கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணின் குரல் 2000.05

Page 1
óluØØA
மே 2000 0 இதழ் 21
பெண்களின் s» гsы
 
 

pført G5Igal
0 ISSN 1391-09140 விலை ரூபா 20/=
மக்கான இலங்கைச் சஞ்சிகை

Page 2
பொருளடக்கம்
இந்தப் பெண்கள் யாவருமே அடிமட்டத்திலிருந்து வருபவர்கள் 2
உலகளாவிய பொருளாதாரமும். பலியிடப்படும் பெண்களும் 5
தலிபான் பெண்கள் மீதான யுத்தம்
பொருளாதார அதிகாரமளிப்பின் ஊடாக மனோநிலையிலான LDTÖDLö O
பெண்களைக் கடத்தல் 13
முறைசாரா துறை தொழிலை விருத்தி செய்வதற்கான அவசியமும், நுண் கடனின்
LJE (35 lb 7
உலகமயமாக்கலும், வறுமையும் 22
எங்கள் கதை 27
ஒரு பதிப்புரிமை வழக்கு 29
ஆசிரியர் :
பத்மா சோமகாந்தன்
முகப்புச் சித்திரம் : நிர்மானிகா டியூஷானி
சித்திரங்கள் : ஜானகி சமந்தி
அச்சுப் பதிவு : ஹைடெக் பிரின்ட்ஸ்
ஆதரவளிப்பு : SDA
. (3D, 2000 இதழ் 21
ISSN 139-094
வெளியீடு :
பெண்ணின் குரல் 2125 பொல்ஹேன்கொட கார்டின்ஸ் கொழும்பு - 05 தொலைபேசி : 074 - 407879/816585 FF-GLDu56): voicewom(a)Sltnet.lk
கனக் ஆரம்பத்தில் பெணி கள் வேளைகளில பட்டுள்ளது; ப கொள்ளப் படே இல்லை, தொழ மூடி மறைத்துவ
g2 L 68 69 LO L s 6 இலங்கையில் பொறுத்தளவி பங்களித்துள்ள இலங்: ‘உலகளாவிய கட்டுரையை 6 வெளிநாட்டு விளங்குகிறார் செலவாணி சம் தொழில், மற்று அறுபதிலிருந்து அடக்குகிறார்க சபை செய்தி இ அந்நிய செலா எடுக்கும் போது பங்களிப்பின் ம
பெண் தொழில்படைய செய்யப்பட்ட எடுக்கப்படவில் நிரந்தரமான நீ
பெண் உயர்வுடன் இ காட்டுமிராண்டித் சிறிய குற்றங்களு பாலியலுக்காக தாக்கப்படும் உணவூட்டுபவ: வீட்டில் செல்லும் பே தாக்கப்படுகின் சம்பாத்தியங்க இந்த { பொருளாதாரப் கஷடங்கள், த6 தனது கதைக்கு அடைந்த வெற் என்ற வந்தனா
ܚܠ
 

கிடப்பட்ட காலத்தின் இருந்து குடும்பத்திற்கு உணவு, ட் டுவது சில ஏற்றுக் கொள்ளப் ல வேளைகளில் ஏற்றுக் வேயில்லை. ஆனால், வம்சாவழி பதிவானது ‘வேலை மிலின் ‘வேலைப்பிரிவு ஆகியற்றின் மூலம் பிரச்சனையை ர்ளதுடன், இதன் மூலம், பெண்களினால் செய்யப்படும் ா பங்களிப்பையும் குறைக்கின்றது. தற்போது , வம்சாவழிப் பதிவுகள் வைக்கப்பட்டிருப்பதைப் ல், நாட்டின் பொருளாதாரத்திற்கு பெண்கள் னர் என்பது மிகவும் தெளிவாகும். கையில் (இந்த இதழில் விஜிதா பெர்னாண்டோ எழுதிய பொருளாதாரமும் பலியிடப்படும் பெண்களும்' என்ற வாசிக்கவும்) நாட்டின் முதன்மையான முதல் மூன்று செலாவணி உழைப்பாளர்களாக பெண்கள் கள். "நாட்டின் முதன்மையான மூன்று அந்நிய பாத்தியங்களை ஈட்டும் (ஆடைத்தொழில், புலம்பெயர்ந்த ம் தேயிலை ஆகியவற்றில்) மொத்த தொழில்படையில் தொண்ணுாறு வரைக்குமான வீதத்தை அவர்கள் ள்” என தனது கூற்றை நியாயப்படுத்த முதலீட்டுச் இதழை அவர் மேலும் குறிப்பிடுகின்றார். "இந்த மூன்று வணி சம்பாத்தியங்களின் செயற்றிறனைக் கருத்திற்கு து, தேசியப் பொருளாதாரத்திற்கு பெண்களின் நேரடிப் )கத்துவத்தைத் தெளிவாகக் காணலாம்.”
கமக்காரர்கள், மிகச் சிறிய கைத்தொழில் பெண் பினர், முந்திரிகை ஊழியர்கள் ஆகியோரினால் பங்களிப்பு இச்செய்தி இதழில் கரிசனைக்கு ல்லை. இப்பங்களிப்புகள் பொருளாதாரச் சுற்றில் ைெலயை உருவாக்குகின்றது. களின் அங்கீகரிக்கப்பட்ட சம்பாதிக்கும் சக்தியின் ணைந்து அவர்களுக்கு எதிரான வன்முறை மிகவும் 5 தனமாக அதிகரித்துள்ளது. என்ன விலையில்? மிகவும் ரூக்காக அல்லது எவ்வித குற்றமின்றி ஆனால் அவளது அவள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் போதும், போதும், கொல்லப்படும் போதும் தேசத்திற்கு ள் அவளோ என நாம் கேட்கலாம்.
வறுமையைத் தணிப்பதற்காக அவள் புலம் பெயர்ந்து ாது, அவள் பெண் என்ற காரணத்தில் அவள் றாள்; வீட்டில் அவள் குடும்பம் சிதறுகின்றது; அவளது ள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதழில் தேசத்திற்கு உணவூட்டுவதற்காக பெண்களின் பங்களிப்பு, கடத்தப்படும் போது அவள் அடையும் மிபானில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், ந எதிரான உரிமை வழக்கில் கவிஞர் ஆன் ரணசிங்க றி ஆகியன பற்றியும் ‘உலகமயமாக்கலும் வறுமையும்
ஷிவாவின் கட்டுரையும் காணப்படுகின்றன.
ஆசிரியர்
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 3
இந்தப் பெண்க அடிமட்டத்திலிருந்
சிலா BJTIGIGASTIL. ஈபர்ட் அவர்க கண்டது. ஆசிய பொதுநலவரசு இ
பணிப்பாளராக ஆறு வருடிங்
பெண்ணின் குரல்:
ஆண் களில் தங்கியிருப்பவர்களாக பெண்கள் விளங்குகிறார்கள் என்ற நம்பிக்கை நன்கு வேரூன்றி உள்ளது. இருந்த போதிலும், கொடுப்பனவாகாத தொழிலைக் கணக்கெடுக்காமல், “ஏற்றுக்கொள்ளத்தக்க” அமைப்பில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெண்கள் பங்களிக்கும் ஒரு புதிய சூழ்நிலை எழுந்துள்ளது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ifourt:
பொருளாதாரத்திற்கு பெண்கள் அதிகளவு பங்களிக்கி றார்கள் என்பதையிட்டு நான் உடன்படுகின்றேன். ஆனால், நான் ஒதுக்கினைக் கொண்டிருக்கிறேன். புலம் பெயர்ந்த பெண்களும், பெருந்தோட்டத் துறையிலுள்ள பெண்களும், மொத்த தேசிய உற்பத்திக்கு பங்களிப்பதையிட்டு நான் உடன்படுகின்றேன்.
இப்பங்களிப்பு பாராட்டத்தக்கது என்ற போதிலும், இப் பெண்கள் யாவரும் தொழில்ரீதியான வகைப்படுத்தலைப் பொறுத்தளவில் கீழ் மட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே விளங்குகிறார்கள். இருந்தும், 3.3% பெண்கள் மட்டுமே நிருவாக, முகாமைத்துவ மட்டத்தில் உள்ளனர். புள்ளிவிபரரீதியாக கணக்குக்கு எடுக்கப்படாத முறைசாராத் துறையில், பெண்கள் பாரிய பங்கினை வகிக்கின்றார்கள். அதாவது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங் கினை இப்பெணிகள் யாவருமே வகிக்கிறார்கள்.
பெண்ணின் குரல்:
வேறு நாடுகளில் நீங்கள் பெற்ற அனுபவங்கள் இலங்கை நிலைமைக்கு எவ்வாறு தொடர்பானதாகும்?
foort:
சகல நாடுகள் பற்றியும் என்னால் பேசமுடியாது. ஆனால்,
 
 
 
 
 

ፊw uቧጦሪ”ቧ®òuD து வருபவர்கள்
ஆசிய பிராந்தியத்தில் உள்ள எட்டு பொதுநலவரசு நாடுகளில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். சிங்கப்பூர், மலேசியா, புருணை தாருஸ்லாம் ஆகிய மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, இந்தியா, இலங்கை போன்ற தென் ஆசிய நாடுகளில் பெண்களின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கு இடையில் முற்றிலும் வித்தியாசமான வேறுபாடு உள்ளது. முன்னாள் தென் ஆசிய நாடுகள் 'சார்க் (SAARC) பிராந்தியத்தைச் சேர்ந்தவையாகும். பின்னையவை ஆசியானை’ (ASEAN) சேர்ந்தவையாகும். 'சார்க் நாடுகளைக் கருத்திற்கு எடுக்கும் போது, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளை விட நாம் முன்னணியில் திகழ்கின்றோம். அவற்றின் மிகவும் உயர்வான படிப்பறிவின்மை வீதங்கள், உயர்ந்த சனத்தொகை வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, தமது சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெண்களின் பங்கு மிகவும் குறைவானதாகும். பாகிஸ்தானில் பெண்களின் படிப்பறிவு வீதம் 20% ஐ விடக் குறைவாகும். பங்களாதேஷில் இது சுமார் 35% ஆகும். இந்தியாவைப் பொறுத்தளவில் இது சுமார் 40% ஆகும். இந்தியாவின் சனத்தொகை ஒரு பில்லியன் என்பதுடன், அதன் வருடாந்தப் பிறப்பின் தொகை 18 மில்லியனாகும். இது இலங்கையின் மொத்தச் சனத்தொகைக்குச் சமனாகும்.
பெண்ணின் குரல்:
சார்க் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடான மாலைதீவுக்கு உங்கள் கவனத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். அதிகளவு பேசப்படாத ஆர்வமுள்ள சூழ்நிலையொன்று அங்கு நிலவுகின்றது என நான் நினைக்கிறேன்.
சீலா:
மாலைதீவானது 1200 தீவுகளைக் கொண்டதாகும். இதன் சனத்தொகை 400,000 ஐ விடக் குறைவாகும். அவர்கள் உயர்வான படிப்பறிவைக் கொண்டவர்கள். பெண்களின் படிப்பறிவு வீதம் 94% ஆகும். கூட்டுக் குடும்ப அமைப்பு
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 4
முறை பற்றி இது இன்னும் பெருமைப்படுகின்றது. இங்கு சிறுவர்களுக்கு குறிப்பாக குர்ஆனை எழுதவும், வாசிக்கவும் பாட்டிமார் கற்பிக்கின்றார்கள். மாலைதீவு பொருளாதாரத்தில், பெருமளவு பெண்கள் தொழில் படையில் - விசேடமாக அரசாங்கப் பதவிகளில் உள்ளனர். அரசாங்க அலுவலகங்கள் பெண்களால் (பெரிதும் இளம் பெண்கள்) நிருவகிக்கப்படுகின்றன. மீன்பிடி கைத்தொழிலில் பெரும்பாலான ஆண்கள் பங்கெடுப்பதும், அதிகளவு பெண்கள் உயர்நிலை, மூன்றாம் நிலை கல்வியை கற்பதற்கு செல்வதுமே இதற்கான காரணம் என மக்கள் என்னிடம் கூறினார்கள்.
ஆசியாவின் பிராந்தியத்தைச் சேர்ந்த புரூணை தாருஸ் லாம் ஒரு செல்வந்த நாடாகும். அதன் பொருளாதாரச் செயற்பாடு எண்ணெய் கூறமைவுகளின் மீது பாதுகாப்பாகத் தங்கியுள்ளது. அவர்களின் பொருளாதாரம் நிலையாக இருப்பதனால், மிகவும் சில பெண்களே தொழில்புரிகின்றார்கள். முஸ்லிம்களான அவர்கள் வீட்டுக்கு வெளியே வேலை செய்வதற்கு மதம் அதைரியப்படுத்துகிறது. ஆனால், நிரந்தர செயலாளர்கள், பணிப்பாளர்கள் ஆகிய மட்டங்களில் மிகவும் முன்னேற்றகரமான பெண்களை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் ஹிஜாப்பை அணியும் அதே வேளை உயர்வான தீர்மானமெடுக்கும் மட்டத்தில் உள்ளனர். இங்கு பொருளாதாரச் செயற்பாட்டில் பெண் கள் பங்கெடுப்பதற்கு மதம் தடையாக விளங்கவில்லை. பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளிக்கப்படுகின்றது. இருந்தும், சிலர் மட்டுமே தீர்மானமெடுக்கும் மட்டத்தை அடைந்துள்ளனர்.
சிங்கப்பூரில், பெண்கள் மிகவும் சுதந்திரத்துடன
 

விளங்குவதுடன், பொருளாதாரச் செயற்பாடுகளில் ஆண்களுக்கு சரிசமனாக விளங்கி, முழுமையாகப் பங்கெடுக்கிறார்கள். 28,000 அமெரிக்க டொலர் என்ற உலகின் மிகவும் உயர்வான சராசரி வருமானத்தையிட்டு இந்நாடு பெருமைப்படுகின்ற போதிலும், பாரிய சமூகப் பிரச்சனைகளுக்கு இது முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளது. தொழில்புரியும் பெருமளவு இளம் பெண்கள் திருமணம் செய்து, குடும்பமொன்றைக் கொண்டிருக்க விரும்ப வில்லை. இளம் ஜோடிகள் கூடிவாழ்வது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மரபாகும். வருடமொன்றுக்கு சுவீகாரத்திற்காக 50,000 பிள்ளைகள் சிங்கப்பூருக்குத் தேவைப்பபடுகின்றது என தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு பிள்ளைகளைக் கொண்டிருக்கும்படி இளம் ஜோடிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகின்றது. இது பல்வகையான ஊக்கங்கள் மூலம் தூண்டப்படுகின்றது.
மலேஷியாவில், ஆன்மீக அபிவிருத்தியுடன் (Spiritual development) கைகோர்த்த நிலையில் பொருளாதார அபிவிருத்தி இணைந்துள்ளது. சிங்கப்பூர் பொருளாதார அபிவிருத்தியை அடைந்த போது ஆன்மீக அபிவிருத்தி கண்கூடானதாக விளங்கவில்லை.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய தென் ஆசிய நாடுகளின் பாரம்பரியங்கள் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. இம் மூன்று நாடுகளிலும் குடும் பமொன் றுக்கு பிறக் கும் பெண்குழந்தை ஒரு பாரமாகக் கருதப்படுகின்றது. மிகவும் பின்தங்கிய கிராமத்தில் கூட பிறக்கப் போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்ற பரிசோதனை நடத்தப் படுவதுடன் , கருச் சிதைவுகள் சட்ட
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 5
விரோதமானவை என்ற போதிலும், பெண் சிசுக் கருக்கள நாளாந்தம் அழிக்கப்படுகின்றன. ஆண்களை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களாகப் பெணிகள் உருவெடுத்துள்ளார்கள். சாதி அமைப்பு, வகுப்பு அமைப்பு, சீதன அமைப்பு ஆகியன இந்திய உப கண்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஊறு விளைவிக்கின்றன. இது கூட பெண்களின் பொருளாதாரப் பங்கெடுப்பைப் பாதிக்கின்றது. இவர்களின் பெரும்பாலா னோர் முதலாவது பிள்ளையின் பிறப்புடன் தொழில் படையை விட்டு விலகுகின்றனர்.
பெண்ணின் குரல்:
சிறுமிகளை நடத்தும் விதத்தில் தெரியத்தக்க பாகுபாடு காட்டப்படுகின்றதா?
சீலா:
ஆம், இந்திய உப கண்டத்தில் உள்ள ஒரு சிறுமி சுமை எனபதை நாம் அறிந்துள்ளோம். புதுடில்லியில் 16 வயதான பாடசாலைப் பெண் ஒருத்தி மீது பஸ் ஏறியது தொடர்பான வழக்கின் தீர்ப்பைப் பற்றிக் குறிப்பிட நான் விரும்புகிறேன். நஷடஈட்டுக்காக பெண்ணின் பெற்றோர் வழக்குத் தாக்கல் செய்த போது, பெற்றோரினால் சிறுமியைப் பராமரிப்பதற்கான பொறுப்பைச் சாரதி எடுத்துவிட்டதனால், நஷ்டஈடு கொடுக் கத் தேவையில் லை என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
நாளாந்தம் கற்பழிப்புக்கு பலியானவர்கள், சீதனத்திற்கு பலியானவர்கள் பற்றி அறிக்கைகள் வருவதுடன், அரசாங்கத்தினால் சிறிதளவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மகள் ஒருத்தி திருமணம் முடித்து வைக்கப்பட்ட பின்னர், அவளது பெற்றோரால் ஒரு கோப்பை நீர் கூட பெறப்படமாட்டாது. ஏனெனில், கன்னியாதானம் என அவள் கருதப்படுவதுடன், திருமணமாகிய மகளிடம் இருந்து எதையாவது பெறுவது பாவம் என பெற்றோர்கள் நம்புகின்றனர்.
பெண்ணில் குரல்:
இலங்கையில் இந்நிலைமை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
56)II: .
இந்நாடுகளில் உள்ள நமது சகோதரிகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள். எமது நாட்டில் சீதனத்தின் விளைவாக ஏற்படும் மரணங்கள்

குறித்து நான் எதுவுமே கேள்விப்படவில்லை. இந்திய od Lu Gb60őTġög6l6ð 6Î(Bä5g5 LD(bLD56T (daughter in-law) வந்த பின், அவள் கூட்டுக் குடும்பத்தின் அடிமையாகவே விளங்குவாள். அவளே தனது மாமியாரை (motherinlaw) சுத்தப்படுத்த வேண்டும். அவரைப் பராமரிக்க வேண்டும். அத்துடன் அவருக்கு ஏற்படும் தலையிடிக்கும், வலிகளுக்கும் எண்ணெய் தேய்த்துவிடவேண்டும். இது பொருளாதாரச் செயற்பாடுகளில் அவரது பங்கெடுப்புக்கு ஊறுவிளைவிக்கின்றது. எனக்கு தெரிந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான ஒரு பெண் அதிகாலையிலேயே எழுந்து, கற்பிப்பதற்கு செல்வதற்கு முன் முழுக் குடித்தனத்திற்கும் தோய்த்தல், சமைத்தல் ஆகியன உட்பட குடித்தன வேலைகள் யாவற்றையும் கவனிக்க வேண்டியிருந்தது. தனது கணவர் வீட்டு வேலைகளில் உதவி செய்வதில்லை என்றும், மாமனாரும், மாமியாரும் வீட்டில் இல்லாதபோது கணவர் உதவி செய்வார் என்றும் கூறினார். அத்துடன் சகல சம்பாத்தியங்களும் குடித்தனம் மீது செலவழிப்பதற்காக மாமியாருக்கு கையளிக்கப்படு கின்றது.
பெண்ணின் குரல்:
நாட்டின் பொருளாதாரத்தில் எமது பெண்களின் பங்கெடுப்பு குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவிரும்புகிறேன்.
சீலா:
இலங்கையில் திருமணத்தின் பின் பெண்கள் தமது சொந்தக் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதனால், தொழில்படையை விட்டு அவர்கள் வருவதில்லை எனத் தெரிகிறது. இந்தியப் பாரம்பரியமானது திருமணத்தின் பின்னரான பந்துக்களினால் (in-laws) பெண் ஒருத்தி விழுங்கப்படுகிறாள். ஆனால், இங்கு வேலை செய்யும் பெண்ணுக்கு அதிகளவு ஆதரவளிக்கப்படுகின்றது.
பெண்ணின் குரல்:
இக் கருத்துப் பரிமாறலை முடிப்பதற்கு நீங்கள் எதையாவது சேர்ப்பீர்களா?
சீலா:
பெண்ணாகப் பிறந்ததற்காகவும், இலங்கையில் பிறந்ததற்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில் ரீதியானதும், தனிப்பட்டரீதியானதுமான முன்னேற்றத்திற்கு எதிராக எவ்வித பாகுபாட்டுக்கும் நான் முகம் கொடுக்கவில்லை.
பெண்ணின் குரல் (3D, 2000

Page 6
உலகளாவிய பொ u 6ťuửuửubub ólu ao
இலங்கையில் உள்ள பெண் ஊழியர்கள் நாட்டுக்கான அந்நிய செலாவணி ஈட்டுபவர்களில முதன்மையான ஸ்தானத்தை வகிப்பதாக நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் முதன்மையான மூன்று அந்நிய செலவாணி சம்பாத்தியங்களை ஈட்டுப (ஆடைத்தொழில், புலம்பெயர்ந்த தொழில், மற்றுப் தேயிலை ஆகியவற்றில்) மொத்த தொழில்படையில் அறுபதிலிருந்து தொண்ணுாறு வரைக்குமான வீதத்தை அவர்கள் அடக்குகிறார்கள். இத் தகவலை 1999இல் வெளியிடப்பட்ட முதலீட்டுச் சபை செய்தி இதழொன்று வெளியிட்டுள்ளது.
"இநீ த மூன்று அந் நிய செலவாணி சம்பாத்தியங்களின் செயற்றிறனைக் கருத்திற்கு எடுக்கும் போது, தேசியப் பொருளாதாரத்திற்கு பெண்களின் நேரடிட் பங்களிப்பின் மகத்துவத்தைத் தெளிவாகக் காணலாம் என்கிறது இந்த செய்தி இதழ்.
1998இல் மொத்த கைத்தொழில் ஏற்றுமதிகளின் அறுபத்தொன்பது சதவீதத்திற்கு ஆடைத்தொழில்துறை கணக்குக் காட்டியது. இதன் மூலம் 1593 பில்லியன் ரூபாவுக்கு சமமான அந்நிய செலாவணிச் சம்பாத்தியம் ஈட்டப்பட்டுள்ளது. இதே வேளை கமத்தொழில் ஏற்றுமதிகளின் 71 சதவீதத்திற்கு தேயிலை கணக்குக் காட்டியது. இதன் மூலம் 50.3 பில்லியன் ரூபா அந்நிய செலாவணி ஈட்டப் பட்டுள்ளது. இதே ஆணி டு, புலம்பெயர்ந்த ஊழியர்கள் 64 பில்லியன் ரூபாவை அனுப்பிவைத்தனர்.
கடந்த இருபது வருடங்களின்போது இலங்கையில் வீட்டுப் பணிப் பெணி தொழில் சந்தையில் முன்னெப்போதுமில்லாத மாற்றமொன்று ஏற்பட்டுள்ளது. எழுபதாம் ஆண்டுகளில் வீட்டுப் பணிப்பெண் தொழிலின் புலம்பெயர்வுடன் இது ஆரம்பித்துள்ளது. தொழிற் சாலைகளிலும், ஆடை உற்பத்தி நிலையங்களிலும் தேர்ச்சி பெறாத பெண்கள், ஏற்றுமதி பதப்படுத்தல் வலயங்களில் தேர்ச்சி பெறாத குறைந்த கொடுப்பனவுத் தொழில்களில் பெரும் தொகையிலான பெண்கள், பல தேசிய, மற்றும் உள்ளூர் தொழிற்றுறை உரிமையாளர்களுக்கு துண்டுக்கணக்கில் வேலை செய்யும் பெண்கள் என்றவாறு உலகமயமாக்கல், திறந்த பொருளாதாரம் ஆகியவற்றிலான வேறு எதிரொலிகளும் காணப்படுகின்றன.

