கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 1998.06

Page 1
舒 6lU1@iika
ஜூன் 1998 0 இதழ் 17
பெண்களின் உரிை
 

piai 5/Jais.
D ISSN 1391-0914 O 5.625) BLIT 20/=
மக்கான இலங்கைச் சஞ்சிகை

Page 2
பொருளடக்கம்
தந்தைவழி சமூக அமைப்பின்
அதிகார இல்லம் 01
குடும்பம் 02
வீட்டு வேலையும் பெண்களும் 05
குடும்பப் பாதுகாப்பு என்னும் பொய்மை 09
வீட்டுக்குப் போதல் 12
பெண்கள் அடிமையா க்கப்பட்டமை 13
விவாக விளம்பரங்கள் 16
ஐஞ்சு நிமிஷம் 20
கைம்மை 23
நினைவுகள் 25
குடும்பம் பலியெடுத்தல் 27
உள்வீட்டு வன்முறைகள் 29
பெண்கள் தலைமை
யிலான குடும்பம் 31
ஆசிரியர் : பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் : எஸ்.டி.சாமி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரின்ட்ஸ்
ஆதரவளிப்பு : SIDA
வெளியீடு :
பெண்ணின் குரல் 21125 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு - 05 தொலைபேசி : 074-407879
தந்தைவழி சமூ
அமைப்பின்
அதிகார
இல்லம்
இந்த இ உள்ளடக்கியுள்ே செயற்படுகின்றது வந்துள்ளோம். இன் அத்துடன் இது த மிக முக்கியமாகவி
இவ்விதழின் குடும்ப அலகினும் அதிகாரத்தை ஆ தொடர்பில் பெரு கூட சமூகத்தின் அ ஏற்றுக்கொள்ளப்பட் வித்தியாசமான பே ரீதியாக குடும்ப 6 இருந்து (அதாவது பெண்களின் அை விவகாரங்கள் பற் வழங்குகின்றது. 8 பின்பற்றி, ஒரு உ6 இடங்களில் உச்ச ஒழுக்கம் பெண்களு கட்டுப்பட்டது அ நிலவுகின்றது."
69(55TULD60: பிரதிகூலங்களுக்கு பண்புகள் ஆணினா குடும்ப அலகில் கி வாழ்கிறார்கள்.
இச்சூழ்நிை அம்சங்களினால் சிறந்த வாழ்க்கை செய்தல், இளம் ெ காரணமாகத் தர நிருவகிப்பதற்கான ஆகியவற்றினால்
இக்கட்டுை அம்சங்களை கே போன்றதாகும். இ நோக்குவதற்காக இது தொடர்பாக செய்து அதுபற்றி சித்தமாயுள்ளோம்

தழில் குடும்பம் பற்றிய கருப்பொருளை நாம் ளாம். குடும்ப அலகு ஒன்றினுள் பால்நிலை எவ்வாறு என்பதையிட்டு சில அம்சங்களை நாம் வெளிக்கொண்டு றைய சமூகத்தில் முதலாவது அலகாக குடும்பம் மிளிர்கின்றது. ந்தைவழி சமூக அமைப்பின் கருத்துருவான பகுப்பாய்விற்கு பும் விளங்குகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட பக்கங்களிலும், வழங்கப்பட்ட நேரத்திலும், ர் நடைமுறைப்படுத்தப்படும் தந்தைவழி சமூக அமைப்பின் ழமாகக் கோடிட்டு காட்டுவது சாத்தியமற்றதாகும். இது bபாலானவை எளிதில் புலப்படாதவையாக விளங்கினாலும் பிவிருத்திக்கு உறுதியான பங்களிப்பு செய்யக்கூடியது என்பது டுள்ள உண்மையாகும். எனினும், குடும்ப அலகுகளில் நிலவும் ாக்குகளை நாம் மேலோட்டமாக தொட்டுள்ளதுடன், வரலாற்று வளர்ச்சியை தொடர்புபடுத்தக்கூடிய முக்கிய ஆவணங்களில் ஏன்ஜல்ஸ் எழுதிய குடும்பத்தின் மூலம்) ஆரம்பித்துள்ளோம். மப்பிலும், அடிமைத்தனத்திலும் இடம்பெறும் பலதரப்பட்ட றிய வழிகாட்டலையும், பகுப்பாய்விற்கான ஆதரவையும் இது இதனுடன் ஆரம்பித்து, ஒருதாரமணத்தின் அடிச்சுவடிகளைப் ண்மையான முடிவுக்கு வந்துள்ளோம். இந்தக்கருத்து பல்வேறு ப்படுத்தப்பட்டுள்ளது. “ஒருதார மணத்தின் வழியிலான விசேட நக்கு மட்டுமே உரித்தாக விளங்குகின்றது. இது ஆண்களுக்கு ல்ல. இந்த அமைப்பிலான ஒழுக்க முறையே இன்றும்
ா அமைப்பு முறையின் ஆரம்பத்தில் இருந்து பெண்களே த உட்படுகின்றனர். ஒருதாரமணத்தினால் பெண்களின் சீரிய ால் பெரிதும் மறுக்கப்படுவதுடன், இதற்கு கட்டுப்படும் பெண்கள் சிறைக் கைதிகளாகவும், சமையலறையில் அடிமைகளாகவும்
ல வீட்டில் பால்நிலை வகிக்கும் பங்கின் சுருக்கமான பின்வரும் முறையில் பின் தொடர்கின்றது. விதவையான பின் மறுக்கப்படுதல், மணமுடிப்பதற்காக ஜோடிகளைத் தெரிவு பண்களும், வயதான பெண்களும் தாங்க முடியாத அழுத்தத்தின் )கொலையை நாடுதல், ஒற்றைப் பெற்றோரின் வீட்டை முயற்சி, நீடிக்கப்பட்ட குடும்ப அமைப்பு, வன்முறை, மதம் பெண்கள் மீதான அடக்குமுறை போன்றன.
ரகள் யாவும் தந்தைவழி சமூக அமைப்பின் மறுத்தல் ாடிட்டுக்காட்டுவதற்கான சமூகத்தின் மத்தியில் ஒரு சிறுதுளி து சம்பந்தமாக குடும்ப அலகின் புனிதத் தன்மைக்கு அப்பால் விழிப்படையச் செய்வதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏதாவது பங்களிப்பை ஆற்ற நீங்கள் விரும்பினால், தயவு எமக்கு எழுதவும். எதிர்காலத்தில் அதை உபயோகிக்க நாம்
- ஆசிரியர்
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0

Page 3
AA AA
தந்தை வழிச் சமூகக் கட்டுமானத்தில் குடும்பம் என்பதே மிகுந்த அடக்குமுறை அலகாக உள்ளது. பெண்ணினத்திற்கு எதிரான அடக்கு முறையும், இடப்பெயர்வும் இங்குதான் ஆரம்பிக்கிறது. பின்னர் இதுவே குடும்ப அலகின் ஒவ்வொரு கட்டத்திலும்
வாழ்க்கை பூராவும் தொடர்ந்து குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அமுல்நடத்தப்படுகிறது.
குடும்ப அலகில் பலவகையானவை உண்டு. மையப்படுத்தப்பட்ட, விரிவாக்கப்பட்ட, ஒற்றைப் பெற்றாருடைய, பெண் ஓரினச் சேர்க்கை, ஆண் ஓரினச் சேர்க்கை என்று பல கும்ப வகைகள் உண்டு. இவற்றில் ஒற்றைப் பெற்றார் குடும்பம் என்பது தந்தை வழிச் செல்வாக்கிற்கு சற்று அப்பாற்பட்டுள்ளது எனலாம்.
மையப்படுத்தப்பட்ட குடும்பம் என்பது ஐரோப்பாவிலும், உயர்ந்த சமூகங்களிடையும் காணக்கூடியதாய் உள்ளது. ஆனால், உண்மையில் ஏனைய குடும்ப அலகுகளைப் போல் பல்வகை வகையறாக்கள் உண்டு. இவை இனவாத முனைப்பு டைய சமூகங்களாக இனத்துவ, மொழி, சமய வித்தியாசங்களை அழுத்துவனவாக உள்ளன. இக்குடும்பமானது பிள்ளைகள், பெற்றார் என்ற வட்டத்துள், ஆணொருவனைக் இக்குடும்ப அலகின் பிரதான பாதுகாப்பாளராகக் கொள்கிறது. அவன் குடும்பத்திற்குத் தலைமைதாங்க, அவனது மனைவி முழுநேர குடும்பப் பெண்ணாகவும், தாயாகவும் இருக்கிறாள்.
விரிவாக்கப்பட்ட குடும்பம் ஆணொருவனின் தலைமையில் அவனது மனைவி அல்லது மனைவிமார்களோடும் அவனது மகன் மார் குடும்பத்தாலும் இயக்கப்படுவதாகும். இது ஒரு பாரம்பரிய குடும்ப அலகு, இங்கே மனைவியானவள் குடும்பத்தின் தலைமை அதிகாரத்திற்கும், மாமிக்கும் (கணவனின் தாய்) மச்சாள்மாருக்கும் (கணவனின் சகோதரிகள்) மற்றும் சொந்தக்காரருக்கும் குடும்ப அங்கத்தவர்க்கும் கட்டுப்பட்டவளாக இருக்கறாள்.
இக்குடும்ப அமைப்பில் மனைவியானவள் பலபேரைத் திருப்திப்படுத்த வேண்டியவளாக இருக்கிறாள். இதனால் மையப்படுத்தப்பட்ட குடும்பத்தின் மனைவியைவிட, விரிவாக்கப்பட்ட குடும்பத்தின் மனைவி மிகுந்த கஷ்டத்திற்குள் ளாகிறாள். விரிவாக்கப்பட்ட குடும்பத்தின் தலைமைக்கு அதிக அதிகாரமும், பொறுப்பும் வழங்கப்படுவதால், அது அவளை மிக பயங்கரமானவளாகவும் மாறச்
2 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

செய்கிறது. மனைவி அல்லது மனைவிமார் மிகக் குறைந்த அதிகாரங்கள் உடையவர்களாக மாறுகின்றனர். இங்கே குடும்ப அலகானது சதித்திட்டங்கள் நிறைந்த வலைப்பின்னலாக மாறுவதால், பிரதான குடும்பத்தின் தலைவனின் அதிகாரங்களைக் கூட்டுவதோடு, பெண்ணின் நிலையை மிகக் குறைந்த தளத்திற்கு தள்ளுகிறது.
ஒற்றைப் பெற்றார் உள்ள குடும்பங்கள் (பெண்களும் பிள்ளைகளும்) பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அவளுக்கென குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொள் வதற்கென ஒரு தலைமகன் இல்லை. சமூகமயப்ப டுத்தலானது அவளிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்தாது, ஆணொருவனின் தலைமையை இழந்ததையே உணர்த்துவதாக மாறுகிறது. அவன் எவ்வளவு குடிகாரனாக இருந்தாலும், மனைவியை நையப்புடைப்பவனாக இருந்தாலும் இதையே அவள் உணர்கிறாள்.
ஆணொருவன் இல்லாது விதவையாக, விவாகமாகாதவளாக, ஒற்றைப் பெற்றாராக இருப்பது வழமையாக ஒரு வெட்கத்திற்குரிய விஷயமாகவே கொள்ளப்படுகிறது. இத்தகைய விடுதலை பெற்ற குடும்பங்களுக்கான சமூகத் தண்டனையாகவே இக்கருத்து நிலவுகிறது. இதன் மூலம் இத்தகைய குடும்பங்கள் பிரபலமாக்கப்படுவது தடுக்கப்படுகிறது. தைரியம் மிக்க பெண்களின் மிடுக்கான இத்தகைய சுதந்திரப் போக்கிற்கு எதிராகவே சமூக, கலாசார கட்டுப்பாடுகள் தடைகள் நிலவுகின்றன. சமூகத் தடைகள் என்பவை இங்கே பெண்களை சமூக ரீதியாக ஓரங்கட்டுதல், பொருளாதார ரீதியாக நிர்க்கதியாக் குதல் போன்றவை ஆகும்.
ஏனைய அதிக அளவு எண்ணிக்கை இல்லாத ஆனால் மிகப் பிரபலமான குடும்ப அலகாக உள்ளவை பெணி ஓரினச்சேர்க்கை குடும்ப அலகுகளாகும்.
எல்லா குடும்ப அலகுகளும் கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத ஆணாதிக்க (தந்தைவழி) கட்டுக்களைக் கொண்டுள்ளன. இவை பெண்ணினது, தாயினது, மகளினது ஆத்மாவையே ஊடறுத்துச் செல்கின்றன. இதனால் இவர்கள் இரண்டாந்தரத்தான வாழ்க்கை போக்கை தவிர்க்க முடியாத வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றனர். குடும்ப அலகு என்பது என்ன? இந்த அலகு எப்படி வெளிவருகிறது. அது எவ்வாறு ஆணாதிக்க முறைக்கு

Page 4
துணைபோகிறது? (பார்க்கவும்: “பெண்கள் அடிமையாக்கப்பட்டமை” என்ற கட்டுரையை)
“FAMULUS" என்ற வார்த்தை "வீட்டடிமை” என்றும் "FAMILIA" என்பது ஒரு மனிதனுக்கு சொந்தமாகவுள்ள அடிமைகளின் எண்ணிக்கை என்றும் கொள்ளப்படுகிறது. இந்த முறையானது ரோமர்களால் புதிய சமூக அமைப்பை உருவாக்க வெளிக் கொணரப்பட்டதாகும். இதன்படி இதன் தலைவனா னவன் மனைவி, பிள்ளைகள், ஒரு தொகை அடிமைகள் முதலியோரை தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டிருந்தான். ரோமானியச் சட்டப்படி அவன் அவர்களது சாவுக்கும் வாழ்வுக்கும் உரிமை கொண்டாடக் கூடியவனாக இருந்தான் (ORIGIN OF THE FAMILY).
“எப்பொழுது ஒரு பெண்ணா னவள் தன் பொருளாதார உற்பத்தியி லிருந்து நீங்கினாளோ அப்பொழுதி லிருந்தே அவள் தங்கியிருக்க வேண்டிய வளானாள். மனைவி, குடும்பம் ஆகிய வற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆணிடம் கொடுக்கப்படுகிறது. விவாகம் என்பது முதன்முதலாக ஒரு பொருளா தாரச் சுமையாக மாறுகிறது. இச் சந்தர்ப்பத்தில் சட்டமும் சமயமும், இதற்குதவியாக முன்வந்து, பெண் களையும் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டியது ஆணின் கடப்பாடு எனப்
y5gst JuGig 601." (THE FAMILY)
6T6656il 5 (EVELYNREED) gg. பற்றிச் சொல்கையில் இன்னுமொருபடி மேலே சென்று "இதை மூடி மறைப்பது போல் புதிய புராணம் ஒன்று எழுகிறது. \s அதாவது பெண்கள் மட்டுமல்ல தொழில் புரியம் ஆண்களும் இந்த முதலாளித்துவ சமூகத்தால் சுரண்டப்படுகிறார்கள். களவாடப்படுகிறார்கள் என்பதே அது."
ஒரு சமூகமானது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பாதுகாப்பையும் உதவியையும் வழங்குகிறது. இதனோடு பார்க்கும் போது குடும்பத்தில் காணப்படும் நிலை வேறாகவே இருக்கிறது. சமூகத்தை நிர்வகிக்க வென தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அறிவும், பயிற்சியும், தலைமை தாங்கும் தகைமையும் பெற்றவர்களாக இருப்பர். ஆனாலி குடும்பங்களில் தலைமை பொறுப்பை வகிப் போர் அனுபவம், பயிற்சி என்பவையற்ற பாதுகாப்பாளராகவும் உதவி வழங்கு வோராகவுமே உள்ளனர். இதனால் இவ் விஷயத்தில் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபாடான விதிமுறைகளும் நடவடிக்கைகளும் இடம் பெறுவது கண்கூடு.

எது எவ்வாறாய் இருந்தாலும் பெண்கள் எல்லா விஷயத்திலும் ஓரங்கட்டப்பட்ட, அடக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட நிலையை அனுபவிப்பவர் களாகவே ஆணாதிக்க சமூகங்களில் உள்ளனர்.
குடும்ப அலகென்பது திடீரென உண்டாக்கப்பட்ட ஒன்றல்ல. பெண்ணானவள் தாயாகவும், பாது காப்பாளராகவும் சகலவற்றையும் கவனிப்பவளாகவும் இருந்த நிலையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுத்தன. வேட்டைக் காரனாக இருந்த மனிதன் விவசாயியாக மாற முற்பட்டபோது, அத்தொழிலை ஏற்கனவே சிறிய அளவில் செய்து கொண்டிருந்த பெண் அதிலிருந்து தள்ளிவைக்கப்பட்டாள்.
அவள் முழுநேரத் தாயாகவும் பிள்ளை பராமரிப்பாளராகவும் உணவூட்டுவோராகவும் மாற்றப்பட்டாள் (இது பற்றிய முழு விபரமும் பெண்ணின் குரல் 6 இல் காண்க).
ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணுடைய சுதந்திரம் பலவித கட்டுப்பாட்டுக்குள்ளாக்கப்படுகிறது. இதனால் அவள் தனது அறிவு வளர்ச்சி குன்றிய நிலைக்குள்ளாகிறாள். இது படிப்படியாக ஆண்களே ஆள்வதற்குரியோர் என்ற மேம்பாட்டு சுபாவத்திற்கு வழிவகுக்கிறது.
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 O 3

Page 5
“மாதிரிக்” குடும்பத்தில் பெண் என்பவள் உணவு, உடை, கல்வி, அலங்கரிப்பு போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் இரண்டாம் பட்ச நிலையிலேயே வைக்கப்படுகிறாள். அவளது மகளானவள் இன்னொரு ஆடவனின் கையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக "கலியாணம்” செய்து கொடுக்கப்படும்போது மட்டும் இந்த விஷயத்தில் புறநடை ஏற்படுகிறது. அவள் வீட்டு வேலைக்குரியவளாகக் கொள்ளப்படுவதால் அவளது இயற்கையான நல்லாற்றல்கள் மழுங்கடிக்கப் படுகின்றன. அவள் ஒரு சிறந்த இசைஞானமுடை யவளாகவோ, விஞ்ஞானியாகவோ, எழுத்தாள ராகவோ, ஆய்வாளராகவோ வரக்கூடிய ஆற்றல்கள் இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவள் அத்துறையில் சோபிக்க முடியாது போகிறது. பிறப்பில் தனது சகோதரனைவிட இவற்றில் அவள் ஆற்றல் பெற்றிருந்தாலும் அவளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப் படாது விடப்படுகிறது.
ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற இரண்டு கருவிகளாக மனிதனால் ஆக்கப்பட்ட சட்டமும், சமயமும் நிற் கிண்றன. இவை ஆணையும் பெண்ணையும் “விவாகம்” என்பதன் மூலம் இணைத்து குடும்பம் என்ற ஸ்தாபனத்தை ஆரம்பித்து வைக்கின்றனவெனலாம். கலியாணம் என்பது அடுக்குக ளாலான சமத்துவமற்ற உறவுமுறைகளைப் பேணுகிறது. இங்கே பெண்ணானவள் பலவித சுரண்டலுக்குள்ளாகிறாள். அவள் சட்டம், மரபு, சமயம், இலக்கியம் ஆகியவற்றின் மூலம் குடும்ப அலகைப் பேணுவதற்காக, மாதிரிப் பெண்ணாக, கீழ்ப்படிவுள்ள மகளாக, தியாகம் செய்யும் தாயாக, இவை யெல்லாவற்றையும் ஒருங்குசேரக் கொண்ட மனைவியாக, வேலைக்காரியாக கடமை செய்யப் பணிக்கப்படுகிறாள்.
ஆணாதிக்க சட்ட முறை தெளிவாக ஆணொரு வனையே குடும்பத் தலைவனாக ஏற்றுக் கொள்கிறது. சாவித்திரி குணசேகரவின் “குடும்பச் சட்டம்” பின்வருமாறு கூறுகிறது:
“எல்லா குடும்பச் சட்டமும் குடும்ப அதிகாரம், மனைவி பற்றிய விஷயத்தில் ஒன்றையே கூறுகின்றன. புருஷன் என்பவனே குடும்பத்தின் தலைவனாகவும் மனைவி, பிள்ளைகளின் நலன் பேணுபவளாகவும் கொள்ளப்படுகிறான். மனைவிக்கும் உரிமையும் பொறுப்பும் இருந்தபோதும் இவை கணவனுடைய தகமைகளுக்கு கீழானதாகவே இருக்கிறது. அவளுக்கு முழுஉரிமையும் கணவன் இறந்து விவாகத் தொடர்பு இல்லாமல் போகும்போதே ஏற்படுகிறது. விவாகரத்து மூலம் கலியாணத் தொடர்பு இல்லாமல் போகும்போது இவை முக்கியத்துவமற்றவையாகின்றன.
4 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

குடும்ப அடக்குமுறை என்பது பாலுறவு ரீதியாகவும் இடம் பெறுகிறது. பாலுறவுத்தேவை, பாலுறவு உரிமை என்பவை பெண்ணைப் பொறுத் தவரை குடும்ப ரீதியாகவோ சமூக ரீதியாகவோ கணக்கிலெடுக்கப்படுவதில்லை. ஆணைப் பொறுத்த வரை அவன் ஆண் என்பதால் அவனுக்கு விரகதாப காதல் உணர்வுகள் தீர்க்கப்படகூடிய உரிமை வழங்கப்படுகிறது.
அவன் குடும்பத்திற்கு வெளியே சென்று தன் விரகதாப உணர்வுகளை தீர்த்துக் கொண்டாலும் அவன் மன்னிக்கப்படுகிறான். ஆனால் பெண்ணுக்கு இவ்வுரிமை இல்லை. இதைப் பெண்கள் யாராவது துணிகரமாகச் செய்துவிட்டால் அவள் பைத்திய காரியாகவும், வெட்கங்கெட்டவளாகவும், வேசையா கவும், தீண்டத்தகாதவளாகவும் ஒதுக்கப்படுகிறாள்.
“பெண்ணடிமைத் தனம் அகன்று கொண்டி ருக்கும் இத்தருணத்தில், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைவெளிகளிலும் இருக்கும் இளம் பெண்களாகிய நாம் நம் முன்னைய மூத்த சகோதரிகளின் செயற்பாட்டைக் கெளரவிக்காவிடில் துன்பகரமான நிலைக்குள்ளேயே வீழ்வோம்" என்கிறார் எட்வார்ட் கார்பென்ரர்.
சட்டமும் சமயமும் சமூக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் சதா பெண்ணையே அவதானித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் முக்கியமாக சொத்துரிமை, வம்சாவழிச் சொத்துரிமை கவனிக்கப் படுகின்றன.
சமயத்தைப் பொறுத்தவரை பெண்ணுக்கு எந்த சமயமும் கைகொடுப்பதாய் இல்லை. அது புத்த சமயமாய் இருந்தாலும் சரி, இஸ்லாமாக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்றே. அவள் பத்தோடு பதினொன்றாக கோயில்களையும் வழிபாட்டுத் தலங்களையும் நிரப்புபவளாகவே இருக்கிறாள். பாப்பாண்டவர் முதல் குருத்துவமுடைய சகலரும் பெண்ணினதும் அவளது பிள்ளைகளினதும் உரிமைகளை ஒடுக்குபவர்களாகவே உள்ளனர். பைபிள், தம்மபதம், வேதசுருதிகள் எல்லாமே ஆண்களால் எழுதப்பட்டு மறைமுகமாக பெண்களின் ஒழுக்க விதிகளை அழுத்துபவையாகவே உள்ளன.
இதிலிருந்து தம்மை விடுத்துக்கொள்ளும், விடுவிக்க பெரும் முயற்சி எடுத்து குடும்பம் என்னும் அமைப்பில் ஓட்டைவிழச் செய்பவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது வேறு கதை.
ஈவா றணவீர

