொழில் உள்ள ஏனைய முக்கியமானவர்களாலும் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.
சந்தையின் தரங்களுக்கு ஏற்பமுந்திரிக் கொட்டைகள் தயார்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறையை மேற் கொள்ளும் பெண்களுக்கு உரிய கரிசனை வழங்கப்படவில்லை. தமது தொழில்நுட்ப ஆற்றலளவையிட்டு அறிந்து வைத்திருப்பதில்லை. முந்திரிக் கொட்டை பதப்படுத்தல் ஒரு தொழில்நுட்ப ஆற்றலளவு என்பதை ஒரு சிலர் மட்டுமே இனங்கண்டனர். இவ்வேலையில் தமது திறமைத் தொழில் சட்டத்தை விருத்தி செய்வதற்கு பெண்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டவில்லை.
கைத்தொழிலில் தமது வளர்ச்சியை விஸ்தரிக்க முடியுமான தகவலை அடைய முடியாமை.
தமது வேலையில் செளகரியத்தைப் பேணுவதற்கான தொழில்நுட்பம் மீதான தகவலும், அவர்களுக்கு மிகவும் சாதகமான கடன் வசதிகளும் முந்திரிக் கொட்டையைப் பதப்படுத்தும் பெண்களை அடையவில்லை. தொழில்நுட்பம், சந்தை அம்சங்கள் மீதான தகவல் ஒட்டம் முறைசாராததாக விளங்குவதுடன், பெரும்பாலும் ஏற்றுமதியில் ஈடுபடுபவர்களில்இருந்து இடைத்தரகர்களுக்கு வந்தது. சந்தைப்படுத்தலில் பெண்கள் சம்பந்தப்படாததினால், இத் தகவலை இப்பெண்களால் அடைய முடியவில்லை.
கருத்திட்டம்
முந்திரிக்கொட்டையின் கோதை அகற்றுவதற்கான புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக
--

இலங்கை இடைத்தர தொழில்நுட்ப அபிவிருத்திக் குழாம் கருத்திட்டம் ஒன்றை வனாத்தவில்லுவில் 1994 இல் ஆரம்பித்தது. இங்கு விளைவிக்கும் பிரதான பயிராக மரமுந்திரி விளங்குகின்றது. தமது வாழ்வாதாரத்திற்கு சுமார் 90 வீதத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் முந்திரிக் கொட்டை தொடர்பான வேலை மீது தங்கியுள்ளன. நாட்டின் உலர் வலயத்தின் பகுதியான புத்தளம் மாவட்டத்தின் வடக்கில் வனாத்தவில்லு உள்ளது. குறைவான மழை வீழ்ச்சி, குறைந்த நீர்ப்பாசன வசதிகள், குறைபாடான மண் நிலைமைகள் ஆகியன இப்பகுதி நெல் பயிர்ச் செய்கைக்கு பொருத்தமற்றதாக்குகின்றன.
வனாத்தவில்லுவில் பெண்களைப் பொறுத்தளவில் முந்திரிக் கொட்டையின் கோதை அகற்றும் திறமை புதிதாக தேடிக் கொள்ளப்பட்டதொன்றாகும். பத்து வருடங்களுக்கு முன்புவரை ஆண்களும், பெண்களும் உலரா முந்திரிக் கொட்டைகளை, பிரதானமாக கம்பஹாவில் இருந்து வந்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்தார்கள். இந்த இடைத்தரகர்கள் கோதை அகற்றி உலரவைத்து, உயர்ந்த விலைகளில் ஏற்றுமதிக் கம்பனிகளுக்கு, அல்லது ஏற்றுமதியில் ஈடுபடுபவர்களுக்கு விற்பனை செய்தார்கள். இதன் மூலம் கம்பஹாவின் இடைத்தரகர்கள் கொளுத்த லாபம் ஈட்டிய அதே வேளை, வனாத்த வில்லுவில் உள்ள இக் குடும்பங்கள் மிகவும் சொற்ப வருவாயையே பெற்றன.
கம்பஹாவைச் சேர்ந்த ஒருவர் வனாத்தவில்லுவில் குடியேறிய போது முந்திரிக் கொட்டையின் கோதை அகற்றும் திறமை பரவியது. தொழில்நுட்பத்தின் இந்த முறைசாரா பரம்பல் வேரூன்றுவதற்கு சிறிது காலம் பிடித்தது. 1993 இல் சுமார் பதினைந்து பேர் வனாத்தவில்லுவில் முந்திரிக் கொட்டையின் கோதை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும், தமது உற்பத்தியை அவர்கள் கம்பஹாவில் இருந்து வந்த வர்த்தகர்களுக்கே விற்பனை செய்தார்கள். முந்திரிக்கொட்டை பதப்படுத்தல். விருத்தி செய்யப்பட்ட போது, இடைத்தரகர்கள் தமது வியாபாரத்தை வனாத்த வில்லுவில் ஆரம்பித்தார்கள். முந்திரிக் கொட்டை பதப்படுத்துவோராக அவர்கள் பெண்களைக் கூலிக்கு அமர்த்தினார்கள். இது அதிக நேரத்தை எடுக்கும், மிகவும் கஷ்டமான ஒரு பணியாகும். இதன் மூலம் பெண்கள் மிகவும் சொற்பமான வருவாயையே ஈட்டினார்கள். கூலிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர் ஆயிரம் முந்திரிக் கொட்டைகளின் கோதுகளை அகற்றுவதற்கு முப்பது ரூபாவை மட்டுமே பெற்றார். அனுபவமிக்க பெண் ஒருவர் நாளொன்றுக்கு நூறுரூபாவை ஈட்டினார்.
சுய தொழிலாக முந்திரிக் கொட்டை பதப்படுத்துவதை ஆரம்பிக்க பல பெண்கள் விரும்பினார்கள். ஆனால், பருவத்தின் போது ஒரு தொகை உலரா முந்திரிக்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 20
கொட்டையை வாங்குவதற்கான பணம் அவர்களிடம் இருக்கவில்லை. இச் சந்தர்ப்பத்தில் கிராமிய பிராந்திய அபிவிருத்தி வங்கி (கி.பி.அ.வ.) சிறு குழுக்களாக பெண்களை ஒன்று சேரும்படியும், தாம் அதற்கு கடனுதவி அளிப்பதாகவும் வாக்குறுதி அளித்தது.
இக்கடன் திட்டம் தான் 'இசுறு' - இது ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு வருடமும் ஐயாயிரம் ரூபாவை கடனாக அளித்தது. இதன் மூலம் பதப்படுத்துவோர் வருடம் முழுவதும் முந்திரிக் கொட்டை கையிருப்பை பராமரித்து, பருவமற்ற காலத்தில் விலை ஏறும் போது விற்பனை செய்யலாம் என வங்கி நம்பிக்கை கொண்டிருந்தது. 1994இல் 14% வட்டியில் கடன் வழங்கப்பட்டது. உயர்வான மீள் கொடுப்பனவு வீதத்தைக் காட்டியவர்களுக்கு உச்சக் கடனாக 20,000 ரூபாய் வழங்கப்பட்டது.
சுய தொழிலுக்காக முந்திரிக் கொட்டை கையிருப்புக்களை கொள்வனவு செய்வதற்காக மூலதனமாக இதில் முழுமையாக தங்கியிருக்கும் பெண்களுக்கு மிகவும் உபயோகமான கடன் வசதியாக இசுறு' விளங்குகின்றது. ஆனால், இங்கு பிரச்சனைகள் தோன்றின. வருடம் முழுவதற்கும் தேவையான முந்திரிக் கொட்டையை வாங்குவதற்கு ஐயாயிரம்
ரூபா போதுமானதாக இருக்கவில்லை. கையிருப்பு முடிந்தவுடன்,
இடைத்தரகர்களுக்காக மீண்டும் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்ய வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்பட்டது. உண்மையில் நீண்ட கால அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இரு தவணைகளாகப் பிரித்து கடன் வழங்கப்பட்ட போது பிரச்சனை இன்னும் அதிகரித்தது. இரண்டாவது தவணைக் கொடுப்பனவு ஜுலையில் செய்யப்பட்ட போது, முந்திரிக் கொட்டை பருவம் முடிவடைந்து விடும். இதனால் குறைந்த விலையில் பெண்களால் முந்திரிக் கொட்டையை வாங்க முடியவில்லை. கோது அகற்றப்பட்ட முந்திரிக் கொட்டையை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக விளங்கியது. எனவே, பருவமற்ற காலத்தின்போது முந்திரி கொட்டையைக் கொள்வனவு செய்வதில் பிரயோசனம் இருக்கவில்லை.
இக் கட்டத்தில் தான் இலங்கை இடைத்தர தொழில்
நுட்ப அபிவிருத்திக் குழாம் வனாத்தவில்லுவுக்கு வந்தது.
தொழில்நுட்ப தலையீடு ஒன்று நிலைமையை மாற்றி, திட்டமான அபிவிருத்தியை ஏற்படுத்துவோம் என நாம் நம்பினோம். இதன் பொருட்டு முந்திரிக் கொட்டையை உலர்த்துவதற்கான கருத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி திட்ட உலர்த்திகள் (Tray drdrier) அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த உலர்த்திகள் முந்திரிக் கொட்டைகளை உலர்த்துவதற்கு உதவும். இதனால் சிறு அளவிலான பதப்படுத்துவோர் தமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதிக்கம்பனிக்கு, அல்லது ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வர்களுக்கு விற்பனை செய்யலாம்.
9.