ருளாதாரமும
(8 D, 2000
பெண்ணின் குரல்

Page 7
இந்த மாற்றங்கள் ஏழைப் பெண்கள் மீது முன்னெப்போதுமில்லாத தாக்கங்களைக் கொண்டுள்ளன. சுதந்திர வர்த்தக வலயங்களில் வேலை செய்தல், மத்திய கிழக்கிற்கு புலம்பெயர்தல் ஆகியன பிரதானமாக வீட்டு அடிப்படையிலான, மோசமான கொடுப்பனவுக்குரிய, அல்லது ஒரு போதுமே கொடுப்பனவு செய்யப்படாத பாரம்பரிய பொருளாதாரச் செயற்பாடுகளில் இருந்து பெண்களின் வேலையை மாற்றியுள்ளது. பாரியதும், மிகவும் வித்தியாசமானதொன்றாகவும் விளங்குவது என்னவெனில் தற்போது பெண்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வேலைக்குப் போகலாம்; கிரமமான வருமானங்களைப் பெறமுடியும்.
ஆனால், இதனால் செலவு என்ன? பருவகால கமத்தொழில் செயற்பாடுகளில் ஓரளவு சம்பந்தப்பட்டிருந்த பெண்கள், தற்போது குறைந்த கொடுப்பனவிலான தேர்ச்சி பெறாத கடினமான தொழில்களைப் புரிகின்றார்கள். தொழிலின் இத்துறைகளின் ஏதாவது ஒன்றை நோக்கும் போது, தொழிலின் புதிய சர்வதேச பிரிவுகள் பெண்களின் கீழ்படிவான நிலையை மீள்வலியுறுத்தியுள்ளன. மிகவும் சுரண்டப்படும் நிலையிலும் தொழிலின் ஆகக்குறைந்த தேர்ச்சியிலான வகுதியில் அடங்கும் நிலையிலும், சந்தையின் மிகவும் சுரண்டப்படும் தேவைகளை நிறைவேற்றும் நிலையிலும் பெண்கள் தொடர்ந்தும் விளங்குகின்றார்கள்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஏறத்தாள தொண்ணுாறு சதவீதத்தினர் இளம் பெண்களாவர். இவர்கள் பணிவானவர்கள்; புத்திசாலிகள்; பெரிதும் கல்வி கற்றவர்கள். இவர்கள் தொழிலாளர் துறைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு குறைந்த கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அடிப்படை சமூகப் பாதுகாப்பு அற்றவர்கள், அத்துடன் உடல்ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும், பெரிதும் வன்முறைக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலையில் விளங்குகிறார்கள். இவர்களுக்கு ஆகக் குறைந்த இடைவேளைகளுடனான குறைந்த மட்ட ஒழுங்குமுறையிலான வேலை நேரங்கள், குறைந்த கொடுப்பனவு ஆகியன வழங்கப்படுவதுடன், ஆண்களுக்கு மட்டுமே உயர்மட்ட பதவிகள் என்ற ரீதியாக பால்நிலை பாகுபாடும் காட்டப்படுகின்றது. அண்மையில், சில தொழில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், தமது தொழில்களை இழந்து விடுவமோ என்ற பயத்தின் காரணமாக முறையிடுவதற்கு பெண்கள் பெரிதும் அச்சமடைகின்றார்கள்.
புலம்பெயர்ந்தவர்களைப் பொறுத்தளவில், அவர்களது வாழ்க்கை முழுமையாக புரட்சிகரமாக விளங்காத போதிலும், இப்பெண்கள் கூட தமது மாற்றமடையும் பாத்திரங்களுடன் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். அவர்களது வீட்டுப் பொறுப்புக் களை அவர்களே தனித்து நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஆண்களில் இருந்து எவ்வித உதவியுமின்றி, தமது சொந்த சுமையாகவே இரட்டைச் சுமையும் விளங்குகின்றது. தொழிலுடன் சேர்த்து அது இன்னும் கடினமாகிவிட்டது. குடித்தனத்தினுள் காலாதிகாலமான பால்நிலைப் பாத்திரங்களும், சமூக உறவுகளின் பாரியளவிலான அதிகாரமும் இன்னும் மாற்றமடையாமலே உள்ளது. வீட்டிலும், வேலையிலும் அடக்குமுறைச் சக்திகள் விழிப்புடன் இருப்பதுடன், தமது கைகளில் சிறிதளவு பணத்தைப் பெண்கள் கொண்டுள்ளதைத் தவிர, இச்சக்திகளினால் அவர்கள் தொடர்ந்தும் சுரண்டப் படுகிறார்கள்.
கடல்கடந்த நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக ஆயிரக்கணக்கான இளம் பெண்களை வறுமையும் விரட்டுகின்றது. இப்புலம் பெயர்வின் மனித ஆகுசெலவும், இவ்விளம் குடும்பங்களில் சமூக எதிர்த்தாக்கங்களும் பரந்த பரிமாணத்தைக் கொண்ட பிரச்சனைகளாகும். பில்லியன் கணக்கான ரூபாய்களைக் கொண்டுவரும் முக்கிய அந்நிய செலவாணியைச் சம்பாதிப்பவர்களாக அவர்கள் விளங்குவதனால், அவர்களது ஏற்றுமதியை அரசாங்கம் ஊக்கப்படுத்து கின்றது. இப் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி, அல்லது நாற்சக்கர வண்டிகளிலும், சவப்பெட்டிகளிலும் நாடு திரும்புவதைப் பற்றி வெகுஜன ஊடகங்களில் உச்சப்படுத்தப்பட்டுள்ள சம்பவங்களும், ஆராய்ச்சியாளர் களின் விடய ஆய்வுகளும் ஏராளமானவையாகும். ஆனால், புலம்பெயர்வு தொடருகின்றது. நாளாந்தம் மேலும், மேலும் பெண்கள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள்.
சிறுவர் மீதான கெடுதியான தாக்கங்கள் பற்றியும் ஆய்வுகள் ஆவணப்படுத்தியுள்ளன. பெண்கள் புலம் பெயர்ந்தமையினால் மிகவும் இளம் சிறுவர்கள் நோய்கள், பசியின்மை, வளர்ச்சியின்மை ஆகியவற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள்; இளம் வயதிலேயே பாடசாலையை விட்டு விலகுகிறார்கள்; போதை மருந்து, புகைத்தல் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள்; இளவயதில் திருமணம் புரிகிறார்கள்; டீன் ஏஜ் என அழைக்கப்படும் வயதில் கர்ப்பமடைகிறார்கள்; கருச்சிதைவு செய்கிறார்கள்; தாய் இல் லாத காரணத்தினால் அசாதாரண உறவுகளுக்கு இளம் பெண்கள் ஆளாகின்றார்கள்; தந்தைமார் ஊர் சுற்றுகையில் சிறுவர்கள் அயலவர்களின் பராமரிப்பில் கிடக்கிறார்கள். இவையெல்லாம் எமது சமூகங்களில் பெருமளவில் காணக்கிடைக்கின்றன.
வெளிநாட்டுக்கு தாய்மார் செல்வதற்கான காரணம் தான் மிகவும் நெஞ்சைப் பிழியவைக்கின்றது. “எமது பிள்ளைகளுக்காகத் தான் நாம் வெளிநாடு செல்கிறோம். ஆதலால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தைக் கொண்டிருப்பார்கள்” என்கிறார்கள் இப்பெண்கள்.
பெணணின் குரல் 0 மே, 2000

Page 8
ஆனால், நாடு திரும்பும் பெருமளவு பெண்கள் மனம் வருத்தமில்லை. கணவர்மார் ஊர் சுற்றித் திரிந்தாலும், குடும்பத்தினுள் கருத்து வேற்றுபை ஏற்பட்டாலும், இவற்றையெல்லாம் சமாளித்து எதிர்காலத்திற்கு முகம்கொடுக்க இப் பெண்கள் தயாராக இருக்கிறார்கள். எனினும், தொழில்ரீதியாக தொழிலானது கஷ்டமாக விளங்கினாலும், தொழிலாற்றும் பெண்கள் என்ற புதிய அந்தஸ்து தமக்கு வழங்கப்பட்டுள்ளதன் காரணத்தினால், சுய பெறுமதியின் உணர்வினை அவர்கள் ஈட்டுகின்றார்கள். பெருமளவு சந்தர்ப்பங்களில் அவர்கள் தமது வாழ்க்கை முறைகளை மாற்றியுள்ளார்கள்; காணி வாங்கியுள்ளார்கள்; வீடு கட்டியுள்ளார்கள்; தற்போதுள்ள வீடுகளை திருத்தியுள்ளார்கள்; தமது குடும்பங்களின் அலுவல் களில் உறுதியான செல் வாக்கினை ஈட்டுகின்றார்கள்.
கமத்தொழில் பணியை விட மிகவும் கடினமான உழைப்பை அளிக்க வேண்டிய தொழிற்சாலை தொழிலாளர்களாக வேலை செய்வதற்கும் விரும்பு கிறார்கள். நாட்டின் பலதரப்பட்ட பகுதிகளில் ஒரு பாரிய தொகையிலான ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் பட்டிருப்பதால், பெருமளவு பெண்கள் வேலைகளுக்கு நடந்து செல்ல முடியும், அல்லது சைக்கிளில் செல்ல முடியும். கட்டுநாயக்காவில் ஏற்றுமதி உற்பத்தி வலயம் மட்டும் இருந்த காலத்தில் பெண்கள் தமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறி, மிகவும் திருப்திகரமற்ற தங்குமிட விடுதிகளில் வாழ வேண்டியிருந்தது. இந்த விடுதிகளின் உரிமையாளர்களினால் அவர்கள் பலவழிகளிலும் உறிஞ்சப்பட்டார்கள். வேலையிலிருந்து வீட்டுக்கும், வீட்டிலிருந்து வேலைக்கும் பிரயாண வசதியை சில தொழிற்சாலைகள் வழங்குகின்றன. சமயாசமய வேலைக்கு அல்லது தும்பு வேலைக்கு கட்டுப்பாடான வேலை நேரங்கள் விரும்பப்படுகின்றன. மாத முடிவில் சுமார் 2000 ரூபா என்றவாறு சம்பளமும் வழங்கப்படுகிறது. இவ்விதமான வேதனங்களைப் பாரம்பரிய தொழில்கள் வழங்குவதில்லை.
தாராளமயத்தைப் பொறுத்தளவில், பொருளாதார விஸ் தரிப்புக்கான உற்பத்தி முறையாக உப ஒப்பந்தப்படுத்தல் ஒரு செயலுபாயமாகும். இது தொழில் படைக்குள் உப ஒப்பந்தப்படுத்தப்பட்ட பெண்களைத் தள்ளியுள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களில் இருந்து பெண்கள் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான அடைதலைக் கொண்டிருப்பதுடன், உப ஒப்பந்தப்படுத்தல் தொழில்களில் ஆகக்குறைந்த வேதன மட்டத்தை விட இதில் குறைவாகவே வழங்கப்படுகிறது. ஆனால், குடும்ப வருமானங்களுக்கு அவர்களால் பங்களிக்கக் கூடியதாகவுள்ளது.
குறைந்த வேதனங்கள், தோல் சப்பாத்துகளுக்கு வார்களை தைப்பது போன்ற முதுகெலும்பு முறியும்

தன்மையிலான வேலை ஆகிய காரணங்கள் நிலவிய போதும் , பெண்கள் அதிகாரத் தன்மையுடன் விளங்குவதாகவும், குடும்பத்தில் பால்நிலை உறவுகளில் நியாயத்திற்கு பங்களிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். எனினும், இந்த குறைந்த தரத்திலான தொழில்கள் மூலம் தொழில்ரீதியாக உயர்வதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை; உறுதித் தன்மையும் இல்லை; இதனால், பிரதான நீரோட்ட தொழில் சந்தைக்கான புற எல்லைக்குரியவர்களாக பெண்கள் தொடர்ந்தும் விளங்குகிறார்கள்.
இலங்கையில் குடும்பத்தினதும், திருமணத்தினதும்
பாராம்பரிய, ஒழிவுமறைவான அமைப்புக்கள் மெதுவாகவே மாற்றமடைவதுடன், குடும்பங்களில் இப்புதிய மாற்றங்கள் பிணக்கிலான சூழ்நிலைகளை விளைவிப்பதைத் தொடருகின்றன. பெண்களினாலான புதிய சம்பாத்தியங்கள் இருந்த போதிலும், குடும்பங் களினுள் அதிகாரத் தொடர்புகள், கட்டுப்பாட்டை இன்னும் கொண்டிருக்கும் ஆணிலேயே தங்கியுள்ளன. தமது பொருளாதாரத் தேவைகளுக்கு கணவர் மீது பெண்கள் குறைந்தளவே தங்கியுள்ளனர். ஆனால், குடும்பத்தினுள் சமமற்ற பால்நிலை உறவுகளைச் சட்டபூர்வமாக்குவதை சமூகம் தொடர்கின்றது. தொழிலில் சமமற்ற பால்நிலை பிரிவு, பாரம்பரிய பால் நிலைத் தத்துவங்கள், விடாப்பிடியாக விளங்கும் வீட்டு வன்முறை ஆகியன இன்னும் தொடருகின்றன.
உலகமயமாக்கலானது பெண்களின் சரிவு நிலையை திருத்தி, நடைமுறையில் சில பொருளாதார பலத்தையும், நம்பிக்கையையும் ஈட்டுவதற்கு அவர்களுக்கு உதவியுள்ள போதிலும், வம்சத்தலைமைப் பெறுமதிகள் வெற்றிகொள்வதுடன், ஆண் ஆதிக்கம் இன்னும் உயர்வாகவே விளங்குவது உரத்தும், தெளிவாகவும் தெரியவருகிறது.
உலகமயமாக்கல் ஊடாக பிறந்துள்ள புதிய பொருளாதார சந்தர்ப்பங்களும், தாராளமய நடை முறைகளின் போது அவை வழங்கவுள்ளவையும் சந்தர்ப்ப ங்களை விட அதிகளவு பயமுறுத்தல்களுடன் தூவப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தமது வாழ்வை அளப்பரியளவில் மறுசீரமைப்பதற்கு பெண்கள் முகம்கொடுக்க வேண்டியுள்ளது.
பாரிய பொருளாதார சக்தியை இப்பெண்கள் பிரதிநிதிப்படுத்தும் அதேவேளை, குடும்பத்தினுள் அதிகார உறவுகளுக்கான பாரிய ஊறுபடுதன்மைக்கு முகம் கொடுப்பதுடன், அவர்களது மரபொழுங்கினால் பிணைக்கப்பட்ட சமூகங்களில் தாய்மார்கள் என்ற அந்தஸ்தையும் இழப்பது ஒரு விசித்திரமான முரண்பட்ட நிலையாகும்.
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 9
தலிபான் பெண் யுத்
பெண்கள் மீது ஆப்கானிஸ்தான் அரசாங்கம் யுத்தத்தை நடத்துகின்றது. இந் நிலை மிகவும் மோசமடைவதன் காரணமாக, அழிவுக்கு முற்பட்ட போலந்தில் யூதர்கள் நடத்தப்பட்டதைப் போன்று இப் பெண்கள் நடத்தப்படுவதாக "டைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் கருத்தில் ஒருவர் ஒப்பிட்டுள்ளார்.
1996 இல் அதிகார தி தை தலிபானி பொறுப்பேற்றது முதல், பெண்கள் புர்க்காவை அணிய வேண்டும் என்பதுடன், சரிவர ஆடை அணியாத பெண கள் பகிரங் கமாகத் தாக்கப் பட்டு, கல்லெறியப்பட்டார்கள். தமது கண்களை மறைக்கும் வலை இல்லாத போது அவர்களுக்கு இத்தண்டனை கிடைத்தது.
ஒரு பெண் வாகனமொன்றை செலுத்திச் செல்கையில் தற்செயலாக அவளது கை வெளியே தெரிந்தபடியால் கோபமடைந்த அடிப்படைவாதிகளைக் கொண்ட கும்பலொன்று அவளை அடித்துக் கொன்றது.
இன்னொரு பெண் தனது உறவினர் அற்ற ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்டதாக கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டாள்.
ஆண் ஒருவரின் துணையின்றி வேலை செய்யவோ அல்லது பகிரங்கமாக வெளியில் நடமாடவோ ஒரு பெண் அனுமதிக்கப்படமாட்டாள்.
பேராசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வைத்தியர்கள், வழக்கறிஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் என்ற உயர்பதவியை வகித்த பெண்கள் தமது தொழில்களில் இருந்து வெளியேற்றப்பட்டு, வீட்டுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் உள்ள வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் வர்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். பிறத்தியார் உள்ளே பார்ப்பதைத் தடுப்பதற்காகவே இந்த முன்னேற்பாடாம். சத்தத்தை எழுப்பாத சப்பாத்துக்களையே அவர்கள் போட வேண்டும். அப் பொழுதே அவர் கள் நடக் கும் போது மற்றவர்களுக்கு தெரியவராது. சின்னதொரு துர்நடத்தைக்காக தமது உயிர் பறிக்கப்படுமோ என்ற அச்சத்திலேயே பெண்கள் வாழ்கிறார்கள்.
பெணி கள் வேலை செய்யமுடியாது

ண்ைகள் மீதான தம்
என்றபடியால், ஆண் உறவினர்கள் அல்லது கணவர்கள் அற்ற பெண்கள் பிஎச்.டி. பட்டத்தைக் கொண்டிருந்தாலும் பசி பட்டினியால் இறக்கிறார்கள்; அல்லது வீதிகளில் பிச்சை எடுக்கிறார்கள்.
பெண்களிடையே அழுத்தம் பரந்துள்ளதுடன், அது வெடித்து விடுமோ என்ற கட்டத்தை அடைந்துள்ளது. இவ்வாறான கடும்போக்கான இஸ்லாமிய சமூகத்தில் தற்கொலை வீதத்தை உறுதியாக அறிந்து கொள்ள வழியில்லை என்ற போதிலும், சரியான மருந்து வகைகளைப் பெறமுடியாமலும், கடுமையான மன அழுத்தத்திற்கு பரிகாரம் காண முடியாமலும், இவ்வித நிலைமைகளில் வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்து தற்கொலை செய்யும் பெண்களின் வீதம் கணிசமான அளவு அதிகரித்துள் ளதாக நிவாரண ஊழியர் கள் மதிப்பிட்டுள்ளார்கள்.
பெண்களுக்கு பெரிதும் மருத்துவ வசதிகளும் கிடைப்பதில்லை. பெண்களுக்கான அபூர்வமான ஆஸ்பத்திரி ஒன்றில், படுக்கைகளில் ஆடாமல் அசையாமல் பெரிதும் ' உயிரற்ற நிலையில், புர்க்கா போர்த்தப்பட்டவாறு
8 பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 10
பேசுவதற்கோ, சாப்பிடுவதற்கோ அல்லது எதையாவது செய்வதற்கோ மறுப்பதுடன் சாவின் விளிம்பில் பெண்கள் கிடப்பதை பத்திரிகை நிருபர் ஒருவர் கண்டுள்ளார். மற்றவர்கள் பைத்தியமாகி, மூலைகளில் முடங்கிக் கிடந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் அச்சத்தில் ஆடுவதும், அழுவதுமாக இருந்தனர். பெண்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் முடிந்த பின், எல்லாப் பெண்களையும் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு முன் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அணிதிரட்டுவது பற்றி வைத்தியர் ஒருவர் எண்ணுகின்றார். இந்தக் கட்டத்தில் தான் மனித உரிமைகளின் மீறல் எவ்வளவு குறைத்து மதிப்பிடப்படுகின்றது என்று தெரியவருகிறது.
தமது பெண் உறவினர்களின் விசேடமாக, தமது மனைவிமாரின் உயிர் வாழ்விலும் , இறப்பிலும் கணவன்மாருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பெண்கள் தமது சதையின் ஒரு அங்குலத்தை வெளிப்படுத்தினால் அல்லது மிகவும் அற்பமான வழியில் குற்றமிழைத்தால் அவர்களைக் கல்லெறிந்து கொல்வதற்கோ அல்லது அடித்துக் கொல்வதற்கோ ஆத்திரமுற்றிருக்கும் கும்பலுக்கும் இதே மாதிரி உரிமை உள்ளது.
1996 மட்டுமே, பொதுவாக பெண்கள் தாம் விரும்பியவாறு வேலை செய்யவோ, ஆடையணியவோ, வாகனங்களை செலுத்தவோ, பகிரங்க இடங்களில் நடமாடவோ ஓரளவு சுதந்திரத்தை அனுபவித்தார்கள். இந்த மாறுதலின் துரிதத்தன்மையே மன அழுத்தத்திற்கும், தற்கொலைக்குமான பிரதான காரணமாகும். ஒரு காலத்தில் கல்விமான்களாக, அல்லது வைத்தியர்களாக அல்லது அடிப்படை மனித உரிமைகளுக்கு இலகுவில் பழக்கப்பட்டவர்களாக விளங்கிய பெண்கள் தற்போது நன்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வலது சாரி அடிப்படைவாத இஸ்லாம் என்ற பெயரில் ஓரளவு மனிதர்களாகவே நடத்தப்படுகின்றார்கள். இது அவர்களது பாரம்பரியமோ அல்லது கலாசாரமோ அல்ல; ஆனால், அவர்களுக்கு இது அந்நியமானது; அடிப்படைவாதம் ஒரு விதி என்ற கலாசாரங்களுக்கும் கூட இது பிற்போக்கானது.
ஒவ்வொருவருக்கும், முஸ்லிம் நாடொன்றில் உள்ள பெண்களாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளத்தக்க மனித வாழ்வாதாரத்திற்கான உரிமையுள்ளது. அல்பேனிய இனத்தவர்களின் மனித உரிமைகள் என்ற பெயரில் கொசோவோவில் உள்ள இராணுவச் சக்திக்கு பயமுறுத்தலை விடுக்கலாம் என்றால், தலிபான் ஆட்சியாளர்களினால் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அடக்குமுறை, கொலை, அநீதி ஆகியவற்றுக்கு சமாதான ஆக்கிரமிப்பை வெளிப்படுத்த உலகப் பிரஜைகளினால் நிச்சயமாகமுடியும்.