Page 6
வீட்டு வேலைய
"எனது மனைவி வேலைக்குச் செல்வதில்லை." அப்படியாயின் உலகம் ஓயாமலி சுழல்வதற் காய் உழைப்பவர் யார்? சமையல் செய்வதும் துணிகளைத் தோய்ப்பதும் தணர்னர் சுமப்பதும் யார்? குழந்தைப் பராமரிப்பும் நோயாளர் கவனிப்பும் எவரது வேலை?
எவர் வேலை செய்வதனால் ஆணர் மது அருந்தவும் நண்பர்களுடன் புகை பிடிக்கவும் சிட்டாடவும் முடிகிறது? ஆண்மகன் ஒருவன் வேலை செய்யவும், ஊதியம் பெறவும் உதவும் சக்தியை அளிப்பது எவரது வேலை? எவரது உழைப்பு கண்ணில் படாதது? எவரது உழைப்பு காதில் விழாதது? சம்பளம் குறைந்ததும், சம்பளம் அற்றதும் எவரது உழைப்பு? எவரது உழைப்பு கணக்கெடுக்கப்படாதது?
-அம்ருதா பிரிதம்
வீடு சார்ந்த வேலைகள் அனைத்தும் பெண்களுடையவை என்ற கருத்து நெடுங்காலமாகவே நிலவுவதாகும். இது எமது சமூகத்திலி மாத்திரமல்லாமல் பொதுவாகவே உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்தாகவும் நடைமுறையாகவும் உள்ளது. பெண்ணுக்குரிய இயற்கையான கடமைகள் எனக் கருதப்படும் இவ்வீட்டு வேலைகளில் பெறுமதி வாய்ந்த உழைப்புச் சக்தி அடங்கியுள்ளது என்பதும் அது கணிக்கப்படவேண்டியது என வலியுறுத்துவதும் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வீட்டுவேலைகளில் சமையல், துணிதோய்த்தல், குழந்தை பெறுதலும் பராமரிப்பும், வயோதியர்களையும் நோயாளர்களையும் கவனித்தல் போன்றன அடங்கும். வீட்டுக்கு வெளியே வேலை செய்து ஊதியம் பெறும் பெண்ணுக்கும் பொதுவான கடமைகளாகவே இவை கருதப்படுகின்றன. இக் "கடமைகளில்" இருந்து பெண்கள் தவறுவது எவராலும் விரும்பப்படுவதில்லை. வீடு சார்ந்த இவ்வேலைகள் பெண் ணுக்கு

ம் பெணிகளும்
சித்திரா மெளனகுரு
இயற்கையாகவே உரியவை என்ற கருத்தினாலேயே “பெண் வீட்டுக்கு வெளியே வேலைக்குச்செல்வது பொருத்தமா? பொருத்தமற்றதா?” என்ற விவாதங்கள் இன்னும் எம்மத்தியில் நடைபெறுகின்றன.
எனினும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் நிர்ப்பந்தங்களும் ஒரு குடும்பத்தில் வேலை செய்ய இயலுமானவர்கள் அனைவரையும் ஆண், பெண் என்ற பால் வேறுபாடின்றி தொழில் செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்குகின்றன. இவ்வாறு வீட்டுக்கு வெளியே தொழில் செய்வது பெண்களுக்கு நடைமுறை வழக்கமாகிவிட்ட போதிலும் வீட்டுவேலை பற்றிய கருத்து நிலையில் மாற்றம் பெரிதளவு ஏற்படவில்லை. இன்னும் பெணிகளுடைய கடமையோடு வீடு சார்ந்த வேலைகள் என்ற கருத்தே பெரும்பான்மையோரது கருத்தாக உள்ளது. இதனால் வீட்டு வேலைகள் உழைப்பாகக் கருதப்படுவதில்லை. இக்கருத்து சட்டரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் கூட உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. இதனாலேயே உத்தியோகபூர்வமான கணக்கெடுப்புக்கள் புள்ளிவிபரங்கள், அறிக்கைகள் போன்றவற்றிலும் வீட்டுவேலை செய்யும் பெண்களும், வீட்டிலேயே வேறு வருமானங்களை ஈட்டித்தரும் கோழிவளர்ப்பு, தோட்டவேலை போன்றவற்றில் ஈடுபடும் பெண்களும் வேலையற்றவர்களாகவே கணிக்கப்படுகிறார்கள். பொருளாதார ஆய்வுகளிலும் கூட மேற்கூறிய வேலைகளில் ஈடுபடும் பெண்களது உழைப்பு கணிக்கப்படுவதில்லை. சில பொருளியலாளர்கள், சமையல், விறகு சேகரித்தல், தண்ணிர் எடுத்தல், குழந்தை பராமரிப்பு போன்றவற்றை வேலை அல்ல என்றும் அவைகளுக்கு செலவிடும் நேரம் ஓய்வு நேரம் போன்றது எனவும் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் வீட்டு வேலைகள் உண்மையில் பெண்களின் உழைப்பே எனவும் வீட்டுக்கு வெளியிலும் வேலை செய்யும் பெணி இருவகையான வேலைகளைச் செய்கிறாள் எனவும் இதனால் அவள் "இரட்டைச் சுமைக்கு" உள்ளாகிறாள் எனவும் இந்த நிலையை மாற்றுதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இன்று உலகெங்கிலுமுள்ள பெண்கள் இயக்கங்கள் குரல் கொடுக்கின்றன. w
பெண்ணுடைய வீட்டுவேலைகள் குறித்துச்
பெண்ணின் குரல் 0 ஜூண், 1998 D 5

Page 7
செய்யப்பட்ட சில ஆராய்ச்சிகள் ஆச்சரியகரமான விபரங்களைத் தருகின்றன. உருக்குத் தொழில் போன்ற கடினமான கைத்தொழில் வேலைகளில் ஈடுபடும் தொழிலாளி இழக்கும் உடற்சக்தியை வீட்டுவேலைகளின் போது பெண் இழப்பதை இவ்விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விபரங்களுட் சில பின்வருமாறு:
பாத்திரங்கள் கழுவுதல், சமைத்தல், துணிகளை மினுக்குதல் போன்றவற்றுக்கு ஒருநிமிடத்துக்கு இழக்கும் கலோரிகள்: 2-3
வீடு கூட்டுதல், படுக்கையைத் துப்பரவாக்கல், விரித்தல் என்பவற்றுக்கு: 3-4
கையினால் சலவை செய்தலி , நிலத்தை மினுக்குதல் போன்றவற்றுக்கு 4-5.
துணிகளை அலசுதல், பிழிதல், நிலத்தைக்கழுவுதல் போன்றவற்றுக்கு 5-6.
இவ்விபரங்கள் மேற்கு நாடுகளில் பெறப்பட்டவை. அங்கு நவீன உபகரணங் களால் வீட்டுவேலைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. தன்னியக்கக் கலங்களும் அழுத்தக் கலங்களும் அங்கு சர்வ சாதாரணமாகப் பாவ னையில் உள்ளன. சமையல் செய்வதற்கு மின்சாரமும் இயற்கை வாயுவும் எரிபொருளாகப் பயன்படுகின்றன. இத்தகைய வசதிகள் இருந்தும் கூட உடலுழைப்புச் சுலபமாக்கப்பட்டிருந்தும் கூட ஆலைத் தொழில்களில் இழக்கும் உடற்சக்தியை வீட்டுவேலைசெய்யும் போது பெண்கள் இழப்பதை மேற்கூறிய விபரங்கள் தெரிவிக்கின்றன.
எமது நாட்டிலோ பெரும்பாலான பெண்கள் அடுப்பூதித்தான் சமைக்கின்றனர். சமையலும் ஏனைய வீட்டுவேலைகளும் கடினமான உடலுழைப்பாகவே உள்ளன. அம்மியில் அரைத்தல், இடித்தல் போன்ற வேலைகளில் இழக்கும் சக்தி மிக அதிகமாகும். எமது நாட்டில் வீட்டு வேலைகளின் போது இழக்கும் கலோரிப் பெறுமானம் பற்றி ஆராய்ச்சி செய்தால், மேற்கூறிய கலோரி இழப்பைவிட அதிகளவாக எமது நாட்டுப் பெண்கள் இழப்பது தெரியவரலாம். பெண்ணின் இயற்கையான கடமை என்றும் இலேசான வேலை என்றும் வேலையே அல்ல என்றும் கருதப்படும் இவ் வீட்டுவேலைகளில் பெண்கள் எவ்வளவு சக்தியை இழக்கிறார்கள் என்பது
6 0 பெண்ணின் குரல் 0 ஜூனி, 1998
 

இவ்விபரங்களைப் பார்க்கும்போது விளங்கும்.
இத்தகைய வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஒருபோதும் ஓய்வு கிடைப்பதில்லை. தொழிற்சாலைகளிலோ அலுவலகங்களிலோ வேலை செய்பவர்கள் நாளுக்கு எட்டுமணி நேரமே வேலை செய்கின்றனர். மேலதிக நேரம் வேலை செய்தால் ஊதியம் கிடைக்கும். இது தவிர வாராந்த விடுமுறைகள், பொது விடுமுறைத் தினங்கள் அவர்களுக்கும் உள்ளன.
வீட்டில் வேலைசெய்யும் பெண்ணுக்கோ இவ்விடுமுறைகள் எதுவுமே இல்லை. அவளது வேலை நேரமும் மிக
நீண்டதே. மூன்று நேரச் சமையல், குழந்தை பரா மரிப்பு, வீட்டினைச் சுத்தமாக்கல், தையல் வேலை ஆகியவை அவளது முழுநேரத்தை யும் விழுங்கி விடுகின் றன. வெளியில் சென்று உழைக்கும் பெண் வீடு திரும்பியபின் வீட்டு வேலைகளில் ஈடுபடு கின்றாள். விடுமுறைத் தினங்களிலே அவளது மேலதிக வீட்டு வேலை கள் காத்திருக்கும். ஆனால் உழைக்கும் ஆணுக்கோ வேறு வித
மான சலுகைகள் தரப் படுகின்றன. உழைப்பவன் என்பதனால் மேலதிக கவனிப்பும் விசேட உறவும் அவனுக்குக் கிடைக்கின்றன. ஆணும் பெண்ணும் சேர்ந்து உழைக்கும் குடும்பமாயின் வேலையிலிருந்து வீடு திரும்பியபின் கணவன் ஒயப் வெடுக்கிறான். நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்கிறான். வேறு வகையான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறான். ஆனால் உழைக்கும் பெண்ணுக்கோ அவள் உழைப்பவள் ஓய்வெடுக்கட்டும், உணவ ருந்தட்டும் என்று எவருமே சொல்வதில்லை. வீட்டுக்குத் திரும்பியபின் கணவன் ஓய்வெடுக்க அவள் வீட்டுவேலைகளில் ஓயாது உழல்கிறாள்.
பெல்ஜியம், பல்கேரியா, செக்கோஸ்லவேகியா, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, போலாந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, யூகோஸ்லாவியா, பெரு முதலிய வெவ்வேறு சமூக முறைமைகளையுடைய பன்னிரண்டு நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி வீட்டுக்கு வெளியில் வேலை செய்யும் பெண்கள் வீட்டு வேலைகளில் ஒரு வாரத்திற்கு 35 மணி நேரம்

Page 8
ஈடுபடுகிறார்கள். வெளியில் வேலை செய்யாத பெண்ணோ 50 மணி நேரத்தை வீட்டு வேலைகளில செலவழிக்கிறாள். இந்தியாவில் பெறப்பட்ட விபரங்கள் 50 வருட வாழ்க்கைக் காலத்தையுடை பெண் 8.33 வருடங்களை அல்லது தனது வாழ்க்கையில் 16.66 வீதத்தைச் சமையலறையில் செலவிடுவதைத் தெரிவிக்கின்றன. இந்தியாவின் நிலைமையைக் கொண்ட இலங்கைப் பெண்களுக்கும் இது பொருந்தும். ஆனால், இக்கணக்கெடுப்பு சமையலுக்கு முன்பு செய்யும் ஆயத்தங்களையோ, பின்னர் செய்யும் கழுவுதல் போன்ற வேலைகளையோ உட்படுத்த வில்லை. அதுமட்டுமன்றி ஏனைய வீட்டு வேலைகளையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பழைய கூட்டுக்குடும்பங்களில் வேலைகள் பங்கிடப்பட்டன. பெற்றோருடனும், உறவினருட்னும் குடும்பமாக வசிக்கும்போது வீட்டுவேலைகளை ஏனைய பெண் அங்கத்தவர்களும் பங்கிட்டுக் கொண்டனர். ஆனால், நவீன காலத்தில் ஓரலகுக் குடும்பங்களில் பெண்ணுடைய வேலைப்பளு அதிகரித்துள்ளது. மேலோட்டமாக நோக்கும்போது, ஓரலகுக் குடும்பங்களில் குடும்பத்து அங்கத்தவர்கள் தொகை குறைவாகவே இருப்பதனால் வேலைகளும் குறைவதுபோல தென்படலாம். ஆனால் உண்மையில் தனி ஆளாகவே வீட்டுவேலையையும், வீட்டுப் பொறுப்பையும் தாங்கும் நிலை பெண்ணுடைய உடல், உளச் சுமையை அதிகரிக்கிறது. கூட்டுக் குடும்பங்களில், கிராமங்களில் ஒருவர் வேலை செய்யும் நேரத்தைவிட நகரத்துத் தனிக் குடும்பங்களில் கணவன் வீட்டுவேலைகளிற் சிலவற்றைச் செய்கிறான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது ஆணுடைய கடமை எனக்கருதப்படுவதில்லை. பெண்ணுக்கு இரங்கி உதவி செய்தல்' என்ற கருத்தே காணப்படுகிறது. வீட்டுவேலையும் பெறுமதியுள்ள உழைப்பு என்பதும் அது ஆண்,பெண் இருவராலும் பங்கிடப்பட வேண்டும் என்பதும் முற்றாக உணர்ந்து ஏற்றுக்கொள்ளப்படவோ செயற்படுத்தப்படவோ இல்லை. இந்நிலைமை பெண்ணினுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாகவே உள்ளது.
வீட்டுவேலைகள் பெண்ணுடைய ஆக்கத் திறமையையோ ஆளுமையையோ, வளர்ப்ப தில்லை. மாறாக அவை அவளைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தி வீடு என்ற குறுகிய எல்லைக்குள் அடக்கி வைக்கின்றன. "அற்ப வீட்டு வேலை அவளை நசுக்குகின்றது; கழுத்தை நெரிக்கின்றது; சோர்வை ஏற்படுத்துகின்றது; இழிவுபடுத்துகின்றது; சமையலறையு டனும் குழந்தை வளர்ப்புடனும் அவளைத் தளையிடுகின்றது. அவளது உழைப்பைக் காட்டு மிராண்டித்தனமான முறையில் வினையற்றதாக்கிச்

சலிப்பேற்படுத்துகின்றது. தனது நேரமெல்லாவற்றையும் பெண் சோர்வேற்படுத்தும், ஒடுக்கும் உற்சாகமற்ற வீட்டுவேலைகளுக்கு எதிரான முழு மூச்சான போராட்டம் எங்கு எப்பொழுது தொடங்கப்படுகிறதோ அங்குதான், அப்போதுதான் மாதர்களின் மெய்யான விடுதலை தொடங்கும் என்று லெனினும் பெண் விடுதலை பற்றிப்பேசும் போது குறிப்பிட்டார்.
“ஓயாமல் நச்சரிக்கும் வீட்டு வேலைகள்" பெண்களின் ஒய்வு நேரங்களை விழுங்கிவிடுகின்றன. ஓய்வு நேரமே ஒரு சமூகத்தின் உண்மையான செல்வமாகும். ஒருவர் தமது ஆளுமையை வளர்க்கவும் ஆக்கத்திறனை விருத்திசெய்யவும், தனிமனித சமூகத் தொடர்புகளைப் பேணவும் ஓய்வு நேரம் பயன்படும். ஆனால் வேலைப்பளுவின் அதிகரிப்பினால் பெண் தனது ஓய்வு நேரங்களை இழந்துவிடுகிறாள். இதனால் பெரும்பாலான பெண்கள் தமது திறமைகளை விருத்திசெய்யாமலும் வெளிக்காட்டாமலும் வீட்டோடு அடங்கிவிடுகின்றனர். இலங்கையில் அவர்களது தனிமனித முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் சாத்தியமாவது எவ்வாறு?
வரலாற்று ரீதியாக நோக்கினால் பெண் முன்பு வீட்டுவேலைகளிலி மாத்திரமன்றி ஏனைய வேலைகளிலும் ஈடுபட்டவை தெரியவரும். இன்னும் கூட கிராமங்களில் பெண்கள் வீட்டுவேலைளிலும் வெளியே விவசாய வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். ஆனால் இவர்கள் பிரதான விவசாயிகளாகக் கருதப்படுவதில்லை. முதலாளித்துவமும் பணப் பொருளாதாரமும் வளர்ச்சியடைய பெண்கள் அதிகளவு பங்குபற்றிய விவசாயம், விற்பனை போன்றவை ஆண்களுக்குரிய தொழில்களாக மாறின. அதாவது பணமாக ஊதியம் பெறும் தொழில்கள் ஆண்களுக்குரியவையாக மாறின. பண ஊதியம் தராத வீட்டுவேலைகள் பெண்ணுக்கே உரிய கடமைகள் என்ற கருத்து தொடர்ந்து இறுக்கமானதாய் உள்ளது.
இன்று, நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்கு பற்றி பேசப்படுகிறது. பெண்களின் திறமை வீட்டுக் குள் அடங்கிவிடாது வெளியிலும் பயன்படவேண்டும் எனப் பலரும் மீண்டும் மீண்டும் வற்புறுத்துகின்றனர். ஆனால் பெண்ணினது வீட்டுப்பளு குறித்து எவரும் பேசுவதில்லை. ஆண் பெண் சமத்துவம் பேசுகின்ற பெண்கள் இயக்கங்கள், பெண் நிலைவாதிகள் தவிர வேறு எவரும் பெண்னின் இரட்டைச் சுமைபற்றி அக்கறைப்படுவதில்லை. ஆண்கள் வீட்டுவேலைகளில் பங்கெடுக்க வேண்டும் எனவும் கோருவதிலி லை. ஆணி பெணி அசமத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக சமூகக் கருத்துநிலை தொடர்ந்திருக்கும் வரை இந்நிலையில் பெரியளவு மாற்றம் ஏற்படப்போவதில்லை. இக்கருத்து
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 O 7

Page 9
நிலையை மாற்றுவதில் பெண் நிலை வாத இயக்கங்களின் விட்டுக்கொடுக்கா தொடர்ச்சியான போராட்டங்கள் மிகுந்த பங்காற்ற முடியும். ஆனால் அதுவரையில் பெண்களது வீட்டுவேலைச் சுமையை குறைக்கவல்ல திட்டங்களையும் சேவைகளையும் ஏற்படுத்துமாறு அரசாங்கத்தையும் ஏனைய நிறுவனங்களையும் பெண்கள் இயக்கங்கள் வற்புறுத்தலாம்.
பல துறைகளில் பெண்களின் உழைப்பு அதிகளவு பயன்படுகிறது. ஆனால் அவர்களின் ஆர்வம் , தனிப்பட்ட திறமைகள் என்பவை கவனிக்கப்படாமல் மலிவான உழைப்புச் சக்தியின் இருப்பிடமாகவே அவர்கள் கருதப்படுகின்றனர். பெண்ணின் குடும்ப பொறுப்பைச் சுலபமாக்குவது தனிப்பட்ட பிரச்சினையாகவே கருதப்படுகிறது. சமீப காலத்தில் பெண்கள் இயக்கங்கள் இவற்றில் அக்கறை காட்டியபோதும் தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சிகளோ இவற்றைச் சிறிதளவாவது கவனத்தில் கொள்ளவில்லை.
எமது நாட்டில் ஒரு பெரிய தொழிற்துறைகளில் பெண்களின் உழைப்புச் சக்தி பெருமளவில் பயன்படுகிறது. இவை பெருந்தோட்டத்துறை, சுதந்திரவர்த்தக வலயம் ஆகியவையாகும். இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளரில் பாதிக்கு மேற்பட்டோர் பெண்களே. தேயிலைக் கொழுந்து ஒடிக்கும் வேலையில் 90% பெண்களாவர். சுதந்திர வர்த்தக வலயத்துத் தொழிற்சாலைகளில் வேலை செய்வோரில் 86% பெண்களாவர். இப் பெண் தொழிலாளிகளே இலங்கையின் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் ஒடுக்கவும் சுரண்டவும் படுவோர். போதிய கூலியின்மை, கடுமையான வேலை, மோசமான வேலை நிலைமைகள், போதிய விடுமுறை இல்லாமை போன்றவற்றால் பாதிக்கப்படும் இவர்கள் மேலதிக வீட்டுழியத்தாலும் நசுக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு ஏனைய மத்தியதர வர்க்கத்துப் பெண் களைப் போல வேலைக் காரர்களை வைத்திருப்பதற்கோ, நவீன உபகரணங்களை பயன்படுத்தவோ வசதியில்லை. இந்நிலையில் வேலைச் சுமையினால் இவர்கள் மேலும் தாக்கமுறுகின்றனர். குழந்தை பெறுதல், குழந்தை பராமரிப்பு ஆகியனவும் பெண்களுடைய தனிப்பட்ட பிரச்சினையாகவே கருதப்படுகின்றன. ஆனால் பெண் தொழிலாளர் குழந்தைபெறுவதென்பது இன்னோர் தலைமுறைத்தொழிலாளரை உற்பத்தி செய்வதாகும். ஆனால், இதனை எவருமே சமூகக் கடமையாகக் கொள்வதில்லை. சர்வதேச தொழில் ஸ்தாபனம் தாய்மாருக்கு 12 வாரகால பிரசவ விடுமுறையைச் சிபார்சு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனை கடைப்பிடிப்பதில்லை. இலங்கையில் முதலிரு
8 () பெண்ணினி குரல் 0 ஜூன், 1998

பிரசவங்களுக்கே 12 வாரகால லீவு வழங்கப் படுகின்றது. அத்துடன் எமது நாட்டில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மிக மிகக் குறைவே. இருப்பவையும் செம்மையாக இயங்குவதில்லை.
இந் நிலையில் தேசிய பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் சிறந்த பங்காற்ற வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வாறு? அத்துடன் கடமை என்றும் இலேசான வேலை என்றும் உழைப்புச் சக்தி அற்றவை எனவும் கருதப்படும் வீட்டுவேலைகள் பெண்களை நிரந்தர வேலையாட்களாக ஆக்கிவிடுவதையும் உணரவேண்டும். எனவேதான் பெண்களின் இரட்டைச் சுமையைத் தளர்த்தும் வகையில் சமூக நிறுவனங்களும் அரசாங்கமும் முயலுதல் வேண்டும்.
r 6) I6007 N
நாம் பெண்ணுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம் ஏன்? காட்டிலே நெல்லைத்தேடி எடுத்தவள் முதல்பெண் வேட்டைக்காரன் வெறுங்கையாக வந்தாலும் நெல்மணி பொறுக்கி ஊட்டியவள் பெண் பச்சிலைகளை மூலிகைகளைக் கிழங்குகளை பழங்களைச் சமைத்துக் காட்டியவள் பெண் பனிக்கடல் பாய, குழந்தைகளைக் காத்தவள் தாய் தீயை முட்டியவள் பெண்; தீயைக் காப்பவள் பெண் விலங்கை மனிதனாக்கியவள் பெண் முனைப்பை முறித்தவள் பெண் அச்சத்தை ஒட்டியவள். பெண் துணிவை வளர்த்தவள் பெண்
காட்டெருமையை மடக்கக் கற்றான் ஆண் குதிரைச் சவாரி செய்யக் கற்றான் ஆண் அகந்தை மேல் ஏறிப்பறந்தான் ஆண் வலிமையே நீதி என்றான் ஆண் ஆணின் கொடுமை, மென்மையை அழித்தது; அடிமையை வளர்த்தது. அடிமை விதைத்தான்; அடிமை அறுத்தான் அகந்தையின் வெள்ளாமை அதுவே! விடுதலை! சமத்துவம்! உடன்பிறப்பு! தாய்! அடிமை என நினைப்பதில்லை பெண்ணை! உயிரின் ஊற்றாக வாழ்கிறாள் பெண்! இன்பகாலத்திற்குத் தாயாக வாழ்கிறாள்!
-லியுட் மிலர் செரஸ்டனோவா, ரவர்யக் கவிஞர்
ސ............ ܢܠ