மேற்படி குழாம் வங்கியுடன் சேர்ந்து பதப்படுத்துவோருக்கு ஊக்கமளித்தது, இவர்களுடன் இலங்கை, சர்வதேச முந்திரிக் கொட்டை பதப்படுத்தல் துறைபற்றி ஒரு தொகை கருத்துப் பரிமாறல்கள் இடம் பெற்றன. எமது பங்காளிகளான சமுதாயத்துடன் கருத்திட்டத்தின் எல்லா அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாறுவதன் பெறுமதியை கம்பஹாவில் நாம் அடைந்த அனுபவம் எங்களுக்கு காட்டியிருந்தது.
பதினேழு பதப்படுத்துவோர் எமது தட்ட உலர்த்தியை முயற்சித்துப் பார்ப்பதென முடிவெடுத்தனர். கிராமக் குழுவினதும், எனது தாபனத்தினதும் பங்களிப்புகள் பற்றிக் கருத்துப் பரிமாறப்பட்டு, தீர்மானம் எடுக்கப்பட்டது. உலர்த்தியை நிறுவுவதற்குப் பொருத்தமான காணியை கிராமவாசிகள் கண்டு பிடிப்பார்கள். இதற்காக அவர்கள் உறைவிடம் ஒன்றையும் அமைப்பார்கள். எமது தாபனம் தொழில் சட்டத்தை வழங்கி, அது தொழிற்படுவதற்கு உதவி அளிக்கும். உலர்த்தலின் போது முந்திரிக் கொட்டைகளுக்கு ஏற்படும் சாத்தியமான சேதாரங்களுக்கான ஆகு செலவையும் எமது தாபனம் பொறுப்பேற்கும்.
யாருக்குப் பொருத்தமானது?
வனாத்தவில்லுக் குழு பிரதானமாக பெண்களையே அடக்கியிருந்தது. ஆனால், உலர்த்தியைத் தொழிற்படுத்து வதற்காக இரு ஆண்களை மட்டும் தெரிவுசெய்தனர். உலர்த்தி உண்மையில் வீடு ஒன்றிலேயே நிறுவப்பட்டது. இவ்வீட்டைச் சேர்ந்த கணவனும், மனைவியும் கருத்திட்டத்தை மேற்கொண்ட சங்கத்தின் உறுப்பினர்களாவர். எனினும் கணவன் உலர்த்தியை மட்டுமே தொழிற்படுத்தினார். உலர்த்தியின் தொழில் நுட்பத்துடன் பெண்கள் பரீட்சயமாக வேண்டும் என நாம் விரும்பியபோதும் இக் கட்டத்தில் தலையிட நாம் விரும்பவில்லை. உலர்த்தி தொழிற்படத் தொடங்கியது.
உலர்த்தியின் உபயோகம் மூலம் ஆரம்பக் குழு நன்மை அடைந்ததினால், கருத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் மேலும் பெண்கள் உறுப்பினர்களானார்கள். உயர்ந்த தரத்தைக் கொண்ட முந்திரிக் கொட்டையை பதப்படுத்து வதற்கான அவர்களது ஆற்றலளவு பெரிதும் அதிகரித்ததுடன், தம்முடன் இணைந்து வேலை செய்வதற்காக அவர்கள் அப்பகுதியில்உள்ள பெண்களை கூலிக்கு அமர்த்தினார்கள். உற்பத்தியின் அவர்களது பிந்திய புள்ளிவிபரங்கள் அவர்களது வெற்றிக்கு சான்று பகக்கின்றன. 1997 ஏப்ரலில் இருந்து டிசம்பர் வரை இக்குழு,7593 கி.கி. முந்திரிக் கொட்டையைப் பதப்படுத்தி 2,16,965 ரூபா வருமானத்தை ஈட்டியது.
பொருளாதார வெற்றிக்குச் சமாந்தரமாக தொழில்நுட்ப அபிவிருத்தியின் கதையும், அதற்கு பெண்களின் பங்களிப்பும் செல்கின்றன.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 21
இலங்கையில் உலர்வலயப் பகுதியில் குளங்களை
அண்டிவாழும் சமூகங்களின் பயிர்ச்செய்கை, ஆடு, மாடு வளர்ப்பு போன்றவற்றின் தன்மை பற்றி அறிய 1991 ல் ஒர் ஆய்வு இடம்பெற்றது. இந்த ஆய்வின் நோக்கானது நிலங்களில் மேய்ச்சலை நம்பி வாழும் ஆடு, மாடு வளர்ப்பும், பயிர்ச்செய்கையும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக இருக்கும் பட்சத்தில் இங்கு நீடித்த பயனைத் தரக்கூடிய பயிர்ச் செய்கையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவதே.
சராசரி 225 ஏக்கர் நிலங்களைக் கொண்டதும் 274 குடும்பங்களை அடிப்படை யாகக் கொண்டதுமான இவ்வாய் வானது விவசாயத் திணைக் களத்தினாலும், விலங்கு உற்பத்தி சுகாதாரத் திணைக் களத்தினாலும் சேர்ந்து நடாத்தப்பட்டன. இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் 98 வீதக் குடும்பங்களில் மனை விமார் மட்டும் முழுநேரமாக விவசாயத் தில் ஈடுபடுவதும், 84 வீதக் குடும்பங்களில் கணவன் மார் மட்டும் ஈடுபடுவதும், 79 வீதக் குடும்பங்களில் கண வனும், மனைவியும் முழுநேரமாக விவ சாயத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்துள்ளது.
இதிலிருந்து விவசாயக் குடும்பங்களில் பெண்கள் தான் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடத்துவது தெரியவந்துள்ளது.
உலர்வலயத்தில் நடைபெறும் விவசாயமானது, மனிதனால் உண்டாக்கப்பட்ட குளங்களை அண்டி நடைபெறுவதை மரபாகக் கொண்டுள்ளது. இவ்வாறு குளத்தை அண்டிய விவசாயமானது, நீர்ப்பாசனம் வழங்கப்படும் வயல், வீட்டோடு சேர்ந்த விவசாயம், மழையை நம்பிய மேட்டுநிலம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேட்டுநிலம் எனப்படுவது, குளத்து நீர் எட்டமுடியாத மேட்டுநிலப் பகுதி. இங்கு காடழித்து பயிர்ச்செய்கை நடைபெறுவதால் இது சேனைப் பயிர்ச்செய்கை எனப்படும். இங்கு உயர் மரங்களைத் தவிர்த்து கீழ்வளரிகள் அழிக்கப்பட்டு பயிர்ச் செய்கை நடைபெறுவதால் மண் பாதுகாக்கப்படுகிறது. பள்ளத்தை நோக்கி நீர் பாயும் பகுதிகளில் வெட்டப்பட்ட மரக்
 

ஆர்.கே. விமலதுரிய
குற்றிகளும், கிளைகளும் அரணாக அடுக்கப்படுவதால் நில அரிப்பு தடுக்கப்படுகிறது. பருவமழை பெய்யும் ஒவ்வொரு சமயமும் எரியூட்டப்பட்ட பகுதியில் பல்வகைத் தானியங்கள், மரக்கறி வகைகள் தொடர்ந்து பல காலங்களுக்கு பயிரிடப்படுகின்றன. உரம் பாவிக்கப்படாது பத்து வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பயிர் செய்யப்படுவதால் இந்நிலத்தின் அறுவடை குறைகிறது. இதனால் இந்நிலம் பத்து வருடங்களுக்கு எதுவும் விளைவிக்கப் படாது கைவிடப்படுகிறது. இதற்குள் இன்னொரு கன்னி நிலத் துண்டு சேனைப் பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதிகளவு (நிலத்திற்கு) செலவின்றி செய்யப்பட்டு வந்த சேனைப் பயிர்ச்செய்கை, ஜனநெருக் கடி அதிகரிப்பினால் அதன் விளைச்சலை இழக்கிறது. ஜனநெருக்கடி அதிகரிக்க எல்லோரும் பயிர் செய்கை யில் இறங்கியதால், பயிரிடப்படாது நிலத்திற்கு விடப்படும் ஓய்வுகாலம் குறுகியதால், அதற்கு விளைச்சல் காரணமாய் இருந்து வந்த நற்பெயர் அற்றுப் போகிறது. திரும்பவும் விளைச்சலை அதிகப்படுத்துவதற்கான பண்படுத்தலைச் செய்வதற்குத் தேவையான காலம் போதாதிருந்தது. இதனால் விளைச்சலை அதிகப்படுத்து வதற்கான விவசாயிக்கு மைக்றோ இரசாயன உரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும் நிலத்தை உழுது பண்படுத்தத் தொடங்கியதும், இது நில அரிப்பு ஏற்படுத்துவதற்கு காலாயிற்று. காரணம்: முன்னைய சேனைப்பயிர்ச் செய்கையின் போது இதற்கு எதிராக இருந்த பாதுகாப்புகள் தற்போது இல்லாமல் இருந்ததே. இது நிலத்தின் வளத்தைக் கெடுத்து, உற்பத்தியையும் குறைத்ததால், இத்தகைய காடழித்தற் பயிர்ச்செய்கைக்கு எதிராக அரசாங்கம் சட்டம் கொண்டு வந்தது.
விவசாய திணைக்களத்தின் ஆய்வின்படி 22 வீத அளவிலான சேனைப் பயிர்ச்செய்கையே அதன் உண்மையான முறைக்கேற்ப நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. அதிகளவிலான கமக்காரர் தெடர்ந்தும் தமது நிலத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நிலத்தின் வளத்தை அதிகரிப்பதிலும், விவசாயியின் வருமானத்தைப் பெருக்குவதிலும் கால்நடைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 22
இலங்கையின் உலர் வலயப் பகுதியில் 40 லட்சம் ஹெக்ரயர் நிலத்தில் 10 லட்சம் ஹெக்ரயர் நிலமே மழை வீழ்ச்சிக்குரிய பகுதிகளாய் உள்ளன. வட கீழ் பருவப் பெயர்ச்சிக்காலமான ஒக்ரோபரில் இருந்து ஜனவரி வரையிலான காலப்பகுதியில் ஆண்டுக்கு எழுபது வீதமான மழை இப்பகுதியில் பெய்கிறது. மிகுதி மழை மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காலத்தில் பெய்கிறது. இவைக்கிடையே நான்கு மாதங்கள் வரையிலான நீண்ட வரட்சிக்காலம் நிலவுகிறது.
மாடு, எருமை, ஆடு போன்ற கால்நடைகள் பொது மேய்ச்சல் நிலங்களிலும், அறுவடை செய்யப்பட்ட நிலங் களிலும் மேயவிடப்பட்டும், போஷிக்கப்பட்டும் வளர்க்கப் படுகின்றன. கால் நடைகளால் தற்போது கிடைக்கும் வருமானம் குறைவானதாகவே உள்ளது.
இதன் மூலம் நாம் அறிவது, பயிர்ச்செய்கையையும்,
தேசத்துக்கு 2
பெண்களை முன்னேற்றுவதற்கான மூலோபாயங் களை தேடும் நைரோபி முன்னணி 1985ல் பின்வருமாறு பிரகடனப்படுத்தியது: "உலகின் அனேக இடங்களில் முக்கிய உற்பத்தியாளர்களாக விளங்கும் பெண்கள், உணவு விவசாய அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிப்பதோடு, உற்பத்தி சுழற்சியெனப்படும் பாதுகாத்தல், களஞ்சியப்படுத்தல், பண்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகிய சகல கட்டங்களிலும் பங்கேற்கின்றனர். ஆகவே, பொருளாதார அபிவிருத்திக்கு குறிப்பாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரங்களுக்கு பெண்கள் உதவுவது கணிக்கப்பட்டு அதற்குரிய சன்மானம் வழங்கப்படவேண்டும்."
ஆகவே, மேற்படி கூற்றின்படி, பெண்கள் தமது வேலைக்குரிய கணிப்பை பெறவேண்டிய தகைமையுடையவர் களாவர். ஆனால், அப்படி இது நடைபெறுகிறதா? பாரம்பரிய ரீதியாக பெண்கள் விவசாயத்திற்கு பாரிய பங்களிப்பைச் செய்துள்ளனர். ஆனால், பின்னர் வந்த இத்துறைக்கான அபிவிருத்தி திட்டங்கள்- அதாவது உழவுயந்திரம், அறுவடை யந்திரம், பயிர்க்கொல்லிப் பூச்சிகளுக்கு எதிராக விமானம் மூலம் மருந்தடித்தல் போன்றவை எல்லாம் ஆண்களை
2