பாலியல் துவடிபிரயோகமும், சிறுவர்களைக் கடத்துதலும்
1995இல் பிரிவு 360A இல் குற்றவியல் குற்றமாக சிறுவர்களைக் கடத்துதல் தண்டச் சட்டக் கோவைக்கான புதிய திருத்தங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுவரை, குறிப்பாக பாலியல் வேலைக்காக ஆண் சிறுவரைக் கடத்துதலின் மட்டத்தில் ஏற்பட்ட கரிசனையிலிருந்து திருத்தமானது விளைந்துள்ளது. பெண்களைக் கூட்டுதல் மீது நோக்கினைக் கொண்டுள்ள இத் திருத்தம், பணத்திற்காக, அல்லது ஏதாவது வேறு கரிசனைக்காக ஏதாவது நபரை “வாங்குதல் , விற்றல் அல்லது பண்டமாற்றுதல்’ ஆகியவற்றைத் தடுக்கின்றது. இது விபச்சாரத்திற்காக பெண்களைக் கூட்டுதலைக் குற்றவியல் குற்றமாக உள்ளடக்குகின்றது.
எனினும், சிறுவரைக் கடத்துதலில் அன்றி விபச்சாரம் மீதே திருத்தம் நோக்கினைக் கொண்டிருப்பதுடன், இத் திருத்தங்களின் கீழ் , ' விபச் சார விடுதிகள் வேட்டையாடப்பட்ட பெருமளவு சந்தர்ப்பங்கள் இருந்ததுடன் , வயதான ஜோடிகள் கைதுமி செய்யப்பட்டுள்ளனர். வயதான ஜோடிகளுக்கு இடையில் இணக்கமான பாலியலை திருத்தமானது குற்றமாகவும் கருதுகின்றது. விபச்சாரத்தைக் கையாள்வதற்கான இன்னும் ஒழுங்கமைப்பு கட்டமைப்பாக விளங்கும் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நாடோடிகள், விபச் சார விடுதிகள் கட்டளைச் சட்டத்தின் தொழிற்பாட்டுடன், பெண் பாலியல் வேலையாட்களின் சம்மதத்துடன் வர்த்தக அடிப்படையில் நடத்தப்படக்கூடிய விபச்சாரத்தைத் தடை செய்வதையும் புதிய திருத்தம் கோருகின்றது. விபச்சாரி எனக் கருதப்படும் பெண் ஒருவர் வீதிகளில் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது நாடோடிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிடிவிறாந்து இன்றி கைது செய்யப்பட்டு, 14 நாள் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆண் வாடிக்கையாளரும், தரகரும் கைது செய்யப்படலாம் என்பதுடன், ஆனால, சிறிய அபராதங்களின் கொடுப்பனவுடன் பெரிதும் விடுவிக்கப்படுகின்றனர்.
எனவே, ஒன்றில் பெண்களைப் பாதுகாப்பதற்கு, அல்லது அவர்களது ஆர்வங்களைக் கண்காணிப்பதற்கு 1995இன் திருத்தங்கள் போதுமானதாக விளங்கவில்லை. விபச்சாரிகளுக்கு எதிராக குற்றவியல் நீதித்துறை அமைப்பு தொடர்ந்தும் ஒரு பட்சமாக விளங்குவதுடன், விபச்சாரத்தைச் செயற்கை ரீதியில் தடை செய்வதைக் கோரும் அமைப் பினை அவை பெரிதும் துஷ்பிரயோகிப்பதுடன், பாகுபாட்டில் இருந்து, அல்லது சுரண்டலில் இருந்து பாதுகாப்பையும் அவர்களுக்கு அனுமதிப்பதில்லை. பெண்களைக் கடத்தும் மிகவும் குறிப்பான பிரச்சனைகளைத் திருத்தங்கள் கவனத்தில் எடுக்கத் தவறுகின்றன. இவை சரிவர இணைக்கப்பட்டு, சீர்ப்படுத்தப்பட வேண்டும்.
("பெண்களுக்கு எதிரான வன்முறை” என்ற கட்டுரையில் குமுதினி சாமுவேல்)
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 11
பொருளாதார அதிக மனோநிலையி
சிறுவர் மீது வர்த்தகரீதியான பாலியல் சுரண்டல் மீது விழிப்பியலை உயர்த்துமுகமாக Protecting Environment and Children Everywhere (P.E. A.C.E.) 6T60T ஆங்கிலத்தில் அழைக்கப்படும் எங்கும் சூழலையும், சிறுவர்களையும் பாதுகாத்தல் என்றொரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறுவர்களைப் பாதுகாத்தல் என்ற போது, அது சிறுவர் விபச்சாரம் என தவறாக விளங்கப்பட்டது. 1990இல் 2 வருட ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் (3 நாடுகளான தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகியவற்றில் “நவீன அடிமைத்தனத்தில் அகப்படுதல்” என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது) 1991இல் பொதுசன செயல் திட்டங்கள் ஆரம்பமாகின.
இலங்கையில், சிறுவர் மீதான துஷ்பிரயோகம், சிறுவரைப் பாலியல்ரீதியாகச் சுரண்டல் ஆகியன மீது பெருமளவு ஆய்வுகள் ஏற்கனவே நிலவிய போதும், உல்லாசப் பயணிகளாக நாட்டுக்கு வருகை தந்து வாழும் வெளிநாட்டு தன்னினச் சேர்க்கையாளர்களினால் சிறுவர்கள் மீதான முழு அளவிலான பாலியல் சுரண்டல் மீதே PE.A.C.E. ஆய்வு நோக்கினைக் கொண்டிருந்தது.
மேல் மாகாணத்தினதும், தென் மாகாணத்தினதும் உல்லாசப் பயண கடற்கரை கூடுமிடங்களின் சுற்று வட்டாரமும், கண்டியுமே பிரதானமாக "ஆபத்துப் பகுதிகளாக” ஆராய்ச்சியில் காட்டப்பட்டுள்ளன. இவ்விடங்களில் சிறுவர் பாலியல் துஷபிரயோகிகளின் கிராக்கியைப் பூர்த்திசெய்வதற்காக அவர்களுக்கு 6 - 15 வயதுக்கிடையான சிறுவர் ஒப்படைக்கப்பட்டனர். அத்தருணத்தில் (1990களின் ஆரம்பத்தில்) குடும்பங்களி னுள்ளும், பாடசாலைகளிலும் துஷபிரயோகம், தகாத உறவு, கற்பழிப்பு, பாலியல் தாக்குதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான பயமுறுத்தல் இருந்ததுடன், இவை பற்றி எடுத்துரைக்கவோ, பகிரங்கமாக கருத்துப் பரிமாறவோ முடியாத நிலை நிலவியது. கடற்கரையை அண்டிய குக்கிராமங்கள், நகர சேரிப்புறங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த இச் சிறுவர்கள் மீதான மிகவும் ஊறுபடத்தக்க பாலியல் துஷ பிரயோகத்தையும், சுரண்டலையும் தணிப்பதற்கு / ஒழிப்பதற்கு குறிப்பிடத்தக்க அல்லது உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
 

ாரமளிப்பின் ஊடாக லான மாற்றம்
கொடுரமான மா.பியா (Mafia) முறையில் செயல்படும் தரகர்களும், அவர்களுக்கு துணை போகிறவர்களும் இச் சமுதாயங்கள் மீது ஆட்சி புரிந்தார்கள். பெருமளவு ஒழுங்குமுறையற்ற குடும்பங்கள் பெருகின. ஒற்றைப் பெற்றோர் அவர்கள் தந்தைமார்களாக இருந்தாலும் சரி, தாய்மார்களாக இருந்தாலும் சரி தமது பிள்ளைகளை பாதுகாக்கக் கஷடப்பட்டனர். தமது பெற்றோரினால், மத்திய கிழக்கில் இருந்த தாய்மாரினால் வேறு கள்ளத் தொடர்புகளில் சிக்கியுள்ள தந்தைமாரினால் கைவிடப்பட்ட பெருமளவு சிறுவர்களே தமது துஷ்பிரயோ கிகளின் தயவு தாட்சண்யத்தில் அற்ப சம்பாத்தியத்தை உழைத்தனர்.
விபச்சாரத்தின் பிடியில் சிக்கியுள்ள சிறுவர்கள், ஆபாசப்படங்களில் பயன்படுத்தப்படுவதும், துஷ்பிரயோகி
க்கப்படுவதுமான சிறுவர்கள், கடத்தப்படும் சிறுவர்கள் மிகவும் வறிய குடும்பங்களில் இருந்து வந்த சிறுவர்கள் ஆகியோரின் பெற்றோர்/ பாதுகாவலர் வெள்ளத்தைத் தடுக்க பெரிதும் உதவியற்ற நிலையில் விளங்குகின்றனர். அறிக்கையிடப்பட்ட சம்பவங்களில் ஆகக் குறைந்தது எழுபது சதவீதத்தினர் இந்த பலவீனமான துறைகளைச்
O பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 12
சேர்ந்தவர்களாவர். பொருளாதாரரீதியில் சொல்தென்றால், இவர்கள் படிப்பறிவில்லாதவர்கள்; பயிற்றுவிக்கப்படா தவர்கள்; தேர்ச்சியடையாதவர்கள்.
மது அருந்துதல் ஒரு சீரிய பிரச்சனையாக உள்ள குடும் பங் களிலும் , போதை மருந் துகளுக்கு அடிமைகளாகவுள்ள குடும்பங்களிலும், சிறுவர் மற்றும் பெண்கள் மீது கிரமமாக வன்முறை இடம்பெறும் குடும்பங்களிலும், தமது வெறுப்படைந்த, வேலையற்ற கணவன்மார்களால் கிரமமாக அடி உதை வாங்கும் பலவீனமான குடும் பங்களிலும் இது பெரிதும் வழமையானதாகும்.
இக்காட்சிகள் மேடையேற்றப்படும் வேளையி லேயே இதற்குள் PE.A.C.E ஊடுருவியதுடன், சிறுவர் மீதான பாலியல் துஷ பிரயோகத்தின் பின்தொடர் விளைவுகள் மீது விழிப்பியலை உயர்த்தியது. அதே வேளை, வெளிநாட்டவருக்கு அல்லது உள்ளூர் துஷ்பிரயோகிக்கு தனது உடலை விற்பதன் மூலம் சிறுவர் ஒருவரினால் ஈட்டப்படும் ஒற்றை டொலர் "செல்வம்” என பட்டினியால் வாடும் குடித்தனத்தினால கருதப்பட்டதனால், “கெளரவமான” வாழ்க்கை முறைகள், பெறுமதிகள், தத்துவங்கள் ஆகியன மீதான தவறுகளைச் சுட்டிக்காட்டுதல் பயனற்றது என்பது விரைவிலேயே கண்டறியப்பட்டது.
பிரச்சனை நிலவிய, அதாவது சிறுவர்கள் வாங்கி, விற்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு, துஷ்பிரயோகிக் கப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட “கலந்தாய்தல் - கல்வி" திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்டவை செயன்முறை கருத்திட்டங்களுக்கு நீடிக்கப்பட வேண்டியிருந்தது. இதன் மூலம் அனாதரவான தாய்மார்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்க முடியும். தமது சூழ்நிலைகளின் வெட்கத்தையும், கெளரமின்மையையும் அறிந்து “பிச்சைக்காரர்களாகக்கூடாது" என அவர்கள் தமக்குள் அவசரமாக விரும்பியவாறு சிறுவர்களின் விபச்சாரத்தை தணிப்பதற்கான / முடிவுக்கு கொண்டுவருவதற்கான P.E.A.C.E. திட்டங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டியிருந்தது.
முன்னோடிக் கருத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. தாய்மார்களுக்கு எளிய தேர்ச்சிகள் பயிற்றுவிக்கப்பட்டன. தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் சிறந்த வாழ்க்கையை எப்பொழுதும் பெண்கள் பெரிதும் விரும்பினார்கள். தாய்மார்கள் விடாமுயற்சியுடன் விளங்கினார்கள். தைத்தல், ஒட்டுவேலை, பின்னல் வேலை, உணவுகளைத் தயாரித்தல், விற்றல், கறித்துாள்கள், கோப்பி, தேயிலை போன்றவற்றைப் பொதிப்படுத்தல் என்று சகல மிகச் சிறிய முயற்சிகள். ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு இத்திட்டங்களுக்கு U.N.RPA நிதியுதவி அளித்தது. வறுமை ஒழிப்பு இன்றி மனோநிலையிலான மாற்றம் இடம்பெற முடியாது என அவர்கள் நன்கு கண்டதுடன்,

புரிந்து கொண்டனர். காலப் போக்கிலேயே PE.A.C.E. இது பற்றி கற்றறிந்தது.
1998இல் பொருளாதார அபிவிருத்தி ஊடாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து தடுத்தலுக்கும், மீட்பித்தலுக்குமாக பிரதானமாக வடிவமைக்கப்பட்ட சமுதாய அடிப்படையிலான திட்டமொன்று BCE என்ற ஐரோப்பிய தளத்திலான அரச சார்பற்ற தாபனமொன்றின் கூட்டுமுயற்சியுடன் 18 மாத கால முன்னோடிக் கருத்திட்டமொன்று PE.A.C.E.இனால் ஆரம்பிக்கப்பட்டது. இது மேற்கு கரையோர கடற்கரை அத்துமீறல் குடியேற்றங்களில் 4, கொழும்பு 14இல் உள்ள சேரிப்புறத்தில் ஒன்று, கண்டியில் ஒன்று என 6 அமைவிடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. சமுதாயத்திற் காகவும், சமுதாயத்தினாலும் தமது அமைவிடங்களுக்குப் பொருத்தமாக விளங்கும் வகையில் இத் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டன. தேவைகளினதும், அமுலாக்கத் தினதும் அர்த்தப்படுத்தலில் வித்தியாசங்கள் இருந்த அதேவேளை 18 மாதங்களின் பின் திட்டங்களை மதிப்பாய்ந்த போது, அமுலாக்கப்படும் குழாம்களின் இணைந்திருந்த தேர்ச்சிகளுடனும், நிபுணத்துவத்துடனும், அதன் சொந்தத் தேவைகளினதும், வளங்களினதும் சமுதாய மதிப்பீடு மீதான அடிப்படையில் ஒரு நன்கு ஒன்றிணைந்த அணுகுமுறை இருந்தது என்பது வெளிப்படையானது.
சமுதாயத்தில், பலதரப்பட்ட விருப்புக்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் வருமானத் தோற்றுவிப்பு ஆரம்பநிலை அவசியங்களில் ஒன்றாகும். சுழற்சி நிதியமொன்று இருந்தது. ஆனால், எடுக்கப்பட்ட பணம் மீளச் செலுத்தப்பட வேண்டும். பெருமளவு பெண்கள் உதாரணமாக பழங்கள், மரக்கறிகள் ஆகியவற்றை வர்த்தகப்படுத்தல், வாங்குதல், விற்றல் போன்ற சிறிய வியாபார முயற்சிகளைத் தான் விரும்பினார்கள். இவற்றை தாம் கையாளலாம் என அவர்கள் விரைவிலேயே உணர்ந்தார்கள். சிறிய லாபத்தில் சந்தைகளில் விற்பனை செய்தல், பலசரக்குச் சாமான்களை விற்பனை செய்தல். இடியப்பங்களைத் தயாரித்தல், பெறக் கட்டளைகளுக்கு விநியோகித்தல் அல்லது தமது அயலவர்களுக்கு விற்பனை செய்தல். இது அவர்களுக்கு கிரமமான பருமானத்தின் ஒரு மூலமாகும். ஏனையோர் சற்று பேரவா காண்டவர்கள். கடித உறைகளையும், கடத்ாசி பைகளையும் ஒரு குழு தயாரித்தது. இது மாதமொன்றுக்கு சுமார் 100,000 பைகளைத் தயாரித்தது.
கண்டியைச் சேர்ந்த ஒரு குழு (14 பெண்கள்) சப்பாத்துத் தொழிற்சாலையிலிருந்து தோல் துண்டுகளை வாங்கி, கைத்தொழில் அபிவிருத்திச் சபையிலிருந்து பயிற்சியைப் பெற்று, வார் சப்பாத்துக்களையும், செருப்புக்களையும் தயாரித்தது. இன்னொரு குழு வீடு வீடாகவும், கடைகடையாகவும் சென்று விற்பனை
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 13
செய்தது. இரத்மலானையில், துண்டு ஆடைத்துணிகளைக் கொள்வனவு செய்த பெண்கள் குழுவொன்று உடன் விற்பனையைக் கொண்ட ஆடைகளைத் தயாரித்தது.
இந்த வருமானம் தோற்றுவிக்கும் நடவடிக்கைகள் செழிப் பானதாக விளங்கியதுடன் , நம்பிக்கை உணர்வையும், எதிர்காலத்திற்கான ஆர்வங்களையும் பெண் களுக்கு ஏற்படுத்தியதுடன் , பெருமளவு தருணங்களில் வன்முறையைக் கையாள்வதற்கான பலத்தையும், தைரியத்தையும் அளித்தன. உண்மையில் ஒவ்வொரு இடத்திலும் 100 சதவீத வெற்றி கிட்டவில்லை. குறிப்பாக சேரி அடிப்படையிலான திட்டங்களில் உடனடியாக வருமானம் தோற்றுவிக்கும் திட்டங்களை மேற்கொள்வதில்லை என்றும், ஆனால், போதனை, கலந்தாய்வு ஆகியன மீது அதிகளவு கரிசனை காட்டுதென்றும் தீர்மானிக்கப்பட்டது. எனினும், ஏனைய செயற்பாட்டுத் துறைகளில் உறுதியான அபிவிருத்தி அவதானிக்கப்பட்டது.
வாழ்க்கையின் வழிமுறைகளை தற்போது கொண்டுள்ள அதே வேளை, அவர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை வழங்குதல், சிறுவர்களின் எதிர்காலத்திற்கு பணத்தை இடுதல் (மாதமொன்றுக்கு 50 அல்லது வாரத்திற்கு 5 ரூபா என்றவாறு சேமித்தல்), ஆடைகளையும், ஏனைய தேவைப்பட்டவைகளையும் கொள்வனவு செய்தல், உணவுப் பொருளின் ஏணியில் ஒரு படி வரைக்கும் கொடிய வறுமையை தணித்தல், நம்பிக்கையினதும், முன்னேற்றத்தினதும் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு ஆரம்பித்தல்.
எத்தருணத்திலும், இந்த ஆறு அமைவிடங்களில் இளம் பையன்களும், பெண்களும் இனியும் விபச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்; இப்பகுதிகளுக்கு வர தன்னினச் சேர்க்கையாளர்கள் (வெளிநாட்டவர்கள்) தயக்க மடைவார்கள்; தரகர்கள் இனியும் ஆட்சி செலுத்த மாட்டார்கள் என்பது மிகவும் வெளிப்படையானதாகும். உள்ளூர் துஷபிரயோகம் முழுமையாக அகற்றப்பட வில்லை. ஆனால், தமது பிள்ளைகளை சிறந்த வகையில் பாதுகாப்பதை தாய்மார்கள் கற்றுவிட்டார்கள். தற்போது இடம்பெறும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுகின்றது. நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கவும், அவர்களுக்கு சரியானதும், உரியதுமான தண்டனைக்கு சிறுவர் பாலியல் குற்றவாளிகளையும், கற்பழிப்போர் களையும், தொல்லை கொடுப்போர்களையும் கொண்டு வரவும் தாய் மார்களும், சிறுவர்களும் தயாராக இருக்கிறார்கள்.
சகல 6 அமைவிடங்களிலும் உள்ள தாய்மார்கள் தமது சொந்த சனசமூக அபிவிருத்திச் சங்கங்களை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தமது தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், குழுக்களையும்

கொண்டுள்ளார்கள். அத்துடன் தமது கிரமமான வாராந்த / மாதாந்தக் கூட்டங்களையும் நடத்துகிறார்கள்.
ஒவ்வொரு சங்கமும் அதன் சொந்த வங்கிக் கணக் கையும் , அங்கத்துவருக்கான தனிப்பட்ட சேமிப்புக்களையும் கொண்டுள்ளது. சில சங்கங்கள் உறுப்பினர்களுக்கு அவசியப்படும் வேளைகளில் கடன்களை வழங்குகின்றன. படிப்படியாக, அங்குலம் அங்குலமாக, வேலையை அது தொடரும் இடங்களில் அபிவிருத்தியையும், முன்னேற்றத்தையும் PE.A.C.E. அவதானிக்கின்றது.
மொரீன் செனிவிரத்ன
தலைவர்
(P.E.A.C.E)
რო, g asasib ua)lugu (tubl
தந்பை காட்ட - அண்று கொருஞ் சுவாலையில் குதித்தாள் மண்ணின் புத்திரி
கூடி நிண்று
வேடிக்கை பார்த்தது 6lay5/ö/362jaoèaoi ôa35/ôa2ugy öm-a’lultib
காதல் தீயில் குளித்தும் - உண்ணை கரையேந்க மறுக்கிறதே EBÉD aður aus Sin-ťilltid கை தட்டி சீரித்து
கேலி செய்கிறது
ώαυαοί υιτώ வேட்டை நாய் போல் ஊனுக்கு அலைகிறது இந்த
Pa (61/1 бо-LU UD எமக்கு வேண்டாம் வந்துவிரு
பித்தர்களும் சித்தர்களும் வாழும் - இந்த பிரபஞ்சம் எமக்கு வேண்டாம் வந்துவிரு
புனிதர்களும் முனிவர்களும் வாழும் -
[5 புது உலகம் படைத்து
அங்கு நானும் நீயும் ஆதாம் ஏவாளாய் அவதரிப்போம்
புவனகாந்தன்- ܓܠ
பெண்ணின் குரல் OJ (3D, 2000

Page 14
பெண்களை
பெண்களையும், சிறுவர்களையும் கடத்துவதற்கு எதிரான சண்டையில் நாடுகளை ஒரு பாரிய படிக்கல்லை முன்னெடுத்துச் செல்லக்கூடிய சர்வதேச ஒப்பந்த மொன்றுக்கான இறுதிப் பூச்சுக்களை சட்ட நிபுணர்கள் இடுகின்றார்கள். இக்கடத்தலானது உலகளாவிய ஒரு தலையிடி என்பதுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றத்துடன் வளர்ச்சியுறும் தொடர்புகளைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், உலகம் பூராவும் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களும், இளம் பெண்களும் தமது சொந்த ஊர்களில் இருந்து கடத்தப்பட்டு சட்டவிரோத பாலியல் வர்த்தகத்திற்கு இட்டுச் செல்லப்படுகின்றார்கள். இவர்களில் சிலர் சம்மதத்துடன் செல்கின்றார்கள். ஆனால், ஏனையவர்கள் அவர்களது சம்மதத்திற்கு எதிராக விபச்சாரத்திற்குள் பலாத்காரமாகத் தள்ளப்படுகின்றார்கள்.
2000ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் மில்லேனியம் அசெம்பிளியின் தீர்மானத்திற்கு சமவாயமும், ஒப்பந்தமும் தயாராக இருப்பதுடன், 2000 ஏப்ரலில் வியன்னாவில் இடம்பெற்ற குற்றத்தைத் தடுத்தல், குற்றவாளிகளை சீர்திருத்துதல் மீதான பத்தாவது ஐக்கிய நாடுகள் பேராளர் மகாநாட்டின் கருத்துப் பரிமாறலுக்கான பிரதான விடயங்களாக இவை விளங்கின.
கடத்தலானது கடந்த ஆண்டுகளின் போது வானத்தை எட்டியுள்ளது. ஏனெனில் இதில் உயர்ந்த லாபம் கிட்டுவதுடன், தொடர்புரீதியில் சிறிதளவு ஆபத்து க்களே உள்ளன. ஆட்களைக் கடத்து வதற்கு எதிராக குறிப்பிட்ட சட்டங் களைப் பெருமளவு நாடுகள் கொண்டிருக்கவில்லை. இவை Ο பெண்களுக்கு எதிரான கடத்தலுக்கு எதிராக சில சட்டங்களைக் கொண்டி O ருந்தன. நடைமுறையிலுள்ள சட்டங் O கள் செயற்படாது விளங்கு வதுடன், O சாட்சியமின்மையானது ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களை சிறிய தண்டனை யுடன் தப்பிப்போக அனுமதிக்கின்றது.
ஆகக் குறைந்தது 100,000 சட்டவிரோத புலம் பெயர் நீத விபச்சாரிகள் ஐக்கிய அமெரிக்காவில் வேலை செய்வதாக 1999 மே மாதத்தில் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டு