Page 10
குரும்ப பாதுகாப்பு எ
மூன்று பெண்கள் தமது அனுபவத்
முதலாவது பெண்
என்னைப் பொறுத்தவரை குடும்பம் என்பது அடுத்த பாதுகாப்பு பொய்மை. குடும்பமானது சகல ஞானாசிரியர் (Godfathers)களையும் ஒன்றாகச் சேர்த்தால் ஏற்படும் பயங்கரத்தைவிட கூடுதலானது. குடும்ப அலகானது பெண்களை ஒடுக்கி, தந்தைவழி மையத்தை வலியுறுத்துவதாகும். அணுக்குண்டை வெடிக்க வைப்பதன் மூலம் உலகில் உள்ள உயிர்களுக்கு ஏற்படும் அழிவை விட தந்தை வழி குடும்ப மையத்தைக் க  ைல பட் பதென ப து ஆபத்தானது. ஆனால் இது என்னைப்பொறுத்தவரை ச ந தோ சமான தே. "குடும்பத்தை” பற்றிய வரையறைகள் எதுவாக இருந்தாலும் 69 (Ch குறிக்கப்பட்ட சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கு இசைவுற மக் களை சமூகமயப்படுத்துவதே குடும்பத்தின் பிரதான தொழிற்பாடாகும். அத னால்தான் குடும்பத்திற்கு அத்தனை சக்தி. எவ்வெவ் வகையில் நாம் வாழ வேண்டும், எவ்வகைத் தேர்வுகளை நாம் செய்ய வேண்டும் என்பன போன்ற ஒரு தொடர் கட்டுகளுக் கெல்லாம் குடும்பமே காரணமாகவுள்ளது.
குடும்ப மாதிரிகள் மேற்கோ கிழக்கோ, கறுப்போ வெள்ளையோ, வறியதோ செல்வமானதோ, பழையதோ புதியதோ, ஒரு பெற்றோருக்குரியதோ பல பெற்றோருக்குரியதோ, பரந்துபட்டதோ மையப்படுத்தப்பட்டதோ எதுவாக இருந்தாலும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட மேல்பூச்சை கொண்டதான தோற்றத்தை தருவதாக இருப்பதே. ஆனால் இப் புறத்தோற்றத்தை எடுத்துவிட்டால் அவற்றின் கீழ் ஒரேவகைத் தன்மையையே பார்க்கலாம். அதாவது தந்தைவழி ஆதிக்கத்தை போற்றுவதாகவே இருக்கும். இதன் கீழ் பெண் என்பவள் ஒடுக்கப்பட்டு ஆணுக்கு
 
 
 

ன்னும் பொய்மை!
“குடும்பம்” பற்றிய தைக் கூறுகின்றனர்.
சேவை செய்யவே பணிக்கப்படுகிறாள். ஆகவே குடும்பம் பெண்களுக்கு கெட்டதே. காலனித்துவ நாடுகள் அங்கு வசிப் போரின் கேள்வியற்ற ஒப்புதலோடுதான் ஆளப்படுகின்றன. ஆனால் இவைக்கெதிரான சவால் எழும்பட்சத்தில் வன்முறை பிரயோகிக்கப்படுகின்றது. மேலும் ஆதிக்கத்துக் குட்பட்டவர் தமது வழமையான நடைமுறையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குள்ளாக்கப்படும்போது அவரே அதைப் பேணுவதற்கு போராடவும் வேண்டியுள்ளது.
இந்த "விருப்பமானது" அவர்களுக்கு பிள்ளை களினாலேயே செய்விக்கப் படுகிறது. பிள்கைளையே நான் இரணி டாவது 'கொலனியாக பார்க்கிறேன். எந்தப்பிள்ளையும் குடும்ப அமைப்பு முறையிலிருந்து தனிப்படுத்தப்பட விரும்பு வதில்லை. குடும்பத்தின் தொழிற்பாடானது இளைய வர்களை சமூக மயப்படுத்து வதை நோக்காகக் கொண்டி ருப்பதால் முதலில் பிள்ளை கள் குடும்பத்தின் தேவை களைக் கவனிக்க வேண்டிய வர்களாய் இருக்கின்றனர். அதன் பின்னரே அவர்களின் தேவைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளன. பெண் களைப் பொறுத்தவரை அவர்கள் ஆதரவற்றவர்களாய் ‘ஆக்கப்படுகின்றனர். ஆனால் பிள்ளைகள் ஆதரவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். பெண்கள் எவ்வளவுக்கெவ்வளவு தந்தைவழி பெறுமதிகளை அடுத்த பரம்பரைக்கு கையளிப்பவர்களாக இருக்கிறார்களோ அவ்வள வுக்கவ்வளவு அவர்கள் பிள்ளைகளின் பொறுப்பை ஏற்பவர்களாய் உள்ளனர். ஒரு 'கொலனி’ இன்னொரு கொலணியை' கவனித்துக்கொள்ள, இரண்டு பகுதியினரிடமிருந்தும் ஆண்கள் நன்றியைப் பெற்றுக்கொள்கின்றனர். பெண்கள், பிள்ளைகளை பெண்ணியம் சார்ந்த கருத்துக்களால் ஆண்களை முறியடிப்பார்களானால் அவர்களைப் பார்க்கவேண்டிய பொறுப்பு ஆண்களிடம்
பெண்ணின் குரல் 0 ஜூண், 1998 O 9

Page 11
ஒப்புவிக்கப்படும் (பெண் ஓர்இனச்சேர்க்கை ஆய்வுகள் எமக்கு அறியத்தருவன போல்).
பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இத்தகைய பங்களிப்பில் அவர்கள் வெற்றி பெறும் அளவுக்கு அவர்களுக்கு ஆண்களால் வழங்கப்படும் ரொட்டிப் பருக்கைகள் போன்ற வெகுமதிகளான வீடு, மோதிரம், பேர் என்பவை கிடைக்கும். இதில் தோல்விபெறும் பெண்களுக்கு கிடைப்பதோ அழிவுதான். இந்த அழிவு வேலை ‘நல்ல பெண்கள் எனக் கருதப்படுவோரால் ‘கெட்ட பெண்களுக்கு எதிராகச் செய்யப்படுகிறது. குடும்பம் என்னும் அமைப்புக்குள் அடங்காத ’கெட்ட பெண்கள் என்னும் களைகளை நல்ல பெண்கள் அகற்றுகின்றனர். அந்த குடும்ப ‘அமைப்பு எவ்வளவு முற்போக்கானதாகக் காட்டப்பட்ட போதும் இதற்குள் அடங்க மறுக்கும் பெண்களே அழிக்கப்படுகின்றனர்.
இத்தகைய தம் நிலையை பெண்கள் உணராவிடில் வேறு மாற்று சமூகக்கட்டுமானத்தை நாங்கள் சாத்தியப்படுத்த முடியாது. பெண்கள் அனேகள் ஆண்களுக்குச் சேவை செய்து மட்டும் களைப்படையவில்லை. 'வழிதவறிச் செல்லும் பெண்களை அடக்குவதினாலும் அவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது. இத்தகைய குற்றச் செயல் அனேகமாக தாயப் மை யைப் பற்றிப் பேசும் ஸ்தாபனங்களின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் தான் தாய்மார் பலர் ஆண்களின் அதிகாரத்தை விட்டுநீங்கிய பின்னும் அவர்கள் வழி அதிகாரச் சிந்தை உடையவர்களாகவே உள்ளனர்.
இத் தனி மையால் தாயப் மை என்பது தாய்மையற்றதற்கும் மேலானதாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தாய்மையற்றவர்கள் தாய்மைப் பேறுடையவர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறார்கள். இதுவும் ஒருவகை தந்தைவழிச் செயற்பாடே.
மரபுரீதியாக வரும் சமூகங்களில் ஆண் ஒருவனுக்கு சேவை செய்யாத விவாகமாகாத பெண்களின் ஆற்றல் அனைத்தும் கூட்டாக இருக்கும் ஆண் களுக்கு சேவை செய்யும் வகையில் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலம் வரை சட்ட ரீதியாக விவாகமான பெண்கள் மாத்திரமே நிர்வாகச் சேவையில் அனுமதிக்கப்பட்டனர். விக்ரோறியா காலத்து வைத்திய கலாசாலைகளையும் பாடசாலை களையும் யார் நடத்தினார்கள்? மூன்றாம் உலக நாடுகளில் மூத்த சகோதரிகளே பிள்ளைகளைப் பராமரிக்கின்றனர்.
இச்சம்பவமானது எனக்கு மிகக் குறைந்த கூலிக்கு ஆனால் சொர்க்கத்தில் உங்களுக்கு அதிக வெகுமதி கிடைக்கும்’ என்ற போதனையோடு பெண்களால் நடாத்தப்பட்ட பராமரிப்பு வேலைகள் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. பெண்களைப்
10 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

பொறுத்தவரை பிள்ளைப் பாராமரிப்பு என்பது கட்டாயமாகையால் (அவர்கள் தாயாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) கூடவே அவர்கள் விரும்புகிற ஒன்றாகவும் அவர்களுக்கே உரிய ஒன்றாகவும் கருதப்படுவதால் இவ்வேலைக்கு அவர்களுக்கு கூலி அளிக்கப்படுவதில்லை. அதனால் எல்லாவித பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களும் இதையே பின்பற்றுகின்றன. பெண்களே பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டும் என்று இருக்குமானால், பிள்ளை தேவையா இல்லையா என்பது பற்றிய உண்மையான தேர்வு எப்படி ஏற்படப்போகிறது? எனக்குரிய வேலை பிள்ளை பராமரிப்பு என்றால் ஏன் எனக்கு கர்ப்பச் சிதைவு மாத்திரைகளும், கர்ப்பக்கலைப்புகளும் தரப்பட வேண்டும்? பிள்ளைப் பேறு எனது தேர்வு இல்லையென்றால், பிள்ளைப் பராமரிப்பு அப்படி ஒரு தொல்லைக்குரியதாக ஏன் இருக்க வேண்டும்? வயது முதிர்ந்தோர் இவ்வேலையைச் செய்வது பற்றி என்ன சொல்லலாம்? விவாகமாகாத இளம் பெண்கள் வயது முதிர்ந்தவர்களோடு ஏன் இழுபட வேண்டும்? பிரித்தானியாவில் உள்ள குடும்ப அமைப்பு கோட்பாட்டுப்படி, பெற்றார் கரைச்சல் தருவோராய் இருந்தால் அவர்களைவிட்டு நீங்கும்படி அங்குள்ள மக்கள் கூறுவர். ஆனால் பிள்ளைகளை விடடு நீங்கும்படி எவரும் சொல்வதில்லை. சில நாடுகளில் பெண்கள் பிள்ளைகளையும் பெற்றாரையும் விட்டு நீங்குவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குள்ள தேர்வு என்ன? நாங்கள் யாரோடு வாழ்வதென்பது வீட்டுப்பிரச்சினையிலேயே அதிகமாகத் தங்கியுள்ளது; குடும்ப ஐக்கியம் என்னும் பொய்மையில் அல்ல, இருந்தும் இந்த தொன்மை வழக்கே தொடர்கிறது.
பிள்ளைப் பராமரிப்பில் ஆண்கள் ஈடுபடும்போது அவர்களே ஆலோசனை வழங்குவோராகவும், கொள்கை வகுப்போராகவும், அதன் உருவமைப் பாளர்களாகவும் மாறுகின்றனர். எண் னைப் பொறுத்தவரையில் , பெண்கள் தந்தைவழி சட்டதிட்டங்களுக்கெதிராக குரல்கொடுத்திருக்கா விட்டால், அவர்களின் பிள்ளை பராமரிப்பு வேலை எந்த முக்கியத்துவமும் பெற்றிருக்காது. தாய்மையை "எவ்வாறு பெண்ணியத்திற்குப் பாவிப்பது என்பதே எமது அடுத்த செயற்பாடாகும். தாய் மை என்பது மாற்றமுடியாத புனித மதச் சடங்காகப் பார்க்கப்படாமல் எல்லாவித வேலைகளில் ஒன்றாகவே பார்க்கப்பட வேண்டும். இதன் தெரிவு என்னும் பிரச்சனை பற்றி சிந்திப்பதற்கு, பிரக்ஞைபூர்வமான தீர்மானம் எடுப்பதற்கு, அதன் விளைவுகளைப் பரிசீலிப்பதற்கு, தேவை ஆசை பற்றி குவிமையப்படுத்துவதற்கு, இன்னும் கொடுத்தல் கோருதல் என்னும் இன்னோரன்ன விஷயங்கள் தொடர்பாக நான் இந்த விஷயத்தோடு

Page 12
சம்பந்தப்பட்டுள்ள சகல முரண்பாடுகளோடும் போராட வேண்டியுள்ளது மட்டுமல்லாமல் இந்த முழு உலகத்தோடும் யுத்தம் நடத்த வேண்டியவளாய் உள்ளேன். இவ்வுலகமானது குடும்பம் தாய்மை என்னும் தூண்களைச் சுற்றியே வலம் வருகிறது.
இவையனைத்தும் உனக்கு கூடிப்போய்விட்ட தாகத் தெரியுமானால், இந்த குடும்பம் என்னும் வழமையான இயல்பிலிருந்து அப்பால் சென்று பார். இன்னும் சரியாகச் சொல்வதானால் சம்பிர தாயங்களையும் அனுமானங்களையும் எதிர்த்து சவால் விடுவோர் பற்றி உனது நிலையை எண்ணிப் பார். அவர்களுக்கு சிறு உத்தியோகங்களைக் கொடுப்பதானது, ஒரு நல்லுலகை ஸ்தாபிப்பதற்கான உனது கடமையிலிருந்து தப்புவதாகும். இதனால்தான் பெண்களிடையே உண்மையான ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்பது உலகத்தைச் சிதறடிப்பது போன்ற ஒன்றாகும். இங்கே மிக ஆழமாக ஒவ்வொரு பகுதிகளையும் அலசி ஆராயாவிடில் எமக்கு உண்மையான விடுதலை கிடைக்குமா?
பகைமையே பெரிதாக இருப்பதாலி , குடும்பத்திற்கு அப்பால் விலகிச் செல்வதென்பது தற்கொலைக்குச் சமமானதாகும். நாங்கள் எமது வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் பேணிக் கொண்டே அதற்கான கட்டணத்தை இறுக்கிறோம். அதனால்தான் இதன் தலைப்பு அடுத்த பாதுகாப்பு பொய்மை’.
-ഖഖtഖqI
இரண்டாவது பெண்
இன்னொரு பாதுகாப்பு
நான் பதினொரு வயதாய் இருக்கும்போது ஒரு சிறுமி இன்னொரு சிறுமியை பகிடி பண்ணுவது எனது காதுகளில் விழுந்தது. "நீ விளையாட முடியாது. நீ தத்தெடுத்து வளர்க்கப்படுகிற பிள்ளை. உன்னை உன் அம்மா குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுச் சென்றாள்.”
நான் இதைக் கேட்டு ஒன்றும் சொல்லவில்லை. எனக் குத் தெரியும் நானும் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவள் என்றும், இதை நான் வெளியில் சொல்லக்கூடாதென்றும் கேட்கப்பட்டிருந்தேன். நாங்கள் உயிரியல் ரீதியான மையத்தை உடைய ஒரு குடும்பத்தில் வாழ்வதே ஒரே ஒரு வழி என கண்டுள்ளோம். பிள்ளைகள் இருக்கக்கூடாதென வாழும் பெண்களை நாம் விரக்தியுற்றோ காண்கிறோம். பெற்றார் இல்லா பிள்ளைகள் எல்லாவற்றையும் இழந்தவர்களாகவும் எல்லாவற்றாலும் குழப்பப்பட்டவர் களாகவும் காண்கிறோம். இங்கே பிரச்சனை

என்னவென்றால் பிள்ளைகள் பெற்றார் இல்லாமல் வாழ்கிறார்ககள் என்பதல்ல. எல்லாமே எங்கள் சமூகத்தில் குடும்பத்தைச் சுற்றி பின்னப்பட்டிருப்பதே (அன்னை நாள், தந்தை நாள், பெற்றார் மாலைப்பொழுது என்பன போன்றவை).
நான் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது நல்லதெனச் சொல்லப்பட்டேன். காரணம், வீட்டிலேயே எப்பொழுதும் விடப்பட்டிருப்பதால், எவ்வாறாய் இருந்தாலும் அந்தப் பிள்ளைப் பருவ காலம் இலகுவானதல்ல. ஏற்கனவே பிரச்சனைகள் இருக்கும் குடும்பச் சூழலில் தத்தெடுப்பு வளர்ப்புமுறை மேலும் பிரச்சனைகளை கூட்டுவிக்கக்கூடியது. புதிய பரிமாணத்தை நமது உறவு முறைக்கு தரக்கூடியது. வெறும் கற்பனை உலகத்தில் நான் சிக்குண்டேன். எனது உண்மையான, இளவரசி போன்ற அம்மாவைக் கற்பனை பண்ணி, அவர் என்னை வந்து அன்பும் செல்வமும் உள்ள இடத்திற்கு கொண்டு செல்வது போல் எண்ணினேன். இன்னும் அவளுக்காகவே காத்திருக்கிறேன். ஆனால் எனது வாழ்க்கையை நானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.
நான் தத்தெடுக்கப்பட்ட நாட்களில் இருந்து பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆனால் இன்னும் அனேக உணர்வுகள் அதே மாதிரியே உள்ளன. இப்பொழுது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் தமது உண்மையான பிறப்பு பத்திரத்தை 18 வயதுக்குப் பின்னர் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தமது பெற்றாரை கண்டுபிடிக்க முயல்பவருக்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. நான் தத்தெடுக்கப்பட்டது பற்றி என்னை வளர்த்தவர்கள் பீதியுறாதவாறு பேசுவதென்பது கஷ்டமானதெனக் கண்டேன்.
தத்தெடுப்பது என்பது பெண் களைப் பொறுத்தவரை பல சிக்கல்களைத் தருகிறது. தனது பிள்ளையைக் கைவிட்ட தாய் அனேகமாக இயற்கைக்கு மாறானவர்களாகவும் அது பற்றிய குற்ற உணர்வுள்ளவர்களாகவும் கருதப்படுகிறது. இன்னும் பிள்ளைப் பேறற்றவள் தாழ்வு மனப்பான்மைக் குள்ளாக்கப்படுவதோடு, இயற்கைக்கு புறம்பானவளாக கருதப்படுகிறாள். குடும்ப பாதுகாப்புக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளிடம் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்குப் பிரதியுபகாரமாக தத்தெடுக்கப்பட்ட பிள்ளை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் தமது பெற்றாரின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை கவனிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு தொடரோட்டமாக கலியாணம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கலியாணம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் யாராவது இதற்கெதிராக கிளம்பும் வரை ஓடிக்கொண்டிருக்கும்.
- கதலின் விட்மர்
பெண் ணினி குரல் 0 ஜூன், 1998 0 1 1

Page 13
மூன்றாவது பெண்
பாதுகாப்பில்லை?!
குடும்பம்
ஒரு மிருகம்
ஆனால் அது இரண்டு கால்களில் நடக்கிறது.
அதற்கு கைகள் இல்லை
ஆனால் கதைக்கிறது
ஆனால் அது எதையும் செவிமடுப்ப தில்லை
ஆனால் சிந்திக்கிறது
ஆனால் அது விளங் கிக் கொள்வதில்லை
ஆனால் அதற்கு மனிதர் மாதிரி முகமிருக்கிறது
ஆனால் இது மூதாதையரின் பிசாசு
ஆனால் அது
ஆனால் அதற்கு உயிரில்லை
ஆனால் அது சுவாசிக்கிறது
ஆனால் அது சிதைவுற்ற புராதன டைனோசர்களின் எலும் புக் கூடாகத்
தெரிகிறது.
ஆனால் அது மனிதர்களில் வாழ்கிறது
ஆனால் அது மிருகங்கள் மாதிரி விழுங்குகிறது.
ஆனால் அது சந்தோசம் தருவதாக இருக்கிறது.
ஆனால் அது இரத்தம் உறிஞ்சும் பேய்களின் பற்களை உடையது
ஆனால் அது பெணி போலத்
தெரிகிறது
ஆனால் அது பெட்டை நாய்.
- நூறி
பாகிஸ்தான்
மிகத் திரளான பெண்களை அரசியலிலும் பொதுவாழ்விலும் ஈடுபடச் செய்யாவிட டாலர், சலிப்பூட்டுகிற வீட்டு வேலைக ளிலிருநதும் சமையலறை யிலிருந்தும் அவர்களை நாம் விடுதலை செய்யாவிட்டால சோசலிசத்தை விட்டு விடுங்கள். உண்மையான ஜனநாயகத்தைக் கூடச் சாதிக்க முடியாது.
- லெனின்
12 0 பெண்ணினி குரல் 0 ஜூன், 1998
வீ
6
சொல்ல
சனங்க உள்ளது
L இளம்ெ குடும்ப
ஒரு அ
செய்வதி
செய்யட்
s
இப்படி யாரும்
566)6)
|f
مستة
கவனிப்
போல் வேண் ( கல்வியி பிறருை
(l உன்6ை குடும்பப்
(g றேனுவு ஏமாற்றி:
அவள் நேரங்க மனைவி
96.606
செய்ய
f
பீற்றா, ம நீ ஒரு
ந பாடத்ை

ட்டுக்குப் போதல்
ாங் கே போகிறாயப் பீற் றா? உனக்கு அப்பா வில்லையா, வெளியே தனிய போகவேண்டாம் என்று?
ான் எப்படி தனியாய் இருக்க முடியும்? வீதி முழுதும் ள். மேலும் எனக்கு வேலை சில செய்ய வேண்டி து. எனக்காக யாரும் செய்யமுடியாது, சீலா.
fற்றா, குறும் புத்தனமாக கதைக் காதே. நீ ஒரு பண். ஆட்கள் என்ன நினைப்பார்கள்? உனக்கொரு ம் இல்லையா? அத்தோடு நானும் அந்தக் குடும்பத்தில் ங்கத்தவள். நான் உன்னால் அவமானப்பட வேண்டுமா?
நன்போக்கில் போகும் ஒருபெண்ணை ஆண்கள் விவாகம் நில்லை.
ரி, ஆனால் நான் இநத ஆண்களை விவாகம் போவதில்லை. அவர்கள் உனக்கு உரியவர்கள்.
டனக்கு முதல் நான் எப்படி விவாகம் செய்யலாம்? நீ நடப்பாயானால் நான் அவமானப்படுவதோடு என்னையும்
கலியாணம் செய்யமாட்டார்கள்.
டன்னை யாரும் கலியாணம் செய்யாவிட்டால் நீ ப்படுவாயா?
ச்ெசயமாக கவலைப்படுவேன். பின்னடிக்கு என்னை யார் பார்கள்? நீயும் உன்னைப் பற்றி யோசிக்க வேண்டும்.
டன் கதையைக் கேட்க எனக்குச் சிரிக்க வேண்டும் இருக்கு. சீலா ஏன் வேறு யாரும் உன்னை கவனிக்க டும்? உனக்கு உத்தியோகம் இருக்கு, நல்ல ருக்கு, ஆரோக்கியமான உடல் இருக்கு, பிறகேன் டய உதவி?
pட்டாள்தனமாகக் கதைக் காதே, பீற்றா. இவை னப் பாதுகாக்கப்போவதில்லை. நல்ல பெயருடைய ம் ஒன்று வேண்டும்.
5டும்பம் எனக்கு என்னத்தைச் செய்ய முடியும்? க்கு அது என்னத்தைச் செய்தது? அவன் அவளை னான். அதனால் அவள் தற்கொலை செய்யப் பார்த்தாள். ஒரு முட்டாள் என்று நான் சொல்லுவேன். சில ளில் குடும்பம் உதவ முடியாது. நீறிஸ் தன்னுடைய வியை அடிக்கிறான். அது அவளுடைய குடும்பம் அடிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவள் இதில் என்ன இருக்கு?
எப்பொழுதும் மற்றப்பக்கத்தைத்தான் பார்க்கிறாய், >ற்றவர்களில் இருந்து வேறாக இருக்கவே விரும்புகிறாய். காலத்தில் இதற்கான பாடத்தைப் படிப்பாய்.
ான் நினைக்கிறேன் நீயும் ஒரு நாள் உன்னுடைய தப் படிப்பாய் என்று. அது உனக்கு நல்லதாய் இருக்கும்.