கால்நடை வளர்ப்பையும் இப்பகுதியில் இணைப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைக் கூட்டிக்கொள்ளலாம். மேலும் இது, மழை வீழ்ச்சியை நம்பிவாழும் இம்மேட்டு நிலப்பகுதியில் ஒரு நிலையான பயிர்ச் செய்கையை உறுதிப்படுத்துவதற்கும் வழிவகுக்கும். தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் (சிறு போகம்) கீழ் நிலப்பகுதிகளிலும் வட கிழக்குப் பருவப்பெயர்ச்சிக்காலத்தில் (பெரும் போகம்) மேட்டுநிலப் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படும் உயர் பெறுமானமுடைய பயிர்ச் செய்கை விளைச்சலை பண்ணை மூலம் கிடைக்கும் பசளையினால் அதிகரிக்கச் செய்யலாம்.
குடும்பம் முழுவதும் ஈடுபடும் பண்ணை விவசாயத் தில் கால்நடை வளர்ப்பானது உழுது பண்படுத்தல் போன்ற வற்றுக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பால், இறைச்சி போன் றவை உணவாகக் கொள்வதற்கு கிடைப்பதால் பண்ணைத் தொழிலில் ஈடுபடும் சமூகம் போஷாக்கு சத்துடன் வாழும் தரத்தைப் பெறுகிறது.
இஸபெல் கெய்மர்
மையப்படுத்தியே செய்யப்பட்டன. இவை விவசாயத்தை செய்து வந்த பெண்களுக்கு எவ்வாறு உதவின? இக்காலகட்டத்தில் பெண்கள் விவசாயத்திற்கு கொடுத்த பங்களிப்பானது, புறக்கணிக்கப்பட்டதோடு அவர்கள் மிகக்குறைந்த சம்பளம் வாங்கும் நிலைக்கு ஒதுக்கப்பட்டனர்.
உலகனைத்தும் இன்று பெண்கள் விவசாயத்திற்கு கணிசமான அளவு பங்களிப்பு செய்கின்றனர். அனேகமான சமூகங்களில் அவர்களது வேலையானது சம்பளமற்ற குடும்ப வேலையாக, சுய தொழிலாக, அல்லது நாளாந்த சம்பள வேலைக்காரர்களாக பண்ணைகளிலும், பெருந் தோட்டங் களிலும் செய்யப்படுகின்றது. இன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பெண்கள் பெருமளவு வீதத்தில் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். செயல்திறமையும், விவசாயத் தின் உற்பத்தியுமே நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைத் தீர்மானிப்பன. ஆகவே, இந்த அபிவிருத்திக்கு பெண்கள் ஆற்றும் பங்களிப்பு கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.
ஆசியாவில் 50 - 60 வீதமான உணவு பெண்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபிரிக்காவில் 70 வீதமான
1 டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 23
லத்தீன் அமெரிக்காவில் 30 வீதமான உணவு பெண்களால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வளவு தூரம் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டபோதும் அவர்கள் உலகின் சொத்தில் 1 வீதத்தையே தமக்கு சொந்த மாகக் கொண்டுள்ளனர். தந்தை வழி மரபு அவர்கள் சொத்துப் பேற்றைக் குறுக்கி யுள்ளது. அவர்கள் வேலை நேரத்தை கூட்டியுள்ளது. அத் தோடு அவர்கள் கல்வியும், வருமான மும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் விவசாயத்தில் மட்டும் துரிதமாகச் செயல்படவில்லை. குடிப்பதற்கு தண்ணிர் காவவேண்டியவர்களாகவும், சாப்பாட்டுக்கும், வெப்பத்திற்கும் எரிபொருள் தேட வேண்டியவர்களாகவும் உள்ளனர். மேலும் பெண்கள் தம் குடும்பவேலையையும் செய்கின்றனர். இதனால் ஆண்களைவிட பெண்கள் வேலைநேரம் கூடுதலானது.
பெண்கள் பசிக்கு எதிராகப் போராடுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்கள் உணவுப் பயிர்ச் செய்கையில் மட்டும் ஈடுபடவில்லை. அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உணவுத் தயாரிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். விவசாயத்திற்கான சிறந்த நிலங்கள் பணம் ஈட்டும் பயிர்ச்செய்கைக்காக ஒதுக்கப்பட்டு சம்பள உழைப்பாளி களாகக் கொள்ளப்படும் ஆண்கள் கையில் அவை விடப்படுகின்றன. உணவுக்கான பயிர்ச்செய்கையில் பெண்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், பணப் பயிர்ச் செய்கைக்கும் அவர்கள் உதவ வேண்டியவர்களாய் உள்ளனர். எவ்வளவுக்கெவ்வளவு குடும்பம் வறுமையாக உள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு கூடுதலான வேலை பார்க்க வேண்டியவர்களாகிறார்கள் பெண்கள்.
தமது ஆண் சகபாடிகள் போல பெண்கள் குறைவான கடன்தொகை, பணமுதலீடு, நிலம் உடையவர்களாய் உள்ள னர். அவர்கள் வரவர உற்பத்தி வாய்ப்பு முறைகளிலிருந்து நீக் கப்படுபவர்களாய் இருக்கின்றனர். சில நாடுகளில் பெண்கள் தமக்கு தம் நிலங்களில் இருந்து கிடைக்கும் மேலதிக வருவாயை விற்க வேண்டியவர்களாயும் உள்ளனர்.
அனேக சமூகங்களில் ஜீவனோபாயத்திற்காக செய்யப்படும் விவசாயத்தில் ஆண்கள் நிலத்தை துப்புர வாக்கி உழுதுவிட பெண்கள் மண்ணை வெட்டி பயிர்நட்டு, களைபிடுங்கி, அறுவடை செய்து, களஞ்சியப் படுத்தி பாதுகாத்தல் போன்ற சகல வேலைகளையும் செய்கின்றனர். மேலும் அவர்களே அவற்றைச் சந்தைப் படுத்தவும் வேண்டியவர்களாய் உள்ளனர். இன்னும் அநேக சமூகங்களில் பெண்களே கால்நடைக ளின் பராமரிப்பை மேற்

கொள்கின்றனர். அவற் றுக்கான வைக் கோல் சேகரித்தல், ஆடு, மாடுகளில் பால் கறத்தல், கோழி வளர்த்தல் போன்ற இன் னோரன்ன வேலைகள் பெண் களால் செய்யப் படுகின்றன. வரட்சிக் காலத்தில் ஆண்கள் வேலை தேடி நகர்ப் பகுதி களுக்குச் செல்ல பெண்களே முழுக் குடும்பத்தையும் கவனிக்க வேண்டியவர்களாய் உள்ளனர்.
புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தோடும், சமூக நடைமுறை மாற்றங்களாலும் பெண்கள் பார்த்துவந்த பாரம்பரிய ரீதியான செயல்முறைகள் மாற்றம் அடைந்துள்ளன. ஆண்கள் நகரங்களில் வேலைபார்க்கத் தொடங்க, பெண்களின் மேல் விவசாயத் தொழிலின் பளு கூடுவதாயிற்று. முன்னரைவிட தற்போது பெண்கள் பணப்பயிர்ச் செய்கையில் கூடுதலாக ஈடுபடத் தொடங்கி யுள்ளனர்.
பச்சைப் புரட்சியும், பல்வகையான உயர் உற்பத்திக்கான சாதனங்களின் அறிமுகமும் பெண்களை அன்றாட தொழில் புரியும் நிலைக்குள் தள்ளியுள்ளன. எவ்வாறாயினும் இயந்திரமயமாக்கல் இடம்பெற்ற இடமெங்கும் பெண்கள் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. மேலும் களைக் கொல்லி பாவனையின் அறிமுகமானது பெண்கள் பார்க்கும் வேலையை தேவையற்றதாக்கியுள்ளது. இவை சம்பந்தமாக பெண்கள் அவர்களின் அரசின் கண்களுக்கே படுவதாய் இல்லை.
இலங்கை ஒரு விவசாய நாடு. வளமான நிலமும் வருடம் பூராவும் சூரிய வெளிச்சமும் உள்ள நாடு. மரபு ரீதியான விவசாயமுறைகள் கைவிடப்பட்டு இங்கு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் பெண்கள் அரைவாசிக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்கின்றனர். இங்கு தென்னை, தேயிலை, றபர் தோட்டப் பயிர்ச்செய்கை இடம் பெறுகிறது.
இலங்கையில் தும்பு உற்பத்தி ஒரு பொருளாதார செயற்பாடாக பெண்களால் செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் மட்டைகள் ஊறவைக்கப்பட்டு, தும்பு பெறப்பட்டு கயிறு திரிக்கப்படுகிறது. மெத்தைகள், கார் இருக்கைகள், பாய்கள், சுவரில் தொங்கவிடப்படும் அழகுப் பொருட்கள் போன்றவற்றுக்கெல்லாம் தும்புகள் பயன்படுத்தப்படுகின்றன, தேங்காய் மட்டைகளை ஊறப்போடும் ஆண்களுக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட பெண்கள் குறைவாகவே பெறுகின்றனர். பெண்களும், ஆண்களும் கூட்டாகவே ஒரு
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 24
பொருளைச் செய்தாலும், தும்பைப் பிரித்து கயிறாகப் பின்னும் பெண்களுக்கு குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. கொப்பறா செய்கையும் கிராமியப் பொருளாதாரத்தில் இடம் பெறுகிறது. கசிப்பு உற்பத்தியும் முழுக்குடும்பமும் ஈடுபடும் தொழிலாகும். இதன் தயாரிப்பில் பெண்கள் ஈடுபடாவிட்டாலும் அதன் விற்பனையில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களில் 72 வீதமானோர் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இங்கே பெண்கள் பெருஞ் சுமையான தேயிலையைக் காவிச் செல்கின்றனர். வெறுங்கால்களோடு பலவித தொற்று நோய்ப்புழுக்கள் கால்வழிச் செல்ல இடமளித்து வேலை செய்கின்றனர். பலவித மலைச் சரிவுகளில் ஏறி இறங்கி, நெருக்கடி மிகுந்த லயங்களில் வாழும் இப்பெண்கள் மிகக் குறைவான கூலியே பெறுகின்றனர். ஆனால், இவர்களே கூட்டு மொத்தமாக இலங்கைக்கு அதிகளவு வருவாயைத் தேடித்தருபவர்களாவர். காலை ஏழு மணிக்கு கொழுந்து பறிக்க தொடங்கும் இப்பெண்கள், மாலை நான்கு மணிக்கு வீடு திரும்பி தமது குடும்பத்துக்கு சாப்பாடு சமைத்து பராமரிக்க வேண்டியவர்களாய் உள்ளனர். அதிகாலையில் இவர்கள் எழுந்து காலைச் சாப்பாட்டை தயாரித்து பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். ஆண்கள் கொழுந்து பறிக்கும் பெண்களின் மேற்பார்வையாளராக இருப்பதன் மூலம் பால்நிலைப் பிரிவையும், தொழில் சமமின்மையையும், ஆணாதிக்கத்தையும் ஏற்படுத்துவதோடு, இது தோட்டத்தோடு மட்டும் நில்லாமல் குடும்பம் வரை எடுத்துச் செல்ல வாய்ப்பளிக்கப்படுகிறது.
தோட்ட வாழ்க்கை என்பது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையாகும். தேயிலைக்கொழுந்து பறிப்பதில் இருந்து ஒரு நாளே விடுமுறையாக கிடைக்கிறது. இதனால் குடும்பத்தோடு சேர்ந்திருப்பதற்கு அவகாசம் இல்லை. எங்காவது பிரயாணம் செய்வதும் சாத்தியமில்லாது போகிறது. தேயிலைத் தோட்டத்தில் வாழும் பெண் அடக்கு முறை அமைப்புக்குள் அகப்பட்டவளாக, கீழான நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். ஒரு மூடுண்ட சமூக அமைப்பாக அது இருப்பதால் வெளிச் சமூகங்களோடு பழகமுடியாத நிலையில் சாதிப்பாகுபாடுகளால் பாதிக்கப்படுகின்றாள்.
றபர் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் வீட்டில் அதிகளவு வேலை செய்துவிட்டு வேலை செய்யப்போகிறார்கள். றபர் தோட்டங்களில் வேலை என்பது, தேயிலை, தோட்டவேலை, தும்புத்தொழில் போல் அடுக்குமுறை அமைப்பாலானது. றபர் பயிர்ச்செய்கையானது நூறு