ாக கடததல
13
ள்ளது. ‘அடிமைகள்’ என்ற பெயரிலான இந்நூலை எழுதியவர் பினோ ஐச் சி. இவர் போதைமருந்து கட்டுப்பாட்டு, ஐக்கிய நாடுகள் குற்றத் தடுப்பு அலுவலகத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர். ஜப்பானில் சுமார் 40,000 - 50,000 தாய்லாந்து பெண்கள் விபச்சாரிகளாக சட்டவிரோதமாக வேலை செய்வதாக குற்றம், நீதி மீதான ஐக்கிய நாடுகள் உலகளாவிய அறிக்கை குறிப்பிடுகின்றது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள சட்டவிரோத பாலியல் ஊழியர்களின் எண்ணிக்கை 200,000க்கும் ஐந்து லட்சத்திற்கும் இடைப்பட்டதாகும். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் கிழக்கு ஐரோப்பியாவில் இருந்து வருகின்றனர். மூன்றில் ஒரு பங்கினர் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து வருகின்றனர். இத்தகவலை பூகோள அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெண்களையும், சிறுவர்களையும் கடத்துதல் ஒரு தசாப்தத்திற்கு முன் முன்னாள் யுத்த எல்லைகள் திறக்கபட்டதிலிருந்து துரிதமாக அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் ஆட்கடத்தல் ஏற்கனவே குறைவாக இருந்த போதிலும் தற்போது ஆசியா, ஆபிரிக்கா, கரீபியன்
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 15
நாடுகள் போன்றவற்றின் 'பாரம்பரிய கடத்தலுக்கு போட்டி போடக்கூடிய நிலைக்கு அதிகரித்துள்ளதாக 1999இல் நடத்தப்பட்ட ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. புலம் பெயர்வுக்கான சர்வதேச தாபனம் இவ்வாய்வை மேற்கொண்டது.
1996இல் மிகக் கொடிய செயற்பாட்டுக்குள் அகப்பட்ட 1,572 பெண்கள் ஜேர்மனியில் சம்பந்தப்பட்ட வர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். 1995இல் வியன்னாவில் சுமார் 670 பெண்கள் கடத்தல் சம்பந்தமாக பதிவாகியுள்ளனர். இது 1990உடன் ஒப்பிடுகையில் சுமார் ஆறு தடவைகள் உயர்வாகும்.
தம்மால் கடத்தப்பட்டவர்களுக்காக பாரிய தொகையிலான பணத்தை கடத்துவோர் ஈட்டுகின்றார்கள். ஐக்கிய அமெரிக்காவிலும், ஜப்பானிலும் ஆசிய விபச்சாரிகள் ஒவ்வொருவரும் 20,000 டொலர்கள் வரை விற்கப்படுகின்றார்கள். பெல்ஜியத்தில், கடத்தலில் ஈடுபடும் ஒருவர் ஆபிரிக்காவில் இருந்து பெண்களை இறக்குமதி செய்து அவர் கள் ஒவ்வொரு வரையும் 8,000 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். ஜேர்மனியில் உள்ள ரஷ்ய விபச்சாரிகள் மாதமொன்றுக்கு சுமார் 7500 டொலர்களை சம்பாதிக்கின்றார்கள். இதில் விபச்சார உரிமையாளர் ஆகக் குறைந்தது 7,000 டொலர்களை பெறுகின்றார். விபச்சார விடுதிகளின் வருவாய்களும், விபச்சாரிகள் பெறும் விலைகளும் கைத்தொழில்மய, நாடுகளிலும், அபிவிருத்தி நாடுகளில் அவர்களது சேவைகளுக்கான உயர் நீ த கிராக் கியை சுட்டிக்காட்டுகின்றது. ஆசியாவின் சில பகுதிகளில் பாலியல் உல்லாசப் பயணத்தின் வளர்ச்சியுடன் கிராக்கி அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ளூர் கிராக்கியும் கணிசமானது என ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் (Human Rights Watch) 9.5ds60)85u (6d56örpg).
விபச்சாரிகளுக்கான கிராக்கியின் அதிகரிப்புடன், அதன் பங்கை எடுப்பதற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம் உள்நுழைந்துள்ளது. ஜேர்மனியின் சிவப்பு விளக்கு மாவட்டங்களில் வேலை செய்யும் சுமார் 15,000 ரஷ்ய, கிழக்கு ஐரோப்பியப் பெண்களில் பெரும்பாலானோர் விபச்சார விடுதிகள், பாலியல் கிளப்புகள், மஸாஜ் கூடங்கள், நீராவி குளியல் கூடங்கள் ஆகியவற்றில் ரஷ்யச் சம மேளனம் , துருக் கி மு னி னாள் யூகோஸிலாவியாவைச் சேர்ந்த குற்றவியல் குழுக்களின் நிதிசார் கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்கிறார்கள் என்ற தகவலை 1OM அளவீடு குறிப்பிடுகின்றது. ஆசிய ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றக் குழுக்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பாலியல் கைத்தொழிலின் சுமார் 70 சதவீதத்தை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன.
உயர்ந்த வேலை வாய்ப்பும் , நிதிசார் நெருக்கடியும் உள்ள பிராந்தியங்களில் ஆள்கடத்தல் செழிப்படைந்துள்ளது. இவர்கள் மகிழ்விப்பவர்கள், மொடல்கள், வீட்டு உதவியாளர்கள், சமையல் உதவியாளர்கள் அல்லது தபால மூலமான

மணப்பெண்கள் ஆகியோருக்கான விளம்பரங்கள் ஊடாக ஆட்கடத்தல் வலைக்குள் சிக்குகிறார்கள். சிலர் அவர்களது நண்பர்களாலும், தெரிந்தவர்களாலும் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.
ஒரு முறை வலையில் சிக்குபவர்கள் ரங்கராட்டினம் போன்று பயமுறுத்தல்கள், வன்முறை, பலாத்கார விபச்சாரம் ஆகியவற்றினுள் அகப்பட்டு விடுவார்கள். கடவுச்சீட்டுக்கள் அல்லது அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்படும் அல்லது கிழிக்கப்படும் என்பதால் , கைது செய்யப் படுவோமோ என்ற தொடர்ச்சியான அச்சத்திலேயே பெண்கள் வாழ்கிறார்கள். நிலைமைகள் சுகாதார சீர்கேடானவை என்பதுடன், ஒரே சிறிய அறையில் பெண்கள் வாழ்வதுடன், வேலையும் செய்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் பூட்டி வைக்கப்படுகின்றனர், அல்லது சிலவேளைகளில் உடல் ரீதியாக அதாவது சிகரெட்டால் சுடுதல், கத்தியால் குத்துதல், மின்சாரத்தை பாய்ச்சுதல் என சித்திரவதை செய்யப்படுகின்றார்கள்.
பெருமளவு பெண்கள் "கடன் ஒப்பந்தம்” காரணமாக வருடக்கணக்கில் விபச்சாரிகளாக வேலை செய்கிறார்கள். இவ்வித ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் விடுதலை பெற்று தமது நாடுகளில் இருந்து வந்ததிற்கான ஆகாய விமானச் சீட்டுக்களின் கட்டணத்தை மீளச் செலுத்துவதற்கு இப்பெண்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும், ஆள் கடத்தல்காரர்களுக்கு விபச்சார விடுதி உரிமையாளர்கள் வழங்கிய உயர்வான கட்டணத்திற்கு ஏற்ப பெண்கள் வேலை செய்யவேண்டும்.
பலாத்காரமாக விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட பெருமளவு கடத்தப்பட்ட பெண்கள் எயிட்ஸை விளைவிக் கும் எச்.ஐ.வி. வைரஸினால பீடிக்கப்படுகின்றார்கள்.
தாய்லாந்துக்கு கடத்தப்பட்ட மியான்மாரைச் சேர்ந்த 19 பெண்களையும், இளம்பெண்களையும் ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் அண்மையில் நேர்முகம் கண்டது. இதில் 14 பேர் இக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
சிறுவர் விபச்சாரத்திற்கும் எச்.ஐ.வி. எயிட்ஸ்ஸின் பயமுறுத்தல் பரவிவிட்டது.
எயிட்ஸ் மீது உத்தேச வாடிக்கையாளர்களுக்கு விழிப்பியல் ஏற்பட்டதை அடுத்து வைரசினால் பீடிக்கப்படாததாகக் கருதப்படும் பின்தங்கிய கிராமங்களில் இருந்து மேலும், மேலும் இளம்பெண்களைக் கொண்டு வருவதற்காக தாய்லாந்து பாலியல் கைத்தொழில் தள்ளப்பட்டுள்ளது.
ஜேர்மன் - செக்கோஸ்லேவேக்கியா எல்லையின் வழியே பணியாற்றும் கரோ என்ற மனிதாபிமான
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 16
கருத்திட்டமானது 12 க்கும் 18க்கும் இடைப்பட்ட பெண்களுடனும், இளம்பெண்களுடனும் பணிபுரிவதாகத் தெரிவிக்கின்றது. கரோவின் கூற்றின் பிரகாரம் விபச்சார வாடிக்கையாளர்களில் எச்.ஐ.வி. / எயிட்ஸ் மற்றும் வேறு நோய்கள் ஆகியவை குறித்து ஏற்பட்டுள்ள அச்சமே இந்த வயது வீழ்ச்சிக்கான காரணமாகும்.
பெண்களின் கடத்தலைப் பொறுத்தளவில் சிறுவர்களின் வர்த்தகத்திலான அதிகரிப்புக்கு உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலில் உயர்வான கிராக்கியே காரணமாகும். “உல்லாசப் பயண வர்த்தகத்தின் நேரடியான விளைவினாலேயே சிறுவர் விபச்சாரத்தில் ந ம ப முடியாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளினால் வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய உல்லாசப் பயண கவர்ச்சியே சிறுவர் விபச்சாரமாகும். மேற்கத்தைய நாடுகளில் இந்த அற்பச் செயலுக்கு சமாந்தரமாக, சிறுவர் ஆபாசபடங்களில் உயர்வான பாதாள உலக வர்த்தகத்தின் அதிர்வெடி விளங்குகின்றது” என்று இன்டர் போல் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் பலிகடாவாவது இலகுவில் இடம் பெறுகின்றது. சில பிராந்தியங்களில், உடன் பணத்திற்காக பெற்றோர் தமது பிள்ளைகளை கடத்தல்காரர்களுக்கு விற்கின்றார்கள். அல்லது கடத்தல்காரர்கள் மிக இலகுவில் அவர்களை கடத்திச் செல்கின்றார்கள். விசேடமாக அனாதை விடுதிகளில் கடத்தப்படுவது பொதுவானதாகும். இங்கு சிறுவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றது. எந்தச் சிறுவர் தமக்குத் தேவை என்பதை எதிர்கால “உரிமையாளர்கள்’ தெரிவு செய்யல்ாம்.
ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்சின் கூற்றின் பிரகாரம், நேபாளத்தின் தரைவிரிப்பு கைத்தொழிலில் வேலை செய்யும் 900,000 சிறுவர்களில் சுமார் 10 சதவீதத்தினர் உண்மையில் கடத்தப்பட்டவர்களாவர். அதே வேளை 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் தமது பெற்றோர்களால் விற்கப்பட்டவர்களாவர். சிலர் பகல் வேளைகளில் தொழிற்சாலைகளிலும், இரவில் விபச்சார விடுதிகளிலும் பணியாற்றுகின்றனர்.
பரந்த ரீதியில் சிறுவர்களைக் கடத்துவதும், சுரண்டுவதும் பற்றி சர்வதேச முகவராண்மைகள் அதிகரித்தளவில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. கம்போடியா மீதான அண்மைய அறிக்கையொன்று குறித்து ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் குறிப்பிட்டுள்ளது. இதன் படி இங்கு பெருமளவு சிறுவர்களும், சிறு பராயத்தினரும் கொணி டுவரப்பட்டு, விபச் சார விடுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றார்கள். அதே வேளை ஏனையோர் குடித்தன வேலைக்காரர்களாக பணியாற்றுகின்றார்கள். அல்லது நிருமாண அமைவிடங் களில் அடிமை போன்ற நிலைமைகளில் பணியாற்று கின்றார்கள். மற்றையோர் ஒழங்குபடுத்தப்பட்ட பிச்சையெடுக் கும் குழுக்களில் இணைவதற்கு தள்ளப்படுகின்றார்கள்.

Anti - Slavary International 6ĩ 6öI Lj LI (6 Lổ அடிமைத்தனத்திற்கு எதிரான சர்வதேச தாபனமொன்றின் கூற்றின்படி, ஆபிரிக்காவின் மிகவும் வறுமை நாடுகளின் கிராமங்களான பெனின் அல்லது தகோ போன்றவற்றில் 8 இலிருந்து 15 வயதான சிறுவர்கள் “தெரிவு செய்யப்பட்டு" அல்லது கடத்தப்பட்டு, அண்மையில் உள்ள நைஜீரியா, கபோனி போன்ற நாடுகளுக்கு குடித்தனங்களில், பெருந்தோட்டங்களில் அல்லது விபச்சார விடுதிகளில் அடிமைகளாக வேலை செய்வதற்கு விற்கப்படுகின்றார்கள். இவ்வாறான பிரச்சனை மத்திய, மற்றும் தென் ஆபிரிக்காவில் உயர்வானதாகும். இங்கு பெருந்தொகையிலான வீதிச் சிறார்கள் கடத்தல்காரர்களின் இலகுவான இரையாக விளங்குகிறார்கள். சிலியில், ஐக்கிய நாடுகளின் உலகளாவிய அறிக்கையின் பிரகாரம், போதைப் பொருள் அடிமைத்தனத்திற்கும், விபச்சாரத் திற்கும் இடையில் , ஒரு நெருங்கிய தொடர்பு நிலவுகின்றது. சிறுவர்கள் 9, 10 அல்லது 11 வயதாக இருக்கும் பொழுதே கடத்தல்காரர்களும், தரகர்களும் அவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி விடுவார்கள். அதன் பின்னர் அவர்கள் அடிமைகளாக வைக்கப்படுவார்கள்.
உலகளாவிய விபச்சார வியாபாரத்தை பெருக்குவதில் எவ்வாறு கடத்தல்காரர்களினால் முடிந்தது என்பதற்கான பாரிய காரணம் என்னவெனில் , அரசாங்கங்களும், மனித உரிமைகள் தாபனங்களும் விபச்சாரத்தின் பெண்கள் குற்றவாளிகள் என்பதையிட்டு எளிதில் சீர்தூக்கிப்பார்த்துள்ளதுடன், கடத்தல்காரர்களின் பங்கினையும் குறைத்து மதித்துள்ளது. அத்துடன், கடத்தல்காரர்களுக்கு எதிராக பெண்கள் சாட்சிய மளிப்பதற்கு முன் அவர்கள் தமது தாய்நாடுகளுக்கு உடனடியாக அனுப்பப்படுகிறார்கள்.
கடத்தப்படுபவர்களை விட கடத்தல்காரர்கள் உதாரணமாக, மியான்மாரிலிருந்து கடத்தலில் ஈடுபடுபவர்கள் எந்த ஒரு அரசாங்கத்தினதும் தெண்டமின்றி நாட்டுக்குத் திரும்ப முடியும் என்று தாய்லாந்து சட்டங்களும், சர்வதேச கடத்தலுக்கு எதிரான விதிகளும் ஒழுங்குகளைக் கொண்டுள்ளன. எனினும் உடனடியாக நாடுகடத்தலும், சிறைத்தண்டனையும் பெரும்பாலும் சட்டமாக விளங்குகின்றன.
தாய்லாந்தைச் சேர்ந்த ரனொங் என்ற இடத்தில் அண்மையில் நடத்தப்பட்ட திடீர் வேட்டையின் போது, மியான்மாரைச் சேர்ந்த 148 இளம் பெண்களும், பெண்களும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 58 பேர் மியான்மார், கெளதயுவகில் உள்ள உத்தியோகத்தர் களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களுக்கு நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறிய குற்றச்சாட்டுக்காக மூன்று வருடச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கடத்தல் காரர்கள் தப்பிவிட்டார்கள். இத்தகவலை ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் வெளியிட்டுள்ளது.
நேபாளத்திலும், இந்தியாவிலும் கடத்தலை
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 17
குற்றவியல்படுத்தும் பெருமளவு சட்டங்கள் நடைமுறையில் இருந்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் பெண்களையும், இளம்பெண்களையும் கடத்துதல் அபரிதமாக விளங்குகின்றது. கடத்தப்படும் வழிகளில் பலதரப்பட்ட இடங்களில் கடத்தல்காரர்களுக்கு பொலிசாரும், வேறு அரசாங்க உத்தியோகத்தர்களும் உடந்தையாக இருப்பதாகவும், ஆனால், பொறுப்பாக வுள்ளவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவோ அல்லது தண்டிக்கவோ சிறிதளவே செய்யப்பட்டுள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் குறிப்பிட்டுள்ளது.
தேசங்களுக்கு இடையிலான ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றத்திற்கு எதிராக உத்தேச ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின் பெண் களையும் சிறுவர்களையும் கடத்துவதற்கு எதிரான அரசியல் அறிக்கை (protocal) அங்கீகரிக்கப்பட்டால், கடத்துவதில் ஈடுபடுபவர்களுக்கும் அல்லது அது தொடர்பான செயற்பாடுகளுக்கும் எதிராக தண்டனையை அளிப்பதற்கு நாடுகள் கடப்பாடுகளைக் கொண்டுள்ளன. அப்பாவிகளாகக் கடத்தப்படுபவர்களைப் பாதுகாப்பதற்கு நாடுகள் உடன்படவுள்ளன. இது சிறுவர் களை பராமரிப்பதையும், தமது பிரதேசங்களில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக கடத்தப்படுபவர்கள் இருப்பதை அனுமதிக்கும் குடியகல்வு சட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவதையும் உள்ளடக்குகின்றது.
கடத்தல்காரர்களை வேட்டையாடுவதை அரசியல் அறிக்கை தூண்டியுள்ளது. கடத்தல்காரர்கள், கடத்தப்படு பவர்கள், கடத்தப்படும் முறைகள் (தேர்ந்தெடுத்தல், வழிகள், தனிப்பட்டவர்களுக்கும், கடத்தலில் ஈடுபடும் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகியன உட்பட) ஆகியவற்றைக் கோருவதில் ஒத்துழைக்க நாடுகள் உடன்படவுள்ளன.
ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றத்தின் ஓர் அம்சமாக பெண்களையும், சிறுவர்களையும் கடத்துவது சம்பந்தமான இந்த ஆபத்தை ஒழிப்பதற்கு சர்வதேச சமூகத்தினாலான முன்னைய முயற்சிகளை அரசியல் அறிக்கை புதுப்பிக்கவுள்ளது. பயமுறுத்தும் வீதத்தில் கடத்தல் வலைப்பின்னல் விஸ்தரிப்பதால், இதற்கு புதியதொரு அணுகுமுறை அவசரமாக அவசியப்படுகின்றது என நாடுகள் தீர்மானித்துள்ளன. கடத்தலுக்கு எதிரான யுத்தத்தை மிகவும் சக்திவாய்ந்த சட்டக்கருவியாக வழங்குவதற்கும், சட்டத்தை நிறைவேற்றுவதற்கும், கடத்தப்படுபவர்களைப் பாதுகாப்பதற்கும் இடையில் சிறந்த சமநிலையை ஏற்படுத்துவதற்குமான நோக்கினை அரசியல் அறிக்கை கொண்டுள்ளது.
ஆட்கள் கடத்தப்படுவதை அடக்குதல் மற்றும் ஏனையவர்களின் விபச் சாரத்தை சுரண்டுதல் (கடத்தப்படுதல் சமவாயம்) மீதான 1949 சமவாயமே ஆட்கள் கடத்தப்படுவதைப் பகிரங்கமாக கண்டிப்பதற்கான முதலாவது ஐ.நா ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், கடத்தல்காரர்களையும், சட்டவிரோத விபச்சார
l6

உரிமையாளர்களையும், அவர்களுக்கு உதவியளிப்பவர் களையும் தண்டிப்பதென நாடுகள் உடன்பட்டன. கடத்தப்படுபவர்களைப் பாதுகாப்பதெனவும், அவர்களை பாதுகாப்பாக நாடுகடத்துவதெனவும் இந்நாடுகள் உறுதிமொழியளித்தன.
விபச்சாரத்திற்கு பெண்கள் கடத்தப்படுவதை தடுப்பதைக் கோரும் தீர்மானமொன்றை மனித உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு 1994இல் நிறைவேற்றியது. இதன் பின் பெண்களுக்கு எதிரான வன்முறை மீதான விசேட அறிக்கையிடுனரின் நியமனமும், சிறுவர்களின் விற்பனை, சிறுவர் விபச்சாரம், சிறுவர் ஆபாச படப் பிடிப்பு ஆகியன மரீதான விசேட அறிக்கையிடுனரின் நடைமுறையிலான வேலையும் கடத்தல் பிரச்சனை மீது மேலதிக நோக்கினை முன்வைப்பதற்கு உதவியளித்துள்ளது.
N
ப அன்புள்ள அம்மாவுக்கு - உன்
p w குழந்தை எழுதுவது - வயிற்றிலிருந்து நலமா? நீ நலமாயின் நான் நலமே ா உனக்கு ஓர் வேண்டுகோள் ஓர் ஆசை
நிறைவேற்றுவாயா?
காந்தியும், அன்னை தெரசாவும் நடந்த இப்பூமியில்
கால்பதித்து நானும் நடக்கவேண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சேவையை இம்மானிடத்திற்கு நானும் செய்ய வேண்டும் என் முன்னோர்கள் சுவாசித்த இக்காற்றை நானும் சுவாசிக்கவேண்டும் ா மரணத்தை வெல்ல முயல வேண்டும்
வசந்தத்தின் புன் சிரிப்பை பார்க்க வேண்டும்
மாரியின் அட்டகாசச் சிரிப்பை பார்க்க வேண்டும் கோடையின் சுடுவிழிகளை நோக்க வேண்டும் லட்சிய பாதையின் முடிவிடம் கண்டு ா ஆனந்தக் கூத்தாட வேண்டும்
உன் மடிமீது என் முகம் புதைத்து கதறி அழவேண்டும்
எனவே எனவே
என் தாயே பெண்ணென்று எனை நீ கருவிலேயே கண்டுபிடித்தாலும்
கலைத்துவிடாதே அம்மா
கலைத்துவிடாதே
V -வானதி தர்மகுலசிங்கம்
الم
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 18
முறைசாரா துறை தொழிை அவசியமும், நுண்
"அண்மைய வருடங்களில், சந்தைச் சக்திகளின் அதிகார நோக்கிய முனைப்பானதுமான பொருளாதாரச் சூழ பாரிய நோக்காக பெண் தொழில் உரிமையாளர்கள் விை முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் தவறி சிறு, குடிசைக் கைத்தொழில்கள் ஆகிய இரண்டைய மீதான வலியுறுத்தல் நோக்கப்படுகின்றது.”
இலங்கையில் பெணி தொழிற் றுறை உரிமையாளர்களின் நிலையின் முழுமையான கவனத்தை மேற்படி கூற்று கொண்டுவருகின்றது. சந்தை முனைப் பான பொருளாதாரத்தினால் வழங்கப்படும் சவால்களை நிறைவேற்றுவதற்கும், தொழிலின் குறைந்த சுரண்டலுடனும், அதிகளவு கெளரவத்துடனும் பொருளாதாரத்திற்கு அதிகரித்த உற்பத்தித் திறன் பங்கெடுப்பையும், பங்களிப்பையும் கொண்டு வரும் தன்மையில் அதன் துரித வளர்ச்சிக்கும் தொழிற்றுறை உரிமையாளர்களாக பெண்களை விருத்தி செய்வதற்கான முக்கியத்துவம் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பெண் தொழிற்றுறை உரிமையாளர்களை மேம்படுத்துவதற்கு சிறிதளவே செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு உறுதியானதும், கவனிக்கத்தக்கதுமான பங்களிப்பை பெண்கள் செய்யக்கூடிய ஒரு தோதான சூழலும் உருவாக்கப்படவில்லை.
இந்த சமநிலை மாறாத நிலைக்கு பிரதான காரணம் என்னவெனில், ஏற்றுமதி முனைப்பான சந்தை வளர்ச்சி மீதான மிகையான வலியுறுத்தலும், பெயரந்த மட்ட கைத்தொழில் சம்பாத்தியங்களை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதுமாகும். இதற்கு மேலதிகமாக, பெயரந்த மட்டப் பொருளாதார செயற்பாடுகளின் செறிவும், அவற்றின் முடிவுகளும் ஏழைகளுக்கு, விசேடமாக ஏழைப் பெண்களை வெறுமனே சிறிது சிறிதாகவே அடைந்துள்ளது. இதன் விளைவாக, முறைசாரா துறையில் ஒரு மிகவும் குறைந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
1970களின் முற்கூற்றில், பாரிய அளவிலான இறக்குமதி வர்த்தகத்தை விருத்தி செய்கையில், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உற்பத்திகளை வழங்குவதற்கு சாத்தியவள வழிவகைகளாக மட்டுமே நோக்கப்பட்டது. வீட்டு அடிப்படையிலான ஊழியர்களினால் பெரிதும்