Page 14
பெண்கள் அடிை
ஆரம்பகாலத்தில் குடும்பம் என்பது முழு இனக் கூட்டத்தையே இணைப்பதாக இருக்க, அதனுள் ஆணும் பெண்ணும் பொதுவாக விவாக ரீதியான உறவைப் பேணி வந்தனர். இது பின்னர் படிப்படியாக நெருங்கிய உறவினர்களை விலக்கி பின்னர் விவாக ரீதியாக ஏற்பட்ட உறவினர்களை விலக்கி கூட்டுவிவாகமே சாத்தியப் படாத தாக்கப்பட்டது. இறுதியாக ஒற்றை ஜோடியே மிஞ் சுவதாயிற் று. இந்த மையப் புள்ளியும் அற்றுப்போகுமானால் கலியாணம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. ஒருவனுக்கு ஒரு தாரம் என்ற எழுச்சியின் போது தனிப்பட்ட ஒருவனின் விரக தாப ஆசை எவ்வளவு சிறிய பங்களிப்பை செய்துள்ளது என்பதை இதிலிருந்தே அறியலாம். இதன் வளர்ச்சிக் கட்டத்தில் இதை எல்லா மக்களும் பயன்படுத்தியமை இதற்கோர் பலமான ஆதாரமாகக் காட்டலாம். ஆரம்ப காலக் குடும்ப உருவாக்கத்தில் ஆண்களுக்கு பெண்களைப் பெற்றுக்கொள்வதில் குறையிருக்கவில்லை. மாறாக தேவைக்கு அதிகமாக பெற்றிருந்தனர். தற்போது பெண்கள் கிடைப்பது அரிதாகவும் தேடப்படவேண்டியவர்களும் ஆளானார்கள். கலியாணம் என்னும் சோடி சேர்த்தலோடுதான் பெண்கள் கைப்பற்றப்பட வேண்டியவர்களாகவும் வாங்கப்பட வேண்டி யவர்களாகவும் மாறும் குணக்குறி ஆரம்பிக்கிறது. இது பாரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதன் அறிகுறியென்றே சொல்லலாம். இந்த மாதிரி மனைவிமாரைப் பெறுதலையும் பெறுபவர்களையும் வியப் புக்குரிய ஒன்றாக கருதும் ஸ்கொட் மக்லெனான் என்பார் “கைப்பற்றியதன் மூலம் கலியாணம்”, “வாங்கியதன் மூலம் கலியாணம்” என்னும் விசேட வகுப்புக்களாகப் பிரிக்கிறார். பொதுவாக விவாகம் என்பது, அமெரிக்க இந்தியர்கள் மத்தியிலும் சரி வேறுபட்ட மக்களிடையேயும் சரி, கலியாணம் செய்து கொள்வோரோடு கலந்தாலோசிக்கப்படாது அவர்களின் தாய்மார்களினால் தீர்மானிக்கப்படுகிறது. முன் னர் பழக்க மற் ற, ஒரு வரை ஒருவர் தெரிந்திருக்காதவர்கள், அதற்குரிய காலம் வந்ததும் சோடி சேர்க்கப்படுகின்றனர். கலியாணத்திற்கு முன்னர், மணமகள் மணமகனின் தாய்வழி வரும் உறவினருக்கு அன்பளிப்புகள் வழங்குகிறாள். இவைகள் மணப்பெண்ணுக்குரிய அன்பளிப்புகளாகத் திருப்பப்படுகின்றன. இச் சந்தர்ப்பத்திலும் விவாகம், மணமக்கள் விரும்பினால் விலக்கப்படக்கூடிய ஒன்றாகவே இருக் கிறது. ஆனால் சில இனக் குழுக் களிடையே, SD g5 íT U 600T LD (T &E5

Duildbdbinin 1601D
இறோகுவோஸ் (Iroguois) போன்றோர் மத்தியில் இத்தகைய விவாக விலக்கலுக்கு பொதுமக்கள் எதிராகவே உள்ளனர். கணவன் மனைவியிடையே வேற்றுமைகள் அதிகரிப்பின் இருசாராரின் ஆண் உறவினர் சுமுகமாகத் தீர்த்து வைக் க முன்வருகின்றனர். இவை முறிவுறும் பட்சத்தில் பிரிவினை ஏற்றுக்கொள்ளப்பட்டு, இருவரும் வேறு விவாகம் செய்யும் உரித்துடையவர் ஆகின்றனர். பிள்ளைகள் தாயுடன் விடப்படுகின்றனர்.
சுதந்திரமான குடும்பம் ஒன்றின் தேவைக்கு, சோடி சேர்த்து வாழும் குடும் ப முறை பலவீனமானதாகவும் நிலையற்றதாகவுமே இருக்கிறது. இது ஆரம்பத்திலிருந்து வந்த பொதுவுடைமைக் குடும்ப முறையை அழிப்பதாய் இல்லை. பொதுவுடைமை குடும்ப முறையில் வீட்டில் பெண்ணே மிக்க அதிகாரம் உடையவளாய் இருந்தாள். ஆண் பெற்றாரை அறுதியிட்டு நிச்சயப்படுத்த முடியாத காரணங்களால் பெண்ணுக்கே முதன்மை இடம் கிடைத்தது. இது பெணி களை தாயப் மாரை மிக உயர் நீத மரியாதைக்குரிய இடத்தில் வைத்தது. 18ம் நுாற் றாணி டின் அறிவெழுச் சிக் காலத் தோடு முன்வைக்கப்பட்ட கருத்தான, பெண் என்பவள் ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்பது மிகவும் அபத்தமானது. எல்லாவகையான காட்டுமிராண்டி மக்களிடையேயும் அநாகரிக கூட்டத்தினர் மத்தியதர, இன்னும் சில மேல்தர வர்க்கத்திடையேயும் பெண்களது நிலை சுதந்திரமானதாக மட்டுமல்ல, கெளரவம் மிக்கதாகவும் இருக்கிறது. சோடிசேர்க்கும் விவாக முறையில் இன்னும் என்ன இருக்கிறது என்பதை அறிய நாம் அஷர் றைற் (Ashur Wright) என்பவரின் கருத்தைப் பார்ப்போம். இவர் கன காலமாக இறோ குயிஸ் (ro guois) மக்களிடையே மதப்பிரச்சாரகராக இருந்தவர்.
"அவர்கள் தம் குடும்ப வழக்கப்படி நீண்ட பெரிய வீடுகளில் குடியிருந்தனர். இது அனேக குடும் பங் களைக் கொணர் ட புராதன பொதுவுடைமைக் கூட்டு வாழ்க்கைக்குரியது. இதில் சில இனக் கூட்டம் முதன்மை பெற்றவையாய் இருந்தன. பெண்கள் வேற்று இனக்கூட்டத்திலிருந்து தமது கணவன் மா ரைப் பெற்றிருந்தனர் . எவ்வாறாயினும் பெண்களே குடும்பத்தை ஆளுவோராய் இருந்தனர். உணவுக் களஞ்சிய அறை எல்லோருக்கும் பொதுவானதாகவே இருந்தது. உணவுக் குரிய பொருளை வழங்கமுடியாத கணவனை அதிர்ஷ்டம் கெட்டவன்
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 13

Page 15
என்றே சொல்ல வேண்டும். எத்தனை
பிள்ளைகள் அவனுக்கிருந்தாலும், எவ்வளவு உணவுப்பொருள் அவர்கள் வீட்டில் இருந்தாலும் உழைக்க முடியாத கணவன் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறான். அந்தக் கட்டளையை அவன் மீறுவது ஆபத்தாகவே முடியும். ஆகவே அவனி தனி னுடைய இனக் கூட்டத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியவனாகிறான். அல்லது வழமையாக நடைபெறுவது போல் அவன் புதிய விவாகம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவனா கிறான். பெண்கள்தான் இவ்வினக் கூட்டங்கள் மத்தியில், எல்லா இடங்களிலும் இருப்பதுபோல் மிகுந்த அதிகாரம் உடையவர்களாக இருக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் தமது கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் தலைவனையே தேவை யேற்படின் அந்த உயர் நிலை யிலிருந்து கீழே இறக்கி, சாதாரண போர்வீரனாக மாற்றவும் பெண்கள் அதிகாரம் பெற்றிருந்தனர்."
இதற்கு காரணம் காட்டு மிராண்டி, அநாகரிக இனக்கூட்டங் களிடையே பெண்கள் எல்லோரும் ஒரே இனத்தவராக இருக்க, அவர்களது கணவன்மார் வெவ்வேறு இனக்கூட்டங்களில் இருந்து வந்ததே பெணி களின் ஆதிக் கத்துக்கு காரணமாய் இருக்கிறது. இருபாலா ருக்குமிடையே நிலவிய வேலைப் பிரிவு பெண்களின் மேலாதிக்க நிலையில் ஏற்படாமல் வேறு காரணங்களால் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கடுமையான உழைப்பை மேற்கொண்டிருந்த பெண்கள் மிகுந்த மரியாதைக் குரியவராகவும் இருந்தனர். ஐரோப்பிய சமூகத்தில் நாகரிகத்தின் சீமாட்டி எனப்பட்ட வர்கள் போலியான கெளரவத்தைப் பெறுபவர்களாகவும் உண்மையான வேலைப்பளுவிலிருந்து நீங்கியவர்க ளாகவும் இருந்தார்கள். இவர்கள், கடும் உழைப்பாளர்களாக இருந்த அநாகரிக இனக் கூட்டத்துப் பெண்கள், தம்மின மக்களிடையே பெற்றிருந்த உயர்ந்த சமூக
14 0 பெண்ணின் குரல் 0 ஜூன்,
1998
 

அந்தஸ்தை பெற்றிருக்கவில்லை.
குடும்பம் என்னும் அமைப்பில், கலியாணச் சோடி சேர்த்தல் என்பது புதிய அம்சத்தைப் புகுத்திற்று. குழந்தையின் அருகே இயற்கையான தாயோ, இன்று போல் கிடைக்கும் அனேக தந்தை மார் போலல்லாது இயற்கையான, உறுதிப்படுத்தப்பட்ட தந்தையும் கிடைக்கக்கூடியதாய் இருந்தது.
குடும்பத்துள் ஏற்பட்டிருந்த வேலைப் பிரிவின்படி, கணவனே உணவையும் , அதற்குரிய கருவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தான். அதனால் தொழிலுக்குரிய கருவி களை அவனே வைத்திருந்தான். கணவனும் மனைவியும் ஒருவரை யொருவர் பிரிந்திருக்கும் போது, அவன் இவற்றைத் தன்னோடு எடுத்துச் செல்ல மனைவி வீட்டு பொருட்களை தனக்குரியதாகக் கொண்டாள். மேலும் அன்றைய சமூக வழக்குப் படி கணவனே கால்நடை ஆகியவற்றுக் கும் சொந்தம் கொணி டா டினான். அவ்வாறே அடிமைகளும் அவனுக் குரியவராய் இருந்தனர். ஆனால் அதேவேளை அன்றைய வழக்குப்படி பிள்ளைகள் தகப்பனின் சொத்துக் களுக்கு வாரிசாக முடியாது.
வாரிசுரிமை, முறைப் படி தாய் வழி வந்தவர்களுக்கே உரியதாயிற்று. ஒருவன் இறந்தால் அவனுடைய சொத்துக்கள் அவனது தாய்வழி வந்தவர்களுக்கே சென்றது. செத்தவனுடைய பிள்ளைகள் 96) g) 60) - U வாரிசுகளாக இருக்காது அவர்களுடைய தாயின் வழிக்குரியவர்களாகவே இருப்பர். கால்நடை, மந்தைக் கூட்டங்கள் ஆகியவற்றுக் குச் சொந்தமாய் இருந்த ஒருவன் இறந்தால், அவனது மந்தைகள் அவனுடைய சகோதரர் களுக்கும் சகோதரிகளுக்கும் அல்லது அவனது தாயின் வழிச் சகோதரிகளுக்குமே சென்றன. அவனுடைய பிள்ளைகள் அவற் றுக்கு உரிமை பாராட்ட முடியாது.

Page 16
செல்வம் அதிகரிக்கத் தொடங்கியதும் ஆணுடைய அதிகாரம் மேலோங்கத் தொடங்கிற்று. அதனால் வழக்கிலிருந்து வந்த வாரிசுரிமையை உதறி தன் பிள்ளைகளை அதற்குரியவர்களாக்கும் நிலையை அவன் பெற்றான். ஆனால் தாய்வழி உரிமை நிலைத்திருக்கும் பட்சத்தில் இதைச் செய்வது சாத்தியமல்ல. ஆனால் இது இன்று தெரிவது போல் பெரும் கடுமையான விஷயமாக இருக்கவில்லை. காரணம் இப் புரட்சியானது சமூகத்தின் எந்த அங்கத்தவரையும் குழப்பாது நடந்தேறியது. தாய்வழி வந்த வாரிசுரிமை தந்தை வழிக்கு மாறியது. ஆனால் இது எப்பொழுது நாகரிகமுற்ற மக்கள் மத்தியில் நடந்தேறியது எனத் தெரியாது. சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலேயே இது நடைபெற்றது.
தாய்வழி உரிமை புறந்தள்ளப்பட்டதுதான் சரித்திர ரீதியான பெண்ணியத்தின் தோல்வியாகும். ஆணான வண் வீட்டிலும் அதிகாரத் தைக் கைப்பற்றினான். பெண் அவனுக்கு அடிமையானாள். அவள் அவனது காமவேட்கைக்குப் பலியாகி, பிள்ளைகள் பெறும் யந்திரமானாள். இத்தகைய கீழ்நிலைப்பட்ட பெண்ணின் நிலை கிரேக்கர்கள் காலத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. இதை விட மேலாக அதற்குப்பின் வந்த செவ்வியல் புராததன காலத்திலும் தெரிந்தது. அதன்பின்னர் அவை படிப்படியாக மறைக்கப்பட்டுவந்தாலும் முற்றாக அழிக்கப்படவில்லை. メ
ஒரு தாரக் குடும்பம் என்னும் புதிய முறையையே நாம் கிரேக்கர் மத்தியில் காணி கிறோம். இங்கே பெண் கேவலமான நிலைக்குட்படுத்தப்படுகிறாள். கிரேக்கர் மத்தியில் நிலவிய கடவுளரின் புராணக் கதைகளில் பெண்கள் முன்னர் அனுபவித் திருந்த சுதந்திரமான வாழ்க் கையைக் காணி கிறோம். ஹோமர் காவியங்களில் எப்படி ஒரு நாட்டை ஆக்கிரமிப்புச் செய்த படைத்தளபதிகளுக்கு கைது செய்யப்பட்ட பெண்கள் கேளிக்கை பொருட்களாக ஆக்கப்பட்டனர் என்பதைக் காண்கிறோம். அழகான பெண்கள் தெரிவு செய்யப்பட்டு படைத் தளபதிகளின் தரங்களுக்கேற்ப வழங்கப்பட்டனர். இத்தகைய அடிமையாக்கப்பட்ட பெண்களுக்கான போரே அக்கிலீஸ் அகமெமோன் ஆகியோர் மத்தியில் நிலவுவதை இலியட் காவியத்தில் பார்க்கிறோம்.
ஆண்கள் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவித்தாலும் அவனது சட்டரீதியாக வந்த மனைவி, கறி புடைய வளாக அவனுக்கு விசுவாசமானவளாக இருக்கவே எதிர்பார்க்கப் பட்டாள். கிரேக்க வீரயுகத்தில் கிரேக்கப்

பெண்ணானவள் கெளரவம் மிக்கவளாக இருந்தாள். ஆனால் அவள் கணவனைப் பொறுத்தவரை, அவள் அவனது பிள்ளைகளுக்கு தாயாகக் கடமையாற்றும் பாத்திரத்தை மட்டுமே வகித்தாள். கூடவே வீட்டைப் பராமரிப்பதோடு அடிமைகளையும் கவனித்தாள். ஒருதார குடும்பம் என்பதோடு அடிமைகளும் அக்குடும்பத்தில் இருந்தார்கள். அடிமைகளில் அழகான இளம் பெண்களும் வீட்டுத் தலைவனின் அனுபவிப்புக்குரியவையாய் இருந்தன. ஆனால் அவனது மனைவியோ அவனுக்கு மட்டுமே விசுவாசம் உடையவளாக எதிர்பார்க்கப்பட்டாள். ஆகவே ஒருதார மணம் என்பது பெண்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது. இன்றுவரை அதுவே நிலவுகிறது.
ஒருதார விவாகம், ஒரு பாலாரை இன்னொரு பாலார் அடக்க முற்பட்டபோதே ஏற்படுகிறது. இது ஆண் பெண் இருபாலாருக்குமிடையே சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து நிகழ்ந்து வந்த போராட்டத்தையே காட்டுகிறது. முதல் தரமான எதிர்ப்பும், முதல்தரமான அடக்குமுறையும் சரித்திரத்தில் ஆண், பெண்ணை அடக்க முற்பட்ட போதே ஏற்பட்டது.
இரண்டாவது முரண்பாடு என்னவெனில், கணவர் சகல சுகபோகங்களையும் அனுபவிக்கக் கூடியதாக இருக்க, மனைவி எந்தவித கவனிப்பும் அற்று ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளாள். இதுவே, மனைவியானவள் கணவனுக்கு நல்ல பாடம் படிப்பிக்கும் வரை நிலவியது. கணவன் பல பெணி களோடு சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்க, மனைவி தனக்கு பணிவிடை புரிந்த வேலைக்காரனோடு உறவுகொண்டாள்.
எது எவ்வாறாய் இருந்தாலும் ஒருதார மணம் என்பதோடு பல பெண்கள் உறவு, முறைகேடான நடத்தைஸ் என்று பல கண்டனத்துக்குள்ளாகும் போக்குகள் நிலவின. இவைக்கு தண்டனை வழங்கப்பட்டபோதும், அவை அவற்றையும் மீறி நிகழ்ந்தன.
இதுவரை நான் கூறியவை, ஆரம்பத்திலிருந்து எந்தவித மாற்றமும் இல்லாது தொடர்ந்து வரும் ஒருதார மணம் பற்றியதே. ஆனால் இங்கே, மனவிை கணவனின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுவதைப் பார்க்கிறோம். காலாகாலமாக கணவன் மனைவிக்கிடையேயான இந்த எதிர்ப்பும் போட்டியும் நிலவி வருவதும், இதை நல்ல முறையில் தீர்க்க எந்த வழியுமில்லாததால் சரித்திர ஆரம்பகாலத்தில் இரு நீ தே இது இரு வர்க்கங்களாகப் பிரிந்து வந்துள்ளது.
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 15

Page 17
விவாக விள
- இஸபெல்
திருமணங்கள் என்பவை பொருளாதார காரணிகள், சமூக அசைவு, நகரமயமாதல், தொலைத்தொடர்பு ஊடகங்களின் செல்வாக்கு, வெளித்தொடர்புகளால் பாதிக்கப்படல் போன்றவற்றால் ஏற்படுத்தப்பட்டு மாற்றம் அடைந்து வருகின்றன. பேச்சுக் கலியாணங்கள் என்பவை இலங்கையில் இன்னும் சாதி, சமயம், இனம் என்பவற்றோடு, பணம், சொத்து என்பவற்றையும் கணக்கிலெடுப்பவையாய் உள்ளன. எவ்வாறாயினும் பத்தொன்பதாம் நுாற் றாணி டிலிருந்து, விவாக ஒழுங்குகள் முதலாளித்துவம் மேலெழுந்ததிலிருந்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளாலும் மாற்றமடைந்துள்ளன.
இலங்கையில் பேச்சுக்கலியாணம் பொதுவான ஒன்றாகவே உள்ளது. இது கிராமத்திலுள்ள கலியாணத் தரகர்களால் அல்லது இனபந்துக்களால் ஏற்படுத்தப்படுவதாகும். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தொலைத் தொடர்பு வசதி, கலியாணங்களில் மாற்றத்தை, அதவது மத்தியதர வர்க்க கலியாணங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தற்போது செய்திப் பத்திரிகைகள் சிறப்பான முறையில் சோடிகளைத் தெரிவு செய்வதில் உதவுகின்றன அதாவது மரபு ரீதியான அல்லது நவீன மயமான விதிமுறைகளைப் பின்பற்றுவோர் ஆகிய இருசாராருக்கும் பொதுவாக செய்திப் பத்திரிகைகள் உதவுகின்றன. கலியாணம் பற்றிய பத்திரிகை விளம்பரம் எவருக்கும் பொதுவானதாக இருந்தபோதும், மத்தியதரவர்க்கம், மேல்வர்க்கம் போன்றவற்றில் உள்ளவர்களே ஆங்கிலப் பத்திரிகைகளில் இதுபற்றி விளம்பரம் செய்கின்றனர் என்பதை அவர் பார்க்கும் தொழில்களில் இருந்தும் அவர்கள் கேட்கும் சீதனத் தொகையிலிருந்தும் அறியலாம்.
பத்திரிகைகள் எப்படிப் புதிய குடும்பங்கள் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் உண்டாக்கப்படுகின்றன என்பதை 'பெண்ணின் குரல் கண்டுபிடிக்க முயன்றது. இதற்காக "சண்டே ஒப்சேவர்' பத்திரிகையில் வெளியான 7699 விவாக விளம்பரங்களைப் பரிசீலித்தோம். அனேகமான விளம்பரங்கள் தமது குடும்பத்தன்மை, சாதி, சமயம், வர்க்கம் போன்றவற்றை குறிப்பிட்டு பெற்றோரால் வெளியிடப்பட்டிருந்தன. பத்திரிகைகளிலி விளம்பரப்படுத்துதல் செளகரியமான முறையில் கலியாணத்தை ஒழுங்கு செய்வதாகும். இதன் மூலம் கலியாணத் தரகரின் குறுக்கீடின்றி, அதிக செலவின்றி இருபகுதியினரையும் தொடர்புகொள்ளச் செய்து
16 0 பெண்ணிண் குரல் 0 ஜூண், 1998