வருடங்களுக்கு முன்னரே அறிமுகமானது. பால் எடுப்பதையும், தமது குடும்ப வேலையையும் செய்வது பெண்களுக்கு சில வேளை கஷ்டத்தைத் தருவதாய் உள்ளது. வேலைக்குப் பெயர் கொடுத்ததற்குப் பிறகு, தமது வேலைபுரியும் இடத்திற்கு நடந்து செல்லவேண்டும். எடுத்தபாலை பாரமான அலுமினியம் பாத்திரங்களில் காவிச்செல்கின்றனர். அப்படிச் செல்லும் அவர்கள் சிலவேளை பாம்புகளால் தீண்டப்படுவதும் உண்டு. ஒரு குறிக்கப்பட்ட, அதாவது 200-300க்கு இடைப்பட்ட மரங்களில் பால் எடுக்கவேண்டும். இவை முற்றும் முடியாவிட்டால் சம்பளம் எடுப்பது தடைப்பட்டுவிடும். மழைநாட்களில் சம்பளம் கொடுப்பதில்லை. காரணம் இவை வேலைநாட்களாகக் கொள்ளப்படுவதில்லை.
பொதுவாக பெண்கள் அறிவை எட்டுவதற்குரிய வாய்ப்பில்லாத சமூகக்கட்டுப்பாடுகள் உள்ளன. இதிலிருந்து இவற்றுக்கான திட்டங்கள் என்பவை தொழில்நுட்பம், குடும்பத் திட்டமிடல், சந்தைப்படுத்தல், நிர்வகித்தல் போன்றவற்றை கலாசார ரீதியாக உணர்வுபூர்வமாக்கப்பட்ட நிலையில் செயற்படுத்த வேண்டும்.
விவசாயத்துறையில் இருக்கும் பெண்களின் உடல் நலம் கவனிக்கப்படாதுள்ளது. பயிர்களுக்காகப் பாவிக்கப்படும் கிருமிநாசினிகள் மிகக்கெடுதலான விளைவை உடலுக்கு ஏற்படுத்துகின்றன. பெண்கள் சிலவேளைகளில் குழந்தைப் பேறு அண்மிக்கும் காலங்களில் வேலை செய்கின்றனர். சிலவேளை குழந்தைப் பேறு முடிந்த உடனும் வேலைக்குத் திரும்புகின்றனர். சிலவேளை தம் குழந்தைகளைத் தம் முதுகுகளில் காவிச் செல்கின்றனர். இதனால் தாய்ப் பாலூட்டுதல் தடைப்படுகின்றது, அல்லது கவனிக்கப்படாது போகின்றது.
பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் பங்களிப்பானது, அவர்களை ஆண்களுக்குரிய சகல அந்தஸ்துகளுடனும் சமமாக கணிக்கப்படவேண்டிய நிலையைக் கோருகிறது. தீர்வை எடுக்கும் எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு அந்நிலையை வழங்க வேண்டும். பெண்களின் விவசாயத்துறை வேலையானது உற்பத்தி ரீதியானதோடு மீள் உற்பத்திக்கும் உரியது. ஆண்களும், பெண்களும் ஒருவருக் கொருவர் மாற்றீடாக வேலை புரியாவிடில் நீடித்த வெற்றிகர மான வேலை நடைபெறாது. அத்தோடு விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பானது முழுமையான கவனிப்புக்குரிய தாக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 25
பின்னணி
விவசாய உற்பத்தி கிராமங்கள் (APV) எனச் சொல்லப்படும் வேலைத்திட்டத்தின் முதல் வேலை 1991 ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் முக்கிய நோக்கங்களாக பயிற்சிமூலம் கிராம மட்டத்திலான அபிவிருத்தியை ஏற்படுத்துதல், சிறியளவிலான வருவாயை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு கடன் வழங்குதல், விவசாய உற்பத்தியையும் சந்தைப்படுத்தலையும் சந்திப்பதற்குத் தோதாய் கிராமிய கட்டமைப்பை மேலுயர்த்துதல் போன்றவை உள்ளன. மொத்தத்தில் கிராம மக்களின் சமூக நலன் பேணலை உயர்த்துதலுக்கே மிகமேலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதல் முயற்சியாக, வித்தியாசமான விவசாய-சுற்றுச் சூழல் பொருந்திய 25 கிராமங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்ட போது, வெவ்வேறான பெறுபேறுகள் கிடைத்தன.
நிறுவனத்தின் மதிப்பீட்டு ஆய்வு (The Institute's Evaluation Study) பத்துக் கிராமங்களை உள்ளடக்கி, ஒரு மாகாணத்திற்கு ஒன்றாக நாட்டின் வெவ்வேறு பாகங்களில், வெவ் வேறு சமய, சமூக, கலாசார கூட்டுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் முறையில் நடைபெற்றது. வடமாகாணத்தில் வவுனியாவுக்கு அருகில் உள்ள சமன்குளம், மத்திய மாகாணத்தில் அனுராதபுரத்திற்கு சற்றுத் தள்ளியுள்ள மாவத்தே வெவ, வடமேற்கு மாகாணத்தில் உள்ள கரையோரப் பகுதியான நிரிபொல, ஊவா மாகாணத்தில் உள்ள குருகுடேகம, மத்திய மாகாணத்தில் உள்ள வெற்றகதெனிய, சப்பிரகமுவ மாகாணத்தில் கேகாலைக்கு அருகிலுள்ள மத்தமகொட, தென் மாகாணத்திலுள்ள ஹியாரே, மேல் மாகாணத்திலுள்ள நிரிபொல போன்ற கிராமங்கள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டவையாகும்.
இந்த ஆய்வுக்கான காலம் ஒரு மாதமாகவே
2
 

ஈஷானி விஜேசேகர
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதன் நோக்கம் எதிர்காலத்தில் தலையெடுக்கவுள்ள பால்நிலைப்பட்ட பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளும் முகமாகவே இருந்தது.
கண்டறிந்தவை
பெண்கள் மேற்படி விஷயங்களில் பங்கெடுப்பதற் கான சமூக பொருளாதார காரணிகள் பலவகையில் ஒன்றாகவே உள்ளன. இருந்தபோதும் ஒவ்வொரு கிராமங்களிலும் காணப்பட்ட முக்கியமான வேறுபாடுகள் கணக்கிலெடுக்கப்பட்டன. கிராமமட்டத்தில் சனசமூக 9|ly u60LLSlsi) glib Guosh (Community Based Organization) 6)S)6)JöFm"LLu 9 fibugöğ5 éf5)rJITLDrñI356fhsöT (APV) செயற்பாடுகள் நல்ல முறையில் இயங்குவதை அறியக்கூடியதாய் உள்ளது. அவற்றின் முக்கிய தொழிற் பாடானது, தமது அங்கத்தவர் களுக்கு குறிப்பாக முழுச் சமூகத்துக்குமே இயன்றளவு செல்வத்தை ஈட்டித்தர முயலுவதே.
விவசாய உற்பத்தி கிராமங்களின் (APV) ஆரம்ப செயற்பாட்டில் பால்நிலைப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால், எவ்வாறிருந்த போதும் பெண்கள் இவற்றில் கூடிய அக்கறை கொண்ட செயல்பாடுடையவராய் காணப்பட்டனர். இன்னும் 85 வீதமான பெண்கள் விவசாயத்திலும், மிருக வளர்ப்பிலும் நேரடியாகப் பங்குபற்றுபவராய் இருந்தனர்.
மேலும் ஆய்வுகள் மேற்கொண்ட போது பால்நிலைப்பட்ட வேறுபாடுகள் இருப்பது தெரிந்தது. சமய ரீதியான பின்னணி போன்றவை இவ்விஷயத்தில் இனத்துவ வேறுபாட்டை விட முதன்மை பெற்றிருந்தன. கிறிஸ்தவ சமயப் பின்னணியில் வந்த பெண்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கக்கூடியவர்களாய் இருந்தார்கள். பெளத்த, இந்து சமயப் பின்னணியில் வந்தவர்கள் தமது ஆண்களின்
கருத்துக்களை ஏற்றுக்கொள்வோராய் காணப்பட்டனர்.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 26
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க முழுக்க ஆண்களையே தீர்வு எடுக்க விடுவோராய் காணப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் அங்கத்துவம் வகிக்கும் இடங்களிலும் அவர்கள் அபிப்பிராயங்கள் செவிமடுக்கப்படாமலே இருந்தன.
விவசாயத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த பெண்கள் தீர்வு எடுக்கவும், செல்வாக்குச் செலுத்தவும் கூடியவராய் இருந்தனர். இருந்தபோதும் அவர்கள் முதலீடு செய்யும் விஷயத்தில் தலையிட முடியாதவர்களாகவே இருந்தனர். அவர்களது தீவிர ஈடுபாடு களைபிடுங்குதல், நாற்றுநடுதல், அறுவடை செய்தல் போன்றவற்றிலேயே காணக்கூடியதாய் இருந்தது. இன்னும் கணிசமான அளவினர் தண்ணிர் பாய்ச்சும் நிர்வரகத்தை மேற்கொண்டனர். மிருக வளர்ப்பு, அவற்றைச் சந்தைப்படுத்தல் போன்றவற்றால் பெண்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கவும், குடும்பத்திற்கான சேமிப்பைச் செய்யவும் வலுவுடையவராயினர்.
கிராமிய மட்டத்தின் அமைப்பு நிர்வாகம், அடிப்படைக் கட்டமைப்பு, சிறுதிட்ட அபிவிருத்தி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்த போதும், பெண்கள் அபிப்பிராயங்களை அறிவதற்கான ஒழுங்கான வழிவகைகள் இடம் பெறவில்லை. ஒரளவு படித்த பெண்களை இவற்றில் ஈடுபடுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் இருக்கவில்லை. அதனால் இளம் பெண்கள் வேலை தேடிக் கிராமத்திற்கு வெளியே சென்றனர். சிறு தொகையினர் இந் நாட்டில் இடம்பெறும் வர்த்தக வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். 'சீட்டு' பிடித்தல் மேலோங்கியே உள்ளது. இதன் மூலம் விவசாய பொருட்கள் வாங்கவும், நகைகள் பெண் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கவும் முற்படுகின்றனர். பின்னர் தேவை ஏற்படும் போது அவற்றை விற்கவோ, அடைவு கொடுக்கவோ பாவித்தனர்.
பரிந்துரைகள்
இது சம்பந்தமாக விவசாய, பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் (IAWID) பல பரிந்துரைகளை முன்வைத்தது. இவை நடைமுறைப்படுத்தப்படுமானால் பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, அவர்கள் பலவகையிலும் விடுதலையடைவர் என எதிர்பார்க்கப்பட்டது.
(1) முதலாவதாக கிராமப் பெண்கள் சமூக பொருளாதார அபிவிருத்தியில் கீழ் மட்டத்திலிருந்தே பங்கெடுக்கும் வாய்ப்பளித்தல். அதன் முதல்படியாக கமத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை நிர்வாகி நல்ல தராதரம்
25