ல விருத்தி செய்வதந்தான
கடனின் பங்கும்
ரமணி ஜயசுந்தர
ம் செலுத்துவதும், தனியார் துறையின் மேம்படுத்தலை லொன்றில் அபிவிருத்தியிலான செயலுபாயங்களின் ாங்கியுள்ளார்கள். எனினும், பெண்களின் பொருளாதார யுள்ள முறைமையான துறை மற்றும் மரபுரீதியான ம் பொறுத்தளவில் பெண் தொழிற்றுறையுரிமையின்
மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் செயற்பாடாக பாரம்பரியமாக கைத்தொழில்கள் நோக்கப்பட்டன. முறைசாராத் துறைக் கைத்தொழில்களை மேம்படுத்து வதற்கு அப்போதைய அரசாங்க நிருவாகத்தினாலான முயற்சியில் 1977இல் திறந்த சந்தைக் கொள்கைகளை கடைப்பிடித்தலுடன் அதாவது ஏற்றுமதி முனைப்பான கைத்தொழில்மயமாக்கலுக்கும், பாரிய முனைப்பான கைத்தொழிலுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு பெரிதும் செல்லாததாக்கப்பட்டது. இருந்தும், நாட்டின் பொருளாதாரம், மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றினால் கைத்தொழில் மீது முன்வைக்கப் பட்டுள்ள வலியுறுத்தல் மற்றும் குறைந்த மட்டத்திலான ஆர்வம் ஆகியவற்றினால் உறுதியான பொருளாதாரச் சக்தியாக முறைசாரா துறை மீள வெளிப்படையடை வதாகத் தோன்றுகின்றது. எனவே, விசேடமாக பொருளாதாரச் சந்தர்ப்பங்களுக்கு ஓரளவு தேர்ச்சி பெற்றதும், தேர்ச்சி பெறாததுமான ஊழியர்களுக்கு வழங்கப்படும் (பெரிதும் பெண்கள்) உற்பத்தித் திறனாகவும், நிலைத்திருத்தற் மாற்றீடாகவும் இத் துறையை அபிவிருத்தி செய்வது மீதான நோக்குக்கான அவசியம் வெளிப்பாடானதாகும். கொள் கைகள் , போக் குகள் , எண் ணங்கள் ஆகியவற்றை மீள்வகுத்தமைப்பதற்கான அவசரத் தேவையொன்று தற்போதுள்ளது.
முறைசாரா துறை கைத்தொழில் மீதான தரவினதும், புள்ளிவிபரங்களினதும் பற்றாக்குறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரச் செயற்பாடுகளின் நோக்கெல்லைக்கு வெளியே தற்போதும் நிலவுகிறது என்ற உணர்மையைச் சுட்டிக் காட்டுகின்றது. “வேலையின்" வரைவிலக்கணமும், ஏற்றுக்கொள்ளப் பட்ட குணவியல்புகளும் பணம் சம்பந்தப்பட்ட துறைக்கும், அதன் செயற்பாடுகளுக்கும் மட்டுப்பட்டு ள்ளதுடன், இது முறைசாரா துறைச் செயற்பாடுகளைத் தவிர்க்கின்றது.
17 பெண்ணின் குரல் (3LD, 2000

Page 19
முறைசாரா துறை மீது வைக்கப்பட்டுள்ள வலியுறுத்தலானது மேற்படி அட்டவணையில் காண முடியும் . இதில் சொந்தக் கணக்கு ஊழியர்களினதும் , கொடுப்பனவற்ற குடும்ப ஊழியர்களினதும் சதவீதமானது கொடுப்பனவாகும். இத்துறைகளில் கூட கடந்த இரு தசாப்தங்களில் வீதங்கள் மாறுபட்டுள்ளன. இது ஓரத்திலான ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றது. ஆனால், குறைவாகவே விளங்குகின்றது. முறை சாராத் துறையின் புள்ளிவிபரங்கள் அவற்றின் முடிவுகளையிட்டு பெரிதும் வினாவெழுப்பப்படுவதுடன், ஆனால், உண்மையான சமூகச் சூழ்நிலையில் முறைசாரா கைத்தொழில் நிலவுகின்றதா என்பது சந்தேகிக்கப்படு வதுடன், கொள்கைக் கவனமெடுப்பு, ஆதரவு ஆகியவை இனி மையினால் அதன் பங்கு, பங்களிப்பு ஆகியவற்றுக்கு தடங்கலும் ஏற்படுகின்றது.
முறைசாராத் துறையின் முக்கியத்துவமும், பெயரந்த மட்ட சந்தை முனைப்பிலான பொருளாதார த்திற்கு சவாலாக வருவதற்கு சிறிய, நடுத்தர அளவிலான தொழிற்றுறை உரிமையை விருத்தி செய்வதற்கான அபிவிருத்தியும் இலங்கையின் வருமான பங்கீட்டின் பாகுபாட்டின் காரணமாக பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சந்தை முனைப்பான கொள் கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வியக்கத்தக்க வளர்ச்சி வீதங்களில் பதிவுசெய்து, வளமாக்கியுள்ள போதிலும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வருமான இடைவெளி குறிப்பிடத்தக்கதாக விளங்கியுள்ளதுடன், பரந்தளவில் வளர்ச்சியடைந்துள்ளது. சனத்தொகையின் உச்ச 10% இனி வருமானத் திணி பங்கு தொடர் நீ தும் அதிகரித்துள்ளது. இது 1973இல் 30% ஆகவும், 1978/ 79இல் 39.1% ஆகவும், 1981/82இல் 41.7% ஆகவும், 1985/86இல் 49.3% ஆகவும் விளங்கியது. அடி மட்டத்திலான 40% இன் வருமானத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது 1973இல் 15.1% ஆகவும், 1978/79இல் 12.1% ஆகவும், 1981/82இல் 11.8% ஆகவும், 1985/86இல் 7.1% ஆகவும் விளங்கியது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு உற்பத்தித் திறனாகப் பங்களிப்பதற்கு முறைசாராத் துறையை விருத்தி செய்யு முகமாக, முறைசாராக் கைத்தொழில் துறையினதும், முறையான தொழில் படையின் பாகமாக துறையில் ஈடுபட்டுள்ள முறைசாரா தொழில் படையினதும் அங்கீகாரத்திற்கு இட்டுச்செல்லும் தீவிரமான மாற்றங்கள் அத்தியாவசியமாகும். “முறைசாரானது” என துறை விளங்கும் வரை, அதன் முக்கியத்துவம் அரசாங்கத்திற்கும், பொருளாதா ரத்திற்கும் , கொள்கை வகுப்பவர்களுக்கும் இரணி டாம் பட்சமாக விளங்குவதுடன், சகல மட்டங்களுக்கும் படிப்படியாக பரவும்.
1

மான்யங்கள், ஊக்கப்படிகள், உலர்பொருட்கள், நிபுணத்துவம், தொழில்நுட்ப ஆதரவின் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் தன்னிச்சையான ஆதரவுச் சேவைகளை விளைவிக்கும் ஏற்றுமதி முனைப்பான கைத்தொழில்களுக்கு, முறைசாராத்துறைக்கு வழங்கும் சமமான வலியுறுத்தலையும், முக்கியத்துவத்தையும் கொண்ட நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை மீள வரையறுத்தல், ஏற்றுமதி முனைப்பான பெயரந்த மட்ட கைத்தொழிலுக்கு கிடைக்கப்பெறும் சாத்தியவளச் சந்தைகளை அடைதல், பராமரித்தல் ஆகியவற்றை முறைசாராத் துறையின் “தரமுயர்த்தல்” அடக்குகின்றது. இதே போல, முறைசாரா துறைக்கான நடைமுறை யிலுள்ள தொழில் சட்டங்கள் விஸ்தரிக்கப்பட வேண்டும். இதன் மூலம், நாட்டின் தொழில் சட்டங்களிலிருந்து சகல தும், முழுமையானதுமான ஆதரவையும் , பாதுகாப்பையும், கடன் என்ற அமைப்பில் நிதிசார் ஊக்கங்களையும் துறையானது பெற்றுக் கொள்ளும்.
இது தொடர்பில் , பெண் தொழிற்றுறை உரிமையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். முறைசாரா துறைகளின் இரண்டாம் நிலை அந்தஸ்தின் பாரம்பரிய நோக்கானது துறையில் உள்ள பெண்களின் பங்கில் இருந்து பிரதானமாக கிளைவிடுகின்றது. இங்கு பாரம் பரியமாகப் பெண் கள் தங்கியிருக்கும் இல்லத்தரசிகளை அடக்கும் தொழில் ஒதுக்காக நோக்கப்படுகின்றது. இரண்டாம் நிலையிலான உழைப்பாளர்களாக விளங்கும் இல்லத்தரசிகள், குடும்ப வருமான தி தைக் குறைநிரப் புவதற்கு எளிய பொருளாதார செயற்பாடுகளைப் பொறுப்பேற்கலாம். முறைசாராத் துறைக் கும் , சிறு அளவிலான தாளாணி மைகளுக்கும் எதிரான பொதுவான பாகுபாட்டுடன் இணைந்துள்ள இந்த பால் நிலை பாகுபாடானது தொழில் சந்தையிலும் , பொருளாதாரத்திலும் அரசாங்க மற்றும் முறைமையான துறை முன்னுரிமையைப் பெறுவதற்கு பெண் தொழிற்றுறை உரிமையாளர்கள் மீது மேலதிக சுமையை முன்வைக்கின்றது. முறைசாரா துறையின் முக்கியத்துவத்துவம், தமது சொந்த பொருளாதார சூழி நிலைகளுக்கு பெணி தொழிற் றுறை உரிமையாளர்களின் பங்களிப்பு, நிலைத்திருக்கும் தனி மையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்காக அவர் களது ஆற்றலளவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை செல்லாததா க்குவதனால் முறைசாரா துறையினதும், பெண் தொழிற்றுறை உரிமையாளர்களினதும் சாதனைகளும், ஆற்றலளவும் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்த ப்பட்டுள்ளன. துறையை விருத்தி செய்வதன் உறுதியான நிலையையும், முக்கியத்துவத்தையும் ஒரு பெரும் எண்ணிக்கையிலான சுயேச்சையான ஆய்வுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சுட்டிக் காட்டியுள்ள போதிலும், ஆய்வுகள், அறிக்கைகள் அல்லது விரிவான
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 20
தேசிய மட்ட புள்ளிவிபரங்கள் ஆகியன கிடைக்கவில்லை.
குடும்பப் பொருளாதாரத்திற்கு முதனிலை வருமானம் ஈட்டுபவர்களாகப் பங்களிக்கும் சுயதொழிலிலான பெண் தொழிற்றுறை உரிமையாளர் களின் படையொன்று தோன் றியுள்ளமையே முறைசாராத் துறையின் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்றாகும் . இப் பெண் களில் பெரும் பான் மையோர் வேறுபட்ட கல விசார் மட்டங்களுடனான நகர மற்றும் கிராமியத் துறைகளில் குறைந்த வருமான மட்டங்களைச் சேர்ந்தவர்களாவர். ஆனால், தொழில்படையில் பெரிதும் ஓரளவு தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்றுமதி முனைப்பான கைத்தொழில்களுக்கு மலிவான தொழிலின் பாரிய பகுதியை உற்பத்தி செய்யும் சனத்தொகையின் அதே சமூக அடுக்கு இதுவாகும். அரசாங்க மூலங்களில் இருந்து ஆகக் குறைந்தளவில் கிடைக்கும் ஆதரவுச் சேவைகளைப் பயன்படுத்தியும், அரசாங்க சார்பற்ற துறைகளில் இருந்து தொடர்புரீதியில் பரந்தளவிலான ஆதரவுடனும் பெண்களினாலான லாபகரமானதும், உற்பத்தித்திறனானதுமான சுய தொழிலை நோக்கிய இந்த நடவடிக்கையானது முறைசாரா துறை மீது புதிய வரைவிலக்கணங்களையும் புதிய கிராக்கிகளையும் கொண்டு வந்துள்ளது. வருமானம் தோற்றுவிப்பதற்கு நுண், மற்றும் நடு மட்ட கடனின் பங்கே பிரதான துறையில் ஒன்றாகும்.
கடந்த காலத்தில் சுய முகாமையிலான வருமானம் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் பெண்களின் குறைந்த மட்டத்திற்கு பங்களித்த பிரதான காரணிகளில் ஒன்றாக, கடன் வசதிகளுக்கு பெண்களின் அடைய முடியாத தன்மையாகும். இரண்டாம் நிலையில் முறைசாரா துறையை முன்வைத்துள்ள அரசாங்கக் கொள்கையினால் அதிகளவிலான பளுவினாலும், இல்லத்தரசிகளாகவும், சிறுவர் பராமரிப்பாளர்களாகவும் பெண்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட பாரம்பரிய பங்குகளினாலும் தசாப்தகாலங்களாக கடன் வசதிகளை அடைவதற்கு பெண்கள் மறுக்கப்பட்டுள்ளனர். திறந்த சந்தை கொள்கைகளையும், ஊக்கப்படிகளையும் கடைப்பிடித்த போதும், பாரிய அளவிலான ஏற்றுமதி முனைப்பான பொருளாதாரத் தாளாண்மைகளுக்கு அதிகளவு ஆதரவு அளிக்கப்பட்ட போதும், தேர்ச்சி பெறாத பெண் தொழிலாளருக்கு கிராக்கியை ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியுறும் தொழில் சந்தையில் இணைவதற்கு எதிர்ப்புள்ளது போன்று, சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தாளாண்மைகளில் ஈடுபடுவதற்கு முயலும் பெண்கள் பிரயாசையான பணியொன்றுக்கு முகம் கொடுக்கிறார்கள். வறுமையிலிருந்து நீங்குவதற்கும், திருந்திய பொருளாதார, சமூக நலனுக்கும் ஆரம்பநிலை நெம்புகோலாக பொருளாதார
1.

அதிகாரமளிப்பும் ஆரம்பிக்கும் புள்ளியாக கடனுக்கான அவசியமும் உணரப் பட்டுள்ள போதிலும் , உத் தர வாதங்களையும் கூட்டுக் களையும் சமர்ப்பிப்பதற்கு இயலாததன் விளைவாக மோசமான கடன்பெறுனர்களாக பெண்கள் விளங்குகிறார்கள் என்ற பாரம்பரிய நம்பிக்கைகளின் காரணமாகவும், கடன்களை மீளச் செலுத்துவதற்கு பெரிய அளவிலான தாளாணி  ைமகளைப் பராமரிப்பதற்கான இயலாமையினாலும் பிரதான நீரோட்ட நிதி, வங்கியாடல் துறைக்குள் பிரவேசிப்பதற்கு பெண்கள் மறுக்கப்படுகின்றனர்.
1975இல் அபிவிருத்தி வளங்களுக்கு பெண்கள் அடைதலில் பரந்த பாகுபாடுகள் மீது சர்வதேசப் பெண்கள் நோக்கினைக் கொண்டிருந்தது. பெண்கள் பணியகத்தினால் ஆதரவளிக்கப்பட்ட வருமானம் தோற்றுவிக்கும் திட்டங்களுக்கான கடன் வசதிகளை வழங்குவதற்கு மக்கள் வங்கிக்கும், இலங்கை வங்கிக்கும் இடையில் கூட்டு முயற்சிகளுக்கு இது உயர்ச்சியை அளித்தது. அரசாங்க வங்கிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய தொகையிலான பரவலான திட்டங்களும், அரசாங்க ஆதரவளிப்பிலான வறுமைத் தணிப்புத் திட்டங்களும், சிறிய அளவிலான பெண் தொழிற்றுறை உரிமையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கு அரசாங்க சார்பற்ற தாபனங்களும் இதைப் பின்தொடர்ந்தது.
வருமானம் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை வசதிப்படுத்துவதில் அரசாங்க அல்லது அரசாங்க சார் பற்ற தாபனங் களால் வழங்கப் படும் உத்தரவாதங்களின் அடிப்படையில் சிறிய அளவிலான வருமானம் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் மீது செறிந்துள்ள இத்திட்டங்களின் தாக்கமானது, சிறிய அளவில் என்றாலும் சமுதாய மட்ட பொருளாதார நடைமுறையில் தீவிர பங்கெடுப்பதற்காக இல்லத்தரசி, இல்லத்தை அமைப்பவர் என்ற தமது பாரம்பரிய பங்குகளில் இருந்து பெண்கள் வெளியே வந்த போது உணரப்பட்டது. கடன் வசதிகளுக்கு அடைதலை பெண்கள் கொண்டிருந்ததன் விளைவாக மிகவும் உயர்ந்த வட்டி வீதத்தில் ஏழைப் பெண்களுக்கு கடனை வழங்குவோர் மீது தங்கியிருத்தல் குறைவடைந்தது. பெண்களின் வருமான மட்டங்கள் அதிகரித்து, அது ஓரத்திற்குரிய திருந்திய வாழ்க்கைத் தரங்களுக்கும், சிறுவர்களுக்கான சிறந்த கல்வி போன்ற வேறு சமூக நன்மைகளுக்கும் வழி வகுத்தது. சிறிய தொகைகளில் சேமிப்புக்கள் திரண்டிருப்பதையும், சில வேளைகளில் குழுக்களாகச் சேமிப்பதற்கு தம்மைப் பெண்கள் ஒழுங்குபடுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.
சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான கடன் திட்டங்களின் உண்மையான நோக்கம் என்னவெனில்,
பெண்ணின் குரல் O (3D, 2000

Page 21
தொழில்நிலை தொழில் தருனர் சம்பளத்திலான ஊழியர் சொந்தக் கனக்கு உடமையாளர்* கொடுப்பனவற்ற குடும்ப ஊழியர்*
குறிப்பு
இலங்கையின் குடிசனமதிப்பீடு, 1981, தோழில்படை, சமு: 1994, நான்காவது காலாண்டு (வடக்கு. கிழக்கு மாகாணங்க குடிசன, வீடமைப்பு மதிப்பீடு 1971, 1981, இலங்கை : மாகாணங்கள் புறநீங்கலாக, குடிசன மதிப்பீட்டு, புள்ளி
* தனது சொந்த தாளாண்மையை அதாவது நோக்கத்திற்: வேறு பங்காளர்களுடன் சேர்ந்து முற்றிலும் சொந்தமாகக் சொந்தக் கனக்கு உரிமையாளர் ஆவார். ஒரு வியாட அல்லது ஒரு பண்ணையாக தாளாண்மை விளங்கலாம். வேலையின் தற்காலிகமான அவசர சந்தர்ப்பங்களை பூர் காலங்களுக்கு காலத்திற்கு காலம் தொழிலாற்றும் சமய தொழிற்படுத்தும் ஓர் ஆள் சொந்த கணக்கு ஊழியராக பங்கிலிருந்து வரைவிலக்கணம், குடிசன மதிப்பீட்டு. புள்ள
" வியாபாரத் தாளாண்மையாக ஒரு சேவைப் பொறுப்பு
தொழிற்படுத்தப்படும் ஒரு பண்ணையாக இருக்கும் தாள ஆளொருவர் கொடுப்பனவற்ற குடும்ப ஊழியாராவார். வரைவிலக்கணம், குடிசன மதிப்பீட்டு. புள்ளிவிபரத் தினை
வருமானத் தோற்றுவிப்புக்கான வழிவகைகளை பெண்களுக்கு வழங்குவதன் மூலம் வறுமையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதாகும். இருந்தும், இதற்கான அணுகுமுறையானது, வறுமையிலிருந்து பெண்களை மீட்டெடுக்கும் நோக்கிலிருந்து ஓரளவு நீக்கப்பட்டு ள்ளதாகத் தெரிகிறது. சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான வருமானம் தோற் று விக் கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பெண்களுக்கான நுன்ை கடன் வசதிகளை வழங்குவதை நோக்கிய உந்துதலின் பின்னரான இரு தசாப்தங்களில் கடன் வழங்கல் நுண் மட்டத்தில் இருந்துள்ளது. பெருமளவு கடன் திட்டங்கள் உயர்ந்த மீள் கொடுப்பனவு வீதங்களையும் , கருத்திட்டங்களிலிருந்து பதிவாகிய உயர்வான வருமானங்களையும் பொறுத்தளவில் வெற்றிகரமாக விளங்கிய போதிலும் , பாரிய அளவிலான மூலதனங்களுக்காக பாரிய அளவிலான கடன்களைப் பெறுவதற்காகப் பிரதான நிரோட்ட வங்கியாடல் அமைப்பில் பிரவேசிப்பதற்கு அதன் பெண் தொழிற்றுறை உரிமையாளர்களை மேம்படுத்துவதற்கு பகிர்ந்தளிக்கத் தவறியுள்ளன. நுணி மட்ட தொழிற் றுறை உரிமையாளர்களை விருத்தி செய்வதற்காக
 

E - போருளாதார அளவீடு 1985/8690. தொழில்படை அளவீடு வில் புறநீங்கலாக குடிசனமதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம், தோழில்படை அளவீடு. 1985, 1991, 1995 (வடக்கு, கிழக்கு பிபரத் தினைக்களம்.
காக கிரமமாக தொழில்படுத்தாத ஊழியர்களின் உதவியின்றி கொண்டிராத தாளாண்மையை தொழிற்படுத்தும் ஓர் ஆளே ார தாளாண்மையாக, ஒரு சேவைப் பொறுப்பு முயற்சியாக கொடுப்பனவற்ற குடும்ப ஊழியர்களின் உதவியுடன் அல்லது த்தி செய்வதற்கான வேளையில் ஒரு மாதத்திற்குக் குறைந்த பாசமய ஊழியர்களின் உதவியுடன், தனது தாளாண்மையைத் கருதப்படுவார். (இலங்கையில் பெண்களின் மாற்றமடையும் ரிவிபரத் திணைக்களம், 1997, பக்.173).
முயற்சியாக அல்லது குடித்தனத்தின் உறுப்பினர் ஒருவரால் ாண்மை ஒன்றில் ஏதாவது கொடுப்பனவின்றி வேலை செய்யும்
(இலங்கையில் பெண்களின் மாற்றமடையும் பங்கிலிருந்து I 145,5IIIf. 1997. LJai. 173).
படிப்படியானதும், முறைமையானதுமான நடைமுறை யானது, பெயரந்த பொருளாதாரக் காட்சிக்குப் பங்களிப்புச் செய்யும் பெயரந்த மட்டத்தில் பணியாற்றும் பெண் தொழிற்றுறை உரிமையாளர்களை உற்பத்தி செய்வதற்கு கடன் திட்டங்களுக்காக இடம்பெறவில்லை.
கடந்த இரு தசாப்தங்களில் தொழிற்பட்ட நுண், மற்றும் நடு மட்ட கடன் திட்டங்களின் சமூகவியல் தாக்கம் நன்மைபயப்பதாக விளங்கியது. இதற்குச் சான்றாக ஒரு பாரிய தொகையிலான ஆய்வுகளும், கட்டுரைகளும் உள்ளன.
இருந்தும் , வளமடைந்துள்ள சந்தை முனைப்பான பொருளாதாரத்தின் சவால்களைப் பூர்த்தி செய்யவும், அதன் வளர்ச்சி வீதத்திற்கு அமைவாகவும் கடந்த காலங்களில் சிறிய அளவிலான பெனன் தொழிற்றுறை உரிமையாளர்கள் செயலுபபாங்களை மீள் நினைத்துப் பார்ப்பதற்கான அவசியமுள்ளது. சந்தைச் சக்திகளை பூர்த்தி செய்வதற்குப் போதுமான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்வதற்கு அரசாங்க
2O பெண்ணின் குரல் D மே, 2000