ாம்பரங்கள்
கைம்மர் -
கலியாணத்தை சிக்கனமாக நிறைவேற்றிவிட முடிகிறது. கலியான தி தை ஒழுங்குபடுத் துவதற்கு
தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது என்பது எவ்வாறு கலியாணம் வர்த்தக ரீதியாக தொழிற்படுகிறது என்பதைக் காட்டும். இவ்வாறு கலியான விளம்பரங்களை விட்டு பெரியளவில் விலகிவந்துவிட்டதாக எண்ணக்கூடாது. இது உணி மையில் தமது சோடியைத் தெரிவு
செய்வோருக்கு, மரபுபற்றிய அம்சங்களையும் நவீன விஷயங்கள் பற்றிய அம்சங்களையும் கணக்கிலெடுத்து தேர்வு செய்வதற்கு உதவுகிறது (ராஜசிங்க எஸ், 1977).
ஆண்-பெண் தகைமைகள்
குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி, ஆண் பெண் இருபாலாரிடையேயும், அவர்கள் புரியும் தொழிலை அடிப் படையாகக் கொணி டு பெரிய சமத்துவமின்மையை ஏற்படுத்தியுள்ளது. தொழில் சம்பந்தமாக ஏற்படும் வித்தியாசங்கள், பொருளாதார சமத்துவமின்மை!ை! ஏற்படுத்துகின்றன. மேலும் குடும்ப அரசியல் என்னும் உறவுமுறை ஏற்படுத்தும் இணைவுகள், ஆண்களுக்கு சாதகமாக இயங்கும் பர வணி விதிமுறைகள் எண் பவற் றாலும் , இச்சமத்துவமின்மை ஏற்படுகின்றது. பத்திரிகை விளம்பரங்களில் ஆண்- பெண் தகைமைகள்

Page 18
தெளிவாக சொல்லப்படுகின்றன.
கலியான விளம்பரங்களில் மணப்பெண்ணினது தொழில், நடத்தை போன்றவை மட்டுமல்லாமல், வீட்டு பராமரிப்பு திறமையும் போடப்படுகிறது. இன்னும் சில மாப்பிள்ளை தேடும் விளம்பரங்களில் மணப்பெண்ணின் தந்தை, சகோதரனின் உத்தியோகமும் குறிக்கப்படுகிறது.
அனேக சமூகங்களில் பெனி கள் சிறுவயதிலிருந்தே மணப் பெண் ணுக் குரிய தகைமைகளில் சிறப்புப்பெற கற்பிக்கப்படுகின்றனர். அவர்கள் சமையல், தையல், கீழ்படிவு போன்றவற்றில் சிறப்புற எதிர்பார்க்கப்படுகிறது. கன்னித்தன்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதேவேளை ஆண்களுக்கு சமூகத்தில் மிகுந்த சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் சிறுவயதிலிருந்தே அனுபவிப்பவராய் உள்ளனர். அனேக விளம்பரங்கள் பெற்றோராலேயே கொடுக்கப்படுகிறது. ஆனால் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணப்பெண் தேடும் விளம்பரங்கள் குறைவாகவே உள்ளன. இதன் காரணம் என்னவெனில் ஆண்கள் தங்கள் வாழ்க்கைக்குரிய ஜோடிகளை தாமாகவே சந்தித்து தெரிவு செய்வதற்கான சுதந்திரம் பெற்றுள்ளனர் என்பதே. இன்னொரு சுவையான விஷயம் என்னவெனில் மாப்பிள்ளைகள் தங்களுக்கு மணப்பெண் தேவைப்படும் விளம்பரங்களை தாங்களே தங்களுக்காக போடும் நிலையில் உள்ளனர்.
கன்னித்தன்மை
கலியாண வியாபாரத்தில் 'கன்னித்தன்மையே ஒரு பெண் பெறுமதிமிக்க வெகுமதியாக கொண்டுவருகிறாள். “பெண்களுடைய பாலியல்பு
 

என்பதே அவளுடைய குடும்பத்தின் சொத்தாகவும் அவளது கலியாணத்திற்குரிய விலையாகவும் கணிக் கப்படுகிறது. கலியாணத்தின் போது ஒருபெண்ணுடைய பாலியல்பு அவளுக்குரிய சொத்தாக இல்லாமல் பிறரின் பாவனைக்காக பாதுகாக் கப்பட வேண்டியதாக உள்ளது. பெண்களுடைய பாலியல்பை மீறுவதென்பது சமூக ரீதியாக விலக்கப்பட்ட பகுதியில் ஒரு வயது வந்தவர் தன் பாலியல் தொடர்புகைள வைத்திருக்கிறார் எண் பதல்ல, அப்படிச் செயப் வதன் மூலம் இன்னொருவருக்குச் சொந்தமான (அப்பா,சகோதரன், கணவன்) சொத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும். அனேகமான சமூகங்களில் வன்புணர்வு (RAPE) ஒரு பெண்ணின் தனிப்பட்ட துன்பங்களை இரண்டாம் பட்சமானதாக ஒதுக்கி, அவளைச் சமூக ரீதியாக கீழ்மைப்படுத்துகிறது (OConnel) ஒ, கொனல் 199419)”
இலங்கையில் ஒரு மணப் பெண் ணின் கண் ணித் தன் மை யை Լ] 6Ն) வழக்கங்கள் உறுதிப்படுத்துகின்றன. "தென்னிலங்கையில் உள்ள கலியான சம்பிரதாயம், இந்த நாட்டிலுள்ள ஒரு பெண் பாதிக்கப்படும் நிலையையே காட்டுகிறது. இங்கே பெண் ணினி கண் ணித் தன் மை பெரிதாக கணிக்கப்படுவதோடு மணப்பெண்ணின் மாமியாரால் அவளுடைய முதலிரவின்பின் அவளது கன்னித்தன்மை பரிசீலிக்கப்படுகிறது (Postel - Shrivers: 1980-61). “இப்பரிசீலனையானது மணப்பெண்ணினது படுக்கை விரிப்பில் இரத்தக்கறை படிந்திருக்கிறதா என்பதைப் பார்ப்பதாகும் . இதைத் தொடர்ந்து வரும் சம்பிரதாயங்கள் ஒரு பெண் கன்னியாக இருந்தாளா என்பதை வெளிப்படையாக பிறருக்கு பறைசாற்றுவதாக அமையும். இச் சம்பிரதாயங்கள் மணப்பெண்ணையும் அவள் குடும்பத்தையும் இழிவுபடுத்துவதாக
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 17

Page 19
அமையலாம். இந்தப் பரீட்சையில் மணப்பெண் சித்தியடைந்தால் அவள் வீட்டுக் கு அழைக்கப்படும்போது செந்நிற ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க, அவளை அவளது மாமியார் செந்நிற மலர்கள் கொண்டு வரவேற்பார். அவள் தோல்வியுற்றால் அவள் வெள்ளை உடை உடுத்து வர, வெள்ளைநிற மலர்களால் அவள் மாமியாரால் வரவேற்கப் படுவாள் . மணப் பெண் ணினி குடும்பத்தவர்களுக்கு சம்பந்தப்பகுதியினர் சாப்பாடு பரிமாறாமல் அவர்களையே எடுத்துச் சாப்பிடும்படி விடுவர். அதுவும் விருந்துக்குரிய மேசையில் இல்லாமல் வேறு அருகிலுள்ள சாதாரண மேசையில் வழங்கப்படும் (பசநாயக்க 1991:5).”
பெற்றார் கடமைகள்
அனேகமான பேச்சுக் கலியாணங்களில், பெற்றார்தான் தம் பிள்ளைகளுக்கு விவாகங்களை ஒழுங்கு படுத்துகிறார்கள். பேச்சுக்கலியாணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டவையாய் இருக்காவிட்டாலும் பெண்கள் தம் பெற்றார் எடுக்கும் தீர்வுக்கு கட்டுப்பட வேணி டியவர்களாயப் உள்ளனர் . இன்னும் இலங்கையில், பெண்கள் தம் பெற்றாருக்கு கீழ்படிய வேண்டிய முறையிலேயே வளர்க்கப்படுகிறார்கள். இது பெற்றாரால் தரப்படும் விவாக விளம்பரங்களில் தெளிவாகிறது. அனேகமான பெற்றோர் அவ்விளம்பரங்களில் தமது பெண்களை “கீழ்படிவுள்ள", “நல்ல நடத்தையுள்ள", "பாரம்பரிய விதிமுறைகளை கனம் பணி னுகிற” என்ற முறையிலேயே குறிப்பிடுகின்றனர். விளம்பரங்களில் சாதி, சீதனம் போன்றவவை குறிப்பிடப்படும்போதும், குடும்பத்தின் ஆண் அங்கத்தவர்களின் உத்தியோகம் பற்றி பிரஸ்தாபிக்கப்படும்போதும், சமூகத்தில் தமது குடும்பத்தின் நிலையை உயர்த்தவே செய்யப்படுகிறது.
சாதி
சாதி என்பது பரம்பரையாக வரும் கட்டித்த சமூகப் பிரிவாகும். சாதி என்பது இன்று, ஒருவன் தனது சாதிக்குரிய தொழிலைச் செய்யாவிட்டாலும் அவனது சமூக அந்தஸ்தை குறிப்பதாகும். இலங்கையில் சாதி என்னும் கருத்து, பொருத்தமான கலியாணத்திற்குரிய முக்கியமான சேர்வையாக கருதப்படுவதோடு அதற்கு ஒப்புதல் தருவதற்குரிய காரணியாகவும் இருக்கிறது. அனேகமான எல்லா பத்திரிகை விளம்பரங்களிலும், விளம்பரப்படுத்தியவர் தனது சாதியைப் பற்றியே முதலில் குறிப்பிடுகிறார் 66% மணப்பெண்கள் தமது சாதியையும் 55% வி மாப்பிள்ளைமார் தமதையும் குறிப்பிட்டிருந்தனர்.
உலகத்தில் அனேகமான கலாசாரங்களில் இந்: வகைச் சாதிப்பாகுபாடு இருப்பதை காண்கிறோம் இலங்கையில் சிங்கள பெளத்தரிடையே இந்த
18 0 பெண்ணினி குரல் 0 ஜூன், 1998

சாதிப் பிரக் ஞை உண்டு. ஆனால் இந்தச் சாதிப்பாகுபாடு இலங்கைத் தமிழரிடையேதான் மிகக் கூடுதலாக உள்ளது. மேலும் சிறுபான்மையினரான தமிழ் இந்தியத் தொழிலாளரிடையேயும் இது உள்ளது. அனேகமாக ஒருவனுடைய சாதி அவனது முதல் பெயரால் இனங் காணப்படுகிறது. கலியாண விஷயத்தில் சாதி ஒரு முக்கிய காரணியாக உள்ளது இலங்கை கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் தமது சாதியை இனங்கண்டு கொள்கின்றனர். கொழும்பு பல்கலைக்கழக மானிடவியல் பேராசிரியர் எச்.ரி ஹெரிஜ் என்பவர் சாதி என்பது ஒருவனது தேசியத் தைப் போல அடையாளத் தைப் பேணுவதற்குரியதாக இருக்கிறது என்கிறார். கல்வித்தகைமை மட்டம்
சணி டே ஒப்சேவரில் வந்த அனேக விளம்பரங்களில், விளம்பரப்படுத்திய மாப்பிள்ளைமார் தமக்கு படித்த பெண் னே தேவையெனக் கேட்டிருந்தனர். வரப்போகும் கலியாணப்பெண்ணின் கல்வித்தகமை ஒருகுடும்பத்தின் சமூக அந்தஸ்தை கூட்டுவதற்கு பாவிக்கப்படுகிறது. மணப்பெண்ணின் குடும்பம் எப்பொழுதும் தமது பெண்ணுக்கு மாப்பிள்ளையாக வருபவன் நன்றாகப் படித்தவனாக அல்லது பெண்ணுக்குச் சமமாகவாவது படித்தவனாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றது. அதேவேளை மாப்பிள்ளை இதனால் தான் மாப்பிள்ளையாகத் தெரிவாகப்படுவதன் மூலம் நல்ல சீதனம் பெறும் வாய்ப்பை அடைகிறான்.
பத்திரிகை விளம்பரங்களில் 87% இல் மணப்பெண்கள் தமக்குரிய மாப்பிள்ளை தொழில் பார்ப்பவனாக இருப்பதையே விரும்புகின்றனர். ஒரு பெண் நல்ல வருமானமுடையவளாக இருந்தாலும் அவளுடைய கல்வி சீதனத்திற்குரிய ஒரு பகுதியாகக் கொள்ளப்படமாட்டாது. அவளுடைய கல்வியானது அவளை அவளது குடும்பத்தின் தரத்தைவிட உயர்ந்த தரத்து மாப்பிள்ளையைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கும். இன்னும் சுவாரஸ்யமானது என்னவெனில் சண்டே ஒப்சேவரில் வந்த அநேகமான விளம்பரங்களில் மாப்பிள்ளை வீட்டார், தமக்கு தேவையான மணப்பெண் படித்தவளாக அல்லது ஆங்கிலம் பேசக்கூடியவளாக இருக்க வேண்டும் என்றே கேட்டுக் கொண்டனர். வெகு சிலரே தொழில் பார்க்கும் பெண்ணை கேட்டனர். ஆய்வுக் குட்பட்ட 54% விளம்பரங்களில் , தொழில்பார்க்கும் பெண்ணை கேட்டனர். சில விளம்பரங்களில் ஆசிரியையாகவோ வீட்டலங்கரிப் பாளராகவோ இருக்கும் பெண்களைக் கேட்டனர்.
சீதனம் சீதனம் என்பது பெண் ணினால்
கலியாணத்தின்போது மணமகனது வீட்டுக்கு கொண்டுவரும் சொத்தாகும். இது மணப் பெண்ணின்

Page 20
சமூக அந்தஸ்தைக் காட்டுவதாய் அமையும் அனேகமான பத்திரிகை விளம்பரங்களில், மணப்பெண கொடுக்கப் போகும் சீதனமாக வீடு, நகை மணப் பெண் ணின் சம்பளம் என்பவை போடப்பட்டிருக்கும். மாப்பிள்ளை தேடும் 87% விளம்பரங்கள் அனைத்தும் தாம் கொடுக்கப்போகுப் சீதனத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தன.
சாகதக் குறிப்பு
சாதகப் பொருத்தம் பார்ப்பது கலியான விஷயங்களில் முக்கிய பங்குவகிக்கிறது மணமக்களின் சுமுகவாழ்க்கை உறவுக்கு இதன் பொருத்தப்பாடு மிக அவசியம் என பெற்றோரால் கருதப்படுகிறது. சுபநேரம் பார்ப்பது சிங்கள் பெளத்தர்களுக்குப் பிரத்தியேகமானது. தமிழர்களும் சாதகம் பார்க்கிறார்கள். இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் சாதகம் பார்க்கிறார்கள்.
விளம்பரப்படுத்தப் பட்டவற்றில் 4% மணப்பெண்களும் 52% மணமகன்மாரும் சாதகட் பொருத்தம் பார்ப்பதை விரும்பினர்.
சமூக தரப்பாடு
பத்திரிகை விளம்பரங்களில் குடும்பத்தின் சமூக அந்தஸ்து பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட்டது முக்கியமாக சண்டே ஒப்சேவர் பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்களில் அனேகமாக பெண்ணுடைய குடும்பத்தில் உள்ள ஆண்களின் தொழில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் இத்தகைய மணமகனொருவனைக் கணவனாகக் கொள்வதே குடும்ப அந்தஸ்தாக கருதப்படுகிறது.
கலியாணத்தின் “தொழிற்பாடு” சமூக அந்தஸ்தை கூட்டுவதாக இருப்பதே. இதன்மூலம் சாதி கல்வித்தராதரம், சீதனம், பெண் பகுதியாரினதும் பெண்ணினதும் செல்வாக்கு, நற்பெயர் எல்லாம் ஒன்று கலப்பதே. சீதனத்தோடு மணமகனின் தொழிலும் இணைவதால் மணப்பெண் தன் எதிர்கால பொருளாதார நிலையை உறுதிப்படுத்திக்கொள்கிறாள் குடும்பத்தின் மதிப்பு பேணப்படுவது அவசியம் என்பதால் அனேக விளம்பரங்களில் பெற்றார் தங்களை “கெளரவம் மிக்கவராகக்” குறிப்பிடுவர்.
ஒரு குடும்பம் தனது பணத்தை கலியாண வைபவங்களில் செலவழிப்பதன் மூலமும், விருந்துக்கு அழைக்கப்படுவோர் மூலமும், விருந்து வைக்கப்படும் இடங்கள் மூலமும் தனது குடும்ப சமூக அந்தஸ்தைக் காட்டமுயலும்.

ஒரேவகைத்தன்மை
சணி டே ஒப்சேவரில் வரும் அனேக விளம்பரங்களில் ஒரே வகைத்தன்மை கொண்ட மணப்பெண் பற்றிய விளம்பரங்கள் தரப்படுகிறது. மணமகனைத் தேடும் பெண் பகுதியினரின் விளம்பரங்கள் அனேகமானவை எப்படி சீதனத் தொகையை விளம்பரப்படுத்துகின்றனவோ அவ்வாறே பெண்ணினது உடலழகு, நடத்தை போன்றவற்றையும் “நல்லலொழுக்கமுள்ள”, “நல்ல பழக்கமுள்ள", “கீழ்படிவுள்ள” என்று விளம்பரப்படுத்துகின்றனர். ஆனால் இதில் தமக்கு எத்தகைய மணமகன் வேண்டும் என்பது பற்றி இருக்காது. சில புறநடையாக "புகைபிடிக்காத","குடிப்பழக்கமில்லாத” என்பன போன்ற மணமகன் பற்றிய எதிர்பார்ப்புகள் இடம்பெறும். சிலவேளை மணப் பெண்ணை விவாகரத்து செயப் துவிட் டால் “விவரம் இல் லாத”, “பொருத்தப்பாடில்லாத” என்று அவர்கள் பற்றி தட்டிக்கழித்துவிடுவதுண்டு. எடுக்கப்பட்ட தரவுகளின்படி 9% மணமகன்மார் விவாகரத்து செய்யப்பட்டுள்ளனர். 6.2% மணப் பெண் கள் விவாகரத்துச் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய ஒரேவகையான “பெண்தேர்வு” விளம்பரங்களில் இருந்து, எவ்வளவு தூரம் பெண்கள் தம் பெற்றோரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும், அவர்களிடம் அவர்கள் வாழ்க்கையைத் தீாமானிக்கும் உரிமை இல்லை என்பதும் தெரிய வரும். மாப்பிள்ளை தேடும் 34% விளம்பரங்களில் 16% பெண்கள் மட்டுமே தமக்கு வேண்டிய மணமகன் எத்தகைய குணநலன்
உடையவராய் இருக்க வேண்டும் என்பதைக்
குறிப் பிட்டிருந்தனர். மணப் பெண் வேண்டி போடப்பட்டுள்ள 42% விளம்பரங்களில் 30% மாத்திரமான ஆண்களே தமது நடத்தை, குணஇயல்புகளை வெளியிட்டிருந்தனர்.
விவாகமாகாதவர்கள்
இலங்கையில் கலியாணமே ஒரு பெண்ணினது முக்கிய குறிக்கோளாக உள்ளது. சிறுமியரும் பெண்களும் எதிர்கால கணவனால் நல்ல முறையில் பேணப்படுவதற்குரிய முறையில் வளர்க்கப்படுகின்றனர்.
குடும்பத்தின் அடிப்படை கலியாணம் என்றே பார்க்கப்படுகிறது. விவாகமாகாத பெண்ணோ, ஆணோ குடும்பமாகப் பார்க்கப்படுவதில்லை. விவாகமே எல்லாவகை அந்தஸ்து, பேர், புகழ், உடைமை, வாரிசுரிமை போன்றவற்றையெல்லாம் பேணுவதற்குரிய குடும்பத் தொடராகக் காணக்கூடியதாய் உள்ளது. கலியாணம் ஆகாமல் இருப்பவரை, இலங்கையில் அதிர்ஷ்டம் கெட்டவராகவே பார்க்கப்படுகிறது. மேலும் விவாகரத்து செய்யப்பட்டவர்கள், ஒரு பெற்றாள் உள்ள குடும்பங்கள், கைம்பெண்கள், மலட்டுப்பெண்கள், முறையற்ற காதல் தொடர்புடையவர்கள் ஆகியோரைச் சுற்றி ஓர் அவப்பெயரே நிலவுகிறது.
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 19

Page 21
“இந்த தெய்வானைக்கும் இராமலிங்கத்திற்கும் என்ன நடந்தது?
ஊரில புருஷன் பெஞ்சாதிக்கு உதாரணமாக, குடும்பம் நடத்துறதுக்கு செய்முறை விளக்கமா இருந்ததுகள்.
எப்படி இரு துருவமா போனதுகள்.
பேரப்பிள்ளைகளைக் கண்ட இந்த வயதிலும் அப்பிடி என்ன மனக்கசப்பும் வைராக்கியமும்?”
“இராமலிங்கம் என்னப்பா. என்ன நடந்தது?”
"ம். புரியேல்ல.”
ஐஞ்சு
“என்ன! இத்தன வருஷ தாம்பத்தியத்திலயும் அவாவ புரிஞ்சு கொள்ளயில்லயா நீ. ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சு கொண்டுதானே முன்னுதாரணமா ஐம்பது வருஷ தாம்பத்திய வாழ்க்க நடத்தினிங்க. பிறகென்ன.”
"இல்ல. நடா. என்னால இத புரிஞ்சு கொள்ள முடியேல்ல. எப்பவோ நடந்த ஒரு விஷயத்த அவளிட்ட சொன்னன். அப்பிடி நடந்தது பிழை எண்டு வாதாடினாள். அதில தவறு இல் லயெண் டு எவ்வளவோ எடுத்துச் சொன்னன். சரி, தவறெண்டாலும் என்ன மன்னிச்சிடு எண்டு காலப்பிடிச்சு கெஞ்சினன். அவள் ஒண்டுக்கும் மசியேல்ல. அதுதான் ஏனென்டு புரிஞ்சு கொள்ள முடியேல்ல.”
"அப்பிடி என்ன விஷயம்?”
“இல்ல. நடா. பெரிசா ஒண்டுமில்ல. இவள் இரண்டாவது பிள்ளைய வயித்தில சுமக்கேக்க ஒரேயொரு தடவ அதுவும் ஐஞ்சு நிமிசம்தான். எனக்கிருந்த தாகத்த வேறொருத்தியிட்ட தனிச்சுக் கொண்டன். எனக்கு அண்டைக்கு அது அவசியம் தேவப் பட்டுது. இவளாலையும முடியாது பாவம்.அதுதான் காசு குடுத்து போயிற்று வந்தன். அத இவ்வளவு நாளுக்குப் பிறகு சும்மா தமாசா சொன்னன். அவ்வளவுதான்! இந்த ஐம்பது வருஷத்தையும் பொய்யாக்கிற்று போயிற்றாள்.”
“எனக்கே கேக்க வியப்பா இருக்கு. எப்பவோ நடந்த இந்தச் சின்ன விசயத்துக்காக இப்படி நடந்து கொண்டாவா தெய்வானை.”
éé
சரி. நீ இந்தக் கதையை சொல்ல அவா என்ன சொன்னவா?”
20 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

"கிட்ட இருந்தவ்ஸ் அதிர்ந்துபோய் விலகினாள். உங்களால எப்பிடி முடிஞ்சுது. நீங்க இப்படி நடந்து கொண்டீங்களா? நான் ஏமாந்திற்றன். என்ன ஏமாத்திற்றீங்க. பொய். பொய் எல்லாம் பொய். எண்டு கத்தினாள்.”
"இதில ஏமாத்த என்ன தெய்வானை இருக்கு. நான் என்ன உன்னைவிட்டுட்டு அவளோடு குடும்பம் நடத்திக் கொண்டா இருந்தனான். இல்லையே ஒரு ஐஞ்சு நிமிசம் என்ர தேவைய, வேகத்த, தாபத்த தணிச்சன். அவ்வளவுதான். இதுக்குப்போய் இப்பிடி ஐஞ்சு நிமிசத்துக்காக ஐம்பது வருஷத்தையும்
நிமிசம்
ஏ. தேவகெளரி
பொய்யாக்கிற்றியே. எண்டன்.”
“என்ன. ஐஞ்சு நிமிசமா. என்னக் கட்டி ஒரு மாசத்தில விட் டுட்டு ஸ் கொல சிப் எண் டு வெளிநாட்டுக்குப் போனிங்க. ஒரு வருஷமா. ஒரு வருஷமா நான் இருந்தன். என்ர தவிப்பு, தாபம், தேவை அத்தனையும் அடக்கிக் கொண்டு இருந்தன். ஒரு மாச நினைவிலேயே ஒரு வருஷத்தையும் கழிச்சன். அப்ப நான் என்ர தேவைய, பசிய மட்டும் நினைச் சுப் பாக்கெல்ல. அதோட சேர்த்து உங்களையும் நினைச்சன். அப்பிடித்தான் காலம் போச்சு. என்ர தேவைய, பசிய மட்டும் நான்
நினைச்சிருந்தா நீங்கதான் தேவையெண்டில்ல. எந்த ஆம்பிளையும் சரிதான். ஆனா நான் உங்கள நினைச்சு அதுக்குப்பிறகுதான் என்ர தேவைய நினைப்பன். எனக்கு ‘செக்ஸ்’ தேவைப்பட்டது. ஆனா அத உங்களோடதான் பகிர்ந்துகொள்ளவேணும் எண்ட அவா, வேகம், விருப்பு எல்லாம் இருந்தது. ஏன்? அவ்வளவு தூரம் உங்கள நான் “லவ் பண்ணுறன். நம்பிக்கையான அன்பு வைச்சிருக்கிறன்.
உங்கள மாதிரி ஒரு ஜஞ்சு நிமிசம் எண்டு யாரையாவது நான் கூப்பிட்டிருந்தா இண்டைக்கு என்ர நில வேற. எப்பிடி உங்களால முடிஞ்சுது. என்ன ஏமாத்தி என்னோட பொய் வாழ்க் கை வாழ்ந்திருக்கீங்க” எண்டு அழுதழுது கத்தினாள். இந்த வயசிலேயும் அப்பிடியொரு வேகம். அவளின்ர சொல்லில.