உடைய பெண்களை இயக்குநராகவோ, உதவி இயக்குநராகவோ நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நியமித்தல்.
வெங்காயம் 18 25 43
தையல்மெஷின் 6 6 உழுந்து 14 15 29 நெல் விவசாயம் 10 13 23 மிளகாய் 24 24 உருளைக்கிழங்கு 甘2 12
(2) விவசாய உற்பத்தியாளர்கள் என்ற முறையில்
பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எல்லாக் கிராமப்பெண்களும் கிராமிய அமைப்புகளிலும், கூட்டுறவுஸ்தாபனங்களிலும் தீவிர பங்கெடுக்கச் செய்யவேண்டும். பெண்களுக்கென கூட்டுறவு அமைப்புகளில் விசேட ஒதுக்கிடங்கள்
கொடுக்கப்பட வேண்டும்.
குருகுடேகம
உருளைக்கிழங்கு
தக்காளி செங்கற்கள் செய்தல்
(3) கிராம அமைப்புகளின் உருவாக்கத்திற்கு உறுதுணை யாக குடும்ப அங்கத்துவமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் கிராமிய அமைப்புகள் எவற்றிலும் பங்கெடுக்கக் கூடியவராய் இருக்க வேண்டும்.
அம்பாறை சிறு திட்டங்கள்
செங்கல் செய்தல்
உலோக வேலை
மரக்கறி
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 27
(4) எல்லாவித முதலீடுகளுக்கும் பெண்கள் அபிப்பிராயத்திற்கு முன்னுரிமையும் கணிப்பும் கொடுக்கப்பட வேண்டும். பொருட்களை பரிசீலிக்கும் முறை சம்பந்தப்பட்ட செயற்களங்கள் அமைக்கப்பட வேண்டும். இது விவசாயத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதோடு சந்தைப்படுத் தலுக்கும் உதவும். இதனால் சுரண்டலை மேற்கொள்ளும் தரகர்கள் அப்புறப்படுத்தப்படுவர்.
ஆடுவளர்த்தல்
மாடுவளர்த்தல்
கோழி வளர்த்தல்
(5) தொழில்நுட்பங்களைக் கிராமங்களில் அறிமுகப் படுத்துவதற்கான தனியார் துறை அமைப்பு உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமே பெண்களின் பங்குபற்றுதலையும் கிராமத்தின் துரித முன்னேற்றத்தையும் செய்யலாம்.
கொழும்பு சிறு திட்ட
எண்ணெய்
கோழி வளர்த்தல்
(6) பெண்களை பலவித விவசாயத்துறைகளில் பயிற்றுவித்தல். இதற்கான விசேட தகைமை பெற்றோரை தருவித்து செயல்படுத்தவேண்டும். இது விவசாய உற்பத்தி கிராமங்களின் திட்டத்திற்கேற்ப செயல்படுவதாய் அமையும்.
 
 
 
 
 
 
 
 
 
 

வெனிச்சத்துக்கு வர பென்னே
ஆண்டாண்டு காலமாய் அடிமையாயிருந்து மாண்டுபோகும் மானிடப் பெண்ணே சுதந்திரம் என்பது சும்மா வருமா? தென்றல் பட்டு தென்னை சாயுமா? சுழலாய் எழுந்திடு சுந்தரப் பெண்ணே
செவ்வாய் கிரகத்தின் முதற்குரலிற்கு உந்தன் இனத்தாள் சொந்தக்காரி என் வீட்டுப் பெண்ணே அடுப்பங்கரையில் இன்னமும் உனக்கு வேலைகள் என்ன?
விடுதலைக்காக மனதின் அடியில் அழுது புலம்புகிறாய்! அர்த்தங்களில்லையே வெளிச்சம் வருமென இருட்டிலிராமல் வெளிச்சம் தேடி இருட்டில் நடக்கலாம்
நாளைய உலகின் அஸ்திவாரமாய் இருப்பதில் உனக்கும் உரிமைகளுண்டு தடுக்க நினைக்கும் தந்திரக்கைகளை தட்டிவிடுவதில் தயக்கங்களென்ன
சட்டிபானைகள் உன்னிலை கண்டு சங்கடப்படும் வரை காத்திருப்பாயா பூமித்தாயின் சோதரப் பெண்ணே புயலாய் மாறிடு புதுமைகள் செய்யலாம் பொங்கி எழுந்திடு சரித்திரம் படைக்கலாம் வானம் கூட வாய் பிளக்க இடியாய் முழங்கி வாகை சூடலாம் குனியக்குனிய குட்டுபவன் மட்டுமல்ல குட்டக்குனிபவனும் முட்டாள் தான்.
சுசித்தா ஜெபரட்னசிங்கம் ,
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 28
இலங்கையில் இன்று எச்.ஐ.வி. வைரஸ் உள்ளவர்க ளென மருத்துவர்களால் அடை யாளம் காணப்பட்ட சுமார் 160 பேர்களும், ' எயிட்ஸ்' நோயுள்ள வர்களென 68 பேரும் உள்ளனர். வறுமை, யுத்தக் கொடுமை, அதனால் இடம் பெயர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள், அதிகரித்த அபாயகரமான சிறார் விபசாரம், ஒதுக்கப்பட்டு தனித்து விடப்பெற்ற பெருந்தோட்டப் பெண்கள், சுதந்திரப் பொருளாதார வலயத்தில் வறுமையினாலும், தனிமையினாலும் வாடும் பெண்களின் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தைகள், விபசார அதிகரிப்பு, சேரிகளின் பெருக்கம், சில பெண்களை 'ஒழுக்கமற்றவர்கள்’ என ஒதுக்கி வைத்துள்ளமை, சிலபகுதிகளுக்கு சமூக உரிமைகள் வழங்கப்படாமலுள்ளமை முதலியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது, 180 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இலங்கை நாட்டில் எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதே.
எச்.ஐ.வி வைரஸ் எளிதாகப் பீடித்துக்கொள்ளும் நிலைமையில் துரதிர்ஷ்டவசமாக பெண்களே உள்ளனர். எச்.ஐ.வி, எயிட்ஸ் என்பவற்றால் உலகில் பாதிப்புக்குள்ளாகி யவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களாவர். இதற்கு சமூகவியல் மற்றும் ஜிவசாஸ்திரவியல் அடிப்படையில் பல காரணங்களைக் குறிப்பிடலாம். பெண் உறுப்பில் இயல்பான அமைப்புக் காரணமாக, தொற்று நோய்க்கிருமிகள் எளிதாக பெண்களைப் பாதித்து விடுகின்றன. உடலுறவுக்குப் பின். ஆண்விந்து பெண் உறுப்பின் வழிப்பரப்பில் பரந்து தங்கி நின்றுவிடுகிறது. உடலுறவின் போது உறுப்பின் மெல்லிய தசைகளுக்கு காயமேற்படுவதும் உண்டு. எனவே எச்.ஐ.வி வைரஸ் குருதிக்குழாய்களினூடாக பெண்ணின் உடலில தொற்ற முடிகிறது. பிரசவத்தின் போது, அல்லது கர்ப்பச் சிதைவின் போது உபயோகிக்கப்படுகின்ற கருவிகளில் கிருமிகள் சுத்திகரிக்கப்படாதிருப்பினும், எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகள் பெண்களின் உடலில் செல்லுவதற்கு வாய்ப்புண்டு. உலகின் சில நாடுகளில் பெண்ணின் உறுப்புக்களை சிதைக்கும் வழக்கமுண்டு. அவ்வாறாக சிதைக்கப்படுவதற்குப்
27
 
 