Page 22
இயந்திரம், வர்த்தகத் தாபனங்கள், அரச சார்பற்ற துறை ஆகியவற்றிலிருந்து ஆதரவை அவர்கள் கோரவேண்டும். எனினும், நடைமுறையானது வர்த்தக வங்கிகளுடனான கூட்டுமுயற்சியில் அரச சார்பற்ற துறைத் தாபனங்களினால் மேற்கொள்ளப்படும் சிறிய தொகையிலான கடன் முயற்சிகளினால் நோக்கப்பட்டவாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்களின் கீழ், அரச சார்பற்ற தாபனங்களினால் தொழிற்படுத்தப்படும் கொடையளிப்பு ஆதரவளிப்பிலான கடன் திட்டங்களினால் வழங்கப்படும் நுணி கடன்களுடன் சிறிய அளவிலான வருமானம் தோற்றுவிக்கும் கருத்திட்டங்களை ஆரம்பிக்கும் பெண் தொழிற் றுறை உரிமையாளர்கள் , வர்த்தக வங்கிகளுடன் கூட்டுமுயற்சியில் ஈடுபடும் இதே தாபனங்களினால் வழங்கப்படும் பாரிய கடன்களை தற்போது அடைவதற்கான அந்தஸ் தைச் சாதித்துவிட்டார்கள். சமுதாய மட்டத்தில் அல்லது அடிமட்டத்தில் கூட ஆரம்பிக்கும் பெண் தொழிற்றுறை உரிமையாளர்கள் சாத்தியவளமான பாரிய அளவிலான தாளாண்மைகள் ஊடாக பிரதான நீரோட்ட வங்கியாடல் அமைப் பில் பிரவேசிக்க துரிதமாக விருத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
எனினும் , இது தொடர்பில் , சந்தைப் பொருளாதாரத்தினுள் பெணி தொழிற்றுறை உரிமையாளர்களின் பலன்தரக்கூடிய பிரவேசத்தை கடன் ஆதரவு மட்டும் உறுதிப்படுத்தமாட்டாது. தேர்ச்சி அபிவிருத்திக் கான நடைமுறையிலுள்ள சந்தர்ப்பங்களையும் நவீன தொழில்நுட்பத்திற்கான அடைதலையும் பகுப்பாய்தல், கிடைக்கப்பெறும் சந்தைகளை அடைதல் , சந்தைகளையும் , சந்தைப்படுத்தல் செயலுபாயங்களையும் விருத்தி செய்தல், நடுத் தர அளவிலானதும், பாரிய அளவிலானதுமான உற்பத்தியாளர்களாக வருவதற்கு சிறிய அளவிலான கைத்தொழில் அதிபர்களை மேம்படுத்துவதற்கு இத்தகைய ஆதரவுச் சேவைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியன அத்தியாவசியமாகும்.
சிறிய அளவிலான பெண் உற்பத்தியாளர்கள் நடுத் தர, மற்றும் ust fu அளவிலான உற்பத்தியாளர்களாக வருவதற்கான இடைவெளியை உறுதிப்படுத்துவதில் இலங்கை சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நிலவும் பாரம்பரிய பால்நிலை பாகுபாடுகளைச் சரிக்கட்டுவதே பாரிய தடைகளில் ஒன்றாக விளங்குவதாகப் பெரிதும் சொல்லப்படுகின்றது. எனினும் ஒரு பாரிய அளவுக்கு பால்நிலைகளையும் ஒரே மாதிரியான போக்குகளையும் களைந்து விட்டு கடந்த இரு தசாப்தங்களில் சந்தைப் பொருளாதாரத்தின் சவால்களைச் சரிக்கட்டுவதற்கு தோன்றியுள்ள பெண்களின் தன்மையானது வேறு வகையில் காட்டுகின்றது.

cs> -c2 >~Se-5 SDN- eto சூரியனாய் நட்சத்திரனாய்
உடுக்களாய் உலாவரும் மானிடம்உனக்கு மட்டும் ஏன் வாழ்வை அமாவாசை இருட்டாயப் அடையாளம் காட்ட வேண்டும்? சிந்தனை செய் பெண்ணே. சிந்தனை செய்! நீ மட்டும் சந்திரோதயமாகலாம் உன் சீவியம் கும்மிருட்டில் குடியிருக்க வேண்டுமாம் சிந்தனை செய் பெண்ணே. சிந்தனை செய்!
LDITL, LDİT61flopéu76ü ി மகுடமேறிய மமதையில் 6 ای. மாட்சிமைக்குரியவர்களாய் کا لام' மார்தட்டிக் கொள்ளும் மானிடம் ငွ¥) ჯა` உனக்கு மட்டும் ஏன் ്യ
சட்டங்கள் பல திட்டி கொட்டங்கள் அடிக்க வேண்டும்? சிந்தனை செய் பெண்ணே. சிந்தனை செய்!
ஆளப் பிறந்ததாகவும் அனுபவிக்கப் பிறந்ததாகவும் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் மானிடம் அகிலத்தையே ஆளுமை செய்ய அங்கீகரிக்கப்பட்டவர்களாய் அதிகாரக் களிப்பில் இருக்கும் போது உனக்கு மட்டும் ஏன் சமையலறையையே சாம்ராஜ்யமாக்க வேண்டும்? சிந்தனை செய் பெண்ணே. சிந்தனை செய்!
உன் எல்லைகளைக் குறுக்கி மனவெழுச்சிகளை மழுங்கடித்து தொட்டிகளுக்குள் குட்டையாய் நின்று போன பொன்சாய் மரங்களாய் உன் வளர்ச்சியை வரையறைப்படுத்திட வானளாவ ஓங்கி உயரும் குரல்களினூடே எதிர் நீச்சலிட்டு நீ போராடத்தான் மாட்டாயோ? ஆதலால் சிந்தனை செய் பெண்ணே. சிந்தனை செய்!
நீ தான் இன்றைய யுகத்தில் அடக்குமுறையின் குளுரைக்கப்பட்ட எதிரி புதுமைப் புரட்சியின் நவீன பிரதிநிதி சமுதாய சிந்தனையின் சமயோசித உயிர்நாடி புதிய சித்தாந்தங்களின் பெரு விருட்சம் தேடல்களின் தீனி அடிமைச்சிறையின் சாவுமனி பெண்ணியம் ஈன்றெடுத்த பக்குவக் குழந்தை மொத்தத்தில் நீ ஒரு "பீனிக்ஸ்’ பறவை எரித்தேவிட்டாலும் சாம்பலிலிருந்து மறுபடியும் உருவாகும் - பீனிக்ஸ் பறவை ஆகவே சிந்தனை செயப் பெண்ணே. சிந்தனை செய்!
-முர்வறிதா மீராலெப்பை CS -- c2 >~Se-5 SDN- edo
21 பெண்ணின் குரல் 0 மே 2000

Page 23
glasabupus Disraja)
பஞ்சாப்பில் உள்ள பத்திந்தா என்ற இடத்திற்கு நான் அண்மையில் விஜயம் செய்திருந்தேன். காரணம்: கமக்காரர்கள் தற்கொலை செய்யும் தொற்று நோய் குறித்து ஆராய. இந்தியாவிலேயே மிகவும் சுபீட்சமான கமத்தொழில் பிராந்தியமாக பஞ்சாப் விளங்குகின்றது. இன்று, ஒவ்வொரு கமக்காரனும் கடனிலும், நம்பிக்கை யின்மையிலும் மூழ்கியுள்ளான். அதிகளவு நீண்டு, பரந்துள்ள நிலங்கள் நீர் தன்மையற்ற வனாந்தரமாகக் காட்சியளிக்கின்றன. வயதான கமக்காரன் ஒருத்தன் சுட்டிக் காட்டியுள்ளது போன்று, மரங்கள் கூட காய்ப்பதில்லை. கிருமிநாசினிகளை மிகவும் தாராளமாக உபயோகிப்பதனால் அவை மகரந்தச் சேர்க்கைகளை ஏற்படுத்தும் தேனீக்களையும், வண்ணாத்திப் பூச்சிகளையும் கொன்று விடுவதே இதற்கான காரணமாகும்.
இந்த சூழலியல், சமூக அழிவினை பஞ்சாப் மட்டும் அனுபவிக்கவில்லை. கடந்த வருடம் ஆந்திர பிரதேசத்தின் வராங்கலில் நான் இருந்த போது, கமக்காரர்கள் தற்கொலை செய்வதை அறிந்தேன். தானியங்கள், தினை, சோளம் மற்றும், நெல் ஆகிய வற்றைப் பாரம்பரியமாக செய்கை பணி னிய கமக்காரர்களிடம் அவர்களை லட்சாதிபதியாக்கும் என எண்ணப்பட்ட "வெள்ளைத் தங்கம்” எனக் குறிப்பிடப்படும் கலப்பின பருத்தி விதைகளை வாங்கும் படி விதைக் கம் பெனிகளால் துTணி டப்பட்டுள்ளனர். அதை செவிமடுத்ததன் பலன் அவர்கள் ஏழைகளாகியுள்ளனர்.
புதிய கலப்பினங்களின் அறிமுகத்துடன் அவர்களின் மரபுவழி வந்த விதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலப்பினங்களைப் பொறுத்தளவில் அவற்றைச் சேமித்து வைக்க முடியாது என்பதுடன், உயர்ந்த ஆகுசெலவில் ஒவ்வொரு வருடமும் கொள்வனவு செய்யப்படுவது அவசியமாகும். கிருமித் தாக்குதல்களுக்கு கலப்பினங்கள் மிகவும் ஊறுபடத்தக்கவையாகும். வராங்கலில் கிருமிநாசினிகளுக்கு செலவழிக்கப்படும் தொகை 2000 சதவீதத்தால், அதாவது 1980களில் 2.5 மில்லியன் டொலர்களாக இருந்து 1997இல் 50 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இப்பொழுது அதே கிருமிநாசினிகளை தம் உயிர்களைப் போக்குவதற்கு கமக்காரர்கள் உட்கொள்கிறார்கள். இதன் மூலம் கொடுப்பனவு செய்ய முடியாத கடனில் இருந்து நிரந்தரமாக தப்பிவிட முடியுமாம்!
மூலவுயிருரு ரீதியில் உருவாக்கப்பட்ட விதையை அறிமுகப்படுத்த கூட்டுத்தாபனங்கள் தற்போது முயல்கின்றன. இவை மேலும் ஆகுசெலவுகளையும், சூழலியல் அபாயங்களையும் அதிகரிக்கின்றன. இதனால்
2.

Syb, og ØɔUDNgub
தான் ஆந்திர பிரதேச கமக்காரர் சங்கத்தைச் சேர்ந்த மல்ல ரெட்டி போன்ற கமக்காரர்கள் வராங்கலில் மொன்சான்போவின் மூலவுயிருரு ரீதியில் உருவாக்கப்பட்ட பொங்கார்ட் பருத்தியை பிடுங்கி எறிந்துள்ளனர்.
மார்ச் 27 அன்று 25 வயதான பெத்தவதி ரத்தன் என்பவர் தனது உயிரைப் போக்கினார். ஏனெனில் தனது இரண்டு ஏக்கர் பண்ணையில் ஆழ் குழாய்க் கிணறைத் தோண்டுவதற்காகப் பெற்ற கடனை அவரால் அடைக்க முடியவில்லை. கிணறுகள் தற்போது வரண்டுள்ளன. இதே போல் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் கிணறுகள் வற்றியுள்ளன. 50 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் நீர் பஞ்சத்தை எதிர்நோக்குகின்றனர்.
வரட்சியானது ஒரு "இயற்கையான அழிவு” அல்ல. அது "மனிதனால் ஆக்கப்பட்டதாகும்.” உள்ளூர் தேவைகளுக்கு நீரை முன்னெச்சரிக் கையுடன் பயன்படுத்தும் உணவுப்பயிர்களுக்கு பதிலாக, நீரை அளவுக்கதிகம் உறிஞ்சும் ஏற்றுமதிப் பணப் பயிர்களை வளர்ப்பதற்கு வரண்ட பிராந்தியங்களில் அரிதான நில நீரை அபரிமிதமாகப் பயன்படுத்துவதன் விளைவே இதுவாகும்.
இவ்வாறான அனுபவங்கள் தான் புதிய உலகப்
பொருளாதாரம் பற்றி திருப்தியடைவது தவறானது என்பதை எமக்குத் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின்
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 24
வாழ்க்கை மீது உலகமயமாக்கலின் தாக்கம் பற்றி நினைப்பதை நிறுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என இவ் விரிவுரையில் நான் வாதிக்கின்றேன். நிலைத்திருத்தற் தன்மையை நாம் சாதிக்க வேண்டுமானால், இது முக்கியமானதாகும்.
கடந்த வருடத்தில் சீட்டல் (Seattle) மற்றும் உலக வர்த்தக தாபனத்தின் எதிர்ப்புகளையடுத்து மீண்டும் எண்ணிப் பார்க்க யாவரையும் தள்ளியுள்ளது. உலகமயமாக்கலை ஏற்றுக் கொண்டு நிலைத்திருத்தற் அபிவிருத்தியின் வேறுபட்ட அம்சங்கள் பற்றி இந்த விரிவுரைத் தொடர் முழுவதும் குறிப்பிட்டுள்ளனர். நாம் செய்யும் தவறுகளை தீவிரமாக மீள் மதிப்பாய்வதற்கு எனக்கு இப்போது நேரம் வந்துவிட்டது. உலகமயமாக்கல் என்ற பெயரில் நாம் ஏழைகளுக்கு செய்வது கொடுரமானது என்பதுடன், மன்னிக்க முடியாததாகும். உலகமயமாக் கலின் விசேடமாக உணவிலும் , கமத்தொழிலிலும் வெளிப்படும் அழிவுகளுக்கு நாம் சான்று பகரும் போது, இந்தியா மீது இது விசேடமாக கண்கூடானதாகும்.
உலகத்திற்கு யார் உணவுபூட்டுகின்றனர்? பெருமளவு மக்களால் வழங்கப்பட்டவற்றை விட எனது பதில் மிகவும் வித்தியாசமானதாகும்.
உயிரியல் பன்னிலையுடன் பணியாற்றும் பெண்களும், சிறு கமக்காரர்களுமே மூன்றாவது உலகில் ஆரம்பநிலை உணவு வழங்குனர்கள் என்பதுடன், முதன்மையான அனுமானத்திற்கு மாறாக, அவர்களின் உயிரியல் பன்னிலை அடிப்படையிலான சிறுபண்ணை அமைப்புக்கள் கைத்தொழில் தனிப்பயிர்களை விட மிகவும் உற்பத்தித் திறனானவையாகும்.
வளமான பன்னிலையும், உணவு உற்பத்தியின் நிலைத்திருத்தற் அமைப்புக்களும் அதிகரித்துவரும் உணவு உற்பத்தியின் பெயரால் அழிக்கப்பட்டுள்ளது. எனினும், பன்னிலையின் அழிவுடன், போஷாக்கின் வளமான மூலங்கள் அற்றுப் போகின்றன. ஏக்கரொன்றுக்கு போஷாக்கினைப் பொறுத்தளவிலும், நோக்கிலான உயிரியல் பன்னிலையில் இருந்தும் அளவிடும் போது, கைத்தொழில் கமத்தொழிலின் “உயர்வான விளைச்சல் களோ” அல்லது கைத்தொழில் கமத்தொழிலோ உணவினதும், போஷாக்கினதும் அதிகளவு உற்பத்தியை குறித்து நிற்காது.
தனித்த பயிரொன்றின் அலகுப் பகுதி ஒன்றின் உற்பத்தியையே விளைச்சல் வழக்கமாக குறிப்பிடுகின்றன. முழு வயலிலும்ஒரேயொரு பயிரை மட்டும் நாட்டுதல் அதன் தனிப்பட்ட விளைச்சலை அதிகரிக்கும். கலப்பாக பல பயிர்களைப் பயிரிடுவதால் கைத்தொழில் பயிர்கள் குறைந்த விளைச்சலையே கொண்டிருக்கும். ஆனால், உணவின் உயர்வான மொத்த விளைச்சலைக் கொண்டிருக்கும். சிறு கமக்காரர்களினால் சிறு பண்ணைகள் மீது உணவு உற்பத்தி மேற்கொள்ளப்

s
பட்டால் அது அழிந்துவிடும் வகையில் விளைச்சல்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இது மூன்றாவது உலகத்தில் லட்சக்கணக்கான பெண் கமக்காரர்களின் உற்பத்தியை மறைக்கின்றது.
உயிரியல் பன்னிலை நோக்கிலிருந்து உயிரியல் பன்னிலை அடிப்படையிலான உற்பத்தித் திறனானது தனிப்பயிர் உற்பத்தித்திறனை விட அதிகமாகும். பன்னிலையின் உயர்ந்த உற்பத்தித் திறனுக்காக இந்த குருட்டுத்தன்மையை எமது வயல்களில் தனிப்பயிர் உருவாக்கும். இதை "உள்ளத்தின் தனிப்பயிர்” என நான் அழைக்கின்றேன்.
வழிப்பாஸில் உள்ள மயன் கமக்காரர்கள் உற்பத்தித்திறனற்றவர்கள் எனச் சித்தரிக்கப்படுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் ஏக்கரொன்றுக்கு 2 தொன் கோதுமையை மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள். எனினும், அவர்களது அவரைகளினதும், பழரசங்களினதும் பன்னிலையையும், அவர்களது மரக்கறிகளையும், பழ மரங்களையும் கணக்குக் கு எடுக் கும் போது, ஏக்கரொன்றுக்கு முழுமையான உணவின் விளைச்சல் 20 தொன்னாகும். ஜாவாவில் சிறிய கமக்காரர்கள் தமது வீட்டுத் தோட்டங்களில் 607 வர் க்கங்களைப் பயிரிடுகிறார்கள். வர் க்கங்களின் முழுமையான பன்னிலையானது இலையுதிர் அயனமண்டல வனத்துடன் ஒப்பிடக்கூடியதாகும்.
உப சஹாரா ஆபிரிக்காவில், பணப் பயிர்களின் வழியே விடப்பட்டுள்ள இடங்களில் 120 வேறுபட்ட பயிர்களை பெண்கள் பயிரிடுகின்றார்கள். இதுவே குடித்தன உணவுப் பாதுகாப்பின் பிரதான மூலமாகும்.
தாய்லாந்தில் ஓர் ஒற்றை வீட்டுத் தோட்டம் 230க்கு மேற்பட்ட வர்க்கங்களைக் கொண்டிருப்பதுடன், ஆபிரிக்க வீட்டுத் தோட்டங்கள் 60க்கு மேற்பட்ட மர வர்க்கங்களைக் கொண்டுள்ளன.
கொங்கோவில் உள்ள கிராமியக் குடும்பங்கள் 50க்கு மேற்பட்ட வித்தியாசமான மரவர்க்கங்களின் இலைகளைச் சாப்பிடுகின்றன.
பணி ணைகளின் மொத்த விளைச் சலின் அரைவாசிக்கு கணக்குக்காட்டும் குடித்தனங்களின் பண்ணைநிலத்தின் 2 சதவீதத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்கள் அமைந்துள்ளன என கிழக்கு நைஜீரியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்று கண்டறிந்துள்ளது. இதே போல, குடித்தன வருமானத்தின் 20க்கு மேற்பட்ட சதவீதத்தையும், உள்ளூர் உணவு விநியோகங்களில் 40 சதவீதத்தையும் இந்தோனிஷியாவில் உள்ள வீட்டுத் தோட்டங்கள் வழங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய, கைத்தொழில் தனிப்பயிர்களை விட
ஆயிரம் தடவைகள் அதிகளவு உணவை சிறிய உயிரியல் பன்னிலைப் பண்ணைகள் உற்பத்தி செய்ய முடியும் என
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 25
உணவு, விவசாய தாபனத்தினால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டியுள்ளது.
வரட்சியையும், வனாந்தரத் தன்மையையும் தடுப்பதற்கான சிறந்த செயலுபாயமாக பன்னிலைப் படுத்தலே விளங்குகின்றது.
வளர்ச்சியுறும் சனத்தொகைக்கு நிலைத்திருக்கும் வகையில் உணவூட்டுவதற்கு உயிரியல் பன்னிலையில் தீவிரப்படுத்தலே உலகத்திற்கு அவசியமாகின்றது. இரசாயன தீவிரப்படுத்தலோ அல்லது மூலவுயிருருவை திரிவுபடுத்தலோ அல்ல. உயிரியல் பன்னிலை ஊடாக உலகத்திற்கு பெண்களும், சிறிய கமக்காரர்களும் உணவூட்டும் அதே வேளை, மூலவுயிருரு திரிபு, மற்றும், கமத்தொழிலின் உலகமயமாக்கல் ஆகியன இன்றி, உலகம் பட்டினி கிடக்கும் என எமக்கு அடிக்கடி கூறப்படுகின்றது. மூலவுயிருரு திரிபானது அதிகளவு உணவை உற்பத்தி செய்வதில்லை என்பதுடன், உண்மையில் விளைச்சலின் வீழ்ச்சிக்கே பெரிதும் இட்டுச் செல்கிறது என சகல அனுபவரீதியான சான்றுகள் காட்டியுள்ள போதிலும், பசித்திருப்பவர்களுக்கு உணவூட்டுவதற்கு ஒரேயொரு மாற்றிடாக தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகின்றது.
இதனால் தான் உலகத்திற்கு யார் உணவூட்டு கிறார்கள் என நான் கேட்கிறேன்.
பன்னிலைக்கான இந்த வேண்டுமென்றேவாறான கணி மூடித்தனம், இயற்கையின் உற்பத்திக்கான கண்மூடித்தனம், பெண்களினாலான உற்பத்தி, மூன்றாவது உலக கமக்காரர்களினாலான உற்பத்தி ஆகியன திரிபுபடுத்தலுக்கு முன்னீட்சிப்படுத்தப்படுவதற்கான அழிவையும், ஒதுக்குதலையும் அனுமதிக்கின்றது.
குருட்டுத் தன் மைக் கான குணமாக்கியாக அதிகளவு அலட்சியப்படுத்தப்படும் "பொன் அரிசி" அல்லது பிறப்பியல் ரீதியாக உருவாக்கப்பட்ட விட்டமின் A ஆகியவற்றைப் பொறுத்தளவில், பிறப்பியல் உருவாக்க மின்றி, விட்டமின் A குறைபாட்டினை அகற்ற முடியாது என அனுமானிக்கப்படுகின்றது. எனினும், இயற்கை யானதும் அபரிமிதமானதும், பன்னிலை மூலங்களி னாலானதுமான விட்டமினி Aயை இயற்கை வழங்குகின்றது. அரிசி தீட்டப்படாவிட்டால் அந்த அரிசியே விட்டமின் Aயை வழங்கும். எமது கோதுமை வயல்களில் கிருமிநாசினிகள் விசிறப்படாவிட்டால், ருசிமிக்கதும், போஷாக்கிலானதுமான இலை வகைகளாக நாம் vathua, amauanada, (65 Q60d6d656ñT SÉluu6Jð60DDës கொண்டிருப்போம்.
இயற்கை, உள்ளூர் பொருளியல், மற்றும் சிறிய தன்னிச்சையிலான உற்பத்தியாளர்கள் ஆகியவற்றின் வழிவகைகளில் அளித்தல் அவற்றின் உற்பத்தி புலப்படாமையை அளித்தலாகும்.
தமது குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும்