Page 22
"ஐயோ. தெய்வானை. என்ன நீ ஏமாத்திற்றன் ஏமாத்திற்றன் என்றுறாய். நான் உன்னில எவ்வளவு அன்பு வைச்சிருக்கிறன் தெரியுமா? உன்னைவிட்டா எனக்கு யாரிரிக்கினம்..” எண்டு நானும் எவ்வளவோ சொல்லிப்பாத்தன். அவளோ,
"செக்ஸ் உறவ உங்களோடதான் வைச்சிருக்க வேணும் எண்டு நான் எவ்வளவு ஆவலும், ஆசையும் கொண்டிருந்தனோ அதப்போல நீங்க இல்ல. உங்களுக்கு என்னோட மட்டும்தான் வைச்சிருக்க வேணுமெண்டில் ல. யாரோடையும் வைச் சுக் கொள்ளலாம் எண்ட மனம். அதுதான் என்ன ஏமாத்திறது.
இதுதான் பொய் வாழ்க்கை.
என்ர நம்பிக்கையெல்லாம் உடைகிற பம்மாத்து எண்டு நிறையச் சொல்லத் தொடங்கினாள். நானும் என் நியாயப்படுத்தல்களைச் சொன்னன்.
“இல் ல தெய்வான. உண்ணில நான் வைச்சிருக்கிற அன்பு, பாசம், நம்பிக்கை, காமம் எதுவும் இந்த ஐஞ்சு நிமிசத்தில குறைஞ்சு போகேல்ல. ஜஸ்ற் பஸ்சில ஏறி இறங்குறமாதிரி. என்ர மனசில எந்த தாக்கமும் இல்ல. நான் அவளையே நினைச்சுக் கொண்டும் இல்ல. அந்த நேரம் அவ்வளவுதான். முடிஞ்சுது.
அதுக்குப் பிறகு நான் அத நினைச்சுக்கூடப் பார்த்ததில்ல. அதோட அவள் முகமே எனக்கு மறந்து போயிற்று. அவள் யாரோ நான் யாரோ. எனக்கு அன்போ, பாசமோ இல்ல. “ஜஸ்ற் ஒரு ஐஞ்சு நிமிசம், என்ன நம்பு தெய்வான.” எண்டெல்லாம் விளக்கம் சொன்னன். அவள் எதுவுமே கதைக்கேல்ல.
எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னாள். “என்னால இனி ஏலாது. இந்த மனசை தேற்ற முடியேல்ல. வேண்டாம். இந்த நம்பிக்கை இருப்பு வேண்டாம்.” எண்டு சொல்லிற்று வெளிக்கிட்டுப் போனவள் தானி . என் னைப் பார்க் கக் கூட விருப்பமில்லையெண்டு மகளிட்ட சொல்லிற்றாள். ஒருத்தருக்கும் என்னண்டும் தெரியா. இப்ப ஆரோடையும் ஒண்டும் கதைக்கிறதில்லை. பேசாமல் இருக்கிறாள் தனிமையில. இதால என்ன வருத்திறாளா தன்ன வருத்திறாளா எணடு ஒண்டுமே புரியேல்ல.
அண்டைக்கு ஒரு கடிதம் எழுதி வைச்சிருந்தாள். இதுதான் அது.
'சின்ன வயசில இருந்து என்ர குடும்பத்தில நான் எல்லாத்தையும் அனுபவிச்சன். அன்பு, பாசம், எனக்காக எதையும் செய்யும் அக்கறை, என்மேல் கரிசனை இதெல்லாம் என்ர அப்பா, அம்மா, அண்ணன்மார், தங்கச்சி எண்டு என்ர குடும்பத்தில இருந்து எல்லாம் கிடைச்சுது. எல்லாம் கிடைக்குது எண்டு நான் இப்படியே இருந்திருக்கலாமா?

இல்லையே. எனக்கு செக்ஸ் வேணும். அந்த இன்பம் வேணும். என் உதிரத்தில் இருந்து சந்ததி வேணும். இதனால திருமணபந்தம் ஏற்பட்டுது. நீங்களும் நல்ல அன்பு, பாசம், கரிசனை எல்லாமே கொண்டவரா இருந்தீங்க. இது எல்லாத்தையும் விட செக்ஸ் உறவு கிடைச்சுது. மிச்ச வாழ்க்கையும் நம்பிக்கையாக கொண்டுபோக கிடைச்சதுதான் செக்ஸ். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ எண்ட நிலைப்பாட்டில் ஆரம்பமானதுதான் அது. இது எல்லாவற்றிற்கும் மேலாக நான் உங்களில வைச்சிருக்கிற அதீத அன்பு, உங்களிடம் தான் என் இன்பத்தை பெற வேணும் எண்ட என் எண்ணம் வாழ்க்கை ஸ்திரமாக காரணமாயிற்று. என்னை நான் எப்படி உங்களுக்குக் கொடுத்தேனோ அதேபோல் உங்களை எனக்கு எடுத்துக்கொண்டேன். இந்த மாதிரித்தான் நீங்களும் உங்கட குடும்பத்தில எல்லாத்தையும் பெற்று செக்ஸை என்னிடம் பெற்றீர்கள். அதுவே நான் உங்களுக்கு மனைவியாகக் காலமெல்லாம துணையாக, ஒரு உச்ச நம்பிக்கைக்குரியவளாகினேன். இந்த நிலையில் எதன் மூலம் நான் உங்களுக்கு மனைவியானேனோ, எதன் மூலம் எங்கள் சந்ததிக்கு காரணமானேனோ அதையே வேறொருத்தியிடம் - வேறொருத்திக்கு நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். கொடுத்திருக்கிறீர்கள்- என்றால் எனது நிலை கேள்விக்குரியது தானே! நான் ஏன்? என் நம்பிக்கை ஏன்? நான் கரைந்து கரைந்து என்ன ஆழ அழுத்திக் கொண்ட இந்தக் குடும்ப உறவு ஏன்?
உங்கள் அம்மா, அப்பா எண்ட குடும்ப அமைப்பில் இருந்தும், அந்த ஐஞ்சு நிமிசம் அவளிடம் இருந்தும் நான் எதனால் வேறுபட்டு நிற்கிறேன்? எனக்குரிய இடம் எது? எதுவுமே இல்லையே! உங்கட குடும்ப உறவினர்களில் இருந்து நான் வித்தியாசப்பட்டு நின்றது இந்த செக்ஸ் ஒன்றாலதான். அதுவே வேறொருத்தியிடம் கிடைக்குது எண்டா நான் ஏன்? எனக்குரிய இடம் எது?
உங்களுக்கு சாப்பாடு சமைக்கவும், உடுப்புக் கழுவவும் வேலைக்கு ஆள் வைச்சிருக்கலாம். அதப்போல செக்ஸ்ஸிற்கும் ஆள வைச்சிருக்கலாம் எண்டா ஏன் குடும்ப அமைப்பு? உங்கட பெயர் சொல்ல பிள்ளை வேணும். அத பெத்துத்தர நான் வேணும் அவ்வளவுதான்! அதுக்கு மேல ஒண்டுமில்ல என்ன. இப்படியெண்டா நான் ஏன் இவ்வளவு வருஷத்தையும் உங்களில மாஞ்சு மாஞ்சு கரைச்சன். இந்த குடும்ப அமைப்பெல்லாம் என்ன விசரி ஆக்கிற்றுது. நான் கொண்ட பெருமிதமெல்லாம் நகைப்புக்கிடமாயிற்று. சும்மா. கானுற நேரம் கதைப்பம். படுக்கிற நேரம் செக்ஸ் செய்வம். விடிய எழும்பி ஒவ்வொரு திக்கா போவம். இப்பிடி வாழ்ந்திருக்கலாமே. கணவனை இன்னொருத்தியிடம் கூடையில சுமந்து சென்ற நளாயினியையும், காசு கொடுத்து கணவன அனுப்பின கண்ணகியையும்
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 21

Page 23
என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியேல்ல யாருக்கு வேணும் அந்தப் பெருமை?
எனக் கு செக்ஸ் வேணும் . அதுவும உங்களிடம்தான் வேணும் எண்டு நான் இருக்க நீங்களோ எனக்கு செக்ஸ் வேணும் அது நீயாகத் தான் இருக்கவேணுமெண்டில்ல யாரா இருந்தால் என்ன எண்டு நீங்க போனபிறகு இந்த குடும் அமைப்பில அர்த்தமே இல்ல. இது வெறும் சந்ததி உற்பத்திக்கான அமைப்புத்தான்.
போதும்.
இனி வேண்டாம் இந்த நம்பிக்கை இருப்புக்கள்
இனி வேண்டாம் இந்த ஏமாற்றுகள்
பெறுமதி கணிக்க முடியாத என முதலீடுகளையெல்லாம் நீங்கள் உங்கள் உழைப்பில பெற்றுக் கொணி ட இலாபங்களாகவே செலவழித்திருக்கிறீர்கள். இது கூட உங்களுக்கு புரியவில்லையா?
“இன்னும் எனக்குப் புரியேல்ல. ஒரு சின்ன விஷயத்த இப்பிடி பெரிசா எடுத்து தன்னை அழிச்சுக்கொள்ளுறாவே எண்ட கவலையா இருக்கு நடா. எனக்கு”
“அதுதானே இதென்ன விசர் மனுசி எப்பவோ நடந்த ஒண்டுக்காக இப்பிடி. நானும் ஏதோ பெரிய விசயம் எண்டு நினைச்சன். உனக்கும் தேவையில்ல பழைய கதையெல்லாம் இப்ப ஏன் அவுக்க வெளிக்கிட்டனி. உனக்குத்தெரியுந்தானே இந்தப் பொம் பிளையஞக்கு நாங்க வேற ஆரும் பொம்பிளையைப் பற்றிச் சொன்னாலே பிடிக்காது ஒரு பொறாமைதான். அதுகளிட இயல்பு அப்பிடி பிறகேன் இப்படி தேவையில்லாத கதை கதைக்க போனி.
‘இந்தப் பிரச்சினை நடந்து ஒரு மாதத்தி தெய்வான செத்துப்போச்சு. அது கடைசி வரை தt மனுசன பார்க்கவேயில் லை. இதக் கேட் இராமலிங்கமும் தற்கொலை செய்துகொண்டான்.
எனது தாத்தாவின் டயறியைப் பாத்த எனக் ஆச்சரியாமாகத்தான் இருந்தது. "சீ கடைசிவரைக்கு தெயப்வானைப் பாட்டியை யாருமே புரிஞ் கொள்ளயில்லையே. அம்மாட்ட இதக்காட்டி கேட்டன்.
“ஒமோம். எங்கட அப்பாவின்ர ‘பிறன்ட்தா இது நல்ல ஒரு கததானே. அதுதான் டயறி வைச்சிருந்தனான். ஆனா இந்த தெய்வான மனுசிக்கு விசர்தான். வயசான காலத்தில பேசாம இருக்கிறது: பாவம் அந்த மனுசன் தற்கொலை செய்திற்று திமிர் மனுசிதான். ஆம் பிள, தப்பு, தள நடக் கும் தானே. பொம் பிள அனுசரி
22 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

வேண்டியதுதான்.”
எனக்கு அம்மாவின் கதை வியப்பாகவும் ஆத்திரமாகவும் இருக்கு. சீ. இந்த அம்மாவாலுமா புரிஞ்சு கொள்ளமுடியேல்ல.
“அதுதான் அம்மா. நானும் இவளுக்குச் சொன்னனான். இவள் என்னமோ பெரிய விசயமா. இத கதைச்சுக் கொண்டிருக்கிறாள்.” அண்ணாவும் சேர்ந்து கொண்டான். இராமலிங்கம் தாத்தா, அப்பா, அம்மா, இவர்களுடன் அண்ணாவும் சேர்ந்து கொண்டான்.
எனக்குப் பின்னால் வரும் சந்ததியும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளுமா?
எனக்கு எங்காவது இவர்களை விட்டு வெகுதூரத்திற்கு ஓடிவிட வேண்டும்போல் உள்ளது.
(f6O10 2/517/7 96/6f?
---------------- - - - - - - - - - - - - - -ا
பெண்பிள்ளை பிறந்ததும் அழுவார் உடுப்பு, படிப்பு, சீதனம் சீர்வரிசை என்று
ஜயோ இது சுமையே சுமையென்று!
அவளோ மனதிலே மணாளனைச் சுமக்கும் "சுமை” கையிலும் வயிற்றிலும் பிள்ளையைச் சுமக்கும் "சுமை” தொழில் பார்க்கத் தொடங்கினாலும் வேலைப் பளுவைச் சுமக்கும் சுமை வீட்டுவேலை வெளிவேலை எனத்தொழிலும் இரட்டைச் சுமை. இத்தனை சுமைகளையும் தாங்கும் சுமை தாங்கிதான் பெண்
--சக்தி தாய்லாந்தில் விவாகரத்துச் செய்யும் உரிமை கணவனுக்கு மட்டுமே உண்டு. மனைவி தனது சொத்துக்களை விற்பதற்கும் கணவனிடம் அனுமதி பெறவேண்டும்.

Page 24
கைம்மை
விதவை மை என்பது அதற்குரிய சம்பிரதாயங்கள், சடங்குகளோடு தொழிற்படும் ஒரு சமூக ஸ்தாபனமாகக் கணிக்கப்பட்டுள்ளது. வதவையானவள் தலையை மழித்தல், நகையணிதலை கைவிடல், வாசனைப் பொருள்போடப்பட்ட சத்துணவு உட்கொள்ளலை தவிர்த்தல். கற்தரையில் சயனித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டியவளாகிறாள். விதவையை மறுவிவாகம் செய்ய அனுமதித்த கலாசாரத்தை உடைய தாழ்த்தப்பட்ட தமிழ்ச் சமூகங்கள், தென்னிந்தியாவில் உள்ள வேறு இனக்கூட்டங்கள், இலங்கைத் தமிழர் போன்றவற்றின் மத்தியில் இச்சடங்குகள் இல்லை. இது தந்தை வழி கலாசாரங்களைக் கொண்ட பிரதேச மாற்றங்கள் இந்துசமயத்தில் செல்வாக்கு செலுத்தியதன் விளைவே.
விதவைகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் செயற்பாடுகள் போன்றவற்றில் பெளத்தம் செலுத்திய செல்வாக்கும் ஒரு காரணமாகும். கைம்மை நோன்பு என்பது இவற்றில் பொதுவான ஒன்றாகும். விதவை கடைப்பிடிக்கும் உடல் ஒறுப்பு நோன் புக்கு சமமானவற்றை பெளத்தத்திலும் சமணத்திலும் காணக்கூடியதாக உள்ளது. தலைமழித்தல், காவி அணிதல், குறைவாக
awa
 

- செல்வி திருச்சந்திரன் -
உண்ணுதல், ஆடம்பரங்களைத் தவிர்த்தல், பாலியல் உறவுகளை நிராகரித்தல், பொதுவாக உடல் ஒறுப்பு என்பது பெளத்த, சமண சந்நியாசிகளுக்கு இடப்பட்ட விதிகளாகும். "நோன்பு” எனும் வார்த்தை மொழியில் ரீதியாக பெளத்த சந்நியாசிகளின் தன் ஒறுப்பு தண்டனைகளோடு சம்பந்தப்பட்டதாகும். பிராமணிய இந்து மதம் இக் கொள்கைகளை பொறுக்கி தமது விதவைகளுக்குரிய சடங்குகளாக்கியது. அவர்கள் விதவைகள் வெள்ளை உடுப்பதை கட்டாயப்படுத்தினர். சில சாதியினரிடையே விதவைகள் மேல்பகுதி ஆடைகளை அகற்ற வேண்டிய நிலைக்குள்ளாகினர். இது பெளத்த பிக் குமாரினி உடையை ஞாபகப்படுத்துவதாய் உள்ளது. கற்புப்பற்றிய கோட்பாடு மாற்றப்பட்டு கணவனை இழந்த பெண்கள் தன் ஒறுப்பை மேற்கொண்டு தன் கணவன்மார் அனுபவிக்காத வற்றிலிருந்து விடுபடுகின்றனர். ஆகவே இங்கே பெளத்த துறவுமுறைகள் பெண்கள் மேல் சுமத்தப்படுகிறது. முழுக்கோட்பாடும் பெண்களது பாலியல் தொடர்பு வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்காகவே அமைகிறது. உணவைக் கட்டுப் படுத்துவதன் மூலம் அவளது உடலுறவுப் பசியை கட்டுப்படுத்தவும் ஆடை அலங்காரங்களை தவிர்ப்பதன் மூலம் அவளின் கவர்ச்சியை இல்லாமல் மறைக்கவும் பார்க்கின்றனர். பெண்ணுடைய பாலியல் எழுச்சி யென்பது கணவனுக்கே பிரத்தியேகமாக உடைமை யாக்கப்பட்டதான நிலை இது. விதவைமையைச் சுற்றி பின்னப்பட்டுள்ள சடங்குகள், பாலியல் எழுச்சி நிராகரிப்பு, உலக நிராகரிப்பு ஆகியவற்றைக் குறியீடாகக் கொண்டவையாகும். வரலாற்றின் பிற்பட்ட காலத்தில் உயர் சாதியினரின் விதிகளாக மாற்றப்பட்ட இவைக்கு, மூலகாரணமாக இருந்தவை தர்ம சாத்திரங்களாகும்.
இத்தகைய ஆணாதிக்கம் கொணி ட ஸ்தாபனரீதியான சடங்குகளுக்கு காரணம் அன்று எதுவாய் இருந்திருக்கும்? இது பற்றி நாம் எவ்வாறு சிந்திக்கலாம். பெண்கள் திரும்பவும் விவாகம் செய்ய அனுமதிக்கப்பட்டால் அவர்கள் தமக்குச் சொந்தமான சொத்துக்களையும் எடுத்துச் சென்றுவிடுவர். அவள் திரும்பவும் விவாகம் செய்தால் அவளுடைய முந்திய கணவனுடைய சகோதரர்களுக்கு அவளுடைய சொத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். அவள் தனியனாக இருந்தால் அவள் தனது சொத்துக்களின் மேல் அதிகாரம் செலுத்தக்கூடியவளாய் இருப்பாள். கணவனை இழந்த பெண்கள் மேல் இத்தகைய விதவைச் சடங்குகள் திணிக்கப்படுகின்றன. அத்தோடு ஆணாதிக்கம் கொண்ட இச் சடங்குகள் உடல் ஒறுப்பு
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 23

Page 25
வகை சார்ந்தனவாய் மாறி சமயம் சம்பந்தப்பட்ட ஆணாதிக்க முறைமைக்கு இட்டுச்செல்கின்றன. இவை பொதுவாக பிராமண சமூகத்தினாலேயே கடைப் பிடிக்கப்பட்டு வந்தன என்பது இவை ஆதியில் இச்சமூகத்திற்கே உரியனவாய் இருந்தன என்பதும் பின்னர் பிராமண சமூகத்தோடு சமூக அந்தஸ்தில் போட்டி போட முனைந்த வேறு சாதியினர் இவற்றைப் பின்பற்றினர், விதவைகளுக்கு தலை மழித்தல் இன்னும் பல வகையில் பாலியலோடு தொடர்பு கொண்டதாய் உள்ளது. தலைமுடியானது வீர்யம், சக்தி, ஓர்மம், ஜீவசக்தி என்பவற்றின் குறியீடாக ஆண்களுக்கும், பென்மையின் அழகு, கவர்ச்சி போன்றவற்றை வெளிக்காட்டுவதாக பெண்களுக்கும் அமைந்துள்ளது. ஆகவே தலைமயிர் இல்லாமை என்பது பாலியல் ரீதியான வாழ்க்கையை ஒறுப்பாக்குவதாகும். இது படிப்படியாக துறவு வாழ்க்கையை நோக்கி இட்டுச் செல்வதாகும்.
றொஸ்ல
பாட்டிமார்களில் றொஸலின் ஆச்சி மாதிரி மிக றமணி எண்ணினாள். வீட்டிலே றமணியின் மிகுந்த றமணியைக் குளிப்பாட்டினாள், அவளது உடைகளை அழகான கதைகள் கொன்னவளும் அவளே.
றொஸலின் ஆச்சியும் றமணியும் சிட்டுக்குருவிக பார்த்துக்கொண்டு நிற்பர். அந்நேரங்களில் குருவிக பறவைகளை பார்க்காத நேரங்களில் றொஸலின் சிலவேளைகளில் அவர்கள் தோட்டத்தில் தாவரங்க அலுவலாக இருக்கும்போது உதவினர்.
றொஸலின் ஆச்சி தேங்காய் உரிப்பதோடு சமையலுக்கு அம்மாவுக்கு உதவினாள்.
ஒருநாள் யாரோ வீட்டுக்கு வரப்போவதாகவும் ெ வேண்டும் என்றும் அம்மா சொன்னாள். றொஸலின்
அம்மா சொன்னாள் றொஸலின் ஆச்சிக்கு வேறு இருக்கலாம் என்றும் சொன்னாள். றமணி இதைக்ே வேண்டும் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடி
மாதத்திற்கு ஒருமுறை அம்மா றொஸலின் ஆ சென்ற ஒவ்வொரு சமயமும் றொஸலின் ஆச்சிை தலையை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவர்களுக்கா அவளுக்கு றமணியைப் பற்றிய நினைவே இருக்க
றமணி இப்போ றொஸலின் ஆச்சியில் அக் றமணியை விட்டு தூரப் போய்விட்டதாகவும், வித்த
கிராமசபைத் தலை6
நெடுந்தீவில் கொடிவேலி என்றோர் இட திருவாட்டி நாகேந்திர செல்லம்மா உள்ளூரிலே கிராம சபையின் தலைவியாகத் தெரியப் பெற்ற முன் தலைவியாக இருந்தவர்.
24 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