() ()
இசபெல் கெய்மர் ஜெராட் ஸ்னோபல்
பயன்படுத்தப்படும் கருவி களாலும், பின்னர் மென்மையான உட்புறத் தோல்கள் கிழிபடுவ தனாலும், அவ்விடங்களினூடாக பெண்ணுடம்பில் எச்.ஐ.வி. வைரஸ் எளிதாக நுழைய முடிகின்றது.
பெண்கள் மத்தியில் எச்.ஐ.வி. எயிட்ஸ் அதிகரித்த வீதத்தில் காணப்படுவதற்கான சமூகவியல் காரணங்கள் பல. பெண்கள் இரண்டாந்தரப் பிரஜை களாகவும். பாலியல் சின்னமாக- ஆணின் பாலியல் தேவையை நிறைவேற்று வதற்கான அவனுக்குரிய பொருளாகவும் கருதப்படுகிறாள். போதியளவு கல்விவாய்ப்பும் பெண்களுக்கு
மறுக்கப்படுகிறது. ஆணின் விருப்பத்துக்கு மறுக்கப்படாது என அவள் போதிக்கப்படுகிறாள். அத்துடன் அடக்கம், பணிவு என அவள் பழக்கப்படுகிறாள். கணவனுக்கு எதிராக எதனையும் சொல்லக்கூடாதெனப் போதிக்கப்படுவதனால் கடுமையான நோய் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் செல்லாது, அதனைத் தாங்கிக் கொள்கிறாள். தூர இடங்களிலுள்ள ஏழைப் பெண்களைப் பொறுத்தவரை மருத்துவக் கவனிப்புக்கு உள்ளாவதென்பது மிக சிரமமானது. எச்.ஐ.வி.தொற்றிக் கொண்ட ஒருவர், துரதிர்ஷ்டவசமாக அதன் பாதிப்பை உணராமல் தேகாரோக்கியமுள்ளவராக, சுமார் 10 ஆண்டுகள் வரை விளங்கலாம். தான் நோய் தொற்றிக் கொண்டவரென்பதை அவர் அறிவதேயில்லை. எச்.ஐ.வி. உள்ளவரென உறுதிப்படுத்தப்பட்டவரொருவர் அத் தொற்றுநோயைப் பரப்பவல்லவர் என்பது நிச்சயம். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம், அல்லது இரத்ததானம் மூலம் அவர் கிருமிகளைப் பரப்பமுடிகிறது. தனக்கு எச்.ஐ.வி. கிருமி உள்ளதென்பதை ஒருவர் உணர்ந்திருந்த போதிலும், பயம் அல்லது வெட்கம் காரணமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட அவர் மறுத்துவிடுவதுண்டு. எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களை இழிவாகக் கணிப்பது அறியாமை காரணமாகவே மாறாக அவர்கள் மீது அதிக அன்பையும், ஆதரவையும் சமூகம் காட்ட வேண்டும்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியச் செல்லும் இலங்கைப் பெண்களில் பலர் அங்கு பாலியல் துஷ்பிரயோகம்,
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 29
பலாத்கார உடலுறவு போன்றவற்றுக்குப் பலியாகுவதனால், எச்.ஐ.வி. வைரஸ் கிருமிகளைத் தொற்றிக்கொள்ள நேரிடுகிறது. வெளிநாடுகளுக்குப் பணிபுரியச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான பெண்களும், மற்றும் உள்ளூரில் பாலியல் துன்புறுத்தல், வல்லுறவுகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான பெண்களும் இவற்றை வெளியில் சொல்லாமல் தமக்குள் மறைத்துப் புதைத்து விடுகின்றனர். அவர்களிடமுள்ள வைரஸ் கிருமிகளும் எயிட்ஸ் என்ற பயங்கரமான இறுதிக்கட்டத்துக்கு கொழுத்து விளையும் வரை மெளனமாகவே இருந்து விடுகின்றன. வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பெண் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோய்க்கு இருவகையாக முகம் கொடுக்க நேரிடுகிறது. வெளிநாட்டில் பாலியல் துன்புறுத்தல்- அதன் மூலம் எச்.ஐ.வி. அவளில் தொற்றுகிறது. அப்படியில்லாவிடில், நாடு திரும்பியதும் கணவன் மூலம் அவளுக்கு இக்கிருமி தொற்றுகிறது. ஏனெனில் அவள் வெளிநாடு சென்ற பின் எவளோ ஒருத்தியுடன் அவள் கணவன் சேர்ந்து வாழுகிறான். அந்த ஒருத்தியிடமிருந்து கணவன் காவிவந்த எச்.ஐ.வி. நாடு திரும்பிய மனைவியிடம் சென்றடைகிறது. அல்லது வெளிநாட்டிலிருந்து அவள் காவி வந்த தொற்று நோய்கிருமியை கணவனில் பற்றவைத்து விடுகிறாள். எச்.ஐ.வி.உள்ள பெண்ணொருத்தி கர்ப்பம் தரித்தால் கர்ப்பத்திலுள்ள சிசுவைக் கூட அந்நோய் தொற்றிக்கொள்ளும் சந்தர்ப்பமும் உண்டு.
பாலியல் துஷ்பிரயோகத்தினாலோ, திருமணத்துக்கு மேலதிகமான கள்ளத்தொடர்புகளினாலோ ஏற்படும் வடுவுக்கு பெண்கள் மீதே பழிபோடப்படுகிறது. அநேகமான ஆண்கள் உடலுறவு கொள்வது தமது உரிமை எனக்கருதுகிறார்கள். பல பெண்களும் ஆண்களுக்கு அது தேவையானதென நம்புகிறார்கள். பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அது வெட்ககரமானதென்றும், அவர்களின் கணவர்மார் தவறிச் சென்றால் அது மனைவிமார் போதுமான அளவுக்கு தமது கணவர்மாரின் பாலியல் தேவையை நிறைவேற்றாததே காரணம் என்றும் பெண்கள் போதிக்கப்பட்டு வருகிறார்கள்.
யுத்தம் காரணமாக அநேக குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்கிக் காப்பாற்ற வேண்டியுள்ளது. இவ்வாறான பல குடும்பங்களில் குறிப்பாக அநாதரவான குடும்பங்களில், குடும்ப அங்கத்தவர்களைக் காப்பற்றுவதற்காக. விபசாரத்திலீடுபட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குப் பெண் ஆளாகிறாள். கணவன் மனைவிக்கிடையில் முறிவேற்பட்ட குடும்பங்களின் இளம் பெண்கள் இச்செயலுக்கு எளிதில் இரையாகிவிடுகின்றனர்.
மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் படிப்பறிவு வீதம் மிகக்குறை வாயிருப்பதனால், சுய சுகாதாரத்தைப் பற்றிய அறிவில்லாதவர் களாயுள்ளனர். இந்நிலை அங்குள்ள பெண்களை மிகவும்
2

பாதிக்கின்றது. தமது வாழ்க்கையுடன் தொடர்புள்ள விஷயங்களை அறிந்து கொள்வதற்குத் தடையாக பண்பாட்டு ஒழுங்குமுறை விளங்குகிறது. மிகச் சிறுவயதிலிருந்தே சமுதாயத்தில் பெண்களின் இடம் ஆண்களுக்கு சமமானதல்ல எனவும், குடும்பத்தின் அனைத்து விஷயங்களையும் அவனே கவனித்துக் கொள்வான் எனவும் பெண்கள் ஆண்களின் சொற்படி நடக்க வேண்டுமெனவும் பெண்களுக்கு போதிக்கப்பட்டிருக் கின்றது. இச்சூழ்நிலையில் பெண்களின் வாழ்க்கையில் கல்விக்கு இடமில்லை. கல்வியைப் பெற்றால்கூட அந்த அறிவை வீட்டு விஷயங்களில் நடைமுறைப்படுத்த பெண்ணினால் முடியாது.
தங்களின் உடம்பைப் பற்றியோ, அது எவ்வாறு இயங்குகிறதென்பதைப் பற்றியோ பெருந்தோட்டப்புறப் பெண்களுக்கு எதுவும் தெரியாமலேயுள்ளது. தங்களின் சுய சுகாதாரத்தைப் பற்றி விசாரிக்கமுடியாததால் தடுக்கக்கூடிய, அல்லது மாற்றக்கூடிய பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். ஆண்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படாத வகையில் எளிதான குடும்பக்கட்டுப்பாட்டு பயிற்சிகளையாவது இவர்களுக்கு அளிக்க முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் பெண்களின் உழைப்பிலேயே தங்கியுள்ளது. பெருந்தோட்டங் கள், சுதந்திர வர்த்தக வலயம், வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக இவர்கள் தொழில் செய்கின்றனர். எனவே, இவர்களின் தேகாரோக்கியத்துக்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் நாட்டின் எதிர்காலத் தாய்மார் மட்டுமல்ல, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றனர்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பல இளம் பெண்கள் தமது வருமானத்தை அதிகரிப்பதற்காக தவறான வழிகளில் ஈடுபடவேண்டியுள்ளது. இவர்கள் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோய்க்கு ஆளாக நேரிடலாம். இப் பெண்களில் பலர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். மேலும் ஒரு பகுதியினர் ஆண் நண்பர்களைத் தேடிக்கொள்கின்றனர். அநேக சந்தர்ப்பங்களில் இவர்கள் தேவையற்ற கர்ப்பங்களை அழித்துக்கொள்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களிடம் நிலவும் பாதுகாப்பற்ற உடலுறவுப் பழக்கங்களின் விளைவாக எஸ்.ரி.டி, எச்.ஐ.வி, எயிட்ஸ் போன்ற பயங்கர வியாதிகள் பெருமளவில் பரவ நேரிடும்.
இரத்தத்தைப் போதியளவு பரிசோதிக்காமை, அல்லது மருத்துவக் கருவிகளில் முழுமையாக கிருமிகள் நீக்கப்படாமை காரணமாகவும் இலங்கையில் எயிட்ஸ் நோய் பரப்பப்படுகின்றது. இரத்ததானம் செய்பவர்களுக்கு பணம் கொடுக்கும் வழக்க மிருப்பதனால், போதை பாவிப்பவர்கள் தமது பணத்தேவைக்காக வழங்கும் இரத்தத்தில் எச்.ஐ.வி. கிருமிகளிருக்க முடியும்.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 30
எயிட்ஸ்' என்பது மேலைநாட்டாரின் வியாதி. அது இங்கு பரவுவதற்கு வெளிநாட்டாரும், சுற்றுலாப் பயணிகளுமே காரணம் எனக் குறைகாணும் மனோபாவம் நிலவுகிறது. எயிட்ஸை தடுப்பதற்கான வழிமுறைகள் காணப்பட வேண்டும். வெள்ளைக்காரர்களினால் தான் இது பரவவேண்டு மென்பதில்லை. ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களினாலும்
இது தொற்றிக் கொள்ளும்.
அபிவிருத்தியுற்று வரும் நாடுகளில் எயிட்ஸ் பிரச்சனையை அலசி ஆராய்ந்தால் இது அடிப்படையில் பாலியல் தொடர்பாய் எழுந்ததென்பது தெளிவாகும். மேற்கு நாடுகளில் இது பெருமளவில் தன்னினப்புணர்ச்சியாளர்கள், விபச்சாரிகள், ஒழுக்கங்கெட்ட பெண்கள் என்போரிடையே நிலவிய வியப்ாதியாக காணப்பட்டது. அபிவிருத்தியுற்ற நாடுகளிலோ இது பெண்களின் வியாதி எனக் கருதப்படுகிறது. அதனால் கவனிக்கப்படாமல், கண்டுபிடிக்கப்படாமல், அபிவிருத்திக்கு ஊறான ஒரு விஷயம் என கருதப்படாமல் அபாயகரமான ஒருகட்டத்தை எட்டும் வரை
இவ்விஷயம் உதாசீனம் செய்யப்பட்டது. அதனால் உலகத்தில்
இப்போது இந் நோய் உள்ளவர்களின் தொகையில் 80
வீதமானவர்கள் பெண்களாவர். இதில் பெருந் தொகையானவர்கள் அபிவிருத்தியுற்றுவரும் நாடுகளின் பெண்களே!
விபசாரத்திலீடுபட்ட பெண்கள், வெளிநாட்டில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், ஏழைப் பெண்கள்,
தோட்டத்துறைப் பெண்கள், கிராமப்புறப் பெண்கள்,
ஒழுக்கங்கெட்டவர்கள் என சமூகத்தால் முத்திரை குத்தப்பட்ட
பெண்கள், மனநோயாளியான பெண்கள், மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிய பெண்கள் என்போர் மீது காட்டப்படும் வெறுப்புக் காரணமாக இவர்களுக்கு எச்.ஐ.வி, வைரஸ் தொடர்பான இரத்தப் பரிசீலனையோ, மருத்துவ சிகிச்சையோ, மேலைநாடுகளைப் போலன்றி வளர்வுற்று வரும் நாடுகளில் மிக அரிதாகவே கிடைக்கிறது. பெண்களுக்கு எச்.ஐ.வி. வைரஸ் பரிசோதனைகள் கிடைக்கத் தவறினால், கர்ப்பிணியாக உள்ள பெண்களின் எச்.ஐ.வி. வைரஸ் அவளின் கர்ப்பத்திலுள்ள சிசுவுக்கும் தொற்றி, அதனால் எதிர்காலச் சந்ததியே பாழாகும் ஆபத்து உண்டு. பல நாடுகளில் எச்.ஐ.வி. உள்ளவள் என மருத்துவ சோதனை மூலம் ஒரு பெண் உறுதி செய்யப்பட்டால் அது அவளின் தவறினால் ஏற்பட்ட நோய் எனக் கணவன்மார் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால், அவளோ திருமணத்துக்கு முன்போ, பிறகோ வேறொருவருடனும் எவ்வித உடலுறவும் வைத்திருக்கமாட்டாள். ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஒவ்வொரு ஆணும் பல பெண்களை வைத்திருப்பர்.
29