உற்பத்தி செய்யும் பெண்கள் உற்பத்தித்திறனற்ற, பொருளாதார ரீதியில் தீவிர மற்றவர்களாகக் கருதப்படுகின்றார்கள். பெண்களின் வேலையின் பெறுமதி குறைப்பும், நிலைத்திருத்தற் பொருளியலில் செய்யப்பட்ட வேலையும் ஏகாதிபத்திய வம்சாவழியினால் நிருமாணிக்கப்பட்ட அமைப்பின் இயற்கையான விளைவாகும். இவ்வாறு தான் உலகமயமாக்கல் உள்ளூர் பொருளியலை அழிப்பதுடன், அழிப்புக்கூட வளர்ச்சியாக கணக்கிடப்படுகிறது.
பெண்கள் கூட குறைத்து மதிப்பிடப்படுகின்றனர். கிராமிய, மற்றும் சுதேசிய சமுதாயங்களில் பெருமளவு பெண்களுக்கு இயற்கையின் படிநிலைப்படுத்தல்களுடன் அவர்களது வேலைக்கு ஒத்துழைப்பதும், முதன்மையான சந்தையிலான 'அபிவிருத்தி, வர்த்தக கொள்கைகள் ஆகியவற்றுக்கு பெரிதும் முரண்பட்டிருப்பதுமே இதற்கான காரணமாகும். தேவைகளை வேலையானது திருப்திப் படுத்துவதுடன், நிலைத்திருத்தலை உறுதிப்படுத்துவதன் காரணமாக, அது பொதுவில் பெறுமதி குறைக்கப்படு கின்றது. வாழ்க்கையும் வாழ்க்கை ஆதரவு அமைப்பு க்களும் குறைந்தளவே போஷிக்கப்படுகின்றன.
நிலைத்திருத்தல், புத்துயிர்த்தல் உற்பத்தியில் பெறுமதி குறைப்பும், புலப்படாத்தன்மையும் உணவுத் துறையில் மிகவும் வெளிப்படையானவையாகும். தமது குடும்பங்களுக்கும், சமுதாயங்களுக்கும் உணவூட்டு வதற்கான பங்கினை தொழிலில் வம்சாவழிப் பிரிவு குறித்தொதுக்கியுள்ள அதே வேளை, வம்சாவழி பொருளியலும், விஞ்ஞானம், மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் வம்சாவழி கருத்துக்களும் உணவை வழங்கும் பெண்களின் வேலையை வியக்கத்தக்கதாக இல்லாமல் செய்கிறது. “உலகத்திற்கு உணவூட்டல்” உண்மையில் நிறைவேற்றும் பெண்களிடமிருந்து விட்டுப் போகின்றது என்பதுடன், உலக கம வியாபாரம், மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றின் மீது தங்கியிருப்பதாக முன்னீட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், கைத்தொழில்மயமாக்கலும், உணவின் மூலவுயிருரு திரிபும், கமத்தொழில் வர்த்தகத்தில் உலகமயமாக்கலும் ஏழைகளுக்கு உணவூட்டுவதன்றி பசியை உருவாக்குவதற்கான பரிகாரங்களாகும்.
எல்லா இடமும், உணவு உற்பத்தியானது ஒரு மறுதலையான பொருளாதாரமாக விளங்குகின்றது. தமது உற்பத்திக்கு அவர்களுக்கு கிடைக்கும் விலையை விட கைத்தொழில் உற்பத்திக்காக ஆகுசெலவிலான உள்ளிடுகளை அதிகளவில் வாங்குவதற்காக கமக்காரர்கள் நிறையவே செலவழிக்கிறார்கள. இதன் பின்விளைவு: செல்வந்த மற்றும் வறிய நாடுகளில் கடன்களும், தற்கொலை என்ற தொற்றுநோயும் அதிகரிக்கின்றன.
பொருளாதார உலகமயமாக்கலானது விதைக் கைத்தொழிலின் செறிவுக்கும், கிருமிநாசினிகளின்
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 26
அதிகரித்த பயன்படுத்தலுக்கும், இறுதியாக அதிகரித்த கடனுக்கும் இட்டுச் செல்கின்றது. மூலதன தீவிரமான, கூட்டு கட்டுப் படுத்தலிலான கமத் தொழிலானது கமக்காரர்கள் ஏழைகளாகவும், ஆனால் தற்போது வரை, உணவில் சுய தேவையைக் கொண்டுள்ள பிராந்தி யங்களுக்கு பரப்பப்படுகின்றது. உலகமயமாக்கல் ஊடாக கைத்தொழில் கமத்தொழில் அறிமுகப்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் உயர்வான ஆகுசெலவுகள் சிறிய கமக்காரர்கள் உயிர்வாழ்வதற்கு முடியாத நிலைமையைத் தோற்றுவித்துள்ளது.
நிலைத்திருக்காத கைத்தொழில் கமத்தொழிலின் உலகமயமாக்கலானது, நாணயங்களின் பெறுமதி குறைப்பு, உற்பத்தி ஆகுசெலவுகளில் அதிகரிப்பு, பண்ட விலைகளில் வீழ்ச்சி ஆகியன ஒன்றாக சேர்ந்து மூன்றாவது உலக கமக்காரர்களின் வருமானங்களை விழுங்கி விடுகின்றன.
இவ்வருடத்தின் போது மூதவைக்கு அறிக்கை யொன்றில் கனடிய தேசிய கமக்காரர் சங்கம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
தானியங்கள், கோதுமை, 'ஒட்ஸ்' (Oats), நவதானியங்கள் ஆகியவற்றை கமக்காரர் கள் விளைவிக்கும் அதே வேளை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்படுகின்றார் கள். காலை உணவுக்கான தானியங்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் உயர்ந்த லாபங்களை அறுவடை செய்கின்றன. 1998இல் தானியக் கம்பெனிகளாக கெலொக்ஸ், கியூக்கர் ஒட்ஸ், ஜெனரல் மில்ஸ் ஆகியவை முறையே 56%, 165%, 222% ஒப்புரவு வீதங்களின் விளைவினைப் பெற்றுள்ளன. ஒரு புசல் நவதானியங்கள் 4 டொலர்களுக்கும் குறைவாக விற்கப்பட்ட அதே வேளை கோன் ட்பிளேக்ஸ் (corn fakes) 133 டொலர்களுக்கு விற்கப்பட்டது. 1998இல் பண்ணைகளை விட 186 இலிருந்து 740 தடவைகள் அதிகளவு லாபத்தை தானியக் கம்பெனிகள் ஈட்டியுள்ளன. ஏனையோர் அதிகளவை எடுப்பதன் காரணத்தினால் மிகவும் குறைவானதை கமக்காரர்கள் பெறுகின்றார்கள் போலும்.
நான் சொன்னது போன்று, பெண் கள் உலகிலேயே முதனிலை உணவு உற்பத்தியாளர்கள் என்பதுடன், உணவு பதனிடுவோர்களாவர். எனினும், உற்பத்தியிலும், பதனிடுவதிலும் அவர்களது வேலை தற்போது மறைக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உணவுப் பழக்க வழக்கங்களினதும் உள்ளூர் உணவுப் பொருளியல்களினதும் பன்னிலையை உணவு அமைப் பின் உலகமயமாக கலானது அழிக்கின்றது. பச்சையானது (fresh), உள்ளூர்மயமானது

(Local), 6035uigoTT61)Tais85 Lull-gil (Hand made) 6T60Ti கூறப்படும் சகலவையும் ஆரோக்கியக் கேடானது என வரையறுக்கப்படும் ஓர் உலகளாவிய தனிப்பயிர் மக்கள் மீது திணிக்கப்படுகின்றது. மோசமாக நோய்களை பரப்புவையாக மனிதக் கைகள் வரையறுக்கப்பட்டு ள்ளதுடன், மனிதக் கைகளினால் செய்யப்படும் வேலைகள் உலக கூட்டுத்தாபனங்களில் இருந்து வாங்கப்படும் இயந்திரங்களினாலும், இரசாயனங்களினாலும் பதிலீடு செய்யப்படுகின்றன. உலகத்திற்கு உணவுபூட்டுவதற்கு இ ைவ பரிகாரங்கள் அல் ல , ஆனால அதிகாரமுள்ளவர்களுக்கு சந்தைகளை உருவாக்கு வதற்கு ஏழைகளின் வாழ்வாதாரங்களை ஒழிப்பதாகும்.
ஆக்கவுரிமைகளும், புலமை ஆதன உரிமை களும் புதுமையான கண்டுபிடிப்புக்களுக்கு வழங்கப்படு வதாக எண்ணப்படுகின்றது. ஆனால், பாசுமதி போன்ற அரிசி வகைகளுக்கு அல்லது எமது தாய்மார்களும், பாட்டிமார்களும் பயன்படுத்திய வேம்பிலிருந்து பெறப்பட்ட கிருமிநாசினிகளுக்கு ஆக்கவுரிமைகள் கோரப்படுகின்றன.
உயிரியல் பன்னிலை, கமத்தொழில் ஆகிய வற்றின் மீது பெண்களின் சுதேசிய அறிவை இயற்கை அபரிதமாக வழங்கியுள்ளதுடன், குறைந்ததில் இருந்து அதிகமானதை உருவாக்குவதற்கும், பங்கிடுதல் ஊடாக வளர்ச்சியை உருவாக்குவதற்கும் அந்த அபரிதம் மீது போஷாக்கு கட்டப்பட்டுள்ளது.
அவர்களின் வளங்களும், அறிவும் என்ன என்பதற்கு கொடுப்பனவு செய்வதன் மூலம் ஆழமான வறுமைக் குள் ஏழைகள் தள்ளப்பட்டுள்ளனர். பணக்காரர்கள் கூட ஏழைகளாவர். ஏனெனில் களவு மற்றும் பலாத்காரம், வன்முறை ஆகியவற்றைப் பாவித்தல் ஆகியன மீது அவர்களது லாபங்கள் அடிப்படையைக் கொணி டவையாகும் . இது செல் வந்தத் திணி உருவாக்கமல்ல, ஆனால், கொள்ளையாகும்.
சகல வர்க்கங்களினதும், சகல மக்களினதும் பாதுகாப்பை நிலைத்திருத்தலானது தேவைப்படுத்து கின்றது. வர்க்கங்களை பன்னிலைப்படுத்தும், மக்களைப் பன்னிலைப்படுத்தும் அங்கீகாரமானது சூழலில் அமைப்புக்களையும், சூழலியல் நடைமுறைகளையும் பராமரிப்பதில் அத்தியாவசிய பங்கினை வகிக்கின்றது. தாவரங்களின் கருக்கட்டலுக்கும், வழித்தோன்றலுக்கும் மகரந்தச் சேர்க்கைகள் முக்கியமானவையாகும். வயலில் உள்ள உயிரியல் பன்னிலையானது மரக்கறிகள், பசுந்தீவனங்கள், மருந்து, நீர் மற்றும் காற்று அரிப்பு ஆகியவற்றிலிருந்து மணி னுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குகின்றது.
நிலைத்திருத்தற் தன்மைக்கும், ஏழைகளின் வாழ்தகவுக்கும் ஒரு பயமுறுத்தலாக உலக சுதந்திர வர்த்தக பொருளாதாரம் வந்துள்ளதுடன், ஏனைய இனங்கள் பக்க விளைவாக அன்றி, அல்லது ஒரு புறநீங்கலாக அன்றி, ஆனால் மிகவும் அடிப்படையான
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 27
மட்டத்தில் எமது உலக நோக்கின் மீளமைத்தல் ஊடா முறைமையான வழியில் ஆபத்தில் விளங்குகின்றன சந்தை போட்டித்தன்மை, சந்தைச் செயற்றிறன ஆகியவற்றின் பெயரால் நிலைத்திருத்தல், பங்கிடல் வாழ்தகவு ஆகியன பொருளாதார ரீதியாக நீக்க படுகின்றன.
உலகை உருவாக்கும் உயிரினங்களுக்கு உணவுபூட்டுவதன் மூலம் மட்டுமே உலகத்திற்கு உணவூட்டமுடியும்.
ஏனைய உயிரினங்களுக்கும், இனங்களுக்கும் உணவைக் கொடுப்பதன் மூலம், எமது சொந்த உணவுப் பாதுகாப்புக்கான நிலைமைகளை நாம் பராமரிக்கின்றோம். மண் புழுக்களுக்கு நாம் உணவூட்டுவதன் மூலம், நாம் எமக்கே உணவூட்டுகின்றோம். மண்ணுக்கு உணவு வழங்குவதன் மூலம், நாம் மனிதர்களுக்கு உணவு வழங்குகின்றோம். அபரிமிதத்தின் இந்த உலக நோக்கானது பங்கிடுதல் மீதும், மண் குடும்பத்தின் உறுப்பினர்களாக, மனிதர்களின் ஆழ்ந்த விழிப்பியல் மீதும் அடிப்படையிலானதாகும். ஏனைய உயிரினங்களை வளம்குன்றச் செய்வதில் உள்ள இந்த விழிப்பியல் நாம் எம்மை வளம் குன்றச் செய்வதுடன் ஏனைய உயிரினங்களை போஷிப்பதனால், நிலைத்திருத்தற் அடிப்படையில் எம்மை நாம் போஷிக்கின்றோம்.
ஏனைய இனங்களுக்கும், பெருமளவு மனிதர் களுக்கும் இடப்பரப்பிலான விட்டுவைக்காத பொருளாதார பொறியிலிருந்து நாம் விலகிச் செல வதை நிலைத்திருத்தலான கோரிக்கை விடுக்கின்றது. இயற்கைக்கும், ஏழைகளுக்கும் எதிரான யுத்தமொன்றாக பொருளாதார உலகமயமாக்கல் வந்துள்ளது. ஆனால், உலகமயமாக்கலின் விதிகள் கடவுள் வழங்கியவை அல்ல. அவை மாற்றப்பட முடியும். நாம் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
சீட்டில் (Seattle) முதல், விதி அடிப்படையிலான அமைப்புக்கான அவசியமே அடிக்கடி பயன்படுத்தப்படும்
محلھو سہہ
 

சொற்றொடராகும். வர்த்தகத்தின் விதியாக உலக மயமாக்கல் விளங்குவதுடன், பெறுமதியின் ஒரேயொரு மூலமாக விளங்கக்கூடிய வோல் வீதிக்கு (Wal Street) உயர்ந்துள்ளதுடன், இதன் விளைவாக, உயர்ந்த பெறுமதித்தன்மையையும், கலாசாரத்தையும் எதிர்கால த்தையும் கொண்டிருக்க வேண்டிய விடயங்கள் பெறுமதி குறைக்கப்படுவதுடன், அழிக்கப்படுகின்றன. உலகமய மாக்கலின் விதிகள் நீதியின் விதிகளையும் , கருணையினதும் பங்கிடுதலினதும் நிலைத்திருத்தலையும் குறைத்து மதிக்கின்றன.
உயிரினமண்டலத்தின் விதிகளின் படி நாம் வாழ்ந்தால் மட்டுமே இனங்களாக நாம் உயிர்வாழ முடியும். நிலைத்திருத்தலினாலும், நீதியினால் வைக்கப் பட்டுள்ள மட்டுப் படுத்தல் களை உலகளாவிய பொருளாதாரம் மதித்தால் மட்டுமே, ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு போதியவற்றை உயிரினமண்டலம் கொணடிருக்கும்.
எமக்கு காந்தி ஞாபகப்படுத்தியது போன்று, ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு போதுமானதை புவி கொண்டுள்ளது. ஆனால், சில மக்களின் பேராசைக்கு அல்ல.
s பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 28
லிங்கள்
கடற்கரையோரமாக அமைந்திருந்த அந்த அலுவலகம் ‘கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
தலைமைக் காரியாலயமானதால் அதிகாரிகளும், அலுவலர்களும் வருவதும், போவதுமாக இருந்தனர். அக்கவுண்ட் செக்ஷனில் ராஜசேகரன் அலுவலக ஊழியர்களின் மாதாந்த சம்பளப் பட்டியலை சரி பார்த்துக் கொண்டிருந்தார்.
“சேர்” என்ற அழைப்புக் குரல் அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது.
புன்முறுவல் ததும்ப திவாகரன் நின்றிருந்தான். கையில் ஒரு "டிக்கட் புத்தகம்.
என்ன என்ற வினாக்குறி இவர் முகத்தில்.
“சேர்! ஒரு டிக்கட் எடுங்களேன்.” இலேசான கெஞ்சும் தொனி.
‘டிக்கட் வாங்குவது, நன்கொடை வழங்குவது என்றாலே கணக்காளர் ராஜசேகருக்கு பிடிக்காத சமா ச் சாரங்கள் . எனினும் உள்ளுணர்வை வெளிக்காட்டாது, "என்ன டிக்கெட்" என்று வினாவெழுப்பிய வண்ணம் அவன் நீட்டிய "டிக்கெட்' புத்தகத்தை கையில் எடுத்து விழிகளை மேயவிட்டார்.
"எங்க கிராமத்து லைப்ரரியில வாசிப்புப் புத்தகங்கள் குறைவு. அதுதான். நல்ல நூல்களை (பாங்கிக் கொடுக்க எங்க இளைஞர் அபிவிருத்தி சங்கம் இந்த முயற்சியில் இறங்கி இருக்கு. உங்க ஆதரவும் எங்களுக்கு அவசியம்.” திவாகரன் நீட்டிக் கொண்டே போனான்.
GG
ம். நல்ல காரியம். கட்டாயம் உதவி பண்ணணும். நான் மறுக்கல்ல. ஆனால் இப்போ என் கையில பணமில்லையே. அப்புறமா நானே வாங்கிக் கொள்றேன்.”
திவாகரனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அப்புறமாக என்றால் ஒரு சதமும் பெயராது. மறுபேச்சின்றி அவன் தனது 'டைப்பிங்' மேசையை நோக்கி நகர்ந்தான்.
புர்கான் பீ இப்திகார்

கதை
‘அப்பா. ஒரு தொல்லை அகன்றது' என ராஜசேகரன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.
‘நான் யாருக்கும் எந்த டிக்கட்டும் விற்றதும் இல்லை. எவங்களுக்காகவும் நன்கொடை வசூலிக்க சென்றதும் இல்லை. அப்படியிருக்க நான் ஏன் இவங்க கிட்ட வாங்கணும். இப்படி தனக்குத் தானே கேள்வியும் பதிலாகவும் இருந்த வேளையில், “ராஜசேகரன் சேர் உங்களை டிரக்டர் கூப்பிடுகிறார். சீக்கிரம் போங்க.” பியன் குரல் கொடுத்தான்.
‘ம்.எதுக்காக என்னை கூப்பிட்டனுப்பியிருக்கார் என சிந்தித்தவாறு அவசரமாக பணிப்பாளரின் அறை நோக்கி நடந்தார். கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தார். அரை மணித்தியாலம் சென்ற பின்னர் வெளியே வந்தார்.
பெண்ணின் குரல் O (3D, 2000

Page 29
'எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்றை எப்படி செய்ய முடியும்? சே. இந்த சித்ராவுக்கும் கலியாணம் கட்ட வேறு திகதியே கிடைக்கவில்லையா? இப்போ நான் தான் மாட்டுப்பட்டுப் போனேன். பணிப்பாளரின் பேச்சைத் தட்டவும் முடியாது. ம். இந்த வேலையை நான் செய்வதால் விசேட கொடுப்பனவு உண்டு என்றும் சொல்றார். ஏன் நஷடப்பட வேணும். என்றாலும் எனக்குக் கொஞ்சமும் அனுபவமில்லாத காரியம் . சரி பார்ப்போம்’ என மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டவர் பியோனை அழைத்து “சித்ரா மெடத்தின் மேசையில் உள்ள கல்சரல் புரோக்கிராம் (கலாசார நிகழ்ச்சி) பைலை கொண்டு வா" எனப் பணித்தார்.
ஒரு வாரம் கழிந்தது. ராஜசேகரன் தனது பணியின் நிமித்தம் பிரதேச செயலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
சகல செளகரியங்களுடன் கூடிய தங்குமிட வசதிகளை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். எனினும் வீட்டில் மனைவியையும், திருமணமாகாத இருபத்தி ஐந்து வயது மகளையும் தனியே விட்டு வந்தது மனதை என்னவோ பண்ணியது. உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார். பரமதிருப்தி. இன்னும் ஒரு வாரம் தானே. வந்த காரியத்தில் முழு மூச்சாக FGUL6)T60TITs.
உள்நாட்டு யுத்தம் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்திக்க வரும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு, கலை நிகழ்ச்சியொன்றை நடத்த முகாம் வாசிகள் இணங்கியிருந்தனர். அதனை மேற்பார்வை செய்து வேண்டிய வசதிகளை அவர்களுக்கு செய்து கொடுத்து சிறப்பாக அதனை நடத்தி முடிக்கும் பொறுப்பு ராஜசேகரனுக்கு.
வழக்கமாக அலுவலக உத்தியோகத்தர் சித்ராவுக்குத் தான் இம் மாதிரியான கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபாடுண்டு. கலை என்றால் என்ன விலை என்று கேட்கும் பிரகிருதி ராஜசேகரன் விதியே என்று ஒத்துக்கொண்டவர். இங்கே வந்து புதிய முகங்களோடு கலந்த போது வீட்டு நினைவையே மறந்து போனார்.
குறித்த தினத்தில் பாடல், அபிநய நிகழ்ச்சி, வில்லுப்பாட்டு என மண்டபம் கலகலத்தது. அனைவரும் பாராட்டும்வண்ணம் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது “கதையைக் கேளுங்கள் எங்கள் கதையைக் கேளுங்கள்” என இரண்டு பெண்கள் பாடிய படி மேடையேறினர்.
அனைவரும் ஆவலோடு பார்த்துக் கொண்டிரு ந்தனர். ராஜசேகரனுக்கு ஒரே ஆச்சரியம். தன்னாலும் நிகழ்ச்சிகளை ரசிக்க முடிகிறதே என்றெண்ணும் போது உவகை வேறு. இதுவரை காலமும் கணக்குப் புத்தகங்களோடு, "எக்கவுண்ட் பைல்களோடு மாரடித்து

நாட்களை கழித்ததை எண்ணி வேதனைப் பட்டார்.
கதை கேளிர்’ நிகழ்ச்சி அவரது சிந்தனையோட்டத்தை தடுத்து நிறுத்தியது.
"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்தோம். கட்டிய என் கணவர் என்ன ஆனார்?. இதுவரை எனக்குத் தெரியவில்லை. என் வயது பதினெட்டு. ஆறு மாத என் குழந்தை தொட்டிலிலே. வருவாரா என் கணவர்? அவர் எங்கே?” பாடிய இளம்பெண்ணின் குரலில் சோகக் குயிலின் உணர்வுகள்.
"என் கணவர் உயிர் பிரிவதைக் கண்ணால் கண்டவள் நான். சின்னஞ் சிறு சிறுமியர் இருவரோடு முகாமுக்கு வந்தவள் நான் பத்தாம் வகுப்பில் உயர்சித்தி பெற்றவள் நான். படிப்புக்குத் தொழில் பெற எங்கே போவேன். அப்பம், பலகாரம் செய்து கடைகளுக்கு அனுப்பி எங்கள் மூவரதும் பசிப்பிணியை தீர்த்தேன். முத்த மகள் பருவமடைந்தாள். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் அவளுக்குக் கொடுக்க சத்தான உணவுக்கு வக்கின்றி நான் வானத்தைப் பார்த்தேன். அந்த சுபகாரியம் நடந்து ஒரு மாதமாகு முன்பே. உழைப்புக்கு வழியின்றி ஊதாரியான உதவாக்கரை ஒருவன் சிட்டான என் மகளை சிக்கென்று பிடித்து சீரழித்து பாழுங்கிணற்றில் பாங்காகத் தள்ளி பாதகம் புரிந்தனனே. பறிகொடுத்தேன் என் மகளை. விழி கலங்கி வேதனையில் வீழ்ந்தேன். ஐயிரண்டு மாதம் சென்றது. இரண்டாம் மகள், மொட்டான அவள் பூவாய் மலர்ந்தாள். ஐயகோ. பரவசப்பட முடியாது பதறிப் போனேன். பாவையிவளை பாதுகாக்க முடியாது பறி கொடுக்கும் துர்ப்பாக்கியம் எனக்கு வேண்டாம் என்றெண்ணி தீர்மானம் நான் எடுத்தேன். புத்தம் புது புத்தகம் தூக்கி பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய என் இளைய மகள் ஒரே மகள். பதினாறு வயதில் முப்பது வயது மணவாளருக்கு வாழி க் கைப் பட்டு முதற்பிள்ளையை தன் வயிற்றில் சுமந்து வலம்
வருகிறாள். . பார்த்தீரா எங்கள் பரிதாப நிலையை. (335 Lo UT...... எங்கள் கதை. கதையை கேளுங்கள். எங்கள் கதையைக் கேளுங்கள்.”
பாடிமுடித்து அந்த இரு பெண்களும் மேடையை விட்டு இறங்கினர்.
பார்வையாளர்களின் கண்களில் கண்ணிர் குளம் கட்டியது. கலாசார நிகழ்ச்சி என்றால் வெறும் ஆட்டம் பாட்டுத்தான். கேளிக் கை கூத்துத் தான் என எண்ணியிருந்த ராஜசேகரன் சோகத்தால் சற்றுத் தடுமாறிப் போனார். சமூகப் பிரச்சினைகளை கலாசார நிகழ்ச்சிகள் மூலம் எப்படி வெளிப்படுத்தலாம் என்பதை புரிந்து கொண்டார். வெளிக் கொண்டு வரப்படாத ஏனைய பிரச்சினைகளை இனங்கண்டு சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் முழுமையாக அவர் மனதை ஆக்கிரமித்துக் கொண்டது. மனித மனம் என்ன இரும்பா. ஈரம் அனைவர் உள்ளங்களிலும் உண்டு.
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 30
42υτ, υιόδύι(ή
இலங்கை எழுத்தாளரான ஆன் ரனசிங்க பதிப்புரிமை வழக்கொன்றில் வெற்றியீட்டியுள்ளார். இவ்வழக்கு பெங்கியூன் புக்ஸ் இந்தியா (பிறைவேற்) விமிற்றெற் எனப்படும் ஒரு பாரிய வெளியீட்டு நிறுவனமொன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. இலங்கையில் ஒரு பதிப்புரிமை வழக்கில் எழுத்தாளர் ஒருவர் வெற்றியிட்டியுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இவ்வழக்கில் விசாரனையின் போது ஏற்பட்ட இனக்கப்பாடானது இங்குள்ள எழுத்தாளர் களுக்கு - அவர்கள் வளர்ந்த அல்லது முதிர்ந்த எழுத்தாளர்களாக இருந்தாலும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஏனெனில் இவ்வழக்கின் மூலம் நீதி, நியாயம் ஆகியவற்றை வெளியீட்டாளரிடமிருந்து எதிர்பார்க்கலாம் என்பது நிருபணமாகிறது.
இவ்வழக்கில் எழுத்தாளரின் சட்டத்தரணியான ரொமேஷ் டீ சிஸ் வா (ஜனாதிபதி சட்டத்தரணி தொலைபேசியூடாக சொன்னார்: "கோட்பாட்டினை (பதிப்புரிமையின் தனது உரித்துரிமையை) தாபிப்பதற்கு முன் வந்தமை ஒரு நல்ல விடயமாகும் , தாம் செய்வதையிட்டு பாரிய வெளியீட்டு நிறுவனங்கள்
 