ஒபேசேகரா அவர்கள் , பெளத்த, இந்துக்களிடையே தலைமுடியானது எவ்வாறு சமய - சமூக அனுட்டானங்களுக்குரிய கலாசாரக் குறியீடாக உள் ளது என்பதை காட் டியுள்ளார். தலைமழித்தலுக்கும் அள்ளிக்கட்டிய சடை முடிக்கும் உள்ள குறியீட்டு வேறுபாட்டைப் பற்றி ஒபேசேகரா குறிப்பிடுகையில், முடிமழித்தல், பாலியல் ரீதியான “நலமெடுத்தல்” என்கிறார். ஆயினும் இது துறவோடும் கற்போடும் தொடர்புடையது என்றும் கூறுகிறார். இது பின்னர் அரச குடும்பத்துப் பெண்களால் பின்பற்றப்பட்டு, உயர்குலப் பெண்களின் ஒழுக்கத்தை குறிப்பதாயிற்று.
இச் சம்பிரதாயங்கள் பெண்களின் பாலியல் எழுச்சிகளைக் கட்டுப்படுத்த எழுந்த வன்முறைப் பாங்கான மாறாட்டங்களாகும். இவை இன்றும் அன்றும் கிரிகை ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்து வேத மரபால் உத்தரவாதப்படுத்தப்பட்டவையாகும்.
0 () ன் ஆச்சி அழகானவர்கள் எவரும் இருக்கவில்லை. அப்படித்தான்
அன்புக்குரிய ஒருத்தி அவளே. றொஸலின் ஆச்சிதான் மாற்றினாள், தலை சீவினாள், உணவூட்டினாள், இன்னும்
ள் கேற்றடியிலுள்ள மஞ்சள் பூக்களில் தேன் எடுப்பதைப் ள் குழப்பம் அடைந்துவிடும் என்பதால் கதைப்பதில்லை.
ஆச்சி றமணிக்கு ஜாதக கதைகள் சொன்னாள். ளைப் பார்க்கும்போது, தோட்ட வேலைகளில் அம்மா
அதைத் துருவவும் செய்தாள். அப்படித்தான் அவள்
றாஸலின் ஆச்சி தன்னுடைய அறையை விட்டுக்கொடுக்க ஆச்சிக்கு என்ன நடக்கிறது?
இடம் பார்த்திருப்பதாகவும் அங்கே அவள் சந்தோஷமாக ட்டு அழுதாள். றொஸலின் ஆச்சி வேறிடத்திற்கு போக பவில்லை. Fசியைப் பார்க்க றமணியைக் கூட்டிச் சென்றாள். அங்கே ப படுக்கையிலிருந்து எழுப்ப வேண்டியிருந்தது. அவள் கதிரையில் அமர்ந்து காத்திருந்தாள். சில வேளைகளில் ல்லை. றை கொள்வதாய் இல்லை. காரணம் அவள் இப்போ பாசமாக மாறிப் போனதாகவும் பட்டாள்.
பான முதற் பெண்மணி
ண்டு. அங்கே பழைய விதானையாரின் பாரியார் ன்றி உலகவரலாற்றிலேயே சரித்திரம் படைத்தவர். ப்பெண், பூரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராவதற்கு
- மில்க்வைற் செய்தி

Page 26
நினைவுகள்
ஜெஸ்மா இஸ்மாயில்
இதோ, நான் ஒரு 56 வயதுடைய விதவை நான் கொஞ்சக் காலத்திற்கு முன்னர்தான் எனது “இதாத்” காலத்தையும் நிறைவு செய்தேன். எவரது கவனத்தையும் அதிகம் ஈர்க்காத சேலையை உடுத்திருந்தேன். வேறெதைப் பற்றி நான் சொல்லி இருக்கிறது? நாற்பது வருடங்களாக எனது கணவனுடன் வாழ்ந்தேன். அவர் என்னோடு நல்லாகவே இருந்தார். எல்லாரும் அவர் எங்கள் புனித நூலின் போதனைகளால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றனர். உனக்கு ஒதுதான் இல்லை பாத்திமா? காசா? உணவா? உடையா வெளியே சுற்றுதலா? எதுதான் உனக்கு இல்லை என்று அவர்கள் கேட்டனர்.
"ஆம்". நான் தலையசைத்தேன். ஆனால் எனது இப்பதிலால் நான் இவற்றை மறுப்பதுபோல எனது மாமி ஆத்திரம் அடைந்தாள். காரணம் எனது பதிலிலி எந்தவித உற்சாகமும் இருக்கவில்லை என்பது போல அவள் நினைத்தாள்.
‘ஏன் அவர் இவளை ஹஜ் யாத்திரைக்கும் கூட்டிச் சென்றார். அவள் ஒரு ஹஜானி, அங்கபார் அவளை, இதுபற்றி அவள் எதுவும் சொல்வதாய் இல்லை. என்கிறாள் அவள்.
இந்த ஆத்திரத்திற்கு எனக்கு காரணம் விளங்கவில்லை. நான் அவர்கள் என் வாழ்க்கை பற்றி விபரித்ததைக் கேட்டேன்.
இன்னொரு குரல்
அவளுக்கு நான்கு பிள்ளைகள். என்ன அதிர்ஷ்டம், அவளுக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அத்தோடு அவர்களுக்கு விவாகமுL ஆகிவிட்டது. இப்போது அவர்களுக்கு தாயை: கவனிக்கலாம். நல்ல அதிர்ஷ்டம் உள்ள தாய்! நான ஓர் இலட்சியப்பூர்வமான விதவை. எனக்குத் தெரியு எனது கணவனின் இழப்பு எத்தகையது என்பது! அவ எனக்கு மிகுந்த நல்லவராகவும் பாதுகாப்பாளராகவு இருந்தார். அதனால் எனக்கு எந்தத் தேவையு இருக்கவில்லை என மக்கள் சொல்லிக் கொண்டனர்
நான்தான் அந்த விதவை. நான் எந்த திட்டத்தையும் போடக்கூடாது. போடவும் முடியவில்லை முழுக் குடும்பமே என் மேல் இரங்கியது. மகன்மார் மகள்மார், மருமக்கள், அவர்களுடைய மருமக்கள் என்று எல்லோரும் எனது எதிர்காலத் திட்டங்கலை வகுக்கத் தொடங்கினர்.
"இங்க பார் பாத்திமா," - ஒருவர் கூறினார் "இந்த வீடு உனக்கு மிகப் பெரியது. ஏன் இந் வீட்டையும் வேலைக்காரரையும் நீ பராமரித்து

கஷ்டப்பட வேண்டும்? நீ உன்னுடைய மகள்மாரோடு போயிருப்பதுதானே?"
"பாத்திமா அதிர்ஷ்டசாலி". இன்னொரு குரல் கூறிற்று. "உனக்கு தெரிவுக்கு சந்தர்ப்பம் இருக்கிறது."
என்னுடைய மகள்மார் வந்தார்கள். என்னைப் பார்த்தார்கள். நான் இருந்த வீட்டின் பெறுதியை கணக்கிட்டார்கள். அதனால் கிடைக்கக்கூடிய கூலியைக் கணக்கிட்டார்கள். அங்குள்ள தள பாடங்களை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விவாதித்தார்கள்.
இதில் என்னோடு கலந்தாலோசிக்க அவசியம் இருக்கவில்லை. நான் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க பார்த்துக்கொள்ளப்பட்டதோடு எனக்கு எந்நேரமும் ஆதரவும் இருந்தது. எந்நேரமும் குடும்பம் என்பது என்னைச் சுற்றிக் குடை பிடித்து எனக்கு கவசமிட்டுக்கொண்டிருந்தது. ஆம் இதைப்பார்த்து நான் ஓர் பாக்கியசாலி என எனக்குள் நினைத்துக் கொண்டேன். எனக்கு செளகரியம் தரும் மக்கள் உள்ள இடத்திற்கு சென்றிருப்பதைத் தவிர வேறென்ன
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 25

Page 27
நான் செய்ய இருக்கு.? நான் கம்பிகள் இட்ட ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறேன். வானம் நீலமாய் இருந்தது. என்றும் போல் மரங்கள் பச்சையாய் இருந்தன. மல்லிகைப் பூக்களினதும் தேமா பூக்களினதும் சுகந்தத்தை காவிக் கொண்டு காற்று வீசியது. மரங்களில் ஜம்புப்பழங்கள் றோஸ் நிறங்காட்டி ஜொலித்தன. இவையனைத்தையும் ஜன்னல் ஊடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் நெஞ்சின் அடியில், நான் கட்டப்பட்டிருந்ததை உணர்ந்தேன். இவ்வேளை திடீரென குருவிகளின் கீச்சிடல் கேட்டது. குருவிக்கூட்டம் என்னருகே பறந்து சென்றது. எவ்வளவு சுதந்திரமாய் அவைகள் உள்ளன. அவற்றின் விதி அவற்றின் கைகளிலேயே உள்ளது. தமது வாழ்க்கையைத் திட்டமிடும் திகிலும், வாழ்வின் நிச்சயமற்ற தன்மையும் அவற்றுக்கு வாழ்க்கை பற்றிய அர்த்தத்தைக் கொடுக்கிறது. இவற்றோடு ஒப்பிடும் போது நான் எத்தகைய சீரழிந்தவள்!
வாழ்க்கையை விட்டு நீங்கும் இவ்வேளையில் நான் அதிர்ஷ்டக்காரப் பாத்திமா. பாத்திமா, நான் எனக்கே சொல்லிக்கொண்டேன், வாழ்க்கையில் திருப்திப்பட்டிரு. விதியை தூண்டிவிடாதே.
இதோ இன்னுமொரு கைம்பெண். வயது இருபத்தாறு. கூடவே ஒரு சிறிய மகள் வேறு. இவளுக்கு இங்கே குடும்பம் என்பது இவளை ஒரு சிறிய எல்லைக்குள் உலாவ வைக்கும் வேலியாக இருக்கவில்லை. அவளது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க உதவும் சக்தியாகவே அமைந்தது. அவளுக்கு பாதுகாப்பையும் செளகரியத்தையும் துன்பப்படும் இவ்விளமைக் காலத்தில் தருவனவாகவே அமைந்தது. ஆனால் பின்னர் படிப்படியாக இவை நீக்கப்பட்டு அந்த இளம் விதவை தன்னுடைய எதிர்காலத்தை தானே நிர்ணயிக்க வேண்டி யவளானாள். 40 வயதிற்குப் பின்னர் அவள் வாழ்க்கையைத் திருப்பிப் பார்க்கும் அவள் முழுமையான வாழ்க்கையை நடத்தாத போதும் பெண்ணாக வாழ்ந்த நிறைவு இருந்தது; வாழ்ந்தும் வாழ்க்கையில் ஜீவித்திருக்காத ஒரு தனிநபர் வாழ்க்கை அது.
குறிப்பு: சமூகத்தின் மையமாக இருக்கும் குடும்பம் பலவித மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது. மேற்கூறப்பட்ட இருவகை நிலைமைகளில் இருந்து பார்க்கும்போது, குடும்பந் தரும் ஆதரவான பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதற்காக இது மூச்சைத் திணற வைக்கும் ஒரு வாழ்க்கையல்ல. “இஸ்லாமிய சமூக ஒழுங்கின்படி மானிடத்தின் முதன்மையானதும் உண்மையானதுமான அலகு குடும்பமே. அத்தோடு நாகரிகத்தை சாத்தியப்படுத்தும் சக்தியாகவும் அது உள்ளது." (அ.
26 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

ஸலர் ரஹ மான்) குடும்பம் என்பது ஒரு நோக்கத்தையும் பொறுப்பையும் கொண்டதாய் இருக்கிறது. அத்தோடு சமூகத்தின் அடிப்படையைக் கட்டியெழுப்பும் பணியில் அதன் பங்களிப்பானது குடும்ப அங்கத்தவர் எவரும் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழாது இருக்க செயலூக்கம் தருவதாக அமைகிறது. அல் குறானின் கட்டளைப் படி, விசேடமாக விதவைகளைப் பராமரிக்கும் விஷயம் பற்றி தெளிவாகவே உள்ளது. அதாவது விதவைகளை மனிதாபிமானத்தோடும், இரக்கத்தோடும் பார்க்க வேண்டும் என்கிறது அது. எது எவ்வாறாயினும் போரினாலும் பொருளாதார ஒழுங்கின்மையாலும் சீரழிந்துள்ள இலங்கையின் பின்னணியில் பார்க்கும்போது இப்பெண்களே அதிக இழப்புக 'குரியவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக போரினால் விதவையாக்கப்பட்டவர்கள்; இடப்பெயர்ச்சிக் குள்ளானவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் வெறுமனே நலன்பேணும் உபகாரங்கள் மூலம் தீர்க்கப்படக் கூடியவையல்ல. அவர்கள் சுயநிறைவு டையவர்களாகவும் தம் சொந்தக் காலில் நிற்கக் கூடியவர்களாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
குடும்பம் வழமையான உபயோகமுள்ள பணியை செய்ய வேண்டியிருந்தபோதும் அது தன்னுடைய ஆதரவு தரும் மூலோபாயங்களை மாற்றியமைக்க வேண்டும். இதுபற்றி அதிக சிந்தனையும் ஆலோசனையும் பெண்களால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆதரவு காட்டுதல், கெளகரியப்படுத்துதல் என்பவையெல்லாம் நிரந்தர மற்றவை. எல்லாவற்றையும் அழிக்கவல்ல கீழோடும் சுழியோட்டங்களில் இருந்து மீள்வதற்கு ஒரு குடும்பமானது அதன் அங்கத்தவர்களை கல்வி மூலம் கட்டியெழுப்ப வேண்டும்.
தாலியில் அவள்
அணர்ணனுக்குத் திருமணம் அனைவருக்கும் சந்தோஷம் அடுப்படிக்கு ஆள் வந்தாச்சு
பூத்த நாள் தொடங்கி
விலக்கு நின்ற நாள் வரை செய்த சொஜ்ஜி பஜ்ஜிக்காய் கிண்ணஸில்.
பொறியில் எலி హో தூண்டிலில் மீன் @イ தாலியில் அவள்

Page 28

குடும்பம் கொல்கிறது
பதினான்கு வயது பாடசாலை மாணவி அவளது தந்தையினால் மாறிமாறி கற்பழிக்கப்படுகிறாள். அத் தருணத்தில் அவளது தாய் வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றிருந்தாள். இன்னொரு நாள் அவளது தமையன் தன்னுடன் பாலியல் உறவு கொள்ள வரும்படி மிரட்டினான். அவள் கர்ப்பிணியாகிய போது வாழ்வதில் அர்த்தமில்லை என நினைக்கிறாள். அவள் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். ஆனால், அயலவர் ஒருவர் அவளது முயற்சியைத் தடுத்துவிட்டு, அவளை உளவியல் சிகிச்சை நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார்.
இன்னொரு சம்பவத்தில் “டீன் ஏஜ்" பெண் ஒருத்தி தனது உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டு, தீயில் சங்கமிக்கிறாள். காரணம்: அவள் தனது தாயுடன் வாக்குவாதப்பட்டாளாம்.
இலங்கையில் இதுவரை கற்பழிக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்திற்காக தற்கொலை செய்த பெண்களின் தொகை இரண்டாயிரத்திற்கு மேல் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 1995 இல் ஆகக் குறைந்தது 2,263 பெண்கள் தீக்குளித்தல், நஞ்சை உட்கொள்ளல், மிகையான போதை மருந்து, விரைந்து வரும் ரயிலின் முன்பாக பாய்தல், தூக்குப்போடுதல் ஆகியவற்றின் காரணமாக உயிரை இழந்துள்ளார்கள்.
"பெண்களைத் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் பொதுவான சில காரணங்களாக காதல் தோல்வி, திருமண வாழ்வில் பிரச்சனை, வறுமை, மன அழுத்தங்கள் ஆகியன விளங்குகின்றன” என்று சொல்கிறார் ‘சுமித்திரயோ’ என்ற தாபனத்தின் இணைப் பணிப்பாளர் ரிச்சர்ட் லூயிஸ். இத் தாபனம் உளவியல் ரீதியில பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் ஒரு அரச சார்பற்ற தாபனமாகும். மிகவும் ஊறுபடத்தக்க குழுவினராக 14க்கும் 25க்கும் இடைப்பட்ட வயதினரே விளங்குகின்றனர்.
“1995இல் தற்கொலை செய்த ஆண்களின் தொகை அதிகமாகும் - 6,256 பேர். ஆனால் தற்கொலைக்கு முயன்ற பெண்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகும்.” இவ்வாறு சொன்னார் உளவியல் வைத்தியர் டாக்டர் ஜி.பி.சி. விஜேசிங்க.
பிரசவத்தின் போது பொறுப்புக்களைப் பெண்கள் சுமப்பதனால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவது குறைவு என்ற போதிலும், கணிசமான அளவு பெண்கள் இன்னும் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.
"வம்சத் தலைமைத்துவத்தின் அழுத்தம் தான் பெண்களைத் தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது.” என்று சமூக விஞ்ஞானிகள் சங்கத்தைச் சேர்ந்த குமாரி ஜயவர்தன தெரிவிக்கிறார். "திருமணமாகும்
Qugo Goofof gy6) O egv6, 1998 O 27

Page 29
ஒரு பெண் நிறைய பொறுப்புக்களைச் சுமக்க வேண்டியுள்ளது. இந்த அழுத்தங்கள் சில வேளைகளில் தாங்க முடியாதவையாக விளங்குகின்றன.”
“உளவியல் ரீதியான, உடல் ரீதியான துாவழித்தலுக்கு உட்பட்ட திருமணமான பெண்கள் மத்தியில் தற்கொலையும் தற்கொலை முயற்சியும் பொதுவானவையாகும்” என்று சொன்னார் பத்மா கஹதுடுவ. இவர் தூவழிக்கப்பட்ட பெண்களின் சேமநலனுக்காகப் பணியாற்றும் கொழும்பில் தளத்தைக் கொண்ட "விமன் இன் நீட்) (Women in need) என்ற தாபனத்தைச் சேர்ந்தவர். “சிங்கள திருமண சம்பிரதாயத்தின் காரணமாக, கன்னித்தன்மை, சோதனையால் தமது உயிரைப் போக்கிக் கொண்ட பெருமளவு புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் உள்ளனர்.”
தன்னினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்களும் தற்கொலையை நாடுகின்றார்கள். இவர்களில் சிலர் திருமணத்தின் பின்னரே தாம் தன் னினச் சேர்க்கையாளர் என்பதை கண்டறிகிறார்கள்.
1994 இல் காதலில் தோல்வியுற்ற 370 ஜோடிகள் தமது உயிரை மாய்த்துக் கொண்டனர். இது பற்றி திரு. லூயிஸ் பின்வருமாறு சொல்கிறார்: "இவர்களைக் காதலிக்கும் ஆண்கள் தாம் திருமணம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு பெண்களுடன் பாலியல் தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால், அவர்கள் கர்ப்பமடையும் போது அவர்களின் காதலர்கள் அவர்களுக்கு மோசம் செய்து விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து இப் பெண்களை அவர்களது பெற்றோரும் நிராகரித்து விடுகின்றனர். இதனால் மாற்று வழி தெரியாமல், தமது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.”
“டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் காதல் விவகாரங்களைப் பெற்றோர் எதிர்க்கின்றார்கள் இதனால் மனமுடையும் பெண்கள் வேறு வழியின்றி தற்கொலையை நாடுகிறார்கள்” என்கிறார் திருமதி ஜயவர்தன. இது கிராமியப் பகுதிகளில் ஒரு சீரிய பிரச்சனையாகும். தடைவிதிக்கப்பட்ட காதலி விவகாரங்களை முழு கிராமமுமே எதிர்க்கின்றது.
பரீட்சைகள் கூட வாழ்வுக்கும், மரணத்திற்கு இடையிலான ஒரு விடயமாக விளங்குகின்றது சாதாரண தரப் பரீட்சையிலும், உயர்தரப் பரீட்சையிலு நிலவும் போட்டித் தன்மையின் காரணமாக அை மாணவிகள் மீது நிறைய அழுத்தத் ை முன்வைத்துள்ளன. பரீட்சையில் சிறந்த பெறுபேை எடுக்கத்தவறும் போது, அல்லது, பெற்றோரி எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாதபோது சி மாணவிகள் தற்கொலை செய்கிறார்கள். 1994 இ பரீட்சையில் சித்தியடையத் தவறிய ஆகக் குறைந்த 21 பாடசாலை மாணவிகள் தமது உயிை போக்கினார்கள். ஒரு முறை தனது புத்தகங்களை கொண்டே சிதைய அமைத்து ஒரு மாணவி, அதற்கு
28 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998

பாய்ந்தார்.
தற்போதைய பரீட்சை முனைப்பான கல்விமுறை மாற்றமடைய வேண்டும் என்று நூற்கல்வியாளர் அபேவர்தனா தெரிவிக்கிறார். “பரீட்சை முடிவுகள் முது குறைந்தளவு அழுத்தத் தையே பெற்றோர் கொண்டிருக்க வேண்டும்.”
வீட்டுப் பணிப் பெணிகள் மத்தியில் தற்கொலைகள் பொதுவானதாகும் . பல வருடங்களுக்கு வெளிநாட்டில் பணிபுரிந்தவர்கள் மீண்டும் சொந்த நாட்டில் வாழ்வதற்கு கஷ்டப்படுகிறார்கள்.
தற்கொலைக்கு ஊறுபடக்கூடிய இன்னொரு குழுவாக சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியம் பெண்கள் விளங்குகின்றார்கள் என உளவியல் சுகாதாரத்திற்கான சனசமூக நிலையம் தெரிவிக்கின்றது. இவர்களைத் திருமணமானதும், திருமணமாகாததுமான ஆண்கள் காதலிப்பதுடன், பின்னர் பாலியல் ரீதியில் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விட்டு, இறுதியில் அவர்களை கைவிட்டுவிடுகிறார்கள்.
தற்கொலையில் இருந்து மீள்வதற்கு ஒரேயொரு வகையாக விளங்குவது கலந் தாயப் வும் , ஆரோக்கியமான உளவியல் ரீதியான சிகிச்சையும் ஆகும் என்று உளவியல் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த உளவியல் வைத்தியர் டாக்டர் காமினி பிரேமதிலக்க தெரிவிக்கின்றார்.
எனினும் , சில காலமாக உயர்ந்த தொகையிலான தற்கொலைகளுடன் முன்னணியில் திகழ்ந்த இலங்கையில் சிறிதளவு தீர்வு நடவடிக்கைகளே எடுக்கப்பட்டுள்ளன.
தேசிய உளவியல் சுகாதார திட்டம் மீதான ஆண்டுக்குழுவினால் செய்யப்பட்ட ஆலோசனைகள் செயற்படுத்தப்படவில்லை. உளவியல் சுகாதாரப் பிரச்சனைகளைக் களைவதற்கு சில அரச சார்பற்ற தாபனங்கள் தம்மை அர்ப்பணிக்கின்றன. அரச சேவைகள் ஒரு ஆஸ்பத்திரிக்கு மட்டுப்பட்டுள்ளது. இங்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகையிலான நோயாளர்களுக்கு சிசிச்சை அளிக்கப்படு கின்றது. “கலந்தாய்வு மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும். பாடசாலைகளினதும், பல்கலைக்கழகங்களிலும் அதிகளவு உளவியலாளர்களும், கலந்தாயப் 'வாளர்களும் இருக்க வேண்டும்” என்று விமன் இன் நீட் தாபனத்தைச் சேர்ந்த சிந்தா பாலசூரிய தெரிவிக்கின்றார்.
ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக்குத்திக் கொண்டான் என்றெழுது.
-பாரதியார்.