அவனுக்கு எச்.ஐ.வி. வைரஸ் இருப்பின் அதனை அவர்களுக்கு விளைவித்து விட்டு, குற்றமற்றவனாக அவன் விளங்குவான். நோய் தொற்றிக் கொண்ட அத்தனை பெண்களையும் ‘கெட்டுப்போனவர்கள்’ எனத் தள்ளி வைத்துவிட்டு, புதிய மனைவிமாரை அவன் தேடிக்கொள்ளுவான்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் விவசாய உற்பத்தியின் 75 வீதத்தை செய்தளிப்பவர்கள் பெண்களே. கர்ப்பந்தரிக்கக்கூடிய 18 முதல் 45 வயதுக்குட்பட்ட வயதைக் கொண்ட இப்பெண்களின் பெறுமதிமிக்க நாட்டின் பொருளாதாரத்துக்கான பங்களிப்பையும், எதிர்கால இளஞ் சந்ததியையும் கொடிய 'எயிட்ஸ் நோய்க்குப் பலி கொடுக்க வேண்டுமா?
பெண்விபசாரம் இருக்கின்றதென்ற பாரதூரமான விஷயத்தை தொடர்ந்து மூடிமறைத்துவருவது எமது நாடு எதிர்நோக்கும் மற்றொரு பிரச்சனையாகும். வெளிநாட்டாரைப் பொறுத்தவரை சிறார் விபசாரம், சிறார் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவை இங்கு நிலவுகிறதென்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாகும். கெடுக்கப்பட முடியாத இறுக்கமான குடும்ப அமைப்பு முறை இலங்கையிலுள்ளது என்ற கருத்து நிலை நிலவுகின்ற போதிலும், போதைவஸ்து பாவனை, விபசாரம், கருச்சிதைவு, பாலியல் வல்லுறவு, வீடுகளில் ஏற்படும் வன்முறைகள் தொடர்பான சமூகப் பிரச்சனைகளில் கவனஞ் செலுத்தப்படுவதில்லை. தன்னினச் சேர்க்கை, திருமணத்துக்கு முன் உடலுறவு, திருமணமான பின் வேறொருவருடன் வைத்துக்கொள்ளும் இரகசியப் பாலியல் தொடர்பு முதலியவை பற்றிப் பேசப்படுவதில்லை. முத்தமிடுவது போன்ற சாதாரண விஷயங்கள் கூட தொலைக்காட்சியில் தடைசெய்யப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை களோ வெகுகோலகலமாக ஒளிபரப்பாகின்றன!
கலியாணத்தின் போது மணப் பெண்ணானவள் தனது கன்னிமைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய சோதனைகள் இன்னும் நிலவுகின்றன. முதலிரவின் போது மணப்பெண் படுத்திருந்த படுக்கை விரிப்பை பரிசோதிப்பதில் குறியாயிருப்பவர்கள், மணமகன் சுத்தமானவனா என்பதை யிட்டு கேள்வியே எழுப்புவதில்லை!
இலங்கையில் எயிட்ஸ் பற்றிய போதனையில்லா மலிருப்பது பரிதாபத்துக்குரியது. எயிட்ஸ் அபாயம் பற்றிய எச்சரிக்கைகள், விளம்பரங்கள், வெகுஜனத்தொடர்பு சாதனங்களில் மேற்கொள்ளப்பட்டு, குடும்பக்கட்டுப்பாட்டுச் சாதனங்களைப் பாவிப்பதற்கு ஊக்குவிக்கவேண்டும்.
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 31
சொந்தக்காரன் சொல்லும் சோகக் கதைகள்
"பெண்ணடிமை திரு மட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே'
என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். கவிஞரின் கூற்றுப்படி மலையக நாவல்கள் ஒவ்வொன்றிலும் பெண்கள் அடிமைகளாக. போகப் பொருட்களாக இருந்து வந்துள்ளதை யதார்த்தபூர்வமாக கதாசிரியர் சித்தரித்துள்ளனர்.
சமூகப் பிரச்சனைகளில் தலை முறைக்கு தலைமுறை, காலத்திற்கு காலம் மாற்றம் ஏற்படுவது இயல்பு. ஆனால், மலையக மக்கள் வாழ்வில், அதிலும் பெண்கள் வாழ்வில் அத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டதில்லை. இதனை மலையக நாவல்கள் நன்கு சித்தரிக்கின்றன.
நந்தியின் "மலைக்கொழுந்து" நாவலை தொடர்ந்து வெளிவந்த பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்" இன்னும் பல சோகக்கதைகளையே சுட்டிக்காட்டுகின்றது.
சொந்தக்காரன்’ நாவல் வர்க்க முரண்பாடுகளையும், தொழிற்சங்க முயற்சிகளையும் பற்றி - மற்ற மலையக நாவல்களை விட சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது.
"குயின்ஸ் தோட்டத்திலுள்ள காளி கோயில் விறாந்தையில் சின்னக்கலப்பன் ஆறுதலாக இருந்தான். பின்னால் ஊன்றிய கையில் உடலைப் பாரப்படுத்தி, மடித்து உயர்ந்து நிற்கும் முழங்காலில் மறுகையை நீட்டி போட்டவாறு யோசனையில் மூழ்கிவிட்டான். கண்கள் உயர்ந்து சடைத்து நிற்கும் செம்பக மரத்தின் மஞ்சற் பூக்களில் வெறித்திருந்தன."
இவ்வாறு நாவலை ஆரம்பிக்கிறார் கதாசிரியர் பெனடிக்ற் பாலன்.
"குயின்ஸ் தோட்ட நிலத்திற்கு யார் சொந்தக்காரன்? பசுமை பூத்துக் குலுங்கும் சித்திரச் சோலைகள் போல காட்சியளிக்கும் இந்த மண்ணுக்கு யார் சொந்தக்காரன். ? என்ற பிரச்சனை நாவல் முழுவதும் விரவி காணப்படுகின்றது. " சின்ன்க்கலப்பன், அவன் தங்கை கண்ணம்மா, அவள் மகள் ஜானகி, சின்னக்கலப்பனின் மகன் வீரமுத்து ஆகியன
 

Øවූ 《グ恋 (2 200 تسلس న్వైడ్త్ Act SèKSNØ S/24
அந்தனி ஜீவா
நாவ்லின் பிரதான பாத்திரங்களாகும். இவர்களைச் சுற்றியே கதை
பின்னப்பட்டிருக்கிறது.
கண்ணம்மா தன் மகள் ஜானகியைப் பற்றிப் பெரிதும் கவலைப்பட்டாள், ஜானகி பெரியவளாகி மூன்று
வருடங்களாகிவிட்டன. இவற்றையெல்லாம் தன் அண்ணனான சின்னக்கலப்பனிடம் கண்ணம்மா விபரித்துக் கூறினாள். "பக்கத்து காம்பராவிலுள்ள ஒரு குமர்ப் பெண்ணுக்கு தகப்பன் யாரென்று தெரியாமல் குழந்தை பிறந்திருக்கும் பயங்கரத்தை கூறி எப்படியும் ஜானகியின் திருமணத்திற்கு ஒரு முடிவான தேதி குறிப்பிடும்படி ஒற்றைக் காலில் நின்றாள். அழுது வடியும் அவளுக்கு தன் மனதில் அழுத்தி வைத்திருக்கும் எண்ணங்களைக் கூற முடியவில்லை சின்னக்கலப்பனுக்கு. அவளும் விசயத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் முறையில் விளக்கமாகக் கூற முடியாமல் அவஸ்தைப்பட்டான்."
"வீரமுத்துவும் ஜானகியும் கலியாணம் முடிந்தாப் பிறகு வாழ ஒரு தனிக்காம்பரா வேணும்" என்று சுருக்கமாக கூறினான். அவன் திருமணம் செய்யப்போகும் மகனை நினைத்துப் பார்த்தான்.
"தானே தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள முனையும் நாட்களில் தனக்கேற்படும் கஷ்டத்தையும், மற்ற லயங்களில் உள்ளவர்களின் அனுபவங்களையும், அவை ஏற்படுத்தும் மனநிஸ்டூரங்களையும் அவன் அறிவான். அந்த காம்பராவில் வீரமுத்துவும் கலியாணம் முடித்து வந்தால்? பருவமடைந்த பொட்டு, நட்சத்திரம், வயது வந்த பயலுகள் ஆகியோரினால் ஏற்படும் அவஸ்தைகளையும், சங்கடங்களையும் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை."
இதுதான் மலையக லயக்காம்பரா வீடுகளில் ஏற்படும் பிரச்சனைகள்.
இதுபோன்ற பல விடயங்களை உள்ளடக்கமாக கொண்டுள்ளது பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன்'
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை சொந்தக்காரன் போல சோகம் நிறைந்ததாக உள்ளது.
- இனியும் வரும் -
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 32
பெருமளவு வளர்முக நாடுகளில் கிராமியப் பெண்கள் பெருமளவு வளர்முக நாடுகளில் கிராமியப் பெண்கள் அதிகாலை 4 மணியிலிருந்து காலை 8 மணிக்கிடையில் அடுப்புமூட்டி, வீடுவாசல் கூட்டி, பால் கறந்து, நீர் அள்ளி, காலை உணவு தயாரிக்கிறார்கள். பிள்ளைகள், மற்றும் குடும்பத்திலிருக்கும், ஏனையோரிற்கும் உணவு வழங்கி பின் 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை கணவனது வயலிலோ, தோட்டத்திலோ களை பறித்து, நீரிறைத்து மற்றும் இதர வேலைகளில் உதவுகிறார்கள். பின் மீண்டும் விறகு ஒடித்து, மாட்டிற்கு புல் பிடுங்கி, இரவு உணவிற்கும், மறுநாட்காலை உணவிற் கும் தேவையான காய்கறி, இதர பொருட்களைச் சேகரித்து வீடு சேர்கிறார்கள். மீண்டும் இரவு உணவு தயாரித்து அனைவரிற்கும் பரிமாறிய பின் எஞ்சியதை தான் உண்கின்றாள்.
இவ்வாறு பெண்கள் ஆண் களை விட தினமும் இரட்டிப்பு மடங்கு வேலை செய்து தம் குடும்பத்தைப் , பாதுகாப்பதுடன், மறைமுகமாக விவசாய விருத்திக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும் உதவுகின்றனர். இவ் வாறிருப்பினும் இப்பெண்களது பங்களிப்பு கணக்கில் எடுக்கப் படுவதில்லை. இவர்களது வேலைக் கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இவர்கள்
ஊதியம் வழங்கப்படாத குடும்ப தொழிலாளர்கள் எனும் வர்க்கத்துள் தள்ளப்படுகின்றனர்.
இவ்விருத்தியடைந்துவரும் நாடுகளில் விவசாய வளங்கள் எதுவும் பெண்களிற்கு உரிமையாகவும் இல்லை. குறிப்பாக விவசாய நிலத்திற்கான உரிமையற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் வருடாவருடம் மென்மேலும் வறியவர் களாகவும்,போஷாக்கு குன்றியவர்களாகவும் ஆகி வருவதுடன் குடும்பத்திற்காக கடுமையாக உழைக்க வேண்டியவர் களுமாகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரைவாசிக்கும் அதிகமான மக்கட்தொகை
31
 