തD ബൃp്ത്ര
தகோ மத்தியூ
மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தமது தவறை ஒப்புக் கொன் டதற்கு மேலதிகமாக, நானய இனக்கமாக 25,000 ருபா வழங்கப்பட்டது. சில வேளைகளில் இணக்கமானது வெறுமனே சங்கேதமான (symbolic) ரூபாய் ஆகும்."
19899MI இலக்க வழக்கு 1997 ஜூலையில் இருந்து இழுபட்டு புத்தாயிரமாண்டு வரை நீடித்த போதும், வழக்கின் போது அளிக்கப்பட்ட தீர்ப்பு எழுத்தாளரிலேயே பதிப்புரிமை தங்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டியது.
s.
-- .. ''
இதன் தொடர்ச்சியாக வெளியீடும், மீள்
வெளியீடும் எழுத்தாளரின் வெளிப்படுத்தப்படும் அனுமதி அவசியம் என்பதை எடுத்துக் காட்டியது.
"வாதியே கதாசிரியர் என்றும் அவரே டிஸயர் D'Sir ) என ற கதையினி பதிப் புரிமையைக் கொண்டிருக்கிறார்" என்று இணக்கத்தின் போது பிரதிவாதி வெளியீட்டு நிறுவனம்) ஒப்புக்கொண்டார். வாதியின் எழுத்து மூலமான சம்மதம் இன்றி எதிர்காலத்தில் கதை வெளியிடப்படமாட்டாது. 2000 மே 1 அன்று அல்லது அதற்கு முன் வாதிக்கு 25,000 இலங்கை ரூபாய் கொடுப் பன புெ செய்யப் பட வேண்டும்
பெண்ணின் குரல் ) të D. JOOO

Page 31
கதாசிரியருக்கு ஒரு காசோலை கிடைத்துள்ளது. தனது சொநி த ஆக்கம் மீது தனது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான அவரின் மூன்று வருடப் போராட்டம் கடைசியாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது என்பதையிட்டு ஆன் ரணசிங்க ஆறுதலும், மகிழ்ச்சியும் அடைந்தார். "தமது கதாசிரியர்களை வெளியீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்” என்கிறார் கதாசிரியர்.
‘நவீன இலங்கைக் கதைகளின் பெங்குவின் lds' (Penguin Book of Modern Sri Lankan Stories) 6T60T JUGSLD தொகுப்பில் ஆன் ரணசிங்கவின் ‘டிஸயர் உள்ளடக்கப் பட்டுள்ளது. இதை பேராசிரியர் டி.சி.ஆர்.எ.குணதிலக பதிப்பித்திருந்தார். 1996இன் கடைசிப் பகுதியில் வெளியிடப்பட்டது. இத் தொகுப்பில் எல்லாமாக 16 கதைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. புண்ணியகாந்தி விஜேநாயக்க, காமினி அக்மீமன, சித்ரா பெர்னாண்டோ, சாந்தினி லொகுகே, ரெஹானா மொகிடீன், விஜிதா பெர்னாண்டோ, ஜேம்ஸ் குணவர்தன ஆகியோரின் கதைகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தது. ஆங்கில மூலத்திலான கதைகளும், தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட கதைகளும் (என்.எஸ்.எம்.இராமையா, எ.சாந்தன், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரால் எழுதப்பட்டவை), சிங்களத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட கதைகளும் (மார்ட்டின் விக்கிரமசிங்க, குணதாச அமரசேகர, எதிரிவீர சரச்சந்திர, சோமரத்ன பாலசூரிய ஆகியோரால் எழுதப்பட்டவை) இத் தொகுப்பில் வெளியிடப்பட்டன.
கொடுப்பனவு இல்லை
இவ்விவகாரத்தைப் பொறுத்தளவில் தமது ஆக்க த்திற்காக ஒரு ரூபாய் கூட உயிர்வாழும் கதாசிரியர் கள் எவருக்கும் கொடுப் பனவு செய்யப்படவில்லை. அத்துடன், இவர்களில் எவருமே ஒரு சிறிதளவு தொகையாவது வழங்கப்படாதது குறித்து அக்கறை காட் டவில்லை. எழுத்தாளர்களுக்கு பணத்தைப் பகிர்ந்தளிக்குமாறு பதிப்பாசிரியரிடம் வெளியீட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டதாகவும், பெங்குவின் நிறுவனமே இவ்விடயத்தை கவனிக்க வேண்டும் என அவர் எதிர்பார்த்ததினால் அவர் மறுத்து விட்டதாகவும் நம்பகமாகத் தெரிய வருகிறது.
தமது வேலைக்காக எவ்வித கொடுப்பனவும் செய்யப்படாததையிட்டு கதாசிரியர்கள் எவருமே அலட்டிக் கொள்ளவில்லை. இது குறித்து அவரது அபிப்பிராயத்தை புண்ணியகாந்தி விஜேநாயக்காவிடம் கேட்டபோது, “கொடுப்பனவு பற்றி நாணி கவலைப்படவில்லை. ” என்றார். பெருமளவு எழுத்தாளர்கள் தமது எழுத்துகளுக்கு பரந்தரீதியான வாசகர் கூட்டத்தையன்றி, அதிகளவு கொடுப்பனவை எதிர்பார்க்கவில்லை என எண்ணத் தோன்றுகின்றது.
இத்தொகுப்பு வெளியிடப்பட்டு சில காலத்தினுள் 1996 (9.3-lbust 26 si6O g5 6.jd' (The Week) 6T6ip
3

இந்திய செய்திச் சஞ்சிகையில் தனது கதையான டிஸயர் வெளியிடப்பட்டிருந்ததை ஆன் ரணசிங்க கண்டறிந்தார். இக் கதை "பெங்குவின் புக்ஸ் (பிறைவேற்) லிமிற்றெற்றின் அனுமதியுடன் மீள் அச்சிடப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பற்றி தெளிவுபடுத்துவதற்கு ‘த வீக் சஞ்சிகையுடன் தொடர்பு கொள்ளப்பட்ட போது, நல்லெண்ணத்தின் அடிப்படையில் 3,000 இந்திய ரூபாய் தொகைக்கு பெங்குவினிடமிருந்து கதையை மீள் அச்சிடுவதற்கு அனுமதி பெற்றதாக ”த வீக் விளக்கமளித்தது. தமது தவறுக்காக அவர்கள் மன்னிப்பு கோரியதுடன், 3,000 ரூபாவுக்கு காசோலை ஒன்றை கதாசிரியருக்கு அனுப்பிவைத்தது.
துணை உரிமைகள்
1997 இல் ஆண் ரணசிங் கவின் வழக்கறிஞர்களுக்கு அனுப்பி வைத்த கடிதமொன்றின் தவறு பற்றி பெங்குவின் விளக்கமளித்தது. அக் கடிதத் தில் , "துணை உரிமைகள் உட்பட கட்டுப்படுத்தப்படாத பதிப்புரிமையை சகல புத்தகங்கள் தொடர்பில் மெஸர்ஸ் பெங்குவின் கொண்டுள்ளதன் காரணமாக கவனமின்மை இடம்பெற்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், கதாசிரியரினால் எடுக்கப்பட்ட நிலை u pij pj வெளியீட்டாளருக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதமொன்றில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. “பதிப்புரிமைச் சட்டத்தை வெளியீட்டாளர்கள் வெளிப்படையாக மீறிவிட்டதுடன், உங்கள் மீது எழுத்தாளர்களான நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகமும் இழைத்துவிட்டீர்கள். தொகுப்பில் துணை உரிமைகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்ற தப்பான நம்பிக்கையில், திட்டமற்ற தவறு என்பதை என்னால் நம்புவதற்கு கஷ்டமாக இருப்பதை நான் அறிகிறேன். உரிமைகள் பற்றிய பிரச்சனையை விசேடமாக பெங்குவின் இந்தியா போன்ற அனுபவம் வாய்ந்த, மதிப்பினைக் கொண்ட வெளியீட்டாளர் பரிசீலிப்பது யாருடையாவது கடமையாகும். நான் உங்கள் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால், மன்னிப்பு மட்டும் போதுமானதல்ல. ” என தனது கதையை சஞ்சிகைக்கு அளிக்கப்பட்டதையிட்டு அவர் உணர்ந்தார்.
இந்தப் பின்னணியில் தான் வெளியீட்டாளருக்கு எதிராக கதாசிரியர் வழக்குதொடர்ந்ததுடன், அது மூன்று வருடங்களுக்கு இழுபட்டது.
தொடர்பான பிரச்சனைகள்
தமது சொந்த நாட்டில் கெளரவத்தை அல்லது உரிய கொடுப்பனவை கதாசிரியர்கள் மட்டும் பெறுவதில்லை. பெருமளவு இலங்கைக் கதாசிரியர்கள் சிறிய உள்ளூர் நிறுவனங்கள், ரியூட்டரிகள், கல்லூரிகள்,
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 32
வெளியீட்டு நிறுவனங்கள் தமது ஆக்கத்தின் ஒப்புக்கொள்ளப்படாத 'களவையும், வெளியீட்டையும் பற்றி முறைப்பாடு செய்த பிரச்சனைகளை இவ்வழக்கு நோக்காகக் கொண்டு வருகின்றது.
பதிப்புரிமை வெளிப்படையாக மீறப்படுவதுடன், கொடுப்பனவு பற்றிய வினா குறிப்பிடப்படுவதில்லை.
மேலும், சரியான வெளியீட்டாளரின் தேடலின் போது எழுத்தாளர் கஷடங்களுக்கும், பரிகாசத்திற்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. 1998 மிராஜ் (Mirage) என்ற தனது எழுத்துப் பிரதிக்கான கிரேஷியர் பரிசை வென்ற காமினி அக் மீமன நேர்முகப் பேட்டியொன்றின் போது (த சண்டே லீடர், ஏப்ரல் 5, 1998) சரியான வெளியீட்டாளரை கண்டறிவதற்கான கஷ்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். “ஒருவரின் சொந்த ஆக்கத்தை வெளியிடுவதில் உள்ள கஷ்டங்களின் பரிதாப நிலை. உங்கள் புத்தகத்தை சுற்றித்திரிந்து விற்பது. கொடுப்பனவுக்காகக் காத்திருப்பது” என அவர் அழுத்தம்திருத்தமாகச் சொன்னார். "இதெல்லாவற்றையும் கடந்து எழுத்தாளர் ஒருவர் செல்லவேண்டும்.”
இச் சூழ்நிலையை மீட்டுரைப்பதற்கு, 1998 ஜூன் 21 அன்று பதிப்புரிமைப் பிரச்சனை மீது கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் ஒருவர் முகம் கொடுக்க வேண்டியதை இக்கட்டுரையாளர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"தமது எழுத்துக்கள் சிறந்த வகையில் பதிப்பிக்கப்பட்டு, கவர்ச்சிகரமான 'லே அவுட் (Lay out) செய்யப்பட்டு, அச்சிடப்பட வேண்டும் என்றே பெரும்பான்மையான எழுத்தாளர்கள் கனவு காண்கிறார்கள். இதைத் தொடர்ந்து றோயல்டியில் பிரதிபலிக்கும் நூலின் துரிதமான விற்பனை. வெளியீட்டாளர் உடனடியாக கொடுப்பனவைச் செய்தால் உண்மையிலேயே அது 'போனஸ்'
3(35LD.
ஆனால், நல்லதொரு வெளியீட்டாளரின் விலையானது சிவப்புக் கல்லை விட உயர்வானது என இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள பெருமளவு எழுத்தாளர்கள் கண்டறிந்துள்ளனர். பின்வரும் காட்சிகளை கருத்திற்கு எடுங்கள். இவை கற்பனைக்கு அப்பாற்பட்டவையாகும்.
bi df :
நூல் ஒன்றுக்கான விலை குறித்து எழுத்தாளர் உடன்படுவதுடன் றோயல்டியாக 20% என்ற வீதத்தை எதிர்பார்க்கிறார். ஆனால், குறிப்பிட்ட விலையை விட இரண்டு மடங்கு உயர்வாக நூல் விற் கப் படுவதை அவர் அறிந்து ஆச்சரியப்படுகிறார். அதே வேளை ஏற்கனவே உடன்பட்ட விலையின் 20% என்ற வீதத்திலேயே

றோயல்டி விளங்குகின்றது.
காட்சி 2:
விற்கப்பட்ட நூல்களுக்கு வருமதியான காசோலைகளைப் பெறுவதற்காக காலி வீதியில் ஒரு புத்தகக் கடையிலிருந்து இன்னொரு புத்தகக் கடைக்கு முதிர்ந்த எழுத்தாளர் ஒருவருடன் இளம் எழுத்தாளர் செல் கினி றார் . காசோலை தாமதமடையும் போது, அல்லது அது நீட்டப்படாத போது முதிர்ந்த எழுத்தாளரின் முகத்தில் தோன்றும் பெரும் ஏமாற்றத்தை இளம் எழுத்தாளர் காண்கின்றார். இப்படியான ஒரு நிலைக்கு தானும் வர வேணி டுமா என இளம் எழுத்தாளர் எண்ணுகிறார்.
காட்சி 3:
இந்தியாவில் தனது நூலை வெளியிட்டு அதில் இருந்து கிடைக்கும் "றோயல்டிக்கு 30% வரியை இந்திய அரசாங்கம் விதிப்பதையிட்டு இலங்கைக் கதாசிரியர் புறுபுறுக்கிறார். இந்த றோயல்டி பணம் எப்படியும் தாமதமாகவே அவருக்கு கிடைக்கும். ஏனெனில் அவரது நூலை வெளியிடும் வெளியீட்டு நிறுவனம் "றோயல்டியை வழங்குவதில் மெதுவான போக்கையே கடைப்பிடிக்கும்.
காட்சி 4:
மாணவர் ஒருவர் "டியூட்டரி வெளியிட்ட வழிகாட்டி என்ற நூலில் ஒப்புக் கொள்ளல் இன்றி வெளிவந்துள்ள உங்கள் கவிதை பற்றி ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக உங்களுடன் தொடர்பு கொள்கிறார். அதில் ஒப்புக் கொள்ளல் இல்லை. உங்கள் அனுமதி கோரப்படவில்லை. பதிப்புரிமைக்கு மதிப்பு வழங்கப்படவில்லை. "புலமை ஆதன உரிமைகள்? அவை என்ன?”
இவ்வாறான காட்சிகளும், இவை போன்ற பல காட்சிகளும் விரக்தியில் தமது பற்களை அரைப்பதற்கு எழுத்தாளர்களைத் தள்ளுகின்றன. மிகவும் அபூர்வமாகவே அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.”
எழுத்தாளரின் தனிச்சிறப்புரிமை
தாபிக்கப்பட்ட வெளியீட்டாளர் ஒருவர் தனது ஆக்கங்களை பிறிதொரு சநீதர் ப் பத்தில வெளியிட மாட் டார் என்ற அச்சத்தில் , தமது உரிமைகளை நிலை நிறுத்துவதையிட்டு எழுத்தாளர் அவ்வளவாக அலட்டிக் கொள்ளமாட்டார். வழக்குத் தாக்கல் செய்யும் போது அதுக்கு ஏற்படும் நிதிசார்
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 33
சுமையை சிலரினால் தாங்கிக் கொள்ள முடியாது.
அவரது கதையொன்று அனுமதியின்றி மீள் பிரசுரிக்கப்பட்டால் வெறுப்படைவாரா என புண்ணியகாந்தி விஜேநாயக்காவிடம் கேட்கப்பட்ட போது, அவர் சொன்னர்: “ஆம் நான் வெறுப்படைவேன். எல்லோரும் ஒன்று கூடி, எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டால், இது தொடரும்.”
"நாம் அதிகளவு நம்புவதே பிரச்சனையாகும். வெளியீட்டுக்காக நாம் எமது ஆக்கத்தை வழங்கும் போது அது எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறது, கிடைக்க வேண்டிய கொடுப்பனவு, தொகுப்புக்கும், தனிப்பட்ட ஆக்கத்திற்கும் யார் உரிமைகளைக் கொண்டிருப்பது என்பதையிட்டு நாம் உடன்படவேண்டும்.”
தொகுப்பொன்றில் அடங்கியுள்ள ஆக்கங்களுக்கு கதாசிரியர்களுக்கு கொடுப்பனவுகள் (எவ்வளவு தான் குறைவாக இருந்தாலும்) செய்யப்பட்டிருக்காவிட்டால் வெளியீட்டாளர் ஒருவர் தொகுப்பொன்றுக்கு எவ்வாறு துணை உரிமைகளைப் பெறமுடியும்? சுருங்கச் சொல்லின், கதாசிரியர்கள் நன்மைபயக்காத விதத்தில் தொகுப் பொன்றின் பகுதிகளை பதிப்பித்தல் அல்லது மீளப் பதிப்பித்தல் மூலம் பணத்தை வெளியீட்டாளர் ஒருவர் உழைக்க முடியுமா? சட்டத்திற்குப் புறம்பாக, இயற்கையான நீதியின் கோட்பாடுகளுக்கு எதிராக இது செல்லவில்லையா? −
இலங்கை எழுத்தாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட கொடுப் பனவு ஏனி மிகவும் அற்பமானதாக விளங்குகின்றது? ஒரு கதை மட்டும் 3,000 இந்திய ரூபாய்க்கு (அண்ணளவாக 4,500 இலங்கை ரூபாய்) மீளப்பதிப்பிக்க முடியுமென்றால், மொழி பெயர்ப்பாளர்கள் உட்பட 16 கதாசிரியர்களுக்கும் முதல் தருணத்திலேயே இதை விடக் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டால் என்ன?
வெளியீட்டு வருடத்துடன் பிரசுரிக்கப்படும் பிரதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுவது ஏன் இன்னும் சட்ட தேவைப்பாடாகவில்லை? உதாரணமாக தரவு அல்லது விபரங்கள் கிடைக்காவிட்டால், தனது றோயல்டியை (இச்சந்தர்ப்பத்தைப் பொறுத்தளவில், இந்தியாவில் உள்ளூர் விற்பனையின் 3 சதவீதம், ஏற்றுமதி விற்பனையின் 2 சதவீதம், உத்தரவுப்பத்திரம், கடதாசி பின் அட்டை, அல்லது மட்டை பின் அட்டை ஆகியவற்றின் கீழ் மறுபிரசுரங்களிலிருந்து 10 சதவீதம்) கதாசிரியர் ஒருவர் அல்லது தொகுப்பொன்றின் ஆசிரியர் எவ்வாறு கணக் கிடுவார் ? மேலும் , மறுபிரசுரத் தைப் பொறுத் தளவில ஆசிரியருக்கு அலி லது கதாசிரியர்களுக்கு வெளியீட்டாளர் அறிவிப்பார் என்ற நம்பிக்கையை மட்டும் ஒருவர் கொண்டிருக்கலாம்.
ஆனால், பணம் போன்ற இம் மைக்குரிய கரிசனைகளுக்கு மேற் பட்ட ஆத்மா கி களை

எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் கொண்டிருந்தாலும் கூட, பிரதிகளின் விற்பனையிலிருந்து (இச் சந்தர்ப்பத்தில், இந்தியாவில் பிரதியொன்று ரூபா 200, இலங்கையில் ரூபா 400) வெளியீட்டாளர்கள் ஏன் நிதிசார் ரீதியாக நன்மையடைய வேண்டுமா? அதிகளவை கேட்பதற்கு அவர்கள் விரும்பினாலோ, இல்லாவிட்டாலோ, ஆசிரியரும், முக்கியமாக எழுத்தாளர்களும் தமது ஆக்கத்திறன் சக்திகளை நிதிசார் லாபமின்றி ஏன் செலவழிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
உட்பொதிந்துள்ள கருத்துக்கள்
உட்பொதிந்துள்ள கருத்துக்களை எழுத்தாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், தமது உடன்படிக்கைகள் / ஒப்பந்தங்கள் மீது அச்சிடப்பட்டு ள்ளவற்றை தாமாகவே வாசிக்க தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தொகுப்பொன்றுக்கு வெளியீட்டாளர் களுக்கும், ஆசிரியருக்கும் இடையிலான உடன்படிக்கை வித்தியாசமாக கட்டமைக்கப்படவிருந்தாலும் இது பொருந்தும். வித்தியாசமான எழுத்தாளர்களின் உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மதிக்கப்பட வேண்டும். இல்லாவிடில், ஆசிரியருடன் மட்டும் வெளியீட்டாளர் தொடர்பு கொள்ளும் அதே வேளை எழுத்தாளர்களுக்கு வெளியீட்டாளரே கொடுப்பனவை மேற்கொள்வார் என ஆசிரியர் அனுமானிக்கும் போது, எழுத்தாளர் தொடர்ந்தும் கஷ்டத்தில் தத்தளிப்பார்.
முடிவுரையில் ஆன் ரணசிங்க குறிப்பிட்டுள்ளதைக் குறிப்பிடவேண்டும். “தமது உரிமைகள் குறித்து கதாசிரியர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். ஏதாவது பழைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கைகளைச் சுட்டுக் கொள்ளக் கூடாது. இப் போதைக் கு வெளியீட்டாளர்களே சாட் டையை கையில வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. பதிப்புரிமை பிரச்சனையுடன் உள்ள எந்த ஒரு எழுத்தாளரும் ரணசிங்க எதிர் பெங்குவின் இந்தியா வழக்கை மேற்கோள் காட்டலாம்.”
7. ཛོད༽
1995ஆம் ஆண்டின் போது பெண்களுக்கு எதிராக 51,431 சிறு குற்றங்களைப் பொலிசார் பதிவு செய்துள்ளனர். இவை துஷ பிரயோகம் , அவமரியாதை, பயமுறுத்தல் , காயத்தை வேண்டுமென்றே விளைவித்தல், வன்முறை அதிகாரத்தைப் பயன்படுத்தல், மற்றும் வேறு குற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன. கொலை, கொலை முயற்சி, கடும் காயத்தை வேண்டுமென்றே விளைவித்தல், கடத்தல், பாலியல் வன்முறை போன்ற வகுதிகளில் பெண்களுக்கு எதிராக 877 கடுமையான
(മ இழைக்கப்பட்டன ހ&
பெண்ணின் குரல் 0 மே, 2000

Page 34
όλυ (αδί4
மே 2000 0 இதழ் 21
அம்மா அதtதை கல்லீண் கர்ப்பத்தில் சிமண்ணாக நீ இன் பிரசவிக்க வில்லை இண்றும் உண் சாப இங்கே தாண் கிடக் ஆலைகளில் . 4 و سیمم مایاهانه ۲امه
ቇጠr፩)ሪፄኗöፊ፻፳ፏó.............. 6 சமூகச் சந்திகளில். இண்றும் உண் சாப இங்கே தான் கிடக்
-கவிஞர் வைரமு
 
 
 
 
 
 
 

øfør Gysik
| D ISSN 1391-0914. П silsoso jun 20/=
நீதஸ் கிறது. இங்கே தாண். ஆவலகங்களில். ட்டில்களில்.
ண்ணும்
ந்கல்
கிறது. இங்கே தாண்.
த்து