Page 30
வீட்டு வன்
இலங்கையில் வீட்டு வன்முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் பெரிதும் சரிவர மேற்கொள்ளப் படவில்லை. வன்முறை இடம்பெறுவதில்லை என்றே பெரும்பாலானோர் நம்பவிரும்புகின்றனர். ஆனால், சில இடங்களில் உள்வீட்டு வன்முறைச் சம்பவங்கள் 60% அளவில் உயர்வானவையாகும் என ஆய்வுகள் காட்டியுள்ளன (தெரணியாகல, 1992).
வீட்டு வன்முறைகள் குறித்து கருத்துப்பரிமாற பெரும்பாலலானோர் விரும்புவதில்லை. ஏனெனில் அது தனிப்பட்ட, அல்லது வெட்கத்திற்குரிய விடயம் என அவர்கள் கருதுகிறார்கள். இதன் விளைவாக, எமது சமூகத்தில் மிகவும் குறைந்தளவு முறிைப்பாடு செய்யப்படும் குற்றச் செயல்களில் ஒன்றாக இது விளங்குகின்றது. பெண்களுக்கு எதிரான வடிவத்திலான வன்முறைக்கு மன்னிப்பை வழங்கும், அல்லது அமைதியாக இருக்கும், ஒரு சமூகத்தை நாம் உருவாக்குதென்றால், வீட்டு வன்முறை நோக்கிய சமூகப் போக்குகள் மாற்றமடைய வேண்டும்.
"சிறிதளவு சத்தம் எழுப்பக்கூட என்னை அனுமதிப்பதில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதையிட்டு எமது அயலவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நாங்கள் மகிழ்ச்சியான திருமண ஜோடி என அவர்கள் நினைக்கிறார்கள்."
- L),uliføOTIT, 45
வீட்டு வணி முறை என்றால் என்ன?
அதிகாரம், கட்டுப்பாடு ஆகியன பற்றியதே வீட்டு வன்முறையாகும். தனது மனைவியின் உரிமையுடன் உடன்பட மறுக்கும் கணவன் அவள்
மீது ஆதிக்கத்தையும், கட்டுப்பாட் கட்டியெழுப் டையும் செலுத்த தூவிப்பு உபாயங் 6ـ 52 جةH 2260 களை உபயோகிக்கின்றான். இந்த அதிகரித்த உபாயங்கள் பின் வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
* உடல் ரீதியாகத் தூவித்தல், தேனிலவுக் க (உதாரணம்: குத்துவிடுதல், அடித்தல், l = வலையில் அறைதல், தள்ளுதல், தொண்டையை = முந்திய து இறுக்குதல், அவளுக்கு எதிராக ஆயுதங்களை உபயோகித்தல்.)
se பால் ரீதியாகத் துாவழித்தல் பாலியல் வல்லுறவு
(x- மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், தூஷித்தல் (உதாரணம்:

ர்முறைகள்
பகிரங்கமாக அவளைத் தாழ்த்துதல், அவளை கேலி செய்தல், பெறுமதியற்றவள் என்ற உணர்வை பெறுவதை நோக்கி கருத்துக்களை வெளிப்படுத்தல், அவளுக்கு காயம் ஏற்படுத்தப் போவதாகப் பயமுறுத்தல்).
பொருளாதார ரீதியாகத் துT வரித்தல் (உதாரணம்: உணவு, பணம், போன்ற அடிப்படை தேவைகளை வழங்காமல் விடுதல்).
t சமூக ரீதியாக தூவித்தல் (உதாரணம்: நண்பிகளுடன், அல்லது உறவினர்களுடன் அவள் தொடர்பை ஏற்படுத்துவதைத் தடுத்தல், தொடர்ச்சியாக அவளைப் பின்தொடர்வதுடன் அவளது நடமாட்டத்தை கண்காணித்தல்).
பொதுவான கட்டுக்கதைகள் நிலவியபோதும் தேசியம், மதம், இனம், அல்லது தொழில் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளாமல் குடும்பங்களில் வீட்டு வன்முறைகள் இடம்பெறுகின்றன. இம்சிக்கப படுவோரில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். ஆனால், இவ்வகையான தூவழித்தலுக்கு சிறிய எண்ணிக்கையிலான ஆண்களும் பாதிக்கப்படு கின்றார்கள். இங்கு வெளியிடப்பட்டுள்ள தூவழித்தல் சுழற்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளவாறு தூவழித்தல் பெரும்பாலும் பின்தொடர்கின்றது.
கட்டியெழுப்பப்பட்ட உளஅலைவு அலையில் (tension) இருந்து தூவிழித்தலின் வெடித்தல் வரை
இச்சுழற்சி பெயர்கின்றது. இது தீங்கு இழைப்பவரின் சார்பில் பச்சாதாப உணர்வுகளால் பின்தொடரப்
துாவழித்தலின் சுழற்சி
イト தள்ளிவைத்தல் கட்டம்
புதல் கட்டம் ー கட்டுப்பாடு
லைவு நிலை = LILLD
56
|
a கழிவிரக்கக் கட்டம்
சிக்க வைக்கல் = நியாயப்படுத்தல்
ததல = கீழ்படி இறங்குதல்
ாஷித்தலை மறுத்தல் குற்றம்
N பின்தொடர்தல் கட்டம்
= பின்தொடர்தலும், வாக்குறுதியும் = உதவியற்ற தன்மை
= பயமுறுத்தல்கள்
Σκ.
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 29

Page 31
படுகின்றது. அவளது அன்பையும், நம்பிக்கையையும் “மீண்டும் வாங்குவதற்கு” அவன் முயலக்கூடும். இதற்கு சாத்தியங்களையும், அன்பளிப்புக்களையும் அவன் வழங்கப்படக்கூடும். இதன்பின் ஓரளவு அமைதி நிலை தொடரக்கூடும். ஆனால், மீண்டும் உள அலைவு நிலை தோன்றிவருகின்றது.
இச்சுழற்சி உச்சநிலையை அடையும்போது அவள் மீதான அதிகாரம் அதிகரிப்பதுடன், தப்புவதற்கான அவளது ஆற்றலளவு குறைந்து வருகின்றது. இக்கட்டுப்பாட்டைப் பெண்கள் மீது வண்மையாக ஆண்கள் சாதிப்பதுடன், இதுவே வன்மையான தொடர்புகளில் அவர்களை அடிக்கடி சிக்க வைக்கின்றது.
“சின்ன காரணத்திற்குக் கூட அவர் என்னை அடிப்பார். ஒரு தடவை பிள்ளைகள் நித்திரை கொண்டபோது நுளம்பு வலையை விரிப்பதற்கு நான் மறந்துவிட்டேன். இதனால் அவர் என்னை அடித்தார். எமக்கு பணத்தை உழைப்பதற்காக எவ்வளவு கடுமையாக வேலை செய்வதற்காகவும், நாணி ஒன்றுமே செய்வதில்லை எனவும் கத்தினார்.
- aidoa.07f7, 29
விட்டு வன்முறைகளுக்கு என்ன காரணங்கள்?
எமது சமூகத்திலி ஆணிகளுக்கும் , பெண்களுக்கும் இடையிலான சமனற்ற அதிகார அமைப்புக்களில் வீட்டு வன்முறைக்கான காரணிகள் காணப்படுகின்றன. தனது நடவடிக்கைகளுக்கான பொறுப்பில் இருந்து தீங்கு இழைப்பவர் தப்புவதற்கு ஒரு சமாதானமாக மட்டுமே மது அருந்துதல், அழுத்தம், மனரீதியான குழப்பநிலை, அல்லது பெண்களினால் ஏற்படும் கோப உணர்ச்சி போன்ற பொதுவாகக் குறிப்பிடப்படும் காரணிகள் விளங்குகின்றன.
மது ஒருவரில் மந்த நிலையைத் தோற்றுவித்து வன்முறை வெளிப்பாடுகளுக்கு பங்களிக்கக்கூடும் ஆனால், இது வன்முறைக்கான காரணம் அல்ல வன்முறையான ஆணிகள் தமது துாவரிக்குப போக்குகளையும், பழக்கவழக்கங்களையும் ஒரு உறவுமுறையை வளர்க்க முயற்சிக்கின்றார்க6ே யொழிய வன்முறைகளுக்குள் அடங்கியுள் 6 விவகாரங்களை அறிய முயற்சி செய்வதில்லை.
"இதெலீலாம் நரியாயப்படுத்தத்தக்கத இல்லையா என்பதையிட்டு நான் உணர்மையா எதையும் எண்ணவில்லை. இது எனது விதி என்ே நான் நினைக்கிறேன்."
- சகுந்தலா,
30 0 பெண்ணின் குரல் 0 ஜூண், 1998

இலங்கையில் இன்னும் ஆண் ஆதிக்கத்தின் கருத்துரு நிலவுகின்றது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும், அதிகாரத்தையும், கட்டுப் பாட்டையும் பராமரிப்பவர்களாகவும் எதிர்பார்க்கப படுகிறார்கள். என்னைப் பொறுத்தளவில் குறிப்பாக ஆண் ஒத்த தன்மையுடன் குறைந்த தொடர்புடையவர் என்ற வகையில் அதனை அடைந்து கொள்வதற்குரிய முறைகளில் ஒன்று வன்முறையைப் பிரயோகிப்பதாகும். எனவே ஆணினி உரிமையாக உள் வீட்டு வன்முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆண்களும், பெண்களும் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.
"அவர் எவர் மரிதும் வன முறையாக நடப்பதில்லை. என்னுடன் மட்டும்தான். நாங்கள் வாக்குவாதப்பட்டால், நானும் வாக்குவாதப்படுவேன். அச் சமயங்களில் அவர் எண்னை சில தடவைகள் அடிப்பார்.”
- (ölgFT607r. 30
துாஷரிக்கும் ஆணிகளை அவர் களது உடற்தோற்றம், அவர்களது கலாசாரப் பின்னணி, அல்லது அவர்களது சமூக அந்தஸ்து ஆகிய வற்றினால் இனங்காண முடியாது. அவர்கள் பெரும்பாலும் அவர்களது மனைவிமார்களுக்கு எதிராகவே வன்முறையுடன் செயற்படுகிறார்கள். அவர்களது சமூகத்தின் ஏனையவர்களுக்கு அவர்கள் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளாகத் தோன்றுகிறார்கள். வன்முறையானது மிகவும் இளம் வயதில் இருந்து ஒன்றில் அதற்கு நேரடியாகப் பலியாகி, அல்லது அதன் உபயோகத்திற்கு முக்ம்கொடுத்து கடைப் பிடிக்கப்படுகின்றது என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. வன்முறையானது உதாசீனப்படுத்தப்படும்போது, அல்லது முழுமையாக சமூகத்தினாலும், குடும்பத் தினாலும் சகித்து கொள்ளப்படும் போது, அதை வாழ்க்கையின் ஒரு அம்சமாக சிறுவர்கள்

Page 32
ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டை விதிக்கும் ஒரு சக்திமிக்க வழிவகையாக வன்முறையை அவர்கள் நோக்குவதுடன், பிணக்கின் தீர்வுக்கு வன்முறையற்ற முறைக்களைக் கற்பதில்லை. இந்த முறையாக வன்முறையின் சுழற்சியானது ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு காவிச் செல்லப்படுகின்றது.
"வீட்டை விட்டுச் செல்வதையிட்டு என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. எனக்குச் செல்வதற்கு தோதான வீடு இல்லை. இதைப்பற்றி யெல்லாம் ஆட்கள் அறிவதையும் நான் விரும்ப வில்லை. ஆட்கள் இதைப் பற்றி அறிந்தால், பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதில் நான் கஷ்டங்களை எதிர்நோக்குவேன். விவாகரத்து பெறுவதையும் நான் விரும்பவில்லை.
- still D67, 46
வன்முறையான தொடர்புகளுக்கு மத்தியிலும், பெண்கள் தொடர்ந்திருப்பதற்கான பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் தொடர்புகள் முறிவடையக் கூடாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என விரும்புகி றார்கள். இலங்கையில் கணவனிலேயே பெண்கள் நிதிரீதியில் பெரிதும் தங்கியுள்ளனர். தமது பிள்ளைகளுக்குமான இல்லமொன்றை இழந்து விடுவோமோ என அவர்கள் அஞ்சுகின்றார்கள். விவாகரத்துடன் இணைந்துள்ள சமூகத்தில் ஏற்படும் களங்கத்தையிட்டும், மற்றும் தமது பிள்ளைகளுடனும் இது தொடர்வது சாத்தியமாகும் என்பதையிட்டும் அவர்கள் கரிசனையுள்ளவர்களாக விளங்குகின் றார்கள். அவர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்ல முயன்றால் தீங்கு இழைப்பவர் அவளைப் பயமுறுத்தவும் கூடும். இதன்மூலம் தனது பிடியை அவர் இறுக்குகிறார். பெருமளவு பெண்கள் எங்கு செல்வது என்று தெரியாமல், அல்லது யாரிடம் உதவிக்குச் செல்வது என்று தெரியாமல் தவிக்கின்றார்கள்.
பெண்கள் தலைை
இலங்கையில் பெண்களின் தலைமையிலான குடும்பங்களின் விகிதாசாரம் 1994இல் 21சதவீதத் திற்கு அதிகரித்துள்ளது. இது 1981 இல் 16 சத வீதமாகவும், 1992 இல் 19 சதவீதமாகவும் விளங்கியது. இலங்கைப் பெண்கள் பணியகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட பெணி தலைமையிலான குடும் பங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மீதான செயல் அமர்வில் இப்புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
இலங்கையின் சமூக அமைப்பிலும், கொள்கை வகுப்போருக்கும் பெண்களின் தலைமையிலான குடும்பங்கள் ஓர் அதிகரித்தளவிலான முக்கிய

வீட்டு வன்முறைபற்றி சமூகமாக நாம் என்ன செய்யமுடியும்?
வீட்டு வன்முறை ஒரு சிக்கலான விவகாரமாகும். இதற்கு இலகுவான தீர்வுகள் இல்லை. இது கட்டுப்படுத்துவதற்கான ஆணின் விருப்பத்தின் வெளிப்பாடு ஆகும். எனவே, ஆண்களுக்கு அதிகாரத் தையும், கட்டுப்பாட்டையும் வழங்கி பெண்களின் பெறுமதியைக் குறைக்கும் சமூகமாக நாம் சவால் விடுக்க வேண்டும். இந்த அதிகார அமைப்பே பெண்கள் மீது துவித்தலைத் தொடர்வதற்கு வழிவகுக்கின்றது. இந்த அதிகாரமே பெரிதும் சமூகத்தினால் சத்தமில்லாமல் உதாசீனம் செய்யப்படுகிறது, அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
எனினும், கலாசார ரீதியில் புதைந்துள்ள இத்தகைய போக்குகளை உடைத்தெறிவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இப்பணியை நிறைவேற்று வதற்கு இலங்கையில் உள்ள ஒரு தாபனமாக விமன் இன் நீட் விளங்குகிறது. இது வீட்டில் இடம்பெறும் வன்முறையையும் பெண்களுக்கு எதிரான சகல வழிகளிலான வன்முறைகளையும் களைவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இத் தாபனம் கொழும்பு மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் நெருக்கடி நிலையங்களைத் தொழிற்படுத்துவதுடன், வன்முறைக்குப் பலியாவோருக்கு இலவசமாக கலந்தாய்வு, சட்ட ரீதியான ஆலோசனை ஆதரிப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கின்றது.
உள்வீட்டு வன்முறையை அனுமதிக்கும் போக்குகளில் மாற்றங்கள் ஓர் இரவிலேயே நிகழும் என எதிர்பார்க்க முடியாது. எனினும், காரணிகளைப் பரிசீலிப்பதன் மூலம், பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவளித்து, உள்வீட்டு வன்முறை தொடர்பான விவகாரங்களையிட்டு கருத்துப்பரிமாறுவதன் மூலம், எமது சமூகத்தில் இத்தகைய சம்வத்தைக் குறைப்பது நோக்கி நாம் பணியாற்ற முடியும்.
மையிலான குடும்பம்
அம்சமாக விளங்குகின்றன.
பெண்கள், வெகுஜன ஊடக கூட்டு (Women and Media Collective) 6T66TD 960)LDigit 960)600TL Umélif டாக்டர் சேபாலி கோட்டேகொட “ஆயுதப் பிணக்கு நிலைகளில் பெண்களின் தலைமையிலான குடும்பங்கள்” பற்றி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் வறுமையில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த இரு தசாப்தங்களின் போது அதிகரித் துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக, பொருளாதார மாற்றம், விசேடமாக கிராமியப் பகுதிகளில் வருமானத்தைத் தோற்றுவிப்பதிலும், உணவு
பெண்ணின் குரல் 0 ஜூன், 1998 0 31

Page 33
உற்பத்தியிலும் பாரிய பொறுப்பை எடுப்பதற்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளதே இப் பெயர்ச்சிக்காக பாரிய காரணமாகும்.
உலர்வலயக் கிராமங்களில் பெண்களுக்கான வேதனங்கள் ஆணிகளை விட குறைவாக உள்ளபோதிலும், குடும்ப வருமானத்திற்காக இப் பெணிகளின் பங்களிப்பு தொடர்பு ரீதியில் உயர்வானதாகும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. ஆண்களால் ஈட்டப்படும் வருமானத்தில் 25 சதவீதத்தை மட்டுமே பெண்கள் ஈட்டுகின்றார்கள்.
1980களின் இறுதிப்பகுதியில் நாட்டின் தெற்கில் சமூகப் பிணக்கு என்ற அமைப்பில் அனுபவிக்கப்பட்ட அரசியல் எழுச்சியும், வடக்கிலும் கிழக்கிலும் தற்போது இடம்பெறும் யுத்தமுமே பெண்கள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை பெருகுவதற்கான பிரதான காரணமாகும்.
இருதசாப்தங்களுக்கு மேலாக பாரிய அளவிலான இடப்பெயர்வு, காணமல் போதல், குடும்ப உறுப்பினர்களின் மரணம் ஆகியவற்றை இலங்கை மக்கள் அனுபவித்துள்ளனர்.
1996 இறுதிவரை 785,187 பே இடம்பெயர்ந்துள்ளதாகப் புனர்வாழ்வு, புனர்நிருமான அமைச்சு தெரிவிக்கின்றது. இவர்களில் 75,377 டே ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். கடந் சில வருடங்களில் ஒரு கணிசமான தொகையா இளம் விதவைகள் குடும்பங்களின் தலைமைத் வத்தை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ள பட்டுள்ளனர்.
32 0 பெண்ணின் குரல் 0 ஜூன், 1998
 

பென்கள் தலைமையிலான குடும்பங்கள் மீதான உத்தியோகபூர்வ தகவல் அவர்களைத் தொடர்ந்தும் விதவைகள்’, ‘ ஊறுபடத்தக்க பெணிகள், கைவிடப்பட்ட பெண்கள்', 'ஆதரவளிக்கப்படாத பெண்கள் ஆகியோரைக் கொண்ட குடும்பங்களாகவே வருணிக்கின்றது. வடக்கிலும், கிழக்கிலும் மற்றும் தெற்கிலும் சனத்தொகையில் குறிப்பிடத்தக்க விகிதாசாரமாகப் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் இருப்பதுடன், தமது குடும்பங்களின் பராமரிப்புக்கு முழுமையான பொறுப்புடன் அவர்கள் விளங்குகின்றார்கள் என்ற உண்மைக்கு மாறாக இது விளங்குகின்றது.
1980களின் இறுதியில் வண் செயலிகள் இடம் பெற்ற தென் கிழக்கு மாவட்டமான மொனராகலையில் இடம்பெற்ற ஆய்வொன்று இங்கு தற்போது சனத்தொகையில் 59 சதவீதத்தினர் பெண்களாவர் என்ற உண்மையை வெளிப்படுத் தியுள்ளது.
நாட்டில் உள்ள முழுமையான சராசரி சனத்தொகையில் அடங்கும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் என்ற நிலை நிலவுவதனால், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் ஒரு புதிய குறிப்பிடத் தக்க அம்சம் என இவ்வாய்வு தெரிவிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களினுள் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் தோன்றுவதற்கான பெருமளவு காரணங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான சாமுவேல் அறிக்கை (1994) இக் காரணங்களை இனங்கண்டுள்ளது. அவை வருமாறு: () நடவடிக்கையின் போது கணவர் கொல்லப்படுதல் (i) கைது அல்லது கடத்தலைத் தொடர்ந்து கணவரின் மரணம் (ii) எவ்வித நேரடிச் சாட்சியின்றி கணவர் ‘மறைதல்' (iv) தொந்தரவு, கைது, தடுத்துவைத்தல், அல்லது மரணம் ஆகியவற்றில் இருந்து தப்புவதற்கு கணவர் தப்பியோடிவிடுதல். அத்துடன் அவரது இருப்பிடம் அறியப்பட்டுள்ளது அல்லது அறியப்பட வில்லை. (V) தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்காக கணவர் குடும்பத்தை கைவிடுதல் (vi) சண்டையின் போது குடும்பங்கள் பிரிந்து விடுவதுடன், கணவரைக் கண்டுபிடிக்கமுடியாமல் போதல்.
பெண்கள் தலமையிலான குடும்பங்கள் மீதான ஆராய்ச்சி குடும்பங்களின் தலைவிகளாக ஏன் பெணிகள் வருகின்றார்கள் எண்பதற்கான காரணங்களை உச்சப்படுத்தியுள்ளது.
ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழவைக்கவுமே அவளை இறைவன் படைத்திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
- ராஜம் கிருஷ்ணன்

Page 34
O 6lusa,
ஜூன் 1998 இதழ் தவறுகள்
குடும்பர் எண்பது கதம்ப கதம்பத்தில் மனம் தரும்
மனம் தரும் மலரைக் க மடிந்திடச் செய்வது பாவ
கனவனின் சேவைகள், ! காலமெல்லாம் அவள் ெ கனப்பொழுதேனும் தன் கண்னெனக் குடும்பத்தை
இமைப்பொழுதேனும்இவ6 நினைப்பவர் உண்டோ ம இணையிலா இவளது சே மறுப்பவர் பலர் ஏன் ஆன
துணையென வந்த தூய சுமையினைத் தாங்குவதே இவளாலே மனைபெறும் எடுத்துரைக்காமல் தான்
புனைபெயர் கொண்டு புத் புகழ்ந்திடுவார் பெண்விடு மனை புகுந்தாளை ஒரு
மாண்புடன் ஏனோ புகழ்ந்
நாட்டிற்கு சுதந்திரம் நாற் வேட்டுகள் வைத்து முழா வீட்டினில் பெண்ணிற்கு 6 சாற்றி முழங்கிடு பெண்கு
பொறுண்மயின் சிகரம் நில் எரிமலையான நாட்களுை பெருமைகள் உணர மறு எரிமலையாகு எழுந்துநின்
ஒளிதரும் சூரியன் ஓங்கி காரிருள் ஒடி ஒளிந்து செ கருமையும் நீங்கி விடிவுள் அடிமை விலங்கினை அறு வீறு கொண்டெழுந்திடு ெ வல்லமை உணர்த்திடு பு
 

ணிண் குரல்
17 O ISSN 1391-0914 O 55606) etLIIT 20/=
மென்றால் - பெனி
மலரன்றோ னியவிடாமல் - மழுங்கி னிறோ"
குழந்தையின் தேவைகள் சய்திடுவாள் - ஒரு 33.631 GLu60:5509 IITurc,5) தக் காத்திடுவாள்
ாது சேவைகள் ாநிலத்தில் - ஈடு வைகள் என்ன
ரினத்தில்.
வள் குடும்ப நன் அறியார் - இனை LDITLif
திரிவார்.
ந்தகமெலாம் தலையை - அவர் கனமேனும் தறியார்.
பத்தி எட்டிலாம். ங்குகின்றார் - அவர்தம் பிலங்குகள் இட்டதை - பறை ரலே
ப்மகள் கூட ர்டு - உன் த்திடும் போது *று
வந்தால்தான் காள்ளும் - கொடிய பரும் - உன் றுத்து உடைத்திட பண்ணினமே - உன் விதனில்
விஜயராணி சற்குனராஜா