 

விஜயராணி சற்குனராஜா
வாழ்வாதாரப் பயிற்சி செய்கையிலேயே தங்கியுள்ளது. பணப் பயிர்ச் செய்கையில் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், தடைகள், இவற்றினால் குறைந்த வருமானம் என்பன இதற்குப் பிரதான காரணிகளாகும். எனவே, இம் மக்கள் பெரிதும் வாழ்வாதாரப் பயிர்ச் செய்கையிலும், இச் செய்கைக்காக அருகிலுள்ள காடு, வெற்றுநிலம் மற்றும் இயற்கை வளங்களிலுமே பெரிதும் தங்கியிருக்க வேண்டியவர் களாகின்றனர். பெருகி வரும் சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக இந் நிலை மேலும் மேலும் இறுகி வருகின்றது. சில தசாப்தங்கட்கு முன்பு இவ் வாழ்வாதாரப் Luurfě, செய்கையானது சூழற் சமநிலையைப் பாதிக்காத ஒர் முன் மாதிரியான பயிர்ச் செய்கை நடவடிக்கையாகவே விளங்கி வந்தது. ஆனால், அண்மைக் காலங்களில் அதிகரித்த சனத்தொகையும், அதி கரிக்கும் மக்கட் தேவையும் இவ் வாழ்வாதாரப் பயிர்ச் செய்கையைக் கூட சூழற் சமநிலைக்கு அச்சுறுத்தல் செய்யும் ஓர் நடவடிக்கையாக மாறி விட்டன.
இதுமட்டுமன்றி, வறிய கிராம மக்கள் தமக்கு அயலிலுள்ள சூழலை, குறிப்பாக காட்டுவளத்தையும், நிலம் மற்றும் நீர்வளத்தையும் தம் தேவைக்காக கட்டுப்பாடின்றிப் பாவிப்பதும், அழிப்பதும் அதிகரித்து வருகின்றன. இந் நிலை உலகளாவிய ரீதியில் நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார அபிவிருத்திக்கு ஓர் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
அருகிவரும் இவ்வளங்கள் கிராமிய பெண்களது வேலைப்பளுவையும் அதிகரிக்கின்றது. எரிபொருள் விறகிற்காகவும் இதர உணவு மற்றும் ஏனைய தேவைகட்காகவும் காட்டு வளத்தை அணுகும் இவர்கள் முன்பைவிட மேலும் பன்மடங்கு தூரம் நடக்க வேண்டியவர்களாகவும், அதிக தூரம் நீர் மற்றும் விறகு போன்றவற்றை தலையிலும், முதுகிலும் சுமந்து வரவேண்டியவர்களாகவும் ஆகின்றனர்.
உலகின் எந்த மூலையில் நடக்கும் எத்தகைய மாற்றமும் இறுதியில் இப் பெண்களை தாக்கி, அவர்களது குடும்பப்
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 33
பளுவையும், வேலைப் பளுவையும் அதிகரிக்கின்ற போதிலும் துரதிர்ஷ்டவசமாக இவர்களது இத்தகைய பங்களிப்புக்கள் எவையும் புள்ளிவிபரவியலாளர்களினாலோ, பொருளியல் நிபுணர்களினாலோ, அன்றியும் திட்டமிடலியலாளர்களினாலோ கணக்கில் கொள்ளப்படுவதில்லை. எந்த ஒரு வறுமை ஒழிப்புத் திட்டமோ, சூழல் பாதுகாப்புத் திட்டமோ, அன்றியும் அபிவிருத்தித் திட்டமோ இத்தகைய பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாவிடின் வெற்றியளிக்காது.
குடும்பத் தலைவனது பணவருமானம் குடும்பத் தேவைகட்கும் போதாமலிருப்பதனால் இவ்வாறு பெண்கள் கணவனின் வருமானத்தை விட இரட்டிப்பு மடங்கு வருமானம் பெறக் கூடியளவு பெறுமானமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியவர்களாகின்றனர். ஆயினும் இந் நடவடிக்கைகள் இதைவிட குறைந்த வருமானம் உடைய கணவனது நட வடிக்கைகளை "பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் எனக் கணக்கிடுவது போல் கணக்கிடப்படுவதில்லை.
இதனால் இப் பெண்கள் அபிவிருத்தி நடவடிக்கைகட்காக வழங்கப்படும் கடன் வரிச்சலுகைள், உதவி மானியங்கள் போன்ற எதனையும் பெற முடியாதவர்களாகவும் நில உரிமை அற்றவர்களுமாகவுமே உள்ளனர். இந் நிலை இட் பெண்களின் இவ்வாறான சிறந்த மனிதவளத்தின் உற்பத்தித் திறனை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேல் உயர்த்த முடியாததாகின்றது. இத்தகைய துரதிர்ஷ்டநிலை, வறுமைட் பிடியிலிருந்து இத்தகைய பெண்கள் மேலெழ முடியாத சூழலை உருவாக்குவதுடன், இவர்களது கல்வியறிவு மட்டம், போஷாக்கு நிலை என்பவற்றையும் உயரவிடாமல் தடுக்கின்றது. மேலு இவர்கள் சமூக அந்தஸ்து, புற உலகத்துடனான தொடர் அற்றவர்களாகவும், வாழ்வில் எத்தகைய முன்னேற்றகரமான மாற்றங்கள் இன்றியே வாழ்ந்து முடிப்பவர்களாகவும் உள்ளன தேசிய, சர்வதேச, சமூக மற்றும் அபிவிருத்தி நோக்குடை தாபனங்களும் இந் நிலையை தெளிவாக உணர்ந்து கொண்( அவ்வப் பிரதேசங்கட்கான அபிவிருத்தித் திட்டங்களை வகுத்த அவசியமாகின்றது. பாரம்பரிய அபிவிருத்தி முறைக பெண்களின் அபிவிருத்தியில் ஏற்படக்கூடிய தடைகளைப் பற்றி கவனத்தில் கொள்ளாமை ஓர் முக்கிய குறைபாடாகு உதாரணமாக பெண்களால் வாழ்வாதார நடவடிக்கைகட்கா பயன்படுத்தப்பட்டு வந்த பெருமளவு கிராமிய நிலங்க தனியார்மயப்படுத்தலின் கீழ் முதலாளிகளின் கைகளி ஒப்படைக்கப்பட்டமை, பெண்களது வாழ்வாத நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் இத்தை நடவடிக்கைகள் இந் நிலங்களில் தங்கியிருந்த பெண்க எஞ்சியுள்ள சிறிய நிலத்துண்டுகளை நாடிப் படையெடுக் செய்ததனால் அந் நிலங்களின் மண் வளம், அயற் பிரே நீர்வளம் என்பனவும் வேகமாக பாவிக்கப்பட்டு சுரண் படுவதற்கும் வழி வகுக்கின்றன.

பெண்களிற்காக தனிப்பட வளங்கள் ஒதுக்கப்படாத போதிலும், கிடைக்கும் வளங்களிற்காக கிடைப்பனவு அல்லது வளங்களை பாவிக்கக்கூடிய உரிமை என்பனவும் தடுக்கப் படுதல் எதிர்காலத்தில் இவர்கள் குறைந்த பெறுபேற்றிற்காக மேலும் மேலும் அதிகம் பாடுபடவேண்டிய சூழ்நிலையை உருவாக்குகின்றது. வறிய நாடுகளின் வேகமான சனத்தொகை அதிகரிப்பும், குடும்பத்தில் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் மேலும் இவர்களது பெளதீக வாழ்க்கைத் தரத்தைக் குறைத்து உற்பத்தித் திறனையும் குறைக்கின்றது.
இத்தகைய துரதிர்ஷ்ட நிலையை நீக்குவதற்காக அரச, அரச சார்பற்ற தேசிய, சர்வதேச நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க வேண்டியது மிகமிக அவசியமாகின்றது. இவற்றுள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்கள் பின்வருமாறு:
1. பிறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தல்.
2. பெண்கள், தாய்மாரது போஷாக்கு நிலை
களை உயர்த்துதல்.
3. பெண்களின் கல்வியறிவை அதிகரித்தல்.
4. இதுவரை காலமும் பொருளாதார ரீதியாக கணிக்கப்படாத பெண்களது ஊதியமற்ற வேலைகளையும் பொருளாதார நடவடிக்கை களாக கணக்கிட்டு அவர்களது பங்களிப்பை முக்கியப்படுத்தல்.
5. நிலம், மற்றும் இதர வளங்களிற்கான பெண்களது உரிமைகள், வளங்களை அணுகக்கூடிய தன்மை என்பனவற்றை அதிகரித்தல்.
6. பெண்களது சமூக அந்தஸ்து மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய வகையில் அபிவிருத்தித் திட்டங்களையும், சட்ட திட்டங்களையும் அமைத்தல்.
இத்தகைய காரணிகளைக் கவனத்திற் கொண்டு, விவசாயத்துறையில் மட்டுமன்றி, இதர துறைகளிலும் பெண்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமே வளர்ச்சியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தியை மேம்படுத்த முடியும் என்பது திண்ணம். நாட்டில் அபிவிருத்திக்குரிய குறிகாட்டிகளில் ஒன்றாக இவ்வாறான வருமானம் குறைந்த பெண்களது பெளதீக வாழ்க்கை சுட்டெண்ணையும் சேர்த்துக் கொள்ளுதல் நாட்டின் உண்மையான அபிவிருத்தி நிலையைக் காட்டும் ஓர் வழியாக அமையும்.
32
டிசம்பர் 1997 - பெண்ணின் குரல்

Page 34
டிசம்பர் 19970 இதழ் 16 0
6ll Japrg
நிதானடா:
ட போற்றிப் ဉ=ဠိ
6. * ஒரு சாதி==
=தமிழனே=
6.
ஆனாலும்-H விலைகொடுத்து=
விலை கொடுத்து(ப்)==
edg
பெண்மையைக் E. கேவலப்படுத்துகின்ற =ஒரு சாதி=
உண்டென்றால்ட
தமிழனே
அதுவும் நீதாண்டா =
 
 
 
 
 
 

விண் குரல்
| ISSN 1391-0914. || || lea. ELIT 20/=
நீmஒருத்தியாவது
செழுமை காணும்=
=நீக
திச்சட்டிக் ளோடு
தீய்ந்து விடத்தான் துடிக்கிறாயா
தியையும் =தீய்க்கின்ற பெண்மையாய்–
துணிவு கொள்
இல்லை யென்றால்
வாழ்க்கை
- உன்னையே தீய்த்துவிடத்
துணிந்துவிடும்தாயே!
தருமலிங்கம்